மாணிக்க விழுமியங்கள் - 15 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) நகரத்தார் அறப்பட்டயங்கள் - முதல் பதிப்பு 1963 தலைவர்களுக்கு - முதல் பதிப்பு 1965 நீதிநூல்கள் - முதல் பதிப்பு 1991 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 15 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+352 = 368 விலை : 345/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 368 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. நகதரத்தார் அறப்பட்டயங்கள் முதற் பதிப்பு 1963 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. பதிப்புரை நகரத்தார் அறப்பட்டயங்கள் என்னும் இந்நூலில் எட்டுவகை ஏடுகள் உள்ளன. இவற்றின் காலம் கி.பி.1600 முதல் 1800 வரை என்று மதிப்பிடலாம். நாட்டுவரலாறு என்பது போர்ச் செயல்களையும் அரசர்களின் செய்திகளையும் மட்டும் குறிப்பதன்று; குடிமக்களின் செயல்களையும் சமுதாய நடப்புக் களையும் கூறவேண்டும். அவ்வக்காலத்து மனப்பான்மைகளைக் காட்ட வேண்டும். இவ்வேடுகள் பழனித்தலத்து முந்நூற்றைம்பது ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் சமய நடப்புக்களையும் நடத்தியவர்களையும் அவர்களின் அற்புதச் செயல்களையும் அச்செயல்களை வியந்த அரசர்களையும் அவ்வரசர்களின் சமய மதிப்பினையும் விரிவாகக் கூறுகின்றது. இவ்வறங்களைச் செய்தருளியவர்கள் நகரத்தார்கள்; ஆதலின் நகரத்தார் வரலாற்றினையும் பெருமையினையும் இவ்வேடுகள் சுடடிக்காட்டுகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட பக்கம் கொண்ட இவ்வேடுகள் பாண்டியர், சோழர், மதுரை நாயக்கர், சிவகங்கைச்சீமை மருது, புதுக்கோட்டைத் தொண்டைமான் முதலியோரைப் பற்றிய குறிப்புக்களைக் கொண்டிருக்கின்றன. ஆதலின் வரலாற்றாசிரியர் களுக்குத் துணை செய்யும் என நம்புகின்றேன். முந்நூற்றைம்பது ஆண்டுகட்குமுன் பேச்சுத் தமிழ்ப்படி எழுதப்பட்ட இவ்வேடுகள் தமிழ்மொழி யாராய்ச்சியாளர்க்கும் நல்ல துணை செய்யும். சமயம் பற்றிய பல மரபுகள் இருத்தலின், சைவ சமய வரலாற்றிற்கும் ஈண்டுச்சான்றுகள் உண்டு. இவ்வச்சு நூலில் அடங்கிய ஏடுகளின் வகை:- பட்டயத்தின் அமைப்பு முறைகள் சாலி, கலி, தமிழ் என்ற மூன்றுவகை ஆண்டுகளும் திங்கள் நாள் கிழமை ஓரைகளும் பல பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. இன்னாருக்கு இன்னார் முன்பாக இன்னார் கொடுத்த தர்மசாசனப்பட்டயம் என்று எழுதுமுறையைக் காண்கின்றோம். விளக்கமாகவும் முடிவில் தொகுத்தும் சாசன நோக்கம் தரப்பட்டுள்ளது. சமயத்துறையில் யார் யார்க்கு என்னென்ன மரியாதைகள், மரியாதை வரிசைகள் அவ்வரிசைக்குரிய காரணங்கள், அற்புத நிகழ்ச்சிகள், பூசை நடப்புக்கள், அந்நடப்புக்கு வேண்டும் பொருள் தரங்கள் எல்லாம் ஐயத்திற்கும் வழுவிற்கும் இடமின்றிக் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக்குறிக்கும் நோக்கமே இப்பட்டயங்கள் தோன்றிய நோக்கமாகும். ஒரு பழங் கையெழுத்துப் புத்தகப்படியிலிருந்து இந்நூல் அச்சாக்கப்பட்டுள்ளது. எனினும் மூலப்பட்டயங்கள் ஏடுகளாக இருந்தன என்று அறியவேண்டும். ஒவ்வொரு பட்டயத்திற்கும் எத்தனை ஏடுகள் என்பதனை மேல் அட்டவணையிற் காணலாம். இவ்வறப் பணியை உலகம் உள்ளவரை நடத்துவோம் எனவும், எது நிலை திரிந்தாலும் இவ்வறநிலை திரியோம் எனவும், இவ்வறத்திற்கு இடையூறு செய்தவர்கள் இன்னபழிக்கு ஆளாவார்கள் எனவும், உதவி செய்தவர்கள் இங்ஙனம் வாழ்வார்கள் எனவும் இறுதியில் விடாது குறிப்பிடுவது இப்பட்டயங்களின் வழக்காறாகும். இச்சாசனம் எழுதினது இன்னார் சொற்படிக்கு இன்னான் என்று காட்டி முடிக்கப்படும். யார் எழுதினால் சாசன நோக்கம் வலுப்படுமோ அவரைக்கொண்டு எழுதச்சொல்லும் அறிவுடைமையைப் பார்க்கின்றோம். பட்டயத்தின் தொடக்கத்திலும் கடைசியிலும் முருகன் பாடல்கள் இருத்தலுண்டு. இனி ஒவ்வொரு பட்டயத்தின் கருத்தினையும் சுருக்கமாகக் காண்போம். 1. பழனிக்கோயில் நடப்பு அட்டவணை (பக்கம் 1- 27) நேமங்கோயில் இளநல வகுப்பு குப்பாபிச்சஞ் செட்டி மகன் குமரப்பன் பழனித்தலஞ் சென்று உப்பு வணிகஞ் செய்தது, பழனிக்கோயில் தெய்வநாயக பண்டாரத்து மனையில் தங்கிப் பண்டாரத்தின் உதவியையும் அவர்மனைவி, பார்வதியம்மாள் உதவியையும் பெற்றது. வேலாயுத சுவாமிக்கு இலாபத்தில் மகமைப் பணம் சேர்த்தது, பிறகோயில் நகரச் செட்டியார்களும் குமரப்பனோடு உப்பு வாணிகத்திற்குச் சேர்ந்து கொண்டது. உப்புச் செட்டிகள் என்ற பெயர் பெற்றது. (கலாமடம்)ஈசானிய சிவாசாரியார் கட்டளைப்படி குமரப்பன் பழனிக்குக் காவடி கட்டியது, இன்னின்ன இடத்தில் தங்கிச் சென்று,ஐந்து நாள் மகேசுவர பூசை செய்வது, ஏழு கோவில் நகரத்தாரும் காவடி எடுத்தது. ஈசானிய குருதேசிகர் குமரப்பன் முதலானவர் பசியைப் போக்கியது, பூசைக்குப் பிரம்புத்தடி அருளியது, குமரப்பன் சம்பட்டியில் நத்தலிங்க நாயக்கர் மனைவியின் வயிற்றுவலியைப் பழனியப்பர் அருளாற் போக்கியது. நாயக்கர் மனைவி குமரப்பன் வீடு தேடிவந்து நன்றி செலுத்தியது, நாயக்கர் இரண்டு வேலாயுதம் பழனியப்பருக்குக் கொடுத்தது, வேலாயுத சுவாமி பார்வதியம்மாளுக்கும் குமரப்பன் பெண்சாதி சிட்டாளுக்கும் ஈசானியசிவாசாரி யாருக்கும் ஆயிக்குடி சமீன்தாருக்கும் கனவில் தோன்றிச் சொல்லியது, சமீன்தாரின் சுரநோயைப் போக்கியது, மண்டகப்படி நடத்துவது, பண்டாரத்து மனையை மடமாக வைத்துக் கொள்வது, பண்டாரத்துக்குக் குடும்பத்தார்க்கும் வழி வழி நன்றி மறவாதிருப்பது என்ற கருத்துக்களும் இன்னாருக்கு இன்ன கொடுப்பது என்ற கட்டளை வரன்முறைகளும் இவ்வட்டவணையில் சொல்லப்பட்டுள. மண்டகப்படியில் பண்டாரத்துக்கு அரிதிப் பரிவட்டமும், குமரப்பனுக்கு அலங்காரப் பரிவட்டமும், நகரத்தார்களில் முதலாவது திருநீறும் காளாஞ்சியும் கொடுப்பது எனவும், நகரப்பொதுவிலிருந்து (கலாமடம்) ஈசானிய குருதேசிகருக்கும் (பாதரக்குடி) திருப்புனல் தேசிகருக்கும், தெய்வநாயக பண்டாரத்துக்கும், குமரப்பனுக்கும் கொடுப்பது எனவும், இனம் ஒன்றுக்குத் திருநீற்றுப்பை ஒன்று கொடுப்பது எனவும் மரியாதைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. (பக்.24) 2. ஏழுநகரத்தார் தருமசாசனம் (பக்கம் 28 -42) இது தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் எழுதிக்கொடுத்த தருமசாசனம். சாலி ஆண்டு 1780 என்பது பிழையெனத் தோன்றுகின்றது. கலியாண்டோடும் பிறசாசனங்களோடும் ஒத்திட்டுப் பார்க்கும்போது, சாலி 1520 என இருத்தல் வேண்டும் போலும். யுகங்களின் பெயர்கள், நகரத்தார் பெருமைகள், ஏழு நகரத்தாரின் இருபத்திரண்டு வகுப்புகள், தெய்வநாயக பண்டாரத்துக்கும் அன்னதான மடத்துத் திருவிழாவிற்கும் கொடுக்கவேண்டும் அரிசி முதலான பொருளளவுகள், தீர்த்தமும் திருநீறும் வழங்கும் மரியாதை வரிசைகள், பத்தாந்திருநாள் மண்டகப்படியில் கொடுக்கும் பொருளளவுகள், தங்கி வரவேண்டிய இடங்கள் எல்லாம் இச்சாசனத்து எழுதப்பட்டுள்ளன. சோழவரசன் நகரத்தார் பெண்ணைமருவிப் பொறுக்க முடியாத தொந்தரவு செய்தபடியால், இளையாத்தங்குடி வந்த செய்தியையும், அரச தண்டனைக்கு ஒக்கூருடையான் மறுதலை கொடுத்தபடியால் நகரக்கோயில்களில் ஒக்கூருடையானுக்கு முதல் மரியாதை நடக்கின்ற செய்தியையும் அறிகின்றோம்; எனினும், நேமம் குமரப்பன் பழனித்தலத்துக்கு உப்பு விற்கவந்து பட்டபிரயாசையை மதித்து, பழனித்தலத்தில் முதல் விபூதியும் காளாஞ்சியும் பரிவட்டமும் குமரப்பனுக்கு நடக்கட்டும் என்று (பக்.38) எழு நகரத்தார் அனைவோரும் ஒரேமனதாய்ப்பேசி முடித்தனர் என்பது இச்சாசனத்தின் உயிரான கருத்தாகும். இச்சாசனம் நகரத்தார் சொற்படிக்கு ஒக்கூருடையான் உடையப்ப செட்டி அடைக்கப்பன் எழுதியது. ஒக்கூருடையான் தனக்கு உரிய முதல் மரியாதையைப் பழனித்தலத்தில் நேமம் குமரப்பனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருப்பதால், இச்சாசனத்தை ஒக்கூருடையானைக் கொண்டு எழுதச் சொல்லினர் நகரத்தார் என அறியவேண்டும். ஏழு நகரத்தாரும் தனித்தனி ஆறு கால் கூடத்தில் குமரப்பனைக் கும்பிட்டு விழுந்து திருநீறு வாங்கிக்கொள்வது என்ற மரியாதைச் செய்தியும், குமரப்பன் சந்ததியில் முதல்வருடம் பட்டம் கட்டுகின்ற விவரமும் அறியலாம். 3. ஏழு நகரத்தார் தருமசாசனம் (பக்கம் 42 - 65.) இது சாலி 1688 - கலி 4868 (கி.பி.1766) ஆம் ஆண்டில் குழந்தை பண்டாரத்து மகன் குமாரசாமி பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் அளித்த சாசனப்பட்டயம். மேலைச்சாசனம் போல யுகங்களின் பெயர்களும் நகரத்தார் பெருமைகளும் பிரிவுகளும் பண்டாரத்துக்கும் குடும்ப வழியினர்க்கும் கொடுக்கும் கட்டளைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரணிக்கோயில் பெ. குட்டயன் வைகாவூர் நாட்டு விசயகிரி வேலாயுதத் துரையர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியது, துரையின் பட்டத்தம்மாள் குட்டயனிடம் மகப்பேறு கேட்டது, குன்னக்குடியில் பெரியமருது பாண்டியர் மூன்று கேள்வி கேட்டுத் தக்க விடைபெற்றது, குட்டயனுக்குக் கணையாழியும் யானைக்கொம்பும் கொடுத்தது என்ற அற்புதங்களை அறியலாம். விசயகிரித் துரையும் மருதுபாண்டியரும் உத்தர விட்டபடி, இரணிக்கோயில் பெ. குட்டயனுக்கு அருளாடும் காரணத்தால், இரண்டாவது காளாஞ்சியும் மரியாதைக் காளாஞ்சியும் கொடுப்பது என்ற முடிவு இச்சாசனத்தின் உயிரான செய்தியாகும். மரியாதை வரிசைகளும் காரணங்களும் முறைகளும் 59 - 62ஆம் பக்கம் வரை விரிவாக இடம் பெற்றுள. இப்பட்டயத்தில் விசயநகரத்து அரசர்களையும் அவர்கள் வழியாண்ட நாயக்கர் களையும் மகாமண்டலேசுவரன் எழுபத்தேழு பாளையம் முதலியவற்றையும் பற்றிச் சிறந்த குறிப்புக்கள் உள (பக். 47 - 49) 4. ஏழு நகரத்தார் தருமசாசனம் (பக்கம் 66 -78) இது சாலி 1710 கலி 4889 (கி.பி. 1788) ஆம் ஆண்டில் குமாரசாமி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் கொடுத்த தரும சாசனப்பட்டயம். நகரத்தார்களின் பெருமைகள் பிரிவுகள் ஐந்து நாள் பூசைக்கும் அன்னதான மடத்துத் திருவிழாவுக்கும் கொடுக்கும் அரிசி பொன் பழம் முதலியவை, பள்ளயத்துக்குக் கொடுக்கும் பொருள் அளவுகள் குறிக்கப்பட்டுள. வெற்றிலை பாக்கு பழம் காய்கறி களோடு போயிலையும் சுருட்டும் கொடுப்பதுண்டு என்ற ஒரு புதுச்செய்தியை இப்பட்டயத்தில் கற்கின்றோம். நேமங்கோவில் குமரப்பனுக்கும் இரணிக்கோயில் குட்டயனுக்கும் பிறருக்கும் உரிய மரியாதை வரிசைகளும் காரணங்களும் 73 -76 ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள. தெய்வநாயக பண்டாரத்து மனையில் முன்பிருந்த ஆறுகால் கூரைக் கூடத்தைக் கல்திருப்பணி செய்து ஆறுகால் சவுக்கையாக்கியதும், 78 கால் திருப்பணி மண்டபம் செய்ததும் குறிக்கத்தக்க முன்னேற்றங் களாம். இங்ஙனம் நகரத்தார் செலவு செய்து பணி பெருக்கி னாலும் அனுபவிக்கும் உரிமை பண்டாரத்து வழியினர்க்கு என்றும் உண்டு. வயிரவன் கோயில் வேலப்ப செட்டி வயிரவன் திருப்பணி வேலையில் மிக்கமுயற்சி எடுத்துக் கொண்டதனாலும், சுவாமி வயிரவனிடம் நேரில் தோன்றிப் பேசியதனாலும் (பக்.76) நகரத்தார்களில் மூன்றாவது மரியாதை வயிரவனுக்கு உரியது என்பது இச்சாசனத்தின் உயிரான செய்தியாகும். 5. பிறாமலை ஆதீனம் நடப்பு அட்டவணை (பக்கம் 79 -85) பழனிக்கோயில் இடும்பன்மலை முதல் ஊர் வரும் வரையில் ஈசானிய சிவாசாரியார், பண்டாரம், குமரப்பன் நகரத்தார் செய்யவேண்டிய முறைகள் கூறப்பட்டுள. இன்னாருக்கு இன்ன கடமை என்று சன்னிதானம் சொல்லியபோது ஆதீன மரியாதை தனக்கும் வேண்டும் என்று இரணிக்கோயில் திருவேட்பூ ருடையான் குட்டயன் கேட்டான். மற்றவர்களைக் கலந்தாலோசித்து, திருவாவினன்குடியில் நடக்கிற பட்டுபரிவட்டமும் அந்தச் செலவும் குட்டயன் தனதாக இருக்கட்டும் என்று சுவாமி சொல்லியது. சன்னிதானம் ஊருக்கு வரும்போது குட்டயனுக்கு மூன்றாவது பட்டுப் பீதாம்பரம் கொடுக்கின்றது. 6. ஆதீனம் பட்டாபிடேக அட்டவணை (பக்கம் 86 -90) குமரப்பன் பழனியாண்டவர் அனுக்கிரகம் பெற்ற படியானும், ஆதீனத்துக்கு வேண்டும் காரியங்களும் உழைப்பும் செய்தபடியாலும் ஆதீனப்பட்டாபிடேகத்து. இரண்டாவதாகக் குமரப்பன் பட்டு சாத்துகின்றது என்று ஈசானகுருதேசிகர் மொழிந்தார். இதனை இருபத்தொரு கோத்திரத்து நகரத்தார் களும் சரியென ஒத்துக்கொண்டனர். வழக்கம்போல் நடக்கவேணுமேயொழியப் புதுவழக்கம் செய்யப்படாது என்று இளையாத்தாங்குடி பட்டணசுவாமி வகுப்பு அருணாசலஞ் செட்டி அண்ணாமலை மட்டும் சன்னிதானத்தின் திருவடியில் விழுந்து மறுப்புக் கூறினார். குமரப்பன் பெருமையைக் குருதேசிகர் எடுத்துரைத்தபின் அண்ணாமலையும் ஒத்துக் கொண்டார். ஒத்துக்கொண்டதற்கு உறுதியாக அண்ணா மலையையே அட்டவணை எழுதும்படி ஈசானிய சிவாசாரியார் கணித்தார். 7. மடவாலயத் தருமசாசனம் (பக்கம் 91 - 100) இது சாலி 1727 கலி 4906 (கி.பி.1805) ஆண்டில் நாகப்ப பண்டாரத்து மகன் குழந்தைவேலுப் பண்டாரத்துக்கு ஏழுநகரத்தார் அனைவோரும் கொடுத்த சாசனப்பட்டய மாகும். முன்னைச்சாசனங்கள் போலப் பண்டாரத்துக்குக் கொடுக்கும் நடப்புக்களும் பிறவும் குறிக்கப்பட்டுள. இடம் போதாமையினால் அடுத்தமனை மோளையத்தேவன் வகையறா இடத்தை விலைக்கு வாங்கி ஆக்குபுரையும் முப்பத்தொன்பது கால் திருப்பணி மண்டபமும் கட்டிய வளர்ச்சி குறிப்பிடத்தகும். மடத்திற்காக வாங்கிய இம்மனைகளும் பண்டாரத்தின் அநுபோகத்திற்கு உரியனவே பிள்ளையார்கோயில் வகுப்பு முத்தப்பனுக்குச் சிவப்பட்டியில் பழனியாண்டவருடைய அருள்வந்த செய்தியும், தொண்டைமான் அரசர் முத்தப்பன் வீட்டிற்கு வந்து நினைத்த காரியத்தைக் கேட்டு மகிழ்ந்து சால்வை முதலியன கொடுத்த செய்தியும், முத்தப்பன் கேட்டுக் கொண்டபடி கோவில் வீட்டுக்குத் தாம்பூரவேல் கொடுத்த செய்தியும், நேமங்கோவில் பழனியப்பன் பழனிக்கோவிலுக்குக் காவடி எடுத்து வரும்போது இந்த வேலாயுதத்தையும் வைத்துப்பூசை செய்துவரும்படி சொல்லிய செய்தியும், இதனைச் சொல்வதற்காகப் பழனியப்பனை அரண்மனைக்கு அழைத்துவந்து மரியாதை செய்த செய்தியும் இப்பட்டயத்துக்கு முக்கிய செய்திகளாகும். (பக். 96 -98) தேவகோட்டை ரத்தினவேலாயுதமும் குன்றக்குடி வேலாயுதமும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 8. நிரம்பவழகிய தேசிகர் பட்டயம் (பக்கம் 100 -116) இது சாலி 1549 கலி 4730 (கி.பி.1627) ஆம் ஆண்டில் ஏழு நகரத்தார் முன்பாகக் குன்றக்குடி ஆதீனம் நிரம்ப வழங்கிய தேசிகர் (துளாவூர் மடம்) கொடுத்த பட்டயம். யுகங்களின் பெயர் களும் நாயக்கர் பெயர்களும் முன்னர்க் குறிக்கப்பட்டுள்ளன. தேசிகர் பெருமை, நகரத்தார் பெருமை, கோத்திரம், குலசேகரபுர சவுந்தரபாண்டியன் நகரத்தார்களை நற்குடியாகத் தன் சீமைக்கு அழைத்தது, நகரத்தாரின் வெள்ளாட்டிப் பெண்கள் சோழன் உத்திர விட்டும் (கலாமடம்) ஈசானிய குருதேசிகரை தொழ மறுத்தது எங்கள் நிரம்பவழகிய குருதேசிகர் (துளாமடம்) பாண்டிநாட்டிற்கு வந்தால் நாங்களும் போவோம் என்று உரைத்தது, வெள்ளாட்டிப் பெண்கள் தங்கள் குருவிடம் முறையிட்டது, சோழன் குருதேசிகரை வரவழைத்துப் பாண்டியன் பல கிராமங்கள் தருவான் என்று மொழிந்து இருபத்திரண்டு கோத்திரத்து நகரத்தார் ஆண்களும் வெள்ளாட்டிப் பெண்களும் பாண்டி நாட்டிற்கு வந்தது, பாண்டியன் எல்லோரையும் எதிர் கொண்டழைத்து மாகாணங்கள் சர்வமானியமாக அளித்தது. குன்றக்குடி ஆதீனம் அமைந்தது முதலான நகரத்தார் வரலாற்றுக் குறிப்புக்களை இப்பட்டயத்துத் தெளிவாக அறியலாம். நேமங்கோயில் குமரப்பனும் அவன் மனைவி வெள்ளாட்டி சிட்டாளும் உப்புமாறி எடுத்த மகமையால் இந்த ஆதீனமும் பிற தருமங்களும் நடைபெறுகின்றன எனவும், பழனித்தலத்தில்போல இந்தத்தலத்திலும் நகரத்தார்களில் முதலாவது தீர்த்தம் திருநீறு குமரப்பனுக்குக் கொடுப்பது எனவும் நிரம்பவழகிய தேசிகர் உத்தரவுப்படி நகரத்தார் அனைவோரும் உடன்பட்ட செய்தியை இப்பட்டயம் முக்கியமாகச் சொல்லுகின்றது. மரியாதை வரிசைகள் 114 -15 ஆம் பக்கங்களில் உள்ளன. பட்டயங்களும் நடைமுறைகளும் பட்டயங்களில் குறித்துள் நடப்புக்கள் இன்றும் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எல்லாப் பட்டயங்களிலும் முதல் மரியாதைக்குரியவரான நேமம் குமரப்பன் வழி வந்தோரே இன்று நெற்குப்பை கு.பழ. வீட்டினராவர். இரண்டாம் மரியாதைக்கு உரிய அருளாடி இரணிக்கோயில் பெ.குட்டயன் வழிவந்தோரே இன்று கண்டனூர் குப.சு. வீட்டினர் நகரத்தார்களில் மூன்றாம் மரியாதைக்கு உரிய வயிரவன்கோயில் வயிரவன் வழிவந்தோரே இன்று காரைக்குடி கும.பெரி.சு.பழ. வீட்டினர். தாம்பூரவேல் பெற்ற பிள்ளையோர் கோவில் முத்தப்பன் வழிவந்தவரே இன்று மேலைச்சிவபுரி ஆறு.முரு. குடும்பத்தினர் இங்ஙனம் தெய்வ அருள்பெற்ற நகரத்தார் நால்வர் வழிவந்தோர் ஆல்போல் தழைத்து வாழ்ந்து வருதலின், முன்னோர் பணிகள் இடையறாது காக்கப்பட்டு வருகின்றன என்ற உணர்தல் வேண்டும். இக்குடும்பத்தார்கள் தம் குழந்தைகளுக்கு முருகன் பெயர்களையே வைப்பர் என்பதும் நினையத்தகும். பட்டயங்களும் தமிழும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகட்கு முன்தோன்றிய இச்சாசனத் தமிழ் பலவகையாலும் ஊன்றி ஆராய்வதற்கு உரியது என்று மட்டும் ஈண்டுச் சுட்ட விரும்புகின்றேன். தமிழ் உரைநடை வரலாற்றில் இச்சாசன நடை இடம்பெறத் தகுவது. ஒரு பெரும் புத்தக அளவிற்கு ஒப்பான இச்சாசனப் பட்டயங்கள் பேசுவது போன்ற தமிழ் நடையில் எழுதப்பட்டுள. ஒண்ணு, ரெண்டு, மூணு, பனிரெண்டு, அருசி, குடுத்து, ராசா, போயி, துண்ணுத்துப்பை, மதியாரி, சிறைசாக்கினை, வீட்டுக்குப் போரது, பொக்குசம், நச்சேத்திரம் எனப்பல மரூஉச்சொற்களை நிரம்பக்காணலாம். அக்காலத்துத் தமிழ்ச்சொற்களை எங்ஙனம் ஒலித்தார்கள் என்றும் அறிந்து கொள்ளலாம். மாறி (விற்று) அதுமேரைக்கு (அதுபோல) பரங்கள் (பரதேசிகள்) வளமை (வழக்கம்) பெண்ணாட்டி (பெண்டாட்டி) நெட்டெழுத்து (கையெழுத்து) என்ற சொற்களையும், அடகெடுத்தல், அரிதிப்பரிவட்டம், அலங்காரப் பரிவட்டம், வேற்படி, அருளாடி முதலான சொற்களையும் அறிகின்றோம். உண்டுமா, மெழுகிவைத்துவை. நானும் வருக, வருவோமாகவும் என்ற தொடர் முடிபுகளையும் அறிகின்றோம். நகரத்தார்கள் ஒளவையின் தமிழ்ப்பாட்டுக்குப் பொற்பாடகம் கொடுத்தார்கள் எனவும், வரப்புயர என்று ஒளவை உழவர்களை வாழ்த்தியது போல மடிச்சீலை பெருக என்று வணிகஞ்செய்யும் இந்நகரத்தார்களை வாழ்த்தி வரங்கொடுத்தார் எனவும் இப்பட்டயங்கள் விளம்புகின்றன. நாயக்க மன்னன் முத்தமிழ் அணங்கன் எனவும், வள்ளுவமறையுங் கற்று முப்பால் மொழியும்படியே அறிவை அறிந்து அல்லவை கடிந்து நல்லவை நாட்டிக் குடிதழைக்க ஆண்டான் எனவும் மொழிகின்றன. நாங்கள் ஏழு நகரத்தார்கள் நட்டகல்லையும் இட்டசூலமும் அழிக்க மாட்டோம்; மகாமேருகிரி சாய்ந்தபோதிலும், கடல் ஏழும் வற்றின போதிலும், காவேரி வறண்ட போதிலும், சந்திராள் சூரியாள் தெற்கு வடக்கானபோதிலும் நாங்கள் நகரம் பொய்சொல்ல மாட்டோம் எனவரும் உறுதிப்பாடுகள் நகரத்தாரின் நாணயத்தைப் பறைசாற்றுகின்றன. ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி யெனப்படு வார் என்ற வள்ளுவமறைப்படி வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள் என்பதனை இந்த அறப்பட்டயங்கள் காட்டிக்கொண்டு நிற்கின்றன. பண்டையோர் தம் பொய்யாப் பண்பினையும் கட்டுப்பாட்டினையும் புகழினையும் ஒழுங்கினையும் அறிதற்கு இப்பட்டயநூல் ஆராய்ச்சியாளர் கைப்பட்டுப்பரவும் என்று எதிர்பார்க்கின்றேன். நகரத்தார் சமுதாயம் தமிழ்ப்பெருஞ் சமுதாயத்தின் ஒரு பகுதியாதலின், இப்பட்டயங்கள் தமிழினத்தின் நாகரிக வளர்ச்சியைக் காண முயல்வார்க்குத் துணைசெய்யும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பெறுதற்கரிய தம்முன்னோரின் தருமப் பட்டயங்களை யாவரும் அறியும் வண்ணம் அச்சு நூல்வடிவாக்கி உதவிய திரு.கு.பழ.சு.பழ.சுப்பிரமணிய செட்டியார் அவர்களுக்குத் தமிழுலகம் மிக்க கடப்பாடு உடையது. எல்லா நகரத்தார் களுடைய பொருளுதவியினாலும் இவ்வெளியீடு வருகின்றது. நகரத்தார்களுக்கு எல்லாத் தமிழ் மக்களின் நன்றியுரியது. டாக்டர். வ.சுப.மாணிக்கம் அத்தாட்சி உரை பழநிமலை வேலாயுத சுவாமியாருக்கு நடந்து வருகிற தர்ம அட்டவணை பற்றிய “நகரத்தார் அறப்பட்டயங்கள்” ஏழு அடங்கிய நூல் ஒன்று நெற்குப்பை திரு. பழ.சு. பழ. சுப்பிரமணியன் செட்டியாரவர்களால் 22-7-61இல் முன்னுரையில் அறப்பட்டயங்களின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் அதற்குச் சரியாக அச்சிடப் பெற்ற அச்சுப் பிரதி ஒன்றும் என்னிடம் காட்டப் பெற்றதாக அப்போது எழுதியுள்ளேன். மேற்கண்ட கையெழுத்து -அச்சுப் பிரதிகளுக்கு மூலமான எட்டுப் பிரதிகளை இப்பொழுது பழனி பண்டாரத்தையா வீட்டிலிருந்து தேடி எடுத்து வாங்கிக் கொண்டு வந்து சுப. அவர்கள் காட்டினார்கள். சுவடிகள் பழமை யானவையாகவும், கி.பி. 1608இல் எழுதப்பெற்ற சுவடியில் ஒக்கூருடையான் உடையப்ப செட்டி அடைக்கப்பன் என்ற நெட்டெழுத்தும் 1766இல் எழுதப் பெற்ற சுவடியில் இளநலமுடையான் அடைக்கப்ப செட்டி அருணாசலம் என்ற நெட்டெழுத்தும் 1788இல் எழுதப்பெற்ற சுவடியில் பிள்ளையார் பட்டிக் கோயில் அருணாசலஞ் செட்டி குமரப்பன் என்ற நெட்டெழுத்தும் 1805இல் எழுதப் பெற்ற சுவடியில் இலுப்பைக்குடி லெட்சுமணஞ் செட்டி அருணாசலம் என்ற நெட்டெழுத்தும் உடையனவாகவும் கையெழுத்துப் பிரதியில் எழுதியவர்கள் கவனக்குறைவால் விட்டுவிட்ட சில சொற்கள் - சொற்றொடர்களைக் காட்டுவனவாகவு மிருக்கின்றன. ஏட்டுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்களைக் காட்டுவனவாகவுமிருக்கின்றன. ஏட்டுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்கள் அச்சுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்களோடு பொருள் மாறுபாடுடையனவாகப் பெரும்பாலுமில்லை என்றாலும் ஏட்டுப் பிரதி கிடைத்ததனால் முன்னர் தெளிவு பெறாதிருந்த சிற்சில கருத்துக்கள் இப்போது தெளிவு பெற்றுவிட்டன. எடுத்துகாட்டுக்கு அச்சுப் பிரதியின் 3-ஆம் பக்கத்து 16,17 வரிகளில் “முதல் ஒரு பங்கும் இரண்டு பங்கும் உண்டாச்சுது” என்றிருப்பது ஏட்டுப் பிரதியில் “முதல் ஒருபங்கும் லாபம் இரண்டு பங்கும் உண்டாச்சுது” என்று காணப்பெறுவதை நினைவூட்ட விரும்புகின்றேன். இம்மூல ஆதரவைக் கொண்டு இவைகளிற் கண்ட நடைமுறைகள் தொடக்க காலந்தொட்டு இடையில் எவ்வித மாற்றமுமின்றி நிகழ்ந்து வந்தவை என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம். புதிதாகக் கிடைத்த பழைய ஏட்டுச் சுவடிகளில் உள்ளபடி பட்டயங்களை, அடுத்த பதிப்பு வெளியிடும் போது அச்சிட்டு வெளிப்படுத்துவார்கள். மறைந்திருந்த மூலப் பிரதியை வெளிப்படுத்தித் தந்த ஸ்ரீ ஞானதெண்டாயுதப் பெருமான் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளாகப் பழநி அன்னதான மடத்தின் அறப்பணிகளை மேற்கொண்டு தொண்டுபுரிந்து வரும் நெற்குப்பை கு.பழ. குடும்பத்தாருக்கும், கண்டனூர் கு.ப.சு. குடும்பத்தாருக்கும் காரைக்குடி கும.பெரி.சு. பழ. குடும்பத்தாருக்கும் பட்டயங்களிற் கண்ட நடை முறைகளின்படி பெறும் அருட் பிரசாதங்களின் வாயிலாக எல்லா நலன்களையும் வழங்கியருளுவாராக! நலம் பெருகுக. தேவகோட்டை வே. இராமநாதன், 5-3-363 பாலகவி. கு. நாகப்ப பண்டாரம் உ சிவமயம் வேலுமயிலும் துணை. வைகாபுரி நாட்டில் பழனிஸ்த்தலத்தில் ஆவணி மூல வீதிக்கு கீழ்புரம் மகாரிஷியார் கோத்திரம் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு ஒன்பது நாட்டுக்கும் ஏழு கோவிலுக்கும் இருபத்திரெண்டு கோத்திரமுடைய நகரத்தார் அனவோர்களும் எழுதிக்கொடுத்த நகர அட்டவணை நகரச் சாசனம் நகரப்பட்டயம் வகையறா தர்ம்ம சாசனம் பாராட்டுரை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நெடுங்காலமாகச் செய்துவரும் இறை திருப்பணிகள் மிகப்பலவாகும். இப்பணி களுக்காகப் பல கோடிக்கணக்கான செல்வங்களை நகரத்தார்கள் ஆர்வமுடன் பயன்படுத்தியுள்ளார்கள். இப்பணிகள் புகழ் கருதாமல் புண்ணியமே கருதிச் செய்யப் பெற்றன. ஆதலால், இப்பணிகளுள் பலவற்றைப் பற்றிய செய்திகள், இன்றும் பலர் அறியப்படாமல் உள்ளன. இவ்வாறு பலர் அறியாமல், தொடர் புடையவர்களால் மட்டும் அறியப்பெற்று, நடைபெற்றுவரும் பணிகளுள், பழநிமலை வேலாயுதசுவாமியாருக்கு நடந்துவருகிற தரும அட்டவணையில் உள்ள அறப்பணியும் ஒன்றாகும். இவ் அட்டவணையை நிறைந்த கடவுட்பற்றும், உயர்ந்த குணங்களும் உடைய திரு. கு.பழ. சு.பழ. சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் நூல்வடிவில் அச்சிட்டு வெளியிடுவது பாராட்டுதற்குரியது. இந்நூலின் வாயிலாகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் நெற்குப்பை கு.பழ. குடும்பத்தார் பழநிமலை முருகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கிய வழிபாட்டு முறைபுலப்படுகின்றது. இந்நூலில் எழுத்திலும், சொல்லிலும், தொடரிலும் இலக்கணப் பிழைகள் பல உள்ளன; ஆயினும் இது அறப்பணிக்கு உரிய சான்று ஆதலால் பிழைகளைத் திருத்தாமல், தம் முன்னோர்கள் எழுதிவைத்த மூலத்தில் உள்ளவாறே திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் அச்சிட்டுள்ளார்கள் என எண்ணுகிறேன். இவ் அறத்தினைத் தொடங்கிய முன்னோர் கருத்திற் கேற்ப இனியும், இவ் அறம், தொடர்ந்து நடைபெற்று வருவதற்கும், இத்தகைய அறப்பணிகளை மேலும் மேலும் ஆற்றுமாறு அடியவர்களைத் தூண்டுதற்கும் இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. பழநிமலை முருகப்பெருமான் இவ் அறம் வளர அடியவர்களுக்கு அருள்புரிவானாக. அண்ணாமலைநகர் லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் 26-5-61 தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னுரை நெற்குப்பை திரு.கு.பழ.சு.பழ. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு நடந்துவருகிற தர்ம அட்டவணையின் பழைய கையெழுத்துப் பிரதி ஒன்றையும் அதற்குச் சரியாக அச்சிடப்பெற்ற அச்சுப்பிரதி ஒன்றையும் என்னிடம் காட்டினார்கள். அதில் பழனி ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமிக்கு ஆண்டுதோறும் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் காவடியெடுத்து, மாகேசுவரபூசை வழக்கமாக நடத்திக் கொண்டு வருவதன்வரலாற்றுக் குறிப்பு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. நெற்குப்பை கு.பழ. குடும்பத்தின் முன்னோர்களால் மிகச்சிறிய அளவில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பெற்ற இவ்வழிபாடு ஸ்ரீ தெண்டாயுத பாணியின் பேரருளாலும், நகரத்தார்களின் ஒத்துழைப்பாலும் நாளுக்கு நாள் மேலோங்கிச் சிறப்புற்றுப் பயன் வழங்கி வந்திருக்கிறது என்பதை இவ்வட்டவணை நன்கு தெரிவிக்கிறது. இத்தகைய உயர்ந்த வழிபாடு இடையில் சில ஆண்டுகளாக இதில் தொடர்புடையார் சிலர் கொண்டமனப்பிணக்குகளால் கொஞ்சம் மாறுதல்களை அடைந்து வருகிறது என்று தெரிகிறது. பழைய ஆதரவாகிய இவ்வட்டவணையில் கண்டபடி இச்சிவ புண்ணியச் செயல் தொடர்ந்து நிகழ்ந்து வருமானால், நகரத்தார்களுக்கு அது இம்மை மறுமைக்குரிய இருவகைப் பேறுகளையும் எளிதில் வழங்கும் என்பதைச் சொலவும் வேண்டுமோ? ஆண்டவன் திருமுன்பில் அடியார்கள் அனைவரும் தொண்டுசெய்யும் மனப்பான்மையை அன்றிப் பிணக்குக்குரிய வேறு மனப்பான்மைகளைக் கொள்ளுதல் சிறிதும் பொருந்துவது ஆகாது. இவ்வட்டவணையில் எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், சொற்றொடர்ப் பிழைகள் உள்ளன வேனும் இதனை எழுதிய முன்னோர்கள் இதிலுள்ள பொருளையே குறிப்பாகக் கொண்டவர்கள் ஆதலின் அவர்களைப் பின் பற்றி நாமும் இதன்பொருளிலேயே கருத்தைச் செலுத்துதல் வேண்டும் என்பதனாலேயே பிழைகளைத் திருத்தாமல் அச்சிடும்படி தெரிவித்தேன். அதனை ஏற்று, திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் இதனை வெளியிட்டுள்ளார்கள். இவ்வட்டவணை வெளியீடு, இடையில் ஏற்பட்டிருக்கிற பிணக்குகளை மாற்றி முன்புபோல் முறையாக வழிபாடுகள் நிகழும்படி செய்யும் என்றும் உறுதி கொண்டு அவ்வாறு நிகழப் பழநிமலை ஸ்ரீ ஞான தெண்டாயுதபாணியின் பொன்னடிக் கமலங்களை வாழ்த்தி வணங்குகின்றேன். அன்புள்ள தேவக்கோட்டை பாலகவி வயிநாகரம் 3-5-61 வே. இராமநாதன்செட்டியார் தருமபுர ஆதீன வித்துவான், திருவண்ணாமலை ஆதீன விரிவுரையரசு, மதுரை ஆதீனச் சித்தாந்த சைவ வித்தகர், சித்தாந்தப் புலவர் மாமணி. அட்டவணை நடப்பு வையநீடுக; மானமளை மென்னுக; மெய்விரும்பிய அன்பர் விளங்குக; சைவ நென்னெறிதானத் தளைத்தோங்குக; தெய்வவென்றி திருநீறு சிகாக்கவே; மூவிறு முகங்கள் போற்றி; முகம்பொலி கருணைபோற்றி; யாவருந் துதிக்காய்போற்றி; நின்ற ஈராறுதோள்போற்றி, காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேல், மலரடி போற்றி; யன்னான் சேவலு மயிலும் போற்றி; திருக்கை வேல்போற்றி போற்றி (2) திருச்சிற்றம்பலம். வேலுமயிலும் துணை. பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு நடந்து வருகிற தரும அட்டவணை. நடப்புக்காக அட்டவணை. பழனிக்கோவிலுக்கு தருமம் உண்டாக்கின விபரம் இளையாத்தகுடி ஏழு நகரத்தார்களில் நேமங்கோவில் சோளசிங்க வளநாட்டான் குலசேகரபுரத்தில் தேனாறு பாயும் இளநலமுடையான் குப்பாபிச்சஞ்செட்டி குமாரன் குமறப்பன் பழனிக் கோவிலுக்குப்போய், பழனிமலை வேலாயுத சுவாமியையும் தரிசிக்கவேணுமென்று யெண்ணங்கொண்டு உப்பு வியாபாரமும் கொண்டுபோயி வித்து, சுவாமி தெரிசனம் செய்துவருவோம் யென்று யெண்ணி, தான் ஒரு உப்புக் கடகமும் மரவன்தேவன் தலையில் பத்துக் கடகமும் கார்காத்த வேளாளன் சுப்பிரமணிய வேளாளன் சோரு வடிக்கவும் மாகக் கூட்டிக் கொண்டு பழனிக்கோவிலுக்கு வந்து ஆவணிமூல வீதிக்கும் கீள்புரம் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வனாயக பண்டாரத்து மனையில் வந்து இரங்கி, உப்புக் கடகமும் மிரக்கிவைத்து உப்பு மாரி, ஒருபணம் லாபத்திற்கு அரைக்கால் பணம் மகமை யெடுத்து தெய்வநாயக பாண்டரத்தின் பெண்சாதி பார்வதி யம்மாள்யிடம், யெங்களுக்கும் தங்கள் வீட்டிலுள்ளவருக்கும் மூன்று பரதேசிக்கும் சோருவடித்துப் போடவேணும். பண்டாரத்தையாவை மலைக்கி வரும்படி சொல்லி சுவாமி தெரிசனம் செய்துவைக்கும்படியாகவும் செய்ய வேண்டியது அம்மாள் யென்று சொல்ல `அப்படியே யாகட்டு’ மென்று சொல்லி, சோரு வடித்து காயி அவித்து வைத்திருந்தார்கள். மலையில் சுவாமி தெரிசனம் செய்து வந்து பண்டாரத்தையாவை சாப்பிடச் சொல்லி, குமரப்பனும், மரவன் தேவனும் காராளன் சுப்பிரமணிய வேளானும் பரதேசியுமாக இருந்து சாப்பிட்டு, பண்டாரத்திற்கு ஒரு ப™மும், பார்வதி யம்மாளுக்கு ஒரு பணமும் குடுத்து, மருவளி வருவோம், உப்புமார வருவோம்; இனி வந்தால் தங்கள் வீட்டில்தான் வருவோம் என்று சொல்லி தங்கள் ஊருக்குப் போனார்கள். மருமாசம் உப்பு ரெட்டித்துக்கொண்டு வந்தார்கள். வந்தும் பழனிப் பட்டணத்தில் தெய்வநாயக பண்டாரத்து வீட்டில் வந்து இரங்கி, பளைய மேரைக்கு வடித்துப் போட்டார்கள். பண்டாரம் இந்தவாட்டி சுவாமிக்கி ஏழு பணம் மிச்சம்; போயி வருகிறோ மென்று சொல்லிக் கொண்டு இதுமேரைக்கி மாச மாசம் ஒருதரம் உப்புக் கடகம் கொண்டுவந்து மாருகிறது; சிலவுபோக மாசம் பத்துக்கு (72) பணமும் கண்டது. இந்தப் பணம் எழுபத்திரண்டு பணமும் பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு வருகிற மாசம் பண்டாரம்; சுவாமி பணத்துக்கும் உப்பு வாங்கி, கடகத்தில் கொண்டு வருகிறோம். யென்று சொல்லிக்கொண்டு வந்தார்கள். வந்து மருவளியில் தானும் உப்பு வாங்கிக்கொண்டு, சுவாமிக்கு உப்பு வாங்கிக் கொண்டு, பழனிக் கோவிலுக்கு வந்து, தெய்வநாயக பண்டாரத்து வீட்டில் வந்து இரங்கி, பண்டாரத்தையும் கண்டு துண்ணுரும் வாங்கி, சேமலாபம் விசாரிக்க “இந்த வாட்டி,இருபது நாளாயி மளைபிடிச்சுப் பேஞ்சபடியால் உப்பு ரொம்பவும் பிரியமா யிருக்கிறது”. யென்று பண்டாரம் சொல்ல, உப்பு மாரும்போது முதல் ஒரு பங்கும் இருண்டு பங்கும் உண்டாச்சு: பண்டாரம் என்று சொல்ல, பண்டாரம் “இந்தவாட்டி சுவாமிக்கி உப்பு வாங்கி வந்தபடியால் இந்த லாபங் கிடைத்தது”. வளமைபோல், சோரு வடிச்சுப் போட்டு சுவாமிக்கும் மகமைப் பணம் ஒண்ணுக்கு அரைக்கால் பணம் மேரைக்கி எடுத்து முதல்சேத்தி, இந்தப்படிக்கு மூணு வருஷம் நடந்து, அப்பால் நாலாவது வருஷம் நேமமான இளநல முடையான் குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனும், மேப்படியான் பெண்சாதி சிட்டாளும் மாத்தூர் கோவில் உடையான் செட்டி கருப்பாத்தானும் சூரக்குடிகோயில் குமரப்ப செட்டி குமரப்பனும், யிளையாத்தகுடி கோவில் நாச்சியப்பசெட்டி முத்துக்கருப்பனும், வயிரவன் கோவில் முத்துவடுகன் செட்டி வீரப்பனும் ஆக அஞ்சுபேரும் அஞ்சு கடகம் உப்புக் கொண்டும் பத்து ஆள் மரவன் தேவன் தலையில் பத்துக் கடகம் உப்பும், காராளச்சாதி சுப்பிரமணிய வேளானையும் கூட்டிக் கொண்டு பழனிக் கோவிலுக்கு உப்பு மாரவந்து பழனிப் பட்டணத்தில், ஆவணிமூல வீதிக்கும் கீள்புரம் தெற்கு வாசல் வீடு, தெயிவசிகாமணிப் பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரம் வீட்டில் வந்து இரங்கி, உப்பு மாரி, பார்வதி யம்மாள்ளிடம் சொல்லி வந்த நகரத்தார்களும், ஆள்களுக்கும், தங்கள் வீட்டிலுள்ள ஜனங்களும் அஞ்சு பரதேசிக்கும் சோரு வடிச்சுப் போடும் படிக்கும் குடுத்து, பண்டாரத்தை மலைக்கி, சுவாமி தெரிசனம் செய்துவைத்து வீட்டுக்கு வந்து, பண்டாரத்தைச் சாப்பிடச் சொல்லியும், மற்றும் யாவரும் பரதேசிகளும், சாப்பாடு பண்ணி, பண்டாரத்துக்கு குமரப்பன் குடுக்கிறது பணம் ரெண்டும், அம்மாளுக்குக் கொடுக்கிறது ரெண்டு ப™மும், போகப் பாக்கி, பண்டாரத்து பணம் அஞ்சும், அம்மாளுக்குப் பணம் அஞ்சும் குடுத்து, சிலவுபோக முதலுக்குக் காலையரைக்கால் (3/8) பங்கு கிடைத்தது. இந்த இடத்தில் வந்து இரங்கின நாள் முதல் அன்னதானம் மென்மேலும் உண்டாகித்தான் வருகிறது; அம்மாள் வடிச்ச நாள்முதல் எனக்கு லாபம் மென்மேலும் கிடைக்கிறது; இதுவரை சுவாமிக்கி மகமை வந்தது ரூபாயி (85) இந்த ரூபாய் எண்பத்தைந்தும் இருக்கிறது. இந்தவாட்டி மகமைப் பணம் (42) நாப்பத்துரெண்டுமிருக்கிறது ஆக ரூபாய் தொண்ணூற்றாரைய காலும் இருக்கிறது. இதுமேரைக்கி மகமையும், சுவாமி பணத்துக்கு உப்பு மாருகிறதும் மாக மாசம் ஒருதரம், பழனிக் கோவிலுக்கு வந்து உப்பு மாருகிறது. இந்தப்படி சுவாமிக்கு லாபம் முண்டாச்சுது; செட்டிப்பிள்ளை களுக்கும் லாபம் உண்டாச்சுது; இது சங்கதி சில நகரத்தார்கள் தெரிந்து நேமம்மான குமறப்பனிடம் கூலிக்கும் சிலபேரும், சுவாமிக்குக் கூலியாளாகவும், இது மேரைக்குச் சிலபேரும், நாலு, ரெண்டு (4,2) பேரும் தனதிலும்மாக அஞ்சு, ஆறு (5,6) வருஷம் வந்து உப்பு மாரியும், பண்டாரத்து வீட்டில் யிரங்கியும், பார்வதியம்மாள் அன்னம் வடிச்சுப் போட்டும் நடந்து வந்தது. இப்படி மகமையும் ரெம்ப லாபமும் வந்து சுவாமிக்கு நூறு வறாகன், நூத்திஇருபது வறாகன் முதல் உண்டாச்சுது; பழனியாண்டவருடைய காரங்கள் இன்னமட்டும் யென்று சொல்லமுடியாது. பழனிக் கோவிலுக்குப் பேரா சேதி பிறாமலை அஷ்ட்டமடம் அஷ்ட்டகசம், அஷ்ட்டநாகம் தாங்கிய சிம்மாசனம், யேகாதசிக்குத் துவாதேசி யாதினம் வேப்பம்பூ மாலை உடைய யீசானிய சிவாசாரியார் யெங்களுக்கும் பாண்டிய றாசாவுக்கும் திருமலையருக்கும் குருதேசிகர், விசாரித்து, பழனி ஸ்தலத்தினுட அதிசெய்தியையும் நேமமான குமறப்பன் பட்ட பிரயாசையும் பழனி ஸ்தலத்தில் தெய்வ சிகாமணிப் பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரமும் மேல்படியார் பெண்சாதியும் இருக்கின்ற நடபிடிக்கைகளும் கேட்டு ரெம்பவும் குருதேசிகர் சந்தோஷப்பட்டு “நானும் பழனிக் கோவிலுக்கு தைப் பூஜத்துக்குப் போவோம் வருக வென்று உத்தரவு கொடுத்தார்.” அதுமேரைக்கு ஆகட்டு மென்று குமரப்பன் சொல்ல, குருதேசிகர் நான் “அங்கே வந்தால் இனக்குப் பூசைமடம் செய்ய சாகை உண்டுமா?” வென்று கேட்டார். குமறப்பனும் தெய்வநாயக பண்டாரம் தது இடத்தில் மனை சுத்துக்கட்டும் ஆறுகால் கூடமுமிருக்கிறது; அதில் ஒரு பாரிசம் சன்னியதானம் ஆதீனம் வைத்துக் கொள்ளலாம். அதுமேரைக்கு தைப் பூஜத்திற்கு போகலாம் யென்று குருதேசிகர் சொல்ல உத்தரவின்படி நடக்கிறோம் யென்று குமரப்பனும் விடை பெற்றுக்கொண்டு தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். மறுமாசம் பழனிக் கோவிலுக்கு உப்புக் கடகம், வளமைபோல வந்து, பண்டாரத்தைக் கண்டு யெங்களுக்குக் குருதேசிகர் தைப் பூஜத்திற்கு வருகிறதாகச் சொல்லி இருக்கிறார்கள்; அதுமேரைக்கு அழைத்து வருகிறnhம் என்று சொல்லி கேட்டார். அப்படியே குருதேசிகர் வர யென்ன புண்ணியம் செய்திருக்கிறதோ யென்னுடைய மனை யென்று ரெம்பவும் சந்தோஷப்பட்டு அதுமேரைக்கு நல்லது யென்று பண்டாரம் சொல்ல, பண்டாரத்தையாவுக்கு கொடுக்கிற கட்டளைப் பணமும் கொடுத்து அம்மாளுக்கும் வளமைப்படி கொடுத்து ஊருக்குப் போனார்களாகவும். தைப் பூஜத்திற்கு ஈசானிய சிவாசாரியார் உத்தரவுபோல், குமரப்பனும் போயிச் சேர்ந்து, கண்டுபேசி, அது மேரைக்கிக் குருதேசிகர் வாகனம் பல்லாக்கு தயார் செய்து, சகல விருது வாத்தியத்துடன், பகல் தீவட்டியுடன் பழனிக் கோவிலுக்கு வந்து தெய்வநாயக பண்டாரம் வீட்டில் இரங்கி, மறுநாள் மலைக்கோவிலுக்குப்போய் சுவாமிக்கு அபிஷேகம் முதலானது செய்து வீட்டுக்கு வந்து, இந்தத் தெய்வசிகாமணி பண்டாரத்து மனையில் ஒரு மடமாக வைத்து, தைப் பூஜத்தில் மகேசுவர பூஜையும் பிராமணாள் போஜனம் செய்தால் ரெம்பவும் தேவிலை இந்தப் பழனி ஸ்தலத்திற்க்கு வந்ததின்பேரில் தங்கள் முதலாகிய பேருகளுக்கு அதிக லாபமும்,யெனக்கு இந்தத் தெரிசனையும் கிடைத்தது. ஆகச்சே வருகிற தைப் பூஜத்திற்கு, குமரப்பன் காவடி எடுத்துக் கொண்டு வரவும் வேணும். நானும் வருகிறேன். இந்த ஸ்தலத்தைப்போல வேறு ஸ்தலத்தை ஈடு சொல்லக்கூடாது. நமக்கு அமைந்த பண்டாரத்தைப் போல கிடையாது. இதுமேரைக்கிச் செய்ய வேணும் யென்று குமறப்பனுக்கு, வந்த நகரத்தார்களுக்கு தெய்வநாயக பண்டாரத்துக்குச் சொல்லி, அதுமேரைக்கிச் சம்மதித்து, பண்டாரத்துக்கு குமரப்பன் வளமைப்படி பணம் ரெண்டும், அம்மாள் பார்வதியாயிக்கி பணம் ரெண்டும் கொடுத்து, பிரையாணம் சொல்லி அம்மாள் தங்களுடைய கையில் சோறு வடிச்சுப் போட்ட மூலமாயி ரெம்பவும் பிரவல்லியமாச்சுது; நாங்களும் சேமத்தை யடைந்தோம். எனக்கும் உப்புச் செட்டிகளென்ற பெயருங் கிடைத்தது என்று சொல்லிக் கொண்டு வந்தார். ஈசானிய குருதேசிகர், தெய்வநாயக பண்டாரத்தை குருதேசிகர் திருவடியில் சாஷ்டங்கம் நமஸ்காரம் செய்துவித்து, உத்தரவுப்படியே யென்று சொல்ல, குருதேசிகர் அணிந்த பட்டையும் இருபது பணமும் குடுத்து பண்டாரம் நான் போய்வருகிறேன் நம்ம பேசியபடி தைப்பூஜம் பத்து வேளைக்குமுன் எங்களுக்கு வந்துசேர வேணும் நாம் யெல்லாரும் யிந்த ஸ்தலத்திற்கு வருவோம்; தான் வந்துதான் காவடி கட்ட வேண்டியிருப்பதால் பூஜைக்கி வந்துசேர வேண்டியது அது மேரைக்கி வந்துசேருகிறோ மென்று சொல்லிக்கொண்டு அவரவர்கள் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். மாசா மாசா குமரப்பனும், மேற்கண்டவர்களும் வளமைப்படிக்கு வந்து உப்பு மாரியும் வளமைப்படி பாருவதி யம்மாளுக்கு சோரு வடிச்சுப் போடும்படி சொல்லியும் வருகிற நாளையில் மார்கழி மாசத் தவணையில் தெய்வநாயக பண்டாரத்தையாவை யெங்களுடன் வரவேணு மென்று அதுமேரைக்கு, தெய்வநாயக பண்டாரம் பிரையாணப்பட்டு பாருபதியம்மாளுக்கு காவடியும் குருதேசிகரும் வருகிறபடியால் நம்ம வீட்டுகள் யெல்லாம் மெளுகி வைத்துவை யென்று, குமறப்பன் கூடவே யூருக்கு வந்து, இரண்டு, நாலு வேளை சென்று ஈசானிய குருதேசிகரிடம் பண்டாரத்தைக் கூட்டிக் கொண்டு போயி, சுவாமி யவர்களுக்கு பழனியப்பருடைய துண்ணூரு பிரசாதம் குடுத்து, கும்பிட்டு விழுந்து உத்திரவுப்படி வந்து இருக்கிறேன். யென்று சொல்ல குருதேசிகர் அதுமேரைக்கி நடத்துவோம் என்று இருப்பிடமும் கொடுத்து குமறப்பனையும் இருக்கச் சொல்லி, இன்னும் யெத்தினை நாள் இருக்கிறது யென்று பார்ப்போம் யென்று சொல்லிப் பார்த்து இன்னும் அஞ்சுநாள் இருக்கிறது, நவமி திதி அசுவனி நக்ஷத்திரம் அன்றுதான் காவடி யெடுக்கவேணும் யென்று குருதேசிகர் சொல்ல, குமறப்பனும் அதுமேரைக்கி னான் வளவுக்குப் போயி வருகிறேன் யென்று சொல்ல, குருதேசிகர் யாறாறு காவடி யெடுக்கிறீர்கள்? என்று கேள்க்க, மற்றவர்கள் யாவரும் காவடி யெடுக்கவும் மாட்டேன் யென்றும் சிலவுக்குப் பணம் கிடையாது யென்றும் சொல்லிப் போட்டார்கள் என்றும், நான் வரும் வரை, பண்டாரத்தையாவை நம்ம ஆதீனத்தில் யிருக்கும்படி உத்திரவுஆக வேண்டியது. நானும் சிட்டாளும் பிரையாணத்துக்கு முதல் நான் வந்து சேருகிறோம். காவடியும் சன்னியதானத்தில்தான் செய்துதான் குடுக்க வேணு மென்றும் சொல்ல அதுமேரைக்கி நடத்துவோம், பண்டாரமும் நம்மு மடவாலயத்தில் தான் யிருக்கட்டும் யென்றும் சொல்லி யிருக்கச் சொன்னார். அதுமேரைக்கி குமறப்பனும் சிட்டாளும் வந்து சேர்ந்தார்கள். குருதேசிகர் ஆதீனத்தில்தான் காவடியும் கட்டி, தெய்வநாயக பண்டாரத்தை காவடிக்கிப் பூசே செய்யச் சொல்லி, காவடியைத் தூக்கி குமறப்பனுக்கு வைத்து சகல விருது வாத்தியத்துடனும் யீசானிய குருதேசிகரும் பண்டாரமும் யின்னம் மற்றவர்கள் யாவரும் பிரையாணமாகி வரும்போது. கண்டவராயன் பட்டியில் உதையாதி ஸ்தானம் செய்து சிவதவம் முடித்து மருதுத்தோப்பில் மாத்தியானம் செய்து சிவபூசை முடித்து, காவடிக்கும் சுவாமி சமையலில் அன்னமெடுத்து தெய்வநாயக பண்டாரம் பூசை செய்து, துண்ணூரு வாங்கிக் கொண்டு யாவரும் சாப்பிட்டு சிங்கம்பிடாரியில் அத்தி முடித்து, சேவகப் பெருமாள் கோவில் சாகையும் வைத்து, மருதினம் வாரிச்சல யூரினியில் உதையாதி ஸ்தானம் செய்து சிவதவம் முடித்து, சம்பட்டியில் மாத்தியானம் சிவபூசை காவடிப்பூசை போசனுமும் செய்து கோவில் பட்டியில் சந்தியும் சாகையும், மறுதினம் உப்புநதியில் உதையாதி ஸ்தானமும், யிடையன் குளத்தில் சிவபூசையும் காவடிப்பூசையும் போஜனமும், திண்டுக்கல் அபிராமியம்மன் கோவில் சந்தியும் சாகையும், மருதினம் மாங்கரைந்தியில் உதைய ஸ்தானமும் சிவதவமும் பலக்கனூத்தில் சிவபூசையும் காவடிப் பூஜையும், போஜனமும், இன்று பிரதோஷம் ஆனதால் சந்தியும் சாகையும், இந்த இடம், மருதினம் நங்காஞ்சிநதி உதைய ஸ்தானம் சிவதவமும் சந்திர சிவபூசையும் காவடிப் பூசையும் போசனமும், ஆயிக்குடியில் பெருமாள்கோவில் சந்தியும் சாகையும் மறுதினம் இடும்பையா தீர்தத்தில் உதைய ஸ்தானமும் சிவதவம் மாத்தியானம் சிவபூசை போஜனம் செய்து தெய்வநாயக பண்டாரம் விசையகிரி வேலாயுத சின்னானாப்ப நாயக்கர் துரைகளிடம் போயி யெங்கள் குருதேசிகர் வந்து இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் குருதேசிகன் யார்? என்று கேள்க, வேப்பம்பூ மாலை யணிந்தவர் அஷ்டலச்சுமி வாசல் உள்ள மடாதீனம், சிங்மாசனாதி மீனக்கொடி யுடையார், பகல் தீவட்டியுடையோர், வேதமொழி தவறாதவர், துவாதேசிக் கட்டளை யுடையவர், பாண்டிய மகாராசாவுக்கு குருதேசிகர், யெங்கள் உப்புச் செட்டிகளுக்கும் குருதேசிகர், காவடியும் சுவாமியுமாக வந்திருக்கிறார். சுவாமியையும் காவடியையும் அழைத்து என் வீட்டில் வைத்தும், பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு அபிஷேகம் நடக்க வேண்டி இருக்கிறபடியால் கோவில் வாத்தியம் உடன் அழைத்துவர வேணும் யென்று பண்டாரம் சொல்ல “பாண்டியராசா குருதேசிகர் நான் யெதிர்கொண்டு அளைத்து வருவோம்; பல்லக்குக் கட்டு” யென்று மந்திரிக்கி உத்தரவு செய்ய, அதுமேரைக்கி பல்லாக்குக் கட்டி, சகல விருது வாத்தியத்துடன் தெய்வநாயக பண்டாரம் பழனியய்யா பிரசாதமும், தட்டில் வைத்துக்கொண்டு ராசா கூடவே இடும்பையா மலையடிவாரத்தில் இருக்கிற ஈசானிய சிவாசாரியார் திருவடியில் றாசா பாதக்கை இருபது பொன்வைத்து, நமஸ்காரம் செய்து றாசாவுக்கு ஆசீர்பாதம் செய்து றாசாவுக்கு இருப்பிடமுங் கொடுத்தது அனுக்கிரகம் கொடுத்தார். உடனே தெய்வ நாயகப் பண்டாரம் பழனியருப்பருடைய துண்ணூரு பிரசாதமும், சுவாமிக்கும் றாசாவுக்கும் கொடுத்து, காவடிக்கித் தீவார்த்தனை செய்து காவடியைத் தூக்கிக், குமறப்பன் தோளில் வைத்து வரும்போது, பழனியப்பாருடைய திருவிளையாட்டை குருதேசிகரும் றாசாவுமாகப் பார்த்து ஆண்டவர் கிருபை இதுமேரைக்கி இருக்கிற தென்றும் பேசிகொண்டு பகல் தீவட்டி, சகல விருது வாத்தியத்துடன் சிவகிருவலம் வந்து, பழனிப்பட்டணத்தில் ஆவணிமூல வீதிக்கும் கிளக்கில் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்து வீட்டில் வந்து இரங்கியிருந்தார்கள். தென்புறம் பட்டகசாலையில் சுவாமியும் கீள்புரம் பட்டக சாலையில் சிவபூசையும் வைத்துக்கொண்டு, குமறப்பனும் கிட்டாளும் வடபுறம் பட்டகசாலை வீட்டில் யிருந்தார்கள். மற்றவர்கள் யெல்லாம் மேல்புறம் பட்டக சாலையில் இருந்தார்கள். றாசாவும் விடைபெற்றுக்கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார். மறுதினம் பரதேசிகள் ஐம்பத்தியொரு பேருக்கும் பிறாமணஆள் அன்பத்தியொரு பேருக்கும் திட்டம்செய்து, தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரம் பெண்சாதி பாருபதி யம்மாளை யழைத்து, இன்றைய தினம் பரதேசி ஐம்பத்தொரு பேருக்கும் அன்னம் வடிச்சுப் போடவேணும் யென்று சொல்ல அது மேரைக்கி ஆகட்டு மென்று சொல்ல, சுவாமி கூடவந்த சுயம்பாகிகள் பிறாமநாள் அன்பத்தொரு ஆளுக்குச் சோரு வடிச்சுப் போட்டு, பூசம் முதல், நாள் மூன்று வரை வடிச்சுப் போடுகிரது. மகம் நக்ஷத்திரத்தில் காவடி அபிஷேகம், பழனிமலை வேலாயுத சாமிக்கு அபிஷேகம் செய்துவந்து மரு தினம் யிருந்து, பழனித் துரைக்கி திருமுக மனுப்பி, ராசாவும் வந்து யின்று அரமனைச் சாப்பாடு யென்று சொல்லி சகல பதார்த்தமுங் கொடுத்து, வந்து குடுத்து சாப்பாட்டு மேல் பிரயாணம் செய்யவேணு மென்று சொல்லினார் றாசா. அதுமேரைக்கு நடக்கிறோ மென்று சொல்லி, இன்றும் றாசா உத்திரவு சன்னியதானம் வருஷந்தோறும் வரும்படியாக விரும்புகிறேன்; தங்கள் சிலவுக்கு அன்பது பொன் கொடுத்து விடைபெற்றுக் கொண்டு அரண்மனை வந்து சேர்ந்தார். பண்டாரத்துக்கும் குமறப்பன் வளமைபோலக் குடுத்து, காவடிப் பூசைக்கி வரப்போக ஒரு பொன் கொடுத்து, அம்மாள் பாருபதி யாயிக்கி ஒரு சேலையும் குடுத்து, பண்டாரத்துக்கு, காவடி அபிஷேகத்திற்கு ஆக பனிரெண்டு பணம் கொடுத்தார்; குருதேசிகர் பண்டாரத்துக்கு ஏற்பட்ட இருபது பணமும் பட்டும் கொடுத்து, இப்போது ரெம்ப பிரயாசையானதால் இந்த வாட்டி நாற்பது (40) பணமும் கடுத்து போயி வருகிறேன்; இது மேரைக்கி வருஷம் தோரும் யூருக்கு வந்து, காவடி கட்டிக்கொண்டு வந்துசேர வேணும் யென்று உத்திரவு செய்து, இனி பழனிமலை வேலாயுத சுவாமிக்குப் புனர்பூசையில் திருக்கல்யாணம் யானபடியால் அன்றையத்தினம் சோரு வடிச்சுப்போட்டு, ஆகநாள் நாலு ஆகுது, ராசா ஒருதினம் போஜனமானதால் ஆக நாள் ஐந்து யிருக்கிறது. வருகிற வருஷம் முதல் அஞ்சு நாளைக்கு மகேஸ்வர பூசை செய்யவேணும் யென்று சொல்லிப் போட்டு, பிரையாணத்திற்கு பல்லக்குக் கட்டச் சொல்லிப் புறப்பட்டு சம்பட்டியில் குருதேசிகரானவர் குமறப்பனுக்கு துண்ணூரு குடுத்து வீட்டுக்குப் போம்படி உத்திரவு கொடுத்தார். அதுமேரைக்கி குமறப்பன் தன் வீட்டில் மேல்புரம் வீட்டில் காவடியை வைத்து சோருவடிச்சு ஒரு பரதேசிக்கிச் சோரு போட்டுத் துண்ணூரும் வந்தவர்களுக்குக் கொடுத்து யிருக்கிறது. சுவாயும் ஆதீனத்துக்குப் போய்வந்த அடியாருக்கு யெல்லாம் துண்ணூரு கொடுத்து இருக்கிறது. மறுµ குமறப்பன் பழனிக் கோவிலுக்கு வளமைபோல் உப்புக் கடகம் கொண்டுவந்து மாரி வளமைப்படி செய்து தன் வீட்டுக்குப் போரது. மார்கழி µ வாட்டில் பண்டாரத்தையும் முன்வருசம் மேரைக்கி கூட்டிப்போயி குருதேசிகர் ஆதீனத்தில் விட்டு பண்டாரமும் வளமைப்படி பிரசாதமும் கொடுத்து, பழனிக் கோவிலுக்குப் பிரையாணம் இன்னும் பத்துத்தின மிருக்கிரது. அதுவரை ஆதீனத்தில் பாருக்க வேணு மென்று சொல்ல உத்திரவுப்படி இருக்கிறேன் யென்று இருந்தார். பத்தாநாள் காவடிகட்டிப் பூசை செய்து, குமறப்பனுக்குக் காவடியை வைத்துச் சகல விருந்து வாத்தியதுடன் குருதேசிகரும் பண்டாரமும் சிட்டாளும் மற்ற யாவரும் வந்து முன்வருசம் யெங்கே யெந்த மேரைக்கி நடந்துதோ அதுமேரை செய்து பழனிப்பட்டம் இடும்பையா தீர்த்தமாடி, காவடியும் வைத்துச் பூசை செய்து, சிவபூசை பின்ன, பிறாமணள் போசனமும், தெய்வனாயக பண்டாரத்து மனையில் பரதேசிக்குச் சோரு வடிச்சுப் போட்டு, பழனித் துரைக்கிக் திருமுகம் மனுப்ப ராசாவும் முன்வருஷம் போல இருபது பொன் பாத காணிக்கை கொடுத்து, சுவாமியையும் காவடியையும் அழைத்து, பழனிப் பட்டணத்தில், தெய்வநாயக பண்டாரத்து வீட்டில் காவடியும் குருதேசிகரும், முன்வருஷம்போல இரங்கி ராசா அரமனைக்கிப்போய் இருந்தார். மருதினம் பரதேசிக்கிப் பாருபதி யம்மாளை வடிக்கச் சொல்லியும் ஆதீனம் சுயம்பாகியைப் பிறாமணாளுக்கு வடிக்கச் சொல்லியும், போசனம் செய்து, இது மேரைக்கி நாள் அஞ்சுக்கும் நடத்துகிறது. நாலா நாள் ஆறாறு சண்முக நதியில் தீர்த்தமாடி பழனிமலை வேலாயுத சுவாமிக்கிக் காவடி அபிஷேகம் செய்கிறது. குமறப்பனும் குருதேசிகரும் வளக்கப்படி பண்டாரத்துக்கு குடுத்துவிட்டு றாசாவும் சமையல் சாமானும் வளிச்சிலவுக்கு நாற்பது பொன் கொடுத்துவிட்டார். இதுமேரைக்கி நடத்தி சம்பட்டியில் குமறப்பனுக்குத் துண்ணூரும் கொடுத்து, குமறப்பன் முன்வருஷம் போல் வளவுக்குப் போனார்கள். மூணு நாலு வருஷம் யிதுமேரைக்கி நடந்துது. குருதேசிகர் பழனிக் கோவிலுக்கு உப்புக் கடகம் கொண்டுபோயி உப்பு மாரி லாபம் தேடுகிற பேர்களுக்கு யெல்லாம் திருமுகம் யெழுதித் தரிவித்து, நீங்கள் எல்லாம் குமறப்பன் கூடவே காவடி கட்டி யெடுக்க வேணும் யென்று கண்டிப்பான உத்திரவு செய்தார். அதுமேரைக்கி ஆகட்டு மென்று உத்திரவு பெற்றுக் கொண்டு பழனிக்கோவிலுக்கு இந்த வருஷம் குமரப்பன் காவடியுடன் அஞ்சு காவடியும் வந்தது. ஆறு காவடியும் எடுத்து வளமை போல் போயி வந்தார்கள். பின் இரண்டு வருஷம் சென்று யேழு கோவில் நகரத்தாருக்கும், திருப்புனல் தேசிகருக்கும், திருமுகமெழுதி, யாவரையும் தருவித்து பழனிக் கோவிலுக்குப் போய், உப்பு மாரி, இந்தப் புண்ணியத்தை சம்பாரித்து இருக்கிறது. மேரைக்கி எல்லாறும் காவடி யெடுத்து பழனிக் கோவிலுக்கு போகலாம்; வாங்கள் யென்று உத்திரவின்படி யாவரும் வந்து காவடி யெடுத்தது இருபத்தைந்தும் (25) சுவாமி தெரிசனத்திற்கு வந்தது இனம் அன்பத் தேளுமாக (57) வும் வளமைபோல, பண்டாரத்துக்குக் கட்டளைப் பணம், புடவையும் குடுத்து சம்பட்டியில் துண்ணூரும் குடுத்து யாவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். உப்பு வியாபாரமும், காவடியும் நகரக் கூட்டமும் மகமை மேன்மேலும் உண்டானபடியால் காவடி ஒண்ணுக்குப் பணம் இரண்டய அரைக்காலும் காவடி யெடுத்தவனுக்கு ஒரு பணமும், ஆகப்பணம் மூணய அரைக்கால் (3 1/8) ப™மும் எடுத்து அபிஷேகம் செய்கிறது. வளமைபோல் வடிச்சுப் போட்டு, பண்டாரத்துக்குக் குடுக்கிற வளமைப்படி குடுத்து சம்பட்டியில் விசிரி மரத்தில் குருதேசிகர் இருந்து துண்ணூரு கெடுக்கும்போது இனம் ஒண்ணுக்கு கால் (1/4) பணவீதம் குடுக்க வேணும் யென்று உத்திரவு செய்து, அதுமேரைக்கிக் கொடுத்து துண்ணூரு வாங்கிக் கொண்டு யாவருமிருக்கும்போது, இந்தக் கால் பணம் மகமையை நேமமான இளநிலமுடையான குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பன் வசம் கொடுத்து முன் பழனியப்பருடைய மகமைப் பணத்துடன் இதையும் சேர்த்தி வைக்கச் சொல்லி உத்திரவு ஆனதுபோல் துண்ணூருங் குமரப்பனுக்குக் கொடுத்துத்தான் மற்றவர்களுக்குக் கொடுக்கிறது. யாவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மறுவருஷம் சன நருள் சாஸ்தியானதினால் பசி பொருக்காமல் குமறப்பன் குருதேசிகரிடம் கும்பிட்டு வந்து வாய்பொத்தி, முந்தாணி ஒதுக்கி கைகட்டி நின்றதைப் பார்த்து, குருதேசிகர் என்ன வென்று கேள்க்க? நறுள் ரெம்ப ஆனபடியால் பசி பொருக்க மாட்டிலை யென்று குமறப்பன் சொல்ல குருதேசிகர் ஆதீனம் மணியம் அண்ணா சுவாமியைக் கூப்பிட்டு, நம்ம பலகாரத்தையெடு தெய்வநாயக பண்டாரத்து இடம் குடுத்துத் காவடிக்கிப் பலகார நெய்வேத்தியம் செய்து வந்திருக்கிற ஜனங்களுக்குக் குடுக்கச் சொல்லியும், நான் உதையலத்தான் செய்யும் இடங்களில் பலகார நைவேத்தியம் செய்து ஜனங்களுக்குக் கொடுத்து வரும்படி உத்திரவு செய்து மாத்தியானம் செய்யும்போது சாப்பிடும் என்று உத்திரவு செய்தார். அதுமே நடத்தி பழனிக் கோவிலுக்கு வளமைபோல் வந்து சேர்ந்தார்கள். பிரமக் கடினக பண்டார வசம் ஒப்பிச்சதியி குமரப்பன் மகன் குப்பாத்தானும் காவடி யெடுத்து வந்து இருக்கிறான். பழநிக்கோவில் சத்திகிரி அடிவாரத்தில் காவடி இரக்கி வைத்து, குமரப்பனையும் தெய்வனாயக பண்டாரத்தையும் வீட்டுக்குப் போய் பார்பதி அம்மாளை (51) பேருக்கு சோருவடிச்சுப் போடும் படிக்கும் செய்து நீயும் பண்டாரமும் அளைப்புக்கு வழமைப்படி செய்து வாங்கள்; இங்கே இன்று பிறாமனால் போசனம் என்று உத்திரவு செய்தால் அதுமேரை நடந்தது பூசத்தன்னைக்கி குருதேசிகர் ஆறுகால் கூடத்தில் குமரப்பன் காவடியை வைத்து, பூசை செய்து, பரதேசிக்கி வடிச்ச சோத்தை காவடி முன்பாக வைத்து, பூசை பண்ணி, பரத்துக்கு போடும்படி உத்திரவு சொன்னார்கள். நாலாநாள் காவடி செலுத்தி, ஐந்தாநாள் பூசைக்கி, குருதேசிகர் செலுத்தினதின் பேரில் இனி காவடியை வைக்கப்படாது; இன்று இந்தப் பிரம்புத் தடியை வைத்துப்பூசை நடத்துட்டு என்று உத்திரவு செய்ய அதுமேரைக்கி பரத்துக்குப் போட்டுச் சாப்பிட்டார்கள். வளமைப்படி பண்டாரத்துக்கு, கட்டளைப்படி கொடுத்து யவர் யவர் ஊருக்குப் போயி சேர்ந்தார்கள். சம்ப்பட்டி யிலிருக்கும்போது நத்தலிங்கமனாயக்கர் வந்து குமறப்பனை யெங்கே போய் வருகிறீர்கள்? என்று கேட்க, குமறப்பன் பழனிக் கோவிலுக்குப் போய் வருகிறோம். பழயப்பருடைய அதிசயங்களெல்லாங் கேட்டு லிங்கமனாயக்கர் என் வீட்டுக்காரிக்கி சதாவாய்ப் வயிற்றுவலியா யிருக்கிறது நான் அனேக இடங்களில் பார்த்தும் தீரவில்லை யென்று சொல்ல பழனியப்பர் தீர்த்துப் போடுவார் என்றும் அந்தப்படி தீர்த்தால் பழனியப்பருக்கு, பனிரெண்டு (12) பொன் கொடுத்தால் தீரும் என்று குமரப்பன் சொல்ல, மிட்டாநாய்க்கரும், நான் வருஷந்தோரும் தருகிறே னென்று சொல்ல, இதுமேரைக்கி விசிறி மரத்தடியில் இருந்து துண்ணூரும், குமரப்பன் கொடுத்து, இது முதல் ஒரு வருஷத்திற்குள் சவுக்கியமாயிப் போய்விடும் என்று சொல்லித் துண்ணூறுங் கொடுத்து, அனுப்பினார். அது மேரைக்கி, மிட்டா நாய்க்கனும், தன் பெண்சாதி யிடம் சொல்லி பழனியப்பாருடைய துண்ணூரு என்று சொல்லிக் கொடுத்தார். அம்மாளும் வாங்கிச் சாப்பிட்டவுடன் மூன்று தினத்திற்குள் வயிற்றுவலி சவுக்கியமாயிப் போச்சு. அதுமுதல் குமறப்பன் வீட்டுக்குப் போய் குமரப்பனைப் பார்க்க வேணுமென்று அம்மாளுக்கு ரெம்ப எண்ணங்கொண்டு, நாயக்கரிடம் சொல்லி, நாயக்கரும் சம்மதித்து, பல்லாக்கு கட்டச்சொல்லி, குமறப்பன் வளவுக்கு வந்து குமறப்பனை அம்மாள் மூடுதிரைக்குள் நின்று செட்டியாரே யெனக்கு இருந்த வயிற்றுவலி யெப்படித் தீர்த்தாய்? என்று கேட்க, பழனியப்பாருடைய கிருபையால் ரெம்பவும் சவுக்கியமாச்சுது அம்மாள் என்று சொல்ல, அதுக்குப் பழனியப்பாருக்கு யென்ன செய்கிறது? என்று கேட்க, குமரப்பனும் இன்று றாத்திரி நான் நினைத்துப் படுத்திருந்து, அப்பால் சொல்லுகிறேன் னென்று சொல்லிப் போட்டு, குமறப்பனும் ராத்திரி நினைத்துப் படுத்து இருந்து சுவாமி வந்து இரும்பு வேலாயுதம் பெரியது ஒன்றும், சின்ன வேலாயுதம் ஒன்றும், இரண்டு வேலாயுதமும் செய்துகுடு என்றும், பெரிய வேலாயுதத்தை பழனிக் கோவில் தெய்வனாயக பண்டாரத்து, பெண்சாதி பாருபதி யம்மாள் வசம் குமறப்பன் காவடி வைத்து இருக்கிற வீட்டில் வைத்திருக்கச் சொல்லியும், நத்தத்தில் அன்று றாத்திரி வேலுக்குப் பானக்கப் பூசையும் செய்து குடுக்கும்படி சொல்லி, உத்திரவு செய்த மேரைக்கி மிட்டா நாய்க்கரிடம், இதுமேரைக்கிச் சொல்லி, குமரப்பனும் துண்ணூருங் குடுத்து அனுப்ப, அதுமேரைக்கி யூருவந்து, வேலு ரெண்டும் அடிக்கச் சொல்லி, வேலையும் வாங்கிக் கொண்டு குமறப்பன் வளவுக்கு வந்து, உத்திரவுப்படி வேலும் குடுத்து இருக்கிறது வேலாயுதம் சிலவுக்காக இருப்பத்தொரு பொன்னும், வேலாயுதம் ரெண்டும் யென்று சொல்லிக் கொடுத்துவிட்டு, தன்வளவுக்கு வந்து சேர்ந்தார். குருதேசிகரும் கும்பா அபிஷேகத்து நாள் பார்த்து, பழனிக் கோவில் தெய்வநாயக பண்டாரத்துக்கு திருமுக மெழுகி அனுப்ப அதற்கு மூன்று மாசத்திற்குமுன் தெய்வநாயக பண்டாரத்து பெண்சாதி பார்பதி யம்மாள்யிடம் பழனியப்பா பிரசன்னமாயி சொப்பணத்தில் இருப்பு வேலாயுதம் உன் தனதில் செய்துவை; யின்னமதினால் உனக்கு அநேக காரணம் விளங்கும் என்று புத்திறாள் பவுத்திறாள் பிறப்பார்கள்; வருகிற சுக்கிர வாரத்திற்கு இரும்பு வாங்கிக் கொடுத்து, சோமவாரம் வந்து சொல்லுகிறேன் யென்று சுவாமி சொல்ல, அதுமேரைக்கி, வேலாயுதமும் செய்து, வேலாயுதத்தையும் சோமவாரம் ஆறுகால் கூடத்தில் மெழிகி, அதில் வைத்து, பழம், தேங்காய், வெத்திலை, பாக்கு, சூடன், சாம்பிறாணியும் வைத்து,வேலாயுதத்தையும் நிறுத்தி தெய்வநாயக பண்டாரம், பால், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் பண்ணி வேலாயுத்ததை நிறுத்தி அன்று ராத்திரி பார்பதி யம்மாளிடம் சுவாமி வந்து சுக்கில வாரம் பூசை செய்தால் அநேக ஐசுவரியமும், அஷ்ட லட்சுமியும் வந்து இருப்பாள் யென்று சொல்லியும், கிரகத்தில் அன்னக்கொடி கட்டி, மாறாத செல்வமும், நீங்காமலிருக்கும் யென்றும் சொன்னார். யின்றையத்தினம் குமறப்பன் பெண்சாதி சிட்டாளிடம் இதுமேரைக்கி நடந்து இருக்கிறது என்றும் சொல்லி வருகிறேன்? சிட்டாளும் பதிவிரதை. தன்மகன் குப்பாத்தானுக்குப் புத்திர சந்தானம் இல்லை யென்றும் ரெம்ப வியாகுலமா யிருக்கிறாள்; யெதிரிக்கித் தொட்டி கட்டிக் கொடுக்கிறேன் யென்றும் தன் எஜமானுக்கு, திருமுகம் வரும்; வந்தவுடன் இந்த வேலாயுதத்தை எடுத்து குருதேசிகரிடம் கொண்டுபோய்க் கொடுக்கச் சொல்லி உத்திரவு செய்தும், வேல் வரும்போது, குமறப்பன் மகன் பெண்சாதி கெற்பம் உண்டாயிருப்பாள் யென்றும்; ஆயிக்குடி ஜெமீன் தாருக்கு சொர நோய் வந்து ரெம்ப வருத்தப்படுகிறான். அவன் சுரநோய் தீர்ந்து வேல் வரும்போது யெதிர்கொண்டு நின்று அளைத்து வந்து பானக்க பூசை செய்து சுவாமிக்காக முப்பத்தைந்து (35) பொன் கொடுப்பான் யென்றும் சொல்லி விட்டு வந்தார். அதுமேரைக்கிப் போய், குமறப்பன் பெண்சாதி சிட்டாளிடம் பழனியப்பார் உன் மகனுக்கு இன்றுமுதல் அனுகூலம்தான்; கெற்பமும் உண்டாகி ஆண்குளந்தை பிறக்கும் யென்று சொல்லியும், பழனிக்கோவில் தெய்வநாயக பண்டாரத்து பெண்சாதி பார்பதி யம்மாளிடம் சொல்லியபடி வேலுயெடுத்து இவ்விடம் வரும்போது கேட்டுக்கொள். வேல் நாள்தான் செய்து வைக்கும்படிக்கும், இன்னம் அநேக, அதிக அதிசயம் நடக்கும்; பாருங்கள் யென்றும் சொல்லியும் வந்தார். ஈசானிய சிவாச்சாரிய தேசிகரிடம் தான் வைத்த நாளில், தெய்வநாயக பண்டாரம் வேல் யெடுத்து வருவான். அந்த வேலாயுதத்திற்கு கும்பா அபிஷேகம் செய்து மூணு வேலுக்கும், தன் சிவபூசையில் வைக்கிற செப்பு வேலாயுதத்தையும் வைத்து, அபிஷேகம் செய்து குமரப்பன் வசம் சின்ன யிருப்பு வேலாயுதமும், நான்இப்போது குடுத்துத் துண்ணூத்துப்பையும், தன் வசமிருக்கிற மடிச்சீலைப் பையம் குடுத்து, பெரிய வேலாயுதமும் மாதெய்வநாயக பண்டாரம் கொண்டுவருகிற பெரிய வேலாயுதமும், பழனிக்கோவில் தெய்வநாயக பண்டாரம்யிடம் மனையில் இருக்கட்டும் யென்று சொல்லி வந்தார் ஆயிக்குடி ஜெமீனிடம் சுவாமி போயி இன்று உனக்கு சுரநோயி நீங்கிவிடும்; உப்புச் செட்டி குமறப்பன் வருவான். வேலும் காவடியும் குருதேசிகரும் வருவார் யெதிரில் சகல வாத்தியத்துடன் அளைத்து வந்து, பெருமாள் கோவில் வேலுக்குப் பானக்க நைவேத்திய செய்து முப்பத்தைந்து (35) பொன் கொடுத்து யிரு யென்று சுவாமி உத்திரவு செய்துவைத்தார். அதுமேரைக்கி சவுக்கியமாயும் துரையும் எதிர்பார்த்து யிருந்தார். திருமுகப்படிக்கி, வேலாயுதமும் தெய்வநாயக பண்டாரம் எடுத்துக்கொண்டு, ஈசானிய சிவாசாரிய தேசிகரிடம் குடுத்து, பழனியப்பார் துண்ணூரும் பிரசாதமும் கொடுத்து, பழனிக் கோவில் நடந்த, சொப்பனமெல்லாம் பண்டாரம் சொல்ல, குமறப்பன் பெண்சாதி சிட்டாளிடம் கண்ட சொற்பனங்கள் யெல்லாம் சொல்ல பழனியப்பாருடைய காரணம் இதுமேரைக்கி யிருக்கிறது. கும்பா அபிஷேகம் வைத்த தினத்தில் அபிஷேகம் செய்து பண்டாரத்துக்கு ஒரு வராகனும், ஒரு சோடு வேஷ்டியும் கொடுத்து, வேலுக்கு சாத்திய பரிபட்டமும், பண்டாரம் எடுத்துக் கொள்கிறது. காவடி கட்டி வளமைபோல உதைய ஸ்தானம் செய்யும் இடத்தில் காவடி வைத்து, வேல் நிறுத்தி, பலகார நைவேத்தியம் செய்கிறதும், மாத்தியான் செய்யும் இடத்தில் வேலு நிறுத்தி அன்ன நைவேத்தியம் செய்கிறதும் யென்று யேற்படுத்தினது. காவடியும் வேலும் வைத்து, பூசை செய்து தெய்வநாயக பண்டாரம் பழனிக்கோவில் வேலாயுதத்தையும், பண்டார மெடுத்துக்கச் சொல்லியும், நாயக்கர் கொண்டு வந்த பெரிய வேலாயுதத்தை சிவபூசை பெற்ற கோவிலுடன் யெடுத்துக்கச் சொல்லியும் சின்ன வேலாயுதமும் செப்பு வேலாயுதமும், துண்ணூத்துப்பையும், மடிச்சீலைப்பையும், குமறப்பனுக்குக் குடுத்து, சகல விருது வாத்தியத்துடன் குருதேசிகரும் வந்து, வளமைப்படி, யெந்த இடங்களில் யிரக்க வேண்டியதோ அதுமேரைக்கி யிரக்கி பூசை செய்துவந்தார்கள். சம்பப் பட்டியில் பூசை பண்ணி, நத்தங் கோவிலுக்குப் போறபோது மிட்டாலிங்கப்ப நாயக்கர் வந்து, குருதேசிகருக்குப் பாதகாணிக்கை வைத்து, சகல வாத்தியத்துடன் கோவில் வந்து, வேலுக்குப் பாணக்க நைவேத்திய தியம் செய்து பனிரெண்டு பொன்னும் கொடுத்து இது மேரைக்கு வருஷம் தோரும் நடத்தி வருவே நாயகம் என்று சொல்லி நாயக்கரும் அரண்மனைக்குப் போனார். வளமைப்படி பலக்கனூத்து யூரிணிக்கி வந்து, சிவபூசையும் செய்து போசனமும் நடத்திய பிரதோசம்யான படியால் இன்று வேலாயுதத்திற்குப் பானக்க நைவேத்தியம் ஆதீனத்தைச் சேர்ந்ததாக இருக்கட்டும் என்றும் நைவேத்தியம் செய்தார். மறுதினம் சந்தி ஆயிக்குடியில் நடக்கிரது. ஆய்க்குடி ஜமீன்தார் சகல வாத்தியத்துடன் யெதிர் வந்து காத்திருந்து, காவடியும் வேலாயுதமும் குருதேசிகருமாக வந்தார்கள். குருசுவாமிக்கி பாதகாணிக்கை வைத்தும் கும்பிட்டு விழுந்து, பழனியப்பாருடைய உத்திரவு மேரைக்கி வந்தவனாய் இருக்கிறேன், யென்று சொல்ல, உத்திரவுபோல் நடத்துயென்று சொல்ல, சகல விருது வாத்தியதுடன் கோவிலுக்கு வந்து, வேலாயுத சுவாமிக்கிப், பானக்க நைவேத்தியம் செய்து முப்பத்தைந்து (35) வறாகனும் கொடுத்து வருஷம் தோரும் பானக்க பூசை நடத்தி வருகிறேன் யென்று சொல்லி அரமனைக்கிப் போய்விட்டார். மறுதினம் சத்திகிரி அடிவாரத்தில் காவடியை வைத்து இடும்பன் தீர்த்தமாடி, வேலாயுதமும் குமறப்பனும் பண்டாரமும் வந்து வளமைப்படி பார்பதி யம்மாளிடம் சமையல் சாமான் வாங்கிக் கொடுத்து சோருவடிச்சு ஆறுகால்க் கூடத்தில் வேலு நிறுத்த பச்சிரி படி ஒண்ணும் கொட்டிப் பரத்தி, வேலாயுதத்தையும் நிறுத்தி அன்னமும் வைத்து, குருதேசிகர் குடுத்த பெரம்புக் கடிகையையும் நட்டு, பழம் தேங்காய், வெற்றிலைபாக்கு சூடன் சாம்பிறாணி, துண்ணூத்துப் பையும், செப்பு வேலாயுதமும் வைத்து நைவைத்தியம் செய்து, பரத்துக்குப் போட்டு, வளமைப்படி, காவடியும் குருதேசிகரையும் அளைக்கும்போது, பழனித்துரை இன்று பானக்கம் நம்ம உபயமாக இருக்கட்டும் யென்றும், காவடிக்கிப் பானக்க நைவேத்தியம் செய்யச்சொல்லி, அடிவாரத்திற்கு பானக்கம் அனுப்பி வைக்கச் சொல்லி, குமறப்பன் பண்டாரத்தையாவை செப்பு வேலாயுதம், துண்ணூத்துப் பையும் யெடுத்து வாங்கப் பானக்கப் பூசை; யானபடி யானை டுத்து வாருங்கள் யென்று சொல்லி, வளமைபோல அடிவாரத்து வந்து, பழனியப்பருடைய துண்ணுரும் பிரசாதமும் குடுத்து, காவடிக்கித் தீவார்த்தினையும், பானக்க நைவைத்தியமும் செய்து, காவடியை யெடுத்து, சிரிவீதி சுத்தி வந்தார்கள். தெய்வனாயக பண்டாரத்து மனைக்கு வளமைபோல வந்து வளமைப்படி மகேசுவர பூசையும் செய்து, காவடி அபிஷேகம் செய்து, பண்டாரத்துக்கு குடுக்கிற கட்டளைப் படியும் குடுத்தும், வேலாயுதத்திற்கு சொர்ண பொஸ்பம் பணம் ரெண்டும் நாள் ஒண்ணுக்கு இதுமேரைக்கி அஞ்சு நாளைக்கும் குடுக்கிறது. சொர்ண பொஸ்பமும் சாத்துப்படி