டேவிட் லிவிங்ஸ்டன் முதற் பதிப்பு - 1946 இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை - 43, வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகவுரை ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்பது அப்பர் சுவாமிகள் அருள் வாக்கு. அதன்படி பொதுமக்கள் நலத்தையே நாடி உழைத்து தம் நலத்தை இழந்த பெருமக்கள் பலராவர். அவர்களைத் ‘தியாக புருஷர்’ என்று சொல்லலாம். தம் நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதைவிட வேற்று நாடு சென்று, அநாகரிக மக்களுடன் வாழ்ந்து அவர்களை நல்வழிப்படுத்தலில் தம் வாழ்நாளைக் கழித்தல் அருமை யினும் அருமை! பெருமையினும் பெருமை!! தமக்கு நன்மை செய்ய வந்தவர் என்பதை அறியாது அப்பாமர மக்கள் அப்பெருமக்களைக் கொல்லவும் துணிவர். பெருமக்கள் அவர்களை மன்னித்து அவர்களோடு எளிய வாழ்க்கை வாழ்ந்து அவர்களை நல்வழிப்படுத்துவதிலேயே நாட்டங் கொண்டனர் எனின், அப் பெருமக்கள் பூஜிக்கத்தக்கவரே ஆவர். அத்தகைய பெருமக்களில் டேவிட் லிவிங்ஸ்டன் ஒருவர். இவரது தியாக வாழ்வு நம் மாணவர்க்கு ஓர் முன் மாதிரியாகும். ‘இந்தியாவுக்கு இத்தகைய தியாக புருஷர் பலர் தேவைப்படுகின்றனர்’, என்ற விவேகானந்தர் திருவாக்கு சிந்திக்கத்தக்கது. பொருளடக்கம் முகவுரை 3 1. முன்னுரை 5 2. குடும்பமும் பிறப்பும் 8 3. இளமை : கல்வியில் ஆர்வம் 12 4. உயர் தரக் கல்வியும் பணியேற்பும் 16 5. தென் ஆஃப்ரிகா செல்லல் 18 6. குருமான் பணிநிலையம் 22 7. அரிமா வேட்டை 27 8. மண வாழ்க்கை 33 9. ஸெச்சீ° மனமாற்றம் 35 10. கலஹாரிப் பாலைவனம் 39 11. இரண்டாம் பிரயாணம் 45 12. கிழக்கு ஆஃப்ரிகா 54 13. மூன்றாம் பிரயாணம் 60 14. லிவிங்°டனின் மறைவு 67 15. லிவிங்°டனின் அருங்குணங்கள் 72 1. முன்னுரை இன்பநிலை மக்களாகப் பிறந்தவர் எல்லோரும் இன்பத்தையும் வெற்றியையுமே நாடுகின்றனர். ஆனால், இன்பத்தின் உயிர் நிலை துன்பத்திற்குள் மறைந்து கிடக்கிறது என்பதையும், வெற்றியின் திறவுகோல் தோல்விகள் என்ற பெட்டகங் களிலேயே புதையுண்டிருக்கிறது என்பதையும் அறிந்தவர் மிகச் சிலரேயாவர். இதனாலேயே திருவள்ளுவர் பெருமான், “இன்பத்தை விரும்பாமல் துன்பத்தையே இயல்பென்று மேற்கொள்பவன் உண்மையில் துன்பத்தை அடைவ தில்லை” என்ற பொருளுடன், “இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்” என்று கூறியிருக்கிறார். பெரியவர் - சிறியர் துன்பங்களை வரவேற்று அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டும் உடல்வலியும் மனவலியும் இளமையிலேயே பெரிதும் காணப்படும். இளமையில் துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு அஞ்சுபவரும், அந்த அச்சத்தினால் ஊக்கம் இழப்பவரும் வாழ்க்கையில் அருஞ் செயல்களைச் சாதியார். அவர் நாளடைவில் சிறுமைப்பட்டுத் தம் வாழ்வில் வெறுப்பு அடைவர். மேலும் அவர் தம் வாழ்க்கையின் போக்கு முழுவதும் தம் கையில் இல்லை என்றும், வினைப்பயன் அல்லது தலைவிதியின் படியே எல்லாம் நடக்கும் என்றும் எண்ணுவர். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற்றோர் அனை வரும் தம்விதி என்பது, தம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும் தம் பழைய முயற்சியின்மையின் பயனுமே அன்றி வேறன்று என்ற அறிவர். அவர் அவ்விரண்டையும் முயற்சியால் வெல்லலாம் என்ற உணர்ந்து மேன்மேலும் முயல்வர். இங்ஙனம் பெரிய காரியங்களில் ஈடுபட்டுப் பெரு முயற்சியால் வெற்றி பெற்றவர்களைக் குறித்தே திருவள்ளுவர், “செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலாதார்” என்று பகர்ந்தார். பெரியோர் தாம் செய்யும் பெரு முயற்சிகள் சிலவற்றில் இறுதி வெற்றி காணாது போதலும் உண்டு. எனினும் உலகத்தார், பெருந்தன்மை மிக்க அத்தகையவர் தோல்வி களைச் சிறியோர்களின் சிறு வெற்றிகளைவிடப் பன்மடங்கு உயர்வு உடையதாகப் போற்றுவர். டேவிட் லிவிங்°டன் இங்ஙனம் செயற்கரிய செயல்களில் ஈடுபட்டுப் புகழ் எய்திய உலகப் பெரியார் பலர். அவருள் டேவிட் லிவிங்°டன்1 என்ற ஆங்கிலப் பெரியார் ஒருவர். இவர் இளமை யிலேயே செயற்கரிய பெருங்காரியங்களைச் செய்யவேண்டும் என்று மனத்தில் உறுதி கொண்டவர், தம் ஆற்றலையும் அறிவையும் பிறர் நம்மைக்காகவும் பிறர் இன்பத்துக்காகவும் ஈடுபடுத்தி உழைத்தவர். அதுமட்டுமன்று. இவர் நாடிய நன்மை தம் நாட்டையோ, தம் இனத்தையோ தம் போன்ற உயர்நிலையினரையோ பற்றியதன்று. நாடுகளில் தாழ்த்தப்பட்ட நாடாய், இனங்களில் சீரழிவுற்ற இனமாய், நாகரிக உலகில் மற்றவர்களுடன் ஒத்து முன்னேற முடியாமல் நின்றிருந்த ஆஃப்ரிக்க நாட்டு மக்கள் நலனுக்கே இவர் பாடுபட்டார். அதற்காகத் தம் வாழ்க்கை நலன் முழுமையையும் துறந்து உழைத்தார். அருஞ்செயல் ஒருவர் தம் நலம் துறந்து தம் வகுப்பு நலன், தம் நாட்டு நலன் ஆகியவற்றிற்காக உழைப்பதே உலகில் பெருமை யுடைய செயலாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தம் நாடு, தம் இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து நாகரிக மக்கள் செல்லாத அடர்ந்த காடுகளிலும் பாலைவனங் களிலும் திரிந்து, அவர்கள் நெருங்கவும் அஞ்சும் முரட்டு மக்களிடையே லிவிங்°கின் தொண்டாற்ற முன்வந்தது எவ்வளவு உயர்வுடைய செயல் என்று கூறாமலே விளங்கும் அன்றோ? அடிக்குறிப்பு 1. னுயஎனை டுiஎiபேளவடிநே 2. குடும்பமும் பிறப்பும் °காட்லாந்து டேவிட் லிவிங்°டன் °காட்லாந்து1 நாட்டினர். அந் நாடு கல்லும் மலையும் காட்டாறும் நிறைந்தது. இடையிடையே ஆங்காங்கு ஏரிகள் கண்கவர் வனப்புடன் இலங்கும். அந் நாட்டின் கடற்கரை அமைப்பு பிற நாடுகளைப் போலன்றிக் குறுக்கும் நெடுக்குமாகக் துண்டுபட்டுக் கிடப்பது; கடலின் உள்வளைவுகள் நெடுந்தூரம் உள்நாட்டிலும் சென்றிருப்ப தனால், அந்நாட்டில் எப்பக்கமாகச் சென்றாலும் அவ்வவளைவு களைச் சந்திக்கவே நேரும். அல்வாத்தீவு இந்நாட்டின் மேற்குக் கடற்கரையை அடுத்து ஒரு தீவுக் கூட்டம் உண்டு. அத்தீவுகளில் உலகின் மிகப் பழம் பாறைகளும், கடலிலிருந்து தொடங்கி மலைகளின் கீழாக நிலத்தின் அடிவயிற்றைக் குடைந்த செல்வது போன்று நீண்டு அகன்ற கடற் குகைகளும் மிகப்பல. அந்நாட்டு மக்கள் இந்தீவுக் கூட்டத்தை ஹெப்ரிடீ°2 தீவுகள் என்பர். இத்தீவுகளில் ஒன்றாகிய அல்வா3 என்பதில்தான் டேவிட் லிவிங்°டன் பிறந்தார். மலை நிலமக்கள் பண்பு °காட்லாந்து மலைகளிடையே வாழ்ந்த மக்கள், அம்மலையைப் போலவே திண்ணிய உடலும் கரடு, முரடான வாழ்க்கையும் உடையவர். அவர்கள் ஒப்பற்ற வீரர்கள்; சாவிற்கு அஞ்சாமல் தம் நாட்டிற்காகப் போராடும் பெருந்தகை மறவர்கள். ஆனால், அமைதிக் காலத்தில் அவர்கள் கள்ளம், கபடு அற்ற உழைப்பாளிகள்; மான உணர்ச்சியுடன் உடல் வருந்த உழைத்து எளிய வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்கள் விடுதலை ஆர்வமுடையவர்கள், தம்மை அண்டினவரை உயிர்தந்தும் ஆதரிக்கும் இயல்பு உடையவர்கள். அவர்கள் மிக உயர் வாகப் பேணிய அறம் வாய்மை அல்லது உண்மை தவறாமையேயாகும். முன்னோர் வீரம் ஏறக்குறையஇருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தை யும் °காட்லாந்தையும் ஓர் அரசன் ஆட்சி செய்தான். ஆங்கில நாட்டு மக்கள் அவனை வெறுத்து நாட்டிலிருந்து துரத்தி விட்டனர். வேறு ஓர் அரச பரம்பரையையும் நிறுவினர். °காட்லாந்து மக்கள், சிறப்பாக அங்குள்ள மலைநாட்டு மக்கள், இப்புதிய பரம்பரையை ஏற்காது பழைய மரபில் வந்தவர்களையே ஆதரித்தனர்; அவர்களையே அரசராக்கக் கிளர்ச்சி செய்து போராடினர். இத்தகைய பெரும்போர்களில் ‘கல்லோடன்’ என்ற இடத்தில் நடைபெற்ற போரும் ஒன்றாகும். °காட்லாந்திலுள்ள மலைநாட்டு மொழியாகிய ‘கெய்லிக்’ மொழியில் நாட்டுப் பாணர் பலர் இப்போரைப் பற்றிப் பாடியுள்ளனர். டேவிட் லிவிங்°டனின் முப்பாட்டனார் ஒருவர் இப்போரில் ஈடுபட்டு உயிர் நீத்து ‘நாட்டு வீரர்’எனப் புகழ் பெற்றார். உயரிய பண்பு டேவிட் லிவிங்°டன் சிறுவராக இருந்த போது, தம் பாட்டனார் மூலமாகத் தம் முன்னோர்களைப் பற்றிய வீரக் கதைகள் பல கேட்டறிந்தார். அதனால் அப்பாட்டனாருக்கு முந்திய ஆறு தலைமுறைகள் வரையுள்ள முன்னோர் வரலாறு முழுவதும் லிவிங்°டனுக்குத் தெரியவந்தது. குடும்பத்தின் பரம்பரைப் பண்புகளுள், பாட்டனார் மிக பெருமையுடன் அடிக்கடி எடுத்துக்கூறிய செய்தி, ‘அக்குடும்பத்தில் எவரும் வாய்மை தவறியது கிடையாது’ என்பதேயாகும். டேவிட் லிவிங்°டனும் தம் வாழ்நாள் முழுவதும் இப்பண்பில் எத்தகைய குறையும் வராமல் காத்துவந்தார். பாட்டனார் லிவிங்°டன் குடும்பத்தார் 1792 ஆம் ஆண்டிலிருந்தே கிளா°கோ4, நகரத்தில் வந்த குடியேறி இருந்தனர். அங்கு லிவிங்°டனுடைய பாட்டனார் ஒரு பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய வாய்மையைக் கண்ட ஆலை முதலாளிகளுக்கு அவர் மீது பற்றுதலும் நம்பிக்கையும் மிகுந்தன. ஆயிரக்கணக்கான பெருந்தொகைகளை நிதிலையங்களிலிருந்து எடுக்கவோ, அங்கே கொண்டுபோய்க் கொடுக்கவோ நேர்ந்தபோதெல்லாம் அவர்கள் அவர் மூலமாகவே அத்தொகை களை நம்பிக்கையாகக் கொடுத்தனுப்பினார்கள். பெற்றோர் பாட்டனாருக்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர். டேவிடின் தந்தையாகிய நீல் லிவிங்°டனைத் 5 தவிர மற்றவர் எல்லோரும் அரசாங்க அலுவல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர் ஒருவர் மட்டும் தேயிலை வாணிகம் செய்து வந்தனர். அவர் மிகுந்த சமயப் பற்று உடையவர்; ஞாயிற்றக் கிழமைகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவதுடன் அவ்வப்போது கோவில் மேடையேறிச் சிறு சொற்பொழிவுகளும் செய்துவந்தனர். டேவிட் லிவிங்°டனின் தாயார் ஆக்னி° 6 என்பவர். அவர் ‘ஹன்டர்’7 என்று குடிப்பெயருடைய குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் தந்தையர் இருவரும் கிளா°கோ நகரிலேயே வீடு அமர்த்திக் கொண்டு வாழ்ந்திருந்தனர். அங்கே 1813ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் நாளில் டேவிட் லிவிங்°டன் பிறந்தார். ஆக்னி° லிவிங்°டன் வீட்டைச் சுத்தமாகவும் வெளிச்சம் உடையதாகவும் வைத்துக்கொள்வதில் திறமை உடையவர். அங்கங்கே அடுக்குப் பலகைகளிலும் மேடைப் பலகைகளிலும் சட்டங்களிலும் நல்லறிவு தரக்கூடிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய சுற்றுச் சார்புகளிடையே பிறந்து வளர்ந்த டேவிட், கல்வியறிவில் இளமைமுதலே நாட்டங் கொண்டிருந்தமை இயற்கையே அன்றோ? அடிக்குறிப்புகள் 1. ளுஉடிவடயனே 2. கூhந ழநசெனைநள, 3. கூhந ஐளடந டிக ஏiஎய 4. ழுடயளபடிற, 5. சூநடi டுiஎiபேளவடிநே, 6. யபநேள, 7. ழரவேநச 3. இளமை : கல்வியில் ஆர்வம் இளமைச் செயல்கள் நீல் லிவிங்°டனுக்கு ஐந்து ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். டேவிட் லிவிங்°டன் அவர்களில் இரண்டாம் பிள்ளையாவர். இவர் இளமையிலேயே தம் தமையனுடன் சேர்ந்து வீட்டுக் காரியங்களைக் கவனித்துத் தாய் தந்தையருக்கு உதவி செய்வார்; வேலையில்லாமல் ஓய்ந்த நேரங்களில் ஊர்ப்புறங்களிலும் கடற்கரையிலும் சென்று உலாவுவார். அப்போது ஆங்குக் காணும் பற்பல வண்ணப் பூக்களையும், பலவகைச் சிப்பிகளையும், கூழாங்கற்களையும் திரட்டிக் கொண்டு வருவார், ஆறுகளில் தூண்டிலிட்டு மீன் பிடித்தும், ஓடியாடி நீந்தியும் பொழுது போக்குவார். உயரிய எண்ணம் டேவிட் லிவிங்°டனின் குடும்பம் மிக்க செல்வம் உடையதன்று. ஆதலால் இவர், தம் பத்தாம் வயதிலேயே பாட்டனார் தொழிலில் ஈடுபட்டுப் பஞ்சு ஆலையில் வேலை பார்க்கத் தொடங்கினார். ஆனால் இளமையிலேயே இவ ருடைய அன்னையார் இவருக்குப் புத்தகங்கள் மீது பற்றுதலையும், சமூக சேவை செய்யும் எண்ணத்தையும் ஊட்டியிருந்தார். ஆகவே, டேவிட் கூலிவேலை செய்யும் போதும் தம்மால் முடிந்த அளவு அரிய நூல்களைக் கற்பதில் தம் ஓய்வு நேரத்தைக் கழித்தார். இவர், ஆலையில் இயந்திரங் களுக்கிடையே, ஏதேனும் ஒரு புத்தகத்தை விரித்து மாட்டி வைத்திருப்பார்; வேலைக்கிடையில் கிடைக்கும் சிறிது ஓய்வு நேரங்களிலும் அவற்றை ஆவலுடன் படித்துகொண்டு இருப்பார். இவர், அவ்வப்போது தம்மைவிடத் துன்பப்படும் ஏழைகளுக்கு உதவி செய்வார்; உலகின் துன்பப்படுபவர்க்கெனத் தம்மால் எதிர்காலத்தில் சிறிதளவாயினும் உதவி செய்யக் கூடமா என்று ஆராய்வார். அவ்வெண்ணம் நிறைவேறுதற்காக இவர் எப்போதும் திட்டமிட்டுக்கொண்டே இருப்பார். கல்வியில் ஆர்வம் லிவிங்°டன், தாம் பெறும் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தம் மனத்துக்குப் பொருத்தமான புத்தகங்களை வாங்குவதிலேயே செலவு செய்தார். திறம்பட்ட ஆசிரியர் கற்பித்தாலும் மாணவர்க்கு எளிதில் விளங்காத் தன்மையது இலத்தீன்1 இலக்கணம் லிவிங்°டன் அத்தகைய இலக்கணத்தைப் பிறர் உதவியின்றித் தாமாகக் கற்றறிந்தார். இச் செயல் ஒன்றே, இவரது புத்தக ஆர்வம் எவ்வளவு என்பதை அளவிட்டு உரைக்குமன்றோ! இவர் ஆலையில் வேலை செய்து கழித்த ஆறு ஆண்டிற்குள் இலத்தீன் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியின் உதவியால் விர்ஜில் 2, ஹொரெ° 3 முதலியோர் எழுதிய சிறப்புவாய்ந்த இலக்கிய நூல்களைக் கற்று, அவற்றின் பொருளை அறிந்த கொள்ளத்தக்க அறிவுடையவரானார். லிவிங்°டன், காலை ஆறுமணி முதல் இரவு எட்டு மணிவரை ஆலையில் வேலை செய்வது வழக்கம். ஆனால் இவர், மேலும் தம் அறிவை வளர்க்க விரும்பினார். எனவே இவர், ஆலையிலிருந்து வந்த பின்னும், ஆலை முதலாளிகள் பண உதவி செய்து நடத்திவந்த ஏழைப் பிள்ளைகளுக்குரிய பள்ளிக் கூடம் சென்று ஒரு மணி நேரம் படித்தார். அதன் பின்னும் உறங்க மனமின்றிப் பன்னிரண்டு அல்லது ஒரு மணி வரை தம் வீட்டில் படித்து வந்தார். இங்ஙனம் இவர் ஓய்வின்றிப் படித்து வருவதைத் தாயார் கண்டனர்; இங்ஙனம் படிப்பதால் தன் மகனின் உடல்நிலை கெடும் என அவர் அஞ்சினார். ஆதலால் சில வேளைகளில் அவர், லிவிங்°டன் கையிலுள்ள புத்தகத்தை வாங்கிப் பூட்டிய இடத்தில் வைத்து விட்டு, இவரை உறங்கச் செய்வதும் உண்டு. அறிவியல் நூல்கள் டேவிட் லிவிங்°டன் இக்காலங்களில் தமக்குக் கிடைத்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாசித்தார். ஆனால், புனைகதைகள் (நாவல்கள்) கிடைத்தால் அவற்றைக் கண் ணெடுத்தும் பாரார். இதற்குக் காரணம் இல்லாமலில்லை. ‘புனைக்கதைகள், இன்பம் மட்டும் தருமே அன்றி வாழ்க் கையைச் செம்மை செய்வதற்கான படிப்பினைகள் தர மாட்டா’ என லிவிங்°டன் நினைத்தார். அதனால் இவர், புனை கதைகளைவிடப் பல நாடுகளிலும் சுற்றித் திரிந்தவரின் விரிவுரைகளை மிக்க ஆவலுடன் படித்தார். அறிவியல் நூல்களைப் படிப்பதிலும் இவருக்கு விருப்பம் மிக உண்டு. அந்நாளில் சமயத்தலைவர் பலர், ‘அறிவியல், சமயத்தக்கு எதிரானது’ எனக் கருதியிருந்தனர். இக்காரணத்தால் சமயப்பற்று மிக்க நீல் லிவிங்°டன், தன் மகன் அறிவியல் நூல்களைப் படிப்பதைக் கண்டித்து வந்தார். அதனால் தம் சமயப்பற்றுக்கு உறுதி ஏற்றப்பட்டதேயன்றிக் குறைவு ஏற்பட்டதில்லை என லிவிங்°டன் பிற்காலங்களில் கூறியது உண்டு. ஆராய்ச்சி பொருள்கள் டேவிட் லிவிங்°டனின் பிற்கால வாழ்க்கையில் தோன்ற இருந்த பெருமைக்கு உரிய அறிகுறிகள், இவருடைய இளமைப் பருவத்திலேயே ஓரளவு காணப்பட்டன. இவர், புத்தகங்கள் பலவற்றைத் தொகுக்கத் தொடங்கினார்; தமக்கு அருமை என்று தோன்றிய பொருள்களைச் சேர்க்கத்தொடங்கினார். அவற்றைப் பற்றிக் குறிப்புக்குளும் எழுதி வந்தார். இவ்வேலைகள், ஆராய்ச்சியாளர்க்கு மிகப் பயன்படத்தக்கன. இவரது இத்தகைய முயற்சி, சமயப் பணியையும், மருத்துவப் பணியையும் ஒருங்கே ஆற்றப் பேருதவியாக இருந்தது. இவரது இளமைக் காலத்து மக்கட்பணி ஆர்வமே, பிற்காலத்தில் தன்நலமற்ற உண்மைச் சமயப் பணியாக மாறிற்று. ‘சமயப் பணி என்பது மக்கட் பணியே’ என்பதை இவர் வாழ்வு நன்றாக எடுத்துக் காட்டும். பெயர் பொறித்தல் லிவிங்°டன் இளமைப் பருவத்தில் காணப்படும் குறை பாடுகளை உற்று நோக்கினால், அவையும் இவர் உயர்வுக்கு உதவியனவே என்பது தோன்றும் சிறுபிள்ளைகள் ஊருக்கு அருகில் உள்ள ‘பாத்வெல்’3 கோட்டையில் ஏறுவதில் ஒருவருடன் ஒருவர் போட்டியிடுவதுண்டு. லிவிங்°டன், மற்றப் பிள்ளைகளைவிட மிக உயரமான இடத்திற்குத் தாவி ஏறுவார். அங்கே தம் பெயரைப் பொறித்து மீள்வார். வாழ்வில் மற்ற எல்லோரினும் உயர்ந்த குறிக்கோள் உடையவராய் உயர்ந்து, அதனில் தம் புகழ் எழப்பொறித்த பிற்கால வாழ்க்கைக்கு, இஃது ஒரு நல்ல அறிகுறி ஆகும். வீட்டுவேலை லிவிங்°டன், தன் தாயாருக்கு உதவியாக வீட்டு வேலை களைச் செய்வது வழக்கம். இவர் வீட்டைப் பெருக்குவதும் உண்டு. இவர் அத்தொழிலைச் செய்யப் பின்வாங்குவதில்லை. எனினும், வெளியார் காணாதவாறு வாயிற் கதவை அடைத்த பின்தான் அதனைச் செய்ய இவர் ஒருப்படவாராம். பிறர் அவமதிப்பைப் பொருட்படுத்தும் இப்பண்பு, இவரிடம் பின் நாளில் தலைகாட்டவில்லை. அறிவுக்கும் மனச்சான்றுக்கும் ஒத்த காரியங்களைச் செய்வதில் பிறர் அவமதிப்பை இவர் தம் பிற்காலங்களில் பொருட்படுத்தியதில்லை. மக்கள் அவ மதிப்பையோ பகைமையையோ பொருட்படுத்தி யிருந்தால் இயேசு, முகமது, புத்தர், இராஜாராம் மோகன் ராய் போன்றவர் உலகப் பெரியாராக இருக்க மாட்டார்களல்லவா? அடிக்குறிப்புகள் 1. டுயவin 2. ஏசைபடை 3. ழடிசயநள 4. க்ஷடிவாறநடட 4. உயர் தரக் கல்வியும் பணியேற்பும் மருத்துவக் கல்வி லிவிங்°டன், ஆலையில் தம் வேலைகளை ஒழுங்குறச் செய்ததன் பயனாக, இவருடைய 19 ஆம் ஆண்டில் நூல் நூற்போராக உயர்வு பெற்றார். இப்புதிய வேலை சற்றே கடுமையானதாக இருந்தாலும் நல்ல ஊதியம் தருவதாக இருந்தது. ஆகவே, இவர் தம் ஊதியத்தில் முன்னிலும் மிகுதியாக மிகுத்து வைத்துக் குளிர்கால விடுமுறையில் கிளா°கோப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மருத்துவப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். தாம் சறந்ததொரு மக்கட் பணி ஆற்ற அஃது உதவும் என்ற கருத்துடனேயே இவர், தம் இளமைக் காலப் பயிற்சியில் மருத்துவத் துறையையும் ஒரு கூறாகத் தேர்ந்தெடுத்தார். பெரியோர் கூட்டுறவு கிளா°கோ பல்கலைக் கழகம், இவர் வேலை செய்து வந்த இடத்திலிருந்து ஏழுகல் தொலைவில் இருந்தது. குளிர்காலத்தில் இவ்வளவு தூரம் பனிக்கட்டியில் நடப் பதைக் தவிர்க்கும் எண்ணத்துடன் லிவிங்°டன் தம் குடும்பத்தினரை அழைத்துச் சென்று, அந்நகரிலேயே ஒரு வீட்டில் குடியேறினர். இப்பல்கலைக் கழகத்தில லிவிங்°டன், பண்டை நாகரிக மொழியான கிரேக்க மொழிப்பயிற்சி பெற்றார். பேரறிஞர் வார்ட்லா1 வின் சமயச் சொற்பொழிவுகளைக் கேட்ட லிவிங்°டன், அத்துறையில் பேரார்வம் கொண்டார். பல்கலைக் கழகத்தில் அறிவியல் பேராசியராக இருந்தவர். கிரகாம் 2 என்பவர் அவருடன் துணைப் பேராசிரியராக இருந்த ஜேம்°யங்3 என்பருடன் லிவிங்°டன் நெருங்கிப் பழகி அவருக்கு உற்ற நண்பரானார். லண்டன் மருத்துவ மன்னரவைத் தலவ4 வரான ஜே. ரி°டன் பென்னெட்5 என்பவரும் டேவிட் லிவிங்°டனுக்கு அறிமுகமானார். மருத்துவத்தில் தேர்ச்சி லிவிங்°டன் கிளா°கோவில் இரண்டாம் ஆண்டுப் பயிற்சியை மேற்கொண்டபோது, லண்டன் சமயப் பணி யாளர் கழகத்தில் சேர எண்ணங் கொண்டார். இவரது விண்ணப்பம் அப்பொழுதைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே இவர், ஜோஸஃப் மூர் என்ற நண்பருடன் கழகத் தினரைக் காணச் சென்றார். கழகத்தினர் இவரை, திருத்தகை - ரிச்சர்டு ஸீஸில்6 என்பவரை அடுத்து உதவிப்பணி ஆற்றுமாறு ஏவினர். மூன்று மாதப் பணியின் பின் தேர்வில் இவர் ஏற்கப்படாது போகவே, மீண்டும் மூன்று மாதம் உதவிப் பணி செய்ய வேண்டுவதாயிற்று. கழகத்தார் இவரை மேற்கு இந்தி தீவுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர். லிவிங்°டனுடன் அவ்வாண்டு நடைபெற்ற மருத்துவத் தேர்வில் தேறினார். ஆஃப்ரிகா செல்ல ஆர்வம் லிவிங்°டன் மருத்துவத் தேர்வுக்காக லண்டனுக்கு படிக்கச் சென்றபோது சேவல்7 என்ற மாதின் வீட்டில் தங்கினார். அவ்விடத்தில் மோபட்8 என்ற சமயப் பனியாளரைக் கண்டார். அவர் நாற்பது ஆண்டுகட்கு மேல் ஆஃப்ரிக்காவில் பணியாற் றியவர். அவர், லிவிங்°டனுடன் நட்புப் பூண்டு, ஆஃப்ரிக்காவில் தாம் ஆற்றிய பணி பற்றிய வரலாற்றை எல்லாம் இவருக்கு விரித்துரைத்தார். இதன் பயனாக லிவிங்°டனுக்கும், ‘ஆஃரிகா சென்று பணியாற்றவேண்டும்’ என்ற அவா உண்டாயிற்று. அவ்விருப்பத்திற்குத் தக சமயக் கழகம் ஒன்று, இவரை 1840 ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவிற்கு அனுப்ப முன்வந்தது. அடிக்குறிப்புகள் 1. னுடிஉவடிச றுயசனடயற 2. ழுசயாயஅ 3. துயஅநள லுடிரபே 4. ஊhயசைஅயn டிக வாந சுடிலயட ஆநனiஉயட ளுடிஉநைவல டிக டுடினேடிn 5. து.சுளைவடிn க்ஷநnநேவவ 6. சுநஎ. சுiஉhயசன ஊநஉடை 7. ஆசள. ளுநறநடட 8. ஆடிறயெவவ 5. தென் ஆஃப்ரிகா செல்லல் சமயப் பணிக்கு அர்ப்பணம் நம் வாழ்க்கையை உருவாக்கும் செயல்கள் பல, நாம் எண்ணாமலேயே நம் முன் வருவதுண்டு. ஆயினும் நம் உள்ளத்தைச் சார்ந்த விருப்பு வெறுப்புகள் அவற்றிடையே தமக்கு உரிய திறத்தை நம்மையும் அறியாமலே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. லிவிங்°டன், தம் கிராமத்தில் உள்ள ஒரு சமயப்பணி நிலையத்தின் கிளை மூலம் சமயப் பணியாளர் பலருடைய வரலாறுகளைப் பற்றிக் கேள்வியுற்றார். அவர் களுக்காகத் தம்மால் இயன்ற அளவு பொருள் உதவி செய்யவும் உறுதி செய்திருந்தார். ஆனால் சார்° கட்°லாஃப்ட்1 என்ற சீனப் பணியாளர், ‘சமயத்துக்குப் பன்னூறு இளைஞர் வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதனை அறிந்த லிவிங்°டன், பொருள் உதவுவதுடன் அமையாமல் தம் வாழ்க்கை முழுவதையுமே அத்துறைக்கென ஒப்படைக்கத் துணிந்தார். லிவிங்°டன் சிறுவயதிலிருந்தே சிறுசமய உட்பிரிவு களைப் பாராட்டாதவர். ஆதலின் இவர், பரந்த அடிப் படையும் பொது நெறிப்போக்கும் உடைய லண்டன் சமயப் பணிக் கழகம் சார்ந்து தொண்டாற்ற முன் வந்தார். சீன நாட்டுக்குச் செல்ல எழுந்த இவர் எண்ணம், அப்போத அங்கு நடந்த அபினிப்போரால்2 சற்றே தடைப்பட்டது. அப்போது லிவிங்°டன் மோபாட்டின் ஆஃப்ரிகப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆகவே இவர் ஆர்வத்துடன் அதனை மேற்கொண்டார். ஏழைகளுக்கு உழைப்பதே உயர்வு எனக்கொண்ட இவர், நாகரிக உலகில் ஏழ்மைப் படியிலிருந்த ஆஃப்ரிகாவில் பணியாற்ற முனைந்தது பொருத்தமுடையதே ஆகும். வானநூல் கற்றல் லிவிங்°டன் 1840 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் நாளன்று இங்கிலாந்திலிருந்து ஆஃப்ரிகா செல்லப் புறப்பட்டார். இவர் பயணம் செய்த கப்பலின் பெயர் ‘ஜார்ஜ்3’ என்பது. இவர் பயணத்தின்போது அறிஞர் டோனால்டுஸன்4 என்பவரின் நட்பைப் பெற்றார். லிவிங்°டன், அவ்வறிஞரின் உதவியால் வானில் உள்ள கோள்களைக் காணவும் அவற்றின் நிலையை அளவிட்டறியும் கருவியை வழங்கவும் கற்றுக் கொண்டார். பிற்காலத்தில் பாலைவனங்களில் திசை தெரியாது செல்லவேண்டிவந்தபொழுது லிவிங்°டனுக்கு அவ்வறிவு மிகப் பயனுடையதாக இருந்தது. பொதுநலச் சொற்பொழிவு பயணத்தின் நடுவில் நன்னம்பிக்கை முனை5 யில் கப்பல் ஒரு திங்கள் தங்கிவிட்டது. லிவிங்°டன் அங்கே இறங்கிச் சிலகாலம் கரையோரத்திலுள்ள வெள்ளை மக்களுடனும் நாட்டு மக்களுடனும் பழக நேர்ந்தது. அங்குள்ள குடியேற்ற மக்களின் சமயத் தலைவர் அறிஞர் ஃபிலிப்6 என்பவர் ஆவர். லிவிங்°டன் அவருடன் கோவில் சென்று வழிபாடாற்றினார்; ‘கடவுளின் கருணை உள்ளம்’ என்பதைப் பற்றிப் பேசினார். மக்கள் அனைவரிடத்தும் “நன் மக்கள் ஒரே வகையான அன்பு காட்ட வேண்டும். நிறம், நாகரிகம், நாடு, கல்வி ஆகிய எவற்றாலும் மக்களிடையே வேறுபாடு காட்டக் கூடாது” நம் மக்கள் ஒரே வகையான அன்பு காட்ட வேண்டும். நிறம், நாகரிகம், நாடு, கல்வி ஆகிய எவற்றாலும் மக்களிடையே வேறுபாடு காட்டக் கூடாது” என்பதே லிவிங்°டன் பேசியதன் சுருக்கமாகும். ஒரு சிலர் அப்பேச்சை வானளாவப் புகழ்ந்தனர், வேறுசிலர் பழித்தனராம். லிவிங்°டன் வேறுபாடு அறியாமல் திகைத்தனர். சிலர் ஆஃப்ரிக் மக்களை வெள்ளையருடன் ஒப்பாகக் கருதாமல் வேறுபாடு காட்டி வந்தனர். லிவிங்°டன் ‘அனைவரையும் ஒன்றுபோல நடத்தவேண்டும்’ எனக் கூறிய பொது உண்மை அவர்களுடைய வாழ்க்கைப் போக்கைக் குத்திக்காட்டுவது போல் இருந்தது. இவர், அதனைப் பின்னரே அறிந்தார். குருமானில் லிவிங்°டன் ஒரு திங்களுக்குப்பின் கப்பல் நன்னம்பின்கை முனையி லிருந்து புறப்பட்டது, புறப்பட்ட சில நாட்களுக்குள் அல்கோ விரிகுடா7 வந்து சேர்ந்தது. லிவிங்°டன் கப்பலினின்று இறங்கி, மாட்டு வண்டியில் ஏறிச் சில நாட்களில் குருமான்8 என்ற இடம் வந்து சேர்ந்தார். இதுவே அறிஞர் மோபட், நெடுநாள் சமயப்பணி ஆற்றிய இடமாகும். அவர், லிவிங்°டனிடம் தம் வாழ்க்கையின் படிப்பினைகளை எடத்துரைக்கையில், ‘கடற்கரைப்பகுதிகளில் சமயப்பணியாளர் பலரிடையே இருந்து பணி ஆற்றுவதினும் உள் நாட்டில் பிறர் செல்லாத எல்லைவரை சென்று, புத்தம் புதிய மக்களிடையே பணி ஆற்றுவதே நல்லது’ எனக் கூறியிருந்தார். அந்த அறிவுரையின் உண்மையை லிவிங்°டன் விரைவில் கண்டு கொண்டார். பொதுநலத் தொண்டு லிவிங்°டனுக்கு முன் இவ்விடம் வந்து பணியாற்றி யவர் பலரும், சமய உட்பிரிவுகளை மேற்கொண்டவர். அவர் தமக்குள் மாறுபட்ட கருத்தினராய், ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தம் கொள்கைகளைப் பரப்பினர். மேலும் அவர்கள் சமயப் பணியுடனே வாணிக, அரசியல் நலங்களையும் கலந்து செயலாற்றினர். ஆதலால் அவர், கரையோரக் குடியேற்ற மக்களின் நன்மதிப்பைப் பெறாது, அன்னாரின் அவநம்பிக்கையையே பெற்றனர். இதனை லிவிங்°டன் நன்கு அறிந்தவர். ஆதலால் இவர், ‘நாகரிக வகையில் குழந்தைப் பருவத்தினரான அவர் களிடையே உயர்ந்த முறையில் உறவாடிப் புதிய இடத்தில் புதிய நிலையை உண்டு பண்ணவேண்டும்’ என்று எண்ணினார். லிவிங்°டன் ‘தூய அன்பை அன்பினாலும், தன்நல மற்ற உழைப்பினாலும் மட்டுமே பெறமுடியும்’ என்பதைத் தம் நீண்ட பணி வாழ்வில் காட்டலானார்’ லிவிங்°டன் இக்கருத்துடன், குருமானை விட்டு உள்நாடு செல்லும் வகையில் தம்மைப் பயிற்றுவித்துக் கொள்ளத் தொடங்கினார். அடிக்குறிப்புகள் 1. ஊhயசடநளள ழுரவணடயமவ 2. டீயீரைஅ றயசள in ஊhiயே 3. கூhந ழுநடிசபந, 4. னுச. னுடியேடன ளுடிn 5. ஊயயீந டிக ழுடிடின ழடியீந 6. னுச. ஞாடைகை 7. க்ஷ. ஹடபடிய க்ஷயல 8. முரசரஅயn ளுவயவiடிn 6. குருமான் பணிநிலையம் உள்நாட்டுப் பிரயாணம் குருமான் பணிநிலையம், அல்கோ கடற்கரையிலிருந்து 700 கல் தூரம் உள்நாட்டில் விலகி இருந்தது. அத்தூரம் முழுவதும் லிவிங்°டன் மாட்டு வண்டியிலேயே பயணம் செய்ததனால், அந்நாட்டையும், நாட்டு மக்களையும் கூர்ந்து கவனிக்க வாய்ப்புப் பெற்றார். நில இயல் வகையில் அந்நாடு, லிவிங்°டனின் தாய் நாடாகிய °காட்லாந்தைப் போலவே கல்லுங்கரடுமாக மலை அடர்ந்திருந்தது. நாட்டு மக்கள் மக்களும் ஒருவகையில் °காட்லாந்து மக்களையே ஒத்திருந்தனர். அவர், சூதும்வாதும் அற்றவர், அயலவரை அன்புடன் ஏற்றுத் தோழமை கொண்டாடுபவர். ஆனால், அவர்கள் மனத்தில் சிறதளவு ஐயம் ஏற்பட்டாலும்போதும், உடனே அவர்களின் உள்ளார்ந்த முரட்டுக் குணமும் கொடுமையும் கிளர்ந்து வெளிப்படும். சமய வகையில் அவர் பல மூட நம்பிக்கைகளை உடையவராக இருந்தனர். மந்திர வாதிகள், சூனியக்காரர்கள் ஆகியவர்களைப் பற்றிய அச்சம், அவர்களுக்கு மிக உண்டு. அவர்களிடையே மருத்துவரே மந்திரக்காரராகவும் இருந்தனர். அதனோடு அவர்களே மழையைச் சிலவகைச் சடங்குகளால் கொண்டு வரும் ஆற்றல் உடையவர்களாகவும் கருதப்பட்டனர். ஆகவே, லிவிங்°டன் மருத்துவப்பணி, அவர்களிடையே செல்வாக்கு அடைவதற்கு நெடுநாட்கள் ஆயின. நாட்டுமக்களும் உட்பிரிவுகளும் குருமான் வரையுள்ள பகுதியில் வாழ்ந்த மக்கள் பெக்குவானர்1 எனப்படுவர். அவ்விடம் பெக்கு வானாநாடு எனப்படும். அவர் எகிப்தியரைப் போலவே பலவகை விலங்குகளை வணங்குபவராக இருந்தனர். அவர்களிடையே பல உட்பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவின் பெயர், அப்பிரிவினர் வணங்கும் விலங்கின் பெயரை ஒட்டி அமைந்ததாகவே இருந்தத. பெகுவன் (முதலையினம்) பகட்லா (குரங்கினம்), பட்லாபி (மீன்இனம்) என்பன அத்தகைய பெயர்களுட் சிலவாகும். ஒவ்வொரு பிரிவினருக்கும் சிறப்பான ஒவ்வொரு கூத்து உண்டு. அதனாலும் அவர்களைப் பிரித்தறியக்கூடும். மேலும் ஒவ்வொரு பிரிவினரம் தாம் வணங்கும் தெய்வமாகிய விலங்கைமட்டும் கொன்று உண்பதில்லை. நாட்டு மொழிப்பயிற்சி லிவிங்°டன், இங்கிலாந்திலுள்ள தலைமை நிலையத்தி லிருந்து வரும் உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டு மூன்று மாதம் வரை குருமானில் தங்கியிருந்தார். உத்தரவு எதுவும் வரவில்லை. தாம் செல்லும் இடம் எதுவாயினும் அந்நாட்டு மக்களின் மொழி, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிவது இன்றியமை யாதது என்பதை லிவிங்°டன் அறிந்தவர். அதனால் அவர், ஐரோப்பியச் சூழ்நிலையிலிருந்து மற்றிலும் விலகி இருந்த லிட்டிபர்பா2 என்ற இடத்தில் சென்று அங்கே பயிற்சி பெறலானார். ஐரோப்பியத் தொடர்பு இல்லாமல் பயின்ற தன் பயனாக மிகவிரைவிலேயே அந்நாட்டு மொழியிலும், பழக்க வழக்கங்களிலும் தேர்ச்சி உடையவரானார். அதனால் நாட்டுமக்களுள் தாமும் ஒருவர், என்ற நிலைமை யடைந்தார். தொண்டிற்கு இடைஞ்சல் லிவிங்°டனுக்கு முன் ஆஃப்ரிகாவில் சென்று குடியேறின வெள்ளையர் பலர், அந்நாட்டு மக்களை மிக இழிவாக நடத்திவந்தனர். அதனால், இரு சாராரிடையும் தப்பெண்ணமும் பகைமையும் ஐயமனப்பான்மையும் மிகுந் திருந்தன. இவை, தொடக்கத்தில் லிவிங்°டனையும் தாக்கின. எனினும் லிவிங்°டனின் நேர்மை, பெருந்தன்மை முதலிய குணங்கள், பலரை இவருக்கு நண்பராக்கின. லிவிங்°டன் பணியைக் கண்டு பொறாமை உள்ளம் படைத்த வெள்ளையர் சிலுரும், நாட்டு மக்களிடையே மருத்துவராக இருந்த சிலரும் இவருக்கு எதிரிகளாயினர். அவர், லிவிங்°டன் செய்த பணியை வெறுத்தனர். லிவிங்°டனைப் பற்றியும் இவர் செய்யும் பணியைப் பற்றியும் உள்நாட்டில் தவறான கருத்துக் களைப் பரப்பினர். இக்கருத்துக்கள் வேரூன்றிப் பரவுவதன் முன்பே மக்களிடம் நேரடியான உறவு ஏற்படுத்திக் கொள்ள லிவிங்°டன் விரும்பினார். இவர் முதலில் லிட்டிபர்பாவில் குடியேற ஏற்பாடு செய்திருந்தார்; இக்கருத்துடனேயே குருமானுக்கும் வந்தார். ஆனால் அங்குள்ள பக்குவானர் களைப் ‘பாரலா°’ என்ற வகுப்பினர் எதிர்த்துத் துரத்தி விட்டனர். இச் செய்தி லிவிங்°டனுக்கு எட்டிற்று. அதனால், வேறு இடம் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அனாதைப் பெண் லிவிங்°டன், வண்டி ஒன்றின் துணைகொண்டு குருமானுக்குத் திரும்பினார். இவருடன் நாட்டுமக்கள் சிலரும் பயணம் செய்தனர். அவர் பயணம் செய்த வண்டி யின் பின், பதினொன்று, அல்லது பன்னிரண்டு வயதுடைய பெண் ஒருத்தி தொடர்ந்தாள். அவள் தன் தமக்கையின் அதரவில் வாழ்ந்தவள். தமக்கே இறக்கவே ‘அவள் துணையற்றவளானாள். வேறு குடும்பத்தார் அவளை அடிமையாக விற்கவும் முடிவு செய்தனர். இத் தீய எண்ணத்தை அறிந்த அந்நங்கை, அவர்கள் பிடியினின்றும் தப்ப முயன்றாள், வழியில் வண்டியைக் காணவே, வண்டியிலுள்ளோர் உதவியைப் பெறலாகும் என்ற நம்பிகையாலே பின் தொடரவாளாயினள். ஆனால், அவளுடைய ஆண்டான் (எஜமானன்) பின் தொடரவே, அவள் வெறிநாய் கைப்பட்ட பூனைக்குட்டி போலக் கதறினாள். லிவிங்°டனுடன் நாட்டுமக்கள் பலர் பயணம் செய்தனரன்றோ? லிவிங்°டன், அவருள் ஒருவன் உதவியால், அப்பெண் அணிந்திருந்த பாசி மணி முதலியவற்றை விற்றுக் கொடுத்து, அவளை மீட்டார். நீர் வசதி அமைத்த வகை லிவிங்°டன் புதிய குடியேற்றத்திற்கான இடம் பார்த்து, அங்கே பயிரிடுவதற்கு வேண்டும் நீர்வசதிகளை ஏற்படுத்த எண்ணினார். அங்குள்ள மக்கள், வானம் பார்த்து மழை வருவிப்பதொன்று தவிர நீர் வேட்கையைத் தீர்க்க வேறு வகை அறியாதவர். எனவே லிவிங்°டனுக்கு அத் தகைய நாட்டுமக்களிடமிருந்து உதவி பெறுவது அரிதாக இருந்தது. லிவிங்°டன் செய்த இனிய சூழ்ச்சி ஒன்று இவ்வகையில் பெரும்பலன் தந்தது. நாட்டு மருத்துவர், மருந்து தருவது மட்டும் அன்றி, மழையையும் அழைக்கும் தன்மையுடையவர் என்பதை முன்னே கண்டோம். அவர் களைப் போலவே லிவிங்°டன் “நானும் மழையை அழைக்கப் போகிறேன்” என்றார். உடனே யாவரும் அதற்கான செய்வினை (சடங்கு)களுக்கு உதவ முன் வந்தனர். லிவிங்°டன் நயமாக, “எங்கள் நாட்டில் நாங்கள் மழை வருவிக்கச் செய்யும் செய்வினை, கால்வாய் வெட்டுவதே” என்றார். மருத்துவர் இதுகேட்டுப் புன்னகை செய்த போதிலும் யாரும் மனம் நோக வில்லை. மக்களும் உடன் நின்று உழைத்தனர். “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” நாட்டு மக்களிடையே நன்மதிப்புப் பெறும் வகையில் லிவிங்°டன் அவர்கள் மொழியில் பெற்றிருந்த பயிற்சி, சிறந்த பயனுடையதாக இருந்தது. லிவிங்°டன் அந்நாட்டு மொழியை நன்கு அறிந்தவர். என்பது தெரியாத சிலர், இவருடைய வெளிறிய ஒடுங்கிய உடலைக்கண்டு, “இவர் வலுவற்றவர், சமயம் வாய்த்தபோது இவரை அடக்கி விடலாம்” எனப் பேசிக் கொண்டனர். லிவிங்°டன், அவர்கள், தன் தவறுதலைவத் தாமே அறியும் வண்ணம் நெடுந்தொலைவு தம் முழு ஆற்றலைக் காட்டி, விரைந்துநடந்தார். இவர் மீது வசைபேசிய மக்கள் இவரைப் பின்பற்றி நடக்க முடியாமல் நாய்போல் இளைத்தனராம்! இனத்தலைவரது நட்பைப் பெறுதல் பெக்குவானரின் தலைவர் செசில்3 என்பவர். அவர் முதலில் லிவிங்°டனின் சமயப் பணியை வன்மையாக எதிர்த்தார், ஆனால், பிறரால் குணம் அடையாத பலர் லிவிங்°டனின் மருத்துவப்பணி மூலம் குணம் அடைவதைக் கண்டு மனம் மாறி, இவர் வயப்பட்டார். ஒரு சமயம் செசிலின் குழந்தை நோய்வாய்ப் பட்டது. அதனால் அவர், பெருங்கவலை உற்றார். லிவிங்°டன் மிக எளிதாக அவனைக் குணப்படுத்தினார். பின்னரே அத்தலைவர், லிவிங்°டனுடன் நிலைத்த நட்புக்கொண்டார். நல்ல உபதேசம் பெக்குவானர் ‘கைக்குக் கை, உயிர்க்கு உயிர்’ என்ற ஒழுக்க முறையில் திளைத்தவர். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்று கூறிய திருவள்ளுவர் நெறியை ஒத்தது இயேசுநாதர் நெறி. எனவே, லிவிங்°டன் கூறிய இயேசு பெருமான் பொன்னுரை களைக் கேட்டு அவரெல்லாம் ஒன்றும் தோன்றாதவராயினர், குழந்தைகள் போல் கேள்விகள் கேட்டனர், மாறிமாறிக் குழப்பமும், வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர். லிவிங்°டன் சில நாளுக்குள் அவர்கள் மொழியில் விவிலிய நூலின் பகுதிகளை மொழி பெயர்த்ததுடன், வணக்கமுறையில் பாடல்களும் இயற்றலானார். 1843 ஆம் ஆண்டு ஜூனில் ‘குருமானிலிருந்து உள் நாட்டுக்கு ஏகலாம்’ என்ற உத்தரவு சமய சங்கத்திலிருந்து வந்தது. அதனைக் கண்ட லிவிங்°டன் எல்லையிலா மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். குறிப்புகள் 1. க்ஷநஉhரயயேச 2. டவைவiநெசயெ 3 ளுநஉhநடந 7. அரிமா வேட்டை எச்சரிக்கைக் கடிதம் லிவிங்°டன் தன் சமயப் பணிக்கு நிலைக்களமாகத் தேர்ந்த இடம் ‘மபோட்ஸா’1 என்பதாகும். இத்தேர்வுபற்றி இவர் தம் நண்பர்களுக்கு எழுதி, அவர்களின் அறிவுரைகளை எதிர்நோக்கி இருந்தார். லிவிங்°டன் நன்னம்பிக்கை முனைக்குவரும்போது, அறிஞர் ஃபிலிப் என்பவரை அங்கே கண்டாரன்றோ? அவரே ஆஃப்ரிகாவில் சமயக் கழகத்தின் செயலாளராக2 இருந்தவர். அவர் தற்செயலாகக் குருமானுக்கு வந்தார். அச்சமயம் லிவிங்°டன் இட ஆராய்ச்சியில் ஈடுபட்டுத் தொலைதூரம் சென்றிருந்தார். அறிஞர் ஃபிலிப், லிவிங்°டன் திரும்புவதற்குள்ளாகப் போகவேண்டியவரானார். எனவே அவர், லிவிங்°டனுக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்துச் சென்றார். “எக்காரணத்தாலும் மபோட்ஸாவில் குடியேறுவது நன்றன்று. அச்செயல், எரிமலையின் எரிவாயில் வீடு அமைத்து வாழ்வது போலாம். ஏனெனில் அதனை அடுத்து ‘மொகோலொலோ’3 என்ற குழுவின் தலைவனான ‘மொஸிலிகாட்ஸே’4 என்பவன் இருக் கின்றான். அவன் மிகக் கொடியவன், வெள்ளையர் குருதியை உண்ணக் காத்திருப்போன்” என்பதே அவர் குறிப்பில் எழுதிய செய்தியாகும். லிவிங்°டன் திரும்பிய காலையில் இச்செய்தியைக் கண்டு அசினாரல்லர். பிறகு உசாவி, அஃது அவ்வளவு உண்மையன்று எனக்கண்டார். மாபோட்ஸாவில் பெக்குவானர் வகுப்பைச் சேர்ந்த பகட்லாக்களே5 வாழ்ந் தனர். அவர் மொகோலொலோக்களைப் போல் கொடியவர் அல்லர்; மேலும் அவர்கள் பெக்குவானர்களிலும் சிறிது வீரங் குறைந்தவர்களே யாவர் என்பதை லிவிங்°டன் பின் நாட்களில் அறியலானார். துணைவர் இருவர் 1843 ஆம் ஆண்டு ஆக°டு திங்களில் லிவிங்°டன் குருமானிலிருந்து புறப்பட்டு மபோட்ஸாவுக்குப் பயணம் தொடங்கினார். அப்போத இவருடன் வேறு வெள்ளையர் இருவர் அவ்விடத்தை நாடிச்சென்றனர். அவர், திரு பிரிங்கிள்6 ஸர்தாம°°டீல்7 என்பவராவர். அவர் இருவரும் கேளிக்கைகளில் பேரும் புகழும் பெற்றவர்; நம் நாடாகிய இந்தியாவில் பலநாளிருந்து அதனை நன்கு அறிந்தவர். அவருள் °டீல், படைத்தலைவராக இருந்தவர்; பிற்காலத்தில் படை முதல்வர் ஆனவர். அவருடன் லிவிங்°டன் நெருங்கிய நட்பு உடையவரானார். எளிய வாழ்க்கை லிவிங்°டன் ஆஃப்ரிகருடன் நெருங்கிப் பழகியதனால் இவர் பணிக்கு, இரண்டு தனிப்பட்ட நன்மைகள் ஏற்பட் டிருந்தன. அவருடைய மொழியை ஆஃப்ரிக நாட்டு மகன் ஒருவனைப் போலவே இவர் பேசப் பயின்றது ஒன்று , ஆஃப்ரிக நாட்டு நிலைக்கு ஒத்த அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டமை மற்றொன்று. இவருடன் வந்த மற்ற ஆங்கிலேய நண்பர் எல்லாம் ஆரவாரமாகப் பல குதிரைகள், கூடாரங்கள், மூட்டை முடிச்சுக்கள், உணவுப் பொருட்குவைகள் முதலியவற்றை உடன் கொண்டு வந்தனர். இதனால் அவர்கள் பயணத்தில் அடைந்த தொல்லை பெரிதாகும். லிவிங்°டனோ எளிய ஆடையும், ஒரு கட்டை வண்டியும் உடையவராய், வேறு எவ்வகைச் சுமையும் இல்லாமல் கைவீசிச் சென்றார். ஆஃப்ரிக மக்களைப்போல் இவருக்கும் நிலப் பரப்பே படுக்கையாகவும் வானமண்டலமே கூரையாகவும் காற்றே போர்வையாகவும் பயன் பட்டன. ‘மக்களுக்குப் பணி செய்வோர் இன்பவாழ்வு தேடுவது, தன் பணிக்குக் கால்கட்டு கைக்கட்டுகளைத் தேடிக்கொள்வதே ஆகும்’ என்பதை லிவிங்°டன் உணர்வார். ஆதலின் இவர் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டார். பயணத்திடையே இராக்காலங்களில் அங்கங்கே தங்கி, மறுநாள் செல்வதே லிவிங்°டனின் வழக்கம். இவர் எங்கெங்குத் தங்குகின்றாரோ ஆங்காங்குள்ள மக்களின் உதவி கொண்டு வண்டி மாடுகளை அவிழ்த்து விடுவார். மரத்தடியிலும் ஒதுக்கிடங்களிலுமே தங்குவார். லிவிங்°டன் அந் நாட்டு மக்களுடனிருந்து விறகு சேர்த்துச் சமைத்து உண்டு உறங்குவார், அம்மக்களுடன் ஒருவராகக் கலந்து உறவாடுவார். இதனால் அவர் எல்லாம், வேலைக்காரர் என்ற முறையில் உழைக்காமல் நண்பர் என்ற முறையில் ஆர்வத்துடன் உழைத்தனர். சிங்கங்களின் தொல்லை லிவிங்°டன் இவ்வண்ணம் மக்களுடைய அன்பையும் ஆதரவையுங்கொண்டு மபோட்ஸாவை அடைந்தார். அங்கும் இவர், பெரும்பாலும் பிறர் உதவியின்றித் தமக்கு ஒரு சிறு குடிலைக் கட்டிக் கொண்டார். அவர் அங்கே மூன்று ஆண்டுகள் கழித்தார். அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றிச் சிங்கங்களின் தொல்லை பெரிதும் உண்டு. அங்கு வாழ்ந்த பகட்லாக்களின் ஆடுமாடுகளுக்கும் பயிர்களுக்கும் அவற்றால் பேரழிவு ஏற்பட்டது. சில சமயம் மக்கள் உயிர்க்கும் சேதம் உண்டாயிற்று. லிவிங்°டன் இத் தொல்லையை நீக்கும் முயற்சியில் முனைந்தார். ஆஃப்ரிகப் பகுதிகளில் நன்கு ஊடாடிய லிவிங்°டன், சிங்கங்களின் இயல்புகளை நன்கு உணர்ந்து கொண்டார். அந் நாட்டுச் சிங்கங்கள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே செல்லும். ஒரு சிங்கம் எங்காவது கொல்லப்பட்டால் கூட்டம் முழுமையுமே அவ்விடம் விட்டு அகன்றுவிடுமாம். எனவே லிவிங்°டன், ‘சற்று ஆண்மையுடன் ஒன்றைத் தாக்கி அழித்தால் போதும், இத் தொல்லையிலிருந்து மக்களை விடுவிக்கலாம்’ என்று கண்டார். ஆனால், மற்ற பெக்குவானர் வகுப்புகளுக்குள்ள அஞ்சாமையும் வீரமும் பகட்லாக்களுக்கு இல்லை. அவர் அடிக்கடி சிங்கக்கூட்டத்தைச் சூழ்ந்து முற்றுகை செய்தனர். எனினும் தனிமையாய்ச் சிங்கம் எதிர்பட்டபோது அதனை எதிர்த்துத் தாக்கித் தயங்கி அதனைத் தப்பவிட்டு வந்தனர். அவர் லிவிங்°டனுடன் சிங்கக்கூட்டம் ஒன்றை ஒரு குன்றில் வளைத்து நின்றனர், அப்போது சிங்கங்களை வழக்கம்போல் தப்பிச் செல்ல விடுத்தனர். அதனைக் கண்ட லிவிங்°டன், தாமே தனிப்பட்டவகையில் ஒரு சிங்கத்தை எதிர்க்க முயன்றார். அரிமாவேட்டை ‘மபால்வே’7 என்பவர் ஓர் ஆஃப்ரிகப் பள்ளி ஆசிரியர். அவர் லிவிங்°டனுடன் இருந்தார். லிவிங்°டனும் அந்த ஆசிரியரும், வேட்டையிற் பயிற்சியுடைய மற்றும் சிலருடன் சேர்ந்து அங்கே தப்பி ஓட முயலும் சிங்கங்களைத் தாக்க வேண்டும் எனப் புறப்பட்டனர். அப்போது ஒரு பாறையின் மேல் உள்ள புதர் மறைவில் ஒரு பெரிய சிங்கம் மறைந்திருப்பதைக் கண்டனர். மபால்வே அதனைச் சுட்டார். ஆனால், துப்பாக்கிக் குண்டு பாறைமீது பட்டுத் தெறித்தது. சிங்கம் சீற்றத்துடன் குண்டுபட்ட இடத்தில் ஓங்கி அறைந்தது. பின், வளைத்து நின்ற வரிசையைப் பிளந்து கொண்டு ஓடிற்று. பகட்லாக்கள் வழக்கம்போல் வழிவிட்டனரே அன்றி, அதனைத் தடுக்கவோ தாக்கவோ முயலவில்லை. மீண்டும் ஒரு முறை இரண்டு இரண்டு சிங்கங்கள் வந்தன. ஆனால், பக்கத்தில் சூழ்ந்து நின்ற ஆட்கள் மீது பட்டுவிடுமே என்ற அச்சத்தினால் லிவிங்°டனும் நண்பரும் அவற்றைச் சுடவில்லை. முடிவில் அனைவரும் ஊரை நோக்கித் திரும்பினர். அவ்வழியில் மற்றொரு சிங்கம் பாறை அருகில் புதரில் பின்பக்கமாகத் தென்பட்டது. லிவிங்°டன் தம் கையிலிருந்து இரு தோட்டாக்களை நிரப்பிச் சுட்டார். “வேட்டுத்தவறவில்லை; விழுந்தது சிங்கம்” என்ற குரலுடன் அனைவரும் சிங்கத்தை அணுகினர். இதற்கிடையில் லிவிங்°டன் சுட்ட மூன்றாவது குண்டும் சிங்கத்தைத் துளைத்தது. ஆயினும், அதன் அருகில் அவர்கள் சென்றபோது மூன்று குண்டுகளை ஏற்றும் அது சாகாமல் வெகுளியுடன் நின்றது. அதன் தோற்றம், போர் அரங்கில் வெறியுடன் நிற்கும் மல்லன் தோற்றத்தை ஒத்திருந்தது. லிவிங்°டன் வெறுமையாய் விட்டதும் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிய வண்ணம், “சற்றுப் பொறுங்கள், சுடுகிறேன்” என்றார். அதற்குள் சிங்கம் வாலைச் சுழற்றிக் கொண்டு பெருமுழக்கத்துடன் லிவிங்°டன் மீது பாய்ந்தது. சிங்கத்தின் வலது முன்கால், லிவிங்°டன் தோள்மீது தன் முழுவன்மையுடன் ஓங்கி வீழ்ந்தது. சிங்கமும் லிவிங்°டனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு உயிருக்குப் போராடினர். ஒரு முறை, சிங்கத்தின்அடி இவர் பிடரியில் வீழ்ந்து இவரை உணர்விழக்கச் செய்தது. வேட்டையின் பலன் ஏறத்தாழ முப்பது முழத்தொலைவில் நின்றிருந்த மபால்வே இரு முறை சிங்கத்தைச் சுட்டார். குறிதவறிற்று. ஆனால் அதன் பயனாகச் சிங்கம் தன் பிடியுள் இருந்த லிவிங்°டனை விட்டுவிட்டு மபால்வேமீது பாய்ந்தது. முன் ஒருகால் லிவிங்°டனால் உயிர்காக்கப் பெற்ற வீரன் ஒருவன் இச்சமயம் ஈட்டியால் சிங்கத்தின் விலாவில் தாக்கினான். சிங்கம் மபால்வேயையும் விட்டு அவன் மீது பாயலாயிற்று. ஆனால் இதற்குள் சிங்கத்தின் வல்லமை குன்றிவிட்டது. முன்பு குண்டுகள் துளைத்த காயத்திலிருந்து பெருகிய குருதியாலும், தன் தாக்குதல் வேகத்தாலும் அது சோர்வடைந்து வீழ்ந்து இறந்தது. இச் சிங்கம் இறந்து விழுந்ததைக் கண்ட பிறகு சிங்கங்கள் அப்பக்கம் நாடாது அகன்றன. இச் சிங்க வேட்டையில் யாரும் உயிர் இழக்கவில்லை. ஆயினும் சிங்கத்தின் வலிய நகங்களாலும் நச்சுப்பற்களாலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அவருள் லிவிங்°டனும் ஒருவர். இவருடைய தோள்பட்டை எலும்புகள் சுக்கு நூறாயின. சிங்கத்தின் பற்கள் உடுருவியதால் அடிக்கடி வலி ஏற்பட்டது. ஆயினும், இவர் வேட்டைக்காக அணிந்திருந்த தோல் கச்சை, பற்களின் நஞ்சுபடாமல் காத்தது. எனவே, லிவிங்°டன் பூட்டற்றுத் தொங்கிய கையுடன் தப்பினார். மற்றவரோ அத்தகைய பாதுகாப்பு அற்று இருந்ததனால் ஆண்டு தவறாமல் நச்சுக் காய்ச்சலுக்கும் நச்சுவலிக்கும் ஆளாகித் துன்புற்றனர். அடிக்குறிப்புகள் 1 ஆயbடிவளய 2. ஹபநவே 3. ஆடிமடிடடிவடி, 4. ஆடிளடை-முயவளந 5. க்ஷயமயவடயள 6. ஆச. ஞசiபேடந 7. ளுசை கூhடிஅயள ளுவநநடந 8. ஆயயெடறந 8. மண வாழ்க்கை காதல் மணம் 1844- ஆம் ஆண்டில் அறிஞர் மோபட் மறுபடியும் குருமானுக்கு வந்து தங்கினார். லிவிங்°டன் அவரையே ஞான குருவாகக் கொண்டிருந்தார். ஆதலால் இவர், தம் குருவின் குடிலுக்கு அடிக்கடி செல்வார். அச்சமயம் மோபட்டின் மூத்த புதல்வியரான மேரியை லிவிங்°டன் கண்டு பழக நேர்ந்தது. லிவிங்°டனின் வீரப்புகழ் மேரியின் மனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை, அவ்வம்மையார், ‘ஆங்கிலேயப் பெண்மணி எவருக்கும் அத்தகைய வீரவாழ்வில் பங்குகொள்வதைவிட உயர்ந்த பேறு வேறு இல்லை’ என நினைத்தார். லிவிங்°டனும், அம்மையாரின் அடக்கம், குணம், அறிவுப் பயிற்சி ஆகியவற்றை நோக்கி, அவரிடம் மாறாப்பற்று கொண்டார். ஒருநாள் மாலை, மேரிதம் கையால் நீர் வார்த்துக் காத்த சிறு பூஞ்சோலையில் இருவரும் உலவச் சென்றனர். அப்போது அவரவருடைய மனத்தில் தனித்தனி உலவிய எண்ணங்கள் அவர்களின் உரையாடல் மூலம் ஒன்றுபட்டுக் கலந்தன. அறிஞர் மோபட்டும் அவருடைய காதலை இனிது வரவேற்றதனால், அவர் விரைவில் மணவாழ்க்கை என்னும் தேரில் பூட்டப் பெற்றனர். நல்வாழ்வு வாழ்க்கைத் துணைவர் இருவரும் மபோட்ஸாவில் ஓராண்டு தங்கினர். லிவிங்°டன் இதுவரை வெறுஞ் செங்கல் கொண்டு கட்டிய மனக்கோட்டைகள் திருவாட்டி லிவிங்°டனின் மூலம் சுண்ணாம்பும் காரையும் கலந்து கட்டிய உறுதியுடைய கோட்டைகள் ஆயின. மோபட் பலநாள் ஆஃப்ரிகாவில் வாழ்ந்து,அந்நாட்டில் பழகியவர். அச்சமயப் பணியாளரின் செல்வியாரது ஒத்துழைப்பினால், லிவிங்°டன் வாழ்வு, துன்பத்திடையும் இன்பம் பெற்று, நிறைவும் நற்பயனும் உடையதாயிற்று. 9. ஸெச்சீ° மனமாற்றம் இடம் மாறுதல் லிவிங்°டன் இனவேறுபாடு, நிறவேறுபாடு, வகுப்பு வேறுபாடு ஆகிய எல்லா வேறுபாடுகளையும் கடந்த பரந்த அருள் உள்ளம் படைத்தவர். ஆதலால் இவரது சமயப்பணி, பிற பணியாளர் பணியைப்போல் ஆள்திரட்டி ஆட்சி வன்மை கோயில் பணியாக அமையவில்லை. இவர் இயேசு பெருமானின் பேரால் வெள்ளையர் உயர்வை நிலைநாட்ட முனைந்திருந்தால், நாட்டு வேற்றுமை, மொழி வேற்றுமை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் டச்சுக்காரர், ஜெர்மனியர் முதலிய பல்வேறு வகையினரான பிற பணியாளர் இவரை ஓரளவு ஆதரித்திருப்பர். இதுவன்றி இவர், ஆங்கில உயர்வுக்காகப் பாடுபட்டிருப்பினும் இவரை ஓரளவே அவர் எதிர்த்திருப்பார். ஆனால் இவர் எந்த மனித வகுப்பின் ஆட்சியையும் உறுதிப்படுத்த விரும்பினார் அல்லர்; உண்மையாகக் கடவுள் ஆட்சியை, உலக ஒப்பரவு ஆட்சியை நிலை நாட்டவே முயன்றார். இச்செயலே பிற பணியாளர்க்கெல்லாம் வயிற்று நோவை உண்டாக்கிற்று. எனவே, சமயப் பணிக் கழகத்தினர் பலர் லிவிங்°டனோடு முரண்பட்டனர். ஆதலால், லிவிங்°டன், அவர்கள் தொல்லைகளினின்றும் விடுபடும் எண்ணத்துடன், மேலும் உள்நாடு நோக்கிப் பயணப்பட்டார்; மபோட்ஸாவி லிருந்து புறப்பட்டு அதற்கு நாற்பது கல் வடக்கிலுள்ள “சோனுவேன்”1 என்னும் இடத்திற்குச் சென்றார். பலவேலைகள் அவர் அங்கும் மபோட்ஸாவைப் போலவே வாழ்க் கைக்கு உரிய எல்லா வசதிகளையும் தொடக்கத்திலிருந்தே செய்யவேண்டியவரானார். லிவிங்°டன் அங்குத் தம் வாழ்க்கையைப் பற்றித் தம் கைக்குறிப்பேட்டில் வரைந் துள்ள செய்தி, சுவை தருவதாகும். “கட்டட வேலை, தோட்ட வேலை, செருப்புத் தைத்தல், மருத்துவம், கன்னான்வேலை, தச்சு துப்பாக்கி திருத்துதல், கொல்லுலை வளர்த்தல், வண்டி செப்பனிடுதல், சமயச் சொற்பொழிவு, பள்ளிப் போதனை, அறிவு நூல் புகட்டுதல் முதலியனவும் மாணவரான இரண்டு மூன்று பேர்க்குப் பேருரை ஆற்றுதலும் என் நேரத்தைப் பங்கு கொள்கின்றன. என் வாழ்க்கைத் துணைவி அதே சமயத்தில் மெழுகு வர்த்திகள் செய்தல், சவுக்காரம் செய்தல், ஆடை நெய்தல் முதலியவற்றில் ஈடுபட்டிருப்பாள். இவ்வகையில் ஆஃப்ரிகச் சமயப் பணிக்கான ஒரு குடும்பம் என்ற நிலையை நாங்கள் வண்மையுடன் அற்றினோம், அஃதாவது, வெளிவேலை களில் கதம்ப வேலையாளாகக் கணவனும், வீட்டு வேலைகளில் அவியல் பணியாளாய் மனைவியும் அமைந்தோம்” ஸெச்சீல் மதமாற்றம் சோனுவேனில் வாழ்ந்த பெக்குவானர்களின் தலைவர் ஸெச்சீல் என முன்னர்க் கூறியுள்ளோம் அல்லவா? அவரே லிவிங்°டன் சமய போதனையை ஏற்ற முதல் தோழர் ஆவர். இயேசுநாதரின் நல்லுரைகளுக்குச் செவிதந்த சில நாட் களுக்குள்ளாகவே அவர், லிவிங்°டன் மொழி பெயர்த் திருந்த விவிலிய நூலைக் கற்கவும் தொடங்கினார். அவரது குழந்தை உள்ளம் புதுமை ஆர்வத்தால் புதிய சமயத்தை ஆத்திரத்துடன் விழுங்க முயன்றது. எனினும் அதனைச் செரித்துக் கொள்ள முடியாது அது திகைத்தது. பழமை வாசனை, எதிர்பாராத் தடைகளை உண்டாக்கிற்று. சூழ்நிலையாலும் பல இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றுள் முதன்மையானது, கிறி°து நெறியை ஏற்றதனால் அவர் தாம் முன் மணந்திருந்த பன் மனைவியருள் ஒருத்தி நீங்கலாக ஏனையோரை அகற்றவேண்டி நேர்ந்ததேயாம். அவருள் பலரும் பெகுக்வானரிடையே முதற்குடியில் தோன்றியவர்களாதலால், ஸெச்சீல் அக்குடிகளின் உள்ளார்ந்த வெறுப்புக்கு ஆளானார். காட்டு மக்கள் துன்பநிலை லிவிங்°டன் குடியேறியபின் அப்பகுதியில் கருப்பு தோன்றி நீண்டநாள் மழை பெய்யாதிருந்தது. ‘இக்கருப்பு, மக்கள் பழைய நெறியை விட்டு லிவிங்°டன் வணக்க முறையை ஏற்றதனால்தான் ஏற்பட்டது’ எனப் பெக்குவானர் எண்ணினர். மழையில்லாமல் நாடு வறண்ட காலங்களில் தலைவன் மழையைச் செய்வினை களால் வருவிப்பது அந்நாட்டு வழக்கம். ஸெச்சீலோ, புதிய சமயக்கட்டுப்பாட்டினால் அதனைச் செய்ய முடியாத வரானார். மக்கள் அனைவரும் லிவிங்°டன் காலில் விழுந்து ஒரு முறையேனும் ஸெச்சீலைத் தம் நச்சுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துத் தமக்கு உயிர் தருவிக்கும்படி கண்ணீரும் கம்பலையுமாகக் கெஞ்சினர். என் செய்வார் லிவிங்°டன்! இவர் சமய உறுதிக்கு, இது போன்ற பரிதாபமான சோதனை என்றும் ஏற்பட்டதில்லை. கல்வி அளித்தல் இவ்வளவு நெருக்கடியிலும் லிவிங்°டன் மன முடையாமல் தம் பணியைத் தளராது வளர்த்தே வந்தார். நாட்டு மக்கள் பலரை ஆசிரியராகப் பயிற்றுவித்தார். அவர்களைக் கொண்டே நாட்டு மக்களிடையே கல்வியைப் பரப்பினார். இதுவே, லிவிங்°டன் இவ்விடத்தில் ஆற்றிய தொண்டகளில் தலை சிறந்தது. புதிய தொல்லை லிவிங்°டனுக்கு மற்றொரு துறையில் ஏற்பட்ட துயரம், இத்துயர்களை யெல்லாம் மறக்கச் செய்யததாக இருந்தது. டச்சுக்காரரான பூயர்கள், லிவிங்°டன் குடியேறிய பகுதிமுதல் கீழ்க் கடற்கரைவரை பரவி இருந்தனர். அவர் பொதுவாக ஆங்கிலேயருடைய முறைகளையும் லிவிங்°டனுடைய முறைகளையும் வெறுத்தனர். ஏனெனில் அவற்றால் நாட்டுமக்கள் அறிவும் ஒற்றுமையும் வன்மையும் பெற்று, வெள்ளையர்க்கு அடிமையாக வாழ்வதில் வெறுப்புறுவர் என்று அவர் எண்ணினர். லிவிங்°டன் பணி முதிர்ச்சி பெறுமுன் அவர் மன்னேறித் தாக்கிப் பெக்குவானரைச் சூறையாடத் துடித்து நின்றனர். லிவிங்°டன், பீயர் தலைவரான குருகரைக்2 கண்டு நிலைமையைச் சிறிதளவு தளர்த்தினர். எனினும் மேன்மேலும் வளர்ந்து வரும் பொறாமைப் புயலுக்கு ஓய்வு காண முடியவில்லை. இடம் மாற முயற்சி இவ்விடரினின்றும் தப்புவது எங்ஙனம் என லிவிங்° டனும் நண்பரும் ஆராய்ந்தனர். தெற்கிலும் கிழக்கிலும் போக வழியில்லை; அங்கே பூயர்களும் பிற வெள்ளையர்களும் நிலைபெற்றிருந்தனர். வடக்கிலும் மேற்கிலுமோ, இயற்கை அன்னையின் சீற்றமே உருவெடுத்தாற் போன்ற கலஹாரிப் பாலைவனம்3 கடலினம் பரக்கக் கிடந்தது. இந்நிலையில் யாது செய்வது? கலஹாரி கடந்தால் ஓர் அகன்ற நல்ல ஏரியும், அதனைச் சூழ நல்ல இளம் பாலைநிலமும் உண்டு என லிவிங்°டன் பிறர் சொல்லக் கேட்டனர். எனவே இவர் அங்குக் குடியேறி வாழ வாய்ப்பு உண்டோ என்பதை ஆராயப் புறப்பட்டார். அடிக்குறிப்புகள் 1. ஊhடிரேயநே 2. முசரபநச 3. முயடயாயசi டுநளநசவ 10. கலஹாரிப் பாலைவனம் கலஹாரிப் பாலைவனம் உலகத்தில் உள்ள பாலைவனங்களுள் பரப்பிலும் சூட்டிலும் முதன்மை உடையவை வட ஆஃப்ரிகாவில் உள்ள ஸஹாராவும், மேலை ஆசியாவிலுள்ள அரேபியாவும், வடமேற்கு இந்தியாவிலுள்ள தார் பாலைவனமுமே ஆகும். இவற்றினும் வெம்மையில் குறைந்த பாலைவனமும் உண்டு. தென்னிந்தியாவில் திருநெல்வேலி வட்டத்தில் திருச்செந்தூரை அடுத்து ‘குதிரை முடித்தேரி’ என்னும் பாலைவனம் ஒன்றுண்டு. இதுவே, தமிழ்நாடட்டார் காட்சிக்கு உட்பட்ட சிறு பாலைவனமாகும். அளவில் இதனினும் பெரியதாயினும் இதுபோலவே புதர்கள் ஆங்காங்கு நிறைந்ததும் ஆங்காங்கு வற்றிவரும் வறண்ட ஊற்றுக்கள் உடையதும் ஆகிய ஒரு பாலைவனமே கலஹாரி என்பது. இத தென்னாஃப்ரிகாவின் உட் பகுதியில் உள்ளது. இதன் வட கோடியில் ‘ஙாமி’1 என்ற ஏரி இருக்கிறது. அதனை அடுத்துச் செழிப்புள்ள இடம் இருக்கிறது. அவ்விடத்தில் பல ஆறுகள் பாய்கின்றன. முன்னோர் முயற்சி முன்னே இதனை நாடிச் சில வெள்ளையர் செல்ல முயன்றனர். எனினும் அவர் அம்முயற்சியில் மாண்டு அழிந்தனர். ஆதலின் அவர் அப்பாலைவனத்தைப்பற்றி அறிந்த அறிவும் உலகிற்குப் பயன்படாது, அவருடன் அழிந்துபோயிற்று. வேலை வெற்றிகரமாக அதனைக் கடந்து ‘ஙாமி’ யைக் கண்ணுற்ற முதல் வெள்ளையர் லிவிங்°டனே ஆவர். ஸெபிட்டுவேன் அருங்குணங்கள் லிவிங்°டன் இக்காரியத்தை மும்முறை முயன்று, பல முறை தோற்ற பிறகே வெற்றி காண முடிந்தது. முதலில் இத்துறையில் கவனம் செலுத்தக் காரணமாக இருந்தவர் ஸெக்சீலே ஆவர். கலஹாரிப் பாலைவனத்துக்கு அப்பால் வாழ்ந்த ‘மகோலொலோ’2 வகுப்பினரின் மாபெருந் தலைவ னான ஸெபிட்டுவேன்3 என்பவன் ஒரு முறை ஸெச்சீலின் உயிரைக் காத்தவன். மற்றும் அவருக்குத் தலைமைப்பதவியும் தந்து ஆதரித்தவன். மேலும், பூயர்களால் அழிக்கப்பட்ட பல வகுப்பினரின் சிதறிய பகுதிகளைத் தன்னுடன் சேர்த்த ஆதரித்த அருளாளனும் அவனே, பிற வகுப்பினரை மட்டும் அன்றிப் பிறநாட்டினரையும் வரவேற்று அதரிக்கும் அருள் உள்ளம் கொண்டவன் அவன் என்பதை ஸெச்சீல் கூறினார். அதுகேட்ட லிவிங்°டன் அவனைக் காண அவாவினார். இஃது இயற்கையே அன்றோ? ஆ°வெல் நட்பு லிவிங்°டன், இம்முறை தம் ஆருயிர் நண்பரும் ஆஃப்ரிக நாட்டில் உள்ள வெள்ளையரிடையே ‘ஒப்புயர் வற்ற வேட்டையாளர்’ என்று புகழ்பெற்றவருமான ஆ°வெல்4 என்பவரை உடன் கொண்டு சென்றார். லிவிங்°டனுக்கு இப்பொழுது மூன்று பிள்ளைகள் இருந் தனர். மூன்றாம் பிள்ளைக்கு ஞானத் தந்தையாக இருந்தவரும் . இந்த ஆ°வெலே யாவர். பாலைவன யாத்திரை -1 பாலைவனத்திடையே கிடைத்தற்கரிய அரும் பொருள் தண்ணீரே ஆகும். நீரின்றி மக்களும் விலங்குகளும் அடையும் துயரம் சொல்லொணாதது. காய்ச்சலால் வரும் தீமை மற்றொருபுறம். ஆறுகளில் சிறிதளவாகக் கிடக்கும் நீரைப் பருக எண்ணி இறங்கினாலோ, முதலை எமன்கள் ஒளிந்து கிடக்கும். இவ்வனத்தில் மிகக் குள்ளமான ‘புதர் மக்கள்’5 என்ற ஒரு வகுப்பினர் உண்டு. அவர்கள் கூரிய மதியும் புற்றெறும்புகள் போன்று சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் உடையவர்கள்; தீங்கற்ற உள்ளமும் திறமும் படைத்தவர்கள். லிவிங்°டனுக்கு வழிகாட்டியாக வந்தவன் இவ்வினத்தவனே. அவன், அவ்வப்போது அவர்களை விட்டகன்று திகைக்க வைத்தும் வந்தான். ஆயினும் சூதற்ற உள்ளத்துடனும் கவர்ச்சிமிக்க நடிப்புடனும் தற்பெருமை தோன்ற அவன், அவர்கள் முன் நடந்து சென்று ஆரவாரம் செய்வான். எனவே அவனை யாரும் சினந்து கொள்வதில்லை. அங்கங்கே புதர்மக்களின் மாதர் அவர்களைக் கண்டு ஓடுவர். பிறகு அவர்கள் தண்ணீர் மட்டுமே கேட்பது கண்டு வேளாண்மையுடன் நன்கு உபசரிப்பர். லிவிங்°டன் தந்த உணவுப் பொருள்கள், பரிசுகள் அகியவற்றைக் கண்டு அவர் மகிழ்ந்து கூத்தாடினர். உதவி மறுப்பு சிறிது தூரம் சென்றதும் “இதோ ‘ஙாமி’ ஏரி” என ஆ°வெல் துள்ளிக் கூத்தாடினார். ஆனால், அஃது உண்மை யில் நீரன்று, கானல் ஒளியே என்று கண்டு, அவர் ஏமாற்றம் அடைந்தனர். நெடுநாட் சென்றபின் ‘ஜுகா’5 என்ற ஆற்றையும், அதன்பின் அதனினும் பெரிதான ‘தமனாக்கிள்’6 என்ற ஆற்றையும் கண்டார். தமனாக்கிள் கடந்தால் ஸெபிட்டு வேனைச் சந்திக்கலாம். ஆனால், அந்த ஆறு அகலமும் ஆழமும் உடையதாக இருந்தது. லிவிங்°டன் இக்கரையில் இரந்த தலைவனிடம் ஓடம் வேண்டினர். ஸெபிட்டுவேனிடம் பொறாமை கொண்ட அத்தலைவன் உதவ மறுத்தனன். எனவே லிவிங்°டன், வேறு வகையின்றிப் புறப்பட்ட இடத்திற்கே மீள வேண்டி யிருந்தது. ஆ°வெல் தாம் நன்னம்பிக்கை முனை செல்வதாக வும் அங்கிருந்து நல்ல படகு அனுப்புவதாகவும் கூறிச் சென்றார். பாலைவன யாத்திரை-2 லிவிங்°டன் வாழ்க்கை நடத்திய இடத்தில் பஞ்சம் தொடர்ந்த நிலை பெற்றது, எனவே இவர் பள்ளி, பயிற்சிக் கூடம் யாவும் சீர்குலைந்தன, வேறு வேலையின்மையால் 1850 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் லிவிங்°டன் ஈடுபட்டார். இம்முறை காய்ச்சலால் வருந்திய அறுபது வெள்ளையரைக் காக்கும்பொருட்டு, லிவிங்°டன் அவர்களுக்கு நேர் வழிவிட்டு விலகிச் சிலநாள் போக்கினர். இதனிடையில் லிவிங்°டன் பிள்ளைகளும் வேலையாட்களும் காய்ச்சலால் பீடிக்கப்படவே, இம்முறையும் பயன்பெறாது திரும்பினர். இத்தறுவாயில் திருவாட்டி லிவிங்°டன் வழியில் கருவுயிர்த்து ஒரு பெண் மகவு ஈன்றார். ஆறு தினங்களுக்குள் அம்மகவும் நோய்வாய்ப்பட்டு இறந்தது. அதன் பின் உடல் நலத்தை எண்ணி அனைவரும் குருமான் வந்தனர். அங்கிருந்து ஆ°வெலைக் காணச் சென்ற அவர்கள், அவரை எதிரே கண்டு மீண்டார்கள். ஸெபிட்டுவேன் அன்பு காட்டல் ஸெபிட்டுவேன், தன்னை லிவிங்°டன் காண வந்தது கேட்டு, அவருக்கு அழைப்பும் பரிசில்களும் தூதர் மூலம் அனுப்பி யிருந்தான். ஸெச்சீல் சற்றும் முன் யோசனை இல்லாமல், லிவிங்°டனைக் கேளாமலே தூதரை அனுப்பி விட்டார். லிவிங்°டன் அத்தூதருடன் சென்றிருந்தால் எவ்வளவோ துன்பம் குறைந்திருக்கும். பாலைவன