கொங்குத் தமிழக வரலாறு முதற் பதிப்பு - 1983 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. கொங்கு நாடும் தமிழகமும் 1) கொங்குத் தமிழகத்தின் தனித்தன்மைகள், தனிவளங்கள், தனிச்சிறப்புகள் தங்கத் தமிழகத்தின் மங்கா ஒளிமணிப் பதக்கமாகத் திகழ்வது கொங்குநாடு. இதே சிறப்பை நாகரிக உலகில் இந்தியாவும், இந்தியாவில் தமிழகமும் பெற்றுள்ளன. இந் நிலைக்கு நில இயல்சார்பான இயற்கை வாய்ப்புகளும், வரலாற்றுச் சார்பான பண்பாட்டு வாய்ப்புகளும் பெரிதும் உதவியுள்ளன. இயலுலகின் எல்லையற்ற பரப்பிலும் வரலாற்றின் ஆழ் தடத்திலும் சென்றுதான் நாம் இவற்றைத் தெளிதல் வேண்டும். எல்லையற்ற அகல் வான வெளியிலே இயங்கும் கோளங்கள் எண்ணற்றவை. இவற்றுள் கதிரவன் போன்ற எரி நெருப்புக் கோளங்களும் உண்டு. மழை வளத்துக்கு இன்றியமையாத காற்று மண்டிலமும் கடல் மண்டிலமும் இல்லாத நிலாக்கோள் போன்ற வறண்ட கோளங்களும் உண்டு. இந்த இருதிறக் கோளங்களுமே உயிர்த்தடம் அற்றவை. உயிர் வாழ்வும் மனித இனவாழ்வும் உடைய நம் நிலவுலக கோளத்திலேயே, கதிரவன் ஒளி குன்றிய வடகோடி தென்கோடிப் பகுதிகள் உயிர்காணாப் பனிப்பாலை களாகவே நிலவுகின்றன. வடகோள, தென்கோளங்களின் நடுப்பகுதிகளிலேகூட, வடபால் பெரிதும் கடலிடைபுகாத பெருநிலப்பரப்பாகவும், அதுபோலத் தென்பால் பெரிதும் நிலமிடை விரவாத கடற்பரப்பாகவுமே உள்ளன. இவையும் ஒளிவளம் மழைவளம் நிலவளம் குறைவுற்று மனித இன வரலாற்றின் உயிர்வளத்திலும் இன நாகரிக வளத்திலும் பெரிதும் பிந்துற்று, அவற்றைத் தற்காலிகமாக வாங்கி வளர்க்கும் திறம்மட்டுமே உடையவையாய் இயன்று வந்துள்ளன. நாகரிக ஒளியை முதல் முதலாகக் கண்டு, அதனை அயற்சார்பு இல்லாமல் தனக்குத் தானே முற்படப் படைத்து வளர்த்த ஒரு நிலவுலகப்பகுதி உண்டு. அதனை வரலாற் றாசிரியர்கள் நாகரிக உயிர்வரை அல்லது நாகரிக உயிர் மண்டிலம் (டுகைந-டுiநே டிச டுகைந-க்ஷநடவ டிக ழரஅயn ஊiஎடைணையவiடிn) என்று கூறுகின்றனர். இது நம் நிலவுலக நங்கைக்கு ஓர் அரைப்பட்டிகை அல்லது மேகலை போல, அதனை மண்டிலமாகச் சுற்றிக் கிடக்கின்றது. ஆசியாவின் தென்கரைநாடுகள், ஐரோப்பா-ஆப்பிரிக்காக் கண்டங்களுக்கு இடைப்பட்ட நடுநிலக்கடல் சூழ்ந்த நாடுகள், நடு அமெரிக்கப்பகுதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு கடல்-நில மண்டிலமாகவே இது அமைந்துள்ளது. இதே உயிர் மண்டிலத்தில்கூட, பண்டை நாகரிக வளர்ச்சி பெரிதும் எகிப்திலிருந்து சீனம் வரையுள்ள பகுதிகளுக்கு உரியதாகவே இருந்தது. பண்டை நாகரிக உலகின் வாணிகப் பெரும்பாதை இதுவே. பண்டிருந்தே மனித இனம் தனக்கெனப் பண்பட்ட மொழியும், மொழிக்கு எழுத்து வடிவும் எண் இலக்கமும் வகுத்து வளர்த்துக் கொண்டுள்ள பரப்பும் இதுவே. இதனிடைப்பட்ட நாடுகளில் இந்தியாவும் சீனமுமே இன்றளவும் மனித இன நாகரிகத் தொடர்பறாமல் நின்றுநிலவுபவை-இன்றளவும் மனித இன நாகரிகத்தின் தொடர்ச்சி கெடாமல் நின்று நிலவி வளர்ந்து வரும் உலக மொழிகள் சீனமும் தமிழும் (அடுத்தபடியாகச் சப்பான் மொழியும் தமிழின மொழிகளும் இவை சார்ந்த வளர்ச்சிகளும்) மட்டுமேயாகும். உயிர்வரையினையொட்டி மேற்கே ஸ்பெயின் நாட்டின் பிரிணீஸ் மலையிலிருந்து தொடங்கி, கிழக்கே இந்திய, பர்மிய சீன நாடுகளின் வடஎல்லையளாவி ஒரு பாரிய நெடுநீள் மலையடுக்குத் தொடர் ஆதிசேடனோ எனும்படி படர்ந்து கிடக்கின்றது. இது பண்டை நாகரிக உலகின் வடதிசை எல்லைக்கோடாகவும் அதன் பாதுகாப்பரணாகவும் நிலவி வந்துள்ளது. இதன் மிக உயர்ந்த, மிக உறுதிவாய்ந்த மையப்பகுதியே இமயமலை. இத் தெய்வமாமலை இந்தியாவையும் இந்திய நாகரிகத்தையும் வறண்ட வடபால் உலகின் பனிக்காற்றிலிருந்தும், வடதிசைப் பரப்பின் பண்படா நாடோடி இனங்களின் அழிவுத் தாக்குதல் களிலிருந்தும் பேரளவில் பாதுகாத்து வந்துள்ளது. ஆயினும் இதன் ஓரக்கணவாய்களும் தென்திசைக் கடற்பரப்புமே இந்தியாவுக்கு நாகரிக உலகின் தொடர்புகளை வழங்க ஓரளவு உதவியுள்ளன. இதனாலேயே இந்திய நாகரிகம் சீன நாகரிகத்தைப் போல உலக நாகரிக நீரோட்டத்தில் பெரிதும் ஒதுங்கி நின்று விடாமலும், உயிர்வரையின் மற்றத் தொல் பழங்கால நாகரிக இனங்களைப்போல அந் நீரோட்டத்தில் கரைந்து கலந்து மறைந்து விடாமலும் என்றும் உயிர்த்துடிப்பும் உயிர் மலர்ச்சியும் வாய்ந்த நாகரிக இனமாகத் திகழ்ந்து வருகிறது. ஓரக் கணவாய்களைவிட இவ் வகையில் கடற்பரப்பே அரும்பயன் விளைவித்துள்ளது என்னலாம். ஏனெனில், சென்ற மூவாயிர, நாலாயிர ஆண்டுகளாக, ஓரக் கணவாய்கள் வழியாக வந்த பண்படா இனங்களின் புடையெழுச்சிகளும் படையெடுப்பு களும் இந்திய தேசிய வாழ்வையும் பண்பாட்டையும் அத் திசைகளில் அலைக்கழித்தே வந்துள்ளன. கடற் பரப்பே பெரிதும் நாகரிக ஆக்க உறவுகளுக்குப் பயன்பட்டு வந்துள்ளது. பழச்சாற்றினை ஒழுகவிட்டுச் சக்கையைத் தடுத்துநிறுத்தும் சல்லடை போல, இக் கடற்பரப்பு பண்படா இனப் புடை யெழுச்சி தடுத்து பண்பட்ட இனத்தொடர்புகளுக்குமட்டுமே பெரிதும் உதவியுள்ளது. தமிழகத்துக்கும் கொங்கு நாட்டுக்கும் இமயமலையின் பாதுகாப்போடு பாதுகாப்பாக, விந்திய சாத்பூரா மலைகளும் தெக்காண மேட்டு நிலமும் பலபடி அரண்களாக விளங்கி, அமைதியான தேசிய பண்பாட்டு வளர்ச்சிகளுக்குப் பெரிதும் வழிவகுத்துள்ளன. இங்கும் தென்னகத்தின் இருபுற ஓரங்களிலும் உள்ள இடைவெளிகளும் முத்திசைக் கடற் பரப்புமே வடதிசையினும் மிகுதியாகத் தென்திசைக்கு ஆக்கவள உறவுகளுக்குரிய ஊக்கம் வழங்கியுள்ளன. இதன் பயனாக, கடல் கடந்த உலக நாகரிகத் தொடர்புகள் வகையிலும், வாணிக, கலை, பண்பாட்டு ஆக்க உறவுகள் வகையிலும் தென்னகம் பொதுவாக, தமிழகமும் கொங்குநாடும் சிறப்பாக, மிகப் பேரளவான வளவாய்ப்புகள் பெற்றுவந் துள்ளன. மற்றும் இதன் பயனாகவே இந்திய வரலாற்றில் தென்னக, தமிழக அரசுகள் பேரரசுகளே மிகுந்த அளவில் கடலரசுகளாகவும் கடற்பேரரசுகளாகவும் இயங்கியுள்ளன. மேலும் இவையே இந்திய சமய, கலை, பண்பாட்டு வாழ்வலைகளைத் தென்கிழக்காசியாவெங்கும் கொண்டு சென்று பரப்பும் பணியிலும் மிகப் பெரும்பங்கு கொண்டிருந்தன, பங்கு பெற்று வந்துள்ளன. தொலைதூர ஆப்பிரிக்க, கிழக்காசிய, பண்டை அமெரிக்கப் பரப்புகளிலும் இவை சென்று எட்டியிருந்தன என்று அறிஞர் கருதுகின்றனர். இந்த எல்லா வகைகளிலும் கொங்கு நாட்டின் வாய்ப்புகள் தமிழகத்தின் ஏனைமண்டலங்களின் வாய்ப்புகளைவிடக் குறைந்தவை யல்ல; நிறைந்தவையே! ஏனெனில், கொங்குத் தமிழகத்தின் அக எல்லையைப் பொறுத்தமட்டில், அது கிட்டத்தட்ட நாற்புறமும் மலைகளையும் குன்றுகளையும் அவற்றில் வாழும் வீரமரபினங்களையும் பாதுகாப்பாகக் கொண்டுள்ளது. இதனால் தென்னகத்தின் ஓர் இடை வெளிகள்மூலமாகத் தமிழகத்தின் பிற பகுதிகள் கண்ட படையெழுச்சிகளுக்கும் பண்பாட்டு அலைக்கழிவுகளுக்கும் கொங்குநாடு பெரிதும் ஆளாகாமல் இருந்து வந்துள்ளது. அதன்மீது ஏற்பட்ட தாக்குதல்களெல்லாம் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து மேற்கு, தெற்கு, கிழக்கு இடைவெளிகள் வழியாக அதன்மீது படர்ந்து வந்தவையே யாகும். ஏனெனில், தமிழகத்தின் அரசு பேரரசுப் போட்டிகள் வரலாற்றுக்கால முழுவதும் அதனை மீண்டும் மீண்டும் தாக்கத் தவறவில்லை. ஆயின், எந்தப் படையெடுப்பும், எந்தத் தற்காலிக ஆட்சிமாறுதல் களும்கூட அதன் நிலையான தனித் தன்மையைப் பாதிக்கவில்லை. இதனாலேயே இந்தியாவின், உலகின் பழம் பண்பாட்டுப் பெட்டகமாகத் தென்னகமும் தமிழகமும் பொதுவாக விளங்குவதுபோல, கொங்குநாடு இன்றளவும் இந்தியாவின், தமிழகத்தின் பழம் பண்பாட்டுச் சேமகலமாகத் திகழ்ந்து வருகிறது. உபநிடதகால, சங்ககால, தொல்காப்பிய காலப் பழமைகளை-உபநிடத காலத்துக்கும் சங்க காலத்துக்கும், தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட பழமைகளைக்கூட, இன்று நாம் கொங்குநாட்டு வாழ்வில் முனைப்பாக, உயிர் மலர்ச்சிப் பண்பாகவே காணலாம். இவை வெறும் பழமைகள் மட்டும் அல்ல; வருங்காலத் தமிழக, இந்திய, உலக நாகரிகத்துக்கே பெரும்பயன் வழங்கத்தக்க உயிர் விதைப் பண்புகள் ஆகும். கொங்குத் தமிழகம் புறத் தமிழகத்தின் புயல்களால் பாதிக்கப்பட்டு அரசியல் அவல நிலைகளுக்குப் பெரிதும் ஆளாகி வந்த நாட்களில்கூட அதன் தனித் தன்மையும் நல்லமைதியும், மக்கள் வாழ்வும் பண்பும், வீரமும், வாழ்வியல் பொருளியல் முயற்சிகளும் அவற்றால் ஒரு சிறிதும் குலைவுறவில்லை. அவை தடைகள் யாவும் தகர்த்து முன்னேறியே வந்துள்ளன. காடு நாடாக்கும் பணியிலும், மடிமையும் மிடிமையும் அடிமையும் வீழ்த்தித் தன்னாண்மையும் ஆள்வினையும் ஊக்குவிக்கும் திறங்களிலும் கொங்குத் தமிழகம் அன்றும் இன்றும் தமிழகத்தின் முன்னணியில் நின்று தென்னக வாழ்வையும் இந்திய தேசிய வளத்தையும் மேம்படுத்தப் பாடுபடும் ஒரு தங்கத் தரணியாகவே இயன்று வந்துள்ளது. உள்நாட்டுப் பகுதியாக இன்று நிலவும் கொங்குத் தமிழகம் நாகரிக உலகின் கடல் வாழ்வுத்தொடர்பின் பயனைப் பிற தமிழக மண்டலங்களுக்கு ஒப்பாக அல்லது அவற்றினும் மிகையாக எவ்வாறு பெறமுடியும் என்று எவரும் வினவுதல் கூடும்! ஆனால், கொங்குத் தமிழகம் உள்நாட்டுப் பகுதியாய் அமைந்தது சங்க காலத்துக்குப் பின்னரேயாகும். இது கீழே விளக்கப்பட விருக்கிறது. தவிர, பண்டை உலகின் வாணிகப் பெரு வழியானது முற்றிலும் கடல் வழியாக இயங்கவில்லை. கிழக்கு ஆப்பிரிக்கா விலும் மலேசியாவிலும், வியட்னாம், லயோஸ் (பண்டைக் கம்போடியா, சாம் அல்லது சம்பாப் பேரரசுகளின்) பகுதிகளிலும் தமிழகத்திலும் அது கடலிடைப்பட்ட நிலவழியாகவே இயன்றது. ஏனெனில், தமிழினத் தொடர்புடைய இவ்வெல்லாப் பகுதி களிலுமே, சுற்றிச் செல்லும் கடல் வழியைவிட இடைநிலவழியே நேர் குறுக்கு வழியாக மட்டுமன்றி, பாதுகாப்பான வழியாகவும், ஆதாய வளமுடைய வழியாகவும் அமைந்திருந்தது. இப்பகுதி களிலுள்ள நிலையான வல்லரசுகளும் நல்லரசுகளும் கடலரசுகள், கடற்பேரரசுகளாக இருந்த காரணத்தால் அவை கடற் கொள்ளைக்காரரிடமிருந்தும் நிலக்கொள்ளைக்காரர்களிட மிருந்தும் வழிப்பாதுகாப்பு அளித்தன. அத்துடன் இப்பகுதிகளில் பேணி வளர்க்கப் பட்டு வந்த மக்கட்பண்பாடும் நல்லமைதியும் நிலவள, தொழில்வள, சரக்குவளச் செழிப்புக்கும், உள்நாட்டு வெளிநாட்டு வாணிக வளர்ச்சிக்கும் பெரிதும் உகந்தவையாய் இருந்தன. கி.மு. 4000ஆண்டுக்கு முன்னிருந்தே தென்னகம் அதாவது பண்டைத் தமிழகம் மாண்ட நாகரிக உலக மக்களான எகிப்தியர், ஏலமியர், சுமேரியர், பாலஸ்தீனர், பினீசியர், கிரேக்கர், உரோமர் ஆகியவர்களுடனும், அராபியருடனும், வெனீசியருடனும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறா வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. அவ் வாணிகத்தில் தமிழகச் சரக்குகள், சிறப்பாகக் கொங்குத் தமிழகச் சரக்குகளே பெரும் பங்கு கொண்டிருந்தன. உலக மொழிகளிலெல்லாம் அச்சரக்குகளின் பெயர்கள் தமிழ்ச் சொற்களின் திரிபாகவே இன்றளவும் வழங்கி வந்துள்ளன. இது அவ் வாணிக வளத்தின் தொன்மைக்கும் உலகளாவிய விரிவகற்சிக்கும், தமிழகமும் கொங்குத்தமிழகமும் அதில் கொண்டிருந்த உயிர்ப் பங்கிற்கும் சான்றுகள் ஆகும். அக்கால உலக வாணிகச் சரக்குகளான தேக்கு (ஆங்கிலம்: வநயம) அகில் (இலத்தீனம்: ஹளூரடைய, அகில், கழுகு; ஆங்கிலம்: நுயபடந, கழுகு, நயபடநறடிடின, அகில்) சந்தனம் (ஆங்கிலம்: ளுயனேயடறடிடின), யானைத் தந்தம் (தமிழ்: இபம்-யானை; ஆங்கிலம் நட-நயீh-யவே யானை; iஎ-டீசல தந்தம்), சர்க்கரை (பண்டைத் தமிழ்: சக்கரை ஆங்கிலம்: ளுரபயச; பிரஞ்சு: ளுரஉசந), மயில்தோகை. (ஏபிரேயம்: வரமாiஅ), குரங்குகள் (ஏபிரேயம்: முயயீi). அரிசி (கிரேக்கம்: டீசணைய; ஆங்கிலம்: சiஉந), மிளகு அல்லது திப்பிலி (கிரேக்கம்: ஞiயீயடய; ஆங்கிலம்: ஞநயீயீநச) ஆகியவை தமிழகத்திலிருந்தே உலகளாவச் சென்றன என்பதை இச் சொற்களே காட்டுகின்றன. இச்சரக்குகள் பெரும்பாலாகக் கொங்குத் தமிழகத்துக்கும் அதன் சூழ்புலங்களுக்குமே சிறப்புரிமையானவை என்பதும் இங்கே கருதத் தக்கது ஆகும். இது கீழே விரிக்கப்பட விருக்கிறது. எகிப்தியரின் மோட்டுக் கோபுரங்களின் (ஞலசயஅனைள) அடியிலும், சால்டியரின் `ஊர்' என்ற பண்டைத் தலைநகரிலும் தமிழகக் கொங்கு நாட்டின் தேக்கும் எஃகும்; சிந்துவெளியில் அதன் தங்கமும் அந் நாட்களிலேயே (கி.மு. 4000-கி.மு. 2000) கொண்டு சென்று பயன்படுத்தப்பட்டிருந்தன என்று அறிகிறோம். கி.மு. 8,6ஆம் நூற்றாண்டுகளிலிருந்து கிரேக்கரின் வாணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் தமிழகத்தில் முன்னிலும் நெருக்கமாயின. கிரேக்கர்கள் பாவைவிளக்குப் போன்ற உயரிய கலைப் பொருள்களையும், புட்டியிலடைத்த உயர் மதுவகை களையும் தாம் பெற்ற சரக்குகளுக்கு மாற்றாகத் தமிழக அரசர், செல்வர் ஆகியோர்க்கு விற்றனர். தவிர, அரசர்களிடமும் செல்வர்களிடமும் அவர்கள் படை வீரராகவும், கோட்டைக் காவலராகவும் தமிழகத்திலேயே தங்கிப் பணியாற்றினர். பண்டைத் தமிழ்ச் சேரநாட்டு முசிறியருகே அவர்கள் கோட்டை நகர் அமைத்து வாழ்ந்ததாகவும் அறிகிறோம். அந் நாளைய உரோமப் பேரரசரும் சீனப் பேரரசரும் பிற தென்கிழக்காசியப் பேரரசரும் தமிழகப் பேரரசருடன் தூதுத் தொடர்புகள் பரிமாறிக் கொண்டிருந்தனர் என்றும் தெரிய வருகிறது. அந்நாட்டவரின் வரலாற்றுக் குறிப்புகளும், அக்காலத் தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்களும் இவற்றை நமக்குத் தெளிவு படுத்துகின்றன. கி.மு. 1ஆம் நூற்றாண்டிலிருந்து உரோமரும், கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அராபியரும், கி.பி. 14ஆம் நூற்றாண்டி லிருந்து வெனீசியரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர் போன்ற மற்ற மேலை ஐரோப்பிய நாட்டினரும் இந்த உலக வாணிகத் தொடர்பில் தமிழருடனும் கொங்குத் தமிழருடனும் பங்கேற்று வந்துள்ளனர். தமிழர் கிரேக்கரையும் உரோமரையும் வேறுபாடின்றி யவனர் (அயோனியர்: கிரேக்கரிடையே நாகரிக வளம் ஓங்கிய பிரிவினர்) என்றே அழைத்தனர். அராபியரையும் பிறரையும் சோனகர் என்றனர். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையுள்ள 1200 ஆண்டுக் காலத்தின் முற்பகுதியே தமிழ்ச் சங்க காலம் (உண்மையில் பிற்பட்ட சங்ககாலம்) சார்ந்த ஊழிஆகும். தமிழரின் உலக வாணிகத் தொடர்பும் வளமும் உச்சநிலை அடைந்திருந்த காலம் இதுவே-இதுவே தமிழக உலக வாணிக வளத்தில் கொங்குத் தமிழகம் மிகப் பெரும் பங்கு கொண்டிருந்த காலமும் ஆகும். ஏனெனில், இவ்வூழியில் உலக வாணிகப் பாதையானது தமிழகத்தின் மேல் கடற்கரையிலிருந்து கீழ்கடற்கரைக்கும், கீழ்கடற் கரையிலிருந்து மேல் கடற்கரைக்கும் கொங்குநாட்டின் முழு அகலமும் கடந்தே சென்றது. இப்பாதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தில் கொங்குப் பெருவழி என்றே அழைக்கப்பட்டு வந்தது. இப்பெயருக்கேற்ப, கொங்குநாடே இப்பாதையின் மையப்பகுதியாக மட்டுமன்றி மிகப்பெரும் பகுதியாகவும் அமைந்திருந்தது. உள்நாட்டு வெளிநாட்டு வாணிகச் சரக்கு வளங்களிலும் அன்று கொங்கு நாடு கொண்ட பங்கே மிகப் பெரிதாயிருந்தது. இந்நிலையில் இப் பாதையின் முழு நிறை பயனுக்கும் அதன் பயன்வளமான மிகப் பெருஞ் செல்வ வளத்துக்கும் பண்பு, பண்பாட்டு வளத்துக்கும் உரிய மைய உயிர்நிலைப் பகுதியாகச் சங்க காலக் கொங்குத் தமிழகம் விளங்கிற்று. சங்ககாலம் என்று நாம் குறிப்பிடும் சங்ககாலப் பிற்பகுதிக்கு (கி.மு. 6-கி.பி. 3 நூற்றாண்டுகளுக்கு) உரிய கொங்குத் தமிழகம் அதற்குமுன் என்றும் பெற்றிருந்ததை விட, அக்காலத்துக்குப் பிற்பட அது என்றும் அடைந்துள்ளதைப் பார்க்கிலும், மிகப் பெருஞ் செல்வ வளம் உடையதாயிருந்தது. கூல வகைகள், தேன், பால், தயிர், நெய் முதலிய உணவுப் பொருள்கள்; மிளகு ஏலம் போன்ற சுவை மணப் பொருள்கள்; சந்தனம், அகில், தேக்கு முதலிய உயர் மண, உயர் கட்டுமானப் பொருள்கள்; பொன், நீலமணிக் கற்கள், எஃகு, இரும்புப் பொருள்கள் போன்ற பெருமதிப்புடைய அணிமணிச் செல்வங்கள் ஆகிய பல்வகை வளங்களும் கொங்குத் தமிழகத்தின் அகநாடு புறநாடு எல்லைகளுக்கும் சூழலுக்குமே முழு உரிமைப்பட்ட பண்டை உலக வாணிகச் செல்வங்களாய் இருந்தன. சங்கப் பாடல்களும் அந்நாளைய யவன நில நூலாசிரியர், வரலாற்றாசிரியர் குறிப்பீடுகளும் மட்டுமன்றி, கொங்கு நாடெங்கும் கண்டெடுக்கப் பட்ட - கண்டெடுக்கப்பட்டுவரும் புதையல் நாணயவளமும் சங்க காலக் கொங்கு நாட்டுக்கேயுரிய இப் பெருவளத்துக்குச் சான்று பகர்கின்றன. கி.மு. 1ஆம் நூற்றாண்டில் ஆட்சி தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட உரோமப் பேரரசர் பெரும் பாலோருடைய உருவங்கள், பெயர்கள் பொறிக்கப்பட்ட புத்தம் புதிய தங்க வெள்ளி தாமிர நாணயங்கள், மிகப் பெரும்பாலாகத் தங்க வெள்ளி நாணயங்கள் கொங்கு நாடெங்குமே சென்ற இரு நூற்றாண்டுகளாகக் கருவூர், வெள்ளலூர் போன்ற பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டு வந்துள்ளன. கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை ஆயிர ஆண்டுகளாக அவை தமிழகத்தின் முக்கிய செலாவணி நாணயமாக மக்கள் புழக்கத்தில் இருந்து வரும் அளவுக்கு ஏராளமாயிருந்தன என்று வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். தவிர, இன்று போலவே அன்றும் தமிழர் இப் பொற்காசுகளைத் தொளையிட்டு அல்லது பூணிட்டுக் கோத்தணிந்தனர் என்றும் தெரியவருகிறது. ஏனெனில், புதையல்களில் கண்ட நாணயங்களிலே கூட அத்தகைய தடங்கள் காணப்படுகின்றன. ஸ்பெயின் நாடு அன்றைய உரோமப் பேரரசர் ஆட்சியில் இருந்தது. அந் நாட்டில் உள்ள தங்கச் சுரங்கங்களின் தங்கம் முழுவதும் பேரரசின் தம்பட்ட சாலையில் நாணயங்களாக்கப் பட்டு, முத்துமணியணிப் பொருள்களின் நிலையாகத் தமிழகத்திலே கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. அயலாட்சிக் காலங்களில் வெளிநாட்டு ஆடையணிமணிகளால் இந்தியா இழந்த செல்வத்தைக் காந்தியடிகள் போன்ற தலைவர்கள் கண்டித்தது போல, உரோமப் பேரரசில் கேட்டோ (ஊயவடி) போன்ற தலைவர்களும் பிளினி (ஞடini) போன்ற பிற அறிஞர்களும் தமிழக வாணிகத்தால் உரோமர் அடைந்த செல்வ இழப்பைக் கண்டித்து முழக்கம் எழுப்பி வந்தனர் என்று அறிகிறோம். உரோமர் இழந்த இச்செல்வத்தினால் மிகுந்த வளநலம் பெற்றவர்கள் கொங்குத் தமிழக மக்களின் சங்க கால முன்னோர்களேயாவர் என்று கூறத் தேவையில்லை. கடல் கடந்த நாடுகளுடன் மட்டுமன்றி, நிலங்கடந்த நாடுகளுடனும் சங்ககாலத்துக்கு முன்னிருந்தே கொங்கு மக்கள் பெருவாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். கொங்குத் தலைநகரான கருவூரில் வாழ்ந்த ஒரு சங்கப் புலவர் (கருவூர்க் கலிங்கத்தார்) கலிங்கநாட்டுப் பெருவணிகராகவும் விளங்கினார். தவிர, கொங்குநாட்டின் பல சிற்றூர்களில் கூட கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்குரிய ஈரான் நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தென்னக, தமிழகப்பரப்பில், குறிப்பாக அப் பரப்புகளின் நடுநாயகத் தலைமையிடமாய் அன்று விளங்கிய கொங்குத் தமிழகப்பரப்பில் சங்ககாலத்துக்கு முன்னும் சங்ககாலத்திலும் நிலவியிருந்த வாணிகவள, செல்வவளச் சிறப்பை இவை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இன்று இந்தியாவின் தேசியப்பறவையாக மதிக்கப்படுவது மயில். அழகுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், தமிழ்க் கடவுளாகிய முருகனுக்குரிய ஊர்தியாகவும், சமணர் இசுலாமியர் போன்ற பல்வேறு சமயத்தவர்க்குரிய பூசனைப் பொருளாகவும் உலகெங்கும் வழங்குவது இது. தமிழகத்துக்கே, சிறப்பாகக் கொங்குத் தமிழகத்துக்கே உரிய இம் மயிற்பீலி உலக வாணிகச் சரக்காக கொங்கு நாடெங்கும் கடந்து வண்டி களில் ஏற்றப்பட்டுச் சென்ற காட்சியைத் திருவள்ளுவர் பெருமான் நமக்கு ஒரு குறட்பாவின் எல்லைக்குள்ளாகவே படம்பிடித்துக் காட்டியுள்ளார். `பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்!' (குறள் 475) அச்சுமுறியும் அளவுக்கு மயிற்பீலிகள் ஏற்றப்பட்ட மாட்டு வண்டிகள் கொங்குநாட்டினூடாக உலகப் பெருவழியில் செல்வதை முப்பால் முதல்வர் ஈராயிர மூவாயிர ஆண்டுகளுக்கு முன்பே கண்டிருந்தன ராதல் வேண்டும். தொன்று தொட்டு வரலாற்றிற்கு முற்பட்ட தொல் பழங்காலங்களிலும் அது தொடர்ந்து வரலாற்றுக்கால முழுமையிலும் நாகரிக உலகில் இந்தியாவும், இந்தியாவில் தமிழகமும், தமிழகத்தில் கொங்குத் தமிழகமும் வகித்து வந்துள்ள மையத் தனியிடத்தை இச்செய்திகள் நமக்கு உணர்த்து கின்றன. பண்டைநாட்களிலே உலகு வாழ வழிகாட்டியவண்ணம் வாழ்ந்து சென்றுவிட்ட மாண்ட பல் பெருநாகரிகங்களின் பெயர் கூறும்படியாக இன்னும் நின்றுநிலவும் இனப்பரப்பே இந்தியா. இதே நிலையுடையவையே இந்தியாவில் தமிழகம், தமிழகத்தில் தங்கத் தமிழகமாம் கொங்குத் தமிழகம். கொங்கு என்ற சொல்லின் பொருளே, பொருள்களில் ஒன்றே கொங்கு தங்கம் என்பது தான்!) அதேசமயம் இவையே இன்று வாழ்ந்து வளர்ந்து வரும் உலக நாகரிக இனங்களின் நற்பண்புக்கூறுகளை ஆக்கி அணிசெய்யவல்ல புத்துருக்கு மணிகளாகவும் திகழ்கின்றன. இங்ஙனமாக மனிதஇனநாகரிகம் என்ற இடையறாத் தொடர்புடைய மணிமாலையில் அத் தொடர்புக்குரிய ஊடிழையாக இவையே தம் வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளன என்று கூறலாம். இது முற்றிலும் இயல்பான, இயற்படைப்பான ஒன்று அன்று. உண்மையில், இது மனிதநாகரிகம் இயல் வாய்ப்பு வளங்களைப் பயன்படுத்தி, நீடித்த இன வாழ்வின் பட்டறிவடிப் படையாக, இப்பரப்புகளில் நின்று பேணிவளர்த்துள்ள மரபுப்பண்பின் அமைதியேயாகும். பழமையின் பாழ்படுத்தும் கேடுகள் கண்டகற்றியும், புதுமையின் மருட்சியூட்டும் மாசுதூசுகள் தடுத்தாண்டும்; இது போலவே பழமையின் வாழ்வளிக்கும் பண்புகள் கெடாமல் பேணிவளர்த்தும், புதுமையின் புதுவளம் ஊக்கும் பண்புகள் தேர்ந்துகண்டு பயன்படுத்தியும் மாயா உலகு புரக்கும் மாண்பொறுப்பினை ஏற்று, கிரேக்க புராணங் கூறும் மாமலைத் தெய்வவீரன் அட்லாசு போலக் கனவுலகைத் தாங்கிய வண்ணம் நின்று நிலவும் மாநிலமாக அது விளங்குகிறது! இத்தகைய இந்தியாவின் துயிலா நீள்விழிகளாகத் தென்னகம் அல்லது தமிழகமும், அவ்விழிகளினூடாகக் காணப்படும் காட்சிகளை வாங்கி மூளையில் பதியவைக்கும் விழிப்பாவை யின் குருதிநாள நாடிநரம்புகளாகக் கொங்குத் தமிழகமும் விளங்குகின்றன. மனித இனநாகரிக உயிர்மண்டிலமே உலகநங்கையின் அருமணிமேகலையானால், இந்தியாவும் தமிழகமும், தங்கத் தமிழகமாம் கொங்குத் தமிழகமும் அம் மேகலையின் இணைப்பு முகப்பாகவும், தொங்கற்பதக்க மாகவும் மைய முத்துமணி பவழக் குமிழ் ஒளியாகவும் கருதத்தக்கவை என்னலாம். 2) கொங்குத் தமிழக எல்லைகள்: அன்றைய பெருக்கமும் இன்றையச் செறிவும் ஒரு நாட்டின் எல்லையும் ஒருமைப்பாடும் மலை, ஆறு, கடல் போன்ற இயற்கை அமைப்புகளாலோ, அரசியல் சூழ்வரவுகளாலோ அமைவுறுதல் கூடும். ஆனால், அவ் ஒருமைப்பாடு, பண்புமரபு, நாகரிக மரபு, பண்பாட்டு மரபு ஆகியவற்றின் அடிப்படையிலும் அகநாடு புறநாடு சார்ந்த ஒத்திசைவு அடிப்படையிலும் அமைந்து அது தன் சூழலையே ஊக்கி வளர்க்குமானால், அந்நிலை பொன்னாலான ஒரு வண்ணப் பூ அத்துடன் மணமும் உயிர்த்துடிப்பு வளமும் பெற்றாற்போன்ற முழுநிறை அருமைப்பாடு உடையது ஆகும். இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் கொங்குத் தமிழகத்துக்கும் இம் மூவகைப்பட்ட எல்லையமைவும் ஒருமைப்பாடும் ஒத்திசைவமைதியும் செவ்வனே அமைந்துள்ளன. ஏனெனில், இம் முப்பரப்புகளிலுமே காலத்தினால் ஏற்பட்ட குறுக்கங்களாகக் காணப்படுபவைகூட அவற்றின் பண்புச் செறிவான அக எல்லைகளாகவும், அவற்றின் சூழல் மலர்ச்சிகளை ஊக்கும் புற எல்லைகளாகவும் கருதத்தக்கவை ஆகும். இந்தியா என்ற இன்றைய அரசியல் அமைப்பானது, பண்பாட்டு முறையில், பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா, இலங்கை, நேபாளம், ஆப்கனிஸ்தானம், திபெத், தென்கிழக்காசியா ஆகியவற்றையும் தன் பண்டைநாகரிக விரிவாகக் கொண்டதே யாகும். இவையே இருவேறு வகையில் அதன் முற்கால வாழ்வுகளின் பண்பு மலர்ச்சிப் படர்ச்சிகளாகவும், அதன் இக்காலப் பண்புமரபுச் செறிவாகவும் கொள்ளத்தக்கவை ஆகும். இதுபோலவே தமிழகம் பண்டு தென்னகப் பெரும் பகுதியளாவி விரிந்திருந்தது. அதன் பண்பெல்லையோ, இந்தியாவும் இந்திய நாகரிக எல்லையும் மனித இனநாகரிகப் பேரெல்லையும் அளாவியிருந்தது. கொங்குத் தமிழகத்தின் நிலையும் இது போன்றதே; அது இன்றைய தமிழகத்தின் செம்பாதியாக இருந்துகொண்டே, பண்டைத் தமிழக விரிவில் இன்னும் பெரும்பகுதியாக நிலவிவந்தது. தற்கால, அணிமைக்காலத் தமிழக மரபில் கொங்குநாடு என்பது கோயம்புத்தூர், நீலகிரி, பெரியார் மாவட்டமாகிய ஈரோடு, தர்மபுரி ஆகிய கோட்டங்களும், திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தின் கரூர், குழித்தலை வட்டாரங்களும், மதுரைக் கோட்டத்தின் பழனி, திண்டுக்கல் வட்டாரங்களும் அடங்கிய பரப்பாகக் கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இந்த எல்லையே (கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப்பின்) சிலபல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிலவி, இடைக்காலப் பழம்பாடல்களிலும் பொறிக்கப்பட்டு விட்டது. கி.பி. 16, 12ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கொங்கு மண்டல சதகமும் (இரு சதகங்கள் உள்ளன), 12ஆம் நூற்றாண்டுக்குரிய பெரிய புராணமும், ஓரளவு 7-முதல் 9ஆம் நூற்றாண்டுக்குரிய தேவாரப் பாடல்களும் இதே எல்லைகளையே பேரளவில் சுட்டுகின்றன. வடக்கு, தலைமலையாம்; வைகாவூர், தெற்கு; குடக்கு, பொருப்பு வெள்ளிக் குன்று;-கிழக்கு, கழித்தண்டலை மேவும் காவிரிசூழ் நாடா! குழித்தண்டலை யளவே கொங்கு. இப் பழம்பாடலின் மற்றொரு வடிவம் வடக்கெல்லையைத் தலைமலையினிடமாகப் பெரும்பாலை என்று கூறுகிறது. இங்கே பெரும் பாலை என்பது ஓர் ஊர். வைகாவூர் என்பது பழனி; குழித்தண்டலை என்பது குழித்தலை. மதிற்கரை, கீழ்திசை; தெற்கு, பழனி; மதிகுடக்கு கதித்துள வெள்ளிமலை; பெரும்பாலை, கவின்வடக்கு; விதித்துள நான்கெல்லை வளம் முற்றும் மேவி, விண்ணோர் மதித்திட வாழ்வு தழைத்திடும்நீள் கொங்குமண்டலமே! கொங்கு மண்டல சதகம் தரும் இந்த எல்லைக் குறிப்பீட்டில் கிழக்கெல்லை குழித்தலை என்பதனிடமாக அதற்குச் சற்று மேல்பால், அதாவது பின்னால் உள்ள மதிற்கரை அல்லது மதுக்கரை என்பதாகச் சுட்டப்படுகிறது. அத்துடன் இச்சதகத்தின் பழைய பின்குறிப்பிணைப்பே கொங்கு நாட்டின் 24 உட்பிரிவுகளையும் வகுத்துரைக்கிறது. சில பல நூற்றாண்டுகளாகச் செதுக்கப்பட்ட கொங்குச் சோழர் காலக் கல்வெட்டுகள் தரும் விவரங்களிலிருந்து இவை சிலபல கூறுகளில் வேறுபடுகின்றன. இவை சோழர்களுக்கு முற்பட்ட, பிற்பட்ட நிலைகளைக் குறிப்பவை என்று கருதலாகும். மொத்தத்தில் தற்கால, அணிமைக்கால மரபுக்குரிய கொங்கு நாட்டின் எல்லைகளை நாம் வடக்கே தெக்கண மாநிலத்து விளிம்பான மலைகள், கன்னடநாடு எனவும்; கிழக்கே மதுக்கரை அல்லது அதற்குச் சற்று அப்பாலுள்ள குழித்தலை, சோழதொண்டை நாடுகள் எனவும்: தெற்கே பழனி வட்டாரம், பாண்டிநாடு எனவும்; மேற்கே வெள்ளிமலை அல்லது பொதுவாக மேற்குத்தொடர்ச்சிமலை, சேரநாடு அல்லது தற்காலக் கேரளமாநிலம் எனவும் வகுத்துக் காணலாம். தற்கால அணிமைக்கால மரபுக்குரிய இந்த எல்லை தமிழக வரலாற்றிலே குறுகி வந்துள்ள ஒன்றேயானாலும், இதுவே கூட மேலே குறித்தபடி நாற்புறமும் மலைகூறும் மேட்டு நிலங்களும் உடையதாய், நிலஇயல் அடிப்படையிலும் பண்பாட்டடிப் படையிலும் தனி முழுமையுடைய ஓர் அக நாடாகவும், சுண்டக்காய்ச்சிய பாலின் செறிவிறுக்கம் போன்ற திண்ணிய ஒருமைப்பாடுடையதாகவுமே இயல்கின்றது. இந்தப் பரப்பையே காவிரியின் தமிழகக் கிளையாறான பூவானி அல்லது பவானியாறு, காவிரியாறு ஆகியவற்றின் வடபாலுள்ள பகுதி, அவற்றுக்குத் தென்பால் உள்ள பகுதி எனப்பிரித்து வடகொங்கம், தென்கொங்கம் என அணிமைக் காலங்களில் வழங்குவதுண்டு. சிலசமயம் காவிரியின் மற்றக் கிளைகளான நொய்யல் அல்லது காஞ்சியாறு, ஆன்பொருநை அல்லது அமராவதியாறு ஆகியவற்றின் சமவெளிகளை உட்படுத்தி மேல் கொங்குநாடு என்று குறிப்பதும் உண்டு. சங்க காலத்திலும் சங்ககாலத்தை அடுத்தும் இது வேள் நாடு அல்லது வேளாள நாடு என வழங்கியிருந்ததாகவும் அறிகிறோம். சில வரலாற்றாசிரியர்கள் பாண்டியர் பட்டயங்களினடிப்படையில் கொல்லிமலைப் பகுதியைக் கீழ்க் கொங்கமாகிய மழகொங்கம் என்று குறிப்பதும் உண்டு. ஆனால், மழநாடு என்ற இப்பகுதியின் பெயரிலும், மழகொங்கம் என்ற தொகைச் சொல்லிலும் இடம் பெற்ற மழ என்ற உரிச்சொல் வீரமும் இளமையும் அழகு மென்மையும் ஒருங்கே குறிப்பது ஆகும். எனவே, மழகொங்கம் என்ற தொகை மழநாட்டை உள்ளடக்கிய கொங்கு நாட்டையே குறித்த சிறப்பு வழக்குச் சொல் என்று கருத இடமுண்டு. ஏனெனில் பாண்டியர் கொங்கு நாட்டின் கீழ்ப்பகுதியை மட்டுமன்றி, மேல் பகுதியையும் கைக் கொண் டிருந்தனர் என்றே தெரிகிறது. மேலே சுட்டிய வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற எவ்வகைப் பாகுபாடும் இன்றி இப்பரப்பு முழுவதுமே, சங்ககாலத்திலும் அதற்கு முன்னும் அதன் பின்னர்ச் சில காலமும் கூடிய பெருங் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக பண்டைக்காலத் தென்கொங்கு நாடாகவே நிலவிற்று. பண்டை வடகொங்கு நாடு இன்று கன்னட மாநிலத்திலுள்ள காவிரியாற்றுச் சமவெளி தாண்டி நெடுந்தொலை வடக்கே பரவியிருந்தது. இன்று கன்னட மாநிலத்தில் அமைந்துள்ள புன்னாடு, எருமைநாடு என்னும் மைசூர் வட்டாரம் (மைசூர், மகிஷபுரி: மகிஷம்-எருமை), மேலைக்கங்க மரபினர் ஆண்ட கங்கநாடு அல்லது கங்கவாடி காவிரிக்கு வடபால் உள்ள ஹளபீடு(பழைய வீடு) என்னும் துவரைநாடு அல்லது இருங்கோவேள் நாடு ஆகியவையும் பிறவும் இந்தச் சங்ககால வடகொங்கு நாட்டில் அடங்கியிருந்தன. இன்று கன்னட மாநிலப் பகுதியாகியுள்ள பண்டை வட கொங்கு நாடு அன்று தமிழகப் பகுதியாகவும் கொங்குத் தமிழகப் பகுதியாகவும் அமைந்திருந்தது போலவே, மேல் கடற்கரையில் இன்று கேரள மாநிலமாய் மாறிவிட்ட பரப்பு சங்ககாலத்தில் தமிழகத்தின் பகுதியான தமிழ்ச் சேரநாடாகவும்; அதற்கு வடக்கே இன்று கன்னடமொழி, துளுமொழி, குடகுமொழி, மராத்தியின் கிளைமொழியாகிய கொங்கணி மொழி ஆகியவை பேசப்படும் பன்மொழிப்பகுதி தமிழகப் பகுதியாகிய தமிழ்த் துளுநாடு அல்லது கொண்கான நாடாகவும் அமைந்திருந்தன. தமிழ்ச் சேரநாடு கொங்கு நாட்டை ஒட்டியே கிடந்தாலும், தொன்று தொட்டே தமிழக முடியரசர் மூவருள் ஒருவரான சேரரால், ஆளப்பட்டு வந்த நாடு என்ற முறையில் அது சேரநாடு எனத் தனி நாடாகவே என்றும் குறிக்கப்பட்டது. கொங்கு நாட்டின் பகுதியாகக் கொள்ளப்பெறவில்லை. ஆனால், பண்டைத்தமிழ்த் துளுநாடு, பண்டைய தமிழ் வடகொங்கு நாட்டை எட்டிக்கிடந்த தமிழ்ப்பகுதி என்ற முறையில் கொங்கை அளாவிய பகுதி அல்லது கொங்கு வண்ணமாக நிலவிய பகுதி என்ற நிலையிலே கொங்கண நாடு, கொங்காணநாடு அல்லது கொண்கான நாடு என்ற மேல் கொங்கு நாடாகவே நிலவிற்று. தமிழில் நெய்தல் நிலப் பகுதியின் தலைவன் கொண்கன் என வழங்கியதனை யொட்டியே, கொங்கணம் அல்லது கொங்காணம் என்ற இந்த நெய்தல் நிலப்பகுதியின் பெயரும் கொண்கானம் எனப் பண்டைத் தமிழில் திரிந்து வழங்கிற்று என்னலாம். வரலாற்றாசிரியர் பலர் கொங்கு நாட்டின் தற்காலத் தமிழகங்கடந்த முற்காலப் பரப்பை அறவே ஒதுக்கி அல்லது புறக்கணித்து விடுவதுண்டு. ஆயினும், வடகொங்கப் பரப்பு சங்ககாலக் கொங்குநாட்டுப் பகுதியே என்பதனை அறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி நன்கெடுத்து விளக்கிக் கூறியுள்ளார். ஆனால், அவர் மேல் கொங்கப்பரப்பைக் கொங்குத் தமிழகத் தின் பகுதியாகக் கொள்ளாமல், தமிழ்த்துளுநாடு என்ற தனிநாடாகவே கொண்டுள்ளார். பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டைநாடு, கொங்குநாடு, துளுநாடு எனக் கொங்குநாட்டை மையமாகக் கொண்ட சங்ககாலத் தமிழகம் ஆறு மண்டலங் களாகப் பிரிவுற்றிருந்ததாக அவர் கொள்கிறார். வரலாற்றாசிரியர் புலவர் குழந்தையும், (தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற ஏட்டில்) இவ்வாசிரியருமே சங்ககாலத் தமிழகத்தை ஐந்து மண்டலங்கள் கொண்ட பரப்பாகவும், சங்ககாலக் கொங்கு பரப்பை வடபால் மட்டும் வடுக எல்லையினையுடைய தமிழக மையப் பகுதியாகவும் வகுத்துக் காட்டியுள்ளனர். பெருங்கொங்குத் தமிழகத்தின் எல்லை இவ்வாறு சங்க காலத்தை நோக்க இன்று மிகவும் குறுகிவிட்டதென்றே கூற வேண்டும். ஆனால், இவ் எல்லைக்குறுக்கம் கொங்குத் தமிழகத்துக்கு மட்டுமே உரியதன்று. அது வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைப் பெருந்தமிழகத்தின் எல்லைக் குறுக்கங்களின் ஒரு கூறேயாகும். இது மட்டுமன்று. இந்த இருதிறக் குறுக்கங் களுமே கொங்குத் தமிழகத்துக்கு மட்டுமோ, தமிழகத்துக்கு மட்டுமோ ஏற்பட்ட தனி நிகழ்ச்சிகள் அல்ல. அவை இந்திய நாகரிக உலக எல்லைகளிலே அந்நாகரிக விரிவுவளர்ச்சி, அதன் செறிவு முதிர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுத்த இருபேரியக்கங்கள் அல்லது அலைபாய்வுகளின் பகுதிகளாய் அமைந்தவையே யாகும். பண்டைத் தமிழகத்தின் தென்பால் எல்லை குறுகியதற்குப் படிப்படியாகக் கடலுள் அமிழ்ந்துவந்த ஒரு தென்மாகண்டமே காரணம் ஆகும். இவ்வாசிரியரின் குமரிக்கண்டம் என்ற ஆய்வேடு காண்க. இதனைத் தமிழ்மரபு குமரிக் கண்டம் என்றும், புவியியல் அறிஞர் மரபு இலமூரியா அல்லது கோண்டுவானா என்றும் கூறும். இதனை ஒத்து அத்லாந்திசு என்ற ஒரு தென்மாகண்டம் பற்றிய மேலையுலக மரபும் உண்டு. தொடர் புறவுடைய இவ்விரு மாகண்டங்களிலுமேதான் மனித இன நாகரிகம் மண்ணுலக வரலாற்றின் ஆதியூழிகளில் தோன்றி வளர்ந்தது. அம் மாகண்டங்கள் படிப்படியாகக் கடலுள் அமிழ்ந்தபோது, தெற்கிருந்து வடக்கு, வடமேற்கு, வடகிழக்காகப் பரவிப் படர்ந்த புடைபெயர்ச்சி அலைகளே முதலில் உயிர்மண்டில மெங்கும் அளாவி, பின் அதுகடந்தும் உலகின் நாகரிக அலைபாய்வுகளாய் விரிவுற்றன. இந்த அலைபாய்வுக்கு எதிராக, கி.மு. 2000 அல்லது கி.மு. 1500-லிருந்து கி.பி. 1500 வரை மூவாயிர ஆண்டுகளுக்கு மேலாக உயிர் மண்டிலத்தின் வடபாலிருந்து காத்தியர் (ழுடிவாள), விசிகாத்தியர் (ஏளைபைடிவாள) வண்டலியர் (ஏயனேடயள), யூச்சியர் (நுரஉhளை), குசாணர் (முரளாயளே), ஊணர், வெள்ளை ஊணர் (ழரனே, றாவைந ழரளே); மங்கோலியர் (ஆடிபேடிடள) முதலிய பண்படா நாடோடி மக்களின் புடைபெயர்ச்சி அலைகள் நாகரிக உயிர் வரை அல்லது நாகரிக உலக முழுவதன் மீதும் மோதி அலைக்கழித்தன. பண்டை உலகின் எகிப்திய, சுமேரிய, ஏலமிய, பினீசிய, உரோம, கிரேக்க நாகரிகங்களை அடுத்தடுத்து அழித்து அவற்றை மாண்ட நாகரிகங்களாக்கிய அலைபாய்வுகள் இவையே. ஆயிரக் கணக்கான ஆண்டுக்காலம் அலையின்பின் அலையாகத் தொடர்ந்த இத்தாக்குதல்களின் இடைவெளிகளில் முந்திய நாடோடி அலைகள் குடியமர்வு பெற்றுக் கிரேக்கர் உரோமர் போன்ற புதிய நாகரிக இனங்களாக வளர்ந்தோங்கிய பின்னும், அவையே பின்வந்த புத்தம் புதிய நாடோடி அலைகளுக்கு இரையாகி அழிய நேர்ந்தது. இன்றைய உலக நாகரிக இனங்கள் பலவும் இத்தகைய அழிபாடுகள் மீது பழைய அடிநில நாகரிக விதைகளிலிருந்து புதிய மறுமலர்ச்சிகளாக எழுந்த வேர் வளர்ச்சிகளேயாகும். இந்த அடிநில வேர் வளர்ச்சி மூலங்கள், அடிநில விதையினங்கள் ஆகியவற்றின் வாழ்வுக்காலத் தோழமை பெற்ற இனங்களே தமிழக, கொங்குத்தமிழக நாகரிக இனங்கள்! நம் மனித உலகுக்குக் கிடைத்துள்ள பண்டையுலகின் விருந்து மரபுகளே இவை! வருங்கால நாகரிக உலகுக்கும் இவை விருந்தினங்களாக அமையத் தக்கவை ஆகும் என்னலாம். அகல் உலகின் இந்த அலைபாய்வுகள் இரண்டில், முந்திய அலைபாய்வுக்குரிய கடல்கோள்களினால் தமிழகத் தென்பால் எல்லையும், சேர சோழ பாண்டிய நாடுகளின் தென்பால் எல்லைகளும் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு நோக்கிக் குறுக்க முற்றன. இதுபோலவே பிந்திய அலைபாய்வின் தொலை விளைவாகவே தமிழகத்தின் வடக்கு, மேற்கு எல்லைகளும். பண்டைத் தமிழ்ச் சேரநாடு, பெருங்கொங்குநாடு, பெருந் தொண்டைநாடு ஆகியவற்றின் மேற்கு, வடக்கு எல்லைகளும் குறுகித் தேய்வுற நேர்ந்தன. இந்தியாவின் தொலைதூர வடகிழக்கெல்லையில் மஞ்சூரியர், மங்கோலியர், ஊணர் முதலிய பண்படா இனத்தவர் சீனநாகரிகத்தின்மீது வடதிசையிலிருந்து தாக்கினர், இதனால் வடசீனர் தென்சீனர்மீதும் தென்சீனர் (பண்டைச் சீன சப்பான் இனங்களுடனும் தமிழினத்துடனும் தொடர்புடைய) வியட்னாம், லயொஸ், கம்போடியா, பர்மா ஆகிய தமிழினப் பரப்புகளின் மீதும் மோதினர். இதனாலேயே இந்தியாவினுள்ளும் வங்காளியர் என்போர் கலிங்கர் அல்லது ஒரியர்மீதும், கலிங்கர் அல்லது ஒரியர் ஆந்திரர்மீதும், ஆந்திரர் தமிழர்மீதும் மோதி, அவரவர் புற அக எல்லைகளைத் தென்பாலாக நெருக்கித் தள்ளினர். இதன் பயனாகவே நெல்லூர் அளாவிக் கிடந்த பண்டைத் தமிழக வடஎல்லையும், வடபெண்ணையாறு வரை பரவியிருந்த பண்டைத் தொண்டை நாட்டு எல்லையும் திருவேங்கடத்துக்கும் அதற்கு இப்பாலும் நழுவி விடலாயின. இதுபோலவே இந்தியாவின் தொலைவடக்கு, வட மேற்கிலிருந்து யூச்சியர், குசாணர், பார்த்தியர், வெள்ளை ஊணர் ஆகிய நாடோடி அலைகளின் தாக்குதலால் சிந்தியர் குசராத்தியர்மீதும், குசராத்தியர் மராத்தியர் மீதும், மராத்தியர் கன்னடியர் மீதும், கன்னடியர் தமிழர்மீதும் தென்பாலாக நெருக்குண்டு அவரவர் புறஎல்லை, அகஎல்லைகளைத் தெற்கு நோக்கிச் சறுக்கவிட்டனர். இந்தியாவினுள் இந்த அலைபாய்வின் இருபிரிவுகளுக் குள்ளே, கீழ்பால் அலைபாய்வைவிட, வடமேற்குக் கணவாய்கள் வழிவந்த மேல்பால் அலைபாய்வே அடுக்கடுக்காகத் தொடுத்து நீடித்த, மூர்க்கமிக்க அலைபாய்வாய் அமைந்தது. இது மட்டுமன்று; கீழ்பால் பண்டு மகதப்பேரரசு, ஆந்திர கலிங்கப் பேரரசுகள், விந்தியமலை சூழ்ந்த தமிழின நாகரிக அரசுகள், தமிழக அரசு பேரரசுகள் ஆகியவற்றின் வலிமைகள் இந்த அலைகளின் வேகத்தைத் தடுத்துக் குறைத்து நின்றன. இந்த அரசுகள் பலவும் அவற்றால் கவிழ்ந்தாலும், அலைகளும் கலிங்க எல்லையிலிருந்து திசைமாறித் தெறித்தோடின. அவை கலிங்கக் கடல் வழியலையாகவே தென்னகம் கடந்து தமிழ் ஈழம் (இலங்கை) சென்று, அங்கே புதிய கலிங்க அல்லது சிங்கள அரசை அமைத்தது. மேல்பால் அலைபாய்வின் வழியில் தென்கோடித் தமிழ்ச்சேர அரசு ஒன்றைத் தவிர வேறு வலிமை வாய்ந்த தடங்கல்கள் பண்டு இல்லை. இதனாலேயே இத்திசையில் பண்டைத் தமிழகமும் பண்டைப் பெருங்கொங்குத் தமிழகமும் தங்கள் வட எல்லையில் மட்டுமன்றி, மேற்கெல்லை யிலும் தேய்வுற்றுக் குறுக நேர்ந்தன. ஏனெனில், இத்திசையில் முக்கொங்கு நாடாகிய பண்டைப் பெருங் கொங்குத் தமிழகம் படிப்படியாகத் தன் பண்டை மேல் கொங்குப் பரப்பு, வடகொங்குப் பரப்பு ஆகிய இரண்டையும் முழுவதும் இழந்து விட்டது. பண்டைப் பெருந்தமிழகமோ, பெருங்கொங்கு நாடு இழந்து விட்ட இந்தப் பகுதிகளை மட்டுமன்றி, தன் மேற்கு எல்லையிலுள்ள சேரநாடு முழுவதையும் பாண்டிய நாட்டின் மேல் கடலோரப் பகுதியையும் அவற்றுடனாக இழக்கநேர்ந்தது. இந்த அலைபாய்வுகள் வெறும் எல்லை மாற்றமாகமட்டும் அமையவில்லை. தமிழகத்துக்கு வடக்கே ஒரே மொழியாய்க் கிடந்த சங்ககால வடுக மொழி கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குள் கன்னடம், தெலுங்கு என்ற இரு தமிழின மொழிகளாய்ப் பிளவுற்றது. வடமேற்கிலோ அதே நூற்றாண்டுக்குள் பண்டைத் தமிழ்ச் சேரநாட்டுப் பாண்டிய நாட்டுப் பரப்பில் மலையாளம் என்ற புதுமொழியும், மேல் கொங்குப்பரப்பில் 16ஆம் நூற்றாண்டுக்குள் படகம், துளு, குடகு, கொங்கணி ஆகிய நான்கு புதிய மொழிகளும் எழுந்து தனிமொழிகளாக நிலவியுள்ளன. (தென்ன கத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும், மேலை ஆசியாவிலும், ஐரோப்பா முழுவதிலும்கூட இதே அலைபாய்வின் இதே போன்ற விளைவுகளைக் காணலாம். இன்றைய உலக மொழிகளில் மிகப் பெரும்பாலானவை கி.பி. 12 அல்லது 16ஆம் நூற்றாண்டினை ஒட்டிப் புதிது பிறந்தவையாகவோ அல்லது புதிய இலக்கிய வாழ்வு பெற்றவையாகவோ தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று ஒப்பீட்டாய்வாளர் காணலாம். இந்திய எல்லையில் இந்த அலைபாய்வுகள் கி.மு. 3ஆம் நூற் றாண்டுக்கு முன்னிருந்தே மோதிவந்தாலும், தமிழக எல்லையில் அவை செயலாற்றத் தொடங்கியது சங்ககால இறுதியில் அதாவது, கி.பி. 3ஆம் நூற்றாண்டிலேயாகும். தமிழரின் சங்ககால வாழ்வின் அறுதி கண்ட களப்பிரர் படையெழுச்சி எனப்படுவது உண்மையில் உலகளாவிய இந்த அலைபாய்வில் கடைசிப் படியான இந்தியாவின் தென்கோடி அலை வீச்சேயாகும். (கிரேக்க, உரோம நாகரிகங்களின் வீழ்ச்சியும், சங்கத் தமிழ் வாழ்வின் வீழ்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே ஊழியில் நிகழ்ந்த இந்த ஒரே அலைவீச்சின் துணை விளைவுகளேயாகும் என்பதும் இங்கே கூர்ந்து காணத்தக்கது ஆகும்.) சங்க காலத்தில் அதாவது கி.பி. 250க்கு முன், இன்றைய கன்னட நாட்டுக் காவிரிச் சமவெளிக்கு வடக்கே பரவிக் கிடந்த தமிழகக்கொங்கு நாட்டெல்லை, கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குள் இன்றைய தலைமலை எல்லைக்கு வந்துவிட்டது. இதற்குத் தமிழ்ச் சங்க இலக்கியச் சான்றுமட்டு மன்று, கன்னடமொழிச் சான்றும் உண்டு. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டுடனே கங்கநாட்டையும் ஆண்ட நிருபதுங்க மன்னனால் இயற்றப் பட்டதாகக் கொள்ளப்படும் கவிராச மார்க்கம் என்ற பழங் கன்னட மொழியின் இலக்கணம் அப் பழங்கன்னட மொழியின் வடதென் எல்லைகளை முறையே கோதாவரி ஆறு, காவிரி ஆறு என்றே வகுக்கிறது. இது கன்னட மொழியின் தென்எல்லையின் சரிவை மட்டுமன்றி, மராத்தியர் தாக்குதல் அலையால் ஏற்பட்ட வடஎல்லைச் சரிவையும் சுட்டிக்காட்டவே செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் காவிரிக்கு வடபால் இருந்த கன்னட மொழியின் தென் எல்லை (தமிழின் வடஎல்லை) கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குள் காவிரியளாவ வந்துவிட்டதென்றால், புதுக் கன்னட மொழிக் காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குள் கன்னட மொழியின் வடஎல்லை கோதாவரி தாண்டிக் கிருட்டிணையாற்றை அணுகிவிட்டது. அதன் தென்எல்லையும் தமிழின் வடஎல்லையும் அதற்குள் கன்னட நாட்டுக் காவிரி தாண்டித் தலைமலைக்கே வந்து விட்டது காணலாம். பண்டை வடுகு மொழியாகிய பழங்கன்னட மொழியானது, புதுக்கன்னடம், தெலுங்கு என இரண்டுபட்டதும் இக்காலத் திலேயே யாகும். மேலே சுட்டியுள்ளபடி, பண்டைத் தமிழகத்துக்கும் பண்டைக் கொங்குத் தமிழகத்துக்கும் இருந்த முழுமையும் ஒருமைப்பாடும் இம்மொழி மாற்றங்களாலோ, எல்லை மாற்றங்களாலோ பெரிதும் சிதைவுற்றுவிடவில்லை-வளம் பெற்றுள்ளன என்று கூடக் கூறலாம். ஏனெனில் இரு பரப்புகளிலுமே புதுஎல்லை அகஎல்லையாகிச் செறிவுற்றும் பழைய எல்லை புறஎல்லையாகி விரிவுற்றும் புதுமலர்ச்சிகள் பெற்றன. பண்டைத் தமிழக எல்லைகளும் பண்டைக்கொங்குத் தமிழக எல்லைகளும் இந்தியா அளாவ, உலகளாவ ஏந்தி நிற்கும் பண்பொளிச் சின்னங்கள் இம் மெய்ம்மைக்குச் சான்று பகர்கின்றன. கொங்குத்தமிழகத்தின் தனிப்பண்புகளின் செறிவையும் ஆழத்தையும் நாம் பண்டை முக்கொங்குப் பரப்பின் ஒருமைப் பாட்டிலும், பண்டைப் பெருங்கொங்கு, பெருந்தமிழக, பேரிந்திய பண்பாட்டின் விரிவகற்சியிலும் சென்றுதான் காணல்வேண்டும். தமிழ் என்ற மொழிப் பெயரின் வேர்ச்சொல் `இழ்' என்பது. இது இழுமெனும் இனிமைப் பொருள் உடையது. தமிழின மொழிகளான மலையாளம் (மலையம்-பொதியமலை, பொதிய மலைத்தென்றல்), தெலுங்கு அல்லது தெனுகு (தேன்) கன்னடம் (கன்னல்-கரும்பு அல்லது கற்கண்டு, இந்தி: கன்னா-கரும்பு), துளு (துளி-தேன்துளி அல்லது அமுதத்துளி), குடகு (கூழ்-இனிய உணவு, சர்க்கரைப்பாகு; இந்தி: குடு-வெல்லப் பாகு) என்பவற்றின் பெயர்களிலும் பண்டைப் பெருந்தமிழகப் பகுதியான இலங்கை அல்லது ஈழம் (பொன், தேன், கள்) என்பதன் பெயரிலும் இதே இனிமைப் பொருள் பரவியுள்ளது. தமிழுக்கும் சந்தனமரத்துக்கும், தென்றலுக்கும் காதற் கடவுளான மன்மதனுக்கும் பிறப்பிடமான தமிழரின் தேசிய மலை பொதியம் என்ற மலையமலை ஆகும். இது கடல்கொண்ட தமிழகத்துக் குமரிமலையின் ஒரு பகுதியே என்பது நினைவு கூரத் தக்கது ஆகும். இம்மலைப் பெயரின் தடத்தை அணிமை மலையாள மொழியின் பெயரில் மட்டுமன்றித் தொலை மேற்கிலுள்ள மாலத்தீவுகள், தொலைக் கிழக்கிலுள்ள மலேசியா நாடு ஆகியவற்றின் பெயர்களிலும் காணலாம். இது மட்டுமோ? காளிதாசன் (கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டு) காலத்திலிருந்து இன்றுவரை இந்தியாவின் எல்லா மொழிகளுக்குரிய காப்பியங் களிலும் நாடகங்களிலும் திரைப் படங்களிலும் சந்தனம் (மலயஜம்-மலையமலையில் பிறப்பது), தென்றல் (மலயவாதம், மலயானிலம், மலயபவனம்-மலையமலை யிலிருந்து வீசும் காற்று), தென்றலஞ் செல்வனாகிய வசந்தன் அல்லது மன்மதன், மாறன் அல்லது மாரன், (மலயராஜன்) ஆகிய கவிதை வழக்குச் சொற்கள் இடம் பெற்றுவந்துள்ளன. தமிழக, இந்திய நாகரிகங்களின் அகல் விரிவான தென்கிழக்காசியாவிலோ, இம்மலைப்பெயரின் தேசியமரபு வளத்தின் முழுநிறை ஆழ அகலப் பெருமானங்களும் மலர்ச்சி பெற்றுள்ளன. பொதிய மலை ஆண்ட பாண்டியன் மாறன் (மாறன் அல்லது மாரன்-மன்மதன்) எனப்படுகிறான். தென்கிழக்காசியாவில் ஒரு பேரரசு மரபு (கி.பி, 8ஆம் நூற்றாண்டில்) சீர்மாறன் (ஸ்ரீ மாரன்) என்ற பட்டம் தாங்கி நின்றது. இது மட்டுமன்று. சிவபெருமான் மலையரசனான பாண்டியன் (மலையத் துவச பாண்டியன்) ஈன்ற மகளான தடாதகைப் பிராட்டியை மணந்து பாண்டியனாக ஆட்சி செய்ததனால் மலையரசன் என்கிற பெயர் பெற்றான். தென் கிழக்காசியாவின் பல பேரரச மரபினர் மலையர சன்(கம்போடிய நாட்டில் கிமேர்-மலையரசன் மரபு; கடார நாட்டிலும் இந்தோனேசியாவிலும் ஆண்ட சைலேந்திரர்-மலையரசர்) என்ற பட்டமேற்றனர். அத்துடன் அவ்வரசர் தம் பெயராலேயே தம் மரபின் முன்னோன் என்ற முறையில் மலையரசனான சிவபிரானுக்கு மலைச் சின்னமான இலிங்க உருவுடன் மலைபோன்று ஓங்கி நின்ற கோபுரமேந்திய கோயில்கள் உள் எழுப்பி, தாம் மலையரசனான சிவபிரான் வழிவந்த மரபினர் என்பதையும் தம் கல்வெட்டுகளில் வலியுறுத்தியுள்ளனர் (சேர சோழ பாண்டிய அரசரும் பல்லவரும் பிறரும் இதே சிவபிரான் மரபினர் என்று கூறத் தேவையில்லை) கொங்குத்தமிழகப் பண்பாட்டுடன் இம் மலர்ச்சி விரிவுக்குரிய தொடர்புகள் கீழே வரும் பிரிவுகளில் விளக்கப்பட விருக்கின்றன. மலையம் என்ற சொல்லின் முழு ஆழ அகல பெருமானங்களை நாம் தென் கிழக்காசியாவில் காண்பது போலவே, தமிழ் என்ற சொல்லின் இனிமைப்பொருளின் முழு ஆழ அகல பெருமானங்களையும் நாம் கொங்கு என்ற சொல்லிலும், அது குறிக்கும் கொங்கு நாட்டு மரபுகளிலும் பண்பு பண்பாடுகளிலும் முனைப்பாகக் காணலாம். கொங்குநாடு என்ற பெயரிலும் பண்டை மேல் கொங்கு நாடு சுட்டிய கொங்கணம் அல்லது கொங்காணம் என்ற பெயரிலும் இடம் பெற்றுள்ள கொங்கு என்னும் தமிழ்ச் சொல்லுக்குத் தங்கம், தேன், நறுமணம், இனிமை, இளமை என்ற பொருள்கள் உண்டு. இவை உண்மையில் பல்வேறு பொருள்கள் அல்ல, தமிழ் என்ற சொல்லின் இனிமைப் பொருளுக்குரிய பல் திறச்செறிவு விரிவுடைய ஒரே பொருளேயாகும்-அதன் பல்திறப் பண்பு முனைப்பு என்றே கூறலாம். கொங்கு என்னும் இவ் வேர்ச்சொல் தொடர்பு இன்றைய கொங்கு நாடாகிய பண்டைத் தென் கொங்குத் தமிழகத்துக்கும், பண்டை மேல் கொங்குநாட்டுக்கும் மட்டுமே உரியதன்று. அதன் பண்பு மரபு பண்டை வடகொங்கு நாட்டுக்கும் தமிழக முழுமைக்கும் இந்தியா முழுமைக்குமே பொருந்துவதாகும். இது கீழே விரிக்கப்படுகிறது. கொங்கு என்ற சொல்லின் எல்லாப் பொருள்களிலும் அது கொங்கை என்ற உருவில் பெண்டிர் மார்பகத்துக்கு முற்றிலும் பொருந்துவதாகும். பொன் போன்ற சுணங்கு (காசுத்தேமல்) பூக்குமிடம், இளமைச் சின்னம், உயிரினிமை வாய்ந்த பால்வளம் பொங்கும் உயிரூற்று என்ற அம் மார்பகத்தின் பண்புகளே அச் சொல்லை மீண்டும் உருவகப்படுத்தி நில அன்னையின் தாய்ப்பால் ஊற்றுகளாகிய காவிரி, கோதாவரி அல்லது மகாநதி, கங்கை ஆகிய உயிர்ப்பேராறுகளுக்குரிய பெயர் ஆக்கின. ஆனால் சமக்கிருதத்தில் ஒகரஒலி இல்லை. வங்க மொழியிலோ, அகரமே பெரும்பாலும் ஒகரமாக ஒலிக்கப்படுகிறது. (பொங்குவளம் என்பதே பங்காளம், வங்காளம், வங்கம் ஆயினவாறு காண்க). இந் நிலையிலேயே காவிரி ஆற்றிற்கும் மற்ற ஆறுகளுக்கும் உரிய பொதுப் பெயரான கொங்கை என்ற சொல் கங்கை என மருவி வழங்கப்பட்டுள்ளது என்னல் தகும். தவிர, தமிழகத்திலேயே பெண்டிர் மார்பகம் என்ற பொருளை நேரடியாகச் சுட்டுவதினின்று அதனை இடக்கரடக்கலாக மடக்கும் உணர்வே `கங்கை' என்ற இந்த மருவிய வழக்கு எளிதில் வரவேற்கப்பட வழிசெய்திருத்தல் சாலும். மற்றும் கொங்கு, கொங்கம், கொங்கை ஆகிய திரிபுகளுக்கியையவே கங்கை, கங்கம், கங்கு என்ற திரிபுகளும் வழக்கில் ஏற்பட்டுள்ளன. கொங்கணிப் பிராமணரைக் கொங்குப்பட்டர், கங்கப்பட்டர், கங்குப் பட்டர் என்று பலவாறாக வழங்கும் வழக்கு மரபு பாரத இதிகாச காலத்திலிருந்து இன்றுவரை இந்தியாவில் நடைமுறை வழக்கிலுள்ளது. (தமிழக முன்னாள் முதல்வர் வான்புகழ் அறிஞர் அண்ணாவின் சந்திர மோகன் நாடக மரபு நினைவூட்டுகிறபடி, மாவீரன் சிவாஜியின் அரச குருவின் பெயர் கங்கபட்டர் என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கதாகும்.) கொங்கு நாடு என்பதும் கங்க நாடு என்பதும் இவ்வாறு தொடர்புடைய சொற்களேயாகும். இம்முறையில் கொங்கு நாடு, கங்கநாடு ஆகிய இருசொற்களுமே காவிரியாற்றிற்குரிய நாடு கோதாவரி அல்லது மகாநதியாற்றுக்குரிய நாடு அல்லது கங்கையாற்றுக்குரிய நாடு என்று பொருள் படுவன ஆகும். இது வெறுஞ் சொல்லாராய்ச்சிக் கற்பனையோ இலக்கியப் புனைந்துரையோ அன்று; வரலாற்றுமரபு காட்டும் மெய்ம்மையே யாகும். ஏனெனில், கங்க நாடு என்னும் பெயரும், மகதநாடு, பாடலிபுரம் என்னும் பெயர்களும், பிறவும் இம்மூன்று ஆற்றுச் சமவெளிகளிலும் பொது மரபுகளாகக் காணப்படுபவையே யாகும். (பாண்டி, மலையம், இலங்கை போன்ற சூழ் புலப் பெயர்கள் இம்முப் பரப்புகளுக்கும் தமிழினத்தின் சிந்துவெளி, கிழக்காபிரிக்க தென்கிழக்காசியப் பரப்புகளுக்கும் உரியனவே யாகும்.) தவிர சங்க காலத்திலும் அது தொடர்ந்தும் பண்டை வட கொங்கப்பகுதியில் ஆண்ட ஒரு மரபினர் கங்கர் என்றும் தம் மரபினர் ஆண்டபகுதி கங்கநாடு அல்லது கங்கவாடி என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது. (சங்க காலத்துக்குப் பின் கொங்கு நாட்டுடன் கங்க நாடும் சேர்த்து ஆண்டவர்கள் இம்மரபினரே யாவர்.) இது போலவே கோதாவரி அல்லது மகாநதிப் பகுதியில் கலிங்கம் ஆண்ட மற்றொரு மரபினரும் கங்கர் என்றே அழைக்கப்பட்டனர். இதனாலேயே வரலாற்று ஆசிரியர்கள் வடகொங்கு மரபினரை மேலைக்கங்கர் என்றும், கலிங்கக் கங்கரைக் கீழைக் கங்கர் என்றும் பிரித்துணர்கின்றனர். கங்கை என்ற சொல் இன்று, அப்பெயரால் வழங்கும் வடதிசைப் பேராற்றுக்கே முதனிலையுரிமையானது என்று பொதுவாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அது பண்டு, காவிரிக்கே முந்துற்ற முதனிலை வழக்காய், ஒப்புமை காரணமாகவே மற்ற ஆறுகளுக்கு வழங்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், கொங்கு நாட்டுக்கும் கங்கையாற்றுக்கும் இடையே உள்ள சொல் மரபு, பொருள் மரபுத்தொடர்பு மற்ற ஆறுகளோ, அவற்றுக்குரிய நாடுகளோ காணாதவை. கொங்கு என்ற சொல்லின் மணப்பொரு ளும் இனிமைப்பொருளும் காவிரி என்ற ஆற்றுப் பெயரில் கா அல்லது சோலை என்ற அப்பெயர்ப் பகுதியில் அமைந்திருப்பது போல, தங்கம் என்ற அதன் பொருளும் பொன்னி என்ற அவ்வாற்றின் மற்றொரு பெயரில் பொன் என்ற பெயர்ப்பகுதியாகப் பொருந்தியுள்ளது. கங்கை அல்லது கொங்கை என்னும் சொல்லிலோ கொங்கு என்பதன் இரு திறப்பட்ட முழுமைப் பொருளும் ஒருங்கமைவுறுகின்றது. தவிர வரலாற்று முறையில் இப் பொருள்கள் காவிரியாற்றிற்கும் கொங்குநாட்டுக்கும் பொருந்துவது போல, மற்ற ஆறுகளுக்கும் அவற்றுக்குரிய நாடுகளுக்கும் பொருந்துவதில்லை. ஏனெனில், காவிரி ஆற்று நீரிலேயே பொன் உண்டு. காவிரி நீரைக் காய்ச்சியும் காவிரி மணல் அரித்து உருக்கியும் பொன் எடுக்கும் மரபு அணிமைக் காலம்வரை இருந்து வந்தது. பண்டை வடகொங்குப் பகுதியாகிய கோலாற்றில் (கோலார்: மலேசிய நாட்டுத் தலைநகரான கோலாலம்பூரை நினைவூட்டும் பண்டைக் குவலாலபுரம்) இன்று செயல்பட்டு வரும் தங்கச்சுரங்கம் பண்டுதொழிற் பட்டு வந்த சுரங்கத்தின் புத்தகழ்வே என்று அறிகிறோம். இன்றைய தமிழகக் கொங்குப் பரப்பிலும் மதுரைவரை எங்கும் அணிமைக் காலம் வரை தங்கம் மேலீடாகவே அகழ்ந்தெடுக்கப்பட்டுவந்த தடங்கள் காணப் படுவதாக மாவட்ட அரசிதழ்கள் கூறுகின்றன. சங்கப்பாடல் களும் இவற்றை உறுதிசெய்கின்றன. தவிர பண்டைத் தென்கொங்கம் வட கொங்கம் இரண்டிலுமே நீலமணிக் கல்வளம் மட்டுமன்றிப் பொன் வளமும் மலிந்திருந்ததாக மேலைக் குறிப்பீடுகளும், சங்க இலக்கியமும் ஒருங்கே கூறுகின்றன. (சிந்து வெளி நாகரிக காலத்தில் கி.மு. 2500-லேயே கொங்கு நாட்டுத் தங்கம் அங்கே பயன்படுத்தப்பட்டதாகச் சிந்துவெளி அகழ்வாராய்ச்சியாளர் கூறுகின்றனர்.) மேல் கொங்குநாட்டுத் தங்கவளம் பற்றியோ சங்கப்புலவர்கள் தம் பாடல்வரிதோறும் வாயாரப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். இவ்வாறு பொன் வளம் பண்டைப் பெருங்கொங்கு நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே உரியதாய் அமையவில்லை. அது காவிரியாற்றுக்கும் அதனுடன் உயிர்த்தொடர்பு கொண்ட பண்டை முழுக்கொங்கு நாட்டுக்குமே முக்கால் உரிமை யுடையதாய் இருந்துவருவது காண்கிறோம். பண்டைக் கொங்குத் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே, இன்றைய கொங்குநாடு அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று காவிரியாற்றுடன் கொங்குநாடு கொண்டுள்ள தொடர்பு அடியும் முடியுமற்ற ஓர் இடைத் தொடர்பு மட்டுமேயாகும். ஆனால், கொங்கு என்ற நாட்டுப்பெயருக்குப் பொருத்தமாகச் சங்க காலத்தில் தலைக்காவிரிப் பகுதியான குடகு நாட்டிலிருந்து சோழநாட்டு அகண்ட காவிரிவரை இந்தஆற்றின் மிகப்பெரும் பகுதியும் கொங்குத் தமிழகத்துக்கே பேருரிமை உடையதாயிருந்தது. அத்துடன் கொங்கு நாட்டின் பரப்பு முழுமையுமே அன்று சோழ நாட்டைப் போன்று காவிரியின் நெல்வளத்துக்கு மட்டுமன்றி, அதன் பொன் வளத்துக்கும் பிற உலோக, கனிவளங்களுக்கும் உரியதாய் அமைந் திருந்தது. (தமிழில் பொன் உலோகப் பொதுப் பொருளும் சுட்டியதேயாகும். பசும்பொன், தங்கம்; செம்பொன், செம்பு; இரும்பொன் இரும்பு; வெண்பொன், வெள்ளி.) பெரும்புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளையும் பெருங் கவிஞர் புலவர் குழந்தையும் எடுத்துக்காட்டியுள்ளபடி, பண்டைப் பெருங் கொங்குத் தமிழக மரபின் தேசிய ஒருமைப்பாட்டை அப் பரப்பில் ஓடும் தனியாறுகள், காவிரியின் கிளையாறுகள் ஆகியவற்றின் பெயர்களே நமக்குக் காட்டும். (தென்வெண்ணெய், வடவெண்ணெய், அதாவது தென் பெண்ணை வடபெண்ணை யாறுகள் பண்டைப் பெருந்தொண்டை நாட்டின் ஒருமைப் பாட்டைச் சுட்டுவது இங்கே குறிப்பிடத் தக்கது.) அன்றைய தமிழ்க் கொண்கானத்தின் வட எல்லையா யமைந்த ஆறு வானியாறு அல்லது சேரனாறு (தற்கால ஹோனவார் அல்லது ஷீராவதி ஆறு; ஷோரனூர் என்ற நகரம் பெயர்காண்க) என்றும், அது தோன்றும் மலையிலிருந்தே பிறந்து ஓடும் சேர நாட்டின் அதாவது தற்காலக் கேரள மாநிலத்தின் ஓர் ஆறு பொன்வானி (தற்காலப் பொன்னானியாறு) என்றும், தற்காலத் தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் ஒழுகும் காவிரியாற்றின் இரு கிளைகளும் முறையே பூவானி (தற்காலப் பவானியாறு) என்றும், கீழ்ப்பூவானி (தற்காலக் கெப்பிணி அல்லது கப்பிணி அல்லது கபினியாறு) என்றும் ஒரு சீர்படப் பெயர் பெற்றுள்ளன. கடல் கொண்ட தமிழகத்தின் தலைச்சங்ககால அரசன் நிலந்தரு திருவிற் பாண்டியனைப் பராவிப் புகழ்ந்த புலவர்கள், அவன் ஆட்சிக்குரிய கடல் கொண்ட நாட்டுப் பஃறுளி யாற்றினைப் பாடியது போலவே, சங்ககாலப் பெருங்கொங்கு நாடு முழுவதையுமாண்ட கொங்குப் பெருஞ் சேரரைப் பாடிய சங்கப் புலவர்களும், அவர்கள் ஆட்சிக்குரிய மேல் கொங்க நாட்டு வடஎல்லையிலுள்ள வானியாற்றைப் பாடியுள்ளனர். (இது பின்னால் சுட்டப்பட விருக்கிறது)! முக்கொங்கு நாடாகத் திகழ்ந்த பண்டைக் கொங்குத் தமிழகத்தின் ஒருமைப்பாடு மேலே சுட்டிய மலைமரபு ஆற்றுமரபு ஆகியவற்றுடன் அமைந்து விடவில்லை. இன்றைய கொங்குநாடு வடக்குமேற்கு இருபுறமும் கன்னட கேரள மாநிலங்களாகவும், மற்ற இருதிசையும் தமிழகமாகவும், இன்றைய தமிழக முக்கோணத்திலே அதற்குரிய ஒருதலைக் கோணமாய் உள்ளது. ஆனால், பண்டைப் பெருங்கொங்குநாடு முப்புறக் கடல் சூழ்ந்த பண்டைய அகல்பெருந் தமிழகத்தில் வடக்கே மட்டும் பண்டைக் கொங்குத் தமிழாகிய வடுகு மொழியை எல்லையாகக் கொண்டு, மற்ற முத்திசைகளிலும் செந்தமிழ் மாநிலத்தின் பிற நான்கு மண்டலங்களையும் அளாவி, தென்னகத்துக்கும் தமிழகத்துக்கும் ஒருங்கே மைய இதய பீடமாய்த் திகழ்ந்திருந்தது. அத்துடன் அது அன்று உள்நாட்டுப் பகுதியாய் நிலவாமல், மேல் கொங்குநாட்டின் தொண்டி, மாந்தை ஆகிய துறைமுகங்கள் மூலமாகக் கடல் தொடர்பு உடையதாகவும் இருந்தது. இதனால் பண்டைக் கொங்குத் தமிழகம் உலக வாணிகம் தன்னூடாகச் செல்லப் பெற்றதனுடன் அமையவில்லை-தன் வாணிகம் உலக வாணிகப் பெரு வழியினூடாகச் செல்லவும் அது வழி கண்டிருந்தது. `கொங்கர் குடகடல் ஓட்டிய ஞான்றை’ என்பது போன்ற சங்கக் குறிப்புகள் இதற்குச் சான்று பகர்கின்றன. கடலகச் சேரநாட்டைவிட, உள்நிலக் கொங்குப் பகுதியிலேயே இயேசுநாதர் வாழ்வுக் கால உரோம நாணயங்கள் மிகுதியாகக் கிடைத்துவருவதும் இதே உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. இடைக்கால அணிமைக் காலங்களில் அயற் பண்பாட்சி யாளர்களுக்கு உகந்த நிலையில் கொங்கு மக்கள் உள்நாட்டு மக்களாய் ஒதுங்கி வாழ்ந்தாலும், சங்ககாலப் பழம்பண்பின் உந்துதலால் இன்று அவர்களும் மற்றத் தமிழக மக்களைப் போலவே இந்திய, பேரிந்திய, அகல் உலகப் பெருவாழ்வுகளில் தங்குதடையற்ற தமிழ் மரபுரிமைகொள்ளத் தொடங்கி யுள்ளனர் என்பது காணலாம். இன்றைய கொங்குப் பரப்பின் மக்களேயன்றி, பண்டை வட கொங்கு மக்களும் சங்க இலக்கியத்தில் கொங்கர் என்றே அழைக்கப்பட்ட னர். கொங்குநாட்டு மையம் அன்று பண்டை வடகொங்குப் பகுதியி லிருந்ததனாலேயே அப் பகுதியாண்ட ஒரு வேளிர் மரபினர் கொங்கர் அல்லது கங்கர் எனப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்தி ஆகும். அத்துடன் மேல் கொங்க மக்கள் கொங்கணர், கொங்கணவர் என்று தனிப்பட வழங்கப்பட்டாலும், பொது முறையில் கொங்குக் குடகர், குடகக் கொங்கர் என்றும் தங்குதடையின்றிச் சுட்டப்பட்டனர்! மேலும், கொங்கர், கொங்கணர். கொங்கணவர் என்ற பெயர்களிடையே அன்றைய தமிழ் மரபு மிகுதி வேறுபாடு காட்டியதாகத் தெரியவில்லை. வடகொங்கு (கங்கநாடு) தென் கொங்குப் பகுதிகளையே பெரிதும் ஆண்ட சங்க காலத்துக்குப் பிற்பட்ட கங்க மன்னர் பெயர்களில் நாம் `கொங்கணிவர்மன்' போன்ற சொல் வடிவங்களை ஏராளமாகக் காண்கிறோம். இதுபோலவே மேல் கொங்கு நாட்டைச் சோழர் காலம்வரை ஆண்ட ஒருமரபினர் தம்மைக் கொங்காள்வார் என்றே குறித்துக் கொண்டனர். கொங்கு நாட்டுச் சித்தர்களில் ஒருவர் கொங்கணச் சித்தர் என்றும், இவர் வாழ்ந்த மலை கொங்கண மலை என்றும் இன்றுகாறும் வழங்கி வந்துள்ளது. தவிர, சேரநாட்டுத் தமிழ் மொழி திரிந்து மலையாளமாகவும், வடகொங்குத் தமிழ்மொழி திரிந்து கன்னடமாகவும் மாறிய பின்னும் கூட (கி.பி. 