செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 1 அ ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் - 1 அ ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+276 = 296 விலை : 370/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 296 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற மண்ணில் இருந்துகொண்டு தாய் மொழியாம் தமிழின் மேல் வற்றாத பற்றுக்கொண்டு வாழும் தமிழ் உள்ளங்களை முதலில் வணங்குகிறேன். இவ்வருந்தமிழ்க் களஞ்சியம் முதல் தொகுதி வெளிவருவதற்குப் பொங்கு தமிழ் மன்ற அமைப்பினர் வெளியீட்டுச் செலவிற்கு முழுமையாக உதவினர். உதவிய தமிழ் உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந் தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு, வழக்குச் சொல் அகராதி பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. அ முதல் அ வரை அ அ: 1 தமிழ் மொழியின் முதல் எழுத்து எழுத்தெனப் படுப அகர முதல்.. - தொல். 1 அகர முதல எழுத்தெல்லாம் - திருக். 1 அ:2 சுட்டெழுத்து; அவன்; அவ் வீடு; அ: 3 எட்டு என்னும் எண் குறிக்கும் எழுத்து. எ-டு: எட்டேகால் இலட்சணமே ஔவை, தனிப் எட்டு = அ. கால் = வ. எட்டேகால் = அவ அ: 4 வாயை அகலத் திறத்தல் வழியாக ஏற்படும் இயல்பு ஒலி. அகலம் > அகரம். கரம் எழுத்தைச் சார்ந்து வரும் சாரியை. கரம், காரம், கான் என்பவை சாரியை. எ-டு: அகரம், ஆகாரம், ஐகான், ஔகான், அஃகான் என்பதும் அகரமே. (நன். 126. இராமாநுச.) அகர முதல என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம். அது போல இறைவனாகிய முதலை உடைத்து உலகமென வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன், எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க(தொல். 46 நச்.). மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க் கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறார் ஆயினார். அந்நிலைமை தமக்கே புலப் படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத் திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது(தொல். 46. நச்.). அகரம் தானே நடந்தும் நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒரு முதலாயும், அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற்பொருட்கும், அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் முன்வைக்கப்பட்டது(நன். 72 மயிலை.). அகரம் தனியே நிற்றலானும், பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல. அது அ என்ற வழியும். மூவினங்களில் ஏறின வழியும் ஓசை வேறுபட்டவாற்றான் உணர்க(தொல். 8. நச்.). அ, ஆ ஆகிய எழுத்துக்களுக்குரிய வரி வடிவம் ஒலி வடிவம் ஆகிய இரண்டையும் அறுவகை இலக்கணம் கூறுவது கிளி முகம் போலக் சுழித்து கீழ் கொணர்ந்து இடப்பால் நீட்டி மேல் வளைந்து இடைவெளி அமைதர வலத்தீர்த்து அம்முகம் அடங்க மேலீர்த்து அம்முறை கீழும் ஈர்த்தல் அகரக் குறியாம் ஆன்இளம் கன்றிற்கு இரங்கலில் மூலத்து எழுங்காற் றுணை கொடு சிறிதுவாய் திறந்து ஒலிக்கும் அக் குறியின் ஈற்றின் வரைநுனி இலங்க வலந்தொட்டு இடம்வரை சுழித்தல் ஆகாரத் தியல்பாம் அவணெழுந் திருமடங் காம்இதன் தொனியே இவ்வாறே அறுவகை இலக்கணம் எல்லா எழுத்துக் களுக்கும் இருவகை வடிவங்களையும் கூறுகின்றது. இதனை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள். சான்றாகக் காட்டப்பட்டது இது. * அகரம் காண்க. அ ஆ எளிய முயற்சியால் வாயைத்திறந்த அளவில் எழும் காற்றால் அ ஆ ஒலி உண்டாம் அ ஆ அங்காப் புடைய - நன். 75 இவ்வியற்கை ஒலி, இரக்கக் குறியாகவும் அமையும் சிறப்பினது. அ ஆ விழுந்து விட்டான்; தூக்குங்கள் -மக்கள் வழக்கு. அ ஆ இழந்தானென் றெண்ணப்படும் - நாலடி.9 அ, இ, உ தொல்பழ நாளில் மாந்தன் தன் சுட்டு விரலை நீட்டி அ என்றான். அந்த இடம், அவன், அவள், அவர், அது, அவை என அவன் சுட்டிக் காட்டியவற்றை எல்லாம் குறித்தது அது. செடியும் கொடியும் புல்லும் பூண்டும் புழுவும் பூச்சியும் பறவையும் விலங்கும் ஆகிய எல்லாமும், அவன் அ எனச் சுட்டிய சுட்டில் குறித்துக் காட்டப்பட்டன. பின்னே அவன் திணை பால் முதலியவை கண்டதனால் படிப்படியே அவன் அவள் அது முதலியவை உண்டாயின. வீடு மாடு, குளம், ஆறு முதலிய பெயர்கள் தோன்றிய பின்னர் அவ்வீடு, அம்மாடு, அக்குளம், அவ் வாறு எனச் சுட்டு (அ) தனியே நின்று சுட்டிக் காட்டியது. அதற்குப் பின்னர் அ, ஆ என நீண்டு ஆது, ஆங்கு என்பனவும் உண்டாயின. பின்னர் இகரச் சுட்டும் உகரச் சுட்டும் அகரச் சுட்டுப் போல் தோன்றி வளர்ந்தன. அவ்விடத்திற்கும் இவ்விடத்திற்கும் ஊடாக அமைந்த இடத்தில் உள்ளதைக் காட்டும் சுட்டாக உகரச் சுட்டு நின்றது. அச்சுட்டு வீழ்ந்தாலும் அருகி வழங்காமல் இல்லை. எ-டு: அவ் வீடு, அம் மாடு, ஆங்கு, ஆது இவ் வீடு, இம் மாடு; ஈங்கு, ஈது உப்பக்கம் காண்பர் - திருக். 620 உது - அது, இது, உது வென வரூஉம் பெயரும் - (தொல், 654) உக்கடை - ஊர்ப்பெயர், தஞ்சை மாவட்டம். உக்கரை- இடப்பெயர், திருச்சிராப்பள்ளி மாவட்டம். ஊங்கணோர் - சிலப். 28 134 ஊங்கண் - நற். 246 அ உ அ என்பதும் உ என்பதும் முறையே எட்டு, இரண்டு என்னும் எண்களைக் குறிக்கும் எழுத்துகளாம். அ உ அறியா அறிவில் இடைமகனே நொ அலையல் நின்னாட்டை நீ - யா.வி. 37 பொருள்: எட்டினோடிரண்டும் அறியேனையேஎன்னும் மாணிக்கவாசகம் (திருச். 49) எட்டு, மாந்தர் வளர்நிலை: இரண்டு, இறைநிலை. என்னையும் அறியேன்; என்னை உடையானையும் அறியேன் என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் - திருமந்.2266 தன்னை அறிந்தான் தலைவனை அறிந்தான்என்பது வழங்கு மொழி. அஃகடி அல்கு + அடி = அல்கடி > அஃகடி. பொருள் முட்டுப் பாடாம் வறுமை. அல்கு சுருக்கம் என்னும் பொருளது. அடி, அடித்தல், தாக்குதல். நேற்றுக் கொன்ற வறுமை இன்றும் வருமோ? (திருக். 1048) என ஏங்க வைக்கும் நெருக்கடி அஃகடியாம் அஃகடி > அக்கடி அஃகம் அஃகம்: 1 அல்கு +அம் = அல்கம் > அஃகம். எல் = ஒளி, கதிர். அல் = ஒளி குன்றிய - சுருங்கிய - பொழுது (இரவு) அல்குதல் = சுருங்குதல் எ-டு: எல் = பகல்; அல் = இரவு, எல் (ஒளி) அற்ற பொழுது: அல். அல்குதல் > அஃகுதல். அஃகி அகன்ற அறிவு (திருக். 175) நுணுகி விரிந்த அறிவு. அஃகம்: 2 அஃகம் = சுருங்கிய - சிறுத்த - தவசம். பயறு வகைகளுடன் ஒப்பிடத் தவச வகைகளின் சிற்றளவு புலப்படும். அஃகமும் காசும் சிக்கெனத் தேடு -ஔவை அஃகம்: 3 அஃகம் > அக்கம், சிறுமணி; சிறிய முண்மணியாய உருத்திராக்கக் கண்மணி. அஃகரம் அல்கு + அர் + அம் = அல்கரம் > அஃகரம். அல்குதல் = குறைதல் அர் = செம்மை வேர் அம் = பெருமை ஒட்டு அஃகரம் = எருக்கு குறைந்த அல்லது சிறிய செந்நிறப் பூவையுடையது. குவியிணர்ப் புல்லிலை எருக்கம் - புறம். 106 எரிநிறம் உடையது எருக்கு என்பதை எண்ணுக. எரி = தீ. அஃகாமை அஃகாமை = குறையாமை. அல்கு + ஆ + மை = அல்காமை > அஃகாமை. அல்குதல் > அஃகுதல்; அல்குதல் = குறைதல், குறைதல் இல்லாமை அஃகாமை. அஃகாமை செல்வத்திற்கு யாது, - திருக். 178 அஃகான் அஃகான் = அகரம். அகரம், அகாரம் என வருவதுடன், கான் சாரியை பெற்று அஃகான் எனவும் வரும். அஃகான் நிற்றல் ஆகிய பண்பே - தொல். 121 அஃகி அஃகி: 1 அஃகி = நுண்குரு; ஒரு நோய். அல்கு + இ = அல்கி > அஃகி > அக்கி. அஃகி (அக்கி) எழுதுதல் என்பது நுண்குருவுக்குச் செங்காவி தடவுதல், மந்திரித்தலும் உண்டு. அஃகி:2 அஃகி = நுணுகி ஆராய்தல் அஃகி அகன்ற அறிவு - திருக். 175. அஃகு அல்கு > அஃகு அல்குதல் = குறைதல், சுருங்குதல் நுண் துளியாய் ஊறி வரும் ஊற்றுநீர், கரும்பு, தென்னை, பனை ஆகியவற்றின் பாளை வழியே ஊறி வரும் நீர். அஃகுதல் அஃகுதல் = குறைதல். கதிர் ஒளி குன்றிய பொழுது அல் ஆகும். அப்பொழுது அல்குதல் பொழுது. அல்குதல் > அஃகுதல் ஆகிக் குறைதல் பொருள் தந்தது. அஃகித் தோன்றும் - தொல். 1133 அஃகுல்லி அல்கு > அஃகு + உல்லி = அஃகுல்லி. அல்குதல் = நொய்தாதல். ஈரப்பதமான பிதிர்வுடைய மாவால் செய்யப்படும் பிட்டு, நொய், நொய்யாகப் பிதிர்ந்து உதிர்வது. அதன் நொய்தாம் தன்மை கருதி இடப்பட்ட பெயர். அஃகுல்லி உக்காரி என்பதும் அது. அஃகுவஃகு அஃகு + வ் +அஃகு = அஃகுவஃகு > அக்குவக்கு வகரம் உடம்படுமெய் பனிக்கால விடியற் போதில் ஈளைச் சளி மிக்குக் கோழை வெளிக் கொணர முதுமையர் படும் இருமல் துயரொலிக் குறிப்பு இஃது. இடையீடின்றியும் இது வாட்டுவது. மழை பனிக் காலங் களில் காடுகளிலேயே திரியும் ஆயர்க்கு இத்துயர் பெரிதாம். எ-டு: அஃகுவஃகென்று திரியும் இடைமகனே - பெருந். 423 அஃகுளுத்தல் * அக்குளுத்தல் காண்க. அஃகுள் அல்குள் > அக்குள். தோளின் உள்ளாகச் சுருங்கியுள்ள உட்கூடு அஃகுள். கமக் கூடு என்பதும் அது. கமம் = மறைவு; உள்ளிடம். கமுக்கம் என்பது மறைவு என்னும் பொருள்தரும் கலைச்சொல்லாக்கமாக மக்கள் வழக்கில் உள்ளது. அஃகேனம் அல்கு+ ஏனம் = அஃகேனம் = ஆய்தம்; அல்குதல் = குறைதல். அ, ஆ முதலிய உயிர் எழுத்துக்கும் க முதலாம் உயிர்மெய் யெழுத்திற்கும் இடைநின்று இரண்டன் ஒலியும் இயைந்த ஒலியுடையதாய் இருப்பதால் அ-க-ஏனம் அஃகேனம் (அக்கேனம்) எனப்பட்டதாம். அக்கன்னா என்பதும் மக்கள் வழக்கில் உண்டு. மெல்லிய அகர ஒலியினது இது. ஏனம், எழுத்துச் சாரியை. அஃது (அது) அது என்பதன் முன், உயிர் முதற்சொல் வரின் அது, அஃது ஆகும். அது + இல்லை = அஃதில்லை; அதில்லை என்று ஆகாது. அதுவில்லை என்றும் ஆகாது. ஆயின், பொருள் வேறாம். அது + இவண் = அஃதிவண் அது, அஃது = சுட்டுப் பெயர்; சேய்மைச் சுட்டு; படர்க்கை இடம். அது+ யாது + எனின் = அஃதியாதெனின் யகரத்தின் முன் உகரம் இகரம் ஆகியது. மறத்திற்கும் அஃதே துணை - திருக். 76 mJ> அஃது + ஏ = அஃதே அஃதை அஃதை: 1 அல்குதை > அஃகுதை > அஃதை. அஃதை = நுண்ணிய அறிவினன். அங்கலுள் மாமை அஃதை தந்தை - அகம். 98 அஃதை: 2 அகுதை, சோழன் ஒருவன் பெயர். மறப்போர் அகுதை - புறம். 347 அஃதை தந்தையாகவும் இருந்ததால் இப்பெயர் பெற்றான். * அகுதை காண்க. அஃதை: 3 இருபாற் பொதுப்பெயர் அஃறிணை அல் + திணை; உயர்திணை அல்லாத திணை. உயர்திணை மன அறிவாம் ஆறாம் அறிவுடைய மாந்தர். அவரல்லாத விலங்கு பறவை முதலிய உயிரிகளும் உயிர் இல்லாதனவுமாகியவை அஃறிணை. மக்கள் தாமே ஆறறி உயிரே - தொல். 1532 திணை = ஒழுக்கம், கட்டமைந்த ஒழுக்கம். பொருள் நூலின் பெரும் பிரிவும் நிலப்பிரிவும் திணையாகும். எ-டு: அகத்திணை, புறத்திணை; குறிஞ்சித்திணை, முல்லைத்திணை; வெட்சித்திணை, கரந்தைத்திணை. * திணை காண்க. அகக்கடுப்பு அகம் = உள், வயிறு. உள்வெப்பு, வயிற்றுள் உண்டாம் வெதுப்பு, வயிற்று உளைச்சல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு என்பவை அகக்கடுப்பாம். மனத்தில் ஏற்படும் எரிவும் அகக்கடுப்பு ஆகும். அகம் = மனம். கடி > கடு = மிகுதி. கடி மிகுதிப் பொருள் தரும் உரிச்சொல் (நன். 457) அகக்கண் அகம் + கண் = அகக்கண்; அகம் = உள். அகக்கண் = அறிவுக்கண் அங்கண் என்பதும் அது. புறக்கண்தான் கெட்டது; புலவர்க்கு அகக்கண்ணும் கெட்டதோ? என்பதும் அம்மைச்சி, அந்தகக்கவி வீரராகவரைக் கேட்ட வினாவாம் (தனிப்.). அகக்களிப்பு அகம் + களிப்பு = அகக்களிப்பு. கள் - மது - அருந்துதலால் ஏற்படும் மகிழ்வு களிப்பு; அக்களிப்பு பின்னே பொதுவகையில் மகிழ்வைக் குறிப்பதாயிற்று. உண்ணக்களித்தல், குடி. உள்ளக்களித்தல், காதல்! உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு - திருக். 1281 * அக்களிப்பு காண்க. அகக்காழ் அகம் + காழ் = அகக்காழ் அகக்காழ் = உள் வயிரம். காழ் = கருமை. கெட்டித்தன்மை, கெட்டித்தன்மையால் கருமை ஆயது அகக்காழ் உடையது மரம். அகக்கா ழனவே மரமென மொழிப - தொல். 1585 *காழ் காண்க. அகக்கூத்து அகச்சுவை விளங்க ஆடும் கூத்து அகக்கூத்து. அகச்சுவை யாவது மெய்ப்பாடு நகை அழுகை முதலியவை. குணத்தின் வழியது அகக்கூத் தெனப்படும் (சிலப். அரங் 12. அடியார்க் .அரும்பத.) அகங்காரம் அகம் + காரம் = அகங்காரம் > ஆங்காரம். அகம் = உள், காரம் = எரிவு, யான் எனது என்னும் செருக்கு வழிப்பட்டதே அகங்காரமாம். ஆங்காரம் சாங்காரம்என்பது மக்கள் வழங்கும் இணைச்சொல். ஆங்காரம் உண்டாகி விட்டால் எளிதில் போகாது. அழிவு செய்யாமல் போகாது என்பது குறிப்பாம். அகங்கரித்தல், ஆங்கரித்தல் என்பவும் இது. அகஞ்செவி அகம் + செவி = அகஞ்செவி செவியகம் என்பது அகஞ்செவி என வழங்கும். அகம் என்பது செவியொடு சேருங்கால் அகம் என்பதன் இடையே நின்ற ககர உயிர்மெய் நீங்கி, அம் என்றாகிச் செவியொடும் சேர்ந்து அஞ்செவியாம். அகமுனர்ச் செவிகை வரின்இடை யனகெடும் - நன். 222 அகடவிகடம் அகடவிகடம்: 1 அகடு = வயிறு, விகடம் = நகையாண்டி (நையாண்டி) வேடிக்கை வயிற்றைத் தட்டித் தடவி ஆடிப் பாடிக் கையேந்தி. இந்த வயிற்றுக்கு ஏதாவது கொடுங்கள்என்னும் வகையில் ஏற்பட்டது அகட விகடம். அது செல்வர் வீட்டு வாயில் பக்கத் திண்ணையில் - திண்டில்- ஏறி வயிற்றைத் தட்டிக் கொட்டிக் கையேந்துதல் வகையால் திண்டாட்டம் எனவும் வழங்கியது. முன்னது வயிறாம் உறுப்பு வழி வந்தது. பின்னது நிற்கும் இடத்து வழி வந்தது. அவன் பேச்சை நம்பாதே; அவன் அகடவிகடக்காரன்- மக்கள் வழக்கு இந்நாளில் அகடவிகடம் அப்பொருள் பற்றிய தெளிவு இல்லாமல் நகைச்சுவை என்னும் அளவில் கொள்ளப்படுகிறது. அகடவிகடம் 2 உண்மையை மறைத்து வேறொன்று காட்டுதல் அகடம் = அகத்தே உள்ளது விகடம் = வேடமிட்டு (மறைத்து)க் காட்டுவது * வேடம் காண்க. அகடாரார் அகடு + ஆரார் அகடாம் வயிறு நிரம்புமாறு உண்ணார். தம் செல்வம் போய்விடும் என்னும் கருமியர் தம் வயிறு நிரம்பவும் உண்ணார் அவர் பிறர்க்கோ உதவுவார்? அகடாரார் அல்லல் உழப்பர் - திருக். 935 அகடு அகம் + அள் + து = அகள்து = அகடு மேல் தோலின் உள்ளாகச் செறிந்து இருப்பது; வயிறு. பெருவயிறு, சிறுவயிறு; குடல்; பெருங்குடல், சிறுகுடல் (மணிக்குடல்) என்பவை செறிந்துள்ளவை. அள்= செறிவு. அகடு கீண்டு அகடு கீண்டு = வயிற்றைக் கிழித்து கடலூடறுத்துச் செல்லும் ஆறு, அக்கடலின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதாகச் சொல்லிய அணி வழியது. அகடுகீண்டு ஒழுகிய தன்றே -நைடத-6 அகடுற அகடு + உற = அகடுற; உண்ணுமாறு என்றும் உணவு இல்லாமல் வாழ முடியாது. அவ்வாறு உண்ணச் செல்வம் நிலைத்து இருக்கவும் இராது. அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம் - நாலடி. 2 அகடூரி அகடு = வயிறு. அகடு + ஊரி = அகடூரி வயிற்றால் ஊர்ந்து செல்லும் பாம்பு -த.சொ. அ அகட்டுத்தே அகட்டுத்தே என்பது பிள்ளையார். வயிறு பெருத்த தெய்வம் (த.சொ.அ.) மத்தள வயிறன் என்பார் அருணகிரியார். (திருப். கடவுள்.) அகணி அகணி: 1 அகணி = அகத்தே - உள்ளே - உள்ளது. பனை மடலின் உள்தோல் அல்லது பட்டை. அதனை எடுத்துக் கட்டுக் கட்டுதற்குப் பயன்படுத்துவர். அதற்கு அகணிநார் என்பது பெயர். பனைத்தொழில் ஆட்சி இது. சுக்கில் புறணி நஞ்சு; கடுக்காயில் அகணி நஞ்சு என்னும் பழமொழியில் கடுக்காயின் விதை அகணி (உள்ளுள்ளது) என்பது புலப்படும். அகணி: 2 முல்லைக்கும் நெய்தலுக்கும் இடையகத்ததாம் மருதம் அகணி எனப்படும். சொன்னநீர் வளமைத்தாய சுரமைநாட் டகணி சார்ந்து- சூளா. நகரச்.1 அகத்தமிழ் அகம் + தமிழ் = அகத்தமிழ். அகப்பொருள் பற்றிக் கூறும் தமிழ். - திருக்கோ. 70 * அகப்பொருள் காண்க. அகத்தார் மதிலின் அகத்தே இருந்து போரிடுவார் அகத்தார் எனப்பட்டனர். அகத்தார் நிலைக்கு எளிதாம் நீர தரண் - திருக். 745 ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று - பு.வெ. 86 என்பது அகத்தோர் காவல் நிலையாம். இனிக் கோட்டையுள் குடியிருப்பாரும் அகத்தார் எனப் பட்டனர். அவ்வகையால் பெயர்பெற்ற குடியிருப்பு அகத்தார் குடியிருப்பு என்பது. நெல்லை மாவட்டம் சார்ந்தது அது. அகத்தி கொடிக்கால் ஓரங்களில் வைக்கப்படும் வேலி போன்ற மரம். அகத்தே உள்ள வெற்றிலைக் கொடிக்காலைக் காக்குமாறு வைக்கப் படுவதால், அகத்தி எனப்பட்டது. அகத்தி, கொத்துக் கொத்தாகக் காய்க்கும். ஆனாலும், வேலிப் புறத்தே இருக்குமே அன்றி உள்ளிடத்தே வைத்துக் காக்கப்படுவது இல்லை. ஆதலால், அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான் என்பது வழங்கு மொழியாயிற்று. அகத்திற்கு உரிமையாட்டி அகத்தி, அகத்தாள், ஆத்தாள் என வழங்கப்படுகிறார். அகமாவது வீடு. அகத்திடுதல் அகத்திடுதல் = தழுவுதல், அரவணைத்தல். கவவு அகத்திடுமே - தொல். 840 கவவுக்கை நெகிழாமல் என்னும் சிலம்பிற்கு அகத்திட்ட கை புல்லினும் போதினும் நெகிழாமல் புணர்வோனாக (அடியார்க். 1 61). அகத்திணை அகம் + திணை = அகத்திணை திணை = ஒழுக்கம் * அகப்பொருள் காண்க அகத்துறை அகம் + துறை = அகத்துறை * அகப்பொருள் காண்க. அகநகர் நகரின் உள்ளிடம் நகரகம்; அது, இலக்கண வகையால் அகநகர் என வழங்கலாயிற்று. அகநக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய் - சிலப். 9 1,2 அகநிலை அகம் + நிலை = அகநிலை = ஊர் அரைசுமேம் படீஇய அகநிலை மருங்கில் - சிலப். 5 161 நிலைபெறத் தங்குமிடம் அகநிலையாம் நிலையகம் என்பதும் அது. பதியெழூஉ அறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் - சிலப். 1 15, 16 பதியினின்றும் பெயர்தலை அறியாத - அடியார்க். அகந்தை அகழ்ந்து + ஐ = அகழ்ந்தை > அகந்தை அகந்தை = அகழ்ந்து எடுக்க வேண்டிய தற்செருக்கு. அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் - மீனா. பிள். 62 அகப்பகை: 1 அகம் + பகை = அகப்பகை, உட்பகை. அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப - நீதிநெறி. 55 உட்பகை என்பதும் அது. உட்பகை அஞ்சித்தற் காக்க - திருக். 883 அகப்பகை: 2 தன்மனத்தகத்தே உண்டாகும் காமம், வெகுளி, மயக்கம் முதலானவும் அகப்பகையாம் (திருக். 360). தவம்செய்வோர்கள் வெருவரச்சென்று அடைகாம வெகுளியென - கம்ப.பால. 327 அகப்பட்டி அகம் + பட்டி = அகப்பட்டி அகப்பட்டி ஆவாரைக் காணின் - திருக். 1074 தனக்கு உட்பட்ட அல்லது உள்ளடங்கிய பட்டி. பட்டி என்பது பட்டிமாடு. பட்டிமாடு போற் கட்டற்றுத் திரிபவனைப் பட்டி யென்றது உவமையாகுபெயர். நோதக்க செய்யும் சிறுபட்டி கலித். 51 (திருக். 1074 மரபுரை.). கட்டற்று விளைநிலத்துள் புகுந்து அழிக்கும் மாட்டை ஊர்ப்பட்டியில் அடைத்து வைப்பர். தண்டத் தொகை கட்டியே மாட்டைக் கொண்டு போகும் தண்டனை முறை அது. பட்டி என்பதைக், கொண்டி என்றும், கொண்டித் தொழு என்றும் வழங்குதல் உண்டு. கொண்டித் தோப்பு என்பது ஓரிடப் பெயர். அகப்பற்று அகம் + பற்று = அகப்பற்று. தன்னலத்தால் தன்மனத்து உண்டாகும் பொதுநலக் கேடாம் பற்றுமை. யான் எனது என்னும் செருக்கு - திருக். 346 ஆரா இயற்கை அவா - திருக். 370 முதலியனவுமாம். அகப்பாட்டு அகம் + பாட்டு = அகப்பாட்டு. அகவாழ்வு ஆகிய களவு கற்பு பற்றிய பாடல்கள் அகப்பாட்டு ஆகும். அகவாழ்வு மனத்தால் வாழும் வாழ்வும் மனைவாழ்வுமாம். அகம் மனம், மனை, உள் முதலாம் பொருள் தரும் சொல். எட்டுத் தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, முழுமையும் அகப்பாடல்களே. அகப்பாட்டு நாடக வழக்கும் உலகியல் வழக்குமாக அமைந்த புலனெறி வழக்கில் சொல்லப்படும். அகப்புரை அகம் + புரை = அகப்புரை. வீட்டின் தாழ்வாரம் நடுப்பகுதி ஆகியவை கடந்து, உள்ளாக அமைந்த அறை அல்லது பாதுகாப்புடைய பகுதியை அகப்புரை என்பர். நாகர்கோயில் வட்டாரத்தார். புரை = உயர்வு. உயர்வாக அமைந்த இடம் புரை உயர்வாகும் - தொல். 785 புரைய மன்ற புரையோர் கேண்மை - நற். 1 அகப்பேய் அகம் + பேய் = அகப்பேய். அகம் = மனம்; நிலைபெறாது. அலையும் மனத்தைப் பேயாக உருவகம் செய்தது. அகப்பேய் என்பதாம். மனம் எனும் மாடுஎன்பது போன்றது. (இடைக்காட்டுச் சித்தர்) மனத்தைப் பேயாகக் கொண்டு பாடிய சித்தர் அகப்பேய்ச் சித்தர் எனப்பட்டார். தம் பாடல்தொறும் தம் மனத்தை விளித்துக் கூறுவதாக அமைந்த பாடல்கள் அவை. இதனை அகப்பைச் சித்தர் என்று சொன்னாரும், பதிப்புச் செய்தாரும் உளர். அது பிழையாம். பேய் என்பது அச்சப் பொருளது. பேம் நாம் உரும் அச்சம் - தொல். 848 பேபே எனச் சிறாரை அச்சுறுத்துவார் உளர். பேஎ நிலைஇய இரும் பௌவத்து - மதுரைக். 76 அகப்பை அகப்பை 1 அகப்பு+ ஐ = அகப்பை. அகப்பை = பெரிய கலத்தில் உள்ள சோறு, கறிவகை, குழம்பு முதலியவற்றை அகழ்ந்து எடுக்கும் தேங்காய்ச் சிரட்டையால் ஆகிய கருவி. அகழ்ந்து எடுப்பது அகப்பை. இப்போது பல்வகை மாழைகளாலும் அகப்பைகள் உள. அகப்பையை ஆப்பை எனவும் வழங்குகின்றனர். அகப்பை, கருவியைக் குறியாமல் சோற்றைக் குறிப்பதும் வழக்கில் உள்ளது. ஓரகப்பை போதும்என்பதில் உள்ள அகப்பை சோறாம். அகப்பையடி என்பது சோற்றுக்கு இல்லாமை. அகப்பை நோய் என்பது வறுமை. வறுமை எனின் எளிய வறுமையன்று. சோற்றுக்கு இல்லாக் கொடிய வறுமை. அகப்பை 2 அகம் + பை= அகப்பை. அகப்பை என்பது குடலையும் குறிக்கும்; வயிற்றுள் அமைந்தது குடல் ஆதலால் அகப்பை எனப்பட்டது. அகப்பை, வயிற்றைக் குறித்தல் இலக்கிய நெறி. அகப்பேய் (அகம் + பேய்) என உருவகித்தல் மெய்யியல் நெறி. அகப்பை அடங்கினால் கொழுப்பெலாம் அடங்கும்என்பது பழமொழி. அகப்பைக்கு (வயிற்றுக்கு) அள்ளி இடும் கருவியை அகப்பை என்றதும், அதனைச் சோற்றுக்கு ஆக்கியதும் வழக்கியல் நெறி. அகம் = உள். அகப்பு = உட்செல்வது அகப்பு > ஆப்பு. அகப்பொருட் கோவை அகம் + பொருள் + கோவை = அகப்பொருட்கோவை. அகப்பொருள் துறைகளை ஓர் ஒழுங்குறுத்திக் கோத்த அமைப்புடையது இக்கோவையாகும். கோக்கப்பட்டவை யெல்லாம் பொதுவாகக் கோவை எனத் தக்கனவே எனினும், அவை ஆசாரக் கோவை, வருக்கக் கோவை, ஞானக் கோவை எனப்படுவதன்றிக் கோவை என்ற அளவில் குறிக்கப்படுவன அல்ல. அவ்வாறு குறிக்கப் படுவது அகப்பொருட் கோவையே. * கோவை காண்க. அகப்பொருள் அகம் + பொருள் = அகப்பொருள். அகத்துட் கொண்டு போற்றும் பொருள். ஒத்த அன்பான் இயைந்த தலைவனும் தலைவியும் தம்முள் கூடுகின்ற காலத்து நிகழும் பேரின்பமாய், அக்கூட்டத்தின் பின் இத்தன்மைத்து என்று இருவராலும் விளக்கிக் கூற இயலாததாய், எக்காலத்தும் உள்ளத்தானேயே நுகரப்படுவதோர் இன்பம். MjÈ‹, m~J mf¥bghUŸ vd¥g£lJ.”(bjhš. பொருள். 1 நச்.) அகத்திணை, அகத்துறை என்பனவும் இது. அகத்திணை மருங்கின் - தொல். 1002 அவியகத் துறைகள் தாங்கி - கம்ப. ஆரண். 225 அகமணம் அகம் + மணம் = அகமணம். அகம் = உள், நெருக்கம், உள்ளுக்குள். அத்தை மகன், அம்மான் மகள், அக்கை மகள் என்னும் நெருங்கிய உறவில் செய்யும் திருமணம் அகமணம் எனப்படும். அகமணம் உடல் உள நலங்களுக்கு ஒவ்வாது என்பது இற்றை ஆய்வறிஞர்கள் முடிபு. அகமனம் அகம் + மனம் = அகமனம் ஒருவர் எண்ணம் சொல் செயல் மன்னுதற்கு - நிலைபெறுதற்கு - அடித்தளமாய் அமைவது மனம். மன் + அம் = மனம் எனப்பட்டது. மனத்துள்ளும் ஓர் ஆழ்மனம் உண்டு. அம்மனம் அகமன மாம். அதனை ஆழ்மனம், உள்மனம், உள் உள் எனவும் வழங்குவர். இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து - திருக். 1057 அகம் அகம் என்னும் சொல்லுக்கு உரிய பொருள்களை, அகம்மனம் மனையே பாவம் அகல் இடம் உள்ளும் ஆமே என்று சூடாமணி நிகண்டு (11.1) சொல்லும். அகம், ஆன்மா, மனை, உள், உள்ளம், அகலம், வெற்புடன் பாவப் பேர்என ஆன்மா அகலம் மலை என்பவற்றையும் இணைத்துச் சொல்லும் அகராதி நிகண்டு. இவற்றுடன், அகச்சுவை, அகநானூறு, ஏழாம் வேற்றுமை உருபு, ஒருமரம், மருதநிலம், ஆழம் என்னும் பொருள்களையும் பிற்கால நூல்கள் இணைத்துக் கொள்ளும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி, உள்ளிடம், உள்ளடங்குகை, மனம், நெஞ்சம், ஆதன் (ஆன்மா), மார்பு, அகப்பொருள், அகத்திணை, இன்பம், அகநானூறு, விசும்பு, உருபுகளுள் ஒன்று, ஈறுகளுள் ஒன்று, தவசம், வெள்வேல் என்னும் பொருள்களை விரிக்கின்றது. அகம் தனிச் சொல்லாகவும் வரும்; சொற்களின் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வரும் என்பவற்றை அதன் ஆட்சிகளால் அறியலாம். அகத்து எழுந்த(அகம். 5) என்பதில் உள்ளமும். செல் இனி அகத்து(அகம்.66) என்பதில் வீடும். நல் அகம் வடுக்கொள(அகம். 100) என்பதில் மார்பும், அகத்து உறுப்பு(திருக். 79) என்பதில் உள்ளும். அறைபறை அன்னார் அகத்து(திருக். 1180) என்பதில் இடமும், பொருளாக அகம் ஆளப்பெற்றமை அறியலாம். அகம் முன்னொட்டாக, அகநகர், அகநாடு, அகமதில் எனவருதல், நகரகம், நாட்டகம், மதிலகம் என்பவற்றின் முன்பின் மாறி வரும் இலக்கணையாய் வந்தவையாம். அவை, உள் என்னும் இடப் பொருள் குறித்து வந்தவையே. அகம், பொருட்பெயர் ஈறாகவும் (கேடகம், பாடகம்) தொழிற்பெயர் ஈறாகவும் (நம்பகம், நாடகம்) பண்புப் பெயர் ஈறாகவும் (காழகம், பாசகம்) வருமேனும் இடப்பெயர் ஈறாக வருதலே மிகுதியாம். அமரகம், அயலகம், உயிரகம், உள்ளகம், ஈனகம், கண்ணகம், கல்லகம், காட்டகம், கானகம், குன்றகம், கையகம், சிலம்பகம், தமரகம், தமிழகம், திரையகம், தூம்பகம், நீரகம், பயம்பகம், மலையகம், மனையகம், மார்பகம், வரையகம், வரைப்பகம், வானகம், விசும்பகம், விடரகம், வியலகம் என வருவனவற்றைக் காண்க. அகம் என்னும் சொல்லின் முன், கை என்னும் சொல் வந்து புணரின் அங்கை என்று ஆகும் என்பதை. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான என விதி வகுத்துக் காட்டினார் ஆசிரியர் தொல்காப்பியனார் (315) கை என்பதனுடன் செவி என்பதையும் சேர்த்து. அகமுனர்ச் செவிகை வரின் இடையன கெடும் என்றார் நன்னூலார் (222). இவற்றுக்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும், சங்கர நமச்சிவாயரும், அஞ்சிறை என அகம், சிறை என்பதனொடு வருவதையும் இணைத்துக் கொண்டனர். குறுந்தொகையில் வரும், கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிஇவர்களை இவ்வாறு இணைக்க ஏவிற்று! அகம் முன் வரும் கண், அங்கண் ஆதலும் அங்கணம், அங்கணன் அங்கணா என வழக்கூன்றியுள்ளமையும் கொண்டு இணைக்க வேண்டும் அன்றோ? இனி, கான், வான், என்பவை பழஞ்சொற்கள். அவை கானகம் வானகம் என்றும், கானம் வானம் என்றும் சங்கச் சான்றோர் காலத்திலேயே பயில வழங்கலாயின. கானகம் என்பதன் தொகுத்தல் கானம் என்பதும், வானகம் என்பதன் தொகுத்தல் வானம் என்பதும் வெளிப்படை. கானக நாடு, கானகம், கானக வாழ்க்கை, என்பன பாட்டு தொகைகளில் 17 இடங்களில் ஆளப் பெற்றுள. அவ்வாறே கானங்கோழி, கானச்சிற்றாறு, கானத்தோர், கானநாடன், கானப்பேர், கானம், கான மஞ்ஞை, கானமர் செல்வி, கான முயல், கான முல்லை, கான யானை என்பனவாய்க் கானம் என்பது நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஆளப் பெற்றுளது. வான் என்பதும் வானம் என்பதும் தனித்தனி நூற்றுக்கு மேலும் வழங்கப் பெற்றுள. வானகம் என்பதும், வானக மீன், வானகத்தார், வானக வாழ்க்கை எனப் பன்னீரிடங்களில் ஆளப் பெற்றுளது. ஆக அகம் என்பது ஒட்டுச் சொல்லாய் அம் என்னும் தொகுத்தலாய்ப் பெருகி வழங்கியது என உணரலாம். இனி, உள்ளகம் என்பதும் உள்ளம் என்பதும் இவ்வாறே வழங்குகின்றன. ஆயினும் ஓரடிப்படையில் இரண்டையும் இருவேறு நிலையிலேயே பொருள் கருதி வழங்கியுள்ளனர் என்பது விளங்குகின்றது. பாதிரி வள்ளிதழ்... உள்ளகம் புரையும் - பெரும். 6 உணவில் வறுங்கூட் டுள்ளகம் - பட் 267 தாமரை உள்ளகத் தன்ன - குறுந். 376 ஈரிமை உள்ளகம் கனல - அகம். 19 உள்ளக நறுந்தாது உறைப்ப - சிலப். 5 235 அறைதாழ் கோத்து உள்ளகத்து இரீஇ -மணிமே. 4 88 உள்ளகம் புகுதலும் - மணிமே. 20 101 என்பவற்றை நோக்க உள்ளிடம் என்னும் பொருளிலேயே வந்துள்ளமை புலப்படும். இவ்வாறே, மாந்தர் மனமும், உள்ளகமே எனினும் இப்பருப்பொருள்களின் உள்ளிடத்திற்கும், நுண் பொருளாம் மனத்திற்கும் வேறுபாடு வெளிப்படத் தோன்றுமாறே அதனை உள்ளம் எனச் சான்றோர் வழங்கினர். உள்ளகம் என மனத்தை யாண்டும் வழங்கினாரல்லர். உள்ளம் என்பதை உள் எனக்குறுக்கி அவ்வுள்ளத்தினுள் என்பதை, உள்ளுள் என்றனர் என்பதும் அருகி வழங்கும் சான்றுகளால் புலப்படுகின்றது. உள்ளம் முளையெழ ஊக்கித்தம் உள்ளுள் பரப்பி - பரி. 10 66 உள்ளா தமைந்தோர் உள்ளும் உள்ளில் உள்ளம் உள்ளுள் உவந்தே - கலித். 118 இதனை, உள்ளே உள்ளே என அடுக்காக்கிக் கொள்வதும் கூடுவதே. அகம் என்னும் இப்பகாச் சொல் அகத்தான். அகத்தார், அகத்தவர், அகத்தோர் எனப் பகுசொல்லாக விரிந்து உள்ளிருப்பாரை உணர்த்தும் சொல்லாயிற்று. மதிலின் உள்ளிருக்கும் வீரனை அகத்தோன் என்றார் தொல்காப்பியனார். அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் -தொல். 1013 அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் - தொல். 1014 தொல்காப்பியனாரே தமிழகத்து வாழ்வாரை. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை அகத்தவர் - தொல். 1336 என்றார். புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை எனக் கரும்பு வயலின் வேலியின் உள்ளிருப்போரை அகத்தோர் என்றது புறம் (28). கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண் எனத் திருக்குறளும் (745). அகத்தாரே வாழ்வார் என நாலடியாரும் (31). மதிலகத்தாரையும் இல்லகத்தாரையும் குறித்தன. வையகம் = உலகம், வைகுதல் = தங்குதல், வைகத்தக்க இடம் வையகம் எனப்பட்டது. அது வைத்துள்ள பொருள்களைச் சுட்டுவதாய் வையம், வைப்பு. வைப்புழி எனவும் வழங்கப்பட்டது. வையகம் என்பதன் முன்பின் மாறலாகிய அகவை என்பது, குறித்த ஆண்டுக்கு உட்பட்ட வயதைக் குறித்தல், அவளுந்தான் ஈராறாண் டகவையாள்என்பதால் (சிலப். மங். 24) புலப்படும். அகம் உள்ளிடத்தைக் குறிப்பதாலும் உள்ளிடம் இருண்டு கிடப்பதாலும் இருள் என்னும் பொருள் பெற்றது. அகம் வேரற்றுக வீசு அருக்கனார்(கம்ப. கிட். 417). அகத்தர் என்பது ஆத்தர் என்றும். அகத்தன் என்பது ஆத்தன் என்றும், அகத்தாள் என்பது ஆத்தாள் என்றும் அகரம் நீண்டு, ககரம் கெட்டுச் சொல் வடிவங் கொண்டன. அகத்துக்கு உரியவர், வீட்டுக்கு உரியவன், வீட்டுக்கு உரியவள் என்னும் உரிமைப் பொருட்டாகிப் பெருமையும் தலைமையும் கொண்டு சிறந்தன. ஆகலின் ஆத்தர், தலைவர் பெரியர் என்றும், ஆத்தன் தலைவன் பெரியன் என்றும் (திருநூற். 19) பொருள் தந்தன. ஆத்தாள், தாயையும், தாய்க்கடவுளாம் உமையையும் குறிப்பதாயிற்று. அகத்தாள் என்பதே ஆத்தாள் ஆயிற்று. இதன் விளியே ஆத்தா என்பது. அம்மை, அம்மா என்றும், அப்பன், அப்பர் என்பவை அப்பா என்றும், அக்கை, அக்கா என்றும், தங்கை, தங்காய் என்றும், அண்ணன், அண்ணா என்றும் விளிச் சொல்லே முறைப் பெயர்ச் சொல்லாக அமைந்தமை போல ஆத்தா என்பதும் அமைந்ததாம். தாய் என்பதை அம்மனை, அம்மை, அவ்வை, அன்னை, ஆய், ஈன்றாள், ஞாய், தம்மனை, தெளவை, பயந்தாள், யாய், என்னும் சொற்களாலும் பழநூல்கள் வழங்கின அவை, ஆத்தாள் என்னும் சொல்லை வழங்கிற்றில்லை. பட்டினத்தடிகள், காளமேகப் புலவர், அபிராமிப் பட்டர் ஆகியோர் ஆத்தாள் என்னும் சொல்லைக் கையாண்டுள்ளனர். அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு என்பது பட்டினத்தடிகள் வாக்கு (பட்டினத். பா. தி.) அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி என்பதும், கூத்தாள் விழிகள்நெடும் கூர்வேலாம்; கூத்தாள்தன் மூத்தாள் விழிகள் முழுநீலம் - மூத்தாள்தன் ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன் ஆத்தாள் விழிகளிரண் டம்பு என்பதும் காளமேகப் புலவர் தனிப்பாடல்கள். ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை - அபி. அந். 108 இவ்வாத்தாள் என்னும் சொல் அகத்தாள் என்பதன் வழிவந்த சொல்லேயாம். தெய்வத்திற்கும் ஆத்தாள் என்றது தாய் வழிபாட்டினின்றே தாய்த்தெய்வ வழிபாடு அரும்பியது என்பதை உணரின் தெளிவாகும். அன்றியும் உமையொரு பாகன் அம்மையப்பன் எனபதும், அபிராமி, அம்மை என்பதும் உணர்வார் ஆத்தாள் என வழங்கியதன் இயைபு அறிவர். அகம் என்பது திருத்தக்க தேவரால் ஆம் எனப் பயன்படுத்தப் பெறுகிறது. ஆம்புடை தெரிந்து என்பார் அவர். இதனை, ஆம் என்பது ஆகும் என்பதன் தொகுத்தலெனக் குறிப்புரைகாரர் (உ.வே.சா.) கொள்ளினும், அகம் என்பது ஆம், ஆயது என்பது பொருந்துமெனக் கொள்ளத்தக்கது. அகம் என்னும் சொல்லைப் போலவே. அதன் திரிந்த வடிவமாகிய ஆம் என்பதற்கும் வீடு என்னும் பொருள் உண்டாயிற்று. அகமுடையாள், அகமுடையான் என்னும் சொற்கள் வீட்டுக்கு உரிமையுடையவள், வீட்டுக்கு உரிமை யுடையவன் என்னும் பொருளமைதி கொண்டது போலவே, ஆமுடையாள், ஆமுடையான் என்பனவும் பொருளமைதி யுடையனவாயின. அகம் அடியாக வந்த அகத்துக்காரி என்பது போலவே ஆத்துக்காரி என்பதும் வீட்டுக்காரி என்னும் பொருளுக்கு உரித்தாயிற்று. இவற்றின் கொச்சையாக வழங்கப் பெறும் ஆம்படையான், ஆம்படையாள் என்பவை கடியத் தக்கவையாம். அகம் என்பதன் அடியாக வந்த ஆத்தாள் என்பதும், அதன் அடியாக வந்த ஆத்துக்காரி என்பதும் சொன்மூலம் ஒன்றாக அமையினும் பொருணிலை யால் பெருவேறுபாடுற்றமை கருதத் தக்கது. ஆயின், முதற்கண் தாய்க்கு உரிமையாகிய ஆட்சி, பின்னே மனைவிக்கு ஆகி, அம்மனைவியே மக்கட்குத் தாயாய் உரிமை யாட்டியுமாதலால் அம்மூலச் சொற்களின் பொருத்தமும் புலப்படும். அன்றியும் இவ்வமைந்த சொல்லாட்சியால், தாய்க்குப் பின் தாரம் என்னும் சொலவடையின் தேர்ந்த பொருளும் தெளிவாகும். இனி, அகம் என்பதன் வழிவந்த ஆம் என்னும் சொல்லில் இருந்தே ஆமை என்னும் சொல் அரும்பிற்று என்பது நுண்ணிதின் நோக்குதலால் திண்ணிதிற் புலப்படக் கூடுவதாம். எவ்வுயிர்க்கும் இல்லாத் தனிச்சிறப் பொன்றைத் தனக்கென வுடையது. ஆமை, பிற மரங்களினும் அகன்று செல்லும் அகல் என்னும் மரப்பெயர் ஆல் என்று வழங்குவது போலவும். அகழ்தலால் அமைந்த அகழி என்னும் பெயர் ஆழி என்று வழங்குவது போலவும், உறுப்புகளை உள்ளே அடக்கிக் கொள்ளும் சிறப்பால் அகமை எனப் பெற்ற உயிரி ஆமை எனவும். யாமை எனவும் வழங்கப் பெற்றதாம். ஆமையின் சிறப்பியல்பு கால்களும் தலையும் ஆகிய புற உறுப்புகளை அகத்தே இழுத்துக் கொள்ளுதல் ஆகும். இதனை, ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என அடக்கமுடைமைக்கு அருமையாக உவமை வழி அமைத்துக் கொண்டார் திருவள்ளுவர் (126). ஓடு, ஆமையின் வீடு போல இருக்கிறது. இந்த வீட்டை அது எங்கே போனாலும் உடன்கொண்டு போகின்றது. முதுகெலும்பு உயிரிகளிலே இத்துணைச் சிறந்த பாதுகாப்பு வேறு எதற்கும் இல்லை என்றே சொல்லலாம். ஆமைகள் ஏறத்தாழ பதினேழு பதினெட்டுக் கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.v‹W அறிவியல் ஆய்வாளர் கூறுவர். மேலும், ஆமையின் ஓடு உடைந்து போனால் மீண்டும் வளர்ந்து விடும் என்றும், ஓடுகளுக்கு இடையே தலையையும் கால்களையும் இழுத்துக் கொள்ளும்என்றும் கூறுவர். ஆமையின் பெயர்களுள் ஒன்று உறுப்படக்கி மற்றொன்று கடிப்பு; கடிப்பாவது காவலுடைமை. மேலோட்டுப் பாது காப்புடைமையால் இப்பெயர் பெற்றது. எந்தை ஓம்பும் கடிப்புடை வியனகர் - நற். 98 என்பதில் கடிப்பு பாதுகாப்புப் பொருளில் ஆளப் பட்டுள்ளமை காண்க. ஆமை என்னும் பெயரும் யாமை என்னும் பெயரும் சங்க நூல் ஆட்சியிலே இருப்பதால் இவற்றின் பழமையும் நன்கு புலப்படும் ஆயினும் ஆமை என்னும் ஆட்சியினும் யாமை என்னும் ஆட்சியே மிக்குளது என்பதால் பாட்டு தொகை நூல்களால் புலப்படுகின்றன. இனி, அகமை என்பது ஆமை எனப் பொருள் கருதிய பெயராயினும் யாமை என்பதே முன்மையது என்றும் ஆமை என்பதோ பின்மையது என்றும் கருதுதற்கும் இடனுண்டு! யாக்கை, யாடு, யாணம், யாண்டு, யாய், யார், யாளி, யாறு, யானை என்னும் சொற்கள் ஆக்கை, ஆடு, ஆணம், ஆண்டு, ஆய், ஆர், ஆளி, ஆறு ஆனை என்றும் வழங்கப் பெறுவது போல யாமையும் ஆமையும் வழங்குகின்றது எனக் கொள்க. அகம் உனக்கு மிஞ்சி விட்டது, அகம் பிடித்தவன்என் மக்கள் வழக்கில் வருவனவற்றால் அதற்குச் செருக்கு என்னும் பொருள் உண்மை விளங்கும், இதனை, அகம்பாவம் எனக் கூறுவதும் உண்டு. அவன் அகம்பாவத்திற்கு ஒரு நாள் அழிவு வராமல் போகாதுஎன்பதில் அகம் என்பதன் பொருளே அகம்பாவத்திற்கும் உள்ளமை விளங்கும். உள்ளுள் தன்னைப் பெருமிதமாக நினைத்துக் கொண்டு போவதாலும் செயலாற்று வதாலும் அகம் என்பதற்குச் செருக்கு என்னும் பொருள் ஏற்பட்டதாகலாம். அகர அகரம் அகரத்தினும் முன்னாம் அகரமெனப் புனைந்து, அகரம் என்னும் ஊர்ப்பெயர்க்கும் முன்னாம் ஊர்ப்பெயராக்கப்பட்டது. அகர அகரம் >m¡uhfu«. முன்னர் இருந்த பெயர், சேரி. எ-டு: பார்ப்பனச்சேரி, ஏணிச்சேரி, வண்ணக்கச் சேரி, மக்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி, பின்னே அது பொருள் வகையால் தாழ்த்தப்பட்டுப் பட்சேரி, பள்ளுச்சேரி, பறைச்சேரி என ஆயிற்று. அகர முதலி அகரம் + முதல் + இ = அகரமுதலி அகர முதலாய வரிசையில் சொற்பொருள் தரும் கருவிநூல் அகரமுதலியாம். அகர முதல்எனவரும் (தொல். 1, திருக். 1) சொல்லிணையொடும் இகர ஈறு இயைந்து ஆக்கப்பட்ட புத்தாக்கச் சொல் இது. வழக்குக்குக் கொணர்ந்தவர் பாவாணர். எ-டு: செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகர முதலி அகரம் தமிழ் மொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து. மெய் யெழுத்தை இயக்கும் எழுத்து; தனித்தும் இயங்கும் எழுத்து. எ-டு: க்+அ=க அகரம், முதன்மை எழுத்து ஆதலால் முதன்மை என்னும் இடப்பெயர் குறித்தது. எ-டு: நயினார் அகரம், அகரமாங்குடி (ஊர்ப்பெயர்கள்) அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயிலென் - திருமந், 1860 அகரம் மருத நிலத்தார், மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதாலேயே அவர் குடியிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது. அக்கிர அகரம் = அக்கிராகரம். அக்கிரம் - நுனி, முதல், தலைமை(ஒப்பியன் மொழிநூல் பக். 146- 147). அகரவரி அகரம் + வரி = அகரவரி அகர வரிசை தொடங்கிச் சொல்லும் பொருளும் கூறும் கருவிநூல் அகரவரியாம். அகரமுதலி, அகராதி என்பனவும் அது. அகரவரி என்பது மக்கள் வழக்கு. அகரவரிமாலை (அக்கரமாலை) அகர முதலாகிய வரிசையில் மொழிக்கு முதலாக வரும் எழுத்துகளுக்கெல்லாம் பாடல் அமைந்தது அகரவரிமாலை ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகியவை இவ்வகையில் அமைந்தவை. அகரவரிமாலை இதுகால் எண்ணற்று விளங்குகின்றன. அவற்றைத் தொகையாக்கிய நூலும் உண்டு அருணாசல அக்கரமாலை இணைக்குறள் தாழிசையால் அமைந்தது. அகராதி அகராதி: 1 அகரம் என்பது அ. கரம் என்பது அ என்பதைச் சார்ந்து இயைந்து நிற்றலால் சாரியை எனப்படும். காரம் என்னும் சாரியையும், கான் என்னும் சாரியையும் இயைதல் உண்டு (அகாரம், அஃகான்). அகரம், தமிழ் முதல் எழுத்து ஆதலால், அகரம் என்பதற்கு முதன்மை என்னும் பொருள் உண்டு. எழுத்தெனப் படுவ அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப -தொல்.1 என்றார். திருவள்ளுவர், அவர் கூறியவாறே முதற்குறளை, அகர முதல எழுத்தெல்லாம்என்றதுடன் அதன் முதன்மையை ஆதி பகவனுக்கு இணைத்து, ஆதி, பகவன் முதற்றே உலகுஎன்றார். இத்தொடரில் வரும் அகரத்தையும் ஆதியையும் இணைத்த ஒருவர் அகராதி என்னும் கலைச்சொல்லை உருவாக்கினார். அகரம் முதலாகச் சொற்களை வரிசைப்படுத்தி அதன் பொருள் கூறும் நூலுக்கு அகராதி எனப் பெயரிட்டார். ஔவையார். அறஞ் செயவிரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் என்று அகர வரிசையில் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களை இயற்றினார். அதன்பின் அம்முறையில் இருபதுக்கு மேற்பட்ட நூல்கள் கிளர்ந்துள்ளன. யாப்பு வகையில் உயிர் வருக்க மோனைக்குச் சான்றாக வருவனவாகிய பாடல்கள் அகர வரிசைப்பட்டனவே. அகராதி நிகண்டு என்னும் சொற்பொருள் நூல் சிதம்பர இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. நிகண்டு நூல்கள் பாடலால் அமைந்தவை. உரைநடையில் அகராதியை முதற்கண் தந்தவர் வீரமாமுனிவர், அவர் இயற்றியது சதுரகராதி. பெயர், பொருள், தொகை, தொடை, அகராதி என்பன அவை. (சதுர்=நான்கு). அகராதி என்பதில் உள்ள ஆதி வடசொல் எனச்சிலர் கொண்டனர். அது என்பது ஆது ஆகும். எ-டு: எனது - எனாது நினது - நினாது திசைப் பெயர்கள் தெனாது. வடாது, குடாது, குணாது என வருதல் இலக்கிய வழக்கு. அது சுட்டுப் பெயர். ஆது, ஆதி அகரச் சுட்டின் நீட்சி வழியது. பெயரகராதி அகராதி அரிய கருவிநூல் ஆகும். சொல்லுக்கு உரிய பொருள்களைத் திரட்டித் தருவது அது. இலக்கிய வழக்கு, மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் இடம் பெற்றுள்ள சொற்களை யெல்லாம் திரட்டி வரிசைப் படுத்தி அவ்வவற்றின் பொருள்களையும் ஒழுங்குபடுத்தித் தரும் அரிய கருவிநூல் - மேற்பார்வை நூல் - அதுவாகும். சொல்லும் அதன் பொருளும் நிரலே அமைந்தது பெயரகராதி. பொருளகராதி ஒரு பொருளுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களையும் ஓரிடத்துத் திரட்டித் தருவது பொருளகராதி. எண்ணகராதி ஒன்று, இரண்டு, மூன்று என எண் வரிசைப்படுத்தி, அவற்றின் பொருளை உரைப்பது எண்ணகராதி. எ-டு: மூன்று - முத்தமிழ், முக்காலம், மூவிடம், மூவேந்தர், முப்பழம் இப்படி வருகின்ற எண்ணின் வரிசையில் காணப் படுவனவற்றை யெல்லாம் அறியத் தருவது அது. தொடையகராதி யாப்பில் வரும் உறுப்பு எதுகை என்பது. முதல் எழுத்து மாத்திரை அளவால் ஒத்திருக்க இரண்டாம் எழுத்து இயைந்து வருதல் எதுகை எனப்படும். எதுகை, தொடை வகையுள் ஒன்று. ஆடிப் பட்டம் தேடி விதை சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் இப்பழ மொழிகள், பொதுமக்கள் கொடை, முதுமொழி என்னும் உரைப்பா வகையைச் சேர்ந்தது என்பது தொல் காப்பியம். இப்பழ மொழிகளில் ஆடி, தேடி என்பவையும், சித்திரை பத்தரை என்பவையும் எதுகைகள். முதல் பழமொழியின், (ஆடி, தேடி) முதல் எழுத்து நெடில் (ஆ) இரண்டாம் எழுத்து குறில் (டி), முதல் எழுத்து மாத்திரை அளவால் ஒத்திருக்க இரண்டாம் எழுத்து அவ்வெழுத்தாகவே வந்தது எதுகையாம். இது எதுகை வகையில் நெடிற்கீழ் எதுகை. இரண்டாம் பழமொழியில் சித்திரை பத்தரை என்பவை எதுகை. சி,ப, என்பவை குறில். இரண்டாம் எழுத்து அதே எழுத்து, குறில் எழுத்தை முதலாகக் கொண்ட இது, குறிற்கீழ் எதுகை. இவ்விருவகைச் சொற்களையும் அகரநிரல் படி, தரும் நான்காம் பகுதி தொடை அகராதி எனப்படும். தொடை என்பது தொடுக்கப்படுவது.இங்கே எதுகைத் தொடையைக் குறித்தது. குறிற்கீழ் எதுகை, நெடிற்கீழ் எதுகை என இத்தொடையகராதி இருவகையாக நடையிடும். அகராதி அமைப்பும், அகராதி பார்ப்பதும் அகராதி காண்பதற்கு முதற்கண் தெளிவாக இருக்க வேண்டியது. அ முதல் ன் முடிய உள்ள எழுத்தின் வரிசை, ஐயமின்றித் தெளிவாக மனத்தில் இருப்பதாகும். ல,ள,ழ,ர,ற,ந,ன,ண, என மாறிக்கிடக்கும் இவ்வெழுத்துக் களை வரிசைப்படுத்துதல் மட்டுமில்லை, ந என்னும் எழுத்து ஒன்று தவிர எவ்வெழுத்தும் தமிழ்ச்சொல்லில் முதலாக வாராது என்னும் தெளிவு இருக்க வேண்டும். இலக்குவன், இளக்கம், எழில் என்பவை போல (ல,ள,ழி) சொன் முதலிடம் பெறாமையை அறிந்தால் தமிழ்ச்சொல் முறை விளங்கும். ரம்பம், லவணம் எனச் சொற்கள் ர, ல முதலாக வந்தால், அவை தமிழ்மரபில் எழுதப் பட்டவையோ, தமிழ்ச் சொல்லானவையோ இல்லை என்பதாம். அ என்பதன் பொருள் கூறும் அகராதி, அ ஆ என்பதை அடுத்துக் கூறுகிறது. அகம் என்பது தள்ளிப் போவானேன்? அ என்பதற்கு அடுத்த உயிரெழுத்து ஆ ஆதலால் அதனைச் சொல்லியே தொடர வேண்டும். அ உ அறியா என்பது இடைக்காடர் பாடல் அ உ என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டும் எனின் (எட்டும் இரண்டும்) ஆ ஆ என்பதன் பின்னரே சொல்ல வேண்டும். அகர வரிசை முடித்தும் அகம் வராமல் அஃகம் வருவது ஏன்? அ என்னும் உயிர் வரிசைக்கும் க் எனத் தொடங்கும் மெய் வரிசைக்கும் ஊடே இருக்கும் எழுத்து ஆய்தம் (ஃ) ஆதலால், அஃகம் என்பது வந்ததாம். ஆய்த எழுத்தை அஃகேனம் என்பர். அது, அ, க இனம் என்பது அறிக. அகங்கை, அகத்தி, அகடூரி, அகச்சுட்டு, அகப்பொருள், அகப்பட்டி, அகத்திணை, அகன்றில், அகவற்பா, அக்கறை என்னும் பத்துச் சொற்களை எப்படி வரிசைப் படுத்த வேண்டும்? அல்லது எப்படி வரிசையாகக் கண்டு கொள்ள வேண்டும்? அகங்கை, அகச்சுட்டு, அகடூரி, அகத்தி, அகத்திணை, அகப்பட்டி, அகப்பொருள், அகவற்பா, அகன்றில் அக்கறை என வரிசையாகும். முதல் ஒன்பதும், அக என இருந்தாலும் மூன்றாம் எழுத்து நான்காம் எழுத்து ஆகியவை கொண்டு வரிசைப்படுத்தியது காண்க. அகப்பட்டி, அகப்பொருள் என்பவற்றுள் முதல் மூன் றெழுத்தும் ஒன்றாக இருந்தாலும் நான்காம் எழுத்து, ப, பொ என்பவை கொண்டு முன்னும் பின்னும் வைக்கப்பட்டமை அறிக. அகத்தி, அகத்திணை என்பவற்றுள் முதல் நான்கு எழுத்துகளும் ஒன்றாக இருந்தாலும், பின்னதில் ஐந்தாம் எழுத்தொன்று வந்தமை காண்க. பகாச்சொல் ஏழு எழுத்தும் பகுசொல் ஒன்பது எழுத்தும் கொள்ளும் என்பது நன்னூல் (190) கடைசி எழுத்துவரைக்கும் அகரநிரல் முறை மாறாது அமைக்க வேண்டும். அக்கறை என்பதில் க் என்பது க வரிசைக் கடைசி எழுத்து ஆதலால் இறுதியில் வைக்கப்பட்டது. சிலர், அ என்பதை அடுத்து வைத்து க, கா, கி, என்பவற்றை வைப்பதும் உண்டு. அகராதியின் பயன் கால், பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊரின் றாகி ஆறு இனிது படுமே உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக்கூழ் அள்ளல் பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலை வருமே - புறம். 185 இதனை இயற்றியவன் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன். இப்பாட்டை எளிதில் படித்துப் பொருள் காண்பதற் காகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. பிரித்து எழுதாமல் இருந்தால். கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவற் சாகா டுகைப்போன் மாணி னூறின் றாகி யாறினிது படுமே வுய்த்தல் தேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு மிகப்பஃறீநோய் தலைத்தலை வருமே என்றே பாட்டு இருக்கும். ஆதலால், பாடல் ஆயினும் உரைநடை ஆயினும் தனித் தனிச் சொல்லாகப் பிரிக்கவும் தனித்தனிச் சொல்லைச் சேர்த்துப் படிக்கவும் பயிற்சி வேண்டும். இலக்கியச் சொல்லின் பொருள், சொல்லைப் பிரிக்கும் பயிற்சியால் எளிதாகிவிடும். ஒருவர் கேதந்துஎன்றால் பொருள் என்ன?