யாத்திரை-3 லிவிங்°டன் மூன்றாம் முறையாக 1851 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் ஸெபிட்டுவேனை நாடிச்சென்றார். இம்முறை அவர்கள் ‘தமுனாக்கிள்’ என்ற ஆற்றை எளிதில் கடந்து, ஸெபிட்டுவேனுடன் அளவளாவினர். இருண்ட ஆஃப்ரிக நாட்டு வாழ்வினிடையே லிவிங்°டன் கண்களுக்கு ஸெபிட்டுவேன் ஒரு பேரொளி விளக்கமாகவே திகழ்ந்தான். அவன் தன் வாழ்நாட் களுக்குள் பல வகுப்பினருக்கும் நிழல் அளித்துப் பகையச்சம் போக்கிய சான்றோன். அவன் சிறந்த போர் வீரன், இரப்பவர்க்கு ஈத்து உவக்கும் தண்ணளியான். அவன் ஈகை, அருள், நட்பு ஆகிய உயர் குணங்களைக் கொடுமுடிகளாகக் கொண்ட அருட் குணக்குன்றாக விளங்கினான். பயன்பெறாத முயற்சி ஸெபிட்டுவேன் லிவிங்°டனை நன்கு வரவேற்றான்; குடியேற எவ்விடம் வேண்டினும் அவ்விடம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் அவனால் லிவிங்°டனும் இவர் பணியும் முழுப்பயன் பெறமுடியாது போயிற்று. லிவிங்°டன் வந்த சில நாட்களுக்குள் அவனை ஈரல் காசநோய் பிடித்தது. லிவிங்°டன், ஆஃப்ரிக நாட்டின் கருமாணிக்கமான அவனைத் தம் மருத்துவத்தால் குணப்படுத்த எவ்வளவோ ஆவல் உடையவராக இருந்தார். ஆனால் மூடநம்பிக்கை கொண்டனர். இயல்பாகவே அவனுக்குத் தீது நேரிடினும் அது தம்மால் விளைந்தது எனக்கொண்டு அந்நாட்டு மக்கள் தமக்குத் தீங்கு செய்தவர் என லிவிங்°டன் அஞ்சித் தம் ஆவலை அடக்கிக் கொண்டார். ஸெபிட்டுவேனும் விரைவில் இயற்கை எய்தினான். ஆட்சிக்கு உரிமையுடையவளாய் வந்த அவன் புதல்வி ‘மெமோச்சிஷானே’யும் லிவிங்°டனிடம் நல் எண்ணம் உடையவளாகவே இருந்தாள். ஆனால் லிவிங்°டன் குடியிருப்புக்கேற்ற இடம் காணாது மீண்டனர். குடும்பத்தைத் தாய்நாட்டுக்கு அனுப்புதல் இதற்கிடையில் லிவிங்°டனும் ஆ°வெலும் கிழக்கில் ‘ஃஜாம்பெஸி’7 ஆற்றுத் தலைநிலம் வரையில் சென்று வேவு பார்த்தனர். இறுதியில் திருவாட்டி லிவிங்°டன் உடல் நலத்தையும், குhந்தைகளின் கல்வியையும் எண்ணி, லிவிங்°டன் தம் குடும்பத்தை இங்கிலாந்துக்கே அனுப்ப உறுதிகொண்டார். அதனால், அவர்கள் நன்னம்பிக்கை மனைக்குப் பயணமானார்கள். உழைப்பைப் பாராட்டுதல் லிவிங்°டன் இப்பயணங்களாலும் அவ்வப்போது நேரிட்ட இன்னல்களாலும் பெரிதும் கடன்பட்டு உழன்றார். சமயப்பணி நிலையமோ லிவிங்°டன்செலவுகளை வீண் செலவுகள் எனக்கூறி, அவர் வீரச் செயல்களை அசட்டை செய்தது. இந்நிலையில் ஒப்பற்ற தன் மதிப்புடன் ஆ°வெல், தம் பண்ணை வரும்படியில் ஒரு பகுதியை லிவிங்°டனுக்கு நட்பு உரிமையுடன் உதவினர். அத்துடன் அரசாங்கமும், நில இயல் மன்னரவை ஆராய்ச்சிக் கழகத்தாரும் லிவிங்°டனின் பணியைப் போற்ற மன்வந்து ‘ஙாமி’ ஏரியைப் புதுவதாகக் கண்டதற்காக இவருக்கு 25 பெரும் பொற்காசுகள் (கினிகள்) வழங்கினர். இங்ஙனமாகச் சமயத்துறையிலும் மக்கட் பணித்துறையிலும் லிவிங்°டனுக்கு உரிய புகழ் அவரை வந்து அடையும் முன்னரே, அறிவியல் ஆராய்ச்சித்துறையில் புகழ்ச்செல்வி அவரை அடையலானாள். அடிக்குறிப்புகள் 1. டுயமந சூபயஅi 2. ஆயமடிடடிடடி 3. ளுநbiவாயநே 4. டீளநறநடட 5. சுநசைய துரபய 6. கூயஅரn ஊடந 7. சுiஎநச ஷ்யஅநௌi 11. இரண்டாம் பிரயாணம் துன்பங்களுக்கு இடையில் தொண்டு லிவிங்°டனின் இரண்டாம் பிரயாணமே தென் ஆஃப்ரிகாவின் உள்நாட்டுப் பகுதியைக் கீழ்க்கடலடனும் மேல்கடலுடனும் (இந்துமா கடற்கரையுடனும் அட்லாண்டிக் மாகடற்கரையுடனும்) இணைத்தது. இதனால் அந்நாடு உலகப்போக்கு வரவு நெறிகளுடனும், நாகரிகப் போக் குடனும் தொடர்பு பெற்றது. அயினும் இப்பெருங் காரியத்தைத் தொடங்கும்போது லிவிங்°டனை, அன்றைய ஆற்றல் மிக்க குழுவினர் பலரும் எதிர்க்கவே மற்பட்டனர். பூயர்கள்1 லிவிங்°டன் தங்கள் அடிமை வாணிகத்தை அழிக்கப் பார்க்கின்றனர்’என்ற இவர்மீது சீறினர். தென்ஆஃப்ரிக அரசாங்கம் எல்லா வல்லரசுகளுடனும் ஒப்புரவு காட்டி ‘சமயப் பணியாளர் நாட்டுப்பற்று அற்றவராக நடக்கின்றனர்’ என்று எண்ணிற்று. ஆகவே அவ்வரசாங்கத்தாரும் அவர்களிடம் உவர்ப்புக்காட்டினர். சமயப்பணி நிலையமோ லிவிங்°டன் தம் சமய உட்கிளையின் கட்டுப்பாட்டை மீறிப் பொது மனப்பான்மையுடன் நடந்துவந்தது கண்டு புழுங்கிற்று. லிவிங்°டன் இக் குறுகிய மனப்பான்மைகளுக்கிடையும் உண்மையான அருள் நோக்குடன் இறைவன் பணியில் வீறு கொண்டு இறங்கினார். புதுப்பயிற்சி நன்னம்பிக்கை முனையில் சில நாட்களில், லிவிங்°டன் ஆஃப்ரிகப் பயணத்தின்போது தமக்கு ஏற் பட்டிருந்த உள்நாக்கு வளர்ச்சியை அறுவை மருத்துவத்தால் சரிசெய்து கொண்டார். அத்துடன் அவர் திக்கறியாத இடங்களில் தம் நிலையறிய உதவும்படி கோள்களின் நிலைகளையும் விண்மீன்களின் நிலைகளையும் கொண்டு நிலக் கிடக்கையை வரையறையிட்டு அளவைப் படம் வரையும் மறையையும் பயின்று கொண்டார். பூயர் அட்டூழியம் லிவிங்°டன் குருமானுக்கு வந்தபோது உள்ளந் துடிக்கும் நிகழ்ச்சி ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. லிவிங்°டன் பணியை வெறுத்த அடிமை வணிகராகிய பூயர்கள் இவர் அரும் பணி ஆற்றிய இடமாகிய பெக்குவான நாட்டைத் தாக்கிச் சூறை கொண்டனர்; ஸெச்சீலின் குழந்தைகள் சிலரையும், லிவிங்°டன் பள்ளிப் பிள்ளைகளையும், பிறமக்ளையும் அடிமைகளாகக் கொண்டனர், லிவிங்°டன் குடிசையையும் குடியிருப்பையும் அடியோடு அழித்து ஒழித்தனர். பெக்குவானர் செல்வமெல்லாம் அழிந்து பலர் உயிர் இழந்தனர். எஞ்சிய சிலருடன் ஸெச்சீல் லிவிங்°டனிடம் வந்து முறையிட்டார். உயிர்வதைக்கு ஆளான அக்காத்தும் அம்மக்கள் நம்பிக்கையும் உறுதியும் பற்றும் கெடாமல் லிவிங்°டன் பணியைத் தாமே நடத்த முன்வந்த ஒன்றே இவர் மனப் புண்ணுக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது. நல்ல நோக்கம் லிவிங்°டன் ஸெச்சீலைத் தம்முடன் அழைத்துச் சென்று அவருக்கும் அவரைச் சேர்ந்தவருக்கும் ஏற்பட்ட தீமையைப்பற்றி விக்டோரிய பேரரசிடம் முறையிட முயன் றார். ஆனால் பக்கத் துணையின்றி அது வீணாயிற்று. இனி வடக்கே செல்லும் முயற்சியில் பூயர் எதிர்ப்பு இருக்கும் என்பதை லிவிங்°டன் அறிந்தார். எப்பாடுபட்டாயினும் ஆஃப்ரிக உள்நாட்டுப் பகுதியை நாகரிக உலகுடன் இணைத்தாலன்றி அடிமை வாணிகத்தை நிறுத்த முடியாது என்பதை இவர் கண்டார். ஆதலால் லிவிங்°டன் வடக்கு நோக்கி மீண்டும் பயணமானார். இம்முறை இவர் செல்ல விரும்பிய இடம் ஸெபிட்டுவேனின் ஆட்சிக்கு உட்பட்ட நாட்டின் வடகோடியில் உள்ள ‘லின்யாண்டி’2 ஆகும். பூயர்களுடன் உடன்படிக்கை பூயர்களுக்கும் ஆஃப்ரிக மக்களுக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பெரும்போர் நிகழ்ந்து வந்தது. இப்போரே ‘கா ஃபிரிப் போர்’3 எனப்படும். அப்போர் கீழ்க்கரைப் பக்கம் நடந்தது. ஆகவே அவ்வழி எளிதாயினும் அவர்கள் அதை விட்டகன்று கலஹாரிப் பாலைவனத்தின் வழியே மீட்டும் செல்லவேண்டியவராயினர். அப்படிச் சென்றும் பூயர்களுடன் பல கைகலப்புகள் நேர்ந்தன. போர் இறுதியில் பிரிட்டிஷார் அப்பகுதியில் பங்கு கொண்டதாலும் ‘பரோலாங்’4 வகுப்பினர் பெக்குவானர்களுடன் சேர்ந்ததனாலும் பூயர்கள் உடன்படிக்கை செய்து கொண்டனர். ஸெச்சீலின் பிள்ளைகளில் பூயர்களின் கொடுமைக்கு இரையாகாது எஞ்சிய சிலரும் பிற பெக்கு வானரும் தம் இனத்தவருடன் வந்து சேர்ந்தனர். ‘இறந்தவர் பிறந்தனர்’ என்ற அளவில் பெக்குவானர் இன்பக் கூத்தாடினர். புதிய இடத்தில் தொண்டுபுரிதல் வழியில் பல சிற்றாறுகள் வெள்ளமெடுத்துப் பெருகிச் சேறாக இரந்ததனாலும், வழிகாட்ட உதவிய ஆட்கள் கலகம் விளைத்ததினாலும் பயணம் மிகத் தாமதித்தது. அவர்கள் ‘சோப்’5 ஆற்றை அடைந்ததும் மகோலொலோ வகுப்பினர் இருந்த இடம் சென்று சேர்ந்தனர். ஸெபிட்டுவேனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன், ஆட்சிப் பொறுப்பை விரும் பாது விலங்கியதனால் அவன் தம்பியாகிய ஸெக்கெலெட்டு6 தலைவனானான். அவனும் லிவிங்°டனிடம் நட்புடையவ னாகவே இருந்து வந்தான். ஆனால், போர்ச்சுக்கீசிய அடிமை வாணிகர்கள் அவன் உடன்பிறந்தானாகிய இம்பெபி7 யை அவனுக்கு எதிராகத் தூண்டி ஆதரவு அளித்து வந்தார்கள். லிவிங்°டன் ஸெக்கெலெட்டை அடிமை வாணிகத்தை விட்டொழிக்கும்படி உறுதிமொழி கூறுவித்தார். மேலும் மற்ற வகுப்பினரையும் போர்ச்சுக்கீசியரையும் அடிமை வாணிகத்தைக் கைவிட்டு மகோலொலோக்களுடன் கால்நடை வாணிகம் புரியுமாறு தூண்டிவந்தார். இதன்மூலம் அவர்களுக்கு மேற்கில் இருந்த ‘லெச்சுலாடெப்’8 முதலிய வகுப்பினருடன் நட்பும் வாணிகத் தொடர்பும் மிகுந்தன. லிவிங்°டன் லின்யான்டியில் சிலநாள் தங்கி, மருத்துவப் பணியும் சமயப் பணியும் ஆற்றிவந்தார். அங் குள்ளவர்களிற் பலர் ஏழு அல்லது எட்டு பெண்களை மணந்தவர்கள். லிவிங்°டனின் சமயத்தை மேற்கொண் டால், ஒரு மனைவியைத் தவிர மற்றவரை நீக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வேண்டும். அது, அவர்களை லிவிங்°டன் சமயத்தில் சேராவண்ணம் நெடுநாள் தடுத்து வைத்தது. ஆயினும் அவர்களுடைய பொதுவாழ்வை லிவிங்°டனால் பல வகைகளில் மேம்படுத்த முடிந்தது. காய்ச்சல் நோய் லின்பான்டியிலும் மிகுதியாக இருந்தது. எனவே லிவிங்°டனும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். இவருடன் குடியேறிய மொகோலொலோக்களும் வரவரக் குறையலாயினர். எனவே லிவிங்°டன் மேல் கடற்கரை சென்று வெளிநாட்டுத் தொடர்பை வளர்க்க வேண்டும் என்ற தம் பழைய திட்டத்தை விரைவில் தொடங்கினார். அதன்படி அவர் ஸெக்கெலெட்டு தந்த ஆட்களுடனும், கால்நடைகள், உணவுப்பொருள்கள் ஆகியவற்றுடனும் 1853 ஆம் ஆண்டு நவம்பர் 11 ல் ‘லோவாண்டா’ நோக்கிப் புறப்பட்டார். புதியவர் உதவி லிவிங்°டன் செய்த பயணங்கள் அனைத்திலும் லோவாண்டாப் பயணமே மிகுந்த தொல்லைகளை உடையது. இவர் எருது ஒன்றின் மீது ஊர்ந்து ஆற்றைக் கடக்க முற்பட்டார். அப்பொழுது அந்த எருது இவரை நட்டாற்றில் விட்டு அகன்றது. ஸெகெலெட்டுவின் செல்வாக்கு பரவிய எல்லையைக் கடந்தபின் லிவிங்°டனுடன் இவரைச் சேர்ந்தோரும் ‘பாலோண்டாக்கள்’9 என்ற வகுப்பினரைக் கண்டனர். அவர்கள் தலைவன் ‘ஷின்டே’10 என்பவன் அவன் துணைத்தலைவியான ‘மானென்கோ’11 என்பவள் அவன் கீழிரந்து கிழக்கெல்லையை ஆண்டாள். அவள் ஆண்மையும் வீரமும் பிடிவாதமும் உடைய வீரப் பெண்மணி. அவள் லிவிங்°டன் கூட்டத்தார்க்கு உதவ முன்வந்தாள். ஆயினும் அவள் அவர்களை ஆற்றில் படகுமூலம் போகவிடாமல் தன் மனம் போல் கரை வழியாகப் போகச் செய்தாள். லிவிங்°டன் ஆட்கள் அவளுடன் ஒத்து நடக்க முடியாமல் அவலமுற்றனர். ஷின்டே நடு ஆஃப்ரிகாவிலேயே மிக்க ஆரவாரமான அரச நிலையுடையவன். அவன் தன் கொலு மண்டபத்தில் லிவிங்°டன் அவனுக்கு ஓர் எருதைப் பரிசளித்தார், பின் மகோலொலோவுடன் வாணிகம் செய்யத் தூண்டியபின், அவன் தந்த வழிகாட்டிகளுடன் காதெமா என்ற மற்றொரு தலைவனை அடைந்து அங்கும் அவனால் ஆதரிக்கப்பெற்றார். பல இடையூறுகள் இதன் பின், லிவிங்°டன் நோயாலும் கீழுள்ளோர் கலகங்களாலும் பல தொல்லைகள் அடைந்தார். பலமுறை தம் ஆட்களையே துப்பாக்கியால் அச்சுறுத்தி அடக்க வேண்டியவரானார். ‘சீபோக்’13 என்ற வகுப்பினரின் தலைவன் படைகளும் அவர்களை அழித்துப் பெருங் கொள்ளைபெற எண்ணினான். லிவிங்°டனும் இவர் ஆட் களும் காட்டிய ஆண்மையால் அவன் பணிந்துவிட்டான். எனினும் போகுமிடம் எங்கும் அவன் ஆட்கள் தொல்லை தந்துகொண்டே இருந்தனர், இறுதியில் லிவிங்°டனும் இவரைச் சேர்ந்தவர்களும் ஏப்ரல் மாதம் முதலாம் நாள் ‘ஹோவாங்ஹோ’14 என்ற ஆற்றை அணுகினர். அவ் வாற்றைக் கடக்கப் போர்ச்சுகீஸிய ஊர்த் தலைவன் ஒருவனின் உதவி வேண்டினர். அவனும் இவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளைக் கைம்மாறாகப் பெற எண்ணி னான். ஆயினும் லிவிங்°டன் முதலியோர் தம் மிடமள்ள பொருள்களை இழக்க மனமின்றி அவன் ஆட்களைச் சட்டை செய்யாமல் எதிர்த்துப் போராடினர்; இறுதியில் ‘ஸிப்ரியானோ’15 என்ற போர்ச்சுகீசிய படைத்தலைவன் உதவியால் ஆற்றைக் கடந்தனர். அவனே அவர்களுக்கு உணவும் நல்லிடமும் தந்ததுடன் மாகோலொலோக்களுக்கு விரைவில் ஊதியம் தரும் வாணிகமுறைகளைக் காட்டினான். அவன் உதவியாலேயே அவர்கள் எளிதில் எஞ்சிய தூரத்தையும் கடந்து லோவாண்டா சென்றார்கள். லோவாண்டாவில் லிவிங்°டன் ஸெகெலேட்டுவின் பரிசுகளுள் இரண்டு யானைத் தந்தங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. லிவிங்°டன் அப்பொருளைக் கொண்டு அவனுக்குக் குதிரைகளும், பிற பொருள்களும் வாங்கினர், அவர் மேலும் நடந்து இறுதியில் கடலைக் கண்டனர். அதுவரையில் கடலையே கண்டிராத மகோலொலோக்கள், கடலைக் கண்டதும் அடைந்த வியப் பிற்கு எல்லை இல்லை. லோவாண்டாவில் அடிமை வாணிக எதிர்ப்புப் பணியாளரான திரு. கெப்ரியேல்16 லிவிங்°டனை யும் மற்றுமள்ளவரையும் மிக அன்புடன் வரவேற்றார். லிவிங்°டனுக்குக் கப்பல் மாலுமி ஒருவரும் நன்கு பழக்க மானார். அவரது கப்பல் மூலமாகவே லிவிங்°டன் தம் பயணத்தில் எடுத்த படங்களை நில இயல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் காலக்கேட்டினால் அக்கப்பல் உடைந்துபோனதால் அவற்றை இவர் மீண்டும் வரைந்தனுப்ப வேண்டியதாயிற்று. கண்ணுக்கு இனிய காட்சி போர்ச்சுகீஸிய ஆஃப்ரிகாவில் லிவிங்°டன் கண்ட காட்சிகள் இவருக்கு மகிழ்ச்சி அளித்தன. போர்ச்சுகீஸியர் நாட்டு மக்களுடன் தங்குதடையின்றி மணஉறவுகொண்டு கலந்தனர். நாட்டு மக்களும் கல்வி, அலுவல், ஆட்சி இம் மூன்றிலும் வெள்ளையருடன் ஒன்றுபட்டுக் கலந்திருந்தனர். பூயர்கள் நாட்டுமக்களை எதிர்த்ததைக் காட்டிலும் ஆங்கிலேயர் பிரித்துவைத்து ஒப்புரவு காட்டியதை விட - இஃது எவ்வளவோ இனிய காட்சி என லிவிங்°டன் கருதினார். முன் இடத்திற்கு மீளல் திரும்பும் பயணத்தில் சீபோக்குகள் முன்னளவு தொல்லை தரவில்லை. ‘கடமா’17 ‘வின்டோ’18 ஆகியவர்கள் உறவினர்போல் களிப்புடன் வரவேற்றனர். லிவிங்°டனும் தாம் கொண்டுவந்த பழங்கள், உணவுப்பொருள்கள், இன்ப வாழ்வுப் பொருள்கள், ஆகியவற்றால் அவர்களை மகிழ்வித்தார். மகோலொலோக்கள், இறந்தவர் மீண்டும் வந்தாலொத்த மகிழ்ச்சி கொண்டுகூத்தாடி, எதிர்கொண்டு அழைத்தனர். அவர்களால் லிவிங்°டன், ஊர்வலம் வரும் அரசகுமரன் போல் பரோட்ஸாப் பள்ளத்தாக்கிலிருந்து19 லின்யான்டிவரை ஆரவாரமாகக் கொண்டு செல்லப்பட்டார். விக்டோரியா நீர்வீழ்ச்சி லின்யான்டியில் லிவிங்°டன் எட்டு வாரங்கள் தங்கினார். ‘உள்நாட்டுப் பகுதியை மேல்கடற்கரையுடன் இணைத்தாய் விட்டது. இனிக் கிழக்குப் பக்கத்துடனும் இணைப்பு ஏற்படுத்தவேண்டும்’ என எண்ணிய லிவிங்°டன், கிழக்கே கிலிமேன்20 நோக்கிப் புறப்பட்டார். அவர்களுடன் ஸெகெலெட்டு ஜாம்பெஸித் தலைநிலம் வரை வந்தான். லிவிங்°டனும் பிறரும் அவ்வாற்றின் வழியே சென்று அதில் உள்ள ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை அடைந்தனர். இப்பெரிய நீர்வீழ்ச்சியிலிருந்து நீர்த்திவலைகள் மிக உயர்ந்து தூண்கள் போல் மேலெழுந்து சென்றன. ஆகவே, அதனை அந்நாட்டு மக்கள் மோஸி- வா-துன்யா21, அஃதாவது ‘இரைச்சலிடும் நீராவி’ என்று பெயரிட்டனர். லிவிங்°டன் தம் நாட்டை, அந்நாள் ஆண்ட விக்டோரியா பேரரசியின் பெயரை இட்டு, அதனை ‘விக்டோரியா நீர்வீழ்ச்சி’22 என்ற அழைத்தனர். அஃது இன்றளவும் அப்பெயராலேயே வழங்குகிறது. புதிய காட்சிகள் அந்நீர்வீழ்ச்சியின் இருபுறங்களையும் அடர்ந்து உயர்ந்த மரங்கள் அழகுசெய்தன. தென் ஆஃப்ரிகாவில் லிவிங்°டன் கண்ட காட்சிகள் எல்லாம் பரந்த பாலைவனங்களும் புதர்களும் சதுப்பு நிலங்களும் மங்கலான தோற்றமுடைய குன்றுகளுமே ஆம். ஆனால் இதற்கு மாறாக, லிவிங்°டன் கண்முன் இயற்கை, பன்னிறத் தோசை விரித்தாடும் பச்சை மயில்போல் தன் முழு அழகுடன் தோற்றமளித்த முதலிடம் இதுவே. லிவிங்°டன் சிறு படகுகளில் சென்று நீர் வீழ்ச்சியை அடுத்து உள்ள தீவில் இறங்கினார். அதனுள் பாறையைத் துளைத்தோடும் கிளை நீர் வீழ்ச்சிகளைக் கண்டு வியந்தார். பருத்த தூண்கள் உருவில் தண்ணீர் நிலத்தைக் கிழித்து பாதாளத்தில் செல்வது போன்ற அக்காட்சி அச்சந் தருவதாக இருந்தது. கிழக்குப் பகுதி குடிகள் மேற்றிசையில் வாழ்ந்த மக்களைப்போலவே கீழ்த் திசையிலும் பலவகை முரட்டு வகுப்பினர் தொல்லை தர இருந்தனர். லிவிங்°டன் சில சமயம் அச்சுறுத்தலாலும், சில சமயம் நயத்தாலும், சில சமயம் தம்மிடத்திலுள்ள அரிய நாகரிகப் பொருள்களான கடிகாரம், வெயில் கண்ணாடி முதலியவற்றால் வேடிக்கை காட்டுவதாலும் அவர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டார். போர்ச்சுகீஸியருடன் அண்மைவரைப் போரிட்ட மக்கள் சிலர், லிவிங்°டனைப் போர்ச்சுக்கீஸியரென நினைத்துப் பகைத்தனர். லிவிங்°டன் தம் தோலின் தூய வெண்மையைக் காட்டித் தாம் வேறு நாட்டினர் என்பதை உணர்த்தினார். அவர்கள் “ஆ! தூய வெண்ணிறம் கறுப்புடன் நட்புடையது; கலப்பு நிறமே எங்களைப் பகைப்பது” என்ற கூறி நட்புக்கொண்டார்கள். லிவிங்°டன் போர்ச்சுகீஸிய எல்லை அடைந்ததும், மேலைப் போர்ச்சுக்கீஸியர் சிலரிடமிருந்து பெற்ற கடிதங்கள் அவருக்கு மேஜர் ஹிக்கார்டு23 என்பவர்; அவர் லிவிங்°டன் முதலியோருக்கு உணவு அனுப்பி வரவேற்றார். லிவிங்°டன் தம்முடன் வந்த மகோலெலோக்களை இங்கே உள்ள டெட்டி24 என்ற இடத்தில் தங்கச் செய்தனர், பிறகு கடல் வழியாக ஸென்னாவுக்கும்25 அங்கிருந்து மௌரிடிய ஸுக்கும்26 சென்றார். இவருடன் சென்ற ‘ஸெக்வேபு’27 என்ற மகோலொலோ வகுப்பினன் கடல், கப்பல் முதலிய கண்காணாக் காட்சியைக் கண்ட மட்டற்ற மகிழ்ச்சியால் நிலைதடுமாறிப் பித்தனாகி இருந்தான். மற்ற மகோலொ லோக்கள் விறகு வெட்டி தல் முதலிய தொழிலில் ஈடுபட்டு, டெட்டியிலேயே தங்கிப் பொருள் ஈட்டி இன்புடன் வாழ்ந்தனர். லிவிங்°டன் மௌரிடியஸில் ஒரு திங்கள் தங்கினார். ஆஃப்ரிகப் பயணத்தினிமையே நோய்ப்பட்டு உப்பியிருந்த தமது நுரையீரலை இவர் அறுவை மருத்துவத்தால் குணப் டுத்திக் கொண்டார். அதன்பின் ‘பி’ அண்ட் ‘ஓ’ கழகத்திற்கு உரிய கண்டியா28 என்ற கப்பலில் தாய் நாடு செல்லப் புறப் பட்டார். அடிக்குறிப்புகள் 1. க்ஷடிநசள 2. டுiலேயவேi 3. மயமசைறயச 4. க்ஷயசடிடடிபே 5. சுiஎநச உhடிநெ 6. ளுநமநடநவர 7. ஆயீநயீந 8. டுடியனேடிள 8. க்ஷடிடடினேய 10. ளுhiவேந 11. ஆயநேமேடி 12. முயவாநஅய 13. ஊhநbடிபரந 14. ழடியபோடி 15. ஊலயீசiஅடி 16. ஆச. ழுயசெநைட 17. முயனயஅய 18. ஏiவேடி 19. க்ஷயசடிவளயஎயடடநல 20. ணுரடையஅயநே 21. ஆடிளi-ஏய-கூரலேய 22. ஏiஉவடிசயை குயடடள 23. ஆயதடிச ளுiஉஉயசன 24. கூநவவந 25. ஊநnயே 26. ஆயரசவைரைள 27. ளுநளூரநரெ 27. ஞயனேடி ஊடிஅயீயபே, முhயனேயை 12. கிழக்கு ஆஃப்ரிகா தாய்நாட்டில் சிறப்புப் பெறுதல் லிவிங்°டன் பயணம் செய்த கப்பல், இங்கிலாந்து செல்லும் வழியில் உடைந்துபோயிற்று. அதனால் இவர், வேறு கப்பலேறி மார்சேல்°1, பாரி° ஆகிய இடங்களின் வழியாக வந்து சேர்ந்தார். தாய் நாட்டில் மக்கள் ஆயிரக் கணக்கில் திரள் திரளாக வந்து இவரைக் கண்டனர். மன்னர் நில இயல் ஆராய்ச்சிக் கழகம்2, லண்டன் சமயப் பணிக் கழகம்3 முதலிய கழகங்கள் லிவிங்°டனுக்குப் பாராட்டுகள் அளித்து, பரிசுகளும், தங்கப்பதக்கங்களும் தந்தன. லண்டன், தன் நகர உரிமையை இவருக்குத் தங்கப் பேழையில் வைத்து அளித்தது. கிளா°கோ நகரம், உரிமை அளித்து 2000 பொன்னும் தந்தது, எடின்பரோ, லீட்°, லிவர்பூல், பிர்மிங்ஹாம் முதலிய நகரங்களில் பாராட்டுகள் நடைபெறுகின்றன. ஆக்°ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள், அறிஞர் பட்டங்கள் நல்கின. இவ்வளவிற்கும் மேலாக அந்நாளைய ஆங்கிலநாட்டு முதன் மந்திரியான பாமர்°டன்4 லிவிங்°டனைக் கிழக்கு ஆஃப்பிரிகாவின் அயல்நாட்டு அமைச்சராக5 அமர்த்திப் பெருமைப்படுத்தினார். பிரயாணம் பற்றிய முதல்நூல் லிவிங்°டனின் தாய்நாட்டு நண்பர்கள் பெருந்தகை ஆர். மர்ச்சிஸன் 6, திரு . ஜான் மரே 7 என்போராவர். இவர்கள் லிவிங்°டனை நோக்கி, “தாங்கள் மீண்டும் ஆஃப்ரிகா வுக்குப் பயணமாகுமுன், முன்செய்த ஆஃப்ரிகப் பயணங் களைப் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும்” என வேண்டினர். லிவிங்°டனும் அவ்வறே எழுதினர். இந்நூல் இவருக்கு நல்ல வருவாய் தந்தது. ஆஃப்ரிகா மீளல் இதுகாறும் உடல் நலத்தின் பொருட்டும் குழந்தையின் கல்வியின் பொருட்டும் லிவிங்°டனிடமிருந்து பிரிந்து, இங்கிலாந்தில் தங்கியிருந்த திருவாட்டி லிவிங்°டன், இனிமேலும் பிரிந்திருக்க மனமின்றி, உடன்செல்ல உறுதி கொண்டார். எனவே அவர்கள், மூத்த பிள்ளைகள் மூவரை யும் தாய்நாட்டில் தங்கச்செய்து, கடைசிப் புதல்வனான ஆ°வெலுடன்8 1859 ஆம் ஆண்டு மார்ச் 10 இல் பெர்ல் (முத்து) என்ற கப்பலில் ஆஃப்ரிகாவுக்குப் பயணமாயினர். உடன் சென்ற ஆராய்ச்சியாளர்கள் வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில் லிவிங்°டன் ஏராளமான ஆட்களும் தளவாடங்களும் அனுப்ப அரசாங்கம் எண்ணிக் கொண்டிருந்தது. ஆனால், ‘உண்மைப் பணிக்கு ஆரவாரம் கால்கட்டு ஆகும்’ என லிவிங்°டன் எண்ணினார். ஆகவே அவர் அறிவியல் வல்லுநர் சிலருடன் சிற்சில பொரள்களை மட்டும் ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார். அவ்வல்லுநர்களுள் அறிஞர்கர்க்9 என்ற செடிநூற் புலமையாளர்10 திரு. ஸி. லிவிங்°டன் என்ற மண்கூற்று நூலறிஞர் 11 அவருக்குத் துணையாக திரு. ஆர். தார்ன்டன்12 என்ற மற்றொருவர் ஆகிய மூவர் இடம் பெற்றனர். அனைவரும் ஸீராலோனைக்13 கடந்து நன் னம்பிக்கை முனைவருமுன்னர் லிவிங்°டனின் மனைவி மீட்டும் உடல் நலிவுற்றார். எனவே, லிவிங்°டன் அவரை அவர் பெற்றோரிடம் விட்டு, மேற்சென்று கிழக்கு ஆஃப்ரிகக் கரையைச் செர்ந்தார். ஆராய்ச்சி செய்தல் லிவிங்°டனுடன் நன்னம்பிக்கை அரசாங்க அறிவியல் வல்லுநர் சிலர் சென்றனர், லிவிங்°டன் அவர்களின் உதவி யால் ஃஜாம்பஸி14 யின் விழுவாயில் பிரியும் நான்கு கால் களையும் நன்கு ஆராய்ந்தனர்; அவற்றுள் ‘கொங்கோன்’15 என்ற கிளையைத் தேர்ந்தனர். பின் அவர்கள் ஆற்றுப் பயணத்திற்கெனத் தாங்கள் கொண்டுவந்திருந்த ‘மாராபர்ட்’16 என்ற மரக்கலத்தின் பிரித்த பகுதிகளை மீட்டும் இணைத்து, அக்கிளையாற்றின் வழியே மேல் நோக்கிச் சென்று, டெட்டியை அடைந்தனர். லிவிங்°டன் அங்கே முன்னர் விட்டுச் சென்ற மகோலொலோக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். நயாஸா ஏரி அதன்பின் லிவிங்°டன் தம் நண்பருடன் ஃஜாம்பெஸி யின் மற்றொரு கிளையாகிய ‘ஷீரே’17 ஆற்றை ஆராய்ந் துணரும் எண்ணத்துடன் பயணம் செய்தார். அவர்கள் இங்கே டிங்கேன்18 ஸிபிஸா19 முதலிய நாட்டுத் தலைவர்களுடன் நட்புப் பூண்டு இறுதியில் ஏப்ரல் 18இல் ‘ஷிர்வா’20 என்ற ஏரியைக் கண்டுபிடித்தனர். அதன்பின் அவர்கள் மீண்டும் கடற்கரை வந்து சேர்ந்தனர், படகு செப்பனிடப்பட்டது; பின் மகோலொலோக்கள் சிலரை வழிகாட்டியாகக் கொண்டு, மேலும் வடக்கே பயணம் செய்து செப்டம்பர் 16 ல் ‘நயாஸா’ ஏரியைக்21 கண்டனர். இவ்விரண்டு ஏரிகளையும் முதல்முதல் கண்ட ஆங்கிலேயர்கள் அவர்களேயாவர். இன்பமும் துன்பமும் ‘நயாஸா’ ஏரி 200 கல் அளவு நீண்டு கிடந்தது. அதனைச் சுற்றிலும் உள்ள இடம் மிகச் செழிப்பாக இருந்தது. இவ்விடங்களில் உள்ள மக்கள் பெரும்பாலும் அமைதியான வாழ்க்கை உடையவர்களே யாவர். ஆயினும் அராபியர் வடக்கிலிருந்து இங்கு வந்து நடத்திய அடிமை வாணிகத்தின் காரணமாக அவர்களிடையே அச்சமும், ஐயப்பாடும், பூசலும் நிறைந்திருந்தன. லிவிங்°டன் கிழக்காஃப்ரிக்காவில் தங்கிய காலத்தில் பலமுறை இந்த ஏரியை அணுகிப் பொறுமையோடு முற்றிலும் ஆராய்ந்தார்; அதைப்பற்றிய படங்களும் விவரங்களும் சேர்த்தார். லிவிங்°டன் அடிமை வாணிகத்தை நிறுத்தி இப்பக்கங்களில் அமைதியும், நல்வாழ்வும் ஏற்படுத்த எவ்வளவோ முயன்றும் அம் முயற்சிகள் எல்லாம் அப்பொழுதைக்கு வீணாயின. மேலும், அவர்கள் சுவட்டைப் பின்பற்றிப் போர்ச்சுகீஸியர் புகுந்து அடிமை வாணிகத்தை வளர்க்கவும் நேர்ந்தது. அதனால் லிவிங்°டன் முதலில் செல்லும்போது நறுஞ்சோலைகளாக விளங்கிய இடங்கள், மறுமுறை செல்கையில் கண்ணீரும் துயரும் மிக்க ‘நன்கடாய்’த் திகழ்ந்தன. ஆயினும் நாளடைவில் ஆங்கில ஆட்சியும் நாகரிகமும் புகுந்து அடிமை அறவே ஒழியும் வகையில் லிவிங்°டன் பணி, ஒரு வழிகாட்டியாகவே அமைந்தது. டெட்டியில் தங்கிய மகோலொலோக்களில் பலர், அம்மை நோயால் தொல்லைப்பட்டு இறந்தனர். அவர்களை மீட்டும் தம் நாட்டுக்குக் கொண்டு வருவதாக லிவிங்°டன் ஸெகெலெட்டுக்கு உறுதி கூறியிருந்தார். அதன்படி இவர் அவர்களை உடன் கொண்டு ஃஜாம்பெஸி ஆற்றில் மேல் நோக்கிச் சென்று ‘ஷெஷெகெ’23 என்னும் இடத்தில் ஸெகெலெட்டைக் கண்டனர். அவன் தொழுநோய்கண்டு தன் மக்களிடமிருந்து பிரிந்திருந்தான். அவன் லிவிங்°டனின் அறிவுரைகளை மறந்து, மக்களிடை வேற்றுமை காட்டினான்; தன் தந்தை அமைத்த பேரரசையும் அவன் சீர்குலையவிட்டிருந்தான். லிவிங்°டன் அவன் நோய்க்கு மருந்து தந்தும் மற்றிலும் குணம் ஏற்படவில்லை. ஆனால் லிவிங்°டனின் கூட்டுறவால் அவன் மனஅமைதி பெற்றான். மகொலொலோக்கள் இழந்த தாயை மீட்டும் பெற்ற சேய்கள் போல லிவிங்°டனை வரவேற்று மகிழ்ச்சி எய்தினார்கள். நற்பணியில் தோல்வி அவர்கள் மறுபடியும் டெட்டிக்கு வந்தனர். அப் போதும் ஆங்கில நாட்டுப் பல்கலைக் கழகங்களின் சார்பில் ஓர் ஆங்கில சமயப் பணிக்குழாம் அங்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களைக்கண்ட லிவிங்°டன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். லிவிங்°டனும் இக்குழாத்தினரும் ஒப்பற்ற நல்லெண்ணத்துடன் ஒத்துழைத்து ஆஃப்ரிக மக்களை ஈடேற்றவும், ஒத்துழைத்து ஆஃப்ரிக மக்களை ஈடேற்றவும், அடிமையை ஒழிக்கவும் அரும்பாடுபட்டனர். ஆனால் இறைவன் திருவிளையாடல் ‘இப்போது அவர்களுக்கு எதிராக இருந்தது. அவர்கள் நற்பணியின் தோல்வி, லிவிங்°டன் புகழை அந்நிலையில் பழிப்புயலுக்கு ஆளாக்கியது; இடையூறும் விளைவித்து விட்டது. ‘மங்கஞ்சா’23 என்ற ஒரு வகுப்பினர் லிவிங்°டனிடம் நட்புக் கொண்டனர்; ‘மகோமெரோ’24 என்ற ஊரில் சமயப்பணி நிலையம் அமைக்க இடந்தந்தனர். இங்கிலாந்திலிருந்து வந்த சமயக் குழத்தின் தலைவர் இவ்விடத்திலிருந்து பணியாற்ற லானார், ஆனால் மங்கஞ்சாக்களை ‘அஜாவா’25 என்ற வகுப்பினர் அடிக்கடி தாக்கினர். லிவிங்°டன் இப் போர்களில் ஈடுபட விரும்பவில்லை. இவர் சமயத் தலைவரையும் இவ்வகையில் எச்சரித்திருந்தார். ஆனால் அஜாவாக்களால் நன்மக்கள் துன்புறுவதைக் காணப்பெறாத சமயத்தலைவர், மங்கஞ்சாக்கள் பக்கம் நின்று உதவினர். இப்போர்களில் ஈடுபட்டும், நோய்வாய்ப்பட்டும் சமயத்தலைவர் குழாத்தில் ஒருவர் நீங்க மற்றவர் அனைவரும் இறந்தனர். மீண்டுவர ஆணை ஷீரேயின் வடக்கிலிருந்த “ரோவுமா’26 ஆற்றை ஆராய்வதில் ஈடுபட்டிருந்து மீண்ட லிவிங்°டன் இச் செய்தியைக் கேட்டு மனம் உடைந்தார். பின் கடற்கரையில் வந்து சேர்ந்ததும் அடுத்த கப்பலில் வந்த செல்வி மக்கென்ஸி27 முதலிய நண்பர்களைக் கண்டார்; அவர் கொண்டிருந்த கடிதம் மூலம் அரசாங்கத்தார் தம் பணியினின்று தம்மை நீக்கி மீண்டுவரப் பணித்ததாக அறிந்தார். மனைவியார் இறப்பு ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்ற முதுமொழிப்படி இத்துயரச் செய்தியை அடுத்து லிவிங்°டன் வாழ்வில் மற்றோர் இடியும் வீழ்ந்தது. செல்வி மக்கென்ஸியுடன் நன்னம்பிக்கையில் சில நாள் இன்ப வாழ்வில் குலவியிருந்த லிவிங்°டன் மனைவியார், அவ்வாண்டு ஏப்ரல் 27 இல் திடுமென மறைவுற்றார். ஆயிரம் முறை எமனை எதிர்த்துப் போரிட்ட ஆண் சிங்கமான லிவிங்°டன், அப்போது சிறு பிள்ளைபோல் தேம்பித் தேம்பி அழுதனராம். கலங்கா உள்ளம் லிவிங்°டனுக்கு இடையில் வந்த புகழ்ச் செல்வியும், இவர் நூலால் வந்த திருச்செல்வியும் இவரை விட்டு நீங்கினர். இப்போது இவர் வருவாய் அற்றுக் கடன் பட்டார். இந் நிலையில் இவர், தம்மிடமிருந்த ‘நயஸா’ என்ற சிறு கப்பலை விற்க எண்ணிப் பம்பாய்க்குச் சென்றார். அங்கு விற்க முடியாது போகவே, மீண்டும் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தார். லிவிங்°டன் மறுமுறையும் பம்பாய்க்குச் சென்று அக்கப்பலை அழிவிலையாக (நஷ்டமாக)2600 பொன்னுக்கு விற்றார். ஆயின் அந்தோ! அப்பொருளும் இவருக்குக் கிட்டாமல், அப்பொருளை விட்டுவைத்த இந்தியப் பொருள் நிலையம் முடிவுற்றதாம்! இத்தனை தீமைகளிடையேயும் மனங் கலங்காது தம் பணியிலே உறுதி தவறாதிருந்த லிவிங்°டன் மன உரத்தின் தன்மையை என்னென்பது! ‘மெய்த்திரு வந்துற்றபோதும் வெந்துயர்வந்துற்ற போதும், ஒத்திருக்கும் உள்ளத்து உரவோர்’ என்ற பெரியார் இயல்பிற்கு இவர் ஓர் எடுத்துக் காட்டாயினர். அடிக்குறிப்புகள் 1. Marseilles 2. royal georaphical society 3. London Mission Society 4. Lord Palmerston 5. Consul of east, 6. Sir R. Murchison 7. John Murray 8. Oswell 9. Dr. Kirk, 10. Botanist 11. Gelogist 12. R. Thorontn 13 T. Seeoateon, 14. River Zambest 15. Kongone 16. Marobert 17. Rivershire 18. Tingane 19. Chibisa 20. Lake shirwa 21. Lake Nyasa 22. Sheshake 23. Mangancha 24. Makomero 25. Ajwo 26. River Rovama 27. Miss Mackensi 13. மூன்றாம் பிரயாணம் அழைத்தமைக்குக் காரணம் லிவிங்°டன் இங்கிலாந்துக்குப் போன ஆண்டு, பாமர்°டன் பெருமகனார் ‘அமைச்சர் குழு’ ஆட்சியின் இறுதி ஆண்டாக இருந்தது. பாமர்°டன் எப்போதும்போல அவர் மீது விருப்பம் உடையவராகவே இருந்தார். ஆயினும், ‘போர்ச்சுகீஸிய அரசாங்கம் உங்கள் செயல்கள் எங்களுக்கு மாறாக உள்ளன என்று கூறியதனாலேயே உங்களை மீட்டும் அழைக்க வேண்டியதாயிற்று’ என்ற அவர் கூறினார். பாமர்°டன் பெருமாட்டி லிவிங்°டனுக்குத் தேநீர் விருந்தளித்துப் பாராட்டினார். இரண்டாம் பிரயாணம் பற்றிய நூல் லிவிங்°டன் தம் குழந்தைகளுடன், °காட்லாந்தின் பழம் பெருங் குடியினருள் ஒருவரான அர்கைல் கோமான்1 அழைப்பை ஏற்று அவரூராகிய இன்வெராரி2 சென்றார். அங்கே அக்கோமானின் தூண்டுதலால் தம் இரண்டாம் முறைப் பயணம் குறித்து நூல் ஒன்று எழுதினார் அடிமை வாணிகம் ஒழியவேண்டும் 1864 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் ‘பாத்’3 என்னும் இடத்தில் லிவிங்°டன் பேருரை ஆற்றினார். அப்போது, ‘அடிமை வாணிகத்தில் மூழ்கி அழியும் கிக்காஃப்ரிக மக்களை ஈடேற்றும் பணியில் ஆங்கில இளைஞர் பெருவாரியாக முனையவேண்டும்”எனக் கூறினார். அக்கூற்று, போர்ச்கீஸிய அரசியலார் பகைமையை இன்னும் பெருக்குவதை இவர் நன்கு அறிவார். ஆயினும் நற்காரியத்தில் யாவர் பகைமையையும் இவர் பொருட்படுத்தியதில்லை. இதன் பயனாக அதன்பின் ஆஃப்ரிகாவில் இவர் பணியெல்லாம் போர்ச்சுகீஸியரின் கைக்கெட்டாத் தொலைவிலிருக்கவேண்டி வந்தது. ‘புதுநிலம் காண்பவர்’ பதவி இத்தகைய அரசியல் சிக்கல்கள் இனி லிவிங்°டன் பணியைத் தாக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன், நில இயலாராய்ச்சிக் கழகத்தைச் சார்ந்த டாடரிக்கெருந் தகையார்4, புதுநிலங்காண்பவர்5 என்ற முறையிலேயே இவரை அனுப்ப ஏற்பாடு செய்தார். இம்முறை லிவிங்°டன் ஆராய்ச்சிக்கு உட்பட்ட இடங்கள் ரோவுமா ஆறு, தங்கனீகா ஏரி 6 ஆகியவையேயாகும். இப்பகுதியைக் கடற்கரை வழிகளாலோ அல்லது வடக்கே நைல் ஆற்றுப்7 பகுதியுடனோ இணைக்க வழிகாணும் படி லிவிங்°டன் வேண்டப்பட்டார். அவர் பயணம் தொடங்குமுன் அரசியல் பேரவையில் வருங்காலப் பணிபற்றியும் தம் கோட்பாடு பற்றியும் பேசினார். பின் ஆக்°ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது இவர் தம் தாயார் மறைவுற்றதாகக் கேட்டு இறுதிக் கடனைச் சென்று ஆற்றினார். வறுமையே தோழன் லிவிங்°டனின் பயணச் செலவிற்காக அரசாங்கத்தார் 500 பொன்னும், நில ஆராய்ச்சிக் கழகத்தார் 500 பொன்னும், நண்பரொருவர் 1000 பொன்னும் தந்தனர். அயல்நாட்டு அமைச்சர் என்ற பெயர் இருந்தும். அப்போது அதற்கு ஊதியம் இல்லாததால் இத்தொகை இவருக்குப் போதாதாகவே இருந்தது. ‘நயஸா’ கப்பல் விற்ற சிறு தொகையை பம்பாயில் இழந்த பின் இவர் துணிந்து வறுமையையே தமது தோழனாகக்கொண்டு ஆஃப்ரிகாவுக்குச் செல்ல எண்ணினார். ஆஃப்ரிகாவை அடைதல் லிவிங்°டன், பென்குவின்8 என்ற கப்பலில் பயணம் தொடங்கினார். இந்தியாவில் நாசிக்கிலிருந்து உடன்வந்த ஒருசில தொண்ர்களுடன் மார்ச் திங்களின் இறுதியில் ‘ரோவுமா’ வின் கரையில் இறங்கினார். இவர் குழாத்தில் இருந்தவர் ஏறக்குறைய முப்பத்தறுவர் ஆவர். ஆஃப்ரிகத் தட்ப வெப்ப நிலையிலும் அங்குள்ள ‘செட்சி’9 என்ற எறும்புவகையினிடையிலும் எவ்வெவ் விலங்குகள் வாழமுடியும் என்று காண, லிவிங்°டன் இந்தியாவிலிருந்து ஒட்டைகள், எருமைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்திருந்தார். அராபியர் தொல்லை ஆக°டு 8 இல் லிவிங்°டன் நயாஸா ஏரியை அடைந்தார். அராபியர் இவரை முற்றிலும் பகைத்து உதுக் கினர். ஏரியின் படகுகள் அனைத்தும் அவர்கள் கையில இருந்தமையால், லிவிங்°டன் ஏரியைக் கடக்க முடியாமல் , தம்மைச் சேர்ந்தவருடன் தெற்குப் பக்கமாகச் சுற்றிச் சென்றார். அராபியர்கள், ஆஃப்ரிகத் தலைவர்களை ஒருவர்க் கெதிராக ஒருவரைத் தூண்டிவந்ததனால் ஷீரே ஆறு ஏரியிலிருந்து வெளிவரும் இடத்தில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவர்களின் தூண்டுதலாலே லிவிங்°டன் குழாத்திலுள்ள பலர் மனங்ககெட்டு லிவிங்°டனைவிட்டு ஃஜான்ஸிபாருக்குச் 10 சென்றனர் அங்குச் சென்ற அவர்கள் லிவிங்°டன் இறந்துவிட்டதாகக் கதைகட்டி விட்டார்கள். அதனைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நில ஆராய்ச்சிக் கழகம் உண்மையைக் கண்டறிய ‘யங்’11 என்பவரை அனுப்பிற்று, பிறகு யங் எழுதிய அறிக்கைமூலம் அக்கழகம் உண்மையை உணர்ந்தது. தங்கனீகா ஏரி லிவிங்°டன் இதன் பின் வடமேற்காகத் ‘தங்கனீகா’ ஏரி நோக்கிச் சென்றார். உணவுப் பொருள்கள் செலவாய் விட்டதால் நாட்டச் சோளமும் ஆட்டுப் பாலும் மட்டுமே அருந்தும் நிலைமை ஏற்பட்டது. லிவிங்°டன், ஆட்கள் இல்லாமையால் மூட்டை சுமக்கக் கூலி ஆள் அமர்த்தினர். இதற்கும் கையிலிருந்த பணம் போதவில்லை. டிசம்பர் திங்களில் லிவிங்°டனே நோய்வாய்ப்பட்டார். இவரின் கால்நடைகளும் மருந்துகளும் அடிக்கடி திருடுபோயின. இத்தனை தொல்லை களுக்கு இடையில், லிவிங்°டன் ஏப்ரலில் லியெம்பா ஏரியை12 அடைந்தார். இஃது உண்மையில் தங்கனீகா ஏரியின் தென்கோடியே என்பது பின்னால் தெரியவந்தது. மொயிரோ பங்வியோலோ ஏரிகள் லியெம்பாப் பகுதியில் போர்ப்புயல் பரந்திருந்ததால் லிவிங்°டன் தெற்குநோக்கித் திரும்பினார். நைல் ஆற்றுத் தலையிடமாகக் கருதப்பட்ட மொயிரோ ஏரியை 13 நாடினார். ‘உபுங்கு’ என்ற குழுவினர் லிவிங்°டனைப் பெருந்தன்மை யுடன் நடத்தினர். ‘முகமது மொகாரிப்’14 என்னும் அடிமை வணிகன் அராயினாக இருந்தும் லிவிங்°டனுக்கு வழித் துணைவனாக இருந்து உதவினான். அவன் அளித்த விருந்து, நெடுநாள் நல்லணவு இல்லாதிருந்த லிவிங்°டனுக்கு அமுதமாக இருந்தது. 1867 ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் லிவிங்°டனும் மற்றையோரும் மோயிரோ ஏரியை அடைந்தார்கள். இந்த ஏரி 40 கல் அகலம் உடையதாக இருந்தது. லிவிங்°டன் அதனை நன்கு ஆராய்ந்தார். லிவிங்°டன் இப்போது மேற்குறிப்பிட்ட ஏரியின் தெற்கில் அதனினும் பெரிதெனக் கொள்ளப் பட்ட பங்வியோலோ15 என்னும் ஏறியைக்காண மீட்டும் தெற்கே சென்றார். மொகாரிப் இதனைத் தடுக்கவும் எதிர்க்கவும் முயன்றும் பயன் படவில்லை. லிவிங்°டன் ஜுலை 18 இல் அந்த ஏரியைக் கண்டு அதன் அழகிய பரப்பை நோக்கி மகிழ்ந்தார். அதன்பின் இவர் மீண்டும் அராபியருடன் வந்து சேர்ந்தார். காங்கோவின் கிளையாறு லிவிங்°டன் லுவாலாபா ஆறு16 நைல் ஆற்றில் சென்று சேரும் கிளைதானா என்று காண விரும்பினார். எனவே, இவர் லுவாலாபா ஆற்றின் வாயாகச் சென்று அக்டோபர் 25 இல் மனியூமாக்கள்17 நாட்டின் தலைநகரான பம்பார்18 என்னும் இடத்தை அடைந்தார். இங்குத் தம் ஆட்களுக்காவும் கடிதங்களுக் காகவும் சிலநாள் காத்திருந்தார். இறுதியில் ஆட்களில் ஒரு சிலரே வந்தனர். கடிதங்களில் 40 வராமல் தடுக்கப்பட்டு, ஒன்றே வந்து சேர்ந்தது. வந்த மக்களும் அளவில்லாத மறையில் சம்பளம் கோரிப் பயணத்தைத் தடுக்கப் பார்த்தார்கள். லிவிங்°டன், பயத்தாலும் நயத்தாலும் வர்களைச்சமாளித்துக் கொண்டு ஃபிப்ரவரியில் புறப்பட்டச் சென்றார். அதன் பயனாக லுவாலாபா ஆறு நைலின் கிளையாறு அன்று; காங்கோவின் கிளையே என்பது உறுதிப்பட்டது. லிவிங்°டனும் அடிமைகளும் லிவிங்°டன், அடிமைகளை விடுவிக்க முயல்பவ ராயினும் சிலசமயம் அடிமைகள் நடத்தை இவர் மனத்தைப் புண்படுத்துவதாக இருந்தது. அடிமைகள், தாங்கள் அடிமை யாக இருக்கும்போதே தங்கள் தலைவர்கள் முன்னிலையில், தமக்கு உணவு விற்ற வணிகர்களை அடிக்கவும் அவர்கள் குhந்தைகளைப் புடைக்கவும் துணிந்தார். அடிமைத் தளையை அகற்றப் பாடுபட்ட வீரராகிய லிவிங்°டன், துப்பாக்கி நீட்டி அவ்வடிமைகளை அச்சுறுத்தித் திருத்த வேண்டியதாயிற்று. இவரிடம் அனுப்பப் பட்டவர்கள் பிரிட்டிஷ் குடிமக்களான பனியர்கலின்19 அடிமைகள் ஆவர். அவர்களும் பொய், சூது, வங்சம், கொடுமை ஆகியவற்றுக்கு உறைவிடமாக இருந்து, பெருந்தொல்லை கொடுத்தனர். லிவிங்°டனைவிடச் சற்றுக் குறைந்த அருளுள்ம் உடையவர்கள் சமயப்பணித் தலைவர்களாக இருப்பன், இதனைக்கண்டு, ‘அவர்களின் அடிமைத்தளை சரியானதே’ என்றம் கூறியிருப்பர். ஆனால் லிவிங்°டன் இக்கொடுமைகளைச் செயலில் கண்டித்துக்கொண்டே, மனத்தில் அவர்களின் அன்மிக இழிநிலைக்கு இரங்கினார். முறைதவறித் தவறிழைக்கும் தனையனைத் தந்தை ஒறுக்கும்போதும் தந்தையின் அன்பு மாறாதன்றோ? அறிவற்ற அடிமைகள் லிவிங்°டனின் வேலையாட்கள் விடுதலை பெற்ற அடிமைகளாயினும் இவரையே கொல்லச் சதிசெய்தனர். ‘அபெட்’20 என்ற ஒருவன் உண்மையுள்ளவனாக இருந்து முன்னெச்சரிக்கை தந்ததினால் லிவிங்°டன் விழிப்பாக இருந்தார். இவர், அவர்களை வேலையிலிரந்து நீக்க முன் வந்ததும் அவர்கள் லிவிங்°டன் காலில் விழுந்து மன்னிப்புப் பெற்றனர். ஆனால் அவர்கள் மன்னிப்புக்கு உரியவரல்லர் என்பது விரைவில் தெரியவந்தது. டுகும்பெ21 என்ற ஒருவர் அராபிய நண்பர் சிலருடன் லிவிங்°டனைக் கண்டனர். லிவிங்°டனுக்க நாட்டில் படகு கிடைக்காததின் காரணம் அவ்வேலையாட்கள் லிவிங்°டனைப் பற்றிப் பொல்லாங்கு கூறிப் பழி பரப்பியதே என்று அவர் காட்டினர். அதன்பின் லிவிங்°டன் அவர்களை வேலையினின்றும் அகற்றி, டுகும்பெ என்பவரிடம் 2000 வெள்ளி (400 பொன்) கொடுத்துப் பத்து ஆட்கள் பெற்றார். °டான்லியின் வருகை லிவிங்°டன் மீண்டும் உஜ்ஜியை அடைந்தார் இங்கே அராபியரும் பிறரும் இவரை நண்பராக நடத்தினர். எனினும் பலர் இவர் பொருள்களைத் திருடினர். உடலும் தளர்ந்து உள்ளத்தில் உரமும் சிதைந்த இந்நேரத்தில் ‘ஹூ ஸி’22 என்பவர் லிவிங்°டனிடம் வந்து ஓர் ஆ‘கிலேயர் வந்திருப்பதாக அறிவித்தார். ஆனால், வந்தவர் லிவிங்°டன் நண்பர் °டான்லியே23 யாவர். அவர் உண்மையில் அமெரிக்கா ‘நியூயார்க் ஹெராலடு ’என்ற அமெரிக்கச் செய்தித்தாள் நடத்துவோரால் அனுப்பப்பட்டவர். அவர் அனுப்பப்பட்டதன் நோக்கம் லிவிங்°டனைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுவதும் இறந்திருந்தாராயின் பாராட்டுடன் லிவிங்°டனின் எலும்புகளை எடுத்துவருவதுமே யாகும். லிவிங்°டனை உயிருடன் கண்ட அவர் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. லிவிங்°டனும் அவரைக் கண்டவுடன் ‘கரைகாணாப் புயற்கடலிற் புணைகண்டாற் போல’ அளவிலா உவகை கொண்டார், ஏனெனில் அவர் வரவு லிவிங்°டன் வாழ்வில் ஒரு புதிய கோளின் வரவு என்றே கூறத்தக்கதாக இருந்தது. துன்பமிக்க அவருடைய பிற்கால வாழ்வில் அத பேரமைதியை உண்டு பண்ணிற்று. அடிக்குறிப்புகள் 1. Duke of Argy - ll 2. Inverary 3. Bath 4. Sir. Roderick 5. Explorer 6. Lake Tanganyika 7. River Nile 8. Pengain 9. Tsetse 10. Zanzibar 11. Mr. Young 12. Lake Liemba 13. Lake Moero 14. Mohamed Mokarib 15. Lake Bangweolo 16. River Lualaba 17. Manylaema 18. Bambarre 19. Banias 20. Abet 21. Dukumbe 22. Susi 23. Mr. Stanley 14. லிவிங்°டனின் மறைவு உரிய காலத்தில் உதவி லிவிங்°டனுக்கு உரிய நெடுநாளைய கடிதங்கள் ஒரு பணியாளிடமிருந்தன. °டான்லி லிவிங்°டனைக் காண வரும்போது அவ்வேலையாளையும் அழைத்து வந்திருந்தார். அக்கடிதங்களுள் லிவிங்°டன் மக்கள் எழுதிய கடிதங்களும் இருந்தன. இவையன்றி °டான்லி வேறு நற்செய்திகளும் கொண்டுவந்திரந்தார். அஃதாவது பிரிட்டிஷ் அரசாங்கம் மீட்டும் லிவிங்°டனின் பணிகளி;ன அருமை பெருமைகளை உணர்ந்து இவருக்கு 1000 பொன் தர இணங்கியது என்பதே யாகும். °டான்லி கொணர்ந்த பொரள்களால் லிவிங்°டன் உடல்நிலையும் செல்வ நிலையும் உயர்வுற்றன, செய்திகளால் உளநிலையும் செம்மையுற்றது. இருவரும் செய்த ஆராய்ச்சி லிவிங்°டன் கண்டறிய வேண்டுமென ஆவல் கொண்ட செய்திகள் இரண்டு. ஒன்று லுவாலாபாத் தலை நிலம் பற்றியது, மற்றொன்று தங்கனீகா வடபுற ஆராய்ச்சி. இவற்றுள் பின்னதையே முதலில் கண்டறிய லிவிங்°டன் முடிவு செய்தார். எனவே °டான்லியுடன் 1871 ஆம் ஆண்டு நவம்பர் 16 இல் பயணமானார். ‘அவர்கள் தாங்கள் நேரிற் கண்டவற்றி லிருந்து, ‘தங்கநீகா ஏரிக்குள் லுஸைஜ்’1 என்ற ஓராறு பாய்ந்த தாயினும் எந்த ஆறும் அதனினின்று வெளிவரவில்லை’ என்று உணர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் டிசம்பர் 13 இல் உஜ்ஜி வந்து சேர்ந்தார்கள். °டான்லியின் பாராட்டு இவ்விரண்டு திங்கட் காலத்துக்குள் லிவிங்°டனுடன் °டான்லி நன்கு பழக வாய்ப்பு ஏற்பட்டது. பாகப் பழக லிவிங்°டனிடம் அவர் கொண்ட நட்பும் மதிப்பும், வளர் பிறைபோல் பெருகின. “லிவிங்°டனை ஒத்த வீரமும், விடாமுயற்சியும், பொறுமையும், தன்னலமறுப்பும், எதிரி களிடையும் மாறாத அன்பும் உடைய பணியாளரை நான் கண்டதில்லை” என்று அவர் மனமாரப் பாராட்டினார். லிவிங்°டன் தம்மை வஞ்சித்துத் தம்மீது கல்லெறி வோரையும் எதிர்த்தச் சுடுவதில் விருப்பம் இல்லாதவர். °டான்லி அவ்விதம் செய்வதையும் லிவிங்°டன் தம் அருட் பார்பையால் தடுத்தார். லிவிங்°டன் கறுப்பு மக்கள் கண்களில் வெள்ளையர் உண்மை நாகரிக மேம்பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டாகத் தோற்றினார், வெள்ளையர் கண்களிலோ ‘நாட்டு மக்களின் ஒப்பற்ற நண்பர்’ எனத் தோற்றினார். பொறுமைக்கு இருப்பிடம் தங்கனிகா ஏரிக் கரைகளிலுள்ள மக்கள், அதன் செழித்த கரையிடையே, நீரில் வாழும் மீன்போலக் கவலையற்று வாழ்ந்திருந்தனர். பல இடங்களில் அம் மக்கள் லிவிங்°டன் முதலியோரிடம் நட்புக்காட்டி ஏமாற்றப் பார்த்தனர். ஆனால், நல்ல காலமாக லிவிங்°டன் அவர்களிடமிருந்து தப்பி அகன்றனர். சில இடங்களில் கரையிலிருந்த மக்கள் லிவிங்°டனைக் கரையேறும் படி தூண்டினர். கரையேறாதது கண்டு கல்லெறிந்தனர். லிவிங்°டன் அப்போதும் ‘அவர்களை எதிர்க்க வேண்டா’ என்று கூறினராம். பல இடங்களில் அராபியர்களும் லிவிங்°டனின் வாய்மை, பொறுமை, நகைச்சுவை ஆகியவற்றில் ஈடுபட்டுத் தம் இயற்கைக்குமாறாக அமைதியுடன் நடந்து கொண்டனர். பிரியா விடை உஜ்ஜியில் லிவிங்°டன் °டான்லியுடன் சில காலம் இருந்தார். அது காலை காலை °டான்லி, “எஞ்சிய வேலையை ஒத்திவைத்தத் தாய்நாடு சென்று உடலைச் சரிப்படுத்திக்கொண்டு பின் ஒர கால் திரும்பி வரலாம்”என லிவிங்°டனுக்கு வற்புறுத்தினார். ஆனால் லிவிங்°டன் எப்படியாவது எடுத்த பணியை முடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்தார். எனவே உனான்யெம்பி 2 வரையில் சென்று அங்குள்ள தம் பொருள்களை எடுத்துக் கொண்டு, தாய் நாட்டிலிருந்து வரும் கடிதங்களையும் பார்த்துவிட்டு அதன்பின் வடக்கே செல்வது என்பது உறுதியாயிற்று. லிவிங்°டன் இப்போது டான்லியின் விருந்தினராதலால் இவர் ஏறிச் செல்ல நல்ல கழுதை ஒன்று (அந்நாட்டு வழக்கப் படி) அனுப்பப் பட்டிருந்தது. ஆனால், மக்கட் பணியாளருள் சிறந்தவரான லிவிங்°டன் அதனை நடக்க விட்டு, எல்லோரையும் போலத் தாமும் நடந்தே வந்தார். அங்ஙனம் நடந்தமையால் காலெல்லாம் கொப்புளங்கள் உண்டாயின. இதனால் லிவிங்°டன் உனான் யெம்பில் சிலநாள் தங்கினார். அங்கே லிவிங்°டன் பொருள்களிற் சில கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சில, கரையான்களுக்கு இரையாயின. ஆயினும் எஞ்சியவையே லிவிங்°டனுக்கு ஏராளமானதாகத் தோன்றின. நண்ப ரிருவரும் பிரியா விடை பெற்றது கண்கொள்ளாக் காட்சி யாக இருந்தது. அரிய குறிப்புகள் °டான்லி சென்ற சில மாதங்கட்குப் பிறகே அவரால் ஃஜான்ஸிபாரிலிருந்து ஆட்கள் அனுப்பப்பட்டனர். லிவிங்°டன் அதுவரையில் அங்கிருந்து அந்நாட்டில் கண்ட பல அருஞ்செய்திகளைச் சுவைபடச் சித்தரித்துவந்தார். அவற்றுள் அந்நாட்டுக்கொடிய பாம்புகளைப் பூனை கொல்வதை விவரிக்கும் சித்திரம் ஒன்றாகும். பாம்பு அறியா வண்ணம் பூனை பதுங்கிவந்து பாம்பின் படத்தில் ஓர் அறை அறைந்து தலையை அழுத்திக் கொண்டு கழுத்தைக்கடித்து எறிந்துவிடும்; பின் துடிதுடிக்கம் உடலைவிட்டுப் போய்விடுமாம். பூனையின் இவ்வருஞ் செயலுக்காகவே எகிப்தியர் பூனையை வணங்கி வந்தனர் என்ற அவர் கருதினார். நாட்டுப் பிள்ளைகள் ‘தங்கனீகாப் பகுதியில் நாட்டு மக்களிடையே தாய்மார் தம் குழந்தைகளை அடிமைகளாக விற்றனர்’ என்ற செய்தி ஐரோப்பாவில் கூறப்பட்டு வந்தது. இஃது ஆஃப்ரிகரைப் பற்றி ஐரோப்பியர் இழிவான எண்ணங் கொள்வதற்காகவே பரப்பப் பட்டது. லிவிங்°டன் தாம் கண்டவரையில், ஆஃப்ரிக உள்நாட்டு மக்கள் கொடிய அடிமை வணிகற் கைப்பட்டன்றி அதனை ஆதரிக்கவில்லை. அவர்களும் அன்புக்கும் ஆதரவுக்கும் இணங்கும் இயற்கைப் பண்பு உடையவர்களே’ என்று உரைத்துள்ளார்; மேலும் “ஆஃப்ரிகப் பிள்ளைகளுக்குப் போதிய நல்ல பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இல்லை;இத்துறையைத் திருத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார். லிவிங்°டன் இங்கே உணவு அற்றவர்க்கு உணவும், உடையற்றவர்க்கு உடையும், ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு ஆதரவும் கொடுத்து வந்தார் என்பது இவர் குறிப்புகளால் தெரிகிறது. உதவிக்கு ஆட்கள் 1872ஆம் ஆண்டு ஆக°டு 25 இல் °டான்லி தெரிந் தெடுத்தனுப்பிய 56 ஆட்களும் வந்தனர். “இவர்கள் மகோ லொலோக்களைப் போல வீரமுடையவர்கள் அல்லராயினும், அவர்களைப் போலன்றி உண்மையும் உழைப்பும் உடைய வர்கள்” என்று லிவிங்°டன் எழுதியுள்ளார். ஆனால் பின்அவர்கள் செயல்களிலிருந்து அவர்கள் வீரத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்பது தெரிந்தது. தளர்ந்த நிலையிலும் பிரயாணம் இப்பயணத்தில் சிறிது தொலைவுதான் லிவிங்°ட னால் தாமாகச் செல்லமுடிந்தது. நோயாலும் தளர்ச்சி யாலும் நடக்கமுடியாத நிலைவந்தது. எனினும் பயணத்தை நிறுத்த மனமின்றி லிவிங்°டன் சிவிகையில் பயணம் செய்தார். சிவிகை செல்லமுடியாத இடத்தில் இவர் தம் உண்மைமிக்க பணியாட்களான ஸூஸி, சுமா ஆகிய வர்களால் தூக்கிச் செல்லப்பட்டார். இந்நிலையிலும் இவர் தாம் கண்டவற்றையும் அறிந்தவற்றையும் தம் குறிப்பில் எழுதத் தவறவில்லை என்பது பெருவியப்பேயாகும். ஆனால் இவர் ஏப்ரல் 23 முதல் 26 வரை ஒன்றும் எழுத முடியாமல் தேதி மட்டும் குறித்தார். 27 இல் “நான் முற்றிலும் தளர்ந் திருக்கிறேன்; பாலாடு வாங்கும்படி கூறியிருக்கிறேன். மோலிலாமோ ஆற்றின் 3 பக்கம் வந்து சேர்ந்திருக்கிறோம்” என்று எழுதினார். லிவிங்°டன் மறைவு மறுநாட் காலை முதல் லிவிங்°டனுக்குப் பார்வை குன்றியது. ஒலிகளைக் கேட்டறியும் அறிவும் குன்றியது அன்று இரவு லிவிங்°டன் வெந்நீர் கேட்டார். எனினும் அதனை முட்டுப்பாட்டுடன் தான் உட்கொள்ள முடிந்தது. காலை 4 மணிக்குக் கடவுளைத் தொழுத நிலையிலேயே லிவிங்°டன் ஆவி இறைவனடி சார்ந்தது. ஆஃப்ரிகாவின் மாபெரு நண்பராகிய இவர் ஆஃப்ரிக மண்ணிலேயே தம் உடல் நீத்தார். உடல் அடக்கம் லிவிங்°டனின் பணியாட்கள், லிவிங்°டன் உயிர் நீத்த பின்பும் இவர் பக்கம் நின்று மாறாது பல துன்பங்களைத் தாங்கி இவர் உடலைத் துறைமுகம் வரை கொண்டுவந்து சேர்த்தனர். லிவிங்°டன்இருதயமும், குடலும் ஜான்ஸிபாரில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் உடல் உலர்த்தப் பட்டுக் கப்பலில் ஸதாம்ப்டன் கொண்டுவரப்பட்டு ஆங்கில நாட்டார் அனைவர் கண்ணீரிடையேயும், பாராட்டிடையேயும் வெ°ட்மின்°டர் மண்டபத்தில்4 அடக்கம் செய்யப்பட்டது. அடிக்குறிப்புகள் 1. Lusize 3.Rives Molilomo 2. Unanembe 4.Westministerabbey 15. லிவிங்°டனின் அருங்குணங்கள் பெருமைக்கு மூலகாரணங்கள் உலக வரலாற்றில் தம் பெயரைப் பொன் எழுத்துக் களில் பொறித்த புகழுடைய பெரியோர் வாழ்க்கை வரலாறு களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் பெறப்படவன இவையாகும். ஒன்று, அவர்கள் பெருமைக்கெல்லாம் மூலகாரணமாக இருப்பது அவர்கள் கொண்ட உயர் நோக்கங்களும் குறிக்கோள்களும் ஆகும். இரண்டு, அக் குறிக்கோள் வாழ்க்கையில் அவர்கள் தம் திட்டத்தை எவ்வளவு உயர்வாகத் தீட்டமுடியுமோ அவ்வளவு உயர் வாகத் தீட்டினர் என்பது நெப்போலியன், நெல்ஸன் போன்ற பெரியார் தம் சொறொகுதியில் ‘முடியாதது’ என்ற சொல் இல்லை என்று குறிப்பிட்டது இதனையே யாகும். லிவிங்°டன் தம் வாழ்க்கையின் தொடக்கத்தில் தம் விளையாட்டிலும் இப்பண்பைக் காட்டினார். இவர் மற்றப் பிள்ளைகள் ஏறாத உயரத்துப் பாறை மீதேறித் தம் பெயர் பொறிக்க முயன்றார். வாழ்க்கைப் பணியிலும் இவர் இதே உயர் பேரார்வம் கொண்டிருந்தார் என்பதைத் தம் இறுதி நாள் வருமுன் கைக்குறிப்பில் எழுதிய ஒரு செய்தி காட்டுகிறது, “என் இறுதி முயற்சியாகிய இவ்வொன்றைச் செய்ய என்னால் முடியுமாயின், அது வேறு எவராலும் மறக்க வொண்ணாச் செயலாகிவிடும். என்னுடைய இந்த இறுதி முயற்சியின் போதுதான் தீயோன்(சைத்தான்) நோய், இடையூறு, மனஉடைவு, வலிவின்மை ஆகிய தடைகளால் என்னை முறியடிக்கப் பார்க்கிறான். இறைவன் திருவுளம் ன்பக்கமிருந்தால் நான் நற்பேறு உடையவனே” என்பதேயாகும். வீர வாழ்க்கை லிவிங்°டனை ‘ஆஃப்ரிகாவின் இளம் சிங்கம்’ என்று கூறுவதுண்டு. இவர் சிங்கங்களின் வேட்டையைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில்,“சிங்கங்கள் பிறர் எதிர்த்தபோதன்றிப் போரிடா, அவை வலிமையுடையனவே அன்றி வீரங் குன்றியவை” எனக் கூறியுள்ளார். விலங்காகிய சிங்கம் எப்படியாயினும் ஆஃப்ரிகச் சிங்கமாகிய லிவிங்°டனிடம் இக் குறையைக் காணமுடியாது. தீமையைக் கண்ட இடத்தி லெல்லாம் லிவிங்°டன் சீறி எழுந்து அதனை அறைந்து கொல்லத் தயங்கியதில்லை. அத் தீமை பகைவரிடமிருந்த போது மட்டுமன்றி, தம்மவரிடமிருந்தாலும் அதனைக் கண்டிக்க இவர் தயங்கியதில்லை. ஆஃப்ரிகா, ஐரோப்பிய வீரர் பலருக்குக் கல்லறையாக அமைந்த நாடாகும். அத்தகைய நாட்டில் கொடிய மக்களிடையே மட்டுமின்றி மக்கள் கொடுமையினும் மிக்க பகைகளாகிய நோய், விலங்குகள், பாலைவனங்கள், செட்சி எறும்புகள் ஆகியவற்றினிடையேயும் லிவிங்°டன் வாழ்ந்து, பல்லாயிரங் கல் தொலை பயணம் செய்து தம் பணியை வெற்றியுற முடித்தது இவ்வீரத்தின் பயனாகவேதான். அரிய வீரம் வீரமென்பது போர்க்களத்தில் எதிரிகள் முன் மட்டும் பயன்படுவது. அது வெஞ்சினத்தால் வலியுறுவது. ஆனால் லிவிங்°டன் வீரம் அத்தகையது அன்று. நோயுடன் போராடுவதும் தோல்வியுடன் போராடுவதும் வெறும் வெறுபிடித்த வீரமன்று. அது பொறுமையும் விடா முயற்சியும் மன உறுதியும் உடைய வீரமாகும். காலன் பிடி தம் மீது தாவியபோதும் எடுத்த காரியம் விடாமல் இறுதி மூச்சுவரைப் பாடுபட்ட பெருமை, லிவிங்°டன் போன்ற ஒரு சிலர்க்கே உரியதாகும். குடும்பத்தில் அன்பு வீர வாழ்க்கையுடையவர் பலர் நெஞ்சில் ஈரமற்றவராக இருத்தல் காணலாம். அத்தகைய வீரம் அவர்களைப் பெரியார் அக்கத் தக்கதன்று. லிவிங்°டனோ குடும்ப வாழ்விலும் பொது வாhவிலும் அன்பே உருவானவர்; தாய் தந்தையரிடம் தம் கடமை உணர்ந்து அன்பு காட்டியவர் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் மனைவியுடன் இருந்த போதும், பிரிந்தபோதும், மனைவியார் இறந்த பின்னும் அவரை இவர் மனக்கோவிலில் கொண்டு போற்றினார். இச் செய்தி எவர் மனத்தையும் கனிவுறச் செய்யும் இன்ப நாடகமாகும். லிவிங்°டன் தம் புதல்வர் புதல்வியாரிடம் அன்பு கொண்டிருந்த தோடு அவர்கள் தம் குடி உயர்வுக்கு ஒத்தவராக இருப்பது கண்டு இறும்பூது எய்தினார். °டான்லி போன்ற நண்பர் தம் பணியினும் மிகுதியாகத் தம் உடல் நலத்தை வற்புறுத்திய காலையில் லிவிங்°டன்புதல்வி ஆக்னி°, “என்னை எண்ணி உங்கள் பணியைத் துறந்துவரவேண்டு மென்பதில்லை. உங்கள் பணியை நிறைவேற்றி வர விரும்பினீர்களாயின், அதனால் இறைவன் உள்ளம் நிறைவுறும். எங்கும் அது நிறைவையே தரும்” என்று எழுதியிருந்தார். அதுகண்ட லிவிங்°டன் °டான்லியிடம், ‘இதோ என் பழங்குடியின் ஒரு சிறு அரும்பு’1 என்று கூறிப் பெருமைப்பட்டாராம். அருள் உள்ளம் லிவிங்°டன் அன்பு, அவர் குடும்பத்துடன் மட்டும் நின்றிருந்தால்கூட அஃது ஒரு கவிஞன் சித்திரத்துக்கு உரியதாயிருக்கும். ஆனால், அது குடும்ப எல்லையைக் கடந்து நாட்டெல்லையையும் கடந்து உலகையே தழுவி நின்று ‘அருள்’ என்னும் பெயர்பெற்றது. சமயப்பற்றிலும் அது தம் சமயம் பிறர் சமயம் என்ற வேற்றுமை கடந்தது. ஆஃப்ரிக மக்கள் தம் சமயத்தில் சாராதவிடத்தும் அவர்கள் உள்ளார்ந்த நலன்களைக்கேட்க லிவிங்°டன் தயங்கியதில்லை. மொகாரிப் போன்ற அராபியர் களை ஒப்புறரவு காட்டியும் அனைத்துலகும் தம் குடியென நடத்தி அனைவரையும் தம் வயப்படுத்தினார். இக்காட்சி கண்ட °டான்லி போன்ற பெரியார், லிவிங்°டனைத் தெய்வத்துக்கு அடுத்த படியில் வைத்துப் போற்றியதில் வியப்பில்லை. இனிய சொல்லாளர் வெளியாருக்குப் பெரியாராக இருக்கும் பலர் வீட்டா ருக்குச் சிறியாராக நடப்பதுண்டு. லிவிங்°டன் தன் பணி யாட்களிடத்திலம் நடுநிலையும் ஒத்துணர்வும் நீக்கியதில்லை. லிவிங்°டன் பணியாள் ஆகிய ஸூஸி என்பவன் ஒருநாள் குடிவெறியால் தம் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டார்; அதற்காக இவர் சினங்கொள்ளாது அவனைத் தட்டி எழுப்பி, ‘குடிப்பதில்லை என்ற உறுதிக்கு இது தான் எடுத்துக்க hட்டோ?’ என்றனராம். இப்பெருந்தன்மையின் பயனாகவே கடுமையான தலைவரைவிட இவரிடம் பணியாட்கள் பற்றும் அச்சமும் பன்மடங்கு உடையவராக இருந்தனர். கிறி°துவின் வாழ்க்கை ஆஃப்ரிக மக்களிடையே லிவிங்°டன் ஏற்படுத்திய மனமாற்றம் சொல்லும் அளவினதன்று. இவருக்கு முன்னும் பின்னும் வெள்ளையர் செய்த பல பழிகளையும் படிப் படியாக ஆஃப்ரிகர் மனத்தினின்றும் அகலச்செய்வதா யிருந்தது இவர் அருள் நிறைவு. இவரை ஒரு முறை அறிந்த ஆஸப்ரிக மக்கள், வெள்ளையரினும் மிகுதியான பொறுமை யும் பெருந்தன்மையும் உடையவராய் இன்னா செய்தாரையும் நன்னயம் செய்து ஒறுக்கும் தன்மை உடையவராயினர். இவ்வகையில் லிவிங்°டன் வாழ்க்கை கிறி°தவ வாழ்க்கை என்று கூறுவதைவிடக் கிரு°துவின் வாழ்க்கையாகவே இருந்தது என்று கூறலாம். நடுவுநிலை உணர்வு லிவிங்°டனின் நடுவுநிலை உணர்வு வியக்கத் தக்க தாகும். இவர் தாம் என்றும் நேர்மையுடையவர் ஆயினும், பிறர் நேர்மை தவறியவிடத்தும் நடவுநிலைமை நீங்கிச் செயலாற்று வதில்லை. இவருடைய அராபிய நண்பர், இவருக்குமாறாக நடந்து படுகொலைகள் செய்தபோதும் தாக்கப்பட்டவர்க்குத் தாக்குதலின் பின் உதவினரேயன்றி அவர்களுக்காகக்கூடச் சண்டையில் கலக்கவில்லை. அராபியர் பிழையுணர்ந்து பிழை பொறுக்கவேண்டியபோது, ‘யானே பிழைகள் நிறைந்தவன்’ என்று கூறினர் என்றால், இவருடைய முழு அருள் நிலையின் திறத்தை என்னென்று கூறுவது. துறவு வாழ்க்கை தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகிய லிவிங்°டன் வாழ்க்கை, உண்மைத் துறவு வாழ்க்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ‘சிலுவையைத் தாங்கி நட’ என்ற இயேசு பெருமானின் விவிலிய உரையைச் சிலர் ‘சிலுவைக் குறி தாங்கி நட’ என்று கொள்ளுவர். ஆனால் அவர் தியாக வாழ்வை ஏற்று நட என்று கொண்டார். ஆணவம், காமியம், மாயை (தற்பெருமை, தன்னலம், பொருட்பற்று) ஆகிய முமமலங்களும் (குற்றங்களும்) அறுத்த நீற்றுக்கு அறிகுறி, நீது என உணராது புறநீறுமட்டு மணிந்து தருக்குபவர் உண்டு. உண்மைத்துறவு புறவேடமன்று. புறவேடத்துடன் அதன் உட்பொருளாகிய தன்னலத் தியாகமும் பொதுநலத் தொண்டுமே என்பதை லிவிங்°டன் வாழ்வு எடுத்துக் காட்டுகிறது. கல்லறை வாசகம்2 வெ°ட் மின்°டர் மண்டபத்தின் லிவிங்°டன் கல்லறைமீது இவர் நாட்குறிப்பினின்றெடுத்த ஒரு வாசகமே கல்லறை வாசகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. லிவிங்°ட னின் வாழ்க்கைக் குறிக்கோளின் உயர்வையும் இவர் சமயப் பணியின் விரிவையும் அரள் விரிவையும் அது நன்கு எடுத்துக் காட்டுகிறது. “இறைவனுடைய மங்காத அருட் செல்வங்கள் மாந்தர் அனைவர்மீதும் பொழிக. அமெரிக்கர், ஆங்கிலேயர், துருக்கியர் அனைவர் மீதும் பொழிக”3 என்பதே அக்குறிப்பு ஆகும். சமய உணர்வு °டான்லி லிவிங்°டனது சமய உணர்வுபற்றிக் கூறு கையில், “அவரது சமயம், அவர் உள்ளார்ந்த இடைவிடா விழிப்புமிக்க வாழ்க்கை நடைமுறையேயாகும். அஃது அவர் யாரிடமும் வெளிப்படையாகக் காட்டும் அல்லது உரத்து விளம்பரம் செய்யும் பொரளன்று. அஃது அவர் யாரிடமும் வெளிப்படையாகக் காட்டும் அல்லது உரத்து விளம்பரம் செய்யும் பொருளன்று. அஃது அவர் செயல் ஒவ்வொன் றிலும் உள்ளுரச் சந்தடியின்றி நடைமுறையில் காட்டப்படும் ஓர் அடிப்படைப் பண்பாகும். சமயத்தின் உயர்ந்த பண்பு களை அவர் வாழ்க்கை மறையில் காணலாம். அவர் வேலைக் காரரிடம் நடந்து கொள்ளும் முறையிலும் ஆஃப்ரிக நாட்டு மக்களிடம் நடந்துகொள்ளும் முறையிலும் தீவிர வைராக்கியமுடைய மு°லீம்களிடம் நடந்து கொள்ளும் நடைமுறையிலும் அவர் சமயத்தைச் சிறப்பாகக் காணலாம்” என்று கூறுகிறார். இவர் வரலாற்றுப் பயன் லிவிங்°டன் போன்ற பெரியார் நம் தமிழ் நாட்டில் தோன்றி நம் நாட்டு வாழ்வு, சமய வாழ்வு பொதுவாழ்வு ஆகியவற்றுக்கு உயிர் கொடுத்து, அதன் பழம்புகழைப் புதுப்பிக்கவேண்டும். இவர் போன்றவர் வாழ்க்கைகள் இளைஞர் உள்ளத்தில் படிவதால், அத்தகைய பண்புகள் வளர்ந்து வாழ்கை பெருமை அடையும் என்பதில் ஐயமில்லை. அடிக்குறிப்புகள் 1. A chip of the old block from my family. 