12ஆம் நூற்றாண்டு கடந்தும்) மேல் கொங்குப் பகுதி தமிழ் மொழியிலும் தமிழ்ப் பண்பிலும் நீடித்திருந்தது. (கோலர் என்ற இந் நாட்டுப் பழங்குடியினர் பெயர் சோழர் என்ற பெயருடன் தொடர் புடையது என்றும் கருத இடமுண்டு) தமிழகத்திலே சோழ ராட்சிக்கு முன் பாண்டிநாட்டு வழக்கிலிருந்த பண்டைத்தமிழ் வட்டெழுத்துக்களோடொத்த கோலெழுத்து வடிவம் மேல் கொங்கு நாட்டில் இன்று வரை கூட நீடித்துள்ளது. பழங் கல்வெட்டுகளும் இங்கே மிகப் பெரும்பாலாகத் தமிழ் மொழிக் கல்வெட்டுகளாகவே இயன்று வந்துள்ளன. மேல்கொங்குப் பகுதியில் இன்று சுப்பிரமணியம் என்று வழங்கப்படும் நகரிலுள்ள முருகன் கோயிலில் சங்க காலத் திருமுருகாற்றுப்படை விரிக்கும் முறைமையில் சிறிதும் வழுவாமல் இன்னும் பூசனை நடை பெற்று வருகிறது என்பதை வரலாற்றாசிரியர் பண்டாரகர் இராசமாணிக்கனார் எடுத்துக்காட்டியுள்ளார். திருமுருகாற்றுப்படை குறித்துள்ள முருகன் திருப்பதிகளுள் அது ஒன்றாய் இருந்திருக்கக் கூடும் என்றும் அவர் கருதியுள்ளார் மற்றும் கோயிற் பூசனையைத் திருமுருகாற்றுப்படை கூறும் முறைமையில் வழுவாமல் இன்றும் மேல் கடற்கரை எங்குமே நடத்தி வருபவர் மேல் கொங்கநாட்டு, சேரநாட்டுப் பரப்புக்களுக்குரிய மிகப் பழமை வாய்ந்த தென்னகப் பிராமண மரபினர்களான போற்றிகள், நம்பூதிரிகள் ஆகியோரேயாவர். (புலவர் குழந்தை இவர்களைப் பிற்கால வருகையாளர் என்று ஐயுறவு கொண்டுள்ளார். ஆனால், ஆசிரியர் மறைமலையடி களார் அவர்களைக் குருதி மரபில் மட்டுமன்றிப் பண்பாட்டு மரபிலும் பண்டைத்தமிழ் வழிவந்த தமிழ்ச் சமயகுருமாராகவே கொண்டுள்ளார்). திருச்செந்தூர் போன்ற இடங்களில் முருக பூசனை செய்யும் பிராமணர், தங்களைச் சோழியர் என்றோ, கொங்கணியர் என்றோதான் இன்றும் கூறிக்கொள்கின்றனர். பண்டைச் சமயசாத்திரமுறை வழுவாமல் முன்குடுமி (சமக்கிருதம்: பூர்வசிகா-மங்கலக் குடுமியான முன்முடி, அபரசிகா-அமங்கல காலங்களுக்குரிய பின்குடுமி) வைத்திருப்பவர்கள் தாங்களே என்று அவர்கள் பெருமையும் உரிமையும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் நாட்டுக் கோட்டையர் போன்ற வணிக மரபினரும், கார்காத்தார், தொண்டை மண்டல துளுவ வேளாளர், தொண்டை மண்டல வேளாளர் போன்ற வேளாண் மரபினரும் பிறரும் துளுநாடு (மேல் கொங்குநாடு), கங்க நாடு (வடகொங்கு நாடு), கார் மண்டலம் (வடகொங்கு ஒட்டியபகுதி) ஆகியவற்றையே தங்கள் மூலத்தாயகமாகக் கூறிக்கொள்கின்றனர். உண்மையில் கொங்குவேளாளர் உட்பட (வணிக மரபினர் பலரையும் உள்ளிட்ட) எல்லா வேளாண் மரபினருமே தங்களைக் கங்கமரபினர், கங்கை குலத்தவர், காங்கேயர் என்றே கூறிக் கொள்கின்றனர். உண்மையில் வரலாற்றுலகப் பேரறிஞர் திருத்தந்தை ஈராசு கருத்தின்படி (ஐனேடி ஞசடிவடி-ஆநனவைநசசயநேயn ஊiஎடைளையவiடிn என்ற ஆய்வுப் பேரேடு காண்க). மனித இனத்தில் ஆரிய திராவிடப் பிரிவீடு ஏற்படுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் முற்படத் தொல் பழங்கால உலகில் நிலவிய மீனவர்-வேளாளர் என்ற இருபேரினங்களிடையே வேளாளப் பேரினத்தின் மையத் தலைமையிடம் மேல் கொங்கமாகிய குடகு நாடே என்று அறியப்படுகிறது. பண்டைய பெருங்கொங்கு நாட்டின் பிரிவுகளாகிய மூன்று கொங்கு நாடுகளிடையேயும் பிரித்தறியமுடியாத மிக நெருங்கிய சமுதாய, சமய, அரசியல் தொடர் பொருமைப்பாடுகள் தொன்றுதொட்டே நிலவி வந்துள்ளன என்பதைச் சங்க இலக்கியப் பலகணி நமக்குக் காட்டுகிறது. சங்ககாலத் தொடக்கத்திலிருந்து தொண்டைநாடு, கொங்கு நாடு என நாம் இன்று கூறும் எல்லைகள் மட்டுமன்றி. அவற்றுக்கு அப்பாற்பட்ட பண்டை வட தொண்டைநாடு, பண்டை வடகொங்கு மேல்கொங்கு நாடுகள் ஆகிய பகுதிகளும் அவற்றுக்கு அப்பாலுள்ள பகுதிகளும் கூட, முற்றிலும் வேளிர் ஆண்ட பகுதிகளாக, முடியரசின் வாடைபடாப் பகுதிகளாகவே இருந்தன. சங்ககாலத்தில் மேல் கொங்கில் ஆண்ட கடம்பவேள் நன்னனும், வடகொங்காண்ட எருமையூரனும் புன்னாடரும் இருங்கோ வேளிரும் கங்கரும் கட்டியும், இன்றைய தமிழகக் கொங்கமாகிய தென் கொங்கமாண்ட அதியமான், ஓரி, வையாவிக்கோ, கண்டிரக்கோ முதலியோரும் ஒரே நிலைப்படத் தமிழக வேளிர் மரபைச் சேர்ந்தவராகவே இருந்தனர். தவிர, பெரும்புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை குறித்துக் காட்டியுள்ளபடி சேரநாட்டின் தெற்கிலுள்ள பாண்டிநாட்டுப் பகுதியிலும், தற்காலக் கொங்கு நாட்டின் மேல் பகுதியிலும் கீழ்பகுதியிலும் அமைந்தது போலவே, மேல் கொங்கு வடகொங்கு பரப்புகளின் வட எல்லையிலும் ஒரு பெரும்பகுதி வேள்நாடு என்றே வழங்கியிருந்தது. பல்லாளர் என்ற முடியரசு மரபினர் பெயரிலும், சிரவண பெள்ளேகுள என்ற தலப்பெயரிலும் நாம் `வேள்' என்ற இந்த உலகப் பழமை வாய்ந்த வேர்ச்சொல்லின் தடமே காண்கிறோம். இதுமட்டுமன்று. சங்ககாலம் கடந்த பின்நாட்களில் வடகொங்கப் பரப்பில் ஆண்ட சளுக்கர், இரட்டர், கங்கர், ஒய்சளர் போன்ற அரச, பேரரச மரபினர் பலரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டுவரை கூட வேளிராகவே கருதப்பட்டிருந்தனர். அந்நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட திவாகரம், பிங்களந்தை போன்ற தமிழ் நிகண்டுகள் இதனாலேயே வேளிர், குறுநில மன்னர், குறும்பர், சளுக்கர் ஆகிய சொற்களை ஒரு பொருட் சொற்களாகக் குறித்துள்ளன. முக்கொங்கு நாட்டின் ஒருமைப்பாட்டுவளம் சுட்டும் இன்னொரு மரபு கோசர் மரபு ஆகும். இப் பழங்குடியினத்தவர் மேலைக் கொங்க மாகிய துளுநாட்டுக்கே உரியவர்கள். இது கீழே விரிக்கப்படவிருக்கிறது. இவர்கள் சங்கப் புலவர்களாலே பலபடப் பாராட்டப்பட்டவர் ஆவர். சங்கப் புலவர்களுள்ளேயே கருவூர்க்கோசனார் என்பவர் இம்மரபினர் ஆவர். இன்று இந்தியாவெங்கும் பரவி வாழும் கூர்க்க இனத்தவரைப் போல, கொங்குத்தமிழக முழுவதிலும் தமிழக முழுவதிலும் பரவி வாழ்ந்த இந்தக் கோசர்கள் வீரமும் கண்டிப்பும் வாய்மையும் உடையவர்களாகப் பாராட்டப்பட்டனர். இதன் பயனாக இக்காலக் கூர்க் இனத்தவரைப் போலவே, தமிழக முழுவதிலும் அவர்கள் படை வீரராகவும், கோட்டைக் காவலராகவும், வாயில் காப்போராகவும் அரசரிடமும் செல்வரிடமும் பணியாற்றினர். எங்கும் வரி பிரிக்கும் பொறுப்புரிமையும், பெருமதிப்பும் உடைய உயர் அரசுப்பணியாளர்களாகவும் அவர்கள் திகழ்ந்தார்கள். இன்றும் கொங்கு நாட்டவர்க்கே சிறப்புரிமையுடையனவாகக் கருதப்படும் துணிபு, வீரம், மான உணர்வு, வாய்மை, இளமைத் துடிப்பு ஆகிய பண்புகள் இப்பண்டை இனத்தவரின் பண்புகளை நினைவூட்டுவன ஆகும். இன்று தமிழ் மக்களுடனும் கொங்கு மக்களுடனும் இக் கோசர் பிரித்தறிய முடியாத நிலையில் இரண்டறக் கலந்துவிட்ட போதிலும், தமிழர் குருதியிலும் நாடி நரம்புகளிலும் சிறப்பாகக் கொங்குத் தமிழ்மக்கள் குருதியிலும் நாடி நரம்புகளிலும் இக்கோசரின் குருதிப் பண்போட்டம் இன்னும் அதிர்வுறுகின்றது என்று உறுதியாகக் கூறலாம். (தமிழ்நாட்டுக் கணக்கர் அல்லது காருணிகர் என்ற வேளாண் வகுப்பினரும், வட இந்தியாவின் கணக்கு வகுப்பினரான காயஸ்த பிராமணரும் இவ்வின மரபினர் வழித்தோன்றல்களே என்று கருதத் தகும்). கொங்குநாட்டில் சத்தியமங்கலம் என்ற ஊரின் பெயரும், பெயர் மரபும் சூழலும் இன்னும் இம்மரபினர் குடியிருப்புகளின் சின்னமா யிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப் பகுதியாண்ட வேள்மரபினரான கட்டியர் கோசரினத்தவரே என்றும், அசோகன் கல்வெட்டுகள் குறிப்பிடும் சத்திய புத்திரர் இவர்களே என்றும் புலவர் குழந்தை கருதுகிறார். இன்றைய கொங்குநாட்டின் பெருநகரான கோயம்புத்தூர் அல்லது கோயமுத்தூரின் பெயரில் கூடச் சில வரலாற்றாசிரியர் கோசர் என்ற இவ் இனப்பெயர்த் தொடர்பைக் காண எண்ணுகின்றனர். ஆனால், கி.பி. 9, 10ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கல்வெட்டுகளும் சோழர் பட்டயம் ஒன்றும் இந் நகரைக் கோவன் என்ற இருளர் தலைவனின் பெயரால் கோவன் புத்தூர் என அமைந்ததோ என்று கருத வைக்கின்றன. (சோழர் பட்டய ஆதாரத்தையும் பிற அந்நாளைய கல்வெட்டுகளையும் முழுதும் அப்படியே ஏற்பதானால், சோழர் காலம் வரை கொங்குநாடு முழுவதும் இருளர்களே பரவியாண்டதாகக் கொள்ளல் வேண்டும். இது கீழே ஆராயப்படுகிறது) ஆனால், எப்படியும் இந் நகரின் பெருவளமும் வளர்ச்சியும் கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே என்பதில் ஐயமில்லை. கோவன் இருளரோ, கோசரோ எவராயினும் ஆகுக, கோவன் என்ற சொல் சங்ககால மரபில் வந்த ஒரு வேள் ஆதல் கூடாததன்று. ஏனெனில், கோசரும் இருளரும் ஒரே நிலைப்படப் பழந்தமிழினத்தவரே யாவர். மற்றும் கோவூர்கிழார் என்ற சங்கப்புலவர் பெயரும் இத்தகு சங்ககால வேள்மரபே சுட்டுகின்றது. தவிர, பின்னே விளக்க இருக்கிறபடி, கோவர், கோவியர் என்ற சொற்கள் பொதுவாக வேளிரினத்தவரையும் சிறப்பாக ஆய்மரபினரான வேளிரினத்த வரையும் சுட்டுவதே யாகும். மேலே குறித்தபடி இப்பகுதிக்குரிய முற்கால வேள்நாடு அல்லது வேளாளநாடு என்ற பெயர் மரபும் இதுவே குறித்துணர்த்துவதாகும். பண்டைப் பெருங்கொங்கு நாட்டுக்கும் சரி, அதன் அக நாட்டுச் செறிவாகிய இன்றைய கொங்குநாட்டுக்கும் சரி; மலை, கடல், ஆறு ஆகியவற்றைவிட அதன் சிறந்த பாதுகாப்பெல்லையும் பண்பாட்டு எல்லையுமாய் அமைபவை அவ்வெல்லைகளைச் சுற்றிலும் உள்ள வீரப்பழங்குடி மக்களேயாவர் என்பது மேலே கூறப்பட்டுள்ளது. சரியான தேசிய முறையில் அவர்கள் வாழ்வு சீரமைக்கப்படுமேயானால், அவர்களைவிடச் சிறந்த பாதுகாப்போ, பண்பாட்டுக்காப்போ கொங்குத் தமிழகத்துக்கும் தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் வேறு இருக்க முடியாது என்னலாம். 3) தமிழ்மொழியின் கன்னித்தாய்மைப் பண்பும் கொங்குத் தமிழ் வாழ்க்கைப் பண்பும் மூவா இளமைப் பண்பு என்பது தமிழரின் பழந்தெய்வ மாகிய முருகனுக்குச் சிறப்புரிமையான பண்பு ஆகும். இதனையே `முன்னைப் பழமைக்கும்' முந்தியதாய் நின்று `பின்னைப் புதுமைக்கும்' பிந்தியதாயமையும் பழமை புதுமை வளம் என இறைவனுக்கேயுரிய அரும்பண்பாக மாணிக்கவாசகப் பெருமான் பாடியுள்ளார். இறைப்பண்பாக இதனை நாகரிக உலக முழுவதுமே போற்றி வருகிறது. ஆனால், இந்திய மக்களால் மட்டுமே, தமிழகத் தேசியக் கவிஞர் பாரதியார் மொழியில், `தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பு' என இதே பண்பு நாட்டன்னையாகிய பாரதத் தாய்க்கும் உரியதாகப் போற்றப்படுகிறது. தமிழ் மரபோ, இன்னும் ஒருபடி மேற்சென்று, இறைமை அதாவது உலகத் தாய்மை மரபு நாட்டுத் தாய்மை மரபு, மொழித்தாய்மை மரபு ஆகிய மூன்றனுக்கும் உரிய முத்தமிழ்த் தேசிய, முத்தமிழ் இறை, முத்தமிழ் மொழி மரபாக இப் பண்பினைப் பாராட்டுகிறது. மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரனார் மொழியில் கூறுவதானால் இதுவே தமிழின், தமிழ் நாட்டின், தமிழ் இறைமையின் மூவாக்கன்னியிளமைத்திறம், அதாவது `கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்' ஈன்றெடுத்து வளர்த்தும் சிதையாத தமிழின் `சீரிளமைத் திறம்' ஆகும். மும்மைசான்ற இந்தப் பண்பு மரபுக்கு ஒரு நீண்ட தொல் பழந் தேசியப் பின்னணி உண்டு. தமிழ் என்ற சொல் ஒரு மொழிப் பெயர் மட்டுமன்று; அது ஒரு மொழியின், ஓர் இனத்தின் ஒரு நாட்டின், ஒரு பண்பு மரபின், ஒரு பண்பாட்டின், ஓர் இறைமையின் வழிவழிப் பெயர் ஆகும். தமிழரின், மொழி, இனம், நாடு, இறைமை அல்லது சமயக் கோட்பாடு, வாழ்க்கைப் பண்பு, பண்பாடு, நாகரிகம் ஆகிய எல்லாத் திறங்களிலும் மூவா இளமைப் பண்பு பேணும் ஒரு நெடு நீள்மரபாகவே அது பேணப்பட்டு வந்துள்ளது. கொங்கு என்ற சொல்லும் இதே மரபுப் பண்பைக் குறிப்பதாகும். ஆனால் இது அதன் முனைத்த, உயிர்க் கனிவார்ந்த பண்புத் திறம் சுட்டுகிறது. தமிழ் மூவா இளமையானால், கொங்கு அதன் மாளாத, தாழ்வு தளர்வுகளற்ற, என்றும் உரம் பெற வளரும் உயிர் வளப்பமிக்க இளமை நலம், இளமை, இனிமை, இளமைத் துடிப்பு ஆகும். (இதுவகையில் கங்கை கொங்கை என்ற சொல் தொடர்பு மேலே குறிக்கப்பட்டுள்ளது). ஓரம் என்ற பொருளுடைய கங்கு என்ற சொல்லின் மரூஉ எனக் கொண்டு, கொங்கு என்ற சொல்லுக்குச் சேர நாட்டின் ஓரப் பகுதி எனப் பொருள் வருவிக்க முற்படுபவர் உண்டு. ஆனால், இது சொல்லுக்குத் தற்காலச் சூழலில் தரப்படும் புது விளக்க மாகலாமேயன்றி, மரபு தழுவிய பொருளாக மாட்டாது. ஏனெனில், சேர நாடும் கொங்கு நாடும் ஒன்று என்பதோ, கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதி என்பதோ முற்காலச் சங்க இலக்கியம் அறியாத ஒரு பிற்காலக் கருத்து மரபே யாகும். (இது கீழே விரிக்கப்படவிருக்கிறது). அத்துடன் கொங்கு என்ற நாட்டுப் பெயரின் மரபு சங்க காலத்தினும் மிக்க பழமை வாய்ந்தது ஆகும். எனவே தமிழ் என்ற சொல்லைவிட அது பழமையில் குறைந்ததன்று. நிறைந்ததேயாகும் என்னல் தகும். தங்கம், தேன், நறுமணம், இனிமை, இளமை, இளமைத் துடிப்பு முதலிய அச்சொல்லின் சொற்பொருள்களைத் தழுவிய அதன் மரபுப் பொருள் உண்மையில் தேன்மலரின் அழகும் மணமும் இனிமையும் பொன்னின் பொலிவும், இரண்டின் உயிர் வளமாகிய மாளா இளமை நலமும் ஒருங்கே காத்துப் பேணி வளர்க்கத் தக்க அன்பு அறிவு கலை இயல் வாழ்க்கைப் பண்புகளின் மரபு என்பதேயாகும். என்றும் இளமை என்பது சிவபெருமானுக்குப் பொதுப் பண்பு, முருகனுக்குச் சிறப்புப் பண்பு. மல்லிகை என்பது கொடிக்குப் பொதுப் பெயர்; மல்லிகைப் பூவுக்கே சிறப்புப் பெயர். பால்வளம் என்பது பசுவின் உடல் முழுவதும் பரவிய பண்பேயானாலும், பசுவின் மடுவே அதன் ஊற்றுவளம் ஆகும். தமிழகத்துக்கும் கொங்கு நாட்டுக்கும் (சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்குமன்று) ஏதாவது `கங்கு'த் தொடர்பு (ஓரத் தொடர்பு, முனைப்பு) உண்டானால் அது இதுவே! மற்றும் உண்மையில் கொங்கு என்பதும் முருகு (இளமை, அழகு, தேன்) என்பதும் தமிழில் ஒரு பொருட் சொற்கள்! எனவேதான், கொங்கு மக்களிடம் இன்றும் காணப்படுவதாகக் கூறப்படும் பண்புகளை யெல்லாம் நாம் நம் தமிழ்ப் புராண மரபு படைத்து உருவாக்கியுள்ள `தகப்பன் சாமி'யாகிய முருகன் அல்லது கந்தன் பண்புருவிலும் காணலாம்! (மயிலேறும் பெருமாளாகக் கந்தன் அல்லது முருகன் ஆடிய குன்று தோறாடல் கொங்கு நாட்டுக் குன்றுகளையே பெரிதும் குறிப்பதாகும். மயில்கள் கொங்கு நாட்டிலேயே மிகுதி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்). தமிழ் மொழியின் கன்னித் தாய்மைக்கு இலக்கங்களாக ஆசிரியர் சுந்தரனார் எடுத்தியம்பும் சேய்மொழிகள் மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகியவையே. இவை பயிலும் நாடுகள் அனைத்துமே தற்காலக் கொங்கு நாட்டினை அடுத்துள்ளன. எனவே தமிழகம் கன்னித்தாய் என்றால், இவ்வெல்லா மொழி மக்களையும் தன்னகத்தே கொண் டிருப்பதுடன், அவ் எல்லைகள் அளாவிக் கிடக்கும் கொங்குத் தமிழகமே அக்கன்னித் தாய்மைச் சின்னமாய் அச் சேய்களை அரவணைத்துக் கொண்டுள்ளது என்னலாம். அத்துடன் அச்சேய்களுள் கன்னடமும் தெலுங்கும் மட்டுமே (வடுகு என்ற உருவில்) சங்ககாலம் அறிந்தவை. மற்றவை புதிய மொழிகள். மற்றும் பொது முறையில் மட்டுமே அவற்றையும் புதிய மொழியாகிய மலையாளத்தையும் நாம் தமிழகம் ஈன்றெடுத்தவை என்று கூறலாம். துளு, குடகு என்பவையும், பண்டைத் துளு நாட்டுப் பரப்பில் மராத்திக் கலப்பால் எழுந்த கொங்கணியும், நீலகிரியில் கன்னடம் அல்லது பண்டை வடுகு மொழிக் கலப்பால் தோன்றியுள்ள படகமும் பிறவும் கொங்குத் தமிழகமே சிறப்பு முறையில் ஈன்றெடுத்த புத்திளஞ் சேய்கள் அல்லது அணுக்கக் குழந்தைகள் என்று கூறத்தகும்! தமிழகத்தின் `கங்கு' அல்லது முனைப்பாகக் கொங்கு நாடு விளங்குவது போல, கொங்கு நாட்டின் `கங்கு' அல்லது முனைப்பாக விளங்குவதே மழநாடு. மழநாட்டின் பெயரிலும், அதனை உட்கொண்டுள்ள கொங்கு நாட்டின் `மழ கொங்கம்' என்ற பெயரிலும் உள்ள மழ என்ற உரிச்சொல் (வீரமும் இளமைத் துடிப்பும் அழகும் மென்மையும் ஒருங்கே கொண்டது என) சுட்டும் பண்பு ஒன்று உண்டு. தமிழகத்தின் மற்ற மண்டலங்களைவிட முனைப்பாகக் கொங்கு நாடே நாற்புறமும் `கொங்கு வேலி' அல்லது `கொங்கர'ணாகப் பெற்றுள்ள வீரப்பழங்குடியினப் பண்பினையே அது சுட்டுவது ஆகலாம். மயிலை ஊர்தியாகக் கொண்டு அவ்வீரக் கொங்கினங் களிடையே குன்றுதோறாடும் முருக வேளுக்குரிய பண்பு இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். பெரிய புராண காலம் வரை அப்புராணத்திலும், யவனர் போன்ற மேலை நாட்டினர் குறிப்பு மரபுகளிலும் தமிழகக் கல்வெட்டுகளிலும் பாண்டி நாடு தனிச் சிறப்புப் படத் தென்னாடு, தமிழ் நாடு, செந்தமிழ்நாடு எனவும்; மறவர்நாடு எனவும், குமரி நாடு, கன்னி நாடு, பெண்கள் நாடு எனவும் பலபடப் பாராட்டப்பட்டுள்ளது. (ஆங்கிலமாக் கவிஞர் சேக்சுபியரின் நடு வேனிற் கனவு நாடகம் சித்திரிக்கும் இந்தியா இதுவே!) இவை யாவும் தமிழக முழுமைக்கும் உள்ள பொதுப் பண்புக் குறிப்புகளேயாயினும், அவையே பாண்டி நாட்டினுக்குச் சிறப்புப் பண்புகளாகக் குறிக்கப்பட்டுள்ளன என்பதில் ஐயம் இல்லை. தொண்டை நாட்டின் அறிவுப் பண்பும் சான்றாண்மைப் பண்பும் இது போன்ற சிறப்புப்பண்பு மரபுகளேயாகும். ஆனால் இத்தகைய அடைமொழிச் சிறப்புகள் எவையும் இல்லாமல் அதன் இயற் பெயரிலேயே கொங்குத் தமிழகத்தின் முழுத் தமிழ்த் தேசியப் பண்பின் சிறப்பு முனைப்பினைத் தமிழக மரபு பண்டே கண்டு பாராட்டியுள்ளது என்னலாம். அம் முழுப் பண்பு முனைப்பே கன்னித் தாய்மைப் பண்பின் சிறப்புத் திறமான மூவா இளமைத் துடிப்பு வளம் ஆகும். கன்னித்தமிழ், குமரித் தமிழ், கொங்குத் தமிழ் என்ற தொகைச் சொல் வழக்குகளில் கன்னி, குமரி, கொங்கு என்ற அடைகள் ஒரே பொருள் மரபு சுட்டியவை ஆகும். ஆனால் இன்று பலரும் கருதி வருவது போல, அவை புலவர் வழக்குக்குரிய சிறப்பு அடைகள் அல்ல. அருட்செல்வம் (அருளாகிய செல்வம்), முருகக் கடவுள் (முருகனாகிய கடவுள்) என்ற வழக்குகள் போல, அவை இருபெயரொட்டுப் பண்புப் பெயர்கள் ஆகும். ஏனெனில் இன்று தமிழ் ஒரு மொழிப் பெயராகவும், கொங்கு ஒரு நாட்டுப் பெயராகவும் வழங்குவது போல, கன்னி, குமரி, கொங்கு என்ற மூன்று சொற்களுமே பண்டு நாட்டின் இயற்பெயராகவும், மொழியின் இயற் பெயராகவும் இனத்தின் இயற்பெயராகவும் வழங்கிய முழுமைத் தேசியப் பெயர்கள் ஆகும். இவை மட்டுமோ! இவையே கடல் கொண்ட தமிழகத்தில் குமரிநாடு என்ற தமிழ் நாட்டுப் பெயராய்; குமரியர் எனத் தமிழ் மக்கட் பெயராய்; குமரி மொழி எனத் தமிழ் மொழிப் பெயராய்; குமரி நாட்டின் தேசிய மரபுத் தெய்வமான தமிழன்னை அல்லது குமரியன்னை யின் பெயராய்; அந்த அன்னை வாழும் மலையான குமரிமலையின் பெயராய்; அம் மலையினின்று ஒழுகும் குமரியாற்றின் பெயராய்; அவ்வாற்றில் வாழ்ந்து தமிழரின் தேசியச் சின்னமாகப் பேணப்பட்ட தெய்வ மீனான குமரி மீனின் (ஆநசஅயனை) பெயராய் இயங்கின என்பதை நாம் இங்கே நினைத்துப்பார்த்தல் வேண்டும்! சேரரின் அயிரைமலை, அயிரை ஆறு, அயிரைமீன்; சோழரின் சென்னிமலை அல்லது நேரிமலை, நேரிமலையின் வெந்நீர் கொப்புளிக்கும் ஊற்று வளம் போன்றவை இம் முழுத் தேசிய மரபின் சிதைவுற்ற பிற்காலக் கிளை மரபுகளாய் இத் தமிழ் மூலமரபின் தொன்மையை விளக்குவனவாகவே உள்ளன. தவிர, பொது மரபே வழிமரபாகக் கன்னியாகுமரிக் கன்னிபகவதி யம்மன், மதுரை மீனாட்சியம்மன், சிதம்பரத்துப் பண்டைக் காளியின் ஆண் வடிவாகிய ஆடலரசர், காஞ்சி காமாட்சியம்மன், (ஒரு வேளை, `கொங்கு மலைச்' செல்லாயி அம்மன்), இந்தியாவின் தொலை தூர வடதிசையின் காசி விசாலாட்சியம்மன் (தமிழ்: சால்; சாலி - நெல்), உச்சைனி நகரத்து நித்திய கலியாணி அம்மன், துருக்கி நாட்டின் பண்டை எபீசசு நகரத்து தயானாதேவி, கிரேக்க நாட்டின் ஏதேன்சு நகரின் அதீனாதேவி ஆகிய இந்தியா அளாவிய, உலகளாவிய இம் மரபின் தொன்மையும் தொல் உலக விரிவும் இங்கே கருதத்தக்கன ஆகும். (இது கீழே மேலும் விளக்கப்பட விருக்கிறது). கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குரிய கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் கன்னிபகவதியம்மனைத் தமிழன்னை என்றே மரபு மறவாமல் குறிக்கின்றன. மீனாட்சி என்ற மதுரையம்மன் பெயர் மீன் சின்னத்தின் ஆட்சி என்ற தேசிய ஒருமைப்பாட்டுப் பொருளுடையதே யாகும். பிற்காலத்தார் இதனை மீன் போன்ற கண்ணுடையவள் என்று திரித்துக் கருதியிருந்தனராகலாம். அத்துடன் தமிழ்ப் புராண மரபு இந்த அம்மன் தமிழன்னையின் வடிவம் என்பதை மறக்கவில்லை. பாண்டியன் பெற்ற செல்வியாக அவள் வளர்ந்தபோது, அவள் முத்தமிழாகிய இயல் இசை நாடகங்களையே மூன்று மார்பகங்களாகப் பெற்றிருந்தாள். ஆனால் தன் காதல் தலைவனாகிய ஆடல் (நாடக) அரசனைக் கண்டதும் நாடகத் தமிழாகிய ஒரு மார்பகம் அத்தலைவனுரு வாகவே மாறி மயங்கிவிட்டது. மதுரைக் கோயிலிலேயே சங்கப் புலவர் அமைவுறுவதும், பிற பல கோயில் மரபுகளும் இன்னும் இத் தேசிய மரபின் பல தொன்மை வளங்களை நினைவூட்டு பவை ஆகும். தமிழகத்தில் பொதுவாகவும், கொங்குத் தமிழகத்தில் சிறப்பாகவும் பிறப்பின்போதே தமிழ் மரபு கண்டு குறித்துள்ள இந்தக் கன்னித் தாய்மை அல்லது மூவா இளமைப் பண்பை நாம் கொங்கு நாட்டின் நிலஇயல், நிலவளஇயல் அதன் பண்பு வளம், தொழில்வளம் ஆகிய எல்லாத்திறங்களையும் காலஎல்லை, வரலாற்றெல்லை ஆகியவற்றிலும் சென்று மெய்ப்பித்துக் காணத் தக்கவையே என்னல் தகும். `கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து' வாளொடு முன் தோன்றி மூத்தகுடி', எனத் தமிழ் மரபு ஒருவாசகத்தினுள் வைத்தே தமிழரின் நிலமரபு, குடிமரபு, பண்புமரபு ஆகிய மூன்றன் கன்னி இளமைப் பழமையைப் பாடியுள்ளது. தென்னகத்திலும் தமிழகத்திலும் பொதுவாக, கொங்குத் தமிழகத்தில் தனிச் சிறப்புற நாம் இம் மூன்று பண்புகளையுமே காணல் தகும். ஏனெனில், பண்டைக்குமரி மாநிலத் தொடர்பினை நினைவூட்டும் இப்பண்புக் கூறுகளை நாம் கொங்குத் தமிழகம் என்னும் மேட்டு நிலத்திலும், அது சூழ்ந்த குன்றங்கள் மலைகள் ஆகியவற்றின் பண்பிலும் அவற்றில் வாழும் மிகு பழமைச் சின்னங்களாகிய மலங்குடி மக்கள் வாழ்வுகளிலும், அவற்றிடையே மலையைக் காடாக்கி, காட்டை நாடாக்கி ஐந்திணை நிலவளங்களும் பரப்பியுள்ள அகநாட்டு மக்களின் பண்பு மரபுகளிலும் மிக முனைப்பாகக் காணலாம். தென்னகத்திலும் கொங்கு நாட்டிலும் ஒரு சில நூறடிகள் அகழ்ந்து பார்த்தால்கூட நிலவுலகம் தோன்றிய காலத்தின் கன்னி அழற்பாறைப் பரப்பையே காண முடியும் என்று புவிக் கருவியலார் (ழுநடிடடிபளைவள) கூறுகின்றனர். (அகல் உலகில் உருசியநாட்டு யூரல்மலைப் பகுதிக்கும் கொங்கு நாட்டுச் சூழலுக்குமே பெரிதும் உரிய கன்னிவளம் இது) கன்னி நிலமாகிய இதுவே, நிலக் கருவீனும் கனிவளத்திலும், உலோக வளத்திலும், உழவு முதலிய தொழில் வளங்களிலும், இவ்வளங்களை ஆக்கும் மனித இன ஆள்வினை வளத்திலும் உலகுக்கு வழிகாட்டியாய் இருந்து வந்துள்ளது என்னலாம். மலைநாட்டு நிலங்கள் செம்மண் நிலமாய் இருத்தலே இயல்பு. ஆனால், செம்மண்ணின் உலோகச்சத்துகளுடன் பிற கனிவளச்சத்து உயிர்ச்சத்து ஆகியவற்றின் உரவளமும் மிகுந்த கருநிலம் அல்லது கரிசல் நிலமாகவே (க்ஷடயஉம ஊடிவவடிn ளுடிடை) குமரிமலைத் தொடர்புடைய பெருங் கொங்குநாடாகிய கருநாடகம் அப்பெயர் பெற்று நிலவுகின்றது என்னலாம். தமிழில் கருமை செல்வமும் செல்வவளமும் உயிர்வளமும் உரவளமும் (கருந்தனம், கருவூலம் - செல்வக்குவை, கருப்பை, கர்ப்பம்; காரணம்-கருவண்ணம்; காரியம்: - கருவளம்) குறிப்பது இதனாலேயேயாகும். இருளர், துதவர் போன்று சுருட்டை மயிரும் கருநிறமும் உடைய ஒரு குள்ளமான இனத்தினரே (பண்டைக் கொங்குப் பழங்குடிகள் போன்றவர்) பண்டை நாகரிக உலகில் கப்பல் தொழிலாளர்களாகவும் கல்லுளிச் சித்தர்கள் அதாவது சுரங்கத் தொழிலாளர்களாகவும் இரும்பு பொன்மணி வினைஞராகவும் விளங்கி வந்துள்ளனர் என்று மனிதஇனப் பழமை யாராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டை எகிப்தியரிடையே உழைப்பாளராயிருந்த இம்மக்களை அவ் எகிப்தியர் வழிநின்று கிரேக்க அறிஞரும் வரலாற்றாசிரியரும் 'எறும்பு மனிதர்' என்று அழைத்தனர். வரலாற்றுப் புகழ் பெற்ற உலகின் முதற் பெருவைரமான கோகினூர் (ஒளி அரசன்; பாரசிகமொழி: கோ-அரசன்; நூர்-ஒளி) கொங்கு நாட்டில் கண்டெடுக்கப்பட்டதே யாகும். ஐயாயிர, ஏழாயிர ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பொன் முதலிய உலோகங்களை அகழ்ந்தெடுப்பதில் மட்டுமன்றி, இரும்பை எஃகாக்கும் தொழிலைக் கண்டு, அந்த எஃகினையும் இரும்பு துருப்பிடிப்பதைத் தடுக்கும் ஆற்றலுடைய தேக்கு மரத்தினையும், துருப் பிடிக்காத தனி முறை எஃகுக் கலவையினையும் ஊர் என்ற சால்டியரின் தலைநகரிலும், எகிப்திய கூர்ங் கோபுரங்களினடி யிலும் இடம் பெறும்படி அனுப்பியவர்களும், சிந்து வெளி நாகரிக மக்களுக்குத் தங்கம் வழங்கியவர்களும் கொங்கு மக்களே என்பது மேலே கூறப்பட்டது. உலகமெங்கும் பரவிய வாணிகப் பொருளாக நீலமணிக் கற்களும் தங்கமும் தேக்கும் அகிலும் சந்தனமும் கூலவகைகளும் கொங்கு நாடு முழுவதிலும் வளம் பெற்றிருந்தன என்பது யவனக் குறிப்புகளாலும் சங்க இலக்கியத்தாலும் விளக்கம் பெறுகின்றன. அத்துடன், கொங்கு நாட்டு மக்களாகிய கடம்பர் போன்ற மேலைக் கடலோடிகளான வேளிரினத்தவரே உலகின் முதல் கடலோடிகளாக மட்டுமன்றி, உலகின் முதற் கடற் கொள்ளைக்காரர்களாகவும் விளங்கினர் என்பதை யவனர் குறிப்புகளும் பவேருஜாதகம் போன்ற புத்தர் காலப் பாளி சமக்கிருத ஏடுகளும், சங்க இலக்கியமும்கூட விளக்குகின்றன. (பம்பாய் நகரின் மலபார்க் குன்றப் பகுதி, 1840 வரை கூட இத்தகு மேலைக் கடலாண்ட ஒரு தலைவனின் ஆட்சித் தலைமையிடமாய் இருந்தது) `சேரன் கடலில் பிற கலம் செல்லாதவாறு போல' என்ற சங்க கால உவம வாசகம், சேர நாட்டுச் சேரனை மட்டுமன்றி கொங்குநாட்டுக் கொங்குச் சேரரையும் உளப்படுத்திக் குறிப்பதாகும். ஏனெனில், மேலை இந்தியக் கடற்கரையில் கராச்சி முதல் கன்னியாகுமரி வரை கடற் கொள்ளையிட்ட நன்னன் மரபினராகிய கடம்பர்களை அடக்கி அம் மேல் கடற்கரையை உலக வாணிகத்துக்குரியதாக்கிய பெருமை, சேரரும் கொங்குச் சேரரும் இணைந்த கூட்டுறவினுக்கே உரியதாகும். சங்க கால ஏடாகிய பதிற்றுப்பத்து, இதனை விளக்குகிறது. இக் கொள்ளையரை அடக்கிய கொங்குச் சேரர் மட்டுமன்றி அவரால் அடக்கப் பெற்ற கடம்பரும் கொங்கரே யாவர் என்பது இங்கே கருதத் தக்கது ஆகும். கொங்கு மக்கள் அரிசியையும் சர்க்கரையையும் (உலகளாவிய அவற்றின் பெயர்கள் காட்டுகிறபடி) இரண்டாயிர, மூவாயிர ஆண்டுகளுக்கு முன்னரே வாணிகச் சரக்காக உலகெங்கும் அனுப்பியவர்கள் மட்டுமல்லர்; கடவுளின் படைப்புகளாகிய காட்டுச் செடியையும், காட்டுப் பயிரையும் நாட்டுக் கரும்பாக, நாட்டு நெல்லாக மறுபடைப்புச் செய்து மனித இனத்துக்கு வழங்கியவர்களும் அவர்களே என்று கருத இடமுண்டு. ஏனெனில், உலக மொழிகளிலெல்லாம் நெல் என்ற பெயர் பரவாமல், அரிசி என்ற பெயரே (கிரேக்கம் டிசணைய: ஆங்கிலம் சiஉந) பரவியுள்ளது. மற்றும் அரிசி என்ற இந்தச் சொல்லிலுள்ள சகரஒலி அதன் பண்டைத் திராவிட ஒலிப்புடன் அப்படியே கிரேக்க எழுத்திலும் (ஷ்) ஆங்கில எழுத்திலும் (ஊ) பதியப் பட்டுள்ளது. (இருமொழிகளிலும் இன்றைய தமிழர் ஒலிப்பின்படி அது (ளு) என்ற எழுத்தாக இருத்தல் வேண்டும். ஆனால், அது ஷ் அல்லது ஊ என்ற ஒலிக் குறிப்பாக உள்ளது) இது மட்டுமன்று; அரிசி என்ற இச்சொல் பண்டைத் தமிழிலும் இன்றைய மலையாளத்திலும், `அரி' என்ற வடிவமே பெறுகிறது. அதன் பழம் பொருள் நெற்பயிர் என்பதே யாகும். கன்னட மொழியில் மட்டும்தான் அது அரிகாய் என்பதனடியாக `அரிகே' ஆகி; நெல் என்ற பொருள் குறித்துப் பின் அரிசியையும் குறிக்கிறது. அரிசி என்ற இன்றைய தமிழ்ச் சொல் `அரிகே' என்ற வடிவின் ஒலித்திரிபே யாகும். இந்தத் திரிபு கன்னட நாட்டை ஒட்டிய தமிழ் நிலமாகிய கொங்கு நிலத்திலேயே ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்னலாம். அத்துடன் அது குறிக்கும் நெற்பயிர், அதன் காயாகிய நெல், அதன் உணவுக்குரிய மாற்றுருவாகிய அரிசி ஆகிய பொருள்கள் இப் பயிரின் படைப்பாக்கத் தாயகம் கொங்கு மாநிலமே என்பதையே சுட்டுகின்றன. நெல்லும் கரும்பும் இன்று முழுக்க முழுக்க மருத நிலப் பயிர்கள்; மருதநிலப் பயிர்கள் என்பதைவிட, சேற்று நிலப் பயிர்கள் என்றே கூறலாம். ஆனால், நெல் மலையிலிருந்துதான் பிறந்தது என்பதை இன்றும் அதற்கு இனமான இயற்பயிராக மலை நெல்லே அமைவதனால் உணரலாம். பண்டைக் கொங்கு மக்கள் ஐவன நெல் போன்ற இயற்கைக் கூலங்களையும் உண்டதாகச் சங்கப் புலவர் குறிப்பிட்டுள்ளனர். கரும்பு வகையிலோ கரும்பு (கரும்பயிர்) என்ற அதன் பெயரே, அது இயல்பாய் வளர்ந்த கொங்கு நாட்டின் கருமண்ணைக் காட்டி நிற்கிறது. சங்கப் பாடல்கள் தகடூர் அதியமானின் தொலை மரபினரான முன்னோர் கரும்பை வானுலகினின்று கொண்டு வந்து இம் மண்ணுலகில் பயிராக்கினர் என்று கூறுகின்றன. பண்டைச் சீனப்பேரரசர் தங்களை வானவர் என்று கூறிக் கொண்ட தனை ஒட்டி, இந்த வானவர் உலகம் சீனநாடாயிருந் திருத்தல் கூடும் எனச் சில ஆராய்ச்சியாளர் கருதியுள்ளனர் (`சீனி' என்ற சர்க்கரைப் பெயரையும் இதற்குச் சான்றாக அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்). தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற ஏட்டில் இவ்வாசிரியரும் புலவர் குழந்தையும் பண்டைச் சேரப் பேரரசர் தமக்கு வானவர் (வானவரம்பன்) என்று பட்டஞ் சூட்டிக்கொண்டதை நினைவுறுத்தி அது சேரநாடாகலாம் என்று கருதியுள்ளனர். ஆனால், அது உண்மையிலேயே வானவர் நாடுதான்-கொங்கு நாட்டு மனிதன் பயில் திறக் கைப்புனைவால் கரும்பாக்கிவிட்ட காட்டுத்தட்டைகள் கடவுட்படைப்பாக வளர்ந்திருந்த கொங்கு நாட்டு மலைக் காடுதான் என்று கருதுவதே பொருத்தமானதாகும். கரும்பு என்ற சொல்லும், உலகெங்கும் பரவியுள்ள சர்க்கரை என்ற சொல்லும் கரும்புப் பயிருக்கு மட்டுமன்று, சர்க்கரைத் தொழிலுக்குமே தமிழகமும் கொங்கு நாடும்தான் தாயகம் என்பதைக் காட்டுகின்றன `சீனி' என்ற சொல் அதன் `வெண்பொடி' வடிவத்திற்கு மட்டுமே உரிய பிற்காலச் சொல் ஆகும். காட்டு விலங்குகளையும் காட்டுச் செடி கொடிகளையும் நாட்டு விலங்கு. நாட்டுப் பயிர் ஆக்கியது மனித நாகரிகத்தின் ஆதிகாலப் பண்பு வளங்களில் ஒன்று ஆகும். காய்ச்சற் பொடிக் குரிய மரமும் (உinஉhடியே) பால்மரமும் (சரbநெச வசநந) புகையிலையும் பெரு நாட்டினராலும், காப்பி துருக்கி நாட்டவராலும், செங்கழு நீர்மலர் (ரோசாப்பூ) பாரசிக நாட்டின ராலும் குதிரை அராபியராலும் ஆதிகால ஆரியராலும், தேயிலையும் பட்டும் சீனநாட்டினராலும், கண்டு பயிற்றப்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். இந்த ஆதி மனிதப் படைப்புத்திறத்தில் கொங்கு மாந்தன் பங்கு பெரிது என்பதனை நெல்லும் கரும்பும் மட்டுமன்று-யானை, கால்நடைப் பயிர்ப்பு (செநநனiபே) ஆகியவையும் காட்டும். யானை இன்றும் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தமிழகம், இலங்கை, பர்மா ஆகிய நான்கு நாடுகளுக்கே உரியது. ஆப்பிரிக்கர்கள் யானை இறந்தபின் ஊனும் எலும்பும் தந்தமும் பயன்படுத்தியதன்றிப் பழக்கிப் பணிகொண்டதில்லை, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளிலுள்ள யானைகள் எளிதில் பழக்கிவிடத் தக்கவை-அவை எருமைகளைவிட ஒரு சிறிதேதான் பெரியவை. தமிழக யானையோ தமிழகத்துக்கே, பெரிதும் கொங்குத் தமிழகத்துக்கேயுரிய தனியினம் ஆகும். ஆப்பிரிக்க யானையை விட அது நீளத்தில் குறைந்ததே-ஆனால், உயரத்திலும் அழகிலும் வீறமைதியிலும் அறிவிலும் வேலைத்திறத்திலும் சிறந்த அரச யானையினம் கொங்கு நாட்டுச் சூழலுக்கே பெரிதும் உரிய தமிழக அல்லது இந்திய யானையே யாகும்! அதை மனிதனுக்குப் பணியாற்ற, இறைவன் விழாக்களுக்கு அழகு சேர்க்க முதல் முதல் பயன்படுத்தியது கொங்கு நாடேயாகும். இந்திய யானைகள் விந்தியம் வரை வாழினும், கொங்கு நாட்டின் சங்ககால உம்பற்காடு (ஆனைமலைக்காடு; உம்பல்-யானை) இன்றும் அதன் மையப் பெருக்க இடமாகவே உள்ளது. யானைப்பாகரின் மறைமொழியான வடசொல் இன்று சமக்கிருதமாகக் கருதப் படினும் உண்மையில் கொங்கு நாட்டுப் பழங்குடியினத்தவரின் மரபுப் பேச்சேயாகும் என்னலாம்! இந்திய யானையைப் போலவே, இந்தியப் பசுவும் உலகில், தனியினமாக (திமில் உடையனவாக) உள்ளது. இதன் ஆதிப் பயிர்ப்பினப் படைப்பும் கொங்குத் தமிழகத்துக்கே உரியதாய் இருத்தல் கூடும். கொங்கு நாட்டவர் காட்டுப் பசுவை வளர்த்து அதன் பால் உண்டதனைச் சங்கப்பாடல்கள் குறிக்கின்றன. இது எவ்வாறாயினும், கால்நடை வளமும் கால் நடைப் பயிர்ப்பின வளமும் சங்க காலத்திலிருந்து இன்றுவரை கொங்கு நாட்டுக்குத் தனிச் சிறப்பே அளித்து வந்துள்ளன. சங்கப் புலவர் வரிக்கு வரி கொங்குநாட்டை `ஆகெழு' கொங்கு என்று சிறப்பிக்கத் தவறவில்லை. சங்க காலத்தில் அரிசி தமிழகமெங்கும் பரவிய பண்பாயினும், ஆவினப் பயிர்ப்பு அவ்வாறு பரவி விடவில்லை. அரிசியினும் மிகுதியாக ஆவினத்தையே கொங்கின் சிறப்புப் பண்பாகச் சங்கப் புலவர் பாராட்டியது இதனாலேயே ஆதல் வேண்டும் என்னலாம். சோழநாடும் பாண்டி நாடும் அன்று நெல்வளத்தில் விஞ்சிவிட்டதனாலும், கொங்குநாட்டின் இச் சிறப்பு தனிப்படக் கூறப்படவில்லை என்று கருதலாம். கொங்கு நாட்டினரின் கரும்புப் படைப்பைவிட அவர்களது நெற்படைப்பு மிகு பழமை யுடையதாய் சங்கத் தமிழராலேயே மறக்கப்பட்டிருத் தலும் கூடியதேயாகும். தமிழகத்தில் பழங்கற்காலத்திலிருந்தே மக்கள் நெசவுத் தொழிலில் பழகியிருந்தனர் என்றும்; புதுக்கற்காலத்தை அடுத்தே இரும்பை வழங்கத் தொடங்கியிருந்தனர் என்றும் பழமையாராய்ச்சியாளர் கருதுகின்றனர். தமிழரே இவ்விருவகை களிலும் ஆரியருக்கு முற்பட்ட இந்திய நாகரிகமாகக் கருதப்படும் சிந்துவெளித் திராவிட நாகரிகத்தினும் முந்துற்ற மேம்பட்ட வளர்ச்சியடைந்திருந்தனர் என்று அறிகிறோம். இவ்விரு வளர்ச்சிகளுமே கொங்குத் தமிழகத்துக்கு மேலும் சிறப்புறப் பொருந்துபவை ஆகும் என்று கருத இடமுண்டு. ஏனெனில், கொங்குநாட்டில் இன்றும் பழங்கற்கால இடைக்கற்காலச் சின்னங்கள் மிகுதி கிடைக்கவில்லையானாலும் கிடைத்துள்ள புதுக்கற் காலக் கருவிகளே, அதே காலத்துக்குரிய பிற தென்னக, தமிழகப் பகுதிகளுக்குரிய கருவிகளைக் காட்டிலும் மிகச் சிறந்த வேலைப்பாடுகள் உடையவையாய்க் காணப்படுகின்றன. இதுமட்டுமன்று, நிலவுலகில் இதேபோன்ற வேலைப்பாட்டுச் சிறப்புடைய இடங்களிடையே, கொங்கு நாடே நடுநாயகமாக அமைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அந்நாளைய புதையல் கல்லடுக்குகளிடையே காணப்படும் ஒருவகை உரைகல் நெசவுத் தொழிலில் துணிகளுக்குப் பளபளப்பூட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. புதுக் கற்காலத்துக்குள் அத்தொழில் கொங்கு நாட்டில் அடைந்துவிட்ட நேர்த்தியை இது காட்டுகிறது என்னலாம். கொங்குநாட்டுப் புதைகுழிகளிலும் கல்லடுக்குகளிலும் இறந்தவரின் எலும்புகளுடன் பிறபொருள்களிடையே இரும்புக்கருவிகளும் தங்க வெள்ளி அணிமணிகளும் இடம் பெறுகின்றன. கற்கருவிகள் கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகளிடையே தான் மிகுதி காணப்படுகின்றன. அத்துடன் அவை பெரிதும் பர்கூர்ப் பகுதியில்தான் மிகப் பேரளவில் குவிக்கப்பட்டுக் காணக்கிடக்கின்றன. புதுக்கற் காலத்திலேயே தொழிலாக்கம் மையப்படுத்தப்படும் அளவுக்குக் கொங்கு நாட்டில் தொழில் வளம் பெருக்கமுற்றிருந்தது என்பதையும்; அதற்குரிய சமுதாய அமைப்பும் சமுதாய அரசியலமைப்பும் அந் நாளிலேயே கொங்குநாட்டில் ஏற்பட்டிருந்தன என்பதையும் இது காட்டுகிறது. பண்டைத் தமிழர் கிரேக்கரைப் போலவே, மாண்ட மக்களின் உடலை அல்லது உடல் எரியூட்டப்பட்ட சாம்பல் எலும்பு ஆகியவற்றைத் தாழிகளில் (ருசளே) அடக்கம் செய்தனர். இவை தமிழ் மரபில் முதுமக்கள் தாழிகள் என்று வழங்கப்படுகின்றன. சவஅடக்கம் செய்யப்பட்ட இத்தகைய புதைகுழிகள் மாண்டவர்குழிகள் என்று அழைக்கப்பட் டிருக்கலாம். ஏனெனில், பிற்கால அணிமைக் கால மக்கள் அந்தந்தக் காலக் கருத்து வண்ணங்களுக்கியைய அவற்றைப் பாண்டவர் குழிகள் என வழங்கி வருகின்றனர். மாண்டவீரர்க்கும் வீரநங்கையர்க்கும் வீரக் கற்புடை நங்கையர்க்கும் அவர்கள் பெயர்களும் பீடும் புகழும் எழுதப்பட்ட வீரக்கற்கள், மாசதிக்கற்கள் ஆகியவை எழுப்பப்பட்டிருந்தன என்பதைச் சங்க காலப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால், சங்ககாலத்துக் குரிய பழமையுடையனவாக அத்தகைய கற்களோ, கல் எழுத்துக்களோ இன்னும் நம்மால் கண்டுணரப்படவில்லை. சங்க காலத்துக்குப் பிற்பட்டவையே தமிழகத்திலும் கொங்கு நாட்டிலும் அப்பாலும் கிடைத்து வருகின்றன. சிலம்புக் காப்பிய நாயகியாகிய கண்ணகி பிறந்தது. சோழநாடு, தியாகத்தீயில் அவள் குளித்தது பாண்டிநாடு. அவள் தெய்வமாகக் கோயிலெடுத்து வழிபடப்பட்டதோ சேரநாடு. ஆனால், கோயிலெடுத்து விழா நடத்திய இந்த ஒரு செய்தியில் மட்டுமே, அதுவும் இலங்கையிலும் அவந்திநாட்டிலும் அதனதன் அரசரால் அது நிகழ்த்தப்பட்டதுபோல, கொங்கு நாட்டிலும் கொங்கிளங்கோசரால் அதே செயல் நிகழ்த்தப்பட்டிருந்தது என்று கருத இடமுண்டு. ஆயினும், சிலம்புக் காப்பியம் அக் கற்புத் தேவியை முழுக்க முழுக்கக் கொங்கு மரபுக்கே உரியவளாக்கிக் `கொங்கச் செல்வி, கொடுமலையாட்டி' என்று தனிச் சிறப்புப்படப் போற்றியுள்ளது. இது ஒரு வேளை கண்ணகி பழனிமலையடுத்த காட்டு வழியினூடாகச் சென்றே சேர நாட்டருகில் தெய்வமானாள் என்பதனாலாகலாம். அல்லது ஒருவேளை பொதுவாகக் கற்புக் கடவுளுக்கும் கொங்கு நாட்டுக்கும் சிலம்புக் காலத்தினும் பழமையான தொடர்பு இருந்திருக்கலாம். (தமிழ் இலக்கணமரபு முல்லைத் திணைக்கே கற்பை உரிமையாக்கி யுள்ளது என்பதும், கண்ணகி தெய்வமாகுமுன் தமிழரால் முல்லை நிலத்தெய்வமான மாயோன் ஆகிய கண்ணனின் காதல் துணைவியான நப்பின்னைப் பிராட்டி அல்லது ராதையே கற்புக் கடவுளாகக் கருதப்பட்டாள் என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கவை ஆகும். இதுவன்றித் தமிழன்னையாகிய குமரிமலை மரபில்வந்த மலையாள பகவதியுடனும் சேரர் குலதெய்வமாகிய அயிரையம்மனுடனும் இக் கற்புக் கடவுள் ஒன்றுபடுத்தப்பட்டு இருத்தல் கூடும். ஆனால், இது எவ்வாறானாலும், வரலாற்றில் கற்புக்கும் கொங்கு நாட்டுக்கும் (தாலி கொங்கு நாட்டுக்கே சிறப்புரிமையுடைய மரபு என்று கருத இடமுண்டு). நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும் என்பது உறுதி. ஏனெனில், பண்டைப் பெருங் கொங்கு நாட்டுப் பரப்பு முழுவதிலும் மராத்தி மாநிலத்துக் கொங்காண நாட்டெல்லை கடந்து பம்பாய் வரை கூட வீரக்கற்களும் வீரமாசதிக் கற்களும் (மாஸ்திக்கல்) அத் தமிழ்ப் பெயர்களுடனேயே (ஆனால், தமிழ் எழுத்திலின்றி) கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அறிகிறோம். கொங்கு நாட்டின் நிலப்பழமையோடொத்த நிலவள, தொழில்வள, பண்புவளப் பழமைகளுக்குரிய சின்னமாயமைவது, கொங்கு நாட்டின் மக்கட் பழமை வளமேயாகும். கொங்கு மாநிலம் சூழ்ந்த மலைகள், குன்றுகள், மலைக் கணவாய்கள், பள்ளத்தாக்குகள், மேட்டு நிலங்கள் ஆகியவற்றில் ஒதுங்கி வாழும் பழங்குடி, மலங்குடி இனங்களே இதற்குச் சான்றுகள் ஆவர். ஏனெனில் விந்தியமலைச் சூழலுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் பழங்குடியினங்களில் மிகப்பெரும்பாலானவர்கள் இங்கேயே, இந்தியாவினுள் ஓர் பழங்கால இந்தியாவாக, தனி வாழ்வு வாழ்கின்றனர். இவர்களில் நீலகிரியில் வாழும் தொதவர், கோத்தர், குறும்பர், படகர்; வெள்ளிமலை, ஆனைமலைப் பகுதிகளில் வாழும் இருளர், மலசர், முதுவர், காடர், புலையர்; கொல்லிமலை, சேர்வராயன் மலைகளில் வாழும் மலையாளிகள், மலையரையர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் பெரும்பாலும் தமிழக வழக்கிலிருந்து சிறிதும் பெரிதும் திரிபுற்ற தமிழ் மொழியே பேசுகின்றனர். தமிழினம் சார்ந்த பிறிது மொழியினரோ, பிறிது இனத்தவரோ என்று ஐயுறுமளவு வேறுபட்டவர் மிகமிகச் சிலரே. அதே சமயம் கொங்குத் தமிழகத்தின் அகநாட்டு மக்களிடம் வழங்கும் பழமையான சமய சமுதாய மொழி அரசியற் பண்புகளுடன் அவர்கள் வாழ்வுகள் தொடர்புடையவையாகவே, அவற்றுக்கு ஒளி விளக்கம் தருபவையாகவே இருத்தல் வேண்டும் எனலாம். கொங்கு நாட்டின் தமிழ்த் தொன்மை, இந்தியத் தொன்மை, உலகத் தொன்மை சார்ந்த பழஞ் சின்னங்களாகவே அவர்கள் வாழ்வு கருதப்படத் தக்கது, கருதப்படல் வேண்டும் என்று கூறத்தகும்! `துடியன் கடம்பன் பாணன் பறையன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை' என்று சங்ககாலப் பழம் பாடல்கள் போற்றியுள்ள தமிழரின் நாற்பெருந் தொல் குடிகளில், கடம்பர் சங்ககாலங்களிலிருந்தே மேல் கொங்குநாட்டின் வேள் குடியினராய்; கடலோடிகளாகவும் அரசு வல்லரசு மரபினராகவும் வாழ்ந்தவர் ஆவர். பறையரும் பாணரும் புலவரும் இன்று தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களாக உள்ளனர். துடியரோ, மேற்கூறப்பட்ட மலங்குடி இனத்தவர்களுள்ளேயே மிகத் தொன்மை யானவர்களாகக் கருதப்படும் துதவராக இருக்கலாம் என்று அறிஞர் கூறுகின்றனர். கோவை மாநகருக்கருகிலுள்ள துடியலூர் (துடிசை) இப் பழங்குடியினத்தவர் பெயரடிப் படையாகத் `துடியனூர்' என்ற வடிவின் திரிபாய் இருத்தல் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதியுள்ளனர். சங்ககாலத்துக்குப் பின் பல நூற்றாண்டுகள் வரை இருளர் தலைவர்கள் கொங்குநாடெங்கும் ஆண்டனர் என்று சோழர் பட்டயம் கூறுகின்றது. கொங்குநாட்டு உட்பிரிவுகளில் குறும்பு நாடு என்றும் ஒன்று உண்டு. குறும்பர்கள் குடியரசுக் குழுவினராக, கப்பல் சின்னம் பொறித்த நாணயம் வெளியிடுமளவில் கடலோடி மரபினராக விளங்கினர் என்று பழம்பொருளாய்வாளர் கூறுகின்றனர். குண்டூர்ப் பகுதியைத் தொல் பழங்காலத் தாயகமாகக் கொண்டிருந்த பண்டை ஆந்திரப் பேரரசருடன் இவர்கள் மிக நெருங்கிய தொடர்புடையவராவர் என்று கருத இடமுண்டு. கல்வி, தொழில் ஆகியவற்றில் இப் பழங்குடியினரை மீண்டும் முன்னேற்றுவிப்பதன் மூலம் அவர்களையும் மற்ற நாட்டுமக்களுடன் இணைவித்துத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க மாநில அரசினரும் இந்திய அரசினரும் பெருமுயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது போற்றுதற்குரியதேயாகும் ஆனால், நாட்டுணர்விலும் இன உணர்விலும் அவர்கள் சரிசம அளவில் முனைப்பாகப் பங்கு கொள்ளும் முறையில் அவர்கள் கல்வியுடன் அவர்களைப்பற்றிய மெய்யான பழமையாராய்ச்சி களும் தமிழக, இந்திய, உலகப் பழமையாராய்ச்சிகளும் ஊக்கப் பெறாத வரை, இத்துறையில் போதிய வெற்றி காணமுடியாது என்றே கூறல் தகும். கொங்கு மக்களின் ஒத்திசைவுப் பண்பு களுடன் அவர்கள் வாழ்வு இணைவதற்குக் கொங்குநாட்டுக்கு வெளியிலிருந்து வரும் போலிச் சமய சமுதாயக் கோட்பாடுகள் பெரிதும் தடங்கல்களாய் உள்ளன என்பதில் ஐயமில்லை. இன்று பிற்பட்ட இனங்களாக அல்லது பிற்பட்ட சமுதாய வகுப்பினராக இருப்பவர்களெல்லாம் பிற்பட்டவர்களாகவே என்றும் இருந்திருந்தவராதல் வேண்டும் என்று இந்தியாவிலும் நாகரிக உலகிலும் இன்றைய ஆட்சி இனத்தவராகிய அறிஞர் பலரும் கருதுகின்றனர். இது சரியன்று என்பதைச் சங்க இலக்கிய ஆராய்ச்சிகளும் இந்தியா அளாவிய, உலகளாவிய பழமை யாராய்ச்சிகளும் காட்டும். எடுத்துக்காட்டாக, பண்டு தமிழினத் துடன் தொடர்பு கொண்டிருந்த நீகிரோவரினம் தென் ஆப்பிரிக்காவில் தொல் பழங்காலத்திலேயே கோட்டை கொத்தள நகர் வாழ்வு கொண்டிருந்தது என்று அறிகிறோம். இன்று உலகப் பாலை வனங்களில் மிகப் பெரிதான சகாரா, பண்டு அவ்வின மக்களின் சோலை வனமாக இருந்ததாகவும் அறிகிறோம். மற்றும் உலகக் குழந்தைக் கதை இலக்கிய மூலவரான ஈசப் (ஹநளடியீ) கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே அபிசினியாவில் வாழ்ந்த ஒரு நீகிரோ அறிஞர் ஆவார். தவிர, இன்று மராத்தி மாநிலத்துக்கு வடபால் பிற்பட்ட இனத்தவராக ஒதுக்கப் பட்டுள்ள வில்லியர் (க்ஷhடைள) இன்றைய தமிழகத்தில் பிற்பட்ட சமுதாயத்தினராகவும், இன்றைய கொங்குநாட்டில் வேளாளருடன் ஒத்த சமுதாய ஆட்சி வகுப்பினராகவும், சங்ககாலத்தில் இன்னும் உயரிய நிலையில் புலவர் பாடும் புகழ்சான்ற வல்வில் ஓரியின் வேள் மரபினராகவும் வாழ்ந்தவரேயாவர். இன்று தமிழகத்திலும் இந்தியாவிலும் நிலவுகின்ற சமுதாய, இன உயர்வுதாழ்வு வேறுபாடுகள், வேறுபாட்டு அமைப்பு முறைகள், நம்பிக்கைகள் ஆகியவை சங்க காலத்துக்கு அல்லது வேத உபநிடத காலங்களுக்கு நெடுநாட் பின்னர் ஏற்பட்டவையே; சங்ககாலத்திலோ, உபநிடத காலங்களிலோ, புத்தச மண சமயங்கள் மேலோங்கியிருந்த காலத்திலோ கூடத் தமிழகத்திலும் இந்தியாவிலும் காணப்படும் நிலை இதுவன்று. சிறப்பாக, தமிழகத்தைப் பொறுத்தமட்டில், இன்று மலங்குடி களாக ஒதுக்கியுள்ளவர்கள் பிற்படுத்தப்பட்ட இனத்தவர் அல்லது சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் முன்னோர்கள் சங்ககாலத்தில் மற்ற எந்த வகுப்பினரையும் விட எந்த வகையிலும் குறையாத குறிப்பிடத் தக்க சமுதாய உயர்நிலை பெற்றிருந்தனர் என்று காண்கிறோம். ஏனெனில், அவர் களிடையே பெண்பாலார் ஆகிய கொங்குநாட்டுப் புலவர் பெருமாட்டி ஒளவையார் (பாணர் மரபினர்), பேய்மகள் இளவெயினி (பேயர் அதாவது பிற்காலத்தில் பிசாசர், சண்டாளர் எனக் கருதப்பட்ட மலங்குடி மரபினர்), குறமகள் இளவெயினி (குறவர்), வெண்ணிக் குயத்தி (குயவர் வகுப்பு) முதலியோர் சங்கப் புலவர்களாக விளங்குமளவுக்குப் பால் வேறுபாடு, வகுப்பு வேறுபாடு, மரபு வேறுபாடு, இன வேறுபாடு, தொழில் வேறுபாடு இன்றிச் சமுதாய உரிமை, கல்வி, உரிமை, அரசியல் உரிமை ஆகிய எல்லா உரிமைகளும் பெற்றிருந்தனர் என்று காண்கிறோம். மேலும் காரைக்காலம்மையார் (பேயாக வாழ்ந்த சிவநெறிப் பக்திக் கவிஞர்), பேயாழ்வார் (பேய் மரபுக்குரிய வைணவநெறி பக்திக் கவிஞர்), திருப்பாணாழ்வார் (பாணர் மரபின் வைணவ நெறிப் பக்திக் கவிஞர்) ஆகியோர்கள் காலம்வரை இதே சமுதாய உயர்வு தாழ்வு வேறுபாடற்ற நிலை பல நூற்றாண்டுகள் நீடித்திருந்தது என்று காண்கிறோம். இந்தியாவிலும் தமிழகத்திலும் சங்ககாலத்துக்குப் பின் ஏற்பட்ட அரசியல், சமய, சமுதாய, பண்பாட்டுச் சூழல் மாறுபாடுகளே இவ் உயர்வு தாழ்வு வேறுபாடுகளைப் படிப்படியாகப் பெருக்கி வளர்த்து வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. கொங்குத் தமிழகத்தையும் இது தாக்கியுள்ளது என்றாலும் அப்பரப்பு அதன் முழு அவலத்துக்கு இன்னும் ஆளாகிவிடவில்லை. இது கீழே வரும் பிரிவுகளில் விளக்கப்படவிருக்கிறது. கொங்கு நாட்டில், இன்று, பிறமண்டலங்களின் மக்களும், பிற தமிழக இந்திய மொழிகள் பேசுபவர்களும் வந்து கலந்து சிறுபான்மையினராகவேனும் விரவி வாழ்கின்றனர். தென்னகத்தில் கொங்குநாட்டின் மைய நிலையை நோக்க, இது வியப்பன்று; இயல்பே. இந்தியாவின், தமிழகத்தின் பிற மண்டலங்களிலிருந்து இது வேறுபட்ட நிலையோ, மிகைப்பட்ட நிலையோகூட அன்று. ஆயினும் இப்பரப்பின் மிகப் பெரும்பாலான குடிகள் தமிழராக மட்டுமல்லர், கொங்குத் தமிழராகவே உள்ளனர்-பழந்தமிழ்ப் பண்பில், பண்டைய இந்தியப் பண்பாடாகிய கொங்குப் பண்பில் மாறாதவர்க ளாகவே உள்ளனர். இதுமட்டுமன்று எங்கே பிற பண்பாடுகளின் கலப்பால் அல்லது தொடர்பால் தங்கள் கொங்குப் பண்பை இழந்துவிட நேருமோ என்று அஞ்சி, நெடுங்காலமாக அவர்கள் தங்கள் மரபுப் பெயருடன் கொங்கு என்ற அடைமொழியையும் சேர்த்துக் கொள்பவராகவே உள்ளனர். மற்றும் கொங்கு என்ற இந்த அடை வெறும் நாட்டெல்லையையோ, அல்லது வெறும் பண்பையோ மட்டும் குறிக்கும் சொல் அன்று என்பதைத் தற்காலத்திய திணைநிலை ஆய்வாளர்கள் (சுநபiடியேட சுநளநயசஉh ளுஉhடிடயசள) நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளனர் (க்ஷசநனேய நு.கு. க்ஷநஉம: ஹரவாடிச யனே நுனவைடிச, ஞநசளயீநஉவiஎநள டிn ய சுநபiடியேட ஊரடவரசந: யசவiஉடந 2). ஏனெனில், இந்த அடைமொழி அவர்களின் கொங்கு நாகரிகம், கொங்குப் பண்பு, கொங்குத் தமிழ் மொழி, கொங்குப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் குறிப்பவையாக மட்டும் அமையவில்லை: கொங்கு நாட்டெல்லை கடப்பதற்குள் இச்சொல்லும் இப்பண்புகளும் இயல்பாகப் படிப்படியாகக் குறைந்து மங்கி மறைந்து விடுகின்றன. எனவே, இவை பலர் கருதுவது போல், வெறும் சாதிக் கட்டுகளோ வெறும் நாட்டெல்லை, சமுதாய எல்லை குறித்த சின்னங்களோ அல்ல; அவை நாட்டெல்லையுடனும் நாட்டு வரலாற்று மரபுகளுடனும் பின்னிப்பிணைக்கப்பட்ட நாகரிக சமுதாயப் பண்புகளாய், கொங்குத் தேசியப் பண்புகளாய், கொங்கு நாட்டில் வந்தேறும் குடிகளையும் தம் வயப்படுத்தித் தேசிய ஒருமைப் பாட்டுக்குள் கொண்டுவரத் தக்க ஆற்றல் சான்ற பண்புகளாகவே விளங்குகின்றன என்பதை இது காட்டுகிறது. கொங்கு நாட்டின் கொங்குத் தேசிய மரபில் இன்று முனைப்பாக எடுத்துக்காட்டப்படும் ஒரு பெரும் பிளவு கூட, இந்திய, உலகப் பழமைகளிடையே மிகுதொன்மை வாய்ந்த இக் கொங்குப் பழமையின் அடிப்படை ஒருமைப்பாட்டை வலியுறுத்தி விளக்குவதாகவே அமைந்துள்ளது. கொங்கு நாட்டின் இடைக்கால அல்லது அணிமைக்கால வரலாற்றில் வேளாளர் மரபு, வேட்டுவ மரபு ஆகிய இரு பழங் கொங்குத் தமிழ் மரபுகள் சென்ற ஒரு சில நூற்றாண்டுகளாகத் தம்முள் பூசலிட நேர்ந்த மரபுகள் என்பதை அப்பூசல்களைப் பாடும் (கள்ளழகர் அம்மானை, அண்ணன்மார் கதை போன்ற நாட்டுப் பாடல்கள் காட்டுகின்றன. ஆனால், பாரதப் போர் பாண்டவருக்கும் கௌரவருக்கும் இடைப்பட்ட தீராப்பூசல்களின் வரலாறு என்பதனால், பாண்டவரும் கௌரவரும் ஒரே குடியினர் என்பது மறுக்கப்பட்டு விடுவதில்லை. பாண்டவர் கௌரவர் என்ற எதிரிடை வழக்கு மூலம் பாண்டவரும் கௌரவரும் ஒரே பிரிவினரே என்பது முற்றிலும் மறைக்கப்பட்டு விடவும் இல்லை. மேலும் இப் பூசல்களைப் பாடும் பாடல்களின் பண்பு பாரதப்போர்ப் பண்பிலிருந்து பெரிதும் வேறுபட்டது மன்று. (பாரதக் கதையே பண்டைத் தமிழ்க் கொங்கர் மரபுக்குரியது என்று கருத இடமுண்டு) ஏனெனில், வேளாளர்-வேட்டுவர் ஆகிய இரு சார்பினருமே கொங்கு மக்களிடையே சமுதாய ஆட்சிக்குரிய மதிப்புடையவர்கள்! இரு சாராருமே தொன்று தொட்டு வந்த வீரமரபினர்; இருசாராருமே தாம் வகிக்கும் ஆட்சித் தலைமைக்கும் நாட்டுரிமைக்கும் சின்னங்களான கவுண்டர் அல்லது காமிண்டர் என்ற பட்டமும், கொங்கர் என்ற பட்டமும் சூட்டிக்கொண்டுள்ளனர் என்பதும் இதனை நன்கு விளக்குகின்றது. வேட்டுவர்வேளாளர் என்ற எதிரிடை வழக்கு பாண்டவர் கௌரவர் (தமிழ்: கௌரியர் = பாண்டியர்) என்ற வழக்குப் போன்றதே-வேட்டுவர்வேளாளர் என்ற சொற்களின் தொடர்பையும் மரபுப் பண்புத் தொடர்பையும் இது மறைத்து விட முடியாது. இது கீழே விளக்கப்பட விருக்கிறது. கொங்கர் அல்லது கவுண்டர் என்ற பட்டங்கள் குறித்த கொங்கு நாட்டு ஆட்சித் தலைமை உலகில் வழங்கும் ஏனைய ஆட்சித் தலைமைகளைப் போன்று ஒருவர் மற்றவர் மீதோ, அல்லது பலர் மீதோ, அல்லது ஒரு சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மீதோ கொண்டு செலுத்தும் ஆண்டான் அடிமை முறை அல்லது அரசியல் ஆட்சித் தலைமையன்று. அது சமுதாய ஆட்சித்தலைமை, அல்லது குடித்தலைமை; அதாவது சிறுபான்மையே பெரும்பான்மையாக விரிந்து கொண்டு செல்லும் குடியரசு மரபின் ஆட்சித்தலைமையாகும். (இதன் வரலாற்று வேர் முதல் மரபு கீழே விளக்கப்படவிருக்கிறது. வரும் பிரிவின் நாடு குடி என்ற சொல் விளக்க விரிவு காண்க) இருவகுப்பினரின் இடைக்கால அணிமைக் காலப் போராட்டமும் இத்தகைய தலைமைப் போட்டிக்குரிய ஆதிக்கப் போராட்டமே-கொங்கு மரபுக்கும் ஓர் அயல் மரபுக்கும் உரிய போராட்டமாக அது இன்று வரை என்றுமே வண்ணம் பெற்றதில்லை. அது மிகு பழமையான வேர் முதல் உடையதுமன்று, சோழர் காலத்துக்குப் பிற்பட்டதேயாகும். வடுகநாதர் போன்ற வேட்டுவர் குடித் தெய்வங்களை வேளாளரும் மேற்கொண்டு வாழ்வது, அவர்கள் நீடித்த தொடக்ககால நேசபாசத் தொடர்பினையே குறித்துக் காட்டுவதாகும். மறவர் என்ற பழந்தமிழ்ச் சொல் வீரர் என்ற பொருளே உடையது. கள்ளர் என்ற சொல்லும் இதுபோல மறைவடக்கம் (இரகசியம்) அல்லது மறைகாத்தல் பண்பை மேற்கொண்ட ஒற்றர் அல்லது வேவுப் படையினரைக் குறிப்பதாகும். இடைக்கால, பிற்காலங்களில் மறம் என்பது அறத்துக்கு எதிர்மாறான சொல், தீய ஒழுக்கம் குறிப்பது என்றும், கள்ளர் என்ற சொல்லும் இதுபோலவே திருடர், கொள்ளைக்காரர்களைக் குறிப்பது என்றும் கருதப்பட்டுவந்துள்ளன, வருகின்றன. இதுபோலவே அரசருக் குரிய வீர விளையாட்டாகிய வேட்டம் (வேள், பகுதி; வேளிர்-குடியரசர்; வேளி-திருமணம்; வேளாளர்-வேள் மரபினர்) என்ற சொல் நாகரிகமற்ற வேடரைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டு வரலாயிற்று. இதனாலேயே வேட்டுவ மரபினர் வேளாளரிடமிருந்து வேறுபட்ட மலங்குடிகள் போன்ற பழய பண்படா வேடவகுப்பினர் என்ற தவறான கருத்து எழுந்துள்ளது. வேளாளர்-வேட்டுவர் பாடல் மரபுப் போராட் டத்துக்கு இனப்போராட்டச் சாயம் கொடுக்க வழிவகுத்துள்ள புதிய சொல் மரபுச் சூழல் இது! (வரும் பிரிவுகளில் இது விளக்கப்பட விருக்கிறது). பண்டை வல்வில் ஓரிக்குரிய வேளிர் இனத்தவராகிய இவ் வேட்டுவ மரபினர் இன்றும் அன்றும் வேளாள மரபினருடன் ஒத்த சரிநிலை வீர ஆட்சி மரபும் வீரப் பண்பாடும் உடைய வரேயாவர்-பண்டைய இந்தியாவில் மராத்தி மாநிலத்துக்கு அப்பால் சௌராட்டிர நாடுவரை பரவியிருந்த அவர்கள் நாகரிகப்பரப்பு மேலே குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஆட்சி பெரிதும் குறிஞ்சி நிலத்திலிருந்து பரவியதாகவோ அல்லது வரலாற்றுப் போக்கில் குறிஞ்சி நிலப்பக்கமாக ஒதுங்கியதாகவோ அமைவது ஆகும். பொதுநிலை வேளிர் ஆட்சியுடன் முல்லைநில ஆயர் தலைவர், பாலைநில மறவர் தலைவர் ஆகியோர் முற்காலங்களில் மோதிக்கொண்டது போலவே, மருதநிலத்துப் புதுவளங் கண்ட ஐந்திணை விரவிய வேளிர் மரபினராகிய வேளாளர் பிற்காலத்திய அரசியற் சூழல்களிடையே அவர்களுடன் மோத நேர்ந்திருத்தல் இயல்பே. தவிர, இப்பூசல் கொங்குச் சோழர் காலத்துக்கும் பிற்பட்டு, கி.பி. 14, 15ஆம் நூற்றாண்டுகளின் பின்னரே தொடங்குவதை நோக்க, இப்பூசலில் திணைமரபுப் போட்டியைவிட, புறஅரசியல் சூழல்களால் அல்லது பண்பாட்டுத் தலையீடுகளால் ஏற்பட்ட போட்டியே மிகுதி இடம் பெற்றிருந்ததென்று கூறலாம். தென்னகத்திலே இடங்கை வலங்கைப் போராட்டங்கள், தென்கலை, வடகலைப் போராட்டங்கள், நாடார் மறவர் போராட்டங்கள் போன்ற பலவகை மரபுரிமை, சாதியுரிமைப் போராட் டங்களுக்குரிய காலம் இதே ஊழியே என்பதும் இங்கே காணத்தக்கது ஆகும். கொங்கர் அல்லது கவுண்டர் என்ற ஆட்சியுரிமை குறித்த பட்டம் கொங்கு நாட்டுக்கே உரியது, கொங்கு நாட்டுக்கு வெளியே தமிழகத்தில் இல்லாத ஒன்று என்பது உண்மையே. ஆனால், இன்றைய தமிழகத்துக்கு வெளியே பண்டைப் பெருங் கொங்கு நாட்டுப் பரப்பில் அது `கௌடா' என்ற உருவில் பரவலாகவே உள்ளது. `கொங்கர்' (இது பண்டை வட கொங்கு நாடு ஆண்டு பின்னாட்களில் கொங்கு நாடும் ஆண்ட `கங்கர்' என்ற சொல்லின் மற்றொரு வடிவம்) என்ற கொங்கு நாட்டுக்கே சிறப்பான பட்டம் கூட இதுபோலவே பண்டை வடகொங்குப் பரப்பில் ஆண்ட `கங்கர்' என்ற மரபினரின் ஆட்சி மரபுப் பெயருடன் தொடர்புடைய தாகவே இருப்பது காணலாம். (மேல் கொங்கு நாடாண்ட கொங்காள்வார் மரபும் இங்கே கருதத்தக்க தாகும்). கவுண்டர் அல்லது கௌண்டர் என்ற சொல் மரபும் கௌடர் என்ற சொல் மரபும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதில் ஐயமில்லை. ஏனெனில், `கௌண்டர்' என்ற சொல்லைக் கன்னட தெலுங்கு மொழிகளிலோ, சமக்கிருத மொழியிலோ எழுதும்போதும் ஒலிக்கும்போதும், இடையிலுள்ள ணகர ஒலி(ண்) சமக்கிருத முதலிய இந்திய மொழிகளுக்குப் பொதுவாகவும் கன்னட தெலுங்கு மொழிகளுக்குச் சிறப்பாகவும் உள்ள முழுமூக்கொலி (சமக்கிருத அனுசுவாரம்) அல்லது அரை மூக்கொலி (சமக்கிருத அர்த்தானுசுவாரம்) ஆக மாறி மறைந்து விடுவது அம்மொழி களின் மரபு ஆகும். இது போலவே சமக்கிருத ஒலி மரபின் காரணமாகவே, குடக்கு(மேற்கு), குடகு (மேற்குள்ள நாடு), குடவரை (மேற்குத் தொடர்ச்சி மலை), குடவர்(மேற்கு நாட்டார், மேற்கு நாடாண்டவர், சேரர், கொங்குச் சேரர்) என்ற பழந்தமிழ்ச் சொற்களில் குடக்கு (மேற்கு) என்ற சொல்லடியாகப் பிறந்த குடவர் (மேல்திசை ஆண்டவர்) என்ற தமிழ்ச்சொல் கௌடர், கவுடர் என்றும் கௌண்டர், கவுண்டர் என்றும் மாறியதாதல் வேண்டும் என்னலாம் பண்டைத் தமிழ் வழக்கின் சேரலர் என்பதே கன்னட ஒலிமரபு மூலமாக (தமிழ் சகரம், கன்னடத்தில் ககரமாதல் மரபியல்பு) சமக்கிருதத்தில் கேரளர் ஆயிற்று என்று பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் விளக்கியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ், சமக்கிருதம் ஆகிய இருமொழிகளின் இணை மரபாகப் பண்டை பெருங்கொங்குப் பரப்பில் (சேரலர்-கேரளர் என்பது போலப்) பயின்று வளர்ந்த இச்சொல் கொங்குமரபு எல்லையும் தமிழ் மரபு எல்லையும் கடந்து ஆயிர ஆண்டுக் காலமாக நிலவியுள்ள இந்தியமரபுச் சொற்களுடன் தொடர் புடையது ஆகும். குடக்கு (மேற்கு), குணக்கு (கிழக்கு) ஆகிய திசை குறித்த இருசொற்களின் அடியாக கௌட, கௌண்ட, கௌண என்ற வடிவங்கள் மயங்குவதை நாம் அவற்றில் காணலாம். விதர்ப்ப நாட்டில் பயின்ற ஒரு சமக்கிருத இலக்கியமரபு வைதர்ப்ப முறை (வைதர்ப்பீ ரீதி) என்றும், அதற்கு மாறாக மேற்கே அல்லது கிழக்கே அதாவது புறமே வழங்கிய முறை கௌட முறை (கௌடீ ரீதி) என்றும் காளிதாசன் காலமுதல் கம்பர் காலம் வரையும் அப்பாலும் தமிழ் சமக்கிருதம் முதலிய எல்லா இந்திய மொழிகளிலும் வழங்கி வந்துள்ளன. (கௌட முறைப் பண்புகளை நாம் சேக்சுப்பியர் கால இங்கிலாந்திலும் காண்கிறோம்). ஒட்டக் கூத்தர், தமிழ் மரபில் கௌடப் புலவர், என்று அழைக்கப் பெறுகிறார். இதுபோலவே திருவள்ளுவரின் புலால் மறுத்த உணவு மரபினை மேற்கொண்ட தமிழக ஆந்திர கருநாடக மராத்திய குசராத்திய மரபுகளுக்குரிய பிராமணர் பஞ்ச திராவிடர் என்றும், இவர்களுக்கு மாறான பிற திசை மரபுகளுக்குரியவர்கள் பஞ்ச கௌடர் என்றும் வழங்கப் பெறுகின்றனர். அத்துடன் சங்க காலத்திலிருந்து தென்னகத்தில் மட்டுமே காணப்படும் தமிழ்ப் புகழ் சான்ற பிராமண மரபின் கோத்திரத்தினர் கௌண்டினியர் என்றும் கௌணியர் என்றும் பெயர் பெற்றுள்ளனர். சங்ககாலத்தை அடுத்து வாழ்ந்த பாண்டியரும் பிற தமிழரசரும் வேளாளர்-வேட்டுவர் ஆகிய இரு மரபினருக்குமே கொங்கர் என்ற பட்டமும் காமிண்டர் (காவலில் வல்லவர்: கா-காத்தல்; மிண்டன் வல்லவன்: இச்சொல் இன்றும் மலையாள நாட்டுமொழியில் உயிர் வழக்காறாக உள்ளது. மிடல்-வலிமை என்பதனுடன் தொடர்புடையது) என்ற பட்டமும் தனித்தனியாக ஒருசீர்ப்பட வழங்கினர். காமிண்டன் என்ற இந்தச் சொல்லே கவுண்டன் என மருவிவிட்டதாக ஆராய்ச்சியாளர் பலர் கருதியுள்ளனர். ஆனால், கொங்கர் என்ற பட்டத்தைவிடக் கொங்கு என்ற சொல் பழமையானது. அதுபோலவே காமிண்டன் என்ற பட்டத்தினும் பார்க்கக் கவுடர்-கவுண்டர் என்ற சொல் வடிவம் அகல் இந்திய மரபுக்குரிய விரிவும் தொன்மையும் உடையது என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. எனவே, `காமிண்டன்' என்பது தனிப்பட்டமாகவே தொடங்கி, பின் கவுண்டர் என்ற சொல்லுடன் ஒன்றுபடுத்தப்பட்டது என்று கருதல் தகும். சொற்பொருளிலும் காமிண்டன் (காவலில் வல்லவனாக அரசரால் மதிக்கப்பட்டவர்) என்பதனை விடக் கௌண்டர்-கவுண்டர் என்ற சொல் வடிவம் மேல் திசைக் குடியரசு ஆட்சி மரபினர் என்ற பொருளில் இன்னும் பழமையான வழக்கும் உயரிய மதிப்பும் உடையதாகும். ஏனெனில், அது வேள் ஆட்சி மரபினர் அல்லது குடியரசு மரபினர் எனப் பண்டை வேளிர் தனியாட்சியே குறித்துக் காட்டிக் கொங்கர் (கொங்கு) நாடாண்டவர் என்ற பொருளுடன் ஒன்றுபடுவதாகும். கடல் கொண்ட பண்டைக்குமரிமாநில மரபில் வந்த கன்னிமாநில மாகிய தமிழகத்திலும் முனைப்பான கன்னிமாநில மரபான கொங்கு மரபுகொங்கு நாட்டிற்கேயுரிய மரபு ஆகும்; சேரசோழ பாண்டிய மன்னராலோ, சேரசோழ பாண்டிய நாட்டுக் குடிவரவுகளாலோ அது வழங்கப்பெற்றது என்பது வரலாற்று மரபு, மொழி மரபு ஆகிய இரண்டுக்கும் முரண்பட்ட பிற்காலக் கருத்து ஆகும். ஆனால், அதே சமயம், இக்கொங்கு மரபு கொங்கு நாட்டு வாழ்வுடன் மட்டுமே தொடர்புடையதன்று; அதன் பழமைக்கு மட்டுமே உரியதுமன்று. அதுவே தமிழக, தென்னக, இந்திய, நாகரிக உலகப் பழமைகளுடன் ஆழ்ந்த வேர்முதல் தொடர்புடையதாய், அவற்றின் வாழ்வுகளில் மறக்கப்பட்டுவிட்ட அல்லது மறக்கப்பட்டு வந்துள்ள அல்லது மறக்கப்பட்டு வருகிற ஒரு நெடுநீள் மரபினைச் சுட்டிக் காட்டும் தொல் பழம் பண்பு மரபு ஆகும். இது அடுத்துவரும் பகுதிகளில் விளக்கப்படவிருக்கிறது. வருங்காலக் கொங்குத் தமிழகத்தின் வாழ்வுக்கு மட்டுமன்றி, வருங்காலத் தமிழக, இந்திய வாழ்வுகளுக்கும், நாகரிக உலக வாழ்வுக்கும் கூட அது மிகுந்த ஒளி விளக்கம் தருவது ஆகும் என்னலாம். 2. வரலாற்று வானவிளிம்பின் வண்ணங்கள் 1) விடியல் வானொளி காட்டும் குடியரசு மரபுப் பண்பு சங்கத் தமிழ்ப் பாடல்கள் தமிழகத்தின் முடியுடை மூவேந்தரான சேர சோழ பாண்டியரைப் பற்றி மட்டும்தான் பேசுகின்றன என்பதில்லை. அம்மூவரசு நாடுகளின் எல்லையிலும் அவற்றுக்குப் புறம்பாகத் தொண்டைநாடு, கொங்கு நாடு ஆகியவற்றின் எல்லைகளிலும், அவற்றுக்கு அப்பாலும் ஆட்சி புரிந்த வேளிர் அல்லது குடியரசர்களைப் பற்றிய செய்திகளை அவை இன்னும் பேரளவிலேயே நமக்குத் தெரிவிக்கின்றன. தமிழர் வாழ்விலும் சங்ககாலத் தமிழ்ப் புலவர் வாழ்விலும் மூவரசர் கொண்ட பங்கைவிட வேளிர் கொண்ட பங்கு ஒரு சிறிதும் குறைந்ததன்று, மேம்பட்டது என்றே கூறத்தகும். அதே சமயம் அவ்வேளிரில் ஒருவரிருவர் முடிபுனைய முற்பட்டிருந்த இடங்களில் கூட, அந் நாளைய தமிழக மரபும், தமிழகம் கடந்த மக்கள் மரபும் அப்புது மரபை ஏற்கவில்லை, ஏற்க மறுத்தே வந்தன என்று காண்கிறோம். முடிபுனைய முற்பட்ட பாரியும் அதியனும் சரி, முடிபுனையத் துணிந்து முடிபுனைந்தே விட்ட காரியும் சரி-எவருமே மக்களாலும் புலவராலும் வேளிராகவே மதிக்கப் பட்டனர், சுட்டப்பட்டனர்; அரசராக மதிக்கப் பெறவோ, சுட்டப் பெறவோ இல்லை. அத்துடன் சங்ககாலத் தமிழகம், சிறப்பாகக் கொங்குத் தமிழகம் என்ற மையத்திலிருந்து விலகிவந்த அளவிலேயே மக்கள் படிப்படியாக இப்பழைய குடியரசு மரபினை மறந்து, புதிய முடியரசு மரபினை ஏற்றமைந்தனர் என்று காண்கிறோம். கொங்குத் தமிழக, தமிழக, இந்திய வரலாறுகள் இதனை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் மூவேந்தர் மரபுகள் படைப்புக் காலம் தொட்டே நிலவி வந்துள்ளன என்று தமிழ் மரபு போற்றுகிறது. அத்துடன் உலகெங்குமே முடியரசு முறைதான் பழமையானது என்றும், குடியரசு முறை பின் வந்த ஒன்று என்றும் அணிமைக் காலத்தது என்றுமே பொதுவாகக் கருதப்படுகிறது. இது முற்றிலும் சரியன்று என்பதையும், பண்டிருந்தே குடியரசு முறையும், முடியரசு முறையும் மாறிமாறி வந்துள்ளன என்பதையும் பண்டைக் கிரேக்கர், உரோமர், பினீசியர் ஆகியோர் வரலாறுகளும் அணிமைக் கால உலக வரலாறுகளும் நமக்குக் காட்டுகின்றன. அத்துடன் இம்மாறுபாட்டு அலைகளின் ஒவ்வொரு படியிலும் குடியரசுப் பண்புகள் முடியரசு மரபு மீதும், முடியரசுப் பண்புகள் குடியரசு மரபு மீதும் படர்ந்துள்ளன. இதன் பயனாக, இரு மரபுகளிலும் இரு பண்பு முறைகளும் விரவியே வந்துள்ளன. அத்துடன், மொத்தத்தில் முடியரசுப் பண்புகள் தேசிய வளர்ச்சிகளாகவும், குடியரசுப் பண்புகள் நாகரிக, பண்பாட்டு மரபுகளாகவுமே விளங்கி வந்துள்ளன. இந்த இருதிற வளர்ச்சிகளுமே தொலைநோக்குடையவை யாய், நாட்டு நலனையும் அதே சமயம் நாடு கடந்த மனித இன வாழ்வின் நலன்களையும் மேம்படுத்துபவையாகவும் அமையலாம்; குறுநோக்குடையவையாய் நாட்டுக்கோ, நாடு கடந்த மனித இனத்துக்கோ படிப்படியான அல்லது தொலை விளைவான கேடுகள் வருவிப்பவையாகவும் அமைதல் கூடும். இவற்றுள் முந்தியவை உண்மையான நேர் வளர்ச்சிக் கூறுகள் அல்லது பண்புகள்; பிந்தியவையோ போலி வளர்ச்சிகள், பெரிதும் பண்புகள் போலத் தோற்றும் பண்புப் போலிகள் ஆகும். பண்டைத் தமிழர் இப்பண்பு வேறுபாடுகளை நுனித்துணர்ந்து கண்டவர் ஆவர். அவர்கள் வளர்த்த தமிழ்ப் பண்புகளும், தமிழ் மரபுகளும் குறுகிய தனிநல, குழுநல நோக்குடையவையாய் அமையாமல், நாடும் மொழியும், இனமும் சமயமும் கடந்த நிலையில், கால இடத் தொலை நோக்குடையவையாகவே அமைந்துள்ளது இதனாலேயேயாகும். தமிழ்ப் பண்பு, தமிழ் மரபு என்ற வழக்காறுகள் தமிழர் தமக்கென வளர்த்த பண்பு மரபுகளல்ல: அவை மனித இனத்துக்கென்றே தமிழகம் வளர்த்த மனித இன மரபுகள் அல்லது வள்ளுவப் பண்புகள் ஆகும். உலக நலமே கருதிய இப் பழந்தமிழ்ப் பண்புகளை இயல்பாக அறிந்தோ அல்லது பல தறுவாய்களில் முனைப்பான தன்னறிவில்லாமலே இயல்பூக்க உணர்வினாலேயோ பேணிக் காக்கும் வகையில் கொங்குத் தமிழகம், தமிழகத்தினுள்ளேயே தமிழ்ப் பண்பின் ஒரு நடுநாயக அரங்கமாக, மையக் காப்பகமாக இயங்கி வந்துள்ளது. `பண்டைத் தமிழர் அரசியல் வாழ்வு' என்ற ஆய்வேட்டில் தமிழ்ப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர், சங்ககாலத் தமிழர் அரசியல் நிலையை விளக்கும் ஒரு புதிய புரட்சிகரமான கருத்தொளியைப் பாய்ச்சியுள்ளார். தமிழக வாழ்வில் முடியரசு நிலைகளைவிட வேள்புலங்களின் குடியரசு நிலைகளே முற்பட்ட பழமையுடையவை என்று அவர் கருதியுள்ளார். அதே சமயம் தமிழ் மூவரசர்களே தமிழுலகப் பழமையுடையவர் என்ற கருத்து மரபுக்கும், அம்முடியுடை அரசுகள் மூன்று என்று தமிழ் மரபு வரையறுத்தமைக்கும் அவர் இதன் வாயிலாகவே புது விளக்கமும் கண்டுள்ளார். ஒரு புறம், மூவரசுகள், வேளிரின் இணைவால் இயல்பாக ஏற்பட்டவை; மறுபுறம், அவை தேசிய வளர்ச்சி சார்ந்தவை. ஏனெனில், பாண்டியரும் சோழரும் மிகத் தொல் பழங்காலத் திலேயே தனித்தனி ஐந்து ஐந்து வேளிரின் ஒருங்கிணைவாகத் தோன்றி மலர்ச்சியுற்றவர் ஆவர். சேரரோ, இதுபோல, ஏழு வேளிரின் இணைவரசாகத் தோன்றி, இணைவரசாகவே அணிமைக் காலம் வரை தொடர்ந்து வந்துள்ளனர். அத்துடன் பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கத்தோடு மற்ற அரசர் இருவரும், வேளிரும் கூட மொழியளவில் புதுமரபுப் போட்டியிடாமல் தேசிய மரபு காத்து அதன் வளர்ச்சியில் ஒத்துழைத்தனர். மிகத் தொல் பழங்காலத்திலேயே தமிழர் மூவரசரின் முடியாட்சியை ஏற்றமைந்ததற்கும், அதே சமயம் அதை மூன்று என்ற தொகை வரையறைக்கு உட்படுத்தியதற்கும் உரிய விளக்கம் இதுவே. மூவரசர்கள் தம் நாட்டெல்லை கடந்து வென்றாண்ட காலத்திலும் மூவரசு நாடுகளின் எல்லைகள் மாறாமலே தொடர்ந்ததற்குரிய சூழலும் இதுவேயாகும். இம் மரபுநுட்பம் காணாத நிலையில் சிலபல வரலாற் றாசிரியர்கள் வேளிரைக் குடியரசர் என்று கூறுவதனுடன் அமையாமல் அவர்களைச் சிற்றரசர் அல்லது அரசர் என்றே குறித்து விடுகின்றனர். இது சரியன்று, தவறான வழக்கே யாகும். ஏனெனில், வேள்புலக் குடியரசர் சிறிய அல்லது பெரிய எல்லைகளை யாண்ட முடியரசரே யாவர் என்ற தவறான கருத்துக்கு இவ் வழக்காறு இடமளித்து விடுகிறது. தவிர, இதுவே அவர்கள் மெய்ம்மரபையும், அதன் பின்னணியில் கண்டுணரப் பட வேண்டிய தமிழக, இந்திய, நாகரிக உலகப் பழமைகளையும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்திலிருந்து நிழலடித்து விடுவதாக அமைகிறது. வேள் புலங்களுக்குரிய தொல்மரபின் மெய்ம்மைகளை நுனித்துணர்வதற்குத் தமிழ் மொழி, தமிழ்ச் சங்க இலக்கிய மரபுகளுடன், பிற இந்திய, உலக மொழி மரபுகளும் வரலாற்று மரபுகளும் இணைந்து உதவுகின்றன. நாடு என்ற தமிழ்ச் சொல் இன்று இந்தியநாடு, சீனநாடு என உலகின் பெருநாடுகளுக்கும்; அவற்றின் பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திர நாடு போன்ற மொழி மாநிலங்களுக்கும்; சேரநாடு, சோழநாடு எனப் பண்டை மூவரசு நாடுகளுக்கும்; அவற்றுடன் ஒத்த புறப் பரப்புகளாகிய தொண்டை நாடு, கொங்கு நாடு போன்றவற்றுக்கும்; இவற்றின் உட்பிரிவுகளான தொண்டை மண்டலம் 24 நாடுகள், கொங்கு 24 நாடுகள் ஆகியவற்றுக்கும்; இவற்றுடன் ஒப்பாக வேளிர் ஆண்ட பகுதிகளுக்கும் வேறுபாடின்றி ஒருங்கே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்ஙனம் ஆட்சியின் அடிமட்டச் சிற்றெல்லையிலிருந்து உச்சப்பேரெல்லை வரையுள்ள இந்த எல்லாப் படிகளையும் அகல் உலகப் பரப்பு நோக்கிக் குறிக்கத் தமிழில் வேறுவேறு சொற்கள் அன்றும் இல்லாமல் இல்லை, இன்றும் உண்டு; ஆயினும், ஒரே சொல் இந்த எல்லாப் படிகளிலும் விரிந்து சென்று வழங்கும் தமிழ் மரபு வியத்தற்குரியதேயாகும். இது மட்டுமன்று! நாடு என்ற சொல் இவ்வாறு இடப்பரப்பின் எல்லா விரிவுகளையும் குறிப்பதுடன் நின்று விடவில்லை. ஊர் மக்களோ, நாட்டு மக்களோ, சமுதாய அல்லது தொழில் வகுப்பு மக்களோ, கூட்டு நலமும் சரிசம நிலையுமுடைய பிறவகைக் குழுக்களோ, தற்கால அரசியல் கட்சிகளோ கூட, தாமே நேரில் வந்து குழுமிப் பேசி முடிவெடுப்பதற்குரிய கூட்டத்தினை நாம் இன்று மாநாடு என்கிறோம். பண்டைக் கிரேக்கரிடையிலும், மிகப் பழங்கால (கி.