என்றார். அவ்வளவில் நில்லாமல், அகராதியிலும் இல்லைஎன்றார். எங்கே வருகிறது கேதந்துஎன்றேன். அதுதான் பாரதியார் பாடிய, வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்துஎன்றாரே அவர். நகைக்காதிருக்க முடியுமா? உலகினுக்கே தந்து என்று பாருங்கள் என்றதும் அவரும் நகைத்தார். பிரிக்க வேண்டா - பிரிக்கக் கூடா - வகையில் பிரித்துக் கொண்டு பொருள்காண்பதும், அகராதியைப் புரட்டிப் பார்ப்பதும் பயன் செய்ய மாட்டா. இன்னொருவர் ஒருகால் கிற்றுணி என்பதன் பொருள் என்ன என்றார். இச்சொல் தமிழ் வழக்கில் இல்லை. இவர் பாடற் சொல்லைப் பிழைபடப் பிரித்துக் கொண்டு கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு. கிற்றுணி எங்கே வருகிறது என்று வினாவினேன். அவர், நைடத்தில் வருகிறது என்றார். தொடரைச் சொல்லுங்கள் என்றேன். காழ கிற்றுணி என்றார். காழ் அகில் துணி என்பதுஅது. வயிரம் பாய்ந்த அகில் துண்டம் என்பது பொருள் என்றேன். பழகிக் கொண்டே இருப்பவர்க்கும் இடர் வருதல் உண்டு. இலக்கியத்தில் முதுக்குறை என்றொரு சொல்லாட்சி உண்டு. அதனை முது + குறை எனப் பிரித்தால் முதுமைக் குற்றம் எனப் பொருள் தரும். முதுக்கு + உறை எனப் பிரித்தால் முதுமையான அறிவு அல்லது பேரறிவு என்று பொருள் தரும். சொல்லைப் பிரித்தல் பிழையானால், பொருளும் பிழைபடத்தானே செய்யும். பிழைபட்ட பிரிவுச் சொல்லை அகராதியில் பார்த்தால் இடம்பெற்றிருக்க முடியாதே. கம்பராமாயணத்தில் ஒரு படலத்தின் பெயர் கடறாவு படலம் என்பது பிரித்தால் கடல் தாவு கடலம் கடறு ஆவு படலம் எனப்பிரித்தால் என்ன பொருள் வரும்? பல தாழிசை, பஃறாழிசை சில தாழிசை, சிஃறாழிசை இவை அகராதியில் பஃறாழிசை, சிஃறாழிசை என்றே இருக்கும். பல தாழிசை சிலதாழிசை எனப் பார்க்க இயலா; ஏனெனில், இவை கலைச்சொற்கள், யாப்பியல் சார்ந்தவை அவற்றைப் பிரித்துப் பொருளறிய வேண்டுமே ஒழிய, சொல்லைப் பிரித்து அமைத்தல் யாப்பியல் பிழையாகிவிடும். இவற்றை எண்ணி அகராதியைப் பயன் கொள்ள வேண்டும். புறநானூற்றுப் பாடல் ஒன்றை நாம் குறிப்பிட்டோம். அதில் கால், பார், கோத்து, ஞாலத்து, சாகாடு, உகைப்போன், மாணின், ஊறு, இன்று, ஆறு, உய்த்தல், தேற்றான், வைகல், கூழ், அள்ளல், தலைத்தலை என்பவை அருஞ்சொற்களாகத் தோன்றும். ஆனால், பேச்சு வழக்கில் பல சொற்கள் உள்ளனவே. நாம் பல்காலும் உரையாடலில் பயன்படுத்தி வருவனவே. வண்டியில் கால் (சக்கரம்) பார் (அச்சொடு கூடிய அகன்ற சட்டம்) என்பவை உள. கோத்தல் ஊசியில் நூல் கோத்தல், ஒன்றோடு ஒன்றை இணைத்தல், கோர்த்தல் கோர்வை என்பவை பிழைச் சொற்கள். கோத்தல் கோவை என்பவையே சரியான சொற்கள். கோப்பு என்பதை எண்ணுக. ஞாலம் = உலகம்; இலக்கியச் சொல். சாகாடு = வண்டி; சகடம் என்பதும் அது. உகைத்தல் = செலுத்துதல், இயக்குதல். மாணின் (மாண் +இன் ) = தகுதியானவன் எனின். ஊறு = இடையூறு, துன்பம். இன்று = இல்லையாகி. ஆறு = வழி. உய்த்தல் = இயக்குதல், ஓட்டுதல். தேற்றான் = தெளிவு இல்லாதவன். வைகல் = நாள்தோறும். கூழ் அள்ளல் = நீரும் மண்ணும் கலந்துள்ள சேறு, அளறு, தலைத்தலை = மேலும் மேலும். ஒரு பாடலில் வரும் சொற்களைக் கண்டு மலைக்க வேண்டியது இல்லை ஏனெனில் அப்பாடலில் வந்த சொற்கள் அருஞ்சொற்கள் - பின்னொரு பாடலில் வரும்போது, அருஞ் சொல்லாக இல்லாமல் தெரிந்த சொல்லாகி விடும் அல்லவோ! ஒரு பத்துப் பாடலைப் படித்துப் பொருள் உணர்ந்து கொண்டால், ஒரு நூறு பாடலுக்கு அச்சொற்பொருள் உடன் வந்து உதவும். செல்லச் செல்ல ஒரு பாடலுக்கு ஓரிரு சொற்களை யன்றி மற்றவை எல்லாம் தெரிந்த சொற்களாகவே இருக்கும். அன்றியும் சொல்லோட்டத்திலேயே அதன் பொருளைக் கண்டு கொள்ளும் வகையில் பயிற்சி இயல்பாக உண்டாகிவிடும். பின்னர் அரிதாகவே அகராதி தேவைப்படும் நிலையும் உண்டாகிவிடும். அகராதி கையில் இருப்பது, உழவனுக்குக் களஞ்சியத்தில் பொருள் இருப்பது போன்றது. வணிகனுக்கு வைப்பகப் பொருள் (Bank) வேண்டுமளவு இருப்பது போன்றது. பயில்பவர்க்குப் பயிற்சி மிக்க ஆசிரியர் பக்கத்தே இருப்பது போன்றது. ஆய்வாளர்க்கோ பொற்சுரங்கம் மணிக்குவியல் வயிரப்பாளம் என்பவை உடைமையாக இருப்பது போன்றது. அகராதிப் பயிற்சியின் தேவையை, ஆங்கிலம் கற்பாரைப் பார்த்துப் புரியலாம். அகராதி இல்லாமல் ஆங்கில ஆசிரியரோ ஆங்கிலம் கற்பாரோ இரார். அவர்கள், ஓர் அகராதி அன்றிப் பலவகை அகராதிகள் வைத்திருப்பர். நாற்தோறும் பயன்படுத்தியும் வருவர். ஆனால், தமிழ் பயில்வாரோ, தமிழைப் பயிற்றுவாரோ அகராதி வைத்திருப்பது அரிதாகும். சொல்லாய்வு பொருளாய்வு வரலாற்றாய்வு பண் பாட்டாய்வு அறிவியல் முதலாம் துறையாய்வுகளுக்கு இன்றிய மையா மூலமுதல் அகராதி என உணர்தல் வேண்டும். நம் முந்தையர் தந்த சொல்வளம் பொருள்வளம் தேக்கி வைக்கப்பட்டுள்ள பெருநீர்த் தேக்கமும் அதன் பயன்பாட்டு விளைவும் அகராதியே என்பதை உணர்தல் நம் தலைக்கடனாம். மொழிஞாயிறு பாவாணர் அரிதாகத் தொகுத்து வைத்த நூல்களில் ஆயிரத்தின் மேலும் எண்ணிக்கை உடையவை அகராதிகளே எனின், மொழி கற்பார்க்கு அகராதியின் இன்றியமையாமையை உரைக்க வேண்டுவது இல்லை. நம் கையில் தவழும் எழில் மிக்க அகராதிக் குழந்தையைக் கருக்கொண்ட பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்கள்! உருவாக்கித் தந்த உயர் தொண்டர்கள் எத்தனை எத்தனை பேர்கள்! திருவாக்கித் தந்த திறவோர்கள் எத்தனை எத்தனை பேர்கள்! அவர்களுக்கெல்லாம் தமிழுலகம் கடப்பாடும் நன்றியும் பெரிதும் உடையதாம். அகராதி: 2 அகராதி= ஆணவன், செருக்கன். அகராதி என்பது நூற்பொருளாக இருக்கவும் அகராதிக்கு எப்படி ஆணவப் பொருள் வந்தது? அகராதி படித்தவன் சொல்லாற்றலுடன் விளங்கினான். அவனை வெல்லல் அரிதாக இருந்தது. அதனால் அகராதி படித்தவனோடு சொல்லாடலை விரும்பாமல், ஒதுங்கினர். பின்னர், அகராதி படித்தவன் என்பது அகராதி பிடித்தவனாக ஆகி, ஆணவப் பொருளில் வழங்கலாயிற்று. அவன் பெரிய அகராதி எனப் பழிப்பாரும் உளர். பெருமைக்கு ஏற்பட்ட சிறுமை இது. அகலக் கவி (பாவிகம்) பொருட்டொடர் நிலையாய் விரிவுறச் செய்யும் பெரு நூல்கள் அகலக் கவி எனப்படும். பெருங்காப்பியம், காப்பியம், புராணம், (தொன்மம்) என்பவற்றைக் காண்க. நால்வகைக் கவிஞருள், வித்தாரக் கவி எனப் பெறுப வரால் இயற்றப்படும் பெருநூலே அகலக் கவியாம். அகலக் கவியாவான், நால்வகைக் கவிகளுள் ஒருவன். அவன் பாடும் அகலக்கவி, பெருங்காப்பியம். உலா, அந்நாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், பரணி என்பவை ஒன்றற்கு ஒன்று பாடுதல் அருமையனஎன்றும், யாவையும் பாடிக் கோவையும் பாடுக என்றும் கூறுவர். இவற்றைப் பாட வல்லாரே,பாவேந்தர் வேந்தராய்ப் பாராட்டுப் பெற்றனர். சயங்கொண்டாரும் ஒட்டக் கூத்தரும், கவிச் சக்கரவர்த்தி எனப் புகழ் பெற்றதையும் பார காப்பியம் பாடிய கம்பர் இப்பட்டம் பெற்றதையும் கருதுக. பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்பது தண்டியலங்காரம் (90). காப்பியம் என்பது பாவிகமாம். பாவிகம் பாடவல்லான் பாவிகன்என்க. பாவியம், பாவியன் என்னின் பொருள் முரணாம். அகலம் அம் என்னும் சாரியை ஏற்று அகல் என்பது அகலம் என்றாகி அகன்மைப் பொருள் தரும். அகலம் என்பது அகலக்கவி, அகலவுரை, மார்பு, விரிவு, நிலம், வானம், பெருமை, அகலுதல் என்னும் பொருள்களைத் தரும். அகலவுரை உரைகளுள் சிறப்புப் பெற்றது அகலவுரையாம். குறிப்புரை, சொல்லுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை என்பவற்றுள் பேருரையே அகலவுரையாம். பல்வேறு நயங்களும் விரிந்து, கூற்றும் குறிப்பும் மலிந்து, தடையும் விடையும் செறிந்து, நூலாசிரியர் நுழையாவிடத்தும் நுழைந்து, நுண்பொருள் காட்டி எண்சுவை கெழும எழுதப் பெறுவதே அகலவுரையாம். தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர் (தொல். சிறப்புப். நச்.) மார்பு: ஓதுதலே தொழிலாகக் கொண்டவர் ஓதுவார் எனப் பெறுவது போலவும், ஓயாமல் ஒலிக்கும் கடல் ஓதம் எனப் பெறுவது போலவும். இடையறாப் பயிற்சி மேற்கொண்டவர் பயில்வான் எனப் பெறுவர். பயில்வானாக விளங்குவோர், உடற்கட்டை உற்று நோக்குவார். மார்புப் படலத்தையும், வயிற்றுச் சுருக்கத்தையும் கண்டு களிப்பர். பயிற்சி மேம் பாட்டினான் அகன்று விளங்கும் மார்பினை அகலம் என்றது எத்துணைப் பொருத்தமானது. கோயில் சிலைகளையும், குறிப்பாகக் காவல் வீரர் சிலைகளையும் காண்பார் மார்பகலத்தை அல்லது அகல் மார்பை வியவாது இரார். பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மார்பினை இடைக்குன்றூர் கிழார். வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள் அணங்கருங் கடுந்திறல் என்னை முணங்கு நிமிர்ந்து அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம் - புறம். 78 என மூலப் பொருள் விரித்து முறைபெற உரைத்தார். விற்பயிற்சி யால் சிறந்த குகன் மார்பினைக், கண்ணகன் தடமார் பெனும் கல்லினான் என்று கம்பர் (அயோத், 657) உரைத்ததையும் கொள்க. விரிவு : அகல உழுவதினும் ஆழ உழுவதே மேல் என்னும் நாட்டுப் பழமொழி இப்பொருள் தெளிவிக்கும். நிலம், வானம்: பெரிது பெரிது புவனம் பெரிது என்பதாலும் பார் என்னும் சொல் நிலத்துக்கு உண்மையாலும் அகலம் என்பது நிலம் என்னும் பொருள் பெற்றது. நிலத்தடங் கலையும் கவித்து விளங்கும் அகற்சித் தோற்றத்தால் வானும் அகலம் ஆயிற்று. பெருமை: பருமை, அகலம், விரிவு என்பன பெருமைக் குரியனவாகக் கொள்ளப் பெறுதலின் அகலத்திற்குப் பெருமைப் பொருள் நேர்ந்தது. நின் தோற்றமும் அகலமும் நீரின் உள என்னும் பரிபாட்டானும் (4 30) தோற்றம் வெளிப்படுதல் அகலம் பெருமைஎன்னும் பரிமேலழகர் உரையானும் இப்பெருமைப் பொருள் அகலத்திற்கு உண்மை அறியப் பெறும். அகலப் பண்புச் சொற்களைத் தொகுத்து, அகறல் பாழி ஆய்வு பரப்பு அகலுள் கண்ணறை படர்தல் வியலிடம் ஆன்றல் பயன் நனவு விரிவு மேல்நனி என்றிவை அகலம் என்பர் அறிந்திசி னோரே என்பார் திவாகரர் (திவா. 8 அகலம்). மேலும் நீள்தலுக்கு எதிராய், அகலுதல் அகலம் எனக் கொள்க. நீள அகலப் பரப்பே பரப்பெனும் கணக்கியல் புதுவது அன்றே. அகல் என்பது உள், கண், இடம், தலை, என்னும் இடப் பொருள் சொற்கள் ஏற்று, அகலுள், அகன்கண், அகலிடம், அகன்றலை என்றாகித் தெரு, ஊர், நகர், உலகம் ஆகியவற்றைக் குறித்தலும், அடைமொழியாகி நிற்றலும் ஆயின. அகலுள் ஆங்கண் - குறிஞ்சி, 4; மலை. 438 அகலுள் மங்கல அணி எழுந்தது - சிலப். 1 47 அகன்கண் வரைப்பு - கலித். 115 18 அகலிடப் பாரம் அகல நீங்கி - சிலப். 30 180 அகன்றலை நாடு - புறம். 69 89 என வருவன அறிக. அகலுள் அகன்ற உள்ளிடத்தை யுடைய பேரூர் அகலுள் எனப்படும். பழநாளில் புகார் நகர், பட்டினப்பாக்கம், மருங்கூர்ப்பாக்கம் துறைமுகம், அரண்மனை, குடியிருப்பு என விரிந்து இருந்தமை யால் அகலுள் எனப்பட்டது. அகலுள் மங்கல அணியெழுந்தது - சிலப். 1 47 அகல் அகல் என்பது பல பொருள் தரும் ஒரு சொல்; அதன் பொருள்கள் அனைத்தும் அகலுதல் அடிப்படையில் அமைந்தவையாம். அகல் வயல் (முருகு. 72) அகல் வானம் (மதுரைக். 32) அகல் யாறு (கலித். 34), அகன்மலை (அகம். 171) அகன்மார்பு (புறம். 255), அகனகர் (மணிமே. 28, 198) அகனாடு (புறம். 249), அகல் ஞாலம் (கலித். 39) என வருவனவற்றைக் காண்க. அகநகர், அகநாடு எனின் நகரின் உள், நாட்டின் உள் என உட்பகுதிகளை (அகப்பகுதிகளை)க் குறிக்கும். அகல் என்பது பெயர்ச்சொல்லாய், அகன்ற சட்டி, அகல் விளக்கு, அகல் என்னும் ஓர் அளவை ஆகியவற்றைக் குறிக்கும். காரகல் கூவியர் பாகொடு பிடித்த -பெரும். 377 ஐயகல் நிறைநெய் சொரிந்து - நெடுநல். 102 என்பவற்றில் சட்டியும், அகல் விளக்கும் சுட்டப் பெற்றுள. அகல் என்னும் அளவைப் பெயர் ஒன்றை உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். (தொல். தொகை. 28) அகல் என்பது அகல்வு, அகலல், அகலுகை, அகற்சி, அகற்றம் என்று ஆகியும் அகலுதல் பொருளே தரும். 1. உள்ளகல் வுடைத்தாய் - பெருங். 1,49 59 2. எயிலது அகற்றமும் - பெருங். 3 14 25 அகல் = அப்பால் போ; அகன்று போ; ஏவல், வழியில் நிற்பாரையோ, நெருங்கி நிற்பாரையோ அகல் எனக் கட்டளை இடுதல் உண்டு. அகவல் மயில் கூவுதல், அகவுதல் ஆகும். அகமகிழ்வில் அழைக்கும் அழைப்பில் அகவுதல் > அகவல் ஆயது! போர்க்களத்தில் வீரரைப் போரிட்டு அழைத்துப் போரிடல் உண்டு, அவ்வாறு செய்வார் அகவுநர் எனப்பட்டார். அகவல் ஒலிபோல் அமைந்து இயற்றளைப் பாடல் அகவல்பா எனப்பட்டது. நால்வகைப் பாக்களும் பிரிவும் எண்ணப் படினும் அகவல், வெண்பா என்னும் இருவகைப் பாவுள் அவை அடங்கும் என்பார் தொல்காப்பியர் (1364). வெண்பா கட்டு மிக்கது. அகவல் ஓடிய ஓட்டத்தில் பாடுவது. ஆதலால், ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க அகவல் நடையைக் கொண்டனர். அதனால் ஆசிரியப்பா எனப்பட்டது. நூல் என்பது இலக்கணம் பற்றியது என்பது பழமரபு. ஆசிரியர் தொல்காப்பியர் பாவகையை நூலினான, உரையினான என எண்ணுவார் (1421). நூலுக்குரிய பாவாக அகவல் ஆளப் பட்டது. அதனால் அதனை நூற்பா என வழங்கினர். அகவல் பாவால் அமைந்த நூல் அகவல் எனப் பெறும். பல வகைப் பாடல்கள் அமைந்திருப்பின் அதனை அகவல் என வழங்கப் பெறுவது இல்லை. ஒரேயொரு நெடிய அகவலால் அமைந்த ஒரு நூல் வகையே அகவல் எனப் பெறும். வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் 1596 அடிகளைக் கொண்டது. மாணிக்கவாசகர் அருளிய கீர்த்தித் திருவகவல், போற்றித் திருவகவல் என்பனவும், கபிலர் பாடிய கபிலர் அகவலும் அகவல் நூல் வகைக்கு எடுத்துக் காட்டுகள், நம்மாழ்வார் பாடிய திருவாசிரியம் அகவலே. பத்துப்பாட்டுள் பட்டினப்பாலை நீங்கலாக எஞ்சிய ஒன்பதும் அகவற்பாவால் அமைந்த நூல்களே எனினும் அக்காலத்து அகவல் என ஒரு நூல் வகை, எண்ணப் பெறவில்லை யாதலின் அவற்றைப் பாட்டு என்றே வழங்கினர். அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதியவாறெல்லாம் வரையாது சொல்வதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கின் உள்ளார் அழைத்தல் என்றும் சொல்லுப; அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும்; அவை, தச்சுவினை மாக்கள் கண்ணும், களம்பாடும் வினைஞர் கண்ணும், கட்டுங் கழங்குமிட்டு உரைப்பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசல் இசைப்பார் கண்ணும் கேட்கப்படும். fH§»£L ciu¥gh® m§‡dnk tH¡»‹ cŸsjhŒ¡ TW« Xir MáÇa¥gh vd¥gL« v‹wthW.”(bjhš. பொருள். 393. பேரா.) அகவன் மகள் அகவன் > அகவல் + மகள் = அகவன் மகள். தெய்வத்தைக் கூவிக் கூவி அழைத்துக் குறி சொல்லும் மலைவாணர் மகள் அகவன் மகளாம், கட்டுவிச்சி என்பதும் அவள் பெயர். அகவிக் கூறலின் அகவல் ஆயிற்று(தொல். செய். 81. நச்.). கட்டும் கழங்குமிட்டு உரைப்பார்(தொல். செய். 81. பேரா.) அகவல் கூறி அழைத்தல். அது, சிற்றிலக்கியங்களில் குறம் என வரும் * அகவல் காண்க. அகவாய் அகம் + வாய் = அகவாய்; உள்வாய் வாயின் உள்ளகம் அகவாய் எனப்படும். அண்ணாக்கு உண்ணாக்கு என்பவை போல் உள்வாய் ஆயது. அஃது அகவாயாம். வாய் = இடம், அகம் = உள். உள்வாய் என்பதும் அது. ஏரி, குளம், கண்வாய் என்பவற்றின் உள்வாய் நிலப்பகுதி அகவாய் எனப்படும். அகவிலை அகம் + விலை = அகவிலை அகம் = அஃகம் > அக்கம் > அகம், அக்க விலை > அகவிலை. அக்கம் = தவசம். அஃகம் சுருக்கேல்- ஆத்திசூடி . அக்கம் உணவுப்பயிர். ஆதலின் அதனைக் குறையாமல் விளைவிக்க வேண்டும். அக்கத்தின் விலை மிகாமல் பார்த்துக் கொள்ளல் அரசின் கடமை. தவசப் பயிர் விளைவு குறைந்தால் விலை கூடி மக்கள் துயரப்பட நேரும். ஆதலால் தவசப் பயிரை மிகப் பெருக்கினால் அகவிலை மிகாமல் இருக்கும். இப்பொதுப் பொருள் இதுகால் மாறி அகவிலை என்பது மிகுவிலை என்னும் பொருள் கொண்டது ஆயிற்று. அவ்வகவிலையும் தாறுமாறாக ஏறிய நிலையில் மிகுவிலைப் பொருள் தருவதாயிற்று. இந்நாளில் D.A. எனப்படும் பஞ்சப் படியை, அகவிலைப்படி என வழங்குதல் நேரிதெனப் பாவாணர் குறித்தார். அருந்தற்படி என்பதும் அதுவே. அருந்தல், பொருள் விலை ஏற்றத்தால் வாங்குதற்கு அரிய தட்டுப்பாடு. அருந்தல் ஆயிற்று. அரிது, அருமை என்பவற்றின் அடியாதலும் கிடைத்ததற்கு அருமை பற்றியதே. மற்றும் அருந்தல் உண்ணுகை யாதலால் உணவு இல்லாமல் உயிர்வாழ இயலாததால் இன்றியமையா அதற்கு உதவும் தொகை அருந்தல் படி எனவும் தகும். அகவை அகம் (அக) + வை =அகவை. இத்தனை ஆண்டுகளுக்கு உட்பட்டது என்பது அகவை. ஈராறாண்டு அகவையாள் - சிலப். 1 24 ஈரெட்டாண்டு அகவையான் - சிலப். 1 34 கண்ணகியும் கோவலனும் பன்னிரண்டு ஆண்டுக்கும், பதினாறாண்டுக்கும் உட்பட்டவர் என்பதாம், 79ஆம் ஆண்டு நிறைத்து 80ஆம் ஆண்டு தொடங்கிய நாளே எண்பதாம் அகவை என்பது வழக்காகும். 95 உருபா என்று இருந்தால் காசோலையில் நூற்றுக்கு உள்பட்டது என்று குறியீடு செய்வது போன்றது இது. அகழெலி அகழ் எலி; அகத்தே (உள்ளே) குடைந்துறையும் எலி, நிலத்தை அகழ்தலும், சுவரை அகழ்தலும் செய்து வாழிடம் அமைப்பது அகழெலி. இல்லெலி மடிந்த தொல்சுவர் - புறம். 211 அகழான் என்பதும் அது .அகழ் + ஆன் = அகழான், ஆன் = சொல்லீறு, கறையான் என்பதிலுள்ளது போல. அகழ் அகம் = உள்; அகழ்தல் = உள்ளே தோண்டுதல் உள்ளாவது நிலம், மலை ஆயவற்றின் உட்பகுதி. அகழ்வாரைத் தாங்கும் நிலம்என்பது வள்ளுவம் (151) அகழும் எலி அகழான் எனவும், அகழெலி எனவும் வழங்கப்படும். பன்றி நிலத்தை அகழ்ந்து கிழங்கெடுத்துத் தின்னுதலைக் கண்ட மாந்தர் தாமும் அகழக் கற்றுக் கொண்டுளர். உழுதலையும் படிப்படியே அறிந்து கொண்டுளர். தோண்டும் தொழிலுக்கு அகழ்தல் எனப் பெயர் சூட்டினர். பன்றி கிழங்கு தோண்டுதலைக் கிழங்ககழ் கேழல் என்கிறது ஐங்குறுநூறு (270) மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழி என்கிறது சிலம்பு (10 68) மற்றை எலிகளுக்கும், மிக ஆழமாக அகழ்ந்து சென்று வளையை அமைத்துக் கொள்ளும் எலியைக் கூர்ந்து கண்டு அகழான் என்றனர். மென்னிலம் வன்னிலம் ஆகிய எந்நிலத்துத் தோண்டுதலும் பொதுவில் அகழ்தலாக இருந்தது. மலை அகழ்க்குவனே - பட். 271 இது வன்னிலத்தகழ்தல். மேலும், வன்னிலத்து அகழ்தல் கல்லுதல் எனப்பட்டது. கல்லுவென் மலைமேலும்என்பார் கம்பர் (அயோத். கங். 71) கிழங்கு கல்லி எடுப்போம் குறவஞ்சிப் பாடல் (மீனாட். குறம் 18). இது மென்னிலத்தது. ஆதலால், அகழ்தலும் கல்லுதலும் பொதுவில் தோண்டுதல் பொருளில் வழங்கியமை புலப்படும். கல்லுதல் கிள்ளுதலாகியது பின் வரவு. கிழங்கு கிள்ளுதல் என்பது திருக்குற்றாலக் குறவஞ்சி (44) தோண்டுதல் பொருள் தரும் சொற்களைத் திவாகரம் கூறுகிறது சூறல் சூன்றல் தோண்டலாகும் தொட்டலும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே - திவா. 9 பிங்கலமும் இவ்வைந்து சொற்களையே கூறுகிறது. கல்லுதலும் கிள்ளுதலும் இவற்றில் இடம் பெறவில்லை. நிலம் கிள்ளுதல் பொதுமையுற்று இலையைக் கிள்ளுதல் தோலைக் கிள்ளுதல், ஓலையைக் கிள்ளுதல் என விரிந்தது. கிள்ளுவது. கிள்ளை (கிளி) கிள்ளி எடுத்த ஓலை கிள்ளாக்கு. அகழ்தலால் அமைந்த இடம் அகழ் எனப்பட்டது. அவ் வகழ் இயற்கையாக அமைந்தனவும். செயற்கையாக அமைக்கப் பட்டனவும் என இருவகைப்பட்டன. நிலத்தை அறுத்துக் கொண்டு சென்ற நீர், தேங்கி நிற்றலால் தேக்கம், குண்டு, குழி, குட்டை, கிடங்கு, கடல் என்பவை ஆயின. மக்கள் தம் பயன்பாடு கருதி அகழ்ந்து ஆக்கியவை கிணறு, கேணி, ஏரி, கண்வாய், ஏந்தல்,அகழி, இலஞ்சி, பொய்கை எனப் பலவாயின. அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை - மலை, 214 என்பது இயற்கை அகழ்வு. நீர் நசைஇக் குழித்த அகழ்சூழ் பயம்பு - பெரும். 108 என்பது செயற்கை அகழ்வு அகழ்தற்கு இப்பொழுது மிகப்பெரியதும் வலியதுமாம் பொறிகள் கண்டு பிடிக்கப்பட்டுள. இழுவடப் பொறி (Dragline Machine) அள்ளுபொறி (Grab) அகப்பைப் பொறி (Skinner), எனப்பல உள, ஆனால் நம் முந்தையர் அரிதில் முயன்றே அகழ்ந்தனர். அவர்கள் அகழ்தலுக்கு உளி, எஃகம், பார் என்ப வற்றைப் பயன்படுத்தினர். நிலன் அகழ் உளியன் - சிலப். 16 204 செவ்வாய் எஃகம் வளைஇய அகழின் - பதிற். 33 பாருடைத்த குண்டகழி புறம். 24 என்பவற்றால் அக்கருவிகளை அறியலாம். உளி கொண்டு அகழ்தலைப் போல அகழ வல்ல நகத்தையுடை கரடியை உளியம் என்றனர். பாரையை உடைக்க வல்ல கம்பியைக் கடப்பாரை என்றனர். குத்தி எழுப்பி வாங்குதற்குரிய கருவியை எஃகம் என்றனர். எக்குதல் எழும்புதல் என்பவை. மேலெழுச்சியைக் குறிக்கும். மிதி எஃகி என நீர் அள்ளி வரும் மிதி பொறி ஒன்றும் உண்டு. அரசர்கள் வாழ்மனை அரண்மனை எனப்பட்டது. வலிய கட்டடம் உயரமும் மிகுதி; கட்டுக்காவலும் அப்படி! ஆதலால் அரண்மனை எனப்பட்டது. அவர்கள் கண்ட அரண்வகை நான்கு மலையரண், காட்டரண், மதிலரண், நீரரண் என்பவை அவை. நீரரண், ஆறும் கடலும், அகழும் என்பன. அகத்தரணாம் மதிலுக்கும், புறத்தரணாம் காவற்காட்டுக்கும் இடையே அமைந்தது நீர் அரணாகிய அகழாகும். அகழ், ஆழமும் அகலமும் மிக்கதாக இருந்தது. அதில் நீர் பாய்ச்சினர். அதனை அகழி பாய்ச்சுதல் என்றனர். அவ்வழக்கச் சான்றாக இந்நாளில் கம்பிகள் நாட்டிக் காப்பரண் செய்வது அழிப்பாய்ச்சுதல் என்படுகின்றது. அகழில் நீர் பாய்ச்சுவது எதற்காக? பகைவர் அகழுள் இறங்கக் கூடாது என்பதற்காக முதலை, கராம், கெடிறு முதலிய நீர் வாழிகளை வளர்ப்பதற்காகவே நீர் பாய்ச்சினர். இவற்றை, நிலவரை இறந்த குண்டுகண் அகழி - புறம். 21 அருமிளையுடுத்த அகழி - சிலப். 13 183 இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த விலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழி - சிலப். 14 66-7 என்பவற்றாலும் உயிரிகள் ஆங்குள்ளமையை கோள்வல் முதலைய குண்டுகண் அகழ் - பதிற். 53 குரூஉக் கெடிற்ற குண்டகழி - புறம். 18 கராஅம் கலித்த குண்டுகண் அகழி -புறம்.37 என்பவற்றாலும் அறியலாம். அகழ் நீர்ப் பெருக்காலும் மதிலைச் சூழ்ந்திருந்தலாலும் கடலுக்கு உவமையாகக் கூறப்பட்டது. சில குளங்களும் ஏரிகளும் கடல் என்றும் மாகடல் (சமுத்திரம்) என்றும் பெயர் பெற்றன. எ-டு: அம்பாசமுத்திரம் பொங்குமாகடல் இவ்வுவமையால் கடலுக்கும் அகழி என்றொரு பெயர் உண்டாயிற்று. அகழ்கடல் ஞாலம் - சிலப். 28 12 வேலை அகழால் அமைந்த அவனி - சிலப். 10 வெண். நிலத்தைப் பெண்ணாக்கி அவள் உடுக்கும் உடையாகக் கடலைக் கூறும் வழக்கும் ஏற்பட்டது. அவ்வாறே அகழையும் நகர்க்கு உடையெனக் கூறும் வழக்கும் உண்டாயிற்று. அகழ் உடுத்து - மணிமே. 28 22 அகழ்தல் அகழ்வு என்றும் ஆகும். அகழ்வு தொல்பொருள் துறையில் வழங்கப் பெறும் கடப்பாட்டுச் சொல். அத்துறையினர் ஆய்வு. அகழ்வு ஆய்வே ஆகும். அகழ்ந்து ஆங்குப் புதையுண்டு கிடக்கும் தொல் பொருள்களை எடுத்து ஆய்ந்து துலக்குதல் அதன் பணியாம். அகழ்தல் என்பது நீளம் அகலம் என்பவற்றொடு ஆழம் என்பதும் உடையதாகும். ஆதலால், அகழ் என்பதில் முதல் நீண்டு ககரம் கெட்டு ஆழ் என்னும் வடிவம் பெற்றது. ஆழ்கடல் ஞாலம் - சிலப். 22 52 நிலத்துக்குக் கண்ட ஆழம் நீர்க்கும் விரிந்தது. மேலும் எண்ணத்திற்கும் விரிந்தது. நீராழம் கண்டாலும் நெஞ்சாழம் காண முடியுமா?என்பது பழமொழி. ஆழ்கென் உள்ளம் - புறம். 132 ஆழ் நரகுஎன நிரயத்தைக் குறிக்கிறது . - மணிமே. 30 50 ஆழ்தல், ஆழ்வு ஆழ்ச்சி என்றும் ஆகும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி - புறம். 60 பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி - புறம். 90 மலருள் வண்டு புகுதலைத் தோட்டாழ்வு சுரும்புண என்கிறது அகப்பாட்டு (161) ஆழ்ந்த பற்றுமையால் இறையன்பின் ஆழத்துள் ஆழமாய் ஆழ்தலால் ஆழ்வார் எனப் பெற்றனர். நிலத்தை அகழ்ந்து உள்ளே குடியிருப்பு (புற்று அமைத்து)க் கொள்ளும் கறையான் பெயர்களுள் ஒன்று ஆழல். ஆழல் புற்றம் - புறம். 152 ஆற்ற அகலா அருந்துயரை. ஆழ்துயர் என்பர். அத்துயருற்றார் மெய்ப்பாடு அழுகை. ஆதலால் ஆழல் என்பது அழுகைப் பொருள் தந்தது. காட்சிப் பொருளாகிய ஆழம் கருத்துப் பொருளாய் என்னை ஆழம் பார்க்கிறான்என வழக்காயிற்று. ஆழமுடைத் தாதல் என்பது நூலுக்குரிய பத்து அழகுகளுள் ஒன்றாம் (நன். 13) நீரில் ஆழ்தல் ஆகிய மூழ்குதல் போலக் கவலையில் ஆழ்தலும் இயல்பாயிற்று வேலையே குறியாய் ஆழ்தலும் வழக்காயிற்று. அகழ், ஆழி என்பவை வட்டம் வலையம் ஆகிய பொருள் தந்தமையால் ஆழி என்பது விரலணியின் பெயராயிற்று வணிகருள் சிறந்தார்க்கு ஏனாதி என்னும் பட்டம் வழங்கி அதற்குச் சான்றாக வீரமணி வழங்கியதை ஆழி தொட்டான் என்பர். (சீவக. 2167) ஆழி சூழ்ந்த ஒரு மலை ஆழிமால் வரை (சக்கரவாளம்) என்பதும், காமனின் கடல் ஆகிய முரசு, ஆழிமுரசு என்பதும். திருமாலின் கைப்படையை வழங்கிய சிவனை ஆழிப்படை அருளியவன் என்பதும். அதைக் கொண்ட திருமாலை ஆழியங்கையன் என்பதும் தொன்மச் செய்திகள். பிரிந்து சென்ற தலைவன் வருதற்குறி யறியக் கூடல் இழைத்தல் மகளிர் வழக்காகும். கண்ணை மூடிக்கொண்டு மணலில் வட்டமிட வட்டம் ஒட்டின் வருவான் என்பது அது. அதனை ஆழி இழைத்தல்என்றனர். புத்தரின் தருமசக்கரம் அறவாழியாம். வள்ளுவம் (8) இறையை, அறவாழி அந்தணன் என்னும். அகளங்கம் அல் + களங்கம் = அகளங்கம்; லகர ஒற்றுக் கெட்டது. மனமாசின்மை என்பது அது. அஃதறம் என்பது வள்ளுவம் (34) அகளங்கன் = மன மாசில்லான். போர்வேல் அகளங்கா என்பது ஔவையார் தனிப் பாடல். புத்தர் பெயர்களுள் ஒன்று. அகளங்கன் அல் + களங்கன் = அகளங்கன் = கறை அற்றவன். களங்கம் = கருமை, கறை, குறை கள் = கருமை. புத்தன் பெயருள் ஒன்று அகளங்கன். உயர்ந்தோனை விளிக்கும் பெயர் அகளங்கா என்பது. அஞ்சொற் கிளிகள் பஞ்சரம் விட்டகலா துறையும் அகளங்கா என்பது அந்தகக் கவி வீரராகவர் இயற்றிய தனிப் பாடல்களுள் ஒன்று. அகளம் அகளம் 1 அகலம் > அகளம் = பெருந்தாழி, மிடாப்பானை, நீர்ச்சால். அகளத் தன்ன நிறைசுனை - மலை. 104 அகளம் 2 யாழ்ப் பத்தர். வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்து - சிறுபாண். 224 பொருள்: தாழிபோலப் புடைபட்டிருத்தலின் அப் பெயர்த்து (நச். உரை). அகளி என்பதும் அது அப்பங்கும் அப்பங்கும் ஓரகளி பெய்ததற்பின் - தைல. தைலவ. 94 (த.சொ.அ.) அகளி = மிடாப் பானை. அகறல் அகறல், அகற்சி என்பவை அகலல், விரிதல், பெருகல், பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் முதலிய பொருள்களைத் தரும். இவை ஒன்றற்கு ஒன்று தொடர்பாகவும், வளர்ச்சியாகவும் அமைந்த சொற்களே. இவ்வனைத்துப் பொருள்களுக்கும் அடிப்படை. அகலல் தன்மையே! இவற்றுள் அகலல், விரிதல், பெருகல் என்பவை ஒரு தொடர் பெற்றனவும், பிரிதல், கடத்தல், நீங்கல், ஒழிதல் ஒரு தொடர் பெற்றனவும் ஆகும். முன்னவை அகலிப்பையும் பின்னவை அகலிப்பால் இடையறவுபட்டும் ஒழிந்தும் போதலையும் இடனாகக் கொண்டவை. களிறு சென்று களன் அகற்றவும் - புறம் 26 அறிவகற்றும் ஆகல் ஊழ் - திருக். 372 என்பவற்றில் வரும் அகறல் அகலிப்பை உணர்த்துவன. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே - தொல். 984 தெவ்வுப் புலம் அகற்றி - சிறுபாண். 246 ஐயறிவு அகற்றும் கையறு படர் - அகம். 71 என்பவற்றில் இடையறவு படலும், ஒழிதலும் பொருளாக அகறல் வந்தன. இவ்வகறல் பண்பு, பருப்பொருள் நுண்பொருள் இரண்டிற்கும் இயையப் பெருகி வருவனவாம். மென்தோள் அகறல்என்பது (திருக். 1325) பருப்பொருள் அகற்சியாம். தெவ்வுப் புலம் அகற்றிஎன்றலும் இதுவே. அறிவு, வறுமை, துன்பு, இருள் ஆகியவற்றை ஒழித்தல் நுண்பொருள் அகற்சியாம். ஐயறிவகற்றும் கையறு படர் - அகம். 71 என்பது அறிவு அகற்றல். இலம்பாடு அகற்றல் யாவது -புறம். 381 நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி - புறம. 337 என்பவை வறுமை அகற்றல். இனையல் அகற்ற - புறம். 377 இரும்பே ரொக்கல் பெரும்புலம்பு அகற்ற - புறம். 390 என்பவை துன்பு அகற்றல். குணக்கெழு திங்கள் கனைஇருள் அகற்ற - புறம். 376 ஆரிருள் அகற்றிய மின்னொளிர் - அகம். 272 எஃகிருள் அகற்றும் ஏமப் பாசறை - புறம். 397 ஒளிதிகழ் திருந்துமணி நளிஇருள் அகற்றும் - புறம். 172 அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் -புறம். 56 என்பவை பல்வேறு வகைகளில் இருள் அகற்றலாம். அறியாமை, வறுமை, துன்பம், என்பவை உள்ளிருள் அல்லது அகஇருள் என்பதும், ஏனை இருள் புறவிருள் என்பதும் காண்க. அவ்வாறே, அறிவு உள்ளொளி என்பதும் ஏனைக் கதிர்களும் பிறவும் புறவொளி என்பதும் அறிக. ஒளி அகல அகல (விரிய விரிய) இருள் அகலும் (ஒடுங்கும், நீங்கும்) என்பதும், அவ்வகற்றுதலே உலகை உய்விக்கும் என்பதும், ஒரு கொம்பில் பழுத்த நல்ல கனியும் நச்சுக் கனியும் போல அகற்சியும் அழிவும் உள என்பதும் இச்சொன் மூலம் கொண்டு தெளிக. அகற்றுதல் - ஆற்றுதல் அகற்றுதல் என்னும் சொல் ஆற்றுதல் எனத் திரியும். அதன் அகரக் குறில் நெடிலாக நீண்டு ககரம் கெட்டு ஆற்றுதல் என அமையும். அகற்றுதல் பொருண்மையே, ஆற்றுதல் பொருண்மையாயும் நிலைக்கும். வெந்நீர், காய்ச்சுப் பால், தேநீர் முதலியவற்றை ஆற்றிக் குடிக்கிறோம். நீரிலும் பாலிலும் தேநீரிலும் இருந்த வெப்பத்தை வேண்டும் அளவுக்கு அகற்றுதலே - தணித்தலே - ஆற்றுதலாம் என்பது வெளிப்படப் புலப்படும் தெளிவான செய்தி. ஒருவர் நோய்வாய்ப் படுகின்றார். அவர்தம் நோயை நோய்க் கூறு அறிந்து அகற்ற வல்ல மருத்துவர் தக்க மருத்துவத்தால் அகற்றுகிறார். ஆதலால் அதுவும் ஆற்றுதலாம். இனி, ஒருவர் அல்லல்பட்டு, ஆற்றாராய் அலமருகின்றார். அவர்தம் அல்லலை அவரே தம் தெளிவால் அகற்றிக் கொள்ள மாட்டாராய்த் துன்புறுகிறார். இந்நிலையில் உளவியல் அறிந்து உற்றுழி உதவும் உழுவலன்பரோ மனநோய் மாற்றவல்ல திறம் வாய்ந்த அறிஞரோ அவர்தம் மனத்துயரை அகற்றுகின்றார். அதுவும் ஆற்றுதலேயாம். இவற்றால் அன்றோ தம் துயரையும் பிறர் துயரையும் தணிக்கும் திறம் இலாரை, ஆற்றமாட்டாதவர் என உலகம் பழித்து ஒழிக்கவும் இழித்துரைக்கவும் துணிகிறது. ஆற்ற மாட்டாதவரை, ஆற்றா மாக்கள் என்றும் ஆற்றாதார் என்றும் இலக்கியமும் கூறலாயிற்று. ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - மணிமே. 17; 64. 19:35; ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் - மணிமே. 11. 92, 93. ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - நாலடி. 98 என்பவற்றைக் காண்க. தேற்றுதலால் அமையும் தேறுதல் போல, ஆற்றுதலால் அமைவது ஆறுதலாம். தீயினால் சுட்டபுண் உள்ளாறும் - திருக். 129 ஆறுவது சினம் - ஔவை ஆத்தி. என்பவை ஆறுதல் காட்சிகளே. இவ்வாறுதல் அனைத்தும் அகற்றும் வழியாக வந்தவையே, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதுகிறான். அதனைக் குறிப்பால் அறிந்து கொண்ட தலைவி வருந்துகிறாள். தலைவன் அவளை ஆற்றிப் பிரிவுத் துயர் அகற்றிப் பிரிகிறான். தலைவி தன்பிரிவை அறியின் வருந்துவள் அதனைத் தாங்குதற்கு அரிதுஎன்று எண்ணித் தலைவன் அவள் அறியாமல் பிரிவதும் உண்டு. அந்நிலையில் அவன் ஆற்றாது துயர் அடைவாள். அவள் தன் ஆருயிர்த் தோழி ஆற்றுவிப்பார். ஆறியிருப்பாள் தலைவி. இவ்வாறாக அகப்பொருள் இலக்கண இலக்கியங்களின் வரும் ஆறுதல், ஆற்றுதல் என்பனவெல்லாம் இவ்வகற்றுதல் வழி வந்த சொற்களே. பசித்துக் கிடக்கும் ஒருவனுக்கு அவன் பசியாற ஒருவன் உணவு படைக்கிறான். பசியாறி மகிழ்கிறான் பசியுற்றவன். கடுவெயிலில் நெடுவழி நடந்தவன் காலாறிக் கொள்கிறாள். அவ்வாறுதல்கள் அகலுதல் வழிவந்தவையே முன்னதில் பசியகலுதல், பின்னதில் வெப்பமும் வலியும் அகலுதல். இறந்தவர் உடலுக்கு எரியூட்டிய மறுநாள் செய்யும் ஒரு சடங்கு தீயாற்றுதல், என்பது பெயர். எரிந்து பட்டுக் கிடக்கும் பொடியின் மேல்நீர் தெளித்து வெப்பம் அகற்றிச் செய்யும் கடனே தீயாற்றுதல். இவ்வாறு அகற்றுதலே ஆற்றுதலாக எண்ணற்ற வழக்கங்கள் உண்மை அறிக. ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்குதவுதல் - கலித். 133 பொருமுரண் ஆற்றுதல் - நாலடி,.149 அருநவை ஆற்றுதல் - நாலடி.295 என்பவற்றை நோக்குக. அகன் அகன்: அகம் = வீடு; அகன் = வீட்டுக்குரியவன்; கணவன். அகத்தன் என்பவனும் அவன். மனத்தகத்தனும் மணத் தகத்தனும் இல்லகத்தனும் அவன். ஆதலால் அகன், அகத்தன் ஆனான், அதன் பெண்பாற் சொல் அகத்தள். அகன்றது, அகண்டது அகலமாக அமைந்தது அகன்றது. அகழ்ந்து விரிவாக அமைந்தது அகண்டது. அல்கண்டம் > அகண்டம்; துண்டிக்கப் படாதது; விரிந்தது. கண்டம் = துண்டிக்கப்பட்டது. ஆசியாக் கண்டம்; உப்புக் கண்டம். அகன்றோர் - ஆன்றோர் அகன்ற, அகன்று என்பவை ஆன்ற, ஆன்று என்றும், அகன்றோர் என்பது ஆன்றோர் என்றும் வழங்கும். அறிவு, கேள்வி முதலியவை விரிவும், அமைதியும் நிறைவும் உடையன. ஆகலின், அவ்வகற்சிப் பொருள் அடிப்படையில் ஆன்ற அறிவு ஆன்ற கேள்வி எனப் பெற்றன. ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை - பதிற். 57 ஆன்ற அறிவும் - திருக். 1022 என்று அறிவும். ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம். 26 பல்லான்ற கேள்விப் பயனுடையார் - நாலடி. 106 பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் - நாலடி, 256 என்று கேள்வியும் குறிக்கப் பெறுகின்றன. குடிவரவும், பெருமையும் அகன்ற சீர்மைத்தாகலின், அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் - திருக். 681 ஆன்ற பெருமை - திருக். 416 ஆன்ற பெரியர் - திருக். 694 ஆன்ற மதிப்பும் - நாலடி. 168 எனச் சுட்டப் பெறுகின்றன. இனிக் கற்பு, ஒழுக்கம், முதலியனவும் அகன்ற புகழுக்குரியன வாகலின், ஆன்ற கற்பில் சான்ற பெரியன் - அகம். 198 ஆன்ற ஒழுக்கு - திருக். 148 ஆன்ற துணை - திருக். 862 ஆன்ற பொருளும் - திருக். 909 எனப்பெற்றன. அருவி அண்மையில் இல்லாமல் அகன்ற இடம். அருவி ஆன்ற நீரில் நீளிடை - நற். 137 அருவி ஆன்ற அணியில் மாமலை - மதுரைக். 306 அருவி ஆன்ற பைங்கால் தோறும் - அகம். 78 அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் - அகம். 185 எனப் பெற்றுள. இவ்வாறு ஆன்ற அகற்சிப் பொருளிலே வந்தவை பிறவும் கொள்க. இவ்வாறே ஆன்று என்பது. ஆன்றடங்கு அறிஞர் - மதுரைக். 481 ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் - புறம். 191 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான். - திருக். 635 என்றும், பாடான் றிரங்கும் அருவி - புறம். 124 பாடான் றவிந்த பனிக்கடல் - மதுரைக் .629 நிழலான் றவிந்த நீரில் ஆரிடை - குறுந். 356 மாரியான்று மழை மேக்கெழு - புறம். 143 பெயலான் றமைந்த தூங்கிருள் - அகம். 158 மூன்றுலகும் ஆன்றெழு - சூளா. 137 என்றும், வருவன கொண்டு ஆன்று இப்பொருட்டதாதல் கண்டு கொள்க. இனி ஆன்றோரைக் காண்போம். உயர்ந்த மாந்தர் என்பதை முன்னவர் அறிவாலும் பண்பாலும் உரையிட்டுக் கண்டு தெளிந்த முடிவாக, ஆன்றோர், சான்றோர் எனப் பெயரிட்டு வழங்கினர். இந்நாளில் இவற்றின் உண்மைப் பொருள் விளக்கம் பெறக் காணாராய் வேறுபாடற வழங்குவாராயினர். வழங்குதலிலும் மூலப் பொருள் காணாமலும் முட்டுப்பாடுறுவாராயினர். இச்சொற்களில் அடிப்பொருள் தெளியின் ஐயம் அகன்று உண்மை விளங்கும். அறிவின் இலக்கணத்தை வள்ளுவனார் நுண்மை, விரிவு, ஆழம் என முக்கூறு படுத்துக் கூறினார். நுண்மாண் நுழைபுலம் - திருக். 407 அறிவின் முக்கூறுகளுள் நடுவணது அகற்சியாம். அதுவே தலைமையானதுமாம்! நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்பது இவ்வறிவுப் பொருளுக்கும் பொருந்துவதாம், ஆழ்தலும் நுணுக்கமும், அறிவின் அகற்சியால் ஆம் என்றும், அகற்சிக்கு ஆழ்தலும் நுணுக்கமும் அருந்துணையாம் என்றும் எளிதின் நோக்கினும் தெளிவாம். ஆகலின், அகன்று விரிந்த அறிவாளர் களை அகன்றோர் என்றனர். அகன்றோர் பின்னே ஆன்றோர் ஆயினர். அறிவிற்குச் சிறப்பு அகலுதல் போலவே, பண்புக்குச் சிறப்பு, நிறைவு ஆகும். மிகுதலும் அதுவே. இதனைக் கருதியே பண்பான் நிறைந்த பெருமக்களைச் சால்பின் அடிப்படையில் சான்றோர் என்றார். சால்பு = நிறைவு; மிகுதி. சால என்னும் உரிச்சொல் மிகுதிப் பொருள் தருவதாகலின் சால்பான் நிறைந்தோர் சான்றோர் எனப் பெயர் பெற்றனர். இவற்றால் ஆன்றோர்! சான்றோர் என்னும் சொற்களின் பொருள் நுணுக்கம் புலப்படும். அகன்ற அறிவினராம் சங்கப் புலவர்களைப் பண்டை உரையாசிரியர்கள் சங்கச் சான்றோர் என்றது என்னையோ எனின், அவர்கள். அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போற் போற்றாக் கடை - திருக். 315 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு - திருக். 422 என்பவற்றைப் போற்றி ஒழுகிப் பண்பாட்டின் கொள்கலங் களாகவும் அறத்தொண்டின் வழிகாட்டிகளாகவும் மிகப்பலர் இருந்தமையால் அவர்களைச் சங்கச் சான்றோர் என்றனர் என்க. அறிவினை, அகன்ற அறிவு எனக் குறிப்பிடும் வள்ளுவப் பெருந்தகையே. ஆன்ற அறிவு என்றும் வழங்குதல் இச் சொல்லின் மூலங்காட்டிய முறைமை என மகிழத்தக்கதாம். அஃகி அகன்ற அறிவு - திருக். 175 ஆள்வினையும் ஆன்ற அறிவும் - திருக். 1022 என்பவற்றைக் காண்க. ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றோன் - நற். 233 என்றது சான்றாண்மை இல்லானை எள்ளுதற்பட வந்த அங்கதம் ஆகும். ஆன்றோர் சான்றோர் இயல்புகள் தனித்தனித் தன்மைய வெனினும், ஆன்றோர் சான்றோராயும், சான்றோர் ஆன்றோரா யும் அமைதலே உலகுய்க்கும் வழியாகும். ஆகலின் அத்தன்மை புலப்படுமாற்றான். ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் - புறம். 191 என்று விரித்து விளக்கினர். உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர்என்று சான்றோர் தன்மையாய் ஆன்றோர் அமைதலையும் விளக்கிக் காட்டினர் (அகம். 123) அகன்ற அறிவாளரை ஆன்றோர், ஆன்றார், ஆன்றவர் என வழங்கினர். இச்சொற்களுக்கு அறிவுடையோர், தேவர், புலவர், நன்னெறியாளர் எனப் பல பொருள்களை அகர முதலிகள் குறிக்கின்றன. இவையெல்லாம் அகற்சி மூலத்துக் கிளைத்த பொருள்களே. அறிவான் அகன்ற பெருமக்கள் ஆன்றோர் எனப் பெற்றனர். ஆனால், தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் பிரிவு, அகற்சி எனப் பெறுமாகலின், அவ்வகற்சியாளன் அகன்றோன் எனப்பெற்றான். நின்றான், இருந்தான், கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் - நாலடி. 29 என்பது உலகியற்கை ஆகலின், இறந்து பட்டாரையும் அகன்றார் என்றனர். அவர் உற்றார், உறவு, வீடு, குடி அகன்று செல்பவர் ஆகலின் அப்பெயர்க்கு உரியர் ஆனார். புகையும் ஆவியும் காற்றும் மேலெழக் காண்கும் ஆகலின், இறந்தார் ஆவி மேலுலகு சென்றது என்னும் முடிவான் ஆவி வாழ்வினரை அல்லது தேவருலகு என்னும் விண்ணுலகு வாழ்வினரை, அகன்றார் என்றனர். இவ்வகன்றார்கள் எல்லாம் பொருள் வளர்ச்சிப் போக்கில் ஆன்றோர், ஆன்றார், ஆன்றவர் எனப் பெற்றனர் என்க. இவற்றுள் இடம் அகன்று பிரித்து சென்றார் மட்டும் மாறாமல், அகன்றோர் என்றே வழங்கப் பெற்றனர். ஏனையோர், ஆன்றோர் எனப் பெற்றனர். சேய்நிலைக்கு அகன்றோர் என்றார் தொல்காப்பியனார் (986), அவ்வாறு அகன்றவர் நாடு கடந்து சென்றார் ஆகலின். காடிறந்து அகன்றோர் என்றது அகம் (177) அவர்கள் செலவு நோக்கம் வெளிப்பட. ஆள்வினைக்கு அகன்றோர் - நற். 69 செய்பொருட்கு அகன்றோர் - குறுந். 190 என விளக்கினாரும் உளர். பிரிந்த நிலையை, ஏமம் செய்து அகன்றார் - குறுந். 200 காதல் செய்து அகன்றார் - கலித். 129 இனிய செய்து அகன்றார் - கலித் 129 உள்ளாது அகன்றார் - கார். 27 கம்பலை செய்து அகன்றார் - அகம். 227 என்று விளக்கினாரும் உளர். வளமை பெருகினார்என்னும் பொருளில் வள்ளுவர், அகன்றாரைக் குறிக்கிறார் ஓரிடத்து. அழுக்கற்று அகன்றாரும் இல்லை - திருக். 170 என்பது அது. அல்லிடை ஆக்கொண் டப்பதி யகன்றோன் என மணிமேகலை ஆபுத்திரனைச் சுட்டுகின்றது. (13.38) அறிவான் அகன்ற ஆன்றோர் நெறி, ஆன்றோர் செல்நெறிஎனப் பெறுகிறது நற்றிணையில் (233). ஆன்றோர் என்பது போல ஆன்றோள் எனப் பெண்பாற் குறியீடு உண்டு. ஆன்றோள் கணவ - பதிற். 55 என்பது அது. பொய்யறியாப் புகழாளர் ஆன்றோர் என்பதை. அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை எனக் குறுந்தொகை (184) குறிக்கிறது. தேவர் உலகை, ஆன்றோர் உலகம் என்று கலித்தொகை யும் (139) ஆன்றோர் அரும்பெறல் உலகம்என்று அகநானூறும் (213) கூறுகின்றன. அகாலம் அல் + காலம் = அகாலம்; பொருந்துதல் அல்லாத காலம். காலமல்லாக் காலம் அது அகாலத்தில் வந்து விருந்து, அகாலச் சாவுஎன்பவை மக்கள் வழக்கு. பிற்கால வழக்குச் சொல்லாகிய இது. அகாலத்தி லுன்னுடை யுடலைவிட நினைப்பதென்- பிரகலாத. 61 என ஞானவாசிட்டத்தில் இடம் பெற்றது (த.சொ. அ.) அகில் முகந்த நீரைப் பொழிவது முகில் ஆவதுபோல் அகத்து மணத்தைப் பரப்புவது அகில் ஆயது. அகில் பிறக்கும் இடத்தை. கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும் என்கிறது நான்மணிக்கடிகை(6). வயிறு அகமாம். வயிற்றகம் என்பதும் அது. அகில் கட்டையாதலாலும், அறுத்து எடுக்கப்படுதல். எரிக்கப்படுதல் ஆயவற்றாலும் - அகைக்கப்படுவதால் - அகில் எனப்பட்டதுமாம். அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திட லுயர்த்தலாமே- சூடா.11 7 புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது என்னும் நறுந்தொகை (26) அகிலியலைத் தெளிவிக்கும். அகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து - சிலப் 14 98,99 அகருவும் பூழிலும் அகிலென அறைவர் - திவா.மரப்.3 என்பதால், அகர் பூழில் என்பனவும் அகிலின் பெயராதல் அறியலாம். அகர் என்பதும் உள்ளிடத்தது என்னும் பொருளதாம். அகுதை அகுதை 1 ஒரு சோழன் பெயர். அவன் ஒரு வள்ளல். அகுதை என்பானிடம் ஆழிப்படை ஒன்று உண்டு என்றும், அப்படை எதிரிட்டார் எவரையும் ஊடுருவிப் பாய்ந்து அழிக்கவல்லது என்றும், பலர்புகழ் செய்தியாக அந்நாள் இருந்தது. அகத்தே துளைக்கும் ஆழிப்படை உடைய அவனை அகுதை என்று வழங்கினர். அகத்தே குதைக்கும் (துளைக்கும்) ஆழியுடையான் அகுதையாம். குதை = துணை (ம.வ.) பொய்யா கியரோ பொய்யா கியரோ பாவடி யானை பரிசிலர்க் கருகாச் சீர்கெழு நோன்தாள் அகுதைகட் டோன்றிய பொன்புனை திகிரியில் பொய்யா கியரோ -புறம். 233 *அஃதை2 காண்க அகுதை: 2 வளவன் (சோழன்) மகள் ஒருத்தி அகுதை என வழங்கப் பட்டாள். அங்கலுள் மாமை அகுதை தந்தை - அகம். 96 அகுதை, அஃதை எனவும் பாடம் பெற்றது. * அஃதை1 காண்க. அகைத்தல் அகம் > அகு > mif> அகைத்தல். உள்ளிருந்து எழுவது அகைத்தல் ஆகும். துளிர்த்தல், தளிர்த்தல், செழித்தல், எரிதல், அழுதல், செல்லுதல், அழிதல் ஆகிய பொருள்களில் அகைத்தல் வரும். கயம் அகைய - மதுரைக். 92 அகை எரி - கலித். 139 குப்பைக் கீரை கொய்கண் அகைத்த - புறம். 159 அகைப்பு வண்ணம் தொல்காப்பியம் கூறும் வண்ணங்களுள் ஒன்று இது. அறுத்து அறுத்து அல்லது விட்டு விட்டு நடையிடும் ஒலியினது இது. அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும் - தொல். 1485 அகைத்தல்வே தனையொடித்தல் அறுத்திட லுயர்த்த லாமே -சூடா. 11 7 அகைமம் அகமம் > அகைமம். அகைமம் = புல்லுருவி. அகத்துளதை உறிஞ்சி வாழ்வது. ஒரு மரத்தின் ஆற்றலைத் தான் உறிஞ்சி வாழும் புல்லுருவி அது. (பச். மூ.) நல்ல மரத்திற்குப் புல்லுருவி வாய்த்தாற் போல என்பது gHbkhÊ. அக்கக்காய் அஃகு + அஃகு + அய் = அஃகஃகாய் > அக்கக்காய் அஃகு = அல்கு, சிறியது. சிறிது சிறிதாக, சிறுசிறு துண்டங்களாக ஆக்கல் அக்கக்காய் ஆக்கலாகும். ஒரு பெருங்கருத்தைப் பகுதி பகுதியாக ஆராய்தல் அக்கக்காய் ஆராய்தலாகும். (செ.சொ.அ.மு.) அக்கச்சி அக்கை, அச்சி என்னும் முறைப் பெயர்கள் இரண்டும் கூடியது அக்கச்சி. அக்கை என்பது மூத்தவள் என்னும் முறைப் பெயரினது. தம் உடன்பிறந்த மூத்தாள் எனின் அவள் தமக்கை எனப்படுவாள். தம் + அக்கை; தம் + ஐயன் = தமையன் ஆவது போல், ஐயன் = அப்பன்; தந்தை அன்னவன். அம்மாவை ஒப்பப் பேணும் உரிமைப்பாடு கருதி அக்கையொடு அச்சி (அம்மை) என்னும் முறைப் பெயரும் சேர்த்து வழங்கப்பட்டது. இதுவாம். அச்சி = அம்மை (பெண்பால்); அச்சன் = அப்பன் (ஆண்பால்). சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட் சோதியைக் கண்டேனடி - அக்கச்சி சோதியைக் கண்டேனடி - திருவருட் 4949 * அக்கை காண்க அக்கப்போர் அக்கப்போர் என்பது இந்நாள் பொதுமக்கள் வழக்குச் சொல். கல்வியறிவு அறவே இல்லாத பொது மக்களிடத்துத் தோன்றிக் கற்றோர் முதல் அனைவரிடத்தும் ஊன்றியுள்ள சொல். உன்னோடு எப்போதும் அக்கப்போராக இருக்கிறது. உன்னோடு அக்கப்போர் செய்ய நம்மால் ஆகாது. Xahkš xÊahkš m¡f¥ngh® g©QgtndhL v‹d brŒtJ?; நின்றாலும் குற்றம், நடந்தாலும் குற்றம் அவனோடு ஒரே அக்கப்போர்- இப்படி நாளும் பொழுதும் எங்கும் எவரிடமும் கேட்கும் சொல் அக்கப்போர்! இவ் வக்கப்போர்க்குப் பொருள் காண வழக்கியலை நோக்குதல் வேண்டும். அக்கம் பக்கம் என்பது இணைமொழி. இவற்றுள் அக்கம், தன்வீடும் தானிருக்கும் இடமும் சார்ந்தது. பக்கம் தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தானிருக்கும் இடத்திற்கும் அடுத்துள்ள இடமும். அக்கம் பக்கம் பார்த்துப் பேசு என்பது ஈரிடங்களையும் இணைக்கும் பழமொழி. பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே என்பது மற்றொரு பழமொழி. பகலிலும், அக்கம் பற்றிப் பேசுதல் கூடாது. பார்த்துப் பேசுதல், பாராது பேசுதல் இரண்டும் கூடாது. சுவரும் கேட்கும், தோட்டமும் கேட்கும், கேணியும் கேட்கும், முற்றமும் கேட்கும், மூலை முடுக்கும் கேட்கும், எது எங்கிருந்து எப்படிக் கேட்கிறது என்று தெரியாமல் கேட்கும் அப்படிக் கேட்டால் என்ன விளைவாம்? அக்கப் போராம்! கேட்டதை வைத்துக் கொண்டு, வீட்டுக்குள்ளே வைவது போல வெளியாரை வையலாம்; சட்டி, பானை, ஆடுமாடு, வேலையாள், வேற்றான் எவரைச் சாக்கிட்டேனும் சாடை மாடையாகப் பேசலாம்! கேட்கப் பேசலாம். கேட்டும் கேளாமலும் பேசலாம்! இரு வீட்டார்க்கும் - ஒட்டுக்குடி ஓரக்குடி அண்டை அயல், என்று வாழும் இரு சாரார்க்கும் - ஓயாத்தொல்லை! ஒழியாத் தொல்லை; அரிசிறங்கு ஓய்ந்தாலும் ஓயாத அடங்காத தொல்லை! கிண்டிக் கிளறுதலைத் தொழிலாகக் கொண்ட கோழி அதனை விடுத்தாலும், தன் இனத்தைச் சேர்ந்தது அடுத்த தெரு வழியில் வாலை மடக்கிக் கொண்டு ஓடுதலைக் கண்டு குரைத்தலை நாய் மறந்தாலும், அயர்தி மறதியால் விட்டாலும் - விடாத முணகல்! மூச்செறிவு! உருட்டல் புரட்டல்! இதைக் கண்ட ஒருவர் மனத்தை இச்செயல் வாட்டியிருக்கிறது. எந்தப் போர் இருந்தாலும் இந்தப் போர்க்கு - அக்கப் போர்க்கு - இடந்தருதல் கூடாது என எண்ணி யிருப்பார். அதனை ஒரு சொல்லாக்கி உலவ விட்டிருப்பார்! கிட்ட உறவு முட்டப் பகை என்பதை எவர் அறியார். அடுத்திருந்து மாணாத செய்வான் -(திருக். 867) பகையைச் சுட்டுகிறாரே வள்ளுவர். மடியிலே பூனையைக் கட்டிக் கொண்டு சொகினம் (சகுனம்) பார்ப்பதா? என்கிறதே ஒரு பழமொழி! பக்கத்துக் கடனோ பழிக்கடனோ என்கிறதே மற்றொரு பழமொழி! இவையெல்லாம் அக்கப் போர்க்கு இடந்தராதே அக்கப் போரை விலைக்கு வாங்கிக் கொள்ளாதே என்னும் எண்ணத்தின் வெளிப்பாடுகளே! அக்கம், க் ஆகிய ஒற்றுக்கெட அகம் ஆகும். பகுக்கப் பட்டது பகம், பாகம். பாகப் பிரிவு; அதற்குப் பிரிவு எல்லைக் கோடு இல்லாமல் இருந்தால் ஒருவரிடமாகவே இருந்திருக்கும். இவ்விளக்கங்கள் என்ன சொல்கின்றன? குடி வழியில் வேறொருவர் இருந்தாலும், அக்கப்போர் குறைவாக இருக்கும். ஒரே குடும்பத்தவர் - குருதிக் கலப்புடையவர் - அக்கப்போரா நூறாண்டு வாழ்வு; நொடி நொடியும் சாவு என அக்கப்போர் ஆக்கும் என்பதை எச்சரிக்கிறதாம். அக்கம் அக்கம்:1 அக்கம் = தவசம். அஃகுதல் > அக்குதல் > சிறிதாதல். பெரும்பாலான தவசங்கள் சிறியவை. தினை, சாமை, வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி, கம்பு, கேழ்வரகு என்னும் தமிழகத்துத் தவசங்கள் மிகச் சிறியவையாம். சோளம், நெல் என்பவை சற்றே பெரிதாயினும் பழவகை, காய்வகை, பயறுவகை (மொச்சை, அவரை) கிழங்குவகை போலப் பெரியவை அல்ல. அக்கம்:2 புறத்தே புலப்படாமல் அகத்தே அமைந்துள்ள நீர் அக்கம் எனப்படும். தென்னை, பனை ஆகியவற்றின் உள்ளே இருந்து பாளையைச் சீவிவிடச் சொட்டுச்சொட்டாக உள்ளிருந்து வழியும் நீர் அக்கானீர் என்று குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. அக்கம் என்பதைத் தண்ணீர் என்பது தஞ்சை வழக்கு. ஊற்றுநீர், நிலத்தகத்து நீர் அல்லவா! * அஃகம் காண்க. அக்கம் பக்கம் அக்கம் தன்வீடும் தானிருக்கும் இடமும். பக்கம் தன்வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தானிருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும் ஒருகுடிவழியர் அல்லது தாயாதியர் இருக்கும் வீடு வளைவு, வளசல் எனப்பெறும். அவ்வீடுகள் ஒரு காலத்தில் ஓருடைமையாய் இருந்து பின்னர்ப் பல பாகமாய் அமைதல் வழக்கு. அவற்றுள் தன் வீடும் இடமும் அக்கமும், அதற்கு அருகிலுள்ளது பக்கமும் ஆயின. அக்கம் = அகம்; பக்கம் = பகம் (பிரிவு). அக்கத்திற்கு - அகத்திற்குப் - பக்கம் அமைந்தது பக்கம். அடுத்தும் தொடுத்தும் அமைந்தவை அவை. அக்கரை அக்கரை என்பது அ+கரை எனப் பிரிக்கப்பட்டு, அந்தக் கரை என்பதைக் குறிக்கும். கடல் கடந்த இடம், அக்கரைச் சீமைஎனப்படும். ஓவர்சீசு பேங்கு என்பது, அக்கரை வங்கி அல்லது அக்கரை வைப்பகம்ஆகும். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைஎன்பது பழமொழி. ஆற்றின் அக்கரையில் அமைந்ததோர் ஊர், அக்கரைப்பட்டி! காசில்லாதவன் இக் கரையில் கிடந்தால் என்ன, அக்கரையில் கிடந்தால் என்ன?என்பது பழமொழி. அக்களிப்பு அகம் + களிப்பு = அகக்களிப்பு > அக்களிப்பு ; மனமகிழ்வு. சக்களத்திகள் அக்களிப்பொடு கெக்கலிப்பட - சர். சம. கீர், 166 உள்ளக் களித்தல் என்பதும் இது. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும - திருக். 