மாணிக்க விழுமியங்கள் - 10 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) இரட்டைக் காப்பியங்கள் - முதல் பதிப்பு 1958 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 10 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+504 = 520 விலை : 485/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 376 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. இரட்டைக் காப்பியங்கள் முதற் பதிப்பு 1958 இந்நூல் 1980 இல் மணிவாசகர் நூலகம் வெளியிட்ட 4ஆம் பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முதற் பதிப்பின் முகவுரை ஐம்பெருங் காப்பியங்களுள் அழிவுபடாது நாம் பெற்றுள்ளவை மூன்றே. அம்மூன்றனுள்ளும் சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டும் கதையாலும் கருத்தாலும் காலத்தாலும் தொடர்புடையவை. இவ்வுறவுக் காப்பியங்கள் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்னும் புதிய தொகைப் பெயரால் ஒருபதிப்பாக வழங்கின், தமிழ்ப் பரவலுக்கும் ஆராய்ச்சி ஊற்றுக்கும் இடமாகும் என்று எண்ணினேன். என் எண்ணத்தைச் செயலாக்கிய பெருமை காரைக்குடி செல்வி பதிப்பகத்துக்கு உரியது. இப்புதிய தொகைநூலை ஒரு தனிப் பதிப்பாகவும் பெரிய மலிபுப் பதிப்பாகவும் செல்வி பதிப்பகத்தார் மூனறாண்டுகட்கு முன் வெளியிட்டனர். வளர்ந்துவரும் இவ்வெளியீட்டு நிலையத்தின் தமிழ்த் தொண்டுக்கு நன்றியன். முற்றும் புணர்ச்சி பிரியாத வலிந்த பதிப்புக்கள் இன்று தமிழர்க்குக் கைத்துணையாகா. எல்லாப் புணர்ச்சிகளையும் அலக்கலக்காகப் பிரித்த மெலிந்த தமிழர் அறிவு பெறவும் நாளைத் தமிழ் ஆக்கம் பெறவும். ஊடலும் கூடலும் போல, செவ்வி நோக்கிப் பிரிதலும் புணர்தலும் பெற்ற அளவுப் பதிப்புக்கள்-நடுத்தரப் பதிப்புக்கள்-தமிழகத்திற்கு வேண்டுவன. இந்நோக்கத்தால் எழுந்த பதிப்பு இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சந்தி பிரித்தறிவதற்கு இலக்கண நூற் பயிற்சி வேண்டும் என்று நம் மக்கள் தவறாக எண்ணி மலைக்கின்றனர். விளையாடுங் குழந்தைக்கென வீதி சமைப்பாருண்டோ? தொல்காப்பிய முதலான இலக்கணப் பனுவல்கள் தோன்றிய நோக்கம் வேறு. சொற்கட்டி விளையாடல்போலத் திருக்குறளில் ஒரு பத்து அதிகாரங்களைப் புணர்த்தும் பிரித்தும் சொல்லி வாய்ப்பயிற்சி செய்யுங்கள், போதும். தமிழ்ப் புணர்ச்சியின் இயல்பு, எளிமை, இனிமை இன்றியமையாமை எல்லாம் யார்க்கும் விளங்கிக் கிடக்கும். தமிழர்கள் தாய்மொழியிலக்கியங்களைக் கற்கும் பெரிய எளிய நேர்முறை இதுதான் என்பது முடிந்த துணிபு. இப்பதிப்பில் உள்ள தமிழ்ப் புணர்ச்சி என்னும் கட்டுரை இம்முறையில் பயிற்சிக்குத் துணைசெய்யும். காதைச் சுருக்கம் என்ற பகுதியில் இரட்டைக் காப்பியங்களைக் கற்க விழையும் தொடக்கத்தார்க்குப் பயன்படும். சிலப்பதிகாரத்திறன் மணி மேகலைத்திறன் என்ற பகுதிகள் இக்காப்பியங்களில் முன்னறிவுடையார்க்கு மேலும் திறங்காண வாயில் காட்டும். ஒப்புமைச் சுருக்கம் என்ற பகுதி இரட்டைக் காப்பியங்கள் என்னும் புதிய தொகைப் பெயர்க்கு ஒருவகையால் சான்று தரும். சில அடிகளுக்கு ஒருமுறை நூல்முழுவதும் மேலே தந்துள்ள கருத்துரைகள் வேண்டும் இடங்களைத் தேடவேண்டாதே எளிதிற் காணச் செய்யும். அருஞ்சொற்பொருள் என்ற பகுதி, சுருக்கம் போலத் தோன்றினும், இரு காப்பியங்களிலும் வரும் பொதுவான சொற்கள் பெரும்பாலும் இடம் பெற்றுள என்பது குறிப்பிடத்தகும். நூல் முழுவதற்கும் அடிகள் வரிசையாகத் தொடர்ந்து எண்ணப்பட்டுள. சிலப்பதிகாரம் மணிமேகலைக்கு இத்தொடரெண் முறை இப்பதிப்பிற்கே உரியது. இடங் குறித்துக் கொள்ளவும் மேற்கோள் காட்டவும், இவ்வகை எண்ணுப் பதிப்பு கற்றார்க்கும் கற்பார்க்கும் பெருந்துணையாகும். காதை முடிவில் வலப்பக்கத்துள்ள தமிழெண்கள் அக்காதைக்கு உரிய அடியெண்ணிக்கையைக் காட்டும். இரண்டாம் பதிப்பாகிய இவ்வெளியீட்டில் சிலப்பதிகார மாந்தர், மணிமேகலை மாந்தர், சிலப்பதிகார இலக்கியக் குறிப்புக்கள், மணிமேகலை இலக்கியக் குறிப்புக்கள் என்ற புதிய பகுதிகள் சேர்ந்துள்ளன. இலக்கியக் குறிப்புக்கள் நிரம்பியவையல்ல; எனினும் இலக்கிய நிலத்துக்கு உரிய உரங்களையும் இலக்கிய உழவுக்கு வேண்டும் முறைகளையும் செவ்வனம் புலப்படுத்தும். இரட்டைக் காப்பியம் பதிப்புவனப்பெல்லாம் பொலிய அச்சிட்டுத் தந்த காரைக்குடி தென்னிந்திய (சௌத் இந்தியா) அச்சகத்தார்க்கு மிகவும் நன்றியுடையேன். வ.சுப. மாணிக்கம் காரைக்குடி கதிரகம் 15.12.1960 பொருளடக்கம் 1. சிலப்பதிகாரம் - காதைச் சுருக்கம் 6 2. மணிமேகலை - காதைச் சுருக்கம் 24 3. சிலப்பதிகாரத் திறன் 40 4. மணிமேகலைத் திறன் 55 5. ஒப்புமைச் சுருக்கம் 73 6. தமிழ்ப்புணர்ச்சி 77 7. சிலப்பதிகாரம் - மூலம் 87 - முதலாவது புகார்க் காண்டம் 91 - இரண்டாவது மதுரைக் காண்டம் 157 - மூன்றாவது வஞ்சிக் காண்டம் 238 8. மணிமேகலை - மூலம் 297 9. அருஞ்சொற்பொருள் 492 10. சிலப்பதிகார மாந்தர் 501 11. மணிமேகலை மாந்தர் 502 என் அன்புறை காரைக்குடி உயர்திரு ராம.வீர.ராம.இராமசாமி செட்டியார் அவர்களுக்கு பெற்ற தாயும் பெருமகிழ் வெய்த உற்ற கல்வியும் உண்டியும் அளித்து வருகுலம் பாராது வறிய சிறார்க்குக் குருகுலம் நடத்தும் ஒருதமிழ்த் தோன்றல்; பள்ளிப் படிப்புக்குப் பற்பல ஆயிரம் அள்ளிக் கொடுக்கும் அறிவுடைக் கையன்; நாடும் குடிகளின் நலிவு நீக்கி வாடும் பயிர்க்கு வாய்க்கால் போல்வான்; தோட்டச் செடிகளைத் துடிக்க விட்டு நாட்டு மரங்களை நாடாத் தொண்டன்; ஈட்டுஞ் செல்வர்க் கிதுபொருள் என்று காட்டும் வாழ்க்கைக் கடமைச் சான்றோன்; ஆதல் பெருக்கி அறங்கள் வளர்க்கும் ஈதல் நெறிமேற் காதல் உடையோன்; தன்னெஞ் சுவப்பத் தன்கடன் ஆற்றுவோன் என்னெஞ் சறிந்த இயல்பு வள்ளல்; செயற்கைப் புகழைச் சிந்தை செய்யா இயற்கைக் கொடைஞன் இராம சாமி இல்லறம் தழைக்கும் இனியனைப் பல்லறம் தழைக்கப் பாடுவம் நாமே. -வ.சுப.மாணிக்கம். சிலப்பதிகாரம் காதைச்சுருக்கம் பதிகம் “இளங்கோவே! வேங்கை மரநிழலில் ஒருமுலை இழந்த பத்தினியொருத்தி நின்றாள். தேவர்கள் அவள் கணவனோடு வந்து அவளை அழைத்துச் சென்றதைக் கண்ணாரக் கண்டோம்’ என்று குன்றக் குறவர்கள் வியந்த செய்தியை அறிவித்தனர். ‘கோவலன் சோழர் தலைநகராம் காவிரிப்பூம் பட்டினத்துப் பிறந்த வணிகன். பரத்தைக்குல மாதவியோடு கூடி ஆடிப்பொருளையெல்லாம் இழந்தான். மனைவி கண்ணகி யோடு காற்சிலம்பு விற்கப் பாண்டியர்தம் மதுரைக்குச் சென்றவன் தீய பொற்கொல்லனைக் கண்ணுற்றான். ஊழ்வினை முற்றியது. சிலம்பு திருடிய கள்வன் என்று பாண்டியனால் கொலைப்பட்டான். கற்புடைக் கண்ணகி அழுதாள்; சினந்தாள்; முலையைத் திருகி எறிந்தாள். மதுரை எரிய, மதுரைமாதெய்வம் கண்ணகி முன்தோன்றியது. கோவலன் முற்பிறப்பில் சங்கமனைக் கொன்றான்; அத்தீவினையால் இப்பிறப்பில் கொல்லப் பட்டான் என்று காரணம் காட்டிற்று. இதனை வெள்ளியம் பலத்துப் படுத்துக்கிடந்த நான் கேட்டேன்” என்று தமிழ்ப் புலவர் சாத்தனார் குறவர் செய்தியை இளங்கோவுக்கு விரித் துரைத்தனர். வரலாற்றை வடித்துணர்ந்த அடிகள் ‘சிலப் பதிகாரம் என்னும் ஒரு நூல் யாப்பேன். அரசு முறை தவறிய வேந்தர்களை அறமே அழிக்கும்; கற்பியை எல்லோரும் ஏத்துவர்; ஊழ் வினை தாக்காது விடாது என்ற முவ்வுண்மைகளை வலியுறுத்துவே என்று தங்கருத்தை வெளியிட்டனர். ‘இவ் வரலாறு சோழ பாண்டிய சேரவேந்தர் மூவரையும் சார்ந்தது; ஆதலின் அடிகளாகிய நீரே நூல் செய்தருளுக’ என்று சாத்தனார் தகுதிசுட்டி இசைந்தார். இளங்கோ சிலப் பதிகாரத்தை முப்பது காதைகளாகவும் உரைநடை கலந்த பாடலாகவும் எழுதிச் சொல்ல மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் கேட்டனர். உரைபெறு கட்டுரை செங்கோல் வளைந்த நாள்முதல் பாண்டி நாட்டில் வறுமையும் நோயும் பரவின. வெற்றிவேற் செழியன் பத்தினிக்கு ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டான். நாட்டுப்பிணி நீங்கியது. கொங்கு நாட்டுக்கோசரும் இலங்கைக் கயவாகுவும் சோழன் பெருங்கிள்ளியும் கற்பிக்கு விழா நிகழ்த்தினர். மழை வளம் பெருகிற்று. புகார்க்காண்டம் 1. மங்கல வாழ்த்துப் பாடல் சோழன் குடைபோலும் திங்களை வணங்குவோம். சோழன் திகிரிபோலும் ஞாயிற்றை வணங்குவோம். சோழன் அளிபோலும் மழையை வணங்குவோம். சோழன் குலம் போலும் புகாரை வணங்குவோம். புகார் நகரம் (காவிரிப் பூம்பட்டினம்) பொதியம் இமயம் ஒப்ப அழியாச் சிறப்புடையது. இந்நகரில் வணிகன் மாநாய்கனுக்குக் கண்ணகி பிறந்தாள். பன்னிரண்டு வயதினள். திருமகளுக்கும் அருந்ததிக்கும் உவமை யாகத்தக்க அழகும் கற்பும் வாய்ந்தவள். பெண்டிரும் புகழும் குணத்தினள். இந்நகரிலேயே வணிகன் மாசாத்துவானுக்குக் கோவலன் பிறந்தான். பதினாறு வயதினன். கண்கண்ட முருகன் போல்வான். பெண்டிர் பாராட்டும் இளைஞன். பெற்றோர் இசைவுப்படி இருவர்க்கும் திருமணம் நிகழ்ந்தது. தீதின்றி வாழ்க என்று மகளிர் அரசு வாழ்த்தொடு மணவாழ்த்துப் பாடினர். 2. மனையறம் படுத்த காதை காதலர் இருவரும் நாலாம் மாடியில் மணிக்கட்டில்மேல் அமர்ந்தனர். மணத்தென்றலை நுகர்ந்து வேட்கை பெருகினர். நிலா முற்றம் ஏறி மலர்ப் படுக்கையில் ஞாயிறும் திங்களும் போல் அணைந்தனர். காதலர் மாலை இரண்டும் புணர்ச்சியால் தம்முள் இணைந்தன. வேட்கை வயப்பட்ட கோவலன் கண்ணகி யின் இயற்கையழகை வாயூறிப் பாராட்டினான். ‘பொன்னே, முத்தே, மணமே, கரும்பே, தேனே, மருந்தே, மணியே, அமிழ்தே, இசையே’ என்று அமுதூறி அடுக்கி இசைத்தான். கண்ணகி தனிச் சமையல் நடத்தி இல்லறம் செய்யவேண்டும் என்று அவளைத் தனிமனைப் படுத்தினாள் கோவலன் தாய். இம்முறையால் கண்ணகியின் இல் வாழ்க்கை சில ஆண்டுகள் ஓடிற்று. 3. அரங்கேற்று காதை மாதவி காவிரிப்பூம்பட்டினத்தில் நாடகக் கணிகை குலத்துப் பிறந்தவள். ஆடல் பாடல் அழகு மூன்றும் குறைவற நிறைந்தவள். அவள் கூத்துத்திறத்தை மன்னன் முன் அரங் கேற்றிக் காட்ட விரும்பிய ஆடலாசிரியன் முதலியோர் ஒருங்கு கூடினர். நாடகநூலோர் வகுத்தப்படி அரங்கு அமைக்கப் பட்டது. தலைக்கோலைக் குளிர்ப்பாட்டி மாலையணிந்து பட்டத்து யானையின் கையிற் கொடுத்தனர். அதனை அரச னிடம் பெற்ற கவிஞன் நகரை வலஞ்செய்து அரங்கில் வைத்தான். மாதவி வலக்காலை முன்வைத்து அரங்கில் ஏறினாள். ஆடிமுதிர்ந்த தோரிய மகளிரும் அங்ஙனமே ஏறினர். நன்மை பொலிக தீமை நீங்குக என்று தெய்வப்பாடல் பாடினர். இசைக்கருவிகள் யாவும் ஒத்திசைத்தன. மாதவி மங்கலமான பாலைப் பண்ணைப்பாடித் தேசிக்கூத்து வடுகக்கூத்துக்களை ஒரு பொற்பூங்கொடி ஆடியதென்னும்படி ஆடிக்காட்டி வேந்தனிடம் தலைக்கோற் பட்டமும் ஆயிரத்தெண்கழஞ்சு பொன்மாலையும் பெற்றாள். ‘இம்மாலை ஆயிரத்தெட்டுக் கழஞ்சுபெறுமதியுடையது. இதனை வாங்குவான் மாதவிக்கு உரியவன்’ என்று சொல்லி நகர இளைஞர்கள் நடமாடும் வீதியில் விற்பதுபோல் நிற்கும்படி, தோழி கூனியை மாதவியின் தாய் நிறுத்தினாள். கோவலன் அப்பொருள் கொடுத்து மாலையை வாங்கி மாதவி வயப்பட்டான். தனக்கு ஒரு கற்புடை மனைவி உள்ளாள் என்பதை மறந்துவிட்டான். 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை மாலைக்காலம் வந்தது, வண்டிசையும் குழலிசையும் கேட்டன. மணத்தென்றல் வீசிற்று. செவ்வானத்து இளம்பிறை தோன்றிற்று. நிலவொளி எங்கும் பரவிற்று. கணவனைப் பிரியாத நங்கையும் புணர்ந்து மகிழ்வெய்தினர். பிரிந்த காதலியர் காமத்தீ வெகுப்பத் துயரெய்தினர். ஆடையாலும் அணியாலும் ஒப்பனை செய்துகொண்டு மாதவி நிலா முற்றத்துப் பூப்படுக்கைமேல் உடனிருந்த கோவலனைப் புலவி யாலும் கலவியாலும் இன்புறுத்தினாள். மாதவி போலவே கூடிய பிறபெண்டிரும் சந்தனம் பூசி மாலையணிந்து காதலர் மார்பில் களித்துயில் கொண்டனர். கண்ணகியோ காலிற் சிலம்பு அணியவில்லை. நெற்றிக்குத் திலகம் இடவில்லை. கண்ணுக்கு மைத்தீட்டவில்லை. கூந்தலுக்கு எண்ணெய் தடவவில்லை. சிரித்த முகமின்றி வருத்த முகத்தோடிருந்தாள். கண்ணகி போலவே தனித்த பிற பெண்டிரும் நிலா முற்றம் செல்லவில்லை. தென்றல் வரும் பலகணியைத் திறக்கவில்லை. அணையில் தலைசாய்த்து உறக்கம் கொள்ளவில்லை. புணர்ந் தோர் இன்புறவும் பிரிந்தோர் துன்புறவும் மன்மதன் புகார் நகரை இரவுக்காலத்து ஆட்சிசெய்தான். 5. இந்திர விழவு ஊரெடுத்த காதை பொழுது புலர்ந்தது. கதிரொளி எங்கும் விளங்கியது. நகரார் இந்திரவிழாக் கொண்டாடத் தொடங்கினார். சித்திரைத் திங்கள் நிறைமதியில் மறப்பெண்கள் கூடி நாடுவாழ்க எனப் பூதத்துக்குப் பலி கொடுத்தனர். படைஞர்களும் வேந்தன் வெல்க என்று வஞ்சினம் சாற்றித் தற்பலி வழங்கினர். வடதிசை வென்ற கரிகாலன் கொண்டு வந்த கொற்றப்பந்தர் பட்டி மண்டபம் தோரணவாயில் மூன்றும் ஒருங்கிருக்கும் காட்சி மண்டபத்துப் பலி நிகழ்ந்தது. களவு ஒழிக்கும் வெள்ளிடை மன்றம், குறைநீக்கும் இலஞ்சிமன்றம், மயக்கம் போக்கும் நெடுங்கல்மன்றம், குற்றம் தடுக்கும் பூதசதுக்கம், கோல்காக்கும் பாவைமன்றம் என்னும் ஐவகை மன்றத்தும் அளிக்கப்பட்டது. வச்சிரக்கோட்டத்திருந்த முரசை யானைமேல் வைத்து ஐராவதக் கோட்டத்துக்கு எடுத்துச் சென்றனர். கற்பகத் தருக்கோட்டத்து கொடியேற்றம் செய்து இந்திரவிழாத்துவக்கம் காட்டினர். காவிரி புண்ணிய நன்னீரால் இந்திரனை நீராட் டினர். சிவன்கோயில் முதலாய இடங்களெல்லாம் விழாச் செயல்கள் நிகழ்ந்தன. பரத்தமை கணவன்மார் விருந்தினரை உடனழைத்துச் சென்றாலும், மனைவியர் ஊடல் தீருமோ தீராதோ என்று உள் நடுங்கினர். இன்ன சிறப்புடைய இந்திர விழா நாளில் கண்ணகியின் பிரிவுக் கருங்கண் துன்பநீர் பெருக்கி இடந்துடித்தது. மாதவியின் புணர்ச்சிச் செங்கண் இன்பநீர் உகுத்து வலந்துடித்தது. 6. கடலாடு காதை இமயமலை வடசேடிகண் வாழும் வித்தியாதரன் இந்திர விழாக்காணத் தன் காதலியோடு புறப்பாடு செய்தான். இமயம், கங்கை, உச்சயினி, விந்தம், வேங்கடம், காவிரி நாடுகளை அவட்குக் காண்பித்துப் புகாரை அடைந்தான். இவள்தான் மாதவியென்று மனைவிக்குச் சுட்டி, மாதவி ஆடிய பதினோரா டலைக் கண்டு உவப்புற்றான். திருநாள் முடிவில் கோவலன் வருத்தங்கொண்டிருப்ப, கூந்தலுக்கு மணம் ஊட்டி, முடி முதல் அடி வரை அணிகள் பூட்டிப் புலந்தும் கலந்தும் கோவலனைக் களிப்பித்தாள் மாதவி. பொழுது புலரா முன் இருவரும் வீதி பலகடந்து காலை விளக்கொளியில் கடற்கரை புக்கனர். அரசிளங்குமரர் முதலாய செல்வ நம்பியர் தம் காதலியரொடு அங்குக் குழுமினர். கோவலனும் மாதவியும் தாழைசூழ்ந்த புன்னை நிழலில் திரையால் வளைந்த அறையில் கட்டில்மேல் அமர்ந்திருப்ப, வயந்த மாலை யாழினை மாதவியிடம் கொடுத்தாள். 7. கானல்வரி மணமகள் போலும் அழகிய யாழைத் தொழுது வாங்கிய மாதவி குற்றமின்மையை இசையெழுப்பிப் பார்த்துக் கோவலனிடம் நீட்டினாள். அவன் காவிரியையும் கானலையும் (கடற்கரைச்சோலை) இடமாக வைத்து வரிப்பாடல்களை யாழில் வாசித்தான். தலைவன் தலைவியர்தம் களவுக் காதலைப் பொருளாக வைத்துப்பாடினான். இவன் பாடலில் ஒரு குறிப்பு உண்டு என்றும், வேறொருத்திபால் மயங்கியுள்ளான் என்றும் மாதவி கருதி யாழைத் தான் வாங்கினாள். தானும் (பிறன் ஒருவனைக் காதலித்த) ஒரு குறிப்புடையவள்போல ஏட்டிக்குப் போட்டியாகக் காதற்பொருளில் கானல்வரிகளைப் பாடினாள். அவள் குறிப்பைக் குறிபெனக் கருதாது அயலான்மேல் கொண்ட கள்ளக்காதல் என்று கோவலன் எண்ணினான். மாயமும் பொய்யும் உடைய குலத்திற் பிறந்த மாதவிக்கு இஃது இயல்பு என்று துணியுமாறு ஊழிவினை தாக்கிற்று. ஆதலின் மாதவியை அணைத்த கையை நெகிழ்த்தான். பொழுது போயிற்று போவோம் என்றான். தான் மட்டும் எழுந்து இடம் நீங்கினான். என்ன செய்வது என்று மாதவிக்கு ஒன்றும் தோன்றவில்லை. கூடவந்த காதலன் இல்லாமல்தான் வண்டி யேறித் தன் வீடு புகுந்தாள். 8. வேனிற் காதை இளவேனில் வரவைத் தென்றல் குளிர்ந்து காட்டிற்று. குயிர் கூவிக் காட்டிற்று. கோவலன் பிரிவால் வருந்திய மாதவி வாயாற் பாடி யாழிசைத்தாள். பண் மயங்கிற்று. தாழை வெண்மடலை எழுது தாளாகவும் பித்திகை மலர்முனையை எழுத்தாணியாகவும் சாதிலிங்கக் குழம்பை மையாகவும் கொண்டு காமவுணர்ச்சி தூண்டக் கோவலனுக்கு ஒரு திருமுகம் வரைந்தாள். ‘உயிர்களைத் துணையோடு கூட்டும் இளவேனில் என்பான் முறை தெரியாச் சின்ன அரசன். மாலைத்திங்களும் நேர்மையுடையன் அல்லன். மலரம்பால் உயிரைக் கொல்கின் றான். இது நீர் அறியாததன்று’ எனத்தன் காம வேட்கையை வெளிப்படுத்தினாள். தோழி வயந்தமாலை மாலை வடிவாய ஓலையைக் கோவலனை வீதியிற் கண்டு நீட்ட. ‘ஆடல் மகளாய மாதவிக்கு நடிக்கத் தெரியாதோ?’ என்று நகைத்து ஓலையைக் கோவலன் வாங்க மறுத்தான். அதனைச் செவிப்பட்ட மாதவி, இன்று மாலை வாராராயினும் நாளைக் காலை வருவார் என்று வயந்த மாலைக்கு ஏமாற்றம் தோன்றாதபடி உரைத்தாளெனி னும், படுக்கை கொள்ளாது இருந்தாள். 9. கனாத்திறம் உரைத்த காதை மாலதி என்னும் பார்ப்பனி மாற்றாளின் குழந்தைக்குப் பால் கொடுக்கையில் விக்கி அது செத்துவிட்டது. அவள் பெருங்கவலையை நீக்க, ஐயன் கோயில் தெய்வமாகிய சாத்தன் குழவியாய்த் தோன்றினான். தேவந்தியை மணந்தான். அத்தேவந்தியிடம் ‘நாங்கள் வேற்றூர் சென்றோம். பொய்யான ஒரு பழி ஏற்பட்டது. கோவலன் தீங்கு எய்தினான். அரசன் முன் வழக்காடினேன். அரசனுக்கும் ஊர்க்கும் அழிவுண்டாயிற்று. பின் சில நலம் பெற்றோம். இவ்வாறு கனவு கண்டேன்’ எனக் கண்ணகி உரைத்தாள். ‘புண்ணியத்துறை குளித்து காமன் கோயிலைத் தொழுதால், பிரிந்த கணவன் மீள்வான்; இருமை யும் இன்பம் உண்டு’ என்று தேவந்தி வழி கூற, ‘இவ்வழி பெருமையன்று’ எனச் சுருங்கச் சுட்டி விடுத்தாள் கண்ணகி. மாதவியைத் துறந்த கோவலன் வந்தான். மனைவியின் திருமேனி, மெலிவைக் கண்டான். வஞ்சகியின் கூட்டத்தால் தன்பெருஞ் செல்வம் கரைந்தது என்று நாணினான். வழக்கம் போல இப்பொழுதும் சொல்லுகிறான் என்று கருதிய கண்ணகி இளஞ்சிரிப்பொடு, ‘காற்சிலம்புகள் இன்னும் உள்ளன; கொள்ளுங்கள்’ என்று மொழிந்தாள். ‘நங்காய், இச்சிலம்பை முதலாகக் கொண்டு இழந்த நகைகளை ஆக்குவேன்; மதுரைக்குச் செல்வேன்; நீயும் வருக, எழுக’ என அறுதியிட்டு உரைத்தான். வினை வழிகாட்ட இரவு விடியாமுன் இருவரும் நடந்தனர். 10. நாடுகாண் காதை கோவலனும் கண்ணகியும் காவிரியின் வடகரை வழியாய் மேற்கு நோக்கிச்சென்று சமணத்துறத்தி கவுந்தியடிகளின் தவப் பள்ளியை நெருங்கினர். நடைவருத்தம் தாங்காது பெருமூச்சு விட்ட கண்ணகி ‘இன்னும் மதுரை எவ்வளவு தூரம் இருக்கும்’ என்று கேட்டாள். ஆறைந்து காவதந்தான்; கிட்டந்தான் எனக் கோவலன் விளையாட்டாகக் கூறினான். கவுந்தியும் மதுரைக்கு ஏக இருந்தாள். மூவரும் சோலை வழியாக நடந்தவர் காவிரியின் நீரொலிகளையும், உழவர் உழத்தியர் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தனர். நாளொன்றுக்குக் காவதம் நடந்து திருவரங்கம் எய்தினர். படகேறிக் காவிரித் தென்கரையில் ஒரு பொழிலகத்து இளைப்பாறியிருக்கையில், அங்கு வந்த ஒரு காமுகனும் பரத்தையும் ‘இவர்கள் ஒரே தாய்க்குப் பிறந்து கணவன் மனைவியானவரோ’ எனக்கோவலனையும், கண்ணகியையும் கேலி செய்தனர். சினந்த கவுந்தி அப்பரத்தர்களை நரியாகச் சபித்தாள். பின் மூவரும் யானையைக் கோழிவென்ற சிறப்பு டைய உறையூரைச் சேர்ந்தனர். மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை உறையூரிலிருந்து புறப்பட்ட மூவரும் குடமலை நாட்டு மாங்காட்டு மறையோனை ஒரு பொழிலில் எதிர்ப்பட்டனர். திருமால் திருவரங்கத்துக் கிடந்த கோலத்தையும், திருவேங் கடத்து நின்றகோலத்தையும் கண்டு தொழுதற்குப் பாண்டிய நாட்டு வழியாக அம்மறையோன் வந்தான். பாண்டியன் பல்வகைச் சிறப்புக்களைத் தானே வாய்விட்டுப் பேசினான். கோவலன் கண்ணகியை உடன்கொண்டு முதுவேனிலில் புறப்பட்டதற்கு இரங்கினான். சிவன் சூலம் போல மூவழிகள் மதுரைக்கு உள என்றும், வலப்பக்கநெறி பொழிலும் சிறு மலையும் உடையது; இடப் பக்கநெறி குகையும் வியத்தகு பொய் கைகளும் உடையது. இடைவழி துன்புறுத்தாத வனதெய்வமும் எளிமையும் உடையது என்றும் விளக்கினான். மூவரும் இடை நெறியைப் பின்பற்றி நடந்தனர். கோவலன் தண்ணீர் கொண்டு வரத் துறைக்குச் சென்றபோது வனதெய்வம் வயந்தமாலை உருவில் அணுகிக் காதல்படப் பேசிற்று. மறையோன் கூறியது நினைவிற்குவரவே கோவலன் மந்திரம் ஓதினான். தெய்வம் நடுங்கிக் கற்பிக்கும் தவத்திக்கும் சொல்லாதே என்று வேண்டிப் போயிற்று. பின்னர் மூவரும் வழியிடை இருந்த ஐயை கோட்டத் தில் தங்கினர். 12. வேட்டுவ வழி வெயில் தாங்காது கண்ணகி அடி சிவந்தாள்; பெருமூச்சு உயிர்த்தாள். கொற்றவை கோயிலின் ஓர் ஒதுப்புறத்தில் எல்லாரும் இளைப்பாறியிருந்தனர். அப்போது பூசைமகள் சாலினி ஆவேசங் கொண்டு, ‘வளமான வழிப்பறி வாழ்க்கை வேண்டுமேல் தெய்வக் கொற்றவைக்குப் பலிக்கடன் செய்யத் தவறாதீர்கள்’ என்று வேட்டுவர்க்கு முன்னுறுத்தினாள். மறக்குடியிற் பிறந்த ஒரு குமரியைக் கொற்றவையாகக் கோலஞ் செய்து பலி செலுத்தினர். தெய்வம் ஏறிய சாலினி கணவனோடு இருந்த கண்ணகியைச் சுட்டி, ‘இவளோ, கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென் தமிழ்நாடு செய்த தவக்கொழுந்து, உலகிற் சிறந்த ஒரு மாமணி’ என்று எதிரது அறிந்து புகழ்ந்தாள். இவை பொருளற்ற மயக்கமொழிகள் என்று கண்ணகி நாணிக் கணவன்பால் ஒதுங்கி நின்றாள். குமரிக் கொற்றவையைப் போற்றிப் பாடி, ‘வழிவளம் தருக; எம் பாண்டிய அரசன் வெட்சி சூடுக’ என்று வேட்டுவர் தொழுதனர். 13. புறஞ்சேரி இறுத்த காதை கண்ணகியின் உடல்மேன்மை கோவலனுக்கு விளங்கிற்று. பாண்டியன் தன் செங்கோற் சிறப்பால் இந்நாட்டில் யாதொரு இடையூறும் யாதானும் வாராது; ஆதலால் நிலவொளியில் இரவிடைச் செலவு செய்வதே நலம் என்று கூறி அவ்வாறே நடந்தனர். ஒருநாள் நீர்த்துறையில் தனித்து நின்ற கோவலனை அடையாளம் கண்டுகொண்டான், கோசிகன். இவன் மாதவி விடுத்த தூதன். கோவலன் பிரிவால் பெற்றோரும் சுற்றத்தாரும் ஊராரும் மாதவியும் பட்ட நீள்துயரை விளம்பினான். ‘என் குற்றம் யாதுமில்லை; குற்ற மாயினும் பொறுக்க’ என்று மாதவி நீட்டிய கடிதத்தை அளிக்க அவள் தீதில்லை; தீது இழைத்தவன் நானே என்று கோவலன் சொல்லிக்கொண்டான். ‘இக்கடிதத்தை இப்படியே என் பெற்றோருக்குச் சேர்ப்பி. இதன் வாசகம் என் கருத்துக்குப் பொருந்துகின்றது’ என்று கோசிகனிடம் திரும்பக் கொடுத்தபின் வழியிடைப் பாணரொடு சேர்ந்து யாழ் வாசித் தான். மதுரைத் தென்றல் தவழ்ந்தது. கோவலனும் கண்ணகியும் வையையைத் தொழுது, படகில் ஏறாது கட்டுமரத்தில் ஏறித் தென்கரையை அடைந்து கவுந்தியொடு மதிற்புறத்துப் புறஞ் சேரியில் தங்கினர். 14. ஊர்காண் காதை சோலையிலும் வயலிலும் நீர் நிலைகளிலும் பறவைகள் ஒலித்தன. கதிரவன் மதுரை வாழியரைத் துயில் எழுப்பினான். காலைச்சங்கும் முரசும் இயம்பின. கோவலன் கவுந்தியை வணங்கி, கண்ணகி மெல்லியலை வெங்கானம் அழைத்து வந்து தன் மனம்படும் வேதனையைப் புலப்படுத்தினான். காடு சென்று காதலியைப் பிரிந்த இராமனும் நளனும் போலாது, நீ காடு வந்தும் காதலியோடு உடனுறையும் நல்வினைப்பேறு உடையாய் என்று கவுந்தி ஆறுதல் மொழிந்தாள். மதுரையுள் தங்குவதற்கு ஓரிடம் பார்க்கச் சென்ற கோவலன் பற்பல வீதிகளையும் வெயிற்படாது கொடிகளின் நிழலிற் சென்று கண்டான். தலைநகரின் வளம் கண்ட மகிழ்ச்சியால் சென்ற காரியத்தை மறந்து புறஞ்சேரி திரும்பினான். 15. அடைக்கலக் காதை மீண்டுவந்த கோவலன் மதுரையின் திருவையும் பாண்டியன் செங்கோன்மையையும் கவுந்தியடிகட்குப் புகழ்பட மொழிந்தான். அங்குப் போந்த மாடலமறையோன் கோவலனை விளித்து, ‘ஐய, மணிமேகலைக்குப் பெயரிடுங்கால் தானம் வாங்க வந்த மறையவனை வீரத்தால் யானைப் பிடியினின்றும் விடுவித்தாய். கீரியைக் கொன்றாள் என்று மனைவியைத் துறந்த மறையவனைக் கழுவாய் செய்து கூட்டி வைத்தாய். பத்தினியைக் குறைகூறிய கயவனைப் பூதம் அடித்துக் கொல்ல, அவன் சுற்றத்தைப் பொருளீந்து காத்தாய். நீ இப்பிறப்பிற்செய்த வெல்லாம் நல்வினைகளே, மனைவியொடு கொடுங்கானம் நடத்தற்கு முற்பிறப்பில் ஏதும் தீவினை செய்திருப்பாய்போலும்’ என்று நெஞ்சம் கன்றினான். “இவ்வூரில் மனைவி நடுங்கவும், என் ஆடை பறிபோய்ப் பன்றிமேல் ஏறவும், மணிமேகலையை மாதவி புத்தன் முன் அளிப்பவும் கனாக்கண்டேன்” என்று சொல்லிக் கவலைப் பட்டான் கோவலன். அதுசமயம் புறஞ்சேரி வந்த இடைச்சி மாதரி கவுந்தியைத் தொழுதாள். இவள் குலத்திற்சிறந்தாள்; எல்லா வகையாலும் நல்ல பண்பினள் என்று அறிந்த கவுந்தி, ‘வணிகர் உறைவிடம் சேரும் வரை கண்ணகியைப் பேணுக’ என்று அடைக்கலம் ஈந்தாள். ‘கற்வுக் கடன் பூண்ட இவள் என் கண்கண்ட தெய்வம். இவள் போலும் ஒரு தெய்வத்தை யான் கண்டதில்லை’ என்று கண்ணகியை அறிமுகப்படுத்தினாள். மாதரியும் மதில்வாயிலைக் கடந்து கண்ணகியொடு தன் மனை அடைந்தனள். 16. கொலைக்களக் காதை மாதரி தன் மகள் ஐயையைக் கண்ணகிக்குப் பணிபுரியச் செய்தாள். சமையற்கு வேண்டும் பொருள்களை அளித்தாள். கண்ணகி சோறு படைக்கும் காட்சியைக் கண்டு, ‘இவன் மணி வண்ணன்; இவள் நப்பின்னை’ என்று சொல்லி மகிழ்ந்தாள். உண்டு இனிதிருந்த கோவலன், ‘என் பெற்றோர் உன்னை நினைந்து என்ன துன்பப்பட்டனரோ? சிறியாரினம் சேர்ந்த எனக்குக் கரையுண்டோ? என் சொல்லை மதித்து மதுரைக்குப் புறப்பட்டாயே’ என இரங்கி மொழிந்தான். கேட்ட கண்ணகி ‘நும் பரிவால் விருந்தோம்பும் அறம் பேற்றிலேன். தங்கள் போக்கு பெற்றோரைப் புண்படுத்திற்று. தங்கள் சொற்படி என்று ஒழுகுவதே என் வாழ்க்கையாதலின் புறப்பட்டு வந்தேன்’ என்று தெரிவித்தாள். ஒரு சிலம்பை விற்க எடுத்துக் கொண்டான் கோவலன். எதிரே வந்த பொற் கொல்லனிடம் சிலம்பு விற்பனை பற்றிக் கேட்டான். யமதூதன் போலும் கொல்லன். ‘இச்சிலம்பு கோப்பெருந் தேவிக்கே தகும்’ என்று கோவலன் குளிரப் பேசினான். தான் முன்பு களவாடிய தேவி சிலம்புக்கு இவனைச் சாட்டிவிடுவேன் என்று வஞ்சனை கொண்டான். கள்வன் அகப்பட்டான் என்று பாண்டியன் காலில் வீழ்ந்தான். தீவினை விரைவாக வேலை செய்தது. மனைவியின் ஊடல் தீர்க்கத் துடித்த பாண்டியன் நெடுஞ்செழியன் கள்வனைக் கொன்று சிலம்பை இவ்விடத்துக் கொண்டுவருக என்று காவலர்களை ஏவினான். கோவலனைப் பார்த்ததும், இவன் கள்வன் போலத் தோன்றவில்லையே என்று தயங்கிய காவலர்களுக்குப் பொற்கொல்லன் களவுக் கல்வியையும் கள்வரின் மாயத்தையும் சான்றொடு மனத்திற் பதிய விரித் துரைத்தான். காவலருள் ஒரு மூர்க்கன் திடீரெனக் கோவலனை வெட்டினான். வெட்டிலிருந்து குருதி கொப்புளித்தது. கோவலன் ஊழ்வினை விளைந்தது. பாண்டியன் செங்கோலும் வளைந்தது. 17. ஆய்ச்சியர் குரலை பாண்டியன் அரண்மனையில் காலை முரசும் அதிர்ந்தது. இன்று நம் நெய்ம்முறை என்று தயிர் கடையச் சென்றாள் மாதரி. பாலும் உறையவில்லை; வெண்ணையும் உருகவில்லை. மறிகளும் துள்ளவில்லை. ஆக்களோ அழுகின்றன. கழுத்து மணிகளோ தாமே விழுகின்றன; என்ன துன்பமோ என்று மாதரி துயருற்றாள். கண்ணகி காண மாயவனுக்குக் குரவைக் கூத்து ஆடுவோம் என்றாள். இளம் பெண்கள் எழுவர்க்கு ஏழிசைப் பெயர்கள் இடப்பட்டன. திருமால் சீர் கேளாத செவி ஒரு செவியா? அவனைக் காணாத கண் ஒரு கண்ணா? அவனைப் புகழாத நா ஒரு நாவா? எனக் குரவையுள் எல்லாரும் ஏத்தினர். தெய்வம் ஆவின் துயரைத் தீர்க்க; தென்னவன் முரசு வெற்றியொடு முழங்குக என்று குரவை முடிவில் வாழ்த்தினர். 18. துன்ப மாலை மாதரி குரவை முடித்து வையைக்கு நீராடச் சென்றபின் கோவலன் இறந்தது பற்றிப் பேசிக்கொள்ளும் ஊர்ப்பேச்சைக் கேட்ட ஒருத்தி விரைந்துவந்தாள். அவள் துடிப்பு கண்ணகியை நடுக்கிற்று. அரண்மனைச் சிலம்பை ஓசைப்படாமல் கவர்ந்த கள்வன் என்று காவலர் கொலை நினைந்தனர் என்றாள் வந்தவள். அவ்வளவுதான். கண்ணகி பொங்கினாள்; எழுந்தாள்; வீறிட்டாள். பாண்டியன் கொடுங்கோலால் என்பெருங் கணவனை இழந்தேன்; இருந்து வாழேன்; அழுதுசாகேன். கதிரவா! என் கணவன் கள்வனா? என்றாள். ‘கள்வனல்லன்; இவ்வூர் தீக்கிரையாகும்’ என்றது ஒரு வானொலி. 19. ஊர்சூழ் வரி கதிரவன் சான்றாக உண்மையறிந்த கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பைக் கையில் எடுத்தாள். ஊர்ப்பெண்டுகளை விளித்து, ‘என் சிலம்பை விலை கொடுத்து வாங்க முடியாமல் கள்வன் என்று கொலை செய்து பறித்துக்கொண்டு விட்டனர். உம்முன் என் கணவனைக் காண்பேன்; கண்டு நல்லுரை கேட்பேன்’ எனச் சூளுரைத்து அழுதாள். அரசனைப் பழி தூற்றும் குடிமக்கள் காட்டக் கணவனைக் கண்டாள். அவன் தன்னைக் காணாத துக்கம் பெருகிற்று. கணவன் நறுமேனி புழுதிபடிந்து குருதியுள் கிடப்பத்தைக் கண்பொறுக்கவில்லை. மன்னவன் கொடுமையை நினைவுகொண்டாள். இவ்வூரில் கற்பிகள் உண்டோ? சான்றோர் உண்டோ? தெய்வம் உண்டோ? என்று கூக்கிரலிட்டாள். கணவன் மார்பைத் தழுவ, கிடந்தவன் எழுந்தான். முகம் வாடியதே என்று அவள் கண்ணீரைக் கையால் துடைக்க, அவன் திருவடிகளைக் கண்ணகி இருகையா லும் பற்றினாள். ‘கண்ணே இரு’ என்று சொல்லிக் கோவலன் மறைந்துவிட்டான். சினம் தணியாது கணவனிடம் சேரேன் என்று பாண்டியன் அரண்மனை நோக்கி விரைந்தாள் கண்ணகி. 20. வழக்குரை காதை பாண்டியன் தேவி தான்கண்ட தீயகனவை மன்னனுக்குச் சொல்லி உடனிருந்தாள். கண்ணகி ‘முறை தவறிய அரசன் வாயிலோயே! கணவனையிழந்த ஒருத்தி ஒற்றைச் சிலம்பொடு நிற்கின்றாள் என்று அறிவி’ என ஏவினாள். தன்முன் வந்த கண்ணகியை, ‘அழும் நீ யார்’ என்றான் பாண்டியன். ‘அறிவில் அரசே! கோல்கோடாச் சோழன் புகார் என் ஊர். என் காற்சிலம்பை உன் ஊருக்கு விற்க வந்து நின்னாற் கொலைப்பட்ட கோவலன் மனைவி நான்’ என்று சுடச்சுடச் சொல்லித் தன் சிலம்பின் பரல் மாணிக்கம் என்றாள் கண்ணகி. என் தேவியின் சிலம்புப் பரல் முத்து என்றான் நெடுஞ்செழியன். கோவலனிடம் வாங்கிய சிலம்பை வரவழைக்க, அதனை விரைந்து எடுத்து உடைத்தாள் கண்ணகி. உள்ளிருந்த மாணிக்கக் கல் மன்னவன் இதழில் தெறித்தது. ‘யானோ அரசன்; யானே கள்வன்’ என்று குடைதளரக் கோல் தளர உயிர் தளர வீழ்ந்தான். கோப்பெருந்தேவியும் குலை நடுங்கி உயிர்போக வீழ்ந்தாள். 21. வஞ்சினமாலை வேந்தனொடு தேவியும் உயிர்நீர்த்தமை அறியாத கண்ணகி கற்பிகள் பிறந்த ஊரிற் பிறந்தேன். யானும் ஓர் கற்பி என்பது மெய்யானால், அரசை அழிப்பதோடு நில்லேன்; மதுரையையும் அழிப்பேன்’ என்று தேவி முன் வஞ்சினங்கூறி அவ்விடத்தை விட்டகன்றாள். குற்றப்படா என் கொழுநனைக் கொலைப்படுத்திய மதுரையை அழிப்பது குற்றமாமோ என்று இடமுலையைக் கையால் திருகிச் சுற்றி எறிந்தாள். உடனே தீக்கடவுள் வெளிப்பட்டது. கண்ணகி ஏவற்படி நல்லுயிர்களைச் சாராது கூடல் நகரைக் கொளுத்திற்று. 22. அழற்படு காதை கண்ணகியின் பணிகேட்ட தீக்கடவுள் அழலைப் பரப்பிற்று. அரசனும் அரசியும் அரசு கட்டிலில் வீழ்ந்தவர் மடிந்துவிட்டனர் என்பதை அறியாது, ஆசான் முதலாய கோத்தொழிலாளிகள் ஓவியம்போலத் திகைத்திருந்தனர். படையாளர் அரண்மனை வாயிலில் தீயைக்கண்டு கூடினர். நால்வகைப் பூதங்களும் தம்காவல் விட்டுச் சென்றன. கறவைகன்றுகள் களிறு குதிரைகள் பிழைத்து மதிற்புறத்தே ஓடின. இளமடந்தையர் குழவியொடு கிழவியரைக் கூட்டிக் கொண்டு வெளியேறினர். முது பெண்கள் கணவனை இழந்தாள் செயல் பொருந்தும் என்று எரியை வணங்கினர். நாடக மங்கையர் தீயூட்டிய இவள் யார் என்று கற்பை வியந்தனர். நெருப்பின் வெம்மை தாங்காது மதுரைமாதெய்வம் வீரபத்தினி முன் தோன்றிற்று. 23. கட்டுரை காதை முன் வந்த ஊர்த்தெய்வம் கண்ணகி தன் கணவனை இழந்ததற்கு இரங்கிற்று. இது ஊழ்வினையின் விளைவு என்று இயம்பிற்று. கீரந்தை மனைவியின் கற்பைக்காக்க ஒரு பாண்டியன்தன் கையை வெட்டிக் கொண்டான் என்றும், வார்த்திகனைக் கள்வன் எனக்காவலர் சிறை செய்தபோது உண்மையறிந்த ஒரு பாண்டியன் பொறுத்தருள்க என்று வார்த்திகன் காலில் வீழ்ந்தான் என்றும் இரு நிகழ்ச்சிகள் காட்டி, தென்னவ குலத்தார் கோல் பிழையார் என்று விளக்கிற்று. மேலும் அத்தெய்வம் நெடுஞ்செழியன் தவற்றுக்குக் கோவலன் பழவினையே காரணம் என்று கண்ணகிக்குப் புலப்படுத்திற்று. கபிலபுரத்து வணிகன் சங்கமன் தன் மனைவி நீலியொடு சிங்கபுரத்துத் தெருவில் நகை விற்பனை செய்தான். பரதன் என்பது கோவலன் முற்பிறப்புப் பெயர், சங்கமனை ஒற்றன் என்று தன் மன்னனுக்குச் சொல்லிக் கொல்வித்தான். கணவனை இழந்த நீலி இது முறையோ என்று அலறினாள். பதினான்கு நாட்கழிந்து மலைமேல் ஏறி வீழும்போது ‘யான்பட்ட துன்பம் எனக்குத் துன்பம் செய்தோரும் படுக’ என்று சபித்தாள். அவ்வினையே இன்று கோவலன் உயிரை வவ்வியது. பதினாலு நாட்குப் பின் நின் கணவனைத் தெய்வவுருவிற் காண்பாய்’ என்று மதுரைத் தெய்வம் உரைத்தது. நெருப்பும் தணிந்தது. கணவனைக் காணும்வரை நிலை கொள்ளேன் என்றவளாய்க் கண்ணகி வையைக் கரைவழியே மேற்கு நோக்கி ஓடி மலைநாடு அடைந்தாள். திருச்செங்குன்று மலையேறி வேங்கை மரநிழலில் நின்றாள். தேவர்களொடு வந்த கோவலனைக் கண்டு தானும் வானவூர்தி ஏறினாள். வஞ்சிக்காண்டம் 24. குன்றக் குரவை வேங்கை நிழற்கீழ் நின்றுகொண்டிருந்த கண்ணகியை ‘நீ யார்’ என்று மலைப் பெண்கள் இரக்கத்தோடு வினவினர். ‘மதுரையும் அரசும் அழியக் கணவனை இழந்த கடுவினையேன்’ என்று அறிவித்தாள் கண்ணகி என்றதும் குறத்தியர் தொழுதனர். அந்நிலையில் தேவர்கள் வந்து மலர்மாரி சொரிந்து கண்ணகியை அவள் கணவனொடு அழைத்துச் சென்ற புதுமையை மலை வாழியர் தம் கண்ணாற்கண்டனர். இவளே நம் குலதெய்வம் என்று வழிபாடு இயற்றினர். முருகனைப் பல்துறையில் பாடிச் சேரனை வாழ்த்திக் குரவை அயர்ந்தனர். 25. காட்சிக் காதை சேரன் செங்குட்டுவன் தேவியுடன் பேரியாற்றங்கரையில் மலைவளம் கண்டு இயற்கை யொலிகளைச் செவிமடுத்திருந் தான். குன்றக் குறவர்கள் மலைப்படு செல்வங்களைக் காணிக்கை யாகக் கொண்டுவந்து அளித்து, தாம் கண்ட தெய்வக் காட்சியை விளம்பினர். உடனிருந்த தமிழாசான் சாத்தனார் கோவலன் கொல்லுண்டது முதல் பாண்டிமாதேவி உயிர் கொடுத்ததுவரை விரித்துரைத்தனர். கேட்ட செங்குட்டுவன் உயிரீந்து கோல்காத்த பாண்டியனைப் பாராட்டி, அரசாள்வது பெருந்துன்பம் எனச் சுட்டினான். அருகிருந்த சேரமாதேவி நம்மாடு அடைந்த பத்தினிக் கடவுளை வணங்க வழிசெய்ய வேண்டும் என்றாள். பொதியமலையிற் கல்லெடுத்துக் காவிரி யில் நீர்ப்படுத்தும் தமிழகச் செயலைக்காட்டிலும், இமயத்திற் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படுத்துவதே வீரக்குடியிற் பிறந்தார்க்குத் தகும் என்று குட்டுவன் துணிந்தான். ‘பத்தினிக்கு இமயத்துக் கல்லெடுக்க எம்வேந்தன் எழுகின்றான். வடதிசை மன்னர்கள் திறையொடு தொழுக. தொழாராயின் துறவுபூண்டு காடேகுக’ என்று முரசறையப்பட்டது. 26. கால்கோட் காதை ‘வடவரசர்கள் தமிழகத்தைப் பழித்தார்களாம். அதற்கு எதிர்ப்பில்லாவிடின், எம்போலும் தமிழ் வேந்தர்க்கு என்ன தனிப்புகழ் உண்டு. இமயக்கல்லை வடமன்னர் முடித்தலை யேற்றிக்கொண்டு வருவேன்; வாரேனாயின், பகையை அச்சுறுத் தாது என் குடியை அச்சுறுத்திய கொடுங்கோலன் ஆவேன் என்று வஞ்சினம் அறைந்தான் செங்குட்டுவன். சிவன் சேவடியைத் தலையிற் சூடினான். திருமால் சேடத்தைத் தோளில் தாங்கினான். கடலோரமாகச் சென்ற பெரும்படை நீலகிரியில் தங்கியது. அங்கு நூற்றுவர் கன்னர்தம் தூதன் சஞ்சயன் வந்து வணங்கி, ‘வேந்தே தாங்கள் மேற்கொண்ட கல்லெடுப்புச் செயலை என் மன்னர் தாமே முடித்துத் தருவர்’ என்று வேண்டினான். ‘தமிழ் மறத்தை அறியாதிகழ்ந்த பால குமாரன் மக்கள் கனகவியசர்க்குப் பாடங்கற்பிக்கப் புறப்பட்டி ருக்கின்றது எம்படை. ஆதலால் கங்கையாற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் படகு தந்தாற்போதும்’ என்று சொல்லிச் சஞ்சயனை விடுத்தான். வடநாட்டிற் பாசறை அமைக்கப் பட்டது. தமிழாற்றலை ஒருகை பார்ப்போம் என்று திரண்ட கனக விசயர் முதலான வடமன்னர்கள் எதிர்த்து எளிதில் தோல்வியுண்டனர். துறவு வேடம் கொண்டு தப்பிக்க எண்ணிய கனகவிசயரோ சிறைப்பட்டனர். அமைச்சன் வில்லவன் கோதையை ஏவிப்பத்தினி வடிவெழுத இமயக்கல்லை எடுத்துக் கொண்டான் செங்குட்டுவன். 27. நீர்ப்படைக் காதை செங்குட்டுவன் கற்புக்கல்லைக் கனகவிசயர்தம் முடிமேல் ஏற்றிச் சுமத்தினான். கங்கையில் நீர்ப்படை செய்தான். அதன் தென்கரையில் பாசறை அமைத்து, வெற்றி தந்த தன் படை யோர்க்குச் சிறப்பளித்தான். அங்குப்போந்த மாடலமறையோன் ‘தென்னாட்டு மாதவி கடற்பாட்டு வடநாட்டுக் கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது’ என்று நகைச்சுவைபடக் குறிப்பிட்டான். வெற்றிவேற்செழியன் அரசுபூண்டு ஆயிரம் பொற்கொல்லரைப் பத்தினிப் பலிவாங்கிப் பாண்டிநாடு காப்பதையும் சோணாட் டாட்சி தீதின்றி நடப்பதையும் தெரிவித்தான். தோற்ற கனகவிச யரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டி வரும்படி நீலனை ஏவிய செங்குட்டுவன் தன்பிரிவால் வருந்தும் தேவி துயர்நீங்க வஞ்சியுட் புகுந்தான். அவனையும் தானையையும் வஞ்சி வாழியர் எதிர்கொண்டனர். 28. நடுகற் காதை பின் அரியணை வீற்றிருந்த வேந்தனைத் தொழுத நீலன் முனி வேடத்தால் உயிர் பிழைத்து ஓடிய மன்னர்களை வென்றது ஒரு வென்றியா என்பது சோழ வேந்தன் கருத்து எனவும், தவக்கோலம் கொண்டவரைச் சினந்த சினப்பு ஒரு சினமா என்பது பாண்டிய வேந்தன் கருத்து எனவும் அறிவிக்க, சேர வேந்தன் கண் சிவந்தது; வீர நகை பிறந்தது. ‘அரசர் ஏறே, அடங்குக நின் வெகுளி’ என்று அருகிருந்த மாடலன் தணிவுரை இசைத்தனன். யாக்கை, செல்வம், இளமை நிலையாமை களையும் வினையின் இயல்புகளையும் விளங்க உரைத்து, ‘நீ ஐம்பதாண்டுகளாக ஆற்றிய மறக்கள வேள்வி போதும். இனி அறவேள்வி செய்க’ என்று அறன் நீங்கி வலியுறுத்தினான். அங்ஙனமே வேள்வி நடைபெற்றது. ஆசியவரசர் சிறை நீங்கி விருந்தினராயினர். பத்தினிக் கோயில் கட்டப்பட்டது. இமயக் கல்லில் கண்ணகித் தெய்வத்தை நாட்டி விழாச்செய்து மகிழ்ந்தான் செங்குட்டுவன். 