பி. 7-10 நூற்றாண்டு) ஆங்கிலேயரிடையிலும், பண்டைச் செர்மானிய மக்களிடை யிலும் நாட்டுமக்கள் தாமே நேரில் வந்து தம் நாட்டாட்சியில் கலந்துகொண்ட மரபினை இது நினைவூட்டுகிறது. இம்மரபு இன்று பேராட்கள் (சுநயீசநளநவேயவiஎநள) மூலம் ஆட்சி நடத்தும் நம் கால அரசியல் குடியாட்சி அல்லது மறைமுகக் குடியாட்சி (ஞடிடவைiஉயட டிச ஐனேசைநஉவ னுநஅடிஉசயஉல) முறை அன்று; மக்களே நேரில் வந்து தம் ஆட்சியில் கலந்துகொள்ளும் உரிமையினை யுடைய சமுதாயக் குடியாட்சி அல்லது நேர்முகக் குடியாட்சி (ளுடிஉயைட டிச னுசைநஉவ னுநஅடிஉசயஉல) மரபு ஆகும். மாநாடு என்ற சொல்லில் மா(பெரிய) என்ற அடைமொழிக்குப் பின்னால் ஒரு முழுமரபு, முழுவரலாறே மறைந்து கிடக்கின்றது. நாட்டுக்கோட்டை வணிகரின் 96 நாட்டு(96 நகர)க் கூட்டம் அல்லது கொங்கு வேளாளரின் 24 நாட்டுக் கூட்டம் என்ற வழக்குகள் மா என்ற இந்த அடைமொழி மரபு மீதும், நாடு என்ற சொல்மரபு மீதும் பேரொளி வீசுகின்றன. நாட்டுக் கோட்டை வணிகமரபு நகரத்தார் என்ற பெயர் மூலமாய் பின்வரும் நகர்-நாடு அரசு மரபு நோக்குவது காணலாம்.) ஏனெனில், மாநாடு என்ற சொல்லில், நாடு என்பது நாட்டு மக்கள் எல்லாரும் நேரடியாகவே வந்து கலந்துகொள்ளும் உரிமையினை உடைய நாட்டின் அதாவது மக்களினக் குழுவின் ஆட்சி மன்றத்தைக் குறிப்பிடுகிறது. `மா' என்ற அடைமொழி சேர்ந்த மாநாடு என்ற சொல்லோ பெருநாடு, அதாவது இத்தகைய உரிமையினையுடைய சரிசமநிலை வாய்ந்த பல குழுக்கள் அல்லது பல நாடுகளின் இணைவான கூட்டாட்சிக் குழுமத்தின் மாமக்கள் மன்றம் என்ற பொருளையே தருகிறது. மக்கள் மன்றம் என்ற தொகைநிலைத் தொடர் இன்றும் இம் மரபை நமக்கு நினைவூட்டுவதாக இயல்கின்றது. வேளிர் ஆண்ட எண்ணற்ற நாடுகளேயன்றி, வேள்நாடு எனச் சிறப்புப்பட வேளிர் கூட்டுக் குழுவரசுகள் (குநனநசயட சுநயீரடெiஉள) என அமைக்கப்பட்ட சூழலையும் இதுவே சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், மாநாடு என்ற சொல் சுட்டும் மரபு இதுவே! நாடு என்பது இவ்வாறு ஒரு நிலப்பரப்போ, ஒரு மக்கட் பரப்போ, இரண்டின் இணைவோகூட அன்று. வழிவழிக் கூட்டு வாழ்வு மரபிலும், வழிவழிக் கூட்டுநிலை ஆட்சி மரபிலும் வந்த ஒரு மக்களினம் அல்லது அத்தகைய மக்களினங்களின் கூட்டுத் தொகுதியையும், அதன் அல்லது அவற்றின் வாழ்வுக்கும் ஆட்சி மரபுக்கும் நிலைக்களனான நிலப்பரப்பையும் இச்சொல் மொத்தமாகச் சுட்டுவது ஆகும். நாடு என்ற சொல்லின் இந்த இலக்கணத்திலிருந்து மாநாடு என்ற சொல் மாறுபடுவ தில்லை. ஏனெனில் மா(பெரிய) என்ற அடைமொழி பல நாடுகளின் கூட்டினை மட்டும் குறிப்பதன்று; அது ஒரே மைய நாட்டின் அதாவது இனத்தாயக நாட்டின் விரிவாக, ஒன்றுடனொன்று இனத் தொடர்பு பட்டுப் பலவாய் விரிவுற்ற பெருநாடு அல்லது கூட்டரசுக் குழுவினையே உணர்த்துவதாகும். இன்று மாநாடு கூட்டுபவர்கள் எண்ணிப் பாராத பண்டைக் குடியரசு மரபின் மறைதிறவுப் பண்பு இது! இனக்குழு அல்லது நாடு இவ்வாறு இனவாழ்வுத் தொடர்பும் ஆட்சி மரபுத் தொடர்பும் இவற்றுடன் நீடித்த கூட்டு வாழ்வு, கூட்டாட்சி மரபும் உடையதாய், நாடு, மாநாடு அதாவது பெருநாடு என விரிந்து செல்லும் உயிர் மரபுப் பண்பு வாய்ந்தது என்று காண்கிறோம். நாடு என்ற சொல்லில் நாம் மேலே கண்ட எல்லையற்ற, மனித இனம் அல்லது உலகம் அளாவிச் செல்கிற வரலாற்று மரபு விரிவின் மறைதிறவு இதுவேயாகும். நாடு என்ற சொல் முதல்முதலில் வேளிர் ஆண்ட பகுதிக்கே வழங்கப்பட்டு, உலகளாவிய அதன் விரிவான எல்லா எல்லைகளுக்கும் அம்மரபு வழிநின்றே இன்றளவும் தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது காணலாம். இது மட்டுமோ? இவ் உயிர்மரபு வழிநின்றே அது எல்லாப் படிகளிலும் மக்கள் நேரடிக் குடியாட்சி மரபுகளுக்கு இன்று வரை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதும்; அதே சமயம், இன்றைய மறைமுகக் குடியாட்சி மரபுகளுக்கு அது அவ்வாறு பயன்படுத்தப் பெறவில்லை என்பதும் கூர்ந்துணர்ந்து காணத்தக்க மறை நுட்பங்கள் ஆகும். ஏனெனில், தற்கால நாட்டுச் சட்டமன்றங் களை யாரும் நாடு என்றோ, மாநாடு என்றோ கூறுவதில்லை, கூறவும் முடியாது! தமிழக வழக்கில் மட்டுமன்றி, ஆங்கிலநாட்டு வழக்கிலும் நாம் இதே பண்பைக் காணலாம். ஆயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட இங்கிலாந்தில் மக்கள் ஆட்சி மன்றங்கள் ஊர் மன்றம் (கூடிறn ஆடிடிவ), மாவட்ட மன்றம் (ளுhசைந ஆடிடிவ) என விரிந்து சென்று மைய ஆட்சியில் மாமக்கள் மன்றம் அல்லது அறிவு வந்தோர் மன்றம் (றுவைநயேபநஅடிவ) ஆயிற்று. மறைமுகக் குடியாட்சி முறை அயலின ஆட்சியால் ஏற்பட்ட நாட்களில் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) மைய மன்றத்தின் பழைய பெயர் வழக்கு இறந்துபட்டு, புதிய பெயர் (ஆங்கில மொழி: ஞயசடயைஅநவே-பேசும் கூட்டம்: பிரஞ்சு மொழி: ஞயசடநச-பேசு) வழங்கத் தொடங்கிவிட்டது. பிரான்சு நாட்டிலோ செருமானி நாட்டிலோ இப்புதிய பிரஞ்சு மொழிச் சொல் வழங்கப் பெறவில்லை என்பது கூர்ந்துணர்ந்து காணத்தக்கது. முந்திய ஊர் மாவட்ட மன்றங்களுக்கும், பழைய மைய மன்றத்திற்கும் இடையேயுள்ள குடியரசு மரபுத் தொடர் அறுந்ததனால், முந்தியவை மக்கள் நீதிமன்றங்களாக ஒதுங்கின. இவ்வாறு பழம் பொருள் மரபு ஒழிந்தபின் மன்றம் (ஆடிடிவ) என்ற பழைய ஆங்கில மரபுச் சொல் இன்று வரலாற்றுப் பழஞ் சொல்லாய், ஆய்வாராய்வு (ஐவ ளை ய அடிடிவ யீடிiவே-அது ஆய்வாராய்வுக் குரிய செய்தி) என்ற பொருள் மட்டுமே உடையதாய் இயல்கின்றது. நாடு என்ற சொல்லின் இந்த எல்லா மரபு விரிவுகளையும் பொருள் விரிவுகளையும் நாம் குடி, மொழி (றுடிசன, ளுயீநநஉh, டயபேரயபந, ஏடிவந) ஆகிய சொற்களிலும் காணலாம். உண்மையில் இம்மூன்று தமிழ்ச் சொற்களுமே பண்டைக் குடியாட்சி மரபுடன் தொடர்புடையவை. குடியாட்சி மரபு என்னும் ஒரே அச்சில் சுழலும் முக்கோணச் சொற்களாக அவை திகழ்கின்றன. குடியரசு, குடியாட்சி என்ற சொற்களிலேயே குடி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. மொழி (ஏடிவந) இன்றும் ஆட்சியில் மக்கள் கொள்ளும் பங்காகிய வாக்குச் சுட்டி நிற்கிறது. மற்றும் மொழி, குடி என்ற சொற்களின் பொருள்களே தமிழில் நாடு என்ற சொற்பொருளில் உள்ளடங்கிய முப்பாற் பகுதியின் செம்பாதி யாக இன்றும் இயல்கின்றன. குடி என்ற தமிழ்ச்சொல் நாடு என்ற சொல்லைப் போலவே எல்லையற்ற மரபு விரிவுடையது. அது குடும்பத்தையும், குடும்பத்தின் பிறப்புவழி விரிவு அல்லது புறமணக்குழு (கோத்திரம், கிளை, கூட்டம் அல்லது கோயில்), அதன் மணவழி விரிவு அல்லது அகமணக்குழு (கோத்திரங்களின் மணஉறவுத் தொகுதியான குலம்), உடன் வாழ்வுக்குழு (தமிழ்: ஊரார், ஊர்; இலத்தீனம்: ழுநளே, ழுநவேடைநள) ஆகிய எல்லைகளையும் உணர்த்துகிறது. பழங்குடி, மலங்குடி, குடியிருப்பு, குடியமர்வு, குடியேற்றம் ஆகிய வழக்காறுகளில் இச்சொல் தரும் பொருள் இதுவே. இதே சொல் குடில் (குடியின் இல்), குடிசை (குடிசெய்யும் இடம்), வீடு (செயற்கைக் கட்டுப்பாடுகளும் மன உலைவுகளும் விட்ட அல்லது அற்ற இயல்பான வாழ்விடம்) என வாழும் இடம் தழுவி, அதன்பின் வீடு (சிறிய குடும்ப இன்பத்திற்குரிய இடம்), நாடு (தனி உயிர் அல்லது தனி மனிதர் நாடுகின்ற (இன்ப வாய்ப்புகளின் விரிவிடம்), பேரின்ப வீடு (இனங்குறிக் கொண்ட நிறை இன்ப உலகு) என வாழ்விட விரிவு பெற்ற பின்னும் இவ் எல்லாப் படிகளின் ஆட்சிக்குரிய குழு அல்லது ஆளப்படுபவரின் தொகுதி சுட்டிற்று. `குடி உயர, கோன் உயரும்' என்ற மரபுரையில், கோன் ஆளுபவரைக் குறித்தது போலவே, குடி ஆளப்படுபவரின் தொகுதி சுட்டிற்று. குடியாட்சி என்ற தொடரில் இதே சொல் குடியும் கோனும் ஒன்றான நிலை அதாவது குடியாட்சியின் உயிர்ப்பண்பே குறிக்கிறது. குடியரசு, குடியாட்சி ஆகியவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களே அக்கருத்துச் சுட்டும் மேலை மொழிச் சொற்களைவிட (சுநயீரடெiஉ; இலத்தீனம்: சநள அரசு, யீரடெiஉ, பொது; னநஅடிஉசயஉல; கிரேக்கம்: னநஅடிள மக்கட் கூட்டம்; மசயவயை ஆட்சி) குடியாட்சி மரபும் பண்பும் பொருளும் ஒருங்கே சுட்டும் அருஞ்சிறப்புடையவையா யமைதல் காணலாம். மேலையுலகில் சமயவாழ்வின் இறைமைக்குத் தாய்மைப் பண்பு உண்டாயினும் தாய்மைப் பண்புக்குரிய குடிமைப் பாங்கு குடியரசு, குடியாட்சி ஆகியவற்றுக்குரிய மேலையுலகச் சொற்களிலும் இல்லை, அவற்றின் ஆட்சிப் பண்பிலும் அத் தொடர்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு (தாயகம்) என்ற மலையாள மொழிச் சொல்வழக்கும், குடும்பமனை அல்லது தாயகம் என்பதற்குரிய ஆங்கில மொழிச் சொல் (hடிஅந) வழக்கும் நாடு, குடி என்ற இத் தமிழ்ச் சொற்களில் ஆழமாகச் செறிந்துள்ள தொனிப் பொருள் நுட்பமரபுகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. குடும்பம், தாய்நிலம், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றில் மட்டுமே தனிஉயிர் அல்லது தனி மனிதருக்குக் கிடைக்கக் கூடிய விருப்ப வாழ்வுரிமை, இயல் மரபுச்சூழல், இயல் வாய்ப்பு நலம், பழக்க வழக்க மரபுநலம், இனநலப் பொது நோக்க ஒருமைப்பாடு, குருதி அல்லது காதல் அல்லது உடன் வாழ்வு வழிவந்த மரபுப் பாசம், மரபுத் தோழமைத் தொடர்புறவு ஆகியவற்றை இவ் வழக்காறுகள் குறித்துக் காட்டுகின்றன. தமிழர் மரபில் குடியாட்சித் தொடர்புடைய நாடு, மொழி, குடி ஆகிய இந்த மூன்று சொற்களுமே இறைமைச் சொற்கள் ஆகும். அறிவியல் மேதை ஐன்ஸ்டீனின் மொழியில் கூறுவதானால், இவை கருத்தியலான இறைமையோடு (ஆயஉசடி-ஊடிளஅடிள) ஒத்த, ஆனால் கண்கண்ட வாழ்வின் உயிர்த்திற இயங்கியல் பண்பினை யுடைய நான்களவைப் பண்புருக்கள் (னுலயேஅiஉ குடிரச-னுiஅநளேiடியேட டீசபயnளைஅள) ஆகும். மேலே காட்டியுள்ளபடி, தமிழ் மரபு இவற்றையே குடிமரபு இறை (கடவுள்), நாட்டுமரபு இறை (நாட்டன்னை), மொழிமரபு இறை (தமிழன்னை) என்ற மூன்று ஓவா மூவா இளநலப் பண்புகளாகக் கொண்டது-தமிழ் என்ற சொல்லும், கொங்கு என்ற சொல்லும் முருகு என்ற சொல்லும் இந்த ஓவாமூவா இளமைநல இன்ப அழகே குறிக்கின்றன. தமிழ்நாடு, கொங்கு நாடு, மழநாடு அல்லது முருகுநாடு ஆகிய தொகைச் சொற்கள் பொதுமையில் ஒரு பொருளாய், படிப்படிச் செறிவான அகநாட்டுப் பண்புச் சொற்களாய் நிலவுவன ஆகும். குடும்பத்தின் விரிவே நாட்டுமக்கள் தொகுதி; குடும்ப வாழ்வுக்குரிய வீட்டின் விரிவே நாடு; அந்நாட்டின் விரிவே மாநாடு அல்லது உலகம் அல்லது பெருவீடு (நாட்டின், உலகின் காலவிரிவு மலர்ச்சியாகிய கனவியல் குறிக்கோள் உலகு எனும் பேரின்ப வீடு). சொல்மரபு காட்டும் தமிழ்க் குடியரசுப் பண்பு விளக்கம் இதுவே! இன்று இது நமக்கு ஓர் அழகுக் கருத்தாக அல்லது அழகுக் கருத்துரையாக மட்டுமே அமைதல் கூடும். ஆனால், இதுவே வேளிர் ஆண்ட `பகுதிக்குப் பொருத்தமான ஒரு முழு நிறை இலக்கணம் ஆகும் என்பது கூர்ந்துணர்ந்து காணத்தக்கது. ஏனெனில், வேள்புலம் என்பது பெரிதும் குருதித் தொடர்பும் மணஉறவுத் தொடர்பும் அணுக்க வாழ்வுத் தொடர்பும் உடைய ஒரு மக்களாட்சியின் மரபுப் பரப்பாகவே அமைந்திருந்தது. அத்தொடர்பில் இயல்பான குடும்பத்தின் தலைவரான தாய் அல்லது தந்தை ஆகியோரின் தலைமைக்குரிய மலர்ச்சியாகவே சமுதாய, அரசியல், சமயத் தளங்களில் முறையே ஆசான், அரசன், ஞானகுரு அல்லது கடவுள் என்ற முறையில் (தாய், தந்தை, ஆசான், அரசன், கடவுள் ஆகிய) ஐங்குரவர் அல்லது ஐங்குரிசிலர் (குரு-விதை, இனவிதை) மரபு வளர்ந்தது. இந்த ஐங்குரவரின் மொத்த உருவாக, பேராளராக, குடும்ப விரிவான நாட்டின் மூத்த குடிமகனாக விளங்கிய கோ அதாவது குலமுதல்வன் (குலமுதல்வி) அல்லது குலத்தலைவன் (குலத் தலைவி) அல்லது ஆட்சித் தலைவராக (ஆங்கிலம்: ஞசinஉந-இளவரசன்: இலத்தீனப் பொருளில், முதல் குடிமகன்; னுரமந-குடியரசுத் தலைவன், கோமகன், இளவரசன்) அமைந்தான். இக் கோவரசுக் குழுவே நாளடைவில் விரிவுற்று ஊர், பேரூர் அல்லது நகர் (கோநகர் அல்லது தலைநகர்), அப்பேரூர் சேர்ந்து வளர்ந்த சிற்றூர்க்குழு என மலர்ச்சியடைந்து, பண்டைக் கிரேக்க, உரோம, பினீசிய மக்கள் வரலாறுகள் காட்டும் நகர்-நாடு அரசு (ஊவைல-ளுவயவந) ஆயிற்று (அப்பழம் பெரு நாட்டினங்களின் பண்டை வரலாறு காண்க). பண்டைக் கிரேக்க நாட்டு வரலாற்றாய்வாளர் ஒருவர் நகர்-நாடு அரசின் இலக்கணத்தையும், அதன் தோற்ற வளர்ச்சி வரலாற்று மரபையும் தமிழ்க் கவிஞர் பெருமாட்டி ஒருவரின் பாடல் மொழிபெயர்ப்பு மூலமே விளக்க முற்பட்டுள்ளார். கொங்கு நாட்டுக் கவியரசியாகிய ஒளவையார் பெயரால் நம்மிடையே நிலவும் ஒரு பாடலே அது. சங்ககாலத் தொண்டை நாட்டு வேளிருள் ஒருவனான தொண்டைமான் இளந்திரையன் ஆண்ட காஞ்சிமாநகரை அது வருணிக்கிறது. `வையகம் எல்லாம் கழனியா, வையகத்துள் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்; செய்யகத்தே வான்கரும்பே தொண்டை வளநாடு; வான்கரும்பின் சாறே அந்நாட்டின் தனியூர்கள்; சாறுஅட்ட கட்டியே கச்சிப் பொருப்பெல்லாம்; கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்!' ஆயிர இதழ்த்தாமரை வடிவிலே அமைந்துள்ள தமிழக மதுரை மாநகரைப் போலவே கிரேக்கரிடையிலும் பிற நாகரிக உலக மக்களிடையிலும் இந்த நகர்-நாடு அரசும் அதன் மையப்பேரூர் அல்லது கோநகரமும் குலமுதல்வன் அல்லது குலமுதல்வியாகிய இந்தக் கோவின் மனையை (கோயில், கோவில்-அரண்மனை அல்லது வழிபாட்டிடம்) அல்லது இந்தக் கோவின் சின்னமாகிய நடுகல் (இலிங்கம்) அல்லது கோமரம் (தற்காலத் திருத்தலத் திருமரம், கொடி மரம்) நிறுவப் பெற்ற ஊர் வெளியை (பொது, பொதியில், பொதியம், பொதியை அல்லது பொதிகை) நடுவாகக் கொண்டே அமையப் பெற்றிருந்தன. நாளடைவில் குல முன்னோனாகிய ஆதிகோவே தெய்வமாய் (குலதெய்வ மரபாய்), அத்தெய்வ மரபில் வந்த கோக்களே (கோ-தெய்வம், அரசன்) அத் தெய்வ வழிபாட்டுக்குரிய பூசனைக் குருமாராகவும் அத் தெய்வ மரபில் மலர்வுற்ற நாட்டுமக்களின் அரசராகவும், சமுதாயத் தலைவராகவும் போர்க்காலப் படைத்தலைவராக வும் செயலாற்றினர். பண்டைத் தமிழர், பண்டை நாகரிக உலகமக்கள் ஆகியோரின் இனமலர்ச்சியிடையே இனத்தின் அல்லது நாட்டின் மூலமுதல்வி அல்லது மூலமுதல்வனான கோவே இறைவி அல்லது இறைவன் அல்லது அம்மையப்பனாகிய சிவபிரான் (குறிஞ்சி நிலத்து வள்ளி-முருகன், முல்லை நிலத்து நப்பின்னை-கண்ணன்) ஆயினர். ஊர் மையப் பொது வெளியாகிய அம்பலமே வழிபாட்டிடமாகிய கோயிலாகவும், மக்கள் கூடுமிடமான ஆட்சி மன்றம் அல்லது அம்பலமாகவும் வளர்ச்சிபெற்றது. போர்க்காலக் கோட்டையாகவும், அமைதி காலப்பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களாகவும், ஆட்சி மன்றம், நீதிமன்றம், திருமண அரங்கங்களாகவும், கலைக் கூடங்கள், சொற் கூடங்கள், ஆய்வாராய்வுக் கூடங்களாகவும் களஞ்சியங்களாகவும், விழா வழிபாட்டுக் களங்களாகவும் அயலாட்சிக் காலம் வரை நிலவிவந்துள்ள காஞ்சிமாநகரக் கோயில்கள் இந்த இனமலர்ச்சி வளர்ச்சிகளின் சின்னங்கள் ஆகும். மேற்காட்டப்பட்ட ஒளவைப் பிராட்டியார் பாடலும், அவ் வடிவில் கிரேக்க வரலாற்றாய்வாளர் எடுத்துக்காட்டிய மேற்கோளும் இந்த முழுமையான இனமலர்ச்சி வளர்ச்சி களுக்குச் சான்று பகர்கின்றன. கோ என்ற சொல் பாரசிக மொழியிலும் தமிழிலும் மட்டுமே மலை, அரசன் என்ற இருபொருள்களையும், தமிழில் மட்டுமே அந்த இரு பொருள்களுடன் குலமுதல்வி அல்லது குலமுதல்வன் (கோத்திரம்-கோவழிவந்த மரபு), கடவுள் (கோயில்-வழிபாட்டிடம்), அரசன் (கோயில்-அரண்மனை), சமயகுரு (கோமரத்தாடி) ஆகிய பொருள்களையும் சுட்டுவதாக அமைந் துள்ளது காணலாம். தாய்-தந்தை அல்லது அம்மையப்பனான இக்கோ அல்லது இறைவனே தமிழ்ப் புராண மரபில் மலையரசனாகிய பாண்டியன் (பொதியம் அல்லது மலையமலை ஆண்டவன்) வளர்த்த முத்தமிழ்ச் செல்வியாகிய உமையை மணந்து மலையரசனாகவே நாடாண்ட சிவபிரான் என மலர்ச்சியுற்றான். குமேர் அல்லது க்மேர், சைலேந்திரர் என்ற பண்டை மலேசிய, இந்தோனேசிய, சுமேரியப் பரப்புகள் கண்ட பேரரச மரபுகளின் பெயர்கள் மலையரசன் என்ற பொருளையே தருகின்றன. கோபுரம் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் இம் மரபு வழியிலேயே மலையின் சின்னமாக இலிங்கத்தின் மீதமைந்த மலையின் முழுமைச் சின்னம் என்ற பொருள் அமைந்தது. இக் கருத்து மரபின் தென்கிழக்காசியப் பரப்பு விரிவு இது என்பது மேலே சுட்டப் பட்டது. பொது அல்லது பொதியில் அல்லது அம்பலம் என்ற சொல்லும் இதே மலர்ச்சி காட்டுகிறது. மலையாள மாநில வழக்கில் அது இன்றும் கோயிலையே உணர்த்துகிறது. ஆனால் தமிழிலோ அது பெரிதும் பொதுமை (ஞரடெiஉ, பொது நிலை, பொதுவிடம்), ஊர்வெளி, ஆட்சிமன்றம் ஆகிய பொருள்களே சுட்டுகிறது. அதே சமயம் இறைவன் ஆடுமிடம் என்ற கருத்துருவில் இச்சொல் அதன் தொல்பழஞ் சமயத் தொடர்பையும் (தமிழர் மரபில்) சமயமும் அரசியலும் ஒரே இணைமரபே என்ற மெய்ம்மையினையும் சுட்டிவிடுகிறது. சிதம்பரம் (சமக்கிருதம்: சித்-சிற்றுயிர் அதாவது ஆன்மா; அம்பரம்-வானவெளி) அல்லது சிற்றம்பலம் (சிறிய அம்பலம் அல்லது சிற்றுயிராகிய இடவெளி அல்லது கோயில்) என்ற நகர்ப் பெயரில் அம்பரம் அல்லது அம்பலம் என்ற சொல்லின் இந்த இருதிறப் பொருள்களும் இணைவது காணலாம். மற்றும் சிற்றம்பலம் அல்லது சிற்றுயிரின் ஆன்மவெளி (திருவள்ளுவர் பெருமான் சுட்டிய இறை ஒளிபாயும் இதயமலர்), பேரம்பலம் அல்லது ஞானப் பெருவெளி (உபநிடதங்கள் பேசும் கட்டற்ற ஆன்மா, பரவெளி ஆன்மா), பொன்னம்பலம் அதாவது இரண்டின் இணைவான பொன்னொளி (வள்ளலார் பெருமான் மேற்கொண்ட அருட்பெருஞ் சோதி) ஆகிய நுண்பொருள் மரபுகளும் தமிழில் மட்டுமே இச் சொல்லின் மரபுமலர்ச்சி விரிவுகளைக் காட்டுகின்றன என்பது காணலாம். ஆண்பாலாக மட்டுமோ, பெண்பாலாக மட்டுமோ குறிக்கப்பெற இயலாத தமிழ் மரபின் இறைவனாகிய அம்மை யப்பனைச் சுட்ட வேறு எந்த மொழியிலும் (சமக்கிருதத்திலும்) இல்லாத `அவர்' என்ற இருபாற் சுட்டான பால்பகா உயர்திணைச் சொல்லை உடைய உலகின் ஒரே தெய்வ மொழி தமிழ் என்று தமிழ்க் கவிஞர் பெருமான் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார் பாடியுள்ளார்! மலையாள மாநில மரபில் அகத்திய கூடம் என்றும், அகல் இந்திய மரபில் மலையம் என்றும் வழங்கப்படும் தமிழினத் தெய்வத் திருமலை தமிழில் மேற்கண்ட ஊர்வெளி அல்லது அம்பலமரபு (இலத்தீனம் குடிசரஅ, ஊர்வெளி, சந்தை வெளி, ஆராய்ச்சி அரங்கம்) குறித்த பொதியில் அல்லது பொதியம் என்ற பெயராலேயே சுட்டப்படுகிறது. இப்பொதிய மலையிலேயே என்றும் மூவா இளமையளாகிய தமிழன்னை சங்கம் வீற்றிருந்து விளையாடுவதாகக் கம்பர் பெருமான் தமிழ் மரபுச் சித்திரம் தீட்டியுள்ளார். கடல் கொண்ட தமிழகக் குமரிமலையின் பகுதியாகிய இந்தப் பொதியம் அல்லது அம்பலமே தமிழகத்தில் இன்றும் பேணப்படும் ஐவேறான பொன்னம்பலங்களின் தாய் மரபு மூலமான அல்லது தமிழினத்தின் தேசியப் பொதுநிலையான ஐம்பொன் அம்பலமாக நிலவியிருந்தது என்னல் தகும். மேலே சுட்டியபடி குடியரசு மரபின் மரபு மூலச் சின்னமான இப் பொது நிலை அம்பலத்தின் தெய்வமாகிய கன்னித்தாயின் மரபு விரிவினையே நாம் கன்னியாகுமரியின் கன்னி பகவதியம்மன், மதுரை மீனாட்சியம்மன், (ஒருவேளை கொங்கு நாட்டுச் செல்லாயி அம்மன்), காஞ்சி காமாட்சியம்மன், காசி விசாலாட்சியம்மன் (தமிழ்ப் பெயர்: சாலி-நெல்), உச்சைனி நித்திய கலியாணியம்மன், பண்டை மேலை ஆசிய (துருக்கி) நாட்டின் எபீசசு நகரத்துத் தயானா அம்மன், கிரேக்கநாட்டு ஏதேன்சு நகரத்து அதீனா அம்மன் என நாகரிக உலகெங்கும் நகர் நடுக் கன்னித்தாய்த் தெய்வக் கோயில்களாகவே காண்கிறோம். உரோமர் மரபிலும் அதைப் பின்பற்றிச் செருமானிய மரபிலும் (ஆனால் பிரிட்டானிய மரபிலன்று) மட்டுமே இந்த அன்னை மரபு தந்தை மரபாக மாறியுள்ளது. நகர்-நாடு அரசு என்பது நாகரிக உலகளாவிய பண்பு என்பதையும், அந் நாகரிக உலகில் பினீசியருக்கும் கிரேக்கருக்கும் உரோமருக்கும் பிறருக்கும் அம்மரபில் தமிழகமே முன்னோடி யாய் அமைந்திருந்தது என்பதையும் இவ் விளக்கங்கள் தெரிவிக்கின்றன. தவிர, இந்தியாவினுள் இம் மரபு ஆரியர் எனப்படும் இந்து-ஐரோப்பிய இனத்தவர் வருகைக்கும், இதுபோல அணிமை மேலையுலகில் செமித்திய இனத்தவர் வருகைக்கும் முற்பட்ட தொல் பழமையுடையது ஆகும். ஏனெனில், இம் மரபே விவிலியத் திருமறையின் பழைய ஏற்பாட்டின் மூலமரபாகவும் (ஞயவசயைசஉhல, கோவரசு அல்லது தந்தையரசு; இலத்தீனம்: ஞயவசயை, கோத்திரம் அல்லது தந்தை வழிக்குடும்பம்), இருக்குவேத மரபாகவும், திருவள்ளுவர் கண்ட முப்பால் அரசு மரபாகவும் அமைந்துள்ளது. இருக்குவேத முனிவர்களில் வசிட்டரினும் முற்பட்ட ஆரியப் பழமையும், வேதப்பழமையும், இருக்குவேத மந்திரங் களிலேயே மிகப் பெரும்பாலானவற்றை ஆக்கியவர் என்ற வேதமரபுத் தலைமையும் ஒருங்கே கொண்டவர் விசுவாமித்திரர் (வேதமொழி: விசுவா-உலக அன்னை; மித்திரர்-நண்பர்; சமக்கிருத இலக்கண உரை மரபில் பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (இதனை விசுவம்-இயலுலகு, மித்திரர்-நண்பர் எனப் பிரிக்க முயன்று குழம்பியுள்ளனர்) அல்லது கௌசிகர் அல்லது குசிகர் (வேதமொழி: குச-வேத வேள்விக்குரிய தெய்வப்புல் அதாவது தருப்பை என்ற அருகம்புல்). இந்திய வரலாற்றுப் பேராசிரியர் அரங்கசாமி ஐயங்கார் (ஞசந ஆரளநடஅயn ஞநசiடின டிக ஐனேயை) சுட்டிக்காட்டியுள்ளபடி, அப் பழங்கால மரபுக்கேற்ப, அம் மாமுனிவர் பண்டை ஆரியரின் அரசர் அல்லது ஆட்சித் தலைவராகவும், வேள்விக்காலத் தலைமைச் சமயகுருவாகவும், போர்க்காலப் படைத்தலைவராகவும், அமைதிகால நீதித் தலைவராகவும், திருமணம் போன்ற சமுதாய விழாக்களின் வினைமுறைத் தலைவராகவும், (மந்திரங்களை ஆக்கி அறிவித்த பேராசிரியராகவும்) அதாவது ஆரிய இனமரபில் பிறந்த ஒரு தமிழ் மரபுச் சித்தராகவும் ஒருங்கே விளங்கினார். அத்துடன் அக்கால ஆரியரிடையே வருணக்கருத்து பிறக்க வில்லை என்பதைக் குலபதி (குலத்தலைவன்), விசாம்பதி (மக்களின் தலைவன்: விச்-மக்கள்) ஆகிய இருக்குவேத அரசரைச் சுட்டிய சொற்கள் காட்டுகின்றன. ஏனெனில், இங்கே குலம் என்ற சொல் சாதி அல்லது வருணம் குறிக்கவில்லை, நாட்டுமக்கள்-அனைவரையும் குறித்தது என்பதையும்; விச் என்பதும் பின்னாளைய கடைவருணமாகிய வைசியா என்ற மூன்றாம் வருணம் குறிக்கவில்லை, நாட்டுமக்கள் அனைவரையுமே சுட்டிற்று என்பதையும் காணலாம். திருவள்ளுவர் பெருமான் குறிக்கொண்ட நாடும் அரசும், இதே நகர்-நாடு அரசுப் பண்பு அல்லது வேள்புலக் குடியரசு மரபிலிருந்து மாறுபட்டதன்று. `நாடுஎன்ப, நாடா வளத்தன; நாடுஅல்ல நாட வளம்தரும் நாடு' இங்கே நாடு என்ற பெயர்ச் சொல்லையே முப்பால் முதல்வர் நாடுதல் (இனநலம் குறிக்கொள்ளுதல்) என்ற வினைப்பொருளடியாகப் பிறந்த தென்ற குறிப்புக் காட்டி யுள்ளார். ஐங்குரவர் மரபில் நின்று நாட்டுக்குத் தாமே தாயாக, தந்தையாக, ஆசானாக, கோவரசனாக, தெய்வமாக அமைந்த மன்னர், மக்களைத் தன் குழந்தைகள் நிலையில் வைத்து, அவர்கள் வளங்களை அவர்கள் அறிந்து நாடுமுன்பே நிறைவு செய்து, அத்துடன் அமையாமல், அவர்கள் நாடாத, அறியாத வளங் களையும் (இனக்கல்வி அதாவது தேசியக் கல்வி மூலம்) அறிந்து நாடுவிக்க வல்லவனாய் இருத்தல் வேண்டும் என்று திருவள்ளுவர் விரும்பியுள்ளார். திருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரங்கள் இறைமாட்சி அதிகாரத்தினையடுத்து அமைந்துள்ள தன் மெய்ம்மை விளக்கம் இதுவே! நகர்-நாடு அரசு அல்லது குடியரசு மரபில் வந்த வேளிர் பண்டைத் தமிழக அதாவது தென்னக எல்லை கடந்து இந்திய, நாகரிக உலக மெங்குமே பரவியிருந்தனர். கன்னட, ஆந்திர, கலிங்க, மராத்திய, குசராத்திய எல்லை யெங்கும் பரவி ஆட்சி செய்த சளுக்கரும் மேற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிச் சாளுக்கியரும் இரட்டரும் (இராஷ்டிரகூடரும்) மேலைக் கங்கர் (பண்டை வடகொங்கமும் கொங்குநாடும் ஆண்டவர்) கீழைக்கங்கர் (கலிங்கம் ஆண்டவர்) ஆகியோரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை வேளிராயிருந்து, பின்னரே அரசர், பேரரசராயினர் என்பது மேலே கூறப்பட்டது. தவிர, தமிழக அரசர் பேரரசர் வேளிர் ஆகியோருடன் போட்டியிட்டுக் கடலாட்சி செய்த குறும்பரும் ஆந்திரரும் கலிங்கரும் (பிற பண்டை வேள் நாடுகளின் ஆட்சி யாளர்களும்) வேளிர் அல்லது குடியரசுகளின் கூட்டிணைவு களாகவே (சுநயீரடெiஉயn குநனநசயவiடிளே) நெடுங் காலம் ஆண்டவராவர். அம் மரபினர் பலர் உரோமனிய ஜூலியசு சீசரையும் (கி.மு. 1ஆம் நூற்றாண்டு) பிரான்சுநாட்டு நெப்போலியனையும் (கி.பி. 19ஆம் நூற்றாண்டு) போல, குடியரசுத் தலைவராயிருந்து அதைக் கைப்பற்றியே பேரரசராயினர். புத்தர்பிரான் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) பிறப்புக்குரிய சாக்கியமரபு, அதே காலத்துக்குரிய மகாவீரர் பிறப்புக்குரிய வைசாலிநகரம் (காசி விசாலாட்சியம்மனை நினைவூட்டும் பெயர்; விசாலாட்சி என்பதன் தமிழ் வடிவம். சாலி-நெல்) ஆகியவை முறையே குடியரசுக் குழுவாகவும் குடியாட்சி நகரமாகவுமே நிலவியிருந்தன. தவிர, கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சிற்றரசன் நிலையில் (ஒருவேளை வேளிர் நிலையில்) இருந்த குப்த மரபினனான முதலாம் சந்திரகுப்தன் லிச்சாவியர் என்ற குடியரசுக்குழு மரபிலிருந்து பெண் கொண்டதன் பயனாகவே எளிதில் பேரரசுநிலை எய்தினான் என்று வரலாற்றாசிரியர் வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார். சங்ககாலத் தமிழக முடியரசர் (சேரர், கொங்குச் சேரர் உட்பட) மேற் கொண்ட வழக்க மரபை இது நினைவூட்டுகிறது. இதே மரபும் சூழலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பரப்பெங்கும் நீடித்திருந்தது என்பதையும் இது காட்டுகிறது. தமிழக, இந்தியப் பரப்புகளில் காஞ்சி, உச்சைனி, வைசாலி போன்ற நகரங்களும், தமிழகத்தில் சோழர் காலம்வரை நிலவியிருந்த மணிக்கிராமத்தார், நானாதேசக்குழு, திசையா யிரத்து ஐந்நூற்றுவர் குழு போன்ற உலகநாடுகள் அளாவிய வாணிகக் குழுக்களும் பிற தொழிலமைப்புகளும் உண்மையில் வேள்புல நிலையிலிருந்தும் கூட்டுக் குடியரசு நிலையிலிருந்தும் மேலும் முன்னேறி மலர்ச்சி பெற்று வளர்ந்த தன்னாட்சி நகரங்கள் (ஊவைல ஊடிசயீடிசயவiடிளே), வாணிக, தொழில் தன்னாட்சி அமைப்புகள் (ஆநசஉயவேடைந டிச ஐனேரளவசயைட ஊடிசயீடிசயவiடிளே) ஆகியவையே என்று அறிகிறோம். இவற்றுட் பல இன்று நாட்டுக்கோட்டை வணிகர், செங்குந்தர், கட்டி முதலியார் ஆகியோர் போன்று, குடியரசுமரபு தேய்வுறப் பெற்றுச் சாதி மரபுகளிடையே சாதி மரபுகளாக உறைந்து விட்டன. தவிர, காஞ்சி (தமிழகம்), வல்லபி (குசராத்), நாலந்தா (பீகார்), விக்கிரமசிலா (அசாம்) முதலிய பல்கலைக்கழகங்கள் இதே வேள்புலத் தன்னாட்சி மரபினைப் பின்பற்றி எழுந்த தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களேயாகும். கீழே விளக்கப்பட இருக்கிறபடி, பண்டைத் தமிழரசரின் ஆட்சிப் பரப்பும் வேளிர் ஆட்சிப்பரப்பும் தாண்டித் தமிழுலகின் மீதே கலையாட்சியும் இயலாட்சியும் மொழியாட்சியும் இலக்கிய வாழ்வின் ஆட்சியும் பரப்பிய முச்சங்க மரபு என்பது தொல் பழங்காலத்திலேயே முகிழ்த்த இத்தகைய கல்வி நிறுவனம் அல்லது இத்தகைய பாரிய தேசியப் பல்கலைக்கழக அமைப்பே யாகும். நாகரிக உலகெங்குமுள்ள பல்கலைக் கழக மரபுகள் இன்னும் இக் கோமரபு, சங்கமரபு பேணியே வருகின்றன. அவற்றின் வேந்தர், துணைவேந்தர் கோமரபிலும் குடியரசு மரபிலும் வந்தவர்களேயாவர். தமிழகத்தில் மூவரசுகளும், வடபால் சிசுநாகர், நந்தர், மோரியர், குப்தர் ஆகியோரால் வளர்க்கப்பட்ட மகத அரசுமே தொல்பழங்கால இந்தியாவில் வேளிர் இணைவால் ஏற்பட்ட ஆதிகால முடியரசுகள் என்று கருத இடமுண்டு. ஏனெனில், தமிழ்ப் பேரரசரின் முற்கால இமயப் படையெடுப்புகளுக்கும், அதனையொட்டிப் புத்தர்கால அரசன் அசாத சத்துரு (கி.மு. 6ஆம் நூற்றாண்டு), மோரியர் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு), சமுத்திரகுப்தன் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) ஆகியோரின் தமிழகப் படையெடுப்புகளுக்கும் இம் மரபுப் போட்டியே வழிவகுத்தது என்னலாம். உண்மையில் வரலாற்றுக்கால முழுவதும் வட மேற்கு, மேற்கு இந்தியப் பரப்பு கொங்குநாட்டுத் தாயாதிச் சண்டையையே நினைவூட்டவல்ல பாரதப்போருக்கும் (அயலவர் படையெடுப்புகளுக்கும், அயலவர் ஆட்சிகளுக்கும்தான் ஆளானதேயன்றி, இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பரப்புகளைப் போன்று தேசிய அரசு பேரரசுப் போட்டிகளுக்கு உரியதாகப் பெரிதும் நிலவவில்லை! மூன்றாவதாக, தமிழல்லாத பிற இந்தியத்தாய் மொழிகள் மிகப்பலவும் உலகத்தாய்மொழிகள் கூட) இலக்கிய மொழிகளாக உருவாவதற்கு நெடுநாள் முன்பிருந்தே மதுரை மாநகர் வளர்த்த தமிழுடன் விதர்ப்ப நாடு வளர்த்த பாளி, பாகதம், சமக்கிருதம் போன்ற அவ்வக்கால சமய இலக்கிய மொழிகள் அவ்வெல்லாத் துறைகளுக்குமுரிய தென்மொழியான தமிழுக்கு எதிரிடையாக வடமொழி எனத் தழைத்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது இதே மரபூழிக்குரிய செய்தியேயாகும். சங்ககால வேளிர் அனைவருமே தம் ஆட்சி மரபை வேள் என்றும் ஆட்சிக்குடி மரபினரை வேள்மான் (வேள்மகன்), அல்லது வேள்மாள் (வேள்மகள்) என்றுமே வழங்கினர். ஆயினும் அவர்களில் சிலர் வேள் என்ற இப்பொதுப் பெயருடனாக, கோ, இருங்கோ, கோமான் (கோமகன்) என்ற பட்டங்களையும், இன்னும் சிலர் அப்பொதுப் பெயருடனாக அல்லது பொதுப் பெயர், பட்டம் ஆகிய இரண்டினுடனாக ஆய் என்ற தனிப் பெயரையும் இணைத்துக்கொண்டனர். பாண்டிநாட்டுப் பகுதி யான நாஞ்சில்நாடு அல்லது வேள்நாடு ஆண்ட திருவாங்கூர் அரசர் கி.பி. 10ஆம் நூற்றாண்டு கடந்தும் ஆய்வேள் மரபினர் என்றே தமிழக வரலாற்றில் குறிக்கப்பட்டு வந்துள்ளனர். இம் மூன்று சொற்களில் கோ (அரசன்) என்ற சொல், அதன் விரிவுகளான கோன் (அரசன்), கோல் (அரசன் கைக்கோல், ஆட்சி, ஆட்சித் தன்மை) கோன்மை, (ஆட்சி, ஆட்சித்தன்மை) ஆகியவற்றுடனே குடியரசுக் காலம் கடந்த அம்மரபு மறக்கப் பட்ட பின்னும் முடியாட்சிக்குரிய அரசரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக நீடித்து வந்துள்ளது. ஆனால், ஆய் என்ற சொல்லோ, வேள் என்ற சொல்லோகூட, குடியரசுமரபு மறக்கப்பட்டுவிட்ட முடியாட்சிக் காலங்களில் ஆட்சிமரபு குறித்த சொற்களாக நீடிக்கவில்லை. முன்னது தொடக்கத்தில் ஒருதிணைக்கு உரிய மக்கட் பெயராகவும் (முல்லைநில ஆயர்), அதன்பின் ஒரு சாதிமரபு குறித்த பெயராகவும் (இடையர்) தேய்ந்து இழிபுற்றுக் குறுகிவிட்டது. பின்னதோ, வேளிர் என்ற அதன் பழைய பன்மை வடிவம் உட்பட, குடியரசுமரபு மறக்கப் பட்டபோதே ஆட்சி மரபும் பொருள் மரபும் இழந்துவிட்ட பழஞ்சொல்லாகிவிட்டது. ஆயினும், முடியரசுகள் இழந்துவிட்ட பழைய கோமரபுப் பண்புகள் பலவற்றையும் அவற்றின் பொது முறையான இலக்கிய வழக்காறுகள் இன்றும் குறித்துக் காட்டுகின்றன. ஆய் என்ற சொல் தாய் அல்லது தந்தை, தலைவி அல்லது தலைவன், ஆசான், மேலாளர் (ஆயளவநச, டீஎநசடடிசன) ஆகிய பொருள்களின் மூலம் ஆதிகாலப் பெண் இறைமை, பெண்வழி மரபு, பெண்ஆட்சி, பெண்டிர் சமயத்தலைமை, பெண்டிர் செல்வ உரிமை ஆகியவற்றையும், கோமரபுக்குரிய ஐங்குரவர் பண்பையும் சுட்டுகின்றது. இதன் விரிவாகத் தாயம் (ஒருபெண்டிர் விளையாட்டு, குடிவழி உரிமை) தாயாதி (ஒரு கோத்திரத் துட்பட்ட பங்காளி), தாயபாகம் (சொத்துப் பிரிவினை) ஆகிய சொற்கள் இன்னும் தொல்பழமரபு சுட்டுவனவாய் நிலவுகின்றன. இதுபோலவே வேள் (முருகன், மன்மதன், மணமகன், வீரமும் அழகும் இளமையும் ஒருங்கே கொண்டவன்) என்ற சொல்லும், அதன் விரிவுகளான வேள்வி (சமயவினைமுறை, வழிபாடு), வேட்டல் (வழிபட்டு நேர்ந்துகொள்ளல், விரும்புதல், மணம் புரிதல்; தெலுங்கு: பெள்ளி, மலையாளம்: வேளி - திருமணம்) ஆகியவையும் இறைமை, சமய ஆட்சி, அரசியல் ஆட்சி, சமுதாய ஆட்சி, நீதிமுறை ஆட்சி, பண்பாட்சி முதலிய கோமரபின் முழுநிறை ஆட்சிப்பண்பை உணர்த்துகின்றன. கோ, ஆய், வேள் ஆகிய மூன்று சொற்களும் இவ்வாறு தமிழக, இந்திய, நாகரிக உலகத் தொல்பழமைக்கால அரசியல் வரலாற்றையே தம்முள் கொண்டியல்கின்றன. கோ (மலை, தலைவன்) என்ற சொல் குடியரசு, முடியரசு ஆகிய இரண்டனுக்கும் உரிய பொது மூல அரசு மரபையும், அம் மரபின் குறிஞ்சித்திணை யூழியையும் குறித்துக் காட்டுகிறது. அதுமட்டுமன்று, வேளிரிணைவால் ஏற்பட்ட ஆதிமுடியரசு களின் தனித்தன்மைகளையும் இதுவே விளக்குவதாகும். ஏனெனில், அவை இவ்வூழியிலேயே மற்ற வேள்புல குடியரசுகளினின்றும் பிரிவுற்றன. ஆய் என்னும் சொல் குடியரசு மரபின் முல்லைநில மரபைச் சுட்டுகிறது. பின்னே விளக்க விருக்கிறபடி, பெண் இறைமையும் பெண் ஆட்சியும் பெண் வழிமரபும் மாறியமைந்ததும், முல்லைநில மரபு ஆட்சி மரபிலிருந்தே ஒதுங்கித் தனி மரபாகப் பிரிய நேர்ந்ததும் இம் முல்லைநில ஊழியிலேயேயாகும். மூன்றாவதாக வேள் என்ற சொல்லே, குடியரசுமரபின் முழுமலர்ச்சி காட்டும் சொல் ஆகும். குடியரசு மரபு மருதநிலத்திற்குத் தாவி, ஐந்திணை நிலங்களிலும் படர்ந்து பரவிய பேரூழி இதுவே. இது கீழே விரித் துரைக்கப்படவிருக்கிறது. குடியரசுக்கும், முடியரசுக்கும் உரிய பொது மூலமரபு என்பது உண்மையில் மனித இன நாகரிக சமுதாய அரசேயாகும். இந் நாகரிக சமுதாய அரசும், அதற்குரிய அடிப்படையாயமைந்த மனித இன நாகரிக சமுதாயமும் நாகரிக உலகில் ஐந்திணை விரவிய நிலத்திலேயே தோன்றி வளர்ந்து தொடர்ச்சியறாத முழுநிறை மலர்ச்சியடைந்தது. முழு மலர்ச்சியடைந்த பின்னும் அத்தகைய ஐந்திணை விரவிய நிலமே அதன் மலர்ச்சியை இடையறாது ஊக்குவதற்குரிய உயிர் விதைப்பண்ணை யாகவும் அமைந்தது. இத்தகைய ஐந்திணை விரவிய தன்மை மேலே சுட்டப்பட்ட நாகரிக உலக உயிர் மண்டிலத்தின் கடல் மலை விரவிய நாடுகளுக்குரிய பொதுத்தன்மை ஆகும். அதேசமயம் அது பண்டைத் தமிழகத்துக்கும் அதன் அகல் விரிவாகிய இந்தியாவுக்கும், அதன் செறிவிறுக்கமாகிய கொங்குத் தமிழகத்துக்கும் சிறப்புப்பண்பு ஆகும். இதனை உணர்ந்தே பண்டைத் தமிழர் மலை வளப்பகுதி அல்லது குறிஞ்சி, காட்டு வளப்பகுதி அல்லது முல்லை, ஆற்றுவளப்பகுதி அல்லது மருதம், கடலோர வளப்பகுதி அல்லது நெய்தல் என்ற நானிலங்களையும், அவற்றுடனே வளமற்றது போலத் தோற்றுகிற, ஆனால் இனவளம் ஊக்கும் திறனுடைய புன்காடு, கரிசற்காடு அல்லது மணற்காடு ஆகிய பாலை என்பதையும் இணைத்து, மனித இன மலர்ச்சிக்குரிய நிலப்பரப்பை ஐந்திணைகளாக வகுத்துக் கண்டனர். மனித இன வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஆர்னால்டு டாயின்பீ கண்டு கூறியுள்ளபடி, மனித - இன நாகரிகமும் பண்பாடும் நாகரிக சமுதாய அரசும் குறிஞ்சியில் முதல்முதல் பிறந்து உரம் பெற்று, முல்லையிலேயே நெடுங்காலம் தவழ்ந்து விளையாடி வளம் கண்டு, மருதத்தில் சென்று தங்கியபின்பே உலக சமுதாய அரசாகப் புதுமலர்ச்சி பெற்று நெய்தல் பாலை ஆகிய சேய்த்திணைகளில் மட்டுமன்றி, தாய்த் திணைகளாகிய குறிஞ்சி முல்லை ஆகியவற்றிலும் புதுவளர்ச்சியை பரப்பி, மனிதஇன நாகரிகத்தை அதன் இன்றைய நிலையில் திணைகடந்த அதாவது திணைவரம்பற்ற நாகரிக சமுதாய அரசுப் பரப்பாக்கிற்று. கோ என்ற சொல்லுக்குரிய மலை என்ற பொருளும் அதன் சொல்விரிவுகளாகிய கோபுரம் (மலையரசனின் மலைபோன்ற பெரும் படிச் சின்னம்), கோட்டை (கோ, கோடு-மலை), மலையோடிணைக்கப்பட்ட மலை போன்ற பாதுகாப்பு), கோட்டம் (ஆதி மனிதஇனப் பரப்பில் மலைப் போக்குகளால் விளைந்த பிரிவு, நாட்டுப் பெரும்பிரிவு, கோயில்வளாகம்) ஆகியவையும், அதே சொல்லினுக்குரிய மலையரச னாகிய குலமுதல்வன் என்ற பொருளும் அப்பொருள் மரபின் விரிவாகிய கோத்திரம் போன்ற சொற்களும் வேள்புலக் குடியரசு மரபின் குறிஞ்சி நிலப்பிறப்பு வளர்ச்சி வளங்களைக் குறித்துக் காட்டுகின்றன. கோ என்ற சொல்லின் ஆவினம் (கன்றுகாலி) என்ற பொருள், அச்சொல்விரிவு பொருள்விரிவு மரபுவிரிவுகளாகிய கோன் (அரசன், இடையன்), கோவன், கோவலன், கோபன் (அரசன், இடையன், முல்லைநிலத் தெய்வமான கண்ணன் அல்லது மாயோன்), கோவி அல்லது கோபி (இடைக்குடி நங்கை), கண்ணன் காதல் துணைவியாகிய நப்பின்னைப் பிராட்டி அல்லது திருமகள், வைணவ நங்கை, வைணவ நங்கையரும் வடஇந்திய வைணவரும் நெற்றியில் அணியும் ஒற்றை நாமம்), கோகுலம் (கண்ணன் பிறந்த ஊர்: குலம்-குடி, குடியிருப்பு), கோல் (இடையர் கைக்கோல், மன்னர் கைக்கோல், ஆட்சி, ஆட்சியின் தன்மை, அழகு) ஆகியவையும்; இது போலவே ஆய் (வேள் குடிப் பெயர், தலைவி-தலைவன்; ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்தல், ஆராய்தல், தேர்ந்து உயர்ச்சி காணல், அருமை, சிறப்பு), ஆயம் (ஆதரவான முட்டுக்கோல், ஆதரவு, அரசர் சுற்றம், உயர்குடி நங்கையரின் பாங்கியர்குழு, அரசியல் மேலவை, அறிஞர் பேரவை; கிரேக்கம்: ஹசநடியீயபவைiஉய ஆரியர் மலையிருக்கை அல்லது அறிஞர் அவை. பண்டை ஆங்கிலம்: றுவைநயேளநஅடிவ அறிவு வந்தவரவை, நாட்டுச் சட்டமன்றம்) ஆகிய சொற்களும் வேள்புல மரபின் முல்லைத் திணைக்குரிய நீடுவாழ்வையும் செறிவார்ந்த மலர்ச்சியையும் உணர்த்துகின்றன. தமிழ் இலக்கண மரபில் தமிழர் போர்முறை ஆனிரை கவர்தலிலும் மீட்டலிலும் தொடங்கிக் கோட்டை முற்றுகையிலும் காப்பிலும் கோட்டைக்கு வெளியே களப்போரிலும் முதிர்வுற்றன. பாரதக் காதை பொதுவாகவும் அதன் விராட பருவம் சிறப்பாகவும் காட்டும் குறிஞ்சி முல்லை மருத மரபுப் பண்புகள் இவையே! கோட்டையின் மதியரண், காட்டரண், நீரரண் (அகழி) ஆகியவற்றில் நாம் இம்முத்திணை மலர்ச்சிப் பண்பே காண்கிறோம். கோட்டை என்ற தமிழ்ச்சொல்லுடன் அதன் குறிஞ்சி அல்லது மலைசார்ந்த மரபுப் பண்பும் மராத்தி எல்லை கடந்து இரசபுதனம் வரை பரவியுள்ளன. சீனரிடமிருந்தும் துருக்கியரிடமிருந்தும் வெடிமருந்து, வெடிக்கலம் (துப்பாக்கி) ஆகியவை உலகில் பரவும் வரையிலும் அது கடந்தும்கூட நாகரிக உலகெங்கும் கோட்டைகளே அரசர் இளங்கோக்கள் வலிமைக்குரிய சின்னங்களாகக் கருதப்பட்டு வந்துள்ளன. வேள்புல மலர்ச்சியின் குறிஞ்சித்திணை மரபுக் காலத்திலேயே வேள்புல இணைவாகிய ஆதி முடியரசுகள் அத் தாய் மரபிலிருந்து பிரிந்தன என்பது மேலே சுட்டப்பட்டது. இவ் வூழியின் பெண் இறைமை, பெண் வழிமரபு ஆகியவற்றிலிருந்தே இந்தியாவெங்குமுள்ள கோயிற்குருமாரும், கோயில் மரபு தழுவிய இசைவேளாளர் போன்ற கலைவகுப்பினரும் பிறரும் தனிமரபுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர் என்னலாம். வடமேற்கு இந்தியப் பரப்பில் இவர்கள் நட்வர் என்ற தாழ்த்தப்பட்ட மரபினராயுள்ளனர். முல்லைத்திணை மரபோ இன்னும் புரட்சி கரமான மாறுதல்கள் கண்டது. மனித இனம் வேய்ங்குழலும் நரம்பிசையும் பறைமுழக்கும் பிறவும் கண்டு முழுநிரை இசைவளர்த்த திணை இதுவே. இப்பழந் தமிழிசை மரபுகள் வேதகால இசை (கி.மு. 1000), ஆதி கிரேக்க இசை (கி.மு.8ஆம் நூற்றாண்டு), சீனஇசை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இக்காலத் தமிழ்க் கவிதையும் (கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல்) ஆதி கிரேக்க காலக்கவிதையுடனும் (யீயளவடிசயட டினநள) சீனக்கவிதை மரபுடனும் தொடர்புடையன. தமிழர் இத்திணையில் வளர்ந்த கற்பு மரபு (பெண் ஆட்சி மரபு) கூட கிரேக்க உரோம சீன எல்லைவரை ஒளிபரப்பியிருந்தன என்று கூற இடமுண்டு. சீனப்பேரரசர் பேணிய கற்புச் சின்னமான பெரு வளைவுகள் (யசஉhநள) இதற்குச் சான்றுகள் ஆகும். கிரேக்கர் அறியாத தாய்மைச் சிறப்பினை உரோமர் உணர்ந்து மதித்திருந்தனர் என்பதும் இம் மரபின் தடம் ஆகும். முல்லை மரபில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுபாடுகள் பலவற்றுக்கு வழிவகுத்த பெருந்திருப்பமாவது, குறிஞ்சி மரபு அல்லது கோமரபுக் காலத்துக்குரிய பெண் இறைமை, பெண் ஆட்சி, பெண்வழி மரபு, பெண்வழிச் செல்வ உரிமை ஆகியவை படிப்படியாக ஆணுக்கும் உரிமைப்பட்டு, பின் ஆண் வழிக்கு மாற்றப்பட்டு வந்ததே ஆகும். (குறிஞ்சி முல்லை நிலைகளுக்குரிய இத் தடங்களைக் கேரளத்தில் செறிவாக, தமிழகத்திலும் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் பசிபிக்மாகடல் தீவப்பரப்பிலும் பிற தென்னுலகப்பகுதிகளிலும் அப்பாலும் பரவலாகக் காணலாம்). பெண்ணுடன் ஆண் வாழ்விலும் ஆட்சியிலும் சரிசம பங்கு கொள்ளும் இக் கற்புநிலை நாகரிகத்தளத்திலேயே பெண்பாலார் அக (வீட்டு) ஆட்சிக்கும் ஆண்பாலார் புற (நாட்டு, உலக) ஆட்சிக்கும் சிறப்புரிமை உடையவர் ஆயினர். முல்லைத் திணைக்குரிய தெய்வமாகிய கண்ணனின் காதல் துணைவியான நப்பின்னைப் பிராட்டியே (மராத்தி குசராத்தி நாட்டு ராதா கிருட்டின வழிபாட்டு மரபுக்குரிய ராதையே) கண்ணகிக்கு முன்னோடியான கற்புத் தெய்வமாகக் கருதப்பட்டாள். (பிற்கால இந்து சமய மரபு ராதையைக் காமக் கிழத்தியாக்கி இழிவு படுத்தியுள்ளது.) ஆட்சிப் பண்பு மரபின் இப் புரட்சியே சமய, சமுதாய வாழ்வு களிலும் பண்பாடுகளிலும் மொழி மரபுகளிலும் பெருந் திருப்பங்களை உண்டு பண்ணிற்று. தொல் பழங்காலத்தில் அன்னை (கன்னித்தாய்) வழிபாட்டு மரபு அன்னையின் மகன் (சேய் அல்லது முருகன்) வழிபாடாகவும், அன்னையின் ஆண்கிளை அல்லது அண்ணன் (தாய்மாமனாகிய மாயோன்) வழிபாடாகவும், அன்னையின் காதல் துணை அல்லது ஆண்பாதி (அம்மையப்பன் அல்லது சிவபிரான்) வழிபாடாகவும் மூவகை அல்லது திணைவகையில் இருவகைப்பட்டது. இம் மும்மை மரபின் தடங்களை நாம் தமிழக, இந்தியப் பரப்புகளில் மட்டுமன்றி நாகரிக உலக முழுவதிலும், நாகரிக உலக சமயங்கள் அனைத்திலும் காணலாம். நாகரிக உலகுக்குப் புறம்பான உலகின் வடகோடிப் பண்படா இனங்களிடையே (ஆயiநே: ஹnஉநைவே டுயற) அன்னை வழிபாடோ, பெண்ஆட்சி மரபோ, கோமரபு மலர்ச்சியோ தழைக்கவில்லை யாதலால், இயற்கை யாற்றல் வழிபாடுகளான பல தெய்வ வணக்கமன்றி ஓரிறை வணக்கம் மலரவில்லை என்று அறிஞர் கூறுகின்றனர். மாறாக, நாகரிக உலகிலே பெண்வழி மரபுடனும் வேள்புலக் குடியரசு மரபுடனும் மலர்ந்த கோமரபு மலர்ச்சியாகவே ஓரிறை வழிபாடு தோன்றி வளர்ந்தது. அத்துடன் மேலே சுட்டியபடி, குடியாட்சி மரபுக்கு மூலமாய் அமைந்த இந்த ஓரிறை வழிபாடு அம் மரபில் நின்றே இயல்பாகக் குடிமை இறைமை (னுiஎiநே குயஅடைல) என்ற நிலையில் தாய், தந்தை, சேய் (ஆடிவாநச, குயவாநச, ளுடிn) இணைவான மூவொருமை இறைமைக் கோட்பாடாயிற்று. இதுவே பண்டைத் தமிழ் மரபில் சிவன், உமை, முருகன் (சோமாஸ்கந்தம்) என; புராணமரபில் சிவன், திருமால், நான்முகன் என; கிறித்தவ மரபில் தந்தை இறை, (ழுடின வாந குயவாநச), மகன் இறை (ழுடின வாந ளுடிn), தூய ஆவிஇறை (ழுடின வாந ழடிடல ளுயீசைவை) என; உமர் கய்யாமின் இசுலாமிய சூபி மரபில் அணங்கு (வாந டுயனல டிச ழுடின வாந ஆடிவாநச), ஏடு (வேதம் அல்லது குரான்), தேறல் கிண்ணம் (இறையருள் அல்லது பக்தி) என நாகரிக உலக சமயங்களில் படர்ந்து பரவியுள்ளது. சமய, சமுதாய, பண்பாட்டு ஒழுக்கத் துறைகள் சார்ந்த அறிவுத் துறைகளில் கூடத் தமிழரின் நாடு மொழி இறை ஆகிய சாவாமூவா மும்மைப்பண்பாகவும்; இயலிசை நாடகம் என முத்தமிழாகவும்; அறம்பொருள் இன்பமென முப்பாலாகவும்; பதிபசுபாசம் என, சத்துசித்து ஆனந்தம் என, திருக்கு திருசிய விவேகம் எனப் பலவாறான முப்பொருள் திறங்களாகவும் இதே மலர்ச்சி பல கிளை மரபுகளை வளர்த்துள்ளது என்று காணலாம். குறிஞ்சி முல்லை மரபு ஊழிகளில் ஏற்பட்ட இம் மாறுபாடுகளின் பயனாகவே, பெண்ணுருவாயிருந்த இறைவி ஆண்உருவ இறைவனானதுடன், பெண்டிரிடமே தங்கியிருந்த தெய்வ வழிபாடு (கணியன் - பூசனையாளன், வானூலார்; பெண்பால் கணிகை; தேவராட்டி, தேவடியாள்; தாசி - கடவுள் அடியார் ஆகிய இன்றைய இசைவேளாளப் பெண்டிர் பெயர்கள். அடிகள் - துறவி) ஆண்களுக்கு மாறிற்று. அல்லி மரபினரான பண்டைய அரசியர், பின்னாட்களில் ஆண் அரசர் ஆயினர். அத்துடன் தற்காலிகமாகத் தொடக்க காலத்தில் கோ மரபும், கிட்டத்தட்ட நிலையாக ஆய் மரபும் மூலமரபினின்று பிரிந்து சமயத் துறையில் தனிமரபான திருமால் வழிபாடும் (அன்னை வழிபாடும் கன்னி வழிபாடும்) சமுதாயத் துறையில் திணைசார்ந்த தனிமரபாக, கிட்டத்தட்டத் தனிச்சாதிமராக (ஆயர் அல்லது இடையரும்) பிரிய நேர்ந்தது. திணை தோறும் தெய்வங்கள் மாறினும், இத் திணை (ஓரளவு குறிஞ்சித் திணையும்) மட்டுமே கோ மரபின் இறைமைப் பிளவு காரணமாக சமய சமுதாய வாழ்வில் தனி மரபுகளாக ஒதுங்கியுள்ளது காணலாம். இது மேலும் (அச் சமுதாய, சமயத்துறை அறிஞரால்) ஆராய்தற்குரியது. வேள்மரபின் வேர்முதற் பண்பு குறிக்கும் கோ, கோயில், அம்பலம், பொதியில் ஆகிய சொல் மரபு, பொருள் மரபுகளிலும் மேற்குறித்த மலர்ச்சிப் போக்கின் சாயல்களை நாம் காண்கிறோம். முருக, திருமால் வழிபாடுகளில் கோ என்ற சொல் கோ மரத்தை (கோயில் திருமரம், கொடி மரம்) மட்டுமன்றி மாடுகளைக் கட்டும் கட்டுத்தறியாகிய கம்பத்தையும் (கந்து, கந்தில்; கந்திற்பாவை) சுட்டிற்று. இதுவே இலிங்க வழிபாடாகவும் (கந்து, கந்தம் - இலிங்கம்; கந்தன் - முருகன்) மலர்ந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. இதற்கேற்பப் பொதியில் (வெட்டவெளி) சோலையாகவும் (பொதும்பர் - சோலை), முருகனின் குன்று தோறாடலாகவும் மலர்ந்தது. (இது பெரிதும் கொங்குநாட்டு மரபு ஆகலாம்) அத்துடன் திருமால் வழிபாட்டில் கோ அல்லது இறைவன் பசுமலை, பசுஞ்சோலை அல்லது நீலவான் ஆகியவற்றின் வண்ணத்தவனாக விண்டு (விண் - நீலவான்; சமக்கிருத வடிவம்: விஷ்ணு) எனவும் கோயில் விண்ணகரம் (விண்டு - திருமால்; நகரம் - நகரும் இல்லங்கள் அல்லது கிடைகள் அமைந்த பேரூரின் நடுவெளியிடம்; சமக்கிருத வடிவம்: விஷ்ணுக்ருகம்) எனவும் வழங்கின. வேள்மரபு மலர்ச்சியில் குறிஞ்சி முல்லை மரபுகளில் கண்ட புரட்சிகரமான இம் மாறுபாடுகளைவிட மருதத்திணை மரபில் அது அடைந்த மலர்ச்சி மாறுபாடு குறைந்ததன்று, சிலபல வகைகளில் மேம்பட்டதேயாகும். ஏனெனில் மேலே குறித்தபடி, மருத நிலமரபே ஐந்திணை மரபாக மட்டுமன்றி, திணை வரம்புகளை அழித்து வளர்ந்த தற்கால மனித இன நாகரிகச் சமுதாய மரபாகவும் வளர்ந்துள்ளது. நாகரிக உலகில் இந்தியாவுக்கு மட்டும் தனித்தன்மை அளித்த தளமும் இதுவே யாகும். மனித இன நாகரிக வாழ்வில் கொங்குத் தமிழகம் வகித்துவந்துள்ள மைய இடம் விளங்குவதும் இத் தளமே! ஐந்திணை மலர்ச்சியின் போக்கில் மருதநிலையின் மரபின்போது ஏற்பட்ட இந்தப் பெருந் திருப்பத்தை நாம் ஐந்திணைகளின் இறைமை மலர்ச்சியிலேயே காணலாம். இறைமரபு மலர்ச்சியின் தொடக்கத்தில் கோமுதல்வி பெண் நிலையில் கன்னித் தாயாகவும், பின்னர் குறிஞ்சி மரபிலேயே அத் தாயின் ஆண்கிளையாகிய மாயோனாகவும் மாறும் நிலை ஏற்பட்டது என்பது மேலே கூறப்பட்டது. குறிஞ்சி முல்லைத் திரிபாகிய பாலையிலோ அத் தாயின் வீரத் திருஉரு மீட்டும் அவ்விருவரின் பெண்வடிவான மாயோள் (நாரணி, திருமாலின் கிளைப்பாதி; சிவை, சிவபிரானின் மறுபாதி) அல்லது கொற்றவை ஆயிற்று. ஆனால். மருதநில மரபில் ஏற்பட்ட ஐந்திணை மலர்ச்சி அல்லது நாட்டு மலர்ச்சியின் முழுநிறைவும் அதன் புதுவளமுமே வேந்தன் (நாட்டுப் புதுவாழ்வு வேய்ந்தவன்) அல்லது மழைத் தெய்வமாகிய இந்திரன் என உருவகிக்கப் பட்டு, அந்த இரு பண்புகளின் ஓர் உருவான வேந்தன் அல்லது இந்திரன் மருதத்திணைக்கு உரிய இறைமை ஆனான். அம் மழையின் கருவள மாகவும், கடலுழவாகிய மீன் முத்து சங்கு பவளப்பயிர், கடல் வாணிகம் முதலான புதுவளங்களின் தாயகமாகவும் விளங்கிய கடலகத்தின் தெய்வமாகிய வருணனே நெய்தல் திணைக்குரிய இறைமை பெற்றான். இந்த ஐம்மை இறைமையே ஐங்குரவரையும் சுட்டி ஐயுரு இறைமை (பஞ்ச மூர்த்திகள்) மரபு ஆயிற்று. இங்கே மனித இனச் சமுதாயத்தில் வளம்படைக்கும் வேள் அல்லது குடியரசனே இயற்கையில் மழைவளம் தரும் வேந்தன் அல்லது இந்திரனாகவும், அவ் வேளரசரின் வேள் குடிமக்களே வேளாளர் அதாவது அம் மழைவள அடிப்படையான உழவாண்மை வளமும் அது சார்ந்து வளர்ந்த வாழ்வு வளங்களும் படைக்கும் குடியரசமரபின் மலர்ச்சிக்குரியவர்களாக வும் (தேவர்களாகவும்) உருவகிக்கப்பட்டது காணலாம். இது கீழே விரிக்கப்படவிருக்கிறது. மேலே காட்டியபடி, வேள் என்ற சொல்லும் அதன் பழம் பன்மை வடிவான வேளிர் என்ற சொல்லும் தம் சங்க காலக் குடியரசு மரபுப் பொருளை இழந்து, அப் பொருளில் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட முடியரசுக் காலங்களில் கிட்டத் தட்ட வழக்கிறந்த சொற்கள் ஆகிவிட்டன. சமக்கிருதத்தில் கூட, முதலில் பெண் என்ற பொருளும், பின்னர் மக்கள் என்ற பொருளும் கொண்ட ஜன என்ற சொல்லடியாகப் பிறந்த ஜனபத (குடியரசு) ராட்டிர (நகர் - நாடு அரசு; ராஜ் - வேள்; த்ர - காத்துப்பேணு) வேள் (ராஜ், ராஜன்ய) ஆகிய சொற்களின் நிலையும் இதுவே. ஆயினும் வேள் அல்லது வேளிர் என்ற சொல்லின் மரபுவிரிவாகத் தொல்காப்பியத்திலும் திருக் குறளிலும், சங்க இலக்கியத்திலும் அருகலாகவே வழங்கப்படும் வேள்வி, வேளாண்மை, வேளாளர் ஆகிய சொற்கள் வேள்புல அரசின் மருதத்திணை, மருதத்திணை கடந்த ஐந்திணை மலர்ச்சிகளை நமக்கு நன்கு புலப்படுத்திக் காட்டுகின்றன. (இது முழு அளவில் பின்னர் விளக்கப்பட விருக்கிறது.) தொல்காப்பிய மரபிலும் தமிழிலக்கண மரபிலும் தமிழிலக்கிய மரபிலும் குறிஞ்சிநில மக்கள் குறவர் என்றும், முல்லைநில மக்கள்ஆயர் என்றும், பாலைநில மக்கள் எயினர் என்றும், நெய்தல்நில மக்கள் மீனவர் என்றும் அழைக்கப்பட்டது போல, மருதநில மக்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். எல்லாத் திணைகளிலிருந்தும் ஆளும் மரபில் பயின்ற குடிகள், அருந்திறலாளர்கள், அறிவாளர்கள் ஆகிய அனைவரும் நாட்டு வாழ்வின் நடுத்திணையாகிவிட்ட மருதத்திணையின் புதிய ஐந்திணை மையத் தலைநகர்களைச் சூழ வந்து புதுக் குடியமர்வுற்று ஐந்திணைவளமும் அதன் அப்பாலைய வளமும் ஆண்டு புதுநாகரிக வாழ்வு தொடங்கிய நிலையை இது காட்டுகிறது. இலக்கண மரபில் இப் புதுவள, புதுநாகரிக வாழ்வின், மையம் என்ற முறையில் மருதநிலமே, இவ்வூழியில் சிறப்புப்பட நாடு எனப்பட்டது. (பின்னாட்களில் பாண்டிய நாடே சிறப்புப்பட தமிழ்நாடு, தென்னாடு எனச் சுட்டப்பட்ட மரபினை இது நினைவூட்டுவது ஆகும்). அரசனும் இதற்கு ஏற்ப இந்நாட்களில் நாடன் என்றும், அதே மூச்சில் வெற்பன் (மலை யாண்டவன்), துறைவன் (கடலாண்டவன்) என்றும் அழைக்கப் பட்டான். இவற்றை ஒட்டியே, மருதநிலத் தெய்வமாகிய வேந்தன் அல்லது இந்திரனும் ஐந்திணை உட்கொண்ட நாட்டின் தெய்வமாக உயர்த்தப்பட்டான். வேளிர் அரசர் தலைமையில் இத் தேசியத் தெய்வத்தின் பெயரால் தேசிய அளவிலேயே இந்திரவிழா எடுக்கப்பட்டது. (கோ மரபில் முன்னம் மலர்ந்த அம்மையப்பனுடன், இப்போது மலர்வுற்ற கோவேள் அல்லது கோவரசனான இந்திரனும் ஒன்று படுத்தப்பட்ட இவ்வூழி மரபையே (தென்கிழக்காசியப் பரப்பு நமக்குச் சுட்டிக் காட்டுகிறபடி). திருக்குறள் காலமுதல் காப்பிய காலம் (கி.பி. 3-6 நூற்றாண்டுகள்). தேவார பெரியபுராண காலம் வரை நாட்டு வாழ்த்து, இறைவாழ்த்து, அரசு வாழ்த்து ஆகியவற்று டன் அவற்றுக்கும் முந்துநிலையாக மழை வாழ்த்தும் (வான் - வானவர், அந்தண்மை. அந்தணர் வாழ்த்துகள்) அதுபோலவே காப்பியங்களிலே, நாட்டுப்படலம், நகரப்படலம் ஆகியவற்றுடன் ஆற்றுப்படலமும் சிறப்பிடம் பெற்றன. தமிழகத்தின் பொங்கல் விழா, காவேரியின் பதினெட்டாம் பெருக்கு, பரிபாடல் விரித்துரைக்கும் வைகைப் புனல் விழா, இந்தியாவின் போகிப்பண்டிகை (போகி - இந்திரன்), கேரள மாநிலத்தின் ஓணவிழா, (தென்னகப் பெருவேந்தன் மாவலியின் புகழ் நினைவு விழா) ஆகியவை (மேலையுலகின் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஈத் பண்டிகை ஆகியவைகூட) வேந்தன் அல்லது இந்திரன் பெயரால் நிகழ்த்தப்பட்ட இப் பண்டைப் பெருந் தேசிய மக்கள் விழாவின் மரபின் வந்தவையேயாகும் என்னல் தகும் (இது மனித இன நாகரிக உலகளவில் ஆய்வுக்குரியது). தற்கால நகரங்களைப் போலவே மருதநிலமும் முன்பே வளர்ந்துவிட்ட பொருள் வளம், பண்பு வளம், அறிவு கலை வளங்கள் ஆகியவற்றைப் பேணிப் பரப்பும் நிலமாக மட்டுமே மனித இன வாழ்வில் இடம் பெற்றுள்ளது. அவற்றை ஆக்கிப் படைத்து வளர்க்கும் மரபு அதற்கு என்றும் கிடையாது. மனித இன வரலாற்றில், மருதநிலத்துக்குரிய இதே இயல்பு முடியரசுக்கும் உரியதாகும். குடியரசு மலர்ச்சியில் தோன்றி வளர்ந்த மரபுகள், பண்புகள், வளங்கள் ஆகியவற்றைப் பேணிப் பரப்புவதன்றி, அது தனக்கென அவற்றை முதனிலையாக ஆக்கிப் படைப்பதில்லை. இதனாலேயே நாம் வரலாற்றில் கொங்கு மாநிலம் போன்று குறிஞ்சிமுல்லை விரவிய சிறுபாலைகளாகிய மராத்தியம், இரசபுதனம் (இராஜஸ்தான்), நேபாளம், சுவிட்சர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நிலங்களிலேயே குடியரசு மரபுடன் வீரமரபு விரவுவது காண்கிறோம். உபநிடதங்களும் புத்த சமண சமயங்களும் இத்தகு வீரக்குடியரசு மரபுகளிலிருந்து தோன்றியவையே யாகும். இது போலவே வரலாற்றில் கொங்குத் தமிழகத்தை உள்ளடக்கிய தமிழகம் அல்லது தென்னகம் போன்று குடியரசு மரபும் வீரமரபும் பேணி, வேள்புல நிலையிலேயே வேள்புல அரசு மலர்ச்சியை ஐந்திணை யளாவப் பரப்பும் வாய்ப்புப் பெற்ற நிலங்களில்தான் மக்களினங்கள் கடலோடி இனங்களாக நிலவிவந்துள்ளன என்று காண்கிறோம். வரலாற்றுக்கால பிரிட்டானியர், உலாந்தர் (டச்சுக்காரர்), போர்ச்சுக்கீசியர், பண்டைக்கால பினீசியர், கிரேக்கர், அராபியர், மலேசிய இந்தோனேசிய மக்கள் ஆகியோரே உலகின் இத்தகைய கடலோடி இனங்களாய், கடலரசு கடற் பேரரசுகளாய் நிலவிவந்துள்ளனர் என்பதன் சூழல்விளக்கம் இதுவே யாகும். பழந்தமிழகத்திலும், பழங் கொங்குத் தமிழகத்திலும் நாகரிக உலகில் முடியரசருக்கு முற்பட்டே வேளிர் ஐந்திணை மலர்ச்சியில் முன்னேறி யிருந்தனர். பழங்கொங்குத் தமிழகத்தில் நன்னன் ஆண்ட கடம்ப மரபினரும் குறும்பரும், பழந்தொண்டை நாட்டுப் பரப்பிலும் அப்பாலும் திரையர், இளந்திரையர் (திரையர் என்ற சொல்லே கடலோடிகள் என்ற பொருளுடையது), ஆந்திரர், கலிங்கர் ஆகியோரும், அகல் உலகில் பசிபிக் மக்கள் பீனிசியர், கிரேக்க அதேனியர் ஆகியோருமே இம்மெய்மைக்குச் சான்றுகள் ஆவர். பிற அரசர் பேரரசர் தம் ஆட்சியுட்பட்ட இத்தகைய இனங்களின் துணையாலேயே கடலாள முனைந்து வந்தனர் என்பது காணலாம். (திரையர் என்ற சொல் திராவிடம், எரித்ரேயம் அல்லது செங்கடல் நிலம், துரேனியம் அல்லது கிரேக்க கடற்பகுதி, எதுருசுக்கானம் அல்லது தொல் பழங்கால உரோமர் தாயகம் ஆகிய பெயர்களுடன் தொடர்புடைய தென்று திருத்தந்தை ஈராசு கருதியுள்ளார்). குடியரசு முடியரசு மரபுகள் ஒரே மூல மரபில் தோன்றிப் பண்புகள் விரவப்பெற்றே வளர்ந்தாலும், அவற்றிடையே அடிப்படைப் பண்புகளிலும் பண்பு வளர்ச்சிப் போக்குகளிலும் ஆட்சியிலக்குகளிலும், பண்பிலக்குகளிலும் குறிப்பிடத்தக்க உயிர்நிலை வேறுபாடுகள் உண்டு. இவற்றுள் தலைமையானவை ஆள்வோர் ஆளப்படுவோர் வேறுபாடு கால இடம் கடந்த இன இலக்கு ஆகியவையேயாகும். ஏனெனில் குடியாட்சியில் குடிகளுக்காகவே, குடிவளத்துக்காகவே ஆட்சி அமைந்திருந்தது. முடியாட்சியிலோ ஆட்சி அல்லது ஆளுபவர் வளத்துக்காகவே நாட்டாட்சி என்ற நிலைமை உள்ளார வளர்ச்சியடைந்தது. யார் ஆள்வது என்பதைக் குடியாட்சியில் மக்களே முடிவு செய்வர். முடியாட்சியில் ஆட்சியாளரே அதனை முடிவு செய்ய முற்பட்டனர். இவ்வகையில் `மக்களால் மக்களுக்காக மக்கள் மூலமே நடத்தப்படுவது குடியாட்சி' என்ற குடியரசின் குறிக்கோளுக்கு முடியாட்சியைவிட, இன்றைய மறைமுக அரசியல் குடியாட்சியைவிட, பண்டைய நேர்முகச் சமுதாயக் குடியாட்சியே மிகப்பேரளவில் உகந்ததாயிருந்தது என்று காணலாம். ஏனெனில், பின்னதே இயல்பான குடும்ப விரிவாயமைந்த சமுதாய வாழ்வில் மலர்ந்து அதனுடன் வளரும் தன்மையுடையதாயிருந்தது. அத்துடன் அது கீழிருந்து மேலாக வளர்வது; முன்னதைப் போலவோ, முடியாட்சியைப் போலவோ அது மேலிருந்து கீழாக மக்கள் மீது சுமத்தப்படுவதன்று. குடியரசு மரபில் ஆள்பவர் அல்லது ஆட்சித் தலைவர் (கோ அல்லது வேள்) குடிகளுள் ஒருவராய், முதற் குடிமகனாய், மற்றக் குடிமக்களுடன் குருதி மண வாழ்வுத் தொடர்புறவு கொண்டவராய் அமைந்திருந்தனர். முடியாட்சியில் இத் தொடர்பு குன்றியதனாலேயே ஆள்பவர் அயலாராகக்கூட இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. அத்துடன் செயல்நிலையில் குடியரசருக்கு நாட்டு மக்களின் மக்கட்படையன்றி (ஆங்கிலம்: குலசன அல்லது ஆடைவையை அல்லது சூயவiடியேட ஹசஅல) நிலவர ஊதியம் பெற்று உழைக்கும் நிலைப்படையோ (ளுவயனேiபே ஹசஅல), தம் அணுக்க உற்றார் உறவினரான நாட்டு மக்களேயன்றி ஊதிய மூலம் அமர்த்தப்பெற்ற நிலையான அரசியற் பணிக்குழுவோ (ஞடினை டிச ஞநசஅயநேவே ஊiஎடை ளுநசஎiஉந) மக்கள் மரபு வழக்காறும் (ஆங்கிலம்: ஊடிnஎநவேiடிளே) அவ்வக்கால மக்கள் மனமறிந்த கருத்துமாறுபாட்டு மரபுகளும் (ஊடிஅஅடிn டுயற) அன்றி வகுத்தியற்றப்பட்ட நிலைச்சட்டம் (றுசவைவநn டிச ஊடினகைநைன டிச ளுவயவரவடிசல டுயற) அல்லது சட்ட ஆக்க முறையோ (டுநபளைடயவiஎந ஆநவாடினள) கிடையாது. இவை முடியாட்சி மரபு ஊக்கிய பண்புகள் ஆகும். நாகரிக உலகில், இந்தியாவில், தமிழகத்திலே கூடக் கொங்குத் தமிழகமே சிறப்பு முறையில் குடியரசு மரபின் பிறப்பிடம், வளர்ச்சியிடம், அதன் சாவாமூவாக்கன்னி மலர்ச்சியாகிய உயிர் விதைப் பண்புக்குரிய இடம் என்று கூறத்தகும். ஏனெனில், அதன் வேள்புலப் பண்புகள் புற உலக, புறத்தமிழகத் தலையீடின்றி இயல்பாக வளரும் வாய்ப்புப் பெற்றால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை உலகின் இரு கோடிகளில் நிலவிவந்த அல்லது நிலவிவந்துள்ள இரு பரப்புகள் காட்டும். முதலது வரலாற்றாசிரியரால் பண்டைச் சமதருமப் பேரரசு (யn ஹnஉநைவே ளுடிஉயைடளைவ நுஅயீசைந) என்றே பாராட்டப்பட்டுள்ள தென்அமெரிக்காவின் இங்காப் பேரரசு (கி.பி. 