1249 அக்கறை ஒன்றன் மேல் அளவிலா ஈடுபாடு காட்டுவதும், அதே நோக்கமாக இருந்து முயல்வதும் அக்கறை ஆகும். அக்கறை என்பதை அக்கரை என எழுதுவாரும் உளர். அது போல் அப்படி எழுதி இருவடிவும் காட்டும் அகராதியும் உண்டு. இலக்கியத்தில் கூட உண்டு ஆனால் இவற்றைப் படியெடுத்தோரின் பிழையெனத் தள்ளி விடலாம். இரு வழக்காகவும் எழுதப்படுதல் கருதி, இரு வழக்கையும் அகராதியில் ஏற்றினார் என்றும் தள்ளிவிடலாம். அக்கறை என்பது இரட்டைச் சொல்லால் ஆய ஒற்றைச் சொல். அறிவறை (அறிவு அறை) என்றும் குறையறை (குறை அறை) என்றும் வழங்கப்படுதல் போல, அக்கு அறை எனப் பிரிக்கப்படும் சொல் அக்கறை. அக்கு என்பது அஃகு என்னும் பழ வடிவினது. அஃகுதல் குறைதல், கருங்குதல் எனப் பொருள் தருவது. அஃகி அகன்ற அறிவு(நுணுகி விரிந்த அறிவு) எனத் திருக்குறளில் ஆட்சி பெறும் (175). அஃகாமை என அதன் எதிரிடையாய்ச் சுருங்காமையைக் காட்டியும் திருக்குறளில் ஆட்சி பெறும் (178) அஃகு என்பதிலுள்ள ஆய்த எழுத்து, நுணுக்கம் என்னும் பொருள் தருவது என்பது மொழியியல் அறிந்தாரும். தொல்காப்பியம் கற்றாரும் தெளிவாக அறிந்த செய்தி. அச்சொல் அக்கு என்றாகியும் அப்பொருள் தரும். அறை என்பதன் பொருள் அறுத்தல், அறுக்கப்படுதல் என்னும் பொருளது. வீட்டின் அறை, கண்ணறை (குளத்துமடை), அறைக்கீரை, மூக்கறை, காதறை என்பவற்றில் உள்ள அறையின் பொருள் காண்க. அறை போகு குடிகள் (ஊரை விட்டு அற்றுப் போகும் குடிகள்) என்பது சிலம்பு (4 10) அறிவு அறை போதல், அறிவற்றுப் போதல், குறை அறை குறையற்றுப் போதல் என்னும் பொருளன என்பதை எண்ணுக. ஆயின், அக்கறை என்பதன் பொருள் என்ன? அக்கு என்பதற்குக் கண்ட பொருளையும், அறை என்பதற்குக் கண்ட பொருளையும் சேர்த்தால், அக்கறைப் பொருள் வந்துவிடும். சுருக்கம் அற்றுப் போதல் அக்கறை என்க. ஒன்றன் மேல் பெருக்கமான ஈடுபாடு, பெருக்கமான ஆர்வம், பெருக்கமான உழைப்பு, பெருக்கமான உந்துதல் இருத்தல்தானே, அக்கறை! அப்பொருள்தானே இவ்விரட்டைச் சொல் இணைவாம். ஒற்றைச் சொற் பொருள். அக்காக்காய் குழந்தைகளுக்குக் குழல் வாருவார் கூறும் திருப்பாடல். மாதவன் தன்குழல் வாராய்அக் காக்காய் - நாலா. 162 காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா குருவி! கொண்டைக்குப் பூக் கொண்டு வா என்பது போலப் பாடுவது, காக்கையைச் சுட்டிக் காட்டி வா எனக் கூறலால் அக்காக்காய் எனப்பட்டதாம். அக்காரடலை அக்கரம் + அடலை = அக்காரடலை கருப்புக்கட்டி வெல்லக்கட்டி சேர்த்து அடப்பட்ட - சமைக்கப் பட்ட - சோறு ஆம் பாலக்கா ரடலை யண்பனீரூ றமிர்தம் * அக்கானீர் காண்க. அக்காரடிசில் அக்காரம் + அடிசில் = அக்காரடிசில் அக்காரம் = சருக்கரை; அடிசில் = சோறு. அரிசியும் பாசிப் பருப்பும் சமமாகக் கலந்து நான்கு பங்கு பாலில் சமைத்துச் சருக்கரையும் நெய்யும் மிகக் கலந்து செய்வது அக்கார அடிசிலாம் (தி.பி.அ) அக்கி அஃகி (அல்கி) > அக்கி அக்கி = வியர்வைக்குரு (வேர்க்குரு) போல் அப்பித் தோன்றிச் சிவந்து அரிப்பும் துயரும் ஊட்டும் தோல் நோய். இதற்குக் காவிக்கட்டியை அரைத்துக் தடவுதல் அக்கி எழுதுதல் எனப்படும். அதற்கெனப் பண்டுவம் பார்ப்பவர் சிற்றூர்களில் உண்டு. அக்கியம் அல்கியம் = சுருக்கத்தன்மை ஈயாத கருமியை அக்கியம் பிடித்தவன், அடுத்தவன் கொடுப்பதும் இவனுக்குக் கண்ணெரியும். என்பர். பழிக்கப்படும் ஈயா இவறன் (கருமி) இவன். கருமித்தனம் வேறு, சிக்கனம் வேறு. தம் தேவையைச் சீராக எண்ணிச் சிக்கெனக் கடைப்பிடித்து எதிர்காலக் காப்புக் கருதிச் செலவிடுவது சிக்கனம். புண்ணுக்குத் தடவவும் சுண்ணாம்பு தராதவன்கருமி. அக்குணி அல்கு + உணி = அல்குணி > அக்குணி சிறிதளவே உண்ணுபவன் அக்குணி. அக்குணிப் பிள்ளைக்குத் துக்கிணிப் பிச்சை என்பது பழமொழி. அக்குத் தொக்கு அக்கு = தவசம் தொக்கு = பணம் அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத் தேடு(ஔவை ஆத்தி). என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாகும். தொக்கு = தொகுக்கப் பெற்றது; தொகை, பயிர்களில் தவசப்பயிர், பணப்பயிர் என இருவகை இருத்தல் அறிக. அக்குத் தொக்கு இல்லை என்பது மரபு மொழி. தவசமும் பணமும் இல்லை என்றும், தவசமும் பணமும் தந்துதவுவார் இலர் என்றும் இரண்டையும் குறிக்கும். இனி உற்றார் உறவு இல்லை என்பதையும் குறித்தல் உண்டு. அக்கு = உற்றார்; தொக்கு = உறவு அக்கு = நெருக்கம் (அக்கம் பக்கம்) தொக்கு = தொடக்கு > தொக்கு = தொடுத்து இருப்பது. அக்குவேர் ஆணிவேர் அக்குவேர் = மெல்லிய வேர் ஆணிவேர் = ஆழ்ந்து செல்லும் வலிய வேர். அக்குதல் = சுருங்குதல், மெலிதாதல், ஒரு மரத்தின் வேர்களுள் பக்கத்துச் செல்லும் வேர் பலவாய் மெலியவாய் இருக்கும். ஆணிவேர் நேர்கீழ் இறங்குவதாய் ஒன்றாய் வலியதாய் இருக்கும். அக்கு வேராக ஆணி வேராக ஆய்தல் என்பது வழக்கு. அக்குவேறு ஆணிவேறு அக்கு = முள் ஆணி = காலடியில் தோன்றிய கட்டி முள் தைத்து அஃது எடுக்கப் படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டி பட்டுக் கல்போல் ஆகிக் காலை ஊன்ற முடியா வலிக்கு ஆளாக்கும். பின்னர் அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதல் உண்டு. அதனை ஆணி பிடுங்குதல் என்பர். அக்குளுத்தல் அல்கு + உள் = அஃகுள் > அக்குள். தோட்பட்டையின் உள்ளிடமாகிய அக்குள், உணர்வு மிக உடையது. அங்கே கைவிரல் கொண்டு வருடின் நகைப்பு ஏற்படும். கிச்சுக் காட்டல் என்பது அக்குளுத்தலாம். அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் - கலித். 94 அக்குளுக்காட்டல் என்பதும் இது. கிச்சுக் காட்டல் என்பது மக்கள் வழக்கு. மாட்டு முதுகில் கிச்சுக் காட்டல் உழவர் வழககு. வண்டியை விரைந்து ஓட்ட இதனைச் செய்வர். அக்குறும்பு அகம் + குறும்பு = அகக்குறும்பு > அக்குறும்பு. குறும்பு = சிறுதனமான செயல்; வறண்ட காட்டு வழியில் செல்வாரை வழிமறித்துப் பறித்துக் கவருதலும், உடனாகி இருந்தே சிறு செயல் செய்தலும் அக்குறும்பு ஆகும் (ம.வ.) அக்கை அகம் > அக்கம்; நெருக்கம் அக்கு + ஐ = அக்கை; உடன்பிறந்த மூத்தாள்; மூத்தாள், ஐ = தாய். தம்மை நெருங்கி இருக்கும் - தம்மகத்தில் உடனிருக்கும் - தாய் = அக்கை. தம் என்பது நெருக்கம் காட்டுவது. தம் + அக்கை = தமக்கை. ஓ.நோ தம் + ஐயன் = தமையன்; அண்ணன், மூத்தோன். ஐ = தந்தை தாயோடு இருப்பினும் தாயின்றி இருப்பினும் தாய் நிலையில் இருப்பவர் தமக்கையாராம். தந்தை யோடிருப்பினும் தந்தை யின்றி இருப்பினும் தந்தை நிலையில் இருப்பவர் தமையனாராம். அங்கணம் அங்கணம்: 1 அங்கணம் பேச்சு, எழுத்து என்னும் இருவகை வழக்குகளிலும் இன்றும் வழங்கும் சொல். அங்கணக் குழி, அங்கணத் தொட்டி, அங்கணக் கிடங்கு என உலக வழக்கிலும் அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் - திருக். 720 ஊரங்கண நீர் - நாலடி. 175 என இலக்கிய வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. சமையலறையில் கலங்கள் கழுவும் நீர், கை கழுவுதல், துடைத்தல் ஆகிய நீர், வழிவதற்காக அமைக்கப்பட்ட குழி அல்லது தொட்டி அங்கணக்குழி, அங்கணத்தொட்டி எனப்படும். சமையற் பகுதியில் அடுப்பு உயரமும், அதில் தாழ்ந்து தளமும், அத்தளத்தில் தாழ்ந்து அங்கணக் குழியும், அக் குழியிலிருந்து வழியும் நீர் வழிந்தோடும் படி வடிகாலும் அமைக்கப்படுதல் எண்ணத் தக்கன. அங்கணக் குழியில் கொட்டப்படும் நீர் வெளியேறு வதற்குத் துளையுண்டு. தூம்பும் உண்டு. துளை, புரை, சுரை,குழை, புழை, முழை, நுழை, வளை என்பவை எல்லாம் துளை என்னும் பொருள் தருவனவே. துளைக்குக் கண் என்பது ஒரு பெயர். மான் கண் போலத் துளை யமைத்துக் காற்றுப் புகுவாய் அமைத்தனர் முந்தையோர். அது மான்கண் காலதர் மாளிகை(சிலப்.5 8) எனப்பட்டது. கால் அதர் = காற்று வழி. கண் என்பதால் அமைந்த பெயருடையது கண் வாய். கண்ணே நீர் வழியும் வாயாக அமைக்கப்படுவதலால் கண்வாய் எனப்பட்டது. அதுவே இந்நாள் கம்மாய் என வழங்குகின்றது. மான்கண் புலிக்கண் நாழிக்கண் துடுப்புக் கண் என அக்கண்கள் அமைக்கப் பெற்றுள்ளமை காணக் கூடியவே. அங்கணக் குழியில் இருந்து நீர் செல்வதற்குக் கண் அல்லது துளை அமைக்கப்படுவது தெளிவான செய்தி. அக்கண் வெளியே புலப்பட அமைந்ததா குழியினுள் மறைவாய் அமைந்ததா? எனின், அதன் அகத்தே மறைவாக அமைக்கப் பட்டதேயாம். அகம் + கண் = அங்கண்; உள்ளிடத்தே அமைந்த கண் அகங்கண் (அங்கண்). அம் என்னும் ஒட்டினைச் சேர்த்து அகங்கண் அம் (அங்கணம்) ஆயிற்று. உள்ளிடத்தே கண்ணைக் கொண்ட குழி எனப் பிறவற்றையும் ஒட்டிக் கொள்க. அகம் கண் அம் என்னும் முச் சொல் ஒட்டு ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்பதே அங்கணம். இப்படிப் பல சொற்கள் ஒரு சொல்லாய் நிற்குமோ என அறிந்தோர் ஐயுறார்; அரிவாள் மணை முச்சொற் கூட்டு ஒரு சொல். ஒட்டு இல்லாத முழு முழுச் சொற்கள். அவை அரிதல் சிறிதாய் அறுத்தல்; அரிதற்குரிய வாள்; அவ்வாள் அமைதற்குரிய மணை (பலகை) இம்மூன்று உறுப்புகளும் உண்மை காண்க. முகம் வாய் என்பவை ஒரு முதலும் ஓருறுப்புமாம் பெயர்களைச் சுட்டுவன; இரண்டும் சேர்ந்து முகவாய் என ஒரு சொல் தன்மையாயும் அமையும். வாய்க்குக் கீழேயுள்ள தாடியைக் குறிக்கும் போது முகவாய்க் கட்டை என முச்சொற் கூட்டாகும். முகத்தில் வாய், வாயின் கட்டை; இவை ஒன்றின் பகுதி ஒன்றாய் அதன் பகுதி ஒன்றாய்க் குறித்தலை அறிக. அதன் கொச்சை வடிவு முகரக் கட்டை என்பதாம். ஆதலால், அகம் கண் அம் எனப் பல சொல் இணைந்து ஒரு சொல் ஆகுமோ என ஐயுறவு வேண்டியதில்லை என்க. அங்கணம்: 2 இரண்டு தூண்களுக்கு நடுவிலுள்ள இடம் வெ.வி.பே. அங்கண் அங்கண்: 1 அம் + கண் = அங்கண் = அழகிய இடம்.அங்கண் விசும்பு (நாலடி, 151) அங்கண்: 2 அ+ கண் = அங்கண் = அவ்விடம் . அங்கண் உற்றில்(கந்த. சூரன்றண்ட 29) (த.சொ.அ.) அங்கண்: 3 அகம் + கண் = அகங்கண் எனின், உள்ளிடம் அங்கணக் குழி அங்கணத்துள் உக்க அமிழ்து(திருக். 720) அங்கதச் செய்யுள் அங்கதச் செய்யுளை ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வெளிப்பட வசை கூறும் செம்பொருள் அங்கதம் பழி மறைத்துக் கூறும் பழிகரப்பு அங்கதம் என்னும் இரு பகுப்பையும் சுட்டுகிறார். வெண்பா யாப்பை அதற்கு உரிமையும் ஆக்குகிறார். இவ்வங்கதம் பழிப்பது போலப் புகழ்வதாகவும் புகழ்வது போலப் பழிப்பதாகவும் அமைந்து வஞ்சப் புகழ்ச்சி என்னும் பெயரும் பின்னாளில் பெற்றது. அங்கதச் செய்யுள் தனிப்பாடல் தொகுதிகளுள் பல உளவேனும், நூலாக அமைந்தது அருமையே. அவ்வகையில் கவிமணி தேசிக விநாயகர் இயற்றிய மருமக்கள் வழி மான்மியம் எடுத்துக்காட்டாம் பாவேந்தரின் இருண்ட வீடும் எண்ணத் தக்கதாம். ஆயின், இவை அங்கதம் என்னும் நூல் வகைப் பெயரைப் பெற்றில என்பது குறிப்பிடத்தக்கது. வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர் - தொல். 1386 அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றால் கூறுக என்பான் இது கூறினான். வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும். வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பு அங்கதம். மாற்றரசனையும், அவன் இளங்கோவினையும் வசை கூறுமாறு போலாது தம் கோனையும் அவன் இளங்கோனையும் வசை கூறுங்கால் தாங்கி உரைப்பர்; அவை போலப் பழிப்பன என்றவாறு(தொல். பொருள். 437-8. பேரா.) எ-டு நாஞ்சில் நாடன், மடவன் மன்ற செந்நாப் புலவீர் யாம்சில அரிசி வேண்டினே மாகப், பெருங்களிறு நல்கியோன் - புறம். 140 பாரி பாரி என்று பல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டீண் டுலகுபுரப் பதுவே - புறம். 107 அங்கதம் அங்கம்: 1 வங்கு = வளைவு; வங்கு > அங்கு. சொல்லுவதைச் சொல்லுமாறு புகழாகவோ பழியாகவோ சொல்லுதல் இல்லாமல், புகழ்வது போலப் பழிப்பதாகவும் பழிப்பது போலப் புகழ்வதாகவும் சொல்லுதல் அங்கதம் ஆகும். அங்கு = வளைவு, சுற்று. அங்கதம்: 2 வளைவாக அமைந்த தோள்வளை என்னும் அணிகலம் அங்கதம் எனப்படும். வாகு வலையம் என்பதும் அது. புயவரை மிசை. அங்கதம் - திருவிளை. மாணிக். 12 அங்கயற்கண்ணி அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி, மலைமகள் அழகிய கயல் (கெண்டைமீன்) போலும் கண்ணை உடையவள். அங்கயற்கண் அமுதேஎன்பார் குமரகுருபரர் (மீனா. பிள். 24) கயற்கணி என்பதும் அங்கணி என்பதும் அங்கயற்கண்ணி பெயரே. கயற்கண்ணி காலில் விழுந்து வினைகெடுப்போம் - குற்.குற. அங்கலாய்த்தல் மன உளைச்சல், மனத்துயர் அகம் > அம்; கலாய்த்தல் = கலக்கமுறல், கலகமிடல் மனம் கலக்கமுறல் அங்கலாய்த்தலாம். கலாய்த்தல் கை கால் மட்டும் கலத்தல் அன்று; கருவி கலத்தல் ஆயின் அங்கலாய்த்தலுக்கு அளவு உண்டா? இச்சொல்லாட்சி பின் வழக்காம். அங்கலாய்ப் பானே - இராம. கீர்த் ஆடு மறித்தவன் செய்விளையுமா? அங்கலாய்த்தவன் செய்விளையுமா? என்பது பழமொழி (செ.சொ. அ.மு.) அங்காடி வங்கு = வளைவு. t§F> அங்கு. சுற்றம் சுற்றியிருக்கும் வளைசல் போல, வணிகச் சுற்றமும் ஒரு வட்டமாக அமர்ந்து பண்டமாற்றுச் செய்த பழநாளில் அங்காடி எனப்பெயர் பெற்றது. வட்ட அமைப்பு வாடிக்கை வாணிகத்திற்கு வாய்ப்பானதாம். கடை, வீட்டுத் தலைவாயில் பகுதியில் இருந்தது. சந்தை, சந்தி முனையில் இருந்தது. அங்காடி சுற்றுச் சுவர் அல்லது வேலியுடையதாய்ப் பல்வகை வணிக நிலையங்கள் பகுதி பகுதியாக அமைந்ததாய் அகன்ற உள்ளிடம் உடையதாய் இருந்தமையால் அகம் கடை > அங்கடை > அங்கடி > அங்காடி ஆயிற்றாம். அம்முதல் (தெ) = விற்றல்; கடை = இடம்; கடை > கடி > காடி என்று திரிந்திருக்கலாம். அம் + காடி = அங்காடி. என்பது செ. சொ. பி. அ. முதலி. பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே அல்லங் காடி அழிதரு கம்பலை என்பதால் (மதுரைக். 543- 544) அப்பறவை குழுமி ஒலித்தல் உவமை எண்ணத்தக்கது. அங்காத்தல் - வாயைத் திறத்தல், கூவி அழைத்து விற்றலாலும் வட்டமாக இருந்து வணிகம் நடாத்தலாலும் அங்காடிப் பெயர் ஏற்றதாகலாம். நாளங்காடி, அல்லங்காடி எனப் பகற்கடை, மாலைக்கடை என்பவை இருந்தமை சிலம்பு முதலியவற்றால் அறியலாம். நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி - சிலப். 5 63 அல்லங் காடி அழிதரு கம்பலை - மதுரைக். 544 அங்காடி பாரித்தல் அங்காடி = கடை; அம்முதல் = பொருந்துதல், ஒத்தல், ஒத்த மதிப்புள்ள பொருளுக்கு மாறுதல். m«Kjš v‹W« Éid¢brhš tÊahf¥ ãwªj brhš.”(br.brh.m.K.) பாரித்தல் = மிகுத்தல் ஒரு கடைக்காரன் பேரூதியங் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு வந்து நிறைத்தலுக்கு அங்காடி பாரித்தல் என்று பெயர். அவனைப் போலப் பேராசையினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவதும் அங்காடி பாரித்தல் எனப்படும். (சொல். கட். 12) அங்காளம்மை அம் + காள் + அம்மை = அங்காளம்மை அழகிய கரிய அம்மை காளியம்மை. சூருடைக் கானகம் உகந்த காளி - சிலப். 20 38 அங்காளம்மை வழிபாடு பெருக்க மிக்கதாம். அங்கிட்டு அங்கு + இட்டு = அங்கு இடைவிட்டு; மிக நெருங்கி இடையூறோ தடையோ ஒருவர் செய்தால் வேலையில் அல்லது ஓய்வில் இருப்பவர் அங்கிட்டுப் போயேன்என்பர். அன்பும் அரவணைப்பும் உள்ள போதில் இங்கிட்டு வாயேன்என்றும் அவர்களே அவர்களைக் கூறுவர். சூழ்நிலை சார்ந்த வழக்கு இது; முரண் அன்று. அங்குசம் அங்குசம்: 1 வங்கு > அங்கு அங்கு = வளைவு. அங்குசம் = வளை குறடு, தோட்டி, யானை செலுத்துவோர் கைக்கருவி. எ-டு அங்குசங் கடாவ ஒருகை - முருகு. 110 பொன்னியல் புனை தோட்டி - புறம். 14 அங்குசம்2 அங்குசம் என்னும் சொல் பண்டை இலக்கிய வழக்கில் இடம் பெறுவதாலும், தமிழ் வேரினின்று பிறந்திருத்தலாலும், அங்கதம் (வளையல் கொடுவாய்) என்னும் சொல்லைப் பெரிதும் ஒத்திருத்தலாலும், வாழை என்னும் பொருள் உடைமையாலும், விகரம் சேர்ந்து (அங்குசவி) கொள் என்னும் கூலத்தைக் குறித்தலாலும் இங்குத் தென்சொல்லாகக் கொள்ளப்பட்டது. என்பது செ.சொ.அ.மு. வாழைத்தார் யானையின் வளைந்த தும்பிக்கை போலும் வடிவினது. ஆதலால் வாழை அங்குசம் எனப்பட்டது. அங்கை அகம் + கை = அங்கை; உள்ளங்கை. அக்கேபோல் அங்கை ஒழிய விரலழுகி - நாலடி. 123 தங்கை என்னும் முறைப்பெயர் அங்கையாய் இருந்து தம் என்னும் உரிமை முன்னொட்டொடு தம் அங்கை jk§if> தங்கை என வந்ததாகலாம். ஒ.நோ. தம் + அக்கை = தமக்கை தம் + ஆய் = தாய் தம் + ஐயன் = தமையன் அங்ஙனம் அ + ஙனம் = அங்ஙனம். அவ்வாறு, அப்படி என்னும் பொருளது. அங்ஙன், அன்னணம் என்னும் வடிவுகளிலும் வழங்கும் சொல். பிற்கால வழக்குச் சொல். வேதம் எங்ஙனம் அங்ஙனம் அவை சொன்னவிதி - கம்ப. உயுத். 353 நம்மொடும் அங்ஙன் குலாவினான் - திருக்கா. 16 16 (செ.சொ.அ.மு.) அசங்கு ஆசை என்னும் பொருளில் அசங்கு என்னும் சொல் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகிறது. ஒன்றை அடைந்ததும் அதனை விடுத்து அடுத்த ஒன்றன்மேல் அசைந்து செல்லும் ஆசையை அசங்கு என்றனர். அசதி அயர்வு > அயதி > அசதி. யகரம் சகரமாகத் திரிதல் மக்கள் வழக்கு. உயரம் > உசரம், மயற்கை > மசக்கை. தசரதன், தசமுகன் என்பவற்றில் வரும் தசம் வடசொல். அதனைத் தமிழாக்கம் செய்யும் கம்பர் தயரதன் என்பார். அதில் வரும் சகர யகரத்திரிபு வேறாம் அசப்பில் தெரிதல் அசைவு > அசைப்பு = கண்ணசைவு, பார்வை. ஒரு பார்வையில் தெரிதல். ஒருவரைப் போலவே ஒருவர் தோற்றம் அமைந்திருத்தல் உண்டு. அதிலும் கூர்ந்து நோக்காமல் மேலோட்டமாக நோக்கினால். அவரைப் போலவே இவரும் தோன்றுவார். அத்தகையரை அவராக நினைத்து ஏதோ சொல்ல வாயெடுப்பர்; சொல்லியும் விடுவர். அவர்க்கோ இவர் யாரெனத் தெரியாமல் திகைப்புண்டாம். அந்நிலையை அறிந்து இவர் வேறொருவர் என்பதை, அசப்பிலே பார்த்தால் என் நண்பர் இன்னாரைப் போலத் தோற்றம் இருந்தது. அவரென்றே நினைத்துக் கொண்டேன்; பொறுத்துக் கொள்ளுங்கள்என்பர். இதில் அசப்பில் என்பது ஒரு பார்வையில் (ஒரு தோற்றத்தில்) என்னும் பொருள் தருவதறிக. அசலம் சலம் = அசைவது, ஓடுவது, நீர். அல் + சலம் = அசையாதது, ஓடாதது; மலை. வேங்கட அசலம், மருத அசலம் என்பவை வேங்கடாசலம், மருதாசலம் ஆயமை வடமொழிப் புணர்ச்சித் திரிப்பு. அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே - நன். 28 * சலம் காண்க. அசா அசா = துன்பம், அயர்வு > அயா > அசா. தலைவிக்கமைந்த துணையுள் ஒன்று அசாத்துணை துன்பத்திற்கு யாரே துணையாவார் அவர், அசாத்துணை. நலங்கேழ் அரிவை புலம்பசா விடவே - குறுந். 238 அசுகணி அசுகு + அணி = அசுகணி. மொச்சை அவரை பயறு ஆகிய செடிகளில் உண்டாகிப் பல்லாயிரம் பூச்சிகள் தொடுத்துச் சரம்போல் அமைந்து செடியின் உரத்தை உறுஞ்சி, விளைவைக் கெடுக்கும் ஒருவகை நுண்புழு அசுகணி, அசுகு + அணி, சிறுபூச்சி வரிசை. கைபட்டால் பிசுபிசு என்று அருவறுப்பாக இருப்பது. கொழுமை மிக்க செடிகளில் பற்றிக் கிடக்கும் அப்பூச்சி பற்றாமல் இருப்பதற்கு முற்காப்பாக மருந்துகள் தெளிப்பதைக் கண்டுளர். பிசுபிசுக்கும் அசுகுணியின் அடைசலையும் தொடுப்பையும் உணர்ந்தவர். அழுகணி எனவும் வழங்குகின்றனர். நசுகணி என்பாரும் உண்டு. அசுணம் அல் + சுணம் = அசுணம். அசுணமா என்பதால் விலங்கு வகையைச் சேர்ந்தது அஃது ஆகும். மெல்லிசை தவழுங்கால் அவ்விசைக்கு மயங்கி இசைப்பாரை அணுகிய அளவில் அவர் வல்லிசை எழுப்பி அதன் செவிப்பறை கிழிய வீழ்ந்து படச் செய்வர் என்றும் அதனை வேட்டையாடிப் பற்று முறை அஃதென்றும் நூல்களாலும் உரைகளாலும் அறிய வருவன. எவ்விலங்குக்கும் எப்பறவைக்கும் வாயாத செவியுணர்வு இதற்கு அமைந்தது என்பது வியப்பாம். இம் மெல்லுணர்வே இவற்றின் அழிவுக்கு மூலம் போலும். மாசுணம் என்பது பாம்பு. அதற்கு அரவம் என்பது பெயர். அரவம் மெல்லொலியாம். பூசுணை என்னும் கொடிவகை அறிவோம். பூவொடு கூடிய சுணை தொட்டார் விரவில் ஒட்டிக் கழுவுதற்கும் அரிதாய் இருக்கும். அதனால் அதனையே அக்கொடிக்குப் பெயராக இட்டனர். அதுபோல் மற்றவற்றுக்கு இல்லா உணர்வு கண்டு இடப்பட்ட பெயர் அசுணமாம். கொள்ளுதற்குக் கூடாத - அல்லாத, சுணப்பினை - உணர்வினை - யுடையது அசுணமாம். அசும்பு அசும்பு = நீர்க்கசிவு. பல்வேறு இடங்களில் உண்டாகும். நீர்க்கசிவு சிற்றூற்றாய் - சிறு சுனையாய் - ஆகும். அதன் தோற்றம் அசும்பு ஆகும். அக்கசிவுப் பகுதி, நீர்ப் பதம் உடையதாய் - கால்வைத்தால் தடம் பதிவதாய் - இருக்கும். வார் அசும்பு ஒழுகு முன்றில் - புறம். 114 இதன் பொருள்: வார்ந்த மதுச் சேறுஎன்பது பழைய உரை. * தசும்பு காண்க. அசை அசை 1 நாவை அசைத்து இசை உண்டாக்குவதால் அசை எனப்பட்டது. அது சீரின் உறுப்பு, அசைத்து இசை கோடலின் அசையே (யா.கா. 1. மேற்.) அசை 2 வீட்டு முகட்டில் இருந்து தொங்கு தொடரி அல்லது கயிற்றில் கட்டப்பட்டு அசைந்தாடும் பலகை அசையாம். ஊஞ்சல் வேறு அசை வேறு. அசையில் படுக்கை தலையணை முதலிய வற்றை வைப்பது வழக்கம். முகவை, நெல்லை, வழக்கு இது. அசை 3 ஊசல் ஆட்டம் என்னும் ஊசல் வரி பாடி ஓடித்தள்ளி ஆட விடும் இசையாட்டத்திற்கும் அசையே கருவியாம். எ-டு சிலப்பதிகாரம் ஊசல் வரி( 29 23-25) அசை 4 கடிகையாரத்தில் நொடிப் பொழுது காட்டும் அரைவட்டச் சுழலியை அசை என்பது உண்டு. அசை 5 ஏவல் அசைக்க -ஆட்டுக ; அசைக - உண்க என்பவை அவை. அசை 6 கூரிய அறிவாளன் பார்வையில் உலகியக்கம், அசைதலும் இசைதலும்ஒருங்கே கொண்டதாகப் புலப்பட்டது. ஒன்றன் இருப்பும் இயக்கமும் வாழ்வும் அசைதலும் இசைதலும்இல்லாமல் முடியாது என்பது தெளிவாயிற்று. பிறந்த குழந்தை இயக்கத்தால் அசைவு வெளிப்படுகிறது. வெளிப்பட்ட போதே காலைக் கையை அசைக்கத் தொடங்குகிறது. அக்குழந்தை அசைத்தல் இல்லாமல் உள்ளுறுப்புகள் அசையவும் இசையவும் ஆகின்றன. நாவை அசைக்கிறது; தேன் துளிபட்டதும் அசைத்தல் வெளிப்படப் புலப்படுகின்றது. அசைதல், இயக்கச் சான்று! அசைவிலா நிலை என்னும் தோற்றமும் அசைவிலாமை அன்று. இடையிலாப் பேரசைவே அசைவிலாத் தோற்றம் வழங்குகின்றது. நிலையிலா நிலையே அனைத்து அண்டங்களுமாம்! நாம் இருக்கும் நிலமும், குடியிருக்கும் நிலையமும் எல்லாமும் எல்லாமும் அசைந்தும் அசையாத் தோற்றங்களேயாகும். அசையின் நலம் இசையிலேயே சிறக்கின்றது. பூதங்கள் அனைத்தும் அசைவனவே. அசையே அசைவு. இயக்கம், உயிர்ப்பு, அசையா நிலை என்பதும் அசைந்தும் அசையா நிலையேயாம். தறியில், பாடல் அசை போலவே அசை உண்டே! காற்றசைதானே மூச்சசை! பேச்சசை! அசைக! இசைக! அசைச்சீர் பாடலில் சில இடங்களில் அசையே சீராக நிற்பது உண்டு. அதனை அசைச்சீர் என்பர். வெண்பாவின் இறுதியில் நாள் மலர் என்னும் வாய்பாட்டில் வருவன அசைச்சீராம். நாள் என்பது நேர் அசை. மலர் என்பது நிரையசை. நிலமிசை நீடுவாழ் வார் - திருக். 3 யாண்டும் இடும்பை இல - திருக். 4 அசைச்சொல் பெயர்ச்சொல்லொடும் வினைச்சொல்லொடும் சார்த்திச் சொல்லப்படும் சொல் அசைச்சொல். அதற்கென வேறு பொருள் இல்லை என்று கூறுவர். ஆனால் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்லாசிரியன் ஆணையை எண்ணின் அவ்வாறு பொருள் இல்லை என்று தள்ள முடியாதாம். கொல் என்பதோர் அசைச்சொல். அதன் பொருள் கொல்லே ஐயம்எனக் கூறப்படும். (தொல். 753). அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - திருக். 1081 என்பதில் வரும் சொல்லாகிய கொல் ஐயப் பொருள் தரவில்லையா? அசைத்தல் மேலும் கீழும் அல்லது இடமும் வலமும் அசைத்தல் அசையாகும். ஆடு மாடுகள் அசை போட்டு உண்ணல் அசை போடல் அசையிடல் எனப்பெறும். அசை போட்டுத் தின்னும் ஆவைத் தலைமாணாக்கர்க்கு உவமைப்படுத்தும் நன்னூல் (38). புல் கண்ட இடத்துத் தின்று, நீர் கண்ட இடத்துக் குடித்து, நிழல் கண்ட இடத்துப் படுத்து, அசை போடுவது ஆவின் இயல்பாம். தின்ற உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து மென்று உள்ளே இறக்குதலை அசை மீட்டல் என்பர். மீட்டும் மெல்லுதலை அசை வெட்டல் என்பர். நஞ்சினை அசைவு செய்தவன் என்பது தேவாரம் (583 3) ஆடு மாடுகளைப் போல் சிலர் எப்பொழுதும் எதையாவது மென்று கொண்டே இருப்பர். அவர்களிடம் என்ன அசை போடுகிறீர்களா? என்ன பஞ்சமானாலும் உங்களுக்கு அசை போடல் நில்லாதுஎன்பதுண்டு. இனி, என்ணுதலை அசை போடுதல் என்பது அறிவாளர் வழக்கம். மீள மீளக் கொண்டு வந்தும் புரட்டியும் மாற்றியும் எண்ணுதல் அசையிடுவது போன்றதாகலின் அப்பொருளுக்கும் ஆயிற்று. அச்சசல் அச்சு அசல்; அச்சடித்தது ஒன்றைப் போல் ஒன்று இருக்கும். அதுபோல் வேறுபாடு காணமுடியாத ஒப்பான அமைப்பு அச்சசல் எனப்படும். இது நெல்லை வழக்குச் சொல். எ-டு: இவர் அவரைப் போல அச்சசலாக இருக்கிறார், இதுவும் அதுவும் அச்சசல் தாம் அச்சடையாளம் அச்சிட்டுச் செய்தாற் போன்ற அடையாளம். அச்சசல் என்பதும் அது. அடிமை என்பதன் அடையாளமாகப் பச்சை குத்துதல் முதலாகச் செய்யப்பட்ட அடையாளமாம். அடிமை என்பதைக் காட்டும் சூட்டுக்குறிஎன்றும் கூறுவர். (செ.சொ.அ.மு.) அச்சம் தும்மல் ஒலி அச்சு, அச்சு என வெளிப்படும். தும்மல் ஏற்பட்டால் துயர அடிப்படை என்பதால் நூறு என்பர். மீண்டும் தும்மினால் இருநூறு என்பர். நூறாண்டு நோய் நொடி இன்றி வாழ்க. இருநூறாண்டு நோய்நொடி இன்றி வாழ்க என்பதன் அடையாளம் அவ்வாழ்த்தாம். தும்மல் துயர் அறிகுறி எனக் கருதப்பட்டதால், தும்முச் செறுப்ப அழுதாள் அழித்தழுதாள் என்றது குறள் (1318, 1317) அச்சு என்னும் தும்மல் ஒலி வழியே உண்டாகிய அச்சம் மெய்ப்பாடுகளுள் ஒன்றாயிற்றாம். நச்சென்று தும்மினான் என்பதும் அச்சவழிப் பட்டதேயாம். அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்றது தொல்காப்பியம் (1202) அச்சமே கீழ்களது ஆசாரம். என்றது திருக்குறள் (1075); அச்சம் உடையார்க்கு அரணில்லை என்றும் (534), அஞ்சாமை அல்லால் துணைவேண்டாஎன்றும் கூறியது. (497) அச்சமிக்காரைப் பெறுதலின் பெறாமையே நன்று என்றது நறுந்தொகை (4). அஞ்சி அஞ்சிச் சாவார்என்றார் பாரதியார். அச்சம் என்பது குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம்- இறை 30. நக். அச்சலத்தி அச்சு + அலத்தி = அச்சத்தால் அலமரல் செய்வது. அச்சத்தை உண்டாக்கும் பேச்சும், செயலும் நேருங்கால் அச்சலத்தியாக உள்ளது என்பது மக்கள் வழக்கு. அன்பினால் செய்யும் மனத்துயரம் இச்சலத்தி எனப்படும். இச்சை + அலத்தி = இச்சலத்தி. அச்சன் குடநாட்டார் தந்தையை அச்சன் என்பர் என்பது நன்னூல் உரை (273) அப்பன், அத்தன், அச்சன் என்பவை மூன்றும் தந்தையைக் குறிக்கும் சொல்லே. அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் என்னும் வள்ளலார், அத்தா அச்சா என்பவற்றை யும் வழங்குவார் (திருவருட்பா). உணர்வுக் குறிகளாக வரும் சொற்கள் உறவுப் பெயர்களாக அமைதலே மிகுதி. அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா எனப்பல வழங்கும். அவ்வாறே அச்சா, அச்சோ, அச்சச்சோ, அச்சாவோ என வழங்குதல் தமிழகம் தழுவிய வழக்கேயாம். அச்சாணி அச்சு + ஆணி = அச்சாணி உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி - திருக். 667 அச்சு = உருள் கோத்த மரம்; ஆணி = உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுவது. அது வடிவால் சிறிதாய் இருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து. (பரிமே. உரை) அச்சாறு ஊறுகாய் என்பதை அச்சாறு என்பது தஞ்சை வழக்கு. சாறு, பழம் முதலியவற்றின் பிழிவு. மிளகுச்சாறு, புளிச்சாறு என்பதுடன் சாறு என்பதும் பொதுவழக்குச் சொல்லே. இச்சாறு உடனுக்குடன் வைத்துப் பயன்படுத்துவது. அதனினும் வேறுபட்டது அல் சாறு > அச்சாறு, நெடுநாள் ஊறவைத்துப் பயன் கொள்வது. ஒ.நோ. நல் செள்ளை > நச்செள்ளை அச்சி அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால் அச்சி என்பது. அச்சி பெண்பால் இறுதியாக (ஈறாக) இருப்பதுடன் (தமிழச்சி). அம்மா என்றும், தலைவி என்றும் பொருள் தரும். அது காதலியைக் குறிப்பதாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. அச்சிரம் அச்சிரம் = பனி. அல் + சிரம் = அற்சிரம் > அச்சிரம். அல் = இரவு; சிரல் = கூரிய மூக்குடைய சிச்சிலிப் பறவை. அப்பறவை குத்துவதுபோல் குத்தும் பனி அச்சிரம் ஆகும். அச்சிரம் வருத்தும் ஊர் அச்சிரப்பாக்கம். அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் - சிலப். 14 105 அச்சிரம் என்பது மறைந்து போன சொற்களில் ஒன்று. இச் சொல்லுக்குப் பனிக்காலம் என்பது பொருள்.. இச்சொல் வேறு பொருளில் இக்காலத்தில் வழங்கி வருகிறது. வாயில் உண்டாகிற ஒருவித புண்ணுக்கு அச்சிரம் என்று பெயர் கூறப்படுகிறது.... gÅ¡ fhy¤ij¡ F¿¡F« m¢áu« v‹D« brhš gÅ¡ fhy¤âš c©lh»a thŒ¥ò© nehŒ¡F¥ bgauhƉW v‹W njh‹W»wJ.”(mŠáiw¤J«ã. 130- 131) அச்சு வண்டி அச்சினையோ, அச்சிடுவதையோ குறியாத அச்சு என ஒன்று பொதுமக்கள் வழக்கில் உண்டு. அச்சடிச் சீலை (சேலை)என்பது, சுங்கடிச் சீலை. நெற்பயிர் நடுகைக்கு முன் சமனிலையாய் - ஓரம் சாரம் வெட்டி ஒழுங்குற்றதாய் - நிலத்தைப் பண்படுத்துதலை அச்சுத்திரட்டல் என்பது உழவர் வழக்கு. அச்சு என்பது வார்ப்படக் காசு என்னும் பொருளில் கல்வெட்டு உண்டு. அச்சுப் பணி நாள் நாளும் சிறக்கின்றது. அச்சகங்கள் பெருகுகின்றன எழுத்துப் பிழைகளும் அவற்றை நீக்கப் படும்பாடும், அச்சுப் பணியோ நச்சுப் பணியோ- என்னும் பழமொழியை உண்டாக்கியுள்ளது. உருள் ஊர்தி வழியே வந்த அச்சு, உலகத்தேர் அச்சாக மாறிய மாட்சி வியப்பானது. அச்சொடிதல் பெருஞ்சேதம்; பேரிழப்பு ஏற்படல். எதிர்பாரா வகையில் சொத்தை எல்லாம் இழக்கும் நிலைமை ஏற்பட்டு விட்டால், அச்சை ஒடித்து விட்டது என்றோ அச்சொடிந்துவிட்டது என்றோ சொல்வது வழக்கம். வண்டியில் உள்ள ஓர் உறுப்பு அச்சு; அவ்வச்சு, திரண்ட இரும்பால் ஆனது. அது, ஒடிந்துவிட்டால் ஒடிந்த இடத்தை விட்டு வண்டி நகராது. அதுபோல் ஒருவர் செயலொழிந்து போகுமாறு திடுமென்று ஏற்படும் பொருள் இழப்பு அச் சொடிதல் எனப்படும். அச்சோ அச்சோ ஐயோ! அச்சன் = அப்பன், அச்சோ என விளித்து அரவணைக்கும் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று. அச்சோப் பத்துஎன்பது அது. ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ! -திவ். பெரிய. 1.8 6 அச்சோப் பத்து - திருவா. அஞர் அயர் > அஞர். அயர்வு = சோர்வு; அயர்த்தல் = மறத்தல். அயர்வு மறதி இணைச்சொல் கடிய ஓட்டம், ஒயா உழைப்பு! இவற்றால் அயர்வு உண்டாகின்றது! இயக்கத்தால் தேய்மானம் ஏற்படுகின்றது ஓட்டமும் உழைப்பும் தந்த அயர்வை ஈடு செய்யாவிடின் கேடாம், உடலில் உண்டாம் சோர்வு, எண்ணும் எண்ணத்தையும் தடுக்கின்றது. அயர்த்து மறந்து போகின்றது. அயர்த்தல் என்பது மறதிப் பொருள் தருகின்றது. அயத்துப் போச்சுஎன்பது மக்கள் வழக்கு. அயர்வும் அஞர்வும் ஒரு பொருளவே. அஞர் = துன்பம், சோர்வால் உண்டாம் துன்பம். கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் - குறுந். 103 அஞ்சடித்தல் ஐந்து > அஞ்சு + அடித்தல் = அஞ்சடித்தல் தொழில் படுத்து விடுதல். அவர் கடை அஞ்சடிக்கிறதுஎன்றால், ஈயோட்டுகிறார் என்பது போன்ற வழக்காகும். கடையில் வணிகம் நிகழவில்லை என்பது பொருள், தொழில் சீராக இல்லை அஞ்சடித்து விட்டதுஎன்பதும் கேட்கக் கூடியது. அஞ்சு என்பது ஐந்து என்னும் பொருளது. இங்கு ஐந்து மெய் வாய் கண் மூக்கு செவியாகிய ஐந்து உறுப்புகளையுடைய உடலைக் குறித்து நிற்கிறது. அடித்துப் போட்ட உடல் அசையாமல் கிடப்பது போலக் கடை வணிகமும், தொழில் இயக்கமும் படுத்துவிட்டன என்பது விளக்கப் பொருளாம். சுறுசுறுப்பு இல்லாதவனைப் பார்த்தும் என்ன அஞ்சடித்துப் போய் இருக்கிறாய் என்பதும் உண்டு. இது இப்பொருளை மேலும் தெளிவாக்கும். அஞ்சலிக்கை கண்டீரக் கோப் பெருநற் கிள்ளி என்பானைக் கண்ட புலவர் வன்பரணர் அவன் தோற்றம் கண்டவராய்த் தொழுது கொண்டு எழுந்தார். அவன் தன் கையைக் கவித்து இருக்கச் சொன்னான். இதில் வரும் தொழுதல் என்பதற்கு அஞ்சலி பண்ணல் என்கிறார் புறநானூற்று உரையாளர். கை குவித்தல், அஞ்சலி பண்ணல் என இதனால் அறியலாம். சிலப்பதிகாரத்தில் வரும் அஞ்சலிக்கை என்பதற்கு, அஞ்சலி என்ப தறிவுறக் கிளப்பின் எஞ்ச லின்றி இருகையும் பதாகையாய் வந்தகம் பொருந்து மாட்சித் தென்றனர் அந்தமில் காட்சி அறிந்திசி னோரே என்பதை மேற்கோள் காட்டுகிறார் அடியார்க்கு நல்லார். இருகையும் இணைந்து கூப்புகை அதுவாம்; கூத்துக் கலை முத்திரையுள் ஒன்று. அது, குவித்தல் (கும்பிடுதல்) அஞ்சல் மடல், கடிதம், ஓலை, முதலாக வழங்கப்பட்ட சொல் ஆங்கிலர் ஆட்சியில் அஞ்சல் எனப்பட்டது. அஞ்சல் = கடிதம், அஞ்சலர், அஞ்சலகம், அஞ்சல் துறை, அஞ்சல் வண்டி, அஞ்சல் பெட்டி, அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை, அஞ்சல் உறை, அஞ்சல் செலவு என அஞ்சல் வழிச் சொற்கள் பெருகலாயின. அஞ்சல் என்ற ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது? நெடிய கோல், அதன் உச்சியில் வேல்கத்தி, சலசல எனப் பெருக ஒலிக்கும் சலங்கை - இவையமைந்த ஒரு கருவியைத் தூக்கிக் கொண்டு ஒருவர் ஓட்டம் போட்டு வந்தால், எதிரே வருபவர் பார்ப்பவர் அஞ்சி ஒதுங்குவரா? எதிரே நிற்பரா? அவ்வாளும், அரசாணையால் குதிரை மேல் ஏறி விரைந்து செல்லும் ஆள் என்றால் ஒலி கேட்டதும் அப்பாலாவாரா மாட்டாரா? அக்குதிரை அஞ்சல் குதிரை, அதன் மேல் இருப்பவர் அஞ்சல்காரர்! அவர் கையில் பையில் கொண்ட கடிதங்கள் அஞ்சல்கள் எனப்பட்டன. அஞ்சல் குதிரை சில குறித்த இடங்களுக்கு வந்து கொடுத்துச் செல்லும் கடிதம் சிற்றூர்களுக்கு ஓடுநர் வழியாகக் கொண்டு சேர்க்கப்படும். அவரும் கையில் ஒலிக்கும் மணியுடைய வேல்கம்பு உடையராக ஓடுவார். இவற்றால் அஞ்சல் என்பது அச்சத்துடன் விரைவுப் பொருளும் தருவதாயிற்று. ஓரஞ்சலில் வந்து விடுகிறேன்என்றால், விரைந்து வருவேன் என்பதாம். இந்நாளில் தீயணைப்பு வண்டி, முதலுதவி வண்டி, ஆட்சியர் வண்டி என்பவை ஒலி கேட்டு ஒதுங்க வைக்கும் ஓர் உத்தி கொண்டிருத்தலை ஒப்பிட்டுப் பார்க்க. ஓரிடத்துச் செய்தி மற்றோரிடம் சேரச் செய்வதாம் அஞ்சல் போல் வானொலி தொலைக்காட்சி ஆயவற்றில் பதிவு செய்யப்பட்ட ஒலி, ஒளிக் காட்சிகளை வேறிடத்துக் கேட்கவும் காணவும் பரப்புவது இந்நாளில் அஞ்சல் எனப்பட்டது. அஞ்சல் வழிக் கல்வியும் உண்டாயது. அஞ்சனம் ஐ = அழகு. சன்னம் > சனம். சன்னம் = சிறிது. ஐஞ்சனம் > அஞ்சனம். அழகியதாய் - சிறுகீற்றாய் - அமைந்தது அஞ்சனம் ஆகும். கண்மை என்பது அஞ்சனம் என வழங்கும். கண் இமையில் மெல்லிய சிறிய கீற்றாய்த் தடவி ஒப்பனை செய்ய உதவுவது அஞ்சனம் எனப்பட்டது. பண்டே அஞ்சனம் எழுதப்பட்டமை. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் என்னும் வள்ளுவத்தால் (1285) புலப்படும். அஞ்சனம் கருநிறமாதல், அஞ்சன வண்ணன்என் ஆருயிர் நாயகன் என்னும் கம்பர் வாக்கால் (அயோ. 1006) அறியலாம். அஞ்சனத் திரளும் அணிஅரி தாரமும் என்பது சிலப்பதிகாரம் (25 40). அஞ்சி அதியமான் குடியினர் தம் போராற்றல் மேம்பாட்டால் கொண்ட பெயர் அஞ்சி என்பதாம். போரடு திருவில் பொலந்தார் அஞ்சி - புறம். 91 இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே - புறம். 94 உடன்றோர் உய்தல் யாவது? - புறம். 97 நீயே கூற்றத் தனையை - புறம். 98 என்பவை ஔவையார் வழங்கிய வீறுமொழிகள். பகையை அஞ்சச் செய்வான் அஞ்சி எனப்பட்டான். உலகை ஒடுக்க வல்லான் ஒடுங்கி என்று மெய்கண்டாரால் சுட்டப்பட்டமை அறிக (சிவஞானபோ. 1) அஞ்ஞை அம்மை > அஞ்ஞை; இன எழுத்துத் திரிபு. அன்னை என்பதும் அது. அஞ்ஞை நீ ஏங்கி அழல் - சிலப். 3 அன்னை நீ என்பதும் இதற்குப் பாடம். ஓ.நோ. மைந்தன் > மஞ்சன் மஞ்சன்கழல் நகுகின்றது கண்டாள் - கம்ப. அயோத். 627 அடக்கம் அடக்கம்: 1 அடு > அடல் > அடக்கல் > அடக்கம். பொறிகள் தத்தம் போக்கில் போகாமல் மனவலியால் அமைத்து நெருக்கிச், செல்லும் வழியால் செல்லச் செய்வது அடக்கமாம். சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு - திருக். 422 என்றவாறு செயலுறல் அடக்கமாம்! போர்வீரர் ஒரே குறியாக இருந்து பகை வெல்லல் போல் பொறி புலப்பகைகளை வெல்லல் அருமையால் அதன் பெற்றியை, அடக்கம் அமரருள் உய்க்கும்என்றார் வள்ளுவர் (121). அமர் = போர்; அமரர் = போர்வீரர். அடக்கம் என்பது உயர்ந்தோர் முன் அடங்கி ஒழுகும் ஒழுக்கம். அவை, பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய் புதைத்தலும் முதலாயின. (தொல். பொருள். 250. பேரா.) அடக்கமாவது பிறர் தன்னை வியந்து உரைக்கத் தான் அடங்கி இருத்தல். (நாலடி. 170. தருமர்.) அடக்கம்: 2 அடக்கம் செய்யப்பட்ட இடம். மூச்சு அடங்கி அப்படியே இயக்கமறச் செய்வது அடக்கம் எனப்படும். மூச்சுப் பயிற்சியில் தேர்ந்த ஓகியர் தம் மூச்சை இயங்காமல் அடக்கி இயற்கை எய்திவிடலுண்டு. அத்தகைய நிலை அடக்கம் எனப்படும். இஃது இன்னார் அடக்கமான இடம் என்பது வழக்காறு. ஐம்புலன்களை அடக்கும் அடக்கத்தில் இருந்து, மூச்சையே அடக்கி நிறுத்தி விடும் இவ்வடக்கத்திற்குப் பொருள் விரிவாகியது. அடக்கம் செய்தல் எனப் புதைத்தலைக் கூறும் வழக்குள்ளதை அறிக. ஒடுக்கம் என்பதும் காண்க! அடக்கம் ஒடுக்கம் அடக்கம் = மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்குதல் ஒடுக்கம் = பணிவுடன் ஒடுங்கி நிற்குல் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்(திருக். 126), புலனைந்தும் வென்றான்தன் வீரமே வீரமாம்(ஔவை தனிப்.) என்பவை அடக்கம். வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து மற்றைச் சுந்தரத் தடக்கைத் தானை மடக்குறத் துவண்டு நின்றான்- கம்ப. அயோ. 291 இது கைகேயி முன்னர் இராமன் நின்ற பணிவு நிலை இஃது ஒடுக்கம். சான்றோர் ஒடுங்கிய இடம் ஒடுக்கம் எனப் பெறுதலையும், இறைவன் ஒடுங்கி எனப் பெறுதலையும் கருதுக. அடம் பிடித்தல் அடம்பிடித்தல் என்பது சொன்னதைக் கேளாமல், தான் சொல்லியதைச் சொல்லிச் சொல்லி முரண்டு பிடித்தல் அடம் பிடித்தல் ஆகும். கலங்களில் பிடிக்கும் கரி அழுக்கு ஆகியவை. அகலாமல் பற்றிக் கொள்ளுவதை அட்டுப் பிடித்தல் என்பர் அட்டுப் பிடித்தல் போல் தன் எண்ணத்தை விடாது பற்றுதல் அடம் ஆகும். இது நெல்லை, முகவை வழக்கு. அடர் அடர்: 1 அடர் = செறிவு, செறிவாகச் செய்யப்பட்ட தகடு, அடர்புகர்ச் சிறுகண் யானை - புறம். 6 அழல்புரிந்த அடர்தாமரை - புறம். 29 அடு >ml® அடர்: 2 அடர் > அடர்த்தல் அடர்த்தல்= அடுத்துச் சென்று அடக்குதல்; வெள்ளை அடர்த்தாற்கே - சிலப். 7 9,10,12 அடல் அடல் = வலிமை, போரிடல், வெல்லுதல், கொல்லுதல், அடுதல் என்பதும் இது. நெருக்கமாக இருந்த இருவர் அந்நெருக்கம் குறையின் பகையாம். பகைமைப் பட்டார். வலிமை காட்டவும் வெல்லவும் வேண்டிப் போரிடலும் அழித்தலும் நடைபெறுவன. ஆதலால், அடல் என்பதற்கு இத் தொடர்ச்சிப் பொருள்கள் ஏற்பட்டன. அடுதல் ஆகிய சமைத்தல், உண்ணற்குத் தகப் பொருளை ஆக்கலாம். உண்ண வாராப் பொருள்களை உண்ணும் வகையில் போக்குவ போக்கி, சேர்ப்பவை சேர்த்து ஆக்குவ ஆக்கலால் அவற்றின் இயல்பை மாற்றியும், அழித்தும் ஆக்குவது அடுதல், அடல் ஆயிற்றாம். சோறு அடுபவரை அடவி என்பது யாழ்ப்பாண வழக்கு. அடவி அடர்ந்த காடாக உள்ள இடம் அடவி. அடர்வி > அடவி. அடர்த்தி என்பது செறிவு. இருங்காடு, கருங்காடு என்பனவும் செறிவு வழிப்பட்ட சொற்களே. எ-டு: அடவிக் கதலிப் பசுங்குருத்தை - அந்தகக். தனிப் பயிர் அடர்த்தியாக உள்ளது களை அடைசலாக உள்ளது என்பன மக்கள் வழக்கு. அடவியார் அடவியார் என்பதொரு குடிப்பிரிவு; அப்பிரிவினர், ஒரு காலத்துக் குறிஞ்சி, முல்லை நில வாணராக இருந்தனர் என்பதற்குரிய சான்று அது. அவர்கள் இதுகால் மருதநில வாணராக உளர், சேற்றூர் என்னும் முகவை மாவட்ட ஊரில், அடவியார் தெரு என ஒன்றுண்டு. அடவியான் அடவி என்பது காடு, அடர்ந்து - செறிந்து - விளங்குதால் அடவி ஆயிற்று. வெளிப்படாமல் வீட்டுள் அடங்கிச் செறிந்து கிடப்பவனை அடவியான் என்பது வேலூர் வழக்கு. அடா, அடே அடுத்திருக்கும் இளைஞரையும் அடிப்பட்ட உறவு உரிமை உடையாரையும் அடா, அடே, ஏடா (ஏ அடா) ஏடே (ஏ அடே) என உரிமை யன்பால் பெரியவர் விளிப்பது வழக்கம். அவ்வாறே பெண்மகாரை அடி, அடீ, ஏடி (ஏ அடி) ஏடீ (ஏ அடீ) ஏட்டி என மகளிர் விளிப்பதும் வழக்கம். இதனை வசைச் சொல்லாகச் சொல்வாரும் கேட்பாரும் எண்ணுவது இல்லை. ஆனால் உரிமை உறவு இல்லாரை அடே, அடி, எனில் இழிமைச் சொல்லாய் எண்ணப்படுதல் ஆயிற்று. வாஅடா, போஅடா (வாடா, போடா) வாஅடி, போ அடி (வாடி, போடி) என்பவை ஏவல். மகிழ்வுக் குறிப்புமாம். வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் - பாரதியார் அடடே(அடே அடே) - வியப்புக்குறி. அடடே அப்படியா ஆயிற்று? * ஏலே காண்க. அடாவடி அடு + ஆ + அடி= அடாவடி அடு = பொருந்துதல்; அடா = பொருந்தாமை. போர் என்பது ஒப்புப் பொருளது. பொருந்தலால் பொரு. போர் எனப்படுவது. அது பொருந்தா வகையில் முறைகேடாம் வகையில் ஒருவனால் செய்யப்படுமானால், அடாவடி என்றும், அடாவடிக்காரன் என்றும் அடாவடித்தனம் என்றும் மக்களால் சொல்லப்படுகின்றது. போரறம் அங்கே போற்றப்படவில்லை என்பதாம். அடி அடி1 ஓர் உருவின் அடிப்பகுதி அடியாம். அடியாம் அடிப்பகுதி கால் ஆகும். மாந்தர் காலின் அளவு அடி எனப்பட்டு அளவைப் பெயர் ஆயிற்று; அது. நீட்டலளவை. காலின் அளவுகொண்டு செய்யப்பட்ட அளவும் அடி எனப்பட்டது. அதனை அளக்கும் கோல் என்றார் வள்ளுவர் (710) வழக்கில் அளவு கோல், அடிக்குச்சி என உள்ளன. அடி என்பது முன்பு பன்னிரண்டு விரல் (அங்குல) அளவாகக் கொள்ளப்பட்டது. இதுகால் பதின்ம முறையில் மாத்தம் (மீட்டர்) எனப்படுகிறது. அடி2 ஒன்றன் முடிப்பகுதி முடியாம். அடிமுடி இரண்டும் ஒன்றன் கீழெல்லை மேலெல்லையாம். முடியாவது முடிவு இடம். ஓர் உரு அல்லது பொருள் நிலத்தை அடுத்துத் தொட்டிருக்கும் பகுதி அடி ஆகும். அடு > அடி. நிலத்தடி நீர், நிலத்தின் உள்ளே இருப்பது. மரத்தடி முதலியன நிலத்தின் உள்ளிருந்து கிளர்ந்து நிலத்தின் மேல் எழுந்து நிற்பன. இயங்குவனவற்றின் கால்கள் நிலத்தை அடுத்து இருப்பதால் அடி எனப்பட்டன. அடிமரம், அடிமுடி, புள்ளடி, மக்கள், மற்றை உயிரிகளில் கால் அமைந்தவை எல்லாவற்றுக்கும் கால் அடியே அடி, மரங்கள் முதலாம் ஓரறி வுயிரிகளுக்கு மண்மேல் தெரியும் பகுதி அடியும், அவற்றின் வேரின் கீழ்ப்பகுதி வேரும் வேரடியுமாம். ஒன்றை அடுத்ததால் - நெருங்கியதால் - ஏற்பட்ட ஓசை அடி எனலாயது. கோலால் தாக்குதலும், கையால் அறைதலும், அடி என ஏவலும் ஆயது. வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் - புறம். 10 இவ்வடி காலாம் அடியாம். அடிக்கண் தங்குதல் அடியுறை எனப்பட்டது. அடிநிழற் பழகிய அடியுறை - புறம். 198 விடுதல் இன்றி ஒன்றியிருத்தல் அடிப்படல் ஆகும். ஒரு பயிர் விளைந்து, அதன் அடிப் பகுதியில் மீள எழுந்த பயிர் தாளடி எனப்படும். பல்கால் என்பது அடிக்கடியாம். அடி என்பது அடா அடே என்பது போல, அடீ என விளியாயிற்று. கலங்களில் பற்றுப் பிடித்தல் அடிப்பிடித்தல் எனப்பட்டது. அடியைப் பற்றுதல் வழிபாடும், மன்றாட்டும், தோல்விக் குறியும், அடிமைச் சான்றும் ஆயின. அடியேன் என்பது அடியவர் பணிமொழி, மரத்தடி, களத்தடி, ஊரடி முதலியன இடப்பெயர் சுட்டின. அடித்தல் தொழிற்பெயர். கதிர் அடித்தல், காயடித்தல், ஏரடித்தல், பரம்படித்தல், பண்ணையடித்தல், புழுதியடித்தல், பேயடித்தல், மாரடித்தல், அரட்டை அடித்தல் முதலியன பெருவழக்கானவை. இயற்கை இயங்கியல் வெயிலடித்தல், காற்றடித்தல் மழையடித்தல் எனப்பட்டன. வயிற்றில் அடித்தல், பட்டுணி போடுதல் எனலாயிற்று. ஐந்தடித்தல் என்பது அஞ்சடித்தல் என்று வழு வழக்காயது. ஐம்பொறிகளும் அடித்துப் போட்டது போல் செயலற்றுக் கிடத்தல் ஐந்தடித்தலாம். சிங்கியடித்தல் என்பது உணவுக்குத் திண்டாடுதல் ஆகும். ஓர் அடிப் பகுதியில் மேல் கொண்டு ஆய்தல், அடிப்படை ஆய்வு நெறியாம். அடியின் சமப்பாடு, அடிமட்டம், பரந்துபட்டுச் செல்லும் ஓசையை உடைய பாடல் நடையிட அமைந்தது அடி. நாற்சீர் அளவடி; முச்சீர் சிந்தடி; இருசீர் குறளடி ஒன்றை முதற்கண் எழுதும் ஓலை, அடியோலை; அதனைப் படி எடுப்பது படியோலை; அடியோலை மூல ஓலையாம். அடிபடுவதால் உண்டாவது காயம் . வடு. அது மாறாது. நாவடியோ அடியாமல் அடித்து அழியா வடுவாவது. அடிகொடி அடி என்பது வேர்; கொடி என்பது வேரில் இருந்து தளிர்த்துப் படரும் கொடி கொடியாவது அடியின் முடி. அந்தாதி என்பதை அடிகொடி என்பது யாழ்ப்பாண வழக்கு. இஃது இயற்கையொடும் இணைந்த இனிய அமைப்பினது. அடிசால் பிடிசால் அடிசால் = விதை தெளிப்பதற்காக அடிக்கும் சால் பிடிசால் = தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால் சாலாவது ஆழமாகவும், அகலகமாவும் உழுவது. அடிசால், பிடிசால் வேளாண்மைத் தொழில் வழியாக வழங்கப்பெறும் இணைச்சொல். சால் என்பது உழுபடைச் சால் என்பதன் சுருக்கம். உழுபடையாவது கலப்பை. மேல் மண்ணும் கீழ்மண்ணும் கலக்கவைக்கும் கலப்பை, பொது நிலை உழவு விடுத்து, ஆழ உழுதல் சால் அடித்தல் எனப்படும். சாலடித்தல் விதை தெளிப்பதற்கும் பாத்தி கட்டுவதற்கும் இடனாக அமையும் உழு தடத்தில் விதை போடுதல் சால் விதை எனப்படும். அடிசில் அடுசில் > அடிசில். அடுதல் சமைத்தல் அட்டு - சமைத்துப் - பக்குவப்படுத்துவது அடிசில் ஆகும். அடிசிலும் பூவும் - தொல். 109 ஊன்துவை அடிசில் - புறம். 390 நெய்யுடை அடிசில் -புறம். 188 உண்பொருள்களில் ஆகாவற்றை அழித்து ஆக்கம் தருவன கொண்டு ஆக்கலால் அடுதல் என்பதற்குச் சமைத்தல் பொருளும், அடிசில் என்பதற்கு உண்பொருள் என்னும் பொருளும் உண்டாயினவாம். முன்பே, அடிசில் நூல் இருந்தமை, பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்(சிறுபாண். 241) என்பதால் புலப்படும். மடை நூல் என்பதும் இது. * மடைநூல் காண்க. அடிதிரும்பல் அடி திரும்பும் வேளை என்பது காலடி நிழல் கிழக்கில் சாயும் மொழுது, அதாவது உச்சி சாய்ந்த மாலைப் பொழுது ஆகும். அடித்திரும்பி விட்டது. வீட்டுக்குப் போகலாம்என்பர். அடியைச் சார்ந்த நிழலைக் குறித்து. நேரம் குறிப்பது இது. இது தென் தமிழக வழக்காகும். அடித்தல் அடித்தல்= கிடைத்தல், உண்ணல், வெதுப்பல், அசைத்தல். அடித்தல் என்பது அடித்தலாம் வினையைக் குறியாமல் பரிசு அடித்தது. என்பதில் கிடைத்தல் பொருளில் வருகிறது. வயிறு நிறைய அடித்துவிட்டேன்.v‹gâš உண்ணற் பொருள் அடித்தலுக்கு உண்டாகின்றது. காய்ச்சல் அடித்தல் போன்றனவற்றில் அடியாத அடி அடியாகின்றது. ஆங்கு வெயிலடித்தல் போல வெப்பப் பொருள் தந்தது. வயிற்றில் அடித்தல் என்பதிலோ பட்டுணி போடுதலைக் குறிப்பதாயிற்று. எதில் அடித்தாலும் வயிற்றில் அடித்தலாகாது. கண்ணடித்தல் என்பதோ அசைத்தல் பொருளது. அடித்துப் பிடித்து அடித்தல் = ஒருவன் கையையோ கையிலுள்ள மண்ணையோ தட்டுதல். பிடித்தல் = தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல். மண்தட்டி ஓடிப் பிடித்தல் என்னும் சிறுவர் விளை யாட்டில் அடித்துப் பிடித்து ஓடல் என்னும் இணைச்சொல் வழங்கும். அடிபிடி அடி = அடித்தல் என்பது முதனிலை யளவில் அடியென நின்றது. பிடி = பிடித்தல் என்பதும் முதனிலை யளவில் பிடியென நின்றது. அடியும் பிடியும் என உம்மைத் தொகையாய் அமைந்து இணைச்சொல்லாகியது. சண்டை, போர், விளையாட்டு என்பவற்றில் தாக்குவாரும் தடுப்பாரும் என இரு திறத்தர் உளரன்றோ! தாக்குவார் வினைப்பாடு அடி, தடுப்பார் வினைப்பாடு பிடி. வெட்சி, சுரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, எனப் புறத்திணைகள் இரு கூறுபட்டு அமைதலை அறிக. இவை போர்க்கள அடிபிடிகள். நீ யடித்தால் என்கை புளியங்காய் பிடுங்கவா போகும் என்பது வழங்கு மொழி. அடிபிறக்கிடல் அடி + பிறக்கு + இடல் = அடிபிறக்கிடல். போரில் நின்று தாக்க அஞ்சிப் பின்னிடல் அடிபிறக்கிடல் ஆகும். காலைப் பின்வாங்கல் அல்லது பின்வைத்தல் போரில் முதுகு காட்டலுக்கு முன்னோடியாதலால் அடிபிறக்கிட்டோரைத் தாக்குதல் போரறம் அன்று என்பது பண்டைத் தமிழர் வழக்கு. (புறம். 9 தொல். புறத். 10 நச்.) அடிபுதை அரணம் காலடி, பரடு, கணுக்கால் என்பவை வரை முழுதுற மூடிக் காக்கப் போர் வீரர்கள் பூண்டதும் தோலால் ஆயதுமாம் செருப்பு, அடிபுதை அரணம் எனப்பழநாளில் வழங்கப்பட்டது. புதைத்தல் = மூடுதல்; அரணம் = காவல். எ-டு: அடிபுதை அரணம் -பெரும். 69 * செருப்பு காண்க. அடிப்பாவாடை அடி + பாவாடை = அடிப்பாவாடை. பாவாடைக்கு உள்ளாக உடுத்திய பாவாடையை அடிப்பாவாடை (உட்பாவாடை) என்பது குமரி வட்டார வழக்கு. அடி மரம் செடி கொடிகளின் வேரும் தூருமாம் பகுதி மண்ணுள் இருந்து வருவதால் உள் என்னும் பொருள் கொண்டது. அடிப்பொடி அடிப்பொடி = தொண்டர். அடி = காலடி; பொடி = தூசி, தூள், காலடியில் பட்ட தூள் எனப் பொருள் குறித்தாலும், அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை எடுத்து, வழிபடும் பொருள் போலப் பூசிக் கொள்ளுவாரை அடிப்பொடி என்பர். சிவனியர்க்குப் பொடி, தீருநீறு, மாலியர்க்குப் பொடி, திருமண், தொண்டரடிப்பொடியாழ்வார் நாலாயிரப் பனுவலார், கம்பன் அடிப்பொடி கணேசனார் அணித்தே வாழ்ந்தவர். அடிமுடி உறுப்புகள் அகங்கால் உகிர்விரல் மீகால் பரடு கணைமுழந்தாள் மிகுங்கால் நிதம்பமும் உந்தியுதர மரைமுலையும் நகஞ்சார் விரலங்கை முன்கைதோள் கண்டம் முகம்நகைவாய் நகுங்கா திதழ்மூக்குக் கண்புரு வம்நெற்றி தாழ்குழலே - நவநீதப். 