29. வாழ்த்துக் காதை கண்ணகி கோட்டத்து வீற்றிருந்து குடதிசை வேந்தன் மன்னர்களிடம் திறை வாங்கினான். அதுகாலை, கண்ணகியின் காவற்பேண்டும் அடித்தோழியும் தேவந்தியும் மாதரி மகள் ஐயையை அழைத்துக்கொண்டு கண்ணகி கோயிலுக்கு வந்தனர்., கண்ணகிக்கும் தங்கட்கும் உள்ள உறவை அழுது ஏங்கிச் செங்குட்டுவனுக்குத் தெரிவித்தனர். ‘நீ பட்ட துன்பங் கேட்டுத் தாயும் மாமியும் உயிர்விட்டனர்; தமப்பனும் மாமனும் துறவு பூண்டனர்: மாதவியும் மணிமேகலையும் தவப்பட்டனர்; அடைக்கலம் இழந்தேன் என மாதரி உயிர் நீத்தாள்’ என்று தெய்வ நங்கைமுன் அரற்றினர். வளைக் கையுடைய ஒரு மின்னற் கொடியை வேந்தன் வானத்திற் கண்டு வியந்தான். வஞ்சி மகளிர் மூவேந்தரையும் வாழ்ந்த, கண்ணகி நல்லாள் “செங்குட்டுவன் வாழ்க” என்று ஏத்தினாள். 30. வரந்தரு காதை தேவந்தி செங்குட்டுவனுக்கு மணிமேகலையின் இளந் துறவை உரைத்தாள். பின் செங்குட்டுவன் பத்தினி வழிபாடு நாளும் நிகழ்தற்கு உரிய நிலக்கொடை வழங்கித் தேவந்தியைப் பூசையாட்டியாக அமர்த்தினான்; கற்புக் கடவுளை மும்முறை வலம் வந்து வணங்கினான். சிறை நீங்கிய கனகவிசயரும் மன்னர் பிறரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் இலங்கைக் கயவாகு வேந்தனும் ‘எங்கள் நாட்டுப் பத்தினி வேள்வியில் வந்தருள்க’ என்று கண்ணகி தெய்வத்தை வேண்டினர். வரம் தந்தேன் என்ற ஒலி எழுந்தது. வானொலி கேட்ட சேரனும் பிறரும் மாடலனும் அவ்விடம் விட்டுப் போன பின்னர் யான் (இளங்கோ) பத்தினிக் கோயில் சென்றேன். தெய்வம் தேவந்திமேல் வெளிப்பட்டுப் பேசிற்று. ‘அரச மண்டபத்தில் தந்தைக்குப் பக்கத்துச் செங்குட்டுவனும் நீயும் உடனிருந்த போது, நீ அரசாள்வாய் என்று ஒரு கணிவன் முன்மொழிந்தான். அவன் சொல்லை வெறுத்து அண்ணன் மனத்துயர் நீங்க நீ துறவு பூண்டாய். வீடாளும் பேறு அடைந்தாய்’ என்று என் துறவு வரலாறு கூறிய கண்ணகி தெய்வத்தின் கற்பு வரலாற்றை நான் கூறும் பேறு பெற்றேன். இதனைக் கேட்கும் பேறுபெற்ற உலக மக்களே! தெய்வம் தெளிந்து தீதின்றி வாழ்க!” மணிமேகலை காதைச்சுருக்கம் பதிகம் சோழன் தலைநகர் நான்முகன் படைத்த நாளில் சம்பாபதி என்று பெயர் பெற்றது. அகத்தியன் கரகம் கவிழ்க்க ஓடிய காவிரியால் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரையும் பெற்றது. இரு பெயர் பூண்ட இம் மூதூரில் இந்திரனுக்கு விழா அறைந்தது முதல் பவத்திறம் அறுக என மணிமேகலை நோற்றது ஈறான முப்பது பிரிவுகளாக ‘மணிமேகலை’ என்னும் நூலைக் கூலவாணிகன் சாத்தன் இயற்றினான். இளங்கோ வேந்தன் கேட்டான். 1. விழாவறை காதை பொதியமலை முனிவன் சொற்படி தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழன் இந்திர விழாவை இருபத்தெட்டு நாள் கொண்டாடினான். அதுமுதல் இவ்விழா இடையீடின்றி நடைபெற்றது. சமயக் கணக்கரும் பிறரும் ‘விழாவை மறந்தால் பூதங்கள் துயர்செய்யும். அதனை இவ் வாண்டும் தொடங்குக’ என்று அறிவித்தனர். பறைஞன் வச்சிரக் கோட்டத்து முரசை யானைப் பிடரியில் ஏற்றி, ஊர் வாழி கோல்வாழி என்று ஏத்தியபின், தேவர்களும் வந்து கலந்து கொள்ளும் விழாவாதலின், நகரை அணி செய்க, துப்புரவு செய்க, யாரிடத்தும் அன்பு கொள்க, நாடு வளம் சுரக்க என முரசறைந்தனன். 2. ஊரவர் உரைத்த காதை இந்திர விழாவில் ஆடுதற்கு மாதவியும் வரவில்லை. மணிமேகலையும் வரவில்லை. அதனால் கலக்கங் கொண்ட தாய் சித்திராபதி தோழி வயந்தமாலையை அழைத்து, ஊரவர் கூறும் பழி மொழியை எடுத்துரை என விடுத்தாள். நாட்டியத் துறை தேர்ந்த நீ தவம் புரிதல் வெட்கம் என்று ஊரார் சொல்லும் பழிப்பு நல்லதில்லை என வயந்த மாலை மாதவி யிடம் மொழிந்தனள். ‘என் காதலன் கொலைப்பட்டது கேட்டுக் கடுந்துயர் எய்தும் நான் ஊரவர் அலரைப் பொருட்படுத்தி லேன்’ என்றாள் மாதவி. மேலும் மாபெரும் பத்தினி மகளாகிய மணிமேகலை தீத்தொழிற்புகாள் எனவும், நாங்கள் இருவரும் அறவணவடிகளைப் பணிந்து புத்தமதம் சார்ந்தோம் எனவும் வாழ்க்கைப் புரட்சி தெரிவித்தாள். 3. மலர்வனம் புக்க காதை கோவலன் கண்ணகியார் முடிபைக்கேட்ட மணிமேகலை அழ, நீர்த்துளி பகவனுக்குத் தொடுத்த மாலையைக் கெடுத்தது என்று புதுப்பூ பறித்து வரும்படி மாதவி ஏவ, மணிமேகலை தனியாகப் போகக்கூடாது என்றாள் சுதமதி. அவள் கௌசிக அந்தணன் மகள். தனித்துப்போய் மலர் கொய்தபோது, விஞ்சையன் மாருதவேகன் தூக்கிச்சென்று இன்புற்றுப் பின்னர் இந்நகரில் கொண்டுவந்து விடப்பட்டவள். உவவனமே சிறந்த சோலை எனவும், அங்குள்ள பளிக்கறை மண்டபம் ஒலியை வெளிப்படுத்தாது உருவத்தை மட்டும் புறப்படுத்தும் எனவும், அங்கிருக்கும் தாமரைப் பீடிகையில் இட்ட அரும்பு எண்ணிய தெய்வத்தின் அடியிற்போய்ச் சேரும் எனவும் விளக்கிய சுதமதி மணிமேகலையைக் கூட்டிக் கொண்டு வீதி வழியாகச் சென்றாள். தெருவில் வேடிக்கைகளைக் கண்டுகொண்டிருந்த மக்கட் கூட்டம் ஒருமுகமாகத் திரும்பி ‘இவளைத் தவப்படுத்திய தாயோ கொடியவள்’ என்று தூற்றியது. மணிமேகலை மெத்தென நடந்து உவவனம் நுழைந்தாள். 4. பளிக்கறை புக்க காதை உவவனத்தின் இயற்கையெழிலைச் சுதமதி காட்ட மணிமேகலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கு உள்ளாள் என்பதை எட்டி குமரனால் அறிந்த சோழன் அரசன் மகன் உதயகுமரன் தேரேறி வனம் வந்தான். தேரொலி கேட்டனள் சுதமதி. மணிமேகலை பளிக்கறை மண்டபம் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். காமம் கனிந்து நின்ற உதயகுமரனை, ‘முதுமை வேடம் பூண்டு முறைகூறிய குலத்தோன்றலே, மக்கள் யாக்கை வினையால் வந்தது. வினையை விளைப்பது. தோலைப் புரட்டிப் பார்த்தால் இதன் அழகின்மை வெளிப்படை’ என்று சுதமதி நல்லுரை கழறிக்கொண்டிருக்கையில், மணிமேகலையின் செம்மேனி பளிங்கில் அவன் கண்ணுக்குப்பட்டது. 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை பளிங்கின் உருவத்தைக்கண்டு, ஓவியம் அன்று, மணி மேகலை என அறிந்த உதயகுமரன் நீர்ப்பெருக்கிற்குக் கரையில்லை; காமப்பெருக்கிற்கு நிறையில்லை; எப்படியும் இவளை வவ்வுவேன் என்று உட்கொண்டான். நீ என் சமணப் பள்ளியைக் கைவிட்டாய் என்றான் சுதமதியைப் பார்த்து. தன் தந்தை பசுமுட்டிக் குடல் வெளிவந்து கலங்கியபோது சமணர்கள் இரக்கமின்றி இருந்தனர் என்றும், புத்த முனிவன் சங்கதருமன் அன்போடு அணைத்து இடம் அளித்தான் என்றும், அதனால் சமண் நீங்கிப் பௌத்தம் சேர்ந்தேன் என்றும் அவள் காரணம் காட்டினாள். மணிமேகலையைச் சித்திராபதி தருவாள் என்ற நம்பிக்கையொடு இளவரசன் தவவனத்தை விட்டகன்றான். மாதவி மகளுக்கும் உதய குமரனைக் கண்டதும் ஒருசிறு வேட்கை பிறந்தது; எனினும் திட்பத்தால் உள்ளத்தைத் திருத்திக் கொண்டனள். இந்திர விழாக் காணவந்த மணிமேகலா தெய்வம் மானிடப் பெண் வடிவில் தாமரைப் பீடிகையைத் தொழுது புத்தனைப் போற்றியது. கதிரவன் மறைய மாலைப்பொழுது ஆயிற்று. 6. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை மாலை நீங்கத் திங்கள் தோன்றியது. பெண்ணுருக் கொண்ட தெய்வம், ‘இது அறவோர் வனம்’ என அரசகுமரன் சென்றுவிட்டான்; வீதியிற் கைப்பற்றுவான் என்றும், மதிலின் மேலைத்திசை வழியாகப் போய்ச் சக்கரவாளக் கோட்டத்தை அடையுங்கள் என்றும் அறிவுறுத்திற்று. சுடுகாட்டுக் கோட்டத் துக்குச் சக்கரவாளக் கோட்டம் என்று பெயர் வந்த காரணம் யாது என்று சுதமதி வினவத் தெய்வம் கூறலுற்றது. சார்ங்கலன் என்னும் பார்ப்பனச் சிறுவன் வழிதவறிச் சுடுகாடு சென்றான். பிணத்தைத் தின்றாடும் பேய்க்கூத்தைக் கண்டு கலங்கிப் பேய்க்கோட்பட்டுத் தன்னுயிரைத் தாய்முன் விட்டான். தாய் கோதமை ‘என கணவனோ கண்ணில்லான்; உதவிய ஒரு மகனையும் பேயுண்டது; என்னுயிர்கொண்டு இவனுயிர்தா’ என்று சம்பாபதி தெய்வத்தின்முன் கூக்குரலிட்டாள். சென்ற உயிரை மீள்விக்கும் வன்மை தனக்கும் இல்லை; எத்தேவர்க்கும் இல்லை என்று மேய்ப்பிக்கச் சம்பாபதி சக்கரவாளக் கோட்டத்துப் பிரமர் முதலாய தேவர்களை இங்கு தன்னாற் றலால் கூட்டிற்று. அதன்பின் இங்கும் சக்கரவாளக் கோட்டம் ஒன்று செயற்கையால் அமைக்கப்பட்டது. இதுவே அப்பெய ருக்கு காரணம் என்று விளக்கிய முடிவில், சுதமதியும் மணி மேகலையும் உறங்கிவிட்டனர். மணிமேகலையை மட்டும் மணிமேகலா தெய்வம் தூக்கிச்சென்று மணிபல்லவத் தீவில் வைத்து நீங்கியது. 7. துயிலெழுப்பிய காதை மணிமேகலா தெய்வம் மணிமேகலை நினைப்போடு படுத்திருக்கும் உதயகுமரனிடம் ‘கோல் திரியாதே; தவத்திமேல் எண்ணம் வையாதே’ என்று முன்னுறுத்தியது. பின் உவவனஞ் சென்று சுதமதிக்கு ‘நான் மணிமேகலா தெய்வம். வினைப்பக் குவம் மணி மேகலைக்கு வந்துவிட்டது. மாதவி என்னைப்பற்றி அறிவாள்’ என்று உரைத்து அகன்றது. சுதமதியும் வனத்தை விட்டுச் சக்கரவாளக் கோட்டத்துக்கு வந்தபோது, ‘இரவி வன்மன்மகளே, துச்சய மன்னன் மனைவியே, யானை முன் இறந்த வீரையே, நின் இளையவளாகிய மணிமேகலை தன் பிறப்பையும் உன் பிறப்பையும் அறிந்துகொண்டு ஏழு நாளில் வருவாள்’ என்று கந்திற்பாவை அற்புதம் உரைத்தது. சுதமதி நடந்ததெல்லாம் மாதவிக்குக்கூற அவள் கலங்கியிருந்தாள். 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவரப்பட்ட மணிமேகலை துயில் நீங்கிப் பார்த்தாள். ஞாயிறு தன்னொளியை விரித்தது. இஃது உவவனத்தில் ஓரிடமோ, நனவோ, கனவோ, முன் தோன்றிய பெண் செய்த வஞ்சகமோ என்று மயங்கினாள். ஒளித்திருந்து என்னைத் துன்பப்படுத்தாதே, வா என்று சுதமதியை அழைத்தாள். தந்தை கோவலனை நினைந்து ஐயாவோ என்று அழுதாள். அவட்கு முன் புத்தன் இருந்து அறம் உரைத்த தருமபீடிகை தோன்றிற்று. 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை தருமபீடிகையைத் தொழுத மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் உணர்ச்சி ஏற்பட்டது. ‘பிரமதருமனே, நாகநாட்டில் நிலநடுக்கம் உண்டாகும்; இடம் பெயர்க’ என்று அரசன் அத்திபதிக்கு முன் மொழிந்தாய். அரசனும் அதனைக் குடிமக் கட்குச் சாற்றிக் காயங்கரையில் இருந்தான். நீ குறித்தபடி நிலம் நடுங்கி அழிந்தமை அறிந்து எல்லோரும் நின்னைத் தொழுதனர். அக்காலத்து நான் அரசன் இரவிவன்மனுக்கு மகளாய் இலக்குமி என்று பெயர் பெற்றிருந்தேன். அத்திபதி அரசன் மகன் இராகுலனை மணந்தேன். இருவரும் நின்னைத் தொழுத பொழுது, திட்டிவிடத்தால் இராகுலன் இறக்க, நீ தீப்புகுவாய் என்றும், காவிரிப் பூம்பட்டினத்திற் பிறந்து நீ துன்புறும்போது மணிமேகலா தெய்வம் உதவி செய்யும் என்றும், காதலன் பிறப்பை அத்தெய்வம் சொல்லும் என்றும் அறிவித்தனை. அத்தெய்வம் இன்னும் வரக்காணேனே’ என்று மணிமேகலை சொல்லி ஏங்கினாள். 10. மந்திரம் கொடுத்த காதை வானத்திலிருந்து வந்த மணிமேகலா தெய்வம் அறவோன் ஆசனத்தைப் புத்தன் எனவே கருதித் தொழுதது. அவளை வணங்கி, என் கணவன் பிறப்பை அருள்க என்றாள் மணிமேகலை. ‘இலக்குமியே! கேள், நின் கணவன் இராகுலனும் நீயும் பகற்காலத்து ஒரு பொழிலில் இருந்தீர்கள். காமம் மிக்கு நின்னைக்கூடல் வேண்டினான். அது சமயம் பௌத்த முனிவன் சாது சக்கரன் அப்பொழிலுக்கு வந்தான். இராகுலனோ சினம் அடைந்தான். நீ கணவனை இடித்துரைத்து முனிவனுக்கு விருந்தோம்பினாய். அவ்வறம் நின் பிறப்பை ஒழிக்கும். அவ்விராகுலனே இவ்வுதயகுமரன். அத்தொடர் பாலேதான் அவனும் உன்னை விரும்பினான். உன் உள்ளமும் அவன்பாற் சென்றது. அதனைத் தவிர்க்கவே உன்னைத் தனிமைப்படுத்தி னேன். இலக்குமியே; உன் தமக்கையராகிய தாரையும் வீரையும் கச்சய அரசன் துச்சயனை மணந்தனர். அறவணர் சொற்படி பாதப்பங்கயமலையைத் தொழுத நல்வினையால் மாதவி சுதமதியராக உன்கூடப் பிறந்துள்ளனர்’ என்று தெய்வம் தெரிவித்தது. வேற்றுருவெய்தவும், வானம் செல்லவும், பசியறுக் கவும் செய்யும் மூன்று மந்திரங்களையும் கொடுத்துப் போயிற்று. 11. பாத்திரம் பெற்ற காதை தெய்வம் நீங்கியபின் மணிமேகலைமுன் தருமபீடிகையைக் காக்கும் தீவதிலகை தோன்றினாள். ஆபுத்திரன் கையிலிருந்து அமுத சுரபி இங்கு கோமுகிக் குளத்தில் உண்டு என்றும், குறையாது சோறு வழங்கும் குணமுடையது அப்பாத்திரம் என்றும், அது இன்று முற்பிறப்பு உணர்ந்த உன் கைக்கு வரும் என்றும் தீவதிலகை அறிவிக்க, மணிமேகலை கோமுகிப் பொய்கையைத் தொழ, பாத்திரம் மேலெழுந்து அவள் கைக்கண் சேர்ந்தது. பாத்திரம் பெற்ற நங்கை புத்ததேவனைப் போற்றினாள். பசிநோய் எனைத்து நலங்களையும் அழிக்கும் கொடுமைத்து என்றும், உண்டி கொடுத்தோரே உயிர்கொடுத் தோர் என்றும், அக்கொடை செய்தவரின் புகழே புகழ் என்றும் தீவதிலகை மணிமேகலைக்கு உறுதி கூறினாள். அவட்கு இப்பிறப்பில் அமுதசரபி கிடைப்பதற்குச் சென்ற பிறப்பில் சாதுசக்கர முனிவனை விருந்துகொண்ட நல்வினையே காரணம் ஆகும். குழந்தைக்குத் தாய் முலைபோல ஏழைக்கு இப்பாத்திரம் சோறு சுரக்க என்று நல்லுள்ளம் கொண்ட மணிமேகலை மணிபல்லவத்தீவை விட்டு என்று வருவாள் என எதிர்பார்த் திருக்கும் தாயை அடைந்தாள். முற்பிறப்பில் தனக்கு மாதவியும் சுதமதியும் தமக்கையர் என்ற உறவை அறிவித்தாள். 12. அறவணர்த் தொழுத காதை மூவரும் அறவணவடிகளைக் கண்டு வணங்கினர். ஆபுத்திரன் வரலாற்றை நும்மிடம் கேட்கும்படி தீவதிலகை தெரிவித்தாள் என்றனள் மணிமேகலை. ‘மற்றொருமுறை பாதபங்கயமலை தொழச் சென்றபோது, துச்சய மன்னனைக் கண்டேன். இளைய மனைவி வீரையானையால் மடிய, அது பொறாது மூத்தாள் தாரையும் மாடி ஏறி மடிந்தாள் என்று அவன் வருத்தப்பட்டான். அப்பெண்களே நீங்கள்’ என மாதவிக்கும் சுதமதிக்கும் அறிவித்தார் அறவணர். புத்த ஞாயிறு இவ்வுலகில் தோன்றுங்காலத்து மக்கள் மனவிருள் முற்றும் அகலும் உயிர்கள் தம்முள் பகைஇரா; குறைப் பிறவிகள் பிறவா; அவன் சொல்லும் அருளறம் கேட்டோர் பிறவாப்பெற்றி அடைவர் என்று தம் நம்பிக்கையைச் சுட்டினார். உயிர் மருந்து ஏந்திய மணிமேகலைக்கு, மக்கள் தேவன் என யார்க்கும் ஒப்பான பொதுவறம் யாதெனின் பசிப்பிணி தீர்த்தல் என்ற ஒன்றே என அறன் வலியுறுத்தினார். 13. ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை அறவணர் மணிமேகலைக்கு உரைத்த ஆபுத்திரன் வரலாறு: கற்பொழுக்கம் கடந்த பார்ப்பனி சாலி குமரித்துறை யாடச் சென்ற வழியில் பெற்ற ஆண்குழந்தையை ஒரு தோட்டத் தில் இட்டாள். குழவிக் குரல்கேட்ட ஒரு பசு பாலூட்டிக் காத்தது. மறையவன் இளம்பூதி ஆன் மகனல்லன்; என் மகன் என்று தழுவி எடுத்துப் பல்லாண்டு வளர்த்தான். ஆபுத்திரன் வேள்வியிற் கொலை செய்யக் கட்டியிருந்த பசுமேல் இரக்கங் கொண்டு அதனைக் களவில் ஓட்டிச் சென்றான். அந்தணர்கள் அவனைப் பிடித்து அடித்துப் புலையன் என்றும் கற்பிழந்த வளின் மகன் என்றும் துன்புறுத்தினர். தந்தை பூதியும் வீட்டி னின்று துரத்திவிட்டான். அந்தணர்கள் வாழும் கிராமந் தோறும் பிச்சை கேட்டுப் பார்த்தான் ஆபுத்திரன். ஏந்திய பாத்திரத்து இட்டனர் கல்லை. அதனால் மதுரைக்குச் சென்று சிந்தாதேவியின் அம்பலத்துத் தங்கினான். பிச்சை வாங்கி ஏழைகட்கு உணவு வழங்கினான். எஞ்சியதை உண்டு ஓட்டைத் தலைக்கு வைத்துக்கொண்டு உறங்கினான். 14. பாத்திர மரபு கூறிய காதை ஆபுத்திரன் வரலாற்றை அறவணர் தொடர்ந்து கூறுகின் றார்; ஒருநாள் நள்ளிரவில் சிலர் பசி பசி என்று இரந்தார்கள். பிச்சை வாங்கிய சோறு எச்சமில்லையே எனக் கவன்றான் ஆபுத்திரன். சிந்தாதேவி வெளிப்பட்டு, ‘அழியாதே. இது கொள்க’ என்று வற்றாத அமுத சுரபியை அருளினாள். அந்நாள் தொட்டு எவ்வுயிரும் பசியறியாதாயிற்று. தேவி அம்பலத்து ஊணொலியரவம் பெருகிற்று. இந்திரன் ஆபுத்திர னுக்குச் சிறப்புச் செய்யவந்தான். ‘உண்டோர் முகமலர்ச்சியே என அறப்பயன்’ என்று சொல்லி இந்திரனை ஆபுத்திரன் இகழவே, இவன் பாத்திரத்துக்கு வேலையில்லாமல் வைப்பேன் எனத் தேவேந்திரன் நாடு முழுதும் நன் மழை பெய்வித்தான். பாண்டிய நாட்டிற் பஞ்சம் நீங்கிற்று. இரப்பார் யாருமில்லை. சாவக நாட்டில் மழையில்லை; பசியுண்டு என்று கேள்விப்பட்ட ஆபுத்திரன் அந்நாட்டுக்குக் கப்பலில் ஏறினான். மணிபல்லவத் தில் இறங்கியவனைக் கப்பல் விட்டுச் சென்றுவிட்டது. அத் தீவில் மக்கள் யாருமில்லை. பாத்திரத்தை வைத்துக்கொண்டு தன்னுயிர் வளர்க்க விரும்பாத ஆபுத்திரன், ஆருளுடையார் கைப்புகு வாய் என்று அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கை யில் விட்டு உயிர் நீத்தான். அவன் சாவகநாட்டு வேந்தனது ஆவயிற்றில் இன்று பிறப்பு எடுத்திருக்கின்றான். 15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை ‘ஆபுத்திரனைக் காத்த நற்பசு பொன்மயமாய்ச் சாவக நாட்டில் மண்முக முனிவனிடம் சென்றது. அதன் வயிற்றில் பொன் முட்டையிலிருந்து ஆபுத்திரன் வெளிவந்தான். புத்த தேவன் தோன்றும் காலத்து நிகழும் நல்லியற்கைகள் இவன் பிறந்த நாளிலும் காணப்பட்டன. சாவகவேந்தன் பூமிசந்திரன் ஆபுத்திரனை மகனாக எடுத்து வளர்த்தான். அம்மகன் இப்போது அரசாள்கின்றான்’ என்று ஆபுத்திரன் வரலாறு கூறிமுடித்தார் அறவணர். சோணாட்டில் உயிர்கள் பசியால் துடித்தன. பிக்குணிக் கோலங்கொண்ட மணிமேகலை அறனோடு ஏந்தி வீதியில் வந்தாள். அழகுக்கொவ்வாத் தவத்தைக் கண்டு ஊர் மக்கள் பரிவுற்றனர். பத்தினிப் பெண்டிரிடத்தில் முதன் முதல் பாத்திரத்தில் பிச்சை வாங்கவேண்டும் என்று விரும்பிய மணிமேகலைக்கு ‘ஆதிரைபால் பிச்சை பெறுக’ என்று யானைத் தீ நோய்கொண்ட காயசண்டிகை காட்டினாள். 16. ஆதிரை பிச்சையிட்ட காதை ஆதிரையின் கணவன் சாதுவன் பரத்தையரொடு கூடிப் பொருளைத் தொலைத்தான். கடல் கடந்து பொருளீட்ட மரக்கலம் ஏறினான். கப்பல் கவிழ உயிர்தப்பி நாகர்மலையை அடைந்தான். சாதுவன் கடலில் இறந்தான் என்ற பொய்ச் செய்தி கேட்ட ஆதிரை சடலையில் எரியூட்டிப் புகுந்தாள். தீ அவளைச் சுடவில்லை. ‘கணவன் இறக்கவில்லை; வருவான்’ என்ற வானொலியைக் கேட்டு வீடு சேர்ந்தாள். இவள் கற்பி களும் தொழத்தக்க பெருங்கற்பி. நிற்க, சாதுவன் நாகருடைய மொழியைப் பேச அறிந்தவன். அதனால் கொடிய வேட்டுவத் தலைவனால் மதிக்கப்பட்டான். உயிருண்மை, வினையுண்மை, வினைக்கேற்ற பிறப்புண்மைகளை அவ்வேட்டுவத்தலைவனுக்கு மிக எளிதாக விளக்கினான். கடலிற் பிழைத்து வந்தோரைப் பேணு; வாழும் உயிரைக் கொல்லாதே என்று ஏற்ற அறங்கள் கூறினான். வேட்டுவக் குருமகனால் சிறந்த பொருள்கள் நல்கப் பெற்று ஊர் வந்து தன் மனைவியொடு வாழ்ந்தான். இது ஆதிரைப் பத்தியின் வரலாறு. அம்மனையில் பிச்சை பெறுக என்றாள் காயசண்டிகை, உலக முழுவதும் பசிப்பிணி அறுக என வாழ்த்தி ஆதிரை நல்லாள் பாத்திரம் நிறையச் சோறிட்டாள். 17. உலகவறவி புக்க காதை மணிமேகலை பசித்த உயிர்கெல்லாம் சோறு வழங்கினாள். காயசண்டிகைக்கும் ஒருபிடி அமுதளித்தாள். உடனே அவள் வயிற்று யானைத் தீ நோய் நீங்கிற்று. வடசேடிக் காஞ்சனநகர் காயசண்டிகையின் ஊர். அவள் தன் கணவொடு பொதியமலை வந்தாள். விருச்சிக முனிவன் உண்ணற்கு வைத்திருந்த நாவற் கனியைக் காலால் சிதைத்தாள். பன்னீராண் டிற்கு ஒருமுறை கனியுண்ணும் அம்முனிவன் ‘பன்னீராண்டு யானைத்தீநோய் உறுக. வானொழும் மந்திரம்மறக்க’ என்று சபித்தனன். ஆண்டிற் கொருமுறை அவள் கணவன் பார்த்து ஆறுதல் கூறிப்போவது வழக்கம். இவ்வாறு காயசண்டிகை தன் வரலாறு கூறிப்போய பின், மணிமேகலை சக்கரவாளக் கோட்டத்து உலகவறவிக்குச் சென்று யாவரையும் கூப்பிட்டு உணவு வாரி வழங்கிக் கொண்டிருந்தனள். 18. உதயகுமரன் அம்பலம்புக்க காதை மணிமேகலையின் போக்கைக் கேட்ட சித்திராபதி குல வொழுக்கம் கெட்டது என்று உளங்கொதித்தாள். ‘உதய குமரனால் மணிமேகலையைத் தேரேற்றிக் கொண்டுவரச் செய்வேன்; செய்யேனாயின், செங்கல் சுமந்த பழிபெறுவேன்’ என வஞ்சினம் கூறி மன்னன் மகனிடம் சென்றாள். ‘மணி மேகலை கற்புக்குடியிற் பிறந்தவள் இல்லை; ஊராரை ஆடலும் பாடலும் அழகும் காட்டி மயக்கும் பரத்தைக் குடியிற் பிறந்தவள். குலம் பிழைத்த குமரியை வழிக்குக் கொண்டு வருதலும் குமரன் கடமையன்றோ’ என்று பித்தூட்டவே, உதய குமரன் உள்ளம் பிறழந்து தேரேறி உலக வறவி சென்றான். தவம் புரிந்த காரணம் என்ன என்று மணிமேகலையிடம் பேச்சுத் தொடங்கினான். இவன் என்ன செய்வானோ என்று அஞ்சிய மணிமேகலை மந்திரம் ஓதிக் காயசண்டிகை வடிவுபெற்றாள். சம்பாதித் தெய்வமே! மணிமேகலையைத் தருக; நீ அருளா விட்டால் இங்கேயே கிடப்பேன் என்று சூளுரைத்தான் இளவரசன். 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை சம்பாபதிக் கோட்டத்து ஒரு சித்திரத் தெய்வம் உன் வேண்டுகோள் நடவாது என்று அறிவிக்க, உதயகுமரன் ஆசை நீங்கானாய் அரண்மனை திரும்பினான். உண்மை வடிவோடு இருந்தால் உதயகுமரன் விடான் என்று கருதிய மணிமேகலை காயசண்டிகை வடிவோடே பாத்திரம் ஏந்தித் திரிந்தாள். ஒரு நாள் சிறைச்சாலை சென்று அங்குப் பசித்துக் கிடந்த குற்றவாளி கட்கு உணவூட்டினாள். இவ்வியப்பினைக் காவலர்கள் சோழன் மாவண்கிள்ளிக்குத் தெரிவித்து மணி மேகலையை அழைத்து வந்தனர். ‘வேந்தே, வாழி, நான் விஞ்சையன் மகள். இப்பாத்திரம் தெய்வம் தந்தது. தீராத யானைத் தீநோயையும் தீர்த்தது. உயிர்கட்குச் சோற்று மருந்து தருவது’ என்று மொழிந்த மணிமேகலை ‘இனி சிறைச் சாலையை அறச்சாலையாக மாற்றுக’ என்று வேண்டினாள். அரசனும் அவ்வண்ணம் செய்தான். 20. உதயகுமரனை வாளால் எறிந்த காதை வேந்தன் முன் மணிமேகலை பெற்ற சிறப்பை அறிந்த உதய குமரன், ‘யாதுவரினும் வருக. அம்பலஞ்சென்று அவளைக் கைப்பற்றுவேன்’ என்று துணிந்து உலகவறவி சென்றான். நிற்க; ஆண்டிற்கு ஒருமுறை வரும் விஞ்சைக்காஞ்சனன் காயசண்டி கையின் தோற்றம் கொண்ட மணிமேகலையைத் தன் மனைவி காய சண்டிகை என்று நினைத்து அவள் கைப்பாத்திரத்தைப் புகழ்ந்தான். மணிமேகலை அதனைச் செவி மடுக்காது, உதய குமரனுக்கு நரைமூதாட்டி ஒருத்தியைச் சுட்டி யாக்கையின் அருவருப்பை அறிவுறுத்தினாள். பசி நீங்கியபின், என்னை மறந்து இவன் காதலன் ஆதலின் இங்கே தங்கிவிட்டாள் என்று கருதிக்கொண்ட விஞ்சையன் புற்றுப்பாம்புபோல அம்பலத்தில் ஒளிந்திருந்தான். காமவேட்கை தணியானாய் நள்ளிரவில் அங்குப் புகுந்திருந்த உதயகுமரனை வாளால் வெட்டினான். மணிமேகலையை நெருங்க, ‘செல்லாதே, இவள் மணிமேகலை, பசி நீங்கிய காயசண்டிகை வானத்திற் செல்லும்போது விந்த மலை அந்தரியால் விழுங்கப்பட்டாள்’ எனக் கந்திற்பாவை தடுத்து மொழிந்தது. 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை சம்பாபதிக் கோட்டத்திருந்த மணிமேகலை தன்வேற்று வடிவத்தால் உதயகுமரன் மடிந்தது கண்டு, கெடுக இவ்வுரு வெனக் காயசண்டிகைக் கோலத்தைக் களைந்தாள். ‘காதலனே, சென்ற பிறவியில் நீ பாம்புக்கடியால் மாண்டபோது உடன் கட்டை ஏறினேன். இப்போது விஞ்சையன் வாளால் விளந் தனை’ என்று புலம்பி அவன் உடலைத் தீண்ட நெருங்கினாள், ‘செல்லாதே. பிறப்பறுக்க முயல்வோய்! செல்லாதே’ என்று கந்துத்தெய்வம் கழறிற்று. ‘முற்பிறப்பில் முனிவன் பிரம தருமனுக்கு நீங்கள் விருந்தோம்புகையில், சமையலாளி பாத்தி ரங்களோடு வழுக்கி விழுந்தான். விழுந்தவன்பால் இரங்காது சினந்து வாளால் வெட்டினான் நின் கணவன் இராகுலன். அவ்வல்வினையாலன்றோ சென்ற பிறவியில் திட்டிவிடத்தா லும் இப்பிறவியில் விஞ்சையனாலும் வீழ்ந்தான்’ என்று அத்தெய்வம் வினைவிளைவு கூறிற்று. ‘சோழன் சிறைசெய் வான்; இராசமாதேவி துன்புறுத்துவாள்; அறவணர் விடுவிப் பார்; ஆபுத்திரனைக் காண்பாய்; மணிபல்லவம் செல்வாய்; வஞ்சிநகர் புகுவாய், பல்சமயக் கொள்கைகளைக் கேட்டு இகழ்வாய்; கச்சிசென்று தருமம்கேட்டு இப்பிறப்பறுப்பாய். பின் உத்தரமகதத்து ஆண் வடிவாய்ப் பிறந்து அருளறம் பூண்டு சார்பறுத்துப் புத்தன் தலை மாணாக்கன் ஆவாய்’ என்று துவதிகத்தெய்வம் வருவதுரைத்தது. மணிமேகலை மயக் கொழிந்தாள். கதிரவன் உலகில் தோன்றினான். 22. சிறைசெய் காதை உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைச் சக்கர வாளத்து மாதவர் அறிந்தனர். மணிமேகலையையும் உதயகுமரன் உடலையும் ஓரிடத்து ஒளித்துவைத்து வேந்தனை நணுகினர். ‘அரசே நின்வாழ்நாள் இனிதாகுக. இன்று மட்டுமோ! இதற்கு முன்னும் இப்பதியில் பத்தினிப் பெண்டிரை விழைந்தும் தவமகளை விழைந்தும் உயிரிழந்தோர் பலர்’ என்று முகவுரை தொடங்கிய ஒரு மாதவன் மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் ‘சோழன் ககந்தனின் இளைய மகன் காவிரியில் குளித்துவரும் மருதியை ‘நீ வா’ என்று கூப்பிட்டான். அப்பத்தினி கலங்கிப் பூதத்தினிடம் முறையிட்டாள். அரசத்தந்தையால் காம மகன் கொல்லப்பட்டான். அந்தக் ககந்தனின் மத்த மகனோ தவத்தி விசாகையைக் காமுற்றான். அவள் கழுத்திலிடும் நோக்கொடு தன் தலைமாலையை எடுக்கக் கைதூக்கினான். தூக்கிய கை தலையை விட்டு மடங்கவில்லை. கேட்ட செங்கோற் ககந்தன் இனி மகனில்லை என்று பாராது அவனையும் வாளால் வெட்டினான்’ என்று மாதவன் முடித்தான். ‘இன்றேயல்ல எனத் தொடங்கினீர், இன்றும் அன்ன நிகழ்ச்சி நடந்ததுண்டோ’ என்று குறிப்பாக வினவிய வேந்தனுக்கு, ‘மணிமேகலை மேல் வைத்த காமத்தால் இன்று உன்மகன் மடிந்தான்’ என மாதவன் வெளிப்படுத்தினான். தன் தீய மகன் இறந்ததற்கு மகிழ்ந்த சோழன் கணிகை மகளைச் சிறை செய்தான். 23. சிறைவிடு காதை மகற்கொலை கேட்டதாய் இராசமாதேவி உள்ளம் கொதித்து மணிமேகலையைத் துன்புறுத்த நினைத்தாள். தவத்திற் சிறந்த மணிமேகலைக்குச் சிறை தகாது என்று அரசனுக்குச் சொல்லி விடுதலை செய்து, அன்புடையவள் போலத் தன் அரணம்னைக்குக் கொண்டு வந்து வைத்துப் பித்து மருந்து ஊட்டினாள்; மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலைக்கு அறிவு திரியவில்லை. கயவனைப் பொருள் கொடுத்துத் தவம் கலைக்க ஏவினாள்; மந்திரம் ஓதி ஆணுருக்கொண்டிருந்த மணி மேகலையைக் கண்டு திரும்பினான். நோயென்று சொல் பரப்பிப் பட்டினி போட்டாள்; ஊணொழி மந்திரம் கற்ற மணி மேகலைக்குப் பசி எடுக்கவில்லை. துன்பம் மணிமேகலையைத் தொடராமை கண்டஞ்சிய தேவி ‘மகன் துயர் தாங்காது செய்தேனைப் பொறுக்க’ என்று தொழுதாள். ‘உன் மகன் வினைக்கேற்ப எவ்வுடம்பு எடுத்தானோ? உண்மைக்காதல் உனக்கு மகன்மேல் இருக்குமாயின், உடம்பெடுத்த எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு’ என்று மணிமேகலை அறிவுறுத்தினாள். 24. ஆபுத்திரனாடு அடைந்த காதை தன் சூழ்ச்சியே உதயகுமரன் அழிவுக்குக் காரணம் என்று உணர்ந்த சித்திராபதி பேர்த்தி மணிமேகலையை மீட்டுக் கொண்டுவரும் எண்ணத்தோடு இராசமாதேவியிடம் சென்றாள். ‘இவ்வூருக்கும் ஒரு பேரழிவு வரும்போலும். நெடுமுடிக்கிள்ளி சோலையிடைக்கண்ட ஒருத்தியைப் புணர்ந்தான். அவள் பிரிய வருந்தினான். ‘நீ புணர்ந்தவள் நாக நாட்டரசன் வளைவணன் மகள் பீலிவளையாவாள். கருவுற்ற அவள் இனி வாராள். ஈன்ற மகனே வருவான். இந்திரவிழாச் செய்யத் தவறினால் காவிரிப் பூம்பட்டினம் கடல் கொள்ளும். அதனால் விழிப்பாயிரு’ என்று ஒரு சாரணன் முன்னுறுத் தினான். ‘தன் பெயருடையாளை (மணிமேகலையை)த் துன்புறுத்தினால் மணிமேகலா தெய்வம் கேடுசெய்யும். ஆதலின் அவளை என்னிடம் தருக’ என்று வேண்டினாள் சித்திராபதி. தீயொழுக்கம் உடைய உன் மனைக்கு அவள் வாராள் என்று இராசமாதேவி மறுத்த பின்னர், மணிமேகலை வான் வழிச்சென்று ஆபுத்திரனாடு அடைந்து ஒரு பொழிலில் தங்கியிருந்தாள். 25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை மணிமேகலை தங்கிய பொழிலுக்குப் புண்ணியராசனும் வந்தான். ‘உன்கைப் பாத்திரமே என்கை வந்தது. மணிபல்லவஞ் சென்றால் முற்பிறப்பைத் தெளிவாய்’ என்று பணிந்து அத் தீவிற்குப் புறப்பட்டாள் மணிமேகலை. அரசனும் (ஆபுத்திரனும்) பின்னர் அங்குச் சென்று தரும பீடிகையால் தன் பிறப்பு உணர்ந்தான். அவனை அங்கு விட்டுச் சென்றதற்காக உயிர் நீத்த ஒன்பது செட்டிகளின் என்புகளையும் புன்னை மரநிழலில் புதையுண்ட அவன் என்பினையும் தீவதிலகை காட்டினாள் ‘பீலிவளை பெற்ற மகன் கப்பல் கவிழக் கடலில் மறைந்தான். அத்துயரச் செய்தியைக் கம்பளச் செட்டியிடம் கேட்ட சோழன் கிள்ளி மகனைத் தேடி அலைந்து மறந்தான் இந்திரவிழாச் செய்ய. அதனால் காவிரிப்பூம் பட்டினம் கடலில் முழுகிற்று. ‘அறவணவடிகளும் மாதவி சுதமதியரும் வஞ்சி மாநகர் சென்றுவிட்டனர்’ எனத் தீவதிலகை மேகலைக்குச் செய்தி சொல்லினள். ஆபுத்திரனாகிய புண்ணியராசன் தன் என்பைத் தோண்டிப் பழைய உடல்மேற் பற்றுக்கொள்ள, இதற்கா நீ இங்கு வந்தாய் என்று இடித்துரைத்தாள் மணிமேகலை. ‘அறம் எனப்படுவது உண்டியும் உடையும் உறையுளும் உயிர்க்கெல் லாம் அளிப்பதுவே’ என அரசனுக்கு அருளறம் மொழிந்து வஞ்சிக்கு ஏகினாள். 26. வஞ்சிமாநகர் புக்க காதை வஞ்சிநகர் சேர்ந்த மணிமேகலை கண்ணகி கோவலன்தம் தெய்வப் படிமங்களைத் தொழுது அழுதாள். அவள் முன் கண்ணகி தோன்றி ‘என் கணவன் கொலைக்கு அவன் முற் பிறவியில் ஒருவனைக் குற்றஞ்சாட்டிக் கொல்வித்தான் என்ற உண்மை அறிந்த பின்னும், சீற்றங்கொண்டு மதுரையை அழித்தேன். அவ்வினை என்னை விடாது. இன்னும் பல பிறப்பு எடுத்து உழன்று கபில நகரை அடைவோம். உன் தந்தையுடனே இந்திரவிகாரையைத் தொழுத புண்ணியத்தால் முதல்வன் அறங்கேட்டுப் பிறவாமை எய்துவோம்’ என்று தன் பிறவி முடிபை வெளியிட்டாள். பிடகநெறி நிற்க என்றும், பிறசமயத் திறங்களை அறிந்துகொள்ளும்பொருட்டு வேற்றுருக்கொள்க என்றும் கண்ணகியார் உரைப்ப, மந்திரம் ஓதி மாதவன் வடிவு கொண்டு மணிமேகலை வஞ்சியின் புறஞ்சேரியில் தங்கினாள். 27. சமயக்கணக்கர்தம் திறம்கேட்ட காதை மாதவன் வடிவாய மணிமேகலை பல்வேறு சமயத்தறி ஞர்களை அணுகினாள். அளவை, சைவம், பிரமம், வைணவம், வேதம், ஆசீவகம், சமணம், சாங்கியம், வைசேடிகம், பூதம் முதலாய நெறிகளின் கோட்பாடுகளை அவரவர் வாய்க் கேட்டுக் கொண்டனள். மறுப்புக்கூற விரும்பவில்லை. முற்பிறப்பு அறிந்தோர் உண்டோ? என்ற பூதவாதியை நகைத்து, அனுமான அளவையின் இன்றியமையாமையை அவனுக்கு உரைத்தனள். 28. கச்சிமாநகர் புக்க காதை மணிமேகலை புறஞ்சேரிவிட்டுப் பல்வகை அமைப்புக் களையும் பார்த்து மகிழ்ந்து வஞ்சிநகருட் சென்றாள். கோவலன் தந்தையும் துறவியுமான மாசாத்துவானைக் கண்டு வணங்கி னாள். கோவலன் கண்ணகியார்க்கு உற்ற துயர்கேட்டுத் துறவு பூண்டதையும், தன் முன்னோன் ஒருவன் இந்நகரில் எழுப்பிய புத்த சயித்தத்தைத் தொழ வந்ததையும், அறவணர் தாயரொடு காஞ்சிக்குச் சென்றதையும், காஞ்சி மழைவளமின்றிப் பசிப்படு வதையும் மாசாத்துவான் மேகலைக்குத் தெரிவித்தான். அவளும் பாத்திரம் கைக்கொண்டு வான்வழியாகக் கச்சிக்குச் சென்று இளங்கிள்ளி பகவனுக்கு எடுத்த சேதியத்தைத் தொழுதிருக்கும்போது, அரசன் அமைச்சரொடு சென்று அடிபணிந்தான். ‘ஒரு தெய்வத்தின் ஏவற்படி, கோமுகிக்குளமும் சோலையும் விளங்கும் மணிபல்லவம் இங்கு அமைக்கப் பட்டுள்ளது; காண்க’ என்றான். கண்டு உவந்த மணிமேகலை பிறப்புக் காட்டிய தரும பீடிகையும் தீவதிலகை கோயிலும் மணிமேகலா தெய்வக்கோயிலும் கூட அமைத்து விழாச் செய்யச் சோழ வேந்தனை ஏவி, எவ்வுயிர்க்கும் பசிநோய்க்குச் சோற்று மருத்துவம் செய்தாள். தாயரையும் அறவணவடி களையும் கண்டபின் தான் கொண்டிருந்த ஆண்வேடத்தைக் களைந்தாள். 29. தவத்திறம் பூண்டு தருமம்கேட்ட காதை அறவணவடிகட்கு ‘உருமாறி வஞ்சியிற் பல்சமய நுண் பொருள் கேட்டேன். அவை என் உள்ளம் தொடவில்லை. மெய்ப்பொருள் அருளுக’ என்று வேண்டினாள் மணிமேகலை. ஆதிசினேந்திரன் கொண்ட அளவைகள் காட்சி அனுமானம் என்னும் இரண்டே. காரியானுமானமே பிழைபடாதது. அதுபக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்று உறுப்புக்களை உடையது. நன்பக்கம், நல்லேது, நல்ல திட்டாந்தம், பக்கப் போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி என அவை கூறுபடும். இங்ஙனம் மெய்ப்பொருள் காட்டும் நுண்கூறுகளை எடுத்துக் காட்டுக்களோடு விரித்து விளக்கிய அறவணர், இம்முறையால் மெய்யும் பொய்யும் ஐயமின்றி ஆய்ந்துகொள் என்று அருளினார். 30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை முற்பிறப்பு அறிந்த மணிமேகலை புத்த தன்ம சங்கம் என்னும் மும்மணிகளை மனமொழி மெய்களால் வணங்கிப் புத்தன் திருவடியே சரணாகப் புத்த சங்கத்தைச் சேர்ந்தாள். போதி முதற்புத்தன் திருவாய் மலர்ந்ததும் எண்ணில் புத்தர்கள் ஓதியதும் ஆன அருளற நெறியை அறவணர் கூறுவாராயினர். பன்னிரு நிதானம், நால்வகை வாய்மை, ஐவகைக் கந்தம், அறுவகை வழக்கு, நால்வகை நயம், நால்வகை வினாவிடை என்று மெய்ப்பொருள்களை வகைகளோடு விளக்கியபின், கட்டும் வீடும் தத்தம் வினையால் வருவன என்றும், எத் தீவினைக்கும் காமம் வெகுளி மயக்கங்களே காரணம் என்றும், அவற்றைக் கடியும் வழிகள் இவை என்றும் அறுதியிட்டுரைத்து, மணிமேகலையின் மனத்திருள் நீங்க அறிவொளி ஏற்றினார் அறவணர். தவம்பூண்டு புத்ததருமம் கேட்ட மணிமேகலை, காஞ்சியில் தன் பிறவியற நோற்பாளாயினாள். சிலப்பதிகாரத் திறன் இலக்கியங்களைப் புறம்போய் ஆராயக்கூடாது; நூலளவில் நின்றே திறங்காண வேண்டும். இந்நெறி பல இலக்கியங்கட்குப் பொருந்தும்; ஏனெனின், பல இலக்கியங்கள் சில மூல இலக்கியங்களின் சாயல்கள்; பிறர் இட்ட விதைப் பயனைத் தொகுத்த குவியல்கள். அந்நூல்களின் ஆசிரியர்களோ இலக்கிய உழவர்கள் அல்லர்; இலக்கிய வணிகர்கள். மூல இலக்கியம் என்பது நூல்களைப் பார்த்து எழுதியதன்று; நேரடி யாக மக்கள் வாழ்ககையைப் பார்த்து எழுதியது. ஆதலின், அங்ஙனம் பார்வை செலுத்திய ஆசிரியன் சிறப்படைகின்றான். காலந்தோறும் மக்கள் வாழ்வில் இலக்கியம் எழுதத்தக்க நிகழ்ச்சிகள் நடக்கவே செய்கின்றன; எனினும் அவற்றை அவ்வண்ணம் கண்டு எழுதவல்ல இலக்கியக் கண்ணோடிகள் அல்லது இலக்கிய முதல்வர்கள் காலந்தோறும் தோன்றுவ தில்லை. அம்முதல்வர்களின் வரலாற்றை அறியும்போதுதான் அம்மூல இலக்கியங்கள் எழுதப்பட்டதற்குக் காரணம் தெரிய வரும். எனவே மூல இலக்கியங்கட்குப் புறம்போய் ஆராய்வதும் ஒரு நெறியாகும். தமிழுக்கு ஓரு சிறப்பு மூல இலக்கியங்கள் பலவுடைமை; எனினும், அவற்றைத் தந்துதவிய புலவர்களின் வரலாறு நமக்குக் கிடையாது. இது தமிழ் இலக்கிய ஆராய்ச் சிக்கு நீங்காக் குறையாகும். இக்குறை நீங்கிய ஒரு பழந்தமிழ் முதல் நூல் சிலப்பதிகாரம். ஆக்கியோன் வரலாற்றை ஆராய்ச் சிக்கு வேண்டுமளவு அவன் வாய்ச்சொற்களாலே அறியும் பேறும் பெற்றுள்ளோம். ஆ சிலப்பதிகாரம் இளங்கோவின் நன்கொடை. அதனை யாக்கும்படி கண்ணகி வரலாற்றைக் கூறிய சாத்தனார் தூண்ட வில்லை; கண்ணகி வான் ஏகிய செய்திக் குன்றக்குறவரிடம் கேட்ட செங்குட்டுவன் தூண்டவில்லை. செங்குட்டுவனுக்கும் இளங்கோவுக்கும் குறவர் சொல்லிய செய்தியை விளக்கிய புலவர் சாத்தனார்க்குக்கூட நூல் எழுதும் கருத்து உதிக்க வில்லை. இளங்கோவுக்குக்கூடச் செய்தி அறிந்த அப்பொழுது அக்கருத்து இல்லை. அரசியல் பிழைத்தவர் தாமே அழிவர் என்ற உண்மையையும், வினை கட்டாயம் வந்து பயனைத் தரும் என்ற உண்மையையும் அறியும் அளவிற்கே கதை இடங் கொடுத்தது. பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற உண்மையை அறிதற்கு அப்போது அவர் தெரிந்திருந்த ஒரே செய்தி வானவர் வந்து கண்ணகியைத் தொழுது மலர்சொரிந்து அழைத்துச் சென்றதுவேயாகும். இதனை மதுரைக் காண்டத்தின் இறுதியில், “அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ கானமர் புதிகுழற் கண்ணகி தானென்” (3036-9) என்று கூறிவிட்டார். குறவரிடமோ சாத்தனாரிடமோ கண்ணகி செய்தி கேட்டவுடன், மூன்று கொள்கைகளை நாட்டச் சிலப்பதிகாரம் எழுதுவேன் என்று இளங்கோ எழுதியிருப்ப ரேல், வஞ்சிக் காண்டம் கருக்கொள்ளற்கு இடமில்லை. வானவர் செய்தியைச் சொல்லி முடித்த மதுரைக் காண்டத் தோடு நூல் முடிந்திருக்க வேண்டும். அடிகட்கு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் என்று பிறந்தது? பத்தினி வானோர் ஏத்திய அளவாகவே நின்றாள். இன்னும் உலகோரால் தொழப்படவில்லை. குன்றக்குறவர்கள் தெய்வமெனத் தொழுதார் என்போமேல், அவர் ஆசிரியர் கருத்துப்படி உயர்ந்தோர் ஆகார். செங்குட்டுவன் பத்தினிப் புகழை இமயம் வரை பரப்பிக் கல்லெடுத்து வந்தான். வஞ்சியிற் பத்தினிக்கோட்டம் அமைத்தான். பத்தினி விழா அயர்ந்தான். வடநாடும் கொங்கும் மாளவமும் இலங்கையும் கண்ணகிக்குப் படிமம் எழுதி விழாக் கொண்டாடின. பாண்டி நாடும் சோழ நாடும் பத்தினிக்கு விழாவணி நிகழ்ந்தின. இன்னணம் முத்தமிழ் வேந்தர்களும் அயல்நாட்டு வேந்தர்களும் செய்த விழாக்களை உட்கொண்டே, பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்று ஓர் உண்மை அறிவிக்க நினைந்தார் இளங்கோ. கண்ணகிக்குக் கல்லெடுப்பு, கோட்டம் அமைப்பு, விழாவெடுப்பு முதலிய அரசியற் செல்வாக்குக்குப் பின்னரே, இளங்கோ நூலியற்றத் தொடங்கினார் என்று துணிதற்கு, “இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்ப” (1796-9) என்ற அடிகளே போதும், ஐயை கோட்டத்திருந்த கண்ணகியின் எதிர்காலப் புகழை இங்ஙனம் பூசைமகள் சாலினி கூறினா ளென இளங்கோ முன்கூட்டியே தெரிவிக்கின்றார். எங்ஙனம் அவரால் தெரிவிக்க முடிந்தது? பன்னாடுகள் கண்ணகிக்குச் செய்த பெருமைகளைக் கண்டபின் நூல் தொடங்கினார் என்பதே இதன் கருத்து. மேலும் இச்சாலினி புகழ்ச்சியில் வானோர் தொழுகை சுட்டப்படாமை காண்க. இதனால் கண்ணகி உலகப்புகழ்பெற்ற பின்னரே நூல் எழுந்தது என்பது பெறப்படும். செங்குட்டுவன் முதலியோர் மேற்கொண்ட சிறப்புக் களால் கண்ணகி நல்லாள் ஒரு காப்பியத்திற்குத் தலைவியாகும் தகுதி பெற்றுவிட்டாள். இத்தகுதிப்பாட்டிற்குப் பின்னரே இளங்கோ நூல் வரைந்தார் என்றாலும், அந்தப் ‘பின்’ என்ற காலம் எது? தகுதி பெற்றிருந்த கண்ணகியை இலக்கியப் பாவையாக்க வேண்டும் என்ற உணர்ச்சியை இத்துறவி என்று பெற்றார்? எவ்வாறு பெற்றார்? தமக்கு நூல் பாடும் உணர்வு பிறந்த திறத்தை அவரே சொல்லுகின்றார். செங்குட்டுவனும் மன்னர் பிறரும் தெய்வத்தை வாழ்த்தி வரம் பெற்றுப் பத்தினிக் கோட்டத்தை விட்டுச் சென்றனர். பின் ஒரு நாள் பத்தினியை வழிபடக் கோட்டத்திற்கு நான் போனேன். கண்ணகி பூசை யாட்டி தேவந்தி மூலம் வெளிப்பட்டு, ‘அரச மண்டபத்துத் தந்தைக்கு அருகில் நீ இருந்தாய். அரசாளும் திரு உனக்கு உண்டென்று அங்குப் போந்த ஒரு கணிவன் உரைத்தான். அவனைச் சினந்து பார்த்தாய். செங்குட்டுவன் கொண்ட கவலை நீங்கும்படி, நாடாளாது துறவு பூண்டாய். வீடாளும் வேந்து ஆயினாய்’ என்று என்னை நோக்கிப் புகழ்ந்தான். “யானும் சென்றேன் என்னெதிர் எழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி ............................................................................................................. அந்தமில் இன்பத் தரசாள் வேந்தென்று என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி” (4937-50) எனச் சிலப்பதிகாரம் பிறந்த வரலாற்றைச் சுட்டுகின்றார். என் வரலாற்றைக் கூறிய கண்ணகியின் வரலாற்றைக் கூறினேன் என்று தம்மொடு தொடர்புபடுத்திக் காட்டுவதிலிருந்து இவர் தன் வரலாறு கேட்டது முந்தியது என்றும், சிலப்பதிகாரப் படைப்பு பிந்தியது என்றும் காலம் அறியப்பெறும். மேலும் இத்தொடர்பு உணர்ச்சியே சிலப்பதிகாரம் எழுதத்தூண்டிய உணர்ச்சி என்றும் கருதத்தகும். இளங்கோ மணமாகிப் பின் துறவு பூண்ட துறவோர் அல்லர். மணமாகா மாணவ நிலையில் துறவியானவர். அவர் துறவு மேற்கொண்டது ஏன்? (அண்ணன் இருப்ப) நீ அரசு பூண்பாய் என்று முறை மாற்றம் சொல்லிய சோதிடனைச் சினத்தளவில் தம் வெறுப்பைக் காட்டினாற் போதாதா? ஏன் இளமைத்துறவு கொள்ளத்துணிந்தார்? இளங்கோ சோதிடனை வெறுத்தளவில் அமைவது செங்குட்டுவன் தன் ஐயத்தையும் கவலையையும் போக்கிவிடாது. சோதிடன் சொல் பலிக்கும் என்றே குட்டுவன் நினைப்பான். ஆதலின் கணிவனை வெறுப் பதைக் காட்டிலும் அவன் எது தனக்குக் கிடைக்கும் என்றானோ அதனையும் அதுவரும் சூழ்நிலையையும் வெறுத்தல் வேண்டும் என்றும், தன் வெறுப்பைச் செயலாற் காட்டவேண்டும் என்றும் இளங்கோ நெஞ்சம் துணிந்தது. ‘இக்கணிவன் சொல் எம்மிடம் பலியாதது ஒருபுறம் இருக்க, மணந்தால் பிறக்கும் என் குழந்தைகளிடம் பலித்தாலும் பலிக்கலாம்; எதற்கும் இடமின்றி மணவாத்துறவு கொள்வேன்’ என்று கொள்கைகொண்டார். ‘செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க’ என்பதனால் இளங்கோவின் துறவுணர்ச்சிக்குக் காரணம் உடன் பிறப்பின் மேல் எழுந்த அன்புணர்ச்சி என்று அறிகின்றோம். அடிகள் வாழ்வில் நல்ல பல நிகழ்ச்சிகள் நடந்திருத்தல் கூடும் அவற்றையெல்லாம் அவர் நமக்குக் கூற விரும்பவில்லை. தம் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றத்தை மட்டும் தெரிவிக்கின்றார். அதனைக் கண்ணகி வாயிலாகத் தெரிவிக் கின்றார். அதுவும் நூலின் இறுதியில் சுருங்கச்சுட்டி முடிக்கின் றார். உடன் பிறப்பின் அன்பால் துறவு தழுவினேனே யன்றிப் பெண் இழிவென்று கருதித் துறவு கொண்டிலேன் என்று காட்டுதற்கும், இல்லறஞ் சிறந்த பத்தினியைத் தொழும் துறவியே நான் என்று காட்டுதற்கும், கண்ணகி வரலாற்றை எழுதத் தம்மைத் தூண்டிய உணர்ச்சியைக் காட்டுவதற்கும் இளங்கோ தம் வாழ்வின் ஒரு குறிப்பை அருளினார். தம் பணிவு தோன்ற அக்குறிப்பை நூலின் இறுதியில் சில சொற்களால் சொல்லி முடித்தார். உள்ளம் உயர்ந்த ஒரு துறவி சிலப்பதிகார நூலுக்கு ஆசிரியன் என்ற அறிவோடு நாம் நூலுள் புகும்போது, அந்நூல் முழுதும் அவர்தம் உயர்ந்த உள்ளம் ஆட்சி செய்வதைக் காண்கின்றோம். அடிகளைப் பெற்றெடுத்த மொழித்தாய்க்கு நாமும் பிறந்தோம்; அவர் நூலை எழுதிய மொழியிலேயே படிக்கும் பேறுபெற்றோம் எனப் பெருமிதம் கொள்கின்றோம். இ முதல்வன் நல்லியல்புகளை அறிந்த நாம் இனி அவன் படைப்பின் நற்கூறுகளைக் காண்போம். விரிப்பதற்கு இக் கட்டுரை இடந்தராது. ஆதலின் சுருக்கமாகத் தொகுத்துச் சொல்லுவன். சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத் துறையில் தந்த புதுமைகள் பலப்பல. காப்பியங்கட்கு ஆண்பாலார் தலைவர் களாகவும் அவருள்ளும் அரசன் அனையோர் சிறந்த தலைவர் களாகவும் எண்ணப்படுதல் உண்டு. ஒரு குடும்பப்பெண் கண்ணகி இக்காவியத் தலைவி. அவள் அரசர்கள் கோட்டம் அமைத்துப் பாராட்டும் தெய்வமாகவும் அரச துறவிக்குப் பாடற்பொருளாகவும் ஆகின்றாள். வீரஞ்சான்ற ஆடவர்க்குக் கல்லெடுப்பது மரபு. மறக்குடியிற்கூடப் பிறவாது அறக்குடியிற் பிறந்த இல்லாள் இமயக்கல் எடுப்பதற்கு உரியவள் ஆகின்றாள். “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர” (தொல். 