12-15 நூற்றாண்டுகள்) ஆகும். இது ஐரோப்பிய அரசியல் வேட்டைக்காரர்களாலேயே மீளா அழிவுக்காளாயிற்று. இரண்டாவதோ கடல் கடந்த இந்து சமய, இந்திய சமுதாயப் பரப்பு என்றே அறிஞரால் வருணிக்கப்படும் பாலித்தீவின் கலைவாழ்வுச் சமுதாயம் ஆகும். தற்கால மேலை நாகரிகம் என்னும் புயற் சூறாவளியினால் அது வாடி வதங்கத் தொடங்கியுள்ளது. இந்த இரண்டினையும் மங்கி மறுக வைத்த நாகரிகச் சூழல்களை வாங்கி (சப்பானியர் போல) விழுங்கி வளரும் கொங்குச் சமுதாயம் மேற்கூறியவற்றின் இயல்பான குறிக்கோள் நோக்கி இன்னும் மலர்ச்சியுறும் நிலை யுடையது என்னல் தரும். தமிழகத்தில் மூவரசுகள் வேளிர் இணைவாலேயே தோன்றி வளர்ந்திருந்தாலும், அம் மூவரசு நாடுகளின் எல்லையிலேயே அவ்வரசர் களுக்கு அடங்கியும் அடங்காமலும், நட்பாகவும் பகையாகவும் வேளிர் பலர் ஆண்டு வந்தனர். ஆயினும், தமிழ் மரபு அம் மூவரசுக்குப் புறம்பாகத் தொண்டை கொங்கு நாடுகளையே குடியரசுகளுக்கேயுரிய பரப்புகளாகவும், அதேசமயம் இருவேறு தனித்தன்மைகளையும் இருவேறு தனி முழுமைகளையுமுடைய இரு நாடுகளாகவும் கணித்து வந்திருந்தது. வரலாற்றுப் போக்கு இக்கணிப்பை மெய்ப்பிப்ப தாகவே அமைந்துள்ளது. பண்டைப் பெருந்தொண்டை நாடும், பண்டைப் பெருங்கொங்கு நாட்டில் இன்றைய கொங்குப் பரப்பாகிய அகநாடு கடந்த புறப்பகுதிகளும் சங்ககாலத்தில் கொங்கு அகநாட்டைப் போலவே முற்றிலும் வேள்புலப் பரப்புகளாக விளங்கியிருந்தன. ஆயினும், அக்காலத்தை அடுத்து உடனடி யாகவே அவை தம் வேள்மரபுகளை முடியரசு- பேரரசுகளாக்கிக் கொண்டன. தவிர, இவ்விருவகைப் பரப்புகளுமே தமிழக மூவரசு நாடுகளையும் இந்தியாவின் மற்றப் பகுதிகளையும் போன்று குடியரசர்களை மட்டுமன்றிக் குடியரசுப் பண்பு, குடியரசுமரபு ஆகியவற்றையே முற்றிலும் இழந்து மறந்து விட்டன. அத்துடன், அவை வரலாற்றில் என்றும் திரும்பக் குடியரசுப் பண்புக்கு மீளாமல், தம் தனித்தன்மைகளை அறவே கைவிட்டுப் புறஉலகின் முடியரசு பேரரசுப் போட்டிப் பரப்புகளுடன் பரப்பாகித் தம் தனிநிலை, தனிப்பண்புகளை, அழியவிட்டு விட்டன. அவற்றின் பண்டைய மண்டல எல்லைகளும், கொங்கு நாட்டு எல்லையைப் போல இன்றும் பண்பு, பண்பாட்டு எல்லையாய் நிலவாமல், இலக்கிய மரபு அல்லது வரலாற்று மரபுக்கு மட்டுமேயுரிய பழங்கால எல்லைத் தடங்களாய் விட்டன. இன்றைய கொங்கு நாட்டெல்லையிலும் சங்ககால இறுதிக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னாகவே, தொடங்கி அவ்விறுதிக்குள் வேளிர் ஆட்சிகள் பெரும்பாலும் தம்மிடையே போட்டிகளுக்கு ஆளாகி, வெளியிலிருந்து ஊடுருவிய அரசு- பேரரசுகளுக்குப் படிப்படியாக இரையாயின. ஆயினும், சங்ககாலத்திலும் சரி, பிற்காலத்திலும் சரி, கொங்கு நாடு தன் பரப்புக்குரிய வேள்புலங்கள் எவற்றையும் முடியரசாக மலரவிடவில்லை. அது மட்டுமன்று. சங்ககாலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி - எந்தப் புற அரசுகளும் பேரரசுகளும் கொங்கு நாட்டில் புற அரசு பேரரசுகளாக ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. மற்றும் அவை அக அரசு பேரரசுகளாக ஆண்டபோதும் ஏனைய மண்டலங்களின் அக அரசு பேரரசுகளைப் போல நாட்டின் பழமையான தனித்தன்மை களையோ, குடியரசுப் பண்பையோ மாற்றித் தன் வயப்படுத்தி விடத் துணியவில்லை. ஏனெனில், அவை யாவுமே எத்தனை நூற்றாண்டுகள் தொடர்ந்த போதிலும் வரலாற்று நோக்கில் குறுகிய இடைக்கால நிகழ்ச்சிகளாக அல்லது தற்காலிக அரசியல் அலைகளாக மட்டுமே நிலவின. திணைநிலை ஆராய்ச்சியாளர் ஆய்ந்துணர்ந்து கூறும் முறையில் தமிழக, இந்தியப் பரப்பிலேயே வேறு எந்தத் திணைநிலை பரப்பையும் (சுநபiடியேட ரnவைள) விடத் தற்காலக் கொங்கு நாடு, அறிஞர் மட்டுமே அறிந்த வெறும் வரலாற்று மரபெல்லையாக அமையாமல் மக்கள் வாழ்விலேயே நின்று நிலவவல்ல தனித்தன்மையும் தனிப்பண்பு பண்பாட்டெல்லையும் உடையதாய் இயல்வதன் காரணம் இதுவே. கொங்கு என்பது ஒரு நாட்டின் ஒரு மரபெல்லையின் பெயராக மட்டும் நிலவவில்லை; அது தமிழ் மரபுப்பரப்பில் பூத்த ஒரு தனித்தமிழ் மரபின் பெயராக, தனிப்பண்பு பண்பாட்டின் பெயராக இன்றும் நிலவி வந்திருப்பதும் வருவதும் இதனாலேயே யாகும். மற்றும் அது உலகிலிருந்தும் இந்தியாவிலிருந்து, தமிழகத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தனிப்பண்பு மட்டுமன்று; அதுவே அப்பரப்புகளின் பழம்பண்பு ஆகும். இதுமட்டுமன்று. அது அவற்றின் பழமைப் பண்பு மட்டுமாய் அமையாமல், அவற்றின் வருங்காலத் தேசிய மலர்ச்சிகளுக்கு இன்றியமையாத உயிர்மரபுப் பண்பாகவே நிலவுகிறது. கொங்கு நாட்டில் ஓரளவு நீடித்த ஆட்சியமைத்த சேரர், கங்கர், சோழர், பாண்டியர் ஆகியோர்கூட தாம் ஆண்ட கால முழுவதிலும் கொங்குச் சேரர், கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் என்ற நிலையிலேயே ஆண்டிருந்தனர். புறமண்டலங் களை யாண்ட சேரசோழ பாண்டிய மரபினருடன் அவர்கள் தொடக்கக்கால குருதித் தொடர்பு அல்லது குடித்தொடர்பு அன்றி வேறு எத்தகைய தொடர்பும் கொள்ளா மல், தனிக்கொங்கு மரபினராகவே ஆண்டனர், ஆண்டு மாண்டனர். நாட்டைத் தம் வயப்படுத்துவதற்கு மாறாக அவர்கள் தாமே நாட்டின் வயப்பட்டு, நாட்டு வாழ்விலேயே தாமும் இரண்டறக் கலந்துவிட்டனர். நாட்டின் குடியரசுகளை அவர்கள் தமக்கு இரையாக்கிக் கொண்டாலும், குடியரசுப் பண்பாடுகளை அவர்கள் தமக்கு இரையாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தாமே அக் குடியரசுப் பண்புகளுக்கு இரையாகி அப் பண்புகளிலேயே தம்மை இழையவிட்டுச் சென்றனர். கொங்கு நாட்டு வேளிருட் பலரும் சங்க காலத்திலேயே முடியரசரால் முறியடிக்கப்பட்டுத் தம் ஆட்சியிழந்தவரேயாவர். ஆனால் ஆட்சியாளர்தான் ஆட்சியிழந்தனரேயன்றி, ஆட்சிக் குரிய மக்கள் சமுதாயம் தம் தனித்தன்மையையோ, தம் தொல் பழங்காலக் குடியரசு மரபையோ, வாழ்வையோ, பண்பையோ சமய ஒழுக்க மரபுகளையோ ஒருசிறிதும் இழந்துவிடவில்லை, மறந்துவிடவில்லை; கை நெகிழ விட்டு விடவும் இல்லை. கொங்கு நாட்டு மன்னரும் சரி, கொங்கு நாட்டின் மீது படையெடுத்துத் தாக்கிய பிறநாட்டு மன்னரும் சரி கொங்கு நாட்டின் இம் மக்கட் பண்பை மதித்துப் பேணிப் பாராட்டத் தவறவில்லை. ஏனெனில், பின் கூறப்பட்ட பிற நாட்டினரே வேளாளர் வேட்டுவர் போட்டியை ஊக்கியவராயிருந்த நிலையிலும்கூட, அவர்கள் இருசாராருக்கும் ஒருங்கே கொங்கர், காமிண்டர் ஆகிய பட்டங்கள் தந்து தம் சார்பில் அவர்களை ஆளவிட்டனர். தவிர, கொங்கு நாடாண்ட முடிமன்னர் மட்டுமன்றி, அவர்கட்கு முற்பட்ட வேள்புல ஆட்சியாளர்கள்கூட மக்களின் மரபு மூலமாகவும், மக்களின் இயல்பான தலைவர் மூலமாகவுமே பெரும்பாலும் ஆட்சி நடத்தினர். சங்ககாலத்துக்கு முன்பே ஊறிவிட்ட இந்தக் கொங்கு மக்கள் பண்பே, கொங்கு நாட்டின் காலங்கண்ட, ஆனால் காலங்கடந்து வளரும் தனித்தன்மை ஆகும். அதனைத் தொல்பழங்காலத்திலேயே கண்டதன் விளைவாகத்தான், மேலே கூறியபடி தமிழ்மரபு இந்நாட்டைக் கொங்கு நாடு என்று பண்புப்பெயர் சூட்டிப் பாராட்டிற்று என்னல் தகும். கொங்கு என்னும் சொல். தமிழ் எவ்வளவு பழமையான சொல்லோ, அதனினும் ஒரு சிறிதும் குறையாத பழமையுடைய பண்பார்ந்த சொல் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது ஆகும். உயிராறுகளில் நீர்வளம் வற்றிய பின்னும் அடிநில ஊற்றின் வளம் சுரத்தல் போல, குடியரசுகளின் புறவீழ்ச்சிக்குப் பின்னும் கொங்கு மக்களின் உள்ளத்தின் உள்ளார்ந்த இயலுணர்வான குடியரசுப் பண்பு மேல்நிலைத் தனியாட்சிகளைத் தம் வயப்படுத்திக்கொண்டு அம்மேல் நிலையாட்சிகளின் நிழலிலேயே புதுமுறைத் தனிமலர்ச்சிகள் கண்டுள்ளது. அதன் மூலம் அது மக்கள் தனி வாழ்வுரிமை, கூட்டு வாழ்வுரிமை, தன் முடிபுரிமை ஆகியவற்றைச் சமுதாயத் தன்னாட்சிக்குரிய புதிய கட்டுக்கோப்புகளாக மாற்றியமைத்துக் கொண்டது. இது மட்டுமன்று, சாதி மரபு உருவில் நின்றே அது புறமண்டலச் சாதி மரபுகளைப் போலத் தனித்து நின்று விடாமல், தம்மைச் சூழ ஒத்திசைவுப் பண்பு பரப்பி, நாடு மாநாடு பெருநாடு, குடியரசுக் குழு, உலகம் ஆகிய விரிவுகள் நோக்கிய குடிவிரிவு நாட்டு விரிவு ஆகிய மலர்ச்சிகளைப் பேணி முன்னேறிவரத் தலைப்பட் டுள்ளது. கொங்கு நாட்டு வேளிரிடையே தலை சிறந்தவனென்று கூறத்தக்கவன், தகடூர் வேளாகிய அதியமான் ஆவன். அவன் மரபினர், சங்க காலத்துடன் முற்றிலும் தனி ஆட்சி இழந்து விடாமல், கங்கர் பாண்டியர் சோழர் காலங் கடந்தும் அவ்வக்கால மேலாட்சி நிலைகளுக்கு உட்பட்டுத் தம் தனியாட்சி மரபு நீட்டித்திருந்தனர். இதைவிடக் குறிப்பிடத்தக்க தனி முறையில் தற்காலக் கொங்கு நாடும் அது கடந்து பண்டை வடகொங்குப் பகுதியும் பரவியாண்ட கட்டியர் என்ற வேள் மரபினர் கங்கர், பாண்டியர் - சோழர் காலம் மட்டுமன்றி, விசயநகர மரபின் ஆட்சிக்காலம் (கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டு) கடந்தும் தம் தனியாட்சி மரபு காத்து வந்தனர். அத்துடன்மை யாமல், இன்றுவரை கூட அம் மரபினர், தம் அரசியல் ஆட்சிமரபு இழந்தும் தம் சமுதாய ஆட்சிமரபும் சமுதாயக் கட்டமைப்பும் இழவாமல், கட்டி முதலியார் என்ற பெயரில், தனிச் சாதிமரபுக் குழுவினராகவே இயங்கிவருகின்றனர். (கொங்கு மரபின் உரம்பாய்ந்த குடியரசுப் பண்புக்கு இதுவும் ஒரு சான்று ஆகும்). இந்தியாவிலும், சிறப்பாகத் தமிழகத்திலும், கொங்குத் தமிழகத்திலும் சாதிக்கட்டு மரபுக்கும், ஊராண்மை நாட்டாண்மை மரபுகளுக்கும் பண்டை வேளிரின் குடியரசு மரபுகளுக்கும் இடையேயுள்ள இணையறாத் தொடர்பை, மேலே சுட்டப்பட்ட கட்டியர் மரபுக் குறிப்பு முனைப்பாக எடுத்துக்காட்டுகிறது. நம் காலம்வரை, இதுபோல் நீடித்து வரும் நெல்லை மாவட்டக் கோட்டை வேளாளர் மரபு, திருச்சி மாவட்டக் கோட்டைக் கள்ளர் மரபு, பாண்டிய நாட்டுக் கோட்டை வணிகர் மரபு ஆகியவையும் இதே தொடர்புக்குரிய பரவலான சான்றுகள் ஆகும். வடஇந்தியாவில், இரசபுதன மாநிலத்தில், அம் மாநிலப் பெயரே (இரசபுத்திரர். இராசன்யர் - வேளிர்; இரசபுதனம் - வேள்நாடு), அதன் பண்டை வேள் புலத் தொடர்பு சுட்டிக் காட்டுவதாகும். அதனை ஒட்டிய மேலை-- இந்தியப் பரப்பு முழுவதுமே இன்றும் இராட்டிரம் (வேள்நாடு) என்ற பண்டை வேள்புல மரபுக்குரிய பெயரடியாகக் குசராத் (கூர்ச்சர ராட்டிரம்), சௌராட்டிரம் (கொங்கு நாட்டு வேட்டுவர் குடித்தொடர்பு சுட்டும் வில்லியர் என்பவர் பிற்பட்ட பழங்குடியினத்தவராக வாழும் பகுதி (சு-நல்ல; ராட்டிரம்; நகர்-நாடு அரசத் தொகுதி அல்லது வேள்நாடு), மகாராட்டிரம் (பெரிய வேள் நாடு) என்ற நாட்டினப் பெயர்களுடையதாக நிலவுகிறது காணலாம். அரசியல் மாறுபாடுகளாலோ, போர்க்காலக் கொந்தளிப்பு களாலோ உலகில் பொதுவாக ஏற்படும் சமுதாயக் குழப்பம், மக்கள் வாழ்க்கைச் சீரழிவு, பொருளியல் நிலை குலைவு ஆகியவை பொதுவாக இந்தியாவில் அயலாட்சிக் காலம் வரை ஏற்பட்டதில்லை என்று அறிகிறோம். பண்டைப் பெருங் கொங்குத் தமிழகத் தொடர்புடைய மேலை இந்தியப் பரப்புக்கு இது சிறப்பு வகையில் பொருந்திவந்துள்ள நிலை ஆகும். இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் அத்தகைய மேல்நிலை ஆட்சிமாறுபாடுகள் பற்றிக் கவலைப்படாமல் இந்திய மக்கள் சமுதாயம், தன்னாட்சி அடிப்படையிலும் குடியரசு மரபு முறையின் அடிப்படையிலும் அமைந்த தம் மரபு நெறியில் வீறமைதியுடன் வாழ்வுநடத்திக் கொண்டேயிருந்தது. இதனைப் பல வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டியேயுள்ளனர். ஆனால். இது சாதிமரபின் பின்னணியில் உயிர் மரபுடன் நிலவும் குடியரசுப் பண்புக்குரிய உயிராற்றல் என்பது காணாமல், அதைச் சாதி மரபு அல்லது சாதி வருண மரபுக்குரிய உயிரற்ற திறம் என்று அவர்கள் கருதியுள்ளனர். சாதி வருண முறையின் தடம் எதுவும் இல்லாமலே இதே பண்புத்திறம் பழஞ் சீனமக்கள் சமுதாயத்திலும் நிலவி வந்துள்ளது என்பதையும், இந்தியாவிலும் கொங்குநாடு, தமிழகம், பழங் கொங்குத் தமிழகம் ஆகிய மையங்களிலிருந்து கால இடத் தொலைவில் விலகுந்தோறும் இப்பண்பு குறைந்து வந்துள்ளது என்பதையும் அவ் வரலாற்றாசிரியர் நுனித்துக் காணவில்லை. இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் (1939-1945), பண்டைச் சமுதாயக் குடியரசுகளின் மக்கட் படையினை நினைவூட்டவல்ல ஊர்க் காவல் படையும், பிற புதிய மக்களாட்சி மரபுகளும், சமதரும மரபுகளும் (பங்கீடு முதலியன) வகுத்தே இந்தியாவிலும் பிறநாடுகளிலும் மேலாட்சியாளர் மக்கள் வாழ்வமைதி காக்க முற்பட்டிருந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது ஆகும். உண்மையில், தென்னக கொங்குப் பரப்பு மையத்திலிருந்து தென்னகமெங்கும், இந்தியாவெங்கும், தென்கிழக்காசியா வெங்கும் வைதிக இயக்கம் என்ற பெயரால் ஒரு புதிய தேசிய இயக்கத்தைத் திட்டமிட்டு உருவாக்கியவர், கி.பி. 14ஆம் நூற்றாண்டில் பண்டைக் கொங்குத் தமிழகப் பரப்பில் விசயநகரப் பேரரசை நிறுவிய வித்தியாரணிய அடிகளேயாவர். இந்தியாவின் நான்கு சங்கர மடங்களில் ஒன்றாக அப்பரப்பில் நிலவிய ஒரு மடத்தின் தலைவராயிருந்த அவர், இதற்குரிய படிப்பினைகளையும் நெறிமுறைகளையும் கொங்கு நாட்டு மக்கட் குடியாட்சிப் பண்பிலிருந்தே பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், அப்பெரியார் தாம் ஒரு சமய மடம், வகுப்பு மடத்தின் தலைவராயிருந்தும்கூட, அகல் தேசிய நோக்குடன் எல்லா வகுப்பு மரபுத் தலைவர்களையும் மட்டுமன்றி, புத்தர், சமணர், சைவர், வீரசைவர், வைணவர், கிறித்தவர், இசுலாமியர் உட்பட எல்லாச் சமயத் தலைவர் களையும் தோழமையுடன் அழைத்து ஒருங்கு கூட்டி, அவர்கள் ஒத்துழைப்புடனேயே தம் தேசிய, சமுதாயத் திட்டத்தைத் தம் அரசியல் செல்வாக்காலும் அறிவுத்திறத்தாலும் பண்பாட்டுப் பெருமிதத்தாலும் கட்டமைத்துப் பரப்பினார். வித்தியாரணிய அடிகளாரின் சாதி சமய ஒத்திசைவுத் திட்டம், கொங்கு நாட்டு வாழ்வில் மட்டுமே வழிவழி மரபாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒத்திசைவுப் பண்பின் கொங்கு நாடு கடந்த அகல் தேசியப் பரப்பீடேயாகும். ஏனெனில், அத் திட்டத்தின் மையக் கூறுகள் இரண்டுமே தமிழகத்துடனும், கொங்குத் தமிழகத்துடனும், தொடர்புடையவை ஆகும். கோயில்களிலும் திருமணங்களிலும் ஒரே சமக்கிருத மொழி மந்திரங்களை வழங்குவது, அவர் இயக்கத்தின் பெயரால் வைதிகத் திருமணங்கள் என்றே இன்றும் வழங்கப்படும் திருமணங்களில் தாலிகட்டினை மைய வினை முறையாக்குவது என்பவையே அம் மையக் கூறுகள் ஆகும். சங்க காலத்தையடுத்து எழுந்த சைவ வைணவ பக்தி இயக்கத்தின் பயனாக, இந்தியாவெங்கும் தென்கிழக்காசியா வெங்கும் இசை நாடக மரபுகளோடியையத் தமிழகப் பக்திப்பாடல்களும் தமிழ் மந்திரங்களும் பரவின. ஏனெனில், தமிழே அன்று அப் பரப்பெங்கும் போட்டியற்ற தெய்வ மொழி, இலக்கிய மொழி, பண்பாட்டு மொழி, ஆட்சி மொழியாய் இலங்கிற்று. ஆனால், அடிகளார் காலத்துக்குள் பாளி பாகத சமக்கிருத மொழிகள் மட்டுமன்றி, தமிழுடனொத்த பல இந்திய, உலகத் தாய்மொழிகளும் இலக்கிய நிலைக்கு உயர்ந்து வந்தன. தமிழ் இலக்கிய மரபுகள், தமிழ் மணவாழ்த்து மரபுகள், பக்தி காலத் தமிழ்ப்பாடல்கள், தமிழ் மந்திரங் களினிடமாக, தாய்மொழிகளிடையே பொது வழக்காகச் சமக்கிருத பாளி பாகத மந்திரங்கள் பரப்பப்பட்ட நிலைக்குரிய விளக்கம் இதுவே. அம் மொழிகளில், சிறப்பாகச் சமக்கிருத மொழியில், இக் காலத்துக்குள்ளாக தமிழ்ப் பக்திப் பாடல்கள், மந்திரங்கள் முதலியன மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன, மொழிபெயர்க்கப் படத் தொடங்கின. சமக்கிருத மந்திர மரபு என்பது இவ்வாறாகப் பழைய தமிழ் மந்திர மரபுகளிலிருந்து இயல்பாய் மலர்ந்த ஒரு பிற்கால மரபுத் திரிபேயாகும். இந்து சமய மறுமலர்ச்சியின்போது இந்தியாவெங்கும் பரவிய கோயில் மரபுக்குரிய மொழியாகிய தமிழ், இவ்வாறு சமக்கிருத மந்திர மரபாகத் தமிழக மையத்திலிருந்தே திரிபுற்று வழங்கத் தொடங்கிற்று. உலகில் முதல் முதலாகச் சமக்கிருதம் தென்னக எழுத்துருவில் தென்னகத் தொன் மரபுகளுடனேயே, தென்கிழக்காசியாவிலேயே, காணப்படுவது இதனாலேயே யாகும். தாலிகட்டு இன்றைய வைதிகத் திருமணத்தின் ஒரு பகுதியாயினும் அது இன்றும் பண்டைத் தமிழகமாகிய, தென்னகத்திலேயே கொங்கு மையத்திலிருந்து நெடுந்தொலை பரவவில்லை. சங்க காலங்களில் தாலி தமிழகமெங்கும் வழங்கினாலும், சிறுவர் சிறுமியர் காப்பணியாக அரையிலும் கையிலும் கழுத்திலும் அணியப்பெற்றே வழங்கப்பட்டு வந்தது. இம் மங்கலக் காப்பணி, பெண்டிருடனும் மணமகளுடனும் மணவினையுடனும் தொடர்பு கொண்டது முல்லை நில நாகரிக ஊழிக்குரிய பெண்டிர் அக- ஆட்சிச்சின்னம் அல்லது பட்டம் என்ற முறையிலேயேயாகும். இது கொங்கு நாட்டில் பிறந்த மரபே என்று கருதத்தகும். ஏனெனில், இந்தியாவெங்கும் முல்லைநிலக் கற்பு நாகரிகம், வேளிர் மலர்ச்சியின்போது சமுதாய முறையில் ஆயர்மரபாகவும் சமய மரபில் வைணவ மரபாகவும் முற்றிலும் ஒதுங்கிவிட்டது. அவ்வாறு ஒதுங்காது முழுமரபாய் இயன்ற கொங்கு மரபிலேயே வேள்மரபு அல்லது வேளாள மரபு மக்களின் பொது மரபாக, மணவினை மரபாகப் பரவியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தாலியுடன் இணைந்த நெற்றிப்பட்ட மரபு இன்னும் குசராத்தி நாடளாவிப் பரவியுள்ள நிலை இதைச் சுட்டிக்காட்டுகிறது. தவிர, தமிழகத்திலேயே வேளாளர் மரபினிடையே கூட கார்காத்த வேளாளர் தாலியைத் திருமணத்துடன் இணைக்காமல், கன்னிப்பருவக் காப்பு விழா (விளக்கிடு கலியாணம்) என்பதனுடன் தொடர்புபடுத்தி வந்துள்ளனர் என்பது இங்கே குறிக்கத்தக்கது ஆகும். கேரள நாட்டு நிலையும் இதில் வேறுபட்டதன்று. மேலும் கொங்கு நாட்டில் திருமணத்தை வேளாளர் மரபுக் குருமாரே நடத்த, அம் மரபு மறந்து பிறநாட்டுப் பிறமரபினர் பிராமணர்களை வைத்து நடத்துவதும் கொங்கு நாட்டின் தாலிகட்டுப் பழமையை உணர்த்துகிறது. கொங்குப் பரப்பின் குடியரசு மரபு வழிவந்த குடிமக்களின் உயிர் மலர்ச்சிப் பண்பு காரணமாக அதன் ஒத்திசைவுப் பண்பின் அடிப்படையாக உருவாக்கப் பெற்ற வைதிக இயக்கம், வைதிக நெறி என்ற பெயரால், தென்னகமெங்கும், இந்தியாவெங்கும் அப்பாலும் இந்திய சமுதாய அடிப்படையாக மட்டுமின்றிப் பழமையான இந்து சமயத்தின் புதிய அடிப்படையாகவும் புதிது பரவியுள்ளது, பரவிவருகிறது. கால வலிமையும் ஆட்சி வலிமையும் உடைய புதிய உலக சமயங்களின் முன்னே உலகின் மாண்டு மறைந்த பிற தொல் பழங்காலச் சமயங்களைப் போலச் சரிவுற்று விடாமல் இந்து சமயமும் இந்திய சமுதாயமும் புதிய சமயம், புதிய நாகரிகங்கள், புதிய சீர்திருத்த இயக்கங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்து நிற்கும் உறுதிப்பாட்டின் மறைதிறவும் இதுவே! ஆயினும், இவ்வுறுதிப்பாடு பயிர்நல உறுதிப்பாடாக அமையாமல், களையாக வளரும் முட்காட்டின் உறுதிப் பாடாகவே நிலவி வந்துள்ளது, வருகிறது. ஏனெனில், அடிகளார் நெறி, கொங்குவாழ்வின் உயிர் மரபும் உயிர் மலர்ச்சி, மரபும் அற்ற, உயிர்ப் பண்பின் உள்ளீடற்ற மரச்சட்டமாகவே உறைந்துவிட்டது. இதற்குரிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக, அவர் வகுத்த திட்டம் அவர் வகுத்த நாட்களில் சாதி சமயம் சாராத முழு தேசியத் திட்டமாகவே அமைந்திருந்தாலும், அதை அமைத்த அப் பெரியார் ஒரு சாதிமட, சமயமடத் தலைவராகவே அமைந்த காரணத்தினால், இன்று அது சாதி சமய சமுதாய அரசியல் குழு நலங்களின் ஆதிக்க அமைப்பாக மாறி இந்திய சமுதாயத்தில், இந்திய சமயத்தில் மாறாத, உயிர் மலர்ச்சியற்ற, மாற்றவோ திருத்தவோ முடியாத அடிப்படையாக ஆக்கப் பெற்று வருகிறது. அத்துடன், கொங்கு வாழ்வில் இயல்பாக அமைந்த குடியரசு மரபின் உயிர்த்துடிப்பை மட்டுமின்றி, அதனை வளர்க்கும் திறமுடைய குடியரசு மரபில் வந்த தலைமையையும் அது முற்றிலும் இழந்துவிட்டது. சமுதாயத் தலைமைக்கு மாறாக, அது சமுதாயத்தைச் சுரண்டி வாழ முற்படும் ஒரு பிற்போக்கான குழு நலத்திற்குரிய குருட்டுத் தலைமையாய் விட்டது. தேசியவாதிகள், சமய சமுதாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும், அவ்வகைக்குரிய நன்முயற்சிகளுக்கும் அது நிலையான தடங்கலாய், தேசிய வாழ்வுக்கே ஒரு மாபெருந் தடையாய், அமைந்துள்ளதன் காரணம் இதுவே. அடிகளாரின் திட்டம் இழந்துவிட்ட இந்த இரு பண்புகளையும், சங்ககாலக் குடியரசு மரபில் வந்து அதன் உயிர் மலர்ச்சியும் உயிர் மரபுத் தலைமையும் முற்றிலும் இழவாது நிலவும் கொங்கு வாழ்வு, இன்னும் பேரளவில் பெற்றுத் திகழ்கின்றது. கொங்குத் தேசியம் இந்தியத் தேசியத்தில் தன் பொறுப்புணர்ந்து செயலாற்ற முற்படுமேயானால், அது கொங்கு மக்களுக்கு மட்டுமன்றி, தமிழக முழுமைக்கும், இந்திய தேசிய வாழ்வுக்கும் நாகரிக உலகுக்கும்கூட இத்துறையில் படிப்பினை யாகவும் வரலாற்றுப் பாடமாகவும் முன்மாதிரியாகவும் திகழத்தக்கது ஆதல் உறுதி. குடியரசு மரபுக்கும் கொங்கு மக்கள் சமுதாயக் கட்டமைப்புக்கும் இடையேயுள்ள மரபு மலர்ச்சித் தொடர்பு, அதன் தோற்ற வளர்ச்சி, வரலாற்று விளக்கம், தேசிய வாழ்வில், நாகரிக உலக வாழ்வுகளில் அதற்குரிய பயன்வள அருமைப்பாடு ஆகியவை, வரும் பிரிவுகளில் விளக்கப்பட விருக்கின்றன. 2) பண்டைக் குடியரசு மரபின் ஒளி நிழற் படிவங்கள்: கொங்கு நாட்டுச் சமுதாயத் தன்னாட்சி மரபு சாதி வருண முறையில் சாதி மரபும் வருண மரபும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வேறு மரபுகள் என்பது காணாமல், தொடக்ககால வரலாற்றாய்வாளர் இரண்டும் ஒன்றே என்று கருதினர். அத்துடன் அவ் இணைப்பட்ட முறைமை ஆரிய-திராவிட இனக்கலப்பின் விளைவு என்றும் ஆரியரால் முதலில் தமக்குள்ளும் (மூவருணம்), பின் மற்ற மக்கள் மீதும் (சூத்திரர், தாழ்த்தப்பட்டவர், ஆதிவாசிகள்) சுமத்தப்பட்ட ஒன்று என்றும் விளக்க முற்பட்டனர். இந்திய சமுதாயமும் இந்து சமயமும் சாதி வருண முறையும் படைப்புடன் படைப்பாகக் கடவுளால் உருவாக்கப் பட்டவை என்றும், சாதி வருண முறையே இந்து சமய வாழ்வின் அடிப்படை என்றும் அணிமைக் காலங்களிலிருந்து இந்து சமய சமுதாய ஆட்சியாளர்கள் என்போர் வலியுறுத்தி வந்துள்ளனர்; வருகின்றனர். வரலாற்றாசிரியர், ஆராய்ச்சியாளர், புலவர், அரசியல் தலைவர்கள், சாதி முறைச் சமுதாயத்தை எதிர்க்கும் சமுதாய சமயச் சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் ஆகியோர் கூட (காந்தியடிகள் ஒருவர் நீங்கலாக) இந்த நம்பிக்கையில் உறுதியாகப் பங்கு கொண்டுள்ளனர். இவ்வாறு ஏற்கெனவே சமய சமுதாய ஆட்சி வகுப்பினரின் குழு நலங்கள் வற்புறுத்தி வந்துள்ள மரபுக்குப் புதிதாக எழுந்த ஆராய்ச்சியாளரின் விளக்கம் ஓரளவு உகந்ததாகவே அமைந் துள்ளது. ஏனெனில், இதன் அடிப்படையில் இந்தியாவெங்கும் பிராமணரும் மற்ற உயர் வகுப்பினரும் நாட்டு மக்களிடையே தாம் தனிப்பட்ட ஆரிய மரபினர் அல்லது (ஆண் வழியிலேனும்) ஆரியக் குருதிக் கலப்பு மிக்கவர் என்று பெருமை கொண்டு தம் உயர்வு நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. அதே சமயம், இதே அடிப்படையில் வடஇந்தியத் தாய் மொழிகள் பேசுவோர், சிறப்பாக அம் மொழிகள் பேசும் உயர்குடியினர், தம் மொழிகளே ஆரிய இன மொழிகள் என்றும், தாமே ஆரிய மரபினர் அல்லது ஆரியக் கலப்பு மிக்க மரபினர் என்றும் புதிய உரிமை கொண்டாட முடிகின்றது. (தம் தாய்மொழிகள் இழந்துவிட்ட பழமைச் சிறப்புகளைக் கூடச் சமக்கிருதத்தில் கண்டு ஆறுதல் பெறும் உணர்வு அவர்களை வலிந்து சமக்கிருதப் பற்றாளர்களாக்கி வந்துள்ளது). சாதி வருண முறைமையில் சாதி மரபு வேறு, வருண மரபு வேறு என்று கொண்டவர், ஆசிரியர் மறைமலையடிகளார். சாதி மரபை அமைத்தவர்கள் வேளாளரே என்றும், வருணமரபை அதனுடன் இணைத்து, அந்த இணைமரபுக்குக் கடவுட் படைப்பாதாரம் தந்து அதனை வலியுறுத்தியவரே ஆரியர் என்றும் அவர் கருதினார். இங்கே அடிகளார் வேளாளர் என்றது தமிழகத்தின் ஒரு வேளாள மரபையோ அல்லது பல வேளாள மரபுகளின் தொகுதியையோகூட அன்று. தென்னக மெங்கும் இந்தியாவெங்கும், அதே, படிநிலையினுடைய சமயச் சார்பற்ற இந்தியாவின் சமுதாய ஆட்சி வகுப்பினையே அவர் வேளாளர் என்ற சொல்லால் குறிப்பிட்டார் என்பது தெளிவு. ஆரியர் என்று அவர் கூறு வதும் பிராமணர் உள்ளிட்ட ஆட்சி வகுப்பினரையே என்று காணலாம். தற்காலப் பொருளியல் சமுதாய முறை ஆய்வாளர், சிறப்பாக அறிஞர் குணா, `சாதியத்தின் தோற்றம்' என்ற தம் ஆய்வேட்டில், பெயரளவில் அடிகளார் கருத்தை ஒதுக்கினாலும், அதற்குத் தம் புதிய பொருளியல் சமுதாயவியல் ஆய்வு மரபின்படி, புது விளக்கமே தந்துள்ளார். நாகரிக உலகெங்கும் இயல்பாக மறைந்துவிட்ட ஆதி மனிதனின் இனமுறை வேறு பாடுகளை (கூசiயெட டீசபயnளையவiடிளே) இந்தியாவில் மட்டும் நிலவுடைமை ஆட்சி யாளர் (ஊடயளள டிக குநரனயட டுயனேடடிசனளைஅ) அழியாது பாதுகாத்து, அதன்மீது தொழிலடிப்படையில் சாதி மரபு முறை எழுப்பினர் என்றும், சமய குருமார் அதற்கு வருணப்பூச்சும், கடவுட் படைப்பாதாரமும் வழங்கி யுதவினர் என்றும் அவர் விளக்க முற்பட்டுள்ளார். அடிகளாரும் சரி, புதிய பொருளியல் சமுதாயவியல் ஆய்வாளரும் சரி - இரு சாராருமே இன வேறுபாட்டுக் கோட்பாட்டின் சாயலிலிருந்து முழுவதும் விலகிவிடவில்லை என்பது காணலாம். ஏனெனில் ஆரியர், பிராமணர், சமயகுருமார் என்ற சொற்கள் கிட்டத்தட்ட ஒரே பண்பு குறித்த சொற்களாகவே வழங்கப்பட்டுள்ளன; அதுபோலவே, திராவிடர், வேளாளர், நிலவுடைமையாட்சியாளர் என்ற சொற்களும் பெரிதும் பழைய மரபுச் சொற்களுக்கு ஈடான புதிய மாற்றுச் சொற்களேயாகும் என்று காணலாம். தவிர, ஆசிரியர் குணா கூறும் இன மரபு (வசiநெ) என்பது வரலாற்றுக் காலத்துக்கு நெடுநாள் முன்பே நாகரிக உலகம் கடந்துவிட்ட ஒரு படிநிலை ஆகும். நாகரிக உலகுக்கு வெளியேயிருந்து வந்த பண்படா இனங்களுக்கு மட்டுமே அது அணுக்க கால உரிமையுடையது. அதனிடமாக நாகரிக உலகம் கண்டது இனமரபு அன்று; குடியரசு அடிப்படையிலமைந்த குலமரபேயாகும். இது கீழே விளக்கப்பட விருக்கிறது. உழைப்பின் பயன் பெறாமலே கூலிக்கு உழைப்பவராகிய அடிநிலை வகுப்பினர், உழைப்பின் பயனை ஆள்பவராகிய உயர் வகுப்பினர், இரு சாராரிடையேயும் பாலம் போல, அதே சமயம் இரு சாராரையும் நிலையாகப் பிரித்து வைப்பவராய், அத்துடன், தம் போட்டிகளால் அப்பிரிவினையை நிலவரப்படுத்தி வளர்ப்பவராக விளங்கும் நடுத்தர வகுப்பினர் ஆகிய மூவகுப்பு வேறுபாடு நாகரிக உலக முழுமைக்கும் பொதுவாக வளர்ந்து வந்துள்ள, வளர்ந்து வரும் வகுப்பு வேறுபாடு ஆகும். ஆனால் இந்தியாவிலே உலக முழுமைக்குள்ள இந்த வேறுபாடு மட்டுமன்றி, இதற்கும் அடிப்படையாயமையும் சாதி வருண முறை வேறுபாடு அதற்கும் முற்படத் தோன்றி வளர்ந்துள்ளது, வளர்ந்து வருகிறது. ஆய்வாளர் எவரும் இந்த வேறுபாட்டிலோ, வேறுபாடுகடந்து அவற்றிடையே மிளிரும் அடிப்படை ஒருமைப்பாடுகளிலோ, இரண்டும் கலந்தமைந்த சிக்கல்களிலோ, குளறுபடிகளிலோ கருத்துச் செலுத்தவில்லை. சாதி வருண மரபு முறை, மூவகுப்பு மரபு முறையினின்றும் அடிப்படைப் பண்புகளில் வேறுபட்டதன்று. ஏனெனில், இந்தியா வெங்கும் சாதிகள் பல, எண்ணற்ற பல்வகையினவாக மாறுபட்டாலும், `வருணமுறை வடக்கே மூன்று (வேதமும் மூன்றே). தெற்கு கருத்தளவில் நான்கு (வேதமும் நான்கு), நடைமுறையில் ஒன்று என இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் வேறுபட்டாலும், எங்கும் அவ் இணை மரபு உண்மையில் மூவின வகுப்பாகவே இயல்கின்றது. அவையே, சமய சமுதாய ஆட்சி மரபும் தன்னுரிமையும் முழுதளவில் கொண்டு வாழும் பிராமணர் வகுப்பு; அவர்களுடனாக வட இந்தியாவில் அவர்களைச் சார்ந்து அவர்களுடன் இணைந்த அடுத்த இருவரும், அவ்வுரிமைகளைப் பேரளவில் அல்லது ஓரளவில் கொண்ட, ஆனால், உரிமை வரையறுக்கப்பட்ட பிராமண ரல்லாத சமுதாய ஆட்சி மரபு வகுப்பு; உரிமைகள் பெரிதும் சிறிதும் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவையே யாகும். இதனாலேயே உலகெங்குமுள்ள மூவகுப்புப் போராட்டத்துடன் போராட்டமாக, இந்தியாவிலும் இந்திய நாகரிகப் பரப்புகளிலும் பழைய மூவகுப்புகளும் புதிய மூவகுப்புகளும் தம்மிடையே நடத்தும் போராட்டமும் இணைந்து கலந்து, இந்திய மக்கள் வாழ்வு போராட்டத்தி னுள் போராட்டமாக, இரட்டைப் போராட்டமாக நிலவுகின்றது. நிகழ்காலச் சிக்கல்களை இறந்தகால மரபுகளால் விளக்குவதும், அவ் விளக்க ஒளிகளின் மூலம் சிக்கல் தவிர்த்து அல்லது சிக்கல் திருத்தி, வருங்கால வாழ்வைக் கட்டமைக்க உதவுவதும்தான் வரலாற்றின் பண்பு - வரலாற்றின் மெய்ம்மரபுக் காட்சியொளி ஒன்றுதான் இவ்வகையில் அதற்குரிய ஆற்றல் சான்ற திறம் வழங்குவதாகும். வழக்கறிஞரின் திறமை வாய்ந்த வாத ஆதாரக் கோட்பாடுகள், இவ்வகையில், சமுதாயத்துக்கு நீடித்து நிலையாக உதவமாட்டா. இன்றைய சாதி மரபுகளுக்கும் வருண மரபுக்கும் இடையே அவ்வக் காலச் சட்டங்களும் ஆட்சியாளர் அல்லது ஆட்சி வகுப்பினர் தரும் விளக்கங்களும் வழங்கும் தொடர்பன்றி, வேறு மரபு வரன் முறையான தொடர்பு கிடையாது. சாதி மரபு, வருண மரபு ஆகியவையோ அவை சார்ந்த கருத்துகளோ, இந்திய சமுதாய வாழ்வில் அல்லது சமுதாய நடைமுறைக் கருத்துகளில் என்றேனும் நிலவியதாக வேத உபநிடதங்களிலோ, சங்ககால இலக்கியத்திலோ, பழங்கால இடைக்கால இலக்கியங் களிலோகூடக் காணமுடியாது; இவற்றின் பெயர்கள்கூட அறியாதவை அவை. அத்துடன், இந்தியாவின் வரலாற்று மரபு களுடனோ, இலக்கிய வாழ்வுகளுடனோ, சமய வாழ்வுடனோ, இன்றளவும் இந்தியாவில் அவற்றிடையே காணப்படும் வேறுபாடு களுடனோ மேற்குறிப்பிட்ட இனக்கலப்புக் கோட்பாடு, அதன் புதிய பதிப்புகள்கூட ஒரு சிறிதும் பொருந்தவில்லை; முற்றிலும் முரண் பாடாகவே உள்ளன. ஆரிய - திராவிட இனக் கலப்புக் கோட்பாட்டுக்கு ஏற்ப இந்தியாவில் சாதி வருண முறையின் செறிவிறுக்கம், பொதுவாக மேற்கிருந்து கிழக்காக, வடக்கிருந்து தெற்காக வடமேற்கிலிருந்து தென்கிழக்காகக் குறைந்து வரவில்லை; அத்திசைகளில் கூடியே வந்துள்ளது, வருகிறது! தவிர, வடக்கே மூன்று வேதங்களும் மூன்று வருணங்களும் மட்டுமே மதிக்கப்பட, தெற்கில் நான்கு வேதம், நான்கு வருணம் (பகவத் கீதை: சாதுர்வர்ணயம் மயாச்ரஷ்டம் - நான்கு வருண அமைப்பு என்னால் படைக்கப் பட்டது), என்ற வாய்ப்பேச்சினிடையே நடைமுறையில் நான்குமன்று, மூன்றுமன்று; ஒரே வருணம்தான் இன்றுவரை உள்ளது. இரண்டாவதாக, முதல் வருணத்தவராகிய பிராமணர் மேற்கைவிடக் கிழக்கிலேயே, வடக்கைவிடத் தெற்கிலேயே படிப்படியாக வாழ்க்கைச் சிறப்பு, கல்வியறிவுச் சிறப்பு (குறிப்பாக, அவ்வக்கால ஆட்சி மொழிக் கல்விச் சிறப்பு), செல்வச் சிறப்பு, அரசியல் பதவி மேம்பாடு ஆகியவற்றை உடையவர்களாகவும், அவ்வக்கால அரசியல் மாறுபாடு, ஆட்சிமொழி மாறுபாடு, ஆட்சிக்குரிய சமய, பண்பாட்டு மாறுபாடு ஆகியவற்றுக் கிசைய எளிதாகத் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுவிடும் மரபுடைய வர்களாகவும் உள்ளனர். மூன்றாவதாக, இந்துசமய வாழ்வில் வேதமுறைத் தெய்வ வழிபாடுகளும், வேதவேள்வி முறை அதாவது உயிர்ப்பலி வேள்வி முறைகளும் (உயர் குடியினரிடையே) அறவே மறக்கப்பட்டு, வேத மரபு அறியாத கோயில் வழிபாடும் சிவதிருமால் வழிபாட்டு நெறிகளுமே இந்து சமய மரபுகளாக என்றும்போல் இன்றும் நின்று நிலைத்து, வளர்ந்து வருகின்றன. நான்காவதாக, தம்மை ஆரியர் என்று கூறிக்கொண்டும் நம்பிக்கொண்டும் வரும் பிராமணரால்கூட, பசுக்கொலை உட்பட்ட வேதமரபின் கொலை வேள்வி முறைக்கு மாறான பசுவழிபாடும் ஊன்மறுத்த உணவும் பொதுவாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன, வருகின்றன. இறுதியான ஊன் மறுத்த இவ்வுணவுப் பண்பில் முனைத்த பிராமணர்கள் பெரிதும் தென் இந்தியப் பிராமணர்களாய், பஞ்ச திராவிடர் என்றே அழைக்கப்பெறுகின்றனர். ஊன் மறுத்த உணவும் பெரிதும் சைவ உணவு என்றோ, சிறுபான்மையாக வீர வைணவ உணவு அல்லது சமண உணவு என்றோதான் அழைக்கப் பெறுகிறதேயன்றி, ஆரிய உணவு என்றோ, பிராமண உணவு என்றோ அழைக்கப் பெறவில்லை. இச் செய்திகள், இந்திய நாகரிகத்திலோ, சமய வாழ்விலோ, சமுதாயப் பண்பாட்டிலோகூட ஆரிய ஆதிக்கத்தைக் காட்ட வில்லை; மிகத் தெளிவாகத் திராவிட அல்லது தமிழின ஆதிக்கத்தையே காட்டுகின்றன. (பிராமணர்கள், வேளாளரையும் வள்ளுவரையும் போலப் பண்டைத் திராவிட சமயகுருமார் மரபில் வந்தவர்களே! இது கீழே விளக்கப்பட விருக்கிறது). புத்த சமண சமயப் பரப்பும், சைவ வீர வைணவ எழுச்சி மரபுகளும் மிகத் தெளிவாகத் தென்னகத்திசைத் தமிழினத் திராவிடப் பண்பாட்சியின் வலிமையையே காட்டுகின்றன. வேத வேள்வியின் பலியீட்டு முறைக்கு ஒத்த பலியீட்டு முறைகளை இந்தியாவிலும் உலகெங்கும் சிறு தெய்வ வழிபாடுகளில் காணலாம். ஆகவே, வேதநெறியும் பலிவழிபாடும் இரண்டுமே ஆரிய நெறி, திராவிட நெறி என்ற வேறுபாடு கடந்து, மனித இன நாகரிகம் தோற்றுவதற்கு முற்பட்ட பழமையான மரபுகள் என்றே பொதுவாகக் கொள்ளல் தகும். ஆயின் நாகரிக உலகில், சிறப்பாக இந்திய சமுதாயத்தில், நாகரிகத்துக்கு முற்பட்ட பழமையில்கூட, நாம் கோமரபுக்குரிய அன்னை வழிபாடு, சிவ திருமால் வழிபாடு ஆகியவற்றின் தடங்களை அல்லது வேர் மூலமரபுகளைத்தான் காண்கிறோம். எனவே, வேதநெறி என்பது, இந்தியாவினுள் அல்லது அதற்கும் அப்பாற்பட்ட திராவிட நாகரிகத்தின் ஆசிய எல்லைக்குள் வந்த ஆரியர் மேற்கொண்ட பழமை மட்டுமே என்று கருதல் ஆகும். மேலை உலகில் (ஐரோப்பாவில்)கூட, ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய இன நாகரிகம் என்று முந்திய வரலாற்றாசிரியர் கூறுபவையாவும் அவ்வினத்தவர் படிப்படியாகத் தென்திசை நாகரிக உலகுடன் தொடர்புபட்ட நிலையில், தொடர்புபட்ட அளவில் வளர்த்துக்கொண்ட நாகரிகங்களன்றி வேறல்ல என்பதை உலகளாவிய வரலாற்றுக் கண்ணோட்டம் தெளிவாகக் காட்டும். கிரேக்கரும் உரோமரும் (செமிட்டிய இனத்தவரும்கூட) தமக்கு முற்பட்ட தொல்பழங்கால நாகரிகங்களின் நகர், நாடு, அரசுமரபும் அன்னை வழிபாடும் கோயில் வழிபாட்டு மரபும் பின்பற்றியவர்களேயாவர் என்பதும் இங்கே காணத்தகும். இந்தியாவுக்கே உரிய சாதி வருண முறையும் சரி, நாகரிக உலகுக்குப் பொதுவான மூவகுப்பு முறையும் சரி, இரண்டுமே முற்றிலும் இன அடிப்படையிலோ, பொருளியல் அடிப்படை யிலோ மட்டும் விளக்கம் பெற முடியாதவை. ஏனெனில், இவை யாவுமே நாகரிக உலக முழுமைக்கும் பொதுவான பண்புகள், பொதுவான சூழல்கள். அவை நாகரிக உலகுக்குப் பொதுவான மூவகுப்பு முறைமையின் வேறுபாடுகளைக்கூட விளக்க முடியாது. இப் பொது மாறுபாடுகளையும், கீழ்த்திசையிலும் இந்தியாவி லும் இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் ஏற்படும் வேறுபாடு களையும் நாம் அந்த அந்தக் கால இடங்களின் வரலாற்றுச் சூழல், அரசியல் சூழல்களில்தான் தேட வேண்டியவர்களாகிறோம். தவிர, பொதுவுடைமை இயக்க, சமதரும இயக்க மூலவர்களான கார்ல் மார்க்சு, ஏங்கெல்சு, லெனின் ஆகியோரின் கோட்பாடுகள் சுட்டிக் காட்டுகிறபடி, பொருளியல் சமுதாய இயல் உயர்வு தாழ்வுகள் தனிமனி தனின் தற்காலிக உயர்வு தாழ்வுகளாக மட்டும் நின்றுவிடுவதில்லை; அவை சமுதாய வாழ்வுகளுடனும், அவற்றுக்குரிய பழக்க வழக்க மரபுகளுடனும், சமய ஒழுக்கமுறைக் கருத்து மரபுகளுடனும் சட்டங்கள், ஆட்சியமைப்பு, ஆட்சிமுறை ஆகியவற்றுடனும் பின்னிப் பிணைந்து தொடர்பு கொண்டே வருபவை ஆகும். இத்தொடர்பு களின் மூலமே அவ்வயர்வு தாழ்வுகள் முதலாளித்துவ சமுதாயத்தின் அல்லது சமய சமுதாயத்தின் நிலையான உயர்வு தாழ்வு வகுப்புகளாக வளரும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளன, வருகின்றன. சமதருமவாணர்கள், பொதுவுடைமை யாளர்கள் பெற்றுள்ள இந்தப் படிப்பினைகளே அரசியலைக் கைப்பற்றிச் சமுதாய, சமய, பொருளியல் அடிப்படையையே மாற்றியமைக்கும் புரட்சிகரமான முயற்சியில் அவர்களைத் தூண்டுகின்றன என்பது கண்கூடு. இனவேறுபாடு, சமுதாய வேறுபாடு, தொழில் வேறுபாடு, பொருளியல் வேறுபாடு ஆகிய அனைத்தின் பயனாக விளையும் தற்காலிக உயர்வு தாழ்வுகளின் பின்னணியில் இருந்துகொண்டு, உயர்வு தாழ்வுகளை நிலையான உயர்வு தாழ்வுகள் ஆக்குவதுடன், உயர்வுகளை மேன்மேல் உயர்வுகளாக வளர்க்கவும், தாழ்வுகளை மேன்மேல் தாழ்வுகளாகப் பெருக்கவும், வகை செய்வது அவ்வக்கால மேல்நிலை வகுப்பினரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கேயாகும். எனவே, இந்தியாவுக்கும், புற உலகுக்கும் இடையே மட்டுமின்றி இந்தியாவிலேயே இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம், சூழலுக்கு சூழல் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் சிறப்பு வேறுபாடுகளுக்கு வரலாற்றில் அவ்வக்கால இடச் சூழலுக்கேற்ப இத்தகைய அரசியல் செல்வாக்கின் போக்கில் ஏற்பட்டு வந்துள்ள, ஏற்பட்டுவரும் தனித்திருப்பங்களே காரணம் என்னலாம். இன்றைய உலகின் அரசியல் சார்பான மறைமுகக் குடியாட்சி (ஞடிடவைiஉயட டிச ஐனேசைநஉவ னுநஅடிஉசயஉல) முறை, பண்டைக்கால உலகின் சமுதாயவியல் நேரடி குடியாட்சி, (ளுடிஉயைடளைவ டிச னுசைநஉவ னுநஅடிஉசயஉல) முறையிலிருந்து வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டுள்ளது. ஆனால், மேலை யுலகில் அடுக்கடுக்கான பண்படா இனங்களின் அலைபாய்வுகளால் கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுக்குள்ளாகச் சமுதாய நேர்முகக் குடியாட்சி முறை தகர்வுற்று, முடியாட்சியிலும் சரி, குடியாட்சியிலும் சரி, தற்கால அரசியல் மறைமுகக் குடியாட்சிப் பண்பே நிலைபெற்று வந்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே, சிறப்பாக மேலையுலகில் இனமுறை (கூசiயெட டீசபயnளையவiடிn) வேறுபாடு மட்டுமின்றி, குலமுறை அதாவது சமுதாய முறையான பாகுபாடும் முற்றிலும் அழிந்து விட்டதற்குரிய காரணம் இதுவே. இந்தியாவிலோ, இதே பண்படா அலைகள் தேசியப் பண்புகளில் ஓரளவு சீர்குலைவு உண்டு பண்ணியதன்றி அதனை அழிக்கவோ, முற்றிலும் மாற்றியமைக்கவோ இயல வில்லை. மேலையுலக ஆட்சியும் அதனால் ஏற்பட்ட பண்புத் தாக்குதல்களும் நுழையும் வரை இந்தியாவிலோ, கீழ்த்திசை யிலோ மறைமுகக் குடியாட்சி மரபுகள் வந்து புகவில்லை; குலமுறை அல்லது அரசியல் சமுதாய வகுப்பு இந்தியாவில் மட்டும் முற்றிலும் அழியாமல் சாதி வேறுபாடுகளுக்குரிய மூல அடிப்படையாக நீடிக்க வழி வகுத்த சூழல் இதுவே! மேலே சுட்டியபடி இக் குலமுறை மரபு இனக்குழு மரபு (கூசiயெட டீசபயnளையவiடிn) அன்று; அரசியல் சமுதாய முறை (ளுடிஉயைட டீசபயnளையவiடிn) சார்ந்ததே என்பது கருதிக் காணத்தக்கது ஆகும். பண்டைச் சமுதாயக் குடியரசுகளுக்கும், முடியரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில் நாகரிக உலக முழுவதிலுமே பழமையான குடியரசு முறைப்பட்ட ஆட்சிகள் தடங்கெட அழிந்துபோய் விட்டன. ஆயினும், அப்போராட்டம் அரசியல் துறையுடன் நின்று விடாமல் எங்குமே பண்புத்துறைப் போராட்டமாக மாறி நின்று நிலவியே வந்துள்ளது, வருகிறது. உலகப் பெருஞ்சமய மரபுகளை, சமய சமுதாய இயக்கங்களை அரசியல் இயக்கங்களைக்கூட இயக்கி வரும் மரபு இதுவே. ஏனெனில் அது அரசியல், சமய, சமுதாய, கலை, அறிவியல், பண்பாட்டுப் போராட்டங்களாக உலகெங்குமே வேறுவேறு வடிவில் நீடித்து வந்துள்ளது. இது, வருங்கால உலகநாடுகளின் ஒப்பியல் வரலாற்றாய்வுக்குரிய செய்தி ஆகும். இந்தியாவில் சாதி வருண முறை வேறுபாடுகளுக்கும், அது சார்ந்த சமய, சமுதாயப் பண்பாடுகளுக்கும், கருத்து மரபுகளுக்கும் வழிவகுத்த சூழல் இது! சமுதாய ஆட்சி வகுப்பு, சமய ஆட்சி வகுப்பு ஆகிய இரண்டின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சிகள், அவற்றிடையே ஏற்பட்ட தற்காலிக முரண் பாட்டுப் பூசல்கள், அவற்றின் நிலையான கூட்டிணைவுச் செயற்பாடுகள் ஆகியவை நாகரிக உலகுக்குப் பொதுவானவையே. ஆயினும், இந்தியாவுக்கு வெளியே உலகெங்கும், சீன சப்பான் நாடுகளில்கூட, இந்த இரு வகுப்புகளும் நாளடைவில் இணைந்து ஒரே உயர்வகுப்பு அல்லது ஆட்சிவகுப்பாகியுள்ளது. நடுத்தர வகுப்போ மீண்டும் அடிநிலைப் பொதுமக்களிடமிருந்தே பெரிதும் புதிய வகுப்பாக எழுந்து வளர்ந்துள்ளது. ஆனால், கீழ்திசையில்கூட இந்தியாவில் அல்லது இந்திய நாகரிகப் பரப்பில் மட்டுமே சமய சமுதாய வகுப்புகள் போல இயங்கும் இரண்டு வகுப்புகளும் அரசியல் வகுப்புகளாக மாறி, பிறப்படிப்படையாகவே முதலில் ஒரே வகுப்பாகவும், பின்னர் நிலையான இருவகுப்புகளாகவும் (இரண்டுக்கு மேற்பட்ட வகுப்புகளாகக்கூட) மாறியுள்ளன. அத்துடன், உலகில் வேறெங்கும் இல்லாத நிலையில், சமுதாய உரிமையின் பெயரால் ஆளும் வகுப்பே உயர்வகுப்பாகியுள்ளது. இதுமட்டுமன்று கீழே விளக்க இருக்கிறபடி, இந்த இருவகுப்பு களுமே சமுதாய, பொருளியல் ஆட்சி வகுப்பாகவோ, சமய ஆட்சி வகுப்பாகவோ தோற்றினாலும் அவ்வாறே அவை தம்மை ஆர்வமுடன் சிலபல காலமாகக் குறித்துக்கொண்டு வந்தாலும், உண்மையில் அவை இரண்டும் அரசியல் வகுப்புகளே - இரண்டுமே குடியரசு முடியரசுப் பண்புப் போராட்டத்திடையே படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக, ஒன்றினுள்ளிருந்து மற்றொன்றாகத் தோன்றிய இரண்டு (அல்லது மேற்பட்ட) அரசியல் ஆட்சி வகுப்புகளே யாகும். குடியரசு, முடியரசுப் பண்பாட்டுப் போராட்டத்தில், இந்தியாவில் மட்டுமே ஏற்பட்ட இத்தனி வளர்ச்சிகளுக்குரிய காரணங்கள் நான்கு: இந்தியாவிலும், தமிழகத்திலும், கொங்குத் தமிழகத்திலும் குடியரசு முடியரசுப் போராட்டச் சூழல் களிடையே செயற்பட்ட இரண்டு அல்லது மூன்று தனிமரபுகள், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட ஒரு சூழல் ஆகியவையே அவை. தனி மரபுகளுள் முதலாவதாகக்குறிக்கத்தக்கது வேளிரிணைவால் பிறந்த தமிழ் மூவரசையும் (நான்காவதாக மகதப் பேரரசையும்) மூன்று (அல்லது நான்கு) என வரையறுத்த பண்டைத் தமிழ் இந்திய மரபு ஆகும். இரண்டாவது மூன்றாவது மரபுகள் தமிழகத்திலும் தமிழகத்துக்குப் புறம்பாக, இந்தியா விலும் இரு வேறு மரபுகள் போலச் செயற்பட்டு வந்துள்ள மொழிமரபின் இருவடிவங்களேயாகும். ஏனெனில், தமிழகத்தில் மட்டுமே மூவரசுகளும், வேள்புலங்களும் மொழித் துறையில் மரபுப் போட்டி இடாமல் தம்முள் ஒத்து ஒரே தமிழ்ச் சங்கத்தை ஏற்றுத் தமிழ் என்ற ஒரே மக்கள் மொழித் தேசியம் பேணும் நிலை ஏற்பட்டது. இதுவே இயல்பாக இந்தியா அளாவ, நாகரிக உலகளாவ வளர்ந்திருக்கக்கூடிய, வளர்ந்திருக்க வேண்டிய மரபு அல்லது பண்பு ஆகும். ஆனால் தமிழக, சீன, சப்பான் மரபுகள் நீங்கலாக, நாகரிக உலக முழுவதிலுமே இந்த நிலை அணிமைக் காலம் வரை ஏற்படவில்லை. மேலையுலகில் அணிமை மேலையுலகிலும் சமய, ஆட்சி நாகரிகப் பண்பாடுகள் காரணமாக வழக்கிழந்த மொழிகளான இலத்தீனமும் கிரேக்கமும் அரபு மொழியும் மொகலாய இந்தியாவில் வழக்கிறந்த பழம் பாரசீக மொழியும் சமய ஆட்சி, அரசியல் ஆட்சி, இலக்கிய அறிவு பண்பாட்சி மொழிகளாக விளங்கியது போல, இந்தியாவில் புத்த சமண சமய காலங்களிலும் அவற்றைத் தொடர்ந்து இந்து சமய மறுமலர்ச்சிக் காலங்களிலும் மக்கள் மரபிழந்த அல்லது வழக்கிழந்த பாளி, பாகத, சமக்கிருத மொழிகளே இலக்கிய, சமய, அறிவு, பண்பாட்டு மொழிகளாகப் புது வளர்ச்சியடைந்தன. இவ்வாறாக, ஒரே தேசிய மொழிமரபு இந்தியாவில் தென்பால் மக்கள் மொழித் தேசியமான தமிழ் அல்லது தென்மொழித் தேசியமாகவும், வடபால் வழக்கிறந்த மொழித் தேசியமான பாளி அல்லது பாகத அல்லது சமக்கிருத மொழித் தேசியமாகவும் இருகிளை மரபுகளாக இலங்கிற்று; இந்தியாவில் மட்டுமன்றிச் சீன சப்பான் நீங்கலான நாகரிக உலகப் பரப்பு முழுவதிலுமே தமிழ் ஒன்றுதான் தொன்றுதொட்டு மனித இனமரபின் முழுச்சமய ஆட்சி (தெய்வ) மொழியாகவும் தேசிய ஆட்சி மொழி, சட்டமொழி, இலக்கிய பண்பாட்டு மொழியாகவும் இயங்கி வந்துள்ளது. இந்த இரண்டு அல்லது மூன்று பண்பு மரபுகளுடன் இணைந்து செயலாற்றிய நான்காவது சூழல்மரபு, மூவாயிர ஆண்டுகளாக (கி.பி. 1500 வரையும் அதுகடந்தும்) இந்தியாவின் வடமேற்குக் கணவாய்கள் வழியே புகுந்த பண்படா இனங்களின் அலைபாய்வுகள் அவற்றின் விளைவான அயற் பண்பாட்டுக் கலவைகள், மயக்கங்கள், பண்பாட்டுச் சீர்குலைவுச் சுழற்சிகள் ஆகியவையே யாகும். இம் மரபுகள், சூழல்கள் ஆகியவற்றிடையே நீடித்து வளர்ந்த குடியரசு - முடியரசுப் பண்பாட்டுப் போராட்டத்தில் நாம் மூன்று தளங்களைக் காணலாம். மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக இந்திய நாகரிகப் பரப்பு முழுவதுமே அடுக்கடுக்கான அலைபாய்வுகளாய்ச் செயலாற்றி வந்துள்ளன. இப் பரப்பின் எல்லா இடங்களிலும் அவை, உடனடியாக ஒரே சமகாலத்தில், ஒரே நேர் அலைவீச்சாகப் பரவிவிடவில்லை. கிட்டத் தட்ட அவற்றின் அடுக்கடுக்கான செயற்பாடுகளை நாம் கிட்டத்தட்ட ஒரு சீர்படவே இந்திய, தமிழக வரலாறுகளில் வகுத்துக் காணலாம். முதலாவது தளத்தில் வேளிரிணைவாலோ போர் வெற்றிகளாலோ, அரசியற் புரட்சிகளாலோ தோன்றிய முடியரசர்கள், மண உறவு, நட்புறவு ஆகியவற்றின் மூலமாக வேளிருடன் மேலும் இணைந்தும், பகைமை மூலமாக அவர்களை அழித்தும் படிப்படியாகத் தம் ஆட்சி எல்லையையும் வலிமையையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொண்டனர். அத்துடன் முடியரசரும் குடியரசரும் மோதிக்கொண்ட போதெல்லாம், இந்த நட்புறவு, பகைமையுறவு ஆகியவைகள் வேளிரையும் பிரித்து, ஒருவருடன் ஒருவர் போராடச் செய்தன. ஆனால், இத்தகு போராட்டங்களில் எந்த முடியரசு வென்றாலும் தோற்றாலும், பொதுவாகக் குடியரசுகளின் அழிவே அவற்றால் விரைவுபடலாயிற்று; மற்றும் இத் தளத்திலேயே வேளிர் பலர் முடியரசருடன் நட்புறவு கொள்வதனுடன் அமையாமல், அவர்களிடம் படைத் தலைவராகவும் அமைச்சராகவும் அமர்ந்து பணியாற்ற முனைந்திருந்தனர். தவிர, இத் தளத்திலேயே முடியரசரும் குடியரசரும் தம்முள் ஒத்திசைவான போட்டியிட்டு, தமிழுலகுக்கே (தமிழ் ஈழம் உட்பட) ஒருமை அளித்த தமிழ்ச் சங்கம் அமைத்து, அதன்மூலம் தமிழுக்கும் தமிழ்ப் புலவருக்கும் பேராதரவு காட்டி அதனை, அவர்களைப் பேணினர். இதுபோலவே, இருசாராரும் தம்முள் ஒத்திசைவான போட்டியிட்டுக் கலையும், தொழிலும், வாணிகமும் வளர்த்தனர். அனைவரும் சேர்ந்து ஊக்கிய இந்தத் தொல் பழந் தேசியப் பண்பாட்டின் மூலம் புலவர் வகுப்பினரும், அவர்கள் துணைவர்களான பாணர், பாடினியர், கூத்தர், பொருநர், விறலியர் முதலிய கலைவகுப்பினரும், கணக்காயர் (பேராசிரியர்), இளம் பாலாசிரியர் (பள்ளி ஆசிரியர்), கணியர் (வானூலார்), சமய அறிஞர், புரோசர் (சமய குருமார்), மருத்துவர், நோட்டர் (பொன் மணி தேர்வாளர்) முதலிய அறிஞர், கலைஞர், வினைத் திறலாளர் வகுப்பினரும் வளர்ச்சியுற்றனர். இவ்வகுப்புகளின் ஆதரவு நாடி, முடியரசரும் குடியரசரும் தம்முள் நட்பு போட்டியிட்டனர். ஆனால், வேளிர்களைப் போல, இவ்வறிவுக்கலை சமயவகுப்பு பிளவுபடாமல், வேளிர் குடியரசர் ஆகியோரிடையே கூடப்பிரிவுறாமல், தேசியப் பண்பார்ந்த வகுப்பாகவே ஒருமனமுடன் செயல்பட்டது. (கடைச்சங்க இலக்கியம் காட்டும் தமிழ்மரபுப் பெருமை, இது) ஏனெனில், தமிழ்மொழி ஒருபுறம் மக்கள் மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் ஆட்சி கலை அறிவு பண்பாடு ஆகிய எல்லாத் துறைகளுக்கும் உரிய ஒரே மொழியாகவும்; மறுபுறம் அரசர், வேளிர், பொது மக்கள், மேன்மக்கள் ஆகிய எல்லாரையும் இணைக்கும் ஒரே மொழியாகவும் நாகரிக உலகின் முழுஉரிமை தேசியமொழியாய் (பண்டைச் சீன சப்பான் மொழிகள் போல) இயங்கிற்று. போரும் வீரப்போட்டிகளும், முடியரசுகளின் ஆட்சி விரிவுக்கு மட்டுமே பயன்பட்டன. ஆட்சியுறுதியும் ஆட்சி வளமும், சிறப்பாக முடியரசின் ஆட்சியுறுதியும் ஆட்சிவளமும், இந்த ஆதரவுப் போட்டிகளையே பெரிதும் சார்ந்தவை ஆயின. இரண்டாவது தளமே, வரலாற்று முறையில் முடியரசுக் காலத்தின் அரசியல் தேசியத்தளம் ஆகும் என்னலாம். இத் தளத்தில், முடியரசர், வேள்புலங்களை விழுங்கிய பின்னும் பழமை வாய்ந்த அரசுரிமைக்கு உரியவரான குடியரசு மரபுகளில் பெண் எடுத்துத் தம் முடியுரிமையை மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் பெருமுனைப்பும் பேரார்வமும் காட்டினர். (வேள் புலங்களின் ஆட்சியுரிமை ஆதிநாட்களில் பெண்டிருக்கே உரியதாயிருந்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது ஆகும். தவிர, வட இந்தியாவில் முதலாம் சந்திரகுப்தனின் லிச்சாவிக் குடியினர் மணஉறவும், கொங்கு நாட்டிலேயே சேரர், கொங்குச் சேரர் ஆகியோரின் யையாவிக் கோமான்குடிப் பெண்டிர் மணஉறவும் பிறவும் இதே சூழலை விளக்குவன ஆகும்) அத்துடன் தொன்றுதொட்டு ஆட்சியுரிமையும் ஆளும் பயிற்சி மரபும், மக்கள் தொடர்பும் உடையவராயிருந்த வேளிர் குடியினரையே அரசர்கள் தேர்ந்தெடுத்துத் தம் உரிமைச் சுற்றம் ஆக்கிக் கொண்டனர். இது மட்டுமோ? இரண்டாம் மனைவியை மணஞ் செய்து கொள்பவர் எப்படியாவது தம் முதல் மனைவியைப் பசப்பி ஊக்குவித்து அவளைக் கொண்டே தாலி கட்டுவிக்கத் துடிப்பது போல, முடியரசர்களும் தொன்று தொட்டு மக்கள் ஆட்சி மரபுக்கு இயல்பான உரிமையுடையவராயிருந்த வேள் குடியினரையே தமக்கு முடிசூட்டும் தனி உரிமையுடையவராக அமைத்துக் கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் பெருமையும் கொண்டனர். இதே தளத்தில், மேலைநாட்டு முடியரசரைப் போலவே இந்தியாவிலும், முடிமன்னர், தம் பெருமக்கள், சமயகுருமார், பொதுமக்கள் உட்பட எல்லா நாட்டு மக்களையும் ஒருங்கே கவரும் முறையில் மொழி, சமயம், வாழ்க்கை வளம் ஆகியவை சார்ந்த தேசிய வளர்ச்சிகளை நேரடியாக ஊக்கி மேம்படுத்த முனைந்தனர். அத்துடன் மொழிப்புலமை, கலைத்திறம், சமய அறிவு, போர் வீரம், கல்வி, உழவுத் தொழில், வாணிகம் முதலிய துறைகளில் மேம்பாடு ஆகிய சிறப்புடையவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பரிசுகளும் பட்டங்களும், தனிப் பட்டய உரிமைகளும் விருதுகளும் பதவிகளும் மானியங்களும் வரிசைகளும் வழங்கி அவர்களைப் பெருமக்களுடன் பெருமக்களாக உயர்த்தினர். முடியரசரின் அரசியல் சுற்றமான பெருமக்கள் வகுப்பு இதனால் விரிவுற்று முடியரசருக்குரிய தேசிய ஆதரவுகள் மேன்மேலும் பெருகின. இவ்வாறாக, நாடு நகர்ப் பாதுகாப்புக்காகப் பண்டைக் குடியரசர் கட்டியெழுப்பிய கற்கோட்டை அரண் வரிசைகளைப் போல, முடியரசரும், தம் அரசுரிமைக்கும் ஆட்சிக்கும் நல்லுறுதிப்பாடும் மக்கள் ஆர்வ ஆதரவு வளமும் பெருக்கமுறும் வகை யில், இத்தகைய வகுப்பு வரிசைகளையே தம் தேசியப் பண்பாட்டுக் கோட் டையின் நல்லரண் வரிசைகளாகக் கட்டமைத்துக் கொள்ள முற்பட்டனர். மூன்றாம் தள ஊழியே, நாகரிக உலகில் இந்தியாவுக்கும், இந்தியாவில் தமிழகத்துக்கும் வேறு வேறுபட்ட தனித்தன்மை களும் கொங்குத் தமிழகத்துக்குத் தனி உயர் சிறப்பும் வழங்கிய ஊழி ஆகும். ஏனெனில், முதலிரு ஊழிகளை விட மூன்றாம் ஊழி இந்தியாவில் எளிதாக எதிர்ப்பின்றிப் பரவிற்று. ஆனால், தமிழகத்திலும் தென்னகத்திலும் அது எதிர்ப்புக்களைக் கடந்தே வெற்றிகாண வேண்டியதாயிற்று. அதேசமயம் பண்டைக் கொங்குத் தமிழகத்தில் பொதுவாக, அதன் அக நாடாகிய தற்காலக் கொங்கு நாட்டில் சிறப்பாக மூன்று ஊழிகளுமே போதிய அளவில் செயலாற்ற முடியாமல் போயின. அதன் ஊன்றிய குடியரசு மரபும் குடியரசுப் பண்பும் இதனைத் தடைப்படுத்தி நின்றன, தடைப்படுத்தியே வருகின்றன. இது கீழே விளக்கப்பட இருக்கின்றது. இந்தியாவின் முடியரசர்களிடையே, தமிழக மூவேந்தர் (மற்றும் மகதப் பேரரசர்) போன்று வேளிரிணைவால் அமைந்த தொல்பழமை வாய்ந்த இயல் மரபினரும் உண்டு! பல்லவர் (பழந்திரையர் மரபினர்), கங்கர், வாணர், கடம்பர், சளுக்கர், இரட்டர், யாதவர் (தேவகிரி ஆண்ட ஆய் மரபினர்) போன்று வேளிர் மரபிலேயே வந்த புது அரச மரபினரும், வடமேற்கு ஓரக் கணவாய்கள் வழி இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்து இந்தியருடன் இந்தியராகக் கலந்துவிட்ட பார்த்தியர். ஊணர் போன்றாரின் அயலின அரசுகளும் உண்டு. தவிர, தோள் வலியாலும் வாள் வலியாலும் அரசுரிமை நாடிப் பெற்றவர்களும் அரச மரபின் உட் பூசல்களிடையே மரபுரிமை பெற்றும் பெறாமலும் தம் தனி வல்லமைகளாலோ செல்வாக்காலோ முடியுரிமை கொள்ள முனைந்தவரும் பலர். அத்தகு சூழல்களில், இயல்பாகவே பெருமக்கள் வகுப்பினரிடையே பலரும் புதிய மரபுகளுக்கு ஆதரவு காட்டத் தயங்கி ஆர்வ - ஆதரவாளர், எதிர்ப்பாளர், நடுநிலையாளர் எனத் தம்மிடையே பிளவுற்றுப் பிரிவுறலாயினர். பல்லவர் போன்ற புதிய மரபுக்குரிய அல்லது பார்த்தியர், குசாணர், ஊணர் போன்ற அயல் மரபுக்குரிய அரசர் - பேரரசர்கள் இவ்வகைப்பட்ட புதிய சூழ்நிலைக்கு ஆளான போது, தமக்கு ஆர்வ ஆதரவு தர முன்வந்த பெருமக்களையும் பிறரையும் மற்றப் பெருமக்களிடமிருந்து பிரித்து உயர்த்திப் புதிய உயர்வகுப்பினர் ஆக்கினர், தமக்கு ஆதரவு வலிமை வழங்கத்தக்க இனமரபு, மொழிமரபு, சமயமரபு ஆகியவற்றையும் அவர்கள் தேடி அணைத்து உயர்த்தவும் முற்பட்டனர். அத்துடன் எதிர்த்தவர்களின் மொழிமரபு சமயமரபுகளை, அவர்கள், இதுபோல மற்றப் பெருமக்கள் படிநிலையிலிருந்தும் நீக்கிப் பொதுமக்கள், அல்லது அவர்களிலும் தாழ்ந்த கீழ்ப்படி நிலைகளுக்குத் தள்ளினர். மேற்கண்ட முறையில் உயர்த்தப்பட்ட புதுவகுப்பினரை ஆட்சியாளர் தம் அரசியல் சுற்றத்தினும் உயரிய அரசகுருமார் ஆக்கினர். அவர் களுக்கும் அவர்கள் ஆட்சிக்குப் படிப்படியாக மாற்றப்பட்ட கோயில்கள், சமயநிறுவனங்களுக்கும் மானியங்கள் தனிப்பட்ட முறையில் இறையிலி (வரியில்லாத) மானியங்கள் ஆக்கப்பட்டன. அவர்கள் வாழ்க்கைவளம், கல்விவளம் ஆகியவற்றிற்கென அரசர்கள் தனி அமைப்புகள் (சதுர்வேதி மங்கலங்கள், வடஇந்தியாவில் திரிவேதி மங்கலங்கள், வேதபாட சாலைகள், சமக்கிருதக் கல்விச்சாலைகள், சமக்கிருதத்திலேயே புதிய இலக்கிய, சமயநூல் வளர்ச்சியாதரவுகள் ஆகியவை) ஏற்படுத்தினர். இதுபோலவே எதிர்ப்பாளர் ஆகிய காரணத் தினால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் புதிய ஆட்சியில் உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு அவர்கள் பொதுமக்கள் அல்லது பொதுமக்களிலும் கீழ்ப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாகரிக உலகெங்கும் நம் நாட்களுக்குள் தோன்றிவிட்ட மூவகுப்பு முறையைப் போன்ற ஒரு மூவகுப்பு முறையாக இந்திய நாகரிகப் பரப்பில் சாதி வருணமுறை அமைந்தவகை இதுவே. பழைய பெருமக்கள் வகுப்பிலிருந்து பிரிக்கப்பட்டு உயர்த்தப் பெற்ற புதுவகுப்பே உரிமை வரம் பெற்ற அல்லது தனித் தன்னாண்மை, தனிச்சிறப்புரிமைகள் பெற்ற உச்ச உயர் ஆட்சி வகுப்பாகவும், அவர்களையடுத்துப் பழைய ஆட்சி வகுப்பின் எஞ்சிய பகுதியினர் தம் உரிமைகளை மட்டாகக் கொண்டு உரிமை வரம்புபட்ட நடுத்தர வகுப்பாகவும், பழைய பொது மக்களும் உயர்வகுப்புகளிலிருந்து ஒதுக்கித் தள்ளப்பட்டவர் களும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் களாகவும் உரிமைகள் படிப்படியாக அகற்றப்பட்டவராகவும் பிரிவுற்றனர். (எவ்வகைக் கட்டுப்பாடும் விரும்பாத குடியரசுக் குழுவினரே இவ்வூழியில் மலைப்பகுதிகளுக்குச் சென்று ஒதுங்கிய பழங்குடியினர் ஆவார்கள் என்று கருத இடமுண்டு. விந்தியப் பகுதிகளில் பேரரசமைத்து ஆண்ட கேரளா மரபினரை இதற்குச் சான்றாகக் கூறலாம்) இந்தியாவில் புத்த சமண சமயங்கள் மேலோங்கியிருந்த ஊழியும் மேற்கண்ட குடியரசு, முடியரசுப் பண்பாட்டுப் போட்டிக்குரிய முதல் இரண்டு தள ஊழிகளும் கிட்டத்தட்ட சமகாலத்தவை என்னலாம். இதுபோலவே சங்க காலத்தி லிருந்தும் மோரியர் ஆந்திரர் ஆகியோர் வீழ்ச்சிக் காலத்தி லிருந்தும், வடமேற்கிலும், வடக்கிலும் நேரடியாக ஆனால் தென் பெரும் பகுதியிலும் கீழ்ப்பெரும் பகுதியிலும் சைவ, வீரசைவ, வைணவ மலர்ச்சிகளின் துணைகொண்டும் வளர்ந்த இந்து சமய மறுமலர்ச்சி ஊழி, மேற்கண்ட முடியரசுக் கால மூன்றாம் ஊழி ஆகியவையும் கிட்டத்தட்ட சமகால ஊழிகளாக விளங்கி வந்துள்ளன. முதல் இருதள ஊழிகளில் தமிழ் அல்லது தாய்மொழி அடிப் படையாக அமைந்த மக்கள் மொழித் தேசியம் மூன்றாம் தள ஊழியிலேயே படிப்படியாகப் புத்த சமண சமயங்களுக்குரிய பாளி பாகத மொழிகள் அல்லது புதிய இந்து சமய மறுமலர்ச்சிக் குரிய சமக்கிருத மொழி என வழக்கிறந்த மொழித் தேசியமாக மாறிற்று. பழைய அரசியல் வகுப்பாகிய பெருமக்கள் வகுப்பிலிருந்து பிரித்து உயர்த்தப்பட்ட புதிய அரசியல் வகுப்பு 'அரசகுருமார்' வகுப்பு என்ற முறையில் சமயத்தின் பெயரால் மட்டுமன்றிச் சமக்கிருதத்தின் பெயராலும், பொது மக்களுக்கும், பெரு மக்களுக்கும் மட்டுமன்றி, தன்னை உயர்த்தி வைத்த அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மேலாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. அரசரும் ஆட்சியாளரும் இதில் அவர்களின் வழியில் குறுக்கிடவில்லை மனமார ஒத்துழைத்தனர். ஏனெனில், அவர்கள் கோரிய சமய உரிமை யாவரையும் கவர்ந்தது. தவிர, புதிய முடியரசர் மட்டுமன்றி, எல்லா அரசர் - பேரரசருமே அவர்களால் உடனடியாகப் பெற்ற ஆதாயம் மதிப்பிடற் கரியதாயிருந்தது. இதுவரை அரசர்களால், போர் வலிமை மூலம் குடியரசர்களை வீழ்த்தவும், நல்லாட்சியால் மக்களைக் கவரவும் மட்டுமே முடிந்தது. மக்கள் தம் பழைய குடியரசு மரபை மறக்கும்படி செய்ய அவர்களால் முடியவில்லை. பழைய பெருமக்கள் மரபோ, அதில் இடம்பெற்ற பழைய சமய குருமார் மரபோ, புலவர் அறிஞர் கலைஞர் மரபுகளோ முடியரசருக்குத் தம் ஆதரவைத்தான் வாங்க முடிந்தது. குடியரசு மரபை மக்கள் மறக்கும்படி செய்வதோ, அதைத் தாமே மறந்து விடுவதோகூட அவர்கள் கனவுக்கும் ஆற்றலுக்கும் இயல்புக்கும் அப்பாற்பட்ட செய்தியாய் அமைந்திருந்தது. புதிய அரசியல் வகுப்போ சமக்கிருதச் சார்பான சமயச் சார்பு மூலம் இதனை மிக எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலும் வாய்ப்பும் உடையதாயிற்று. உண்மையில் புதிய வகுப்பினரால் தம் ஆதரவுக்குரிய அரசருக்குச் சமக்கிருதச் சார்பான சமயத்தின் பெயரால் மரபாதரவுக்கும் மக்கள் ஆதரவுக்கும் மேம்பட்ட தெய்வீக ஆதரவையே வகுத்துத்தர முடிந்தது. சூரிய மரபு, சந்திர மரபு, அக்கினி மரபு போன்ற புதிய ஆட்சி மரபு, புதிய தெய்வீகக் கால்வழி மரபு ஆகியவைகளையே அரசருக்குப் பெற்றுத்தரும் அல்லது அவற்றை உறுதிப்படுத்தித் தரும் ஆற்றலும், அவற்றுக்குத் தம் சமக்கிருத மொழியில் புதிய ஆதாரங்கள் வகுத்துத் தரும் வாய்ப்பும் அவர்களுக்கு எளிதில் அமைந்து விட்டன. (சமக்கிருத மொழியும் சமக்கிருதக் கல்வியும் இதற்கேற்ப, அவர்களுக்கு மட்டுமே, அதிலும் அவர்களில் ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மொழியாக, கல்வியாக இயன்றன) ஆந்திரர், கடம்பர், வாணர், கங்கர், சாளுக்கியர் ஆகியோரையும் தம் எல்லை கடந்து பேருலகாள முற்பட்ட பிற அரசர் பேரரசர்களையும் போலவே, பல்லவர்களும் தமிழ் அல்லது தாய்மொழி மரபுக்கு மாறாகப் பாளி பாகத சமக்கிருத மரபுகளையே தொடக்கத்தில் முற்றாதரவாக மேற்கொண்டிருந் தனர். இது மூன்றாம் தள ஊழிக்குரிய பண்பே என்பதனைப் புத்த சமணச் சார்பான பாளி பாகதங்களின் முற்பட்ட வழக்கே காட்டுகிறது. பல வரலாற்றாசிரியரும் பல புலவோரும் பல்லவரை யும் பிறரையும் தமிழகத்துக்கு அல்லது தென்னகத்திற்கு அல்லது இந்தியாவுக்கே அயலவர் என்று கருத வைத்தற்குரிய சூழ்நிலை இதுவேயாகும். (சமக்கிருத இலக்கிய மரபு மட்டுமின்றி, பின்னாளைய உருது அல்லது இந்துஸ்தானி அல்லது இந்தித் தேசிய மரபும் தென்னகத்திலிருந்தே வடதிசைக்குப் பரவியவை ஆகும் என்பது கூர்ந்து கண்டுணர்தற்குரிய செய்தி ஆகும்). ஆட்சி மொழி மாறுதலும் சமய மாறுதலும் முடியரசு பேரரசு களின் அரசு நெறிமுறைச் சூழல் வாய்ப்புகளுக்குரியனவே என்பதை வரலாற்றாய்வுகள் காட்டும். ஊணப் பேரரசன் தோரமாணன் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) தனக்கு முற்பட்ட குப்தப் பேரரசரின் வைணவ சமயத்தையும் அவர்களை ஆதரித்த வைணவ சமயத் தலைவரையும் ஒதுக்கித்தள்ளி, சைவ சமயமே தழுவி தன் தலைநகரான உஜ்ஜைனியில் அச் சமயத்துக்கும் சமயத் தலைவருக்கும் புதுவாழ்வும் புதுமலர்ச்சியும் அளித்தான் என்பதை அறிஞர் ஏ.எஸ்.பி.ஐயர் (கூhசநந ஆநn டிக னுநளவiலே) எடுத்துக் காட்டியுள்ளார். மூன்றாம் தளத்தில், ஏற்பட்ட இத்தகு புதிய சூழ்நிலை களிடையே அரசுக்கு முடிசூட்டும் பழைய பெருமக்களின் உரிமையில் முடியரசுக்கு இருந்த அக்கறையும் ஆர்வமும் பெரிதும் குறையலாயிற்று. ஏனெனில் குடியரசுமரபுக்கும் அதனுடன் வேளிர்க்கும் கோமரபிற்கும் உரிய தெய்வீகக் கால்வழி மரபுரிமையும் ஆட்சி மரபுரிமையும் ஒருங்கே அரசராலும் பெருமக்களாலும் பொதுமக்களாலும் மறக்கப்பட்டுவிட்டன. இந்நிலை யில் பெருமக்களின் முடிசூட்டும் உரிமை மட்டுமின்றி, அரசுக்கு அரச மரபும் (சத்திரிய மரபும் அரசர் குலப்பிறப் புரிமையும்) அரசன் ஆட்சிக்குத் தெய்வீக ஆதரவும் ஒப்புதலும் வாங்கித்தரும் உரிமையும் அதை மறுத்து விடும் உரிமையும்கூட, படிப்படியாகப் புதிய ஆட்சி வகுப்பினரிடமே மெல்ல மெல்ல வந்தடைந்தன. தமிழ் மாக்கவிஞரான கம்பநாடர் (கி.பி. 9 அல்லது 10 அல்லது 12ஆம் நூற்றாண்டு) இராமபிரானின் முடிசூட்டு விழா வருணனையினிடையே, பழைய முடிசூட்டு விழா மரபையும் அதில் அவர் நாட்களுக்குள்ளாக ஏற்பட்டு வந்திருந்த மாறுதலின் சாயலையும் நமக்கு ஒருங்கே நயம்பட இணைத்துக் காட்டியுள்ளார். `வெண்ணெய் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி' என்ற அவர் பாடல் வரியில், அவரை ஆதரித்த புரவலரான வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் வேள் மரபு அல்லது வேளாள மரபின் முன்னோரே தம் பழைய மரபுரிமையின் மதிப்பை விடாமல் மணிமுடி எடுத்துக் கொடுக்கின்றனர். ஆனால் சூட்டவில்லை! புதிய வகுப்பினரான வசிட்டரே அதை அவர்களிடமிருந்து அமைச்சர் சுமந்திரர் கைப்பட வழங்கிச் சூட்டுவதாகக் கவிஞர் முடிக்கிறார். புதிய மரபினரின் அந் நாளைய புதிய அரசியல், சமுதாயச் செல் வாக்கை `வசிட்டனே' என்ற சொல்லில் கம்பநாடரே பயன்படுத்தும் `ஏ'காரம் தொனிப்படுத்திக் காட்டுகிறது. மூன்றாம் தளத்தில் பல்லவர் காலத்தை ஒட்டி (கி.பி. 3-6ஆம் நூற் றாண்டுகள்) முடிமன்னர் மரபுகளுக்குப் பேராதரவாக முடி மன்னராலேயே பழைய ஆட்சி வகுப்பினின்று பிரித்தெடுத்து உயர்த்தப்பட்ட புதிய வகுப்பினர், நாளடைவில், மன்னர்களையும் நாட்டாட்சி அயலாட்சி மரபுகளையும் ஆக்கவும் அழிக்கவும், ஏற்றவும் இறக்கவும், ஆட்டிப் படைக்கவும் மாற்றவும் வல்லமை பெற்றவராயிருந்தனர். அயல் மரபாட்சி அயலாட்சிக் காலங்களில் இது மேலும் வளர்ந்தது. இந்திய தேசியத்துக்கே பல வகைகளில் புது வழி காட்டிச் சென்ற வீர சிவாஜியின் (கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டு) காலத்துக்குள், இந்துப் பேரரசே அமைத்துவிட்ட அம் மக்கட் பெருந் தலைவனுக்கு மொகலாயப் பேரரசர் வகித்த (சக்கரவர்த்தி அல்லது சம்ராட் என்ற) பட்டமோ, அரச மரபினன் (இராசபுத்திரருக்கு அளிக்கப்பட்ட சத்திரியன் என்ற) உரிமையோ அவற்றிற்குரிய தெய்விக ஒப்புதலோ மறுத்து விடும் அளவுக்கு அவர்கள் ஆற்றலும் பேரவாவும் வளர்ந்துவிட்டன. வீர சிவாஜிக்குப் பின் வல்லமைச்சர் (பேஷ்வா) என்ற முறையில் அவர்களே ஆட்சியைக் கைப்பற்றி, அயலாட்சிக் காலத்தின் நடுப்பகுதி (1857) கடந்தும் இந்தியாவின் பெரும் பரப்பிலும் அரசர், பேரரசாக அல்லது அமைச்சராக ஆண்டனர். வேளிர் மரபில் வந்த ஆய்வேள் ஆட்சியாக மட்டுமின்றி, அதன் மலர்ச்சியாக 17ஆம் நூற்றாண்டு வரை குடியாட்சியாகவே (எட்டு வீட்டுப் பிள்ளைமார் ஆட்சியாகவே) நடைபெற்ற திருவாங்கூர் ஆட்சியை, அதன் வல்லரசரான மார்த்தாண்ட வர்மன் மரபினர் அயலாட்சி ஆதரவு பெற்றுப் புதிய வகுப்பினரின் நலங்களுக்கே முதலிடம் கொடுத்த ஆட்சியாக மாற்றி ஆண்டனர். ஆட்சியின் இத் தனிச் சலுகைகள், 20ஆம் நூற்றாண்டில் பேரமைச்சராகவும் அரசத்துணைவராகவும் நாடாண்ட பேரறிஞர் வயவர் சி.பி. இராமசாமி ஐயரின் ஆட்சிக்காலத்திலேயே அகற்றப்பட்டன. இந்திய வரலாற்றில் இரண்டாவது மூன்றாவது தள ஊழிகளில் காணப்படத்தக்க புரட்சிகரமான இந்த மாறுபாடு களையெல்லாம் ஒருபுறம் வேள் என்ற சொல்லின் புதுச் சொல் விரிவு, புது மரபு விரிவு ஆகியவையே, வரலாற்றில் ஓட விடப்படும் ஒரு வண்ணத்திரைப்படம் போல நமக்குக் காட்டுகின்றன. மற்றொரு புறம் அதற்கிசைந்த உரை விளக்கங் களாக அவ்வூழிகளில் தமிழக, தென்னக, இந்தியப் பரப்புகளில் எழுந்த சாதிப்பெயர் மரபுகள் விளங்குகின்றன. மேலே காட்டியபடி, வேள் (பழம் பன்மை: வேளிர்) என்ற குடியரசு மரபுக் காலச் சொல்லுக்கு, இறைவன், சமய ஆட்சித் தலைவர், வேட்கோவர், (வேளார், பூசனையாளர், குயவர்), அரசியல் ஆட்சித்தலைவர், சமுதாய ஆட்சித்தலைவர், குடும்ப ஆட்சித்தலைவர், காதல் தலைவர் முதலிய எத்தனையோ பொருள்கள் உண்டு. ஆனால், உழவர் என்ற ஒரு பொருள் மட்டும் கிடையாது. இதற்கேற்றபடியே, இச் சொல்லின் புது விரிவாகிய வேளாண்மை, வேளாளர் என்ற சொற்களுக்கும் தொடக்க காலங்களில் உழவு, உழவர் என்ற பொருள்கள் இருந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் உழவர் வாழ்வையே விரித்துரைக்கும் தமிழரின் தனி இலக்கியத்துறை ஒன்று உண்டு. அது வேளாண் பாட்டு என்று இன்றுவரை அழைக்கப்பெறவில்லை. பள்ளுப்பாட்டு என்றே வழங்கப்பட்டு வருகிறது. (பள்ளர்-உழவர், பழனம்-வயல். மலையாள மாநில வழக்கு: செறுமர்-உழவர், செறு-வயல்) தவிர திருக்குறளில் உழவு என்ற ஓர் அதிகாரமே உண்டு. அதில் இச் சொற்கள் வழங்கப் பெறவில்லை. அதே சமயம், வேள்வி, வேளாண்மை ஆகிய இரு தொடர்புடைய சொற்களை நாம் தொடர்புடைய பொருள்களிலேயே விருந்தோம்பல், ஒப்புரவுடைமை, ஆள்வினையுடைமை ஆகிய அதிகாரங்களில் காண்கிறோம். ஆனால், இங்கே அவற்றின் பொருள் உழவு அன்று; அதிகாரப் பெயருடன் பொருந்திய நிலையில் அவற்றின் பொருள், உரையாசிரியர்களே காட்டுகிறபடி, ஒப்புரவாட்சி அதாவது அறிவாலும் முயற்சியாலும் பண்பாலும் நன்பொருள் ஈட்டி அதனைக் கொண்டு மக்கள் வாழ்க்கை வளப் பயிர் அல்லது மக்கட் பண்பு வளப் பயிர் வளர்த்தலாகிய இன உழவாண்மைப் பண்பு என்பதேயாகும். வேள்வி அல்லது வழிபாடு என்பதும் உண்மையில், இப் பண்புகளின் கனவியல் உருவான இறைமை வழிபாடு அல்லது இப் பண்பு பேணல் என்பதேயாகும். சங்க இலக்கியத்தில், பதினெண் கீழ்க்கணக்கு ஏடுகளில் ஒன்றான திரிகடுகம் 'வேளாளன்' என்ற சொல்லுக்குத் தரும் பண்பு விளக்கமும் இதுவேயாகும். அச் சொல்லுடன் தாளாளன், கோளாளன் ஆகிய சொற்களும் அப் பாட்டில் ஒரு நிலைப் படத் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. `வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்; தாளாளன் என்பான் கடன்படா-வாழ்பவன்; கோளாளன் என்பான் மறவாதான்: இம் மூவர் கேளாக வாழ்தல் இனிது. இங்கே தாளாண்மை என்பது, ஒருவன் கடன்படாமல் வாழ்தல், அதாவது தன் உழைப்பையே தான் நம்பி, பிறர் உழைப்பின் பயனாகப் பிறனைச் சார்ந்து வாழாமல், தானே ஈட்டும் தன்னாண்மை முயற்சியாளன் என்ற பொருளைச் சுட்டுகிறது. கோளாண்மை என்பது மறவாமை அதாவது, ஒருவன் கடமையும் குறிக்கோளும் மறவாது, ஈட்டுதல் வளத்துக்கு உரமாயுதவும் முறையில் பட்டறிவாலும் கல்வியாலும் ஆய்வாலும் பெறும் அறிவு கலைத் துறைகளின் பயிற்சி மறவாது கடைப்பிடித்து நிற்பது என்ற பொருள் தருவது ஆகும். இவ்விரு பண்புகளும் கருவிப் பண்புகள் மட்டுமே; ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு தொடரும் இவை வேளாண்மைக்குரிய படிகள், வேளாண்மையையே இலக்காகக் குறிக் கொண்டவை ஆகும். இக் குறிக்கோட் சொல் உண்மையில் வேளின் உழவாண்மை என்ற உருவகப் பொருளுடையதாய், குடியரசாட்சி குறிக்கொண்ட இலக்கான இன உழவாண்மை அதாவது மக்கள் வாழ்க்கை வள, பண்பு வளப் பயிர் வளர்த்தல் என்ற பொருள் காட்டுவதாகும். இலக்குப் பண்பின் பெயர் என்ற முறையில் வேளாண்மை என்ற சொல்லும் பண்பும் பொருளும், தாளாண்மை (அருந்திறலாண்மை), கோளாண்மை (இனவள அறிவாண்மை) என்ற மற்ற இரு கருவிப் பண்புகளையும் உள்ளடக்கியதேயாகும். திருவள்ளுவரும் அவரைப் பின்பற்றிய, சங்ககாலப் புலவர்களும் கம்ப நாடர் போன்ற பிற்காலத் தமிழ்க் கவிதை மரபினரும் மனித இன வாழ்வின் எல்லாவள ஆட்சி பண்பாட்சித் துறைகளையுமே - குடும்ப வாழ்வையேகூட - இனப் பேருழ வாண்மைத் துறைகளாகவே உருவகித் துள்ளனர் (தமிழ்ச் சொல் புலம்-அறிவு, வயல், துறை, நாடு). திருவள்ளுவர் வில்லை ஏராகக் கொண்டு வீரப்புகழ்ப் பயிர் வளர்ப்பவர் (வில்லேருழவர்) என வீரரையும், சொல்லை ஏராகக் கொண்டு சுவை நலப் பயிர், அறிவுப்பயிர், பண்புப் பயிர் வளர்ப்பவர் (சொல்லேருழவர்) எனப் புலவரையும் இன உழவராகவே மதித்தார். வேளிரையும் இதுபோலவே அவர் வீறாண்மை, திறலாண்மை, அறிவாண்மை, பண்பாண்மை ஆகிய ஏர்கள் கொண்டு மக்கள் வாழ்வு வளப் பயிர், பண்பு வளப்பயிர் (வேளாண்மை) வளர்ப்பவரெனவே கொண்டார் என்பதில் ஐயமில்லை, `நாடென்ப நாடா வளத்தன' என்று அவர் நாட்டுக்குத் தந்த விளக்கம் இதனைக் காட்டும். சங்க காலப் புலவர்கள் கற்புடைப் பெண்டிரை இது போலவே தம் இளமை நலமும் பண்பு நலமும் ஏராகக் கொண்டு கணவன் வீரம் பாய்ந்த மார்பையே நிலமாக உழுது குடும்ப நலம், வாழ்க்கை நலம், நாட்டு நலம் ஆகியவற்றை விளைவிப்பவர் என வருணித் துள்ளனர். மேலைக் கிறித்துவ உலகில், மக்கட் பண்பார்ந்த ஆன்மிக ஆட்சி யாளரை இதே மரபில் நின்றே சமயவாணர் இன மேய்ப்பர் (ஞயளவடிச, ளுயீசைவைரயட ளுhநயீhநசன) என்று குறிப்பது காணலாம். ஆனால், சமய ஆட்சியையும் குடும்ப சமுதாய ஆட்சியையும், நாட்டாட்சி, இன ஆட்சியையும் ஒரே ஆட்சியாகக் கொண்ட வேள்புலக் குடியரசு மரபில் வந்த தமிழர் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய அவ் இலக்கியல் குடிமக்கள் ஆட்சியில் தன்மையையே வேளாண்மை, வேள்வி என்றனர். அதனைப் பண்பாகக் கொண்ட பண்பாட்சியாளரையே (பண்பு சான்ற குடியரச ரையே) வேளாளர் என்றனர். இன்று இசைவேளாளர் என்றால் பாடும் வேளாளர் என்றும் வணிக வேளாளர் என்றுமே நம் காலத் தமிழர் எண்ணுகின்றனர். அத் தொகைச் சொற்களின் தமிழ் மரபுப் பொருள்கள் இவையல்ல; இசைக் கருவிகளை ஏராகக் கொண்டு இன்ப, பேரின்பப் பயிர் வளர்ப்பவர்கள், வாணிகத்தை அல்லது கடல்நில வாழ்வை ஏராகக் கொண்டு வாழ்வு வளப்பயிர் வளர்ப்பவர்கள் (தமிழ்ச் சொல் ஏர்-கலப்பை, அழகு, வாழ்க்கை நலம்) என்பவையே அம் மரபுக்குரிய பொருள்கள் ஆகும். வணிகர், வாணிகம் ஆகிய (வண்மை, வளம் ஆகியவற்றுடன் தொடர்புடைய) சொற்கள் தமிழில் மட்டுமன்று, சமக்கிருதத் திலும் உண்டு. ஆயினும் சமக்கிருத மரபில்கூட கடைவருண மாகிய மூன்றாம் வருணப் பெயர் `வேள்' என்ற பழந்தமிழ்ச் சொல் மரபில் வந்த பழைய இருக்குவேத மொழிச் சொல்லான விச் (நாட்டு மக்கள்) என்ற சொல்லடியாகவே மலர்ந்துள்ளது காணலாம். வேளாண்மை என்ற சொல்லின் மூலமுதற் பொருள் உழவு அன்று; வாணிகமும் அன்று; அது ஆளுபவர் ஆளப்படு பவர் வேறுபாடற்ற கனவியற் குடியாட்சிப் பண்பே என்பதை இது தெற்றெனக் காட்டுகின்றது. தொல்காப்பிய இலக்கணமரபில் மருதநில அல்லது ஐந்திணை நில ஆட்சியாளர் அல்லது தெய்வம் வேந்தன் என்றும், அந் நிலத்தின் அல்லது நிலங்களின் எல்லாக் குடியரசு மரபுக் குடியாளருமே வேளாளர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அம் மரபில் வேளாளர் என்ற சொல் மருத நிலம் வாழ் மக்கள் என்ற பொதுப் பொருளும், ஐந்திணை ஆளும் மக்கள் என்ற சிறப்புப் பொருளும் ஒருங்கே கொண்டதன் சூழல் விளக்கம் இதுவே! (ஏனெனில், மருத நிலமே அன்று நாடு, நாட்டின் அக நாடாக விளங்கிற்று. இது கீழே விளக்கப்பட விருக்கிறது.) 