2. Epitaph 3. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் பராபரமே. அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன் முதற் பதிப்பு - 1946 இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை - 43 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. பொருளடக்கம் 1. இயற்கையின் செல்வன் 2. இளமைப்பயிற்சி 3. பெர்ன் பதிவுரிமை நிலையம் (1902 - 1909) 4. பேராசிரியர் (1909 - 1914) 5. உலகப்புகழ் (1914 - 1929) 6. அமெரிக்கா 7. அறிவாட்சியும் பண்பாட்சியும் 1. இயற்கையின் செல்வன் இன்றைய உலகம் “அறிவியல்” (ளுஉநைnஉந) உலகம். சென்ற நானூறு ஆண்டுகளாக, உலக நாகரிகம் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறது. இம்முன்னேற்றத்திற்கு அறிவியல் வளர்ச்சியே பெரிதும் காரணம் ஆகும். அறிவியல் துறைகள் இன்று பலவாகப் பெருகியுள்ளன. ஒவ்வொரு துறையிலும் ஈடுபட்ட ஆராய்ச்சியறிஞர்கள் எத்தனையோ பேர். அவர்களே உலகத்துக்குப் புத்தொளி காட்டும் ஒளி விளக்கங்கள். அவர்களிடையே, விளக்கங்களுக் கெல்லாம் விளக்கமாக, அறிவியல் உலகின் கதிரவனாக விளங்குபவர் ஐன்ஸ்டீன் (நுiளேவநin)ஆராய்ச்சி அறிஞரிடையே ஓர் ஆராய்ச்சி அறிஞராக, ஆராய்ச்சி யுலகின் முடிசூடா மன்னராக அவர் திகழ்கின்றார். ஐன்ஸ்டீன் முற்காலப் பெரியாரல்லர். இக்காலப் பெரியாரே. அவர் இருபதாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர். அவர் நம்மை விட்டுப் பிரிவுற்றது கூட 1955-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் நாளில்தான். ஆயினும் அவர் தம் காலத்துக்குள்ளாகவே தலைசிறந்த அறிவியலறிஞராகப் புகழ்பெற்றார், அது மட்டுமோ? முந்திய அறிஞர் புகழெல்லாம் தாண்டி, அவர் புகழ் வானளாவ வளர்ந்தது. ஆராய்ச்சி உலகில் அவர் பழைய ஊழியை வென்று, ஒரு புதிய ஊழியையே தொடங்கி வைத்துள்ளார். ஊழி கடந்த ஊழி முதல்வராக அவர் ஒளிர்கின்றார். கீழ்வரும் நிகழ்ச்சி அவர் காலங்கடந்த புகழை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது. அது அவர் வாழ்நாள் காலத்திலேயே நடை பெற்றதாகும். ரிவர்சைட் சர்ச் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ரிவர்சைட் சர்ச் என்று ஒரு கோவில் உண்டு. அதன் சுவர்களைப் புதிய முறையில் அழகுபடுத்தக் கோயில் உரிமையாளர்கள் விரும்பினர். உலகின் தலை சிறந்த வீரர், சமயத் தொண்டர், அறிஞர், கலைஞர் ஆகியவர் ஒவியங்களைத் தீட்ட அவர்கள் எண்ணினர். பெயர்களையும் அவர்கள் தாமாகத் தேர்ந்தெடுக்கவில்லை. தலைசிறந்த பல அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர். உலகின் புகழ் மன்னர்களின் பெயர்களைக் குறித்தனுப்பும்படி கோரினர். அறிஞர் பட்டியல்களில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றவரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறுநூறு புகழுருவங்கள் கோயிற் சுவர்களை அணிசெய்தன. அறுநூறு திருவுருவங்களிலும் ஒன்று நீங்கலாக ஏனையயாவும் மாண்ட பெரியார்களின் படிவங்களாகவே அமைந்தன. அந்த ஒன்றே, வாழும் பெரியார் வடிவமாகக் காட்சி தந்தது. அந்த ஒன்று ஐன்ஸ்டீன் திருவுருவமே யாகும். பட்டியல்களை அனுப்பியவர்கள் வாழும் அறிஞர்களையும் குறிக்கத் தவறவில்லை. ஆனால், எவரும் வாழ்நாள் காலத்திலேயே நிலையான புகழ் நாட்டுவது அரிது. ஒரு பட்டியலில் குறிக்கப் பட்டவர் மறுபட்டியல்களில் இடம் பெறவில்லை. சில பட்டியல் களில் இடம்பெற்றவர் பல, பட்டியல்களில் விடப்பட்டிருந்தனர். ஆனால் ஐன்ஸ்டீன் பெயரோ, ஒரு பட்டியல் விடாமல், எல்லாப் பட்டியல்களிலும் இடம்பெற்றிருந்தது. இங்ஙனம் தம்கால அறிஞர் உள்ளங்களிலேயே போட்டி யற்ற இடம்பெற்றவர் ஐன்ஸ்டீன். அத்தகையவர் புகழுலகை ஆட்கொண்டதில் வியப்பு இருக்கமுடியாது. இயற்கையின் இதயம் எவருக்கும் எளிதில் கிட்டாத இந்த அரும்பெரும் புகழை ஐன்ஸ்டீன் எவ்வாறு பெற்றார்? போட்டியற்ற புகழ், மாளாப்புகழ், வளரும் புகழ் - இவையாவும் அவருக்கு ஒருங்கே எப்படிக் கிட்டின? இவ்வினாக்களுக்கு அவர் அருஞ்சாதனைகள், வாழ்க்கைப் பண்புகளே விடையும் விளக்கமும் தரமுடியும். அவர் வாழ்க்கை வரலாறு இவ்வகையில் நமக்குச் சிறந்ததொரு படிப்பினை தர வல்லது. மற்ற ஆராய்ச்சி அறிஞர்களின் எல்லை கடந்து அவர் இயற்கையின் இதயத்தையே காண அவாவினார். இயற்கையும் பிறர் எவர்க்கும் எளிதில் திறக்காத தன் உள்ளக் கதவை அவருக்குத் திறந்து காட்டிற்று. அதன் உள்ளார்ந்த செல்வங்களை அவர் மனித உலகுக்கு எடுத்து வழங்கினார். இயற்கையின் செல்வம் எல்லையற்றது. எண்ணில் அடங்காதது. பொருள், ஆற்றல், அறிவு, அழகு, இன்பம் நலம் ஆகிய பல்வேறு வண்ணங்களாக அது எங்கும் பரவி நிறைந்துள்ளது. மனிதன் இயற்கையின் செல்வத்துக்கு உரிமை உடையவன். ஆனால், இயற்கையை உணரும் அளவிலேயே அதை அவன் தனதாகப் பெற்றுத் துய்க்கமுடியும். இயற்கையை உணரும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களே மனித இனத்தின் முன்னோடிகள் ஆவர். அவர்கள் அறிவே உலக அறிவாக, பொது மக்கள் அறிவாகப் பரவி உலக நாகரிகத்தை வளர்க்கிறது. மனித நாகரிக வளர்ச்சியில் நாம், மனிதன் அறிவுநிலையின் மூன்று படிகளைக் காணலாம். அவையே பொது அறிவு (ழுநநேசயட முnடிறடநனபந டிச ஊடிஅஅடிn ளுநளேந) பகுத்தறிவு அல்லது புத்தறிவு (சுயவiடியேடளைஅ) அடிப்படை அறிவு அல்லது மெய்யறிவு (சுநயளடிn) என்பவை. ஒவ்வொரு தலை முறையிலும் முன்பே அறியப்பட்ட அறிவு பொது அறிவு ஆகும். ஒவ்வொரு தலைமுறையிலும் பகுத்தறிவுடன் துணை கொண்டு அறிவியல் அறிஞர் இயற்கையின் செல்வக் குகையிலிருந்து புதிய செல்வம் பெற்றுத் தருகின்றனர். அறிவு வட்டியாகிய புத்தறிவு இதுவே. இது அடுத்த தலைமுறையின் பொது அறிவாகிய அறிவுமுதலோடு சேர்ந்து புதிய பொது அறிவாகிறது. இவ்வாறு தலைமுறைதோறும் பொது அறிவின்படி உயர்கிறது. நுட்ப நுணுக்கங்களாக, துண்டுத் துணுக்குகளாகக் கண்டுணரப்பட்ட புத்தறிவுகளை வகுத்துக்கோத்து, அடிப்படை முழு அறிவு காண முனைபவர் மெய்யறிவாளர். மெய்யறிவின் ஆற்றலால் பொது அறிவு புதிய முதலாக, புதிய பொது அறிவாக மாறி, புத்தம் புதிய அறிவுக்கு வழி வகுக்குகிறது. இயற்கையின் முழு உருவத்தை அதன் இதயக் கண்ணாடியில் கண்டு, அது புத்தூழி வகுக்கிறது. முழு அறிவினால் புத்தூழி வகுக்கும் அறிவுமுனைவரே முழு நிறை உரிமை பெற்ற இயற்கையின் செல்வர் ஆவர். முப்பெருஞ் செல்வர் அறிவுலக வரலாற்றில், ஆராய்ச்சியறிஞர் பலர். ஆனால், இத் தகைய இயற்கையின் செல்வராக நாம் மூவரைச் சிறப்பித்துக் குறிக்கலாம். அவர்கள் யூக்லிட்(நுரஉடனை), நியூட்டன் (சூநறவடிn), ஐன்ஸ்டீன் என்பவர்களே. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க அறிஞர் யூக்லிட். உலக நாகரிகத் தொடக்கக் காலமாகிய அந்நாளிலேயே, பொது அறிவை வகுத்துத் தொகுத்துப் புத்தமைதி கண்டவர் இயங்குகிற பொருளுக்கெல்லாம் அடிப்படைச் சட்டமாக அமைவது ‘இயங்காத, நிலையான இயற்கை’ அதாவது ‘வெளியிடம்’(ளுயீயஉந) என்பதை அவர் கண்டார். இவ்வெளி யிடத்தில் இயங்கும் பொருள் கள் அதன் வடிவில் ஒரு கூறாகவே இயங்குவன. வெளியிடத்துக்கு நீளம், அகலம், உயரம் என்ற ‘மூவளவைகள்’(கூhசநந னுiஅநளேiடிளே) உண்டு; இவையே பொருளின் வடிவ, உருவப் பண்புகள், இவற்றின் அமைதிகளை யுக்லிட் கணித்து உருவாக்கினார். இவை ‘வடிவியல்,’(ழுநடிஅநவசல) ‘உருவியல்,’(ஆநளேரசயவiடிn) என்ற நூல் துறைகளாக வளர்ந்தன. இக்காரணத்தால் அவர் ‘வடிவியலின் தந்தை’ எனும் புகழ் பெற்றுள்ளார். 2000 ஆண்டுகளுக்கு மேலாக யூக்லிட் கண்ட முடிவுகளே அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படையாய் இருந்து வந்துள்ளன. நியூட்டன் 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த அறிஞர். அவர் இயற்கை என்னும் இயங்காச் சட்டத்தில் இயங்குகின்ற பொருள்களின் நிலைகளையும் இயக்கங்களையும் ஆராய்ந்தார். அவற்றின் ஒழுங்கு முறைகளை வகுத்துத் தொகுத்து அளவை யிட்டார். இவையே ‘இயங்கியலின்’(ஞாலளiஉள) அடிப்படை ஆயிற்று. இக் காரணத்தால் நியூட்டன் இயங்கியலின் தந்தை என்று அழைக்கப் படுகிறார். சென்ற முந்நூறு ஆண்டுகளின் அறிவியல் ஆராய்ச்சிகள் யூக்லுட் கண்ட அடிப்படையிலும் நியூட்டன் கண்ட அடிப்படை யிலுமே நடைபெற்று வந்துள்ளன. 20-ம் நூற்றாண்டுக்குள் அறிவியல் ஆராய்ச்சி யூக்லிட் முடிவுகளையும், நியூட்டன் முடிவுகளையும் தாண்டி நெடுந்தொலை வளர்ந்து விட்டது. பல நுட்ப இயக்கங்களை அவர்கள் முடிபுகள் விளக்கத் தவறின. பல பாரிய இயக்கங்கள் நுண்ணிய அளவில் அவற்றுக்கு முரண்பட்டனவாகத் தோன்றின. யூக்லிட், நியூட்டன் ஆகியவர்களின் முடிபுகள் தவறென்று கொள்வதா, இயற்கைதான் தவறுகிறது என்று கொள்வதா? இந்தஇருதலைக் கேள்வி அறிஞர் உள்ளங்களில் அலை பாய்ந்தது. அறிவியல் அறிஞர்கள் பெரிதும் இடர்ப்பாடுற்றனர். லாரென்ஸ், (டுடிசநவேண) மைக்கேல்சன், (ஆiஉhயநடளடிn) ஏர்ன்ஸ்ட் மாக் (நுசளேவ ஆயஉh) முதலிய பேரறிஞர்கள் இவ்விடர்ப்பாடுகளில் கருத்துச் செலுத்தி ஆராய்ந்தனர். அவற்றைக் கணித்து அளவையிட்டனர். ஆனால், அவர்களால் இடர்ப்பாடுகளை முற்றிலும் விளக்கமுடியவில்லை. பழைய அடிப்படைகள் ஆட்டங்கண்டன. ஆனால் இன்னும் அவையே அடிப்படை களாய் இருந்தன. ஏனென்றால், வேறு அடிப்படை காணப்படவில்லை. இந்நிலையில் இயற்கையே தன் உரிமைச்செல்வனாக ஐன்ஸ்டீனை அனுப்பிற்று என்னலாம். அவர் விளக்கங் களின்மேல் விளக்கங்களாகப் புதுப்புது விளக்கங்கள் கொண்டு வந்தார். அவை இடர்ப்பாடுகளை விளக்கின. புதிய மெய்மை களையும் காட்டின. அது மட்டுமோ? யூக்லிட், நியூட்டன் ஆகியோர் முடிபுகளையும் அவை விளக்கி, அம்முடிவுகளுக்குப் புதுப்பொருளும் புது வண்ணமும் தந்தன. மூவரில் முதல்வர் இங்ஙனம் இயற்கையின் செல்வராகிய மூவருள்ளும், ஐன்ஸ்டீன் மற்ற இருவர் புகழையும் தம் புகழாக்கி, இயற்கையின் தனிப்பெருஞ் செல்வராகியுள்ளார். யூக்லிடையும் நியூட்டனையும் நாம் ‘வடிவியலின் தந்தை’ ‘இயங்கியலின் தந்தை’ என்றுதான் பெருமைப் படுத்தினோம். ஆனால், ஐன்ஸ்டீனையோ வருங்கால அறிவியல் உலகம் ‘புதிய வடிவியலின் தந்தை’ ‘புதிய இயங்கியலின் தந்தை’ என்று மட்டும் புகழாது. ‘புதிய அறிவியல் துறைகளின் தந்தை’ புதிய அறிவியலூழியின் முதல்வர் என்றே பாராட்டுவது உறுதி! பண்டை உலகம் திருவள்ளுவர், புத்தர்பிரான், மகா வீரர், இயேசு பெருமான், முகமது நபி நாயகம் ஆகிய அருட்பெரியார்களைத் தந்துள்ளது. இன்றைய அறிவியல் ஊழி அருட்பெரியார்கள் வகையில் வளமுடையதென்று கூறமுடியாது. மகாத்மா காந்தியடி களைப் போன்ற இக்கால அருட்பெரியார் ஒரு சிலரே. ஆனால், அறிவியல் துறையில் பண்டை உலகம் கனவிலும் காணாத வளத்தை நம் அறிவியலூழி கண்டுள்ளது. பண்டை அருட்பெரியார்களுக்கு இணையாகக் கூறத்தக்க அறிவுப் பெரியாராகவே அது ஐன்ஸ்டீனை ஈன்றளித்துள்ளது. அணு ஊழியின் தந்தை சென்ற நானூறு ஆண்டுக் காலத்தை நாம் பொதுவாக ‘அறிவியலூழி’ என்கிறோம். நீராவி, நிலக்கரி, பாரெண்ணெய், (ஞநவசடிட) மின்னாற்றல், கதிரியம், (சுயனரைஅ) பரம்பலை (சுயனiடி றுயஎநள) ஆகிய பல புதுமைகள் கண்டுணரப் பெற்றது இக்காலத்திலேயே. அவற்றால் மனித வாழ்வில் ஏற்பட்ட புரட்சிப் படிகளை நாம் ‘நீராவியூழி’, ‘நிலக்கரி ஊழி,’ ‘மின்னூழி,’ முதலிய பெயர்களால் குறிக்கிறோம். இவ் வகையில் நம் அணிமைத் தற் காலத்தை நாம் ‘அணு ஊழி’ என்று வழங்குகிறோம். அண்டத்தை (ருniஎநசளந) ஆக்கும் ஆற்றலும், ‘அழிக்கும் ஆற்றலும்: ஒவ்வோர் அணுவுக் குள்ளும் அடங்கியுள்ளன என்பதை மனிதன் அறிந்து வருவது இவ்வூழியிலேயே. அதை அவன் இன்று ‘அணுக்குண்டாக’ அழிவுத்துறையிலே பெரிதும் வழங்குகிறான். ஆனால், ஆக்கத்துறையில் அதைப் பயன்படுத்தும் காலம் மிகுதொலைவில் இல்லை எனலாம். அணுவைப் பிளந்து அளவையிடும் வகையில், ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிகளே பேரளவில் வழிகாட்டின. அறிவியல் துறைகளில் ஐன்ஸ்டீன் பெருமைகளுள் இது ஒன்று. ஆனால், அவர் முழுப் பெருமையில் இது ஒரு சிறுகூறேயாகும். அவர் பெருஞ் சாதனை அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் ஒரே இயற்கை நியதியின் கீழ்க் கொண்டு வந்ததேயாகும். இதன் மூலம் மனிதன் இரண்டையும் இயக்கி ஆளும் தன் ஆற்றலைப் பெருக்கியுள்ளான். தொடர்புறவுக் கோட்பாடு ஐன்ஸ்டீனின் அறிவியல் புரட்சிக்குரிய முக்கிய கோட்பாடு ‘தொடர்புறவுக் கோட்பாடு’(சுநடயவiஎவைல கூhநடிசல) என்பதே. இதை அவர் இரண்டு தொகுதிகளாக ஆராய்ந்து வெளியிட்டார். முதல் தொகுதி தொடர்புறவின் சிறுதிறக் கோட்பாடு (ளுயீநஉயைட டிச ஞயசவiஉரடயச கூhநடிசல டிக சுநடயவiஎவைல) என்பது. இரண்டாம் தொகுதி அதன் பொதுமுறைக் கோட்பாடு (ழுநநேசயட டிச ருniஎநசளயட கூhநடிசல டிக சுநடயவiஎவைல) என்பது. சிறுதிறக் கோட்பாடு நியூட்டனின் இயக்கக் கோட்பாட்டின் ‘மூவளவை’ முறையை ‘நாலளவை’ முறை (குடிரச னiஅநளேiடிளே) ஆக்கிற்று. நீளம், அகலம், உயரம், என்ற பழய மூவளவை முறையினிடமாக, அவர் ‘நீளம், அகலம், உயரம், காலம்’ என்ற நாலளலைகளையும் இயக்க அளவைகளாகக் கொண்டார். இயக்கம் என்பது இயங்கா இயற்கைச் சட்டத்தில் இயங்கும் பொருள்களின் இடப்பெயர்ச்சி என்று யூக்லிடும், நியூட்டனும் முடிவு செய்திருந்தனர். அம்முடிவை ஐன்ஸ்டீன் மாற்றினார். இயற்கையில் எல்லாப் பொருள்களும் இயங்கும் பொருள்களே. இயங்கும் பொருள்களுக்கு அடித்தளமான நிலவுலகமும் அதைச் சூழ்ந்த ‘வளிமண்டலமும்’(ஹவஅடிளயீhநசந) பம்பரம் போல் சுழன்று கொண்டு கதிரவனைச் சுற்றுகின்றன. கதிரவனும் ‘பால்வெளி’ யினுள்ளே (கூhந ஆடைமல றுயல) இயங்குகிறான். பால் வெளியும் ‘அகண்ட வெளியில்’(ஐவேநச-ளவநடடயச ளயீயஉந) இயங்குகிறது. ஆகவே இயக்கம் என்பது இயங்காச் சட்டத்தில் இயங்கும் இயக்கம் - அதாவது ‘தனிநிலை இயக்கம்’(ஹளெடிடரவந ஆடிஎநஅநவே) அன்று; இயங்கும் பொருளுடன் தொடர்புறவு கொண்ட ‘தொடர்புறவு இயக்கமே’(சுநடயவiஎந ஆடிஎநஅநவே) என்று ஐன்ஸ்டீன் கண்டு விளக்கினார். யூக்லிட், நியூட்டன் ஆகியோரின் அளவை முறைகள் நாலள வை முறையை மூவளவையாகவே அளந்தன. இதனாலேயே அவை இடர்ப்பாடு கண்டன என்று ஐன்ஸ்டீன் கண்டார். அவற்றின் பிழைபாட்டையும் ஒருங்கே விளக்கினார். அவற்றைத் திருத்தி அவற்றினும் அடிப்படையான விளக்கங்கள் தந்தார். தொடர்புறவுக் கோட்பாட்டின் பொதுமுறை விளக்கம் இன்னும் வியப்புக்குரியது. அவர் இதன்படி: மாறு படும் தொடர் புறவு இயக்கங்கள் அனைத்தையும் அளக்கும் ஒரு மாறுபடாத நிலையான அடிப்படை இயக்க அளவையைக் கண்டார். இதுவே ஒளியின் வேகம். (ஏநடடிஉவைல டிக டiபாவ) இது எந்தத் தொடர்புறவுச் சூழல்களாலும் மாறுபடாமல், எங்கும் எப்போதும் நொடிக்கு (ளுநஉடினே) 1,86,000 கல்(ஆடைநள) தொலை விலேயே செல்கிறது. இதுவே அளவைகளுக் கெல்லாம் மூல அளவை(க்ஷயளiஉ ளவயனேயசன) என்று அவர் காட்டினார். புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் ஐன்ஸ்டீன் புரட்சிகரமான கண்டுபிடிப்புக்கள் இவை மட்டு மல்ல, இன்னும் பல. நியூட்டன் கண்ட ‘பொருள் ஈர்ப்பாற்றல்’ (குடிசஉந டிக பசயஎவைல) ஒரு தனி ஆற்றலன்று, பொருள்களின் இயக்கத்தால் ஏற்படும் ஒர் இயல்பான விளைவே என்று அவர் விளக்கினார். ‘மின் காந்த’ அலைகளும் (நுடநஉவசடி-அயபநேவiஉ றயஎநள) ஒளி அலைகளும் வேறு வேறு இயக்கங்களல்ல, ஒரே ‘விசை’ (ஏநடடிஉவைல) உடைய ஒரே இயக்கத்தின் இருவேறு வண்ணங்களே என்று அவர் வகுத்துரைத்தார். ‘பொருள் வேறு, ஆற்றல் வேறு என்ற பழைய முடிபை மாற்றி, அவற்றின் தொடர்பைப் புத்தம் புதிதாக விளக் கினார். ‘விசை’ மிகுந்தோறும் பொருளின் ‘எடைமானம்’(ஆயளள) பெருகும், அதன் ‘பருமானம்’(ஏடிடரஅந) குறுகும் என்ற மெய்மையை அவர் சுட்டிக் காட்டினார். இரண்டும் ஒன்று மற்றொன்றாகக் கூடுமாதலின், இரண்டும் அடிப்படையில் ஒன்றே என்று முடிவு செய்தார். இங்ஙனம் அறிவியல் உலகில் ஐன்ஸ்டீன் செய்த மாறுபாடுகள் புரட்சிகரமானவை. அளவிறந்தவை. ஆனால், அறிவியல் உலகில் செய்த இதே புரட்சியை அவர் வேறு பல துறைகளிலும் கூடத் தொடங்கி வைக்கத் தவறவில்லை. உலகையும் இயற்கையையும் முழுவடிவில் ஆராய முற்பட்ட மெய்விளக்க அறிஞர்கள் லோக்,(டுடிஉமந) ஹியூம்(ழரஅந), பார்க்லி (க்ஷநசமநடநல), டார்வின்(னுயசறin), கான்ட்(முயவே) முதலியவர்கள். அவர்கள் வரிசையிலும் வைத்தெண்ணத்தக்க, மாபெரு மெய் விளக்க அறிஞராக ஐன்ஸ்டீன் ஒளி வீசுகின்றார். முழுநிறை மனிதர் அறிவியல் ஆராய்ச்சி அறிஞர், மெய்விளக்க அறிஞர் ஆகியோர் பெரிதும் ஆய்வுக் கூடங்களிலும் (டுயbடிசயவடிசநைள) அறிவகங்களிலும் (ளுஉநைவேகைiஉ ளுடிஉநைவநைள) அடைபட்டுக் கிடப்பவரே யாவர். உலக வாழ்விலோ, வாழ்க்கைச் செய்திகளிலோ அவர்கள் ஆராய்ச்சிக் கண்ணோட்டம் செலுத்து வதில்லை. அக்கறைகூடக் காட்டுவதில்லை. ஆனால், ஐன்ஸ்டீன் முழுநிறை அறிவியலறிஞ ராகவும், மெய்விளக்க அறிஞராகவும் மட்டும் வாழவில்லை. முழுநிறை மனிதராகவும் வாழ்ந்தார். அவர் சமயங்களுக்கு அடிமைப்படவில்லை. ஆனால், பெரும்பாலான அறிவியல் அறிஞர்களைப் போலவோ, மெய் விளக்க அறிஞர்களைப் போலவோ, அவர் சமய வாழ்வைப் புறக் கணித்து வெறுத்தொதுக்கவும் இல்லை. அவர் ஆழ்ந்த சமய உணர்வுடனும், சமரச உணர்வுடனும் வாழ்ந்தார். அதே சமயம் சமயங்கள் வேறு, சமய உணர்வு வேறு என்ற அடிப்படை உண்மை யை அவர் அறிந்தார். அதை அவர் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்கினார். அறிவியல் அல்லது பகுத்தறிவும் சமயம் அல்லது பற்றார்வமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்று கருதுபவரே உலகில் பலர். தாழ்ந்தபடிச் சமயவாழ்வும், தாழ்ந்தபடி அறிவியல் வாழ்வும் தத்தம் குறைபாட்டால் முரண்படுவது உண்மையே. ஆனால், உயர்தரச் சமய உணர்வும், உயர்தர அறிவியலார்வமும் முரண்பட்டவை யல்ல, கிட்டத்தட்ட ஒரே உணர்வின் இருவேற வண்ணங்களே. இதை ஐன்ஸ்டீன் அழகுற விளக்கியுள்ளார். இதனையே, ‘விண்ணொளிர் மீனின் வியன்ஒளி விளக்கம் தன்ணொளி மின்புழு அவாவிடும் ஆர்வம்’ (‘கூhந னநளசைந டிக வாந அடிவா கடிச வாந ளவயச’ - றுடிசனளறடிசவா) என்று கவிதையார்வத்தால் சில கலையுலக மன்னரும் கண்டு கூறியுள்ளனர். போரை எதிர்த்து உலக அமைதியை நாடியவர் ஐன்ஸ்டீன். இக் குறிக்கோளுக்காக வீடு விட்டு நாடு விட்டுப் போராட அவர் தயங்கவில்லை. போர்க்கள வீரரின் மேம் பட்ட அமைதிக்கள வீரர் அவர். ஏனெனில் குறுகிய நாட்டுப்பற்று, இனப்பற்று இல்லாமலே, அவர் நாட்டுக்கும் இனத்துக்கும் தொண்டாற்றி னார். அதே சமயம் உலக இயக்கங்களிலும் பெரும்பங்கு கொண்டு, உலகத்துக்கும் தொண்டாற்றினார். ஐன்ஸ்டீன் வாழ்வின் பெரும்புதிர் அவர் எளிமைப் பண்பும் எளிமைத் தோற்றமுமேயாகும். இங்கே அவர் மகாத்மா காந்தியடிகள் போன்ற அருட்பெரியார்களுடன் ஒப்புரவுடையவ ராகிறார். அகத்துறவு பூண்ட அருளாளர் புகழ் அவரை நாடிற்று. ஆனால், அவர் என்றும் புகழையோ, பதவியையோ நாடவில்லை. அறிவியலின் காதலனாக, ஆனால் அறிவியல் தரும் ஆற்றலை உலகுக்களித்துப் பணிவுடன் தொண்டு செய்யும் மனித இனத்தொண்டராக அவர் வாழ்ந்தார். குடும்பம், நட்பு, சமுதாய வாழ்வு ஆகிய பொதுவான இன்பங்களைக்கூட அவர் இந்த இரண்டு குறிக் கோள்களுக்காக விட்டுக்கொடுத்து அகத்துறவியாக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன் புகழ் பரந்த அளவுக்கு, அவர் கோட்பாடுகள் இன்னும் பொதுமக்களிடையே பரவவில்லை அறிவுலகின் உச்சியி லுள்ள ஒரு சிலரே அதனை மதிப்பிட்டு வரவேற்றனர். அவருடைய ‘தொடர்புறவுக் கோட்பாட்டைப் புரிந்து கொண்டவர் உலகிலே பத்துப்பேருக்குமேல் இருக்கமுடியாது’ என்று அறிவு வட்டாரங் களில் கூறப் பட்ட காலம் உண்டு. இன்னும் அது அறிஞர் சூழலும் ஆய்வுக்கூட எல்லையும் கடந்துவிட வில்லை. பள்ளி, கல்லூரி மாணவர் பாடத் திட்டங்களில் கூட அது முற்றிலும் இடம்பெற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் கருத்துக்களின் புரட்சிகரமான தன்மையேயாகும். தவிர, ஐன்ஸ்டீன் கோட்பாடு உயர்தரக் கணக்கறிவின் அடிப்படையில் அமைந்துள்ளதனால், உயர்தரக் கணக்கியலறிவு பரவும். அளவிலேயே அது பொது அறிவாக வளரமுடிகிறது. ஆயினும் அறிஞர் குழு மூலமாக அவர் புகழுடன் இவ்வறிவும் பரவி வருகின்றது. உலகம் அவர் அறிவின் முழுவிளைவைத் துய்க்கும் காலம் தொலைவிலிராது என்னலாம். ஐன்ஸ்டீன் வருங்கால அறிவியலின் முன்னோடி. வருங்கால உலகின் முன்னுணர்வுத் தூதர். வருங்கால உலகின் சிற்பிகளான இளைஞர் யாவரும் அவர் வாழ்வின் பயனை உணர்ந்து கொள்ளுதல் இன்றியமையாதது. சிறப்பாக, அறிவியல் துறையில் பிந்திவிட்ட கீழை உலகமும், தமிழகமும், அவர் வாழ்விலும் பண்பிலும் அக்கரை கொள்ளக் கடமைப்பட்டுள்ளது. அறிவியல் ஊழியிலேயே பிந்திவிட்ட நாம் ஐன்ஸ்டீனின் வருங்காலப் புதிய அறிவியலூழியில் இன்னும் பிந்திவிட நேரும். கீழ்நாட்டு ஐன்ஸ்டீன்களையும், தமிழக ஐன்ஸ்டீன்களையும் படைப்பதன் மூலமே மேனாடுகளுடன் நாம் ஒத்து ‘ஒரே உலகில்’ சரிசம உறுப்பினராக வளர முடியும். அவ்வகையில் ஐன்ஸ்டீன் வாழ்க்கை நமக்கு ஒரு தூண்டுதலாகும். 2. இளமைப்பயிற்சி அறிவாராய்ச்சிக்கும் கலை வளத்துக்கும் பேர்போன நாடு ஜெர்மனி. அறிவியல் உலகின் பேரறிஞரான ஐன்ஸ்டீனுக்கும் அதுவே பிறப்பிடம் ஆகும். இந்த அரும் பெரும் புகழை வேறு எந்த நாடும் ஆர்வத்துடன் ஏற்றுப் பெருமை கொண்டிருக்கும். ஆனால், ஜெர்மனியில் காலத்தின் கோலம் வேறுவகையாய் அமைந்தது. தாய் சேயை அணைக்க முன்வரவில்லை. அதன் புகழ்கண்டு மகிழவில்லை. மாற்றாந்தாயாக மாறிச் சேயின் புகழ்கண்டு அவள் புழுங்கினாள். சேயைப் புறக்கணித்து ஒறுக்க முனைந்தாள். சேயும் தாயின் அணைப்பை நாடவில்லை. தாய்மையை வேறிடங்களில் அது தேடிற்று. இயற்கை நெறிக்கு மாறுபட்ட இம் மாயப் புதிருக்கு விடை தருவது வரலாறே. ஜெர்மனியின் வாழ்வில் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஏற்பட்டுவந்த மாறுதலே இந்நிலைக்கு வழிவகுத்தது. தெற்கும் வடக்கும் ஜெர்மனியின் பழங்கலைப் பெருமைக்கும் நாகரிகப் புகழுக் கும் காரணமான பகுதி தென் ஜெர்மனி. ஷில்லர் (ளுஉhடைடநச), லெஸ்ஸிங் (டுநளளiபே), ஹீன்(ழநiநே) முதலிய புகழ்ச் செல்வங்களை ஈன்ற பகுதி அது. அதுவே உலகத்துக்கு ஐன்ஸ்டீனையும் அளித்தது. அது கலைவாழ்விலும் அறிவுத்துறையிலும் நாகரிக உலகுடன் நட்புப் பூண்டிருந்தது. சமயவேறு பாடு, இனவேறுபாடு, நாட்டுப்பகைமை ஆகிய நச்சுப் பண்புகளற்ற சமரச ஒளியில் அது திளைத்தது. இக் காரணங்களால் அமைதியாக வாழ்வையும் பண்பாட்டையுமே அது உயிர் மூச்சுக் களாகக் கொண்டிருந்தது. வடஜெர்மனி இவ்வெல்லாத் துறைகளிலும் தென் ஜெர்மனிக்கு மாறானது. ஆனால், 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அதுவே ஜெர்மனியில் ஆதிக்கம் நாட்டிற்று. அத்துடன் அரசியல் துறையிலும் பொருளியல் துறையிலும், கலைத் துறையிலும் அது உலக ஆதிக்கம் நாடிற்று. ஜெர்மனியை அதற்குரிய பாரிய படைத்தள மாகவும், படைவீடாகவும் மாற்ற அது அரும்பாடுபட்டது. இந் நோக்கத்துடன் போர் வெறி, நாட்டுப் பகைமை, இனப்பகைமை, சமயவெறி ஆகியவற்றை அது ஜெர்மனியின் புதிய தேசீயமாக வளர்க்க முனைந்தது. தென் ஜெர்மனியின் வாழ்வு இப் புதிய ஆதிக்க வெறியர்களின் காலடியில் கிடந்து நசுக்குண்டது. விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தென் ஜெர்மானியர் இந்த ஆதிக்கத்துக்குப் பணிய வேண்டி வந்தது. ஆனால், பணியாத பழைய ஜெர்மனியின் உயிர்த்துடிப்பு ஐன்ஸ்டீன் நாடி நரம்புகளில் ஓடிற்று. புதிய ஜெர்மனியின் போக்குடன் அவரும் அவருடன் புதிய ஜெர்மனியும் முரண்பட்டதன் காரணம் இதுவே. தாயும் சேயும் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கிய இம்முரண்பாடு, அவர் வாழ்வில் இறுதிவரை விரிந்துகொண்டே செல்வதைக் காணலாம். வட ஜெர்மனியரான போர்வெறி கொண்ட பிரஷ்யர் (ஞசயரளளயைளே) ஜெர்மன் பேரரசு நிறுவிய ஆண்டு 1871. ஐன்ஸ்டீன் பிறந்தது இதற்கு எட்டு ஆண்டுகளின் பின்னரேயாகும். பேரரசின் கொடுமைகளை மங்கச் செய்த கொடுங்கோலன் ஹிட்லர். அவன் 1930 முதல் ஆதிக்கத்துக்கு வந்தான். ஐன்ஸ்டீன் ஜெர்மனியிலிருந்து நாடுகடத்தப் பட்டது இதற்கு மூன்று ஆண்டு கழித்தேயாகும். தாய்க்கும் சேய்க்கும் இடையே பிளவு ஏற்படுத்திய அரசியற் கோளாறுகளின் தன்மையை இவ்வாண்டுகள் எடுத்துக் காட்டுபவை ஆகும். குடும்பச் சூழல் ஐன்ஸ்டீனின் முழு இயற்பெயர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (ஹடநெசவ நுiளேவநin) என்பது. அவர் 1879 மார்ச் 14-ம் நாள் உல்ம் என்ற சிற்றூரில் பிறந்தார். ஆனால், அடுத்த ஆண்டே அவர் தாய் தந்தையர் குடி பெயர்ந்து மியூனிச்(ஆரniஉh) நகருக்குச் சென்றனர். இங்கே அடுத்த ஆண்டு அவர்களுக்கு மஜா(ஆயதய) என்ற மற்றும் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஐன்ஸ்டீன் இளமையின் முற்பகுதி முழுவதும் இந்நகரிலேயே கழிந்தது. எலிஸா(நுடணைய) என்ற மைத்துனிமுறை உடைய பெண் ஒன்றும் மியூனிச்சில் சிலகாலம் அவர்களுடன் இருந்தது. இப் பெண் பிற்காலத்தில் ஐன்ஸ்டீனின் இரண்டாவது வாழ்க்கைத்துணைவி ஆனார். ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனின் தந்தை ஹெர்மன் ஐன்ஸ்டீன் (ழநசஅயnn நுiளேவநin) என்பவர். அன்னை பாலின்(ஞயரடiநே) என்பவர். ஹெர்மன் ஐன்ஸ்டீன் ஒரு சிறு மின்காந்தத் தொழிற்சாலை வைத்து நடத்தினர். இதில் அவருடன் அவர் உடன் பிறந்தாரும் உழைத்தார். ஹெர்மன் தொழிற்சாலையின் வாணிகத் துறையைக் கவனித்துக் கொண்டார். அவர் உடன் பிறந்தாரே தொழில் துறையைப் பார்த்து வந்தார். ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் யூத மரபினர். ஆனால், மரபுகாரணமாக அவர்களுக்கு எத்தகைய குறையும் ஜெர்மனியில் அக்காலத்தில் இல்லை. தென் ஜெர்மானியரின் சமரச வாழ்வில் மதவேறுபாடும் இனவேறுபாடும், அன்று புகவில்லை. இக்காரணத்தால் யூதரும் முனைப்பாக யூதராக வாழவில்லை. யூதரல்லாத பிறரும் தாம் வேறு, யூதர் வேறு என்ற எண்ணம் கொள்ளவில்லை. ஐன்ஸ்டீனின் தந்தை தொழில்துறையில் அடிக்கடி தோல்விகள் கண்டார். வறுமை அவர் குடும்பத்தை வாட்டிற்று. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. தோல்விகளைத் தட்டிக் கழித்து விடும் பண்பு அவரிடம் இருந்தது. ஆனால், அவர் உடன்பிறந்தார் அவரைவிட அறிவியலறிவும், ஆர்வமும், தொழில் திறமும் உடைய வராயிருந்தார். ஐன்ஸ்டீனின் அன்னையாரும் இனிய குணமும் நகைத்திறமும் வாய்ந்தவரா யிருந்தார். ஐன்ஸ்டீன் வாழ்க்கையின் அறிவார்வத்துக்கு அவர் சிற்றப்பனாரும், கலைப் பண்புக்கும் நகைத்திறத்துக்கும் அவர் அன்னையாரும் பெரிதும் துணை தந்தனர் எனலாம். அன்னைக்கு அவரிடம் அளவிலாப் பற்று இருந்தது. ஐன்ஸ்டீன் எதிர்காலத்தைப் பற்றி வேறு எவரும் எவ்வகை நம்பிக்கையும் காட்டியதில்லை. ஆனால், அன்னையார்மட்டும், “ஆல்பெர்ட் வருங்காலத்தில் ஒரு பெரிய பேராசிரியர் ஆகப்போகிறான். இது உறுதி. வேண்டுமானால் பாருங்கள்!” என்று பெருமையுடன் கூறுவாராம். குழந்தைப் பண்புகள் குழந்தைப் பருவத்தில் ஐன்ஸ்டீன் நலிந்த உடலும், முதிரா அறிவும் உடையராகவே அமைந்திருந்தார். பிற்காலப் புகழின் விதையையோ, பிற்கால அறிவின் தடத்தையோ இச்சமயம் அவர் வாழ்வில் யாரும் காணமுடியாது. எல்லாப் பிள்ளைகளும் பேசும் பருவத்தில் அவர் பேசப் பழகவில்லை. பேசப் பழகியபின்பும் அவர் பேசுவது அருமையாகவே இருந்தது. அத்துடன் மற்றப் பிள்ளை களைப்போல் அவர் என்றும் ஓடியாடுவதில்லை. விளையாடுவது மில்லை. அவர் ஒரே பொழுதுபோக்கு ஒதுங்கி வாய் மூடிப் பகற்கனவுகள் காண்பதேயாகும். இளமையில் அவர் சூலைநோய்க்கு ஆளாய் வருந்தினார். இது அவர் ஒதுங்கிய பழக்கங்களை இன்னும் மிகுதியாக்கிற்று. குழந்தைகள் பொதுவாகவும், அந்நாளைய ஜெர்மன் குழந்தை கள் சிறப்பாகவும், போர்வீரராக விளையாட விரும்புவதுண்டு. போர்வீரர் போன்ற பொம்மைகளை வைத்து விளையாடுவதையும் அவர்கள் விரும்புவது இயல்பு. ஆனால், ஐன்ஸ்டீன் இத்திசையில் ஆர்வம் செலுத்தியதே கிடையாது. புதிய ஜெர்மனியின் படைகள் தெருவில் அணிவகுத்துச் செல்லும், சமயம், குழந்தைகள் மட்டு மல்லாமல், பெரியோர்களும் அந்த வீரக் காட்சியைக் கண்டு களிப்பதுண்டு. ஆனால், ஜன்ஸ்டீன் அக் காட்சியைக் காண விரும்பவில்லை. போர்வீரரின் வறுமை கண்டும், தண்டனைக்கு அவர்கள் அஞ்சி அஞ்சி அடங்குவது கண்டும் அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டார். அவர்கள் வாழ்வின்மீது அவருக்கு வெறுப்பே ஏற்பட்டது. காந்த ஊசி இத்தனைச் சூழலிலும் அறிவியலார்வம் மட்டும் குழந்தை ஐன்ஸ்டீனிடம் ஐந்து வயதிலிருந்தே எப்படியோ வளர்ந்தது. ஒருநாள் அவர் தந்தை ஒரு சிறிய திசைகாட்டும் கருவியை அவரிடம் தந்தார். விளையாட்டுப் பொருள்களையே நாடாத அவர், அதை விடாது சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். எந்தத் திசையில் திருப்பினாலும் அதன் காந்த ஊசி வடக்கிலேயே திரும்பியது கண்டு, அவர் குழந்தையுள்ளம் அடைந்த வியப்பார்வம் எல்லையற்றதாயிருந்தது. “ஊசியைச் சுற்றியுள்ள வெட்ட வெளியிலே ஒன்றும் இருப் பதாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனாலும் அதை வடக்குத் திசைக்கே இழுக்கும் ஒரு சக்தி அந்த வெட்டவெளியில் நிறைந் திருக்கவேண்டும்,” இவ்வாறு அறிவியல் குழந்தை ஐன்ஸ்டீன் எண்ணமிட்டது என்று அறிகிறோம். சமய உணர்வு தொடக்கப் பள்ளிகள் அந்நாளில் தனித்தனி சமயக் கிளை களின் தலைவர்களாலேயே நடத்தப்பட்டன. பிள்ளைகள் நெடுந் தொலை சென்றாவது தத்தம் சமயக் கிளைப் பள்ளிகளில் பயில்வது வழக்கம். ஐன்ஸ்டீன் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கரே மிகுதியாய் இருந்தனர். பள்ளியும் கத்தோலிக்கர் நடத்திய பள்ளியாகவேயிருந்தது. ஐன்ஸ்டீன் குடும்பத்தினர் பெயரளவிலேயே யூதராயிருந்தனர். யூத சமயத்திலோ வினைமுறையிலோ முனைத்தவராயில்லை. ஆழ்ந்த பண்புடைய சில யூதப் பழக்க வழக்கங்கள் மட்டுமே அவர்களிடம் படிந்திருந்தன. அத்துடன் வறுமையும் அவர்களை வாட்டிற்று. எனவே, ஐன்ஸ்டீன் தாய் தந்தையர் யூதர் பள்ளி தேடி அவரைத் தொலை தூரத்துக்கு அனுப்பத் துணியவில்லை. கத்தோலிக்கப் பள்ளியிலேயே அவர் கற்றார். பள்ளியில் அவர் ஒருவரே யூத மாணவராயிருந்தார். ஆயினும், இதனால் ஐன்ஸ்டீனுக்குத் தனித் தொல்லை எதுவும் நேரவில்லை. கத்தோலிக்க சமய அறிவில் அவர் கத்தோலிக்கப் பிள்ளைகளை விஞ்சியவராயிருந்தார். அதன் விளங்காப் பகுதிகளை அவர் கத்தோ லிக்கப் பிள்ளைகளுக்கே விளக்கவும் முனைந்தார்! கத்தோலிக்க சமயம் வேறு, யூதர் சமயம் வேறு என்பதையே அவர் அன்று அறிய வில்லை. ஆகவே பள்ளியில் கத்தோலிக்கக் கருத்துக்களையும், குடும்பத்தில் யூதக் கருத்துக்களையும் அவர் வேற்றுமையின்றிக் கற்றார். இரண்டும் சேர்ந்தே அவரது அடிப்படைச் சமய உணர்வாயிற்று. கட்டுப்பாட்டை விரும்பாத ஐன்ஸ்டீன் பகட்டான சமய வினை முறைகளையும் விரும்பவில்லை. ஆனால், சமய உணர் வையும், கட்டுப்பாடற்ற எளிய வினைமுறைகளையும் அவர் வெறுக்கவில்லை. இதன் பயனாக, சமய உணர்வையே கேலி செய்த தந்தையையும், வேறு சில உறவினரையும் மெல்லக் கண்டிக்கக்கூட இந்த வயதில் அவர் துணிந்தார். பொய்யில்லா மெய்யர் தொடக்கப் பள்ளியிலிருந்தே பள்ளி வாழ்வின் கட்டுப்பாடு, தண்டனைகள் ஆகியவற்றை அவர் வெறுத்தார். வாழ்க்கைக்குப் பயன்படாத பிறமொழி இலக்கணத்தை உருப்போடும் பயிற்சி முறைகளும் அவருக்குக் கசப்பாயிருந்தது. பிள்ளைகள் விரும்பிக் கற்பதே நற் கல்வி என்று அவர் கருதினார். பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் கேள்விகள் மூலம் விளக்கமளித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கை. ஆசிரியர் மாணவர் நட்புறவு அவர் விரும்பிய கல்விமுறையின் அடிப்படையாயிருந்தது. அவர் தொடக்கப்பள்ளி வாழ்வில் ஒரு சிறப்பு உண்டு. எவ்வளவு தண்டனைகளைப் பெற்றாலும், அவர் குற்றத்தை மறைத்ததில்லை. பொய் சொல்வதைவிடத் தண்டனை பெறுவது அவருக்கு உகந்ததாயிருந்தது இதனால் அவர் ‘பொய்மையில்லா மெய்யர்’(ழடிநேளவ துடிhn) என்று பிள்ளைகளிடையே அழைக்கப் பட்டார். தனி ஒரு ஆசிரியர் தொடக்கப்பள்ளி முடிந்தபின் அவர் லுயிட் பால்டு பயிற்சிக் கூடம் (டுரவைடியீடிடன ழுலஅயேளரைஅ) என்ற மியூனிச் உயர்தரப் பள்ளியில் சேர்ந்தார். பெயரே அப்பள்ளியின் தன்மையைச் சுட்டிக் காட்ட வல்லது. உடற் பயிற்சியைப் போலவே கிரேக்க இலத்தீன் மொழி இலக்கணங்கள் அடித்து உடம்பில் படியவைக்கப்பட்டன. ஐன்ஸ்டீன் பின்னாட்களில் இப் பள்ளிகளைப் படைத்துறைப் பள்ளிக் கூடங்களுக்குரிய பக்க மேளங்கள் என்று கருதினார். பிள்ளைகள் படை வீரர்களாகவும், ஆசிரியர் நான்முறைப் பயிற்சி ஆசான்களாகவு, பள்ளித்தலைவர் படைத் தலைவராகவும் அவருக்குக் காட்சியளித்தனர். ஆசிரியர்கள் பொதுவாகக் கற்பிப்பதில் தாமும் ஆர்வம் காட்டியதில்லை. மாணவர்களிடமும் அவர்கள் ஆர்வம் ஊட்டக் கருதியதில்லை. சிறப்பாக, கிரேக்க இலத்தீன ஆசிரியர்கள் அப் பண்டை நாடுகளின் பண்பாடுகளின் மீது ஆர்வம் கொண்டது மில்லை. அதைத் தூண்டியதுமில்லை. ரூஸ்(சுரநளள) என்ற ஓர் ஆசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்காயிருந்தார். அவர் வகுப்புக்கள் எவ்வளவு நீளமாயிருந்தாலும் ஐன்ஸ்டீன் சோர்வுறுவதில்லை. அந்த ஒரு ஆசிரியரை மட்டும் ஐன்ஸ்டீன் என்றும் மறவாமல் ஆர்வத்துடன் உள்ளத்தில் நேசித்து வந்தார். பின்னாட்களில் ஐன்ஸ்டீன் தமது 30-வது வயதில் இந்த ஆசிரியரைக் காணச் சென்றபோது, அவர் ஆர்வம் பெரிதும் புண் பட்டதாம். நல்லாசிரியராயிருந்ததனால் ‘ரூஸூ’க்குக் கிட்டிய விளைவு வறுமை, மனக்கசப்பு ஆகியவையே. எனவே, தம்மை ஆர்வத்துடன் ஒரு மாணவர் நாடி வரக்கூடும் என்பதையே அவர் நம்பவில்லை. தம்மை அவமதிக்க வருவதாகவே எண்ணி அவர் வெளியே நழுவி விட்டாராம்! அறிவியல் கலை ஆர்வம் பள்ளிப் படிப்பில் அக்கறை செலுத்தாவிட்டாலும், ஐன்ஸ்டீன் அறிவியல் நூல்களைப் பள்ளிப்பாடங்களுக்குப் புறம்பாகவும் சென்று படித்தார். அவர் குடும்ப நண்பரான உருசிய யூதமாணவர் ஒருவர் அவருக்கு நூல்கள் தந்துதவினார். ஏரான் பெர்ன்ஸ்டீனின் ‘பொதுமக்களுக்குரிய இயல்நூல்’(‘ஹ ஞடியீரடயச க்ஷடிடிம டிn சூயவரசயட ளுஉநைnஉந’ லெ ஹயசடிn க்ஷயசளேவநin) பியூக்னெரின் ‘பொருளும் ஆற்றலும்’ (‘குடிசஉந & ஆயவவயச’) முதலிய புத்தகங்களை அவர் ஆர்வத்துடன் பருகினார். அவர் சிற்றப்பனார் வேடிக்கையாகவே ‘உருக்கணக்கிய’லில் (ஹடபநசெய) அவருக்கு ஆர்வமூட்டியிருந்தார். “கிட்டாத விசையைக் ‘கி’ என்று வைத்துக்கொண்டு கணக்குப் போடு. பின் கிட்டிய விடையிலிருந்து ‘கி’ கிடைத்துவிடும்” என்று அவர் கூறி உருக்கணக்கியலில் ஐன்ஸ்டீனை ஊக்குவாராம்! பள்ளிப்பாடமாகப் புதிதாக வாங்கப்பட்ட ஒரு ‘வடிவியல்’ நூல் (கூநஒவ-bடிடிம டிக பநடிஅநவசல) கூட அவருக்கு ஒரு புனைகதை (சூடிஎநட) ஆயிற்று. வாழ்க்கையின் அனுபவச் செய்திகளைப் படத்துடன் விந்தைகளாக விளக்கும் அந்த நூல் ஒன்றிரண்டாண்டுக்குரிய பாடமாக இருந்தது. அதை அவர் ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே ஆர்வத்துடன் படித்து முடித்துவிட்டார். அதற்குள்ளாகவே அது அவருக்கு முழுதும் பாடமாகியும் விட்டது. பள்ளியில் ஆண்டு முழுவதும் அவர் அந்நூலில் ஆசிரியரின் முன்னோடியாய் விட்டார். ஆசிரியர் கற்பித்ததில் அவருக்கு ஒன்றும் புதுமையில்லாது போயிற்று! ஆயினும் தாம் அறிந்ததை ஆசிரியர் வருந்தி வருந்திக் கற்பிப்பது அவருக்கு ஒரு புதுச்சுவை தந்தது. உயர்தரப் பள்ளி யூதர்களுக்குரியது. அதில் முதல் தடவை யாக அவர் யூத சமய ஏடுகளைக் கற்றார். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஒருங்கே திரு நூலாய் அமைந்த விவிலிய நூலின் பழைய ஏற்பாடு அவர் சமய உணர்வையும் ஆர்வத்தையும் தட்டி எழுப்புவதாயிருந்தது. வீட்டில் வில்யாழ் (ஏiடிடin) வைத்து அவருக்கு இசைப் பயிற்சி அளிக்கப் பட்டது. பள்ளிக் கட்டுப்பாட்டுடன் ஒரு வேண்டாக் கட்டுப்பாடாகவே அவர் இதையும் முதலில் கருதினார். ஆனால், 12 வயதுக்குள் மோஸார்ட் (ஆடிணடிசவ) பீதவன், (க்ஷநநவாடிஎநn) முதலிய இசைமன்னர் உருப்படிகளில் ஈடுபாடு தோன்றியபின், வில்யாழ் அவர் வாழ்க்கையின் நீங்கா இன்பங்களுள் ஒன்றாயிற்று. போலி மருத்துவச் சான்று ஐன்ஸ்டீனுக்குப் பதினைந்தாண்டு திகையும் சமயம் அவர் தந்தை வாழ்வில் மீண்டும் மாறுதல் ஏற்பட்டது. மியூனிச்சில் அவர் தொழில் சீர்குலைந்தது. 1894-ல் அவர் இத்தாலியிலுள்ள மிலான் நகருக்குச் சென்று தம் வாழ்வைச் செப்பம் செய்ய முயன்றார். ஆயினும் ஐன்ஸ்டீன் மியூனிச்சிலேயே தம் பள்ளிப்படிப்பை முடிக்கும்படி தந்தை அவரை அங்கே விட்டுச்சென்றார். உயர்தரப்பள்ளி இறுதித்தேர்வின் நற்சான்றில்லாமல், எவரும் பல்கலைக் கழகத்துக்கோ, உயர்தரப் பணிகளுக்கோ போக முடியாது. ஆனால் பள்ளி இறுதித் தேர்வு ஐன்ஸ்டீனுக்கு ஓர் எட்டிக் கனியாகவே அமைந்தது. கணக்கியல் ஒன்றில் அவர் பள்ளிப்பாடம் கடந்து மிகவும் திறமையுடையவராயிருந்தார். கிரேக்கம் (ழுசநநம) இலத்தீனம் (டுயவin)முதலிய பண்டை மொழிகளிலும் இலக்கணங்களிலும் அவர் சிறிதும் முன்னேற முடியவில்லை. எப்படியாவது உயர்தரப் பள்ளியைவிட்டு ஒழிய அவர் சூழ்ச்சி செய்தார். அவர் ஒரு மருத்துவரை அணுகினார். “பள்ளிப் படிப்பே உடல் நிலைக்கு ஒத்துக்கொள்ளாது. ஆறுமாதமாவது இத்தாலியிலிருந்தா லல்லாமல் தேர்வுக்குச் செல்லவும் முடியாது,” என்று ஒரு நற்சான்று பெற்றார். இதே சமயம் பள்ளியின் இரும்புக்கட்டுப் பாடுகள் ஐன்ஸ்டீனின் மனம் போனபோக்கால் தடைபடுவதாகவும், பிற பிள்ளைகளும் அவரால் கெடுவதாகவும் பள்ளித்தலைவர்கள் கருதி அவரை அகற்ற முனைந்திருந்தனர். இதனால் பள்ளியிலிருந்து அவர் எளிதாகவே விலகிச்செல்ல முடிந்தது. கணக்காசிரியர் ஒருவர்மட்டும் ஐன்ஸ்டீனை உயர்வாக மதித்திருந்தார். அவரிடமிருந்து ஐன்ஸ்டீன் ஒரு நற்சான்று பெற்றுக் கொண்டார். இசையார்ந்த இத்தாலி பதினைந்தாவது வயதிலேயே ஐன்ஸ்டீனுக்கு ஜெர்மனியின் பள்ளி வாழ்வும், ஜெர்மனியும் நரகமாகத் தோற்றத் தொடங்கி விட்டன. ஆனால், இத்தாலி(ஐவடயல)அவருக்குப் பொன்னுலகாக விளங்கிற்று. அவர் தந்தையை வற்புறுத்தி, ஜெர்மனி குடியுரிமை யையே உதறித் தள்ளிவிட்டார். தந்தையும் மகனின் இந்தப் பிடிமுரண்டுக்கு எப்படியோ இணங்கினார். இதுமுதல் இன்னொரு நாட்டின் குடியுரிமை பெறும் வரை, அதாவது 15 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப் பட்ட ஆறாண்டுக் காலமும், ஐன்ஸ்டீன் நாடற்றவராகவே இருந்தார். ஆனால், இதுபற்றி அவர் கவலைப்படவில்லை. சில மாதங்கள் இத்தாலியின் பழங்கலைக் காட்சிகள் அவருக்கு விருந்தளித்தன. இத்தாலிய மக்களின் அன்பார்வமிக்க இணக்க நயமும், அவர்கள் இசையார்வமும் அவர் உள்ளங் குளிர்வித்தன. அவர் வாழ்வில் முதல் தடவையாக, அவர் உள்ளம் விளையாட்டுக் களத்தில் உள்ள பள்ளி இளைஞர், நங்கையர் நிலையில் துள்ளிக் குதித்தது. பொறுப்புணர்ச்சியும் கவலையும் ஆனால், வாழ்வின் இன்பம் வயிற்றுப் பசியாற்ற முடியாது. ஐன்ஸ்டீன் இவ்வுண்மையை விரைவில் காண நேர்ந்தது. தந்தையின் தொழில் இத்தாலியிலும் முழுத் தோல்வியே கண்டது. அவர் மகனிடம் தம் நிலைமையை ஒட்டறுத்துக் கூறிவிட்டார். “அப்பனே, இனி நீயாகத்தான் உன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னால் உன்னை இனி நீடித்து ஆதரிக்க முடியாது. விரைவில் ஏதேனும் தொழில் பார்த்துக்கொள்,” என்றார். வாழ்க்கையின் சுமையும், பொறுப்பும், கவலையும் இதுமுதல் ஐன்ஸ்டீனை வாட்டத்தொடங்கின. காந்த ஊசியில் ஈடுபட்ட நாள்முதல் ஐன்ஸ்டீன் உள்ளம் இயற்கையின் அமைதிகளைக் கண்டுணரும் அவாவிலேயே ஈடுபட்டிருந்தது. இயங்கியல், கணக்கியல் முதலிய கலை நுணுக்கத் துறைகளிலேயே அவர் ஈடுபட விரும்பினார். இத்துறைகளின் ஆராய்ச்சியில் அன்று ஜூரிச்சிலுள்ள ஸ்விட்ஸர்லாந்துக் கூட்டுற வாட்சியின் பல்கலை நுணுக்கக் கூடமே (ளுறளைளகநனநடியட) பேர் போனதாயிருந்தது. அதன் நுழைவுத்தேர்வுக்கு ஞடிடலவநஉniஉ யவ ணரசனை (நுவேசயnஉந நுஒயஅநவேiடிn) அவர் மனுச்செய்து கொண்டார். ஆரோப்பள்ளி மொழித்துறையிலும் இலக்கணத்துறையிலும் ஐன்ஸ்டீனுக்கு இருந்த பிற்போக்கு நுழைவுத்தேர்வில் இடம் பெறுவதற்கே தடையாயிற்று. ஆயினும் அவருக்குக் கணக்கியல் துறையில் இருந்த வழக்கமீறிய திறமையும் ஆர்வமுங் கண்டு பல்கலை நுணுக்கக் கூடத் தலைவர் அவர் மீது கனிவும் பரிவும் கொண்டார். நுழைவுத் தேர்வில்லாமலே நுழைவுபெறும் ஒரு குறுக்கு வழியை அவர் ஐன்ஸ்டீனுக்குக் காட்டினார். ஸ்விட்ஸர்லாந்து நகரப் பள்ளிகளில் ஒன்றில் பள்ளி இறுதித்தேர்வு (ளுஉhடிடிட கiயேட நுஒயஅiயேவiடிn) பெறும்படி அவர் அறிவுரை தந்தார். அதன்படி ஐன்ஸ்டீன் ஆரோவட்டப் பள்ளியில்ஊயவடியேட ளுஉhடிடிட டிக ஹயசயn) சேர்ந்தார். ஆரோப்பள்ளியின் கல்விமுறை ஐன்ஸ்டீன் உள்ளப் பாங்குக்கு உகந்ததாயிருந்தது. மாணவர்கள் தாமாகச் சிந்திக்கவும் செயலாற்றவும் இடம்பெற்றனர் - அதற்கான தூண்டுதலும் சூழ்நிலை வாய்ப்புக்களும்கூட அவர்களுக்கு அளிக்கப்பட்டன. ஆசிரியர் மாணவர்களுடன் தாராளமாகவும், நேசபாவத்துடனும் பழகினர். வாழ்க்கைச் செய்திகள்பற்றியும் அரசியல் பற்றியும் பேசும் உரிமை மாணவர் களுக்கு இருந்தது. இதுவும் ஊக்கப் பட்டது. இந் நிலையில் பள்ளி வாழ்வில் ஐன்ஸ்டீனுக்கிருந்த வெறுப்பு முற்றிலும் பறந்தோடிற்று. ஆரோப் பள்ளியில் இருந்த ஆசிரியர் வின்ட்லருடனும்(றுiவேநடநச) அவர் புதல்வர் புதல்வியருடனும் ஐன்ஸ்டீன் மிகவும் நட்பாடினார். பின்னாட்களில் இந் நட்பு குடும்ப உறவாயிற்று. ஆசிரியர் புதல்வரே ஐன்ஸ்டீன் தங்கையை மணந்து, அவர் மைத்துனரானார். ஜூரிச் பல்கலைக் கூடம் ஆரோவில் ஓர் ஆண்டு கழித்தபின், ஐன்ஸ்டீனுக்கு எளிதில் ஜூரிச் பல்கலைக் கூடத்தில் இடம் கிடைத்தது. அவர் முதலில் ஜூரிச்சை அணுகியபோது, பணித்துறைக்காகப் பயிலவே எண்ணினார். இப்போது அவர் நோக்கம் மாறுபட்டது. பணித் துறையிலிருந்தால் அவர் விரும்பிய துறைகளில் மேலும் ஆராய்ச்சி செய்யும் வாய்ப்புக் கிட்டாது. அத் துறைகளில் பயிற்சி ஆசிரிய ரானால் இந்த வாய்ப்புக் கிட்டும் என்று அவர் எண்ணினார். ஜூரிச்சில் இயங்கியலின் உயர்தர அறிவுநூல்களை வாசிக்கும் வாய்ப்பு ஐன்ஸ்டீனுக்குக் கிட்டிற்று. அதை அவர் நன்கு பயன் படுத்தினார். ஹெல்ம்ஹால்ட்ஸ்,(ழநடஅhடிடவண) கிர்ச்ஹஃவ், (முசைஉhhடிகச) பால்ட்ஸ்ம்ன், (க்ஷடிவாளஅயnn) மாக்ஸ்வெல், (ஆயஒறநடட) ஹெர்ட்ஸ் (ழநசவண) முதலிய இயங்கியல் வல்லுநர் நூல்களை அவர் இப்போது பயின்றார். ஜூரிச்சில் இச்சமயம் உலகின் தலைசிறந்த கணக்கியல் வல்லுநர்களுள் ஒருவரான ஹெர்மன் மிங்கோவ்ஸ்கி35 கணக்கியலாசிரியராக இருந்தார். அவர் உருசிய நாட்டவர். அவர் உதவியுடன் இயங்கியலுக்கு அடிப் படையாக உதவும் கணக்கியல் கருத்துக்களை ஐன்ஸ்டீன் உருவாக்கினார். ஆயினும் மிங்கோவ்ஸ்கியின் முழு அருமையையும், உயர்தரக் கணக்கியலின் இன்றியமை யாமையையும் ஐன்ஸ்டீன் இப்போது உணரவில்லை. பின்னாளில் அவை தேவைப்பட்ட போது அவர் மிங்கோவ்ஸ்கியின் துணையையே மீட்டும் நாடினார். உலகமெங்குமிருந்து மாணவர்கள் அன்று ஜூரிச்சில் வந்து பயின்று வந்தனர். அவர்களிடையே ஆஸ்டிரியப் புரட்சித் தலைவர் விக்டர் ஆட்லரின்(ஏமைவடிச ஹனடநச) புதல்வரான பிரீடரீக் ஆட்லர் (குடிடநனசiஉh ஹனடநச) , ஹங்கேரியா விலிருந்து வந்த ஸெர்விய நங்கையான மிலேவா மாரிட்ஸ் (ஆடநைஎய ஆயசiஉஒh) ஆகியவர்கள் ஐன்ஸ்டீன் நண்பராயினர். மிலேவா மிகுதியாக வாயாடா தவர். ஐன்ஸ்டீன் ஆராய்ச்சிப் பேச்சுக்களை அறியாமலே அறிந்தவர் போல அவர் தலையாட்டிவந்தார். ஐன்ஸ்டீன் அவர் பேசா மௌனத்தை நிறை அறிவார்வமாகக் கொண்டு, அவரிடம் மிகுதி ஈடுபாடு காட்டிவந்தார். இவ் ஈடுபாடு வரவர வளர்ந்து வந்தது. ஐன்ஸ்டீன் ஜூரிச்சிலேயே ஆசிரியப்பணி நாடியிருந்தார். ஆனால், அந்த எண்ணம் வெற்றிபெறவில்லை. மாணவர் நிலையில் அவரைப் போற்றிய ஆசிரியர்கள் அதன் முடிவில் அவரைக் கை விட்டனர். அச்சமயம் அதன் காரணங்களை இளைஞர் ஐன்ஸ்டீன் அறியவில்லை. ஸ்விட்ஸர்லாந்தில் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருந்தபின், 1901-ல் அவர் ஸ்விட்ஸர்லாந்துக் குடியுரிமை பெற்றிருந்தார். ஆயினும் அவர் புதுக் குடியுரிமையாளர் என்ற காரணத்தாலும், யூதர் என்ற காரணத்தாலுமே அவரிடம் ஜூரிச் பல்கலைக்கூடம் மனக்கோட்டம் காட்டிற்று என்பதை அவர் பின்னாட்களிலே உணர்ந்தார். தோல்வி, வறுமை ஜூரிச்சில் கிடையாத பணியை மற்ற சிறிய பள்ளிகளில் ஐன்ஸ்டீன் தேடினார். இங்கும் அதே காரணங்களால் மாயத்தோல்வி அவரைப் பின்பற்றிற்று. பத்திரிகை விளம்ரரங் களின் மூலமாக ஷாஃவ்ஹெளஸன் (ளுஉhயககாயரளநn) நகால் அவருக்கு ஓர் இடம் கிடைத்தது. அங்குள்ள ஒரு மாணவர்விடுதித் தலைவரின் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அவர் வீட்டாசிரியரானார். இங்கே பிள்ளைகளுக்கு தேர்வில் தேறும் சூழ்ச்சிமுறைகளைக் கற்பிக்கும் வழக்கத்தை அவர் மேற்கொள்ள வில்லை. அவர்கள் சிந்தனையைத் தூண்டிக் கற்பிக்கலானார். இது தவறான முறை என்று ஆசிரிய அனுபவமுடைய பிள்ளைகளின் பாதுகாவலர் கருதினார். இதன் பயனாக, ஐன்ஸ்டீன் தம் பொறுப்பைத் துறக்க நேர்ந்தது. மாணவர்கள் முன்னேற்றத்துக்கு ஆசிரியர்கள்தான் தடை என்று ஐன்ஸ்டீன் இதுவரை எண்ணியிருந்தார். இந்தப் பழைய எண்ணம் இப்போது சிறிது மாறிற்று. ஆசிரியர் நற்பண்புக்கு நிலையங்கள் தடங்கள் செய்தன என்பதை அவர் இப்போது கண்டார். மியூனிச் ஆசிரியர் ரூஸ்ஸிடம் பின்னாளில் அவர் கண்ட மனப்பாங்கு இதனை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். தொழிலில்லாமை, தோல்வி, வறுமை ஆகியவற்றின் இருள் இப்போது இளைஞர் ஐன்ஸ்டீனைச் சூழ்ந்தது. அவரது இனமும் குடியுரிமையுமே அவர் ஊழாய் இருந்ததை அவர் அன்றே அறிந்திருந்தால், இருள் இன்னும் செறிவுற்றிருக்கும். ஆனால், இருளில் ஒளியாக அவருக்கு ஓர் எதிர்பாரா வழி ஏற்பட்டது. ஜூரிச் பள்ளித்தோழரான மார்ஸல் கிராஸ்மன்(ஆயசஉநட பசடிளளஅநn) பெர்ன் (க்ஷநநே) நகரிலுள்ள அறிவியல் பதிவுரிமைநிலைய ஆட்சியாளர் ஹாலரை (ழயடடநச, னுசைநஉவடிச, ஞயவநவே, டீககiஉந) ஐன்ஸ்டீ னுக்கு அறிமுகப்படுத்தினார். கடமைகளைச் செய்வதுடன் அமையும் பலரை அமர்த்தி அமர்த்தி அலுப்புற்றவர் ஹாலர். புத்தார்வமுடைய ஒருவர் மூலம் நிலையத்துக்கு விருவிருப்பூட்ட அவர் எண்ணினார். இவ்வகையில் ஐன்ஸ்டீனுக்கும் அன்றைய வறுமை நிலையில் அதைவிடச் சிறந்த இடம் கிடைத் திருக்கமுடியாது. ஐன்ஸ்டீன் பணியேற்று அலுவல் தொடங்கினார். 3. பெர்ன் பதிவுரிமை நிலையம் (1902 - 1909) ஐன்ஸ்டீன் வாழ்க்கையின் முதல் திரும்பு கட்டமும், முதன் மையான திரும்புகட்டமும் பெர்ன் பதிவுரிமை நிலையப் பணியே யாகும். அவர் 1902-ம் ஆண்டு முதல் 1909-ம் ஆண்டுவரை அதில் ஈடுபட்டிருந்தார். பணியில் நுழையும் போது அவர் இளைஞராக, புகழும் அனுபவமும் அற்றவராக, தன்னம்பிக்கையற்ற நிலையில், வாழ்வின் இருளில் தடவிக்கொண்டு தள்ளாடியவராக விளங்கினார். ஆனால், அதை விட்டு வெளிவரும்போது மனைவி மக்களுடன், புகழொளியின் புன்முறுவலிடையே, வெற்றிமேல் வெற்றி நோக்கி வெளியேறினார். அதற்குமேலும் அவர் வாழ்க்கையில் துன்பங்களும் நெருக்கடிகளும் ஏற்படாமலில்லை. ஆனால், பெர்ன் வரும்போது இருந்த தன்னம்பிக்கையற்ற நிலை பின் என்றும் ஏற்படவில்லை. அவர் வாழ்க்கையின் குறிக்கோள் அதற்குப்பின் ஒரே குறிக்கோளா யிற்று. பெர்னில் வெற்றி கரமாகத் தொடங்கிய ஆராய்ச்சிகளை முழுநிறைவு படுத்துவதே அவர் வாழ்நாள் பணியாயிற்று. பதிவுரிமை நிலையத்தின் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. அதேசமயம் அது அவர் வறுமையைப் போக்கி, அவர் வாழ்வின் படித்தரத்தை நிலையாக உயர்த்திற்று. பணியில் அவர் பெற்ற ஊதியம் 3000 ஸ்விஸ் வெள்ளி; (குநயnஉள) அதாவது கிட்டத்தட்ட 600 இந்திய வெள்ளிகள் ஆகும். இவ் வளமான வருவாய் மூலம் அவர் குடும்ப வாழ்வுபற்றி எண்ண அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. திருமணம் தம்முடன் ஜூரிச்சில் பயின்ற ஸெர்பிய நங்கை மிலேவா விடமே அவர் மனம் சென்றது. வாழ்வைத் தேடுவதைத் தவிரத் தனிப்பட எந்தத் திறமையோ, தகுதியோ அற்றவர் அந்நங்கை. அவர் பழைய கிரேக்க கத்தோலிக்க (ழுசநநம ஊயவாடிடiஉ) சமயத்தைச் சார்ந்தவ ராயினும், முற்போக்குக் கருத்துடையவராகவும், சமயம் பற்றிய அக்கரையற்ற வராகவுமே இருந்தார். ஆகவே, அவர் யாதொரு தடங்கலுமின்றி ஐன்ஸ்டீனை ஏற்றார். 1903-ல் அவர்கள் திருமணம் நிறைவேறிற்று. அடுத்த ஆண்டில் ஒரு புதல்வனும் அதனை அடுத்து மற்றொரு புதல்வனும் பிறந்து அவர்கள் மணவாழ்க்கையை நிறைவு படுத்தினர். முதற் புதல்வனை ஐன்ஸ்டீன் தன் பெயரேயிட்டு ஆல்பெர்ட் என்று அழைத்தார். பணிமனை வேலை பணிமனை வேலை ஐன்ஸ்டீனுக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய ஆராய்ச்சியிலீடுபடுபவர் அந்த ஆராய்ச்சிகளைத் தமதாக்கி உரிமைப் படுத்துவதற்காகவும், அதைப் பாதுகாப்பதற்காகவுமே அந்நிலையத்துக்கு உரிமைப்பதிவு செய்யும்படி மனு அனுப்பினர். ஏற்கெனவே உலகின் பல கோணங்களிலிருந்தும் மனுக்கள் வந்த குவிந்துகொண்டிருந்தன. நிலையத்தின் தேவையையும் செல்வாக் கையும் இது நன்கு எடுத்துக் காட்டிற்று. ஆனால், ஐன்ஸ்டீன் வரும்வரை அத்தகைய வேலையை எவராலும் ஒழுங்கு படுத்தவோ, முடிக்கவோ இயலாதிருந்தது. ஐன்ஸ்டீன் முழு மூச்சுடனும் முழு ஆர்வத்துடனும் அதில் ஈடுபட்டார். ஒவ்வோர் ஆராய்ச்சி மனுவையும் அவர் கவனித்து அதன் கருப் பொருளையும் கருத்தையும் தெளிவாக அதன் தலைப்புரையில் எழுதினார். தலைப்பின் பொருளுக்கேற்றபடி அவற்றை வகுத்து ஒழுங்குபடுத்தினார். தெளிவாக எழுதப்படாதவற்றைத் தெளிவாக எடுத்தெழுதினார். தெளிவாக விளக்கப்படாதவற்றை அவர் அரும்பாடுபட்டுத் தாமே அத்துறை நூல்களைக் கற்றறிந்து விளக்கி எழுதினார். விடை எழுதப்படாம லிருந்தவற்றுக்கு உடனுக்குடன் விடைகள் வரைந்தனுப்பினார். பலர் ஆராய்ச்சிகளுக்கு மேற்பட அவர் ஆராய்ச்சி அறிவுரைகள் அனுப்பி ஊக்கினார். இத்தகு செயல்களால், பதிவுரிமை நிலையமாக மட்டுமே யிருந்த அப் பணிமனை, ஆராய்ச்சி யாளர்களின் அறிவுரை நிலையமாக மாறத் தொடங்கிற்று. பணிமனையிலிருந்து வந்த விளக்கங்களைக் கண்டு ஆராய்ச்சி யுலகம் வியப்பும் மலைப்பும் அடைந்தது. உலகத்தின் ஒரு புதிய அறிவியல் சோதி பணிமனையாளர் உருவில் இருந்து எழுதி வருவதை எவரும் கனவு கண்டிருக்க முடியாதன்றோ? பதிவுரிமை நிலையத்தில் ஐன்ஸ்டீன் அமர்த்தப்பட்ட சில நாளைக்குள், ஜூரிச்சில் அவருடன் பயின்ற மற்றொரு தோழரும் அங்கே இடம் பெற்றார். அவரே பொறியாண்மைத் துறை மாணவரான (ளுவரனநவே டிக ளுடிசபiநேநசநசல) பெஸ்ஸோ(க்ஷநளளடி) என்ற இளைஞர். தம் துறை அறிவுடன் இயங்கியல், சமுதாய இயல், தொழில் நுணுக்கத் துறை ஆகிய பல துறைகளிலும் அவர் பரந்த அறிவுடையவரா யிருந்தார். எந்தத் துறையிலும் அவர் கருத்துரைகளும் முடிவுகளும் அப்பழுக்கற்ற வையாய் இருந்தன. ஐன்ஸ்டீனும் அவரும் ஒருவர் அறிவை மற்றவர் தீட்டும் இரு சாணைக்கற்களாய் அமைந்திருந்தனர். அறிவுத் துணை நலம் பணிமனை மேலை, நண்பருடன் அளவளாவல், ஓய்வு நேர ஆராய்ச்சி ஆகிய இத்தனைக்கும் பின்னர், இரவில் நெடுநேரம் விழித்திருந்து மனைவியிடம் தம் ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கி விரிவுரையாற்றுவதற்கு ஐன்ஸ்டீனுக்கு எப்படியோ நேரமும், மனமும், ஈடுபாடும் இருந்தன. வாழ்க்கையில் ஆராய்ச்சியாளர் மனைவிக்குரிய பெருந் தகுதியும் கடமையும் அவர் ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கேட்பதே என்று ஐன்ஸ்டீன் எண்ணியிருக்க வேண்டும். மனைவியும் கடைசிவரை எல்லாவற்றையும் காதுகொடுத்துப் பொறுமையாகக் கேட்கும் ஓர் ஒப்பற்ற அருங்குணம் உடைய வராகவே இருந்தார். உண்மையில் அந் நங்கை அதில் அக்கறை கொள்ளவில்லை என்பதை இளமையார்வமிக்க ஐன்ஸ்டீன் நெடு நாள் அறியவில்லை. அத்துடன் குழந்தை ஆல்பெர்ட் பிறந்தபின் ஆராய்ச்சி களைக் கேட்கும் வேலையில் அவனுக்கும் பங்கு ஏற்பட்டது. மூத்த ஆல்பெர்ட் இளைய ஆல்பெர்ட்டிடம் தம் ஆராய்ச்சிகள், வெற்றி தோல்விகளை ஆர்வமாக எடுத்து விளக்கி, அவன் ஆர்வக் கருத்து ரையை அடிக்கடி எதிர்பார்ப்பதுண்டு. மனைவியின் பொறுமை வாய்ந்த மௌனத்தை விடக் குழந்தையின் ஆர்வச் சிரிப்பிலும், குறும்புப் பார்வையிலும் ஐன்ஸ்டீனுக்கு மிகுந்த ஆர்வ ஊக்கம் ஏற்பட்டதென்றே கூறவேண்டும். உண்மையில் ஐன்ஸ்டீன் உள்ளம் என்றும் குழந்தை உள்ளமாகவே இருந்ததனால், குழந்தைகளிடம் அவர் ஈடுபாடு எப்போது மிகுதியாகவே இருந்தது. பணிமனை வாழ்விலும் குடும்பவாழ்விலும் இக் காலத்தில் ஐன்ஸ்டீன் ஒருங்கே மனநிறைவுடையவராக இருந்தார். அவர் வாழ்வில் பின்னாளில் புகழ் இதற்கு மேற்பட எவ்வளவோ வளர்ந் தாலும், இச்சமயம் அவர் அனுபவித்த இனிய வாழ்க்கை அமைதியை எப்போதுமே அவர் அடைந்ததில்லை என்னலாம். இக்காலத்தின் நடுப்பகுதியில் 1905-ல் ஓர் ஆண்டுக்குள் அவர் செய்து முடித்த செயல்களின் அளவிலும், அருமை பெருமைகளிலும் நாம் இதைத் தெளிவாகக் காணலாகும். இதுவரை நண்பரிடையே மட்டும் மதிப்படைந்திருந்த அவர் இந்த ஒரே ஆண்டின் ஆராய்ச்சி வெளியீடுகளால் திடுமென உலகளாவிய புகழ் அடைந்தார். ஓர் ஆண்டின் சாதனைகள் “இயங்கும் பொருள்களின் மின்காந்த இயக்கங்கள்,”(டிn வாந நடநஉவசடி - னுலயேஅiஉள டிக க்ஷடினநைள in அடிவiடிn) “ஆற்றலின் தடை எதிர்ப்பாற்றல்,” (கூhந ஐவேநசயை டிக நுநேசபல) “பிரௌண் கண்ட இயக்கத்தின் ஒழுங்கமைதி” (கூhந டுயற டிக வாந க்ஷசடிறni யn அடிஎநஅநவே) “ஒளியின் தோற்றமும் மாறுபாடும்; அதுபற்றிய பயன் மிக்க மதிப்பீடு,” (ஹ ழநரசளைவiஉ நுஎயடரயவiடிn டிக டiபாவ, வைள டிசபைiளே யனே வசயளேகடிசஅயவiடிளே) “அணுத்திரளின் பருமான அளவைகளை அறுதியிடுவதற்குரிய ஒரு முறை” (ஹ நேற அநவாடின கடிச வாந னநவநசஅiயேவiடிn டிக அடிடநஉரடயச னiஅநளேiடிளே) ஆகிய இத்தனை புரட்சிகரமான ஆராய்ச்சிக் கட்டுரைகளும் ஓர் ஆண்டுக்குள் ஐன்ஸ்டீனின் மூளை என்னும் அறிவுத் தொழிற் சாலையிலிருந்து வெளிவந்த வெளிவந்த புதுப் படைப்புக்கள் ஆகும். இப் புத்தாராய்ச்சிகளில் “ஒளியின் தோற்றமும் மாறுபாடும் பற்றிய பயன்மிக்க மதிப்பீடு,” என்ற இறுதி வெளியீடு ஜூரிச் பல்கலைக் கழகத்தாரின் கவனத்தை ஐன்ஸ்டீன் பக்கம் திருப்பிற்று. அப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளைனர் (ஞசடிகநளளடிச முடநiநேச) இள ஆராய்ச்சி யாளரான ஐன்ஸ்டீனின் அருந் திறமையை முதல்முதல் கண்டுணர்ந் தவராவர். அவர் ஆதரவில் பல்கலைக் கழகம் ஐன்ஸ்டீனுக்கு “மெய்விளக்கத்துறை முனைவர்” (னுடிஉவடிச டிக ஞாடைடிளடியீhல) என்ற பட்டம் அளித்துப் பெருமைப்படுத்திற்று. பேராசிரியர் கிளைனர் ஐன்ஸ்டீன் பெருமையை 1901-லேயே அறிந்துகொண்டிருந்தார் என்று அறிகிறோம். அவ்வாண்டில் ஐன்ஸ்டீன் ஷாஃவ் ஹெளஸனில் வீட்டாசிரியப் பணிதான் செய்து கொண்டிருந்தார். ‘வளிகளின் விசையாற்றல் கோட்பாடு பற்றிய’ ஐன்ஸ்டீன் கட்டுரையை (கூhந முiநேவiஉ வாநடிசல டிக ஊநயளநள) அவர் காண நேர்ந்தது. அதைப் பேராசிரியர் உயர்வாக மதித்தபோதிலும், உலகியல் தொடர்பு களை முன்னிட்டே அம் மதிப்பை வெளியிடுவது நன்றன்றென அடங்கியிருந்தார். ஏனெனில் அக்கட்டுரை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கிளைனருடன் உழைத்த லட்விக் பொல்ட்ஸ்மன் (டுரனறபை க்ஷடிடவணஅயnn) என்ற மற்றொரு புகழ்பெற்ற பேராசிரியர் கருத்துக்களை முனைப்பாகக் கண்டிப்ப தாயிருந்தது. பேராசிரியர் அவா புகழ்பெற்ற ஆராய்ச்சியறிஞரைத் திகைக்க வைக்கும் புத்தாராய்ச்சியுடைய இளைஞரொருவர் ஒரு பணிமனையில் இருந்து வேலை செய்வது பேராசிரியர் கிளைனருக்குப் பிடிக்க வில்லை. அந்நிலை பொதுவாகப் பல்கலைக் கழகங்களுக்கும், சிறப்பாக அருகாமையிலிருந்த ஜூரிச் பல்கலைக் கழகத்துக்கும் மதிப்பளிப்பதல்ல என்று அவர் கருதினார். முனைவர் பட்டத்தை அளித்ததன் மூலம் ஜூரிச் பல்கலைக் கழகம் இக் குறைபாட்டை அரைகுறையாகவே அகற்றிய தெனவும் அவர் எண்ணினார். ஆகவே பல்கலைக் கழகத்துடனும், மாணவருடனும் இன்னும் மிகுதி தொடர்பு கொண்டு தம் ஆராய்ச்சி அறிவை இளைஞருலகுக்கும் பயன் படுத்தும்படி அவர் ஐன்ஸ்டீனைத் தூண்டினார். அவரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக்கும் முயற்சியில் அவர் முனைந்தார். ஆனால், பேராசிரியர் விருப்பம் பல்கலைக் கழகத்தின் இரும்புச்சட்ட விதிமுறைகளைத் தளர்த்திவிடப் போதுமான தாயில்லை. ஆசிரியராக நீடித்த அனுபவம் பெற்ற பின்னரே ஒருவர் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உரிமை பெற முடியும். அவ்வுரிமைக்காகச் சம்பளமில்லாமல் உழைத்த வண்ணம் எத்தனையோ இளைஞர் காத்துக்கொண்டிருந்தனர். பேராசிரியர் கிளைனர் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், ஐன்ஸ்டீனும் இவ்வாறு காத்திருக்கவேண்டும். ஆனால் மற்றச் செல்வ இளைஞரைப் போல ஐன்ஸ்டீன் சம்பளமில்லாத வேலையில் எவ்வாறு ஈடுபட முடியும்? பேராசிரியர் இதற்கும் வழிவகுத்தார். பணிமனை வேலையை விடாமலே ஆசிரியப்பணி செய்யும்படி அவர் ஐன்ஸ்டீனைத் தூண்டினார். ஐன்ஸ்டீன் இதற்கும் இணங்கினார். தேடிவந்த பதவி புகழை ஐன்ஸ்டீன் நாடவில்லை. அவர் ஆராய்ச்சித் திறமை யால் புகழ் அவரை நாடிற்று. ஆனால், பதவியை அவர் நாடாமல் பதவி அவ்வளவு எளிதாக அவரை வந்தடையக்கூடும் என்று எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஐன்ஸ்டீன் வாழ்வில் இந்தப் புதுமையும் விரைவில் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தில் ஆசிரியப்பணியை அவர் பேராசிரியர் கிளைனருக்காகவே மேற்கொண்டார். அதில் அவர் பெயரெடுக்க விரும்பவுமில்லை. பெயர் எடுக்கவுமில்லை. பேராசிரியர் கிளைனரே ஒரு நாள் மாணவருடன் வந்து அமர்ந்திருந்தார். ஆராய்ச்சியறிஞர் ஆசிரியப்பணியில் ஒரு சிறிதும் அக்கறைகொள்ளவில்லை என்று அவர் கண்டார். வேண்டா வெறுப்புடனே பேராசிரியர் மற்றொருவர் பெயரைப் பரிந்துரைக்க நேரிட்டது. ஆனால், இந்த மற்றொருவர் ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடத்தில் ஐன்ஸ்டீனுடன் பயின்ற ஆஸ்ட்ரிய இளைஞன் பிரீடரீக் ஆட்லராக அமைந்தார். ஐன்ஸ்டீனின் புகழ் இதற்குள் உலகப் புகழாகியிருந்தது. அதில் ஆட்லர் ஈடுபடும் பெருமையும் கொண்டார். ‘பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி ஐன்ஸ்டீனுக்குப் பெருமை தருவதன்று, பல்கலைக்கழகத்துக்குப் பெருமை தருவது, உலகுக்குப் பயனும் பெருமையும் தருவது’ என்ற அவ் விளைஞர் எண்ணினார். ஐன்ஸ்டீனுக்கெதிராக நின்று அப் பதவியைப் பெறுவதன்மூலம் பல்கலைக் கழகத்துக்கும், ஆராய்ச்சி உலகுக்கும் கேடு செய்ய அவர் விரும்பவில்லை. இக் காரணத்தால் அவர் பேராசிரியரிடம் சென்றார். “ஐயா, ஐன்ஸ்டீன் புகழை அறியாத பல்கலைக் கழகத்தில் நான் சேவை செய்ய விரும்பவில்லை. கொடுத்தால் பதவியை அவருக்கே கொடுங்கள். அதன் பின்னரே இந்தப் பல்கலைக் கழகத்தை நான் மதிப்பேன்,” என்று மனந்திறந்து கூறினார். ஆட்லர் அன்று ஆஸ்டிரியாவில் செல்வாக்கடைந்துள்ள ஆட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்; அதன் தலைவர் பிள்ளை. அவர் சொல்லைத் தட்டப் பேராசிரியர் கிளைனரும் விரும்பவில்லை. மற்றப் பல்கலைக் கழகப் பேராசிரியரும் விரும்பவில்லை. ஆகவே ஐன்ஸ்டீனே அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார். பதவி நாடாத ஐன்ஸ்டீனை இவ்வாறு பதவியும் தேடி வந்தடைந்தது. 