1005) என்று தொல்காப்பியர் வீரன் கல்லெடுப்புக்குக் கூறிய துறை களை இளங்கோ வஞ்சிக்காண்டத்தின் காதைப் பெயர்களாகப் பத்தினிக் கல்வெடுப்புக்கு மாற்றியமைத் திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரம் தமிழ் நிலத்துப் பிறந்து தமிழே பேசி வாழ்ந்து புகழ்வளம் பெற்ற மக்களைத் தலைவர்களாகக் கொண்ட நாட்டுக் காப்பியம். இன்னதற்காக இந்நூல் எழுதப்படுவது என்ற குறிக்கோட் காட்சியைச் சிலப்பதிகாரமே முதன்முதல் காட்டுவது. துறவி பாடிய நூல் இயற்கை வாழ்த்தோடு தொடங்குகின்றது. ஆசிரியன் தன் வரலாற்றின் ஒரு பகுதியைக் கற்பவர்க்கு அகச் சான்றாகக் காட்டுவது இந் நூலேயாகும். சிலப்பத்திகாரத்தைத் தமிழின் முதற்பெருங் காப்பியம் என்று காலச்சிறப்புக் கூறுவர். அங்ஙனம் தோன்றிய முதற் பெருநூல் தமிழக மூவேந்தர்க்கும் உரியதாய், முந்நாட்டினையும் பற்றியதாய், புகார், மதுரை, வஞ்சி என்னும் முத்தலை நகரங் களால் காண்டப்பெயர் அமைந்ததாய், இயலிசை நாடகம் என்னும் துறைப் பாடல்கள் உடையதாய், யாப்பிற் பலவகை கண்டதாய், உரையிடையிட்ட பாட்டு நடைத்தாய், புகார்க் காண்டம் முற்றிற்று என்பதுபோல் நூலறுதி காட்டுவதாய்ப் பொலிந்து இலக்கிய ஞாயிறாக விளங்குகின்றது. தமிழிசை மறுபிறவி எடுத்து வளர்வதற்கும் யாழ்நூல் தோன்றுவதற்கும் அடிப்படைச் செல்வம் நிரம்பியது சிலப்பதிகாரம். ஐந்திணை வளங்கள், திணைமக்களின் பழக்கவழக்கங்கள், பல்சமயத் திறங்கள், அயல்நாட்டுறவுகள், தமிழக ஆட்சி முறைகள், மன்னர் வரலாறுகள், தமிழ் மொழியின் ஆற்றல் என்றினைய வெல்லாம் காட்டும் ஒரு தமிழ் நாகரிகக் களஞ்சியம் சிலப்பதிகாரம். ஈ ஆசான் தனிச்சிறப்பையும் நூலின் பல்சிறப்பையும் அறிந்த நாம் இனி நூலின் அமைப்பைக் காண்போம். சிலப்பதிகாரம் தமிழில் முதற்கண் எழுந்த காப்பியம்; அதுவும் ஒரு நாடகக் காப்பியம் என்று எல்லோரும் சொல்லக் கேட்கின்றோம். நாம் இன்று படிக்கும் நாடக நூல்கள் காட்சிகளாக நின்று காலம், களம், கூற்று என்ற வகைப்பட்டு முழுப் பேச்சாக அமைந்தி ருக்கக் காண்கின்றோம். ஆதலின் சிலப்பதிகார நூலை விரிக்கும் போது நாடக காப்பியம் என்ற தோற்றம் யார் மனத்தும் படுவதில்லை. ஏனெனின் நாடக நூலின் தோற்றம் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று இன்றைய நூல்களை வைத்து ஒரு வடிவு செய்துகொண்டோம். அவ்வடிவொடு இருந்தாற்றான் நாடக நூல் என்ற எண்ணம் சட்டெனப் பிறக்கின்றது. தமிழ் மொழியில் உள்ள நாடக நூல் ஏன் வேறொரு வடிவில் இருத்தல் கூடாது? என்று ஓர்தல் வேண்டும். நடிக்கும் வகையிலன்றி எழுத்து வகையான் அமைந்த நாடக இலக்கியத்துக்கு வடிவு வரையறையில்லை; பொருளைச் சொல்லிச் செல்லும் முறையில் நாடகப் பண்புகள் அமைந்துள்ளனவா? என்று காணலேதகும். அங்ஙனம் சிலப்பதிகாரத்தைக் காண்போம். ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்று பதிகம் கூறுதலால், உரை நடையும் பாட்டும் அமைந்த ஒரு கூட்டு நடை நூலென்று சிலப்பதிகாரத்தை நாம் அறிகின்றோம். ‘குடத்துப் பால் உறையாமையும் குவியிமில் ஏற்றின் மடக்கண்ணீர் சோர்தலும்’ (2783) ‘கமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட’ (4632) என்று வரும் பகுதிகளும் காண்டங் களின் இறுதியிலும் நூலின் இறுதியிலும் வரும் கட்டுரைகளும் உரைநடையால் அமைந்தவை என்று நாம் சொல்லுகின்றோம். இஃது ஆராய்தற்கு உரியது. இவை அடி தளை என்ற சில யாப்பு முறை இல்லை என்பதைத் தவிர எதுகை மோனையோட்டம் உடையனவாகவே உள்ளன. உரைப்பாட்டு மடை என்று குறிக்கப்பட்ட சில பகுதிகள் (1803-23) உரைதழுவா நல்ல பாவாகவே உள்ளன. அன்றியும் இப்பகுதிகள் விரல்விட்டு எண்ணத்தக்கனவேயொழிய நூல் முழுதும் பரந்து காணப்பட வில்லை. ஆதலின் உரை என்பது வேறாதல் வேண்டும். மேலும் நாம் உரை என்று சொல்லி வரும் பகுதிகள் பாடலாகவே ஆக்கியிருப்பினும் நூலின் சிறப்புக்குக் கேடொன்றும் இல்லை. உரைநடை கலக்கவேண்டிய கட்டாயம் ஆசிரியர்க்கு ஏன் வந்தது? இந்நடைத் தழுவலால் அவர்கொண்ட பயனென்ன? மங்கல வாழ்த்துப் பாடலைக் காண்மின். ஆங்கு, அதனால், அவளுந்தான், அவனுந்தான், அவரை, அவ்வழி என்று அப் பாடலில் இடையிடையே வருவன உரைச்சொல் லாகும். இரண்டு பாட்டின் கருத்துக்களை இணைக்க இடையே ஒரு பாட்டு மடுக்காது ஓரிரு சொல்கொடுத்துத் தொடர்ச்சி காட்டுகின்றார் இளங்கோ. நிகழ்ச்சிகளுக்குப் பாட்டு எழுதி அவற்றின் தொடர்புக்கு ஏற்ற உரைச்சொல்லைப் பொருத்து கின்றார். இப்புது நடையால் கதைப் போக்கு விறுவிறுப்படை கின்றது. தொடர்பு எளிதாக அறியப்படுகின்றது. கண்ணகி கோவலன் பிறப்போடு இயல்புகளைச் சொல்லிய ஆசிரியர் ‘அவரை’ (40) என்ற உரைச் சொல் பெய்து அவர் தம் திருமணத்தைப்பற்றி விரிக்கின்றார்; நாடகம் காண்பார்க்கு, காட்சிகள் தடையின்றி அடுத்து வருதல் வேண்டும். அப்பொழுது தான் மேற்செல்லும் வேட்கை ஏற்படும் சிலப்பதிகாரம் நாடக நூலாதலின் காட்சிகளுக்கிடையே தொடர்பு சுட்ட ஒரு முழுப்பாடல் கொடுத்துக் காலம் நீட்டியாது தனிச் சொல்லை படுத்தினார். கதைப் போக்கின் ஓட்டத்தை வேகப்படுத்தி னார். ‘உரையிடையிட்ட’ என்பதற்குச் ‘சொல்லிடையிட்ட’ என்பதுவே பொருள் (உரை-சொல்). உரை குறித்தெழுத்த என் கருத்தைக் கீழ்வரும் பகுதிகள் இன்னும் தெளிவாக்கும். கோவலன் கொல்லப்பட்டான் என்ற ஊர்ப்பேச்சைக் கேட்டுவந்த ஒருத்தி கண்ணகி முன் சொல்ல மாட்டாது நிற்கின்றாள். கண்ணகியோ ‘என் காதலன் இன்னும் வரக் காணேன் என்னமோ’ என்று புலம்பிக் கேட்கின்றாள். “தஞ்சமோ தோழி தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதொழி சொன்னது அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே” (2936-44) இவ்விடத்து இரு பாட்டிற்கிடையே ‘சொன்னது’ என்ற ஒரு சொல்லை இடையே தந்து இளங்கோ அவ்வளவில் நின்று, கதையுணர்ச்சியைப் பெருகச் செய்திருப்பதை பார்க்கின்றோம். நாடகந்தழுவாத ஓர் காப்பியமாயின், ‘சொன்னது’ என்ற தொடர்பைப் பாடல் நடையில் காட்டியிருக்கும் என்று அறிக. உ நாடகக் காப்பியம் நம் சிலப்பதிகாரம் என்பதற்கு நூலின் தொடக்கமே ஒரு சான்றுகாண். திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் பூம்புகார் போற்றுதும் மாமழை போற்றுதும் என்ற தன்மைப் பன்மை நடையில், நடிப்பதற்குமுன் நாடக மாந்தர் கூடித் தொழுவதுபோல் அமைந்திருத்தல் காண்க. திங்களை முன்னர்ச் சொல்லுதலின் கூத்துக்குரிய இரவுக்காலமும் குறிப்பிற் பெறப்படும். இன்னொரு சான்று, நிகழ்ச்சி கூறுதற்கு முன் அதற்குத் தக்க கால இடச் சூழ்நிலை களை நாடகக் கவிஞன் புனைகின்றான் கேவலனும் கண்ணகியும் இன்பம் துயத்தனர் என்ற நுகர்ச்சிக்கு இளங்கோ அமைத்துக் காட்டும் இனிய செவ்வி வருமாறு:- “கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழி ...................................................................................................................... கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும் நிரைநிலை மாடத் தரமியம் ஏறிச் சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக் கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிரொருங் கிருந்த காட்சி போல” (79-99) செல்வ இருக்கையும் தென்றல் நுகர்ச்சியும் நிலாமுற்றமும் பூப்படுக்கையும் ஆகிய இன்பச் சூழலைக் காட்டுகின்றார். நாடகத்துக் கண்முன் தோன்றும் சுற்று நிலையை நாடக இலக்கியம் படிப்பார்க்கு எழுத்து வடிவில் காட்ட வேண்டியி ருத்தலால், சிலப்பதிகாரத்தில் இயற்கை வருணனை காதை காதைகளாகப் பெருகியிருக்கின்றது. இந்நூலில் கதை நிகழ்ச்சிகள் வரும் பகுதிகளைத் தொகுத்துப் பாருங்கள். சில பக்கங்கட்கு மேலிரா. 175 அடிகளுடைய அரங்கேற்று காதையில் ஓர் இருபத்தைந்து அடிகளே கதை நடப்பிற்கு உரியன. 84 அடிகள் அமைந்த அந்தி மாலைச் சிறப்புச் செய்காதையில் காதை நிகழ்ச்சியே இல்லை. 240 அடிகள் செல்லும் இந்திர விழவூரெடுத்த காதையில் நாடக மாந்தர் செயல் யாதுமில்லை. நூலோட்டம் விட்டுக் காட்டக்கூடாது என்பதற்காக இந்திர விழாவில் கண்ணகி கண் இடந்துடித்தது; மாதவி கண் வலந்து டித்தது என்று ஆறடிகளில் முடிக்கின்றார். இந்நோக்கொடு காதைகளை ஆராயின், கனாத்திறம் உரைத்த காதை, அடைக்கலக்காதை, கொலைக்களக்காதை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை என்ற சிலவே கதை நிரம்பிய பகுதிகளாக உள, மற்றையவெல்லாம் காலம், இடம், காட்சிகளைப் புனையும் நாடகத் திறங்களாக உள. ஊ கோவலன் கண்ணகியாரைப் பற்றி இலக்கியம் காண நினைத்த இளங்கோ அன்னவர் வாழ்ந்த இடம், குழந்தைப் பருவம், கொண்ட பழக்க வழக்கங்கள், கற்ற கலைகள், மதுரைக்கு ஏகியவழி, இடையிடைத் தங்கிய இடங்கள், ஆண்டுளோர் இன்னோரைப் பற்றிச் சொல்லும் குறிப்பு, மதுரைப் புறஞ்சேரி, மாதரி இல்லம். கோவலன் வெட்டுண்ட களம் என்ற பல் கூறுகளைத் தாமே நேரிற் சென்று கண்டும் கேட்டும் செய்தி பல தொகுத்தவர் என்பது என் துணிபு. தங்காலத்து நடந்த நிகழ்ச்சிகளை எழுதப் புகும் எவரும் இங்ஙனம் நேர்முகமாக வேண்டியன அறிந்து தெளிந்துகொள் வர். காவியத் தலை மக்களைக் குறித்த செய்தி நிரம்பக்கிடைத்த போதிலும், இளங்கோப்புலவன் நிகழ்ச்சிகளை வாழ்க்கை வரலாறு எழுதுவார்போல் பிறப்பு முதல் ஆற்றொழுக்காக எழுதிச் செல்லவில்லை. திருமணந் தொடங்கிப் பாடுகின்றார். இரண்டாவது காதையில் கோவலன் கண்ணகியொடு இன்பந்துள்க்கின்றான். மூன்றாவது காதையில் கண்ணகியைப் பிரிந்து மாதவியொடு இன்புறுகின்றான். ஐந்தாவது காதையில் மாதவியைப் பிரிதலும் கண்ணகியைச் சேர்தலும் கூறப்படு கின்றன. ஏழாவது காதையில் மாதவியைக் கடற்கரையில் பிரிகின்றான். ஒன்பதாவது காதையில் கண்ணகியை அடைந்து மதுரைக்குச் செல்கின்றான். இன்னணம் கோவலன் வாழ்க்கை இளங்கோவால் வேகப்படுத்தப்படுகின்றது. நாடகக் காட்சிகள் இன்பியலும் துன்பியலுமாக விரைந்து மாறுகின்றன; எனினும் இச்செய்திகளே கோவலனைப் பற்றி இளங்கோ அறிந்தவை என்று எண்ணவேண்டா. அவனைக் குறித்துத் தெரிந்த செய்திக் குறிப்புக்கள் புகார் நகரத்து உரியவையாயினும், நாடகக் கவிஞன் அவற்றைப் புகார்க் காண்டத்துக் கூற விரும்பவில்லை. இலக்கியம் செய்தித்தாள் அன்று; வரலாற்று நூலும் அன்று; தலைமக்களின் செய்திகளை வெளிப்படுத்தும் இடத்தாலும் முறையாலும் ஒரு நுட்பம் காட்டுவது. ஆதலின் மணிமேகலை பிறந்தாள் என்பதைக் கோவலன் மாதவியோடு கூடியிருந்தவரை சொல்லாது ஒளித்துக்கொண்டார். மாதவி மகளுக்கு மணி மேகலை என்ற பெயரிடுங்கால் வந்த மறையவனை யானையி னின்று காத்த உதவியையும், மனைவியைத் துறந்த மறையவனைப் பொருள் கொடுத்துக் கூட்டிய உதவியையும் இறந்த கயவன் சுற்றத்தாரைப் புரந்த உதவியையும் புகார்க் காண்டத்து மறைத்து வைத்து, மதுரைக் காண்டத்து வெளிப்படுத்துவர். மதுரைப் புறஞ்சேரியில் கோவலனைக் கண்ணகியொடு கண்டு வருந்திய மாடல மறையோன் மேலை உதவிகளைக் குறிப்பிட்டு, “இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” (2421-23) எனக் கோவலனது சிறப்புக்களை அடுக்கித் தொடுத்துப் பாராட்டுகின்றான். இவ்வளவு தாண்டிப் பழைய நிகழ்வுகளைக் கோவலன் மடிவுக்கு முன் புகழச்செய்யும் ஆசிரியன் நோக்கம் கோவலன் கொலைப்பட்டது பழவினையின் பயன் என்றும், எடுத்த பிறப்பில் எவ்வளவு நல்வினைகள் செய்திருந்தாலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியாது என்றும், ஊழ்வினை உருத்து வந்தூட்டியே தீரும் என்றும் நிறுவுதல் என அறிக. எ சிலப்பதிகாரம் தலைசிறந்த நாடகக் காப்பியம் என்று அறுதியிட்டுத் துணிதற்கு இறுதியாக ஒரு பெருஞ்சான்று காண்போம். நாடக மாந்தரின் வாழ்க்கைச் செயல்கள் பல ஆண்டுகளில் பல்வேறு காலங்களில் நிகழ்வன; எனினும் நாடக ஆசிரியன் நடந்த கால அளவை எவ்வளவு குறுக்க முடியுமோ அவ்வளவு குறுக்கி, நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நிகழந்தனவாகப் பிணைத்தும் இணைத்தும் சொல்லுவான். நாடக விறுவிறுப்புக் காக நடந்த காலத்தைக் கொலைப்படுத்துவான். இக்காலக் கொலை இனிதென்று நாடகங் காண்பார்களும் மகிழ்ப. சிலம்பின் கதை பல ஆண்டுகட்கு உரியது என்பதை இளங்கோ அறியாமலும் இல்லை; நமக்கு அறிவிக்காமலும் இல்லை. “யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்” (157-58) “ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு காவதம் அல்லது கடவா ராகிப் பன்னாள் தங்கிச் சென்னாள் ஒருநாள்” (1418-20) “இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது.” (4289-90) மனையறம் படுத்தியபின் கண்ணகி தன் கொழுநனொடு சில ஆண்டுகள் இல்லறம் நடத்தினாள் என்பது முதல் மேற் கோளாலும், புகாரிலிருந்து மதுரைக்குச் செலவிட்ட மூவரும் நாளொன்றுக்குக் காவதம் நடந்து இடையிடையே தங்கி இளைப்பாறி நாள் பல நடந்தனர் என்பது இரண்டாவதாலும், வஞ்சியினின்றும் வடநாடு படையெடுத்த செங்குட்டுவன் பகைவரைத் தோற்பித்துப் பத்தினிக்கல் எடுத்துவருதற்கு முப்பத்திரண்டு திங்கள் ஆயின என்பது மூன்றாவதாலும் அறிகின்றோம். மேற்கண்டாங்கு காதையின் கால எல்லையை ஒரு வகையால் உணர்த்தினாலும், நிகழ்ச்சிகளைக் கூற வரும்போது வேகத்திற்காகக் காலத்தைப் பலிகொடுப்பது நாடகப் பண்பு. மாதவி வேந்தனிடம் மாலையைப் பரிசுபெற்ற அன்றே கூனியைத் தெருவில் விற்பனைக்கு நிறுத்தியதாகவும், நிறுத்திய அன்றே மாலையை விலைக்கு வாங்கிய கோவலன் மாதவியைச் சேர்ந்ததாகவும் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. கடற்சோலை யில் மாதவியை விட்ட கோவலன் வீடு வந்த அன்றே கண்ணகியை அழைத்துக்கொண்டு பொழுது புலர்வதன் முன் மதுரை செல்கின்றான். மாதவி வேட்கையால் கண்ணகியைப் பிரிந்த கோவலன் மதுரைக்குப் புறப்படும் முன்னாள் மாலையே தன் வீடு வந்தான்போலவும் இடைக்காலத்து வாராதான் போலவும் நிகழ்ச்சிகள் மறைக்கப்படுகின்றன. மாடல மறை யோனும் கவுந்தியடிகளும் புறஞ்சேரி இருக்கைகூடாது; மதுரை அகநகர் செல்க என்று கோவலனுக்குச் சொல்லிக் கொண்டி ருக்கும் பொழுதே மாதரி வருகிறாள்; கண்ணகியை அடைக்கலம் பெறுகிறாள். மாதரி வீடு சென்றதும், கண்ணகி சமைத்ததும், கணவனுக்கு அமுது படைத்ததும், இருவரும் உரையாடியதும், கோவலன் பொற்கொல்லனைக் கண்டதும், பின்னவன் பாண்டியனுக்கு அறிவித்ததும், காவலர் வந்ததும் கொன்றதும் ஆய நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடந்தன என்று படுமாறு கொலைக்களக்காதை கற்பவர் எண்ணத்தைப் பிணிக்கும் வேகத்தில் அமைத்து கிடக்கின்றது. கோவலன் பழவினை எல்லா நிகழ்ச்சிகளையும் விரைவுபடுத்தி அவனைத் தாக்கத் துடிக்கிறது. “காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (2765-66) என்று இளங்கோ விரைவுக் காரணத்தைச் சுட்டுதல் காண்க. ஒருநாளுள் நடந்தவை கொலைக்களக்காதையில் கூறிய நிகழ்ச்சிகள் மாத்திரமோ? இன்னும் அரிய நடப்புக்கள் அவ் வொரு நாளிலேயே நாடகத்து நடக்கின்றன. கால இடையீடு குறையக்குறைய நாடகக் கவர்ச்சி பெருகும் என்பதும், முன் நிகழ்வைப் பின்னும் பின் நிகழ்வை முன்னும் காலத்திரிபுபட மாற்றுதல் கூடாதேயொழியக் காலக்குறுக்கஞ் செய்தல் நாடக அறம் என்பதும் இளங்கோ காட்டும் இலக்கணம். கோவலன் கண்ணகியைக் காலையிற் பிரிந்து அந்நாள் மாலையே கொல்லுண்டான் என்று வைத்துக் கொள்வோம். ‘நெய்ம்முறை நமக்கு இன்று ஆம்’ (2773) என்று மாதிரி தயிர்கடையச் செல்லு கின்றாள். பாலுறையாமை பார்க்கின்றாள். எனவே இது மறு நாட்காலையாகும். பின்னர்க் குரவை நடைபெறுகின்றது. அதனைக் கண்ணகி கண்டு களிக்கின்றாள். குரவை முடிவில் ஊர்ப்பேச்சை ஒருத்தி வந்து கண்ணகிக்குத் தெரிவிக்கின்றாள். இதனால் முதல்நாள் மாலை கோவலன் இறந்தனன்; மறுநாள் மாலை கண்ணகி அத்துயரச் செய்தியை அறிந்தனள் என்பது தெளிவு. அறிந்த பின் அலறிப் பதறிக் கொலையிடம் விரைகின் றாள்; மடிந்த கணவனை ஒரு நாட்கழித்தே காண்கின்றாள். கண்ணகி யின் அழுகைப் பெருக்கையும் அவலப் பெருக்கையும் காட்டுவ தற்காக இவ்வொருநாளை ஆசிரியன் பலியிடுகின்றான். “வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்டாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவள்தன்னைக் காணாக் கடுத்துயரம்” (3003-7) இப்பாட்டில் இருநாள் நிகழ்ச்சி ஒருநாள நிகழ்ச்சியாகக் காட்டப்படுகின்றது. ஒரே நாளில் காலைப்பொழுதில் உயிரோடு கணவனைத் தழுவிய கண்ணகி அன்றே மாலைப் பொழுதில் குருதியோடு அவனைத் தழுவினாள் என்ற கருத் தோட்டம் கற்பார் நெஞ்சை அவலப்படுத்துகின்றது. ஒரு நாட்காலப் பலி நாடகத்துக்குக் கவர்ச்சி அளிக்கின்றது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒருநாள் பலியாவதைக் காண்போம். கோவலன் செவ்வாய்க்கிழமை காலை கண்ணகியைப் பிரிந்து சென்றான் என்று வைத்துக்கொண்டால், பகற்பொழு தைக்குள் கொலைப்படுகின்றான். புதன்கிழமை மாலை கண்ணகி வெட்டுண்ட கோவலனைக் காண்கின்றாள். அன்றிரவே தேவிக்குத் தீக்கனா ஏற்படுகின்றது. வியாழக்கிழமை மாலை பாண்டியன் முன் கண்ணகி தோன்றி வழக்குரைத்து வெல்கின்றாள். பாண்டியன் தேவியொடு அப்போதே உயிர் விடுகின்றான். இக்காலத்தெளிவோடு பின்வரும் அடிகளைக் காண்போம். “கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவும் தெரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண்” (3126-9) இது கோப்பெருந்தேவிமுன் கண்ணகி கூற்று. ஒருநாள் முற்பகலில் பிறனுக்குக் கேடு செய்தவன் அதே நாள் பிற்பகலில் தான் கேடடைவான் என்று தன் கணவனை அழித்த பாண்டியன் உடனே அழிந்தது பற்றி மகிழ்கின்றாள் பத்தினி. இருநாள் ஈங்குக் குறைவுபடுதலைக் காண்கின்றோம். ஊழ் வினை மிக விரைந்து வந்து வினை செய்தானைத் தாக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு நாடகம் இருநாளைப் பலிகொண்டது. சிலப்பதிகாரம் பண்பியல் நிறைந்த நாடகத் தமிழ் காப்பியம் என்பது இதுவரை சொல்லிய ஏதுக்களால் உறுதிப்படும். தமிழ் இலக்கியவுலகில் இன்றுகாறும் நாடக இலக்கியமாக விளங்குவது சிலப்பத்திகாரம் ஒன்றே. அதனால் இக்கட்டுரைக்கண் இளங்கோ கண்ட நாடக அமைப்புக் குறித்து விரித்துரைத்தேன். இம்முன்னறிவு சிலப்பதிகாரத்துள் நுழை வார்க்கு நல்ல துணையாகுக. காதை அமைப்பையும் கூற்றுக் களையும் புனைவுகளையும் நாடகக் குறியில் காணச்செய்யும் தூண்டுகோலாகுக. சிலப்பதிகாரத் தமிழை முழுதும் பல்முறை படிக்கும் பற்றும் உரனும் தமிழர்க்கு உண்டாவதாகுக. மணிமேகலைத் திறன் ஒரு குறிக்கோள் வைத்து இலக்கியம் யாப்பவனே எழுத்தாளன். அக்குறிக்கோளுக்கு மக்களை இழுப்பதற்காகவே நடைக் கவர்ச்சியைக் கையாள்கின்றான். இலக்கிய நயம் மருந்தின் மேலினிப்புப் போன்றது. மக்கள் வாழ்க்கை இலக்கி யத்தின் பொருள்; குறிக்கோள் இலக்கியத்தின் நாடி; நயம் இலக்கியத்தின் அணி; எத்துணை மக்களைத் தன் குறிக்கோ ளால் ஈர்க்கின்றதோ, எவ்வளவு நாள் வரை ஈர்க்கின்றதோ அதுவே ஓர் இலக்கியத்தின் வாழ்நாள். ஈர்ப்புத் தன்மையை என்று இழந்ததோ அன்று அதன் மடிநாள். பின்னர் அவ் விலக்கியம் பொருட்காட்சிச் சாலையிலுள்ள நாணயங்கள் போலவும், வீட்டுக் கிழவன் போலவும் பழமை பேசவே பயன்படும். ஒவ்வொரு இலக்கியம் எல்லா மக்களையும் நோக்கியே எழுதப்படவேண்டும் என்பதில்லை. குழந்தை, பெண்டிர், நாடு, அரசு, இனம், காதல், வீரம், தொழில், சமயம் என்ற ஒவ்வோர் துறையில் வைத்து இலக்கியங்கள் தோன்றலாம். அத்துறைய ளவில் அது பரந்த நோக்குடையதாக இருத்தல் வேண்டும். குறிக்கோளும் காலங்கடந்ததாக அமையவேண்டும் என்பதில்லை. ஒரு குறித்த காலத்தை உட்கொண்டு சீர்திருத்தத்தைப் பரப்பும் நோக்கொடு இயற்றலாம். கருதிய பயன் செய்த பின், அவ் விலக்கியம் காட்சிக்குரிய பழைய நாணயம் போலக் (கற்றபின் நிற்றற்கு உரியதாகாது) கற்றற்குரிய நூலாக நின்றுவிடும். எனினும் காலங்கடந்த குறிக்கோளும், இனம் நிலம் கடந்த மக்கள் நோக்கும் சான்ற இலக்கியங்களே பொன்போல நிலைத்து வாழ்வன. என்றும் நின்று பயன்செய்யும் கொள்கை இலக்கியங்கள் ஒரு மொழிக்குக் கிடைப்பது அரிது. நம் மொழிக்கோ அன்ன இலக்கியங்கள் பல கிடைத்துள்ளன. ஆ கூலவாணிகன் மதுரைச் சாத்தனார் கொள்கை பரப்பவே மணிமேகலையை எழுதினார். சிலப்பதிகாரம் யாத்த இளங் கோவின் கொள்கையை நாம் வெளிப்படையாக அறிவது போலச் சாத்தனார் கொள்கைகளை நூன்முகத்து அறிய முடியவில்லை; எனினும், நூலுள் அடிவைத்துச் செல்லச்செல்ல வணிகனார் கோட்பாடுகள் சிலப்பதிகாரத்தினும் தெளிவாகப் புலப்படுகின்றன. சிலப்பதிகார அமைப்பிற்காணும் நல்ல இலக்கியக் கூறுகள் மணிமேகலை நூலுக்கு இல்லை என்பது வெளிப்படை. ஒருகால் சாத்தனாரும் முயன்று அவ்வமைப்புக் களைத் தம் நூலுக்கு அமைத்திருந்தாரேல், ஒரு காலத்து எழுந்த இவ்விரு காப்பியங்களையும் கற்பவர்க்கு, யார் யாரைப் பார்த்து எழுதினார்களோ என்ற வம்புணர்ச்சியே முன்வரும். மேலும் முத்தலை நகரங்களை வைத்து மூன்று காண்டங்களாக வகுப்பதற்குக் கண்ணகியார் வரலாற்றில் இடமுண்டு. மணி மேகலை வரலாற்றில் இடமில்லை. மூன்று கொள்கைகள் விளங்க நூல் நாட்டுவேன் என்றார் இளங்கோ. ‘அது மட்டும் போதாது; கண்ணகி கதை முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது. ஆதலின், அவ்வமைப்பில் நூல் எழுத வேண்டும்’ என்ற குறிப்பை இளங்கோவுக்கு அருளியவர் சாத்தனார். இக் கருத்தைச் சிலப்பதிகாரப் பதிகம் காட்டுகின்றது. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக. இதனால் சாத்தனார் புலமை அறியப்பெறும். காவியப் பொது வனப்பு அழகாக அமைவதற்குக் கண்ணகியை மணந்து மாதவியைக் காமுற்று விளையாடிய கோவலனார் வரலாறு போலக் குமரிப் பருவத்தை துறவுபூண்ட மணிமேகலை வரலாறு வாய்ப்பு அளிக்கவில்லை. கதை இடங்கொடாத போது புலமை என்செய்யும். இ மணிமேகலை புத்தமதச் சார்புடைய ஓரிலக்கியம். தமிழ் மொழிக் கண் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் இதுவே. வடநாட்டில் தோன்றிய இம்மதத்தின் சொற்கள் வடமொழிச் சொற்கள், ஆதலின் தமிழில் பௌத்த காப்பியம் பாடப்புகுந்த சாத்தனார்க்கு ஏனைப் புலவர்க்கு இல்லாத ஒரு தனிக்கடமை அஃதாவது வடசொல்லுக்குத் தமிழ்ச்சொல் காணும் பணி உண்டாயிற்று. இத்தமிழ்ப் பணியை அவர் முழுதற முடித்தார் என்று சொல்லமாட்டேன். மொழியாக்கத் துறையில் முதன் முதற் புகுந்து ஓரளவு வெற்றிகண்டார் என்றும், பின்பு சமயக் காப்பியம் செய்தார்க்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக நின்றார் என்றும் அறிவோமாக. “பேதமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோர் அறியிற் பெரும்பே றறிகுவர் அறியா ராயின் ஆழ்நர கறிவர்” (4540-5) “துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் (4681-3) என்பது சாத்தனார் செய்த தமிழாக்கம். பன்னிரு நிதானங் களையும் நால்வகைச் சத்தியங்களையும் மேற்கண்டாங்கு மொழியாக்கம் என்று தோன்றாதபடி தமிழாக்கம் செய்திருத்தல் காண்க. ஏது நிகழ்ச்சி, அருளறம், அறவணர் என்றாங்கு ஆக்கியருளிய சொற்கள் மிகப்பல. “சமய சம்பந்தமான சில சொற்களையும் தொடர்களையும் வேறு சிலவற்றையும் இடத்திற்கேற்ப இவர் மொழி பெயர்த்து அமைத்திருத்தல் மிகப் பாராட்டற்கு உரியதொன்றாம்” என்பது தமிழ்ப் பெரியார் டாக்டர் உ.வே.சா. அவர்களின் புகழுரை. பிற மொழியைத் தமிழ்ப் படுத்தும் மொழித்திறம் பெற்ற சாத்தனார் தமிழி லிருந்தே புத்தாக்கம் செய்தருளிய சொற்களும் பல. மொழிக்குப் பொருள் வளம் மாத்திரம் அளித்துச் சொல்வளம் அளிக்காத எழுத்தாளி தன் கடமையில் செம்பாகம் குறையுடையன். ‘சாத்தனார் தமிழ்’ என்பது ஒரு தனித் திறனாய்வுக்கு உரியது. சாத்தனார் மொழி நோக்கில் தம் நூலை இருபுரிவு செய்துகொண்டனர். முப்பது காதைகள் கொண்ட இந்நூலில் (27) சமயக்கணக்கர் தம்திறங்கேட்ட காதை (29) தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை (30) பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற மூன்று காதைகள் பல்சமய உண்மை களையும் பௌத்த மன மெய்ப்பொருளையும் கூறுவன. ஈண்டு தமிழ்ச்சொற்கள் சிலவே காணப்படும். முழுக்க முழுக்கப் பிறமொழிமயம் என்பது வெள்ளிடை. சொற்கள் அயல்மொழி யாக இருந்தாலும் எழுத்தெல்லாம் தமிழே என்பது தமிழ் வளர்ப்பார் நினைவுக்கு உரியது. இக்காதைகள் தத்துவப் பட்டியல்கள்; இலக்கியம் இல்லை. ஆதலின், இவற்றைச் சொல்லக் கடமைப்பட்ட சாத்தனார் சொல்லுதற்கு நூலின் இறுதியை ஒதுக்கிக் கொண்டார். நூலின் முற்பகுதியாம் ஏனைக் காதைகள் தமிழ்வளம் செறிந்த இலக்கியம். சமண காப்பியம் இயற்றிய திருத்தக்கதேவரும் சாத்தனார் வழியைப் பின்பற்றித் தம் சமயக் கொள்கைகளைச் சீவகசிந்தாமணியின் இறதி முத்தியிலம்பகத்தில் சொல்வது காண்க. ஈ சாத்தனார் தம் நூலின் தொடக்கத்தை மட்டும் நாடகம் போல் அமைத்தார். மணிமேகலையின் பிறப்புத் தொடங்கி அவர் கூறவில்லை. காவிரிப்பூம் பட்டினத்து இந்திரவிழா நடக்கின்றது. ‘நாட்டியம் ஆட மாதவி வருவாள்; பருவம் எய்திய அவள் மகள் மணிமேகலையும் இவ்வாண்டு வருவாள்’ என்று ஊரவர் எதிர்பார்த்திருக்கின்றனர். மாதவி தாய் சித்திராபதியும் பேர்த்தியும் நாடவர் காண வருவாள் என்று உள்ளம் பூரித்தி ருக்கின்றாள். கோவலன் இறந்தபின் மாதவி வாழ்க்கை எண்ணம் மாறுகின்றது. புதிதாக எதிர்பார்த்த மணிமேகலையும் வரவில்லை. பழைமையாய் வந்துகொண்டிருந்த மாதவியும் வந்தாளில்லை. ஊரார் ஏசுகின்றனர். சித்திராபதி குலவொழுக்கம் போயிற்றே என்று துடிக்கின்றான். இங்ஙனம் நூலின் தொடக்கம் நாடகப்போக்கு உடையதேயன்றி இது நாடகக் காப்பியம் அன்று. சாத்தனார் ஓர் இயற்புலவர். அவர் நூல் ஓர் இயற்றமிழ்க் காப்பியம். இக் காப்பியத்தை இரண்டு நெறிகள் நயப்படுத்துகின்றன. காப்பியத் தலைவியாம் மணிமேகலையின் வரலாறு சிறிது சிறிதாக வெளிப்படுத்தப் படுகின்றது. மணி மேகலையைக் காண்பார் ஒவ்வொருவரும் கதையின் ஒரு பகுதியைச் சொல்லி மற்றைப் பகுதியை இன்னாரிடம் கேட்டுத் தெரிந்துகொள் என்று தொட்டுவிட்டுச் செல்வதால் படிப் பார்க்கு மேலறியும் ஒரு வேட்கை பிறக்கின்றது. இனி, கிளைக் கதைகள் பல இந்நூலிற் காணலாம். சுதமதி, தீவதிலகை, ஆபுத்திரன், ஆதிரை, காயசண்டிகை, பீலிவளை, மருதி, விசாகை என்பவர்தம் வரலாறுகளை ஒரு காதைக்கு ஒன்றாக வெளிப்படுத்துதலால், சுவையற்ற மணிமேகலையின் வரலாறு செயற்கைச் சுவையுடைய தாகின்றது. உ சாத்தனாரும் இளங்கோவும் நண்பர்கள். கண்ணகி வரலாற்றைச் சாத்தனார் இளங்கோவுக்கு விரித்துரைத்தனர். தண் தமிழாசான் என்றும், நன்னூற்புலவன் என்றும் அடிகளார் வணிகனாரை நன்மதிப்போடு குறிப்பிடுவர். சிலப்பதிகாரம் மணிமேகலை பலர் கூடிய அவையில் அரங்கேறியனவாகப் பதிகங்கள் காட்டவில்லை. சிலப்பதிகாரத்தைச் சார்த்தனார் கேட்டார் எனவும் மணிமேகலையை இளங்கோ கேட்டார் எனவும் இவ்வாறு தம்முள் கேட்டுக்கொண்டனர் என்றே அறிகின்றோம். இதனால் தமிழுக்கு நாடகத்துறையிலும் சமயத் துறையிலும் முதற் காப்பியங்கள் எழுதிய இருவர்தம் நட்பின் சிறப்பு பெறப்படும். மேலும் கோவலன் கதையை இரு பகுதி யாகப் பிரித்துக்கொண்டு, கண்ணகியைத் தலைமையாக வைத்து இளங்கோவும், மாதவி மகளைத் தலைமையாக வைத்துச் சாத்தனாரும் நூல் எழுதப் புகுந்தனர். புகுந்தகாலை, தாம் தாம் எந்தெந்தச் செய்திகளைத் தத்தம் நூலில் சொல்வது, விடுவது என்று ஒரு வரம்பு செய்துகொண்டார்கள்போலும். மணிமேகலையின் பிறப்பைச் சிலப்பதிகாரம் சொல்லுதலின், சாத்தனார் அதனைக் கூறவில்லை. புகார்க்காண்டத்து மாதவிக்குப் பேரிடம் நல்கிய இளங்கோ கோவலன் இறந்தபின் அவன் துயர்நிலையை விரித்துரைக்கவில்லை. மாதவியின் தாய் சித்திராபதிக்குச் சிலப்பதிகாரத்தில் இடமில்லை. கண்ணகி தெய்வமாய் அமைந்த எல்லையொடு இளங்கோ அவள் வரலாற்றை நிறுத்திவிடுவார். “யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்” (சி.3166-7) எனக் கண்ணகி தன் சினம் பழுதற்றது என்று கருதுகின்றாள். ஆயின் மணிமேகலை நூல் காட்டுவதென்ன? கோவலன் இறந்ததற்கு ஊழ்வினை காரணம்; அவன் முற்பிறப்பில் தீதற்ற ஒருவனைக் கொல்வித்தது காரணம்; வளையாத பாண்டியன் செங்கோல் வளைந்ததற்குக் கோவலன் காரணம்; ஆதலால், கண்ணகி மதுரையை எரித்தது பொருந்தாது. குற்றமற்ற தலைநகரை அழித்த தீவினை அவளைத் தொடரும். அவள் பல பிறவி எடுத்து உழல்வாள் என்று கண்ணகியின் மறுபிறவி வாழ்க்கையை விரிக்கின்றது. “உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் அவ்வினை யிறுதியின் அடுசினப் பாவம் எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது” (ம. 3426-31) இது சாத்தனார் மணிமேகலையில் கண்ணகியின் கூற்று. பத்தினியாயினும் தீவினை விடாது என்றும், நல்வினைப் பயனால் தேவருலகம் சென்ற நான் மீண்டும் பிறப்பேன் என்றும் கண்ணகி கூற்றாகச் சாத்தனார் மேல் நிகழ்வைக் கூறுவர். கோவலன் கண்ணகியார் இன்ன சமயத்தைச் சார்ந்தவர் என்று சிலப்பதிகாரத்தால் நாம் அறிந்துகொள்ள இயலாது. சமணத்துறைவி அவ்விருவர் வழித்துணையாகின்றாள். வைணவ மாதரி அவ்விருவரை விருந்தோம்புகின்றாள். சைவச் செங் குட்டுவன் தெய்வக்கல் எடுக்கின்றான். கட்சி புகா நாட்டுப் பற்றுடையவர்போல மதம் தழுவாக் கடவுட் பற்றுடைய இளங்கோவடிகள் அவ்விருவரையும் பாடுகின்றார். நிற்க; மதுரை செல்ல நினைத்த கோவலன் கண்ணகியார் வீட்டைக் கடந்து திருமால் கோட்டத்தையும் இந்திர விகாரத்தையும் சாரணர் சிலாதலத்தையும் தொழுது சென்று காவிரிக்கரையை அடைகின்றனர். சிலப்பதிகாரத்தில் இப்பகுதியைப் படிக்கும் போது காவியத் தலை மக்களின் மதச்சார்ப்பு நமக்கு புலப்பட வில்லை. ஆயின் மணிமேகலை தெரிவிப்பதென்ன? “அண்ணல் அறக்கதிஈ விரிக்குங் காலைப் பைந்தொடி தந்தை யுடனே பகவன் இந்திர விகாரம் ஏழுமேத் துதலின் .......................................................................................... பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்” (ம. 3447-53) இதுவும் மணிமேகலையில் கண்ணகி சொல்வது. புகாரில் கோவலனுடனே இந்திர விகாரத்தைத் தொழுத நல்வினைப் பயனால், புத்தன் பிறந்து சொல்லும் அறத்தைக் கேட்டுப் பிறவி அறுவார்கள் என்று சாத்தனார் வெளிப்படுத்துவர். தம் காவிய மக்களின் மறுபிறப்பை ஏன் இளங்கோப்புலவன் கூறிற்றிலன்? அதனைக் கூறும் பொறுப்பைச் சாத்தனார்க்கு விட்டுவிட்ட னரா? சிலப்பதிகாரம் நாடகமாதலின், கண்ணகி தெய்வமாய் உச்ச நிலையோடு நிறுத்துவதுதான் ஒக்கும். பத்தினித் தெய்வம் மறுபிறப்பு எடுத்தது; பிறப்பில் உழன்றது எனக் கதையை வளர்ப்பது சுவைக் கசப்பாய் நாடக வீழ்ச்சியாய் முடியும். இப்பண்பினை நினைத்துப்போலும் இளங்கோ உம்மை இம்மை மறுமைகளை மிகுதியாகக் கூறும் சாத்தனார்க்கு விட்டுவிட்டார். இதனை உட்கொண்டுபோலும் “மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்” என்று இளங்கோ நூலிறுதியில் சொல்ல வேண்டியதாயிற்று. “மண்ணக மடந்தை வான்துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (சி.3764-7) மதுரை அழிவிற்கும் கோல் வளைவிற்கும் கோவலன் ஊழ் வினையே காரணம் என்பது இளங்கோவிற்கும் உடன்பாடா தலின், ‘கண்ணகி தன் தீவினையால் மீண்டும் பிறப்பாள்’ என்னும் சாத்தனார் கொள்கையையும் உடன்பட்டிருப்பர் என்றே துணியலாம். சிலப்பதிகாரத்தின் முத்திறக் கொள்கை களுள் அரசியல் பிழைத்த அரசன் அழிவான்; பத்தினியை உயர்ந்தோர் ஏந்துவர் என்பவை இரண்டும் அந்நூற்கே உரியன. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது இரட்டைக் காப்பியங்கட்கும் உரியது. நாடக இலக்கியமாய் அமைத்த காரணத்தால் இளங்கோ தலை மக்களின் சில செய்திகளைத் தள்ள வேண்டியவராகிறார். அவர் தள்ளிய செய்திகள் மணிமேகலை நூலில் இடம் பெறுகின்றன. “தணியாக் காதல் தாய்கண் ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் கடவுள் எழுதிய படிமங் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து வணங்கி நின்று குணம்பல ஏந்தி” (ம. 3396-400) என்ற அடிகளால் வஞ்சிநகர் ஏகிப் பத்தினிக்கோட்டம் சென்ற மணிமேகலை, கண்ணகி கோவலன் இருவருடைய தெய்வவுரு வங்களையும் தொழுதாள் என அறிகின்றோம். ‘கொடை கெழு தாதை கோவலன்’ என்பதனால் அவன் படிவம் சமைத்தற்குத் தக்க பண்புடையவன் என்பதைiயும் அறிந்து மகிழ்சின்றோம். பத்தினிக் கோட்டத்துக் கணவன் வடிவமும் அமைய வேண்டி யது முறைதானே! இலங்கை நிக்காவேவா விகாரக்குகையில் இரண்டு படிமங்கள் உள என்றும், அவை கோவலன் கண்ணகியைக் குறிப்பன என்றும் சொல்லுவர். எனினும் கோவலன் தெய்வக் கல்லைப் பற்றி நாடகப்பண்பு நோக்கிச் சிலப்பதிகாரம் கூறிற்றிலது. இவ்விளக்கங்களால் கோவலன் குடும்ப வரலாற்றை இலக்கியப்படுத்த எண்ணிய அடிகளாரும் வணிகனாரும் பாடும் கதைப்பகுதியை வரையறுத்துக்கொண்ட னர் என்று கருதலாம். ஊ சாத்தனார் நூலுக்கு ‘மணிமேகலை’ என்று பெயர் வைத்தாரா? ‘மணிமேகலை துறவு’ என்று பெயர் வைத்தாரா? “மாவண் தமித்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென்” என்ற படிகப்படி இரண்டினையும் கொள்ள இடம் உண்டு. எனினும், “மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம்” என்ற நடையால், மணிமேகலை சிலப்பதிகாரம் என்பன நூற்பெயர்களே எனத் துணியலாம். நிற்க; இந்நூல் தொடக்க முதல் இறுதிகாறும் மணிமேகலையின் துறவையே பொருளாகக் கொண்டு இயங்குவது. குமரி யொருத்தி துறவி யானாள்; அதுவும் பரத்தை குலத்துப் பிறந்த ஒரு குமரி துறவியானாள் என்ற கதையை எழுதும் புலவன், இயல்பாக எழுதிவிட முடியாது; எழுதுவதும் ஒவ்வாது. அவள் நெஞ்சம் அவளைக் காமத்திற்குத் தூண்டிற்று என அகப்போராட்டமும் காட்டவேண்டும். பிறரும் அவளைக் காமத்திற்கு வருத்த முற்பட்டனர் எனப் புறப்போராட்டமும் காட்டவேண்டும். சாத்தனார் இலக்கியதுக்கு ஒரு நல்ல வாய்ப்பு காவியத் தலைவி குமரியாகவும் பரத்தை குலத்தவளாகவும் அமைந்தது. உவ வனத்தில் ஒரு காட்சி. மணிமேகலை அங்கு உள்ளாள் என்பது தெரிந்த உதயகுமரன் வருகின்றான். அவன் வரவறிந்த அவள் பளிக்கறைக்குள் ஒளிந்துகொள்கின்றனள். மணிமேகலை எங்கே என்று சுதமதியை வினாவுகின்றான் உதயகுமரன். மணிமேக லைக்குக் காமவுணர்ச்சி தோன்றுகின்றது. நிறைகலங்கிப் புன்முறுவல் பூக்கின்றாள். தன் முலையை அதுக்குகின்றாள். உள்ளம் குமரனை நாடுகின்றது. குமரனும் அவளை நாடு கின்றான். பளிக்கறையைத் தடவிப் பார்க்கின்றான். திறக்க வழி தெரியவில்லை. இழித்துப் பேசிச் சித்திராபதி உதவியால் அடைவேன் என்ற நம்பிக்கையொடு திரும்புகின்றான். “கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்று இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத் தியற்கை” (ம.529.32) என மணிமேகலை தோழி சுதமதிக்குத் தன் உள்ளம் முதன் முதல் காமத்தால் கலங்கியதை வெளிப்படுத்துவள். வந்தவன் என்னை வைதானே; அதற்கு அவன்மேல் வெறுப்பன்றோ தோன்றவேண்டும்? மாறாக விருப்பன்றோ உதிக்கின்றது! இங்ஙன் நெஞ்சைத்திரிக்கும் உணர்வுதான் காமம் எனப் படுமோ? என விஞ்சையனை இன்புற்ற சுதமதியைக் கேட்கின் றாள். இவ்வுணர்ச்சி அவள்பால் நெடிது நிற்க முடியவில்லை. கலங்கிய மனம் அறிவுத் தெளிவால் திட்பம் உறுகின்றது. ‘இதுவே யாயிற் கெடுக தன்திறம்’ (534) என்று சொல்லி உறுதி பெறுகின்றாள். தக்க பருவத்துச் சிறு காம அணு பிறக்க இடங்கொடுத்துவிடின், அவ்வணு ஒரு கணத்துக்கு எவ்வளவு பல்கும் என்று கணக்கிட முடியாது. உடல் முழுதும் அவ்வணு மயமாய் விடும்; ஆதலின், காமப்பதம் பெற்ற மணிமேகலைக் குமரியின் உறுதி மறுபடி உடையாதென்று எங்ஙனம் சொல்ல முடியும்? இந்நிலையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத் தீவிற்குத் தூக்கிப் போய்விடுகின்ற கதையைப் படிக்கின்றோம். “ஆங்கனம் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின் கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துகு வெண்களர் வீழ்வது போன்மென அறத்தின் வித்தாங் காகிய உன்னையோர் திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன்” (ம.1110-5) ‘நீ அறநிலத்து வித்து. களர்நிலத்துப்போய் ஒழிதல் கூடாது. உதய குமரன் உன்னை விழைகின்றான்; நீயும் உள்ளத்தை அவன் பக்கம் திருப்புகின்றாய். இதனைத் தடுக்கவே உன்னைத் தீவிற்குத் தூக்கிக் கொணர்ந்தேன்’ என்று தெய்வம் மேகலைக்குத் தெளிவிக்கின்றது. அதனொடு நிற்கவில்லை தெய்வம். உதயகுமரன் கனவிற் போய்த் தவத்தியைக் காமுறாதே என்றும் தடுக்கின்றது. இத் தெய்வக் குறுக்கீடு இன்றேல் மணிமேகலை கதை எவ்வாறு முடிந்திருக்குமோ? கதை ஒருவகை நயமாய் மணிமேகலைக்குச் சிறப்பாய் முடியக் காண்கின்றோம். அவனிடம் அவள் உள்ளம் பற்றியதற்குக் காரணம் அவன் அவளின் முற்பிறப்பிற் கணவன் என்று காட்டி, மணிமேகலை புதியவனைக் காதலிக்கவில்லை; பழையவனைப் புதுப்பிறப்பிற் கண்டதும் பழங்காதல் தொடர்ந்தது என அமைதிகோலுகிறார் ஆசிரியர். உதயகுமரன் பழம்பிறப்புக் கொழுநன் என்று அறிந்த மணிமேகலைக்கு அவன்பால் காமம் தோன்றாவிடினும் முன்னைத் தொடர்பு பற்றி ஒரு தனிப்பற்று இருந்தது. அவன் தன்னைக் காண வரும்போதெல்லாம் மதிப்போடு வணங்கிப் பேசுவள். தன்மேல் வைத்த காதலால் உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டதும், “திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள் கட்டழல் ஈமத் தென்னுயிர் சுட்டேன் உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலே னாதலின் தலைமகள் தோன்றி மணிபல் லவத்திடை என்னையாங் குய்த்து ................................................................................................................ காயசண் டிகைவடி வானேன் காதல வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை உருப்ப விளிந்தனையோ” (ம.2438-51) என ஒப்பாரி வைப்பதுபோல் புலம்புகின்றாள்; உன்னைக் காதலித்த என்னைத் தெய்வமன்றோ தடுத்தது என்று பழிப்பாள் போல் இரங்குகின்றாள்; தன்னிலை மறந்து ‘காதல’ என்று ஓலமிடுகின்றவள் அவன் உடலைத் தீண்ட நெருங்குகின்றாள். ஈண்டும் ஒரு தெய்வம் குறுக்கிட்டுச் ‘செல்லல்! செல்லல்! என்று கத்துகின்றது. பிறவியை ஒழிக்க முயலும் உனக்கு இவ்வவலம் கூடாது என்று அறிவுறுத்துகின்றது. இவ்வண்ணம் சாத்தனார் மணிமேகலை துறவைக் காத்துச் செல்லும் இலக்கியப்போக்கு ஒரு புதுமையுடையது. எ சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் போன்றவள் மணி மேகலையில் சித்திராபதி. இவளுக்கு மாதவி துறவே பிடிக்க வில்லை. மணிமேகலை துறவோ சினத்தை உண்டாக்கிவிட்டது. பரத்தை குலத்திற் பிறந்தும், அக்குலவொழுக்கத்திற் பெருமை கொண்டவள். கணிகையர் துறவுக்கோலம் பூணுதல் மானக்கேடு என்னும் உறுதியான கொள்கையினள். நாடாளும் வேந்தன் மகன் தன் பேர்த்தியை நாடுவது ஒரு நற்பேறு என்று மகிழ்பவள். இவள் உதயகுமரனை ஏவி மணிமேகலையின் துறவைக் கலைக்கப்பாடுபட்டாள். இடையூறு செய்தாள். இப்புறத்தாக்கு தலைத் தவிர்க்கவே மணிமேகலை காயசண்டிகை வடிவங் கொண்டாள். அவ்வேற்றுருவம் அவளைக் காத்தது என்று சொல்லுதற்கில்லை. மாறுவேடம் பூண்ட இவள்தான் மணி மேகலை என்று தெரிந்த உதயகுமரன் எப்படியும் அவளைக் கைப்பற்றுவது என்று இரவில் அவள் தங்கியிருக்கும் சம்பாபதி கோட்டத்துள் நுழைந்திருக்கின்றான். மணிமேகலையின் துறவைக் காக்க அவன் வெட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. ஊழ்வினை விஞ்சையன் வாள்கொண்டு உதய குமரனை ஒழிக்கின்றது. எனவே மணிமேகலை காமங்கொண்ட தன் உள்ளத்தைத் தெய்வத் துணையால் வென்றாள்; காமத் தொடு வந்தானை ஊழ் துணையால் வென்றாள்; இவ்வகை யால் அவள் துறவு கடைபோயிற்று என்று அறிகின்றோம். ஏ மக்கட் சமுதாயத்தை அல்வழி நீக்கி நல்வழிப்படுத்த எழுந்த ஒரு சீர்திருத்தக் காவியம் மணிமேகலை. இலக்கியவு லகில் இந்நூலின் தனிச் சிறப்பு இது. இத் திருத்தங்கள் புத்தமதத் தொடர்பால் விளைந்தன என்று ஆசிரியர் காட்டுகின்றார். பௌத்தம் இப் பெருமைக்கு உரியது என்பது வெளிப்படை. எம் மதச் சார்பினதாயினும் ஆகுக; ஒருநூல் இவ்வுலக வாழ்க்கைக்குக் காட்டும் வழி என்ன? அதுவே பார்க்கத்தகும் கருத்து. சித்திரா பதி, மாதவி, மணிமேகலை மூவர்தம் வாழ்வு நிலைகளைக் காண்போம். சித்திராபதி பரத்தை வாழ்க்கை நடத்தியவள்; பலரை இன்புறுத்தும் குடிப்பிறப்பை வழுவுதல் பழி பாவம் என்ற கோளினள். மாதவியோ பரத்தைக்குப் பிறந்தவளே யொழியத் தான் பரத்தமை ஆடியவள் அல்லள். ஒருவனையே காதலிக்கும் உள்ளம் வளர்ந்தவள். கோவலனிடம் பொருள் பறிக்கவில்லை. அவன் பிரிந்த பின்னும் இறந்த பின்னும் பிறனொருவனை நினையாதவள். “காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள்” (சி.1063) “காதலன உற்ற கடுந்துயர் கேட்டு” (ம.110) என்றபடி, கோவலனை என்றும் காதலனாகவே வரித்தவள். அவனிறப்புக்கு வருந்திப் பத்தினிப் பெண்டுகள்போலத் தன்னுயிர் போகவில்லையே என ஏங்கிப் புத்தசமயம் பற்றித் துறவு பூண்பவள். ஆனால் கோவலன் இறக்கும் வரை இந்திர விழா நாளில் நாடாவர்காண ஆடரங்கு ஏறி நடந்தாள். பரத்தைத் தொழில் செய்யாவிட்டாலும், இல்லறப் பண்பு அவளுக்கு இல்லை. கானல்வரியில், கோவலன் பிறளொருத் தியை நினைத்துப் பாடினான் என்று ஐயமுற்ற மாதவி இற்பண்பு உடையவளாக இருப்பின், ஊடர் கொண்டிருப்பாள்; அல்லது அவனைக் கடிந்துரைத்திருப்பாள். அப்பண்பு அறியாதவளும் பெறாதவளும் ஆதலின், தானும் பிறனொருத்தன்மேல் காதலுற்றாற்போல நடிக்கும் பரத்தைக் குணத்தைப் பார்க்கின் றோம். இற்பண்பு எனப்படுவது குடும்ப உறுப்பினருள் ஒருவர் திரிந்தாலும் அது நோக்கி ஏனையவர் தம் நெஞ்சும் செயலும் மாறாது ஒழுகுதல். இவ்வியல் மாதவிபால் இல்லை. எனினும் அவள் இருமணப் பெண்டு அல்லள். மாதவி மகள் மணிமேகலையோ ஓர் சீர்திருந்தியும் சீர்திருத்தியும் ஆவாள். அவள் தனக்குத் தாயாக மாதவியை நினைக்கவில்லை. கண்ணகியை நினைக்கின்றாள். மாதவி அங்ஙனம் நினைக்க மகளைப் பழக்கி வளர்த்திருக்கின்றாள். “மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்” (127-9) இந்திரவிழாவில் ஆடவரவில்லை என்று ஊரவர் என்னைப் பழிப்பது பொருந்தும். மணிமேகலையைச் சுட்டிப் பேசுவதற்கு அவர்கள் யார்? அவள் என் மகளா? பத்தினியின் குலமகள் அல்லவா? இவ்வாறு மாதவி தன் மகட்குக் குலப் பிறப்புக் கூறுகின்றாள். கோவலன் மணிமேகலைக் குழந்தையைத் தன் மனைக்கு அழைத்துச் சென்றிருப்பான் என்றும் கண்ணகி யும் அக்குழந்தைமேல் அன்பு காட்டியிருப்பாள் என்றும் கொள் வதில் தவறில்லை. “தந்தையும் தாயும் தாம்நனி உழந்த” (ம.152) “தணியாக் காதல் தாய்கண் ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்” (ம.3396-7) என்ற அடிகளை, மணிமேகலைக்குப் பெற்றோர் கோவலன் கண்ணகி யார் என்று அவள் தூய பிறப்புக்காட்டும் நோக் கொடு ஆசிரியர் எழுதுவர். ‘பைந்தொடி தந்தையுடனே’ (3448) என இவ்வுறவுமுறை கண்ணகி வாக்கிலும் வைத்து உறுதிப் படுத்தப்படுகின்றது. இம்மகள் ஒருவனை மணந்து மனைவியாய் இல்லறம் நடத்திப் பின் துறவு தாங்காது, முன்னோர் செய்த பாவத்துக்கு ஈடுசெய்பவள் போல் குமரித்துறவியாகக் காண் கின்றோம். இத்திறம் சீர்திருந்தினாள் மணிமேகலை. இல்லறக் குடியிற் பிறந்த வணிகப் பெண் நாடறிய ஆற்றல் காட்டிச் சிலப்பதி காரத்தின் தலைவியாகின்றாள். இஃது ஓர் இலக்கியப் புரட்சி. பரத்தைத் தொழிலிற் கன்றிய சித்திராபதியின் பேர்த்தி மணி மேகலைக் காவியத் தலைவியாகின்றாள். இது முன்னையினும் பெரும்புரட்சியன்றோ? சாத்தனார் பரத்தைக்குலம் ஒழிய வேண்டும்; பரத்தையர் இல்லறத்தோராக முன்னேற வேண்டும்; சமுதாயம் வாழ வேண்டும் என்று கருதும் சீர்திருத்தி. அந்நோக்கு இந்நூல் முழுதும் பரந்து கிடக்கக் காண்பீர்கள். “கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை தலைமையாக் கொண்ட நின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி” (ம.3056-9) எல்லாக்குற்றமும் விளைவிப்பது பரத்தைத் தொழில் என்றும் அதனைக் குணமாகக் கொண்டு பரப்பும் ஒரு கூட்டம் இருத்தல் இழிவு என்றும் நூல் கட்டுதல் காண்க. சித்திராபதியும் முடிவில் திருந்தினாள் என்று சாத்தனார் செய்யும் சீர்திருத்தம் வரவேற்றற்கு உரியது. பரத்தை யொழிப்போடு மதுவொழிப்பு, சிறையொழிப்பு, சாதியொழிப்பு என்றினைய சமுதாயச் சீர்திருத்தங்களின் களஞ்சியம் இக்காவியம். உ எல்லா ஒழிப்புக்களினும் உயிர்களின் பசியொழிப்பே மணிமேகலை வற்புறுத்தும் பேரறமாகும். இவ்வறத்தை இந்நூல்போல் வற்புறுத்தும் ஒரு நூல் வேறு தமிழில் இல்லை. பசியின் கொடுமை மிகப் பெரிது. குடிமை, பெருமை, கல்வி, நாண், தோற்றம் என்ற நல்லவை யாவும் பசித் தீ முன் அழிந்தொழியும் எதனைத் துறந்த துறவியும் பசியைத் துறத்தல் முடியாது. பசி யாரையும் வாட்டிப் பண்பு திரிக்கும் ஆதலின், “பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது” (1239-40) “மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே” (1254-5) என்று சோற்றுக்கொடையின் சிறப்பும் அக் கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன. சோற்றை ஆருயிர் மருந்து என்றும், அதனை வழங்குவோரை ஆருயிர் மருத்துவர் என்றும் சாத்தனார் புகழ்வர். பசி நோயிலிருந்து தான் ஏனைப் புறநோய்களும் அகநோய்களும் பிறப்பன. உடற்பிணி மருத்துவர்களாலும் அகப்பிணி அறிஞர்களாலும் சமுதாயக் கேடுகள் ஒழியமாட்டா. ஏனைநோய்க்கும் பிறப்பிட மாம் பசிப்பிணி தீர்க்கும் அற மருத்துவர்கள் சமுதாயத்திற் பெருகவேண்டும். “மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர்.” (1421-4) எனப் பழத்த துறவி அறவணர் உயிர்வாழும் உலகிற்கெல்லாம் பொது வறம் சாற்றுவர். தனியாரும் பசியொழிக்கப் பாடுபடுதல் வேண்டும். அதன் ஒழிப்பை முதற்கடமையாக அரசும் எண்ண வேண்டும். ஒருயிர் பசித்துக்கிடத்தல் கூடாது. கூடாது. வரப்புயர என்றாற்போலப் பசியொழிக என்றால் ஏனைத் தீயவை யெல்லாம் ஒழியும் என்பதுவே சாத்தனார் சமுதாயக் கொள்கை. “பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென” (70-1) முரசோன் விழா அறைகின்றான். பசி நீங்கப் புறப்பிணி நீங்கும், புறப்பிணி நீங்க அகப்பகை நீங்கும் என்று சாத்தனார் நாட்டிற்கு வழிகாட்டுவர். மக்கட்கு அடிப்படை வேண்டுகை உணவு உடை வீடு என்ற மூன்றுமே என்றும், அவற்றை எவ் வகையானும் அமைத்துக் கொடுப்பதுவே நல்லரசின் முதற்கடன் என்றும் இன்று பல்லரசுகளும் ஒத்துக்கொள் கின்றன. அக்கடனைச் செவ்வன் முடித்துக் குடிப்பசி களையப் பாடுபடுகின்றன. “அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்....................................................................................” (3383-5) சாத்தனார் பன்னூறு ஆண்டுகட்கு முன் கண்டு காட்டிய கனவு இது; அறுதியிட்டுரைத்த அறம் இது. மக்கட்கும் அரசுகளுக்கும் காட்டிய வழி இது. தமிழ்ப் புலவன் கண்ட கனவு அறிவியல் பெருகிய இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கனவாகவே நிற்கின்றது. உயிர் பசி நீங்கும் நனவுநாள் என்றோ? மணிமேகலைக் காப்பியத்தைக் கற்குங்கால் புத்த மதத்தைப் பரப்ப நினைத்தார் வணிகனார் என்ற தோற்றம் நமக்கு புலப்படவில்லை. சீர்திருத்தத்திற்குப் பெயர்போய அம்மதத்தைக் கருவியாக வைத்து, மன்பதையைச் சீர்திருத்த முனைந்தார் என்றே நூற்போக்குக் காட்டுகின்றது. சமுதாய ஊழைலையும் மாந்தர்களின் சமுதாய நோக்கத்தையும் சீராக்க எழுந்த மணிமேகலை ஒரு பறைநூல்; ஆதலின் எல்லாத் தமிழ்க்காப்பியத்தைக் காட்டிலும் எளிய நடையில் இலங்கு கின்றது. சொற்கள் செறிவின்றி சல்லடை நடையில் கலகலப் பாக யாப்பு அமைந்திருக்கின்றது. சொல்லாக்கம் செய்யும் மொழி வன்மை பெற்ற சாத்தனார் இடத்திற்கேற்ப நடை யெளிமை செய்யும் புது மனம் கொண்டவராக இருப்பது பாராட்டற்குரியது. வழக்குச் சொற்களையும் பேச்சு நடையை யும் மிகத் தழுவியிருப்பதும் தமிழ் வளர்ச்சிக்கு வரவேற்கத் தக்கதொன்று நடையெளிமையைக் கதை சொல்லும்போதும் அறஞ் சொல்லும்போது நினைவோடு கையாளும் சாத்தனாரின் நடைபிற இடங்களில் செம்மாப்பு உடையது; யானை எருத்தம் போல்வது. புறத்துறையில் ஓர் எடுத்துக்காட்டு:- “வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால் சேய்நிலத் தன்றியும் செவ்விதின் வணங்கி எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையும் தேரும் மாவும் மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி ஒளியொடு வாழி ஊழிதோ நூழி வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை கேளிது மாதோ கெடுகநின் பகைஞர்” (2253-66) இவ்வடிகளின் தமிழும், பெருமிதமும், சங்க நடைச்செல வும் எல்லாம் நினைவுகொண்டு இம் மணிமேகலையின் காலம் ஆராய வேண்டும். முற்பிறப்பு மறுபிறப்புக்கள் சொல்லும் மணிமேகலை நூல் ஒரு சாரார்க்குப் பிடிக்கும். ஒரு சாரார்க்குப் பிடிக்காது. பௌத்தர் இன்று தமிழகத்திலில்லை. ஒரு மதம் சார்ந்த நூலென்று மணிமேகலையை இன்று வாழ் சைவ வைணவ முகமதிய ஏசுத்தமிழர்கள் அவ்வளவு பற்றுக்காட்டாதிருந்தால் அது தாய்க்குக்குழி தோண்டுவதாகும். எம்மதம் சார்ந்த காப்பியமாயினும், மொழி தமிழ் என்ற ஒருமை எண்ணமே நமக்கு நிற்பதாகுக. காமம்கொண்ட உதய குமரன் கொலைப்பட்டான். அரசமா தேவி வருத்தம் தாங்காது மணிமேகலையைத் துன்புறுத்தினாள். பின்னர் மணிமேகலையின் பெருமை அறிந்து தொழுதாள். ‘அரசியே உனக்கு உன் மகன் உடல்மேல் விருப்பமா? உயிர் மேல் விருப்பமா? உடலை விரும்பினையேல், அது உன்னிடத்துத் தானே இருந்தது. நீ தானே அதனைச் சுடலையில் எரித்தாய். உயிரை விரும்பினையேல், ஒன்று செய். அவ்வுயிர் தான் செய்த வினைக்கேற்ப இதுவரை ஓர் உடம்பு எடுத்துப் பிறந்திருக்கும். அப்பிறவி எதுவென நாம் அறியோம். ஆதலின் உடம்பெடுத்து வாழும் அஃறிணை முதலாய எவ்வுயிர்க்கும் அன்பு செய்யத் தொடங்கு. விதிவிலக்கின்றிப் பிறந்த உயிர்கெல்லாம் அன்பு காட்டுவையேல், அவ்வுயிர்களுள் உன் மகனுக்கும் அன்பு போய்ச்சேரும். ஓருயிர்க்கேனும் அன்பு கொள்ளத் தவறுவையேல், அவ்வுயிர் நின்மகனாக இருந்து விடுதலும் கூடும்’ என்று அன்பு பரப்ப வலியுறுத்துகின்றாள்:- “பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்” (2904-11) அன்புப் பரப்பவேண்டும் அடிகள் இவை. முற்பிறப்பாகுக; மறுபிறப்பாகுக; வினையாகுக; மதமாகுக; பற்றுக்கோடு யாதாயினும் ஆகுக; ஆசிரியன் இப்பிறப்பிற்கு, இவ்வுலகிற்கு, நம் சமுதாயத்துக்கு. நம் அரசுக்கு வேண்டும் வாழ்வறமாக முடிக்கின்றானா? என்று பார்த்துக் கொள்ளவேண்டும். சாத்தனார் எக்கதையையும் வாழ்வறமாக, மக்களறமாக முடித்துக் காட்ட வல்லவர். ஆதலின் மணிமேகலை சீர்திருத்தி களின் கையில் அமுதசுரபியாகப் புகுந்து மன்பதைக்கெல்லாம் நலச்சோறு வழங்குவதாகுக. இரட்டைக் காப்பியங்கள் ஒப்புமைச் சுருக்கம் சிலப்பதிகாரம் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் மணிமேகலைப் பதிகம் இளங்கோ வேந்தன் அருளிச் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென். சொல்லொப்பு 1. திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து (சி.784) தீவ திலகை செவ்வனம் உரைக்கும் (ம.1179) 2. நன்னூற் புலவர்க்கு நன்கனம் உரைத்தாங்கு (சி.3799) நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த (ம.102) 3. ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென (சி.3515) ஈனோர்க் கெல்லாம் இடற்கெட இயன்றது (ம.3909) 4. பெண்ணணி கோலம் பெயர்ந்த பிற்பாடு (சி.1917) பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு (ம.1383) 5. நோதக வுண்டோ நும்மக னார்க்கினி (சி.2566) நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் (ம.2456) (மகன் - கணவன்) தொடர் ஒப்புமை 1. ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட (சி.3098) கடைமணி உகுநீர் கண்டன னாயின் (ம.169) 2. கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே (சி.1991) கண்மணி யனையான் கடிதீங் குறுமென (ம.1979) (கண்மணி யனையான் - காதலன்) அடியொப்புமை 1. பசியும் பிணியும் பகையும் நீங்கி (சி.489-90) வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி (ம.70-71) 2. தாரன் மாலையன் தமனியப் பூணினன் (சி.2487-8) பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் (ம.183-4) 3. வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் (சி.358-9) கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி (ம.37-8) இலக்கணம் 1. புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யான் (சி.2679) நள்ளிருட் கொண்டு நடக்குவன் (ம. 1462) 2. பாயெரி இந்தப் பதியூட்ட காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் (ம.1900) 3. உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு (சி.4632) இப்பதிப் புகுந்தீங்கு யானுறை கின்றேன் (ம.1934) 4. பொதியி லாயினும் இமய மாயினும் (சி.14) அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் (ம.638) 5. இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் (சி.3336) ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி (ம.259) திருக்குறள் மேற்கோள் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் (சி.3128-09) தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (ம.2676.8) உவமை யொப்பு 1. இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி யிழந்த நாகம் போன்றதும் இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் (சி.1973-6) மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும் நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துய ருழப்ப இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னிய துரைத்த சுதமதி தானென் (ம.928-32) 2. ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பம் தாம்நனி எய்த (சி.4795-7) ஆங்கவள் உரைகேட் டரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் (ம.144-6) உருவகநடை 1. அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே வருந்தினை போலும்நீ மாதவி என்றோர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக் கோசிக மாணி கூறக் கேட்ட (சி.1966-9) அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு வுயிர்ப்ப ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி (ம.2019-20) 2. மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத் திளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது (சி. 3375-7) கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டியப் புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென (2129-32) நூல் நயம் எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் உயிர்பதிப் பெயர்த்தமை உறுக. (சி.3788-90) மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றி (ம.2827-30) கற்பியல் 1. பீடன் றெனவிருந்த பின்னரே (சி.1250) கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள் (ம.2065-6) 2. அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை (சி.4604-6) மாதவர் நோண்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் (ம.2824-5) வினையியல் 1. ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது (சி.4562-3) ஆடுங் கூத்தியர் அணியே போல வேற்றோர் அணியொடு வந்தீரோ (ம.1356-7) 2. உம்மை வினைவந் துருத்த காலைச் செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது (சி.2510-1) தலைவன் காக்கும் தம்பொருட் டாகிய அவல வெவ்வினை என்போர் அறியார் அறஞ்செய் காத லன்பினி னாயினும் மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழியாது (ம.2490-3) தமிழ்ப்புணர்ச்சி தமிழ் மொழியின் ஒரு தனிச்சிறப்பு பேச்சும் எழுத்தும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பது; அதனாலேதான் குமரி நாடு அழியினும் தமிழ் குமரியாக வாழ்கின்றாள்; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஈராயிரம் ஆண்டுப் பழைய அடி இன்றும் விளங்குகின்றது. இவ்வாழ்வுக்குக் காரணம் நம் வழக்கிலிருந்து நம் செய்யுட்கள் பிறந்தன. இதுவே ஆயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியத்துக்கு உரையெழுதிய பேராசிரியரின் கோட்பாடு. நம் வழக்கின் கூறுகளைத்தான் புதிய சுவை நடையில் பாட்டின்கண் காண்கின்றோம். அக்கூறு களுள் ஒன்று புணர்ச்சி என்பது. குழந்தையின் மழலைத் தமிழை ஒரு சிறிது கேளுங்கள். சொற்கள் நின்று நின்று செல்கின் றனவா? நீரோட்டம் போல் கலந்தும் இணைந்தும் தொடர்ப் படுவதைக் காண்பீர்கள். இவ்வழக்குப் புணர்ச்சியே செய்யுட்கு ஏறியிருக்கின்றது. வழக்கை மிகுதியாகக் கேட்ட பயிற்சியால் இப்புணர்ச்சி நமக்குத் தோன்றவில்லை. நூலைப் படிக்கும் போது புணர்ச்சி பிரிந்திருந்தால் தமிழின்பம் பெறலாம் என்று நாம் மயங்குகின்றோம். இன்பத்திற்கு இஃது இயற்கையன்று. பிரித்துக்காணும் மொழிப்பயிற்சி பெறுவதே நேர்வழி. ஓரைம்பது பாட்டுக்களைப் பிரித்தும் புணர்த்தும் பார்க்கும் சிறு நன்முயற்சி - ஒருநாள் முயற்சி - நமக்கு வேண்டும். இச்சிறு முயற்சிக்குச் சோம்பற்பட்டு, ஒரு கோடிப் பாடல்களை முற்றும் பிரிவினை செய்து பதிப்பிக்கும் போக்குக்கு இடங்கொடுத்த லாகாது. மொழியுலகில் உரைநடையினும் பாடல் சிறந்திருப்ப தற்குக் காரணம் அதன் ஓசை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பது. இவ்வொழுங்கையே ‘யாப்பு’ என்ப. ஒழுகிய ஓசையைப் பாட்டு, பாடல், பா என்று பாராட்டுகின்றோம். எதுகை மோனைகள் தழுவிய பாடலின் பொதுப்பயன் இளம் உள்ளங்களையும் கல்லா உள்ளங்களையும் கொள்ளைகொள்வது. கற்றார் உள்ளத்தில் நின்று நிலைப்பது. நம் தமிழ்க் குழவிகள் சிறந்த நூல்களை வரப்பண்ணுதற்குப் புணர்த்த பதிப்புகளையே அளிக்க வேண்டும். அப்போதுதான் ஓசை கொண்டு பாடும் இயற்கைக் கவிஞர்கள் தமிழ்நிலத்துப் பிறப்பார்கள். இன்று சிறு பள்ளி முதல் பல்கலைக்கழகம்வரை தமிழ்ச்செய்யுட் பாடங்கள் அடிகளற்றுச் சீர்களற்றுப் பிரித்துப் பதிக்கப் படுகின்றன. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் கல்வி நிலையங்களிற்கூடப் புணர்த்த பதிப்புக்கள் இல்லையெனின் வருங்காலத் தமிழகத்தில் தமிழிலக்கியநிலை யாதாமோ? ஆதலின் தமிழ் மக்கள் ஒரிருநாள் முயல்க. ஐம்பது பாட்டுக் களைப் பிரித்தும் புணர்த்தும் பயில்க. தமிழின் இயற்கையும் இனிமையும் விளங்கக் காண்பீர்கள். புணர்ச்சி வழக்குத் தமிழில் உண்டு; அவ்வழக்கே பாடலிற் காணப்பெறுகின்றது என்பதைத் தெளிவிக்க இங்கே வழக்குக்காட்டுக்கள் நிரம்பத்தருவேன். இன்றியமையாத சில புணர்ச்சி விதிகளையும் தருவன். இவை பலவகையாலும் குறையுடையன; என்றாலும் அடிப்படைப் பயிற்சியை நல்கும் என்றும் நல்ல பயிற்சிக்குத் தூண்டும் என்றும் நம்புகின்றேன். நால்வகை தொடர் புணர்ச்சிக்கு இரு சொற்கள் வேண்டும். ‘தமிழறிந்தான்’ என்பது ஒரு புணர்ச்சி. இவ்விருசொல்லுள் ‘தமிழ்’ நிலை மொழிச்சொல் எனப்படும்; ‘அறிந்தான்’ வருமொழிச்சொல் எனப்படும். நிலைமொழியிலும் பல எழுத்துக்கள் உண்டு. வருமொழியிலும் பல எழுத்துக்கள் உள. இவ்வெல்லா எழுத்துக்களுமா புணர்கின்றன? இல்லை. நிலைமொழி இறுதி யெழுத்தும் வருமொழி முதலெழுத்துமே கூடுகின்றன. ஒரு பொருளைக் கயிற்றால் கட்டுகின்றோம்; கயிறுபோத வில்லை. இன்னொரு கயிறு முடிந்து நீளமாக்குகின்றோம் இரண்டு கயிறுகளை முடிந்தோம் என்றாலும் முடிபட்டவை எவை? முதற்கயிற்றின் கடைசியையும் மற்றொன்றின் நுனியையுமே சேர்த்தோம். அதுபோல இரண்டு சொற்கள் சேர்ந்தன என்றாலும் புணரப்பட்டவை நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்துமே என்பது தெளிவு. ‘தமிழை நயந்தான்’ என்பதில் ஈற்றெழுத்து ‘ழை’ யா? இல்லை. முதலெழுத்து ‘ந’ வா? இல்லை. ழை-ழ்+ஐ எனப் பிரிவுபடும்; ஆதலின் நிலைமொழி ஈற்றெழுத்து ‘ஐ’ என்றும், உயிர் என்றும் சொல்லவேண்டும். ந-ந்+அ எனப் பிரிவுபடுதலின் வருமொழி முதலெழுத்து ‘ந’ என்றும், மெய் என்றும் கொள்ளவேண்டும். இவ்வகையால் புணரும் தொடர் நால்வகைப்படும். 1. தமிழ் + அறிவு : மெய்யீறு உயிர்முதல் 2. நிலா + ஒளி : உயிரீறு உயிர்முதல் 3. பாடம் + படி : மெய்யீறு மெய்ம்முதல் 4. நல்லன + செய் : உயிரீறு மெய்ம்முதல் பயிற்சி :- பின் வருவன எத்தொடர்கள்? கடிவது மற குறளறிவு எட்டுத்தொகை எங்கள் நாடு பாரதி நூல் செம்மை வேண்டும் நால்வகைப் புணர்ச்சி புணர்ச்சியில் சொற்கள் படும் நட்பு முறையும் நான்கு வகையாகும் இயல்பு, மிகுதல், திரிதல், கெடுதல் என்பன அவை. இரண்டு சொற்கள் கூடும்போது அத்தொடரில் ஏதும் மாற்றம் உண்டா? சில தொடர்களில் எம்மாற்றமும் உண்டாவதில்லை. இரண்டு சொற்களைச் சேர்த்த அளவிலேயே அவை தம்முள் இணைந்துவிடுகின்றன. இதனை இயல்பு புணர்ச்சி என்ப. அகப்பொருளிலும் தாமே எதிர்ப்பட்டுக்கூடும் களவுக் காதலர் களின் தொடர்பு இயல்பு புணர்ச்சி என்றே சொல்லப்படுதல் காண்க. காட்டுக்கள்:- வானொலி; தமிழிசை, நல்லது செய்; பொன்மலை; நெய்வேலி. மிகுதல் என்பது புணர்ச்சியால் ஓர் எழுத்து தோன்றுதல். புணர்தற்கு வந்த சொற்கள் இரண்டும் மூன்றாவது ஒரு பொருளைத் தெளிவாகக் காட்டுவதற்கு இவ்வெழுத்து வேண்டும். காட்டுக்கள்:- எலிப்பொறி; தமிழ்ச்சொல்; தைப் பொங்கல்; கலைத்துறை; போர்க்களம்; நாட்டுப்பற்று. திரிதல் என்பது ஈற்றெழுத்தோ, முதலெழுத்தோ இரண்டுமோ அஃதாவது உள்ள எழுத்து வேறொரு எழுத்தாக மாறுபடல். இவ்வெழுத்து மாற்றத்தால், கூடிய சொற்கள் தம் தனிபொருளின் மேல் ஓர் கூட்டுப்பொருள் தருகின்றன. காட்டுக்கள்:- பற்பொடி; நாட்குறிப்பு; பெருஞ்சொல்; தண்டமிழ்; ஆண்டகை; தென்றிசை; தென்றமிழ். கெடுதல் என்பது எழுத்து மறைதல், இல்லாது போதல். கோவலன் கெட்டபின் பொருளீட்டினாற்போலச் சில சொற்கள் அறக்கெட்டபின் பொருளுணர்ச்சியைத் தெளிவாகத் தருகின்றன. காட்டுக்கள்:- நிலக்கரி, முகப்பரு, பல்பொருள், பழக்கவழக்கம், சேர சோழ பாண்டியர். பயிற்சி :- பின் வருவன எப்புணர்ச்சிகள்? நீரிழிவு, அறவுரை, மரப்பொம்மை, கொண்டாட்டம், கற்பலகை, காய்கறி, மொழிப்பற்று, தீப்பெட்டி, ஐந்தாறு, அடிக்கடி, அருட்பா, அருஞ்சொல், கருங்குளம். இதுவரை நால்வகை மொழித் தொடரையும் நால்வகைப் புணர்ச்சியையும் அறிந்தோம். இவற்றை ஓர் முன்னறிவாகக் கொண்டு தமிழ் மொழியிற் பரந்துகிடக்கும் புணர்ச்சி விதிகள் சிலவற்றைப் பயில்வோம். வழக்கிலிருந்தே மிகுதியாக எடுத்துக்காட்டுக்கள் கொள்வோம். விதி 1. (உயிர்மெய்ப் புணர்ச்சி) இப்புணர்ச்சிக்கு மெய்யீறு உயிர்முதல் ஆகும். இதனை மெய்யுயிர்ப் புணர்ச்சி என்றால் நமக்கு நன்கு விளங்கும். புணர்ச்சி நிலை - பிரிவு நிலை பேரேடு - பேர் + ஏடு தமிழாசிரியன் - தமிழ் + ஆசிரியன் தொழிலாளி - தொழில் + ஆளி இங்கு மெய்யெழுத்துக்கள் மேல் உயிர்கள் இயல்பாகப் புணர்ந்திருக்கின்றன. இது மிக எளிய புணர்ச்சி; மொழி முழுதும் வழக்கிலும் செய்யுளிலிலும் மண்டிக்கிடக்கும் புணர்ச்சி, மா, மு, மோ, யா, யோ, ணே, ளொ, னொ, ர, ரு, ரூ இவற்றை முதலிற் பிரிக்க. செய்யுட் பயிற்சி: பிரிக்க:- ஊருடன் கூடிவாழ். அனந்த லாடேல். உத்தமனா யிரு. புணர்க்க:- தோழ னோடும் ஏழைமை பேசேல்; சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். விதி 2 (இ ஈ ஐப்புணர்ச்சி) இப்புணர்ச்சி உயிரீறு உயிர்முதல் ஆகும். நிலை மொழி யீற்றுயிர்கள் இ ஈ ஐயாக இருக்கவேண்டும். வருமொழி உயிருக்கு வரம்பில்லை. இரண்டு உயிர்கள் ஒன்று சேரா. அதனால் அவற்றுக்கு இடையே ஒரு மெய் பிறக்க வேண்டும். இம்மெய் இரண்டுயிர்களைப் பொருத்துதலின் ‘உடம்படு மெய்ப்புணர்ச்சி என்று சொல்லுவர். ஈங்கு பெரும்பாலும் வருமெய் ‘ய்’ ஆகும். புணர் நிலை பிரிவு நிலை குடியரசு குடி+ய்+அரசு தீ யணைப்பு தீ+ய்+அணைப்பு பனையோலை பனை+ய்+ஓலை இப்புணர்ச்சியும் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கடல்போற் காணப்படும். ‘ய்’ என்ற மெய் இருசொற்களின் உயிர்களை நடுநின்று கூட்டுதல் காண்க. செய்யுட் பயிற்சி: பிரிக்க: கீழ்மை யகற்று, பூமி திருத்தி யுண் புணர்க்க: சான்றோர் என்கை ஈன்றோட் கழகு மாரி அல்லது காரியம் இல்லை விதி: 3 (ஏனையுயிர்ப் புணர்ச்சி) விதி 2 இல் மூன்று உயிர்களைத் தனியாகக் கொண்டோம். இவ்விதிக்கு ஏனை (அ, ஆ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஒள) உயிர்கள் நிலைமொழி இறுதிகளாம். இவை ‘வ்’ என்ற எழுத்தை உடம்படு மெய்யாகக்கொள்ளும். வருமொழியில் எவ்வுயிரும் வரலாம். புணர் நிலை பிரிவு நிலை அவ்வப்பொழுது - அ+வ்+அப்பொழுது பாவாடை - பா+வ்+ஆடை இளங்கோவடிகள் - இளங்கோ+வ்+அடிகள் விதி 2 விதி 3 இரண்டும் சேர்த்து உடம்படு மெய்ப்புணர்ச்சி என்று ஒரு பெயர்பெறும். இப்புணர்ச்சிகள் எல்லா வடிகளிலும் காணலாம். ஏகார ஓகார இறுதிகள் இரண்டு மெய்களையும் பெறுதல் உண்டு:- சேவடி, சேயடி, கோவில், கோயில். செய்யுட்பயிற்சி: பிரிக்க: ஞயம் படவுரை ஆக்க மெவனோ வுயிர்க்கு புணர்க்க கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் இனிய உளவாக இன்னாத கூறல். விதி 4. (குற்றியலுகரப் புணர்ச்சி) இப்புணர்ச்சிக்கும் உயிரீறு உயிர்முதல் ஆகும். தமிழ் மொழியில் உள்ள உகர வீற்றுச் சொற்கள் பல மாத்திரை குறையுடையன. அதனால் அவை தனிப்புணர்ச்சி விதி பெறுகின் றன. நாடு, மாடு, வீடு, வீசு, காசு, மாசு, கடுகு, பருகு, வந்து, கண்டு, அறிந்து, நின்று, அடுப்பு, துடுப்பு, வெறுப்பு என்பனபோலும் எண்ணிலடங்காச் சொற்கள் குற்றியலுகரங்களாம். (அடு, சுடு, படு, எடு, அது, கதவு, துப்புரவு முதலியன முற்றுகரங்களாம்) ‘எழுந்திருந்தான்’ என்ற குற்றியலுகரத் தொடர் எழுந்து+ இருந்தான் எனப் பிரியும். இங்கு நடந்தகேடு என்ன? குற்றியலு கரம் கெட்டது. இறுதியில் ‘த்’ மட்டும் நின்றது. வருமொழி முதல் ‘இ’ அம்மெய்மேல் ஏற த்+இ=தி ஆயிற்று. எனவே மாத்திரை குறைந்த உகரம் ஓடும்; அது இருந்தவிடத்தை வருமொழியில் வரும் உயிர் எதுவோ அது கைப்பற்றிக்கொள் ளும் என அறியலாம். நாட்டையாளும் சிறுபடை மன்னன் பேராற்றல் உடைய வேந்தன் வரும்போது ஓடிவிடுகின்றான். அவன் நாடு இருக்கின்றது. வந்த பெருவேந்தன் அந்நாட்டைக் கைப்பற்றுகின்றான். இதுவே குற்றியலுகரத்தின் நிலை. இவ்விதியால் கு+ஆ:கா; து+ஒ:தொ: டு+இ:டி; சு+அ:ச; பு+எ: பெ; று+ஏ; றே என மாறக் காணலாம். இவ்வொரு விதியை நீங்கள் நன்கு விளங்கிக்கொண்டுவிட்டால், பாடலில் ஒரு பெரும்பகுதி எளிமையாய்த் தோன்றக் காண்பீர்கள். இவ்வுகரத்தொடர் இல்லாத பேச்சில்லை; பாட்டில்லை. இதனைத் தெரிந்துகொள் வதைத் தவிர வேறு வழியுமில்லை. காற்றுப் போல் யாண்டும் பரவிக்கிடக்கின்றது இவ்வுகரம். புணர்நிலை பிரிவு நிலை பகுத்தறிவு பகுத்து+அறிவு கற்புக்கரசி கற்புக்கு+அரசி ஒத்துழையாமை ஒத்து+உழையாமை நாடோடி நாடு+ஓடி அரசியல் அரசு+இயல் அன்பளிப்பு அன்பு+அளிப்பு இவையெல்லாம் நாம் நாள்தோறும் வழங்கும் சொற்கள். இக்காட்டுக்களைக் கண்டபின், வழக்கொடு பட்டதுதான் தமிழ்ச் செய்யுள் என்றும், முறையான தமிழறிவைச் சிறிது முயன்று பெறுவதுதான் நன்று என்றும் யாரும் உணர்வர். செய்யுட் புணர்ச்சி பிரிக்க: எண்ணெழுத் திகழேல். ஏற்ப திகழ்ச்சி ஐய மிட்டுண். ஒப்புர வொழுகு. ஓதுவ தொழியேல் புணர்க்க: தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது கல்விக் கழகு கசடற மொழிதல். விதி 5 (மகரப்புணர்ச்சி) இனவெழுத்துக்கள் எனச் சில எழுத்துக்களைத் தமிழில் வகைப்படுத்துவதுண்டு. அவை ங்க, ஞ்ச, ந்த, ம்ப, என்றவாறு இனமாகக் கூடிவரும். மகரம் (ம்) பகரத்துக்கு (ப்) இனம்; அது நிலைமொழியீற்றில் நிற்கும் போது, க முதலாக வந்தால் ‘ங்’ ஆகும் ச வந்தால் ஞ் ஆகும்; த வந்தால் ந் ஆகும். ப வந்தால் மாறாது நிற்கும். காலம் + கடத்தாதே : காலங் கடத்தாதே காலம் + சிறிது : காலஞ் சிறிது காலம் + தெளிந்தான் : காலந் தெளிந்தான் காலம் + போற்று : காலம் போற்று கடாரங் கொண்டான், தேங்குழல், கொடுங்கோல், அருஞ்சொல், மணஞ்செய், கூட்டஞ் சேர், செந்தமிழ், பெருந்தலை, கடுந்துயர், பெரும்புகழ், வெறும்பை, கரும்பாம்பு என எண்ணில வருதல் காண்க. எனவே ங், ஞ், ந் என்ற இடங்களை ‘ம்’ ஆகப் பிரித்துப் பார்க்க வேண்டும். செய்யுட் பயிற்சி: பிரிக்க: அறஞ் செய விரும்பு. நோய்க்கிடங் கொடேல். மனந்தடுமாறேல். ஓரஞ் சொல்லேல். புணர்க்க: அஃகமும் காசும் சிக்கெனத் தேடு புலையும் கொலையும் களவும் தவிர். விதி 6: (ன ல புணர்ச்சி) இதுவரை சொல்லிய ஐந்து விதிகளும் முதலிற் பழகுதற்கு உரியன. அவற்றால் ஒரு பெரும் பாடலில் மூன்றில் இருபங்கு தெளிவுறும். இனிக்கூறும் புணர்ச்சிகள் வழக்கிலும் பாட்டிலும் மலிந்து வாரா. ஆதலின் அதிகப்பயிற்சிக்கு உரியவை என்று மனங்கொள்ளுக. நிலைமொழி ஈற்றில் ன் ல் இருப்பதாகக் கொள்வோம். பொதுவான ஒரு விதி இவை வல்லெழுத்து வரும்பொழுது ‘ற்’ ஆகத்திரியும். எனவே, ‘ற்’ எழுத்தை. ‘ன்’ ஆக ‘ல்’ ஆகப் பிரித்துப் பார்க்கவேண்டும். புணர் நிலை பிரிநிலை பொற்றாமரை பொன்+தாமரை முற்காலம் முன்+காலம் கற்கண்டு கல்+கண்டு கற்றாழை கல்+தாழை இங்கு பொற்றாமரை, கற்றாழை என்பற்றில் வருமொழித் தகரமும் ‘ற’ கரமாதல் காண்க. இனி நிலைமொழி யீற்றில் ன், ல் இருக்க, வருமொழியில் ‘ந’ வந்தால், எல்லாமே ‘ன்’ ஆகத் திரியும். புணர்நிலை பிரிநிலை முன்னாள் முன்+நாள் என்னிலை என்+நிலை நானூறு நால்+நூறு மேனாடு மேல்+நாடு இப்புணர்ச்சி விதி பாடல்களை ஒருவாறு பிரிக்கும் அளவிற்குப் பயன்படும். செய்யுட் பயிற்சி பிரிக்க: இலவம் பஞ்சிற் றுயில். சொற் சோர்வு படேல் காவறானே பாவையர்க் கழகு வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் விதி 7: (ண ள புணர்ச்சி) மேலை விதிபோல் இப்புணர்ச்சியும் கருத்தூன்றிப் பயிலற் குரியது. பாடலில் சில இடங்களிலேதான் இது காணப்படும். பயிற்சியால் ஆகாதநிலை. நிலைமொழி ஈற்றில் ண் ள் இருப்பதாகக் கொள்வோம். பொதுவான ஒரு விதி இவை வல்வெழுத்து (க் ச் த் ப்) வரும்போது ‘ட்’ ஆகத் திரியும். எனவே, ‘ட்’ எழுத்தைக்காணின் ‘ண்’ அல்லது ‘ள்’ ஆகப் பிரித்துப் பாருங்கள். புணர்நிலை பிரிநிலை மட்பாண்டம் மண்+பாண்டம் கண்டாங்கி கண்+தாங்கி நாடோறும் நாள்+தோறும் அருட்பா அருள்+பா நாட்குறிப்பு நாள்+குறிப்பு இங்கு கண்டாங்கி வருமொழித் தகரம் டகரம் ஆதல் காணலாம். டி=ள்+தி; டா=ள்+தா; டொ=ள்+தொ என்றவாறு பிரித்துப் பழக வேண்டும். இனி நிலைமொழி இறுதியில் ண் ள் இருக்க, வருமொழியில் ‘ந’ வந்தால் எல்லாமே ‘ண’ ஆகத் திரியும். புணர்நிலை பிரிநிலை தண்ணீர் தண்+நீர் கண்ணீர் கண்+நீர் எண்ணான்கு எண்+நான்கு எண்ணெய் எள்+நெய் செய்யுட் பயிற்சி பிரிக்க: பொருடனைப் போற்றி வாழ். மெல்லினல்லா டோள் சேர் கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி. சிலப்பதிகாரம் பதிகம் (இணைக்குறளாசிரியப்பா) மலைக்குறவர் அறிவிப்பு குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக் குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப் பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிலல் 5. ஒருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக்கு அமரர்க் கரசன் தமர்வந்தீண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெங் கட்புலம் காண விட்புலம் போயது இறும்பூது போலும் அறிந்தருள் நீயென கதைச் சுருக்கம் 10. அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தன் யானறி குவனது பட்டதென் றுரைப்போன் ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப் பேராச் சிறப்பிற் புகார்நக ரத்துக் கோவலன் என்பானோர் வாணிகன் அவ்வூர் 15. நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக் கண்ணகி என்பாள் மனைவி அவள்கால் பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப் பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர் 20. மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன் பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக் கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லையீங் கிருக்கிகென் றேகிப் 25. பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் கண்டனன் பிறனோர் கள்வன் கையென வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகிக் கன்றிய காவலர்க் கூஉய்க் கள்வனைக் 30. கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நிலைக்களம் காணாள் நெடுங்கணீர் உகுத்துப் பத்தினி யாகலிற் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகம் திருகி 35. நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய பலர் புகழ் பத்தினி யாகும் இவளென தீவினையின் விளைவு வினைவிளை காலம் என்றீர் யாதவர் வினைவிளை வென்ன விறலோய் கேட்டி. அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் 40. கொன்றையஞ் சடைமுடி மன்றப் போதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்; அரஞர் உற்ற வீரபத் தினிமுன் மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக் கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் 45. முதிர்வினை நுங்கட்கு முடிந்த தாகலின் முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவனொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச் சங்கமன் என்னும் வாணிகன் மனைவி இட்ட சாபம் கட்டிய தாகலின் 50. வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்லெனக் கோட்டமில் கட்டுரை கேட்டனன் யானென நூலின் குறிக்கோள் 55. அரைசியல் பிழைத்தோர்க கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வீனை உருத்துவந் தூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரான் 60. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுகென் றாற்கவர் நூலின் உட்பிரிவுகள் முப்பது மங்கல வாழ்த்துப் பாடலும் குரவர் மனையறம் படுத்த காதையும் நடம்நவில் 65. மங்கை மாதவி அரங்கேற்று காதையும் அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும் இந்திர விழவூ ரெடுத்த காதையும் கடலாடு காதையும் மடலவிழ், கானல் வரியும் வேனில்வந் திறுத்தென 70. மாதவி யிரங்கிய காதையும் தீதுடைக் கனாத்திறம் உரைத்த காதையும் வினாத்திறத்து நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு புறஞ்சேரி யிறுத்த காதையும் கறங்கிசை 75. ஊர்காண் காதையும் சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும் கொலைக்களக் காதையும் ஆய்ச்சியர் குலவையும் தீத்திறம் கேட்ட துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு 80. வழக்குரை காதையும் வஞ்சின மாலையும் அழற்படு காதையும் அருந்தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும் மட்டலர் கோதையர் குன்றக் குரவையும் என்றிவை அனைத்துடன் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் 85. வாழ்த்து வரந்தரு காதையொடு இவ்வா றைந்தும் சாத்தனார் நூல் கேட்டல் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் 90. இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென், உரைபெறு கட்டுரை பாண்டிய நாடு 1. அன்று தொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலி ருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிர வரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்திசெய்ய, நாடு மலிய மழைபெய்து நோயும் துன்பமும் நீங்கியது. கொங்கு நாடு 2. அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய, மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. இலங்கை 3. அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகுவென்பான். நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவளென, ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப, மழை வீற்றி ருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று. சோழ நாடு 4. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரும் இவளோர் பத்தினிக் கடவுள் ஆகமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே. முதலாவது புகார்க் காண்டம் 1. மங்கல வாழ்த்துப்பாடல் வாழ்த்து (சிந்தியல் வெண்பாக்கள்) 1. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கவன் அளிபோல் மேனின்று தான்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற்கவன் குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான். நகரச் சிறப்பு (கொச்சகக் கலிப்பா) 13. ஆங்குப் பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே. கண்ணகி 20. அதனால் நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார்நக ரதுதன்னில் மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்; அவளுந்தான் போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர் மன்னுங் கண்ணகியென் பாள்மன்னோ. கோவலன் 30. ஆங்குப் பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான் வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண் டகைவையான்; அவனுந்தான் மண்டேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம் பண்டேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக் கண்டேத்துஞ் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற் கொண்டேத்துங் கிழமையான் கோவலனென் பான்மன்னோ. திருமணம் 40. அவரை இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி யானை எருத்தத் தணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம் அவ்வழி முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல வணியெழுந்தது மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தக்கீழ் 50. வானூர் மதியம் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்க ணோன்பென்னை! விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர் 60. போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார் திருமண வாழ்த்து காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமல் தீதறு கெனவேத்திச் சின்மலர் கொடுதூவி, அங்கண் உலகின் அருந்ததி யன்னாளை மங்கல நல்லமளி யேற்றினார் தங்கிய இப்பால் இமயத் திருத்திய வாள்வேங்கை உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும் செருமிகு சினவேற் செம்பியன் 68. ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே. (68) 2. மனையறம்படுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) இன்ப அமளி 69. உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர் முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளர்த்த தாகி, அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம் ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம் கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவ முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும் 80. மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக் தென்றல் நுகர்ச்சி கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை அரும்புபொதி அவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக் கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த் தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப் புரிகுழல் அளகத்துப் புகலேக் கற்றுத் திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து 90. மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து ஊடலும் கூடலும் விரைமலர் வாளியொடு வேனில் வீற் றிருக்கும் நிரைநிலை மாடத் தரமிய மேறிச் சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக் கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி முதிர்கடல் ஞால முழுவதும் விளக்கும் கதிரொருங் கிருந்த காட்சி பேல 100. வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் கோவலன் புலம்பல் தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை கண்ணகியின் உறுப்பழகு குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத் தாயினும் உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையின் பெரியோன் தருக திருநுத லாகென. 110. அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப் படைவழங் குவதோர் பண்புண் டாகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவ மாக ஈக்க மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின் தேவர் கோமான் தெய்வக் காவற் படைநினைக் களிக்கவத னிடைநினக் கிடையென அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே அஞ்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச் 120. செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது தன்மை யழகு மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின் சாயற் கிடைந்து தண்கான் அடையவும், அன்னம் நன்னுதல் மென்னடைக் கழிந்து நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவும், அளிய தாமே சிறுபசுங் கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது உடனுறைவு மரீஇ ஒருவா வாயின. அணி யழகு 130. நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர் மறுவில் மங்கல வணியே யன்றியும் பிறதணி அணியப் பெற்றதை எவன்கொல்! பல்லிருங் கூந்தற் சின்மலர் அன்றியும் எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல்! நானம் நல்லகில் நறும்புகை யன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்! திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் ஒருகாழ் முத்தமொ டுற்றதை எவன்கொல்! திங்கள்முத் தரும்பவும் சிறுகிடை வருந்தவும் 140. இங்கிவை யணிந்தனர் என்னுற் றனர்கொல்! சுவை யழகு மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையால்! நின்னையென்று உலவாக் கட்டுரை பலபா ராட்டித் 150. தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மழிந்துசெல் வுழிநாள் தனிமனை வாழ்க்கை வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க. யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற் 158. காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென். (90) (வெண்பா) பாம்பின் புணர்ச்சி 1. தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார் காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று. 3. அரங்கேற்று காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) ஆடல் மகளின் இலக்கணம் 159. தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத் திந்திர சிறுவனொடு தலைக்கோற் றானத்துச் சாபம் நீங்கிய மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல் ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி ஆடலாசிரியன் இலக்கணம் 170. இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோ ராடலும் பாடும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் கூடிய நெறியின கொளுத்துங் காலைப் பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும் கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக் கூடை செய்தகை வாரத்துக் களைதலும் வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும் 180. பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும் இசையாசிரியன் இலக்கணம் யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரற் றண்ணுமை ஆடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித் தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் தேசிகத் திருவின் ஓசை யெல்லாம் 190. ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக் கவியது குறிப்பும் ஆடற் றொகுதியும் பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையோன் தானும் புலவன் இலக்கணம் இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து இசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்தாங்கு 200. அசையா மரபி னதுபட வைத்து மாற்றோர் செய்த வசைமொழி அறிந்து நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும் தண்ணுமை ஆசிரியன் இலக்கணம் ஆடல் பாடல் இசையே தமிழே பண்ணே பாணி தூக்கே முடமே தேசிகம் என்றிவை ஆசின் உணர்ந்து கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்தாங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி வாங்கிய வாரத்து யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக் 210. கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச் சித்திரக் கரணம் சிதைவின்று செலுத்தும் அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும் குழலாசிரியன் இலக்கணம் சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப் பண்ணமை முழவின் கண்ணெறி அறிந்து 220. தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு இசையோன் பாடிய இசையின் இயற்கை வந்தது வளர்த்து வருவ தொற்றி இன்புற இயக்கி இசைபட வைத்து வார நிலத்தைக் கேடின்றி வளர்த்தாங்கு ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக வழுவின் றிசைக்குங் குழலோன் தானும் யாழாசிரியன் இலக்கணம் ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி 230. வன்மையிற் கிடந்த தார பாகமும் மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை ஒழிந்த பாகமும் பொற்புடைத் தளராத் தாரம் விளரிக் கீத்துக் கிளைவழிப் பட்டனள் ஆங்கே கிளையும் தன்கிளை அழிவுகண் டவள்வயிற் சேர ஏனை மகளிருங் கிளைவழிச் சேர மேல துழையிளி கீழது கைக்கிளை வம்புறு மரபிற் செம்பாலை யாயது 240. இறுதி யாதி யாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக் குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின் முன்னதன் வகைய முறைமையில் திரிந்தாங்கு இளிமுத லாகிய ஏர்படு கிழமையும் கோடி விளரி மேற்செம் பாலையென நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின் இணைநரம் புடையன அணைவுறக் கொண்டாங்கு யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் 250. குழல்மேற் கோடி வலமுறை வலிய வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன் அரங்கின் இலக்கணம் எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக் கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு நூனெறி மரபின் அரங்கம் அளக்கும் கோலள விருபத்து நால்விர லாக எழுகோல் அகலத் தெண்கோல் நீளத் 260. தொருகோல் உயரத் துறுப்பின தாகி உத்தரப் பலகையோ டரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோ லாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேனிலை வைத்துத் தூணிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து 270. மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப் தலைக்கோல் இலக்கணம் பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு கண்ணிடை நவமணி ஒழுக்கி மண்ணிய நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக் காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் ஆகென வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் தலைக்கோற் கரணம் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி 280. மண்ணிய பின்னர் மாலை அணிந்து நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு முரசெழுந் தியம்பப் பல்லியம் ஆர்ப்ப அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும் தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு மாதவி அரங்கேற்றம் இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, வலக்கால் முன்மிதித் தேறி அரங்கத்து 290. வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீரியல் பொலிய நீரல நீங்க வாரம் இரண்டும் வரிசையிற் பாடப் பாடிய வாரத் தீற்றினின் றிசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம் குழல்வழி நின்றது யாழே யாழ் வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு 300. கூடிநின் றிசைத்த தாமந் திரிகை ஆமந் திரிகையோ டந்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி வந்த முறையின் வழிமுறை வழாமல் அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல் நான்கின் ஓரீஇய நன்கனம் அறிந்து மூன்றளந் தொன்று கொட்டி அதனை 310. ஐதுமண் டிலத்தாற் கூடை போக்கி வந்த வாரம் வழிமயங்கிய பின்றை ஆறும் நாலும் அம்முறை போக்கிக் கூறிய ஐந்தின் கொள்கை போலப் பின்னையும் அம்முறை பேசிய பின்றைப் பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன் வேந்தன் பரிசளிப்பு இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி 320. விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே மாலை விற்பனை நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து நகர நம்பியர் திரிதரு மறுகிற் பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த கோவலன் புணர்வும் பிரிவும் மாமலர் நெடுங்கண் மாதவி மாலை கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு 330. மணமனை புக்கு மாதவி தன்னொடு அணையுறு கைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுத லறியா விருப்பின னாயினன் 333. வடுநீங்கு சிறப்பிற்றன் மனையகம் மறந்தென் (175) (வெண்பா) மாதவி ஆடல் 2. எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும் பண்ணின்ற கூத்துப் பதினொறும்- மண்ணின்மேற் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கின் வந்து. 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) நிலமகள் புலம்பல் 334. விரிகதிர் பரப்பி உலகமுழு தாண்ட ஒருதனித் திகிரி உரவோற் காணேன் அங்கண் வானத் தணிநிலா விரிக்கும் திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத் திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத் 340. திரைநீ ராடை இருநில மடந்தை அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைக் மாலை வருகை கறைகெழு குடிகள் கைதலை வைப்ப அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி வலம்படு தானை மன்னர் இல்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக் குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத 350. அறுகாற் அறுகாற் குறும்பெறிந் தரும்புபொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப மல்லர் மூதூர் மாலைவந் திறுத்தென திங்கள் விளக்கம் இளைய ராயினும் பகையரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின் அந்தி வானத்து வெண்பிளை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப் பான்மையிற் றிரியாது பாற்கதில் பரப்பி மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து மாதவி மகிழ்ச்சி 360. இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து சேந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல் அந்துகில் மேகலை அசைந்தன வருந்த நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியும் காதலற் களித்தாங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக் கோலங் கொண்ட மாதவி யன்றியும் புணர்ந்தோர் இன்துயில் குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு குணதிசை மருங்கிற் காரகில் துறந்து 370. வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத் தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க் காமரு குவளைக் கழுநீர் மாமலர் பைந்தளிர்ப் படலை பரூஉக்காழ் ஆரம் சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்தாங்கு ஆவியங் கொழுநர் அகலத் தொடுங்கிக் காவியங் கண்ணார் களித்துயில் எய்த கண்ணகி தனித்துயர் 380. அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீர் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் 390. மையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும் பிரிந்தோர் கவலை காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி வேனிற் பள்ளி மேவாது கழிந்து கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து மலையத் தாரமும் மணிமுத் தாரமும் அலர்முலை யாகத் தடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர் வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த 400. இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத்து இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை யோட்டிக் கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப காமன் நகராட்சி அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல் பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப் 410. புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள்வாய்ச் சங்கம் முறைமுறைஆர்ப்ப உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயில் எடுப்பி இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான் விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி மகர வெல்கொடி மைந்தன் திரிதர 417 நகரங் காவல் நனிசிறந்த ததுவென் (84) (வெண்பா) மதியின் ஆட்சி 3. கூடினார் பால்நிழலாய்க் கூடார்பால் வெய்யதாய்க் காவலன் வெண்குடைபோற் காட்டிற்றே-கூடிய மாதவிக்கும் கண்ணகிக்கும் வானூர் மதிவிரிந்து போதவிழ்க்கும் கங்குற் பொழுது. 5. இந்திரவிழவூ ரெடுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) கதிரவன் தோன்றல் 418. அலைநீ ராடை மலைமுறை யாகத்து ஆரப்பே ரியாற்று மாரிக் கூந்தல் கண்ணன் பரப்பின் மண்ணக மடந்தை புதையிருட் படாஅம் போக நீக்கி உதய மால்வரை உச்சித் தோன்றி உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி மருவூர்ப்பாக்கத்தின் வீதிகள் வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும், 430. வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திருதரு நகர வீதியும் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும், தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல் வெளுக்கையோ டளந்துகடை யறியா வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு 440. கூலம் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் பைந்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும், கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் 450. கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பா ணிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் பட்டினப்பாக்கத்தின் வீதிகள் கோவியல் வீதியும் கொடித்தோர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோ ரிருக்கையும், 460. வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும், சூதல் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் 470. நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும், கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும், பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும் நாளங்காடிப்பூதம் இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் 480. நடுக்கின்றி நிலைஇய கொள்வோர் ஓதையும் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் மறப்பெண்டிரின் வாழ்த்தொலி புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப் பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி 490. வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர் ஓதையிற் பெயர வீரர்களின் தற்பலி மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறல் மன்னற் குற்றத்தை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகெனக் கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி 500. ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரமர் அழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி கரிகாலன் இமயவென்றி இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன் வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் 510. மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு வடவர் திறைப்பொருள் மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், 520. அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின; துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின் இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும் வெள்ளிடை மன்றம் வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் 530. கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஓரீஇய வாகிக் கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் இலஞ்சி மன்றம் கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் நெடுங்கல் மன்றம் வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர் 540. நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கட் கூளிக் கடுநவைப் பட்டோர் சூழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் பூத சதுக்க மன்றம் தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் 550. காதம் நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் பாவை மன்றம் அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உழுத்துப் பாவைநின் றழூஉம் பாவை மன்றமும் மன்றப் பலிகள் மெய்வகை யுணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ முரசேற்றம் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி கொடியேற்றம் 560. வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து மங்கலவீதி மரகத மணியொடு வயிரம் குயிற்றிப் பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத் தியாங்கணும் கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரணம் நிலைஇய தோமறு பசும்பொற் 570. பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொற் படாகை தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு இந்திரனை நீராட்டல் ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பசித் தேரினர் இயைந்தொருங் கீண்டி அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென 580. மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணகம் மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப் சிறந்த விழாச்செயல்கள் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் 590. மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீ முறை யொருபால்; நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால், கொடித்தோர் வேந்தனொடு கூடா மன்னர் 600. அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால்; கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர் பண்ணியாழ்ப் புலவர் பாடற் பணரொடு எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால்; முழவுக் கண் துயிலாது முடிக்கும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் தென்றல் வீதி காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் 610. பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து காமக் களிமகிழ் வெய்திக் காமர் பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து நாண்மகி ழிருக்கை நாளங் காடியில் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையும் சாந்தும் புலராது சிறந்து நகையா டாயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு 620. மலய மாருதம் திரிதரு மறுகில் நிலத்திங்களோ? கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்தாங்கு இருகருங் கயலோ டிடைக்குமிழ் எழுதி அங்கண் வானத் தரவுப்பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல் வானவல்லியோ? நீர்வாய் திங்கள் நீள்நிலத் தமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மீனேற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல் கள்ளக்கமலமோ? இருநில மன்னற்குப் பெருவளங் காட்டத் 630. திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாமென எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங் குவளையும் குமிழும் பூத்தாங்கு உள்வரிக் கோலத் துறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் பெண் கூற்றோ? மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையிற் றிரிந்துதன் அருந்தொழில் திரியாது நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப் 640. பெண்மையிற் றிரியும் பெற்றியும் உண்டென காதலர் ஊடல் உருவி லாளன் ஒருபெருஞ் சேனை இகலம ராட்டி யெதிர்நின்று விலக்கியவர் எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் மாதர்வாண் முகத்து மணித்தோட்டுக் குவளைப் போதுபுறங் கொடுத்துப் போகிய செங்கடை விருந்திற் றீர்ந்தில தாயின் யாவதும் 650. மருந்தும் தருங்கோலிம் மாநில வரைப்பெனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் கண்ணகி மாதவி நிலைகள் உள்ளக நறுந்தா துறைப்பமீ தழிந்து கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன 657. விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென். (240) 6. கடலாடு காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) விஞ்சையன் வேட்கை 658. வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக் கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக் கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன் தென்திசை மருங்கினோர் செழும்பதி தன்னுள் இந்திர விழவுகொண் டெடுக்குநாள் இதுவெனக் பூதக் காட்சி கடுவிசை அவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ 670. இருந்துபலி உண்ணும் இடனும் காண்கும் மன்றக் காட்சி அமரா பதிகாத் தமரனிற் பெற்றுத் தமரில் தந்து தகைசால் சிறப்பிற் பொய்வகை யின்றிப் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியும் காண்குதல் மாதவி ஆடற்காட்சி நாரதன் வீணை தயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரங் கண்ணோன் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல்கா ளாகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் 680. தங்குக இவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்கர வல்குல் ஆடலும் காண்குதும் புகார் வருகை துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே அமரர் தலைவனை வணங்குதும் யாமெனச் சிமையத் திமையமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் 690. சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் பதினொராடல்கள் மாயோன் பாணியும் வருணப் பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச் சீரியல் பொலிய நீரல நீங்கப் பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப உமையவள் ஒருதிற னாக ஓங்கிய 700. இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும், தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும் கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியந் தொகுதியும் அவுணற் கடந்த மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும் படைவீழ்த் தவுணர் பையுள் எய்தக் 710. குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி யாடலும் காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்யோள் ஆடிய பாவையும் வயலுழை நின்று வடக்கு வாயிலுள் 720. அயிராணி மடந்தை ஆடிய கடையமும் அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் நிலையும் படிதமும் நீங்கா மரபின் பதினோ ராடலும் பாட்டின் பகுதியும் விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய் கோவலன் ஊடல் தாதவிழ் பூம்பொழில் இருந்தியான் கூறிய மாதவி மரபின் மாதவி இவளெனக் காதலிக் குரைத்துக் கண்டுமகிழ் வெய்திய மேதகு சிறப்பின் விஞ்ஞையன் அன்றியும் அந்தரத் துள்ளோர் அறியா மரபின் 730. வந்து காண்குனூறூஉம் வானவன் விழவும் ஆடலும் கோலமும் அணியுங் கடைக்கொள ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்பப் மாதவி கோலம் பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி அலத்தகம் ஊட்டிய அஞ்செஞ் சீறடி 740. நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக் கமைவுற அணிந்து, குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப், பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து, மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை 750. பரியகம் வால்வளைபவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து, வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து, சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து, கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு. 760. இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்கா தகவயின் அழகுற அணிந்து, தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்து தலைக்கணி மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கூடலும் ஊடலும் கோவலற் களித்துப் பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் மாதவி வேண்டல் உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப் பெருநீர் போகும் இரியல் மாக்களொடு 770. மடலவிழ் கானற் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டின ளாகிப் புறப்பாடு பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப வைகறை யாமம் வாரணம் காட்ட வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத் தாரணி மார்பனொடு பேரணி அணிந்து வான வண்கையன் அத்திரி ஏற மானமர் நோக்கியும் வையம் ஏறிக் இடைவீதிகள் கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின் 780. மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து, மகர வாரி வளந்தந் தோங்கிய நகர வீதி நடுவண் போகிக் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பிற் கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும் 790. மாலைச் சேரி மருங்குசென் றெய்தி கடற்கரை விளக்குகள் வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும் நொடைநவில் மகடூஉ கடைகெழு விளக்கமும் இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும் 800. மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கீண்டி இடிக்கலப் பன்ன ஈரயிர் மருங்கின் கடிப்பகை காணுங் காட்சிய தாகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றும் கைதை வேலி நெய்தலங் கானல் பொய்த லாயமொடு பூங்கொடி பொருந்தி ஆரவாரம் நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய 810. மலைப்பல் தாரமுங் கடற்பல் தாரமும் வளந்தலை மயங்கிய குளங்குகல விருக்கை அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் பரத குமரரும் உரிமைச் சுற்றமும் பரத குமரரும் பல்வே றாயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும் விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாட் போல வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக் 820. கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கியை தொலிப்பக் கோவலன் மாதவி கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவயின் ஆங்கோர் புன்னை நீழற் புதுமணற் பரப்பில் ஓவிய எழினி சூழவுடன் போக்கி விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை வருந்துபு நின்ற வசந்த மாலைகைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் 831. மாமலர் நெடுங்கண் மாதவி தானென். (174) (வெண்பா) காலைப்பொழுது 4. வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்தோட்டு மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக் களிநறவம் தாதூதத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெங்கதிரோன் தேர். 