'வேளாண்மை என்ற சொல்' இன்று உழவாண்மை என்ற நேரடிப் பொருளில், சில பல நூற்றாண்டுகளாகவே வழங்கத் தொடங்கியுள்ளது. ஆனால் அச்சொல் தொடக்கத்தில் உவம உருவக சொல்லாய், இன உழவாண்மை அதாவது குடியரசு பண்பாட்சியே குறித்து, உவம - உருவகப் பொருளும் வேள் என்ற வேர்ச்சொற் பொருள்களும் பண்புகளும் மரபுகளும் மறக்கப் பட்ட பின்னாட்களிலேயே உழவாண்மை என்ற நேர் பொருள் சுட்டத் தொடங்கிற்று என்னலாம். கிட்டத்தட்ட இதே காலச் சூழலிலேயே, பழந்தமிழ்ச் சொற்களான நூல் (ளுஉநைnஉந), பனுவல் (சுநளநயசஉh), பட்டாங்கு (ஞாடைடிளடியீhல) ஆகியவையும் பொருள் மரபு கெட்டழிந்து, புத்தகம் (நூல், பனுவல்), மெய்ம்மை அல்லது சாத்திரம் (பட்டாங்கு) என்ற பொருள்கள் சுட்டின. திருக்குறளையும் சங்க இலக்கியத்தையும் போலவே, தொல்காப்பியமும் ஒரே ஒரு நூற்பாவில் வேளாண்மைக்கும் உழவுக்கும் உள்ள இத் தொலைத் தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது. `வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது பிறிதூண் இல்லை' இங்கே உழுதூண் (உழுது ஈட்டிய உணவு உண்ணுதல்) பிறிதூண் (பிற வழியில் ஈட்டிய உணவு உண்ணுதல்) இல்லை (எதிர்மறை வலியுறுத்து) ஆகிய அரிய வழக்குகளின் பொருட் பண்புகளை உரையாசிரியரும் பிறரும் காணாது, குடியரசு மரபு மறந்த தம் கால மயக்கங்களுக்கேற்றபடி பொருள் கூறிச் சென்றனர். உழவு, உழைப்பு ஆகிய சொற் பகுதித் தொடர்புகளும் அவர்கள் கால ஊழி காணாதவை ஆகும். பேரரசன் அவுரங்கசீப் கிட்டத்தட்ட இந்தியா முழுதாண்ட நிலையிலும் தலையணி தைத்தும் வேதநூல் படி செய்துமே தம் வாழ்வு நடத்தினார். உலகில் எந்தப் பேரரசும் காணாத பெருவளம் பெருக்கிய இங்காப் பேரரசர், தம் உணவுக்குத் தாமே உழைத்தனர், தமிழக மரபிலேயே ஏகம்பவாணரும், சடையப்ப வள்ளலும் ஆயிரவேலி, ஆயிர ஏர் படைத்தவராயினும், தாமே முதல் 'ஏர் பிடித்து' உழைத்து உண்டு பிறரையும் உண்பித்தவர் ஆவர். தொல்காப்பிய நூற்பா குறித்த தமிழ்க் கருத்து மரபு இதுவே. வேளாளர் என்பவர் வள்ளுவர் பண்பு வழுவாது தாமே உழுது உண்டு (உழைத்துப் பெற்ற பொருளே தாமும் துய்த்து) அது கொண்டே உலகு புரத்தற்கும் உரியர். இது பிற்காலத்தவர் கருதியது போல வேளாளர்க் குரிய புகழ்ப் பண்பு அல்லது புலவர் பாடும் சிறப்புப்பண்பு அன்று-வேளாளர் என்ற சொல்லே குறித்த (வேள் நிலைப் பண்பாட்சியாளர் என்ற) பொருள் ஆகும். வேளாளர் இனத்துக்கே உரிய காப்பியம் என்று கருதத் தக்கது ஏர் எழுபது. அதனைப் பாடிய கம்ப நாடர் திருவள்ளுவரைப் போலவே வேளிர் பெருமைகள் (அரச மரபினர் பெருமைகள்), சமயவாணர் பெருமைகள் ஆகியவற்றையெல்லாம் வேளாளர் பெருமையாகப் பாராட்டத் தவறவில்லை. குடிமன்னர், பண்பு மன்னர், வணிக மன்னர் என்று அவர்களைப் புகழவும் அவர் தயங்கவில்லை. ஆனால், திருவள்ளுவர் வேளிருக்குரிய நேரடிப் பெருமையாகக் கூறியவற்றையெல்லாம் (வேள்வி, வேளாண்மை) அவர் உழவுக்கு, உழவர்க்கும் மட்டுமே உரியதாகப் பாடுகிறார். அவர் காலத்துக்குள் ஏற்பட்ட அரசியல், சமய, சமுதாய மாறுதல் களிடையே, வேள் மரபின் அம் மும்மரபுக் கூறுகளும் மறக்கப் பட்டு விட்ட நிலையையே இது காட்டுகிறது. ஆரிய (அதாவது இந்தோ-ஐரோப்பிய இன)ப் பேராய்ச்சியாளரான அறிஞர் ராகுல் சங்கிருத்தியாயனர் (ஏடிடபய வடி ழுயபேய என்ற தம் ஆராய்ச்சி யடிப்படையான கலை ஏட்டில்) அவ்வினத்த வரிடையே உழவும் ஏரும் புதிது புகுந்த காலநிலையை (கி.மு. 1000) நமக்குச் சித்திரித்துக் காட்டியுள்ளார். நாகரிக உலகில் உழவுக்கு முற்பட்ட ஐந்திணைச் சிறு பயிர்த் தொழிலுக்குரிய காலத் தொல் பழமையை இது நமக்குக் கருத்துருவில் வழங்குவதாகும். ஏனெனில், ஆரியர் அதனை நாகரிக உலகில் வந்து கைக்கொள்வதற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே அது நாகரிக உலகில், சிறப்பாகத் தமிழகத்தில் பரவி விட்டதாதல் வேண்டும். நாகரிக உலகில், ஆதி நாட்களில், உழவில்லாமலே, ஐந்திணைகளிலும், இயல்பான சிறுவளம் அல்லது செயல் முறையான சிறு பயிர்த் தொழில் வளங்கள் இருந்தன. இன்றைய நாகரிக உலகின் கூல வகைகள், காய் கனி பூ வகைகளில் பலவும் வளர்ப்பு விலங்கு புட்களில் பலவும், ஏரும் களைக்கொட்டும் வண்டிகளும் (சக்கரங்களும்) கூட அன்று கண்டுணரப்பட வில்லை. மேலே கூறியுள்ளபடி, குறிஞ்சி முல்லைப் படிகள் கடந்து, மனித இன நாகரிகம் மருத நிலத்தில் ஊன்றி ஐந்திணை யளாவப் பரவிய வேளாண்மை மலர்ச்சிக் காலத்திலேயே இவையாவும் உலகெங்கும் படிப்படியாக வளர்ந்தன. தொழில் (கூடி வினையாற்றுதல் தொழு, மாட்டுப்பட்டி; தொழுதி, கூட்டம்), பயிர், பயிர்ப்பு (நீடித்துப் பயின்று வருவது, நீண்ட காலம் பயிற்றுவித்துப் படைத்துருவாக்கி வளர்க்கப்படுவது; ஆயிரங்காலத்துப் பயிர் என்ற வழக்கு காண்க) என்ற தமிழ்ச் சொற்கள் இம் மலர்ச்சிகளையே சுட்டுகின்றன. இன்று எல்லாவகை ஆற்றல்கள், திறங்கள், அறிவுகள் உடைய மக்களும் சிற்றூர்களிலிருந்து நகரங்களில் வந்து குழுமி மீண்டும் சிற்றூர்ப் பரப்புகளின் மீது ஆட்சி பரப்புவது போலவே, மருதநில ஐந்திணை மலர்ச்சியூழியிலும் பேருழ வாண்மை பெருந்தொழி லாண்மை ஆட்சித்திறலாண்மை அருந்திற அறிவாண்மை பண்பாட்சி ஆகியவற்றில் பயின்ற மக்கள் எல்லாத் திணைகளிலு மிருந்து மையத்திணையான மருதத்திணையிலமையப் பெற்ற ஐந்திணை நாட்டுத் தலைநகரங்களைச் சூழவந்து கூடி மீண்டும் ஐந்திணையளாவப் பரவி உழவாட்சி, தொழிலாட்சி, வாணிக ஆட்சி முதலானவற்றில் தலைப்பட்டனர். புதிய கூலவகை களையும் புதிய பயிர் வகைகளையும் பயிர் முறைகளையும் கருவிகளையும் (ஏருழவையும்) புதிய கால்நடை பயிர்ப்பினங் களையும் (ஊயவவடந-செநநனiபே) மருத நிலத்துக்குக் கொண்டு வந்து அவற்றை மீண்டும் ஐந்திணைகளிலும் பரப்பியவர்கள் அவர்களே, விதை வளத்துடன் மண் வளமும் உரவளமும் கண்டு இயைவித்து வளம் பெருக்கியவர்களும், உழவுக்கும் உழவர்க்கும் வளம் தரும் கால்நடை வளர்ப்பு, பால் வளப் பண்ணை, வாணிகம், நெசவு, உலோகத் தொழில் முதலிய பிற தொழிலாட்சிகள் கண்டு பெருக்கியவர்களும் கலைகள் இயல்கள் அறிவு நூல்கள் படைத்துக் கோளாளராகவும் தாளாளராகவும் ஒருங்கே விளங்கியவர்களும் இந்த இன உழவாட்சியாளராகிய பெரு வேளாளரேயாவர். இங்ஙனமாக, இந்தியாவில், முடியரசின் முதல் இரு ஊழிகளில் பிராமணரும் வேளாளரும் (தமிழ்: வேளாளர்-இன உழவாளர்; அந்தணர்-அந்தண்மை அதாவது மழையின் பண்பு உடையவர்; பார்ப்பார்-வாழ்க்கை இலக்கு நோக்குபவர்) உட்பட்ட ஆட்சிப் பெருங்குடி மக்கள் ஐந்திணைகளிலிருந்தும் வந்து மருத நிலத்தில் குழுமி, திணை மரபு கடந்த புதிய சமுதாயத்தின் ஆளும் வகுப்பினராய்ப் பரவினர். அவர்களில் பெரும்பாலோர், ஆட்சியிழந்த பழைய வேளிரும் வேள்புலக் குடியரசு மரபில் வந்த தன்னாட்சியாளருமேயாவர். அவர்கள் பேணிய பிறப்பு மரபு முற்றிலும் நேரடியான ஆதி மனித இனப்பிரிவுக்கு (கூசiயெட டீசபயnளையவiடிn) உரியது அன்று; நேர் மாறாக, அது குடியரசு மரபில் வந்த அதன் நாகரிக உலகச் சமுதாய மலர்ச்சி வடிவமேயாகும். அத்துடன் மேலே குறித்தபடி (கீழே விளக்கப்படும் முறையில்) முதலிரு ஊழிகளிலும் மன்னர் வழங்கிய பட்டங்கள் இப் பெரு வகுப்பினரின் தொகையைப் பெருக்கியதுடனன்றி, (மேலையுலகப் பெருமக்கள் பட்டங்கள் போலவே) வழி வழி மரபுத் தொடர்பையும் வலியுறுத்தின. பட்டங்களின் வேறுபாட்டால், அவர்களிடையே மரபு வேறுபாடுகளும் பெருகின. வேளாளர் என்ற ஒரே நாகரிக சமுதாயத்தின் தேசிய இனம் இதனால் மூவகுப்புகள், அவற்றின் சாதி மரபுகளாக நாளடைவில் பிளந்து தகர்வுற நேர்ந்தது. பொதுவாக, முதல் இருதள ஊழிகளிலேயே, பொது மக்கள், பெருமக்கள் என்ற இருவகுப்பு வேறுபாடு மெல்லத் தலை தூக்கிற்று என்னலாம். ஏனெனில், குடியாட்சியில் ஆள்வோர்-ஆளப்படுவோர் வேறுபாடு கிடையாது. ஆனால் முடியாட்சியில் தொன்றுதொட்டு நிலவிய தனி உயர்வு பெறாத பழங்குடிகளே பெரிதும் பொதுநிலை மக்களாயினர். புதிய குடியாட்சி மரபினரும் (தன்னாட்சி நகர், தன்னாட்சித் தொழிற் குழுக்கள் ஆகியவை சார்ந்தவர்களும் அவர்களுடன் வந்த அருந் திறலாளர், அறிவாளர், பெருந்தொழிலாட்சியாளர், முடியரசரால் உயர்த்தப் பட்டவர்கள் ஆகியோரும்) பெருமக்கள் வகுப்பாக திரண்டனர். மேலே கண்டபடி, குடியாட்சி மரபின் புதுமலர்ச்சி யால் வந்த வாணிகத் தொழில் நிறுவனக் குழுக்கள் தன்னாட்சி நகரக் குழுக்கள் ஆகியவையும் புது மரபுகளாக இணைந்து பெருமக்கள் வகுப்பைப் பெருக்கின. வழி வழி மரபாக வந்த பட்டங்கள் அவர்கள் உயர்வுகளின் அல்லது பிரிவுகளின் சின்னங்கள் ஆயின. தமிழகம், தென்னகம் உட்பட இந்தியா எங்குமே (புற உலகில் கூட) இம் மன்னரூழிக் காலப்பட்டங்களே பல சாதி மரபு, குடிமரபுகளின் பெயர்களாகவோ அல்லது மரபுச் சின்னங் களாகவோ அல்லது அதன் மதிப்புக்குறியீடுகளாகவோ பெயருடன் ஒட்டிய குடிப்பெயராக வழங்குவது காணலாம். இயற்பெயர்கள் போலன்றி தூய தாய்மொழிச் சொற்களாய், அதாவது தாய்நில தாய் இனமரபுச் சொற்களாய் விளங்கும் இப்பெயர்கள், மனித - இன வரலாற்றாய்வுத் துறையில் உயிர்நிலை முதன்மையானவை என்று கருதத்தக்கவை ஆகும். பட்டங்களின் எல்லையும் சாதிமரபுகளின் எல்லையும் எப்போதும் முற்றிலும் ஒன்றுபட்டு நிலவுவதில்லை. சில பட்டங்கள் சாதி அல்லது சாதிக்குழு குறிப்பவையாகவும், சில பட்டங்கள் வேறுவேறு சாதி மரபு, வருணமரபுகளுக்கிடையில் விரவியவையாகவும் வழங்குகின்றன. ஏனெனில், சாதி மரபுகள் என்பவை குடி மரபு, குல மரபு, வகுப்பு மரபுப் பட்டங்களின் வேறுபாடுகள், தொழிற்குழுக்கள் தன்னாட்சிக் குழுக்கள் முதலிய பல்வேறு மரபுகள் வழிவந்தவை ஆகும். அத்துடன் மூன்றாம் ஊழிக்காலத்தில் புதிய வகுப்பு பரப்பிய வருணமுறையாட்சியில் சாதி மரபுகளின் படிநிலையானது வகுப்பினுள் மட்டுமின்றி வகுப்புக்கு வகுப்பு அதாவது வருணத்திற்கு வருணம் என்ற நிலையிலும் உயர்த்தப்பட்டும் தாழ்த்தப்பட்டும் மாறுபட்டு வந்தது. வேள்புலக் குடியரசர் ஊழியில், மேலே சுட்டியபடி, வகுப்பு வேறுபாடே கிடையாது. அறிஞர் ரூசோ(18ஆம் நூற்றாண்டு), அறிஞர் கார்ல் மார்க்ஸ் (19ஆம் நூற்றாண்டு) ஆகியோர் இதனையே ஆதி சமதரும அல்லது ஆதிப் பொதுவுடைமைச் சமுதாய ஊழி என்று குறித்தனர். அத்துடன், இவ்வூழியில் கோவரசர் அல்லது குடியரசருடன் அவர்கள் சார்ந்த குழுவின் எல்லாக் குடிமக்களும் உறவினரே-பிறப்புவழியுறவு, மணவழியுறவு அல்லது இவற்றிற்கு ஈடான உடன் வாழ்வுறவு, அல்லது உணர்வுறவு அல்லது மரபுறவு அல்லது பண்புறவு பேணியவர்களேயாவர். வேளிர் வழி வந்த முடியரசரும் பிறரும் தொடக்கத்தில் இம் மரபு மறவாது அதனை உணர்வு வழி மரபாகக் கொண்டவர்களேயாவர். உறவு முறைகளைச் சமுதாய எல்லை முழுவதிலும் கணித்து எண்கணிப்புப் போலப் பரப்பி உறவுப் பெயரிடும் ஆற்றல் இன்னும் உலக மொழிகளிடையே தமிழுக்கு மட்டும் உண்டு என்பது ஓர்ந்து காணத்தக்க செய்தி ஆகும். மானியங்கள், சிறப்புரிமைகள் ஆகியவற்றுடன் சேர்த்து மன்னர் வழங்கிய பட்டங்களில் தலையானவை, இத்தகைய உணர்வுறவுத் தன்மை வாய்ந்த உறவுமுறைப் பட்டங்களேயாகும். அதே சமயம் அப் பட்டங்களைப் பெறுபவரின் அறிவு, திறமை, பதவி, சேவை, தனி மரபுகள், தனித்துறைச்சிறப்பு ஆகியவற்றைக் குறிப்பவையாகவும் பல பட்டங்கள் அமைந்தன. பண்டை ஆய்வேள் மரபில் வந்து அரச, பேரரச மரபினராகவே ஆண்ட யாதவரும் இரட்டரும் அம் மரபுகளே சுட்டிக் கோன், கோனார்(கோவரசர்), மாதவர், ரெட்டி (ராஷ்ட்ரம்-வேள் என்ற சொல்லின் மரூஉ; ச்ரேஷ்டி-முதலியார் என்பதன் மரூஉ எனவும் கொள்வதுண்டு) என்றும் வழங்கப் பட்டனர். ராஜு(ராஜ்-வேளிர்), ராயர் அல்லது அரையர் (அரசர்:அரை, வரை-மலை), முத்தரசர், முத்தரையர் அல்லது முத்துராஜா (முத்து-அரசர்; மூன்று தரை ஆண்டவர் என்று கொள்வதும் உண்டு) முதலியவையும் இது போன்றவை யேயாகும். வேளிர் அல்லது வேள் குடியினர் அல்லது அதற்கு ஈடான சிறப்புப் பெற்றவர்கள் மன்னரால் சிற்றரசர் அல்லது இளவரசராகக் கருதப்பட்டு பிள்ளை என்ற பட்டம் வழங்கப் பட்டனர். முடியரசுக்குரிய கூரிய அல்லது முக்கதுப்புடைய மணிமுடியன்றி (ஊசடிறn) இளவரசன் அணியும் வளைவானமுடி (பண்டைத்தமிழ்: மண்டை; ஆங்கிலம்; ஊடிசடிநேவ) பண்டை வேளிருக்குரியதேயாகும். உலகெங்கும் பெருமக்கள் அணியும் தலைப் பாகைக்குரிய மூலமரபு இதுவே என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது ஆகும்! மேல்கடற்கரையில், யூதர் அல்லது சிரியா நாட்டுக் கிறித்துவ வணிகரும் அரபு நாட்டு இசுலாமிய வணிகரும், இதற்கு ஈடான பட்டமாக மாப்பிள்ளை (ஆயயீயீடைடயள சிரிய கிறித்துவர்; ஆடியீடயாள, அராபிய இசுலாமியர்) என்று சிறப்பிக்கப்பட்டனர். தந்தை பெயர் பிள்ளைக்குப் பட்டமாவதுபோல, சமுதாய ஆட்சித் துறைகளிலும் சிறப்புவாய்ந்தவர்க்கு மன்னர் தம் பெயர், மரபுப்பெயர், விருதுப்பெயர் ஆகியவற்றையே பட்டமாக அளித்தனர். மன்னர் மரபினரேயன்றி மன்னரை வென்ற பிற மன்னரும் அவர்களின் படைத்தலைவரும் துணைவரும் வெல்லப்பட்டவர் பெயர்களை விருதுப் பெயர்களாக ஏற்றனர். இதனால் பல்லவரும் கலிங்கரும் அவர்களை வென்ற அரசரும் படைத் தலைவர்களும் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட வரும் ஒருங்கே பல்லவராயர், காலிங்கராயர் போன்ற பட்டங்கள் தாங்கினர். (வேளாளரிடமும் அவர்களுடன் ஒத்த வேறுபல மரபினரிடமும் இவற்றை நாம் இன்று காணலாம்) பிள்ளை, மாப்பிள்ளை என்பது போன்ற, ஆனால், அதனினும் மதிப்புமிக்க பட்டமாக தம்பி, தங்கச்சி, நம்பி, நம்-தம்பி, (நம்பியார்-கேரள மக்கள்திறக் குருமார்), நம்பூதிரி (நம்பிதிரு), தம்பிரான் (திருவாங்கூர் அரசன் தந்தைமரபு), எம்பிரான் திரி (எம்பிரான் திரு) சாமூதிரி(சாமிதிரு) போன்ற பட்டங்கள் வேள் நிலையிலேயே உரிமையுடன் வாழ்ந்த பெருமக்கள், சமயகுருமார் ஆகியோருக்குத் தரப்பட்டன. அரசகுருவாக மூன்றாம் ஊழியில் உயர்த்தப்பட்ட பெருங்குடி மக்களும் பிறரும் அவ்விரு ஊழிகளிலுமே ஐயர் (தந்தை), ஐயங்கார் (ஐயன்-தந்தை, காரு (தெலுங்கு மொழியின் மதிப்பு விகுதி), ஐயா (தந்தை, பாட்டன்), போற்றி (நாஞ்சில் நாட்டு வழக்கு: பாட்டன், போற்றுதற் குரியவர்) எனச் சிறப்பிக்கப் பட்டனர். வட இந்தியாவெங்கும் பண்டிதர் (காசுமீர பிராமணர்), பண்டா (ஒரிய பிராமணர்), பண்ட் (வடமாநிலப் பிராமணர்), பட்டர் (படித்துப் பட்டம் பெற்றவர்) என்ற விருதுகள் வழி வழி மரபாகிச் சாதிமரபு (பெரும்பாலும் பிராமண மரபு) குறிக்கின்றன. அரசியல் வகுப்பாக மாறாத நிலையில், இந்தியாவெங்கும் கோயில் குருமார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவே வாழ்கின்றனர். தமிழகத்தில் ஆண்டி (ஆண்டை-கடவுள், முருகன்), பண்டாரம் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பண்டை அன்னை வழிபாட்டாளர் மரபு (கடவுளடியார் வகுப்பு) நிலையும் இதுவே. அது தென்னகத்தில் இசை வேளாளராகவும் வடமேற்கு இந்தியாவில் நட், நட்வர் எனும் தாழ்த்தப் பட்ட மரபாகவும் நிலவுகின்றது. சங்ககாலத்தில், வணிகராவோர், செட்டி - எட்டி காவிதி எனப் படிப்படியாக உயரிய பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தனர். இவற்றுள் செட்டி (செட்டு-கட்டுதிட்டம்), வாணிகக்குழு; சமக்கிருதம்: ச்ரேஷ்டி; குசராத்தி: ளுhநவவல, ளுயவை) மட்டுமே இன்று வழங்குகிறது. பன்னாட்டு வாணிகம் கடல் வாணிகம் சுட்டிய மற்ற இரு பட்டங்களும் வழக்கிறந்தன. படைத்துறை, கப்பல்துறை, கப்பற்படைத்துறை ஆகியவற்றின் சார்பில் படையாட்சி (வன்னிய மரபினர்), முதலி (படைமுதலி-டுநைரவநயேவே), நாய்கர் (நாய்கன், மாநாய்கன் - கப்பல் தலைவன், நாவாய்-கப்பல்), நாயர் (ஐதர் அலி காலம்வரை கேரளப் படை வீரமரபினர்), நாயுடு (அவுரங்கசீப் காலம்வரை ஆந்திரப்படைவீரர்) என்ற பட்டங்கள் வழங்கின. அயலாட்சிக் காலத்திலும் இன்னும் கூட நாயக் என்பது (டுநைரவநயேவே சூயமை) படைத் துறைப் பட்டமாகவே வழங்கி வருகிறது. குடும்ப மரபுத் தொழிலாகிய நெசவுத் தொழில் உயர்வுடையதாகக் கருதப்பட்டதனால், அத்தொழிலாளர் சேணியர் (சேண்-உயர்வு), சாலியர் (சால், சால்பு-மேன்மை), ஆரியர் (ஆர்-நிறைவு), பட்டாரியர் (படு-முனைப்பான, அல்லது பட்டாசாரியார்; பட்டம், ஆசிரியர்) எனச் சிறப்பிக்கப் பட்டனர். விசுவாமித்திரர் மரபில் வந்த ஆரிய வேள்விக்குருமார், வேள்வி சார்ந்த கலைகளான (வேதாங்கங்கள்) மருத்துவம், அறுவை, வானூல், நிலக்கணிப்பு ஆகிய துறை அறிஞர் ஆகியோர், சோமாசி (சோமயாஜி, சோமயாகம் செய்தவர்), சட்டர்ஜி (சத்ரஜித்-சத்ர-வேள்வி, வீரம்), ஆசிரியர் அல்லது ஆசாரியர் (ஆச்சாரி என்ற தமிழ் வடிவில் பிராமண மரபு, ஆசாரி என்ற தமிழ் வடிவில் கம்மியர் மரபு), வேளார் (குயவர் அல்லது வேட் கோவர்) ஆயினர். மூன்றாம் ஊழியில் இவர்களில் பலர் நடுத்தரவகுப்பினும் கீழ்நிலைப்படிகளுக்குத் தாழ்த்தப்பட்டு அணிமைக் காலங்களில் இடங்கை வலங்கைப் போராட்டத்தில் இடங்கையராக நின்று போராடும் நிலைபெற்றனர். சௌராட்டிர நாட்டுப் பிராமணர், கேரளத்தில் அப்பளமிடும் பிராமணர், நாடகமாடும் பிராமணர் ஆகியோர் நிலையும் இதுவே. மூன்றாம் ஊழிக்காலத்தில், குடியரசு மரபில் வளர்ந்த புத்த சமண சமயங்களில் நீடித்த பெருமக்கள் வகுப்பினர் (வேளிர் அல்லது சத்திரியர்), வட மாநிலத்தில் நான்காம் வகுப்பினர் (சூத்திரர்) ஆக்கப்பெற்றனர் என்பதைப் பேரறிஞர் பண்டாரகர் அம்பேத்கர் (றுhடி ஹசந ளுரனசயள?) விளக்கியுள்ளார். குடியரசு மரபில் வந்த ஊர்க்கணக்கர் மரபு, தென்னகத்தில் கருணிக வேளாளராகவும் (வள்ளலார் பெருமான் பிறந்த மரபு), குசராத்தில் நாகர பிராமண மரபாகவும் வட இந்தியப் பரப்பில் நாகரி எழுத்தைப் படைத்து வழங்கிய காயஸ்த பிராமண மரபாகவும் இயல்கின்றது. உழவுத் தொழிலில் சிறந்தவர்க்கென்று, தமிழகத்திலன்றி வேறு எந் நாட்டிலும், சங்க காலத்திலன்றி வேறெக்காலத்திலும் அரசரால் தனிப் பட்டம் வழங்கப்பட்டதாக அறியக் கூடவில்லை. அத்துடன் அந்நாளில் வேளிர் மரபினரின் ஒரு பகுதியினர் மட்டுமே தனிப்பட அருந்திறப் பெருந்தொழிலாய் அன்று நிலவிய இத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்று கருத இடம் உண்டு. ஏனெனில் கிழார் என்ற இதற்குரிய பட்டம் பெற்றவரும் பெறாதவரும் சங்க காலத்தில் இம் மரபுக்குரிய புலவர்களுள் இடம் பெற்றிருந்தனர் என்று காண்கிறோம். உயர் உழவாண்மையை உள்ளடக்கிய வேளாண்மை மலர்ச்சி சங்க காலத்துக்கு முன்னரே பெருகத் தொடங்கி விட்டது என்பதை இது காட்டுகிறது. சங்க காலத்துக்குப் பின்னோ, படிப் படியாக நாட்டின் மற்றத் தொழில்கள், வாணிகம் ஆகியவற்றைத் தாண்டி உழவாண்மையே பெரும்பாலார் தொழிலாகி (பஞ்சம், வறுமை காரணமாக) வளர்ந்து விட்டதனால் வேளாண்மை என்ற பெயரே நாளடைவில் உழவாண்மை என்ற நேரடிப் பொருள் கொள்ளத் தொடங்கிவிட்டது. தொழிலிலும் வாணிகத்திலும் செல்வ வளத்திலும் கல்வி வளத்திலும் உலகில் முதலிடம் வகித்த தமிழகமும், இந்தியாவும், சீனமும், கீழை நாடுகளும் அணிமை அயலாட்சிக் காலங்களி லேயே (கி.பி. 16ஆம் நூற்றாண்டின் விசயநகர ஆட்சிக்குப் பிற்பட்டே), திடுமெனச் சரிவுற்று, மீண்டும் முற்றிலும் சிறுதிற உழவும் சிறுதிற அரைகுறைக் கல்வியும் சிறு கைத்தொழிலும் நம்பி வாழ வேண்டிய பண்பிலா அடிமை வறுமைப் பரப்புகளாக மாறின. அயலாட்சியாளர், மேலையுலகப் புதிய முதலாளித்துவ வேட்டையாளர் ஆகியோருக்கும் கீழையுலகச் சாதி வருணக் குழுநல வேடருக்கும் இந் நிலை ஒருங்கே உகந்ததாயிருந்தது. தேசியத் தலைவர்கள் கூட வரலாறும் மரபும் மறந்த இந்தச் சூழ்நிலையே பண்டை இந்தியா, என நம்பி அதனைக் கிராம இந்தியா, எளிய வாழ்வு வாழ்ந்த இந்தியா, ஆன்மிக இந்தியா என அயலாட்சி வகுப்பினர் காதுகளுக்கினிதாகப் பாடிவந்தனர். (கார்ல் மார்க்சும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றறிஞர் சிலரும் இம் மயக்க மாறாட்டத்தைக் கடிந்து மெய்ம்மை சுட்ட முயன்றுள்ளனர்). கோவரசு மரபின் மூவொருமை இறைமை மலர்ச்சியுடன் மலர்ச்சி யாகவே தமிழர் முப்பால் அல்லது மூவேதம் (பழைய ஆரியரின் மூவேதம் இதே மரபினதே), முப்பால் நெறி, முத்தமிழ், இவற்றுடனொத்த தொழில், கலை, அறிவுத் துறைகளின் மும்மை நூல்களில் பயின்றவர் என்ற முறையிலேயே பண்டைச் சமய குருமாருக்கும் தொழிலாசிரியருக்கும் (அம் மரபிலே இன்று பிராமணர் கம்மியர் போன்றோருக்கும்) முப்புரி அல்லது மும்மை முப்புரிநூல், படித்தவர் என்ற சிறப்புத் தோன்ற மதிப்புச் சின்னமாயிற்று. அக ஆட்சிச் சின்னமாகிய மூன்று முடியிட்ட தாலி மரபினை ஒத்த புற ஆட்சிச் சின்னமே இது என்பது- நோக்கத்தக்கதாகும். (வெற்றிச் சின்னமாகிய பொட்டு நெற்றியில் இடப்படுவது போல, ஆட்சிச் சின்னங்களாகிய இவை கழுத்திலும் தோளிலும் அணியப்படுகின்றன). தமிழரிடையே நான்காம் வேதம் என்ற மரபு, திருக்குறளில் முப்பாலுக்கு ஆன்மிகத் திறவுகோலாக வைக்கப் பெற்றுள்ள பாயிரம் (அகல் இந்திய மரபில் உபநிடதம், ஆகமம் போன்றது) குறிப்பதாகும். அரசகுருவினராக விளங்கிய மூன்றாம் ஊழிக்குரிய புதிய வகுப்பினர் இதே மரபில் தமக்கென வகுத்துக்கொண்ட நான்காம் வேதமே அதர்வ அல்லது அதர்வண வேதம் (அதர்வன்-அரசகுரு) ஆகும். தமிழகத்துக்கு வெளியே நால்வேத மரபு முற்றிலும் பரவாத நிலையின் விளக்கம் இதுவே. நாகரிக உலகினின்று இந்தியா வேறுபட்டு உயர்வுற்று வழிகாட்டும் தலைமை நிலையே வகிப்பதற்குக் காரணமா யிருந்தது வேள்புலக் குடியாட்சி மரபும் அதன் வழியிலிருந்து பெரிதும் விலகாதிருந்த (ஐங்குரவர் மரபு பேணிய) ஆதி முடியரசு மரபுமேயாகும். ஆனால் இந்தியா வேறு பட்டதனுடன் அமையாமல், முதலில் சமய சமுதாய அறிவுப் பண்பாட்டிலும் பின் தொழில் வாணிகச் செல்வவளங்களிலும் படிப்படியாகத் தாழ்ச்சியுற்று அடிமைக் கீழ்திசையின் அடிமை நாயகமாக மாறி வந்தமைக்கு முடியரசின் இரண்டாம், மூன்றாம் ஊழிகள், சிறப்பாக மூன்றாம் ஊழியே காரணம் ஆகும். அவ்வூழிகளில் முற்றிலும் மறக் கடிக்கப்பட்டு வந்துள்ள குடியரசு (தமிழ்) மரபுகளும், குடியரசுப் பண்புகளும் பண்பாடுகளுமே உயிர் மலர்ச்சியிழந்த சாதி வருண மரபு, அதன் சார்பால் சம நிலையுணர்வும் உயிர்த்துடிப்புமற்ற இந்து சமய வாழ்வு, இந்திய தேசிய வாழ்வு ஆகியவற்றைச் சீரமைத்து உயிர்ப்பூட்ட வல்லவை ஆகும். அதற்குரிய திறவு மேலையுலக நாகரிக மரபில் இல்லை. தமிழ் மரபில், கொங்குத் தமிழக மரபிலேயே பொதிந்து கிடக்கிறது. நாகரிக உலகில் இந்தியாவின் வேறுபாடுகளை மட்டுமின்றி, இந்தியாவில் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்குப் பரப்புகள், தென்னகம், தமிழகம் ஆகியவற்றின் வேறுபாடுகளையும், அவற்றுள் கொங்குத் தமிழகத்தின் தனித் தன்மைகளையும் முத்தள ஊழிகளின் செயற்பாடுகளே விளக்குகின்றன. இந்தியாவின் வடமேற்கு, வடக்குப் பரப்புகளில் ஆட்சியாளரிடையிலும் பழைய ஆட்சி வகுப்பாகிய நடுத்தர வகுப்பினரிடையிலும் அயலினத்தவர் மிகுதி கலப்புற்றிருந்தனர். புதிய வருணமுறைச் சமுதாயத்தில் எளிதாகத் தம் உயர்வை நிலைநாட்டிக் கொள்ளும் ஆர்வத்தால் அவர்கள் புதிய வகுப்பினருடன் மனமார ஒத்துழைத்து இரண்டாம் அல்லது மூன்றாம் வருணமாக இடம் பெற்றனர். வேளிர் மரபை விடாது காத்த இராசஸ்தான் (இரசபுதனம்: ராஜ், ரஜபுத்ர-வேள்) பரப்பின் வீர மக்கள் புதிய இசுலாமியப் படையெழுச்சியைத் தடுக்க உதவிய நிலை ஏற்பட்டபோது அவர்களுக்கு தனிச்சலுகையாக அக்கினி மரபு என்ற புதியமரபு படைத்துருவாக்கி ஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஆனால், முகலாய ஆட்சி, சிறப்பாக அக்பர் ஆட்சி, புதிய வகுப்பினரை மேலும் உயர்த்திய நிலையிலேயே அதே வேளிர் மரபினராகிய மராத்தியர், தென்மராத்தியராகிய கொங்கணியர் (சிவாஜி மரபினர்) ஆகியோருக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது. (வான்புகழ் அறிஞர் அண்ணாவின் சந்திர மோகன் நாடகம் இக் காட்சியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது). தமிழகத்திலிருந்து குடியரசு மரபிலூறிய கொங்குப் பரப்புக் கடந்தே வடபால் பரவிய சைவ, வீரசைவ, வைணவ சமய எழுச்சிகள் காரணமாக, கோயிற்குருக்கள் உட்பட்ட பழைய ஆட்சி வகுப்பினர் அனைவரிடையேயும் (பக்திப் பண்பில் ஈடுபட்ட புதிய வகுப்பினரிடம் கூட) சாதி வருண எதிர்ப்பு முனைப்பாயிருந்தது. (பகவத் கீதையும்) ஞான தேவரது பகவத்கீதையின் மராத்திய மொழிபெயர்ப்பும் இதற்கு முனைப்பான சான்றுகள் ஆகும்). இப் பரப்புகளே புத்த சமண நெறிகள் நீடித்து நிலவிய பகுதிகள் ஆகும். ஒரே வருணம் என்ற முறைமை தென்னகம் முழுவதும் செயற்படுத்தப்பட்ட நிலைக்குரிய விளக்கமும் இதுவே. வடமாநிலத்தைப் போலவே இத் தென்பரப்பிலும் பழைய ஆட்சி வகுப்பினர் அனைவருமே நான்காம் வகுப்பு (சூத்திரர்) என்ற புதிய இடைநிலை வகுப்பில் சேர்க்கப் பட்டனர். இந்தியாவின் மேல்கோடியிலும் (பாக்கிஸ்தானின் சிந்து மாநிலத் திலும்) கீழ் கோடியிலும் (வங்காள தேசத்திலும்) இந் நான்காம் வகுப்பு மரபு பரப்பப்படவில்லை. இதே பரப்புக்கள் சோழ, சாளுக்கிய ஆட்சிகளுக்கும் உட்படாது தமிழ் இந்திய நாகரிகப் பரப்பின் புறப்பகுதிகளாகவே அமைந்தன. இந்நிலையிலேயே இவ்விரு கோடிகளிலும் வரலாற்றுக் காலங்களில் இசுலாமும் அயற்பண்பாடுகளும், எளிதில் காலூன்றி, அவற்றை அணிமைக் காலங்களில் இந்தியாவின் அண்டை நாடுகளாக்க நேர்ந்தது. கொங்கு நாட்டைப் போலவே தொண்டை நாடும் குடியரசுப் பரப்பாக அமைந்தபோதிலும், அது அம் மரபின் சமதருமப் பண்பை (வருணமுறை எதிர்ப்பை) விட சமய அறிவுப் பண்பிலேயே பெரிதும் கருத்தூன்றிற்று. பல்லவர் கால முதல் அது பண்டைக் குடியரசு கால இந்தியாவின் (தமிழ் அல்லது மாண்டுபட்டதாய் மொழிகளின்) கலை யறிவுப் பண்டாரங்களை புதிய வகுப்புக்குரிய சமக்கிருத சமய சாத்திர இலக்கியக் கருவூலங்களாக வளர்ப்பதில் முந்திடம் பெற்றது. அதே சமயம் அதுவே சமய எழுச்சிகளிலும் சைவ, வீரசைவ மலர்ச்சிகள் பரவாத நிலையிலும் வைணவ மலர்ச்சியை-அதுவும் சாதி வருண மரபு எதிர்ப்பு இன்றியே-கிழக்கிந்தி யாவில் பரவவிட்டது. இதனால் கீழ்திசை வைணவம் சாதி மரபின் எதிர்ப்பில் முனைப்புக் காட்டவில்லை. ஆயினும் பக்தி இயக்கம் இதனால் செறிவு குன்றிவிடவில்லை. ஏனெனில் சைவ மூவருக்கும் முற்பட்ட மணிவாசகரின் உறு முனைப்பான பக்தி இயக்கமும் ஆழ்வார் களின் செறிவான பக்திப் பண்பும் இத்திசைப் பக்தி இயக்கமாகப் பரவிற்று; மற்றும், இப்பரப்புகளிலேயே அன்னை வழிபாடும் நீடித்துள்ளது. கொங்கு நாட்டின் மேல்பால் மேல் கடற்கரையும், அதன் மிகு தொலைவில் கீழ்பால் வங்கமும் தென் கிழக்காசியாவும், பெண்வழி ஆட்சித் தடம் முற்றிலும் மாறாமல் காத்துள்ளன. வேள்புலக் குடியரசு மலர்ச்சியின் ஆண் மரபு மலர்ச்சி முற்றிலும் சென்று பரவாத பரப்புகளே இவை. புதிய வகுப்பினைப் பெண்ணுரிமை மறுப்புக்குப் போராட வைத்த பரப்பு இதுவே என்னலாம். கல்வித் தெய்வம் (கலைமகள்), செல்வத் தெய்வம் (திருமகள்), ஆற்றல் தெய்வம் அல்லது ஆட்சித் தெய்வம் (மலைமகள்) ஆகியோரையே பண்டை இந்து சமயம் பெண் பாலராகக் கொண்டிருந்தது. ஆனால், சமக்கிருத மரபில் வந்த புதிய இந்து சமயமோ (சுமார்த்த இந்து நெறி) உச்ச உயர் வருணப் பெண்டிர், சீதை துரோபதை போன்ற காவிய அன்னையர், கலைமகள் மலைமகள் போன்ற பெண் தெய்வங்கள் உட்படப் பெண்பாலினம் முழுவதையுமே (சமக்கிருத நாடகங்களில் சமக்கிருதம் பேச உரிமையற்ற) கல்வியுரிமை, செல்வ உரிமை, ஆட்சியுரிமை மறுக்கப்பட்ட நான்காம் வகுப்பினராக்க முனைந்தது. பெண்கள் தம் சாதி வருண மரபினும் உயரிய மரபினருக்கே உரியவர் என்ற மரபு முறை இப் பரப்புகளில் செயற்படுத்தப்பட்டு வந்தது. இந்தியச் சட்டத்தில் மருமக்கள் தாயமுறை, தாய பாகமுறை போன்ற தனி வேறுபாடுகளுக்குரிய பரப்புகள் இவையே. சமக்கிருத இன்ப நூல்கள் (திருக்குறள் போன்ற தமிழ் மரபு நூல்களின் மரபினின்று விலகி) பெண்டிரை முற்றிலும் கவர்ச்சிச் சரக்காக்கிவிட முனைந்துள்ளன. தற்கால மேலையுலக நாகரிகமும் அதன் அடிவருடிகளான பல எழுத்தாளர் மரபுகளும் இன்று இதையே பின்பற்றி வருகின்றன. தமிழக, தென்னக, இந்திய வரலாறுகள் காட்டும் இந்தப் பின்னணியிலேயே நாம் கொங்குத் தமிழகத்தின் வரலாற்றை, சிறப்பாகச் சமய சமுதாயப் பண்பு பண்பாடுகளின் வரலாற்றைக் காண்டல் வேண்டும். ஏனெனில், கொங்கு நாட்டு மக்களும் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் திணைநில ஆய்வாளர் களும் காணும் கொங்கு நாட்டின் தனித்தன்மை என்பது உண்மையில் மேற்கண்ட மூன்றுதள ஊழிகளுக்கும் மிகுதி ஆட்பட்டு மாறுபடாத நிலையேயாகும். இத்தனித் தன்மையை நாம் முக்கூறுகள் கொண்ட தனித் தன்மையாக வகுத்துணரலாம். முதலாவதாகக் கூறத்தக்கது மிகு பழமை ஆகும். நாகரிக உலகம், இந்தியா, தமிழகம் ஆகிய பரப்புகளில் முடியரசின் மூன்று ஊழிகளிலும், சிறப்பாக இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும், முனைப்பாக மூன்றாம் ஊழியில் ஏற்பட்ட புது மாறுதல்கள் கொங்குப் பரப்பை அணிமை அயலாட்சிக் காலம் வரை, இன்றுவரை கூட, முற்றிலும் பாதிக்கவில்லை. எனவே கொங்கு நாட்டின் தனித்தன்மை இன்றைய கொங்கு நாட்டுக்கு மட்டுமே உரியதாயினும், அதன் பழமை தமிழக முழுமைக்கும் இந்தியாவுக்கும் நாகரிக உலகுக்குமே பெரிதும் உரியது ஆகும். இரண்டாவது கூறு, அத் தனித்தன்மையின் பழமை, அல்லது அப் பழமையின் தனித் தன்மை ஆகும். ஏனெனில், இத் தனித் தன்மைக்குரிய பழமையின் சாயல்கள் சங்க காலத்திலேயே, அதற்கும் முற்பட்டே தொடங்கியவை. அவை, கொங்கு மக்கள் உள்ளத்தில் ஊறி வழி வழி மரபாக வந்தவை; கொங்கு நாட்டின் ஐந்திணை நிலமரபில் பிறந்து வேள்புலக் குடியரசு மரபின் ஐந்திணை மலர்ச்சியில் அதன் பிறப்பிலிருந்தே மும்முறை வடிகட்டி வந்த தொன்மையும் பழமையும் தனிச் சிறப்பும் உடையவை. மூன்றாவது கூற்றினையே நாம், தெய்விகமாய் வந்தமைந்த கூறு என்னலாம். ஏனெனில், எல்லாத் தனித் தன்மைகளும் பழமைகளும் நல்லனவாய், கால இடங்கடந்த உலக நலன் அதாவது வள்ளுவ நலன் உடை யவையாய் இருந்து தீர வேண்டும் என்பது கிடையாது. ஆனால் கொங்குப் பழமையும் கொங்குத் தனித் தன்மையும், கடல் கொண்ட குமரித் தமிழக மரபில் தோய்ந்தவை. அவை வருங்காலக் கொங்குத் தமிழகத்துக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், நாகரிக உலகுக்கும் அகல் உலகுக்கும்கூட நீடு நலம் தருபவை - நீடு நலம் மட்டுமன்றி, அவற்றின் வாழ்வுக்கு, வளர்ச்சிக்கு இன்றியமையா உயிர் வளம் தருபவை ஆகும். கொங்கு நாட்டுக்கு வெளியிலிருந்து தமிழரும், தமிழினத்தவரும், இந்தியரும் நாகரிக உலக மக்களும் பேரளவாக வந்து கலந்துகொள்ளும், இன்னும் கலந்துகொள்ளவிருக்கும் நம் காலங்களில் கூட, அக் கலப்பு கொங்கு மக்களின் கொங்கு மரபை- கொங்கு மக்கள் சமுதாய அமைப்பு, பண்பு பண்பாடு ஆகியவற்றை நிலையாக மாற்றிவிட முடியவில்லை. ஏனெனில், அதன் ஆற்றல் பழமையாற்றல், தனித்தன்மை ஆற்றல் மட்டுமன்று. அது புதுமை ஆற்றலாகவும் உயிர்த் துடிப்பும் உயிர் மலர்ச்சிப் பண்பும் உடைய ஆற்றலாகவுமே இயங்குகிறது. அது புது வரவினர் பண்பை ஏற்றுத் தான் மாறுவதுடன் நில்லாமல், அவர்களையும் தன் இனமாக்கி இயைவிப்பது; தன் ஒப்பற்ற ஒத்திசைவாற்றலின் திறத்தால் அது நாளடைவில் அவர்களையும் தம் வயமாக மாற்றியமைத்து விட வல்லதாகியுள்ளது. இது வியப்புக்குரியதன்று. ஏனெனில், கொங்குப் பண்பு என்பது நாடு கடந்து, மொழி கடந்து, கால இடச் சூழல் கடந்து பரவ வல்ல தமிழர் இறைப் பண்பு, வள்ளுவப் பண்பு ஆகும் - உலக முழுவதற்கும் மனித இன நாகரிக முழுவதற்கும் உரிய பழமை நல, பயின்று வளர்ந்த பண்பு நலத்தின் மரபுத் திறம் அதுவே! சங்க காலத்திலிருந்தே, முடியரசின் முதலாவது இரண்டாவது ஊழிகளுக்கு முன்னிருந்தே, கொங்கு நாட்டு ஆட்சி முடியரசரால் முடியரசின் நேரடியாட்சியாக நடத்தப் பெறவில்லை. அது, வேள்குடி மரபில் வந்த தலைவர் மூலமான குடிமரபாட்சியாகவே இருந்து வந்தது. வேள் புலக் குடியரசர் ஆட்சிக் காலத்தில் கூட இதே நிலை இருந்திருக்க வேண்டும் என்னல் தகும். அவர்கள் ஆட்சி, இயல்பான மக்கள் வாழ்க்கை நலம், குடி சமுதாய நலம் ஆகியவற்றிலிருந்து மலர்ந்து, ஆண் பெண்பாலர் உள்ளடங்கலாக இயல்பான மக்கள் தலைமை மூலமே, மக்கள் மனமறிந்த மரபு நெறிகள் மூலமே நடைபெற்றது என்பது காண்டற்குரியது. ஏனெனில், அவர்களின் ஆட்சி மரபை வேளாளர்-வேட்டுவர் ஆட்சி மரபுகளாகப் பிரித்தாள முற்பட்ட வேற்றரசரும் சரி, மற்ற நாட்டரசரும் சரி-இரு சாராருக்கும் ஒரே பட்டமாகக் கொங்கர், குடவர் அல்லது கவுண்டர் அல்லது கௌடர், காமிண்டர் என்ற காவலுரிமை, ஆட்சியுரிமை விருதுகளே வழங்கினர். `கொங்கர்' என்ற இவ் விருதுப் பட்டம் காட்டும் உயரிய குடியாட்சிப் பண்பு அதாவது உயர்வார்ந்த தேசியப் பண்பின் திறம் நினைக்க நினைக்க இனிப்பூட்டுவதாகும் இவ்வினிப்பு, அதன் சொல்லும் பொருளும் கடந்த நாகரிக உலகின் ஒப்புயர்வற்ற பண்பினிப்பேயாகும். ஏனெனில், உண்மையான குடியரசுப் பண்பு வாய்ந்த ஒரு நாட்டில் அதன் பதவிகளி லெல்லாம் மிக உயரிய பதவி அந்நாட்டின் குடிமகன் (இக்காலத் தமிழ்ப் பொருளான அம்பட்டனன்று; பண்டைப் பொருளான குடியுரிமையாளன், ஊவைணைநn யனே ஏடிவநச டிக ய ளநடக-படிஎநசniபே னநஅடிஉசயஉல) என்ற பதவியேயாகும். குடியரசு நாட்டின் குடியாட்சி மரபில், எல்லாப் பதவிகளையும் வழங்கும் பெரும் பதவி அதுவே! எல்லாப் பதவியினருக்கும் உரிய இன்றியமையா அடிப்படைத் தகுதியும் அதுவே! இன்றும் உலகமொழிகளிலே, தமிழிலே கூட, `கொங்கர்' என்ற சொல் ஒன்றுக்கு மட்டுமேயுள்ள குடியரசு மரபுப் பண்பு, கூர்ந்து கண்டு வியந்து பாராட்டி மகிழ்தற்குரிய ஒன்றாகும். உலகின் வேறு எந்த மக்கட்சுட்டு வழக்கும், ஒரு நாட்டுக் குடிமக்கள் பெயராகவும் அந்நாட்டின் ஆட்சியுரிமை பெற்றவர்கள் பெயராகவும் இயங்கவில்லை, இயங்கியதில்லை! கொங்கன், கொங்கர் என்ற சொல் ஒன்று மட்டுமே கொங்கு நாட்டான், கொங்கு நாடாள்பவன் என்ற இரு குடியரசு மரபுப் பொருளும் ஒருங்கே தருகின்றன. சேரன், சோழன், பாண்டியன், தமிழன், இந்தியன், ஆங்கிலேயன் போன்ற எந்தச் சொற்களும் இம் மரபுச் சிறப்புடையனவையாய் இயங்கவில்லை என்பது தெளிவு. கொங்கு நாட்டுச் சாதி மரபினர் பலரும் தம் வினைதீர்க்கும் தாயத்து ஆகச் சாதிப் பெயருடன் கொங்கு என்னும் புனிதச் சொல்லை (தமிழ்: புனிது-பிறப்பிலிருந்தே தொடரும் தூய்மை) தொங்க விட்டுக் கொள்ள முனைவதில் வியப்பில்லை! கொங்கு நாட்டவரிடம் காணப்படும் தமிழ் மரபிலூன்றிய இந்த ஆழ்ந்த குடியரசுப் பண்பு பண்டும் அணிமைக் காலத்திலும் முடியரசர், முடியரசின் மூன்றாம் தள ஊழிக்கால அறிஞர் ஆகியோருக்குக் கண்ணுறுத்தலாயிருந்து வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தற்கால ஆராய்ச்சி யாளர்களின் ஆராய்ச்சிகளுக்கே அடிப்படை யாயுள்ள பழைய வரலாற்றுக் கையேடுகள், முடியரசரின் பட்டயங்கள், கல்வெட் டுகள், சாதி மரபினர்க்குரிய மரபு வரலாறுகள் ஆகியவற்றையே தன் வயப்படுத்திவிடத்தக்க கால வண்ணக் கலவையாக அது செயலாற்றி யுள்ளது. கால வண்ணத்தாலும் கால மயக்கத்தாலும் இடைக்கால அணிமைக் கால ஊழிகளில் போர் வீரர் என்ற பொருளுடைய மறவர் (மறம்: அறத்துக்கு மாறானது). அரசர் வேவுப் படையினரான கள்வர் (திருடர், கொள்ளைக்காரர்), குடியுரிமை குறித்த குடிமகன் (அம்பட்டன்), பொது மகன் (வேசி மகன்), பண்டைக் கோயிற் குருமாரைக் குறிக்கும் தேவராளன் (தேவடியாள்-விலைமகள்), கணியான் (வானூலார், சமயகுரு- பெண்பால்: கணிகை-வேசி), திரை மரபினரான திராவிடர் (ஓடி வந்தவர்), வேள் மரபினரான வேளாளர் (புது வடிவம்; வெள்ளாளர்-பெண்பால்: வெள்ளாட்டி-வேசி) ஆகிய சொற்களைப் போலவே கொங்குத் தங்க மரபில் வந்த `கொங்கன்' என்ற (முருகனின்) தெய்வ மரபு பெயருக்குரிய சொல்லும் பண்பற்றவன், வேலையாள் போன்ற இழிபொருள்களுடைய தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. சங்க காலப் பலகணி ஒன்று மட்டுமே, இவ்வகையில் தற்காலக் கொங்கு நாட்டு வரலாற்றாசிரியர் கண்களை மட்டுமன்றி, மரபு வரலாற் றாசிரியர்களின் கண்ணோட்டத்தையும் வரலாற்று வாய்மைகளின் மெய் வண்ணம் நோக்கிக் கொண்டு செல்ல உதவுவதாக அமைந்துள்ளது. இது வரும் பிரிவில் விளக்கப்பட விருக்கிறது. 3) கொங்கு நாகரிக வளர்ச்சி: வேளாளர்-வேட்டுவர் மரபு மலர்ச்சி தமிழ் என்ற சொல்லின் பண்பு விரிவே, பண்பு முனைப்பே கொங்கு என்பது. அது போலவே தமிழ், கொங்கு என்ற சொற்களின் மலர்ச்சி விரிவு, மலர்ச்சி முனைப்பே வேளாண்மை என்ற சொல் - அது கோமரபு, வேள் மரபு ஆகியவற்றின் மலர்ச்சி சுட்டிய சொல் ஆகும். இது போலவே, பழ கொங்கம் என்ற கொங்கு நாட்டின் சிறப்புப் பெயரிலும் அந் நாட்டின் ஒரு பகுதியான மழநாடு என்ற பெயரிலும் இடம் பெற்ற மழ என்ற உரிச்சொல் வீரம், அழகு, இனிமை, இளமை என்றென்றும் நின்று நிலவிச் சாவா மூவா மலர்ச்சி வளம் வழங்கும் பண்பு என்ற அம் மரபின் முழுப் பொருள் வளமும் சுட்டுகிறது. வேள் (முருகன், மன்மதன்) என்ற தெய்வப் பெயரிலும் முருகன், கந்தன் (முருகு-அழகு, இளமை, தேன்; கந்தம்-மணம்; கந்தழி-இலிங்கம்) என்ற தெய்வப் பெயர்களிலும் நாம் இதே கோமரபில் வந்த இதே மரபுப் பொருள் மலர்ச்சிகளைக் காணலாம். தமிழ், கொங்கு, வேள், முருகு, கந்தம், மழ என்ற இந்த ஆறு சொற்களும் இவ்வாறு (முருகவேளின் ஆறு முகங்கள் எனும்படி) கோமரபில் வந்த தமிழ் மரபு, கொங்கு மரபு, முருகன் மரபு, மழவர் மரபு, வேளாண்மை-வேட்டுவ மரபு ஆகியவற்றின் ஒருமை நிறைவைக் குறித்துக் காட்டுகின்றன. (மழவர் என்ற சொல் வேளாளர் மரபையும் வேட்டுவ மரபையும் ஒரே இணை மரபாகக் குறிக்கும் சொல் ஆகும்). கொங்குநாட்டின் எல்லா மரபினரும், சிறப்பாக அதன் குடியரசு மரபு வழிவந்த ஆட்சியுரிமையுடைய வேளாள-வேட்டுவர் மரபினரும் நாகரிக உலகளாவிய இந்த மலர்ச்சியின் முழுநிறை பண்புக்கு உரியவராவர். பண்டைய வரலாறும் இன்றைய வாழ்வும் ஒருங்கே தெரிவிக்கும் பண்பு மரபின் மெய்ம்மை இது! இந்தியாவுக்கு வெளியேயுள்ள வேள்மரபின் நாகரிக உலகப் பழமையையும் விரிவையும், மேலே காட்டியுள்ள உலகளாவிய நகர்-நாடு அரசு மலர்ச்சியும் அன்னை வழிபாடும் தெளிவுபடுத்துகின்றன. அது போலவே அன்னையின் சேய் ஆகிய வேள் வழிபாட்டின் மிகு பழமை விரிவுக்கு மேலையாசியா வெங்கும் பரவி வந்ததாக விவிலியப் பழைய ஏற்பாட்டுப் பகுதி (கி.மு. 7ஆம் நூற்றாண்டு) சுட்டும் வேளின் தங்கக் காளை வடிவ (க்ஷநட, க்ஷநடயைட) வழிபாட்டு மரபு சான்று பகரும். வேளாளர்-வேட்டுவர் மரபுக்குப் பொதுவாகவும், வேட்டுவ மரபினருக்குச் சிறப்பாகவும் உரிய வடுகநாதர் அல்லது ஐயனார் (அய்யப்பன் அல்லது நகர்-காவல் தெய்வமான சாத்தா) என்ற தெய்வமரபின் பழமையைக் குமரிக் கண்டப் பகுதியாகக் கருதப்படும் வட அமெரிக்கக் கலிபோர்னியா மாநிலத்துச் சாத்தா மலை மரபு (ஆடிரவே ளுhயளவய) சுட்டிக் காட்டும். இந்தியாவினுள்ளேயே, இன்றைய தமிழக எல்லைக்கு வெளியேயுள்ள வேள் மரபினர் (தென்னகத்தின் நாயர், நாயகர், நாயுடு, ரெட்டி; மராத்தியர்; இரசபுத்திரர்; கூர்க்கர்; சீக்கியர் முதலியோர்) பெரிதும் வரலாற்றுக் கால முழுமையும் வேளாண்மை மலர்ச்சியின் முற்பாதிக் கூறாகிய வீரமரபு பேணிய அளவில் அம் மலர்ச்சியின் பிற்பாதிக் கூறுகளாகிய பேருழ வாண்மை, பெரு வாணிகம், பெருந் தொழிலாண்மை முதலியவற்றை முதனிலையாக அதாவது மரபு மலர்ச்சிப் பண்பாகப் பண்டே படைத்து உருவாக்கிப் பேணினர் என்று கூற முடியாது. ஏனெனில், வேள் என்ற சொல்லே பரவியுள்ள தமிழின எல்லையிலும் சரி (மலையாளம்-வெள்ளாளர்; தெலுங்கு-கன்னடப் பரப்பு: வேளமர்; கன்னடப் பரப்பு: க்ஷநடபயரஅ, ளுசயஎயயே க்ஷநடபடிடய; பல்லாளர் என்ற மன்னர் மரபுப் பெயர், கவுண்டர் என்பதன் திரிபாகிய கௌடா) அதற்கு அப்பாலும் சரி, வேளாண்மை என்ற தமிழ்ச் சொல்லின் இந்த மரபு மலர்ச்சி, அதற்குரிய பொருள் மலர்ச்சி, பண்பு மலர்ச்சி ஆகியவை சென்றெட்டவில்லை என்பது தெளிவு. பிற்பட்ட இலக்கண மரபில் மருதநிலத்தைக் கடைநிலம் என்று வகுத்து வேளாளரையும் கடையர் (பெண்பால்- கடைசியர்) என்று குறித்துச் சூத்திரர் என்ற சொல்லுடன் ஒன்றுபடுத்திய மூன்றாம் ஊழியின் தென்னக மரபே, வேள் என்ற இச் சொல்லும் அதன் விரிவு மரபுகளும் வடபால் வழங்காமல் தடுத்துள்ளது என்னல் தகும். கேரள மாநிலத்திலும் தமிழிலும் அதை வெள்ளாளர் (வெள்ளத்தை ஆள்பவர் என்ற புதுமரபுப் பொருளுடன்) திரித்து வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. இது மட்டுமன்று. பேரறிஞரும் பெருந்தலைவருமான வயவர் சி.பி. இராமசாமி ஐயர் சுட்டியுள்ளபடி, இந்தியாவிலோ நாகரிக உலகிலோ, ஆட்சி மரபையும் வீரமரபையும் உயர் மரபுகளாக மதிப்பது போல, உழவு மரபு, தொழில் மரபு, வாணிக (வட்டி) மரபு ஆகியவற்றை மதித்ததில்லை. இதற்கு மாறாகத் தொன்று தொட்டே இவற்றை, உயர்வாக மதித்த இனம் தமிழினம் (அடுத்த படியாக ஓரளவில் யூதர், பார்சி இனம்) மட்டுமேயாகும். (கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை கிறித்துவ இசுலாமிய மரபுகள் வட்டித் தொழிலை எதிர்த்ததனாலேயே மேலையுலகில் யூதரும், நடுவுலகில் பார்சிகளும், இந்துக்களும், இந்தியாவில் மார்வாடிகள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஆகியோரும் பிறரும் மட்டுமே இத் துறையில் தனியாட்சி நடத்தினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்). இசுலாமிய உலகில் மட்டுமின்றி இசுலாமிய ஆட்சிக் கால இந்தியாவில் கூட, வட்டித் தொழில் பார்சிகள், இந்துக்கள் கையிலேயே இருந்தது. வேளாண்மை என்ற சொற் பொருள்மரபு மலர்ச்சியுடன் கூடவே வேளாண்மையின் முற்பாதி மலர்ச்சியை மட்டுமன்றிப் பிற்பாதி மலர்ச்சியையும் தற்காலத் தமிழக மண்டலங்களான பாண்டி மண்டலம் (தற்காலக் குமரி மாவட்டம், இதனுள் ளடங்கிய வேள்நாடு என்னும் பழம் பிரிவே), சோழ மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் (மூன்று வேள் நாடுகளைக் கொண்டது) ஆகிய மண்டல மரபுகளும் தெளிவுபடக் காட்டுகின்றன. இம் மண்டலங்கள் ஒவ்வொன் றிலுமே வேளாள மரபுகள் தனி மரபாகவோ, பல மரபு களாகவோ, நாட்டு மக்களிடையே சிறுபான்மையினராகவோ, பெரும்பான்மையினராகவோ, நாட்டு மக்கள் பொதுச் சமுதாய வாழ்வுடன் ஒட்டியோ ஒட்டாமலோ வாழ்கின்றனர். ஆனால், கொங்கு மண்டலம் ஒன்றில் மட்டுமே (ஓரளவு நாஞ்சில் நாட்டிலும்) வேளாள மரபு நாட்டு வாழ்விலிருந்து பிரிக்க முடியாத நிலையில் நாட்டுப் பெயரே தாங்கிக் கொங்கு வேளாளர்-கொங்கு வேட்டுவர் மரபாக இயங்குகிறது. வேளாளர்-வேட்டுவர் இணைமரபன்றி வேறு பழமையான தனி வேளாளர் மரபு இம் மண்டலத்தில் இன்றும் பெரிதும் இடம் பெறவில்லை. மற்ற எந்த மண்டலத்தின் வேளாளரையும் விட இக் கொங்கு வேளாளரே தம் தாய்நிலத்தில் பெரும்பான்மையினராக, தாய் நிலத்தின் ஒரே வேளாண் மரபாக, தாய் நில வாழ்வுடன் ஒன்றிய பழமையும் மரபும், மரபு மலர்ச்சியும் உடையவராக நிலவுகின்றனர். இது மட்டுமோ? பிற மண்டலங்களிலுள்ள வேளாளர், வேளாண்மை மலர்ச்சியில் பிற்பாதிக் கூறாகிய உழவாண்மையைப் பேணிய அளவில், அதன் முற்பாதிக் கூறாகிய (தென்னக இந்திய நாகரிக உலக மரபுகள் பேணி வந்துள்ள) வீர மரபை முதனிலையாக அதாவது மரபு மலர்ச்சியாகப் பேணி வந்துள்ளனர் என்று கூறமுடியாது. அது தொடர்பான சமய சமுதாய வினைமுறை சார்ந்த ஆட்சி மரபைக்கூட நாட்டு மரபாகப் பேணி வந்துள்ளனர் என்று கூற இயலாது. ஏனெனில், வேளாளர் மரபுகளிடையே மட்டுமன்றி சாதி மரபுகளிடையிலேயே கொங்கு வேளாளர்-வேட்டுவர் மரபு ஒன்று மட்டுமே வீரமரபும், குடியரசு மரபில் வந்த முழுமை ஆட்சி மரபும், ஒத்திசைவு மரபாகிய நாட்டு வாழ்வு மரபும் ஒருங்கே காத்துப் பேணி வந்துள்ளது என்று காணலாம். இவ்வாறு, தமிழகத்தின் வேறு எந்த வேளாளர் மரபினரையும்விட, இந்தக் கொங்கு வேளாளர் மரபே, தாய்நிலம் அதாவது தாய்நில வாழ்வுடன் ஒட்டிய தாயக மரபாக நிலவுகிறது. மண்டலங்களிடையேயும் கொங்கு வேளாளர் மரபினுக்கும் கொங்கு மண்டலத்துக்கும் உரிய இதே தேசிய மரபுப் பிணைப்பு பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய பிற மண்டலங்களுக்கு அறவே கிடையாது. தொண்டை மண்டலத்தையோ, சோழ மண்டலத்தையோ, பாண்டி சேர மண்டலத்தையோ தாயகமாகக் கொண்ட வேளாள மரபு என்று கூறத்தக்க எந்த வேளாண் மரபையும் (நாஞ்சில் நாட்டு வேளாளர் மரபு, நாட்டுக்கோட்டை வணிகர் மரபு நீங்கலாக) நாட்டு வரலாறுகளோ, மரபு வரலாறுகளோ கூட அறியமாட்டா! கொங்குநாட்டு வேட்டுவப் பெருங்குடி மக்களே அந் நாட்டின் (பண்படா எயினர் அல்லது வேடர் மரபில் வந்த) தொல் பழங்குடிகள் என்றும், கொங்கு வேளாளர் சோழர் ஆட்சிக் காலங்களில் (கி.பி. 9 அல்லது 10-12ஆம் நூற்றாண்டு களில்) சேர பாண்டிய நாடுகளிலிருந்தோ, சோழ நாட்டிலிருந்தோ வந்து குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட மரபினரே என்றும் வரலாற்றாராய்ச்சியாளர் பலர் கருதியுள்ளனர்; கருதி வருகின்றனர். வேளாளர் குடியேறும் அல்லது குடியேற்றப்படும் வரை கொங்கு நாடு, சிறப்பாக இன்றைய கொங்கு நாட்டின் வடபெரும்பகுதி வளமற்ற பாலை, குறிஞ்சி, முல்லைப் பரப்பாகவும், பண்பற்ற பரப்பாகவுமே நிலவி வந்ததென்றும் அவர்கள் கொள்கின்றனர். இக்கருத்து வரலாற்று மெய்ம்மை நிலைகளுக்கும், மெய் மரபுகளுக்கும் எவ்வளவு நேர் எதிர் முரணானது என்பது மேலே விரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முடிவுகளுக்கு அவர்கள் பிற வரலாற்று ஆதாரங்களுடன் மரபு வரலாற்று ஆதாரங்களையும் அணிமைக் கால (கி.பி. 15-16ஆம் நூற்றாண்டுக்குரிய) வேளாளர் - வேட்டுவர் மரபின் உட்பூசல் பற்றிய மக்கட்பாடல்களையும் ஆதரவாக எடுத்துக் காட்டுகின்றனர். மேலீடாகப் பார்ப்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர் கருத்தும் மரபு வரலாறுகளின் கருத்தும் ஒன்றே என்று தோற்றக்கூடும். ஆனால், இது போலித் தோற்றமே யாகும். ஏனெனில், சாதி மரபு வரலாறுகள் சோழ நாட்டிலிருந்து கொங்கு வேளாளர் வெளியேறி வந்த காலத்தைப் பட்டயச் சான்றுடனேயே கலி 807 (கி.மு. 2293) என்றும், கொங்கு வேளாளப் பெரியன் கூட்டத்தலைவரான வேணாவுடையார் அல்லது வேணாடர் சோழ நாட்டிலே (உண்மையில் சோழ நாட்டு எல்லையிலுள்ள கொங்கு நாட்டுப் பகுதியாகிய குழித்துறை வட்டாரத்திலே) தங்கி வாழ்ந்த காலத்தை கலி 1200 (கி.மு. 1900) என்றும் குறிக்கின்றன. இது இன்று நாம் சங்ககாலம் (கி.மு. 600 - கி.பி. 250) என்று மதிப்பிடும் காலத்துக்கு 2000 அல்லது 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் ஆகும். அது மட்டுமன்று; ஆரியர் இந்தியாவிற்குள் வந்த காலம் (கி.மு. 1500) என வரலாற்றாசிரியர் மதிப்பிடும் கால எல்லைக்கும் இது 700 அல்லது 400 ஆண்டு முற்பட்டது ஆகிவிடுகிறது. பட்டயங்கள் தரும் கலி ஆண்டுகளைச் சக ஆண்டுகள் (கலி 3178 அல்லது கி.பி. 78-ல் தொடங்குவது) எனக் கொண்டே வரலாற்றாராய்ச்சியாளர் தம் முடிவுடன் இந்த ஆதாரங்களை இணைக்கின்றனர். இந்த ஆண்டு மாறாட்டங்கள் மெய்யானால், அதுவே ஆதாரங்களின் கால வண்ண மயக்கத்தையும் காட்டுவது ஆகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால், அவற்றின் கால வண்ணத்திரிபு காலமாறாட்டத்துடன் அமைவதன்று; பெயர் மாறாட்டம், மொழிமரபு மாறாட்டம், பண்பு மரபு மாறாட்டம் ஆகியவை இவற்றிலும் பிற நாட்டு மரபு வரலாறுகளிலும் மலிந்தே உள்ளன. இதனைப் புலவர் குழந்தை போன்ற வரலாற்றாசிரியர் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதே மரபு வரலாறுகள், சங்க காலப் பசும்பூண் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் (கி.பி. 1, 2ஆம் நூற்றாண்டுகள்), சங்க காலத்துக்குப் பிற்பட்ட பாண்டிய பல்லவர்கள் (கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகள்) ஆகியோரே வேளாளர் ஆட்சி மரபுக்குப் போட்டியாக வேட்டுவ ஆட்சி மரபினரைப் பாண்டி நாட்டி லிருந்தும், கொல்லி மலைக்கு அப்பாலுள்ள வடுக நாட்டிலிருந்தும் கொங்கு நாட்டுக்குள் கொண்டு வந்து குடியேற்றியதாகக் கூறுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படுவதே சமுதாய உயர் மதிப்புச் சின்னம் என்று கருதப்படும் அணிமைக்கால மரபுகளே இவை. பொதுவாகச் சாதிமரபு வரலாறுகளும் சரி, அவற்றுக்கும் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகளுக்கும் ஆதாரமான சோழர் காலப்பட்டயங்கள் கல்வெட்டுகள், கொங்கு தேசத்து ராசாக்கன் போன்ற நாட்டு மரபு வரலாறுகள், அணிமைக்கால மக்கட்பாடல்கள் ஆகியவையும் (மரபு வரலாற்றாசிரியர்களின் சொல்லாராய்ச்சிகளும் கூட) கால வண்ணம் தோய்ந்து அதன் சாயம் பூசப்பட்ட அரைகுறை மெய்ம்மைகள் அல்லது மெய்ம்மைகளின் உருத்திரிபுகளேயாகும் என்பது மேலே சுட்டப்பட்டது. உண்மையில் அவை நமக்குக் காட்டும் பழங்கொங்கு நாட்டின் சித்திரம் சங்க இலக்கியப் பலகணி மூலமாகவும் வெளிநாட்டவர் குறியீடுகள் மூலமாகவும் பழமையாராய்ச்சிகளின் மூலமாகவும் கி.மு. 4000 ஆண்டுக்கு முன்னிருந்தே நமக்குத் தெரிய வரும் கொங்குத்தமிழகத்தின் பழமை வளச் சித்திரத்துக்கு முற்றிலும் மாறான முரண்பாடுகளை உடையது ஆகும். சங்க இலக்கிய ஆராய்ச்சி, அதன் துணை கொண்ட தமிழ்மொழி, தமிழ்ச் சொற்களின் தொல்மூல மரபாராய்ச்சி, உலக வரலாற்று ஒப்பீட்டாராய்ச்சி ஆகியவற்றின் ஒளி மூலமாகவே நாம் கால வண்ணம் படர்வித்துள்ள இத்தகைய திரிபு முரண்பாடுகளகற்றி வண்ணத் தோய்வற்ற முழு மெய்ம்மை வரலாறு காணமுடியும். கொங்கு நாட்டு வரலாற்றை வகுத்தவர்களில் பலர் சங்க காலத்தையே ஒதுக்கிவிட்டுப் பிற்காலச் சாயம் தோய்ந்த (புராணப் பண்பு வாய்ந்த) வரலாறே வழங்கினர். ஆயினும், சங்கப் புலவருள்ளும் புரவலருள்ளும் வேளிருள்ளும் யார் யார் கொங்கு நாட்டவர் என்று வரலாற்றாசிரியருள் சிலர் ஆய்ந்து காண முற்பட்டதுண்டு. பெருங்கவிஞர் புலவர் குழந்தையோ புலவர், புரவலர், வேளிர் ஆகியோரிடையே யார் யார் கொங்கு நாட்டவர் என்று ஆய்வதுடன் அமையாமல், யார் யார் கொங்கு வேளாள மரபினர் என்றே விளக்கமுனைந்தார். அத்துடன் இவ்வடிப்படையிலேயே அவர் சாதிமரபாராய்ச்சியாளர், ஆராய்ச்சியாளர் ஆகிய இரு சாரார் முடிவுகளையும் ஒதுக்கித்தள்ளி, கொங்கு வேளாளர் மரபினரும் கொங்கு வேட்டுவ மரபினரும் பிறரும் கொங்கு நாட்டுக்கேயுரிய தொல்பழங்குடிகளே யாவர் என்ற தம் முடிவை வலியுறுத்திக் காட்டினார். சங்கக்காலக் கொங்கு நாட்டு வரலாறு காண்பதில் பொதுவான காலவண்ணம் மட்டுமன்றி, கொங்கு நாட்டுக்கேயுரிய தனிப்பட்ட கால மரபு வண்ணமும் தலையிட்டுத் தடுத்து வந்துள்ளது. கொங்காண்ட சேர சோழ மரபினருடன் கொங்கு மக்கள் பொதுவாகக் கொண்டிருந்த பாசம் சோழர் காலத்திலும் சோழருக்குப் பிற்பட்ட, காலத்திலும் தனிவளமும் வளர்ச்சியும் பெற்றது. ஏனெனில், அந் நாட்களில் கொங்கு நாடாண்ட கொங்குச் சோழர் கொங்குப் பாண்டியர் ஆகியோருடன் அவர்களின் கீழிருந்தும் தனியாகவும் சில பிற்காலக் கொங்கு சேரரும் ஆண்டனர். சங்க காலப் பெருங் கொங்குத்தமிழகம் தற்கால கொங்கு நாட்டு எல்லையளவாகக் குறுகி வந்த காலமும், கொங்கு நாட்டினுள் தமிழகச் சைவ சமய எழுச்சி முதலிலும், அதனையடுத்து பண்டை வடகொங்க அல்லது கன்னடப் பகுதியிலிருந்து வீரசைவ சமய எழுச்சியும் புகுந்து பரவிய காலமும் இதுவே. பழைய குடியரசு மரபுகள் பழைய எல்லை மரபுகள் மறக்கப்பட்ட இப்புதுச் சூழலிடையேதான் கொங்குநாடு சேர நாட்டின் ஒரு பகுதி என்ற கருத்தும் அதன் நாகரிகம் சேர சோழ நாட்டு நாகரிகத்தின் ஒரு புது நிழற்படிவே என்ற கருத்தும் மக்களிடையே மெல்லத் தோய்ந்து பரவின, பரவ விடப்பட்டன. தெய்வப்பாவலர் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் `சேரர் கொங்கு நாடு, சேரர் கொங்கு நன்னாடு' என்ற மணி முழக்கப் பாடல்களின் மூலம் இதனை மக்கள் மரபில் உறுதிப்படுத்த உதவிற்று. நம் கால அணிமை நாட்களிலேயே இம் மரபை ஒட்டிக் கேரள மாநில ஆராய்ச்சியாளர் சிலரும் தமிழக ஆராய்ச்சியாளர் பலரும் கொங்கு நாடுதான் சேரநாடு (கேரளம் அன்று) என்றோ, சேரநாடு கொங்குநாட்டுப் பகுதி அல்லது கொங்கு நாடு சேர நாட்டுப்பகுதி என்றோ, கொங்கு நாட்டின் மேற்பகுதி சேரநாட்டுக்குரியது என்றோ இவையல்ல என்றோ வாத எதிர்வாத ஆய்வில் இறங்கினர். (அன்றைய புதிய மலையாள, புதிய தமிழக மொழித் தேசிய மரபுகள் இதற்கு நெய் வார்த்தன). சங்கப்பாடல்களிலேயே சேரர் கடற்கரைத் தலைநகரான வஞ்சி என்ற கருவூருக்கும், கொங்குநாட்டின் பண்டைய உள்நாட்டுத் தலைநகரான கரூவூர் என்ற வஞ்சிக்கும் ஒரே பெயர்களிட்டு வழங்கி வந்த நிலை இவ் வராய்ச்சித்துறைக் குழப்பங்களை மேலும் மேலும் பெருக்கிற்று. இம் மரபு மயக்கம், ஆராய்ச்சிக்குழப்பம் ஆகியவற் றிடையே, ஓயாது கொங்கு, கொங்கர் என்றே பாடிய சங்ககாலப் பதிற்றுப்பத்துக்கும் கொங்கு நாட்டுக்கும் உள்ள தொடர்புகள் அறியப்படாமல், அது சேர நாட்டுக்கு மட்டுமேயுரிய காப்பியம் என்று கருதப்பட்டது. ஆனால் தமிழக வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனிவேங்கடசாமி இக் குழப்ப மயக்கங்க ளகற்றி, அக் காப்பியத்தின் இறந்துபட்ட முதற்பத்து உள்ளடங்கலாக முற்பட்ட ஆறு பத்துகள் மட்டுமே சேர நாடாண்ட பெருஞ் சேரரைப் பாடின என்றும், இறந்துபட்ட கடைசி பத்து உள்ளடங்கலான இறுதி நான்கு பத்துகளும் முப்பெருங் கொங்கு நாடும் வென்றாண்ட கொங்குப் பெருஞ்சேரரைப் பாடியவை என்றும் தெளிவு படுத்தினார். இதன் மூலமே அவர் முதன்முதலாகச் சங்ககாலக் கொங்கு வரலாறு கண்டு, அதனை ஒரு தனி வரலாற்றாராய்ச்சி ஏடாக இயற்றித் தந்துள்ளார். கொங்கு நாட்டுப் பழமை பற்றிய இச் சங்க இலக்கியப் புத்தாராய்ச்சி ஒளிகள் கொங்குநாட்டு வரலாற்றின்மீது மட்டுமின்றி, கொங்கு நாட்டு, மரபு வரலாறுகள் மீதும் கொங்கு நாட்டு மக்கள் வாழ்க்கைப்பண்பு மரபுகள் மீதும் பெருவிளக்கம் வழங்குபவையாக உள்ளன! தற்காலக் கொங்கு நாட்டெல்லையிலே கொங்குச் சோழர் ஆட்சித் தொடக்கத்தில் தென் கொங்கு என்று இன்று கூறப்படும் சேர பாண்டிய சோழ எல்லைகளே நாடும் நகரும் உழவாண்மை, தொழிலாண்மை, பண்பாண்மை வளமும் உடையனவாயிருந்தன. இன்று வட கொங்கு என்று கூறப்படும் பண்டை வடகொங்கு மேல்கொங்குப் பரப்பினை அடுத்த பகுதிகள் முழுவதும் (கோவை, பெரியார், சேலம், தருமபுரி மாவட்டங் களின் பெரும் பகுதிகளும்) நிலவகை, வாழ்வுவகை ஆகிய இரு துறைகளிலும் பெரிதும் வற்றற்பாலைகளாக விளங்கின. ஆனால், தற்காலக் கொங்கு நாட்டின் பெருந்தலைநகர்களான கோவை, சேலம், ஈரோடு ஆகியவற்றை உட்கொண்ட இப் பகுதிகள்தாம் இன்று கொங்கு வாழ்வுக்குரிய அக நாட்டின் அகநாடு என்று கூறத்தக்க வளமுடையவை என்பதில் ஐயமில்லை. சங்ககால நிலையும் இதில் வேறுபட்டதன்று. ஏனெனில், பிற்காலத்தில் கொங்குப் பெருவழி என்று கூறப்பட்ட சங்ககால நாகரிக உலக வாணிகப் பெருவழி முழுவதும் இப் பகுதிகளினூடாகவே சென்றது. இப் பகுதிகளின் கூலவளம் (அரிசி வளம். கரும்பு வளம் உட்பட), பொன்மணி வளம், பிற சரக்குவளம் ஆகியவற்றின் பயனாகவே பண்டைத் தங்க நாணயப் புதையல்கள் கொங்கு நாடெங்கும் பேரளவாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (அரிசியும், கரும்புத் தொழிலும் இரும்பு பொன் சுரங்கத் தொழிலும் ஒருவேளை நெசவுத் தொழிலும்கூடப் படைத்துருவாக்கி உலகுக்களித்த கொங்கு முன்னோர்கள் வாழ்ந்த பகுதிகளே இவைதாம். இது மேலே சுட்டப்பட்டது.) சேரப் பேரரசருக்கு ஒரு சிறிதும் பின்னடை யாமல் கொங்குப் பெருஞ்சேரர் புலவர்களுக்கு வழங்கிய நூற்றாயிரக் கணக்கான காணங்கள் (பொன் நாணயங்கள்) கொங்கு அக நாட்டின் வடபகுதிக்கே சிறப்பான இச் சங்ககால வளத்தினை வலியுறுத்துகிறது. சோழ பாண்டிய பல்லவரும் கங்கரும் அவாவுற்று மீண்டும் மீண்டும் படையெடுத்தழித்த பகுதிகளும் இவையேயாகும். கொங்குநாட்டின் சங்ககால, இக்கால நிலவள, உழவாண்மை வள, பண்பு வள நிலைகளுக்கிடையே சங்க காலத்துக்கும், சோழர் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தை இந் நிலை சுட்டிக் காட்டுகிறது. இப் பள்ளம் கொங்கு நாட்டின் வட எல்லையையே பெரிதும் தாக்கிற்று. சேர, பாண்டிய, சோழ எல்லைப் பகுதிகளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை என்றும் தெரியவருகிறது. இவ்விடைக்காலத்தில் தான் களப்பிரர் எழுச்சி என்ற, இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியான அலைபாய்வு களின் கடைசி வீச்சு தமிழகத்தைத் தாக்கி மூவரசுகளையும் புதிய பல்லவ மரபையும்கூடச் சில பல நூற்றாண்டுகளாக அலைக்கழித்தது. கொங்கு நாடே அதன் பேரழிவுக்கு மிகுதியும் ஆட்பட்டிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. பண்டை வட கொங்கு நாடாண்டு இன்றைய கொங்கு நாட்டையும் சங்க காலத்தின்பின் வென்று ஆட்சி செய்த கங்க மரபு அரசர்கள் இந்த அலைபாய்வின் முன்னணிச் செயல்வீரரேயாதலால் அவர்கள் வரலாறு இதனை நமக்குச் சுட்டிக் காட்டவில்லை. இவ்வலை பாய்வுக்குச் சற்று முன்னும், அதன் பின்னும் நிகழ்ந்த சோழ பாண்டியர் படையெடுப்புகளும் இதே நிலைக்கு உதவின என்பதில் ஐயமில்லை (இவை பின்னர் விளக்கப்பட விருக்கின்றன.) தற்காலக் கொங்கு நாட்டின், சிறப்பாக அதன் வடபகுதியின் வளத்துக்கு நாட்டின் மரபு வரலாறுகளும் வரலாற்று ஆதாரங்களும் ஆர்வமுடன் விரித்துரைக்கும் சோழர் காலச் சீரமைப்பே காரணம் ஆகும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இச் சீரமைப்புக்கும் அதனால் நிரப்பப் பெற்ற இடைக்காலப் பள்ளத்துக்கும் முற்பட்ட சங்க காலக் கொங்கு நாட்டு வளத்துக்கு இது போலவே ஒரு முந்திய சீரமைப்பு (வேள் புலத் தொடக்கக் கால வேளாண்மை மலர்ச்சியே) காரணம் ஆகும் என்று காணலாம். கால வண்ணம் தோயப்பெற்ற மரபு வரலாறுகள், நாட்டு மரபு வரலாறுகள் ஆர்வமுடன் சுட்டிக் காட்டாது மறந்துவிட்ட, மறக்கடித்து மறைத்த முந்திய சீரமைப்பே இது. குடியரசு மரபு மறக்கப்பட்டுவந்த கால மரபு வரலாறுகளும் ஆதாரங்களும் அவற்றினடிப்படையான ஆராய்ச்சிகளும், முந்திய குடியரசு மரபுக் காலத்திய முதல் சீரமைப்பை அறியாத நிலையில் அல்லது மறந்த நிலையில் அல்லது நோக்காத நிலையில், இடைக்காலப் பள்ளத்தையே கொங்கு நாட்டின் தொல்பழமை நிலையாகவும், சோழர்கால மறுசீரமைப்பையே முதற் சீரமைப்பாகவும் (சங்க இலக்கிய நோக்காது) கொண்டது இயல்பேயாகும். கொங்கு வேளாளர் வரலாறு என மரபு வரலாறு ஆய்ந்து தொகுத்துள்ள அறிஞர் செல்வி டி. கே. சக்தி தேவியார், அம் மரபு வரலாற்றாசிரியர் வழி நின்று அதற்குரிய ஆதாரங்களையே பின்பற்றி, கொங்கு வேளாளரின் மூலத்தாயகம் சோழ நாடே எனக்கொள்கிறார். சோழ கொங்குப் பரப்புகளில் ஓடும் காவிரியாற்றின் தெற்கிலுள்ளவர்கள் தென்தலை வேளாளர், வடக்கிலுள்ளவர்கள் வடதலை வேளாளர் என்றும் தென்தலையினரே தலைமை நிலையுடையவரென்றும் அவர் காட்டுகிறார். வடதலையினரே தொண்டை மண்டல மரபுகளாய் பிரிய, கொங்கு வேளாளரும் பிறரும் தென் தலையினரினின்றும் பிரிந்து படர்ந்து பரவினர் என்றும் அவர் வகுத்துரைக்கிறார். இவற்றையடுத்து, வேறு எவ்வகைப் பட்ட மரபு விளக்கங்களிலும் ஆய்வு விளக்கங்களிலும் இறங்காமலே அவர் திடுமெனக் கொங்கு வேளாளரின் வேளாளர் இனப் பொதுத் தலைமை பற்றி ஒரு முடிவு அறிவித்து விடுகிறார்: `வடதலை வேளாளராகிய துளுவ வேளாளர் (அதாவது தொண்டை மண்டலத் துளுவ வேளாளர்), கொண்டை கட்டி வேளாளர் (கொண்டல் கட்டி வேளாளர் அதாவது தொண்டை மண்டல வேளாளர்), கார்காத்தார் ஆகிய எல்லா வேளாளர்களையும் விடக் கொங்கு வேளாளரே உயர்ந்த மூத்த இனமாகக் கூறப்பட்டது. வேளாள இனத்துக்கே மூத்த குடிமகன், கொங்கு வேளாளப் பெரியன் குலத்தின் தலைவரான வேணாடரே யாவர்' இதுவே அறிஞர் விரித்து விளக்க முற்படாது முடிக்கும் முடிவு! அறிஞர் இங்கே விரிக்காது குறிப்பாக விட்டு விட்ட விளக்கமும் உண்டு. விளக்காமலே முடித்த முடிவும் உண்டு; குடியரசு மரபில் வந்த வேளாண் மரபின் மரபுச் சொற்களாகத் தம்மையறியாமலே சுட்டிச் சென்ற மறைநிலை விளக்கமும் உண்டு. முதலாவதாக, வடதலையாருக்குத் தலைமை நிலை யுடையவர் தென்தலையினர் என்றும், அத் தென்தலையாரின் தலைவர் ஆன வேணாடரே கொங்கு வேளாளர் தலைவராத லால் கொங்கு வேளாளர் இருதலை வேளாளருக்கும் தலைவராவார் என்றும், அவர் வாதிடுகிறார் என்பது