வேஸ்டியும் பண்டாரத்தைச் சேர்கிறது. பாருபதியாயி வேலாயுதத்தையும், லிங்கம நாயக்கர் வேலாயுதத்தில் பெரிய வேலாயுதத்தையும் தேசிகர் பிரம்பையும் தெய்வநாயக பண்டாரத்து வசம் கொடுத்து யிருக்கட்டும் என்று சொல்லியும் சம்மப்பட்டியில் விசிரி மரத்தடியில் பானக்க பூசை செய்து துண்ணூரு கொடுக்க வேண்டி யிருப்பதால் தானும் வந்துதான் வரவேணு மென்று குருதேசிகர் சொல்ல, அதுமேரைக்கி நடக்கிறேன் என்று சொல்லி யாவரும் வந்து சம்மப்பட்டியில் வந்து விசிரி மரத்தில் வேலாயுதம் நிறுத்தி, பானக்க பூசை செய்து, துண்ணூரு கொடுத்து யவாள் யவாள் யூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இப்போது குமறப்பன் யெடுத்து வருகிற வேலாயுதமும், செப்பு வேலையும், துண்ணூத்துப் பையும், மடிசீலைப் பையும், தன் வீட்டில் ஒரு வீட்டில் இதுகலை வைத்து, பூசை செய்து ஊரு நகரத்தார் யாவரும் துண்ணூரு வாங்கிப் போயி இருப்பார்கள். பண்டாரத்தையாவுக்கு ஒரு சோடு வேட்டியும், ஒரு வறாகனும் குடுத்துபடி சிலவும் குடுத்து, வருஷம்தோறும் யிதுமேரைக்கி கொடுத்து வருமோ மாகவும் வளமைப்படி மாசம் ஒரு தரம் உப்புக் கடகம் கொண்டு வருகிறது. இப்படிச்சில வருசம் சென்று ஈசானியக் குருதேசிகர் ஒரு வருஷம் ஆறாநாள் சந்தண அபிசேகமும் அஞ்சா நாள் பாத்தாந்திருனாள் மண்டகப் படியும் நடத்த வேண்டி யிருப்பதால் வருகிற வருஷம் நடக்க வேணு மென்று பழனிக் கோவில் துரையிடம் சொல்லி யெங்களுக்கு மண்டகப் படியும் செய்ய யிடம் வேணும் யென்று கேள்க குமறப்பனை உனக்கு வேண்டியபடி செய்து குடுக்கிறேன். மாரியம்மன் கோவில் முன்பாக இடமிருக்கிறது. அது மேரைக்கி நடத்திப் போடலாம் மண்டகப்படியில் பண்டாரத்துக்கு அரிதிப் பரிவட்டமும் நேமமான இளநல முடையான் குமரப்பனுக்கு அலங்காரப் பரிவட்டமும் கட்டும் படிக்கும், நகரத்தார்களில் முதலாபது துண்ணூரும் காளாஞ்சியும் கொடுக்கிறது. நகரப் பொதுவில் குருதேசிகர் இரண்டு ஆதீனத்தில் ஈசானிய குருதேசிகருக்கும் திருப்புனல் தேசிகருக்கும் தெய்வனாயக பண்டாரத்துக்கும் குமரப்பனுக்கும் கொடுக்கிறது. இனம் ஒண்ணுக்குத் துண்ணூத்துப்பை ஒண்ணு கொடுக்கிறது. வருகிற வருஷம்முதல் நகரத்தார்கள் புள்ளிக் கின்னதுயென்று ஒரு வடிவைத்துக் கொடுக்கவேணும். தெய்வநாயக பண்டாரத்துக்கு யென்று. நமக்கு இந்த தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்தையா மனையில்தான் மடமாகவே வைத்துக்க வேண்டியிருக்கிறது. ஆறுகால் மடத்தில் வேலாயுதசுவாமி நிறுத்திப் பூசைசெய்யவும் குருதேசிகர் தென்புரம் கூடத்தில் சிவபூசை வைத்து இரங்கவும் மேல்புரம் கூடத்தில் பரங்கள் சாப்பிடவும், வடபுறம் கூடத்தில் குமறப்பன் நகறத்தார்களும் வந்து இருக்கவும் இதுகளுக்கெல்லாம் யேதுவுவாயிருக்கும். ஆனதால் இதுவே மட ஆதீனத்திற்கு நல்ல யிடமு நமக்கு லாப முதலானது மேன்மேலும உண்டாகியும், குப்பாத்தானுக்கு சுவாமி உத்திரவு மேரைக்கி ஆண் குளந்தையும் பிறந்துயிருக்கிறது. இதுவுமன்னியில் பாருபதியம்மாளும், நம்ம சிட்டாமேரைக்கு தெய்வநாயக பண்டாரத்தைப் போலும் கிடையாது. இந்தப் பழனி ஸ்தலத்தில் நடக்கிற புண்ணியத்தைப் போலவும் கிடையாது. வருகிற வருஷம் இரனூத்தம்பதாளுக்கு (250) வடிச்சுப்போடு யென்று, பாருபதியம்மாள் வசம் முடியாது யென்றும் பனிரெண்டு பேருக்கும் பால் பொங்கலும், பார்பதியம்மாள் வடிக்கட்டும்; மற்றதையெல்லாம் நகரத்தார்கள் வடிச்சுப்போடு யென்று வேப்பம் பூமாலை யணிந்த குருதேசிகர் உத்திரவுபோல் நடந்து யேற்படுத்து கிறோம். பண்டாரத்தை யாவைக் கேள்ப்போம் பார்பதியம் மாளையும் கேள்ப்போம் என்று அனைவரும் கூடியிருந்து கொண்டு பண்டாரத்தையும் பெண்சாதியையும் கேள்க அது மேரைக்கி நல்லது. யெங்கள் வீடே தங்களுக்கு. யேதேனும் கட்டளைப் பணமும், புள்ளிக் காசும், மகேசுர பூசையில் படி அரிசியும், நாங்கள் வடித்துப் போட்டால் மிச்சச் சாமான் நாங்கள் வைத்துக்குவோம் என்றும் அம்மா நாங்கள் வடிச்சாலும் மிச்சச் சாமான் தங்களுக்கே கொடுக்கிறோம் யென்றும் ஒருமனதாய்ச் சொல்லியும், குருதேசிகர் ஆதினத்தில் ஒரு அட்டோத்திரம் அர்ச்சனை நடத்தவேணும் நகரத்தார் தீர்த்தக்குடம் நித்தியப்படி, பழனிமலை வேலாயுத சுவாமி அபிஷேகத்திற்குக் கொடுத்து வரும்படி செய்யவேணும். மாரியார் கோத்திரம் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரம் பெண்சாதி பார்பதி அம்மாளையும் வைத்து அம்மாள் தங்கள் கையால் வடிச்சுப்போட்ட சோறுநாலும், பண்டாரம் கொடுத்த துண்ணூருனாலும் தங்களாலும் பழனியப்பறாலும் நாங்கள் மேன்மையடைந்தோம். அதை நாங்கள் யெப்போதும் மரக்கோம். தங்கள் மனையில் எங்கள் ஆதீனமாக இருக்கவேணும் நாங்கள் தங்களுக்கு யாதொரு துரோகமும் பாதகமும் நினைக்க மாட்டோம். நாங்கள் இட்ட சூலத்தையும் நட்டகல்லையும் வாக்கு வாதத்தையும் அளிக்கமாட்டோம் யென்று மனை உன்னதான யென்றும் தருமம் யெங்களுதுதான் யென்றும் வேப்பம் பூமாலையாரம் அணிந்த ஈசானிய தேசிகர் திருவடியில் நேமமான குமரப்பன் முதல் மேல்கண்டபடி சொல்லித் தொட்டான். யாவரும் அதுமேரை தொட்டார்கள். வருகிற வருஷம் ஆதினத்துக்கும், யெங்கள் நகரத்தாருக்கும், பண்டாரத்துக்கும் ரெண்டு சாசனம் யெழுதிக் கொடுப்போம். யென்றும் இதுக்குச் சாக்ஷி கரகதக் கனைபதி யென்றும் பட்டத்து வினாயனென்றும், பழனிமலை வேலாயுத சுவாமி யென்றும், ஈசானிய குருதேசிக ரென்றும், பச்சங்கந்தா பாணி பாத்திரரென்றும், வேலாயுத விசையகிரித்துரையென்றும், எழுதின தரும சாசின அட்டவணை. கரகக் கணபதிதுணை யேடு நாப்பத்தேளு வேலு மயிலும் துணை. யாவரும் மாறாத செல்வத்தை பெருகுவார்கள். தெண்டாயுதம் கடவுள்துணை, யாவரும் வளமைபோல யூருவந்து சேர்ந்தார்கள். யெல்லாரும் சதாசேருவை. (உ) அசலுக்குச் சரியான நகல். வேலுமயிலும் துணை. (அட்டவணை முற்றும்) நகரச் சாசன அட்டவணை வேலும் மயிலும் துணை ஏழு நரகத்தார் தர்ம சாசனம் வைய நீடுக மாமளை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறிக் தான்றளைத் தோங்குக தெய்வ வென்றிரு நீறுசிறக் கவே கருணைபொழி திரு முகங்களாறும் வாழி கனகமலர்ப் பன்னிரெண்டும் கையும் வேலும் வாழி யிருசரண மென்றலைமேல் னாழு மோங்க யிந்திரவிக் கப்பாலுமினிது வாழி அருள்பெறுக அமரர் சிரைமீட்டே யாண்ட யாரிரண்டு திருநயனத் தளகும் வாழி மருபணியும் பைங்கடம் பந்தாறும் மார்பும் வாழி பரிமயிற் சேவற்கொடியும் வாழி யடைந்தவர் துணைவா வாழி யடையலர் கரியா வாழி மடந்தைதன் மைந்தா வாழி மாதவன் மருகா வாழி திடம்புனை வேலா வாழி தேவராருயுரே வாழி படந்தபோ, ரசுரர் கூற்றும் பரமனே வாழி வாழி யுகங்களின் பெயர்கள் அனந்தன், அற்புதன், தமந்தன், தாரீசன், தண்டியன், பின்னியன், பின்னாயன், அயிதன், மயிதன் மனீரன், மனீரணன், விசுவாசன், விசுக்கிரதன் அணங்கிரதன், கிரேதன், திரேதன், துவாபரன், கலியுகன் ஆக யுகம் பதினெட்டு (18) க்குமேல் ஆகாசமே சம்புவாகி ஆகாசமே பொருளாகி நின்றபடியினாலே பராபரமாகிய பரமேஸ்பரி தறாதலம் படைக்க தானினைந்தருளி, அனந்தளென்னும் யுகத்திலே ஆகாசம் பிறந்தது. ஆகாசத்திலே வாயு பிறந்தது. வாயுவிலே அக்கினி பிறந்தது. அக்கினியில் அப்பு பிறந்தது. அப்புவில் பிரிதுவி பிறந்தது. பிரிதுவி ஆகிய பூலோகத்திலே, சுவர்க்காதி லோகமாகிய மகாமேரு தோன்றி, மகாமேருவில் பரம ஆகாயம் தோன்றி, பரமா காயத்தினால் பஞ்சமுகம் தோன்றி, இதற்கு வேதம் சாக்ஷி. சத்தியாசோத முகமாவது பிரிதுவி. இதற்குத் தெய்வன் பிரமதேவன்; வாமதேவ முகமாவது அப்பு. இதற்குத் தெய்வம் விஷ்ணு. அகோர முகமாவது தேய்வு, இதற்குத் தெய்வம் ருத்திரின். தற்புருஷ முகமாவது வாய்வு. இதற்குத் தெய்வம் மகேஸ்பரதேவன்; ஈஸ்பர முகமாவது ஆகாசம். இதற்குத் தெய்வம் சதாசிவன்; இனிப் பஞ்ச வர்ணமாவது; பிரம்மா சிவப்பு வர்ணம் விஷ்ணு, பச்சை, நீலமேக; சாமழ வர்ணம் ருத்திரன் மாணிக்க வர்னம். மகேஸ்வரன் புகை வர்னம் சதாசிவம் பவள வர்னம். இதற்குச் சாக்ஷி திருமந்திரமாலை யென்றறியவும். (2) அனந்தனென்னும் யுகத்திலே ஆதிநாறாயணன் பிறந்தான். அற்புதனென்னும் யுகத்திலே ஆதிநாறாயணனாலே பிர்ம்மா பிறந்தான். தமந்தனென்னும் யுகத்திலே பிரம்மாவினாலே வேதங்கள் பிறந்தது. தாரீசனென்னும் யுகத்திலே வேதங்களாலே தேவேந்திரன் பிறந்தான். தண்டியனென்னும் யுகத்திலே தேவேந்திரனாலே, சந்திரனாலே, சந்திர சூரியர்கள் பிறந்தார்கள். பின்னியனென்னும் யுகத்திலே சந்திர சூரியராலே நவக்கிரகங்கள் பிறந்தது. பின்னாய னென்னும் யுகத்திலே நவக்கிரகாதிகளாலே சத்தமேகங்கள் பிறந்தது. அயுதனென்னம் யுகத்திலே சத்தமேகங்களாலே நவமேகங்கள் பிறந்தது. நவமேகங்களாலே மழை பிறந்தது. மயுதனென்னும் யுகத்திலே மழையினாலே பதினெட்டு வகைத் தானியங்கள் பிறந்தது. பதினெட்டு வகைந் தானியங்களாலே ஆனைமுதல் யெறும்பு கடை யெண்பத்து நூறாயிரம் (8000000) சீவஜெந்து பிறந்தது. மனீரனென்னும் யுகத்திலே பிறாமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவை நான்கு சாதியும் பிறந்தார்கள். ஆதிருத்திரனே பிறாமணன் விஷ்ணுவே சத்திரியன் பிர்ம்மாவே வைசியம். தேவேந்திரனே சூத்திரன். மணீரணன் என்னும் யுகத்திலே பதினெட்டு வகைத் தானியங்களாலே பதினெட்டு வகை சாதிமுகம் பிறந்தது. ஆகையினாலே இவர்களுக்கு போக போக்கியங்களனுபவிக்க ஆறுதெரிச முற்பவித்து, இந்த ஆறு தெரிசனமும் யெப்படி யென்னில், சுப்பிரமணியசுவாமி ஆறுமுகத்துக்கும் திருமேனி யொன்றாக நின்ற தன்மை போலவும். இந்த ஆறு தெரிசனத்திலே தீர்த்தங்கள் பிறந்தது. விசுவாசமென்னும் யுகத்திலே தீர்த்தங்களாலே தக்கங்கள் பிறந்தது. கிரேதா யுகமென்னும் யுகத்திலே தானதருமங்களாலே துர்க்கங்கள் பிறந்தது. துவாபரி யுகத்திலே சுகதுக்கங்களாலே ஜெனன மரணமுண்டாச்சுது. கலியுகனென்னும் யுகத்திலே ஜெனன மரணங்களாலே சத்திய, அசத்தியங்கள் உண்டாச்சுது. இப்படிக்கொத்த நாமங்குள்ளாக நடந்துவருகிற சாலியவாகன சகார்த்தம் 1780 -க்குமேல் கலியுக சகார்த்தம் 4700-க்குமேல் செல்லாநின்ற விக்குருதி - ஸ்ரீ தை - மீ 10-உ சோமவாரமும் பூச நக்ஷத்திரமும், பௌர்ணமியும், அமுர்தயோகமும் கூடிய சுபதினத்தில் ஸ்ரீ,வீர பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு செல்லும் வைகாவூர் நாட்டில் பழனிச்சத்திரத்தில், ஆவணி மூலவீதிக்கும் கீழ்புரத்தில் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாய பண்டாரத்துக்கு சோளமண்டலமாகிய காவேரி பூம்பட்டணத்தில் பிறந்தவர்கள்; உயரு வனவணிகர், மகாமகுட வணிகர். நாகலோகத்தில் றெற்றின வணிகர். தங்கமேருறை கண்டவர்கள்; மதயானையை நிறைகண்டவர். காவேரியைப் பஞ்சாலடைத் தவர்கள், ஒளவை தண் தமிழுக்குப் பொற்பாடகம் கொடுத்தவர்கள். மடிச்சீலை பெருக வென்று வாழ்த்தி வரம் பெற்றவர்கள். கம்பனார் கோவிலை கனகத்தால் மேய்ந்தவர்கள். கலியாண வாசலுக்கு பவளக்கால் நாட்டினவர்கள். தண்ணீர் கயிறுக்குத் தங்கக் கயர் போட்டவர்கள். சோளமண்டலத்தில் மூவேந்தருக்கும் மும்முடி சூட்டினவர்கள். சிங்கக்கொடித் தலைவர்கள்; சிங்காசனத்தால்; சீரகமாலையுடையார். வெள்ளை வாரணத்தார். பாண்டி நாட்டரசன் குலசேகர சவுந்திரபாண்டியன் நற்கொடி தன் சீமைக்கு அழைத்தபோது பொன் புஷ்பரதமேரி வந்தவர்கள்; கல்வாச நாடாகிய இளசை நகர் தன்னில் பூவசியறாக வந்தவர்கள். குலசேகரபுரம், தேனாறுடையார் அன்னை, தந்தை தெய்வம், மறையோர், குருவை வணங்குவோர். சதுர்மரை ஆறு சாஸ்திரமுணர்ந்து, வேள்வி முடித்த யோகி, மெஞ்ஞானி உயிர்விர்மமாசாரி. ஆதிய பாண்டி நாட்டாச்சாரியர் பதம் போற்றுவோர்கள். வேத வித்தியாயம் விளங்கும் மெக்ஞானி ஆதிமெய்ப்பொருளை அறிந்தருள் யோகி, திருப்புனல் குருதேசிகனை, தினம் பதம் போற்றுவோர்கள். கல்வாசல் நாடாகிய குலசேகரபுரம், இளையாத்தங்குடி சீரசேற்றூரில் சிறந்தருள் கல்வாசல் நாடு, நேமமனோடு, கேரளசிங்கவளநாடு பிரமமூர் நாட்டில் வீரபாண்டிபுரம், பெருந்திருவான் கேரளசிங்க வளநாடு, வீரபாண்டிபுரம், மருதாந்தபுரம் சீர்குளத்தூர். பிரம்பூர் நாட்டில் சூடாமணிபுரம், கானாடு ஒன்பது நாட்டுக்கும் ஏழு கோவிலுக்கும் இருபத்திரண்டு கோத்திரமும். ஒக்கூருடையான், பெருமாரூருடையான், கிங்கினி, கூருடையான் - பட்டணச் சாமி கழனிவாசலுடையான், திருவேற்பூருடையான், இன்னலமுடையான், யேழகப் பெருந்திருவான குளத்தூ ருடையான், பெருகுளத்தூருடை யான், மண்ணூருடையான், உறையூர்உடையார், மணலூர் உடையார் குளத்தூருடையான், கண்ணூருடையான், அருமிபாக்கூருடையான், கரும்பூருடை யான், புகலிடம் கொடுத்த பட்டணமுடையோர் இருபத்திரண்டு கோத்திரமாகிய ஏழு நகரத்தாரனைவோரும், பழனி ஸ்தலத்தில் வடவாச்சின்னோப நாயக்கர் பாணிபாத்திர உடையார். மற்றுமுண்டாகிய ஸ்தானிகம். பரிகலத்தார் முன்பாக ஏழு நகரத்தாரனைவோரும், தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு, தர்மசாசனப் பட்டயம் கட்டளையிட்டோம். இந்தப்படிக்கு அனைவோரும் கூடிப்பேசினதற்கு விபரம். தெய்வனாயக பண்டாரத்து வருஷம் (க)க்கு புள்ளி (க)க்கு பணம் காலும், கால்ப்படி அரிசியும் குடி வீதங்கொடுத்து வருவோமாகவும். இந்தப் படிக்கிக் கொடுக்காத பேருக்கு அடகெடுத்து வாங்கிக் கொள்ளுவீர்களாகவும். அன்னதான மடத்துக்கு திருவிழாவிற்கு வருஷம் (க)க்கு ஆறு பொன் கொடுக்கிறது. இதுவுமன்னியில் காவணம், சிறப்புப் பண்ணுகிறதற்காக, பனிரெண்டு பொன்கொடுத்து வருகிறது. மயேஸ்வர பூசையில், வேல் நிறுத்துகிறதற்கு அடிப்பரப்பு வேல்படியால் நாள் (1)க்கு ஒருபடி யரிசியும், வேலுக்குச் சாத்துகிற பரிவட்டமும், ஒருநாள் *(1)க்கு சொர்ன பொஸ்பம் பனம் (2) ம் வாழைப்பழம் பதினைந்து, வெத்திலை முப்பது, பாக்குப் பதினைந்து, தேங்காய் ஏழு, சூடம் சாம்பிறாணி, தீபத்துக்கு எண்ணைபடி (1) பொங்கலுக்கு அரிசி படி (1)க்கு, பள்ளையத்துக்கு சாதம் கூடை (5)க்கு இடும்பையாவுக்குக் கூடை (3)ம் வள்ளியம்மை தெய்வானைக்குக் கூடை (2)ம், பொங்கலில் சுவாமியாருக்கும் பிள்ளையாருக்கும் பள்ளையம் போட்டு, ஏழு நகரத்தாருக்குப் பாதிப் பிரசாதமும், எங்கள் பண்டாரத்துக்கு பாதி பிரசாதமும் எடுத்துக்கொள்ளுகிறது. தீர்த்தம் துண்ணூரு முதலாவது ஈசானிய சிவாச்சாரியாருக்கும், இரண்டாவது திருப்புனல் வாசம் சேனாபதிக் குருக்களையாவுக்கும், மூனாவது மடத்துப் பண்டாரத்துக்கும், நாலாவது நேமமான இளநலமுடையான் குமறப்பனுக்கும், அஞ்சாவது நகரத்தார்களுக்கும், காளாஞ்சி முதலானதும் மேற்கண்ட விபரப்படிக்குத் தருகிறது. நாள் (1) ஒன்றுக்கு (2) இரண்டு காளாஞ்சியும் வேலாயுதச் சின்னோப நாயக்கர், விசையகிரித் துரையவர்களுக்குக் கொண்டுபோய்த் தருகிறது. எங்கள் பண்டாரத்துக்கு மயேஸ்பர பூசையில் நாள் (1) க்கு வேல்படியால் பத்துப் படியரிசியும், இரண்டுபடி பருப்பும், அரைப்படி நெய்யும், அதற்குள்ள சாமான் முழுமையும் அஞ்சு நாள் பூசைக்கும், இந்தப்படி கொடுத்து வருவோமாகவும். மயேஸ்பர பூசையில் மிச்சமும் காவணமும் அடுப்புக்கரியும், இன்னும் மிச்சச் சாமான்கள் முழுவதும் நம்மள் பண்டாரத்துக்குச் சேருகிறது. இதுவுமன்னியில், மலையின் பேரில் சுவாமிக்கு, காவடி அபிஷேகத்துக்கும், சந்தண அபிஷேகத்துக்கும், சந்தனம், மாலை, வில்வம், திருமஞ்சனம் சாமான்களுக்கு ஆறு பொன் கொடுக்கிறது. சுவாமி அபிஷேக, பஞ்சாமிர்த, பிரசாத முதலானதும், மடத்தில் காளாஞ்சிப் பிரகாரம் வேல் படியால் இனம், (1)க்கு கால்படி கொடுக்கிறது. மலை வேலை பார்க்கிற திருமஞ்சனம், வில்வ அர்ச்சனை வகையறாவுக்காக நம்மள் பண்டாரத்துக்கு மயேஸ்பர பூசையில் நாள் (1)க்கு வேல் படியால் அரிசிபடி (3)ம் அதற்குள்ள பருப்பு, நெய்சாமான் முழுவதும் கொடுத்து வருவோமாகவும். இதுவுமன்னியில், ஏழு நகரத்தார் உபயம் மாரியம்மன் கோவில் தண்ணீர்ப் பந்தலில் தைப்பூசம், பந்தாந் திருநாள் மண்டகப்படி செய்து நம்மள் பண்டாரத்துக்கும் விசயகிரித் துரையிடத்தில் அரிதிப் பரிவட்டம் கட்டும் படிக்கும், இளநல முடையான் குமறப்பனுக்கும் அலங்காரப் பரிவட்டம் கட்டும் படிக்கும் உத்திரவு, நகரத்தார் வாங்கி, மேற்படி மண்டகப்படி சிலவுக்கு, கோவிலுக்கு வருஷம்(1)க்கு கொடுக்கிறது. கோவிலில் மண்டகப்படி தீபத்துக்காக நெய் படி அஞ்சும் சாதப் பிரசாதம் அஞ்சும் வடை அஞ்சும், அதிரசம் அஞ்சும், பிரசாதம் கொடுக்கிறது. இந்தப் பிரசாதமும் நம்மள் பண்டாரத்துக்குச் சேருகீறது. நம்மள் பண்டாரத்துக்கு அரிதிப் பரிவட்டம் கட்டுகிறதுக்குக் கோவிலில் பட்டுக் கொடுக்கிறது. ஏழு நகரத்தாரும் பண்டாரத்துக்குச் சோமன் சீலைக்காக இரண்டு வராகன் கொடுக்கிறது. விபூதியை(1)ம் கொடுக்கிறது. இதுவுமன்னியில் நம்மள் பண்டாரத்து மக்கள் பெண், ஆணானாலும், கல்யாணத்துக்குப் பத்து வராகனும், வந்த பெண்ணுகள், பிறந்த பெண்ணுகள் சடங்கானால் வாரகன் ரெண்டும், தருமத்துக் குடையவர் மரணமானால் நகரத்தார் துப்பட்டா போடுகிறதற்கும் சிலவுக்கும் ஒரு வராகன் கொடுக்கிறது. மடத்துப் பார்பதி யம்மாளுக்கு வருஷம் (1)க்கு ஒரு சேலையும் கொடுத்து வருவோமாகவும். மடத்தைச் சேர்ந்த யெடமும் கட்டடமும் நம்மள் பண்டாரத்துக்குச் சேர்ந்தது; பண்டாரத்து தென்புறம் பட்டகசாலையில் ஈசானிய சிவாச்சாரியார் இறங்கும் இடமும் காவடியும் வைக்கிறது. மேபுறம் ஆறுகால் சவுக்கக் கூடத்தில் வேலும் கம்பும் நிறுத்துகிறது. வடபுறம் பட்டகசாலை அறையில் பூசைச் சாமான்கள் வைத்துக் கொள்ளுகிறது. வாயுவு மூலைப் பட்டகசாலையில் அன்னம் கொட்டுகிறது. ஆறு கால் கூடத்துக்கும் கன்னி மூலையில் பாரை உரலுக்கும் அடுததாப்போல் அடுப்பும், தெற்குவாசல் ஈடையும் ,கீள் புறம் பட்டகசாலையில் பிறாமண போஜனமும் கொடுக்கிறது. மேற்கண்ட மடமும் கூரைக் கட்டடம். முதல்நாள் பூசையில், இடும்பன் தீர்த்தமாடி, இடும்பன் மலையில் ஈசானிய சிவாச்சாரியாருக்கும், பிறாமண போஜனமும், மயேஸ்வர பூசையும் மடத்திலும் நடத்தி, குமறப்பன் வசம் இருக்கிற விபூதிப் பையும், தாம்பூர வேலும்; தீத்தம், துண்ணூரும், காளாஞ்சியும், நம்மள் பண்டாரத்து வசம் கொடுத்து, சகல விருது வாத்தியத்துடனும் இடும்ப மலைக்குப் போய், ஈசானிய சிவாச்சாரியாருக்கு, தீத்தம் துண்ணூரும் கொடுத்து, காவடி நகரக் காவடிக்கித் தீவார்த்தினை செய்து, காளாஞ்சி முதலாகியதும் வளமைப்படி கொடுத்து, பழனிப் பட்டணத்திற்கு வெள்ளைக் கொடை, வெஞ்சாமரம், அன்னக்கொடி, மீனக்கொடி, மகரக்கொடி, இன்னும் அநேக விருதுகளுடனே பகல் தீவட்டியுடன் மடத்துக்கு வந்து தென்புறம் பட்டகசாலையில் வளமைப்படிவைத்து, தீவார்த்தனை செய்து வளைமப்படி, காளாஞ்சி கொடுக்கிறது. மறுநாள் இரண்டாம் பூசைமுதல் மடத்தில் பிறாமண போஜனம் கொடுக்கிறது. மடத்துக்குப் பூசைக்கு வாங்கும் நவமாண்டமும் நாயகப் பானையும் நம்மள் பண்டாரத்தைச் சேருகிறது. இதுவுமன்னியில் பழனிப் பட்டணத்துக்குக் காவடி வரும்போது குமரப்பன் கோவில் வீட்டில் இருக்கிற விபூதிப்பையும் தாம்பூர வேலாயுதமும், இரும்பு வேலாயுதமும், பிரம்புக்கடியும், கண்மலர் சோடி(க)ம் புருவம் சோடி(க)ம் நெத்திப் பட்டம் சோடி (க)ம் ஒட்டியாணம் (க)ம் ருத்திராக்ஷ்ம் கோர்வை (1)ம் இந்தவாபரணமும், தீவார்த்தனைத் தட்டுகளும், தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வனாயக பண்டாரத்து வசம் கொடுத்து, கண்டவராயன்பட்டியில் பலகார நைவேத்தியமும், மருதுப்பட்டி யூரணிக்கரையில் பொங்கல் வைநேத்தியமும், சைவப்பெருமாள் கோவில் படுக்கையும், வருச்சலுப்பட்டி ஊரணியில் பலகார நைவேத்தியமும், சம்பப்பட்டிச் சாலையில் விசிறி மரத்தடியில் பொங்கல் நைவேத்தியமும், நத்தத்தில் படுக்கையும், பானக்க நைவேத்தியமும், உப்பாத்தியில் பலகார நைவேத்தியமும் இடையல் சத்திரத்தில் பொங்கல் நைவேத்தியமும், திண்டுக்கல் அபிறாமி அம்மன் கோவிலில் படுக்கையும், மாங்கரையாற்றில் பலகாரமும், பலக்கனூத்து ஊரணியில் பொங்கலும், பானக்கப் பூசையும், படுக்கையும் நங்காஞ்சி யாற்றில் பலகார நைவேத்தியமும் சத்திரப்பட்டிச் சாலையில் பொங்கல் நைவேத்தியமும், ஆயக்குடியில் பெருமாள் கோவிலில் பானக்க நைவேத்தியமும் படுக்கையும், இடும்பன் தீர்த்தத்தில் பலகார நைவேத்தியமும் மடத்தில் பொங்கல் நைவேத்தியமும், அஞ்சுநாள் பூசையும் செய்து, ஆறாநாள் சந்தன அபிசேகமும் செய்து, சம்பப்பட்டியில் போய் விசிறி மரத்தடியில் தீர்த்தம், துண்ணூரும் வழக்கப்படி கொடுத்து, ஈசானிய சிவாச்சாரியருக்கு விபூதிப்பையும், நேமமான இளநலமுடையான் குமரப்பனுக்கு விபூதிப் பையும் கொடுக்கிறது. விபூதிப் பையும், வேலும், திருவா பரணமும், தீபத்தட்டும் குமரப்பன் கோவில் வீட்டில் வளக்கப்படி ஒப்புவித்து, விபூதி குடுத்து, நம்மள் பண்டாரத்துக்குச் சாப்பாட்டுக்குக் கொடுத்துப் போகவர ஒரு பொன்னும் கொடுக்கிறது. நம்மள் பண்டாரத்து வசம் பிரம்புக் கடியும் இருப்பு வேலாயுதமும், கண்டர கோடாலியும் மடத்தில் இருக்கிறது. மேற்படி வேலுக்கும், மூல ஸ்தானத்திற்கும் சுக்கிரவாசம் பூசை செய்துவருகிறது. சங்கராந்திக்கு ரூ. (1)ம் சிவன்றாத்திரிக்கி ரூ.(3/8) ம் ஆடிப் பதினெட்டாம் நோம்புக்கு ரூ(3/8) ம் ஆவணி மூலத்துக்கு ரூ(3/8) ம் பிள்ளையார் சதுர்த்திக்கு ரூ(3/8) சரஸ்பதி பூசைக்கு ரூ. 3/8 ம் தீபாவளிக்கி ரூ.(3/8) ம் இந்தப்படி திருக்கார்த்திகைக்கும் ரூ.(3/8)ம் எண்ணை படி (1) ம் கொடுத்து வருமோமாகவும். இதுகளை நம்மள் பண்டாரம் வாங்கி, பூசை செய்கிறதற்கும், தூத்துப் பெருக்குகிறதற்கும் பண்டாரத்திற்கு வருஷம் ஒன்றுக்கு புள்ளி(க)க்கு கால் பணமும், கால்படி அரிசியும் கொடுத்து வருவோமாகவும். காவேரிப்பூம்பட்டினம் விட்டுப் புறப்படும்போது, மரகதப் பிள்ளையாரை தெரிசனை பண்ணி, ராஜாவினுடைய உபத்திரவம் பெண்ணு விஷயமாய் பொறுக்காதபடியால் இளையேத்துக்குடி வந்துசேர்ந்தோம். எங்கள் நகரத்தார் பெண்ணை மரவுதலை செய்தபடியால், ராஜனுக்கு ஒக்கூருடையான் மருதலைக் கொடுத்தபடியால், எங்கள் கோவில்களுக்கும் உறவின்முறைக்கும் முதல்மரியாதை ஒக்கூருடையானுக்கு நடக்கிறது. பழனி ஸ்தலத்தில் நேமமான இளநலமுடையான் குப்பாபிச்சன் செட்டிகுமாரன் குமரப்பனும் மேற்படியான் பெண்சாதி சிட்டாளும், இன்னும் நாலுபேரும், மாத்தூர் கோவில் உடையான் செட்டி கருப்பாத்தானும் சூறக்குடி கோவில் குமரப்ப செட்டி குமரப்பனும், இளையத்தாங்குடி நாச்சியப்ப செட்டி முத்துக்கருப்பனும், வயிரவன் கோவில் முத்துவடுகன் செட்டி வீரப்பனும், ஆக அஞ்சுபேரும் அஞ்சு கடகம் உப்பும் ஆள் மரவன் தலையில் பத்துக் கடகம் உப்பும் காறாள வமிசம் சுப்பிரமணிய வேளானும் சமையலுக்குக் கூட்டிக்கொண்டு, பழனிக் கோவிலுக்கு நாலு வருஷம், ஆறு வருஷம் பிரயாசைப்பட்டு, மடத்தையும் மடத்துப் பண்டாரத்து அப்பாவையும் நகரத்தார்களை வரும்படிக்கும் பிரையாசம் யெடுத்துக் கொண்டபடியால் முதல் நகரத்தாருக்கு முன்கொடுக்கிற விபூதியும், காளாஞ்சியும், பரிவட்டமும் யேழு நகரத்தாரனை வோரும் ஒரேமனதாய்க் குமறப்பனுக்கு நடக்கட்டுமென்று பேசிமுடிச் சாசனம். குமரப்பனுக்கும் பழனிப்பாருடைய கிருபை இருந்தபடிhல் என்ன காரியத்தை நினைத்து முடியுமென்று ஆறுகால் கூடத்தில் கொடுத்தால், துண்ணூரு வாங்கின உடனே அனுகூலப்படும். இப்பேர்பட்ட பிரையாசை யெடுத்துக் கொண்டபடியாலும் ஆண்ட வனுடைய அனுக்கிரகத்தாலும் ஏழு நகரத்தார் ஒவ்வொருவரும் நமஸ்காரம் பண்ணித் துண்ணூரு வாங்குகிறது. இதைத் தவிர குமரப்பனுடைய சந்ததியில் முதல் வருஷம் பட்டங்கட்டுகிறதற்கு விபரம். தைமீ (4)ம் பூசையத் தினம் ஆறாறு சண்முக நதியில் தீர்த்தமாடி நகரத்தார்களுடன் நதி வலம் வந்து, பழனிப்பட்டணத்தில் பழயப்பார்பதி திருநா வீதிக்கும் மேல்புரம் மாரியம்மன் கோவில் முன்பாக, ஏழுநகரத்தார் உபயம் தண்ணீர்ப் பந்தலில் சோளசிங்க வளநாட்டான் நேமமான குலசேகரபுரத்தில் தேனாறுபாயும் இளநலமுடையான் குப்பா பிச்சஞ்செட்டி குமாரன் குமறப்பனை தண்ணீர் பந்தலில் நிறுத்தி, வந்த நகரத்தார்கள் எல்லாம் அன்னதான மடத்துக்குப் பூசை முதலான துகளைப் பார்த்து, சுவாமிக்கு அபிஷேகம் நடத்தி, சுவாமி கிட்டே இருக்கிற விபூதிப் பையில் வேலும், அதிலுள் வைத்தும் பரிவட்டம், சாத்துபடி மாலையும், வெத்திலை, பாக்குத் தேங்காய், பழம் காளாஞ்சியுடன், சகல விருது வாத்தியத்துடன், மடத்துப் பண்டாரத்தையா, மாரிசியார் கோத்திரம், தெய்வசிகாமணி பண்டாரத்து குமாரன் தெய்வநாயக பண்டாரத்து இடம் கொடுத்து, நகரத்தார்களும் கட்டியத்தடியும், வெள்ளைச் சாமரமும், கொடை, கொடி, இதுகளுடன் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்து, குமரப்பனுக்குத் தீர்த்தம், துண்ணூரு கொடுத்துப் பட்டங்கட்டி, மடத்துக்கு வந்து, தென்புறம் கூடத்தில் இருந்து, காவடிக் காணிக்கை வாங்கி, சுவாமிக்குத் தீவார்த்தனை செய்து, பட்டம் கட்டி, சடாச்சரமும் உபதேசித்துக் கொடுக்கிறதற்காக, பண்டாரத்துக்கு இரண்டு வராகன் கொடுக்கிறது. இந்தப்படிக்கு ஏழு நகரத்தார் அனைவோர்களும் ஒரே மனதாய்ச் சம்மதிச்சுக்கொண்டு இந்தப் புண்ணியத்தை ஒருமனதாய் கட்டளையும் மடவாலய கருமமும் வழுவாதபடிக்கு தருமமே எழுதிய பிரகாரம் நடப்பிவித்துக் கொண்டு வருவோமாகவும். புத்திராள் பவுத்திறாள் பரியந்தமும், சந்திராள் சூரியாள் உள்ளவரைக்கும், கல்லுங் காவேரியும், புல்லும் பூமியும் உள்ள வரைக்கும், நடத்திவருவோமாகவும், நாங்கள் சொன்னசொல் தவறாதவர்கள். சந்திராள் சூரியாள் தெற்கு வடக்காயினும், மகாமேறுகிறி நிறைசாயினும், வேதமொழி தவர்ந்தபோதிலும், கடல் ஏழும் வத்தினபோதிலும், நாங்கள் பொய்யுரைக்கோம். இந்தப் புண்ணியத்துக்கு யாதாமொருவர் வாக்குச் சகாயம், மனச்சகாயம், சார சகாயம், அர்த்த சகாயம் செய்தோர்கள் பழனிச் சன்னிதானத்தில் தீர்த்தமாடி, சண்முகநதியில் பூசத்திலே பௌர்ணமி நாளில் பழனிமலை வேலாயுத சுவாமியாரையும், வள்ளியம்மை, தெய்வானையையும், கைலாசநாதரையும் பெரியநாயகியையும் சேவித்த பலனும், பொய்த்தாமறையில் தீர்த்தமாடி, சிவகாமியம்மையும் தில்லைக்கோவிந்தரையும் சேவித்த பலனும், காசியில் தீர்த்தமாடி, விஸ்வநாதரையும் விசாலாக்ஷிமியையும் சேவித்த பலனும் ராமேஸ்புரத்தில் தீர்த்தமாடி, ராமலிங்கத்தையும் அலைவளரும் காதல் அம்மையும் சேவித்த பலனும், திருவண்ணாமலை, திருப்பதி, திருச்செந்தூர், திருப்புறங் குன்றம், திருவாவினங்குடி, திருப்பெருந்துரை இந்த ஸ்தலங்களிலே தீர்த்தமாடி சகலத்திர பேர்களும் சகஸ்திர போஜனம் செய்த பலனும் பெருவார்களாகவும் நாகலோக கைலாசமாகிய பழனி ஸ்தலத்தில் உண்டாகிய தருமத்தைப் போலவும் நமக்கு இருக்கிற பண்டாரத்தைய்யாவைப் போலவும் கிடையாது; அவரிட்டசமுக்குள் நின்று நமக்கு இருக்கிற பண்டாரத்தைய்யாவைப் போலவும் ஆணைக்குட்பட்டு நடந்து வருவோமாகவும். இந்தப் புண்ணியத்துக்கு உள்பட்ட ஏழு நகரத்தாரனைவோரும் பட்டயத்தில் காணிக்கையும் அது முபடியும் பண்டாரத்தையாவுக்குக் கொடுத்து வருமோமாகவும். இந்தத் தருமத்துக்கும் யாதொருவர் விகாதம் செய்தவர்கள் கெங்கையிலே (1008)க் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலேயேயும், குரு, மாதா, பிதாவைக் கொன்ற தோசத்திலேயும், சன்னியாசி, யோகீஸ்பரனைக் கொன்ற தோஷத்திலேயும் அசுவத்தி, பிரம்மாவத்தி தோஷத்திலே போவர்களாகவும். அப்படி வறாதபிடிக்கு இந்தப் புண்ணியத்தை கைகொண்ட பேர்களுக்கு ஆல்போல் தளைத்து, அருகுபோல் வேறூன்றி மூங்கிபோல் சுற்றமும் முசியாமல் வாழ்ந்திருப்பார். மயில்வேலும் துணை. இந்தப் பட்டயம் சாசனம் எழுதினது. ஏழு நகரத்தாரனைவோர்கள் சொற்படிக்கு ஒக்கூருடையான் உடையப்ப செட்டி அடைக்கப்பன் நெட்டெழுத்து. சீர்பூத்த செழுங்கமல வேலும் வாழி! தேவர்தொழும் பாதார விந்தம் வாழி! தார்பூத்த தினைக்கடம்ப மாலை வாழி! சக்கரைகிரி நடனமிடும் மயிலும் வாழி! கார்பூத்த சிவகிரி கோபுரமும் வாழி! கனகமிகு குண்டலமும் காதும் வாழி! பார்பூத்த தண்டலைகள் அரனார் சேர்ந்த பழனிமலைக் குமரேசம் பாதம் வாழி! வாழி வாழி ஆக ஏடு இருபத்தி ஒண்ணு. ஈசானியச் சிவாச்சாரியாரும், பண்டாரத்தையாவும், ஏழு நகரத்தாரும், குமரப்பனும், சதா சேர்வை. பழனிமலை வேலாயுதம் சுவாமியார் துணை. உ. மரகதக் கணபதி துணை. உ. வேலுமயிலும் துணை. உ. அசலுக்குச் செரியான நகல். (ஏழு நகரத்தார் தர்ம சாசனம் முற்றும்) சிவமயம். ஹரி ஓம். நன்றாக. குரு வாள்க. குருவே துணை. சிவமயம் சீர்பிறவே பிரமரக் கோமுக மொன்றே தெய்வரி குஞ்சரியைச் சேர்ந்தமுக மொன்றே மாறுபட சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புரிய வந்தமுக மொன்றே கூறுமடியார்கள் வினை தீர்த்தமுக மொன்றே குன்றுருவ வேலதனை யேவுமுகம் யொன்றே ஆறுமுகமான வடி யாறு மரியாறோ ஆதி அமராபதி அமந்த பெருமாளே ( 2.) வைகை நீடுக! மாமறை மன்னுக! மெய் விரும்பிய அன்பர் விளங்குக! சைவநன்னெறி தான் தளைத் தோங்க! தெய்வ வெண்ணீரு திருநீரு சிறக்கவே! கருணை பொழி முகங்களாரும் வாழி! கனகமலர்ப் பனிரெண்டுங் கய்யும்வேலும் வாழி! இருசறண மென்றலை மேல்னாளு மோங்கும்! யிந்திர விக்கப்பாலும் மினிதும் வாழி! அருள்பெருக அமரர் சிறைமீட்டே யாண்ட! யாரிரண்டு திருநயனத் தழகு வாழி! மருவணியும் பைங்கடப் பந்தாருமார்பு வாழி! பரிமயில் சேவற் கொடியும் வாழி! அடைந்தவர் துணைவா வாழி! அடையலற் கறியாய் வாழி! மடந்தைதன் மைந்தா வாழி! மாதவன் மருகா வாழி! திடம்புனை வேலா வாழி! தேவனாருயிறே வாழி! படர்ந்தயோர் அசுர கூற்றெம்பரமனே வாழி! வாழி! நடந்துவருகிற சாலியவாகன சகார்த்தம் 1710க்கு மேல் செல்லாநின்ற கலியுக சகார்த்தம் 4889க்குமேல் செல்லாநின்ற பிலவங்க வருஷம் சித்திரை-மீ 15உ பூஷ நக்ஷத்திரமும் பெற்ற சுபதினத்தில் பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு செல்லும் வைகாவூர் நாட்டில் பழனி ஸ்த்தலத்தில் ஆவணி மூல வீதிக்கும் கீழ்புரத்தில் மகாரிஷயர் கோத்திரம், குமாரசாமி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்து மனையில் சொர்னமண்டலமாகிய காவேரிப்பூம்பட்டணத்தில் பிறந்தவர்கள். உயர்தன வணிகர், மகாமகுட வணிகர் நாக லோகத்தில் ரத்ன வணிகர் தங்க மேருரை கண்டவர்கள் மதயானையை நிறைகண்டவர்கள், காவேரியை பஞ்சாலடைத் தவர்கள், அவ்வை தன் தமிழுக்குப் பொற்பாடகம் கொடுத்தவர்கள். மடிச்சீலை பெருக வென்று வாழ்த்தி வரம் பெற்றவர்கள் கம்பனார் கோவிலை செம்பொன்னால் மேய்ந்தவர்கள், கலியாண வாசலுக்கு பவளக்கால் நாட்டினவர்கள், தண்ணீர் கயத்துக்கு தங்கக் கயர் போட்டவர்கள், சோள மண்டலத்தில் மூவேந்திரருக்கு முடி சூட்டினவர்கள், சிங்கக்கொடித் தலைவர்கள், சிங்காசனத்தார், சீரகமாலை உடையார், வெள்ளை வாரனத்தார், பாண்டிய நாட்டரசன் குலசேகர சவுந்திர பாண்டியன் நற்குடிதன் சீமைக்கி அழைத்தபோது, பொன் புஸ்ப்பரதம் ஏறி வந்தவர்கள், கல்வாசல் நாடாகிய யிளசை நகற்தன்னில் பூவசியறாக வந்தவர்கள், குலசேகரபுரம் தேனாருடையார், அன்னை, தந்தை, தெய்வம், மறையோர், குருவை வணங்குவோர்கள், சதுர்மறை ஆறு சாஸ்த்திரம் உணர்ந்து வேள்முடித்த யோகி, மெய்ஞ்ஞானி உயிர் பிரமசாரியாகிய பாண்டிய நாட்டரசாரி பதம் பெற்றோர்கள், வேதவிதஞாயம் விளங்கு மெஞ்ஞானி, ஆதி மெய்பொருள் அரிந்தருள் யோகி திருப்புனல் குருதேசிகன் பதமும் போற்றுவோர்கள், கல்வாசல் நாடாகிய குலசேகரபுரம் இளையாத்தக்குடி சீரசெத்தூரில் சிரந்தருள் கல்வாசநாடு, நேமநாடு, கேரளசிங்கவளவாடு, பிரம்பூர் நாட்டில் வீரபாண்டியபுரம், பெருந்திருவான சோளசிங்க வளநாடு வீரபாண்டியபுரம் மருதாந்தபுரம், சிருகுளத்தூர், பிரம்பூர் நாட்டில் சூடாமணியும், கானாடு ஒன்பது நாட்டுக்கும், ஏழு கோவிலுக்கும் இருபத்திரெண்டு கோத்திரமும், ஒக்கூருடையான், பெருமருதூருடையான், பெறசெந்தூருடையான், கிங்கினிக் கூருடையான், பட்டண சாமியாறை யிளநலமுடையான், கழனிவாசல் உடையான், திருவப்பூருடையான், யேளகப் பெருந்திருவான சிருகுளத்தூருடையான், மண்ணூருடையான், மணலூருடையான், குளத்தூருடையான். கண்ணூருடையான் கருப்பூரான் உடையான் அரும்பாக்கூருடையான், புகலிடம் கொடுத்த பட்டணமுடையார் இருபத்திரெண்டு கோத்திர மாகிய ஏழு நகரத்தார் அனைவோரும் பழனி ஸ்த்தலம் வடவா சின்னோபநாயக்கர், பாணிபாத்திர உடையார் மற்றமுண்டாகிய ஸ்த்தானம் பரிகல் முன்பாக ஏழு நகரத்தார் அனைவோரும் குமாரசாமி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்குத் தர்மசாசனப் பட்டயம் கட்டளையிட்டோம். எங்கள் முன்னோர்களால் நேமமான யிளநலமுடையான் குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனும், மற்ற அனைவோரும், தங்கள் முன்னோர்கள் தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்து மனையில் கூரை, ஆறுகால் கூடத்தைப் பிரித்து, கல் திருப்பணியால் ஆறு கால் சவுக்கையும் செய்து தை மாதம் பூச நச்சேத்திரத்தில் அஞ்சுநாளைப் பூசையும் நடத்தி, காளாஞ்சியும் யீசான்ய சிவாசாரிய சுவாமி அவர்களுக்கு முதலாவது; திருப்புனல்வாசல் முதண்மையரான் சேனாபதி சுவாமி அவர்களுக்கும் ரெண்டாவது; யெங்கள் மடத்து தெய்வநாயக பண்டாரத்தையாவுக்கும் மூனாவது; நேமமான யிளநலமுடையான் குமரப்பனுக்கும் நாலாவது; இந்தப் பிரகாரம் தீர்த்தம் திருனூரும் காளாஞ்சியும் வளமை போல்க் குடுத்து, அஞ்சாம் பூசையத்தினம், பத்தாம் திருநாள் மண்டகப்படியில் நகரத்தார் உபயம் சிலவுசெய்து, எங்கள் பண்டாரத்தையாவுக்கு அரிதி பரிவட்டமும், எங்கள் குமரப்பனுக்கு அலங்காரப் பரிவட்டமும், மாரியம்மன் கோவில் தண்ணீர் பந்தலில் பட்டங்கட்டி, அன்னதான மடத்துக்கு வந்து சுவாமிக்கு பூசை செய்து வளமைபோல், தீர்த்தம், திருனூரு, காளாஞ்சியும் வாங்கிக் கொள்ளுகிரது. பண்டாரத்தையாவை அவர் சாகைக்கி அளைத்துப் போய்விடுகிரது. தங்களுக்குத் தூத்துப் பெருக்கி திருவிளக்கேத்தி வைக்கிறதர்க்காக வருஷம் ஒன்றுக்கு, எங்களில் இருபத்திரெண்டு கோத்திரத்தில், புள்ளி ஒன்றுக்கு பணம் காலும் அரிசி படி கால் வீதமும் வருஷம் தோரும் குடுத்து வருவோமாகவும் இந்தப் படிக்கி, குடுக்காத பேர்களுக்கு அட்டங்கெடுத்து வாங்கிக்கொள்வீர்களாகவும். அன்னதான மடத்துக்குத் திருவிழாவுக்கு வருஷம் ஒன்றுக்கு ஆறு பொன் கொடுத்துவருவோமாகவும் இதுவுமன்னியில் காவணம் சிறப்புச் செய்ரதற்க்காக பண்ணிரெண்டு பொன் கொடுத்து வருவோமாகவும் மகேஸ்பர பூசையில் நாள் ஒன்றுக்கு வேல் நிறுத்துகிறதற்க்காக அடிப்பரப்புக்கு வேல்ப்படியால் அரிசி படி ஒன்று வேலுக்குச் சாத்துகிற பரிவட்டமும், நாள்ஒன்றுக்குச் சொர்ன புஸ்ப்பம் பணம் ரெண்டும் வாழைப்பழம் பதினைந்து, வெத்திலை முப்பது, பாக்கு பதினைந்து, தேங்காய் ஏழு, சூடம், சாம்பிராணி, தீபத்துக்கு யெண்ணைபடி ஒன்று அபிஷேகத்துக்கு, பழம், இருபத்தி அஞ்சு, நல்லெண்ணை படி ஒன்று, சர்க்கரை பலம் பதினைந்து, தேன்படி அரைக்கால், முந்திரிப்பழம் கால்பலம், பேரிச்சம்பழம் அரைப்பலமும், பொங்கலுக்கு அரிசி படி ஒன்றும், சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசி படி ரெண்டும், பாசிப்பயர் படி காலும், சர்க்கரை பலம் இருபதும், தேங்காய் ரெண்டும், பொங்கப் பானை வைக்க நெய்வேத்தியதுக்கு தேங்காய் ரெண்டும், பழம் நாலும், வெத்திலை பத்தும், பாக்கு அஞ்சும், பள்ளயத்துக்கு நாங்கள் வடிக்கிற சாதத்தில் அஞ்சு கூடை சாதம் அதற்கு விபரம் இடும்பையாவுக்கு கூடை மூன்றும், வள்ளிதெய்வானைக்குக் கூடை ரெண்டும், தங்கள் பொங்களில் சுவாமிக்கும் பிள்ளையாருக்கும் பள்ளயம் போட்டு, பள்ளயத்துக்கு நெய் படிமுக்கால், பழம் பதினைந்து, சர்க்கரை பலம் பத்து, அதர்க்கான காய்கரி முழுமையும் போயிலையும் சுருட்டு அஞ்சும் குடுத்து, தீவார்த்தனைசெய்து, தீர்த்தம் திருநூரு முதலாவது ஈசான்ய சிவாச்சாரியாருக்கும்; ரெண்டாவது பாதரக்குடி திருப்புனல் வாசல் சேனாபதி குருக்கள் சுவாமி அவர்களுக்கும்; மூனாவது மடத்து தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்தையாவுக்கும், ஏழு நகரத்தார் எங்களில் முதலாவது நேமமான இள நலமுடையான் குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனுக்கும்; ரெண்டாவது இரணிக்கோவில், பழனி யாண்டவர் திருவடி பெற்ற, பெ. குட்டயனுக்கும்; மூனாவது வயிரவன் கோவில் வேலப்ப செட்டி வயிரவனுக்கும், நகரத்தார்க ளனைவோர்களுக்கும் காளாஞ்சி முதலானதும் மேல்கண்ட விபரப்படிக்கி தருகிரது. நாள்ஒன்றுக்கு இரண்டு காளாஞ்சி வேலாயுத சின்னோப நாயக்கர் விஷயகிரித் துரை அவர்களுக்குக் குடுக்கிரது. இந்தப்படி நாள்ஒன்று அஞ்சு நாளைக்கும் மேல்க்கண்ட விபரப்படி குடுத்து வருகிறது. பள்ளயத்தில் பிள்ளையார் பள்ளயமும் சுவாமி பள்ளயமும், நகரத்தாருக்கும், மற்ற பள்ளயம் பண்டாரத்துக்கும், மகேஸ்பர அஞ்சுநாளை பூசையில் தங்களுக்கு நாள் ஒன்றுக்கு வேல்ப்படியால் அரிசி படி பத்தும் பருப்புப் படி ரெண்டும், நெய் படி ஒன்று, உப்பு படி ஒன்றும், காய்கரி முழுமையும் எரி கரும்பும் இந்தப்படிக்கி, மலைக்கி தீர்த்தக் குடம் கொண்டு போரதற்க்காக அரிசிபடி மூன்றும் அதற்க்குண்டான சாமான்களும், எங்கள் குருவாகிய ஈசான்ய சிவாச்சாரியார் அர்ச்சனைக்காக தங்களுக்குக் குடுக்கும்படி உத்திரவான, படி, அரிசி படி ஏழும் அதர்க்குண்டான சாமான்களும், திருப்புனல்வாசல் சேனாபதி குருக்கள் சுவாமி அவர்கள் தீர்த்தக் குடத்துக்காக தங்களுக்கு, குடுக்கும்படி உத்திரவானது அரிசி படி அஞ்சும், வயிரவன் கோவில் வயிரவன் பிராமண போசனத்துக்குக் குடுத்து அரிசி தரின அரிசி படினாலும் அதற்குண்டான சாமான்களும், ஆகவகை அஞ்சுக்கும் அரிசிபடி இருபத்தி ஒன்பதும், அதர்க்குண்டான சாமான்களும் குடுத்து வருவோமாகவும் இதுவுமன்னியில் ஏழு நகரத்தார் உபயம் மாரியம்மன் கோவில் தண்ணீர்பந்தல் உபயம் தைபூசத்தில், பத்தாம் திருவிளா, மண்டகப்படியில், நகரத்தார் உபயம் செய்து தங்களுக்கு அரிதி பரிவட்டமும், நேமமான யிளநலமுடையான் குமரப்பனுக்கு அலங்கார பரிவட்டமும், இரணிக்கோவில் பழனியப்பார் அருள்பெற்ற, பெ.குட்டயனுக்கும் மரியாதிக் காளாஞ்சியும், குடுத்து அன்னதான மடத்துக்கு சகல விருது வாத்தியங்களுடன் அழைத்துக் கொண்டு வந்து தீவார்த்தனை செய்து வளமைபோல் காளாஞ்சியும் குடுத்து பண்டாரத்தையாவை அழைத்து, சாகையில் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறது. பட்டம் கட்டிக்கிறதற்க்காக வருஷம் ஒன்றுக்கு சோமன் சீலைக்கி ரெண்டு விராகனும், பண்டாரத்தையாவுக்குக் குடுக்கிரதுந் தவிர விபூதிப்பை ஒன்றும் தருகிறது. மகேஸ்பர பூசையில் மிஞ்சின சாமானும் பண்டாரத்தை சேறுகிரது. காவணமும், அடுப்புக்கரியும் நவபாண்டமும் நாயகப் பானையும் பண்டாரத்தைச் சேருகிறது. இதுவும் மன்னியில் மலையின்பேரில் வேலாயுத சுவாமியாருக்கு நகரத்தார் திருமஞ்சனம், நித்தியப்படி உபயம் குடம் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு, தங்களுக்கு அஞ்சு வராகனும் குடுக்கிறது. மலையின் பேரில் காவடி அபிஷேகத் துக்கும், சந்தன அபிஷேகத்துக்கும் வில்ப, திருமஞ்சனம் சாமான்களுக்கு ஆறுபொன் குடுக்கிறது. அபிஷேக பஞ்சாமிர்த முதலானதும் மடத்தில் காளாஞ்சிப் பிரகாரம், வேல்படியால் நாள் ரெண்டுக்கு இனம் ஒன்றுக்கு அரைப்படிகுடுக்கிறது. இதுவுமன்னியில் நம்மள் பண்டாரத்து மக்கள் பெண் ஆனாலும் கல்யாணத்துக்குப் பத்து விறாகனும் வந்த பெண்கள், பிரந்த பெண்கள் சடங்கானால் ரெண்டு விராகனும்; கருமத்துக் குடையவர்கள் மறணமானால் நகரத்தார் துப்பட்டா போடுகிரதற்கு சிலவுக்கு ஒரு விராகனும் குடுக்கிறது. மடத்து பார்வதி அம்மாளுக்கு ´ -க (வருஷம் ஒன்று)க்கு சீலை ஒன்று குடுக்கிரது. மடத்தை சேற்ந்தயிடம் தங்களைச் சேர்ந்ததினால் எங்கள் முன்னோர்கள் தங்கள் முன்னோர்கள் மனையில், கல்த்திருப்பணி ஆறுகால் சவுக்கை கட்டி, மேல்கண்ட தர்மம் முழுமையும், நடத்தி வருகிரபடியால், இப்போது ஆறுகால் சவுக்கையைச் சுத்தி, கல்திருப்பணி எழுபத்தி எட்டுக்கால் மண்டபம் கட்ட வேண்டியதிருப்பதால், மேல் கண்ட மடத்துக்குத் தென்புறம் வளமையான தலவாசல் ஒன்றும், மேல்புரம் தலவாசல், கன்னிமூலையில் தங்களுக்குச் சமையல்புரை கட்டுகிறதென்றும், நகரத்தார்கள் அனவோர்களும் தங்களைக் கேட்டுக்கொண்ட படியால் தாங்கள் ஆக்குபுரையிலும் 78 கால் திருப்பணி மண்டபத்திலும், ஆறுகால் சவுக்கையிலும், தாங்கள் அனுபவித்துக் கொண்டு தங்கள் புத்திறாள், பவுத்திறாள் பறம்பரையுள்ள வரைக்கிம், அனுபவித்துக் கொள்வீற்களாகவும். எங்களுடைய புத்திறா, பவுத்திறாள் பறம்பரை தங்களுக்கு புள்ளி பணமும் மகேஸ்பற பூசையில் யேர்ப்பாட்டுப்படிக்கி, தங்கள் மனையில், விசேஷங்களுக்கு ஏர்ப்படுத்திய கட்டளைப் பணங்களும், கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் யுள்ளவரைக்கி, சந்திறாள், சூரியாள் உள்ளவரைக்கிம் நடத்தி வருவோமாகவும். யிந்த மடவாலயத்தில் இளநலமுடையான் குமரப்பனுக்கு எங்களில் முதன்மையான தீர்த்தம் திருநூறு காளாஞ்சி முதலானதும் குடுக்கிறது. இரண்டாவது இரணிக்கோவில் பெ.குட்டயனுக்கும்: மூனாவது வயிரவன் கோவில் வேலப்ப செட்டி வயிரவனுக்கும் நாலாவது மற்ற நகரத்தார்கள் அனவோர்களுக்கும் குடுக்கிறது. யிப்படி யேற்பட்டதுக்கு காரணம் எங்களில் ஒக்கூர் உடையான் றாசனுக்கு மருதலை கொடுத்த காரணத்தாலும், எங்கள் கோவில்களிலும் உரைமுரையிலும் தீர்த்தம், திருநூறு, வெத்திலை, பாக்கு குடுக்கிற தன்மையை போல் நேமமான யிளநலமுடையான் பிச்சக்குப்பாஞ் செட்டி குமரப்பன், பழனி ஸ்த்தலத்துக்கு உப்பு கடகம் சுமந்து வந்து,வித்து, மகமையெடுத்து, மேல்கண்ட தர்மம் முழுமையும் பண்டாரத்தையாவையும், விஷயகிரித்துறை அவர்களிடத்தில், மலையில் நடக்கிற தர்மத்துக்கும், அன்னதான மடத்தில் தர்மத்துக்கும், மாரியம்மன் கோவில் தண்ணீர்ப்பந்தல், பத்தாம்திருநாள் மண்டகப்படியும், தர்மத்தையும் இதுகளை யெல்லாம் ரொம்ப பிரயாசைப்பட்டு, சம்பாரித்து, எங்களுக்கும் மேல்கண்ட தர்மத்தைத் தந்த படியாலும், குமரப்பனுக்கு முதலாவது தீர்த்தம், திருநூறு குடுத்து வருகிறது. சில வருஷம் சென்றபின் இறணிக்கோவில், பெ.குட்டயன் பழனிக் கோவிலுக்குக் காவடி எடுத்துக்கொண்டு வரும்போது, பழனியப்பாருடைய அருள்தங்கி நினைத்த காரியங்களெல்லாம் சித்திக்கும்படி, பழனி ஸ்த்தலம் வேலாயுத விசயகிரி துரை அவர்கள் நினைத்த காரியங்கள்லெல்லாம் சொன்னபடியாலும் - ராஜா உத்திறவுக்கு மிகவும் சந்தோஷமாகி, ராஜா கையிலிருந்த செங்கோல் பிறம்பூ - (2)ம் சந்திறாறமும் குடுத்து, சகல வாத்தியத்துடன் அன்னதான மடத்துக்கு றாசாவும் கூடவே வந்து பழனியப்பனுக்கு ரெம்பவும் சொல்லி தனக்கு முதலாவது மரியாதையும், ரெண்டாவது பெ.குட்டயனுக்கு நடக்கும்படிக்கும், குட்டயன் அருளாடி வாக்கு சொல்லவும். பழனியப்பன், விபூதி கொடுக்கவும், இந்தப்படி நடத்துங்கள் யென்று உத்தறவு செய்தார். பழனியப்பனும், எங்கள் உறமுறைக்கும் எங்கள் பண்டாரத்து அய்யாவுக்கும் சேதி சொல்லி, துரை அவர்கள் உத்தரவுபோல் நடக்குறோம். அடுத்த பைங்குனிமீ உத்திரத்தில் குன்றாக்குடியில் நகறக்காவடி மலை சுத்திவரும்போது, குட்டயனுக்கு பழனியப்பாருடைய அருள்தங்கி வாக்கு சொல்லி வரும்போது, மருதுபாண்டியன் றாசாவந்து, நினைத்த காரியங்கள் யெல்லாம் சொல்லி, அது திட்டாந்திறம் அரிய பிறாமலையும் யெசரிவளந்தானும் மலையும் பொருதுமா வென்று, நினைத்து கேட்டா யென்று சொன்னவுடன் மருதுபாண்டிய றாசாவும், தன் கையில் போட்டிருந்த கணையாளி மோதிறத்தையும் குட்டயனுக்கு குடுத்து, ரெம்பவும் மரியாதைகள் செய்து நேமமான யிளநலமுடையான் பழனியப்பனையும் கூப்பிட்டு, பழனி ஸ்த்தலத்தில் நடந்த சங்கதி முழுமையும் விசாரித்து, அதுபோல்த்தான் நடக்கவேணும் மென்று மருதுபாண்டிய றாசா சொன்னபடி யாலும், எங்கள் நகரத்தார்கள் அனவோர்களுக்கும் சொல்லியும் எங்கள் நாகப்ப பண்டாரத்துக்கு சொல்லியும் தைமீ முதல் பூசைய்த்தினம் காவடிஅளைக்க வரும்போது, குட்டயனுக்கு பட்டங்கட்டி, மடத்துக்கு அளைத்து வந்து, ஆறுகால் சவுக்கையில் பண்டாரம் சடாச்சறம் உபதேசித்து, காளாஞ்சி முதலானதும் குடுக்கிறது. - பண்டாரத்து அய்யாவுக்கு, பட்டம் கட்டினதுக்காக ரூபாய் அஞ்சு குட்டயன் தனதில் குடுக்கிறது. இவற்களுக்கு றாசாவினுடைய உத்தறவுப் பிறகாரம், சுவாமியினுடைய அனுக்கிறகத்தினாலும், ரெண்டாவது மரியாதை; மூனாவது வயிரவன் கோவில் வேலப்ப செட்டி வயிரவனுக்கும், கல் திருப்பணி அன்னதான மடத்தில் நகரத் தார்கள் கூடி பார்க்கும்படி வயிரவனை சொன்னதில் வயிரவனும் மடத்துக்கு வாணம் தோண்டி, வாணக்கல் நாளையத்தினம் இறக்கவேணும் மென்று, நாலு வசத்தில், சுவாமி வயிறவனிடம் பிரசன்னமாய் வந்து, வாணத்துக்கு மொங்கான் போட்டது போறாது என்று சுவாமி சொன்னபடியால் வையிறவனும் நாளைத்தினம் கல் இறக்க வேண்டியிருப்பதால் யெப்படி சுவாமி முடியும்? என்று கேட்டான். பூமி மட்டத்துக்குக் மணலை கொட்டி, பனிரெண்டு தண்ணீர்க் குடமும் மொங்கான் மறத்தையும் வைத்திரு; நாளை பார்த்தநாளில் கல் யெறக்கு யென்று உத்தரவு செய்தார். அதுபோல் சாமான்களும் தயாரித்துவைத்து, வயிரவனும் யிருந்தான். மறுநாள் காலையில் வாணங்களை பார்க்க, ரெண்டு முளம் யிறங்கி யிருந்தது. அந்த அதிசயங்களையும் நகரத்தார்கள் பார்த்தார்கள். திருப்பணி வேலையில் ரெம்ப சிறத்தை யெடுத்துக் கொண்டபடி யினாலேயும், பிறாமண போசனம், அகுதி, பறதேசி, களுக்கு வடித்து போட்டுகொண்டு வருகிறபடி யினாலேயும், அதற்க்காக நகற பொதுவில் இருபத்தி ஒரு பொன் ´ (1) ஒன்றுக்கு குடுக்கிறது. பாணக்கமும் சுருட்டும் வயிறவன் கரைத்து வைக்கிறது. யிப்படிப் பிரயாசைக்காக யிந்த மடாலயத்தில் நடக்கிற மரியாதைகள். நகரத்தார் அனைவோரும் சம்மதித்து முதலாவது ஈசான்ய சிவாச்சாரியாருக்கும், ரெண்டாவது திருப்புனல் வாசல் முதன்மை சேதினாபதி குருக்கள் சுவாமிக்கு; மூனாவது மடத்து தெய்வநாயக பண்டாரத்து அய்யாவுக்கும்; எங்களில் முதன்மை நேமமான யிளநலமுடையான் குமரப்பனுக்கும்; ரெண்டாவது இறனிக்கோவில் பெ.குட்டயனுக்கும் மூனாவது வயிரவன் கோவில் வேலப்பசெட்டி வயிறவனுக்கும்; நாலாவது நகரத்தாருக்கும் காளாஞ்சி முதலானதும் குடுத்து வருகிற தென்று பேசியிருக்கிறது. பண்டாரத்தய்யாவுக்கு மேல் யெழுதிய கட்டளைப்படிக்கி ´ம் தோரும் புத்திறாள், எங்கள் பவுத்திறாள் உள்ள பரியந்தம், கல்லும் காவேரி, புல்லும் பூமியும், சந்திறாள் சூரியாள் உள்ள பரியந்தம் நடத்திவருவோமாகவும். மகாமேருமுரி சாய்ந்தபோதிலும், சந்திறாள் சூரியாள் தெற்கு வடக்கு ஆனபோதிலும் நாங்கள் நகறம் பொய்யுரை யோம். இந்த மேல்கண்ட தருமங்களுக்கு விகாதம் செய்ய வேணுமென்று நினைத்தவனுக்க, விகாதம் செய்தவனுக்கும் காசி கெங்கைக் கரையிலே ஆயிறத்தியெட்டு (1008) காராம் பசுவை கொன்ற தோசத்திலேயும் தீர்த்த வாசங்களிலே குருத்துறோகம், சாமத்துறோகம், யெனத்துறோகம், விசுவாசபாதகம், மாதா பிதாவை கொன்ற தோசத்திலேயும், சிசுவாதை செய்த தோசத்திலேயும் போகக் கடவார்கள்ளென்று, நகரத்தார் அனவோர்களும் யெழுதி குடுத்த தர்மசாசனம் பட்டயம். மேல்கண்ட பாவங்களில் போகாமல் இந்த தருமத்தை பரிபாலனம் செய்தபேருக்கு காசி கெங்ககையில் ஆயிரத்தியெட்டு கோதானம் செய்த பலனும் சோட சதானம் செய்த பலனும் பெருவார்களாகவும் ஆல்போல் தளைத்து அருகுபோல் வேறூணி மூங்கிபோல் சுற்றம் முசியாமல் வாள்ந்துயிருப்பார்கள் ளென்று ஏழு நகரத்தார் எழுதி குடுத்த தர்ம சாசனைப் பட்டயம். யிந்தப்படிக்கி பட்டயம் யெழுதினது நகறத்தார் சொல்ப்படிக்கி பிள்iயார் கோவில் அருணாசலஞ் செட்டி குமரப்பன் நெட்டெழுத்து. வேலு மயிலும் துணை. சீர்பூத்த செழுங்கமல வேலும் வாழி தேவர் தொழும் பாதாரவிந்தம் வாழி தார்பூத்த தினைக்கடம்ப மாலை வாழி சக்கிரி நடனமிடு மயிலும் வாழி காற்பூத்த சிவகிறிக் கோபுரமும் வாழி கணகமிடு குண்டலமும் காதும் வாழி பார்பூத்த தண்டலைகள் அரனார் சேர்ந்த, பழனிமலைக் குமரேசர் பாதம் வாழி ஆக ஏடு இருபத்தி ஒன்பது. சதா சேர்வை மரகதக் கணபதி துணை. உ. தெண்டாயுதபாணி துணை. குமரன் துணை. அசல் பட்டயத்திற்குச் சரியான நகல்ப் பட்டயம். வேலு மயிலும் துணை செய்யவும். (முற்றும்.) பிறாமலை ஆதீனம் சுவாமி தெரிசனம் செய்து வருகிர நடப்பு அட்டவணை வையநீடுக! மாமழை மன்னுக! மெய்விரும்பிய அன்பர் விளங்குக! சைவநன்னெறி தான் தளைத்தோங்குக! தெய்வவென்றி திருநீறு சிறக்கவே! புவனகர்த்தாவாகிய பழனிமலை வேலாயுத சுவாமியார் தெரிசனம் செய்துவருகிற பிறாமலை ஆதீனம் அஸ்ட்ட லட்சுமி வாசல் அஸ்ட்ட கெஜம் அஸ்ட்ட நாகந்தங்கிய சிம்மாசனாதிபதி, மீனக்கொடி வலபாகத்தில் ஆகாயத்தை உலாவிக்கொண்டு வரவும், அன்னக்கொடி, யாளிக்கொடி, பூச்சக்கரக்கொடி, மகரதோரணம், டால்,பங்கா, துத்தாரி, திருச்சங்கும், சதா காலமும் தொணித்தும், வேப்பம்பூ மாலை ஆரம் அனிந்த, ஈசான்ய சிவாச்சாரியார் பழனிமலையில் நடக்கவேண்டிய பத்ததிகளும், ஆதீனத்தில் நடக்கவேண்டிய பத்ததிகளும், நம்ம பண்டாரம் நடக்கிர பத்ததிகளும், குமரப்பன் நடக்கிற பத்ததிகளும், நகரத்தார் நடக்கிற பத்ததிகளும், பிறாமலை ஆதீனம் பழனிக்கோவில் இடும்பன் மலைமுதல் ஊரு வரும் வரையில் நடக்கிற அட்டவணை. இடும்பன் மலையில் அடிவாரத்துக்கு பழனி தேவஸ்த்தானம் தளாங்குடன் வந்து, பிரசாதம் கொடுத்து, மடத்துவரை சகல விருது வாத்தியதுடன் வந்தால் ஆதீன மரியாதை ரெண்டு பொன் குடுக்கிரது. சண்முக நதி ஸ்த்தானத்துக்குப் போகும்போது யானை சகல விருது வாத்தியத்துடன் வந்தால், அதற்கு ரெண்டு பொன்னும், மலைக்கி சுவாமி அபிஷேகத்துக்குப் போனால் (மேற்படி) ³ விருது வந்தால் இரண்டு பொன்னுங் கொடுக்கிரது மலைக்கி சுவாமிக்கி அபிஷேகத்துக்குப் போகும்போது அன்னதான மடத்தில் சுவாமிக்கு முன்பாக யிருக்கிற ³ (மேற்படி) ஆதீனம் மீனக்கொடி, வேப்பம் பூ மாலை ஆரம்ப தங்கிய ஈசான்ய சிவாச்சாரியாரைத் தெரிசனை செய்து, மலைக்கி அபிஷேகத்துக்குப் போகும்போது, மலைவீதி சுத்தி வரும்போது, இடும்பன் மலையிலிருந்து வரும்போது, பல்லாக்குச் சவ்வாரியுடன் வருகிரது. மலைக்கி வரும்போது பல்லாக்கு பதினெட்டாம் படி வரை வருகிரது. பல்லாக்கு பிடிக்கிரது. படியேரி வரும்போது ரெட்டை தீவட்டி தட்டான் மண்டபத்திர் பல்லாக்குக் கட்டுகிரது. பகல் தீவட்டி, பிடிக்கிரது படியேறி வரும் பொழுது ரெட்டை தீவட்டி சாமரம், பூச்சக்கிறக்குடை, கட்டியம், மீனக்கொடி, அன்னக்கொடி, யாளிக்கொடி, பங்கா, துத்தாரி, சின்ன மலவண்டை சகல வாத்தியத்துடன் வருகிரது. கோபுர வாசல் வழியாக, பிரகாரம் வந்து, ஆலயத்திற்செல்லும்போது, மகா மண்டபத்து வரை மீனக்கொடியும், ரெட்டைத் தீவட்டியும், அஸ்த்த மண்டபத்தில் நின்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்வரை கைத்தீவட்டி ரெண்டும், ஈசானிய சிவாச்சாரியாருக்குப் பிடித்திருக்கிரது. அபிஷேகஞ்செய்து தேவஸ்த்தானத்துக்கு ஆதீனத்தில் ரெண்டு பொன் குடுக்கிரது. சொர்ண புஸ்ப்பம் ரெண்டு பொன் சாத்துகிரது. தேவஸ்த்தானத்தில் ஈசானிய சிவாச்சாரியாருக்கு அரிதி பரிபட்டமும் கட்டி, அர்த்தசாமந்தொழுது வருகிறது. மலைக்கோவில் ஸ்த்தல மரியாதை, ஸ்த்தானீயான், பாத்திர உடையார், அருபத்தினாலு பண்டாரம், மணியம், கணக்கு, சம்புருதிக்கி, சகலமான சிப்பந்திக்கும் மொத்தம் பொன் ஆறுங் குடுக்கிரது. தம்பாக்குருக்களுக்கு ரெண்டு பொன் குடுக்கிரது. பழனியாண்டவருக்கு பீதாம்பரஞ் சாத்துகிரது. தெய்வநாயக பண்டாரத்துக்குச் சந்தன மாலை, விபூதி, திருமஞ்சண, வில்வம் இதற்கு மூணு பொன் குடுக்கிரது. அர்த்த சாமத்தில் பரிபட்டம் கட்டியபடி, சகல விருது வாத்தியத்துடன், அன்னதான மடத்துக்கு வந்து, சன்னியதானத்திலிருக்கிற வடக்கு முகமாயிருக்கும் ஈசுhனிய சிவாச்சாரியார் தெரிசனை செய்து யிருப்பிடத்துக்கு வருகிரது. வந்து தெய்வநாயக பண்டாரத்துக்குச் சோமன், சோடும் ³ (மேற்படி) யான் பெண்சாதி பார்வதியாயிக்கிச் சீலையும் கொடுத்துக் காளாஞ்சி கொடுக்கிரது. நேமமான யிளநலமுடையான் குப்பாபிச்சாஞ் செட்டி குமரப்பனுக்கும் காளாஞ்சி கொடுக்கிரது. நகரத்தாருக்கும் விபூதி காளாஞ்சி கொடுக்கிரது. மருதினம் நகரத்தார் காவடி அபிஷேகத்துக்கு நகரத்தார்கள் போகிரது. மலையில் அபிஷேகஞ் செய்துவந்து, சன்னியதானத்துக்கு தெய்வநாயக பண்டாரம் பிரசாதம், காளாஞ்சி கொடுக்கிரது. மருதினம் பத்தாம் திருவிளாமண்டகப்படிக்கி, நகரத்தாரனைவோரும், ஈசானிய சிவாச்சாரியாரை, பெரியநாயகியம்மையும் கைலாசநாதறையும் முத்துக்குமாரையும் தெரிசனம் செய்து வைத்து, மாரியம்மன் கோவில் மண்டகப்படிக்கி, அழைத்துவந்து, மண்டகப்படி நடத்தி, ஈசானிய சீவாச்சாரியாருக்கு நகரப்பொதுவில், பீதாம்பரம் வாங்கி, முத்துக்குமாரருக்கு சாத்தி பரிபட்டம் கட்டுகிரது. தேவஸ்த்தானத்தில் தெய்வநாயக பண்டாரத்துக்கும் குமரப்பனுக்கும் பரிபட்டம் கட்டிக் சகல விருது வாத்தியத்துடன் அன்னதான மடம் வந்து, சுவாமிக்கித் தீபாராதனைசெய்து, நகரப்பொதுவில் தேவஸ்தானத்தாருக்கு வேண்டிய மரியாதையுஞ் செய்து, சகல விருது வாத்தியத்துடன் சுவாமி பூசை மடம் வருகிரது. வந்துயிருந்து யாவரும் விடைபெற்றுக்கொண்டு போய்வருகிரது. தெய்வ நாயகமும், ஈசானிய சிவாச்சாரியாரை அஷ்டாங்க, சாஷ்ட்டாங்கஞ் செய்து, விபூதிப்பை, பிரசாதமும் பெற்று, வாத்தியத்துடன் தெய்வநாயகம் சாகைக்கி போய்வருகிரது. ஆறா நாள் பழனிமலைக்கி போய் சன்னியதானத்து உபயம் என்னவென்றால் சந்தனம் பொன் (க)ம் புனுகு பொன் (க)ம் லங்கோடு, கபீனமும், சொர்ன புஸ்ப்பம் குருக்கள், பண்டாரம், கோவில் சிலவு சகலமும் இரண்டு பொன் ஆதீனத்தில் குடுக்கிரது. அன்று தினம் சுவாமிக்கி, பட்டு பீதாம்பரம் நகரத்தார் வாங்கி, பழனி வேலாயுத சுவாமிக்கி சாத்தி, ஈசான சிவாச்சாரியாருக்கு அரிதியாய்க்கட்டி, சகல விருது வாத்தியத்துடன் யிடும்பன் கோவில் தெரிசனம் செய்து, திருவாவினன்குடி வந்து, சுவாமி தரிசனம் செய்துவைக்கிறது. நகரத்தாரைச் சேர்ந்தது. பட்டு பீதாம்பரமும் வாங்கி குளந்தைவேலாயுத சுவாமிக்கி, சாத்தி சுவாமி அரிதி பரிவட்டமும் கட்டி, சகல விருது வாத்தியத்துடன் அன்னதான மடத்தில் சுவாமி தெரிசனமும், ஈசானிய சிவாச்சாரி யார் தெரிசனையும் செய்து, ஆதீனம் பூசை மடத்துக்குக் யெழுந்தருளி, தெய்வநாயகத்துக்கு, நாள் ரெண்டுக்கு அபிஷேகத்துக்காகப் பொன் நாலும், மடத்திலிருக்கிற ஈசானிய சிவாச்சாரியாருக்கு பூசை செய்வதற்காகப் பொன் ரெண்டும், ஆதீனத்தில் கொடுத்து வருகிரது. இடும்பன் மலைக்கி பிரசாதமும், பட்டுப் பரிபட்டமும், காளாஞ்சிச் சிலவும் நம்ம தெய்வநாயகத்தைச் சேர்ந்தது. சுவாமி ஊருக்கு பிரப்படும்போது அன்னதான மடத்தில் சுவாமி தெரிசனம் செய்து வைத்து, ஆதீனம் ஈசானிய சிவாச்சாரியாருக்குபட்டு பீதாம்பரமும் நேமங்கோவில் யிளநலமுடையான் குப்பாபிச்சஞ்செட்டி குமரப்பன் சிலவு தனதில். சுவாமி பல்லாக்கு ஏறும்போது தெய்வநாயக பண்டாரம் சுவாமி திருமேனி சாத்துப்படிக்காக விபூதி, பண்ணிரண்டு படி வைத்து, திரியரங்கம், அஷ்ட்டாங்கம் சாஸ்ட்டாங்கம், நமஸ்க்காரஞ்செய்து, சன்னியதானத்தின் விபூதி பஞ்சாச்சரமும் பெற்று, ஈசானிய சிவாச்சாரியார் திருமேனியில் அணிந்த பட்டுப் பீதாம்பரத்தையும் தெய்வநாயகத்துக்குக் கொடுத்து, பல்லாக்கு தாங்கிவரும் சடாமுனிக்கு, அன்னம் போடுகிர யிடத்தில் பனிரெண்டு தேங்காய் செதருகாய் அடித்துப் பிறப்பிடுகிரது. நேமங்கோவில் யிளநலமுடையான் குமரப்பனுக்கும் விபூதிப்பையும் பீதாம்பரமும் தருகிரது. சகல விருது வாத்தியத்துடன் மீனக்கொடி சுவாமி வலப்பாகத்தில், ஆகாயத்தை உலாவிக் கொண்டு வருகிரது. சுவாமி பல்லாக்கு ஏறிவரும் போது ஏழுகோவில் நகரத்தாரும் பல்லாக்குடனே வருகிரது. பழனி பட்டணத்துக்கு கீழ்ப்பிரத்தில் வட்டப்பாரை அடியில் பழனிமலை வேலாயுத சுவாமியாரையும் தெரிசனமுஞ் செய்து, வேலாயுத விஜயகிறித் துரைக்கும் பட்டுப் பீதாம்பரமும் விபூதி பஞ்சாட்சரமும், கொடுத்து, மகாராஜாவைப் பார்த்து குருதேசிகர் நாம் போய்வருவோம் என்று உத்திரவு செய்தார். அப்படியே மகாபாக்கிய மென்று சாஸ்ட்டாங்க நமஸ்க்காரஞ் செய்து, றாஜா சகல விருந்து வாத்தியத்துடன் தன் அரண்மனை வந்து சேர்ந்தார். சுவாமியும் நகரத்தாரும், குமரப்பன் பல்லாக்கு அருகில்வர, மற்ற நகரத்தார்கள் பல்லாக்கை சூள்ந்துவர, சகல வாத்தியந் தொனிக்க வருகிரது. யிந்த பிரகாரம் நடத்தி வருங்காலத்தில் யெறணிக் கோவில் திருவேட்பூருடையான் குட்டயனும் சன்னியதானத்தில் ஆதீன மரியாதை அடியேனுக்கில்லாமலிருந்தால் சரியா? வென்று கேட்டான். சுவாமியும் நம்ம பண்டாரத்தையும், நகரத்தாரையும் குமரப்பனையும் வைத்து, யோசனைசெய்து மரியாதை நடத்துவோம். மேப்படியார் சம்மதங் கேட்க்க, ஆதீனத்தில் சன்னியதான உத்திரவு போல் நடக்கச் சித்தமாக யிருக்கிறோம். உத்திரவுப்படி செய்வோம். எங்களனைவர்க்குஞ் சம்மதந்தான் யென்று சொல்ல, சுவாமி யோசித்து, நான் சொல்லுகிறதைக் கேட்பிப்பாயா? வென்று குட்டயனுக்கு உத்திரவாச்சுது. குட்டயனும் உத்திரவுப்படி நடக்கிறே னென்று சொல்ல குருதேசிகர் யிடும்பன்மலை அடிவாரத்தில் நமக்கு பட்டு பரிவட்டமும், நம்ம பண்டாரத்தை சேர்ந்ததாயிருக்கிரது; அன்னதான மடத்தில் முதல்ப் பூசையத் தினம் நகரத்தாரைச் சேர்ந்ததாக யிருக்கிரது. பெரியநாயம்மன் கோவில் பத்தாந் திருவிளா மண்டகப்படிச் சிலவும்,மலையில் சந்தன அபிஷேகத்துக்கு, தேவஸ்தானம் சிலவும் திருவாவினங்குடியில் நடக்கிற சிலவும் நகரத்தாரைச் சேர்ந்ததாகயிருக்கிறது. நாம், ஊருக்கு வரும்போது அன்னதான மடத்தில் நடக்கிர பட்டுப் பீதாம்பரச் சிலவும் நம்ம, குமரப்பன் தனதாக யிருக்கிறது. இப்படியிருக்கிரபடியால் நகரத்தாருக்கு ஏற்ப்பட்டிருக்கிரது. அதில் ஒரு சிலவை குட்டையனை செய்யச் சொல்வதாய் அபிப்பிறாயமிருக்கிரது. என்ன சொல்லுகிரீர்க. ளென்றார். சன்னியதானத்து வாக்குப்படி நடக்கிறோம். சுவாமியும் திருவாவினங்குடியில் நடக்குகிரபட்டு பரிபட்டமும் அந்த சிலவு குட்டயன் தனதாகயிருக்கட்டு மென்று உத்திரவானது. அதுமேரைக்கி நடப்பதாய் சகலரும் ஒப்புக்கொண்டார்கள். சன்னியதானம் ஊருக்கு வரும்போது மூன்றாவது பட்டுப் பீதாம்பரமுங்கொடுக்கிரது. பழைய மேறைக்கி, பல்லாக்கில் சகலவிருது வாத்தியத்துடன் மீனக்கொடி ஆகாயத்தில் அளாவிக் கொண்டு வருகிரது. இந்த தருமத்தை வழுவினபேர்கள் காசிக்கெங்கையில் ஆயிரத்தெட்டு காறாம்பசுவை கொண்ட தோஷமும் குரு மாதா பிதா சிசுவாதை செய்த தோசத்தில் போவார்களாகவும். யிந்த தருமத்தை பரிபாலனஞ் செய்பவர்கள் காசிக்கெங்கையில் ஆயிரங்கோதானம் செய்த பலனும் றாமேஸ்வரத்தில் தனிஸ்க்கோடி தீர்த்தமாடின பலனும் பெருவார்களாகவும். ஆல்போல் தளைத்து அருகுபோல் வேறூன்றி மூங்கிபோல் சுற்றும் முசியாமல் வாழ்ந்திருப்பாராகவும். பழனியாண்டவர் இரக்ஷிப்பார். மீனாக்ஷி சுந்தரேசர் இரக்ஷிப்பார். நவ வீரவாகு சகாயம். யாவரும் சதா சேர்வை. வேலுமயிலுந் துணை. ஆதீனம் அட்டவணை பட்டாபிஷேக அட்டவணை இந்த ஸ்த்தலத்தில் நடக்கிர தருமத்தையும் தவறாமல் நடத்திவரக் கடவீர்களென்று சொல்லி, ஈசானிய சிவாச்சாரியார் உத்திரவுசெய்து உபதேசம் பண்ணினார். யிந்த பழனி ஸ்தலத்தில் புவனகற்த்தாவாகிய பழனிமலை வேலாயுத சுவாமியாரையும், நம்முட பறங்குன்றத்தில் யிறா நின்ற மயூர வாகண மூடறையும் நம்முட கொடுகுன்ற ஆதீனம் போதயண சூத்திரம், மான்டிவ்வய கோத்திரம்; வேப்பம்பூ ஆரம் அணிந் திருமார்பை யுடையவர், சேல்துசம் படைத்த நிம்ப மாலிகாபரண ஈசானிய சிவாச்சாரியார் பாண்டிய றாசாவுக்கு குருதேசிகர்; நம்முட பரம்பரை உள்ளமற்றும் இதை மறக்கக்கூடாது யென்று வாக்குதத்தம்; தெய்வநாயக (பண்டார)த்துக்கு கொடுத்த சவ்வாரி. மீனாட்சி சுந்தரரையும் கணபதியும் தேமுனியையும் யெப்போதும் தெய்வநாயக பண்டாரத்து மனையில் வைத்து பூசை செய்து வருகிரதுடன் கண்டறக் கோடாலி பிரம்பும் குடுத்து, இந்த ஆதீன உற்பத்தி காண்டப் பிருதியும் குடுத்துயிருக்கிரது. பழனி ஸ்தலத்துக்கு வந்த வரலாறு சொல்லத் துடங்கிறோம். தேனாறு பாயும் நேமங்கோயில் யிளநலமுடையான் குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனும், மேற்ப்படியான் பெண் சாதியும் சிட்டாளும் நம்முட மடவாலயத்துக்கு வந்து, யிந்த ஸ்த்தலத்துக்கு வந்து சுவாமி தெரிசனம் செய்து பண்டாரத்தையும், மடவாலயத்தையும், சம்பாரித்து வைத்தபடியால், அவனுக்கு விபூதிப் பையும், சிவபூசை வேலாயுதமும் மடிச்சீலைப் பையுங் கொடுத்துயிருக்கிரது. அதையிம் குமரப்பன் வசமிருக்கவேணும். யிந்த ஸ்தலத்தில் நகரத்தார்களில் முதலாவது விபூதியும் நம்முட ஆதீனத்தில் பட்டாபிஷேகத்துக்கு முதல்மை பட்டணசுவாமி வகுப்புக்கு விபூதி பிரசாதமும், ரெண்டாவது யிளநலமுடையான் குமரப்பனும் யென்று ஆதீனத்தில் முதலாவது பட்டு பாண்டிய மகாராஜா பீதாம்பரமும் பாத காணிக்கையும் மற்ற றாசாக்கள் அப்பாலும். நகரத்தார்களில் பட்டு பீதாம்பரமும் பாதகாணிக்கையும் முதலாவது வைக்கிறது என்றும், யிரண்டாவது நேமங்கோயில் யிளநலமுடையான் குப்பாபிச்சஞ் செட்டி மகன் குமரப்பன் பழனியாண்டவர் அனுக்கிரகம் பெற்றபடியாலும் ஆதீனத்துக்கு வேண்டிய காரியங்களும், சரீரப் பிரயாசையும் செய்தபடியாலும், நீங்கள் யிருபத்தொரு கோத்திரத்தில் உதித்தவர்கள் அனைவரும், நம்ம குமுரப்பனுக்கு ரெண்டாவது என்று ஈசானிய சிவாச்சாரியார் உத்திரவு செய்ய சமஸ்த்தமான பேர்களும் சம்மதித்து இருந்தார்கள். பட்டணசுவாமி வகுப்பு அண்ணாமலையும் எழுந்துயிருந்து சன்னியதானத்தின் திருவடியில் சாஸ்ட் டாங்கந் தெண்டநிட்டு வளக்கம்போல் நடக்கவேணுமே ஒளிய, புதுவளக்கம் செய்யப்படாது; நாங்கள் பட்டுச் சாத்தியல்ல மற்ற வகுப்புக்காரர் பட்டு சாத்தி வருகிர வளக்கம்? இதுக்கு சன்னியதானத்தில் உத்திரவு செய்யப்படாது யென்றான். மற்றவர்கள் குருதேசிகர் திருமுக தெரிசனையைப் பார்க்க, யிளநலமுடைய குமரப்பனும் நானி முடிகவிந்து நின்றதைப் பார்த்த குருதேசிகருக்கு தீர்க்கமுண்டாகியின், யிருபத்தொரு கோத்திரமும் சம்மதஞ் சொல்லி, தாமொருவர் மட்டும் யிப்படிச்சொல்லி வருகிரது தருமமல்ல; அதாவது யிளநலமுடைய குமரப்பன் பண்ணின காரியங்களும், சரீரப் பிரயாசையும் பழனியப்பாருடைய தெரிசனையும் செய்துவைத்த பிறயாசைக்கிப் யிந்த மரியாதை போறாது யென்று உத்திரவு செய்ய அப்படியே செய்கிரது; அடியேன் செய்த பிளையைப் பொருத்து, லட்சிக்க வேணு மென்று சாஸ்ட்டாங்க நமஸ்காரஞ்செய்து புத்தியென்ன? வென்று அண்ணாமலை கேட்க, சுவாமியும் கிருபை கூர்ந்து, ஆசீர்பாதமும் செய்து, பஞ்சாச்சரமுங் கொடுத்துயிருக்கும்படி உத்திரவு செய்தார். அண்ணாமலையும் யிருந்தான். ஈசானிய சிவாச்சாரியாரும், யிளநலமுடையான் குமரப்பனைப் பார்ப்பார்; பார்த்து யிருதயத்தில் வைப்பார்; யிப்படி யிருக்கிர சமயத்தில் குருதேசிகர் யிந்தப்படி ஆதீனம் அட்டவணையில் ரெண்டாவது நேமங்கோவில் யிளநலமுடைய குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனுக்கு விபூதி குடுக்கிர யென்றும் எழுதும்படி இளையாத்தக்குடி பட்டணசுவாமியான் அண்ணாமலையை யெழுதும்படி செய்து, சன்னியதானத்தின் உத்திரவுப்படிக்கும், ஏழு கோவில் யிருபத்தொரு கோத்திரத் தார்கள் சம்மதப்படிக்கியிந்த அட்டவணை யெழுதினது. பட்டணசுவாமி வகுப்பு அருணாசலஞ் செட்டி அண்ணாமலை யென்று கை நாட்டஞ் செய்து வாங்கி வைத்துக்கொண்டு சுவாமி ஒரு உபாயஞ் செய்தார்; அதாவது யாது? குமரப்பன் வருத்தமாக யிருக்கிறவனுக்கு சந்தோசமுண்டாக வேணும் என்று நினைத்து நகரத்தார்களைப் பார்த்து, ஈசானிய சிவாச்சாரியார் இந்த அட்டவணை யெழுதினது யாவருக்கும் சம்மதந்தானா? யென்றார். உத்தரவுக்கு ரெண்டுயில்லை யென்றார்கள். அப்ப சுவாமியும், ஒரு புருசனைக் கட்டினாலும், ஒரு அதிகாரங் குடுத்தாலும் ஒரு அடையாளம் வேணுமே? யென்றார். அப்படித்தான் வளக்க மென்றார்கள் யின்றையத் தினம் ரெண்டாவது மரியாதை செய்வதாய்ச் சொல்லி முரியெழுதி யிருக்கிரது. அதற்க்காக யின்று தினம் குமரப்பனுக்கு விபூதி குடுத்து, ஒரு பீதாம்பரமுங் குடுத்து, சகல விருது வாத்தியத்துடன் நகரக் கூட்டத்துடன் அவன் சாகைக்கு அழைத்துப் போய்விட்டால் ரெம்பவும் யென்றார். உத்திரவுப்படி நடக்கிறோம் யென்றார்கள். அப்ப குமரப்பனும் நம்ம வருத்தப்பட்டவனை ஞானக் கண்ணினால் தெரிந்து, நமக்கு சந்தோசமாகுமென்று, எண்ணிச் செய்கிறார் நம்முட குருவுக்குச் சமதை யாரைச் சொல்லப்போகிறோம். என்று ஆனந்தம், பிர்மானந்தம் கொண்டான். சுவாமியும் குமரப்பனும் மணக்கவலை தீர்ந்தது யென்றார். நகரத்தார்களும் யிந்த அண்ணாமலை செய்த காரியத்துக்கு யிப்படி உத்திரவு செய்திருக்கிறார் யென்றார்கள். அவரவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி பண்ணிக் கொண்டார்கள். ஈசானிய சிவாச்சாரியாரும் ஆதீனமணியம், அண்ணாச்சாமி அய்யரை அழைத்து, நம்ம பொக்குசத்தில் பீதாம்பரம் யிருக்கிரது. அதில் ஒரு பீதாம்பரம் யெடுத்து வா என்றார்கள். அதுபோல் பீதாம்பரமும் கொண்டுவந்து சன்னியதானத்தின் முன்பாக வைக்க, சகல விருது வாத்தியத்துடன், நேமங்கோவில் இளநலமுடையான் குப்பாபிச்சஞ் செட்டி குமரப்பனை