1909-ல் அவர் முதல்முதலாக ஒரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரானார். பெர்ன் பதிவுரிமை நிலையப் பணிக்கு ஒரு முடிவு ஏற்பட்டது. இளைஞர் தன்மறுப்பு இந்நிகழ்ச்சியில் ஆட்லருக்குப் பங்கு உண்டு என்பது ஐன்ஸ்டீனுக்கு அப்போது தெரியாது. தெரிந்தபோது, அவர் ஆட்லர்மீது மகிழ்வும் பெருமித நல்லெண்ணமும் கொண்டார். தன்னலமும் சூழ்ச்சியும் நிறைந்த உயர் பணி உலகிலே, ஆட்லர் ஒரு தூய ஒளிமின்னலாக அவருக்குத் தோன்றினார். ஐன்ஸ்டீன் அறிவியலாராய்ச்சியின் சிறந்தவர் மட்டுமல்ல; மனிதப் பண்புணர்விலும் ஒப்புயர்வற்றவர். அறிவியல் உலகில் உள்ள அவர் பெருமையை நாம் அகற்றிப் பார்த்தால்கூட, அவர் பெருமை குன்றிவிடாது. ஏனெனில், அப்போதும் அவர் மகாத்மா காந்தி, டால்ஸ்டாய், ரோமேன் ரோலந்து ஆகியவர்கள் அருகே இடம்பெறத்தக்க அருளாளாராயிருப்பார். ஆனால், அவர் மனிதப் பண்புள்ளம் கூட ஜெர்மன் பள்ளிகளின் அனுபவர்கள், ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூட அனுபவங்கள் ஆகியவற்றுக்குப் பின் மனித உலகின் தன்னலச் சிறுமைகளை எண்ணிப் புண்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்லர் நிகழ்ச்சி எதிர்பாரா இடத்தில், எதிர்பாரா முறையில் மனிதப் பண்பின் ஒரு விளக்கொளியை அவருக்குக் காட்டிற்று. 1915-ம் ஆண்டில் இதே ஸ்டியூர்க் (ளுவரசபமா) என்ற ஓர் ஆஸ்ட்ரிய அமைச்சரை இளைஞர் ஆட்லர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இச்செய்தி மீண்டும் ஐன்ஸ்டீனைப் புண்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை. உயர் பண்பும் உயர் குறிக்கோளும் உடைய இளைஞர்களைக் கூட அரசியல் சூழல் அதற்கு மாறான செயல்களில் தூண்டக்கூடும் என்பதை அச்செயல் அவருக்குக் காட்டியிருக்கும். பண்பும் சூழலும் எண்ணற்ற இளைஞர் பேரவா ஆர்வத்துடன், ஏக்கத்துடன் விரும்பிக் காத்துக்கிடந்தும் பெறாத புகழ், இப்போது ஐன்ஸ்டீன் காலடியில் கிடந்தது. எண்ணற்ற செல்வ இளைஞர்கள் பணங் கொடுத்தும், பாடுபட்டும் பெறக்காத்துக்கிடந்த பதவி பணி செய்து பிழைத்த ஏழையாகிய அவருக்கு எளிதாக வந்து கிடைத்தது. ஆனால், இரண்டிலும் அவருக்குப் பெருமையோ, மனநிறைவோ, பற்றோ ஏற்படவில்லை. பல்கலைக் கழகத்தில் அவர் வாழ்க்கை முறையும் பண்பும் இதைப் பட்டாங்கமாக எல்லாருக்கும் எடுத்துக் காட்டின. மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எல்லாருடனும் அவர் இனிமையுடனே பழகினார். பலர் எளிதில் அவர் நண்பராயினர். சிற்சில சமயம் மாணவருக்கு அவர் தம் ஆராய்ச்சிக் கருத்துக்களை இனிதாக எளிதான முறையில், அவரவர் மனத்தில் பதியும்படி எடுத்து விளக்கினார். அவர் ஓர் ஒப்பற்ற அறிஞர் மட்டுமல்ல, ஒப்பற்ற ஆசிரியரும் ஆவார் என்பதை மாணவர்கள் காணமுடிந்தது. அவர் யாரையும் புண்படுத்தியதி ல்லை. உயர் பணியிடங் களில் மிகப் பொது நிகழ்ச்சியான சூழ்ச்சி எதிர் சூழ்ச்சிகள் எதிலும் அவர் ஈடுபடவில்லை. கடமை தவிர வேறு எதிலும் கருத்துச் செலுத்தாத அத்தகு கண்ணியரை எவரும் கண்ட தில்லை. ஆயினும் இத்தனை பண்புகளும் கூடப் பல்கலைக்கழக வாழ்வுடன் அவர் வாழ்வு முற்றிலும் பொருந்தும்படி செய்யவில்லை. இதற்குக் காரணம் வளைந்து கொடுக்காத அவர் மனிதப் பண்பிலேயே இருந்தது. மாணவர், ஆசிரியர், பேராசிரியர் யாவரிடமும் அவர் ஒரே நிலையுடன், மனிதருடன் மனிதராகவே பழகினார். சரிநிகரானவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய வேறுபாடுகளை அவர் மதிக்கவு மில்லை; காட்டவும் இல்லை. இது அவர்ருக்கு இயற்கையாய் அமைந்து விட்டது. உயர்வு தாழ்வுப் படிவரிசை களிலே அமைந்த உலக வாழ்வில் - சிறப்பாகப் பல்கலைக் கழக வாழ்வில் - இது எவ்வாறு பொருந்தும்? அவர் விரும்பியபோது உழைத்தார். விரும்பியபடி உழைத்தார். புகழை விரும்பவில்லை. பதவி உயர்வை விரும்பவில்லை. இதனால் ஆசிரியப் பணியின் நாள்முறைத் திட்டங்களை அவர் முனைப் பாகக் கவனிக்க முடியவில்லை. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவர் அடிக்கடி அதிலேயே தன்னை மறந்து இருந்துவிடுவார். பணியின் கட்டுப்பாடுகளை இதனால் அவர் பின்பற்ற முடியவில்லை. பதவிமேல் பதவி இத்தகைய சூழலில் பேராசிரியப் பதவி அவர் ஆராய்ச்சிப் புகழுக்குரிய ஒரு பரிசாக அமைந்ததேயன்றி, அவர் வாழ்க்கைப் பணியாய் அமையவில்லை. ஆனால் இக் காரணத்தால் பேராசிரியப் பதவிகள் அவரை நாடாமல் இல்லை. ஆராய்ச்சிப் புகழ் பேராசிரியர் பதவியைவிடப் பெரிது. ஜூரிச் பல்கலைக் கழகம் இதை விரைவில் காணலாயிற்று. பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஜூரிச் பல்கலைக்கழகங்களாக இல்லை. புகழ்பெற்ற ஆராய்ச்சியறிஞரான அவரைப் பேராசிரியராகப் பெறும் புகழை அவாவி, பல்கலைக் கழகங்கள் விரைவில் ஒன்றுடனொன்று போட்டியிட்டன. அவர் வாழ்வின் மிகப் பெரும் பகுதி பேராசிரியப் பணி லேயே கழிந்தது. அது அவர் ஆராய்ச்சிப் புகழை வளர்ப்பதாய் அமைய வில்லை. அதன் பரிசு மட்டுமே! ஆனால், அவர் ஆராய்ச்சி களுக்கான வாய்ப்பு வளங்களை அவை அளித்தன. 1905-ல் தோன்றிய பல்வேறு ஆராய்ச்சிகளின் கரு, அவர் வாழ்நாள் முழுவதும் முதிர்ச்சியுற்று வளர்ந்தது. அறிவியல் உலகையே அடையாளம் தெரியாமல் மாற்றவல்ல ஆராய்ச்சிப் புரட்சிகளாக அவை மலர்ச்சியுற்றுக் கனிவளம் தந்தன. 4. பேராசிரியர் (1909 - 1914) சமயம், இலக்கியம், கலை, அரசியல் ஆகிய துறைகளில் நாம் முடிசூடா மன்னரை - மிகப் பலர் ஆற்றலையும் செயலையும் ஒரு தனி மனிதர் ஆற்றலாகவும் செயலாகவும் கொண்ட மாபெரிய மாந்தரைக் காணல் கூடும். அறிவுத் துறையில் கூடப் பண்டை உலகிலோ, அறிவியல் ஆராய்ச்சியின் விடியற் பொழுதாகிய நியூட்டன் காலத்திலோ இத்தகைய பெரியார்களுக்கு இடமுண்டு. ஆனால், அறிவியலாராய்ச்சி ஊழி முற்றிலும் குடியாட்சி ஊழியாய் அமைந்துள்ளது. இங்கே பெருமை உண்டு, வளர்ச்சி உண்டு; ஆனால் அது காலத்தின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சி பல்லாயிரம் தனிமனிதர் அதில் பங்கு கொள்கின்றனர் - ஆனால், மிகப்பெரிய அளவில் அதில் பங்குகொண்ட தனிப் பெரும் பெரியாரை அதில் காண்பது அருமை. ஆயினும் 20-ம் நூற்றாண்டில் உலகில் மீண்டும் ஓர் ஊழி மாறி மற்றோர் ஊழி தொடங்கும் திருப்பத்தில், அத்தகைய ஒரு முடிசூடா மன்னனாக ஐன்ஸ்டீன் காட்சியளிக்கிறார். அவர் பேராசிரியர் பணி இதனைப் பலவகையில் விளக்கு வதாக அமைகிறது. பீடுமிக்க பெருவாழ்வு தனிமனிதர் ஆராய்ச்சிக்குப் புகழும் மதிப்பும் நற்சான்றும் அளிப்பவை பல்கலைக் கழகங்கள் போன்ற புகழ் நிலையங்கள். ஆனால் அவர் தொடர்பால் பெருமையும் புகழும் பெற அவை போட்டியிட்டன. அவருக்கு முன் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி யாளர்கள், அவரால் முன்பமாதிரியாக, ஆசான்களாக மதிக்கப்பெற்ற புகழ் மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவர் புது விளக்கங் களைக் கேட்க, அவர் ஆராய்ச்சியுரைகளால் புதுத் தூண்டுதல் பெற விரைந்தனர். பல்கலைக் கழக மாணவர், கல்லூரி மாணவர் என்ற நிலையில் மாணவர்கள் அவரை அணுகவில்லை. அவர் புகழ் மாணவராக இடம்பெற அவாக்கொண்டு அவர்கள் அவரை நாடினர். ஆட்லர் அவரிடம் காட்டிய மதிப்பு இதற்கு ஒரு முனிமுகமே யாகும். ஜூரிச் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளருடனொத்த ஆராய்ச்சியாளரான அவருடன் பணியிலமர்ந்தவர் டேவிட் ரீக்கின்ஸ்டீன் என்பவர்.(னுயஎனை சுநடiஉhiளேவநin) அவர் ஐன்ஸ்டீனைத் தம் தலைவராகக் கருதி, அவர் புகழ்ப்பணியில் தலைநின்றார். ஆல்பெர்ட் ஐன்ஸ்டீ னுடன் கொண்ட புகழ்த் தொடர்பை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஐன்ஸ்டீனின் வாழ்க்கைப் பண்போவியம் தீட்டினார். இது போலவே பிரேக் பல்கலைக் கழகத்தில் அவர் பேராசிரியப் பணியில் அவருக்குப்பின் அமர்ந்த பேராசியர் பிலிப் பிராங்க், (ஞாடைiயீ குசயமே)அவரும் ஐன்ஸ்டீன் புகழ் வரலாறு எழுத முன்வந்தார். ஐன்ஸ்டீனால் நன்கு மதிக்கப்பட்ட, ஐன்ஸ்டீன் பின் பற்றிய புகழ் மன்னர் எர்னஸ்ட் மாக். அவர் ஐன்ஸ்டீன் புகழ் கேட்டு அவர் தொடர்பால் பெருமையடைய அவாவினார். இத்தனை புகழுக்கிடையில் இகழும் வராமலில்லை. பெர்லினில் அவர் பேராசிரியப் பணியிலிருந்தும் தாயகத்திலிருந்தும் துரத்தப்பட்டு, ஜெர்மானிய ஆட்சியாளரின் தூற்றலுக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். இரு தடவை தாயகத்தின்தாய்மை உரிமையிழந்து, மீண்டும் தாய்மை தேடும் படலத்தில் அவர் இறங்கவேண்டி வந்தது. புகழிலும் இகழிலும் ஐன்ஸ்டீனின் மாறாத உறுதிப் பண்பு அருட்பெரியார் வாழ்க்கையிலும் எளிதில் காண முடியாத ஒன்று ஆகும். புகழில் அவர் மகிழவில்லை. இகழில் அவர் தளரவு மில்லை. அவர் குறிக்கோள் என்றும் ஒரு படியாகவே இருந்தது. உலகின் புகழ், இகழ் ஆகியவற்றின் சிறுமையையும் வெறுமையையும் விளக்கும் ஒருமாய விளக்கமாக அவர் பேராசிரியப் பணியின் வரலாறு அமைந்துள்ளது. ஜூரிச் பேராசிரியர் பணி ஜூரிச் பேராசிரியப்பணி மூலம் சமுதாயத்தில் ஐன்ஸ்டீனின் மதிப்பு உயர்ந்தது. கற்றறிந்த பெருமக்கள் சூழலில் அவருக்கு இடம்கிடைத்தது. ஆயினும் இதனால் அவர் பொருள் நிலையோ, குடும்பநிலையோ சிறிதும் உயரவில்லை. ஏனெனில் இப்பேராசிரியப் பதவி இன்னும் சிறப்புரிமைப் பதவியே (ஞடிளவ டிக ஞசடிகநளளடிச நுஒவசடிசனinடிடிசல) நிலையான பதவிக்குரிய மதிப்பு அதற்குண்டு; ஊதியம் நன்மதிப்பூதியமே. (ழடிnடிசயசரைn) எனவே பொருள் முறையில் அவர் வருவாய் பதிவுரிமை நிலைய ஊதியத்தைவிட மிகுதியாயில்லை. அதே சமயம் பதிவுரிமை நிலையத்தின் பணியாளராக வாழ்ந்தபோது இல்லாத மதிப்பையும் செலவையும் அவர் வாசிக்கவேண்டி வந்தது. முன் இல்லாத பகட்டார வார உடை இப்போது அவசியமாயிற்று. முன் நடந்துசெல்லும் இடங்களுக்கு இப்போது ஊர்திமீது செல்லுவது இன்றியமையாத தாயிற்று. இக் காரணங்களால் மதிப்பு உயர்ந்தும், குடும்பத்தில் மீண்டும் ஓரளவு பண நெருக்கடி ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் இக்காலத்தில் தமக்கு இருந்த முட்டுப் பாடுபற்றி நகைச்சுவை ததும்பத் தம் நண்பரிடம் பேசுவது வழக்கம். “தொடர் புறவுக்கோட்பாட்டைப் பற்றிய என் விளக்கத்தில் இயற்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நான் ஒவ்வொரு மணிப்பொறி ஏற்றி வைத்தேன். ஆனால், என் இல்ல முழுமைக்கும் என்னால் ஒரு மணிப்பொறி கூட மாட்டிவைக்க முடியவில்லை,” என்று தம்மிடம் மணிப் பொறியில்லாக் குறைபாட்டை அவர் இனிது சுட்டிக் காட்டினார். அவர் ஆராய்ச்சிகளில் செலவிட்ட நேரத்தில் ஒரு சிறு பகுதியாவது இப்போது வீட்டின் செலவுகளைக் குறைப்பது எப்படி என்பதில் சென்றிருக்க வேண்டும். ஆனால், இதில் திருமதி ஐன்ஸ்டீன் ஒத்துழைப்பு மிகவும் பயனுடையதாயிருந்தது. அவர் மாணவர் கட்கு இடவசதியும், உணவு வசதியும் செய்து தந்து தம் செலவைச் சரி செய்துவந்தார். பல்கலைக் கழகத்தில் பேராசிரியப் பணியுடன் பணியாக, அதன் இயங்கியல் அரங்கத்தின் துணைப்பொறுப்பாளர் பணியும்(ஹளளளைவயவே யவ வாந ஐளேவவைரவந டிக ஞாலளiஉள) அவருக்குத் தரப்பட்டது. ஆனால் இதற்கும் ஊதியம் இல்லையாதலால், அவர் பொருள் நிலையை இது மாற்றவில்லை. ஆயினும் அவர் விரும்பிய துறையில் உழைக்கவும், இயங்கியல்துறை மாணவர், ஆராய்ச்சியாளருடன் பழகவும் அவருக்கு இது வாய்ப் பளித்தது. தவிர, அவர் இளமைக் கனவுகளாயிருந்த ஆராய்ச்சிக் கோட்டைகள் இப்போது இத்துறையில் அவர் ஒழுங்கான பணியரங்கக் கோட்டைகளாய்விட்டன. அவர் ஆராய்ச்சியும் இச்சமயம் உதிரியான தனிநிலையாராய்ச்சியாய் இல்லை. அது ஆராய்ச்சித் துறையிலே ஒழுங்கு முறைப்படியும், உரிமையுடனும் செய்யப்பெற்ற பணியாயிற்று. குடும்பச் சித்திரங்கள் ஐன்ஸ்டீனின் ஆசிரிய நண்பர் ரீக்கின்ஸ்டீன். அவர் இக் காலக் குடும்பவாழ்வின் சில சித்திரங்களை நமக்குத் தந்துள்ளார். ஒருநாள் ரீக்கின்ஸ்டீன் ஐன்ஸ்டீனைக் காணச்சென்றிருந்தார். வீடு திறந்திருந்தது. திருமதி ஐன்ஸ்டீன் வெளியேயில்லை. ஆனால் ஐன்ஸ்டீன் வெளி அறையில் இருந்தார். குழந்தை கட்டிலில் உறங்கும் பாவனையுடன் கிடந்தது. அவர் கை தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஆனால் அவர் கவனம் தொட்டிலில் இல்லை. மற்றொரு கையில் விரித்தமேனியாக இருந்த புத்தகத்தில் அவர் நாட்டம் சென்றிருந்தது. குழந்தைகூட ஓரப்பார்வையால் புத்தகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. அறை ஒரே நெடியாய் இருந்தது. எங்கும் புகை கம்மிக் கொண்டிருந்தது. இரண்டையும் கவனியாமல் அவர் எப்படி வாசிக்கமுடிந்ததோ, தெரியவில்லை! ஆனால் வந்த நண்பர் செய்தியை உடனே அறிந்துகொண்டார் - பேராசிரியர் மனைவி வறுமையுடன் போராடிக்கொண்டிருந்தார்! பேராசிரியர் புகைத்துக்கொண்டிருந்த சுருட்டும் அவர் நிலையை எடுத்துக்கூறிற்று. அது பேராசிரியர்கள் வெளியே கொண்டு செல்லத்தக்க தன்று. மதிப்புடைய எவர் கையிலும் அது இடம்பெறத் தக்கதாயில்லை! மற்றொருநாள் பேராசிரியர் நாடகம் பார்க்கப்போவதாக நண்பருடன் கூறினார். நண்பரும் உடன் சென்றார். அவர்கள் இயங்கியல் அரங்கத்திலிருந்து நேராகவே கொட்டகை சென்றனர். திருமதி ஐன்ஸ்டீனிடம் அவர் நாடகத்திட்டத்தைக் கூறியிருக்க வேண்டும். ஏனெனில், அவரும் நேராக அங்கே வந்து காத்திருந்தார். ஐன்ஸ்டீனின் இரவுணவுக்காக அவர் இரண்டு அப்பம் கொண்டு வந்திருந்தார். அளவு குறைந்தாலும் அன்பு குறையாத வண்ணம் அப்பெண்மணி அப்பங்களிரண்டையும் இரு நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்! அறிவுலக மன்னர்களின் தொடர்பு ஐன்ஸ்டீன் ஜூரிச் பேராசிரியராயிருந்த நாட்களில் உலகின் பல அறிவியல் ஆராய்ச்சி மன்னர்களுடன் பழக அவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெர்லினிலிருந்து மாக்ஸ் பிளாங்க் (ஆடிஒ ஞடயசநம) என்ற பேரறிஞர் 1905-லேயே அவர் தொடர்புறவுக் கோட்பாட்டின் சிறுதிற விளக்கத்தை ஆதரித்துக் கடிதம் எழுதியிருந்தார். அதுமுதல் ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிக் கோட்பாடு முழுவதும் இருவரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரவின் ஆய்வு எதிர் ஆய்வு ஆயிற்று. அடுத்த பெரும்பகுதி ஆராய்ச்சி வெளிவருமுன், அவர்களிடையே அது நன்றாக அலசிச் செப்பம் செய்யப்பட்டது. 1907-ல் மாக்ஸ் வான் லோ (ஆயஒ ஏயn டுயரந) என்ற பெர்லினிலுள்ள மற்றோர் அறிஞர் தொடர்பு ஏற்பட்டது. 1908-ல் ஸால்ஸ்பர்க்கில் அறிவியலறிஞர் பேரவை (ஊடிபேசநளள டிக ளுஉநைவேளைவள யவ ளுயடணநெசப)ஒன்று கூடிற்று. அதில் தொடர்புறவுக் கோட்பாடு பற்றிப் பேசும்படி ஐன்ஸ்டீன் அழைக்கப் பட்டிருந்தார், இங்கே அவர் சொற்பொழி வைக் கேட்டவர்கள் மாணவர்களோ, ஆராய்ச்சி இளைஞர்களோ அல்லர். உலகின் அறிவியல் தலைவர்களே அதை நேரிடையாக அவர் வாய் மொழியால் கேட்டு விளக்கம்பெற அவாவினர். அறிஞர் உலகம் முதன்முதலாக அவரை நேரிடையாகக் கண்டு அளவாள வியது இப்போதுதான் என்னலாம். ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் பெயர்பெறுமுன், அறிவியல் உலகில் அவர் முன்னோடிகளாயிருந்தவர்கள் பிரஞ்சு அறிஞர் ஹென்ரி பரயின்கரர் (ழநசேi ஞடிinஉயநஉ) என்பவரும் ஹாலந்து நாட்டு அறிஞர் ஹென்ட்ரிக் ஏ.லாரென்சுமே (ழநனேசமை ஹ டுடிசநளேரஅய) யாவர். ஐன்ஸ்டீன் ஆராய்ச்சிகள் புரட்சிகரமானவை, புத்தூழிக்கு வழி வகுப்பவை என்று இருவரும் மனமார வரவேற்றனர். இது காரணமாக பிரான்சிலும் ஹாலந்திலும் ஐன்ஸ்டீன் செல்வாக்கு வளர்ந்தது. அறிஞர் பிளாங்கைப் போலவே, பழுத்த கிழவரான லாரென்ஸூம் தம் வாழ்நாள் இறுதிவரை ஐன்ஸ்டீனுடன் தம் ஆராய்ச்சிகள் பற்றிக் கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். யூட்ரெக்ட், (ருவசநமந) லெய்ட்ன் (டுநலனநn) பல்கலைக் கழகங்கள் இப்போது ஐன்ஸ்டீனைத் தனித்தனி, தத்தம் பல்கலைக் கழகப் பேராசிரியராக வருமாறு அழைத்தன. திடுமென ஜூரிச்சை விட்டுச் செல்லத் துணியாமல் ஐன்ஸ்டீன் அவற்றை நன்றியறிதலுடன் மறுத்தார். பிரேக் பல்கலைக் கழக அழைப்பு மூன்று ஆண்டு ஜூரிச்சின் சிறப்புரிமைப் பேரா சிரியராயிருந்தபின் 1911-ல் பிரேக் நகர்ப் பல்கலைக் கழகம் (ஊநniஎநளளiலே டிக யீசயபரந) அவருக்குப் பேராசிரியர் பணி தர விரும்பிற்று. இங்கே பேராசிரியர் பணி சிறப்புரிமைப் பணியன்று. நிறையுரிமைப் பணியே.(ஞடிளவ டிக ஞசடிகநளளடிச டிசனiயேசல)அதன் ஊதியமும் முழுநிறை ஊதியமாய் இருந்தது. தவிர முதன் முதல் இப் பல்கலைக் கழகத்தில் வேந்தராயிருந்தவர், ஏர்ன்ஸ்ட் மாக் (நுசளேவ ஆயஉh) என்ற பேர் போன அறிவியல் அறிஞர். ஐன்ஸ்டீன் அவரையே தம் ஆராய்ச்சிக்குரிய மூல ஆசான்களுள் ஒருவராக மதித்திருந்தார். அத்தகைய பெரியார் பெயருடன் தொடர்புகொண்ட பல்கலைக் கழகத்தில் உழைப்பதை அவர் ஒரு பெரும்பேறு எனக் கொண்டார். இக்காரணங்களால், பிரேக் பதவியை ஏற்று அவர் அந்நகர் சென்றார். ஐன்ஸ்டீனுக்குப் பிரேகின் அழைப்பு விடுத்தவர் அப் பல்கலைக் கழகத்தின் இயங்கியல் துறைப் பொறுப்பாளர் ஆண்டன் லம்பா (ஹவேடிn டுயஅயீய) ஆவர். அழைப்புக்கு முன் அவர் அத்துறையில் உலகின் தலைசிறந்த வல்லுநரான மாக்ஸ் பிளாங்கிடம் ஐன்ஸ்டீன் பற்றிய கருத்துரை உசாவினார். கருத்துரை புகழுரையாக வந்துசேர்ந்தது. “ஐன்ஸ்டீன் புதிய கோட்பாடு வெற்றிபெறும் என்றுதான் நான் நம்புகிறேன். அது வெற்றி பெற்றபின் அவருக்கு யாரும் நற்சான்று கொடுக்கும் நிலையிலிருக்கமாட்டார்கள். அவர் 20-ம் நூற்றாண்டின் கொப்பர்னிக்கஸாக (ஊடியீநசniஉரள) விளங்குவார்” என்று அவர் விடையிறுத்தார். ** உலகம் உருண்டை என்றும், ஞாயிற்றைச் சுற்றி ஓடுகிறது என்றும் முதன் முதல் எடுத்துரைத்தது இவரே. ஜூரிச் பல்கலைக் கழகத்திலிருந்த பழமை இரும்புச் சட்டங்கள் இங்கும் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் ஒன்று அயல்நாட்டவர் அமர்வுக் கெதிரானது. மற்றொன்று சமயப் பற்றற்றவர்களுக் கெதிரானது. ஐன்ஸ்டீனின் பெரும்புகழ் முன்னைய சட்டத்தை ஒதுக்கிவைக்க உதவிற்று. தாம் ஒரு நல்ல யூதர் என்று ஐன்ஸ்டீன் உறுதிமொழி கூறிக் கையொப்பமிட்ட பின்பே இரண்டாவது சட்டம் வாய்மூடிற்று. இந்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களுக்குத் தனிப் பட்ட பணிமுறை உடை ஒன்று இருந்தது. இது கப்பற்படைத் தலைவர் உடையின் மாதிரியில் அமைந்திருந்தது. பணி அமர்வை யடுத்துப் புதிய பேராசிரியர்கள் அந்த உடையிலேயே மன்னரைக் காணவேண்டும். ஐன்ஸ்டீன் பெருசெலவில் இந்த உடையைச் சித்தம் செய்ய வேண்டிவந்தது. ஆனால் பணிமுறை வாழ்வில் இந்த ஒரு தடவை தவிர, அதற்கு வேறு பயன் கிடையாது. பணியை விட்டுச் செல்லும் சமயம் அடுத்த பேராசிரியராக வந்த தம் நண்பர் பிலிப் பிராங்குக்கு ஐன்ஸ்டீன் இந்த உடையை அரை விலைக்குக் கொடுத்தார். பேராசிரியர் பிராங்கின் பணி அமர்வுக் காலத்திலேயே புதிய குடியரசு ஏற்பட்டதால், முடியாட்சிக்கால உடை அதன்பின் தேவைப்படவில்லை. ஆகவே அதை ஓர் ஏழைக் கப்பற் படை வீரருக்குக் கொடுத்துதவினாராம்! இரண்டு இனங்கள்: இனத்துக்குள்ளும் வேறுபாடு பிரேக் இன்று ஜெக்கோஸ்லாவியாவின் தலைநகர். ஆனால், அன்று அது ஒரு விசித்திரமான நிலையில் இருந்தது. ஜெர்மானியரே அதை ஆண்டனர். ஜெர்மன் மொழியே ஆட்சிமொழியாயிருந்தது. ஆனால், மக்கள் தொகையில் ஜெர்மானியர் நகரிலேயே நூற்றுக்கு ஐந்து பேராக இருந்தனர். நாட்டுப்புறத்தில் இந்த விழுக்காடு கூடக்கிடையாது. ஆனாலும் ஜெர்மானியருக் கென்று தனிப் பல்கலைக் கழகங்கள், தனிப் பள்ளிக் கூடங்கள், தனி நாடகக் கொட்டகைகள், தனிக் கோயில்கள் இருந்தன. ஜெக் மக்களோ, ஜெக்மொழி பேசியவர்களோ இவற்றுக்கு அருகிலும் வரமுடியாது. தங்கள் தாயகத்திலேயே அவர்கள் அடிமைகளாகவும் அயலார் களாகவும் இழிவுபடுத்தி நடத்தப்பட்டனர். உரிமைகள் யாவும் பெரும்பாலும் ஜெர்மானியருக்கே ஒதுக்கப்பட்டிருந்தன. கடமைகள் பேரளவில் ஜெக் மக்கள்மீதே சுமத்தப்பட்டன. சிறுபான்மையினராகிய ஜெர்மானியருள்ளும் மிகப் பலர் யூதர்கள். ஜெக் மக்களை இழித்துப் பழிப்பதில், யூதருடன் மற்ற ஜெர்மானியர் சேர்ந்துகொண்டனர். ஆனால், மறைமுகமாக ஜெர்மானியர் யூதர்கiயும் வெறுக்கத் தொடங்கியிருந்தனர். ஐன்ஸ்டீன் யூதர்; பிறப்பாலும் மொழியாலும் ஜெர்மானியர். ஆனால், குடியுரிமையால் அவர் ஸ்விட்ஸர்லாந்து நாட்டவரா யிருந்தார். இனவேறுபாடு, நாட்டு வேறுபாடு, மொழி வேறுபாடு எதுவும் அவருக்குக் கிடையாது. இந்நிலையல் அவர் வாழ்வு இங்கே மிகவும் இடர்ப் பட்டதாகவே இருந்தது. ஆயினும் இதை அவர் உணர நெடுநாளாயிற்று. ஏனெனில், அவர் ஜெர்மன்மக்கள் எவரையும் பார்க்கவே நேரவில்லை. மாணவரிடையே எல்லாரும் ஜெர்மன் மொழியே பேசினதால், எத்தகைய சிக்கலும் ஏற்படவில்லை. ஐன்ஸ்டீனின் பெரும்புகழ் அவருக்கு முன்னே பல்கலைக் கழகம் சென்றிருந்ததனால், மாணவர்கள் அவரை ஒரு பேராசிரி யராக மட்டுமன்றி, ஓர் அரும்புகழ்ப் பெரியாராகவும் மதித்துப் பற்றார்வத்துடன் பழகினர். ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட்பாட்டின் சிறு திற விளக்கம் இதற்குள் அறிவியல் உலகம் எங்கும் ஒப்புக் கொள்ளப் பட்டுவிட்டது. ஆனால், ஐன்ஸ்டீன் அக்கோட்பாட்டின் பொது முறை விளக்கத்தால் இயங்கியலை முழுவதுமே மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் அவருக்குப் பெருத்த இடர்ப் பாடுகள் ஏற்பட்டன. விளக்கத்தை அறிவுலகுக்கு எடுத்துக்கூற உயர்தரக் கணக்கியல் துறையின் அறிவு தேவைப்பட்டது. ஐன்ஸ்டீன் பள்ளிக் காலத்தில் கணக்கியலில் கொண்ட ஆர்வமும் திறமும், ஜூரிச்சில் இயங்கியலில் மிகுதி ஆர்வம் கொண்டதால் தடைப் பட்டுப் போயிற்று. இதைச் சரிசெய்து கொள்ள அவர் இப்போது கணக்கியலில் உயர்தர அறிஞர் உதவியை நாடினார். பிரேக் நண்பர்கள் பிரேக் பல்கலைக் கழகத்திலுள்ள அவர் நண்பர்களில் கணக்கியல் அறிஞர் ஜார்ஜ் பிக், (ழுநடிசபந யீiஉம)இயங்கியல் துறையில் அவருடன் உழைத்த நோஹல் (சூடிhநட) என்ற இளைஞர், மாக்ஸ் பிராட் (ஆடிஒ க்ஷசடின) என்ற இள எழுந்தாளர் ஆகியவர்கள் முக்கிய மானவர்கள். ஜார்ஜ் பிக் உயர் தரக் கணக்கியல் துறையில் ஐன்ஸ்டீனுக்குத் துணைபுரிந்தார். இருவரும் அத்துறை பற்றி வாதிட்டனர். இத் தாலியக் கணக்கியலறிஞர்களான ரிக்கி (சுiஉஉi), லேவி - ஸிவிட்டா (டுநஎi-ஊiஎவைய) ஆகியவர்களின் ‘தனிநிலை மீப்பியல் கணிப்பு’ (ஹ ளெடிரைவந னுகைகநசநவேயைட ஊயடஉரரைள) முறையைத் தொடர் புறவுக் கோட்பாட்டில் பயன்படுத்தும்படி அவர் ஐன்ஸ்டீனுக்கு அறிவுரை கூறினார். பிக் வேலும் பல் வேறுவகையில் ஐன்ஸ்டீனுக்கு மனதுக்குகந்த நண்பராயிருந்தார். அவர் ஏர்ன்ஸ்ட் மாக் காலத்தில் வேலை பார்த்ததினால் அவரை நன்கறிந்திருந்தார். அவரிடம் பற்றார்வமிக்கவராகவும் இருந்தார். ஐன்ஸ்டீனும், அவரும் அடிக்கடி அம் முதல்வர் குணநலங்களைப்பற்றியும், கோட்பாடுகள் பற்றியும் பேசி மகிழ்வர். பிக் வில்யாழ் வாசிப்பதிலும் ஈடுபாடுடையவரா யிருந்தார். இருவரும் மாலை வேளையில் இசையில் மகிழ்ந்து களிப்புறுவர். நோஹல் ஒரு யூத இளைஞர். அந்நாட்டு யூதர் நிலைகளை அவர் ஐன்ஸ்டீனுக்கு எடுத்துரைத்தார். முனைத்த யூத இயக்கத்தின்(ஷ்iடிnளைஅ) தலைவர்கள் யூதர்களுக்கு ஒரு தனித்தாயகம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தொடங்கியிருந்தனர். அவர்களில் சிலர் பிரேகிலிருந்தனர். ஐன்ஸ்டீன் யூதர்களிடம் கொண்டபற்று, அவர் மனித இனப் பற்றின் ஒரு பகுதியே. யூதர் தனிவாழ்வு, தனியியக்கங்களில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டமுடிய வில்லை. அவர்கள் நல் வாழ்விலும் அதற்கு வேண்டிய அளவு ஒற்றுமையிலுமே அவர் கருத்துச் செலுத்தினார். அவர்கள் படை திரட்டையோ, போர் எதிர் போராட்டங்களையோ அவர் விரும்பவில்லை. மாக்ஸ் பிராட் ஓர் இள எழுத்தாளர். ஐன்ஸ்டீனுடன் நெருங்கிப் பழகி அவர் குணங்குறைகளை அவர் நன்கறிந்து கொண்டிருந்தார். அவர் இயற்றிய ஒரு புனைகதை “டைக்கோ பிராகியின் மீட்பு”(சுநனநஅயீவiடிn டிக கூலஉnடி க்ஷசயபந) என்பது. டைக்கோ பிராகி ஒரு டென்மார்க் நாட்டு வான நூலறிஞர். அவர் வாழ்க்கையின் மாலைப்போதில் மியூனிச்சில் வந்து தங்கி, கெப்லர் (முநயீடநச) என்ற மற்றொரு வான நூலறிஞருட னிருந்து உழைத்தார். இதனடிப்படையாக எழுந்தது புனைகதை. பிராட் ஐன்ஸ்டீன் பண்புருவிலே கெப்லரைத் தீட்டியிருந்தார். ஐன்ஸ்டீனை அறிந்தவர்களெல்லாம், பிராடின் கெப்லர் உண்மையில் ஐன்ஸ்டீனே என்பதை உணர்ந்து கொண்டனர். அவர் பண்புகள் கெப்லர் உருவில் அவ்வளவு தனிச் சிறப்புடையவையாயிருந்தன. சமஸ்கிருதப் பேராசிரியர் பல்கலைக் கழகத்தில் ஐன்ஸ்டீனுடன் பழகிய பேராசிரியர் களில் தலைசிறந்தவர் மாரிட்ஸ் வின்டெர்னிட்ஸ்27 என்பவர். அவர் பேர்போன சமஸ்கிருதப் பேராசிரியர். மணமாகாப் பேரிளங்கன்னி யான அவர் கொழுந்தியார் பேரிசைப்பெட்டி28 வாசிப்பதில் வல்லவர். அவருடன் இசைவாக ஐன்ஸ்டீன் “வில்யாழ்” வாசித்துப் பொழுதுப் போக்குவது வழக்கம். அவர் மிகவும் ஆசார ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவர். அவரிடம் ஐன்ஸ்டீன் ஒரு தம்பி போல அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வாராம்! பிரேக் பல்கலைக் கழகத்திலிருந்து ஐன்ஸ்டீன் பிரிய வேண்டிய காலம் வந்தபோது, பேராசிரியர் வின்டர்னிட்ஸின் கொழுந்தியார் தம்முடன் இனி யார் வில்யாழ் வாசிப்பார் என்று கவலைப்பட்டார். ‘வில்யாழ்ப் பயிற்சியுடையவரைப் பார்த்து, அடுத்த பேராசிரியராக அமர்த்தி விட்டுப் போகிறேன்’ என்று ஐன்ஸ்டீன் சிறிது நகைச் சுவையுடன் ஆறுதல் சொல்லிவைத்தார். ஆனால் அடுத்த பேராசிரியராகத் தம் நண்பர் பிலிப் பிராங்கை அறிமுகம் செய்து வைத்தபோது, அம்மாது மறவாமல் புதிய பேராசிரியரிடம் இச்செய்தியைக் கேட்டுவிட்டார். “உங்களுக்கு நிலையாக வில்யாழ்ப் பயிற்சி உண்டல்லவா” என்று அவர் வினவினார். புதிய பேராசிரியர் ‘இல்லை’ என்ற போது, அம்மாது “பார்த்தீர்களா? ஐன்ஸ்டீன் என்னை ஏமாற்றி விட்டாரே” என்று குறைப்பட்டாராம்! ஆராய்ச்சிகள்: ஒளிக்கதிரும் ஈர்ப்பாற்றலும் தொடர்புறவுக் கோட்பாட்டின் பொதுமுறை விளக்கச் சார்பாகவும் ஒளியின் இயல்புபற்றியும் இரண்டு முக்கியமான ஆராய்ச்சி வெளியீடுகள் பிரேக் வாழ்வின்போது வெளிவந்தன. ‘ஒளி இயக்கத்துறையில் ஈர்ப்பாற்றலின் தொடர்பு’ (சுநடயவiடிn டிக பசயஎவைல டிக சநடயவiடிn டிக டுiபாவ) என்ற கட்டுரை 1911-லும், ‘ஒளி நுண்ம இயைபியல் ஒப்பீட்டமைதியும் அதன் வெப்ப - விசை ஆற்றல் அடிப்படையும்’(ஞாடிவடிஉhநஅiஉயட க்ஷயளiஉ வாந ஏநடடிஉவைல டிக டுiபாவ) என்ற கட்டுரை 1912-லும் வெளியிடப்பட்டன. முதற்கட்டுரை தனி ஈர்ப்பாற்றல் உடைய நிலஉலகம் போன்ற மண்டலங்களில் ஒளி மற்றப் பொருள்களைப் போலவே ஈர்ப்பாற்ற லுக்கு ஆளாகிறது என்ற முடிவை விளக்கிற்று. இதை நேரடியாகத் தேர்ந்து பார்க்கவும் அவர் ஒரு வழி காட்டினார். நிலைமாறா விண்மீன்களின் ஒளி கதிரவன் மண்டலத்தருகே வரும்போது, அம் மண்டலத்தின் ஈர்ப்பாற்றலால் விலகு மென்றும், இதைக் கதிரவன் மறைவின்போது காணலாம் என்றும் அவர் அறிவித்தார். அடுத்த கதிரவன் மறைவு 1914-லேயே ஏற்பட்டது. வான நூலார் ஐன்ஸ்டீன் முடிவின் மெய்ம்மையைத் தேர்ந்துணர நெடுந் தொலை செல்ல முனைந்தனர். ஆனால், முதல் உலகப்போர் அறிவியலின் இம் முக்கியமான நடைமுறையைத் தடுத்தது. போர் முடிந்தபின் அடுத்த கதிரவன் மறைவின்போது மீட்டும் தேர்வு 1919-ல் தொடரப்பட்டது. வியக்கத்தக்க முறையில் ஐன்ஸ்டீன் முடிவு மெய்ப்பிக்கப்பட்டது. “ஒளியலை பற்றி ஆராயாத பைத்தியக்காரர்கள்” இரண்டாவது கட்டுரை ஒளிபற்றி அந்நாள் நிலவிய இரண்டு கோட்பாடுகளின் முரண்பாடுகளை விளக்க முனைந்தது. ஒரு கோட்பாடு ஒளி அலைகளாகப் (றுயஎநள) பரவுகின்றது என்பது. மற்றது அது அணுக்களாக, குறிப்பிட்ட தொகுதி யளவுகளாகப் (ணுரயவேரசஅ) பரவுடிகறது என்பது. இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயம் அவருக்குப் பின் அவரிடத்தில் பேராசிரியரான அவர் நண்பர் பிலிப் பிராங்க் ஐன்ஸ்டீனுடன் இருந்தார். இருவரும் பல்கலைக் கழகப் பலகணி களின் வழியாக அதன் பின் புறத் தோட்டத்தின் பக்கமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். அத்தோட்டம் உண்மையில் பிரேக் நகரின் பைத்தியக்காரர் விடுதியைச் சேர்ந்தது, இது பேராசிரியர் பிராங்குக்கு அப்போது தெரியவாராது. பெண்கள் ஒரு சமயமும், ஆண்கள் மற்றொரு சமயமும் வாய் பேசாது உலவுவதை அவர் கண்டார். அவர்களைச் சுட்டிக்காட்டி, “இவர்கள் யார்?” என்று கேட்டார். “ஒளியலை பற்றி ஆராய நேரமில்லாத பைத்தியக்காரர்கள் இவர்கள் தான்,” என்றார் ஐன்ஸ்டீன். ஒரே வாசகத்தில் பேராசிரியர் பிராங்கின் கேள்விக்குப் பதிலும் இருந்தது. ஐன்ஸ்டீன் உள்ளத்தில் தோய்ந்து நினைந்து கிடந்த ஆராய்ச்சியின் ஒளியும் அதனூடாகக் கனிவுற்றது. ஜூரிச் பல்கலைக் கூட அழைப்பு பெர்ன் பதிவுரிமைநிலையப் பணிக்குப்பின், ஐன்ஸ்டீனுக்கு மிகப்பெரிய அளவில் ஒத்துப்போன இடம் பிரேக் தான் என்று கூறலாம். ஆனால், அவர் மனைவிக்கு பிரேக் ஒரு சிறிதும் ஒத்துக் கொள்ளவில்லை. இது வியப்புக்குரிய தன்று. ஏனெனில், ஐன்ஸ்டீனுக்குப் பல்கலைக் கழகத்தில் கிட்டிய சமுதாயச் சூழல் அம் மாதராருக்கு நகரில் கிட்ட வில்லை. தவிர இரண்டு இனங்களாக வாழ்ந்த அந்த உலகத்தில், கணவரின் பதவிமூலம் அவர் ஜெர்மன் இனக்கோட்டைக்குள் அடைபட்டிருந்தார். அதே சமயம் ஸ்லாவிய இனத்தவரான அவர் ஜெர்மானியருக்கு அயலாராகவுமிருந்தார். அவர் இனத்தவருடன் அவர் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. 1912-ல் ஐன்ஸ்டீன் பயின்ற ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடம் அவரைப் பேராசிரியராகவே அழைத்தது. ஐன்ஸ்டீன் அதை ஏற்பதில் சிறிது தயக்கம் காட்டி வந்தார். ஆனால், திருமதி ஐன்ஸ்டீன் பிரேகை விட்டுப் போகத் துடித்தார். ஜூரிச் என்றதும் அவர் துள்ளிக் குதித்தார். அவர் முடிவே ஐன்ஸ்டீன் முடிவாயிற்று. நுழைவுத் தேர்வுக்கு ஒருகாலத்தில் இடம் அளிக்காத நிலை யத்தில், பேராசிரியராகவே அவர் இப்போது மீட்டும் நுழைந்தார். அறிவியல் உலகில் ஜூரிச் பல்கலை நுணுக்கக் கூடத்தின் மதிப்புப் பல்கலைக் கழகங்களின் மதிப்பைவிட உயர்ந்ததா யிருந்தது. உண்மையில் ஜூரிச் பல்கலைக் கழகம் அதனருகே ஒரு நிழலாகத் தான் இயங்கிற்று, எனவே ஐன்ஸ்டீன் வருகை இங்கே பலவகையில் முக்கியத்துவம் உடையதாயிருந்தது. அவர் மாணவராக இங்கே பயின்ற நாளிலிருந்து ஐன்ஸ்டீனின் வாழ்வில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அப் பல்கலைக்கூட வாழ்விலும் எவ்வளவோ மாற்றம் உண்டாகி யிருந்தது. அவர் புகழை அவர் கல்வி கற்ற நிலையம் புத்தம்புதுப் புகழாக்கிற்று. ஐன்ஸ்டீனின் பணிவு, கூச்சம், ஒதுங்கிய போக்கு, எளிமை ஆகியவை இதுவரை அவர் பேராசிரியர் வாழ்வில் ஒரு குறையாக இருந்ததுண்டு. ஆனால் இப்போது பொங்கி எழுந்த அவர் வண்புகழ் அவர் உண்மை மதிப்பை எடுத்துக்காட்டி அதையும் நிறைவு படுத்திற்று, அவர் எப்போது பேசுவார் என்று மாணவர் திரண்டு காத்துக்கிடக்கலாயினர். அவர் வகுப்பு நேரங்களில் அவர் துறையின் மாணவரே யன்றிப் பிறதுறை மாணவர்கள்கூடப் பெருந்திரளில் வந்து குழுமுவாராயினர். அதேசமயம் அவர் ஆராய்ச்சிக்குரிய எல்லா வாய்ப்புக்களும் உரிமைகளும் அவருக்குக் கிட்டின. அவர் வேலை நேரங்களில் தொலைவில் சென்றிருந்து அவரை ஊக்குவதி லேயே பலர் அக்கறை கொண்டுவிட்டனர். அவர் கோட்பாட்டின் பொதுமுறை விளக்கம் இதற்குள் உறுதிவாய்ந்த ஒரு பாரியகட்டடத்தின் சட்ட மாயிற்று. அதன் உத்தரங்கள், கைகள் ஆகியவையே இன்னும் மீந்திருந்தன. இவையும் முற்றுப்பெற ஜூரிச் வாழ்வே பெரிதும் உதவியாயிருந்தது. முன் அவர் நண்பராக இருந்த மார்ஸெல் கிராஸ்மென் இப்போது அங்கே கணக்குத் துறையாளராயிருந்தனர். ஐன்ஸ்டீன் கோட்பாட்டை வகுத்து உருவாக்குவதில் அவர் ஐன்ஸ்டீனுடன் ஒத்துழைத்தார். உலக அறிவியற் பேரவைகள் 1911-ம் ஆண்டு வால்ட்டர் ஏர்ன்ஸ்ட் என்ற இயைபியல் ஆராய்ச்சி(ருயடவநள நுசளேவ நுnஎயநவபைவைடிச in ஊhநஅளைவசல) அறிஞர் முயற்சியால் பெல்ஜிய நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் (க்ஷசளேளநடள,ஊயயீவையட டிக க்ஷநடபரைஅ) உலக அறிவியலாளர் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. பெருஞ் செல்வ வணிகரான ஸால்வே (ளுடிடறயல) என்பவர் செலவில் அது நடைபெற்றதனால், அது ஸால்வேப் பேரவை என்று அழைக்கப் பட்டது. இதிலும், இதனையடுத்த பல உலகப் பேரவைகளிலும் ஐன்ஸ்டீன் பங்கு தலைமைப் பங்காகவே இருந்தது. ஐன்ஸ்டீனின் புத்தாராய்ச்சிகளை மட்டுமல்லாமல், அதை அவர் எவருக்கும் விளங்கும்படி விரித்துரைக்கும் திறத்தையும், வினாக்களுக்கு விடை விளக்கம் கூறுகையில் அவர் காட்டிய பரந்த அறிவையும் கண்டு உலக அறிவியலறிஞர்கள் வியப்படைந்தனர்! அங்கு வந்திருந்த அறிஞர்கள் அத்தனை பேரிலும் வயதிலும் நீடித்த ஆராய்ச்சி அனுபவத்திலும் ஐன்ஸ்டீனே மிகவும் குறைந்தவர். ஆயினும் அவரையே யாவரும் தேர்ந்தெடுக்காத தலைவராக மதிக்கத் தொடங்கினர். 1913-ல் வீயன்னா நகரில் ஜெர்மன் இயங்கியலறிஞர்கள் பேரவை ஒன்று கூடிற்று. ஈர்ப்பாற்றல் பற்றிய தம் புதிய கோட் பாடுகளை விளக்கும்படி ஐன்ஸ்டீன் அழைக்கப்பட்டிருந்தார். இங்கே அவர் தம் புது விளக்கங்களை விரித்துரைத்ததன்றி, தம் ஆராய்ச்சிக்கு உதவிய பல கணக்கியலறிஞர்களின் பெயர்களையும் எடுத்துக்கூறிப் பாராட்டினார். அவர்களில் சிலர் புகழ் பெறா தவர்கள். அவர்கள் அப் பேரவையில் வந்திருந்ததறிந்து, அவர் அவர்களை நடுவிடத்துக்கு இட்டுவந்து வெளிப்படையாகப் பாராட்டினார். அவர் அறிவுமட்டுமன்று, இதயமும் பெரிதே என்று அறிவியலுலகம் உணர்ந்து கொண்டது! அவர் ஆன்மிக ஆசான்களுள் ஒருவராக ஏர்ன்ஸ்ட்மாக் இப்பேரவையில் வந்திருந்தார். அவருடன் ஐன்ஸ்டீன் அளவளா வினார். இளைஞர் ஐன்ஸ்டீன் அவருடன் நகைச்சுவைத் ததும்பப் பேசி வாதமிட்டார். ஆசான் கருத்துக்களில் சிலவற்றை ஐன்ஸ்டீன் ஏற்கவில்லையாயினும், முதுபெரும் பெரியாராகிய அவருக்கு மதிப்புக் காட்டும் முறையில் அவ்வாதத்தை நிறுத்தினார். பெர்லின் அழைப்பு அந்நாளில் அறிவியல் உலகின் தலைமையிடமாகப் பெர்லின் நகரம் விளங்கிற்று. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியம் அதன் புகழை வளர்ப்பதில் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைத்து வந்தார். அதன் இயங்கியல் அறிஞரான மாக்ஸ் பிளாங்க், போர் (க்ஷடிhச) ஆகியவர்கள் ஐன்ஸ்டீனையும் அங்கே கொண்டுசெல்ல அரும்பாடுபட்டனர். அத்துடன் பேராசிரியர் பதவியைவிட முழு நேர ஆராய்ச்சியே அவருக்கு ஏற்றது என்பதை அவர்கள் கண்டனர். வான்ட்ஹாஃவ் (ஏயனோடிகக) என்ற இயங்கியலறிஞர் உயிர் நீத்தபோது அத்தகைய ஒரு பணியிட ஒழிவு ஏற்பட்டது. அதை ஏற்றுப் பெர்வின் வரும் படி அவர்கள் ஐன்ஸ்டீனை வற்புறுத்தினர். ஐன்ஸ்டீன் குடும்பவாழ்வில் இப்போது மனக்கசப்பு வளர்ந்து வந்தது. அவருக்கும் திருமதி ஐன்ஸ்டீனுக்கும் வரவர மனம் ஒத்துக் கொள்ளவில்லை. திருமதி ஐன்ஸ்டீன் அவரை விட்டுப் பிரிந்து மண உறவுப் பிரிவினை கோரிக் கொண்டிருந்தார். இடமாற்றம் மனத்துக்கு ஓரளவு அமைதி தரும் என்றெண்ணி ஐன்ஸ்டீன் 1914-ல் பெர்லின் அழைப்பை ஏற்றார். 5. உலகப்புகழ் (1914 - 1929) பேராசிரியர் கடமைகளும் பொறுப்புக்களும் இல்லாமலே பெர்லின் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவி, புதிதாகக் கட்டப் படவிருக்கும் இயங்கியல் ஆய்வுக்கூடப் பொறுப்பாண்மை, (னுசைநஉ வடிசளாiயீ டிக வாந ஐளேவவைரவந டிக ஞாலளiஉள) ஜெர்மன் உலக அறிஞர் மன்றமாகிய மன்னுரிமை, பிரஷ்ய அறிவியல் கலைக்கூடத்தின் உறுப்பினர் பதவி, (குநடடடிற டிக வாந சுடிலயட ஞசரளளயைn ஹஉயனநஅல டிக ளுஉநைவேளைவள) கலைக்கூட நிதியிலிருந்து ஊதியமாக ஒரு பெருந்தொகை ஆகிய இத்தனை வசதிகளுடன் ஐன்ஸ்டீன் பெர்லின் சென்றார். ஊதியத்தொகை முன் எங்கும் பெற்றதைவிடப் பன் மடங்கு பெரிது. ஆராய்ச்சி களுக்கும், ஆராய்ச்சி அறிஞர்கள் தொடர்புக்கும் இங்குள்ள வாய்ப்புக்கள் வேறு எங்கும் எளிதில் கிட்டாதவை. அவர் அறிவும் ஆற்றலும் மிகப்பெரிதாயிருந்தாலும், அவை இன்னும் பன்மடங்காக வளர இங்கே தகுதிவாய்ந்த சூழல் ஏற்பட்டது. பெர்லினில் ஐன்ஸ்டீனின் மாமன் பெரிய வணிகச் செல்வராயிருந்தார். மியூனிச்சில் அவருடன் வந்து தங்கி விளையாடியிருந்த மைத்துனி எலிஸா அவர் புதல்வியேயாவர். ஐன்ஸ்டீன் குடும்ப வாழ்வில் துயருற்றிருந்தது போலவே, எலிஸாவும் இப்போது துயர்ப்பட்டிருந்தார். அவர் இப்போது கணவனிழந்த கைம் பெண்ணாயிருந்தார். பழைய விளையாட்டுத் தோழமை நினைவு இருவர் புது நட்புக்கும் பொலிவு தந்தது. பெர்லின் வாழ்வு, முதல் உலகப் போர் ஐன்ஸ்டீன் கலைக்கூடத்தில் வேலை தொடங்கிய சில மாதங்களுக்குள் முதல் உலகப் போர் மூண்டது. கலைக் கூடத்தின் வல்லுநர்களில் பலர் மனமுவந்து போர் முயற்சியிலீடுபட்டுத் தம் பதவியையும் செல்வத்தையும் வளர்த்துக் கொள்ள முனைந்தனர். இயைபியலறிஞர் வால்ட்டர் நேர்ன்ஸ்ட் (றுயடவநச சூநசளேவ) நச்சுவளி (ஞடிளைடிn ழுயள) சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டார். ஜெர்மனிக்கு நச்சுவெளி செய்வதற்கு வேண்டிய அம்மோனியா அயல் நாடுகளிலிருந்து கிடைக்கவில்லை. பிரிட்ஸ் ஹேபர் (குசவைண ழயநெச) என்ற மற்றோர் அறிஞர் வளி மண்டலத்திலிருந்தே அதைப் பிரித்தெடுக்கும் ஒரு வகைதுறை கண்டு போர் முயற்சியை ஊக்கினார். இந்த அறிஞர்களுக்கு மாறாக, ஐன்ஸ்டீன் போரை வெறுத்தார். போரில் ஜெர்மனியின் போக்கை அவரால் மனமார ஆதரிக்க முடியவில்லை. அரசியல் அரங்கத்தில் நடந்த போரை ஒட்டி, அறிவியலரங்கத்திலும் ஒரு போர் தொடங்கிற்று. ஜெர்மானி யரல்லாத அறிவியலறிஞரைப் புறக்கணிக்கும் மனப்பான்மை வளர்ந்தது. ஐன்ஸ்டீன் இதிலும் பங்கு கொள்ள முடியவில்லை. ஜெர்மனியின் கலைத்துறை, அறிவுத்துறைப் புகழை அதன் போர் முயற்சிக்கெதிராக்க நேசநாட்டினர் முயன்றனர். அறிவுத்துறை ஜெர்மனி வேறு, ஆதிக்க ஜெர்மனி வேறு என்று அவர்கள் விளம்பரப்படுத்தினர். இதனை எதிர்த்து, 92 தலைசிறந்த அறிஞர்கள் போர் முயற்சியில் தாம் ஈடு பட்டுள்ளதாக அறிக்கையிட்டனர். இதிலும் ஐன்ஸ்டீன் கையொப்பமிடவில்லை. போர்க்கால முழுவதும் ஐன்ஸ்டீன் தம் ஆராய்ச்சி யுலகிலேயே அடைபட்டுக்கிடந்தார். நாட்டுக்கு நாடு தூற்றிக் கொண்டது. அவர் பெயரும் அவர் கோட்பாடுகளும் கூட இடையிடையே இழுக்கப்பட்டன. ஆனால், அவர் எதற்கும் செவிசாய்க்கவில்லை. புதிய அன்புச் சூழல் அவர் உள்ளம் இப்போது போரின் அவதிபற்றியும், உலகத்தின் அல்லல்கள் பற்றியும் கவலைப்பட்டது. அவர் உடலும் பெரிதும் நலிவுற்றது. இச்சமயம் அவர் மாமனும் மைத்துனியும் அவருக்குப் பேராறுதலும் பெருந் துணையும் அளித்தனர். போர்க்கால உணவு நெருக்கடி நிலைமையில் குடும்ப வாழ்வற்ற நிலையில் அவர் விடுதிஉணவையே நம்பியிருக்கவேண்டும். ஆனால், அந்நிலை ஏற்படாதபடி மாமனும் மைத்துனியும் அவரைத்தம் இல்லத்திலேயே உண்ணும்படி அழைத்து அன்பாதரவு காட்டினர். அவரும் அவர்கள் அன்பில் கனிவுற்றுத் தம்மாலியன்றவரை அவர்கள் வீட்டு வேலைகளில் ஊடாடி உதவிசெய்தார். வீட்டு வேலைகளிலும் அவர் இயங்கியலறிவுத்திறம் எதிர்பாராதபடி சில சமயம் பயன்பட்டது. இச்சமயம் அவர் நண்பர் பிராங்க் ஒருநாள் அவரைப் பார்க்க வந்திருந்தார். ஐன்ஸ்டீன் அவரைத் தன் மாமன் வீட்டுக்கு வந்து விருந்துண்ணும்படி அழைத்தார். பிராங்க் இதை ஏற்க விரும்பவில்லை. போர்க்கால உணவு நிலையைச் சாக்குக்கூறி மறுக்க முற்பட்டார். ஆனால், ஐன்ஸ்டீன் நகைத்திறத்துடனும், குறும் புத் திறத்துடனும் மறுப்பை ஏற்காது வற்புறுத்தினார். “பங்கீட்டளவைவிட எவ்வளவோ மிகுதியாக வைத்திருப்பவர் என் மாமனார். அதில் பங்குகொள்வதன் மூலம் சமூகநீதிக்கு உதவிய பெருமைகூட உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே தயக்கம் வேண்டாம். வாருங்கள்,” என்று அவர் பிராங்கை அழைத்துச்சென்றார். குடும்பத்துக்கு ஐன்ஸ்டீன் எவ்வளவு உதவியாய் இருந்தார் என்பதைப்பற்றி உணவுமேடையில் எலிஸா அன்புரிமையுடன் கேலி செய்தார். “‘ஆல்பெர்ட்டியில் ’ உலகம் போற்றும் அறிவியலறிஞர். ஆனால் அவர் அறிவு இப்போது பெரிதும் எங்களுக்குத் தான் பயன்படுகிறது. இங்கே என்னென்ன மாதிரி உணவெல்லாமோ மருந்து, வெடிமருந்துகளிடையே புட்டிகளிலும், பெட்டிகளிலும் வருகின்றன. எது உணவு, எது மருந்து அல்லது வெடிமருந்து என்று தெரியவில்லை. எதை எப்படித் திறப்பதென்றும் தெரியவில்லை. குடும்பத்தின் இயைபியலறிஞரான ‘ஆல்பெர்ட்டின்’ உதவியில்லா விட்டால் அவற்றை எல்லாம் நாங்கள் சரிவரத் திறந்து பயன் படுத்தியிருக்க முடியாது” என்றார். இரண்டாவது மனைவி எலிஸா எலிசா குழந்தைப் பருவத்திலிருந்தே ஐன்ஸ்டீனை ‘ஆல் பெர்ட்டில்’ என்றே அழைத்துப் பழகியிருந்தாள். அவர் நாட்டுப்புற மொழியில் அருமையாகக் குறிப்பிடும் சொற்கள் எல்லாவற்றுக்கும் இறுதியில் ஒரு ‘இல்’ விகுதி சேர்த்து, அவற்றைக் கொஞ்சிப்பேசும் செல்லப்பெயர்களாக்குவது வழக்கம். அங்ஙனம் பேசிப் பழைய எலிசாவின் குழந்தையுரிமை இப்போது நட்புரிமையாக நீடித்தது. நட்புரிமை விரைவில் அவர்கள் இருவர் வாழ்வையும் ஒன்று படுத்திற்று. போர்க் காலத்திலேயே ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் எலிசா ஐன்ஸ்டீனை மணந்துகொண்டார். முன்பே ஒரே குடிப்பெயர் தாங்கிய அவ்விருவரும் திருமணத் தால் மிகுதி பெயர் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. எலிசாவின் பிறந்த குடிப் பெயரே வேட்டகக் குடிப் பெயராகவும் அமைந்தது. தொடர்புறவுக்கோட்பாட்டின் பொதுமுறை விளக்கம் பெர்லினி லேயே 1914-இல் முழு உருவடைந்தது. அத்துடன் ஒளிக்கதிரின் ஈர்ப்பாற்றல்பற்றி 1911-இல் பிரேகில் அவர் செய்த முடிவைப் பின்னும் திருத்தி, 1916-இல் இரண்டாவது ஓர் அறிவிப்பு வெளியிட்டார். முதல் அறிவிப்பு கதிரவன் கோள்மறைவை ஒட்டித் தேர்வுபெற இருந்த சமயம், போர் தொடங்கியதால் அந்தத் தேர்வு தடைப்பட்டுவிட்டது. 1918-ல் போர் முடிவுக்குவந்து அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. அடுத்த ஆண்டிலேயே முழுக் கோள் மறைவு உண்டாயிற்று. இங்கிலாந்திலுள்ள ‘மன்னுரிமைக் கழகம், (சுடிலயட ளுடிஉநைவல) ‘லண்டன் மன்னுரிமை வானூலாராய்ச்சிக் கழகம் (சுடிலயட ஹளவசடிnடிஅiஉயட ளுடிஉநைவல) ஆகிய இருகழகங்களின் ஒன்றுபட்ட முயற்சியால், பிரேக் முடிவு, பெர்லின் முடிவு ஆகிய இரண்டும் தேரப்பட்டன. பிரேஸிலிலும் மேற்கு ஆபிரிக்காவிலுமே கதிரவன் முழு மறைவு தென்பட்டன. இரண்டு வானூற் குழுக்கள் இரண்டிடத்திலும் கதிரவனைப் படம்பிடித்தன. ஐன்ஸ்டீனின் பெர்லின் முடிவே கிட்டத்தட்டச் சரி எனத் தெரிய வந்தது. இதுவரை கொள்கையளவிலேயே வெற்றிபெற்றிருந்த தொடர்புறவுக் கோட்பாடு, இப்போது நேரான காட்சித்தேர்வு முறையாலும் வலியுறவு பெற்றுவிட்டது. பகைமை எதிர்பகைமைச் சூழல்கள் போர்க்காலத்திலிருந்த நாட்டுப் பகைமைகள் போர் முடிந்த வுடன் ஓய்ந்து விடவில்லை. நேர்மாறாக வெற்றி இதை ஒருதலைச் சார்பாக வலியுறுத்திற்று. தோல்வியுற்ற ஜெர்மனியில் குமுறல்கள் மட்டுமே இருந்தன. வெற்றி பெற்றவர்கள் பக்கமோ விளம்பர வெற்றிகளில் முனைந்து ஜெர்மனியின் தவறுகளைப் பெருக்கும் போக்கு எழுந்தது. இச்சமயத்தில் ஐன்ஸ்டீன் முடிவுகளைத் தேர்வு செய்ய, வெற்றிபெற்ற இங்கிலாந்தின் சார்பிலே, இரண்டு மன்னுரிமைக் கழகங்கள் முனைந்ததுபற்றி ஆங்கில நாட்டுப் பத்திரிகைகள் முதலில் வியப்புத்தெரிவித்துக் கிண்டலாக எழுதின. ஆயினும் விரைவில் ஐன்ஸ்டீனின் வெற்றி நேச நாடுகளிலும் அவர் செல்வாக்கை வளர்த்தது. ஐன்ஸ்டீன் இதுவரை அறிவியல் உலகிலேயே ஆதரவுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியிருந்தார். இப்போது அரசியல், சமய, இன, கட்சி மனப்பான்மைகளை முன்னிட்டுப் பொது மக்களிடையே அவரைப் போற்றிப் புகழ்பவரும், தூற்றி இகழ்பவரும் பெருகினர். ஐன்ஸ்டீன் பெயர் சாதகமாகவோ, பாதகமாகவோ உலகமெங்கும் பத்திரிகைகளில், துண்டு வெளியீடுகளில், அறிஞர் கழகங்களில் அடிபட்டது. யூத எதிர்ப்பு; யூத இயக்கம் போற்றுதலையும் சரி, தூற்றுதலையும் சரி, ஐன்ஸ்டீன் பொருட் படுத்தவில்லை. அவர் ஆராய்ச்சிகளிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தார். ஆனால், அவரால் முற்றிலும் பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. தோற்றுவிட்ட ஜெர்மனியில் எங்கும் மனக்கசப்பும் கருத்துக் குழப்பங்களும் மலிந்திருந்தன. அதனிடையே தோல்விகளுக்கு முழுவதும் யூதரையே குறைகூறும் மனப்பான்மை வளர்ந்துவந்தது. யூதர்கள் இதைப் பார்த்துக் கொண்டு வாளா இருக்கமுடியவில்லை. போர் முடிவில் துருக்கிப் பேரரசிலிருந்து பாலஸ்தீனம் பிரிந்து தனி நாடாகியிருந்தது. அது யூதர்களின் பண்டைத் தாயகம். இஸ்லாமியர் ஆட்சிகளின் பயனாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யூதர் தாயகமற்று உலகத்தில் பரந்து குடியேறி மீளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆகவே, அவர்களும் யூத உலகமாக ஒன்றுபடத் தொடங்கினர். ஐன்ஸ்டீன் யூத வெறியர் அல்லராயினும், யூதர் பக்கம் ஒத்துணர்வு காட்டினார். முதல் யூதர் மாநாட்டிலே அவர் பங்கு கொண்டார். யூத எதிர்ப்பாளர் இதைப் பயன்படுத்தி, அவருக் கெதிராகக் கிளர்ச்சி செய்வாராயினர். நேசநாடுகள் அவரைப் பெருமைப் படுத்தப் பெருமைப் படுத்த, அவர்மீது ஜெர்மன் யூத எதிரிகளுக்கு உள்ள வெறுப்பு வலுத்தது. உலக அமைதி இயக்கம் தோற்ற நாடுகளில் மட்டுமன்றி, நேசநாடுகளிலும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஏற்பட, ஐன்ஸ்டீனின் மற்றொரு பொது வாழ்வுக் கொள்கை காரணமாயிற்று. ஐன்ஸ்டீன் உண்மையிலேயே கனிந்த உள்ளங்கொண்டவர். அவர் எப்போதுமே போரை வெறுத்தவர். முதல் உலகப்போரின் அழிவு மட்டுமன்றி, அதனால் உலக மக்களிடம் ஏற்பட்ட வெறுப்பு, பகைமை ஆக்கத்துறை வாழ் வமைதிக்கு ஏற்பட்ட இடையூறுகள் ஆகியவை அவர் போர் எதிர்ப்பையும் அமைதி நாட்டத்தையும் பெருக்கின. போர்க்காலத்திலே அறிஞரிடையே அமைதி நாடிய அறிஞர் பலர் இருந்தனர். உருசிய ஞானி டால்ஸ்டாய், பிரஞ்சு அறிஞர் ரோமேன் ரோலந்து, மகாத்மா காந்தி ஆகியோர் ஆதரவு அதற்கு இருந்தது. போரின்பின் அமெரிக்கத் தலைவர் வில்சன் முயற்சியால், அது ஒரு பேரியக்கமாகி, உலக அமைதிக்கான புதிய உலக நாடுகள் சங்கம் (டுநயபயந டிக சூயவiடிளே நுளவயஉநடiளாநன in 1919) அமைத்தது. அமைதி இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஐன்ஸ்டீனுக்குப் பலர் ஆதரவாளராகவும் எதிர்ப்பாளராகவும் தம்மை அணிவகுத்துக் கொண்டனர். 1922-இல் உலக சங்கத்தில் அறிவுலக ஒற்றுமைக் குழுவில் (ஊடிஅஅவைவஉந கடிச வாந ஊடி-டியீநசயவiடிn டிக ஐவேநடைநஉவரயடள) ஐன்ஸ்டீன் ஓர் உறுப்பினர் பதவி ஏற்றார். அரசியல் முறையில் நடத்தப்பெற்ற சங்கத்தின் அமைதி இயக்கத்தில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இல்லை. அரசியலானர்கள் தத்தம் நாட்டின் பக்கமே உழைக்கக்கூடியவர்கள் என்று அவர் ஐயுற்றார். ஆயினும் நல்ல குறிக்கோளுடன் தொடங்கப்படும் இயக்கத்தில் விலகியிருக்க அவர் விரும்ப வில்லை. ஆனால், அடுத்த ஆண்டே சங்கத்தின் போக்கு வல்லரசுகள் செயலுக்கடங்கியது என்று கண்டு அவர் விலகினார். இச்செயல் அமைதி இயக்க உதிரிகளுக்கு மகிழ்வூட்டியது. எனவே, 1924-ல் அவர் மீண்டும் சங்கத்தின் குழுவில் சேரவேண்டிவந்தது. போரின் புயல்களாலும் போருக்குப்பின் ஏற்பட்டபுயல் எதிர்ப்புயல்களாலும் ஐன்ஸ்டீன் அகவாழ்வு அலைக் கழிக்கப் பட்டது. அவ்வகநிலைப் புயல்களில் அவருக்கிருந்த ஒரே ஆறுதல் அவர் ஆராய்ச்சிகளின் வெற்றிகரமான முற்போக்கும், அன்பாதரவு காட்டி அவர் வாழ்வின் இன்பதுன்பங்களில் பங்குகொண்ட அவர் மனைவி எலிசா ஐன்ஸ்டீனின் துணையுமே யாகும். புதிய கருத்துப்புரட்சிகள் ஒளிக்கதிர் ஈர்ப்பாற்றல்களால் வளைவுறுகின்றது என்ற ஐன்ஸ்டீனின் 1911,1916-ஆம் ஆண்டைய முடிவு மற்றொரு பாரிய இருதலைப்பட்ட கருத்துப் புரட்சிக்கு அடி கோலிற்று. ஈர்ப்பாற்றல் பொருளின் கவர்ச்சியாற்றலன்று. அதன் இயக்கத்தின் விளைவாக ஏற்படும் சூழ்கள ஆற்றலே (குநைடன டிக ஐநேசவயை) என்று அவர் கண்டார். இது ஒருபுறம் மின் காந்த இயக்கத்தின் சூழ்கள ஆராய்ச்சியுடன் (நுடநஉவசடி ஆயபநேவiஉ குநைடன) அவர் ஆராய்ச்சி யைப் பிணைத்தது. மற்றொரு புறம் ஒளி ஒவ்வொரு சூழ்கள மண்டலத்திலும் வளைந்து செல்வதால், அதன் மொத்தப் போக்கும் வளைவானதே என்று அவர் எண்ணத் தொடங்கினார். இது அவரை யூக்லிடின் இடக்கணக்கியலை (ஞடயநே ழுநடிஅநவசல டிக நுரஉடனை) விட்டு, பாரிய அளவை களில் ரைமன் இடக்கணக்கியல் (சுநைஅயn’ள nடிn நரஉடனைநயn பநடிஅநவசல) முறைகளைப் பின்பற்றச்செய்தது. ஐன்ஸ்டீன் புகழ் அறிவுலகில் உச்சநிலை அடைந்த பின்னும் உலகப் பொதுமக்களிடையே அவர் கருத்துக்கள் எளிதில் பரவாமலே இருந்தன. இதற்கு அவர் கருத்துக்களின் எதிர்பாராப் புதுமையும் கடுமையும் ஓரளவு காரணமாயினும், இரண்டு உலகப்போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசியல் சமுதாயச் சூழல்களும் அவற்றின் இயக்க எதிர் இயக்க அலைகளுமே பெரிதும் காரணமாய் இருந்தன. ஆயினும் இவ்வியக்க எதிர் இயக்க அலைகளால் ஒரு நல்ல பயனும் ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் கருத்துக்களை அவர் வாய்மொழிகளாலே அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் அறிவியல் உலகில் எங்கும் எழுந்தது. உலகின் நாடுகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியயாவும் ஒன்றன்பின் ஒன்றாக, அவரை அழைத்து, அவர் கருத்துக்களை அறிந்து, அவர் பெருமையை முன்னிலும் பன்மடங்காகப் பாராட்டின. புயல் எதிர் புயல்களிடையே அவர் பேரும் புகழும் பின்னும் வளர்ந்தன. மீண்டும் ஜெர்மன் குடியுரிமை ஜெர்மனியில் அவர்மீது ஏற்பட்டுவரும் எதிர்ப்புக் கண்டு ஜெர்மன் அரசியலார் வருந்தினர். ஜெர்மனியுடன் அவர் தொடர்பு நீடிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினர். ஐன்ஸ்டீன் உள்ளம் இந்த அன்புக் கோரிக்கைக்குக் கனிவுடன் இணங்கிற்று. இதுவரை ஸ்விட்ஸர்லாந்துக் குடியுரிமையுடனே வாழ்ந்த அவர், இப்போது ஜெர்மன் குடியுரிமை கோரிப் பெற்றார். ஸ்விட்ஸர்லாந்துக் குடி உரிமை துறக்கப்பட்டது. இச்செயலுக்கு ஐன்ஸ்டீன் பின்னால் வருந்த நேர்ந்தது. வெளிநாட்டுப் பயணம்: ஹாலந்து, பிரேக் ஹாலந்தில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் 1912 முதலே ஐன்ஸ்டீன் அங்கம் வகித்துவந்தார். ஆண்டு தோறும் 1928 வரை அவர் மாணவர்களுக்குக் காலாகாலத்தில் தம் பேருரைகளால் பயிற்சி அளித்து வந்தார். 1921-இல் புதிய ஜெக்கோஸ்லவேகியா ஆட்சியில் இருந்த பிரேக் பல்கலைக் கழகத்துக்கு அவர் சென்றார். இங்கே அவர் தம் நண்பர் பேராசிரியர் பிராங்குடன் தங்கி அளவளாவினார். சமையல், தொழிலில் அறிவியல் அறிவின் துணை பேராசிரியர் பிராங்க் அப்போது புதிய மணவாழ்வில் ஈடுபட்டிருந்தார். மனைவி கல்லூரி மாணவராய் இருந்தவர். அவர் களுக்குக் குடிக்கூலிக்கு வீடு கிடைக்காததால், பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் ஓர் அறையிலேயே அவர்கள் தங்கியிருந்தனர். சமையல் அனுபவமற்ற நங்கை அன்று வாங்கிய ஈரலைக் கொதிநீரில் விட்டுக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார். ஈரல் எளிதில் வேகவில்லை. பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்த ஐன்ஸ்டீன் சட்டென எழுந்து வந்து திருமதி பிராங்கிற்கு ஈரலை வேகவைக்கும் முறையை அறிவியலடிப் படையிலே விளக்கினார். “தண்ணீரின் கொதிநிலை வெப்பம் குறைவானது என்பது உங்களுக்குத் தெரியாதா? உயர்ந்த கொதிநிலை வெப்பம் உடைய வெண்ணெய், நெய் போன்றவற்றிலிட்டே அதை வேகவைக்க முடியும்” என்று அவர் திருமதி பிராங்குக்குச் சமையற்கலை விளக்கம் தந்தார்! பிரேகில் அறிவியல் வளர்ச்சிக்காக ‘யூரேனியாக் கழகம்’ (ருசயnயை ஹளளடிஉயைவiடிn) என்ற நிலையம் நிறுவப்பட்டிருந்தது. அதன் சார்பில் ஐன்ஸ்டீன் ‘அண்டவெளியின் வளைந்த இயல்பு’ (கூhந ஊரசஎயவரசந டிக ஊடிளஅiஉ ளுயீயஉந) என்ற தம் கோட்பாட்டை விளக்கிப் பேசினார். அணுகுண்டின் மூலவிதை பிரேகில் நடந்த ஒரு செயல் பின்னாட்களில் பெரு முக்கி யத்துவம் உடையதாய் அமைந்தது. ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளில் அடிப்படையான முக்கியத்துவம் உடைய ஒரு வாய்பாடு உண்டு. அது ஆற்றலின் அளவைப்பற்றியது. ஒளிவேகத் தின் தற்பெருக்க எண்ணையும், எடைமானத்தையும் பெருக்கிய அளவே ஆற்றல் என்பது அவ் வாய்பாடு. ஆற்றலை நாம் ‘ஆ’ என்றும் ஒளிவிசையை ‘ஓ’ என்றும் எடைமானத்தை ‘எ’ என்றும் குறித்தால், அது ஆ=எ ஒ2 என்ற உருவில் (நு= அஉ2 றாநசந நு=நுநேசபல, ஆ=ஆயளளயனே, ஊ=ஏநடஒவைல டிக டுiபாவ) எளிய வாய்பாடாகக் காட்சி தரும். இவ் வாய்பாட்டை அடிப்படையாகக்கொண்டால் அணுவில் அடங்கிய ஆற்றல் அளவற்றதாகும். அம் முறையில் பேராற்றல் வாய்ந்த அழிவுப் பொறிகளைச் செய்யப் பலர் முயன்றனர். பலர் அவற்றை அவ்வப்போது அவரிடமே கொண்டுவந்து காட்டி அவர் ஆதரவு பெற விரும்பியதுண்டு. இம் முயற்சிகளின் நோக்கத்தையே ஐன்ஸ்டீன் வெறுத்தார். அவற்றிலீடு பட்டவர் அறிவு நிலையையும் அவர் பொருட்படுத்த வில்லை. அவர்களை வெறியர் என்றே மதித்து வெறுத்தொதுக்கினார். பிரேகைவிட்டுப் புறப்படும் சமயத்தில் அவர் தங்கிய இடமறிந்து அவரைக் காணப் பலர் அருமுயற்சி செய்தனர். இவர்களில் அணுஆற்றல் பொறி அமைத்த இளைஞரும் ஒருவர். பேராசிரியர் பிராங்கிடம் இளைஞர் தம் உரிமையை வற்புறுத்தினார். “இத்தகைய தறுவாய்க்காக ஆண்டுக் கணக்காகக் காத்திருக்கிறேன். அணு ஆற்றலுக்கு வழி வகுத்த பேரறிஞரை நான் கண்டுதானாக வேண்டும்,” என்றான் இளைஞன். அவரைக் கண்டபோதும் இளைஞர் முழு விளக்கமும் விரைந்து சொல்லப் படபடத்தார். ஐன்ஸ்டீன் என்று மில்லா வெறுப்புடன் பேசினார். “தம்பி, இவ்வளவு கடு முயற்சி தேவை யில்லை; விரிவுரை வேண்டியதில்லை; ஒரு சொல்லே போதும், இந்த அறிவற்ற முயற்சி பயன்படா தென்பதற்கு. என்னிடமிருந்து இதுபற்றி வேறு எதுவும் அறிவதற்கில்லை. இந்தப் பொறி உருப் படியாக வேலை செய்யாது!” என்றுகூறி அகன்றார். பொறி உருப்படியாக வேலைசெய்தது, ஆனால் அழிவுத் துறையிலேயே வேலைசெய்தது. 