தெளிவு. விரிக்காது குறிப்பாகத் தெரிவிக்கப்பட்ட விளக்கம் இதுவே ஆகும். ஆனால் தென்தலையின் பொதுமைத் தலைவரான வேணாடர் எவ்வாறு கொங்கு வேளாளரின் சிறப்புத் தலைவராய், அம் மரபினராகவே கருதப்பட்டு வந்துள்ளார் என்பதோ, தாய் மரபான தென்தலைக்குச் சேய் மரபான கொங்கு வேளாளர் மரபு எவ்வாறு தலைமை ஏற்க முடிந்தது என்பதோ விரிக்கப் பெறவில்லை. இதுபோலவே காவிரி தென்தலை வடதலைகளை மட்டுமே குறிப்பிட்டுவிட்டு, பின் தண் பொருநையாறு, பழையாறு ஆகிய ஆற்று வெளிகளுக்குரிய பொதுவான பாண்டி நாட்டு, சிறப்பான நாஞ்சில் நாட்டு வேளாள மரபினரையும் பிறரையும் உள்ளிட்ட வேளாளரினம் முழுமைக்குமே கொங்கு வேளாளர் எவ்வாறு தலைவராவார் என்பதும் விளக்கப்பட வில்லை. இந் நிலையிலும், குடியரசு மரபில் வந்த மூத்த குடிமகன், `வேணாடர்' ஆகிய வேளாள மரபுச் சொற்களே வரலாற்று மரபுகளுட்சென்று இம் முடிவுக்கான விளக்கம் காண வழி வகுக்கின்றன! ஏனெனில், `மூத்த குடிமகன்' என்ற அறிஞரின் சொற்றொடர் வேள் (னுரமந, குடியரசுத் தலைவர், கோமகன்; ஞசinஉந, முதற் குடிமகன், கோமகன், இளவரசன்) என்ற சொல்லின் மலர்ச்சி மரபு காட்டுகின்றது. வேணாடர் என்ற தலைவரின் பதவிப் பெயரோ அவ் வேள் மரபை மட்டுமன்றி அதன் மலர்ச்சியில் ஒரு திருப்பமாயமையும் வேள் நாடு (குநனநசயட சுநயீரடெiஉ) என்ற அமைப்பையும் குறித்துக் காட்டுகிறது. வேள் மரபு வேளாண் மரபாக மலர்ச்சியுற்றதற்குரிய மலர்ச்சித் திருப்பத்தையும், வேளாளர் இனத்துக்குரிய தாய் மூல மரபையும் ஒருங்கே குறிக்கும் சொல் இது! இது தமிழக வரலாற்றுச் சொல் மட்டும் அன்று - தமிழக, தென்னக, இந்திய வரலாற்றுச் சொல் ஆகும். கோவரசு மலர்ச்சி, குடியரசு மலர்ச்சி, அரசு மலர்ச்சி ஆகிய ஒரே தொடர்பான மலர்ச்சிக் கோவையில், வேள் நாடு என்னும் தொகைச் சொல்லும் மரபும் மரபுப் பொருளும் நடுநாயக இடம் வகிப்பதாகும். ஏனெனில், ஆதிகால முடியரசு (சேர, சோழ, பாண்டியர், மகத அரசர்) முதலில் வேணாடர் (ஞசநளனைநவே டிக ய சுநயீரடெiஉயn குநனநசயவiடிn) பதவி வகித்தே முடியரசுப் பதவி பெற்றனர். குறும்பர், ஆந்திரர், கலிங்கர் ஆகியோரும், புத்தர்பிரான் மரபினரான சாக்கியரும் கொண்டவீடு ரெட்டி அரசரும் தேவகிரி யாதவ மரபினரும் பிறரும் வேணாடராயிருந்தே அரசர் பேரரசராகத் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம், காஞ்சி, வல்லபி, நாலந்தாப் பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் காஞ்சி, வைசாலி, காசி போன்ற தன்னாண்மை நகரங்கள் (ஊவைல ஊடிசயீடிசயவiடிளே), சோழர் கால உலக வாணிகக் குழுக்கள், தொழிற் குழுக்கள் (ஊடிஅஅநசஉயைட டிச ஐனேரளவசயைட ஊடிசயீடிசயவiடிளே) ஆகியவையும் வேணாடு என்ற அமைப்பிலிருந்து எழுந்த கிளை மலர்ச்சிகளே. இதுபோல மேலே கட்டியர் மரபு, செங்குந்தர் மரபு, நாட்டுக்கோட்டை வணிகர் மரபு, பிராமணர் மரபு உட்பட்ட பிற சாதி மரபுகள் ஆகியவற்றின் செய்திகள் மூலம் குறித்துக் காட்டியுள்ளபடி, அவற்றுக்கெல்லாம் முற்பட்ட மூலமான வேளாண்மை மலர்ச்சியின் பிற்பாதிக்கூறாகிய பேருழவாண்மை, பெருந் தொழிலாண்மை, பேரறிவாமை, அருந் திறலாண்மை ஆகிய மலர்ச்சிகளும் `வேள் நாடு' என்ற மைய மூல மரபு வழி மலர்ந்த நேர் மலர்ச்சிகளில் வரலாற்றுத் தலைமை சான்ற ஒன்றேயாகும். இந்த மைய நேர் மரபு மலர்ச்சிக்குரிய நாகரிக உலக, இந்திய, தமிழகப் பகுதி கொங்குத் தமிழகமே என்பது கீழே விளக்கப் படுகிறது.. இன்றைய தமிழகத்தையும் சங்க காலப் பெருந் தமிழகத்தையும்விடத் தொல் பழமையும் தொன்மை விரிவகலமும் உடையது கடலால் பெரும்பகுதி விழுங்கப்பட்ட பண்டை மாபெருங் குமரித் தமிழகம். அதன் மைய மலையாகிய குமரி மலையின் (பண்டைப் பொதியம், பண்டை மலையம் அல்லது பண்டைத் திருமலை) ஒரு தற்காலத் தமிழகக் கிளையே குமரி முதல் குடகு வரை நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதி (சையமலை). இம் மையத் தமிழ்த் தெய்வமாமலையைச் சுற்றியே தமிழர் வாழ்வும், தமிழ் வாழ்வும், வேளாண்மை மலர்ச்சியும் படர்ந்து வந்துள்ளன. சங்க காலத்தில் இதன் வடகோடியில் (தார்வார், ஐதராபாத் பகுதியில்) ஒன்றும், தென்கோடியில் (நாஞ்சில் நாட்டில்) ஒன்றும், நடுவில் (கோயமுத்தூர் மாவட்டம். அதனை ஒட்டிய மைசூர், குடகு மேல் கடற்கரைப் பகுதி ஆகியவற்றில்) ஒன்றுமாக மூன்று வேள் நாடுகள் உருவாகியிருந்தன. இவற்றுள் நடுவாக அமைந்த வேள் நாடு சங்க காலத்தை அடுத்து அதன் பின்னும் நீண்ட காலமாக வேள் நாடு என்று மட்டுமன்றி வேளாளநாடு என்றும் தனிச் சிறப்புப்பட அழைக்கப்பட்டு வந்தது என்று அறிகிறோம். மரபு வரலாறு வேளாளரினத் தலைவராகக் குறித்துக் காட்டும் வேணாடர், மாண்ட தொல் பழமை சான்ற இந்த வேணாடுகளின் மரபில் வந்து இன்றும் மாளா மரபாய், உயிர் மரபாய் நிலவுகின்ற வேள் நாட்டுத் தலைமை மரபினர் ஆவர். அவர் மூலம் நாம் இம் மாண்ட மும் மரபுகளுக்கும் அப்பால் நாலாவதாக, அல்லது நாலாவதும் ஐந்தாவதும் ஆக, மேலும் இரு வரலாற்று வேணாட்டு மரபுகளைக் காண்கிறோம். ஏனெனில், மரபு வரலாறும் வரலாறும் ஒருங்கே சுட்டுகிறபடி, கொங்கு நாட்டின் சோழ நாட்டெல்லையிலுள்ள குழித்தலை வட்டாரத்தில் ஒன்றும் கொங்கு நாட்டின் பாண்டிய சேர நாட்டெல்லை யிலுள்ள பழனி வட்டாரத்தி லொன்றுமாக கொங்கு நாட்டுத் தென் பகுதியிலும் இரு வேணாடுகள் நிலவியதாக அறிகிறோம். கொங்கு நாட்டுத் தென்பகுதியி லுள்ள இரு வேணாடுகளுக்கும் வேளாளரினத் தலைவரான தென்தலை வேணாடரே தலைவராவார்-மரபு வரலாறுகள் ஒன்றை அவரது பழைய தாயக மரபு என்றும் மற்றொன்றைப் புதிய மரபு என்றும் குறிக்கின்றன. பழனிப் பகுதிக்குரிய வேணாடே திருநெல்வேலி மாவட்ட அம்பா சமுத்திரம் (பண்டை ஆய்க்குடி), திருக்குறுங்குடி, களக்காடு, கோட்டாறு, திருவதங்கோடு, பத்மநாபபுரம், திருவனந்தபுரம் எனத் தலைநகர் மாற்றம் பெற்று, 18ஆம் நூற்றாண்டுக்குள் நாஞ்சில் நாடாகவும் திருவாங்கூர் நாடாகவும் மலர்ச்சி மாறுபாடுகள் பெற்றது. இவ்வாறு நாஞ்சில் நாடு என்று இன்று வழங்கும் பாண்டி நாட்டுப் பகுதியும், இன்றும் மருமக்கள் தாயத்தடம் மாறாது நிலவும் அதன் பழமை சான்ற வேளாண் மரபும் தென் கொங்குப் பழனி வட்டத்தினின்று புடைபெயர்ந்து சென்ற கிளை மலர்ச்சியே யாகும் என்பதை இது காட்டுகிறது. குமரி மலைத் தொடர்ச்சியாகிய சையமலை சூழ்ந்த இந்த ஐந்து வேளிர் நாடுகளில் கொங்கு நாடே மூன்று வேளிர் நாடுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவற்றுள்ளும் வடபாலுள்ள பண்டைத் தமிழகத்தின் மைய வேள் நாடே (கோவைப் பகுதிகள்) முழு மலர்ச்சிப் பகுதியாக வேளாளர் நாடு எனச் சிறப்பிக்கப்பட்டிருந்தது என்பதையும், கொங்கு நாட்டின் ஏனைய இரு வேள் நாடுகளுக்கும் அதுவே முற்பட்ட பழமையும், பெருமையும் புகழும் உடையதென்பதையும் காண்கிறோம். மூன்றும் ஒரே வேள் நாட்டின் வரலாற்றுக்காலப் புடைபெயர்ச்சிகளே யாகும் என்பது தெளிவு. மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து வேணாடுகளுக்குள்ளே, வடகோடி வேணாடு இன்றைய தமிழக எல்லைக்கு அப்பால் நெடிது வடக்கேயுள்ளது ஆகும். இதனால் இது மேலே காட்டியபடி கலிங்கம் ஆந்திரம் முதலிய பிற இந்தியப் பகுதிகள் போலவே வேளாண்மையின் முழுமலர்ச்சி காணாது முற்பாதி மலர்ச்சியுடன் நின்று விட்ட வேள்நாடு ஆகும். மற்ற நான்கு வேணாடுகளில், இன்றும் உயிர் மரபுடன் நிலவும் வேணாடுகள் கொங்கு நாட்டின் சோணாட்டு எல்லையிலுள்ள வேணாடும், அதற்கு அடுத்தபடியாக அணிமைக் காலம் வரை வேணாடாய் நிலவியிருந்த இன்றைய நாஞ்சில் நாடும் மட்டுமேயாகும். இவற்றிலும் உயிர்மரபுத் தலைமையுடையது முன்னதே. ஐந்தனுள்ளும் இடையேயுள்ள இரு வேணாடுகளும் (பழனி வட்டார, கோவை வட்டார வேணாடுகள்) இன்று நிலவாத பண்டை மரபுகள். அதே சமயம், இவற்றுள் ஒன்றே (கோவை வட்டார வேள்நாடே) வேளாளர் நாடு என்ற முழுநிறை மலர்ச்சிப் பெயரைப் பண்டே கொண்டு விளங்கிற்று. அதுவே இன்னும் உயிர் மரபுடன் எஞ்சியுள்ள குழித்தலை வட்டார, பழனி வட்டார வேணாடுகளின் மூலத்தாயகம் என்பது இதனால் விளக்கம் பெறுவதாகும். சங்க காலத்திய அல்லது சங்க காலத்தினும் முற்பட்ட வேளாண்மை மலர்ச்சியின் தாயகமும், அதன் முழு நிறை மலர்ச்சியின் தாயகமும் நடுமைய வேள் நாடு அல்லது வேளாள நாடே (கோவை வட்டாரமே) என்பதையும்; அதன் மாண்ட மரபுக்குரிய மாளா உயிர் மரபே வேணாடர் என்ற இன்றைய கொங்கு வேளாண் மரபிற்குரிய வேணாடு என்பதையும்; பழனி வட்டாரத்தைப் பழைய வேணாடும், நாஞ்சில் நாட்டு வேணாடும், மைய வேணாட்டிலிருந்து அவரது உயிர் மரபு மலர்ச்சி பெற்ற ஒரு கிளை மலர்ச்சிப் பாதையைக் குறிப்பனவே என்பதையும் இவ் ஒப்பீடுகள் விளக்குகின்றன. சாதி மரபு வரலாறுகளும் மொழி மரபுகளும் தரும் ஒளிக்கீற்றுகள் இதே மெய்ம்மையை வலியுறுத்தி மேலும் தெளிவு பிறப்பிக்கின்றன. கொங்கு வேளாளர் தம் தாயக மரபாகப் பற்றார்வத்துடன் சோழ நாட்டையே (அடுத்தபடியாகச் சேர பாண்டிய நாடுகளையே) சுட்டுகின்றனர். அதே சமயம் கொங்கு வேளாளர் உட்படத் தமிழக வேளாள மரபினர் (பல வணிக மரபினர் உள்ளடங்கலாக) யாவருமே தம் முழு இன மரபையும் கங்கை மரபு என்றுதான் குறித்துக்கொள்கின்றனர். கோத்திர மரபு அற்ற அல்லது அதனை இழந்துவிட்ட வேளாண் மரபினர் சிலர் பலர் கூடத் திருமண வினையின்போது தம்மைக் கங்கை கோத்திரத்தார் என்றே கூறிக் கொள்கின்றனர். மேலே விளக்கியுள்ளபடி, இங்கே கங்கை என்பது காவிரியைத்தான் சுட்டுகிறது என்று கொள்வதே பொருந்தும் (முதனிலை மரபாக வேளாண் மலர்ச்சி வடபாற் கங்கைக் கரைவரை என்றுமே எட்டியதில்லை). தமிழ் மரபிலேயே சோழநாடு காவிரியுடன் தொடர்புடையது மட்டுமன்று, சிறப்புப்படக் காவிரிநாடு என்றே அழைக்கப் பெறுவது ஆகும். எனவே மேலீடாகப் பார்த்தால், இவ்வகையில் நாம் கொங்கு வேளாளரின் ஆர்வ முடிவை ஏற்று, வேளாளர் இனத்தின் மூலத்தாயகம் சோழ நாடே என்று முடிவு செய்ய இடமுண்டு (சைவ சமய மறுமலர்ச்சிக்கு வழி வகுத்த மைய நாடு சோணாடே என்பதும் இம் முடிவுக்கு வலிமை சேர்க்கத் தக்கதேயாகும்). ஆனால் வேளாள இனத்த வரின் மரபுரைகள் இந்த ஆர்வமுடிவுடன் முரணுகின்றன. வேளாளப் பேரினத்தவருள் கார்காத்தார் பெயருடனேயே, கார் மண்டலம் (கங்கவாடி அல்லது இன்றைய வடகொங்கு, பண்டை வடகொங்கு அளாவிய பகுதி), தொண்டை மண்டலத் துளுவ வேளாளர் பெயருடனேயே துளுநாடு (குடகு நாடு உள்ளிட்ட பண்டை மேல் கொங்கு நாடு) ஆகியவை தொடர்புடையவை. இம் மரபினரும் தொண்டை மண்டல (கொண்டல் கட்டி) வேளாளரும் (நாட்டுக்கோட்டை வணிகரும் பிறரும் கூட) தம் மரபு வரலாறுகளில் தாம் நாக நாடு அல்லது கங்க நாட்டிலிருந்தே சங்க காலத்தை ஒட்டிய ஒரு தொண்டை மானால் குடியேற்றப்பட்டவராக அல்லது பிறிது காரணங் களால் குடியேறியவ ராகக் கூறுகின்றனர். வேளாளரினத்தின் மூல மலர்ச்சித் தாய் மரபாகக் கருதப்பட்டு வந்துள்ள கங்கை மரபு அல்லது காவிரி மரபு சோழ நாட்டைக் குறிக்கவில்லை, அந்த ஆற்றுடன் தொடர்புடைய பண்டைக் கொங்கு நாட்டை, சிறப்பாகக் குடகு நாடும் மேல் கடற்கரையும் காவிரியும் அளாவிய மைய வேளாள நாட்டையே குறிக்கின்றது என்பது இதனால் பெறப்படுகின்றது. (நாக நாடு என்பதுகூட நாயர், நாய்கர், நாயுடு போன்ற தமிழகத்துக்கு அப்பாற்பட்ட தமிழின நாட்டு மரபுகளுடனே மிகு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. அதுவும் குடகு நாடாகவே இருத்தல் கூடும்) நாகரிக உலகக் குடியரசு மரபில் முகிழ்த்த வேள்-வேளாண்மை மலர்ச்சி குறிஞ்சியில் பிறந்து முல்லையில் முதிர்ந்து மருதத்தில் தங்கி ஐந்திணையளாவித் திணைவரம் பழித்த பின்பே இன்றைய மனித இன நாகரிகச் சமுதாயமாயிற்று என்பது மேலே கூறப்பட்டது. இது பொது முறையில் உயிர் மண்டிலமாகிய நாகரிக உலகின் ஐந்திணை விரவிய பல பரப்புகளுக்கும் உரியதேயாகும். ஆயினும், அதன் இடையறா முழுநிறை வளர்ச்சிக்கும் முழுநிறை உயிர் மரபுக்கும் வளத்துக்கும் உரிய ஒரே உலகப்பகுதி ஆனைமலை, வெள்ளிமலை, குடகுமலை, மேல்கடல், காவிரியாறு என்ற இந்த மலையாறு கடலளாவிய பகுதியாகிய கொங்கு நாட்டின் வேளாள நாடேயாகும். இதிலிருந்து இரு மலர்ச்சிப் பாதைகள் இம் முழு வேளாண் மலர்ச்சியைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றன. ஒரு பாதை மலையோரமாகத் தெற்கு நோக்கிச் சென்று பழனி வட்டாரப் பகுதியில் வந்து தங்கி, பின் அங்கிருந்து பாண்டி நாட்டின் நாஞ்சில் நாட்டுப் பகுதி சென்று பாண்டிநாடு முழுவதும் ஓரளவு சேர நாட்டிலும் பரவிற்று. இரண்டாவது பாதை காவிரி நோக்கிச் சென்று, காவிரியின் போக்கிலேயே தென் கிழக்காக முன்னேறிக் குழித்தலை வட்டாரப் பகுதியில் தங்கி, பின் கிழக்காகச் சோழ நாட்டிலும் வடக்காகத் தொண்டை நாட்டிலும் பரவிற்று. மேற்கண்ட இருபாதைகளுமே கொங்குநாட்டின் நீள - அகல முழுதும் கடந்தே சென்றன என்று காணலாம். களப்பிரர் எழுச்சிக்கால அலைபாய்வு, தமிழக முழுவதையும் பொதுவாக வடபால் பாதித்த அளவு தென்கோடி யிலுள்ள நாஞ்சில் நாடு, தென்பாண்டிநாடு ஆகியவற்றின் மலர்ச்சியைத் தாக்கிக் குலைக்கவில்லை. ஆனால், கொங்கு நாட்டின் வடபெரும்பகுதி முழுவதும் மலர்ச்சி வளம் முற்றிலும் இழந்து விடவே, வேளாண் மரபினர் சேர பாண்டிய சோழ நாட்டு எல்லைவரை துரத்தி ஒதுக்கப்பட்டனர். கங்கர் ஆட்சியின் இறுதிக் காலத்திலும் சோழர் காலத்திலும் தொடங்கப்பட்ட வேளாண் மறு மலர்ச்சிக்கு இத் தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளே (சோழ நாட்டெல்லையிலுள்ள கொங்குப் பகுதி யாகிய குழித்தலை வட்டாரம், சேர பாண்டிய நாட்டெல்லை யிலுள்ள கொங்குப் பகுதியாகிய பழனி வட்டாரம் ஆகியவையே) மூலதளங்களாய் அமைந்தன. இம் மூலதளங்களி லிருந்து மறுமலர்ச்சிப் பாதை வடக்காகவோ, காவிரிக் கரையளாவி வடகிழக்காகவோ சென்று மீண்டும் கொங்கு நாட்டை இன்றைய நிலைக்கு வளப்படுத்தின. முல்லைநில வாழ்வுக் காலத்தில் பொதுவாகத் தமிழகத்திலும் இந்தியாவிலும் வேளாளப் பேரினத்தின் மலர்ச்சியிலிருந்து ஆயர் அல்லது இடையர் (கோவேளாளர் அல்லது கோவைசியர்) தனி மாயோன் வழிபாட்டு மரபுடன் பிரிந்தது போலவே, குறிஞ்சி நிலத்தில் குறவரும் (முருக வழிபாட்டு மரபு), பாலைநிலத்தில் மறவரும் (கொற்றவை வழிபாட்டு மரபு), நெய்தல் நிலத்தில் மீனவரும் (வருணன்-பிற்கால மீனத் திருப்பிறப்புக்குரிய மாயோனாக மலர்ச்சி), மருதநிலத்தவரான மூன்றாம் ஊழிப்புது வகுப்பினரும் (சிவபெருமான் மரபிலிருந்து விலகி நின்ற இந்திரன் முதலிய வானவர் மரபு), பிரிந்தனர். (இந்தியாவெங்கும் ஒருவேளை நாகரிக உலகெங்கும்கூட பழங்குடியினர், மலங்குடியினர் இவ்வாறு பிரிந்து ஒதுங்கிய திணைமரபினரே யாதல் கூடும்). இந்த மரபுச் சிதறல் பெரிதும் முடியரசுக்கும் அதன் மூன்றாம் ஊழிக்கும் உரியதாதலால், நாகரிக உலகெங்கும், இந்திய தமிழகப் பரப்பெங்கும் நடைபெற்ற இச்சிதறல் கொங்கு நாட்டிலோ, பண்டைப் பெரும் கொங்கு நாட்டின் விரிநிழல் படிவாகிய (ஞசடிதநஉவiடிn ளாயனடிற) நடுமேட்டு நிலப்பகுதியிலோ (விந்தியமலை சூழ்ந்த பகுதியிலோ) அதன் தெற்கிலுள்ள தெக்காணப் பகுதியிலோ நெடுநாள் நிகழவில்லை. இப்பரப்பு முழுமையிலும் வேளாண்மை மலர்ச்சி பெறாத குறிஞ்சி, முல்லை மரபின் வேளிரே, வேணாடரே வேளாண் மரபினராக, அதே சமயம் யாதவர், இராட்டிரகூடர், ரெட்டி போன்ற ஆட்சி மரபினராக நிலவியுள்ளனர் என்பது காண்கிறோம். உலகில், இந்தியாவில், தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத நிலையில் கொங்கு நாட்டின் கொங்குவேளாளர்-வேட்டுவர் மரபினரிடம் மட்டுமே நாம் காணும் குடியரசு மரபின் ஐந்திணை மலர்ச்சியும் ஒருங்கமைத்த நிலை இந்த வரலாற்று மரபில் வந்த விளைவேயாகும். ஆயினும், நாகரிக உலகில் ஆங்காங்கேயும் (மேலையுலக மூர்கள், சப்பானிய ஐனுக்கள் (ஐரேள) போன்றவர்கள்) இந்தியாவில் விந்தியச் சூழலையும் போலவே கொங்கு நாட்டு மலைப்பகுதிகளிலும் இத்தகைய திணைநிலை ஒதுக்கீட்டு நாகரிகங்கள் வந்து படிவுற்றுள்ளன. கொங்கு அக நாட்டிலும் உள்நாட்டில் மட்டுமே இவ்வாறு பிரியாமல் ஒதுங்காமல் முல்லை, மருதம், நெய்தலாகிய மற்றத் திணை மரபினங்களைப் போலவே குறிஞ்சி மரபில் வந்த பழம்பெரும் கோமரபினராகிய வேட்டுவ மரபினரும், வேளாளருடன் இணை பிரியாத வேளாளராகவே ஐந்திணை மலர்ச்சியாகிய வேளாண்மை மலர்ச்சி முழுதுமே நிறைவுறப் பெற்று, பண்டைக் குடியரசு மரபில் வந்த குடியாட்சி மரபை (கொங்குப் பண்பை) அவர்களுடன் இன்றும் பங்கு கொண்டு வளர்த்து வருகின்றனர். மக்களால் விருப்பார்வத்துடன் இராசாசி என அழைக்கப்பட்டு வந்துள்ள கொங்கு நாட்டுப் பெரியார் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார், தாம் இந்தியத் தலைவராயிருந்தபோது வள்ளுவ அரசியலின் சிறப்பைப் பாராட்டியது போலவே, தாம் தமிழக முதல்வராக அமைந்த காலங்களில் ஐந்திணை மரபும் இணைந்த கொங்கு வேளாளரின் தேசிய உழைப்பாற்றலை வியந்து போற்றியுள்ளார். ஆனால், முடியரசர் பொதுவாக, சிறப்பாகத் தமிழரின் கடல் கடந்த உலகாட்சியில் முனைந்த பாண்டிய பல்லவரும் பிற்காலச் சோழரும் போன்று கோமரபில் வந்த முடியரசர் இந்த வேட்டுவர் மரபு மற்றத் திணை மரபுகளைப் போலக் கொங்கு வேளாள மரபில் தோய்ந்து ஒன்றிவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அவ்விரு மரபினரையும் பிரித்தாளும் வினைமுறை மேற் கொண்டனர். இவ் வகையில் பாண்டிய பல்லவர்கள், கொங்குப் பெருஞ் சேரரால் அடக்கி ஒடுக்கப்பட்ட அதியமான்-ஓரி-காரி மரபினரை மீண்டும் உயர்த்தி வேளாளருடன் போட்டி யிட்டு மோதவிட முயன்றனர். (கொங்கு நாட்டின் வடபகுதி முழுவதும் பாலையாக, கொங்கு வாழ்வு வளப்பரப்பில் ஒரு வரலாற்றுப் பள்ளமாக ஆக்கப் பெற்ற குருதிப் போராட்டங்களுடன் இது பெரிதும் தொடர்புடையது ஆதல் கூடும்). ஆனால், சோழ மரபினரோ, தம் புதிய தேசிய வளத்தின் பெயராலேயே இதனை இன்னும் சிறப்புற நடத்தினர். பழைய முடியரசுக்கு மாறாக அவர்கள் சார்புதலை மாற்றி, வேட்டுவ மரபினருக்கெதிராக வேளாள மரபினர்க்குப் பேராதரவு தர முனைந்தனர், இதில் மூன்றாம் ஊழிக்குரிய புதுச்சமய, புதுப் பண்பாட்டு ஆர்வமும் கலந்திருந்தது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சோழர்களின் பட்டயங்களிலும், கல்வெட்டுக்களிலும், அவர்கள் கருத்து மரபில் வந்த மரபு வரலாறுகளிலும் நாம் இந்த ஆர்வத்தை, இந்த ஓரச் சார்புகளை முற்றும் காணலாம். மூன்றாம் தள ஊழி அலை தமிழகத்தில் உச்ச நிலையடைந்து வந்த காலங்களில் (கி.பி. 15, 16 நூற்றாண்டு முதல்) வடகலை, தென்கலைப் போராட்டங்கள், வலங்கை இடங்கைப் போராட்டங்கள், நாடார்-மறவர் போராட்டங்கள், கேரளத்தில் நாயர்-ஈழவர் போராட்டங்கள், பல இடங்களில் வேளாள மரபினருள்ளேயே சிறுகட்சி, பெருங்கட்சிப் போராட்டங்கள் ஆகியவற்றுடனொப்ப, அதே சமகால ஊழி மரபாகவே, கொங்கு நாட்டில் வேளாளர் வேட்டுவ மரபுப் போராட்டங்கள் ஊக்கி வளர்க்கப்பட்டன. நாட்டுப் பாடல்கள் நமக்குப் பதிவு செய்து வழங்கும் புதிய மாபாரத மரபு இதுவே! சங்ககாலத்தில் கோ மரபும் ஆய் மரபும் மிக நெருங்கிய இணை மரபுகளாகவே இயங்கி வந்தது காணலாம். பல ஆய் மரபினர் வேள், கோ ஆகிய இரு பட்டங்களும் ஒருங்கே தாங்கியிருந்தனர். தற்காலக் கொங்கு நாட்டுக்கு வடக்கிலும், மேற்கிலும் கிழக்கிலும் இரு மரபுகளும் முற்றிலும் ஒரே மரபாய் இணைந்திருக்கவேண்டும் என்று கருத இடமுண்டு. ஏனெனில் வடபால் இது யாதவர் ஆட்சி மரபிலேயே தனி வேறுபாடுகளை ஊக்கிற்று. (இதுவும் வட இந்திய, உலக மரபுகளும் அத்திசை களின் தனி ஆய்வுக்குக் குரியன) ஆனால், கொங்கு நாட்டில் மற்ற நாற்றிணை மரபுகளும் வேளாளர் மரபில் முற்றிலும் இரண்டறக் கலந்து இணைந்து, விட்ட பின்னும், பாலைமரபு (மறவர் மரபு) இணையாத தெற்கு வடக்கு கிழக்கு திசைகளிலிருந்து வந்த முடியரசு மரபுகளின் தூண்டுதலே கிட்டத்தட்ட முழு வேளாண்மை மலர்ச்சியும் பெற்று வேளாளர் மரபாகவே மாறியிருந்த வேட்டுவ மரபைத் தனித்து நின்று சமுதாய தளத்திலேயே குடியரசுப் போட்டி நிகழ்த்த வைத்துள்ளது என்னலாம். தமிழக (பண்டைப் பெருந்தமிழக) எல்லையெங்கும் சிறப்பாகக் கொங்குத் தமிழக (பண்டைப் பெருங்கொங்குத் தமிழக) எல்லையெங்கும் நிலவிவரும் முனைப்பான முருக வழிபாட்டில் நாம் இன்னும் இந்தக் குறிஞ்சி மரபுக் காலத்துக் குரிய கோமரபின் தனிப்பட்ட செல்வாக்கினைக் காணலாம். மேலே சுட்டியுள்ளபடி தமிழ்மொழி மரபு, சொல் மரபு, பண்பு மரபுகளில் கூட நாம் இந்தக் கோ மரபின் ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர்த்துய்கள் ஆகியவற்றைக் காண்டல் தகும். சைவ நாயன்மார்களில் சேர அல்லது கொங்குச் சேர அரசராகிய சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோருடனும், வைணவ ஆழ்வார்களுள் கொங்குச் சேர அரசனாகிய குலசேகராழ்வார், திருமங்கை யாழ்வார் ஆகியோருடனும் கொங்கு வரலாறு பெருந் தொடர்பு கொண்டுள்ளது. சுந்தரர் வேடுபறி என்ற அழகிய பாடல் வேட்டுவர் வடிவில் கொங்கு வேளாள நாட்டிலே இறைவனாடிய திருவிளையாடல்களைப் பாடுகிறது. முருகனின் ஒரே காதல் துணைவியான வள்ளி நாச்சியார் (கண்ணனின் பன்மனை மணமும், முருகனின் தெய்வயானை மணமும், சங்ககாலம் அறியாத பிற்கால மரபுகள்) இவ்வேட்டுவ மரபினரேயாவர். பாரதத்தில் விசயனுக்குச் சிவபிரான் அருள் பாலிக்கவந்த வடிவமும் இவ்வடிவமேயாகும். வேள் என்ற தமிழ்ச்சொல் முருகனையும் காதற் கடவுளையும், வேள்வி என்ற சொல் வழிபாட்டையும் ஒப்புரவையும் (வேளாண்மை) வேட்டம் என்பது காதலையும் வேட்டையையும், வேடு என்பது இறையுணவு மீதிடும் மெல்லாடையையும் வேடரையும் களவியல் காதலையும், வேட்டு என்ற சொல் மலை தகர்த்துக் காடு நாடாக்க வழிவகுக்கும் சுரங்க வெடியையும் உணர்த்தும். இச் சுரங்க வெடியின் பழமையைக் `கல்லுளிச்சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடு பொடி' என்ற தமிழ்ப் பழஞ்சொல் காட்டும். பண்டை வேளிர்க்கும் அவர் வழிவந்த அரசருக்கும் அவர்கள் உருவிலேயே வழிபடப்பட்ட ஐயனார் அல்லது சாத்தனுக்கும் (சாத்தன், சாத்தா: சமக்கிருதம், சாஸ்தா-அரசன்; தமிழ்: சாத்து-இறைப்படிவ ஒப்பனை, உழவர் கூட்டம், வணிகர் கூட்டம், அரசர் சுற்றம்; சாத்துப்படி, கோயிற்கட்டளை) வேட்டையாடுதலும் (கொடுவிலங்குகளை அழித்தலும்) செண்டாட்டமும் (ஞடிடடி: குதிரைமீது கவர்ந்து ஆடும் பந்தாட்டம்) சிறந்த வீரப்பயிற்சிகளாகக் கருதப்பட்டன. (தற்கால அகல் உலக அகழ்வாராய்ச்சியாளர் இச் செண்டாட்டத்தின் கி.மு. 4000ஆண்டுகளுக்குரிய பிறப்பிடமாக வடமேற்குப் பாரசீக நாட்டைக் குறிக்கின்றனர்.) தென்னக மெங்கும் ஐயனார் கோயில் வெளியில் பக்தர்களால் நேர்ந்து நிறுத்தப்பட்டுள்ள பாரிய மரக் குதிரைகள் ஐயனாரின் ஊர்காவலுக்கு மட்டுமன்றி, அவருக்குரிய செண்டாட்டக் கேளிக்கைக்கும் உரியதாகும். அத்தெய்வத்தையும் அதன் மரபில் வந்த (சிவகங்கை மருது பாண்டியர் போன்ற) அரசரையும் தமிழ்ப்புலவர் செண்டலங்காரர் என்று பாடுவ துண்டு. செண்டாட்டமாகிய குதிரைப் பந்தாட்டத்துக்குரிய மட்டை வடிவே அரசர் கைக்கோலாகவும், (கோதண்டம், பாரதப் போரில் வீமனின் கதாயுதம் அல்லது தண்டம்) அவ்வடிவிலுள்ள பூஞ்செண்டாகவும் மலர்ச்சியுற்றது. (மணம் ளுஉநவே என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு என இதை தவறாகக் கொள்பவர் உண்டு) வேளாளர்-வேட்டுவர் மரபின் பொதுத் தெய்வமாகவும், வேட்டுவ மரபினரின் சிறப்புத் தெய்வமாகவும் விளங்கும் வடுகநாதர் அல்லது வைரவர் வேட்டையுடன் மிகு தொடர் புடையவர் என்பதை அவரது வேட்டைநாய் ஊர்தி காட்டும். வீரபத்திரக் கடவுளுடனும் ஐயனாருடனும், முருகனின் துணைவனான வேளைக்காரனும், தமிழக மன்னரின் வேளைக்காரப்படையும் (பாண்டி நாட்டுச் சாவேர்ப்படை, அதாவது சாவேற்புப்படை) ஒரே தெய்வ மரபுத் தொடர்புடைய தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னக இந்திய உலக வேள் மரபு முழுவதிலும் காணப் படுகிற, ஆனால், தமிழக வேளாளர் மரபில் அவ்வளவாகக் காணப்பெற இயலாத வீரமரபினை நாம் கொங்கு நாட்டு வேளாளர், வேட்டுவர் ஆகிய இரு மரபுகளிலுமே ஒப்பக் காண்கிறோம். இரு மரபுகளும் ஒரே இணைமரபாய் முடியரசு ஊழி வரலாற்றால் மட்டுமே பிரிக்கப்பட்ட கிளையினமரபுகள் ஆகியுள்ளன என்பதை இதுவும்; இது போன்ற அவர்களின் பிற பொது மலர்ச்சிப் பண்புக் கூறுகளும் (தமிழ்: மழவர்-வீரர், உழவர்) காட்டும். நாடுகளிடையே கொங்கு நாட்டுக்கு மட்டுமே தனிப் பெருஞ் சிறப்பாய் அமைந்துள்ள தனித் தன்மை அல்லது கொங்குத் தன்மை என்பது (கொங்கன், தனித்தன்மையுடையவன், தனித்திருவிளையாடல் புரிபவன், முருகன் அல்லது மதுரைச் சொக்கனாகிய சிவபெருமான்) உண்மையில் கொங்கு வேளாளர்-வேட்டுவர் இணைமரபின் தனித் தன்மை ஆகும். அதுவே நாகரிக உலகின் வேளாண்மை மலர்ச்சிக்குரிய முழு நிறைவுத் தன்மையின் நாடு நோக்கிய, உலக நோக்கிய அகலவிரிவின் உயிர்விதைப் பண்பு என்னலாம். கொங்கு வேளாளப் பெருங்குடி மக்களும் கொங்கு வேட்டுவப் பெருங்குடி மக்களும் வேறு வேறு நாட்டவர், மரபினர், பண்பினர் என்பதோ, அவர்களில் எம் மரபினரேனும் மற்ற மண்டலங்களைத் தாயகமாகக் கொண்டு அங்கிருந்து குடியேறியவர் அல்லது குடியேற்றப் பட்டவர் என்பதோ இவ்வாறு தமிழ் மரபு, வரலாற்றுமரபு, மொழி மரபு, நாகரிக மரபு. ஆகிய அனைத்துக்கும் முரண்பட்ட மருண்ட நோக்கின் விளைவேயாகும். இது போலவே கொங்கு வேளாள மரபு சோழ நாட்டு வேளாள மரபையோ, பிற வேளாள மரபுகளையோ (பண்டை வட கொங்கு, மேல் கொங்குப் பரப்புகளிலுள்ள மரபுகளையோ கூட) தாய்மரபு அல்லது தாய்மரபுகளாகக் கொண்டது என்று கொள்வதும், கருதுவதும் முற்றிலும் தவறே ஆகும். இவற்றை மேற்கண்ட வேளாண்மை மலர்ச்சி விளக்கம் காட்டும். உண்மையில் கொங்கு வேளாள மரபு தென்னகமெங்கு முள்ள எல்லா வேள்மரபு, வேளாளர் மரபுகளுடனும் தொடர்புடைய ஆனால், அவற்றிற் கெல்லாம் மலர்ச்சித் தாயகமான, மலர்ச்சி நிறைவான ஆதி வேளாண் மரபும் முழு வேளாண் மரபும் ஆகும். இது மட்டுமன்று; கொங்கு வேளாளர். வேளாளர் இனத்துக்குமட்டுமன்று; பிராமணரையும் பிறரையும் உள்ளடக்கிய எல்லாத் தமிழ், தென்னக, இந்திய மரபுகளுக்கும் மூலமான குடியரசு மரபின் நேர்வழி மலர்ச்சிக் கான்முளை மரபினரே யாவர். அறிஞர் செல்வி சக்தி தேவியார், தம்மையுமறியாது மரபு வழி நின்றே பயன்படுத்திய `மூத்த குடிமகன்' `முதற் குடிமகன்' `வேளாளர் இனத்துக்கே தலைவர் வேணாடர்' என்ற தொடர்களின் பின்னணியிலுள்ள மரபு விளக்கம் இதுவே! கொங்குநாடு, கொங்கு வேளாளர் இனம் ஆகிய இரண்டனுக்கும் உரிய தனி மரபுத் தன்மை அல்லது கொங்குத் தன்மையை நாம் கீழ்வருமாறு வகுத்துக் காணலாம். பண்டைக் கொங்குத் தமிழகப் பரப்பு, பண்டை நாகரிக உலகின் வாணிகப் பெரும் பாதை தன்னூடாக மேற்கு கிழக்காக நேர் குறுக்கே செல்லப்பெற்று அதன் முழுமலர்ச்சி வளத்தையும் பெற்றிருந்தது; ஆனால், அதன் அரும்பெரும் பேறு இது ஒன்று மட்டுமன்று; கிட்டத்தட்ட அதே ஊழியிலேயே, அதுபோலவே நாகரிக உலகின், தமிழகத்தின் வேளாண்மை முழுமலர்ச்சிப் பாதைகள் இரண்டிலும் கொங்குத் தமிழகம் வடக்கு தெற்கு அல்லது வடமேற்கு தென்கிழக்கான போக்கில் சென்ற இருபெரும் பாதைகளிலும் நேர்குறுக்காகக் கிடந்து அதன் முழு நிறை மலர்ச்சியும் தேசிய பண்பாட்டுவளமும் பெற்று வந்துள்ளது. இது மட்டுமோ? இரு பாதைகளிலும் சங்க காலத்துக்கு முன்னுள்ள (வடக்கு தெற்கு அல்லது மேற்கு கிழக்கான) முதல் மலர்ச்சிச் சீரமைப்பையன்றி, சோழர் காலத்தி லான (தெற்கு வடக்கு அல்லது தென்கிழக்கு வடமேற்கான) இரண்டாம் மலர்ச்சி அல்லது மறு சீரமைப்பையும் அது பெற்றுத் திகழ்ந்துள்ளது. முழு மலர்ச்சியை நிறைவாகவும் இருமடியாகவும் பெற்றதனாலேயே அது தென் அமெரிக்காவின் `பெரு' நாட்டு இங்கா மரபுப் பரப்பைப் போல, தமிழக, இந்திய, நாகரிக உலக வேளாண்மை, தொழிலாண்மை மலர்ச்சியின் மையமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இது போலவே அது நாகரிக உலகின், இந்தியாவின் சமுதாயத் துறைச் சமதரும. தேசிய ஒளி பரப்பும் மைய நிலமாகவும் விளங்கி வருகிறது. வீரமரபு, கால்நடைப் பயிர்ப்பின மரபு (கற்பு நாகரிக அதாவது குடும்பவழி வந்த குடியரசு நாகரிக மரபு), உழவாண்மை, தொழிலாண்மை, வாணிக மரபுகள் ஆகிய ஐந்திற மரபும், ஓருலகு காணவல்ல மனித இன நாகரிகத்தின், தேசியங்களின் விதைப் பண்பாய்ச் சமுதாய ஒத்திசைவு, கூட்டிணை பண்பு ஒருங்கே கொண்டவையாகக் கொங்கு நாடும், கொங்கு வேளாளர்மரபும் ஒருங்கே இலங்குகின்றன. நாகரிக உலகப் பழங்குடியினத்தவரின் தொல்பழமைச் சின்னமாக விளங்குபவை கோத்திர குலப் பிரிவு, கோத்திரச் சின்னங்கள் (கூடிவநஅள: பெரும்பாலும் செடி கொடிவிலங்குகள் பண்புகளாக அமைபவை), இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒத்திசைவு, அகல்விரிவுக்குரிய (குலம், பெருங்குலம், இனம், பேரினம், நாடு, மாநாடு, உலகம் என்று செல்கிற) குடியரசு மலர்ச்சிப் பண்பு ஆகியவையே. இவை நாகரிக உலகின் வேறு எந்தப் பரப்பையும்விடக் கொங்கு நாட்டுக்கும், வேறு எந்த மரபினரையும், பிற பிராமண வேளாள மரபினரையும் விடப் பேரளவாகக் கொங்கு வேளாளருக்குமே பெருவாய்ப்பாக கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது ஆகும். உலகில் வேறு எந்த நாட்டின் எந்த மரபினுக்கும்-இந்தியாவில் வேறு எந்த பிராமண அல்லது வேளாள மரபினருக்கும் இல்லாத நிலையில் கொங்கு நாட்டு வாழ்வில் கொங்கு வேளாள மரபு நாட்டு வாழ்வே வாழ்வாகக் கொண்டியங்குகிறது. அவர்கள் பெரும்பாண்மை வகுப்பாக இன்று விளங்குவது குடியரசு மரபு மலர்ச்சியறாத அவர்களின் ஒத்திசைவு-அகல் விரிவு மலர்ச்சியின் விளைவேயாகும். அதுமட்டுமன்று. இந்தியா வெங்கும் சாதி வருண அடிப்படையில் ஏற்பட்டுள்ள சமுதாய, அரசியல், கல்வி, உழவு, வாணிக தொழிலாட்சிப் பிளவுச் சிதறல்கள், கொங்கு வேளாளர் வாழ்வையோ கொங்கு வாழ்வையோ இன்னும் பாதிக்கவில்லை. அது இன்னும் அகல் தேசிய வாழ்வு ஊக்கும் சமுதாயத் தேசிய வாழ்வாகவே இயல்கின்றது. தொல்காப்பிய கருப் பொருள் மரபை நினைவூட்டும் காணி (தனிநில உரிமை, குடிவழிக் கோயில் மரபு; மேலைச் சொல்: ஊரடவ) ஆகியவை ஓரளவு பாண்டி நாட்டிலும் பேரளவில் கொங்கு நாட்டிலும் இன்னும் நீடித்து நிலவுகிறது. நாகரிக உலகமெங்கும், இந்தியாவிலும், தமிழகத்திலும் பொதுவாகப் புதிய நாகரிகங்கள் பரவாத இடப் பரப்புகளிலும், பழங்குடி, மலங்குடி, தாழ்த்தப்பட்ட இனப் பரப்புகளிலும் சிறப்பாக குடிப்பெயர்கள், இடப்பெயர்கள் (மலை, ஆறு ஆகியவற்றின் பெயர்கள்) சாதி மரபுப் பட்டப்பெயர்கள் ஆகியவற்றில் மட்டுமே தொல்பழந் தாய் நில அல்லது தாய் இன அதாவது தூய தாய் மொழிப் பண்பு மரபுகள், காணப்படுகின்றன. பழமை வாய்ந்த தெய்வ மரபுகள், சமய வழக்கங்கள், மரபுகள், தெய்வங் களின் பழமையான பெயர்கள், பண்புகள் ஆகியவற்றின் செய்திகளும் இவை ஒத்தவையே. ஆனால், கொங்கு நாட்டு வாழ்வில் இந்த உயர்வு தாழ்வு வேறுபாடுகளோ சமுதாய இனப் பிளவு வேறுபாடுகளோ இல்லாமல் வேளாளரிடையேயும் பிற மரபுகளிடையேயும் தொல்காப்பிய காலத்துக்கும் முற்பட்ட, தொல்காப்பிய, திருவள்ளுவ, சங்க காலங்களுக்குரிய மொழிப் பழமைகள், மரபுப் பழமைகள், பண்புப் பழமைகள் ஆகிய எல்லாவற்றையும் காணலாம். திணைநிலை ஆய்வாளர்கள் இவற்றை ஆய்ந்து சுட்டிக்காட்ட முற்பட்டுள்ளனர். மேலைக் கிறித்துவ, இசுலாமிய, யூத சமயத்தவர் இறைவனை இயேசுவின் தந்தை, அபிரகாமின் தந்தை என்று கூறுவதுண்டு. சங்க கால பழங்காலத் தமிழர் இறந்த இடம், இறந்த சூழல், ஆகியவற்றைச் சார்த்தி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், ஆனைமேல் துஞ்சிய பெருமாள் போன்ற பெயர் சுட்டும் மரபும் உடையவராயிருந்தனர். புகழ்பெற்ற முன்னோர், தந்தை பெயரேயன்றி, புகழ்பெற்ற மகன் பெயரும் ஒருவரின் சிறப்புப் பெயராக வழங்கப்பெற்றது காண்கிறோம். ஆந்தை (ஆதன் தந்தை), பூதந்தை (பூதன் தந்தை), சாத்தந்தை (சாத்தன் தந்தை) ஆகிய சொற்கள் கடவுள் பெயராகவும் (ஆதன், ஆதி ஆகியவையே கடவுள் சுட்டுவன) இயற்பெயர், சிறப்புப் பெயர்களாகவும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழங்கின என்பதை அவ்விலக்கணத்தில் அச்சொற்களுக்கு விதியமைத் துள்ளதன் மூலம் அறிகிறோம், இப்பெயர்களும் இதுபோல, சங்க கால வழக்கிலிருந்த புலவர் முதலியோர் பெயர்களும், பூதர், பேயர் போன்ற தெய்வ மரபுப் பெயர்களும், பிற பழக்கவழக்க மரபுகளும் சொல் மரபு, மொழி மரபுகளும் கொங்கு வாழ்விலும் கொங்கு வேளாளர் வாழ்விலும் பிற கொங்கு மரபினர் வாழ்விலும் பேரளவாகக் காணப் பெறுகின்றன. மனித இன நாகரிகப் பழமை, இந்திய, தமிழகப் பழமைகளுக்குரிய ஆராய்ச்சியாளருக்கும் அவற்றில் பயின்று பழக விரும்பும் பண்பாளர்களுக்கும் கொங்கு வாழ்வும் கொங்கு வேளாளர் உட்பட்ட கொங்கு மக்கள் வாழ்வும் ஒரு விலை மதிப்பிட வொண்ணாத கருவூலம் ஆகும். கொங்கு வேளாளர் மரபு சாதி மரபுகளிடையே ஒரு சாதி மரபாக, பல வேளாளர் மரபுகளிடையே ஒரு வேளாளர் மரபாக மட்டுமே பலருக்கும் மேலீடாகத் தோற்றமளிக்கக்கூடும். ஆனால், அது வேளாளர் இனத்தின் வரலாற்றையே தன் வரலாறாகத் தன்னகங் கொண்டு வேளாளர் இனத்தின் மணிப் பதிப்பு, நிறைமணிப் பதிப்பாக இயல்வது ஆகும். அத்துடன் அது தற்கால வேளாளர் இனத்துக்கு மட்டுமன்றி, பிராமண இனத்துக்கும், மற்ற எல்லா இந்திய மரபினருக்கும் உரிய பொது மூல மரபாகிய வேள் மரபு அல்லது குடியரசு மரபின் நேர் மரபுக் கொழுந்தாய் இன்றும் அதன் பெயரும் பண்பும் மரபும் மீட்டும் உயிர்ப்பித்துப் புதிய தேசிய, புதிய நாகரிக வாழ்வுக்கும் உலகுக்கும் வழிகாட்ட வல்ல மரபொளி யாய் இயல்கின்றது. சாதிவருண உயர்வுதாழ்வு பேணிவரும் ஏடாகூடமான மரச் சட்டத்தினுள்ளும், வகுப்பு, நாடு, மொழி இன வேறுபாடு, நிற வேறுபாடு பேணும் சூழல்களினுள்ளும், குடும்ப சமுதாய வாழ்வு கெட்டழியும் தற்கால மேலையுலக வாழ்வுகளிலும், குறிக்கோளும் திட்டமுமின்றி அல்லாடும் தற்கால உலகுக்குத் தமிழ் மொழியும், தமிழர் திருக்குறளும் போலப் பழைய சமதரும அடித்தளத்தில் நின்றெழும் ஒரு புதிய சமதரும ஒளிக்கம்பமாக, கொங்கு நாடும் கொங்கு வேளாண்மை மரபும் பொங்கொளி வீசுகின்றன. 3. சங்கம் கண்ட கொங்கு வாழ்வு 1) வேள் புலக் குடியரசுக் கோட்டங்கள் சங்க காலப் பெருங் கொங்குத் தமிழகம் சேர சோழ பாண்டிய தொண்டை மண்டலங்கள் புடைசூழத் தமிழகத்தின் நடுமையமாகவும் அதன் முனைப்பான மரபிளங் கொழுந்தாகவும் விளங்கிற்று. தமிழக வரலாற்றின் வான விளிம்பாகிய தொல் பழங்காலத்திலிருந்தே சங்ககால இறுதிக் காலமாகக் குறிக்கப் படும் கி.பி. 250 (கி.பி. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி) வரையுள்ள இப்பேரூழியின் முற்பகுதியில் (கி.பி. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதிவரை) இப்பரப்பு முழுவதும் வேள் புலக் குடியரசுகளின் ஆட்சிக் கோட்டங் களாகவே திகழ்ந்தது. அப்பேரூழியின் பிற்பகுதியில், அவை ஒவ்வொன்றாகக் கொங்குப் பேரரசர் கட்டியெழுப்பிய கொங்குப் பேரரசினால் தனித்தனிக் குடியரசு நாடுகள் என்ற முறையில் விழுங்கப்பட்டுவிட்டன. சங்ககால வேளரசுகள் எண்ணிக்கையில் மிகமிகப் பலவாகவே இருந்திருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில், அவற்றைப்பற்றி நமக்குத் தெரிவிக்கும் சங்க இலக்கியங்களும் சங்க கால முத்தமிழ் இலக்கிய இலக்கணப் பரப்புகளும் எல்லாமே நிறைவாக நமக்கு வந்து எட்டவில்லை. இறந்தவையும் மறைந்தவையும் போக, எஞ்சியவைகளும் பெரிதும் சிறிதும் சிதைந்த வடிவிலேயே வந்து கிட்டியுள்ளன. அவற்றால் கூட நாம் பண்ணன், ஏற்றை, வெளியன், அத்தி, முன்றுறை போன்ற பல வேளிர்கள் வகையில் அவர்களின் பெயர் மட்டுமே அறிகிறோம்; பெயர் அறியப்படாத வேள் புலங்களும் இருத்தல் கூடியதே. இந் நிலையிலும் நாம் சங்கப் பலகணிகள் மூலம் பண்டை மேல் கொங்கு நாட்டில் கோசர், கடம்பர் ஆகியவர்கள் பற்றியும்; பண்டை வடகொங்கு நாட்டில் குதிரைமலை, துவரைநாடு, புன்னாடு, எருமையூர், கங்கநாடு, கட்டிநாடு ஆகியவை பற்றியும்; தற்காலக் கொங்கு நாடாகிய பண்டைத் தென்கொங்கு நாட்டில் வையாவி நாடு, தகடூர், கொல்லிமலை, குதிரைமலை, கண்டிர நாடு, விச்சி நாடு, காமூர் நாடு ஆகியவை பற்றியும் ஓரளவு விளக்கமான செய்திகளை அறிகிறோம். கோலத்துக்காகப் பெண்டிர் இடும் புள்ளிகள் போல, இவை சங்க காலக் கொங்கு நாட்டின் வரலாற்றுப் போக்கையும் கொங்கு மக்கள் வாழ்க்கைப் போக்கையும் நுனித்துணர வைப்பவையாய் உள்ளன. இங்கே குதிரைமலை இரு தடவை கூறப்பட்டுள்ளது காணலாம். பெரும் புலவர் ஒளவை துரைசாமிப்பிள்ளை கருதியுள்ளபடி, அவை ஒரே மலையின் இருபக்க நாடுகளாய் வடகொங்கு தென்கொங்குப் பகுதிகளில் இருந்தவை என்று கருதத் தகும். இரண்டும் ஒரே நாடு என்பவரும் உண்டு. கொங்கு மக்கள் வாழ்வு அந் நாளைய அனைந்திந்திய அரசியல் வாழ்வு, பெருந் தமிழக முழுவாழ்வு ஆகிய வரலாற்றுச் சக்கரங்களின் சுழற்சியிடையே சுழற்சிமைய அச்சாகத் திகழ்ந்தது. இப்பெருஞ் சுழற்சியின் போக்கை ஒட்டியே நாம் முதலில் மேல்கொங்கு, அடுத்து வடதென் கொங்குப் பரப்பு என அவற்றின் வரலாறுகளை வரிசைப்படுத்திக் காண வேண்டிய வர்கள் ஆகிறோம். மேலே சுட்டியுள்ளபடி தொல் பழங்கால இந்தியாவின் ஆதி முடியரசுப் போட்டிகள் பேரரசு போட்டிகளாக விரிவுற்றபோது, அவற்றின் தொலைவீச்சாகத் தென்திசை வடதிசைப் போட்டி கிளர்ந் தெழுந்தது. இதன் அரசியல் வரலாற்றில் மூன்று மரபுகளையும் அவற்றிடைப்பட்ட இரு திருப்பங்களையும் காணலாம். கடல்கொண்ட தென் மதுரையிலிருந்து ஆண்ட முதற் சங்க கால நிலந்தரு திருவிற் பாண்டியன் நாட்களிலிருந்து சோழன் கரிகால்வளவன், இமயவரம்பன் பெருஞ்சேரலாதன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலம் வரை (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) நீடித்த முதல் மரபு தென்னக இமயப் படையெடுப்பு விழாவாகவே நடந்தது. ஆனால், இதன் பிற்பகுதியிலேயே முதல் திருப்பம் ஏற்பட்டு, இரண்டாம் மரபு புத்தர் காலப் பேரரசன் அசாதசத்துரு (கி.மு. 5ஆம் நூற்றாண்டு) மோரியர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) முதல் சந்திர குப்தன் (கி.பி. 5ஆம் நூற்றாண்டு) ஆகியோர் காலம் வரை வட அரசர் தென்திசைப் படை யெடுப்பாகத் தொடர்ந்தது. மீண்டும் இதனிடையே இரண்டாம் திருப்பம் ஏற்பட்டுச் சேரன் செங்குட்டுவன் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) கால முதல் சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) காலம் வரை அது இந்தியாவுக்கு வெளியே அல்லது வட மேற்கேயுள்ள அயலரசருக் கெதிரான தென் திசை-வடதிசைத் தேசிய கூட்டணியாக உருமாறிற்று. (நடு ஆசியாவில் பாக்திரியா பார்த்தியா நாடுகளுடன் வடமேற்கிந்தியாவும் இணைத்து ஆண்ட கனகன் அல்லது குசாணப் பேரரசன் கனிஷ்கன், வடமேற்கிந்தியா மீது 18 முறை படையெடுத்துச் சூறையாடிய ஆப்கன் அரசன் கஜினி மாமூது ஆகியோரே இவ் அயல் மரபுக்குரிய அரசராவர்). திருப்பங்கள் இரண்டுமே சங்க காலத்துக்குரியன. இரு திருப்பங் களுக்கும் முறையே சங்க காலப் பெருங்கொங்குத் தமிழகமும் தமிழ்ச் சேர நாடுமே நிலைக்களங்களாகவும் தூண்டுதல் காரணங்களாகவும் அமைந்திருந்தன. புத்தர் பிரான் காலத்தில் (கி.மு. 5ஆம் நூற்றாண்டில்) தொடங்கி மோரிய மரபின் அசோகன் காலம் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) வரை நீடித்த இரண்டாம் மரபுக்குரிய முதல் திருப்பமே தமிழக மக்களின் - சிறப்பாகக் கொங்குத் தமிழக மக்களின் உள்ளங்களில் பரபரப்பையும் பல்வகை அதிர்வலை களையும் எழுப்பியிருந்தன. பத்திரிகை வாசிப்பவர்கள் இன்று தம் மனைவி மக்களிடம் உரையாடும்போது இடைப்பெய்து கூறும் உணர்ச்சிமயமான உலகச் செய்தித்துணுக்குகளைப்போல, சங்கப் புலவர்கள் இந்த அதிர்வலைகளைத் தம் அகப்புறப் பாடல்களில் பதிவு செய்து சென்றுள்ளனர். இம் முறையிலேயே படுமரத்து மோசி கீரனார், மாமூலனார் ஆகிய புலவர்கள், கங்கையாறு, அதன் கிளையான சோனையாறு, கிரேக்க வெற்றி வீர மன்னன் அலெக்சாண்டர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) படையெடுப்பின் அதிர்வு காரணமாக அப்பகுதிகளில் ஆண்ட நந்த மரபினர் கங்கைப்படுகையுள் புதைத்து வைத்திருந்த செல்வக்குவை ஆகியவற்றைப் பற்றிப் பாடியுள்ளனர். `வெண்கோட்டு யானை சோனைபடியும் பொன்மலி பாடலி பெறீஇயர்!' (குறுந்தொகை 75) `பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியங் கொல்லோ?: (அகம் 265) மோரியப் பேரரசனான அசோகன் (கி.மு. 272-231) செதுக்குவித்த பாளிமொழிக் கல்வெட்டுகள் மூலமாக, அவன் பேரரசாட்சி பண்டைப் பெருந்தமிழக எல்லைவரை பரவியிருந்ததாக அறிகிறோம். அவன் பாட்டன் (சந்திரகுப்தன்), தந்தை (பிந்துசாரன்) ஆகியோரின் ஆட்சிகள் விந்தியமலைக்கு இப்பால் பரவியிருந்ததாகத் தெரியவில்லை; அசோகன் ஆட்சியிலோ அவன் முதற்போரும் இறுதிப் போரும் அவன் ஆட்சித் தொடக்கத்தில் நிகழ்ந்த கலிங்கப் பெரும் போரே (கி.மு. 271-264) ஆகும். இந் நிலையில் தென்னக வெற்றி பெரிதும் பிந்துசாரன் ஆட்சி யிறுதிக் குள்ளாக நடத்திருக்கலாம் என்று வின்சென்ட் சுமித் முதலிய வரலாற்றாசிரியர்கள் கருதியுள்ளனர். ஆனால் உண்மை நிலை, தென்னக வரலாற்று மரபு மூலமே, விளங்குவதாகும், கலிங்கப் பேரரசும் ஆந்திரப் பேரரசும் குடியரசுக்குழு நிலையிலிருந்துகொண்டே, வடதிசைப் பேரரசுகளுடன் (பர்மிய அரசுகளுடன்கூட) போட்டியிட்டு அவற்றை இறுதியில் விழுங்கியவை ஆகும். அசோகன் காலத்துக்கு முன்னரும் பின்னரும் இரு பேரரசுகளும் மாறி மாறி விரிவுற்றுத் தமிழக எல்லையளாவியிருந்தன. எனவே தென்னகம் வென்ற மோரியப் பேரரசன் உண்மையில் சந்திர குப்தனோ, பிந்துசாரனோ அல்லன்; அசோகனே! பண்டைத் தமிழக எல்லையளாவிப் பரவியிருந்த கலிங்கப் பேரரசின் வெற்றியுடன் வெற்றியாகவே, அவன் பேரரசும் தமிழக எல்லையளாவி நின்று, அதன்பின் தமிழகத்தினுள்ளும் படையெடுக்க முயன்றது. ஆனால், இதில் வெற்றி கிட்டாததனாலேயே அசோகன் தமிழக அரசுகளுடன் நேச ஒப்பந்தம் செய்துகொண்டான். கலிங்கப் போருடன் போராகவே தமிழகப் படையெடுப்பு முயற்சி மோரியரால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்டு, அப்பெரும் போரின் இறுதிக் கட்டமாகவே அம் முயற்சியும் முடிவுற்றது. ஏனெனில், அம் முயற்சியின் முதற்கட்டத்தில் மோரியர் நேரடியாகத் தமிழகத்தைத் தாக்க முற்படவில்லை. தமிழக அரசுகளிடையே ஓர் எல்லைப்புற அரசையே தம் நேச அரசாக்கிக் கொண்டு, அந் நேச அரசைத் தூண்டி மற்றத் தமிழக அரசுகளைத் தாக்கிவிட்டது. இதில் தோல்வியுற்ற பிறகே அவர்கள் நேரடித் தாக்குதலுக்கான பெரும்படி ஏற்பாடுகளில் முனைந்தனர். பெருந்தமிழக எல்லையிலுள்ள மலைகளிலும் கணவாய்களிலும் அவர்கள் தேர்கள் ஆண்டுக்கணக்காக உருண்டு பெரும் படைகள் செல்வதற்குரிய மலைப்பாறைகளை உடைத்துக் கணவாய்ப்பாதைகள் அமைத்தும், ஆங்காங்கே படை காவல் தளங்கள் நிறுவியும் வந்தனர். ஆண்டாண்டாக நடைபெற்று வந்த இப்பெரு முயற்சி களால் தமிழர் வாழ்விலும் தமிழக மக்கள் உணர்விலும் ஏற்பட்ட அதிர்வுகளை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், மாமூலனார் போன்ற சங்கப் புலவர்கள் நம் வரலாற்றுச் செவிப்புலனில் படும்படி எடுத்துக் காட்டியுள்ளனர். `விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைந்த அறை'................................. (அகம் 69) `மாகெழுதானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைந்த ..................................... அறைவாய்' (அகம் 251) இங்கே வம்ப மோரியர் (வம்பு - புதுமை) என்பது, புதிய மரபினரான மோரியர் என்னும் பொருளுடையது. தமிழருக்கு நெடுங்காலம் பழக்கப்பட்ட சிசுநாகர் மரபு, நந்தர் மரபு ஆகியவற்றை ஒழித்து புதிது வந்த மரபு என்பதனை இது காட்டுகிறது. `பொன்புனை திகிரி' `புனை தேர் நேமி' ஆகியவை பேரரசின் தேர்களுக்குரிய உறுதி வாய்ந்த இரும்புச் சக்கரங்களைக் குறிக்கின்றன (திகிரி, நேமி - சக்கரம்). தமிழக அரசுகளுக்கு எதிராக அசோகனால் ஏவி விடப்பட்ட தமிழக வல்லரசு ஒரு முடியரசு அன்று - தமிழக மூவரசுகளுக்கும் வடதிசை மோரிய கலிங்கப் பேரரசுகளுக்கும் இடையே மேல் கொங்கு நாட்டில் அவற்றுடன் போட்டியிட்டு வளர முற்பட்ட கோசர் என்ற வேள்புலக் குடியரசுக் குழுவேயாகும். கோசர் மரபு, அதன் மூர்க்கமிக்க முதல் தாக்குதலுக்கு ஆளான கடம்பர் தலைவனான நன்னனின் வேளரசு ஆகிய இரண்டுமே மேல் கொங்கு நாட்டுக்குரிய வேள் அரசுகள் ஆகும். கோசருக்கும் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு மேலே சுட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் சிலர் பல்லவரை (பஃலவர் என்ற பார்த்தியருடன் ஒன்றுபடுத்தி) அயலவர் என்று கருதியது போலவே, கோசரையும் (குசாணருடன் தொடர்புபடுத்தி) அயலின மரபினர் என்று கருதியதுண்டு. ஆனால், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி காட்டியுள்ளபடி, அவர்கள் தாயகம் தமிழ்த்துளு நாடாகிய மேல் கொங்கத்தின் வடகொங்கமளாவிய எல்லையே (குடகுநாடே)யாகும். அத்தாயகத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்வையே சங்கப் பாடல் ஒன்று நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. `மெய்ம்மவி பெரும் பூண் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார் கைப் பறைக் கட் பீலித் தோகைக் காவின் துளுநாடு' (அகம் 205) கிரேக்க நாட்டு நகர்-நாடு அரசுகளில் ஒன்றாகிய ஸ்பார்ட்டா (ளுயீயசவய)வின் மக்களைப் போலவே, கோசரும் போர் ஒன்றையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு எப்போதும் போர்த்திறப் பயிற்சிகளிலேயே ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். அவர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் சங்கப்புலவர்கள் `வென்வேல் கோசர்', `வாய்வாள் கோசர்' `இளம்பல் கோசர்' என வாளும் வேலும் தாங்கிய அவர்களின் வீரத் தோற்றத்தையும் இளமை அதாவது இளமைத் துடிப்பையும் தன்னாண்மைப் போக்கையுமே நம் கண்முன் கொண்டு வருகின்றனர். தவிர, அசோகன் கல்வெட்டுகள் கூறும் சத்தியபுத்திரர் என்ற பெயரையே நினைவூட்டும் முறையில் சங்கப்புலவர்கள் அவர்களை `வாய்மொழிக் கோசர்', `ஒருமொழிக் கோசர்' என்றே குறிப்பிடுகின்றனர், மேலும் `நான்மொழிக்கோசர்: `நாலூர்க் கோசர்' என்றும் அவர்கள் சுட்டப் பெறுகின்றனர். தமிழ்-மலையாள மொழிகளில் கொஞ்சு, கொச்சு (மலையாளம்: சிறிய), குஞ்சு (மலையாளம் குஞ்ஞு-குழந்தை), குஞ்சி (ஆண்முடிமயிர்), குஞ்சம் ஆகிய சொற்களுடனும் கொச்சி (நாட்டுப் பெயர்), கொச்சி மஞ்சள் ஆகியவற்றுடனும் கோசர் என்ற இனப்பெயர் தொடர்புடையது. சந்திரகுப்த மோரியன் காலத்துக்கு முன்னரே இவர்கள் இந்தியாவுக்கு வடமேற்கே பரவியிருந்தனர் என்று கருத இடமுண்டு. இந்துகோசு மலை, ஆரிய மாநிலமடுத்த ஆரகோசா மாநிலம் (மோரிய அரசிலும் இன்றைய உருசிய அரசிலும் பகுதிகளாயிருப்பவை) ஆகிய பெயர்களும் அவ்விடங்களிலிருந்து அலைபாய்ந்த குசாண மரபும் இவர்களுடன் பழந்தொடர்பு உடையவர்களாயிருத்தல் கூடாததன்று. கொங்கு என்ற சொல்லைப் போலவே `கோசர்' என்ற சொல்லும் இளமை குறித்தல் காணலாம். சில அறிஞர் `நான்மொழிக் கோசர்' என்பதற்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளும் பேசியவர்கள் என்று பொருள் கொள்ள எண்ணியுள்ளனர். ஆனால், இப் பழங்காலம் மலையாளமோ (வடுகு என்ற மொழியாகவன்றி தனி மொழிகளாகத்) தெலுங்கு கன்னட மொழிகளோ தோன்றாத காலம் ஆகும். உண்மையில் ``நான்மொழி'' `நாலூர்' என்ற தொகைகளும், எப்போதும் `கோசர்' என்றே குறிக்கப்படும் பன்மை வழக்கும், இளமை என்ற (குடியரசு மரபினுக்குரிய தன்னாண்மை குறித்த) அடைமொழியும் அவர்கள் குடியரசுக் கூட்டுக்குழுவாய் அமைந்த நான்கு நகர்-நாடு அரசுகளின் இணையரசு (ஊடிகேநனநசயஉல டிச ஊடிகேநனநசயவiடிn) மரபினரே யாவர் என்பது காட்டுகின்றன. சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்தே (கி.மு. 2500) இத்தகைய நாலூர்க் குடியரசுக்குழு நிலவியிருந்தது என்று திருத்தந்தை ஈராசு கருதியுள்ளனர். தொல் பழங்காலத்திலேயே வேகமாக வளர்ந்து வந்த இந்த வீரவல்லரசு, கலிங்கப் பேரரசின் வீழ்ச்சிக்கு முன்பே, கிழக்கும், வடக்கும் அக் குடியாட்சி வல்லரசாலும்; தெற்கே மற்றத் தமிழக அரசுகளாலும்; மேற்கே மற்றொரு கடலக வல்லரசாக வளர்ந்து வந்த கடம்ப அரசாலும் நாற்புறமும் அடைபட்டு வளர்ச்சி தடைப்பட்டு முறுகி நின்றது ஆதல் வேண்டும். தொலைப் பேரரசனான அசோகனின் நேசபாசக் கரமேற்று, அவனது கலிங்கத் தாக்குதலுக்கு ஆதரவாகக் கிளர்ந்து இச் சூழுறவு தகர்க்க அவர்கள் எளிதாக முன்வந்ததற்குரிய காரணம் இதுவே! `துடியன் கடம்பன் பாணன் பறையன்' என்று சங்க காலப் பாடல்கள் விதந்துரைக்கும் தமிழர் தொல்பழ மரபுகள் நான்கில் ஒன்று கடம்ப மரபு. தமிழர் புராண மரபிலே முருகப்பெருமான் கடம்பர் தலைவனாகிய சூரனை வென்றதனாலேயே கடம்பன் எனப்பட்டான். இலங்கையின் கடம்பனாறு, மதுரையின் பழமைப் பெயரான கடம்பவனம் (கோயில் திருமரம் கடம்பமரமே) ஆகியவை அவர்களது தென்திசைத் தொல்பழ மரபு காட்டும் பாணர் அல்லது வாணர் (க்ஷயயேள: கேரள மரபிலும் புராண மரபிலும் தென்னக முழுதாண்ட மாவலி அல்லது மகாபலிச் சக்கரவர்த்தியின் மரபினர்) என்பவருடன் போட்டியிட்டும் ஒன்றுபட்டும் அவர்கள் உள்நாட்டுப் பகுதியில் ஒதுங்கி வடகொங்கு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அரசமரபுகள் அமைத்து ஆண்டனர். ஆனால், சங்ககால முழுவதும் அவர்கள் மேல் கடற்கரையெங்கும் கடற்கொள்ளைக் காரராகவும் கடல் வல்லரசாகவும் அமைந்து சேரப் பேரரசருக்கும் கிரேக்கரின் உலக வாணிக வழிகளுக்கும் பெருந்தொல்லை தந்து வந்தனர். கடம்பரும் வாணரும் பண்டு தமிழகம் எங்கும் பரவி யிருந்தனரோ என்று கருத இடமுண்டு. ஏனெனில், தென் தொண்டை நாட்டுப்பகுதி வரலாற்றுக் காலங்களிலே பாணராட்டிரம் (தற்கால பண்ணுருட்டி நகர் வட்டாரம்) என வழங்கப்பட்டது. மற்றும் கடம்பர் தலைவர்களுக்குரிய நன்னன் என்ற பெயரில் வேள்புலத் தலைவர்கள் சங்க காலத்திலேயே கொங்கு நாட்டு ஆனைமலைப் பகுதியிலும் தொண்டை நாட்டுப் (செங் கண்மா நாட்டுப்) பகுதியிலும் இருந்தனர். மேல் கொங்க நாட்டில் கடம்பர் ஆட்சிக்குரிய பாலி நாட்டிலேயே நாம் சங்ககாலத்தில் நன்னன் என்ற பெயருடைய வேளிர் சிலர் பலரை, முதன்மையாக இருவரை, அறிகிறோம். நன்னன் மரபினர், தற்காலக் கன்னட தெலுங்குப் பரப்பெங்கும் சோழர் காலம் வரையிலும் (சோழர் கீழ்ச் சிற்றரசராகவும்) ஆண்டிருந்தனர் என்பதை அப் பரப்பெங்கும் இன்றும் வழங்கும் `நன்னிச்சோட' என்ற இயற்பெயர் (ஒருவேளை தெலுங்கு மாக்கவிஞன் நன்னயன் பெயர்கூட) காட்டும். நன்னன் என்ற பெயர் சிவபிரான் அல்லது முருகனைக் குறித்த அணிமை மரபிழந்த பழம் பெயராகவே இருத்தல் கூடும் (தமிழ்: நன்னர் - நன்மை, நல்ல, நன்கு). நல்லசிவன் என்ற பெயர் (இவ் ஏட்டாசிரியர் பிள்ளைத் திருநாமம் இது) தென் பாண்டி, நாஞ்சில் பகுதிகளில் இன்றும் வழங்குகிறது. அசோகன் காலத்துப் பாலி நாட்டுக் கடம்பரை ஆண்ட நன்னன், பரணர் குறிப்பின்படி, பெண் கொலை புரிந்த காரணத்தால் தமிழ்ப்புலவர் உலகம் பாட மறுத்த நன்னனாகவே இருத்தல் வேண்டும் என்னலாம். அவர் தோட்டத்துப் பசுங்காய் ஒன்றினைக் கவர்ந்து தின்று விட்ட ஒரு சிறுமியின் உயிருக்கு ஈடாக அவள் பெற்றோர்அவள் எடைக்கு எடை தங்கமும் ஒன்பதிற்றொன்பது (81 அல்லது 18) யானைகளும் தருவதாகக் கூறியும் மறுத்துக் கொலை செய்வித்த கொடியோனாக இவன் குறிக்கப்படுகிறான். சங்க காலத்திலே பெரும் புகழ் படைத்த நன்னன், சேரன் செங்குட்டுவன் காலத்துப் பெரும் பெயர் நன்னன் ஆவான். அவனுக்கு நெடிது முற்பட்ட இந்த அசோகன் கால நன்னனை அவனிடமிருந்து பிரித்துணர நாம் இவனை முதலாம் நன்னன் என்று குறிக்கலாம். முதலாம் நன்னன் காலத்திலேயே கடம்பரின் பாலிநாடு பொன்னும், மணியும் கொழித்த நாடாயிருந்தது. நன்னன் அங்கே, பாழி என்ற வெல்லற்கரிய வலிமை வாய்ந்த கோட்டை ஒன்றைக் கட்டி வாழ்ந்தான். மோரியர்களால் தூண்டப்பட்ட கோசர், கடம்பரைத் தாக்கி நன்னனைப் போரில் தோற்கடித்து, அவன் பட்டத்து யானையைக் கொன்று அவனையும் காடுகளுக்குத் துரத்தினர். அவன் நாட்டைக் கைப்பற்றிப் பாழிக் கோட்டையையே தம் மூலதளமாக்கிக் கொண்டு தெற்கு நோக்கி முன்னேறினர். முதலில் அவர்கள் சேரரை எதிர்த்தனர். சேரர் படைத் தலைவன் (வட கொங்கக்) குதிரைமலை வேளாகிய பிட்டங்கொற்றன் பல கடும் போர்களில் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால், கோசர் கையே வலுத்திருந்தது. அவர்கள் வாட்டாறு, செல்லூர் ஆகிய போர்க் களங்களில் அதியமான் எழினியை முறியடித்த துடன் பிந்திய போரில் அவனைக் கொன்றொழித்து முன்னேறினர். வெற்றிவீரராகிய கோசர் இப்போது தமிழக மூவரசு நாட்டு எல்லைக்குள்ளேயே வந்துவிட்டனர். போரின் போக்கிலும் இப்போது மாறுதல் ஏற்பட்டது. பாண்டி நாட்டு எல்லை யிலுள்ள மோகூரை அவர்கள் தாக்க முற்பட்டபோது, அதன் வேள்படை அவர்களை எதிர்த்துத் தாக்கி வெற்றி கண்டது. அதன்பின் அவர்கள் சோழ நாட்டெல்லையில் அழுந்தூரர் வேள் திதியனை எதிர்க்கத் திரும்பியபோது, அவ்வேளிர் தலைவன் அவர்களை முறியடித்ததுடன் நில்லாமல், அவர்களின் மூலதளமாகிய பாழிக் கோட்டை வரை அவர்களைத் துரத்தியடித்தான். கோசரின் தென்திசைப் போரின் இக் கட்டத்திற்குள் மோரியரின் கலிங்கப் பெரும்போர் அதன் இறுதிக் கட்டத்தை அணுகிவிட்டது. இந் நிலையில் மோரியப் பேரரசின் ஒரு படைப் பிரிவே கோசருக்கு உதவியாகத் தெற்கே அனுப்பப்பட்டு, மேலே சங்கப் பாடல்கள் தெரிவித்துள்ள நிலையில் நேரடிப் பெரும் படை எழுச்சிகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முன் என்றும் கண்டிராத இப்பெரும் படையெழுச்சியின் ஆரவாரம் ஏறத்தாழ முதன் முறையாகத் தமிழக முழுவதையுமே ஒன்று படச் செய்தது. அந் நாளைய தமிழகப் பேரரசனான சோழன் இளஞ்சேட் சென்னியின் தலைமையில் தமிழக அரசர்கள் வேளிர்கள் ஆகிய அனைவரும் அணிவகுத்து நின்றனர். இத் தேசியப் பெரும்படை மோரியப் படைகளை எங்கும் முறியடித்து, அவற்றின் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே தரைமட்டமாக்கி அழித்தது. `எழூஉத் திணிதோள் சோழர் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளஞ்சேட்சென்னி செம்புறழ் புரிசைப் பாழி நூறி' (அகம்) எனச் சங்கப் புலவர் இடையன் சேந்தன் கொற்றனார் இவ் வெற்றியைப் பாராட்டினார். வரலாற்றுப் புகழ்பெற்ற இப்பெரும் போரைச் செருப்பாழி (செரு - போர்) என்றும், இதன் புகழ் வெற்றி கண்ட சோழனைச் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் வரலாறு போற்றுகிறது. இப்போரின்போது ஏற்பட்ட மூவரசர் (வேளிர்) கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததாகவும் அதன் பின் தன்னால் அழிக்கப்பட்டதாகவும் பின்னாளைய கலிங்கப் பேரரசன் காரவேலன் தன் ஹத்திகும்பா வெற்றித்தூண் (கி.மு. 163 அல்லது 153) கல் எழுத்தில் கூறுகிறான். ஆனால், அவன் வெற்றி நிலைக்கவில்லை என்பதை அடுத்து வந்த ஆந்திரப் பேரரசின் வரலாறும் அதனுடன் சேரன் செங்குட்டுவன் கொண்ட நட்புறவுக் கூட்டும் காட்டும் (இது மேலே கண்ட இரண்டாம் திருப்பத் தொடக்கம் ஆகும்.) கலிங்கப் பெரும் போரின் (கி.மு. 271-264) ஒரு பகுதியான இம் மோரியரின் தமிழகப் போராட்டம் கி.மு. 268-264 ஆகிய ஆண்டுக் காலத்திற்குரியது என்பதை மேற்கண்ட காரவேலன் கணிப்பு காட்டுகிறது. இதன் முடிவில் அசோகன் தமிழக அரசுகளுடன் செய்துகொண்ட நேச ஒப்பந்தத்தின்படியே, தன் சார்பில் போரிட்ட கோசரை மற்றத் தமிழக அரசுகளுடன் நட்புறவு கொள்ளும்படி செய்தான் என்று கருதலாம். ஏனெனில், தமிழக நேச வல்லரசுகளை அவன் கல்வெட்டுகள் பாண்டிர், சோழர், கேரளபுத்திரர் (சேரர்), சத்தியபுத்திரர் என்று நான்காகக் குறிக்கின்றன. இது கொங்குச் சேரர் மரபு தோன்றுவதற்கு சில பல நூற்றாண்டுகள் முற்பட்ட செய்தியாதலால், சத்தியபுத்திரர் என்ற பெயர் கொங்குச் சேரரைக் குறிக்க முடியாது. இது பொதுவாகக் கொங்கரையோ, பிந்திய காலங்களில் சத்திய மங்கலம் என்ற நகர்த் தொடர்புடைய கட்டி மரபினரையோ குறித்ததாகும் என்பர் புலவர் குழந்தை, ஆனால், அதுவும் மிகப் பிற்பட்ட காலச் செய்தி ஆகும். தவிர, சேரருடனும் சோழ, பாண்டி யருடனும் ஒப்பாகக் கூறப்பட்ட இவ்வல்லரசு மரபினர் முடியரசல்லராயினும் அவருடன் ஒத்த ஆற்றல் சான்ற வல்லரசரான கோசரே என்று துணிந்து கூறலாம். அசோகன் காலத்திய நிகழ்ச்சிகளுக்குப் பின், இரண்டு மூன்று நூற்றாண்டுக் கால அளவும் நாம் பெருங்கொங்கு, மேல் கொங்கு நாடுகள் பற்றிக் குறிப்பிடத்தக்க எதுவும் அறிய முடியவில்லை. ஆயினும், கோசர் தொடர்ந்து வல்லரசாகவே நீடித்து வளம் பெற்றுவந்தனர் என்பதைக் காண்கிறோம். பொதுவாகத் தமிழக அரசுகளுடனும் சிறப்பாகச் சேர அரசுடனும் தொடர்ந்து அவர்கள் நட்பு மேன்மேலும் பெருகிக் கொண்டே தான் இருந்தது. மேலே சுட்டியபடி கொங்கு நாடு உட்படத் தமிழக முழுவதும் அவர்கள் பரவி, அரசரிடமும் செல்வரிடமும் படை வீரர், ஆட்சிப் பொறுப்பாளர், பணியாளர்களாக விளங்கிய காலம் இதுவே யாகலாம். அதே சமயம் கோசரால் அசோகன் காலத்தில் முறியடிக்கப்பட்ட கடம்பர் விரைவில் மீட்சி பெற்றுப் பின் வந்த நூற்றாண்டுக்குள் முதலாம் நன்னன் காலத்திலிருந்ததை விடக் கடலாட்சியிலும் பொன் வளத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு வளமுடன் வளர்ச்சி பெற்றிருந்தனர். சேரருடன் அவர்கள் ஓயாது பகைமை கொண்டு போராடினர். இப் போர்களில் கோசர் தொடர்ந்து சேரருக்கு ஆதரவாகவே செயற்பட்டிருந்தனர் என்று கருதலாம். பெருஞ்சேரர் காலத்து (கி.பி. 1,2ஆம் நூற்றாண்டு) நன்னன் புலவர்களால் பெரும் பெயர் நன்னன், `பொன்னங் கண்ணி பொலந்தார் நன்னன்' என்று சிறப்பிக்கப்படுகிறான். அவன் நாட்டுப் பொன் வளச்சிறப்பையும் `கடம்பின் வாயில்' என்ற பெயருடைய அவன் தலைநகரச் சிறப்பையும் அவர்கள் பலபடப் பாராட்டியுள்ளனர். கந்தபுராணத்தின் சூரபத்மனை நினை வூட்டும் முறையில் அவன் காவல் மரம் அமைந்த மூலதளம் கடலகத்துள்ள ஒரு தீவில் இருந்தது. சேரரின் தொல்பழங்காலத் தலைநகரான நறாவையும் (பதிற்றுப்பத்தும் கிரேக்கர் குறிப்புகளும் சுட்டுவது) பூழி நாட்டையும் அவன் கைக்கொண்ட தனாலேயே, குடக்கோ நெடுஞ்சேரலாதன் காலத்திலிருந்து சேரர்கள் வஞ்சி அல்லது மேல் கடற்கரைக் கருவூரைத் தம் தலைநகராக்கிக் கொண்டனர் என்று அறிகிறோம். குடக்கோ நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல் யானைச் செல் கெழுகுட்டுவன் பூழி நாட்டையும் பண்டை வட கொங்கு நாட்டையும் வென்று நன்னனையும் கீழடக்கினான். இவற்றின் மேலாட்சிகளை அவன் தன் தாயாதி உடன்பிறந்தானான கொங்குச் சேரனிடமே ஒப்படைத்தான். ஆனால், அவன் தமையன் நெடுஞ்சேரலாதன் மைந்தர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் காலங்களில் நன்னன் மீண்டும் தன்னாண்மை பெற்றுப் பகைவனானான். பண்டை வட கொங்கு நாட்டுப் புன்னாட்டின் நீலமணிக் கல்வளம் அவாவி, அவன் அந் நாட்டின் மீது படையெடுத்தான். சேரர்படைத் தலைவனான வெளியன் வேண்மாள் ஆய் எயினன் பாழிப் பறந்தலைப் போரில் (பறந்தலை - போர்க்களம்) கொல்லப்பட்டான். ஆயினும், சேரருடன் தொடர்ந்து நடந்த போரில் அவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலால், கடம்பின் வாயில் போரில் முறியடிக்கப்பெற்றான். இதன் பின்னும் சேரன் செங்குட்டுவன் ஆட்சியில் அவன் கிளர்ந்தெழவே, அப் பெருஞ் சேரன் புராண மரபுக்குரிய முருகனைப் போலவே கடலகத்துள்ள தீவினுட் சென்று அவன் காவற் கோட்டையையும், காவல் மரத்தையும் அழித்து அவன் ஆட்சியையும் நிலையாக முடிவுக்குக் கொண்டு வந்தான். இதுவரை, சேரர், தாம் மேல் கொங்கிலும், வட கொங்கிலும் வென்ற நாடுகளை, அவ் வெற்றிகளின்போது உடனின்ற தம் தாயாதியரான கொங்குச் சேரரிடமே ஒப்படைத்து வந்தனர் என்று காண்கிறோம். ஆனால், சேரன் செங்குட்டுவன் இப்போது சேரர்-கடம்பர் போரில் தன் பக்கமே ஆதரவு காட்டிய கோசரிடமே கடம்பர் ஆட்சியை ஒப்படைத்தான் என்று கருத இடமுண்டு. இச் சூழல் கீழே ஆராயப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்ட தேசங்கடந்த தேசியப் பெருவிழாவில் (குத்தாயமாக கி.பி 180) இலங்கை மன்னன் கயவாகுவும் அவந்திநாட்டு மன்னனும் அவர்களுடன் ஒப்பாகக் கொங்கு நாட்டுச் சார்பில் கொங்கிளங் கோசரும் வந்து கலந்து கொண்ட ரென்றும்; இலங்கை அரசரும் அவந்தி அரசரும் தத்தம் நாடுகளில் சென்று அங்கே கண்ணகிக்குக் கோயிலும் விழாவும் எடுத்தது போலவே, கொங்கிளங் கோசரும் தம் நாடாகிய கொங்கு நாட்டில் சென்று கண்ணகிக்குக் கோயிலும் விழாவும் எடுத்தனர் என்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மேலே குறித்துள்ளபடி, வரலாற்றாசிரியர் பலர், சேரரையும் கொங்குச் சேரரையும் ஒரே மரபினர் என்று கொண்டிருந்தனர். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியே இரு மரபுகளின் வேறுபாடு கண்டவர் ஆவர். ஆனால், இரு சார்பினருமே, கொங்கிளங் கோசர் என்பவர் சேரர் கீழோ, கொங்குச் சேரர் கீழோ பணியாற்றிய உயர் பணியாளர்கள் என்றே கொண்டனர். அத்துடன் இரு சாராருமே கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுமலையிலுள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலின் தெய்வப்படிவமே பின்னாட்களில் அவ்வாறு கருதப்பட்ட கண்ணகிப் படிவம் என்றும், கொங்கு நாட்டில் கொங்கிளங் கோசரால் விழாவெடுத்து நிறுவப்பட்ட கோயிற் படிவம் அதுவே என்றும் கருதியுள்ளனர். இவ்வகையில் இரு சாராருக்கும் இடையேயுள்ள வேறுபாடு மிகச்சிறிதே. முந்தியவர்களில் பலர் அரும்பதவுரையாசிரியரின் உரைக் குறிப்பைப் பின்பற்றிச் சேரன் செங்குட்டுவன் விழாவெடுத்த சேரநாட்டுப் பகுதியே திருச்செங் கோடுதான் என்று குறிக்கின்றனர். (இது கொடுங்கல்லூர்ப் பகவதியம்மன் கோயிலே என்பர் கேரள மாநில அறிஞர்). பிந்தியவரோ, கொங்கு நிலவியல் நன்கறிந்து இதனை மறுத்துரைக்கும் கொங்கு நாட்டவரான அடியார்க்கு நல்லார் உரையைப் பின்பற்றி, இது கொங்கு நாட்டில் கொங்குச் சேரர் சார்பில் அவர்களின் கீழ் உயர் பணியாளராகச் செயல்பட்ட கொங்கிளங் கோசர் நிறுவியதே எனக் கொள்கிறார். பெருஞ்சேரன் விழாவுக்கு விருந்தினர்களாக வந்தவர்களுள் சோழ பாண்டியர்களோ, கொங்குச் சேரரோ சிறப்பிடம் பெற்றதாகக் குறிக்கப்பட வில்லை. தமிழகப் பெரும் பேரரசனாக அன்று விளங்கிய சேரன் செங்குட்டுவனுக்குச் சரிசமமாகக் கருதப்பட்ட வல்லரசுகளே அவனுக்குத் தகுதி வாய்ந்த நண்பர்களாகவும் விருந்தினர்களாகவும் கருதப்பட்டனர் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வல்லரசுகளுள் கொங்கு நாட்டுச் சார்பில் வந்த ஒரே வல்லரசாகத்தான் கொங்கிளங் கோசர் குறிக்கப்படுகின்றனர். விழாக்காலத்தில் கொங்குச் சேரர் ஆட்சி மரபுத் தொடர்பில் அரசேயில்லாத ஓர் இடைவெளியோ, அல்லது இடை வீழ்ச்சியோ அல்லது பிற அவல நிலைகளோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஏற்கெனவே மேலே சுட்டியபடி, கோசர், கொங்கிளங் கோசர் என்ற பெயர்களில் உள்ள பன்மை வழக்கு, இளமை (வீரமரபு, குடியரசு மரபு சுட்டிய குறிப்பு) ஆகியவையும், கொங்கிளங் கோசர் என்ற பிந்திய பெயரே இங்கே சுட்டப்பட்ட நிலையும் பிறவும் அவர்கள் இச்சமயம் கூட்டுக் குடியரசாகவும், பேரரசு வல்லரசாகவும், ஒரு வேளை தென் கொங்குப் பகுதியும் மேல் கொங்கும் வடகொங்கும் சேர்த்தாண்ட கொங்கு நாட்டு ஆட்சிக்கே யுரியவர்களாகத் திகழ்ந்திருந்தனர் என்பது காட்டும். திருச்செங்கோடு அந் நாளில் இக் கோசரின் ஆட்சிக்கு உட்பட்டதா யிருந்தது என்று கொள்ளக் கூடுமானால், அவர்கள் நிறுவிய கோயிலும் அதுவாகவே இருத்தல் கூடாததன்று. ஆயினும், அதனை அவர்களின் மூலத் தாயகத்துக்கு அருகாமையில் மேல் கொங்குப் பகுதியிலேயேயுள்ள மங்களூர் அல்லது மங்கலாபுரம் போன்ற இடங்களில் காண எண்ணுவதே பொருந்துவது ஆகலாம். பழந் தமிழ்த் தெய்வமாகிய தமிழன்னை மரபில் வந்த புது மரபான கண்ணகியின் கன்னி இளமை (நித்திய கல்யாணித் தன்மை) தெய்வத் தன்மை ஆகியவற்றை `மங்கலா' என்ற பெயர் மிகச் சிறப்புறக் குறிப்பதாகும். பண்டை வடகொங்கு நாட்டுப் பரப்பில் குதிரைமலை என்ற வேள் நாட்டைப் பற்றி நாம் தொடர்பற்ற சில துண்டுத் துணுக்கான செய்திகளை மட்டுமே அறிகிறோம். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் கோசர்-சேரர் போராட்டத்தில் குதிரைமலை வேளான பிட்டங் கொற்றன் சேரர் படைத் தலைவனாயிருந்து பல கடும் போர்களாற்றியும் அவர்கள் வெற்றிப் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற செய்தி மேலே கூறப்பட் டுள்ளது. இவனை `வானவர் மறவன்' (வானவர் - சேரர்; மறவன் - வீரன், படைத்தலைவன்) என்றும், `கோதை நண்பன்' (கோதை - சேரன்) என்றும், விழுமிய ஈகைக் குணமுடையவன் என்றும் சங்கப் புலவர்கள் பாராட்டியுள்ளனர். அவன் மலையில் குறவர் காட்டுப் பசுவின் பாலில் தினை கரைத்து உண்டனர் என்றும் தெரியவருகிறது. (காட்டுப் பசுவைப் பழக்கி நாட்டுப் பசுவாகப் படைத்துருவாக்கி உலகுக்களித்தவர் கொங்கு நாட்டுத் தமிழரே யாதல் சாலும் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ளது.) களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் காலத்தில்சேரர் படைத்தலைவனாயிருந்த வெளியன் வேள்மான் ஆய்எயினன் இம் மரபுக்குரியவனே என்கிறார், ஒளவை துரைசாமி. சேரர்-கடம்பர் போராட் டத்தில் நன்னனின் வீரப் படைத் தலைவனான மிஞிலியால் இவன் கொல்லப்பட்டான் என்பது மேலே கூறப்பட்டது. குதிரைமலை எழினி என்பவன் வள்ளன்மை பற்றிப் புறநானூறு (158) பேசுகிறது. இவனும் இம்மரபினன் ஆதல் கூடும். பண்டைத் தென் கொங்கு நாட்டுக் குதிரைமலை வேளாள குமணன் வரலாற்றில் குறிக்கப்படும் இளவெளிமானும் இக் குதிரைமலையாண்ட மரபினனேயாதல் கூடும். இது கீழே சுட்டப்படுகிறது. துவரை நாடு என்னும் வேள்புலம், பண்டை வட கொங்கு நாட்டில், இன்றைய கன்னட மாநிலத்துக் காவிரிப் படுகைக்கும் நெடிது வடக்கே, தற்போது ஹளபீடு (ஹள - பழைய, பீடு - வீடு) என வழங்கும் பகுதியில் அமைந்திருந்தது. துவார சமுத்திரம் என்ற பெயரில் அது பிற்காலங்களில், தனி அரசமரபுகளுக்குரிய இடமாய் இருந்தது. இங்கேயுள்ள பெரிய ஏரியின் கரையில் காணப்படும் அழிபாடுகள், பண்டைத் துவரை நாட்டின் தலை நகரான அரையம் என்பதன் தடங்களேயாகும் என்று கருதப்படு கிறது. (இன்றைய மக்களிடையே `ராயர்' என வழங்கப்படும் பெயரும், விசயநகரப் பேரரசின் அப் பட்டமும், பிறர் பலரும் மேற்கொண்டு வரும் இதே சாதி மரபுப் பட்டமும் இந்த வேள் மரபினர் வழிவந்த பட்டங்கள் ஆதல் கூடும்). துவரையாண்ட வேளிர் இருங்கோவேள் என்று குறிக்கப்பட்டனர். அவர்களே `புலி கடிமால்' என்ற சிறப்புப் பட்டத்துடனும் புலவரால் பாடப்பட்டனர். பிற்கால `ஹொய்சளர்' (புலி கொன்றவர்) என்ற அரசு, பேரரசு மரபின் பெயர் இதன் மரபு மலர்ச்சியே என்று கருதப்படுகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை வரலாற்றுப் புகழ் சான்ற அப் போர்க்களத்தில் மற்ற இரு தமிழரசருடன் சேர்ந்து எதிர்த்த வேளிர் ஐவருள் இவ்வேளும் ஒருவன். அத்துடன் மூவரசரும் சேர்ந்து பாரியைக் கொன்றொழித்தபின், அவ் வள்ளலின் புதல்வியரான அங்கவை, சங்கவை ஆகியோரைப் புலவர் கபிலர் இட்டுவந்து மணஞ்செய்துகொள்ளும்படி வேண்டியபோது, இருங்கோ வேள், மூவரசர் பகைக்கஞ்சி அதை மறுத்ததாக அறிகிறோம். கொங்குச் சேரரின் ஆட்சிக் காலத்தில் சேரமரபின் பல்யானைக் குட்டுவன், பிற மேல் கொங்கு வடகொங்குப் பகுதிகளுடன் சேர இதனையும் வென்று, அப்பேரரசிடம் ஒப்படைத்தான். புன்னாடு என்ற வேள்புலம், பண்டை வட கொங்கு நாட்டில், முற்கால உலக வாணிகத்துக்குரிய அருமதிப்புடைப் பொருளாகிய நீலமணிக் கற்களுக்குப் பேர்போன பகுதி ஆகும். பண்டை யவனர் இவ் வேள்புலப்பெயருடன் அவ் வளமும் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியமும் இதனைச் சிறப்பிக்கிறது. புன்னாடர் என்றே வழங்கும் இதன் பன்மைப் பெயர், இது தனிவேள் ஆண்ட வேள்புலமன்று, வேள்புலக் குடியரசுக் குழு என்பதைக் காட்டுகிறது. (இது வேளாளர் நாடு என்ற சங்க கால மைய வேள்நாட்டின் ஒரு பகுதி ஆகலாம்). காவிரியின் கன்னட மாநிலக் கிளையான கெப்பிணி (பண்டைத் தமிழ்க் கீழ்ப் பூவானி) அல்லது கப்பிணி அல்லது கபினி ஆற்றின் கரையிலுள்ள கட்டூர் (கிட்டூர், பிற்காலக் கீர்த்திபுரம்) அதன் தலைநகரமாயிருந்தது. பாலி நாட்டுப் பெருவேள் நன்னன் புன்னாட்டின் நீலமணிக்கல் வளமவாவி எதிர்த்தபோது, சேரர் முதலில் தோற்றாலும் பின் வென்று, நன்னனைக் கீழடக்கினர். இதன்பின் நெடுஞ்சேரலாதன் தம்பி பல்யானை செல்கெழு குட்டுவன் பாலிநாடும் பூழிநாடும் பண்டை வடகொங்கும் வென்று கொங்குச் சேரர் வசம் ஒப்படைத்தபோது, வடகொங்குப் பகுதியான புன்னாடும் கொங்குப் பேரரசுப் பகுதியாயிற்று. இதன் பின்னும் புன்னாட்டின் வளமவாவி முதலில் சோழர் படைத்தலைவனான பழையனும், பின் சோழன் பசும்பூட் சென்னியும் கட்டூரைத் தாக்கினர். அந் நாளைய கொங்குச் சேரர் மேலாட்சியின் கீழ் ஆண்ட நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்ற ஐந்து வேளிரும் புன்னாடருக்கு உதவியாக வந்து பழையனை எதிர்த்து முறியடித்துக் கொன்று புன்னாட்டைக் காத்தனர். இப் போரின் பிற்பகுதி கொங்குப் பெருஞ் சேரர் வரலாற்றிற் குரியது. சங்க காலத்துக்குப் பின் புன்னாட்டு வேள்புல ஆட்சி மரபில் பெண் எடுத்ததன் மூலமே, அப்போது முடியரசராகத் தொடங்கிவிட்ட கங்கர் புன்னாட்டையும் விழுங்கி, பின்னாளைய அரசு வல்லரசு மரபாக வளர்ச்சி பெற்றனர். எருமையூர் என்ற வேள்புலம், பண்டை வடகொங்கு நாட்டில், தற்காலத்தில் மைசூர் (எருமையூர் என்பதன் சமக்கிருத வடிவமான மகிஷபுரி என்பதன் சிதைவு; மகிஷம்-எருமை) என்ற பகுதியில் நிலவிற்று. சங்க காலத்துக்குப் பின், ஓய்சளர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளிலும் இப் பெயர் காணப்படுகிறது. இவ்வேள்புலத் தலைவன் எருமையூரன் என்று குறிக்கப்பட்டான். இவ் வேள்புலப் பெயராலேயே (மைசூர் என்ற வடிவில்) அணிமைக் காலம் வரை கன்னட மாநிலத்தின் பெரும் பகுதியளாவிய ஒரு தனியரசும் ஒரு தனி மாநிலமும் அமைக்கப் பெற்றிருந்தன. சங்ககால வேளான எருமையூரனின் ஆட்சி, ஒருபுறம் வடக்கே அந் நாளைய வடுக எல்லைவரையும், மற்றொரு புறம் மேற்கே `குடகு நாடு' வரையிலும் பரவியிருந்தது. சேர நாட்டில் ஓர் அயிரைமலையும் ஓர் அயிரையாறும் இருந்தது போல, அவன் ஆட்சியெல்லையிலும் அதன் பெயரை நினைவூட்டும் முறையில் ஓர் அயிரிமலையும் ஓர் அயிரியாறும் இருந்தன. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இரு முடியரசருடன் சேர்ந்து எதிர்த்த வேளிர் ஐவருள் எருமை யூரனும் ஒருவன். பிற வடகொங்குப் பகுதிகளுடன் அவற்றுள் ஒன்றாக இவ் வேளிர் புலமும் கொங்குப் பேரரசுட்பட்டது, கங்கர் என்ற வேள் மரபினர், பண்டை வடகொங்கு நாட்டில், கங்கநாடு அல்லது கங்கவாடி என்றழைக்கப்பட்ட தலைக்காட்டுப் பகுதியை ஆண்டனர். பின்னாட்களில் கங்கவாடியை மட்டுமன்றி அதனுடன் தற்காலக் கொங்கு நாட்டையும் சேர்த்து அரசு வல்லரசாக, சிலகாலம் பேரரசு அல்லது பேரரசுகளாக ஆண்ட கங்கப் பெருமரபினர் இவர்களே. முற்கால வேளிர் தலைவர் கங்கன் என்றும் கங்கர் என்றும் (ஒருமையிலும் பன்மை யிலுமாகவே) அழைக்கப்பட்டனர். கலிங்கமாண்ட கங்க மரபினரிடமிருந்து பிரித்தறியவே இவர்களின் பிற்கால மரபு வரலாற்றில் மேலைக் கங்க மரபு என வழங்குகிறது என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால், இம்மேலைக் கங்க மரபே சில காலம் இருமரபுகளாகப் பிரிவுற்றிருந்தது. (இப் பிற்கால வரலாறு, பின்னர் விரிக்கப்பட விருக்கிறது). இவ்வேளிரும், கொங்குப் பேரரசுக்கு உட்பட்டிருந்தனர். பழையனை எதிர்த்துப் புன்னாடருக்கு உதவிய வேளிர் ஐவருள் கங்கனும் ஒருவன். பின்னாளில் முடியரசாக வளர்ந்தபின் இவர்கள் புன்னாட்டை மண உறவால் விழுங்கி வளர்ந்தனர் என்பது மேலே கூறப்பட்டுள்ளது. கட்டியர் என்ற வேள்புல மரபு, பண்டை வட கொங்கப் பகுதியில் ஆண்டு, பின்னாட்களில் இன்றைய கொங்கு எல்லையிலும் பரவிய வேள் மரபு ஆகும். அவர்கள் நாடு கட்டி நாடு, அவர்கள் தலைவன் கட்டி என்று வழங்கப் பெற்றான். மக்களும் படைவீரர்களும் கட்டியர் எனச் சுட்டப் பட்டனர். இவ்வேளிரும், கொங்குப் பேரரசுக்கு உட்பட்டிருந்தனர். புன்னாடருக்கு உதவியாகப் பழையனை எதிர்த்த வேளிர் ஐவருள் கட்டியும் ஒருவன். கட்டி என்ற வேளிர் தலைவனைப் பற்றிய ஓர் இனிய வீரப் பெருமிதக் காட்சியைச் சங்கப் பலகணி, நமக்குக் காட்டுகிறது. சோழ நாட்டு உறையூர் ஆண்ட வேள் தித்தனைத் தாக்கக் கட்டி முற்பட்டிருந்தான். அச்சமயம், தித்தனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான கிணைப்பறை ஓசை தொலைவி லிருந்தே கட்டியின் செவிகளில் விழுந்தது. `இது பகைமைக்குரிய நேரமன்று' என்று கூறி, அவன் படையுடன் திரும்பி விட்டான். பண்டைத் தென் கொங்கு நாடே இன்றைய கொங்கு அகநாடாய் இயல்வது. சங்க கால வேள்புலமாகிய வையாவிநாடு, இன்றைய கொங்கு நாட்டுப் பழனி வட்டாரத்தில் இருந்தது. இதன் தலைவர் வையாவிக்கோ அல்லது வையாவிக் கோமான் என்றும், மக்கள் ஆவியர் என்றும் சுட்டப்பெற்றனர். அவர்கள் மலையின் பெயரான பொதினியே இன்று பழனி என மருவியுள்ளது, (பழம் நீ எனக் கூறப்படும் புராண மரபுக்கதை இனிதேயாயினும் அதனடியாகப் பழநி என வருவித்து எழுதுவது தவறு, மரபு மாறாட்டச் செயலும் ஆகும்). இவ்வேளிரின் நகரம் திருமுருகாற்றுப் படைக் கால முதல் திருப்புகழ்க் காலம் வரை இலக்கிய மரபில் திரு ஆவிநன்குடி (இதுவும் திருவாவினன் குடி என்று புராண மரபுக்கதைக் கியையத் திரித்தெழுதி வழங்குகிறது) என்றும், வையாபுரி, வைகாவூர் என்றும் புகழ்ப்பெயர்கள் பெற்றுள்ளன. இதனையடுத்துள்ள கோடை மலைத் தொடரில் வாழ்ந்த பண்ணன் என்ற வேள் தலைவன் பெயராலேயே அம் மலைத்தொடர் பண்ணிமலை (தவறான திருத்தம்: பன்றிமலை-சமக்கிருதத் திரிபு-வராகமலை) ஆயிற்று என்று கருதப்படுகிறது. இவ்வேளிர் ஆய்மரபினர். பிற்காலத்தில் தெற்கு மேற்காகப் புடைபெயர்வுற்றுத் திருவாங்கூர் அரச மரபாக மலர்வுற்ற ஆய்வேள்மரபு இதுவாதல் கூடும் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ளது. வையாவி நாட்டு வேளிருள் பெரும்புகழ் பெற்றவன் வையாவிக் கோப்பெரும்பேகன். படரக் கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தன் தேரையே அளித்த பாரியின் புகழ்போல, குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்குத் தன் போர்வையையே வழங்கிவிட்டு வந்தவன் என்று இவன் கொடைவண்மை புலவரால் புகழப்படுகிறது. இவன் துணைவி கண்ணகி சிலப்பதிகாரக் கண்ணகி போலவே கற்பிற் சிறந்தவள். பிறமகளிர் வயப்பட்டு அவளைப் புறக்கணித்து வந்த பேகனைச் சங்கப்புலவர் பலர் சென்றுபாடி அவள் துயர் களைய விரையும்படித் தூண்டினர். வையாவிக் கோமான் பதுமன் என்ற வேள் தன் புதல்வியர் இருவரை முறையே சேர மரபின் பல்யானை செல்கெழுகுட்டு வனுக்கும் கொங்குச் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் மணஞ் செய்து கொடுத்தான். ஏற்கெனவே தாயாதி உடன்பிறந்தாராயிருந்த அவர்கள் பாசம் இதனால் மேலும் நெருக்கமுடையதாயிற்று. அத்துடன் அதுவே கொங்குத் தமிழகம் கொங்குச் சேரர் பேரரசில் படிப்படியாக எளிதில் கரைவதற்கும் வழிவகுத்தது என்னலாம். தகடூர் நாட்டு அதியமான் பண்டைத் தென் கொங்கு நாடாகிய இன்றைய கொங்கு நாட்டில் ஆட்சி செய்த வேளிருள் தலைசிறந்தவன். அவன் நகரும் நாடும் ஒருங்கே தகடூர் எனப்பட்டன. தலைவர் அதியமான், அதிகைமான், அதியமான், அதியன் என்றும்; மக்கள் அதிகர், அதியர் என்றும்; நாடு அதிகை என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதியமானைப் பாடிய சங்கப்பாடல் ஒன்று, அவன் முன்னோரே வானவர் நாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கியதாகக் கூறுகிறது. இதனைப் புராணக் கற்பனை சார்ந்த புனைந்துரை எனக் கருதுபவர் உண்டு. வானவர் நாடு என்ற பெயர் சீன நாட்டுக்கும் உண்டு. சேர நாட்டுக்கும் உரியது. ஆனால், இம்மரபுரையின் ஊன்றிய மெய்ம்மை ஒன்றே. ஏதோ ஒரு காட்டுத் தட்டையைப் பயிற்றுவைத்துக் கரும்பாக்கி, அதிலிருந்து சர்க்கரைத் தொழிலையும் கண்டவர் அதிகை நாட்டவர் அல்லது கொங்குத் தமிழகத்தவர் என்பதே அது. (உலகெங்கும் பெரிதும் கரும்புக்குப் பெயரின்றிச் சர்க்கரைப் பெயரே தமிழ்ப் பெயராக வழங்குவதனடிப்படையில், இது மேலே குறிக்கப்பட்டுள்ளது. கரும்பு-கரும்பயிர்-கரிசல் நாட்டுப் பயிர்; இந்தி: கன்னா; தமிழ்: கன்னல்-கரும்பு) புன்னாட்டையும் படியூரையும் போலவே, இந்நாட்டின் மலைப் பகுதிகளிலும் நீலமணிக்கற்களும் தங்கமும் செல்வ வளங்களாகக் கிட்டின. மேலே சுட்டியபடி, மோரியர் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு) அதியமான் எழினி என்பவன் கோசரால் வாட்டாறு, செல்லூர் போர்க்களங்களில் முறியடித்துக் கொல்லப்பட்டான். அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பவனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வென்றதாகப் பதிற்றுப்பத்து கூறுகிறது. அவன் பசும்பூட் பாண்டியனுக்குப் படைத் தலைவனாகவும் உற்ற துணைவனாகவும் இருந்தான் என்றும் பாண்டியன் பகைவர்கள் இதனால் ஒன்றுபட்டு இணைந்து அவனை முறியடித்தனர் என்றும் பரணர் பாடுகிறார். நக்கீரரின் அகப்பாட்டு (253) ஒன்று பசும்பூட் பாண்டியன் கொங்கரைத் தாக்கித் துரத்தி நாட்டை நண்பர்களுக்குப் பிரித்தளித்தான் என்று கூறுகிறது. `வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும்பூட் பாண்டியன் பொன்மலி நெடுநகர் கூடல் ஆடி இன்னிசை ஆர்ப்பு.......' பாண்டியன், கொங்கு வேளாள மரபினரைக் கொங்கு நாட்டின் தென் பகுதியிலிருந்து துரத்திவிட்டு, வேட்டுவ மரபினரை அப்பகுதிகளில் குடியேற்றியதனை இது குறிப்பதாக மரபு வரலாறுகள் காட்டுகின்றன. இப் பாட்டில் நெடுமிடல் பெயர் குறிக்கப்படவில்லை. அவன் இம்முயற்சியில் முந்துற இறந்துவிட்டதனாலே இப்பாட்டில் இறுதி வெற்றிக்குரிய மதுரை மக்கள் ஆரவாரமும், மற்றொரு குறுந்தொகை(393)ப் பாட்டில் அவன் மாள்வும் கொங்கர் ஆரவாரமும் குறிக்கப்படுகின்றன என்று அவர்கள் கொள்வர். `கூகைக் கோழி வாகைப் புறந்தலைப் பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பு' அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட குறுந்தொகைப் பாட்டு, கீழ்வரும் அகப்பாட்டு (142) ஆகிய இரண்டையும் இணைத்து, இவ் வதிகமான் மாள்வு நன்னன் படைத்தலைவனான மிஞிலியால் நேர்ந்தது என்று கொள்கிறார். குறுந்தொகைப் பாட்டில் வரும் கொங்கர் என்பதை அவர் கொண்கர் (அதாவது கொண்கானத்தவர்) எனக் கொள்வர். (அகப்பாட்டும் நெடுமிடல் பெயர் கூறவில்லை.) `கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவர, பேஎய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி புள்ளிற் கேமமாகிய பெரும் பெயர் வெள்ளத்தானை அதிகன் கொன்று வந்து ஒள்வாள் அமலை ஆடிய.......' தகடூர் வேளிருள் பெரும்புகழ் நிறுவியவன் அதியமான் நெடுமான் அஞ்சியேயாவன். அவன் சங்ககால வள்ளல்கள் எழுவரில் ஒருவன். கொங்கு நாட்டின் கவிப் பேரரசியான ஒளவையார் அவன் அருந்துணைவராகவும், அவைப் புலவராகவும், அவன் அரசியல் தூதமைச்சராகவும் விளங்கினார். அவரும் பிற சங்கப் புலவோர்களும் அவன் வீரத்தையும், வெற்றிகளையும், கொடைப் பண்புகளையும் வாயாரப் பாராட்டியுள்ளனர். உண்டவரை நெடுநாள் வாழச் செய்யும் அரு நெல்லிக்கனி ஒன்று அவனுக்குக்கிடைத்தபோது, அதனை அவன் தானுண்ணாது ஒளவையாரை உண்பித்து, அவர் உண்ட பின்னரே அதன் அருமை தெரிவித்தான். இச்செயற்கரும் செயல் கண்டு உவகையும் நன்றிப் பெருக்கும் மீதூரப் பெற்ற அக்கவிஞர் பெருமாட்டி, நீலமணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும, நீயே! (புறம் 91) என்று அவனை மனமுருக வாழ்த்தினார். அதியமானின் இவ்வருஞ்செயலையும் அவன் முன்னோர் கரும்பு தருவித்த புகழையும் இணைத்துக் கொங்கு மண்டல சதகம் பாடுகிறது. `சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத் தமிழ்ச் சொல் ஒளவைக்கு ஆதரவோடு கொடுத்தவன், கன்னலை அங்கு நின்று மேதினி மீதில் கொடுவந்து நட்டவன்மேன்மரபோர் மாதிரம் சூழ் அரண் மேவுவதும் கொங்கு மண்டலமே!' அதியமான் அஞ்சிக்கு, அவனைப்போலவே வள்ளல் களாகவும் வேளிர்களாகவும் விளங்கிய கொல்லிமலை வல்வில் ஓரியும், மலையமான் திருமுடிக்காரியும் முறையே உயிர் நண்பராகவும் உயிர்ப் பகைவராகவும் விளங்கினர். அதியமான் பின்னவனைத் தாக்க எண்ணி, முதலில் காஞ்சியாண்ட தொண்டைமான் இளந்திரையனின் நட்பை உறுதி செய்து கொள் வதற்காக அவனிடம் ஒளவையாரைத் தூதுவராக அனுப்பினான். தற்பெருமைமிக்க தொண்டமான் பளபளப்பாக ஒளிவீசும் தன் பாரிய படைக்கலக் கொட்டிலைத் தூதருக்குக் காட்ட முனைந்தபோது, அக் கவிஞர் பெருமாட்டி `ஆம்! இவையே அழகானவை, அப்படியே புத்தம் புதிதாக நெய் பூசப்பெற்றுப் பளபளக்கின்றன. என் தலைவனோ தான் உண்ணாமலே புலவர்களுக்குக் கொடுத்து வாடுபவன். அவன் படைக் கலங்களோ முற்றிலும் போரில் ஒடிந்தும் குருதி படிந்து துருப்பிடித்தும் கிடப்பவை' என்று நா நயம்படக் கூறி அவனை இணக்குவித்து அவன் ஆர்வ நேசம் பெற்றார்! அதன்பின் உயிர் நண்பன் ஓரியின் உதவியுடன் அதியமான் காரியின் நாட்டைக் கைப்பற்றினான். காரி, கொங்குப் பேரரசன் பெருஞ்சேரலிரும்பொறையை அணுகி, அவன் உதவியால் அதியமானின் துணையையும் மீறி, ஓரியை முறியடித்துக் கொன்றான். அதன் பின் சோழ பாண்டியர் உதவிய நிலையிலும் அதியமான் நெடுமான் அஞ்சியும் அவன் வீரப்படைத்தலைவன் பெரும்பாக்கனும் அவர் வீரப்புதல்வன் பொகுட்டெழினியும் கொங்குச் சேரனை எதிர்த்துத் தகடூர்ப் பெரும் போரில் மாண்டனர். நமக்கு அரைகுறையாகவே கிட்டியுள்ள சங்க காலக் கொங்கு நாட்டுப் பெருங்காப்பியமாகிய தகடூர் யாத்திரை, பல ஆண்டுகள் நீடித்த இத் தமிழகப் பெரும்போரைச் சங்ககாலப் புலவரின் நேரடிக் காட்சியாகவே வருணித்துள்ளது. இப் போர் வெற்றியாலேயே, கொங்குச் சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற விருதுப் பெயர் பெற்றான். கொல்லிமலை என்ற வேள்புலம், பண்டைத் தென் கொங்கு நாடாகிய இன்றைய கொங்கு நாட்டின் புகழ் சான்ற மரபு ஆகும். அது கொல்லிமலை என்ற மலையினாலேயே அப் பெயர் பெற்றது. அது கொல்லி நாடு என்றும் கொல்லிக் கூற்றம் என்றும் அழைக்கப் பெறுவதுண்டு. அதன் வேளிர், ஓரி என்ற குடிப் பெயரால் சுட்டப்பட்டனர். கொல்லிமலை இப்போது சதுரகிரி என அழைக்கப்படுகிறது. அது 180 சதுரக் கல் பரப்பு உடையது. அதன் மிக உயரிய கொடுமுடியான வேட்டைக்காரன் மலை 4663 அடி உயரம் உடையது. அறப்பளீசுரம் என்ற கோயிலும் அதன்மீது அறப்பளீசுர சதகம் என்ற தமிழ்ச் சதக இலக்கியமும் இதற்கு உண்டு. இவ் வேள்புலத்தின் மலைப் பகுதிகளில் புன்னாடு படியூர் தகடூர் முதலிய பிற இடங்களில் கிடைத்த நீலமணிக் கற்களும் பொன்னும் மலிந்திருந்தன. இதன் காடுகளில் சந்தன மரங்களும், பலா மரங்களும் கருங்காலி மரங்களும் மலிந்திருந்தன. தற்காலத்தில் தேக்கு வளமும் இங்கே மிகுதி. இவ் வேள்புலத்தைச் சூழ, கொங்கு தொண்டை நாடுகளில் வாழும் வில்லியர் தமிழகத்தில் இன்று பிற்பட்ட சமுதாயத்தின ராக வாழ்ந்தாலும் அவர்கள் முன்னோர் பெருவீர மரபினராகப் புகழ் பெற்றவர்களா யிருந்தனர் என்று காண்கிறோம். இவர்கள் தொல்பழங் காலங்களில் பெருங் கொங்குப் பரப்புத் தாண்டிக் குசராத் மாநிலம் வரை பரவியிருந்தனர் என்பதை அங்கே தனி மொழியுடன் பிற்பட்ட இனத்தவராய் வாழும் வில்லியர் (க்ஷhடைள) மரபு காட்டுகிறது. இது மேலே குறிக்கப்பட்டுள்ளது. இக் காலத்தில் சேலம் அருகாமையில் காணப்படும் மாயமான் குறடு என்ற ஒளிவெளித் தோற்றம் போல, அந் நாளில் இங்கே கொல்லும் அழகுத் தெய்வப் பாவை (மோகினி) யாகிய கொல்லிப் பாவை என்னும் ஒளிநிழல் தோற்றம் நிலவிற்று. இதனைச் சங்கப் புலவோர் `கடவுள் எழுதிய பாவை' (அகம். 62), `தெய்வம் எழுதிய வினைமாண் பாவை' (நற்றிணை) எனப் பாடியுள்ளனர். கொங்கு மண்டல சதகமும் இதைக் குறிப்பிட்டுள்ளது. சங்க காலத்தில் பெரும் புகழ் நிறுவிய கொல்லிமலைத் தலைவன் ஆதன் ஓரி அல்லது வல்வில் ஓரி என்பவன். இவன் வள்ளல்கள் எழுவரில் ஒருவன். `வெம் போர் மழவர் பெருமகன் மாவண் ஓரி' (நற்றிணை), `அடு போர் ஆனா ஆதன் ஓரி' `மாரிவண் கொடை' (புறம் 153) என அவன் இணையிலாப் பெருவீரத்தையும் இசையார்ந்த நெடுங் கொடையையும் சங்கப் புலவர் வாயாரப் பாராட்டியுள்ளனர். அவன் உயிர் நண்பனாக அதியமான் நெடுமான் அஞ்சியும், அவன் உயிர்ப்பகைவனாக மலையமான் திருமுடிக்காரியும் விளங்கினர். அவன் துணையுடன் அதியமான் முதலில் காரியின் நாட்டைக் கைப்பற்றி அவனைத் துரத்தியதும், பின்னர் கொங்குச் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறையின் உதவியுடன் காரி ஓரியின் கொல்லி நாட்டைத் தாக்கியபோது, அதியமான் அவனுக்குத் துணை நின்றும் பயனின்றி, வல்வில் ஓரி போரில் முறியடிக்கப்பட்டு வீரமாள்வு எய்தியதும் மேலே சுட்டப்பட்டுள்ளன. ஓரி என்ற பெயரே கொண்ட வல்வில் ஓரியின் குதிரையும் காரி என்ற பெயரே உடைய மலையமான் காரியின் குதிரையும், அக்காலத்தில் அக் குதிரைகளின் தலைவர்களைப் போலவே, வீரப்புகழ் வாய்ந்தவையாய் இருந்தன. `காரிக் குதிரை காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும்' (பத்துப்பாட்டு; சிறுபாணாற்றுப்படை) என இந்த இருபெரு வீரரின் போர்க்கால மோதுதலைச் சங்ககாலப் புலவர் வருணித்துள்ளனர். தமிழகத்துக்கு வெளியே, சிறப்பாகச் சேர நாட்டில் உள்ள வேள் மரபினர் பெரிதும் இந்த ஓரியின் மரபினராகவே இருந்தனர் என்னல் தகும். அவர்கள் வீரப்புகழுக்குரிய வில்லே சேரர் கொடியாய் அமைந்தது என்பது இதனைச் சுட்டுகிறது. சேரரின் இந்த வில் பழைய நெடு வில் (டுடிபே bடிற) என்பதனிடமாக மேலையுலகில் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் புதிது பரவிய விசைவில் (ஊசடிளள bடிற) ஆதல் கூடும் இவ் விசை விற்படை காரணமாகவே சேரர் வானவர் என்றும். மேல் கொங்கு, வட கொங்கு. தென் கொங்கு ஆறுகள் வானி என்றும் பெயர் பெற்றனவாதல் கூடும். சோழர், விசய நகரப் பேரரசர், முகலாயர் காலம் வரை இந்த விசை விற்படையின் புகழ் நீடித்திருந்தது. ஆங்கில அரசன் ஹெரால்டு (1066), சோழ இளவரசன் இராசாதித்தன் (10ஆம் நூற்றாண்டு), விசய நகரப் பேரரசன் இராமராயன் (1565) ஆகியோர் இந்த விசை வில்லின் தாக்குதலால் உயிர் இழந்தவரேயாவர். கண்டிர நாடு என்பது, பண்டைத் தென் கொங்கு நாடாகிய, தற்காலக் கொங்கு நாட்டில், தோட்டிமலை சார்ந்த வேள்புலம் ஆகும். யானையை இயக்கும் கருவி என்ற பொருளிலிருந்து அம்மலைப் பெயரை வேறுபடுத்திக் காட்டுவது போலச் சங்கப் புலவர் அதனை `இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர்த் தோட்டி' என வருணித்தனர். அதன் காடுகளில் காந்தள் மலர்கள் நிறைந்திருந்தன என்றும், யானை வளத்துக்கும் தேன் வளத்துக்கும் அவை பேர் போனவை என்றும் அறிகிறோம். ஆயர்கள் இக்காடுகளில் பசுவளம் பெருக்கி நெய்வளம் கண்டனர் (பால்வளப் பொருள்களில் வெண்ணெயையும் பாலேட்டையுமே மேலையுலக மொழிகள் அறியும்: நெய் என்ற பொருளும் சொல்லும் தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் மட்டுமே உரியன. பண்டைக் கொங்கு நாட்டிலும் தமிழக நெய் என்ற இப்பால்வளப் பொருள் உலக வாணிகச் சரக்காக உருவாக்கப்பட்டது என்பதனை இம்மொழி மரபு சுட்டிக் காட்டுகிறது. முதல் முதல் பசுவைப் படைத்தளித்த நாடும் கொங்குத் தமிழகமே என்பது மேலே சுட்டப்பட்டுள்ளது. (தமிழில் மட்டுமே மரபியல் நெய்க்கு முற்பட்ட பழமை நெய்க்கு உரியது). கண்டிர நாட்டு வேளிர் 'கண்டிரக்கோ' எனப்பட்டனர். சங்க காலப் புகழ்பெற்ற வேளான கண்டிரக்கோப்பெருநள்ளி என்பவன், வள்ளல்கள் எழுவரில் ஒருவன். இவ் வேள்புலப் பகுதிக்குரிய புகழியூர் மலையின் கல்லெழுத்துக்கள் மூலம் இவன் பெயராலேயே நள்ளியூர் என ஓர் ஊர் இருந்ததாக அறிகிறோம். இதுவே அவன் தலைநகராக இருந்திருத்தல் கூடும். புலவர்களுக்குக் கண்டிரக்கோப் பெருநள்ளி, தேர்களையும் யானைகளையும் பரிசில்களாக வாரி வாரி வழங்கினான் என்று அறிகிறோம். ஆனால், அவன் குருதி மரபின் வண்மை, அவன் வண்மை யுடனேயே போட்டியிட்டது. அவன் இல்லாதபோது அவனை நாடி வந்த புலவர்களுக்கு அவன் வேள்மனைப் பெண்டிரும் பிள்ளைகளும் பிடி யானைகளையும் (பெண் யானைகளையும்) குட்டி யானை (போதகங்) களையுமே பரிசாகக் கொடுத்தனர் என்ற இனிய செய்தியைப் புலவர் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒரு சமயம், வன்பரணர் என்னும் புலவர் பெருமான் அவனை நாடிக் காட்டுகளில் நடந்து, ஒரு மரத்தடியில் பசிவிடாயாலும் களைப்பாலும் சோர்ந்து கிடந்தார். அச் சமயம் பெருவேள் நள்ளி யாரோ ஒரு வேடன் போல வந்து, ஒரு மானைத் தானே வேட்டையாடி அதன் இறைச்சியைச் சமைத்து, அப் புலவரை உண்பித்தான். அவனே நள்ளி என்று பிற்பட்டே அறிந்த புலவர்பெருமான், அவனை உளமாரப் பாடிப் புகழ்ந்தார்(புறம் 150). விச்சி நாடு அல்லது விச்சியர் நாடு, பண்டைத் தென் கொங்கு நாடாகிய இக்காலக் கொங்கு நாட்டில், தற்காலத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பச்சைமலைப் பகுதியே என்று கருதப்படுகிறது. அதன் சாரல்களில் வளர்ந்த பலாமரங்களின் வளமை பற்றிக் கபிலர் பெருமான் (புறம் 200) பாடியுள்ளார். சந்தன மரங்களும் கருங்காலி மரங்களும் அதன் காடுகளில் வளங்கொழித்திருந்தன. அம் மலைமீதிருந்த வெல்லமுடியாத ஐந்தெயில் கோட்டையிலேயே, விச்சியரின் வேளிர் ஆகிய விச்சிக்கோக்கள் வாழ்ந்துவந்தனர். சங்கப் பாடல்கள், ஒரு விச்சிக்கோ பற்றியும், அவன் தம்பி இளவிச்சிக்கோ பற்றியும் பாடுகின்றன. அந் நாட்டில் குறும்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த பாணர்கள் (இன்றைய தாழ்த்தப்பட்ட வகுப்பினரல்லர், அவர்கள் முன்னோர்களான இசைக் கலைஞர்கள்) விச்சிக்கோ காட்டில் தனியொருவனாக வெறுங்கையுடன் ஒரு கொடும்புலியுடன் மல்லாடி வென்றதைக் கண்டு வியந்து பாராட்டினர். இச் செய்தியைப் பரணர் (குறுந்தொகை 326) விரித்துரைத்துள்ளனர். கொங்குப் பெருஞ்சேரனான இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை முற்றுகையிட்டான். சோழரும் பாண்டியரும் விச்சிக்கோவுக்குத் துணையாய் நின்று போராடிய நிலையிலும், கோட்டை வீழ்ச்சியுற்று, நாடு, கொங்குப் பேரரசால் விழுங்கப் பெற்றது. கழுவுள் என்ற வேளிர் தலைவனுக்குரிய காமூர் என்ற முல்லை நில வேள்புலம் பண்டைத் தென் கொங்காகிய இன்றைய கொங்கு நாட்டில் இருந்தது. அந் நாட்டின் பசுவள, பால்வளச் செல்வத்தால் அதன் மக்கள் ஓங்குபுகழ் பெற்றிருந்தனர். அவர்களின் கோட்டை அவர்கள் புகழ் போல ஓங்கிய மதில்களும், அவர்கள் செல்வ வளம்போல ஆழ்ந்தகன்று பரவிய அகழியும் உடையதாயிருந்தது! கொங்குப் பெருஞ் சேரனான பெருஞ்சேரல் இரும்பொறை பதினான்கு வேளிர்களின் துணையுடன் கடும்போரிட்டுக் கழுவுளின் காமூர்க் கோட்டையையும் நாட்டையும் கைக்கொண்டான். குதிரைமலை (பண்டை வடகொங்கக் குதிரைமலையின் வேறானது) என்ற வேள்புலம் சங்க காலத் தென்கொங்கு நாடாகிய இன்றைய கொங்குத் தமிழகத்தின் உலகப் புகழ் நாட்டிய நன்னிலம் ஆகும். (இது கீழே விளக்கப்படவிருக்கிறது.) இவ்வேள்புலம் தற்கால உடுமலைப் பேட்டை வட்டத்தின் அருகாமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சங்ககாலக் குதிரைமலை அல்லது முதிரமலை ஆண்ட பெரும் புகழ் வள்ளல் குமணவேளுக்கு இளங்குமணன் என்ற ஒரு தம்பி இருந்தான். வள்ளல்கள் எழுவரிலும் தலைசிறந்த வள்ளலான குமணவேளைப் புலவோர் `பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேல் குமணன்!' (புறம் 163) `அரிது பெறு நறுங்கலன் எளிதினில் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் மட்டார் மறுகின் முதிரத்தோனே!' (புறம் 160) எனப் பாசமீதூரப் பாடியுள்ளனர். சங்கப் புலவருள்ளே தன்மானக் குன்றேறி நின்ற நல்லிசைப் புலவர் பெருஞ்சித்திரனார் ஆவர். தம்மை மதியாது காலந் தாழ்த்துச் சிறு பரிசிலே தர முன்வந்த இளவெளிமான் என்ற மற்றொரு வள்ளல் வேள்மீது சீறிப் பரிசிலை எறிந்து, புலவர் தகுதியறிந்த புரவலன் பரிசிலின் தன்மையை உன் கண்முன் கொணர்ந்து காட்டுவேன், என்று வஞ்சினம் கூறிய நிலையில் அவர் குமணவேளிடம் வந்தார்! குமணவேள், பிற பரிசில்களுடன் வழங்கிய பாரிய யானையை இளவெளிமான், முன்றிலில் நின்ற ஒரு மரத்தில் கட்டிவிட்டு அவனை அங்கு இட்டு வந்து காட்டினார். (மேலே சுட்டியபடி இளவெளிமான் என்ற இந்த வேள் பண்டை வட கொங்குப் பக்கமுள்ள குதிரைமலை வேள் மரபினனாக இருத்தல்கூடும் எனலாம்) இளங்குமணன், தன் தமையனான வள்ளற் பெருவேள் குமணனைக் காட்டுக்கு ஓட்டிவிட்டு நாடாண்டான். அத்துடன், அவன் தன் தமையன் தலை கொணர்வோர்க்குக் கைநிறை பொன் வழங்குவதாக அறிவித்தான். காட்டில் வந்து குமணவேளைப் பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவருக்கு, வேறு எதுவும் வழங்க இயலா நிலையில் குமண வேள் தன் வாளைக் கொடுத்துத் தலைகொண்டு சென்று பொன் பெறுக என வேண்டினான். புலவர் அது மறுத்து வாளுடன் இளங்குமணனிடம் சென்று இச் செய்தி கூறி உடன்பிறந்தார் இருவரையும் இணக்குவிக்க விரைந்தார். பெரிதும் போர்ச் செய்திகளே நிரம்பிய வேளிர் வரலாற்றில், குமண வேளின் புகழ் நாடகம் ஒரு தண்ணிலவுக் காட்சியாய் மிளிர்கிறது. இம் மெய்ப் புகழ் வரலாற்றுக் கதை தமிழகம் கடந்து, உலகில் நீள் நெடுந் தொலை பரவியுள்ளது எனலாம். ஏனெனில், ஆங்கில உலகமாக் கவிஞன் சேக்சுப்பியரின் `மனம் போல் வாழ்வு' (ஹள லடிர டமைந வை) எனும் நாடகக் கதையின் முல்லைப் பாட்டழகையே நினைவூட்டும் இத் தொல் பழ வரலாறு, இத்தாலி முதலிய பல நாடுகளின் இலக்கியத் திரைகள் கடந்து சென்று அவ் ஆங்கில நாடகக் கதைக்கே (ஈரேழு நூற்றாண்டுக் கால முற்பட்ட) மரபு மூலமாய் அமைந்தது என்னல் தகும். புலவரைப் புரக்கும் வகையில் தமிழக முடி மன்னரின் வண்மை, இந்தியாவோ உலகமோ காணாத ஒன்று; அதன் தமிழக வரலாற்றுப் புகழ் மரபும் வேறு எந்நாடும் வரலாறும் காணாததேயாகும். சேக்சுப்பியர் நாடகத்தினும் சிறந்த தமிழ்ச் சங்ககால நாடகப் பாடல்களில் ஒன்றான பட்டினப்பாலை பாடிய கடியலுர் உருத்திரங்கண்ணனாருக்குக் கரிகால் வளவன் அப் பாடல் அரங்கேறிய பதினாறு கால் மண்டபத்தின் தூண் தோறும் ஆயிரம் (கலிங்கத்துப் பரணி இதை நூறாயிரமாகக் கூறியுள்ளது) பொன் கிழி கட்டிப் பரிசளித்தான். ஆயிர ஆண்டு கழித்துக் கலிங்கத்துப் பரணி இது பாடியதுடனன்றி, பாண்டியன் சோழ நாடழித்தபோது (இன்று காணக் கிடையாத) அந்த மண்டபத்தை மட்டும் அழியாது காத்ததாகக் கூறித் தன் கல்வெட்டுகளில் இதன் புகழ் நினைவூட்டினான். கொங்குப் பேரரசரோ சேரரோ வழங்கிய பரிசுகள் இன்னும் பாரியவை-குறிப்பாகப் பெருஞ்சேரல் இரும்பொறை பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிய புலவர் அரிசில் கிழாருக்குத் தன் ஆட்சியும் அரண்மனையும் தவிசுமே வழங்கியதன்றிச் சிறு செலவுக்கென ஒன்பது நூறாயிரம் காணம் (பொற்காசு) கையுறையாகக் கொடுத்தான். ஆனால், வேளிரையும் அவர்களை விழுங்கிய மன்னரையும் ஒரே நிலையில் வைத்துப் பாடிய தமிழ்ப் புலவரின் தமிழ்ப் பண்பு மரபு எழுவர் என வள்ளல்களைத் தொகைப் படுத்திய காலத்தில் இம்முடி மன்னர் ஒருவரையேனும் அந்த வள்ளல்களின் வண்மைக்கு நிகராகக் கொண்டு உளப்படுத்த வில்லை. வள்ளண்மையின் முழுநிறை உருவங்களாக அவர்கள் எழுவரையும் வேளிரிடையேதான் கண்டனர். முடியரசர் பேரரசரின் ஆரவாரப் பரிசில்களை விட, மக்களுடன் மக்களாக, ஊடாடி வாழ்ந்த குடியரசராகிய வேளிரின் பரிசில்களே பழந்தமிழர் உள்ளங்களில் ஆழப்பதிந்து தமிழ்ப் பண்பலைகளைத் தூண்டின என்று காணலாம். முடியரசுக் கால மூன்றாம் தள ஊழியின் கால வண்ணத்தின் மருட்சியுட்பட்ட பிற்கால, அணிமைக்காலத் தமிழர் (ஒரு வேளை பாரதக் கர்ணன் ஒருவன் நீங்கலாக) புராணக் கற்பனைக்குரிய முடியரசரையே முந்து புகழ் பெறும் முதலெழு, இடையெழு வள்ளல்களாகத் தொகுத்து, தமிழ் மரபுக்கும் தமிழர் வரலாற்றுக்குமேயுரிய இத்தமிழ் வள்ளல்கள் எழுவரையும் ஒருங்கே கடையெழுவள்ளல்கள் ஆக்கி வரிசை திருத்தினர்! பண்டைத் தமிழர் குடியரசு மரபுப் பண்பின் பெருமையையும் உயர்ச்சியையும், வேளிர் வரலாறுகளும் அவர்களிடையே புலவர்களால் பொறுக்கியெடுத்துத் தரப்பட்ட வள்ளல்களின் வரலாறுகளும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. அவ்வள்ளல் களின் வரலாற்றில் செம்பாதிக்கு மேற்பட்ட பகுதி கொங்கு நாட்டுக்கு உரியது என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். 2) சேரரும் கொங்குச் சேரரும்: வீட்டரசர் கட்டி யெழுப்பிய நாட்டரசுக் கோட்டை `சிலப்பதிகாரச் செய்தி' என்ற தம் ஆய்வேட்டில் ஆசிரியர் போ. ரா. குருசாமி காட்டியுள்ளபடி, முத்தமிழ் நாடகக் காப்பியமாக மட்டுமன்றி மூவேந்தர் நாட்டுத் தேசியக் காப்பியமாகவும் திகழும் சிலம்பு சித்திரிக்கும் தமிழக ஊழ் நம் கண் முன் மூவரசு நாடுகளின் மூன்று போகூழ்களாகவும், மூவரசு கடந்த ஒரு தமிழக (குடியரசு மரபுக்குரிய கொங்குத் தமிழக) ஆகூழாகவும் காட்சியளிக்கின்றது. தமிழ் வளர்த்த பாண்டியர்கள் அத் தமிழ் கடந்து தமிழ் மக்கள் மரபின் நீதியைக் காண்பதிலும், கலை இன்பம் வளர்த்த சோழர்கள் அக் கலைகளைக்கடந்து கலைஞன் வாழ்க்கை நலத்தைக் காப்பதிலும், வீரம் வளர்த்த சேரர் அவ் வீர வெற்றியிடையே தம் மரபின் அறம், அதாவது, வீரத்தின் இலக்காகிய மக்கள் தன்னாண்மை வாழ்வைப் பேணுவதிலும் வழுவினர். இவையே மூவரசுகளின் போகூழ்கள் அல்லது இழவூழ்கள். இம்மூன்றனுள்ளும் அடிப்படையானது குடும்ப வாழ்வு நலத்தையே அடித்தளமாகவும் மனித இன வாழ்வு நலத்தையே (ழரஅயnளைஅ) இலக்காகவும் கொண்ட குடியரசு அல்லது குடியாட்சிப் பண்பு ஆகும். இதுவே கண்ணகியின் கற்புப்பண்பு என்னலாம். சிலம்பையும் சேரரையும் பொறுத்த மட்டில், தமிழினத் தேசிய மாக்கவிஞன் இளங்கோ தம் காப்பியத்தில் பேரரசி வேண்மாளின் கடைக்கண் வீச்சு மூலமும் அவ்வேள் புல மரபுக்குரிய அப் பேரரசியின் முத்து மணியுரைகள் மூலமும், மாடலன் அறிவுரை மூலமும், கற்புக் கடவுள் காட்சி மூலமும், அக் கற்புக் கடவுள் வாழ்த்துரை மூலமும் இதனை விளக்கிக் காட்டியுள்ளார். கண்ணகிக் காப்பிய வாயிலாகத் தமிழகத்தின் ஆகூழ் என அவர் சுட்டிக்காட்டும் காப்பியப் படிப்பினை அல்லது நோக்கு இதுவே! (தமிழ்க் கற்பு என்பதே பண்டைத் தமிழ்க் குடியரசுப் பண்பின் அடிப்படை ஆகும்.) கொங்குச் சேரப் பேரரசினைக் கட்டியெழுப்பியவர் கொங்குச் சேரரே. ஆனால், அதற்கு அடிக்கல் நாட்டியவர் சேரர். குடியரசுப் பண்பை நாட்டரசுப் பண்பாக்கியவர் கொங்குச் சேரரென்றால், மூவரசரிடையே (மேலே சுட்டியுள்ளபடி) அதனை வீட்டரசுப் பண்பாகப் பேணியவர் சேரரே யாவர். கொங்குப் பேரரசை நாம் இதனாலேயே வீட்டரசர் கட்டியெழுப்பிய நாட்டரசுக் கோட்டை என்று கூற வேண்டியவர்கள் ஆகிறோம். தென்னக, இந்திய, உலக வரலாற்றில் தேசிய ஆட்சி முறை மரபிலும் (சூயவiடியேட ளுலளவநஅ டிக ஊiஎடை ளுநசஎiஉந), கடலாட்சி மரபிலும் (ஆயசவைiஅந யனே சூயஎயட ஞடிறநச) சேர மரபு, கொங்குப் பேரரசு மூலம் சோழப் பேரரசு மரபுக்குக் காட்டிய வழியே விசயநகர, மராத்திய, மொகலாய மரபுகள் மூலம் இன்றைய இந்தியாவும் அகல் உலகும் வழிபட்டுப் பின்பற்றி வரும் நெறியாகும். இது உலக ஒப்பியல் வரலாற்றாய்வு மூலமே நுனித்துணர்ந்து காணத்தக்க செய்தி ஆகும். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி சுட்டியுள்ளபடி, கொங்கு நாட்டின் தொடக்ககால வரலாற்றை நமக்குத் தொடர்புபடுத்திக் காட்டுவதில் சங்ககாலப் பதிற்றுப்பத்து மைய ஏடாகவும், பிற சங்கப் பாடல்கள் துணைமையாகவும், மிகச் சிறிதளவே நமக்குக் கிட்டியுள்ள தமிழி என்று குறிக்கப்படும் சங்ககாலப் பாளி எழுத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டுகள் ஓரளவும் உதவுகின்றன. இறந்துபட்ட முதற்பத்து உட்பட, பதிற்றுப்பத்தின் முந்திய ஆறு பத்துக்கள் மூலம் நாம் கொங்குச் சேர மரபில் முதல் தலைமுறையாக உதியன் சேரல் (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி), இரண்டாவது தலைமுறை யாகக் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (58 ஆண்டு ஆட்சி), அவன் தம்பி பல்யானைச் செங்கெழுகுட்டுவன் (25 ஆண்டு ஆட்சி), மூன்றாம் தலைமுறையாகக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (25 ஆண்டு ஆட்சி), சேரன் செங்குட்டுவன் (55 ஆண்டு ஆட்சி), ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (38 ஆண்டு ஆட்சி) ஆகிய மூவர் என மூன்று தலைமுறைகளுக்குரிய ஆறு அரசர் வரலாறுகளை அறிகிறோம். ஒவ்வொரு தலைமுறையினரும் ஒருங்கு சேர்ந்தே ஆட்சி செய்ததனால், இவற்றின் மொத்த, கால நீட்சி (உதியன் சேரல் குத்தாயமாக 20; குடக்கோ நெடுஞ்சேரலாதன் 58; சேரன் செங்குட்டுவன் 55 என) 133 ஆண்டுகள் ஆகும் என்று கொள்ளலாம். சங்க இலக்கியத் துணையுடன் பதிற்றுப்பத்து தெரிவிக்கும் கொங்குச் சேர மரபின் மொத்த ஆட்சிக் காலம் இதனை உள்ளடக்கியது ஆகும். பதிற்றுப்பத்திலேயே இறந்துபட்ட கடைசிப்பத்து உள்ளடங்கலான பிந்திய நான்கு பத்துகளும் (பிற சங்கப் பாடல்களின் துணையுடன்) நமக்குக் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளுக்குரிய ஆறு அரசர் வரலாறுகளைத் தெரிவிக்கின்றன, அவர்களில் அந்துவன் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 92-112), செல்வக் கடுங்கோ வாழி ஆதன் அல்லது சுருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறை (25 ஆண்டு ஆட்சி: கி.பி. 112-137), பெருஞ்சேரல் இரும்பொறை (17 ஆண்டு ஆட்சி; கி.பி. 137-154) ஆகிய மூன்று தலைமுறையின் மூன்று அரசரும் முறையே சேர மரபினரின் முதல் மூன்று தலைமுறையினரின் தாயாதி உடன்பிறப்புகள் ஆவர். ஆயினும் மூத்த சேரமரபின் முதல் மூன்று தலைமுறையினரைப் பார்க்க, இவர்களின் ஆட்சிக்கால அளவு மிக மிகக் குறைவே. இதனாலேயே மூத்த சேரமரபின் மூன்றாம் தலைமுறைக் காலத்துக்குள்ளாக இந்த இளைய கொங்கு மரபின் நான்காம் தலைமுறைக்குரிய இரு அரசரில் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி புதல்வனாகக் கருதப்படும் இளஞ்சேரல் இரும்பொறை (16 ஆண்டு ஆட்சி: கி.பி. 154-170) என்ற முதல் அரசன் ஆட்சி முடிந்து விடுகிறது (இது சிலம்பின் குறிப்பால் பெறப்படுகிறது). அதே நான்காம் தலைமுறைக்குரியவனாக, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாகக் கருதப்படும் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி; கி.பி. 170-190) என்ற அரசனும், தொடர்பறியப் படாத ஓர் ஐந்தாம் தலைமுறையரசனாகக் கணைக்கால் இரும்பொறையும் (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 190-210) மூத்த மரபின் மூன்றாம் தலைமுறையினுள்ளாகவும் அது கடந்து சிறிது காலமும் (சேரன் செங்குட்டுவனின் புதல்வன் குட்டுவன் சேரல் அல்லது கோக் கோதை மார்பன் ஆட்சிக் காலமும்) ஆண்டவர் என்று கொள்ளத் தகும். இங்கே இருமரபுகளிலும் முதல்வர்கள், கொங்கு மரபின் இறுதி இரண்டு அரசர்கள் ஆகிய நால்வரின் ஆட்சி ஆண்டுகள் ஊகங்களே; மற்றவை பதிற்றுப்பத்துப் பதிகங்களால் திட்டமாக அறியப்படுபவை. இது போலவே கொங்கு மரபின் இறுதி அரசன் பதிற்றுப்பத்தால் அறியப் படாமல் மற்றச் சங்கக் குறிப்புகளால் அறியப்படுபவனே (அவனுக்கு முற்பட்ட அரசன் கூட இறந்துபட்ட 10ஆம் பத்துக்குரியவனாக உய்த் துணரப் படுபவன் மட்டுமே). மற்றவர்கள் நேரடியாகவே பதிற்றுப்பத்தி னால் தெரிய வருபவர்கள் ஆவர். இவர்கள் கால அறுதியீடு பெரிதும் சேரன் செங்குட்டுவனின் கண்ணகி விழா நிகழ்ந்த காலமாகக் கணிக்கப் படும் கி.பி. 180 என்பதனை மையக்கல்லாகக் கொண்டு கணக்கிடப் பட்டவையேயாகும். சங்கப் புலவர்களுக்குள்ளேயே பாலைபாடிய பெருங் கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ ஆகிய இருவரும் கொங்குப் பேரரசர் மரபினரே என்று அறிகிறோம். அவர்கள் முறையே தந்தையும் மகனுமாகவே தோற்றமளிக்கின்றனர். தவிர, எட்டுத் தொகையில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில் மருதத்திணை வேட்கைப்பத்தில் குறிக்கப்படும் ஆதன் அவினி இதே மரபினனாக, ஆனால், அம் மரபினுக்குரிய ஓர் இளமுறைச் சிற்றரசனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புகழியூர் ஆறு நாட்டு மலையில் காணப்பெறும் தமிழி எனப்படும் பாளி வடிவத் தமிழ்க் கல்லெழுத்துக்களின் மூலம் இதே, மரபினுக்குரியவராக ஒரு கோ ஆதன் சேரல் இரும்பொறை, அவன் மகனாக ஒரு பெருங் கடுங்கோன், அவன் மகனாக ஓர் இளங்கடுங்கோன் ஆகிய மூவரைப் பற்றிக் கேள்வியுறுகிறோம். இவர்கள் சமணரை ஆதரித்தவர்க ளாதலால், சமண சமயச் சார்பினராகவே இருந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. கல்வெட்டுகளால் அறியப்படும் கோ ஆதன் இரும்பொறை, பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன் ஆகிய மூவரையும் சில வரலாற்றாய்வாளர் மேற்கண்ட பதிற்றுப்பத்து (2, 3, 4ஆம் அரசரான) செல்வக் கடுங்கோவாழி ஆதன், பெருஞ்சேரலிரும் பொறை, இளஞ்சேர லிரும்பொறை ஆகிய மூவர்களுடன் ஒன்றுபடுத்த எண்ணுகின்றனர். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, பதிற்றுப்பத்து மரபில் பின் இருவரும் தந்தை மகன் உறவுடையவரல்லர், பெரியப்பனும் தம்பி மகனும் ஆவர் என்று காட்டி இந்த ஒருமைப்பாட்டை மறுத்துள்ளார். ஆனால் ஒருமைப் பாட்டின் தடங்கல் இது மட்டுமன்று. கல்வெட்டால் அறியப்படுபவரின் சமணப்பற்று பதிற்றுப்பத்து மரபினருடன் ஒரு சிறிதும் பொருந்தாத பண்பு ஆகும் என்பதை அவர்கள் வரலாறு காட்டும். கல்வெட்டில் கூறப்படும் மூவரில் பின் இருவர் பெயர்கள், சங்கப் புலவரான இருவர் பெயர்களுடன் இணைபவையே என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கருதியுள்ளார். சங்கப் புலவரின் சமணச் சார்புத்தடம் அறியப்படும்வரை, இதுவும் பொருந்துவதன்று என்று எண்ணல் தகும். கொங்குச் சேரர் குடித் தொடர்புடைய ஆண் பெண் புலவர் பலரை நாம் சங்கப்புலவரிடையே காண்கிறோம். கொங்குச் சேரமரபு மிக நீண்டகால மரபு என்பதை இது காட்டுகிறது. (ஐங்குறுநூறு தொகுப்பித்ததுகூட ஒரு கொங்குப் பெருஞ் சேரனேயாவான்). ஆனால் மேலே சுட்டிய அறிஞர் சீனி வேங்கடசாமியின் கணிப்பின்படி, அது கி.பி. 92 முதல் 210 வரை 118 ஆண்டுகளே நிலவியதாகக் கருதப்படுகிறது. மூத்த சேரமரபின் முதல் தலைமுறையே செங்குட்டுவன் ஆட்சி இறுதி (கி.பி. 185) ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டால், கி.பி. 52-ல் தொடங்குவது ஆகிறது அதன் தாயாதி மரபாகத் தொடங்கும் கொங்கு மரபும் குறைந்தது அதே அளவு பழமை யுடையதாய் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. செங்குட்டுவன் ஆட்சிக் கணிப்புக்கு ஆதாரமான இலங்கைக் கயவாகுவின் காலமும் ஒரு நூற்றாண்டளவு முற்பட்டது ஆகலாம் என்று கருதுபவர் உண்டு. இந் நிலையில் இருமரபுகளின் தொடக்கத் தலைமுறைகளும் இன்னும் முற்பட்டவை (குறைந்தது 40 ஆண்டுகளாவது முற்பட்டவை) ஆதல் கூடும். ஐங்குறுநூற்று ஆதன் அவினி சிற்றரச மரபினனே எனக் கொண்டாலும், சங்கப் புலவர் இருவர், கல்வெட்டில் கண்ட மூவர் ஆக ஐவர் மேலே தொடர்மரபாகக் குறிக்கப்பட்ட ஆறு கொங்குச் சேரர் மரபுக் கால் வழியில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை. பேரரசின் ஆட்சி அதில் முதல் அரசருடன் தொடங்கி, இறுதி அரசருடன் முடிகிறது என்பதை உறுதியாகக் கூறலாம். எனவே, இந்த ஐந்து அரசரும், இரு மரபு ஒப்பீட்டால் ஏற்படும் நாற்பதாண்டு வேறுபாடு, செங்குட்டுவன் விழாக்கால மரபு இடையீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நான்காம் ஐந்தாம் அரசருக்கு (இளஞ்சேரல் இரும்பொறை, மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆகியோருக்கு) முன்னோ, பின்னோ, இடைப்பட்டோ நிகழ்ந்திருக்கக்கூடிய இடைவெளிகளுக்கு உரியவர்கள் ஆகலாம். இவர்களையும் கல்வெட்டுகளால் அறியப்படும் பாண்டியர் போன்ற பிற அரசர்களையும் சங்கப்பாடல் மரபு குறிக்காமல், அல்லது அத்தகைய பாடல்கள் தொகுப்புகளில் சேர்க்கப்படாமல் போனதற்கு அவர்கள் முனைத்த புத்த சமண மரபு அல்லது பிறசெய்திகள் காரணங்களாக இருந்திருக்கலாம் என்று கருதத் தகும். இவ்வெல்லா முறையிலும் கொங்குச் சேரப் பேரரசின் முழு மரபு வரிசை விவரமும் அதன் காலக் கணிப்பும் தெளிவாகக் கண்டு உருவாக்கப்படும் வரை, அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் மரபு வரிசைத் தொடர்பும் காலக் கணிப்புமே இங்கே தற்காலிகமாகப் பின்பற்றப் படுகின்றன. தொண்டை நாட்டைப் போலக் கொங்கு நாடு, மூவரசு நாடுகளுக்கு ஒதுங்கியிருக்கவில்லை. அதன் நடு நிலையிடம் காரணமாக அது அவற்றினிடையே நடைபெறும் போட்டிகளுக்குரிய மையப் போர்க்களமாகவே நிலவிற்று. ஆனால், எந்த ஓர் அரசரும் அதனை வெல்ல விடாமல், மற்ற இரு அரசரும் எப்போதும் கொங்கு வேளிருக்கு ஆதரவு காட்டி வந்த நிலையில், இப்போட்டியே கொங்கு நாட்டின் தன்னாண்மை நிலையை நெடுநாள் பேணியிருத்தல் வேண்டும் எனலாம். ஆனால், பதிற்றுப்பத்தின் சேர மரபினர், அவர்களின் தாயாதியரும் இளங்கிளையினருமாகிய கொங்குச் சேர மரபினர் ஆகியோர் நாட்களில் இந் நிலை மாறிற்று. ஏனெனில், ஒருபுறம் இக் காலத்தில் தமிழக அரசரிடையே சேரர், கொங்குச் சேரர் ஆற்றலே மேலோங்கியிருந்தது. மறுபுறம் சேரரின் உள்ளார்ந்த குடியாட்சி மரபுப் பண்பு, தொடக்கத்திலிருந்தே நேரடியாட்சியில் முளையாமல், ஒரு கிளைக் கொங்குச் சேர மரபை உருவாக்கி அதன் மூலமே வென்றாள முற்பட்டது. அத்துடன் மூன்றாவதாக, அவர்கள் தம் அரசாண்மைத் திறம் (அரசியல் சூழ்ச்சி நயம்), மண உறவு, நட்புறவுகள் மூலம் வேளிரிடையே போட்டியும் பிளவும் ஊக்கி, அவற்றைப் பயன்படுத்தினர். அந்துவன் சேரல் இரும்பொறை அல்லது கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி; கி.பி. 92-112) கொங்குப் பேரரசினைத் தோற்றுவித்த முதல்வனும் அதன் முதல் அரசனும் ஆவான் என்று கூறத்தகும். இவன் பதிற்றுப்பத்து மரபில் மூத்த சேரர் குடியின் முதலரசனான உதியன் சேரலின் தாயாதி உடன் பிறப்பாளன் ஆவன். அத்துடன் மேலே சுட்டியுள்ளபடி உதியன் சேரலின் இளைய புதல்வனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன், அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகனாகிய செல்வக் கடுங்கோ வாழி ஆதன் ஆகிய இருவருக்கும் அவ்விரு மரபின் அரசரும் கொங்கு நாட்டு வேளிருள் ஒருவனான வையாவிக் கோமான் பதுமனின் இரு புதல்வியர்களை மணஞ் செய்வித்துத் தம் உறவையும் தம் கொங்கு நாட்டு ஆட்சித் தொடர்பையும் இன்னும் நெருக்கமாக்கிக் கொண்டனர். பதிற்றுப்பத்தினால் அந்துவஞ் சேரல் இரும்பொறை பாடப் பெறவில்லையாயினும். அவன் மகனைப் பாடிய ஏழாம் பத்தின் பதிகம் அவனை அப் பத்தினுக்குரிய தலைவனின் தந்தை என்ற முறையில் `மாகெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழுதானை வெருவரு தோன்றல்!' எனக் குறிப்பிட்டு, அவன் கொங்குநாடு வென்றாண்ட செய்தி தெரிவிக்கிறது, அவன், தன் தனி முயற்சியாலோ, அல்லது தன் தாயாதி உடன்பிறந்தானின் இளைய புதல்வனான பல்யானைக் குட்டுவனின் துணையுடனோ முதலில் ஆனைமலைப் பகுதியாகிய உம்பற்காட்டையும் (உம்பல் யானை) அதன்பின் பண்டைத் தென் கொங்கு எல்லையில் கருவூரை உட்கொண்ட ஒரு பெரும் பகுதியையும் வென்று தன் கொங்குப் பேரரசாட்சிக்கு அடிகோலினான். ஆனைமலைப்பகுதி சேரமரபினரிடமே விடப்பட்டு, மற்றத் தென்கொங்குப் பகுதிகளையே அந்துவஞ் சேரல் புதிய கொங்குச் சேரப் பேரரசின் அடித்தளமாகக் கொண்டான் என்று தோற்றுகிறது. ஏனெனில், அந்துவஞ் சேரல் சேரர் தலைநகரான வஞ்சி என்ற கருவூரின் பெயரையே கொங்கு நாட்டுக் கருவூர் என்ற வஞ்சிக்கும் இட்டு அதனைத் தலைநகராகக் கொண்டு ஆளமுற்பட்டான். (இங்கே வஞ்சி என்பதே சேரர் தலைநகரின் பழம்பெயராய்க் கருவூருக்கும், கருவூர் என்பதே பழங்கொங்குத் தலைநகரின் பெயராய் வஞ்சிக்கும் மறு பெயர்களாகச் சூட்டப்பட்டன என்று கொள்ளல் தகும்.) இதனை ஒட்டியே அவன் தனக்குக் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்ற விருதுப்பெயர் சூட்டிக் கொண்டான் என்னலாம். ஆனைமலைப்பகுதி சேரரிடமே நீடித்தது என்பதனைப் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகத்தால் அறிகிறோம். ஏனெனில், பல்யானைக் குட்டுவனின் தமையனான நெடுஞ்சேரலாதன் அப் பத்தில் தன்னைப் பாடிய குமட்டூர் கண்ணனார் என்னும் புலவருக்கு உம்பற்காட்டின் ஐந்நூறு ஊர்களைப் பிரமதேயமாக அளித்தான் என்றும், அக் குட்டுவனையே பாடிய மூன்றாம் பத்துப் பதிகம். குட்டுவன் அதனைத் தன் தாயாதியர்களுக்குப் பங்கிட்டு வழங்கினான் என்றும் கூறுகிறது, (பங்கிட்டு வழங்கிய போது அதன் மேலாட்சி கொங்குப் பேரரசனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்று கருதல் தகும்.) கருவூரைத் தலைநகராகக் கொண்டதன்றி, அந்துவஞ் சேரல் இரும்பொறை அங்கே வேண்மாடம் என்ற பெயரால் ஓர் அரண்மனை எழுப்பி, அதிலிருந்து ஆண்டான். ஏழாம் பத்தின் பதிக மூலமே அவன் அரசியார் பொறையன் பெருந்தேவியார் என்றும், அத்தேவியார் தந்தை ஒரு தந்தை என்னும் இயற்பெயருடையவராயிருந்தார் என்றும் அறிகிறோம். (இவர் ஒரு வேளிராயிருத்தல் கூடியதேயாகும்) இவ்வரசன் பெருவீரனாகவும் ஓயாது போராற்றிய வனாகவும் இருந்தான். அவனது போர்வெறி, முன்கோபம், ஆத்திரம் ஆகியவற்றைச் சங்கப்பலகணிக் காட்சி ஒன்று நமக்குக் காட்டுகிறது. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், இக் கொங்குச் சேர அரசனின் வேண் மாடத்தில் அவனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அச் சமயம் சோழ அரசன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் யானை அவனுக்கு அடங்காமல் அவ் வேண்மாடத்துக்கு அருகாமை யிலேயே அவனை இட்டுக்கொண்டு வந்துவிட்டது. சோழன் தன்னைத் தாக்க வருவதாகவே எண்ணிய அந்துவஞ்சேரல் உடன் தானே அவன் மீது போர் தொடுக்கக் கிளம்பிவிட்டான். ஆனால், புலவர் அவனைக் கையமர்த்தி இருத்தி யானையின் அடங்கா நிலை காரணமான மெய்ந் நிலைமை கூறி விளக்க மளித்து அமைதிப்படுத்தினார். செல்வக்கடுங்கோ வாழி ஆதன் (25 ஆண்டு ஆட்சி: கி.பி. 112-137) முந்திய பேரரசனின் புதல்வன் ஆவான். இவன் மூத்த வழிச் சேரர் குடிக்குரிய பல்யானை செல்கெழுகுட்டுவனின் தாயாதி உடன்பிறப்பாய் இருந்ததன்றி, வையாவிக் கோமான் பதுமன் தேவியார் என்ற இரண்டு ஒரே குடிமரபுப் பெண்களை மணந்து அவனுடன் மேலும் நெருங்கிய உறவுடையவனாய்த் திகழ்ந்தான் என்பது மேலே சுட்டப்பட்டது. ஆதன் என்பதே இவன் இயற்பெயர். கடும்போர்கள் பல ஆற்றியதனாலேயே இவன் கடுங்கோ எனப் பெயர் பெற்றிருந்தான் என்று கருதலாம். ஏனெனில், தன் ஆட்சியை விரிவுபடுத்துவதிலேயே அவன் தன் வாழ்நாள் முழுவதும் கழித்தான் என்று தோன்றுகிறது. இப் பேரரசனுக்கு 'மாந்தரன்' என்றும் ஒரு பட்டப் பெயர் உண்டு. பின்னாட்களில், இவன் பெயரனும் இதே பெயர் பெற்றிருந்ததனால் வரலாற்றில் இவனை நாம் முதலாம் மாந்தரன் என்று குறிப்பிடலாம். பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து, செல்வக் கடுங்கோவின் புகழ் பாடுவதேயாகும். அதனைப் பாடியவர் நல்லிசைப் புலவர் என்றும், புலனழுக்கற்ற அந்தணாளர் என்றும் சங்கப் புலவர்களாலேயே சிறப்பிக்கப்படும் பெருமையுடைய கபிலர் பெருமான் ஆவார், தொடக்கத்தில் பாரி வள்ளலின் அவைப் புலவராயிருந்த அவர், அப் பெரு வள்ளல் வேள் இறந்தபின், இப் பேரரசன் ஆதரவையே நாடி வந்தார். போர்க்களத்திலேயே வாழ்நாள் கழித்த அவனை அவரும் போர்க்களப் படை வீட்டிலேயே வந்து காண வேண்டியதாயிற்று. அச் சமயம் அவன் தோளும் மார்பும் முற்றிலும் பழம்புண் தழும்புகளிடையே புதுப்புண் காயங்களும் நிரம்பிக் கோரக் காட்சி அளித்திருந்தன. எனவே, புலவர் முன் அவன் வரும் போது, அவற்றை முற்றிலும் சந்தனக் குழம்பால் பூசி மறைத்துக்கொண்டிருந்தான். பதிற்றுப் பத்திலேயே புலவர் பெருமான் இதனைக் குறிப்பிட்டு,' `எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்' என்று அவனைப் பாடுகிறார். இப் பத்தினைப் பாடியதற்காகக் கபிலர் பெருமானுக்கு இப் பேரரசன் நூறாயிரம் காணம் (காணம்-அக்காலப் பொற்காசு) வழங்கிய துடனன்றி, அவருடன் நன்றா என்னும் குன்றின் மேல் ஏறி நின்று, புலவர் கண்ணில் பட்ட எல்லா ஊர்களின் வருவாய்களையும் பரிசாக வழங்கியதாக அப் பத்தின் பதிகம் கூறுகிறது. இப் பரிசு செல்வக் கடுங்கோவின் வள்ளன்மையை மட்டுமன்றி அவன் போர் வெற்றி வளங்களையும் பேரரசின் விரிவையுமே சுட்டிக் காட்டுகின்றது. உண்மையில் ஒன்பதாம் பத்தில் இவன் பேரனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார் இவ் விருதிறப் பெருமிதமும் உளங்கொண்டே பேரனாகிய அப் பேரரசனின் போர்க்களத்தில் பகைவர்கள் விட்டுச் சென்றோடிய வாட்கள், விற்களின் எண்ணிக்கைக்கு இப்பேரரசன் கபிலனுக்கு வழங்கிய ஊர்களின் எண்ணிக்கையையே உவமையாக ஒப்பிட்டு, அவ்வூர்களின் எண்ணிக்கையை விட அவ் வேல்கள், வாள்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை மிகப் பெரியதாயிருந்தது என்று நாநயம்படக் கூறுகிறார். புலவர் பெருமான் கபிலர், இப்பேரரசனின் போர்களை விரித்துரைக்க வில்லையானாலும், ஏதோ ஒரு போரில் அல்லது போர்களில் அவன் சோழர், பாண்டியர் ஆகிய இரு பெரு வேந்தர்களையும் வென்றதாகக் கூறுகிறார். அத்துடன் அவன் வீரத்துக்கும் புகழ் ஒளிக்கும் கதிரவன் ஓரளவுக்குத்தான் ஒப்பாவான், முற்றிலும் ஒப்பாக மாட்டான் என்று நயத்திறம்பட வாதிடுகிறார். `கதிரவன் பகலில் மட்டுமே வருகிறான், தோன்றி மறைகிறான், இரவெல்லாம் ஓய்வு கொள்கிறான்: ஆனால் செல்வக்கடுங்கோ ஓய்வதில்லை, மறைவதில்லை; அவன் புகழ் ஒளி வீசுவதன்றி ஒளிப்பதில்லை' என்று அவர் பாடுகிறார். செல்வக் கடுங்கோ வாழியாதனின் மூத்த கிளை வழித் தாயாதியான பல்யானைக் குட்டுவன் போர் வெற்றிகளிலெல்லாம், கடுங்கோ பெரும் பங்கு கொண்டிருந்தான் என்று கருத இடமுண்டு. ஏனெனில் மாந்தை, தொண்டி என்ற மேல் கடற்கரைத் துறைமுகங்களை உள்ளடக்கிய பூழி நாட்டை, சேரர் சார்பில் பல்யானைக் குட்டுவன் கடம்பவேள் நன்னனிட மிருந்து கைப்பற்றியபின், அதைக் கொங்குப் பேரரசனிடமே ஒப் படைத்தான். (சேரருக்கு முசிறி போன்ற வேறு சிறந்த துறைமுகங்கள் இருந்ததாலேயே இவ்வாறு செய்தான் என்பர், அறிஞர் சீனி வேங்கடசாமி. பூழி நாடு துளுநாட்டுப் பகுதியன்று, சேர நாட்டுப் பகுதியென்றும் அவர் வாதிக்கிறார்). இதன்பின் செல்வக் கடுங்கோவும் அவன் பின்னோர்களும் `பூழியர்கோ', `பூழியர் மெய்ம்மறை' என்று புலவர்களால் சிறப்பிக்கப் படுகின்றனர். மூன்றாம் பத்தில், பல்யானைக்குட்டுவனின் இருகடல் விழா அரும்புகழ் விழாச் செயலாக விரித்துரைக்கப்படுகிறது. பின்னாட்களில் சோழப் பேரரசரும் விசயநகரப் பேரரசரும் தொடர்ந்து கொண்டாடிய இத்தேசிய விழா மரபின் மூலத்தையும் அது கொண்டாடப்பெற்ற முறையையும் நாம் இங்கேதான் காணமுடிகிறது. சேரரின் அயிரைமலைத் தெய்வத்தின் முன் வீற்றிருந்த குட்டுவன் அங்கிருந்து இரு கடல் வரையிலும் இரண்டிரண்டு வரிசைகளாகப் பத்தடிக்கு ஒரு யானையை நிறுத்தி, இரு கடல் நீரையும் ஒரே சமயத்தில் அஞ்சல் செய்வித்துத் தன்னை நீராட்டிக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து விரித்துரைக்கிறது. பூழி நாட்டு வெற்றியை அடுத்து வடகொங்குப் பரப்பு, வட தொண்டைப் பரப்பு முழுவதிலும் குட்டுவன் வெற்றி மூலம் நாட்டிய மேலாட்சி விரிவையே இவ்விழா எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு குட்டுவன் இவ் வெற்றி விழாவைத் தனதாகக் கொண்டாடினாலும், இதில் தனக்குதவிய கொங்குச் சேரனிடமே அம் மேலாட்சி முழுவதையும் ஒப்படைத்தான் என்று அறிகிறோம். வீரத்துடன் வள்ளன்மையும், இரண்டினுடன் சமயப் பற்றார்வமும் இப் பேரரசன் வாழ்வில் சரிசமப் பங்கே கொண்டன. இக் கொங்குப் பேரரசனிடம் பரிசில் நாடி வந்த புலவர் குண்டுகட் பாழி ஆதனாருக்கு அவன், பெருஞ் செல்வமும் யானை, குதிரை, ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளும், வயலும் மனையும், வயலில் உழைப்பதற்கான களமரும் (உழவரும்) வாரி வழங்கினான். இவற்றைப் பெற்ற புலவர் தாம் காண்பது கனவா அல்லது நனவுதானா என மயங்குவதாக (புறம் 387) நயம்படப் பாடுகிறார். தான் இல்லாதபோதும், தன்னை எதிர்பாராமலே புலவர்களுக்குத் தன்னிடமுள்ள செல்வக்குவையையும் தேர்களையும், குதிரைகளையும், முட்டின்றி வாரி வழங்கும்படி அவன் தன் பணியாளர்களுக்கு நிலைக் கட்டளையிட்டிருந்த தாகக் கபிலர் (7ஆம் பத்தில்) பாடுகிறார். இது மேலே கூறப்பட்ட கண்டிரக்கோப் பெருநள்ளியின் வேள்குடி வண்மையையே நினைவூட்டுவதாயுள்ளது. இப்பேரரசன் திருமாலை வழிபட்டவன். ஓகந்தூர் என்ற ஊரை அவன் திருமால் கோயில் ஒன்றுக்கு இறைக் கொடையாக வழங்கினான். வேள்விகள் பல செய்தவனென்றும், பிராமணர்க்குப் பொன்னும் பொருளும் ஏராளமாக அளித்தவன் என்றும். கபிலர் அவனைப் பாடுகிறார். அவன் தன் புரோகிதனை விடப் பன்மடங்கு அற நெறியில் மேம்பட்டவ னாக விளங்கினான் என்றும் பாராட்டப்படுகிறான். ப்ராசரன் என்னும் வேத விற்பன்னன் வேதமோதும் திறமையில் வெற்றிக் கொடி நாட்டி, அவ்வகையில் மூத்தவழிச் சேரர்களான நெடுஞ்சேரலாதன், பல்யானைக் குட்டுவன் ஆகியோரிடம் பரிசு பெற்றது போலவே, கொங்குப் பெருஞ் சேரனான செல்வக் கடுங்கோவிடமும் வந்து பரிசில் பெற்று மகிழ்ந்தான் என்று சிலம்பு கூறுகிறது. இப்பேரரசனுக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. பெருஞ்சேரல் இரும்பொறை அல்லது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17 ஆண்டு ஆட்சி: கி.பி. 137-154) செல்வக் கடுங்கோவின் புதல்வர்களில் மூத்தவன். கொங்குப் பேரரசு இவன் காலத்திலேயே அதன் புகழின் உச்சநிலையைச் சென்றெட்டிற்று என்னலாம். அவன் போர் வெற்றிகளையும் போர் வெற்றிப் புகழையும் முன்னிட்டுப் புலவர்களால் அவன் `கொடித் தேர்ப் பொறையன்,' `சினப் போர்ப் பொறையன்', `பொலந்தேர் யானை இயல் தேர்ப் பொறையன்', `புண்ணுடை எறுழ்தோள்' உடையவன் (எறுழ்-வல்லமை) என்று பலபடப் பாராட்டப் பெறுகிறான். வரலாற்றுப் பெரும்புகழ் சான்ற தகடூர் வெற்றியின் பின் இப் பேரரசன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சிறப்பு விருதுப் பட்டத்தால் குறிக்கப்படுகிறான். பெருஞ்சேரலிரும்பொறையின் ஆட்சிக்குரிய முப்பெருஞ் செயல்கள் மேற்கண்ட காமூர், கொல்லிமலை, தகடூர் ஆகிய கொங்குத் தமிழகத்தின் முப்பெரு வேள்புலங்களைத் தாக்கி அவன் மேற்கொண்ட வெற்றிகள் ஆகும். ஏற்கனவே விரித்துள்ள படி, பதினான்கு வேளிரின் பக்கத்துணையுடன் அவன் காமூர் வேள் கழுவுளின் உறுதி வாய்ந்த கோட்டை நகரையும் நாட்டையும் கைக்கொண்டான். அது போலவே மலையமான் திருமுடிக் காரியின் பக்கத்துணையுடன் அவன் கொல்லி மலை அதன் ஓரியைத் தாக்கி, அவன் உதவிக்கு வந்த அதியமானைத் துரத்தியபின், ஓரியைக் கொன்று அவன் நாட்டையும் கைக்கொண்டான். இதன்பின் சோழ பாண்டியராகிய மற்ற இரு தமிழக அரசரும் வந்து அதியமான் நெடுமான் அஞ்சிக்கு உதவிய நிலையிலும், அவன் காரியுடன் சென்று தகடூரைப் பல ஆண்டுகள் முற்றுகை செய்து தகர்த்து, அந் நாட்டைக் கைக்கொண்டான். தகடூர்ப் படைத்தலைவன் பெருப்பாக்கன், பெருவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி, அவன் வீர இளங்குருளையான பொகுட்டெழினி ஆகியவர்களின் வீரமாள்வுக்குரிய இப்பெரும் போரை அரிசில் கிழார், பொன்முடியார் போன்ற சங்கப் புலவர்களின் நேர்முக வருணனையாகப் பாடும் (சில பாடல்கள் தவிர அழிந்துபட்ட) கொங்குப் பாரதமான தகடூர் யாத்திரை பற்றி மேலே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தகடூர் யாத்திரையின் நேர்முகக்காட்சி வருணனையில் இடம் பெற்ற புலவர்களில் ஒருவரான அரிசில் கிழாரே, பெருஞ்சேரல் இரும் பொறையைப் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தில் பாடியவர் ஆவர். கொங்குச்சேரன் புலவருக்கு வழங்கிய பரிசிலின் பெருமிதமே, அவன் காலத்தில் பேரரசு அடைந்த வீறுயர்ச்சியினைக் காட்டுவதாகும். அது எந்தப் புலவருக்கும் எந்த அரசனோ பேரரசனோ அளிக்கக் கனவு காணாத பீடு உடையது; பதிகத்தின் மொழியில் கூறுவதானால் இப்பேரரசன் புலவருக்குக் கைச் செலவுக்கென்று ஒன்பது நூறாயிரம் காணம் (காணம்-தங்க நாணயம்) வழங்கியபின், தானும் தன் அரசியும் தவிசிலிருந்து இறங்கிப் புறம் போந்து அரண்மனையும் நாடும் அரசும் கொள்க எனக் கொடுக்க முன்வந்தான். புலவர் அடக்கத்துடன் `என் பெயரால் நீரே ஆள்க' என்று நயம்படக் கூறித் தாமே அமைச்சராக இருந்து ஆட்சி மேற்கொண்டார். இப்பேரரசனது வீரப்புகழின் ஒலி, எதிரொலி, சங்க காலத் தமிழகமெங்கும் அதிர்வுறச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. தகடூர் எறிந்த என்ற அவன் பட்டம், இதைக் காட்டுகிறது. ஆனால், நமக்கு அதனினும் இனியதொரு பண்பு சான்ற நிலவொளிக் காட்சியைக் சங்கப் பலகனி காட்டுகிறது. மோசிகீரனார் என்னும் புலவர் பெருமகனார் இவனைக் கண்டு பரிசில் பெறும் நோக்கத்துடன், நீள்வழி கடந்துவந்தார். அவர் வந்த வேளையில் அரண்மனையே வெறிச்சோடிக் கிடந்தது. அரசுரிமை முரசினை யானை மேலேற்றித் திருமுழுக்காட்டும் விழாவில் எல்லாகும் ஈடுபட்டு வெளியே சென்றிருந்தனர். பசிவிடாயாலும் களைப்பாலும் சோர்ந்த நிலையிலிருந்த புலவர் தாம் செய்வது இன்னதென்றறியாமலே, முரசுக்குரிய அரசுரிமைக் கட்டிலில் அமர்ந்து தூங்கிவிட்டார். வேறெவரும் வருமுன் பேரரசனே அங்கு வந்து இதனைக் கண்டபோது, இயல்பாகக் கடுஞ்சினம் கொள்வதற்கு மாறாக, புலவர் பெருமையை மனத்துட் கொண்டு அவருக்குக் கவரி எடுத்து வீசலானான். விழித்தெழுந்து இந்த அரும் பெறற் காட்சியினைக் கண்ட புலவர், இதனையே காலத்தில் நிற்கவல்ல காட்சியாக விதந்து (புறம் 150) பாடுகிறார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அறநெறியாளன் என்றும், தன் புரோகிதனுக்கே அறநெறி கூறி அவனைத் தவம் செய்யும்படி காட்டுக்கு அனுப்பினான் என்றும் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் அவனை அவன் அமைச்சரான புலவர் அரிசில் கிழார் பாடியுள்ளார். அவன் இறைப் பற்றிலும் சிறந்திருந்தான். தன் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், சேரர், கொங்குச் சேரர் இருசாராருக்கு முரிய ஒரே குல தெய்வமாகிய கொற்றவைக்கு அவன் விழா எடுத்தான். அதில் தன் போரில் பட்ட பகைவர்களின் யானைத் தந்தங்களையே தவிசாயமைத்து, அதன் மீது கொற்றவையை ஏற்றி வழிபட்டான். போரில் குருதிக் கறைபட்ட தன் வீரவாளினையும் இங்கேயே கழுவிக்கொண்டான் என்று அவன் அமைச்சரும் புலவருமான அரிசில் கிழார் நயம்படக் கூறுகிறார். பேரரசன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு நெடுநாள் பிள்ளையில்லாதிருந்து, நோன்பு பல ஆற்றிய பின்னரே, ஒரு புதல்வன் பிறந்தான். தந்தையின் ஆட்சி குறுகியதாய், அவன் பிறப்பும் பிந்தியதாய் இருந்த நிலையில் பேரரசன் ஆட்சி முடிவிலும் அவன் சிறுவனாகவே இருந்தான். எனவே ,அவன் தம்பியான குட்டுவன்சேரலின் புதல்வனான இளஞ்சேரல் இரும்பொறையே அவனுக்குப்பின் பேரரசனானான், சிறுவனாயிருந்த பெருஞ்சேரலின் பிள்ளையே இளஞ்சேரலிரும் பொறைக்குப்பின் வந்து ஆண்ட யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை என்று கருதப்படுகிறது. குட்டுவன் சேரல், தகடூர்ப் போரில் வீரமாள்வுற்றிருக்கலாம் அல்லது அதன்பின் உயிரிழந்திருக்கலாம் என்று உய்த்துணரப்படுகிறது. இளஞ்சேரல் இரும்பொறை (16 ஆண்டு ஆட்சி; கி.