7. கானல்வரி (கொச்சகக்கலி) கட்டுரை மாதவி யாழ் வாங்கல் 832. சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தரும் கோடும் ஆணியும் நரம்புமென்று இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுவாங்கிப் குற்றம் பார்த்தல் பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசையெழீ இப் 840. பண்வகையாற் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிகைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடையென இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியினோர்த்து ஏவலன்பின் பாணியாதெனக் மாதவி யாழ் நீட்டல் கோவலன் கையாழ் நீட்ட அவனும் 850. காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன் கோவலன் யாழ் வாசித்தல் காவிரியை நோக்கியன (ஆற்றுவரி) (வேறு) 852. திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி. மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய் மன்னு மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி; விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் வாய்காவா மழவ ரோதை வளவன்தன் வளனே வாழி காவேரி. வரைவு கடாவுதல் (சார்த்து வரி) (வேறு) 864. கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வம் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோம் ஐய; விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர் காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோம் ஐய; மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் அறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர் மோது முதுதிரையால் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதழிப்ப மாழ்கி யைய கோதை பரிந்தசைய மெல்விரலாற் கொண்டோச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர் குறியிடத்துச் சென்ற பாங்கன் கூற்று (முகமில் வரி) (வேறு) 876. துறைமேய் வலம்புரி தோய்ந்துமணல் உழுத தோற்றம் மாய்வான் பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது போர்க்குங் கானல் நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும். கழற்றெதிர்மறை (கானல் வரி) நிணங்கொள் புலாலுணங்கல் நின்றுபுள் ளோப்புதல் தலைக்கீ டாகக் கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையி லேந்தி மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர் அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றில் மலர்கை யேந்தி விலைமின் உணங்கற் பொருட்டாக வேண்டுருவம் கொண்டு வேறோர் கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. இடந்தலைப்பாடு (நிலைவரி) (வேறு) 888. கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கணேர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கு மோடும் கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நல் சீறூர்க்கே மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே. புலவுமீன் வெள்ளுணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க்கு அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர் அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானல் பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே. தலைமகன் உற்றதுரைத்தவை (முரிவரி) (வேறு) 900. பொழிறரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே எழுதரு மின்னிடையே எனையிடர் செய்தவையே திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே. புணர்தலுறும் தலைவன் ஆற்றாமை (திணைநிலைவரி) (வேறு) 912. கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகும் இடையிழவல் கண்டாய். கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும் வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய். ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்னையர் கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும் பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய். புணர்ந்தோன் ஆற்றாமை (வேறு) 924. பவள உலக்கை கையாற் பற்றித் தவள முத்தம் குறுவாள் செங்கண் தவள முத்தங் குறுவாள் செங்கண் குவளை யல்ல கொடிய கொடிய. புன்னை நீழற் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம் கள்வாய் நீலங் கையி னேந்திப் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய அகக்கைக்கிளை (வேறு) 936. சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய் சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய் ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின் சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய் மாதவி யாழ் வாசித்தல் கட்டுரை தப்பெண்ணம் 940. ஆங்குக் கானல்வரிப் பாடல்கேட்ட மானொடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன் தன்னிலை மயங்கினானெனக் கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள்போல் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத்தொடங்குமன் காவிலியை நோக்கியன (ஆற்றுவரி) (வேறு) 946. மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யது போர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயிர்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி வாழி யவன்தன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும் ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி கையுறை மறுத்தல் (சாத்துவரி) (வேறு) 958. தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய; வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். மறையில் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங் கறிகோம் ஐய: நிறைமதியும் மீனும் எனவன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்பல் ஊதும் புகாரே எம்மூர் உண்டாரை வென்னாறா ஊணொளியாப் பாக்கத்துள் உறையொன் றின்றித் தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங் கறிகோம் ஐய: வண்டல் திரையழிப்பக் கையால் மணமுகந்து மதிமேல் நீண்ட புண்டோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர் தலைவியைக் குறைநயப்பித்தல் (திணைநிலை வரி) (வேறு) 970. புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால் காமமிக்க கழிபடல்கிளவி தம்முடைய தண்ணளியும் தாமுந்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால். புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள் வண்கனார் கானல் வரக்கண் டறிதியோ. 982. புள்ளியல்மான் தேராழி போன வழியெல்லாம் தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற் றென்செய்கோ தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற் றெம்மோடீங்கு உள்ளாரோ டுள்ளாய் உணராய்மற் றென்செய்கோ நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே. நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம் ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம். அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல் (மயங்கு திணை நிலைவரி) (வேறு) 994. நன்னித் திலத்தின் பூணணிந்து நலஞ்சார் பவளக் கலையுடுத்துச் செந்நெற் பழனக் கழனிதொறும் திரையு லாவு கடற்சேர்ப்ப புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் என்னைக் காணா வகைமறைத்தால் அன்னை காணின் என்செய்கோ. வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து சேரிப் பரதர் வலைமுன்றில் திரையு லாவு கடற்சேர்ப்ப மாதிப் பீரத் தலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து ஆரிக் கொடுமை செய்தாரென் றன்னை அறியின் என்செய்கோ. புலவுற் றிரங்கி அதுநீங்கப் பொழிற்றண் டலையிற் புகுந்துதிர்ந்த கலவைச் செம்மல் மணங்கமழத் திரையு லாவு கடற்சேர்ப்ப பலவுற் றொருநோய் துணியாத படல்நோய் மடவாள் தனியுழப்ப அலவுற் றிரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ. பொழுதுண்டு ஆற்றாத்தலைவி கூற்று (வேறு) 1006. இளையிருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட் டுளதாங் கொல் வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருள்மாலை, கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீர் உகுத்தனவே புதுமதி புரைமுகத்தாய் போனார் நாட் டுளதாங்கொல் மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை. பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல் மறவையாய் என்னுயிர்மேல் வந்தவிம் மருள்மாலை. தலைமகள் இயற்படமொழிதல் (சாயல்வரி) (வேறு) 1018. கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் பொய்தல் அழித்துப் போனா ரவர்நம் மையல் மனம்விட் டகல்வா ரல்லர் கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்றார் ஒருவர் நீநல் கென்றே நின்றா ரவர்நம் மானேர் நோக்கம் மறப்பா ரல்லர். அன்னம் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்நம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர். காமமிக்க கழிபடர் கிளவி (முகமில் வரி) (வேறு) 1030. அடையல் குருகே அடையலெங் கானல் அடையல் குருகே அடையலெங் கானல் உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோய் உரையாய் அடையல் குருகே அடையலெங் கானல் பண்மாற்றம் (கட்டுரை) (வேறு) 1034. ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் காந்தள் மெல்விரற் கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசையெழீஇப் பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள். மாலைபொழுது கண்ட தலைவி கூற்று (முகமில்வரி) (வேறு) 1038. நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல் கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை. பிரித்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை. பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை மாலைநீ யாயின் மணந்தார் அவராயின் ஞாலமோ நல்கூர்ந்த ததுவாழி மாலை. வரைவு நீட்டித்த தலைமகன் கேட்பக் கூறியது (வேறு) 1050. தீத்துழைஇ வந்தவிச் செல்வன் மருள்மாலை தூக்காது துணிந்தவித் துயரெஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும். தப்பெண்ணம் (கட்டுரை) 1055. எனக்கேட்டு, கானல்வரி யான்பாடத் தானொன்றின் மேல்மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென கோவலன் வாராப்பிரிவு யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின் உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்த்தனனாய்ப் பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதுமென்றுடனெழாது 1060. ஏவலாளருடன் சூழ்தரக்கோவலன்தான் போனபின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாயத் தொலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக் காதலனுட னன்றியே மாதவிதன் மனைப்புக்காள். ஆங்கு, மாயிரு ஞாலத் தரசு தலைவணக்கும் சூழி யானைச் சுடர்வாட் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப 1068. ஆழி மால்வரை அகவையா எனவே. (237) 8. வேனிற் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) தமிழகம் 1069. நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இளவேனில் இன்னிள வேனில் வந்தனன் இவணென வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனை புகரறு கோலங் கொள்ளுமென் பதுபோல் 1080. கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற மாதவி பாடல் மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடா தேகிய மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளி ஏறி மாணிழை தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் தன்கடன் இறுக்குந் தன்மைய ஆதலின், கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து 1090. மையறு சிறப்பின் கையுறை ஏந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி யாழ் வாசித்தல் ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி நன்பால் அமைந்த இருக்கைய ளாகி வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச் செம்பகை ஆர்ப்பே வடம் அதிர்வே வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து பிழையா மரபின் ஈரேழ் கோவையை 1100. உழைமுதற் கைக்கிளை இறுவாய் கட்டி இணைகிளை பகைநட் பென்றிந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுத லாகவும் குரலீறாகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி 1110. மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉந் தெள்ளிசைக் கரணத்துப் புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச் மலர்க் கடிதம் சண்பக மாதவி தமாலம் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அஞ்செங் கழுநீர் ஆயிதழ்க் கத்திகை எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் 1120. ஒருமுகம் அன்றி உலகுதொழு திறைஞ்சும் திருமுகம் போக்கும் செவ்விய ளாகி, அலத்தகக் கொழுஞ்சே றளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு கடிதச் செய்தி மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனும் செவ்விய னல்லன்; புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும் 1130. நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்றிஃ தறிந்தீ மின்னென, எண்ணெண் கலையும் இசைந்துடன் போகப் பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் தளவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்துரை எழுதிப் வசந்தமாலை தூது செல்லல் பசந்த மேனியள் படருறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்த் தூமலர் மாலையின் துணிபொரு ளெல்லாம் கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென 1140. மாலை வாங்கிய வேலரி நெடுங்கண் கூல மறுகிற் கோவலற் களிப்பத் எண்வகை வரிக்கூத்து திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட மாதர்வாண் முகத்து மதைஇய நோக்கமொடு காதலின் தோன்றிய கண்கூடு வரியும். புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயலுலாய்த் திரிதரும் காமர் செவ்வியின் பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய நாகிள முத்தின் நகைநலம் காட்டி 1150. வருகென வந்து போகெனப் போகிய கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும், அந்தி மாலை வந்ததற் கிரங்கிச் சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக் கிளிபுரை கிளவியும் மடவன நடையும் களிமயிற் சாயலும் கரந்தன ளாகிச் செருவேல் நெடுங்கட் சிலதியர் கோலத்து ஒருதனி வந்த உள்வரி யாடலும், சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு 1160. திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும் புறத்துநின் றாடிய புன்புற வரியும், கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் மின்னிடை வருத்த நன்னுதல் தோன்றிச் சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப் புணர்ச்சியுட் பொதிந்த கலாந்தரு கிளவியின் இருபுற மொழிப்பொருள் கேட்டன ளாகித் தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் கிளந்துவே றாகிய கிளர்வரிக் கோலமும், 1170. பிரிந்துறை காலத்துப் பரிந்தன ளாகி என்னுறு கிளைகட்குத் தன்னுறு துயரம் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி யன்றியும், வண்டலர் கோதை மாலையுள் மயங்கிக் கண்டவர்க் குரைத்த காட்சி வரியும், அடுத்தடுத் தவர்முன் மயங்கிய மயக்கமும் எடுத்தவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் கோவலன் மாதவியை மதியாமை ஆடல் மகளே ஆதலின் ஆயிழை பாடுபெற் றனவப் பைந்தொடி தனக்கென வசந்தமாலையின் வருத்தம் அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய 1180. மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற் கிரங்கி வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடலர் கோதைக்குத் துனைந்துசென் றுரைப்ப மாதவி நம்பிக்கை மாலை வாரா ராயினும் மாணிழை காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் 1186. மாமலர் நெடுங்கண் மாதவி தானென் (115) (வெண்பா) 5. செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக மைந்தார் அசோகம் மடலவிழக்-கொந்தார் இளவேனல் வந்ததால் என்னாங்கொல் இன்று வளவேனற் கண்ணி மனம். 6. ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்னாணை கூடுமின் என்று குயில்சாற்ற-நீடிய வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்கலந்தாய் காண். 9. கனாத்திறம் உரைத்த காதை (கலிவெண்பா) இரவு வருகை 1187. அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்கோர் கோலம் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள் மாலதி கவலை மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையாள் என்மேற் படாதனவிட்டு ஏற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்டு அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் 1200. தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு மாலதியின் பேரழுகை ஏசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய் செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் பொய்யுரையே யன்று பொருளுரையே கையில் படுபிணந்தா என்று பறித்தவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்கு இடுபிணந் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி மடியுகத் திட்டாள் மகவை இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி யழுதாளுக் கச்சாத்தன் சாத்தன் பிறத்தல் 1210. அஞ்ஞைநீ ஏங்கி யழலென்று முன்னை உயிர்க்கிழவி காணாயென் றக்குழவி யாயோர் குயிற்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பின்றி மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி வழிபாடு தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப் 1220. பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து நீவா எனவுரைத்து நீங்குதலும் தூமொழி ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும் தீர்த்தத் துறைபடிவேன் என்றவனைப் பேர்த்திங்கன் மீட்டுத் தருவாய் எனவொன்றன் மேலிட்டுக் கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் தேவந்தி கண்ணகியை வாழ்த்தல் கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென்று எண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடுதூஉய்ச் சென்று 1230. பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன் கண்ணகி கனவு கடுக்குமென் நெஞ்சம் கனவினால் என்கை பிடித்தனன் பேயோர் பெரும்பதியுட் பட்டேம் பட்ட பதியில் படாத தொருவார்த்தை இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்தன்மேல் கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக் காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன் தீக்குற்றம் போலும் செறிதொடிஇ தீக்குற்றம் உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற 1240. நற்றிறம் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ தேவந்தி நோன்பு செய்யெனல் கைத்தாயும் அல்லை கணவற் கொருநோன்பு பொய்தாய் பழம்பிறப்பில் பொய்க்கெடுக உய்த்துக் கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர் உலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொரு நாள் ஆடுதும் என்ற அணியிழைக்கவ் வாயிழையாள் கண்ணகியின் கற்பு 1250. பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய கோவலன் வருகையும் வருத்தமும் காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் கோவலன் என்றாளோர் குற்றிளையாள் கோவலனும் பாடமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தங்கண் டியாவும் சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன கண்ணகியின் புன்சிரிப்பு நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச் சிலம்புள கொண்மெனச் சேயிழை கேளிச் கோவலன் நல்வழி 1260. சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்தபொரு ளீட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங்கு ஏடலர் கோதாய் எழுகென்று நீடி வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குல் (79) 1265. கனைசுடர் கால்சீயா முன். (வெண்பா) வினைவழி 7. காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க-மூதை வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன். 10. நாடுகாண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) (வைகறைச் செலவு) 1266. வான்கண் விழியா வைகறை யாமத்து மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாட் கங்குல் ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப 1270. ஏழகத் தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணையெனத் திரியும் தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு திருமால் கோட்டம் அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து இந்திர விகாரம் பணையைந் தோங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழுடன் போகிப் சிலாதலம் 1280. புலவூண் துறந்து பொய்யா விரதத்து அவல நீத்தறிந் தடங்கிய கொள்கை மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி யைந்தும் தம்முடன் கூடி வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப் பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதியுண் டாமென உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட 1290. இலகொளிச் சிலாதலம் தொழுது வலங்கொண்டு உயிர்வாயில் மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக விடைகழி யொருங்குடன் நீங்கிக் இலவந்திகைச் சோலை கலையி லாளன் காமர் வேனிலொடு மலய மாருதம் மன்னவற் கிறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயிற்புறம் போகித் காவிரியின் வடகரை வழி தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகம் கழிந்து குடதிசைக் கொண்டு கொழும்புனற் காவிரி 1310. வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து கண்ணகியின் வினா காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண் இறுங்கொடி நுசுப்போ டினைந்தடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க மதுரை மூதூர் யாதென வினவ ஆறைங் காதம்நம் அகனாட் டும்பர் நாறைங் கூந்தல் நணித்தென நக்குத் கவுந்தியின் வழித்துணை தேமொழி தன்னொடும் சிறையகத் திருந்த 1310. காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும், உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் என்னோ உறுக ணாளரின் கடைகழிந் திங்ஙனம் கருதிய வாறென, உரையாட் டில்லை உறுதவத் தீர்யான் மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் பாடகச் சீறடி பரற்பகை உழவா காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ 1320. உரிய தன்றீங் கொழிகென ஒழியீர்; மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத் தென்றமிழ் நன்னாட்டுத் தீதுநீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி அடிகள் நீரே அருளுதி ராயினித் தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேனெனக் சோலைவழி கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு 1330. ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ. வெயில்நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் கையறு துன்பம் காட்டினுங் காட்டும்; உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்; மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச் 1340. செஞ்சுளைப் பலவின் பரற்பகை உறுக்கும் வயல் வழி கயனெடுங் கண்ணி காதற் கேள்வ வயலுழைப் படர்குவம் எனினே ஆங்குப் பூநா றிலஞ்சிப் பொருகயல் ஓட்டி நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் கலங்கலும் உண்டிக் காரிகை ஆங்கண் கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்; அடங்கா வேட்கையின் அறிவஞர் எய்திக் 1350. குடங்கையின் நொண்டு கொள்ளவுங் கூடும் குறுநர் இட்ட குவளையும் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீரஞர் எய்தி அறியா தடியாங் கிடுதலுங் கூடும்; எறிநீர் அடைகரை இயக்கம் தன்னின் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழடி யொதுக்கத் துறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா; வயலும் சோலையும் அல்ல தியாங்கணும் 1360. அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு குறியறிந் தவையவை குறுகா தோம்பெனத் மேற்செலவு தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப் பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் காவிரியின் நீரோலி கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடும் 1370. சூல்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக் குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓவிறந் தொலிக்கும் ஒலியே யல்லது ஆம்பியும் கிழாரும் வீங்கிசை யேத்தமும் ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லா பறவை ஒலிகள் கழனிச் செந்நல் கரும்புசூழ் மருங்கில் பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக் கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும் 1380. செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போலப் பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும் உழவர்கள் ஆரவாரம் உழாஅ நுண்தொளி உள்புக் கழுந்திய கழாஅமயிர் யாக்கைச் செங்கட் காரான் சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ் புற்ற குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியக் 1390. கருங்கை வினைஞரும் களமரும் கூடி ஒருங்குநின் றார்க்கும் ஒலியே யன்றியும் உழத்தியர் பாடல் கடிமலர் களைந்து முடிநா றழுத்தித் தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர் வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும் உழவுப் பாடல்கள் கொழுங்கொடி யறுகையும் குவளையும் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போல் பழிச்சினர் கைதொழ 1400. ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும் அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும் தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த மண்கணை முழவின் மகிழிசை ஓதையும் பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங்கு இடைப்பட்ட ஊர்கள் ஆர்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார் உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை 1410. இறையுயர் மாடம் எங்கணும் போர்த்து மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கை யன்றியும் பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும் பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து மங்குல் வானத்து மலையிற் றோன்றும் ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு காவதம் அல்லது கடவா ராகிப் 1420. பன்னான் தங்கிச் சொன்னாள் ஒருநாள் திருவரங்கம் ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக் குரங்கமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து சாரணதைத் தொழுதல் வானவர் உறையும் பூநா றொருசிறைப் பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கப் பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட இலங்கொளிச் சிலாதலம் மேலிருந் தருளிப் பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத் தருமம் சாற்றும் சாரணர் தோன்றப் பண்டைத் தொல்வினை பாறுக என்றே 1430. கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர் வந்த காரணம் வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோ னாயினும் ஆர்வமும் செற்றமும் அகல நீங்கிய வீர னாகலின் விழுமம் கொள்ளான் வினை வலிது கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய்; ஒழிகென வொழியா தூட்டும் வல்வினை இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா; கடுங்கால் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன 1440. ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் அருகன் திருப்புகழ் அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன் பரமன் குணவதன் பரத்தி லொளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி இறைவன் குரவன் இயல்குணன் எங்கோன் 1450. குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி ஓதிய வேதத் தொளியுறி னல்லது போதார் பிறவிப் பொதியறை யோரெனச் கவுந்தியின் பற்று சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற் காவுந்தி யுந்தன் கைதலை மேற்கொண்டு ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் 1460. திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா; காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாம மல்லது நவிலா தென்னா; ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண்; அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது; அருகர் அறவன் அறிவோற் கல்லதென் இருகையும் கூடி ஒருவழிக் குவியா; மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென் 1470. தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது; இறுதியி லின்பத் திறைமொழிக் கல்லது மறுதர ஓதியென் மனம்புடை பெயராது; என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டதற்கு கவுந்திக்கு வாழ்த்து ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப் பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து காவித் தென்கரை காரணி பூம்பொழிற் காவிரிப் பேர்யாற்று 1480. நீரணி மாடத்து நெடுந்துறை போகி மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும் தீதுதீர் நியமத் தென்கரை யெய்திப் போதுசூழ் கிடக்கையோர் பூம்பொழில் இருந்துழி கவுந்தியும் சாபமும் விடுதலையும் வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு கொங்கலர் பூம்பொழிற் குறுகினர் சென்றோர் காமனும் தேவியும் போலும் ஈங்கிவர் ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே நோற்றுணல் யாக்கை நொசிதவத் தீருடன் ஆற்றுவழிப் பட்டோர்ஆரென வினவவென் 1490. மக்கள் காணீர் மானிட யாக்கையர் பக்கம் நீங்குமின் பரிபுலம் பினரென, உடன்வயிற் றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்றறிந் தீரெனத், தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க எள்ளுநர் போலுமிவர் என்பூங் கோதையை முள்ளுடைக் காட்டின் முதுநரி யாகெனக், கவுந்தி யிடத்து தவந்தரு சாபம் கட்டிய தாகலின் பட்டதை யறியார் 1500. குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியா மையென் றறியல் வேண்டும் செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீ ரோவென, அறியா மையினின் றிழிபிறப் புற்றோர் உரையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப் பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் முன்னை யுருவம் பெறுகவீங் கிவரெனச் உரையூரை அடைதல் சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின் காவுந்தி யையையும் தேவியும் கணவனும் முறஞ்செவி வாரணம் முன் சமம் முருக்கிய 1512. புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென். (248) கட்டுரை முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் தொடிவிளங்கு தடக்கைச் சோழர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் 1520. குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் தெய்வக் காவிரித் தீதுநீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் பரந்திசை யெய்திய பாரதி விருத்தியும் திணைநிலை வரியும் இணைநிலை வரியும் அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈரேழ் சகோடமும் இடைநிலைப் பாலையும் தாரத் தாக்கமும் தான்தெரி பண்ணும் ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும் என்றிவை யனைத்தும் பிறபெருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் ஒருபரிசா நோக்கிக் கிடந்த 1533. புகார்க் காண்டம் முற்றிற்று. (20) (வெண்பா) புகார் வாழ்த்து 8. காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ-வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். *** புகார்க் காண்டம் முற்றிற்று இரண்டாவது மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சோலையின் இருத்தல் 1534. திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து கோதையாள் பிண்டிக் கொழுநிழல் இருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக் கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் அந்தி லரங்கத் தகன்பொழில் அகவயின் 1540. சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு அன்றவர் உறைவிடத் தல்கினர் அடங்கித் தென்திசை மருங்கிற் செலவு விருப்புற்று, வைகறை யாமத்து வாரணம் கழிந்து வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத் திருக்கை புக்குழி தென்னவ வாழ்த்து வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழிதொ றுலகம் காக்க! 1550. அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் வாழி! திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி! முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று 1560. இடயுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுள் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுநீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் திருமால் கிடந்த நின்ற வண்ணங்கள் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விதித் தகலாது படிந்தது போல 1570. ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும், வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு நன்றி மேகம் நின்றது போலப் 1580. பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும், என்கண் காட்டென் றென்னுளம் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்; தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின், வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் 1590. தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மறையோன் இன்பம் மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயெனக் கோவலற் குரைக்கும் கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் 1600. காலை எய்தினர் காரிகை தன்னுடன் வழி முப்பிரிவு அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தவிந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் வலப்பக்க வழியின் இயல்பு வலம்படக் கிடந்த வழிநீர் துணியின், அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் 1610. வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும் நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமும் கடந்தால், ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் கொய்பூந் தினையும் கொழும்புன வரகும் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்; அம்மலை வலங்கொண்ட டகன்பதிச் செல்லுமின் இடப்பக்க வழியின் இயல்பு 1620. அவ்வழிப் படரீ ராயின் இடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு; விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு இட்ட சித்தி யெனும்பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை 1630. முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்; பலகா ரணிபடிந் தாடுவி ராயின் பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்; இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே; ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின் ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து 1640. வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்தலைப் பொலங்கொடி மின்னின் புயலைங் கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கன்னிகா ரத்துத் தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி, இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதும் செப்புமின் நீயிரிவ் வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் உரைத்தார்க குரியேன் உரைத்தீ ராயின் 1650. திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும், கதவம் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள போகிடை கழியன ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி, இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தால் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும், உரையீ ராயினும் உறுகண் செய்யேன் நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும், உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் 1660. கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும், அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும் ஒருமுறை யாக உளங்கொண் டோதி வேண்டிய தொன்றின் விரும்பினி ராடின் காண்டகு மரபின வல்ல மற்றவை; மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் புள்ளணி நீள்கொiடி புணர்நிலை தோன்றும். 