44 அகவல், வஞ்சிப் பாக்களால் உறுப்பு (அவயவ) மாலை வரும் எனவும், கலிப்பா வருதலையும் விலக்கார் எனவும் கூறுவர். (பொய்கையார் பாட்டியல்; நவநீதப் பாட்டியல் 44 மேற்கோள்) அப்பரடிகள் ஒரு பதிகத்தைத் திருவங்க மாலை யாகப் பாடினார். அதில் தலை, கண், மூக்கு, வாய், நெஞ்சு, கை, ஆக்கை, கால் என்பன முறையே சொல்லப் பெறுகின்றன. அங்கு =வளைவு. வளைந்து நிமிரும் உடல் அங்கம் ஆயது. பெரியாழ்வார் பாடிய கண்ணன் திருப்பாதாதிகேச வண்ணத்தில் பாதம், விரல், கணைக்கால், முழந்தாள், குறங்கு, முத்தக் காசு, மருங்கு, உந்தி, உதரம், மார்பு, தோள், கை, கண்டம், வாய், நாக்கு, நயனம், முறுவல், மூக்கு, கண்கள், புருவம், குழை, நெற்றி, குழல் என்பன முறையே ஓதப் பெறுகின்றன. அப்பரடிகள் தம் தலை முதலியவற்றை விளித்துப் பாடினார். பெரியாழ்வார் கண்ணன் அடிமுதல் முடியீறாகப் பாடினார். இவை அங்க மாலைக்குரிய இலக்கணத்தைப் பெறாவாயினும். அங்க மாலைக்கு முன்னோடிகள் என்னத்தக்கன. அங்க மாலைக்குப் பின்னோடி என்னத் தக்கதும் உண்டு. அது, மெய்மறை (கவசம்) என்னும் பெயர் கொண்டது. விநாயக கவசம், சட்டி கவசம் முதலியன அவை. இன்ன இன்ன உறுப்புகளை இப்படி இதனால் காக்கஎனவரும் அமைவுடை யவை அவை. தெய்வங்களுக்குப் பாதாதி கேசமும் (அடிமுடியும்), ஏனையவர்களுக்குக் கேசாதி பாதமும் (முடியடியும்) கூறுதல் மரபென்பர்என்பது நவநீதப் பாட்டியல் குறிப்புரை (43) அடிமை காலடியைச் சார்ந்து தொண்டு பூண்டும், உரிமை இழந்து அடிமைப்பட்டும் இருப்பவர் அடிமை எனப்படுவர். குருவர் அடிமை, துறவர் அடிமை, இறையடிமை முதலாம் அடிமையர்க்கு அடிமை உயர்வுப் பொருளும், வறுமை இழிமைகளால் தம் உரிமையற்றுக் கிடப்பார்க்கு இழிமைப் பொருளும் அடிமை வழியே உண்டாம். தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன் - சுந். தேவா. முருகடிமை, கம்பன் அடிப்பொடி, தொண்டரடிப்பொடி போல்வன உயர்வுக்குரிய அடிமை. நாட்டால் அடிமை, மொழியால் அடிமை, குல அடிமை, கொத்தடிமை என்பன இழிமைப்பட்ட அடிமை. * அடிப்பொடி காண்க. அடியோலை அச்சோலை அடியோலை = முதற்கண் எழுதப்பட்ட ஓலை அல்லது மூல ஓலை. அச்சோலை = மூல ஓலையைப் பார்த்து எழுதப்பட்ட படியோலை. அடிமனை, அடிமணை என்பவற்றில் உள்ள அடி மூலமாதல் தெளிவிக்கும். மூலத்தில் உள்ளது உள்ளபடி, படியெடுப்பது அச் சோலையாம். மூட்சியில் கிழிந்த ஓலை படியோலை மூல ஓலை, மாட்சியிற் காட்ட வைத்தேன்(பெரிய. தடுத். 36) என வருவதில் சுட்டும் படியோலை அச்சோலையாம். அச்சடிச் சீலை, அச்சு வெல்லம், வார்ப்பட அச்சு என்ப வற்றைக் கொண்டு அச்சு படியாதல் அறிக. அடிவிலை அடிவிலை = ஊன்விலை மாடு விற்பதற்காகத் தாம்பணிக்குக் கொண்டு செல்வர். அங்குக் குறைந்த விலைக்கு மாட்டைக் கேட்டால். அடி விலைக்குக் கேட்கிறாயா? வேலை செய்யும் மாடு இதுஎன்பர். அடிவிலை என்பது கறியின் விலையைக் கணக்கிட்டு ஊன் உணவுப் பொருளுக்காக் கொண்டு செல்லப்படும் மாடாகும். அடிவிலை என்பது மாடடித்துக் கொன்று கூறு போட்டு விலைக்கு விற்பாரிடம் கொடுத்து, வாங்கும் விலையாகும். அத்தகு மாடுகள் அடிமாடுகள் எனப்படும். அடித்தல் கொல்லுதல். அடுகிடை ஒன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஒருவர் முன்னோ, வழிபடு தெய்வத்தின் முன்னோ உண்ணாமலும் பருகாமலும் உயிரை விடுதற்குத் துணிந்தாராய்ப் பலரும் அறியக் கிடக்கும் கிடைநிலை அடுகிடை எனப்படும். அடுதல் = அழித்தல். தன்னை ஒறுத்தல் வழியாகத் தான் எண்ணிய எண்ணத்தை முடித்துக் கொள்ளல் அது. பிறர்க்கு இன்னா செய்யாமை வழியாகத் தன்னை வாட்டித் தன் எண்ணத்தை நிறைவேற்றலாம் அது. அடுகிடை படுகிடை அடுத்தும் படுத்தும் கிடத்தல், விட்டுப் பிரியாமல் இருத்தல்; ஒன்றைச் சாதிக்க நினைப்பார் எப்போதும் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து இருத்தல் அடுகிடை - அடுத்துக் கிடப்பது. படுக்கையிலேயே கிடத்தல் - படுகிடை. அடுகிடை படுகிடையாக் கிடந்து பெண்ணைக் கட்டினான் என்பது மக்கள் வழக்கு அடுக்கல் அடுக்கல் = மலை; ஒன்றன்மேல் ஒன்று வைத்தது போல் அமைந்த மலை அடுக்கல் ஆகும். அடுக்குப் பாறை என்பதொரு மலைப்பெயர். அடுக்குமொழி, அடுக்குச் சட்டி, அடுக்குமாடி என்பவை வழக்குகள் அடுக்கு மல்லிகை, இயற்கைக் கொடை. அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது - மலை. 19 அடுக்குவது பொருந்த அமைந்தது. அடுக்காதது பொருந்த அமையாதது. நீ செய்யும் செயல் அடுக்காது என்பது மக்கள் வழக்கு அடுக்கல், அடுக்கம் என்பதுமாம். அடுக்களை அடுக்கு + அள் + ஐ = அடுக்களை. ஒன்றை ஒன்று நெருங்க வைப்பது அடுக்கு ஆகும். பக்கம் வைத்தல் மேலே வைத்தல் என இருவகை வைப்பும் அடுக்கே. கீழே அடுத்தடுத்து அமைத்தது அடுப்பு ஆகும். மேலே மேலே வைப்பது அடுக்கு ஆகும். எ-டு: அடுக்கு மல்லி, அடுக்குப் பாறை, அடுக்குச்சட்டி, அடுக்குப் பானை. சொற்களை அடுக்கிக் கூறல் அடுக்குமொழி; அடுக்குத் தொடர். உணவாக்கும் மடைப்பள்ளி எனினும், வீட்டுச் சமையல் அறை எனினும் கலங்கள் பலவாய் - செறிவாய் - வைக்கப்படுதலால் அஃது அடுக்களை எனப்பட்டது. அள் என்பது செறிவு. x.neh.: செறிவற்ற மண் அள் அல்(அள்ளல்). சமையலறையை அடுக்களை என்பது வழக்கு. அடுக்கு அடுக்கு:1 ஒன்றை அடுத்து ஒன்று அமைவதும், அடுக்கி வைப்பதும் அடுக்கு ஆகும். அடுக்குப்பாறை, அடுக்கு மல்லி, அடுக்கம் (மலைத்தொடர்) என்பன போல்வன அடுத்தடுத் தமைந்தவை இயற்கை யமைப்புடையவை. அடுக்குப்பானை, அடுக்குச்சட்டி, அடுக்களை (அடுக்கி வைக்கப்பட்ட கலங்களையுடைய அட்டில் அல்லது சமையலறை ஆக்குப்புரை என்பதும் அது) அடுக்கியல், அடுக்குத் தொடர், அடுக்குமொழி என்பன மொழி வழிப்பட்டவை. அடுக்கியல் அராகம் எனப்படும். இவை செயற்கைவழி யமைப்புடையவை. அடுக்கு மாடி நகர்களின் எழுச்சித் தோற்றம் அடுக்காதீர்கள் என்றால் வெற்றுப் புகழ்ச்சி வேண்டா என்பதன் குறிப்பு. உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி -தொல். 588 அடுக்கிய கோடி -திருக்.954 அடுக்கு:2 அடுக்கு = ஐந்து. அடுக்குப் பாறை அடுக்குப்பானை, அடுக்கு மொழி, அடுக்கு மல்லிகை என்பவற்றிலுள்ள அடுக்கு என்பது அடுக்குதலைக் குறித்தது. எண்ணைக் குறித்தது இல்லை ஆனால், வாழை யிலையை ஒன்றனுள் ஒன்றாக அடுக்கி ஓரடுக்கு, ஈரடுக்கு என இலை வணிகம் செய்வர் . இவ்வடுக்கு ஒன்றில் ஐந்து இலைகள் எண்ணி வைக்கப்படும். அடுக்குச் சட்டி என்பது ஒன்றனுள் ஒன்று அடங்கும். ஐந்து சட்டிகளை உடையதாம். ஆதலால் அடுக்கு என்பது ஐந்து என்னும் எண்ணைக் குறித்தது. கை, பூட்டு என்பவை காண்க. அடுக்குள் அடுக்கு + உள்= அடுக்குள். சமையலறையை அடுக்குள் என்பது உண்டு. கலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்படுவதும், வீட்டின் உள்பகுதியாக இருப்பதும் கருதிய பெயர் அடுக்குள் ஆகும். இது பார்ப்பனர் வழக்கு. அடுசில் அடுசில் = சோறு. அடுசில் > அடிசில். அடுசில் ஆகிய ஆவுதி -பதிற்.21 அடிசிற் கினியாளை -தனிப். x.neh.: ஒடுங்கி >xo§». * அடிசில் காண்க. அடுதல் அடுதல் = அழித்தல்; சமைத்தல் ; போரிடல். அடப்படுவது அடிசில்; உணவு. அதனை ஆக்கும் மனைப்பகுதி அட்டில், சமையல் கூடம். அடுத்தும் வெட்டியும் எரியூட்டியும் செய்யும் அடுதல் போல் போர்க்களத்தில் பகைவரை அழித்தல், அடுதல் எனவும் அடுபோர் எனவும் வழங்கப்பட்டது. ஒன்று பெற்றிருந்து அல்லது கொண்டிருந்த இயல்பை அல்லது நிலையை மாற்றியமைத்தல் அடுதலாம். தீ அடுத்தலால் வேதல் பொரிதல் அவிதல் முதலியவும், நீர் அடுத்தலால் நனைதல் இளகல் வழிதல் முதலியவும், காற்று அடுத்தலால் உலர்தல் வற்றல் காய்தல் முதலியவும், கருவி அடுத்தலால் வெட்டல் குத்தல் சிதைத்தல் முதலியவும் ஏற்படுதல் கண்கூடு. ஆக்கம் கேடு ஆகிய இரண்டும் உலகத்து இயற்கை ஆதலின் அடுதல் பயன் அவ்விரண்டுமாய்க் கலந்தே உண்டாகின்றன. அழிதலால் பயனும் அழிதலால் கேடும் உண்டாதல் வெளிப்படை. எ-டு: சோறு படுக்கும் தீ -புறம்.20. ஊர் சுடு விளக்கு -மதுரைக்.692. அடுத்தும் தொடுத்தும் அடுத்தல் = இடைவெளிபடுதல். தொடுத்தல் = இடைவெளிபடாமை. அண்டை வீடு அடுத்த வீடு என்பதையும், அண்டியர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி தொடர்வு, தொடலை, தொடர், வண்டி, தொடர் கதை, தொடர்பொழிவு இவற்றால் தொடுத்தல் பொருளை அறிக. அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா -மூதுரை 5 அடுப்பில் காளான் பூத்தல் அடுப்பில் காளான் பூத்தல் = சமைக்கவும் இயலா வறுமை. ஆம்பி, காளாம்பி, காளான் என்பன ஒரு பொருளன. காளான் குப்பையில் பெரிதும் உண்டாகும். ஆதலால், குப்பைக் காளான் எனவும் படும். நல்ல மண் பதத்தில் மழைக் காலத்தில் தோன்றக் கூடிய காளான் சமையல் செய்யும் அடுப்பில் முளைத்ததென்றால் என்ன காரணம்? பல நாள்கள் அடுப்பில் நெருப்பு மூட்டவில்லை. நெருப்பு எரிந்த சாம்பலை அள்ளவில்லை. கூரை முகடு சிதைந்திருப்பதால் மழைநீர் வழிந்திருக்கிறது. ஆகவே, அங்குக் காளான் தோன்றியிருக்கிறது என வறுமையின் உச்சத்தைக் காட்டுவதாம். அடுப்பில் பூனை கிண்டுதல் என்பதுவும் இது. ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்ப -புறம். 164 அடுப்பில் பூனை கிண்டுதல் அடுப்பில் பூனை கிண்டுதல் = சமைக்கவும் இயலா வறுமை. பூனை அழகு உயிரியாக மேலை நாட்டில் வளர்ப்பது உண்டாயினும். அப்பழக்கத்தை மேற்கொள்ளும் நம் நாட்டாரும் அதற்காக வளர்ப்பது உண்டாயினும், எலி பிடிப்பதற்காக வளர்ப்பதே பெரும்பான்மையாம். எலி சுவரைத் துளைத்துக் குடியிருக்கும். வீட்டுத் தளத்தையும் தோண்டி குடியிருக்குமா? பலநாள் அடுப்பு மூட்டாமையால் அதையும் மற்ற மண்பகுதி போலவே கொண்டு எலி வளை தோண்டக் குடியிருக்கின்றதாம். அதனைப் பிடிப்பதற்காகப் பூனை அடுப்பைக் கிண்டுகிறதாம். வறுமைக்கொடுமையைச் சொல்லுவது இது. வல்சி இன்மையின் வயின்வயின் மாறி இல்லெலி மடிந்த -புறம். 211 அடுப்பு அடுத்து அடுத்து அமைந்தது அடுப்பு எனப்பட்டது. அடுதல், சமைத்தல், சமையல் செய்வதற்கு அடுத்தடுத்து அமைக்கப்படுவது திருக்கோயில் திருமடம் மடைப்பள்ளிகளில் காணலாம். ஊர்ப்பொது விழாக்கள் எடுக்கப்பட்டுப் பொங்க லிடுங்கால் ஐம்பது அறுபது அடுப்புகள் வரிசையாக அமைக்கப் படுவதை இன்றும் சிற்றூர்களில் காணலாம். இன்றும் வீடுகளில் ஒரே பொழுதில் பலவும் ஆக்க வாய்ப்பாக வீட்டு அடுப்புகளும் இரண்டு மூன்று இணைத்தும், அடுத்தும் அமைத்தல் வழக்கே. ஆவியடுப்பு வந்து விட்ட நாளிலும் இரண்டு மூன்று கலங்கள் வைத்து ஆக்க அடுப்புகள் அமைதல் நாம் காண்பதே. அடுத்து அமைந்ததால் அடுப்பு எனப் பெயர் கொண்டு அதில் ஆக்கப்படும் சோறு கறி முதலியவை அடுதல் என ஆயவை அறிக. அடுப்பும் துடுப்பும் அடுப்பு = அடுப்பு வேலை. துடுப்பு = அடுப்பு வேலையுடன் செய்யும் துடுப்பு வேலை, களி அல்லது கூழ் கிண்டும் வேலை. அடுப்பில் இருக்கும், உலையின் கொதிநிலை அறிந்து, அதில் மாவைப் போடுதலும், போடப்பட்ட மாவு கட்டிபட்டுப் போகாவண்ணம் கிண்டுதலும் தீயின் அளவினைத் தேவைக்குத் தகக் கூட்டிக் குறைத்துக் கொள்ளுதலுமாகிய பலதிறத்தொரு பணிக்கிடையே, அப்பணி செய்வாரை எவரேனும் கூப்பிட்டால் அடுப்பும் துடுப்புமாக இருக்கிறேன் என்பார். உடனே வர முடியாது என்பது மறுமொழியாம். இதனை விடை வகை எட்டனுள் உற்றதுரைத்தலொடு சார்த்தலாம். அல்லது பிறிது மொழிதல் விடையென ஒன்பதாய் ஆக்கலாம். அடும்பு நெய்தல் நிலக்கொடி வகையுள் ஒன்று அடும்பு; அடம்பு எனவும் வழங்கும். அடுத்தல், நெருங்குதல்; அடர்தல், செறிதல். அடு >ml® > அடர்த்தி. மரம் செடி கொடி என்பவற்றின் பூ, காய், கனி முதலிய வற்றிலும் இலையே நெருங்கியும் அடர்ந்தும் இருப்பதால் அதனை அடை என்றனர். அப்பொது வகையாம் அடையினும் மிகு செறிவுடைய இலைகளை உடைமையால் அடும்பு எனவும் அடம்பு எனவும் இக்கொடி வழங்கப்பட்டது. பொம்மல் அடும்பு - நற். 272 பொம்மல் > பொதும்பல் = செறிதல். பொதும்பு = செறிந்த சோலை. பொதும்பில் கிழார் என்பார் சங்கப்புலவர். அவர் ஊர் மதுரை சார்ந்த பொதும்பு. அடும்பமல் நெடுங்கொடி என்பது ஐங். தனிப். 6 அமலுதல் = நெருங்குதல் அடும்பவிழ் அணிமலர் சிதைஇ, தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்என்பதால் (குறுந். 349) அதன் மலரின் பருமை புலனாம். அடை அடை: 1 அடை என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அடை என்பதன் வழியாக வந்த சொற்களும் பலவாம். அடை என்பதற்கு இலை என்பது ஒரு பொருள். அஃது எப்படி வந்தது? ஒரு மரத்தில் அல்லது செடி கொடிகளில் மிகுதியும் நிரம்பி அல்லது அடர்ந்து இருப்பது எது? இலையே. அதனால் அடுத்தடுத்து நெருங்கி இருக்கும் இலை அல்லது அடைசலாக மூடியிருக்கும் இலை அடை எனப்பட்டது. அடகு எனினும் இலையேயாம். அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் என்பது ஔவையார் தனிப்பாடல். அடை: 2 அடையுள் ஓர் இலைக்குத் தனிச் சிறப்புண்டு. மங்கலத் தன்மையும் அதற்குத் தரப்படுவதுண்டு. அது வெள்ளடை எனப்படும் வெற்றிலை. இளந்தளிர், வெளுப்பு நிறமாக இருததலால் வெள்ளடை எனப்படுவதாயிற்று. அதற்கு வெற்றிலைப் பெயர் எப்படி வந்தது? பூவாத காயாத இலை, வெற்று இலை தானே! இனி, வெறுமனே - அவியாமல், காயப் போடாமல், கடைதல் இல்லாமல் - விரும்பித் தின்னும் இலையாக இருப்பதாலும் வெற்றிலை ஆயிற்று. வெறுமை இலை, வெற்றிலை. அடைகாத்தல் அடைகாத்தல் = வெளிப்போகாது வீட்டுள் இருத்தல். கோழி முட்டையிட்டு இருபத்தொரு நாள் அடை கிடக்கும். குஞ்சு பொரித்து வெளிப்படும் வரை அடை காக்கும் கோழி. தீனி நீர் ஆகியவற்றையும் கருதுவது இல்லை. அடையை விட்டு வெளிப்படவும் எளிதில் விரும்புவது இல்லை. அடை கிடக்கத் தடையொன்று வருவதாயின் அதனை எதிர்த்துப் போரிடவும் துணியும். அவ்வடை காக்கும் வழக்கத்திலிருந்து, கிடந்த கிடப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல் என்னும் பொருள் அதற்குப் பிறந்தது. வீட்டை விட்டு வெளிப்போகாத பிள்ளைகளை ஏன் அடை கிடக்கிறாய்? வெளியே போய் வாயேன்என்பது வழக்காயிற்று. அடைக்கத்து முட்டையிடுதற்குக் கோழி கத்துதல் (கேறுதல்) அடைக்கத்து எனப்படும். அக்கோழி முட்டையிட்டு அடை காக்கப் பருவம் வந்ததை அதன் மொழியால் கூறுதலே கேறுதல், அதனை உணர்ந்து அடை கூட்டி வைக்கத் தவறினால், நம் வீட்டிலே தின்றும் குடித்தும், அடுத்த வீட்டிலே முட்டையிட்டு விட்டு வந்து விடும். அடை என்பது என்ன? கோழி குஞ்சு பொரிப்பதற்காக வைக்கப்படும் மண் ஓடு. அதில் உமியைப் பரப்பி வைத்துவிட்டால் அதிலேயே முட்டையிடும்; அங்கேயே படுத்துக் கொள்ளும். தீனி தண்ணீர் கருதாமல் பல நாள்கள் அடைந்தே கிடப்பதற்குரிய இருப்பை அடைஎன்பது சரிதானே! காட்டுப் பறவைகள் தாமே ஈனில் இழைத்துக் கொண்டால், வீட்டுப் பறவையாம் கோழிக்கு நாமே அடை வைக்கிறோம். தாய்மைக் கோயில் அவ்வடை அன்றோ! அடைக்கலம் ஊர் விட்டு ஊர் போவார். விலை மதிப்பு மிக்க தம் பொருள்களைத் தக்காரிடம் தந்து பாதுகாக்கச் சொல்வது பழவழக்கு, அவ்வழக்கிலிருந்து வந்ததே அடைக்கலம் என்பது. கலம், அணிகலம், உண்கலம், படைக்கலம் ஆகிய இன்னவை. இவ்வழக்கே நம்பிக்கை யுடையவர்களிடம் மனைவி மக்கள் முதலியவர்களை அடைக்கலமாக வைக்கும் நிலைமைக்கு வளர்ந்தது. இப்பொழுது அடைக்கலம் இன்னும் விரிந்து விட்டது. நாட்டுக்கு நாடே அடைக்கலமாகப் போய்க் கொண்டுள்ளதை வரலாறு காட்டிக் கொண்டுள்ளது. அடைக்கலம் மக்கள் பெயரும், தெய்வப் பெயரும், ஊர்ப் பெயருமாக விளங்குதல் வெளிப்படை. அடைக்கலாங் குருவி குருவிகளுள் ஒன்று அடைக்கலாங் குருவி. அது, குடிசை, கூரை, முகடு, பலகணி ஆகியவற்றில் தங்கி இருப்பது. அது அடைக்கலமாக வந்து தங்கியிருப்பதால் அதற்குக் கேடு சூழக் குடிசைவாணர் எண்ணவும் செய்யார். அடைக்கல எண்ணப் பேறு அது. அடைக்காய் வெற்றிலை போடுபவர் அடையாகிய வெற்றிலையை மட்டுமா மெல்லுகின்றனர்? அதனோடு பாக்கும் சேர்க்கப் படுகின்றது. அப் பாக்குக்குப் பெயர் அடைக்காய் என்பது. அடைகாய் எனின் அடையும் அதனோடு சேர்க்கும் காயும் எனப் பொருளாம். அடைக்காய் எனின் பாக்கு என்றாம். அடைசல் நில புலங்களில் பயிர் நிரம்பியிருந்தால் பயிர் அடைச லாகக் கிடக்கிறது என்பதும், களை நிரம்பியிருந்தால் களை அடைசலாகக் கிடக்கிறது என்பதும் உழவடைச் சொற்கள். உழவுத் தொழிலை அடுத்துத் தோன்றிய சொல் உழவடைச் சொல்தானே! அடைத்தல் உடைப்பு, பள்ளம் ஆகியவற்றை முறையே அடைப்பதும் மூடுவதும் போல் வயிறு முட்ட உட்கொளல் அடைத்தலாம். கதவடைத்தல் போலவும், வழியடைத்தல் போலவும் (திருக். 38 புறம். 151) உணவு புகுவாய் முட்ட உண்பது எனினும் ஒப்பதே. புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம். மட்டவிழும் தோசை வடையுடனே - சட்டமுடன் ஓயாமல் சோறுகறி யுண்டையுண்டை யாய் அடைக்கும் வாயா நமச்சிவா யா - தனிப். 4 823 அடைத்துக் கொள்ளல் அடைத்துக் கொள்ளல் = இருமலமும் வெளிப்படாமை. வெளிப்படாமல் மூடி வைப்பதை அடைத்தல் என்பது வழக்கு. கதவடைப்பு, சிறையடைப்பு, தட்டியடைப்பு, பெட்டியடைப்பு என்பவற்றைக் கருதுக. ஒருவர் அடைக்காமல் தானே அடைத்துக் கொள்ளும் சிறுநீர்க்கட்டு, மலக்கட்டு என்பவையும், அடைத்துக் கொள்ளலாகக் கூறப்படும். முன்னும் பின்னும் அடைத்துக் கொண்டது என்பதும் வழக்கே. குருதியோட்டத் தடைப்பாடு, மூச்சோட்டத் தடைப்பாடு என்பனவும் அடைத்துக் கொள்ளல் எனவும் வழங்கும். மார்படைப்பு நோய் மிகப் பெருகி வருவது கண்கூடு. அடைத்தோயை (அடைத்தோசை) அடையின் சுவையை அறியார் எவர்? அடைத் தோசையை விரும்பார் எவர்? அதற்கு அடை என எப்படிப் பெயர் வந்தது? பருப்பு வகை, தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி முதலிய பலவும் சேர்த்து ஆக்கப்படுவது அடை. அஃது ஒரு காலத்தில் பெரும்பாலும். கீரை வகைகளை ஆட்டிப் பருப்பு முதலிவற்றுடன் கலந்து ஆக்கியமையால் வந்த பெயர் என்பதை வெளியிடுகிறது. பல பொருள்கள் செறிந்து அமைந்தது. அன்றியும் அத்தோயை மாத்தோயையிலும் கனமானதும்கூட. இலையடையாக இருந்த அடை முட்டை யடையாகவும் மாலைக் கடைகளில் சாலை வழியெல்லாம் இடம் பெற லாயிற்றே. அவ்வடை தேநீர்க் கடைகளிலெல்லாம் கூட இடம் பிடித்துக் கொண்டதே. அதிலும் மற்றைச் சுவைப் பொருள்கள் பல இடம்பிடித்துக் கொண்டன. * தோயை காண்க. அடைப்பான் ஆடு மாடுகளுக்கு அடைப்பான், நோய் உண்மையை எவர் அறியார்? கடையடைப்புகள், கதவடைப்புகள் ஆகியவை செய்தித்தாள் சரக்காயினவே! அடையா நெடுங் கதவு (கம்பர் தனிப்) தமிழன் பண்பாட்டுச் சான்று என்பது இன்று நடைமுறையாமா? கடைத்திறப்புப் பாடாமலே கதவு திறந்து, தோலிருக்கச்சுளை விழுங்கியது போல நிகழும் நிகழ்ச்சிகள் தமிழ் மண்ணிலும் கூடத் தவழலாயினவே அடைப்பு உடைப்பு எடுத்தால் அடுத்து அடைப்பு உண்டன்றோ! அடை என்பது ஏவலாயிற்றே! மண், மணல், கல், இலை தழை முதலியவற்றைச் செறித்து வைப்பது அடைப்பு. அணை என்பது அடைப்புச் செய்கைதானே! அண்ணுதல், நெருங்குதல், அடுத்தல், அண்ணுதல் அணை, அடுத்தல் அடை; குழந்தை புரண்டு விடாமல் இருப்பதற்குத் தாய் என்ன செய்கிறார்? அணையடை துணியால் அமைக்கிறார். உடைப்பு அடைப்பு மட்டும்தானா அடைப்பு! இப் பொழுது அடைப்புப் பெருகி வருதல் கண்கூடு. மாரடைப்பு, முன்னும் பின்னும் அடைப்பு.இப்படி எத்தனை அடைப்புகள்? அடைப்பை முற்காலத்தில் பெருஞ்செல்வர்கள், சிற்றரசர்கள் ஆகி யோர்க்கு வெற்றிலை மடித்துத் தருவதற்கு ஏவலாளர்கள் வைத்திருந்தனர். அவர்களுக்கு அடைப்பைக்காரர் என்பது பெயர். அடைப்பை வெற்றிலைப்பை. மடைத் தொழில் (சமையல் தொழில்) வல்லார்களைப் பணியாளர்களாகச் செல்வர்கள் அமர்த்தியிருந்தது போலவே, அடைப்பைக்காரர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்கள், நினைவூட்டத் தக்க வகையில் சுவையும் மணமும் மிக்க வெற்றிலைச் சுருள்கள் அமைத்துத் தந்தனர்; இடித்துப் பதப்படுத்தியும் தந்தனர். செல்வச் செழிப்பின் அடையாளமாகவும் மகிழ்வுக் குறியாகவும் மங்கலக் குறியாகவும் வெற்றிலை ஆயதால் அதனை வைக்கும் பெட்டி வெள்ளியானும் பொன்னாலும் வேலைப்பாடு மிக்கதாகச் செயல்படுவதாயிற்று. அதற்கு, வெற்றிலைச் செல்வம் செல்லப் பெட்டி (செல்வப் பெட்டி) என்னும் வழக்கம் உண்டாயிற்று. தமனிய அடைப்பை என்பதற்குப் பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டி என்றார் அரும்பத உரைகாரர் (சிலப். 14 128) சீர்கொளச் செய்த செம்பொன் அடைப்பைஎன்றும், எரிமணி அடைப்பைஎன்றும் சிந்தாமணி கூறிற்று. (1303, 2140) அரசர் சுற்றங்களுள் ஒன்றாக, அடைப்பைச் சுற்றத்தைச் சுட்டிற்று பெருங்கதை (1 38 161) அடைமானம் ஒருவரிடம் ஒரு பொருளை ஒப்படைத்து அதற்கு ஈடாக மதிக்கத்தக்க பொருளைப் பெற்றுக் கொண்டு பின்னர்த் தாம் வாங்கிய பொருளை வட்டியொடு தந்து தாம் அடைவு வைத்த பொருளை மீட்டுக் கொள்ளல் அடைமானமாம். மானம் = அளவு. அடைமானம் = ஒப்படைத்த பொருள் அளவு. அடைமான முரியும் எழுதப் பெறலுண்டு. மானம், சொல் ஈறு, வருமானம் பெறுமானம் போல்வது எனவும் கொள்ளலாம். அடைமானம் மக்கள் வழக்கில் அடமானம் எனப்படுகிறது. அடைமுண்டு ஒரு வண்டியை அசையாமல் நிறுத்த வேண்டும். அதற்கு அடை வைப்பர். சக்கரத்தின் முன்னும் பின்னும் நெருக்கமாக அடுத்துக் கொடுப்பதே அடை. அது முன்னடை பின்னடை என்று இரண்டாகச் சொல்லவும் படும். அடைமுண்டு, அடைக்கல் என்பவை அவை. அடைமொழி தாமரையை வெண்டாமரை, செந்தாமரை என்று அடை தந்து சொன்னால், அதன் வகை விளக்கமாகின்றதே! செங்கால் நாரை நனைசுவர்க் கூரை மூவரியணில் கோடுவாழ் குரங்கு என்று அடைமொழிகள் தந்தால் பொருள் விளக்கமும் நடை நயமும் அமைதல் விளங்கும். இவை பெயரடை, வினையடை, என்பனவாம். எ-டு: வெண்டாமரை - பெயரடை வெண்மை. நிமிர்ந்து நில் - வினையடை; நிமிர்ந்து. அடையல் அடை+அல் = அடையல். ஊரை அடைதல், அலுவலகத்தை அடைதல் என அடைதல், சேர்தல் பொருளில் வரும் அடையல் குருகே அடையலெங்கானல் என்பது சிலம்பு. அடையல், அடையாதே என்னும் பொருளது. அடையார் அடை + ஆர் = அடையார் ஒருவரை அடைந்து நெருங்கி இருப்பவர் நட்பர். அவ்வாறு அடையார் நட்பரல்லர். அவர் அடையார், அடையலர். இச்சொற்களுக்குப் பகைவர் என்பது பொருள். அடையாளம் அடையாளம் காணவே ஒரு துறையென்ன, வகை வகைத் துறைகள் உள்ளன. தலை இப்படி; முகம் இப்படி; மச்சம் தழும்பு இப்படி இப்படி அமைப்பு, சூழல் இப்படி இப்படி; ஒருவரை அல்லது ஒன்றை, அடைந்துள்ள குறிகளைக் கண்டு தெளிவதே அடையாளம் ஆகும். ஒருவர் தம் கண்ணிலும் செவியிலும் கருத்திலும் அடைந்துள்ள தோற்றமும் அமைவும் மாற்றமில்லாமை அடையாளமாம். ஆளின் தோற்றமே முதற்கண் பதிந்து விட்டமையால் அடையாளம் எனப்பட்டு, பின்னே ஆடு மாடு தோட்டம் துரவு அணிமணி முதலியனவும் அடையாளம் ஆயது. அடையாளம் ஒத்திருத்தலால் பழியோரிடம் பாவமோரிடம் என மாறி விடுவதும் புதுமையில்லை. குற்ற வழக்கில் அடையாளம் படுத்தும் பாடு தனித் தொன்மமாம் (புராணமாம்). என்ன! இப்படி இளைத்து விட்டீர்கள்? அடையாளமே தெரியவில்லை ஆள்வந்த அடையாளமே புலப்படவில்லை! என்பனவெல்லாம் வழக்கில் உள்ளவை. அடைவுக்கடை இந்நாளில் பல இடங்களில் அடகுக் கடை எனப் பலகைகள் தொங்கக் காணுகிறோமே? அவை கீரைக் கடைகளா? அடகு என்பது கீரை அல்லவா! அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் - ஔவை தனிப். நம் பொருள் ஒன்றை ஒப்படைத்து, ஒப்படைக்கப்பட்ட வரிடமிருந்து நமக்கு வேண்டும் பொருளை வாங்கிக் கொள்வது அடைவு ஆகும். அதனைச் செய்யும் கடைகள் அடைவுக் கடைகள்! *அடைமானம் காண்க. அட்டகம் (எட்டகம்) ஒரே வகை யாப்பில் பாடல்கள் எட்டுப் பாடுவது அட்டகம் ஆகும். வண்ணச் சரபம் தண்டபாணியடிகள் பாடியது மந்திர அட்டகம். எட்டெழுத்தைப் பற்றிக் கூறும் எட்டுப் பாடல்களை உடையது. இது திருவரங்கத் திருவாயிரத்தில் உள்ளது. அட்டகாசம் ஒரே அட்டகாசமாக இருக்கிறது என்று பாராட்டு கிறோம். அவர் அருமையாக உடுத்தும், அருமையாக ஒப்பனை செய்தும் பொலிவோடு காட்சி வழங்குகிறார்; அவரைப் பார்த்து, ஒரே அட்டகாசம் போங்கள்என்கிறோம். சிலர் வீடு தோட்டச் சூழல் ஆகியவற்றைப் பார்த்த அளவில் அட்டகாசமான வீடு என்கிறோம். இந்த அட்டகாசம் என்பதன் பொருளென்ன? சிலர் சிரிக்கும் போது பெருஞ்சிரிப்புச் சிரித்தலுண்டு. குறுநகை, அளவே நகை, பெருநகை என முந்நகைப் படுத்திக் கூறுவர் பழைய உரையாசிரியர்கள், குறுகச் சிரித்தல், அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என்பவை அவை. நகை என்பதற்கே ஒளிப்பொருள் உண்டு. பல மலைகளையும் பார்த்துத் தன் எடுப்பாலும் வளத்தாலும், வனப்பாலும் ஒளியாலும் நகைக்கின்றதாம் பனிமலை அதனால், பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை என்றார் கல்வியில் பெரியவர். (பால. 324) பொன்னகைக்கும் புன்னகைக்கும் பொருந்திய ஒற்றுமை இருப்பதை நம்நாடு உலகுக்குப் பறையறைந்து கொண்டுதானே உள்ளது. அட்டகாசம் என்பதற்குப் பெருநகை எனப் பொருள் தருகின்றன அகர முதலிகள். பொலிவு, பெருநகை ஆகிய இவற்றை அட்டகாசம் என்னும் சொல் எப்படித் தருகிறது? அட்டாலும் பால் சுவையில் குன்றாது, சுட்டாலும் சங்கு ஒளியில் குன்றாதுஎன்பவை ஔவையார் உரை. அடுதலும் சுடுதலும் ஒரு வினை இரு சொற்களே! சுண்டக் காய்ச்சப்பட்ட பாலில் சுவையேறவே செய்யும்! சங்கு சுட்டால் வெண்மை மிகுவது, சிப்பிச் சுண்ணாம்பைப் பார்த்தாலே புலப்படும். வெள்ளையடிப்புக்கென அதனைத் தேடிப் போய் வாங்குவது அதன் இணையிலா வெண்மைக்கேதான்! சுட்ட சிப்பிக்குச் - சங்குக்கு - எவ்வளவு வெண்மை! சுட்டது சுருக்கும், கரியாகும். இது வெளுக்கிறது. மேலும் வெளுக்கிறது. இப்படியே சுட்டால் ஒளி மிகுவதும் ஒன்றுண்மை அனைவரும் அறிந்ததே. அது தங்கம். சுடச்சுட அதற்கு ஒளிமிகும் அதனால் திருவள்ளுவர். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்றார் (267). பொன் சுடச்சுட ஒளிவிடும். மாந்தர், துன்பம் சுடச்சுட ஒளிவிடுவர் என்பதாம். சுட்டு உருகி நிற்கும் பொன்னைப் பார்த்தால் அதன் பொலிவு புலப்படும். பொன்னில் சிறந்த பொன் ஆணிப் பொன். கலப்பற்ற தூய பொன் என்பதற்குச் சான்றாக உரையாணியிட்ட பொன்னே ஆணிப்பொன். ஓடவிட்ட பொன் என்பதும் வழக்கு ஓடவிடுதல் என்பது. அஃதொன்றே இறுதியில் தங்கும் எஞ்சியவை ஆவியாய் அழிந்து போம்; ஆதலால் அதனைச் தங்கம் என்றனர் என்பர். மாலைப் பொழுதில் கதிரோன் காட்சியைக் காணுகின்றார் பாவேந்தர். தங்கத்தை உருக்கிவிட்ட வானோடை தன்னிலே ஓர் செங்கதிர் மாணிக்கத்துச் செழும் பழம் முழுகும் மாலை என்கிறார். தங்கத் தகடு நகர்வது போல் - கதிர் தானே நகர்வது பார் என்றும், தங்கத்தைக் காய்ச்சி உருக்கிடவே - அங்கே தனிப்பெரும் கொல்லரும் உள்ளனரோ? எங்கேயும் பார்த்து மகிழ்ந்ததுண்டோ - இந்த ஏரியைப் போலொரு தங்கவேரி என்றும் பாடல்கள் கிளர்ந்தன. மறையும் கதிரோனைப் பெரும்பாவலர் பாரதியார். பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ எத்தனை வடிவம்! எத்தனை கலவை. தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள் என்று வண்ணிப்பது கருதத் தக்கது. பொன், சுடர் இவற்றைப் பற்றி இவண் விரிப்பானேன்? பொன்னுக்கு ஒரு பெயர் காசு. காசுமாலை என்பது பொன்னால் செய்த மாலையே; காசுக் கடை என்பது பொற்கடையே; அல்லது தங்கக் கடையே! கிளி வேப்பம் பழத்தைச் சிவந்த அலகால் பற்றுகிறது. அதனை, ஓரழகி பொற்காசில் நூல் நுழைப்பதற்காகத் தன் சிவந்த விரல்களின் இடையே பற்றியிருப்பதற்கு உவமை காட்டுகிறார் ஒரு புலவர் (குறுந். 67) தங்கத்தால் செய்த பணமே காசு எனப்பட்டு, அதன் பின்னர்ச் செம்பு முதலியவற்றால் செய்ததற்கும் ஆயிற்று என்பது நாணய வரலாற்றுச் செய்தி. காசு பொன், பொலம் எனவும் வழங்குதல், பொன்னில் இருந்து பொற்பு அழகு என்பவை யுண்டாம். காசு ஆகிய பொன்னின் பொலிவு உலகறிந்த செய்தி. அப்பொன் தகத்தக எனப் பளிச்சிடுதல் புலவர்களைக் கவர்ந்தது போலவே பொது மக்களையும் கவர்ந்தமையால் ஏற்பட்டதே அட்டகாசம்! அட்ட காசு சுடுபொன் - சுடர்ப்பொன் - தகத்தக என ஒளிவிடும் அழகு அட்டகாசம்; காசு +அம் =காசம் இதனொடு ஓர் ஒட்டைச் சேர்த்துப் பிரகாசம் (ப்ரகாசம்) என்றார் பிறர். தேம் தேஎம் என்பவை தேயமாகி, தேசமாகி விளங்குதல் தெரிந்ததன்றோ? காயம் என்னும் தொல் பழந்தமிழ்ச் சொல் ஆ என்பதை ஒட்டி ஆகாயமாய், வேற்றுச் சொல்லாகிச் செந்தமிழ்ச் சொல்லை வீழ்த்தி விடவில்லையா? அட்டகாசம், சுட்டபொன்! சுடச்சுடரும் சுடர்ப்பொன்! வள்ளுவர் அரைக்குறள், பொதுமக்கள் பார்வையில் அட்ட காசமாக இருக்கிறது என்பது இதனால் விளங்கும். அட்டக்கரி அட்டக்கரி அட்டக் கறுப்பு என மிகக் கறுப்பாக இருக்கும் ஒன்றைச் சுட்டுதற்கு உவமைப் படுத்திக் கூறுகிறோம். அவனா? m£l¡ fÇ!”, அதுவா? அட்டக் கறுப்பு!இப்படிச் சொல்லி விடுதல் பெருவழக்கு. இவ்விரு வடிவங்களையும் அகரவரி நூல்கள் தந்து, மிக்க கறுப்புஎனப்பொருள் தருகின்றன. அட்டக்கரி, அட்டக் கறுப்பு = மிக்க கறுப்பு. சென்னைப் பல்கலைக் கழக அகராதி. அட்டக்கரி ATTA-K-KARI, N. CT. ATTA+JET BLACK. DENCE BLACKNESS. மிக்க கறுப்பு CALLOG. அட்டக்கறுப்பு ATTA-K- KARUP. PU.N. CT. IDT JET BLACK. மிகக் கறுப்பு. ஆனந்த விகடன் அகராதி. ம.த.ச.அகராதிச் செய்தியை அப்படியே அமைத்துக் கொண்டது. பல அகர முதலிகளில் இச்சொற்கள் இடம் பெறவில்லை. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் இச்சொற்கள் இடம் பெற்றதுடன் விளக்கமும் பெற்றுள. அட்டக்கரி ATT-A-L-KARI. bg. (N) மிகக் கருப்பு மிகக் கருப்பானது; ம. அட்டக்கரி JET BLACK, THAT WHICH IS JET BLACK. (ஒருகா. அண்டம் (அண்டங்காக்கை) போன்ற என்றிருக்கலாம். ஒ.நோ: நண்டுவாய்க் காலி நட்டுவாய்க்காலி) அட்டக் கருப்பு ATTA-K-KARUPPU. bg. (N) மிகக் கருப்பு மிக்க கருப்பு JET BLACK.” அட்டம் என்னும் சொல்லுக்குப் பொருள் தெளிவாகி விட்டால் கரி, கறுப்புக் கவலையில்லை. அட்டம் என்பதற்குக் கூறிய மிக, மிக்க என்ற பொருள்கள் சரியானவையே. ஆயினும் எப்படி அப்பொருள் தந்தது என்ற குறிப்பு இல்லை. அண்டங்காக்கையை அட்டக் காக்கை என்றாலும் அதே சிக்கல்தான். வேற்று மொழி ஒப்பும் வழக்கொப்பே யன்றிப் பொருள் விளக்க ஒப்பு இல்லையாம். அட்டம் என்றொரு பொருள் உண்டு. அவ்வாறே கிட்டம் என்றொரு பொருளும் உண்டு. அவற்றை அறிதல் இவ் விளக்கத்திற்கு ஒளிதரும். ஒளியைத் தேடித்தானே போக வேண்டும்; உலைக் களத்தில் கரியை உலையில் போட்டு வேக வைத்து அவ்வேக்காட்டில் இரும்பை வெதுப்புதல் எவரும் அறிந்தது. எரிந்து இறுகிப் போன கரி இறுகி அடர்ப்புற்று இரும்பெனச் செறிந்து கட்டியாகும். அதற்குக் கிட்டம் என்பது பெயர். ஒப்புமையால், என்ன இது இரும்புக் கிட்டமாக இருக்கிறதுஎன உடைபடாப் பொருளைக் கூறுவது வழக்கு. கரியால் ஓடும் தொடர் வண்டியிலிருந்து எரிபொருளைத் தள்ளுங்கால் ஆங்கும் கிட்டம் காணலாம். விறகு ,எரு முதலியவற்றால் எரியும் அடுப்பில் வைக்கப் பட்ட சமையல் கலங்கள், அக்கரிப் புகையால் கறுத்துப் போகும். அட்ட புகை அப்பிப் பற்றிக் கொள்ளும். கலத்தின் வண்ணம், எவ்வண்ணம் ஆயினும் கருவண்ணமாக்கி விடும். பற்றிப் பிடிக்கும் அக்கரி. புறத்தே என்றால் உள்ளேயும் பற்றிப் பிடிக்கும் பொருளும் உண்டு. அதனால் பற்றுத் தேய்த்தல் என்பது ஒரு தொழிலாய் - ஒரு பிழைப்பாய் அமைந்துவிட்டது. அட்டதால் அமைந்த கரிப்பற்று என்னும் பொருள்களும் கிளர்ந்தன. அடுகலத்து ஏற்படும் கரியே அட்டக்கரி, அக்கறுப்பே அட்டக்கறுப்பு எனப்படலாயிற்று. சோற்றுப் பானை போல நிறம் கறிச் சட்டி போல நிறம்என்பவை வழங்கு மொழிகள். ஒருநாய், பன்றி வேட்டைக்குப் போனதாம்; பன்றி ஒன்றைக் கண்டு நாய் நெருங்கியதாம்; துணிவு மிக்க பன்றி நாயைப் புரட்டிப் புரட்டிப் படாப்பாடு படுத்தி விட்டதாம்! அதனால் வேட்டைக்களத்தில் இருந்து வீட்டுக்கு வந்த நாய், கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த சோற்றுப் பானையைக் கண்டதும் தன்னைக் காட்டில் வெருட்டிய பன்றியே வீட்டில் நிற்பதாக எண்ணி ஆங்கிருந்து ஓட்டம் பிடித்ததாம். இக்கதையை உட்கொண்டு வழங்குகின்றது ஒரு பழமொழி. பன்றி வேட்டையில் பயந்து வந்த நாய், சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டமெடுத்ததாம்என்பது அது. இப்பழமொழியும் அட்டத்தைச் சுட்டுதல் அறிக. அட்டம் + கரி = அட்டக்கரி அட்டம் + கறுப்பு = அட்டக்கறுப்பு இறுக்கப் பற்றிக் கொள்ளுதல் அட்டம் எனப்பட்ட பின்னே, அந்நிலை அட்டு எனப்படலாயிற்று. அட்டுப் பிடித்தவன் தலையெல்லாம் அட்டுப்பிடித்துக் கிடத்தல் அழுக்குப் பிடித்தலால், தலையில் சிக்குப் பிடித்தல், சடையாதல் இவையெல்லாம் பற்றாலும் பாசத்தாலும் விளைவன அல்லவா! அட்டணைக்கால் அடு > அட்டு + அணை + கால் = அட்டணைக்கால் அடுதல் = குறுக்கிடுதல், தடுத்தல். ஓர் இருக்கையிலோ திண்ணையிலோ அமர்ந்து ஒருகாலை நிலத்தில் ஊன்றி, மற்றொரு காலை ஊன்றிய கால் மேல் குறுக்காகப் போட்டு அமர்தல் அட்டணைக்கால் ஆகும். என்ன, அட்டணைக்கால் போட்டு அமர்ந்துவிட்டீர்கள்; வேலைக்குப் போகவில்லையா? என்பது மக்கள் வழக்கு. அட்டமணியம் வட்டம் சுற்றி வழியே போ என்றால் அட்டத்தில் பாய்ந்து விட்டான் என்பது வழக்குச் சொல். அட்டம் என்பது குறுக்கே என்னும் பொருளது. நட்டணைக்கால் என்பது நிலத்தில் ஊன்றிய கால்; அட்டணைக்கால் என்பது நட்டணைக்கால் மேல் குறுக்காகத் தூக்கிப் போட்ட கால், வட்டம் முழுச்சுற்று; அட்டம் குறுக்கு. அட்டமணியம் என்னும் சொற்றொடரில் அட்டம் என்பதற்குக் குறுக்கு என்னும் பொருள் தெளிவாகிறது. மணியம் என்பதன் பொருள் என்ன? நாட்டாட்சியின் சிறிய அளவு, ஊராட்சி பல்லாயிரம் ஊராட்சிகளின் தொகுப்பே நாட்டாட்சி, ஊராட்சி செய்பவர் ஊர்மணியம் (கிராம மணியம்) அவரே ஊரின் ஆட்சியாளர். ஆங்கிலர் ஆட்சியில் இந்தியப் பரப்புக்குத் துணையரசர் (Vice Ray) இருந்தார். மாநில ஆட்சிக்கு ஆளுநர் (GOVERNOR) இருந்தார். அவ்வாறே மாவட்ட ஆட்சியில் இருந்து ஊராட்சி வரை ஆட்சியாளர் இருந்தனர். அந்நடைமுறை இந்நாள் வரை தொடரல் கண்கூடு. ஊர் அலுவலர் (Village Officer) என்னும் பெயரால் இன்று உள்ளனர். ஊராட்சி பார்த்தவர், ஊர் மணியம் எனப்பட்டார். அவர் வைத்தது வரிசை; செய்தது சட்டம்; வரி வாங்குதலா, தண்டத் தீர்வை விதித்தலா, ஊர் வழக்கை முடித்தலா, பிறப்பு இறப்புக் குறிப்பா அவ்வளவுக்கும் அவரே பொறுப்பாளர். மேலாட்சியாளர் எவர் வரினும் ஊர்மணியத்தைப் பார்த்துத்தான் எதுவும் செய்வார். மணியம் சொன்னதுதான் அரசு சொன்னது. அவர் சொன்னதே காவல்துறை, நீதித்துறைச் சான்றுகள். மணியம் ஊரில் மணி போன்றவர் எனப் பட்டவர்தாம். ஆயினும் ஓட்டை உடைசல் கீறல்மணிகள் இல்லாமல் போவது இல்லையே. முறை செய்ய வேண்டிய அவர், முறை கேடராக அமைவதும் தவிர்க்க முடியாதது தானே! அதனால், மணியம் என்பதற்குரிய பொருள் அதிகாரம் செய்தல், முறை கேடாக அதிகாரம் செய்தல் என்பனவாய் அமைந்தன. அதனால், இந்த மணியமெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே உன்னை யார் மணியத்திற்கு வைத்தது? என்பன போன்ற வழக்குகள் உண்டாயின. அவ்வகையில் வந்த ஒன்றே அட்டமணியம் என்பது. ஒரு வேலையை மேற்பார்க்க ஒர் அலுவலன் உள்ளான். அவனே கெடுபிடிக்காரன்; ஈவு இரக்கமில்லாமல் நடப்பவன். அவன் இல்லாப் பொழுதில் அல்லது இருக்கும் பொழுதில் கூட, அவனுக்கும் கெடுபிடி செய்பவனாக ஒருவன் தலைப்பட்டால், அவன் செய்யும் கெடுபிடி எரிச்சலில் பிறந்தது. அட்டமணியம். அவன் செய்யும் மணியத்தைப் பொறுத்தாலும் இவன் செய்யும் அட்டமணியத்தைப் பொறுக்க முடியவில்லைஎன்று வெதும்பி யுரைப்பது வழக்காயிற்று. அட்டமணியம் என்பது குறுக்கே குறுக்கே புகுந்து வேண்டாத வகையில் ஏன்? வெறுக்கும் வகையில் அதிகாரம் செய்வதாம். ஊரின் மணியெனப்பட்ட பெருமை, வெட்டி அதிகாரப் பொருளுக்கு இறங்கிய இறங்குநிலைப் பொருள் இது. ஊர்மணியம் பார்த்தவர் மணியகாரர் எனப்பட்டனர். அது குடிவழிப் பெயராய் - ஓர் இனப் பெயராய் - இந்நாளில் வழங்குகின்றது. கணக்கு எழுதிய குடிவழியினர் கருணீகர் எனப்பட்டது போன்றது இது. சிற்றூர் கோயில் மடம் முதலியவற்றின் மேலாண்மை செய்பவர் மணியம் மணியகாரன் என்று கூறுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி. இம்மணியத்தின் துடிப்பு விளங்குமாறு, துடி மணியக்காரர் என்கிறது விறலி விடு தூது (1055). மணியத்தின் அடாவடித்தனம் புலப்படுமாறு துர்ச்சனர் தமக்கேற்ற மணியம் என்கிறது அறப்பளீசுரர் சதகம் (49) அட்ட மணியம் பாராட்டால் வெளிப்பட்டது அன்று. பொறுக்க மாட்டா எரிச்சலால் வெளிப்பட்டது. பதவிப் பெயர் பழிப் பெயராயதற்கு இஃதொரு சான்று. அட்டம் வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம். அட்டம் சுழிக்காமல் என்பது ஊடு அல்லது குறுக்கே போகாமல் என்பதாம் விளையாட்டில் பயன்படுத்தும் சொல் இது. நெல்லை வழக்கு. அட்டளை அடு >m£L + அளை = அட்டளை. குறுக்கும் நெடுக்குமாகப் பலகையாலோ இரும்புத் தகட்டாலோ தடுத்துத் தட்டுத் தட்டாகப் பொருள்களை வைக்கச் செய்தது, அட்டளையாம். வீட்டுப்பயன், அங்காடிப் பயன் ஆயவற்றுக்கு இன்றியமையாதது அட்டளை. அட்டாலி மதில்மேல் உறுப்புகளுள் ஒன்று அட்டாலை. அதில் இருந்து காக்கும் வீரர் அட்டாலைச் சேவகர் எனப்படுவர். அட்டளை என்பது சுவரில் பொருந்தும் தாங்கு சட்டம் அல்லது பலகை. கொங்கு நாட்டில் அட்டாலி என்பது பரண் என்னும் காவல் அமைப்பைக் குறித்து வழங்குகின்றது. பரணை என்பதும் அது. அட்டி நீங்கள் நாளைக்கு வந்து அட்டியில்லாமல் வாங்கிக் கொண்டு போகலாம் என்பது தென் தமிழக வழக்குச் சொல் அட்டி = தடை . அடுத்து வைக்கும் முட்டு - முண்டு - அடை. அது. நகரவிடாமல் தடுப்பது தடை இல்லாமல் - தடுப்பு இல்லாமல். அதுபோல் அடை இல்லாமல், அடுத்துள்ள தடையில்லாமல் என்பது அட்டி ஆயிற்றாம். அடு > அட்டு > அட்டி. அட்டில் அடு > அட்டு + இல் = அட்டில் சமையற் பகுதி அடுதல், சமைத்தல். சமையல் செய்ய அமைந்த பேரிடம் அட்டிற் சாலை, அட்டிற் கூடம், மடைப்பள்ளி எனப் பல பெயர் ஏற்கும். மடைத்தொழில், சமையல் வேலை. அடுமடையா -நளவெண்பா (385). அட்டுக்குஞ்சு பொரித்த கோழிக் குஞ்சை அட்டுக்குஞ்சு என்பது கருவூர் வட்டார வழக்கு. அடு >m£L = நெருங்கி. அட்டுக்குவி அட்டுக்குவி: 1 குவி = குவிக்கப்பட்ட குவியல். அட்டுக்குவி சோறு = சமைத்து மலைபோல் குவிக்கப்பட்டசோறு. அட்டுக்குவி சோற்றுப் பருப்பதம் -நாலா. 264 அட்டுக்குவி: 2 அட்டு = கொன்று. அட்டுக்குவி = கொன்றுகுவி ; களப்போரில் தலைவன் ஏவல். அட்டூழியம் அட்டு + ஊழியம் =அட்டூழியம். அட்டூழியம் என்பதற்குத் தீம்பு என்கிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. மதுரைத் தமிழ்ச்சங்க அகராதியும் அதையே கூறுகிறது. கொடுந்தீம்பு என்கிறது செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகர முதலி; அவன் பண்ணிய அட்டூழியத் திற்கு அளவில்லைஎன எடுத்துக்காட்டு தந்து, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளிலும் இச்சொல்லாட்சி யுண்மையையும் சொல்கிறது. அட்டூழியம் வந்த வகை என்ன? அட்டூழியத்திற்குத் தீம்பு என எப்படிப் பொருள் வந்தது? தீம்பு என்பதற்குத் தீமை என்பதைக் காட்டிக், குறும்பு கேடு என்னும் பொருள்களைத் தருகிறது செ. ப . க. அகராதி. அட்டூழியம் செய்பவன், தலைவனாகப் - பெரியவனாக- ஆணையிடத் தக்க தகுதியோ முறையோ உரிமையோ உடையவனாக இருக்க மாட்டான். அவன் செய்கின்ற வேண்டாத தலையீடுகள் முறைகேடுகள், குறுக்கீடுகள் ஆகியவையே அட்டூழியம் எனப்படுகின்றதாம். இதனை எண்ணிப் பார்த்துக் கொண்டே சொல்லமைப்பை நோக்குதல் வேண்டும். அட்டு என்பதும் ஊழியம் என்பதும் ஆகிய இருசொல் இணைப்பே அட்டூழியம் என்பது வெளிப்படை. இதில் அட்டு என்பதன் பொருள் தெளிவாகி விட்டால் ஊழியத்தின் பொருள் தெளிவாகி விடும். அடு என்பதன் வழி வரும் சொல் அட்டு, அடுதல் என்பது சுடுதல், வாட்டுதல், வறுத்தல், பொரித்தல், சமைத்தல், கொல்லுதல், போரிடல், துன்புறுத்தல் முதலிய பொருள்களைத் தரும். இங்கே அட்டூழியம் மனத்தைச் சுடுதல், வாட்டுதல், துன்புறுத்தல் ஆகிய பொருள்களில் இடம் பெறுகிறது. மனவெதுப்பு, மனவுளைவு செய்வதே அட்டூழியமாம்; அதுவும் அதிகாரத்தோடு - அதிகாரம் இல்லாத அதிகாரத்தோடு - இருக்கும் என்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஏவியதைத் கேட்டு நடக்க வேண்டியவன், நம்மை வேண்டா வகையில் ஏவியும் மனவுளைச்சல் தந்தும் தன்தோற்றத்தை மிகுத்துக் கொள்ளும் போதே உன் அட்டூழியத்தை நிறுத்து என்றோ , உன் அட்டூழியம் அளவுக்கு விஞ்சியதுஎன்றோ சொல்லும் வழக்கு நேர்கின்றது. ஊழியம் செய்பவர்கள் தங்கள் ஊழியத்தை ஒழுங்காகச் செய்யாமல் அவ்வூழியத்தையும் அழித்து, பிறர் ஊழியத்தையும் கெடுத்து, ஊழியத்தை ஒழுங்குறுத்தும் அலுவலர்க்கும் வேண்டாக் குறுக்கீடும் தடையுமாய் நிற்கும் எதிரிடைச் செயல்களைச் செய்தல் அட்டூழியம் என்க. அடும் பகை நிலையிலும் இல்லை; ஊழியம் பார்க்கும் நிலையிலும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை. உள்ளத்திற்கு ஒட்டிய நிலையும் இல்லை; உள்ளத்திற்கு வெட்டிய நிலையும் இல்லை; இரண்டும் அல்லாமல் இரண்டும் இணைந்த எதிரிடை நிலை! அழிப்பவனாக இருந்தால் எச்சரிக்கையாக இருந்திருக் கலாம்; அணைப்பவனாக வந்து அழிப்பவனாக உள்ளம் கொண்டிருப்பவனால் அலைக்கழிவு இல்லாமல் தீருமா? வாள்போல் பகைவர்; கேள் போல் பகைவர் என இருவேறு வகையர் பகைவர். இவரோ கேள்வாள் பகைவர்! (திருக்.882). காவலுக்கு ஏற்படுத்தப் பட்டவரே களவாளியாக இருந்து சுரண்டினால் எஞ்சுமா? பயிரை ஆடு மாடு மேயாமல் காக்க அமைந்தது வேலி! அது பயிரை மேய்ந்தால் பயிர் இருக்குமா? அழுகையை அமர்த்த, அமர்த்தப் பட்டவளே உறங்கும் பிள்ளையைக் கிள்ளி விடுபவளாக இருந்தால் சொல்லறியாக் குழந்தை என்னாம்? அவளைக் கண்டாலே அழுமே! அவளைப் பார்த்தாலே ஒவ்வாமையாகி விடுமே! அட்டூழியம் = அழிவு வேலை; ஊழியம் செய்து காக்க வேண்டியவரே, அழிக்கும் வேலை; அவ்வேலையை வைத்துக் கொள்ள வேண்டா என்பது போலச் சொல்லமைதி அமைந்துள்ளமை அறிந்து கொள்ளத் தக்கது. அட்டை அடு > அட்டு + ஐ = அட்டை. அட்டு = ஒட்டிக் கொள்வது, ஒட்டிக் கிடப்பது. எ-டு: அட்டுக்குட்டி = தாயை விட்டு அகலாமல் ஒட்டிக்கிடக்கும் ஆட்டுக்குட்டி அட்டுப்பிடித்தவன் = நீராடாமல் அழுக்குப் பிடித்தவன். அட்டுக்குட்டி போல் ஒட்டிக்கிடக்கும் ஊருயிரி ; நீர்ப்பத இடத்தில் கிடந்து கால் வைப்பார் அறியாமல் காலில் ஒட்டிக் கொண்டு குருதியை முட்ட முட்ட உறிஞ்சி ஒட்டியது தெரியாமலே உதிர்ந்து கொள்வது அட்டையின் இயல்பாம். அட்டைபோல் சுவைப்பர்என்பது திவ்விய பிரபந்த அகராதி. புழுதி அட்டிச் செம்மிய குடம் -கம்ப. கிட்.735 அட்டையாக ஒட்டிக் கொள்வான்என்னும் மக்கள் வழக்கு ஒட்டிக் கிடத்தலோடு உறிஞ்சுவதையும் சுட்டுவதாம். அட்டைக்குழி தண்டனை வகையுள் ஒன்று அட்டைக்குழியில் தள்ளிவிடல். அண்ணாத்தல் செய்யாது அளறு என்பது வள்ளுவம். அவ்வாறு அட்டைக்கு உரிய இடமாம். சேற்றை விட்டு வெளியேறாமையொடு அட்டைக்கடியால் உள்ள குருதியும் உறிஞ்சப்பட்டு விரைந்து முடிவை ஏற்படுத்தும். அளறு என்பதற்கு நிரயம் (நரகம் ) என்ற உரைகளை நினைக. அட்டையாடல் அட்டை துண்டிக்கப்பட்டாலும் துண்டாய உடல் பகுதி துள்ளித் துள்ளித் துடிக்கும். அவ்வாறே போர்க்களத்தில் தலையற்ற முண்டம் துள்ளுவதை அட்டையாடல் என்றனர். அட்டை அற்றுழியும் ஊருமாறு போல உயிர்நீங்க அற்றுழியும் உடம்பு ஆடுதலின் அட்டையாடல் என்ப(தொல். பொருள். 71 நச்.) அணங்கு அண் > அண > அணங்கு. தானே அடுத்து வந்து நெருக்கித் துயரூட்டுவது. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ - திருக். 1081 அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் - சிறுபாண். 86 அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே - தொல். 1202 கண்ணால் வருத்தும் பெண், வருத்தும் தெய்வம், அச்சுறுத்தும் பேய் என்பவை அணங்கு எனப்பட்டன. தாயை மகிழச் செய்வதுடன் வருத்தவும் செய்யும் குட்டியும் அணங்கு எனப்படும். ஆளியின் அணங்கு - சிலப். 25: 48 வயப்படுத்தி வருத்துவது. தலைவனும் தலைவியுமாய்க் கூடி இருந்த காலை இன்புறுத்திய இயற்கை நலங்கள் எவையோ அவை எல்லாம் அவர்கள் பிரிவுற்ற காலை பெருவருத்தம் செய்வதை அகத்திணைப் பாலைப் பாடல்கள் வழியே அறிக. அணத்தான் அணத்தான் = ஓணான். அண் = மேலே. தலையை மேலே தூக்கித் தோற்றம் தருதலால் அணத்தான் எனப்பட்டது. கதவின் மேலே போடும் தாழ் அண்ணாந்தாழ் எனப்படும். விளையாட்டில் தோற்றவனுக்குத் தண்டனை வகையால் செய்வது அண்ணாந்தாள் என்பது அது. குனிய வைத்து முதுகின் மேல் கல்லேற்றுதலாம்; விளையாட்டு வழக்கம் இது. அணல் அண் = மேல், அண்ணம் = மேல்வாய், மேல்வாய்ப்பகுதியில் இருந்து கன்னத்தில் வழியும் மயிர்க்கற்றை அணல் என்பது. தாடி என்பதும் அது. மையணற் காளை - புறம். 83 இதன் பொருள் மைபோன்ற தாடியினையுடை இளையோன் (பழைய உரை). அணி அணி: 1 ஒழுங்குபட்ட அமைப்புடையது. அணி = வரிசை; அணிவகுப்பு, அணிதேர் என்பவற்றைக் கருதுக. இருபாலும் முளையடித்து முளைகளில் நெடுங்கயிற்றைக் கட்டி வரிசையாக அதில் மாடுகளைக் கட்டி நிறுத்தும் வழக்கத்தால் மாட்டுச் சந்தைக்கு தாம்பணி என்று பெயர். தாம்பு = கயிறு; சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றுஎன்னும் முல்லைப்பாட்டில் (12) தாம்பு கயிறாதல் அறிக. தாம்பணி, தாமணியாய், தாமணி தாவணியாய்ச் சிதைவுற்று வழங்குகிறது. அணி: 2 ஒன்றோடு ஒன்று பொருந்தி அழகு செய்வது அணி எனப்படும். படைவீரர் அணிவகுப்பை எண்ணுக! உயரம், உடை, கருவி, நடை என்பவை ஒப்பப் பொருந்தும் ஒருமை உவகைக் கிடமாம். அவ்வாறே பாடற்கமையும் உவமை முதலாம் அணிகளும், உடலுறுப்புகளொடு பொருந்த அமையும் அணிகலங்களும் பொருந்துதலால் அணி எனப்படுவனவாம். மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைதோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையாய் வைத்தார் பெரிது என்று நன்னூல் (55) அணிந்துரை பற்றி நவின்றது. அணியம் தயார் என்னும் அயற் சொல்லுக்கு அணியம் என்னும் சொல்லைப் படைத்தார் பாவாணர். அணிவகுப்பில் நிற்பார் ஆணைக்குக் காத்திருந்து கடனாற்றும் நிலைபோல் நோக்கி யிருப்பது அணியம் ஆகும். இனி, அண்மை இடம் அணிமை எனப்படுவதுடன் அணியம் எனவும் வழங்குதல் நெல்லை வழக்கு. அணியம் = பக்கம். அணி யைந்தகம் ( அலங்கார பஞ்சகம்) வெண்பாவும், கலித்துறையும், ஆசிரியப்பாவும், ஆசிரிய விருத்தமும், வண்ணமும் என்னும் ஐந்தும் மாறி மாறி அந்தாதியாக வரப்பாடுதல் அணியைந்தகமாம். அலங்கார பஞ்சகம் (வ). (பஞ்சகம் - ஐந்துடையது) வெண்பா அகவல் கலித்துறை அகவல் விருத்தம் சந்த விருத்தமிவ் வகையே மாறி மாறியந் தாதித் தொடையாய்ப் பாடுவ தலங்கார பஞ்சக மாகும் - முத்துவீ. 1108 அணில் அணியாவது வரிசை. அணி + இல் = அணில். வரிசையாய் மூன்று வரிகளையுடைய உயிரி, ஆதலால் அணில் எனப்பட்டது. மூவரி அணில் என்றார் தொல்காப்பியர் (தொல். 1505). வெள்வரிக்காயை வாள்வரிக் கொடுங்காய் என்றார் இளங்கோவடிகள் (16:25). கொடுமை = வளைவு. வளைந்த வரியுடைய வெள்ளரிக்காயும் வால்வரிக் கொடுங்காய் என்று பாடமோதி வெள்வரிக்காய் என்பாருமுளர். அணில் வரிக் கொடுங்காய் எனப் புறத்தினும் (246) காட்டினார்அடியார்க். அணி வகை அணி = ஒன்றை ஒன்று பொருந்த அழகுடன் செய்யப்பட்டது. அணிகலம் (ன்)= கற்பதித்துச் செய்யப்பட்டது. ஆரம் = முத்துத் தொங்கலாய் அமைந்தது. இழை = பொன்னுருக் கிழையால் பொருந்தச் செய்யப்பட்டது. நகை = ஒளியுண்டாகச் செய்யப்பட்டது. பணி = பண்ணும் தேர்ச்சி வெளிப்படச் செய்யப் பட்டது. பூண் = பூட்டுவாய் அமைந்தது. வள்ளி = வளப்பெருக்குக் கொண்டதாகத் தோன்றச் செய்தது. காழ் = வயிரம் பதித்துக் கெட்டியாகச் செய்யப் பட்டது. அணு அண் + உ = அணு. செறிவுடையது அணு. பிளத்தற்கு அரியதாம் நுண் செறிவமைந்த அடிமூலம் அணுவாம். ஒன்றனோடு ஒன்று அண்ணிச் செறிந்த நுண்மம் அணுவென்க. அண்ணுதல் = நெருங்குதல். மண் திணிந்த நிலம் என்னும் புறப்பாடல் உரையில் (2) அணுச்செறிந்த நிலம்என்பார் பழைய உரையாசிரியர். அணுத்திரள் ஒலி என்பார் நன்னூலார். அணுவைப் பிளத்தல் பற்றியது திருவள்ளுவ மாலைப் பாட்டு ஒன்று. அணுவைத் துளைத்து என்பது. அணுவைச் சத (நூறு) கூறிட்ட கோண் என்பார் கம்பர் (உயுத். 