அழைத்து, விபூதி பஞ்சாட்சரமும் குடுத்து, பீதாம்பரமும் கட்டி, ஆசீர்பாதமுஞ் செய்து, சகல விருது வாத்தியத்துடன், குமரப்பனை அவன் சாகைக்கி ஏழுகோவில் யிருபத்தி ரெண்டு கோத்திரத்தார்கள் அனைவருங் கூடி குமரப்பன் சாகைக்கு அழைத்து வந்தார்கள். யிப்படி வேண்டிய மரியாதையும் செய்து சகலரும் சாகை வந்து சேர்ந்தார்கள். தெய்வநாயக பண்டாரம் பழனியப்பாருடைய பட்டு பரிபட்டத்தைச் சாத்தி, பட்டாபிஷேகத்துக்கு தீபாரனை யாகிரது. அதற்கு தெய்வநாயக பண்டாரத்துக்கு ஏற்பட்ட மரியாதையும் பழனிக்கோவில் சிலவுங் குடுக்கிறது. மீனாட்சி சகாயம். ஆதீன அட்டவணை முற்றிற்று. பழனியாண்டவர் சகாயம். வேலுமயிலுந் துணை. மீனாட்சி சுந்தரேஸ்பரர் துணை. திருச்சிற்றம்பலம். (முற்றும்.) வைய நீடுக, மாமறை மண்ணுக மெய்விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான் தளைத்தோங்குக தெய்வ வெண்ணீரு திருநீறு சிறக்கவே சத்தியம் அசத்தியம் முண்டாச்சுது. சத்தியம் அசத்தியம் ஆகிய பூலோகத்திலே சாலியவாகன சகார்த்தம் 1727க்குமேல் கலியுக சகார்த்தம் 4906க்குமேல் செல்லாநின்ற குறோதி ´தைமீ 22உ ஞாயிற்றுக்கிளமை பௌர்ணமையும், பூச நட்சேத்திரமும், கூடிய சுபதினத்தில் ஸ்ரீ பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு செல்லும் வைகாபுரி நாட்டு பழனி ஸ்த்தலத்தில் ஆவணி மூலவீதிக்கும் கீள்புரத்தில் மகாரிஷியர் கோத்திரம் தெய்வ சிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு சோள மண்டலமாகிய காவேரிப் பூம்பட்டினத்தில் பிறந்தவர்கள், உற் தனவணிகர், தங்கமேருறை கண்டவர்கள், மத யானையை நிறைகண்டவர்கள். காவேரிப் பிரபாகத்தைப் பஞ்சாலடைத்தவர்கள், தன் தமிழுக்குப் பொற்பாடகங் குடுத்தவர்கள், மடிச்சீலை பெருக வென்று வாழ்த்தி வரம் பெற்றவர்கள்; கம்பனார் கோயிலை தங்கத்தால் மேய்ந்தவர்கள், கலியாண வாசலுக்குப் பவளக்கால் நாட்டினவர்கள், தண்ணீ கயருக்குத் தங்கக்கயர் போட்டவர்கள். சோள மண்டலத்தில் மூவேந்திறறுக்கு மும்முடி சூட்டி வைத்தவர்கள். சிங்கக் கொடித்தலைவர்கள். சிங்காசனத்தார். சீரகமாலையுடையார், வெள்ளைவாரணத்தார். பாண்டியநாட்டு றாசன் குலசேகர சவுந்திர பாண்டியன் நற்குடி தன் சீமைக்கு அழைத்தபோது, பொன், பொஸ்ப ரதம் ஏரி வந்தவர்கள், கல்வாசனாடாகிய இளைச நகர் தன்னில் பூவசியறாக வந்தவர்கள், குலசேகரபுரம் தேறுடையார், அன்னை, தந்தை, தெய்வ, மறையோர் குருவை மறையோர், சதுர்மறை ஆறு சாஸ்த்திரமும் மோதி யுணர்ந்தவர்கள். வேள்வி முடித்த யோகி, மெஞ்ஞானி, யிர் பிர்மசாரியாகிய பாண்டிநாட்டு ஆசாரியார் பாதம் போற்றுவார்கள். வேத வித்தியாயம் விளங்கு மெஞ்ஞானி, ஆதி மெய்ப்பொருளை அரிந்தருள் யோகி, திருப்புனல் குருதேசிகனார் பாதம் பெற்ற பேர்கள், கல்நாடாகிய குலசேகரபுரம், யிளையாத்தக்குடி சீர்செற்றூரில் முற்ந்தருள் கல்வாசனாடு, நேமனோடு, சோளசிங்கவளநாடு, பிரம நாட்டில் வீரபாண்டியபுரம், பெருந்திருவான கேரளசிங்க வளநாடு, வீரபாண்டியபுரம் மருதாந்தபுரம், சிறுகளத்தூர், பிரம்பூர் நாட்டில் சூடாமணியும், மகாநாடு ஒன்பது நாட்டுக்கும், ஏழு கோவிலுக்கும், இருபத்தி ரெண்டு கோத்திரம், ஒக்கூருடையான், பெரும்தூருடையன், கிங்கினிக்கூருடையான், பட்டணசுவாமி யுடையான், கழனிவாசலுடையார், திருவேட்பூருடை திருவப்பூருடையான், இளநலமுடையான், யோகப் பெருந்திருவான சிருகொளத்தூருடையான், பெருகுளத்தூ ருடையார், மண்ணூருடையார், மணலூருடையார், உறை யூருடையான், கொளத்தூருடையான், கண்ணூருடையான், அரும்பாத்கூருடையான், கருப்பூருடையான், புகளிடங் கொடுத்த பட்டிணமுடையோர், இருபத்திரண்டு கோத்திர மாகிய ஏழு கோவில் நகரத்தாரணைவோர்களும் பழனி ஸ்தலம் சின்னோட் நாயக்கர், பாணிபாத்திர உடையார் மற்று முண்டாகிய ஸ்த்தாணீகால் பரிகல முன்பாக ஏழு நகறத்தனை வோர்களும் நாகப்ப பண்டாரத்து மகன் குளந்தை வேலுப் பண்டாரத்துக்கு மடவாலயத் தர்ம சாசனப் பட்டயம் கட்டளையிட்டோம். இதற்குமுன் தங்களுடைய முன்னோர்களுடைய மனையில் எங்கள் முன்னோர்களால் கட்டப்பட்ட ஆறுகால் சவுக்கையில் அதைச் சுற்றி எழுபத்தெட்டு (78) க்கால் திருப்பணியும் தங்களுக்காக மேல்புரம் கன்னி மூலையிற் வடக்கு வாசல் வீடும் கட்டி, வைத்திருக்கும் எங்கள் ஏழு கோயில் நகரத்தாரனைவர்களும் வருஷம் ஒன்றுக்கு எங்கள் புள்ளி ஒன்றுக்கு பணம் காலும், அரிசி படி (வ) கால் வீதமும், தங்களுக்குக் குடுத்து வருவோமாகவும் குடுக்காத பேர்களிடம் எங்கள் சாதி முறைபோல் அடவுயெடுத்து வாங்கிக் கொள்வீராகவும். இதைத் தவிர தைமீ (5) அஞ்சு நாள் பூசையில் நாள் ஒன்றுக்கு வேல் நிருத்துகிறதற்கு, அடிப்பரப்புகிறதற்கு வேல்ப்படியால் ஒரு படி அரிசியும் வேலுக்கு சாத்துகிர பரிபட்டமும் சொர்னபுஷ்பம் பணம் இரண்டும், வெத்திலை முப்பதும் பாக்கு பதினைந்தும் பளம் பதினைந்தும், தேங்காய் ஏழும், தீபத்துக்கு எண்ணைபடி ஒன்றும் சாமிக்கி, முன்னேட்டுப் படிக்கி உண்டாகிய, அபிஷேகத்துக் குண்டாகிய சாமானும், பள்ளயத்துக்கு ஆக நாங்கள் வடிக்கிற சாதத்தில் அஞ்சு கூடை சாதமும் அதுக்குண்டாகிய சாமான்களும் நாள் ஒன்றுக்கு. இதைத் தவிர அன்னதான மடத்துக்கு திருவிளக்குக்கு வருஷம் ஒன்றுக்கு தங்களுக்கு ஆறு (6) பொன் குடுத்துவிடுகிறது. மடத்துக்கு காவணம் சிறப்பு பண்ணுகிரதற்கு பனிரெண்டு பொன் குடுத்துவருகிரது. சாமிக்கு அஞ்சுநாள்ப் பூசையில் நாள் ஒன்றுக்கு பொங்கலுக்கு அரிசிபடி ஒன்று, சர்க்கரைப் பொங்கலுக்கு அரிசிபடி ரெண்டும் அதற்குண்டான சாமான்களும் குடுக்கிரது. மகேஸ்வரபூசையில் பண்டாரத்தையாவுக்கு நாள் ஒன்றுக்கு வேல்ப்படியால் அரிசிபடி பத்தும், ஈசானிய சிவாச்சாரியார் உத்திரவின்படி அரிசிபடி ஏழும், திருப்புனல் வாசல் முதன்மையறான சேனாபதி குருக்கள் சுவாமியவர்கள் உத்திரவின்படி அரிசிபடி அஞ்சும், நகரத்தார் யேர்ப்படுத்திய பிராமணாள் போசனத்தில் அடி செதரஅரிசி நாலுபடியும் ஆக அரிசிபடி இருபத்தி ஆறும், மலையில் திருமஞ்சன வில்வா அர்சனை வேலை மெறாசுக்காக அரிசிபடி மூனும் ஆக அரிசிபடி இருபத்தி ஒன்பது, அதற்குண்டான சகல சாமான்களும் நாள் ஒன்றுக்கும் இந்தப் படி நாள் அஞ்சுக்கு கொடுத்து வருகிரது. மலையின் பேரில் சுவாமிக்கிக் காவடி அபிஷேகத்துக்கு சந்தன அபிஷேகத்துக்கும் வருஷம் ஒன்றுக்கு ஆறுபொன் குடுத்து வருவோமாகவும் மடத்து பார்வதியம்மாளுக்கு வருஷம் ஒன்றுக்கு சேலை ஒன்று குடுத்துவருவோமாகவும் பத்தாந் திருவிளா மாரியம்மன் கோவில் தண்ணீர்ப்பந்தலில் மண்டகப்படியில் நாங்கள் உபயஞ்செய்து, தங்களுக்கு அரிதிப்பரிவட்டமும், எங்களில் நேமங்கோவில் யிளநல முடையான் குமரப்பனுக்கு அலங்காரப் பரிவட்டமும் கட்டி மடத்துக்கு சகல விருது வாத்தியத்துடன் அழைத்து வந்து, தீபார்த்தனை முதலானதுஞ்செய்து காளாஞ்சி வளமைபோல் குடுத்து பண்டாரத்தையாவை ஆக்குப்பொரைக்கு அழைத்துப் போய்விடுகிறது. மகேஸ்பரபூசைக்கி சாமான் வாங்கிறதில் மிஞ்சின சாமான்கள் பண்டாரத்து அய்யாவை சேருகிரது. அடுப்புக்கரியும் நாயகப்பானையும் நவபாண்டமும் முழுமையும், காவணக் கால் சாமான்களெல்லாம் தாங்களே எடுத்துக் கொள்கிரது. பரிபட்டங் கட்டிக் கொள்ளுகிரதுக்கு சோமன் சீலைக்கி வருஷம் ஒன்றுக்கு இரண்டு வறாகன் குடுத்து வருகிரது. மாரியம்மன் கோவில் தண்ணீர்ப் பந்தலில் கொள்ளுக்கஞ்சி வைத்து நாங்கள் ஊத்துகிறதற்கு, தங்களுக்காக நாங்கள் யேர்ப்படுத்திய அரிசி படி இரண்டும், கொள்ளுப் பருப்பு படி காலும், உப்பு படி காலும் யிதுமேறைக்கி நாள் ஒன்றுக்கும், அஞ்சு நாளைக்கி யிந்தப்படி கொடுத்து வருவோமாகவும் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு நாங்கள் ஏற்படுத்தியிருக்கிற கல்யாணத்துக்காக பத்து விறாகனும், சடங்கானால் இரண்டு விறாகனும், கருமத்துக்கு உடையவர்கள் மரணமானால் துப்பட்டாவுக்கும் சிலவுக்கும் விறாகன் ஒன்று குடுத்து வருகிரது. தங்களுடைய முன்னோர்கள் மனையில் யெங்களுடைய முன்னோர்களால் கல்த்திருப்பணி ஆறுகால் சவுக்கையும், யெழுபத்தெட்டுக் கால் சுத்து மண்டபமும், ஆக்குபொரையும், தங்களுடைய,அனுபோகத்துக்குள் வருகிரது. யிப்போது எங்களுக்கு யிடம் போறாதுனால் அடுத்த மனை மோளையத் தேவன் வகையறாவிடம் நாங்கள் கிறயத்துக்கு வாங்கி யிருக்கிறோம். யிப்போது தங்களுடைய ஆக்குப் பொரையில் கல்மண்டபமும் கட்ட வேண்டியதிருப்பதால், தங்களுக்கு மோளையத் தேவனிடம் விலைக்கி வாங்கிய மனையில் தங்களுக்கு ஆக்குப் பொரையும், தங்களுடைய ஆக்குப் புரையில் முப்பத்தொன்பது கால் திருப்பணி மண்டபமும் கட்டி, கிரயத்துக்கு வாங்கின மனையில் ஆக்குப் பொறை, கட்டி கன்னிமூலை பார்சத்தில் ஒன்பது கால் கல் திருப்பணி நடையும் கட்டி, நாங்கள் மடத்துக்காக கிறையத்துக்கு வாங்கிற மனைகள் தங்களுக்கே யொளிய மற்றவர்களுக்கு யில்லை. நாங்கள் கட்டப்பட்ட ஆக்குப் பொறை, முப்பத்தொன்பது கால் மண்டபமும், ஒன்பது கால் கல் நடையும், யெழுபத்தியெட்டுக் கால்மண்பமும், ஆறுகால் சவுக்கையும் வளமையான தெற்குவாசல் நடையும் இதுகளையெல்லாம் தாங்கள் குடியிருந்து அனுபவித்து, தங்கள் புத்திறாள், பவுத்திறாள் பறம்பறைக்கும் சந்திறாள், சூரியாள் உள்ள வரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும் மடத்துக்கு தீபத்துக்கு முத்துக்கு, மாசம் ஒன்றுக்கு மூனு பணமும், தண்ணீர் பந்தலில் ஒரு பணமும் சாமி வீதிக்கு யெழுந்தருளி வரும்போது விசேஷம் ஒன்றுக்கு பணம் காலே அரைக்கால் வீதம் குடுத்து வருவோமாகவும் யிந்த மடவாலையத்துக்கு ஏற்படுத்திய தருமங்களும் மடத்துக்காக ஏற்ப்பட்ட பிரம்பு கடிகையும், மடத்து, பார்வதியம்மாள் யிரும்பு வேலாயுதமும், லிங்கப்ப நாயக்கர் வேலாயுதமும், நேமமான யிளநலமுடையான் குமரப்பன் இரும்பு வேலாயுதமும் தொண்டமான் றாசா உபயம் தாம்பூர வேலாயுதமும், குன்றக்குடி மடத்து உபயம் வந்த வெள்ளி வேலாயுதமும் தேவகோட்டை நகறத்தார் உபயம் சொறனற்றின வேலாயுதமும் யிதுகளை யெல்லாம் ஆறு காலச் சவுக்கையில் நிறுத்தி, பள்ளயம் போட்டு, பூசை செய்கிறது. பிள்ளையார் கோவில் வகுப்பு முத்தப்பன் பழனிக் கோவிலுக்கு காவடியெடுத்து வரும்போது, பழனியாண்ட வருடைய அருள்தங்கி காவடி முத்திரியை செலுத்தி, சிவப்பட்டியில் தன் வீட்டில் காவடியை வைத்து, சுக்கில வாரத்துக்கு வாரம் பூசை செய்து வந்ததில், பழனியாண்ட வருடைய கிருபையால் வெகுகாரணத் திருவிளையாட்டு களாடினபடியால் யாவருக்கு அனுகூலசித்துக்குள் விளையாடி வந்தபடியால் தொண்டமான்றாசா வேட்டைக்கு வந்துயிருக்கும் போது, யிந்த அதிசயம் கேள்விப்பட்டு, மகாறாசாவும் முத்தப்பன் வீட்டுக்கு வந்து பழனியாண்ட வரிடம் நான் நினைத்த காரியத்தைக் கேட்டுச்சொல்லென்றார். முத்தப்பனுக்கும் ஆண்டவருடைய கிருபையால் இன்றையத் தினம் இரண்டு மானும் ஒரு மிருகம் கிடைக்குமாயென்று கேள்கிறாய். இன்றையத்தினம் பதினஞ்சு நாளிகைக்கு மூன்று மிருகம் வருகிரது. அதில் முதல் வருகிறதும் இரண்டாவது வருகிர மிருகமும், கிடைக்கும். இரண்டாவது மான் அஞ்சும் (5) வரும். அதில் குத்துப்பட்ட மானும், குத்துப்படாத மானும், கிடைக்கும் போ வென்று சொன்னார். அதுபோல் றாசாவும் வேட்டைக்கிப்போய் வேட்டையாடி அதுபோல் கிடைத்தது. றாஜாவுக்கு உடனே சந்தோஷம் வந்து பல்லாக்கைவிட்டு யிறங்கி, முத்தப்பனை பல்லாக்கில் வைத்துக் கொண்டுவா வென்று மந்தியிரிடஞ் சொன்னார். மந்திரி வந்து முத்தப்பனைப் பல்லாக்கில் வைத்து, இராசா சமுகத்தில் கூட்டி வந்து விட்டார். ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார். முத்தப்பனுக்குச் சால்வையும் மோகன மாலையும் வளதடியும் குத்தட்டியுங் குடுத்து ஒனக்கு யென்னவேணு? மென்று கேட்டார். யெனக்கு கோவில் வீட்டுக்கு தாம் பூரவேலும், அதை யென்கோவில் வீட்டில் வைத்து பூசை செய்து வரும்படிக்கும் பழனிக் கோவிலுக்கு நான் காவடியெடுத்துப் போகும்போது, யிந்தவேலை யெங்கள் சாதி நேமங்கோவில் பழனியப்பனிருக்கிறான். அந்த பழனியப்பன் வேலாயுதத்துடன் இந்த வேலாயுதத்தையும் வைத்து, பள்ளயம் போட்டுப் பூசை செய்துவரும்படி உத்திரவாக வேண்டியது. சொன்ன உடன் பழனியப்பனுக்கு திருமுகம் எழுதி அரண்மனைக்கி அழைத்துவந்து, பழனியப்பனுக்கு வெகு மரியாதையுஞ் செய்து, பழனிக்கோவிலுக்காகத் தாம்பூர வேலாயுதஞ்செய்து, முத்தப்பன் கோவில் வீட்டில் பூசை செய்து வரும்படிக்கும் செய்து, பழனிக்கோவிலுக்கு தான் போகும்போது இந்த வேலாயுதத்தையும், தன்னுடைய வேலாயுதத்துடன் வைத்துப் பூசை செய்து வரும்படிக்கும் இறாசா உத்திரவு சேய்தார். அந்தப்படியே நடத்திவருகிறோ மென்று சம்மதித்து வேலாயுதத்தையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள். இராஜா உத்திரவு செய்தபடியால் யிந்த வேலாயுதத்தையும் நிருத்திப் பூசை செய்யுங்களென்று சொல்ல, பண்டாரம் வருஷம் ஒன்றுக்கு அஞ்சு பணங்கொடுங்களென்று கேட்டார். அது மேறைக்கி தருகிறோ மென்று சொல்லியிருக்கிறோம். காவடி அபிஷேகத்தில் முத்தப்பனுக்கு கால்ப்படி பஞ்சாமர்தமும் கொடுக்கிறது. வேல் எடுத்து வருகிற பண்டாரத்துக்கு படிச்சிலவு குடுத்து வருகிரது. யிதுவுமன்னியில் தேவகோட்டை றற்றின வேலாயுத சாத்துப்படிக்கி ஒன்பது பணம் குடுத்து வருவோமாகவும், தேவகோட்டை நகரத்தார் களுக்கு கால்ப்படி பஞ்சாமர்தமும் குடுத்து வருவோமாகவும் குன்றக்குடி வேலாயுதமும் அலங்காரத்துக்காக வந்திருக்கிறது. மேல்க்கண்ட தருமப்படிக்கி காளாஞ்சி மரியாதை வளமைபோலவும், கட்டளைப் பணங்களும் வளமைபோல் குடுத்து வருமோமாகவும். தங்கள் புத்திறாள் பவுத்திறாள் யுள்ள வறைக்கும், கல்லுங் காவேரியும், புல்லும் பூமியும் யெங்களுடைய புத்திறாள் பவுத்திறாள் வரைக்கும் சந்திறா சூரியாள் உள்ளவரைக்கும் நடத்திவருவோராகவும், யிந்தத் தருமத்துக்கு விகாத யிடர் செய்தவர்களுக்கு, காசியில் கெங்கையில் ஆயிரத்தெட்டு காராம்பசுவைக் கொண்ட தோசத்திலேயும், தீர்த்த வாசங்களில் குரு, மாதா, பிதாவை கொன்ற தோசங்களில் போகக் கடவார்களாகவுமென்று யெழு நகரத்தாறனைவோர்களும் சம்மதித்து எழுதிக்கொடுத்த தர்ம சாசனப் பட்டயம். யிந்தத் தருமத்தைப் பரிபாலனஞ் செய்த பேர்களுக்கு, காசிக் கெங்கையில் ஆயிரத்தொட்டு கோதானஞ் செய்த பலனும், சோடஷதானஞ் செய்த பலனும், பெருவார்களாகவும் ஆல்போல் தளைத்து, அருகுபோல் வேறூன்றி, மூங்கிபோல்ச் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்களாகவும். மரகதக் கணபதி துணை. யிந்தப் பட்டயம் எழுதினது நகரத்தார் சொல்ப் படிக்கியிலுப்பைக் குடிக் கோவில் அரு™hசலஞ் செட்டி லெக்ஷீமணன் நெட்டெழுது. வேலுமயிலுந் துணை. சீர்பூத்த செழுங்கமல வேலு வாழி! தேவர்தொழும் பாதார விந்தம் வாழி! தார்பூத்த தினைக்கடம்பன் மாலை வாழி! சக்கிறகிரி நடனமிடு மயிலும் வாழி! கார்பூத்த சிவகிறிக் கோபுரமும் வாழி! கனகமிடு குண்டலமும் காதும் வாழி! தார்பூத்த தண்டலைகள் அரனார் சேர்ந்த! பழனிமலைக் குமறேசர் பாதம் வாழி! தெண்டாயுதபாணி துணை. யேடு பத்தொன்பதாம் வேலுமயிலுந் துணை. அசல் பட்டயத்திற்கு சரியான நகல் பட்டயம். குமரன் துணைசெய்யவும். (முற்றும்.) உ சிவமயம் அருவமும் உருவுமாகி யனாதியாய் பலவாய்ப் யொன்றாய்ப் பிறமமாய் நின்ற சோதி பிளம்பதோர் மேனியாகி கருணைகூர் முகங்களாரும் கரங்கள் பண்ணிரெண்டும் கொண்டேன். ஒரு திருமுருகன் வந்துங் குதித்தன் யுலகுமுய்ய (உ.) மூவீரு முகங்கள் போற்றி முகம் பொளி கருணை போற்றி யாவரும் துதிக்காநின்ற யீறாறு தோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேல் மலறடி போற்றி! யன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம். (உ.) பன்னிரு கரத்தாய்ப் போற்றி பசும்பொன் மாமணியா போற்றி முன்னிய கருணையாரு முருகப் பரம் பொருளே போற்றி கன்னிய ரிருவ நீங்கா கருணை வாருதியே போற்றி என்னிரு கண்ணே கண், கண்ணுள் யிருக்கு மாமணியே போற்றி திருச்சிற்றம்பலம். வேலுமயிலுந் துணை. வைய நீடுக! மாமறை மண்ணுக! மெய்விரும்பிய அன்பர் விளங்குக! சைவ நென்னெறி தான் தளைத்தோங்குக! தெய்வ நென்நெறி திருநீறு சிறக்கவே! கருணை பொழி திருமுகங்களாரும் வாழி! கனகமலர் பண்ணிரெண்டு கையும் வேலும் வாழி! யிருசறண மெண்ண தலைமேல் நாலும் மோங்கும்--- யிந்திரவிக் கப்பாலும் மினிது வாழி! அருள் பெருக யமரர் சிறை மீட்டே யாண்ட - யாரிரெண்டு திருநயனத் தளகும் வாழி! மருவழியும் பைங்கடப் பந்தாரு மாருபு வாழி! பரிமயிற்ச் சேவக் கொடியும் வாழி! அடைந்தவா துணைவா வாழி! அடையலர்க் கரியர் வாழி! மடந்தன் மைந்தா வாழி! மாதவன் மருகா வாழி! திடம்புலை வேலா வாழி! தேவறா யுயிறே வாழி! படந்த போரசுறர் கூற்றெ பரமனே வாழி வாழி! ஸ்ரீ புவன தகன பறமே ஈசுபறர் குமாறன், அமரர் சிறைமீட்ட தேவர்கள் தேவன் தெய்வலோக நாயகன், அயிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன், கோகனகனைச் சறசமாடிக் குட்டிக் குடுமியை நெற்றிப்போக்கி கோலவிருப்பதங் கொடுத்த குமாற கெம்பீரன், கொக்கறா வறையாழி கொட்ட றாவுத்தன், வக்கிறமிடு அசுறேசன் வட்ட நீர் ஒப்ப, வுக்கிற மயிலேறி வரும் முத்தண்டதீரன், பக்கறைப் பகட்டர் காபட்டிடப் படக்களுத்தில், கொக்கரித்துடலக் கிளித்த கொக்கறக் கொடிக்குமாரன், கூளி கொட்டக் கூகை பசாசுகள், தொக்கனித்த தாள மொத்தச் சூரன் மாளவதற்கு, வடவையால் எழுந்து வடிவேல் எடுத்த சேவுகதீரன், மறா மறமோங்குக் கொக்கு நாக மறை வெட்டிட்ட, தேவ சிறைமீட்ட தேவ சேனாபதி, மரகதகலாம் யூரவாகன்ன, நாரதன் வளத்த வேள்வியில் பிறந்து, திருகுபுரி கொடுத்துகாக வரும் தியோள் அகஸ்த்தியருக்குச் சொந்த மிளம்பமு, மாறெழுத்துண்மையும் யோதி வைத்தவன், வாணிக்கு வாக்குவரமும் குடுத்தவன் சூரியன் பதவி தோற்றளித்தவன், அசுற குலைகாரன், அமறாபதிக் காவலன், தோடுசிறுகாதிபன், தோகைமயில் வாகணன், சீதரன திருமருகன் சிவசுப்பிர மணியன், சண்டப்பிறசண்டன, வண்டருக்கொருமுண்டன், ஆறாது நூறுயூர் அஸ்ட்டமங்கல, மாவினங்குடி, பழனிமலைக் கதிபன், இடும்பன் மலை யென்மலை யீறாறென்றும், பழனியிலங்கும் வைகாபூர் நாட்டுக் கிறைபன், பன்றிமலை, பூம்பறை, பழனிமலைக் காவலன், பன்றி மலையினும், பலபூதரிடத்திலும், தேன்பொழிச் சோலைச் சிவகிரியிலுறை வோன், மாதிரையெரியும் மண்ணிய குளக்கறைப் பாதிறை யமர்ந்து பலவுயிற்க் கிறங்கும், தந்திமுகத்தோன் தனையோர்க் கிளையோன், பத்திப்பிரியன், பெற்றவயோர்க் கிளையோன், சலன பார்பதி புத்திரன் சிவசுத கணபதி, விக்கின விநாயகன், தெய்வலோக நாயகன், யெல்லாத் தேவருக்கும் வல்லபன், ஸ்ரீ. வீர பழனிமலை வேலாயுத சுவாமியார் திருவிளப் படக்கு, வீரபாகுதேவர் அருளிப்பாடல். உ.திருச்சிற்றம்பலம். அலகிண்டமுஞ் சிலவளிந்து மற்றண் டறண்டமுஞ் சண்டவங்கிக் கொண் டுலகிலும் பருமபதம் யிரந்து போய் யொருவறன்றியே யொழியு மந்தனாள மலரயன் சிரங்கரக கபாலமாய் மாலவஞ் சட்டஞ் சூலமீது கொண் டிலகு சிங்குவாழ் தலைவ நெங்கையாலிடம் தாடினார் கவே நடனதமாடினார். திருச்சிற்றம்பலம். நிறம்ப வளகிய தேசிகர் பட்டயம் யுகங்களின் பெயர்: அனந்தன், அற்புதன், தமந்தன, தாரீசன், தண்டியன், பின்னியன், பின்னாயன், அயிதன், மயிதன், மணீரன், மணீரணன், விசுவாசன், விசுக்கிறதன், அனங்கிர்தன், கிறேயுதன், திறேயுதன், துபாபரியுகம், கலியுகம், ஆயும் பதிநெட்டு யாகயுகம் பதினெட்டுக்குக்மேல் ஆகாசமே சம்புவாகி, ஆகாசமே பொருளாகி நின்றபடியினாலே, பாரபரமாகிய பரமேஸ்வரன், தறாதலம் படைக்கத்தான் நினைந்தருளிய. அனந்தனென்னு யுகத்திலே ஆகாசம் பிரந்தது. ஆகாசத்திலே வாயுபிரந்தது வாயுவிலே அக்கினி பிறந்தது அக்கினியில் அப்பூப் பிறந்தது பிரிதிவியாகிய பூலோகத்தில் சுவக்கமாய், மகாமெரு தோன்றி, மகாமேருவின்மேல் பரமாகாயம் தோன்றி, பறம ஆகாசத்தினால் பஞ்சமுகம் தோன்றி யிதற்கு வேதம் சாச்சி. சத்தியோசாத முகமாவது பிரிதிவி யிதுக்கு தெய்வம் பிர்மம். தேவன் வாமதே தேவமாவது அப்பு. யிதுக்குத் தெய்வம் விஷ்ணு. அகோர முகமானது தேயுவு. யிதுக்குத் தெய்வம் ருத்திரன். தர்புருசமுக மாவது வாயுவு. யிதுக்குத் தெய்வம் யேசுபற தேவன். ஈசுவர முகமாவது ஆகாசம். யிதுக்குத் தெய்வம் சுதாசிவம். யினிப் பஞ்சவர்ண முகமாவது, பிர்மா சிகப்பு வர்ணம், விஷ்ணு பச்சை நீலமேக சாமள வருணன், ருத்திரன் மாணிக்கவர்ணன், சதாசிவம் பவன வர்ணன். யிதுக்கு சாச்சி திருமந்திரமாலை யென்றறியவும். அனந்தனென்னு யுகத்திலே ஆதிநாராயணன் பிறந்தான். ஆதிநாறாயணனாலே பிர்மா பிறந்தான். தமந்தனென்னு யுகத்திலே, பிர்மாவினாலே வேதங்கள் பிறந்தது. தாரீசனென்னும் யுகத்திலே வேதங்களினாலே தெய்வேந்திரன் பிறந்தான். தண்டியனென்னும் யுகத்திலே தேவேந்திரனாலே சந்திர, சூரியர் பிறந்தார்கள். பின்னியனென்னும் யுகத்திலே சந்திர,சூரியறாலே நவக்கிறகம் பிறந்தது. பின்னு நென்னம் யுகத்திலே நவக்கிறகங் களினாலே சத்தமேகங்கள் பிறந்தது அயுதனென்னும் யுகத்திலே சத்தமேகங்களாலே நவமேகங்கள் பிறந்தது. நவமேகங்களாலே மழைபிறந்தது. மயுதனென்னும் யுகத்திலே மழையினாலே பதினெட்டு வகைத் தானியங்கள் பிறந்தது. பதினெட்டு வகைத் தானியங்களினாலே ஆனைமுதல் யெரும்புகடை 84, 00000 சீவசெந்துக்கள் பிரந்தது. மணீரண்ண னென்னும் யுகத்திலே பிர்மச், சத்திரிய, வஷிய, சூத்திர, இவை நான்கு சாதி பிறந்தது. ஆதிருத்திரன் பிறாமணன், விஷ்ணுவே சத்திரியன், பிர்மாவே வசியன், தேய்வேந்திரன் சூத்திரன், மனீரெனென்னும் யுகத்திலே பதினெட்டு வகைத் தானியங்களினாலே பதினெட்டு வகைச்சாதி பிறந்தது. யாகையினாலே யிவர்களுக்குப் போக போக்கியங்கள் அனுபவிக்க ஆறுதெரிசனத்தில் முற்பவித்த, யிந்த ஆறு தெரிசனமும் யெப்படியெனில் சுப்பிரமணிய சுவாமி ஆறுமுகத்துக்கு திருமேனி யொன்றாக நின்ற தன்மையைப் போலவும், யிந்த ஆறு தெரிசனத்திலே தீர்த்தங்கள் பிறந்தது. விசுவாசனென்னும் யுகத்திலே தீர்த்தங்களாலே தற்கங்கள் பிறந்தது. விசுக்கிறதென்னும் யுகத்திலே தற்கங்களாலே புண்ணியம், பாவம் பிறந்தது. அனங்கிருததென்னும் யுகத்திலே புண்ணிய பாவங்களினாலே தான தர்மங்கள் பிறந்தது. கிறேதானென்னும் யுகத்திலே தான தர்மங்களினாலே போக போக்கியங்கள் பிறந்தது. திறேதானென்னும் யுகத்திலே போக போக்கியங்களினாலே சுக, துக்கங்கள் பிறந்தது. துவாபரியுக னென்னும் யுகத்திலே சுக, துற்கங்களினாலே செனன, மரணங்களினாலே கலியுக னென்னும் யுகத்திலே சத்தியம், அசத்தியம், உண்டாச்சுது.. சத்தியம், அசத்தியம் முண்டாகிய பூலோகத்துக் கதிபதியாகிய றாசாதிறாசன், சொஷத் மகாமண்டலேஸ்பரன், ஆரியதடவிபாடன், பானக்குள் தற்புவறாத கண்டன், கண்டனாடு குடாதுலுக்கா தளவி பாடன், துலுக்கமோகத்தான், ஒட்டியதடவிபாடன், ஒட்டிய மோகத்தான், சோளமண்டல பிறத்திடனாபசாரியான். பாண்டிப் பிறதாபனாசாரியன். சோளமண்டல வீரப்பிரதன், தொண்டமண்டலப் பிறத்திடனாப சாரியான், பாண்டிய பிரதாபனாசாரியான் சோளமண்டல வீரப் பிரதாபன் தொண்ட மண்டலம், சண்டப் பிரசண்டன், யிளமுங்கொங்கும் யாள்ப்பாணமும் மெண் மண்டலந்திறை கொண்டருளிய றாசாதிறாசன், றாசபரமேஸ்பரன், றாச மாத மார்த்தாண்டன், றாசா கெம்பீரன், றாசகுல திலகன், றாச வசீகரனார் பூங்காவலன், றாசகேசறி, வட மன்னர் மகுடலைய, றாச தேவவேந்திரன், தறணி விளங்கும் விருது கட்டாரிச் சாலுவனமன, மறை பூங்காவலன், அசுபதி, கெசபதி, நற்பதி, நவகோடி நாறாயணன், வங்காளர், சிங்காளர், ஆரியர், பறவர், ஒட்டியர், மதங்கர், மாளுவர், மலையாள், கொங்கர், கலிஞர், கருனாடத்லுதுக்கர், மறாட்டரென்ன பட்டணப் பதினெனப் பூமியும் ஏழு தீவுமுடைத்தாகிய நாகலோகப் பெருந்தீவில், எழுத்தொரு பாளையமும், திறைகொண்டு, நற்பதியாகிய பூலோக புரந்தறன், பூருவ, தெட்டச்சன், உத்திர, சட்ட சமுத்திறாபதியாகிய மதுலுக்காணமும் கொண்டு துலையாத் திசைக் கம்பமும் நாட்டி, நுஷட்ட நிறக்கிறக, சிஸ்ட்ட பரிபாலனஞ்செய்து, அருளாகி நின்ற காலத்தில், வீரநகறத்தில் பிரிதிவு ராச்சிய பரிபாலனம் செய்து, அருளாகி நின்ற காலத்தில் மகாறாயப் புரவுடைய தேவமகாறாயர், கண்டியப் பிறதாப றாயர், சாம்புவர் றாயர், மல்லிகாறச்சுனர் றாயர், அச்சுதறாயர், கிருஷ்ணறாயர், சதாசிவ றாயர், நற்சிங்க றாயர், விருப்பாட்சி றாயர், குமார நறசிங்க றாயர், தேவறாயர் அப்பாச்சி றாயர் ரெகுனாத றாயர், அண்ணாச்சி றாயர், கொண்ட றாயர், பாப்பு றாயர், றாமச்சந்திர றாயர், இவர்கள் பிரிதிவு, றாச்சிய பரிபாலம் பண்ணி அருளாகிய நின்ற காலத்தில் றாய றானுவங்களுக்குக் கருத்தாறான, விசுவனாத நாயக்கர், அய்யங்கொங்கு மண்டலம், நறையனூர் நாட்டில் புறத்தில் யெழுந்தருளியிருந்து, யோதி உணர்ந்து உலக முழுது ஆள்வதற்கு நீதிசாரம் நினவுடன் கற்று, முன்மொழி வினோதன, முத்தமிளிலங்கும் அறிவுச் க்ஷத்தியன். அழகுக்கு அனங்கன், அன்னச்சந்திரன், சோமன், வில்லுக்கு விசையன், மல்லுக்கு வீமன், சொல்லுக்கு அரிச்சந்திரன், பொருமைக்குத் தருமன், சம்பத்துக்கு குபேரன், பரிக்கு நகுலன், சாஸ்த்திரத்துக்கு சகாதேவன், குடைத்துக் கர்ணன், கடக்கரியுதைபவன், யொழிவுக்கு கதிரவன், குளுமைக்கிச் சந்திரன். யிப்படி யென்னப்பட்ட புகள் ஆண்டு, யின்றா சொல்தனித்து வள்ளுவமறையு கற்று, முப்பால் மொழியும் பாடியே, அறிவை அறிந்து அல்லவைக் கடிந்து, நல்லவை நாட்டிக்கொள்மொழிக் குடி தளைக்க, ஆறிலொன்று, ஆரிகடமை கொண்டு, அருள்பெருகி, அன்புகந்து, ஆகமசாலையும், வேதவொலியும், விபுதர்வீதியும், தபோதன மடங்களும், தருமசாலையும் தண்ணீர்பந்தலும், தற்பறாசாயூட்சியமும், விட்டடிக்கொத்த நாமங்களுக்குள்ளாக நடந்து வருகிற. சாலியவாகன சகார்த்தம் 1549க்கு மேல் கலியுக சகார்த்தம் 4730க்கு மேல் செல்லாநின்ற சித்திர (பானு) hத்திரி -ஸ்ரீ தை-மீ 7 -உ சோமவாரமும், பூசநட்சேத்திரமும், பவுர்ணமியும் கூடிய சுபதினத்தில் வீரபழனிமலை, வேலாயுத சுவாமியாருக்கு செல்லும் வைகாவூர் நாட்டில் பழனி ஸ்தலத்தில் ஆவணிமூல வீதிக்கும் கீழ்புறம் தெய்வநாயக பண்டாரத்து மகன் தாண்டப்பண்டாரம் சுவாகமசூந்திரம், மகாரிஷியார் கோத்திரம், தாண்டபண்டாரத்துக்கு. ஸ்ரீவாஞ்சியம், சத்திக்ஞானகோத்திரம். சந்ததி மெய்கண்டான் சந்ததி சூத்திரம் சிவாகம சூத்திரம் பட்ட மங்கல ஆதீனம் குன்றாக்குடி ஆறுகால் பூசம் ருத்திறாஷ்க் குடை நிறம்பவளகிய தேசிகர் எழுதிக்குடுத்த வில்வாரிச்சனைப் பட்டயங் கட்டளையிட்டோம். ஆத்திமாலை அனிந்த மார்பன்னுட தேசம் ஸ்ரீ வாஞ்சியம், நிறம்பவளகிய தேசிகர், வணங்காமுடி மன்னர். ஆறுகால்ப் பீடாதிபதி, சத்தியோசாத் தேசிகர், பஞ்சுhக்ஷ்சர பிரியோன் சைவசமயம் விளங்கும் அஞ்செழுத் துண்மையும் ஓதிவைத்த குருதேசிகன், வாஞ்சியீசுபரரும் மங்களம்மாளும் ரிசப வாகன ரூடறாய்க் காச்சிபெற்ற குருதேசிகன், வன்னபகவான் சிவபூசைக்கி கெங்கையாக வந்த குருதேசிகன், அக்கினிதேவன் தூப. தீபமாக வரப்பெற்ற குருதேசிகன், வாயுவு பகவான் சிவிதை தாங்கிய குருதேசிகன்,ஆகாச பகவான் ருத்திராக்ஷசக்குடை பிடிக்கப் பெற்ற குருதேசிகமூர்த்தி, அத்திமாலை உடைய குருதேசிகன், வெள்ளைக் குடை, வெள்ளைச்சாமரம். அன்னக்கொடி. சிம்மக்கொடி. யாளிக்கொடி அனுமக்கொடி. மகரக்கொடி. விருதுக்குடைய குருதேசிகன், வாஞ்சியீஸ்பர, மங்களம்மாள் கைங்கிரியம் செய்த குருதேசிகன், தேவசபை மெச்ச குருதேசிகன், அன்னை தந்தை சொல்மாறாத குருதேசிகன், பொய்சொல்லா, குருதேசிகன் ஆரம் திரி பொழுது மறாதும் மெய்ஞானி சமயம், விசேஷம், நிர்வாணம், ஆசாரி ஆபிஷேகம் பெற்ற குருதேசிகன், சிவசுப்பிரமணியர் அகஸ்த்தியருக்கு தெரிசனை குடுத்தது போல். குன்றக்குடியில் மயில்வாகன ரூடறாய், காட்சி பெற்ற குருதேசிகர், ஆறு எழுத்துண்மையும் பெற்ற முனிவர், மாமாங்கத்தலை வைத்து சிவபெருமானுக்கு நெய்வேத்தியம் செய்த குருதேசிகன், பாண்டிய நாடான, குலசேகரபுர சுந்தரபாண்டியன் நற்குடி தன் சீமைக்கி அழைத்தபோது நிறம்பவளகிய தேசிகரும். சீரகமாலை உடையார், வெள்ளைவாரணத்தார், பொன் புஸ்ப ரதம் யேரி வந்தவர்கள், கல்வாசல் நாடாகிய இளசைநகர் தன்னில் பூவசியறாக வந்தவர்கள், குலசேகரபுரம் தேனாருடையார், அன்னை, தந்தை, தெய்வம், மறையோர் குருவை வணங்குவோர்கள், சதுர்மறை ஆறு சாஸ்த்திரமும் வுணர்ந்து வேள்விமுடித்தயோகி, மெஞ்ஞானி, உயிர் பிரமசாரியாகிய பாண்டிய நாட்டாசாரியர் பதம் போற்றுவோர்கள் வேதவித்தியாயம் விளக்குமெஞ்ஞானி, ஆதி மெய்ப்பொருளை அரிந்தருள் யோகி, திருப்புனல் தேசிகன் பதமும் போற்றுவார்கள். கல்வாசல் நாடாகிய குலசேகரபுரம், யிளையாத்தங்குடி, சீறசெத்தூரில் சிறந்தருள் கல்வாசல் நாடாகிய குலசேகரபுரம் நேமனாடு, கேரளசிங்கவளநாடு, பிரம்பூர்நாட்டில் வீரபாண்டியும், மருதாந்தபுரம், சிறுகுளத்தூர், பிரம்பூர்நாடு, சூடாமணிபுரம், கானாடு யொன்பது நாட்டுக்கும், யேழு கோவிலுக்கும், இருபத்திரெண்டு கோத்திரமும், ஒக்கூருடையான், பெருமதூருடையான், பெறசெந்தூருடையான், கிங்கினிக்கூருடை யான், களணி வாசலுடையான், திருவேட்ப் பூருடையான், யேளகப் பெருந்திருவான், சிருகுளத்தூருடை யான், மண்ணூ ருடையான், உறையூருடை யான், மணலூருடையான், குளத்தூருடையான், கருப் பூருடையான், கண்ணூருடையான், அரும்பாக் கூருடையான், புகழ்யிடம் கொடுத்த பட்டண முடையார் இருபத்திரெண்டு கோத்திரமுடையவர், ஏழு கோவில் நகரத்தார்களனைவோர் களுக்கும், மேல்ப்படியார் களுடைய பெண்ணாட்டிகளும் வெள்ளாட்டிப் பெண்கள். வணங்காமுடி வேந்தர் புத்திரிகள், சோளமகாறாசாயிடம் போய் எங்கள் யிசமானுக்கு பாண்டியநாட்டுக் குருதேசிகர், ஈசானிய சிவாச்சாரியார் யிருக்கிறார். அவர் இடம் பஞ்சாச்சரம் பெற்றுக்கவுமாக உத்திரவு பண்ணின காரியஞ்சரியே, நாங்கள் வெள்ளாட்டிப் பெண்கள், மருகுருவைத் தொழமாட்டோம்; எங்கள் நிறம்பவளகிய தேசிகருக்குச் செவிகுடுத்து, மருகுருவுக்குச் செவி குடுக்க மாட்டோம்; நாங்களும் பாண்டியநாட்டுக்குப் போகமாட்டோம். என்று சொல்லச், சோளமகாறாசா, ஆத்தி மாலை அனிந்தமார்பன் யேன்? யென்றுகேள்க்க, வெள்ளாட்டிப் பெண்கள் யெங்கள் குருதேசிகர் பாண்டியநாட்டுக்கு வந்தால் நாங்களும் கூடவே வருவோம் என்று சொல்ல அதுமேறை உங்கள் குருவை அழைத்து வாங்கள் என்று உத்திரவுசொல்ல, அதுமேறை வெள்ளாட்டிப் பெண்கள் யெல்லாம் ஒன்றுசேர்ந்து, நிறம்பவளகிய குருதேசிகரிடம் பாதகாணிக்கை வைத்துக் கும்பிட்டு விழுந்துகொண்டு. சுவாமி! ஆத்திமாலை யாரம் அணிந்த மகாறாசா யெங்களைப் பாண்டியநாட்டுக்குப் போகும்படியாகவும், பாண்டியர்குரு, ஈசானிய குருதேசிகர்களிடம் எங்கள் ஆண் பிள்ளைகளை உபதேசம் பெற்றுக்கச் சொல்லியும் உத்திரவு செய்தார். எங்கள் சுவாமிவறாமல் பிறப்படமாட்டோம் யென்று சொல்லிப்போட்டோம்; தங்களையும் கூட அழைத்து வரும்படியாய் உத்திரவு செய்தார். ஈசானிய தானத்தில் உத்திரவுபோல் நடக்கிறோம் என்று வெள்ளாட்டிப் பெண்கள் சொல்ல, குருதேசிகர், “மகாறாசா உத்திரவுக்கும் தங்கள் வார்த்தைக்கும் நான் ரெண்டு சொல்லுகிரவனல்ல. நாம் பிறதேசத்துக்கு போனால் நமக்கு நடக்கிற மரியாதையும், நம்மபூமி, மனையைப் போலவும் கிடைக்கமாட்டாது. நாம் அங்கே வந்து யென்ன செய்கிரது?” குருதேசிகர் சொல்ல, வெள்ளாட்டிப்பெண்கள் றாசாயிடம் வந்து “சுவாமி சத்தியோசாத குருதேசிகர் பாண்டிய நாட்டுக்கு போனால், மண்ணும் மனையும் கிடைக்கமாட்டாதே” என்று சொல்லுகிறார். அப்ப, மகாறாசா சத்தியோசாத குருதேசிகருக்கு, மந்திரியுடன் சகலவிருது வாத்தியத்துடன் அழைத்து வரும்படி உத்திரவுசெய்து, அதுமேறைக்கி, பாதகாணிக்கை வைத்து “றாச சபைக்கு அழைத்து வரும்படி உத்திரவு” யென்று மந்திரி சொல்ல, உத்திரவுபோல், சகல வாத்தியத்துடன் றாச சபைக்கு வந்தார்கள். ராசா பொற்தட்டில் ஆத்திமாலையை வைத்து பாதகாணிக்கை இருபத்தொரு பொன் வைத்துக்கொண்டு நின்றார். றாசா பொற்தட்டில் யிருந்த, கண்டத்தில் தரித்து, பாத காணிக்கையும் வைத்து, றாச வருசையாக றற்றின சிம்மாசனத்தில் யிருப்பிடமுங் கொடுத்து, றாசாவும் யிருந்துகொண்டு, “சுவாமி பாண்டியதேசத்துக்கு யெழுந்தருள வேண்டிய தாய் விரும்புகிறேன்;” மகாறாசா உத்திரப்படி யென்று குருதேசிகர் சொல்ல, மகாறாசா சத்தியோசாத குருதேசிகறைப் பார்த்து “தாங்கள் கையுங்கிரியஞ் செய்கிற வாஞ்சி யீசுபறறை, மங்களம்மாளுக்கும் ரெண்டு கிறாமந் தனிக்கிறாமமும், தங்கள் கிறகத்துக்கு மூணு கிறாமமும் தங்கள் பூசை மடம் முதலானதும், ரெட்டைத்தீவட்டி, வெள்ளைக்குடை, வெள்ளைச் சாமரம், அன்னக்கொடி, யாளிக்கொடி, சிம்மக்கொடி, ருத்திறாட்சக் குடை, கற்பக நிழல் முதலாகிய சகல விருது வாத்தியங்களும் வரும்படிக்கும், அங்கே யிதுபோல் எப்போதும் நீங்காமல் இருக்கும்படியாகவும் பாண்டியனுக்கு உத்திரவு அனுப்பி யிருக்கிறேன். அதுபோல் நடந்துவருவார்க” ளென்று றாசா சொல்ல, அப்படியே நல்லது என்று விடைபெற்றுக் கொண்டு “வெள்ளாட்டிகளுக்கு உத்திரவு, நாங்களும் கூட வருகிறோம். யெல்லோரும் பொன், புஸ்ப ரதமேரிப்போவோ”, மென்று சொல்லிலிட்டு, தம் ஆதீனத்துக்குப் போய், வாஞ்சி யீசுபரறையும் மங்களாம்மாளையும் போட்டக்கோவில் உடன் எடுத்துக் கொண்டு சத்திக்ஞான கோத்திரம் மெய்கண்டான் சந்ததி திருச்சிற்றம்பல குருதேசிகரிடம் விடை பெற்றுக்கொண்டு, ஸ்ரீவாஞ்சியம் விட்டுப் பிறப்பிட்டு, பொஸ்ப்ப ரதத்தில் வந்துசேர்ந்து இருபத்திரெண்டு கோத்திரத்தார்களும், வெள்ளாட்டிப் பெண்களும் ரதத்தின் பேரில் யேரி, பாண்டிய நாட்டுக்கு வருகிறபோது. குலசேகரந்த பாண்டியன் எதிர்கொண்டு, சகல விருது வாத்தியதுடன் அழைத்து வந்து ஓனாங்குடியில் யிருபத்தி ரெண்டு கோத்திரத்தாரும் வெள்ளாட்டிப் பெண்களும் நிருத்தி, குருதேசிகறை குன்றாக்குடி ஆதீனமாக யிருக்கச் சொல்லியும், “தங்களுக்கு சுப்பிரமணியர் கடாச்சும் யிருப்பதால் யிந்த ஸ்த்தலத்தில் யிருங்கள்” யென்றும் பட்டத்துச் சோள மகாறாசா சொன்னபடியால் பட்ட மங்கல மாகானம் யென்றும், வாஞ்சி யீசுபர மங்களம்மாளுக்கும் யிதுபோல் ரெண்டு மாகாணமும், தங்கள் கிறகத்துக்கு, மூணு மாகாணமும் சர்வமாணியமாக அனுபவித்துக் கொள்வீர்கள் என்று பாண்டிய றாசா, வேப்பம்பூ ஆரம் அணிந்த றாசா, சத்தியோசாத குருவுக்கு தத்தஞ் செய்துவிட்டார். யிப்படிக்கொத்த விருதுகளுடைய குன்றாக்குடி ஆதீனம் சத்திக்ஞான கோத்திரம், சந்ததி மெய்கண்டான் சந்ததி, நிறம்ப வளகிய தேசிகர் யென்று ஆண்டவர் சன்னியதானத்தில் மாசந்தோறும் வருகிற சுக்கில வாரத்துக்கும், சோம வாரத்துக்கும் பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வருகிரதுக்கு ´ 1க்கு நாலு விறாகனும் குடுத்து வருவோமாகவும். வருஷந்தோரும் குடுத்து வருவோமாகவும் யிந்த நாலு விறாகனில் தம்பாக் குருக்களுக்கு ஒருவிறாகனும், வில்பத்துக்கு ஒரு விறாகனும், தாண்டப் பண்டாரத்துக்கு ஒரு விறாகனும், பழம், வெத்திலை, பாக்கு, சூடன் விறாகன் ஒன்றும் ஆக விறாகன் நாலும் வேலாயுத சுவாமியாருக்கு தை-மீ பூசத்தில், பதினோறாந் திருவிளாவில், ஒரு விறாகனுக்கு அபிஷேக நெய்வேத்தியமும் நடத்தி வருகிரது. யிவ்விடத்துக்கு ஒரு காலம் வறாதிருந்தால் தாண்டப் பண்டாரம் வசம் மேல்க்கண்ட விறாகன் அஞ்சுங் குடுத்து வருவோமாகவும். நகறமடத்தில் தைப்பூசத்தில் யெங்கள் குன்றக்குடி ஆதீனம் நிறம்பவளகிய குருதேசிகருக்கு நாள் ஒன்றுக்கு அரிசிபடி பத்தும் அதுக்குண்டான சாமானும் வாங்கி வருகிறது. நாங்கள் வறாதகாலத்தில் மடத்துத் தெய்வநாயக பண்டாரத்து மகன் தாண்டப் பண்டாரத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசிபடி ரெண்டும், அதுக்குண்டான சாமானும் நாள் அஞ்சுக்குக் குடுக்கும்படியாய், நகறத்தார்களிடமும், நேமமான யிளநளமுடைய குமரப்பனுக்குஞ் சேதி சொல்லி, குடுக்கும்படி உத்திரவு செய்தார். யிந்த ஸ்தலத்தில் நகறத்தார்களில் முதன்மை நேமங்கோவில் யிளநலமுடைய குப்பாபிச்சன் செட்டி குமரப்பனுக்குத் தீர்த்தந் தந்து, திருநீறும் பத்தாந் திருவிளா மண்டகப்படியில் தாண்டப் பண்டாரத்துக்கு அரிதி பரிபட்டமும். மேப்படி குமரப்பனுக்கு அலங்கார பரிபட்டமும், கட்டுகிறது. யிந்த ஸ்தலத்தில் நடக்கிற முளுமையும் நேமமான யிளநலமுடையான் குப்பாபிச்சன் செட்டி குமரப்பனும், வெள்ளாட்டி சிட்டாளும், பெண்ணுமாக உப்புமாரி, மகமை யெடுத்தபடியால் யிந்த மடாதினமும், மற்ற தருமங்களும் நடக்கிறபடியால் ஒக்கூருடையான் மருதலை கொடுத்த படியால், ஏழு கோவிலும் முதல் தீர்த்தம் திருநீறும், யிந்த ஸ்த்தலத்தில் நேமமான குமரப்பனுக்குத் தீர்த்தம், திருநூறு குடுக்கிரது என்றும், நகரத்தார்களும் மடவாலையம் மூன்றிலும், பழனி ஸ்த்தலத்தில் நேமமான குமரப்பனுக்கு நகறத்தார்களில் முதலாவது துண்ணூருயென்றும் ஒரே மனதாய்ச் சொல்லி திட்டஞ்செய்து யிருக்கிரது. நம்ம குன்றக்குடி யாதீனம் புதுப்பட்டத்துக்கு, பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு ரெண்டு விறாகனும் அபிஷேக நெய்வேத்தியஞ் செய்து பிரசாதமும், சாத்துப்படி மாலையும் பரிபட்டமும், அபிஷேகத்துக்குக் குன்றக்குடியில் பண்டாரம் கொண்டுவர ஒரு சோடி வேட்டியும், பட்டு ஒன்றும், ஒரு விறாகனும் படிச்சிலவும் குடுத்துக்கொண்டு வருவோமாகவும் பழனி ஸ்த்தலத்தில் நகரக்காவடி அபிஷேகஞ் செய்து, நாங்கள் வறாத காலத்தில் தெய்வநாயக பண்டாரத்து மகன் தாண்டப் பண்டாரம் வேல்ப்படியால் கால்ப்படி பஞ்சாமர்தம் வாங்கிக்கிரது. மடத்தில் முதலாவது தீர்த்தம் திருநூரு ஈசானிய சிவாச் சாரியாருக்கும், ரெண்டாவது திருப்புனல் தேசிகருக்கும், மூ™hவது சத்தியோசாத தேசிகருக்கும், நாலாவது தெய்வ சிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கும், அஞ்சாவது நேமமான யிளநலமுடைய குமரப்பனுக்கும் யென்றும், ஆறாவது நகரத்தார்க்கு யென்றும் நகறத்தார் களனைவோருங் கூடிப் பேசியிருக்கிரது. நாங்கள் வராத காலத்தில் தெய்வநாயக பண்டாரத்து மகன் தாண்டப் பண்டாரத்து வசம் குடுக்கும்படியாக நகரத்தார்களிடம் சொல்லியும், குமரப்பனும் சம்மதித்து, பண்டாரம் வசம் உத்திரவுபோல் குடுக்கிறேன்: யெங்கள் குன்றக்குடி யாதீனம் சக்திக்ஞான கோத்திரம், சந்ததி மெய்கண்டான் சந்நிதி, நிறம்ப வளகிய தேசிகர் புத்திறாள், பவுத்திறாள் உள்ளவறைக்குப் பழனி ஸ்த்தலம் மகாரிசியார் கோத்திரம், தெய்வநாயக பண்டாரத்து மகன் தாண்டப் பண்டாரம் புத்திறாள் பவுத்திறாள் உள்ளவறைக்கும், கல்லுங் காவேரியும், புல்லும் பூமியும் சந்திறாள் சூரியாள் உள்ளவறைக்குமேல் யெழுதிக் குடுத்த தரும சாசனத்தை நடத்தி வருமோமாகவும். யிந்தத் தருமத்துக்கு யாதாமொருவன் கேடு, விகாதஞ் செய்தாலும் அவர்களுடை யினங்கினாலும், காசிக்கெங்கையில் ஆயிரத்தெட்டுக் காறாம் பசுவைக் கொண்ட தோசத்திலேயும், தீர்த்த வாசங்களில் மாதா, பிதாவைக் கொண்ட தோசத்திலேயும், அசுபத்தி, பிர்மத்தி, தோசத்திலேயும், வாஞ்சி யீசுபரர் மங்களம்மாளுக்கு துறோகஞ் செய்த தோசத்திலேயும் போகக்கடவார்களாகவும். யிந்தத் தருமத்தைப் பரிபாலனஞ் செய்த பேர்கள், காசிக் கெங்கையில் தீர்த்தமாடி, சகஸ்த்திர போஷனஞ் செய்த பலனும், ஆயிரத்தெட்டுக் கோதானம் செய்த பலனும் பெருவார்களாகவும். ஆல்போல் தளைத்து, அருகு போல் வேறூன்றி, மூங்கிபோல் சுற்றம் முசியாமல் வாள்ந்து யிருப்பார்களாகவும் ஆறுமுகப்பெருமான் துணை. ஏழு நகரத்தார் முன்பாக குன்றக்குடி ஆதீனம் நிறம்ப வளகிய தேசிகர் உத்திரவுப்படி, யிந்த பட்டயசாசினம் எழுதினது ஆதீனங் கணக்கு திருச்சிற்றம்பலம் பிள்ளை நெட்டெழுத்து. வேலுமயிலுந் துணை உ. சீர்பூத்த செழுங்கமல வேலும் வாழி! தேவர்தொழும் பாதார விந்தம் வாழி! தார்பூத்த தினைக்கடம்பன் மாலை வாழி! சக்கிற நடனமிடு மயிலும் வாழி! பார்பூத்த தண்டலைகள் அரனார் சேர்ந்த பழனிமலைக் குமரேசர் பாதம் வாழி! கட்டோகரகிரி யீசுபர, அமுத யீசுபர, பரி மங்கை பாதர பரியாள் மீனாட்ச்சி சுந்தரேசுபரர், அளகுமயசடையார், கங்காளநாதர், வாஞ்சி, யீசுபரர், மங்களாம்மாள், கைலாசநாதர், நித்தியகல்யாணி, கண்டிசுப்பறர், சிவபுறந்தர நாயகியும், கர்ப்பக வினாயகரும், சோளீஸ்பரரும், சவுந்திர வள்ளியம்மையும், அயினூத்தி யீசுபரரும், பெரியநாயகி யம்மனும், கலங்காத கடைக் கணபதியும், வளறொளிநாதர் வடிவுள்ள மங்கை வயிரவர் மூர்த்தி தான்தோன்றினாதர் வடியுள்ள மங்கை தேசிகனாதர் ஆவிடைமங்கை, கண்டீசுபரர், காமாட்சியம்மன், பழனி யாண்டவர், சிவசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை யிவர்கள் முன்பாக யிந்தச் சாசினம் எழுதினது. யேடு பதினேழு. வேலுமயிலுந் துணை. அசல் பட்டயத்திற்குச் சரியான நகல். (முற்றிற்று.) சிவமயம். ஆனந்தக் களிப்பு. உ காவடிச்சிந்து. உ ஹரிஓம்: நன்றாக: குருவாழ்க: குருவே துணை: விநாயகர் துதி.உ. வெண்பா. சீர்பெருகும் கண்டனூர் செல்வன் குட்டைய விந்ரதின் பார்புகழுந் தென்பழனி யம்பதிக்கு- யேர்பெறவே காவடிகொண்டுற்ற பெருங் காரணத்தைக் கூற முன்னோன் சேவடி கொண்டேனென் சிரம் சிவமயம். ஆனந்தக் களிப்பு தனனதன தனதந்த நானா தந்த நாதந்த நாதந்த நாதந்த நானா திருவளருங் கணபதியைப் போற்றி - வாணி திவ்யபொற் பாதமதிற்றினமு மலர் சாற்றி அருமையுடன் வணங்கி மிக வேற்றி - ஈசன் அம்பிகை யினிரு சரணமதை வணங்கிப் போற்றி கரிய மாதலனைப் புகழ்ந் தேற்றி - இலகு கமல மாதினிய பதங் கணிந்து மிகப் போற்றி குருபர வேளரு முகனை யேற்றி - வள்ளி குஞ்சரியின் றிருப்பாதங் கொண்டாடிப் போற்றி துதிபெருகுந் தேக்காட்டூர் தன்னில் - நேமம் சொல்லுமிழ நலமுடைய குமறப்ப சுமுகன் பதிபெருகு பழனிநகர் தேடி - யெங்கள் பரம குரு நாதரருள் பதமலறை நாடி கதிமிகுந்த காவடியை யெடுக்க - தங்கள் கண்யமிகு வீசான்ய சிவாச்சாரி யருளால் மதி பெருகு மன்னை சுற்றத்தாரும் - பின்னு மக்கள் மருமக்களுற வானவர் களுடனும் - தனன சங்கு சேமக்கலம் பம்பை - கொம்பு தவில் முரசு பாங்கு துத்தாரி சின்னம் பேரி பொங்கு கடல்போல் நகரா தாளம் -பூரி புகள் நாகசுர மேளம் புல்லாங் குழலுடனே யெங்கெங்கு மெளுந் தோசை தரவே - வணிக ரெல்லோரும் வேலு மயிலென்று சொல்லி வரவே சிங்கன் குமரப்பன் காவடியை - தனது திருத்தோளின் மிசைவைத்து சென்றா ரத்தினமே - தனன சக்கறைக் காவடியைக் கட்டி - யதற்குச் சம்பிரமதாகவே யவல் கடலை தேங்காய் முக்கனியின் வற்கவகை யெல்லா - மமர்த்தி முசியாமல் வாசனையின் மருகு வில்வஞ் சாத்தி அக்கறையாய்ப் புட்பவகை சூடி - முருக னருள் பெருகு மோதுவாராண் டவனைப்பாடி சிக்கெனத் தெய்வ நாயகமும் - பூசை செய்துமுடித் தெல்லோற்கும் பிரசாதங் கொடுத்து - தனன இங்கிவர்க ளிப்படி யிருக்க - மெச்சு மெழிலிரணிக் கோவில் திருவேட்புடையார் மன்னன் பொங்குநிதி மாகண்ட நகரில் - வாழும் புரவலன் குட்டைய வேல் பழனிமலை தனக்கு யிங்கிதக் காவடிகளெடுக்க - இதையத் தெண்ணியே மன்னை சுற்றத் தெல்லோருங் கூடி துங்கமிகு புராமலை யாதீனந் - தாங்கள் தொழுங் குருவா மீசான்ய சிவாச்சாரியார் மடத்தில் - தனன ஈசான்ய சிவாச்சாரியார் சமுகங் - கண்டு யினிமை மிகு குட்டயவே ளெய்தி யக மகிழ்ந்து ஆசானை யன்புடன் சேவித்து - வவர்த னனுக்கிரகத் தோடருளு நீர் வாக்குப் பெற்று நேசானு சாரியாய் வந்த - குமர நிருப முதலனைவறையுங் கண்டு சத்தித்து கூசாமல் யாவர்களுங் கூடி - யன்று கொண்டவிருள் விடியுமட்டுங் குலாவியிருந்தார்கள் - தனன மற்றநா ளுதயத்தி லெளுந்து - யாரு மகிழ்வுடனே நீராடிச் சிவபூசை முடித்து உற்றவாசா னடிகள் பணிந்து - வவர்த னுத்தரவினால் மகிழ்வோடுற்ற காவடிகள் நற்றவன் குட்டய பூமான் - நல்ல நயமிகுந்த சற்கறையைக் கலசத்திலிட்டு சுற்றும் வெளியில்லாமல் மூடி - யெவருஞ் சொல்லரிய பூசாவிதிப் பொருள்கள் கொண்டு - தனன பழந் தேங்கா யவல் கடலை யப்பம் - வடைகள் பணியார மாவிளக்குப் பாக்கிலைகளுடனே உளமேவு தோத்திரங்கள் புரிந்து - யார்க்கும் உசிதமாய்ப் படைத்ததொரு பிரசாதம் பகிர்ந்து வளமான போஜனங்க ளருந்தி - பழனி மார்க்கமதில் நடந்தேக மனங்கள் களிபொருந்தி தளமான சேவர்க ளோடும் - முன்னே தன்மைமிகு வீசான்னிய சிவாச்சாரியார் தாமும் - தனன தண்டிகை மீதேறி முன்னே நடக்க - வோசை தருமேன தாளமுடன் பலவிருது பிடிக்க வண்டிகளிற் பல சாமானேக - மற்றும் வளிநடைக் குகந்தவைகள் மனிதர் கொண்டுபோக கண்டனூர்க் குட்டைய மன்னோடுஞ் - சிறந்த கனமிகுத்த குமரப்ப காண்டீப னடக்க வண்டு சுற்றத்தாரிளைஞ்ஞ ரோடும் - பழநி யருமைமிகு பாதைவழி நடந்தார் மேல்முகமாய் - தனன உத்தமர்க ளிருபேருங் கூடி - யந்த வொயிலான சாலைவழி வெகு ஜனங்க ளோடுஞ் சத்தமிகு மேளதாளங்கள் - முளங்கச் சாம்பிறாணி வாசங்களெங்கும் பரிமளிக்கப் பத்திமிகு மாசாரியாருடனே - மிக்க பலவிருது கொடை கவுரி பணிமாரி வரவே யெத்திசையும் புகள் கண்டறாயன்பட்டி யெல்லையூ ரணியருகி லிரங்கினர் களாமே - தனன முத்திரியை யாலடியி லிரைக்கி - வந்த முதல்வருடன் யாவர்களு மூரணியி லிறங்கி சுத்திபெரத் தானங்கள் செய்து - வங்கே சோமனுடன் வஸ்திரங்கள் சொகுசா யுலர்த்தி பத்திபெறப் பூசாநை வேத்திய - மிக்கப் பலபொருளுஞ் சிறப்பாகப் பரிவோடு வைத்து நத்திவருந் தெய்வனா யகத்தைப் பூசை நடந்தெனவே பயபக்தி யுடனயந்து முடித்தான் - தனன சம்பிரமிகு குட்டய வள்ளல் - தனக்குச் சாமியரு ளுகந்திரங்கிச் சன்னத முண்டாகச் சொம்புபெரு நகரத்தார் தாமும் - வந்த சொந்தமிகு பேர்களுமாய்த் தொழுதருகி நிற்க அந்தமிகு கேள்விகள் தனக்கு - வவர்க ளகமகிழ்க மகிமைபெரு வணிவாக்கு வுதவி விந்தைபெற யாவர்களுங் கூடி - யந்த விடுதிவிட்டப் புறம் நடந்தார்கள் பாடி - தனன வேலப்பன் மேற் கும்மி கவிகள் - சிந்து விருப்பமுள்ள வானந்தக் களிப்புகளும் பாடி சீலமிகு பக்தி சிறத்துடனே - யதிக ஜெயமுலவு நகரத்தாரெல்லாரு மொன்றாய்க் கோலமுரு மாடல் பாடலுடனே - நடந்து குலவு மருதுப்பட்டித் தோப்பு வந்து சேர்ந்து வால நிளலதனில் முத்திரியை - இறக்கி யனைவோறுங் களிப்புடனே யிறங்கினார் வீதி - தனன இறங்கினபேர் யாவர்களுங் குளித்து - முளிகி இன்பமுறு போஜனங்கள் காய்கறிகள் சமைத்து தந்தரமாய் பலகார வகைகள் - செய்து சம்பிர மமதாய்த் தளுகை தனைவைத் தெல்லோரும் நிரம்பு பல பழங்கள் பாயாசாம் - வைத்து நின்ற தெய்வநாயகத்தைச் செய்யென்றார் பூசை வரமிகுந்த பூசைநை வேத்தியம் - புரிந்து வரிசை பெர யாவற்கும் பிரசாதம் பகிர்ந்தார் - தனன யெல்லோரும் போஜனங் ளருந்தி - மகிழ்ந்து விளைப்பாறித் தாம்பூலந் தரித்துக் கொண்டப்பால் சொல்லாளி குமறப்ப மகிப - னுடனே சூழ்ந்த நகரத்தாருங் காவடிக ளெடுத்து வல்லாளன் தெய்வசிகாமணியு - முன்னே மகிழ்ந்தேகப் பல மேள முளங்க நடந்தனரே கல்லாறும் பாதைவழி கடந்து - சிறந்த கனமுள்ள சிங்கம்பிடாரி வந்து சேர்ந்தார் - தனன சிங்கம் பிடாரிதனை யடைந்து - வல்ல சேவகப் பெருமாள்தன் சன்னிதியி லிறங்கி பொங்குமிருள் விடியுமட்டு மதிலே - தங்கிப் பொழுதெளும் வேளைதனி லனைவோரு மெழுந்து தங்கள் தங்கள் பொருள் சாமானுடனே - யாறுஞ் சதிராக வழிகூடி யெழிலாக நடந்தார் துங்கமிகு மாசார் யாறுடனே - நல்ல சொகுசான வரிச்சலூரணி வந்து சேர்ந்தார் - தனன ஊரணியி லெல்லோரு மிரங்கி - யதிலே வுச்சிதமாய் நீராடி வஸ்திரங்களுலர்த்தி சீறான காவடிகள் தனக்கு - வேண சிறந்த பலகாரமவல் கடலைபழந் தேங்காய் பேறான புஷ்ப பத்திரங்கள் - கொண்டு பிரபலமாய் பூஜித்து நைவேத்திய முதவி நேரான பூதி பிரசாதம் - பெற்று நிசமோங்கு குருவுடனே பிரையாணாமா னார் - தனன பலமேள தாளமது துளங்க - மிகுந்த பத்தியொடு நகரத்தா ரரகரா வென்ன நிலமேவு குருக்கள் தண்டிகையு -மங்கே நெடுஞ்சாலை மார்க்கமதின் முன்னாக நடக்க கலைமேவு பாண்டி யரசுதவும் - வெற்றிக் கயல்மீனக் கொடியதுவுங் ககனமதிலுதவ பலமேவு சேவகர்கள் நடக்க - யெங்கள் பண்புபெரு குமறப்பன் குட்டய வேளுடனே - தனன பத்திதரு காவடிகள் நடக்க - அங்கு பலபேர்கள் வேலுமயிலெனுஞ் சொற்கள் படிக்க முத்திதரு குருசிவிகை துலங்க - வெங்கள் முனைவீரன் குமரப்பன் குட்டய வேளிலங்க யெத்திசையும் வருவோர்கள் பணிய - வவர்க்கு வின்பமுடன் மனக்குரைகள் தீர்த்து வரமுதவ புத்திமிகு நகரத்தா ருடனே - யாரும் பொங்கமிகு சமுத்திராப் பட்டிவந்து சேர்ந்தார் - தனன தாமஞ் செய்யாமலங்கே யிறங்கி - விசிறித் தருவடியில் யாவர்களுங் காவடிக ளிரக்கி நேமமுடன் சமையல் செய்யத் தொடங்கி - மிக்க நேர்த்தியாய்க் கறிவகைகள் குளம்பு பாயாச மாமைவடை தோசை பலகாரம் - பூசை அபிஷேக நைவேந்திய மடைவுடனே புரிந்து nக்ஷமமுடன் யாவர்களு முண்டு - களித்துச் செழிப்பான சமுத்திராப் பட்டியை விட்டகன்றார் - தனன கந்தனே துணையென்று நம்பி - யெங்கள் கருதலர்கி ரீடிகும ரப்பமன்னன் தானும் விந்தைசேர் குட்டய துரையிங் - குருவாம் விஷேஷமிகு வீசான்ய சிவாச் சாரியாருடனு மந்தமிகு மெழுகோவில் நகரத் - துள்ள வரிவாள ரெல்லாரும் வரிகிறாரென்று வந்தணையாய் நத்தலிங் கேந்திரன் - நேரில் வளிகொண்டு கண்டளைத்து வரவேண்டுமென்று - தனன தங்கள் குல துறை மக்களுடனுந் - தளவாய்த் தந்திரிகள் மந்திரிகள் சாமந்தனுடனு மங்கமிரு வுலுப்பைவகை யெடுத்து - குருவுக் ககமகிழப் பாதகாணிக்கைகளுங் கொண்டு துங்கமிகு லிங்கப்ப மன்னன் - சென்று சொகுசுபெறக் குருக்கள்தனைக் கண்டு சேவித்து பொங்கமிகு யாவறையு மழைத்துக் -கொண்டு புகள்பெறவே தன்னூரின் விடுதிவந்து சேர்ந்தார் - தனன தனித்தனியே யாவர்கட்குஞ் சாகை - யமர்த்தி சாமியாரவர் தனக்கு மிருப்புவிட்டுக் கொடுத்து யினித்தபால் பழந்தேங்காய் வெல்லம் - பூசைக் கிசைந்ததெல்லா வேணமட்டுங் கொடுத்து நயம்பேசி பனித்தமொழிக் குமரப்பன் தனையு - மெங்கள் பார்த்தீபன் குட்டயவேள் தனையுமுப சரித்து மனத்தில்மிகு பக்தியினால் பூசை - செய்து மகிழ்ச்சியினா லன்றிரவு தங்கியிருந் தார்கள் - தனன எழுந்திருந்து வுதயாதி தன்னில் - சொகுசா யெல்லோரும் பிரயாணமென்று காவடியை செளுங்கதிர் வேறுணையென்று யெடுத்து - யெவருஞ் செல்வமிகு நத்தம்விட்டுப் பாதை வழிகூடி குழிர்ந்த மணல்நிழல் செறியுப்பாற்றில் - வந்து கூடாறத் தோப்பதனி லிறக்கினர் காவடியை கொளுந்து மலைப் புனலிலவர் குளித்து - துருசாய கோலவஸ்திர முலர்த்திக் குலவு வெண்ணீரணிந்து - தனன கடலையவல் பானக்க மிளநீர் - தேங்காய் கனிவர்க்க வகை புஷ்பங் கணிசமாய்வைத்து வடையப்ப மதிரசமுஞ் சுகியன் - றோசை வரிசைநை வேத்தியங்கள் வணக்கமுடன் செய்து வடைவுபெறப் பிரஷாதம் பகிர்ந்து - வுண்டு வன்புபெற முத்திரியை யரகர வென்றெடுத்து யிடமகன்று வுப்பாருவிட்டு - யெளுந்து யினிதான வழிகூடி யெல்லாரு நடந்தார் - தனன வந்திடையன் சத்திரத்தி லிறங்கி - யங்கே வரிசைபெறத் தன்முளுகி வனையாடை யுலர்த்தி மந்திர பஞ்சாக்ஷரங்க ளணிந்து - நின்று வளமைபெற யெல்லோரும் வடி சாதத்துடனே அந்தமிகு காய்கறிகள் குளம்பு - வகைக ளவல்கடலை பலகார வற்க முள்ளதெல்லாஞ் சந்தோஷமாய்ப் படைத்து வணங்கி - யமுது தானருந்தித் தாம்பூலந் தரித்து மகிள்வுடனே - தனன அழகுபெற யெல்லோரு மெளுந்து - வேலென் றவரவர்கள் தோளின்மேற் காவடியைக் கொண்டு விளைவுதருங் கனியுதிருஞ் சாலை - யதனை மேவிவழி கூடிவரு குருவுட னெல்லோரு மிழகு மனத்துடனவர்க ளெல்லாங் - கருணை யிலகு சிவகுருபரா வென்றிருகை கூப்பி வழமைமலி திண்டிநகர் தேடி – கூடி வந்தார்கள் பிராமி மலரடியை நாடி - தனன ஆலயத்தி லனைவர்களு மிறங்கி - யங்கு வவரகள் முத்திரியை யடைவாக வைத்து தாலம்புகள் குட்டய மகீபன் - மீது சண்முகனருள் புரியச் சன்னத முண்டாகி வேலென்ற சொல்லது வுமாகு - மதனை விரும்பியபடி பணிந்தவற் கருள்வாக்கு வுதவி கோலவெண் ணீரவருக் கீய்த்து - தாங்கள் கொடுத்த காணிக்கை பதினாயிரம் பொன்பெற்று - தனன அன்றிரவு அவ்விடத்திற் றங்கி - யாரு மடைவாக நித்திரை விட்டதிகாலை யெளுந்து நன்றிதரு திண்டுக்கல் விட்டுக் - கடந்து நயமுலவு கறைக்கோட்டுக் கணபதியைத் தொளுது மன்றல்மிகு தயிறுமடந் தாண்டி - நல்ல வளமுள்ள ஐயன் குளந்தனையுங் கடந்து குன்றலொளி மாங்கறையா றதனில் - வந்து குளிர்ந்த மணற்றோப் பதனிலிறக்கினர் முத்திரியை - தனன இன்பமா யவல்கடலை தேங்காய் - பழமு மினித்த பானக்க மிளநீரு பலகாரம் அன்புடனே காவடிமுன் வைத்துப் - பூசை யதுபுரிந்து திருநீரு பிரசாதம் பகிர்ந்து தென்புபெற யாவர்களு மெளுந்து - கூடித் திடனான சாலைவழி யுடனாக நடந்தார் என்பிரான் வேலனெனக் கூறி - யந்த யெழுகோவில் நகரத்தா ரூரணிக்கி வந்தார் - தனன ஊரணியில் ஸ்நானமது செய்து - யாரும் வுசிதமிகு துயிலுலர்த்தி உடுத்தி நீரணிந்து யாறுதலாய்ச் சமையல் கறிவகையு - மணத்த மாவின்நெய் பருப்பு பலகாரம் பாயாசங் கூறுபழந் தேங்காயவல் கடலை - யிளநீர் கும்பத்தில் நீர்மோரு பானக்கம் வைத்து பேறுதரு பூசாநை வேத்தியங் - கொடுத்துப் பிரசாதம் நீறுபகிர்ந் துண்டினி திருந்தார் - தனன யெழுகோவில் நகரத்தார் யாரு - மின்றைக் கேற்ற பிரதோஷமென்று சீக்கிரத்தி லெழுந்து தொழுது வேலென்று காவடியை - யெடுத்துத் தோள்மீதில் வைத்தவர்கள் துரிதமாய் நடக்க முழுதுமுண ராசாரியாரு - மேளம் முளங்கவே கொடைகவுரி முதன்மைபெற நடக்க பழுதிலா நங்காஞ்சி நதியில் - வந்து பக்ஷ்முடன் முத்திரியை யிரக்கி யங்கேயிருந்தார் - தனன துயில் துவைத்து முளுகிக் குளித்து - நீறு சுசிபெறவே அணிந்துபணி யாரவடை தோசை தயிர்பாலும் தேங்காயி ழநீறும் - வெல்லம் தருகடலை அவல்கனிகள் சாம்பிராணி சூடம் ஒயில்மிகுந்த தாம்பூல புஸ்பம் வைத்து ஒருமைபெற பூசைநை வேத்தியமது செய்து மயிலோனைத் துதித்தவர்கள் வணங்கிப் போற்றி மகிமைபெறப் பிரசாதம் வளங்கியுண் டியிருந்தார் - தனன சுப்பிரமணியா வெனவே - துதித்து தோள்மீதிற் காவடியைத் தூக்கி வைத்து செப்பமுரு பாதைவழி கூடி - வேலைச் சிந்தையிலும் வாக்கிலும் தெளிவா யமர்த்தி ஒப்பறவா யாவர்களும் நடந்து - சிந்து உயர்கவிதை யானந்தக் களிப்புகளும் பாடி சொல்பெரியச் சத்திரப்பட்டி வந்து சுகமிகுந்த சிங்காரத் தோப்பி லிரங்கினரே - தனன பத்தியொடு யெல்லோரு முழுகிக் - குளித்து பண்பாக வஸ்திரங்க ளுலர்த்தி நீரணிந்து சுத்திபெற வமுதுகரி குளம்பு - ரசமும் சுவையான பால்பழங்கள் இளநீர் தேங்காய் நத்திமிக பானக்க நீர்மோர் - கடலை நல்லஅவல் பலகார வர்க்கவகை முழுதும் சித்திபெறும் புஸ்ப பத்திரமுங் - கொண்டு தெய்வநாயகம் பூசை செய்தானப் போது - தனன பூசை முடித்தினிய வமுதருந்திச் - சுகந்த புஸ்ப பிரசாத நீரெல்லோரு முகந்து ஆசையுடன் குமரப்பன் படிக்க - எங்கள் அருளான குட்டையவேள் சன்னதங் கொண்டாட வாசமிகு சாம்பிராணி காட்டி - தன்னை வணங்கினபேர் யாவருக்கும் வரங்களினி தூட்டி நேசமிகு காவடிகள் கொண்டு - சுகமாய் நெடுஞ்சாலை மார்க்கமாய் நினைவாக நடந்தார் - தனன வேடிக்கையாய்ச் சாலைவழியில் - குருக்கள் வெகுபேர்களுடன் கூடி வருகிறா ரென்று நாடிக்கண்டோ ரோடிச் சொல்ல - அன்பு நயமிகுந்த ஆயுபுரித் துரைகேட்டு மகிழ்வாய் பாடிச்சங்கீத வகை மேளம் - ஆடல் பண்பு பெறவந்து குருபாதத்தை வணங்கித் தேடு காணிக்கை நிதிஉதவித் - துரையும் சிறப்பாக யாவரையும் அழைத்துவந்து சேர்ந்தார் - தனன பெருமாள்தன் கோவிலதி லிரங்கி - இளநீர் பெருமைதரு பானக்கம் நீர்மோர் பாயாசம் தருமாலை சந்தனந் தாம்பூலம் - வைத்துச் சாம்பிராணித் தூபமிட்டுச் சாமிதனைப் பணிந்து குருபாதஞ் சென்னி மேற்கொண்டு - எவரும் கோலமிகு காவடியைக் கும்பிட் டெடுத்து பரிவாகப் பாதைவழி கூடி - புகழ்ந்து பரமகுரு நாதனைப் பாடியே நடந்தார் - தனன ஆண்டவன் றனைத் துதித்துக்கொண்டு - வேலன் றடிக்கடி ஆனந்தங்கொண்டு தாண்டுபரி நகுல குமரப்பன் - வீர தந்திரி குட்டைய சமர்த்தருடன் கூடி ஈண்டுமெழில் கோவில் நகரத்தா ருடனும் இன்பமுரு இடும்பன்மலை விருப்பமுற்றுச் சேர்ந்து பூண்டகாவடி யதனை யிரக்கி - அருள் புரியிடும்பன் சன்னதியில் புனிதமுட னிருந்தார் - தனன சீரான இடும்பன்மலை வந்து -மலைக்குத் தெற்கானத் தோப்பதனிற் காவடிக ளிரக்கி நீராடித் திருமணிந்து - பூசை நெய்வேத்தியப் பொருளெல்லாம் நேராக வைத்து பேரான தெய்வநாயகமும் - சூடம் சம்பிரமிகு தூபங்கள் பிரபலமா யமர்த்தி சீராளன் குமரப்பன் தன் - னுடனே தெய்வநாயக மன்னதான மடம் வந்தார் - தனன மடத்தில்வந்து மகேஸ்பர பூசை - தன்னை வாகுபெற மறையோர்க ளன்பத்தொரு பேர்க்கும் திடமாக முடித்திவர்கள் கொடுக்க - அங்கே ஜெயமேவு காவடியின் பின்னாக வந்தார். அடைவாக மகேஸ்பர பூசை - பார்ப்பார் ஐம்பத்தொரு பேர்களுக்கும் அருள்பெறவே நடத்தி மடல்புரியு மதுவேப்ப மாலை - அணியும் மாதவர் குருவுடனே மகிழ்ந்தாரு மருந்தார் - தனன அருளெனத் தெய்வ நாயகமும் - விஷய அழகிரி வேலாயுதத் துரையிடத்தில் நடந்து பரிவுபெற வணக்கமது புரிந்து எடுத்துப் பகருவான் பாண்டியர்கள் தலைமுறையின் குருவாம் திருவளரு மெழுகோவில் நகரத் - துள்ள செல்வர்க ளெல்லாங் கூடிச் சிவசுப்பிரமணியர்க் குறியபல காவடிகள் கொண்டு - செலுத்த ஒருமுகமாய் வருகிறார் ஆகையினா லிப்போ - தனன எதிரழைக்கத் தேவஸ்தான வரிசை தனக்கு இயல்பா யுத்திரவரு ளினிவேண்டு மென்றார் முதிர்சுவையி நம்துரை வாக்குள்ள துரையும் முடியசைத்து உத்திரவு மொழிந்துபின்னுஞ் சொல்வார் கதிர்பரவு சிகர சன்னிதியில் - உள்ள கனத்த யெடுபிடிபிரம்பு காணும் வெள்ளித்தடியும் கதிர்பெறவே தாசியர்கள் மேளம் - யானை தனையு மாவுத்தனையும் நடத்தெனவே யருளி - தனன தலையசைத்து விஜயகிரித் துரையும் -அன்பன் தனைப்பார்த்துச் சொல்லுவார் தெய்வநாயகமே கலைமிகுந்த தருவருவதாவே - நானும் கண்டிடுவோமென்று சொல்லிக் காணிக்கையுடனே விலைமிகுந்த பீதாம்பரங்கள் இன்னும் வேண வரிசையுமெடுத்து வெகு பேர்களுடனே சிலைமதனன் போல் துரையுமெழுந்து - தந்தச் சிவிகையினி லேறிவிருதோடு மேள் முளங்க இடும்பன் சன்னதி வந்து துரையும் - குருவின் இருபாதந் தொழுது காணிக்கைகளும் செலுத்தித் தடம்புயன் வேலாயுதத் துரையுங் கலந்து சமரசமதாய்ப் பேசி யிருக்குந் தருணத்தில் திடமிகுந்த பொருளான ரெல்லாம் - வந்து சேர யிருபேர்களையும் சந்தித்து இருந்தார் வடம்புனையும் தெய்வநாயகமு - மனுவை வாங்கியாலயம் புகுந்து வரிசை விருதுடனே - தனன தாசியர்கள் தாள மேளங்கள் - முழவு தானதிறக் கொடிகள்கொடை சுருட்டிடங் காவுக்கை பேசிவரு கட்டியத்துடனே - குருவையும் பெருக்கமாய்க் காணவென்று இடும்பன் சன்னதிக்கே பூக்ஷிதையாய்த் தேவஸ்தானத்தார் - வந்து புகழ் குருவினுக்குப் பிரசாத மரியாதை ஏசிலாவகை புரிந்த பின்னே - துரையின் எழில்செங்கோல் பிரம்புதந்து விபூதிப் பையுடனே - தனன காவடியின் முன்பாக வைத்து - வெல்லம் கரைத்த பானக்க மிளநீறு பழந்தேங்காய் தூவதிக புஸ்பவகை சூடி - இனிமை சொல்லரிய பலகார வர்க்கவகை யமைத்து ஆவலுட னெல்லோரும் பணிந்தார் - அங்கே அருளாளன் குமரப்பன் விபூதிப் பையேந்த நாவலன் குட்டையப்ப துரைமேல் அருளும் நலம்பெறவே யிரங்கியதாற் சன்னதமுங்கொண்டு - தனன வடிவழகன் வேலாயுதத் துரைக்குக் - கேட்ட வாக்குக ளெல்லாமவர்கள் மனமகிழக் கொடுத்துப் படி புகழுங் காவடியை யெடுத்துப் - பிரம்பும் பக்குவமாய்க் குட்டையவேள் தன்கையிற் கொடுத்து வடிதத் தமிழக பழனிமலையின் - அடியின் வாரத்தினருகாக மகிழ்வோடு நடந்து திடிம மல்லாரி சங்கு கொம்பு - கர்ணா திருச்சின்னம் எக்காளம் தாரை பூரி முளங்க - தனனதன சிவகிரியை வலஞ் செய்யவென்று - வடக்குத் திருவுலவு வீ திவழி சென்றா ரெல்லோரும் தவமுலவு விஜயகிரித் துரையும் - கேள்வி தனக்காக எதிர்வந்து துதித்து மிகக்கேட்க புவனங் கொண்டாடு குட்டையனும் - அரசன் பூரிக்கச் சிலமொழிகள் புகன்று பின்னும் மடத்தில் நவமான ஆறுகால்ச் சவுக்கில் கேட்டால் நானுனக் குத்திரவு நவிலுவே னென்றார் - தனனதன மகராஜன் வேலாயுதத் துரையுந் தனது மார்பதனி லிலங்கியதோர் சந்திர காரத்தைத் தகையோடு குட்டையவேள் கழுத்தில் - இட்டு தன்கையின் செங்கோலும் பிரம்பதுவுங் கொடுத்தார் சிகர்மேவு சத்தி வேலென்று - சொல்லி சீர்பெறவே வடவீதி மூலைவிட்டுத் திரும்பி புகழ்மேவு குமரப்பன் றுதிக்கச் செல்வம் பொங்குமிகு குட்டையன் மருளாடி நடந்தார் - தனன உத்திர வீதிதனை விட்டு - யாரும் உசிதமிகு கீழ்வாசல் வீதிவந்து சேர்ந்து பத்திமிகு மயில் வாகனத்தின் - எதிரில் பலபீடை கிரகபரிகார வரமீய்ந்து எத்திசையுங் கமழ் பிலாமரமுந் - தென்னை எழில்கதலி கமுகுகுலை எங்குனிறைந் தோங்க சத்திசிவகாமி யருள் பாலா - எங்கள் சண்முகா வென்றவர்கள் தடங்கூடி நடந்தார் - தனன கட்டியம் மந்திர பஞ்சாட்சரன் - மான்மழு தரித்தோன் மறலியை யுதைத்தோன் - மங்கையோர் பாகன் மாமறை வல்லாளன் - மலர்க்கொன்றை சூடி மகாமேரு வில்லி - மாரனை யெரித்தோன் மதகரி யுரித்தோன் - மகேஸ்பர னீன்ற மயில் வாகனத்தோன் - மாரன்றன் மைத்துனன் வடிவேல் முருகன் - வள்ளி மணாளன் எழுகோவில் நகரத்தா ரிறைஞ்சிடும் பாதன் அன்னதான மடத்தில் நடக்கும் அன்னதானம் சொர்ன தானம், வஸ்திரதானம், முதலியவைகளை உகந்தருளும்படிக்கு மயில்வாகனத்தின் மீது ஆறோகணித்துப் பவனியுலாவி வருதலால் பூர்வதிசை வீதியில், மயில் வாகனன் முன்னிலையில் பீடை பரிகாரம், வரங் கொடுக்கிற படியால் யாவர்களுங் கேட்டுக்கொள்ள, எச்சரிக்கை! பறாக்கு! கந்தா சிந்தா குலத்தைத் தீர்ப்பாய் - குமரா கதிர்வேலா யுமைபாலா கருணா கடாக்ஷh எந்தாய் தெய்வானை வள்ளிபங்கா = ஏழைக் கிரங்கியருள் புரியுங்குரு பரனே யுதாரா சந்தாரும் நூலணியு மார்பா -நகரத் தார்களெல் லோரையுந் தற்கார்க்கும் சீலா விந்தைமயிற் பரியேறி வந்து - எங்கள் வினைகள் தடுத்தாண்டருளும் வேலா சரணம் - தன கட்டியம் ஐந்து கரத்தோன் - ஆனை மாமுகத்தோன் அண்ணனுக் கினைய - ஆறுமுகப் பெருமாள் அந்தணன் றனக்கு - ஆரண முறைத்தோன் அம்பிகை தனயன் - அன்பருக் கருள்வோன் அருட் பிரகாசன் - அழகு பொற்பாதன் எழுகோவில் நகரத்தார் - இறைஞ்சிடும் பாதன் அன்னதான மடத்தில் நடக்கும், அன்னதானம் சொர்னதானம், வஸ்திரதானம், முதலியவைகளை, உகந்தருளும்படிக்கி - மயில் வாகனத்தில் ஆறோகணித்து விஷயஞ் செய்வதால் - தெட்சண வீதியில் - மயில் வாகன முன்னிலையில் - தனதான்ய சம்பத்து - வரமருள்வதால் - யாவர்களுங் கேட்டுக்கொள்ள - எச்சரிக்கை! பறாக்கு! பூர்வ வீதிதனைக் கடந்து - சதிராய்ப் பொங்கமிகு தட்சண வீதிவந்து சேர்ந்தார் கூறு மடியார்கள் வினைதீர்க்கும் - குமர குருபரா வெண்றெவருங் குணம்பெறவே துதித்து சீர்பெருகு பழனி மாமலையின் - வலமாய்த் தேரொடு வீதிதனிற் செல்வன் மயில்முன்னே ஏர்பெறவே தனதான்ய சம்பத்துடனே எல்லா வரங்களும் இட்டமுட னுதவி - தனனதன திருவுலவு கடம்பு கூவிளமுங் - கோங்கு திசைதோரும் பரிமளித்துத் தேன்மழைகள் பெய்ய எருலவு பஞ்சவர்னக் கிளியுங் - குயிலும் எழில்வண்டு சீதமுற இசைபலவும் பாடி பாரிலுள்ள ஜனங்களெல் லோருங் கண்டு பரிவுபெற வதிசயித்துப் பரிந்து மனமகிழ கார்கண்டு மயில்கள் நடனமாட - கவிகள் கனிமிகுந்த சோலைகளில் கதித்தே யுலாவ - தனனதன கட்டியம் மாலோன் மருகன் - வைகாபுரியன் வள்ளி மணாளன் - வாரணக் கொடியோன் வறைபக வெரிந்தோன் - வந்திப்போர் நேயன் மாத்தகர் வாகனன் - வரும்பவனி கண்டு மா நகரத்தார் - வணங்கியே துதிக்க மனுக்கள் வணங்கியே - வருகிறார் பவனி! அன்னதான மடத்தில் நடக்கும் அன்னதானம் சொர்னதானம், வஸ்திரதானம் முதலியவைகளை உகந்து வருள்புரிந்து பழனியாண்டவர் விஷயஞ் செய்வதால், மேற்குவீதியின், மயில்வாகனத்தின் சன்னிதி முன்னிலையில், புத்திர சந்தானம் வரங்கொடுக்கப் போகிறபடியால் யாவர்களுங் கேட்டுக்கொள்ள எச்சரிக்கை பறாக்கு! வருக்கை மாதுளை பரிச்செவ்வாழை - கமுகு வரிசைபெரு தென்னைவளர் கரும்புசெந் நெற்கழனி பெருக்கமிகு நெல்லி கூவிளமும் - சோலைப் பெருமைகளும் இருவாட்சி பிச்சி மல்லிகையும் நெருக்கமிகு கொன்னை மருக்கொளுந்தும் - வேறும் நிறைந்தோங்கும் செவந்தி நந்தியாவர்த்த மலரும் சிறக்கவரு வாசனையின் பெருமை என்ன செப்புவேன் மேல்வீதிச் சமுக வாசலிலே - தனனதன சன்னிதானத்தில் வந்து நின்று - வருந்தச் சாமிகுட்டைய வேள்மேல்ச் சன்னதமுங் கொண்டு நன்னயமா யங்குநின்ற பேர்கள் - கேட்ட நல்லசந்தான வரம் நன்மையுடன் கொடுத்து பொன்னூரு ஆயிர வராகன் - கொடுங்கள் புத்திர சந்தானமிகப் பெற்று வாழ்வீர்கள் என்றுமிக வெண்ணீறு கொடுத்து - அவர்கள் இன்பமுரு நகரத்தா ரெல்லோருமாக - தனனதன கட்டியம் அழகுமயில் வேலன் - அரனுமையாள் பாலன் அன்பருக் குறியோன் - அருள்தரப் பெரியோன் அசுர சம்மாரன் - அமரர் பொரும்வீரன் அபிசேகப் பிரியன் - அருந்தமிழ்க் குறியன் அருவினை கடீர்த்தோன் - அமரரிடர் கார்த்தோன் ஆறுமாமுகத்தோன் - ஆறிரு கரத்தோன் எழுகோவில் நகரத்தார் இனிதுடன் போற்றி வணங்கியே துதிக்கும் - மயில்வாகனனார் வருகிறார் பவனி அன்னதான மடத்தில் நடக்கும், அன்னதானம், சொர்னதானம், வஸ்திரதானம், முதலியவைகளை யுகந்து, வேண்டிய வரங்கள், மிகக்கொடுத்தருள், ஆண்டவர் விஷயஞ் செய்வதா லன்னதான மடவாலயத்தில் ஆறுகால் சவுக்கையில் சகல வரங்களையும் கொடுக்கிறபடியால் யாவர்களுங் கேட்டுக்கொள்ள எச்சரிக்கை பறாக்கு! சர்க்கரை நிறைந்த காவடியுஞ் - சூடம் சாம்பிராணி செந்தே னிறைத்த காவடியும் முக்கனி நிறைத்த காவடியும் - இழநி முதிர்ந்தநெய் பாலது நிறைத்த காவடியும் தக்கபொன் நிறைந்த காவடியும் - வெண்ணீர் தயிருடனே பலபொருள் நிறைத்த காவடியும் சிக்கெனவே கொண்டு நகரத்தார் - வார சிங்கார மெவராலுஞ் செப்ப வொண்ணாதே - தனன சித்திரக் காவடிகள் கொண்டு - சங்கு சேகண்டி ஓசையிடச் சிவகிரியைக் கண்டு பத்திமிகு