1670. தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் காண்தகு பிலத்தின் காட்சி யீதாங்கு நடுவழியின் இயல்பு அந்நெறிப் படரீ ராயின் இடையது செந்நெறி யாகும் தேம்பொழில் உடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால், ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம் நடுக்கஞ் சாலா நயத்திற் றோன்றி இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும் 1680. மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென மாமறை யோன்வாய் வழித்திறங் கேட்ட கவுந்தி மறுமொழி காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும் நலம்புரி கொள்கை நான்மறை யாள! பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை; கப்பந் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்; இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் 1690. பிறந்த பிறப்பிற் காணா யோநீ; வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள்; காமுறு தெய்வம் கண்டடி பணிய நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்; என்றம் மறையோற் கிடைமொழி யுணர்த்திக் மேற்செலவு குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப் பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாள் கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் 1700. வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் வனதெய்வத்தின் வஞ்சக்காதல் கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவிற் றோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து, வாச மாலையின் எழுதிய மாற்றம் 1710. தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று, மேலோ ராயினும் நூலோ ராயினும் பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் தண்முகத் தொருகாழ் தன்கையாற் பரிந்து 1720. துனியுற் றென்னையும் துறந்தனள் ஆதலின், மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் பாத்தரும் பண்பநின் பணிமொழி யெதென வனதெய்வத்தின் அச்சம் மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென வியத்தகு மறையோன் விளம்பின னாதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தாலிவ் வைஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் கோவலன் நாவிற் கூறிய மந்திரம் 1730. பாய்கலைப் பாவை மந்திர மாதலின் வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையா தேகென் றேகத் ஐயை கோயிலை அடைதல் தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்தாங்கு அயர்வுறு மடந்தை அருந்துயர் தீர்த்து மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானம் செலவரி தென்று, கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் 1740. குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லே ருழவர் கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக் கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும் விழிநுதற் குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி 1749. ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென். (219) 12. வேட்டுவ வரி (கொச்சகக்கலி) இளைப்பாறி யிருத்தல் 1750. கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்தாங்கு ஐயை கோட்டத் தெய்யா ஒருசிறை வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் சாலினி தெய்வக்கடன் வேண்டல் வழங்குவிற் றடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் 1760. நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக் கல்வென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு குமரிக் கொற்றவை இட்டுத்தலையெண்ணும் எயின ரல்லது 1770. சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளைவெண் கோடு பறித்து மற்றது முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியும் மயங்கு வான்புறத்து உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 1780. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் கடன் கொடுத்தல் பாவையும் கிளியும் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் பந்தும் கழங்கும் தந்தனர் பரசி வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறி பறையும் சூறைச் சின்னமும் 1790. கோடும் சூழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி சாலினி புகழலும் கண்ணகி நாணலும் இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பாய், 1800. பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் முரல் அரும்பினள் நிற்ப கொற்றவை அருள் மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைந்தோள் துளையெறிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி 1810. கரியின் உரிவை போர்த்தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்பும் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் பலர்தொழும் அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை 1820. ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமரிளங் குமரியும் அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே உரைப்பாட்டுமடை முன்றிற்சிறப்பு (வேறு) 1824. நாகம் நாறு நரந்தரம் நிரந்தன ஆவும் ஆரமும் ஓங்கனி எங்கணும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே. செம்பென் வேங்கை சொரிந்தன சேயிதழ் கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளம் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே, மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே. வள்ளிக்கூத்து (வேறு) 1836. கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே கலனும் ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும். பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் வாய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும். முன்னிலைப்பரவல் (வேறு) 1848. ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய் வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய் சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய். வென்றிக்கூத்து (வேறு) 1860. ஆங்குக், கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு அசுரர் வாட அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே. கூத்துள் படுதல் (வேறு) 1865. ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடும் போலும் மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கால்மேல் வாளமலை யாடும் போலும் காயா மலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும். வெட்சி உட்குடைச் சீறூ ரொருமகனான் நிரைகொள்ள உற்ற காலை வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும்போலும் வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும். வெட்சிப் புறநடை கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொயெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும். கொடை (வேறு) 1877. இளமா எயிற்றி இவைகாண்நின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் லானிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன. முருந்தேர் இளநகை காணாய் நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன. கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் அயலூர் அலற எறிந்தநல் லானிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன துறைப்பாட்டுமடை அவிப்பலி (வேறு) 1889. சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளுநின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே. அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு மணியுறு வினைநின மலரடி தொழுதேம் கணநிறை பெருவிறல் எயினிடு கடனிது நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே. துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய வெடிபட வருபவர் எயினர்கள்அரையிருள் அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே. பலிக்கொடை (வேறு) 1901. வம்பலர் பல்கி வழியும் வளம்பட அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய் சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய். துண்ணென் துடியொடு துஞ்சூர் எளிதரு கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய் பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் அருளில் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய். அரசவாழ்த்து (வேறு) மறைமுது முதல்வன் பின்னர் வேறு பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட 1016. வெட்சி சூடுக விறல்வெய் யோனே. (167) 13. புறஞ்சேரியிறுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) பாண்டியர் செங்கோல் 1917. பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள் 1920. படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா; செங்கோற் றென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே இரவிடைச் செலவு பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவெளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேதம் இல்லெனக் 1930. குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப் நிலா வரவு பம்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித் தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீரிள வனமுலை சேரா தொழியவும் தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தா தொழியவும் பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி 1940. செந்தளிர் மேனி சேரா தொழியவும் மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய வேனிற் றிங்களும் வேண்டுதி யென்றே பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர், ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும் இனையா தேகெனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி, 1950. மறவுரை நீத்த மாசறு கேள்வி அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து விடியல் வேனல்வீற் றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணம் கதிர்வர வியம்ப வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர் நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன் மாதவி விடுத்த கோசிகன் உரை 1960. காதலி தன்னொடு கானகம் போந்ததற்கு ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி உட்புலம் புறுதலின் உருவம் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான், கோவலன் பிரியக் கொடுத்துயர் எய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ் வருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே வருந்தினை போலுநீ மாதவி யென்றோர் பாசிலைக் கருகின் பந்தரிற் பொருந்திக் கோசிக மாணி கூறக் கேட்டே, 1970. யாதுநீ கூறிய உரையீ திங்கெனத், தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் கோசிக மாணி கொள்கையின் உரைப்போன், இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் ஏவ லாளர் யாங்கணும் சென்று கோவலற் றேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும் பெருமகன் ஏவ வல்ல தியாங்கணும் 1980. அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோ யுற்று நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர் படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் வீழ்துய ருற்றோள் விழுமம் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும் இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன் 1990. வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக் கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே மண்ணுடை முடங்கல் மாதவி ஈத்ததும் ஈத்த ஓலைகொண் டிடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும் வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு மாதவியின் கடிதம் அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட, உடனுறை காலத் துரைத்தநெய் வாசம் 2000. குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டிய தாதலின் கைவிட லீயான் ஏட்கம் விரித்தாங் கெய்திய துணர்வோன், அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி அன்றியும் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து மாதவி குற்றமிலள் 2010. தன்தீ திலளெனத் தளர்ச்சி நீங்கி என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்கு பெற்றோர்க்குக் கடிதம் எற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல் பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது மாசில் குரவர் மலரடி தொழுதேன் கோசிக மாணி காட்டெனக் கொடுத்து நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு கோவலன் யாழ் வாசித்தல் 2020. ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில் தந்தரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் கைக்கைளை யிறுவாய்க் கட்டி வரன்முறை வந்த மூவகைத் தானத்துப் பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற் பாணி அளைஇ அவரொடு 2030. வடற் காவதம் கூறுமின் நீரெனக் மதுரைத் தென்றல் காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை மான்மரச் சாந்தம் மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே றாடி ஆங்குத் தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி அட்டிற் புகையும் அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் 2040. மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் பொதியிற் றென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர் 2050. தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்லென முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு மதுரை ஒலிகள் அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியம் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் மாதவர் ஓதி மலிந்த ஓதையும் மீனா வென்றி வேந்தன் சிறப்பொடு 2060. வாளோர் எடுத்த நாளணி முழவமும் போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் வையைப் பெண் குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் 2070. பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை 2080. கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் 2090. புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனநடை மாதரும் ஐயனும் தொழுது புறஞ்சேரியில் தங்கல் பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி, வானவர் உறையும் மதுரை வலங்கௌத் தானனி பெரிதும் தகவுடைத் தென்றாங்கு அருமிளை உடுத்த அகழிசூழ் போகிக், 2100. கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்துறு துயரம் துய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந்தினைத் தேங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப், போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப், புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை அறம்புரி மாந்த ரன்றிச் சேராப் 2112. புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென். 14. ஊர்காண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) காலை மங்கலவொலிகள் 2113. புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் 2120. உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசும் கனைகுரல் இயம்பக் கோவலன் உணர்வு கோவலன் சென்று கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி 2130. நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏதம் உண்டோ அடிகளீங் கென்றலும் கவுந்தி ஆறுதலுரை கவுந்தி கூறும் காதலி தன்னொடு தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்று 2140. அறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும் யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்; தீதுடை வெவ்வினை உருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர். ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள். பிரிதற் றுன்பமும் புணர்தற் றுன்பமும் உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோக் கல்லது 2150. ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை பெண்டிரும் உண்டியும் இன்பபென் றுலகில் கொண்டோ ருறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமம் சார்பாக் காதலின் உழந்தாங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே யல்லால் இறந்தோர் பலரால் தொன்றுபட வரூஉந் தொன்மைத் தாதலின் இராமனும் நளனும் கோவலனும் தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன் 2160. வேத முதல்வற் பயந்தோன் என்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ! வல்லா டாயத்து மண்ணர சிழந்து மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன் காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி தீதொடு படூஉம் சிறுமைய ளல்லள் அடவிக் கானகத் தாயிழை தன்னை இடையிருள் யாமத் திட்டு நீக்கியது வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச் சொல்லலும் உண்டேல் சொல்லா யோநீ! 2170 அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே வருந்தா தேகி மன்னவன் கூடல் பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும் கோவலன் மதுரைக்குள் செல்லல் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில் பெருங்கை யானை இனநிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கிற் போகிக் கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு 2180. ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில் பொதுமகளிர் பொழுதுபோக்கு குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகின் கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப் பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து தண்ணறு முல்லையும் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலும் கதுப்புற அடைச்சி 2190. வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு தென்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு எற்படு பொழுதின் இளநிலா முன்றில் தாழ்தரு கோலம் தகைபா ராட்ட வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு கார்காலம் அரத்தப் பூம்பட் டரைமிசை யூடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் 2200. சிறுமலைச் சிலம்பிற் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து குங்கும வருணம் கொங்கையின் இழைத்துச் செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக் கலிகெழு கூடல் செவ்வணி காட்டக் காரர சாளன் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் கூதிர்க்காலம் 2210. முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும் முன்பனிக்காலம் வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலம் தெள்கேர்பு வெண்மழை அரிதிற் றோன்றும் அச்சிரக் காலையும் பின்பனிக்காலம் ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட 2220. அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமும் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியரசு யாண்டுளன் இளவேனிற்காலம் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமலர் ஏந்தத் தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னின வேனில் யாண்டுளன் கொல்லென்று 2230. உருவக் கொடியோர் உடைப்பெருங் கொழுநரொடு பருவம் எண்ணும் படர்தீர் காலைக் முதுவேனிற்காலம் கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க என்றூள் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக் காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக் கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் காமக்கிழத்தியர் வீதி வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் 2240. சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி யன்றியும் நறுமலர் மாலையின் வறிதிடம் கடிந்தாங்கு இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப் புலவிக் காலத்துப் போற்றா துரைத்த 2250. காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும் அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும் செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு வையம் காவலர் மகிழ்தரு வீதியும் நாடகக் கணிகையர் வீதி சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை 2260. வேத்தியல் பொதுவியல் எனவிரு திறந்து மாத்திரை அறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் பாணியும் தூக்கும் கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து நால்வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும் வாரம் பாடும் தோரிய மடந்தையும் தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பாட்டுக் கூத்தியும் நால்வேறு வகையின் நயத்தகு மரபின் 2270. எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத் தவத்தோ ராயினும் தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும் காம விருந்தின் மடவோ ராயினும் ஏம வைகல் இன்துயில் வதியும் பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் அங்காடி வீதி 2280. வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும் அதள்புனை அரணமும் அரியா யோகமும் வளைதரு குழியமும் வால்வெண் கவரியும் ஏனப் படமும் கிடுகின் படமும் கானப் படமும் காழூன்று கடிகையும் செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும் வம்பின் முடிவும் மாலையிற் புனைநவும் வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும் புகையவும் சாந்தமும் பூவிற் புனைநவும் 2290. வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய அரசுவிழை திருவின் அங்காடி வீதியும் இரத்தின வீதி காக பாதமும் களங்கமும் விந்துவும் ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் 2300. பூச உருவின் பொலந்தெளித் தனையவும் தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் இருள்தெளித் தனையவும் இருவே றுருவவும் ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகளறத் துணிந்தவும் சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மையும் வட்டத் தொகுதியும் கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும் 2310. திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும் வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப் பகைதெறல் அறியாப் பயங்கொழு வீதியும் பொன் வீதி சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையில் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும் புடைவை வீதி நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் மளிகை வீதி 2320. நிறைக்கோல் துலாத்தர் பளைக்கட் பராரையர் அம்பண வளவையர் எங்கணும் திரிதரக் கால மன்றியும் கருங்கறி மூடையொடு கூலம் குவித்த கூல வீதியும் கோவலன் திரும்பல் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து விசும்பகடு திருகிய வெங்கதில் நுழையாப் பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக் 2330. கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென். (218) 15. அடைக்கலக் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) கோவலன் பாண்டியனைப் புகழ்தல் நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் 2340. மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் மாடலன் வருகை தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு முகரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழில் ஆங்கண் வகுந்துசெல் வருத்தத்து வான்துயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க. மாடலன் கோவலனைப் புகழ்தல் உடற்கொடை 2350. நாவல் அந்தணன் தானவின் றுரைப்போன் வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழுவி பயந்தனள் எடுத்து வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று தாமின் புறூஉம் தகைமொழி கேட்டாங்கு இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் 2360. புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது துன்ப நீங்கித் துயர்க்கடல் ஒழிகென விஞ்சையிற் பெயர்த்து விழுமம் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென, அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலையென வாழ்த்திய ஞான்று 2370. மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கை மறையோன் தன்னைப் பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஒய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்தனன் கையகம் புக்குப் 2380. பெய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி றடக்கிய கருணை மறவ! பொருட் கொடை பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக எள்ளிய மனையோள் இணைந்துபின் செல்ல வடதிசைப் பெயரும் மாமறை யாளன் கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை வடமொழி வாசகம் செய்தநல் லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கெனப், 2390. பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் மாட மறுகின் மனைதொறு மறுகிக் கருமக் கழிபலம் கொண்மி னோவெனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉய், யாதுநீ யுற்ற இடரீ தென்னென மாதர்தான் உற்ற வான்துயர் செப்பி இப்பொருள் எழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென, அஞ்சல் உன்தன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு 2400. ஒத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானம் செய்தவள் தன்துயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! உயிர்க்கொடை பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும், 2410. பட்டோன் தவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென நன்னெடும் பூதம் நல்கா தாகி நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப, அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் 2420. பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்! மாடலன் இரக்கம் இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்தகோ பால நீயென வினவக் கோவலன் கனவு கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும் 2430. பிணிப்பறுத் தோர்தம் பெற்றி எய்தவும் மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து காமக் கடவுள் கையற் றேங்க அணிதிகழ் போதி அறவோன் தன்முன் மணிமே கலையை மாதவி அளிப்பவும் நனவு போல நள்ளிருள் யாமத்துக் கனவு கண்டேன் கடிதீங் குறுமென கோவலனுக்கு அறிவுரை அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் 2440. உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன் மாட மதுரை மாநகர் புகுகென மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் தனக்குக் கூறுங் காலை மாதரி வருகை அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் கண்ணகி அடைக்கலம் 2450. ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியன் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி, மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர், உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும் 2460. இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டித் தேமென் கூந்தற் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே யாகித் தாங்கிங்கு கண்கண்ட கற்புத் தெய்வம் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதில் வெம்மையிற் காதலன் தனக்கு 2470. நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ அடைக்கலத்தின் சிறப்பு தவத்தோர் அடைக்கலம் தான் சிறி தாயினும் 2480. மிகப்பே ரின்பம் தருமது கேளாய். காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல் உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் தருமஞ் சாற்றும் சாரணர் தம்முன் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப் 2490. பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு யாதிவன் வரவென இறையோன் கூறும் எட்டி சாயலன் இருந்தோன் தனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கியுள் புக்குப் பாற்படு மாதவன் பாதம் பொருந்தி உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் 2500. தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின் மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஓம்பிக் காதற் குரங்கு கடைநாள் எய்தவும் தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணம் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி 2510. உருவினும் திருவினும் உயர்வினும் தோன்றிப் பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணா லாண்டின் இறந்தபிற் பாடு விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின் பெற்ற செல்வப் பெரும்பயனெல்லாம் தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானம் தன்னால் ஆயினன் இவ்வடி வறிமி னோவெனச் 2520. சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் தேவ கமரன் தோன்றினன் என்றலும், சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆரணங் காக அறந்தலைப் பட்டோர் அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் இட்ட தானத் தெட்டியும் மனைவியும் முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர் மாதரி மனைசெல்லல் கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது நீபோ கென்றே 2530. கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி, வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள் முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப மறித்தோள் நவியத் துறிக்கா வாளரொடு செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ மதிற்பொறிகள் மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் 2540. காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால் 2549. கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். (219) 16. கொலைக்களக் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மாதரி கண்ணகியைப் பேணல் 2550. அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் பூவல் ஊட்டிய புனைமாண் பந்தர்க் காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செயிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை யழிப்பச் 2560. செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீர் அடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் அரிசி காய்கறி கொடுத்தல் சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் அடிசில் ஆக்குதற் கமைந்தநற் கலங்கள் 2570. நெடியா தளிமின் நீரெனக் கூற, இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபின் கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப கண்ணகி அமுதாக்கிப் படைத்தல் மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் 2580. திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித், தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் கைவல் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமலர் அங்கையிற் காதலன் அடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் 2590. தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுதம் உண்க அடிகள் ஈங்கென மாதரி ஐயை மகிழ்ச்சி அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை 2600. விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சி ஈங்கென கோவலன் மெய்யுணர்வு உண்டினி திருந்த உயர்பே ராளற்கு அம்மென் திரையலோ டடைக்காய் ஆஈத்த மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி எம்முது குரவர் என்னுற் றனர்கொல்? 2610. மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் நச்சுக்கொன் றேற்கு நன்னெறி யுண்டோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என்செய் தனையென கண்ணகியின் கற்பியல் 2620. அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதில் கோடலும் இழந்த என்னைநும் பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடியவது போலுமென் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் 2630. போற்றா வொழுக்கம் பிரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் கோவலன் அன்பியல் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்துயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே 2640. கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ உழையோர் இல்லா ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் கோவலன் செல்லல் பல்லான் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் 2650. தன்குலம் அறியும் தகுதியன் றாதலின் தாதெரு மன்றம் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் கூற்றத்தூதன் வணக்கம் கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய நுண்வினைக் கொல்லல் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் 2660. காவலன் தேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் வஞ்சகப் பேச்சும் பார்வையும் போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியொடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக், 2670. கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடில் அங்கண் இருமின் நீரெனக் கோவலன் சென்றக் குறுமகன் இருக்கையோர் தேவ கோட்டச் சிறையகம் புக்கபின், கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்குப் பிலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் தீமைச் சூழ்நிலை 2680. கூடல் மகளிர் ஆடற் றோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடலுள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதற் றேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு போப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் 2690. வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக், கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும் துன்னிய மந்திரம் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைமேல் வினை வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரா னாகி ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் 2700. தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் ஊர்காப்பாளரின் பகுத்தறிவு காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் தன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச், செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் 2710. பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட, இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்று கூறும். பொற்கொல்லன் சொல்வன்மை களவுக் கல்வி அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக் கருந்தொழிற் கொல்லன் காட்டினன் உரைப்போன் மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுடன் அன்றே இழுக்குடை மரபில் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது. மருந்திற் பட்டீ ராயின் யாவரும் 2720. பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ? தெய்வத் தோற்றம் தெளிகுவ ராயின் கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ? நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகுதினும் தந்திர கரணம் எண்ணுவ ராயின் 2730. இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யாக்காண் கிற்பார்? காலங் கருதி அவர்பொருள் கையுறின் மேலோ ராயினும் விலக்கலும் உண்டோ? கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்கண் கிற்பார்? இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை ஓர் எடுத்துக்காட்டு தூதர்கோ லத்து வாயிலின் இருந்து 2740. மாதர்கோ லத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் கரற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் தன்னைக் கண்டோ ருளரெனின் காட்டும் ஈங்கிவர்க்கு 2750. உண்டோ உலகத் தொப்போர் என்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் ஒருவன் தற்சான்று திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் கலனசை வேட்கையிற் கடும்புலி போன்று மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவவென் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் 2760. உரியதொன் றுரைமின் உறுபடை யீரெனக் கோவலன் வீழ்வும் கோல்வளையும் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்துயர் கூரக் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் 2766. கோவலன் பண்டை ஊழ்வினை யுருந்தென். (297) 9. நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன்கேள்வன் காரணத்தால்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. 