25 ஆண்டுகளுக்குள் அந்தப் பொறியே அணுகுண்டாக வளர்ந்து, ஹிரோஷிமா நகரத்தை அழித்தது என்று அறிகிறோம். அதுவே அணு ஊழியை ஆரவாரமாகத் தொடக்கிவைத்த அணு குண்டு. ஆஸ்டிரியா வருகை பிரேகிலிருந்து ஐன்ஸ்டீன் ஆஸ்டிரியா சென்றார். அங்கே அவர் பழைய நண்பர் ஆட்லர் புரட்சி வெறிக்கு ஆளாகி, ஓரமைச்சரைச் சுட்டுக்கொன்று, அதன் பயனாக வாழ்நாள் முழுதும் சிறைப்பட்டிருந்தார். சிறையிலிருந்தே தொடர்புறவுக் கோட்பாட்டை எதிர்த்து அவர் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையையும் எழுதியனுப்பினாராம். ஐன்ஸ்டீன் அவர் கோட்பாட்டுக்காக வருந்தவில்லை. உயர் குறிக்கோளும் பண்பும் வாய்ந்த இளைஞர் அரசியல் காரணங் களால் இந்நிலைக்கு ஆளாக நேர்ந்ததே என்று மட்டும் வருந்தினார். ஜெர்மனியில் யூத எதிர்ப்பு ஒரு புதிய அரசியல் கோட்பாடாக வளர்ந்து வருவதை முதன்முதல் மோப்பம் பிடித்தவர் ஐன்ஸ்டீனேயாவர். இந்த வளர்ச்சியே ஹிட்லரின் நாசிசமாக உருவெடுத்தது. வரப்போகும் இந்த இடர் பற்றி ஐன்ஸ்டீன் பிரேகில் தம் நண்பர்களுக்கு எச்சரிக்கை தந்திருந்தார். இந்நிலையில் யூத இயக்கத் தலைவர்களுள் ஒருவரான வீஸ்மன் (றுநளைஅயn) ஐன்ஸ்டீனை அடுத்து, யூதர்களின் புதிய தாயக இயக்கத் தின் அவசியம் பற்றி அமெரிக்காவில் விளம்பரப்படுத்தல் வேண்டு மென்று கூறினார். அத்துடன் ஐன்ஸ்டீனே அப்பொறுப்பை ஏற்பது நலம் என்றும் அவர் வற்புறுத்தினார். ஐன்ஸ்டீன் இதை எளிதில் ஏற்றார். அறிவியல் தொண்டுடன் யூத சேவையையும் ஒருங்கே செய்ய அவர் எண்ணினார். அமெரிக்க அனுபவங்கள் ஐன்ஸ்டீனும் திருமதி ஐன்ஸ்டீனும் அமெரிக்காவில் எண்ணற்ற கழகங்கள், நிலையங்கள் ஆகியவற்றின் பாராட்டுக்கும் எல்லையற்ற மக்கள் ஆர்வத்துக்கும் ஆளாயினர். “தொடர்புறவுக் கோட்பாடு என்றால் என்ன?” “உலகில் உங்கள் கோட்பாட்டை அறிந்தவர் ஒரு பன்னிரண்டு பேருக்கு மேல் இல்லை என்று கூறு கிறார்களே,அது உண்மைதானா?” என்பது போன்ற சிறு கேள்விகள் முதல், “குடியாட்சி பற்றி உங்கள் கருத்து என்ன? அமெரிக்கக் குடியாட்சி சிறந்ததா? பிரான்ஸின் குடியாட்சி சிறந்ததா?” என்பது போன்ற பொதுக் கேள்விகள் வரை எல்லாவகைக் கேள்விகளும் எல்லாத்தரப்பட்ட மக்களாலும் கேட்கப்பட்டன. எண்ணற்ற நிழற்படங்கள், பத்திரிகைக் கட்டுரைகள், விளக்கச் சித்திரங்கள் அவர்களுக்குச் சிறப்பளித்தன. “யூதத் தாயக நிதி, ஜெரூசலம் பல்கலைக்கழக நிதி ஆகிய இரு பெருமுயற்சிகளில் ஐன்ஸ்டீனின் அமெரிக்க வருகை யூதர்களுக்கு மிகவும் பயன்பட்டது. இரண்டின் வெற்றியிலும் அவர் புகழாலும் உழைப்பாலும் ஏற்பட்ட பகுதி பெரிது. அமெரிக்கக் கூட்டரசின் தலைவர் ஹார்டிஞ்சி (ஞசநளனைநவே ஹடயசனiபேடி)நியூயார்க் நகர முதல்வர் ஹைலான் (ழலiடிn, ஆயலடிச டிக சூநறலடிசம) ஆகியவர்கள் ஐன்ஸ்டீனையும் அவர் மேற்கொண்ட யூதமக்கள் பணியையும் பாராட்டினர்.” அறிவியற் புதுஉலகம் கண்ட கொலம்பஸ் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் (ருniஎநசளவைல டிக ஞசinஉநவடிn) அவரை வரவேற்றுப் பல்கலைக் கழகப் பட்டங்கள் வழங்கிற்று. அப்பல்கலைக் கழகத் தலைவர் ஹிப்பன் (ழibbடிn) ஜெர்மன் மொழியிலேயே அவருக்குப் பாராட்டிதழ் வாசித்தளித்தார். “ஆராய்ச்சியின் அளப்பருங் கடல் களை அறிவாற்றலுடனும் உறுதியுடனும் கடந்துசென்று, அறவியற் புதுநிலங் கண்ட அறிவுலகக் கொலம்பஸ்” என்று ஐன்ஸ்டீனை அப் பாராட்டிதழ் புகழ்ந்தது. ஐன்ஸ்டீன் மொழித்துறையில் இன்னும் மிகவும் முன்னேறா மலே இருந்தார். ஆங்கில மொழியை இன்னும் அவர் திறம்படக் கையாண்டு பேசமுடியவில்லை. ஆகவே ஐரோப்பாவில் பேசியது போல அமெரிக்காவிலும் அவர் ஜெர்மன் மொழியிலேயே பேசினார். ஐன்ஸ்டீனின் உலக சமரசத்தை உணராத பலர் இன்னும் அவரை ஜெர்மனி சார்பில் வந்த அறிஞரென்றோ, யூதர் சார்பில் வந்த அறிஞரென்றோ வேறுவேறு தப்பெண்ணம் கொள்ள முடிந்தது. அவர் அமைதி இயக்கங் கண்டு கிலிகொண்ட ஓர் அமெரிக்க மாதர் கழகம் அவரை அமெரிக்காவில் இறங்க விடுவது ஆபத்து என்று கூடக் கலகலத்ததாம்! ஆனால், ஐன்ஸ்டீன் எளிய உருவத்தையும் இனிய நடையையும் கண்ட எவரும் இத்தப்பெண்ணங்களை எளிதில் மாற்றிக் கொண்டனர். எந்நாடும் தம்நாடு, எவ்வினமும் தம்மினம் என்று கொள்ளும் அருளாளர் அவர் என்பதை அவர்கள் உணரலாயினர். இங்கிலாந்து: நியூட்டன் கல்லறைக்குப் புதிய நியூட்டனின் மாலைசூட்டு அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி திரும்பும் வழியில் ஐன்ஸ்டீன் இங்கிலாந்தில் சில நாள் தங்கினார். மெய் விளக்க அறிஞரான ஹால்டேன் பெருமகனார் (டுடிசன ழயடனயநே) அவரை விருந்தினராக வரவேற்றார். ஐன்ஸ்டீன் வந்த ஆண்டிலே, அதாவது 1921-லேயே, அவர் ‘தொடர்புறவின் ஆட்சி’ (கூhந சரடந டிக சநடயவiஎவைல) என்ற ஒரு நூல் வெளியிட்டிருந்தார். அதில் அவர் “இயற்கையின் ஆட்சியில் மட்டுமன்றி, மனித வாழ்விலும் தொடர்புறவுக் கோட்பாடு பயன்தருவது என்று காட்டியிருந்தார். ஒவ்வொருவரும் தாம் காண்பதே சரி என்று பிடி முரண்டு செய்யவேண்டுவதில்லை. எல்லார் காண்பதும் தொடர் புறவுபட்ட ஒரே உண்மையின் பகுதிகளே!” என்ற சமரச அறிவை அவர் அதில் புகட்டியிருந்தார். மன்னர் கல்லூரியில் (முiபேள ஊடிடடநபந) ஐன்ஸ்டீனுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின் வெஸ்ட்மின்ஸ்டர் கூடத்திலிருந்த (றுநளவஅiளேவநச ஹbநெச) நியூட்டனின் கல்லறைமீது ஐன்ஸ்டீன் மாலை யிட்டார். அச்சமயம் ஹால்டேன் பெருமகனார் இரு பேரறிஞர்களையும் ஒப்பிட்டுப் பேசினார். “18-ஆம் நூற்றாண்டுக்கு நியூட்டன் எவ்வாறு அறிவியல் மன்னரோ, அவ்வாறே 20-ஆம் நூற்றாண்டுக்கு ஐன்ஸ்டீன் அறிவியல் மன்னரா வார்” என்ற அவர் உரை சமயத்திற்கேற்ற நல்லுரையாய் அமைந்தது. ஹால்டேன் இல்லத்தில் போர்க்கால முதலமைச்சர் லாயிட் ஜார்ஜ் (டுடடிலன ழுநடிசபந), கலை மன்னர் பெர்னார்டுஷா, கணக்கியலறிஞர் ஒயிட் ஹெட் (றுhவைந hநயன), இங்கிலாந்தின் கோவிலக முதல்வர் (ஹசஉhbiளாடியீ), ஆகியவர்களுடன் ஐன்ஸ்டீன் அளவளாவினார். கோவிலக முதல்வர் கவலை தொடர்புறவுக் கோட்பாட்டுக்கும் சமயத்துக்கும் தொடர் புறவு உண்டென்று யாரோ கோவிலக முதல்வரிடம் கூறியிருந்தார். அவர் ஐன்ஸ்டீன் நூல்களைப் படித்துப் படித்துப் பார்த்தும் அதன் சமயத்துறைப் பொருள் விளங்காமல் குழப்பமடைந்திருந்தார். அது சமயத்துக்கு மாறானதென்று வேறுசிலர் சொல்லவே, அவர் குழப்பம் இன்னும் மிகுதியாயிற்று. இருதரப்புக் கருத்துரையையும் அவர் ஐன்ஸ்டீனிடம் கூறி விளக்கம் கேட்டார். ஐன்ஸ்டீன் விடை வாதங்களுக்கே இடமில்லாமல் செய்தது. “தொடர்புறவுக் கோட்பாட்டால் சமய உணர்வு எவ்வாறு பாதிக்கப்படும்?” என்ற கேள்வியிலிருந்த கவலை தோய்ந்த தொனி அவரைச் சிரிக்க வைத்தது. “ஐயன்மீர், தொடர்புறவுக் கோட்பாடு சமயத்தை எவ்வகையிலும் பாதிக்காது. அது அறிவியல் சார்ந்தது. சமயம் சார்ந்த தன்று,” என்று அவர் கூறினார். ஐன்ஸ்டீன் கட்டுரைப் போட்டி ஐன்ஸ்டீன் ஜெர்மனி வருமுன் வெளிநாடுகளில் அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்பின் புகழ் அங்கே சென்று புயல் வீசிற்று. அதன் அலை எதிர் அலைகள் ஐரோப்பாவெங்கும் பரவின. அதன் பயனாக இரு நிகழ்ச்சிகள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று ஐன்ஸ்டீன் கோட்பாட்டை எளிய வடிவில் மக்களுக்கு விளக்கும் முயற்சிகளின் பெருக்கம். ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட்பாட்டில் ஈடுபட்ட பாரிஸிலுள்ள ஓர் அமெரிக்கச் செல்வர் அக்கோட்பாட்டை விளக்கும் சிறந்த சிறு நூலுக்கு 5000 அமெரிக்க வெள்ளி பரிசளிக்க முன்வந்தார். பரிசுநாடி எண்ணற்ற இளைஞர் சிறு நூல்கள் எழுதி அனுப்பினர். “என்னைத் தவிர என் நண்பர்கள் எல்லாரும் பரிசு பெற எண்ணுகின்றனர். ஆனால், எனக்கு அந்த ஆற்றல் உண்டு என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை,” என்று ஐன்ஸ்டீன் இது பற்றி நகையாடினார். இளைஞர் ஐன்ஸ்டீனைப் போலவே பதிவுரிமை நிலையத்தில் வேலை பார்த்த, ஆனால் 61 வயதுடைய ஒரு அயர்லாந்துக்காரர் அப்பரிசைப் பெற்றார். ஐன்ஸ்டீன் கொள்கைளை விளக்கும் திரைப்படங்கள் கூடப் பல இடங்களில் காட்டப்பட்டன. ஐன்ஸ்டீன் கோபுரம் இயைபியல் சரக்குகள் செய்த ஒரு பெரிய வாணிகக் கழகத்தின் ஆட்சியாளரான டாக்டர் பாஷ் (னுச. க்ஷடிளஉh) என்பவர் ஐன்ஸ்டீன் கோபுரம் ஒன்று கட்டப் பெருந்தொகை அளித்தார். வான் கோளங்களின் கதிர்கள் தாம் கடந்து வரும் சூழ்களங்களுக்கேற்ப நிறம் மாறும் என்பது ஒளி பற்றிய ஐன்ஸ்டீன் கோட்பாடு. இதைத் தேர்ந்து காண் பதற்காகவே இக்கோபுரம் கட்டப்பட்டது. பாட்ஸ்டம் (ஞடிவளனயஅ) அருகே இது கட்டமைக்கப்பட்டது. இயங்கியல் துறையில் புகழ்மன்னர்களாக விளங்கிய எல்லா ரையும் தாண்டிப் பல ஆண்டுகளாக ஐன்ஸ்டீன் புகழ் வளர்ந்து வந்தது. அதே சமயம் ஆண்டுதோறும் இயங்கியல் துறையில் சிறந்த அறிஞருக்கென்று நோபல் பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தன. ஐன்ஸ்டீன் பெயர் பரிசுக்குழுவின் கவனத்துக்கு வராதது பற்றி எங்கும் வியப்பு ஏற்பட்டது. ஆயினும் அதேசமயம் ஆண்டு தோறும் நோபல் பரிசுக் குழுவுக்கு இவ்வகையில் பெருத்த இக் கட்டும் ஏற்பட்டது. நோபல் பரிசு முதல் இடையூறு பரிசுத் திட்டத்தின் வாசகம் பற்றியது. நோபல் பரிசு ஆண்டுதோறும் அணிமையில் கண்டுணரப்பட்ட பயனுடைய கண்டு பிடிப்புக்கே கொடுக்கப்படவேண்டும். தொடர் புறவுக் கோட்பாடு கண்டு பிடிப்புக்களுக்கு உதவும் ஒரு அறிவுக் கோட்பாடு. கண்டு பிடிப்பு என்ற சொல்லின் சட்டவரம்புக்குள் அது வரக்கூடுமா என்று அவர்கள் தயங்கினர். இருபது ஆண்டுகளுக்குப்பின் அது அணுகுண்டைக் கண்டு பிடிக்க உதவிற்று என்பதை அவர்கள் அன்று அறிந்திருக்க முடியாது. மற்றொரு இடைஞ்சல் கோட்பாட்டின் ஆதரவு எதிர்ப்பு இயக்கங்களாக உலகம் பிளவுபட்டிருந்த அன்றைய சூழ்நிலையே! நிலைமையைச் சமாளிக்கப் பரிசுக்குழுவினர் ஒரு வழி கண்டனர். தொடர்புறவுக் கோட்பாட்டை ஒதுக்கிவைத்து விட்டு, ஒளி மின் ஆற்றல் துறையிலும், ஒளி இயைபியல் துறையிலும் அவர் கண்டுணர்ந்த கண்டு பிடிப்புக்களின் பெயரால் 1922-ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அளித்தனர். பரிசளிப்புச் சமயம் ஐன்ஸ்டீன் மீட்டும் தொலை நாடுகளுக்குப் புறப்பட்டிருந்தார். ஆயினும் முதற்பயணமாக 1923 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்வீடன்சென்று, கோடபர்க் நகரில்32 ஸ்வீடன் அறிவியல்கழகத்தில் ஸ்வீடன் அரசர் முன்னிலையில் பேசினார். அவர் பேசியது பரிசுக்குரிய கண்டுபிடிப்புப் பற்றியன்று, தொடர் புறவுக் கோட்பாடு பற்றியேயாகும். ஐன்ஸ்டீன் எதிரிகளின் ஆற்றல் இதற்குள் ஜெர்மனியில் வளர்ந்து வந்தது. அவர்கள் நோபல் பரிசுக்குழுவின் செயலின் முரண்பாட்டை எடுத்துக்காட்டியே எதிர்ப்புச்செய்தனர். யூத எதிர்ப்பு அந்த ஆண்டிலிருந்து வர வரப் பெருகிற்று. 1922-இல் அது அயல்நாட் டமைச்சராயிருந்த யூதத்தலைவர் வால்ட்டர் ராட்டினோவின் (றுயடவநச சுயவாநயேற) கொலை உருவில் தலை தூக்கிற்று. ஐன்ஸ்டீன் இந்நிகழ்ச்சி கேட்டுத் திடுக்கிட்டார். ஜெர்மனியில் வரவிருக்கும் கொடுங்கோலாட்சி அவர் எதிர்பாராத ஒன்றடன்று. ஆயினும் எதிர்பார்த்ததைவிட அது விரைந்து அணுகிவந்தது. இந்நிலையிலும் அவர் தம் சுற்றப் பயணத்தை நிறுத்தவில்லை. 6. அமெரிக்கா காலம் என்று ஒரு தனி அளவை கிடையாது. இடம் என்று ஒரு தனி அளவை கிடையாது. காலமும் இடமும் ஒரே அளவையின் இரண்டு கூறுகள். இரண்டும் சேர்ந்து கால - இடம் என்ற ஒரே அளவை ஆகும். இதுவே ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட் பாட்டின் அடிப்படை உண்மை. ஐன்ஸ்டீனின் வாழ்க்கைப் பண்பை நோக்கினால், அவ்வாழ்வுகூடக் கால - இடப் பண்பற்றதோ என்று கூறத் தோன்றும். அவர் பிறந்த இடம் ஜெர்மனி. பிறந்த காலம் ஹிட்லர் ஆதிக்கம் நோக்கி ஜெர்மனி வளர்ந்த காலம். ஆனால், ஜெர்மனி அவரைப் புறக்கணித்தது. ஜெர்மனியின் காலப் பண்பு அவரை அலைக்கழித்தது. அவர் கால இடங்கடந்த உலக அறிஞராகவே புகழ்வானில் மிதக்க வேண்டியதாயிற்று. ஆயினும் கால இடப் புணைகளற்று மிதந்த அவர் புகழ்வாழ்வுக்கு, அமெரிக்கா அவ் விரண்டையும் அளித்து, அவர் வாழ்வை நம் உலக வாழ்வுக்கு வளந்தரும் பயிராக்கிற்று என்னலாம். பெற்றதாயும், உற்றதாயும் ஜெர்மனியின் ஆழ்ந்த பண்புகள், இருபதாம் நூற்றாண்டின் சிறப்புப் பண்புகள் அவர் வாழ்க்கைப் பண்பில் இடம்பெறவில்லை என்று கூறமுடியாது. அவர் உள்ளப் பயிர் வேரூன்றிய நிலமும், உரமும், நீரும் அவையே. ஹிட்லர் - கெய்ஸர் - பிஸ்மார்க் காலங்களுக்கு முந்திய பழைய ஜெர்மனி உலக அறிவு, உலகக் கலை ஆகியவற்றில் தோய்ந்த நிலமேயாகும். வாக்னர், பீதவன் ஆகியவர்களின் இசை, ஷில்லரின் ஆழ்கலைப் பண்பு, கெதேயின் (ழுடிநவாந)(ஜெர்மனியின் தலைசிறந்த கவிஞர், நாடக ஆசிரியர்) அகலக் கலைப்பண்பு ஆகியவற்றில் அவர் ஈடுபாடு மற்றெந்த ஜெர்மானியருக்கும் பிற்பட்டதன்று. அறிவியல் கலைத் துறைகளில் இருபதாம் நூற்றாண்டுவரை ஜெர்மனி இப் பண்புகளைக் காத்தே வந்தது. மற்ற ஜெர்மானியர்களுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் உள்ள வேற்றுமையெல்லாம், அவர் மற்றவர்களைப் போல ஜெர்மனியின் ஆழ அகலப்பண்புகளை ஹிட்லரிசத்தின் காலடியிலிட்டு அழிக்க ஒருப்படவில்லை என்பதே. ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடு புதிது. அவர் பின்பற்றிய முறையும் 20 ஆம் நூற்றாண்டுக்குப் புதிதே. ஏனெனில், அது அறிவியல் ஊழியில் பகுத்தறிவறிஞர் கைநெகிழ விட்டுவிட்ட மெய்யறிவுமுறை. ஆயினும் அவர் ஆராய்ச்சிகள் கால அடிப்படையற்றவையல்ல. 20 ஆம் நூற்றாண்டில் லாரென்ஸ், மைக்கேல்சன், மாக் ஆகிய பல அறிஞர்கள் அவர் முன்னோடிகளேயாவர். அவர்கள் அவர் அறிவியல் வளர்ச்சியின் வேர்கள் - 20-ஆம் நூற்றாண்டு அதன் நிலம்- இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு இரண்டும் கடந்து எதிர்காலம் நோக்கி வளர்ந்த பாரிய படராலமரமே அவர் ஆராய்ச்சிகளின் தொகுதி. மேலைநாட்டுப் பண்பாட்டின் புது நிலம் அமெரிக்கா. ஐன்ஸ்டீனின் வாழ்வைத் தன்னை நோக்கி ஈர்த்து, வளர்ச்சியைத் தனதாக்கியதன் மூலம், அது மேலைநாட்டு அறிவியலின் புத்தம் புதுநிலமாக வளரத் தொடங்கியுள்ளது என்னலாம். கொலம்பஸ் கண்ட புதுநிலத்தில் ‘அறிவியற் புதுநிலங்கண்ட கொலம்பஸ்’ புது வாழ்வு கண்டது பொருத்தமுடையதேயாகும். பிரஞ்சு நாட்டு அமைச்சர் அழைப்பு நோபல் பரிசு பெறுவதற்கு முன்னரே ஐன்ஸ்டீன் வெளிநாடு செல்லப் பயணம் புறப்பட்டிருந்தார். முதன் முதலில் அவர் ஏற்றுக் கொண்ட அழைப்பு பிரான்சினுடையது. அன்றிருந்த அரசியல் இயக்க எதிர் இயக்க அலை களிடையே, பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே இந்தத் தொடர்பை வெறுத்த அரசியல் கட்சியினர் இருந்தனர். மக்களிடையே அமைதியின் பின்னும் போர்க்காலப் பகைமை தீரவில்லை என்பதை இது காட்டிற்று. பிரஞ்சு அரசியலில் பால் பேய்ன்லெவீ (ஞயரட யீiடேநஎந) என்ற ஒரு கணக்கியலறிஞரே அமைச்சர்களுள் ஒருவராயிருந்தார். அவர் தாமே முன்னின்று அவரைப் பெருமைப்படுத்தினார். ஆங்கில மொழியை விட ஐன்ஸ்டீன் பிரஞ்சு மொழியை எளிதாகப் பேசப் பழகியிருந்தார். இதனால் அவர் பிரஞ்சு மக்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே தம் கருத்துக்களை விளக்க முடிந்தது. ஐன்ஸ்டீன் மீண்டும் ஜெர்மனியின் கலைக்கூடத்தின் கூட் டத்துக்கு வந்திருந்தபோது, அங்கே பிற்போக்காளர் கை வளர்ந்து விட்டதை எளிதாகக் கண்டார். கலைக்கூட உறுப்பினர் பலர் கூட்டத்துக்கு வராதிருந்தனர். பல இருக்கைகள் வெறுமையாகக் கிடந்தன. விரைவில் பிற்போக்காளர் கையில் ஜெர்மனியின் அரசியல் சிக்கி விடும் என்பதை ஐன்ஸ்டீன் தெளிவாக உணர்ந்தார். ஆயினும் இச் சூழ்நிலையில் ஜெர்மனியிலிருந்து தாம் செய்யத்தகுவது எதுவும் இல்லை என்பதை அவர் கண்டார். ஆகவே ஸ்வீடனின் அழைப் பையும், தொலை வெளிநாட்டு அழைப்புக்களையும் ஏற்று அவர் பயணமானார். கீழைஉலகப் பணம் இத்தடவை ஐன்ஸ்டீன் சீனா, ஜப்பான், இந்தியா, பாலஸ்தீன் ஆகிய கீழை நாடுகளுக்கெல்லாம் சென்று மக்களுடன் ஊடாடினார். கீழ் நாடுகளிலுள்ள மக்களின் பொறுமை, அமைதி, பணிவிணக்கம் ஆகியவை அவர் உள்ளங்குளிர்வித்தன. மேலைநாடு இழந்துவிட்ட கலை அமைதியை இங்கெல்லாம் கண்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சீனாவின் ஜெர்மன் பள்ளியிலுள்ள மாணவர்கள் ஜெர்மன் மொழியில் ஜெர்மன் நாட்டுப் பாடல் பாடி அவரை வரவேற்றனர். ஜப்பானில் பேரரசியர் பிரஞ்சு மொழியிலே பேசி அவருடன் அளவளாவினார். ஒவ்வோரிடத்தில் அவர் பேசிய ஜெர்மன் பேச்சும் அதன் மொழி பெயர்ப்புமாகப் பேச்சு நான்கு மணி நேரம் நீடித்தது. இவ்வளவு நீண்ட நேரத்தால் மக்கள் இடைஞ்சலுக் காளாவார்கள் என்று எண்ணி ஐன்ஸ்டீன் சில இடங்களில் குறைந்த நேரம் பேசினார். ஆனால், அவர் அருகிலுள்ள நண்பர்கள் மூலம் நேரம் குறைத்துப் பேசியதற்கே மக்கள் வருந்தினர் என்று கேள்வியுற்றார். கீழ்நாட்டினர் அன்பார்வமும் அறிவார்வமும் கண்டு அவர் அகமகிழ்வுற்றார். யூதர் தாயக வாழ்வு யூதத்தாயகத்தின் இயக்கத்தில் ஐன்ஸ்டீன் பங்கு கொண்டவர். ஆயினும் பாலஸ்தீனில் அத்தாயகத்தைக் கண்டபோது ஐன்ஸ்டீ னுக்கு முழுதும் மனநிறைவு ஏற்பட வில்லை. மேனாடுகளில் பிற இனத்தாரிடையே வாழ்ந்ததை விட இங்கே யூதர்கள் அமைதியாகவே வாழ்ந்தார்கள். ஆயினும், அராபியர்களுடன் ஒத்து வாழ்வதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை என்று ஐன்ஸ்டீன் கருதினார். யூதர், அராபியர் ஆகிய இரு சார்பினரையும் கீழை நாட்டு மக்களாகக் கருதி, அடக்குமுறை ஆடம்பரம் செய்யும் ஆங்கிலச் செயலாளர் (க்ஷசவைiளா ழiபா ஊடிஅஅளைளiடிநேச) ஆட்சிமுறையையும் ஐன்ஸ்டீனும் திருமதி ஐன்ஸ்டீனும் முழுதும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஸ்பெயின் செல்கை 1923-இல் ஐன்ஸ்டீன் ஸ்பெயின் நாட்டுக்கு வந்து, அங்கே மன்னர் பதின்மூன்றாம் அல்பான்ஸோவால் வரவேற்கப்பட்டார். புத்தம் புதிய ஆராய்ச்சிகள் 1924 முதல் ஐன்ஸ்டீன் மீண்டும் ஜெர்மனியில் பெர்லினிலேயே தங்கி, கலைக்கூட வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஜெர்மனியின் கணக்கியல் அறிவுத்துறைக்குப் பேர் போன பல்கலைக் கழகம் கோட்டிங்கென் பல்கலைக் கழகமே. (ருniஎநசளவைல டிக ழுடிவவiபேநn) அது மிங்கோவ்ஸ்கியின் கணக்கியல் முறைப்படி நாலளவை முறையில் தொடர்புறவுக்கோட்பாட்டை ஆராயவும், மாணவர்களுக்கு அதைக் கற்பிக்கவும் தொடங்கிற்று. மாக்ஸ் வான் லோ (ஆயஒ எயn டயஎந) தொடர்புறவுக் கோட்பாட்டைக் கணக்கியல் முறைகளால் விளக்கி ஒரு பாரிய நூல் எழுதினார். தொடர்புறவுக் கோட்பாட்டறிஞர் என்ற புது மதிப்பு அக் கோட்பாட்டின் முதல்வரான ஐன்ஸ்டீன் மதிப்புடன் போட்டுயிடுவதோ என்னும் அளவில் வளர்ந்தது. ஆனால், ஐன்ஸ்டீன் இப்போது புத்தம்புதிய ஆராய்ச்சிகளில் இறங்கித் தம் கோட்பாட்டை விரிவு படுத்திக் கொண்டே வந்தார். ஒன்றுபட்ட சூழ்கள விளக்கம் உண்மையில் 1949-ஆம் ஆண்டி லேயே முழு உருவம் பெற்றது. தவிர, தனியியக்கம், அண்ட இயக்கம், ஒளி இயக்கம் ஆகிய துறைகளிலேயே இதுவரை அவர் தொடர்புறவுக் கோட்பாட்டை விளக்கி வந்திருந்தார். அணுவினுள் அதன் இயக்கத்தை ஆராயவும், அதன் மூலம் அணுவின் ஆக்க இயல் புணரவும் இப்போது அவர் உழைக்கத் தொடங்கினார். ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டம் இவ்வராய்ச்சிகளுக்கிடையில் ஐன்ஸ்டீன் 1929 மார்ச்சில் தம் ஐம்பதாவது பிறந்தநாளை எட்டினார். இதை ஒரு பெரிய உலக விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல நாட்டின் அறிஞர்களும் நிலையத்தார்களும் அரசியலாளர்களும் திட்டமிட்டிருந்தனர். இத்தகைய ஆரவாரங்களை ஐன்ஸ்டீன் மனமார வெறுத்தார் - அவற்றைக் கண்டு அவர் அஞ்சினார் என்றே கூறவேண்டும். அவற்றிலிருந்து தப்புவதற்காக அவர் இனியதோர் சூழ்ச்சி செய்தார். பிறந்த நாள் வருவதற்குப் பலநாளைக்கு முன்பே அவர் பெர்லின் நகருக்கருகிலுள்ள ஒரு வணிக நண்பரின் தோட்ட வீட்டுக்கு எவரும் அறியாமல் குடிபுகுந்தார். ஐன்ஸ்டீனின் முகவரி யாருக்கும் கிடைக்கவில்லை. “பிரான்சுக்குச் சென்றிருக்கிறார். அமரிக்காவுக்குச் சென்றுள்ளார்,” என்ற வதந்திகள் எங்கும் எழுந்தன. தெளிவான முகவரியில்லாததால் எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. அஞ்சல்கள் மட்டும் வீட்டில் மலைமலையாக வந்து குவிந்து கிடந்தன. விழாநாள் கழித்து ஒன்றிரண்டு நாட்களில் ஐன்ஸ்டீன் வந்து அஞ்சல் மலைகளைக் கண்டு வியப்படைந்தார். வேலையில்லாப் படையின் தொண்டர் ஒருவர் அவருக்குப் புகையிலைச் சுருள் ஒன்று அனுப்பியிருந்தார். வேறு பல ஏழைக் குடியானவர்கள் அன்புரைகள் வழங்கியிருந்தனர். இவை ஐன்ஸ்டீன் உள்ளத்தைக் கனிவித்தன. புகையிலைச் சுருள் அனுப்பிய அன்பருக்கு அவர் அன்புவிடை அனுப்பினார். அன்பு காட்டியவர், பாராட்டனுப்பியவர்கள் அரசர் முதல் ஆண்டி வரை இருந்தனர். அவர் நெருங்கிய நண்பர்கள் ஓர் அழகிய சிறு உலாப்படகு அனுப்பியிருந்தனர். அமெரிக்க யூத இயக்கத்தவர்கள் பாலஸ்தீனத்தினலேயே ஒரு வட்டகை நிலம் வாங்கி, அதில் பிறந்தநாள் சின்னங்களாக ஐம்பது மரங்கள் நட்டு வைத்தனர். ‘ஐன்ஸ்டீன் சாலை’ (நுiளேவநin ழுசடிஎந) என்று அது அழைக்கப்பட்டது. பெர்லின் நகரவை அவர் அடிக்கடி உலாப்பயணம் செய்த ஆற்றோரமாக ஒரு சிறு மாளிகையைப் பரிசளித்தது. ஆனால், சில உரிமைச் சட்டங்களின் பிடியில் சிக்கி இப்பரிசு செயற்பட முடியாது போயிற்று. ஐன்ஸ்டீன் அத்தகைய ஒரு நிலத்தைத் தானே வாங்கி வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்தார். கலிபோர்னியாவின் அழைப்பு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் பாஸடீனாவில் (ஞயளயனநயே) உள்ள கலிபோர்னியாக் கலைநுணுக்கக் கூடம் (ஊயடகைடிசnயை ஐளேவவைரவந டிக கூநஉhnடிடடிபல) அவரை அமெரிக்கா வுக்கு வர வழைத்தது. உலக அமைதி இயக்கத்தில் இச்சமயம் அவர் கருத்தூன்றியிருந்தார். அவ்வாண்டுமுதல் அந்நிலையம் ஐன்ஸ்டீனை ஆண்டுதோறும் பேருரை நிகழ்த்தும்படி ஏற்பாடுசெய்து. அவரை ‘நேயத் தொடர்புப் பேராசிரியராக’ (ஏளைவைiபே ஞசடிகநளளடிச) ஏற்றது. அதன்படி 1931-லும் அடுத்த ஆண்டிலும் அவர் அங்கே சென்று பேருரையாற்றினார். ஹிட்லர் ஆதிக்க முரசம் 1932 ஆம் ஆண்டில் ஜெர்மன் பொதுத்தேர்தலுக்கு அரசமரபினரான எண்பது வயது சென்ற படைத்தலைவர் ஹின்டன்பர்க் ஒருபுறமும், அடால்ப் ஹிட்லர் என்ற ஆதிக்கவெறியர் மறுபுறமும் போட்டியிட்டனர். ஹின்டன்பர்க்கே வெற்றியடைந்தார். யார் வெற்றிபெற்றாலும் ஜெர்மனியின் ஆதிக்கம் போர்வெறியர் பக்கமே என்பதை ஐன்ஸ்டீன் ஊகித்துக்கொள்ள முடிந்தது. அவர் எண்ணியபடியே 1933-இல் ஹிண்டன்பர்க் தம் தேர்தல் எதிரியைத் தம்முடன் அரசியலில் சேர்த்துக் கொண்டார். 1932-இல் அமெரிக்காவுக்குப் புறப்படும் சமயம் ஐன்ஸ்டீன் நிலைமைகளை மனைவிக்குக் குறிப்பாகக் காட்டினார். “இத்தடவை வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அதை நன்றாகப் பார்த்துக் கொள்,” என்றார் அவர். “ஏன்?” என்று வியப்புடன் கேட்டார், திருமதி ஐன்ஸ்டீன். “நானோ நீயோ திரும்ப அதைப் பார்க்கப்போவதில்லை,” என்று அவர் உணர்ச்சியின்றி விடையளித்தார். அமெரிக்காவின் கல்வித்துறை வல்லுநரான ஆபிரகாம் பிளெக்ஸ்னர் (ஹசெயாயஅ குடநஒநேச) இப்போது பெர்லின் வந்திருந்தார். புதிதாக நிறுவப்பட்ட பிரின்ஸ்டன் கலைக் கூடத்தில் வந்து தம்முடன் நாட்கழிக்கும் படி அவர் அழைத்தார். “தற்போது நான் கலிபோர்னியாவுக்குச் செல்லும் அழைப்பை ஏற்றிருக்கிறேன். மற்றொரு சமயம் பிரின்ஸ்டன் வருகிறேன்,” என்று ஐன்ஸ்டீன் விடையிறுத்தார். நாசிப்புயல் மேகம் ஹிட்லர் பதவிக்கு வந்ததுமுதல் ஜெர்மனி படிப்படியாகப் பல வகையிலும் மாறுபாடு அடைந்துவந்தது. பிரஷ்ய ஆதிக்கத்திலுள்ள ஜெர்மனிக்கும் ஐன்ஸ்டீனுக்குமே பண்பாட்டு வகையில் பெரும்பிளவு இருந்து வந்தது. ஜெர்மன் குடியுரிமையை அவர் இளமையில் உதறித் தள்ளியதும், ஜூரிச் விட்டுப் பெர்லின் வந்த பின்கூட ஸ்விட்சர்லாந்து உரிமையை விடாததும் இதனாலேயே யாகும். ஆயினும் ஜெர்மனியுடன் பின்னும் அவருக்கு ஒரு தொடர்பு இருந்தது. அறிவியல் துறையில் ஜெர்மனி ஐரோப்பாவில் இன்னும் தலைமைவகித்தே வந்தது. அறிவியல்துறை அரசியலுக்கு உட்பட்ட தன்று. அது அரசியல் கடந்தது என்ற கருத்தே ஜெர்மனியின் கலைக் கோயில்களில் நிலவியிருந்தது. அவர் ஜெர்மன் குடியுரிமையை ஏற்றுத் தாயகத்துடன் சமரச உணர்வு காட்டியதன் காரணம் இதுவே. ஆனால், போர்க்காலத்திலிருந்தே அரசியலுக்கு முதலிடம் தந்த அறிஞரும் அறிவுத்துறையை ஆட்டிப் படைக்க விரும்பிய அரசியலாரும் பெருகிவந்தனர். ஹிட்லர் வந்தவுடன் அறிவியலின் தனிஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாது போயிற்று. ஜெர்மனியில் ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்ற குரல் வேறு எந்த நாட்டிலும் இல்லாத புதுப்பொருளில் எங்கும் எழுப்பப்பட்டது. அறிவியல் துறையில்கூட ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பிற நாட்டார் இருக்கக் கூடாது என்பது அதன் முதல் தொனியாக இருந்தது. மேலும் ஜெர்மானியர் என்ற சொல் ஆரிய இனத்தவர் என்ற பொருளில் வழங்கப்பட்டு, யூதரை விலக்கிற்று. இறுதியில் அது படிப்படியாக யூதரையும் அவர்களை எதிர்க்காத வரையும் உள்ளடக்கி விரிவுற்றது. புதிய போர்வெறிப் போக்கை ஆதரிக்காதவர் களையெல்லாம் அது நாளடைவில் விலக்கி வைக்கக் கங்கணம் கட்டிற்று. பிரஷ்யக் கலைக்கூடப் பதவி துறப்பு பிரஷ்யக் கலைக்கூடத்தில் தன் நிலைபற்றி அறிய ஐன்ஸ்டீன் முதலில் உள்ளங்கொண்டார். நியூயார்க்கிலுள்ள ஜெர்மன் தூதர் நிலையத்தை அணுகினார். அந் நிலையத்தவர்கள் மூலம் அவர் எத்தகைய தெளிவும் அடைய முடியவில்லை. இறுதியில் 1933-இல் அவர் பெல்ஜியத்தில் வந்து தங்கிய வண்ணம், பெர்லின் நண்பர் களுடன் கடித மூலம் தொடர்புகொண்டார். ஜெர்மனியின் புதிய அரசியலின் போக்கில் அவர் நம்பிக்கை கொள்ள எதுவும் நேரவில்லை. அவநம்பிக்கையே வளர்ந்து வந்தது. புதிய அரசியல் பதவி வகிக்கும்வரை ஜெர்மனிக்குப் போக முடியாது என்ற உறுதியுடன் அவர் பிரஷ்யக் கலைக்கூடத்திலுள்ள தம் உறுப்பினர் பதவியைத் துறந்து கடிதம் எழுதினார். ஐன்ஸ்டீன் நண்பர்கள் புதிய அரசியல்போக்கை எதிர்க்காமலே, மனித உணர்ச்சி காட்ட எண்ணி வாதிட்டுப் பார்த்தனர். ஆனால், பொதுமக்களிடையிலும் பத்திரிகைகளிலும் ஐன்ஸ்டீன் எதிர்ப்பே ஜெர்மன் தேசீயமாகப் பரப்பப்பட்டு வந்தது. அவர் பிற நாடுகளுடன் ஊடாடிய ஜெர்மனிக்கெதிராக விளம்பரங்கள் செய்தார் என்றே குற்றம் சாட்டப்பட்டது. நண்பர்கள் இதன்பின் அவரை ஆதரிக்கத் துணியவில்லை. பல்கலைக்கூட நண்பர்கள் மனம் புண்படாதபடி செயலாற்ற ஐன்ஸ்டீன் விரும்பினார். ஆகவே, அவர் தாமாகப் பல்கலைக் கூடத்திலுள்ள தம் உறுப்பினர் பதவியைத் துறந்துவிடுவதாகக் கடிதம் வரைந்தார். ஐன்ஸ்டீன் பதவிதுறப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டு மன்று, “பதவித்துறப்பை ஏற்பதில் கலைக்கூடத்துக்குச் சிறிதளவும் வருத்தம் கிடையாது,” என்ற வாசகத்துடன் பதவித்துறப்பை ஏற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கையில் அகப்படாத பகைவனைப் பழிக்கும்தொனி அவ் வாசகத்தி லிருந்தது. நல்லகாலமாக ஐன்ஸ்டீன் ஜெர்மன் எல்லைக் கப்பால் இருந்தார். இல்லையென்றால், அவர் அறிவும் புகழும் புலி கையில் அகப்பட்ட மானின் அழகுபோலவே அவதிக்குட்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. குற்றச்சாட்டு: வாத எதிர் வாதங்கள் பதவித்துறப்பை ஏற்ற தீர்மானத்துடனே வேறு பல குற்றச்சாட்டுகளும் ஐன்ஸ்டீன் மீது சுமத்தப்பட்டன. ஜெர்மனியில் பல கொடுமைகள் நடப்பதாக ஐன்ஸ்டீன் பிறநாடுகளில் எங்கும் தூற்றுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. அரசியற் பிடியிலிருந்த கலைக்கூட நண்பர்களுக்கும் ஐன்ஸ்டீ னுக்கும் விளக்க எதிர் விளக்கங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஆனால் கலைக்கூடத்தின் குரல் படிப்படியாக நாசியர் குரலாக மாறி வந்தது. ஐன்ஸ்டீன் தாம் குற்றக்கதை கூறியதில்லை என்று மறுத்தெழுதியிருந்தார். அவர்களால் தம் பழைய குற்றச்சாட்டை அப்படியே மெய்ப்பிக்க முடியவில்லை. ஆகவே, அவர்கள் அதைச் சற்றுத் திரித்தனர். குற்றக்கதையை அவராகக் கூறவில்லையானாலும் கூட, பிறர் கூறிய குற்றக்கதைகளை அவர் மறுத்ததில்லை. ஆகவே, அவர் குற்றக்கதை கூறிய இடங்களில் அதற்கு உடந்தையாய் இருந்தார் என்றே கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றச்சாட்டின் பண்பு மாறிற்று. வாத எதிர்வாதங்களாலோ, விளக்க எதிர் விளக்கங்களாலோ இனிப் பயனில்லை என்று ஐன்ஸ்டீன் கண்டார். ஏனென்றால், நாட்டுக்காக மெய்யை மறைப்பதே அவர் கொண்ட நாட்டுப் பற்றின் பண்பன்று. முதற் குற்றச்சாட்டு இதுவே கடமை என்று சுட்டிக்காட்டிற்று. நாட்டுக்காகப் பொய்கூறத் தயங்கக்கூடாது என்ற புதிய நாஜிக் கோட்பாடாகக் குற்றச் சாட்டு வளர்ந்து வந்தது. “ஜெர்மனியின் இன்றைய அரசியலைக் கைப்பற்றியிருக்கும் ஆதிக்கக் குழு ஆட்சி செலுத்தும்வரை, நான் ஜெர்மனியில் வாழ முடியாது. ஏனென்றால் அத்தகைய ஜெர்மனியில் கருத்துரிமை எதுவும் இருக்க இடமில்லை,” என்று அவர் நண்பர்களுக்கு இறுதிவிளக்கம் எழுதினார். முன்பு அவர் ஆராய்ச்சிக் களமாயிருந்த கலைக்கூடத்துக்கு அவர் எழுதிய கடைசிக்கடிதம் அந்தப் பழைய அறிவுக்கோயிலிலிருந்து அவர் இறுதிவிடை பெற்றுக் கொள்ளும் கடிதமாய் அமைந்தது. படிப்படியான மாற்ற ஏமாற்றங்கள் ஐன்ஸ்டீனையும் புதிய அரசியலையும் எப்படியாவது சமரசப் படுத்தி இணக்கி வைக்க அறிஞர் பிளாங்க் அரும் பாடுபட்டார். ஐன்ஸ்டீனின் அறிவை மட்டுமன்றி நிமிர்ந்த நேர்மைப் பண்பையும் அவர் அறிந்தவர். அறிந்து மதித்தவர். அதே சமயம் காலத்தின் மாறுதலுக்கேற்றபடி சிறிது விட்டுக் கொடுத்தேனும் அடிப்படை நலங்களைக் காக்கவேண்டுமென்று அவர் எண்ணினார். ஜெர்மன் அரசியலுடன் அவர் ஒத்துழைத்ததன் காரணம் அதுவே. ஐன்ஸ்டீனும் அவ்வாறு சிறிதளவு விட்டுக்கொடுத்தால், அது ஐன்ஸ்டீனுக்கும் நல்லது, ஜெர்மனிக்கும் நல்லது என்று அவர் மனமார எண்ணினார். இத்தகைய நல்லெண்ணத்துடன் அவர் ஐன்ஸ்டீனுக்காக மட்டும் போராடவில்லை. அறிவியல் துறையில் மட்டுமாவது ஜெர்மனியரல்லா- தாரையும் அதன் அரசியலாரின் ஆதரவு பெறாதவர்களையும் கூடியமட்டும் நீடித்து வைத்துக் கொள்ளும் உரிமைக்காக அவர் வாதாடினார். சிலசமயம் அவர் பெருமுயற்சிகள் சிறிது வெற்றி பெற்றதாகத் தோற்றின. இது அவர் நன்னம்பிக்கைக்கு ஊக்கம் தருவது போலி ருந்தது. ஆனால், அரசியலார் இணக்கம் அவர்கள் விரும்பிய மாறுதல் திட்டத்தில் ஒரு படியாக மட்டுமே யமைந்தது. திட்டத்தின் தேவைக் கிணங்க, ஒவ்வொரு படியாக அவர்கள் தங்கள் ஆள் ஒழிப்பு வேலையைத் தட்டின்றி நிறைவேற்றிக் கொண்டுதான் போயினர். அவர் ஏமாற்றமும் படிப்படியான ஏமாற்றமாகவே அமைந்தது. இறுதியில் பிளாங்கின் நெருங்கிய துணைவர் ஹேபர் கூட அகற்றப் பட்டார். அவரைக் காக்க, பிளாங்க் நேரடியாக ஹிட்லரிடமே சென்று வாதாட முயன்றார். ஆனால், ஹிட்லர் தொனியில் வாதவிளக்கத்துக்கு இடமில்லை. அது படைவீரனை நோக்கி ஆணையிடும் படைத்தலைவன் தொனியாய் இருந்தது! அவர் தோல்வியுற்றார். தோல்வியின் பின்தான் ஐன்ஸ்டீன் முன்னறிவின் திறம் அவருக்கு விளங்கிற்று. ஆனால், விளக்கம் காலங் கடந்ததாயிற்று. வெள்ளம் அதற்குள் அணை கடந்து சென்று விட்டது. பகைமைச் செயல்கள் ஜெர்மன் அரசியலாரின் பகைமைஎண்ணம் படிப்படியாகச் செயற்படத் தொடங்கிற்று. கலைக்கூடம் தானாக அவரை நீக்கும் தொல்லையை ஐன்ஸ்டீன் பதவிதுறப்பு வேண்டாததாக்கியிருந்தது. ஆயினும் அவர்கள் பதவிதுறப்பை ஒப்புக்கொண்டதுடனும் நிற்கவில்லை. குற்றச்சாட்டுகளுடனும் அமையவில்லை. கலைக்கூட உறுப்பினர் குழுவி லிருந்து அவரை விலக்கிவிட்டதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அந்த விவரத்தையும் அவருக்குக் கடிதமூலம் தெரிவித்தனர். அத்துடன் உருசியநாட்டுப் பொதுவுடைமைக் கட்சியுடன் மறை தொடர்பு வைத்துக்கொண்டிருந்ததாக ஐன்ஸ்டீன் மீது புதிய பழி சுமத்தினர். பொதுவுடைமையாளர் கருவிகலங்கள் அவர் வீட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும் சாக்குடன் அவர்கள் அவர் வீட்டைச் சோதனை யிட்டனர். சோதனையின் விளைவை எதிர்பாராமலே, அவரைச் ஜெர்மன் அரசியல் நாடுகடத்தி அவர் வீடுவாசல் உடைமைகளையெல்லாம் பறிமுதல் செய்தது! முந்திய அரசியலாரின் அன்பு வற்புறுத்தலால், ஐன்ஸ்டீன் தம் பழைய ஸ்விட்ஸர்லாந்துக் குடியுரிமை நீத்து, ஜெர்மன் குடியுரிமை பெற்றிருந்தார். அங்ஙனம் செய்யாதிருந்திருந்தால் அவர் உடை மைகள் இப்படிப் பறிமுதல் செய்யப்படமுடியாது. அதுபோலவே, பெர்லின் நகரசபை பரிசளிக்க முன்வந்தபோது அச்செயலை நிறைவேற்ற அவர் தம் பணத்தைச் செலவு செய்து வீடு கட்டியிருந்தார். இது செய்யாமலிருந்தாலும், அவர் உடைமைகளுக்கு இந்த அழிவு ஏற்பட்டிராது. நாட்டுப்பற்று, நகர்ப்பற்று ஆகிய இரு நற்பண்புகளுக்காகக் கூட ஐன்ஸ்டீன் தண்டனை பெறவேண்டியதாயிற்று! ஜெர்மன் அறிவுக்கூடங்கள் அனைத்தும் ஐன்ஸ்டீன் எதிரிகள் கைவசப்பட்டன. அவர் பெயரோ, கோட்பாடோ, கல்விக்கூடங் களில் கற்பிக்கப்படக்கூடாதென்ற கட்டுப்பாடு சுமத்தப்பட்டது. அத்துடன் அவர் தொடர் பறிவுக்கோட்பாட்டு ஏடுகளும், அதனைக் குறிப்பிட்டபிற ஏடுகளும் அரசியல் நாடகக் கொட்டகையின் முன்னிலையில் வெளிப்படையாக எரிக்கப்பட்டன. பெல்ஜியம் தந்த பாதுகாப்பு தம் நண்பர்களைப் பார்ப்பதற்காகவாவது ஐன்ஸ்டீன் ஜெர்மனிக்குப்போக எண்ணியிருக்கக்கூடும். ஆனால், நண்பர்களே அவரை எச்சரித்தனர். ஜெர்மனிக்கு வருவது ஆபத்தானது. வந்தால் காவலோ, சிறையோ, கொலைத் தண்டனையோ கூட நேரக்கூடும் என்று பலர் தெரிவித்தனர். பெல்ஜியத்திலிருப்பதுகூட ஆபத்தானது என்று பலர் எண்ணினர். பிற்போக்குக் கும்பலைச் சார்ந்த எவரேனும் எல்லை கடந்து வந்து தீங்கு விளைவிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவிற்று. இவ்வச்சம் எப்படியோ பெல்ஜிய மக்களிடையே பரவி அந்நாட்டின் அரசியலாருக்கும் எட்டிற்று. ஐன்ஸ்டீனிடம் பற்றுதல்கொண்ட கத்தோலிக்கக் குருவான அப்போ லோ மயீத்தர் (ஹbநெ டய அயவைசந) என்பவர் பாதுகாப்பு நடவடிக்கைக்கான முயற்சிகள் செய்தார். பெல்ஜியம் அரசியாரும் ஐன்ஸ்டீனிடம் ஈடுபாடுகொண்டு, அவருக்கு இரண்டு சிறந்த படைவீரரை முழுநேரமெய்காவலராக ஏற்பாடு செய்தார். இச்சமயம் ஐன்ஸ்டீனைத் தேடிக்கொண்டு பேராசிரியர் பிராங்க் பெல்ஜியம் வந்தார். ஐன்ஸ்டீன் இருப்பிடத்தை விசாரித்து அவரைக் காணமுடியாமல் அல்லலுற்றார். எப்படியோ இடம் கண்டு அணுகிய பின்னும், மெய்காவலரால் அவர் கைதுசெய்யப்பட்டார். நல்ல காலமாகத் திருமதி ஐன்ஸ்டீன் அச்சமயம் வந்து அவரை விடுவித்தார். ஐன்ஸ்டீன் பேராசிரியரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அதேசமயம் அவர் தம்மைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பட்ட பாட்டைக்கேட்டு வியப்பும் வருத்தமும் அடைந்தார். இங்கிலாந்து அகதிகள் இயக்கம் வாழ்வின் இந்த நெருக்கடிகளிலே ஐன்ஸ்டீனுக்கு ஆராய்ச்சியின் ஆறுதலும் மிகுதி இல்லாமல் போயிற்று. ஏனென்றால், அவர் மீண்டும் தாயகமற்றவரானார். அறிவியற் கூட வாய்ப்பும் அவர் நாடோடி வாழ்வில் இல்லாது போயிற்று. ஆனால், அறிவியல் வாய்க்காத இடத்தில் அவர் கலையுணர்வு அவர் மன அமைதிக்கு உதவிற்று. அவர் வில்யாழின் இசையில் சில சமயம் ஈடுபட்டார். சிலசமயம் நண்பர்களுக்கு நகைச்சுவை ததும்பும் பாடல்களும் கடிதங்களும் எழுதியனுப்பினார். அறிவியலறிஞராகிய அவர் எளிய இனிய கவிதைகளும் எழுதியது கண்டு, அவர் நண்பர்கள் வியப்பும் மகிழ்வும் அடைந்தனர். ஜெர்மனியின் ஆள் ஒழிப்புத் திட்டத்தால் உலகின் தலை சிறந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் நாள்தோறும் ஆதரவிழந்து அகதிகளாய், நாடோடி களாய், வேலையும் ஆதரவும் தேடி அலையும் நிலை ஏற்பட்டது. ஐன்ஸ்டீன் அகதிகளில் தலைசிறந்த ஒரு அகதியாய் விட்டாலும், அவரே முதல் அகதியாகவும், அகதிகள் தலைவராகவும் கணிக்கப் பட்டார். மற்றெல்லா அகதிகளும் அவரை அகதிகளின் ஒரு முடிசூடாமன்னன் ஆக்கி, அவர் உதவியை நாடினர். அவரிடம் முதன்முதல் வந்து உதவி நாடியவர் வேலை யிழந்த கலைக்கூட நண்பர் பேபரே. போர்க்காலத்தில் ஜெர்மனிக்கு அவர் ஆற்றிய ஆர்வ உதவிகூட அவரைக் காக்கவில்லை. அவர் இழைத்த பெருங்குற்றம் ஒரு யூதராய்ப் பிறந்ததே. பாலஸ்தீன யூதப் பல்கலைக்கழக அமைப்பில் ஐன்ஸ்டீன் பெரும்பங்கு கொண்டிருந்தார். ஆகவே, அப்பல்கலைக் கழகத்தில் ஓர் இடம் பெற்றுத் தரும்படி பேபர் ஐன்ஸ்டீனை வேண்டினார். பாலஸ்தீன் பல்கலைக் கழகத்தார் ஏற்கெனவே ஐன்ஸ்டீனைத் தம்மிடம் வந்து பணியிலமரும்படி வேண்டிக் கொண்டிருந்தனர். ஐன்ஸ்டீன் தாமும் அப்பல்கலைக் கழகத்தில் சேர மறுத்தார். பேபரையும் அங்கே அனுப்ப மறுத்தார். அப்பல்கலைக் கழகத் தாருக்கு அவர் சிறிது கசப்பான, ஆனால் முற்றிலும் பொருத்தமான அறிவுரை தந்தார். “புதிய பல்கலைக் கழகம் புகழ்நாடி உழைக்கக் காத்திருக்கும் இளைஞரைப் புறக்கணித்துவிட்டுப் புகழ் பெற்ற கிழவர்களை நாடக்கூடாது,” என்று அவர் அப்பல்கலைக் கழகத்தாரிடம் கருத்துரைத்தார். அனுபவமுதிர்ச்சியற்ற இளைஞரைவிட மலிவான விலைக்கு அனுபவமுதிர்ச்சி பெற்ற புகழ்மிக்க முதியோரை உலகெங்கும் பரப்பிற்று, ஜெர்மன் அரசியல்! அவர்கள் அவதிகண்டு ஐன்ஸ்டீன் மனங்குமுறினார். ஆனால், அச்சமயம் அவரே அகதிகளில் ஒருவராயிருந்தார் எனினும் புதிய ஜெர்மனியின் தொடர்பிலிருந்து விடுபட்டு, வெளியே யிருப்பதில் அவர் பேராறுதல் அடைந்தார். அகதிகளின் உதவிக்காக இங்கிலாந்தில் 1933 அக்டோபரில் ஒரு கலைஞர் உதவி இயக்கம்(ஹஉயனநஅiஉ ஹளளளைவயசஉந ஊடிரnஉடை) தொடங்கப் பெற்றது. அதற்காகக் கலைத்துறை உதவி மன்றம் ஒன்றும் நிறுவப்பட்டது. அவற்றின் தொடக்கவிழாவில் ஆங்கில நாட்டு இயக்கவியல் அறிஞரான ரூதர் போர்டுப் பெருமகனார் (டுடிசன சுரவாநசகடிசன) தலைமையில் ஐன்ஸ்டீன் ‘அறிவியலும் விடுதலையுரிமையும் (ளுஉநைnஉந யனே டுiநெசவல) என்ற பொருள்பற்றிப் பேசினார். இத் தறுவாயில் ஐன்ஸ்டீன் ஆழ்ந்த நாட்டுப்பற்று அசையா உறுதியுடையதாக விளங்கிற்று. அது ஆங்கில மக்கள் உள்ளங் களிவித்தது. அகதிகள் சார்பில்கூட அவர் ஜெர்மன் நாட்டரசியலை வெளிப்படையாகக் குறை கூற விரும்பவில்லை. “என்னையும் தன் குழந்தையாக நீடித்த காலம் ஆட்கொண்ட நாடு ஜெர்மனி; அதன் செயல் பற்றிய நன்மை தீமைகளை மதிப்பிட்டுத் தீர்ப்பளிக்க என்னால் முடியாது. செயலுதவி தேவைப்படும் இந்நேரத்தில் அங்ஙனம் தீர்ப்புக்கூறுவதும் பொருத்தமன்று,” என்று அவர் அகதிகள் நிலையை மட்டுமே குறிப்பிட்டார். இக்கூட்டம் முடிந்தபின், ஐன்ஸ்டீன் ஸதாம்ப்டன் துறை முகத்தில் கப்பலேறி அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். பிரின்ஸ்டன் அழைப்பு அகதியான அறிஞர்களிடையே ஐன்ஸ்டீனுக்குத் தனிப்பட்ட முறையில் தம்மைப்பற்றி மிகுதி கவலையில்லை. அவரை விரும்பி அழைத்து அவரை வரவேற்கத் தவங்கிடந்த உலகப் பல்கலைக்கழகங்கள் எண்ணிறந்தன. பாலஸ்தீனிலுள்ள செரூசலம் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைக்கழகம், பிரான்சிலுள்ள ஸார்போன் பல்கலைக்கழகம் முதலியவை அவர் இணக்கம் பெறாமலே அவரைப் பேராசிரியராக அமர்த்திவிடத் துணிந்தன. ஆனால், ஐன்ஸ்டீன் எதிர்கால நோக்கு ஐரோப்பாவை ஜெர்மனியின் ஒரு அகலப் பதிப்பென்றே கொண்டது. இரண்டாவது உலகப்போர் வரலாற்றில் 1942-ஆம் ஆண்டு நிலவரத்தை எண்ணிப்பார்ப்பவர் ஐன்ஸ்டீனின் எதிர்கால நோக்கு வியக்கத்தக்க முறையில் அன்று மெய்ப்பிக்கப்பட்டது காண்பர். ஏனெனில் அன்று பிரிட்டன் நீங்கலாக மீந்த ஐரோப்பா முழுவதும் ஹிட்லரின் ஒரே பாரிய இரும்புக்கோட்டையாக இருந்தது. பிரிட் டன்கூட அந்நாளில் நாஜியர் போர்ப்பயிற்சிக் களமாக அமைந்தது. நாஜியரால் அலைக்கழிக்கப்படாமல் அன்று மீந்து இருந்த மேலை உலகப்பகுதி, ஐன்ஸ்டீன் உற்ற தாயகமாகத் தேர்ந்தெடுத்த அமெரிக்கா ஒன்றே. ஐன்ஸ்டீனை அமெரிக்காவுக்கு விருந்தினர் என்ற முறையி லேயே தொடர்ந்து அழைத்த நிலையம் பாஸடீனாவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகமே. ஆனால், இதுவே அமெரிக் காவில் அவர் பிற்கால வாழ்வுக்கு நிலையான அடிப்படையாயிற்று. 1932-லேயே அவர் புத்தம் புதிதாக அமெரிக்காவில் ஏற்பட இருந்த பிரின்ஸ்டன் உயர்தர ஆராய்ச்சிக் கூடத்தில் உழைப்பதாக ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்நிலையத்தில் அவர் 1933-லேயே சென்று சேர்ந்தார். பெர்லின் கலைக்கூடமும் பிரின்ஸ்டன் ஆராய்ச்சிக் கூடமும் பிரின்ஸ்டன் உயர்தர ஆராய்ச்சிக்கூடம் பலவகைகளில் பெர்லினிலுள்ள பிரஷ்யக் கலைக்கூடத்தை முன் மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நிலையம் ஆகும். இதைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த முதல்வர் அமெரிக்கக் கல்வி வல்லுநரான ஆபிரகாம் பிளெக்ஸ்னரேயாவர். அறிவியல் முனைவர் பட்டம்பெற்றவர் புத்தாராய்ச்சிகளில் புகும் சமயத்தில் புகழ்ப்பெரியார்களின் உதவி பெறுதற்குரிய ஒரு நிலையம் தோற்றுவிக்கவேண்டும் என்று அவர் எண்ணங்கொண்டி ருந்தார். 1930-இல் அவர் தூண்டுதலால் லூயி பாம்பர்கர் (டுடிரளை க்ஷயஅநெசபநச) பெலிக்ஸ் புல்ட் (குநசiஒ கரடன) என்ற இரு செல்வர்கள் அத்துறைக்காக அரைக்கோடி அமெரிக்க வெள்ளிகள் (குiஎந ஆடைடயீடிn னுடிடயசள) (ஒன்றே கால்கோடி இந்திய வெள்ளிகள்) நிதியாக அளித்தனர். கலைக்கூடத்துக்கென ஒரு தனிக் கட்டடம் அமையும் வரை பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத் தலைவர் ஹிப்பன்18 அப்பல்கலைக் கழகத்தின் கணக்கியல் கூடத்தை அதற்கு வழங்கியிருந்தார். உயர்தர ஆராய்ச்சிக்கூடத்தின் பொறுப்பேற்ற பிளெக்ஸ்னர் அதன் தகுதிக்கேற்ற முதல்தர அறிஞரைத் தேடி அமெரிக்கா ஐரோப்பா எங்கும் சுற்றி அலைந்தார். அத்தகைய உயர்ந்த இடத்துக் குக்கூட ஐன்ஸ்டீனை அணுகும் துணிவோ, எண்ணமோ அவருக்கு இருந்ததில்லை. ஏனெனில் உலகின் கண்களில் அன்றைய நிலையிலும் அவர் அறிவியல் உலகினர் எவரும் அணுகமுடியாத புகழ்த் தெய்வமாகத் தோன்றினார். ஆனால் 1931-இல் அவர் பாஸடீனா சென்றிருந்தபோது, கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் இயங்கியல் தலைவர் மில்லிகனை (சு.ஹ. ஆடைடமையn) காண நேர்ந்தது. ஐன்ஸ்டீன் அப்போது மில்லிகனின் விருந்தினராகவே இருந்தார். “ஐன்ஸ்டீன் பணி அமர்வுக்கு அப்பாற்பட்டவரானாலும், புதிய முயற்சிகளில் ஊக்கமும் உதவியும் தரவல்லவர். எக்காரணத் தாலாவது அவர் அதில் பங்குகொள்ளும் பேறு ஏற்படுமானால், புதிய நிலையத்துக்கு ஒரு புதையல் கிடைத்ததுபோன்ற நிலை ஏற்படுவது உறுதி,” என்று மில்லிகன்பிளெக்ஸ்னரிடம் கூறினார். ஐன்ஸ்டீன் நிலையத்தைப்பற்றிக் கனிவுடனும் அக்கதையுடனும் கலந்துபேசினார். அறனிடையே பிளெக்ஸ்னர் தம் அன்பழைப்பையும் ஆர்வக் கனிவுடன் தெரிவித்தார். ஐன்ஸ்டீன் அப்போது அமெரிக்காவுக்கு நிலையாகச் சென்றுவிட எண்ண வில்லை. அடிக்கடி அமெரிக்கா சென்றாலும் பெர்லினிலேயே இருந்தார். ஆகவே 1933 முதல் நிலையத்தின் அழைப்பை ஏற்பதாகக் கூறினார். பிரின்ஸ்டன் வாழ்வுக்கால ஆராய்ச்சி 1933-க்குள் அமெரிக்காவுக்கு நிலையாகக் குடியேறி விட வேண்டு மென்ற எண்ணம் ஐன்ஸ்டீனுக்கு ஏற்பட்டது. அமெரிக்கக் குடியுரிமைச் சட்டப்படி, அமெரிக்காவின் வெளிநாட்டுத் தூதர் ஒருவர்மூலமே குடியுரிமை மனுச் செய்யவேண்டும். அதற்காக ஐன்ஸ்டீன் பெர்முடாத் தீவுக்குச் சென்றார். அங்குள்ள அமெரிக்கத் தூதர் அவருக்கு ஆதரவுகாட்டி, மனுவை ஏற்றார். 1941-இல் இதன் படி அவர் அமெரிக்கக் குடியுரிமையாளரானார். பிரிஸ்டன் ஆராய்ச்சிக் கூடத்தில் ஐன்ஸ்டீன் 1933 முதல் 1945 வரை பேராசிரியராகவே இருந்தார். ஆனால், அதன் பின்னும் அவர் ஓய்வுபெற்ற ஆராய்ச்சியாளராகப் பிரின்ஸ்டனில் தம் ஆய்வுக்கூடமனையிலேயே தங்கித் தம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினார். பிரின்ஸ்டனில் அவர் ஆராய்ச்சிகள் பெரிதும் ‘ஒன்று பட்ட விசைக்களக் கோட்பாட்டின்’ (ருnவைநன கநைடன கூhநடிசல முழுவிளக்கம் காண்ப தாகவே இருந்தன. அணு மூலமான கருநுண்மங்கள் ஆற்றல்களின் செறிவே என்பது அவர் கோட்பாடு. எனவே அவற்றுக்குக் காரணமான களஆற்றலும் அவற்றின் இயக்கத்துக்குக் காரணமான கள ஆற்றல்களும் ஒரே அமைதியுட்பட்டவை என்று நாட்ட அவர் முயன்றார். இம்முயற்சி 1948-இல் முழு வெற்றி கண்டது. அணுக்குண்டும் அதன் விளைவும் இதற்கிடையில் அணு ஆற்றலின் தந்தையாகிய அவரே அணுக் குண்டு ஆராய்ச்சிகளிலும், அதன் விளைவாக ஏற்பட்ட இயக்கங்களிலும் பல பொறுப்புக்கள் ஏற்க வேண்டி வந்தது. ஆற்றல் என்பது ஒளிக்கதிரின் வேகப் பெருக்கத்தையும் எடைமானத்தையும் பெருக்கிய தொகையே (நு=ஆஉ2) என்ற ஐன்ஸ்டீன் வாய்பாடே அணு ஆற்றலுக்கு வழிவகுத்தது. பொருளை ஆற்றலாக மாற்றினால் ஒவ்வோர் அணுவுக்குள்ளும் எல்லையற்ற ஆற்றலுண்டு என்ற அவர் கோட்பாடு வெறும் கோட்பாடாக இல்லை. பலர் அணுவின் கருநுண்மங்களை ஆற்றலாகப் பெருக்க முடியும் என்று செயல் தேர்வுமூலம் காட்டினார்கள். ஆயினும் அதற்கான செலவு அந்த ஆற்றலின் பயனைவிடப் பெரிதாயிருந்ததால், அதில் எவ்வகையான ஆற்றலாதாயமும் இல்லாதிருந்தது. இச்சமயம் பெர்லினிலுள்ள ஆட்டோ ஹான், (டீவவடி ழயாn) லீஸ்மைட்னர் (டுளைநஅநவைநேச) ஆகியோர் பொதுநிலை நுண்மங் (சூநரவசடிநே) கொண்டு தாக்கினால், விண்மம் (ருசயரேயஅ) என்ற உலோக அணுப் பிளப்புற்று, சில நுண்மங்கள் ஆற்றலாகிவிடு கின்றன என்று கண்டார்கள். எதிக்கோ பெர்மி (நுசiடி குநசஅi) என்ற இத்தாலிய இயங்கியலறிஞர் இதனை ஒருபடி முன்னேற்றுவித்து, அதை வெற்றிகரமாக்குவதற்கான பொது நிலை நுண்டத்திரளின் அளவைக் கண்டார். அவர் பாசிசம இத்தாலியிலிருந்து வெளியேறி அமெரிக்கா வந்து வாழ்ந்தவர். நாசி ஜெர்மனியும் பாசிச இத்தாலியும் இவற்றைப் பயன்படுத்து முன், அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தி அணுகுண்டாக்கிவிட வேண்டுமென்று அவர் எண்ணினார். அவர் அமெரிக்க அரசியலை இவ்வகையில் ஊக்க, ஐன்ஸ்டீன் ஆதரவு நாடினார். ஐன்ஸ்டீன் அணு ஆற்றலின் அழிவை விரும்பாவிட்டாலும், அது ஜெர்மனி கைப்பட்டால் தம் உற்ற தாயகமாகிய அமெரிக் காவுக்கு ஏற்படும் தீங்கைக் கண்டார். அதுவரையில் அமெரிக் காவுக்கு உதவுவது தம் கடமை எனக்கொண்டார். ஆகவே அவர் இம்முயற்சியில் முனைந்தார்; அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்டை அம்முயற்சியில் ஈடுபடுத்தி ஊக்கினார். 1945-இல் அமெரிக்காவில் அணுக்குண்டு ஓர் ஒப்பற்ற போர்க் கருவியாயிற்று. அது போரைநிறுத்தவும் பெரிதும் உதவிற்று. ஆனால், ஐப்பானிலுள்ள ஹிரோஷிமாநகரம் அவ்வெற்றிக்குப் பலியாயிற்று! அணுக்குண்டுப்போருக்கு இங்ஙனம் கடமையுணர்ச்சியால் ஐன்ஸ்டீன் உதவினாலும், அணுக்குண்டு எதிர்ப்பியக்கத்திலும் அவர் மிகுதி ஊக்கம் காட்டினார். அரசியல் விரும்பாத அவரை இங்ஙனம் அணுகுண்டு ஓரளவு உலக அரவியற் பொறுப்புக் களில் சிக்கவைத்தது. பிரின்ஸ்டன் குடும்பவாழ்வு 1936-இல் ஐன்ஸ்டீனின் இரண்டாம் மனைவி எலிஸாஉலகு நீத்தார். 1939-ல் ஐன்ஸ்டீனின் அறுபதாவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி, அவர் தங்கை மஜா (ஆயதய) பிரின்ஸ்டனுக்கு வந்தார். மனைவியை இழந்தபின், இத்தங்கையும், ஐன்ஸ்டீன் புதல்வியருள் ஒருவரான மார்கட்டும் (ஆயசபடிவ) அவர் செயலாளரான செல்வி ஹெலென் டியூ காஸூம் (ழநரn னுரமயள) அவருடனிருந்து அவருக்கு உதவியாய் அமைந்தனர். ஆராய்ச்சித் துணைவர் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சிகளில் அவருடன் லான்ஸாஸ் (ஊ.டுயnஉணடிள) லியோ பால்டுஇன்பீல்டு (டுநடியீடிடன ஐகேநைசன) பீட்டர் பெர்க்மன் (க்ஷயசபஅயnn) வாலன்டின் பார்க்மன் (ஏயடநவேin க்ஷயசபஅயnn) ஆகியவர்கள் உழைத்தனர். லான்ஸாஸ் பெர்லினிலே அவருடன் இருந்து உழைத்தவர். ஒன்றுபட்ட களக்கோட் பாட்டில் அவர் துணைதந்தார். ஆனால், இதை முடிக்க உதவியது இன்பீல்டே ஆவர். அவர் ஐன்ஸ்டீனுடன் மிக நெருங்கிப் பழகி ஒத்துழைத்தவர். இருவரும் சேர்ந்து கூட்டுழைப்பால் எழுதிய நூல் “இயங்கியலின் வளர்ச்சிமுறை” (நுஎடிடரவiடிn டிக ஞாலளiஉள) என்பது. பொதுமக்களுக்கு இயங்கியலின் அடிப்படைக் கருத்துக்களை இது பசுமரத்தாணிபோல் பதியவைப்ப தாயிருந்தது. அது உலகில் பரந்த பயனும் விற்பனையும் உடையதாயுள்ளது. இன்பீல்டு தம் வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக்கி வரைந்தார். “தேட்டம்: அறிவியலாளரின் ஆக்க அமைதி” (ணுரநளவ : கூhந அயமiபே டிக ய ளுஉநைவேளைவ) என்ற அந்நூல் ஐன்ஸ்டீனின் பிரின்ஸ்டன் வாழ்க்கை பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கின்றது. அணு ஆக்கம் பற்றிய ஆராய்ச்சிகளில் ஓய்வு ஒழிவில்லாமல் ஐன்ஸ்டீனுடன் ஒத்துழைத்தவர்கள் பெர்க்மனும் பார்க்மனும் ஆவர். அவர்கள் இருவரின் இடை விடாத் தோழமையும் பெயரொற்றுமையும் பிரின்ஸ்டனில் ஒரு பழமொழிக்கே காரணமாய் விட்டது. “பெர்க்மன் தவறினால் பார்க்மன், பார்க்மன் தவறினால் பெர்க்மன்” என்பதே அந்தப் பழமொழி. வாழ்க்கையின் அருள் துறவு ஐன்ஸ்டீன் வாழ்வு முழுவதுமே தற்பற்று நீங்கியும் உலகப் பற்று நீங்காத ஓர் உண்மைத் துறவியின் வாழ்வாய் இருந்தது. பிரின்ஸ்டன் வாழ்வோ துறவிலிருந்தும் ஒதுங்கிய அகத்துறவு வாழ்வு என்னலாம். உலகத்துக்கு அவர் அறிவியற் காலங்கடந்த ஒரு தெய்வமாக விளங்கினார். ஆனால், அதே சமயம் அவர் மனிதப் பண்பின் கனிவு நிறைந்த அருளாளராக, உலக நலனில் என்றும் அக்கறை உடையவராக விளங்கினார். ஐன்ஸ்டீனின் 76-வது பிறந்த நாளைக்குச் சற்றுமுன் அவருக்குச் சிறிது உடல்நலம் குன்றிற்று. ஈரல் நோய் என்று மருத்துவர் கருதி அவரை மருத்துவ விடுதியில் சேர்த்தனர். ஆனால், எவரும் எதிர் பாராவகையில் பிறந்த நாளைக்கு நான்காவது நாளில், 1955-இம் ஆண்டு ஏப்ரில் 18-ஆம் அவர் திடுமென உலகு நீத்தார். அவர் பிரிவின் உண்மைக் காரணம் குருதி நாளம் ஒன்று வெடித்து உடலில் குருதி பரவியதனாலேயே என்று மருத்துவ அறிஞர் ஆய்ந்து கண்டனர். உலகுக்காக வாழ்ந்த அருட்பெரியாரான ஐன்ஸ்டீன் மாள் விலும் அருட்பெரியாராகவே விளங்கினார். அவர் இறுதி விருப்பப் பத்திரத்தில் தம் மூளையையும் உடலின் சில அரும்பகுதிகளையும் உலக நலன்கருதி அறிவியலாராய்ச்சித் துறைக்கு அளித்தார். அறிவியல் உலகம் உள்ளளவும் ஐன்ஸ்டீன் புகழ்ப் பெயர் உலகில் நிலவுவது உறுதி. ஆனால், அறிவியல் செல்லா இடங் களிலும் அவர் அருளொளி சென்று எட்டி அவர் புகழை மாளாத ஆழ்ந்த அருட்புகழாக்கும் என்று துணிந்து கூறலாம். 7. அறிவாட்சியும் பண்பாட்சியும் அறிவாராய்ச்சியில் நுணுகிச் செல்பவர் அறிஞர். அவர்களே மனித வாழ்க்கையின் அடிப்படையை வகுத்தமைப் பவர்கள்; பண்பாளர் என்பவர்கள்; பண்பாட்சியில் பரந்து செல்பவர்கள். வாழ்க்கைக்கு இனிமையும் உயர்வும் அளிப்பவர்கள் அவர்களே. இந்த இரண்டு திறங்களும் ஒருங்கே ஒருவரிடமே அமைவது அருமை. அவ்வாறு அமைந்தால், அது பொன்னால் செய்த மலருக்கு மணமும் வாய்த்தது போன்றதாகும். இத்தகைய அரிய வாய்ப்பை நாம் ஐன்ஸ்டீனிடம் காண்கிறோம். அவர் காலங்கடந்த, தேசங்கடந்த அறிஞர். அதே சமயம் அவர் தலை சிறந்த பண்பாளராகவும் விளங்கினார். ஐன்ஸ்டீனைப் பலர் அறிவுலக மாயாவி என்று கூறுவதுண்டு. தந்தி (கூநடநபசயயீh) கம்பியில்லாத் தந்தி (றுசைநடநளள கூநடநபசயயீhல) தொலைபேசி (கூநடநஎளைiடிn) தொலைக்காட்சி (கூநடநயீhடிநே) ஆகியவற்றைக் கண்டுபிடித்த அறிஞர்களையும் மக்கள் அறிவுலக மாயாவிகள் என்று கருதிய காலம் உண்டு. ஆனால், அவர்கள் அறிவுலகத்துக்கே மாயாவிகளாகத் தோற்றவில்லை. ஏனெனில் அவர்கள் உலகுக்குப் புதுமை கண்டனர். அறிவுலகின் அடிப்படை அறிவை மாற்றவில்லை. ஐன்ஸ்டீன் அறிவுலகின் அடிப்படைக் கருத்துக்களையே மாற்றியமைத்ததனால் அறிவுலக மாயாவி என்று சிறப்பாகக் குறிக்கப்படுகிறார். ஐன்ஸ்டீன் இயற்கைக்கே புத்துருவும் புதுவடிவும் கொடுத்திருக்கிறார். அதை நாம் உணரவேண்டுமானால், இயற்கைபற்றிய பொதுஅறிவை நாம் கடந்துசெல்ல வேண்டும் அறிவியல் உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அறிஞர் கண்டுணர்ந்தவற்றையும் கடந்து செல்ல வேண்டும். அவற்றுக்கப் பால் அவர் கட்டி முடித்த வானளாவிய கட்டடத்தின் உயர அகல நீளத்தை அப்போதுதான் நாம் மதித்துணர முடியும். இயற்கை: ஐன்ஸ்டீன் காலத்து முற்பட்ட அறிவு இயற்கையைப் பற்றிய நம் அறிவு மெய், வாய், மூக்கு, செவி, கண் என்ற ஐம்பொறிகளால் அறியப்படுவது. இவற்றால் ஏற்படும் ஐந்து அறிவுகளையே தொட்டறியும் அறிவு, சுவைத்தறியும் அறிவு, முகர்ந்தறியும் அறிவு, கேட்டறியும் அறிவு, கண்டறியும் அறிவு என்று கூறுகிறோம். இவையே ஐம்புல அறிவுகள். இவற்றுள் மெய், வாய், மூக்கு என்ற முதல் மூன்றும் மிக அருகில் உள்ளபொருள் களையே அறியத்தக்கவை. ஆனால் செவி மேகமண்டலத்திலுள்ள இடியை இங்கிருந்து உணர்கிறது. கண்ணோ வானத்தின் கோடிக் கணக்கான ஒளிக்கோளங்களை இங்கிருந்தே காணவல்லது. நாம் அறியும் உலகின் பேரளவு எல்லை நாம் கண்ணால் காணும் உலகே மனக்கண்ணால், அதாவது பாவனையால் காணும் எல்லைகூட இதைக் கடந்ததன்று. ஐந்து புலன்களாலும் நாம் உணரும் உலகு எவ்வளவோ பெரிது. ஆனால் இயற்கையின் எல்லையற்ற பரப்பில் அது ஒரு சின்னஞ்சிறு கூறு மட்டுமே. புலன்களால் நாம் உணரும் இச்சிறு பரப்பில் கூட நம் அறிவு மிகமிகக் குறைபட்டது என்று அறிஞர் காட்டுகின்றனர். செவியால் நாம் உணரும் ஒலி அலைவடிவாகவே நம் காதுகளில் வந்து எட்டுகிறது. இவை காற்றில் வரும் அலைகள். காற்றில்லாத இடத்தினூடாக இந்த அலைகள் செல்வதில்லை. காற்று நீக்கப்பட்ட குழாய்க்குள், மின்னாற்றலால் ஒரு மணியை இயக்கினால், மணி அசைவதை நாம் காணலாம்; ஆனால் அது அடிப்பதை நாம் கேட்க முடியாது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தியே ஒலித்தடுப்புச் சுவர்கள் அமைக்கப் படுகின்றன. உள்ளே காற்று நீக்கப் பட்ட புழையிடம் இருந்தால், ஒலியலை சுவர் கடந்து செல்லாது. ஒலி அலைகளைப்போல ஒளி அலைகள் காற்றில் இயங்கு பவை அல்ல. அவை மின்காந்த அலைகளாக வெற்றிடத்தில் இயங்குகின்றன. வானவெளியில் கதிரவனிடமிருந்தும், இன்னும் தொலைதூரத்திலுள்ள விண்மீன்களிடமிருந்தும் ஒளி நம்மை வந்தடைய முடிவது இதனாலேயே. ஏனென்றால் காற்று நம் மண்ணுலகைச் சுற்றி ஒரு சில கல் தொலைவரையே இருக்கிறது. அதற்கப்பாலுள்ள வெட்ட வெளி எல்லையின் ஒளியலையன்றி வேறெதுவும் செல்வதில்லை. நம் கண்காணும் ஒளி வெண் கதிரொளி மட்டுமே;. இதில் கதிரவனொளியின் ஏழு நிறங்களும் அடங்கியுள்ளன. அந்நிறங்கள் வயலட் ஏடிடைநவ, இன்டிசோ ஐனேபைடி, பச்சை, நீலம், மஞ்சள், ஆரஞ்சு டிசயபேந , சிவப்பு ஆகியவை. இவற்றுள் மிக அகலங் குறைந்த அலை வயலட் அலையே. அது ஒரு சென்டி மீட்டரில் இலட்சத்தில் நான்கு கூறு நீளமுடையது. மிக அகலமிக்கது சிவப்பலை. அது அதே இலட்சத்தில் ஏழு கூறு நீளமுடையது. இவற்றிடைப்பட்ட சிறு அகலத்துக்கு இப்பாலும் அப்பாலும் (விளக்கப் படம் 1 காண்க); (ஞாடிவடி ளஉயn யனே ஞயளவந கசடிவே யனே யெஉம) எத்தனையோ நிற அலைகளும், ஒளி, வானொலி சுயனiடி, ஒலிபரப்பு க்ஷசடியன உயளவ, அலைகளும் ஓயாது இயங்குகின்றன. இவை அனைத்தும் கண்காண அலைகள், ஆராய்ச்சியறிஞர் அவற்றின் செயலால் அவற்றைக் கண்டுபிடித்து நமக்குப் பயன் படுத்துகிறார்கள். புலன் காணாத இவற்றைப் புலன் கடந்த ஆராய்ச்சி அறிஞர்கள் இயற்கையின் மறைவான உள் வீட்டிலிருந்து நமக்கு எடுத்துதவியுள்ளனர். விசும்பின் கருத்தாட்சி கண்காணும் நம் ஒளியலைகளுக்கும், கண் காணாத இந்த அலைகளுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் அளவில், அவற்றின் அலையகல ஏற்றத்தாழ்விலேயே உள்ளது. மருத்துவ நிலையத்தில் உடலின் உட்பகுதியைப் படம் பிடிக்க உதவுபவை ‘எக்ஸ்’ கதிர்கள் (ஓ-சயலள) இவ் அலைகள் ஒளி அலையைக் காட்டிலும் மிக நுட்பம் வாய்ந் தவை. சென்டி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு கூறுமுதல் பத்துக்கோடியில் ஒரு கூறு வரையில் இவை குறுகிச் செல்கின்றன. அதே சமயம் வானொலியின் அலைகள் ஒரு லட்சம் சென்டி மீட்டர் முதல் ஒரு கோடி சென்டி மீட்டர் வரை அகலமுடையனவாக விரிந்து பரவுகின்றன. நீரின் அலைகள் நீரில் தவழ்கின்றன. ஒலி அலைகள் காற்றில் தவழ்கின்றன. ஆனால் ஒளி அலைகளும், அதனுடனொத்த பிற கண்காணா அலைகளும் வெற்றிடத்தில் எவ்வாறு இயங்க முடியும்? இக்கேள்வி அறிவுலகின் ஒரு புதிராயிற்று. புதிருக்கு அறிஞர் ஒரு தற்காலிக விளக்கம் கண்டனர். வெளியிடத்தில் விசும்பு (நவாநச) என்ற ஒருவகை ஊடுபொருள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதாக அவர்கள் கட்டுரைத்தனர். இது காற்றைவிட நுண்ணிதாம்! ஏனென்றால் அது எல்லாப் பொருள்களின் உள்ளீடாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் காற்று நிலவுலகைச் சுற்றிலும் ஒரு சில கல் தொலைவு வரையே இருக்கிறது. இதுவோ நிலவுலகையும் கதிரவனையும் எல்லாக் கோளங்களையும் சூழ்ந்து அண்டத்திலும் அப்பாலும் நிறைந்திருக்க வேண்டும்! பள்ளிகளில் கணக்குக்கு விடை தெரியாத மாணவன் ‘தெரிய வில்லை’ என்பான். ஆனால், ஒரு பொருளுக்குக் காரணம் கூறமுடியா விட்டால், மக்கள் அதை ‘இயற்கை’ என்கிறார்கள். அல்லது ‘இயற்கை’ என்று கூறாமல் ‘கடவுள் படைப்பு’ என்கிறார்கள். இரண்டும் காரண விளக்கம் ஆய்விடாது. ஆகவேதான் இயற்கையை மெய்விளக்க அறிஞர்களும், அறிவியலா ராய்ச்சியாளரும் ஆராய்கின்றனர். கடவுளைப் பற்றியும் உபநிடத காலமுதல் நம் பண்டைக்கால அறிஞர் ஆராயத்தொடங்கினர். கடவுளைப்பற்றி ஆராய முற்பட்ட உபநிடத அறிஞர் களைப் போலவே, 19-ஆம் நூற்றாண்டில் சிலர் ‘விசும்பு’ பற்றியும் ஆராய முற்பட்டனர். அவர்களில் மைக்கேல்ஸன், மார்லி ஆகியவர்கள் முக்கியமானவர்கள். நீரில் படகுசெல்கிறது. படகின்முன் நீர் படகை எதிர்க் கின்றது. நீர் செறிவுற்றுத் திரள்கிறது. படகின் பின்னால் அது நெகிழ்வுற்றுப் பள்ளமாகிறது. வானுர்தி வகையிலும் முன்னும் பின்னும் காற்றில் இதே நிலையைக் காணலாம். நிலவுலகு விசும்பு வெளியூடே செல்வதானால், விசும்பிலும் இது போன்ற இயக்க எதிர் இயக்கம் இருக்க வேணடும். அத்தகைய இயக்கம் உண்டா என்று அவர்கள் ஆராய்ந்தனர். இல்லை என்று காணப்பட்டது. விசும்பு என்று ஒரு பொருள் இருந்தால், அது காற்றுப்போல, நீர்போல நெகிழ்ச்சியுடையதாயிருக்க முடியாது. கப்பல் கடந்து செல்லும் கரைபோல அது கெட்டிமையுடன் ஒரு நிலையானதாய் இருக்கவேண்டும்! அதே சமயம், அது எப்பொருளும் தன்னூடாகச் செல்ல வழிவிடவேண்டும்! எப்பொருளின் உள்ளீடாகவும் இருக்க வேண்டும்! இதுவே மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் பின் ஏற்பட்ட விசித்திர முடிவு! அணுவினும் சிறியன், அண்டத்தினும் பெரியன்! காற்றினும் நொய்மையன், வைரத்தினும் திண்ணியன்! இவ்வாறு எதிரெதிர் பண்புகளைக் கடவுள் பண்பாகக் கருதினர் சமயவாணர். விசும்பு வகையில் அறிஞரும் இதே வகையான முடிவுக்கு வரவேண்டிய வராயினர்! இது அவர்களுக்குத் திகைப்பை உண்டுபண்ணி யிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மைக்கேல்சன் மார்லி லாரன்ஸ் தேர்வாராய்ச்சிகள் ஓடும் கப்பலில் பந்தாடுபவர், மிதிவண்டி விடுபவர் ஆகியவர் களுக்குக் கப்பல் வேகம் மாறாதபோது எந்த இடர்ப்பாடும் கிடையாது. நிலையான இடத்தில் பந்து விழுவதுபோலவே அங்கும் விழுகிறது. இதற்குக் காரணம் கப்பலுடன் அதன்மேலுள்ள காற்று வெளியும் உடன் செல்கிறது என்பதே. விழும் பொருள்கள் கப்பலின் வேகத்தையும் ஏற்றே விழுகின்றன. இயங்கும் பொருள்களும் அப்படியே! நிலவுலகம் விசும்பூடு செல்லும்போதும் இதே நிலைதான் ஏற்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டு மைக்கேல்சனும் மார்லியும் அடுத்த ஆராய்ச்சி நிகழ்த்தினார்கள். அவர்கள் ஒரு நுண்ணிய ஆய்களத்தேர்வை (ஹயீயீயசயவரள கடிச டயbடிசயவடிசல நஒயீநசiஅநவே) வகுத்தார்கள். அது இடை யீட்டளவை (ஐவேநச கநசடிஅநவநச) என்னும் பெயர் கொண்டது. ஒரு சுழல் மேடையில் ஒரு கறைப்பளிங்குக் கண்ணாடி சாய்வாக வைக்கப் பட்டது. அது பாதி ஒளியை ஊடுருவவிட்டு மறு பாதி ஒளியை எதிரளித்தது. இக் கண்ணாடியினூடாக ஒரு புறமிருந்து ஓர் ஒளிக்கதிர் கண்ணாடியில் செலுத்தப்பட்டது. கதிரொளியின் ஒரு பகுதி கண்ணாடிக்கு நேரே எதிரிலிருந்த ஒரு முகக் கண்ணாடி மீது விழுந்து, எதிரளிக்கப்பட்டு, சாய் கண்ணாடி மூலம் ஒரு நுண்ணாடியில் வந்து சேர்ந்தது. மற்றொரு பகுதி மேடையின் குறுக்கே இருந்த மற்றொரு முகக்கண்ணாடியில் விழுந்து, பின் இதுபோலவே எதிரளிக்கப் பட்டு, அதே நுண்ணாடிக்கு வந்தது. நிலவுலகம் சுற்றும் திசையில் ஒரு முகக்கண்ணாடியும் அத்திசைக்கு நேர் குறுக்காக இன்னொரு முகக்கண்ணாடியும் இருக்கும்படி மேடை அடைக்கப்பட்டது. நீரை எதிர்த்துச் செல்லும் படகைவிட, குறுக்கே செல்லும் படகு விரைந்து செல்லுமல்லவா? நிலவுலகம் சுற்றுந் திசையில் ஓடிய கதிர் விசும் போட்டத்தை எதிர்த்தும், மற்றது அதன் குறுக்காகவும் செல்வதால், முன்னதை விடப் பின்னது நுண்ணோக்காடியில் விரைந்து முன் கூட்டியே வந்து விழவேண்டும். இதுவே மைக்கேல்சன் மார்லி ஆகியோர் எதிர்பார்த்தது. அளவைகள் நுண்ணிழை பிறழாவண்ணம் அமைந் திருந்தன. ஆயினும் இரண்டு கதிர்களிடையேயும் சிறிது வேற்றுமைகூட எழவில்லை! ‘விசும்’பின் விளக்கம் புதிர்மேல் புதிராயிற்று. எச்.