254) அணை அண்+ ஐ = அணை = செறிவு, நெருக்கம். அடுத்துத் தழுவுதல், கட்டிப் பிடித்தல் அணைதலாம். மற்றைக் கட்டடங்களிலும் வலுவாய் - செறிவாய் - கட்டப்பட்ட திண்ணிய சுவர் அணைக்கட்டு எனப்படல் அறிக. ஏறு தழுவுதல் அணைதல் எனப்படும். உயர் இருக்கை, மெத்தை, தலைதாங்கி ஆயவை அணை எனப்படல் உண்டு. அவை அரியணை, பஞ்சணை, தலையணை என்பன. செறிவுப் பண்பும் உயர்தல் பண்பும் உடையது அணை. உயர்வு அகலம் திண்மை அருமைஇந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல் - திருக். 743 என்பது, அஃது அணைக்கும் பொருந்துவதாம். துள்ளிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். வலிமை அணைக்கு வேண்டும் அல்லவோ! அண்டத் தோற்றரவு அண்டம் + தோற்றரவு = அண்டத் தோற்றரவு = உலகத் தோற்றம். நிலம் நீர் தீ வளி விண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் உலகம் என்பது தொல்காப்பியம் (1589). அதனை விரித்துக் கூறுகின்றது பரிபாடல். கருவளர் வானத் திசையில் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் றுண்முறை வெள்ள மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர்வு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் உலகை, இறைமையாகக் காணும் மெய்ப் பொருளாளர், பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி என்று பாடினார் (திருவாசகம், போற்றித் திருவகவல்) இவ்வாறு. உலகம் தோன்றிய வகையை விரித்துக் கூறும் நூல் அண்டத் தோற்றரவு என்பதாம். அண்டநிலை சாற்றல் அண்டகோசம், வகுப்புக் கலிவெண்பாவாம்என்பது பிரபந்தத் திரட்டு. அண்டம் அண் = நெருக்கம். அண் > அண்டு > அண்டம். நெருங்கிய கோள்கள் பலவற்றைக் கொண்ட உலகம் கோள்கள் நெருக்கமா எனின், நாள் மீனாம் விண்மீன் ஒன்றற் கொன்று கொண்டுள்ள இடைவெளியை நோக்க நெருக்கம் என்பது புலப்படும். அண்டம் விதை, முட்டை என்னும் பொருள். நீள் உருண்டை வடிவின. அவ்வடியை உடைய உலகப் பெயராயிற்று. அண்டம் என்பது. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவா. திருவண். 1 அண்டர் அண்டு + அர் = அண்டர். அண்டர் என்பார் ஆயர்; குறிஞ்சி நிலத்தை அண்டியவர் அண்டர் ஆயினர். அவர் ஆக்கள், எருமைகள், ஆடுகள் ஆயவற்றுக்கு அண்டும் இடம் தந்தனர். அவை காட்டு வாழ்வின என்பதும், வீட்டு வாழ்வினவாகவும் ஆக்கப்பட்டவை என்பதும், மாந்தர் தம் நலம் கருதியே. வீட்டு விலங்கு ஆக்கினர் எனினும் காட்டு விலங்குகளின் அச்சம் அலைப்பு ஆயவற்றுக்கு இடமில்லாமல் தொழுவும் பட்டியும் தொட்டியும் அமைத்து உண்ணவும் பருகவும் வாய்ப்புகள் தந்து பாதுகாத்தமையால் அவர் அண்டர் ஆயினர். காட்டுப் புலியின் கொடுமை அஞ்சி - நும் காலடி தங்கிய ஆடுகளை நாட்டுப் புலியெனக் கொல்வதுவோ - உங்கள் நான்மறை ஓதிய நீதிஐயா! என்பது கவிமணியின் ஆசிய சோதி அண்டர் மகளிர், அண்டர் மகன் குறு வழுதியார் என்பன சங்கநூல் ஆட்சியும், சங்கப் புலவர் பெயருமாம். (புறம். 346) அண்டல் அண் = நெருக்கம். அண் > அண்டு > அண்டல். அசையும் பொருள் அசைவின்றி இருக்க அண்டல் (முட்டு) கொடுப்பது வழக்கம். வண்டிகளை நிறுத்தினால் சக்கரத்தின் முன்னும் பின்னும் நெருக்கிக் கல், கட்டை ஆயவற்றை வைப்பதை அண்டல் கொடுத்தல் என்பர். ஒருவரிடம் ஒரு பொருளைக் கடனாக வாங்கும் போது அதற்கு ஈடாக ஏதாவது உரியது உள்ளது எழுத்து ஆள் பிணை என வைப்பதை அண்டல் கொடுத்தல் என்பதும் வழக்கமாம். அண்டல் பண்ணுதல் என்பதும் இது. அண்டா அண்டுதல் = நெருங்குதல்; அண்டாமை = நெருங்காமை. அடுத்து நெருங்காமல் அகன்று விரிந்து இருக்கும் மாழைக்கலம் அண்டா எனப்படும். ஒருவர் நெருங்கி இருந்து உறவைத் துண்டித்துக் கொண்டால் அவன் அண்டவே மாட்டான் என்பர். அண்டார் = பகைவர் எனப்படலும் ஆயினர். அண்டா என்பது போன்றதும் அதனினும் சிறிதாய் உருண்டு திரண்டதாய் இருப்பதுமாம் கலம் குண்டா எனப்படும். குண்டு = உருண்டை. அண்டா குண்டா என்பது இணைமொழி. அண்டாகுண்டா அண்டா = மிகுதியான அளவில் சோறாக்குதலுக்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது. குண்டா = அண்டாவில் ஆக்கப் பெற்ற சோற்றை அள்ளிப் போட்டுப் பந்தியில் பரிமாறு தற்குப் பயன்படுத்தும் ஏனம். கலவகையைச் சேர்ந்தவை இவை, வடிவ அமைப்பால் இரண்டும் ஒத்தவை. பருமை சிறுமையால் வேறுபட்டவை. அண்டாவிற்குக் கைப்பிடி வளையங்கள் உண்டு. குண்டாவிற்கு அவை இல்லை. உடல்நல முறைப்படி அண்டாச் சோறு அண்டக் கூடாது என்பர். பெருஞ்சமையல், வீட்டுச் சமையல் போன்ற அளவினதும் அமைவினதும் அல்ல ஆகலால் அவ்வாறு கூறினர். அண்டி அண்டி = நெருங்கி. ஒருவரை அடுத்து அல்லது நெருங்கி வாழ்வது அண்டி வாழ்தலாம். அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு என்பார் பாரதியார் (பாப்பாப் பாட்டு) அண்டை வீடு, அயல் வீடுஎன்பது மக்கள் வழக்கு. குடலை அண்டித் தோன்றி வெளிப்பட்டு வருத்தும் கட்டியை அண்டி என்பர். அண்டி தள்ளல் என்பது அதன் பெயர் முன்திரி (முந்திரி)யில் வெளிப்படக் கீழே துருத்தி நிற்கும் விதைப் பகுதியையும் அண்டியையும் நோக்கி அதனை அண்டி மாங்கொட்டை என்பர். அண்டிரன் அண் + திரன் = அண்டிரன். அண்ணுதல் = செறிதல்; அணி = மேல். செறிந்தமைந்த ஆற்றுலுடையான் அண்டிரன் எனப் பட்டான். ஆய் அண்டிரன் என்பான் வள்ளல் எழுவருள் ஒருவன் (புறம். 129 136) மோசிகீரனாரால் பாடப்பட்டவன் ஆதலால். மோசி பாடிய ஆயும் - புறம். 158 எனச் சங்கச் சான்றோரால் புகழப்பட்டான். மழைதவழ் பொதியில் அவன் ஆட்சிப் பகுதி ஆய்க்குடி ஆங்குள ஊர், கண்திரள் நோன்காழ், கண்டிரள் நோன்காழ் ஆகும். அவ்வாறே, அண் திரன், அண்டிரனாம். (புறம். 95) அண்டை அடுத்திருப்பவரும் அடுத்திருக்கும் வீடும் அண்டை என்றும் அண்டை வீடு என்றும் அண்டை வீட்டுக்காரர் என்றும் வழங்கப் பெறுவர். அண்டை அயல் என்பது இணைச்சொல். அண்டையார் = நெருக்கமிக்க உறவினராம். அண்டை அயல் அண்டை = தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார். அயல் = அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார். அண் = நெருக்கம்; அணுக்கம் = நெருக்கம்; அணுக்கர் = நண்பர்; அணிமை, அண்மை இவற்றால் அண்டை நெருக்கப் பொருளாதல் கொள்க. அயலார் = பிறர்; திருவருட்கு அயலுமாய் என்பார் தாயுமானவர். அயல், அப்பால் என்னும் பொருட்டதாம். கொண்டவர்கள் கொடுத்தவர்கள், அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும் நல்லா இருக்கணும் என்பது மக்கள் வாழ்த்து வகையுள் ஒன்று. அண்ணணித்து கூடக்குறைய என்றும் ஏறத்தாழ என்றும் நாம் வழங்கு கின்ற சொற்களுக்குரிய பொருளைத் தரும் சொல்லாக ஈழத்தமிழர் அண்ணணித்து என்னும் சொல்லை வழங்கு கின்றனர். அண் = மேல்;அணித்து = பக்கம், நெருக்கம். மேல்நிலையை ஒட்டியதாய் உள்ள நிலை அண்ணணித்து என வழங்குதல், இலக்கிய நயம், தூய்மை, பொருட்செறிவு உடையதாக விளங்குகின்றது. அண்ணம் அண் + அம் = அண்ணம். அண் = மேல்; அண்ணம் = மேல்வாய் நுனிநா அணரி அண்ணம் வருட ரகாரம் ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - தொல். 94 அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் - தொல். 99 அண்ணல்(ன்) அண் + அல் = அண்ணல் = உயர்ந்தது. அண் =மேல்; அண்பல் = மேல்வாய்ப்பல் அண்ணன் = மேலோன் உயர்ந்தோன்; மூத்தோன். அண்ணல் யானை அணிதேர்ப் புரவி - நறுந். 17 அண்ணல் யானை அடுகளத் தொழிய - புறம். 93 அடுபோர் அண்ணல் - மதுரைக். 207 அண்ணல் நெடுங்கோடு - குறிஞ்சி. 54 அண்ணன் அம்மான் என்றாற் போல்வன முறை(ப் பெயர்) - மலை. 185( நச். உரை) அண்ணா, அண்ணார், அண்ணாச்சி, அண்ணாத்தை என்பன அம்முறைப் பெயர் வட்டார வழக்குகள், அண்ண, அண்ணா, அண்ணே, அண்ணோ, அண்ணாவோ, ஏ அண்ணா (ஏண்ணா) என்பன விளி வழக்குகள். அண்ணாக்கு அண் + நாக்கு = அண்ணாக்கு அண் என்பது மேல் என்னும் பொருளது. நாக்கின் மேலே ஒரு குறுநாக்கு இருப்பது எவரும் அறிந்தது. அது, அண்ணாக்கு எனப்படும். அதில் நீர் அல்லது குடிப்புப் படுமாறு தூக்கிக் குடித்தல் அண்ணாக்கக் குடித்தல் என வழங்கும். நாக்கைப் போல் மேல்நாக்கு வெளிப்பட வராமையாலும் தெரியாமையாலும் உண்ணாக்கு (உள்நாக்கு) எனவும் படும். இது தென்மாவட்ட வழக்கு. அண்ணாத்தல் அண் > அண்ணா > அண்ணாத்தல் = வாயைத் திறத்தல் அண்ணாத்தல் செய்யாது அளறு - திருக். 255 அண்ணாக்கக் குடி என்பது மக்கள் வழக்கு. மேல்நாக்கில் படுமாறு மேலே தூக்கிக் குடி; கவ்விக் குடியாதே என்பதாம். அண்ணாள்வி அண் = மேல். ஆள்வி = ஆள்பவன். மேலாளுமை கொள்பவர் அண்ணல் ஆள்வி. அண்(ணல்) ஆள்வி >m©zhŸÉ. அண்ணாள்வி > அண்ணாவி. மேலாண்மை செய்ய வல்ல புலமையன் அண்ணாள்வி எனப்பட்டான். அவன் ஆசிரியன் ஆவன். அவனை அண்ணாவி என மக்கள் வழங்கலாயினர். ஒருவரைக் கண்டித்துரைத்தால், பொறுப்பேற்று வாதிட்டால் நீ என்ன அவனுக்கு அண்ணாவியாஎனக் கடிந்துரைத்தல் உண்டு. அண்ணாவி கூலிதனை எனப் பிற்காலப் புலவர் பாடலிலும் அண்ணாள்வி, அண்ணாவி ஆகிவிட்டார் (விவேக சிந்தாமணி). அண்ணாவி = உவாத்தி, புலவன், மூத்தோன் என்பது அகராதிப் பொருள். அண்ணாள்வி ஆங்கு இடம் பெற்றாரல்லர். அண்ணி அண்ணன் துணைவியார் அண்ணி எனப்படுவார். அண்ணி என்பது அணிலைக் குறித்தல் விளங்கோடு வட்டார வழக்கு. அண் = மேல்; அணல் = மேல்வாய்; அண்ணாத்தல் = வாய்திறத்தல். அணிலைக் கண்ட நுண்காட்சிப் படைப்பு இஃதாம். அண்ணை அன்னை, தந்தை, அக்கை, தங்கை என்பவை போல அண்ணை என்னும் முறைப்பெயர் ஈழத்து வழக்காக உள்ளது. அண்ணன் முறைப்பெயர் அது. அண்ணை பின்வருவதை முன்னறிந்து இட்ட வழி காட்டலால் இச்செயல் வெற்றியாக முடிந்தது.v‹gJ எடுத்துக் காட்டு. அண்ணன் என்பதும் வழக்கில் உள்ளதே. தமிழகத்தில் அண்ணா என்றும் அண்ணாத்தை என்றும் வழங்குதல் உண்டு. முன்னது ஏற்கத்தக்கது. பின்னது வழுவானது. அண்மை அண் = நெருக்கம், செறிவு. அண்ணிய (நெருங்கிய) இடம். காலம் ஆகியவற்றின் தன்மை. அண்மையின் எதிர்ச்சொல் சேய்மை. அண்மையால் சேய்த்தன்றி அண்ணித்து -கலித். 108 அண்மையாய் இருப்பார் அணுக்கர். அணுக்கமாவது நெருக்கம். அண்மைக்கு நெருக்கத்துடன் உயர்வுப் பொருளும் உண்டு. அவ்வகையால் உடன்பிறந்த மூத்தார் அண்ணன் அண்ணா எனப்படுவர். அண்மை இடம் சுட்டுவது அண்மைச் சுட்டு. எ-டு: இது, இவ்வீடு அண்மையில் உள்ளாரை விளிப்பது அண்மை விளி. எ-டு: அன்ப, இனிய. அண்மைச் சொல்லே இயற்கை ஆகும் - தொல். 612 எ-டு: தம்பி- தம்பி “அணிய அணுமை”என்பார் புறப்பாட்டுப் பழைய உரையாசிரியர்.(209) அதங்கோடு அதங்கோடு = அதன்கோடு அத்தன் என்பதன் இடைக்குறை அதன் அத்தன் = அப்பன் ; அச்சன் என்பதும் அது. அச்சன் கோயில் அச்சன் பற்று என்பவை அப்பனைச் சுட்டுவன. அப்பன் அச்சன் அத்தன் என்பவற்றை விளியாக்கி அப்பா, அச்சா, அத்தா என்பர் வள்ளலார்! ஆதன் = உயிர் ; மக்கள் பெயர். ஆதன் தந்தை , ஆதன் அழிசி, ஆதன் அவினி. ஆதன் நுங்கன், வாழி ஆதன் வாழி அவினி(ஐங்குறு. 1-10) ஆதன் > அதன். அதரப் பதற அதரல் = நடுக்கமுறல் பதறல் = நாடித்துடிப்பு மிகல் அதிர்வு = நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உளநடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும். கட்புலனாகும் உடல் நடுக்கம் அதரல் எனவும் கட்புனாகாத நாடித் துடிப்பு மிகுதலும், உரைப்பதற்றமும் பதறல் எனவும் சுட்டப் பெற்றனவாம். ஒடுங்கிய உடம்பு, நடுங்கிய நிலை, அலங்கிய கண், கலங்கியமனம், மறைந்து வருதல், கையெதிர் மறுத்தல் என்பவை அச்சமுற்றோர்க்கு உளவாதலைச் சிலம்பு சொல்லும். அச்ச அவிநயம் ஆயுங் காலை ஒடுங்கிய உடம்பும் நடுங்கிய நிலையும் அலங்கிய கண்ணும் கலங்கிய உளனும் கரந்துவரல் உடைமையும் கையெதிர் மறுத்தலும் பரந்த நோக்கமும் இசைபண் பினவே (3 13 அடியார்க்.) அதர் அதர் = அச்சமிக்க வழி; வழியாலும், வழிப்பறி, விலங்கு முதலியவற்றாலும் அச்சமும் நடுக்கமும் ஆக்கும் வழி; பின் பொதுவில் வழியாயிற்று. அதிர் > அதர். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் -திருக். 594 ஆனினம் கலித்த அதர் - புறம். 138 கல்லதர் அத்தம் -சிலப். 16 57 அதர்கோள் = வழிப்பறி. அதர்வை என்பது இது. அப்புதல் அதர்வை அதரித் திரித்தல் = வைக்கோல் போர் கடாவிடல் அதரித் திரிந்த வாளுகு கடா -புறம்.371 * அத்தம் காண்க. அதள் அதைப்பு > அதப்பு > அதள் தடிப்பான தோல் தோலாடை அணிந்த ஆயனை அதளோன் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (151) அதளோன் துஞ்சும் என்பது அது. அதியமான் அரிய நெல்லிக் கனியை ஔவைக்குத் தந்து அழியாப் புகழ் கொண்ட வள்ளல் அதியமான். அவன் பெயர் அகர முதலிகள், ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றில் அதியமான் என்றும் அதிகமான் என்றும் ஒப்ப வழக்குப் பெற்றுத் தொடர்ந்து வருகின்றது. இப்பெயர்களுள் முறைமையானது எது? அதியமான் முழுப்பெயர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பது, எழினி என்றும் , அஞ்சி என்றும் நெடுமான் என்றும் நெடுமிடல் என்றும், மழவர் பெருமான் என்றும்,அதியர் கோமான் என்றும், பிறவாறும் சுட்டப் பெறுகிறான். இப்பெருமகனைப் பற்றிய விரிவான செய்திகள் புறநானூற்றில் பொதுளியுள்ளன. இவனைப் பெருகப் பாடிய புலவர் பெரு மாட்டியார் ஔவையார் என்பதைச் சுட்ட வேண்டியதில்லை. புறநானூற்றுப் பாடல்களில். ஆர்கலி நறவின் அதியர் கோமான் - புறம்.91 அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான் - புறம். 101 மதியேர் வெண்குடை அதியர் கோமான் - புறம். 392 எனப் பாராட்டப்பட்டுள்ளான். இவற்றுள் முதற்கண் உள்ள ஆர்கலி நறவின் அதியர் கோமான்என்பதில் மட்டும் பாட வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன, அதிகர் கோமான் , அதன் பழைய உரையே தெள்ளிதின் நிறுவுகின்றது. ஆரவாரத்தைச் செய்யும் மதுவினையுடைய அதியர் கோமான் என்பது அவ்வுரை. அன்றியும் அவ்வுரையின் முடி நிலையும் அதியர் கோமான்! mŠá!பெரும! மன்னுக எனக் கூட்டி வினைமுடிவு செய்க என்றேயுள்ளது. ஆகலின் ஒரு காலைக்கு இரு காலை அப்பாடலின் அதியன் என்பதே என, அதன் பண்டையுரை ஆசிரியர் எழுத்தே வலியுறுத்துகின்றது. மேலும், உரையாசிரியர் காலத்திற்கு முன்னரே பாடவேறுபாடு உண்மை எனின் அவர் பாட வேறுபாட்டைச் சுட்டிச் செல்வதும் அதற்குத் தக உரை கூறுவதும் அவர் வழக்காறாம். அவ்வாறு சுட்டாமை ஒன்றே அப்பாட வேறுபாடு உரையாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டது என்பதைக் தெளிவிக்கும். உரையாசிரியர் காலத்திற்கு முற்படவே திணை துறை வகுக்கப் பெற்று நிகழ்வும் பொறித்து வைத்த திறவோர் குறிப்பில் அதியமான் பெயர் ஆட்சியுண்மை பெரிதும் கருதத்தக்கது. அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது (புறம். 87) அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது (புறம்.97) அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது (புறம். 100) அதியமான்நெடுமான் அஞ்சியை அவர் பாடியது (புறம்.103) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஔவையார் பாடியது (புறம்.206). இவ்வாறே 208,231,235,391,392 ஆகிய பாடல் குறிப்புகளிலும் அதியமான் என்றே குறிப்பிடுகிறார். இப்பத்து இடங்களில் ஒரோ ஓர் இடத்தில் மட்டும் அதிகமான் நெடுமான் வஞ்சி எனப் பாட வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. வஞ்சி என்றுள்ள பாடம் கொண்டே அப் படியெடுப்பாளர் கருத்தின்மை அறியக் கூடும்! இனி 158 ஆம் புறப்பாடலில் வள்ளல் எழுவர் பெயரும் தொடர்ந்து கூறுமிடத்துப் பெருஞ்சித்திரனார்,எழினி என்றாராக, உரையாசிரியர் எழினி அதியமானும் என்று விரித்து எழுதியமை நோக்குதற்குரியதாம். பண்டைப் பாவலர்களும், புறநானூற்று உரையாசிரியரும் அதியமான் என்னும் பெயரைச் செவ்விதிற் குறித்துப் போற்றினாராகப் பிற்காலப் படியெடுப்பாளர்களும், பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதியமானுக்கும் அதிகமானுக்கும் வேறுபாடின்மை கொண்டு எழுதுவாராயினர். அதன் விளைவே பழம் புலவர் பாடல்களிலும் உரைகளிலும் அதிகமான் என்று குறிக்கப் பெறலாயிற்றாம். பின்னாளைத் தனிப்பாடல்கள் ஒன்றிரண்டில் அதிகன், அதிகா என்று குறிக்கும் நிலையுடன்அதிகை க்கும் அதிகனுக்கும் சொல்லொப்புக் காட்டி, அதியரின் முன்னோர் ஊர் அதிகையாகலாம் என்று ஆயவும் தூண்டியதாம்! எழுத்து மாற்றத்திற்கு வயப்பட்ட ஏமாற்றங்கள் இவை என்க. புறம் 158 போலவே, சிறுபாணாற்றுப்படையும் வள்ளல் எழுவர் பெயரை வரிசைப் படுத்துகின்றது. அங்கு,அரவக் கடற்றானை அதிகன் எனப் பாடம் உள்ளது. நச்சினார்க்கினியர் உரையும் அதிகன் என்றே செல்கின்றது. அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் புறத்திணையியல் 7ஆம் நூற்பா உரையில் ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்என்றுள்ளது. அவ்விடத்தில் அதிகமான் என்னும் பாடவேறுபாடும் உண்டு. குறுந்தொகை 393ஆம் பாடலில் பாண்டியன் வினைவல் அதிகன்என்று வரும் இடத்தில் அதிகன் என்பது பிழையாதலைப் பேராசிரியர் கந்தசாமியார் திருத்தியுள்ளார். அவர், இராமசாமிபுரம் மூவரையர் வண்ணம் பாடிய பூண்டியப்பப் புலவர் ஏடு பார்த்துத் திருத்தியதுஎன்று குறித்துள்ளார். எழினி எழுதிய புலவர் பாண்டியனார், சேரன் சேரமான், மலையன் மலையமான், தொண்டையன் தொண்டைமான் என்றாற் போலவே அதியன் அதியமான் என வழங்கும். இவ்விரண்டனையும் அதிகன், அதிகமான் எனவும் வழங்கும்; அதியன் மரபினர் அதியர்என்றார். எடுத்துக் காட்டுடன் அதியனை விளக்கிய அவர், பிறர் கோட் கூறி அதியன் மரபினர் அதியர்எனத் தம் கோள் நாட்டினார் ஆதல் தெளிவு. நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூரார் யாண்டும் அதியமான் என்றே கொண்டார். அதியன் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமை பற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளில் காணப்படுவது பற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகையென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேர நாட்டில் குடியேறியிருத்தல் வேண்டும் என்றும் இதனால் அதிகையராகிய இவர் அதியர் எனப்படுவாரானார் என்றும் அறிஞர் கருதுகின்றனர்என்றார் உரைவேந்தர் ஔவை சு.து. முற்படக் கூறியதே ஔவை கருத்து என்பது வெளிப்படை. ஆயினும், பிறர் கருத்துப் பிறிதொன்றுண்மையைச் சுட்டுவதே அவர் கருத்தாகலின், அக்கருத்து அவர்க்கு இன்மை தெளிவாம். அன்றியும் அவர்தம் உரையுள் யாண்டும் அதியமானை அதிகமான் என்று குறித்தார் அல்லர் என்பது சான்றாம். அதிகை என்னும் பாடுபுகழ் ஊர் உண்மையும், அதிகமான் என்னும் பாட வேறுபாடு உண்மையும் போட்ட முடிப்பே அதியமானை அதிகைக்குக் கொண்டு சென்றதாம்; உதியர் உதிகர் ஆகாமை போல அதியர் அதிகர் ஆகார்; ஏனெனில் இரண்டும் குடிப்பெயர்கள் ஆகலின், அதியன் விண்ணத்தனார் என்னும் புலவர் (அகம். 301) அதியர் குடியினர் ஆகலின்; இப்பெயர் பெற்றார் என்பது எண்ணத்தக்கது. இனி, அதியமான் அதிகை சார்ந்தவனாக இருந் திருப்பானேல் அவன் பேரும் பெற்றியும் சீரும் சிறப்பும் ஊரும் உறவும் பலப்பல பயில விரித்துப் பாடும் புலவர், அதிகையைச் சுட்டாது ஒழியார், மேலும் சேரர், சோழர், பாண்டியர், சளுக்கியர், பல்லவர், விசய நகர வேந்தர், நாயக்க மன்னர் என்னப் பல்வேறு கால ஆட்சியர் கல்வெட்டுகளைப் பெற்ற அதிகை, தன் மண்ணுக்குத் தனிப் புகழ் சேர்த்த வள்ளல் அதியனைச் சுட்டாது ஒழியாது. ஆதலால், அதியனுக்கும் அதிகைக்கும் தொடர்பு இல்லையாம். பெருக வழங்கும் பாடற் சான்றையும், உரைச்சான்றையும், மொழியியற் சான்றையும் வலுவாக விலக்கிப் பாட வேறு பாட்டையும், பிற்கால மயக்க உன்னிப்பையும் பொருட்டாக்கி அதியனை அதிகன் என்று வழங்குவது பேனைப் பெருமாள் ஆக்குவதாம். அதுக்குதல் வெதுப்பு மிக்க உணவை, வாயின் இரு புறங்களிலும் மாறிமாறி ஒதுக்கித் தின்னல் அதுக்குதலாம். இனிப் பல்லும் பல்லும் பட அமுக்கிப் பதம் பார்த்தலும் அதுக்குதலாம். கண்ணப்ப நாயனார் இறைவர்க்குப் படைக்க விரும்பிய ஊனைச் சுவை பார்த்ததைக் கூறும் சேக்கிழார். வாயினில் அதுக்கிப் பார்த்து - பெரிய. கண். 118 என்பார். அதைத்தல் அதைத்தல் = தடித்தல்; அதைப்பு = தடிப்பு, வீக்கம். கால் அதைப்பாக இருக்கிறது கை அதைப்பாக இருக்கிறது. ஒன்றும் இல்லை என்று விட்டுவிடாதே என்பவை மக்கள் வழக்கு. கடைவாய் விம்முமாறு போட்டு ஒதுக்கித் தின்னுதல் அதைத்தல் என்பதாம். இதுவும் மக்கள் வழக்கே. அத்தத்தா அத்தன் = அப்பன், அத்தன் அத்தன் = அத்தத்தன்; அத்தத்தா (விளி) அடுத்தடுத் தத்தத்தா என்பான் - கலித். 81 அப்புதல் அத்துதல் என்பவை ஒட்டி - நெருங்கிக் - கிடத்தல், இருத்தல் என்னும் பொருளது. எ-டு: சுவரில் கலவை அப்புதல் அப்புச் சுவர் (ஒட்டுச்சுவர்) அப்பு > அத்து. அத்தம் ஆள் வழக்கற்ற காடு; அழிவும் அவலமும் ஆக்கும் காடு. ஆளில் அத்தமாகிய காடே - புறம். 23 நீர்ப்பசை அற்றுப் போனதும் ஈவிரக்கமாம் நீர்மையற்றவர் வழிப்பறிக்கு இடமாவதும் ஆகிய காடு. அற்றம் > அத்தம். கல்லதர் அத்தம் - சிலப். 16 57 அத்தம் வனம் காடு அத்துவானக்காடு என்பது மக்கள் வழக்கு. அத்துவானக் காட்டிலே ஒரு கிழவி இருந்தாள் சிற்றூர்ப் பாட்டியர் கதை. அத்தவனக்காடு அத்தம்+வனம் +காடு = அத்தவனக்காடு. இதிலுள்ள மூன்று சொற்களும் காடு என்னும் பொருளைத் தருவனவே. அத்தம் = காடு; கல்வழியைக் கல் அதர் அத்தம்என்னும் சிலப்பதிகாரம்; அதர் அத்தம் இரண்டும் வழியே. அத்தம் அற்றம் = முடிவு. மீமிசைச் சொல் - இரு சொல் ஒரு பொருளுடையது. இது முச்சொல் ஒருபொருள் தரும் அருவழக்காகும். இது பொதுவழக்கமாகும். தென் தமிழகக் கதைகளில் மிகுவழக்குடையது இது. அத்தாச்சி அத்தை + ஆ(ய்)ச்சி = அத்தாச்சி. அத்தாச்சி = அத்தையைப் பெற்றதாய்; அத்தாச்சி எனப்படுதல் மதுரை வழக்கு. ஆய்ச்சி =ஆயர் மகளிர், ஆச்சி = அம்மை. அம்மையைப் பெற்றவள் அத்தாச்சி. அத்தான் அகத்தான் > அத்தான். பெற்றவர் உற்றவர் அன்பினும் மேம்பட்டவனாய் அவர்களை மறக்கச் செய்யவல்ல உயிரன்பினனாய் அவனன்றித் தானில்லை என்னும் நேயத்தின் உறைவிடமாய் இருப்பவன் யாவன் அவன் அகத்தான் = அத்தான்! பிறர் அன்பினும் மேம்பட்டவன். இனி அத்தையின் மகன் அத்தான் என்பதுமாம். அன்னையையும் அத்தனையும் அன்றே மறந்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்னும் அப்பரடிகள் வாக்கும், இம்மை மாறி மறுமை ஆகினும் நீயா கியர்என் கணவனை யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே - குறுந். 49 என்னும் சங்க முழக்கமும், கொண்டு தலைக்கழிதலும் எனவும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே எனவும் வரும் தொல்காப்பியத் தோற்றங்களும் (961, 1089). நின்னைப் பிரியேன், பிரியின் உயிர் தரியேன் என்னும் தலைவன் நேர்வும். நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்தோள் பிரிபறியலரே என்னும் நற்றிணையும் (1) எண்ணத்தக்கன. இவற்றை மெய்ப்பிக்கும் காதல் காட்சிகள் இற்றை வாழ்விலும் நிகழ்தலை நோக்குக. அத்தி அரத்தி > அத்தி. அத்தி = சிவந்த பழத்தை உடையது. அரத்தம், அரதனம் போல் சிவந்தது. ஆல், அரசு, அத்தி, இத்தி என்பவை செம்பழம் உடையவை. கல்லத்தி, காட்டத்தி, கொடியத்தி, பேயத்தி, மலையத்தி, விழலத்தி என அத்தி வகை ஆறு. அத்து = ஒட்டுதல். கிளைகளை ஒட்டிக் காய்ப்பதால் அத்தி என்பது செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகர முதலி. அத்திப் பூவைக் கண்டவரும் இல்லை ஆந்தைக் குஞ்சைக் கண்டவரும் இல்லை எனப் பூவற்ற தோற்றம் காட்டலால் அற்றி > அத்தியாகவும் வாய்க்கும். அத்திம்பேர் அத்தை +அன்பர் = அத்தயன்பர். அத்தை அன்பர் (கணவர்) என்பதன் கொச்சை வடிவு அத்திம்பேர். அத்தன் (தந்தை) உடன்பிறந்தாள் அத்தை. அவனை மணந்தவர் அத்தை அன்பர். அத்திரி அத்திரி: 1 அல் + திரி = அல்திரி > அத்திரி = மலை. அத்திரி = திரிவு அற்றது; அசைவற்றது. எ-டு காளத்திரி; காளம் + அத்திரி = கருமலை. காளத்திரி என்பது வடமொழிப் புணர்ச்சித் திரிப்பு. நிலையில் திரியா(து) அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது -திருக். 124 அத்திரி:2 அகம் + திரி = அகத்திரி > அத்திரி = கோவேறு கழுதை. மாடு, குதிரை முதலியவை போல் முனை அல்லது தறியில் கட்டப்படாமல், காலில் தளையிடப் படுவது கழுதை. அக் கழுதையில் உயரமானது கோவேறு கழுதை. கால்களை இணைத்துத் தளையிடப் படுவதால் அத்திரி எனப்பட்டது. கழிச்சே றாடிய கணைக்கால் அத்திரி - நற். 278 அந்தணர் அகம் + தண் + அர் = அந்தணர் = அகத்தே அருளிரக்கம் உடையார். அந்தணர் என்பது இந்நாள் கொள்ளும் குலப்பெயர் போல்வது அன்று. அருள் ஒழுக்கத்தால் எவரும் அடையத் தக்க பண்பியற் சிறப்புப் பெயர் அது. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் குறள் (30) இதனைத் தெளிவிக்கும். அந்தம் அகம் (அம்) + தம் = அந்தம். உள்ளத்திற்கு நிறைவு தருவது அந்தமாம். அந்த மாதன வாழ்வோர் என்பது கம்பரந்தாதி (70) அந்தர் என்பதற்கு உள்ளென்னும் பொருள் உண்மை அறிக. அந்தாதி அந்தாதி = முடிமுதல் ஒரு செய்யுளின் இறுதிச் சீரோ, அதன் உறுப்போ அதனை அடுத்து வரும் செய்யுளுக்கு முதலாக வருமாறு பாடப்பெறும் நூல் அந்தாதி ஆகும். கலித்துறையால் செய்யப் பெறுவது கலித்துறை அந்தாதி என்றும், வெண்பாவால் செய்யப் பெறுவது வெண்பா அந்தாதி என்றும் பெயர் பெறும். பத்துச் செய்யுள்களால் வருவது பதிற்றந்தாதி, நூறு செய்யுள்களால் வருவது நூற்றந்தாதி; பதிற்றுப் பத்தந்தாதி என்பதும் அது. ஐம்பது செய்யுள், எழுபது செய்யுள், தொண்ணூறு செய்யுள் எனக் கொண்டு வருவனவும் அவ்வெண் பெயரால் விளங்கும். வெண்பா கலித்துறை வேண்டிய பொருளிற் பண்பால் உரைப்பதந் தாதித் தொகையே - பன்னிரு. 330 வெண்பாப் பத்து கலித்துறை பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி நூறு வெண்பா நூறு கலித்துறை கூறுதல் நூற்றந் தாதிக் கோளே - இலக். பாட். 81, 82 வெண்பா ஐம்பதானும் எழுபதானும் தொண்ணூ றானும் வந்தால் பேர்பெற்று முடிவது அந்தத் தொகை வெண்பா அந்தாதி யாம் - நவநீதப். 38 காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, முதலாழ்வார் மூவர் பாடிய திருவந்தாதிகள் குறிப்பிடத் தக்கன. திருநூற்றந்தாதியும் அரியது. தண்டபாணி அடிகள் பாடிய ஆங்கிலியர் அந்தாதி புதுவது. சொல்லரு மேன்மைப் பசுமேடம் ஆதிய துய்த்துலக்கும் புல்லறி வாண்மை பொலிஆங் கிலியர் புறம்கொடுக்க வெல்லவல் லானைப் படையா திருக்கின்ற வேதனுக்கு நல்ல மதியொன் றுண்டாகுங்கொலே வெள்ளை நாமகளே என்னும் முதற்பாடலே அவ்வந்தாதி உட்கிடையை விளக்கும். * சதகம், பதிற்றுப் பத்தந்தாதி காண்க. அந்தாதித் தொகை அந்தாதி தொகை = அடிமுதல் தொகை வெண்பாவால் ஆயினும் கலித்துறையால் ஆயினும் வேண்டிய பொருளைப் பற்றிப் பத்து, நூறு என்னும் தொகை பெற வரும் சிறு நூல், அவ்வவ் வந்தாதித் தொகை எனப் பெயர் பெறும். * அந்தாதி காண்க, அந்தி சந்தி அந்தி = மாலையும் இரவும் பொருந்தும் பொழுது. சந்தி = இரவும் காலையும் பொருந்தும் பொழுது. அந்தி சந்தி என்பவை பொருத்துதல் பொருள். மாலைக்கடை அந்திக்கடை எனப்படும் சில ஊர்களில் அந்திக் கடைத்தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள் பழமையைச் சொல்லிக் கொண்டு இன்றும் உள்ளன. அந்தி மாலைச் சிறப்புச் செய்காதைஎன்பது சிலம்பில் ஒரு காதை(4). இரவுக் கடை அல்லங்காடி என்பதும் பகற்கடை எல்லங்காடி என்பதும் சிலப்பதிகார ஆட்சி. இந்நாளில் புதிய புதிய மாலைக் கடைகளும் இரவுக் கடைகளும் பெருகுகின்றன. ஆனால் தமிழில் பெயர் இருந்தால் தலையே போய்விடும் என்பது போல ஆங்கில மயக்கில் குலவுகின்றன. சந்தி, முச்சந்தி, நாற்சந்தி என்பவை சந்திப்பதால் (பொருந்து வதால்) வந்தது போல, இரவும் பகலும் சந்திப்பதால் வந்த பெயர் சிலர் காலையையும் அந்தி என்பர். அதற்கு வெள்ளந்தி என்பது பெயர். fhiy Ãak« ‘ rªâahtªjd«’ vd¥gLjš m¿f.(t) அந்து அறுந்து >mªJ. அறுந்து போக அல்லது அற்றுப்போகச் செய்வது அந்து. கயிறு அறுந்து விட்டது என்பதை,கயிறு அந்து விட்டது என்பது பொதுமக்கள் வழக்கு. நென்மணியை அரித்துக் கெடுக்கும் ஒருவகைப் பூச்சி அந்து என்பதாம். அப்பூச்சி அண்டாதிருக்க நெற்களஞ்சியத்தில் வேப்பிலையைப் பரப்பி வைப்பது வேளாண்மையர் வழக்கமாகும் அந்து என்பது ஒன்றை அழிந்து போகச் செய்வதால் கொண்ட பெயர் அழிந்து அந்து ஆகியது. அந்துகடி துண்டுபோய கதிர்நெல் -பிரபோத. 19 அந்தூது நெல்லானேன் பழமொழி. -செ.சொ.பி.பே. அழிந்து போகும் இறுதி நிலையே அந்தம்! அந்தை அந்தை = முறைப்பெயர். அந்தை என்பதை நிறையெனவும் (தொல். தொகை.28நச்) ஒருவகைக் காலணி எனவும் (மதுரைத் தமிழ்ச் சங்க அகராதி) கண்ட அறிஞர் உலகம், அந்தையை ஒரு முறைப்பெயராகக் காணவில்லை. அந்தீற்று ஓ(அந்தோ) அன்னீற்று ஓ (அன்னோ) என்பவற்றை இடையியலில் தொல்காப்பியர் கூறுகிறார். அன் என்பது அன்னை என்னும் முறைப்பெயர் அடியாகத் தோன்றியது போல, அந்தென்பது அந்தை என்னும் முறைப்பெயர் அடியாகத் தோன்றியிருக்க வேண்டும் எனக்குறிப்பாக அறியலாம். அந்தை முறைப்பெயர், தந்மையால் (தம் + அந்தை) விளங்குவது தகும் என்பதை மற்றை முறைப்பெயர்கள் தெரிவிக்கின்றன. முறைப்பெயர்கள் தம் என்னும் உரிமைப் பொருட்சொல் தொடர வெளிப்படையாகவும், ஒருசார் குறிப்பாகவும் அமைந்துள. ஆய் (தம் + ஆய்) தாய் அப்பன் (தம் + அப்பன்) தமப்பன் (தகப்பன்) ஐயன் (தம் + ஐயன்) தமையன் அக்கை (தம் + அக்கை) தமக்கை அங்கை (தம் + அங்கை) தங்கை இவற்றைப்போலவே தம்பின் (தம்பி) தம்முன்(அண்ணன்) என்பவற்றையும் காண்க. இவ்வுரிமைப் பொருள் இணைப்போடு. அந்தை (தம்+அந்தை) தந்தை என்றமைதலைக் காண்க. அந்துவன் செள்ளை, அந்துவன் வேண்மாள், நல்லந்துவன், அந்துவஞ் சேரல் என்னும் பண்டைப் பெயர்களையும் எண்ணுக. அந்தை, எம் அந்தை, நும் அந்தை, தம் அந்தை என மூவிடப் பெயராய் எந்தை, நுந்தை, தந்தை என ஆதல் அறிக. யாய் ஞாய் தாய் எவ்வை நுவ்வை தவ்வை எம்முன் நும்முன் தம்முன் எம்ஐயன் நும்ஐயன் தம்ஐயன் எம்பின் நும்பின் தம்பின் எங்கை நுங்கை தங்கை எம்மோய் நும்மோய் தம்மோய் எம்மை நும்மை தம்மை எங்கள் நுங்கள் தங்கள் என்னும் முறைப்பெயர் ஒழுங்குமுறை நம் முந்தையரை வியப்புற எண்ண வைக்கும். அந்தை என்னும் பெயருடன் தம் என்னும் உரிமை ஒட்டு ஒட்டியதால் தந்தை அமைந்தது எனக் கொண்டால், பண்டைப் பெருமக்கள் சிலரின் பெயர்ப் புணர்ப்புச் சிக்கல் அவிழ்க்கப் பெறுதல் கண்கூடாம். சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, எயினந்தை, ஆந்தை, பூந்தை என்னும் பெயர்கள் முறையே சாத்தன் தந்தை சாத்தந்தை கொற்றன் தந்தை கொற்றந்தை என்பன போல மருவியதாகக் கூறுதல் ஒழிந்து, சாத்தன் அந்தை சாத்தந்தை கொற்றன் அந்தை கொற்றந்தை என்பன போலப் புணர்ப்புற்றதாகக் கூறத்தகும். முன்னதன் புணர்ச்சி முறையிற் பின்னதன் புணர்ப்பு இயல்பும் எளிதுமாதல் விளங்கும். இவ்வாய்வு மேலும் சில ஆய்வுகளுக்கு ஏந்தாக அமையும்! அந்தோ அந்தோ என்னும் சொல் ஐயோ என்னும் பொருளது தொல்காப்பியத்தில் அந்தோ என்பது அந்தீற்று ஓ என வழங்கப் பெறுகிறது. (767) அந்தோ என்பது பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் இக்கால இயல் வழக்கு வரை இயன்று வருகின்றது. உணர்வு வெளிப்பாட்டில் வெளிப்படும் சொற்களில் ஒன்று அந்தோ ஆகும். அந்தோ அளியேன் வந்தனென்மன்ற - புறம். 238 அந்தோ எந்தை அடையாப் போரில் - புறம். 261 நொந்தழி அவலமொ டென்னா குவள்கொல் - நற். 324 உயங்கி னாளென் றுகாதிர்மற் றந்தோ மயங்கி னாளென்றுநு மருள்தி கலங்கன் மின் -கலித் 143 அந்தோ என் ஆருயிரே - நாலா. பெரியதிரு. 1 2 6 என்பவை யெல்லாம் உணர்வு தட்டி எழுப்பிய உருக்கத்தில் வெளிப்பட்டவை என்பது வெளிப்படை. அந்தோ என்னும் இவ்வுணர்வு வெளிப்பாட்டுச் சொல், ஏனை உணர்வு வெளிப்பாட்டுச் சொற்களோடு ஒப்பு நோக்கத்தக்கதாம். அம்மை, அன்னை, ஆத்தாள், அப்பன், அச்சன், அத்தன், ஐயன், அக்கை, அண்ணன் என்பன வெல்லாம் முறைப் பெயர்கள். இவையெல்லாம் அம்மா, அன்னா, ஆத்தா, அப்பா, அச்சா, அத்தா, ஐயா, அக்கா, அண்ணா, என விளி வடிவில் அமையவும் பெற்றன. அன்றியும் பல்வேறு உணர்வு வெளிப்பாட்டுச் சொற்களாகவும் இயல்கின்றன. அம்மை - அம்ம, அம்மா, அம்மே, அம்மோ, அம்மம்ம, அம்மம்மா, அம்மம்மே, அம்மம்மோ, அம்மனாய், அம்மனே, அம்மனோ, அம்மையே, அம்மவோ, அம்மாடியோ அன்னை - அன்னா, அன்னாய், அன்னே, அன்னோ, அன்னையே, அன்னையோ,அன்னன்னா, அன்னன்னே, அன்னன்னோ ஆத்தான் - ஆத்தா, ஆத்தே, ஆத்தோ, ஆத்தாடி, ஆத்தாடியே, ஆத்தாடியோ, ஆத்தா ஆத்தா, ஆத்தத்தா, ஆத்தத்தே, ஆத்தத்தோ, ஆத்தாவோ அப்பன் - அப்ப, அப்பா, அப்பே, அப்போ, அப்பப்ப, அப்பப்பா, அப்பப்பே, அப்பப்போ, அப்பாடியோ அச்சன் - அச்சா, அச்சோ, அச்சச்சா, அச்சச்சோ, அச்சாவோ. அத்தன் - அத்தா, அத்தோ, அத்தத்தா, அத்தத்தோ, அத்தாவோ ஐயன் - ஐய, ஐயா, ஐயே, ஐயோ, ஐயகோ, ஐயவோ, ஐயாவோ, ஐயோ ஐயோ, ஐயையா, ஐயையே, ஐயையோ, ஐயாடியோ அக்கை - அக்கா, அக்கோ, அக்கக்கா, அக்கக்கோ, அக்கைச்சி, அக்கடா, அக்கடே, அக்காடி, அக்கடோ அண்ணன் - அண்ண, அண்ணா, அண்ணே, அண்ணோ, அண்ணாவோ, அண்ணாத்தே, அண்ணல், அண்ணால். இன்னவையும், பிறவுமாம். இச்சொற்கள் எல்லாமும் உயிர் முதல் எழுத்தால் இயன்றவை என்பது நோக்கத் தக்கது. இச் சொற்களைப் போலவே உணர்வு வெளிப்பாட்டுச் சொல்லாக இருப்பது. அந்தோ என்பது. ஆயின் அஃதொரு முறைப் பெயராக வழக்கில் இல்லை. ஆனால், அது முறைப்பெயர் வழிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என உறுதி செய்யலாம். அம்முறைப்பெயர் அந்தை என்பதாம். அந்தை என்னும் முறைப்பெயர் அழிவால் அதன் வழிப்பட்ட உணர்வுச் சொற்கள் கிளைத்திலவாம். அப்பச்சி அப்பு + அச்சி = அப்பச்சி. தந்தையைக் குறிக்கும் முறைப்பெயராக வழங்குதல் நெல்லை, முகவை வழக்கு. அம்மை அப்பன் போல, அப்பன் அம்மை இணைவுப் பெயர் இது. * அப்பாச்சி காண்க. அப்பழுக்கு அப்பு + அழுக்கு = அப்பழுக்கு அப்பழுக்கு அற்றவர் என்பது வழக்கு, குறை கறை அற்றவர் என்ற பொருளில் வழங்குகின்றது. அப்பிய - ஒட்டிய - அழுக்கு அற்றவர் என்பது பொருளாம். மாசற்றவர் என்பதும் அது. அப்பழுக்கு இல்லாதவன் என்பதில் உள்ள அப்பழுக்கும் பெருவழக்குச் சொல்லே. அழுக்கு, மாசு, குற்றம், குறை, கறை, அப்பிய அழுக்கு எதுவும் இல்லாதது தூயது. அத்தன்மை யுடையவன் தூயன் என்க. உடலிலே அப்பும் அழுக்கும் உடையிலே அப்பும் அழுக்கும் நீரால் போகும். உள்ளத்திலே அப்பும் அழுக்கை எதனால் போக்குவது? கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்? உள்ளத்து அழுக்குப் போகாதே! அதனால். புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் என்றார் திருவள்ளுவர் (298) அப்பன் அப்பர், சிறப்பு நிலை, அப்பா, விளிநிலை, அப்பன், தன்தாயை அடுத்து உரிமையால் அப்பிக் கொண்டவன், அப்பு + அன் = அப்பன், ஒருவர் தம் பெயரை எழுதுங்கால் தம் பெயருக்கு முன்னே ஒட்டிக் கொண்டிருக்கும் பெயர் அப்பனின் பெயராதல் உலகளாவிய வழக்காக வந்துள்ளமை அறிக. அப்பனொடு அன்னை பெயரையும் இணைத்தல் பதிற்றுப்பத்தில் உள்ள பழவழக்கு. இந்நாள் புதுவழக்கு பெண்ணுரிமைப் போற்றலாம். இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன் - இரண்டாம்பத்து. பதி. ஆராத் திருவின் சேரலா தற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் - நான்காம் பத்து. பதி. அப்பாச்சி அப்பாவைப் பெற்றதாய் (அம்மாவின் தாய் அம்மா ஆச்சி அம்மாயி ஆவது போல்) அப்பாச்சி எனப்படுகிறாள். இதனை அப்பா ஆயி (அப்பாயி) என்பதும் உண்டு. * அப்பச்சி காண்க. அப்பி தாய் தந்தை முதலியவர்களை விடாமல் பற்றிக் கொள்ளும் குழந்தையை அப்பி என்பது குமரி மாவட்டப் புதுக்கடை வழக்கு ஆகும். அப்புதல் ஒட்டுதல் சேற்றை அப்புதல் சந்தனத்தை அப்புதல் போல்வது. அப்பு அப்பு என்பது அப்பாவைக் குறிக்கும் முறைப்பெயர். அஃது அன்புப் பொதுச் சொல்லாகப் பலருக்கும் வழங்குவது உண்டு. அப்பா ஐயா அம்மை என்பவை முறைப்பெயர் எனினும், பொதுப் பெயராகவும் வழங்குவது இல்லையா? அதுபோல் என்க. அப்பு விளி வடிவமாகவும் வழங்குகின்றது. “m¥ò eykh?”அப்பு எங்கே போகிறீர்கள்?என்று இளையர் முதியர் வேறுபாடு இன்றியும் வழங்குதல் நடைமுறை. அப்பு என்பது ஏவல் வடிவிலும் வரும். ஒன்றோடு ஒன்றை இணைத்தல் அப்புதல் எனப்படும். சுவரில் சாந்தை அப்பு நான் தேய்க்கிறேன்என்பதும், எருவைத் தூணில் அப்புஎன்பதும் நாம் கேட்பவை. இவை ஏவல் வடிவுகள். ஓர் அப்பு அப்பினான் பார்என்பதில் அப்புதல் அடித்தல் அல்லது அறைதல் பொருள் தருகிறது. ஒன்றை ஒன்றில் அப்புதல் என்பது அடித்தல் தானே! சோற்றை ஓர் அப்பு அப்பினான்என்றால் வயிறு முட்ட உண்டான் என்பது பொருள். அப்புச் சுவர் என்பது ஒட்டுச் சுவர். இயல்பாக அமைந்த சுவரில் பழுதுண்டானால் அதற்கு வலுவமையுமாறு சாந்து, மண் அப்பி வைக்கும் சுவர் அப்புச் சுவராகும். ஆடு மாடுகளின் அரத்தத்தை (இரத்தத்தை) உறிஞ்சி உண்ணும் ஓர் உயிரி உண்ணி எனப்படும். அவ்வுண்ணிக்கு அப்புண்ணி என்பதொரு பெயர். அதன் ஒட்டுதலை விளக்குவது, ஒட்டுண்ணி என்பதும் அதன் மற்றொரு பெயர். நெருங்கியவர் உடையிலும், நெருங்கிய உடலிலும் ஒட்டும் புல் ஒன்றுண்டு. அதற்கு ஒட்டுப்புல் என்பதொரு பெயர். அப்புப்புல் என்பது மற்றொரு பெயர். பழைய சுவருடன் அப்புச் சுவரும் சேர்ந்த போது அச்சுவர் கனமுடையதாக இருக்கும். அதனால் கனம், தடி, என்னும் பொருள்களும் அப்புதலுக்கு உண்டாயின. ஆதலால், அப்புதல் என்பதற்குப் பூசுதல், ஒற்றுதல், தாக்குதல், கவ்வுதல், சார்த்துதல், திணித்தல், உண்ணுதல் ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. எருத்தட்டுவார் சாணத்தை உருட்டித் தட்டி வட்டமாகச் செய்வதைக் காணலாம். அவ்வாறு செய்வது அப்பளித்தலாகும். அப்பளித்தல் வேறு, சப்பளித்தல் வேறு. அப்பளித்தல் வட்ட வடிவானது. சப்பளித்தல் எவ்வடிவிலும் அமையும். அவ்வப் பளித்தல் போல் மாவைப் பிசைந்து, உருட்டி வட்டமாகத் தட்டிச் செய்யப்படுவது அப்பளம், அப்பளாம் என்பது பிழை வழக்கு. இனி, அப்பம், ஊது அப்பம் (ஊத்தப்பம்) என்பனவும் அப்பளித்தல் வழியாக வந்தனவே. அப்பட்டம் என்பது பெருவழக்குச் சொல். அப்பட்டமான பொய் என்பது எங்கும் கேட்கக் கூடியது. அப்பு அட்டம்; அப்பட்டம் ஆயது. அப்புதல் அமைந்தது என்பது பொருள். அப்புதலாவது இட்டுக்கட்டி யுரைத்தல், புனைந்துரைத்தல்; இட்டுக் கட்டிய பொய், புனைந்து கூறிய பொய் என்பது இதன் பொருளாம். அப்புக்குட்டி என்பதொரு பெயர். தாயை விட்டுப் பிரியாது ஒட்டித் திரியும் ஆட்டுக் குட்டியை, அப்புக் குட்டி என்பர். அப்பெயர் மக்கட் பெயராகவும் வழங்கலாயிற்று. பார்ப்பு என்னும் பறவைக் குஞ்சின் பெயர் பாப்பு, பாப்பா எனக் குழந்தை பெயராகவும் வழங்குவது போன்றது அது. அப்புதல் பூசுதல் என்னும் பொருளது. சுவரில் கலவையை அப்புதல். மார்பில் சந்தனம் அப்புதலும் உண்டு. கன்னத்திலோ முதுகிலோ கையால் அடிக்கும் அடியை அப்புதல் என்பதும் வழக்கு. இரண்டு அப்பு அப்பினால்தான் சொன்னது கேட்பான் என்பதில் இப்பொருள் உள்ளமை காண்க. நெல்லை, முகவை வழக்கு இது. அப்புறக்குப்புற அப்புற (ம்) = முகம் மேல்நோக்கி இருத்தல். குப்புற(ம்) = முகம் கீழ்நோக்கி இருத்தல். குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே புரண்டு குப்புறப் படுத்துக் கொள்வது உண்டு. அதனை, அப்பறக் குப்பற விழுகிறது என்பர். அப்பக்கம் என்னும் பொருள்தரும் அப்புறம் என்னும் சொல். குப்புற என்னும் இணைவால் மேல்பக்கம் (மல்லாக்க) என்னும் பொருள் தந்தது. குப்புறக் கிடத்தலை முகங்கீழாகக் கிடத்தல் என்றும், அதோ முகமாய்க் கிடத்தல் என்றும் கூறுவர். அப்பூச்சி குழந்தைகள் தம்மை யொத்த குழந்தைகளை அஞ்சி நடுங்கப் பொய்த் தோற்றம் காட்டுதல் அப்பூச்சி காட்டலாம். பூச்சி = நிழல்; பொய்த்தோற்றம். கருப்புடை , வெள்ளுடை, கோரைப்பல், எனக்காட்டி அஞ்சச் செய்தல். அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் - நாலா. 118 அரட்டன்வந்த தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்- - நாலா. 121 பூச்சி காட்டுதல் பத்தும் (118- 127) இவ்வப்பூச்சியே. அமயம் அமயம் = சமயம், பேரொலி. அமைந்ததாம் பொழுது சமயம் எனப்படும். அமையம் > அமயம். அமயத்தின் அகரம் சகரம் கொண்டு சமயம் ஆதல் சொல்லியல் துறை. எ-டு அவை > சவை ஏண் > சேண். உரிய பொழுது கண்டு உரியார்க்கு உணர்த்தித் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குழந்தையரும் சூழ்ச்சியரும் அமையம் (பேரொலி) - உரிய பொழுதில் - போடுவர். ஏன் அமையம் போடுகிறாய்? போய்விட்டேன் என்பது மக்கள் வழக்கு. அமரர் அமர் + அர் = அமரர். அமரர் என்பது தேவர் என்னும் பொருளது. அமர் என்பது போர்; போர்க்களத்தில் சிறப்பக் கடனாற்றி மறைந்தார்க்கும் கல்லெடுத்து அவர்தம் பெயரும் பெருமையும் எழுதிப் படையலிட்டு வழிபடுவதலால் அவர் அமரர் ஆனார். அவர் குடி வழியினரால் இனியராகக் கொள்ளப்பட்டமையால் தேவர் என்றும் சொல்லப்பட்டார். அவரை விண்ணுலகர், வானவர் என்றும் கூறினர். அமரர்கண் முடியும் அறுவகை யானும் -தொல். 1027 அமர்க்கள வஞ்சி போர்க்களத்தில் மாண்டார் உடலையும் மற்றைக் கரி, பரிகளின் உடலங்களையும் காகம், கழுகு, நாய், நரி, பேய், முதலியன நின்று களித்தாடும் சிறப்பைக் கூறுதல் அமர்க்கள வஞ்சி எனப்படும். இதனைச் செருக்கள வஞ்சி என்றும் கூறுவர். சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. விருத்தவகை பத்தான் விளம்பும் அதனைச் செருக்களம் எனவே செப்பினர் புலவர் - பன்னிரு. 319 செருக்களங் கூறின் செருக்கள வஞ்சி - இலக். பாட். 109 போர்க்களத் திறந்த புரவி நால்வாய் மக்கள் உடலையும் வாயசம் கழுகு பேய்நாய் பசாசம் பிடுங்கிப் பருகிக் களித்துப் பாடிய சிறப்பைக் காட்டல் செருக்கள வஞ்சியாம் செப்புங் காலே -முத்துவீ,1073 அமலம் அமல் + அம் = அமலம். நீர் நிலையில் பரவிக் கிடந்து நீரும் தோன்றா நிலையில் நெருங்கிய இலையும் பூவும் அடர்ந்தது அமலம் என்னும் தாமரையாம். அமலுதல் = நிறைதல்; நீர் நிறை குளமும் மலர் நிறை சோலையும், வளம் நிறை வயலும், உளம்நிறை வாழ்வும் அழகேயாம். இருக்கு அமலம் மலர -திருவானைக்..nfh¢br§f£.3 அமலை அமல் >அமy அமல் = நெருக்கம், செறிவு; குவியல் ; ஓசை வழையமல் அடுக்கம் -குறுந்,260 அத்த வேம்பின் அமலை வான்பூ -குறுந்.281“செந்நெல் அமலை -குறுந்.271 அத்த வாகை அமலை வானெற்று -குறுந்.369 இடைவிடா ஓசை அமலை எனப்பட்டதாம். அமலை, மக்கள் வழக்கில் அமளி என உள்ளது. குழந்தைகள் அமளி (கூச்சல்) தாங்கவில்லைஎன்பது மக்கள் வழக்கு. அமல் > அமளி ஆயது அது. அமளி அமல் > அமள் > அமளி. அமளி = படுக்கை அமலுதல் = செறிதல் செறிந்த பஞ்சால் அமைந்தது படுக்கை. ஆதலால் அமளி எனப்பட்டது. அமளி தைவந்தனனே -குறுந்.30 அமளி மெத்தென இருத்தலால் மெத்தை எனப்பட்டது. மெல்லிய பஞ்சுகளைச் செறித்தமைத்தது மெத்தை. அமிழ்து இன்பத்து அமிழ்த்துவது யாது? அஃது அமிழ்து; அமிழ்தம்,அமுது, அமுதம் என்பனவும் அது. இந்திரன் கதை போன்ற கதை வழிப்பட்டதே அமிழ்து கடைந்த பாற்கடற் கதை. இவ்வொட்டா ஒட்டை ஒட்டிக் கொள்ள வேண்டா என்னுமாறு போல், வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று என்றார் திருவள்ளுவர் (11). அவர் கூழ் அமிழ்தாதலை மக்கட் பேற்றிலே காட்டினார்; சொல்லமுதச் சுவையையும் நல்லமுதால் ஆகிய நங்கையையும் (720,1106) குறித்தார்; உயிர் தளிர்க்கச் செய்யும் உயரமிழ்து தன் உரிமைத் தலைவியே என்பதையும் நிறுவினார்(1106). பாலமுது, கண்ணமுது, அமிர்தப்பால் என்பன பாற்கடற் கதையொடு தொடர்புடையவையா? இல்லையே! அமுக்குதல் இரண்டு இதழ்களையும் திறவாமல் வாயை மூடிக் கொண்டு தின்னல் அமுக்குதல் எனப்படும். சாக்கு அல்லது தாட்டில் பருத்தியைத் திணித்துத் திணித்து வைத்தலை அமுக்குதல் என்பது வழக்கு. எவருக்கும் தெரியாமல் எடுத்து முழுமையாய் விழுங்கி விடுவதை அமுக்குதல் என்பர். ஒரே அமுக்காக அமுக்கி விட்டாய் என்பதும் பெரிய அமுக்கடிக்காரன் என்பதும் வழக்கு. தெரியாமல் உண்பதைக் குறித்த இவ்வழக்கு , தெரியாமல் மறைக்கும் சூழ்ச்சியத்தை அமுக்கடி எனக் குறிப்பதாயிற்று. நீருள் ஒன்றை மூழ்கச் செய்தல் அமிழ்த்துதல் எனப்பட்டது. அமைப்பு அமைப்பு: 1 ஒரு நிறுவனம் அல்லது ஒரு கூட்டம் அமைத்ததை, அமைப்பு என்பது பொது வழக்கு. ஒவ்வோர் அமைப்பின் சார்பிலும் ஓரிருவர் பேராளராக வந்து கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுதல் நடைமுறை. ஆனால் தன் துணைவியை அன்றி ஒருத்தியை வைத்துக் கொள்வதை அமைப்பு எனல் மதுரை வட்டார வழக்கு வைப்பு என்பது பொதுவழக்கு. அமைப்பு: 2 அமைப்பு = விதி. எதிர்பாரா வகையில் ஒருவர் இளமை யிலேயே இறந்து விட்டால் அவன் அமைப்பு அவ்வளவு தான் என்பர் அமைப்பு விதி எனப் பொருளாதல் அது. அம் அம்: 1 பன்மைப் படர்க்கை ஈறு. எ-டு: கற்றனம் ; பெற்றனம் அம்: 2 பெருமையின் பின் ஒட்டு எ-டு: கூடு, கூடம் ; மன்றம். அம்: 3 அகம் என்பதன் தொகுத்தல். அகம் முனர்ச் செவிகை வரின் இடையன கெடும் - நன். 222 அகம் செவி = அஞ்செவி. அகம் கை = அங்கை. அகம் தண்மை = அந்தண்மை அகம் தொகுத்து அம் ஆகி, ஊர்ப்பெயரும் ஊரவர் பழி கூறிப் பரப்பலுமாம். எ-டு: அம்பல்; அகம்பல் > அம்பல் = ஊர்; அகம்பல் மாலாதனார் (அம்பல் மாலாதனார்) என்பவர் சங்கச் சான்றோருள் ஒருவர். அம்: 4 அழகு; அங்கயற்கண்ணி. அம் = அழகிய. அம்மை தானே அடிநிமிர்பு இன்றே - தொல். 1491 அம்: 5 அமைதியாம் தன்மையால் இன்பம் சேர்ப்பது. அம்மையும், ஐம்மையும் அமைதியும் அழகுமாம். பரமர் அம்பாலிகைச் செம்பவளக் கொடிபங்கர் - மறைசை.3 அம்பணம் முகத்தலளவைக் கருவிகளுள் ஒன்று; ஆமையின் ஓடு போல் அகன்று குழிந்து வட்டமாக அமைக்கப்பட்டது. அம்பணம் = ஆமை. அம்பண அளவையர் எங்கணும் திரிதர -சிலப். 14 209 அம்பல் அகம்பல் > அம்பல். செய்தாரே அறிந்து மற்றொருவர் அறியாத களவொழுக்கம் அம்பல். அம்பலும் அலரும் களவு - இறைய. 22 அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்; அலர் என்பது சொல் நிகழ்தல்; அம்பல் என்பது சொல் நிகழ்தல்; அலர் என்பது இல் அறிதல்; அம்பல் என்பது இல் அறிதல்; அலர் என்பது அயல் அறிதல்; அம்பல் என்பது அயல் அறிதல்; அலர் என்பது சேரி அறிதல்; அம்பல் என்பது சேரி அறிதல்; அலர் என்பது ஊர் அறிதல்; அம்பல் என்பது ஊர் அறிதல்; அலர் என்பது நாடு அறிதல்; அம்பல் என்பது நாடு அறிதல்; அலர் என்பது தேயம் அறிதல்; அம்பல் என்பது, சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று, இன்னதன் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. (இறைய. 22 நக். உரை) அம்பாரம் அகம் + பாரம் = அகம்பாரம் > அம்பாரம். அகம் = உள். வண்டியின் உள்ளாகப் பொருள்களை ஒழுங்குற அடுக்குதல் அம்பாரம் எனப்படும். கட்டை வண்டி எனினும் சரக்குந்து முதலிய எவை எனினும் வண்டி தாங்கும் அளவு, அமைவு ஆகியவை செவ்விதாக இருக்க வேண்டும். இல்லாக்கால் வண்டிப் போக்கில் அசைந்தாடி ஒற்றைக்கு மூன்று நான்கு மடங்கு வேலையாதல் மட்டுமன்றி ஊறுபாடும் உளைச்சலும் ஆக்கும். ஆதலால் அம்பாரத்தை அக்கறையோடு கட்டும் கட்டே அதற்குக் கட்டார்ப்பாய் அமைதல் கட்டாயத் தேவையாம். கட்டை வண்டியின் சக்கர மட்டத்திற்கு மேலே மேலே போடும் வைக்கோல் முதலிய பாரத்தை அம்பாரம் என்பது முகவை வழக்கு. அம்பரம் என்பது உயரம், வானம், அம்பரம் > அம்பாரம். உழவர் வழிச் சொல் இது மாட்டுத் தீனியாம். படப்பையின் மேல் முகடு கூட்டுதலை அம்பாரம் என்பதும் நெல்லைப் பரவலாக விடாமல் அம்பாரமாகக் குவி என்பதும் வழக்கே. கூரைக்கு மேல் முகடு போடுதலும் அவ்வாறு வழங்கும். * சம்பாரம் காண்க. அம்போ என விடுதல் அம்போ என விடுதல் = தனித்து ஒதுக்கிவிடல். அம்போ என்பது அம்மோ, ஐயோ என்பன போலத் தனித்து அரற்றல். துணை என்று நின்றவன். தீரா இடையூறு அல்லது தாங்காத் துயர் நேர்ந்த காலையில் குறிப்பாகக்கூடச் சொல்லிக் கொள்ளாமல் ஒதுங்கி விடுதல் (கைவிடுதல்) அம்போ என விடுதலாம். துணை என நமக்கு உண்டு என்ற நம்பிக்கை இல்லா திருந்தால், தன் நிலைக்கு ஏற்றவாறு செயலில் இறங்கியிருக்கக் கூடியவனை, நம்பிக்கை யூட்டி உரிய இக்கட்டான பொழுதில் தனித்து விடுதல் ஒன்றுக்குப் பத்தாம் அல்லலை விளைக்கும்! அவ்விரங்கத் தக்க நிலையே அம்போ எனக் கைவிடலாயிற்று. அம்மம் அம் + அம் = அம்மம். பாலூட்டும் தாயின் மார்பு, அம்மம் எனப்படும். சிறு குழந்தையின் உணவு பாலாக இருந்தலால் அம்மம் என்பதற்குச் சோறு என்னும் பொருள் கொண்டது தஞ்சை வட்டம். அம்மம் = பால், பாலூட்டலை அம்மம் ஊட்டல் என்பது நாலாயிரப்பனுவல். அன்னை உன்னை அறிந்து கொண்டேன் உனக்கஞ்சுவன் அம்மம் தரவே - பெரியாழ். 