பி. 154-170) மேற்கண்டவாறு, முந்திய பேரரசனின் தம்பி புதல்வன் ஆவான். தகடூர் எறிந்த பெருஞ்சேரலின் காலத்திலே உச்ச நிலைக்கு ஏறிய கொங்குப் பேரரசனின் வீறு, இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியிலேயே அதன் முழு முழக்கமும் கண்டது. அவனைப் பாடிய புலவர் பாடல்களும் இதனை மெய்ப்பிக்கின்றன. ஏனெனில், அவர்கள் வழக்கமான பட்டங்கள் சூட்டி அவனைக் `குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை', `சேரமான் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை', என்றோ; கவிதை யணியான சிறப்பு அடைமொழிகளுடன் `பல்வேற் குட்டுவன்' `வென்வேற் குட்டுவன்' என்றோ, பாடி அமையவில்லை. அவன் `வென்றாண்ட நாடுகள்', புகழ் நகரங்கள், வெற்றிப் போர்கள் ஆகியவற்றைச் சுட்டியே இவர்கள் அவனைச் சிறப்பிக்கிறார்கள். நன்னன் ஆண்ட மேல் கொங்கு நாட்டின் வடகோடி எல்லை குறிக்கும் வானியாற்றையே சுட்டிச் `சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன்' என்றும் (பதிற்றுப்பத்து); பூழி நாட்டையோ அதில் தொல் பழங்காலச் சேரர் இருந்தாண்ட நறா அல்லது நறவு (நறா-தேன்) என்ற சேரர் தொல்பழந் தலைநகரையோ, அதன் பேர் போன மாந்தை, தொண்டி ஆகிய துறைமுக நகர்களையோ அவன் ஆண்டான் என்ற முறையில் `எழுஉத்திணி தோள் பூழியர் மெய்ம்மறை இலங்கு நீர்ப்பரப்பின் மாந்தையோர் பொருந!' `நாரரி நறவிற் கொங்கர் கோவே!' `வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!' என்றும்; கட்டிநாடும், புன்னாட்டுடன் அதன் தலைநகரான கட்டூரூம் ஆண்டவன் என்ற குறிப்பில் `கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே, விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே!' என்றும் இப் பேரரசனைப் புலவர் தனிச் சிறப்புப் படுத்திப் பாடியுள்ளனர். (இங்கே கட்டூரில் கிரேக்கர் உரோமர் முதலிய அயல் மொழியாளர் வாணிக நாடிவந்து குடியிருப்பதனைக் குறித்தே `விரவு மொழிக் கட்டூர்' என்ற புலவர் வழக்கு எழுந்துள்ளது என்னலாம்.) இப் பேரரசனைப் பதிற்றுப்பத்தின் 9ஆம் பத்தில் பாடியவர் பெருங்குன்றூர் கிழார் ஆவர். அப் பத்துக்குரிய பதிகத்தின் மொழிப் படியே, பேரரசன் அவருக்குப் பரிசில் கொடுக்காமல் கால நீட்டிப்பவர் போலிருந்து கொண்டே `அவரறியாமல் ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல் வரப் பரப்பி', பன்னூறாயிரம் காணம் (காணம்-அந் நாளைய தங்கக் காசு) கொடுத்தான். பரிசு நீட்டித்தான் என்றெண்ணிப் புலவர் வருந்திப் பாடிய புறப்பாடல்களை (210, 211) புன்முறுவலுடன் ஏற்றுப் பின்னரே மெய்ந்நிலை தெரியச்செய்த பேரரசன் நகை நயப் பண்புத் திறம் குறித்தே பதிகம் `மருளக் கொடுத்தான்' என்று இங்கே கூறியுள்ளது. பேரரசனின் அமைச்சன், வேள் குடியினனான மையூர் கிழான் ஆவான். இப் பேரரசர் தந்தையும் முந்திய பேரரசனின் தம்பியுமாகிய குட்டுவன்சேரல் மையூர் கிழான் ஒருவனின் மகளான அந்துலன் செள்ளையையே மணந்திருந்தான். ஆதலால், இந்த அமைச்சன் மையூர் கிழான் பேரரசனின் தாய்மாமன் அல்லது மைத்துனனாக இருந்திருந்தல் வேண்டும் என்னலாம். இவ்வமைச்சனைப் பேரரசன் `புரோகமயக்கினான் என்று ஒன்பதாம் பத்தின் பதிகம் குறிக்கிறது. `அமைச்சனைப் புரோகிதனி னும் அறிவாளனாகப் பண்ணினான்' என்று பழைய உரை இதற்கு விளக்கம் தருகிறது. முந்திய பேரரசன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் போலவே, இவனும் புலமையிலும் சமய அறநெறிக் கல்வித் துறைகளிலும் மேம்பட் டிருந்தான் என்பதனை இதனால் அறிகிறோம். பண்டை வடகொங்கு, மேல் கொங்குப் பகுதிகளின் மேலாட்சி பல் யானைக் குட்டுவன் காலம் அதாவது அந்துவஞ் சேரல் காலத்திலிருந்தே கொங்கு பேரரசருக்கு உரியதாக இருந்து வந்தது. ஆயினும், மற்றத் தமிழரசர் அதாவது சோழரும் பாண்டியரும் அஞ்சுகிற அல்லது பொறாமைப்படுகிற அளவுக்கு இப்பேரரசன் காலத்திலேயே அது பெருகியிருந்தது. ஏனெனில், அம் மேலாட்சி நேரடியாட்சி போன்ற ஆற்றலுடையதாய் இருந்தது. இதனைப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. ஆயினும், இப்பேரரசன் போர்களிடையே நாம், விச்சிப் போரையும் புன்னாட்டுப் போரை உள்ளடக்கிய சோழப் பெரும் போரையும் மட்டுமே விளக்கமாகக் கேள்விப் படுகிறோம். முந்திய பேரரசன் காலம் வரை வெல்லப்படாமல் இருந்த பண்டைத் தென் கொங்கு அல்லது இன்றைக் கொங்கு நாட்டுப் பகுதியாக, இவன் ஆட்சித் தொடக்கத்தில் இன்று திருச்சிராப் பள்ளி மாவட்டப் பகுதியாயமைந்துள்ள பச்சைமலை யடுத்த விச்சிநாடு அமைந்திருந்தது. சோழ பாண்டியர் ஆகிய இருவருமே உதவிய நிலையிலும் இவ்வேள்புலத்தையும், அதற்குரிய புகழ் சான்ற ஐந்தெயிற் கோட்டையையும் பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறை வென்று கைக்கொண்டான் என்பது மேலே கூறப்பட்டது. சேரமரபின் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் காலத்தில் மேல்கொங்கு நன்னன் புன்னாட்டு நீலக்கல் வளமவாவி எதிர்த்ததும், கொங்குச் சேரப் பேரரசன் துணையுடன் சேரரால் நன்னன் கீழடக்கப் பட்டதும், கொங்குச் சேரர் மேலாட்சிக்குரியவராக்கப் பெற்றதும் மேலே குறிக்கப் பட்டுள்ளன. அது போலவே, சோழன் பசும்பூட் சென்னியின் படைத்தலைவனாயிருந்த வேள் பழையன் அதே நோக்குடன் புன்னாட் டின் மீது படையெடுத்தபோது நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்ற கொங்குப் பேரரசின் மேலாட்சிக்குரிய வேளிர் ஐவரும் பழையனைத் தாக்கிப் போரில் கொன்றழித்துப் புன்னாட்டைக் காத்ததும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. தன் வீரப் படைத்தலைவன் பழையனின் தோல்வியும் மாள்வும் சோழன் பசும்பூட் சென்னிக்குப் பெருந்தலை யிறக்கத்தையும் கடுஞ் சீற்றத்தையும் விளைவித்தன. அவன் கொங்குப் பேரரசன் இளஞ்சேரல் இரும்பொறை மீது பழிவாங்கும் எண்ணத்துடன் (தற்காலக் குழுமமே என்று கருதப்படுகிற) கழுமலம் என்ற வேள்புலத்தைத் தாக்கி, அதன் வேள் ஆன கணையனையும் சிறைப்படுத்தினான். மேலே கண்ட புன்னாட்டு நிகழ்ச்சியுடன் சோழனது இவ் வெற்றியையும் ஒரே தொடர் நிகழ்வாகப் புறப்பாட்டு (44) ஒன்று பாடுகிறது. `நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு அன்றவர் குழீஇ அளப்பருங் கட்டூர் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனான் ஆகித் திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி' சீற்றங் கொள்ள வேண்டிய முறை, இப்போது கொங்குப் பெருஞ் சேரனுக்கே வந்து நேர்ந்தது. அவனது வெஞ்சினக் கட்டளை களைப் பெற்ற அவன் படைத்தலைவர்கள், கழுமலம் போரில் (வரலாற்றுப் புகழ் பெற்ற பின்னாள் சுழுமலம் போரின் வேறானது) சோழர் படைகளைத் தெறித் தோடச் செய்து வெற்றி கண்டனர். இப் பெருவெற்றியைப் பாராட்டும் வகையிலேயே, இப் பேரரசனை ஒன்பதாம் பத்தில் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார், பகைவர்கள் எறிந்து விட்டு ஓடிய வாள்களும், வேல்களும் முன்னம் செல்வக் கடுங்கோவை `நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பாடிப்பெற்ற ஊரினும் பலவே' என்று நாத்திறம்பட வியந்து பாராட்டினார். சோழப் போராட்டத்தின் முதற் கட்டமே இதனுடன் முடிகிறது. இதனையடுத்துச் சோழன் பசும்பூட் சென்னி மாண்டிருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த கட்டத்தில் கொங்குச் சேரனால் தொடர்ந்து முறியடிக்கப் பெற்றவர்கள் வித்தையாண்ட இளம் பழையன் மாறனும், பொத்தியாண்ட பெருஞ் சோழனும் ஆவர். இவர்களுள் முன்னவன் புன்னாட்டுப் போரில் வீர மாள்வுற்ற பழையனின் இளவலாக இருத்தல் கூடும். இப் போர்களின் விளைவாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் சோழர் அருந்தனமாகப் பேணி வந்த சதுக்கப்பூதர் படிமத்தை இளஞ்சேரல் இரும்பொறை வெற்றிச் சின்னமாகக் கைப்பற்றி அதனைக் கருவூரில் நிறுவி விழா எடுத்தான். கொங்குச் சேரப் பேரரசின் இந் நீள் பெரும்புகழை `அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபில் சாந்திவேட்டு' (பதிற்றுப்பத்து) `சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக் கொள் வேள்வி புரிந்தோன்!' (சிலப்பதிகாரம்) என்று சங்கப்பாடலும் சங்ககாலச் சிலம்பும் ஒருங்கே முழங்குகின்றன. இங்கே சிலம்புக் காப்பியம் இளஞ்சேரல் இரும்பொறையை வேள்வி புரிந்தோன் என்று கூறும் தொனியும் அதன் இறந்த காலமுமே, சேரன் செங்குட்டுவன் (கி.பி. 130-135) ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கண்ணகி விழாவுக்கு (கி.பி. 180ஆம் ஆண்டுக்கு) நெடிது முன்னதாகவே இப்பேரரசன் இறந்து விட்டான் என்பதைக் காட்டுகின்றன. தவிர, இக்கூற்று அந்த விழாவுக்கு முற்பட, அதற்குத் தூண்டுதலாகவே, சேரன் செங்குட்டுவனின் போர் வெறியைத் தணியச் செய்து அற ஆர்வம் தூண்டும் முறையில் அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தும் வகையிலே மாடலனால் கூறப்படுகிறது. அசோகன் புத்த நெறி தழுவுவதற்கு அவனது கலிங்கப் போரின் குருதிக் களரி பின்னணியாயமைந்தது போல, கண்ணகி விழாவுக்கும் மாடலன் அறிவுரைக்கும் உரிய பின்னணி, சிலம்பே குறிக்கும் சேரன் செங்குட்டுவனின் கொங்கர் செங்களம் என்ற இடத்தில் நிகழ்ந்த செங்குருதிப் போரே என்னல் தகும். இது கீழே விரிக்கப்படுகிறது. யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 170-190), பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சி இறுதியிலே சிறுவனாயிருந்த அவன் புதல்வனே என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கருதியுள்ளார். இவன் ஆட்சிக் கால அளவும் அடுத்த பேரரசன் ஆட்சிக் கால அளவும் இருபது இருபது ஆண்டுகள் என்பதும், இளஞ்சேரல் ஆட்சியையடுத்து இரண்டும் தொடர்ந்தன என்பதும் இதுபோலவே வேறு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் பெரிதும் உய்த்துணரப்பட்ட ஊகங்களே யாகும். சதுக்கப்பூதரைக் கருவூரில் கொண்டு வந்து நிறுவிய நிகழ்ச்சிக் காலம் கொங்குச்சேரர், பெருஞ்சேரர் ஆகிய இரு மரபினரின் ஆற்றலும், புகழும் அடைந்த உச்சநிலையைக் காட்டுவது மட்டுமன்று; அதுவே கொங்குச் சேரரின் ஆற்றல் சரியத் தொடங்கிய காலம், அதுவே சேரரின் ஆற்றலுக்கும் முதல் ஆட்டம் கொடுத்த காலம் ஆகும் என்னலாம். ஏனெனில், இதனை அடுத்து எழுந்ததே கொங்கர் செங்களப்போர். இரு சேர மரபுகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தமிழக முழுதளாவிய எதிர்ப்பின் முதல் அலையையே இது காட்டுகிறது. ஒருபுறம், சோழமரபில் செங்குட்டுவனின் மைத்துனர் இடம் பெறாது துரத்தப்பட்டனர். மற்றொருபுறம் கொங்கு நாடெங்கும் வேளிர்கள் பேரரசுக்கெதிராகத் தூண்டப்பட்டனர்; கொங்கர் செங்களப்போரில் சேரன் செங்குட்டுவன் ஆற்றிய வீரச் செங்குருதிப் போராட்டம் தற்காலிகமாக வெற்றியே தந்து அவன் புகழ் நாட்டிற்று என்பது உண்மையே. ஆயினும் கண்ணகி விழா அதன் பேராரவார அதிர்வலைகளை அமைதிப்படுத்தப் பேருதவியா யிருந்தது என்பதில் ஐயமில்லை. பெருஞ்சேரரின் பேரரசு அதே சமயம் கண்டுவிட்ட ஆட்ட அலைவை மறைக்கும் அரசியல் திரையாகவும் அது பயன்பட்டது. இரு மரபுகளின் பின் வரலாறு இவற்றை உணர்த்துகிறது. கொங்கர் செங்களப் போரில் கோசர் சேரருக்குப் பேராதரவு செய்திருத்தல் கூடும்; கொங்குச் சேரப் பேரரசு பேரளவில் வீழ்ச்சி யுற்றிருக்கக் கூடும். அப் போரை ஒட்டி, அது முதல் கண்ணகி விழாவரையுள்ள காலம் யானை கட்சேய் ஆட்சிக் காலமாயிராமல், அவன் ஆட்சி இடைக் காலமாய் பெருங் கொங்குப் பரப்பில் கோசரே வல்லரசாட்சி பெற்றிருத்தல் ஆகும் என்று கருதலாம். கண்ணகி விழாவின்போது கொங்கு நாட்டின் சார்பில் கொங்குப் பேரரசர் இடம் பெறாதது, அதே சமயம் கொங்கிளங் கோசரே கொங்கு நாட்டுச் சார்பில் பெரு மதிப்புடன் இடம் பெற்றது ஆகிய செய்திகள் யானைக் கட்சேயின் கொங்குப் பேரரசாட்சியிடையே நிலவிய ஓர் இடைக்கால, அல்லது தொடக்கக்காலச் சூழலே என்று கருத இடமுண்டு. கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டுகளில் முன்னர் அரசியல் பேரரசராக ஆண்ட நிலை தகர்ந்து விட்ட நிலையிலும், பாண்டிய மரபினர், புதிய இலக்கியப் பேரரசராகத் தம் மரபுப் புகழ் புதுப்பித்து வாழ்ந்தனர். கடைசிக் கொங்குப் பேரரசர் வாழ்வுகள் இதனை ஒத்தவை. ஆனால், கொங்குப் பேரரசர் இலக்கியப் பேரரசர்களாக மட்டுமன்றி, கொங்கு மக்கள் உள்ளங்களில் அன்பாட்சி நிறுவிய குடியரசுப் பேரரசராகவும் நிலவினர். சங்க காலக் கொங்கு வரலாற்றின் அந்தி நேரச் செவ்வானின் அழகொளிகளாக அவர்கள் ஆட்சிகள் அமைகின்றன. (பாலை பாடிய பெருங் கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ முதலிய அரச மரபுப்புலவர் புகழாட்சி இப் புகழொளிக்கு முன்பின் இடைவெளிகளில் சுடரிட்டவை ஆகலாம்). செல்வக் கடுங்கோவுக்கும் மாந்தரன் என்ற மறுபெயர் இருந்ததனை ஒட்டியே, புலவர்கள் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு அவன் முகத் தோற்றத்தைச் சுட்டி யானைக் கட்சேய் என்று அடைமொழி சேர்த்து அழைத்தனர் என்னலாம். முந்திய கொங்குச்சேரர் ஆட்சிகளைப் போலவே இக் கொங்குச் சேரன் ஆட்சியிலும் போர்கள் பல நிகழ்ந்தன. ஆனால், வெற்றி மேல் வெற்றிகள் எனத் திகழ்ந்த அவ் வரலாற்றிலேயே அவன் ஆட்சி முதல் வெற்றி விரவிய தோல்விகள் வரலாறாகத் தொடர்ந்தன. பேரரசர் வீரம் குறைந்து விடவில்லை. ஆனால், பேரரசுச் சரிவின் வேகத்தைச் சிலகாலம் தடுத்து நிறுத்தவும், அதன் பண்பை வளர்க்கவுமே அது உதவிற்று. இப் பேரரசனது கன்னிப் போராகவும், வெற்றிப் போராகவும் அதே சமயம் கவிதையஞ் செல்வியை அவனிடம் வரவழைத்த வெற்றிப் போராகவும் அமைந்தது விளங்கில் போரேயாகும். இதுபற்றிய வேறு செய்திகள் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை; கன்னித் தமிழ்க் கொங்கம் ஈன்ற இத் தமிழ்க் கொங்கிளஞ் சேரனுக்குப் போர் வெற்றி குறித்து மகிழ்ச்சி யில்லை. தன் பாட்டன் வெற்றிபாடக் கிடைத்த நல்லிசைக் கபிலனைப் போலவே தன் வெற்றிபாடக் கவிஞன் கிட்ட வில்லையே என்று மட்டுமே அவன் கவலையுற்றதாக அறிகிறோம். ஆனால் விளங்கிலைப் பாட அவன் நாடிய புலவர் பொருந்தில் இளங்கீரனார் உருவில் போர்க் களத்திலேயே அவனை வந்தடைந்தார். `அரசே கவலை வேண்டா! கபிலரைப் போலவே நான் உன் புகழைப் பாடுவேன்' என ஒரு புறப் பாடலையே (புறம் 11) பாடி அவன் வேண்டுகோளுக்கு அவர் விடை தந்தார். பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து, இன்று, இறந்துபட்ட ஒரு பத்தே யாகும். ஆயினும், அதில் பாடல் பெற்றவன் கொங்குப் பேரரசன் யானைக் கட்சேயே என்றும், பாடியவர் பொருந்தில் இளங்கீரனாரே என்றும் மேற்கண்ட புறப்பாடலினடிப்படையில் உய்த்துரைக்கப்படுகிறது. யானைக்கட்சேயின் ஆட்சியில், சிக்கற் பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் எனும் குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், கருவூர் மீது படையெடுத்து முற்றுகையிட்டான், இச்சமயம் சேர நாட்டை ஆண்டவன் சேரன் செங்குட்டுவனின் புதல்வனான குட்டுவன் சேரல் என்ற சேரமான் கோக்கோதை மார்பன் என்று கருதப்படுகிறது. யானைக்கட்சேய் அவன் உதவி கோரி அது வருவதை எதிர் நோக்கிக் கோட்டைக்குள்ளேயே தங்கியிருந்தான். ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் சோழனிடம் சென்று, கோட்டையில் தங்கியிருக்கும் அரசனை எதிர்த்து முற்றுகை நீடித்தல் அறமன்று எனப் புறநானூற்றின் ஒரு பாட்டால் (36) அறிவுறுத்தியும் சோழன் முற்றுகை தளர்த்தவில்லை. எதிர்பார்த்த உதவி காலந் தாழ்ந்தும். சிறிதாகவும் அமைந்தது. இந் நிலையில் சோழன் கொங்குச் சேரனை முறியடித் தோட்டியதனுடன் அமையாமல், கருவூரைச் சூறையாடித் தீக்கிரை யாக்கினான். மாடமாளிகைகள் கூடகோபுரங்கள் கொழுந்து விட்டு நின் றெரிந்தன. சோழனின் வெற்றியைக் கோவூர் கிழார் (புறம் 373), பெண்பாற் புலவரான மாறோகத்து நப்பசலையார் (புறம் 39) ஆகியோர் பாடினர். இப் போரின் பின்னணியில், நாம், அன்றைய தமிழக வரலாற்றுச் சூழலைக் காணலாம். சேரமான் உதவி காலந் தாழ்ந்தும், குறைவாகவும் வந்ததற்குக் காரணம் உண்டு. சோழன் கொங்குப் பேரரசைத் தாக்கிய அதே சமயத்திலேயே பாண்டியன் சேரப் பேரரசையும் தாக்கித் தோல்வி கௌவச் செய்ததுடன், முசிறியிலிருந்த ஏதோ ஒரு தெய்வப்படிமத்தை வெற்றிச் சின்னமாகப் பாண்டி நாட்டுக்கு எடுத்துச் சென்றான். சோழ பாண்டியரின் இந்தத் திட்டமிட்ட இருதிசைத் தாக்குதல், முந்திய கொங்குப் பேரரசனின் சதுக்கப்பூத வெற்றிக்கு எதிர்செயலாக நடத்தப்பட்டதேயாகும். இரு சேர மரபுகளின் புகழ் கண்டு பொருமிய இரு தமிழரசரும் காலம் பார்த்திருந்து ஒன்றுபட்டு மேற்கொண்ட செயல்களே அவை. கொங்குப் பேரரசின் ஆற்றல்சரிவை மட்டுமின்றி, அதன் மூத்த வழிச் சேரப் பேரரசின் வலிமைக் கேட்டையும் இப்போர் நிலவரங்கள் காட்டுகின்றன. ஆயினும், இவ்வளவு பெரிய அழிபாட்டின் பின்கூடக் கொங்குப் பேரரசு சிதறவில்லை. பேரரசின் ஆற்றல் குறையக் குறைய, அதன் அடித்தள மாகிய குடியரசுப் பண்பு அதனை வீட்டரசர் கட்டிய நாட்டரசுக் கோட்டையாக்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. வறுமையிற் செம்மை போன்று தோல்வியில் வீறமைதியும் கனிவும் காட்டிய யானைக் கட்சேயின் மீதும் அவன் பின்னோன் மீதும் கொங்குக் குடிமக்கள் கொண்டிருந்த பாசத்தையே, இப் போரின் பின்னிலை காட்டுகிறது-நீர் கிழிய எய்த வடுப் போல, இவ்வழிபாடு கடந்தும் பேரரசு அமைதி நல்வாழ்வுடன் நீடித்தது என்று அறிகிறோம். யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை அறமுறை வழுவாது ஆண்டான் என்றும், அவன் நாட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்ததால், பிற நாட்டு மக்கள் பொறாமையுறுமளவில் அவன் நாடு வானுலகம் போல விளங்கிற்று என்றும் கோழியூர் கிழாரும் (புறம் 187), பதிற்றுப்பத்தில் அவனைப் பாடியவராகத் தெரியவரும் பொருந்தில் இளங்கீரனாரும் (புறம் 53) அவன் ஆட்சி நலம் போற்றியுள்ளனர். தமிழகத்திலேகூட வெற்றிப் பேரரசர் பலருக்கும் எளிதில் கிட்டாத இத்தகைய புலவரின் புகழ்ப் பாராட்டுப் பரிசு, தோல்விப் பேரரசனாகிய யானைக் கட்சேய்க்கு இயல்பாகக் கிட்டிற்று! இது அவர்கள் குடியரசுப் பண்பு, தமிழ்ப் பண்பு ஆகியவற்றிற்கே சான்று ஆகும். யானைக் கட்சேயைத் தமிழகம் என்றும் மறக்க முடியாதபடி செய்துள்ள அவனது அருஞ் செயல் ஒன்று உண்டு. சங்ககால எட்டுத் தொகையினுள்ளே ஒரு முத்துத் தொகையாகத் திகழும் ஐங்குறுநூற்றை அருமுயற்சியுடன் அந் நாளைய கொங்கு நாட்டின் அறிவுக் களஞ்சியமாயிருந்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரைக் கொண்டு தொகுப்பித்த செயலே அது. சங்க இலக்கியப் பரப்பிலேயே புறநானூற்றுக்குரிய பழந்தமிழ்ப் பண்புக் கனிவும், குறுந்தொகைக்கும் சேக்சுப்பியருக்கும் உரிய நாடகத் திறமும் ஒருங்கே கொண்ட சிங்காரக் கலையழகுச் சிமிழ் என அதனைக் கருதலாம்; நற்றிணையின் வனப்புக்குக் கூட அது பெரிதும் பின்னடைவதன்று. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் புலவராக மட்டுமன்றிச் சிறந்த கணியராகவும் (வானூலாராகவும் அதன் வாழ் பயன்கணிப்பு நூலாராகவும்) விளங்கினார். அவரே கொங்குச் சேரனின் அவைப் புலவராகவும் அரசவைக் கணியராகவும் விளங்கியிருத்தல் கூடும். தம் உளங்கொண்ட தலைவனாகவும், அரசனாகவும் விளங்கிய யானைக்கட்சேயினிடம் அவர் ஆரா அன்புடையவர். அந் நாட்களில் வானில் ஓர் எரிமீன் விழுவது கண்டு அவர் அது பேரரசனுக்குத் தீமை குறித்ததென்று கண்டு கவன்றதுடன், அதன்படியே அவன் மாண்டபோதும் மனமறுக்கமுற்றுக் கையறவு (புறம் 229) பாடினார். கணைக்கால் இரும்பொறை (குத்தாயமாக 20 ஆண்டு ஆட்சி: கி.பி. 190-210) கொங்குப் பேரரசின் கடைசிப் பேரரசன் ஆவான். முந்திய பேரரச மரபுடன் அவன் உறவுமுறைத் தொடர்பு யாது என்பதோ, அவன் எப்போது தவிசேறினான் என்பதோ தெரியவராத செய்திகள் ஆகும். அவன் ஆட்சி ஆண்டுகள் கூட (முதல் பேரரசன், முந்திய பேரரசன் ஆண்டுகளைப் போலவே) ஊகங்கள் ஆகும். ஆனால், அவன் கொங்குச் சேரருக்குரிய அதே மரபுப் பண்பில் வந்தவன் என்பதில் ஐயமில்லை; முந்திய பேரரசன் அப் பேரரசின் மாலைச் செவ்வான மென்றால், இப் பேரரசனை நாம் அதன், வீழ்வானச் செங்கதிரொளி என்னலாம் அவனைப் பாடிய பாடலாக, ஒரு சிறு காப்பியமே கூட உண்டு. அத்துடன் அவனே பாடிய ஒரு பாடல், கூற்றுவன் முகநோக்கிப் பாடிய ஒரு பாடல், சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அவன் சங்க கால அரசன் மட்டுமல்லன், சங்க காலப் புலவனும் ஆவான். பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ ஆகிய பேரரசப் பெரும்புலவர் புகழின் ஒரு சுடர்ப் பொறியாக அவன் விளங்கினான். முந்திய பேரரசனைப் போல வெற்றி விரவிய தோல்வி யன்று, கலப்பற்ற தோல்வியே கண்ட பேரரசன், கணைக்கால் இரும்பொறை. ஆனால், இது அவன் வீரத்தின் குறையன்று, பேரரசுச் சூழலின் குறையே யாகும். பேரரசின் சரிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையவனாகவே அவன் ஆட்சி தொடங்கினான் என்பதை அவன் அவைப் புலவரான பொய்கையார் பாடிய நற்றிணைப் பாடல் (18) காட்டுகிறது. பேரரசினை எதிர்த்த மூவன் என்ற (வேளிராகவே கருதத்தக்க) தலைவனை அவன் கொன்றழித்து மற்றையோர்க்கு எச்சரிக்கையாய் உதவும்படி அந்த மூவனின் பற்களை மேல்கரைத் தொண்டித்துறை முகவாயிலில் பதித்து வைத்தான் என்று அப்பாடல் கூறுகிறது. இது பேரரசன் வீர ஆற்றலை மட்டுமன்றி, அவன் ஆட்சித் தொடக்கத்திலும் பேரரசுக்கிருந்த ஆற்றலையும் விரிவகற் சியையும் எடுத்துக் காட்டுவது ஆகும். ஏனெனில், பேரரசின் தொலைக் கோடியாகிய மேல் கடற்கரைவரை அவன் நில ஆட்சி மட்டுமின்றிக் கடலாட்சியும் எட்டியிருந்தது என்பதை இது காட்டுகிறது. சங்க கால இறுதி நாட்களில் வாழ்ந்து, இன்றளவும் தமிழரால் மறக்க முடியாத பொன்றாப்புகழ் நிறுவிய பேரரசன் சோழன் செங்கணான். சங்க காலப் புகழ்வானின் மாலை வெள்ளி அவன். தொடக்கக் காலச் சைவ நாயன்மார், மாணிக்கவாசகப் பெருமான், தொடக்கக் கால வைணவ ஆழ்வார்கள் ஆகியோருக்குக்கூட அவன் முந்தியவனாய், ஒருவேளை அவர்க ளுக்கே மூல மரபினனாகக்கூட விளங்கியவன் ஆவான். காவிரி இருகரையும் (கொங்கு நாடெங்கும்) எழூபதுக்கு மேற்பட்ட சிவபெருமான் திருக் கோயில்களை எழுப்பிக் கொங்கு நாட்டைச் சிவத்திரு நாடாக்கியவன் அவன். கொங்குப் பேரரசின் புற வீழ்ச்சிக்கு (அக வீழ்ச்சியாகக் கூறக் கூடிய குடியரசுப் பண்பு வீழ்ச்சி என்றும் நிகழ்ந்து விடாத ஒன்று) வழிவகுத்த வெற்றி அவன் வெற்றியே! சோழப் பேரரசன் செங்கணான் கொங்குச் சேரப் பேரரசன் கணைக்கால் இரும்பொறையைத் திருப்போர்ப்புறம் என்ற இடத்தில் நடந்த போரில் முறியடித்ததுடன் அமையாமல், அவனைக் குடவாயில் கோட்டத்தில் (குடந்தைக்கு அருகில்) சிறை வைத்தான். சிறைப்பட்டு விட்ட தமிழ்ப் பேரரசன், காவல் வீரரிடம் விடாய்க்கு நீர் கேட்டு, தன்னை மதியாது அவர்கள் காலந் தாழ்த்துத் தந்த நீரை அருந்தாது நிலத்தில் ஊற்றினான். மான நீத்தபின் வாழ விரும்பாது உணவு நீர் மறுத்துச் சாகத் துணிந்து அவன் பாடிய பாடலே, தமிழின் பேரரசுப் பாடல்களுள் ஒன்றாக (புறம் 64) சங்க இலக்கியப் பரப்பில் மிளிர்கின்றது. ஆனால், அவன் புகழும் சாகவில்லை, பூத உடல் கூட அவ் வேளை சாவு தாண்டியிருந்தது என்பதனைக் `களவழி நாற்பது' என்ற சங்க காலச் சிறுகாப்பியத்தின் முகப்புரையால் அறிகிறோம். பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் கருதப்படும் இச்சங்கப் பாடற் காப்பியத்தைச் சேரன் கணைக்கா லிரும்பொறையினிடம் ஆராப்பற்றுக் கொண்ட புலவர் பொய்கையாரே சோழன் செங்கணான்மீது பாடி, அவனை விடுவித்து மீண்டும் தவிசேற்றினார் என்று தோற்றுகிறது. சங்க கால முழு வீழ்ச்சி, கி.பி. 250 அல்லது அதற்குச் சற்று முன் பின் தொடங்கிய களப்பிரர் படையெழுச்சியின் விளைவு ஆகும். ஆனால், திருப்போர்ப்புற வெற்றியுடன் சரிவுற்ற கணைக்காலிரும்பொறையின் பேரரசாட்சி, அவன் விடுவிக்கப் பட்ட பின்னும் சிறிது காலம் சோழர் மேலாட்சியின் நிழலில் தொடர்ந்திருந்தது என்று கருதலாம். ஆனால், கொங்குப் பேரரசை விழுங்கிய சோழப்பேரசை மட்டுமன்றி, சேர பாண்டியராகிய மற்ற இரு அரசுகளையும் அவர்களிடையே அந்நாள் முகிழ்த்த (திரையர்-இளந்திரையர் ஆகிய தொண்டை நாட்டு மரபின் மலர்ச்சியாகிய) பல்லவ அரசையும் கூட இக் களப்பிரர் எழுச்சி சில நூற்றாண்டுகள் வரை அழிவுக்கு ஆட்படுத்தி விட்டது. மேலே சுட்டியபடி, மகிழம் பூ வாடினாலும், அதன் மணம் என்றும் வாடாதவாறு போல, களப்பிரர் ஆட்சியாலோ பிறர் எவர் ஆட்சியாலோ கொங்கு நாடு தன் அகப்பண்பாகக் கொங்குப் பேரரசு நிழலில் மலர்ந்த தன் குடியரசு மணம் மாறாமல் நின்று நிலைத்து வந்தாலும், புறத்தே அது மற்ற மண்டலங்கள்கூடக் காணாத புறவள அழிவைக் காண வேண்டி வந்தது என்பதில் ஐயமில்லை. ஐந்திணை மலராகப் பூத்த சங்க காலக் குடியரசுப் பண்பு சங்க காலத்துக்குப்பின் நெடுநாள் பாலையாகிவிட்ட கொங்கு நாட்டு வரலாற்றில் சோழர் கால முதல் பாலை வெப்பிடையே நறுஞ்சோலை மலராகவே மீண்டும் புது மலர்ச்சியுறத் தொடங்கியுள்ளது, மலர்ச்சியுற்று வருகிறது. அதன் இடைக்கால வீழ்ச்சி களப்பிரர் எழுச்சி, அதன் முன்னணி மரபினரான கங்க மரபினரின் ஆட்சி ஆகியவற்றால் மட்டுமன்றி, முடியரசர் குருதிப் போராட்டங்களாலும் நேர்ந்தது ஆகும். 3) கொங்கு வாழ்வும் சங்கம் கண்ட தேசிய வாழ்வும் தேசங் கடந்த பெருந் தேசிய அமைப்பும் சங்க இலக்கியமும் சங்க கால இலக்கியமும் இன்று தமிழரின் பழம் பெருமை பேசுவதற்குரிய அருங்கலைக் கருவூலமாக மட்டுமே கருதப்பட்டு வருகின்றன. உலகளாவிய, இந்தியா அளாவிய ஒப்பீட்டாய்வின் துணைகொண்டு சங்க இலக்கியப் பலகணி மூலம் நாம் அறியத் தகும் தமிழக, இந்தியத் தேசிய வாழ்வு வளம், உலக நாகரிக வளம் ஆகியவை பற்றியோ, கொங்கு வரலாற்றுடன் அவற்றிற்குரிய தொடர்பு பற்றியோ அறிஞர் உலகும் புலவர் உலகும் இன்னும் கருத்துச் செலுத்தவில்லை. முடியரசின் மூன்றாம் ஊழிக்குரிய கால வண்ணத்தின் சாயல் தமிழகத்தின் உள்ளும் புறமும் இந்தியாவின் உள்ளும் புறமும் இன்னும் இவற்றை நிழலடிப்பவையாகவே உள்ளன. எல்லா உலக மொழிகளிலும் (ஆங்கிலம்: ஊநடிசட அல்லது ஊhரசட, உழுபவன், அற்பப் பயல்; நுடிசட அல்லது நுயசட, உழாதவன், கோமான், பெருமகன்) சமக்கிருதத்திலும் (விச், வேதகால மக்கள், கடை வருணத்தவரான மூன்றாம் வருணத்தவர்) தமிழிலும் (தேவராட்டி, வழிபாட்டாளர், விலைமகள், பொதுமகள்; குடிமகன்: நாட்டு மக்களில் ஒருவர், வேசி மகன் அல்லது அம்பட்டன்; வேளாளன் என்பதன் புது வடிவம் வெள்ளாளன், கடைநிலத்தவன், பெண்பால் வடிவங்கள்: வெள்ளாட்டியர், கடைசியர்-கீழ் மகள் வகுப்பு) இதே கால வண்ணத்தின் மரபு மலர்ச்சி இழிவுகளைக் காட்டும் சொற்களில் ஒரு சில ஆகும். சங்கம் என்ற தமிழ்ச் சொல்லிலேயே இக் கால வண்ணம் மிகுதி விளையாடியுள்ளது. அது தமிழ்ச் சொல்லன்று, சமக்கிருதச் சொல் என்று கூறும் சமக்கிருத மரபு அறியாக் குழப்பத்துக்கும் (சமக்கிருதம்: ளுயபேயஅ, ளுயபேயஅய; பற்று, புணர்ச்சி; ஆறுகளின் சந்திப்பு; ளுயபேயஅ-யளளடிஉயைவiடிn) ஆராய்ச்சிக் குழப்பத்திற்கும் ஆட்படுபவர்களும் அதனைக் கூடல், கழகம் என்று (மரபுத் தவறாகத்) தனித் தமிழ்ப் படுத்துபவர்களும் உண்டு. ஆனால் சங்கம், கழகம், கூடல் அல்லது கூட்டம் ஆகிய சொற்கள் முற்றிலும் ஒரு பொருட் சொற்கள் அல்ல. சங்கமும் கழகமும் அமைப்புகள். கூடலும் கூட்டமும் அவற்றின் தனி நிகழ்ச்சிகள் குறிப்பவை. கழகம் (குருகுலக்குழு, சூதாடும் குழு, உடிஅஅவைவநந, உடரb; சமக்கிருதம், உபநிஷத் அதாவது உடனிருக்கை) ஆய்வுக்குழு குறிக்கும் சொல் ஆகும். சங்கம் என்பதோ பல அங்கங்களைக் கொண்ட நிலையான பேரமைப்பு (ஹn டிசபயnளைஅ றடிசமiபே வாசடிரபா டிசபயளே; ஹn யளளடிஉயைவiடிn டிக உடிஅஅவைவநநள, உடரளெ யனே எயசiடிரள டிவாநச சரடiபே யள றநடட யள நஒநஉரவiஎந க்ஷடினநைள) ஆகும். அரசன் (தெய்வ மரபில் அதாவது கோ மரபில் வந்தவன்), மன்னன் (மக்கள் தலைவன்), வேந்தன் (தேர்ந்தெடுத்த தலைவன்) முதலிய பிற சொற் குழுக்களைப் போலச் சங்கம், கழகம், கூடல் போன்ற சொற்களையும் நாம் பொது முறையில் ஒரு பொருட் சொற்களாக வழங்கினாலும், அவற்றுக்கு அறிவு மரபில் சிறப்புப் பொருள்களும் பண்புகளும் நயநுணுக்க வேறுபாடுகளும் உண்டு. வரலாற்று மரபாய்வொளி, ஒப்பீட்டாய்வொளி ஆகியவற்றின் துணை கொண்டு நாம் சங்கம், சங்க இலக்கியம், சங்க இலக்கியப் பின்னணி ஆகியவற்றில் காணப்படத்தக்க தமிழக மக்களின் தேசிய வாழ்வு, அதற்குரிய தேசங் கடந்த தேசிய அமைப்பு, இவற்றுடன் கொங்கு நாட்டுக் குரிய உயிர் பண்புத் தொடர்பு ஆகியவை குறித்த பல மெய்ம்மைகளைக் காணல் தகும். முதலாவதாக, சங்க இலக்கியப் பரப்பில் நாம் கவனிக்கத் தக்க பண்பு அதன் முழு நிறை தேசிய, தேசியங் கடந்த பேராண்மைத் திறம் ஆகும். தமிழ்ச் சங்கம் என்பது பாண்டிநாட்டு மதுரை மாநகரில் (முற்பட அலைவாய் அல்லது கவாடபுரத்தில் அல்லது கடல் கொண்ட பஃறுளி யாற்றுத் தென் மதுரையில்) அமைந்திருந் தாலும், அது அம் மதுரைக்கோ, பாண்டி நாட்டுக்கோ மட்டும் உரியதன்று; மூவரசுகளையும் எண்ணற்ற வேளரசுகளையும் உட்கொண்ட பண்டைப் பெருந் தமிழகத்துக்கும், அதற்கு அப்பால் உள்ள தமிழுலகம் முழுமைக்கும் உரியதாகும். இன்றைய கேரள மாநிலம், கன்னட துளு ஆந்திர மாநிலப் பகுதிகள், பண்டைத் தமிழ் ஈழமாகிய இன்றைய சீர் இலங்கை ஆகிய பரப்புகளிலும் அவற்றுக்கு அப்பாலுமிருந்து தமிழ்ப் புலவர்கள் அதில் வந்து கலந்துகொண்டிருந்தனர். பாடியவர்கள், பாடப் பெற்றவர்கள் இப் பரப்பு முழுமைக்கும் உரியவராயிருந்தனர்-எந்த ஒரு நாடோ, அரசோ, நாட்டுப் பகுதி அரசுப் பகுதிகளோ, எந்த ஒரு மாவட்டமோ வட்டமோ, எந்த ஒரு நகரமோ, முக்கியமான ஊரோ, ஊர்ப் பகுதியோ, தெருவோ கூட சங்கப் பேராண்மை பெறாமல் விடப்பட்டிருந்ததென்று கூற முடியாது. தவிர, இந்திய நாகரிகப் பரப்பு முழுவதிலுமுள்ள சமகாலச் செய்திகள், நிகழ்ச்சிகள், மக்களறிந்த பழமொழிகள், பாரத இராமயணக் கதைகள், சமயக் கருத்துக்கள் ஆகிய யாவும் இத் தேசிய இலக்கியக் களஞ்சியத்தில் வாய்மையுறப் பதிவு செய்யப் பட்டுள்ளன. இறந்துபட்டவை, சிதைந்தவை, தொகையுட் சேராதவை ஆகியன போக நம்மிடம் அரைகுறையாக வந்து எட்டியுள்ள சங்கத் தொகுப்புகளுக்குள்ளேயே நமக்கு 600 க்கு மேற்பட்ட புலவர்களின் ஆயிரக்கணக்கான பாட்டுகள் கிடைக்கின்றன. இவற்றுள் கொங்கு நாட்டில் மட்டும் 30க்கு மேற்பட்ட புலவர்கள், கொங்கு நாட்டுப் பண்டைத் தலைநகராகிய கருவூரில் மட்டும் 11க்கு மேற்பட்டவர்கள் இடம் பெறுகின்றனர். பெண்பாற் சங்கப் புலவர்களும் 30 க்கு மேற்பட்டவர்கள் ஆவர். இவர்கள் ஒப்புக்கு அல்லது பெயருக்குப் பெண்பாலராகக் கூறத் தக்கவர்கள் அல்லர். அவர்களிடையே ஆண்பாற் புலவர்களின் முன்னணித் தலைவர்களுடன் தலைவர்களாக இயங்கும் ஆற்றலுடைய கொங்கு நாட்டுக் கவிப் பேரரசி ஒளவையார், காக்கை பாடினியார் (இருவர்) போன்ற பெருங்கவிஞர் இருந்தனர். ஆண் பெண் இருபாலரிடையேயும் எல்லா இடப் பரப்புக்கும் உரியவர்கள் மட்டுமன்றி, அரசர் முதல் ஆண்டி வரை சிற்றுராரும் பேரூராரும் ஆசிரியரும், சமய குருமாரும், உழவரும், வணிகரும், கணியரும், மருத்துவரும், இசை வல்லாரும், நடிகரும்; இன்று பிற்பட்ட சமுதாயத்தினர் அல்லது பிற்பட்ட இனத்தினர் என்று கருதப்படும் குறவர், எயினர், பேயர் (தற்கால அணிமைக் கால வழக்கில் சண்டாளர் அல்லது மலங்குடியினர்) ஆகியோரும் எத்தகைய சமுதாய, தொழில், இன, பால் வேறுபாடுகளும் இன்றி எல்லா வகுப்பினரும் எல்லாப் படிநிலையினரும் தமிழ்ச் சங்கத்தில் பங்கு கொண்டிருந்தனர். கோசர் போன்ற தனியினத்த வரும் ஓர் ஆரிய அரசனும் (பிரகத்தன்) வேத வேள்விகள் செய்தவரும் வேற்றுமையின்றியே அவ்வமைப்பில் ஈடு பட்டிருந்தனர். உலகில் எந்த நாடும், எந்த மொழியும் இந் நாள்வரை எந்தக் கால ஊழியும் காணாத இலக்கிய, அறிவுத் துறைப் பேராண்மை (ழடிசணைடிவேயட யள றநடட யள ஏநசவiஉயட சுநயீசநளநவேயவiடிn) இது. இரண்டாவதாகச் சங்க இலக்கியப் பலகணியில் நாம் நுனித்தறியக் கூடிய செய்தி அதன் அமைப்பு, அமைப்பாட்சி, அமைப்பாண்மை ஆகும். சங்க மரபு அதாவது கடைச்சங்க மரபு சங்க உறுப்பினர்களை 49 பேர் என்று கூறுகிறது. (முற்பட்ட இடை, தலைச் சங்கங்களில் இது 449, 4449 என விரிவுற்றிருந்ததாகவே மரபு தெரிவிக்கிறது). இவர்கள் வாழ்நாள் உறுப்பினர்களாய் இருந்திருந்தால் வாழ்நாள் கடந்தும், உறுப்பாண்மைக் கால வரைவு உடையவர்களாயிருந்தால் அவ் வரைவு கடந்தும் புதுப்பிக்கப் படத்தக்கவர்களாக இருந்திருப்பர் என்னல் தகும். உறுப்பினர் தொகையையும் பேராண்மைத் திறத்தையும் இது வலியுறுத்துவது ஆகும். தவிர உறுப்பினர் வேறு, பாடியவர் வேறு என்பதில் ஐயமில்லை. அரங்கேற்றியவர் தவிர (திருக்குறள் அரங்கேற்ற மரபுரை, தொல்காப்பிய அரங்கேற்ற மரபுரை ஆகியவை தவிர இது நமக்கு வந்தெட்டவில்லை) எவரும் சங்கத்தில் பாடியதாகத் தெரியவில்லை. பாடியவர் அரசவைகளில் மட்டுமன்றி, தமிழுலக நாடுமலை காடுகள் எங்குமிருந்து அவ்வப் பகுதியிலுள்ளவரைப் பாடினர். அப் பாடல்களில் தேடித் தொகுத்த (அல்லது அவற்றுடன் பாடி அல்லது தேடிச் சேர்த்த) அல்லது பொறுக்கித் தேர்ந்தெடுத்த பாடல் தொகைகள் சிலவே சங்க இலக்கியம் என்ற பெயர் மரபுடன் காலங்களின் கோலங்கள் கடந்து நமக்கு வந்தெட்டியுள்ளன. சங்ககாலப் பேராண்மை காட்டுவதை விட மிகப் பேரளவாகவே அக் காலப் புலவர் தொகை, பாடல்களின் அளவு, பாடப்பட்டவர் தொகை, வள்ளல்களின் பரப்பு, வாசிப்பவர் தொகை ஆகியவை இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சங்க உறுப்பினரும் பாடியிருத்தல் கூடியதே என்றாலும், உறுப்பினர்க்குரிய கடமை பாடுவதன்று; பாடியவரையும் பாடிய பாடல்களை யும் தரப்படுத்தி, வகைப்படுத்தி, ஒதுக்குவன ஒதுக்கி, தேர்வன தேர்ந்து, தொகுப்புக்குரியன தொகுத்துப் பேணுவதே யாகும். உலகில் எம் மொழியின் எந்தக் கால இலக்கியமும் காட்ட இயலாத தன்மையினையுடைய சங்க இலக்கியத்தின் கிட்டத் தட்டச் சரிசமமான உயர்வுத்தளம் இதனை மெய்ப்பிப்ப தாகும். இத்தகைய தர உறுதி, தர உயர்வு, தர நயம் காண்பதற் குரிய ஆய்வுக்குழுக்கள் (கழகங்கள்), அதற்குரிய விதிகள் வகுப்பதற்குரிய உட்குழுக்கள் முதலியன அந் நாட்களில் இருந்திருத்தல் வேண்டும். அரங்கேற்றம், பொது ஆய்வு, தொகுப்பு வெளியீடு, சிறப்பு விழாக்கள் ஆகியவற்றுக்குரிய பொதுக் கூட்டங்கள் (கூடல்கள், மாநாடுகள்) நிகழ்ந்திருத்தல் கூடியதே, இக் கூடல்கள், கழக உட்கழகங்கள், சங்கத்தின் நிலையமைப்பு ஆகியவற்றின் தலைவர்களாக; சிறப்பு உறுப்பினர்களாகத் தொல்காப்பியம் அரங்கேற்றிய அதங்கோட்டரசான் (இவன் மரபினர் இன்னும் நாஞ்சில் நாட்டில் தாழ்த்தப்பட்ட குடி மரபினராக வாழ் கின்றனர்), திருக்குறள் மரபுடன் தொடர்புடைய பாண்டியன் அறிவுடை நம்பி, நக்கீரர், சாத்தனார், இறையனார் போன்ற பேரறிஞர்கள் அல்லது பெருந்தலைவர்கள் செயற்பட்டிருத்தல் வேண்டும். தமிழ்ச்சங்கம் என்பது, இக்காலப் புலவர் கூட்டம், புலவர் மாநாடு அல்லது புலவர் குழுப் போன்றதன்று; அது வழிவழி மரபாக நின்று நிலவிய நிலவர அமைப்பாக, பொதுக் கூட்டம், நிறைகுழு, கூடல் குழு, ஆய்வுக்குழு உட்குழுக்கள், பல்வேறுபட்ட சிறப்புப் பொதுத் தலைமைகள் ஆகிய பல்கிளைப்பட்ட அங்கங்களின் செயற்பாடுகளையுடைய ஒரு தேசியப் படராலமரம் போன்ற அமைப்பு, அதற்குரிய மரபுவழி அமைப்பாண்மை, அமைப்பாட்சி ஆகியவற்றை உடையதாக இருந்தது என்பது தெளிவு. மூன்றாவதாகச் சங்கமரபில் நாம் குறிப்பிடத்தக்க செய்தி, சங்கப் பலகணி மூலம் நாம் காணத்தகும் வேள்நாடுகள் கடந்த, அரசு நாடுகள், மண்டலங்கள் கடந்த, தமிழுலகின், தமிழுலக மக்களின் தேசியங் கடந்த பெருந் தேசிய வாழ்வின் கலைவளமும் அறிவு வளமும் அவற்றிற்குரிய சங்க அமைப்பாண்மையின் தனிச் சிறப்பியல்புகளும் ஆகும். செக்கோசிலவாக்கிய நாட்டுத் தமிழறிஞரான கெமில் சுவெலெபெல் தம் சங்க இலக்கிய ஆய்வு மூலமே மேற்கண்ட சங்க இலக்கியத்தின் உயரிய கலைப் பண்புத் திறம் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். அதே சமயம் அவர் அச் சங்க இலக்கியப் பலகணி மூலம் தாம் காணும் தமிழர் சமுதாய வாழ்வின் எளிமைத் தரத்துடன் அந்த உயர்ச்சி முற்றிலும் முரண்பட்டு, சூழ் தமிழினத்திடையே ஓர் உயரிய அயல் தமிழின அமைப்புப் போலக் காட்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார். இங்கே அவர் நோக்கின் முற்பகுதி மெய்ம்மை கண்ட துணிவும் கூர்மையும் உடையதாயினும், அதன் பிற்பகுதி மெய்ம்மையினை முற்றிலும் விளக்க முற்படாமல், ஒரு விளங்காப் புதிராகவே விட்டுச் சென்றுள்ளது. உண்மையில் சங்கப் பலகணி காட்டும் தமிழக வாழ்வின் எளிமை புலவர் கவிதைக் காட்சியின் எளிமையேயன்றி, மக்கள் அரசியல், சமுதாய, பொருளியல். கலையறிவுத்துறை எளிமையன்று. இது கீழே விளக்கப்படு கிறது. தமிழரின் முச்சங்க மரபு, நாம் அறியும் தமிழரின் கடைச் சங்க மரபினும் பழமையானது, விரிவானது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், சிலம்பு மூலமும் அதன் உரைகள் மூலமும், கொங்குத் தமிழக வள்ளல் மகாலிங்கம் போன்றோரின் முயற்சியால் வெளிவந்துகொண்டிருக்கும் பண்டை இசை நாடக நூல்கள் மூலமும் நாம் அறிந்துகொண்டுவரும் முத்தமிழ் மரபு அதனினும் பழமையானது, பாரியது, சீரியது ஆகும். அணிமைக் காலங்களிலேயே அழிந்து வந்துள்ள இம்மரபுகள் கடைச்சங்க காலத்தில் உயிர்மரபுகளாகவே இருந்தன. புலவர்களில் பலரும் அவர்கள் பாடல் துணைக் குழுவினரும் (பாணர், பாடினியர் அல்லது பண் ணிசைத்துப் பாடுபவர், விறலியர் அல்லது ஆடல் பாடல்களுக்குரியவர், கூத்தர், பொருநர் அதாவது போரும் வாழ்வும் நாடகமாக நடிப்பவர் முதலியோர்) ஒருங்கிருந்தே செயலாற்றினர். பரிபாடலும் பதிற்றுப்பத்தும் சிலம்பும் அதன் உரைகளும் காட்டும் பண் வகுப்பு, வண்ண வகுப்பு, இசை வகுப்பு, நாடகத்திறம் ஆகியவை இதற்குச் சான்றுகள் ஆகும். பல நாடுகளிலும் மொழிகளிலும், நாம் பொற்காலம் என்று போற்றும் ஊழிகள் உண்டு. தமிழ்ச் சங்க காலத்தை நோக்க அவற்றின் புலவர்களின் எண்ணிக்கை குறைவே; அவர்களின் தர உயர்வு தாழ்வு வேறுபாடுகளும் மிகப் பெரிதேயாகும். சேக்சுப்பியர், தாந்தே. காளிதாசன், கம்பன் போன்ற உலகமாக்கவிஞர்கள் பாறை பொற்றைகளிடையே இமயக் கொடுமுடிகள் போலத்தான் திகழ்கின்றனர். அவர்களைப் போன்ற ஒரு கவிஞரின் கவிதைப் படைப்புகளிலோ, ஒரே படைப்பிலோ கூட, நாம் மிகப் பாரிய தர உயர்வு தாழ்வுகளை, தனி நயப் பகுதி (ஞரசயீடந ஞயவஉhநள) குறைநயப் பகுதிகளை ஏராள மாகவே காணலாம்; ஆனால் சங்க இலக்கியத்தின் நூற்றுக் கணக்கான புலவர்களின் ஆயிரக்கணக்கான பாடல்களிலே தரக் குறைவு என்பதை நாம் அறவே காண முடியாது. தர உயர்வு தாழ்வுகள் கூட மிகக் குறைவே; அத்தனை புலவரின் அத்தனை பல்வண்ண, பல்திறப் பாடல்களும் அரும்பரு மணிகள் ஒரு சிலவே மிடைந்துள்ள ஒரே சீரான மணிமாலை போன்ற நயத்திற ஒருமைப் பாடுடையவையாகவே திகழ்கின்றன. இத்தர ஒருமைப் பாடு முற்றிலும் அவற்றைத் தொகுத்த திறனாய்வாளர்க்கு மட்டுமேயுரியதாய் இருக்க முடியாது-அதன் பேரளவே இதனை வலியுறுத்திக் காட்டுவது ஆகும். அத்துடன் இந்தத் தர ஒருமைப்பாடு இலக்கியம் அதாவது இயலுக்கு மட்டுமேயுரிய தன்று; அது இசை நாடகங்கள் போன்ற கலைகளுக்கும், மருத்துவம், கணிதம் போன்ற அறிவுத் துறைகளுக்கும் ஒருங்கே உரியதாகும். வரலாறு, அரசியல், நிலவியல், வானநூல், மருத்துவம், செடிநூல் (க்ஷடிவயலே), விலங்குநூல் (ஷ்டிடிடடிபல), இயற்பியல் (ஞாலளiஉள), இயைபியல் (ஊhநஅளைவசல) ஆகிய அறிவுத் துறைகளின் வாய்மையையோ, அறிவுத் திட்ப நுட்பத்தையோ சேக்சுப்பியர், கம்பர் போன்ற வானுயர் புகழ்க் கவிஞரிடம் கூட யாரும் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் மாட்டார்கள். ஆனால் சங்க இலக்கியத்தில் நாம் மருத்துவன் தாமோதரனார், கணிமேதாவியார், புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் போன்ற தனி அறிவுத்துறை வல்லுநர்களான புலவர்களிடையே மட்டுமன்றி, எல்லாப் புலவர்களின் எல்லாப் பாடல்களின் பின்னணியிலுமே இத்தகைய வாய்மையையும் அறிவுத் திட்ப நுட்பத்தையும் அப்பழுக்கற்ற நிலையி லேயே காண்கிறோம். தற்கால மேலையுலக அறிவியல் புலமை வாய்ந்த அறிவாராய்ச்சி யறிஞர்களே (அறிஞர் பி.எல். சாமி போன்றோர்) இவற்றை ஆராய்ந்து கண்டு வியந்து போற்றுகின்றனர். சங்க காலத் தமிழகத்தில் இத்தனித்துறை அறிஞர் களுக்குரிய அறிவு வளத்துக்கான கல்வி நிறுவனங்கள் (பல்கலைக் கழகங்கள்), இவற்றின் மரபும் விரிவும் வளமும் நீடிக்கும்படி வளர்த்த தேசியக் கலையாட்சி நிறுவனங்கள் (னுநயீயசவஅநவேள டிக சூயவiடியேட யனே ஞடியீரடயச நுனரஉயவiடிn) ஆகியவைகள் இருந்திருக்க வேண்டும். மக்களிடையே இவ்வளம் நிலவுவதற்கு ஆதார மாக, அவர்கள் வாழ்க்கைத் தரம், செல்வ வளம், உழவு, கல்வி வளம் ஆகியவை நீடித்து வளர்வதற்குரிய ஆட்சி அமைப்புகள் (ஞடிடவைiஉயட, ளுடிஉயைட யனே ஐனேரளவசயைட நுளூரiயீஅநவேள) நிலவியிருக்க வேண்டும். இன்றைய நாகரிக உலகின் தற்கால நாகரிக ஊழிகளில்கூட, கல்வியின் குறிக்கோள் எல்லா மக்களுக்கும் எண்ணெழுத்தறிவு (ருniஎநசளயட டுவைநசயஉல) என்பது மட்டுமே, பொதுமக்களுக்கு இது தரும் தொடக்கக் கல்வி (நுடநஅநவேயசல நுனரஉயவiடிn), நடுத்தர மக்களுக்கு வருவாயும் தொழிலீடுபாடும் வழங்கும் இடைத்தரக் கல்வி (ளுநஉடினேயசல நுனரஉயவiடிn), உயர் ஆட்சி வகுப்பினர் அல்லது இன அறிவு வகுப்பினருக்கான உயர்தர அல்லது பல்கலைக்கழகக் கல்வி (ழiபாநச டிச ருniஎநசளவைல நுனரஉயவiடிn) என்ற மூவகுப்பு முறைக் கல்வியே தேசிய இலக்கு, நாகரிக இலக்காகியுள்ளது. தமிழரிலக்கு, வள்ளுவ இலக்கு இதுவன்று, மனித இன அறிவு வளர்ச்சியே என்பதை `விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்' `அறிதோற றியாமை கண்டற்றால்' என்பன போன்ற வள்ளுவ வாய்மொழிகள் காட்டும். தவிர, நாகரிக உல கெங்கும் அணிமைக் காலம் வரை கல்வி என்பது தனி மனிதர் கல்வியாக (டுநயசniபே) மட்டுமே அமைந்திருந்தது, தேசியக் கல்வியாக (சூயவiடியேட நுனரஉயவiடிn) இருந்ததில்லை. ஆனால், திருவள்ளுவர் கல்வியைத் தேசியக் கல்வி, தேசிய வாழ்வை இலக்காகக் கொண்ட இனக் கல்வியாகக் கருதியதனால்தான் கல்விக்குரிய நான்கு அதிகாரங்களையும் கல்விமுறை என்றும், கல்லாமை ஒழிப்பு என்றும், கேள்வியால் பொது மக்களிடையே அறிவு பரப்பும் மக்கட் கல்வி என்றும், அறிவுடைமை அதாவது எல்லா உடைமைகளுக்கும் அடிப்படையான ஆட்சி தொழில் துறைகள் சார்ந்த அறிவுக் கல்வி என்றும் வகுத்து, அத்தேசியக் கல்வியை அறத்துப்பாலிலோ, பொருட் பாலின் குடியியலிலோ கூறாமல், இறைமாட்சி அதிகாரத்தினை அடுத்து இறைக் கடமைகளில் முன்னணிக் கடமையாக வைத்தார் என்பது காணலாம். சங்க இலக்கியம், கல்விப் பெருமை கூறிற்றேயன்றி, இக் கல்வி யமைப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை. இது இயல்பே. ஏனெனில், சங்கத்துக்குப் புறம்பாக அத் தகைய அமைப்புகள் இல்லை, இருந்திருக்கவும் முடியாது. ஏனெனில், தமிழகத்திலும் சூழ் புலங்களிலும்கூட அந் நாட்களில் மூவரசு நாடுகள் மூன்றாகவும், வேள்புல நாடுகள் எண்ணற்றவையாகவும் இருந்தன. ஆனால், தமிழுலகின் ஒரே தேசிய மரபாகத் திகழ்ந்த தமிழ்ச் சங்கத்துக்கு வெளியே, ஓயாது செங்குருதிப் போராட்டங் களிலேயே ஈடுபட்டிருந்த தமிழக அரசுகளுக்கோ, வேளிருக்கோ கூட, இத்தகைய உலகளாவிய, தேசமளாவிய ஆக்கச் செயல்களுக்கோ, அமைப்புகளுக்கோ, திட்டங்களுக்கோ உரிய நேரமும் வாய்ப்பும், திட்ட வாய்ப்பும் அதற்குரிய சிந்தனையும் கட்டாயமாக இருந்திருக்க முடியாது. செக்கோசிலவாக்கிய அறிஞர் கெமில் சுவெலெபில் கண்ட இருதிறக் காட்சிப் புதிர் இதுவே. ஆனால், இந்தப் புதிரின் விளக்கம் மனித உலகம் கண்ட முதல் தேசிய அமைப்பாகிய தமிழ்ச் சங்கத்திலேயே காணத் தக்கது என்பதை அவர் எண்ணிப் பார்க்க இயலவில்லை. தமிழ்ச் சங்கம் ஒரு தனிச் சங்கமாக. தனிப் பள்ளி கல்லூரி பல்கலைக் கழகமாக, தனிக் கலைக்கூடமாக அமைக்கப் பெறவில்லை, இயங்கவில்லை. அது தமிழகம், தமிழுலகம் எங்குமுள்ள சங்கங்களை, பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களை, கலைக்கூடங்களை ஒருமுகப்படுத்தி ஆட்சி செய்யும் ஒரு மைய ஆட்சி அமைப்பாகவே நிலவிற்று. அது மட்டுமன்று. அது அரசர், வேளிர்களின் அரசியல் ஆட்சி கடந்த ஒரு மேலாட்சி அமைப்பாக (தற்கால ஐக்கிய நாடு அவை அல்லது உலகக் கல்வி கலை பண்பாட்டு அமைப்புப் போன்று) மொழி கலை அறிவு, தொழிலறிவு, இன அறிவு ஆராய்ச்சி ஆகிய நீண்ட கால வாழ்வுக்குரிய உலக ஆட்சி மன்றமாக நிலவியிருந்ததென்று காணலாம். முடியரசினும் பார்க்கக் குடியரசு அமைப்பிலேயே, பண்டைத் தமிழர் பேரீடுபாடு கொண்டிருந்தனர். மூவரசு நாடுகளுக்குப் பறம்பாக அவர்கள் கொங்கு நாட்டு மரபையும் தொண்டை நாட்டு மரபையும் வகுத்துக் கண்ட காட்சியே இதனைத் தெளிவுபடுத்தும். தமிழர் அறிவுக் கருவூலத்தை ஆசியாவுக்கும் உலகுக்கும் கொண்டு செல்லும் வாயில் தொண்டை நாடு என்பதையும்; தமிழரின் குடியரசு மரபடிப்படையான நாடு மொழி இன வேறுபாடு கடந்த மக்கள் தேசியத்தை உலகளாவப் பரவவிடும் வாயில் கொங்கு நாடே என்பதையும், இம்மண்டல வகுப்பின் போதே தமிழ் மரபு உணர்ந்திருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில், கீழே காட்டுகிறபடி, உலக வரலாற்றில் அறிவு சமய பண்புகளைப் பரப்பும் பணியில் தொண்டை நாடு நின்றது போல, தமிழகத்திலும் இந்தியாவிலும் தேசிய வாழ்க்கைப் பண்பாடு பரப்பும் பணியில் கொங்கு நாடே தோன்றாத் துணையாய் இயன்று வந்துள்ளது. (பாண்டி நாட்டுக்கு அதன் மொழித் துறையும், சோழ நாட்டுக்கு அதன் கலைத்துறையும், சேர நாட்டுக்கு அதன் சமுதாயப் பண்பாட்டுத் துறை, வீரத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட் டிருந்தன என்று கருதலாம்). கடைச்சங்கத்துக்கும் நெடிது முற்பட்ட சங்க காலத்திலிருந்தே தமிழர் தமிழ்ச் சங்கத்தை மூவரசு நாடுகள், வேள்புலங்கள் என்ற அரசியல் வேறுபாடுகளும் தென்னகத் தமிழ் நாடு, ஈழத் தமிழ்நாடு போன்ற நில அல்லது தேச வேறுபாடு களும் கடந்த ஒரு தேசங் கடந்த- தேசிய அமைப்பாகவே குறிக்கொண்டு, வழிவழி மரபாகவே திட்டமிட்டு வளர்த்து வந்தனர். இத் தேசியத் திட்ட மரபு வளர்ச்சியே தேசிய உள்ளங்களில் நின்று நிலவி மூவரசரும் வேளிரும் தம் தனிமுறைப் போட்டிகள் கடந்து தமிழ்ச் சங்கத்தை அன்புப் போட்டியிட்டு வளர்க்கும் படி செய்தது என்று காணலாம். உலகில் திட்டமிட்டு மொழி வளர்க்கும் சங்கமாக பிரான்சு நாட்டில் மட்டுமே கி.பி. 10 அல்லது 14ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு சங்கம் நிலவி வந்துள்ளது. கலையியல் வளர்க்கும் சங்கங்களின் மூதாதையாகக் கிரேக்க நாட்டில் மட்டுமே அறிஞர் பிளேட்டோவின் கலைக்கூடம் (ஹஉயனநஅல: கி.மு. 5ஆம் நூற்றாண்டு) இயங்கிற்று. ஆனால் தமிழ்ச் சங்கம் மொழியும் இலக்கியமும் கலையும் அறிவுத் துறைகளும் திட்டமிட்டு வளர்க்குமிட மாக மட்டுமன்றி, அவற்றின் ஆட்சியமைப்பாகவும், பள்ளி கல்லூரி பல்கலைக் கழகங்களை நாடுகடந்து வேள்புலம் கடந்து வளர்த்து இணைத்து ஆளும் மைய அமைப்பாகவும் இயங்கியிருந்தது. குடியரசு மரபிலேயே இந்திய, உலகப் பல்கலைக்கழகங்கள் வளர்ந்துள்ளன என்பது மேலே சுட்டப்பட்டுள்ளது. மதுரைத் தமிழ்ச் சங்கம் அப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் மூலமரபாய் அமைந்த மரபு ஆகும் என்பதும் அங்கே குறிக்கப் பட்டது. ஆனால் அது பல்கலைக் கழகமோ, கலைக்கூடமோ, அறிவியற்கூடமோ மட்டுமன்று. நாகரிக உலகு அல்லது தமிழுலகளாவி, தேசியம் கடந்த பெருந் தேசிய வாழ்வின் மொழி, கலை, இலக்கியம், அறிவியல் ஆகியவற்றையும், தொழில் வாணிகம் ஆகியவற்றுக்கு அடிப்படையான அறிவாய்வுத் திறங்களையும் திட்ட மிட்டு வளர்க்கும் அரசியல் கடந்த அமைப்பாகவே அது இயங்கி வந் திருந்தது ஆதல் வேண்டும். இதற்கான கிளையமைப்புகளை, கிளைச் சங்கங்களை அது மூவரசு நாடுகள் தோறும் வேள் புலங்கள்தோறும் அப்பாலும் அரசியல் சார்பற்ற, அரசியல் சார்புகளுக்கு மேம்பட்ட தளமாகக் கொண்டு இயங்கி யிருத்தல் வேண்டும் என்னலாம். அரசுகள் வேள்புலங்களிடையேயுள்ள குருதிப் போராட்டங்களிடையே இத்தகைய அமைப்பை மக்கள் தேசிய ஆர்வமட்டுமே தட்டுத் தடங்கலின்றி நடத்திவிடுதல் முடியாது என்பதை நாம் எளிதில் காணலாம். குடியரசு மரபில், அதுவும் அரசியல் குடியரசு மரபில்கூட, இது முடியாத ஒன்றேயாகும். சமுதாயக் குடியரசு மரபில் ஊறி வளர்ந்த ஒரு தேசிய மரபினால் மட்டுமே இதனைக் கொண்டு செலுத்துதல் முடியும். சங்க காலக் குடியரசு மரபு கொங்கு நாட்டுக்கு வெளியே தமிழகத்தில் வீழ்ச்சியடைந்த காலமே சங்க கால இறுதி குறித்த காலம் ஆகும். இதற்கு முன் இருந்த சங்க காலத் தமிழகம் இத்தகைய குடியரசு மரபில் வந்த தேசியம், உயிர் மலர்ச்சி கெடாமல் வாழ்ந்த இனமாகத் திகழ்ந்தது. ஏனெனில், மூவரசு நாடுகளின் முடியரசுகள் வேள்புலக் குடியரசு மரபில் வந்தவையேயாகும். அம் முடியரசுகளும், குடியரசுகளும் சங்கத்தின் தமிழ் வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சிகளில் மட்டுமன்றி, அவற்றின் அரசு கடந்த, வேள்புலங் கடந்த தேசிய அமைப்பாட்சியிலும் தலையிடாமல் அதனைப் பேணிக் காத்து வந்தன. வேளிரும் வேளிரும், அரசரும் அரசரும் போரிட்ட காலத்திலும் சங்கப் புலவர் நாடு கடந்த குடிகளாக நடந்து கொண்டனர், நடத்தப் பெற்றனர் என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. எந்தக் குடியரசுக்கும், முடியரசுக்கும் மேற்பட்ட தாகச் சங்க அமைப்பை எல்லா அரசரும் குடியரசரும் மதித்து நடந்தனர். வேள் நாடு மலர்ச்சியைப் போலவே, தமிழ்ச் சங்கமும் குடியரசு களின் கூட்டணி மரபில் வந்த ஒரு கூட்டரசு அமைப்பே என்பதை இவ் விளக்கம் காட்டும். முடியரசுகளும் சரி, குடியரசர்களும் சரி, மேலாட்சியாளர்களாக மட்டுமே இயங்கி வந்தனர். மேலாட்சிகளின் நிழலிலேயே கொங்கு மக்கள் தங்கள் குடியரசு மரபை (நாட்டுக்கோட்டை வணிகர், நாஞ்சில் நாட்டு வேளாளர், கட்டி முதலியார் மரபினர் ஆகியவரை ஒத்து) சமுதாயத் தன்னாட்சி மரபு அதாவது ஒத்திசைவு விரிவு மலர்ச்சி வாய்ந்த கொங்கு மரபாக வளர்த்தது போல, கொங்கு நாட்டின் அகல் விரிவாகிய பண்டைத் தமிழகமும் அரசு குடியரசுகளின் மேலாட்சியலைகளால் பாதிக்கப்படாத முறையில் வாழ்வு வளம், கலை அறிவியல் மொழி இலக்கிய வளம், தொழில் வாணிக வளம் ஆகியவற்றுக்குரிய ஒரு முழுக் குடியாட்சி அமைப்பாகவே தமிழ்ச் சங்கத்தை வளர்த்து வந்தது என்னல் தகும். இந்த அமைப்பில் தற்காலக் கொங்கு மக்களின் முன்னோராகிய பண்டைக் கொங்குத் தமிழரின் பங்கு மிக மிகப் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், தமிழ் வளர்ப்பில் மைய இடம் மதுரையாய் இருந்ததென்றால், குடியரசுப் பண்பு வளர்ப்பின் மையநிலம் கொங்கு மாநிலமாகவே என்றும் அமைந்து வந்துள்ளது. இந்தியாவெங்கும் இருந்த வேள்நாடுகள் அல்லது குடியரசுக் குழு அமைப்புகளில் மைய - அமைப்பாகவும் முழு நிறை மலர்ச்சியுற்ற அமைப்பாகவும் இன்று வரை உயிர் மலர்ச்சி பெற்ற அமைப்பாகவும் நிலவுவது சங்க கால வேள் நாடு அல்லது வேளாள நாடு ஆகிய தற்கால கொங்கு அகநாடேயாகும். சொல்லேருழவர், அறிவேருழவர், பண்பேருழ வரின் ஒரு வேள் நாடாகவே அரசு குடியரசு எல்லை கடந்து தமிழுலகும், தமிழ்ப்பண்புலகும் ஆளமுற்பட்ட ஒரு குடியாட்சி முடியாட்சி எல்லை கடந்த குடியாட்சிக்குழு அமைப்பாகவே தமிழ்ச் சங்கம் நிலவிற்று. பிரிட்டனின் மாமன்றத்தை மாமன்றங்களின் தாய் (ஆடிவாநச டிக ஞயசடயைஅநவேள) என்று கூறுவதுண்டு. தென் மதுரை அலைவாய் மரபுகளில் வந்து மதுரையில் வளர்ந்த சங்கத்தையும் இது போல நாம் நாகரிக உலகப் பல்கலைக்கழகங்களின், அறிவியற் கூடங்களின், வாணிகத் தொழில் துறை ஆராய்ச்சிக் கூடங்களின் உலகத் தாய் நிறுவனம் என்று கூறலாம். மூவரசு நாடுகளும் வேளரசுகளும் பாண்டியன் மதுரையையே தமிழுலகின் தேசிய மையமாக ஏற்றமைந்ததற்குரிய காரணங்களுள் தலையான ஒன்று, குடியரசு மரபுத் தேசியமாக வளர்ந்த அது குடியரசு மலர்ச்சியின் மையமாக அமைந்த கொங்கு நாட்டினருகே தமிழக மையமாய், கொங்கு நாட்டுக் குடியரசுக் குழுவின் பண்போட்டத்துக்கு இலக்கமாய் அமைந்தது என்பதேயாகும். தமிழாளும் பாண்டிய நாடு, கலையாளும் சோழநாடு, வீரமும் பண்பும் ஆளும் சேர நாடு, அறிவாளும் தொண்டை நாடு ஆகிய இந்த நான்குக்கும் மையமாகத் தமிழ்க் கொங்கு நாடு இந்த நான்கு ஆட்சிகளின் ஆட்சிப் பண்பு பேணும் நாடாகப் பண்டு அமைந்திருந்தது. சங்கத் தமிழும் சங்க காலப் பண்புகளும் பண்டைக் குடியரசு மரபுடன் மரபாக மற்ற மண்டலங்களைவிடக் கொங்கு மண்டலத்திலேயே நீடித்துச் செறிவுடன் நிலவி வருவதன் மறைதிறவினை மதுரைச் சங்கத் தமிழ் மரபு, அதனை ஆண்ட கொங்குக் குடியரசு மரபு ஆகியவற்றின் வரலாற்றுக் காலத் தொடர்பிலேயே காணல் வேண்டும்! µµµ பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர் களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்து விட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப் பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறி னேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப் பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதி யான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 தொகுக்கப்பட்ட அப்பாத்துரையார் நூல்கள் கால வரிசையில் 1. குமரிக் கண்டம் 1940-43 2. நாத்திகர் யார்? ஆத்திகம் எது? 1943 3. இராவணன் வித்தியாதரனா? 1943 4. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 5. கெஞ்சி 1944 6. தளவாய் அரியநாத முதலியார் 1944 7. சிறுகதை விருந்து 1945 8. மேனாட்டு கதைக் கொத்து 1945 9. சேக்சுபியர் கதைகள் 1945, 1950, 1954 10. கிருட்டிண தேவராயர் 1946 11. வருங்காலத் தமிழகம் 1946 12. சங்க காலப் புலவர்கள் 1946 13. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 14 போதும் முதலாளித்துவம் 1946-47 15. குடியாட்சி 1947 16. ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 17. சமதரும விளக்கம் 1947 18. இரவிவர்மா 1949 19. சுபாசு சந்திரபோசு 1949 20. சங்க இலக்கிய மாண்பு 1949 21. காதல் மயக்கம் 1949 22. பெர்னாட்சா 1950 23. தாயகத்தின் அழைப்பு 1951 24. ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 25. பொது உடைமை 1952 26. சமூக ஒப்பந்தம் 1952 27. ஆங்கில தமிழ் அகராதி 1952 28. வருங்காலத் தலைவர்கட்கு 1952 29. சமூக ஒப்பந்தம் 1952 30. பொது உடைமை 1952 31. ஐன்ஸ்டீன் 1953 32. எண்ணிய வண்ணமே 1953 33. ஜேன் அயர் 1954 34. நிழலும் ஒளியும் 1954 35. தென்னாடு 1954 36. *தென்னாட்டுப் போர்க்களங்கள் 1954 37. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 38. டாம் பிரெணின் பள்ளி வாழ்க்கை 1955 39. தென்மொழி 1955 40. திராவிடப் பண்பு 1955 41. நீலகேசி 1955 42. கட்டுரை முத்தாரம் 1956 43. வாழ்வாங்கு வாழ்தல் 1956 44. இதுதான் திராவிட நாடு 1956 45. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழகம் 1956 46. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 47. கதை இன்பம் 1956 48. அறிவுச் சுடர் 1956 49. பொன்னின் தேட்டம் 1957 50. பெஞ்சமின் பிராங்ளின் 1957 51. வாழ்க 1957 52. உலகம் சுற்றுகிறது 1957 53. பேரின்பச் சோலை 1957 54. கன்னியின் சோதனை 1957 55. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 56. திருநிறை ஆற்றல் 1957 57. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 58. வியப்பூட்டும் சிறுகதைகள் 1957 59. மன்பதைக் கதைகள் 1957 60. மக்களும் அமைப்புகளும் 1957-58 61. மருதூர் மாணிக்கம் 1958 62. சிலம்பு வழங்கும் செல்வம் 1958 63. மணிமேகலை 1958 64. சரித்திரம் பேசுகிறது 1959 65. வள்ளுவர் நிழல் 1959 66. காரல் மார்க்சு 1960 67. தமிழன் உரிமை 1960 68. மேனாட்டு இலக்கியக் கதை 1960 69. இரு கடற்கால்கள் 1960 70 வாடாமல்லி 1960 71. இருதுளிக் கண்ணீர் 1960 72. காரல் மார்க்ஸ் 1960 73. மலைநாட்டு மங்கை 1961-62 74. புதியதோர் உலகம் செய்வோம் 1962 75. யாழ் நங்கை 1963 76 வளரும் தமிழ் 1964 77. கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 78. வெற்றித் திருநகர் 1964 79. மொழிவளம் 1965 80 குழந்தை உலகம் 1967 81. செந்தமிழ்ச் செல்வம் 1968 82. கொங்குத் தமிழக வரலாறு 1983 83. இந்துலேகா 1988 முதற் பதிப்பிற்கான ஆண்டு இல்லாத நூல்கள் மறுப்பதிப்பு செய்த ஆண்டு விவரம்: 1. தமிழ் முழக்கம் 2001 2. இன்பத்துள் இன்பம் 2001 3. இந்திய மக்கள் விடுதலை வரலாறு 2002 4. வாழும் வகை 2002 5. உலக இலக்கியங்கள் 2002 6. ஈலியாவின் கட்டுரைகள் 2002 7. பிறமொழி இலக்கிய விருந்து -1 2003 8. பிறமொழி இலக்கிய விருந்து 2 2006 9. சிறுவர் கதைக் களஞ்சியம் 1 2002 10. சிறுவர் கதைக் களஞ்சியம் 2 2002 11. சிறுவர் கதைக் களஞ்சியம் 3 2002 12. சிறுவர் கதைக் களஞ்சியம் 4 2002 13. சிறுவர் கதைக் களஞ்சியம் 5 2002 * தென்னாட்டுப் போர்க்களங்கள் எனும் நூல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட அப்பாத்துரையம் தமிழ் - தமிழர் -- தமிழ்நாடு முதல் பதிப்பு மறுபதிப்பு 1. வருங்காலத் தமிழகம் 1946 2002 வளரும் தமிழ் 1964 2006 தமிழ் முழக்கம் --- 2001 2 தென்மொழி 1955 2001 தமிழன் உரிமை 1960 2001 3. சரித்திரம் பேசுகிறது 1959 2002 மொழிவளம் 1965 2001 4. புதியதோர் உலகம் செய்வோம் 1962 2001 (அறப்போர் பொங்கல் மலர்) வரலாறு 5. சங்க காலப் புலவர்கள் 1945 2003 தளவாய் அரியநாத முதலியார் 1944 2003 கிருட்டிண தேவராயர் 1946 2003 இரவிவர்மா 1949 2003 6. சுபாசு சந்திரபோசு 1949 2003 கன்னடநாட்டின் போர்வாள் ஐதரலி 1964 2003 7. டேவிட் லிவிங்ஸ்டன் 1946 2003 ஐன்ஸ்டீன் 1953 2003 ஜேன் அயர் 1954 2003 8. பெர்னாட்சா 1950 2003 டாம் ப்ரெணின் பள்ளி வாழ்க்கை 1955 2002 9. பெஞ்சமின் பிராங்ளின் 1957 2008 10. குடியாட்சி 1947 2006 ஐக்கிய நாடுகளின் அமைப்பு 1952 --- இரு கடற்கால்கள் 1960 2002 11. தென்னாடு 1954 2006 இதுதான் திராவிட நாடு 1956 --- 12. இந்திய மக்கள் விடுதலை வரலாறு --- 2002 13. வெற்றித் திருநகர் 1964 2003 14. கொங்குத் தமிழக வரலாறு 1983 2002 ஆய்வுகள் 15. சங்க இலக்கிய மாண்பு 1949 2002 சிலம்பு வழங்கும் செல்வம் 1958 2001 இன்பத்துள் இன்பம் --- 2001 16. தென்னாட்டுப் போர்க்களங்கள் -1 1954 2003 17. தென்னாட்டுப் போர்க்களங்கள் -2 1954 2003 18. வாழ்க 1957 2001 உலகம் சுற்றுகிறது 1957 2007 19. மணிமேகலை 1958 2002 செந்தமிழ்ச் செல்வம் 1968 2001 வள்ளுவர் நிழல் 1959 2001 மொழி பெயர்ப்பு 20. குமரிக் கண்டம் 1940-43 2002 21. கால்டுவெல் ஒப்பிலக்கணம் 1944 --- திராவிடப் பண்பு 1955 2014 22. கெஞ்சி 1944 -- 23. பிறமொழி இலக்கிய விருந்து -1 --- 2006 எண்ணிய வண்ணமே 1953 --- 24. பிறமொழி இலக்கிய விருந்து 2 --- 2003 25. தாயகத்தின் அழைப்பு 1952 --- காதல் மயக்கம் 1949 --- 26 . 1800ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் 1956 2001 27. ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1956 2002 செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 2002 ஈலியாவின் கட்டுரைகள் --- 2002 28. நீலகேசி 1955 2003 வாழ்வாங்கு வாழ்தல் 1956 கன்னியின் சோதனை 1957 2002 யாழ் நங்கை 1963 --- 29. பேரின்பச் சோலை 1957 2003 30. வாடாமல்லி 1960 2004 31. மலைநாட்டு மங்கை 1961-62 2007 இந்துலேகா 1988 2003 இளையோர் வரிசை 32. சிறுவர் கதைக் களஞ்சியம் -1 --- 2002 குழந்தை உலகம் 1967 1982 33. சிறுவர் கதைக் களஞ்சியம் - 2 --- 2002 34. சிறுவர் கதைக் களஞ்சியம் - 3 --- 2002 35. சிறுவர் கதைக் களஞ்சியம் - 4, --- 2002 கதை இன்பம் 1956 --- 36. சிறுவர் கதைக் களஞ்சியம் -5 --- 2002 37. சேக்சுபியர் கதைகள் - 1 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 2 --- 2002 38. சேக்சுபியர் கதைகள் - 3 --- 2002 சேக்சுபியர் கதைகள் - 4 --- 2002 39. பொன்னின் தேட்டம், 1957 2002 மன்பதைக் கதைகள், 1957 2002 மருதூர் மாணிக்கம் 1958 2004 40. மேனாட்டு இலக்கியக் கதைகள் 1960 2002 மேனாட்டுக் கதைக் கொத்து, 1945 2002 சிறுகதை விருந்து, 1945 --- வியப்பூட்டும் சிறுகதைகள் 1965 --- பொது 41. அறிவுச் சுடர் 1951 2004 மக்களும் அமைப்புகளும் 1957-58 --- நிழலும் ஒளியும் 1949 --- நாத்திகர் யார்? 1943 --- இராவணன் வித்தியாதரனா? 1943 --- 42. கட்டுரை முத்தாரம் 1956 வாழும் வகை --- 2002 43. நல்வாழ்வுக் கட்டுரைகள் 1957 2002 திருநிறை ஆற்றல் 1957 2004 44. போதும் முதலாளித்துவம் 1946-47 இருதுளிக் கண்ணீர், 1960 உலக இலக்கியங்கள் --- 2002 45. காரல் மார்க்சு 1960 சமூக ஒப்பந்தம் 1952 பொது உடைமை 1952 ஆங்கிலப் புலவர் வரலாறு 1947 46. சமதரும விளக்கம் 1947 2002 வருங்காலத் தலைவர்கட்கு 1952 2002 47. ஆங்கிலம் தமிழ் அகராதி 1952 --- 48. ஐனேயை’ள டுயபேரயபந யீசடிடெநஅ 1954 --- அப்பாத்துரையம் - 14 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  கொங்குத் தமிழக வரலாறு ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 14 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+268 = 288 விலை : 360/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 288  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. கொங்கு நாடும் தமிழகமும் ... 3 1) கொங்குத் தமிழகத்தின் தனித்தன்மைகள், தனிவளங்கள், தனிச்சிறப்புகள் ... 3 2) கொங்குத் தமிழக எல்லைகள்: அன்றைய பெருக்கமும் இன்றையச் செறிவும் ... 13 3) தமிழ்மொழியின் கன்னித்தாய்மைப் பண்பும் கொங்குத் தமிழ் வாழ்க்கைப் பண்பும் ... 35 2.வரலாற்று வானவிளிம்பின் வண்ணங்கள் ... 59 1) விடியல் வானொளி காட்டும் குடியரசு மரபுப் பண்பு ... 59 2) பண்டைக் குடியரசு மரபின் ஒளி நிழற் படிவங்கள்: கொங்கு நாட்டுச் சமுதாயத் தன்னாட்சி மரபு ... 99 3) கொங்கு நாகரிக வளர்ச்சி: வேளாளர்-வேட்டுவர் மரபு மலர்ச்சி ... 139 3. சங்கம் கண்ட கொங்கு வாழ்வு ... 167 1) வேள் புலக் குடியரசுக் கோட்டங்கள் ... 167 2) சேரரும் கொங்குச் சேரரும்: வீட்டரசர் கட்டி யெழுப்பிய நாட்டரசுக் கோட்டை ... 197 3) கொங்கு வாழ்வும் சங்கம் கண்ட தேசிய வாழ்வும் தேசங் கடந்த பெருந் தேசிய அமைப்பும் ... 224