ஏ.லாரன்ஸ் என்பார் மைக்கேல்ஸன் கண்ட புதிருக்கு ஒரு விளக்கம் தந்தார். இயங்கும் பொருள்களில் இயங்கும் திசைநோக்கிப் பொருள்கள் குறுகும் என்றும், அதற்குக் குறுக்கான திசையில் அவை விரியும் என்றும் அவர் கூறினார். இந்நீட்டம், குறுக்கல்களைக் கணிக்கும் வாய்பாட்டையும் அவர் வகுத்து வெளியிட்டார். விசும்போட்டத்தை எதிர்த்தும், குறுக்காகவும் ஏற்பட வேண்டிய வேற்றுமை ஏன் ஏற்படவில்லை என்பதை இது விளக்கிற்று. ஆனால் விசும்பு பற்றிய புதிர் இன்னும் விளக்கம் பெறவில்லை. மைக்கேல்சன் - மார்லி முடிபிலிருந்தும், லாரன்ஸ் முடிபி லிருந்தும் ஐன்ஸ்டீன் இயற்கை பற்றிய தம் புரட்சிகரமான விளக்கத்தைத் தொடங்கினார். ஐன்ஸ்டீன் கோட்பாடுகளின் கருமூலம் ஒளி நொடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் அல்லது 1,86,284 கல் தொலை வேகத்தில் செல்கிறது என்று அறிவியல் அறிஞர் கணித் துள்ளனர். அது நில உலகின் இயக்கவேகத்தால் மாறுபட வில்லை என்ற மைக்கேல்சன் - மார்லியின் ஆராய்ச்சி காட்டிற்று. இதிலிருந்து அவர் தம் பாரிய விளக்கத்தை உருவாக்கினார். புதிரை விளக்கவந்த புதிரான விசும்பை ஐன்ஸ்டீன் ஒழித்துக் கட்டினார். அதனினும் சிறந்த விளக்கமாக லாரன்ஸ் குறுக்கத்தை அவர் கையாண்டார். ஆனால், அவ்விளக்கம் லாரன்ஸூம் வியக்கத் தக்க வகையில் அமைந்தது. ஒளி மட்டுமன்றி, இயற்கையின் எல்லா இயக்கங் களுமே எங்கும் ஒரே நிலையில் ஓரே வகையில்தான் நடைபெறு கின்றன. ஆனால், இயங்கு தளங்களின் சுநகநசநnஉந ளலளவநஅ தொடர்பால் அவை மாறுபாட்டைகின்றன. இம்மாறுபாடுகளை லாரான்ஸ் வாய்பாடு விளக்குகிறது. நீளம், அகலம், உயரம் என்ற மூன்று இட அளவைகள் மட்டும் லாரன்ஸ் வாய்பாட்டால் மாறுபடுவதாக ஐன்ஸ்டீன் கொள்ளவில்லை. காலமும் அதே வகையில் மாறுபடும் என்று அவர் துணிந்துரைத்தார். இது மைக்கேல்சன் - மார்லி தேர்வாராய்ச்சி களின் முடிவை முழுவதும் இயல்பாக விளக்கிற்று. அத்துடன் ‘விசும்’பின் கருத்தாட்சியையும் அது முற்றிலும் ஒழித்தது. ஐன்ஸ்டீன் கண்ட தத்துவமே அவர் தொடர்புறவுக் கோட்பாட்டின் அடிப்படை. அதன் சிறு திறவிளக்கத்தை அது மேலும் விளக்கிற்று. பெருந்திற விளக்கத்துக்கும் அது அடிகோலிற்று. இயங்குதளங்களால் நீளம், அகலம், உயரம் ஆகிய எல்லா அளவைகளும் மாறுபடுவதை லாரன்ஸ் காட்டினார். ஆனால், ஒளிவேகம் மட்டும் மாறுபடாதிருப்பானேன்? இதை லாரன்ஸ் விளக்காது விட்டிருந்தார். ஐன்ஸ்டீன் விளக்கம் இதற்கு விடை கண்டது. நீளம், அகலம், உயரம், காலம் என்ற நான்களவைகளும் மாறுபடா ஒளி வேகம், மாறுபடும் இயக்கத் தளத்தின் இயக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அளவைகளே. ஆகவே, அந்த மாறா மூல அளவைக்கியைய அவை யாவும் மாறுவதால், மூல அளவை மாறாதிருக்கின்றது என்று ஐன்ஸ்டீன் காட்டினார். பல காட்சியாராய்ச்சிகளாலும் (டிளெநசஎயவiடிளே) தேர்வா ராய்ச்சிகளாhலும் (நஒயீநசiஅநவேயவiடிளே) ஐன்ஸ்டீன் முடிவுகள் படிப்படியாகத் தெளிவு பெற்றன. ஒளியின் வேகம் ஒளிக்கு மூலமான பொருளின் வேகத்தாலோ, ஒளிவந்து சேரும் இடத்தின் வேகத்தாலோ மாறுபடுவதில்லை. ஐன்ஸ்டீனின் இக்கோட்பாடு ஒரு காட்சியாராய்ச்சியால் உறுதிப்பட்டது. ஒன்றை ஒன்று சுழன்று செல்லும் இரட்டை விண்மீன்களின் கூறin ளவயசள ஒளிக்கதிர்கள் ஆராயப் பட்டன. ஒன்று நிலவுலகை நோக்கி வந்து கொண்டிருந்தும், மற்றொன்று நிலவுலகை விட்டுப் போய்க் கொண்டிருந்தும் இரண்டின் ஒளி வேகமும் மாறாது ஒத்திருந்தன. அறிவுலகை மாற்றியமைத்த ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் பலவும், அவரது இந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்தே ஒன்றன்பின் ஒன்றாகத் தளிர்த்தன. இயங்குதளங்களின் வேகத்துக்கேற்ப, பொருள்களின் நீள அகல உயரமும், காலமும் குறைபடுகின்றன. இயங்குதள வேகம் ஒளி வேகத்தின் 100-க்கு 90 விழுக்காடாக வளரும்வரை இந்தக் குறுக்கம் மிகப் படிப்ப டியாகவே நடைபெறுகிறது. ஆனால், 90 விழுக்காட்டில் குறுக்கத்தின் எல்லை முன்னளவில் 50 விழுக்காடா கிறது. 90 தாண்டிக் குறுக்கவேகம் இன்னும் விரைவுறுகிறது. இயங்கு தளத்தின் வேகம் ஒளிவேகத்தின் அளவாய்விட்டால், பொருள் இல்லாது போகும்! அதாவது பொருளின் வேகமே பொருளாய்விடும்! கருமூலத்திலிருந்து கிளைத்த பாரிய கிளைக்கோட் பாடுகள் ஐன்ஸ்டீனின் அடுத்த பல கோட்பாடுகளுக்கு இம்முடிபு அடிகோலுகின்றது. கருமூலத்திலிருந்து கிளைத்துப் பல்கிப் பெருகிய பாரிய கிளைகளாக அவை பரவின. 1. எந்தப் பொருளும் ஒளி வேகத்துக்கு மேல் விரைந்து செல்ல முடியாது. ஏனென்றால், அந்த வேகத்தை எட்டும் பொருள் வேகமாகவே மாறிவிடும். 2. ஒளி வேகத்தை நோக்கிப் பொருள் விரையுந்தோறும் பருமன் அளவு (ஏடிடரஅந) குறுகுகிறது. ஆனால், எடைமானம் (* அயளள i.ந. யஅடிரவே டிக உடிவேயiநேன in ய வாiபே யள நஒயீசநளளநன (நை. ரனேநசளவடிடின லெ ரள) லெ வை றநiபாவ எடைமானம் என்பது பொருளில் அடங்கிய பொருண்மை இதை நாம் அதன் எடையால் அளப்பதால் அது ‘எடைமானம்’ எனப்படுகிறது) பெருக்க முறுகிறது. 3. வேகம் அல்லது ஆற்றல் ஒரு பண்பு (நுவேவைல) பொருள் மற்றொரு பண்பு அன்று. இரண்டும் ஒன்று என்று ஐன்ஸ்டீன் காட்டினார். அத்துடன் இரண்டின் தொடர்பையும் ‘ஆற்றல் = எடைமானம் ஓ ஒளிவேகத்தின் தற்பெருக்கம்’* (*ஆ = எஓ2 அதாவது வ = அஉ2) என்று அவர் காட்டினார். இவ்வாய் பாடு அணுக்குண்டு காண உதவியாயிருந்தது; அணு ஊழியையும் தொடங்கி வைத்தது. 4. ஒளிவேகம் வேகத்தின் எல்லை மட்டுமன்று. பருமன், எடை மானம் ஆகியவற்றின் எல்லையும் அதுவே. ஏனெனில், ஒளிவேகம் மிகுந்தோறும் எடைமானம் மிகுவதால், உச்சவேகமே உச்ச எடைமானம் ஆகும். ஒளி வேகம் வேகத்தின் எல்லையாத லால், எடைமானத்தின் எல்லையும் அதுவே. வேகம் குறையுந்தோறும் பருமன் பெருகுகிறது. வேகத்தின் குறைந்த எல்லை ஒளிவேகத்தின் குறைந்த எல்லையே. ஆகவே பருமன் எல்லையும், ஒளிவேக எல்லையாகவே அமைகிறது. இயற்கை எல்லையற்றது என்று ஐன்ஸ்டீன் காலம் வரை மக்களும், கவிஞரும், அறிஞரும் கருதிவந்தனர். எல்லையற்றது என்பதற்கு ஐன்ஸ்டீன் ஒளிவேகம் என்ற பாரிய எல்லையை ஒப்பாக்கினார். இது பொருளின் எல்லை மட்டுமல்ல, பொருளுலகின் எல்லை! அதாவது அண்டங்கள் அடங்கிய இயற்கையின் எல்லை ஆகும். 5. இயற்கை எல்லையற்றது மட்டுமல்ல, வடிவமற்றது என்றும் யாவரும் இதுவரை எண்ணி வந்துள்ளனர். இதில் வியப்புக்கிட மில்லை. ஏனெனில், எல்லையற்ற பொருளுக்கு வடிவமும் இருக்க முடியாது. ஆனால், ஐன்ஸ்டீன் இயற்கைக்கு எல்லை தந்ததனால், அதற்கு வடிவமும் உருவமும் காணமுடிந்தது. யூக்லிட் காலமுதல் இரண்டு இடங்களின் மிகக் குறுகிய இடைவெளி அவற்றிடையேயுள்ள நேர்வரை என்றே எல்லாரும் கருதி வந்திருக்கிறோம். சிறிய அளவைகளில் இது அனுபவத்துக்கு ஒத்ததே. ஆனால், ஒரு நேர்வரையை நீட்டிக்கொண்டே போனால், அது உலகைச் சுற்றிக்கொண்டு புறப்பட்ட இடத்துக்கே வந்துசேர்ந்து விடும்! அப்போது அது நிலவுலகின் சுற்றளவான 24000 கல் தொலைவுக்கு மேற்பட்ட நீளமுள்ள ஒரு வட்டமாகி விடும். இந்த வட்டத்தின் ஒரு கூறினையே நிலவுலக மக்களாகிய நாம் நேர்வரை என்கிறோம். இயற்கையின் நேர்வரை இதுபோன்ற இன்னும் பாரிய ஒரு வட்டமே யாகும். ஓளியின் இயக்கமும், இயற்கையின் எல்லையும் இவ் வட்டமேயல்லாது வேறில்லை. ஆகவே இயற்கை வளைந்த, அதாவது உருண்டையான வடிவம் உடையது. அதன் இயக்கங்கள் எல்லாம் வளைந்த, வட்ட இயக்கங்களே. 6. பொருளும் ஆற்றலும் ஒன்றே என்ற தத்துவம் வகுத்ததுடன் ஐன்ஸ்டீன் அமையவில்லை. அதன் உதவியால் அவர் அணு ஆக்கம், அண்டத்தின் ஆக்கம் ஆகிய இரண்டையும் ஒரே இயற்கை அமைதியில் கொண்டு இணைக்கப் பாடுபட்டார்,. அதில் வெற்றியும் கண்டார். அணு உண்மையில் நடுவே ஒரு கருவுள் சூரஉநைளே ளும், அதனைச் சூழ்ந்து சுற்றிவரும், எதிர் மின்னிகளும் நுடநஉவசடிளே உடையதே. கருவுளோ நேர் மின்னிகள் ஞடிளவைசடிளே திரளும் நொதுமின்னிகள் சூநரவநசடிளே திரளும் சேர்ந்திணைந்தது. இவற்றுட்பட்ட நேர் மின்னிகளும் எதிர் மின்னிகளும் நொது மின்னிகளும் பொருட் கூறுகளல்ல; ஆற்றல்வெளி என்னும் அகல் களத்தில் நிகழும் இருவகை இயக்கச் சுழிகளே நுனனநைளin ஞசiஅடிசனயைட கநைடன - நநேசபல) என்று ஐன்ஸ்டீன் கண்டார். அண்டங்களும் கோளங்களும் இயங்கும் அதே நியதியிலி லேயே மின்னி எதிர் மின்னிகளும் இயங்குகின்றன. அது மட்டு மன்று. மின்னி எதிர்மின்னி இயக்கங்களும் அண்டத்தின் இயக்கமும் ஒரே ஆற்றல் களத்தின் சுழி எதிர்ச்சுழிகளால் ஆக்கப் பெறுபவையே என்று ஐன்ஸ்டீன் கணித்துக்காட்டினார். ஐன்ஸ்டீனின் இந்த விளக்கமே 1949-இல் அவர் முற்றுவித்த ஒன்றுபட்ட களக் கோட்பாடாகும். 7. ஐன்ஸ்டீன் தத்துவத்தால் ஏற்பட்ட மற்றொரு கருத்துப் புரட்சி நியூட்டன் காலத்திய நில ஈர்ப்புக் கோட்பாடு குசடிஉந டிக பசயஎவைல பொருள் ஈர்ப்புக் கோட்பாடு குடிசஉந டிக ழுசயஎவையவiடிn ஆகிய இரண்டும் அடிபட்டுப் போனதேயாகும். இயக்கத்தின் ஆற்றலே அதன் எடைமானமாதலால், ஈர்ப்பாற்றல் அதன் எதிர் ஆற்றலேயாகும் என்பது ஐன்ஸ்டீன் கருத்து. இதை அவர் காட்சியளலையாலும் டீளெநசஎயவiடிn கணிப்பளவையாலும் (ஆயவாயஅயவiஉயட னநஅடிளேவசயவiடிn யனே அநயளரசநஅநவேள) காட்டினார். ஒடும் வண்டியில் நிற்பவரும் உண்மையில் ஒட்டத்தில் பங்கு கொள்பவரே. வண்டி திடுமென நின்றால், அவர் உடலின் ஒட்டம் அவரைத் தள்ளிவிடுகிறது. வண்டி நேராகச் செல்வதற்கு மாறாகச் சுழன்று செல்லுமேயானால், உடலின் இயக்கம் ஒடும் ஒட்டத்திற்கு எதிரானதாகவே இருக்கும். ஈர்ப்பாற்றலும் நில ஈர்ப்பாற்றலும் இவையே என ஐன்ஸ்டீன் கணித்துக் காட்டினார். ஞாயிற்று மண்டிலம் பற்றிய புதிரின் விளக்கம் ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் பலருக்கு மாயம்போலவும், பலருக்குக் கவிஞர் கற்பனை போலவும் மருட்சி அளித்ததுண்டு. இதனால் தொடக்கக் காலத்தில் அவை மெய்ம்மை விளக்கங்களா, கற்பனைகளா என்று சிலர் மயங்கினர். ஆனால், ஒளிக்கதிர்களின் வளைவுபோன்ற பல மெய்ம்மைகள் காட்சியாராய்ச்சிகளாலும், ஆய்வுகள் ஆராய்ச்சிகளாலும் மெய்ப்பிக்கப் பட்டன. அத்துடன், உலகை ஆட்டிப்படைத்துள்ள அணுக்குண்டு, பொருள் - ஆற்றல் மாறுபாடு பற்றிய அவர் வாய்பாட்டின் விளைவேயாகும். தவிர, ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் அறிவியல் உலகின் பல புதிர்களையே விளக்கிப் புத்தொளி தந்துள்ளன. பொருள் - ஆற்றல் மாறுபாட்டு வாய்பாட்டால் விளக்கம் பெற்ற மற்றொரு புதிர், ஞாயிற்று மண்டில ஆராய்ச்சித்துறை பற்றியதாகும். ஞாயிற்று மண்டிலத்திலிருந்து நிலவுலகுக்கு வரும் ஒளியாற்றலின் அளவே எல்லையற்றது. ஆனால், அண்ட வெளியில் பரவும் ஒளியாற்றலில் இது ஒரு சிறு பகுதியேயாகும். எல்லையற்ற காலம் இவ்வாறு எரிந்து ஒளியாற்றல் இழந்தும், ஞாயிற்று மண்டி லத்தின் எடைமானத்திலோ, பருமானத்திலோ அதற்கேற்ற குறைபாடு காணப்படவில்லை. இது அறிவியல் அறிஞர்களுக்கு விளங்காத புதிர்களுள் ஒன்றாக இருந்தது. பொருள் ஆற்றல் - தொடர்பு பற்றிய ஐன்ஸ்டீன் வாய்பாடு இதை முற்றிலும் விளக்கிற்று. பொருள் ஆற்றலாக மாறும்போது, பருமானத்தின் அளவைவிட எடைமானத்தின் அளவும் ஆற்றலளவும் பல கோடி மடங்காகப் பெருகுகின்றன. ஆகவே ஞாயிற்றுமண்டலத்திலிருந்து செல்லும் ஒளியாற்றலின் அளவை நோக்க, அது இழக்கும் பருமானம் மிகச் சிறிதேயாகும். தவிர, இயற்கையின் நேர்வரை கோளாகாரமான அண்டவரையாத லால், வெளிச்செல்லும் ஒளியாற்றல் சென்று மீண்டு வளைவதே யாகும். அறிவியலுலகின் மலைப்புக்குரிய ஒரு புதிர் இங்ஙனம் எளிதில் விடுவிக்கப்பட்டது. ஐன்ஸ்டீன் மூளை: ஆய்வுக்கூடம் கடந்த ஓர் ஆய்வுக்கூடம் ஐன்ஸ்டீன் அறிவியற் புரட்சிகளுக்கெல்லாம் அடிப்படை யான மற்றொரு புரட்சி உண்டு. புலனறிவிலிருந்தே பொதுஅறிவு ஏற்படுவதுபோல, காட்சியாராய்ச்சி களிலிருந்தும், தேர்வாராய்ச்சிகளிலிருந்துமே அறிவியலறிவு வளர்கிறது என்று அறிவியல் ஊழி அறிஞர் கருதி வந்துள்ளனர். ஆனால், ஐன்ஸ்டீன் ஐம்புலன் கடந்த ஆறாம் புலனாகிய மனத்தையும், காட்சித்தேர்வு கடந்த அறிஞன் மூளைத் திறனையும் வலியுறுத்தினார். ஆய்வுகளும் அறிவியலுக்கு இன்றியமையாத தானாலும், அதனினும் அடிப்படையான முக்கியத்துவம் உடையது அறிஞன் மூளையேயாகும். இதை அவர் ஆராய்ச்சி வரலாறே காட்டுகிறது. அவர் ஆராய்ச்சியின் முதற்பகுதி பிற ஆய்வுக்கள அறிஞரின் முடிவு. இறுதிப்படியும் அது. ஆனால், ஆராய்ச்சியின் உயிர்நிலை, இடையே அவர் மூளையின் செயலே யாகும். ஆய்வுக்களங் கடந்த ஆய்வுக்களமாக அவர் மூளை செயலாற்றிற்று. அந்த மூளையையே அவர் தம் இறுதிப் பத்திரத்தால் பிற்கால ஆய்வுக்கள ஆராய்ச்சிக்கு விட்டுச் சென்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அறிவியல், சமயம், கலை அறிவியல் அறிஞர்களின் அறிவார்வம் பற்றிய ஐன்ஸ்டீன் கருத்து, அறிவியல் துறைக்கே புதுமையானது. பணமும் புகழும் பல அறிவியலார் ஆராய்ச்சிகளின் பயனாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஆயினும் பணமும் புகழும் பல அறிஞர்களின் நோக்கமாய் அமையவில்லை. ஐன்ஸ்டீன் வாழ்வில் அவை எள்ளத்தனையும் இடம்பெறவில்லை. அறிவார்வமும் மெய்ம்மை யுணரும் ஆர்வமுமே அறிவியலாளரைத் தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை. இந்த ஆர்வம் கவிஞர் ஆர்வத்தினின்றும், சமய ஆர்வலரின் சமய உணர் வினின்றும் வேறானதல்ல என்று ஐன்ஸ்டீன் எடுத்துக் காட்டி யுள்ளார். அறிவியலின் பக்தராகவும், சமய ஆர்வலராகவும், கலையார்வலராகவும் ஒருங்கே விளங்கிய இப்பெரியாரையன்றி, வேறு எவரும் இம்மூன்றின் ஒருமைப் பாட்டை அனுபவித்துணர்ந் திருக்க முடியாது என்னலாம். முனிவரின் ஒதுங்கிய வாழ்வு, மனித இனப்பற்றாளரின் நட்பார்வம் ஆகிய இரண்டுக்கும் இடையே ஊசலாடியவர் ஐன்ஸ்டீன். அவர் தன்னலமற்ற எளிமை, இனிய உரையாடல் திறம், நகைத்திறம், பரந்த அறிவு ஆகியவை அவரை அவர் நண்பர்களின் நட்புத்தெய்வமாக்கியிருந்தன. அவர் இயல்பான ஆசிரியத்திறமையும் இதுபோல அவருடைய மாணவர் களிடையே அவர் அருமையை உயர்த்தின. ஆனால், நட்பின் திறமறிந்த அவர் நட்பை மிகுதி துய்க்கவில்லை. ஆசிரியத் திறமிக்க அவர் ஆசிரியத் தொழிலில் தம் முழுத்திறமையையும் பயன்படுத்தவில்லை. ஏனெனில், சமுதாயத்திலிருந்தே அவர் பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆராய்ச்சியை அவர் தம் ஒரே காதலாகக் கொண்டிருந்தார். அதற்காக அவர் குடும்பவாழ்வில் கூடப் பெரிதும் பற்றற்ற வராகவே நடந்துகொண்டார். அவர் வாழ்க்கையை நாம் அன்பும் அருளும் கருவகம் கொண்ட அகத்துறவு வாழ்க்கை என்னலாம். கீழ்வரும் இனிய நிகழ்ச்சி இதை நம்முன் கண் கூடாகக் கொண்டு வருகின்றது. ஐன்ஸ்டீனின் கனிந்த அருளுள்ளம். பிரின்ஸ்டனில் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடந்தார். ஆராய்ச்சியிலீடுபட்ட மாணவர்கள் கூட அவர் வேலையில் தலையிடத் துணியவில்லை;. அவரும் அதை விரும்பவில்லை;. அவர் புகழ் உலகெங்கும் பரந்திருந்தது. உலகின் பெரியார் அவரை அடிக்கடி நாடிவந்தனர். ஆனால், எவருக்கும் அவர் தொடர்பு அரிதாகவே இருந்தது. ஆனால், அரியார்க்கு அரியரான அவர், ஓர் ஏழைச் சிறுமிக்கு என்றும் எளியவராய் அமைந் தார்! அவள் பத்துவயதுக் குழந்தை;. பள்ளியில் படித்து வந்தாள்;. கணக்கென்றால்; அவளுக்குக் கசப்பு;. அது அவள் மூளையில் ஏறவில்லை. அவளுக்கு அது ஓயாத் தொல்லை தந்தது. பிரின்ஸ்டன் மாளிகையின் 112-வது எண்ணுள்ள கூடத்தில் உலகிலேயே கணக்கிற் சிறந்த ஒருவர் இருப்பதாக அப்பெண் கேள்வியுற்றிருந்தாள். ஆள் நுழைய அஞ்சும் இடத்தில் அணில் நுழைவது போல, ஐன்ஸ்டீனின் அறிவுக்கோயிலுக்குள் குழந்தை நுழைந்தது! ஐன்ஸ்டீன் குழந்தையிடம் குழந்தையாகப் பழகினார். ஆராய்ச்சி களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அச் சிறுமிக்குச் சொல்லிக் கொடுக்க, அவளுடன் அன்பாகப் பேச அவருக்கு நேரமிருந்தது! பெண் வகுப்பில் எளிதாகக் கணக்கில் தேர்ச்சி பெற்றாள்அப். அது கண்டு ஆசிரியரும் மாணவரும் வியந்தனர். “எப்படி இவ்வளவு எளிதில் எல்லாம் கற்றுக் கொண்டாய்?” என்று கேட்டார்கள். “உலக அறிஞர் ஐன்ஸ்டீன் அல்லவா எனக்குக் கற்றுக் கொடுக்கிறார்?” என்று குழந்தை பெருமையாகப் பேசினாள். இந்த அருஞ்செய்தி குழந்தையின் தாய்க்கு எட்டிற்று. உலக அறிஞருக்குத் தன் குழந்தை எவ்வளவோ தொல்லை கொடுத்திருக்கவேண்டும் என்று தாய் கருதினாள். அந்த அடாப்பழிக்கு வருந்தி, ஐன்ஸ்டீனிடம் மன்னிப்புக் கோரச் சென்றாள். குழந்தை நுழைந்த இடத்தில் நுழைய அன்னை தயங்கினாள். ஆனால், குழந்தை இட்டுச் சென்றது. “புகழ்மிக்க பெரியீர்! நாங்களறியாமல் இந்தக் குழந்தை உங்களுக்குக் கொடுத்த தொல்லைக்கு நான் மன்னிப்புக் கோரு கிறேன்,” என்றாள் தாய். “மன்னிப்பா, அம்மா! குழந்தை என்னிடமிருந்து கற்றுக் கொண்டதை விட, அதனிடமிருந்து நானல்லவா மிகுதி கற்றுக் கொண்டேன்?” என்றார் ஐன்ஸ்டீன். “நீ எப்போது வேண்டுமானாலும் வா, அம்மா!” என்று தாய் முன்னிலையிலேயே குழந்தைக்கு அவர் புதிய அழைப்பும் விடுத்தார்! பிரின்ஸ்டனை அடுத்த மக்களுக்கு ஐன்ஸ்டீன் அடிக்கடி பிள்ளைகளுடன் விளையாடும் ஓர் அன்புத்தெய்வமாகக் காட்சியளித் தார். ஆனால், பிரின்ஸ்டன் கலைக்கூடத்துக்கு அவர் அறிவுத்தெய்வ மாகவும், உலகத்துக்கு அறிவியற் புரட்சி வீரராகவும் விளங்கினார். ஐன்ஸ்டீன் அறிவால் உலகம் பயன்பெற்றது. அவர் அருள் திறத்தால், உலகவாழ்வு அழகு பெற்றுள்ளது என்னலாம். ஜேன் அயர் முதற் பதிப்பு - 1954 இந்நூல் 2003இல் சாரதா மாணிக்கம் பதிப்பகம், சென்னை 43, வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. உள்ளுறை 1. இளமைக்காலம் 2. பள்ளி வாழ்வு 3. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் வருகை 4. தார்ன் ஃவீல்டு இல்லம் 5. ராச்செஸ்டர் வருகை 6. இடர்மேல் இடர் 7. விருந்தாளிகள் 8. மற்றொரு தாக்குதல் 9. திருமதி ரீடின் முடிவு 10. திருமண ஏற்பாடுகளும் பேச்சும் 11. மணவினையிடையே முறிவினை 12. ராச்செஸ்டரின் விளக்கம் 13. தாழ்வும் வாழ்வும் 14. அன்பின் குரல் 15. அமைதி 1. இளமைக்காலம் என் தந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்; கோயில் காரியக்காரராயிருந்து அவர் காலங்கழித்து வந்தார். ஆனால், என் தாய் செல்வக்குடியில் பிறந்தவள். அவள் தந்தையாகிய என் பாட்டன் ரீடை அறியாதவர் எங்கள் வட்டாரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் , என் தாய் அவர் கருத்துக்கு எதிராகவே மணஞ்செய்து கொண்டாள். இதனால் அவள் என் பாட்டன் ஆதரவையும், அவர் செல்வத்தின் உதவியையும் இழந்து, என் தந்தையின் வறுமையிலேயே முழுதும் கிடந்து உழல வேண்டியதாயிற்று. மணவாழ்வின் பொறுப்பை என் தந்தை ஓர் ஆண்டுக்கு மேல் கொண்டு செலுத்த முடியவில்லை. என்னை என் தாய்வயிற்றிலேயே விட்டு விட்டு அவர் காலமானார். நான் ஆணாய்ப் பிறப்பேனா, பெண்ணாய்ப் பிறப்பேனாஎன்பதைக் கூட அவர் அறியவில்லை. என் முகம் காணவுமில்லை. அவர் இறந்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் என்னை என் தாய் பெற்றெடுத்து, ஒரு மாதம் கூட என்னைக் கண்டு மகிழாமல் என் தந்தையைத் தொடர்ந்து சென்றாள். என் மாமன் ரீடு இப்போது தாய் தந்தையரற்ற என்னைத் தன் வீட்டுக்குக் கொண்டு வந்தார். ஜான், எலியா, ஜார்ஜியானா ஆகிய அவர்கள் பிள்ளைகளுடன் அவர் என்னையும் வளர்க்க ஏற்பாடு செய்தார். ஆனால், அவரும் விரையில் காலமானதால் நான் என் அத்தையிடமே வேண்டா விருந்தாளியாக இருந்து வளர்ந்தேன். ஜான் எனக்கு நாலு ஆண்டு மூத்தவன். என் அத்தை அவனுக்குக் கொடுத்த இளக்காரத்தால் அவன் எப்போதும் நோயாளியாகவே நடித்து. மிகுதி உணவும் பண்டங்களும் தின்றதனால், உண்மையிலேயே நோயை வருவித்துக் கொண்டான். அவனுக்கு இளக்காரம் தந்த என் அத்தையிடமும் அவனுக்கு நன்றி கிடையாது. யாரிடமும் நேசமும் கிடையாது எல்லோரையும் ஒன்றுபோலத் திட்டியும் உதைத்தும் வந்தான். எனக்கு என் அத்தை கொடுக்கும் உதை, திட்டு ஆகிய வற்றிலிருந்து எப்போதாவது ஓய்வு கிடைத்தாலும் கிடைக்கும்; அவன் கொடுமைகளிலிருந்து ஓய்வு கிடைப்பதேயில்லை. எலிஸாவும் ஜார்ஜியானாவும் அவனுக்கே அஞ்சி, அவனுக்கு நல்லபிள்ளையாய் நடப்பதற்காக, என்னை ஓயாது அவனிடம் காட்டிக் கொடுப்பார்கள். நான் செய்த குற்றங்களும் நன்மை களும் ஒருங்கே குற்றமாக, ஒரு தடவைக்குப் பல தடவை யாகவும், ஒருவருக்கு இருவர் ஆகவும் பெருக்கிப் பேசுவார்கள். செய்யாத குற்றங்களும் வைது கட்டிக் கூறப்படும். தண்டனை களும் ஓயாமல் கிடைக்கும். தண்டனை கொடுத்து அலுத்தபின், ஜான் தான் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காகத் தாயிடம் கூறி, அவளிடமிருந்து எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பான். இவ்வாறாக, அடி அண்ணனாக, உதை தங்கையாக திட்டும் ஏச்சும் உணவாகக் கொண்டு நான் என் அத்தை வீட்டில் வளர்ந்தேன். ஓயாமல் அடி வாங்கி, வாங்கி என் உடல் காய்த்துப் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பொறுமையாக நான் ஜானிடம் அடிகளை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அடிகளைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது; பொறுக்க முடியாத வேறு செய்திகள் இருந்தன. அடிக்கடி அவன் கிள்ளுவான்; காதைப் பிடித்து முறுக்குவான். அப்போது நான் நோவு பொறுக்க மாட்டாமல் அலறுவேன். அதைப் பார்த்துக் கொண்டே வந்யதும் என் அத்தை, “ஏன் சும்மா கத்துகிறாய்?” என்று அதட்டுவாள். “ஜான் என் காதைப் பிடித்து முறுக்குகிறான். நோவு பொறுக்க முடியவில்லை,” என்பேன் நான். அவள் கண்முன் நடப்பதையே நம்ப மறுப்பாள். “நீ என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயே! எங்கே அவன் உன் காதை முறுக்குகிறான்? அவன் சும்மா இருக்கும்போது ஏன் இப்படிப் பொய் கூறுகிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அவன் முறுக்காது விட்ட மற்றக் காதையும் அவள் முறுக்குவாள். அலறினாள் தண்டனை ஒன்று இரண்டாக, இரண்டு நாலாகப் பெருகும் என்று கண்டு நான் நாளடைவில் எவ்வளவு நோவையும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருக்கப் பழகினேன். ஜானுக்கு வயது பதினான்காகியும், அவன் பள்ளிக் கூடத்துக்குப் போகவில்லை. “பிள்ளை உடம்பு தேறட்டும்; அப்புறம் படித்துக் கொள்ளலாம்.” என்று அத்தை கூறி வந்தாள். ஜானோ, “படிப்பு உடம்புக்கு உதவாது; அதனால் மூளையும் கெட்டு விடும்” என்று சொல்லுவான். இந்தக் கொள்கையை அவன் தன்னளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. வீட்டுவேலை செய்து வந்த மங்கை பெஸ்ஸி தன் ஓய்வு வேளையில் எனக்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்து வந்தாள். அதை ஜான் தன்னாலான மட்டும் எதிர்த்தான். அப்படியும் நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது கண்டு, நான் புத்தகமெடுத்துப் படிக்காதபடி எப்போதும் கண்ணும் கருத்துமாயிருந்து பாதுகாத்து வந்தான். அவன் கருத்துப்படி, நான் செய்யக்கூடும் குற்றங்களிலெல்லாம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம் படிப்பது, அல்லது புத்தகத்தைத் தொடுவதே. புத்தகங்களிருக்கும் அறைப்பக்மே நான் போகக்கூடா தென்று கண்டிப்புச் செய்யப்பட்டது. எனக்கு இயல்பாகவே எப்படியோ படிப்பதில் மிகுதி ஆர்வம் இருந்தது. ஜானின் இந்தக் கண்டிப்பு அவ் ஆர்வத்தை இன்னும் மிகுதியாக்கிற்று. அவனைக் காணாமல் ஒளிவு மறைவுடன் படிப்பதற்கான வாய்ப்பைநான் எப்போதும் எதிர்நோக்கியிருந்தேன். தோட்டத்தின் பக்கமாயிருந்த பலகணியில் பின்புற மாகக் கண்ணாடிக் கதவும், முன்புறமாகத் திரையும் இடப்பட்டிருந்தன. இந்த இரண்டுக்கும் இடையே ஒருவர் உட்கார்ந்திருக்க இடமிருந்தது. அப்படி உட்கார்ந்திருப்ப வரை வீட்டிலுள்ள எவரும் எளிதில் காண முடியாது. ஒளிந்து படிப்பதற்கு நான் இதை அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதுண்டு. ஒரு நாள் அங்கிருந்து ஒரு புதிய புத்தகத்திலுள்ள படங்களை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜான் அந்தப்பக்கம் வந்து எங்கே என்னைக் கண்டு பிடித்து விடப் போகிறானோ என்று என் நெஞ்சம் துடித்துக் கொண்டிருந்தது. ஜான் திடுமென அறைக்குள் வந்தான். அவன் இங்கும் அங்கும் திரிந்தான். அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னால் உள்ளே இருக்கவும் அச்சமாயிருந்தது. வெளியே வரவும் அச்சமாயிருந்தது. எது செய்தாலும் செய்யாவிட்டாலும் அடியும் உதையும் வழக்கம் போலக் கிடைக்கும். இதில் தனிப்பட்ட அச்சத்துக்கு இட மில்லை. ஆனால், என் வழக்கமான மறைவிடத்தை அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்றுதான் நான் அஞ்சினேன். இச்சமயம் எலிஸா உள்ளே வந்தாள். ஜான் அவளிடம் “எலிஸா! உடனே போய் ஜேனை எங்கும் காணவில்லை என்று சொல்லிவிட்டு வா” என்று கூவினான். எலிஸாவுக்கு என் மறைவிடம் எப்படியோ தெரிந்திருந்தது. “அவள் பலகணியின் திரைக்குள் தான் இருக்கிறாள்” என்று சொல்லிய வண்ணம் திரையைச் சுட்டிக் காட்டினாள். அவன் உள்ளே வந்து என்னைப் பிடித்து இழுக்கக் காத்திராமல் நானே வெளிவந்து, “என்ன வேண்டும் ஜான்?” என்றேன். அவன் நிமிர்ந்து பார்த்து, “என்னை ஜான் என்று கூப்பிடாதே! என்ன வேண்டும்? ஐயா!’ என்று நன்கு மதித்துக் கூப்பிட வேண்டும்; தெரியுமா!” என்று உறுக்கினான். நான் நடுக்கத்துடன் தலையசைத்தேன். “ஏன் விழித்துக் கொண்டிருக்கிறாய்? வா இங்கே,” என்றான் ஜான். நான் மெள்ள அருகே சென்றேன். அவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கையை ஓங்கினான். அவன் அடிக்கப்போகிறான் என்று நினைத்து ஒதுங்க இருந்தேன். அதற்குள் அடியும் குத்தும் மாறி மாறி விழுந்தன. தாங்கமுடியாமல் நான் துடித்தேன். ஆனால், அத்தைக்கு அஞ்சி நான் அழவில்லை. “நீ ஒளிந்திருந்ததற்கான தண்டனைதான் இவ்வளவும்; தெரிந்ததா? அதுபோகட்டும், அங்கே என்ன செய்த கொண்டிருந்தாய்?” “படித்துக் கொண்டிருந்தேன்” “புத்தகம் ஏது? எடு பார்ப்போம்.” தேம்பிக் கொண்டே போய்ப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். “இந்தப் புத்தகங்களைத் தொட உனக்கு உரிமையில்லை. பணம் கொடுத்துப் புத்தகம் வாங்கத் தகுதி உள்ளவர்கள் தாம் படிக்கலாம். அது சீமான்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் இருக்கும். உன்னிடம் உண்டிக்கும் உடைக்குமே வழி இல்லை. எங்கள் அம்மா உனக்குத் தெண்டத்துக்குச் சோறும்போட்டு, இரக்கப்பட்டு உடைகளும் வாங்கித் தருகிறாள். அதை இனிக் கெடுத்துக் கொள்ளாதே. புத்தகத்தையும் திருடி, இதைப் படித்த குற்றத்திற்குத் தண்டனையாக இப்போது கதவண்டைபோய் நில்” என்றான் அவன். நான் போய் நின்றேன். ஆனால் போய் நிற்பதற்குள் புத்தகத்தை அவன் என்மீது வீசியெறிந்தான். அந்த வேகத்தில் நான் கதவின் மீது மோதிக் கொண்டேன். தலை கொண்டியில் பட்டுக் குருதி சிந்திற்று. நோவும் பொறுக்க முடியாததா யிருந்தது. அவமதிப்பு, நோவு, வெறுப்பு மூன்றும் சேர்ந்து என் அச்சத்தைப் போக்கித் துணிச்சலை உண்டாக்கின. பல்லைக் கடித்துக் கொண்டு அவனைச் சீற்றத்துடன் நோக்கியவாறு, ‘சீ! நீ ஒரு மனிதனா? நீ ஒரு கழுதை?” என்றேன். என் தலையின் காயத்தைக்கூடப் பாராமல் அவன் என் தலையைப் பற்றி மீண்டும் மீண்டும் சுவரில் மோதினான். நோவு மிகுதியாக, என் பிடிவாதம் தான் மிகுதியாயிற்று. “கழுதைக்கு வேறு என்ன தெரியும், உதைப்பதைத் தவிர,” என்றேன். என் துணிச்சல் எனக்கே வியப்பாயிருந்தது. ஆனால் அதன் பயன் இன்னும் வியப்பாயிருந்தது. அவன் அடிப்பதில் சோர்வடைந்து உட்கார்ந்து விட்டான். நான் மட்டும், “கழுதை; கழுதை” என்ற மந்திரத்தை விடவில்லை. வேலைக்காரி பெஸ்ஸி வந்து, “என்ன அடம் பிடிக்கிறாய், ஜானிடம்?” என்று கூறி என்னை அழைத்துச் சென்றாள். திருமதி ரீடின் காதில் இஃது எட்டியதும், என்னை ஓர் அறையில் அடைத்துப் போட்டு வைக்கும்படி கட்டளையிடப் பட்டது. என்னை இட்டு அடைக்கவிருந்த அறை மாமன் ரீடு கிடந்து இறந்த அறை. அவர் ஆவி அதில் வந்து ஊடாடியதாக எல்லோரும் கருதியதனால், அதன் பக்கம் யாருமே செல்வதில்லை. எனக்கும் ஆவிகளைப் பற்றிய கிலி இருந்தது. ஆகவே, அதை அணுகும்போதே என் குலை நடுங்கிற்று. ஆனால் அறையில் நான் நெடுநேரம் கிடக்க நேரவில்லை. உள்ளே விட்டதே நான் அச்சத்தால் உணர்விழந்தேன். மீண்டும் உணர்வு வந்தபோது நான் பெஸ்ஸியுடன் பின்கட்டில் இருந்தேன். பெஸ்ஸி என்னைத் தேற்றியதுடன், அன்று நடந்து கொண்டதுபோல இனி நடக்கக் கூடாது என்று அன்புடன் கடிந்துகொண்டாள். அந்த வீட்டில் நான் மனமார நேசித்த ஒரே தோழி பெஸ்ஸி ஒருத்தியே. என் துணிச்சலால் என்னையறியாமல் இன்னோர் எதிர்பாராத விளைவும் ஏற்பட்டு வந்தது. என்னை ஏன் வீட்டில் வைத்துச் சோறுபோட வேண்டும் என்று ஜான் தன் தாயிடம் ஓயாது முறையிடத் தொடங்கினான். அவளும் என்னை வீட்டைவிட்டு அகற்றத் திட்டமிட்டாள். ஒருநாள் பெஸ்ஸி மிகு விரைவாக என்னைத் தேடி வந்தாள். “முகம் கழுவி விட்டாயா? விரைவில் உடை உடுத்திக் கொள் என்று படப்படப்புடன் கேட்டாள். என் மறுமொழிக்கு அவள் காத்திருக்கவில்லை, விரைவில் ஈரத்துணியால் முகந்துடைத்து, இருக்கிற ஆடையை அவசரக்கோலமாக அணிவித்து, “அத்தை அழைக்கிறாள் போ” என்றாள். என்ன காரியம் என்று புரியாமல் நான் சென்றேன். திருமதி ரீட் நாற்காலியில் அமர்ந்து, மிக நெட்டையாகத் தோன்றிய ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள். “திரு பிராக்கிள் ஹர்ஸ்ட்! உங்கள் அன்புக்கு நன்றி, இதோ இந்தப் பெண்ணைப் பற்றித்தான் நான் பேசியது.” “இது மிகச் சிறிய பெண்ணாயிற்றே! எத்தனை வயது இருக்கும்?” “பத்து வயதாயிற்று” அவர்கள் ஏதோதோ பேசினர். நான் அதைக் கவனிக்க வில்லை. என்னை என்ன செய்யத் திட்டமிடுகிறார்களோ என்ற எண்ணத்தில் ஆழ்ந்திருந்தேன். ஆனால், அத்தை என்னைப் பற்றிப் பேசிய கடுமொழிகள் என்னைத் திடுமெனத் தட்டி எழுப்பின. “நான் கூறியது நினைவிருக்கட்டும். இவள் மிகவும் குறும்புக்காரப் பெண். திருட்டும், வஞ்சகமும், பொய்யும் அவளுக்குரிய குணங்கள். பள்ளியில் சேர்த்துக் கொண்டால் மற்றப் பிள்ளைகளை இவள் கெடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பும் உங்களைச் சாரும்” என்றாள் அத்தை. ஜானை வெறுத்ததைவிடப் பத்துமடங்கு அவன் தாயை அந்த நொடியிலேயே என் உள்ளம் வெறுத்தது. என் உள்ளத் திலிருந்து தீயும் புகையும் அனற்பொறிகளும் எழுந்தன. என்னை முதன் முதலாக ஒருவரிடம் அறிமுகப்படுத்தும் போதே என்னைப் பற்றிய இந்த முடிவான தீர்ப்புக்கு அவரைக் கொண்டு வர நினைக்கிறாள். நான் எங்கும் உருப்பட்டு விடக்கூடாதே என்பதுதான் அவள் கவலை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவள் கடைசிச் சொற்கள் இன்னும் என் மனித உணர்ச்சியைக் கெடுத்தன. அவளுக்கு வீடும், குடியும் கிடையா. போக்குமில்லை, தகுதியுமில்லை. எந்த வகையிலும் யாருக்கும் பயன்படக் கூடியவள் என்று நம்பவும் முடியவில்லை.ஓய்வு நாட்களில் கூட அவளுக்குச் செல்ல இடம் கிடையாது. இந்த நிலைமையில் அவளை ஏற்றுக் கொண்டு என் கையைக் கழுவி விடுவதானால் எனக்கு அனுப்பத் தடையில்லை. அனாதையான இந்தச் சுமையை நான் எத்தனை நாள் வைத்துக் கொண்டிருக்க முடியும்?” “அந்தோ! அவள் என் அத்தை என்பதையோ, நான் அவள் உறவினள் என்பதையோ கூட அவள் மறைத்துப் பேசிவிட்டாள். நான் ஓர் அனாதை. தங்கவீடில்லை; அன்பு காட்ட உறவில்லை; இவ்வளவு ஒட்டறுத்துப் பேசுவது போதாதாம் என்னைப் பொய்க்காரி, வஞ்சகி என்றும் அறிமுகம் செய்து வைக்கிறாள்’ இவற்றை எண்ணி எண்ணி என் நெஞ்சம் குமுறிற்று. அவர் போனதும், என் ஆத்திரத்தையெல்லாம் அவளிடம் ஒரு தடவை கொட்டினேன். “திருமதி ரீட்! பொய் பேசுபவள் நான் இல்லை. என்னை பற்றி நீ கூறியவை யாவும் பொய். எனக்கு உறவே இல்லை என்று சொன்னாய். உன்னை என் அத்தை என்று தான் நினைத்திருந்தேன். யாராயிருந்தாலென்ன? இந்த உலகில் எனக்கு ஒருவர் பகைவர் உண்டானால், அது நீதான், நீதான் நீதான்!” வெறுப்பும், வியப்பும், மலைப்பும் அவள் முகத்தில் வெடித்தன. ஆனால், வெளியே அனுப்பத் திட்டமிட்டபின் வேறு மிகுதியாக என்ன தண்டனை தரமுடியும்? “ஜேன் அயர்! உன் துடுக்குத்தனத்துக்கு உனக்குத் தண்டனை கிடைக்காமல் போகாது. பார்க்கிறேன்”என்று அவள் கறுவினாள். அந்த வீட்டைவிட்டுப் போவதில் எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. ஆனால், அந்த வீட்டில் என் ஒரே தோழி, என் ஆசிரியர் பெஸ்ஸி இருப்பதை நினைத்தே எனக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது. 2. பள்ளி வாழ்வு என் ஒரே உறவினர் வீட்டிலிருந்து நான் என்றென் றைக்குமாக வெளியேறும்போது கூட, என்னை வழியனுப்ப யாரும் வரவில்லை. பெஸ்ஸி ஒருத்திதான் அஞ்சல் வண்டியை நிறுத்திவைத்து என் பெட்டியுடன் வந்து என்னை வழியனுப்பினாள். “சின்னஞ்சிறு பெண் பள்ளிக்குப் போகிறாள். பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று வண்டியோட்டியிடம் கூறும் கரிசனையும் அவளிடம் தான் இருந்தது. என் பயணத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே நினை வில்லை. எவ்வளவு நேரம் பயணம் செய்தேன் என்பதும் எனக்குத் தெரியாது. நான் பயணமுழுவதும் ஒரே உறக்கமாக உறங்கிவிட்டேன். திடீரென்று வண்டி நின்ற அதிர்ச்சியால் நான் விழித்தேன். வெளியிலிருந்து ஒரு நாகரிகமான குரல் “இந்த வண்டியில் ஜேன் அயர் என்ற ஒரு பெண் வருகிறாளா?” என்று கேட்டது. என் பெயர் கேட்டதும் நான் “ஆம்; இதோ இருக்கிறேன்”, என்று எழுந்தேன். குரல் கொடுத்த மாது என்னைக் கைகொடுத்து இறக்கிவிட்டாள். வேறு ஒருவர் பெட்டியை வாங்கிக் கொண்டார். பொழுது விடியவில்லை. வண்டியிலிருந்து இறங்கியதும் குளிர்காற்று என்மீது வீசி என்னை நடுங்க வைத்தது. நாங்கள் அரையிருட்டிலேயே ஓர் அகன்ற கிளைப்பாதை வழியே சென்று, ஒரு பெரிய கட்டிடத்தில் நுழைந்தோம். பல அறை களைக் கடந்து சென்ற பின் கணப்படுப்பு செக்கச் செவேல் என்று எரிந்து கொண்டிருந்த ஓர் அறையில் நுழைந்தோம். என்னை இட்டுவந்த மாதை அப்போதுதான் நான் முதன் முதலாகத் தெளிவாகக் கண்டேன். அவர் வடிவம் நெட்டை யாகவும், முகம் அழகும் அருளொளியும் உடையதாகவும் இருந்தது. அவர் நடையில்அமைதியும் பெருமிதமும் நிறைந் திருந்தன. என்னுடன் பெட்டியைக் கொண்டுவந்த பெண் அவரை விட வயதில் சிறியவர். அவர் பெயர் செல்வி மில்லர் என்று அவர்கள் உரையாடலால் நான் அறிந்தேன். “இது மிகச் சிறு பெண். தனியே எங்கும் செல்லத்தக்க வயதன்று; கவனமாய்ப் பார்த்துக் கொள், செல்வி மில்லர்!” என்று அவர்கூறி, என்னை அவருடன் அனுப்பினார். அனுப்பு கையில் அவர் என் தோள்மீது கையை வைத்து ஆதரவாக ‘பயணத்தால் நீ மிகவும் அலுப்படைந்திருப்பாய், அல்லவா?” என்று கேட்டார். “ஆம்; சிறிது களைப்பாகவே இருக்கிறது.” என்றேன். ‘அலுப்புமட்டுமென்ன? பசி கூடத்தான் இருக்கும். செல்வி மில்லர்! போய் விரைவில் உணவு கொடுத்துப் படுக்க வை”என்றார் அப்பெரிய மாது. என்னைச் செல்வி மில்லர் இட்டுக் கொண்டு சென்ற அறை மிகவும் பெரியதாயிருந்தது. அதில் கிட்டத்தட்ட என் வயதுடைய பெண்களிலிருந்து எல்லா வயதுப் பெண் களும் நிறைந்திருந்தனர். பெரிய மேசைகளைச் சுற்றி அவர்கள் புத்தகமும் கையுமாக முனங்கிக் கொண்டிருந்தனர். செல்வி மில்லர் அவர்களிடம் என்னைப் புதிய பெண் என்று அறிமுகம் செய்துவைத்தபின், “ இன்று, இப்போது சாப்பாடு கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். படிப்பை நிறுத்தி விடலாம்” என்றார். சாப்பாட்டுக்கு மாக்காண்டு1களும் நீரும் தரப்பட்டன. அதுமுடிந்து சிறிதுநேர வழிபாட்டுக்குப் பின் செல்வி மில்லர் என்னைப் படுக்கையறைக்கு இட்டுச் சென்றார். ஆனால், வழிபாட்டிடம், படிப்பகம், வகுப்பு எல்லாமே அறைகளாயில்லை. கூடங்களாக இருந்தன. எல்லாம் பள்ளியின் எண்பது பிள்ளைகளுக்கும் பொதுவானதால் எண்பது பிள்ளைகள் இருந்து படிக்கவோ, படுக்கவோ தக்கவையா யிருந்தன. இத்தனைய பிள்ளைகளுக்கிடையே நான் படுத்துறங்க நேர்ந்தது முதலில் அன்றைக்குத் தான். தொடக்கத்தில் எனக்குச் சிறிது வெட்காமாயிருந்தது. ஆனால், பெண்கள் எங்கும் ஒருவரை ஒருவர் பொருட்படுத்தாது கண்டு, நானும் எவரை யும் பொருட்படுத்தாமல் படுத்து உறங்கினேன். பயண அலுப்பால் அன்றிரவு நான் அயர்ந்து தூங்கினேன். ஒரு மெல்லிய கனவுகூட அதைக் கெடுக்கவில்லை. ஆனால், இருள் அகலுமுன்பே பள்ளியின் மணி அடித்தது. மற்றப் பெண்கள் எல்லாரும் எழுந்து முகங்கை கழுவுவது கண்டு, நானும் எழுந்து என் எதிரே மேடையண்டையிருந்த நீர்த் தொட்டியில் முகம் அலம்பிக் கொண்டேன். மணி மறுபடியும் அடித்தது. பெண்கள் அனைவரும் இருவர் இருவராக இணைந்து படியிறங்கிப் பள்ளிப் பொதுக் கூடத்துக்குச் சென்றனர். அங்கே வழிபாட்டின் பின்செல்வி மில்லர் அவர்களிடையே வந்து ஆட்சியுரிமைப்படி கையை உயர்த்தி “வகுப்பணி! வகுப்பணி!” என்று கட்டளையிட்டனர். கொஞ்சநேரம் ஆரவாரமும் அமளி குமளியுமாக இருந்தது. ஆனால், விரைவில் ஒன்றன் பின் ஒன்றாய் நான்கு அரைவட்ட வளைவுகளில் நான்கு வகுப்புக்களாகப் பெண்கள் அணிவகுத்து நின்றனர். மில்லர் கண் சாடை காட்ட, ஒரு பெண் என்னை முதல் வகுப்பணியில் தன்னுடன் நிறுத்திக் கொண்டாள். அடுத்த மணி அடித்ததும், ஒவ்வோர் அணியாகப் பெண்கள்அவரவர் வகுப்பறை சென்றனர். ஆசிரியர்கள் அந்தந்த அறை நாற்காலிகளில் வீற்றிருந்தனர். பாடம் தொடங்கிற்று. தொடக்க வகுப்புக்குப் பின் பிள்ளைகளுடன் நான் அமர்ந்து என் பள்ளி வாழ்வில் புகுந்தேன். பாடம் ஒருமணிநேரம் நடந்தது. அதன்பின் அனை வரும் காலையுணவுக்குச் சென்றோம். எனக்கு அதற்குள் பசி மிகுதியாயிற்று. ஆனால், உணவு மேடையருகே சென்றதும் எனக்குக் குமட்டலெடுத்தது. காரணம் காலையுணவுக்காக வைத்திருந்த அப்பங்கள் முக்காற் பங்கு கருகிப் போயிருந்ததே. கருகல் வாடை மூக்கைத் துளைத்தது. மற்றப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.அவர்களுக்கும் என் உணர்ச்சி உள்ளூர இருந்தது என்பதையும், ஆனால், அவர்கள் அதை வெளிக்காட்டத் துணியவில்லை என்பதை யும் உணர்ந்தேன். ஆசிரியர்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்தனரேயன்றி வாய் திறக்கவில்லை. ஓர் ஆசிரியர் மற்றோர் ஆசிரியரின் காதண்டை திரும்பி மெல்ல முணுமுணுத்தார். என் கூரிய செவிப்புலனுக்கு அவர் கூறியது ஓரளவு நன்றாகக் கேட்டது. அதில் பிராக்கிள் ஹர்ஸ்ட் என்ற பெயர் இரண்டு மூன்று தடவை அடிப்பட்டது. “புதிய பெண் வந்த நாளாகப் பார்த்து இந்தக் கொடுமையா?” என்ற அவர் வாய்ச் சொற்கள் என்னை இதில் எவ்வகையிலோ தொடர்பு படுத்தியது. ஆசிரியர்கள் உணவை அரைகுறையாகத்தான் உட் கொண்டார்கள். பெண்கள் கூடக் கண்களில் கண்ணீரைக் கசக்கிப் பல்லைக் கடித்துக் கொண்டு விழுங்கியும், உணவுத் தட்டை வெறுந்தட்டாக்க முடியாமலும் திணறினர். நானோ ஒரு துண்டுகூடத் தொடவில்லை. மீண்டும் வகுப்பறையில் சென்று உட்கார்ந்த போது பாடத்தைவிடப் பசியையே அனைவரும் நினைத்திருக்க வேண்டும். ஆனால், எவ்வகையிலோ பசி முற்றிலும் காதை யடைத்தது. வகுப்பில் என்ன நடக்கிறது என்பதையே நான் கவனிக்க முடியாதவளானேன். என்னை முதலில் வரவேற்று மாது இப்போது ஒவ்வொரு வகுப்பறைக்கும் வந்தார். அவர் வந்ததும் எல்லாரும் எழுந்து நின்று வணங்கினர். அவர்தாம் பள்ளியின் தலைமையாசிரிய ரான செல்வி டெம்பிள் என்று நான் இப்போது அறிந்தேன். அவர் எல்லா வகுப்புப் பிள்ளைகளையும் ஒருங்கே அழைத்து, “பிள்ளைகளே! இன்று நீங்கள் உண்ட உணவு உண்ணத் தகாதது. உங்களில் பலர்இன்னும் பசியுடனேதான் இருப்பீர்கள். ஆகவே, இன்று பிற்பகல் வரை பாடம் வேண்டாம். அத்துடன் தற் காலிகமாக, உங்களுக்குப் புரையப்பமும், பச்சை வெண்ணெ யும் தரும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை உண்டு, அடுத்த உணவுவேளை வரை இளைப்பாறி இருங்கள்,” என்றார். பிள்ளைகள் அனைவர் முகத்திலும் செத்த உயிர் பிழைத்தது போன்ற எக்களிப்பு ஏற்பட்டது. அதைக் கூட ஆரவாரத்தில் காட்டாமல், துள்ளிக்குதித்து அவர்கள் உணவகம் சென்றனர். உணவு முடிந்தபின் அவரவர் போக்கில் தோட்டத்தில் விளையாடச் சென்றனர். என் வாழ்விடமாய் அமைந்துவிட்ட இந்தப் பள்ளியைப் பற்றி இதுவரை எனக்கு எதுவும் தெரியாது. ஆகவே, பள்ளியின் ஒருபுறம் தொங்க விடப்பட்டிருந்த நீண்ட பலகையை நான் உற்றுக் கவனித்தேன். அதில் “லோவுட் நிலையம்” என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதற்குக் கீழே, சற்றுச் சிறிதாக, ஆனால், பெரிய எழுத்தைவிட விளக்கமாகத் தெரியும்படி தடித்த கெட்டி எழுத்தில் “இப்பகுதி திரு. நவமி பிராக்கிள் ஹர்ஸ்டின் வள்ளன்மையால் நிறுவப்பட்டது” என்று செதுக்கப்பட்டிருந்தது. பள்ளி என்ற பெயர்தான் எனக்கு இதுவரை தெரியும். பள்ளிக்கு வருவதாகத்தான் எண்ணி வந்தேன். ஆனால் இங்கே பள்ளி என்ற பெயரினிடமாக ‘நிலையம்’ என்ற பெயரைக் கண்டு, அதன் பொருள் என்னவாயிருக்குமோ என்று மலைத்தேன். நான் வந்த ஒரு நாளைக்குள் என்னிடம் எளிதாகத் தோழியாய் விட்ட பெண் ஹெலன் பர்னஸ் என்பவளே. அவள் கதவருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டி ருந்தாள். நான் அவளிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். “ஹெலன்! இந்தக் பலகையில் என்ன எழுதப்பட்டிருக் கிறது?” “இது தெரியவில்லையா? ‘லோவுட் நிலையம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.” “அது தெரியாமலா கேட்டேன்? எனக்கு நன்றாக வாசிக்கத் தெரியும். இந்தப் பெயர் எதைக் குறிக்கிறது?” “ஏன்? இந்த இடத்தைத்தான்.” “இது பள்ளிதானே? இதை ஏன் நிலையம் என்று குறித்திருக்கிறார்கள்?” “அதுவா? சம்பளம் கொடுக்கும் பள்ளிக்கூடத்தைத் தான் பள்ளி என்று அழைப்பார்கள். அங்கே பிள்ளைகளுக்குப் பெற்றோர் இருப்பார்கள். அவர்கள் சம்பளம் கொடுப்பார்கள். புத்தகம் முதலியவை வாங்கிக் கொடுப்பார்கள். பிள்ளைகள் வீட்டிலிருந்தே உடை முதலியவற்றுடன் வருவார்கள். விடுமுறை நாட்களில் தங்கள் வீடு செல்வார்கள். இது அப்படிப்பட்ட பள்ளி அன்று; அறச்சாலை! இங்கே படிக்க வருகிறவர்கள் தாய்தந்தை இல்லாதவர்கள் ஏன்? நீயும் அம்மாதிரி வருகிறவள் அல்லவா?” “என் பெற்றோர் எனக்கு நினைவு வருவதற்கு முன்பே இறந்துபோனார்கள்.” “இங்கே உள்ள பிள்ளைகள் எல்லாருமே கிட்டத்தட்ட அந்த நிலைமையில் உள்ளவர்கள்தாம்!” நான் நீண்ட நேரம் வாய்மூடி இருந்தேன். என் உள்ளம் எங்கெல்லாமோ சென்றது. சிறிதுநேரம் சென்றதும் நான் மீண்டும் கேள்விகள் கேட்டேன். “இதில், திரு. நவமி பிராக்கின் ஹர்ஸ்ட் என்பவரின் வள்ளன்மைபற்றிக் குறிப்பிட்டிருக்கிறதே! அவர் யார்?” “இப்போது நிலையத்தை மேற்பார்த்துவரும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தை.” ‘திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் எப்படிப்பட்டவர்? நல்லவர்தாமா?” “அவர் ஒரு கோயில் காரியக்காரர்! நிறையப் பணம் உள்ளவர்” “அவர் நிலையத்தை மேற்பார்ப்பானேன்? இல்லம் இல்லத் தலைவி செல்வி டெம்பிகளுக்கு உரியதல்லவா?” “இல்லை; அப்படியிருந்தால் எவ்வளவோ நன்றா யிருக்குமே! செல்வி டெம்பிள் ஒவ்வொரு சிறு செய்தியிலும் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிடுகிறபடி தான் செய்ய வேண்டியிருக்கிறது.” ஹெலன் நல்ல பெண். அவள் மற்றப்பெண்களைப் போல என்னை அசட்டையாகப் பார்த்து விட்டுப் போவ தில்லை. நான் கேட்பதற்கெல்லாம் பொறுமையாக அவள் மறுமொழி கூறுவாள். அவள் நட்பின் பயனாக நான் விரைவில் தலைவியின் குணச்சிறப்புக்களைப் பற்றியும், ஆசிரியர்களின் பெயர், பண்புகளைப் பற்றியும் மற்றும் பள்ளிப் பெண்கள், பள்ளியைப் பற்றியும் பல விவரங்களை அறிந்தேன். எல்லாருடனும் எளிதாகப் பழக இது எனக்குப் பெரிதும் உதவிற்று. 3. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் வருகை நிலையத்தின் உணவு மிகவும் மட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், அத்தனை பெண்கள் உண்பதை யான் ஏன் உண்ணக் கூடாது என்று கருத்துட் கொண்டு மன அமைதியுடன் உண்டேன். கூடிய மட்டும் எல்லாப் பெண்களுடனும் இன்முகங்காட்டி நட்பாடவும் முயன்றேன். என் அமைந்த நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்குக் கூட நல்லெண்ணம் உண்டுபண்ணத் தக்கவையாயிருந்தன. ஆனால், திருமதி ரீட் அவளை அத்தை என்று கூற எனக்கு மனம் வரவில்லை. விதைத்த விதை தக்க நிலத்தில் இடம்பெற்று இதற்குள் முளைவிடத் தொடங்கிற்று. திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் அடுத்த நாள் பள்ளியைப் பார்வையிட வந்தார். என்னை அவர் எளிதில் பார்க்காதபடி நான் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் என் பக்கத்திலேயே இருந்தார். செல்வி டெம்பிளிடம் அவர் பேசியது முழுவதையும் என்னால் கேட்க முடிந்தது. அவர் உள்ளம் நான் எதிர்பார்த்ததைவிட மிகுதியாகத் திருமதி ரீட் உள்ளத்தின் வண்ணம் செறிந்ததாயிருக்கக் கண்டேன். ஆனால், அதே உரையாடல் செல்வி டெம்பிளின் உயர் பண்பையும் காட்டிற்று. பிராக்கிள் ஹர்ஸ்ட் : பிள்ளைகள் செய்யும் வேலை வரவர நன்றாயில்லை. அவர்கள் துன்னும் துணிமணிகள் உயர் குடும்பப் பெண்கள் அணியத்தக்கவையாயில்லை. இனிமேல் திருத்தமாக வேலை பயிற்றுவிக்க வேண்டும். டெம்பிள் : அப்படியே செய்கிறேன். பிராக்கிள் ஹர்ஸ்ட்: இவ்வாரம் சில பெண்களுக்கு இரண்டு தடவை வெள்ளாடை கொடுத்தாக அறிகிறேன். ஒருதடவை கொடுக்கத்தானே பள்ளிக்குக் கட்டளை தரப்பட்டிருக்கிறது? டெம்பிள்: ஆம், ஆனால், அந்தப் பெண்கள் சில நல்ல நண்பர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்களுக்கு வெள்ளாடை அளித்தோம். பிராக்கிள் ஹர்ஸ்ட் : நல்ல நண்பர்களை இந்தப் பள்ளிப் பெண்கள் பார்க்கப் போகவே கூடாது. நாளை இவர்கள் எந்தத் தரத்தில் வாழப் போகிறார்களோ, அந்தத் தரத்துக்கு மேற்பட்டவர்களுடன் பழகுவது அவர்களுக்கு நல்லதன்று. செல்வி டெம்பிள் முகம் சிறிது கறுத்தது. ஆனால், அவள் ஒன்றும் கூறவில்லை. பிராக்கிள் ஹர்ஸ்ட்: அதுமட்டுமன்று; சில நாட்களுக்கு முன் காலையில் மிகைப்பாடாக அப்பமும், வெண்ணெயும் செலவு செய்யப்பட்டிருக்கிறதே! அது என்ன காரணத்துக்காக? டெம்பிள்: அன்று காலை உணவு முழுதும் கருகிப் போய்விட்டது. பெண்கள் யாரும் சாப்பிடவில்லை; பசியோடிருந்தனர். அதனால் மிகைப்பாடாக செலவு செய்ய வேண்டியதாயிற்று. பிராக்கிள் ஹர்ஸ்ட் : இந்த மாதிரி இளக்காரத்தால் இந்த நிலையத்தின் நன்னோக்கங்கள் நிறைவேறாமல் கெட்டுப் போய்விடும் என்று அஞ்சுகிறேன். உணவுக்கே வகையற்ற இந்தப் பெண்கள் கருகிய உணவை உண்டால் என்னவாம்? அல்லது ஒருவேளை பட்டினியாய்க் கிடந்தால்கூட என்ன கெட்டு விட்டது? நாளை பல இன்னல்களைத் தாங்கும் வலிமையும் உரமும் இந்தப் பெண்களுக்கு வரவேண்டு மென்பதற்காக இந்த மாதிரித் தறுவாய்களை உண்டுபண்ண வேண்டியிருக்க, நீங்கள் வந்த தறுவாய்க்களைக் கூடப் பயன்படுத்தாது விடுகிறீர்களே! போகட்டும்; இனிமேலாவது பிள்ளைகள் கருகிய உணவு உட்கொள்ள, பட்டினி கிடக்கப் பயிற்சி கொடுத்து வையுங்கள். உணர்ச்சியற்ற முகத்துடன் செல்வி டெம்பிள் தலையசைத்தாள். திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் கண்கள் இப்போது பெண்கள் பக்கம் திரும்பின. ஒரு பெண் முகந்திருப்பி யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் கண்கள் அப்பெண்ணின் பக்கமாக ஊன்றி நோக்கின. பேசியதற்காக அந்தப் பெண்ணுக்குத் தண்டனை கிடைக்கப் போகிறது என்று நான் கவலை கொண்டேன். ஆனால், அவர் கவனத்தை ஈர்த்தது பெண்ணின் பேச்சன்று. அப்பெண்ணின் அழகிய மயிர்ச் சுருள்களே. “செல்வி டெம்பிள்! அந்தப் பெண்ணின் தலையைப் பார்! அதற்கு ஏன் அத்தனை அழகான சுருள்? இது என்ன அழகு மடமா? அறநிலையமல்லவா?” என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கேட்டார். செல்வி டெம்பிள் அவள் முன்னிலையில் இராவிட்டால் சிரித்திருப்பாள். அதை உள்ளூர அடக்கிக் கொண்டு, “அது சுருள் வைத்துச் சுருட்டியதன்று, ஐயனே! இயற்கையானது,” என்றாள். “இயற்கைக் கூடஇப்படி அறநிலையங்களில் எப்படி விளையாடலாம்? எங்கே மற்றப் பெண்களின் தலையையும் பார்க்கட்டும்; எல்லாரையும் சுவரைப் பார்த்து நிற்கச் சொல்லுங்கள்.” என்று பிராக்கிள் ஹர்ஸ்ட் கட்டளையிட்டார். பாவம்! செல்வி டெம்பிள் எல்லாவகைக் கட்டளை களையும் அப்படியே நடத்தித் தீரவேண்டியவள், பெண்கள் அனைவரும் சுவரைப் பார்த்து வரிசையாக நிற்கும்படி கட்டளையிட்டாள். கட்டளையின் பொருள் இன்னதென்று விளங்காமல் பெண்கள் சிறிது நேரம் விழித்தார்கள். கட்டளை இரண்டு தடவை திருப்பிக் கூறப்பட்டபின் தான் ஓரளவு அதைப் புரிந்து அவர்கள் திரும்பி நின்றார்கள். செல்வி டெம்பிளுடன் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பெண்களின் தலைமுடியழகைப் பார்த்து கொண்டே சென்று திரும்பவும் வந்து உட்கார்ந்தார். பெண்கள் முகங்கள் சுவரைப் பார்த்து நின்றதே நல்லதாயிற்று. அவற்றைத் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் பார்க்க முடியவில்லை. பார்த்திருந்தால், அவருக்கு நல்ல பாட மாயிருக்கும். ஏனென்றால், அவர்கள் செல்வி டெம்பிளைப் போலத் தம்மை அடக்கிக் கொள்ள முடியவில்லை. அவர் புன்மதி போன வகையை உணர்ந்து அவர்கள் மனமாரச் சிரித்தனர். ஆனால், அவர் அடுத்த பேச்சு அவர்களனைவரையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிட்டது. “எல்லா மாணவிகளின் மயிர்களையும் கத்தரித்துவிட்டு, இனி மயிர் சுருளாது வளரும்படி செய்யவேண்டும்; தெரிந்ததா?” என்றார் அவர். தம்மை அடக்கினால் போதாது; தம் மயிரையும் அடக்கிவிட விரும்புகிறார் பள்ளி மேற்பார்வையாளர் என்ற எண்ணம் அத்தனை பெண்கள் உள்ளத்திலும் ஒரே எண்ணமாக எழுந்து ஒரே அடக்க முடியாத சிரிப்பாயிற்று. திரு. பிராக்கிள் ஹர்ஸ்டுக்கு இப்போது நாணம் பொத்துக் கொண்டு வந்தது. “ஆகா! பார்த்தீர்களா இப்போதே! ஒருநாள் பட்டினி போட்டிருந்தால், தலைகளைக் கத்தரித்திருந்தால் இவ்வளவு செக்கு இருக்குமா? சரி; அடுத்த தடவை வரு வதற்குள் மயிர்கள் கத்தரித்து வயிறுகளும் நன்கு பயிற்று விக்கப்பட்டிருக்க வேண்டும்; தெரிந்ததா? இல்லையானால் உங்களையும் மாற்றிவிடுவேன். ஆசிரியர்மார்களையும் குறைத்துவிட நேரும்,” என்றார். திரு. செல்வி டெம்பிளின் முகம் சோர்வுற்றது. அதுகண்ட பெண்களும் தம் சிரிப்புக்கு வருந்தி முகங் கவிழ்த்தனர். திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் தம் வெற்றியை உறுதிப்படுத்த எண்ணி, “தலைச்சுருள், பட்டு, அணிமணி ஆகியவை நல்ல குடும்பப் பெண்களுக்கு அறிகுறியல்ல,” என்று தெளிவுபடுத்தி ஒரு சிறு சொற்பொழிவு செய்தார். அவர் சொற்பொழிவின் நடுவே ஒரு பெட்டி வண்டியில் இருந்து ஒரு சிங்கார மாதும், இரு சிங்காரச் செல்வியர்களும் இறங்கி நிலையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் திருமதி பிராக்கிள் ஹர்ஸ்டும், அவர் புதல்வியரான செல்வியர் பிராக்கிள் ஹர்ஸ்டுமேயாவர். திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் சொற்பொழிவுக்கும், அவர் குடும்பத்தினர் தலைச்சுருள் பட்டாடை அணிமணிகளுக்கும் இடையேயுள்ள முரண் பாட்டைக் கண்டு பெண்கள் திருதிருவென்று விழித்தனர். திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் இந்தத் திண்டாட்டத்தி லிருந்து அவரை என் கவனக்குறைவு தப்ப வைத்து, அதில் என்னைச் சிக்கவைத்தது. அவர் புதல்வியரையே பார்த்துக் கொண்டிருந்த என் புத்தகங்களும் எழுதுகோலும் தொப் பெனப் பேரோசையுடன் கீழே விழுந்தன. எழுதுகோல் இரண்டாக முறிந்துவிட்டது. திரு.பிராக்கிள் ஹர்ஸ்டின் கவனமும் கோபமும் என்மீது திரும்பின. நான் இன்னார் என்பதைக் கண்டு கொண்டதும் அவர் முகத்தில் பொய்ச்சிரிப்புத் தோன்றிற்று. விரைவில் சிரிப்புக் குறுநகையாகி, குறுநகை அச்சந்தரும் கடுமையாக மாற்றமுற்றது. அவர் அறை மூலையிலிருந்த ஓர் உயர்ந்த நாற் காலியைச் செல்வி டெம்பிள் அருகே கொண்டுவரும்படி கட்டளை யிட்டார். அதன் மீது என்னை நிறுத்தும்படி செல்வி டெம்பிளுக்கு உத்தரவாயிற்று. நடுங்கிய கால் களுடன் நான் நாற்காலியில் ஏறி நின்றேன். “பெண்ணே! இந்தச் சிறு குழந்தையைப் பாருங்கள் வயதில் இது உங்கள் அனைவரையும் விடச் சிறுபெண்தான். பார்த்தால் கெட்ட பெண் என்று எவரும் எளிதில் நம்ப மாட்டார்கள். ஆனால், இதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிறு சைத்தான். இதனுடன் யாரும் பேசவோ, விளையாடவோ, செய்யாதீர்கள். இதனுடன் எச்சரிக்கை யாய்ப் பழகுங்கள். “ஆசிரியர்களுக்கும் கூறுகிறேன். இதை நன்றாகக் கண்டித்துத் தண்டித்து வையுங்கள். இந்த ஒரு பெண்ணால் இங்குள்ள மற்றப் பெண்களும் கெட்டுவிடப்படாது.” “இந்தச் சிறு வயதுக்குள்ளேயே இது பொய் பேசுவதில் தேர்ந்திருக்கிறது. வஞ்சம், குறும்பு, பிடிமுரண்டு ஆகியவற்றுக்கு இப்பெண் இருப்பிடம். “இவ்வளவையும் நானாகக் கூறவில்லை. ஆதரவற்ற இந்தப் பெண்ணுக்கும் ஆதரவும் இடமும் கொடுத்துத் தன் வீட்டிலேயே வைத்திருந்த அன்புள்ளம் உடைய சீமாட்டி தான் இதைக் கூறினாள். நன்றிகெட்ட இந்தப் பெண் வீட்டிலிருந்தால், தன் பிள்ளைகள் கெட்டு விடும் என்றுதான் இங்கே என்னிடம் ஒப்படைத்தாள். ஆனால் வஞ்சக மில்லாமல், இந்த நிலையத்துப் பெண்கள் கெட்டு விடக் கூடாதே என்ற தன் கவலையையும் என்னிடம் தெரிவித்து எச்சரிக்கை செய்தார். ஆகவே, அனைவரும் இப்பெண் வகையில் விழிப்பாயிருங்கள்.’ என்று திரு.பிராக்கிள் ஹர்ஸ்ட் கூறி முடித்தார். என் உடலின் எண்சாணும் ஒரு சாணாகக் குன்றிப் போயிற்று. புதிய இடத்தில் வாழ்க்கை தொடங்கும் போதே எல்லார் உள்ளத்திலும் என் மீது கசப்பு உண்டு பண்ணப் பட்டது. என் அத்தையின் கொடுமையினும் இந்தக் கோர மனிதன் கொடுமை எத்தனையோ மடங்கு பெரிது என்று எண்ணி வருந்தினேன். செல்வி டெம்பிள் என்னை நாற்காலியிலிருந்து இறக்கி விட்டாள். பிராக்கிள் ஹர்ஸ்ட் செல்வியர் இருவரும் என்னைப் பார்க்க விரும்பாதவர்கள் போல முகத்தை மறைத்துக் கொண்டு, “ஆகா! என்ன கூழைப் பேயா இது?” என்று என்னை ஏளனமாகப் பேசினர். அன்றிரவு எனக்கு உணவு செல்லவில்லை. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் கட்டளையினால் யாரும் என்னண்டை வரவில்லை. நானும் யாரையும் பார்க்கத் துணியவில்லை. அன்றிரவெல்லாம் என் கண்கள் துயிலை வெறுத்தன. என் தலையணை முழுதும் கண்ணீரால் நனைந்தது. “என்னை அறியுமுன்பே எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று ஒதுக்கிவிட்டனர். நான் இனி என்ன செய்தாலும் செய்யா விட்டாலும் கெட்டவளாகத் தானே வாழ வேண்டும்? இப்படி வாழ்வதை விட இறந்துவிட்டால் எவ்வளவோ நலமா யிருக்குமே,” என்று பலவும் எண்ணிக் கொண்டிருந்து இறுதியில் அயர்ந்தேன். காலையில் பெண்களனைவரும் எழுந்து சென்று விட்டனர். துயில் கூடத்தின் ஒரு மூலையிலிருந்து நான் மீண்டும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். அச்சமயம் என் தோழி ஹெலன் பர்னஸ் என் வகையில் ஏற்பட்டிருந்த தடை யுத்தரவைக் கூடச் சட்டை பண்ணாமல், என்னை வந்து கட்டிக் கொண்டாள் “யார் சொல்வதையும் நான் கேட்கப் போவதில்லை. நீ தங்கமான பெண், வருத்தப்படாத” என்று அவள் என்னைத் தேற்றினாள். அத்துடன் சூடான தேநீரும் அப்பமும் கொண்டு தந்து என்னை வறுபுறுத்தி உண்பித்தாள். என்னைப் போன்ற இச்சிறு உள்ளத்தின் இன அன்பு பெரிய மனிதர் எழுப்பிய வெறுப்புக் கோட்டையைச் சிதறடித்தது. லோவுட் நிலையத்தின் வாழ்வில் ஹெலென் பர்ன்ஸின் தோழமை எனக்கு ஒரு விடிவெள்ளியாயிருந்தது. ஆனால், செல்வி டெம்பிளின் அருளுள்ளம் அவ்வாழ்வின் முழு ஞாயிறாக, முழுநிறை மதியாக விளங்கிற்று. முன்னிரவிலேயே உணவுமேடையில் செல்வி டெம்பிள் என் உளநிலையை உன்னிப்பாகக் கவனித்து வந்தாள். காலையில் எல்லாருடனும் என்னைக் காணாது போகவே, அவள் என்னைத் தேடிவந்து துயிற்கூடத்தில் ஹெலன் பர்னஸுடன் என்னைக் கண்டாள். நான் எதிர்ப்பார்த்தபடி அவள் என்னைக் கண்டிக்கவில்லை, “நீ நேற்று உணவு கொள்ளவில்லை. இரவெல்லாம் உறங்காமல் அழுதிருக்கிறாய் என்று முகம் தானே கூறுகிறது. அழுது அமையப் போவது எப்போது ?” என்றாள். நான் மீட்டு மொருதடவை அழுது, “இனி நான் எப்படி அமையமுடியும்? எல்லாரும் என்னைக் கெட்டவள் என்று தான் முடிவுகட்டி விட்டார்களே; என்றேன். அவர் ஹெலென் பர்னஸைச் சுட்டிக் காட்டி, “இதோ பார்; இந்தப் பெண் முடிவு கட்டிவிடவில்லை. அத்துடன் நான் முடிவுகட்டி விட்டதாக நீ எண்ணுகிறாயா?” என்றாள். அந்தக் கேள்வி எனக்குப் பேரூக்கம் தந்தது. கரை காணாக் கடலில் மிதந்த எனக்கு அது ஒரு கலங்கரை விளக்கமாயிருந்தது. “உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி. அதற்கு நான் என்றும் கேடு வருவிக்கமாட்டேன்,” என்றேன். “என் நல்லெண்ணம் மட்டுமன்று, எல்லார் நல் லெண்ண முமே இனி உன்சொல், உன் செயல், உன் நடத்தையிலேயே இருக்கிறது. சரி; நேற்றுத் திரு. பிராங்கிள் ஹர்ஸ்ட் கூறினாரே, அச்சீமாட்டியார் யார்? உன்னிடமிருந்தே உன் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறோம்,” என்றாள் அவள். நான் என் அத்தை வீட்டுக்கு வர நேர்ந்த வரலாறு, அங்கே வாழ்ந்த வாழ்வு, லோவுட்டுக்கு வந்தது ஆகிய யாவும் கூறி முடித்தேன். “நீ கூறியவை எல்லாவற்றிலும் உண்மையின் எடை இருக்கிறது. ஜேன்! உன் சொல்லைக் கொண்டே இனி யாவரும் உன்னை மதிப்போம். அதற்கு நான் பொறுப்பு. இனி நீ கவலையில்லாமல், உன் கடமைகளைச் சரிவரச் செய். முடியுமானால் திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட்டின் மனங்கூட மாறும்படி செய்வோம். வா,” என்று கூறிச் செல்வி டெம்பிள் என்னை அழைத்துச் சென்றாள். வள்ளல் எனப் பெயர் வாங்கிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் தந்தையைவிட, அவர் வள்ளன்மையைச் சாக்காகக் கொண்டு நிலையத்தில் தம் இரும்புப் பிடியை நிலைநாட்டிய திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் ஆட்சியை விட, செல்வி டெம்பிளின் வள்ளன்மையும் அன்பாட்சியுமே லோவுட்டை அன்னைபோல் வளர்த்தன என்பதை நான் கண்டு கொண்டேன். செல்வி டெம்பிள் தலைவியாயிருக்கும் எந்த நிலையத்திலும் நான் எத்தனை துன்பத்தையும் பெறத் தயங்காதவளாக இருந்தேன். அவள் அருள் உள்ளம், துன்பப்படுகிறவர் துன்பத்தையெல்லாம் தமதாக்கிஅவர்கள் மீது இன்ப அமைதியாகிய நிலவைப் பொழிந்தது. 