3 அம் என்பது மார்பை அமுக்கிப் பால் அருந்துதல் வழியாக உண்டாகிய பெயர், அம் + அம் = அம்மம். அம் தருபவர் அம்மு, அம்மா, அம்மை என விரிவுறும். அம்அம் வழியாக வந்த சொல் அம்ம, அம்மா என்பது பெருக வழங்கும் விளி. ஆனால் வழக்கில் அரிதாக உள்ளவும் மறைந்தவும் உண்டு. அம்மி, அம்மீ என்பனவும் விளியாய் இருந்திருந்து அம்மி என்னும் அரைசிலைப் பெயர் பேராட்சி செய்தமையால் அருகியிருக்க வேண்டும். அம்மீ என்பதும் அதனொடு வழக்கிழந்திருக்க வேண்டும். அம்மா என்னும் விளி பின்னே மா என்ற அளவில் விளியாய் நின்றது. ஆ எனவும் அமைந்தது. அவ் ஆவொடு யகர ஒற்று இணைந்து ஆய் எனப்பட்டது. ஆய் என்னும் பொதுமைப் பெயர் எம், ஆய், யாய்; நும் ஆய், ஞாய்; தம் ஆய், தாய் எனத் தன்மை - முன்னிலை படர்க்கைப் பெயர்களாயின. யாயும் ஞாயும் யாரா கியரோ - குறுந். 40 என்பது நாம் அறிய வாய்க்கும் பழஞ்சான்றாம். ஆய் அன்ன வள்ளல் ஒருவன் ஆஅய் என விளிக்கப் பெற்றான். அவனூர் பொதியம் சார்ந்த ஆய்க்குடியாம். ஆவளர்த்து ஆப்பயன் வழங்கும் குடியினர் ஆயர் என்பதும் இன்னே வருகுவர் தாயர் என முல்லைப்பாட்டு (16) ஆவைச் சுட்டுவதும் எண்ணத் தக்கவையாம். அம்மை என்பதன் ஈறு ஆகிய ஐ, ஆ போலவே தாயைக் குறிப்பதாயிற்று. அவ் ஐ இரட்டிப்பாய் அம்மையைப் பெற்ற அம்மையைக் குறிப்பதாய் ஐ ஐ (ஐயை) என வழங்கலாயிற்று. ஐயை, காவுந்தி ஐயை, ஐயை கோட்டம் என்பவை சான்றுகள். அம்மாறு அம் + மாறு = அம்மாறு = அழகிய மாறு. மீன் பிடிப்பவர்களாகிய பரதவர் கயிறு என்பதை அம்மாறு என்பர் மாறு என்பது புளிய வளார். கருவேல் வளார், பனை நார், தென்னை நார், கற்றாழை நார் ஆகியவற்றைக் குறிக்கும். அவற்றுள் வாளமான நல்ல நாரை எடுத்துக் கயிறாகத் திரிப்பதால் அம்மாறு எனப்பட்டது. கட்டுக்கொடி, விளக்குமாறுக்குப் பயன்படுவது. மாறு கூட்டுதற்கும் ஆகும் என்பதாம். அம்மானை மகளிர் மூவர் அமர்ந்து, ஒருவர் ஒரு வினாவை எழுப்ப, மற்றொருவர் அதற்கொரு மறுமொழி தர, வேறொருவர் அவ்வினாவையும் விடையையும் தொடர்புறுத்தி உரைக்கப் பாடிக் கொண்டு அம்மானைக் காய் விளையாடுவதாகப் பாடுவது அம்மானையாம். அம்மானைப் பாடல் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. அது வரிப் பாடல் வகையைச் சேர்ந்ததாய் அம்மானை வரி எனப்படுகின்றது. மூன்றடுக்கி வருவது அது. அம்மானைப் பாடல் ஐந்தடிகளை யுடையதாகவும், செப்பலோசை யுடையதாகவும் அமையும். முன்னிரண்டிகளும் முதலாமவள் வாக்காகவும், அடுத்த இரண்டடிகளும் இரண்டாமவள் வாக்காகவும் இறுதியடி ஒன்றும் மூன்றாமவள் வாக்காகவும் அமையும். ஒவ்வொருவர் வாக்கின் நிறைவிலும் அம்மானை என்னும் சொன்முடிவிருக்கும். கலம்பகம் முதலிய இலக்கியங்களில் இடம் பெற்ற இவ்வம்மானை, பின்னே தனிநூல் வடிவுற்ற காலையில் யாப்பியல் மாறிப் போய நிலையும் அறிய முடிகின்றது. எடுத்துக் காட்டு இராமப்பையன் அம்மானை வீங்குநீர் வேலை உலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை; ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பின் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை; சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை இச்சிலப்பதிகார அம்மானை வரிப்பாடலின் முதல் நான்கடிகளும் ஓரெதுகையாகவும், இரண்டாம் மூன்றாம் அடிகள் மடக்காவும், ஐந்தாம் அடி எதுகை விகற்பத் தனியடியாகவும் எல்லா அடிகளும் அடியளவில் செப்பலோசை உடையவையாகவும் இருத்தல் அறிக. அம்மி அம்மி: 1 அம்மி = அமுக்கி அரைக்கப் பயன்படும் கல். அம்முதல் அழுத்துதல்; அழுத்தி அரைக்கப் பயன்பட்ட கல், அம்மி, அம் > அம்மு, அமுக்கு, கூரை, முகடு முதலியவை காற்றால் எழுப்பப் படாமல் இருக்கப் போடப்படுவது அமுக்கு. அம்மியை அரைசிலை என்றார் வீரமாமுனிவர் (சதுர). அம்மி: 2 அம்மி = பாட்டி அம்மாவின் தாயை அம்மி என்பது விருதுநகர் வட்டார வழக்கு. அம்மை என்பது அம்மா என விளியாயது. அம்மாவின் அம்மா அம்மம்மா என்றும் அம்மாயி என்றும் அம்மாத்தா என்றும் தென் தமிழக வழக்கில் உண்டு. அம்மி என்பது வியப்பான வழக்கு. அம்முதல் குழந்தை தாயின் மார்பில் பாலருந்துதல் அம்முதலாம். அம்மம் = மார்பு, அம்மம், குழந்தை யுணவு என்னும் பொருள் தரும் சொல். குழந்தைக்குத் தாய்ப்பாலே இயற்கை யுணவு ஆகலான். அன்னை உன்னை அறிந்து கொண்டேன் உனக்கஞ்சுவன் அம்மந் தரவே என்பது நாலாயிரப் பனுவல் (பெரியாழ். 3) பாலூட்டும் தாய் அம்மு அம்மு என்று கொஞ்சிக் கொண்டே பாலூட்டுவது கண்கூடு. அம்மை தாய்மையில் தழைவது அம்மையாம். இனி அமைதியாம் தன்மையும் அம்மையாம். அம்மையஞ் சொல்லார் ஆர வுண்டார் -சீவக. முத்தி. 533 பொருள் மெல்ல அமுதத்தை ஆரா நிற்க(நச்.உரை) அம்மைச்சி அம்மை + அச்சி = அம்மைச்சி. ஒரு புலமையாட்டி பெயர். தாயின் தாயாகிய பாட்டியைக் குறிப்பது அம்மாச்சி. ஔவை என்பது அம்மை, பாட்டி என்னும் உறவுப் பெயராயினும் ஔவையார் பெயர்போல், அம்மைச்சி என்பாரும் புலமையாட்டியராய்ப் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அந்தகக்கவி வீரராகவர் காலத்தவர் அவர். அம்மைச்சி வாழும் அகம்என்பது அவர் பாடிய தனிப்பாடல். அயர்தல் அயர்தல்: 1 அயர்தல் = விளையாடி மகிழ்தல் கழிய காவி குற்றும் கடல் வெண்டலைப் புணரி ஆடியும் அன்றே பிரிவில் ஆயம் உரியதொன் றயர - குறுந். 144 அயர்தலால் உண்டாவது அயர்வு, அயர்ச்சி. அயர்தல்: 2 அயர்தல் = அயர்வுறுதல். அயர்தல் என்பது மகிழ்வு மிக்க நிலையும். அம்மகிழ்வின் பெருக்கால் உண்டாகும், மறதி, தளர்வு, சோர்வு நிலைகளும் சுட்டுவதாம். மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி - சிலப். 3 173 174 என்பதும், விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன் - சிலப். 6 4 என்பதும். ஓரை அயரும் என்பதும் மகிழ்வுப் பெருக்கமாவன காண்க. அயர்தல் மறதியாதல், புழுதியாட்டு அயரா ஓர் அயிராவணம் - மீனா. பிள். கடவுள். என்பதால் விளங்கும். அயர்வு, அயர்ச்சி, அயர்வு, மறதி, அயர்த்துப் போனது. அசந்து போனேன் என்னும் மக்கள் வழக்கால் சோர்வும், மறதியும் விளங்கும். அயிலல் ஐ + இன் = ஐயின் > அயின் = உயர்ந்ததும் இனியதும் ஆகிய உணவு. அயில் + அல் = அயிலல் > அயிறல். அயிலல், அயிறல் என்பவை உண்ணுதலைக் குறிக்கும் சொற்கள். அயினுதல் என்றும் வழங்கும். பாலும், பால் போலும் நீர்த்த உணவும் கொள்ளுதல் அயிலுதலாம். அயினி என்பது சோற்றையும், அயினி நீர் என்பது சோற்று நீரையும் குறிக்கும். உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் என்பது கந்தபுராணம் (சரவண. 33) ஆன பால் கடல்களும் அயிறல் மேயினான் என்பதும் அது (சிங். 27). பால்விட் டயினியும் இன்றயின்றனனே என்பது புறநானூறு (77), அரக்கப் பரக்க விழித்தல் அரக்கல் = முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல் பரக்கல் = சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல். குழந்தை அழும் போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும் முகம் முதலியவற்றைத் தேய்த்தலையும் திருதிருவென அங்கும் இங்கும் மருண்டும் வெருண்டும் பார்த்தலையும் கண்டு அரக்கப்பரக்க விழிப்பதாகச் சொல்லுவர். அறியாப் புதிய இடத்தில் திகைப்போடு இருப்பவனையும் அரக்கப் பரக்க விழிப்பதாகச் சொல்லுவர் (மக்கள் வழக்கு). அரக்கல் அரக்கு + அல் = அரக்கல் அரக்குதல் என்பதும் அரக்கலேயாம். அரக்கல் என்பது அரைத்தலையும், முழுதும் உண்ணுதலையும் குறிக்கும் (த.சொ.அ.) மரங்களில் இலை தழைகளை முழுவதுமாய் ஒட்ட வெட்டுதலை அரக்கல் என்பதும் அரக்க வெட்டுதல் என்பதும் வழக்கு. அவ்வழியே முழுதும் உண்ணுதலைக் குறித்திருக்கலாம். அரக்கன் அரக்கல் > அரக்கன். அரக்குதல் = அழுத்தித் தேய்த்தல்; அழித்தல். அழிவு வேலை செய்யவனும், சிவந்தமுடி உடையவனும் அரக்கன் எனப்பட்டனர். பின்னே செந்தண்மை அற்றவன் அரக்கன் எனப் புனையப்பட்டான். அரக்கு அரக்கு: 1 சிவந்த நிறத்ததாம் செய்பொருள். அர் = சிவப்பு. அரக்காம்பல் = செவ்வாம்பல் அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - முத்தொள். 110 அரக்குப்பூச்சி, அரக்குக் கூடு என்பவும் சிவந்த நிறத்தவை. வான் குருவியின் கூடு வல்லரக்கு - ஔவை தனிப். அரக்கு: 2 அரக்கு = தேய். எண்ணெயை அரக்கத் தேய், கிளையை அரக்க வெட்டுஎன்பவை வழக்கு. அரங்கம் அரங்கம்: 1 அரங்கு + அம் = அரங்கம். ஓர் ஆறு பிரிந்து இருபாலும் மண்ணை அரித்து இடைத்திட்டாகிய இடம் அரங்கம்; ஆற்றிடைக் குறை என்பதும் அது. அரங்கம் = திருவரங்கம். ஆற்றுவீ அரங்கம்- சிலப். 10 156 அரங்கம்: 2 அவை கூடும் இடம். அரங்க வைத்தல் வெண்ணெயை நெய்யாக்குதலை உருக்குதல் என்பது பொதுவழக்கு. உருகச் செய்து ஆக்கப்படும் இரும்பு உருக்கு எனப்படுதலும் உருக்குதல் வழிப்பட்டது. ஆனால் நெல்லைப் பகுதியில் நெய் உருக்குதலை அரங்க வைத்தல் என்பர். இளக வைத்தல் என்னும் பொருளது அது. அரக்க > அரங்க. அரங்கியல் இசையரங்கம், நாடக அரங்கம், திரையரங்கம் என அரங்கங்கள் உண்டு. ஈழத்தமிழர் பாடத்திட்டங்களுள் ஒன்றாக அரங்கியல் உள்ளது. இசை நாடகக் கலைகளைப் பற்றிப் பயிலும் பட்டப்படிப்பு அஃதாம். அரங்கு அரங்கு 1 வீட்டின் இடை நடு அறை. அரங்கு வீடு என்பது மக்கள் வழக்கு. அரங்கு 2 சிறுவர் விளையாடுதற்கு அமைத்த அரங்கு. கட்டளை யன்ன வட்டரங்கு - நற். 3 அரங்கு 3 சூதாடு பலகைச் சட்டம். அரங்கின்றி வட்டாடி யற்றே -திருக். 401 அரசல் புரசல் அரசல் = நேரே தன்செவியில் மெல்லெனப்படுதல். புரசல் = பிறர் செவியில் பட்டு மீளத் தன் செவிக்கு வருதல். அரசு + அல் = அரசல் = செவ்விய வழி. புறசு > புரசு + அல் =புரசல் = புறவழி. அரசல் புரசலாக அந்தச் செய்தியை அறிந்தேன். என்பது வழக்கு. சில செய்திகள் தானே கேட்டறிய நேரும். சில செய்திகள் பிறர் வழியே தன் காதுக்கு வந்த சேரும். இவ்விரு பகுதியையும் சுட்டும் இணைச்சொல் இது. அரசன் விருத்தம் பத்துக் கலித்துறையும், முப்பது விருத்தமும் கலித் தாழிசையுமாக மலை, நாடு நகர் வருணனையும் வாள் மங்கலமும் தோள்மங்கலமும் பாடி முடிப்பது அரசன் விருத்தமாகும். அரசன் விருத்தம் கலித்துறை ஈரைந் தகன்மலைமேல் விரவிய நாடு நகர்ச்சிறப்பாய் விருத்த முப்பான் உரைசெய் கலித்தாழிசையும் வாள்மங்கலம் ஓதுவது புரவலர் ஆயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே! அரசன் விருத்தம் முடிபுனைந்த வேந்தர்க்குப் பாடப் பெறுவதாகும். (நவநீதப். மிகை) அரசாணிக்கால் அரசு + ஆணி + கால் = அரசாணிக்கால். திருமணங்களில் மணமேடையில் அரசாணிக்கால் நடல் உண்டு. அது அரச மரத்தின் கிளையாகும். அரசுபோல் தளிர்த்து என்னும் வாழ்த்து வகையால் அரசு நடுவதன் நோக்குப் புலப்படும். நாங்கள் ஆண்ட பரம்பரை என்பதைக் காட்டும் அடையாளம் அரசாணிக்கால்(ம.வ.) ஆனால், கொங்கு நாட்டில் பறங்கி அல்லது பூ சுணைக்காய் (பூசணிக்காய்) அரசாணிக்காய் எனப்படுகின்றது. புதுமனை விழாவில் கண்ணேறு படாமைக் கருத்தில் மனையில் வைத்தலும் கண் காது வாய் முதலியவை வரைதலும் தெருவில் உடைத்தலும் வழக்காக உள்ளமை நாட்டுப் பொது வழக்கு. அரசு அர் + அ = அர; அர = செவ்வியது. அரசு = செம்பழம் உடைய பால்மர வகையுள் ஒன்று அரசு = செங்கோல் நடாத்தும் ஆட்சி ஆட்சியர். ஆட்சி, ஆள்வார் என்பாரையும் ஒரு மரத்தையும் குறிக்கும் இப்பெயர். குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஆண்மகனைக் குறிப்பதாக வழங்குவது நகரத்தார் வழக்காகும். ஆண் குழந்தை பிறந்தால் அரசு பிறந்தது என்பர். அர் சிவப்பும் செம்மையும் குறிப்பது. எ-டு: அரணம் = கோட்டை; செம்பிட்டுக் கட்டப்பட்டது; இஞ்சி என்பதும் அது. அரணி = தீ; செந்நிறத்தது. அரக்கு = செந்நிறப் பொருள் வகையுள் ஒன்று. அரணை = செந்நிறத்ததாம் ஊரி அரத்தை = செந்நிறத்ததாம் மருந்துத் தண்டு. அரத்தம் = இரத்தம், சிவந்த நிறத்தது. அராகம் = இராகம், முடுகிசை நயம் அமைந்த செவ்வியது. அரட்டி அரட்டு + இ = அரட்டி = அரண்டு -அஞ்சிப் போதல். இருள் கூக்குரல் நாய் வெருட்டல் போன்றவை கண்டு குழந்தைகள் அஞ்சுதலைப் பெரியவர்கள் அரண்டு போனான். அரட்டியாய் விட்டான் என்பர். அரளுதல் அச்சக் குறியாம். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்பது பழமொழி. அரட்டை அரட்டு + ஐ = அரட்டை. அச்சுறுத்தல் என்னும் பொருளில் வந்த அரட்டை இப் பொழுது பொருளற்ற வெற்றுப் பேச்சாகவும், பொழுது போக்கு நகைச்சுவையாகவும் வழக்கில் ஊன்றியுள்ளது. எ-டு: அரட்டை அரங்கம், அரட்டை அடித்தல் பொழுது போக்குப் பேச்சுஎன்பது மக்கள் வழக்கு. அரணி அரணி: 1 அரணி = சிவந்த நிறத்ததாம் தீ; தீயுண்டாக்கும் கடைகோல்; தீக் கடைகோல் என்பதும் அது. ஞெலி தீ = கடைந்த நீ என்பது பழைய உரை, (புறம். 150) அரணி: 2 கோட்டை, காடு என்னும் பொருளிலும் வரும். அரண் + இ = அரணி. அரணை ஊரி வகையுள் ஒன்று. அரணை கடித்தால் மரணம்என்பது வழங்கு மொழி. பாம்பெனத் தோன்றலால் பாம்பரணை என்பர். செவ்வரிகள் உடைமையால் அரணை எனப்பட்டதாம். அர் = சிவப்பு. வேர். அரண் அர் +அண் = அரண் அர் = சிவப்பு; அண் = செறிவு. செம்புருக்கு நீர்விட்டுச் செறிவு மிக்கதாகச் செய்யப்பட்ட கோட்டை அரண். செம்பிட்டுச் செய்த இஞ்சி - கம்ப. உயுத். 1378 அரண் + அம் = அரணம். அம் பெருமை ஒட்டு. எ-டு: கூடு, கூடம். அரத்தம் அர் + அத்து + அம் = அரத்தம். அரத்தம் செந்நிறத்தது. இரத்தம் என மாற்றமுற்றது. ஒ.நோ.: அராகம் > இராகம். சிவந்த பட்டு அரத்தப்பட்டு எனப்படும். அரத்தை அர் + அத்து + ஐ = அரத்தை. அரத்தை = ஒரு மருந்து வேர். சிற்றரத்தை, பேரரத்தை என்பவை உண்டு. அர் என்னும் வேர்ச்சொல் சிவப்பு என்னும் பொருள் தருவது. அப்பொருளமைய அமைந்தது. இது, இதனை மென்று திப்பியைத் துப்பினால் செவ்வண்ணமாக இருத்தலை எவரும் கண்ணாரக் கண்டு உண்மை புரிவர். அரம்பர் துன்புறுத்தும் கொடுமையாளரை அரம்பர் என்பது ஈழத்தமிழர் வழக்கு. அரம்பம் > இரம்பம் வாள். கருக்கு அல்லது பல் அமைந்து மரம் அறுக்க உதவும் வாள் இரம்பம் என வழங்குதல் அறிக. ஒ.நோ.: அரத்தம் > இரத்தம் அராகம் > இராகம். என்பவை போல, அரம்பம் > இரம்பம் ஆயது. மரக்கடைகளில் வாள்பட்டடையும் உண்டு. மரவாடி என்பது மரக்கடை மட்டுமன்று, மரமறுக்கும் வாள் பட்டடை யுடையதுமாம். அரவணைத்தல் அரவு + அணைத்தல் = அரவணைத்தல் = அரவப் பிணைப்புப் போல் தழுவி மகிழ்தல்; அன்பு சொரிதல். பாம்பைக் குறியாமல் தாயும் சேயும், அன்பும் நண்பும் கொண்டாடுதல், போற்றுதல், அன்பு செலுத்துதல், அரவணைப்பு என வழங்கப்படும். வேறுபாடற அப்பாம்புகள் பின்னிக் கிடக்கும் நிலையில் உளமொத்து அன்பு பாராட்டலே அரவணைப்பு என உவமை வழக்காக வழங்குகின்றதாம். மாசுண மகிழ்ச்சி மன்றல் என்பது சிந்தாமணி (189). மாசுணம் என்பது பாம்பு. அரவம் அரவம்: 1 அரவம் = ஒலி வண்டி வரும் அரவமே இல்லையே ஆள் இருக்கும் அரவமே இல்லையே என்னுமாறு வழங்கும் வழக்குகளால், அரவம் என்பதற்கு ஒலி என்னும் பொருளுள்ளமை தெளிவு. அரவம் 2 அர = அரம்போற் கூறிய பல்லை உடைய பாம்பு. அர > அரவு > அரவம் பாம்பு. (வே. சொ.க. 1- பக். 11) பாம்பு தன் உடலால் ஊர்ந்து செல்லும் உயிரி. ஆதலால் அதன்இயக்க உராய்வு ஒலி மெல்லென இல்லாமல் தீராது. அன்றியும் செடி கொடி சருகு புதை என உள்ள இடங்களில் அதன் இயக்கச் சரசரப்பை எளிமையாகக் கேட்கலாம். இவ்வொலிப் பெயர் கொண்டு பெற்றது அரவப் பெயராகலாம். ஆடும் போதே இரையும் - காள. தனிப். அரவர் அடிக்கும் கோலுக்கும் அஞ்சாமல் எழும் அரவம் எனப் படைவீரர் பாடுபுகழ் பெறுவர். எறிகோல் அஞ்சா அரவின் அன்ன - புறம். 89 கலிங்கத்துப் போரில் தமிழர் படைகண்டு அஞ்சி ஓடிய தெலுங்கர், சீறித் தாக்கும் தமிழர் தாக்குதலைக் கண்டு அரவர் அரவர் என்றனர். அவ்வீறு மிக்க சொல் தமிழர் வீறு குன்றிய நிலையில் தெலுங்கர் எள்ளும் சொல்லாய் அரவர் அரவாளு எனக் கொள்ளப்படுவதாயிற்று. தமிழர் தாழ்வு, தமிழ்ச் சொற் பொருள் தாழ்வுக்கு இடந் தந்துவிட்டது. அரளி அர் + அள் + இ = அரளி. அர் = சிவப்பு; அள்= செறிவு; இ = சொல்லீறு. சிவந்த பூவை யுடைய செடி அரளி எனப்பட்டது. செவ்வரளிக்கு வந்த பெயர் பின்னே வெள்ளை யரளி, மஞ்சள் அரளி என்பவற்றுக்கும் பெயராயது. சிறப்புப் பெயர் பொதுப் பெயராகியவற்றுள் ஈதொன்று. அரி: அர் + இ = அரி அரியே ஐம்மை என்பது தொல்காப்பியம் (839) ஐம்மை யாவது அழகியது என்பதாம். அரி என்பது செம்மைநிறம். மஞ்சள் நிறம் உடையதுமாம். அரி = தீ. அரிமாவாம். சிங்கம், அரிசிதரும் நெல், மஞ்சள் முதலாம் பல பொருள்களைத் தரும். அரிவை என்னும் பெண்பாற் பெயர் செவ்வியல் நங்கை என்னும் பொருளதாம். அரிசில் ஆறு நெல்விளை கழனியை ஆக்குவது என்னும் பொருளது. அரிசில் கிழார், சங்கச் சான்றோர். அரிசிற்கரை புத்தூர் தேவாரப் பாடல் பெற்ற பெருமையது. அரி தேன், மது என்னும் பொருளதுமாம். அரிதலைப் பாளைத் தேனும் என்பார் கம்பர் (பால. 40) அரிதாரம் = முகப்பூச்சுச் செம்பொடி. நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி எனப்படும். பின்னர் நெல்லுக்கும், நெல்லின் அரிசிக்கும் ஆகியது. அரியப்பட்டது. அரி; அரிய அமைந்த வாள் ஆகிய கருவி அரிவாள்; அரிவாளும் கட்டையும் அமைந்தது அரிவாள்மணை. அரி = அரிசி (குமரிநாட்டு வழக்கு) அரி என்பது சிறுமை யளவினது. ஆதலால், மொத்தையாக - பருமையாக - அமைவது அன்று. எ-டு.: அரி, செவ்வரி (கண்வரி) அரிக்கண்சட்டி சோறு கறியாக்கி வடிக்க, வடிதட்டாகப் பயன்படும் ஏனத்தை அரிக்கஞ்சட்டி என்பது நெல்லை, முகவை வழக்கு. அரி = சிறியது. சிறிய கண்களையுடைய வடிசட்டி, அரிக்கண் சட்டி எனப்பட்டது. அது வடிப்பதற்குப் பயன்பட்டதால் அரிக்கஞ்சட்டி என்பது மக்கள் வழக்கு. பொற்கொல்லர் பட்டடைக் கரியை அரித்தெடுத்தல் இன்றும் உண்டு. கரந்தையில் ஒரு தெருவின் பெயர் அரிக்காரத்தெரு. அரிசில் அரி + சில் = அரிசில். வெள்ளப் பெருக்கு - கரை மோதல் - இல்லாமல் மணலை அரித்துக் கொண்டு ஓடும் தூய நீரையுடைய ஆறு அரிசில் எனப்பட்டது. இவ்வாறு சார் ஊரும் அரிசில் எனப்பட்டது. அவ்வூரில் பிறந்தவர் அரிசில் கிழார். குடந்தை சார்ந்துஓடும் அவ்வாறு அரசலாறு, அரிசொல் ஆறு என இந்நாள் வழங்குகின்றது. அரி = பொன்னரி மாலை என்பது எண்ணத்தக்கது. அரிச்சுவடி அரி + சுவடி = அரிச்சுவடி அ முதலாம் எழுத்து வரிசை அரிவரி எனப்படும். அரிச்சுவடி என்பதும் அது. அரித்தல் பூச்சி புழுக்கள் தின்னுதல் அரித்தல் எனப் பெறும். கணச் சிதல் அரித்துஎன்பது சிறுபாணாற்றுப்படை (133) செல்லரித்த ஓலை செல்லுமோஎன்பது திருவரங்கக் கலம்பகம் (53). பூச்சி புழுக்கள் அரித்துத் தின்பது போல நொய்தாக அரித்துத் தின்பது அரித்தலாம். அரித்தெடுத்தல் அரித்தெடுத்தல் = முயன்று வாங்குதல். அரிப்பெடுத்தல் வேறு. அரித்தெடுத்தல் வேறு. பொற் கொல்லர் பணிக்குப் பயன்படுத்திய கரித்துகளைக் கூடைக் கணக்கில் விலைக்கு விற்பது வழக்கம். அதனை வாங்கியவர்கள் கரியைச் சல்லடையில் போட்டு அலசி எடுத்துத் தூளை நீரில் இட்டுக் கரைத்துப் பொற்றுகள் இருப்பின் எடுப்பது வழக்கம். அரும்பாடுபட்டுச் சலிப்பில்லாமல் அரித்தால் வீண் போகாது. அது போல் பலகால் விடாது கேட்டுக் கேட்டு வேண்டியதைப் பெற்றுக் கொள்வார் உளர். அவர் செயலை அரித்தெடுத்தல் என்பது வழக்காயிற்று. அரிப்பு நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை ஆகியவை அரிப்பு எனப் படுதல் பொதுவழக்கு. அரிப்பு என்பது ஓயாது அனற்றுதல், வந்து வந்து கேட்டுப் பறித்தல், அரித்தெடுக்கப்பட்ட கள் என்பவை மக்கள் வழக்கில் உள்ளவை. இவை தென் தமிழகப் பொது வழக்காகும். அரிப்பும் பறிப்பும் அரிப்பு = சிறிது சிறிதாகச் சுரண்டுதல் பறிப்பு = முழுமையாகப் பிடுங்கிக் கொள்ளுதல் அரித்துச் சேர்த்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போய்விட்டான்என, அரிப்புப் பறிப்புக் கொடுமைகளைப் பழிப்பர். சிறுகச் சிறுகச் சுரண்டியதை மொத்தமாகப் பறித்துக் கொண்டு போய்விட்டான். இதற்கு இது தக்கதே என்பது போன்ற கருத்தில் இருந்து வந்தது. அரிப்புப் பறிப்பு ஆகும். கறையான் அரித்தலையும், வழிப்பறியையும் கருதுக. அரிப்பெடுத்தல் அரிப்பு = எடுத்தல் = அரிப்பெடுத்தல். அரிப்பெடுத்தல் = சினமுண்டாதல், பால்வெறி உண்டாதல் அரிப்பு என்பது ஊறல், வியர்க்கூர், வெப்பு இவற்றால் தோலில் பொரியுண்டாகும் போது, அதனால் தினவுண்டாவது அரிப்பு எனப்படும். செந்தட்டி, தட்டுப்பலா முதலிய செடிகள் படினும் அரிப்பு உண்டாகும். ஆனால், இவ்வரிப்பு அதனைக் குறியாமல் மன அரிப்பு அல்லது மன எரிச்சலாம் சினத்தையும், பாலுறவு தேடும் வெறியையும் குறிப்பாக வழங்குகின்றது. அரிசினம் என்பது ஆழ்வார் ஆட்சி (நாலா.688) அரிப்பெடுத்துத் திரிகிறான்என இகழ்வது பின்னதாம் பொருளது அரி என்பதற்கு எரி என்னும் பொருள் உண்டென்பது அறியத்தக்கது. அரிமானம் அரி + மானம் = அரிமானம் மண்ணைக் காற்று நீர் ஆகியவை அரிப்பது அரிமானம் ஆகும். சிறிது சிறிதாக எடுத்து இடமாற்றிக் கொண்டு செல்வது அது. ஆதலால் அரி மானம் என்னப்பட்டது. அரி = அரித்தல்; மானம் = அளவு. மண் அரிமானம் ஆனால் அதன் வளம் படிப்படியே அற்றுப் போகும். ஆதலால், புல்வகை செடிகொடி வகைகளை நிலச்சரிவுகளில் வளர்த்து அரிமானம் ஏற்படாமல் காக்க வேண்டும் என அறிவுடையவர் அறிந்து போற்றுகின்றனர். அரிமானம் தடுக்கப்படாவிடின் அழிமானமேயாம். அரிம்பி, அரிப்பு மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும். தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை அரித்தல் என்பதும் பொதுவழக்கே. அரிப்புத் தொழிலர் அரிக்காரர். அரியணை அரி = அரிமாவாம் சிங்கம், அணை = மெத்தையொடு கூடிய இருக்கை. மன்னவர் தம் வீறு காட்டும் வகையில் அரிமுகம் அமைத்த இருக்கைகளில் இருந்தனர். அவ்விருக்கை அரியணையாம். அரியணை அனுமன் தாங்க - கம்ப. உயுத். 4316 அரியா தூக்குச் சட்டியை அரியா என்பது பரதவர் (வலைஞர்) வழக்கமாகும். அரி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறிய தூக்குச் சட்டியை அரியா என வழங்கிப் பொதுப் பெயராகியிருக்க வேண்டும். அரியாடு அரி + ஆடு = அரியாடு. அர், அரத்தம், அரி, அரு என்னும் அடிச்சொற்களின் வழியாக வரும் சொற்கள் செவ்வண்ணம் குறித்து வரும். அம் முறைப்படியே அரியாடு என்று. சிவப்பு நிற ஆட்டை - மெம்மறியாட்டைக் - குறிப்பது ஆயர் வழக்கமாம். இலக்கிய வளமுடைய ஆட்சி இது. அரியாடும் கரியாடும் அரியாடு = செந்நிற ஆடு கரியாடு = கருநிற ஆடு அரியாடு செம்மறியாடு. காராடு ஆகிய கரியாட்டை வெள்ளையாடு என்பர். அதனை மங்கல வழக்கு என இலக்கண நூலார் கூறுவர். அரி சிவப்பாதல் செவ்வரி என்பதாலும் அறிக. செம்மறியாடும், வெள்ளையாடும், தனித்தனி இயல்பு டையவை. கூடி நடக்கவோ, மேயவோ செய்யாதவை. தாமே தனித் தனியாகப் பிரிந்து தம் கூட்டத்துடன் கூடிக் கொள்ளக் கூடியவை. ஆகவே, இவற்றின் இயல்பை அறிந்தோர் இணையத் தகாத இருவர் இணையக் காணின் அரியாடும் கரியாடும் போல என்பர். அரிவரிப் புத்தகம் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, உயிர்மெய், யெழுத்து ஆகியவற்றை முறையே இளையர் அறிந்து கொள்ள, எழுத்து அட்டவணையும் விளக்கப் படங்களும் அமைந்த நூல் ஈழத்தில் அரிவரிப் புத்தகம் என வழக்கில் உள்ளது. இவ்வெழுத்துகளை நெடுங்கணக்கு என்பதும். உயிர், மெய் ஆகிய எழுத்துகளைக் குறுங்கணக்கு என்பதும் தமிழக வழக்கு. கணக்கு ஆய இவற்றைக் கற்பிப்பாரும், ஆய்வாரும் கணக்காயர் எனப்பட்டனர். கணக்காயர் இல்லாத ஊர் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது திரிகடுகம்(10). அருந்துதல் சிறிது சிறிதாகத் தின்னுதல் அல்லது குடித்தல் அருந்துதல் ஆகும். இதனைச் சூடாமணி நிகண்டு அருந்திடல் என்னும் (9.6) நெய்ம்மிதி அருந்தியஎன்பது புறநானூறு (299) அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும்என்பது இராமாயணம் (சுந்த. 344) அருந்துதல் தண்ணீர் குடித்தல் ஆதலை, தண்ணீர் அருந்திஎனவரும் தாயுமானவரால் அறியலாம். (அருளி. 11). நுகர்தல் என்னும் பொருளில் வருவதை, ஆருயிர்கள் பயனருந்து மமருலகம்என்னும் கோயிற் புராணத்தால் அறியலாம். (வியாக்.6) இனி, இது விழுங்குதல் பொருளிலும் வரும் என்பது, அங்க வற்றையும் பற்றி அருந்தினான்எனவரும் கந்தபுராணத்தால் விளங்கும். (இரண்டாம் நாள். சூர. 65) (த.சொ.அ.) அருமி அருமையானவர் என்னும் பொருள் தரும் இச்சொல், ஒரு முறைப் பெயராகும். அண்ணன் மனைவி அண்ணி எனப்படல் பொதுவழக்கு. அவரை அருமி எனல். தென்னார்க்காடு, புதுவை வழக்கு, மாமன் குடும்பத்தவரை அருமைக்காரர் என வழங்கும் வழக்கம் உள்ளமை எண்ணத்தக்கதாம். அருமைக்காரர் திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா, அவ்விழாவின் அருமையை - சிறப்பை - நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர் என்பது கருவூர் வட்டார வழக்கு. கொங்கு நாட்டு வழக்குமாம். அருமை பெருமை அருமை = பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை. பெருமை = செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு. அருமை பெருமை தெரியாதவன்எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது அருமை பெருமைகளை அறிந்து நடத்தல் வேண்டும் என்பது உலகோர் எதிர்பார்ப்பாம். ஆனால், அருமை பெருமை ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வகையாக அல்லவோ தோன்றுகின்றது. அரிது என்பதன் வழிவந்தது அருமை. பெரிது என்பதன் வழிவந்தது பெருமை. அரும்பு வகை அர் > அரு > அரும்பு அரும்பு = கண்ணைக் கவரும் அருமையுடையது. நனை = நீரில் நனைந்தாலன்ன தண்ணியது. கலிகை = தனியாக அன்றிக் கொத்தாகக் கிளர்ந்தது. போகில் = வண்டும் சுரும்பும் போகா நிலையது. முகுளம்,முகை = முகம் திரண்டு அமைந்தது. மொக்குள் = நீர்மேல் தோன்றும் குமிழ் போன்றது. மொட்டு = நீரின் மேலே தோன்றும் திரள் குமிழ் போன்றது. கோலகம் = முழுவதாக உருண்டு திரண்டது. அருவாதல் கடையில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் - கொடுக்கும் அளவில் இல்லாமல் - தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென் தமிழக வழக்கு. அருவாதல் > உருவாதல். உரு = உள்ளது. அரு = இல்லாதது. அருவுரு = அருவமும் உருவமும் ஆயது. அருவி அருவு - அருவி = மலை உச்சியினின்று மரம் செடி கல் மண்ணை அரித் தொழுகும் நீர் வீழ்ச்சி(வே.சொ.க. மு. பக். 13) அரு+வி= அருவி அரு= உருவமற்றது. மலைமேல் இருந்து விழும் நீர் எங்கிருந்து சேர்ந்து வந்தது எனக் கீழே இருந்து காண்பார்க்குத் தெரியாது வீழ்தலால், அருவி எனப்பட்டதுமாம். அருவியின் எதிர்ச்சொல் உருவி. உரு + வி = உருவி. உருவம் தெரிவது; உருவிக் கொண்டு வருவது. ஒரு மரத்தில் இருந்து மற்றொரு செடி உருவி வருவது, புல்லுருவி. நல்ல மரத்துக்குப் புல்லுருவி வாய்த்தது போலஎன்பது பழமொழி. இரு + வி = இருவி. கதிர் அறுவடை செய்த தட்டையில் இருந்து அல்லது வேரில் இருந்து வந்து விளையும் பயிர் இருவியாகும். இரண்டாம் முறையும் பயன் தருவது இருவி. அருளுடைமை அன்புக் கடைக்காலின் மேல் கட்டப்படும் மாளிகை இல்லறம், அருட்கடைக்காலின் மேல் எழும் மாடம் துறவு. ஆகலின் துறவின் முதலிடம் அருளுடைமை ஆயிற்று. உற்றார் உறவொடு தொடர்பு கொண்டு விருந்து தொடங்கி ஒப்புரவாகிய பெருமையது இல்லறம். துறவோ உயிர்கள் அனைத்தையும் தம்முயிராய்ப் பேணும் அருளின் வழியது. அன்பு, தொடர்புடையாரிடத்துத் தோன்றும் நேயம். அருள், எவ்வுயிரிடத்தும் கொள்ளும் உருக்கம். இது பழந்தமிழ் நூல் உரையாளர் தரவு. நல்லவன் அல்லவன் என்றுஇல்லாமல், முயற்சியும் செயல் திறமும் உடையான் எவன் எனினும் அவனிடத் தெல்லாம் பொருள் இருக்கும். ஆனால், அருள் அத்தகையதன்று, மெய்யுணர்வு மிக்கானிடத்துத்தான் அருள் உண்டாகும். அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள - திருக். 241 அருள் அர் + உள் = அருள்; செந்தண்மை. அர் = சிவப்பு. எ-டு: இர் + உள் = இருள்; கருமை அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் - திருக். 30 அருளாளன், அருளாளி, அருளாட்டி, அருளரசு, அருள் முறை முதலியவை அருளின் ஒட்டு நலப்பாடும் நயப்பாடும் கூர்ந்தவை. இறைமையை அருளாகப் போற்றல் மரபு, ஆதலால், அருளாளன், திருவருள், திருவருளம்மை எனப்பட்டன. அருள் இன்மை கேடு ஆகலின். அருட்கண் அழிவெய்திய பாதகன் பாதகப் பாதகப் பாதகன் என்று திருதராட்டிரனைக் கூறினார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்) சொல் அருளொடு கூடியதாக இருத்தல் வேண்டும் என்பதால், அன்புடன் அளைஇய அருண்மொழிஎனப்பட்டது. (மணிமே. 5 63) அருளாளர் வரலாறு திருத்தொண்டர் வரலாறு ஆயிற்று. அருள்வேண்டல், அருள் வேட்டல் என்பவை நூற்பெயர்கள். முருகன் அருள் வேட்டல், சிவனருள் வேட்டல், அருகன் அருள் வேட்டல், புத்தன் அருள்வேட்டல், கிறித்துவின் அருள்வேட்டல், திருமால் அருள்வேட்டல், முதலாம் நூல்கள் திரு.வி.க.வினால் பாடப்பட்டன. யாஅம் இரப்பவை. பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே என்பது கடுவன் இளவெயினனார் செவ்வேள் முன் நின்று வேண்டிய அருள் வேட்டலாம் (பரி.5) அருள் வழியே வழியெனக் கொண்ட வள்ளலார். அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை என்னும் முழக்கம் கொண்டு ஒளி வழிபாடு செய்து இருண்மை ஒழிக்கத் தொடங்கினார். அருள் நெறித்திருக்கூட்டம்; அருள்நெறி மன்றம் என்பவை புதிய அமைப்புகள். அரைகுலையத் தலைகுலைய அரை குலைதல் = இடுப்பில் உடுத்திய உடை நிலை கெடுதல். தலை குலைதல் = முடித்த குடுமியும் கூந்தலும் நிலை கெடுதல். விரைந்து ஓடி வருவார் நிலம் அரை குலையத் தலை குலையக் காட்சி யளிப்பதுண்டு. போரில் பின்னிட்டு வருவார். அஞ்சி அலறியடித்து வருவார் நிலையும் இத்தகையதே. அரை குலையத் தலை குலைய ஓடி tªJ”v‹W சொல்லும் (ஈடு 3.5.1) அரைகுறை அரை = ஒரு பொருளில் சரிபாதியளவினது. குறை = அவ்வரை யளவில் குறைவானது. அரைகுறை வேலை; அரை குறைச் சாப்பாடு என்பவை வழக்கில் உள்ளவை. இனி அறைகுறை என்பதோ வேறு. அறை அறுக்கப்பட்டது. அதில் சரிபாதி என்னும் அளவு இல்லை. குறைஅறுக்கப்பட்டதை அறுத்துக் குறைபட்டது. அரைசிலை அரை + சிலை = அரைசிலை = அரைக்கப் பயன்படும் கல், சிலை = கல். அரைசிலை = அம்மி (சது.அக.) அரைத்தல் அரைத்தல் = தின்னுதல் ஓயாமல் ஒழியாமல் தின்று கொண்டிருப்பதை அரைத்தல் என்பது வழக்கு. அரைவை நடக்கிறது போலிருக்கிறதே என்பது அரைவையாளியிடம் நகைப்பாகக் கேட்கும் வினா. அரைத்தல் அம்மியில் நிகழும். அரைவை ஆலைகளும் இப்பொழுது எங்கும் காண்பன. அரைசிலை என்பது அம்மி. அரைத்தற்குரிய பொருள்களுக்குச் செலவிடுவது அரை செலவு ஆகும். அரைசிலை குமிழ்ப்பு வடித்தல்என்பது தைலவகைப் பாயிரம் (12). அம்மியும் அரைவைப் பொறியும் அல்லாமலே அரைக்க வல்லான். குடியை அரைக்காமல் விடுவானா? மெல்லெனச் சுருங்கத் தின்பானைக் குறிப்பதன்று அரைவை. அவனுக்கு எதிரிடையானைக் குறிப்பது. அரைப்புள்ளி அரை + புள்ளி = அரைப்புள்ளி. புள்ளி என்பது நிறுத்தற் குறிகளுள் ஒன்று. அது முற்றுப்புள்ளி.அதற்கு ஒரு மாத்திரைப் பொழுது நிறுத்தல் வேண்டும்.அவ்வொரு மாத்திரை அளவில் அரைப்பங்கு நிறுத்த வேண்டி இடும்குறி அரைப்புள்ளி ஆகும், அதன் அடையாளம்; என்பது. புள்ளி(.) முடிந்தது என்பதற்கும், கால்புள்ளி(,) தொடரும் என்பதற்கும் அடையாளம் ஆதலால் முடிந்தும் முடியாமல் தொடர்தல் அடையாளம் அரைப்புள்ளியாம். முருகன் வந்தான்; உடன் திரும்பினான் ஒருவர் பட்டத்தின் பின் அரைப்புள்ளி இடுதல் உண்டு. V‹?அவர் மேலும் தொடரலாம் அல்லவா! அரைமூடி பெண் குழந்தைகளின் சிறுபருவ அணிகளுள் ஒன்று அரைமூடி. அரை = இடுப்பு. துணிகட்டும் பருவம் வருமுன் பெண்குறியை மறைக்க அணியும் அணி அரைமூடி. தலைமுடி என (கிரீடம்) ஓர் அணிகலம் இருப்பது போலக் கருதி இதனை அரைமுடி என வழங்குகின்றனர். ஆனால் இதற்குப் பொருந்திய பெயர் அரைமூடி என்பதாம். சிறு பையன்கள் குறியிறை (நீர்ச்சீலை, தாய்ச்சீலை) கட்டிக் கொள்வது போல், சிறுபெண் பிள்ளைகள் குறிமறையாய் அணிவது அரைமூடியாம். இது அரைவடம் எனவும் படும்.அரைவடங்கள் கட்டிச் சதங்கை என்பவை சிறுமியர் அணிகலங்களாதலை அடுக்குகிறார் அருணகிரியார் (பாடல் கருவடைந்து). அரைவடம் = அரைஞாண். அரை வேக்காடு அரை வேக்காடு = பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை. வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம் சமையல் என்பதும், சமயம் என்பதும் பக்குவப் படுத்துதல் பொருளவே. வேக்காடு முழுமையாக இருத்தல்; வேண்டும் பக்குவமாகக் கருதப்படும். அரைவேக்காடு என்பது வெந்ததும் அன்று; வேகாததும் அன்று ஆதலால் இரண்டும் கெட்ட நிலையதாம். இப்பொழுது அரசியல், சமயம் முதலியவற்றிலும் கல்வியிலும் கூட அரைவேக்காடு என்னும் வழக்கு பெருகிக் கொண்டு வருகின்றது. அது ஓர் அரை வேக்காடு; பேசிப் பயனில்லை விடுஎன்பது அரை வேக்காட்டு மதிப்பீட்டுரை. அலகைக்கல் அம்மிக்கல் அரைக்கப் பயன்படுவது. அமுக்கித் தள்ளுதலால் அம்மி ஆயது. அரைக்கப் பயன்படுவதால் அரைகல் அரைசிலை எனவுமாம். அக்கல்லை அலகைக்கல் என்கிறது தமிழக ஒழுகு (3153) கற்பாம் திண்மை குன்றியவள் அலகையாவாள் என்பதன் வழியே வழங்கப்பட்ட சொல் அதுவாம். தமிழ் நெறி மணம் அலகைக்கல் மிதிப்புடையதன்று என்பதை அகப்பாடல்களால் அறியலாம்(அகம்.86,136 ) சிலப்பதிகாரத்தில் முதற்கண் அயல் மண நெறியாய் இடம்பெற்றது அங்கும் தீவலம் வரலே உண்டு. கண்ணகியே அருந்ததி அன்னாள் ஆகிறாள். m«Ä Äâ¥ngh, mUªjâ fhznyh ïšiy.(áy¥.1 51-54). அலக்கு முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில் கொண்டுவந்து வெள்ளாவிக்குப் பயன்படுத்துதலால் வெளுப்பவர் அல்லது சலவை செய்பவர் அலக்குக்காரர் எனப்படுதல் குமரிமாவட்ட வழக்கு. அலங்கம் அலங்கம்: 1 கோட்டை மேல் அமைந்த ஒரு பகுதி. கண்டார்க்கு அச்சம் உண்டாக்கும் பொறிகளும் கருவிகளும் உடையது. அலங்கல் = மாலை மயக்கம்; அலுங்குதல் = அசைதல். காணும் பகைவரை அச்சுறுத்தும் மதிற்பகுதி அலங்கமாம். அலங்கம்: 2 அலங்கம், அஞ்ச வைக்கும் பொறிகள் அமைந்த கோட்டை மட்டுமன்று. அக்கோட்டையைச் சூழ்ந்து நிற்கும் கரா, சுறா முதலை முதலாம் நீர்வாழிகள் திரிவனவாய்க் கண்டாரை அச்சுறுத்துவதாய் உள்ள அகழியையும் இணைத்தே குறிக்கும். அலங்கல், அலைக்கழிக்கும் அகழியையும் குறிக்கும் என்க. தஞ்சை அரண்மனையின் நாற்புறத்தும் அலங்கம் இருந்தமை இன்றும் அறியத்தக்க சான்றாம். தென்கீழ் அலங்கம் என்பது ஒரு தெருப்பெயர். அலங்கல் அலங்கல் அசைதல்;அலங்குதல் > அலுங்குதல் = அசைதல். அசைந்து புரளும் மாலை; மயக்கம் உண்டாக்கும் மாலைப் பொழுது. பகற்பொழுது நிறைந்து இரவுப் பொழுது வரும் மாலைப் பொழுது அப்பொழுது பார்வையை மயக்குவது ஆதலால் தெளிவற்ற காட்சி உண்டாம். அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவென - கம்ப. சுந். கடவுள். பழுதையைக் கண்டு பாம்பென அஞ்சுவது போன்று மயங்குமாலைப் பொழுது என்பது ம. வ. அலங்கோலம் அல்+ அம்+ கோலம் = அலங்கோலம். கோலம் = அழகு; அம் கோலம் = மிக அழகு; அவ்வழகு அற்றது அலங்கோலம். அழகாக இருந்ததை அழகு சிதைப்பது அலங்கோலமாகும். நான் ஒருநாள் இல்லை; வீடே அலங்கோலமாக உள்ளது என்பது வழக்கு. அலத்தம் அலத்தகம் என்பது செம்பஞ்சுக் குழம்பு. இது, இலக்கிய வழக்கு. நாகர் கோயில் வட்டாரத்தில் அலத்தம் என்பது மஞ்சள் நீரைக் குறிக்கிறது. அரத்தகம் அரத்தம் என்பதே அலத்தம் ஆகிக் சிவப்பு என்னும் பொருள் தந்தது. பின்னர் மஞ்சளுக்கு வந்துளது. இரண்டும் விழாக்களின் போது தெளிக்கும் தெளிநீர்களேயாம். அலத்தக மூட்டிய அஞ்செஞ் சீறடி -சிலப்.6 82 அலத்தகம் -சிலப்.8 54 அலத்தகம் = அரத்தகம், சாதிலிங்கம் (அரும்) அலப்பு ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி, அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கிலும் உள்ளமை, பேராசை பிடித்து அலைவாரை அலப்பு என்னும் பட்டப் பெயரிட்டு அழைப்பதால் விளங்கும் அலைப்பு >my¥ò. x.neh.: மலைப்பு > மலப்பு; கலையம் > கலயம். அலரி அலர் + இ = அலரி. விரிவுடையது அலரியாம். ஞாயிற்றின் கதிரை, அலர் கதிர் என்பர். அரும்பாய், முகையாய் இருந்தவை அலர்வதால் பூவின் பொதுப் பெயர் அலரி ஆயிற்று. மலரை மலர வைப்பது கதிரோன் ஆதலால், கதிரோனும் அலரி எனப்பட்டது. அழகு உறையுள்களுள் மலருக்குத் தனி இடம் உண்டன்றோ! அது அழகுக்கு அலரிப்பெயர் தந்ததாம். அலரி = கணவிர மாலை -மணிமே. 3.104அலர் அலர் = பரவுதல், விரிதல் பொருளது; மலர்தல் என்பதும் அது. அலர்கதிர் உச்சி சென்றடைய -கம்ப. அயோத்762 அல்லில் மலரும் அல்லியின் விரிவு அலரி எனப் பெற்றுப் பின்னர் மலர்ந்து விரியும் மலர்களுக்கெல்லாம் பொதுப் பெயராகியிருக்க வேண்டும். மலர் நிலையில் இருந்து இதழ் விரிந்து அலர் ஆகும்போது இடைவெளியுண்டாம். அவ்விடை வெளியுண்டாக அமைந்த பின்னல் தட்டு அலரித்தட்டு எனப்படும். அலர்தல் = மலர்ந்து மணப்பரப்பல். முகைமொக்குள் உள்ளது நாற்றம் -திருக்.1274 முகைமொக்குள் மணம், மலர்ந்ததும் பக்கமெல்லாம் பரவுதல் போல களவொழுக்கமாகிய அகவொழுக்கு ஊரவரால் அறியப்பட்டு ஆறும் குளமும் வீடும் வீதியும் பேசுமாறு விரிவது அலர் ஆயிற்று. அகத்தே அடங்கிக் கிடந்தது அம்பல்; அம்பல் செய்தி அம்பலம் அறி செய்தி ஆயமை அலராம் இதனைப் பற்றி விளக்குகிறது. இறையனார் களவியல். * அம்பல்காண்க. அலவாங்கு; அலவாங்கு: 1 அலை > அல + வாங்கு = அலைவாங்கு > அலவாங்கு. மரத்தின் கிளையை அலைத்தும் வளைத்தும் காய் கனிகளையும் இலைதழைகளையும் வாங்கும் கருவி தோட்டி என்பது அது. அலவாங்கு திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கு. அலவாங்கு: 2 அகழ்ந்து வாங்குதல் கடப்பாறையை அலவாங்கு என்பது யாழ்ப்பாண வழக்கு. * தோட்டி காண்க. அலவு காய்க்காத பனை ஆண்பனை அதனை அலவு என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது. காய்த்தலை அற்றுப் போனது அலவு ஆயிற்று. அலாக்காக அல் + ஆக்கு = அலாக்கு; அலாக்கு + ஆக = அலாக்காக. நிலத்தில் போட்டு இழுக்காமல் உருட்டாமல் புரட்டாமல் ஒன்றைத் தூக்குவதை அலாக்காகத் தூக்குதல் என்பது மக்கள் வழக்கு. நிலத்தில் அல்லாமல் மேலே தூக்குதல் அலாக்கு எனப்பட்டதாம். அலி அல் + இ = அலி; அல்லதாம் இயல்பினது. ஆண்பால் இயல் பெண்பால் இயல், ஆண்பால் தோற்றம் பெண்பால் தோற்றம் என்பவை முழுதுற அமையாமல், இன்னபாலெனத் தீர்மானிக்க அல்லாதாய் அமைந்தது அலியாம். ஆண்மைச் சாயல் சற்றே மிக்கிருப்பின் அலி என்றும்; பெண்மைச் சாயல் சற்றே மிக்கிருப்பின் பேடி என்றும் பகுத்துக் கூறும் பழ வழக்கும் உண்டு. பேடி வந்தாள்,அலி வந்தான் - (தொல். 487 நச்.) அலி மூவகைப்படும். ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்டன்மை இழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண் போலத் திரிவதூஉமென(தெய்.) அலிமரம் வயிரத் தன்மை உள்ளேயோ வெளியேயோ இல்லாத மரம் அலிமரம், மரம் எனப் பெயருற்றதற்கு ஏற்ப உள்வயிரம் அற்றது, வெளி வயிரம் இருந்தால் புல் இனத்தில் சேர்க்கலாம்; அதுவும் அற்றது, அலிமரம், உள்ளும் புறம்பும் வயிரமற்றது. எ-டு: முருங்கை. அலுக்கி அலுக்குதல் என்பது அசைத்தல், துன்பப்படுத்துதல் என்னும் பொருள்களைத் தருவது. வலுவாகக் கடிக்கும் கட்டெறும்பை அலுக்கி என்பது பெட்டவாய்த்தலைப் பகுதியில் வழங்கும் வழக்கமாகும். அலுக்குதல் அலுக்குதல் = அசைத்தல். அலுங்குதல் எனின் அசைதல், தட்டாங்கல் விளையாட்டில் கல்லை மேலே விட்டுக் கீழே கல்லை எடுக்கும் போது எடுக்கும் கல்லை அன்றி எந்தக் கல்லை அசைத்தாலும் அஃது அலுக்குதல் எனப்படும். ஆட்டம் தொடராமல் அடுத்தவரிடம் ஆட்டத்தைத் தரவேண்டும். * அனுக்குதல் காண்க. அலுங்காமல் நலுங்காமல் அலுங்காமல் = அசையாமல் நலுங்காமல் = ஆடாமல் அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும்; தட்டான்கல் அல்லது சொட்டான் கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும்போது விரல் இன்னொரு கல்லில் பட்டு அலுங்கி விட்டால் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டுமென விதியுண்டு. நலுங்குதல், இடம் பெயரும் அளவு கல் ஆடுதலாம். இனி, அலுங்காமல் குலுங்காமல் நடப்பாள் என்பதில் குலுங்குதல் நலுங்குதல் பொருள் தருவதேயாம். குலுங்கிக் குலுங்கி அழுதல் என்பதிலும், குலுக்குதல் என்பதிலும் குலுங்குதலுக்கு ஆடுதல் பொருள் உண்மை அறியவரும். அலுங்கு அலுங்கு: 1 அலுங்குதல் அசைதல், அலுங்காமல் கொண்டு போ என்பது எண்ணெய், தண்ணீர், கண்ணாடி கொண்டு போவார்க்குச் சொல்லும் அறிவுரை. பனையின் பாளையை அசைத்து மிதித்து விடுவதை அலுங்கு என்பது நெல்லை வழக்கு. அலுங்கு: 2 அலுங்கு என்பதுஓர் உயிரியின் பெயர். அது ஊரும் உயிரி. எறும்பைத் தின்னும் அதனை அலுங்கு என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. அலுக்கி என்பது கட்டெறும்பு எனப்படுவதால், அதனைத் தின்பது அலுங்கி எனப்பட்டதாகலாம். அலுங்குதல் அலுங்குதல் அசைதல், அலுங்குதல் மூலம்அலங்குதல். அலங்குளைப் புரவி -புறம். அசைகின்ற பிடரி மயிரை யுடைய - தலையாட்டம் அமைந்த - குதிரை. அலங்கல் = அசையும் நெற்கதிர். கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல் - அகம். 13 அலுங்கல் > அலங்கல் > அணுங்கல் > அனுங்கல் எனத் திரிந்து மக்கள் வழக்கில் உள்ளது. அலுங்குதலும் அசங்குதலும் வாடிப் போதல் பொருளன. அலுப்பு அலுவலாம் வேலை கடுமையாகவும் ஓய்வின்றியும் செய்தலால் உண்டாவது அலுப்பு. அலுவலக வேலையை அலுப்பில்லாத அல்லது அலுப்பற்ற வேலை என்பர். * அலுவல் காண்க. அலுப்பும் சலிப்பும் அலுப்பு = உடலில் ஏற்படும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும். சலிப்பு = உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும். அலங்குதல், அலுங்குதல் = அசைதல், இடையீடு இல்லாமல் உழைப்பவர் அலுப்படைவர். அலுப்பு மருந்து என ஒரு மருந்தும் பலசரக்குக் கடைகளில் உண்டு. முன்னே அலுப்புக்குக் கழாயம் (கசாயம்) கொடுப்பர். இப்பொழுது குடியே அலுப்பு மருந்தாய்க் குடி கெடுத்து வருகின்றது. சலித்தல் = துளைத்தல்; சல்லடை அறிக. உள்ளத்தைத் துளைக்கும் துளைப்பே சலிப்பாம். மனத்திண்மையை, இறையும் சலியா வலிமைஎன்பார் கம்பர் (உயுத். 1733). இறை =சிறிது. அலுவலகம் அலுவல் + அகம் = அலுவலகம் அரசுப் பணி, ஆலைப்பணி எனச் செய்யும் அதிகாரிகள் பணியாற்றும் இடம். இந்நாளில், அலுவலக இயக்கமே அரசின் இயக்கம். அரசு என்பதே, அலுவலக வழியாகவே நடைபெற்று வருதல் வெளிப்படை. அலுவலகமே அரசின் அச்சாணி. அது சிக்கலானால் அரசும் சிக்கலுக்கு ஆட்படும். அது சிக்கலின்றி இயங்கின் அரசும் சிக்கலின்றி இயங்கும். ஓர் அலுவலர் ஆக்கம் செய்யின் அவ்வாக்கம் அரசைச் சாரும். ஓர் அலுவலர் தேக்கம் செய்யின் அத்தேக்கமும் அரசைச் சேரும். அரசின் புகழுக்கும் பழிக்கும் இடம் செய்பவை அலுவலக நடைமுறைகளே! அலுவலகம் ஒன்றா இரண்டா? அரசை இயக்கும் தலைமைச் செயலகம், முறைமன்றம், பல்கலைக்கழகம், ஆட்சியகங்கள், பொருளகங்கள், அஞ்சலகங்கள், நகர் மன்றங்கள், ஒன்றியங்கள், கல்வி நிலையங்கள் - எங்கும் அலுவலகம்! துறைவாரி அலுவலகங்கள் எல்லாம் அலுவலகம்; ஒவ்வொன்றிலும் அலுவலர் ஒருவரா இருவரா? ஆயிரம் ஆயிரம் பேர் அலுவலகங்களும் உண்டு. நகரங்கள் என்பவை அலுவலகக் குவியலகங்கள்! அலுவலகங்களின் தேவை என்ன? அரசு தோற்றுவிக்கும் சட்டங்களை நிறைவேற்றி நடைமுறைப் படுத்துவதே அதன் நோக்கமாகும். அரசின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுக் கடனாற்ற வேண்டியதே அலுவலகங்களின் கடமை. சட்டத்தை உருவாக்குபவர்க்கு அடிமைப்பட்டுக் கிடத்தலோ ஆடிப் பாவை போலத் தூக்கத் தூக்கியாய் இருப்பதோ அலுவலர் கடமை அன்று. ஆள்பவர் இன்று ஒருவர் ஆகலாம் நாளை ஒருவர் ஆகலாம். ஆள் மாறினாலும் மாறாதது - மாற்றப்படும் வரை மாறாதது - சட்டம். அச்சட்டத்தின் காவலராக விளங்க வேண்டியவரே அலுவலர். அலுவலர் அனைவரும் தமக்கு அடிமை என்று ஆள்வோரும், அடிமைப்பட்டுக் கிடத்தல் எழுதா விதிமுறை என்று தம்நலக் குறியராய் அலுவலரும். நடந்து கொள்வதால் முறைமை ஒதுங்கவும், முறைகேடு அரசோச்சவுமாம் நடைகள் உண்டாகி விடுகின்றன. குற்றம் செய்வாரைக் கண்டுபிடிக்க ஒரு துறை; கண்டு பிடித்தவர்களை வழக்குத் தொடுத்துக் குற்றத்தை நிலைநாட்ட ஒரு துறை; தண்டனை தர அல்லது தண்டனை விதிக்க ஒரு துறை; தண்டனை பெறுவிக்க ஒரு துறை என முறையே ஒற்றர் துறை, காவல் துறை, முறை மன்றத் துறை, சிறைத் துறைகள் இருந்தும் குற்றவாளி தப்பிக் கொள்ளவும், குற்றம் இல்லான் தண்டிக்கப் படவும் நேர்கின்ற தென்றால் எங்கோ குறையுள்ளமை தெளிவுதானே! எங்கே குறை எனினும் ஆட்சிக் குறைதானே! ஆதலால், கடமை தவறாமை அலுவலர் கடமையாகவும், கடைப்பிடியாகவும் கட்டாயம் இருத்தல் வேண்டும். கையூட்டு வாங்குவான் மேல் எவன் நடவடிக்கை எடுக்க முடியும்? கையூட்டுவானை எவன் நடவடிக்கை எடுக்க இயலும்? காலம் தவறுவானைக் கண்டிக்க எவனுக்குப் பொருந்தும்? அவற்றை இல்லான்தானே, இருப்பானைக் கடியவும் கண்டிக்கவும் கடனுறுத்தவும் கூடும். அதனால், குற்றங்கடிய விரும்பும் கட்டாயமுடைய அலுவலர், குற்றமற்றவராக இருத்தல் வேண்டும். அலுவல் அலுவல் என்பது பிற்காலச் சொல். அலுவலர், அலுவலகம் என்பன அதன் வழி விரிவானவை. என்ன அலுவல் செய்கிறீர்கள்; என்ன அலுவலாகப் போகிறீர்கள் என்று கேட்பது நடைமுறை. அலுவல் என்பது மதிப்பு மிக்கதாகக் கொள்ளப்படுகிறது. உழைப்பு தொழில் வேலை பணி என்பவற்றினும் அலுவலுக்கு மதிப்பு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். வியர்வை சொட்ட உழைக்கும் உடல் உழைப்பினும், உடலுக்கு அலுப்பு அயர்வு இல்லாமல் வேலை செய்வதை அலுவல் என வழங்கினர். அலுப்பு என்பது உடல் தொல்லை அவனுக்கு என்ன காற்றாடிக்குக் கீழ் வேலை? என்று பாராட்டுதல் கேட்கக் கூடியதே. வாழ்க்கையிலே காற்றாடியாகிப் போன மக்கள், காற்றாடிக்குக் கீழிருந்து செய்யும் வேலையை மதிப்பது இயல்பே! உங்களுக்கென்ன? உங்கள் மகன் வெள்ளை மாளிகையிலே இருக்கிறார்என்று பாராட்டக் கேட்ட தாய். ஆமாம்! அவன் மட்டுமல்லன்! இதோ உழவு செய்கிறானே; அவனைப் பெற்றதாலும் பேறு பெற்றவள் நான்என்று எவ்வேலை ஆயினும் மதிப்புக்குரியதே எனக் கண்ட, மதிப்பிற்குரிய தாய் மதிப்பீடு உண்டு. வள்ளுவரும், தொழிலால் உயர்வு தாழ்வு இல்லை எனக் கண்டார். தொழிலைச் செய்யும் சிறப்பு, தாழ்வு என்பவற்றால் தான் வேறுபாடேயன்றி வேறு, வேறுபாடு இல்லை எனத் தெளிந்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்ற அவர் சிறப் பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்(திருக். 972) என்றதை எண்ணுக. வையகம் காப்பவ ரேனும் - சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யக லத்தொழில் செய்தே - புவி போற்றிட வாழ்பவர் மேலோர் என்றார் பாரதியார். தப்பாக வேதம் சொல்பவனைப் பார்க்கிலும் நன்றாகச் சிரைப்பவன் உயர்ந்த சாதிஎன்றும் அவர் உரத்துக் கூறினார். அலை அல் + ஐ =அலை. நிலை என்பதன் எதிர்ச்சொல் அலை நிலையாக நிற்பது நிலை ஆகும். நிற்றல் அற்ற நிலை அலை ஆகும். நீரில் தோன்றும் அலை, காற்றால் அலைதல், ஓரிடத்து நில்லாமல் அலைதல் ஆயது. நீர்நிலை எனப்படும் அது திண்பொருள் அன்று. நீர்ப்பொருள்; ஆதலால் காற்று மோதுதலால் மேலெழுதலும் கீழ்விழுதலும் ஆகும். அதனை அலை என்பர். அலைதல் அலைச்சல் அலைவு அலைப்பு அலைவாய் அலைகரை அலைத்தல் என்பன எல்லாம் அலையின் வழிவந்த சொற்கள். அலைஓய்வது எப்போது தலை மூழ்குவது எப்போது என்பது பழமொழி. ஆழியில் உண்டாம் பேரலை ஆழிப்பேரலை. அது நாடு நாடாக அழிப்பது கண்கூடு. அலமரல், அலக்கண், அலட்டுதல், அலப்பறை என்பனவும் ஒரு நிலைப்படா நிலையையே குறித்தது. அலை, ஆலையாய் கரும்பாலை, செக்காலை, பஞ்சாலை எனச் சுழல் பொறியமை வால் உண்டாயது. ஆலைவாய்க் கரும்பின் தேனும் - கம்ப. பால. 41 கார்க்கரும்பின் கமழாலை - பட்டினப். 