வருள்கொண்டு ஆடி - மிக்க பலசிந்து வானந்தக் களிப்புகளும் பாடி சித்த மகிழ்வுடனவர்கள் நடக்க - கவரித் திகழ்வால வட்டமணிக் குடைசிலது பிடிக்க எத்திசையும் வாத்தியங்கள் தொணிக்க - வார இங்கித வலங்கார மென் சொலுவோனாமே - தனன சத்திவே லெடுத்து வருவாரும் - சிலம்பு தண்டையொடு கிண்கிணி சதங்கை யணிவாரும் முத்திரிப் பிரம்பு மயிலிறகுச் - சடையும் முடியுடனே யருள்கொண்டு முன்பு வருவோரும் உத்தமர்க ளன்னை சுற்றத்தாருங் - கூடி ஒயிலாக முருகாவென்று ரைத்து வருவோம் சித்திபெற வெகுஜனமெல் லோரும் - வார சிங்கார கெம்பீர தெய்வீகம் பாரும் - தனனதன மன்னர்புகழ் சிவகிரியை வலமாய் - வந்து மயில்வாகனச் குரட்டின் முன்னாகச் சென்று முன்னிலகு பாதவிநாய கனை - வணங்கி முத்திரையும் பிரம்புடனே முன்னாக நின்று வர்னமிகு காவடிக ளாட - பச்சை மயிலாட வைங்கரனு வல்லபையு மாட அன்னநடை வள்ளிதெய் வானை - யருகி லமர்ந்தவே லாயுதமு மானந்தமாட - தனனதன அரனுமையும் பவுரி நின்றாட - வருகில் அலர்மகளுந் திருமாலு மருள்பெற நின்றாட பிரமனுட வானியு னின்றாட - முனிவர் பிரபலமாய் மகவானு மச்சியு நின்றாட சுரர்குருவுந் தாரையு நின்றாடத் - திவ்ய சுகுண மறையோரமார் சூழ்ந்து நின்றாட வரமருளும் புகழ் நந்தியாட - அஸ்ட வைரவர்க ளாதியாய்ச் சிவகணங்களாட - தனனதன அடிவாரந் தன்னைக் கடந்து - திரு வாவினங் குடிவந்து அனைவோருஞ் சேர்ந்து முடிமேவு மாசிரியர் தனக்குச் - சிவிகை முன்கொம்பு ஆளின்றிப் பின்கொம்பு தாங்கப் படிமேவுல மானிடர்கள் தங்கள் - மனதின் படிக்கெலாம் வரமளிப்பஞ் சாட்சர முதவி குடிகளிடங் காணிக்கை வாங்கிச் - செல்வங் குலவு பழனாபுரிக் கடைவீதி நேராய் - தனன வருபவர்கள் காவடிகள் கொண்டு - வெண்சா மரை மீனக்கொடி விருதுமயில் விசிரிரெண்டு பெருகு பூச்சக்கரைக் குடையிலங்க - சுருட்டி பேர்பெரிய பகற்காலத் தீவட்டி துலங்க அருகினிற் கட்டியங்கள் கூறி - வருக அழகுபெறச் சூரியவானங்கள் மிகப் பெருகி திருவளரா வணிமூல வீதி - வந்து சேர்ந்தாடி யானந்தக் களிப்பதனை யோதி - தனன நாதசுரந் தவில் முரசு தாளம் - சங்கு நவுரித்துத் தாரிக் கொம்புலவண்டை யொலிமேளம் பாகனைய மொழி மாதராட - எங்கள் பார்த்தீபன் விஜையகிரித் துரை மகிழ்வுகூட சேகரமாய்ச் சிவாட்சாரியார் வருக - அவரைச் சேர்ந்துவந்த நகரத்தார்க் கினியசெல்வம் பெருக வாக்குப்பெறவே யன்ன தானம் – வழங்கும் மடவாலயந்தனில் வந்து சேர்ந்தார்கள் - தனனதன கொண்டுவந்த காவடிகள் தன்னை - யிரக்கிக் குணமான ஆறுகால்ச் சவுக்கையில் வைத்து கண்ற கோடாலி பிரம்பருகே - எங்கள் கட்டழகன் குமரப்பன் கைதனிலே யிருந்த வெண்டவளத் திருநீற்றுப் பையும் - மிகுந்த விதரணன் குட்டையன் கைச்செங்கோல் பிரம்புக் கொண்டு தெய்வநாயகமும் வைத்துப் - பூசைக் குணம்பெறவே செய்தங்கே யெல்லோரும் பணிந்தார் - தனன குமரப்ப வேள்சாமி வருந்தச் - சிறந்த குட்டையன் ஆறுகால்ச் சவுக்கில் நின்றாட சமர்மிகுந்த விஜையகிரித் துரையை - அழைத்துச் சாற்றுவான் மருளாடிச் சந்ததியுனக்கு கனமிகுந்த மேலை வருடத்தில் - உதவிக் கார்க்கிறேன் எனக்குப் பதினாயிர வராகன் சுமைபெறக் கட்டிவைத்துப் பின்னும் எந்தன் தொண்டன் தெய்வநாயகத்துக் கினிய மானியமும் - தனன உதவினாலப் புத்திரசந் தானம் - உனக்கு உண்டாகு மதற்குத்திட்ட டாந்தரமாகப் பலவித வலம்புரிச் சங்கை - மதகலப் பாலருந்தத் தேடிவைத்தாய் பண்பாகமலையில் அதுவெனக்குக் கொடுத்திடென்று கேட்கத் - துரையும் ஆமென்று கொண்டுவந்து அந்நேரமீய்ந்தார் புதுமைபெரு நல்வரம்வெண் ணீறும் - பெற்றுப் பொங்கமிகு குமரன்மலை புகழ்பெறவே சேர்ந்தார் - தனன தலைமைபெரு குட்டைய மன்னன் -வந்த சகலருக்கும் வரங்கள்திரு நீறுமருளியபின் நிலைமைபெரு தைமாதந் தன்னில் - ஐந்து நிதிபெரு தினங்களிற் பிராமண போஜனமும் பலன்றரு மகேஸ்பர பூசை - செய்து பத்திபெற மனையுதவு பண்டாரந்தனக்கும் நலமிகுந்த பதின்மறக்கா லரிசி - ஒரோர் நாள்வீதஞ் சாமான்கள் நன்மைபெறவழித்து - தனன எழுகோவில் இருபத்தொரு கோத்திரம் - தலைக்கட் டெல்லோரு வருடமொன்றுக் குளக்கரிசி பணங்கால் வளமைபெரு கல்யாணந் தனக்குப் - பத்து விராகனுந் திரட்டிதனக் கிரண்டுவராகனுமாய்க் கிழமைபெரு சங்குக் கைந்துரூபாய் - பதவி கிடைக்கும்போ தற்குவொரு வராகனந்தப்படிக்கி வினவுதரு சாசனமுண் டாகி - இந்த விதமாகக் கையொப்ப மிட்டுதவினார்கள் - தனன மான்றிவ்யக் கோத்திரத்தின் மறையோன் - மேன்மை மருவுபோ தாயன சூத்திரத்துக்குறியோன் தேனினிய வாக்குசிவாட் சாரியார் - சவாரிச் செலுவழிபூ சைக்குருமீ னாக்ஷிசுந்திரரை மேன்மைதரு தெய்வநா யகர்க்கு - உதவி மிகுந்தகண்ற கோடலி பிரம்பதுவுறுகர்ந்தார் கோனென்னும் பண்டாரந் தன்னை - நீறு கொள்கையாய்ப் பனிரெண்டு நாழிகொடுவென்றார் - தனன ஈசான்ய சிவாட்சாரியார் தாமும் - சீடர்க் கீடேறும் வகைதீட்சை யோதுபொழுதெல்லாம் தாசானுந் தாசன் பண்டாரம் - ஆன சற்குணன் தெய்வநா யகந்தனக்குப்பத்துத் தேசான்பொன் னுதவிசெய்து - பின்னும் சிறப்பான வரிசைவகை யருள்வோமென்று ஆசார மிககுரு வுரைத்த - வாக்கி னடைவாக யென்னாளும் நடந்துவருதையா - தனன தயவாக இவ்வா ருத்தாரங் - கொடுத்துத் தருமேன்மை யுருகும ரப்பன்தனக்கு நயமேவு வேலுடன் விபூதிப் - பையும் மார்க்கமிகு பூசைபுரி யென்றுதவிசெய்து நயமேவு சிவாட்சாரியார் தாமு - மடுத்தோர் நம்பினபேர் யாவருக்கு முபகாரியாகித் தனனதன தயையா யெல்லோர்களையுங் கார்த்துத் - தினமுந் தந்ததிகழ் நீடூழி வாழ்வரிவர்தாமே - தனனதன மூன்றானாள்ப் பூசையத் தினத்தி - லெங்கள் முடிமேவு ஈசான்யட் சிவாட்சாரியார்தாமும் தோன்றுசண் முகநதித் தீர்த்தமாடி - பழனிச் சுப்பிரமண்யர்க் கபிஷேகஞ் செய்துதுதிபாடி ஆன்றமனத் துடனருட்பிர சாதம் - பெற்று அரிதிப்ப ரிவட்டம்பெற் றர்த்தசாமந்தொழுது ஏன்றவடி வாரமுடன் குருவும் - மலைவிட் டிறங்கியன்ன தானமட மெய்தியங்கேயிருந்தார் - தனன வரிசைமிகு நாலாநாட் பூசை - சொல்வேன் மார்க்கமிகு நகரத்தா ரெல்லோருமாக வரிசைபெரு மன்னை சுற்றத்துடனே - யெழுந்து வண்மைமிகு தவமுதவுஞ் சண்முகநதியிற் கரிசனையாய்ப் புருஷன் பெண்சாதி - இருவர் கலையொன்றா யுடுத்தியே முழுகிக்கரையேறி விரசுபெரு மறுவஸ்திரந் தாத்து - மறையோர் வேறுவர்னத் தார்களுக்கும் வெகுதானமுதவி - தனன நதிக்கரையி லுறையும்விநா யகர்க்கு - மதுர ரசமிகுந்த பால்ப்பொங்கல் நறுதேங்காய்பழமும் விதிமிகுந்த மலர்த்தீப தூபங் - கொடுத்து மேலான வலம்புரிந் துதித்து நமஸ்கரித்து கதியுதவும் பெரியநா யகியா - ளுறையுங் கனத்தகன் னியர்கட்கு காட்சிபெறவந்து துதிசெய்து பெரியநா யகியை - வணங்கிச் சுசிக்குமன்ன தானமடந் துரிதமுடன்சேர்ந்தார் - தனன திருவளருங் காவடி யொன்றினுக்குப் - பணங் திருவையாய் மூன்றுடனே யறைக்காலுங்கட்டி உரிமைபெற முத்திரிக ளெடுத்து - மேளம் ஓசைபெறச் கடல்போல முளங்கிவரநடந்து பெருமைதரு சிவகிரிமே லேறி - முருகன் பேசரிய பதமலரைப் பெற்றவர்கள்போல அருமையா யபிசேக மொன்றுக் - கணிந்த அலர்மாலை சந்தனப் பொட்டதுவும்பெற்று - தனன விபரமா யிவ்வகைசோ டசமும் - நடத்தி மேன்மைதரு பொட்டுடனே மாலைகளும்பெற்று தவமேவு குமரப்பன் தனக்கும் - பெருமை தகுந்தகுட் டயமகிப னுக்குமலங்காரச் சுபமிகுந்த பரிபட்டங் கட்டி - மாலை சூடியே மடத்தைப்போற் பிரசாதம் பகிர்ந்து பவமற்று மலைதனைவிட் டிறங்கி - வந்து பலருமன்ன தானமடம் பாங்குபெறச்சேர்ந்தார் - தனன துத்தியமாய் ஐந்தாநாள்ப் பூசை - தனிலே தூய்மைதரும் அன்னமொடு கரிகுளம்புவகையும் பத்தியுடனே கொடுத்துப் பின்னும் - மகமை சித்திபெறக் குறித்த காணிக்கைபலவும் சேர்த்தியே குமரப்ப செல்வனிடம் - செலுத்தி சத்திமிகு பண்டாரப்பையில் இட்டுச் சத்திவேல் முன்ணிலையில் சமரசமாய்வந்து - தனன ஆறுகால்ச் சவுக்கை தனில்பூசை -புரிந்து அன்புபெறப் பிரசாதம் யாவர்களும் பகிர்ந்து சீர்பெருகு வேலாயுத தன்றனக்கு - நடக்கும் சிறப்பான நகரத்தார் மண்டகப்படிக்கி நேற்பெறவே தேவஸ்த் தானத்தார் - தனக்கு நிறைமூன்று வறாகனது காணிக்கைவைத்து தாராளமாய் திருக்கண் னதற்க்கு - வரவே சாமிதனக் கபிஷேகநெய் வேத்தியஞ்செய்து - தனனதன அம்பிகை பொன்மாரி சன்னதியில் - தீபா ராதனை சிறப்பெவையும் அகமகிழப்புரிந்து சம்பிரமிகு தெய்வ நாயகர்க்கும் - தாரம் தயவுமிகு பார்வதியம்மாள் தனக்கும் கம்பிபெரு சோமனொடு புடவை - பொதுவில் கனகமாகவேயு விபூதிப்பை யதுவும் தெம்புபெரு பண்டாரந் தனக்கு - வரிசை சிறப்பாய தேவஸ்த்தானம் அரிதிப்பரிபட்டம் - தனன இந்தவிதம் சந்தோசம் நடத்தி - உலகில் இணையில்லாக் குணம்பெருகு குமரப்பன்தனக்கு சந்தவ லங்காரப் பரிபட்டம் - கட்டித் தருமரிகர்க் குட்டயன் தனக்குகாளாஞ்சி விந்தைபெற நடத்திவிரு தோடும் - கட்டியம் மிகுமேள தாளவகை வேடிக்கை யுடனே பந்தமிகு தேவஸ்த்தானத்தார் - நடத்தும் பரிசுபெற்ற நகரத்தார் மடம்வந்து சேர்ந்தார் - தனன மடத்தி லாராதனை நடத்தி - சிறந்த வரிசைபெரு ஸ்த்தலத்தார்க்கு மரியாதைபுரிந்து திடம்பெருகு பண்டாரந் தனையும் - மிகுத்த ஜெயமேள தாளமுடன் விடுதிக்கனுப்பி கொடையா ளன்குட்டய மகிபன் - கதிர்வேல் குமரனைய டைந்து அபிசேக - வகைபுரிந்து அடைவாக மலையைவிட் டிறங்கி - களிப்போ டன்னதான மடம்வந்து நன்மையாய்ச் சேர்ந்தார் - தனன பலர்புகளும் ஆறுநாள் தன்னில் - கூடி பரிவுபெறச் சிவகிரியின் படியதனிலேறி நலமுலவு குமறவேல் தனக்கு - சுகந்த நயமிகுந்த சந்தனஅபி சேகஞ்செய்து பலமிகுத்த வரம்பலவும் பெற்று - மகிள்ந்து படியிறங்கி திருவாவினங் குடியில்வந்து தலம்புகளு மன்னதான மடத்தில் - வந்து சகலரும் மகிழ்ச்சிபெறத் தானங்கிருந்தார் - தனன வெண்ணீரு காளாஞ்சி தன்னை - அருளின் மிகுந்த ஈசானியசிவா சாரியார் தனக்கும் புண்ணியன் திருப்புனல் சேர்வாசன் - உடைய புகள்சேனாபதிக் குருக்கள் தனக்கு மிகக்கொடுத்து கண்ணியன் தெய்வநாய கருக்கும் - இந்த கணக்காகப் பெறுமைபெறு குமறப்பன் தனக்கும் எண்ணரிய குட்டயன் தனக்கும் - இந்த இயல்பாக நகரத்தார்யா வருக்குங்கொடுத்தார் - தனன மதிமித்த குமரப்பன் தனக்கும் - முதன்மை வந்தவரலா றுகேள்மதிக்கு முப்புத்தன்னை விதிபழனி யம்பழனி நகர்தனக்கு - மனைவி விதரணி சிட்டாளுடனேமிகு பொதிகள்கொண்டு கதிதரும் வையாபுரி நாட்டில் - சரக்கை கனமான வர்த்தகமும் கணக்குடனேசெய்து அதிவிதமாய் மகமைதனை வாங்கி - துகைகள் ஆயிரம னூறுபதினாயிர மாய்ப்பெற்று - தனன அன்னதானம் பெருகச் செய்து - அதற்கு ஆதரவு தெய்வநாயகமும் பார்வதியும் பொன்னிலகு மவர்மனையே மடமாய்க் - கொண்டு பொருளுதவி நிலையாகப் பொருள்தேடுமதனால் கன்னிக ரில்லாத குட்டயன் - தனக்கு தலைமைவந்த வகைசொல்வேன் சதிறாசர்தனக்கு உன்றுகேள் விக்கெலா முடனே - தக்க உத்தரம்சொல்ல மகிழ்ந்துயர் புகழ்ச்சியதனால் - தனன குட்டையவேள் குருசொல்லிப் பெற்ற - என்றும் குறைவிலாப் பொருள்வாங்கி கோவிலுக்கு செலுத்தி மட்டில்லாக் கீர்த்திதனைப் படைத்தார் - அந்த மகிமைதனைச் சொல்வதற்கு எவற்கு முடியாது சிட்டர்புகழ் சிவாச்சாரி யாருடனும் - யாரும் செல்வமிகு பழனிவிட்டு திண்டுக்கல்லடைந்து பொட்டெனவே அதைவிட்டுக் கடந்து - எவரும் புகழ்சமுத் திராப்பட்டி விசிரி மரமடைந்தார் - தனன அவடம் விபூதிப் பையதனை - மென்மேல் அருளோங்கு ஈசானியசிவாச் சாரியார்தனக்கும் ஒவ்வித யில்லாத் திருப்புனலில் - வாசல் உகந்தசேனா பதிக்குருக்களவர் தமக்கும் முவ்வகைத் தெய்வநாயக கர்க்கும் - மிகுந்த முனைவீரன் குமரப்பன் குட்டயன்றனக்கு பவ்வமகல் எழுகோவில் நகரத்த - மர்ந்த பலருக்கு முதவியங்கே பரிவாகயிருந்தார் - தனன மந்திர மிகுந்த சிவாச்சாரியார் - தன்னை வணங்கி விடைகொண்டுநக ரத்தார்களெல்லாம் தந்தம் மிடங்களில்ச் சேர்ந்து - அன்ன தானம்வெகு பேர்களுக்குத் தயவாகஉதவி சந்தோஷ மாய்வர் கருக்கப் - பெரிய தனதன குமறப்பனொடு குட்டய மகிபன் வந்துதம்மைக் காண்பவர்கள் யார்க்கு - பூதின் வளம்பெரு காளாஞ்சிகளும் உதவியங்கேயிருந்தார் - தனன கருணைமிகு சிவாச்சாரியர் தாமும் - தன்டி களத்தமுன் கொம்புகளை ஆள்கள் தாங்காமல் விருதுமீ னக்கொடிகள் துலங்க - கொடிகள் மேளதாளத் துடனேகட்டியங் களிலங்க மருளிய சாமரங்கள் போட - கெடியாம் வளர்பிறா மலையென்னு ஆதீனம் சேர்ந்து உருதெய்வ நாயகன் தனக்குச் - சால்வை உதவியே வறாகன்ரெண்டும் வழிச்சிலவுங்கொடுத்தார். - தனன நகரத்தா ரெல்லோரு மொன்றாக் - கந்த னாதனுறை குன்னக்குடிக் காவடிகள் சகமுளோர் துதித்துக் கொண்டாட - முதன்மை தங்குகும றப்பனோடு குட்டையவிந்தினும் அகமகிழ மேளவகை யுடனே - தங்கள் அன்னைசுற்றத் தார்களும்அமர் தலங்கள்நடந்து சுகம்பெறவே அரகரா வென்று -சொல்லி துரிதமுடன் யார்களும்சுகம் பெறவேநடந்தார் - தனன கசமுலவு குன்னக்குடி மலையை - வலமாய்க் கருணைபெறச் சுற்றிவரும்போது மந்தபாண்டியன் வியைமிகு கீள்வாசல் வந்து - கேள்வி விபரம்சொல் லென்றவுடன் குட்டையமகீபன் எசரி வளர்ந்தானும் பிறாமலையுங் - கூடல் என்றைக்கு மிலையங்குஎடுத் தங்குசொல்ல இசைபெருகு ராசன் கேள்விக்கு - சரியாய் இயம்பிமன மகிழவரமீய்ந்து வெண்ணீர்குடுக்க - தனன அரசனுமங் குரியவர்க் குகந்து - தன்கை அரியகணை யாளிதனைக் குட்டயனுக்கிட்டு திறம்பெறவே என்னவேண்டு மென்றார் - அதற்கு செப்புவான் முருகனுக்குயா தொன்றும் வேண்டாம் முறைமை பெறச்சீவ ராத்தந்தம் இரண்டும் முனைவீரகொடு வெனக்கொடுத்தான் பாண்டியனும் விருசுபெரு அரசனிரு வருக்கும் - கனமாய் வெகுமான மரியாதை வேண்டும்வன செய்தார் - தனன அதுநிற்க மலையேறி யாரும் - வேலும் அன்புபெற அபிஷேகம் சாத்துப்படி செய்து முதிசுவைநை வேத்தியம் கள்குடுத்து - யாரும் முறைமைபெற அன்னதானமடம்வந்து சேர்ந்து பதியில்வெகு பேர்க்கமுது கொடுத்து - மகமை பணமுதல்க் காணிக்கை பரிவாகக்கட்டி துதிபெருகு நகரத்தார் யாரும் - தங்கள் துலங்குபதி யடைந்துசுக மாகயிருந்தார் - தனன மகிமைபெரு தைப்பூசந் தனக்கு - நகர வர்த்தக எல்லாருமா சாரியார்தாமும் முகல்போல மேளவகை முளங்க - குருவும் முதன்மை தண்டிகை யேறிநடக்க சகிப்புமிகு குமறப்ப னோடும் - அதிக தக்கபுகள் குட்டயதன் தந்திரியோடும் சுகிமிகுத்த காவடிகள் கொண்டு - தங்கள் தொகுப்பான இடந்தங்கிச் சுகபழனிசேர்ந்தார் - தனன சிவகிரியை யடுத்தவகை கேட்டுத் - துரையும் செல்வலுடன் வந்தவர்களுடன் கூடி நடக்க தவமிகுத்த எழுகோவில் நகரத் -துதித்த தனதனிக ரெல்லோரு மரசனைக் கூடி பவகமற்றுங் கிரியை வலம்வந்து - ஆவணி பகற்மூல வீதியுறைஅன்ன தானமடத்தில் சிவகுருவை நினைந்துள்ளே புகுந்து - சுகமாய் சிறப்பாக யாவர்களுஞ்சேர்ந் தங்கியிருந்தார் - தனன முருகனே துணையென் றெல்லோரும் - அங்கே முளக்கமிட அருளிறங்கிக் குட்டயனாட பெருமைபெரு குமறப்பன் பையை - கொண்டு பிடித்தங்கே யாவருக்கும் வெண்ணீருகுடுத்து வருமந்த விசயகிரித் துறையும் - குளந்தை மார்பதினி லிலங்கியதோர் சந்திரகாரத்தை மருவினிய குட்டயன் களுத்தில் -இட்டு வாக்குப்படி காணிக்கை பண்டார மாணியமும் - தனன கொடுத்தங்கே விஷயகிரித் துரையும் - செல்வம் குலவுமனைதனக் கேகிக்குணம்பெற வங்கிருக்க கொடுத்தபடி பூசையெல்லாம் நடத்தி - யாரும் சுகமுடனுங் கிருக்கச்சிவாச் சாரியார்க்கு முடிபொருத்துந் தலைமுறைகள் தோறும் -பழனி முருகன்பிர சாதங்கள்கொண்டு வருவதான நடுத்தகைய பண்டாரந் தனக்கு - பட்டில் நல்லபீதாம்பரம் வராகங் களிரண்டும் - தனன வரப்போக உரித்தான சிலவும் - குடுத்து வாழ்வதென்றும் இளநலமுடையான் தனக்கும் சிறப்பான தண்ணீர்பந்தல் பட்டம் - தன்னை செய்யுநான் பிறசாதந்தனக் கிருவறாகன் சுறப்பான திருவேட் பூருடையார் - தனக்கு சுபமோங்கு சிவகிறியின் அடிவாரந்தன்னில் நிறைப்பான முதன்மை பெரும்போது - பண்டாரம் நேரும்பிரசா தமதுதனக் கைந்துரூபாய் - தனன குருவுடனே நகரத்தார் யாரும் - கூடி குமரவேளவர்க் கியமலைமேல்க் கட்டளையாய் பெருமைதரு சிவாச்சாரியார் பேறால் - தினமும் பேசரிய அஸ்ட்டோத்திர அர்ச்சனைக்காக வருஷத்தில் பணிரெண்டு பொன்னும் - திருப்புனல் வாசலார் தனக்குதிரு மஞ்சனகுடமும் உரித்தாக ஆறுவரா கனுமாய் - நகரத் துய்யகுட மொன்றினுக் கைந்துவறாகனுமாய் - தனன செல்வமிகு தெய்வநா யகர்க்கு - மணங்கள் சேர்ந்தபொழுது தெல்லாம்வராக னிருபதும் அல்லலரு பூஜைஐந்து னாளும் - தினமும் அரிசிதனி லேழுபடி சம்பாரவகையும் கல்வியறி வாழாகளிற்ச் சிறந்த - குருவாம் கனத்தசிவாச் சாரியார்உத்திரவு கொடுத்தார் நல்லதென்று நகரத்தார் யாரும் - ஒப்பி நன்மைமிகு சாசனத்திர்க் கையொப்பமிட்டார் -தனன இப்படிக்கி யுடன்படிக்கி யெழுதி - யாரும் இயல்பானசா சனர்த்திர்க்கை யொப்பமிட்டார் செப்புவகை தனில்ப்பிசகு வந்தால் - கங்கைத் திருநதி யிற்பசு மறையோர்சி சிதப்புகளென் னாளும்வரா விதமாய்க் - கார்த்தோன் சந்ததிகளா லருகுவேள் போற்றழைத்து இப்புவியில் பருதிமதீ யவணி - உள்ள என்னாளும் நீடுழிவாழ் வரிவர்தாமே - தனன ஜெயமுலவு நகரத்தார் யாரும் - குருவும் செல்வமிகு பழனியூர்ச்சேத் திரத்தைகடந்து வயமேவு திண்டுக்கல் லடைந்து - தங்கி மார்க்கமதைத் தொடந்தேன்முன் வழக்கமிடாமல் நயமேவு சமுத்தி ராப்பட்டி - இருந்து நலமிகுந்த விசரிவிட்டு நாலுமுகம்பிரிந்து பயமகல அவரவர்கள் பதியைச் - சேர்ந்து பரிவாகஅன்னை சுற்றத்துடனவர் களிருந்தார் - தனன தந்திமுக வல்லபையு வாழி - மகிமை தங்குகயி லாயர்பெரியம்மை பதம்வாழி மந்திர வடிவேல் முருகன் - வாழி வஞ்சிதெய் வாணையிரு மலரடிகள்வாரி சுந்திசிவாச் சாரியார் வாழி -வேலன் தொண்டன் தெய்வநாயகமும் பார்வதியும்வாழி எந்தை குமறப்பன் குட்டயன் - வாழி எழுகோவில் நகரத்தார் எல்லோரும் வாழி வாழி - தனன ஆனந்தக் களிப்பு முற்றுப்பெற்றது. ஹரிஓம்: நன்றாக: குருவாள்க: குருவே துணை: நகரத்தார் சுவாமியை அழைக்கிர பாட்டு எண்சீர்க்களில் நெடிலாசிரிய விருத்தம் சிவகிரி மீதுரைந்த கந்தனாதா வா வா தெய்வாணை வள்ளிமண வாளா வாவா பவமகற்று மெஞ்ஞான வடிவேல் வாவா பச்சை மயிலேறிவரும் பரனே வா வா தவரிசிகள் போற்றிய பொற்பாத வாவா சாயூட்ச்சிய பதமருள் சண்முகனே வாவா நவலவரிதான தண்டாயுதனே வந்து நல்வரம் ஈந்தபடியவரை ரெட்ச்சிப்பாயே தெந்தி வயிற்றறன்னலும் வல்லபையுங்கூட துணைவரவேநா யேளையாள வாவா அந்திவண்ண னுடனுமையாள் விடைமீதேறி யருகு வரவடிமை தனையார் வாவா விந்தைபெற மயின்மீது லேறிச் சூரறை வென்றவடி வேலெடுத்த வீரா வாவா தேந்துமால் மருகா கருணைகூர்ந்து நல்வரமீய்ந் தவரை ரெட்ச்சிப்பாயே மாசில்லாமணியே சண்முகனே வாவா வானுலவு வாரணத்தின் கொடியாய் வாவா தேசுபெறு மாணிக்க வொளியே வாவா செந்திலமர்ந் துகந்த கந்தத்தேவே வாவா பேசரிய வேதத்தின் பொருளே வாவா பெருமையருள்நிறைங் குகனேபிறங்க வாவா நாசிதனின் சுழிமுனையின் சுடராய்நின்று நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே ஏருலவு பறங்குன்றத் தமர்ந்தாய் வாவா எங்குநிறைந்துகந்த எந்தன்இறை வாவா சீறுளவு சிவகிரி வாளர்சேயே வாவா தினமுமனத்திருந்து வர்த்தும் செல்வா வாவா பார்புகளும் திருத்தணியம் பதியாய் வாவா பலவினைகள் தணித்தாளென்பரனே வாவா நார்சிறந்த கடம்பணியும் மார்பா வந்து நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே கையிலை மலையுகந்தமர்ந்த கந்தா வாவா கதிர்காமந் தனிலுறையுங் கடம்பா வாவா முகில்தவழும் பரங்கிளிவாளர்சே வாவா முக்கண்ண னுகந்தருளும் முருகா வாவா பயிலுமயிற் பரியேறும் பாலா வாவா பரமனுக்கன் றுபதேசம் பகர்ந்தாய் வாவா நகிலனைந்த சிவகிரிவாள் வள்ளிநேயா நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே மேருசிலைச் சிவனார் தன்குருவே வாவா மெய்த்தவ நற்கீற நிடர்விலக்கி வாவா சூரணவே சமனறையும் தொலைத்தாய் வாவா சுருதிமுடி வுகந்தருளும் தூயா வாவா பார்பகளுங் குருமுனிக்கி யருள்வாய் வாவா பகலிறவு துதிக்குமன்பர் பக்கம் வாவா நாறுகள் பந்திமிர்ந்த மார்பா வந்து நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே பங்கயத்தோன் மால்பணியும் பாதா வாவா பழனி எழில்கிரியி லமர்பாலா வாவா செங்கயற்கண் ணாபிறாமி சிறுவா வாவா தேங்குமலைக் கங்கைதரு செல்வா வாவா அங்கசவேள் மகிழ்ந்திரு மைத்துணனே வாவா அன்புநிறை யருணகிறித் கருள்வாய் வாவா நங்கள்குல தெய்வமென வழுத்துந் தாளாய் நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே சரவணத்தின் பாலனென வுதித்தாய் வாவா தருமாறுவணிதை பார்க்குடித்தாய் வாவா உரம்பிளக்க அசுரரை வேலெரிந்தாய் வாவா உத்தமர்கள் சித்தம் நிறையொழியே வாவா வரம்பயிலுஞ் சிவாச்சாரியார்கள் கனவில் தோன்றும் மாக்கமதாய் நகரத்தார் வாழ்வே வாவா நறவொழுகு செச்சை கமழ்மார்பா வந்து நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே விஷயகிறித் துறைக்கி சேயருளினார்போல மெய்நிலைத்த நகரத்தார் விருப்பே வாவா கஷமுனைச் சமரில்வென்ற கடம்பா வாவா காங்கேயர்க் குருதுமன்பன் கசிபோ வாவா வசமர்ந்த குஞ்சரி மான்மகள்தன் பங்கா வழுத்துமன் பரிடர் தொளைத்த வாழ்வே வாவா நசைமித்த திருப்பழனி நாதா வந்து நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே இந்திராதி தேவர்துயர் விர்த்தாய் வாவா ஏழைபங்குத் தெய்வமெனக் கிரங்கி வாவா சிந்தைதனில் மறுதபாண்டியர்க் குற்றாப்போல ஜெயமுலவு நகரத்தார் தேவே வாவா முந்துகரிக்குதவிய மால்மருகா வாவா மூவுலகும் நிறைந்த மறைமுதல்வா வாவா நந்திவனைக் கறக்கவுரி புதல்வா வாவா நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே வேம்பணியும் உக்கிரனாய்ப் பிறந்தாய் வாவா மேலவர்கள் துயர்தடிந்த வேலா வேலா பாம்பணிந்த திரிபுரைதன் பாலா வாவா பத்திநிறையடியர் தொழும் பாதா வாவா சேம்புநிறையடியர் தொழும் பாதா வாவா செஞ்சேவற் கொடியோனே தினமும் வாவா நாமணியுந் திருவையாபுரியில் வாழ்வே நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே திருவளருஞ் சிவகிரியின் செல்வா வாவா செளித்த நகரத்தவர்கள் தேவே வாவா மருவளரு மன்னதான மடத்திலாறு வளர்காலின் சவுக்கையில் வாழ்வரசே வாவா குருவளகூர் தெய்வநாயகத்தை கொண்டு கொண்டாளுந் திருப்பழனிக் கோவே வாவா நறுங்கள் பணீப மணிமார்ப நாளும் நல்வரமீய்ந் தடியவரை ரெட்ச்சிப்பாயே காவடிகள் வருகிரபோஙது சாமி அழைக்கிர பாட்டு முற்றிற்று. வேலுமயிலுந் துணை. விடுதல்கள் பக்கம். 1 வரி 17-ல் வேலும் மயிலும் துணை. 3. 17 ல் “லாபம்” என்பது முதலில் 6 25-ல் தெய்வசிகாமணி பண்டாரத்து என்பதற்குப் பின் மகன் தெய்வநாயக பண்டாரத்துங 8 5-ல் பண்டாரத்தய்யா என்பதற்குப் பின் யெங்கள் ஊருக்கு என்பது 8 6 - அதுமேரைக்கு என்பதற்குப் பின் குமரப்பன் கூடவே 9 -ல் எல்லாம் என்பதற்குப் பின் பூசி 11 -ல் மீனக்கொடியுடையார் என்பதற்குப் பின் அன்னக்கொடித் தலைவர் யாளிக்கொடியுடையார் என்பது 18 17 பொன்னும் என்பதற்குப் பின் “குடுத்து தன் ஊருக்கு வந்து சேர்ந்தான், குமரப்பனும் வாங்கி ஈசானிய சிவாச்சாரியார் குருதேசிகரிடம் கொண்டுவந்து சுவாமி உத்தரவுப்படி மிட்டாநாயக்கரிடம் வாங்கி 18 21-ல் எழுதி என்பதற்குப் பின் கும்பாபிஷேகம் செய்யும் முன்னே நான்கு தினத்துக்குமுன் செய்யும் முன்னமே நான்கு தினத்துக்குமுன் இவ்விடம் வந்து சேர வேணுமென்று 19 11 -ல் கிரகத்தில் என்பதற்கு முன் “உன்” என்பது சேர்க்க. 37 6 -ல் விபூதிப்பையும் என்பதற்குப் பின் திருப்புனவாசல் சேனாபதி குருக்களய்யாவுக்கு விபூதியையும் 57 26 -க்குப் பிறகு பெ.குட்டையனுக்கத் தனதாகவே வைத்துக்கொள்ளும்படி கனையாளிமோதிரத்தைக் கொடுத்துவிட்டார். 83 24-ல் தெரிசனமும் பல்லாக்குவிட்டு கீழே இரங்கி மலை தெரிசனமும் செய்துவிட்டு 86 17-ல் குடுத்து என்பதற்குப் பின் இருக்கிறது. 104 9-ல் தான் என்பதற்குப் பின் அற்புதம் என்றும் யுகத்திலே ஆதிநாராயணன் பிறந்தான். 108 18-ல் குருதேசிகன் என்பதற்குப்பின் சிவன்பாலே சிந்தையில் வைத்த குருதேசிகன் 109 - 16-ல் கிங்கிணிக் கூருடையான் என்பதற்குப்பின் பட்டண சுவாமியான இளநலமுடையான் 110 17-ல் சொல்லியும் என்பதற்குப்பின் எங்களையும் கூடப்போகச் சொல்லியும் 115 21-ல் தோசத்திலேயேயும் என்பதற்குப் பின் சிசுவதை செய்த தோஷத்திலேயும். தலைவர்களுக்கு முதற் பதிப்பு 1965 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. நாட்டுத் தலைவர் நல்லுரை குடியரசு என்பது சட்ட ஆட்சி, பகுத்தறிவாட்சி, ஒப்புதலாட்சி. நம் எல்லாக் கொள்கைக்கும் எவ்வளவு இணக்கம் காண முடியுமோ அவ்வளவும் காணவேண்டும். அரசியலறிவு என்பது இவை இவை வருமெனத் தீமையை முன்கூட்டியே உணர்த்தல், உணர்ந்து கூடியவரை விலக்கப் பார்த்தல். வன்முறை என்பது கசப்பையும் வெறுப்பையும் பூசலையும் விளைப்பது. இவை விளைந்தால் பின் நீக்குதல் எளிதன்று. டாக்டர் இராதாகிருட்டிணன் 14-2-1965 இந்தியப் பாயிரம் வடவிமயம் தென்குமரி ஆயிடைக் குடியரசு நடத்தும் கோடாச் செங்கோல் படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய; 5 வாழிய பாரதம் வாழிய பல்படை வாழிய பன்மொழி வாழிய பல்வினை ஆழிக் குமரியும் அண்ணல் இமயமும் ஊழி ஊழி ஒன்றி வாழிய; இந்தியத் துகளினை எப்பகை அவாவினும் 10 முந்துக போர்க்களம் சிந்துக உயிரை; சாதிப் பற்றும் சமயப் பற்றும் காதல் அன்ன கட்சிப் பற்றும் மோதல் இல்லா மொழியின் பற்றும் ஆசை நீங்காக் காசுப் பற்றும் 15 பாசம் ஏறிய பதவிப் பற்றும் நேசம் கலந்த ஈசன் பற்றும் தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக; பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக மற்றோர் பற்று மனம்புக வேண்டா; 20 பெருமகன் காந்தி பிறந்த நாட்டில் ஒருமகன் நேரு உழைத்த நாட்டில் இன்முறை என்னும் நன்முறை ஓங்குக வன்முறை என்னும் சின்முறை ஒழிக; அடிப்படை யுரிமைகள் வடுப்பட லின்றிக் 25 கொடுப்பன கொடுக்க கொள்வன கொள்க எடுத்ததற் கெல்லாம் நிறுத்தம் விடுக்க; முறையை அறத்தை மொழியை மதத்தைப் பறைபடு தேர்தலில் பணயம வையற்க; பத்தொடு நான்கு பாரத மொழிகள் 30 ஒத்தநல் லுரிமையும் ஒருமையும் தழுவிப் பாராள் மன்றம் பாங்கினில் ஏறுக; பொதுநல வினையைப் பொறுப்போ டாற்றுக எதுநலம் வரினும் பொதுநலம் செய்க மக்கள் உழைப்பு மலையினும் ஓங்குக 35 தக்க நலமெலாம் சமநலம் ஆகுக; கட்டுப் பாடெனும் கரவினைத் தளர்த்தி முட்டுப் பாடெனும் மூடியை விலக்கித் தட்டு பாடகலத் தனிவழி காண்க; பொய்யா வள்ளுவன் புகழ்சேர் நாட்டில் 40 மெய்யாச் சொல்லுவன் மெய்யாச் சொல்லுவன் எய்யா இந்தியர்க்கு மெய்யாச் சொல்லுவன்; பேச்சிலும் எழுத்திலும் பெருமிதம் வேண்டும் ஏச்சுரை தாக்குரை எவர்க்கு வேண்டும்? எய்திய உரிமையை இடித்துத் காக்கும் 45 செய்தித் தாள்கள் செம்மாந் தியங்குக: வாக்கினை வேண்டி வாய்மை பிறழேல் நாக்கினைக் காப்பான் நாடு காப்பான்: மதித்துப் பேசும் வள்ளுவம் பரவுக மிதித்துப் பேசும் விலங்கியம் படுக: 50 விழுப்பம் வேண்டின் எல்லா வினையிலும் ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் வேண்டும் இழுக்கம் செய்பவன் இந்தியன் ஆகான் ; பசியே இல்லாப் பல்வளம் சுரந்து பிணியே இல்லாப் பெருநலம் பெற்றுப் பகையே இல்லாப் பல்மறம் வீங்கி வரிழிய பாரதம் வாழிய பாரதர் 57 ஏழிசை தாங்கி வாழிய பாரதம். பொருளடக்கம் 1. கடிதம் 1 151 2. கடிதம் 2 153 3. கடிதம் 3 155 4. கடிதம் 4 159 5. கடிதம் 5 163 6. கடிதம் 6 166 7. கடிதம் 7 169 8. கடிதம் 8 172 9. கடிதம் 9 177 10. கடிதம் 10 180 11. கடிதம் 11 184 12. கடிதம் 12 187 13. கடிதம் 13 193 14. கடிதம் 14 198 15. கடிதம் 15 201 16. கடிதம் 16 203 17. கடிதம் 17 207 18. கடிதம் 18 212 19. கடிதம் 19 218 20. கடிதம் 20 224 21. கடிதம் 21 231 22. கடிதம் 22 237 23. கடிதம் 23 245 24. கடிதம் 24 255 25. கடிதம் 25 256 கடிதம் - 1 அன்புத் தலைவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்தும். என் எழுத்தால் இந்தியத் தாய்நாட்டிற்கு ஒரு நன்மை செய்ய முடியும் என்றால், மொழிச்சிக்கலுக்கு முடிவான நிலையான நேர்மையான வழிகாட்ட இயலும் என்றால், அத்தொண்டினை ஏன் முன்வந்து செய்யலாகாது? எழுத வேண்டிய காலமும் பொருத்தமாக இருக்கும்போது, கடமை செய்வதைக் கழிக்கலாமா? நூல்வடிவான இக்கடிதங்களை மூன்றாண்டுக்கு முன்பே எழுதவேண்டும் என்று துடித்தேன். சீனப் படையெடுப்பால் எழுத்தை நிறுத்திக் கொண்டேன். சென்ற ஆண்டு மீண்டும் எழுதும் வேகம் பிறந்தது எனினும் எழுத்து எண்ணியபடி ஓடவில்லை. மொழிக் கிளர்ச்சி நில நடுக்கம்போல் வன்மை யாகப் புறப்பட்டுப் பரவி நாட்டை அலைக்கும் இக்காலத்தில் எழுதாது, என்றுதான் எழுதுவது? நான் ஒரு மொழிப் புலவன். நம் மொழிச் சிக்கல் பற்றி இயல்பாகவும் ஈடுபாடாகவும் பொறுமையாகவும் பல ஆண்டுகளாக என்னளவில் சிந்திக்கத் தொடங்கினேன். சில கருத்துமுடிபுகள் என் அறிவிற்குப்பட்டன. மூன்று நான்கு ஆண்டுகளாக அம்முடிபுகளில் எனக்கு நல்ல நம்பிக்கை பிறந்துவிட்டது. வரவர நம்பிக்கை கூடக்காண்கின்றேன். ஆதலால் இக்கடிதங்களைப் படிப்பவர்கள் ஒரு நம்பிக்கை யோடு படிக்கலாம். அங்ஙனம் படிக்கப் புகுவார்க்கு மூன்று தெளிவுகள் வேண்டும். 1. வன்முறைகளை எதற்கும் என்றும் எவரும் கையாளக்கூடாது. 2. பாரதத்தின் ஒருமைப்பாடு பாழ்படக்கூடாது. 3. அடிப்படையுரிமையில் ஏற்றத்தாழ்வு கூடாது. இத்தெளிவு மூன்றிலும் உங்கட்கு உடும்புப் பிடி போன்ற உறுதியிருக்கும் என்றால், அடுத்து வரும் கடிதங்களைப் படிக்கும் தகுதியுண்டு. உறுதியின்றி ஐயமோ திரிபோ இருக்கும் என்றால்............................ உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 2 தலைவர்களுக்கு, வணக்கம். மூன்று தெளிவுடன்—குறிக்கோளுடன்—நீங்களும் படிக்கத்தொடங்குகின்றீர்கள். யானும் ஆற்றொழுக்காக எழுதத் தொடங்குகின்றேன். மொழிபற்றிய உங்களின் சொந்தக் கருத்துக்களை வைத்துக் கொள்ளுங்கள். என் கருத்தினையும் தாராளமாகச் சொல்லுதற்கு இடங்கொடுங்கள். நாட்டு நலத்திற்காக எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வோமே. அரசியலுக்கும் கட்சிக்கும் அப்பாற்பட்டவன் நான். நாட்டுக்கும் மொழிக்கும் உட்பட்டவன். இயல்பாக எழுதிவரும் கருத்திற் சிலபல சாயல் உடையனபோலத் தோன்றலாம். அதற்கு நான் என் செய்வேன்? யாரும் உரையாதவற்றைப் பார்த்து விலக்கி முழுப் புத்தம் புதுமையாக உரைத்துவிட வேண்டும் என்ற செருக்கா, முனைப்பா என்நோக்கம்? யார் சொல்லியிருந்தாலும் சொல்லி யிராவிட்டாலும் இந்தியாவின் மொழிப்பிணிக்கு நன்மருந்து எது என்று என் அறிவு கண்டதோ.அதனை முன்சொல்லிய முக்குறிக்கோளுக்குப் புறம்போகாமல் எழுதுவதே என்நோக்கம். எழுதி வருங்கால், ஏற்றம் இருக்கும், தூற்றல் இராது. அழுத்தம் இருக்கும், மழுப்பல் இராது. கனிவு இருக்கும், கசப்பு இராது. கடிதங்களைப் பார்த்து வரும்போது, ஓரிடத்து உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்துப்போலப் பட்டால். தெரிந்ததுதானே என்று மேலும் படிப்பதை நிறுத்தி விடவேண்டாம். இறுதிவரை படித்தால் எண்ணாத குறிப்புக்கள் இருக்கும். ஒவ்வாத கருத்தோட்டம்போலப் பட்டால், வேண்டாதவை என்று அவ்வளவோடு கீழே வைத்து விடாதீர்கள். மேலும் தொடர்ந்து படிப்பின், எதிர்க்காமைக்குப் பல விளக்கங்கள் கிடைக்கும், உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 3 தலைவர்களுக்கு, வணக்கம். இக்கடிதம் சென்ற காலத்திற்கு இரங்கி எழுதுகின்றேன். உரிமை பெற்றுப் பதினெட்டு ஆண்டுகள் கழிந்துபோயின. மொழிவாரி மாநிலங்களாக நாட்டைப் பகுத்தோம். அம்மொழிகளை வளர்த்தோமா? 1965 சனவரி முதல் இந்தி பொதுமொழியாகும் என்று 1950இல் சட்டம் செய்தோமே; அங்ஙனம் இன்ன ஆண்டிலிருந்து வட்டார மொழிகள் ஆட்சிமொழியாகவும் கல்வி மொழியாகவும் வரும் என்று தீர்மானம் செய்தோமா? இந்தி பொதுமொழியாகும் என்று சட்டஞ் செய்த ஆண்டிலிருந்தே, வட்டார மொழிகளும் மாநில ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக வந்திருக்க வேண்டாமா? இன்னும் ஒருபடி சென்று கேட்பதாயின், உரிய இடங்களில் எல்லாம் வட்டார மொழிகளுக்கு முடி சூட்டிய பின்னன்றோ பொது மொழிச் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும்? மாநில மொழிகளைப் பள்ளமாகவே வைத்துக் கொண்டு, பொது மொழியைப் பரப்பி மேடாக்குவது பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அம்மேடு ஒரு நாள் இப்பள்ளங் களில் தானே சாய்ந்து விடும், சாய்க்கப்படும் என்று நடுங்குவது இயல்புதானே. வட்டார மொழிகளைக் கூரிய மேடுகளாக்கிப் பொது மொழியைச் சமதரையாக்கினால், அவநம்பிக்கை பிறந்திராது. ஆசையோடு உரிமை பெற்றோம். நம்மொழிகளுக்கு உரிமை கொடுக்கும் ஆசை நமக்கேயில்லை. நேற்றுவரை என்ன சொன்னோம்? நாட்டு மொழிகளைக் கல்லூரி, பல்கலைக்கழக மொழியாக்குவதில் விரைவு கூடாது எனவும் (யார் விரைந்தார்கள்?) ஆர அமரப் பொறுத்துச் சிந்தித்துக் கெடாத படி பார்த்துச் செய்ய வேண்டும் எனவும், மொழிவெறி காரணமாக விரைந்தோடிச் செய்தால், அறிவியலிற் சுருங்கி, உலக ஓட்டத்தில்பின்பின் தங்கி இளைத்து விடுவோம் எனவும் இன்று காசு, நாளைக்கடன் என்று கடைக்காரன் விளம்பரம் போல், இப்பதினெட்டாண்டும் ஆசைகாட்டி வருகின்றோம். வட்டார மொழிகள் பல்கலைக்கழக மொழிகள் ஆகிவிடுமாயின் அறிவு குலைந்து போகும், நாடு உலைந்து போகும் என்று சொல்லாத பெருங்கல்வி மேதைகள் யார்? இந்திய நாட்டின் கல்லூரி பல்கலைக்கழகம் எல்லாம் ஒரு மொழிவாயிலாக இருந்தாற்றான், இணைந்த அறிவு இருக்கும், கலந்த போக்கு இருக்கும் என்றால், வட்டார மொழிகளுக்குப் பஞ்சபூதங்களின் நுட்பங்கள் கூறும் தற்கால வளர்ச்சி உண்டாகுமா? உயர்நிலைப் பள்ளி மொழியாய், அதுவும் ஒருகால் இழந்து தொடக்கப்பள்ளி மொழியாய் வீட்டு மொழியாய்த் தோட்ட மொழியாய்க் குடத்து விளக்குப்போல அடங்குவதல்லது காற்றடித்தாலும் அணையாத குன்று விளக்குப்போல உயரமுடியுமா? உரிமை பெற்ற நாட்டிற்கு ஏற்பக் கல்விச்சிந்தனை நாம் செய்யவில்லையே, நாம் சிந்தித்த சிந்தனையெல்லாம் வேலைச்சிந்தனை, அடிக்கடி வேலையுயர்வுச் சிந்தனை. பொருளாதாரத்தில் ஐந்தாண்டுத் திட்டங்கள் போல மொழிக்கும் ஆண்டுத் திட்டங்கள் கோலியிருக்கவேண்டும். உரிமை பெற்ற நாள்தொட்டு ஒவ்வோர் அமைச்சவையிலும் மொழி மந்திரி ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் மொழி வளர்ச்சிக்கென்றே சில கோடி ஒதுக்கியருக்க வேண்டும். பலதுறை நூல்களைப் பெருக்கி யிருக்க வேண்டும். செய்வன ஆண்டு தோறும் செய்யாது, 1965 சனவரித் திங்களில் இந்தி முடியைத் தூக்கிவைத்தோம். தாங்குதற்கு உரிய தலையும் நிலையும் இல்லாமை கண்டோம், சிறுமிக்குத் தாலிகட்டி விடுவதால் தாயாகி விடுவாளா? இந்தி இந்தியா முழுவதும் தொடர்பு மொழியாவது இருக்கட்டும். இந்தி மாநிலங்கள் நான்கு உள்ளனவே; அவை தம்முளாவது தொடர்பு மொழியாக இந்தி இதுகாறும் கொள்ளப்பட்டுள்ளதா? அது இருக்கட்டும். ஒரு இந்தி மாநிலத்திலாவது ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் முழுக்கமுழுக்க இந்தியுண்டா? இதுவரை வட்டார மொழிகளைத் திட்டமிட்டு வளர்க்காமையினால், பொதுமொழிச் சிக்கல் பெரிதாகி விட்டது. உரிமை எண்ணமும் பெருகிவிட்டது. தாய் மொழிகளைப் பல்கலைக் கழகப் படிப்புவரை வைக்காமை யால் வந்த மறைமுகவுவர்ப்பே - ஏக்கமே - இன்றைய இளைஞர்களின் மொழிக் கிளர்ச்சிக்கு ஒரு பெருங் காரணம். என் ஆசிரியத் தொழில் காட்டும் அநுபவம் இது. முன்னாள் தமிழகக் கல்வியமைச்சர் திரு. சி. சுப்பிரமணிய னார் 1965 முதல் தமிழே கல்லூரிப்பயிற்று மொழியாகும் என்று ஒரு மொழித் திட்டம் கொண்டு வந்தார். அத்திட்டத்தை இவ்வாண்டு முறையாகச நிறைவேற்றியிருந் தால், இவ்வாண்டு ஈங்கு வீறிட்டெழுந்த மொழிப்போருக்கு இடமிருந்திருக்காது மன். எதிரதாக் காக்கும் அறிவுடையார்க்குத்தானே அதிரவருவ தோர் நோய் இராது. நாம் சென்றதற்கு வருந்த வேண்டாம். இனி வருந்துமாறும் செல்ல வேண்டாம். பொதுமெழி பற்றித்தான் தலைவர்களுக்குள் கருத்து ஒற்றுமையில்லை. எல்லார்க்கும் ஒற்றுமையான காரியத்தை முதற்கண் செய்வோமே. இராச்சியங்களில் மாநில மொழிகளே ஆட்சி மொழியாக வேண்டும், பட்டப்படிப்பு வரை கல்வி மொழியாக வேண்டும் என்பதில் நமக்குள் பெருவேற்றுமையில்லை ஆதலின் அதனை முந்திச் செய்வோம், முயன்று செய்வோம், முடியச் செய்வோம். 1966 முதல் வட்டார மொழிகளை இராச்சியத்தின் எல்லா அலுவற்களத்தும் ஆளும் மொழியாக்குவோம்; எல்லாத் துறையிலும் பட்டப்படிப்பு மொழியாக்குவோம்; பாடநூல்கள் இல்லை என்று குறைபட வேண்டா. நிறைவு செய்வது நம் கடன். சில ஆண்டுகள் ஆங்கில நூல்களின் துணை கொண்டு தாய்மொழியில் பாடஞ் சொல்லுவோம். தாய்மொழியிலே விடை எழுதுமாறு வாய்ப்பளிப்போம். ``அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள், தறையிற் கீறிடில் தச்சரும் காய்வரோ” என்றபடி, வளரும் இடைக்காலத்து மொழிகலந்து பேசினும் எழுதினும் அறிவுக்கு விழி திறந்தது, அன்புக்கு வழி பிறந்தது என்று மகிழ்வோம். ``ஓர் உரிமைக்காக வாய்மையையும் அகிம்சையையும் பலி கொடுக்க மாட்டேன்; அங்ஙனம் பலியேற்று வரும் உரிமையை ஏற்றுக்கொள்ளேன். அதுபோலவே ஓர் உரிமை வேண்டித் தாய்மொழியைப் பலி கொடேன்” என்றார் நம் காந்தியண்ணல். அண்ணலின் திருவாசகத்தை இக் கடிதங்களைப் படித்து முடித்து பின்னும் மறவற்க. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 4 தலைவர்களுக்கு, வணக்கம். மொழிப்பிரச்சினைக்கு ஒரு நல்ல முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற முழுநோக்கால் இவ்வெழுத்துக்களை எழுதுகின்றேன். நாடு எரிமலை போலத் திடீர்க் கொந்தளிப்பின்றி இயங்க வேண்டுமாயின், ஆற்றொழுக்குப் போன்ற அடிப் படையுரிமைகளில் யாரும் கைவைக்கக்கூடாது. உயிரிற் கைவைப்பதை ஒக்கும், உரிமையில் கலக்கம் ஏற்பட்டால், அரசியற் கட்சிகள் நாட்டினைக் கலக்கிக் கொண்டே யிருக்கும். “எறும்பு ஊரக் கற்குழியுமே” என்றபடி, உரிமைத் தேய்வு ஒற்றுமைத் தேய்வாகி விடும், நல்லறிஞர்கள் ஒற்றுமைத் தேய்வைச் சொல்லிக்கொண்டேயிராமல், அதற்கு மூலகாரண மான உரிமைத்தேய்வை நிறுத்தவும் நிரப்பவும் பார்ப்பர். நல்லரசிற்கு ஓர் இலக்கணம் மேடைப் பொருளாகவோ, தேர்தற் பொருளாகவோ, கட்சிப் பொருளாகவோ, வாக்கெடுப் புப் பொருளாகவோ மக்களுரிமையை நிறுத்தக்கூடாது. உரிமை கட்சிகட்கு உரிய உரைப் பொருளன்று. உரிமையை எங்ஙனம் எல்லாம் காப்பது என்ற கடமையை கட்சிகளுக்கும் சட்ட சபைகளுக்கும் பாராள்மன்றத்துக்கும் உரிய பொருளாம், ண்பது மக்களுரிமை, உணவு விளைவிப்பது அரசின் கடமை; கல்வி மக்களுரிமை, கற்கவழி செய்வது அரசின் கடமை; கற்பு மக்களுரிமை, அதற்கேற்ற காவல் அளிப்பது அரசின் கடமை. “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல் இன்றெனின் இன்று” என்பர் புலவர் சாத்தனார். உரிமைகளைச் சிறுபான்மை பெரும்பான்மை வைத்து நிறைவேற்றக்கூடாது. அவை எப்பான்மைக்கும் சமம். ஓர் உண்டிச்சாலையில் பத்துப்பேர் உண்ணுகின்றார்கள். ஒன்பது பேர் புலாலுண்ணிகள் என்பதற்காக உண்ணாத ஒருவன் இலையிலும் புலால் படைக்கலாமா? உண் என்று திணிக் கலாமா? அது பெரும்பான்மை பார்த்துக் கட்டாயப் படுத்துவதற்கு உரிய காரியமா? அரசியலில் சிறுபான்மை ஒரு தேர்தற்குப் பின் பெரும் பான்மை யாகலாம்; அதுவே மற்றொரு தேர்தற்குப்பின் சிறுபான்மையாகலாம், மக்களுரிமைகள் தேர்தலுக்குத் தேர்தல் மாறக்கூடியனவா? கட்சிகள் மாறின் கடமையைச் செய்யும் முறைகள் மாறலாம். அவ்வளவே. உரிமைகள் மாறா. கட்சி மாறுந்தோறும் மனிதவுரிமை மாறின் நாடு காடாகி விடுங் காண். மக்களுக்குரிமைகளுள் தலைசிறந்த ஒன்று மொழியுரிமை. இவ்வுரிமை சமயவுரிமையினும் உறுதியானது. தந்தையின் சமயம் வேறு, மகன் சமயம் வேறாகக் காண்கின்றோம். தாய் மொழியில் அன்ன வேறுபாட்டைக் காண்கின்றோமா? கட்சியுரிமையினும் மொழியுரிமை வேறானது. ஒரு குடும்பத் துள் பல கட்சியுடையார் இருப்பதை அறிவோம். ஆனால் குடும்ப மொழி ஒன்றேயன்றோ? மாறக்கூடிய மதவுரிமை, கட்சியுரிமைகளிலும் மாற இயலாத் தாய்மொழியுரிமை, தலையானது. அதுவே பிறப்புரிமை. மொழியுரிமையே மனிதப் பிறப்புக்கு உரிய தனியுரிமை. வழியுரிமை, வழிவழிப் பொதுவுரிமை. இத்தகைய ஏற்றம் உடைய மொழியுரிமையை வேண்டிய மதிப்புக் கொடுத்து நாம் சிந்திக்கவில்லை. மொழியின் அருமை பெருமை ஆற்றலை அதிகாரத்தை முழுதும் அறிந்தவர்கள் சிலரே. குழாய் திறந்தவுடன் நீர்வந்து விழுதல்போல, வாய்திறந்தவுடன் வந்து விடுதலின் எளிமையாக நினைத்து விட்டோம். மொழி என்பது என்ன? ஒருவர் கருத்தை மற்றொருவர்க் குத் தெரிவிக்கும் கருவியே என்று, காலணாவுக்கு வாங்கும் கருவிபோல இலக்கணம் பேசுகின்றோம். உயிர் என்பது உடலை இயக்கும் கருவி; படை என்பது தற்காப்புக் கருவி; கண் என்பது பார்க்கும் கருவி. செவி என்பது கேட்கும் கருவி உடம்பு என்பது குழவி பெறுங்கருவி; வானவூர்தி என்பது பறக்கும் கருவி; உலகத்தில் உள்ள எல்லாமே உலகமே ஒரு கருவி. இப்படியா பார்ப்பது? எது இல்லாவிட்டால் எது எது எப்படியாகும் என்று எதிர்த்துப்பாருங்கள். மொழியில்லாவிட்டால், மனித வளர்ச்சி எங்கே! எங்கே! எங்கே! எல்லாக் கருவியையும் இயக்கும் மாபெரும் மனிதக் கருவி மொழி என்பது விளங்கும். அது மனிதப் பிறப்பின் உயர்வுக்கு இறைவன் வழங்கிய தெய்வக் கருவி என்பது விளங்கும். “ஓசையொலியெலாம் ஆனாய் நீயே” என்று அக்கருவி வடிவாகவே இறைவனைக் கண்டார் நாவுக்கரசர். இந்தியா பன்மொழி நாடு என்றால் தெய்வக் கருவிகள் பலவுடைய நாடு என்பது கருத்து. ஆகவே நம் தேசிய மொழிகள் பதினான்கையும் தெய்வமொழிகள் என்று போற்ற வேண்டும். தெய்வங்களைச் சமமாக மதிப்பது போலத் தேசிய மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். தெய்வம் இகழேல் என்றதுபோல் ‘மொழியை இகழேல்’ என்று கூறுமின். நாட்டின் நலத்துக்குப் பலவற்றைச் சிந்தித்த தலைவர்கள் என்ன காரணமோ மொழி பற்றி நன்கு சிந்திக்கத் தவறிவிட்டனர். சிந்திக்கவே இல்லை என்று சொல்ல மாட்டேன்; சிந்தித்தார்கள்; இயற்கையாகச் சிந்திக்காமல், நாட்டின் இயல்புக் கேற்பச் சிந்திக்காமல், செயற்கையாக, எல்லாம் சரிப்பட்டுவிடும் என்ற பெரும்போக்காகச் சிந்தித்து விட்டனர். மொழியுரிமை ஓர் அடிப்படையுரிமை என்று கருதாது, சரிப்படுத்தக் கூடிய சில்லறையுரிமை என்று கருதிவிட்டனர். மொழிப்பிரச்சினை ஓர் உரிமைப்பிரச்சினை என்று எண்ணியிருப்பார்களாயின் ஒத்த உரிமை வழங்கி அப்பிரச்சினையை மருங்கறக் களையாவிட்டால் ஓயாப் பிரச்சினையாகிவிடும் என்று எண்ணியிருப்பார்களாயின், சிந்தனையை மொழிப் பக்கம் மிகவும் செலுத்தியிருப்பர்மன். இந்தியா ஒன்றுதான் பன்மொழி நாடா? கானடா, பெல்சியம், சுவிச்சர்லந்து, யுகோசுலேவியா, மலேசியா முதலிய நாடுகளில் பன்மொழியாட்சிகள் உளவே, அந்நாடுகளுக்கு மொழித் தூதுகளை அனுப்பி நடைமுறைகளைப் பார்த்து வரச் செய்திருக்கலாமே. விடுதலைக்குப் போராடி உழைத்த தலைவர்கள் என்னென்னதான் சிந்திக்கமுடியும்? பிற்காலத்தார்க்கு எவ்வளவுதான் செய்து வைத்து விட்டுப் போகமுடியும்? அவர்களுக்கும் முயற்சிக்கு ஏற்ற அயர்ச்சி தோன்றத்தானே செய்யும். நாம் சிந்திப்போம். நாட்டின் இயல்புக்கு ஏற்பச் சிந்திப்போம். ஆங்கிலேயர்கள் சென்றபின் நம்மவர்கள் ஆட்சியிலும் தலைமையிடத்தை அடைந்தனர். கல்வித்துறையிலும் பிறதுறைகளிலும் தலைமையிடத்தை அடைந்தனர். தாங்கள் தலைமை பெற்றது போலத் தங்கள் மொழிகளும் தலைமை கூடவே பெற வேண்டாமா? என்று எண்ணவில்லை. ஒரே காரணம் விடுதலைக்குமுன் இருந்த துணிவும் தியாகமும் விடுதலைக்குப் பின் இல்லை. நாட்டுக்கு உரிமை பெற்ற நாமே நம் மொழிகளை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டோம். அதனால் உரிமைபெற்றதன் முழுப்பயனை நுகரமுடியாமல், வளர்ச்சிகளைச் சிந்தனை செய்யாமல், இடையூறுகளையே சிந்தனை செய்து கொண்டிருக்கின்றோம். நாட்டு மொழிகளை, என்ன கெட்டுவிடும் என்ற நம்பிக்கையோடு துணிவாக உயர்த்தி, மொழிப் புரட்சி செய்து விட்டோமானால் கங்கை காவிரி பாய்ந்த நிலம்பேல, என்ன வளமெல்லாம் இந்நாட்டில் உண்டாகும் தெரியுமா? உடல் நலம் பெருகும். கல்வித் தெளிவு உண்டாகும், அறிவுப்புரட்சி ஏற்படும், எண்ணவீறுசெறியும், இனிய உறவு தழைக்கும், ஒற்றுமை யுரன் கூடும், உள்ளம் உயரும், நோபல்பரிசு வாங்கும் பல்லுயிர்கள் பிறக்கும். நாற்பது கோடி மக்கள் வாழும் இப்பாரத நாட்டில், இருபெரு மக்கள் தானே நோபல் பரிசு பெற்றனர். அவர்கள் பெற்றதுங்கூட, நாடு அடிமையாக இருந்த காலத்தல்லவா? ஆங்கிலேயர் ஆண்ட காலத்தல்லவா? உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 5 தலைவர்களுக்கு, வணக்கம். இந்தியாவின் பொது மொழி பற்றிய கொள்கைகள் யாவை? அவற்றின் காரணங்கள் என்ன? எக்கொள்கை எவ்வளவிற்குக் கடைபோகும்? எது விடத்தக்கது? எது விடக்கூடாதது? எது விட்டும் விடக்கூடாதது? முதற் கடிதத்தில் நாம் குறிக்கோளாகக் கொண்ட மூன்று உணமை களுக்குப் புறம்பானது எது? ஒத்து வருவது எது? இவ்வா றெல்லாம் நாம் பொது மொழிபற்றி அலச வேண்டும், யார் கூறுகின்றனர்? உள்நோக்கம் ஏதும் உண்டா? என்று அப்படி யெல்லாம் பார்ப்பது, சுருங்கச்சொல்லின், ஒழுக்கம் ஆகாது. உண்மையும் புலப்படாது. யார் கூறினால் என்ன? உள்ளோட் டம் எதுவாக இருந்தால் என்ன? வெளிப்பட்ட விளைவு எதுவாக இருக்கும் என்பதுவே காணவேண்டுவது. நாம் விரும்பும் பயன் என்ன? அதற்கேற்ற வழி என்ன? இவையே நாம் காண வேண்டுவன. மத்தியவரசின் பொதுமொழி (அலுவல் மொழி) பற்றிய கொள்கைகள் பின்வருமாறு : 1. முன்னிருந்ததுபோல ஆங்கிலமே தனிப் பொது மொழியாக நீடிக்கவேண்டும். 2. இந்தியும் ஆங்கிலமும் சமமான இரு பொது மொழி யாக இருக்க வேண்டும். 3. இந்தியே இந்தியவரசின் தனிப் பொது மொழி. தென்னாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் துணைமொழியாக இருக்கலாம். 4. தேசிய மொழிகள் என்று ஒப்புக்கொண்ட பதி னான்கு மொழிகளும் பொதுமொழி யாதல் வேண்டும். 5. நான்கு திசைக்கும் நான்கு மொழிகளைத் தேர்ந்தெடுத்துப் பொதுமொழிகள் நான்கு கொள்ளலாம். 6. வடநாட்டு மொழிகளில் ஒன்றும் தென்னாட்டு மொழிகளில் ஒன்றுமாக இருபொதுமொழிகள் இருக்கலாம். 7. வடமொழியை ஒரே பொதுமொழியாக ஆக்கலாம். இவ்வெழு கொள்கைகளுள் கிளர்ச்சிக்கு இடந்தராதது எது? ஒருமைப்பாட்டுக்கு உரந்தருவது எது? ஒத்த உரிமை அளிப்பது எது? வடமொழி பேச்சு வழக்குடைய மொழியில்லை, தாய் மொழியில்லை. வழக்குடைய மொழியாக உயிர்ப்பிப்பவர் யார்? உயிர்ப்பிப்பது எப்படி? வழக்குயிர் பெறுவது எந்நாள்? உயிர்ப்பிக்க முடியுமா? முடியும் என்றாலும் முடியுங்காலம் வரை பொதுமொழிப் பிரச்சினையை ஒத்திப்போட முடியுமா? அது புதிய இந்து முசுலீம் பிரச்சினையைத் தோற்றுவிக்காதா? வளஞ்சான்ற தொல்வடமொழி பல வட்டார மொழிகளின் வளர்ச்சிக்குத் துணை செய்யலாமேயன்றி, தான் வழக்குப் பெற்றுப் பொதுமொழியாதல் என்பது கனவுக்கூடேயன்றிக் கண்கூடன்று. வடநாட்டு மொழிகளில் ஒன்றும் தென்னாட்டு மொழிகளில் ஒன்றுமாக இருபொது மொழிகள் இருக்கலாம் என்ற கொள்கை இருதேசக் கொள்கையைப் போன்றது. வட நாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தியைத் தேர்ந்துவிடலாம். தென்னாட்டு மொழிகளில் எதனைத்தேர்வது? திராவிட மொழிகளில் தமிழ் தொன்மையானது, தொன்மையான இலக்கண இலக்கிய வளமுடையது என்பதற்காக. ஏனைத் தென்னாட்டினர் உடன்படுவார்களா? ஆந்திரநாடு பெரியது, தெலுங்கு பேசுவோர் தொகை மிகுதி என்பதற்காக, அதனைப் பொதுமொழியாகக் கன்னடர் கேரளர் தமிழர் இசைவார் களா? இரு இருபிளவுக் கொள்கை; மேலும் பிளவுக் கொள்கை; நடைபெறாக் கொள்கையுமாம். திசைக்கு ஒன்றாக நான்கு மொது மொழிகள் இருக்கலாம் என்பதும் இக்கொள்கை போன்றதே, பொது மொழிக் கொள்கைகளின் எண்ணிக்கைக்கு இவை எண்ணப்பட்டன என்பதன்றி, சிந்தனைக்குரிய சிறப்பினவல்ல. எஞ்சியுள்ள பொதுமொழிக் கோட்பாடுகள் நான்கு. அவற்றுள் ஆங்கிலம் பற்றிய கொள்கைகளை வருகின்ற கடிதங்களில் துணிவுடன் எழுதுவோம். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 6 தலைவர்களுக்கு, வணக்கம். கடினமான கசப்பான கைவிட முடியாத இனிய ஆங்கிலக் கொள்கை குறித்து ஆராய்வோம். போற்றிப் பொறுத்துப் படியுங்கள். ஆங்கிலமொழியின் உலகமதிப்பையும் இந்திய உறவையும் நாம் புறக்கணித்துப் பேசுவது தற்கொலைக்கு ஒப்பாகும். நம் தலைவர்கள் பலரும் ஆங்கில மொழிச் செவிலியால் ஓங்கி வளர்ந்த குழந்தைகள். தில்லியைப் போலவே இலண்டனையும் சொந்தத் தலைநகர்களாகக் கருதி நடந்தவர்கள். உரிமை யுணர்வை அரிய ஆங்கிலத்தாற் பெற்றவர்கள். வயிரத்தை வயிர ஊசிக்கொண்டு அறுப்பது போல ஆங்கில அடிமைத்தளையை ஆங்கில அறிவால் அறுத்தவர்கள். எத்துணையோ அயலவர்கள் புகுந்தாண்டது இந்நாடு. அவரெல்லாம் பகுதி பகுதியாக ஆண்டு மறைந்தனர். பிரிவு பிரிவாகக் கிடந்த இமயமுதற் குமரியை ஒரு நாடு என்னும் உருவாக்கி ஆண்ட பெருமை ஆங்கில ஆட்சிக்கே உரியது. அடிமையில் ஒரு நாடாக மூழ்கினமையால் உரிமையில் ஒரு நாடாக எழுந்தோம். சிலர் சொல்வதுபோல, ஆங்கில அரசு விளைத்த இன்னல்கள் பல இருக்கலாம். “கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்” என்ற வள்ளுவத்தின்படி, அவ்வின்னல்கள் எல்லாம் இமயமுதற் குமரியை இந்தியா என்னும் ஒரு நாடாக ஆக்கித்தந்த நன்மைக்கு ஈடாக, அதனால் அடிமை தந்த ஒரு பெருஞ் செல்வத்தை—ஒரு நாடு என்னும் உடைமையை—உரிமையோடு காத்துக்கொள்ள வேண்டும். சிறுபிள்ளைத் தனமாகக் கலைத்துவிடக்கூடாது. இந்தியாவின் பண்பட்ட சிறப்புக்களை ஆங்கிலப் பெருமக்கள் உலகிற்கு எடுத்துக் காட்டினர்; நம்மையும் உணரச் செய்தனர். ஆங்கிலமே ஞாலத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு நூற்றாண்டுக்கு மேல் அறிவுப்பாலமாக இருந்து வருகின்றது. “சிந்தனை நின்தனக்காக்கி. நாயினேன் தன் கண்ணிணை நின் திருப்பாதப்போதுக் காக்கி, வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி, வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்று தொழுவதுபோல், ஆங்கிலக் கலைமகட்கே அக்கலை மகளின் திருவடிக்கே நம் சிந்தனையெல்லாம் செலுத்தினோம். நம் மொழிகள், கலைகள், நடைமுறைகள் எல்லாங்கூட, கலையாத ஆங்கிலச் சாயம் பெற்றுவிட்டன. நம் நாட்டு வரலாற்றில் ஆங்கில உறவு பன்னூறு பக்கங்கள் இடம் பெறும். தற்கால நிலைமைக்கு நம்மொழிகள் 20 விழுக்காடு கூட வளரக் காணோம். இந்நிலையில் வாய்ப்பாக நம்மிடம் உள்ள ஆங்கிலப் பெருமொழியைச் சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும். உரிமையுணர்வு என்ற பேராலோ, நமக்குட் பூசலாலோ, அதனை விடாதிருப்பதே கெட்டிகாரத் தனமாகும். அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் அகன்று விட்டனர். ‘எங்களைப் போகச் சொல்லியபின், எங்கள் மொழியை வைத்துக்கொள்ள உங்கட்கு என்ன உரிமையுண்டு?’ என்று ஆங்கில மக்கள் கேட்கவில்லை. நம் நன்மைக்கு ஆங்கிலத்தை நாமே வைத்துக்கொண்டுள்ளோம். என்று வேண்டுமானாலும் விடலாம். ஆனால் விடலாமா? என்பது வினா. நம் தாய்மொழிகள் பலதுறையில் ஆழ்ந்து அகன்று ஆக்கம் பெறுதற்கு, ஆங்கிலம் தவிர வேறு துணையில்லை. நம்மவர்கள் ஆங்கிலம் கற்பது தவிர, நம்மொழி வளர்ச்சிக்கு வேறு வழியில்லை. ஆங்கிலம் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமோ? போதும் என்று என்று புள்ளி வைப்போமோ? தெரியாது. இன்றுவரை நம் இளைஞர்கள் எல்லோரும் ஆங்கில வாயிலாகவே பல்துறைகளையும் பயில்கின்றனர்; பட்டம் பெறுகின்றனர். இவர்களின் தொகை ஒரு கோடி இருக்கும். இன்னவர்தம் சராசரி வயது 25 என்று கொண்டாலும் இன்னம் 35 ஆண்டுகள் ஆங்கிலப்பிடி நம்மை விட்டு நீங்காது. கி.பி. 1700 வரை ஆங்கிலப் பிணிப்பு நாடுமுழுவதற்கும் உண்டு என்பது வெளிப்படை. இந்தக் கண்ணோட்டத்தோடு ஆங்கிலப் பொது மொழிக் கோளைப் பார்க்க வேண்டும். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 7 தலைவர்களுக்கு, வணக்கம். ஆங்கிலம் இந்தியாவிற்கு வேண்டும், பலநிலையில் வேண்டும், பல்லாண்டு பல்லாண்டு வேண்டும். யார் எது கூறினும், அது இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நம்மைவிட்டு அகலாது, அகற்றவும் முடியாது. இந்நிலையில் ஒரு கேள்வி. அதுவும் ஒரு பெருங்கேள்வி. நம் நலங்களுக்கு எல்லாம் ஆங்கிலம் இன்றியமையாததுதான். இந்நலங்களை ஆங் கிலத்தை நாட்டின் பொதுமொழி யாக்கினாற்றான் பெற முடியுமா? அல்லது நம் கல்வித்திட்டத்தில் ஆங்கில மொழிக்கு நிலையான பரந்த நல்லிடம் அளித்துப் பெறமுடியாதா? இதனை ஆர அமரச் சினவாது சிந்தியுங்கள். உரிமை நாட்டில் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளும் முறைவேறு; அதற்குப் பதவியளிக்கும் முறைவேறு. எல்லாத் துறையிலுமே நம் நாடு இப்போதுதான் வளர்கின்றது. நம் வளர்வுக்கு வளர்ந்த பன்னாடுகளின் உதவி வேண்டும். பிரிட்டன் அமெரிக்கா கானடா ரசியா இத்தாலி மேற்குச் செருமனி சப்பான் முதலான அயல்நாடுகளிலிருந்து துறை வல்லுநர்களை அழைக்கின்றோம். உடன்படிக்கைகள் செய்து கொள்கின்றோம். அவ்வல்லுநர்கள் இங்குத் தங்கியிருந்து நம்மவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். அங்ஙனம் செய்யும்போது, அயலக அறிஞர்கட்குத் தலைமைப் பதவியா அளிக்கின்றோம்? சீனப் படையெடுப்புக்காலத்து அமெரிக்கத் தளபதியும் பிரிட்டிசுத் தளபதியும் நம் படைஞர்க்கு வானத் தடுப்புப் பயிற்சி அளித்தனரே: அப்போது அயலகத் தளபதி கட்கு நம்நாட்டுப் படைத் தலைமை வழங்கினோமா? உரிமை நாடுகளுக்குள் பதவிநிலை கொடாதே உதவிநிலை பெறும்முறை உண்டு. ஆங்கிலத் தேவைக்குச் சட்டம் வேண்டிய தில்லை; பொதுமொழிப் பதவிநிலை வேண்டியதில்லை. அதன் தேவையை அவ்வளவு உணர்ந்திருக்கின்றோம். நம் மொழிகளை வளர்க்கப் புறப்பட்டால் இன்னும் எவ்வளவோ உணர்வோம். ஆங்கிலத்திற்குச் சிறப்பு அதன் பதவியைப் பொறுத்ததன்று. பதவி பெற்றா அது எல்லா நாடுகளிலும் பரவியிருக்கின்றது? அதன் சிறப்பு அறிவு வளர்ச்சிக்குச் செய்யும் உதவியைப் பொறுத்தது. ஆற்றல் அற்ற, ஆற்றல் சேரவேண்டும் என்று நினைக் கின்ற ஒன்றுக்குத்தான் பதவியளிக்கவேண்டும். நம் நாட்டு மொழிகள் தற்கால வளர்ச்சி பெறவில்லை. பெறும்படி செய்வதற்கு ஆட்சிப்பீடத்தில் தூக்கிவைக்க வேண்டும். நம் மொழிகள் இதுவரை உரிய மதிப்புப் பெறவில்லை. மதிப்புப் பெறவேண்டி அரச பதவி அளிக்க வேண்டும். நாம் உரிமை பெற்றபின்னும், நம் மொழிகளுக்கு ஆட்சி வாய்ப்பும் அரச மதிப்பும் சொந்த நாட்டிலே இல்லாவிட்டால், சொந்த மக்களே வழங்காவிட்டால், அத்தோடு ஒழிய வேண்டியது தானே. வேற்று நாட்டில் புக இடமுண்டா? புகவிடுவார் உண்டா? என் கருத்துப்படி, ஆங்கிலம் காலவரையறையின்றி, குறைந்தது கி.பி. 1700 வரை நமக்குக் கட்டாயம் வேண்டிய திருக்கும். கல்வித் திட்டத்தில் நாடு முழுக்க இடம்பெற வேண்டியதிருக்கும். ஆதலின் அரசியலைமைப்பில் பொது மொழியாகச் சட்டம் செய்யாமலே, ஆங்கிலம் கற்றும், கற்பித்தும் எல்லா நலமும் பெறலாமே, பொது மொழியாகச் சட்டம் செய்தாற்றான் இந்த நலம் கிடைக்கும் என்று நீங்கள் கருதினால், நீங்கள் கருதும் அந்த நலம் யாது? கல்வித் திட்டத்தில் இணையற்ற இடம் கொடுத்தும் பெற முடியாத அப்படிப்பட்ட தனிநலம் யாது? புதுமையாகச் சிந்தனை செய்யுங்கள். சட்டம் வேண்டாம், கல்வித் திட்டமே பெரிது என்ற உண்மை உங்கள் உள்ளத்தைத் தொடுமாயின், தலைவர்களே! ஒத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி கசடற அமைய முன்வந்து வழிகாட்டுங்கள். ஆங்கிலத்துக்கு ஆட்சிச் சட்டம் வேண்டாம்; கல்வித் திட்டம் போதும் என்பது இக்கடிதக் கருத்து. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 8 தலைவர்களுக்கு, வணக்கம். இன்னொரு பெருங்கேள்வி. ஆங்கிலம் பொதுமொழியாக வேண்டும் என்பவர் என்றுமே இந்நாட்டிற்கு அதுதான் பொதுமொழியாக இருந்து வரவேண்டும் என்று எண்ணுகின்றார்களா? அல்லது என்றாவது ஒருநாள் இந்திய மொழியும் பொது மொழியாக வரலாம் என்று கருதுகின்றார்களா? தெளிவு பெறுக. வட்டார மொழிகள் மாநில அளவில் ஆளும் மொழிகளாக வழங்கட்டும்; இந்தியாயினும் வேறு எந்த இந்திய மொழியாயினும் பொது மொழி ஆதலாகாது. ஒர் இந்திய மொழியை மத்திய அலுவல் மொழியாக்கின், அம்மொழி பேசுவார்க்குப் பிறப்பிலேயே தனி வாய்ப்பு ஏற்படுகின்றது. ஏனை மொழிகள் பேசும் இந்தியர்கட்குப் பிறப்பிலேயே ஒருவகை இழப்பு ஏற்படுகின்றது. நம் எல்லார்க்கும் வேற்றுமொழியாகிய ஆங்கிலம் முன்போலவே அலுவற் பொது மொழியானால், ஒரு மொழியாளர்க்குச் சாதகம், இன்னொரு மொழியாளர்க்குப் பாதகம் என்ற முறைக்கேடு இராது. எல்லார்க்கும் சம நலமும் சம வாய்ப்பும் உண்டு. ஆதலின் ஆங்கிலமே எஞ்ஞான்றும் பொது மொழியாக வேண்டும் என்பது ஆங்கிலக் கொள்கையாளரின் விளக்கம். இது அசைக்க முடியாத காரணம். ஒத்த உரிமையும் ஒத்த வாய்ப்பும் வழங்கும் அரசு எதுவோ அதுவே குடியரசு. நம் அரசியலமைப்புப் பாயிரத்தில் இதனை ஒப்புக் கொண்டிருக் கின்றோம். இப்போது இயற்றியுள்ள சட்டப்படி இந்தி பொது மொழியானால் 13 கோடி மக்கட்கு ஒரேயடியான ஏற்றமும், 31 கோடி மக்கட்கு ஒரேயடியான இறக்கமும் ஒரு நொடியில் வரும். இதனைப் புரிந்து கொள்வதில் உள்ளது மொழிச் சிக்கலுக்கு வழி. ஏற்றத்தாழ்வு இல்லை என்று ஒரு சில தலைவர்கள் சொல்லப் புகுவது ஒன்று அறியாமையாக இருக்கலாம், அல்லது வீம்பாக இருக்கலாம். பொது மொழிக் கொள்கையில் சமநலக் கொள்கை வேண்டும் என்பது கடைசிவரை கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் ஆகும். ஆனால் அச்சமநலம் ஆங்கிலம் பொது மொழியாக இருந்தாற்றான் கிடைக்குமா? நம் மொழியின் உரிமையை விட்டுக் கொடுத்தாற்றான் சமநலம் உண்டாகுமா? சமநலமும் கெடாது உரிமையும் விடாது கையாளக்கூடிய வேறு வழியில்லாமலா போய்விட்டது? இப்படியும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தி பொதுமொழியாயின் 13 கோடியினர்க்குப் பெருநலந்தான், 31 கோடியினர்க்கு நலக்கேடுதான் என்பதற்காக 13 கோடி மக்களையும் வரும் வாய்ப்பை இழக்கச் சொல்ல வேண்டுமா? புதிய தொல்லைப்படுத்த வேண்டுமா? இப்பெருந்தொகையினர் மற்றை மொழி மக்களோடு சேர்ந்து ஒரு நாடாக இருப்பதாற்றானே, மொழி நலம் கெடுகின்றது. இந்திய நாடாக இல்லாமல், தனி இந்தி நாடாக இருந்தால், சமநல வினாவுக்கு இடனுண்டா? ‘நல்லது செய்தல் ஆற்றீராயினம் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்றபடி உள்ள நலத்துக்கு, உரிய நலத்துக்கு ஊறு இல்லாதபடி புதிய புதிய வழியைக் காணவேண்டும். வழியா இல்லை? இந்திபோலவே ஏனைய மொழிகளையும் பொது மொழிகளாகத் தழுவிக் கொண்டால் எல்லா மொழி மக்கட்கும் ஒத்த வாய்ப்பு, ஒத்த நலம், ஒத்த உரிமை எல்லாம் பிறப்பிலேயே வந்துவிடுமே; இவ்வாறு என் நெஞ்சம் உணர்கின்றது. நம்மவற்றைப் பொதுமொழியாக உயர்த்திக் கொண்டு நம் சமநலத்தை நாமே காப்பதை விட்டுவிட்டு நம்முள் அடித்துக் கொண்டு நம் மொழிகளுக்கு வரும் பதவியை இழக்கச் செய்வதா நாட்டு முன்னேற்றம்? இவ்வாறு என் நெஞ்சம் குமுறுகின்றது. 44 கோடி மக்களையும் மார்புறத் தழுவிக் கொள்ளுமாறு 14 மொழித் தாய்களையும் நெருங்கவிடாது, அத்தனை கோடி மக்களின் தாயன்பையும் அயல்மொழியைப் பொது மொழியாக்கிக் குலைப்பதா? ஆயிரம் உண்டு இங்கு சாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? இவ்வாறு என் நெஞ்சம் துடிக்கின்றது. நம் நாட்டின் மொழியுறவு சிக்கலுக்கு உரியதன்று. இயல்பாகச் சிந்தனை செய்யாமல் வழிபிசகி அதிகமாகச் சிந்தித்ததன் விளைவு இது. இந்தி பேசுவோரே மிகுதி என்ற ஓர் எண்ணத்தில் தலைதடுமாறி, வேண்டாத பாதையில் நெடுந் தொலை போய்விட்டோம். பாரத மக்களை இந்திபேசும் மக்கள், அதுபேசா மக்கள் எனவும், பாரத நாட்டை இந்தி பேசும் பகுதி, அது பேசாப் பகுதி எனவும், பாரதத் தலைவர்களை இந்தி மாநிலத்தலைவர்கள், இந்தியல் மாநிலத் தலைவர்கள் எனவும் பாரத மொழிகளை இந்தி மொழி, ஏனை மொழிகள் எனவும், பாரத இலக்கியத்தை இந்தி யிலக்கியம் ஏனை இலக்கியம் எனவும் இவ்வாறே இந்தியைத் தலையாக வைத்து, ஏனையவற்றை அதற்கு மறுதலையாக வைத்து இரண்டி ரண்டாகவே பாகுபடுத்தி வருகின்றோம். இதன் முடிவு ஒரு காலத்து எங்குப்போய் நிற்குமோ? அதனாற்றான் ஒரு சில பெருந்தலைவர்கள் இருந்த ஆங்கிலமே இருக்கட்டும் என்று மன்றாடுகின்றனர். இந்தியடிப்படையில் எழுத்தும் பேச்சும் விளக்கமும் சிந்தனையும் பாகுபாடும் வருவது கண்ட அச்சமே, இப்படியே சென்றால், இந்தி ஒரு நாள் ஆதிக்கம் செய்து நாட்டைப் பிளவாக்கும் அல்லது அடிமையாக்கும் என்ற அதிர்ச்சியே ஆங்கிலக் கொள்கையின் வேகத்திற்குக் காரணம். 14 மொழிகளையும் வைத்தால் அதுவே பல பிரி வினைகளுக்கு வழியாகாதா? இது நல்ல கேள்வி. தமிழ் தமிழ் நாட்டளவிலும், தெலுங்கு ஆந்திர நாட்டளவிலும், இந்தி பீகாரளவிலும், பஞ்சாபி பஞ்சாப்பு நாட்டளவிலும், இங்ஙனமே வட்டார மொழிகள் அவ்வம் மாநிலவளவிலும் அமைந்து கிடந்தால், கிடக்கவிட்டால், பிரிவுணர்வுக்கு இட மிருக்கலாம். தனிமாநில அளவில் விடாது, குடுமி முடித்தாற் போல மத்திய அரசிலும் அம் மொழி களுக்கெல்லாம் ஏற்றத்தாழ்வின்றிப் பொதுவுரிமையிருந்தால் பிரியும் உணர்வுக்கோ, ஆதிக்க வுணர்வுக்கோ, அடிமை யுணர்வுக்கோ இடம் எங்கே? தலையான இடத்தில் ஒத்த உரிமைகள் இருந்துவிட்டால், துணிவாக நம்புங்கள்! இந்தியாவின் ஒருமை ஞாயிறு திங்கள் உள்ளளவும் ஒருமையேயாம். ஒருமையுணர் வார் இவ்வுண்மையை உணர்வார். 14 மொழிகளையும் பொது மொழிகளாகக்கொள்ளும் தத்துவம்சரி; அனைத்தையும் வைத்து ஆட்சி நடத்த இயலுமா? சொல்வது எளிது, சொல்லிய வண்ணம் செய்வது எளிதா என்று பலர் கேட்பர், கேட்கின்றனர். ஒன்று சொல்லுங்கள்; உரிமைச் சிக்கல் பெரிதா? ஆட்சிச் சிக்கல் பெரிதா? ஆட்சி எளிமைக்காக உரிமையை மறுக்க முடியுமா? ஆட்சி முறைகள் அனுபவம் ஆக ஆக எளிமையாகும். வயது வந்தோர்க்கெல்லாம் வாக்குரிமை வழங்கினோம். பெண்டிர்களுக்கும் ஒத்த வாக்கு அளித்தோம். முன்னேறிய நாடுகளிற்கூட இத்தகைய வாக்குரிமைப் பெருக்கம் இல்லை. 21 கோடி 30 இலட்ச மக்கள் சென்ற தேர்தலில் வாக்குப் பதிவு செய்துள்ளனர். இவையெல்லாம் எளிய காரியமா? எளிய செலவா? முதலில் நடத்திய பொதுத் தேர்வில் பல சிரமப் பட்டோம். வர வரச் சிந்தித்தோம். இன்னும் சிந்திக்கின்றோம். ஒரே நாளில் முடிவுகளைத் தெரிவிக்கும் அளவுக்கு வழிகள் காண்கின்றோம். எல்லாக் கட்சிகளையும் கலந்து நேரிய விதிகளைக் கண்டு பிடிக்கின்றோம். ஏன் இவ்வளவு பாடுபடு கின்றோம்? மக்கள் உரிமைக்காக. ஒரு மொழியாட்சிதான் எளிது, பன்மொழியாட்சி எளிதன்று (என்று கொண்டாலும்) என்பதற்காக 13 மொழிகளின் உரிமையை விடும்படி கேட்கலாமா? 31 கோடி மக்களை மொழித் தியாகம் செய்யும்படி சொல்லலாமா? உரிமைக்குத் திட்டம், உள்ள இயல்புக்குத் திட்டமே தவிர, எளிமைக்கா திட்டம்? இமயமுதற் குமரிவரை மக்கள் தொகை 10 கோடியாக இருந்தால் நல்லதுதான், மிகச் செழிப்புத்தான், தலைவருமானம் உயருந்தான். இவை யெல்லாம் கற்பனைதான். இந்தியாவின் மக்கள் தொகை 44 கோடி என்ற உள்ளதை வைத்துக்கொண்டு, திட்டம் இட்டு இட்டு, நன்மையும் செழுமையும் வருவாயும் பெருகச் செய்ய வேண்டுமேயன்றி 44 கோடிமக்கள் பிறந்துவிட்டார்களே? நல்லதிட்டம் காண்பதற்கு இவர்கள் தொகை கோடி கோடி குறையக் கூடாதா? என்று கருதலாமா? 14 மொழிகள் இயல்பின என்று கருதி உள்ளனவெல்லாம் வாடாமல் வளர்ந்து வாழ வழி பார்ப்பதா? ஆட்சி எளிமை என்ற பெயரால், ஒரு பொதுமொழி வைத்து ஏனையவெல்லாம் தாமே ஒடுங்கிக் குறைய வழிபார்ப்பதா? முதலிலிருந்தே ஆட்சி எளிமை நோக்கமாயின், உலகமுழுதும் பரந்த ஆங்கிலத்தைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வது இன்னும் எளிமை யில்லையா? என்று சிலர் கேட்பதில் அப்புறம் தவறு என்ன? ஆட்சி எளிமை நம்குறிக்கோளன்று. குடியரசு என்ற முறையை என்று கொண்டோமோ, அன்று முதல் உரிமையே-எல்லார்க்கும் ஒத்த உரிமையே—நம் குறிக்கோள். இனி எழுதப் போவதைச் சிறப்பாகச் சிந்தியுங்கள்! மொழிப் பிரச்சினை என்பது உரிமைப் பிரச்சினை, மக்கள் பிரச்சினை. பதினான்கு மொழிகளையும் பொதுவாக்கிவிட்டால், மொழிப் பிரச் சினையை மக்கள் எண்ணத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். பலகோடி மக்கள் பிரச்சினை என்பது தீர்ந்துவிடுகின்றது. தேர்தல்தோறும் வழிவழி கட்சிப் பேச்சுக்கு இடமில்லாமல் அடங்கிவிடுகின்றது. அதன்பின் அலுவலகப் பிரச்சினையாக மாறுகின்றது, குறுகுகின்றது. மொழிச்சிக்கலைச் சிக்கலாக வைத்து நாட்டை அல்லற்படுத்துவதினும், கிளர்ச்சிக்கு இடம் வைப்பதினும், அனைத்தையும் பொதுமொழியாக்கி உரிமைச் சிக்கலை முதற்கண் ஒழிப்பீராக! ஒழித்தால், உரிமைச்சிக்கல் சிறிய அலுவற்சிக்கலாகமாறும். நாட்டுப் பிரச்சினை குறுகிய அலுவற்களப் பிரச்சினையாக மாறும். வினைக்களத்தார் வழிகண்டு கொள்வார்கள். கட்சிகளுக்கு மொழிபற்றிய சிந்தனையிராது. ஆங்கிலம் பொது மொழியாக நீடித்தால் இனறோ நாளையோ இந்தியர் எல்லாரும் போராடுவர், இந்தியொன்றே பொதுமொழியானால், முன்னோ பின்னோ இந்தி தவிர்ந்த மொழியாளர்கள் பாராளுமன்றத்தையும் தேர்தல்களையும் போராடப் பயன்படுத்துவர். பதினான்கு மொழிகளும் மத்திய ஆட்சிப் பொதுமொழிகளாயின், ஆனவன்றே போராட்ட வுணர்வு ஆழப்புதைப்ட்டுவிடும். தலைவர்களே, மொழிப்பிணி தீர்க்கும் மூலமருந்தைச்சொன்னேன், சொல்லிவிட்டேன். கற்றுத் தெளிந்து எதற்குச் சட்டம் வேண்டுமோ அதற்கு அதனைச் செய்யுங்கள். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 9 தலைவர்களுக்கு, வணக்கம். ஏழாவது கடிதத்திற்கூறியதை மீண்டும் வலியுறுத்து கின்றேன். இன்றியமையாத ஆங்கிலத்துக்குக் கல்வித் திட்டத்தில் இணையற்ற இடம் நல்குவோம்; நல்கி ஆங்கிலத் தின் பல பயன்களைப் பெறுவோம். போதும். ஒரு நாட்டின் நிலைபேற்றுக்கு அறிவு வளர்ச்சி மட்டும் போதாது; நாட்டுப் பற்றும் வேண்டும். அப்பற்றுக்கு நாட்டு மொழிகளே நல்ல வாயில்கள். “வடக்கில் இமயலை பாப்பா, தெற்கில் வாழுங்குமரிமுனை பாப்பா” என்ற மொழித் தொடர்கள் உயர்ந்த வீரத்தையும் ஆழ்ந்த அன்பினையும் அருளவில்லையா? நாடுமுழுதும் மக்களுக்கு அவரவர் தாய்மொழிவழியாக உரிமையுணர்வை ஊட்டியல்லவா விடுதலை பெற்றோம்? விடுதலை பெற்ற அன்றே விடுதலை தந்த மொழிகளையும் அரியணை ஏற்றியிருந்தால், ஒருமைப் பாடு பதினெட்டாண்டு கழித்தும் பேசுதற்கு இடம் ஏற்பட்டிராது. நாட்டுப் பற்றை ஊட்டும் மொழியில் ஒரு பற்று உண்டாகவேண்டும் என்றால், அம்மொழிக்கு நன்மதிப்பு வேண்டும். பற்றுக்கு ஒரு மொழி, பண்புக்கு ஒரு மொழி, அறிவுக்கு ஒரு மொழி, ஆட்சிக்கு ஒரு மொழி, வாழ்வுக்கு ஒரு மொழி என்று இருந்தால், நம் மொழியும் நலிந்து நாடும் நலியும். ஆதலின் உரிமை நாடு தன் மொழிகளை அனைத் துக்கும் உரிய வாயில்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும். உரிமை என்பது நாம் வாழப் பெற்ற உரிமை; நம்மொடு தொடர்புடையவெல்லாம் வளர்க்கப்பெற்ற உரிமை; எது தன் வளர்வுக்கு நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறதோ, நாம் எதனைப் போற்றக் கடமை பூண்டிருக்கின்றமோ, எதனைக் காவாவிட்டால் நமக்குப் பழிவருமோ அதனைச் செய்வது நம் உரிமை. இக்கடமைகளை ஆற்றுதற்கே உரிமை கேட்டோம், பெற்றோம். நன் மருந்துகள் செய்யும் நாடுகள் உண்டு; நுண்பொறிகள் காணும் நாடுகள் உண்டு; நல்லாடைகள் நெய்யும் நாடுகள் உண்டு, எவ்வளவோ நல்ல நல்ல பண்டங்கள் எங்கெங்கோ செய்யப்படுகின்றன, நன்கு செய்யப்பட்ட நாடுகளிலிருந்து நமக்கு வேண்டிய நுகர் பொருள்களை வாங்கிக் கொள்ள லாமே, சுங்கவரி விதித்தும் இறக்குமதித் தடைசெய்தும் வெளிநாட்டுச் சரக்குக்களின் வரவைக் குறைக்கின்றோம், தடுக்கின்றோம். ஏன்? நம் நாட்டகத்துத் தொழில் வளர வேண்டும், அத்தொழில்களை நம்மவர் பழகவேண்டும், தொழில் நுட்பம் நம்மனோர் பெறவேண்டும், தட்டுத்தடுமாறி முயன்று உழன்று நாம் முன்னேற வேண்டும், அதற்குத் தனி வாய்ப்பு அளிக்க வேண்டும். இது நம் வணிகக் கொள்கை. இதுதான் உரிமைக்கு அடையாளம். இது செய்யாத நாடு அடிமைக்கு அடையாளம். வளர்ந்து பரவியமொழி, எத்திசையும் செல்லும் மொழி, நாம் வளர்க்க வேண்டாத மொழி, முன்னரே இருந்த மொழி என்று ஆங்கிலத்துக்கு இனியும் தலைமை கொடுத்து வைத்துக்கொண்டால், நம் மொழிகள் சொந்த நாட்டிலே பரமொழிக்கு அடிமையாய், ஏழை மொழிகளாய், இரண்டாம் மூன்றாந்தர மொழிகளாய், வீட்டுப்படி கடக்கமாட்டாப் பாவைகளாய் எண்ணெய் வறண்ட குத்துவிளக்குப் போல இருக்கும். அம்மொழிகளைக் கற்றவர்கள் படிக்க வேண்டாத வற்றைப்படித்த ஏமாளிகளாக, இன்று போலவே (அவ) மதிக்கப்படுவர். ஆங்கிலம் இனியும் பொதுமொழியாயின், அதனைக் கற்ற பலரின் பற்றுக்கு உரிய நாடு இந்நாடாக இராது. பதினான்கு மொழியிருந்தும் பொதுமொழியாக அயன்மொழியைக் கொண்ட இந்நாட்டை முழுவுரிமை நாடாக உலகம் கருதாது. இனிமேலும் நம் மொழிகளைப் போற்றி நாட்டுப் பற்றினைப் பெருக்காவிடின், மீண்டும் அடிமை வாழ்வுக்கு இடங்கொடுத்ததாகும் என்று எச்சரிக்கின்றேன், வன்மையாக எச்சரிக்கின்றேன். பாரத அன்னை பதினான்கு மொழிப் பிள்ளைகளைப் பெற்றிருக்க, அப்பிள்ளைகளும் சொத்துரிமை காக்கத் துடிதுடிக்க, வேற்றுக் குழந்தையைத் தலைக் குழந்தையாகத் தத்தெடுத்துக் கொள்வது உண்டா? தாய் உடன்படுவாளா? உடன்படுபவள் தாயாவாளா? சொந்தச் சிறுவர்கட்கு உரிமை காக்கும் வயது வரவில்லையெனின், அதற்காக அதுவரை ஒருவரைப் பிள்ளை கூட்டமாட்டோம். காக்கும் வன்மை வரும்வரை, காக்கவல்ல ஒருவரைக் காப்பாளராக உடன் அமர்த்திக்கொள்வோம். இந்நிலைதான் வளரவேண்டிய நம்மொழிகளுக்கும் வளர்ந்த ஆங்கிலத்துக்கும் இனி இருக்க வேண்டிய உறவு. ஆங்கிலத்துக்கு நம் கல்வித் திட்டத்தில் நல்லிடம் அளித்து உறவினைப் போற்றிக் கொள்வோமாக! உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 10 தலைவர்களுக்கு, வணக்கம். ஐந்தாவது கடிதத்தில் பொதுமொழிக் கொள்கை ஏழு உள்ளன என்று எண்ணினோம். வடமொழிக் கொள்கை, வடநாட்டுத் தென்னாட்டுக் கொள்கை, நாற்றிசைக் கொள்கை என்ற மூன்றும் நடைமுறைக்கு வருதல் இல்லை என்று உடனே பார்த்துத் தள்ளினோம். நான்கு கடிதங்களாக ஆங்கிலத் தனிப் பொதுமொழிக் கொள்கை பற்றி விரிவாக ஆராய்ந்தோம். நம்மொழிகளின் வளர்ச்சிக்குத் துணையாக, உரிமை யுணர்வுக்கு ஊறுபடாமல் ஆங்கில மொழியைக் கல்வித் துறையில் ஒரு கட்டாய மொழியாகப் பல்லாண்டு போற்றிக் கொள்வோம் என்று ஓர் இணக்கமான வழியைக்கண்டோம். இனி நாம் ஆராயவேண்டிய கொள்கைகள் மூன்று; பின்வரும் இரண்டனை இப்போது ஆராய்ந்து முடிப்போம். 2. இந்தியும் ஆங்கிலமும் சமமான இரு பொது மொழிகளாக இருக்கவேண்டும். 3. இந்தியே இந்தியவரசின் தனிப் பொதுமொழி, தென்னாட்டு மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் துணைமொழியாக இருக்கலாம். இவ்விரு கொள்கைகளிலும் ஆங்கில மொழி இணையாகத் துணையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஏன்? யாருக்காகச் சேர்க்கப்பட்டது?ஆங்கிலம் இந்தியாவுக்குப் பொதுமொழியாகக் கூடாது எனின், இந்தியாவின் ஒரு பகுதிக்கு அது பொதுமெழி யாகலாமா? ஒரு பகுதியாயினும் பொதுமொழிப் பதவியை அதற்கு அளிக்கலாமா? அது அப்பகுதிப் பாரத மக்களின் உரிமையுணர்வுக்குப் பங்கம் செய்யாதோ? ஆங்கிலம் பாரதம் எங்கும் பொது மொழி யானால் வட்டார மொழிகள் வளரா எனின், ஒரு பகுதியில் அதனைப் பொதுமொழியாக்காது அப்பகுதியில் வழங்கும் இந்தி முதலான வட்டார மொழிகள் வளர இடங் கொடுப்பதும், இன்னொரு பகுதியில் அதனைப் பொது மொழியாக்கித் தமிழ் முதலான வட்டார மொழிகள் வளரவிடாது தடுப்பதும் நேர்மையாகுமா? இவ்வாறு சிந்திப்பதோடு இன்னும் சில சிந்தனை செய்யலாமே. அடிமையாக இருந்த காலத்து ஆங்கிலம் நாடு முழுவதும் இருந்தது. 1965 வரை கூட அம்மொழி நாடெங்கணும் இருந்தது. அங்ஙனம் இருந்த ஒரு மொழியை 1965க்குப்பின் தென்னாட்டு மக்கள் விரும்பும் வரை இணைப்பொதுமொழியாக வைத்துக்கொள்ளலாம் என அப்பகுதி மக்களுக்கு மட்டும் தனிச் சலுகை அளிப்பானேன்? அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலத்தோடு வடநாட்டு மக்களுக்கு இல்லாத தனித் தொடர்பு என்னவோ? அப்பகுதி மக்களுக்குத் தாய்மொழிகள் இல்லை கொல்? இவ்வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாக எண்ணும்போது, மொழிச் சிந்தனையில் தலைவர்களின் குறைபாடு புலனா கின்றது. பெருந் தலைவர்கள் தங்களை வட நாட்டுச் சார் பாளர்களாகவே கருதிவிட்டனர். நாடு முழுதும் மொழிபற்றி ஒரு முடிவு கூறுதற்குப் பின்வாங்கினர். தென்னாட்டவர்கள் ஆங்கிலம் பொது மொழியாக இருக்கவேண்டும் என்று கேட்டபோது, நேரு முதலிய பெருமக்கள் அங்ஙனம் கேட்வர்களை நோக்கி, “இந்தி வளர்வது போல உங்கள் மொழிகள் வளரவேண்டாமா? இந்தியாவில் ஒரு சில மொழிகளுக்கு ஆங்கிலத்தினின்றும் விடுதலை வழங்கி, ஒரு சில மொழிகளை ஆங்கிலத்தின் கீழாக்க விரும்பேன்” என்று நாடு முழுமைக்கும் ஒரு கொள்கை அறைந்திருக்க வேண்டும் ஏன் அறையவில்லை? ஆங்கிலம் வேண்டாம் எனின் தென்னாட்டு மக்களைத் திரிபுபடச் சில தலைவர்கள் தூண்டி விடுவார்கள் என்று கருதினர் போலும். அண்மையில் பரந்து கிளர்ந்த இந்தி எதிர்ப்பை ஒட்டி அடிகள் வினோபாவே 12-2-65இல் மூன்று திட்டம் மொழிந்தார். (1) மக்கள் வன்முறையைக் கையாளக்கூடாது. (2) ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற மக்கள்மேல் இந்தியைச் சுமத்தக் கூடாது. (3) இந்தி வேண்டும் மக்கள் மேல் ஆங்கிலத்தைச் சுமத்தக்கூடாது. முதற்றிட்டம் எவ்வகை யெழுச்சிக்கும் பொதுத் திட்டம், நாகரிகத் திட்டம். அதுவே முதற்கடிதத்தில் நாம் மொழிந்த குறிக்கோள்களில் முதலாவ தாகும். இன்முறையே எதற்கும் நாம் கையாள வேண்டும் நன்முறை. அம்முறை தழுவிச் செய்யும் கிளர்ச்சியே. ஆண்டு பலவாயினும், கொள்கை வெற்றிதரும். அடிகள் பாவே இந்தி வேண்டுவார் மேல் ஆங்கிலத் திணிப்புக்கூடாது என்கின்றாரே; ஏன்? அம்மக்கள் தம் மொழிதான் தமக்கு பொது மொழியாக ஆட்சி மொழியாக இருத்தல் வேண்டும் என்று விழைகின்றனர். ஆங்கிலம் இருப்பின் தம்மொழி தலைதூக்க முடியாது என்று அஞ்சுகின் றனர். அவர்கள் உணர்ச்சி சரி என்பது அடிகள் கருத்து. அவ்வுணர்ச்சியும் அக்கருத்தும நமக்கும் முற்றிலும் ஒக்கும். ஆனால் ஆங்கிலம் வேண்டும் மக்கள் மேல் இந்தியைத் திணிக்கக் கூடாது என்கின்றனரே அடிகள். இந்தியைத் திணிக்கக்கூடாது என்பது சரி. ஆங்கிலம் வேண்டும் மக்கள் என்பார் யார் கொல்? அவர்கள் நம் மக்கள்தானே. அன்ன வர்க்குச் சொந்தத் தாய்மொழிகள் உளவே. சொந்த மொழிகள் உடைய அம்மக்களுக்கு ஆங்கிலம் வேண்டும் என்பதே திணிப்பில்லையா? மொழிச் சிக்கல் தீர்வதும் தீர்ப்பதும் எங்கே சிக்கல், எங்கே திணிப்பு, எங்கே சுழி என்பதைக் கண்டு கொள்வதைப் பொறுத்தது. கண்டு கொள்ள யார் துடிக் கின்றனர்? பாவே அடிகள் கூறிய திட்டத்திலிருந்து அப் பெரியவரும் தம்மை இந்தி மக்களின் தலைவராகக் கருதிப் பேசுகின்றா ரேயன்றி, இந்திய மக்களின் தலைவராகக் கருதிக் கருத் துரைக்க வில்லை என்பது தெளிவாகின்றது. “இந்தி மக்கள் இந்தி பேச வேண்டுவது போல, ஏனைய மக்களும் தத்தம் மொழிகளையே வேண்டுதல் தகும்; ஆங்கிலம் நாட்டின் எம்மொழி மக்கள் மேலும் திணிக்கக் கூடாது” என்று காந்தியடிகள் மாணாக்கராகிய அடிகள் பாவே இனியாவது மொழிவார் என எதிர்ப்பார்போம். நாட்டுப்பற்றில் ஒருணர்வு உடைய நம் தலைவன்மார்கள் மொழிப் பற்றில் ஈருணர்வு உடையவர்களாக உளர். இந்தி மக்களுக்கும் இந்தித் தலைவர்களுக்கும் தம்மொழிப் பற்றில் வேறுபாடு இல்லை; தம் மொழியே தமக்குத் தலை மொழி என்ற ஊற்றத்தில் ஒன்றி விட்டனர். தென்னாட்டுத் தலைவர்களின் மனநிலை வேறு, இவர்கள் மக்களின் மொழியுணர்வோடு கலக்கவில்லை; அவர்களின் மொழி யுணர்வை வேண்டியவாறு வளர்க்கவும் இல்லை. தென்னாட்டு மொழிகளை இந்திக்கு ஒப்ப விடுதலை செய்து வளர்க்கும் அன்புத் துணிவு இத்தலைவர் களுக்கு வரவில்லை. தம் மொழிகளுக்குத் தலைமை கொடாமல், நாட்டொருமை சுட்டியும் ஆட்சியெளிமை சுட்டியும் வேலை வாய்ப்புச் சுட்டியும் இன்னொரு மொழிக்கே எக்காலத்தும் தலைமை வழங்கு அறியாநிலை இத்தலைவர்களிடம் வளர்ந்தோங்கி விட்டது. இந்தித் திணிப்பு என்று எதிரிடும் நாம் நம் மொழிமேல் நாமே ஆங்கிலத்தைத் திணித்துக் கொள்கின்றோமே என்று சிறிதாவது சிந்திக்கின்றோமா? தன்கை குத்திற்றென்று கண் கலங்காதிருக்குமா? தென்னக மொழிகள் வளராது சுருங்கியதற்குத் தென்னிந்தியத் தலைவர்களே பொறுப்பு. இவ்வாறு எதிர்கால வரலாறு பழிக்கும். பழிக்க இபபோதே இடங்கொடாதீர்கள். ஆங்கிலம் என்றால் இமயமுதற் குமரிவரை ஆங்கிலம்; தாய்மொழி என்றால் அவரவர் தாய்மொழி. இப்படி நிகராகப் பார்ப்பதே தலைவர்களுக்கு அழகு. பார்க்காத தலைவர்களைப் பார்க்க வைப்பதே தனிப் பெருந் தலைவர்களுக்கு அழகு. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 11 தலைவர்களுக்கு, வணக்கம். ஆங்கிலத்தை ஒரு துணைப் பொதுமொழியாகத் தென்னாட்டு இராச்சியங்கள் விரும்பும்வரை வைத்துக் கொள்வது பற்றியும் அதனைச் சட்டம் செய்வது பற்றியும் தலைவர்கள் மிகவும் மிகவும் ஆராய வேண்டும். நம் அரசியல் அமைப்பின் 1963 ஏப்பிரலில் விதித்த ஆட்சி மொழிச் சட்டப்படி, இந்தியே நாட்டின் தனிப் பொது மொழியாகும். ஆதலின் தென்னக மக்கள் விரும்பும்வரை, காலவரையறை யின்றி ஆங்கிலம் துணைப் பொதுமொழியாக இருக்கும் எனின், என்ன உட்கோள்? விரும்புவதை விட்டபோது, இந்திதானே வந்து ஆட்கொள்ளும். ஆங்கிலப் பொதுமொழி வேண்டும் என்பவர் நோக்கம் இந்தியை முற்றிலும் தடுத்தல். அந்நோக்கம் நிறைவேற வேண்டின், என்செய்வார்கள்? ஆங்கிலத்தையே என்றும் விரும்பிக் கொண்டிருப்பார்கள். அது இல்லாவிட்டால் இந்தி திணிக்கப் படும் என்று பரப்புவார்கள். இதனால் இந்திக்கு ஏதும் கெடுதல் இல்லை. அது தன்னிலப் பரப்பில் வேறொரு மொழி ஆதிக்கமின்றி ஒரு குழந்தையில்லம்போலச் செழிப்பு மிக்கு வளரும். மேலும் மத்திய மொழியாகி இந்தியப் பெருநிலத்திலும் ஒரு நாள் ஆளுங் குழந்தை என்று அதி காரத்தோடு வளர்க்கப்படும். சொல்வளம் துறைவளம் நூல் வளம் வினைவளம் முனைவளம் பெற்று நாளொரு விலைமேனியும் பொழுதொரு கலை வண்ணமும் கொண்டு இமயம் போல் ஓங்கிப் பரந்து வளரும். இந்தியின் தன் வளர்ச்சிக்கா ஆங்கிலம் வேண்டும் என்பவர்கள் முட்டுக்கட்டை அடுக்குகின்றார்கள்? இந்தி வளர்வதைத் தடுத்தாலன்றோ அவர்கள் எண்ணம் ஈடேறும். அதனைத் தடுக்கவும் வேண்டாம்; தடுக்கவும் அன்னவரால் இயலாது, அதனால் தென்னாட்டு மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று சட்டம் செய்யின், அச்சட்டத்தைப் பற்றி நின்று இந்திமேல் அச்சத்தால் என்றும் ஆங்கிலம் தென்னாட்டில் நீடிப்பதற்கு உரிய வாய்ப்பையே தேடுவார்கள். இந்திநாடு முழுதும் பொதுமொழியாதலும் இல்லை, ஆங்கிலம் துணை மொழியாய்த் தென்னாட்டைவிட்டுப் போதலும் இல்லை என்ற அரைகுறை நிலை பாரத நாட்டில் அமைந்துவிடும். தலைவர்களே! நாட்டின் வடபகுதி இந்தியாய் நாட்டின் தென்பகுதி ஆங்கிலமாய் இருந்தால், அரசியற் சூழ்நிலைகள் எப்படி உருவாகும் என்று நினைத்துப் பாருங்கள். வெளிப்படையாகச் சிறிது விளம்பினால், இந்திப்பகுதி ஒரு வல்லரசைச் சாரும், ஆங்கிலப்பகுதி இன்னொரு வல்லரசை நாடும். இப்பிரிவு பொருளாதாரக்கோடாக, நாகரிகக் கோடாக, சிந்தனைக் கோடாக, தேர்தற்கொள்கைக் கோடாக, பாரதத்தை இருபாரதம் ஆக்கும் என அஞ்சுகின்றேன், நனி அஞ்சுகின்றேன். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழிலன்றோ? அச்சம் தவிர நாம் துணிவாக யாது செய்ய வேண்டும்? செய்ததைப் பன்னிப் பின்னிச் சொல்லிக் கொண்டிருப்பது பலனில்லை, நலனில்லை, எதிர்கால ஞானமில்லை. இந்திக்கு அஞ்சி ஆங்கிலப் பக்கம் சாய்கின்றார்கள்; ஆங்கிலச் சாய்வினால் இருவேறு பிரிவுபடும் என்று நாம் அஞ்சுகின் றோம். பிரிவச்சத்தைத் தவிர்க்க ஆங்கிலச் சார்பைத் தடுக்க வேண்டும். அச்சார்பைத் தடுக்க இந்திக்கு அஞ்சுவதைத் தடுக்க வேண்டும். அவ்வச்சத்தைத் தடுக்க இந்தி நாடு முழுவதும் ஒரே பொதுமொழியாவதைத் தடுக்க வேண்டும். அதனைத் தடுத்துப் பதினான்கு மொழிகளுக்கும் பொதுமொழிப் பதவி அளிக்க வேண்டும். இதுவே காரண காரியமுறை. இந்தியல்லா இராச்சியங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் பொதுமொழியாக நீடிக்கும் என்று ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்யாதிருப்பார்களா? அத்திருத்தம் செய்தற்கு வேண்டாதபடி, அனைத்துக்கும் மூலமான அரசியல் வீதியில் இந்தி ஒன்றே பொது மொழி என்பதற்குப் பதிலாக எட்டாவது அட்டவணையில் எண்ணப்பட்ட பாரத மொழிகள் பதினான்கும் பொது மொழிகளாம் என்று திருத்தஞ் செய்வார்களா? இம் மூலத்திருத்தமே நாட்டின் பல நன்மைகளுக்கு ஏற்ற மூலச்சட்டமாகும். அதனை இப்போதே செய்து விடுதல் எவ்வளவு எவ்வளவோ நல்லது. காந்திப் பெருமகன் இன்று இருந்தால்..................... உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 12 தலைவர்களுக்கு, வணக்கம். ஆங்கிலம் இருக்கட்டும், அதற்குக் கல்வித்துறையில் நல்லிடம் இருக்கட்டும். இந்தி இருக்கட்டும், அதுபொது மொழிகளுள் ஒன்றாக இருக்கட்டும், அதுபொது மொழி களுள் ஒன்றாக இருக்கட்டும், ஏனைய மொழிகள் இருக்கட்டும். அவை இந்திக்கு நிகராக இருக்கட்டும். எல்லாம் தமக்குரிய நிலைகளில் இருக்கட்டும். இதுவே நாம் கூறும் நல்லுரை. பொதுமொழிக் கொள்கை ஏழனுள் இதுவரை ஆறுபற்றி ஆராய்தோம். இனி ஆராய எஞ்சி நிற்பது ஒன்றே. அதுதான் பதினான்கு மொழிகளும் பொது மொழிப் பதவி பெற வேண்டும் என்பது. இது குறித்து முன் கடிதங்களில் இடையிடை சில படித்திருக்கின்றோம். இக்கொள்கையே எல்லா வகையாலும் தக்க கொள்கை என்பதற்கு இதுகாறும் சொல்லிய குறிப்புக்கள் அவ்வளவு போதா, மனந் தொடா. ஆதலின் சில நாடுகளின் நிலைகளையும் மொழிப் புள்ளிகளையும் ஒப்பிட்டுக் காண்போம். அப்போதுதான் இனவோட்டங்களும் மனவோட்டங்களும் எப்படிச் செல்லும் என்பது புலனாகும். நம் பாரத நாடு பழம் பெருநாடு. 1700 கல் அகலமும் 2000 கல் நீளமும் 13 இலட்சச் சதுரக்கற் பரப்பும் உடையது. 544 கிளை மொழிகளும் 179 தலை மொழிகளும் வழங்குவது. இவற்றைப் பேசும் 44 கோடி மக்களைப் பெற்றது. நம் பலமொழிகள் சொந்த எழுத்து வடிவம் உடையவை. சொந்த இலக்கிய வரலாறு பெற்றவை. வீரம்பெற்ற புகழ் மறவர்களையும் காலம் வென்ற இலக்கியப் புலவர்களையும் படைத்தவை. “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு” என்று தொல்காப்பியப் பாயிரம் மொழிந்த படி, ஒவ்வொரு மொழியும் தனக்கென்ற பரந்த தனிநிலமும் தன்னை வழங்கும் கோடிக்கு மேலான தாய்மொழி மக்களையும் சாலப்பெற்றவை. ஆங்கிலம் செருமனி முதலான மொழிகள் தோற்றரவு பெறுவதற்கு முன்னரே தோன்றி வழங்கி இலக்கியத் தடம் கண்டவை. பன்னூறாண்டுகள் தம் எல்லைக்குள் முடி தரித்து அரசோச்சி ஆட்சிமொழிகளாக வீறு சான்றவை. உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பின், இந்தியா பரப்பளவில் ரசியா நீங்கிய ஐரோப்பாவுக்குச் சமம், இப் பரப்பளவிற்குள் ஐரோப்பாவில் 35 தனியுரிமை நாடுகள் உள்ளன. மக்கள் தொகையளவில் நோக்கின் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ரசியா, சீனப் பார்மோசா என்ற ஐந்து வல்லரசுகளின் மக்கள் தொகையைக் கூட்டினால் எவ்வளவு அவ்வளவு நம் தொகை. இன்ன பழம் பெரும் பாரதத்தை 16 இராச்சியங்களா கவும் 9 மேற்பார்வைக் குறுநிலங்களாகவும் பகுத்துள்ளோம். இராச்சியங்களின் பரப்புக்கள் பின்வருமாறு: அ. இந்திய இராச்சியங்கள் பெயர் சதுரப் பரப்பு 1. மத்தியப்பிரதேசம் 171,201 2. இராசத்தான் 131,943 3. மகாராட்டிரம் 118,883 4. உத்திரப்பிரதேசம் 113,454 5. ஆந்திரம் 106,052 6. காசுமீரம் 84,471 7. மைசூர் 74,861 8. குசரத்து 72,154 9. பீகார் 67,196 10. ஒரிசா 60,136 11. தமிழ்நாடு 50,132 12. அசாம் 47,089 13. பஞ்சாபு 46,376 14. மேற்கு வங்காளம் 33,928 15. கேரளம் 14,991 16. நாகநாடு 6,331 ஆ. சில நாடுகளின் பரப்பளவு பெயர் சதுரப் பரப்பு 1. பிரிட்டன் 93,000 2. இத்தாலி 131,000 3. சுவிச்சர்லாந்து 15,950 4. போர்ச்சுகல் 34,500 5. செக்கோசுலோவேகியா 50,000 6. மேற்குச் செருமனி 95,700 7. கிழக்குச் செருமனி 41,400 8. டென்மார்க்கு 16,600 9. பெல்சியம் 11,775 10. கிரீசு 51,000 11. கியூபா 44,000 12. அல்பேனியா 10,629 13. சீனா (பார்மோசா) 13,886 14. இலங்கை 25,000 15. இசுரேல் 8,000 16. லெபனான் 4,300 நம் நாட்டின் 16 இராச்சியங்களில் ஐந்து ஒரு லட்சம் சதுரக்கற் பரப்புக்கு மேற்பட்டவை. ஆறு 50000 சதுரக்கற்கு மிகயாய பரப்பின. மூன்று 30000 சதுரக்கற்கு மிஞ்சியவை. இவ்வளவு பெரிய நிலங்கள் இராச்சியங்கள் என்னும் சிறு பெயர் பெற்று ஒரு நாட்டிற்குள் அடங்கியுள்ளன. குறிப்பாக, 16 அயல் நாடுகளின் பரப்பை மேலே தந்துள்ளேன். பிரிட்டன் நம் ஆந்திரத்தினும், இத்தாலி நம் இராசத்தானினும், பெல்சியம் நம் கேரளத்தினும், கியூபா நம் பஞ்சாபினும், லெபனான் நம் நாக நாட்டினும் அளவிற் குறந்தவை ஐ.நா. வில் 114 நாடுகள் சேர்ந்துள்ளன. இவற்றில் சில நாடுகளின் பரப்போ நம் மாவட்டங்களினும் குறுகியவை. நம் குறுநிலங்களான இமாசலப் பிரதேசம் (10904) அந்தமான் தீவுகள் (3215) திரிபுரா (4116) மணிப்பூர் (8628) முதலியன கூட ஐ.நா.வில் தனிஇடம் பெற்றுள்ள சில நாடுகளிலும் பெரியவை. நம் அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் எண்ணிய பதினான்கு மொழிகளைப் பேசுவோரின் தொகையும், அட்டவணையில் சேராத சில மொழிகளைப் பேசுவோரின் தொகையும் பின் வருவன. இ. 14 இந்திய மொழிகள் பேசுவோர் தொகை கோ. இல 1. இந்தி 13.34 2. தெலுங்கு 3.77 3. வங்காளம் 3.39 4. மராத்தி 3.33 5. தமிழ் 3.01 6. உருது 2.33 7. குசரத்தி 2.03 8. கன்னடம் 1.74 9. மலையாளம் 1.70 10. ஒரியா 1.57 11. பஞ்சாபி 1.10 12. அசாமி 0.68 13. காசுமீர் 0.20 14. வடமொழி ............ ஈ. அட்டவணையில் சேராத இந்திய மொழிகள் பேசுவோர் தொகை கோ. இல 1. பீகாரி 1.68 2. இராசத்தாளி 1.50 3. சாந்தலி 0.32 4. பிசிலி 0.24 5. கோண்டி 0.15 6. சிந்தி 0.24 7. கொங்கணி 0.14 8. ஒரோவான் 0.11 9. குமணி 0.10 10. நேபாலி 0.10 11. பகரி 0.10 உ. சில உலக மொழிகள் பேசுவோர் தொகை கோ. இல 1. செக்கு 1.00 2. டேனியம் 0.50 3. பருமியம் 1.50 4. கிரேக்கம் 0.80 5. போலிசு 3.30 6. சிங்களம் 0.80 7. துருக்கி 2.60 8. சுவீடிசு 0.90 9. ருமேனியம் 1.70 10. அங்கேரியம் 1.30 11. சுலோவேக்கு 0.40 12. அல்பேனியம் 0.20 ஞாலத்து வழங்கும் மொழிகள் மூவாயிரத்துக்கு மேல் என்ப. அவற்றுள் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோர் பேசும் மொழிகள் 140 என்று கணக்கிடுவர். நம் நாட்டில் எழுநூற்றுக்குக் கூடுதலான மொழிகள் இருந்தும் கழித்துக் கழித்து 14 மொழிகளையே அட்டவணைப் படுத்தி யிருக்கின்றோம். பத்து இலட்சத்துக்கு மேலோர் வழங்கும் 11 மொழிகளைக் கூடக கணக்கிற் சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்ப்பின் 25 மொழிகள் தேசிய மொழிகளாகி விடும். குறிப்பாக, சில அயல் மொழிகள் பேசுவோர் தொகையை மேலே கண்டீர்கள். எவ்வளவு குறுந்தொகை! அவையெல்லாம் நாடாள் மொழிகளாய்க் கல்வி மொழிகளாய், உரிமை மொழிகளாய் இலங்குகின்றன. இப்பட்டியற் புள்ளிகளைக் கருத்திற் கொண்டு நம் மொழிச் சிக்கலையும் மொழியுரிமை வேட்கையையும் உலகவுணர்வோடும் மனிதவுணர்வோடும் சிந்திக்க வேண்டும். வருங்கடிதங்களில் அன்ன சிந்தனை செய்வோம். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 13 தலைவர்களுக்கு, வணக்கம். ஒரு நாட்டில் எவை மாறுவன, எவை மாறாதன, எவை மாறக் கூடாதன என்ற பகுத்தறிவோடு முடிவுகள் காண வேண்டும். நாட்டைக் கவிஞன் படைத்த இலக்கிய உலகம்போலக் கற்பித்துக்கொண்டு கனவுத் திட்டங்கள் போடுவது நனவாகாது. மனித இனமெல்லாம் ஒரே நிறமாக ஒரே உயர அகலமாக, ஒரே மதமாக, ஒரே பண்பாக இருந்தால்; உலகம் ஒரு நாடாக, ஒரு குடைக்கீழாக, ஒரு அரசாக, ஒரு தலைவன் மேலாக, ஒரு முதலமைச்சன் துணையாக, எல்லா மக்களும் ஒரு நாட்டுக் குடியாக, ஒரு நாணய வழக்காக இருந்தால்; உலகத்தில் ஒரு மொழி ஓர் எழுத்து ஒரு கல்வித்துறை ஒரு பாடநூல் என இருந்தால் நூல் பிடித்தாற் போலச் சிந்தனைக்கு எளிமைதான்; திட்டத்துக்கு நயந்தான். நம் பாரதநாடு நாற்புறமும் பெருங்கடல் சூழ்ந்திருந்தால், வெப்பம் இல்லாத குளிர் நிலமாக இருந்தால், மக்கள் தொகை 10 கோடியளவாக இருந்தால், அப்பத்துக்கோடியும் ஒரு மொழி பேசினால், ஒரு மதமாக, ஓரினமாக இருந்துவிடின் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்று தான். இப்படி இருந்தால் நல்லது, அப்படி இருந்தால் நல்லது என்று ‘ஆல்’ நடையிடுவது உலக நடை ஆகாது. மதம் ஒன்று, மொழியொன்று, வேதம் ஒன்று பழக்க வழக்கம் ஒன்று என ஒன்றாக இருந்தால் ஒருமை ஒற்றுமை ஓங்கிவிடும் என்பது அநுபவ உண்மையன்று. மதம், வேதம், மொழி, பழக்கம் என அனைத்துமே ஒன்றாக இருக்கும் இனம் அடிக்கடி அடித்துக் கொண்ட அயராப்போர்களை வரலாறு காட்டவில்லையா? “உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா” என்பது ஒரு முது மொழி. ஒருமை வேண்டி ஒன்றை இரண்டாக்க வேண்டா; பன்மையை ஒன்றாக்க வேண்டா. உள்ள நிலை போற்றியே ஒருமைநிலை வளர்க்க முயலவேண்டும். பாரத நாடு பன்மை நாடு. மதப்பன்மை, இனப்பன்மை, மொழிப்பன்மை, எழுத்துப் பன்மை, இலக்கியப்பன்மை என்ற பன்மைச் செல்வம் வாய்ந்தது பாரதம். பன்மையில் ஒருமை, வேற்றுமையில் ஒற்றுமை வளர்ப்பதே நம் கடமை. ஒருமை வளர்ப்பதுவே நம் நோக்க மன்றி, மாவுருட்டினாற்போல் ஒன்றாக்குதல் நம் நோக்கமன்று. நோக்கமாயின், பெரும் பெருந்தவறாகும். இந்தியப் பன்மையை அழித்துவிட முடியாது. ஏன்? அப்பன்மை வேறுபாடுகள் அண்மையில் தோன்றியவையல்ல. நம் மொழிகள் பன்னூறாண்டுகளாக இந்நிலத்தெடு பிறந்து நீள வளர்ந்து இலக்கிய இலக்கணம் நிறைந்து வரலாறு பெற்று அறமும் மறமும் வீறும் கொண்டு மக்கள் நெஞ்சிற் பாய்ந்து பதிந்தவை. இப்பன்மொழியுணர்வை உண்மையாக மதித்துப் போற்றி வளருமாறு வளர்த்தால், நாட்டொருமை சிறுமையின்றி வளரும். எவ்வகைக் கொள்கையும் மொழிவாயி லின்றிப் பரவாது. தாய்மொழியே நல்வாயில். பலகோடி மக்கள் வாழும் இப்பரந்த நாட்டுக்குப் பதினான்கு மொழிகள் கூடுதல் அல்ல. அடிக்கடி மொழிகள் மிகுதி, மொழிகள் மிகுதி என்று ஒரு குறைவு படுமாறு பேசுதல் அழகாகாது. மொழிச் செல்வங்களை நிகரற்ற பொருளாதாரச் செல்வங்களாகவே கொள்ளவேண்டும். நம் நாட்டின் பன்மைத் தன்மையை உணர்ந்து சிக்கலற்ற சில முறைகளை வகுத்துத்தான் இருக்கிறோம். சிறுபான்மைக் குடிகளையும் சமமாகப் போற்றி மதிக்கும் அரசே குடியரசு என்பது. பாரதத்தில் பல மதங்கள் உள. இந்துமதம் 84.79 முகமதியம் 9.93 கிறித்துவம் 2.40 சீக்கியம் 1.74 சைனம் 0.45 பௌத்தம் 0.06 பிற மதத்தார் 7 கோடி 15 விழுக்காடே. இந்துக்கள் 37 கோடி 85 விழுக்காடு இருந்தும், இந்திய நாட்டில் இந்து சமயத்தை அரசு மதமாக்கவில்லை. அறிவியல் சான்ற மேலைநாட்டரசுகள் கூட அரசு மதம் என்று ஒரு மதத்தைச் சட்டமாக்கியிருக்க, நிகரற்ற தனிப்பெரும்பான்மை இருந்தும், 15 விழுக்காடு உடைய சிறுபான்மையினர் உரிமை பாதித்தாக எண்ணி விடக்கூடாதே என்று அஞ்சி, சமயச்சார்பற்ற அரசாகச் சட்டம் இயற்றிக் கொண்டோம், முசுலீம்கள் மிகுதியாக இருந்த இராச்சியங்கள் பாகித்தானாகப் பிரிந்து ஒரு நாடாயின. பிரிந்தபின் இந்தியாவில் உள்ள எல்லா இராச்சியங்களிலும் இந்துக்களே பெரும்பான்மை. பிரிந்த பாகித்தான் முகமதியத்தை அரசு மதமாக்கியது. பிறையை அரசக் குறியாக்கியது. அண்மையில் இவ்வளவு நிகழ்ந்திருத் தலின், நாம் இந்து மதத்தை அரச மதமாகவும், ஓர் இந்துச் சின்னத்தை அரசக்குறியாகவும் மேற்கொண்டிருந்தால், உலகம் ஒன்றும் கூறிவிட முடியாது. நம் தலைவர்கள் அடிப் படையுரிமையில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற அளவுகோலைக் கொண்டவர்கள் இல்லை. சமவுரிமை உடையோம் என்ற மன உணர்வே நல்ல குடியரசுக்கு இலக்கணம் என்று கண்டவர்கள். அதனாலன்றோ பௌத்தப் பேரரசனாகிய அசோகனது அறவாழியை அரசின் குறியாகவிதித்தனர். சமயச்சார்பற்ற அரசியல் தத்துவத்தை மேற்கொண்ட நம்பாரதம் 14 மொழிகள் வழங்கும் இந்நாட்டில் ஒரு மொழியைப் பொதுமொழியாகத் தேர்ந்துகொண்டது அரசியல் வழு என்பது என் கருத்து. மத்தியவரசு சமயத் துறையிற்போல மொழித்துறையிலும் ஒரு மொழிச் சார் பின்மையைத் தழுவவேண்டும். 85 விழுக்காடு இருந்தும் இந்து மதத்தை அரசுச்சமயமாக விதிக்காத பாரதம் 37 விழுக்காடு உடைய இந்தியைப் பொது மொழியாக்குவது எவ்வகையிற் பொருந்தும்? 15 விகிதச் சிறுபான்மையினரைச் சமயத்துறையில் மதித்துப் பொதுமை பேணிய அரசு 63 விகிதப் பெரும்பான்மையினரை மொழித்துறையில் மதியாமை குடியரசுத் தத்துவத்துக்கு ஒரு முரண் இல்லையா? நம் நாட்டில் சமயப்பூசல்கள் இல்லை. அதற்குக் காரணம் அரசின் சமயச்சார்பின்மை. மொழிப்பூசல்களும் இந்நாட்டில் இல்லாதிருக்க வேண்டின், மொழிச் சார்பின்மையே நேர்வழி. சிறுபான்மை பெரும்பான்மை என்று மொழிக் கணக்குப் போடுவது கடைபோகாது. எது சிறுபான்மை? எது பெரும்பான்மை? இதற்கு அளவுகோல் என்ன? 80 கோடிச் சீனத்தொகையை நோக்கி, 44 கோடி இந்தியத் தொகையைச் சிறுபான்மை என்று கூறுவதா? 44 கோடி நம்தொகையைக் கருதி 21 கோடி ரசியர்களைச் சிறுபான்மையினர் என்பதா? எக்கோடி சிறுபான்மை, எக்கோடி பெரும்பான்மை? ஐ.நா. உறுப்புநாடுகளின் அளவை முன் கடிதத்திற் கண்டோம். எல்லாம் ஐ.நா. பேரவையில் ஒத்த வாக்குரிமையுடையன. சிறுபான்மை என்பது எது? பெரும்பான்மையைச் சார்ந்தாலன்றி வாழ முடியாதது எதுவோ அதுதான் சிறுபான்மை. தனக்கென ஓர் பரப்பான நிலமும் ஆற்றலான மொழியும் அளவான மக்கள் தொகையும் இல்லாதது எதுவோ அதுதான் சிறுபான்மை. இந்தி பேசுவோர் 13 கோடியர் என்பதற்காக, இருகோடி, முக்கோடி நாற்கோடி பேசும் மொழியினர் சிறுபாலர் ஆவாரா? வங்காளமோ, தெலுங்கோ, தமிழோ தனித்து வாழ இயலாத சிறுபான்மை மொழிகளா? சிறுகூட்டத்தார் மொழிகளா? சிறுநில மொழிகளா? எவ்வளவு சில இலட்ச மொழிகள் அரசுப் பொதுமொழிகளாய் உள்ளன என்று பன்னிரண்டாவது கடிதத்தில் படித்தோம். நூற்றுக்கணக்கான மொழிகள் இந்தியாவில் இருந்தும் 14 மொழிகளைத் தானே தேர்ந்தெடுத்து அட்டவணையாக் கினோம். ஏன் அங்ஙனம் செய்தோம்? அவைகளுக்குத் தனித்தன்மையுண்டு. தனித்து வளரும் ஆற்றல் உண்டு. போதுமான தொகையினர் உண்டு. தனிப்பான்மையுண்டு என்று தேர்ந்துகொண்ட பின் சிறுபான்மை பெரும்பான்மை என்று வழக்காடுதல் ஆதிக்க மனப்பான்மை என்றே பொருள்படும். இந்நிலையில் பல்வகையாலும் தன்னிறைவு பெற்ற செம்மொழிக்கெல்லாம் சமவாற்றல் வழங்காது, ஒரு மொழி மாத்திரம் பொதுமொழிப் பதவிபெறுதல் இந்திய நாட்டில் அவ்வொருமொழிக்கே, அம்மொழி பேசுவார்க்கே, அம்மொழி மயத்திற்கே, அம்மொழி ஆதிக்கத்திற்கே பாரத நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகும், நாட்டொற்றுமையில் நாட்ட முடைய அன்பர்கள் உண்மையாக இதனைச் செய்யார்கள். ஒரு மொழித் தனிச் செல்வாக்கிற்கு அறிந்தோ அறியாமலோ அரசு இடங்கொடுத்தலாகாது. உரிமைச்சமமே ஒருமைப்பாட்டுக்கு உயிராவது. அச்சமம் மொழிதோறும், மொழியினர் தோறும், நிலந்தோறும் பரவிக்கிடக்க வேண்டும். சமப்பரவல் இல்லாது ஆதிக்கம் ஓரிடத்துக்குவியின், அதிகாரம் குவியும், அதிகாரம் குவியின் நாட்டும் பொதுப்பற்றுக் குறையும், பற்றுக்குறையின் என்ன அறிவிருந்தும் என்ன பயன்? மீண்டும் மீண்டும் சொல்லு கின்றேன். உரிமைக்காற்றுப் புகாத இடத்தில் பாரதவுயிர் இராது. உரிமைக்காற்று அளவுக்கு விஞ்சிய இடத்தில் பாரதப்பற்று இராது. நீரோட்டமான பரந்த அன்பு யாண்டும் காண வேண்டுமாயின், உரிமை என்னும் காற்றோட்டத்தை, ஒரு சீராக, ஒரு சமனாக இமயமுதற் குமரிகாறும் தென்றல் போலப் பரவவிடுங்கள். அப்பரவல் மொழிச் சமம் இன்றி அமையாது என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 14 தலைவர்களுக்கு, வணக்கம். பதினான்கு மொழிகளுள் இந்தி ஒன்றையே பொது மொழியாக்க வேண்டும் என்று பல தலைவர்கள் மொழிகின்றனர், அதுவேதனிப் பொதுமொழியெனச் சட்டமும் இயற்றிவிட்டனர். இந்தி பொது மொழியாதற்கு என்ன தகுதியுண்டு? என்ன பேரிலக்கிய இலக்கணம் உண்டு? வளமுடைய மொழிகள் பல இருக்க வளம் சிறிதும் இல்லா ஒரு மொழியைப் பொது மொழியென உயர்த்தலாமா? என்று எதிர்ப்பு உரைக்கின்ற தலைவர்களும் உளர். இந்தி வேண்டும் என்போர் அது வளஞ்சான்ற தொன்மொழி என்று கூறு கின்றார்களா? மொழி வளத்தில் தமிழ் தெலுங்கு வங்காளம் மராத்தி கன்னடம் முதலிய மொழிகளினும் மிக்கோங்கியது என்று இயம்புகின்றார்களா? வளமற்ற மொழியாயினும் பொதுமொழியாக்கி வளமாக்கு வோம் என்பதுதான் வேண்டுநர்கருத்து. இந்தியை வளமற்றது என்று எதிர்க்குநர் நம் மொழிகளுள் வளமுற்ற ஒரு மொழியைப் பொது மொழியாக்கிக் கொள்ள உடன்படுவார்களா? “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” எனவும் “ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” எனவும், “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” எனவும் பாரதப் புலவன் பாரதி பாராட்டிய மொழி தமிழ். “உன் சீரிளமைத் திறம் வியந்த செயல் மறந்து வாழ்துதுமே” என்று பேராசிரியர் சுந்தரனார் வியந்தமொழி தமிழ். நம் பதினான்கு மொழிகளுள்ளும் தொன்மையதாய் இன்றும் வழக்குடைய மொழி தமிழ். மொழி முட்டறுத்த தொல்காப்பியமும் வழி முட்டறுத்த திருக்குறளும் உடைய மொழி தமிழ். எல்லாப் பெருமதங்கட்கும் காப்பியங் கண்ட மொழி தமிழ். இந்திய மொழிகளுள் கலைக்களஞ்சியம் தொகுத்த மொழி தமிழ். பாரத மொழிகளுள்ளே பல நாட்டிடைப் பரவிய உலக மொழி தமிழ். நிகரற்ற தனிச்சிறப்புக்கள் பெருகிய தமிழ் நல்வளம் சான்றதாயிற்றே. அதனை ஒரே பொதுமொழியாக இந்தியாவிற்கு மேற்கொள்ளலாமா? பிறமொழியாளர்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி எதிர்ப்பார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு வாழும் நான்கூட, அதுவொன்றே பாரதப் பொதுமொழியாதலை உடன்படமாட்டேன்; அதுவும் ஒரு பொது மொழியாதல் வேண்டும்; அதுபோல் உடன்பிறப்பனைய ஏனைப் பதின்மூன்றும் பொது மொழியாதல் வேண்டும் என்றுதானே வலியுறுத்துவேன். பதினான்கும் பொது ஆகாது, எதுவொன்று பொது வானாலும் மொழிச்சமனிலை, உரிமைச் சமனிலை கெடும், கெடும் என்று சுட்டுதற்கன்றோ இத்துணைக் கடிதங்களும் வரைகின்றேன். இந்தி எழுத்துக்குறை, சொற்குறை, இலக்கியக் குறை எனவாங்கு பல குறைபாடுகள் உடைய மொழி என்று சிலர் எதிர்த்து எடுத்துக்காட்டுகின்றனர். மொழிகளை ஒப்பிட்டுப் பார்ப்பின், மொழிதோறும் சிறப்புத் தன்மையும் குறைத் தன்மையும் வெளிப்படும். ஒப்பிட்டுப் பாரா நிலையில் சிறப்பும் வெளிப்படாது, குறைவும் வெளிப்படாது. ஒரு மொழியை எங்ஙனம் பார்க்க வேண்டுமெனின், அம்மொழி பேசும் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தற்குப் போதிய ஆற்றல் தங்கள் தாய்மொழிக்கு இல்லையே என்று வருந்துகின்றார்களா? என்று தாய்மொழியாளர் நிலையில் வைத்துக் காணவேண்டும். தன் வீட்டுணவு தன் வயிற்றுப் பசி தீர்க்கப் போதுமாப் போல, அவரவர் தாய்மொழியும் தம் கருத்தைப் புலப்படுத்தப் போதுமானதே. குறைகள் இருப்பின் களைவது தாய்மொழி யாளர் கடன். ஆதலின் ஒருமொழி குறைமொழி என்று ஏதிலார் ஏச்சுரைக்க வேண்டாம். குறைபாடு இல்லா மொழி ஒன்று சுட்டுங்கள். இந்தி நம்மொழிகளில் ஒன்று. அது நன்றாக வளரட்டும், வாழட்டும். இன்று வளரவில்லை என்பதற்காகவா அது பொதுமொழியாதல் கூடாது என்கின்றோம்? பின்னர் வானுற ஓங்கி வளம்பல பெறினும் இந்தி கூடாது என்றுதான் கூறுவோம். ஒரு தனி மொழியில் நமக்கு இனிப்பும் கசப்பும் இல்லை. பன்மொழி வழங்கும் பாரத நாட்டில் ஒரே ஒரு மொழிக்குப் பொது முடி அளித்தலாகாது. எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றது போல, அம்மன்னர்களின் மொழிக்கெல்லாம் முடியணி வேண்டும் என்பதுவே இக்கடிதங்களின் உள்ளோட்டம். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 15 தலைவர்களுக்கு, வணக்கம். இந்தியே பொதுமொழியாகல் வேண்டும் என்போர் விடாது கூறிவரும் ஒரே ஒரு காரணம் இந்தி பேசுநர் தொகை மிகுதி என்பதாகும். 44 கோடி மக்களில் 13 கோடியினர், அஃதாவது 37 விழுக்காட்டினர் இந்தியினர் என்று குடிக் கணக்குக் கூறுகின்றது. இத்தொகை ஒரு கட்டுக்கதை எனவும், இந்தி என்பது ஒரு தனிமொழியன்று, அது பல்வேறு மொழி எனவும், பஞ்சாபி, இராசத்தானி, பிலி, மேற்குப்பகரி, மத்தியப் பகரி, கிழக்கிந்தி, போசுபுரி, மாகதி, மைதிலி என்ற பல மொழிகளையெல்லாம் சேர்த்து வேண்டுமென்றே இந்திப் பெயர்ப்படுத்துகின்றனர் எனவும், இன்று பொதுமொழியாக்க எண்ணும் இந்தி தில்லி வட்டாரத்து ஒரு கோடியினர் பேசும் கரிபோலி என்னும் மிகச்சிறு மொழியே எனவும், ஒரு மாநிலத்தார் பேசும் இந்தி என்னும் மொழி மற்றொரு மாநிலத்தார்க்குப் புரிவதில்லை எனவும் எதிர்ப்பாளர் இந்தி பற்றிப் பல்வேறு குறிப்புக்களை வெளியிடுகின்றனர். இந்தி பேசுநர் 13 கோடி என்பது கட்டிய மிகை என்றாலும், ஏனை இந்திய மொழிகளை நோக்க, இந்தியினர் தொகை கூடுதல் என்பதனை ஒத்துக்கொள்ளலாம். தெலுங்கு பேசுவோர் 3கோடி 80 லட்சம். வங்காளம் பேசுநர் 3 கோடி 39 இலட்சம், தமிழ் பேசுபவர் 3 கோடி 1 இலட்சம். இந்தியினர் இன்னும் சில கோடிகள் கூடுதலாக இருக்கலாம். 13 கோடியர் என்றே வைத்துக் கொண்டாலும், இந்தியினர் மொழிப் பெரும்பான்மையினர் என்று கூற முடியுமா? 37 விழுக்காடு தானே இந்தி மொழியினர். 31 கோடி அஃதாவது 63 விழுக்காட்டினர் இந்தி மொழி யல்லாதவர் ஆயிற்றே. ஓரவையில் 44 உறுப்பினர்கள், அவருள் 13 ஒரு கட்சி. 31 பலகட்சி. இந்நிலையில் பதின்மூவர் ஒரு மந்திரி சபை அமைக்க முடியுமா? குடியரசில் தனிப்பெரும்பான்மையே காலாடும் போது, சிறு பெரும்பான்மைக்கு என்ன வாழ்வு உண்டு? கேரள அரசியலில் இந்நிலையாமையைத்தானே காண்கின்றோம், 37 விழுக்காடு உடைய இந்தியொன்றே பொதுமொழியானால் மத்திய அரசியல் கேரளமாகிவிடும் என்று அஞ்சுகின்றேன். பொதுமொழி வேண்டும் என்று எண்ணும்போது, நாட்டில் இந்திய மொழிகள் எங்ஙனம் பரவிக்கிடக்கின்றன என்ற அமைப்பைப் பார்க்கவேண்டும். பாரதம் பன்மொழி நாடு என்று கூறுங்கால், பன்மொழி நிலங்கள் கொண்ட கூட்டுநாடு என்பதுவே பொருள். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நிலப்பாகம் உண்டு. அப்பாகத்து அம்மொழி வழக்கே தனிப் பெரும்பான்மை. அதனாலன்றோ மொழிவாரி மாநிலப்பகுப்பு எளிதாயிற்று. விரல்கள் சேர்ந்த கைபோன்றது நம் நாட்டமைப்பு. தமிழ் நிலம் ஒரு தனிப்பகுதி, தெலுங்கு நிலம் ஒரு தனிப்பகுதி, இந்திநிலம் ஒரு தனிப்பகுதி என்றவாறு மொழிநிலங்கள் வரம்புபட்டுக் கிடக்கின்றன. இந்தி பேசுவோர் தொகை மிகுதி எனின் அத்தொகையினர் ஒரு திசையினர் என்பதை மறக்கலாகாது. இந்தியை நடு விரலுக்கு ஒப்பிடலாம். அதுவே கையாகி விடுமா? சுண்டு விரலும் பெருவிரலும் சிறியனவாயினும் கைக்கு இன்றியமையாத விரல்கள் அல்லவா? இந்தி நாடு முழுதும் பரவி வழங்கும் மொழியன்றாதலின், ஏனைய மொழிகள் போலவே ஒரு வட்டார மொழியாதலின், இந்தி பேசுநர் எண்ணிக்கை 13 கோடி கிடக்க 31 கோடியாக இருந்தாலுங்கூட அது வொன்றே பொதுமொழியாதல் நிலவமைப்புக்கு ஒத்துவராது; ஒருமைப்பாட்டுக்கும் உறுதி தராது. இதனையுணராது வட்டார மொழியான ஒரு திசை இந்தியை எத்திசைக்கும் பொதுமொழியாக்குவது இயல்பான மொழிநில ஒழுங்கைக் கலைத்துக் கெடுக்கும் சூழ்ச்சியாகவே கருதப்படும். ஆதலின் மொழிகளைக் கிடந்தாங்கு போற்றிப் பதினான்கையும் பாரதப் பொதுமொழி என ஏற்றலே செங்கோல் ஆகும். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 16 தலைவர்களுக்கு, வணக்கம். நாட்டின் ஒற்றுமைக்கு ஒரு மொழி தேவை தேவையை நிறைவு செய்யும் தகுதி இந்திக்கு உண்டு என்று பலர் கூறுவர். நல்லது. தலைவர்களே, நான் ஒன்று தங்களைக் கேட்கின்றேன், நாம் என்ன இப்போது ஒற்றுமை குறைந்திருக்கின்றோமா? எடுத்ததற்குகெல்லாம் ஒற்றுமை, ஒற்றுமை என்று மூச்சுவிடாது சொல்லும் தலைவர்களின் வாய்ப்பழக்கத்தைக் கண்டு வருந்துகிறேன். நம் உள்ளத்தில் என்றும் ஒற்றுமை ஓட்டமும் நாட்டமும் உண்டு என்பது சீனன் வரவால் உலகிற்குக் குன்றின்மேல் இட்ட குத்துவிளக்குபோல் அழகாக விளங்கி விட்டது. ஒரு சாராரிடை இருந்த பிரிவினையுணர்வு கூடச் சீனப் படையெடுப்புக்குப் பின் செத்துவிட்டது. எந்நாட்டிலும் சிலபல பிரச்சினைகள் இருக்கும். அதுவும் இந்தியாபோன்ற பெருநாட்டில், உரிமைப் புதுநாட்டில் ஓயாத தொல்லைகள் உள்ளும் புறமும் கிளம்பிக் கொண்டுதான் இருக்கும். குடியரசு நாட்டில் சிலர் கிளப்பிவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இவற்றை வாழ்வுப் போராட்டம் என்று கருத வேண்டுமேயன்றி, ஒற்றுமைக் கலைவு வேற்றுமை விளைவு என்று சொல்லித் திரிதல் தலைவர்களுக்கு வேண்டா. பிரச்சினைகளை நேரடியாகத் தெளிவாகத் துணிவாக எளிதாகச் சமமாகத் தீர்க்கப் பாருங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமைநீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்று விடுதலைப் பேராட்டத்தில் முழங்கிய பழைய அறவுரையைக் கண்டதற்கு எல்லாம் கழற வேண்டாம். நம் நாட்டில் வேண்டிய ஒற்றுமைக்குக் குறைவில்லை. இந்தியைப் பொதுமொழியாக்குவதால், ஒற்றுமை முன்னை யினும் கூடிவிடும் என்று எதிர்பார்க்கிறீர்களா? குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லையா? எப்போது அடிப்படை யுரிமையிற் கைவைக்கிறோமோ அப்போது நாட்டொற்று மையிற் கை வைப்பதாகப் பொருள். உரிமையிற் கை வையாத வரை ஒற்றுமைக்கு ஊனம் இல்லை. ஆங்கிலத்துக்குப் பொது மொழிப் பதவியளிப்பதால் உரிமையை இழக்கின்றோம். இந்தி ஒன்றைமட்டும் பொது மொழிப்படுத்துவதால் ஏனை மொழிகளின் உரிமையிற் கைவைக்கின்றோம். பதினான்கு மொழிகளையும் பொது மொழியாக்குவதால் உரிமையைக் காக்கின்றோம். ஒற்றுமைக் கட்டிடத்தை வலுப்படுத்து கின்றோம். இந்தி பொது மொழியானால் உள்ள நல்ல ஒற்றுமையும் கெடும் என்பதனை இப்போது தலைவர்கள் உணர்ந்து விட்டார்கள். எது ஒற்றுமை மிகுக்கும் என்று எண்ணினோமோ அதுவே வேற்றுமை செய்யுமாயின், விட்டுவிட வேண்டியது தான் என்ற அளவுக்குச் சிலர் தெளிந்துவிட்டனர். தெளிந்த வர்கள் பெருகுக. இது பாரத நாட்டின் நற்காலம். நீங்கள் நன்றாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒற்றுமை வேண்டும் என்று தலைவர்கள் பலமாகச் சொல்லிய இடங்கள் இரண்டே. ஒன்று சீனப்படைத்தாக்கம். தலைவர்களின் வேண்டுகோளை எதிர்நோக்காமலே “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே” என்றபடி, மக்கள் எல்லாம் பொன்னும் மணியும் உயிரும் ஈந்து எரிமலைபோல் பொங்கிப் புறம்போந்தனர். இது இயற்கை யொற்றுமை. ஒற்றுமை வேண்டிய மற்றோர் இடம் பொது மொழிப் பிரச்சினை. இப்பிரச்சினை வரும்போதெல்லாம் பாராளு மன்றத்தின் அகத்தும் புறத்தும் ஆரவாரங்கள் எழுகின்றன. 1949 இல் அரசியல் அமைப்பவையில் ஆட்சிமொழி மசோதா வரும்போது 300க்கு மேற்பட்ட திருத்தங்கள் வந்தன எனவும் இதற்குப்போல், காங்கிரசுக்குள்ளே வேறெதற்கும் எதிர்ப்பு இருந்ததில்லை எனவும், அவைத் தலைவர் தன்வாக்குரிமை ஒன்றை அளித்தே மசோதாவைச் சட்டமாக்க வேண்டிய இக்கட்டானநிலை ஏற்பட்டது எனவும் அறிகின்றோம். 1963 ஏப்பிரலில் மீண்டும் ஆட்சிமொழி மசோதா வந்தபோது இருந்த பன்முனை எதிர்ப்புக்கள் நாம் அறியாதவையல்ல. 1965 சனவரியில் தென்னகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்குப்பின் கூடிய பிப்பிரவரிப் பாராளுமன்றக் கூட்டத்தில் மொழிப் பிரச்சினை பற்றி உறுப்பினர்கள் வேகமாகவும் ஆர்வமாகவும் கொதிப்பாகவும் சொல்லாடியதை அறிவோம். மே வரை நடந்த பாராளுமன்றத்தில் மொழித் திருத்த மசோதா வரும் வரும் என்று தென்னகத்தார் ஆவலோடு எதிர்பார்த்தனர். கட்சு எல்லையில் பாகித்தானின் படை யெடுப்பைச் சுட்டிக்காட்டி மொழியுரிமைப் பிரச்சினையை இப்போது தள்ளிவைத்திருக்கின்றோம். இதிலிருந்தே எல்லைப் பிரச்சினைக்கு ஒரு நிகரான உள்நாட்டுப் பிரச்சினை மொழிப்பிரச்சினை என்பது விளங்கவில்லையா? இதனைத் தள்ளி வைக்கலாமே யன்றித் தடுக்க முடியாது. விரைவில் தீர்ப்பது மக்கள் உணர்ச்சிக்கு நல்லது; நாட்டுப் பற்றுக்கு நல்லது. நாட்டுப் பெருந்தலைவர் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தும் போதும், ஆளுநர்கள் மாநில மன்றங்களில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தும் போதும் படுகின்ற அவமதிப்புக்களை நாம் பாராதவர்கள் அல்லர். கூக்குரலிட்டும் இடை மடுத்தும் வெளிநடந்தும் வேறுபல செய்தும் மன்றத்தைத் தெருக்கூத்துப் போலச் சிறுமைப் படுத்துகின்றனர் சில மொழி வெறியினர். சீனா படையெடுத்த ஞான்று. தென்னகச் செய்தித்தாள்களில் மத்தியவரசே மொழிபற்றி ஒரு விளம்பரம் ஒரு நாளான்று, பன்னாள் செய்தது நினைவிருக்கும். தென்னாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இணை மொழியாக இருந்துவரும் என்பது அவ்விளம்பரம். ஏன் இந்த விளம்பரம் அரசு செய்ய வேண்டும்? இந்திமொழி காரணமாக எங்கே தென்னக மக்களின் ஒத்துழைப்பு சீன எதிர்ப்புக்குக் குறைந்துவிடுமோ என்ற அச்சமே அரசு விளம்பரத்தின் அடிப்படை. இங்ஙனம் வழிவழிக் குழப்பத்துக்கும் அவமதிப்புக்கும் அச்சத்துக்கும் ஏதுவான இந்தி பெரிய புதிய ஒற்றுமையைச் செய்துவிடும் என நினைப்பது பேதமைiயாகும். உள்ள நல்ல ஒருமைப்பாட்டைக் குலைத்துவிடல் ஆகாது. கனவுப் பொன் கருதி நனவுச் சோற்றை இழந்து விடலாகாது. ஒரு திசை இந்தி எத்திசையிலும் பரவுவது எப்பொழுது? எவ்வாறு? அதனைப் பரப்ப முடியுமா? பரவும் நாள் வரை உள்ள ஒற்றுமை உலையாது இருக்குமா? இந்தி மொழியா பொது என்று எண்ணும்போதே வேறுபட்ட உணர்வுகள் தோன்றுமாயின், அதனைக் கொண்டு ஒற்றுமைக்கு என்ன செய்ய ஒல்லும்? எல்லா மொழியிலும் விடுதலை யுணர்வு ஊட்டி உரிமை பெற்றோம். அங்ஙனமே எல்லா மொழிகளையும் பொது மொழிகளாக்கி உரிமை காப்போம். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 17 தலைவர்களுக்கு, வணக்கம். நம் மத்திய அரசு இந்தி பரப்புவதை ஒரு மதம் போலப் பின்பற்றுகின்றது. சமயச் சார்பற்ற அரசுக்கு இந்திச் சார்பு இவ்வளவு எதற்கு? மதமாற்றத்திற்கு இந்நாட்டில் இடமில்லை. ஆனால் மொழி மாற்றத்துக்கு அரசு வழிகோலுகின்றது. மத்திய அரசுக்கு வருவாய் எது? எல்லா மொழி மக்களின் வரிதான் வருமானம். அவ்வருமானத்திலிருந்து இந்தியைப் பரப்புதற்குக் கோடிகோடி செலவாகின்றது. எவ்வளவு செலவும் செய்யத் தயார் என்கின்றது மத்திய அரசு. இந்தியல்லா மாநிலங்களில் இந்தி நூல்கள் இனாமாக வழங்கப்படுகின்றன. இந்தியாசிரியர்கள் மத்தியவரசுப் பணத்திலிருந்து நியமிக்கப் படுகின்றனர். இந்தியல்லா மாநிலங்களில் இந்திமொழி படிக்கும் கல்லூரி மாணவர்கட்கு ரூபாய் 50, 75, 100 என்ற வகையில் மாதந்தோறும் சம்பளம் போல் உதவித் தொகைகள் அளிக்கப்படுகின்றன. இந்தி மாநிலங்களில் இந்தித் தாய் மொழி யல்லாதோர் இந்தி படிப்பார்களாயின் ரூபாய் 80, 105, 125 என்ற தரங்களில் மாதந்தோறும் உதவித் தொகைகள் வாரி இறைக்கப் படுகின்றன. உதவித் தொகையில் இவ்விரு வேறு பாட்டின் நுட்பம் என்னவோ? மாநிலங்களில் மத்திய அரசின் பொது அலுவலகங்கள் உள்ளனவே: அங்கெல்லாம் இந்தியாசிரியர்கள் உள்ளனர். தென்னிந்திய மொழியாளர்க்கு இந்தியில் பிரபோத்து என்றதேர்வும் மராத்தி குசரத்தி வங்காளம் முதலிய மொழியினர்க்கு பிரவீண் என்ற இந்தித் தேர்வும், பஞ்சாபி உருது முதலான மொழியவர்க்கு பிரக்கியா என்ற இந்தித் தேர்வும் மத்திய வரசால் நடைபெறுகின்றன. இவற்றுக்குப் பல அலுவலகங்களில் வகுப்புக்கள் நடக்கின்றன. வகுப்புக்களுக்கு வராமலும் தேர்வுகள் எழுதலாம். தேர்வுத் தகுதிகளுக்குச் சான்றிதழ் மட்டும் அன்று. பணமாகப் பரிசுகள் தரத்திற்கு ஏற்ப உண்டு. அவற்றோடு இத்தகுதிகள் தொழிற் பதிவேட்டில் குறித்துக் கொள்ளப்படும். இதனால் வேலையில் உயர்வு கிடைக்கும். நாட்டின் பல மாநிலங்களில் உள்ள 15 இந்திப் பள்ளிகள் நடத்தும் தேர்வுகளை மத்திய அரசு ஒப்புக் கொள்கின்றது. மேலும் பல பள்ளிகளுக்கு இலட்சக் கணக்காக மானியம் வழங்குகின்றது. 125 இடங்களில் நடத்திய தேர்வுகளில் மத்திய அரசின் அலுவலகர் ஒரு இலட்சம்பேர் இந்தி கற்றிருக்கின்றனர். இன்னும் மூன்று லட்சம் பேர் கற்பதற்கு உள்துறையமைச்சு வழி செய்திருக்கின்றது. இந்தி ஆசிரியப் பயிற்சிக்கு மாநிலங்களில் எல்லாம் பயிற்சிப் பள்ளிகள் நடக்கின்றன. இந்தியைப் பரப்பும் கொள்கையில் மத்திய அரசுக்கு அறிவுரை கூறுதற்கென இந்தி சிட்சை சமிதி என்ற ஒரு பெருங் கழகம் உள்ளது. மேலும் மத்தியக் கல்வித் துறையில் ஓர் இந்தி இயக்கம் உண்டு. இந்தியைப் பரப்புதல், சொல்லாக்கஞ் செய்தல், மொழி பெயர்த்தல், எல்லாவகை அரசியல் தாள்களையும் இந்திப்படுத்தல், பெரும் பெரும் நூல்களாக்கல் என்ற பொறுப்பெல்லாம் இந்தி இயக்கத்தைச் சாரும். 1961 ஆம் ஆண்டுவரை மூன்று இலட்சம் சொற்கள் ஆக்கப்பட்டு விட்டன எனவும் தொழில், மருத்துவம், சட்டம், பொறி, தற்காப்பு முதலான பெரும் பெரும் அறிவியற்றுறைகளில் எல்லாம் நூல்கள் எழுதப்பட்டு வருகின்றன எனவும் அறிகின்றோம். தட்டெழுத்து, சுருக்கெழுத்துக்கு வேண்டும் பயிற்சி நிலையங்கள் நாடெங்கும் உள. 40000 பேர் பயில இடமுண்டு. இந்தியைப் பரப்புதற்கு எல்லா வானொலி நிலையங்களும் மத்தியவரசுக்குப் பெருந்துணை செய்கின்றன. வானொலியில் இந்தி வகுப்புக்கள் நிகழ்கின்றன. அடிக்கடி தில்லி அஞ்சல்கள் வருகின்றன. இந்திப்பாடல்கள், இந்தி நாடகங்கள் மிகுந்து இடம் பெறுகின்றன. வானொலி நிலையம் விவிதிபாரதி என்னும் ஒரு நிகழ்ச்சி முறையை அமைத்துக் கொண்டு, 675 மணித்துளிகளில் 540 மணித்துளிகள் இந்திக் கலைக்கே செலவிடுகின்றது என்று ஒருவர் கணக்கிட்டுக் காட்டுகின்றார். தலைவர்களின் இந்திப் பேச்சுக்கள் அப்படியே கேட்கப் படுகின்றன. மத்திய உள்துறை யமைச்சும் கல்வித்துறை யமைச்சும், தற்காப்புத் துறையமைச்சும், மும்முனையாக இந்திப்பரவலில் போட்டியிடுகின்றன. பட்டி தொட்டி சின்னஞ் சிறு ஊரில் எல்லாம் அஞ்சல் நிலையப் பெயர்ப்பலகையில் இந்தி ஓர் இடம் பெறுகின்றது. அஞ்சல் முத்திரைகளில், தலைகளில் தாள்களில் இந்தி. சிறு பெரு நாணயங்களில் இந்தி. பொதுப்பலகை, பொது நிலையங்களில் எல்லாம் இந்தி. வேலைக்கும் வேலைக் காப்புக்கும் வேலையுர்வுக்கும் இந்தி. இந்திநூல்கள், இந்திப் படிப்புகள், இந்தியாசிரியர்கள், இந்திப் பயிற்சிகள், இந்திப் பள்ளிகள் எல்லாம் இனாம். பொருள்காட்டி வேலைகாட்டி வாழ்வுகாட்டி எனை வகையுண்டோ அனைவகையெல்லாம் மத்தியவரசு வரிந்து கட்டி இந்தி மொழி பரப்புவதை உன்னும்போது, ஒரு மதத்தைப் பரப்புதற்குப் பழைய அரசுகள் என்னென்ன கையாண்டனவோ அவையெல்லாம் ஒரு பொதுமொழியைப் பரப்புவதற்குப் பாரதவரசு மேற் கொள்வதாக நமக்குப்படவில்லையா? பாரத நாட்டில் இந்தி பேசுநர் தொகை மிகுதி ஆதலின் இந்தி மொழி இயல்பாகவே பரவத்தான் செய்யும். இன்னொன்று நினைத்துப் பாருங்கள். இந்தி மிக அண்மையில் தோன்றிய மொழி. 13 கோடி அதற்கு எப்படி வந்தது? மிகத் தொன்மையுடைய தமிழைப் பேசுநர் 3 கோடிதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றி வழங்கும் கன்னடம் தெலுங்கு வங்காளம் ஓரியா பேசுவோர் சில கோடிதான். இரண்டு மூன்று நூற்றாண்டுக் குழவிப்பருவம் உடைய இந்தி மொழிக்கு இவ்வளவு கோடி எங்ஙனம்? இந்தி படைமொழி, ஆதிக்க மொழி என்பதுதான் காரணம். இயல்பாகவே தன்னைப் பெருக்கிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த இந்திமொழி ஏற்கனவே நான்கு மாநிலங்களின் வட்டார மொழிகளாக இருக்கின்றது. இந்தியாவின் முதலமைச்சர்கள் அந்நிலத்தவர்களாகவே வருகின்றனர். இது மரபாகும்போலும் இம்மாநிலங்கள் 5 இலட்சம் சதுரக்கற் பரப்பினவை, 1000 கோடி வரவு செலவுத் திட்டம் உடையவை. இதுவே போதும் இந்தி பரவுதற்கு. இப்பெருஞ் சூழ்நிலைக்கு மேலும் இந்தி ஒன்றையே பொதுமொழியாக்கி 2500 கோடி வருவாயுடைய மத்தியவரசும் இமயமுதற் குமரிவரை பரப்புகின்ற கடன் பூணுமாயின், ஏனை மொழிகள் என்ன கதி ஆகும்?. 100 கோடி வருவாயும் அரை லட்சம் ஒரு லட்சம் பரப்பும் உடைய மற்றை மொழிகள் நசுங்காவா? தொட்டிப் பூப்போலச் சுருங்காவா? இந்தி ஒன்றே பொது மொழி யாயினும் ஏனை மொழிகள் பாதிக்கப்படா, வளரும் என்று சொல்வார்களாயின், அச்சொல்லை என் உயிருள்ளவரை நம்பேன், நம்பேன். கண்கூடாகக் காண்கின்றோமே. இந்தி வந்த பின் தென்னாட்டில் வடமொழி கற்கும் மாணவர் தொகை சுருங்கிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் கல்லூரிகளில் வடமொழிவகுப்பு எடுபடலாம். வடமொழியாசிரியர்கள் வேலையிழக்கலாம். முன்னறிவுடைய சில வடமொழிப் பண்டிதர்கள் இந்திப் பட்டம் பெற முயன்றுவிட்டனர். இக்கதியை ஏனை மொழிகளும் அடைய வேண்டுமா? வடக்கே வாழ்ந்த முண்டாப் பெருமொழி என்ன ஆயிற்று? அதன் கிளைகளான சந்தாலி, முண்டாரி, சவேரா, கரியா முதலிய மொழிகளின் கதி என்னோ? வடக்கில் வழங்கிய ஒரோவான், மால்டோ, கோந்து, கோலமி, பிரகூய் முதலான திராவிட மொழிகள் கூம்பிச் சுருங்கிக் குன்றியொடுங்கி வேரறக் காரணம் என்ன? இவற்றை வட இந்திய மொழிகள் தன்மயமாக்கிக் கொண்டன. இவற்றைப் பேசியோர்க்கு வட இந்திய மொழிகள் நாளாவட்டத்தில் தாய்மொழிகளாகி விட்டன. முன்சொல்லியபடி இன்று நம் பாரத நிலவமைப்பு மொழி மொழியாக உள்ளது. இந்தி ஒரு திசை வழக்கு, தமிழ் ஒரு திசை வழக்கு, மராத்தி ஒரு திசை வழக்கு. இந்தி ஒன்றே பொதுமொழியாய், மத்தியவரசின் வளர்ப்பு மொழியாயின், அம்மொழி எல்லா மாநிலங்களிலும் இடைப்புகுந்து கலக்கும். வட்டாரங்களில் எல்லாம் அதன் வழக்குப் பெருகும். எல்லா மாநிலங்களிலும் இந்தித் தாய்மொழியாளர் என்ற புதுவினம் இடையிடையே முளைக்கும். இந்துக்கள் முகமதியர்கள் கிறித்தவர்கள் எல்லா மாநிலங்களிலும் இருப்பதுபோல மற்றை மொழியாளர்கள் இந்தித் தாய்மொழியாளியாக மாறி எங்கும் காணப்படுவர். இந்தி ஒரு திசை வட்டார மொழி என்னும் இற்றைத் தன்மையொழிந்து. பரந்து வழங்கும் பாரத மொழியாகி விடும். அரசுக்கு எது மதமோ அதுதான் நாடெங்கும் பரவும். அரசுக்கு எதுமொழியோ அதுதான் நாடெங்கும் ஆதிக்கம் செய்யும். அரசுக்கு எது சின்னமோ அதுதான் நாடெங்கும் சிறக்கும். இது வரலாறு காட்டும் வழக்கு. இந்தி ஒன்றே பொது மொழியாயின், நல்ல மனத்தொடு யார் கூறினாலும், அப்பொதுமொழி ஏனை மொழிகளை மிகச்சிறுமொழி, குறுமொழியாக்கிவிடும், நண்டுவளை மொழியாக்கிவிடும். இது கற்பனையன்று. காரணம் காட்டும் அச்சம் ஆதலின் எவ்வுயிர்க்கும் அன்பு செய் என்ற முதுமொழியப்படி, எல்லாம் வாழ்ந்து ஓங்கி வளர வேண்டும் என்ற நல்ல நாட்டன்பினர் பன்மொழிகளையும் பாரதப் பொதுமொழியாக்க முன்வருக. முன்வருவாரைப் போற்றுக. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 18 தலைவர்களுக்கு, வணக்கம். ஒரு முக்கியமான கருத்தை. இதுவரை எழுதாத கருத்தை இக்கடிதத்தில் விளக்கமாக விரும்பு முறையில் வரைகின்றேன். குடியரசின் தலையான இலக்கணம் பேச்சுரிமை, கருத்தை வெளியிடும் உரிமை. பேச்சுரிமை யுண்டாம், அதனை வெளியிடுதற்கு உரிய மொழியுரிமை இல்லையாம். இது அரசியல் முரண். உண் என்று கையில் உணவு தந்து வாயைத் தைக்கலாமா? பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் 750 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்திற்றான் உரை நிகழ்த்த வேண்டும். தமிழ். தெலுங்கு. குசரத்தி. மராத்தி முதலான மொழிகளில் பேச விரும்பின், முன்னரே அவைத் தலைவருக்கு அறிவித்து அவர் இசைவு பெற்றுப் பேசலாம் என்பது விதி. நம் அரசியல் அமைப்பு ஒப்புக்கொண்ட தேசிய மொழிகளுள் ஆங்கிலம் இடம் பெறவில்லை. பெறா திருந்தும். தேசிய மொழியல்லாத ஆங்கிலத்துக்குப் பாராளு மன்றத்தில் சம இடமுண்டு. என்ன வியப்பு! தேசிய மொழிகளான பதின்மூன்று மொழிகளுக்கு வாய்ப்பூட்டு. இது மதிப்பா? அவமதிப்பா? பன்னாட்டுத் தலைவர்கள் பாரதத்துக்கு வரும்போது தத்தம் மொழியில் பாராளு மன்றத்தில் உரை செய்கின்றனர். நம் மக்களின் உறுப்பினர்கள் நம் மொழியில் நம் மன்றத்தில் உரை செய்ய வழியில்லை. குடியரசுக்கு எவ்வளவு தலைகீழ். எல்லா வட்டாரங்களிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 21 வயது வேண்டும் என்பதுதான் வரம்பு. வேறு கல்வி வரம்போ மொழி வரம்போ இல்லை. மக்கள் பெரும்பாலோர் விருப்பம் என்பதுவே முடிவான வரம்பு. இங்ஙனம் குடியரசு முறையில் பரந்த நோக்கில் தேர்தல் இலக்கணம் செய்தபின். பாராளுமன்ற மொழி இந்தி அல்லது ஆங்கிலந்தான் என்றால் என்ன பொருள்? இம்மொழி தெரிந்தவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மறைமுகக் குறுகிய கட்டுப்பாடு புகுத்துவது போல் ஆகாதா? இந்தியும் ஆங்கிலமும் பிற மாநிலத்தார்க்குத் தாய்மொழிகள் அல்ல. கற்றுத்தான் அவற்றைத் தெரிய வேண்டும், பேச எழுத வேண்டும். அப்போது இம் மொழிகளைக் கற்றவரே பாராளுமன்றத் தேர்தலுக்குத் தகுதியினர் ஏனை மொழியினர் தகுதியிலர் என்பது தெளிவாக வில்லையா? இந்தி மாநிலங்களில் இத்தகுதி தேவையில்லை. பாராளுமன்ற மொழி பிறப்பிலேயே அந்நிலத்தார்க்குத் தாய் மொழி. கல்லாதாரும் தேர்தலுக்கு நின்று வென்று பாராளு மன்றத்துக்குச் சென்று அவைத் தலைவர் இசைவு வேண்டாமலே தன்வீட்டிற் பேசுவது போலப் பேசலாம். அவர் வீட்டுக்கும் சொந்த மாநிலத்துக்கும் மத்திய மன்றத் துக்கும் மொழிப்படி ஒன்றே. அவர் தம் வட்டார மக்களின் கருத்தை இந்தி மொழிவாயிலாகவே அறிவார். அறிந்த மொழியிலேயே பாராளுமன்றத்து எடுத்தியம்புவார். இயம்பிய மொழிப்படியே இந்தி மாநிலச் செய்தித்தாள்கள் வெளியிடும். தேர்ந்தெடுத்த மக்கள் தம் சார்பாளர்களின் கருத்துச் சொற்களைப் பட்டாங்குப் படிப்பர். இது குடியரசின் ஒழுங்கு. சான்றாக, தமிழ் நிலத்தை வைத்துப் பார்ப்போம். பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெறுவதாகக் கொள்வோம். தமிழ் தெரிந்த ஒரு தமிழரும் இந்தி தெரிந்த ஒரு தமிழரும் தேர்தலுக்கு நிற்கின்றனர். தேர்தல் முழக்கம் எப்படியிருக்கும்? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். இந்தி தெரிந்தார் பக்கம் பேசுபவர் பேசுவார்:- தமிழ் ஒன்றே தெரிந்த நம் அன்பர் தமிழ் நாட்டுச் சட்டசபைக்கு நின்றால் அதுசரி. ஏன்? சட்டமன்றத்தில் தமிழில் பேசலாம். பாராளுமன்றத்துக்கு இவரை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினால், உங்கள் கருத்தை அங்கு எடுத்துச் சொல்லமுடியுமா இவரால்? இவர் தமிழிற் பேசினால் அங்கு யாருக்கு விளங்கும்? தமிழ்நாட்டிலிருந்து சென்ற பிற உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் விளங்கலாம். நமக்குள் விளங்குவதற்காகவா இவரை அங்கு போகச் சொல்லு கின்றோம்? தமிழிடத்து எனக்கு நல்லபற்று உண்டு. வழி வழியாக என் முன்னோர்கள் நற்றமிழ் வல்லவர்கள். தமிழ்வாழ வேண்டும் வளரவேண்டும் என்ற என் ஆசைக்குக் குறைவில்லை. தமிழ் வளம்வேறு தமிழ் நாட்டு வளம்வேறு. மற்றை மாநிலங்களுக்குச் சமமாக நாம் தலைதூக்கித் திரியவேண்டும் என்றால், இந்தி தெரிந்தவர்கள் உள்ளத்துப் பதியும்படி இந்தியிலேயே எடுத்துச் சொல்ல வல்லவரைத் தேர்ந்து அனுப்பவேண்டும். எம் சார்பாளர் நன்றாக இந்தி தெரிந்தவர். இந்தித் தாய்மொழியாளர்கூடப் பேச்சில் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். இவர் இந்தியைத் தமிழ் நாட்டில் படித்தவரில்லை. பீகாரில் பல்லாண்டு தங்கி அம்மக்களோடு ஒன்றிப் பெரும் பெரும் பேராசிரியர்களிடம் இந்திப் பாடங்கேட்டவர். இவர் இலண்டன் திரும்பி என்பதுபோலப் பீகார் திரும்பி. இவரைப்போன்றவரைத் தேர்ந்து பாராள்மன்றத்துக்கு அனுப்புங்கள் தமிழ்நாட்டுப் பொருளா தாரம் எவ்வளவு பெருகுகின்றது பாருங்கள். இவ்வாறு இந்திச் சார்பாளர்கள் மேடை தமிழகத்து முழங்கும். எது குடியரசு முறை? மக்கள் எம்மொழியில் யாரைத் தேர்ந்தெடுத்தனர், அம்மொழியில் அவரை எம்மன்றத்தும் பேசவிடுவதே நல்லுரிமை. இந்தியுறுப் பினர்களுக்கு மாத்திரம் தம் மொழியிற் பேசலாம் எனப் படிமுறையான உரிமை வழங்கிவிட்டு, ஏனை மொழியுறுப் பினர்களுக்கு அதனை மறப்பது பற்றி. என்ன சொல்லாம், மொழித்தண்டனை என்றே சொல்லாம். இவ்விடத்தைத்தான் இந்தியின் பெரும் புகுத்தல் என்று நான் கருதுகிறேன். வேறு மொழிகளுக்குப் பாராளுமன்றத்து வீற்றிருக்கும் வாய்ப்பில்லை என்று வாய் கட்டிவிட்டால், ஏனை மொழிமக்கள் எந்த வட்டாரத்தும் இந்தி தெரிந்தவர்களையே தேர்ந்தெடுக்க முற்படுவர். பராளுமன்ற உறுப்பினர்களாக வர வேண்டு மென்று விழையுநர் எல்லாரும் இந்தி தானே கற்றுக் கொள்ளுவார்கள் என்பது தான் உட்கோள். இதனையே இந்தியின் மறைமுக ஊடுருவல் என்று கருதுகிறேன். எவ்வளவு பேர் இந்தி கற்கவேண்டி வரும் தெரியுமா? பிற மாநிலப் பாராளுமன்ற உறுப்பிடங்கள் ஏறக்குறைய 450. இவ்விடங்கட்கு 2000 பேராவது பிற மாநிலங்களில் போட்டியிடுவர். இது ஒரு தேர்தற் கணக்கு. இப்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போதெல்லாம் வழிவழி எவ்வளவு பேர் போட்டியிடுவர்? இவ்வளவு பேராளரும் எப்படி இந்தி கற்பது? இந்திப் பகுதிகட்கு வந்து படிக்க முடியுமா? இந்தி உயர்நிலைப்பள்ளிகள், இந்திக் கல்லூரிகள், இந்திப் பல்கலைக்கழகங்கள் ஏனை மாநிலங்களில் நிறுவ வேண்டும். திடீரெனப் பாராள் மன்றத்தில் இந்தி உரையாற்ற முடியுமா? மனையிற் பேசிப் பழகினாற்றானே மன்றத்துப் பேச முடியும்? ஆங்கிலம்போல் இந்தி எல்லா மாநித்தும் ஊடுருவி வல்லிருப்புப் பெற்றாலன்றிப் பாராள்மன்றம் இந்தியில் இயங்காது. ஒன்று தெளிவாகச் சொல்லுவேன். இந்தி ஒன்றே பொது மொழியாயின், ஆங்கிலம் இருந்த இடமெல்லாம் இந்தி இருக்கும். பாராள் மன்றத்தில் என்ன? மாநிலச் சட்ட சபைகளிலும் இந்தி வந்துவிடும். இச்சட்டசபைகளில் யாரேனும் இந்தியிற் பேசினால் தடுக்க முடியுமா? அவைத் தலைவரைக் கேட்டுப் பேசவேண்டுமென்று விதிக்க முடியுமா? பொதுமொழி என்றால் எங்கும் புகத்தக்க மதிப்பு மொழி என்பதுதானே கருத்து. தடுத்தால், இந்திய வரசை அவமதித்த சட்டக்குற்றம் ஆகாதா? சுருங்கக் கூறின் இந்தி எல்லா மன்றத்தும் தலைமையோடு செல்லுபடியாகும். ஏனை மொழிகள் தன் மன்றத்தும் வரவரத் தள்ளுபடியாகும். முறையாது, செங்கோன்மையாது எனின், எல்லா மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் பாராள்மன்றத்தில் இடம் பெறுதல்போல, அவ்வுறுப்பினர் தம் மொழிகள் எல்லாம் இடம் பெறுதலே முறை. இந்தியவரசுக்கெனத் தனி நிலம் இல்லை, தனிக் குடிமக்கள் இல்லை. பாராளு மன்றத்துக் எனத் தனிமொழி யில்லை. மாநிலங்களின் கூட்டே இந்திய வரசுவென்பது. மாநிலங்களின் மக்கள் தொகுதியே பாரதக் குடிகள் என்பது. அதுபோல் மாநிலங்களின் மொழிகளே பாராள்மன்ற மொழிகள் ஆதல் வேண்டு மன்றோ? இந்தி பேசுநர் தொகை மிகுதியெனின், அதனால் இந்தியே பாராள் மொழியாக வேண்டுமெனின், மேலும் ஒன்று செய்திருக்கலாமே; இந்தி மாநிலத்தார்க்கே பாராள்மன்ற உறுப்பினர் ஆகும் தகுதியுண்டு, பாரத அமைச்சர் ஆகும் தகுதி யுண்டு என்றுகூட வரை யறுத்திருக்கலாமே. உறுப்பினர்க்குச் சமவுரிமை உண்டென்று சொல்லி, அவர்தம் மொழிக்கு அவ்வுரிமை இல்லை யென்றால் அவ்வுறுப்பினர்கள் பாராள்மன்றத்துச் சென்றபின் செவிடர்களாய் ஊமையராய் உறுப்பிலிகளாய் ஆக்கப் படுகிறார்கள் என்று சிற்றறிவுடைய வனுக்கும் பெருஞ் சினந்தோன்றாதோ? பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் முதலியவற்றின் சட்டசபைகள் இந்தியில் நிகழும். அதுபோல் பாராள்மன்றமும் இந்தியில் நிகழும் எனின், அது ஒரு சட்டசபையாக, இந்திப் பாராள் மன்றமாகக் கருதப் படுமேயன்றி, இந்தியப் பாராள்மன்றமாக விளங்காது. இந்தியப் பாராள்மன்றமாக உள்ளார்க்கும் வெளியார்க்கும் காட்சியளிக்கவேண்டுமெனின், பன்மொழிப் பாராள்மன்றமாக, எல்லாச் சட்டசபைகளின் மொழிகளையும் ஏற்றுக்கொள்ளும் நடுநிலை மன்றமாக இயங்க வேண்டும். இதற்குமேல் என்ன சொல்வது? “பன்மொழி வைத்து எப்படி நடத்த முடியும்? ஒரே குழப்பமாக அல்லவா இருக்கும்? கருத்துக்குச் சரியாயினும் காரியத்துக்கு உதவாது” என்று சிலரென்ன பலர் சொல்லத் தான் செய்கிறார்கள். அதனைக் கேட்டுத்தான் இதனை எழுதுகிறேன். ஒருமொழி இருந்தால் வைத்து ஆளுதல் முற்றும் எளிது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரு மொழி இந்தியாவில் வைப்பது ஒரு நூறாண்டாயினும் எளிதா? பன்மொழி நாட்டுக்குச் சிவணிய இயற்கையா? நீள ஒத்துவருமா? ஒரு நாடு என்பது முக்கியமா? ஒருமொழி காண்பது முக்கியமா? உள்ளத்து முழுதும் சிந்தியுங்கள்! இந்திய நாட்டோடு இந்தி மொழியை இரண்டற அத்துவிதமாக இணைக்காதீர்கள். இணைக்காதீர்கள் என்று தொழுது வேண்டுகிறேன். இணைக்க முயல்வார்க்கு இசையாதீர்கள், இசையாதீர்கள் என்று அழுத்தமாக அறிவுறுத்துகின்றேன். இணைத்தால் என்னாகும்? ஆதிக்கம் தலையெடுத்து இந்தியினரும் பாரத நாட்டைக் கெடுத்துக் கொண்டே யிருப்பர். உரிமை குன்றிச் சினந்து ஏனை மொழியினரும் பாரத நாட்டை இராவணன் ஆண்டாலென்ன, இராமன் ஆண்டாலென்ன என்று மனம்போனபோக்கில் நடக்கத் தொடங்கிவிடுவர். எச்சாராரும் நாட்டுப்பற்றுக் குறைவர். நம்நாடு அலைகடற் பட்ட கப்பல் போலவும், தூறு மழுங்கிய உண்குவளை போலவும் ஒரு நிலையின்றித் தடுமாறும். இதுவா நாம் வேண்டுவது? நல்லதன்று, நாட்டுக்கு உகந்ததன்று, நடப்பதன்று என்று நல்லறிவுக்குப் பட்ட பின்னரும், கிளிப் பிள்ளைபோல் முப்பதாண்டுகட்குமுன் உரிமைகனவாக இருந்த காலத்துச் சொல்லியதையே சொல்லிக் கொண்டும், உரிமை பெற்றுப் பதினேழாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கும் குழப் பத்தைத் தீர்ப்பதுபோற் காட்டி மேலும் குழப்பிக் கொண்டும் இராமல், புதிதாகச் சிந்திக்க வாருங்கள்! பதினான்கு மொழிக்கும் பொது மொழி உரிமை தாருங்கள்! சிக்கல் தானே விலகிச் செல்வதைப் பாருங்கள்! தொடங்குங்கால் துன்பமாய்த் தோன்றினும், எவ்வளவு எளிது, இனிது, முறையானது என்று தெளியுங்கள்! உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 19 தலைவர்களுக்கு, வணக்கம். முன் கடிதத்திற் சொன்ன புதிய சிந்தனை எது? நமக்குப் புதிய சிந்தனை. ஆனால் ஞாலத்தில் உள்ள சிந்தனை. ஐ.