4. தார்ன்ஃவீல்டு இல்லம் செல்வி டெம்பிளின் தலைமையிலேயே நான் லோவுட்டில் ஆறாண்டுகள் அறநிலைய மாணவியாகக் காலங்கழித்தேன். ஆனால், ஆறாண்டுக்குள் நிலையத்தில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. பள்ளியில் தொடங்கிய ஒரு காய்ச்சல் முதலாண்டிலேயே சுற்று வட்டாரங்களிலெல்லாம் பரவிற்று. இதை ஒட்டிப் பள்ளியில் பொது மக்கள் சார்பாகப் பல தேர்வாராய்வுகள் நடைபெற்றன. பெண்களின் உணவு உடைகளில் இது முதல் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. ஆதரவும் பாராட்டும் நன்மதிப்பும் மிகுந்தன. கேட்ஸ்ஹெட்டில் அத்தையிடமும், அவள் பிள்ளைகளிடமும் பட்ட கடுவாழ்வுக்குப் பின் லோவுட்டின் தொடக்கக் கடமை பெரிதன்று. அத்துடன் படிப்படியாக, அது மேம்பாடு அடைந்து வந்தது. செல்வி டெம்பிளின் நற்பயிற்சியாலும், நன் முயற்சி யாலும் நான் நிலையத்தில் மாணவி நிலையிலிருந்து உயர்த்தப் பட்டு ஆசிரியையாக இரண்டாண்டு தொண்டாற்றினேன். அதன் மேலும் என்னை அந்நிலையத்திலேயே உயர் பொறுப்பு ஏற்கும்படிதான் அந் நல்லுள்ளம் அவாவாயிற்று. ஆனால் அவள் இதற்குள் மணமுடித்துக் கொண்டு நிலையத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது. நிலையத்தார் அனைவருடனும் ஒத்துழைத்து அவளுக்கு நான் சிறந்த விடையளிப்பு விழா நிகழ்த்தினேன். அச்சமயத்தில் நான் அவளிடம் “தாங்கள் இல்லாமல் நிலையத்தில் இருக்க நான் விரும்பவில்லை. தாங்கள் தந்த பயிற்சியை நன்கு பயன்படுத்தி ஏதேனும் நல்ல குடும்பத்தில் வீட்டாசிரியை ஆக இருக்கத்தான் எண்ணுகிறேன்.” என்றேன். “எங்கிருந்தாலும் நீ வாழ்வாயாக,” என்று அவள் அன்பு வாழ்த்துரை வழங்கி அகன்றாள். முதலில் எனக்கு எங்கே போவது, என்ன செய்வது என்றே தோன்றவில்லை. பத்திரிகைகளில் என் தோழியர்கள் சில சமயம் விளம்பரங்களைக் காட்டிக் கேலி செய்வது நினைவுக்கு வந்தது. உடனே நான் நிலையத்துக்கு வந்த ஒரு பத்திரிகையில் ஒரு விளம்பரக் கடிதம் வரைந்தனுப்பினேன். அக்கடிதம் இது: “பதினான்கு வயதுக்குக் கீழுள்ள நல்ல குடும்பப் பெண்களுக்கு ஆசிரியையாக வேலை பார்க்க ஓர் இளநங்கை விரும்புகின்றாள். தாய் மொழியும் இசையும் ஓவியமும் நன்கு கற்பிக்கும் ஆற்றல் உண்டு. கீழ்க்கண்ட முகவரிக்கு எழுதுக.” ஜே.அ. அஞ்சல் நிலையம், லோவுட் கடிதத்தை அனுப்பியதும், வாழ்க்கை தொடங்கும் வகையில் முதற்படியில் ஓர் அடி எடுத்து வைத்து விட்டது போன்ற மனநிறைவு எனக்கு ஏற்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு நாளும் நான் மறுமொழியை எதிர்பார்த்து அஞ்சல் நிலையம் சென்று மீண்டேன். ஒரு வாரமாயிற்று. நான் நம்பிக்கை இழக்கலானேன். அச்சமயம் ஒரு கடிதம் வந்தது. அது வருமாறு: “செல்வி ஜே.அ.தம் நன்னடத்தைக்கும் திறமைக்கும் தக்க சான்றுப் பத்திரங்கள் தரமுடியுமானால், இக் குடும்பத்திலுள்ள ஒரே மாணவியின் பொறுப்பு அவரிடம் விடப்படும். மாதம் முப்பது பொன் ஊதியமும் தரப்படும். மில் கோட்டில் தார்ன்ஃவீல்டு இல்லத்தில், திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்ற முகவரிக்கு மறுமொழி அனுப்பும்படி செல்வி ஜே.அ. கோரப்படுகிறார்.” கடிதத்தை நான் நன்கு ஆராய்ந்தேன். முதுமை வாய்ந்த ஒரு மாதின் கையெழுத்து அது. திருமதி ஃவோஃவக்ஸே எழுதியிருக்க வேண்டும் என்பதையும், அவர் ஒரு முதிய மாது என்பதையும் இது காட்டிற்று. கடிதம் மொத்தத்தில் எல்லா வகையிலும் எனக்குப் பிடித்தமாகவே இருந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் கோரிய சான்றிதழ்கள் என்னிடம் இருந்தன. அவற்றை அனுப்பினேன். மறு அஞ்சலிலேயே மறுமொழி வந்துவிட்டது. என் கோரிக்கை நிறைவேறிற்று. இரண்டு வாரங்களுக்குள் என்னை எதிர்பார்ப்பதாகத் திருமதி ஃவேர்ஃவக்ஸ் எழுதியிருந்தாள். லோவுட்டில் என் தோழியர்களிடமிருந்தும் புதிய தலைவியிடமிருந்தும் நான் முன்னாள் மாலையிலேயே பிரியா விடைபெற்றுக் கொண்டேன். இரவில் பெட்டி படுக்கையைக் கட்டிவைத்து விட்டேன். காலை நான்கு மணிக்கு அஞ்சல் வண்டி ஏறிப் பகல் முழுதும் பயணம் செய்து இரவு எட்டு மணிக்கு மில் கோட்டில் இறங்கினேன். ஜார்ஜ் அருந்தகத்தில் நான் சிற்றுண்டி அருந்தினேன். தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலைவிலிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அதை உசாவி ஒரு வண்டி வைத்துக் கொண்டு செல்ல எண்ணினேன். இந்நோக்கத்துடன் அங்குள்ள ஏவலாளனிடம் “தார்ன்ஃவீல்டு இல்லம் எவ்வளவு தொலை இருக்கும், உனக்குத் தெரியுமா?” என்றேன். “தாங்கள் பெயர் அயரா?” என்று மறு கேள்வி கேட்டான் அவன் “அம்; உனக்கு எப்படித் தெரியும்?” “தங்களுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார்.” எனக்காக காத்துக் கொண்டிருந்தது தார்ன் ஃவீல்டு இல்லத்தின் வண்டியோட்டியே. அருந்தகத்தின் வாயிலிலே ஓர் அழகிய பெட்டி வண்டி நின்றிருந்தது. வண்டியோட்டி பெட்டி படுக்கையை எடுத்து வண்டியிலேற்றி என்னையும் ஏறும்படி வேண்டினான். வண்டி விரைந்து சென்றது. வண்டியின் தோற்றத்திலிருந்தும், வண்டியோட்டியின் நடையுடையிலிருந்தும் வண்டிக்குரியவர்கள் நயநாகரிகக் குடும்பத்தினர் அல்லர் என்று கண்டேன். இஃது எனக்கு அமைதி அளித்தது. ஏனென்றால், ‘நயநாகரிகம்’ என்பது என் உள்ளத்தில் திரு. பிராக்கிள் ஹர்ஸ்டின் குடும்பத்துடன் தொடர்புடைய தாயிருந்தது. பயணம் சற்று நீண்ட பயணமாகவே எனக்குத் தோற்றிற்று. பாதைகள் கரடுமுரடாயிருந்தன. கருக்கிருட்டாயிருந்த போதிலும் இருபுறமும் உள்ள நிலம் கட்டாந்தரையாகவே இருந்தது என்பது புலப்பட்டது. நான் செல்லும் இல்லம் ஊரிலிருந்து தொலைவிலுள்ள ஓர் ஒதுக்கிடம் என்பது சொல்லாமலே தெளிவாயிற்று. ஆனால், இதுவும் என் மனநிலைக்கும், விருப்பத்துக்கும் உகந்ததாகவே இருந்தது. வண்டியோட்டி ஒருபெரிய பழங்கால மாளிகை முன் இறங்கி வாயிற்கதவுகளைத் திறந்தான். உட்கதவை வந்து திறந்த பணிப்பெண் வழிகாட்டி “இவ்வழி வருக அம்மணி” என்று கூறி முன் சென்றாள். நடுவிலிருந்த நீண்ட சதுரமான கூடத்தைத் தாண்டி ஒரு சிறிய அறைக்குள் பணிப்பெண் என்னை இட்டுச் சென்றாள். அங்கிருந்த முதுமை வாய்ந்த மாதுதான் என் கடிதத்துக்கு மறுமொழி வரைந்தவர் என்று உணர்ந்து கொண்டேன். அவள் நான் வந்ததும் எழுந்திருந்து “வா அம்மா! பயணம் எப்படி இருந்தது? உடல் நலந்தானே!” என்று அன்புக் கனிவுடன் கேட்டார். “நீங்கள் தாம் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்று நம்புகிறேன்” என்றேன். “ஆம்; இப்படி உட்கார். நீண்ட பயணத்துக்குப் பின் அலுப்புடன் இருப்பாய். உணவு கொண்டு வரச் சொல்லுகிறேன். உண்டு ஓய்வு எடுத்துக் கொள். பின் நாளை பேசிக் கொள்ளலாம்,” என்றாள். “வீட்டாசிரியை நிலை ஓர் உயர் பணியாள் நிலையை விட மேலன்று என்பதை நான் அறிவேன். எனவே, இவ்வளவு மதிப் புடனும், அன்பாதரவுடனும் நான் வரவேற்கப்படுவது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆயினும், என் வேலையில் நான் கொண்ட அக்கறையைக் காட்ட வேண்டும் என்பதை நான் எண்ணினேன். என் மாணவி செல்வி ஃவேர்ஃவக்ஸை நான் இப்போதே காணமுடியுமானால் மகிழ்ச்சியடைவேன்,’ என்றேன். “செல்வி ஃவேர்ஃவக்ஸா? ஓகோ! உங்கள் மாணவி பெயர் செல்வி வாரன்ஸ் என்பது உங்களுக்குத் தெரியாதே!” “அப்படியா! அது உங்கள் புதல்வி என்று நான் நினைத்தேன்.” “எனக்குக் குடும்பமே கிடையாது. ஆனால், என்னைத் தவிரக் குடும்பத்தை மேற்பார்க்கவும் ஆளில்லை. உங்களை வரவேற்கும் பொறுப்பை அதனால் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது.” திருமதி ஃவேர்ஃவக்ஸே குடும்பத் தலைவி என்று நான் நினைத்திருந்தது தவறு என்று கண்டேன். ஆனால், குடும்பத் தலைவிபோலவே அவள் நடந்து கொண்டது கண்டு மகிழ்ந்தேன். இத்தகைய இடத்தில் என் பணி நன்கு தொடங் கிற்று என்பதை நான் அன்றே கண்டு கொண்டேன். மறுநாள் காலை, கதிரவன் பொன் கதிர்கள் என் அறையில் புகுந்து என்னை எழுப்பியபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கேட்ஸ்ஹெட்டில் எனக்கென அறை இருந்ததில்லை. லோவுட்டில் ஆசிரியையானபின் தனி அறை இருந்தாலும், அது இந்த அறைக்கு ஈடன்று. நிலத்தளமெங்கும் கம்பளம் விரித்திரிந்ததினால் குளிர் தட்டாமல் எங்கும் வெது வெதுப்பாயிருந்தது. பலகணிகளுக்கு நீலத்திரை இடப் பட்டிருந்தன. கதிரவன் பொன்னொளியில் இது செந்நீலமாகத் திகழ்ந்து என் கண்களுக்கு விருந்தூட்டின. ஒரு புதிய வாழ்வில் புகுகின்றேன் என்ற எண்ணம் என்னையறியாமல் என்மீது ஊர்ந்தது. நான் என்றுமே என் உடையணிகளைத் திருத்துவதில் கவனமில்லாதிருந்ததில்லை. இப்போது புதிய இடத்தில் புதிய ஆட்கள்முன் என்தோற்றம் எப்படியிருக்குமோ என்ற கவலையுடன் காலை உடையிலும் ஒப்பனையிலும் கருத்தைச் செலுத்தினேன். உணவுமேடை கூட நான் இதுவரை கண்டவற்றைவிட உயர்வுடையதாகவே இருந்தது. “தார்ன்ஃவீல்டு உனக்கு எப்படியிருக்கிறது? பிடித்தம் தானோ? என்று கேட்டாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ். “ஆம்; முதல் நாளிலேயே பிடித்துவிட்டது.” “அப்படியா! மிக மகிழ்ச்சி. ஆனால், இதை எவ்வளவு ஒழுங்குபடுத்தினாலும் திரு. ராச்செஸ்டர் இங்கே மிகுதி தங்குவதில்லை. அவர் தங்கினாலல்லாமல் இதை இன்னும் நீண்டநாள் வைத்துக் காக்க முடியாது.” “திரு. ராச்செஸ்டர் யார் அம்மணி?” “திரு. ராச்செஸ்டர் யாரா? இன்னும் இது தெரிந்து கொள்ளவில்லையா? அவர் தாம் இந்த வீட்டுக்குரியவர். அவர் மேற்பார்வையிலிருக்கும் பெண் தான் உன் மாணவியாகப் போகிற அடேல் வாரன்ஸ்.” இதற்குள் அடேல் வாரன்ஸ்ஸே வந்து சேந்தாள். அவள் சின்னஞ்சிறு பெண். நன்கு சிரித்து விளையாடி யாரையும் எளிதில் வசப்படுத்த வல்லவன். மிக விரைவில் அவள் என்னுடன் பழகிவிட்டாள். முதல் நாள் பாடம் பாடமாகத் தோற்றவில்லை. இருவருக்கும் ஒரு பொழுதுபோக்காக இருந்தது. பாட முடிவில் திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டினாள். வழியில் அவள் ராச்செஸ்டரைப் பற்றிக் கூறினாள். விரிவாகக் கூறிக் கொண்டே சென்றாள். “அவர் அடிக்கடி வருவதில்லை. ஆனால், முன்னறி விப்பில்லாமல் எந்தச் சமயமும் திடுமென வந்துவிடக் கூடுமாதலால், வீட்டை எப்போதும் கட்டுச் செட்டாகவே வைத்துக் கொள்கிறேன்” என்று அவள் அளந்தாள். “அவர் எப்படிப்பட்டவர்? ஏன் இங்கே தங்குவதில்லை?” என்று கேட்டேன். “கெட்டவர் என்று கூறமுடியது. ஆனால் திறமை யுடையவர். மிகவும் விசித்திரமானவருங்கூட. உலகில் மிகவும் பயணம் செய்திருப்பதனால் எந்த இடமும் அவருக்கு எளிதில் பிடிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.” வீட்டின் பல பகுதிகளையும் நாங்கள் பார்த்தோம். நான் எதிர்ப்பார்த்ததைவிட அது பெரிய இடமகன்ற மாளிகையாகத் தானிருந்தது. பல பகுதிகள் நேர்த்தியாகவுமிருந்தன. ஆயினும், மொத்தத்தில் அந்த மாளிகையைச் சுற்றிப் பழங்கால நினைவு கள் பின்னலிட்டுக் கொண்டிருந்தன என்ற எண்ணமே மேலிட்டது. பழைய சாதனங்களடங்கிய ஓர் அறையருகில் சென்றபோது இவ்வெண்ணம் உச்சநிலையடைந்தது. “இந்த வீட்டில் எங்காவது பேயாட்டம் உண்டா?” என்று கேட்கத் தோன்றிற்று. இது கேட்டதே, ஏதோ கண்டவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் சரேலென்று என்னை இட்டுக் கொண்டு கீழே இறங்கினாள். என் பின்னாலிருந்து அப்போது பேய் சிரித்தது போன்ற ஒரு சிரிப்புக் கேட்டது. “அஃது என்ன?” என்று கலவரத்துடன் கேட்டேன். “அஃது ஒரு பணிப்பெண் போடுகிற ஓசை”என்று கூறிவிட்டு, அவள் மறுபுறம் நோன்கி “கிரேஸ் : கிரேஸ்” என்றாள். கிரேஸ்பூல் என்ற வேலைக்காரி எங்கிருந்தோ வந்தாள். “ஏன் இவ்வளவு அலறல்? பேய் பிடித்தவள். அலறல் மாதிரி! போய் அமைதியாக வேலைபார்.” என்றாள் திருமதி ஃவேர்ஃவக்ஸ். பேச்சை மாற்ற விரும்புபவள் போல் திருமதி ஃவேர்ஃவக்ஸ் அடேலைப்பற்றிப் பேச்செடுத்தாள். இஃது உண்மையிலேயே எனக்கு விருப்பமான பேச்சாயிருந்ததனால் நான் விரைவில் அந்தச் சிரிப்பைப் பற்றிய எண்ணத்தை மறந்தேன். 5. ராச்செஸ்டர் வருகை என் புதிய வாழ்வில் நான் அமைந்து தட்டுத் தடங்கலெது வுமில்லாமல் இனிதாக மிதந்து சென்றேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் அன்பு ஒருபுறம்: அடேலின் கள்ளங் கபடமற்ற பாசம் ஒருபுறமாக என்னைக் களிப்பில் ஆழ்த்தின. இந்நிலையில் மூன்று மாதங்கள் மூன்று நாட்களாக கழிந்தன. அடேலுக்கு ஒருநாள் நீர்க்கொண்டுவிட்டது. அதனால் அவளுக்கு அன்று ஓய்வு அளிக்கும்படி திருமதி ஃவேர்ஃவக்ஸ் என்னை வேண்டினாள். என்னிடம் அங்ஙனம் வேண்டிக் கொண்ட நயநாகரிக முறைக்கு இணங்க நானும் நயநாகரிக மாக நடக்க விரும்பினேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் கடிதங்களை வழக்கமாகப் பணியாள் நகரத்து அஞ்சல் நிலையம் சென்று போடுவது வழக்கம். “இப்போது எனக்கும் ஓர் ஓய்வுநாள் தந்தால், நகருக்குச் சென்று வருகிறேன். அத்துடன் கடிதங்களையும் நானே போட்டு வருகிறேன்.” என்று நான் சொன்னேன். திருமதி ஃவேர்ஃவக்ஸ் முக மலர்ச்சியுடன் “அப்படியே போய்வா, அவசரம் எதுவுமில்லை, போதிய நேரம் எடுத்துக் கொண்டு உலவி வா,” என்றாள். நகரில் அஞ்சல் நிலையமும் நகரும் இரண்டு கல் தொலைவில் இருந்தது. புலர் காலையாதலால், வழி ஆளற்று அமைதியாயிருந்தது. ஞாயிறு தன் மென் கதிர்களால் முகிற்கூட்டங்களின் செந்நீலத் திரைகளினூடே மங்கிய ஒளியைப் பரப்பி வந்தான். மேட்டு நிலத்தின் முகட்டை அணுகியதும், சற்றுக் களைத்து ஒரு மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தேன். அச்சமயம் என் ஓய்வையும் அமைதியையும் கிழித்துக் கொண்டு தடதடவென்று ஓர்ஓசை எழுந்தது. அஃது எனக்கு எதிரே இருந்துவரும் குதிரைக் குளம்பின் ஓசை என்று தெரிந்ததும், அத்திரையாக அப்படி யார் செல்லக் கூடும் என்று வியப்புடன் எதிர்நோக்கியிருந்தேன். திடுமென ஒரு வெள்ளை நாய் பின் தொடர, கறுப்புக் குதிரை மீது புயல் வேகத்தின் என்னை ஒருவர் கடந்து சென்றார். அந்த வேகத்தின் அதிர்ச்சியில் நான் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். பின் வெயிலேறு முன் நகர் சென்று மீள எண்ணிப் புறப்பட எழுந்தேன். குதிரைக் குளம்படி ஓசை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், அது திடீரென நின்று தடாலெனப் பேரொலி எழுந்தது. அதனையடுத்து நாயின் அலறலும் கேட்டது. நான் என்னவென்று காணும் எண்ணத்துடன் சற்றுத் திரும்பிச் சென்று பார்த்தேன். சிறிது தொலைக்குள் குதிரையும் மனிதனும் நிலத்தின் மீது புரண்டுகிடந்தனர். மனிதரின் காலொன்று குதிரையினடியில் சிக்கிக் கொண்டதால், அவர் அதை விடுவிக்க முடியாமல் தவித்தார். நாய் என்னை நோக்கி ஓடிவந்தது. என்னைச் சுற்றிச் சுற்றி ஓடி மீண்டு வந்து பின்னும் சுற்றிற்று. அந்த வாய்பேசா விலங்கு என்னை உதவிக்கு அழைக்கிறது என்று அறிந்து, மனிதரை அணுகி, “ஐயா! உடம்பில் காயம் பட்டுவிட்டதா? நான் உதவட்டுமா,” என்றேன். அவர் முரட்டு மனிதராகவே தோன்றினார். பேச்சும் துடுக்குத்தனமுடையதாகவே இருந்தது. உதவி வேண்டும் நிலையில்கூட அவர் உதவிக்கு உரிய பண்பற்றவராகக் காணப் பட்டார். ஆயினும், உதவியில்லாமலே அவர் எழுந்து நடக்க முயன்றபோது, அம்முயற்சி பலிக்கவில்லை. அவர்மீது வந்த வெறுப்பைவிட, அந்நிலையில் அவர்மீது இரக்கமே என்னிடம் மேலெழுந்தது. நான் அவரைத் தாங்கி எழுந்து நிற்க வைத்தேன் அவர் தடை செய்யவில்லை. “ஐயா! தங்களால் உதவியில்லாமல் இனிப்போக முடியாது என்று நினைக்கிறேன். தார்ன்ஹில் இல்லம் அருகேதான் இருக்கிறது. அங்கே சென்று யாரையாவது உதவிக்குக் கூட்டிக் கொண்டு வரட்டுமா?” என்றேன். “தார்ன்ஹில் இல்லமா? நீ யார்? உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்?” என்று அவர் சீற்றத்துடன் குறுக்குக் கேள்வி கேட்டார். அவர் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அந்நிலையில் அவரை விட்டுச் செல்லவோ, அல்லது கேள்விக்கு விடை கூறாமல் நிற்கவோ வழியில்லை. ஆகவே, நான் “அங்கே வீட்டாசிரியை” என்றேன். “ஆ, அப்படியா! நான் மறந்துவிட்டேன்!” என்றார் அவர். அதன்பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் தார்ன் ஹில்லுடன் அவருக்கு ஏதேனும் தொடர் பிருக்கக் கூடும் என்று உய்த்துணர்ந்து கொண்டேன். அவர் என்னைச் சற்று ஏற இறங்கப் பார்த்தார். “உன் உதவியை நாடத்தான் வேண்டியிருக்கிறது. சற்று அருகே வந்து நிற்கிறாயா.” என்றார். அவர் குரலில் சிறிது மாறுதல் ஏற்பட்டதை நான் அப்போது கவனிக்கவில்லை. காலில் வலு இல்லாததால் உடலின் பளுவில் ஒரு பெரும்பகுதி என்மீது சாய்ந்தது. அதை நான் அரும்பாடுபட்டுத் தாங்கிக் கொண்டேன். அவர் குதிரையும் எழுந்து நின்றது. அவர் அதில் ஏறிக் கொண்டார். “உனக்குத் தந்த தொந்தரவை மன்னிக்கக் கோருகிறேன். இன்னும் ஓர் உதவி. என் கைத்தடி அதோ பாதையருகில் கிடக்கிறது. அதை எடுத்துக் கொடு” என்றார். கொடுத்தபின் அவர் “நீ எங்கே போகிறாய்?” என்று கேட்டார். நான் அஞ்சல் நிலையத்தக்குப் போவது அறிந்து, சரி நீ போகலாம்; உன் உதவிக்கு நன்றி, என்று கூறி விடை தந்தார். அவர் எதிர்த் திசையில் மெல்லக் குதிரைமீது சென்று மறையும் வரை பார்த்திருந்து நான் நகர் நோக்கிச் சென்றேன். அஞ்சல் நிலையத்துக்குச் சென்று என் வேலையை முடித்துக் கொண்டு நான் நகரில் நண்பகல் உணவு உண்டு, கடைத்தெருவும் பூங்காக்களும் சுற்றி உலவிப் பொழுது போக்கினேன். திரும்பத் தார்ன்ஹில் இல்லம் வரும்போது பொழுது சாயும் நேரமாகி விட்டது. இல்லத்தின் வாயிலில் ஒரு வெள்ளை நாய் காத்திருந்தது. அஃது என்னைக் கண்டதும் குரைத்து வால் குழைத்தது. அது தான் நான் குதிரையில் வந்தவருடன் கண்ட நாய் என்று அறிந்து கொண்டேன். அஃது இங்கே இருப்பானேன் என்ற வியப்புடன் ஏவலாளிடம் ‘இது யார் நாய்?’ என்றேன். “அது திரு. ராச்செஸ்டர் நாய். அவர் இன்று காலையில் தான் வந்தார். வரும்போதே வழியில் அவருக்கு ஓர் இடர் உண்டாயிற்று. கால் மிகவும் ஊனப்பட்டுப் படுக்கையில் இருக்கிறார்.” என்றான். என் உள்ளத்தில் பேரொளி உண்டாயிற்று. “என்னைக் காலையில் சந்தித்த சீமான் வேறு யாருமல்லர். அடேலின் காவலரான வீட்டுத் தலைவரே!” என்பது எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. திரு. ராச்செஸ்டர் வருகை தார்ன்ஹில் இல்லத்தின் வாழ்வில் புத்துயிரூட்டிற்று. அஃது என் வாழ்வையும் தாக்கா மலிருக்க முடியவில்லை. அவர் வரும் போது நகரிலிருந்து அடேலுக்குப் பரிசாக ஒரு பெட்டி அனுப்பியிருந்தார். அஃது இன்னும் வந்து சேரவில்லை. பெட்டியிலிருந்த பரிசுகள் என்ன என்று அவர் கூறமறுத்துவிட்டதால், அதை ஊகிப்பதிலும், அதுபற்றி மனக்கோட்டைகள் கட்டி அழிப் பதிலுமே அவள் முற்றிலும் ஈடுட்டிருந்தாள். இந்நிலையில் அவள் மனம் பாடத்தில் செல்லவில்லை. ஏவலர்கள் ஓயாது திரு. ராச்செஸ்டருக்காக ஏதேனும் வாங்குவதிலோ, கொண்டு செல்வதிலோ பரபரப் புடையவராயிருந்தனர். திருமதி ஃவேர்ஃவக்ஸ் கூட இப்போது முன் எப்போதையும் விட மிகுதியாக வீட்டு வேலையிலீடு பட்டிருந்தாள். இந்நிலையில் நானும் அவர் வருகை, அவர் பண்புகள், தொலைவிடத்தில் அவர் வாழ்ந்த வாழ்வின் தன்மை ஆகியவற்றை நினைப்பது தவிர வேறு வேலையற்றவளானேன். அவர் நயநாகரிகமுடையவராகத் தோற்றவில்லை, ஆனால் நயநாகரிகமுடையவராக யிருந்திருந்தால் அவர் முதலில் என்னிடம் நடந்து கொண்ட முறை எனக்கு வெறுப்பையே கொடுத்திருக்கும். அவருடைய முரட்டுக்குணம் அவர் நடத்தை யிலுள்ள குறைபாட்டை நிரப்பிற்று. அவர் பின்னால் காட்டிய மதிப்பு இதனால் பன்மடங்கு எனக்கு மகிழ்ச்சி தந்தது. முதலில் அவரை நான் சந்திக்கப் போனபோது, நான் அடேலுடன் சென்றேன். திருமதி ஃவேர்ஃவக்ஸ் முறைப்படி என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் முன்பே என்னை அறிந்ததாகக் காட்டிக் கொள்ளவுமில்லை, அதேசமயம் என்னைத் தனிப்படக் கவனிக்கவுமில்லை. திருமதி ஃவேர்ஃவக்ஸ் தேநீர்க் கோப்பையை என்னிடம் வைத்து “திரு. ராச்செஸ்டருக்கு இதை நீயே எடுத்துக் கொடு. அடேல் அதை ஒரு வேளை கொட்டிவிடக்கூடும்,’ என்றாள். அடேலின் பரிசுப்பெட்டி இதற்குள் வந்துவிட்டது. அதிலுள்ள பொருள்கள் அவள் எதிர்பார்த்தவையாயிருந்தன. எனவே, அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் அதை அடக்க முடியாமல் எங்கும் தாவிக் குதித்துக் கும்மாள மடித்தாள். பின் திரு. ராச்செஸ்டரை அணுகி, எனக்குப் பரிசுகள் எவ்வளவோ நன்றாயிருக்கின்றன. ஆனால், செல்வி அயருக்குப் பரிசு எதுவும் வாங்கிவரவில்லையா?” என்றாள். அதுகேட்டு நான் சிரித்தேன். “உனக்குப் பரிசுகளில் விருப்பம் உண்டா?” என்று அவர் என்னைக் கேட்டார். எனக்கு இதுவரை யாரும் பரிசு கொடுத்ததாக நினைவுமில்லை; நான் விரும்பியதும் கிடையாது. மேலும், பரிசுபெற நான் என்ன செய்துவிட்டேன்! அடேல் நன்றாகப் படித்திருக்கிறாள். அவளுக்குப் பரிசு வேண்டுந்தான்,” என்றேன் நான். அடேலுக்கு இப்போது நல்ல படிப்புத் தகுதி உண்டு என்பது உண்மை. ஆனால், அது முழுவதும் அவள் தகுதி அன்று என்பது எனக்குத் தெரியும். முன்பு வந்திருந்தபோதெல்லாம் அவளிடம் நான் கண்ட முன்னேற்றத்தை விட, இப்போது அடைந்த முன்னேற்றம் எவ்வளவோ மிகுதி. அது பேரளவில் உன் பயிற்சித் திறமையின் பலன்தான்!” என்றார் திரு. ராச்செஸ்டர். உடனே நான், “இப்போது நீங்கள் எனக்குப் பரிசு தந்துவிட்டீர்கள்,’ என்றேன். அவர் புன்முறுவல் பூத்தார். “நீ இங்கே வந்து எவ்வளவு நாளாயிற்று?” என்று கேட்டார். படிப்படியாக அவர் என்னிடமிருந்து என் பள்ளி வாழ்வு, குடும்ப நிலை ஆகியவற்றைக் கேட்டறிந்து என் மீது பரிவு காட்டினார். என் பலவகைத் தகுதிகளையும் உரையாடலுடன் உரையாடலாகவே பேசி அறிந்து கொண்டார். முதலில் எதற்காக அவர் இவற்றை உசாவுகிறார் என்பதை நான் அறிந்து கொள்ளவில்லை. ஆனால், அவர் திருமணம் செய்யப் போவதாகச் செல்வி ஃவேர்ஃவக்ஸிடமிருந்து அறிந்த பின் ஒருவாறு அவர் திட்டத்தை ஊகிக்க முடிந்தது. அவர் திருமணமாகி அடேலை வேறிடத்துக்கு இட்டுச் சென்றால், எனக்கு உகந்தவேறு ஏதேனும் நல்ல தொழில் பார்த்துக் கொடுக்க அவர் எண்ணியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று. 6. இடர்மேல் இடர் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் நாங்கள் திரு ராச்செஸ்டருடனே தேநீர் அருந்தினோம். அப்போது நான் அவரை நேரடியாகக் காணவும் அவர் போக்கையும் குணங்களையும் கவனிக்கவும் முடிந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் அவர் சிறு சிறு போக்குகளையும் வழக்கங்களையும் என்னிடம் விரித்துரைத்திருந்தாள். இப்போது அவற்றின் உண்மை இயல்புகளை என்னால் அறியமுடிந்தது. அவர் இந்தச் சிறுவயதுக்குள்ளாகவே வாழ்க்கையின் இன்னல்களுக்குப் பெரிதும் ஆளானவர் என்பது நன்கு விளங்கிற்று. இவர் வெளிக்கு முரட்டுத்தனமாகப் பேசியதும் இதனாலேயே என்று உணர்ந்தேன். அவர் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் வாழ்க்கைமீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பும் கசப்புமே வெளிவந்தன. அடேலுடன் பேசும்போது மட்டுமே இந்த வெறுப்புச் சற்றுக் குறைவாயிருந்தது. என்னிடம் தொடக் கத்தில் இந்த வெறுப்பை அவர் காட்டினாலும், படிப்படியாக அது குறைந்தே வந்தது. நான் அடேலின் நல்லாசிரியையாய்ச் செய்யும் பணியில் அவருக்கு இருந்த மதிப்பே இதற்குக் காரணம் என்று நான் நினைத்தேன். அவர் என்னை மதிக்குந்தோறும், எனக்கும் அவரிடம் மதிப்பு ஏற்பட்டது. வீட்டுத் தலைவர் என்ற முறையில் முதலில் அவருக்கு நான் காட்டிய தொலைமதிப்பு அவர் வாழ்வின் வரட்சிமீது இரக்கமாகவும், அன்பு மதிப்பாகவும் மாறிற்று. அவர் கருத்துகளுக்கு மற்றவர்களைப் போல் நான் வளைந்து கொடுப்பதில்லை. அவருக்கு இச்சகம் பேசி அவர் நட்பைப் பெற விரும்பவுமில்லை. என் கருத்துக்களை ஒளியாது அவரிடம் கூறினேன். கருத்து மாறுபாடுகளையும், விருப்பு வெறுப்புக்களையும் துணிவுடன் காட்டிக் கொண்டேன். அவர் இவற்றை வெறுக்கவில்லை. மாறாக, என்னிடம் அவர் நம்பிக்கை வளர்ந்தது. அவர் எதிலும் என் அறிவுரையைக் கோரிவந்தார். அடிக்கடி அடேலின் முன்னேற்றம் பற்றியும் வீட்டுக்காரியங் களைப்பற்றியும் நாங்கள் கலந்து பேசித் திட்டமிட்டு வந்தோம். ஆனால், அவர் வாழ்வின் மிக முக்கியமான ஒரு செய்தியைப் பற்றி மட்டும் அவர் என்றும் குறிப்பிடவே இல்லை. நானும் அதுபற்றிப் பேசவில்லை. அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்ற செய்தி மெள்ள வீட்டில் எங்கும் அடிப்பட்டது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் இதுபற்றி மிகுந்த அக்கறையும் கவலையும் காட்டினாள். பக்கத்திலுள்ள ஒரு குடுப்பத்தினுடன் அவர் அடிக்கடி ஊடாடி வந்தார். அக்குடும்பத்தைச் சேர்ந்த செல்வி பிளான்சிதான் இதற்கு மூலக்காரணம் என்று திருமதி ஃவேர்ஃவஸும் பிறரும் கருதினர். அவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்? செய்து கொண்டால் தார்ன்ஹில் இல்லத்திலேயே தங்குவாரா? நகருக்குச் சென்றுவிடுவாரா?” என்பது பற்றியே எல்லாரும் கவலைக் கொண்டனர். ஏனெனில், அவர் வேறிடம் சென்று விட்டால், தார்ன்ஹில் இல்லம் புறக்கணிக்கப்படும். அதை ஒட்டி வாழ்ந்த அனைவர் வாழ்விலும் பொலிவு குன்றிவிடும். எனக்கும் இதுபற்றிய கவலைகள் இல்லாமலில்லை. உண்மையில் எவரையும்விட எனக்குத்தான் கவலை மிகுதி. திரு. ராச்செஸ்டர் மணம் செய்து கொண்டு நகரம் சென்றாலும் சரி, செல்லாவிட்டாலும் சரி, நான் என் வேலையை விடவேண்டி வருவது உறுதி. புதிய வீட்டுத் தலைவியின் கீழ் நான் நீடித்து இருக்க முடியாது. அது செல்வி பிளான்சியாயிருந்தால், நானே இருக்க விரும்பமாட்டேன். இதுவரை சரிசம நிலையில் எல்லாருடனும் நான் பழகிவிட்டேன். நய நாகரிகமுடைய செல்வி பிளான்சி எல்லாப் பணியாளர்களையும், பணியாளர்களாகவும், என்னைப் பணியாளர்களைவிடச் சற்று உயர்வாகவுமே நடத்துவாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. இத்தனை கவலைகளையும் நான் காட்டிக்கொள்ளாமல் அடக்கியே வந்தேன். ஆயினும் திரு. ராச்செஸ்டர் இவற்றை ஓரளவு உய்த்தறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர் என் எழுத்துத் திறமை, ஓவியம், இசைப்பயிற்சி ஆகியவற்றிலெல்லாம் கருத்துச் செலுத்தினார். “இலண்டன் நகரை நீ பார்த்திருக் கிறாயா? அங்கே இருக்க உனக்குப் பிடிக்குமா?” என்றெல்லாம் அவர் அடிக்கடி கேட்டார். இவற்றால், தமக்குத் திருமணமான வுடன் அவர் எனக்கும் இலண்டனில் வேறு வேலை பார்த்துத் தரத் திட்டமிட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. என் உள்ளம் இவ்வாறு அல்லற்பட்டதனால் எனக்கு இரவு உறக்கமே பிடிக்கவில்லை. தார்ன்ஹில் இல்லத்தின் பல காட்சிகளும் பல நிகழ்ச்சிகளும் அரைத்துயிலில் என்முன் கனவாக நின்று நடமிடும். தார்ன் ஹில்லை விட்டுச்செல்ல எனக்கு உள்ளூர மனமில்லை என்பதை இது எனக்கு நன்கு விளக்கிற்று. அத்துடன் திரு. ராச்செஸ்டரைச் செல்வி பிளான்ஸி போன்ற ஒரு பட்டுப்புழுவின் பிடியில் வைத்துப் பார்க்க எனக்கு எக்காரணத்தாலும் பொறுக்க முடியவில்லை. அவள் அவருக்குத் தகுந்த - பிறர் கருதியபடி பார்த்தால் - அவருக்கு மேற்பட்ட தகுதியையுடைய பெண் என்பதை நான் அறிவேன். ஆயினும், எப்படியோ எனக்கு அவள் மீது வெறுப்பும், புழுக்கமும் ஏற்பட்டன. திரு. ராச்செஸ்டர், செல்வி பிளான்சி, தார்ன்ஹில் ஆகியவர்களைப் பற்றிய பல அரைக் கனவுகளிடையே ஒருநாள் என் கூரிய செவிகள் ஏதோ ஒரு கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசையையும், அடைக்கப்படும் ஓசையையும் கேட்டன. நான் இருந்த அறைக்கும் ராச்செஸ்டர் அறைக்கும் இடையே வெளியே தொலை மிகுதியாயிருந்தாலும், பின்புறம் இடையே ஒரு சுவர்தான் இருந்தது. அவர் உறக்கத்தின் மூச்சு ஒவ்வொன்றும், உருண்டு புரண்டு படுக்கும்போது படுக்கை அசையும் அசைவு ஒவ்வொன்றும் எனக்குத் தெளிவாகக் கேட்டது. மணி இரண்டடித்தது. அச்சமயம் என் அறையின் கதவண்டை யாரோ வருவதும் கதவு திறப்பதும், எனக்குத் தெரிந்தது. நான் உரக்க, “யாரது?” என்று அதட்டினேன். உருவம் மெல்லப் பின் வாங்கிற்று. அத்துடன் அது அடங்காப் பேய்ச்சிரிப்புச்சிரித்தது. அந்தச் சிரிப்பு நான் முன் கிரேஸ்பூலின் அறையில் கேட்ட அதே சிரிப்புத்தான். கிரேஸ்பூல் எக் காரணத்தாலோ தார்ன்ஹில் இல்லத்தின் உள்ளிருந்து கொண்டே பகைமை எண்ணம் கொண்டிருக்கிறாள் என்று நான் முன்பே நினைத்தேன். அவள் பேய்ச்சிரிப்பும், இன்று நான் கண்ட காட்சியும் அதை உறுதிப்படுத்தின. அவள் என்னை என்ன செய்ய எண்ணி வந்தாளோ? என்மீது அவளுக்கு என்ன பகையோ? என்னால் அமைந்து படுக்க முடியவில்லை. திருமதி ஃவேர்ஃவக்ஸின் அறை சென்று அவள் துணை நாடலாம் என்று எண்ணி வெளியேறினேன். வெளியே போனபோது நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இடைவழிகளெங்கும் புகை கம்மிக் கொண் டிருந்தது. எங்கேயோ தீ மூள்கிறது என்பதில் ஐயமில்லை. நான் என் ஆடையை முகமீது இழுத்துப் போர்த்துக் கொண்டு புகையினுள் நுழைந்தேன். புகை வரும் திசைநோக்கிச் சென்றேன். புகை திரு. ராச்செஸ்டரின் அறையிலிருந்து தான் வருகிறது என்பதைப் பார்த்ததும் என் உடல் நடுங்கிற்று. கதவு திறந்து கிடந்தது. புகையின் நடுவிலேயே திரு. ராச்செஸ்டர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால், படுக்கையின் ஓரங்களி லெல்லாம் தீ கனிந்து கொண்டிருந்தது. சிந்திக்கச் சிறிதும் நேரமில்லை. நான் உடனே ஓடோடியும் சென்று என் அறையிலிருந்த வாளிகளை எடுத்து நீர் கொண்டு வந்து அவர்மீதே கொட்டினேன். அத்துடன் ‘தீ, தீ’ எழுங்கள் என்று கூவினேன். அவருடைய வழக்கமான முன்கோபமும் முரட்டுத் தனமும்தான் முதலில் என்னை வரவேற்றன. “யாரது சனியன்? என்மேல் தண்ணீர்கொட்டி என்னைச் சாகடிக்கவா பார்க் கிறீர்கள்,” என்று கூக்குரலிட்டு அவர் எழுந்தார். என்னைப் பார்த்ததும் ஒன்றும் தோன்றாமல் “என்ன இது? என் மேல் ஏன் தண்ணீரைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாய்?” என்றார். நான் ஒன்றும் மறுமொழி கூறாமல் புகையைச் சுட்டிக் காட்டினேன். “என்ன நடந்தது? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே?” என்றார். “யாரோ உங்கள் அறையில் தீ வைத்திருக்க வேண்டும்? புகையைக் கண்டு நான் ஓடிவந்து தண்ணீர் கொட்டினேன். இனி தீ பரவாது. ஆனால் தீ வைத்தது யார் என்று விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்” என்றேன். அவர் உடனே பரபரப்புடன் எழுந்து விளக்கேற்றப் போனார். நான் “சற்றுப் பொறுங்கள்” என்று கூறி உலர்ந்த ஆடை தேடிக் கொணர்ந்து, “இனி ஆடை மாற்றிக் கொண்டு வெளியே போய்ப் பாருங்கள்,” என்றேன். திரு.ராசேஸ்டர் வர நேரமாயிற்று. நான் என் அறைக்கே சென்று காத்திருந்தேன். நெடுநேரம் கழித்து அவர் வந்தார். அவர் முகம் கவலை தோய்ந்திருந்தது. “யாரோ ஒரு பேய்ச்சிரிப்புச் சிரித்ததாக நீ கூறினாய் அல்லவா?” என்றார். “ஆம்.” “இதற்கு முன் அதே சிரிப்பை எங்காவது கேட்டதுண்டா?” “உண்டு, இங்கே வேலைசெய்யும் கிரேஸ்பூல் என்ற பெண்ணின் அறையிலிருந்து அந்தச் சிரிப்பை ஒரு தடவை கேட்டேன். அவள் மீது எனக்கு ஐயம் ஏற்பட்டதுண்டு.” அவர் முகத்தில் கவலை குறைந்தது. “ஆம், ஆம்” அவளாகத்தான் இருக்க வேண்டும். அவள் விசித்திரமானவள். அடிக்கடி அறிவு தடுமாறி எனனென்னவோ செய்து விடுகிறாள்” என்றார். ‘இதுவகையில் திருமதி ஃவேர்ஃவக்ஸிடம் கூறி ஏதாவது எச்சரிப்பு செய்யலாமா’ என்றேன். “வேண்டா, இதில் நீ ஒன்றும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டா. நான் வேண்டிய ஏற்பாடு செய்து கொள்கிறேன். நீ இங்கே கண்டவற்றுள் எதனையும் யாரிடமும் இப்போதைக்குச் சொல்லாதிருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.” அவர் விருப்பத்துக்குக் காரணம் என்ன என்று நான் கேட்காமலே, அவர் கூறியபடி செய்வதாக ஒத்துக் கொண்டேன். அவர் இப்போது முதல் தடவையாக என்னை என் முழுப் பெயர் கூறி அழைத்து, “ஜேன் அயர், நீ எப்போதும் எனக்கு இடரில் உதவுகிறாய். இன்று என் உயிரையே காப்பாற்றினாய். நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.” என்று கூறி அன்பாதரவுடன் தம் கையை நீட்டினார். நான் தந்த கைக்கு அவர் முத்தமிட்டு என் முகத்தை உற்று நோக்கினார். அவர் நன்றி காட்டியபோது நான் வெட்கமடைந்தேன். “நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லையே; நல்ல குடும்பத்தில் இடம்பெறும் எவரும் செய்வதைத்தான் நான் செய்தேன்.” என்றேன். ஆம். ஆனால் சரிவர முழுமனதுடனும் திறமையுடனும் நீ செய்தால் நன்மை அடைபவன் நான்; அதற்கு நன்றி காட்டுவது என் கடமை. ஆனால் என் நன்றி சொல்லளவில் நில்லாது. வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்தில் உனக்கு ஓர் இடமுண்டு, என்று கூறிவிட்டு அவர் விடைபெற்று அகன்றார். 7. விருந்தாளிகள் இதற்குப்பின் நாளாக, திரு. ராச்செஸ்டரை நான் காணவில்லை. ஆனால், கிரேஸ் பூலை நான் அடிக்கடி கண்டேன். புகை கண்ட அன்றுமுதல் நான் அவளைப் பற்றிப் பலப்பல எண்ணமிட்டு வந்தேன். ஆனால், அவள் என்னிடம் எதுவும் நடவாதது போலவே பழகினாள். இஃது எனக்கு வியப் பாயிருந்தது. திரு. ராச்செஸ்டரை அழிக்கச் சதி செய்பவள் எவ்வாறு சூதுவாதற்றவள் போல என்னிடம் அளவளாவ முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. அவள் என்னிடம் பேசிய பேச்சிலிருந்து திரு. ராச்செஸ்டர் தார்ன்ஹில் இல்லத்தில் இல்லையென்றும், திரும்பிவர இரண்டு மூன்று நாள் செல்லுமென்றும் அறிந்தேன். அவர் சென்ற இடம் மில் கோட்டிலிருந்து பத்துக் கல் தொலைவி லிருந்த திரு. எஃட்டன் இல்லம் ஆகும். அவ்விடத்தில் நடக்கும் விருந்தில் ஸர் ஜார்ஜ்லின், கர்னல் டென்ட் முதலிய பெரு மக்களுடன் இங்கிரம் பெருமகனார் தம் புதல்வி செல்வி பிளான்சி பெருமாட்டியுடன் கலந்து கொள்ளவிருந்தார். செல்வி பிளான்சியுடன் கலந்து பேசுவதற்காகவே திரு. ராச்செஸ்டர் அங்கே செல்வதாகக் கேள்விப்பட்டேன். தொடர்ந்து இரண்டு நாட்களாகத் திரு. ராச்செஸ்டர் தார்ன்ஹில் இல்லத்தில் இல்லாததால், அவ்வில்லம் வெற்றில்லமாக எனக்குக் காட்சியளித்தது. அவ்வில்லத்தில் எனக்கு ஏற்பட்டிருந்ததாக நான் கருதிய கவர்ச்சியில் ஒரு பெரும்பகுதி அவரே என்பதை நான் இப்போதுதான் உணரத் தொடங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளம் அவரை நாடிச் சென்றது காண, எனக்கே என்மீது சீற்றம் தோற்றிற்று. நான் எங்கே? செல்வி பிளான்சி சீமாட்டி எங்கே? அத்தகைய சீமாட்டியை நாடும் ஒருவருடன் நான் நட்புடன் பழகுவது கூடத் தகுதியற்றது என்று என் அறிவு என்னை இடித்துரைத்தது. நாட்கள் இரண்டு மூன்றல்ல, இரண்டு வாரங்கள் இவ்வாறு சென்றன. நான் என் உள்ளத்தை அடக்கிக் கட்டுக்குள் கொண்டுவர அவ்வாரங்கள் போதியன என்றுதான் தோன்றின. ஆனால், என்னிடம் முன்னுள்ள எழுச்சி இல்லை என்று திருமதி ஃவேர்ஃவக்ஸ் கண்டு கூறியதும், நான் திடுக்கிட்டேன். திரு. ராச்செஸ்டர் திருமணம் செய்து கொண்டால் எனக்கு மீண்டும் நல்ல இடத்தில் வேலை கிடைக்கவேண்டுமே என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறி வெளிக்குச் சமாளித்துக் கொண்டேன். ஒரு நாள் வீட்டுத் தலைவரிடமிருந்து கடிதம் வந்தது. மறுநாளே திரு. ராச்செஸ்டர் தம் நண்பர் சிலருடன் வருவதாக அதில் எழுதியிருந்தார். நண்பர்கள் யார் யார் என்று அதில் குறிப்பிடவில்லை. ஆனால் செல்வி பிளான்சி அதில் ஒருத்தியாயிருப்பது உறுதி என்று யாவரும் முடிவு கட்டினர். விருந்தினர்க்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைந்து நடைபெற்றன. விருந்துக் குழுவினர் அனைவரும் குதிரையேறியே வந்தனர். எதிர்பார்த்தபடி திரு. ராச்செஸ்டரும் செல்வி பிளான்சியும் எல்லாருக்கும் முன்னதாகவே வந்திறங்கினார்கள். செல்வி பிளான்சியின் பேரழகைக் கண்டு அடேல் கூடக் குதித்துப் புகழ்பாடத் தொடங்கினாள். திருமதி ஃவேர்ஃவக்ஸ் உட்பட மற்றவர்களோ அழகுத் தெய்வத்தைத் தொலைவி லிருந்து பார்ப்பது போல் பார்த்தார்கள். தார்ன்ஹில் இல்லத்தின் எதிர்பாரா விருந்தினரான இந்த அழகுத் தெய்வத்துடன் என்னை நான் சரிநிகராக வைத்துப் பார்த்ததற்காக நான் மிகவும் வெட்கமடைந்தேன். இதுவரை மாலை வேளைகளில் திரு. ராச்செஸ்டருடன் தேநீர் அருந்தச் செல்வது போல இப்போது செல்ல நான் துணிய வில்லை. அடேலை அனுப்பிவிட்டுப் பின் தங்க எண்ணினேன். அடேலுடன் நானும் வரும்படி திருமதி ஃவேஃவக்ஸ் மூலம் உத்தரவு வந்த பின்பும், நான் அங்கே சென்று தொலைவில் இருந்தேனேயன்றி அருகே செல்லவில்லை. விருந்தின் போது திரு. ராச்செஸ்டரைப் பற்றி எண்ணா திருக்க என்னாலானமட்டும் முயன்றேன். ஆனால் அவர் தொலைவிலிருந்தாலும் என் எண்ணம் முழுவதும் அவர் திசையிலேயே இருந்தது. எப்படியும் அவ்விடத்தில் இருந்து அவர் பற்றிய சிந்தனைகளை வளர்க்காமல் நழுவிப் போய்விட நான் வழி தேடிக் கொண்டிருந்தேன். செல்வி பிளான்சி இசை மேளத்தைக் கையாடிய வண்ணம் திரு. ராச்செஸ்டரைப் பாட அழைத்தபோது அத்தகைய தறுவாய் எனக்குக் கிடைத்தது. ஆனால் என்னால் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் பாடியதை இதுவரை நான் கேட்டது கிடையாது. அதைக் கேட்கும் ஆர்வம் என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், அவர் நெடுநேரம் பாடவில்லை. அதை நிறுத்திவிட்டு அவர் வெளியேறினார். இப்போதாவது சென்று விடலாமென்று கருதி நான் அருகிலிருந்த கதவு வழியாக வெளியேறிக் கூடத்தைக் கடந்தேன். திரு. ராச்செஸ்டரைவிட்டுச் செல்லவே நான் வெளி யேறினேன். ஆனால், கூட்டத்தில் அவரே எனக்கெதிராக வந்தார். செல்வி பிளான்சி தோழமை இருக்கும்போது இப்போது அவர் என்னுடன் மிகுதி நேரம்பேசமாட்டார் என்றும், விரைந்து அவளிடமே செல்லத் துடிப்பார் என்றும் நான் எதிர்பார்த்திருந்தேன். அதற்குமாறாக அவர் என்னுடன் ஆர அமர நின்று பேசினார். “நீ ஏன் முன்போல என் அறைக்கு இப்போது வருவதில்லை?’ என்று அவர் கேட்டார். நான் இதற்கு மறுமொழி கூறவில்லை. அதே கேள்வியை என் மனம் உள்ளூரத் திருப்பிக் கேட்டுக் கொண்டது. “நீ ஏன் தேநீர் அருந்தும் போது கூட விருந்தினர்களுடன் சரிநிகராக வந்து பழகாமலிருக்கிறாய்?” என்று மீண்டும் கேட்டார். இதற்கும் என்னால் மறுமொழி கூற முடியவில்லை. ஆனால், அவர் விருந்தினரை உயர்வாகவும் என்னை வேறு வகையாகவும் நினைக்கவில்லை என்பது இப்போது எனக்குத் தெள்ளத் தெளிய விளங்கிற்று. ஆனால், ஒரு விட்டாசிரியைக்கு அவ்வாறு பழகும் உரிமை கிடையாது என்பதை நான் நன்கு அறிவேன். என் உள்ளம் திரு. ராச்செஸ்டரிடம் மதிப்பு, நட்பு ஆகிய இரு எல்லைகளையும் தாண்டிவிட்டது. அதை நான் கட்டுப்படுத்தியே வந்தேன். ஆனால், அவர் உள்ளத்தின் நிலையை என் உள்ளத்துடன் இணைத்துப் பார்க்கவும் நான் இதுவரை கனவு காணவில்லை. ஒரு வீட்டாசிரியையிடம் காட்டும் மதிப்பை விட எனக்கு உயர் மதிப்புத் தந்தார் என்று மட்டுமே எண்ணியிருந்தேன். இப்போது அவர் உள்ளமும் அம் மதிப்பெல்லை தாண்டி நட்பெல்லையில் நடமாடுகிறது என்று கண்டேன். இது எனக்கு என் அகத் துன்பத்திடையே பெருத்த ஆறுதல் தந்தது என்பதை என்னால் மறுக்க முடியாது. ஆனாலும் நட்புக் கூட என் உள்ளத்தின் போக்குக்கு மிகவும் இடையூறானது என்று நான் கருதினேன். அவர் நட்பு வலையிலிருந்து கூடியமட்டும் தொலைவில் விலகியிருக்கத் திட்டமிட்டேன். “நீ ஏன் முகவாட்டத்துடனிருக்கிறாய்? விருந்தினர் இருக்கும்வரை நான் அவர்களுடனேயே இருக்க வேண்டி யிருக்கிறது. ஆனாலும், எங்களுடன் நீ வந்து கலந்து கொண்டால் நான் உன்னை அவ்வப்போது காண வழியிருக்கும். நீ தங்குதடையில்லாமல் வரவேண்டுமென்று தான் நான் விரும்புகிறேன். உன்னை எதிர்பார்ப்பேன். ஏமாற்றிவிடாதே வருகிறேன்.” என்று கூறி அவர் ஏதோ அவசர வேலையை எண்ணிப் போய்விட்டார். நட்பு வலையிலிருந்து விலக நான் இட்ட திட்டம் இங்ஙனம் விரைவில் சாய்ந்தது. அவர் நட்புத் தாண்டி என்னிடம் பற்றுக் கொண்டு விட்டார் என்பது இப்போது தெரியவந்தது. செல்வி பிளான்சியை உள்ளடக்கி விருந்தினர் அனைவருடனும் அவர் வேண்டா வெறுப்பாகத்தான் கலந்து கொள்வதாகக் கூறிவிட்டார். ஆகவே, செல்வி பிளான்சியிடம் அவருக்குப் பாசம் இல்லை. ஆயினும் விருந்தினருக்காக இவ்வளவு பரிபவர், அவள் உயர் நிலையையும் பணத்தையும் எண்ணி அவளை மணக்க உடன்பட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று. என் ஐயங்களையெல்லாம் அகற்றி என்னை அவருடன் பிணைக்கத்தக்க வகையில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. 8. மற்றொரு தாக்குதல் ஒரு நாள் திரு. ராச்செஸ்டர் வெளியே போயிருந்தார். அப்போது யாரோ ஒருவர் அவரை நாடி வந்தார். நான் அவரை ஓர் அறையில் காத்திருக்க வைத்துவிட்டுத் திரு. ராச்செஸ்டர் வந்ததும் செய்தி தெரிவித்தேன். “அவர் யாரென்று கேட்டாயா? எங்கிருந்து வந்தாராம்?” என்று அவர் கேட்டார். “திரு. மேஸன் என்று பெயர் கூறியதாக நினைவு, ஜமைக்காத் தீவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலிருந்து வந்திருக்கிறாராம்!” என்றேன். நான் இதைக் கூறியவுடன் அவர் முகம் சுண்டிற்று. “ஆ! மேஸனா, மேலை இந்தியத் தீவிலிருந்தா?” என்று கூறி என் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தார். அத்துடன் “ஜேன்! இப்போது ஒரு பேரிடரில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்வது?” என்று அங்கலாய்த்தார். அவர் கையில்தான் இன்னும் என் கை இருந்தது. அவர் என்னை என் தனிப்பெயரால் ‘ஜேன்’ என்று அழைத்தார். அதையும் நான் கவனிக்கவில்லை. கவனித்தாலும் அதில் எனக்கு என்ன உணர்ச்சி வந்திருக்குமென்று என்னால் கூறமுடியாது. அப்போதிருந்த என் மனநிலை முற்றும் அவர் கவலையைக் கண்டு கவலை கொண்டு அதில் பங்கு கொள்வதாக மட்டுமே, அவருக்கு ஆறுதல் தரத் துடிப்பதாக மட்டுமே இருந்தது. ‘நான் இதில் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?” என்று நான் கேட்டேன்! அன்புடன் ஆதரவுடனும், அவர் என்னைப் பிடித்து இழுத்துத் தம்மருகில் இருத்திக் கொண்டு, “எனக்கு உதவி வேண்டும் போது, நான் உன்னிடம் கட்டாயம் கோருகிறேன். உண்மையைக் கூறுகிறேன். ஜேன், நீ இப்படிக் கேட்டதே என் கவலையில் பாதியைப் போக்கிவிட்டது, இந்தத் தொல்லை பிடித்த வாழ்வில் இருப்பதைவிட, அன்பு உள்ளம் படைத்த உன்னுடன், ஏதேனும் ஒதுங்கிய தீவில், ஒரு நாட்டுப் புறத்தில் ஒரு மூலையில் இருந்தால் எவ்வளவு நலமாயி ருந்திருக்கும்,” என்றார். அவர் பேச்சினாலும் தோற்றத்தினாலும் செயலினாலும் என் வகையில் அவர் உணர்ச்சிகள் எவ்வாறிருந்தன என்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனால், அதே சமயம் என் மனமும் கிட்டத்தட்ட அதே நிலையில் இருந்ததால், அவர் போக்கைத் தடுக்கவோ, ஏற்கவோ செய்யாமல் வாளா இருந்தேன். அத்துடன் அவரைப் பிடித்த கவலையை எப்படி அகற்றுவது என்பதைத் தவிர வேறு எந்த எண்ணத்துக்கும் என் உள்ளத்தில் இடமில்லாதிருந்தது. அமைதியான நேரமாயிருந்தால், இன் னொரு பெண்ணை மணக்க இருக்கும் ஒருவர் என்னிடம் இப்படி நடந்து கொள்ள விட்டிருக்கமாட்டேன். “தீவில் இருக்கும் கனவு இருக்கட்டும். இப்போது கனவு காணும் நேரமில்லை. நனவிலேயே விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். நான் எப்போதும் உங்களுக்கு உதவ ஒருக்கமாக இருப்பேன்.” என்று கூறி நான் என் அறைக்குச் சென்றேன். நான் மீண்டும் அவரை அன்று காண நேரவில்லை. ஆனால் நள்ளிரவில் நன்கு ஒரு கூக்குரல் கேட்டு எழுந்தேன். எனக்கு நேரே இருந்த அறையிலிருந்து, “ஐயோ கொலை, கொலை! வாருங்கள் வாருங்கள்,” என்று ஒரு குரல் கேட்டது. அது திரு. ராச்செஸ்டர் குரலன்று. மேலும் அது ராச் செஸ்டரையே பெயர் கூறி உதவிக்கழைத்தது. நான் பரப்பரப்புடன் ஆடையுடுத்தி வெளியே வந்தேன். நான் கேட்ட குரலை எத்தனையோ பேர் கேட்டிருக்க வேண்டும். பல கதவுகள் திறந்தன. மனிதர் அங்கும் இங்கும் ஓடினர்; கேள்விகள் எங்கும் பரந்தன. “என்ன அது?” -தீயா பற்றி விட்டது? - கொலை, யார் யாரை?” ஆனால், மறுமொழி கூறுவார் இல்லை. யாரோ ஒருவர் குரல், “ராச்செஸ்டர் எங்கே?” என்று கேட்டது. எதிர்ப்புறமிருந்து “இதோ” என்ற குரலுடன் திரு. ராச்செஸ்டர் எங்களை அணுகினார். “என்ன செய்தி? என்ன நடந்தது” என்றனர், பலர். “ஒன்றுமில்லை. சந்தடிதான் பெரிதாயிற்று. நான் வெட்கப்படுகிறேன். ஒரு வேலைக்காரி கெட்ட கனாக் கண்டு அலறியிருக்கிறாள். அவள் நோய்ப்பட்டவள். இன்னும் அமைதியடையவில்லை; அருள் கூர்ந்து எல்லாரும் கலைந்து செல்லும்படி வேண்டிக் கொள்கிறேன். ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும்.” என்றார் அவர். இன்னல் ஏதுமில்லை என்று கண்டதே எல்லாரும் வந்த வழியே கலைந்து சென்றார்கள். நானும் என் அறை சென்று ஓய்வுற்றேன். ஆனால், சற்று நேரத்துக்குள் தெரிந்தவர் தட்டுவது போலக் கதவு மெல்லத் தட்டப்பட்டது. “திரு.ராச்செஸ்டர் தானே!” என்றேன். “ஆம், படுக்கையைவிட்டு எழுந்துதானே இருக்கிறாய்?” “ஆம்.” “சரி. சந்தடி செய்யாமல் என் பின்னே வா!” மேல்மாடியேறி அதன் கோடிவரை அவர் என்னை இட்டுக்கொண்டு சென்றார். வழியில், “குருதி கண்டு நீ கலங்கமாட்டாயே!” என்று கேட்டார். “கலங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், உண்மையில் இதுவரை அத்தகைய காட்சியைப் பார்க்க நேர்ந்ததில்லை. ஏன்?” என்றேன். “பின்னால் தெரியும். இன்று உன் மன உரத்தையே நான் நம்பி வேலைசெய்ய வேண்டியிருக்கிறது,” என்றார். அவர் சந்தடி செய்யாமல் ஓர் அறைக்கதவைத் திறந்தார் அதுமுன் கிரேஸ்பூலை நான் கண்ட அறைக்கு அடுத்த அறையே. அறைக்குள் திரு. மேஸனைக் கண்டேன. அவர் படுக்கையில் கிடந்தார். அவர் கைகளிலும், முகத்திலும் குருதி சேர்ந்த கட்டுக்கள் இருந்தன. நான் திடுக்கிட்டேன். திரு. ராச்செஸ்டர் வாயைப் பொத்தி எச்சரிக்கை செய்ததுடன் என்னைத் தனியாய் அழைத்து, “அவரிடம் எதுவும் பேசக் கூடாது. அவரையும் பேச விடக்கூடாது. நான் மருத்துவரை அழைத்து வரும்வரை நீ இந்த அறையில் அவருடன் அடைபட்டுக் கிடக்க வேண்டும்” என்றார். அவர் கலவரமே எனக்கு நெஞ்சுரம் தந்தது. நான் ‘சரி’ என்று தலையாட்டினேன். அவர் என்னை உள்ளேவிட்டு அறையை வெளியேயிருந்து பூட்டிக் கொண்டு சென்றார். ராச்செஸ்டர் நாட்கணக்கில் திரும்பிவராதது போல் எனக்குத் தோன்றிற்று. ஆனால், உண்மையில் அவர் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே வந்துவிட்டார். அந்த அறைக்கும் கிரேஸ்பூலின் அறைக்கும் இடையே ஒரு சிறு கதவு இருந்தது. அதன் பின்புற மிருந்து கட்டுண்ட புலிபோல யாரோ நடக்கும் அரவம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்துடன் அவ்வப் போது நான் முன்பு கேட்டிருந்த அதே பேய்ச் சிரிப்பும் செவிப்புலனுக்கு எட்டிற்று. ‘கிரேஸ்பூல்தான் மற்றொருமுறை ராச்செஸ்டரைத் தாக்க எண்ணி ஆளடையாளம் தவறித் திரு. மேஸனைத் தாக்கி இருக்க வேண்டும்’ என்று எண்ணினேன். திரு. ராச்செஸ்டர் வந்ததும் நான் அகலநின்றேன். மருத்துவர் காயங்களுக்கு மருந்திட்டு, உடல் தெம்புவர ஒன்றிரண்டு ஊசிகள் இட்டார். திரு. மேஸன் எழுந்திருந்தாலும் தன் உயிருக்கு மிகவும் அஞ்சியதாகத் தோன்றிற்று, ‘நான் பிழைக்கப் போகிறேனா?” என்று கேட்டார். மருத்துவர். “அது பற்றி அச்சமில்லை. ஆனால் காயம் ஆற நாட்செல்லும். கையில் கத்தியின் வெட்டு அல்லாமல், சிதைவு வேறும் ஏற்பட்டிருக்கிறது.” என்றார். நான் ஒரு குத்துக்குமேல் குத்துவிடாமல் “கையைப் பிடித்துக் கொண்டபோது, அவள் அதே காயத்தின் மீது வன்மையாகக் கடித்துவிட்டாள். பல்லின் நச்சுத்திறம் என்ன செய்யுமோ என்று அஞ்சுகிறேன்.” என்றார் திரு. மேஸன். “இனி அச்சமில்லை. மருந்து அதைத் தடுத்துவிடும். நீங்கள் நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றர் மருத்துவர். திரு. ராச்செஸ்டர் திரு. மேஸனை வண்டியிலேற்றி, “நீர் அமெரிக்கா சென்று இதையெல்லாம் விரைவில் மறந்துவிடுவீர்; இப்போதே கப்பலுக்கு நேரமாகிவிட்டது. போய் வாருங்கள்,” என்று அனுப்பினார். அவருடன் சென்ற நண்பர் காட்டரிடமும் அவரை நன்கு கவனித்துக் கப்பலேற்றும்படி கூறினார். திரு.மேஸன் போய்ச் சில நாட்களுக்குள் எப்படியோ ராச்செஸ்டர் உள்ளத்தில் நானும், என் உள்ளத்தில் ராச்செஸ்டரும் நீக்கமற நிறைந்து இடம் பெற்று விட்டோம். “இந்த இருளடர்ந்த வீட்டில் அடைபட்டுக் கிடப்பானேன்? சிறிதுநேரம் தோட்டத்தில் சென்று இருந்து வரலாம் வா” என்று அவர் ஒருநாள் அழைத்தார். “இதை ஏன் இருளடைந்த வீடு என்கிறீர்கள்? இஃது அழகான இடமகன்ற மாளிகையாயிற்றே, என்றேன். அவர், “நீ இதன் வெளிப்புறத்தையே காண்கிறாய். அது என் வாழ்வை எவ்வளவு கருக்கிற்று என்பதை நீ அறியமாட்டாய். உண்மையில் அன்று என் படுக்கையில் எழுந்த தீ இந்த வீட்டைச் சாம்பலாக்கியிருக்கக் கூடுமானால்கூட, நான் வருத்தப்பட்டி ருக்கமாட்டேன்” என்றார். இருவரும் தோட்டத்தின் பக்கமாகப் பேசிக் கொண்டே சென்றோம். அவர் கிரேஸ்பூலின் தொல்லைகளை எண்ணியே வீட்டை வெறுக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று. “கிரேஸ்பூலை இன்னும் வீட்டில் ஏன் வைத்துக் கொள்ள வேண்டும். அனுப்பிவிட்டுத் தொல்லையில்லாமல் இருப்பது தானே?” என்றேன். “கிரேஸ்பூலை அனுப்புவதனால் வெளித்தொல்லை தான் தீரும். தொல்லை இங்கே என் நெஞ்சில் இருக்கிறது.” என்றார் அவர். அவருக்குச் செல்வி இங்கிரம் மீது காதல் இல்லை என்பதை நான் சில நாளாக அறிந்து கொண்டிருந்தேன். தம் குடும்ப மதிப்பை உயர்த்திக் கொள்ளவே அவளை மணம் செய்து கொள்வதாக அவர் எண்ணியிருக்க வேண்டும். எனவே ‘நெஞ்சில் தொல்லை’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் மனம் இதற்குள் அவரிடம் முழுதும் ஈடுபட்டுவிட்டதானாலும், அவர் எந்த அளவு என்னை நாடினார் என்பதனை நான் அறிய முடிய வில்லை. எப்படியும் செல்வி இங்கிராமின் திருமணத்தைத் தடுக்குமளவு அவர் உள்ளம் என்னிட பற்றுக் கொண்டிருக்க முடியாது! ஆகவே, அவருடன் வீணாகப் பழகித் தன் மதிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று என் அறிவு கூறிற்று. ஆனால், நெஞ்சோ தொலைவிலிருந்து அவரைக் காணும் இந்த வாய்ப்பையாவது உதறாதிருக்கத்தான் தூண்டிற்று. தோட்டத்தில் அவர் அன்று ஏதேதோ சொன்னார்; அதில் பெரும்பகுதி அவர் முதிரா இளமைப் பருவத் தவறுகளைப் பற்றியது. வெளிநாட்டிலிருக்கும்போது அவர் செய்த தவறுகள் அவரை விடாமல் பற்றித் துன்புறுத்தின புதிதாக வாழத் தொடங்குவதற்கு இவை தடையாயிருந்தன. ஒன்று அவர் அந்த வாழ்வுக்கு அடிமைப்பட வேண்டும்; அல்லது துணிந்து அதை உதறித்தள்ளி நெஞ்சுக்குகந்த வாழ்வில் இறங்கிப் பழம் பிழைகளை மறக்கடிக்க வேண்டும். இதில் எது செய்வது என்பதுபற்றி அவர் என் அறிவுரையைக் கேட்டார்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் கூறவும் முடியவில்லை. அவர் மீண்டும் வற்புறுத்தி என் கருத்துரை கோரினார். நான், “ஐயா! என்னைவிட அனுபவமிக்க தாங்கள் அறியாதபோது, நான் என்ன கூறமுடியும்? ஆனால் எல்லாம் அறிந்த ஒருவர் இருக்கிறார்; அவரிடம் உங்கள் வாழ்வை ஒப்படையுங்கள். அவர் வழிகாட்டுவார்,” என்று மேலே சுட்டிக் காட்டினேன். “ஆம், ஆனால் அவர்தாம் உன்னை அனுப்பியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார். என் கைகளை அவர் பற்றி ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அழுத்தினார். ஏதோ, என்னவோ என்று பீதியில் நான் சட்டென எழுந்து சென்றேன். தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தபோது அவர் என்னையே நோக்கி நின்றார். 9. திருமதி ரீடின் முடிவு கேட்ஸ்ஹெட்டிலிருந்து இப்போது எனக்குக் கடிதம் வந்தது. அத்தை திருமதி ரீட் அதை எழுதியிருந்தாள். “என் உடல்நிலை முற்றிலும் தளர்ந்து விட்டது. நீண்ட நாளாய் நான் பாயும் படுக்கையுமாக இருந்து இப்போது சாவின் வாயிலை அணுகிவிட்டேன். இறக்குமுன் உன்னிடம் தனித்துச் சில முக்கியமான செய்திகள் கூற விரும்புகிறேன். ஆகவே ஒரு தடவை வந்து போகும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவள் எழுதியிருந்தாள். நான் ஒருவாரம் போய் வரலாமென்று திரு. ராச்செஸ்டர் இணக்கம் அளித்தார். அத்துடன் நான் துணையாக யாரைக் கூட்டிக்செல்ல விரும்புகிறேன் என்றும் கேட்டார். “என் அத்தை தன் பணியாளை அனுப்பியிருக்கிறார்கள்,” என்றேன். ‘சரி, செலவுக்குப் பணம் வேண்டுமே. நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?” “ஐந்து பென்னிகள்,” என்று எடுத்துக் காட்டினேன். அவர் ஒரு நாணயச்சீட்டை (நோட்டை) என்னிடம் நீட்டினார். அஃது ஐம்பதுபொன் சீட்டு. அவர் என் கணக்கில் தர வேண்டியது பதினைந்து பொன் தான். “என்னிடம் சில்லறை இல்லையே!” என்றேன் நான். “அப்படியா, அதுவும் சரிதான். உன்னிடம் முழுத் தொகையும் கொடுப்பதும் தப்புத்தான். ஐம்பது பொன்னைச் செலவு செய்து கொண்டு நீ மூன்று மாதம் இருந்தாலும், இருந்துவிடுவாய்! ஆகவே பத்து எடுத்துச் செல்.” “சரி, அப்படியானால் நீங்கள் இன்னும் எனக்கு ஐம்பது பொன் தரவேண்டும்!” “அதைத் திரும்பி வந்தால்தான் பெறலாம். அஃது என்னிடமே இருக்கட்டும்!” அவர் போக இருந்தார். நான் திரும்பவும் அழைத்து “எனக்கு இன்னும் ஒரு செய்தி பேச வேண்டியிருக்கிறது,” என்றேன். “அவ்வளவு முக்கியமா? அது என்ன?” “நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்!” “ஆம். அதனாலென்ன!” “அடேல் இனிப் பள்ளிக்கூடம் செல்லவேண்டி வரலாம். ஆகவே, நான் வேறு எங்காவது வேலை பார்க்கவேண்டும்.” ஒரு சில நொடிகள் அவர் என்னை ஏறிட்டுப் பார்த்து விட்டு, “உன் வேலை வகையில் நீ முயற்சி எதுவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அந்தப் பொறுப்பு முழுவதையும் என்னிடமே விட்டு விடும்படி கோருகிறேன்.” ‘அப்படியானால் மகிழ்ச்சியே!’ “நீ நாளையா புறப்படுகிறாய்?” ‘ஆம்’ ‘சரி, போய்வா, பார்ப்போம்!’ திரு. ராச்செஸ்டரின் இளமைக் காலத்தின் முற்பகுதி பல இன்னல்களுக்கு இடமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை நான் எண்ணிக் கொண்டே சென்றேன். ஆனால், கேட்ஸ் ஹெட்டை அணுகுந் தோறும் என் இளமையின் முற்பகுதியும் அதைவிட உயர்ந்ததன்று என்பது நினைவுக்கு வந்தது. ராச்செஸ்டர் வீட்டு வாழ்வில் அன்பு இல்லை. கேட்ஸ் ஹெட்டில் என் தொடக்க வாழ்வில் அதன் நிழல் கூடக் கிடையாது. அந்த அளவு இரண்டிலும் ஒற்றுமையே. அவர் தாம் வாழ்வை விட்டு ஓடமுடியவில்லை என்கிறார்! நான் ஓடிவந்து விட்டேன். இதுதான் இரண்டினிடையிலும் உள்ள வேற்றுமை. என் உள்ளம் இவ்வாறு ராச்செஸ்டர் வாழ்வையும், என் வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கோட்டைகள் கட்டிற்று. என் அத்தை உண்மையிலேயே சாவுடன் போராடிக் கொண்டுதான் இருந்தாள். அழைப்பு அனுப்பும் போதிருந்ததை விட நிலைமை மோசமாகி விட்டதால், அவள் என்னை அடையாளங் காணவே இல்லை. என்னை ஆதரித்துக் கல்வி புகட்டிய பணிமாது பெஸ்ஸிதான் என்னை வரவேற்றுப் பழைய நாட் கதைகள் கூறிப் பொழுது போக்கினாள். ஆனால், ஒன்றிரண்டு நாட்களில் திருமதி ரீடின் பார்வையில் சிறிது தெளிவு கண்டது. ஒருநாள் அவள் என்னை உற்று நோக்கினாள். “ஜேன் அயர்தானே!” என்றாள் மெதுவாக. “ஆம். நீங்கள் அழைத்தபடி வந்திருக்கிறேன்,” என்றேன். அவள் நோயுற்ற கண்கள் மிரண்டு மிரண்டு சுற்று முற்றும் பார்த்தன. “அறையில் செவிலியோ வேறு யாருமோ இல்லையே!” என்றாள். இல்லை. நாம் இருவருமே இருக்கிறோம்.” என்றேன். “உன்னைக் கண்டு பேசுவதற்காகத்தான் என் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நான் உனக்கு இரண்டு தடவை எவரும் மன்னிக்கமுடியாத தீங்கு செய்து விட்டேன். இறக்கும் இத்தறுவாயில் மன்னிப்புப் பெற்றாலல்லாமல் என் ஆவி அமைதியுடன் பிரியாது. ஆகவேதான் அவசர அவசரமாக உனக்கு அழைப்பு விடுத்தேன். தீங்குகளைச் சொன்னால் நீ மன்னிப்பது அருமை. ஆனாலும் நான் சொன்னால்தான் என் மனம் ஆறும். முதல் தீங்கு உன்னை மனமார ஆதரிப்பதாக என் கணவனுக்கு நான் அளித்த உறுதியை நான் ஒரு சிறிதும் பின்பற்றாததே. இதுவே பெருங்கொடுமை என்று இப்போது எனக்குத் தெரிகிறது. ஆனால் இரண்டாவது செய்த தீங்கு அதை ஒரு மின்மினியாக்க வல்லது. அதை.... அதை... அந்தோ; அதை என்னால் சொல்லக்கூட முடியவில்லை.... ஆனால் அதோ என் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார். அஃது உன் பெரிய தந்தை - என் அண்ணன் எழுதியது. அதை வாசித்துப் பார் எல்லாம் தெரியும்.” என்றாள். அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை. சிறிது சாய்ந்து படுத்தாள். நான் சென்று கடிதத்தைப் படித்தேன். அது வருமாறு: என் தம்பி மகள் ஜேன் அயர் இருக்குமிடமும் முகவரியும் அறிந்து எனக்குக் கூறும்படி வேண்டுகிறேன். அவளை நான் என்னிடம் அழைத்து மடீராவில் என்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு உடல் தளர்ந்து விட்டது. குழந்தையுமில்லை. ஆகவே நான் அவளுக்கு என் செல்வம் முழுவதையும் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன். தங்கள் அன்புள்ள ஜேம்ஸ் அயர் கடிதத்தின் தேதியிலிருந்து அது மூன்றாண்டுகளுக்குமுன் எழுதப்பட்டதாகத் தெரிந்தது. “இதை இதற்குமுன் என்னிடம் ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டேன். “உன்னை நான் வேம்பாக வெறுத்ததனால் லோவுட்டுக்கு உன்னை அனுப்பினேன். அங்கிருந்து உயர்நிலைக்கு நீ சென்று வாழ நான் விரும்பவில்லை. அத்துடன், போகும்போது... நீ என்னை வெறுத்துப் பேசியதையும் என்னால் மறக்க முடியவில்லை.” “நான் செய்தது தவறு என்று இப்போது உணர்கிறேன். ஆனால் அன்று மனமாரத்தான் செய்தேன். இப்போது உன்னிடம் மன்னிப்புப் பெறுவது முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடிய வில்லை,” என்றாள் திருமதி ரீட். என்னை அவள் வெறுத்தது மன்னிக்கமுடியாத தவறு என்பதை நான் உணர்வேன். உதவியற்ற நிலையில் அவள் என்னிடம் கொடுமை காட்டினாள். ஆனால் இன்று அவள் உதவியற்ற நிலையில்தான் இருக்கிறாள். அவளிடம் கடுமை காட்ட என்மனம் விரும்பவில்லை. ஆகவே, “உங்களை அன்று வெறுத்தேன். இன்று வெறுக்கக் காரணமில்லை. நீங்கள் இன்று என்னை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, என்னளவில் நான் உங்களை மனமார மன்னிக்கத் தடையில்லை. இனி, கடவுளிடம் மன்னிப்புக் கோருங்கள். அவரும் உங்களை மன்னிக்கும்படி நான் பணிவுடன் வேண்டுகிறேன்.” என்றேன். அவள் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் வருத்தத்தின் நிழலுருவுடன் போராடின. இறப்பவர் நல்லெண்ணத்தின் எழிலொளி நெற்றியில் படர்ந்தது. அவள் அமைதியுடன் கண்மூடினாள். 10. திருமண ஏற்பாடுகளும் பேச்சும் நான் கேட்ஸ்ஹெட்டில் எப்படியோ இன்று, நாளை, இவ்வாரம், அடுத்த வாரம் என்று ஒரு மாதம் தங்க வேண்டியதாயிற்று. அதற்கிடையே எனக்குத் திருமதி ஃவேர் ஃவக்ஸிடமிருந்து கடிதம் வந்தது. அதில் திரு. ராச்செஸ்டர் லண்டன் சென்றிருப்பதாகவும், அவர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஒட்டியே போயிருப்பதாகவும் எழுதியி ருந்தாள். செல்வி பிளான்சியை அவர் திருமணம் செய்ய விரும்புவதாக முன்பே என்னிடம் கூறியிருந்ததால், பெண் யார் என்று அவளும் எனக்கு எழுதவில்லை. நானும் வேறு எண்ணத்தக்க தனிக்காரணம் இல்லாததால் அவ்வாறே நினைத்தேன். என் மனத்தில் அவரைப் பற்றிக் கொண்ட பாசமும் அவர் மீது சினத்தையும் என்மீது வெறுப்பையும் தூண்டின. ஆனால், இந்நிலை நீடித்திருக்கவில்லை. அவர் திருமணம் செய்தால் நான் தார்ன்ஹில்லை விட்டுச் செல்ல வேண்டுமே என்ற கவலைதான் எனக்கு இருந்தது. ஒரு மாதத்துக்குப் பின் நான் தார்ன்ஹில்லுக்குச் சென்றபோதும், ஒரு சிலநாள் தங்குவதற்குச் செல்வதாகத்தான் சென்றேன். ஆனால், என்னைக் கண்டதும் அடேல் குதித்த குதி அவளுக்கு என்னிடமிருந்த அளவுகடந்த விருப்பத்தைத் தெள்ளத் தெளியக் காட்டிற்று. தார்ன்ஹில்லில் வேலைக்காரர் எவரும் என்னை ஓர் அயலாளாகக் கருதவில்லை என்பதை அவர்கள் என்னை வரவேற்கும் ஆர்வத்தில் கண்டேன். திருமதி ஃவேர்ஃவக்ஸின் சுருக்கு விழுந்த முகம் கூடப் புன்முறுவலால் மலர்ந்தது. இத்தனை அன்பும் ஆர்வமும் கலந்த ஓர் இல்லத்தி லிருந்து திரு. ராச்செஸ்டரின் திருமணம் என்னைப் பிரிக்கிறதே என்று நான் அடிக்கடி எண்ணினேன். நான் சென்ற ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திரும்பி வந்தார். ஆனால், திருமணத்தின் பேச்சையே அவர் எடுக்கவில்லை. செல்வி பிளான்சியைப் பார்க்க அவர் இங்கிரம் பெருமகனார் இல்லத்துக்கே செல்லவில்லை. யாருக்கும் எதுவும் தெளிவாகப் புரியவில்லை. பெண்ணை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா? என்று திருமதி ஃவேர்ஃவக்ஸ் கேட்டபோது, அவர் சிரித்தாரே தவிர, வேறு விளக்கமான விடை எதுவும் பகரவில்லை. ஒருநாள் கோடை வெப்பம் தாங்காத வேளையில் மாலையில் நான் தோட்டத்தில் சென்று உலவினேன். முன்னிரவிலும் வெப்பம் தணியாததால், தோட்டத்திலேயே இருந்தேன். அச்சமயம் வேறு யாரோ அதே தோட்டத்தில் இருப்பது தெரிந்து எழுந்து சென்றேன். இருந்தது திரு. ராச்செஸ்டர் என்பதைக் கண்டபின்னும், அவருடன் அங்கே அவ்வேளையில் இருக்க விரும்பாமல் விரைந்தேன். ஆனால், அவர் என் எதிரே வந்து, “இது வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நேரமல்லவே; சிறிது நேரம் கழித்துப் போகலாம்,” என்றார். நான் இருக்க விரும்பாவிட்டாலும் அவரைத் தட்டிப் போகவும் துணியாமல் தயங்கினேன். அதற்குள் அவர் என்னைப் பேச்சில் இழுத்து என்னை யறியாமலே உட்கார்ந்து உரையாடும்படி செய்துவிட்டார். “ஜேன்! உனக்குத் தார்ன்ஹில்ஃவீல்டு இல்லத்தின் வாழ்வு பிடித்திருக்கிறதா?” என்று அவர் தொடங்கினார். “ஆம்!” “அடேல், பணியாட்கள், திருமதி ஃவேர்ஃவக்ஸ் யாவருமே?” “ஆம், யாவருமே பிடித்திருக்கிறது.” “இவ்வளவையும் விட்டுப் பிரிவதென்றால் உனக்கு எப்படியிருக்கும்?” “பிரிய எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை.” “ஆயினும் பிரியச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.” “திருமணத்தையும் பிரிந்து செல்லுவதையும் மறந்து சில நாளாகிவிட்டது. அதைக் கேட்பது காதுக்கு நாராசமாயிருக்கிறது. இவ்வளவு கரிசனமாக இதுவரை பேச்சுக் கொடுத்துப் பீடிகை போட்டது இதற்குத்தானா!” என்று எனக்கு எரிச்சலாயிருந்தது. “சமயம் வந்ததும் எந்தநேரத்திலும் போகச் சித்தமாயிருக் கிறேன் நான்.” “சமயம் வருகிறதென்ன? இன்றே வந்துவிட்டது.” எனக்குப் பின்னும் தூக்கி வாரிப்போட்டது. “அப்படி யானால் திருமணம் உறுதியாகிவிட்டதா?” என்றேன். “ஆம், எனக்குத் திருமணமானவுடன் நீ போய் விட வேண்டுமென்று நீ தானே சொன்னாய். ஆனால் எங்கே போவது என்று உறுதி செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டிருக்கிறாய்.” “ஆம்; ஆனால் பெண் யார்? திருமணம் எப்போது?” “திருமணம் விரைவில் வந்துவிடும். பெண் யாராயி ருந்தாலென்ன? செல்வி பிளான்சி இங்கிரமைப் போன்ற ஒருத்தி என்று வைத்துக் கொள்ளேன்!” “எனக்கு எங்கே இடம் பார்த்திருக்கிறீர்கள்?” “மேற்கு அயர்லாந்தில்,” “அவ்வளவு தொலைவா?” “ஆம்.” “தார்ன் ஃவீல்டு இல்லத்தை விட்டுப் போனாலும் அருகிலேயே இடம் பார்த்து இருக்கலாம் என்று நினைத்தேன்.” ஏன் அயர்லாந்துக் கடல் கடந்தவுடன் இந்த எண்ண மெல்லாம் போய்விடும். தார்ஃவீல்டையும் மறந்து விடுவாய், என்னையும் மறந்துவிடுவாய்.” அவர் என்னைப் பேச்சுப் பொறியில் சிக்கவைத்து விட்டார். நான் என்னையும் என் நிலையையும் மறந்தேன். “என் உள்ளத்தை நீங்கள் அறியப் போவதில்லை. நான் தங்களை ஒருநாளும் மறக்க முடியாது. நீங்கள்தாம் மறந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்.” வாசகம் என் வாயிலிருந்து நழுவிய பின்தான் என் தவற்றை உணர்ந்தேன்; விரலைக் கடித்துக் கொண்டேன். “அப்படியானால் என்னை விட்டு ஏன் போக வேண்டும்? இங்கேயே ஏன் இருக்கக்கூடாது?” “உங்கள் மனைவி உங்கள் வீட்டுக்கு வருவாள். அடேலைப் பள்ளிக்கு அனுப்பிவிடவே அவள் விரும்பக்கூடும்.” ‘நான் அனுப்பாது வைத்துக் கொள்கிறேன்.” “அப்போதும் என்னால் இருக்க முடியாது. என் மனநிலை இடங்கொடாது,” என்றேன். நான் மீண்டும் விரலைக் கடித்துக் கொண்டேன். “என்னையே திருமணம் செய்துகொண்டு நீ என் மனைவியானால்!” நான் திடுகிட்டேன்; நான் விரும்பிய விருப்பம் ஈடேறு மென்பதை நான் என்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போதும் அவர் என்னிடம் துணிச்சலான கேலிப்பேச்சுப் பேசுவதாகவே எண்ணினேன். அவர் என் குறிப்பை அறிந்திருக்க வேண்டும். என் முன் மண்டியிட்டு நின்று, “ஜேன்! நான் விளையாட்டுக்காகப் பேசவில்லை. மனமார உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மணம் செய்து கொள்ளும் தகுதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தி ருந்தால், முன்பே வேறுவகையில் நடந்திருப்பேன். நம்மிடை யேயுள்ள வேலியைத் தாண்டுமுன், நீ தாண்ட விரும்புகிறாயா என்று அறியவே இவ்வளவு தகிடு தத்தம் செய்ய வேண்டிய தாயிற்று. இப்போது கேட்கிறேன். நீ என்னை மணந்து என் மனைவியாய் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டார். என்னால் இதை நம்புவதும் கடினமாயிருந்தது. ஏற்கத் துணிவது அதினினும் அரிதாகியிருந்தது. நான் பேசாது நின்றேன். அவர் மீண்டும் மீண்டும் பலவகையில் மன்றாடி என்னை வேண்டினார்: “ஆம்” என்று ஒருசொல் சொல்லின் என் வாழ்வின் போக்கில் பாலூற்று - இல்லை, தலையசைத்தாவது என் உள்ளத்தின் புயலைத் தென்றலாக்கு,” என்றார். என் தலை சுழன்றது. நான் சாய்ந்தேன். அவர் என்னைத் தாங்கினார். என் தலை அவர் தோள்மீது கிடந்தது. ‘என்னால் நம்ப முடியுமானால், உங்கள், உணர்ச்சி நிலையானதானால்......” என்றேன். அவர் என்னை இறுகத் தழுவி முத்தமிட்டார். அந்த இன்பத்தில் நான் என் ஐயங்களெல்லாவற்றையும் மறந்தேன். “என்னால் நம்ப முடியுமானால், உங்கள் உணர்ச்சி நிலை யான தானால் என்னைவிட இன்பமுடைய பெண் உலகில் இருக்க மாட்டாள்,” என்று என் வாசகத்தை தழுதழுத்துக் கூறி முடித்தேன். 11. மணவினையிடையே முறிவினை எங்கள் மன இசைவை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமென்று ராச்செஸ்டர் விரும்பினார். நானும் அதற் கேற்ப வழக்கம் போல் அடேலுக்குக் கற்றுக் கொடுப்பதை நிறுத்தவில்லை. நாங்கள் இருவரும் முன்போல மாலை நேரத்தில் தேநீர் வேளையில் தான் சந்தித்தோம். ஆனால், இப்போது சந்திப்பு ஒரு நாள் கூடத் தவறுவதில்லை. அத்துடன் சில சமயம் தோட்டத்தில் சிறிதுபோது கண்டு அளவளாவிப் பேசி இருப்போம். மாறிய இச் சூழ்நிலையை எவரும் உய்த்துணர்ந்து கொள்ளாதது வியப்பே. ஆனால், நாங்கள் இருவரும் அதை எவரிடமும் கூறவில்லை. நான் மட்டும் மடீராவிலுள்ள என் பெரியப்பாவுக்கு இதுபற்றிக் கடிதம் எழுதியிருந்தேன். திருமணத்துக்குக் குறித்தநாள் அணுகிற்று. இன்னும் பெண்ணை யாரும் பார்க்கச் செல்லவுமில்லை. பெண் வர வுமில்லையே என்று எல்லாரும் கவலைப்பட்டனர். அவர்களிடம் இறுதிவரை மறைத்து வைத்து வேடிக்கை காட்ட அவர் எண்ணியிருந்ததால் நானும் எவ்வளவு சொல்ல விரும்பிய போதும் சொல்லாமல் அடக்கி வைத்தேன். மணப் பெண்ணுக்குரிய பொருள்களெல்லாம் பெட்டி களில் வைத்துப் பூட்டி அரக்கிடப்பட்டன. அவற்றின் மீது ராச்செஸ்டரே தம் கைப்பட ‘திருமதி ராச்செஸ்டருக்கு, பொன்னொளி அருந்தகம், லண்டன் என்று முகவரியிட்டு வைத்தார். மணப்பெண்ணின் ஆடையணிகளும் மணமகன் கையால் நீக்குவதற்குரிய மெல்லிய முகமூடாக்கும் என் அறையிலேயே தொங்கின. திருமணத்துக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவசர வேளையாக ராச்செஸ்டர் வெளியூர் சென்றார். ஆனால், அவர் வருவதற்குள் என் நெஞ்சைத் திடுக்கிட வைக்கத்தக்க ஒரு கனாக்கண்டு நான் மிகவும் பரபரப்படைந்தேன். இது திருமண வினைக்குரிய தீக்குறியாய் விடுமோ என்று அஞ்சினேன். அதுவகையில் ராச்செஸ்டரைக் கண்டு எச்சரிக்கை தரவும், அவர் ஆறுதலால் அமைதிபெறவும் நான் துடித்தேன். மணநாளன்று காலையிலேயே அவர் வந்தார். நான் அவருக்காகக் காத்திருக்கப் பொறுக்காமல் அவர் வரும் வழியில் நெடுந்தொலை சென்று காத்திருந்தேன். ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாக நீண்டது. இறுதியில் அரை நில வொளியில் அவர் குதிரைத் தலையைக் கண்டு முன்னோடிச் சென்று வரவேற்றேன். என்னைக் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியே. அதே சமயம் என்ன செய்தி என்ற கலவரக் கேள்வியும் எழுந்தது. பேரிடர் எதுவுமில்லை என்று உய்த்தறிந்ததும், “நானில்லாமல் உன்னால் ஒருநாள் கூடக் கழிக்க முடியாதென்று எனக்குத் தெரியும். எங்கே என் குதிரைமீது தள்ளி ஏறு பார்க்கலாம்,” என்றார். என் ஆர்வம் என்னுள் ஓர் இளங்குதிரை போலத் துள்ளிற்று. நான் அவர் நீட்டிய இரு கைகளையும் பிடித்துத் தாவி ஏறி அவர்முன் உட்கார்ந்து கொண்டேன். வீட்டண்டை வந்ததும் அவர் என்னை இறக்கிவிட்டார். நான் அவருக்குமுன் அறைக்குச் சென்றேன். அன்றுதான் நான் அவர் மடிமீது உட்கார இணங்கினேன். நான் என் கனவை, கனவு கண்ட உணர்ச்சி ஒரு சிறிதும் குன்றாமல் எடுத்துரைத்தேன். “தார்ன்ஃவீல்டு இல்லம் எரிந்து விழுந்ததாக நான் கனவு கண்டேன். அதில் நீங்கள் இடரில் சிக்கியிருந்தீர்கள். உங்களை மீட்க நான் உட்குதித்தேன். குதித்ததன்பின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விழித்து விட்டேன்,” என்றேன். அவர் இதைக்கேட்டுச் சிரித்தார். “இவ்வளவு தானா? இதற்கா இவ்வளவு அச்சம்! என்னை மீட்டிருப்பாய், இப்போது என் வாழ்விலிருந்து மீட்கிறாயே அதுபோல,” என்றார். “கதை இன்னும் முடியவில்லை. எனக்கு மெய்ம்மயிர் சிலிர்க்கவைக்கும் செய்தி இனித்தான் இருக்கிறது,” என்று தொடங்கினேன். ‘கதைதான் முடிந்துவிட்டதே! இனி என்ன?” என்றார். “விழித்தெழுந்தபோது என் கண்முன் பின்னும் ஒளி தெரிந்தது. கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தேன். என் முன் யாரோ நின்றிருந்தாள். அது பணிப்பெண் சோஃவியோ, என்று ஐயுற்று ‘சோஃவீ! சோஃவீ! என்று அலறினேன். மறுமொழி இல்லை. என்னை அச்சம் பிடித்தாட்டிற்று. ஏனெனில் அது சோஃவியுமன்று, திருமதி ஃவேர்ஃவக்ஸு மன்று; கிரேஸ்பூல்கூட அன்று,” என்றேன். நான் சொல்லி முடிக்குமுன் அவர் ‘ஆ’ என்று வாய் விட்டு அலறிவிட்டார்; பின் சமாளித்துக் கொண்டு ‘அப்புறம்’ என்றார். “அது பெண்ணுருவம்தான். அவள் நெட்டையாய் வலுவான எலும்புக் கட்டுடையவளாய் அடர்த்தியாகக் கறுத்துத் திரண்ட தலைமயிருடையவளாய் இருந்தாள்.” “நீ முகத்தைப் பார்க்கவில்லையா? அது கிரேஸ் பூலாகவோ, அல்லது வேறு யாராகவோ அண்டை அயலி லுள்ளவர் களாவோதாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,” என்றார். “இல்லை. அவள் முகத்தை நன்றாகப் பார்த்தேன். அவள் கிரேஸ்பூலுமன்று. இங்கே அண்டை அயலிலுள்ள எவரு மல்லர். ஆயினும் அவள் இந்தவீட்டுக்குப் புதியவளாகவோ, என்னை அறியாதவளாகவோ இல்லை. ஏனெனில் அவள் என்னை ஒரு முறைப்பு முறைத்துப் பார்த்து விட்டுச் சட்டென என் மணமூடாக்கை எடுத்துக் கிழித்து எறிந்தாள். மண ஆடையைத் தீயிட்டுக் கொளுத்தினாள். அதன்பின் என்மீது பாய்ந்துவந்தாள். நான் அச்சத்தால் கண்ணை மூடினேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியாது. நான் திரும்பவும் எழுந்திருக்க நேரமாயிற்று,” என்றேன். “இது முற்றிலும் கனவு என்பதில் ஐயமில்லை,” என்றார் அவர். “இல்லை. கிழிந்த முகமூடாக்கு. இதோ எரிக்கப்பட்ட மண ஆடையின் கரியினை நானே எழுந்தபின் கண்டேன். இது கனவுக் காட்சியன்று. இந்தப் பெண்ணும் ஆவியன்று; அவள் இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,’ என்றேன். “யாராயிருந்தாலும் நீ ஒரு பேரிடரிலிருந்து தப்பி யிருக்கிறாய் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், இது முன் என்னையும் திரு. மேஸனையும் தாக்கிய அதே கிரேஸ்பூல்தான் என்பதில் ஐயமில்லை. அவளுக்கு அடிக்கடி அறிவு பேதலிப்ப துண்டு. இத்தகைய பெண்ணை வைத்துக் கொண்டிருப்பதனால் ஏற்படக் கூடும் இதுபோன்ற இடையூறுகளை நான் எண்ணாத வனல்லன். ஆனால் அவற்றையும் பொருட்படுத்தாமல் அவளை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாய நிலைமையை நான் உனக்குப் பின்னால் விளக்குகிறேன். இனி உனக்கு எவ்வகை இடரும் வாராது. அச்சமில்லாமல், மணவினைக்கு ஒருங்கி மகிழ்வுடனிரு,” என்று கூறி என்னை அவர் ஆற்றுவித்தார். மணி ஏழடித்ததும் எனக்கு மண அணிபூட்டுவதற்கு சோஃவி என் அறைக்கு வந்தாள். அவளுக்கு மட்டுமே அப்போது செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்துக்குள் ராச்செஸ்டர் வந்து என்னை மிகவும் பரபரப்புடன் விரைவு படுத்தினார். சமய ஊர் முதல்வர் திரு. உட் எங்களுக்காகக் காத்திருப்பதாகக் கூறி அரைகுறை ஒப்பனையோடு என்னை இழுத்துச் சென்றார். சென்ற வேகத்தில் கோயில் வாயில் அணுகுமுன் எனக்கு மூச்சுத் திணறிற்று. அவர் என்னைச் சற்றே ஓய்வு கொள்ள விட்டுப் பின்னும் இழுத்துச் சென்றார். கோவிலகத்தில் நாங்கள் நுழைந்தபோது ராச்செஸ்டரும் சோஃவியுமே ஊர்முதல்வர் முன் நின்றோம். ஆனால், வினைமுறை தொடங்குமுன் அயலார் இருவர் அங்கே நின்றதைக் கண்டேன். தொடக்க வினைகள் முடிந்தபின் முதல்வர் மண வினைக்கு முன் சட்டப்படி கேட்கப்படும் முக்கியமான கேள்வியைக் கேட்டார். “இந்த இரண்டு இளந்துணைவர்களும் சட்டப்படி இணையும் வகையில் ஏதாவது தடங்கலுரைக்கு இடமுண்டு என்று இங்கே எவராவது கருதினால், அதை என்முன் வந்து தெரிவிக்கும்படி கோருகிறேன்,”என்றார். இது வழக்கமான நடைமுறை. ஆகவே, முதல்வர் எந்த மறுமொழியையும் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. முறைமைப்படி சிறிதுநேரம் வாளா இருந்து விட்டு, மேலே நடக்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தொடங்க இருந்தார். அதற்குள் முன்னிருந்து ஓர் உரத்த குரல் கிளம்பிற்று. “சட்டப்படி இந்தத் திருமணம் நடைபெறக் கூடாது என்பதற்கான சரியான காரணம் ஒன்று இருக்கிறது,” என்பதே அக்குரல். இது கேட்ட அனைவரும் அதிர்ச்சியுற்றோம். சிறிது நேரம் அமைதி நிலவிற்று. முதல்வர்தாம் முதலில் வாய்திறந்தார். “கூறவந்ததை முழுவதும் விளக்கிக் கூறுங்கள். இப்போது எழுந்த தடை நேர்மையானதா அல்லவா என்று அறியும்வரை நான் எந்த வினைமுறையும் தொடர்ந்து செய்ய முடியாது,” என்றார். முன் குரலெழுப்பியவர் வந்திருந்த அயலாளர்களுள் ஒருவரே; அவரே மீண்டும் பேசினார். “இந்தத் திருமணம் சட்டப்படி நடைபெறமுடியாத ஒன்று. ஏனென்றால் திரு. ராச்செஸ்டருக்கு ஏற்கனவே ஒரு மனைவி உயிருடனிருக்கிறாள்.” என் காதலரை நான் உற்று நோக்கினேன். அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார். அதை என் பக்கமாகத் திருப்பி உற்று நோக்கினேன். அது விளறி வெளுத்து விறைந்து விருவிருத்துப் போயிருந்தது. அவர் கைகள் நடுங்கின. ஆனால் ஒரு கையால் என்னை இறுகப் பற்றிக் கொண்டே அவர் அயலானைப் பார்த்து, “நீ யாரப்பா! என்று கேட்டார். “நான் ஒரு வழக்குரைஞர். என் பெயர் பிரிக்ஸ்.” “நீர் அறிந்த சட்டப்படி எனக்கு இதற்கு முன்பு மண மாகியிருக்கிறதென்றா கூறுகிறீர்?” “நண்பரே! உமக்கு இன்னும் உயிருடனே ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை மறைக்காதேயுங்கள்.” “அப்படி நீர் கூற என்ன ஆதாரம்?” “இதோ மணமுறியின் மெய்ப்படி: ‘எட்வர்டு ஃரேர்ஃவெக்ஸ் ராச்செஸ்டர் - தார்ன்ஃவீல்டு இல்லம் - ஜெமய்க்காவிலுள்ள ஸ்பானிஷ் நகரிலுள்ள பெர்ததா மேஸன் - இருவருக்கும் திருமணம் இன்று நடந்தேறியது. “ஐந்தாண்டுகட்கு முன் தேதியிட்ட இந்த மணமுறிக்கு என்ன சொல்லுகிறீர்?” “சரி, இது மணம் நடந்ததற்குத்தானே சான்று, மணமகள் இன்னும் உயிருடனிருப்பதாக நீர் எப்படிக் கூற முடியும்?” “இறந்ததற்கான சான்று கொடுக்க வேண்டியவர் நீர்தாம். ஏனென்றால், அவள் ஒரு வாரத்திற்கு முன் உயிருடனிருந்ததற் கான சான்றாளரை அழைத்து வந்திருக்கிறேன். இதோ அவரை முன்னிலைப் படுத்துகிறேன்.” “திரு.மேஸன், அருள் கூர்ந்து இங்கே வாருங்கள்” திரு. மேஸனின் பெயர் கேட்டதும் ராச்செஸ்டர் பற்களை நெறுநெறெனக் கடித்தார். கடுஞ்சீற்றத்தால் அவர் உடல் தளிரென நடுக்குற்றது. நானும் அப்பெயர் கேட்டுத் திடுக்கிட்டேன். மணவினை தடுத்தவர் திரு. மேஸனைப் பார்த்துக் கேள்வி கேட்டார். “இந்த மனிதர் மனைவி உயிருடனிருக்கிறாள் என்பது உமக்குத் தெரியுமா?” “ஆம், இந்தக் கணத்திலும் அவள் தார்ன்ஃவீல்டு இல்லத்தில் இருக்கிறாள். சென்ற ஏப்பிரல் இறுதியில் தான் நான் அங்கே அவளைக் கண்டேன்.” “உமக்கு அவளை எப்படித் தெரியும்?” “நான் அவள் அண்ணன்.” முதல்வர் திரு. உட் இப்போது குறுக்கிட்டார். “நான் இங்கேயே பல ஆண்டுகள் வாழ்கிறேன். தார்ன்ஃவீல்டு இல்லத்தில் திருமதி ராச்செஸ்டர் என்ற பெயருடன் எவரும் இருப்பதாக நான் அறியவில்லை,” என்றார் அவர். திரு. மேஸன் மறுமொழி கூற வாயெடுக்குமுன் ராச்செஸ்டர் தலையிட்டார். “அவளை எவரும் திருமதி ராச்செஸ்டர் என்ற பெயரால் அறியாமல் நான் பார்த்துக் கொண்டேன். என் செயல் இன்று வெளியாகிவிட்டது. போகட்டும்,” என்று அவர் வெறுப்புடன் கூறினார். இவ்வளவானபின் திருமணம் நடத்தமுடியாது என்று ‘உட்’ கூறிவிட்டுக் கோயிலை விட்டுச் சென்றார். ராச்செஸ்டர் பேய் பிடித்தவர் போலானார். நானோ பேயறைந்தவள் போலானேன். ஆனால், அவர் என்னையும் அயலார் இருவரையும் திரு. மேஸனையும் விடாது தம்முடன் தார்ன்ஃவீல்டுக்கு இழுத்துச் சென்று எங்களுக்குத் திருமதி ராச்செஸ்டரையே காட்டியபோது தான் ராச்செஸ்டரின் முழு வாழ்வின் மர்மமும் வெளிப்பட்டது. அவர் திரு.மேஸன் இருந்த அறைக்கு அடுத்த அறை சென்று கதவைத் திறந்து கொண்டே கிரேஸ்பூலைக் கூவி அழைத்தார். கிரேஸ்பூல் ஓடிவந்து. “அம்மா உங்களைப் பார்த்துக் கொண்டிதானிருக்கிறாள். உள்ளே செல்லவேண்டா,” என்றாள். “இன்று நான் அவளுக்கு அஞ்சவேண்டியதில்லை. மேலும் இன்று அவளிடம் சுத்தி முதலிய கருவி எதுவும் இல்லை,” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார். திருமதி ராச்செஸ்டர் அமைதியாகவே இருந்தவள் சரேலென்று அவர்மீது பாய்ந்தாள். அவள் நகங்கள் அவர் தோள்களைக் கீறின. அவள் அவரைக் கடித்துக் குருதி குடிக்கப் போவதுபோல் இருந்தது. ராச்செஸ்டரால் அவளைக் காயப்படுத்தித் தப்பியிருக்க முடியும். அவரிடம் கத்தி இருந்தது. ஆனால் அவர் உறுக்கக் கூட முடியவில்லை. பொறுமையாக அவர் அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் bhண்டார். அதற்குள் கிரேஸ்பூலும் மற்றவர்களும் அவளைக் கயிற்றால் ஒரு நாற்காலியுடன் சேர்த்துக் கட்டினார்கள். ராச்செஸ்டர் அவளைச் சுட்டிக் காட்டி, “இது தான் உங்கள் சட்டப்படி எனக்கு உரிய மனைவி. எனக்கு அவள் அளிக்கும் வரவேற்பையும், ஆதரவையும் கண்டீர்கள். சட்டப்படி அவளை நான் மனைவியாகக் கொண்டு வாழ வேண்டுமென்று கூறுகிறீர்கள்,” என்று வெப்பத்துடன் கேட்டார். பின் என்னைச் சுட்டிக் காட்டி, “இதோ நான் விரும்பி மணம் செய்ய இருந்த பெண்: என்னை விரும்பி எனக்கு ஆதரவு காட்டத்தக்கவள். உங்கள் சட்டப்படி இவள் தான் எனக்கு மனைவியாகத் தகாதவள். உங்கள் சட்டம் அளிக்கும் நேர்மை நான் இவளை இழந்து, அவளுடன் வாழவேண்டும் என்பது,” என்றார். அயலார் இருவரும் ராச்செஸ்டர் சொற்களின் உணர்ச்சியை ஒத்துக்கொண்டனர். “உங்களிடம் எங்களுக்கு ஒரு பகைமையும் கிடையாது. நாங்கள் எங்கள் கட்சிக்காரர் சொல்லியபடி செய்தோம். அவர் இதோ நீங்கள் மணம் செய்ய இருந்த பெண்ணின் பெரிய தந்தை. தன் திருமணத்தைப் பற்றி இவள் எழுதிய கடிதத்தை அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் நண்பரான திரு. மேஸன் உடனிருந்தார். அவர் மூலம் ராச்செஸ்டரின் பழைய திருமணச் செய்தி தெரிய வந்தது. தம் தம்பி புதல்வியின் நலங்கோரிய அவர் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிவந்தது,” என்றார். எனக்கு இப்போது நான் என் பெரிய தந்தைக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. நான் அதற்காக இப்போது வருந்தவில்லை. ஏனென்றால் ராச்செஸ்டரை நான் எவ்வளவு விரும்பினாலும், அவர் நிலைமைக்கு எத்தனை இரங்கினாலும், அவருக்காகச் சட்டம் மீறிய தொடர்பில் இறங்கவோ, என்னைப் பலியாக்கிக் கொள்ளவோ நான் விரும்பவில்லை. 12. ராச்செஸ்டரின் விளக்கம் அயலாரும் திரு. மேஸனும் போய்விட்டனர். ராச் செஸ்டர் வெட்கத்தால் எங்கும் தலைகாட்டவில்லை. என் முகத்தில் விழிக்கவும் முடியாமல் தம் அறையிலேயே அடைப்பட்டுக் கிடந்தார். வீட்டில் உள்ள மற்ற எவரும் அவரையோ, என்னையோ, மிகுதியாகச் சந்திக்க விரும்ப வில்லை. ஆகவே, தனித் தனியாக நாங்கள் எங்கள் உள்ளங் களைத் திறந்து கண்டு அவரவர் துயரத்தை ஆற்றியிருந்தோம். என்னை ராச்செஸ்டர் ஏமாற்றியதற்கு என்னால் அவரை மன்னிக்க முடியவில்லை. அனுபவமற்ற நிலையில் என் பாசத்தால் அறிவுக்கண் மூடப்பெற்று, அவர் வலையில் சிக்கியதற்காக என்னையே நான் மிகவும் நொந்து கொண்டேன். ஆயினும் ராச்செஸ்டர் நிலை ஓரளவு அவர் பாசத்தையும் இக்கட்டையும் விளக்கியதால், நான் அவர் மீது சினமடைவதை விட்டு இனி நான் இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்கலானேன். இனி இந்த இல்லத்தில் ஒரு கணம் தங்குவதும் தவறு; ஆனால் எங்கே செல்வது? எனக்கு வந்த அவப்பெயருடன் எங்கேதான் வேலை எளிதில் கிடைக்கும்? ஆனால், எது வந்தாலும் இரவோடிரவு வெளியேறி விடத்துணிந்தேன். என் மூட்டை முடிச்சுகளுடன் நான் போனால் பயணம் தெரிந்துவிடும். தவிர இடமும் இலக்குமற்றுப் புறப்படும் எனக்கு, மூட்டை முடிச்சுகள் தாம் எதற்கு? நான் ஒரு மாற்றுடையும், ஒருநாள் உணவுக்கான சில உணங்கிய அப்பமும், தண்ணீர் மொண்டு குடிப்பதற்கான ஒரு புட்டியும் எடுத்துக் கட்டி வைத்துக் கொண்டேன்,முன்னிரவில் கதவை மெள்ளத் திறந்து கொண்டு வெளியேறினேன். ஆனால், ஏதோ ஒன்று தடுக்கி நான் விழ இருந்தேன். தடுத்தது ராச்செஸ்டர் கை அவர் என்னைத்தாங்கி அறைக்கே இழுத்து வந்தார். என் காலைப் பிடித்துக் கொண்டு என்னிடம் மன்றாடினார். எனக்கு முதல் தடவை யாகச் சீற்றம் ஏற்பட்டது. “உங்கள் செயலால் என் பழைய வாழ்வும் கெட்டது. புது வாழ்வுக்கும் வழி இல்லை. இன்னும் என்ன செய்ய மேண்டு மென்கிறீர்கள்?” என்று நான் இரைந்தேன். “அதனால்தான் உன்னை ஆதரவற்றவளாக அலையவிட மனமில்லை. சட்டந்தவிர மற்ற எந்த வகையிலும் நான் உன்னை மனைவியாக நடத்துவதில் என்ன தவறு? நீதான் என் இரண்டுபட்ட நிலையைப் பார்த்தாயே! நீ போனால் நான் உயிர்வாழ முடியாது; என்மீது இரக்கங்கொள்,” என்றார். நான் சிறிதும் இணங்கவில்லை, “சீ! இந்த எண்ணம் உங்களுக்குத் தகாது. நான் இறந்தாலும் இறப்பேனே தவிர. என் தன் மதிப்பை இழக்க மாட்டேன்,” என்றேன். “குறைந்த அளவி எனக்காக இன்று போவதை நாளைக் காவது ஒத்திப்போடு. நான் செய்த தீங்கு பெரிது. அதை என்னால் இனிச் சரிசெய்ய முடியாது. ஆனால், என் வாழ்வின் போக்கை நான் உனக்கு முழுதும் கூறியாக வேண்டும். அதை நீ கேட்டபின் உன் மனம் எப்படியோ அப்படியே நடக்க விட்டுவிடுகிறேன். இந்த ஒரே ஒரு கருணை காட்டும்படி கோருகிறேன்,” என்றார் அவர்மீது எனக்கு உள்ளூர இரக்கம் இல்லாமல் இல்லை. நான் இந்த அளவு என் திட்டத்தைத் தளர்த்த ஒத்துக் கொண்டேன். அவர் தொடங்கினார்: “என் தந்தையிடம் பெருஞ்செல்வம் இருந்தது. ஆனால், அவர் பேராவல் அவரை அமைதியாக வாழ விடவில்லை. எனக்கும் எம் தமையனுக்கும் செல்வத்தைப் பங்கிட்டால் அது குறைந்துவிடும் என்று எண்ணி, அவர் அது முழுவதையும் என் தமையனுக்கே கொடுத்துவிட்டார். அத்துடன் முழுவயதும் அனுபவமும் பெறாதநிலையிலே என்னையும் விற்றுப் பணமாக்கிவிட எண்ணினார். “திரு.மேஸன் என் தந்தையின் நண்பர். அவரிடம் தந்தை யின் செல்வத்தின் மூவிரட்டி செல்வம் இருந்தது. ஆனால், எக்காரணத்தாலோ நீண்ட நாள் மணமாகாதிருந்த ஒரு புதல்வி அவருக்கு இருந்தாள். அவளை மணப்பவருக்குத் தம் செல்வத்தின் மூன்றில் இரண்டு பகுதியைக் கொடுக்க இருப்பதாக அவர் ஒரு நாள் என் தந்தையிடம் கூறினார். தந்தையின் பேரவா கிளைத்தெழுந்தது. மூன்றில் இருபங்கைத் தான் வாங்கிக் கொண்டு செல்வி பெர்தாமேஸனை என் மனைவி யாக்கத் துணிந்தார். திருமணம் செய்யுமுன் நான் பெர்தாவைத் தனியாகப் பார்க்கவில்லை. தனியாகப் பார்க்காததால், அவள் அழகில் மயங்கி நானும் ஒத்துக் கொண்டேன். “மணமானபின் தெரிந்தது, பெர்தா மணவாழ்வுக்குரிய பெண்ணல்லள் என்று! கொடிய பைத்தியம் அவளை ஒரு நாளைக்கொருதரம் பேயாக்கியிருந்தது. மற்ற நேரங்களிலும் எந்த ஆணைக் கண்டாலும் - தன் அண்ணனைக் கண்டால் கூட - அவளுக்குப் பித்த வெறி எழுந்துவிடும். “என் வாழ்வு பாழாயிற்று. எனக்கு அறிவு வந்ததே நான் எப்படி உடலோடு உயிர்க்கொலை செய்யப்பட்டுவிட்டேன் என்பது தெரியவந்தது. “என் நகர வாழ்வைப் பிறர் அறியாமற் காக்கவே நான் என் தந்தை இறந்ததும் இந்த வெறிகொண்ட மனைவியுடன் இங்கே வந்தேன். கிரேஸ்பூல் மேஸன் வீட்டிலேயே பணி யாளாயிருந்து பெர்தாவைப் பார்த்து வந்தாள். அவளையே உடன் கொண்டு வந்து பெர்தாவைப் பேணவைத்தேன். ஆனால், அவள் என் மனைவி என்பதையே யாரிடமும் சொல்லாமல் அவளை வீட்டினுள் வைத்துக் காக்கும்படி நான் கிரேஸ்பூலிடம் வேண்டினேன். அவள் இணங்கினாள். “உன்னைக் காணும் வரை நான் வாழ்க்கையில் வெறுப்புற்று எல்லாரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதன் மர்மம் இதுவே. நீ வந்தபின் இந்நிலையை மாற்றினாய். என் மனைவி என்னறையில் தீ வைத்ததையும் தன் அண்ணன் திரு. மேஸனையே குத்திக் கொல்லப் பார்த்ததையும் நீ அறிவாய். வாழ்நாள் முழுவதும் மனைவியாக வாழமுடியாத இந்தப் பைத்தியத்தின் பெயரால் நான் நடைப்பிணமாக வாழ வேண்டுமா? நீயே சொல்! இந்தச் சட்டப் பொறியிலிருந்து நீ என்னை விலக்கலாம். நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். நீ என்னை எவ்வளவு மனமாரக் காதலிக்கிறாய் என்பதை நான் அறிவேன். திருமதி ராச்செஸ்டரைப் பார்க்க, கிரேஸ்பூல் இருக்கிறாள். அவள் தந்தையின் பெருஞ்செல்வம் இருக்கிறது. அடேல் கல்வியைக் கவனிக்கப் பணம் இருக்கிறது. பள்ளிக் கூடம் இருக்கிறது. எனக்கு நீயும் தன்னாண்மையுடன் கூடிய வறுமையும் போதும். உன்னுடன் இருந்து நான் தோட்ட வேலை செய்தால்கூட மனநிறைவாகவே இருக்கும். இனி உன் முடிவைப் பொறுத்தது என் வாழ்வு. அதை அறியக்காத் திருக்கிறேன்,” என்றார். மழை ஓய்ந்தது. அமைதி நிலவிற்று. அவர் என் மறு மொழியை எதிர்பார்த்து நின்றார். ஆனால், என்னிடம் தயக்கம் இல்லை. நானும் ஒரே துணிவுடன் பேசினேன். “நீங்கள் கூறுவதெல்லாம், உங்கள் அளவில் சரி. நீங்கள் பணத்தை உங்கள் தந்தைமாதிரி வழிபடாமலிருக்கலாம். ஆனால், பணக்கார நேர்மைதான் இன்னும் உங்களிடம் இருக்கிறது - நீங்கள் உங்கள் நலத்தைத்தான் நினைத்துப் பார்க்கிறீர்கள் - நானும் ஒரு மனித நெஞ்சம் படைத்தவள். எனக்கும் ஒரு தன்மதிப்பு உண்டு என்பதை மறந்தீர்கள். உங்களுக்கு வாழவழியில்லை. அது சரி, உங்களுக்குத் துன்பம் உண்டு. நான் வருந்துகிறேன். உங்களுக்கு அநீதி செய்யப் பட்டிருக்கிறது. நான் கண்டிக்கிறேன். இருக்கப்படுகிறேன். ஆனாலும் அதற்காக நான் உயிரை இழக்க ஒருப்படமாட்டேன். தன்மதிப்பை விட்டுவிட இணங்க மாட்டேன். மேலும் என் தன் மதிப்பு மட்டுமன்று. திருமதி ராச்செஸ்டரின் தன்மதிப்பு. என் தாய். உங்கள் தாய் எல்லாப் பெண்களின் பெண்மையின் தன்மதிப்பு. நான் உங்கள் மனைவியல்லள். நான் உங்களை மனமார நேசித்தாலும், உங்களுடன் நான் ஒருநாள் கூட இருக்க விரும்பவில்லை,” என்றேன். அவர் முகம் கவிழ்ந்தது. பேசாது எழுந்து சென்றார். சிறிது தொலை சென்றதும் திரும்பி நின்று, ‘ஜேன், உனக்கு என்மீது உண்மைக்காதல் இல்லை,” என்றார். “உண்மைக்காதலில் உரிமை உண்டு, அன்பரே! அதில் அடிமை இல்லை,” என்றேன். மருமத்தில் அம்பு பாய்ந்த விலங்குபோல், அவர் பெருமூச்சு விட்டுக்கொண்டு சென்றார். பொழுது விடியவில்லை. நானும் என் சிறு முடிப்புடன் புறப்பட்டு வெளியேறிவிட்டேன். 13. தாழ்வும் வாழ்வும் என்னிடம் இப்போது பணம் இல்லை. எண்ணி இருபது வெள்ளிகள்தாம் சில்லரையாக இருந்தன. என் முழுச் செல்வமும் இதுதான். ஆகவே, இதை வண்டிக்கும் வழிக்கும் செலவிட நான் விரும்பவில்லை. அத்துடன் இன்ன இடத்திற்குப் போக வேண்டும். இன்ன வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாத நிலையில் வண்டியில் போய்த்தான் என்ன பயன்? என் சிறுதொகையைச் சிறுகச் சிறுக உணவுக்கு மட்டும் செலவு செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் கால் சென்ற திசையில் கால் கடுக்குமளவுக்கு நடந்தேன். பலநாள் நடந்தபின் கால் கடுக்கத் தொடங்கிற்று. உடல் தளர்வுற்றது. அடிக்கடி வழியின் வாய்ப்புக்கேடுகளாலும் அனுபவமின்மையாலும் வேளாவேளைக்கு உணவு நீர் இல்லாமல் தட்டழிந்தேன். குளிப்பு, ஆடைமாற்று எதுவுமே இல்லாதபடியால் படிப்படியாக எனக்கும் நாடோடி களுக்கும் இரந்து திரியும் ஆண்டிகளுக்கும் உள்ள வேற்றுமை அகன்று வந்தது. நாள்தோறும் நான் நடக்கும் தொலை பத்துக் கல்லிலிருந்து படிப்படியாக ஒன்றிரண்டு கல்லாகக் குறைந்தது. வரவரக் காலைத்தூக்க முடியாததாகி விட்டது. ஒருநாள் கை உணவுண்ண எழவில்லை. எங்கே செல்வது எதற்கு என்று தெரியாவிட்டாலும் போய்க்கொண்டே இருக்க எண்ணினேன் - ஒருவேளை சாகும்வரை போய்க்கொண்டேதான் இருக்க வேண்டும் என்று கருதினேன். ஏனென்றால் அது தவிர வேறு நான் என்ன செய்ய முடியும்? பயணம் ஒன்றே நோக்கமாகக் கொண்ட நான் வழியில் வரும் ஒரு வண்டியை நிறுத்தச் சொல்லி அதில் ஏறினேன். வண்டி எங்கே போகிறது. எவ்வளவு தொலைவு போகிறது என்று நான் கேட்கவில்லை. எங்கே போனாலென்ன நான் எங்கே போகவேண்டும் என்பதையும் கூறவில்லை. ஏனெனில் அது எனக்கே தெரியாது. என் கையில் அப்போது இருந்தது 12 வெள்ளி. அதை வண்டிக்காரன் கையில் கொட்டினேன். அவன் பேந்தப் பேந்த விழித்து, ‘என்னம்மா எங்கே போக வேண்டும்? ஏன் இவ்வளவு பணம்?” என்றான். “உன் வண்டி எதுவரை போகிறதோ அதுவரை கொண்டுபோய் இறக்கி விட்டுவிடு. என்கையில் உள்ள பணம் அவ்வளவுதான். அது போதாதென்றால் அந்தப் பணத்துக்கு எதுவரை கொண்டு போகலாமோ அதுவரை கொண்டுபோய் இறக்கிவிட்டு விடு” என்றேன். வண்டிக்காரன் என்ன நினைத்தான் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் வண்டியில் படுத்தவள் திரும்ப வண்டியில் கண்விழிக்கவில்லை. கண்விழித்தபோது சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு வீட்டில் கட்டிலில் படுத்திருந்தேன். இரண்டு இளம் பெண்கள் என் அருகில் மாறி மாறி வந்து அமர்ந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் அக்காள் தங்கைகள். டயானா ரிவர்ஸ், மேரி ரிவர்ஸ் என்பது அவர்கள் கன்னிப்பெயர்கள் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன். மேரி ரிவர்ஸ் என்னருகில் வந்து, “அம்மா உடம்பை அலட்டிக் கொள்ளாதே நீ நல்ல நண்பர்களிடத்தில் தான் இருக்கிறாய். நாங்கள் இருவரும் எங்கள் அண்ணன் தூய திருஜானுடன் உன்னைக் கவனிப்போம்.” என்றாள். வண்டிக்காரன் என் நிலைகண்டு, இரக்கமும் கவலையும் கொண்டு, என்னைத் தன் ஊருக்கே கொண்டுவந்து பிறர்க்கு உதவும் பெரும் பண்புடைய இந்தக் குடும்பத்தாரிடம் ஒப்படைத்திருந்தான் என்பதை நான் அவர்கள் கூற அறிந்தேன். ஊர் பேர் அறியாத என்னை எந்த எதிர்நலனும் நோக்காமல் ஆதரித்த அவர்களின் அருள் தகைமை என்னை இழுதாய் உருக்கிற்று. என் உடல், பொருள், ஆவி மூன்றையும் அப்பெருந் தகையார்களுக்கே ஈடுபடுத்தவும் நான் சித்தமாயிருந்தேன். நான் என் உண்மைப் பெயரையோ வாழ்க்கை வரலாற்றையோ இத்தகையவர்களிடம் கூடத் தெரிவிக்க அஞ்சினேன். ஆகவே, என் பெயர் கேட்டபோது ஜேன் எலியட் என்று கூறினேன். இறுதி நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்ச்சி களையும் ஊர் பேர் மறைத்துத் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் கேள்வியில் பிறர் செய்திகளைத் துருவியுணரும் சிறுமை யவா இல்லை. பெருந்தகைமை வாய்ந்த அன்புக் கனிவார்வம் மட்டுமே இருந்தது. உடலில் சிறிது தெம்பு ஏற்பட்டதும், நான் ஏதேனும் வேலை செய்து அவர்களிடமிருந்து உழைக்க விரும்புவதாகக் கூறினேன். அவர்களும் சிறிது தடையுரைத்து, பின் என் தன்மதிப்பை மதித்தனர் நான் என் கல்வியைப் பயன்படுத்தி அண்டை அயலிலுள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் கல்வி புகட்டியும், பள்ளிகளில் வேலையேற்றும் அந்நல்ல குடும்பத் தினர் வருவாயில் என் பங்கைச் சேர்த்து, அவர்களுடன் அளவளாவி வாழ்ந்தேன். தூயதிரு. ஜான் எனக்கு அண்ணனா யிருந்தால் கூட என்னை அவ்வளவு பேணியிருக்க மாட்டார். டயானாவும் மேரியும் என் உடன்பிறந்த தங்கையராயிருந்தால் கூட அவ்வளவு நேசபாசம் காட்டியிருக்க முடியாது. அந்த அளவு நாங்கள் நால்வரும் ஒரு குடும்பமானோம். உள்ளூரப் பட்டுப்போன என் வாழ்வு வெளித்தோற்றத்துக் கேனும் தளிர்விட்டது. உலகுக்கு ஜேன் எலியட், ஜேன் அயரின் ஒரு நிழல் அல்லது ஓர் ஆவியானாள். ஜேன் அயருக்கு கிடைத்த அன்புச் சூழலை விட ஜேன் எலியட்டுக்குக் கிடைத்த அன்புச் சூழல் தெய்விகச் சூழலாகவே இருந்தது. ஆனால், அன்பு வேறு, வாழ்க்கைப் பற்று வேறு. வாழ்க்கைப் பற்றற்ற நான் தாமரையிலையில் தண்ணீர்த் துளிபோலப் பிறருக்குக் கவர்ச்சிகரமாக ஒளி வீசினேன். என் வாழ்வில் மீண்டும் எதிர்பாராத திருப்பங்கள் இரண்டு நேர்ந்தன. ஒன்று என் ஆவிவாழ்வின் கட்டைப் பெருக்கி எனக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்தது. இரண்டாவது எனக்குச் சொல்லொணாத் துன்பந் தந்தது. ஆனால், அதுவே எனக்கு முடிவில் வாழ்வும் அளித்தது. தூயதிரு. ஜான், தூயதிரு. உட்டைப் போன்ற ஒரு சமயப்பணி முதல்வர். மக்கட் பணியாகிய கடவுட் பணியையும் சமயப்பணிவுடன் ஒன்றுபடுத்தியவர் அவர். அவருடைய நண்பர்களுள் என் திருமணத்தை வந்து தடுத்தவரும், என் பெரிய தந்தையின் வழக்குரைஞருமான திரு.பிரிக்ஸ் ஒருவர். இது எனக்குத் தெரியாது. திரு. பிரிக்ஸ் அவருக்கு எழுதிய கடிதங்களில் அடிக்கடி ஜேன் அயர் என்ற ஒரு பெண்ணைத் தான் எங்கும் துருவித் தேடி வருவதாகவும் அவளிடம் அவளைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தி கூற வேண்டியிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். திரு. ஜானே, தம்முடன் ஊர் பேரில்லாத ஜேன் எலியட் பெயரைத் தாம் கேட்டதில்லை என்றும் மறுமொழி எழுதியிருந்தார். ஒரு நாள் திரு. ஜான் இதை என்னிடம் கூறினார். “இது வரை நீங்கள் தாம் ஜேன் அயராயிருக்கக் கூடும் என்று நான் எண்ணாமல் போனேன். எண்ணியிருந்தால் நண்பர் கோரிய செய்தியில் தக்க தகவல் கூறியிருப்பேன்,” என்றார். அவர் கூறும் செய்தி, திரு.ராச்செஸ்டரைப் பற்றியதாகவே இருக்கவேண்டும் என்று மதித்து நான், “நானும் நீங்கள் கூறப்போகும் செய்தியைக் கேட்க ஆவலுடையவளாகத்தான் இருக்கிறேன். அது திரு. ராச்செஸ்டரைப் பற்றியதுதானே!” என்றேன். “ராச்செஸ்டரா? அப்படி ஒரு பெயரைப்பற்றி நான் கேள்விப்படவில்லை. என் செய்தி அது பற்றியதன்று. அஃது உங்கள் பெரியப்பாவைப் பற்றியது. என் நண்பர் பிரிக்ஸ் அவருடைய வழக்குரைஞர், அவர் தம் செல்வம் முழுவதை யும் உங்களுக்கே உரிமையாக்கி வைத்துவிட்டுச் சில மாதங்களுக்கு முன் இறந்துபோனார். நீங்கள் இப்போது எங்களுள் ஒருவர் அல்லர். உங்கள் பெயருக்கு இப்போது நாணயமாக 20,000 பொன் பொருளகங்களில் கிடக்கிறது,” என்றார். “அப்படியா? இருபதினாயிரம் பொன்னா? எனக்கா?” “ஆம் உங்களுக்குத்தான் ஐயம் வேண்டா?” என் பெருஞ்செல்வத்தைக் கண்டு என் நண்பர் மகிழ்ந்தனர் நான் அவ்வளவாக முதலில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பின் என் இடைக்கால உதவியற்ற நிலையில் என்னை ஆதரித்த ரிவர்ஸ் குடியினர்க்கு நான் என் கடமை நிறைவேற்றவும், அவர்கள் பணியை வளர்க்கவும் இஃது ஓர் ஒப்பற்ற கருவி என்ற எண்ணம் வந்தது. உடனே நான் பள்ளியில் தங்குவதை விடுத்து அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் வீட்டை என் வீடாக்கி அதைச் சீர்திருத்தியும் சேர்ப்பன சேர்த்தும் பெரிதாக்கியும் அவர்கள் வாழ்வை வளப்படுத்தினேன். தம் வீட்டை என் வீடு என்று நான் கூறும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை, என் வீடு என்று கூறி அவர்கள் வீட்டைப் பெரிதாக்குவதில் நானும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் செய்யும் சமூகப் பணிக்கென்று ஆயிரக் கணக்கான பொன் களை அவர்கள் வசம் ஒப்படைத்தேன். என் உள்நோக்கத்தை அவர்கள் அறிந்தும் என் மனம் புண்பட வேண்டா என்று இவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். என் புறவாழ்க்கை இப்போது நிறைவடைந்தது என்றே கூற வேண்டும். ஆனால் அகவாழ்வில் இம்மியளவும் நிறைவு ஏற்படவில்லை. திரு. ராச்செஸ்டரை உதறித் தள்ளியதனால் நான் என் தன்மதிப்பையும் பெண்மையின் மதிப்பையும் காத்துக் கொண்டேனே தவிர, என் உள்ளத்தில் அமைதியை உண்டுபண்ண முடியவில்லை. சட்டப்படி என் வாழ்வில் இடம்பெறாவிட்டாலும், உள்ளத்தில் இடம்பெறுவிட்ட ஒருவரைப் புறக்கணித்து அவரை துன்பத்திலாழ்த்திய நான் எப்படி அமைதி அடைய முடியும்? 14. அன்பின் குரல் என்னை யாரோ என்று எண்ணியபோதே பேணிய ரிவர்ஸ் குடும்பத்தார் என் நல்லெண்ணம், பெருந்தன்மை வண்மை ஆகியவற்றைக் கண்டு என்னிடத்திலும் என் முன்னேற்றத்திலும் முன்னினும் மிகுதியாக அக்கறை காட்டினார்கள். சமயத் தொண்டிலும் சமூகத் தொண்டிலுமே ஈடுபட்டிருந்த தூயதிரு. ஜான் என் பணிக்குரிய நல்லிடம் இந்தியா தான் என்று வற்புறுத்தினார். தென் இந்தியாவில் அப்போது தாழ்த்தப்பட்ட மக்களிடையே கிறிஸ்துவின் நெறியுடன் கல்வியும் போதிக்கத் தக்க சமூகத்தொண்டு மனப்பான்மையுள்ள நல் ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தேவைப்பட்டனர். இதில் கடவுள் தொண்டு கல்வித்தொண்டு ஆகியவற்றுடன் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட சேரிவாணர்களை உயர்த்தும் சமூகத்தொண்டும் இணைந்திருந்தது. என் பண்புகள் திறங்கள் அனைத்துக்கும் இஃது ஒப்பற்ற இடம் என்று அவர் வலியுறுத்தி வந்தார். திரு. ஜானின் உயரிய குறிக்கோள் எனக்குப் பிடித்த மாகவே இருந்தது. அதனினும் உயரிய தொண்டில் நான் ஈடுபட முடியாது. ஆயினும் பெண்ணின் நெஞ்சம் காதலித்த தன் உயிரின் பாதியை ஒதுக்கிப் புறக்கணித்துவிட்டு எதிலும் அமைதி பெறமுடியாது. ராச்செஸ்டரை என் மனம் நாடி நிற்குமளவும் சமூகத் தொண்டில்கூட நான் என் உள்ளத்தின் முழுநிறை இன்பம் பெறமுடியாது. எனினும் இக்காதல் வாழ்வு சமயம், கல்வி, சமூகம் ஆகிய முத்துறைப் பணிகளுக்கு ஈடு என்று என்னால் நம்பமுடியவில்லை. பெண்மையின் காதல் எவ்வளவு தெய்வீகமானாலும் அதில் தன் நலம்தான் இடம் பெறுகிறது. உலகுக்கு உழைக்கும் அகல் அருள் திறம் அதில் கிடையாது. இவ்வாறு மாறி மாறி இருதிசையிலும் என் உள்ளம் ஊசலாடிற்று. “கடவுளே! நீர்தாம் எனக்கு இரண்டிலும் எது உகந்தது என்று முடிவு காட்டி வழிவகுக்க வேண்டும்,’ என்ற வேண்டுகோளுடன் நான் கண்ணயர்ந்தேன். அன்றிரவு எங்கும் அமைதி நிலவிற்று. பலகணி களூடாக நிலவொளி எங்கும் புகுந்து அறையை நிறைத்தது. என் நெஞ்சம் வழக்கத்துக்கு மிகையாகத் துடி துடித்துக் கொண்டி ருந்தது. திடீரென்று அந்தத் துடிதுடிப்பு அடங்கியது போலிருந்தது. முகில்படலம் மறைந்தது போல நிலவொளி நிலவொளியாயிற்று. நான் எதையும் தெளிவாகக் காண முடியவில்லை. ஆனால் காதில் தெளிவாக ஒரு குரல், ஈன, தீனக்குரல் ஒலித்தது. ‘ஜேன்-ஜேன்- ஜேன்’ என்று உருக்கமாக அஃது என்னை அழைத்தது. அக்குரலில் துன்பம், அலுப்பு, ஆவல், சோகம் ஆகிய யாவும் நிரம்பியிருந்தன. அஃது என் நெஞ்சின் அகலங்கடந்து ஆழ்தடத்தில் சொல்லொணாத இரக்க அலைகளை எழுப்பிற்று. அந்தக் குரல் ஏதோ, எங்கிருந்து வந்ததோ அறியேன். ஆனால், அது ராச்செஸ்டரின் குரலாயிருந்தது. குரல் மேலிருந்தோ தொலைவிலிருந்தோ அணிமை யிலிருந்தோ கேட்கவில்லை. என் உள்ளத்திலிருந்து எழுந்த தாகவே தோன்றிற்று. உள்குரலின் இந்த அழைப்பை என்னால் ஒரு கணமும் அசட்டை செய்ய முடியவில்லை. ‘என் உற்றார் ஒருவர் அருந்துன்பத்திலிருப்பதாக எனக்குத் தெரிய வருவதால், நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று வருகிறேன்’ என்று என் உயிர் நண்பர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். தார்ன்ஃவீல்டிலிருந்து புறப்பட்டு வரும்போது இலக் கின்றி நோக்கின்றி நடந்து தளர்ந்து வந்தேன். ஆனால், திரும்பும்போது விரைவுமிக்க வண்டிகளில் சென்றேன். ஒரு கணம் கூட எங்கும் தங்கவில்லை. உணவைக்கூடப் பெரும் பாலும் வாங்கி வைத்துக் கொண்டு போகும்போது அரை குறையாக உண்டேன். உயிரை ஓடவிட்டுப் பின் தொடர்பவள் போல நான் விரைந்து சென்றேன். வழியிலெல்லாம் என் உள்ளம் என்னைப் பலவாறு சுட்டது; ‘அன்று உன் தன்மதிப்பை எண்ணி உன் உயிரினும் அரிய ஒருவரை இன்னலின் பொறியில் சிக்கவைத்து விட்டுச் சென்றாய். இன்று ஏனோ இந்த விரைவு?’ அவர் வேண்ட நீ மறுத்தாய்? இப்போது நீ வேண்ட அவர் மறுத்தால்?’ அவர் இப்போது உன் முகத்தில் விழிப்பாரோ, மாட்டாரோ?’ அவர் மனம் மாறியிருந்தால்! - அவர்நிலை உடல் எப்படியோ? உயிர் இருக்கிறதோ இல்லையோ? - உண்மையில் உயிர் இருக்கிற போது காலால் சவட்டி எறிந்த நீ, உன் மனச்சான்றைப் பசப்பி ஏய்க்கத்தானே இப்போது கரிசனை காட்டுகிறாய்?’ என்று பலவாறு என் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் எண்ண அலைகள் என்னைக் குத்திக் கிளறின. நான் தார்ன்ஃவீல்டை யடைந்தேன். வழியில் நகரிலேயே யாரிடமாவது விவரம் உசாவியிருக்கலாம். ஆனால், கேட்க என் உள்ளம் கூசிற்று. யாரிடமும் பேசாமல் விரைந்து சென்று வீட்டின் முன்புறத்திலிருந்து அதன் வாழ்க்கை நிலையை உய்த்தறிந்தபின் உட்செல்ல எண்ணினேன். ஆனால், இல்லத்தை அணுகுமுன்பே அதன் காட்சி என்னைத் திகைக்கவைத்தது. முன்புறமும் பின்புறமும் உள்ளும் புறமும் எல்லாம் இடிந்து பொடிந்து, வெறும் பாழாகக் கிடந்தது. எங்கும் பற்றியிருந்த கரியும் தூசியும் அது தீக் கிரையாய் அழிந்த கட்டடம் என்பதைக் காட்டின. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மறைந்து பார்க்க வேண்டிய அவசிய மில்லாமலே உள்ளே சென்று எங்கும் சுற்றினேன். அங்கே கூடுகட்டியிருந்த சிலந்திகளும் பறவைகளுமல்லாமல் நிலை மையை விளக்க வேறு எவருமில்லை. நான் வந்த வேகத்தைவிட இரட்டிப்பு வேகத்தில் நகருக்குத் திரும்பினேன். நகரும் ஓரளவு மாறியிருந்தது. ஆயினும் முன் நான் வந்து தார்ன்ஃவீல்டு இல்லம் பற்றி உசாவிய அதே அருந்தகம் சென்று உசாவினேன். ‘தார்ன்ஃவீல்டு இல்லமா? ஏன்? என்ன வேண்டுமா?’ என்றான் ஒருவன். “அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எங்கே? அது இப்போது இந்நிலையிலிருப்பானேன்?” “ஏன்! வீடுதான் எரிந்து விட்டதே! நீ அங்கே யாரைப் பார்க்க விரும்பினாய்? நான் அங்கே வேலை பார்த்தவன்தான். பெயரைச் சொன்னால் தெரிவிக்கிறேன்.” “வீட்டின் தலைவர் திரு.ராச்செஸ்டர் என்ன ஆனார்? இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?” ‘எட்வர்டு ராச்செஸ்டர் தாமே! அவர் இறந்திருந்தால் கூட அவருக்கு நன்றாகத்தானிருக்கும். எரிந்த வீட்டில் தீயின் வெப்புப்பட்டு அவர் கண் குருடாகிவிட்டது. அவர் இப்போது 30 கல் தொலைவிலுல்ள ஃவேர்ண்டீனில் ஒரு தோட்டப் பண்ணையில் சென்று மிகவும் துன்பத்துடன் காலங்கழிக்கிறார்.” அவர் நிலைகேட்டு நான் துடித்தேன். ஆனால், அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஆறுதல் அடைந்தேன். அவரைத் தேடப் புறப்படுமுன் அவரைப் பற்றிய முழு விவரமும் அறிய விரும்பினேன். முதலில் நான் கேட்ட கேள்வி, ‘திருமதி ராச்செஸ்டர் கூட இருக்கிறாளா?’ என்பதே. “இல்லை, இறந்துவிட்டாள். அந்தப் பைத்தியந்தான் வீட்டுக்குத் தீயை வைத்துவிட்டுத் தானும் அத்தீக்கு இரை யாயிற்று. பாவம், தீ தன்னை எரிக்கிறது என்பது தெரியாமல் அவள் தீ எரியும் அழகைப் பார்த்துத் தாளம் போட்டுக் கூத்தாடிக் கொண்டிருந்தாள். தீயைக் கடந்து அவளைக் காக்க எவரும் துணியவில்லை. ஆனால், திரு. ராச்செஸ்டர் தீயின் நடுவிலேயே குதித்தோடி அவளைக் காப்பாற்ற முயன்றார். அப்போதும் அவளுக்குச் சிறிது அறிவிருந்தால் அவள் காப்பாற்றப் பட்டிருப்பாள். அவள் தீயைவிட்டு வெளியே வரமறுத்தாள்; தன் உயிரைப் பாராது தன்னைக் காக்க வந்த கணவனுடன் அவள் போராடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு வெளியே வருமுன் அவள் உடல் முற்றிலும் தீக்காயங்களுக்கு இரையாய் விட்டது. விரைவில் அவள் உயிர் நீத்தாள். ஆனால், அவள் பிடிவாதம் அவள் உயிருடன் நில்லாமல் திரு. ராச்செஸ்டர் கண்களையும் குருடாக்கி விட்டது.” எதன்று அவன் முழு விளக்கமும் தந்தான். திரு. ராசெஸ்டரின் கடுந்தவத்தின் பெருமையை எண்ணி நான் அவரைப் புறக்கணித்துச் சென்றதற்காக வெட்கமடைந்தேன். இப்போது என் ஒரே எண்ணம், ஒரே கவலை, திரு. ராச்செஸ்டரைத் தேடி அவர் இருக்குமிடம் செல்வதுதான். “ ஃவேர்ண்டீனுக்குச் செல்ல இங்கே வண்டி கிடைக்குமா!” என்றேன். அவன் “என்னிடமே இருக்கிறது இதோ வருகிறேன்,” என்று கூறி அகன்றான். சிறிது நேரத்தில் அவன் வண்டியுடன் வந்தான். நான் ஃவேர்ண்டீனன் நோக்கிப் பயணமானேன். 15. அமைதி நான் ஃவேர்ண்டீன் சென்று சேரும்போது பொழுது சாய்ந்துவிட்டது. மழை சற்றே தூறிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் மங்கிய இருளினிடையே வீட்டின் சுவர்கள் மட்டும் வெள்ளை வெளேலென்று தெரிந்தது. அதன் வாசலில் ஓர் உருவம் நின்று கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்த்தது. அதன் நிலையிலிருந்து அது கண்பார்வை குன்றிய தென்று தெளிவாகத் தெரிந்தது. அதுதான் திரு. ராச்செஸ்டரா யிருக்க வேண்டும் என்று மதித்தேன். அவரைக் காண என் பெண் உள்ளம் ஒரு பாதி மலர்ந்தது. மறுபாதி அக்காட்சியைக் கண்டு வருந்திற்று. கண் தெரியாத அந்த நற்குணவாளனிடம் சென்று எப்படி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் என் கால்கள் பின்தங்கின. ஆனால், முதலில் நான் அவரைச் சந்திக்கும்போது உடனிருந்த நாய் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைச் சுற்றிவந்து வால் குழைத்தது. மனிதர் அறிவும் குணமும் மாறினாலும் அப்பண்புகள் மாறாத நாயினத்தின் உயர்வை எண்ணி வருந்தினேன். நாய் மூலம் யாரோ தெரிந்தவர் வந்து நிற்பதாக மட்டுமே அவர் அறிந்தார். அது தன் பணியாள் ஆன ஜான்ஸனின் மனைவி மேரியே என்று கருதி, “போய் விளக்கு ஏற்றி வைத்து விட்டுத் தேநீர் கொண்டுவா”, என்றார். நான் இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி அருகிலுள்ள மேரியின் குடிசைக்குச் சென்றேன். மேரியும் ஜானும் என்னை அடையாளம் கண்டு மகிழ்ந்து வரவேற்றனர். நான் அவர்களை வண்டியிலிருந்து என் பெட்டி படுக்கையைக் கொண்டுவர அனுப்பிவிட்டுத், தேநீரும் விளக்கும் கொண்டு சென்றேன். தேநீர் கொடுக்கும்போது என் கை நடுங்கிற்று. நாய் வேறு என்னை அறிமுகப்படுத்தும் ஆத்திரத்தில் கொஞ்சிக் குலவிற்று அவர் ஒன்றும் புரியாமல், “யார்? மேரி?” என்றார். “மேரி சற்று வெளியே சென்றிருக்கிறாள். நான் ஒரு விருந்தாளி,’ என்றேன். அவர் “ஆ, நான் கேட்பது கனவா, நனவா,” என்றார். அவர் கைகள் என் கைகளைத் தேட முன்வந்தன. நான் என் கைகளை நீட்டினேன். அவர் அவற்றைப் பற்றிதும் “ஆ, என் ஜேன்! இறுதியில் என்னை மறக்காமல் பார்க்கவாவது வந்தாயா?” என்றார். “பார்க்க மட்டும் வரவில்லை. தங்களுடைனேயே இருந்து காலங்கழிக்க வந்தேன்” என்றேன். “உண்மையாகவா?” என்று கேட்டார். “ஆம். நான் எல்லாம் நகரில் வந்து உசாவி அறிந்து கொண்டேன். நான் முன்பே என் தன்மதிப்பை எண்ணியது தவறு. உங்களைக் கடுந்துயரில் விட்டு விட்டுச் சென்றேன். நீங்கள் அடைந்த துன்பங்கள் உங்களுக்கே உரியன அல்ல. அவை எனக்கு வரவேண்டிய தண்டனைகள். மொத்தத்தில் இறைவன் உங்கள் உயிரையாவது பாதுகாத்து எனக்கு அளித்ததனால் நான் பிழைத்தேன்,” என்றேன். மகிழ்ச்சியில் அவர் தம்மை மறந்தார். என் நலங்கள் முற்றும் உசாவினார். ஆனால், நான் என் புதிய வாழ்வைமட்டும் கூறவில்லை. அவர் கண்ணற்ற நிலையில் நான் அவரை என் வாழ்க்கைத் துணையாகத் தேறவேண்டாமென்று அவர் தடுத்துப் பார்த்தார். “நான் உங்களை என்றோ தேர்ந்தாய் விட்டது. நீங்கள் கண்ணிழந்தது எனக்காகவும் பெண்ணினத் திற்குரிய உங்கள் கடமைக்காகவுமேயாதலால், என் உள்ளத்தில் உங்கள் இடம் உயர்வடைந்து விட்டதன்றிச் சற்றும் குறை வடைய வில்லை,” என்று நான் கூறினேன். அதன்பின்னர் அவர் தமக்கு இப்போது வறுமையையும் ஏலமாட்டாமையும் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். நான் அப்போது என் புதுச்செல்வத்தின் செய்திகூறி, அவர் கவலைப்பட வேண்டா என்று ஆற்றினேன். எங்கள் திருமணம் ஒரு வாரத்துக்குள் ஜான், மேரி ஆகியவர்கள் துணையுடன் நடந்தேறியது. திருமணமானபின் ரிவர்ஸ் குடும்பத்தினருக்கும் திரு. பிரிக்ஸீக்கும் அழைப்பனுப்பி விருந்தளித்தோம். டயானாவும் மேரியும் ஜானுடன் வந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நான் இந்தியாவுக்குச் செல்லத் தயங்கிய காரணத்தைத் தூய திரு. ஜான் அறிந்தபோது அவர் என் பெருந்தன்மையையும், கடமை யுணர்ச்சியையும் காதலுறுதியையும் பாராட்டினார். சில நாட்களுக்குள் மகிழ்ச்சி காரணமாகவோ, என் பணிவிடையின் மேம்பாடு காரணமாகவோ, இறைவன் அருளாலே என் கணவர் ஒருநாள் திடுமெனக் கண்ணொளி பெற்றார். எங்கள் வாழ்வில் ஒளி புகுந்தது. திரு. மேஸன் கூடத் தம் தங்கையின் இறுதிநாளில் என் கணவர் அவளுக்காக எடுத்துக் கொண்ட பெருந்தியாகத்தைக் கேள்வியுற்று ஓடோடி வந்தது அவரைப் பாராட்டியதுடன், என்னையும் மனமார வாழ்த்தினார். அடேல் இப்போது பள்ளிக்குச் சென்று ஓய்வுள்ள நேரங்களில் என்னிடமே படித்து வருகிறாள். நீல வானையும் நிலாவையும் அழகிய மலர்களையும் மாநிலக் காட்சிகளையும் நான் என் இருகண்களாலும் மட்டுமன்றித் திரு. ராச்செஸ்டரின் இரு கண்களாலும் கண்டு களிக்கும் பேறுபெற்றேன். பழைய திருமதி ராச்செஸ்டரால் அவருக்கு ஏற்பட்ட குறைகள் என்னால் பெரிதும் மாற்றப் பட்டுவிட்டன என்றறிய நான் மகிழ்கிறேன். ஏனென்றால், தானறியாவிட்டாலும் பைத்தியத்தின் கோளாறினால் அவள் இழைத்த இன்னல்கள் அவர் பழைய வாழ்வில் உறுதி கொண்டிருந்தன. வாழ்விலும் தாழ்விலும் ஒரு நிலைபட்ட அன்பின் ஆற்றல்போல் வாழ்வின் அமைதிக்கு உதவுவது வேறு எதுவுமில்லை. அதன் அமைதி என் வாழ்வில் ஒளிவீசுகிறது. அப்பாத்துரையம் - 7 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  டேவிட் லிவிங்ஸ்டன்  ஐன்ஸ்டீன்  ஜேன் அயர் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 7 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+288 = 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் டேவின் லிவிங்ஸ்டன் 1. முன்னுரை ... 4 2. குடும்பமும் பிறப்பும் ... 7 3. இளமை : கல்வியில் ஆர்வம் ... 10 4. உயர் தரக் கல்வியும் பணியேற்பும் ... 14 5. தென் ஆஃப்ரிகா செல்லல் ... 16 6. குருமான் பணிநிலையம் ... 20 7. அரிமா வேட்டை ... 25 8. மண வாழ்க்கை ... 30 9. ஸெச்சீ° மனமாற்றம் ... 32 10. கலஹாரிப் பாலைவனம் ... 36 11. இரண்டாம் பிரயாணம் ... 42 12. கிழக்கு ஆஃப்ரிகா ... 51 13. மூன்றாம் பிரயாணம் ... 57 14. லிவிங்°டனின் மறைவு ... 64 15. லிவிங்°டனின் அருங்குணங்கள் ... 69 அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன் 1. இயற்கையின் செல்வன் ... 77 2. இளமைப்பயிற்சி ... 88 3. பெர்ன் பதிவுரிமை நிலையம் (1902 - 1909) ... 101 4. பேராசிரியர் (1909 - 1914) ... 110 5. உலகப்புகழ் (1914 - 1929) ... 125 6. அமெரிக்கா ... 140 7. அறிவாட்சியும் பண்பாட்சியும் ... 160 ஜேன் அயர் 1. இளமைக்காலம் ... 177 2. பள்ளி வாழ்வு ... 185 3. திரு. பிராக்கிள் ஹர்ஸ்ட் வருகை ... 192 4. தார்ன்ஃவீல்டு இல்லம் ... 200 5. ராச்செஸ்டர் வருகை ... 207 6. இடர்மேல் இடர் ... 213 7. விருந்தாளிகள் ... 219 8. மற்றொரு தாக்குதல் ... 223 9. திருமதி ரீடின் முடிவு ... 229 10. திருமண ஏற்பாடுகளும் பேச்சும் ... 234 11. மணவினையிடையே முறிவினை ... 239 12. ராச்செஸ்டரின் விளக்கம் ... 247 13. தாழ்வும் வாழ்வும் ... 252 14. அன்பின் குரல் ... 257 15. அமைதி ... 262 பொருளடக்கம் சுhhசு சந்திர போசு 1. முன்னணி வீரர் ... 3 2. இளமையும் கல்வியும் ... 7 3. நாடும் நாட்டியக்கமும் ... 15 4. அரசியல் பணி ஈடுபாடு ... 20 5. குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா? ... 28 6. தியாக வாழ்வும் வெளிநாட்டுப் பயணங்களும் ... 37 7. வெளிநாட்டுப் பயணங்கள் ... 43 8. காங்கிரஸ் தலைமையும் தலைமைப் போட்டியும் ... 52 9. தேசிய முன்னணி இயக்கமும் மாய மறைவும் ... 62 10. வெளிநாடுகளில் புரட்சி இயக்கம் ... 69 11. தலைவர் பெருந்தகை வாழ்க்கையின் படிப்பினைகள் ... 84 நேதாஜியின் வீர உரைகள் ... 92 1. புரட்சியை வளர்ப்பது? ... 93 2. தற்காலிக சர்க்கார் பிரகடனம் ... 101 3. ஆம்; இந்தியா அளிக்கும்! ... 108 4. இழந்த உயிர் திரும்புமா? ... 112 5. இரத்தம் கொடு! சுதந்திரம் இதோ! ... 120 6. காந்திஜிக்குக் காணிக்கை! ... 124 7. ஐரோப்பாவைப் பாருங்கள்! ... 140 8. கற்றுக் கொண்ட பாடம்! ... 152 கன்னட நாட்டின் போர்வால் ஐதரலி 1. விடுதலைப் பாறை ... 161 2. காலமும் களனும் ... 166 3. குடி மரபு ... 173 4. தென்னக அரசியல் அமளி ... 179 5. புகழ் ஏணி ... 187 6. குடிலன் வீழ்ச்சி ... 197 7. வெற்றிப் பாதை ... 205 8. ஆங்கிலேயருடன் போர் ... 215 9. புலியின் பதுங்கலும் பாய்தலும் ... 225 10. விடுதலைப் போராட்டம் ... 235 11. மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும் ... 244