9 செக்காலை என்பது பழமையானது. அரிசி ஆலை, பஞ்சாலை, நூற்பாலை, நெசவாலை, அணுவாலை என்பவை மேல்வளர்நிலை. ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூச் சருக்கரைஎன்பது பழமொழி. அலை கொலை அலை = அலைத்தலாம் துன்புறுத்தல் கொலை = கொல்லுதல். இனிப் புலை கொலை என்பது, புலால் உண்ணுதலையும், கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல் அடுத்தடுத்தும் துயர்பல செய்வதாம். அலைமேற் கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து என்பது திருக்குறள் (551) அலைப்பு, அலைச்சல் முதலிய சொற்களால் அலையின் பொருள் விளங்கும் கொல்லான் கொலை புரியான் என்னும் ஏலாதித் தொடர் (19) கொல்லாதவனையும், கொன்று தந்த ஊனை விரும்பாதவனையும் குறிக்கும். அலைக்கழிப்பு துன்பப்படுமாறு அலையவிட்டு, இப்பொழுது அப் பொழுது, அது இது தருவதாகச் சொல்லி எதுவும் தாராமல் தட்டிக் கழித்துத் தாமே அலுத்து அலைவதை விட்டொழியுமாறு செய்வது அலைக்கழிப்பு. தேரைக்கால் போலத் திரித்திரியாய்த் தேய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை - ஔவை. தனிப். அவனைக் கண்டவாறு அலைக்கழியாதே! பாவம்! ஏழை! என்பது ம.வ. அலைக்களிப்பு அலை = துயர்; களிப்பு = மகிழ்வு. துன்பப்படுத்தி அதனைக் கண்டு மகிழும் கொடுமைத் தன்மை அலைக்களிப்பு எனப்படும். கைப்பொருள் இல்லார் எனினும் அவர் கழுத்தை வெட்டி அதன் துள்ளுதலைக் கண்டு களிப்புறும் கொடுமையரைச் சுட்டுகிறது கலித்தொகை (4). துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும் வழங்காப் புலம்கொள் ஆரிடை அலைசல் அலைசல் 1 நீரில் அலைத்து அலைத்துத் துணியின் அழுக்குப் போக்குவது அலைசுதல் அல்லது அலசுதலாம். நெருக்கமாக இழையோடாமல் அகல அகல இழையோடி தண்ணீரில் பட்ட அளவில் சுருங்கிப் போகும் துணி அலைசல் அல்லது அலசல் எனப்படும். அலைசல் 2 அலைசல் என்பது அலைபோல் அலையும், நிலையிலாத் தன்மையாம், அதற்கு. இரங்குதலாக (வருந்துலாக) அமைந்தது அலைசல் எனப்படுகின்றது. இவ்வகையில், அடிமைத் திறத்து அலைசல், அவத் தொழிற்கு அலைசல், நாளவத்து அலைசல், அவலமதிக்கு அலைசல், ஆனா வாழ்வின் அலைசல், அருட்டிறத்து அலைசல்என அலைசல் பதிகங்கள் வள்ளலார் தொகுப்பில் உள. இவற்றுள் இறுதிய தொன்றும் கொச்சகக் கலிப்பா 36 பாடல்களை உடையது. ஏனையவை எல்லாம் கழிநெடில் ஆசிரியத்தால் ஆயவை. எல்லாமும் பதிகங்கள். அலை பாய்தல் தொடர் தொடராக நினைவு வருதல். அலை வரிசை வரிசையாக வருவது போலப் பலப்பல எண்ணங்கள் ஒன்றனோடு ஒன்று மோதி முட்டி அலைக்கழிவு செய்யும். இவ்வெண்ணங்கள் இன்ப மூட்டுவனவும் நலம் செய்வனவுமாம் எண்ணங்கள் அல்ல என்பதும். துன்பமூட்டு வனவும் தீமை செய்வனவுமாம் எண்ணங்கள் என்பதும் அறியத் தக்கனவாம். எனக்குள் அலைபாய்கின்றது. என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன்.v‹gt® உரையில், அலைபாய்தல் பொருளும் விளைவும் புலனாம். அலையாற்றி கோடியக்கரை என்னும் பெயரே அதன் கடற்சார்பு காட்டும். ஆங்கு அலையாற்றி என்னும் ஒருவகை மரக் காடுகள் அரணாக அமைந்துள. சுனாமி அலைக்கழிவு 26.12.2004இல் ஏற்பட்டு ஊர் ஊராகச் சுருட்டப்பட்ட போதும் கோடியக் கரைக்கு அழிவேதும் இல்லை, அதனால் நாம் பெற வேண்டும் பாடம் என்ன? அலையாற்றிக் காட்டைக் கடலை அடுத்து உண்டாக்கி இயற்கை அரணம் தேடிக் கொள்ளல் வேண்டும் என்பதாம். உள்ளமே காடாகி, உள்ள காடுகளை ஒழிப்பவர்களுக்கு இவ்வுண்மை புலப்படுமா? பறவை விலங்குப் பாதுகாப்பிடம் (சரணாலயம்) ஆகிய கோடியக்கரை தனக்கு எப்பாதிப்பும் இல்லை என மெய்ம்ம வரலாற்றைத் தந்து உயிர்க்காப்புக்கு மரக்காப்பு எத்தகைய முதன்மையது என்பதை உணர்த்துவதை அரசும் அறிஞர்களும் உணர்ந்து வருமுன் காக்கும் காவற் கடனாகக் கொள்ளல் தேவை. தில்லைக்கு வடக்கே 15 அயிரம் (கி.மீ.) தொலைவில் உள்ளது பிச்சாவரம் காடு. சுரபுன்னைக் காடாகக் கடல் சார்ந்து 2800 ஏக்கர் பரப்பில் உள்ளது. அக்காட்டுக்கு மக்கள் வழங்கும் பெயர் அலையாத்தி. கடல் அலைப் பெருக்கு மோதி மோதி வந்தாலும் மண்மேல் ஏறாமல் மண்ணை அரிக்காமல் காவல் அரணமாக இருப்பது அக்காடே. அலையை மேலே செல்லாமல் அகற்றுவதால் அலையகற்றி யாயது. அது அலையாற்றியாய், அலையாத்தியாய் வழங்குகிறது. சுனாமி என்னும் சுருட்டி வந்த போதும் அழிவு இல்லாமல் காத்தது அலையாற்றிக் காடு என்றால் எத்தகைய அறிவியல் பெயர் அது. அலைவாக்காக ஒன்றைத் தூக்குவதை அலாக்காக - கால், மார்பு, தோள் முதலியவற்றில் படாமல் தலைக்குமேல் - தூக்கு என்பர். அலை எப்படி மேலே துள்ளி எழும்புகிறதோ அதுபோல் என்னும் உவமை வழிப்பட்ட ஆட்சியாகக் கொள்ள வாய்ப்பது இது. தென் தமிழகப் பெருவழக்கு. * அலாக்காக காண்க. அலைவாய் அலை + வாய் = அலைவாய் = கடற்கரை. வாய் = இடம். அலைவந்து தவழும் இடம். அலைவாய்க்கரை, அலைவாய் என்பவை ஊர்ப்பெயர்கள். எ-டு: திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), அலைவாய்ப் புத்தூர் அலை > அலைவு > அலைதல். அல் அல்: 1 பகல்பொழுது அல்லாத இரவுப் பொழுதைக் குறிக்கும் சொல். கதிரொளி அற்ற பொழுது அல் என்க. அல்லங்காடி உண்டாகலின் இதனை நாளங்காடி என்றார்(சிலப்.அடியார்க் 59-67) அல்: 2 அல்லது என்னும் அன்மைப் பொருள் குறித்தது. அல்லது ஆவது, அறம் அல்லது. அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் - சிலப். பாயிரம் அல் என்பது முன்னொட்டாக அன்மைப் பொருள் குறித்தது. எ-டு: அல்வழி, அன்மொழித் தொகை அல் பின்னொட்டாகி அன்மைப் பொருள் தரும். எ-டு: மணல்- மண் + அல். மண்= செறிவு. மண்திணிந்த நிலம் -புறம். அள்ளல்- அள் + அல். அள்= செறிவு. அள்ளல் பழனம் - முத்தொள். 110 அல்: 3 அல் பின்னொட்டாகி, எதிர்மறையும் உடன்பாடும் சுட்டும். எ-டு: பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல் - திருக். 196 மகன் எனல் (என் + அல்) - என்று கூறாதே. பதடி எனல் (என் + அல்) - என்ற கூறு. அல்கல் அல்கு + அல் = அல்கல்= குறைதல், சுருங்குதல், தங்குதல் வைத்திருத்தல். ஒளி குறைதல் = இரவு, அல்கல் கனவுகொல் - கலித். 90 இரை சுருங்குதல்; அல்கலின் மொழிசில அறைந்து - நைடத, 137 இருள் தங்குதல்; பல்பூங் கானல் அல்கினம் வருதல் - அகம். 20 வைத்துண்ணும் உணவு, அல்குமிசை வாகும் -புறம். 236 அல்லல் அல் + அல் = அல்லல், மீமிசைச் சொல், அல்லலிலும் அல்லலாம். தீரா அல்லல் நிலை. அல்லலுற் றாற்றாது அழுவாளை - சிலப். 19 15 அல்லற்பட் டாற்றா தழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை - திருக். 555 அல்லாடுதல் அல் + ஆடுதல் = அல்லாடுதல் = அலைந்து திரிந்து துன்புறுதல். அல் = நல்லது அல்லாதது; ஆடுதல் = விளையாடுதல், பெருக்கமாக உண்டாதல், கையில் காசு இல்லாமல் அல்லாடிப் போனேன் என்பது பொதுவழக்கமாம். ஒளுவாடி = ஒளிரும் கண்ணாடி போல் இருந்தவன், ஒளுவாடி மகன் அல்லாடிப் போனான்என்பது முகவை மாவட்ட வழக்கு. அல்லாடுதல் மல்லாடுதல் அல்லாடுதல் = அடிபட்டுக் கீழே விழுதல். மல்லாடுதல் = அடி போடுவதற்கு மேலே எழுதல். சண்டையில் கீழே விழுந்தும் மேலே எழுந்து தாக்குண்டும் தாக்கியும் போரிடுவாரை அல்லாட்டமும் மல்லாட்டமும் போடுவதாகக் கூறுவர். இனி, வறுமையில் தத்தளித்தும், ஒருவாறு வறுமையை முனைந்து வென்றும், மீண்டும் வறுமையும் தவிர்ப்புமாக வாழ்பவரை அவர்பாடு எப்போதும் அல்லாட்டம் மல்லாட்டந்தான் என்பர். இவை போர்த் தத்தளிப்பு வறுமைத் தத்தளிப்புக்கு ஆகி வந்தவை. வெல்லவும் முடியாமல் தோற்கவும் இல்லாமல் திண்டாடும் இரு நிலையையும் விளக்கும் இணைச்சொல் இது. அல்லாட்டம் மல்லாட்டம் என்பதும் இது. அல்லார் அல் + ஆ+ ஆர் = அல்லார்; அல் + ஆ + த் + ஆர் = அல்லாதார். அல்லார், அல்லாதார் = பகைவர், தமிழரல்லார் தமிழர்க்கு வழங்கிய விருது அல்லார், அல்லாதார்என்பவை. பிராமணர், பிராமணர் அல்லார், பிராமணர் அல்லாதார், தமிழர், தமிழர் அல்லார் என்ன வேண்டியவை எப்படித் தடமாறின? ஏன் தடமாறின? எண்ணல் வேண்டும். அல்லி அல்லி அல் + ல் + இ = அல்லி. தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் - நன். 205 என்னும் விதியின்படி, அல் + ல் + இ =அல்லி என்றாகும். அல் = இரவு; இரவில் மலரும் நீர்க்கொடி அல்லி எனப்பட்டது. அல்லி 2 பூவின் புற இதழ் அல்லாத அக இதழ் அல்லியாம். அல்லியம் கமலம் - கந்த. உற். திருக். 73 அல்லி 3 மாதுளை, தசைப்பற்று அன்றி விதையே தின்னுதற்கு ஆதலால் அல்லி எனப்பட்டதாம். அல்லுச்சில்லு அல்லு = அல்லலைத் தரும் பெருங்கடன். சில்லு = சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன். அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர் உரையைக் கேட்கும் போது அவர்கள் அல்லுச் சில்லால் பட்ட துயரம் தெரியவரும். சில்லு என்பது சிறியது; சில்லி, சில்லுக் கருப்புக் கட்டி தேங்காய்ச் சில்லு என்பவற்றால் சில்லுக்குச் சிறுமைப் பொருள் உண்மை அறியலாம். இனி, அல்லு அல்லலையும் சில்லு சிறுமையையும் தருவதாகவும் அமைகிறது. அவனுக்கு அல்லுச் சில்லு எதுவும் இல்லை; அமைதியான வாழ்வு என்னும் பாராட்டால் இது விளங்கும். அல்லை அல்லை = தாய். குடும்பத்துக்கு வரும் துயரம் வறுமை முதலாயவற்றை அல்லாமல் ஆக்கும் அருந்தன்மையால் அன்னை அல்லை எனப்பட்டாள். (வெ.வி.பே.). அல்லை தொல்லை அல்லை = அப்பொழுது ஏற்பட்ட துயர். தொல்லை = பழமையாகவே தொடர்ந்த துயர். அல்லை தொல்லை, இணைச்சொல் அல்லை தொல்லை அகன்ற பாடில்லைஎன்பது மக்கள் வழக்கு. அவக்காச்சி அவா > அவாக்கு > அவக்காச்சி. தின்பதற்கு இது வேண்டும் அது வேண்டும் என்று திரிபவரை அவக்காச்சி என்பது மதுரை வட்டார வழக்கு. ஆவல் என்பதன் வழியாக ஏற்பட்டிருக்கலாம். ஆவல் ஆசை என்பவை மனத்தால் பற்றுதலாம். அவக்கு அவக்கு என்று அள்ளிப் போட்டுவிட்டு எங்கேயோ போனான்ம.வ. அவதி வேலையோ கல்வியோ இல்லாமல் விடப்படும் விடுமுறையை அவதி என்பது நெல்லை வழக்கு. அவம் என்பது தம் கடமை செய்யாது இருக்கும் நிலை, தவம் என்பது தம் கடமை செய்யும் நிலை. தவம் செய்வார் தங்கருமம் செய்வார்என்பது திருக்குறள்(266). பணியிலாப் பொழுதை அவப்பொழுதாகக் கருதிச் சொல்லப்பட்டது இது. இனி, அவதி என்பதற்குத் துயரப் பொருள் உண்டு. அது அவலம் என்பதன் வழிவந்தது. என் அவதி எப்பொழுது ஓயும்? ம.வ. அவயான் அவா + ஆன் = அவாயான் > அவயான். ஆசைப் பெருக்கு என்பது வழக்கு. அஃதோர் அளவில் நில்லாமல் பெருகுவதால் ஆசைக்கோர் அளவில்லை (தாயு.) ஆரா இயற்கை அவா (திருக். 370) எனப்பட்டது. ஆசைப் பெருக்கம் போல் பெருத்த உடலுடையதாகிய பேரெலி (பெருச்சாளி, பெருக்கான், பொண்டான்) என்பதை அவயான் என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. இவண் அவா என்பது பெரிய பெருகிய என்னும் பொருளுடையதாயிற்று. அவரை அவல் = பள்ளம், தட்டை, தகடு. அவல் > அவர் > அவரை. உருண்டை, திரட்சி எனப் பருமையின்றித் தகடாக அல்லது தட்டையாக அமைந்த காயை உடைய கொடி அவரையாம். திரண்ட அரிசியிடி அவல் எனப்படுதலும் அதன் அமைவு தட்டையாதலும் காண்க. அவல் இழியினும் மிசை ஏறினும் -புறம்.102 அவல் ஆகொன்றோ மிசை யாகொன்றோ -புறம்.187 * அவல் காண்க. அவர் அவர் = கணவர். அவர். பன்மைப் பெயரும், ஒருமைச் சிறப்புப் பெயருமாம். ஆயின் அவர் என்பது பொதுமையில் நீங்கிக் கணவரைச் சுட்டும் சுட்டாக அமைந்து பெருக வழங்குகின்றது. அவர் இல்லை; அவரைக் கூப்பிடுங்கள்; அவர் இருந்தால் இந்தப்பாடு உண்டா?என்பவற்றில் எல்லாம் உள்ள அவர், ஒரு மனைவியின் அல்லது பெண்ணின் வாயில் இருந்து வரும் போதெல்லாம், கணவரைக் குறித்தல் அறிக. மனைவியர் வழக்கு இது. அவல் அவல் அருமையான உணவு; குழந்தைகளா முதியவர்களா நோயாளர்களா எவருக்கும் கேடு செய்யாத உணவு; குசேலர் கண்ணன் நட்புக்குக் குறியாக அமைந்தது; கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி(திருப்.2) எனக் கரிமுகன் படையலுக்கு உகந்தது; உடனடி விருந்திற்கா, வெளியூர்க் கட்டுணவுக்கா, உடனே வந்து உதவுவது! நெல்லை நனைய வைத்துப் பின்னே சிறிது உலர்த்திப் பக்குவமாகப் பொரித்து உரலில் இட்டு இடித்து, உமி நீக்கிப் புடைத்து எடுப்பது அவல் என்பது அறிந்ததே. ஆனால், அவல் என்பதன் பெயர்க்காரணம் அறிய வேண்டுமே! அவல் தமிழ்நாட்டில் பண்டு தொட்டே வழக்கில் இருந்து வரும் ஒரு சிற்றுண்டி ஆகும். வேண்டு மட்டும் அவல் தின்று தண்ணிய நீரில் ஆடி மகிழ்வதைப் புறப்பாடல், பாசவல் முக்கித் தண்புன லாடல் என்கிறது(63) கரும்பும் அவலும் விரும்பி யுண்டனர் என்பதைத், தீங்கரும்பொடு அவல் வகுத்தோர் என்கிறது பொருநராற்றுப் படை(216). அவல் இடிப்பதற்கு என்றே, வயிரமேறிய வலிய உலக்கைகள் இருந்தன என்றும், அவை அவலெறி உலக்கை (பெரும்.226, பதிற்.29) எனப்பெற்றன என்றும் அறிகிறோம். பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை -அகம்.141 பழம் பண்டமாம் அவல் இந்நாளிலும் வழக்கில் இருப்பதைத் தெருத் தெருவாகக் கூவி விற்கும் பொருளாக இருப்பதுடன். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்தது போல அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு என்பன போன்ற பழமொழிகள் வழக்கில் உண்மையும் தெளிவிக்கும். அவல் ஆக்குவதற்குரிய தவசம் தக்க பக்குவத்தோடு இருக்க வேண்டும் என்பதை முன்னோர் தெளிவாகக் கண்டு அத்தகையவற்றையே பயன்படுத்தினர் என்பது. தோரை அவற்பதம் கொண்டன எனவரும் மலைபடுகடாத்தால்(12) விளங்கும். தோரை யாவது நெல். அது மூங்கிலில் விளைவது. தினையரிசியால் அவல் செய்யப் பெற்றதையும், அவ்வரிசித் தேர்ச்சியையும், அதன் அழகையும் அருமையான உவமையால் விளக்குகிறது. பொருநராற்றுப் படை. ஆய்தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பு என்பது அது தேர்ந்து கொண்ட தினையை இடித்த அவையல் போல (குற்றல் அரிசிபோல) குற்றமற்ற விரலால் வருடும் யாழ் நரம்புஎன்கிறது. இதில் குற்றலரிசி அவையல் எனப் பெறுவது நோக்கத் தக்கது. குற்றாத அரிசியை அவையா அரிசி என்கிறது பெரும்பாண்(279). அவைப்பு மாண் அரிசி -அகம்.394 இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த அவைப்பு மாண் அரிசி -சிறுபாண்,194-5 கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் -புறம்.215 என்பவற்றால் தெளிக. அவைக்கப் பெற்ற ஒன்றை அவையல் என்பது பொருத்தமே யன்றோ! அவிக்கப் பெற்றதும் . இடிக்கப் பெற்றதும், துவைக்கப் பெற்றதும், பொரிக்கப் பெற்றதும்,வறுக்கப் பெற்றதும் முறையே அவியல், இடியல், துவையல், பொரியல், வறுவல் என்று வழங்குவன போல அவைக்கப் பெற்றது அவையல் என அமைந்ததாம். அவையல் அவைத்தல் என்பன குற்றிய அரிசியைப் பொதுவாகக் குறித்தலால், அதனைப் பொதுப் பொருளில் அரிசிக்குக் கொள்ளாமல் ஒரு சிற்றுணவுக்குக் கொண்டது பொருந்துமோ எனின், பொருந்தும். என் எனின், அவைத்த நிலையில் உண்ணப் பெறுவது அதுவே ஆகலின். ஏனை அரிசியோ பின்னர் சமைத்து உண்ணப் பெறுவது ஆகலின், அடிசில், அவிழ்து, சோறு சமையல் , வாக்கல் முதலாகப் பல பெயர்களைப் பெறும். சங்கச் சான்றோர் நாளிலேயே அவையல் அவயல் என்பவை அருகி, அவல் என்பதே பெருகி வழங்கிற்று எனின் அவல் என்பதன் தொல் பழமை காண்டல் எல்லைக்கு உட்பட்டதாமோ? சங்க நாளில் அவல் என்பதற்குப் பள்ளம் என்னும் ஒரு பொருள் பெருக்கமாக வழங்கியது. அவலா கொன்றோ மிசையா கொன்றோ(புறம்.187) என்றார் ஔவையார். குண்டு குழி, பள்ளம் கேணி இன்னவையும் பிறவும் அவலாகக் குறிக்கப் பெறக் காரணம் என்ன? இந்த உணவு அவலுக்கும், இட அவலுக்கும் உள்ள இயைபு என்ன? இயைபு ஒன்றே தான்; அது தொழில் இயைபே என்க! அவலெறி உலக்கை இருந்தது போலவே, நிலனகழ்தற்குக் குந்தாலி முதலிய கருவிகள் இருந்தன. அவற்றைக் கொண்டு நிலத்தைக் குற்றிக் கேணியும் கிணறும் தோண்டினர், பாறையைத் தகர்த்தனர்; பரல்களைப் பெயர்த்தனர்; வயல் வளம் அமைந்தனர். ஆகலின் அவைத்தலால் (இடித்தலால், குற்றலால்) அமைந்த நிலம் அவையலாய் அவலாய்ப் பெயர் பெற்றதாம்! இதன் தொன்மையும் அவல் தொன்மையே. பரலவல் போழ்வில் - மலை. 198 பரலவல் படுநீர் - குறுந். 250 அவல் தொறும் தேரை தெவிட்ட - ஐங். 453 இனி அவலம் என்பதன் மூலக்கூறும் அவலில் அமைந்துள்ளதை அறிந்து மகிழலாம். தாக்கலும் இடித்தலும் இல்லையேல் அவலம் இல்லையே! அவல் என்னாள் அவலித்து இழிதலின்என்னும் இளங்கோவடிகள் கூர்ப்பு (கட். 186) இம்மூலம் கண்டுரைத்த முத்திரையே யாம்! அவித்தல் அவிர்த்தல் > அவித்தல் = விரியச் செய்து உண்ணுமாறு பக்குவப் படுத்தல் அவித்தலாம். உணவு வகைகளை அவித்துப் பக்குவப் படுத்துதல் போல், பொறிபுலன்களைப் போன வழியில் போக விடாமல் அறிவால் அடக்கிக் காத்தலும் அவித்தலாம். அவித்தல் அழித்தல் அன்று; அவித்தலால் பயன்தான் என்ன? ஐந்தவித்த ஆற்றலாளன் ஐந்திரன். அவனைச் சிறுமைப் படுத்துவது இந்திரனைப் பற்றிய அடக்கமிலாக் கதை. இந்திரன் ஐந்தவித்த ஆற்றலாளன் என்பது குறள் (25). சிறிய தவசம் பயறு வகைகள் அவித்தலால் அளவில் பருத்தலையும் பருக்கை; பருப்பு எனப்படுதலையும் அறிக. அவிநயம் அவி + நயம் = அவிநயம். பக்குவப் படுத்தப்பட்ட பலவகை நயத்தக்க - விரும்பத்தக்க - சுவைப்பாடுகளும் ஒருங்குற வெளிப்படுத்தும் கூத்து. நளிநயம் என்பதும் இது. *நளிநயம் காண்க. அவியல் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒரு கறிவகை. இது பொதுவழக்கு. அவியல் என்பது இட்டவியைக் குறிப்பது கண்டமனூர் வழக்கு. இட்டவி (இட்டிலி). அவிர்தல் அவிர் > அவிர்தல் = விரிதல், விளங்குதல். அவிர்மதி - திருக். 1117 அடர்பொன் அவிரேய்க்கும் - கலித். 22 அவிழ் அவி > அவிழ். அவிழ் = சோற்றுப் பருக்கை; அரிசியில் இருந்த வன்மை - கெட்டித்தன்மை - அவிழ்ந்து மலர்போல் மெல்லியதாய் விரிதல், அவிழ் பதம் (புறம். 159) அவிழ் > அவிழ்து. அவிழ்தல் = கட்டு விரிதல்; அவிழ் மலர் (பெருங். 1 57 103) அவிழ்சாரி அவிழ்சாரி = மானமிலி. அவிழ் = அவிழ்த்தல்; இவண் உடையை அவிழ்த்தல். சாரி = திரிதல். அவிழ்த்துப் போட்டு ஆடவா செய்கிறேன், அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன்என்னும் வழக்குகளின் உண்மை அறிக. திரிதலும் ஆடலும் இந்நாள் நச்சு நாகரிகத்தின் இச்சை வினையாடல்களாகத் திகழ்கின்றன. சாரி என்பது திரிதல் பொருளது. எறும்புச் சாரி புதுமுறை. குதிரைச்சாரி பழமுறை. சாரி போதல் ஒழுங்குறப் போதல். அவிழ்சாரியோ ஒழுங்கறப் போதல். அவிழ்சாரி (அவுசாரி) பேச்சை என்னிடம் எடுக்காதீர்கள்என்பது வழக்குரை. மானமற்றவள் மானமிலி என்பது உட்பொருள். அவிழ்த்து விடுதல் இல்லாததும் பொல்லாததும் கூறுதல். கட்டிலிருந்து விலக்கி விடுதல். அவிழ்த்து விடுதல் எனப்படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் புலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை. கன்றுகளை அவிழ்த்து விட்டுத் தாயிடம் பாலூட்டலும் கறத்தலும் எங்கும் காணுவது. தாய் குழந்தைக்குப் பாலூட்டல் அவிழ்த்து விடுதல் எனவும் சொல்லப்படும். கச்சு, மாரார்ப்பு, மார்புக் கட்டு என்பவற்றை அவிழ்த்துவிட்டுப் பாலூட்டலால் அதனையும் அவிழ்த்து விடுதல் என்று குறிப்பதுண்டு. ஆனால், ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாம் செய்திகளை இட்டுக்கட்டி உண்மை போல் திரித்துக் கூறுதலை அவிழ்த்து விடுதல் என்பதும் உண்டு. என்ன அவிழ்த்து விடுகிறாய்; எனக்குத் தெரியாதா?எனின் நீ பொய் கூறுகிறாய் என்பது பொருளாம். சரடு விடுதல், கயிறு திரித்தல் என்பவை போல்வது. அவுரி அவ் + உரி = அவ்வுரி > அவுரி. அவ் = அழகு. அழகிய உரியாம் நார் உடையது அவுரி. அவ்வரி. அவ்வயிறு = அழகியவரி, அழகிய வயிறு (அகம். 21 ஐங். 305) சணல் நார், சணற் கோணி, சணற்பை, இவற்றின் மூலப் பொருள் அவுரிப் பட்டை அல்லது தோல் ஆகும். உரியாவது தோல். ஆடு மாடுகளுக்குள்ள தோல் உரி பை, மிதியடி, இடைவார் ஆயவற்றின் மூலப்பொருள். கடலை உரித்தல், தென்னை உரிமட்டை, பாம்புரி பாம்புச் சட்டை (தோல்) என்பவை வழக்கில் உள்ளவை. கரியுரி போர்த்த கண்ணுதல் தொன்மச் செய்தி. கிணற்றில் பாறைக்கல் மேல் சுவர் எழுப்பும் போது அப் பாறைக்கும் சுவர்க்கும் உள்தள்ளிய நடைவழி வைப்பர். அப் பகுதியில் பாம்பு பொந்தில் தங்குதலும் சட்டை உரித்தலும் உண்டாகலின் அதற்குப் பாம்புரி என்பது பெயர்; பாம்போடி என்பதும் பெயர். அடிச்சொல்லாக அமையும் சீரிய சொல். உரிச்சொல் தொல்காப்பிய உரிச்சொல் இயல் (உரியியல்) மொழியாக்கத் திற்கு மூல வைப்பகமாம். அவுரியில் இருந்து நீலச்சாயம் எடுக்கப்படும். வடநாட்டுப் பயிர் எனினும் அதற்கு அருமையாக வேர் விளக்கம் கண்டு பெயரிட்ட கூர்மையராம் தமிழர், பாராட்டுக்குரியர், இதுகால் தென்னாட்டுப் பயிராகவும் அவுரி விளங்குகிறது. சாயப்பொருளாகவும், பசுந்தாள் உரப்பொரு ளாகவும் உள்ளது. தமிழகத்தில் நார்க்கயிற்றுக்குப் புளிச்சை பயன்பட்டது. * புளிச்சை காண்க. அவையடக்கம் அவையடக்கமாவது, புலவர் தாம் செய்த நூலிலே குற்றம் கூறாதபடி, கற்றோரை வழிபட்டுத் தம் அடக்கத்தால் அவரை அடக்கிக் கொள்வது. அவையடக் கியலே அரில்தப நாடின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்று என்பது தொல்காப்பியம் (செய். 112). அவையடக்கியல் பழைய ஆட்சி; அதன் பின்னாக்கம் அவையடக்கம். அறையு மாடரங்கும் மடப்பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ இறையும் ஞானமி லாதஎன் புன்கவி முறையில் நூலுணர்ந் தாரு முனிவரோ - கம்ப. அவைய. அவையம் அவை + அம் = அவையம். அவை = கூட்டம்; பன்மைப் பெயர் அம் =பெருமை ஒட்டு. அவையறிதல் அவையஞ்சாமை என்பன திருக்குறள் பொருட்பாலில் உள்ள ஈரதிகாரங்கள்.அறத்துப் பாலில் உள்ளது மக்கட்பேறு இவை இரண்டையும் இணைத்து மரபுவழி உரைகாணின் அவையம் பற்றிய விளக்கம் தெளிவாம். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் - திருக்.67 என்னும் குறளை அறியார் அரியர். பள்ளிப்பாடம் முதல் பல்கலைக்கழகப் பொழிவு வரை இடம் பெறும் குறள்களுள் ஈதொன்று. இதில் வரும் அவையத்தை ஆய்தல் வேண்டும். தொல்காப்பிய அரங்கேற்று , ஓர் அவையத்தின் கண் நிகழ்ந்த செய்தியை அதன் பாயிரம் குறிக்கிறது. அவ்வவையம் நிலத்தரு திருவிற் பாண்டியன் அவையம் எனப் படுகின்றது. பழநாளில் அளவுகோல், நிறைகோல், முகத்தலளவைக் கருவிகள் இன்னன, ஆளும் வேந்தன் பெயரால் வழங்கப்பட்டன என்பதைத் தமிழ் வரலாற்றுலகம் நன்கு அறியும். அவையமும் வேந்தன் பெயரால் அமைதலுண்டு என்பதைத் தொல்காப்பியப் பாயிரத்தின் வழியே அறியலாம். அவையம் என்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் கூடியிருந்து ஆய்ந்த பேரவையே என்பது விளக்கமாகும் செய்தி. ஏனெனில், அவையம் நூலை அரில்தப (குற்றம் நீங்க)த் தெளிந்த செய்தியையும் அப்பாயிரமே குறிக்கின்றது. புலவர்கள் ஒருமனப்பட்டுச் சேர்ந்து ஆய்ந்தமையால் புணர் கூட்டு என்றும் கூடல் என்றும் அவையம் பெயர் பெற்றது. புலவர்கள், தம்மைப் பாடாமை தமக்கோர் இழிவாமென எண்ணிய மூவேந்தரும், அதற்கு முழுத்தகுதியாம் சான்றாண்மைப் புலவர்களும் ஒருங்கிருந்து ஆராய்ந்த காலவியற் பேறு அது. புலவர்களால் பாடு புகழ் பெற்றவரே வீடு பேறும் உற்றவர் என்பதும் அந்நாள் கருத்தாக இருந்தது. புலவரொருவர் தன்னைத் தழுவாமையைத் தன்குறைபாட்டு அடையாளமாகக் கொண்டு வருந்திய மன்னவன் உரையும், புறப்பாடலில் (151) உண்டு. ஆகலின், புலவர் அவையத்து அல்லது சான்றோர் அவையத்து முந்தியிருப்பச் செய்தலே, ஒரு தந்தையின் தலையாய கடனெனப் பண்டைத் தமிழுலகம் கொண்டிருந்த குறிக்கோள் வாழ்வின் தூண்டுதலே குறிப்புச் சுட்டாகக் குறள்வழி இப்பாடலாக வெளிப்பட்டதெனக் கொள்ள வாய்க்கின்றது. இந்நாளில் இராசராசன் பரிசு பெறுதலும் சாகித்திய அகாதெமி பரிசு பெறுதலும் கின்னசு புத்தகத்து இடம் பெறுதலும், ஒலிம்பிக்கு ஆட்டத்தில் பொற்பதக்கம் இராயல் கழகத்தில் உறுப்பாண்மை ஆகியவை பெறுதலும் நோபல் பரிசு பெறுதலுமென, அந்நாள் தமிழுலகம் புலவர் அவையத்து இடம் பெறுதலைப் பேரளவு கோலாக - குறிக்கோள் அளவாகக் - கொண்டிருந்தது எனக் கொள்ளலாம். இது மரபு வழி ஆய்வுப் பயனாம். அவையல் கிளவி சான்றோர் அவைக்கண் உரைக்கத் தகாத சொற்களை அவையல் கிளவி என்றனர். அத்தகு சொற்களையும் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், அவற்றை வெளிப்படக் கூறாது மறைத்துக் கூற வேண்டுமென ஆணையிட்டனர். அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்என்றார் தொல்காப்பியர் (925) அவையல் கிளவியை இடக்கரடக்கு என்றனர் பின்னோர். இடக்கராவது சான்றோர் அவை. அடக்கு, அடக்கி உரைத்தல். உச்சகாரம், உப்பகாரம், பவ்வீ என்பவை மூன்று எழுத்துகளே. உ ஏறிய சகரம் (சு) உ ஏறிய பகரம் (பு) ஈ ஏறிய பகரம் (பீ) என்பவை அவை. இவ்வெழுத்துகளையும் கூறுதற்கு நாணி அவையல் கிளவி வாய்பாட்டல் கூறிய பெருமையது முந்தையோர் நாகரிகம். அழகு அழகை விரும்பார் எவர்? அழகராகத் திகழ விரும்பார் எவர்? அழகுக்கு அழகு செய்ய விரும்பும் உலகம் அழகை விரும்பாதிருக்குமோ? அழகின் ஆட்சி எங்கும் உள்ளது! எதிலும் உள்ளது! எவரிடத்தும் உள்ளது! கலையெல்லாம் அழகு! காட்சியெல்லாம் அழகு! கடவுளும் அழகு! எங்கும் அழகு எதிலும் அழகு என அழகுள்ளம் அழகை நாடித் தேடுகின்றது. ஆனால். ‘mHF v‹gJ v‹d? என வினாவின் அவ்வழகுள்ளம் விடை தருகின்றதோ? விழிக்கின்றது! அழகை எப்படிச் சொல்வது? அழகு அழகானதுதான் என்கிறது. அழகு தன்வயப் படுத்த வல்லது என்கிறது இயற்கை யெல்லாம் அழகுதான் என்கிறது. செயற்கையில் அழகில்லையா? அதுவும் அழகே என்கிறது. கவர்ச்சி மிக்கவை யெல்லாம் அழகுதான்; காட்சி என்ன? கேள்வியும் அழகில்லையா? Rit mH»šiyah? என்கிறது கடைசியில், அழகை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? சொல்வார் சொல் எல்லாம் அழகின் ஓர் ஓரத்தைச் சொல்லுமே அன்றி முழுதாகச் சொல்ல முடியுமோஎன்று கைவிரிக்கிறது. அழகுக்குத்தான் தனித் தமிழில் எத்துணை சொற்கள்? செங்கதிர்ச் சேயோனையும், கருமுகில் மாயோனையும், ஏந்து புகழ் வேந்தனையும், கடல்வள வண்ணனையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் - மழையையும் கதிரையும் திங்களையும் வழிபடு கடவுளாகக் கொண்ட தமிழர் - இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் அழகைப் பற்றிச் சொல்லியதை அறிய வேண்டுமோ? தமிழர் கண்ட பழமையான பேரிலக்கியத்தின் பெயரோ, வனப்பு; அவர்கள், புதுவதாகப் படைக்கும் இலக்கியத்திற்குத் தந்த பெயரோ விருந்து; இத்தகையர் படைத்த இலக்கியம் அனைத்தும் அழகின் இருக்கையே அல்லவோ! அவர்கள், அழகியலை - முருகியலைக் - கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கின்றனர். அவ்வார்வக் கொள்ளையில் புதுப்புதுப் பெயர்களைப் புனைந்து, அழகின் அழகைச் சுட்டுகின்றனர். அவர்கள் சுட்டிய அழகின் இலக்கணம் ஒன்றா? இரண்டா? ஒருபொருட் பன்மொழியாகப் புனைந்துள்ள சொற்கள் எல்லாமும் தனித்தனி இலக்கணமேயாம். அழகுக்கு மட்டும் அவ்விலக்கணம் இல்லாது ஒழியுமோ? உயர்ந்த - பரிய - விரிந்த - கவர்ச்சி மிக்க ஒன்றை எப்படி ஒரே சொல்லால் சொல்வது? ஒரே சொல்லால் முழுதுறச் சொல்ல முடியாததைச் சொல்லாமல் விட்டுவிட வளர்ந்த மனம் விட்டு வைக்குமோ? அதற்கு ஒரு வழி கண்டது. அஃது, ஒரு பொருட் பன்மொழி என்பதேயாம். அகன்ற கடலையோ, உயர்ந்த மலையையோ, விரிந்த வானையோ ஒரே பார்வையில் பார்த்து விட முடிகிறதோ? இன்னதே ஒருபொருட் பன்மொழி அமைந்த வகை பற்றிய விளக்கம். ஒரு பொருட் பன்மொழி கொண்டு அழகின் இலக்கணங் களாக நாம் அறிவன எவை? அழகு ஒழுங்குறுத்தப் பெற்ற அமைப்புடையது உள்ளத்திற்கு விருந்தாக நிறைவு தருவது உணர்வுடைய உள்ளத்தை ஓரொருகால் வருந்தவும் வைப்பது புதுமை புதுமையாகப் பொலிவுறுத்துவது தாயே போலத் தழைக்கும் இன்பம் தருவது அறிவும் செப்பமும் கொண்டு விளங்குவது உள்ளத்தின் எழுச்சிக்கு இடனாக இலங்குவது புறத்து வனப்பால் உள்ளக் களிப்பும் உள்ளொளியும் விரிய வைப்பது ஒப்பிட்டு ஒப்பிட்டு உவகை கூரச் செய்வது புனைந்துஇயற்றாப் பொலிவுடையதாய்ப் புனைவன வெல்லாம் வெல்ல வல்லதாய் அமைவது ஒரு கால் கண்டாரைப் பல்கால் கவர்ந்து வயப்படுத்தும் வளமுடையது இளமையும் திரட்சியும் இனிய தோற்றமும் வண்ணமும் வனப்பும் தன்னில் உடையதாய்த் தன்னை விழைந்தார்க்கு ஊட்டுவதாய் அமைந்தது காலத்தால் அழியாக் கட்டமைவும் வளமை குன்றாச் செழுமையும் சீர்மையும் செறிந்தது தகைமை, தண்மை, இனிமை, இணைமை, கவர்ச்சி, நன்மை, நிறைவு, உட்கோள், பக்குவம், பொலிவு, பசுமை, மலர்ச்சி, வலிமை, ஒளி, ஒலி, மணம், கொடை இன்னவை யெல்லாம் தன்னகத்தே யுடையது. அழகின் இவ்விலக்கணங்களை யெல்லாம் எவரேனும் அடுக்கி உரைத்தனரோ? ஆம்! ஒரு பொருட் பன்மொழியாம் வகையால் உரைத்தனர். பல சொற்களையும் திரட்டி அவற்றின் அமைதியை ஆயத் தலைப்பட்டால், அவ்வொரு பொருளின் கூறுகள் அனைத்தையும் ஒருங்கே கண்டு களிப்பர். முன்னே சுட்டியது போல், கடலை ஒரே பார்வையால் பார்த்து விடுவார் எவர்? மலையை முற்ற ஒரே நோக்கில் கண்டு விடுவார் எவர்? வான் மீன்களை யெல்லாம் வைத்த ஒரு காட்சியால் கணக் கிடுவார் எவர்? அவ்வாறே, எங்கெங்கு காணினும், எதைஎதைக் காணினும் அங்கங்கு அதுவதுவாய் அமைந்து கிடக்கும் அழகை யெல்லாம் திரட்டி அதன் இலக்கணத்தைப் பன் மொழிகளால் பகர்ந்த அறிவார்ந்த திறம் இன்பம் பயப்பதாம். மொழி நலமும் பொருள் வளமும் சேர்ப்பதாம். அழகின் சிரிப்பை அள்ளூறி உணர்ந்து திரட்டிய தீம்பாகாய் வழியக் கூவிய புதுவைக் குயில் பாவேந்தர். அவ்வழகின் சிரிப்பை முன்னரே துய்த்து உணர்ந்தோர் படைப்புகள் ஒருபொருள் பன்மொழிகளாம். உண்ணுதலும் சாப்பிடுதலும் ஒன்றன்றோ! பருகுதலும் குடித்தலும் ஒன்றன்றோ! அரும்பும் முகையும் ஒன்றன்றோ! குழந்தையும் பிள்ளையும் ஒன்றன்றோ! பொது நோக்கில் இவை ஒன்றாகத் தோன்றினாலும் நுண்ணிய வேறுபாடு உள்ளவை என்பதை அறிவாளர் அறிவர். அவரே, ஒரு பொருள் பன்மொழி விளக்கமும் அறிவர். அழகு சுட்டும் சொற்களை அகர முறையில் விளக்கத் துடனும் எடுத்துக் காட்டுடனும் காணலாம். 1 அணங்கு வயப்படுத்தி வருத்துவது. தலைவனும் தலைவியுமாய்க் கூடி இருந்த காலை இன்புறுத்திய இயற்கை நலங்கள் எவையோ அவையெல்லாம் அவர்கள் பிரிவுற்ற காலை பெருவருத்தம் செய்வதை அகத்திணைப் பாலைப் பாடல்கள் வழியே அறிக. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ - திருக். 1081 அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே - தொல். 1202 2 அணி ஒழுங்குபட்ட அமைப்புடையது. அணி = வரிசை; அணிவகுப்பு, அணிதேர் என்பவற்றைக் கருதுக. இருபாலும் முளையடித்து முளை களில் நெடுங்கயிற்றைக் கட்டி வரிசையாக மாடுகளைக் கட்டி நிறுத்தும் வழக்கத்தால் மாட்டுச் சந்தைக்குத் தாம்பணி என்பது பெயர். தாம்பு - கயிறு, சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்று என்னும் முல்லைப்பாட்டில் தாம்பு கயிறாதல் அறிக. தாம்பணி, தாமணியாய், தாமணி தாவணியாய்ச் சிதைவுற்று வழங்குதல் அறிக. 3 அந்தம் அகம் (அம்) + தம் = அந்தம். உள்ளத்திற்கு நிறைவு தருவது அந்தமாம்.அந்தமாதன வாழ்வோர்என்பது கம்பரந்தாதி (70).அந்தர் என்பதற்கு உள்ளென்னும் பொருள் உண்மை அறிக. 4 அமலம் அமலுதல் நிறைதல். நீர் நிறை குளமும் மலர்நிறை சோலையும் வளம்நிறை வயலும், உளம் நிறை வாழ்வும் அழகேயாம். இருக்க அமலம் மலர - திருவானைக். கோச்செங்கட். 3 5 அம் அமைதியாம் தன்மையால் இன்பம் சேர்ப்பது. அம்மையும் ஐம்மையும் அமைதியும் அழகுமாம். பரமர் அம்பாலிகைச் செம்பவளக் கொடிபங்கர் -மறைசை.3 6 அம்மை தாய்மையில் தழைவது அம்மையாம். இனி அமைதியாம் தன்மையும் அம்மையாம். அம்மையஞ் சொல்லார் -சீவக. முத்தி. 533 7 அலரி விரிவுடையது அலரியாம். ஞாயிற்றின் கதிரை, அலர்கதிர் என்பர். அரும்பாய் முகையாய் இருந்தவை அலர்வதால் பூவின் பொதுப்பெயர் அலரி ஆயிற்று. மலரை மலர வைப்பது கதிரோன் ஆதலால் கதிரோனும் அலரி எனப்படும். அழகு உறையுள்களுள் மலருக்குத் தனி இடம் உண்டன்றோ! அது, அழகுக்கு அலரிப் பெயர் தந்ததாம். 8 ஆரியம் ஆர் + இயம் = ஆரியம். கட்டமைந்தது. அருமையானது. இயம் என்னும் ஈறு இலக்கியத்தில் உண்மை காண்க. 9 எழில் எழு + இல் = எழில். எழுச்சிக்கு இடனாக அமைந்தது. அழகு உள்ளத்திற்கு எழுச்சியூட்டலின் எழில் ஆயிற்றாம். எழிலி என்னும் முகிற்பெயர் எழுதலானும் எழுச்சியூட்டலானும் அமைந்ததாம். 10 ஏர் ஏர் என்பதும் எழுச்சிப் பொருட்டதே. ஏர் என்பது ஏர்பு என்றுமாம். வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறுஎன்றார் நக்கீரர். ஏர் முதன்மைப் பொருளதுமாம். தொழில்களுக் கெல்லாம் முதன்மையான ஏர்த் தொழில், பள்ளிக்கு முற்பட வருபவனை முற்காலத்தில் ஏரான் என்று சொல்லிய வழக்கு ஆகியவற்றைக் கருதி முதன்மைப் பொருள் கொள்ளலாம். ஏர்ப்பின்னது உலகுஎன்று அதன் முன்மையைத் தெரிவித்தார் அல்லரோ பொய்யா மொழியார். (1031) 11 ஐ வியப்புக்கு இடமானது. ஐ வியப்பாகும் என்றார் தொல்காப்பியர் (868). ஐது, ஐயோ என்பவை வியப்பின் வழி வரும் சொற்களாம். ஐது அமை நுசுப்புஎன்பது அகம். 75. ஐயோ இவன் அழகுஎன்பது கம்பர் (அயோ. 625). 12 ஒண்மை ஒளியுடையது. ஒள் (ஒண்) + மை = ஒண்மை. ஒள் + ஒளி = ஒள்ளொளி; பேரொளி, ஒளியில் அழகுண்மை, இக்காலச் சரமின் விளக்குக் காண்பார் அறிவர். 13 ஒப்பு ஒன்றைப் போல ஒன்றாக ஒப்பிட்டு அமைக்கப் பெற்றது. ஒப்பத் தோன்றிய உவவனம். காட்சிக்கு ஒப்ப அமைக்கப் பெற்றது. ஒவ்வியம்; அஃது ஓவியமானது அறிக. எந்த வேலைப்பாட்டையும் இடப்பாலும் வலப்பாலும் ஒப்ப அமைத்தலும் அறிக. 14 கவின் கவ்விப் பிடிக்கத் தக்க அழகுடையது கவி, கவின், உள்ளத்தைக் கவித்து ஈர்த்து நிறுத்த வல்லதாகலின் கவின் எனப் பெற்றதாம். கைபுனைத் தியற்றாக் கவின்பெறு வனப்புஎன்பது நக்கீரர் வாக்கு (திருமுரு. 17). 15 களை கள், களி, களை; களிப்புக்கு, இடனாக அமைந்தது. களிப்பொடு திரிவார் இயற்கை அழகராகத் திகழ்தல் ஒருதலை. கவலைக்கோடு உடையார், எத்தகு அழகராயினும் பொலிவற்றுத் தோன்றல் கண்கூடு. இனி, அழகு குறைப்பனவற்றைக் களைந்து, அழகுக்கு உரியவற்றைச் செறித்து வைத்தலால் களையுமாம். 16 காந்தி காந்து, காந்தம், காந்தி என்பவற்றைக் கருதுக. காந்தம் ஒளிப்பொருள் ஆவதுடன், கவர்ச்சித் தன்மையுடையதுமாதல் தெளிவு. சூரிய காந்தி என்பது கதிரோன் வயமாகி மலர்முகம் காட்டல் கண்கூடு. 17 காமர் நிறைந்த விருப்புக்கு இடமானது. கமம் நிறைவு ஆகும். காமம் என்பது. கமம் என்னும் நிறைவு மூலத்தின் வழி வந்த சொல்லே, இன்பத்துப் பாலைக் காமத்துப்பால் என வள்ளுவம் வழங்குவதும் அறியத் தக்கது. 18 காரிகை காரிகை அழகாதல் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை(571) கண்நிறைந்த காரிகை(1272) எனக் காரிகையைப் பொருள் விளங்க விரிப்பார் வள்ளுவர். காரிகைப் பெயர் பெண்ணுக்கு ஆதல் அழகு நலத்தொடு பண்பு நலமும் கருதியதாம். 19 குழகு குழகுக்கு இளமை, குழந்தை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. மழவும் குழவும் இளமைப் பொருள என்பார் தொல் காப்பியர் (765). குளகு இளந்தளிராகும். இளமை அழகுக்குரியது என்பது, கழுதை, குட்டியாக இருக்கும்போது எட்டுப்பங்குஎன்னும் பழமொழி காட்டும். குழகன் அழகன், முருகன் என்க. 20 கேழ் கேழ் என்பது வண்ணமாம். வண்ணத்தில் அழகு பொதுளி நிற்பதாகலின் அழகு கேழ் எனப் பெற்றதாம். 21 கொம்மை கொம்மையாவது திரட்சி எங்குக் கொழுமையும் வளமையும் திரண்டிருக்கிறதோ, அங்கு அழகும் உண்டாம். கொம்மை மகளிர் மார்பகத்தைக் குறிப்பது. அவர்தம் அழகு நலச் செறிவு ஆங்குண்மையால். கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் என்றார் திருவள்ளுவர் (1087) 22 கோலம் வரிவனப்பு உடையது. கோல் திரட்சி, வளைவு, வரி என்னும் பொருள்களையுடையது, வீட்டின் வனப்பை முன்றில் கோலம் முன்னுரை போல விளக்குவதாம். அழகிய வளையல் அணிந்தாள் அன்மொழியால் கோல் வளையாதல் இலக்கண முறை. எழுதுவரிக் கோலத்தார் என ஏடும், எழில் மகளும் இரட்டுறலால் இலங்குவர். 23 சந்தம் நறுமணம் சந்தம். சந்தம் அழகாவது. சந்தம் மடிய வடிவான் மருட்டிய தாழ்குழலேஎன வரும் காரிகை விளியால் விளக்கமாம். 24 சாயல் தோற்றப் பொலிவுடையது. மயிலன்ன சாயல் என்பர். சாய் - சாயை - சாயல்; வடிவ ஒப்பே சாயலாம். உருவும் நிழலும் போல்வதாகலின் சாயை சாயலாயது என்க. 25 சாரு, சார் இவை அழகு சுட்டும் சொற்களாக நிகண்டாலும் அகர முதலிகளாலும் அறியப் பெறுகின்றன. உளவியலுள் தனிச் சிறப்பினது சார்ந்ததன் வண்ணமாதல் என்பது. அழகுக்கு அத்தன்மை யுண்மை விளக்க வேண்டியது இல்லை. குற்றாலச் சாரலும் கொள்ளை யருவிச் சூழலும் சார்ந்தார் ஒருவர் தம்மை மறந்து அவற்றின் வயத்தராதல் கண்கூடு. சார்ந்தார் களைப்பையும் கவலையையும் மாற்றிக் கிளர்ச்சியும் களிப்பும் நல்கும் அழகை சார், சாரு என்றது பொருந்துவதேயாம். 26 சித்திரம் தீட்டப்பெறும் வண்ணத்திலும் வரியிலும் வனப்புக் கொலுக் கொள்ளலின் அழகு சித்திரம் எனப் பெற்றதாம். சித்திர வேலைப்பாடு உடைய சிலம்பு சித்திரச் சிலம்பு எனப் பெற்றது. சித்திரம் ஆங்கு அழகுப் பொருள் தந்தது. ஓவியம் என்பதும் சித்திரத்துடன் ஒப்பக் கருதுக. செத்திரம் > சித்திரம், செத்து = போல. புலி போல என்பது புலி செத்து எனவரல் இலக்கிய ஆட்சி. 27 சிறப்பு சிறப்புடைய பொருளில் அழகும் உண்மையால் அழகு சிறப்பு எனப்பெற்றதாம். அழகையும் புகழையும் தன்னகத்து அகப்படுத்திக் கொள்வது யாவது அஃது சிறைப்பாகிச் சிறப்பும் ஆயதாம். இறைப்பு, இறப்பு நோக்குக. ஏட்டைக் கட்டி இறைப்பிலே (இறப்பிலே) வை என்பது பழமொழி. ஐகாரம் அகரமாதல் மொழியியல். 28 சீர் செவ்விதின் அல்லது சீர்மையின் அமைந்தது. சீர்மை உடைய ஒருத்தி சீர்த்தி எனப்பெற்றாள் (மணிமே.). சீர்த்தி கீர்த்தியாய் வடமொழி வழக்குப் பெற்றது.சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பியம், மிகு புகழ் உடையது அழகுடையது மாம். காந்தியாரின் அழகு தனிப் பேரழகாயதும், அவர்தம் பொக்கைவாய்ப் புன்முறுவல் எவரையும் வயப்படுத்தியதும் அவர்தம் சீர்த்தியால் வாய்த்ததாம். 29 செவ்வி செவ்விதாக அல்லது தகவுற அமைந்தது. அமைப்புச் செம்மை அழகுச் செம்மையாதல் வெளிப்படை, ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைதல் செவ்வியது. ஆகலின் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாம். காண்பார்க்கு இன்பமும் நலமும் செய்யும் காலம் செவ்வி எனப்பெறும். செவ்விது நன்மை தருவது, நேர்மையானது எனவும் பொருள் தரும். இவ்வெல்லாம் அழகுக்கும் உண்மையின், செவ்வி எனப் பெற்றதாம். செம்மை வழிவந்த செவ்வையும் இவண் எண்ணத் தக்கதே. 30 செழுமை செழுமை குலாவும் ஒன்றில் அழகுண்மை எவரும் அறிந்ததே. செழுமையற்ற ஒன்று, செழுமையான ஓவியத்தும் பாவியத்தும் பயிலுங்கால் அழகுற இலங்குவது வெளிப்படை. பாலைப்பாக்களில் காணும் சுவை அழகே யன்றோ! 31 சேடு சே, சேண், சேடு என்பவை உயர்வு என்னும் பொருள் சுட்டுவன, செழுமைப் பொருள் போலவே, உயர்வுப் பொருளும் அழகேயாம். ஆதலால் சேடு எனப்பெற்றது. அது, நரை திரை மூப்புக்கு ஆட்பட்ட அன்னையின் ஓவியம், உள்ளத்துச் சுரக்கும் உயரன்பால் தெய்வமாகத் திகழ்வது இல்லையா? 32 சொக்கு சொக்க வைப்பது யாது? அதன் பெயர் சொக்கு. சோம சுந்தரரைச் சொக்கன் என்றே குறிக்கும் நம்பி திருவிளை யாடல். அச்சொக்கன் ஆட்டத்தில் சொக்கியவள் சொக்கியாம் உமையம்மை! கவர்வது, மையலூட்டுவது, தூயது என்னும் பொருள் தரும் சொக்கு என்னும் சொல் அத்தகவால் அழகையும் சுட்டுவதாம். சொக்கப்பொன் என்பது மக்கள் வழக்கில் உண்டு. 33 தகை, தகைமை தகவும், தகவாம் தன்மையும், தகையும் தகைமையுமாம். அன்பு, அருள், ஒழுங்கு, பெருமை அமைந்தது அழகின்றி யமையுமோ? ஆகலின் தகையும், தகைமையும் அழகெனப் பெற்றன. இனித் தகவும் தகுதியும் அழகினவே என்க. 34 தளிமம் குளிர்ச்சி, திருக்கோயில், மழை, விளக்கு முதலிய பொருள் தரும் தளியின் அடியாகப் பிறந்த தளிமம் அழகுப் பொருளுக்கு உரிமை பூண்டதாம். உளத்திற்கு உவகையும் நிறைவும் தருவன வெல்லாம் அழகின் இருக்கையாகலின் தளிப்பொருளெல்லாம் அழகின் மூலமேயாம். 35 தென் தென், தேனாம்; தேனார் இசையாம்; தேனுகர் ஈயாம்; தென்னி வளைந்த தென்னையாம்; தென்னா தெனா என இசை மாலையாம்! தென்னுண் தேனின் செஞ்சொற் கவிஎன்றார் கம்பர். இனிய தென்னின் இயல்பறிந்தோர் தென் என்பதற்கு அழகுப் பொருள் கண்டனர். அழகாய் அமைத்தனர். 36 தையல் மாதர் காதல் என்பது தொல்காப்பியம். மாதரும் தையலும் வேறன்றே! ஆகலின் தையல் என்பதும் அழகுச் சொல்லாயிற்று. கோணல் மாணல் மரமாயினும் ஒழுங்குறுத்தி, அறுக்கும் வகை அறுத்து, பொளியும் வகை பொளித்து, இணைக்கும் வகை இணைத்து வனப்புறுத்தும் கலை தச்சு ஆகும். தச்சு மரத்தச்சு, கற்றச்சு, கொற்றச்சு எனப் பலவகையாம். தச்சுக் கூலியே தசகூலியாம். இத் தச்சுத் திறம் தையல் என்க. இஃதழகுக் கவையெனல் வெளிப்படை யவனத் தச்சரும் இவணுறைந்தமை கழகச் செய்தி. 37 தோட்டி தோட்டியாவது செல்லும் போக்கில் செல்லவிடாது பற்றி இழுத்து நிறுத்தி வைப்பது. யானைத் தோட்டியால் புலனாம் இது. இவ்வாறே கண்டாரைத் தன் கண் நிறுத்த வல்ல அழகும் புனைவால் தோட்டி எனப் பெற்றதாம். கண்ணுள் வினைஞர் என்னும் பெயரும் ஓவியர்க்குண்மை கருதத் தக்கது. 38 தோல் தோல் ஆவது எண்வகை வனப்பினுள் ஒன்று.இழுமென் மொழியான் விழுமியது நுவலல் தோல் வனப்பின் இயல்பாம். அழகு நடையில் அருமையான பொருளைக் கூறக் கேட்போர் வயப்படுவர் என்பது ஒருதலை. வயப்படுத்தும் சொல்லழகும் பொருளழகும் அழகே என்பதும் ஒரு தலை. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை -திருக்.1043 39 நலம் நலமாவது நன்மை, மங்கலம்,சீர்மை முதலிய பொருள் தரும் சொல். விருப்பும் கண்ணோட்டமும் இன்பமும் நலமாம். இவையுள்ள இடம் அழகு உறையுள் எனற்கு ஐயமின்றே! ஆகலின் நலனும் அழகெனலாயிற்றாம். 40 நவ்வி இளமைத் தன்மையும் மானும் நவ்வியாம். இளமையில் அழகுண்மை அறிந்ததே மானின் அழகோ கலைமான் எனப் பெயரீட்டுரிமைக்கு இடனாயிற்று. நவ்வியம் புதுமைப் பொருள்தரும் சொல். புதுமைக் கவர்ச்சி எவருக்கும் உரியதே. ஆகலின் நவ்வி அழகுச் சொல்லாயிற்றென்க. 41 நன்கு நன்றாக அமைந்தது நன்கு எனப்பெறும் அமைய வேண்டிய அமைப்பின்படி அமைந்ததே அழகாக விளங்கும் ஆகலின் அழகு நன்கு எனப் பெற்றதாம் நன்மை தருவதாலும் நன்கு என்பதற்கு அழகு உரியதாம், உள்ளக் கிளர்ச்சியால் உவகையைப் பெருக்கி உயிரை வளர்ப்பதாகலின். 42 நோக்கம், நோக்கு நோக்குவார் நோக்கத்தைத் தன்னகத்தை விட்டு அகலா வண்ணம் நிலைபெறுத்துவது அழகு ஆகலின், நோக்கம் நோக்கு என்பவையும் அழகின் பெயர் ஆயினவாம். மணிமேகலையார் அழகை. ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?எனச் சாத்தனார் வினவுதல் வழி வியந்துரைத்த தறிக. 43 பதம் பதம் = பக்குவம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்என்னும் பழமொழியால் பதம் பக்குவமாதல் புலப்படும். பக்குவமாக அமைந்தது பதம் ஆயிற்று பக்குவமாக அமைந்தது நாச் சுவையூட்டுவது போல எல்லாப் புலன்களுக்கும் சுவையூட்டும் எழிலும் பதம் ஆயிற்றாம். 44 பாங்கு இணக்கம் , உரிமை, தகைமை, பக்கம், முறை முதலிய பொருள்தரும் பாங்கு என்னும் சொல், அழகையும் சுட்டும். இடத்துக்கும் இயல்புக்கும் தக இணக்கமாக அமைதல் அழகின் இருப்பாம். வளமான பூங்கா எனினும் அதனிடம் பாங்கு அமையாக்கால் அதன் அழகு வயப்படுத்துவது ஆகாதே! அழகின் அமைதியில் ஒன்றற்கு ஒன்று இணக்கமாதல் வேண்டத் தக்கதாம். 45 பூ வனப்பின் வைப்பகமாக ஒரு வனம் திகழ்ந்தாலும் அதன் பூவே முதற்கண் கொள்ளை கொள்வதாம். பூவின் அழகும் கவர்ச்சியும் மங்கல மாண்பும் அறிந்தோர், அழகையே பூவெனப் பெயரிட்டுப் போற்றினர் என்க. பொன் வைக்கும் இடத்தில் பூஎன்னும் பழமொழி பூவின் சிறப்பை உணர்த்தும். 46 பை பை என்பது பைம்மை அல்லது பசுமை. பச்சை மணி பரப்பி வைத்தாற் போலத் திகழும் புல்வெளியில் வேறு செடி கொடி மரங்கள் இல்லையாயினும் அழகு நலம் உண்டாகலின் ஒரே வண்ணப் பரப்பும் அழகே எனக் கண்டது பை என்க. 47 பொலம் பொலம் என்பது பொன். பொலங் கொடி என்பது பொற்கொடி பொன்னின் அழகும் பொலிவும் மதிப்பும் எவரும் அறிந்தது. ஆகலின் பொலம், பொலிவு, பொற்பு, பொன் என்பன அழகைச் சுட்டினவாம். 48 பொலிவு பொன்னின் அழகு பொலிவு எனப் பெறும் நிறைவும் பொலிவாம். பொலிவான அழகு, அழகு பொலிகின்றது என்னும் தொடர்கள் பொலிவுக்கும் அழகுக்கும் உள்ள இணைப்பை விளக்கும். 49 பொற்பு,பொன் பொலம் பொலிவு என்பன போல இவையும் பொன் வழியாக அழகைச் சுட்டும் சொற்களே. பொற்பு என்பது அழகேயன்றி அழகுறுத்துதலையும் சுட்டும். புனைதல் என்பதாம் அது. 50 மஞ்சு மஞ்சு, மைந்து என்பதன் போலி. மஞ்சன் கழல் என்றார் கம்பர். மைந்தாவது வலிமை; ஆடவர்க்கு வினையே உயிர் என பராகலின் வினையாற்றற்குரிய இடத்து அழகும் பொதுளுதல் ஒருதலை. ஆகலின் மஞ்சு அழகு எனப் பெற்றதாம். 51 மணி மணியாவது ஒலியும் ஒளியுமாம் மணி மாணிக்கமும் அணிகலன்களுமாம். இனிய ஒலியும், எழில் வாய்ந்த ஒளியும், மணிக்கலன்களும் அழகின் இருக்கையவாகலின் மணி அழகு டைமையாயிற்றாம். இனிக் கண்ணின் மணியோ எவற்றினும் அழகு விஞ்சியதாம். பாவை என்பது அதன் அருமை காட்டும். 52 மதன் இளமை அமைந்ததும், வாளிப்பு உடையதும் மதன் எனப்பெறும் மழலை மதலை எனப்பெறல் அறிக. மதலையாய் வீழூன்றியாங்குஎன்பதால் மதலை மக்கட் சுட்டாதல் தெளிவு. மழ குழ, என்பன போல மத என்பதும் இளமை சுட்டும். மதர்ப்பு என்னும் கொழுமையும் மதன் காட்டும். ஆகலின் மதன் அழகாயிற்றாம். 53 மா பெருமை சுட்டும் மா, உரிச்சொல்; மாண்பின் மூலம். அழக்குத் தனிப் பெருமையுண்டாகலின் மா எனப்பெற்றது. அவையில், அழகர் சிறப்பு தனிச் சிறப்பாம். ஆடை பாதி ஆள் பாதிஎன்பது பழமொழி செல்வமகள் மாமகள் எனப்பெறுதலும் அறியத் தக்கது. 54 மாண்பு மா என்னும் உரிச்சொல் வழிவந்த சொல் மாண்பு. அது, மா அழகாதல் போல, அழகு சுட்டும் சொல்லாயிற்று. 55 மாதர் விருப்புக்கு உரியர் மாதர்,மாதர் காதல் என்பது தொல்காப்பியம். மாதர் அழகால் விருப்புக்கும், பண்பால் வழிபாட்டுக்கும் உரிமை பூண்டவர். தாய்மையும் இறைமையும் தங்கிய வடிவு மாதர் ஆகலின் அழகு குறித்த சொல்லாயிற்றாம். 56 மாமை மாந்தளிர் போலும் நிறம் மாமை, பச்சைப் பசேல் எனத் திகழும் மாமரத்தின் கிளை நுனிதோறும் செம்பசுமை அல்லது பொன்பசுமை திகழும் தளிர்கள் அரும்பி அசையும் காட்சி, மரம் முழுவதையும் விலக்கித் தன்மாட்டே காண்பாரை வயப் படுத்துதல் கண்கூடு, ஆகலின் மாமை அழகு ஆயிற்றாம். 57 மாழை பொதுவில் உலோகம் என்னும் பொருள்தரும் மாழை, சிறப்பாகப் பொன்னைச் சுட்டும், இனி மாழை மான்மட நோக்கிஎனச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் மாழைக்கு உண்டு. ஆகலின் மாழை அழகே. 58 முருகு அழகு, இளமை, மணம், தெய்வம் இன்ன பல உயர் பொருளையே சுட்டுவது முருகு. ஆகலின் முருகுறையும் மலையிடத்து இறைவனை முருகனாக மலைவாணர் கண்டு வழிபட்டனர். முருகனை அழகன் எனவும் குழகன் எனவும் கொண்டாடினர். தெய்வ முருகில், அழகு கொஞ்சுவதைச் சொல்ல வேண்டுமோ? 59 யாணர் யாண், அழகு எனப்படும். யாணர் புது வருவாய் உடையவர் என்னும் பொருளது. மிகு வருவாய் உடைய வணிகர் கலியாணர் எனப் பெறுவர். வளத்தைத் திருவாகக் கண்டவுள்ளம் வருவாயை யாணராக- அழகாகக் கண்டது. 60 வகுப்பு வகுக்கப் பெற்றது வகுப்பு. வரன்முறையாக வகுத்துக் கொண்டு பாடப் பெறும் ஒருவகை நூல் புய வகுப்பு எனப் பெறுகிறது. காடாகக் காணும் காட்சியிலும், வகுத்துக் காவாகக் காணும் காட்சி அழகுடைய தன்றோ? 61 வடிவு வடிவாவது தோற்றம் தோற்றச் சிறப்பு அழகேயாகலின் வடிவு அழகெனப் பெற்றதாம். வடித்து எடுக்கப் பெற்ற சிற்பத்தின் அழகை என்னென்பது! கல்லைக் கனியாக்க வல்ல கலைத்திறம் வடிவேயன்றோ! 