நா. பேரவை உலகிலேயே மிகப் பெரிய பொது அவை. பன்மொழி நாடுகள் அவ்வவையின் உறுப்புக்கள். ஆங்கிலம், சீனம், பானியம், ரசியம், பிரெஞ்சு என்ற ஐந்து மொழிகள் அவையின் நடைமொழிகள். ஆங்கிலத்திற் பேசினால் ஏனை நான்கு மொழிகளிலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப் படும். இவ்வைந்தல்லாத ஏனை மொழிகளில் பேசக்கூடாது என்ற தடையில்லை. பிற மொழியிற் பேசுபவர் ஐந்து மொழிகளில் ஏதாவது ஒன்றில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பதுவே விதி. ரசியப்பெருநாடு ஒரு கட்சிப் பொதுவுடைமை நாடு. 15 அகக்குடியரசுகள் உடைய நாடு. ரசிய மொழி பெயரளவில் ஒரு பொது மொழி. உக்கிரேனியன், சியார்ச்சியன், ஆர்மீனி யம், வெள்ரசியன், ஊரல் அல்டாயிக்கு முதலிய மொழிகளுக்குச் சமவுரிமை உண்டு, மாசுகோ தலைநகரில் உள்ள தலைமைப் பாராள் மன்றம், தலைமை நீதி மன்றங்களில் எம்மொழியிலும் பேசலாம், கேட்கலம். இவ்வளவு பரந்த வழித்திறப்பு பொது வுடைமை நாட்டில் இருப்பக் காண்கிறோம். சுவிச்சர்லாந்து 16000 சதுரக்கற் பரப்புடைய ஒரு குடியரசு நாடு. பரப்பளவில் நம் கேரள மாநிலத்துக்கு ஒப்பிடலாம். கேரளம் ஒன்றரைக் கோடி மக்கள் கொண்டது. சுவிச்சர் லாந்தோ அறுபது இலட்சம்மக்கள் தொகையது. இந்நாட்டில் நான்கு மொழிகள் உள்ளன. அவற்றைப் பேசுவோர் விழுக்காடு பின்வருமாறு:- செருமன் 73ரூ பிரெஞ்சு 21 இத்தாலி 5 உரோமான்சு 1 இந்நான்கும் கூட்டரசின் சமமொழிகள். ஒருவிழுக்காடு கொண்ட அறுபதினாயிரம் மக்களுக்குக் கூட மொழிச் சமம் உண்டு அங்கு. உரோமான்சு மொழிக்கும் ஏனை மூன்று மொழிகள் ஒப்ப உரிமை அளிக்க வேண்டுமா என்று வாக்கெடுத்த காலை, 99ரூ மக்கள் ஆம் என்று வாக்களித்தனர். இனைய காரணத்தால் அன்றோ உலகிலேயே தலைசிறந்த பழங்குடியரசு என்று சுவிச்சர்லாந்து புகழ் பெறுகின்றது. செனிவா என்பது இந்நாட்டின் பெருநகரங்களில் ஒன்று. முதலுலகப் போருக்குப் பின் அமைத்த உலக நாடுகளின் குழு செனிவாவில் நிறுவப்பெற்றது. ஐ.நா. அவையைக்கூட இந்நகருக்கு மாற்ற வேண்டும் என்ற ஒரு கருத்து உண்டு. பெரும் பெரும் அரசியல் மாநாடுகள் இந்நகரில் குழுமுவதை நாம் படிக்கின்றோம். காரணம் என்ன? சுவிச்சர்லாந்தில் எல்லா வகையானும் சமவுரிமை பொலிகின்றது. நேரு பெருமகன் 1954இல் காங்கிரசுப் பாராள்மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும்போது, யூகோசுலேவியாவின் ஆட்சிமொழிகள் பற்றிப் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்:- “யுகோசுலேவியா நாட்டிலிருந்து வந்த இரு பெரியவர் களிடம் இன்று நீண்டநேரம் பேசிக் கொண்டி ருந்தேன். அவருள் ஒருவர் பழைய அமைச்சர். இந்தியாவின் மொழிக் கொள்கை குறித்து அவர் வினவத் தொடங்கினார் நம் மொழிக் கொள்கை பற்றிச் சிலவற்றை அவர்க்குச் சொல்லியபின். அவர் நாட்டு மொழிக் கொள்கையை நான் கேட்டேன. யுகோசுலேவியாவின் மூன்று தலைமை மொழிகளும் இருவகை வரி வடிவங்களும் உள்ளன. இரு வடிவுகளில் எழுதப்படும் இம்மும்மொழிகளும் நாட்டின் தேசிய அலுவல் மொழிகளாகும். ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு அரசியல் இதழும் இவ்வனைத்திலும் வெளியிடப் படுகின்றன.” “இம்மொழிகளில் ஒன்று செர்பியன் மொழி. இதனைப் பேசுவோர் தொகையே மிகுதி. பயன்படுத்துவதிலும் இம்மொழியே மிகுதி. நாளடைவில் இதன் செல்வாக்கு மற்றை மொழியாளர்களிடைப் பெருகக்கூடும். இவ்வாறு கூறிய அவ்வமைச்சர் செர்பியனே தலையான முதன்மொழி என்ற உணர்ச்சியும் ஏனை மொழிகள் அதனைப்போல் அவ்வளவு சிறந்தவையல்ல என்ற உணர்ச்சியும் வந்துவிடாதபடி விழிப்போடு நடக்கின்றோம் என்றார். கல்விமொழி அவ்வப்பகுதியில் வழங்கும் மொழியே. வேறில்லை. எல்லாப் பகுதியிலும் செர்பிய மொழியைக் கட்டாயம் ஆக்க வில்லையா என்று நான் கேட்போது, இரண்டாவது மொழியாகக் கூடக் கட்டாயமாக வைக்கவில்லை எனவும், ஒவ்வொரு மொழிக்கும் தான் வளர முழுவுரிமையுண்டு என்ற நல்லெண்ணம் நிலவவேண்டும் என்பதற்காகவே செர்பியனைக் கட்டாயம் ஆக்கவில்லை எனவும் விளக்கினார். இதனால் கண்ட நன்மை என்ன? செர்பியன் மொழி தானே பரவுகின்றது.” “அரசுப் பணித்துறையில் வேலை செய்ய விரும்புவார்க்கு எல்லா மொழியிலும் தேர்வா? ஏதாவது ஒரு மொழியிற்றான் தேர்வா? என்று கேட்டேன். கட்டாயமொழி எதுவுமில்லை. தங்கள் தங்கள் மொழியிலேயே தேர்வெழுதுவர் என்று அமைச்சர் விடையிறுத்தார்.” பத்தாண்டுகட்குமுன் பெருமகன் நேரு தெரிவித்த உரையாடல் இன்றும் மிகவும் சிந்திப்பதற்கு உரியது. யூகோசுலேவியா ஒரு இலட்சம் சதுரக்கற் பரப்புடைய நாடு. 2கோடி மக்கள் கொண்டது. இங்கு செர்பியன், சுலோ வேனியன், மேசிடோனியன் என்று மும்மொழிகளும் நிகரான ஆட்சி மொழிகள். கிரிலித்து, இலத்தின் என்னும் இரு எழுத்து வடிவங்களும் ஆட்சிமொழி வடிவங்கள். யூகோசுலேவியாவை விட நம் இந்தியா எவ்வளவு பெரிய பரப்பு, எவ்வளவு நிறைந்த மக்கள் தொகை! 13 இலட்சச் சதுரக் கற்பரப்பும் 44 கோடி குடித்தொகையும் கொண்ட பாரதத்துக்கு 14 ஆட்சிமொழி பாரமா? அம்மொழிகள் ஏற்கனவே தொல்வரலாறும் வேண்டிய நிலப்பரப்பும் எண்ணிறைந்த மக்கள் தொகையும் ஆடசித் தகுதியும் பெற்றுள்ள மொழிகள் அல்லவா? யூகோசுலேவியா ஒரு பொதுவுடைமை நாடு. வேண்டும் என்றால் ஒரு பொதுமொழியை எல்லா மக்கள் மேலும் சுமத்த முடியும். இருந்தும், மொழிச் சமத்தை அங்குக் காண்கிறோம். குடியரசு நாடாகிய இந்தியாவில் ஒரே ஒரு பொது மொழியை, ஒரு பக்கத்து மொழியை, ஏனை மொழிகளினும் வளர்ச்சி குறைந்த மொழியை, ஏற்கனவே பல எதிர்ப்புக்கு உரிய மொழியை, கடுஞ் சட்டத்தாலும், மத்திய ஆட்சியின் பொருள் துணையாலும் படைத் துணையாலும் எல்லா மக்கள் மேலும் வழிவழிச் சுமத்த முனைகின்றோம். இது இந்தியாவின் அவல நெறி, அல்லல் நெறி, அழிவு நெறி. இனந்தோறும் நிலந்தோறும் மொழிச்சமம் இல்லை யென்றால், சுருங்கச் சொல்லுகின்றேன், பொருளாதாரச் சமம், மதிப்புச்சமம், ஆற்றற்சமம், உரிமைச்சமம், நாட்டுணர்வுச் சமம் எல்லாம் இரா. குடியரசு என்பது எல்லா மக்களும் நாட்டங்கொள்ளும் முழுக்குடியரசாக வளராது. எம்மொழி பொதுமொழியோ அம்மொழி மக்கள் மட்டும் ஆர்வங்காட்டும் குறுங் குடியரசாகவே வரவரப்போய்விடும். உண்மையில் எது கூடாது என்று நாம் நினைக்கின்றோமோ, அது நம் முறைப்பிசகால் கூடிவிடலாகாது. ஒரு நாடு என்பதே நம் குறிக்கோள். ஒரு மொழி நம் குறிக்கோளன்று. இதனை உங்கள் உயிர் உள்ளவரை, இந்திய நாட்டுக்கு ஓருயிர் வேண்டும் என்பதுவரை நினைக. மாறாக நினையற்க. தென்னாப்பிரிக்காவில். அயர்லாந்தில், கானடாவில், பின்லந்தில் எல்லாம் பன்மொழி ஆட்சிகள் நிலவுகின்றன. அரசியலமைப்பில் விதிகளும் இயற்றப்பட்டுள. நம்மிற் பிரிந்த பாகித்தான் உருது, வங்காளம் என்ற இருமொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டுள்ளது. அங்ஙனம் கொண்டு மொழிக்கிளர்ச்சியை முளையிலே களைந்துவிட்டது. சிங்களத் தோடு தமிழையும் ஆடசிமொழிகளாகக் கொள்ளுவது எளிதாக இருக்கவும், கொள்ளாமையினாலும், தமிழினம் முழுமைக்கும் மொழியுரிமை அளிக்காமையினாலும், இலங்கை தேர்தல் தோறும் அல்லற்படுவதை நாம் அறியாமல் இலலை. மலேயா நடைடமுறையில் மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் என்ற நான் மொழிகளையம் கையாளுகின்றது. மிகச் சிறுபான்மையினரின் மொழிகளையும் கையாளுகின்றது. மிகச்சிறுபான்மையினரின் மொழியாகிய தமிழையும் சமமொழியாகக் கருதுகின்றது மலேயா அரசு. வங்காளம் இந்தியாவில் வட்டாரமொழி; பாகித்தானில் மத்திய ஆட்சிமொழி. தமிழ்தான் பிறந்த நாட்டில் வட்டார மொழி. கடல் கடந்த மலேயா நாட்டில் பொதுவாட்சி மொழி; என்னவேடிக்கை! இந்தியா தமிழைச் சமமொழியாக மத்திக்காமையால் அன்றோ, இலங்கை தமிழைப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டது, இருந்த நிலையிலிருந்து இறக்கிவிட்டது. தமிழைப் பொறுத்த மட்டில் இந்தியா இலங்கைக்குக் காட்டிய தீவழி இது. என் செய்வது? இந்தியா தமிழை இங்குச் சமமொழியாக்கி இலங்கைக்கும் நல்வழி காட்டுமாகுக. 1937 இல் இந்தி சாகித்திய சம்மேளனத்தார் ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். அது வருமாறு:- “காங்கிரசிலும் அனைத்திந்தியக் காங்கிரசுக் கூட்டத்திலும் காரியக்குழுவிலும் இந்தி-இந்துத் தானியைப் பயன்படுத்த வேண்டும் அம்மொழியில் தங்கள் கருத்துக்களை அறிவிக்க முடியாத உறுப்பினர்கள் தத்தம் மாகாணமொழியிற் பேசலாம். அவ்விதம் பேச விரும்பின் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அவர்கள் பேச்சை இந்தி - இந்துத் தானியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆங்கிலத்திற் பேச விரும்பின் அங்ஙனம் பேச விரும்புகின்றவர் தலைவரின் இசைவு பெற்றுப் பேசலாம்.” இத்தீர்மானத்தைக் காந்தியடிகள் வரவேற்றுப் போற்றினார் என்று அறிகின்றோம். இன்றுள்ள நிலைமை என்ன? பாராள்மன்றத்தில் தமிழ், தெலுங்கு, குசரத்தி முதலான நாட்டு மொழிகளில் பேச வேண்டும் என்றால், அவை நாயகர் முன்னிசைவு வேண்டுமாம். காந்தியின் உள்ளத்திலிருந்து எவ்வளவு தள்ளிப் போயிருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சான்று. தலைவர்களே, பதினான்கு மொழிகளுக்கும் ஒத்த வளர்ச்சி, ஒத்த மதிப்பு, ஒத்த வழக்கு இருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தா? இல்லையா? கருத்தாயின் பதினான்கு மொழிகளையும் பாராளுமனறமொழிகளாகும் ஒத்த உரிமை அளியுங்கள் பாரத முடியைப் பதினான்கு மொழிகளுக்கும் அணியுங்கள். ஏனைய மொழிகளுக்குக் குறுநில முடியை வைத்து, இந்தி ஒன்றுக்கு மட்டும் பாரத அரசுத் தலைமுடி வைப்பதைக் கட்டாயம் தவிருங்கள். பாராள்மன்ற மொழியாகாத ஒரு மொழி, நீங்கள், வளரும், வாழும், கெடாது போகாது என்று என்னதான் கூறினாலும், தலையான ஆட்சி மொழிக்கு உரிய ஆற்றலை அறிந்தவர்களும், பிறமொழிகளை மெல்ல மெல்ல ஒதுக்கவும், ஒடுக்கவும், நசுக்கவும், அழிக்கவும் வல்ல அதன் ஆற்றலை அறிந்தவர்களும், பிறமொழி யாளர்களுக்கு வேலை மோகமும் காட்டி ஊட்டி மயக்கவல்ல அதன் இன்பவலைவீச்சை அறிந்தவர்களும் உடன்பட மாட்டார்கள். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றபடி, வாழ்வின் வாய்ப்புக் குறைந்த மொழிகளை அம்மொழி மாந்தர்களே, அம்மாந்தர்களின் இளைஞர்களே கைவிட்டு விடுவார்கள். செல்வரைப் புறஞ்சுற்றித் திரிவது போல, அதிகாரம் படைத்தவர்களை அண்டிக் கிடப்பதுபோல, வேலைப் பெருவாய்ப்புக்கும் அதிகார விரிவுக்கும் செய்தித்தாட் புகழுக்கும் வெளிநாட்டுச் செலவுக்கும் உரிமையாக்கிய இந்திப் பொது மொழியையே, அகத்தும் புறத்தும் பட்டியிலும் பட்டணத்தும் பள்ளியிலும் பல்கலைக் கழகத்தும் மோகமாகவும் வேகமாகவும் படிப்பர், பரப்புவர், பயன் உண்டென்று விளம்புவர். ஆதலின் பாரதப் பங்கு எல்லா மொழிக்கும் இருக்குமாறு, பாரதப்பற்று எல்லா மொழி மக்கட்கும் பிறக்குமாறு, பாரத எண்ணம் எல்லா மொழி நிலத்தும் படியுமாறு, பாராள்மன்றம் பதினான்கு மொழி மன்றமாக ஆங்கிலத்தையும் பல்லாண்டு தழுவிப் பதினைந்துமொழி மன்றமாக இயங்க வேண்டும் என்பதுவே என் எதிர்பார்ப்பு. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 20 தலைவர்களுக்கு, வணக்கம். பன்மொழி வைப்பு பல குழப்பத்தைத் தரும் என்று திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள். ஒரு மொழி வைப்புத் தரும் ஒற்றுமைக் குழப்பத்தைத் திரும்பத் திரும்பச் சிந்தியுங்கள். நாட்டொருமையை எண்ணும் முறையில் மக்களைப் பண்படுத்துங்கள். செயற்கையான மொழி யொருமையை, நாட்டொருமை கெட்டாலும் கெடுக என்று மயங்கிப் புகுத்த எண்ணவே எண்ணாதீர்கள். என்னனையார் சொல்லுக்குச் செவிசாயுங்கள். பன்மொழி ஆட்சி தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும். தொடங்கிவிட்டால் தோன்றாத பல வழிகள் துலங்கும். உரிமை கொடுத்து வழி காணுங்கள். வழிகாணத் தயங்கி, ஒத்த உரிமையை மறுக்கவோ குறைக்கவோ செய்யாதீர்கள். ஒரு சில வழி முறைகளைப் பரவலாக ஈண்டுக் காணலாம். 1. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் இலக்குமணசாமி முதலியார் 1951இல் பாராள் மன்றத்தின் அவை நாயகராக இருந்த திரு. மாவ்லங்கருக்கு ஒரு நற்கடிதம் எழுதினார். ஐ.நா. அவையில் ஒரே சமயத்துப் பன்மொழி நடப்புக்களை மொழி பெயர்க்கும் கருவிகள் உள எனவும், அக்கருவிகளை நம்மன்றத்திலும் வைத்துக் கொள்ளலாம் இதற்கு மூன்று இலட்சரூபாய் இருந் தாற்போதும், சபையின் நடப்புக்கள் உறுப்பினர் எல்லாருக்கும் புரியும் எனவும் எழுதினார் டாக்டர் இலக்குமணர். இதற்குத் தலைவர் மாவ்லங்கர் இவ்விதம் செய்தால் இந்தி பரவுமா? பரப்ப உதவியாகுமா? என்று பதில் தந்தாராம். இதனால் நாம் அறிவதென்ன? ஒரு மொழி மோகம் உண்மை விழியை மறைக்கின்றது. பாராள்மன்றத்துக்கு வழிவழி நிற்கும் ஆயிரக்கணக்கான உறுப்பினரெல்லாம் தம் தாய் மொழியின் மேலும் இந்தி கற்று இந்தியிற் பேச்சுக்கலை பயின்று வருதல் எளிதா? மொழிபெயர்ப்புக் கருவி அமைத்து, மொழி பெயர்ப்புச் சிறுதுறை அமைத்து, ஒரு சில மொழி பெயர்ப்பாளர்களை நியமித்து பாராள்மன்ற நடவடிக்கைகளை நடத்திக்கொண்டுபோதல் எளிதா? எது இனிய எளிய உரிய முறை? அறிவியல் முறை? இன்றைய உலகியல்முறை? ஒரு சில மொழிபெயர்க்குநர்களை நியமித்து, எம்மொழியிலும் உறுப்பினர் பேசுக, கருத்துக்களைத் தாம் கற்ற, சிந்தித்த மொழியிலேயே புலப்படுத்துக என்று மொழியுரிமை வழங்குதலே குடியரசு முறை. 2. பன்மொழி வைப்பு நம் நாட்டிற்கு எளிது, ஏற்றது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் தனி நிலம், தனி மக்கள், தனி வளர்ச்சியுண்டு. மத்தியவரசுக்கோ பாராள்மன்றத்துக்கோ வேண்டிய மொழி நடவடிக்கைகளையும் அச்சுக்களையும் பதிப்புக்களையும் மாநிலங்களிடம் ஒப்படைத்துவிடலாம். இவைபற்றிய செலவினங்களை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும். மத்தியவரசுக்குப் பெரும்மொழிச் செலவு இராது, ஒரு மொழிச் சார்வு என்ற மாசும் வராது. மாநில ஆட்சி முழுவதும் வட்டார மொழிகளில் நடக்கும்போது, அப்படியே அம்மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாகவும் தழுவிக்கொள்வதுதானே படிமுறை? அதனால் மேலும் எளிமைக்கும் சிக்கனத்துக்கும் இடமுண்டல்லவா? மத்திய ஆடசி என்பது தனியாட்சியன்று, மாநிலவரசுகளின் கூட்டாட்சி. பாரதம் என ஒரு தனி நிலம் இல்லை, மாநிலங்கள் கூடிய பரப்பே பாரதம். பாரதமொழி என ஒன்று இல்லை, ஒன்றை உருவாக்குவதும் உருப்படியாகப் போவதில்லை. மாநில மொழிகளே பாரதமொழிகள். இங்ஙனம் சிந்திப்பதே இயற்கைச் சிந்திப்பு. ஆதலின் வீட்டுமொழி, வட்டாரமொழி, பாரதமொழி என்று மொழிப்பிரிவினை செய்யாது, முத்தன்மையும் எல்லா மொழிக்கும் கிடைக்குமாறு மொழியுரிமை அளிப்பதே குடியரசுமுறை. 3. பாராள்மன்ற உறுப்பினர்கள் தத்தம் தாய் மொழியில் உறுதி மேற்கொள்கின்றார்கள். இது இன்று உள்ள நன்முறை. இவ்வகையில் பன்மொழித் தன்மையைப் பாராள்மன்றம் முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. உறுதிமேற்கொண்ட மொழியிலேயே உள்ளத்துப்பட்ட கருத்துக்களைச் சொல்லவும் கேட்கவும் மேலும் வழிசெய்ய வேண்டாமா? எண்ணிய கருத்தைத் தாய்மொழியிலே வெளியிடுதற்குப் பெருவன்மை வேண்டிய நிலையில் பிறிதொரு மொழியைக் கட்டாயப்படுத்தல் பாராள்மன்ற முறையாகாது. ஆதலின் பன்மொழிக்கும் மொழிபெயர்ப்பு வைப்பதே குடியரசு முறை. 4. அஞ்சலகம், வருமான வரியகம், உயிர்க்காப்பகம், புகைவண்டி நிலையம், வானொலி நிலையம் முதலான பல பொதுத்துறைகள் ஒவவொரு மாநிலத்தும் உள்ளன அல்லவா? இம் மத்தியத் துறைகளில் மாநில மொழிகள் ஆட்சி செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் உயிர்க்காப்பகத்திலிருந்து வரும் கட்டணச்சீட்டுக்கள் தமிழில் உள்ளன. இம் முறையைத்தான் விரும்புகின்றேன். விரிவடைய வேண்டும் என்று வலியுறுத்து கின்றேன். 5. அஞ்சலகத்து ஒவ்வொரு தாளிலும் பதினான்கு மொழிகள் இருத்தல் வேண்டும் என்பதில்லை. காட்டாக, பணவிடைத்தாளை எடுத்துக்கொள்வோம். தமிழில் ஒரு இலட்சம், இந்தியில் இரண்டு இலட்சம், தெலுங்கில் ஒரு இலட்சம் எனத் தனித்தனியாக அச்சடிக்கலாம், இவ்வாறே அஞ்சலட்டை முதலானவும் அடிக்கலாம். உலகப் பொது வெண் வடிவங்களை நாம் தழுவிக் கொண்டதுபோல வேற்று மாநிலங்கட்கும் வேற்று நாடுகளுக்கும் செல்லும் தாள்களில் உரோமன் எழுத்தைத் தழுவிக்கொள்ளலாம். இது சிக்கலற்ற ஒருமுறை. 6. குடிமொழிகளை மதிப்பதே குடியரசுமுறை. தாயை அவமதித்து அவள் பெற்ற மக்களை மதிக்கின்றோம் என்றால் நெறியாகுமா? அஞ்சலகத்தார் குத்தும் முத்திரையில் ஆங்கிலத்திலும் இந்தியிலுமே ஊர்ப்பெயர்கள் உள்ளன. தமிழ்நாட்டார் இடும் முத்திரையில் தமிழ் ஊர்ப் பெயர்கள் தமிழிற்கூட இடம் பெறவில்லை. தென்னாட்டவர்களுக்கு ஆங்கிலம் பொது மொழி என்று சொல்லி ஆங்கிலத்திலும், இந்தியநாட்டுக்கு இந்தி பொதுமெழி என்று சொல்லி இந்தியிலுமே முத்திரை போடுகின்றனர். இந்த இரட்டை யாட்சியால் தமிழ் தன் எல்லைக்குள்ளே தொலைகிறது. ஏனை மாநில மொழிகளின் கதியும் இதுவே. காரைக்குடி அஞ்சலகத்தார் காரைக்குடி எனத் தமிழில் முத்திரை குத்தும் முறையில்லை என்றால் தமிழுக்கு இவ்வுலகில் வேறெங்கு இடமுண்டு? தமிழ் முத்திரையைத் தமிழ் நாட்டிற்கூட எம்கண்கள் காணாவிட்டால் எங்குப்போய்க் கண்டு மகிழும்? இந்தியக் குடியரசில் ஒருமொழி தான் பெற வேண்டிய இடமெல்லாம் பெற்றாக வேண்டும். அதற்கு உரிய இடத்தில் அதனை அப்புறப்படுத்தி விட்டு இன்னொன்றை இருக்கவைத்தல் சாலாது. இருப்பின் ஆதிக்கம் ஆகும். ஆதலால் மாநில அஞ்சல் நிலையங்கள் மாநில மொழிகளில் முத்திரை யிடுக. 7. இந்திய அரசு என்பது மாநிலங்களின் கூட்டரசு. இம்மாநிலங்கள் பிரிவினை நிலங்கள் அல்ல. ஆட்சி எளிமைக்காக வகுத்துக்கொண்ட உறுப்பு நிலங்கள் இவை தொன்றுதொட்டு ஒருவகைத் தன்னிறைவு உடையவை. சிற்சில வகையில் சிறப்பான பண்பு உடையவை. இவற்றைப் போற்றி ஓவியமாக வளர்த்தலே இந்தியப் பண்பாடு என்பது. மாநிலப் பண்பாடுகள் இந்திய ஒருமைக்கு முரணாக இல்லாதிருக்கும் எனின், அவற்றை ஏன் காத்தல் கூடாது? காத்தல் வேண்டும். வானொலியில் காலைச் செய்தி கூறும்போது ஆண்டும் திங்களும் நாளும் கூறுவதைக் கேடிருப்பீர்கள். சகவருடம் பல்குனமாதம் எனவும், சகவருடம் சிரவண மாதம் எனவும் இவ்வாறு ஒவ்வொரு வானொலியிலும் சொல்லிவருப. தமிழ்ச்செய்தி கூறும்போது தமிழ் ஆண்டுகளையும் தமிழ் மாதங்களையும் கூறலாம் அல்லவா? இவ்வாறே ஒவ்வொரு மொழியிலும் வானொலிச் செய்தி உரைக்குங்காலை, அம்மொழியில் வழங்கும் ஆண்டினையும் திங்களையும் கூற வேண்டும். இதுவே மொழிக்காப்பும் ஆகும், பொதுமக்கட்குப் புரிவதும் ஆகும். 8. இரட்டைப் பொதுமொழியாட்சியால் தென்னாட்டுப் பொதுமக்களுக்கு நன்மையில்லை. இயல்பாக அறிவு நலம் பெறும் வாய்ப்பில்லை. எவ்வளவுக்கு மக்கள் மொழியைப் பரப்புகின்றோம், அவ்வளவுக்குக் குடியரசு பரவுகின்றது என்பது பொருள். ஒவ்வொரு திரைப்படத்துக்கு முன்னும் செய்திச் சுருள் காட்டப்பார்க்கின்றீர்கள். இச்செய்தி வாசகங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே இருக்கவும் பார்க்கின்றீர்கள். ஏன் தமிழில் இல்லை? பிற மாநில மொழிகளில் இல்லை? இல்லாதபோது இந்நிலப் பொது மக்கட்கு என்னபயன்? திரைப்படம் என்பது குழந்தை பெண்டிர் முதலான எல்லா நிலையினர்க்கும் வாழைப்பழத்தில் ஊசி போல எளிதில் மொழியுணர்ச்சி ஊட்டும் வழியாகும். இப்படங்களில் மாநில மொழிகளின் இடங்களை இந்தியும் ஆங்கிலமும் பறித்துக் கொள்கின்றன. இது குடியரசு முறையன்று. இயல்பான தாய் மொழியுணர்ச்சிக்குப் பெருந்தடையாகும். தமிழ்நாட்டிற் காட்டப்படும் ஒவ்வொரு செய்திப் படத்திலும் தமிழ் வாசகங்கள் திரையில் இடம் பெற வேண்டும். ஏனை மாநில மொழிகளும் அவ்வந் நிலத்து இடம் பெறவேண்டும். எல்லாம் பன்மொழியில் வெளியிடுவது செலவு மிகாதா என்றால், ஒவ்வொரு மாநிலமும் பெரிதாகலின் மிகாது என்பது என் கருத்து. மிகுமாயினும், மொழித்துறை என்பது உரிமைத்துறை அறிவுத்துறையாதலின், அச்செலவைக் குடியரசு நாடு ஏற்றுக்கொள்ள வேண்டியதே. மொழியுரிமை கேட்கும் போது மாத்திரம் செலவு மிகுதி என்று சுட்டுகின்றீர்கள். மாநிலந்தோறும் ஆளுநர், இரு சட்டசபைகள், மந்திரிகள் பலர்கொண்ட அமைச்சு இருப்பது பெருஞ் செலவில்லையா? பாராள்மன்றம் பல மாதங்கள் நடப்பது செலவில்லையா? தேர்தல் முறைகள எல்லாம் பெருஞ் செலவினங்கள் இல்லையா? இமைவயெல்லாம் குடியரசுக்கு வேண்டுவன என்றால் கருத்தை வெளியிடும் மொழிச் செலவு ஒரு சுமைச் செலவா? ஒவ்வொரு மாநிலமும் தன்னிறையும் பரந்த மொழி வழக்கும் உடையாதாதலின், மொழிச்செலவு பெரிதாகாது என்பது சிறிது நீளச் சிந்தித்தால் தெளிவாகிவிடும். 9. ஒவ்வொரு மாநில அரசுக்கம் தனிச் சின்னம் உண்டு. காட்டாக, தமிழ்நாட்டு அரசுச் சின்னத்தில் பாரதச் சிங்கப் பொறியும் தமிழ்நாட்டுக் கோபுரமும் இடம் பெற்றுள. ஆனால் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளதா? இடம் பெற்றுள்ள மொழி தமிழா? தமிழுக்கு அங்கு ஓர் இடம் வேண்டாவா? நம் எண்ணத்தில் மாசில்லை எனினும் இத்துறையில் நாம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு மாநில அரசுச் சின்னத்திலும் மாநில மொழி விளங்க வேண்டும் என்பது என் ஆசை. எத்துறையிலும் எவ்விடத்திலும் மாநிலமொழிகளின் உரிமையைத் தியாகஞ் செய்ய வேண்டாம். மொழித் தியாகம் குடியரசுக்கு நல்லதன்று. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக் கூடச் சில நல்லிடங்களை நாட்டு மொழிகள் பெற்றிருந்தன. நாம் உரிமை பெற்றபின், என்ன வியப்பு, அவ்விடங்களை நம் மொழிகள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. சொல்வார் யார்? கேட்பார் யார்? புகைவண்டிச் சீட்டில் கட்டணங்கள் தமிழ் எண்களால் இருந்தமையை நீங்கள் ஒரு காலத்துப் பார்த்திருப்பீர்கள். இது ஒரு எடுத்துக்காட்டு. 10. இந்திய நாடு பன்மொழி நாடாதலின், அப் பன்மொழியும் நிகரான வளம்பெற்று வாழ வேண்டும் என்பது நம் விழைவாதலின், செய்ய வேண்டுவது என்ன? ஒவ்வொரு மாநிலத்தும் இந்தி என்னும் ஒரு மொழி மட்டுமன்றிப் பன்மொழி பரவுவதற்கு அடிகோல வேண்டும். பன்மொழி நிலையங்கள் பன்மொழி பெயர்ப்பாளர்கள், பன்மொழிச் சிறுநூல்கள் எல்லாம் நகரங்கள் தோறும் பேரூர்கள் தோறும் பரவ வழி காண வேண்டும். பன்மொழிக்காற்று இமயமுதற் குமரிவரை நாலாறு திசையிலும் வீச வேண்டும். இக்காற்று வீசினால், நம் பாராள் மன்றம் நாலைந்து மொழியளவில் இயங்கும் மன்றமாக விளங்கக் காண்பீர்கள். மத்திய அலுவலர்கள் சில முக்கிய மொழிகளைக் கற்றிருக்கக் காண்பீர்கள். குடியரசி என்னும் கோடாச்செல்வி இந்தியக் கோல் ஏந்தி எளிய இனிய நடைபயின்று எங்கும் உலாவி வரக் காண்பீர்கள். 11. என் நல்ல பேராசை, மத்திய அலுவலகங்கட்கும் மாநில அலுவலகங்கட்கும் இந்தியப் பொது மக்கள் எத்திசையிலிருந்து எம்மொழியிற் கடிதம் எழுதினாலும் எழுதிய மொழியிலேயே பதில் பெற வேண்டும் என்பது. அப்போதுதான் எந்நிலமும் பாரத நிலம் என்ற நாட்டுணர்வு நரம்புணர்வாக வளரும். இக்கருத்து அலட்சியம் செய்தற்கு உரியதன்று. வாக்குரிமையுடைய மக்களின் எழுத்துரிமையை மதிப்பதே குடியரசு முறை. 12. பன்மொழி ஆட்சிமொழிகளாக உள்ள சுவிச்சர்லந்து, அயர்லந்து, பின்லந்து, கானடா, யூகோசுலோவியா, ரசியா, மலேசியா முதலான நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டவைக்கும் மொழிக் குழுக்களை அனுப்பி ஆட்சி நடைமுறைகளைப் பார்த்து வரச் செய்ய வேண்டும். இதனை விரைந்த செய்தால், நம் பன்மொழி முறையை விரைவில் எளிமையாக்கலாம். உலகப் பொருள்களை அறிதற்குக் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை. அதுபோல நாட்டுப் பற்று உயிரிற்படிவதற்கு மொழியிற் சிறந்த வழியில்லை. “பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்” என்ற தமிழ் என் உயிரிற் புகுவது போல எம் மொழியிற் சொல்லினும் புகமாட்டாது. ஏனைய மொழி வாயிலாக நாட்டுப் பற்று ஊட்டுவோம் என்பது கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்போல ஆகிவிடும். இவ்வொரு உண்மையையேனும் உணர்ந்தவர்கள் நாடு மொழி என்ற இரண்டனையும் உயிர்மெய்யாகவே போற்றுவார்கள். நாடு பெரிது மொழிசிறிது எனப்பிரிவினை பேசார்கள். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்மைப வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்மைப வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே என்றார் திருமூலர். உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்போ அத்தொடர்புதான் மொழிக்கும் நாட்டுக்கும். இந்திய வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள் சிறந்த பேரரசனது ஆட்சிக்காலத்து மொழியும் உடன்வளர்ந்தது என்பதனை. மொழிமேகம் உணர்ச்சி நீரை நாட்டு நிலத்துப் பொழிந்து பற்றுவளம் அறிவு வளம் ஆண்மைவளம் எல்லாம் தரும். மொழியார் அழியின் முடியார் அழிவர் விழியார் குறையின் ஒளியார் குறைவர் மொழியை வளர்க்கும் முழுமை அறிந்தேன் மொழியை வளர்ப்பேன் முடிவளர்ப் பேனே இம்மொழி ஞானம் கல்வித் தலைவர்கட்கும் கட்சித் தலைவர்கட்கும் எத்துறைத் தவைர்கட்கும் வேண்டும், வேண்டும். தாய் மொழியைப் பழிப்பது வீரமன்று, விதியன்று, ஈரமன்று. உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 21 தலைவர்களுக்கு, வணக்கம். மொழிச் சிக்கல் பற்றி நல்ல சிந்தனைகள் இப்போது உருவாகி வருவது கண்டு மகிழ்கின்றேன். நம் நாடு ஒற்று மையாக உரிமையாக மேலாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாரிடமும் தூய்மையாக வளர்வது கண்டு மகிழ்கின்றேன். “அருமை யுடைத்து என்று அசாவாமை (தளராமை) வேண்டும்” என்றார் வள்ளுவர். நெஞ்சத் தூய்மையும் நேரிய முயற்சியும் இருந்தால் தீர்க்க இயலாத சிக்கலென ஒனறு உண்டா? உரிமை பெற்ற இப்பதினெட்டு ஆண்டிலும் மலைபோலவும் அலைபோலவும் வந்து விழுந்த எத்தனையோ சிக்கல்களைத் தீர்த்துத் தீர்த்துப் பழகிப்போன நமக்குக் நம் மொழிச் சிக்கல் ஒரு சிக்கலா? ஐந்நூறு குற்றரசுகைளயும் ஆரவாரமின்றி இணைத்த ஒரு செயல்போதுமே நம் ஆற்றலுக்குச் சான்று. என்றோ மொழிச் சிக்கல் தீர்ந்திருக்க வேண்டியது. தீராததற்கு ஒரு காரணம் கல்வியாளர்கள் தம் ஒத்துழைப்பு இல்லை. பெரும்பாலும் கற்றோர்க்கு வேலைப் பற்றும் வெளிநாட்டுப் பற்றும் உண்டேயன்றி நாட்டுப் பற்றுக் குறைவு; அதனைவிட மொழிப்பற்றுக் குறைவு. மேனாட்டுக்கு மேற்படிப்புக்கு நாம் அனுப்பிவைக்கும் பெருமாணவர்கள் எத்துணைப்பேர் தாய்நாட்டுக்குத் திரும்பி வர விழைகின்றனர்? திரும்பி வந்து இந்நாட்டுக்கு ஏற்ற ஊதியம் பெற்றுத் தொண்டு செய்ய நினைக்கின்றனர்? சிலர் குடும்பத்தோடு சென்று அந்நாட்டுக் குடிகளாகவே பதிவு செய்துகொண்டு விடுவதைப் பார்க்கின்றோம். கல்வி அறிவூட்டினால் மாத்திரம் போதாது; நாட்டுப்பற்றோடு அறிவூட்ட வேண்டும். கற்றவர்கள் அறிஞர்களாக இருந்தால் மாத்திரம் போதாது. “நரகம் புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா” என்ற திருவாசகத்தின்படி, எந்நிலையிலும் நாட்டுப்பற்று விடாத அறிஞர்களாக இருத்தல் வேண்டும். தாய் மொழி தகுதியில்லை என்று பறைசாற்றுவதும், தாய் மொழி உயர்கல்விக்கு உதவாது என்று இகழ்வதும், தாய் மொழியிற் கற்றால் என்ன வாழ்வு கிடைக்கும், என்ன அறிவு வரும் என்று இளைஞர்களை அச்சுறுத்துவதும், வெளிநாட்டிற் படிப்பதற்கு உன் தாய்மொழிக் கல்வி பயன்படுமா? என்று மருட்டுவதும் கற்றார் பலரின் கழிபோக்காக உள. இவர்கள் ஒருவகை உட்பகை எனலாம். நாட்டின கல்வித் திட்டத்தைக் கற்றவர்களிடம் விட்டுவிடுவது தான் முறையென்றாலும், நம் நாட்டைப் பொறுத்தவரை அன்னாரிடம் விடுவது கல்விக்குக் கேடு ஒருபுறம் இருக்க, நாட்டுக்கே கேடாகும். ஏன்? கல்விக்குச் சரியான வாயில் தாய்மொழியே என்பதைக்கூட உரிமை பெற்ற பின்னரும் அறியாத இவர்களிடம் கல்வித் திட்டத்தை முழுதும் ஒப்படைக்கலாமா? அதனாற்றான் இந்நாட்டில் அரசியற் கட்சிகள் மொழிபற்றிப் பேசவேண்டிய சூழ்நிலை வந்தது. இன்னும் பல கல்விமான்கள் தாய்மொழி மாற்றத்துக்குத் தடையாக உள்னர். தாய்மbhழி என்று சொல்லும் போதெல்லாம் கல்வித்தரம் பேசுகின்றனர். தாய்மொழியைப் பல்கலைக் கழகம் வரை வைத்தால் நாடு அறியாமைக் காடாகிவிடும் எனவும், இந்தியா உலகம் தெரியாத குழந்தை யாகிவிடும் எனவும், தரம் உயரவும் நாடு உயரவும் உலகம் தெரியவும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்துவர வேண்டும் எனவும் சொல்லிக் கொண்டேயுள்ளனர். இது ஒரு சாபக்கேடு. 1965 பிப்பிரவரியில் கூடிய தமிழகக் காங்கிரசுச் செயற்குழுவும் அனைத்திந்தியக் காங்கிரசுச் செயற்குழுவும் நல்ல மொழிச் சிந்தனையை நாட்டிற்குக் காட்டியுள. பதினான்கு மொழியும் மத்தியப் பணித்துறைத் தேர்வு மொழிகள் ஆகவேண்டும் என்று தமிழகக் காங்கிரசு துணிந்து செய்த தீர்மானத்தைப் பணிந்து வரவேற்கின்றேன். இத்தீர்மானத்தைச் செய்தித் தாளிற் கண்டவுடனேயே மொழிப்பிரச்சினை தீர்தற்கு உரிய ஒளி துலங்கிற்று என்று எண்ணிக் கொண்டேன். அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவரும் இத்தீர்மானம் செய்யுங் காலை உடனிருந்தார் என்று படித்ததும், எண்ணி னேன், அனைத்திந்தியக் காங்கிரசுச் செயற்குழுவும் இத் தீர்மானத்தை அடுத்த கூட்டத்திற் செய்யும் என்று. அப்படியே நடக்கவும் கண்டோம். 1965 சூன் 2 தில்லியிற் கூடிய காங்கிரசுச் செயற்குழு கூடியவரை நீடிய சிந்தனை செலுத்தி இதுவரை இல்லாத புதிய தீர்மானங்களை அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுள்ளது. அதனாற்றான். ‘நல்ல சிந்தனைகள் இப்போது உருவாகி வருவது கண்டு மகிழ்கின்றேன்’ என்று இக்கடிதத்தின் முதற்பத்தியில் மொழிந்தேன். எட்டாவது அட்டவணையில் உள்ள நம் தேசிய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மத்திய அரசுத்துறைத் தேர்வுகள் நிகழவேண்டும் எனவும், விரைவில் நிகழ்த்த வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இந்திய மொழிகளின் வரலாற்றில் இத்தீர்மானம் மிக முக்கியம் வாய்ந்தது. நாட்டு முன் னேற்றத்திற்கும் நல்ல அடிப்படை செய்வது. பதினான்கு மொழியையும் மேற்கொள்வதால் நாடு பிரிந்துவிடும் எனவும், ஆட்சித்தரம் குறைந்து ஆமைவேகந்தான் இருக்கும் எனவும், தரம் ஒன்றுபோல இராது எனவும், கேள்வி குறிப்பது திருத்துவது எல்லாம் ஒத்துவராது எனவும், செலவு மிகும் எனவும் ஒரு சார்கற்ற உலகம் எதிர்ப்புச் செய்யும். இப்படித் தரம் குறைந்துவிட்டது, அப்படித்தரம் குறைந்துவிட்டது எனவும் ஒரு மொழியிருந்த காலத்துத் தரம் மிகமிக ஓங்கி இருந்தது எனவும் ஒருசார் கற்றவர் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பர். அதற்காக வேதாளம் பழையபடி முருக்கமரம் ஏறிக்கொண்டது என்னுமாப்போல, மீண்டும் முன்போல் மத்தியத் தேர்வு எம்மொழியாயினும் ஒரே ஒரு மொழியில் நிகழக்கூடாது. நிகழ விடக்கூடாது. தாய்மொழி கல்வித் தரத்தைக் குறைக்குமா? குறைக்கும் என இந்நாட்டுக் கல்வியாளர்கள் சொல்வது ஒரு விந்தை. மேனாட்டுப் பேராசிரியர் ஒருவர் இந்நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு ‘விஞ்ஞானத்தைக்கூட வேற்று மொழியில் கற்பிக்கின்றார்களே’ என்று வருந்தினார். கல்வியை வேற்று மொழியில் கற்பிப்பது விஞ்ஞான முறையன்று; அதுவும் விஞ்ஞானத்தை அங்ஙனம் கற்பிப்பது முறையே யன்று என்பது அவர் கருத்து. தரங்குறைவதற்குச் சுமையான பாடத்திட்டம் காரணம், செரிக்கவிடாமை காரணம், முழுதும் தேர்வு நோக்கம் காரணம், தொழுப்போல வகுப்புப் பெரிதாக இருத்தல் காரணம், எல்லாவற்றையும் கல்வித் திட்டத்திற் சேர்த்து இள நெஞ்சங்களின் சிந்தனையைத் தூர்த்தல் காரணம். தாய் மொழியை எல்லா நிலையிலும் வையாமை காரணம். ஒரு வகுப்பு இருபது மாணவர்கள் கொண்டதாக இருந்தால், இந்த ஒரு சீர்திருத்தத்தையாவத கல்வித் தலைவர்கள் கொண்டு வந்துவிட்டால், தரம் பந்தின் உயர்ச்சிபோல விரைவில் மேலோங்குவதைப் பார்க்கலாம். பாடவளவு, கற்பிக்குமுறை, வகுப்பளவு வயதளவு என்றவற்றில் பெருங்கவனஞ் செலுத்தாது, நம் நாட்டுக் கல்வித்தலைவர் சிலர் என்றும் தாய்மொழியை முறை மொழியைத் தடுத்துக் கொண்டே உள்ளனர். தாய்மொழியை இகழ்வது நம் நாட்டுட்க கல்விமான்களின் நாகரிகம். இந்நிலையில் அரசுக் கட்சியான காங்கிரசு பல்கலைப் படிப்பும் பணித்துறைத் தேர்வும் எல்லாம் தாய்மொழிவழியே விரைவில் நடக்கவேண்டும் என்று ஆற்றலோடு தெளிவுபடுத்தியிருப்பது என்போல்வார் மனத்தைக் குளிர்வித்தது. பதினான்கு மொழியும் மத்தியத் தேர்வுக்கு இருந்தால் நாடு வேற்றுமைப்பட்டுவிடும் என்று சிலர் கருத்துரைப்ப. அயன்மொழியிருந்தால் நாடே அடிமைப்பட்டுவிடாதா? இந்தி என்னும் ஒரு மொழியிருந்தால் ஏனை மொழிகளும் மொழி நிலங்களும் அடிமைப்பட்டுவிடாவா? முன் ஒரு கடிதத்தில் கூறியபடி, ஒவ்வொரு மொழியையும் அந்தந்த மாநில வளவில் வைத்தாற்றான் பிரிவுணர்ச்சியும் இந்திமேல் நிலையான வெறுப்புணர்ச்சியும் தோன்றும். அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்தோறும் மொழியுணர்ச்சியூட்ட வாய்ப்புக்கிட்டும். மாநில மொழிக்கெல்லாம் மத்திய அரசில் இடம் இருந்தால் மாநில எண்ணம் மறைந்து பாரதம் ஒரு நாடு, நம் நாடு என்னும் பெரிய நாட்டெண்ணம் விளையும். மத்தியப் பாராளுமன்றத்துக்கு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுபோலவும், மத்திய அமைச்சுக்கு மாநிலங்களிலிருந்து தக்கவர்களைச் சேர்த்துக் கொள்வது போலவும், மத்தியப் படைக்கு மாநிலங்களிலிருந்து ஆட்களைத் தேர்ந்து பயிற்சி கொடுப்பதுபோலவும், மத்திய நிதிக்கு மாநிலங்களி லிருந்து வரிவாங்குவது போலவும், மத்திய அரசுக்கு மாநில மொழிகளைப் பொது மொழிகளாக மேற்கொள்வதே முற்றும் சரியான முறை. ஆதலின் காங்கிரசுச் செயற்குழு மேற்கொண்ட தீர்மானம் என் அறிவுக்கு நிறைவு, மனத்துக்கு உவப்பு. மேலும் இம்முறையைத் தொடர்ந்து வளர்க்க நல்வாய்ப்பு. மத்தியப் பணித்துறைத் தேர்வுக்கு மொழியொன்று வினாத்தாள் ஒன்றாக இருந்தாற்றான் திருத்தம் சீராக இருக்கும், தரம் காணமுடியும் என்று இற்றைக் கல்வியாளரிற் சிலரென்ன, பலர் கழறக்கூடும். அவர் சொல்லுக்கு இசைந்து ஒரு மொழிப் பாதையில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்வேன். ஏன்? வரவர என்ன சொல்லுவர் தெரியுமா? பல்கலைக்கழகந் தோறும் வேறுவேறு மொழிகள் இருத்தலால், பட்டதாரிகளின் தரத்தைக் கணிக்க முடிய வில்லை; பல்கலைக் கழகங்கட்கு இடையே பேராசிரியர்களின் பரிமாற்றத்துக்கு இடனில்லை; பல்கலைக் கழகங்கள் தம்முள் தொடர்பில்லை என்றெல்லாம் கூறுவர்; ஆங்கிலமோ இந்தியோ ஒரு மொழி என்னும் அமிழ்து எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் இருந்தால் தரக்குறைவு என்னும் நஞ்சம் இராது என்பர். குருடி வேறு கதவு காண மாட்டாது பழகிய பழைய கதவையே திறந்து கொண்டிருந்தாள் என்பது போல, எல்லாப் பல்கலைக் கழகங்களும் ஒரு மொழி மயமானால், கல்லூரிகள் அம்மொழி மயமாகும், உயர்நிலைப் பள்ளிகளும் அம்மொழி மயமாகும். சுருங்கச் சொல்லின் மாநில மொழிகள் மறை மொழிகள் ஆகிவிடும். ஆதலால் பதினான்கு மொழிகளையும் மத்தியத் தேர்வு மொழிகள் ஆக்கிய காங்கரசின் புரட்சிச் சிந்தனையை மீண்டும் மீண்டும் பாராட்டுவேன். ஒருமைக்குக் கண்ட இப்பெரு நெறியைப் பின்வாங்காதீர், சட்டம் ஆக்கத் தயங்காதீர் என்று வேண்டுவன். தில்லிப் பல்கலைக் கழகத்துணை வேந்தர் டாக்டர் தேசுமுகனார் வைப்பு வங்கியின் ஆளுநராக, மத்திய நிதி மந்திரியாக, பல்துறை ஆட்சியாளராக இருந்தவர்; பன் மொழியறிஞர்; பன்னாடு கண்டவர்; மகாராட்டிரம் வேண்டி மந்திரி பதவி துறந்தவர்; பல மொழிகளிலும் மத்தியப் பணித்துறைத் தேர்வு எழுதலாம் என்பது இவர்தம் மொழிக்கொள்கை. இவ்வறிஞரின் கருத்து காங்கிரசின் தீர்மானத்துக்கு ஓர் அரண் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 22 தலைவர்களுக்கு, வணக்கம். காங்கிரசின் அண்மைத் தீர்மானத்தை முன் கடிதத்தில் பாராட்டினேன், வாழ்த்தினேன், வரவேற்றேன். ஏன்? அத்தீர்மானம் மூன்று நான்கு ஆண்டுகளாக நான் சிந்தித்துத் தெளிந்த மொழிக் கருத்துக்கு ஒரு புடை ஒத்துளது மாத்திரமன்றி மேலும் ஒழுங்கான சிந்தனைக்கு வழி காட்டியுள்ளது. தலைவர்களே! என் கடிதத் தொடரை இன்னும் மூன்று கடிதத்தில் முடித்துக்கொள்வேன் அதனால் மேலும் தெளிவாக்க வேண்டிய சில கருத்துக்களை எழுதிவிடுகிறேன். நம்நாட்டு மொழியாயினும் ஒரே ஒரு பொதுமொழி இந்தியாவுக்குக் கூடவே கூடாது. அது இந்தியாயினும் சரி, பிறமொழியாயினும் சரி. ஏன்? இந்தி ஒன்றே பொது மொழியாயின், ஏனை மொழி மக்களுக்கு நாட்டுப்பற்று மாநில அளவில் குறுகி இருக்கு மேயன்றிப் பரந்த பாரத அளவுக்கு உயராது. பங்கு உள்ள இடத்துத்தான் பற்று இருக்கும். இதனைத் தலைவர்கள் முதலாவது சிந்திக்க. நாட்டுப்பற்று எல்லா மொழி மக்கட்கும் பிறப்பிலே வருவதற்குப் பிறப்பு மொழியான பதினான்கு மொழியையும் பாரதப் பொதுமொழிகளாகச் சட்டஞ் செய்யுமின்! உடனடியாகச் செய்ய வேண்டியது இது. இந்தியொன்றே பொதுமொழியாயின், எங்கள் மொழிநாடு என்ற மிகையான தனிப்பற்றும் ஆதிக்கத் தடிப்பும் இந்தி நிலத்தார்க்கும் இந்தி மொழியார்க்கும் தோன்றிவிடும். இவ்வுணர்ச்சிகளை வேறு எவ்வகையிலும் குறைக்க முடியாது. பொருளாதரத்தில் சமம் காண முயலும் நாம், ஏற்கனவே உள்ள பொருள் மேடுகளைச் சமம் செய்யச் சட்டஞ் செய்யும் நாம் அதிகாரத்திலும் ஆதிக்கதிலும் மக்களிடை சமனிலை காண வேண்டாமா? ஆதிக்க அதிகாரமே செல்வப் பொருளினும் சிறந்த பொருள். பாரத ஆதிக்கத்தை எங்கும் பரவல் நிரவல் செய்ய வேண்டுமேயன்றி, வடநாட்டின் ஒரு பகுதியில் ஒரு மொழி மக்களுக்கு மட்டும் பிறப்பாதிக்கம் உண்டாகுமாறு, அவர் தாய்மொழியை மாத்திரம் பாரத மொழியாக உயர்த்தலாகாது. வெளிப்படையாகப் புரியும் மொழியிற் சொல்லுகின்றேன். பொறுத்துக்கொள்ளுங்கள், ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக்கினால், ஏனை மொழிகள் அப்பொதுமொழியின் வால் பிடிக்கும் தாழ்வுணர்ச்சியே ஏற்படும். ஏனை மொழியாளர்க்கும் அத்தகைய கீழுணர்ச்சியே ஏற்படும். இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க. தமிழைத் துறந்து ஆங்கிலம் கற்ற தமிழர் உளர்; தமிழோடு ஆங்கிலம் கற்ற தமிழர் உளர். தமிழே கற்ற தமிழர் உளர். இவர்கட்குச் சமுதாய மதிப்பு என்ன? வேலை மதிப்பு என்ன? தமிழை வீட்டிலும் பேசாது ஆங்கிலத்திலேயே மனைவியொடும் மக்களொடும் வருவார் போவாரொடும் பேசிப் பயின்ற ஆங்கிலத் தமிழர்களே தமிழகத்திலும் நாடு முழுதும் வேலை வாய்ப்பும் அதிகாரமும் பெற்றிருக்கின்றனர். ஏன்? மத்திய ஆட்சிமொழி ஒரே ஒரு மொழியாக, ஆங்கிலமாக இருத்தலின். இந்தியொன்றே பொதுமொழியானால் ஏனை மொழிகள் தேவையில்லை என்ற நிலை நாளாக ஆக வரும். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியுயர்நிலைப் பள்ளிகள் இந்திக்கல்லூரிகள் இந்தி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள் இந்திப் பல்கலைக் கழகங்கள் அமைப்பதையும் பெருகு வதையும் தடுக்கமுடியுமா? மத்திய அரசினர் சம்பளம் இல்லாமல் இந்தி படிக்கலாம் என்பர்; இப்பள்ளி நிலையங்களிற் படிப் பார்க்குத் தனியூதியம் அளிப்பர். வேலைப் பட்டியலில் முன்சேர்ப்பர்; இந்தியை ஒரு மதம்பேல எவ்வாறெல்லாமோ பரப்புவர். மத்திய அரசு இங்ஙனம் செய்தால், தலைவர்களே! நீங்கள் எதிர்ப்பீர்களா? எதிர்ப்பு நிற்குமா? இவ்விந்திப் பள்ளிகளில் நம்மக்கள் ஓடோடிச் சேர்வர். யார் தடுப்பார்? தடுப்பது அவர்கள் வாழ்வைத் தடுப்பதாகும். நாம் எல்லோரும் இன்று ஆங்கிலப் பள்ளியிற் சேர்ப்பதுபோலத்தான் இந்திப் பள்ளியில் நம் குழந்தைகளைச் சேர்ப்போம். தம் குழந்தைகளைச் சேர்க்குமாறு பிறர்க்கும் கூறுவோம். தாய்மொழிப் பற்றுக் குறைவினாலா இப்படிச் செய்கின்றோம்? தாய்மொழி வயிற்று மொழியாகவில்லை, மாநில அளவிலும் ஏற்றம் தரவில்லை, தில்லியை எட்டிப்பார்க்க முடியவில்லை, என் மொழி என்பயன்? வாழ்வுக்கு வழிசெய்யவில்லையே என்ற உவர்ப்பு வந்துவிடுகின்றது. இந்தியொன்றே பொதுமொழியாயின், அவ்வொன்றைப் படித்தாற்போதுமே, தன் மாநிலத்திலும் பெரியவேலை கிடைக்கும், பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்கும், மத்திய அரசிலும் வேலை கிடைக்கும், மதிப்பு உயரும், பொருள் உயரும், பதவி உயரும், அதிகாரம் உயரும். இப்படி எண்ணுவதுதான் உலகியல், இப்படிப் போவதுதான் உயிரியல், இப்படித் துணிவதுதான் வாழ்வியல். தமிழ் ஒன்றே பொது மொழி யானாலும் ஏனைமொழியாளர் நிலையும் இது தான். எந்த ஒன்று பொதுமொழியானாலும் ஏனை மொழி களின் கதி, ஏனை மொழிப் பள்ளிகளின் கதி, ஏனை மொழி மக்களின் கதி, இப்படித்தான் இருக்கும். தலைவர்களே! நன்றாக எண்ணிப் பார்மின். பொறியியற் பட்டம் ஒருவன் தமிழிற் பெற்றிருக் கின்றான். அப்பட்டத்தை இன்னொருவன் இந்தியிற் பெற்றிருக் கின்றான். வேலை மதிப்பு எப்படி? தமிழிற்பட்டம் பெற்றவன் தமிழ்நாட்டளவில் வேலைக்கு விண்ணப்பம் செய்வான். இந்தியிற் பட்டம் பெற்றவன் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், மகாராட்டிரம், பீகார் முதலான எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசு நிலையங்களிலும் வேலைக்கு விண்ணப்பஞ் செய்வான். எல்லா மாநிலங்களிலும் விண்ணப்பஞ் செய்யும் தகுதி இந்திப் பட்டதாரிக்கு எப்படி வந்தது? பெற்ற அறிவில் வேறுபாடா? இல்லை. பெற்ற மொழியில் வேறுபாடு. இந்தியைப் பாரத மொழியாக்கியதால் வந்த வேறுபாடு. அதனால் என்ன மனப்பான்மை இளைஞர்க்குத் தோன்றும்? வேலைவாய்ப்பை எங்கும் தரும் இந்திப்பட்டதாரி ஆவதையே எல்லாரும் விரும்புவர். வரவரத் தமிழிற் சொல்லிக்கொடுக்கும் பொறியியல் கலையியல் மருத்துவ இயல் எல்லாம் அணிலோடு முன்றில்போல மாணவர்தொகையின்றி எடுபட்டுவிடும். தமிழிற்கு ஆள்வரவில்லையே, மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பவில்லையே, தமிழ்ப்பற்று இல்லையே என்று இன்றுபோல் அரசு ஒப்பாரி வைக்கும் நிலை மீண்டும் வரவேண்டுமா? ஏன் விரும்பவில்லை? தமிழ்க்குற்றமா? படிப்பவர்குற்றமா? இல்லை, இல்லை, தமிழுக்குப் பாரத மதிப்புக் கொடாத குற்றம், பாரதமதிப்பை இந்தி ஒன்றுக்கே உரிமையாக்கிய குற்றம். மேலும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் ஐந்தாறு பொறியியற் கல்லுரிகள் உள. எல்லாக் கல்லூரியிலும் ஆங்கிலமே பயிற்றுமொழி. சென்ற ஆண்டு திருச்சிராப் பள்ளியில் வட்டாரப் பொறியியற் கல்லூரி ஒன்று ஏற்பட்டது. அங்கும் ஆங்கிலமே பயிற்றுமொழி. பாடத் திட்டத்தில் வேறுபாடில்லை. எனினும் இவ்வட்டாரப் பொறியியற் கல்லூரியில் சேர நல்ல பல மாணவர் விண்ணப்பித்தனர். காரணம் என்ன தெரியுமா? இக்கல்லூரி மத்தியவரசைச் சார்ந்தது என்பதுதான். இங்குப் படித்துப் பட்டம் பெற்றால் வேலைக்கு முந்தி எடுத்துக்கொள்வர். வேலையும் பல இடங்களில் கிடைக்கும் என்பது மாணவர்கள் நம்பிக்கை. ஒரே மொழி பயிற்று மொழியாக இருந்துங்கூட மத்திய அரசு நேரடியாக வைத்த கல்லூரி என்பதனால் மாணவர்கள் முதற்கண் அங்கு விண்ணப்பஞ் செய்கின்றனர். மத்திய அரசுக் கல்லூரியாகவும் மத்திய அரசு மொழியாகிய இந்திக் கல்லூரியாகவும் இருந்துவிட்டால், மாநில அரசுக்கு உட்பட்ட தமிழ்க் கல்லூரிக்கு எத்தமிழன் வருவான்? இந்தி ஒன்றே பொது மொழியானால் இவ்வவல நிலை ஏனை மொழிகள் எல்லாவற்றிற்கும் வரும். வாராமுன் காக்க ஒரு வழி உண்டேல் சொல்லுங்கள். இந்தி ஒன்றே பொதுமொழியாயின் இந்திப் படிப்பே இந்திய நாட்டுப்பற்றுக்கு அடையாளம் என்றாகும். இந்திக்குப் புறம் பேசுபவரும் அழுத்தமான தாய்மொழிப் பற்றுடையாரும் நாட்டுக் கேடிகளாக ஐயப்பட நேரிடும். ஆதலால் இந்தியை இந்திய நாட்டோடு இணைத்துப் பேசாதீர்கள். பன்மொழியையும் இணைத்துப் பேசுங்கள். இந்தி ஒன்றே பொதுமொழியாயின், பாரத அரசு கோடி கோடிப் பொருள் செலவிட்டு அதிகாரத்தோடு மூலை முடுக்கெல்லாம் பரப்பும். அதனால் பழைய மத மாற்றம் போன்று புதிய மொழிமாற்றம் ஏற்படும். ஏனை மொழியினர் வாழ்வு நச்சி இந்தியைத் தாய்மொழியாவே தழுவும் நிலை வரும். வந்தால் அஞ்சத்தக்க விளைவுகளும் கொடுமைகளும் உண்டாகும். உண்டானால் நாடு எஞ்ஞான்றும் கலவரம் உடையதாகத் தடுமாறும். எல்லா மொழிக்கும் ஒரு சீரான சமமான முன்னேற்றம் வரவேண்டுமாயின், பன்மொழிச் சட்டம் செய்வதே தகும். மத்திய அரசு ஒரு மொழிக்கே பெருஞ் செலவு செய்வது, ஒரு மொழியையே மிகவும் பரப்புவது. ஒரு மொழிக்கே பெருவேலை கொடுப்பது, ஒரு மொழிக்கே வானொலியை வயப்படுத்துவது எல்லாம் முறையன்று. ஒரு குழந்தைக்கு ஒரு மூலையிலிருந்து பாலும் பிற குழந்தைகளுக்கு மற்றொரு மூலையிலிருந்துரு நீரும் அளிப்பதாகும். இந்தி ஒன்றே மத்திய அரசுமொழியானால். ஏனையவை மாநில அரசு மொழிகளானால், சமமான மதிப்போ, சமமான அதிகாரமோ, சமமான பொருளாதாரமோ, சமமான விருப்பமோ மாநில மொழிகளுக்கு இரா.அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்றபடி, பொதுவழி எம்மொழி அம்மொழிப்படியே நாடு இயங்கும், மனம் பற்றும். இன்று பார்க்கின்றோமே. ஒரே ஊரில் மத்திய அரசைச் சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. மாநில அரசைச் சார்ந்த அலுவல கங்களும் உள்ளன. இவற்றிற்கிடையே ஏற்ற இறக்கம் எப்படி? பஞ்சப்படி எப்படி? ஒருவன் எந்த அரசுப் பணியாளனாக இருக்க விரும்புவான்? ஒரே ஊரில் ஒரே மாதிரி வேலைக்கு இருவகைச் சம்பளத் தரம். இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியான இரண்டு அரசுகள் இருப்பது போல் படவில்லையா? ஆதலின் வேலையாட்கள் மாநில வேலையைவிட்டு மத்திய வேலைக்கு ஆசைப்படுவது இயல்புதானே. இந்தி ஒன்றை மட்டும் பொதுமொழியாக்கி உயர்ந்த வேலைக்கு உரியதாக்கினால், மக்கள் மோகம் இந்தி மேல் இருக்குமேயன்றி, மாநில மொழிமேல் இரா. இவை ஏழை மொழிகளாகவே மனத்தில் எண்ணப்படும். இந்தி ஒன்றே பொதுமொழியாயின், மாநிலங்களில் உள்ள அரசு நிலையங்களிலும் தனியார் நிலையங்களிலும் இந்தி வீற்றிருக்கும். இந்தியறிந்தோரே வரவேற்கப்படுவர். இந்தித் தட்டெழுத்துக்களே விரற்படும். தமிழ் முதலான மாநிலத்துள்ளும் கடிதப் போக்குவரத்து இந்தியிற்றான் நடக்கும். ஒவ்வொரு மாநிலத்தும் மாபெரும் இந்திச் செய்தித்தாள்கள் வெளிவரும் அவற்றுக்குத்தான் விளம்பரங் கள் கிடைக்கும். இன்னும் இந்தி பரவாத முறையில் பலர் இந்தித் திரைப்படம் எடுக்க முனைகின்றனர். இந்தி நடிகர் நடிகையராய்த் திகழப் பலர் விழைகின்றனர். மாநில எழுத்தாளர் எல்லாம் இந்தி யெழுத்தாளராகப் பாரத எழுத்தாளராகப் பாடுபடுவர் ஏன்? இந்தியில் வெளியிட்டால் பதினாயிரக் கணக்கான படிகள் விற்பனையாகும், வருவாய் கூடும், நாடு முழுதும் பெயர் பரவும், மத்திய அரசின் கண்பார்வை விழும். ஒருமொழி நாட்டில் இவ்வாசைகள் இயல்பான மனித ஆசைகளே. காந்தி போலத் தன் நூலை முதற்கண் தன் தாய்மொழியில் எழுதுவார் யார்? உலகப் பற்று அற்ற அக் காந்திதான் அவ்வாறு செய்ய முடியும். இந்தி ஒன்றே பொதுமொழியாயின். தமிழன் தெலுங்கு கல்லான், தெலுங்கன் தமிழ் கல்லான், கன்னடன் மகாராட்டிரம் படியான், மகாராட்டிரன் குசரத்துப் படியான். இந்தி ஒன்று பேசத் தெரிந்து விட்டால் எம்மாநிலத்தவரும் தம்முன் உரையாடிக் கொள்ளலாம் அல்லவா? எவனுக்கும் இந்தி தவிர ஏனை நாட்டுமொழி தெரிந்துகொள்ளத் தேவையில்லை. இந்தி என்னும் ஒரு தனிப் பெருங்குடையை விரித்த பின்பு, ஏனை மொழிக் குடைகளைச் சுருக்கிக் கக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டபின், வேறு குடையை விரும்புவார் உண்டோ? அரச மரத்தின் விரிநிழலில் வேறொன்று வளராததுபோல ஒரு பொது மொழியின் பக்கத்து எம்மொழியிருந்தாலும் சின்னாள் வளர்வது போலத் தோன்றுமேதவிர, முடிவில் வாடிச் சாம்பிப்பட்டுவிடும். அரசவெய்யிலும் பொருள்நீரும் வாழ்வுரமும் இல்லாத மொழிப் பயிர்க்கு என்ன வளர்ச்சியுண்டு? இந்தி ஒன்றே பொதுமொழியாயின், தமிழன் வீட்டிலும் தமிழொலி குறையும், தெலுங்கள் இல்லிலும் தெலுங்கொலி குன்றும். இந்தியிற் பேசிப் பழகுவதற்கு இந்தியாட்களா கிடைக்கும்? மக்களும் மனைவியும் மைததுனனும் அண்ணனும் தம்பியும்தான் அருகிற் கிடைப்பர். தமிழர்கள் தமக்குள் ஆங்கிலத்திலேயே பேசி எழுதிக்கொள்வதுபோல, சில குடும்பங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலமே பேசுவதுபோல, எல்லாம் இனி இந்தியில் நடக்கும். இந்தியில் உரையாடுவது அறிவாகவும் அழகாகவும் நாகரிகமாகவும் தேசியமாகவும் போற்றப்படும். இவை கற்பனையல்ல. அல்லவேயல்ல. ஆங்கிலச் செல்வாக்கை எண்ணிப் பார்த்தால் பளிச்சென்று தெரியும். அப்படியெல்லாம் வந்துவிடுமா? உரிமை நாட்டில் வரவிடு வோமா? என்று சொல்வாரைப் பற்றி யாதும் சொல்ல நாணுகின்றேன். இந்தி ஒன்றே பொதுமொழியானால் ஊர்ப்பட்ட கேடுகள் வரும் என்பதனைப் பாரதியார் வாக்கின்படி நாற்பதினாயிரம் கோயிலிற் சொல்லுவேன். இந்தி ஒன்றே பொதுமொழி. தென்னக மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் இணைமொழியாக இருக்கும் என்பீராயின், மக்கள் என்ன எண்ணுவர், தெரியுமா? எப்படியும் சட்டப்படி ஒருநாள் இந்தி பொதுமொழியாக வரப்போகின்றது, மத்தியவரசும் வேண்டிய வழிதுறைகளை விரித்துச் செய்கின்றது, நாள் தள்ளிப்படிப்பதை விட இப்போது படிக்க முந்திக்கொண்டு விடுவோமே என்று எப்படி எப்படியோ படிக்கத் தொடங்கி விடுவர். குழந்தை களையும் படிக்கச் சொல்லுவர். ஆதலால் ஆங்கிலம் இணை மொழி என்பது இந்தி படிக்க அவகாசம் அளிக்கும் இடைக் காலம் என்பதுவே கருத்து. இவ்விடைக் காலத்து ஆங்கிலம் அமுக்கிக்கொண்டிருக்குமாதலின் மாநில மொழிகள் வளரா. ஆங்கிலம் அகலும்போது அவ்விடத்தை இந்தி கைப்பற்று மாதலின் என்றும் மாநில மொழிகள் வளரா. இவற்றுக்கு ஒரு நாளும் சுதந்திரம் என்பது இல்லைகொல்? தனிவளர்ச்சி என்பதில்லை கொல்? இவற்றின் சுதந்திரதாகம் என்று தணியுமோ? ஆங்கிலம் இணைமொழியாக இருப்பது கண்டு ஏமாற்றிக்கொள்ளவேண்டா. மொழி பதினான்கிற்கும் பொதுமொழிச் சமம் வழங்கினாலல்லது, சட்டஞ் செய்தாலல்லது மொழிச் சிக்கலுக்கு நிலையான தெளிவான உய்தியில்லை. பாரதம் ஓர் குடியரசு நாடு. குடியரசு என்பது அதிகாரப் பகுப்பரசு. எந்த ஒரு மொழிக்கும் எந்த ஒரு நிலத்துக்கும், எந்த ஒரு இனத்துக்கும், எந்த ஒரு மதத்துக்கும் பாரத முழுவதிகாரத்தை நடைமுறையிலோ சட்டத்தாலோ அளித்துவிடக்கூடாது. ஒருக்காலும் கூடாது. அளித்தால் அவ்வொன்றை நோக்கியே எல்லாம் சாயும். அவ்வொன்று எல்லாவற்றையும் தன்னடிக் கீழ்ப்படுத்தும். “சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம், ஒன்றினாற் குறையுடையோம் அல்லோம்” என்றார் அப்பர் பெருமான். சிவன் என்னும் முழுப்பொரு முதல்வனைச் சேர்ந்த நாங்கள் ஊர்ச் சிறு தெய்வங்களை மதித்துத் தொழுவோமா? தொழுது என்ன பயன்? எவன் ஒருவன் எல்லாவற்றையும் தருவானோ அவனைச் சேர்ந்து விட்டோமே என்பது தேவாரப் பெருமிதம். இந்தியொன்றே பாரத முழுமொழியாயின். அவ்வொன்றனைக் கற்றவர்கள், அது இமயமுதற் குமரிவரை செல்லாத இடமில்லை என்ற செல்வாக்கை அறிந்தவர்கள் ஏனைச் சிறு நில மொழிகளை ஏன் படிக்க வேண்டும்? மதிக்க வேண்டும்? படித்தாலும் மதித்தாலும் உலகில் வாழத் தெரியாப் பைத்தியம் என்பர். ஏன்? எல்லாப் பொருளும் இந்தியாற் கிடைக்கும். அதனாற் கிடைக்காத பொருள் என்பது ஒன்றில்லை. ஆதலின் ஏனை மொழிகள் படிப்பது வீண் என்றாகும். பாரதம் பன்மொழி நாடு. அப் பன்மொழிகளையும் தம் குழந்தைகளாக மத்திய அரசு போற்றி வளர்த்தாற்றான் நாடு நெறியான தடத்தில் இயங்கும், மக்கள் மனம் பற்றாக வளரும், அச்சமும் துச்சமும் அடிமையும் இன்றி நடையுடைவினை நினைவெல்லாம் இருக்கும். இந்தி என்னும் ஒரு கால் வைத்துப் பாரதத் தேரை இயக்கிவிடலாம், வரவரச் சரியாகிவிடும் என்று, தலைவர்களே! இளங் குடியரசைப் பதம்பார்க்க வேண்டா. முயற்சிக்கு ஓர் எல்லையுண்டு. விட்டுக் கொடுத்தற்கு ஒரு கட்டுக்கோப்பு உண்டு. ஒரே ஒரு மொழி வைத்து இப்பன்மொழிப் பாரதத்தை உரிமையோடு ஆண்டுவிடலாம் என்று திட்டமிடுவது வடவிமயம் தென்னிமயம் ஆனாலும், தென்குமரி வடகுமரி யானாலும் நடவாது. இஃது என் எண்ணத் தெளிவு. ஆதலின் அன்பினால் துணிந்து சொல்லுகின்றேன். நாடு கெடினும் உரிமை கெடினும் மக்கள் அடிமைப்படினும் வருவது வருக என்று ஒரே ஒரு மொழியை, இவ்வளவு கடிதங்கள் படித்த பின்னும், பொதுமொழியாக்கத் துணிகின்றீர்களா? ஒருமொழித் துணிவு வேண்டா வேண்டா. வேண்டுங்கள் பன்மொழித் துணிவை என்று பாரதத்தாயின் திருவாய் மொழியாக இரக்கின்றேன். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 23 தலைவர்களுக்கு, வணக்கம். இதுவரை விளக்காத ஒரு கருத்தை இக்கடிதத்தில் காணப்போகின்றீர்கள். மாறுபாடாகத் தோன்றினும் அன்பர்கள் மனம் வைத்துச் சிந்திக்க வேண்டும். நல்லதாகத் தோன்றினால் இதுகாறும் நீங்கள் சொல்லி வந்ததை மாற்றிக்கொள்ளத் தயங்கக்கூடாது. நாட்டு நலமே நம் அறிவின் நோக்கம். என் எழுத்தின் நோக்கம். சூன் 2 கூடிய காங்கிரசுச் செயற்குழுவின் தீர்மானத்தை முன் கடிதத்திற் பாராட்டினேன். பதினான்கு மொழியும் மத்தியப் பணித்துறைத் தேர்வுக்கு உரியன என்ற தீர்மானம புதிய நல்வழி காட்டியது என்று வரவேற்றேன். ஒவ்வொரு மாநில மொழியும் ஆட்சி மொழியாகவும்க பல்கலைக் கழக மொழியாகவும் விரைவில் செயற்படவேண்டும் என்ற தீர்மானம் பழையதாயினும் புதிய வேகத்தது என்று போற்றினேன். அன்று அக்குழு செய்த வேறு சில தீர்மானங்களை நான் மூன்று நான்கு ஆண்டுகளாகச் சிந்தித்துத் தெளிந்த உரைகல்லில் உராய்ந்து பார்த்தேன். சில மச்சம் குறைந்தனவாகப்பட்டன. மச்சம் குறையாத பசும்பொன் தீர்மானங்களாக எங்ஙனம் உயர்த்தலாம் என்று ஆராய்ந்தேன். மீண்டும் மீண்டும் மொழிப் பிரச்சினை பற்றியே நாடு முழுதும் பேசிக்கொண்டு காலத்தைக் கடத்தினால், என்ன உருப்படும்? என்ன நிலையாகச் செய்ய முடியும்? வேர் வளர்ந்திருக்கின்றதா என்று நீர் ஊற்றும் போதெல்லாம் தோண்டிப் பார்த்தவன் கதையாகிவிடும். ஒரு நாட்டின் எல்லா ஆதாரத்திற்கும் மொழியே அடிவித்து. பற்றுக்கும் படிப்புக்கும் அறத்துக்கும் மறத்துக்கும் நடைக்கும் படைக்கும் தொழிலுக்கும் எழிலுக்கும் எண்ணத் துக்கும் எழுத்துக்கும் வணிகத்துக்கும் எல்லா அகப்புற வாழ்வுக்கும் மொழியே மனித மூலம். இந்த மொழி கல்வி மொழியாகலாமா? பல்கலைக்கழகப் படிப்பு மொழியா கலாமா? மாநில ஆட்சிமொழியாகலாமா? மத்தியத் தேர்வு மொழியாகலாமா? பாராளுமன்ற மொழியாகலாமா? கலை மொழியாகலாமா? அறிவியல் மொழியாகலாமா? ஒரு மொழி போதுமா? இருமொழி போதாவா? பன்மொழி வேண்டுமா? என்பது பற்றி உரிமை பெற்றுப் பதினெட்டு ஆண்டு ஆகியும் இன்னும் நாம் தீர்ந்தநேரிய ஒரு முடிவைக் காணவில்லை யென்றால், வெட்கம் வெட்கம் எனறு நாமே சொல்லி நம் தலையைக் குனிவித்துக் கொள்வது தவிர வேறு தண்டனை யில்லை. மொழிப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணாமையால் இன்னும் எத்துறையிலும் நாடு ஒழுங்காக ஓடவில்லை. கற்றார் கற்பார் மனங்கள் எல்லாம் அறிவு நிலையில் ஒரு நிலைப்படவில்லை. முடிவாக எண்ணுமின்! நான் சொல்லு கின்றேன் என்று வருத்தப்படாதீர். இந்தி என்னும் ஒரு மொழிச் சிந்தனையாற்றான் நாடு உருவாக வரவில்லை. ஒரே ஒரு பொது மொழி என்ற சிந்தனை மேலும் ஓடினால் ஒரு நாளும் இப்பன்மொழி நாட்டை யாரும் உருவாக்க முடியாது. உருவாக்கு முறையில் இனியாவது சிந்திப்போம். பதினான்கு மொழியிலும் மத்தியவினைத் தேர்வு என்ற தீர்மானம் நல்ல சிந்தனைகளை உருவாக்கும் தீர்மானம் என்பதனாற்றான் அடிக்கடி பாராட்டுகின்றேன். இத்தீர்மானம் வெற்றியாகுமாறு முடித்தல் தீர்மானஞ் செய் குழுவின் பொறுப்பு. தலைவர்களே! மும்மொழித் திட்டம் பற்றி எழுதுவதற்குத் தான் இக்கடிததைத் தொடங்கினேன். ஒரு நல்ல கூறு அண்மையில் காங்கிரசு செய்த தீர்மானத்தில் புதிதாக இடம் பெற்றிருக்கின்றது. இந்தி படிக்க வேண்டும் என்பது ஏனை மொழியாளர்க்கு ஒரு கட்டாயமாக இருந்தது. இந்தி மொழி யாளர்ககோ ஏதாவது ஒரு தேசியமொழி படித்தாற்போதும் என்பது வேண்டுகோளாக இருந்தது. ஏனை மொழியாளர் இந்தி கட்டாயம் படிப்பது போல இந்தியினரும் எட்டாவது அட்டவணையிற் கண்ட ஒரு மொழியைக் கட்டாயம் கூடப் படிக்க வேண்டும் என்பது இப்புதிய தீர்மான முடிவு. இதனால் தாய் மொழியிலும் கூட ஒரு நாட்டு மொழியைப் படித்தல் எல்லார்க்கும் கட்டாயம் ஆயிற்று. எல்லார்க்கும் ஒத்த முயற்சி, ஒத்த கல்வி என்ற நீதி உண்டாகின்றது; வடகோடும், தென்கோடும் சமநிலை பெறுகின்றன. நீதி நேர்மை என்ற நோக்கோடும் பாரத மக்கள் எல்லார்க்கும் கூட ஒரு மொழி தெரிதல் வேண்டும் என்ற கருத்தோடும் இப்புதிய மும்மொழித் திட்டம் அமைகின்றது. எனவே இந்தியினர்க்கு, (1) இந்தி (2)குசரத்து, ஆந்திரம், தமிழ் முதலான ஏனைப் பதின் மூன்று மொழிகளில் ஒன்று (3) ஆங்கிலம் என்ற மும்மொழிப் படிப்பு அவர் கல்வியில் இடம் பெறும். தமிழர் முதலாயினார்க்கு (1) தம் மாநில மொழி (2) இந்தி (3) ஆங்கிலம் என்ற மும்மொழிப் படிப்பு அவர் கல்வியில் இடம் பெறும். இத்திட்டத்தை மேலும் ஆராய்வோம். எல்லார்க்கும் கட்டாயம் என்ற தன்மையைக் கண்டு சிக்கல் தீர்ந்தது என்று பலர் மனமகிழ்ச்சியடையலாம். எல்லார்க்கும் ஒத்த பாரம் என்று பலர் மனங்குளிரலாம். என் நாட்டுக்கண் காணும் பார்வை வேறு. ஐந்து கருத்துரைகளைத் தந்து இக்கடிதத்தை முடிப்பேன். 1. மும்மொழித் திட்டம்பற்றிய என் முதற்கருத்து. எவ்வகையானும் ஒரே ஒரு நாட்டு மொழிக்கு ஆதிக்கம் இருக்கலாகாது. அவ்வாதிக்கத்தை மறுபடியும் இத்திட்டத்திற் காண்கின்றேன். இந்தியொன்றே பொதுமொழி என்ற பழைய சிந்தனைத் தடத்தில் இத்திட்டம் வரையப் பெற்றுளது. இந்தியல்லா ஏனைமொழியினர் இந்தி படிக்கவேண்டும். இந்தியினர் தேசிய மொழிகளுள் ஏதாவது ஒன்றைப் படிக்க வேண்டும். இந்தியல்லாதோர்க்கு இந்தியொன்றையே படிக்க வேண்டும் என்ற மொழி வரம்பு ஏன்? இந்தியினர்க்கு எத்தேசிய மொழியையும் படிக்கலாம் என்ற மொழிச் சலுகை ஏன்? அவ்வரம்புக்கும் இச்சலுகைக்கும் சரியான காரணம் கூற முடியுமா? ஒரே ஒரு காரணந்தான் உண்டு. அதாவது இந்தியொன்றே பொதுமொழி; அதனை எப்படியும் நாடு முழுதும் பரப்பவேண்டும் என்ற பழங்கொள்கை. நான் கேட்பது ஒன்றுதான். இந்தி மொழியினர்க்கு அளித்த சலுகையை ஏனை மொழியாளர்க்கும் ஏன் அளிக்கக் கூடாது? இந்தியாளி, பஞ்சாபி, தமிழ், மராட்டி என ஏதாவது ஒன்று கூடப்படிக்கவேண்டும் என்பது போல ஆந்திரன் மலை யாளம், இந்தி, குசரத்து, தமிழ் என ஏதாவது ஒன்று கூடப்படிக்க வேண்டும் என்று ஒத்த சலுகை ஏன் அளிக்கவில்லை? அளிக்க வேண்டும். இதுதான் நேர்மை என்பது மட்டுமன்று இப்பெரு நாட்டுக்கு நன்னலம் ஆகும். எது நாட்டுக்கு நல்லதோ அதுதான் என் கடிதங்களில் இடம்பெறும். இந்தி ஒன்றே பொதுமொழி என்ற கொள்கையைச் சிந்தனையிலிருந்து விடும் நாள் எந்நாளோ அந்நாள் இந்தியாவுக்கு விடுதலை நாள். பன்மொழிகளும் பொது மொழிகளாம் என்று சட்டம் செய்யும் நிமிடம் எந்த நிமிடமோ அந்த நிமிடம் நாட்டுப்பற்றுக்கு நல்ல நிமிடம். பன்மொழி என்னும் அகலப் பாதையைக் கடைப்பிடிக்காதவரை செய்யும் தீர்மானம் எதுவும் மேல் திருத்தத்துக்கு உரியதாகவே இருக்கும். இந்தி மொழியினர், ஏனை மொழியினர் என்று நம்மைப் பிரிவினை செய்து கொள்ளாமல், இந்திய மக்கள் தம் தாய் மொழியோடு இன்னொரு நம் மொழியையும் கற்க வேண்டும் என்று எல்லார்க்கும் ஒப்ப இத்தீர்மானம் புதுப்பிக்கப்படுமானால், என்போலும் நாட்டன்பிகளின் வரவேற்பு எப்பிறவியிலும் இருக்கும். இது ஒரு நாள் புதுப்பிக்கப்படும் என்று நம்பியிருக் கிறேன். 2. மும்மொழித் திட்டம் பற்றிய என் இரண்டாவது கருத்து. பல்கலைக்கழகம் வரை எல்லோரும் மும் மொழி களையும் படிக்கவேண்டும் என்றால், (மாநிலமொழி-இன்னொரு நம்மொழி - ஆங்கிலம் என எந்த மும்மொழிகளாக இருந்தாலும்) கல்வித்திட்டம் கேவலம் மொழிக் கூட்டம் ஆகுமேயன்றி அறிவுத்திட்டம் ஆகாது. பள்ளிகள் மொழிப் பள்ளிகள் ஆகவும் பல்கலைக் கழகங்கள் மொழிக் கழகங்கள் ஆகவும் காட்சியளிக்குமேயன்றி அறிவு நிலையங்கள் ஆகா. ஒரு வாரத்திற்கு 28 மணிநேரம் படிக்கும் மாணவன் 15 அல்லது 18 மணி நேரம் மொழி படிப்பதாக முடியும். ஒரு மொழியிலும் செம்மை வராது என்பது என் ஆசிரிய அநுபவம். இந்தியா அறிவுத் தரத்திலும் அறிவியல் தரத்திலும் கீழான நாடுகட்கும் கீழாகி விடும் என்று அஞ்சுகின்றேன். விண்வெளிச் செலவைக் காணமாட்டாது மும்மொழிச் செலவையே கண்டு கொண்டிருப்பதாக முடியும். காலவறிவு குன்றி இளைஞர்களும் முன்னேற்றம் குறைவர். நாடு வழி வழி எல்லா வகையாலும் மிகப் பின்தங்கும் ஆதலால் நம் மொழித் திட்டங்களுக்குக் கல்வி நிலையங்களை அளவாகவே பயன்படுத்தவேண்டும். அறிவுக்கு உரியனவாகவே பயன்படுத்தவேண்டும். மொழி வெள்ளம் அறிவுப் பயிரை அழித்துவிடலாகாது. என் கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டா. ஒவவொரு இந்தியனும் தன்மொழியல்லாத ஓர் இந்திய மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் உடன்படுவது மட்டுமன்று, இமயத்தில் உச்சியேறிப் பறைசாற்றவும் செய்வேன். ஏன்? நம்நாடு பன்மொழிநாடு. எவ்வளவு மக்களை நாம் பன்மொழி மக்கள் ஆக்கு கின்றோமோ அவ்வளவுக்கு நாட்டில் ஒருமைப்பாடு உரம்பெறும். இது நாம் கட்டாயம் செய்ய வேண்டியது. இதனை நீங்கள் பள்ளிக்கூட வழி செய்ய நினைப்பது தான் பெருந்தவறு. எண்ணிய பயனையும் இழப்போம், கல்விப் பயனையும் இழப்போம். இரண்டுங்கெட்டான் ஆவோம். கல்வி நிலையங்கட்குப் புறம்பாகத்தான் மக்களிடை பன்மொழி பரப்புவதை மேற்கொள்ள வேண்டும். இன்னொரு தேசிய மொழியை எல்லாக் கல்வி நிலையங்களிலும் கற்றுக் கொடுப்பதானால் எத்துணைக்கோடி செலவாகும்? எவ்வளவு காலம் செலாவகும்? என்ன பயன்வரும் என்று ஒரு கணம் எண்ணுமின்! கோடிகோடி செலவாவது பற்றி நம் பெருநாடு கவலைப்படவேண்டா. பயனின்றிச் செலவழிக்கக் கூடா தல்லவா? அறிவுத் தரம்குறையச் செலவழிக்கலாகாது அல்லவா? இன்னொரு தேசிய மொழியைப் பல்கலைக் கழகம் வரை கட்டாயப்படுத்தினால் (விருப்பப் பாடமாக எடுக்கலம்) பாடம் வைத்தோம் என்ற உவப்புத் தவிர, ஏனையவெல்லாம் ஏமாற்றமே. பன்மொழிப் பரவலுக்குத் தயங்காது செலவழிப்போம்: பன்மொழி மக்களாகப் பக்குவப்படுத்துவோம், இவை யெல்லாம் பள்ளியில் வைத்துக் கொள்ளாது வெளியில் வைத்துக் கொள்வோம். வழியா இல்லை? இந்தியையோ தமிழையோ தெலுங்கையோ பரப்புவது எப்படி? தெலுங்கினை இந்தியினர்க்கு இந்தி வடிவில் எழுதுக. தமிழர்க்குத் தமிழ் வடிவில் எழுதுக. குசரத்தியர்க்குக் குரசத்து வடிவில் எழுதுக. ஒரு தேசிய மொழியைப் பிற தேசிய மொழிகளின் வடிவில் எல்லாம் கூடியவரை விளக்கஞ் செய்து எழுதுக. ஒலி வேறுபாடு வருமிடங்களில் குறிகள் இட்டுக் காட்டுக. பன்மொழிச் சிறுநூல்கள், அரிச்சுவடிகள் தண்ணீர் பட்டாற் போல எங்கும் கிடைக்குமாறு இலவசமாக அளியுங்கள்! சுற்று மொழியாசிரியர்கள என்ற ஒரு குழு அழைத்துப் பல மாநிலங்களுக்கு அனுப்புங்கள்! பெருந் தலைநகரங்களிலும் கல்லூரிகளுக்கு அணிமையிலும் பன்மொழிக் கூடங்கள் அமையுங்கள்! விரும்புவார் ஒரு மொழியோ பல மொழியோ படிக்கட்டும், மூன்றுமாத ஆறுமாத வகுப்புக்கள் உதவித் தொகை வழங்கி நடத்துங்கள்! தனித்தேர்வுகள் எழுதச் செய்த பட்டங்கள் வழங்குமின்! மொழிகள் பரப்பும் தனி நிலையங்களுக்கு எல்லா மாநிலத்திலும் பேராதரவு நல்குமின்! பன்மொழி தெரிந்தார்க்குப் பரிசுகள் அளிமின்! பன்மொழிப் போட்டிகள் பெருக்குமின்! கோடி கோடி இவ்வகையிற் செலவழிக்கலாம். பத்தாண்டிற் பாருங்கள். நாம் எண்ணாத, நம்மால் எண்ண முடியாத ஒருமைப்பாடும் மக்கட்கலப்பும் இனவுறவுகளும் பெருகி நிற்கும். இன்னொரு தேசிய மொழி தெரிய வேண்டும் என்பது மேலான கருத்து. அக்கருத்தினை முறை மாறிச் செய்தால் கருத்துக்கே கேடு ஆதலின் பள்ளிகட்கு வெளியில் பன்மொழியைப் பரப்புவோமாக. முன்மொழித் திட்டத்துக்குப் பள்ளிகளை அடிமைப்படுத்த வேண்டா. வளரும் மாணவர் களை வாட்ட வேண்டா. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் எல்லாம் பலதுறைகளையும் தாய் மொழி வழி கற்பிப்பதோடு நிற்கட்டும். 