62 வண்மை பல்வகை வண்ணங்களும் கெழுமிய தன்மை வண்மையாம். வண்ணத்தில் வனப்புக் கொஞ்சுவதால் தானே, உடுக்கும் உடைகளில் எண்ணரிய வண்ணங்கள்! வண்ணப் பூக்களைத் தேடி ஈக்களே மொய்க்குமானால் மாந்தரைச் சுட்டுவானேன்? விளம்பர உத்திகள் வண்ண உத்திகளாகப் பளிச்சிடுகின்றன அல்லவோ! இனி வளமைத் தன்மையாம் கொடையும் பாடு புகழால் அழகுறல் புறப்பாடலில் காண்க. 63 வளம் வளம் செறிந்த இடமும் காட்சியும் உருவும் வளமாகவே சொல்லப்படுகின்றன. வளனற்ற ஒன்றே ஓவியத்தும் காவியத்தும் வளமுடையதானால், உண்மை வளமுடையது எத்தகு அழகு பெறவல்லது! உலகமே, அளப்பரும் வளப்பெருங் காட்சி என்றால் வளமை அழகே யன்றோ! 64 வனப்பு வன்னிலம் எனப் பெறுவன முல்லையும் குறிஞ்சியுமாம். காடும் மலையும் கவின் கொள்ளைகள்; கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பின; ஆகலின் வனத்தினின்று வனப்புச் சொல் அழகுக்கு வாய்த்ததாம். குறிஞ்சிக் கபிலனும் முல்லைப் பூதனும் வனப்பியல் தோய்ந்து வளமுறப் பாடியவை தனி வனப்பினவாம். 65 வாகு அழகில் தோய்ந்த வாகு, வாய்த்தது என்னும் பொருள் உடையதாம். கைவாகில் வை என்பர். வாய்க்கில் வாக்கில் வாகில் என வந்ததாம். ஒழுங்கு என்னும் பொருள் வாகுக்குண்மை அகரமுதலிகள் சுட்டும். ஒழுங்குற அமைந்தது அழகெனக் குறித்ததாம். 66 வாமம் செல்வம், ஒளி, மார்பு முதலிய பொருள் தரும் வாமம் அழகும் சுட்டும். வாமன் வாமி என்பவை தெய்வக் குறிப்புடை யவை. தாமரைக் கண்ணன், கண்ணன் எனக் கண்ணழகால் குறிக்கப் பெறுவன். அவனை வாமலாசனன் எனவும் திருமகளை வாமலோசனை எனவும் வடமொழியாக்கிக் காட்டல் இருபிறப்பியாம். 67 விடங்கம், விடங்கு ஆண்மையும் ஆற்றலும் கெழுமியதில் அழகும் திகழுமாகலின் இவை அழகெனப் பெற்றனவாம். விடபம், விடை, இடபம் எனப் பெறும் காளையின் அழகும் ஆற்றலும் அறிவோர் அதன் அழகையும் உணரக்கூடும். ஏறுபோல் பீடுநடை என்பதும், அதன் திமில் சிறப்பும் கருதுக. திவாகரம் (1397, 1398) சுட்டும் அழகின் பெயர்கள். ஏர்வனப்பு எழில்யாணர் மாமை கேழ் தையல் காரிகை தோட்டி கவினே விடங்கம் வாமம் வகுப்பு ஒப்பு பஞ்சு பொற்பு காமர் அணிஇவை கட்டழ காகும் என்பதும். நவ்வி அந்தம் பை பூபொலம் அற்புதம் செவ்வி ஒண்மை மாண்புஐ சித்திரம் அழகே என்பதும் ஆக 29 சொற்களாம். இவற்றுள் அற்புதம் ஒழிந்த எல்லாச் சொற்களும் தமிழே. திவாகரர்க்குப் பின் வந்த பிங்கலர் (1941, 1942) அழகு என்னும் பொருள்தரும் சொற்கள் ஐம்பத்திரண்டு கூறுகின்றார் ஏரும் வனப்பும் எழிலும் இராமமும் காரிகையும் மாவும் அம்மையும் கவினும் செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும் அணியும் அணங்கும் யாணரும் பாணியும் மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் வண்ணமும் வளமும் பூவும் பொற்பும் சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும் மதனும் பாங்கும் அம்மும் சொக்கும் சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் அந்தமும் ஒண்மையும் விடங்கமும் அமலமும் குழகும் கோலமும் வாமமும் காந்தியும் அழகின் பெயரலங் காரமும் ஆகும் என்றும், கொம்மையும் மனோகரமும் சாருவுங் கூறும். என்றும் குறிப்பார். சூடாமணி நிகண்டார் (8 24 25) 42 சொற் களைச் சொல்வார். அவை எழில்வண்ணம் யாணர் மாமை இராமமேர் நவ்வி நோக்குச் செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் குழகொடு பொற்பு நன்கு கோலமே மணிவ னப்புப் பழிபடா விடங்கம் மாழை பத்திரந் தோட்டி பாங்கு சுந்தரம் அணங்கு மஞ்சு சொக்குத்தே சிகமம் பொன்னே சந்தங் காரிகைக வின்பூத் தளிமமே வாமம் காமர் அந்தமே மயமே யொண்மை யாய்ந்தவா றேழுந் தானே வந்திடு மழகின் பேராம் என்பார். இனி நிகண்டு நூல்களால் சுட்டப் பெறாத சொற்களும் உள. வெள்ளிவிழாப் பேரகராதி (சூபிலி பேரகராதி)யில் கண்டுள்ள சொற்கள் வருமாறு அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம், அம்மை, அலரி, ஆரியம், இராமம், இல்லிதம், இலாவண்யம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு, கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம், சந்தம், சவி, சாயல், சித்திரம், சீர், சுந்தரம், செவ்வி, செழுமை, சேடு, சொக்கு, சோபம், சௌமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம், தையல், தோட்டி, தோல், நலம்,நவ்வி, நன்கு, நோக்கம், நோக்கு, பதம், பத்திரம், பந்தம், பந்துரம், பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு, மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகம், மனோக்கியம், மாண்பு, மாதர், மாமை, மாழை, முருகு, யாணர், யௌவனம், வகுப்பு, வடிவு, வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம். அன்றியும் பேரழகின் பெயர் அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம், சிறப்பு, பொலிவு, மா, அழகு வகை - கொம்மை, மனோகரம், சுந்தரம், சித்திரம், சாரு. நிகண்டு நூல்கள், அகரமுதலி நூல்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கும் அழகு பற்றிய சொற்களை ஓராற்றான் திரட்டித் தரப்பட்டுள்ளன. திரட்டெல்லாம் தமிழோ? பிறவும் உண்டு! தமிழ்ச்சொற்களைத் தேர்ந்து அவற்றை அகர முறையில் அமைத்துச் சிறிது விளக்கம் தந்தது இத்தொகுப்பாம். ஒவ்வொரு சொல்லின் ஆட்சிக்கும் எடுத்துக்காட்டும் வழக்காறும் காட்டின் விரிவாம் என்று அமைந்தாம். தமிழ்ச் சொல்வளம் காண விழைவார்க்கும், காட்ட விழைவார்க்கும் இத்தகு ஆய்வுகள் துணையாம் என்றும் இத்தமிழ்ச் சொல்வளம் சொல்லாக்கப் படைப்புகளுக்கு ஏந்தாம் என்றும் கருதுக. நெல்லுக்குச் சொல்லென்பது ஒருபெயர் ! சொல்லின் பயன்பாடு கருதியது இவ்வாட்சியாம். அழகு காட்டல் எள்ளி இகழ்தல் ஒருவர் செயலை அவர் செய்வது போல் காட்டிக் குறும்பாக நகைத்தல் அழகு காட்டலாம் (ம.வ.) வலிச்சக் காட்டல் என்பதும் இது. அழகு நூறு (அலங்காரம்) அழகுறுத்திப் பாடப்பெறும் நூறு கட்டளைக் கலித் துறைப் பாடல்களைக் கொண்டது அழகுநூறாகிய அலங்கார மாம் (வ) பழனித் திருவாயிரத்தில் வரும் அலங்காரம் காண்க. இதனை இயற்றிய தண்டபாணியடிகள் இயற்றினவே வேல் அலங்காரம், மயிலலங்காரம், ஆறெழுத்தலங்காரம், வாளலங் காரம், தமிழலங்காரம் என்பன. அருணகிரியார் அருளிய கந்தரலங்காரமும் கருதத் தக்கது. தண்டியலங்காரம் மாறனலங் காரம் ஆகியவை அணியிலக்கணம் கூறுவன. அழல் அழல் = வெப்பு, தீ அழலுதல் எரிதல் வெதும்பல் வெம்பல் அழுதல். அகவெப்பின் வெளிப்பாடு அழல் ஆகிய அழுகை, அழலுதல், வெப்புறுதல், அழலுதல் ஆகிய ஒன்று அழிதலின் முதற்படி. அழன் அழன்று போவது அழன்; உயிரற்றுப் போன உடல் - பிணம் - அழன் ஆகும். இறந்தார் உடலை மூடிவைக்கும் பெருந்தாழி அழக்குடம் ஆகும். அழக்குடம் என்பது பிணக் குடத்தை (தொல்.354. நச்.) அழன்று குழன்று அழன்று = எரிந்து, வெதும்பி. குழன்று = குழைந்து, கூழாகி. அழலுதல் முதல் நிலை; குழன்று போதல் அதன் வளர்நிலை; சோறு காய்கறி அனலால் அழலும்; அனலால் அல்லது அழலால், மிகத் தாக்குண்ணுங்கால் அல்லது நெடும் பொழுது இருத்தலால் குழைந்து கூழாகிப் போகும். இதனை அழன்று குழன்று போயிற்று என்பது வழக்கு. அழி அழி: 1 அழி என்பது வைக்கோலைக் குறிக்கும்; வைக்கோலைப் பிணையலிட்டு அதரித் திரித்தலால் அழி எனப்பட்டது. உழுத நோன்பகடுஅழி தின்றாங்குஎன்றும் (125); உழவொழி பெரும்பகடு அழிதின்றாங்குஎன்றும் (366) புறப்பாடல்கள் அழி வைக்கோல் ஆதலை விளக்கும். அழி:2 அழி கரும்புச் சக்கைக்கு ஆதலை, பொங்கழி ஆலை என்னும் சிலப்பதிகாரத் தொடரால் (10 151) அறியலாம். வைக்கோலைக் குறிக்கும் அழியினின்று கரும்பாகிய இவ்வழியை விலக்குதற்கு, மிக நயமாக அரும்பத உரையாசிரியர் இதனைத் தூற்றாப் பொலிஎன்றார். அடியார்க்கு நல்லாரும் தூற்றாப் பொலியையே ஏற்று அமைந்தார். தூற்றும் பொலி ஆலை, நெற்களம் என்பதையும், தூற்றாப் பொலி ஆலை, கரும்படு களம் என்பதையும் குறித்தமை கொள்க! அழி என்னும் சொல்லுக்குக் கரும்புப் பொருள் உண்மையை அகரவரிசை நூல்கள் இனிமேல்தான் ஏற்றுப் போற்றுதல் வேண்டும். கதிர் அடித்து மணி எடுக்கப்பட்டுச் சவட்டப்பட்ட நெற்றாள்; வெட்டி ஆட்டப்பட்டுக் கரும்பின் சாறு எடுக்கப்பட்ட சக்கை ஆயவை அழியாம். அழிக்கப்பட்டு எஞ்சியது அழி. அழி:3 வீட்டுக்குப் போடப்படும் இரும்புக் கம்பி வேலி. * அகழி காண்க. அழிகதை அழி + கதை = அழிகதை, இற்றை அழிகதை, அழிப்பான் கதை, விடுகதை என்பவை முன்னை நாளில் பிசிர் எனப்பட்டதாம். அதன் வழுவாக வழங்குவது புதிர் என்பது. விடுகதையை அழிகதை என்பது பெரியகுள வட்டார வழக்கு. அழிப்பான் கதை என்பது முகவை மாவட்ட வழக்கு. அளித்தல் = கொடுத்தல்; அழித்தல் = இல்லாது ஆக்குதல் தக்கவிடை தந்துவிட்டால் வினாவுக்குரிய விடைபெற்று நீக்கப்படுவதால் அழிகதை ஆயது. எ-டு: கிணற்றுக்குள்ளே கிண்ணி மிதக்கிறது - வானத்தில் நிலவு. நாலு மூலைப் பெட்டி, நந்தவனத்துப் பெட்டி, ஓடும் குதிரைக்குட்டி, வீசும் புளியாக்கை - கமலை ஏற்றம். அழிச்சாட்டியம் அழித்து ஆட்டியம் > அழிச்சு ஆட்டியம் > அழிச் சாட்டியம். அழித்து ஆட்டிவைத்தல் அழித்தாட்டியம். அது மக்கள் வழக்கில் அழிச்சாட்டியம் என வழங்குகிறது. அழித்தல் முடித்து ஒதுங்கிப் போகாமல் அதற்கு மேலும் வாழ - அமைந்திருக்க - விடாமல் துன்புறுத்திக் கொண்டு இருப்பது அழிச்சாட்டியமாம். புண்ணின்மேல் சூட்டுக்கோல் வைத்து வைத்து எடுக்கும் கொடுமை போல்வது இஃது.அவன் அழிச் சாட்டியக்காரன் நெருங்கினாலும் தீமை! ஒதுங்கினாலும் தீமை என்பது அழிச்சாட்டியத்திற்கு ஆட்பட்டவர் அவலம். அழிதூ அழிது >mÊö. ஆண்பால் என்பது அழிந்ததும், பெண்பால் அழிந்ததும் ஆகிய பால்திரி பிறப்பை அழிதூ என்பது இலக்கிய வழக்கு. தனக்குரிய பாலியல் உணர்வு மாறி அழிவுற்றது. அழிதூ என்பதாம். மாற்றுத் திறனுடைய அவர்கள் பழநாளில் பேடி அலி எனப்பட்டனர். இதன் பழமை தொல்காப்பியத்தில் இடம் பெற்றது கொண்டு அறியலாம். அந்தணரில் அழிதூ ஆனீர் - கந்தபு. அழிதூஉ = அலி (நன்.அகந்தன் கா.36. 263 மயிலை.) அழிந்து ஒழிந்து அழிந்து = கெட்டுப் போகி. ஒழிந்து = அற்றுப் போகி. அழிந்து ஒழிந்து போனது அழிந்தொழிந்து போக நேரம் வந்துவிட்டதா?என்பவை வழக்கு மொழிகள். அழிதல், அழிந்து படுவதும், அழிந்ததற்குச் சான்று இருப்பதும் ஆகும். ஒழிதல், அழிந்ததன் தடமும் இல்லாமல் மறைந்து போவதாம். அழிபசி உடல்நலத்தையும் உளநலத்தையும் ஒருங்கே அழிக்கும் பசி அழிபசியாம். அற்றார் அழிபசி தீர்த்தல் - திருக். 226 அழிபசியை வள்ளலார் சீவகாருண்ய ஒழுக்கத்தில் விரித்து எழுதுகிறார். பசியினால் வரும் துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வருமின்பம் பர இன்பமாகும். என்கிறார். அழிமானம் அழி + மானம் = அழிமானம். மானம் அழிந்த அல்லது மானக் கேடாய நிலை. மான மழிதல் அழிமானமாய் முன்பின் மாறி நின்றது. அழிம்பன் அழிம்பு + அன் = அழிம்பன் = அழிம்பு செய்பவன். * அழிம்பு காண்க. அழிம்பு அழி > அழிம்பு. அறத்தை அழித்த செயல் அழிம்பு ஆகும். அழுக்கேறிய உள்ளத்துவழி நிகழ்வதும் அழிவு செய்வதுமாம் கேடும் தீமையும் அழிம்பு எனப்படுதல் மக்கள் வழக்கு. அழிம்புக்காரன் பிறகு எப்படிச் செய்வான்? என்னதான் சொன்னாலும் நீ உன் அழிம்பை விடமாட்டாய் என்பவை அவை. அழுக்காறாமை அழுக்கு + ஆறு + ஆ + மை = அழுக்காறாமை; அழுக்காறு கொள்ளாமை அல்லது பொறாமைப் படாமை. நல்லாறு, ஒழுக்காறு, இழுக்காறு என வழங்கும் வள்ளுவர் அழுக்காறு எனவும் வழங்குகிறார். அழுக்கு ஆறு = அழுக்கு வழிஅழுக்காறாமை = அழுக்கு வழி அல்லது மாசு வழியில் செல்லாதிருத்தல் ஆ = எதிர்மறைப் பொருளது. கடல் நீரில் குளித்தாரும் அதன் உப்புப் போக நன்னீராடல் வழக்கம். இவரோ, அழுக்காற்றிலே வீழ்பவர் என்னின் எத்தகு அருவறுப்பானவர்! பொறுமையின் எதிரிடையாகிய பொறாமையை அழுக்காறு என்கிறார் வள்ளுவர். அதன் இழிமை அத்தகையது. ஒருவன் நன்முயற்சியாளன்; நற்பண்பன்; பல்லோர் பாராட்டுக்குரிய நல்ல அறிஞன்; அவனைச் சோம்பனும் பண்பிலியும் அறிவிலியுமாகிய ஒருவன் பொறாமையால் பார்க்கிறான். இவன் பொறாமைப் பார்வை இவனுக்குத் தீமை செய்யுமே அல்லாமல், அவனுக்கு என்ன செய்து விடும்? பொறாமையாளன் பிறர் நலம் கண்டு புழுங்குவான்; வெம்புவான்; வெதும்புவான்; உறங்கான்; அமைதி கொள்ளான்; இவ்வளவும் கொண்டான் நோய்க்கு ஆட்படாமல் இருப்பனோ? தான் மேற்கொண்ட செயலில் ஈடுபடுவனோ? மாட்டான்? அதனால், பொறாமை உடையவனைக் கெடுக்கப் பகைவர் எவரும் வேண்டியதில்லை; அவன் கொண்ட பொறாமையே அவனைக் கெடுக்கப் போதுமானது என்றார் வள்ளுவர் (165) அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது அழுங்கல் இழப்புக்கு ஆட்பட்டோர் பலவகையாகக் குரலெழுப்பி வருந்துதல். அழுங்குதல் என்பதும் இது. தானென் இழந்ததிவ் வழுங்கல் ஊரே - நற். 36 அழுதல் அழுதல் = விரும்பாமல் வருந்திக் கொடுத்தல். அழச்செய்து பறித்துக் கொண்டது போல்வதால் கொடுத்தல், அழுதல் ஆயது. அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது. அவனுக்கு வன்படியாக அழுதேன்என்னும் வழக்கில் அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாகத் தருவது இருபாலும் இன்பம். அதுவே ஈத்துவக்கும் இன்பம் (திருக். 228) எனப்படும். பெறுபவர் தருபவரை வாட்டி வருத்திப்பெறுவது. கொடுப்பதாக இல்லாமல் அழுவதாக அமைந்து விடுகிறது. அழுவதிலும் (கொடுப்பதிலும்) பயனுக்கு அழுவதினும் பாழுக்கு அழுவதே மிகுதி என்பது வெளிப்படை. அழுதல் வகை அரற்றல் = சொல்லியதையே பலகால் சொல்லி அழுதல். அழுங்கல் = ஆழமாக எண்ணி அடங்காது அழுதல். இரங்கல் = நடந்ததை நினைந்து நைந்து அழுதல் ஏங்கல் = பெருமூச்சுவிட்டு அழுதல். கசிதல் = உள்ளடக்கி வைத்தும் மாட்டாமல் கண்ணின் கடையோரம் நீர் கசிய இருத்தல். கலங்கல் = தெளிவில்லா மயக்கத்தில் செய்வ தறியாது வருந்துதல். கலுழ்தல் = கண்ணீர் சொட்டுச் சொட்டென வீழ அழுதல். பொருமல் = உள்ளப் போராட்டத்தினால் உள் வெதும்பி அழுகையை அடக்கிக் கொண்டு இருத்தல். விம்மல் = சொல் வராமல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இருத்தல். புலம்பல் = ஆற்றுவார் தேற்றுவார் இல்லாமல் தனித்திருந்து பொருளற்ற சொற்களைத் தானே சொல்லிச் சொல்லி வருத்தல். துறுமல் = பிறர்படுத்தும் நெருக்கடியால் உளைதல். அழுது அடம்பிடித்தல் அழுது அடம்பிடித்தல் = நிறைவேற்றல். குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம்பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய வழியாகக் கொள்வதாம். அடம்பிடிப்பது என்பது தொடர்ந்து செய்வது; அடை மழை என்பது போல, அடம்பிடித்தல் பயன், நிறைவேற்றல், ஆதலால் அப்பொருள் தந்தது. அழுது அரற்றுதல் அழுதல் = கண்ணீர் விட்டுக் கலங்குதல். அரற்றுதல் = வாய்விட்டுப் புலம்பல். அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர் (சிலப். 237-9) அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை - திருக். 555 அரற்றுதல் என்பதற்கு அலறுதல், புலம்பல், ஒலித்தல் ஓலமிடல், பலவும் சொல்லித் தன்குறை கூறல் என்னும் பொருள்கள் உண்டு. காதல் கைம்மிகக் கனவின் அரற்றலைச் சுட்டுவார் தொல்காப்பியர் (பொருள். 256). அரற்று என்பதற்கு வாய்ச் சோர்வு என்பார். இளம்பூரணர். இக்காலத்தில் வாய்வெருவல், வாய்விடல் என அரற்று வழங்குகின்றது. அழுது வாய் குழறிஎன அழுது அரற்றுதலைச் சுட்டுவார் கம்பர் (ஆரண். 41). அழுத்தகம் அழுத்து + அகம் = அழுத்தகம் = அச்சகம். அச்சு பழஞ்சொல்; அச்சு ஆணி அச்சு அடித்தல் என்பனவும் பழஞ்சொற்களே. அச்சுத் திரட்டல் வேளாண்மை வழக்கு. நெல் நடவுக்குத் தக வயலில் சேறும் நீரும் ஆக்கிச் சமன்படுத்தல் அச்சுத் திரட்டல் எனப்படும். அச்சடித்தல் பிற் காலத்ததேனும் அச்சடிச் சீலை பழமைப்பட்டதாம். அச்சடிப்பது அழுத்திப் பதிப்பது ஆதலால் தமிழகத்தில் அச்சகம் எனப் பட்டதை ஈழத் தமிழர் அழுத்தகம் என்றனர். திருமகள் அழுத்தகம், முருகன் அழுத்தகம்என அவை பெயர் பெற்றன. அழுந்துதல் அடிப்பட்டு இருத்தல். அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கை - மதுரைக். 342 பொருள் நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரிய பாண்சாதியின் குடியிருப்பு(நச்.) அழுந்தூர் = தொல்பழமைப் பட்டதாம் ஊர்; பதியெழூஉ அறியாப் பழங்குடி கெழீஇய ஊர் என்பதுமாம். அழுந்தூர் வேள் என்பான் ஒரு வள்ளல் -தொல். அகத். 3 நச். அழும்பில் என்பதோர் ஊர். அழும்பில் அன்ன அறாஅ யாணர் - அகம். 44 அழுவங்காட்டல் அழுவம் + காட்டல் = அழுவங்காட்டல். இது அழுமாறு கேளி செய்தல் (கேலி செய்தல்) என்பது. பெரியகுளம் வட்டார வழக்கு. எள்ளுதலால் அழுமாறு படுத்துதல். இது வலிச்சக் காட்டல் எனவும் படும். இயல்பாக இல்லாமல் கால் கை வாய் முதலியவற்றை வலித்துக் காட்டலால் இப்பெயர் பெற்றது. அதனைப் பொறாதவர் வெருளவோ, வெருட்டவோ ஆதலால் வலிச்சக் காட்டலுமாம். கிருத்துவம் காட்டல் என்பதும் இது. அழுவம் துயரில் அழுந்தச் செய்வது, அழுவம். அழுவம்: 1 அழுவம் = ஆழம், ஆழமான கடல் கடல்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப - மலை. 528 அழுவம்: 2 அழுவம் = ஆழக்குழி, அழிவுறுத்தும் நிலம், அழிக்கும் கருவிகளையுடைய கோட்டை. ஆரிடர் அழுவத்து - மலை. 368 அழுவம்: 3 அழுவம் = போர்க்களம். வாளமர் அழுவம் - கந்தபு. சுந். 51 அழைப்பு முற்கால அழைத்தல் அழைஇ எனப்பட்டது. அன்பு தலைக் கொண்ட, மழலைத் தீங்குரல் மருட்டி அழைஇ - பெருங். 1 40 260-261 அளிக்குரல் அழைஇ - பெருங். 3 6 14 இக்கால அழைப்பிதழ் வகைகளையும் அச்சிடல் வனப்பு களையும் சொல்லி முடியாது. மண அழைப்பு, மருவீட்டு அழைப்பு, விருந்தழைப்பு இன்னவெல்லாம் அஞ்சல் துறைச் சுமைகளில் பெரும் பகுதியாம். அழைப்பதுதான் விருந்தா? அழையா விருந்தும் உண்டே! விழா எதுவும் கொள்ளாமல் முன்செய்த மொய்யை மீளப் பெறவே மொய்யழைப்பு ஒன்றும் இதுகால் தலை யெடுத் துள்ளது! வேறு விழா எடுக்கும் வாய்ப்பிலார், பலர்க்கும் பலகால் எழுதிய மொய்யைப் பெற்றாக வேண்டுமே! அதற்காக எடுப்பது மொய்யழைப்பு விழா! பழுத்த முதுமையர் பார்க்க வேண்டுவாரை எல்லாம் ஒருங்கே அழைக்கும் அழைப்பு விழா உயரிய மெய்யியல் அழைப்பாம். அளகம் அள் + அகம் = அளகம். அள் = செறிவு; அளகம் = மகளிர் கூந்தல்; வெள்ளப் பெருக்கு. அளகம் புனலும் மயிரு மாகும் - பிங். 3103 அள் = செறிவான முள்; முள்ளம் பன்றியின் முள். - திவா. அளக வகை அளகம் = செறிந்த கூந்தல். குழல் = இளையதாய் வளர்வது கூந்தல் = கூட்டி முடியுமாறு அமைந்தது. கூழை = கூந்தலினும் நீண்டது; ஆனால் முழுதுற நீளாதது. குந்தளம் = செறிந்தமைந்தது. ஓதி = வளர்ந்து நீண்டது. ஐம்பால் = ஐந்து பகுப்பாகக் கட்ட வாய்ப்பது, அழகாகப் பகுத்துக் கட்டுமாறு அமைந்தது என்பதுமாம். கதுப்பு = கன்னந் தொட்டுச் சுருண்டு கிடப்பது. சுருள், சுரியல் = சுருள் சுருளாக நெளிந்து கிடப்பது. கோதை = சடையாகப் பின்னாமல் உருட்டித் திரட்டிக் கட்டத் தக்கதும் கொழுமலர்க் கற்றை தாங்கி அழகு செய்வதும் ஆகியது. குருள் = பொன்னிறப் பொலிவால் கவர்வது. கூமல் = கூட்டி முடியத் தக்கது. அளகு அள் + கு = அள்கு > அளகு. அள் = செறிவு, நெருக்கம்; கு = சொல்லீறு. அன்னம், மயில், கோழி, கூகை ஆகியவற்றின் பெட்டை. கோழி கூகை ஆயிரண் டல்லவை சூழுங் காலை அளகெனல் அமையா - தொல். 1555 அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே - தொல். 1556 அளக்கர் அளம் = உப்பளம்; உப்பு விளை நிலம்; உப்பள வேலையர்; கடல் கழி முகம். அளக்கர் திணை விளக்காக - புறம். 229 அளபெடை அளபு + எடை = அளபெடை; அளவுக்குரிய தன் இரண்டு மாத்திரையில் மிகுந்து நெட்டெழுத்து ஒலிப்பது. நெட்டெழுத்து நீள்வதன் அடையாளமாக அதன் இனமாகிய குறில் இடப்படும். ஒற்றெழுத்து அளபெடையாயின் அவ்வொற்றே மீளவும் இடப்படும் (நன். 61, 62) உயிரளபெடை ஒற்றளபெடை என்னும் பெயரிய இவை மூன்று மாத்திரையும் ஒரு மாத்திரையும் ஆக மிகுதல் பொதுநிலை. ஆஅய் அண்டிரன் - புறம். 240 கண்ண் கருவிளை - நன். 62 அளம் கடல்சார் கழிமுகப் பகுதி அளம் எனப்படும். உப்பளம் என்பது விளக்கப்பெயர். உப்புச் செறிவுடைய மண் உப்பு அளம் எனப்படும். உப்பளம் பின்னர் அளம் என்றாலே அப்பொருள் தரலாயிற்று. அள் + அம் = அளம். அள் = செறிவு. அடர்த்தி; அம் = சொல் ஒட்டு. கடலுப்புநீர் கதிரின் காய்தலால் உப்பாக விளைவது அது. கூட்டியும் பெருக்கியும் அள்ளிக் குவிக்கும் அளவில் கிடைத்தலால் அளம் எனப்பட்டது. உப்பு, கல்லாகச் செறிவதால் அச்செறிவு வகையாலும் அளமாம். உப்புக்கல் என்பது வழக்கு. கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு நெடுநெறி ஒழுகை நிரைசெலப் பார்ப்போர் அளம்போகு ஆகுலம் கடுப்பக் கெளவை யாகின்றது -நற்.354 அளவளாவல் அளவு + அளாவல்= அளவளாவல். மனம் கலந்து பழகுதல். அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந் தற்று -திருக்.523 அளவி அளவு + இ = அளவி; அளக்கும் கருவி. எ-டு: மின் அளவி, வெப்ப அளவி காற்றளவி அளவு அள் > அள > அளவு. மாந்தன் நீர் வேட்கையால் நீரை அள்ளிக் குடித்தான். பசித்த போது அள்ளி உண்டான். ஆக்குவதற்கும் அள்ளி ஆக்கினான்; அவ்வாக்கத்திற்கும் உணவுக்கும் தேவையாம் உப்பை அள்ளி எடுத்தான். பிறர் கேட்ட போதும் கேளாப் போதும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்தான். அள்ளுதல் வழியாக அளவு என்பதைக் கண்டான். அள்ளுதற்கு அவனுக்கு வாய்த்தது ஒற்றைக் கையும் கூட்டுக் கையாகிய இரட்டைக் கைகளும். அக்கைகளே இம்முகத்தல் அளவை ஆகியது; அக்கைகளின் விரல்களே எண்ணல் அளவை ஆகியது; அதற்கு விரல்கள் பயன்பட்டன. இரண்டு பொருள்களை இரண்டு கைகளிலும் வைத்து கொண்டு அவற்றின் எடையை ஒப்பு நோக்கினான் இவ்வகையால் மூன்று அளவை வகைகளை (எடுத்தல் அல்லது முகத்தல், எண்ணல், நிறுத்தல்) அறிந்தான். அவன் காலடியால் அளந்தான் அது நீட்டல் அளவை யாயிற்று. ஆக நால்வகை அளவைகளுக்கும் அவன் கையும் காலுமே அளவைக் கருவிகள் ஆயின. அள்ளிய வகையால் உண்டாகிய அளவு பொதுப் பெயராய் முகத்தலளவை எண்ணலளவை நிறுத்தலளவை நீட்டலளவை என்பவற்றை வழங்கினான். பின்னர்க் கண்ணால் அளத்தல், காதால் அளத்தல், மூக்கால் அளத்தல், மூளையால் (தற்சிந்தனையால்) அளத்தல் என்பவற்றைக் கண்டான். சுண்டி அளத்தல் தெறித்து அளத்தல் சொட்டவிட்டு அளத்தல் மூச்சையும் நாடித் துடிப்பையும் அளத்தல், வெப்பு குளிர் மழை அளத்தல் என விரிவாயின. ஆயினும் அள்ளி எடுத்தலால் வந்த அளவு எல்லாவற்றிலும் ஒட்டிக் கொண்டது. அளவை வகைகள், நிறுத்தளத்தல், பெய்த்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந் தளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைத்து என்பார் நச்.(தொல்.7) அளவை அளவு + ஐ = அளவை. தருக்கமிட்டுத் தருக்கமிட்டு மெய்ம்மை கண்டு உறுதி செய்தல் அளவையாம் (Logic). அளவைநூல் கற்றவர் அவர்; அவரிடம் வாயைக் கொடாதேஎன்பது கற்றோர் வழக்கு. அளறு அள் + அறு = அளறு. அள் = செறிவு அறு =அற்றது. அளறு = செறிவற்ற மண் . அண்ணாத்தல் செய்யாது அளறு (திருக்.255) அள்ளல், களர், நொதி, வதி எனவும் படும் இப்பெயர்கள் எல்லாமும் ஒரு பொருளனவாய், வெவ்வேறு வகையால் அளறு என்பதை விளக்குகின்றன. அளாவுதல் அளவு > அளாவு > அளாவுதல் = கலத்தல், பிசைதல். தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் -திருக்.64 அளி அள் +இ = அளி. குளிர், இரக்கம், இனிமை முதலியவற்றை வழங்குவது. திங்களுள் அளியும் நீ -பரி.3 கொடை அளி செங்கோல் -திருக்.390 அளியின் மையின் அவணுறை முனைஇ -அகம்.40 அளித்தல் அருள் பெருக உண்ணுமாறு செய்வது அளித்தல் ஆகும். அளியாவது அருள். அளித்து அயில்கின்ற வேந்தன்என்றார் திருத்தக்க தேவர் (சீவக.192).இடுதல், ஈதல் போல்வது அளித்தலாம். கொடுத்தல் எனும் பொதுப் பொருளின் நீங்கி, உணவு உண்பித்தல் என்னும் சிறப்புப் பொருளில் வந்ததாம். அளை அளை: 1 அள் + ஐ = அளை. அள் = செறிவு; அளை = செறிவுடையது எனினும் எளிதில் புக இடமாவது அளை. அவை செலவு, தளை, வளை, புழை, முழை(குகை) முதலியவை. அளைச்செறி யிரும்புலி -சீவக.1851 அளை: 2 அள்+ஐ =அளை. அள்=செறிவு ; அளை = கெட்டியான தயிர், மோர் வெண்ணெய் என்பவை. அளைவிலை உணவிற் கிளையுடன் அருத்தி -பெரும்.163 செம்புற் றீயலி னின்னளைப் புளித்து -புறம்.119 அளைதல் மழலைக் குழந்தை கையால் உணவை அளாவி உண்ணுதல் அளைதலாகும். இன்னடிசில் புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்கள் என்றார் புகழேந்தியார் (நள.கலிதொ.68) மது வுண்பது அளைதல் எனப்பெறும் என்பது, அளைவது காமமடு நறவு என்னும் சிந்தாமணியால் புலப்படும் (கேம.140) அள்ளக் கொள்ள அள்ள = பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளல். கொள்ள =கூட்டி அள்ளியதைக் கொண்டு போதல். அள்ளக் கொள்ள ஆள் வேண்டும் என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர்.மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடி வந்து அள்ளக் கொள்ள முந்துவர். அள்ளிக் குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை. அள்ளல் அள் + அல் = அள்ளல். அள் = செறிவு; அற்றது. செறிவற்ற அளற்றுநிலம் அள்ளல் ஆகும். ஒரு நீர் நிலை; அதில் செவ்வல்லிக் கொடி மிகுந்துள; அவை பூத்து மலர்வதை, அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழஎன்கிறது முத்தொள்ளாயிரம் (110) அள்ளல், சேறு;அச் சேற்றுவகை மண் தன்மேல் படுவனவற்றை உள்வாங்கும் தன்மையது; செறிவு அற்றது உட்பகை செய்யும் கேடு, மட்பகை செய்யும் கேடு போன்றது என்னும் குறள் (883), வெளியே தோன்றாது; பிறர் உதவவும் வாயாது;உள் வாங்கும் மண் மணல் ஆயவை, ஐயப்படாமல் தோன்றி உள்ளே வாங்கிக் கொள்ளும் தன்மை உடையது - என்பதை அச்சொல்லே விளக்குகிறது. அள்ளி முள்ளி அள்ளுதல் = கை கொள்ளுமளவு எடுத்தல் முள்ளுதல் = விரல் நுனிபட அதனளவு எடுத்தல். தருதல் வகையுள்அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும்,கொள்வார்க்கும் கொடுப்பார்க்கும் உள்ள நேர்வும் அள்ளித் தருதலாலும் முள்ளித் தருதலாலும் விளங்கும். ஏதோ கொடுக்க வேண்டுமே என்னும் கடனுக்காக அள்ளித் தர விரும்பாமல் தருதல். தின்னல் கறிவகைகளும் தீனிவகை களுமாம். அள்ளூறல் அள் + ஊறல் = அள்ளூறல். உள்ளம் அள்ளூறல் என்பது மகிழ்ந்து அம்மகிழ்வில் திளைத்தலாகும். ஊறல், ஊற்றெடுத்தல் போல்வது மணலைத் தோண்ட நீர் சுரப்பது போல் ஒன்றை எண்ணிய அளவால் இன்பச் சுரப்பாவது அள்ளூறல் ஆகும். அள் = செறிவு. அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறிப் பேசுவாய் - திருவெம்.3 அறக்கோல் அறக்கோல் என்பது செங்கோல்; செம்மை என்பது நேர்மை, நேர் என்னும் பொருட்டது செங்குணக்கு, செம்பாதி என்பன நேர்கிழக்கையும் சரி பாதியையும் குறிப்பன. கொடுங்கோல் என்பது வளைந்த கோல் என்னும் பொருட்டது. கொடுங்கோன்மை திருக்குறளில் ஓரதிகாரம் (56) அதில் கோல்கோடி, முறைகோடி என்பவை இடம் பெறும் (554,559) ஒருபால் கோடாது நேராக நிற்கும் சமன்கோலைச் செங்கோலுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்பது திருக்குறள் (118) வளைந்த கோலினராய் ஆமேய்த்துத் திரிவாரைக் கொடுங்கோல் கையர் என்று கூறும் முல்லைப்பாட்டு (15) அக்கோலின் வளைவும் வெருட்டல் அடித்தோட்டல் என்பவை பற்றிய பரிவும் கொண்டு கூறியதாம் அது. அறப்படித்தல் பிழையறப் படித்தல், மாசறப்படித்தல், கசடறப் படித்தல், குறையறப் படித்தல், குற்றமறப் படித்தல் எனப் பல வகையில் வழங்கும் வழக்கில் உள்ள பிழை மாசு, கசடு, குறை குற்றம் என்பவற்றை உள்மறையாய் ஆக்கி அறப்படித்தல் என்பது மக்கள் வழக்கில் உண்டாயிற்று. அறப்படித்தவர் என்பது குறையறப் படித்தவர் என்னும் குறியீட்டு வழக்காக வழங்குகின்றது. எழுத்தற வாசித்தான் என்பது முகவை மாவட்டத்து ஓரூர். படிக்கும் படிப்பில் மாசற கசடற என்பவை முதல்நிலைப் பொருள் அதன்முழு நிலைப் பொருள் படிப்பவர்தம் மாசற கசடற என்பவை முதலாகக் கொண்டு கற்றலும் நிற்றலும் என்பதாம். முன்னது முதற் பிறைமதி நிலை! பின்னது நிறைமதி நிலை. அறல் அறல்: 1 அறு + அல் = அறல். அறுத்து அறுத்து நீரால் அடிபட்டு வந்த மணல் அறல் ஆகும். தண்ணறல் வண்ணம் திரிந்து - மணிமே. 20 41 அறல்: 2 அறல் கொணர்ந்த நீர். வன்பால் தெள்ளறல் பருகிய இரலை -குறுந். 65 அறவன் அறவன்: 1 அற + அன் = அறவன். அறநெறியில் நிலைபெற்றவன். அறத்தைக் கூறுவோன். அறவன்: 2 அறவு + அன் = அறவன் = பற்றற்றவன். அருகன் அறவன் அறிவோன் - சிலப். 10 202 அறவன்: 3 வாழ்வதற்குரிய வகையற்றவன். அவன் கிடக்கிறான் அறவப் பயல் என்பது திருத்தவத் துறை (இலால்குடி) வட்டார வழக்கு. அறவாழி அறம் + ஆழி = அறவாழி. இறைவனை அந்தணன் என்று குறிப்பிடும் திருவள்ளுவர் அறவாழி அந்தணன் (திருக். 8) என விளக்குகிறார். அறக்கடல் என்பது பொருள், ஆழி என்னும் சொல் கடல் என்னும் பொருளது. அதற்குச் சக்கரம் என்றொரு பொருளும் உண்டு. ஆதலால் அறச்சக்கரம் எனப் பொருள் கண்டாரும் உளர். அறநெறியில் வாழ்பவன் அறவாழி என்பதுமாம். அறவாழி என்னும் தொடர், பெயர்ச்சொல்லாக இந்நாள் வழங்குவது வள்ளுவக் கொடையாகும். அறிகுறி அறி = ஒலி, மணம் முதலியவற்றால் அறியும் அடையாளம். குறி = தோற்றத்தால் அல்லது உருவால் அறியும் அடையாளம். வண்டி வரும் அறிகுறியே இல்லையேஎன நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவர். வண்டி வரும் ஒலியும் இல்லை; புகை முதலிய தோற்றமும் இல்லை என்பதாம். மழை பெய்யும் அறிகுறியே இல்லை என்றால், பெய்தற்கு ஏற்ற காற்றும் வெயிலும் இல்லை; மழை முகிலும் மின்னல் இடியும் இல்லை என்பதாம். அறி என்னும் பொதுப் பொருள் உருவக் காட்சியை விலக்கி ஒலி, மணம் முதலியவற்றைக் குறித்து நின்றதாம். குறி என்பது உருவக் காட்சியைக் குறித்து நின்றதாம். அறிமுகம் அறிந்தார் ஒருவர் அறியாதார்க்கு ஒருவரை அல்லது ஒன்றை அறியுமாறு விளக்கிக் கூறுவது அறிமுகமாகும். விழா, விருந்து, வீடு, அரங்கமென அறிமுகப் பெருக்கம் உள்ளது. வணிக விளம்பரமும் அறிமுகமே. பாரி மகளிரை, இருங்கோவேளிடம் கொண்டு சென்ற கபிலர். இவரியார் என்குவை யாயின் இவரே, ஊருடன் இரவலர்க் கருளித் தேருடன், முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமான் நெடுமாப் பாரி மகளிர்; யானே தந்தை தோழன் இவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே - புறம். 201 எனப் பாரி மகளிரையும் தம்மையும் அறிமுகம் செய்கிறார். * விளம்பரம் காண்க. அறிவு அறிதல் அறிவு அறிதல் என்பது கற்று அறிதல் மட்டுமா? அவரவர் உணர்வால் கண்டு கொள்ளும் பட்டறிவு மட்டுமா? இவற்றினும் மேலே உண்டா? அறிவு அறிதல் என்பது இவற்றினும் மேலே விரிந்த பொருளது. அது தன்னை அறிவது. தனக்கு இன்பம் தருவது என்ன? துன்பம் தருவது என்ன என்பதை அறிதல் அது. அவ்வறிதல் முதல் நிலை. அதன் அடுத்த வளர்நிலை இவ்வாறு தானே, பிறர்க்கும் இவற்றால் இன்பமும் துன்பமும் ஏற்படும் என்பதை அறிதல். அதன் முடிநிலை, எனக்கு இன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்வேன்; எனக்குத் துன்பம் தருவதை யானும் பிறர்க்குச் செய்யேன்என்னும் உறுதிப்பாடு. அறிவு வகை உணர்வு = தாமே உணர்தலால் உண்டாகும் அறிவு. உண்மை = பிறப்பொடு பிறந்து வந்துள்ளதாம் அறிவு. உரன் = உறுதிப்பாடாக அமைந்ததாம் அறிவு. உறழ்வு = மாறுபாட்டை வெல்ல வல்ல தருக்க அறிவு ஒண்மை = உள்ளொளி விளக்கமாய் வெளிப்படும் அறிவு. ஓதி = தக்கோரிடம் ஓதித் தக்க வைத்துக் கொள்ளும் அறிவு காட்சி = அகக்காட்சி புறக்காட்சிகளால் அமையப் பெறும் அறிவு. துப்பு = தூயதாய் செவ்விதாய் துணிதலாய் அமையும் அறிவு. தெருட்சி = தெளிந்து தேரும் அறிவு புந்தி = பொருந்திய சிந்தனையால் பொலியும் அறிவு. புலன் = ஐம்பொறி இயக்கால் உண்டாகிய ஐம்புல வகையால் அமையும் அறிவு. பொறி = பொறிகளால் பொறிகளின் இயக்கால் அவற்றைப் பற்றி ஆயும் நுண்ணறிவு போதம் = திறவோர் போதித்த போதனை வழியும் அவர் நூற்றொகை வழியும் பெறும் அறிவு. மதி = நாளும் பெருகி வரும் அறிவு. முதுக்குறைவு = அகவைக்கு விஞ்சி மூதறிவர் கொண்ட அறிவுஉறைவதாய் வியப்புறச் செய்யும் பேரறிவு. ஆறறிவு அமைந்த மாந்தர் அறிவு வகை இவையாம். அறுகாலி அறுகாலி:1 ஆறு > அறு + காலி = அறுகாலி = ஆறு கால்களை யுடைய வண்டு. ஆறு, வண்டின் காலாறு - சிறுவர் பாடல். அறுகாலி:2 ஆறு > அறு + காலி = அறுகாலி. மூன்று கால் உடையது முக்காலி எனவும், நான்கு கால் உடையது நாற்காலி எனவும் வழங்குவது போல், ஆறு கால் உடைய நெடும்பலகை அறுகாலியாகும். ‘Bench’ என்பதற்கு அமைந்த கலைச்சொல் அது. அறுகு நிலத்தின் நெடிய ஆழத்தில் இருந்து வெட்ட வெட்டத் தளிர்த்து வருவது அறுகு ஆகும். அற்றுப் போதல் அற்றது அறுகு எனப்பட்டது. கரிசல் நிலத்தில் அறுகு அகழ்தல், எட்டடி பத்தடி ஆழத்தின் கீழும் செல்லும். மேலாக இருப்பது போல் வெட்டி விட்டால் பட்டுப் போவதன்று அது. கிழங்கு உள்ளே இருந்து கொடி கொடியாகக் கிளரச் செய்ய வல்லது. அறுதி ஒரு நிலத்தை அளந்து அளவுக்குத் தகவோ மரம் கிணறு முதலியவை கணக்கிட்டோ பாராமல் அப்பொழுது தீர்மானித்துத் தருதலை அன்றிப் பின் தொடர்ச்சி இல்லாமல் விலை முடிவு செய்து நிலத்தைப் பதிவு செய்து தருதல் அறுதி விலை எனப்படும். அறுதி என்பது முடிந்த முடிபு என்னும் பொருளதாம். இது நெல்லை, முகவை வழக்கு. மேல் தொடர்தல் இன்றி அற்றுப் போனது என்பது பொருள். Fixed Price எனும் ஆங்கிலத் தொடர்க்கு அறுதிவிலை என்பது பொருத்தமான கலைச்சொல். அறுதொழிலோர் ஆறு > அறு + தொழிலோர் = அறுதொழிலோர். ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் - திருக். 560 என்னும் குறளில் வரும் அறுதொழிலோர் எவர் என்பதை, உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில்கற்ப நடையது கரும பூமி எனத் திவாகரம் (2386) கூறுகிறது. இதனைத் தமிழக ஒழுகு (1293-6) வழிமொழிகின்றது. உழவு வணிகம் ஒலிபடு சிற்பம் கைத்தொழில் வரைவு கலையறிவு என்ற அறுவகைத் தொழில் பொது அறிவொடு செய்தும் செய்வித்தும் உயர்இவர் திகழ்அறு தொழிலோர் அறுத்துக் கட்டல் அறுத்துக் கட்டல் = தீர்த்துக் கட்டுதல் நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு போய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத் தொழிற் சொல். வேறொரு வகையில் குறிப்பு மொழியாக வாழ்வில் பயன்படுத்தப் படுகின்றது. வாழ்க்கைத் துணையாக இருந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றி இனி இணைந்து வாழ முடியாது என்னும் நிலைமை உண்டாகிய போது அவர்கள் மணவிலக்குப் பெறுதலும், விரும்பும் வேறொருவரை மணந்து வாழ்தலும் உண்டு. அதனை அறுத்துக் கட்டல் என்பர். அறுத்தல் = மணவிலக்கு. கட்டல் = மீள் மணம், தாலிகட்டுதல், தாலி அறுத்தல் என்பவை அறிக. அறுமணியணி (அலங்கார சட்கம்) வெண்பா, கட்டளைக் கலித்துறை, எழுசீர் ஆசிரிய விருத்தம், இரட்டை ஆசிரிய விருத்தம், சந்தக் கவி ஆசிரியம் என்னும் அறு வகைப் பாடல்களும் முறையே அமைந்து வரப்பெறும் ஆறன் அடுக்கு நூல் அறுமணி யணியாம் அலங்கார சட்கம் (வ). சட்கம் = ஆறு; வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளா ரால் பாடப் பெற்ற, திருநெல்வேலி ஆறுமுக நயினார் அலங்கார சட்கம்36 பாடல்களால் அமைந்த நூலாகும். இதனை, அறுமணி என்று கூறுவது உண்டு என்பது. விருதை சிவஞான யோகிகள் இயற்றிய நாகேசர் அறுமணி என்னும் நூலால் விளங்கும். அறுவடை அறுவடை = வருவாய். அறுத்துக் களத்திற்கு வந்து களஞ்சியத்தையும் அடைந்தது. அறுவடையாம். இவ் அறுவடை வேளாண் தொழிலில் இடம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள். கடுமையான உழைப்பு நாள் அஃதெனினும், அவ்வறுவடைக் காலமே எதிர்நோக்கி இருக்கும் இன்பநாளாம். அவ்வறுவடைக் கால வருவாயைக் கொண்டது தானே அவர்கள் வாழ்வு. வணிகர்கள் அலுவலர்கள் முதலிய பிறர்க்கும் பெருவருவாய் ஏற்படும் வாய்ப்பு உண்டானால், நல்ல அறுவடை என்னும் வழக்கு உண்டாயிற்று. இங்கே அறுத்து மணி குவிக்கும் செயல் இல்லை யாயினும் வருவாய் கருதி இவ்வாட்சி ஏற்பட்டதாம். மேலும் நேர்வழியல்லா வழியில் வரும் வருவாய்க்கும் அறுவடை என்பது வழக்கிலுள்ளதாம். அறுவாய் அறு + வாய் = அறுவாய். அறுபட்ட இடம்; அறுபட்டுப் போனது போன்றது அறுவாய் ஆகும். அறுவாய் நிறைந்த அவிர்மதி - திருக். 1117 அறுவாய்ப் போதல் அறுவு + ஆய் + போதல் = அறுவாய்ப் போதல். அற்றுப் போதல் = அறுவாய்ப் போதல். அற்றுப் போதல்; செலவாகிப் போதல். உள்ள பொருளெல்லாம் அற்றுப் போவது அறுவாய்ப் போதலாம். அருவாய்ப் போதல் எனின் உள்ள அளவில் குறைந்தும் மிகக் குறைந்தும் அரிதாகிப் போதலாம்(ம.வ.). அறுவாய்ப் போனபின் வந்தால் என்ன கிடைக்கும்? என்பது மக்கள் வழக்கு. அறுவை அறுவை = அறுத்தல், துணி. அறுத்து எடுக்கப்படுவது அறுவை எனப்பட்டது. அறுவை வாணிகம், அறுவை வீதி, அறுவை வாணிகன் இளவேட்டன் என்பவை எல்லாம் பழந்தமிழாட்சிகள். ஒரு பாவில் தொடர்ந்து நெய்து இடையிடையே அறுத்துத் தனித்தனி உடையாக ஆக்குவது கொண்டு ஆகிய பெயர்களுள் ஒன்று அறுவை என்பதாம். இடைவிட்டு வலைப்பின்னலாய் அமைந்த உறியை அறுவை எனப்படுதல் உண்டு. தோமறு கடிகையும் சுவன்மேல் அறுவையும் - சிலப். 10 98 அறுவை = தோளிலிடும் உறி. (அரும்பத.) கத்தி, வாளால் அறுப்பது போலக் காலத்தை அறுத்துப் பாழாக்கும் வகையில் கேட்க வெறுக்கும் வகையில் பேசுவதும் அறுவை எனப் பின்னை வழக்குக் கொண்டது. பொழுதை வீணாக்குவது. பாழாக்குவது, காதுக்கு வெறுப்பூட்டுவது என்னும் பொருள்களில் வழக்கூன்றியுள்ளது. மர அறுவைக் கூடம் = வாள்பட்டடையாம், மரவாடி என்பதும் அது. அறை ஊடு அறுத்து அறுத்து அமைக்கப்பட்டது அறையாகும். வரை அறுக்கப்பட்டது வரையறை ஆவதுபோல. அறையும் பொறையும் மணந்த தலையஎன்பது ஒரு பழந்தொடர் (புறம். 118). மணந்த என்பது கூடியமைந்த என்னும் பொருளதாம். அறை, பாளம் பாளமாக அமைந்த பாறையுள்ள இடமாம். வெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளி துறையூர் வழியிடையே அமைந்த மாலியத்திருக்கோயில் அமைந்த பாறைப் பகுதியும், அதனை அடுத்த ஊருமாம். அகல நீள மனை எழுப்புகிறோம். ஊடே ஊடே வரையறை செய்து, சுவர் வைக்கிறோம். அதற்குப் பெயர் அறை என்கிறோம். ஒரு நெடிய கயிறு; அதனைப் பயன்பாட்டுக்குத் தக அறுக்கிறோம். அறுப்பதால் அதன் தொடர்பு அற்றுப் போகிறது. அறுத்தல் என்பது தொடர்பை அற்றுப் போகச் செய்தலாம். அறைபோகு குடிகள்(சிலப். 4 10) என்பது ஊரை விடுத்துத் தொடர்பு அற்றுப் போன குடிகளாம். அறிவறை போகிய(சிலப். 20 :25) என்பது அறிவு அற்றுப் போன என்னும் இடிப்புரை இல்லையா? கீழறுப்புச் செய்தலும் அறைபோதலாகக் கூறலுண்டு. அறைபோகு அமைச்சர்(சிலப். 5 130) * அறம், அறுவை, ஆறு முதலியவை காண்க. இனி, முரசு அறைதல் என்பதிலுள்ள அறைக்கும் அறுக்கப் பட்டது அறை என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன என வினவத் தோன்றும். முரசு அறைதல் கைபோனவாறு அறைவது இல்லை. கால அளவு, மென்மை முடுகு வன்மை விட்டுவிட்டு அறைதல் என வரையறைகள் உண்டு. ஆதலால், அதுவும் அறைதல் எனப் பட்டது. அவ்வறைதல் பொது நிலையில் அடித்தல் என்னும் பொருளில் வருவதே, கன்னத்தில் அறைதல் செவிட்டில் அறைதல் என்பன. அறைகூவல் அரசு ஆணையை முரசு அறைந்து மக்களைக் கூட்டி உரக்கச் சொல்லுதலால் அறைகூவல் எனப்பட்டது. இதுகால், தமுக் கடித்தல் என்பதும் காணவும் கேட்கவும் கூடியவை. தமுக்கடித்தல் = ஊரறியப் பரப்புதல்; ஒன்று தமுக்கால்; மற்றொன்று வாயால். அறைபறை அன்னர் கயவர் என்பது திருக்குறள் (1076). அறைவாய் வழி இரண்டு மலைகளுக்கு இடையிட்டுக் கடக்குமாறு அமைந்த வழி அறைவாய் வழி எனப்படும் அறையாவது மலை! அறையும் பொறையும் மணந்த தலைய என்பதை அறை என்பதில் கண்டோம். வாய் = வழி; வாயில். குமரி மாவட்டம் சார்ந்த இவ்வூர் ஆரா மொழியாய் ஆரல்வாய் மொழியாய் வழங்குகின்றது. ஆதன் பழம் பெயர் அறைவாய் வழியாம். இரண்டு மலைகளின் ஊடறுத்துச் செல்லும் வழியுடையது அது. அற்காலம் அல் + காலம் = இரவுப் பொழுது; வளமற்றுப் போன வறுமைப் பொழுது. செல்காலம் எல்லாம் செலுத்தினோம்; அல்காலம் கல்லானோம் செம்பானோம் காண் - இரட்டையர் தனிப். அற்குதல் அல்குதல் > அற்குதல் > தங்குதல். அற்காமை, குறைந்தும் இல்லாதும் போதல். அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் - திருக். 333 அற்றது அலைந்தது அற்றது = எவர் துணையும் அற்றவர். அலைந்தது = ஓரிடமும் நிலைப்பற்று அலைந்து திரிபவர். அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடுதானா கிடைத்தது எனச் சலித்துக் கொள்ளுவார் உளர். அவர் அற்றவர் அலைந்தவர் என்று கூறுவதையும் விரும்பாராய் அஃறிணையால் குறிப்பர். தம் வறுமையாலும், செய்து செய்து சலித்தலாலும், மனமின்மையாலும் வரும் பழிப்புரை ஈதாம். அற்றார்க்கு ஒன்று ஆற்றுதலும் புகலற்று அலைவார்க்கு உதவுதலும் அறம் என்பது அறநூற்கொள்கை (திருக். 1007). அற்றம் அற்றம்: 1 அல் > அற்று > அற்றம். நீர்ப்பசையற்றும் வளமற்றும் போய இடமும் அவ்விடத்து வழியும் அற்றம் எனப்பட்டன. அற்றம் என்பது அத்தமாகப் பண்டே திரிந்தது. கல் அதர் அத்தம் என்பது சிலப்பதிகாரம் (16 57) அத்தம் சுரம் எனவும் வழங்கப்பட்டது. வெப்புமிக்க நிலமும் நிலத்து வழியுமே சுரம் ஆயினமை போல, நீர்ப்பசையற்ற நிலமும் நிலவழியுமே அற்றமாயது என்பதை அறியலாம். அற்றம்:2 கரவாக ஒன்றை முடிக்க நினைவார், எவரும் காண வாய்ப்பு அற்ற - சான்று காட்டவோ தடுக்கவோ வாய்ப்பு அற்ற - பொழுதைப் பார்த்துத் தாம் எண்ணிய கரவுச் செயலை முடித்துக் கொள்வர். அத்தகைய பொழுதும் அற்றம் எனப்பட்டது. அற்றத்தில் வெல்வானாக என்பது பெரியபுராணம் (மெய்ப்.6) அற்றம்:3 அற்றம் = அழிவு,கேடு. அறிவற்றம் காக்கும் கருவி திருக்.421 அற்றாலம் அல் + தாலம் = அற்றாலம் = இரவு உணவு. இதுகால், அத்தாளம் எனச் சொல்லும் மாறிப் பொருளும் மாறியது, அத்தாளம் = அடி, உதை.முதுகு என்ன அத்தாளம் கேட்கிறதா ? என்பது வழக்கு. தாலம் = உணவுக் கலம் ; உணவு. அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி அற்றைப் பட்டினி = ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல். அரைப்பட்டினி = ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல். அற்றைப் பட்டினி பொழுது மறுத்துண்ணல்என நற்றிணையில் (110) சொல்லப்படும். ஒரு வேளையுண்டு ஒரு வேளை உண்ணாத வயிற்றை, ஆற்றில் மேடு பள்ளமாய்ப் படிந்துள்ள மணல் வரிக்கு உவமையாகச் சொல்கிறது. அது வயிற்று மேடு பள்ளம் , மணல் மேடு பள்ளம் போலக் காட்டப் படுகிறது உண்ட வயிறு மேடு; உண்ணாத வயிறு பள்ளம், பட்டுணி > பட்டினி. * பட்டுணி காண்க. அனந்தம் அல் > அன் + நந்து + அம் = அனந்தம். அனந்தம் = குறைவற்ற முழுமையது; நிறை மகிழ்வினது. அனந்த நீட்சி ஆனந்தம். ஆனந்தம் = அனந்தம் முதல் நீண்டது. ஆனந்த முதிர்வாம் பேரானந்தம் வீடுபேறு. * மூதானந்தம் காண்க. அனந்தல் அனந்தல் = அல்+ நந்தல் =குறையா வளமுடையது; கடல். நந்தல் அற்றது அனந்தல் (அல் நந்தல்). மண்வளம் பெருவளம்; அவ்வளம் போல்வதும் அதனின் மிக்கதுமாம் வளம் உடையது கடல். கடல் நீர் வளமே மழைவளமாய் மீளவும் அருவி ஆறாய் மண்வளம் கொழிக்கச் செய்வது ஆதலால், மண்ணின் வளம் தோன்றவும் பெருகவும் கொண்ட வளமாய் இருப்பது கடல் வளமாதல் கண்ட முந்தையர் அனந்தல் என அகற்குப் பெயர்சூட்டினர். அனந்தல் ஆடேல் என்பார் ஔவையார்(ஆத்தி.31) அனப்பு அனல் =சூடு, வெப்பம்; அனப்பு என்பதை வெப்பம் அல்லது சூடு என்னும் பொருளில் குமரி மாவட்ட மேல்புரம் பகுதியில் வழங்குகின்றனர். சூடுபடுங்கால் ஒலி உண்டாதல் இயற்கை. ஆதலால் அனக்கம் என்பதை ஒலி என்னும் பொருளில் அகத்தீசுவரம் வட்டாரத்தார் வழங்குவர். அனத்தல் என்பது காய்ச்சல் தாங்காமல் புலம்புதலைக் குறிப்பது முகவை வழக்கு. அனல் அல் > அன்+அல்=அனல். ஒன்று,தன்னிலையைத் தான் கொண்டிருத்தலை அல்லாமல் செய்வது-அழிப்பது-அனல். பொருந்துதல் அற்றது. தன்னைச் சார்ந்த அல்லது ஒட்டிய எதனையும் எரிப்பதும் அழிப்பதும் கரியாக்குவதும் அனலாம். தன் முன் வைத்தது என்னவாயினும் அதனை உண்டு அழிப்பது அனல் ஆதலால் , தேர்ந்துண்ணாப் பூதம் என்கிறது ஒரு பாட்டு (யா. வி.62மேற்.) முன்னுள்ள எதனையும் அதன் தன்மையை அழிக்கும். தன்மை என்பதில் வண்ணமும் அடங்கும் எவ்வண்ணப் பொருளையும் தன் வண்ணம் இழக்கச் செய்து கரியாக்கி-கரு நிறமாக்கி விடும்! அவ்வகையால் அன்+அல்=அனல் என்று பெயர் பெற்றது. சமைக்கவும் கருவிகள் அமைக்கவும் ஒளி வழங்கவும் குளிர் போக்கவும் அனல் உதவும் எனினும்,அதன் முன்னுள்ள பொருளை அதன்தன்மை அகலச் செய்தலை விடாதது அது. அரிசி, காய்கறி ஆயவற்றைப் பக்குவப் படுத்தினாலும் அவற்றின் இயல்பை மாற்றியமைத்தலை எண்ணினால் உண்மை புலப்படும். * கனல் காண்க. அனிச்சம் நுண்மென் மலராக அறியப் பெறும் பூ அனிச்சம். அதன் இயல்பு வள்ளுவத்தில், மோப்பக் குழையும் அனிச்சம் (திருக் .90) எனப்படுகின்றது. அனிச்சப்பூ கால்களையாள் (திருக்.1115) என்றும் பயில வழங்குகின்றன. அலுங்கல் = அசைதல்; அலுங்கல் > அனுங்கல், மூச்சுக் காற்றின் அசைவாலேயே அனுங்கும் - வாடும் - மலர் அனிச்சம் எனப்பட்டதாம். பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய ளாகி என்றார் கம்பர்(ஆரண்.253) பல்லவம் அனுங்க = தளிர் அசைந்து வாட எளிதாக அனுங்கும் மலர் அனிச்சம் எனப்பட்டதாம். அன்பு அல்+பு = அற்பு > அன்பு = நேயம். தம் நலம் அற்றுப் போகச் செய்வது. தம் நலமா, தம்மைச் சார்ந்தார் அல்லது சார்ந்தவை நலமா என்னும் நிலையில் தம்மினும் தம்மைச் சார்ந்தார் மேலும் சார்ந்தவற்றின் மேலும் காட்டும் நலமாம் நேயமே அன்பாம். தொடர்புடையவரிடத்துத் தோன்றும் உள்ள நேயம் அன்பு என்பர். அன்பின் பொருள் விளக்கு முறையில் திருவள்ளுவர், அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று கூறினார் (72) தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் அன்பர் என்க(புறம்.182). அன்பு எனப்படுவது தன்கிளைச் செறாமை என்பது கலித்தொகை(133). அன்றில் அன்றில்: 1 அன்று + இ = அன்றி; அன்றி + இல் = அன்றில். ஒன்றை யன்றி இல்லை என்பது, அன்றில் மகன்றில் சிறப்பாம். அவற்றுள் ஆண் ஆகிய அன்றில், அகன்றில்; மகள் ஆகிய அன்றில் மகன்றில். பெருமைக்குரிய பறவைகளாக இலக்கிய உலகில் வாழ்கின்றன. நேரிடை உலகிலும் வாழ்கின்றன. ஆண் பெண் இரண்டன் பிரிவறியா வாழ்வுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன. குறுங்கால் அகன்றில் -ஐங்.381 பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றில் -குறுந். 57 அன்றில்: 2 அன்றில் என்பது ஈழத்தில் அல்லது, அல்லாமல் என்னும் பொருளில் மக்கள் வழக்காக உள்ளது. வியப்பான சொல்லாட்சி இது. அரசோ அன்றில் மக்கள் தலைவரோ தட்டிக் கழிக்க முடியாது என்பது செய்தித்தாள் தொடர். அன்னம் அல் >m‹ + அம் = அன்னம். அன்னுதல் = பொருந்துதல். தன் இணையைப் பிரியா வாழ்வினது அன்னம். அன்றியும் மற்றைப் பறவைகள் போலன்றி மக்களொடும் நெருங்கி வாழும் இயல்பினதும் ஆகும். அதனால் அதன் பொருந்தி வாழும் இயல்பறிந்தோர் அன்னம் என வழங்கினர். ஓதிமம், எகினம் ஆகிய பெயர்கள் அதற்கு இருப்பினும் அன்னப் பெயர் வள்ளுவரையும், மக்களையும் கவர்ந்தமையால் அன்னம் பெருவழக்குப் பழந்தமிழ்ச் சொல்லாயிற்று. அன்னச் சேவல் அன்னச் சேவல் நீயும் நின் மனைவியும் -புறம்.67 என நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்த பிசிராந்தையாரால் பாடுபுகழ் பெற்றது. அன்னம் மெல்லியது; அதனினும் அதன் தூவி மெல்லியது. அதனால் மாதரடிக்கு அவ்வனிச்சமும் அன்னத் தூவியும் வருத்தமாக்கும் எனப் புனைந்தார் வள்ளுவர் (திருக்.1120). அன்னம், கழனி பொய்கை ஆயன விட்டு ஊரகம் எய்தி உலாவுதலைச், சேலுண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்காலன்னம் என்றார் கம்பர் (பால.45). அன்னத்தை எண்ணும் நமக்கு, அன்னி மிஞிலியும் ஆட்டனத்தியும் இறப்பிலே ஒன்றுபட்டுப் பொருந்தி நின்ற காதல் வாழ்வு நினைவுக்கு வாராமல் போகாது. அன்னா அம்மா என்னும் விளி; வியப்புக் குறி; நெட்டெழுத்துக்குப் பின்வரும் ஒட்டு. அன்னாய் இவனோர் இளமாணாக்கன் -குறுந். 33 அன்னா, அன்னே, அன்னோ - வியப்புக்குறிகள். நெட்டெழுத்துக்குப் பின்வரும் சாரியை. ஆவன்னா , ஈயன்னா, ஊவன்னா அன்னை அன் + ஐ = அன்னை. அன் = பொருந்துதல்; ஐ = சொல்லீறு. அன்னை வாழிவேண் டன்னை - ஐங். 101-110 