3. மும்மொழித் திட்டம் பற்றி என் மூன்றாவது கருத்து. பல்கலைக் கழகம் வரை நம் மொழிகள் பாட மொழிகள் ஆக வேண்டும் என்ற கொள்கையை ஏறக்குறைய நாற்பதாண்டு களாகத் தலைவர்கள் சொல்லிக் கொண்டு வருப. சொல்லும் போதெல்லாம் விரைவில் விரைவில் வரவேண்டும் என்று மரபாகச் சொலுகின்றனரேயன்றி ஒருத்தராவது இன்ன ஆண்டிலிருந்து வரவேண்டும் என்று காலக்கெடு கூறு கின்றனரா? தேதி வையாத திருமணத்துக்கு வேலை என்ன நடக்கும்? உரிமை பெற்றுப் பதினெட்டாண்டு ஆன பின்னருமா ஆண்டு சுட்டத் தயங்குகின்றீர்கள்? நாட்டு மொழிகள் பல்கலைக் கழகமொழி யாதற்கு ஆண்டு சுட்டாமையால், தங்கள் காலத்தை ஆங்கிலமாகவே ஓட்டி விடலாம் என்று கற்றவர்கள் கடத்துகின்றனர். எழுத்தாளர் களும் வெளியீட்டாளர்களும் எழுதவும் பதிப்பிக்கவும் அஞ்சுகின்றனர். விற்பனைச் சந்தை இல்லாதபோது விளைவு செய்வார் உண்டோ? பூனைக்கு மணி கட்டுவது யார் என்றாற்போல, தாய்மொழிக்குக் கல்வி முடியளிக்க மாநிலவரசும் முன்வர வில்லை. பல்கலைக் கழகமும் முன் வரவில்லை. இந் நிலையிற்றான் மத்திய வரசும் ஆளுங்கட்சியான காங்கிரசும் வழி காட்டவேண்டும். தமிழ் நாட்டரசு பல்துறை நூல்களை நூற்றுக் கணக்காக வெளியிட்டுவருவது பெரும் பாராட்டுக்கு உரியது. தமிழைக் கல்லூரி மொழியாக்க வில்லையே என நல்லன்பர் பலர் தமிழக அரசைக் கழறுகின்றனர். இந்திய நாட்டில் ஒரு மாநில அரசு மட்டும் நிலமொழியைக் கல்வி மொழியாக்குவது கடைபோகாது. ஆக்கினால் கற்றார் எதிர்ப்புப் பெரிதாகும். மாணவர் வரவு சுருங்கும். கொள்கை பின் வாங்க நேரிடும். மொழிக்கும் சிறுமை ஏற்படும். மாநில மொழிகள் கல்வி மொழி யாதல் என்பது மாநிலக் கொள்கையன்று. பார நாட்டுக் கொள்கை. தற்காப்புத் திட்டம் போன்றது தாய் மொழிக்காப்புத் திட்டம். தற்காப்பினால் படை வளமும் தாய்மொழிக் காப்பினால் பற்றுவளமும் உண்டாகும். நாட்டுப்பற்று இல்லாதவன் கையில் கூற்றுப் படை இருந்தும் பயன் என்னை? பேடிகை வாளோடு ஓக்கும். ஆதலின் காங்கரிசு 1966 இலிருந்து எல்லா மாநிலங்களிலும் நாட்டு மொழிகள் பல்கலைக் கழக மொழியாதல் வேண்டும் எனத் தீர்மானஞ் செய்து வழி காட்டுவதை நான் எதிர்பார்க்கின்றேன். இத்தகைய ஒரு கல்விச் சட்டம் செய்தல் பாராளுமன்றத்தின் தனிப்பொறுப்பு எனவும் சுட்ட விரும்புகின்றேன். ஆண்டு கூறாதவரை எல்லார்க்கும் நாட்டுமொழிக் கொள்கையில் ஐயப்பாடே தோன்றும்; நம் தலைமுறையில் இது வராது என்ற அவநம்பிக்கையே தோன்றும்; தொடக்கப்பள்ளி உயர் நிலைப்பள்ளியிலுங்கூட ஆங்கிலக் குருமார்பள்ளிகளுக்கே குழந்தைகளை அனுப்பத்தோன்றும். உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலத் தனிவகுப்புகளைத் தமிழ் நாட்டிற் புகுத்துவதுபோல மீண்டும் கொண்டுவரத்தோன்றும்; குடியரசு நாட்டில் மக்களை இன்னமொழியிற்படி என்று கட்டாயப்படுத்த முடியுமா? என்று சாக்குச் சொல்லத் தோன்றும்; இவ்வாறு மறுபடியும் அடிமையுணர்ச்சிக்கு வேண்டியவெல்லாம் செய்யத் தோன்றும். இத்தீய போக்கு குன்று விழுந்த கூரைபோல ஒரு நொடியில் மறைய வேண்டும் எனின், நம் பாராளுமன்றம் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று; அதுதான் தாய் மொழிகள் உயரிய கல்வி மொழியாதற்கு ஆண்டு குறிப்பிடல், இவ்வாண்டு முதல் இது செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றுபோல் கட்டளையிடல். இவ்வொரு கட்டளை போதும் இந்தியாவில் பல நன் மாற்றங்களைக் காண்பதற்கு. பாராள்மன்றம் இவ்வொன்றனையாவது இவ்வாண்டில் உறுதியிட்டுக் கூறுமாயின், அது என் உயிராள் மன்றம் ஆகும். 4. நம் நாட்டுக்கு வேண்டுவது தாய்மொழித்திட்டம். இம்மும் மொழித்திட்டம் அன்று. நம்மொழிகள் வளராத நிலையில் வேற்று மொழித் திட்டம் தாய்மொழி வளர்ச்சியைத் தடுக்கும். எந்த மொழியையும் தாய் மொழித்திட்டத்தோடு சேர்த்து எண்ணலாகாது. ஆங்கிலத்தை நாம் படிப்பதுகூட நம் தாய் மொழியை வளர்க்கவே. ஆங்கிலச்சார்பு நிறைய இருக்கும் இக்காலத்தில் அதன் துணைக்கொண்டு நம் மொழிகளை எல்லாத் துறையிலும் வளர்க்க வேண்டும். மத்திய வரசு வரைப்படம் வழங்கியும், துணைநூல்கள் வழங்கியும், என்னென்ன பொதுப்படையுதவிகள் சிக்கனமாகவும் சீராகவும் செய்யலாமோ அவற்றைச் செய்ய வேண்டும். நம்மொழிகளுக்கு விடிவும் நம்பிக்கையும் வரவேண்டும். எனின், முதற்கண் அறிவியற்றுறைகளை நம்மொழிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆங்கில நூல்களின் துணைகொண்டே சில்லாண்டுகள் நம்மொழிகளில் விளக்கிக் கற்பிப்பதில் தவறொன்றும் இல்லை. ஒன்று மாத்திரம் அழுத்தமாகச் சொல்லுவன். நீள நினைவு வைத்துக்கொள்ளுங்கள். நம்மொழி ஒவ்வொன்றும் அறிவுத்துறையில் ஆட்சித்துறையில் தொழிற் துறையில் தன்னிறைவு உடையதாதல் வேண்டும். தமிழனுக்குத் தமிழ் நிறைமொழி, வங்காளிக்கு வங்காளம் நிறைமொழி, இந்தியாளனுக்கு இந்தி நிறைமொழி. இவ்வாறு ஒருவனுக்குத் தன் மொழியேமேலறிவுக்கும் உயர் வாழ்வுக்கும் குறைவற்ற மொழியாக வேண்டும். வாழ்வாங்கு வாழ்வதற்கு இன்னொரு மொழிக் கட்டாயம் கூடாது. 5. கல்வித் திட்டத்தில் அயல் மொழிப்பாடம் வைப்பது பற்றி முடிவான ஒரு கருத்தைச் சொல்லித்தான ஆகவேண்டும். தாய்மொழிக் கல்வி குழந்தைகட்கு நன்றாகப் பதிந்து உரம் பெற வேண்டுமென்றால், ஒன்று செய்ய வேண்டும், இன்னொன்று செய்யக்கூடாது, எட்டாவது வகுப்புவரை முற்றும் தாய்மொழி ஆட்சி செய்ய வேண்டுமேயன்றி, பிறிதொரு மொழி சிறிதும் ஊடுருவலாகாது, ஒரு மொழி பதியாத நிலையில் அயன்மொழி கற்பிப்பதால் தாய்மொழியில் ஒலிப்பிழைகள் ஏற்படும், சொல் வளர்ச்சி சுருங்கும், அறிவு வளரும் காலம் வீணாகும், சிந்திக்கும் திறம் குறையும். வேண்டாதவற்றை உருபபோட்டு மூளை சுருங்கும். நன்றாக நம்புங்கள்! நாலாவது முதல் எட்டாவது வரை படிக்கும் ஆங்கிலப் பகுதியை ஓராண்டிற் கற்பிக்கலாம், தெளிவாகக் கற்பிக்கலாம், குழந்தை எட்டாவது வரை தாய்மொழி ஒன்றிலே படித்திருக்குமானால். ஏன்? தாய் மொழியுரம் அயன்மொழிப் படிப்பை அவ்வளவு எளிதாக்கும். மேலும் அந்நிலையில் வேற்றுமொழியறிவு பயனும் படும். குழந்தை நிலையில் பன்மொழி கற்பது எளிது என்று பலர் சொல்லுகின்றனர். எளிது என்பதை ஒருவாறு நானும் உடன்படுகின்றேன். பயன் என்ன? வேறு கேடுகள் என்ன? என்று சிந்திக்க. குழந்தை நிலையில் எதுவுமே எளிதுதான். உலகைத் தெரிந்து கொள்வதற்கு அதற்கு அதற்கு அவ்வளவு அவா. மண்ணைப் போட்டாலும் எந்திரம் அரைக்கும். கள்ளைக் குடித்தாலும் குடல் ஏற்றுக் கொள்ளும். கண்ணாற்றல் செவியாற்றல் என்பது போலப் பன்மொழி ஆற்றலென ஒரு தனியாற்றல் மக்கட்குஉண்டா? உண்டாயின் அதனை வறிதாக்காது பயன்படுத்த வேண்டும். அப்படி ஒரு ஆற்றல் இல்லையே. பொதுப் பேராற்றலைக் கேவலம் பன்மொழிக்குப் பயன்படுத்தினால், வேறு திறங்கள் வறிதாகாவா? மரம் என்பதனைக் குழந்தை மும்மொழியிற் படிப்பது அறிவு வளர்ச்சியா? பொருள் வளர்ச்சியா? சிந்தனை வளர்ச்சியா? ஒரு பொருளுக்கு இரணடு மூன்று வேற்றுச் சொற்கள் சிறுவயதில் தெரிந்து கொள்வதில் நாட்டுக்கு என்ன் முன்னேற்றம் உண்டு? இன்றுள்ள செரியாத பாடத்திணிப்பும் சிந்தனைக்கு உதவாப் பன்மொழித் திணிப்பும் நம் இளஞ் சிறார்களுக்கு இருந்தால், கல்வியின் பேரால் அறியாமை பெருகுமேயன்றி, மனஞ் சுருங்குமேயன்றி, விளங்காமை கூடுமேயன்றி, கோடி கோடி செலவு மிகுமே யன்றி, குறிப்பான பயன் எதுவும் இராது. இப்போதே இல்லை என்பதுநடை முறையில் தெளிவு. “கேடில் விழுச் செல்வம் கல்வி” என்பது இந்தியத் தமிழ்மறை. இவ்வுரைகல்லில் இன்றைய கல்வி முறையை உராய்ந்து பார்ப்பார்க்குத் திட்டக்கோளாறுகள் தெரியாமற்போகா. ஆதலின் பிற மொழி எம்மொழி வைப்பினும் எட்டாவது வகுப்புக்கு மேல் கல்வித்திட்டத்தில் இடம் பெறுவதாகுக. நாட்டு நலம் குழந்தைநலம் அறிவு நலம் உடல் நலம் எல்லாம் கருதி இத்தகையை கருத்துரைகளைத் துணிந்து எழுத வேண்டுவது என்னையார் கடனாகும். “நல்லவை எல்லாம் கடன் என்ப” என்பது வள்ளுவம். உண்மை இந்தியத் தமிழன் கடிதம் - 24 தலைவர்களுக்கு, வணக்கம். இதுகாறும் வரைந்த மொழிக்கருத்துக்கள் யாவை? உங்கள் நினைவுக்கும் தெளிவுக்கும் ஒவ்வொரு வரியில் முடிக்கின்றேன். 1. இந்தி ஒன்றே பொதுமொழியாதல் கூடாது. 2. இந்தி ஆங்கிலம் என்ற இரட்டையாட்சி கூடாது. 3. மத்திய அரசுக்கு ஒரு மொழிச் சார்பு கூடாது. 4. ஆங்கிலம் கல்வித் திட்டத்தில் பேரிடம் பெறுக. 5. பதினான்கும் பாரதப் பொது மொழிகள் ஆகுக. 6. பதினான்கும் பாராள்மன்ற மொழிகள் ஆகுக. 7. பதினான்கும் பாரதப் பணித்தேர்வு மொழிகள் ஆகுக. 8. தாய்மொழியைத் தன்னிறைவாக்குக. 9. நம்மொழிகள் உயர்கல்வி மொழியாக ஆண்டு குறிக்க. 10. பன்மொழியறிவை நாட்டிற் பரப்புமின். 11. பங்கு நல்கிப் பற்று வளர்மின். 12. வன்முறை என்னும் சின்முறை ஒழிமின். உன்மை இத்தியத் தமிழன் கடிதம் - 25 அன்புத்தலைவர்களுக்கு, நல்வணக்கம். முழு நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கின்றேன். இந்தியா இன்றுபோல் எஞ்ஞான்றும் ஒற்றுமையாக விளங்கும் என்பதிலும்; கருத்துப் பூசல்கள், கட்சிப் பூசல்கள் எவ்வளவு இருப்பினும் பாரத நாடு என்பதே எல்லார் தம் உண்மை மந்திரமாக இலங்கும் என்பதிலும்; தனியுரிமை. குடியுரிமை, கருத்துரிமை, வாழ்வுரிமை எல்லாம் நம் குடியரசில் நிலவும் என்பதிலும்; பொருளில் தொழிலில் அதிகாரத்தில் எல்லாம் நிகர்மை அமையும் என்பதிலும்; தலைவர்கள் ஒருவரை ஒருவர் மதித்துக் கூடிக்கலந்து இணங்கி மக்கள் நலமாகிய நாட்டு நலத்தைப் பெருக்குவார்கள் என்பதிலும்; இந்நாட்டில் தலைவர்கட்கும் மக்கட்கும் கட்சிப்பற்று வளராது நாட்டுப் பற்றே வளரும் என்பதிலும்; மதித்துப் பேசும் பண்பும் அளவாகப் பேசும் பண்பும் உண்மையாகப் பேசும் ஒழுக்கமும் எத்துறையாளர் பாலும் காணப்படும் என்பதிலும் எங்கும் உழைப்பு, எவரும் உழைப்பு. எதிலும் உழைப்பு என்ற வாழ்வுப் புத்துணர்ச்சி வெள்ளம் போற்பரவும் என்பதிலும்; முயல்வோம், விளைவிப்போம், சமமாக வாழ்வோம், படைபெருக்குவோம், தற்காப்போம், உலகம் காப்போம் என்ற எண்ணங்கள் திண்மைபெறும் என்பதிலும்; உண்மையாகத் தெளிவாகத் துணிவாகப் பணிவாக நாட்டுக்கு நன்மையாக எதனையும் ஆற்றுவோம் என்பதிலும் பொய்யா நம்பிக்கை கொண்டவன் நான். நாட்டுத் தொண்டு என்பது ஒவ்வொருவனுக்கும் வாழ்க்கைக் கடமை. ஆசிரியத் தொழில் பூண்ட நான் என் துறையில் செய்யக்கூடிய நாட்டுத் தொண்டு எது? என்று எண்ணினேன். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றார் உலகப் பேராசிரியர் வள்ளுவர். அந்த அறிவுக்கு மொழி இன்றியமையாதது. அம்மொழிக்கே சிக்கல் இருக்கும் எனின், தெளிந்த அறிவு வளர்ச்சிக்கு இடம் எங்கே? மொழிச்சிக்கல் அறிவுக்குத் தடை, நாட்டன்புக்குத் தடை. ஆதலின் இந்திய நாட்டு மொழி நோய்க்கு முடிவான மருந்து எழுதுவது என்ற ஆசையினால் இக்கடிதங்களை எழுதலானேன். என் எழுத்தை அரசியல் என்று கருதுவார்களா? கட்சியியல் என்று கருதுவார்களா? கேவலம் விற்பனைக்கு எழுதிய விலையியல் என்று கருதுவார்களா? நான் கருதுவது போல் தொண்டியல் என்று கருதுவார்களா? உள்ளத்தில் ஒளியுண்டாகின் உரையிலும் ஒளியுண்டாகும். தலைவர்களே! மொழி ஒரு சிக்குப் பொருளாக எனக்கு என்றும் பட்டதில்லை. நூற்கண்டைப் பிரிக்கத் தெரியாமல் சிக்குப்படுத்தி விடுவதுண்டு. நம் பொதுமொழிக் கதை இப்படியாயிற்று. முறைமை இயற்கை என்ற இரு பெருவிதிகளைப் போற்றி எதனையும் சிந்திக்க வேண்டும், செய்யவேண்டும். முதன் மகன் இராமன் முடி துறப்பதா? தாய் பெற்ற வரத்தால் பரதன் முடிசூடுவதா? என்ற மாற்றம் வந்தபோது, “முறைமையன்று என்பது ஒன்றுண்டு, மும்மையின் நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்” என்றாள் கோசலை. பரதன் இராமனைக் காட்டிலும் பன்மடங்கு பண்பிற் சிறந்தவன், அரசாளும் தகுதியும் உடையவன்; ஆனால் அயோத்தி முடிசூடும் உரிமையுடைய வனா? ஆங்கிலம் உலக மொழித் தகுதியுடையது. நம் மொழிகளினும் பன்மடங்கு நிறைந்தது; எனினும் பாரத நாட்டுப்பொது மொழி என முடிசூடும் உரிமையுண்டா? எவ்வளவு சிறியதாயினும், வளம் குறையதாயினும் முடியுரிமை நம் மொழிக்கே உண்டு. முறைமை என்பது உரிமை. முறைமைக்கேடு முடிவில் உரிமைக்கேடு. ஆதலின் ஆங்கிலத் துக்குக் கல்வியில் பரந்த நல்லிடம் அளிப்போம், அளித்துப் பயன்பெறுவோம். ஆனால் உரிமை நாடான இந்தியாவின் தலைமைக்கும் முதன்மைக்கும் குறைவு தோன்றாதவாறு, நம் மொழிகளுக்குப் பொது முடியளிப்போம். இதுவே முறைமை. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் என்பது வள்ளுவம். இக்குறள் நம்மொழிக்கொள்கைக்கு வழிகாட்டி. அறிவுக்கு நடைமுறைக் கண் வேண்டும். கையொன்று போல விரல் ஒன்று இருந்தால் என்ன? வாயொன்று போலப் பல் ஒன்று இருந்தால் என்ன? நாடொன்று போல மொழியொன்று இருந்தால் என்ன? இருந்தால் நல்லதுதான். இயற்கை அப்படி இல்லையே. இருக்கப்பாடுபடும் முயற்சியெல்லாம் வீண்,வீண், வீண். ஆதலின், “உலகத்து இயற்கை அறிந்து செயல்” என்று அரசுக்கு அறிவுறுத்துகின்றார் வள்ளுவர். நம்நாடு பன் மொழிநாடு. பன்மொழியும் தன்னிறைவுடைய ஒத்த மொழிகள். இவை பாரத நாட்டின் சமமான பொது மொழிகள் ஆவதே இயற்கை. இவற்றுள் ஒன்றை மாத்திரம் பொதுமொழியாக்கு வது, ஆக்குவதற்கு மதவுணர்ச்சி போல் பாடுபடுவது இயற்கை முரண் என்பது மட்டுமன்று, நாட்டுக்கேடும் ஆகும். பரப்ப எடுக்கும் பலத்த முயற்சியால் இந்தி நாடெங்கணும் வரவரப் பரவிவிடும், எல்லாமொழி மக்களும் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டுவிடுவர் என்று யாரும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ள வேண்டா. தென்னாட்டினர் முயன்று இந்தி படிக்கத் தொடங்கினால், இவர் தம் இந்தியறிவில் வடநாட்டவரும் பிச்சை வாங்கவேண்டும் என்று கூறுவார் பாராட்டுக்குக் குழைந்துவிட வேண்டா. பல்லாயிரம் ஆண்டுகளாக ஊறிக் கிடக்கும் இந்நாட்டின் இயற்கையைச் சிந்தித்துச் செய்யுங்கள். பொருளாற்றலால், பேராதிக்கத்தால், இந்தி என்னும் ஒரு மொழியைப் பரப்ப முடிநத்hலும், பரப்பினுங்கூட, மயங்கிவிட வேண்டா, அது நாட்டுக்கு நல்லதன்று என எச்சரிக்கின்றேன், இயற்கையன்று என்ற காரணத்தால். ஓர் உரிமை குறைந்தால், அரச பிளவை போல, அது இன்னொரு பக்கம் வெடிக்கும். உரிமை குறைந்து வாழ விரும்புபவனும், உரிமையைக் குறைத்து ஆளவிரும்புபவனும் நாட்டைக் குறைப்பவன் ஆவான். உரிமையை விடுபவன் ஒரு நாட்டைவிடவும் தயங்கான். வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றாற் போகா என்ற இயற்கையைத் தலைவர்கள் நினைவு கொள்வார்கள் ஆகுக. நம் பதினான்கு மொழிகளையும் பாரதப் பொது மொழிகள் ஆக்குவதே முறைமை, இயற்கை, உரிமை, எளிமை, அன்புடைமை, அறிவுடைமை. அங்ஙனம் ஆக்காமை அடிமை, கொடுமை, அழிவுடைமை, பழியுடைமை, தற்கொலை. பதினான்கு மொழியிலும் ஆட்சி நடத்த முடியுமா? என்பது பலர் கூறும் ஒரு தடை. இதுபற்றிய கவலை எனக்கும் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மாநிலம் இருத்தலாலும், அவை மாநில ஆட்சிமொழிகளாக இருத் தலாலும் அவற்றை அப்படியே பொது மொழியாகவும் கொள்வதுதான் ஆட்சிக்கும் எளிது, மக்கட்கும் எளிது எனப்பட்டது. அங்ஙனம் செய்யாமை தடை என்று மேலும் எனக்குத் தோன்றியது. பதினான்கு மொழியும் பொதுமொழியானால் பிரிவினை ஏற்படாதா? என்பது பலர் வினவும் இன்னொரு தடை. இதுபற்றிய சிந்தனை என்னைப் பெரிதும் அலைத்தது. மாநில மொழிகளை மாநில அளவில் விட்டு வைத்தாற்றான் பிரிவினைச் சிறுமை நினைக்கத் தோன்றும் எனவும், ஒரு மாநில மொழியை மட்டும் பொதுவணை ஏற்றினாற்றான் பூசல் நாட்டம் ஏற்படும் எனவும், தாயின் மடியில் தவழும் குழந்தைகள் போல எல்லா மொழிக்கும் பொதுவில் பங்கு இருந்தால் மத்திய அரசுக்கு வலுவும் பிணிப்பும் உலக மதிப்பும் உண்டாகும் எனவும் எனக்குத் தெளிவாயிற்று. பங்கு கொடுத்தாற்றான் பாரத நாடு தெளிவாயிற்று. பங்கு கொடுத்தாற்றான் பாரத நாடு என்ற பேரெண்ணம் பிறக்கும். கொடாவிட்டால் தமிழகம், ஆந்திரம், மகாராட்டிரம் என்றவாறு பழைய நில எண்ணமே தடித்து வளரும். பாரதப் புத்துணர்ச்சி பொங்காது. ஆங்கிலம் அகன்றால் அறிவு வளர்ச்சி குன்றாதா? என்ற ஏக்கம் எனக்கு இல்லாமல் இல்லை. எங்கே அகலும்? யார் அகற்றுகின்றது? யாரால் பல தலைமுறைக்கு அகற்ற முடியும்? ஆங்கிலத்துக்குக் கல்வியில் வல்லிடம் உண்டு, பல பத்தாண்டு கள் உண்டு. வளர்ந்த ஆங்கிலமும் நம்முடன் இருந்து, நம் மொழிகளும் ஆங்கிலம் போல் வளரும்போது, கங்கை, காவிரி பாய்ந்த நிலம் போன்று அறிவு வளம் பெருகும். இளைஞர்தம் அறிவோட்டத் தில் சிந்தனை கற்பனை புதுமை வேட்கை உரம் தெளிவெல்லாம் இருக்கும். ஆங்கிலம் கல்விச் செவிலியாகத் திகழும் ஆதலின் எத்துறையிலும் அறிவுக் குறைபாடு உறாது. இனியும் ஆங்கிலம் ஆட்சியரசியாக இருந்தால், நாடு ஒரு நாள் நிலையிழக்கும். மக்கள் நாள்தோறும் பற்று இழப்பர், அறிவு என்றும் உரம் இழக்கும். நம் வடபாரத மக்களின் மொழியுணர்ச்சியை மிகவும் மதிப்பவன் நான். நாட்டு மொழியே பொதுமொழியாதல் வேண்டும் என்ற அவர்தம் எண்ண மலரில் உரிமை மணம் கமழ்கின்றது. தாய்மொழி உலகமொழியாக வளர வேண்டும் என்ற ஆராக் காதலும் அயராக் கடமையும் அவர்தம் வாழ்வில் விளங்குகின்றன. வட பாரதத் தலைவர்கட்கும் அம்மக்கட்கும் உள்ள ஒன்றிய மொழிச் சுதந்திர உணர்வு தென்பாரதத் தலைவர்கட்கும் இம் மக்கட்கும் இருந்திருந்தால் மொழிச் சிக்கலே பிறந்திராது, பிறந்திருந்தாலும் இவ்வளவு வளர்ந்திராது, வளர்ந்திருந்தாலும் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திராது. தென்னாட்டுத் தலைவர்கள் மொழிக் கிளர்ச்சிக்குப் பின்னுங்கூடத் தம் குழந்தைகளுக்கு ஆங்கில உணர்வையே வளர்க்கின்றனர். தமிழ் இருந்த உயர்நிலைப் பள்ளிகளில் மீண்டும் ஆங்கிலத்தைப் பாட மொழியாகப் புகுத்தத் தொடங்கி விட்டனரே; கல்லூரிகளில் தமிழ் வரவேண்டும் என்று சொல்லும் இக்காலத்து மீண்டும் ஆங்கிலம் உயர்நிலைப் பள்ளியிலேயே பாட மொழியாகத் தலையெடுக்கின்றதே. யாரை நோவது? தென்னக மாந்தரை ஆட்டிவைக்கும் உணர்ச்சி வேலையுணர்ச்சி, பதவியுணர்ச்சி, உண்டுஉடுத்து உடலோம்பும் மெய்யுணர்ச்சி, வேலைப்பற்று இன்னவர் தம் குருதியில் எப்படியோ ஊறிப்போய்விட்டது. எம்மொழி வேலை தருமோ அம்மொழியைத் தம்மொழியை விட்டுப் படிக்கத் தொடங்குவர். தம் தாய்மொழியை வேலைதரும் வாழ்வு மொழியாக, வீறுசான்ற உரிமை மொழியாக ஆக்க முயலார். இந்நிலையில் தென்னாட்டவர் விரும்பும்வரை ஆங்கிலம் பொதுமொழியாக நீடிக்கும் என்று சில தலைவர்கள் வேண்டுமாறு சட்டமும் செய்து விட்டால், அச்சட்டம் அடிமையின் பரிசாகும். இத்தகைய சட்டம் கூடாது, சுதந்திர உணர்வை வளர்க்காது என்பது வெளிப்படை. வடபாரத மக்களின் மொழியுணர்வைப் பாராட்டினேன். இந்தி ஒன்றே பொதுமொழியாதல் வேண்டும் என்பாராயின், அது ஆதிக்கம். அதனை மட்டும் மறுப்பது அறிவுடைமை. அத் தனிப்பற்று மறுக்கத் தக்கதேயன்றி, நாட்டு மொழிதான் பொதுமொழியாதல் வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை முழுதும் வரவேற்கத்தக்கது. தங்கள் இந்தி பொதுமொழியாக வேண்டும், என்று கேட்கும் உரிமை இந்தியாளர்க்கு உண்டு. அதுபோல் என் தமிழ் பொது மொழியாக வேண்டும். என் வங்காளம் பொதுமொழியாதல் வேண்டும் என்றவாறு கேட்கும் உரிமை ஒவ்வொரு மொழியினர்க்கும் உண்டு. ஒரு மொழியினர்க்கு உள்ள உரிமையை ஏனை மொழியினர் குடியரசு நாட்டில் மறுப்பதற்கு இல்லை. தன்மொழிக்கு உள்ளது எல்லா மொழிக்கும் உள்ளது. இந்தியாளர் தம்மொழியுரிமையைக் கேட்பது முற்றிலும் சரி. தென்னாட் டவர் தம் மொழியுரிமையைக் கேளாததுதான் பெரும்பிழை, மொழியைச் சிக்கலாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் எனக்குப்பட்டவரை, வடநாட்டவர் இல்லை. தென்னாட்ட வரோ தாய்மொழிப்பற்று மிக்க வடநாட்டவரையும் மொழிநிலையில் தம்போல் அடிமையாக்கப் பார்க்கின்றனர். தென்பாரதத்தார் ஆங்கிலம் பொது மொழியாக வேண்டும் என்று கேட்பதை விட்டுவிட்டு, தம் மொழிகளும் பொது மொழியாக வேண்டும் என்று கேட்க வேண்டும். இவ்வளவு நாளும் கேட்கவில்லையே, இனி கேட்கலாமா என்று பின்வாங்காது இந்திபோல் என் மொழியையும் நிகரான பொதுமொழியாக்க வேண்டும், அதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுவிடுவார்களாயின், மொழிச்சிக்கல் தீர்ந்துவிட்டது என்று கொள்ளுங்கள். உண்மையாக உரிமையை விரும்பும் மக்கள் ஏனையோரின் உரிமையை மதிக்கவே செய்குவர். அண்மையில் நிகழ்ந்த பாராளுமன்றத்தில் பேசிய வடபாரதத் தலைவர்களின் கருத்துக்களைப் படித்தீர்களா? பதினான்கு மொழிகளும் பொதுமொழியாவதை பல கட்சித் தலைவர்களும் உடன்பட்டு மொழிந்துள்ளனர். இந்தியாளர்களுக்கு அயல் ஆங்கிலம் பொது மொழியாவதில் எதிர்ப்புணர்ச்சி உண்டேயன்றி, இந்நாட்டு மொழிகளின் மேல் வெறுப்புணர்ச்சியில்லை. அவர்தம் ஆங்கில எதிர்ப்பை ஆதிக்கமாகக் கருதுதல் சரியன்று. மொழிச் சிக்கல் தொடராது நீங்குதற்கு ஒரேவழி தென்னக மக்கள் தம்bhழிகளையும் பாரதப் பொதுமெழி ஆக வேண்டும் என்று உரிமையோடு கேட்பது. இவ்வுரிமைக் கேட்பை வடநாட்டவரும் மனம் உவந்து வரவேற்பர். என் கடிதத்தை முடிக்கும் இந்நாளில் பன்மொழிக் கொள்கை நாடெங்கும் பரவிவரக் காண்கின்றேன், கண்டு மகிழ்கின்றேன். விளம்பரங்கள் பன்மொழியில் வரத் தொடங்கியுள. மொழித்திசை திரும்புகின்றது. மொழிக் கொள்கையில் மாசு நீங்குகின்றது. செயற்கை வழி நெடுந் தொலை சென்ற தலைவர்களைப் பாரதத்தின் இயற்கை மறித்து வழிகாட்டுகின்றது. நம் தலைவர்கள் விடுதலைக்கு உயிர் வழங்கிய நாட்டு வீரர்கள். எஞ்ஞான்றும் நாட்டு நலத்துக்கு ஊறும் மாறும் செய்யார்கள். உண்மை கண்டால் புறம் போகார்கள். இதுகாறும் சொல்லிப் பரப்பிய கொள்கை யாயினும் நாட்டுக்கு நல்லதன்று என்றுபட்டால், பிடிவாதம் கொள்ளார்கள். பிழையை உடனப்டுவது நம் தலைவர்கள் கண்ட காந்தீயம். மொழிச்சிக்கல் இனித் தீர்ந்துவிடும் என்ற நன்னம்பிக்கை எனக்குப் பிறந்துவிட்டது. தீர்த்தாகவேண்டும் என்ற உறுதியும் தலைவர்களிடைப் பரவிவிட்டது. பன்மொழித் திசை பலமாக அடிக்கக் காண்கின்றோம். பெருமகன் சவகர்லால் நேரு மறைந்து ஓராண்டு ஆகின்றது. முதல் ஓராண்டாகிய 26-5-65 ஆம் நாள் தலைவர் டாக்டர் இராதாகிருட்டிணனார் இரவு 8.30 மணிக்கு வானொலியில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அவ்வுரை எல்லா தேசிய மொழிகளிலும் மொழி பெயர்த்து ஒரே காலத்து வானொலியில் பரப்பப்பட்டது. தமிழக வானொலியில் தலைவர் உரையைப் பொதுமக்கள் தமிழில் கேட்டார்கள். இவ்வாறே ஒவ்வொரு மொழி மக்களும் தம் மொழியில் செவி மடுத்திருப்பர். இதுவன்றோ குடியரசு. இதுவன்றோ நேரு புகழாண்டிற் பிறந்த நன்மாற்றம். முன்பெல்லாம் தலைவர் ஆங்கிலத்திற் பேசிய உரைக்குப் பின் இந்தி மொழி பெயர்ப்பு ஒன்றுதான் இருக்கும். நாட்டுத்தலைவர் உரையாற்றிய ஒருவாரத்துக்குப்பின், காங்கிரசுச் செயற்குழு தில்லியில் 2-6-65இல் கூடியது. நாட்டுப் பன்மொழிகளிலும் மத்தியப் பணித்துறைத்தேர்வு நடைபெற வேண்டும் என்று மீண்டும் அழுத்தமாகவும் ஒரு முகமாகவும் தீர்மானித்திருப்பதை அறிவீர்கள். இத்தீர்மானத்தை முன் பன்முறை பாராட்டியிருக்கின்றேன். ஏன்? இத்தீர்மானம் மாசுபடாது குறைபடாது செயற்படுமாயின், மத்திய அரசு ஒருநாள் பன்மொழி யரசாகத்தான் இயங்கும் என்பது என் தெளிவு. தலைவர் இராதாகிருட்டிணனார் 26-6-65இல் ஐக்கிய நாட்டவைபற்றி வானொலியில் ஓர் உரையாற்றினார். இவ்வுரையும் முன்போல் எல்லா மொழிகளிலும் வானொலி யில் மொழிபெயர்த்து ஒலிக்கப்பட்டது. அரசும் ஆளுங் கட்சியும் பன்மொழிச் சிந்தனை உடையன என்பதற்கு மேலே காட்டியவை நற்சான்றுகள். ஒற்றை மொழியாட்சியும் இரட்டை மொழியாட்சியும் பன்மொழியாட்சிக்கு இடங் கொடுக்கின்றன. தலைவர்களே! என் கடிதங்களைப் படித்த பெருமக்களே! எல்லார்க்கும் வணக்கம். நாடு வாழ்க இன்னும் பல கடிதங்கள் எழுதலாம். அவையெல்லாம் விளக்கமே. நான் காட்ட நினைத்த மொழிக்கொள்கை இதுவரை வரைந்த கடிதங்களில் தெளிவு. ஆங்கிலம் நாடெங்கணும் கல்வியில் வல்லிடம் பெறுமாதலின், ஆங்கிலக் கொள்கையாளர்கள் மனம்விட்டுப் பன்மொழிக் கொள்கைக்கு இசைவார்கள் ஆகுக. இந்திபோல் ஏனை நம்மொழிகளும் சமமான ஆற்றலோடு வளரவேண்டும் ஆதலானும், நாட்டுப்பற்று எல்லா மக்களுக்கும் இயல்பாக நிலையாக ஊறவேண்டும் ஆதலானும், இந்தி ஒன்றே வேண்டும் கொள்கையாளர் மனம்விட்டுப் பன்மொழிக் கொள்கைக்கு இசைவார்கள் ஆகுக. நாடு வாழவும் நாம் வாழவும் நம்மால் வாழ வேண்டியவை வாழவும் பன்மொழிப் பொதுக் கொள்கையே நேரான முறையான நிலையான குடியரசு வழி. எல்லோரும் இக்கொள்கையை உடன்பட்டு மொழிச்சிக்கலை முட்டறுப்பார்கள் ஆகுக. நாட்டன்பர்களே, மக்களின் உரிமைகள் கட்சிப் போராட்டத்துக்கோ, தேர்தல் மேடைக்கோ உரியவையல்ல. மொழி என்பது பிறப்புரிமை. பெரும்பான்மை சிறுபான்மை என வாக்கெடுப்புப் பார்த்துத் தீர்க்கக் கூடியதன்று. தீர்க்க நினைத்தால் தீர்ந்துவிடுவதும் அன்று. உரிமைகளைத் தேர்தற் பொருளாக்குவது நாட்டினைச் சூதிற் பணயம் வைத்த தருமன் செயலாகிவிடும். இத்தகைய செயலை நாட்டுக் கவிஞர் நம் பாரதியார் உடன்படவில்லை. தேயத்தை வைக்கத் தருமனுக்கு என்ன உரிமையுண்டு என்று இகழ்கின்றார். இதனைச் சிந்திக்க வேண்டும். பிறப்புரிமைகளைக் காத்துக்கொடுப்பது கட்சி களின் கடன். இன்று மொழியைத் தேர்தலுக்கு முன்வைத்தால், வரும் தேர்தல்களில் என்னென்ன வாக்கெடுப்புப் பொருளாகுமோ? யார் கண்டார்? சாதியை முன்வைப்பர், சமயத்தை முன்வைப்பர், ஒழுக்கத்தைக்கூட முன்வைப்பர். விடுதலைப் போராட்டக் காலத்து மாணவர்களை ஈடுபடுத்திய பயனை இன்றும் நாம் அனுபவிக்கின்றோமே. ஆதலின் வழிவழிப் பிழையைச் செய்துவிடலாகாது. செய்துவிடின் நம் குடியரசு பெருங் குழப்பமாகிப்போகும். மொழிச் சிக்கலை இன்று தீர்க்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் இன்னும் பொறுப்போம். பொறுத்து முயல்வோம். வெற்றி காண்போம். எவ்வாறாயினும் மொழியுரிமையை வாக்கெடுப்புப் பொருள் ஆக்காதீர்கள் என்று எல்லாரையும் வேண்டுகின்றேன். நாட்டின் வழி வழிக்கேட்டுக்கு விதையிடாதீர்கள் என்று தலைவர்களையும் வேண்டுகின்றேன். பாரத நன்மக்காள்! நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்டு யான்வரைந்த மொழிக்கொள்கை உங்கட்கெல்லாம் உடன்பாடு ஆகும் என நம்புகின்றேன். உடன்படின் உடனே செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று: எட்டாவது அட்டவணையிற் கண்ட நம் மொழிகள் அனைத்தும் பாரதப் பொது மொழிகளாம் எனச் சட்டம் செய்தல். இதற்கு மாறான சட்டங்களை அகற்றிவிடல். என்கடன் இந்தியப் பணிசெய்து கிடப்பதே. உண்மை இந்தியத்தமிழன் வாழிய பாரதம் வாழிய பல்படை வாழிய பன்மொழி வாழிய பல்வினை ஆழிக் குமரியும் அண்ணல் இமயமும் ஊழி ஊழி ஒன்றி வாழிய. நீதி நூல்கள் முதற் பதிப்பு 1991 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. மாணிக்கனார் வகுத்த எளிய உரை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூயர். நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் எண்ணி எழுதியவர். சிறுவர் நெஞ்சகளில் நற்கருத்துக்கள் நாளும் விதைக்கப் பெறல் வேண்டும் என்ற நல்ல நோக்கினர். ஆத்தி சூடி அமைப்பில் ‘தமிழ்ச்சூடி’ இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிக்க வழிவகை கண்டவர். நல்ல கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் ‘மாணிக்கக் குறள்’ இயற்றிய மாண்பினர். திருக்குறள் சிந்தனைகளைத் தெளிவாக உணர்த்த செவ்விய உரை கண்ட செம்மல். காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் அமைத்து அதன் தலைவராய் விளங்கிய மாணிக்கனார் தமிழ்ப் பாடல்களையும் நீதி நூல்களையும் சிறுவர்கள் நெஞ்சகத்தில் என்றும் நிலை நிறுத்த விரும்பினார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலக நீதி ஆகிய நூல்களுக்கு எளிய தெளிவுரை வகுத்துத் தமிழ்ச் சங்க வெளியீடாகப் பல பதிப்புக்கள் வரச் செய்தார். தமிழ்ச்சங்கம் மூலம் நீதி நூல் ஒப்புவித்தல் போட்டி நடத்தி ஆண்டுதோறும் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் நல்கினார். வளரும் பயிருக்கு உரமும் நீரும் ஒளியும் அளித்துக் காப்பதில் வல்லவர். செறிவு நடையும் புலமை நடையும் வல்ல மாணிக்கனார் சிறுபர் பொருட்டு மிக மிக ளயி தமிழில் பழகு நடையில் உரை வகுத்துள்ளார். நீதி நூல் கருத்துக்கள் பரவ வேண்டும் என்ற எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தார். காரைக்குடி தமிழ்ச் சங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார். பயிற்று வித்தார். பரிசுகள் நல்கினார். நீதி நூல்களுக்கு எளிய உரை வகுத்தார். செயல் செயல் என வாழ்ந்த செம்மல். வாய்ச்சொல் வீரராக வாழாமல் சொல்லியவண்ணம் செய்து முடித்த பெருமகனாராகவும் திகழ்ந்தார். இவர், கற்றல், கற்பித்தல் முதலிய கல்வி நெறிகளில் சீரிய கோட்பாடுகளுடன் வாழ்ந்த பேராசிரியர். இவரது எழுத்தும் பேச்சும் இவர்தம் கல்விக் கொள்கைகளைப் பறைசாற்று கின்றன. தூய வாழ்விளராகிய மூதறிஞர் நன்முறையில் நீதி நூல் இயற்றத்திட்டமிட்டிருந்தார். இவரது வாழ்க்கைக் குறிப்பு இதனை உணர்த்துகிறது. சிறுவர்களுக்குரிய நீதி நூல்களைப் பற்றி பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரை பெருஞ் சிறப்புடையது. இளைஞர்களுக்கு உடல், உள்ளம், உயிர் பற்றிய நல்வழிக் கருத்துக்கள், நல்வாழ்வுக் கோட்பாடுகள் தமிழில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை நீள நினைந்தவர். நன்கு ஆராய்ந்தவர். தமிழ் நெடுங்கணக்கோடு தமிழ் அறக்கோட் பாடுகளும் வளரும் குழந்தைகள் நெஞ்சில் பதிய வைப்பதில் செயல் ஆர்வம் காட்டியவர். ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள். நீதிநூல்கள் பற்றி மாணிக்கனார் உள்ளம் உவந்து இயற்றிய இப்பாடலை என்றும் நெஞ்சில் நிறுத்துவோம். தமிழர் வாழ்வுநலக் கோட்பாடுகளை ஏழு நீதிநூல்களும் இலக்கிய இன்பமுறும் வகையில் எடுத்தியம்பும் திறத்தினை இவர்தம் ஆராய்ச்சி முன்னுரையில் அறிந்து கொள்ளலாம். பேராசிரியரின் கனவு நனவாகத் தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிதோறும் மீண்டும் நீதிநூல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இந்த அரிய நல்ல பணியைச் செய்த பேராசிரியர்க்குத் தமிழ் உலகம் கடமைப்பட்டுள்ளது. நீதிநூல்களைப் பல பதிப்புக்கள் வெளியிட்டுப் பரப்பிய காரைக்குடி தமிழ்ச்சங்கச் செயலாளர் மா.அ. ஞான சேகரபாண்டியன் அவர்களுக்கும் வ.சுப.மா. எழுத்துக்கள் அனைத்தும் அச்சில் காண அவாவி நிற்கும் அண்ணல் மாணிக்கனாரின் இளவல் வ.சுப.சொக்கலிங்கம் அவர்களுக்கும் மாணிக்கனாரின் அனைத்து நூல்களின் பதிப்புச் செம்மைக்கு உறுதுணையாய் இருக்கும் வாழும் வ.சுப.மாவாகிய டாக்டர் இரா.சாரங்கபாணி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. மாணிக்கனார் எழுத்துக்கள் அனைத்தையும் ‘மாணிக்க நூல் வரிசை’யில் வெளியிட்டு மகிழ்ந்தோம். இந்த ஆண்டு திருக்குறளுக்கு மாணிக்க உரையினைப் பதிப்பித்துப் பேருவகை கொண்டோம். தொடர்ந்து மாணிக்கக் குறளை வெளியிட்டு மட்டிலா மகிழ்ச்சியுற்றோம். மாணிக்கனார் இளைஞர் களுக்காகவே எளிய முறையில் எழுதிய நீதிநூல்களின் உரைகளைப் பதிப்பித்துப் பேருவகை கொள்கிறோம். பொருளடக்கம் 1. ஆத்திசூடி 271 2. கொன்றை வேந்தன் 281 3. நறுந்தொகை 291 4. மூதுரை 305 5. நல்வழி 316 6. நன்னெறி 330 7. உலகநீதி 344 பதிப்புரை சான்றோர்களால் தமிழ்த்தாய் என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றவர் ஒளவையார். அவர் இயற்றிய அறநூல்கள் பல. அவை சிறுவர்க்கென அமைந்தவை; இனிமையும் எளிமையும் சொற்செட்டும் பொருள் ஆழமும் உடையவை. அவற்றில் கூறப்பெறும் கருத்துக்கள் சிறுவர்கள் உள்ளத்தில் அறஒளி விளக்கார் ஒளிர்ந்து அவர்தம் வாழ்க்கை முழுவதும் வழிகாட்டும் என்பது உறுதி. வருங்காலக் குடிமக்களாகிய இக்காலச் சிறுவர் உள்ளங்களில் அறவுணர்வே பெருகவேண்டும் என்னும் அவாவினால் தமிழ்ச் சங்கம் அறநூற் போட்டிகள் நடத்தி வருகின்றது. போட்டியில் பங்குபெறும் சிறுவர்கள் பாடலும் கருத்தும் அறிந்திருத்தல் வேண்டும். அதற்கேற்பப் பாடலும் சங்கத்தார் எழுதிய கருத்தும் கொண்டு இந்நூல் வெளிவருகின்றது. பாட்டுக்களை ஓசை குறையாமல் சேர்த்துப் படிக்க வேண்டும். இந்தப் பயிற்சி பின்னுக்கு நல்லது. பெற்றோர்களும் ஆசிரியப் பெருமக்களும் தமிழ்ச்சங்கப் பணிக்குத் துணைநின்று சிறுவர் சிறுமியர் உள்ளங்களில் அறம் ஒளிவீசச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். “சங்கத் தமிழ் மூன்றுந் தா” ஆத்திசூடி - ஒளவையார் இயற்றியது கடவுள் வணக்கம் ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே (கருத்து) சிவபெருமான் விரும்பும் விநாயகக் கடவுளைப் பலமுறை வாழ்த்தி வணங்குவோம். 1. அறஞ்செய விரும்பு நல்லன செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம் கோபத்தை அடக்கிக் கொள். 3. இயல்வது கரவேல் கொடுக்க முடிந்த பொருளை ஒளிக்காமல் கொடு. 4. ஈவது விலக்கேல் ஒருவர் மற்றொருவர்க்கு கொடுப்பதைத் தடுக்காதே. 5. உடையது விளம்பேல் உன் உடைமைப் பொருளை வெளிப்படப் பலமுறையும் சொல்லாதே. 6. ஊக்கமது கைவிடேல் மனவலிமையைக் கைவிடாதே. 7. எண்ணெழுத் திகழேல் கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். 8. ஏற்ப திகழ்ச்சி ஒருவரிடம் போய் இரப்பது பெருமைக் குறைவாகும். 9. ஐய மிட்டுண் ஏழை எளியவர்கட்குச் சோறு போட்டு நீ உண். 10. ஒப்புர வொழுகு உலகத்தோது ஒத்து நடந்து கொள். 11. ஓதுவ தொழியேல் எக்காலத்தும் படித்துக் கொண்டேயிரு. 12. ஒளவியம் பேசேல் யாரிடத்தும் பொறாமையுடன் பேசாதே. 13. அஃகம் சுருக்கேல் தானியங்களை அளவு குறைத்து விற்காதே. 14. கண்டொன்று சொல்லேல் கண்டபடி மாற்றிச் சொல்லாதே. 15. ஙப்போல் வளை ‘ங’ எழுத்துப்போல நீயும் உன் சுற்றத்தைத் தழுவு. 16. சனிநீ ராடு சனிக்கிழமைதோறும் எண்ணெய் முழுகு. 17. ஞயம்பட வுரை யாரிடமும் இனிமையாகப் பேசு. 18. இடம்பட வீடெடேல் இடம் பெரிதாக வீட்டைக் கட்டாதே. 19. இணக்கமறிந் திணங்கு நல்ல குணம் உடையவரோடு நட்புச் செய். 20. தந்தை தாய்ப்பேண் தாய் தந்தையரை மதித்துக் காப்பாற்று. 21. நன்றி மறவேல் பிறர்செய்த நன்மைகளை மறக்காதே. 22. பருவத்தே பயிர்செய் எந்தச் செயலையும் உரிய காலத்திலே செய். 23. மன்று பறித்துண்ணேல் நீதிமன்றத்தில் இலஞ்சம் வாங்கி வாழாதே. 24. இயல்பலா தனசெயேல் நல்லொழுக்கத்திற்கு மாறாக நடக்காதே. 25. அரவ மாட்டேல் நச்சுப்பாம்புகளைத் தொடாதே. 26. இலவம் பஞ்சிற்றுயில் இலவம் பஞ்சுபோல மெல்லத் தூங்கு. 27. வஞ்சகம் பேசேல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே. 28. அழகலாதன செயேல் சிறப்பில்லாத செயல்களைச் செய்யாதே. 29. இளமை யிற்கல் இளம் பருவத்திலே கல்வி கற்கத் தொடங்கு. 30. அறனை மறவேல் அறத்தினை மறவாமற் செய். 31. அனந்த லாடேல் காலையில் அதிக நேரம் தூங்காதே. 32. கடிவது மற கடுமையாகப் பேசுவதை மறந்துவிடு. 33. காப்பது விரதம் நல்ல கொள்கையை விடாமல் காப்பதே விரதமாகும். 34. கிழமைப் படவாழ் பிறர்க்குப் பயன்படும்படி வாழ்வாய். 35. கீழ்மை யகற்று இழிவான குணத்தையும் செயலையும் நீக்கு. 36. குணமது கைவிடேல் உயர்குணத்தை எந்தநிலையிலும் கைவிடாதே. 37. கூடிப் பிரியேல் ஒருவரிடம் கூடிப் பழகிய பிறகு பிரியாதே. 38. கெடுப்ப தொழி பிறர்க்குத் தீங்கு செய்வதை நீக்கு. 39. கேள்வி முயல் நல்ல கருத்துக்களை விரும்பிக் கேட்க முயற்சி செய் 40. கைவினை கரவேல் உனக்குத் தெரிந்த கைத்தொழிலைப் பிறர்க்கு மறைக்காதே. 41. கொள்ளை விரும்பேல் பிறர் பொருளைக் கொள்ளையடிக்க ஆசைப்படாதே. 42. கோதாட் டொழி தீங்கான விளையாட்டுக்களை நீக்கு. 43. சக்கர நெறிநில் அரசு இடும் சட்டத்துக்கு அடங்கி நட. 44. சான்றோ ரினத்திரு கல்வி அறிவு ஒழுக்கம் நிறைந்தவர்களுடைய கூட்டத்தில் எப்பொழுதும் இரு. 45. சித்திரம் பேசேல் பொய்யான சொற்களை மெய்யென்று நம்பும்படி பேசாதே. 46. சீர்மை மறவேல் நல்ல பண்புகளை மறக்காதே. 47. சுளிக்கச் சொல்லேல் கேட்போர் வெறுப்பு அடையும்படி பேசாதே. 48. சூது விரும்பேல் சூதாடுதலை விளையாட்டாகவும் விரும்பாதே. 49. செய்வன திருந்தச்செய் செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய். 50. சேரிட மறிந்துசேர் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்து கொள். 51. சையெனத் திரியேல் ‘சீ’ என்று வெறுக்கும்படி அலையாதே. 52. சொற்சோர்வு படேல் சொல்லில் குற்றம்படப் பேசாதே. 53. சோம்பித் திரியேல் சோம்பலாகிக் கண்டபடி திரியாதே. 54. தக்கோ னெனத்திரி சிறந்தவன் எனப் புகழும்படி நடந்துகொள். 55. தானமது விரும்பு எளியவர்கட்குத் தானங் கொடுக்க ஆசைப்படு. 56. திருமாலுக் கடிமைசெய் நாராயணனுக்குத் தொண்டனாக இரு. 57. தீவினை யகற்று கொடுமையான செயல்களை நீக்கு. 58. துன்பத்திற் கடங்கொடேல் துன்பம் வரும்படி நடந்து கொள்ளாதே. 59. தூக்கி வினைசெய் எந்தச் செயலையும் முறையாக எண்ணிப் பார்த்துப் பிறகு செய். 60. தெய்வ மிகழேல் கடவுளை இகழ்ந்து பேசாதே. 61. தேசத்தோ டொத்துவாழ் நீ வாழும் தேசத்தில் உள்ளவர்களோடு ஒத்து வாழ். 62. தையல் சொற்கேளேல் மனைவி சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடவாதே. 63. தொன்மை மறவேல் பழம் பெருமையை மறவாதே. 64. தோற்பன தொடரேல் தோல்வி தரும் செயல்களில் ஈடுபடாதே. 65. நன்மை கடைப்பிடி நல்ல குணங்களை உறுதியாகப் பற்றிக்கொள். 66. நாடொப் பனசெய் நாட்டுக்குப் பொருத்தமான நல்ல செயல்களைச் செய். 67. நிலையில் பிரியேல் உனக்கு உரிய நிலையினின்றும் எக்காரணத்தாலும் தாழ்ந்து விடாதே. 68. நீர்விளை யாடேல் ஆழமான நீர்நிலைகளில் விளையாடாதே. 69. நுண்மை நுகரேல் நோய் தரும் திண்படங்களைச் சாப்பிடாதே. 70. நூல்பல கல் நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொள். 71. நெற்பயிர் விளை உழவிற்சிறந்த நெல்லை உண்டாக்கு. 72. நேர்பட வொழுகு நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொள். 73. நைவினை நணுகேல் பிறர் வருந்தும் தீயவினைகளைச் செய்யாதே. 74. நொய்ய வரையேல் பயனில்லாத இளக்கமான சொற்களைப் பேசாதே. 75. நோய்க்கிடங் கொடேல் நோய் வரும்படி நடந்து கொள்ளாதே. 76. பழிப்பன பகரேல் பழியான இழி சொற்களைப் பேசாதே. 77. பாம்பொடு பழகேல் பாம்பை போன்ற கொடியவரோடு பழகாதே. 78. பிழைபடச் சொல்லேல் மொழியைப் பிழையாகப் பேசாதே. 79. பீடுபெற நில் பெருமை தரும் நல்வழியில் நில். 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ் பெரியவர்களை வணங்கி வாழ்க. 81. பூமி திருத்தியுண் நிலத்தைச் சீர்திருத்தி விளைவு செய்து உண்பாயாக. 82. பெரியாரைத் துணைக்கொள் பெரியவர்களை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள். 83. பேதைமை யகற்று மடத்தன்மையை நீக்கிக் கொள். 84. பையலோ டிணங்கேல் போக்கிரிச் சிறுபிள்ளைகளோடு கூடாதே. 85. பொருள்தனைப் போற்றிவாழ் வீண்செலவு செய்யாமல் பொருள்களைக் காத்துப் பெருக்கி வாழ்வாயாக. 86. போர்த்தொழில் புரியேல் யாருடனும் வீண்சண்டை போடாதே. 87. மனந் தடுமாறேல் எதற்கும் கலக்கம் அடையாதே. 88. மாற்றானுக் கிடங்கொடேல் பகைவனுக்கு இடங்கொடுத்துத் துன்பம் அடையாதே. 89. மிகைபட சொல்லேல் தேவையில்லாமல் பேசாதே. 90. மீதூண் விரும்பேல் அளவுக்குமேல் சாப்பிடுதலை விரும்பாதே. 91. முனைமுகத்து நில்லேல் கலகஞ் செய்யும் இடத்தில் நிற்காதே. 92. மூர்க்கரோ டிணங்கேல் பிடிவாதக்காரரோடு கூடிப் பழகாதே. 93. மெல்லினல்லாள் தோள்சர் மனைவியை விட்டுப் பிரியாது வாழ்வாயாக. 94. மேன்மக்கள் சொற்கேள் உயர்ந்தவர் சொற் கேட்டு நட. 95. மைவிழியார் மனையகல் பரத்தையர் வீட்டை நாடாதே. 96. மொழிவ தறமொழி சொல்வதை ஐயத்திற்கு இடமில்லாமல் தெளிவாகச் சொல். 97. மோகத் தைமுனி தேவையில்லாத பொருள்கள் மீது ஆசையை நீக்கு. 98. வல்லமை பேசேல் உன்னுடைய வல்லமையை நீயே புகழ்ந்து பேசாதே. 99. வாதுமுற் கூறேல் யாரிடத்தும் வீண் வாதங்கள் செய்யாதே. 100. வித்தை விரும்பு கல்வியைத் தொடர்ந்து கற்க ஆசைப்படு. 101. வீடு பெறநில் பேரின்பம் கிடைக்கும்படி நடந்துகொள். 102. உத்தம னாயிரு நல்ல பண்புகளில் மேம்பட்டு விளங்கு. 103. ஊருடன் கூடிவாழ் ஊர்மக்களோடு ஒத்துழைத்து வாழ்க. 104. வெட்டெனப் பேசேல் கத்திவெட்டைப் போல் துண்டுபடப் பேசாதே. 105. வேண்டி வினைசெயேல் வேண்டுமென்றே தீயவற்றைச் செய்யாதே. 106. வைகறைத் துயிலெழு பொழுது விடுவதற்கு முன்பே விழித்து எழு. 107. ஒன்னாரைத் தேறேல் பகைவர் சொற்கொண்டு அவரை நம்பாதே. 108. ஓரஞ் சொல்லேல் எந்த வழக்கிலும் ஒருபக்கமாகப் பேசாதே. சங்கத் தமிழ் மூன்றுந் தா கொன்றை வேந்தன் ஒளவையார் இயற்றியது கடவுள் வணக்கம் கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்று மேத்தித் தொழுவோம் யாமே (கருத்து) சிவபெருமானின் திருக்குமரனாம் விநாயக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் வணங்குவோம். 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள். 2. ஆலயந் தொழுவது சாலவும் நன்று கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது. 3. இல்லற மல்லது நல்லற மன்று மனைவியுடன் வாழ்ந்து செய்யும் அறமே நல்லறமாகும். 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் கருமிகளின் செல்வத்தைத் தீயவர் எடுத்துக் கொள்வர். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு அளவாக உண்பது பெண்களுக்கு அழகைத் தரும். 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊராருடன் பகைத்துக் கொண்டவன் அடியோடு அழிவான். 7. எண்ணும் எழுத்துங் கண்ணெனத் தகும் கணக்கும் இலக்கியமும் மக்களுக்குக் கண்கள் போன்றவை. 8. ஏவா மக்கள் மூவா மருந்து சொல்வதற்கு முன் குறிப்பறிந்து செய்யும் மக்கள் அமிழ்தத்தை ஒப்பார்கள். 9. ஐயம் புகினுஞ் செய்வன செய் பிச்சை எடுத்தாயினும் கடமைகளை விடாமற் செய். 10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு சிறந்த ஒருவனைத் துணையாய்க் கொண்டு இல்லறம் நடத்து. 11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் வேதம் ஓதுவதிலும் ஒழுக்கமே சிறந்தது. 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு பொறாமை கொண்டால் செல்வம் அழியும் 13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு தானியத்தையும் செல்வத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடி வை. 14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை பெண்களுக்குக் கற்பாவது உறுதியாக இருப்பது. 15. காவல் தானே பாவையர்க் கழகு தம்மைத் தாமே காத்துக் கொள்வது பெண்களுக்கு அழகு. 16. கிட்டதாயின் வெட்டென மற விரும்பிய பொருள் கிடைக்காதென்றால் அதனை உடனே மறக்க 17. கீழோ ராயினுந் தாழ வுரை உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் பேசு. 18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை குற்றத்தையே பார்த்தால் சுற்றமே இருக்காது. 19. கூரம் பாயினும் வீரியம் பேசேல் கூர்மையான அம்பு கையில் இருந்தாலும் வீராப்புப் பேசாதே. 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் நண்பன் தீங்கே செய்யின் அவன் நட்பை விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை பொருளை இழந்தபோதும் மனம் தளராது இருந்தால் செல்வம் மீண்டும் வரும். 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி கையில் உள்ள செல்வப் பொருளைக் காட்டிலும் கல்விப் பொருளே சிறந்தது. 23. கொற்றவன் அறிதல் உற்றிடத் துதவி அரசன் அறிந்திருந்தால் துன்பக்காலத்து உதவி கிடைக்கும். 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு கோள் சொல்லுபவனிடம் போய்ச் சொல்லும் கோள் காற்றுடன் சேர்ந்து நெருப்புப் போலப் பரவும். 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை பிறர்மேல் பழிச்சொற்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் எல்லோருக்கும் பகையாவான். 26. சந்ததிக் கழகு வந்தி செய்யாமை மலடு இல்லாமல் இருப்பது குடிக்கு அழகு. 27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு தன் பிள்ளைகள் சிறந்தவர்கள் எனச் சொல்லிக் கேட்பது தாய்க்கு மகிழ்ச்சி. 28. சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு சிவனை வழிபடுதல் ஒருவன் செய்யும் தவத்திற்குச் சிறப்பு. 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு சிறப்பாக வாழ விரும்பின் உழு தொழிலைச் செய். 30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் இன்பத்திலும் துன்பத்திலும் கூடியிருப்பதே சுற்றத்தார்க்கு மேன்மை. 31. சூதும் வாதும் வேதனை செய்யும் வஞ்சகமும் வழக்கும் துன்பத்தை உண்டாக்கும். 32. செய்தவம் மறந்தாற் கைதவ மாளும் செய்ய வேண்டிய தவத்தை மறந்தாலும் துன்பம் பற்றிக் கொள்ளும். 33. சேமம் புகினும் யாமத் துறங்கு காவல் செய்யினும் நள்ளிரவில் உறங்க வேண்டும். 34. சையொத் திருந்தால் ஐய மிட்டுண் இணங்கும் அளவு எப்போதும் பிச்சை அளித்து உண்பாயாக. 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் பொருள் உடையவர் அறம் இன்பம் ஆகிய பேறுகளைப் பெறுவர் 36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் சோம்பல் உடையவர் வறுமையால் வாடி அலைவர். 37. தந்தை சொல்மிக்க மந்திர மில்லை தந்தை சொல்லைவிட மேலான அறிவுரை இல்லை. 38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை தாயைக் காட்டிலும் வேறு கோயில் இல்லை. 39. திரைகட லோடியுந் திரவியந் தேடு கப்பல் ஏறி வெளிநாடு சென்றும் பொருளைத் தேடு. 40. தீராக் கோபம் போராய் முடியும் தணியாத கோபம் சண்டையில் கொண்டு நிறுத்தும். 41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு குடும்பத்தில் துன்பங்கண்டும் மனம் பதைக்காத பெண் மடியில் கட்டிக்கொண்ட நெருப்பை ஒப்பாள். 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் கணவன் மேல் பழி சொல்லித் தூற்றும் பெண் அவனுக்கு எமன் ஆவாள். 43. தெய்வம் சீறிற் கைதவ மாளும் கடவுளின் வெறுப்புக்கு ஆளானால் செய்த தவப்பயன் அழியும். 44. தேடா தழிக்கிற் பாடாய் முடியும் செல்வத்தைப் பெருக்காமல் உள்ளதைச் செலவு செய்யின் பின்பு துன்பமாக முடியும். 45. தையும் மாசியும் வையகத் துறங்கு பனிபெய்யும் பருவத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில் உறங்கு. 46. தொழுதூண் சுவையின் உழுதூ ணினிது பிறர்க்கு அடிமை செய்து உண்பதைக் காட்டிலும் தானே உழுது உண்பது இன்பந் தரும். 47. தோழ னோடும் ஏழைமை பேசேல் நண்பனிடங் கூட உன் வறுமை முதலிய எளிமையை வெளிப்படச் சொல்லாதே. 48. நல்லிணக்க மல்லது அல்லற் படுத்தும் தீயநட்பு பெருந் துன்பத்தைத் தரும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் மில்லை நாடுமுழுதும் வாழ்ந்தால் யாருக்கும் துன்பம் இல்லை. 50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை நிலைபெறக் கற்றலாவது சொல்லும் சொல் தவறாமையாம். 51. நீரகம் பொருந்திய ஊர கத்திரு நீர்வளம் பொருந்திய ஊரின்கண் வாழ். 52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி சிறிய காரியத்தையும் ஆராய்ந்து செய்க. 53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுக அறநூலில் சொல்லப்பட்ட முறைகளைத் தெரிந்து நல்வழியில் நட. 54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை நம் மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் இல்லை. 55. நேரா நோன்பு சீரா காது மனம் ஒன்றுபடாத தவம் செம்மையாக அமையாது. 56. நைபவ ரெனினும் நொய்ய வுரையேல் நலிந்தவரிடத்தும் சிறுமையான சொற்களைக் கூறாதே. 57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர் உருவத்தால் சிறியவரும் நல்ல காரியத்தால் எல்லோராலும் விரும்பப்படுவர். 58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை எந்த உயிரையும் கொல்லாமையும் அதன் ஊனைத் தின்னாமையுமே விரதமாகும். 59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் பயிர் விளைச்சலின் மூலம் செய்த நன்மை தெரியும். 60. பாலோ டாயினுங் காலம் அறிந்துண் பால் உணவானாலும் உரியகாலத்திற்கு குடி. 61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும் பிறன் மனைவியை விரும்பாமை தலைசிறந்த அறம் ஆகும். 62. பீரம் பேணிற் பாரந் தாங்கும் தாய்ப்பால் குடித்து வளர்த்த குழந்தை எப்பாரத்தையும் தாங்கும். 63. புலையுங் கொலையுங் களவுந் தவிர் புலால் உண்ணல், கொலை செய்தல், திருடுதல் ஆகிய குற்றங்களை நீக்கு. 64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் கீழ்மக்களிடத்தில் சிறப்பான ஒழுக்கம் அமைவதில்லை. 65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்ககு ஒறவும் இல்லை; வெறுப்பும் இல்லை. 66. பேதமை என்பது மாதர்க் கணிகலன் அறியாதவர் போல் இருத்தல் பெண்களுக்குச் சிறப்பாகும். 67. பையச் சென்றால் வையந் தாங்கும் பண்பாக நடந்து கொண்டால் உலகத்தார் பாராட்டுவர். 68. பொல்லாங்கு என்பவை யெல்லாந் தவிர் தீயன என்று கூறும் அனைத்தையும் நீக்கிவிடு. 69. போனக மென்பது தானுழந் துண்டல் உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவாகும். 70. மருந்தே யாயினும் விருந்தோ டுண் அமுத மாயினும் விருந்தினரோடு சாப்பிடு. 71. மாரி யல்லது காரிய மில்லை மழை பெய்யாவிடில் உலகில் ஒரு செயலும் நடக்காது. 72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை முன்னே மின்னல்; பின்னே மழை; முன்னே முயற்சி: பின்னே இன்பம். 73. மீகாம னில்லா மரக்கல மோடாது மாலுமி இல்லாமல் கப்பல் ஒடாது; தலைவன் இல்லாத குடும்பம் சிறப்பாக நடவாது. 74. முற்பகற் செய்யிற் பிற்பகல் விளையும் முற்பகலில் நாம் பிறர்க்கு நன்மையோ தீங்கோ செய்தால் பிற்பகலில் நன்மையோ தீங்கோ நமக்கு வரும். 75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் பெரியோர் சொன்ன அறிவுரை அமுதம் போல் இன்பமாகும். 76. மெத்தையிற் படுத்தல் நித்திரைக் கழகு பஞ்சணையிற் படுத்தல் நல்ல உறக்கம் தரும். 77. மேழிச் செல்வங் கோழை படாது. உழவால் வரும் செல்வம் என்றும் குறையாது. 78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு பரத்தையர் வீட்டை அணுகாமல் விலகித் தூர நட 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் பெரியோர் சொல்வதைக் கேட்க மறுத்தால் அழிவது நிச்சயம். 80. மோன மென்பது ஞான வரம்பு பேச்சும் மனமும் அடங்கிய நிலையே ஞானத்தின் எல்லையாகும். 81. வளவ னாயினும் அளவறிந் தழித்துண் வளம் மிக்கவன் ஆயினும் வரவுக்கு ஏற்பச் செலவழித்து உண்ண வேண்டும். 82. வானஞ் சுருங்கின் தானஞ் சுருங்கும் மழை குறைந்தால் கொடையும் குறையும். 83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் விருந்து செய்யாதவர்கட்கு இல்லறம் சிறக்காது. 84. வீரன் கேண்மை கூரம் பாகும் வீரனது நட்பு அம்புபோல விரைந்து உதவும். 85. உரவோ ரென்கை யிரவா திருத்தல் பிறரிடம் சென்று ஒன்றையும் கேட்காத உழைப்பாளரே வலியோர் ஆவர். 86. ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு மனம் தளராமை எல்லா முன்னேற்றமும் தரும். 87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை தூய மனமுடையவரித்தில் வஞ்சகம் தோன்றாது. 88. வேந்தன் சீறின் ஆந்துணை இல்லை அரசன் கோபித்தால் யாரிடமும் உதவி கிடைக்காது. 89. வைகல் தோறும் தெய்வந் தொழு நாள்தோறும் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்கு. 90. ஒத்த விடத்து நித்தி ரைகொள் நல்ல காற்றோடும் இடத்தில் நித்திரை செய், 91. ஓதாதார்க் கில்லை உணர்வொடு ஒழுக்கம் முறையாகப் படிக்காதவருக்குச் சிறந்த அறிவும் ஒழுக்கமும் உண்டாவதில்லை. பதிப்புரை புவியாண்டு குடிமக்களின் புற நலம் பெருக்கிய பாண்டிய மன்னர், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்துப் புலவர்களைப் போற்றித் தாமும் கவிபாடி மக்களின் அகநலமும் பெருக்கினர். அத்தகைய சிறப்பு வாய்ந்த பாண்டியர் குடியீயல் தோன்றியவர் அதிவீரராம பாண்டியர். அவர் இயற்றிய நூல்கள் பல. அவை எளிமையும், இனிமையும், கடைப்பிடிக்க வேண்டிய உண்மைகளும், கடவுட் கொள்கைகளும் நிரம்பியவை. அவற்றுள் சிறுவர்க்கென அமைந்த நூல் நறுந்தொகையாகும். அதன்கண் கூறப்பெறும் கருத்துக்கள் சிறுவர்தம் உள்ளத்தில் அறஒளிவிளக்காய் ஒளிர்ந்து அவர்கள் வாழ்க்கை முழுதும் வழிகாட்டும் என்பது உறுதி. வருங்காலக் குடிமக்களாகிய இக்காலச் சிறுவர்கள் உள்ளங்களில் அறவுணர்வு பெருக வேண்டும். என்னும் அவாவினால் 15 ஆண்டுகளாகத் தமிழ்ச் சங்கம் அறநூற் போட்டிகள் பல நடத்தி வருகின்றது. போட்டியில் பங்குபெறும் சிறுவர்கள் பாடலும் கருத்தும் அறிந்திருத்தல் வேண்டும். அதற்கேற்பப் பாடலும் சங்கத்தார் எழுதிய கருத்தும் கொண்டு இந்நூல் வெளிவருகின்றது. செய்யுளைப் பிரிக்காது சேர்த்துப் படித்துப் பயில வேண்டும். இது தமிழுக்கு அடிப்படை முறையாகும். “சங்கத் தமிழ் மூன்றும் தா” வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை அதிவீரராம பாண்டியர் இயற்றியது கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணவற் புதமலர் தலைக்கணி வோமே. (கருத்து) ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோம். நறுந்ததொகை படிப்பதால் வரும்பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. அதிவீரராம பாண்டியன் கொற்கை என்னும் நகரை ஆள்பவன்; வெற்றிதரும் வேல்பொருந்திய கையை உடையவன்; பிறந்த குலத்திற்கு மணிமுடி போன்றவன். அவன் நல்ல தமிழில் விளக்கமாகக் கூறியுள்ள நறுந்தொகையைப் படித்துத் தம்மிடத்துக் குற்றம் உண்டாகாதவாறு நீக்குபவர் ஒரு குறையும் இல்லாதவர் ஆவர். வாழிய நலனே வாழிய நலனே மழை, பயிர், உயிர், அறம் எல்லாம் வாழவேண்டும். 1. எழுத்தறி வித்தவன் இறைவ னாகும் கல்வி கற்பித்த ஆசிரியன் கண்ணாற் காணப்பெறும் கடவுள் ஆவான். 2. கல்விக் கழகு கசடற மொழிதல் குற்றம் இல்லாதபடி பேசுவதே கல்விக்கு மதிப்பாகும். 3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல் தம் சுற்றத்தாரை காப்பது செல்வர்க்குப் பெருமை. 4. வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும் வேதங்களை முறையாக ஓதுவதும் அவற்றிற் சொன்னவாறு நடத்தலும் வேதியர்க்குச் சிறப்பாகும். 5. மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை நீதிமுறைப்படி ஆட்சி செய்வதே அரசர்க்கு அழகாகும். 6. வணிகர்க் கழகு வளர்பொருள் ஈட்டல் மேன்மேலும் வளரும் செல்வத்தைப் பெருக்குவதே வணிகர்க்கு உயர்வு. 7. உழவர்க் கழகேர் உழுதூண் விரும்பல் பயிர் செய்து உண்பதை விரும்புதல் வேளாளர்க்குப் பெருமை. 8. மந்திரிக் கழகு வருபொருள் உரைத்தல் பின்வருவதை முன்னதாக அறிந்து அரசர்க்குச் சொல்லுதலே மந்திரிக்குச் சிறப்பு. 9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை அஞ்சாமையும் வீரமும் படைத்தலைவனுக்கு மேன்மை. 10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல் வந்த விருந்தினருடன் கலந்து இருந்து உண்ணுதலே குடும்பத்துக்கு நல்லது. 11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல் எதிர்வாதம் செய்யாமல் அமைதியாகக் குடும்பத்தை நடத்துவதே வீட்டுப் பெண்களுக்கு முறை. 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல் தன் கணவனைப் போற்றுவதே நல்ல குடிப்பிறந்த பெண்ணுக்குச் சிறப்பாகும். 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல் பிறர் தன்னை விரும்பிக் காணுமாறு அழகு செய்து கொள்ளுதல் தாசிக்கு இயல்பாகும். 14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல் சிறந்த நூல்களைப் படித்துத் தெளிந்து அடக்கமாக ஒழுகுவதே அறிவுடையார்க்கு மதிப்பாகும். 15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை வறுமையிலும் மானத்தை விட்டுப் பிறரிடம் இரவாமையே ஏழைக்கு மதிப்பாகும். 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினம் ஒருவர்க் கருக்க நிழலா காதே. பணம் பழத்தின் பெரிய விதையிலிருந்து தோன்றும் மரம் மிக உயரமாக வளர்ந்தாலும் ஒருவர் தங்குதற்குக் கூட நிழலைத் தராது. பிறர்க்குப் பயன்படாத உயர் செல்வம் பயனற்றது. 17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. மீன் முட்டையை விடச் சிறிதான ஆலம் விதை மன்னர் நால்வகைப் படைகளோடு தங்குதற்குரிய நிழலைத்தரும். பிறர்க்குப் பயன்படும் சிறிய செல்வமும் சிறப்புடையது. 18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர் உருவத்தால் செல்வத்தால் பெரியவர் எல்லாம் பெருமை உடையவர் ஆகார். கொடை செய்பவரே பெரியவர். 19. சிறியோ ரெல்லாம் சிறியரும் அல்லர் உருவத்தால் செல்வத்தால் சிறியவர் எல்லோரும் சிறுமை உடையவர் அல்லர். கொடுக்காதவரே சிறியவர். 20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைகள் அல்லர் பிறந்த பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகள் இல்லை. குடிக்குப் பெருமை செய்யும் பிள்ளைகளே உண்மைப் பிள்ளைகள். 21. உற்றோ ரெல்லாம் உறவினர் அல்லர் உறவினர் எல்லாம் உறவினர் இல்லை. துன்பக் காலத்து உதவி செய்பவரே உண்மை உறவினர். 22. கொண்டோரெல்லாம் பெண்டிரு மல்லர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் எல்லோரும் பெண்கள் இல்லை. இல்லறம் பேணும் பெண்களே உண்மையான மனைவியர். 23. அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது பசுவின் பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறைவதில்லை; மிகும். 24. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது பொன்னைத் தீயிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி குறையாது; அதிகப்படும். 25. அரைக்கினுஞ் சந்தனம் தன்மணம் அறாது. சந்தனக் கட்டையைக் கல்லில் வைத்துத் தேய்த்தாலும் அதது தன் மணத்தில் குறைவதிலை. 26. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது. அகிற் கட்டையைத் தீயிட்டுப் புகைத்தாலும் நறுமணத்தையே வீசும். 27. கலக்கினுங் தண்கடல் சேறா காது கடலை எப்படிக் கலக்கினாலும் அது சேறாகாது; தெளிவாகவே இருக்கும். பால், பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தும் தம்மைப் பிறர் வருத்தியபோதும் தமக்குரிய இயல்பில் மாறுபடுவதிலை. அவை போல, பெரியோர் தமக்கு மிகுந்த துன்பம் வந்தாலும் தம் உயர் குணங்களிலிருந்து மாறுபடார்: 28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய் பேய்ச்சுரைக்காயைப் பால் பெய்து சமைத்தாலும் தனக்குரிய கசப்புத்தன்மையில் குறையாது. 29. ஊட்டினும் பலவிரை உள்ளி கமழாது பலவகையான வாசனைப் பொருள் கூடிச் சமைத்தாலும் உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது. பேய்ச் சுரைக்காயும் உள்ளிப்பூண்டும் இனியசுவையும் மணமும் கூட்டிச் சமைத்தாலும் சுவையும் மணமும் பெறுவ தில்லை. அவை போலச் சிறுமைக்குணம் உடையோர்க்கு அளவற்ற நன்மை செய்தபோதிலும், தம் சிறுமைக் குணத்தி லிருந்து அவர்கள் மாறுபடுவதில்லை. 30. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே ஒருவனுக்கு வரும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனே காரணமானவான்; பிறர் காரணம் ஆகார். 31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே அறிவு குறைந்தோர் செய்யும் சிறு குற்றங்களைப் பெரியோர் பொறுத்துக் கொள்ளுதல் கடமையாகும். 32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே பெரியோர் பொறுப்பாரென்று நினைத்துச் சிறியவர்கள் பெரிய குற்றங்களைச் செய்வார்களானால், பெரியோர் அக்குற்றங்களைப் பொறுக்க மாட்டார். 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே பல ஆண்டுகள் பழகினாலும் கீழோர் நட்பு நீர்ப்பாசி போல உறுதி பெறாது. 34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே ஒருநாள் பழகினாலும் மேலோர் நட்பு ஆழமாகவும் உறுதியாகவும் இருக்கும். 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது சிறப்பு. 36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினட் பறிந்த பதரா கும்மே படிக்காத ஒருவன் தன்குடிப்பிறப்பின் மேன்மையைப் பேசுதல் நெற்பயிரோடு தோன்றிய பதரை ஒக்கும். 37. நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன் கற்றில னாயின் கீழிருப் பவனே ஒருவன் உயர்ந்த குலத்திற் பிறந்தவனாயினும் படிக்காதவனாயின் தாழ்ந்தவனே ஆவான். 38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர் எந்தக் குலத்திற் பிறந்தாலும் யாராக இருந்தாலும் கற்றவரை உயர்வாக அழைப்பர். 39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் கல்வியறிவு உடையவனையே அரசனும் விரும்புவான். 40. அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சமற றேமாந் திருக்கை நன்றே ஆண்மையும் அறிவும் இல்லாத பிள்ளைகளைப் பெறுவதை விட அக்குடி பிள்ளைகளே இல்லாமற் போவது நல்லது. 41. யானைக் கில்லை தானமும் தருமமும் யானைக்கு நீண்ட கையிருப்பினும் அது தானமும் தருமமும் செய்வதிலை. செல்வம் பெருகி இருப்பவரெல்லாம் தானம் செய்வதில்லை. செய்வதற்கு மனம் வேண்டும். 42. பூனைக் கில்லை தவமும் தயையும் பூனை கண்களை மூடிக்கொண்டு இருந்தாலும் தவமும் அருளும் அதற்கில்லை. பொய்யான தோற்றத்தை நம்பலாகாது. 43. ஞானிக் கில்லை இன்பமும் துன்பமும் உண்மை ஞானம் உடையவர்க்கு இன்பமும் துன்பமும் இல்லை. 44. சிதலைக் கில்லை செல்வமும் செருக்கும் கறையான் எந்தப் பொருளையும் அரித்துவிடும். அதுபோலக் கீழ்மக்கள் எதற்கும் கேடுசெய்வர். 45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும் நீச்சு நிலை பாராமல் முதலை எல்லா இடத்தும் செல்லும். அதுபோல மூர்க்கர் எங்கும் சென்று தீமை செய்வர். 46. அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை தீமைக்கு அஞ்சுதலும் பழிக்கு நாணுதலும் முட்டாள்களிடம் இல்லை. 47. நாளுங் கிழமையுங் நலிந்தோர்க் கில்லை நோயாலும் வறுமையாலும் வாடியவர்களுக்கு நாளும் கோளும் இல்லை. 48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை வறுமைப் பட்டோர்க்கு நண்பர்களும் சுற்றமும் இல்லை. 49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா செல்வமும் வறுமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். 50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் குடை நிழலில் யானைமீது அமர்ந்து சென்ற அரசர், ஒரு நாள் அரசு இழந்து காலால் நடந்து எந்த ஊருக்கோ போவார். 51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழச் சாலை அடையினும் அடைவர் தலைமையும் செல்வமும் மேன்மையும் உடையோர் தம் நிலைமாறி உணவின்றி அறத்திற்குச் சோறுபோடும் சத்திரத்தை அடைந்தாலும் அடைவர். 52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர் வெளியில் நின்று கூவிப் பிச்சை எடுப்போர் தமது நிலைமாறி ஒருநாள் அரசாளும் பதவி பெறினும் பெறுவர். 53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர் மலையளவு செல்வம் பெற்றவரும் ஒரேநாளில் அதனை இழத்தலும் கூடும். 54. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குத் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும் ஏழடுக்கு மாளிகைகள் அழிந்து வீழ்ந்து கழுதை மேயும் பாழ்நிலமாக ஆனாலும் ஆகும். 55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும் எருதும் கழுதையும் மேய்ந்த பாழ்நிலம் பெண்ணும் ஆணும் விளையாடி நெல் நிறைந்த நகரமாகவும் மாறும். 56. மணவணி யணிந்த மகளிர் ஆங்கே பிணவணி அணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கொடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர் மணக்கோலம் கொண்ட மகளிர், அந்த மணப்பந்தலிலேயே தம் கணவரைப் பிணக்கோலத்தில் கண்டு அவர் உடம்பைத் தழுவிக்கொண்டு பட்டாடை வெள்ளாடையாகக் கூந்தலை விரித்து அழ நேர்ந்தாலும் நேரலாம். (49 முதல் 56 வரை உள்ள செய்யுட்கள் பதவி, வறுமை, செல்வம், வாழ்க்கை முதலியன நிலையில்லாதவை எனக் கூறுகின்றன.) 57. இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே வறியவர்கள் யாசிப்பது இயற்கையே யாகும். 58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே இரந்து கேட்போர்க்குக் கொடுப்பது பொருள் உடையவர் கடமையாகும். 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை இல்லில் லோர்க்கே உலகில் அளவற்ற செல்வம் பெற்றிருந்தாலும் மாண்புடைய மனைவியைப் பெறாவிடில் எப்பயனும் இல்லை. 60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே அஞ்சாமையுடைய யானை உருவத்தால் பெரிதாக இருந்தாலும் சிறிய மூங்கிற் கோலுக்கு மிகவும் பயப்படும். அதுபோலத் தம்மை ஆள்வோர் இளைஞராயினும் செங்கோலுக்குக் குடிமக்கள் அஞ்சி நடப்பர். 61. குன்றுடை நெடுங்காட் டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே மலையும் காடும் காவலாக அமைந்திருந்த போதும், மான் தனக்குப் பகையான புலியை நினைத்துப் பயப்படும். 62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரைபாம் பிற்கு மிகவஞ் சும்மே ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் தேரை காப்பாக வாழ்ந்தாலும், பாம்பை நினைத்து மிகவும் பயப்படும். மனவலிமை இல்லாதவர் காப்பான இடத்திலும் இருந்தாலும் மான் தேரைகளைப் போலப் பகைவரை நினைத்தபோதே அஞ்சுவர். 63. கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின் கடும்புலி வாழுங் காடு நன்றே கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டில் வாழ்வதைவிடக் கடும்புலி வாழும் காட்டில் வாழலாம். 64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் நன்றே அறிவு ஒழுக்கங்களால் சிறந்த பெரியோர் இல்லாத பெரிய நகரத்தில் வாழ்வதைவிட, தேன் உண்ணும் குறவர் வசிக்கும் மலைப்பக்கம் வாழ்தல் சிறப்பாகும். 65. காலையும் மாலையும் நான்மறை யோதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே காலையும் மாலையும் வேதம் ஓதாத அந்தணர் பதர் ஆவார். 66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே கொடுங்கோலனாய்க் குடிகளை வருத்தி வரிப்பொருள் வாங்கும் கொடிய அரசனும் பதரே யாவான். 67. முதலுள பண்டம் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே முதலைக் கொண்டு வாணிபம் செய்து அதனால் வரும் இலாபத்தை உண்ணாத கஞ்ச வணிகரும் பதர் ஆவார். 68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே விதையும் ஏரும் இருக்கவும், நிலத்தை உழுது பயிர் செய்யாது சோம்பி இருக்கும் வேளாளனும் பதரேயாவான். 69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே தன்னுடைய மனைவியை அவள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விட்டு அவளைக் கவனியாது விடும் அறிவில்லாதவனும் பதராவான். 70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே தன் மனைவியை வீட்டில் தனித்திருக்கச் செய்து அயலானது மனைவியை விரும்பிச் செல்லும் அறிவிலியும் பதராவான். 71. தன்னா யுதமும் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே தன் தொழிலுக்குரிய கருவியையும் தன்கைப் பொருளையும் பிறனிடம் கொடுத்துச் சோம்பியிருக்கும் அறிவிலியும் பதராவான். (65 முதல் 71 வரையுள்ள செய்யுட்களில் அந்தணப் பதர், அரசப்பதர், வணிகப்பதர், வேளாளப்பதர், இல்லறப் பதர், தொழிலாளிப்பதர் என ஆறுவகைப் பதர்களை ஆசிரியர் கூறியுள்ளார்.) 72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின் வாயே பறையாகவும் நாவே அடிகோலாகவும் கொண்டு சான்றோர் பலகாலும் சொல்லும் உறுதி மொழிகளைக் கருத்துடன் கேட்பீராக. 73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே பொய்யன் சொல்லும் பொய், அவனது பேச்சுவன்மையால் மெய்போலக் காணப்படலாம்; நம்பக்கூடாது. 74. மெய்யுடை ஒருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே மெய்யன் சொல்லும் உண்மை, சொல்வன்மை இல்லாமையால் பொய்போலத் தோன்றக்கூடும். சிந்திக்க வேண்டும். 75. இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே இருவரும் பொருந்த உரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தம் மனமுற மறுகினின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே வழக்குத் தீர்ப்பவர் இரு கட்சிக்காரர்களின் முறையீட்டையும் பலமுறை கேட்டு, இருவரும் ஏற்றுக் கொள்ளும்படி தீர்ப்புச் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லாராயின் அறமின்றி வழக்கில் தோற்றவர் அழுத கண்ணீர் அப்படித் தீர்ப்புச் சொன்னவரின் குடியை வேரோடு அழிக்கும் வாளாகிவிடும்; தேவராலும் காக்க முடியாது. 76. பழியா வருவது மொழியா தொழிவது பழியைத் தரும் செய்திகளைப் பேசாது நீக்குக. 77. கழியா வருபுனல் இழியா தொழிவது கழித்துவரும் வெள்ளப் பெருக்கில் இறங்கக் கூடாது. 78. துணையோ டல்லது நெடுவழி போகேல் துணையில்லாமல் நெடுந்தூரம் போகாதே. 79. புணைமீ தல்லது நெடும்புனல் ஏகேல் நன்றாக நீந்தத் தெரிந்திருந்தாலும் பெருவெள்ளத்தைத் தெப்பம் இல்லாமல் கடக்க கூடாது. 80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல் வாகாதே பெண்கள் மீது கொண்ட காதலால் அவர்கள் கூறும் பொருத்த மற்ற காரியங்களைச் செய்ய முயலுதல் கூடாது. 81. வழியே ஏகுக வழியே மீளுக முறையான வழியில் செல்க; அங்ஙனமே திரும்புக. 82. இவைகாண் உலகிற் கியலாம் ஆறே இந்நூலிற் சொல்லப்பெற்ற இந்நெறிகள் யாவும் உலக நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகளாம். பதிப்புரை ஒளவையார் பாடிய அருந்தமிழ் நூல்கள் சுருங்கிய சொற்களால் விரிந்த கருத்தைத் தருவன. அந்நூல்களுள் ஒன்று மூதுரையாகும். மூதுரையில் கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் 31 வெண்பாக்கள் உள்ளன. மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டும் சிறந்த கருத்துக்களை இனிய நடையில் சிறப்பான உவமைகள் மூலம் விளக்கும் மூதுரையை ‘வாக்குண்டாம்’ எனவும் சான்றோர் கூறுவர். ஒவ்வொரு நீதி நூலுக்கும் நூலின் தொடக்கத்தில் உள்ள சொல்லே நூற்பெயராக அமையும் முறைபற்றி மூதுரை நூலின் முதற்பாடலில் உள்ள ‘வாக்குண்டாம்’ என்ற தொடரையே நூற்பெயராக அமைத்து வழங்கி வருகின்றனர் சான்றோர். தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் அறநூற் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஏற் வகையில் பொழிப்புரையுடன் இந்நூல் வெளிவருகின்றது. செய்யுளைப் பிரிக்காது சேர்த்துப் படித்துப் பயில வேண்டும். இது தமிழுக்கு அடிப்படை முறையாகும். சங்கத் தமிழ் மூன்றுந் தா மூதுரை ஒளவையார் இயற்றியது கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. பொருள் : வலிமை பொருந்திய அழகிய உடலினையும் தும்பிக்கையையும் உடைய விநாயக் கடவுளின் திருவடிகளை மலர் கொண்டு வழிபாடு செய்பவர்க்குச் சொல்வளம் உண்டாகும்; இலக்குமியின் கருணையால் செல்வம் உண்டாகும்; உடல் நலமும் உண்டாகும். நன்மை செய்தால் நன்மை வரும் 1. நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா- நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். பொருள் : தென்னைமரம் வேரால் உண்ட நிரை இனிய சுவையுடைய இளநீராக்கி முடியாலே தருகின்றது. அதுபோல, நாம் பிறர்க்குச் செய்யும் உதவி நமக்குத் தவறாமல் வந்து சேரும். ஆதலால் என்றும் நன்மையே செய்க. நல்லோர்க்குச் செய்த உதவி நிலையாக நிற்கும் 2. நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர். பொருள் : பிறர் தமக்குச் செய்த உதவியை நல்லோர் தம் உயிர் உள்ளளவும் மறக்கமாட்டார். பிறர் தமக்குச் செய்த உதவியைத் தீயோர் நீர்மேல் எழுத்துப் போல் உடனே மறந்து விடுவர். இளமையில் வறுமை 3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியாவும் - இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. பொருள் : காலமல்லாத காலத்தில் பூத்த மலரும் கணவன் இல்லாத பெண்ணின் அழகும் பயன்படாவாம். அவைபோல, இளமையில் வறுமையும் முதுமையிற் செல்வமும் பயன் படாவாம்; துன்பம் செய்யும். மேன்மக்கள் இயல்பு 4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும். பொருள் : பாலைத் தீயிலிட்டுக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கினைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தையே தரும். அவைபோல மேன்மக்கள் துன்பம் வந்த போதும், தம் உயர் குணத்தினின்றும் மாறுபடார்; கீழோர் கலந்து பழகினாலும் நண்பர் ஆகார். காலமறிந்து செய்தல் 5. அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்தர உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தா லன்றிப் பழா. பொருள் : கிளைத்துத் தழைத்த வளமான மரங்களாயினும் அவை பழுக்குங்காலம் வந்தாலன்றிப் பழுக்க மாட்டா. அதுபோல கைகூடும் காலம் வந்தாலன்றி, எச்செயலும் எவ்வளவு முயன்றாவும் கை கூடாது. ஆகையால் காலமறிந்து செய்க. உயிரினும் மானம் பெரிது 6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். பொருள் : கல்லால் ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல, மானம் உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரை விட்டு மானத்தைக் காப்பார். அறிவு செல்வம் குணம் அமைதல் 7. நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகும் குணம். பொருள் : நீரினது உயரத்தின் அளவே அல்லிக் கொடி இருக்கும். அதுபோல ஒருவர்க்கு அவர் கற்ற நூலின் அளவே அறிவு அமையும்; செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்; பிறந்த குடியின் இயல்புக்கு ஏற்றவாறே குணம் அமையும். நல்லார் தொடர்பால் வரும் நன்மை 8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றெஎ-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதும் நன்று. பொருள் : நல்லவரைக் காண்பதும் அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும்; அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடியருப்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும். தீயவர் தொடர்பால் வரும் தீமை 9. தீயாரைக் காண்பதும் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவும் தீதேஎ-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் தீது. பொருள் : தீயவர்களைக் காண்பதும் அவர்கள் சொற்படி நடத்தலும் தீமையாகும்; தீயவர்களின் குணங்களைப் பேசுவதும் அவர்களுடன் நட்புக் கொள்ளுதலும் தீமையாய் முடியும். நல்லோரால் எல்லார்க்கும் நன்மை 10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு) எல்லார்க்கும் பெய்யு மழை. பொருள் : நெல்லுக்கு இறைத்த நீரால் புல்லும் வளம் பெறும். அதுபோல நல்லோரைச் சார்ந்த எல்லோரும் பயனடைவர். துணை வலிமை வேண்டும் 11. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமம் செயல் பொருள் : முன்னே முளைப்பது அரிசியேயானாலும் உமி நீக்கி விடின் அரிசி முளைக்காது. ஆதலால் வல்லமை உடையார்க்கும் துணைவலிமையில்லாமல் எடுத்த காரியத்தைச் செய்ய முடியாது. உருவமும் குணமும் 12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்நிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும் பொருள் : பெரிய இதழையுடைய தாழைக்கு மணம் இல்லை; உருவத்தில் சிறிய மகிழம்பூ இனிய மணம் உடையது. கடல் உருவத்தால் பெரியது; எனினும் அதன் நீரில் குளிக்கவும் முடியாது. கடல் அருகில் உள்ள சிறிய ஊற்று நீர் குளிப்பதற்கே அன்றிக் குடிக்கவும் பயன்படும். ஆதலால் தோற்றத்தால் பெரியவர் குணத்தால் சிறியராதலும் தோற்றத்தால் சிறியவர் குணத்தால் பெரியவராதலும் உண்டு. கல்லாதவன் காட்டுமரமாவான் \13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நன் மரம். பொருள் : காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டிலும் படிப்பறிவு இல்லாதவனும் ஒருவனுடைய குறிப்பை அறியாதவனும் நல்ல மரங்களாவர். காரணம் மனித மரங்கள் பார்க்கும், நடக்கும், பேசும். போலி அறிவின் இழிவு 14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. பொருள் : வான்கோழி தன்னை மயிலாக நினைத்து ஆடினாலும் மயிலாகாது. அதுபோலக் கல்லாதவன் கற்பவர்போல் நடித்தாலும் கற்றவன் ஆகான். தீயோர்க்கு உதவின் தீங்கே வரும் 15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல் - பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம். பொருள் : வேங்கைப் புலியின் நோயைத் தீர்த்த விடவைத்தியன் அப்பொழுதே அப்புலிக்கு இரையானாற் போலத் தீயவர்க்கு உதவி செய்யின் அவர் தமக்குச் செய்த உதவியை மறந்து அப்பொழுதே கேடு செய்வர். அடக்கத்தை இகழாதே 16. அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு. பொருள் : கொக்கு தனக்கேற்ற பெரியமீன் வருமளவும் அமைதியாக இருப்பது போலப் பெரியவர்களும் தமக்கு ஏற்ற காலம் வரும்வரை அடங்கியிருப்பார்கள். அடக்கத்தை அறியாமை என்று நினைத்து அவர்கள் வெல்ல நினைப்பவன் தோற்றுப் போவான். உண்மையான உறவினர் 17. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒடி யுறுவார் உறவு. பொருள் : நீர்வற்றியவுடன் குளத்தினின்று நீங்கிப் போகும் நீர்ப்பறவை போன்று நமக்குத் துன்பம் வரும்போது நம்மை விட்டு நீங்குபவர் உண்மையான உறவினர் ஆகார். அக்குளத்தில் உள்ள கொட்டியும், அல்லியும், நெய்தலும் போலத் துன்பத்திலும் பங்கு கொள்பவரே உண்மையான உறவினர் ஆவார். கெட்டாலும் மேன்மக்கள் குணம் மாறார் 18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாகும்- சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால் பொருள் : பொற்குடம் உடைந்தாலும் பொன்னாகிப் பயன்தரும். அதுபோல மேன்மக்கள் வறுமை அடைந்தாலும் மேன்மைக் குணத்திலிருந்து மாறுபடார். மண்ணால் ஆகிய குடம் உடைந்தால் ஒன்றுக்கும் பயன்படாது. அதுபோல, கீழோர் வறுமை அடைந்தால் மேலும் கீழ்மைக் குணம் உடையவராவர். ஆசையாற் பயனில்லை 19. ஆழ அமுக்கி முக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நானாழி - தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். பொருள் : அளவற்ற நீர் உடைய கடலுள் ஒரு படியை ஆழ அமுக்கி முகந்தாலும் அது நாலுபடி மீரை மொள்ளாது. அது போல, ஒரு பெண்ணுக்கு மிக்க பொருளும் தக்க கணவனும் கிடைத்தாலும், பழவினையின் அளவன்றி மிகுதியாய்த் துய்க்க முடியாது. உடன்பிறப்பும் அயலாரும் 20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு. பொருள் : உடம்புடன் பிறந்த நோயே உடலை அழிப்பது போல உடன் பிறந்தவர்களே நமக்குத் தீங்கு செய்வதுண்டு. நமக்குத் தொடர்பில்லாத மலையில் தோன்றிய மருந்த நம் நோயைத் தீர்ப்பதுபோல, நமக்கு அயலவர்களால் நன்மை விளைவதும் உண்டு. மனையாளும் மனையும் 21. இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும். பொருள் : நற்குணமும் நற்செயலும் உடைய மனையாள் வாழும் வீட்டில் எல்லா நன்மையும் நிறைந்திருக்கும். மனைவி இல்லாவிடினும், மனைவி கடுஞ் சொற்களைப் பேசுபவளாக இருப்பினும், அவ்வீடு புலி வாழும் புதருக்கு ஒப்பாகும். ஊழின்படியே நடக்கும் 22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. பொருள் : நல்ல பயனைப் பெறலாம் என்று நினைத்துக் கற்பக மரத்தை அடைந்தோர்க்கு அது கொடிய கசப்புடைய எட்டிக் காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் முற்பிறப்பிற் செய்த தீவினையேயாகும். ஆதலால் மனமே, நீ நினைத்தபடி ஒன்றும் நடவாது. ஊழின்படியே நடக்கும். சினத்தில் மூவகை நிலை 23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். பொருள் : கோபத்தினால் வேறுபட்ட விடத்துக் கீழ்மக்கள் கல்லின் பிளவைப் போல் மீண்டும் ஒன்று கூடார்; இடையாயர் பொன்னின் பிறவைப் போல ஒருவர் கூட்டக் கூடுவர்; சான்றோர் நீரின் பிளவு போலப் பிரிந்த உடனை தாமே கூடுவர். குணமும் தொடர்பும் 24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். பொருள் : தாமரைப்பூவை அன்னம் சேர்ந்தாற் போலக் கற்றவரைக் கற்றவரே விரும்புவர். இடு காட்டில் உள்ள பிணத்தைக் காக்கை விரும்புவது போலக் கல்வியில்லாத மூடரை மூடரே விரும்புவர். வஞ்சனையுடையார் ஒளிந்து இருப்பர் 25. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர் பொருள் : நஞ்சுடைய நாகப்பாம்பு மறைந்து வசிக்கும். அதுபோல நெஞ்சில் வஞ்சனையுடையவர் தம்மை ஒளித்து ஒழுகுவர். நஞ்சில்லாத தண்ணீர்ப்பாம்பு அஞ்சாமல் கிடக்கும். அதுபோல வஞ்சனை யில்லாதவர் வெளிப்படையாக ஒழுகுவர். கற்றோர் சிறப்பு 26. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு. பொருள் : அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் சிறப்பு உண்டு. கற்றோர்க்கு அவர் சொல்லும் எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டு. ஆதலால் மன்னனினும் கற்றவர்க்கே சிறப்பு மிகுதி. நால்வகை எமன்கள் 27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். பொருள் : படியாதவர்க்குப் படித்தவரின் உறுதி மொழிகளும், அறநெறியில் நில்லாதவர்க்கு அறமும், வாழை மரத்திற்கு அது ஈன்ற காயும், கணவனுக்கு இல்வாழ்க்கையில் ஒத்து நடவாத மனைவியும் எமன்களாகும். கேட்டிலும் பண்பு கெடாமை 28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா தாதலால் - தந்தம் தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று பொருள் : சந்தனக்கட்டை தேய்ந்தவிடத்தும் மணத்தில் குறையாது. அதுபோல அரசர் செல்வக் குறைவு நேர்ந்தபோதும் பிறர்க்கு உதவும் குணத்தில் குறையார். நிலையில்லாத வாழ்வு 29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து போம்போ தவளோடும் போம். பொருள் : திருமகள் நம்மை வந்தடையும் போது சுற்றமும் செல்வமும், நல்ல உருவமும், உயர்வான குடிப்பிறப்பும் வந்தடையும். அவள் நீங்கிப் போய்விடின் அனைத்தும் நீங்கிவிடும். ஆதலால் அவை நிலையற்றவை. துன்பம் செய்வார்க்கும் இன்பம் செய்தல் 30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். பொருள் : ஒருவன் தன்னை வெட்டும் போதும் அவனுக்கு நிழல் தந்து வெயிலை மறைக்கும் மரம். அதுபோல் அறிவுடை யோர் தமக்குத் தீங்கு செய்பவர்க்கும் தம்மலான உதவியைச் செய்வர். பதிப்புரை ஒளவையார் பாடிய அருந்தமிழ் நூல்கள் சுருங்கிய சொற்களால் விரிந்த கருத்தைத் தருவன. அந்நூல்களுள் ஒன்று நல்வழியாகும். இந்நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் 41 வெண்பாக்கள் உள்ளன. பாட்டுக்களையெல்லாம் முதலில் மனப்பாடஞ் செய்து கொள்க. செய்யுட்களை யாப்பு முறைப்படி சேர்த்துப் படித்துப் பயில்க. சேர்த்துப் படிப்பதே கவிதையாகும், ஓசை நயமும் இது பின்னுக்கு நல்லது. இந்நூல் மக்களின் நல்வாழ்வுக்கு வேண்டிய சிறந்த கருத்துக்களை இனிய எளிய நடையில் சிறப்பான உவமைகள் மூலம் விளக்குகின்றது. தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் அறநூற் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பொழிப்புரையுடன் இந்நூல் வெளிவருகின்றது. சங்கத் தமிழ் மூன்றுந் தா நல்வழி ஒளவையார் இயற்றியது கடவுள் வாழ்த்து பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. பொருள் : விநாயகப் பெருமானே! பாலும் தேனும் வெல்லப்பாகும் பருப்பும் ஆகிய நான்கு பொருட்களை உனக்குப் படைப்பேன். எனக்கு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் தர வேண்டுகிறேன். நன்மையே செய்க 1. புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும் தீதொழிய நன்மை செயல். பொருள் : புண்ணியத்தால் வாழ்வும் பாவத்தால் தாழ்வும் உண்டாகும். ஒருவன் செய்யும் புண்ணிய பாவங்களே அவன் எதிர்காலச் சேமிப்பு ஆகும். எல்லாச் சமயத்தார்களும் சொல்வது இக்கருத்தே. ஆதலால் பாவத்தை நீக்கிப் புண்ணியம் செய்க. உயர்குலம் இழிகுலம் 2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. பொருள் : துன்பப் படுவோர்க்குக் கொடுத்து உதவுபவர் உயர் குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர். உண்மை நூலில் சொல்லப் பட்ட கருத்தும் இதுவேயாகும். ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை. முகை பயன் வீடுபேறு 3. இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தென்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. பொருள் : துன்பத்தின் இருப்பிடமான இந்த அழியும் உடம்பை மெய் என்று கருதி இராமல், விரைந்து அறம் செய்ய வேண்டும். அறம் செய்யின் வீடுபேறு கிட்டும். காலம் அறிந்து செய்க 4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்தும் போதல்லாற் - கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்கால மாகு மவர்க்கு. பொருள் : நற்காலம் இல்லாவிடின் திட்டமிட்டுச் செய்யும் காரியமும் நடைபெறாது. நற்காலம் நேரின், கண்ணில்லாதவன் குறிபாராமல் மாமரத்தில் எறிந்த கோலினால் மாங்காய் விழுதல் போல, திட்டமிடாத செயலும் கைகூடும். கவலையடைதல் கூடாது 5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். பொருள் : ஊழால் வாராதனவற்றை விரும்பி அழைத் தாலும் வரமாட்டா. ஊழால் வரக்கூடியவற்றைப் போமின் என்று வெறுத்தாலும் போகமாட்டா. ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலை அடைதல் கூடாது. கவலை இறப்பதற்குக் காரணமாகிவிடும். பேராசை கூடாது 6. உள்ள தொழிய ஒருவர்க் கொருசுகமுங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னாலென் உடலோடு வாழும் உயிர்க்கு பொருள் : திரைகடல் ஓடி அளவில்லாமல் பொருள் தேடி வந்தாலும் விதிப்படிதான் ஒருவர் நுகர முடியும். இதனை உணர்ந்து பேராசை கொள்ளாமல் வாழ வேண்டும். ஞானிகள் பற்றற்று இருப்பர் 7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. பொருள் : உடம்பு நோய்களும் புழுக்களும் நிறைந்த இழிவுடையது; இத்தன்மைi ஞானிகள் அறிந்திருப்பர். ஆதலால் தாமரை இலையில் தண்ணீர் போல உடம்பின் மீது பற்றற்று இருப்பர். ஒழுக்கம் பொருளினும் சிறந்தது 8. ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த வாயினும் கூட்டும் பயனன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம். பொருள் : அளவற்ற பொருள்தேடி வைத்தாலும் ஊழி னளவே நமக்குப் பயன்படும். மேலும் செல்வமோ நிலையற்றது. என்றும் நிலைபெறும் நல்லொழுக்கத்தையே தேட வேண்டும். குடிப்பிறந்தார் வறுமையிலும் உதவுவர் 9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும் இல்லையென மாட்டா ரிசைத்து. பொருள் : ஆறு வற்றி வறண்ட காலத்தும் ஊற்று நீரால் உலகத்தவரை உண்பிக்கும். அதுபோல நல்ல குடியிற் பிறந்தவர் வறுமையடைந்த காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவுவர். கொடுத்து உண்டு வாழ்க 10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். பொருள் : இறந்தவர்க்காகப் பல்லாண்டுகள் அழுதாலும் அவர் திரும்பி வரமாட்டார். நாமும் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆதலால் இறப்பதற்குள் அறஞ்செய்து உண்டு கவலையற்று வாழ்தல் சிறப்பாகும். வயிற்றின் கொடுமை 11. ஒருநாள் உணவையொழி யென்றால் ஒழியாய் இருநாளைக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்த லரிது. பொருள் : வயிறே, உணவு கிடைக்காத போது ஒரு நாளைக்கு உணவை விட்டிரு என்று சொன்னால் விடமாட்டாய்; உணவு கிடைத்த போது இரண்டு நாளைக்குச் சேர்த்து ஏற்றுக் கொள் என்றால் ஏற்றுக் கொள்ளாய். உணவின் பொருட்டு நான்படும் துன்பங்களைச் சிறிதும் நீ அறியமாட்டாய். உன்னோடு வாழ்தல் மிகவும் கடினம். உழவின் உயர்வு 12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. பொருள் : உழுது பயிர் செய்து வாழும் வாழ்க்கையே உரிமை உடையது. உயர்வுடையது. அரசாட்சி போன்ற பிற பணிகள் உரிமையற்றவை; குற்றம் வருவதற்கு வாய்ப்பு உடையவை. நம்மால் விலக்க இயலாதன 13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல் பொருள் : உலகில் வாழ்வதற்கு உரியவரை அழிப்பதும், அழிதற்குரியாரை அழியாமல் தடுப்பதும். ஒழியாமல் பிச்சை எடுப்போரைத் தடுப்பதும் நம் கையில் இல்லை. எல்லாம் ஊழின் வழியே நடக்கும். மானமே உயிரினும் சிறந்தது 14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும். பொருள் : பிச்சை எடுத்து உண்பதிலும் இழிவானது பிறரிடத்தில் ஆசை வார்த்தைகள் பேசி மானமின்றி வாங்கி உண்ணுதலாம். மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிர் விட்டு மானத்தைக் காத்தல் சிறப்புடையது. சிவாய நம 15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு) அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். பொருள் : ‘சிவாயநம’ என்னும் திருவைந்தெழுத்தை இடையறாமல் நினைத்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பம் வாராது. விதியை வெல்லுதற்கு இதுவே வழியாகும். ஏனையோர் விதியால் வெல்லப்படுவர். வியத்தகு மேன்மை 16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் தண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா வாற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமா மென்றே யறி. பொருள் : நிலத்தினது நலத்தால் தண்ணீருக்கும், கொடைக்குணத்தால் நல்லோருக்கும், மாறாத கருணையால் கண்களுக்கும், கற்பொழுக்கத்தால் பெண்களுக்கும் வியக்கத் தகுந்த பெருமை உண்டாகும். தீவினையே வறுமைக்கு வித்து 17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்னவறிந்(து) அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல். பொருள் : அறம் செய்தால் பாவம் நீங்கும் என்பதை உணராது அக்காலத்தில் அறம் செய்யாதவர்கள் இப்போது வறுமையால் வாடுகிறார்கள். அவர்களுடைய வறுமைக்குக் காரணம் அவர்கள் செய்த தீவினையாகும் என்பதை உணராது தெய்வத்தை நோவதால் பயனில்லை. அடிப்பவர்க்கே கொடுப்பர் 18. பெற்றோர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தாம். பொருள் : கஞ்சத்தனம் உடைய கருமிகள் தம்மைத் துன்புறுத்துவோர்க்கே கொடுத்து உதவுவர்; தமக்கு உதவும் பெற்றோர், பிள்ளைகள், சுற்றத்தார் முதலியவர்க்குக் கொடுக்க மாட்டார். உயர்நோக்கம் இன்மை 19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழி னுடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி யரிசிக்கே நாம் பொருள் : வயிற்றுப் பசியைத் தணிப்பதற்கு வேண்டும் உணவு தேடுவதிலேயே நம் ஆயுட்கால மெல்லாம் கழிகிறது. பெறுதற்கு அரிய உடலைப் பெற்ற நாம் அது கொண்டு பேரின்பம் பெற முயல வேண்டும். விலைமகள் தொடர்பு 20. அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கும் வித்தாய் விடும். பொருள் : விலைமகளிரைச் சேர்பவன் அம்மிக் கல்லைத் துணையாகக் கொண்டு ஆற்றில் இறங்கியவனைப் போல் தான் கருதிய இன்பத்தை அடையமாட்டான். வறுமையையும் பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவான். வஞ்சனையில்லார்க்கு வாழ்வு சிறக்கும் 21. நீரும் நிலமும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும் தருஞ்சிவந்த தாமரையாள் தான் பொருள் : வஞ்சனையில்லாதவர்க்குத் திருமகளின் அருளால் நீர்வளமும் நிலவளமும் நல்ல விளைச்சலும் பேரும் புகழும் வளமான செல்வமும் வாழ்நாளும் உண்டாகும். புதைத்த பணத்தால் யாருக்குப் பலன் 22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு) ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பர் பாவிகள் அந்தப் பணம். பொருள் : வருந்தி உழைத்துப் பொருள் சேர்த்து உண்ணாமலும் அறஞ்செய்யாமலும் பொருளை மறைத்து வைக்கும் பாவிகளே! நீங்கள் இறந்தபின் அப்பொருளை யார் அனுபவிப்பர்? அவ்வளவும் வீணே. வழக்கில் ஓரம் சொன்னவர் மனைபாழ் 23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. பொருள் : நீதிமன்றத்தில் ஒரு சார்பாகப் பொய் சொன்னவன் வீட்டில் பேய் சேரும்; எருக்கஞ்செடி வளரும்: பாதாள மூலி என்னும் கொடி படரும்; மூதேவி தங்குவாள். பாம்பு குடியிருக்கும். அதாவது அவன் குடியோடு அழிவான். வாழ்க்கை மாண்பு ஐந்து 24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ் - பாரில் உடன்பிறப் பில்லா வுடம்பாழ் பாழே மடக்கொடி யில்லா மனை. பொருள் : திருநீற்றால் நெற்றியும் நெய்யினால் உணவும் ஆற்றினால் ஊரும் உடன்பிறப்பால் உடம்பும் மனைவியினால் வீடும் மாண்பு பெறும். வரவுக் கேற்ற செலவு 25. ஆன முதலில் அதிகஞ் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. பொருள் : வரவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன் மானமும் அறிவும் கெட்டுப் பழி பாவங்களுக்கு ஆளாவான். நல்லவர்களாலும் வெறுக்கப்படுவான். பசி வந்திடப் பத்தும் போகும் 26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவமுயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்யிர்மேற் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம், பொருள் : மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, பதவி, தவம், உயர்வு, தொழில்முயற்சி, காதல் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்துபோகும். எல்லாம் இறைவன் செயல் 27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் -ஒன்றை நினையாக முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். பொருள் : ஒரு பொருளைப் பெற நினைப்பின் அது கிடைக்காமல் வேறொரு பொருள் கிடைக்கலாம். அப்படி யல்லாமல் நினைத்த பொருளும் கிடைக்கலாம். நினையாத ஒன்று கிடைத்தாலும் கிடைக்கும். இவை யாவும் இறைவன் செயல். இறைவன் கருத்துப்படியே எல்லாம் நடக்கும். நாம் நினைக்கின்றபடி ஒன்றும் நடவாது. மனவமைதி வேண்டும் 28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான். பொருள் : ஒரு நாளில் உண்பது ஒருபடியரிசிச் சோறு; உடுப்பது நான்கு முழ ஆடை; ஆனால் எண்ணுவதோ என்பது கோடி நினைவுகள். மெய்யறிவில்லாத இத்தகைய மக்கள் சாகும் அளவும் அமையில்லாமல் துன்பமே அடைவார்கள். ஆதலால் மனவமைதி வேண்டும். கொடையாளருக்கு எல்லோரும் உறவினர் 29. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவா தளிப்பரேல் உற்றார் உலகத் தவர். பொருள் : மரம் பழுத்தால் யாரும் அழைக்காமல் வெளவால் அம்மரத்தை வந்தடையும். கறவைப்பசு தன்னிடம் உள்ள பாலை ஒளிக்காமல் கொடுப்பது போலத் தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் கொடுப்பவர்க்கு எல்லோரும் உறவினர்கள். விதியின் தன்மை 30. தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பர் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. பொருள் : முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைப் பிரமன் விதித்தபடியே இப்பிறவியில் அனுபவிக்க வேண்டும், தீவினையால் தூண்டப்பட்டு நமக்குத் தீங்கு செய்தவரை நாம் என்ன செய்ய முடியும்? ஊரில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகக் கூடி வெறுத்தாலும் விதி போகாது. இதனினும் இது நன்று 31. இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. பொருள் : இலக்கணப் பிழை உடைய பாட்டினும் உரைநடை சிறந்தது; உயர்குடிப் பிறப்பைக்காட்டிலும் ஒழுக்கம் சிறந்தது; தவறுதல் உடைய வீரத்தைக் காட்டிலும் தீராத நோய் நல்லது; குடிக்குவரும் பழிக்கு அஞ்சாத மனைவியுடன் கூடி வாழ்தலினும் தனிமை நல்லது. பொருள் இருக்கும்போதே அறம் செய்க 32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. பொருள் : ஆற்று வெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போலச் செல்வம் வளரும், குறையும். ஆதலால் வந்து இரப்பவர்க்குச் சோறு இடுங்கள்; தண்ணீரும் கொடுங்கள். அதனால் மனம் தூய்மையுற்று விளங்கும். வன்சொல்லும் இன்சொல்லும் 33. வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். பொருள் : வல்லமை பொருந்திய யானையின் உடலில் தைக்கும் அம்பு மெல்லிய பஞ்சில் பாயாது. நீண்டு இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது பசுமரத்தின் வேருக்குப் பிளந்து போகும். அவ்வாறே இன்சொற்களை வன்சொற்கள் வெல்லாவாம். இன்சொற்களே வெல்லும். பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை 34. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்(று) ஈன்றெடுத்த தாய்வேண்டாள் சொல்லா தவன்வாயிற் சொல். பொருள் : கல்லாதவனே யாயினும் பொருள் உடையவ னாயின் எல்லோரும் அவனை வரவேற்றுப் பாராட்டுவர். கற்றவனேயாயினும் பொருள் இல்லாதவனை மனைவியும் விரும்பமாட்டாள். பெற்ற தாயும் விரும்ப மாட்டாள். அவன் சொல்லை யாரும் மதிக்க மாட்டார். அறிவுடையோரும் பேதையும் 35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்(கு) உரைத்தாலும் தோன்றா துணர்வு. பொருள் : மரங்களில் பூக்காமல் காய்க்கின்ற மரங்கள் இருப்பது போல மக்களுள்ளும் பிறர் ஏவாமல் தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. நன்றாகப் பயன்படுத்தி விதைத்தாலும் முறைத்துப் பயன்தராத விதைகள் போல மூடனுக்கு விளங்கு மாறு எடுத்துச் சொன்னாலும் அறிவு உண்டாகாது. பிறன்மனை விரும்பாமை 36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடி போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமயல் மாதர்மேல் வைப்பார் மனம் பொருள் : நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் அழிவை அடையும் காலத்தில் கருக்களை ஈனும். அவை போல ஒருவன் தன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிப்பது அவனிடத்துள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் மூன்றும் அழிவதற்கு அறிகுறியாகும். வீடு அடைதல் 37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ(து) அல்லாற் கவலைபடேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. பொருள் : இருவினைப் பயன்களை வெல்வதற்கு வேதம் முதலான நூல்களிலும் விதியில்லை. எனினும் நெஞ்சமே அதற்காகக் கவலைப்படாதே. வீடு அடைவதற்கு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அமையும் சாதனங்களே உறுதுணையாகும். உண்மை நிலை 38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்ற நிலை தானதாந் தத்துவாம் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். பொருள் : அது நல்லது; இது தீயது; இதை நான் செய்தேன்; இதை அவன் செய்தான்; இது ஆகாது; இது ஆகும் என வேறுபடுத்தாமல் ஆன்மாவாகிய தான் தலைவனாகிய இறைவனுடன் ஒன்றுபட்டு நின்ற நிலையே உயிர்பெற வேண்டிய உண்மை நிலையாகும். தன்னின் வேறாக நினைத்துக் கடவுளைத் தேடுவது சம்புப்புல் அறுத்தோன் அதனைக் கட்டுவதற்கு அதுவே கயிறாகும் என்பதை உணராமல் வேறு கயிறு தேடுவதை ஒக்கும். முப்பதில் முதல்வனை அறி 39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்(று) ஒருபொருளைத் தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்புங் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. பொருள் : முப்பது வயதில் விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய முக்குற்றம் நீங்கப் பெற்று மெய்ப்பொருளாகிய இறையுணர்வை அடைந்து இன்புறவேண்டும். இல்லாவிட்டால் கல்விக்குப் பயனில்லை. கணவன் இல்லாமல் பெண்கள் மூப்படைந்து என்ன பயன்? சிறந்த நூல்கள் 40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். பொருள் : திருக்குறள், உபநிடம், தேவாரம், திருக்கோவை, திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்கள் ஒரு பொருளையே சொல்லுவன. இந்நூல்கள் கற்கத் தக்கவை என்று அறி. பதிப்புரை நன்னெறியை இயற்றியவர் சிவப்பிரகாச அடிகளார். மக்களுக்கு வேண்டும் நன்முறைகளை எல்லோராலும் நன்கறியப்பட்ட உவமைகளைக் கொண்டு விளக்கமாக அடிகளார் பாடியுள்ளார். இந்நூலில் காப்புச் செய்யுளுடன் 41 வெண்பாக்கள் உள்ளன. பாட்டுக்களையெல்லாம் முதலில் மனப்பாடஞ் செய்து கொள்க. செய்யுட்களை யாப்பு முறைப்படி சேர்த்துப் பயில்க. இது பின்னுக்கு நல்லது. அறநூற் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்க்கென எளிய நடையில் விளக்கமாகப் பொழிப்புரை அமைந்துள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் சங்கத் தமிழ்ப்பணிக்கு உற்ற துணையாய் நின்று சிறுவர்கள் வாழ்வில் நன்னெறி தழைக்கச் செய்வார்கள் என நம்புகின்றோம். தமிழ்ச்சங்கம் நடத்தி வரும் அறநூற் போட்டிகளில் கலந்து கொண்டு அறநூல்களை இரண்டாம் வகுப்பிலிருந்து பயின்று வரும் மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் தலைசிறந்த தமிழ்க் குடிமக்களாக வாழ்ந்து பெருமை அடைவார்கள் என்பது உறுதி. சங்கத் தமிழ் மூன்றுந் தா நன்னெறி சிவப்பிரகாசர் இயற்றியது கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. பொருள் : ஒளி வீசும் சடைமுடியையுடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்கினால், நன்னெறியில் உள்ள நாற்பது வெண்பாவும் நன்கு மனத்திற் பாடமாகும். புகழ் கருதாமல் உதவுக 1. என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து. பொருள் : பெண்ணே, எல்லோரையும் புகழ்கின்ற நாக்கு தன்னைப் புகழாவிடத்தும், கை அதற்கு நல்ல சுவைப் பொருள்களைக் கொடுக்கின்றது. அதுபோலப் பெரியோரும், தம்மைப்புகழாதவர்க்கும் தாமேசென்று அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடுப்பர். பெரியோர் வன்சொல் 2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொற் பிறிதென்க - ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு. பொருள் : பெண்ணே, அன்புடன் சாக்கியர் எறிந்த கல்லை இறைவன் ஏற்றுக் கொண்டான்; அன்பில்லாமல் மன்மதன் எறிந்த மலரை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் நம்மிடத்து அன்புடையார் கூறும் கடுஞ் சொல்லும். இன்சொல்லாகும். அன்பிலார் கூறும் இன்சொல்லும் கொடுஞ்சொல்லாகும். முறையறிந்து கொள்க 3. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர் தங்கட் குரியவராற் றாங்கொள்க - தங்கநெடுங் குன்றினாற் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து. பொருள் : பெண்ணே, தமக்கு வேண்டும் பொருள் உதவாதவரிடமிருப்பின், பசுவின் கன்றைக் கொண்டு பாலைக் கறந்து கொள்ளுதல் போல, அவர்க்கு உரியவரைக் கொண்டு பெறுதல் வேண்டும். செல்வப் பயன் 4. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடனீர் சென்று பெயன்முகந்து பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. பொருள் : உதவாத கடல் நீரை மேகம் முகந்து கொண்டு வந்து மழையாகத் தரும். அதுபோல் கொடாதவரின் செல்வத்தை வேறு யாராவது எடுத்துக் கொடுப்பர். பிரியா நட்பின் சிறப்பு 5. நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம். பொருள் : பெண்ணே, அரிசியுடன் கூடி இருக்கும் உமி சிறிதளவு நீங்கிப்பின் ஒன்று கூடினாலும், முளைத்தற்குரிய வலிமையை இழந்துவிடும். அதுபோலப் பிரியாது நட்பாக இருக்கும் இருவர் சிறிது காலம் பிரிந்த பின் கூடினாலும், அவ்விருவரின் நட்பு சிறப்புக் குறைந்ததேயாகும். கணவன் மனைவி கருத்தொற்றுமை 6. காதன் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமம் செய்பவே ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டு மொன்றையே காண். பொருள் : மதிபோன்ற முகத்தையுடையவளே, கண்கள் இரண்டும் தனித்தனியே இரண்டு பொருளைக் காணாமல் ஒரே பொருளைக் காண்பது போலக் கணவனும் மனைவியும் தம்முள் மாறுபாடு இல்லாமல் ஒத்த மனத்துடன் இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும். கல்விச் செருக்குக் கூடாது 7. கடலே யனையம்யாங் கல்வியா லென்னும் அடலே றனையசெருக் காழ்த்தி - விடலே முனிக்கரசு கையால் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். பொருள் : மிகப்பெரிய கடலும் அகத்தியரால் உண்ணப் பட்டது. அதுபோல ‘நாம் கல்விக்கடல்’ என்று செருக்குக் கொள்பவர்களும் வல்லவர் ஒருவரால் வெல்லப்படுவர். ஆதலால் செருக்குக் கொள்ளாதே. சினங்காத்தல் சிறப்பு 8. உள்ளங் கவர்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க - வெள்ளம் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு. பொருள் : வெள்ளம் வந்து ஊரைப் பாழாக்கா வண்ணம் கரைகட்டிக் காத்தலே அருமை. கரையை உடைத்தல் எளிமை. அதுபோல அறிவைக் கொன்று அழிவைத் தரும் கோபம் வாராமல், அடக்கிக் கொள்ளும் குணமே அருமை உடையது. வல்லோர் துணை வலிமை 9. மெலியோர் வலிய விரவலரை யஞ்சார் வலியோர் தமைத்தாம் மருவில் - பலியேல் கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து. பொருள் : சிவபெருமானைச் சார்ந்துள்ளமையால் பாம்பு தன்னினும் வல்லமையுடைய கருடனைக் கண்டு அஞ்சாது. அது போன்று ஒருவன் வல்லமையுடைய ஒருவரைச் சார்ந்திருப்பின் தனது பகைவரைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை. விழுமியோர் இயல்பு 10. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகில் நிறையிருளை நீக்குமேல் நின்று. பொருள் : மதிதன்னிடத்துள்ள களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல் உலகில் பரந்துள்ள இருளை அகற்றி உயிர்களுக்கு இன்பம் செய்யும், அதுபோல மேலோர் தமக்கு வந்துள்ள துன்பத்தை நீக்க நினையாதவராய்ப் பிறர்க்கு வரும் துன்பத்திற்கு மனம் இளகி அதனைத்தீர்த்து வைப்பர். மெய்யறிவாளரும் புலன்களும் 11. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற் கழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு. பொருள் : சுழல்காற்று தன் வலிமையால் சிறிய துரும்பைச் சுழற்றும்; கற்றூணைச் சுழற்ற மாட்டாது. அதுபோல மயங்கச் செய்யும் ஐயறிவும் புல்லறிவாளர்களைத் துன்பம் செய்யும்; நல்லறிவாளர்களைத் துன்பம் செய்ய மாட்டா. உடம்பில் உயிர்தங்கல் வியப்பு 12. வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் சிதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. பொருள் : பெண்ணே, ஒட்டைக் குடத்தில் நீர் நில்லாமல் ஒழுகிப் போதலே இயல்பு; ஒழுகாது நிற்றல் வியப்பு. அதுபோல ஒன்பது ஒட்டைகளை உடைய உடம்பில் உயிர் நீங்குதல் இயல்பு; நீங்காது நிற்றலே வியப்பு. உள்ளதற்குத் தக உதவுக 13. பெருக்க மொடுசுருக்கம் பெற்ற பொருட்கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கும் மலையளவு நின்றமுலை மாதே மதியின் கலையளவு நின்ற கதிர். பொருள் : பெண்ணே, திங்கள் கலைகளின் வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் தக்கவாறு மக்களுக்கு ஒளியைத் தரும். அதுபோல் மேன்மைக்குணம் உடையோர் தம்மிடத்துள்ள பொருள் வளர்ச்சிக்கும் குறைவுக்கும் தக்கவாறு அன்புடன் பிறர்க்குக் கொடுத்து உதவுவர். செல்வச் செருக்கு கூடாது 14. தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோம் என்று தலையா யவர்செருக்குச் சார்தல் - இல்லையால் இரைக்கும்வண் டூதுமலர் ஈர்ங்கோதாய் மேரு வரைக்கும்வந் தன்று வளைவு. பொருள் : பெண்ணே, எந்தக் காலத்திலும் அசைக்க முடியாமதிருந்த மேருமலைக்கும் ஒரு காலத்தில் வளைவு வந்தது. ஆதலால் அழியாத பெருஞ்செல்வக் குடியிற் பிறந்துள்ளோம் என்று தலைமைக்குணம் உடையோர் செல்வச் செருக்கு அடையமாட்டார். வாழ்க்கைக்கு அன்பு அடிப்படை 15. இல்லானுக் கன்பிங் கடம்பொரு ளேவன்மற்(று) எல்லா மிருந்துமவற் கென்செய்யும் - நல்லாய் மொழியிலார்கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. பொருள்: நற்குணமுடைய பெண்ணே, ஊமைகளிடம் பழைய நூல் இருந்தும் பயனில்லை. கண்ணில்லாதவனிடம் விளக்கு இருந்தும் பயனில்லை. அவ்வாறே இவ்வுலகில் அன்பு இல்லாதவனிடம் இடம் பொருள் ஏவல்களும் பிறவும் இருந்தாலும் பயனில்லை. உயர்நதோர் உதவும் முறை 16. தம்மையுந் தங்கள் தலைமையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின் இழியனுஞ் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு கழியினுஞ்செல் லாதோ கடல். பொருள் : பெரிய கடல் தன்னை அடுத்த சிறிய உப்பங் கழியிலும் சென்று பாயும். அதுபோல அறிவு ஒழுக்கங்களினால் உயர்ந்தோர் தம்மைச் சார்ந்தவர் தாழ்ந்தவராயினும் அவர் இருக்கும் இடம் சென்று துன்பம் நீக்குவர். வறுமையினும் உதவி 17. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்று முதவுங் கனி. பொருள் : பெண்ணே, செழித்து வளர்ந்து நின்று பழமாகிய பயனைக் கொடுத்து அழிந்த வாழையின்கீழ், கன்றும் தாய் மரம் போலவே கனி கொடுக்கும். அது போல ‘எம்தந்தை இரப்பவர்க்குக் கொடுத்தமையால் வறுமை அடைந்தான்’ என்று கருதி அவன் பிள்ளைகள் பிறர்க்கு ஈதலைக் கைவிடார். இனசொல் இனிமை தரும் 18. இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழற்கதிரால் தண்ணெண் கதிர்வரவால் பொங்குங் கடல். பொருள் : ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே, குளிர்ச்சி பொருந்திய திங்களின் வரவால் கடல் பொங்கும்; வெம்மையுடைய ஞாயிற்றின் வரவால் பொங்காது. அது போல மக்கள் இன்சொல் கேட்டு மகிழ்வார்; வன்சொற்கேட்டு மகிழமாட்டார். நல்லோர் வரவு நல்கும் இன்பம் 19. நல்லோர் வரவால் நகைமுகம் கொண் டின்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர் திருத்தந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழல்கால் வர. பொருள் : மாமரம் தென்றல் வீசும்போது தளிர் காட்டிச் சிறப்புற்றிருக்கும்; சுழல்காற்று வீசும்போது வருந்தும். அதுபோல, கல்வியறிவு ஒழுக்கங்களில் வல்லபெரியோர் நல்லோர் வருகையால் மகிழ்ச்சியும் தீயவர் வருகையால் துன்பமும் கொள்வர். கருணை உள்ளத்தியல்பு 20. பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க - தெரியிழாய் மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். பொருள் : பெண்ணே, மிக்க நோயால் வருந்தும் பிற உறுப்புக்களைக் கண்டு கண் அழும். அதுபோல, பெரியவர் பிறர்படும் துன்பங்களைக் கண்டவுடன், தம் துன்பமாக எண்ணி நெருப்பிற்பட்ட நெய்போல உருகுவர். கல்லார்செருக்கு கற்றார்முன் அடங்கும் 21. எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை. பொருள் : கங்கையாற்றின் பெருக்கமானது ஞானிகளால் உணரப்படும் சிவபெருமானின் சடையைக் கண்ட அளவில் அடங்கும். அதுபோல, இலக்கண நூலுணர்ச்சி இல்லாதவரின் கல்வி, இலக்கண நூலுணர்ச்சி உடையார் முன்பயன்படாது. பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை 22. ஆக்கும் அறிவா னலது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு பவரார் அரவின் பருமணிகண் டென்றுங் கவரால் கடலின் கடு. பொருள் : நஞ்சுடைய பாம்பாயினும் அதன் பருத்த மாணிக்கத்தைக் கண்டு யாரும் நீக்கமாட்டார். பாற்கடலாயினும் அதனிடத்துத் தோன்றிய நஞ்சினை யாரும் விரும்பிக் கொள்ளமாட்டார். ஆதலால் பிறப்புக் காரணமாக உயர்வு தாழ்வு கொள்ளக்கூடாது. மனவுறுதி வேண்டும் 23. பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் நிகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி பெறும்பூரிக் கனிற்முலைப் பேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியுமே. பொருள் : பெண்ணே, பலமுறை சிற்றெறும்புகள் ஊர்ந்துவரின் கருங்கல்லும் குழிந்து போகும். அதுபோலப் பெண்களிடம் வாய்ப்பேச்சாகப் பழகி வந்தாலும் மனத்திட்பம் நாளுக்கு நாள் தளர்ந்து போகும். கீழேர் பிறர் குற்றமே பேசுவர் 24. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்பும் கனி, பொருள் : சோலையில் சுவைமிகுந்த பழங்கள் நிறைய இருப்பினும் வேப்பம் பழத்தையே காக்கைகள் விரும்பும். அதுபோல ஒருவரிடம் நற்குணங்கள் பல இருப்பினும் கீழ்மக்கள் அவரிடம் உள்ள தீக்குணத்தையே பலரிடமும் சென்று எடுத்துப் பேசுவர். கீழோர் சேர்க்கையால் சிறப்புக் கெடும் 25. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார் கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள். பொருள் : அழகிய கண்களையுடையவளே, தெப்பத்தில் சேர்ந்த கனமுடைய பொருள் கனத்தை இழக்கும். அதுபோல அறிவில்லாத கீழ்மக்களைக் கற்றுணர்ந்த சான்றோர் சேரின் தமது சிறப்பை இழப்பர். உருவத்தைக் கொண்டு மதிப்பிடாதே 26. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் - மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா யிற்றோ விளம்பு. பொருள் : கதிர் ஒளியின் துணைகொண்டு மிகப் பெரிய பொருளையும் காட்டும் கருமணியின் உருவம் சிறிய கண்ணின் அளவாகவே இருக்கும். ஆதலால் உருவத்தில் சிறியவர் என்று கருதி அவரிடம் உள்ள அறிவின் பெருமையை யாரும் இகழார். கைம்மாறு கருதாது உதவுக 27. கைம்மா றுகவாமற் கற்றிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயலுதவி தாஞ்செய்வர் - அம்மா முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று. பொருள் : நாக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்க, பற்கள் பலிய பொருள்களை மென்று அதற்கு இனிய சுவையைக் கொடுக்கும் அதுபோலச் சான்றோர் எதிர் உதவி கருதாமல் தம்மால் இயன்ற உதவியைப் பிறர்க்கு மெய்வருந்திச் செய்வர். வெறுப்பிலும் மேலோர் உதவுவர் 28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக் கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில் காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத் தாயினும் ஆமோஅறை. பொருள் : காயாக இருக்கும் நிலையிலும் வாழை பயன்படும்; எட்டி பழுத்த நிலையிலும் பயன்படாது. அவை போல் பேரறிவுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர்; கீழ்மக்கள் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் பிறர்க்கு ஒரு பொருளும் கொடார். பத்தியுடையார்க்கு அச்சமில்லை 29. உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர் அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பணிமொழியாய் அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான். பொருள் : இன்சொல்லாய், திங்களிடத்துள்ள மான் பூமியில் உள்ள புலிகளுக்குப் பயப்படாது. அதுபோல உயர்ந்த பரம்பொருளிடத்தே மனம் அழுந்தப் பெற்ற ஞானிகள் உடலுக்கு ஒருகோடி துன்பம் வரினும் அச்சமடையார். காலத்தில் அறஞ் செய்க 30. கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. பொருள் : வெள்ளம் வருவதற்கு முன் அணைகட்டி வைக்காதவர் வெள்ளம் பெருகும்போது யாதும் செய்ய முடியாமல் துன்புறுவர். உயிர்களைத் தவறாமல் கொண்டு செல்லும் இயமன் வருவதற்குமுன் மனங்கனிந்து அறஞ்செய்தல் வேண்டும். பிறர் துயரம் தாங்குக 31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய் மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது. பொருள் : சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே, உடம்பில் தாக்கும் பெரிய கோலின் அடியைக் கை விரைந்து போய்த் தன்மேல் தாங்கிக் கொள்ளும். அதுபோல, சான்றோர் பிறர்க்கு வரும் துன்பத்தைத் தாமே வீரமொடு தாங்கிக் காப்பர். முறையறிந்து அறம் செய்க 32. பன்னும் பனுவல் பயன்றேர் அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால் காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாbhன் றிலதாயிற் றான் பொருள் : அழகிய நெற்றியை உடையவளே, வயிரம் பொருந்திய வலிய கதவாயினும் தாழ் இல்லாவிடின் வலிமை குறைந்ததாய் விடும். அதுபோல, நூல்களிற் சொல்லப்படும் விதி விலக்குகளை அறிந்து அறம் செய்யாராயின் அதனால் வரும் சிறப்பு இல்லாது போகும். பெரியோர்க்குக் காப்பு வேண்டாம் 33. எள்ளா திருப்ப இழிஞர்போ றற்குரியர் விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக் கரைகாப் புளுதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப் பளுதோ கடல். பொருள் : நீரைக்கட்டி வைக்கும் சிறிய குளத்திற்கே கரை காப்பு வேண்டும்; பெரிய கடலுக்குக் கரைகாப்பு வேண்டுவ தில்லை. அதுபோல அறிவில்லாத சிறியோர் தம்மைப் பிறர் இகழாவண்ணம் காத்துக் கொள்ளவேண்டும். அறிஞர்க்குக் காப்பு வேண்டுவதில்லை. பெரியோர் பழிக்கு அஞ்சுவர் 34. அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு. பொருள் : பெண்ணே, அழகிய ஒளியுடைய கண்களே இருளுக்கு அஞ்சும். அதுபோன்று அறிவுடையோரே பழிக்கு அஞ்சுவர். குருட்டுக்கண் இருளைக் கண்டு அஞ்சுவதில்லை. அதுபோல அறிவிலார் பழிக்கு அஞ்சுவதில்லை. மேன்மக்கள் கற்றோரை விரும்புவர் 35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம். பொருள் : வேல் போன்ற கண்களை யுடையவளே, வாழைப் பழத்தை இனிய பால் அவாவும்; புளிப்பாகி காடிநீர் அதனை விரும்பாது. அதுபோல, கற்ற அறிவினரை மேன்மக்கள் விரும்புவர்; கீழோர் அவரை மதியார். தக்கார்க்கு உதவுக 36. தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும் நெல்லு கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய். பொருள் : மக்கள் நெல்லுக்கே நீர் இறைப்பர்; காட்டில் உலர்ந்து போகும் புல்லுக்கு நீர் இறைக்க மாட்டார். அது போல் சான்றோரும் நல்லொழுக்கம் உடையவர்க்கே கொடுப்பர்; ஒழுக்கம் இல்லாதவர்க்குக் கொடுக்க மாட்டார். தற்புகழ்ச்சியால் தாழ்வு 37. பெரியோர் முன் தன்னைப் புகழ்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. பொருள் : பெண்ணே, தன்னைத்தானே பெரிதாக நினைத்து நின்ற விந்தமலையானது அகத்தியரால் உயர்வு குறைந்து தாழ்ச்சி அடைந்ததது என்பதை நீ அறியாயோ! ஆதலால் பெரியோர் முன் தன்னைத்தானே புகழ்ந்து சொல்லும் அறிவிலியும் தாழ்ந்து போவான். நல்லோர்தொடர்பு நலம்தரும் 38. நல்லோர் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே - நல்லாய்கேள் காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம் பொருள் : நற்குணமுடைய பெண்ணே, காய் நாட்சென்று முற்றினால் உண்ணுதற்குரிய இனிய கனியாகும். இளந்தளிர் நாட் சென்று முற்றினால் பயன்இல்லை. அதுபோல நல்லோர் செய்யும் நட்பு நாடோறும் வளர்ந்து பயன்தரும்; தீயோர் செய்யும் நட்பு நாடோறும் வளராது கெடும். தீயோர்தொடர்பு தீமைதரும் 39. கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்றொடி சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம். பொருள் : பெண்ணே, செழித்த பூங்கொடியின் பூ மலர்ந்த அன்று மட்டும் மணமுடையதாகிப்பின் கெட்டு விடும், அதுபோல் கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் மிகுதியான நட்பும் கூடியவுடனே தீமையே தரும். அரசரினும் அறிஞரே சிறந்தவர் 40. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தான் மறறொவ்வார் - மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக் காணுங்கண் ஒக்குமோ காண். பொருள் : ஆபரணங்கள் அணியும் பிற உறுப்புக்கள் ஆபரணம் அணியாத உறுப்பாகி கண்ணுக்கு ஒப்பாக மாட்டா. அதுபோல, பொன் ஆபரணங்களை அணிந்த அரசர் அவற்றை அணியாத நிலையான பேரறிவை உடைய அறிஞர்க்கு ஒப்பாக மாட்டார். பதிப்புரை மக்களின் திருந்திய வாழ்க்கைக்கு வேண்டும் கருத்துக்களை எளிய நடையில் கூறும் இந்நூலின் பெயர் உலகநீதி. இதன் ஆசிரியர் உலகநாதர். வாழ்க்கை நன்னெறிகளைத் திரட்டிக்கூறும் உலக நீதிப் பாடல்களில் இறுதி அடிகள் முருகன் திருப்புகழைப் பாடுகின்றன. செய்யுளைப் பிரிக்காது சேர்த்துப் படிக்க வேண்டும். அடியடியாகப் படிக்க வேண்டும். இதுவே தமிழ்முறை. தமிழ்ச்சங்கம் நடத்தும் அறநூற் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்க்கு ஏற்ற வகையில் கருத்து விளக்கமாகப் பொழிப்புரையோடு உலகநீதி வெளிவருகிறது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் தமிழ்ச் சங்கப் பணிக்குத் துணை நின்று சிறுவர் சிறுமியர் உள்ளங்களில் அறம் மலர்ந்து தமிழ் மணம்வீசச் செய்வார்கள் என நம்புகிறோம். சங்கத் தமிழ் மூன்றுந் தா உலக நீதி உலகநாதர் இயற்றியது காப்பு உலக நீதிப் புராணத்தை உரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு. ‘உலகநீதி’யைச் சொல்வதற்கு நூலறிவால் அறிய முடியாத பெருமையினையுடைய யானைமுகக் கடவுள் துணையாவார். பாட்டு 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : நெஞ்சமே! நாள்தோறும் தவறாமல் படிக்க வேண்டும். யாரித்தும தீயசொற்களைப் பேசக்கூடாது. பெற்ற தாயை ஒருபொழுதும் மறக்கக் கூடாது. வஞ்சனை செய்பவர்களுடன் நட்புக்கொள்ளக்கூடாது. போகத் தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் நேரில் இல்லாதபோது அவருடைய குறைகளைப் பிறரிடம் கூற வேண்டாம். தோள் வலிமை மிகுந்த குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனாகிய மயிலேறும் பெருமானை வணங்குவாயாக. பாட்டு 2 நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாடும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : மனமே! உள்ளம் அறிந்த ஒன்றை மறைத்துப் பேசாதே. நிலையில்லாத பயனற்ற செயல்களைச் செய்யாதே. பாம்புபோன்ற நஞ்சுடைய உயிர்களுடன் பழகாதே. உள்ளன்பு இல்லாதவரோடு நட்புச் செய்யாதே. துணையில்லாமல் தனிமையாக நெடுவழி போகாதே. உன்னை அண்டியவர்க்குக் கெடுதி செய்யாதே. வலிமை மிகுந்த குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனும் மயிலை ஊர்தியாகக் கொண்டவனுமாகிய முருகனை வணங்குவாயாக. பாட்டு 3 மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி அல்லையுந் தேட வேண்டாம் சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம் வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : மனமே! நீ நினைத்தபடி யெல்லாம் நடக்காதே. பகைவனை உறவு என்று நினைத்து ஏமாறாதே. தேடிய பொருளைக் கொண்டு நீயும் வாழ்ந்து பிறரையும் வாழச்செய்; புதைத்து வீணாக்காதே. அறச்செயலை ஒருநாளும் மறக்காதே. கோபத்தை வளர்த்துத் துன்பத்தை அடையாதே. உன்மீது கோபங்கொண்டிருப்பவர் வீட்டுவழி போகாதே. காட்டில் விலங்குகளைத் தேடும் குறவருடைய பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனை வழிபடுவாயாக. பாட்டு 4 குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம் மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : மனமே! பிறர் குற்றங்களை பலரிடம் எடுத்துச் சென்று சொல்லாதே. கொலை, களவு செய்பவர்களுடன் நட்புக் கொள்ளாதே. படித்தவரை ஒருபோதும் பழித்துப் பேசாதே. கற்புடைய பிற பெண்களைக் காமுறாதே. அரசரோடு எதிர்வாதம் செய்யாதே. கோவில் இல்லாத ஊரில் குடியருக்காதே. ஈடு இல்லாத வள்ளியின் கணவன் முருகனை வணங்குவாயாக. பாட்டு 5 வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றமொனறுஞ் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெங்செ. பொருள் : மனமே! மணமான பெண்ணைக் கணவருடன் வாழவிடாமற் செய்யாதே. மனையாளைக் குற்றம் சொல்லாதே; பொறுத்துக்கொள். செய்யத்தகாத தீயநெறியில் விழக்கூடாது. போரில் பயந்து புறங்காட்டித் திரும்பி வரவேண்டாம். பண்பில் தாழ்ந்த குலத்தவனோடு சேராதே எளிவர்களை இகழ்ந்து பேசாதே. சிறந்த வாழ்க்கையுடைய குறவர் மகளான வள்ளியின் கணவன் முருகனை வணங்குவாயாக. பாடல் 6 வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன் திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே. பொருள் : மனமே! வீண்பேச்சுக்காரரின் சொற்களைக் கேட்டு அலையாதே. மதியாதவர் வீட்டுக்குப் போகாதே. பெரியோர்கள் கூறும் அறிவுரையை மறக்காதே. முன்கோபம் உடையவருடன் சேராதே. ஆசிரியரின் சம்பளத்தைக் கொடாமல் வைத்துக் கொள்ளாதே. வழிப்பறி செய்வாரோடு சேராதே. மிகுந்த புகழ் உடைவனும் ஒப்பற்ற வள்ளியின் கணவனுமாகிய முருகனை வணங்குவாயாக. பாட்டு 7 கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம் கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம் பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம் எளியாரை எதிரியிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன் குமரவேல் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. பொருள் : மனமே! எண்ணிப்பாராமல் எச்செயலையும் செய்ய வேண்டாம் கெடுங்கணக்கை ஒரு பொழுதும் பேசாதே. பிறர் சண்டை பிடித்துக் கொள்ளும் இடத்திற்குப் போகாதே. ஊருக்குப் பொதுவிடத்தில் குடியிருக்காதே; நிலைக்காது. இரண்டு மனைவி வாழ்க்கை ஒரு போதும் வேண்டாம். ஏழைகளின் பகையை வளர்த்துக் கொள்ளாதே. பறவைகள் நிறைந்த தினைப்புனங் காக்கம் வள்ளியின் கணவனாகிய முருகனின் திருவடியை புகழ்ந்து சொல்வாயாக. பாட்டு 8 சேராத இடந்தனிலே சேர வேண்டாம் செய்ந்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் பிணைபட்டுத் துணைபேசித் திரிய வேண்டாம் வாராருங் குறவருடை வள்ளை பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : மனமே! சேரத்தகாத கூட்டத்தாரொடு சேராதே. பிறர் செய்த உதவியை எக்காலத்தும் நினைக்கவேண்டும். ஊராரைப் பற்றிக் கோள் சொல்லி வீண்காலம் போக்காதே. உறவினர்களை இழிவாகப் போதே. புகழ்தரும் செயல்களைத் தவறாமல் செய் பிறருக்குப் பொறுப்பேற்றுத் துணையில் மாட்டிக் கொண்டு அலைய வேண்டாம். பெருமை பொருந்திய குறத்தி வள்ளியின் கணவனான மயில்வாகனனை வணங்குவாயாக. பாட்டு 9 மண்ணின்று மன்றோரம் செய்ய வேண்டாம் மஞ்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம் கண்ணழிவு செய்ததுயர் காட்ட வேண்டாம் காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம் புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம் மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே பொருள் : மனமே! நடுநிலை இல்லாமல் ஊர்ப்பொது மன்றத்தில் ஒரு பக்கமாகப் பேச வேண்டாம். மனம் கொதித்து எல்லோரிடமும் வம்பு செய்யாதே. கருணையில்லாமல் பிறரைத் துன்புறுத்தாதே. நீ பாராத ஒன்றைப் பார்த்தது போல அளக்காதே. கேட்போர் மனம் புண்படும்படி கடுமையாகப் பேசாதே. புறம் பேசிக் காலம் கழிப்பவரோடு சேராதே. பூமியைத்தன் திருவடியால் அளந்த திருமாலின் தங்கையாகிய உமையினது மைந்தனும் என் தலைவனு மாகிய மயில்வாகனனை வாழ்த்துவாயாக. பாட்டு 10 மறம்பேசித் திரவாரோடு இணங்க வேண்டாம் வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம் திறம்பேசிக் கலமிட்டுத் திரிய வேண்டாம் தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே. பொருள் : மனமே! வெறும் வீரம் பேசுபவரோடு சேராதே. வாதம் பேசி நடைமுறைகளை அழித்து விடாதே. வலிமை பேசி வீண்கலகம் செய்யாதே. கடவுளை நாள்தோறும் நினைக்கவேண்டும். சாகும்நிலை வரினும் பொய் பேசக்கூடாது. உன்னை இகழ்ந்த உறவினரை விரும்பாதே. குறிசொல்லும் குறக்குடியில் பிறந்த வள்ளியின் கணவன் முருகனின் திருப்பெயரைச் சொல்லி வழிபடுவாயாக. பாட்டு 11 அஞ்சுபேர் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம் அதுஏதிங் கென்னில்நீ சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் கூலி சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி மகநோவு தனைத்தீர்த்த மருத்துவன்கூலி இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை ஏதேது செய்வானோ ஏமன் தானே. பொருள் : வண்ணான், நாவிதன், கற்பித்த ஆசிரியர், பேறு பார்த்த மருத்துவச்சி, கொடிய நோய் தீர்த்த மருத்துவன் ஆகிய ஐவருக்கும் உரிய கூலியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடாதவர்க்கு இயமன் என்னென்ன தண்டனை அளிப்பானோ? பாட்டு 12 கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம் கொண்டைமேல் பூத்தெரிய முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் துர்ச்சனாராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை இகழ வேண்டாம் வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. பொருள் : மனமே, ஒற்றுமையுள்ள ஒரு குடும்பத்தைப் பிரித்துக் கெடுக்கக் கூடாது. கொண்டைக்கு மேலை பூத்தெரியும்படி முடியக்கூடாது. பிறர்மீது பழியைச் சுமத்தித் தலையிட்டு அலைய வேண்டாம். கொடிய குணம் உடையவரோடு நட்புச் செய்யாதே. பெருமை மிகுந்த தெய்வத்தை இகழக்கூடாது. வாழ்க்கையில் சிறந்து விளங்கும் பெரியோரை வெறுத்துப் பேச வேண்டாம். மாறுபாடு உடைய குறவர் பெண்ணாகிய வள்ளியின் கணவனாகிய முருகனை வணங்குவாயாக. பாட்டு 13 ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன் உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும் கருத்துடனே நாடோறும் களிப்பினோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப் பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே. பொருள் : உலகநாதனாகி யநான் முருகனை அருமையான தமிழில் பாட விரும்பினேன். மிகவிரும்பி நல்ல கருத்துக்கள் பலவற்றைத்திரட்டி நன் மொழியில் ‘உலகநீதி’ என்னும் நூலைப் பாடினேன். இந்நூலை விரும்பிக் கற்றவர்களும் பிறர் படிக்கும்போது கேட்டவர்களும் தெளிந்த அறிவும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வார்கள்; புகழும் நீண்ட வாழ்வும் பெறுவார்கள்.