17. ஆய்ச்சியர் குரவை (கொச்சக்கலி) மாதரி நெய்ம்முறை 2767. கணலெழுதிய இமயநெற்றின் அயலெழுதிய புலியும்வில்லும் நலவலந்தண் பொழில்மன்னர் ஏவல் கேட்பப் பாரர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் காலை முரசம் கனைகுர லியம்புமாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறும் மத்துங்கொண்டு இடைமுதுமகள் வந்துதோன்றுமன். உரைப்பாட்டு மடை தீ நிமித்தங்கள் 2777. குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; உறிநறு வெண்ணெய் உருகா உருகும் மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு. கருப்பம் 2783. குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக் கண்ணீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கி யாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியும் தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவையாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே. கொளு கன்னியர் எழுவர் 2784. காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க்கோதை யாள்; சுட்டு நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்; மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் முல்லையம் பூங்குழல் தான்; நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் பொண்கொடி மாதர்தன் தோள்; பொற்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிந் நற்கொடி மென்முலை தான்; வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் கொன்றையம் பூங்குழ லாள்; தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் பூவைப் புதுமல ராள். எடுத்துக்காட்டு இசைப்பெயர் புனைதல் 2798. ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழையிளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே. 2808. மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை - ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை. நிற்கும் நிலை மாயவன் சீருளார் பிஞ்ஞையும் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான் அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர் வையம் அளந்தான்தன் மார்பின் திருநோக்காப் பெய்வனைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றாள் ஆயர் மகள். கூத்துள் படுதல் குரவை தொடங்கல் 2822. அவர்தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீர் ஆய்ந்துளார் - முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணியென் றாள்; எனஅக் குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா-உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள். பாட்டு மாயவன் குழல் 2833. கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ மாயவன் வடிவு தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம். 2844. இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம்; வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; தையல் கலையும் வளையும் இழந்தே கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம். ஒன்றன் பகுதி (மாயவன் இருக்கை) 2856. கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் மதிபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளான் பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைநீ புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார் ஆடுநர்ப் புகழ்தல் மாதரி மகிழ்ச்சி 2864. மாயவன்தம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லா நாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றும் உள்வரிப் பாணியொன் றுற்று. உள்வரி வாழ்த்து பூவைநிலை 2871. கோவா மாலையாரம் கோத்த கடலாரம் தேவர்கோள் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தோசித்தான் என்பரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையான் என்பரால்; முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில்தோ ளோச்சிக் கடல்கடைந்தான் என்பரால். முன்னிலைப் பரவல் மாயவன் மாயம் 2883. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தவடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தவடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே. படர்க்கைப் பரவல் - மாயவன் சீர் 2895. மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே; பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராய ணாவென்னா நாவென்ன நாவே. அரசவாழ்த்து 2910. என்றியாம் கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த 2916. தொடித்தோட்டென்னவன் கடிப்பிகு முரசே. (150) 18. துன்ப மாலை (கொச்சகக்கலி) ஒருத்தி விரைவு 2917. ஆங்கு; ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத் தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள் கலக்கநிலை அவள்தான், சொல்லாடாள் சொல்லாடா நின்றாளந் நங்கைக்குச் சொல்லாடுஞ் சொல்லாடுந் தான் கண்ணகி துடிப்பு 2927. எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்குமென் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்குமென் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; நன்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சன்றே அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன் வாழி யோதோழீ; தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ. கொலைச்செய்தி 2940. சொன்னது:- அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே. கண்ணகி அழுகை 2945. எனக்கேட்டு பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள் பழி நோக்கம் 2950. இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப அறனெனும் மடவோய்யான் அவலங்கொண்டழிவலோ தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ. கண்ணகி நேர்மை 2962. காணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆயமடமகளிர் எல்லீருங் கேட்டீமின் ஆயமடமகளிர் எல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கதிரவன் சான்று கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் 2969. ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். (53) 19. ஊர்சூழ் வரி (கொச்சகக்கலி) கண்ணகியின் அரற்றுரை 2970. என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்தன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று; பட்டேன் படாத துயரம் படுகாலை உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று; கள்வனோ அல்லன் கணவனென் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று 2980. காதற் கணவனைக் கண்டால் அவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி மக்களின் மருட்கை மல்லல் மதுரையா ரெல்லாரும் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்? மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்; 2990. மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்? செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்? ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் தெய்வமுற்றாள் போலும் தகையள் இதுவென்கொல்? என்பன சொல்லி இனைந்தேங்கி ஆற்றவும் மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக் காணாக் காட்சி கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் 3000. மல்லல்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப் ஒல்லென் ஒலிபடைத்த தூர்; வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற் கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்டாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்தன்னைக் காணாக் கடுந்துயரம். கோவலனை வினாவல் 3008. என்னுறு துயர்கண்டும் இடருறும் இவளென்னீர் பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ? யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ? கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ? இகழ்ச்சி வினாக்கள் 3020. பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுநர் உறுதுறை தாங்குறூஉம் பெண்டிருர் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளிற் றப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்? கோவலனை உயிரொடு காணல் 3030. என்றிவை சொல்லி அழுவாள் கணவன்தன் பொன்றுஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாண்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற நல்லுரை கேட்டல் அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யார்பற்றப் பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத் துளான் எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான் கண்ணகியின் சினப்போக்கு 3037. மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் 3044. சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன் (75) 20. வழக்குரை காதை (உறழ்கலி) கோப்பெருந்தேவி கனவு 3045. ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா! திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா! 3050. விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா! கருப்பம் செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்துவீழ்தரும் நங்கோன்தன் கொற்றவாயில் மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்னவற்கியாம் உரைத்துமென பாண்டியனுக்குக் கனாவுரை ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் மான்மதத்தின் சாந்தேந்தினர் 3060. கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனும்குறளும் ஊமும்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென ஆயமும் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே-இப்பால் கண்ணகி அறிவிப்பு வாயி லோயே! வாயி லோயே! அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து 3070. இறைமுறை பிழைத்தோன் வாயி லோயோ! இணையரிச் சிலம்பென் றேந்திய கையள் கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயேயென வாயிலோன் அறிவிப்பு வாயிலோன் வாழியெங் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படாராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி 3080. வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்; அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணும் அல்லள்; செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளேயென பாண்டியன் இரக்க வினா வருக மற்றவட் டருக ஈங்கென 3090. வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோயெனத் தேரா மன்னா செப்புவ துடையேன்; எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை அழியின் மடித்தோன் 3100. பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை தூரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப் பெண்ணணங்கே பாண்டியன் அமைதியுரை கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காணென ஒள்ளிழை வழக்கு வென்றி 3110. நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியேயெனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே தருகெனத் தந்து தான்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதற் றெறித்தது மணியே-மணிகண்டு பாண்டியன் சால்பு தாழ்ந்த கடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் 3120. மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் பாண்டிமாதேவியின் கற்பு கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று 3125. இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. (81) (வெண்பா) கண்ணகி கூற்று 10. அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே-பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். 11. காவி யூகுநீரும் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும்-பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலும் கண்டஞ்சிக் கூடலான் கூடாயினான் கண்டார் கூற்று 12. மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் றனிச்சிலம்பும் கண்ணீரும்-வையைக்கோன் கண்டளவே தோற்றானக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். 21. வஞ்சின மாலை (கலி வெண்பா) வினை தப்பாமை 3126. கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவும் தெரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே கண்ணகி பிறந்த ஊர்பெருமை எழுபத்தினியர் 3130. வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்; பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக ஆங்குந்தி நின்ற வரியார் அகலல்குல் மாதர்; உரைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கன்னவில் தோளாவோ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக்கொண்டு 3140. பொன்னங் கொடிபோலப் போதந்தாள்; மன்னி மணல்மலிபூங் கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள்; இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன் நீணோக்கம் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுகம் நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை; விழுமிய பொண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த 3150. நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் வண்டல் அயர்விடத் தியானோர் மகட்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறின் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை யவள்போல்வார் நீடிய 3160. மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் வஞ்சினம் பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையும் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா முலையெறிதல் நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையாற் றிருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து 3170. விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த மதுரை தீப்பற்றல் நீல நிறுத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் பாயொரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனால் யார்பிழைப்பார் ஈங்கென்னப் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே 3182 நற்றேரான் வடல் நகர். (57) (வெண்பா) கற்புத்தீ 13. பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியும் சேனையுமா வேழமும் - கற்புண்ணத் தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான் மறைந்தார் மற்று. 22. அழற்படு காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) கையறு நிலை 3183. ஏவற் றெய்வத் தெரிமுகம் திறந்தது காவற் றெய்வம் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய தயிhது 3190. ஆசான் பெருங்கணி அறக்களத் தந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு தாமிடை கொள்ள நால்வருணப் பூதமும் வெளியேறல் (நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் 3200. ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் தேனும் பாலும் கட்டியும் பெட்பச் சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் 3210. ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பின்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் நன்பகல் வரவடி யூன்றிய காலினன் விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்) முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியொடு ஆதிப் பூதத் ததிபதிக் கடவுளும், (வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் 3220. குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு சண்பகம் கருவிளை செங்கூ தாளம் தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோ டொசிந்த பூவினன் அங்குலி கையறிந் தஞ்சுமகன் விரித்த குங்கும வருணங் கொண்ட மார்பினன் பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் 3230. சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்) பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞாலம் ஆள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு எனவிவை பிடித்த கையின னாகி எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் 3240. கொடுந்தொழில் கடந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன அரைச பூதத் தருந்திறற் கடவுளும், செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் வாணிக மரபின் நீணிலம் ஓம்பி நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் (உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன் 3250. வெட்கி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் கூட முடித்த சென்னியன் நீடொளிப் பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நள்ளியம் பலவும் நயந்துடன் அளைஇக் கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீணிழற் காஞ்சிப் 3260. பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமும் சூழொளித் தாலும் யாழும் ஏந்தி விளைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவும் அரும்பலம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு) உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் 3270. விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும், (கருவிளை புரையும் மேனியன் அரியொடு வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் காழகம் செறிந்த உடையினன் காழகில் சார்ந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி) மண்ணுறு திருமணி புரையும் மேனியன் 3280. ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானும் தோன்றிக், கோமுறை பிழைத்த நாளில் இந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்பது ஆமுறை யாக அறிந்தன மாதலின் யாமுறை போவ தியல்பன் றொவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் 3290. நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் தீப்பரவல் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் (உரக்குரங் குயர்த்த ஒண்சிலை உரவோன்) காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் கன்றும் கனலெரி சேரா அறவை யாயர் அகன்தெரு அடைந்தன; மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் 3300. விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன புதுமணப் பெண்டிர் நிலை சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் செப்புவாய் அவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமலர் அவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம் பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் இளந்தாயர் நிலை 3310. திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத முதுபெண்டிர் புகழ்ச்சி வருவிருந் தோம்பி மனையறம் முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப் பூசல் கொடிதோ அன்றெனப் பொங்கெரி வானவற் றொழுதனர் ஏத்தினர் நாடகமடந்தையர் வியப்பு 3320. எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தையர் ஆடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் சொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் வூர்தீ யூட்டிய ஒருமக ளென்ன மதுரை பொலிவிழத்தல் அந்தி விழாவும் ஆரண ஓதையும் 3330. செந்தீ வேட்டலும் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் வழங்குகுரல் முரசமும் மடிந்த மாநகர்க் வீரபத்தினிமுன் மதுரைத்தெய்வம் காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் 3339. வந்து தோன்றினள் மதுரா பதியென். (157) (வெண்பா) மதுராபதி வரவு 14. மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்-நாம முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் மதுரா பதியென்னு மாது. 23. கட்டுரை காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) (குறள் வெண்பாக்களும் உள) மதுரை மாதெய்வம் வருந்தல் 3340. சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெளி றரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி இடமருங் கிருண்ட நீல மாயினும் வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம் பரற்றுந் தகைமையள் பனித்துறைக் 3350. கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென, வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ என்பின் வருவோய் என்னுடை ஆரஞர் எவ்வம் அறிதி யோவென, 3360. ஆரஞர் எவ்வம் அறிந்தேன் அணியிழா அய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய்; தோழிநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக்கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் தீதுற வந்த வினை, காதில் பாண்டியர் குலச்சிறப்பு 3370. மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனும் அல்லன் இன்னும் கேட்டி நன்னுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத் திளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 3380. இழுக்கந் தாரா திதுவும் கேட்டி பாண்டியன் கைகுறைத்தல் - கீரந்தை கதை உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிக்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 3390. உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க் கிழுக்க மின்மை இன்னும் கேட்டி நன்வா யாகுதல் பாண்டியன் முறைசெய்து வணங்கல் - வார்த்திகன் கதை பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் தாங்கா விளையுள் நன்னா டதனுள் 3400. வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறம் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 3410. நாவலங் கொண்டு நண்ணார் ஓட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலம் கொண்டு தன்பதிப் பெயர்வோன், செங்கோற் றென்னன் திருந்துதொழில் மறையவர் தங்கால் என்ப தூரே அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதிமன் றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி 3420. கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் தளர்நடை யாத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர குண்டப் பார்ப்பீர் என்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச், சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் 3430. ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளை வழாஅது உளமலி உவகையோ டொப்ப ஓதத் தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிக் 3440. கோத்தொழில் இளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வெளவிய பார்ப்பான் இவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக, வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவா தாகலின், திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் 3450. கொடுங்கோல் உண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் கார்த்திகை வணவன் வார்த்திகன் முன்னர் 3460. இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையும் சிறிதுதணித் தனனே; நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவம் திறந்தது; சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென யானை யெருத்தத் தணிமுர சிரீஇக் 3470. கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியும் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோ டரைசுகே டுறுமெனும் உரையும் உண்டே நிரைதொடி யோயே கோவலன் பண்டைவினை - சங்கமன் கதை கடிபொழில் உடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவும் குமரனும் தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் 3480. காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிறைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முட் பகையுற இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் 3490. சங்கமன் என்னும் வாணிகன் தன்னை, முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தர்க்குக் கோத்தொழில் செய்வோன் பரதன் என்னும் பெயரனக் கோவலன் விரதம் நீங்கிய வெறுப்பின னாதலின் ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னர்க்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களம் காணாள் நீலி என்போள் அரசர் முறையோ பரதர் முறையோ 3500. ஊரீர் முறையோ சேரீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனன் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ கட்டுரை கூறல் 3510. உம்மை வினைவந் துருத்த காலைச் செம்மையி லோர்க்குச் செய்தவம் உதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் சேரநாடு செல்லல் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இல்லெனக் 3520. கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு அவல என்னாள் அவலித் திழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலின் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் கண்ணகி கணவனைக் கைகூடல் 3530. பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ 3539. கானமர் புரிகுழற் கண்ணகி தானென். (200) (வெண்பா) கண்ணகி தெய்வம் 15. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து கட்டுரை 3540. முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் 3550. நேரத் தோன்றும் வரியும் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடவாரியர் படைகடைந்து தென்தமிழ்நா டொருங்குகாணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த 3559. மதுரைக் காண்டம் முற்றிற்று. (20) மதுரைக் காண்டம் முற்றிற்று மூன்றாவது வஞ்சிக் காண்டம் 24. குன்றக் குறவை (கொச்சகக் கலி) உரைப்பாட்டு மடை குறமகளிர் வினா 3560. குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன் மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே கண்ணகி விடை மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக் கணவனைங் கிழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள் கண்ணகி வான் ஏகல் என்றலும் இறைஞ்சியஞ்சி இணைவளைக்கை எதிர்கூப்பி நின்ற எல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார் கண்ணகி வழிபாடு இவள்போலும் நல்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின், 3570. சிறுகுறி யீரே! சிறுகுடி யீரே! தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே! நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே! தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின் பரவலும் பரவுமின் விரவுமலர் தூவுமின் 3580. ஒருமுலை இழந்த நங்கைக்குப் பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே கொளுச் சொல் - அருவியாடல் 3582. ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி அரிதாரத் தின்னிடியல் சிந்துரச் சுண்ணம் செறியத்தூய்த் தேங்கமழ்ந்து இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியும் மலையருவி யாடுதுமோ; ஆடுதுமே தோழி ஆடுதுமே தோழி அஞ்லோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே சிறைப்புறம் 3590. எற்றொன்றும் காணோம் புலத்தல் அவர்மலைக் கற்றீண்டி வந்த புதுப்புனல் கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார் உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே; என்னொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப் பொன்னாடி வந்த புதுப்புனல் பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார் முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே; யாதொன்றும் காணோம் புலத்தல் அவர்மலைப் போதாடி வந்த புதுப்புனல் போதாடி வந்த புதுப்புனல் மற்றையார் மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே. பாட்டுமடை குரவையாடல் 3602. உரையினி மாதராய் உண்கண் சிவப்பப் புரைநீர் புனல்குடைந் தாடினோ மாயின் உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி வரைவு முடியத் தெய்வம் பராயது 3606. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலை; அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலை; சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகுபெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே. பாட்டுமடை வெறி விலக்கல் 3618. இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே வெறியாடல் தான்விரும்பி வேலன்வருகென்றாள்; ஆய்வளை நல்லாய் இதுநகையா கின்றே மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன் வருமாயின் வேலன் மடவன் அவனிற் குருகு பெயர்க்குன்றம் கொன்றான் மடவன்; 3626. செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே வெறிகமழ் வெற்பனோய் தீர்க்க வரும்வேலன் வேலன் மடவன் அவனினும் தான்மடவன் ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; நேரிழை நல்லாய் நகையாம் மலைநாடன் மார்பு தருவெந்நோய் தீர்க்க வரும்வேலன் தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான்மடவன் கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின். பாட்டு மடை அறத்தொடு நிலை 3634. வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால் மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே; கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல் மயிலியல் மடவால் மலையர்தம் மகளார் செயலைய மலர்புரை திருவடி தொழுதேம் அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 3642. மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம் பலரறி மணமவர் படுகுவ ரெனவே; குறமகள் அவளெம குலமகள் அவளொடும் அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம் துறைமிசை நினதிரு திருவடி தொடுநர் பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே. பாட்டுமடை - அலர் அறிவுறுத்தல் 3650. என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன் சென்றேன் அவன்தன் திருவடி கைதொழுது நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி கடம்பு சூடி உம்பிடி ஏந்தி மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர் அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை குறமகள் இல்லை செறிதோள் இல்லை கடம்பூண் தெய்வ மாக நேரார் மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே பாட்டுமடை வரைவு வேண்டல் 3660. என்றீங்கு, அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப் புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன மலர்தலை வெற்பன் வரைவானும் போலும். முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல் தலைவனை வானோர் தமராரும் கூடிப் பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த நிலையொன்று பாடுதும் யாம். பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம் பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம் 3670. கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால் மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே திருமணக்காட்சி பாடுற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர் பைத்தர வல்குலம் நம் பைம்புனத் துள்ளாளே பைத்தர வல்குல் கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே; வானக வாழ்க்கை அமரர் தொழுதேத்தக் 3680. கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே; மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப் பெறுகதில் லம்ம இவ்வூரும் ஓர்பெற்றி பெற்றி யுடையதே பெற்றி யுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி யுடையதிவ் வூர். அரச வாழ்த்து என்றியாம் கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக் கண்டுநம் காதலர் கைவந்தார் ஆனாது உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர் வில்லெ ழுதிய இயமத்தொடு 3693. கொல்லி யாண்ட குடவர் கோவே (134) 25. காட்சிக் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மலைவளம் காணச்செல்லல் 3694. மாநீர் வேலிக் கடம்பெறித் திமயத்து வானவர் மருள மலைவிற் பூட்டிய வானவர் தோன்றல் வாய்வாட் கோதை விளங்கில வந்தி வெள்ளி மாடத்து இளங்கோ வேண்மாள் உடனிருந் தருளித் துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் 3700. மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவமெனப், பைந்தொடி ஆயமொடு பரந்தொருங் கீண்டி வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன், வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும் இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும் அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று 3710. கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை இடுமண லெக்கர் இயைந்தொருங் கிருப்பக் மலையோசைகள் குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும் வென்றிச் செல்வேள் வேலன் பாணியும் தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும் 3720. நறவுக்கண் ?டைத்த குறவர் ஓதையும் பறையிசை அருசிப் பயங்கெழும் ஓதையும் புலியொடு பொரூஉம் புகர்முக ஓதையும் கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும் பயம்பில்வீழ் யானைப் பாகர் ஓதையும் இயங்குபடை யரவமோ டியாங்கணும் ஒலிக்க மலைக்குறவர் அரசகாணிக்கை அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல 3730. யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனக் திரளும் அணியரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நூறும் கொழுந்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும் கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் 3740. பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும் ஆளியி னணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு குறவர் சொல்லிய செய்தி ஏஞ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம் 3750. கான வேங்கைக் கீழோர் காரிகை தான்முலை இழந்து தனித்துய ரெய்தி வானவர் போற்ற மன்னொடும் கூடி வானவர் போற்ற வானகம் பெற்றனள் எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ நின்னாட் டியாங்கள் நினைப்பினும் அறியேம் பன்னூறாயிரத் தாண்டுவா ழியரென சாத்தனார் விரிவுரை மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும் 3760. ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம் திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய் தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும் வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும் செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர் வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து முதிரா முலைமுகத் தெழுந்த தீயின் 3770. மதுரை மூதூர் மாநகர் சுட்டதும் அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்த திருவீழ் மார்பின் தென்னர் கோமான் தயங்கிணர்க் கோதை தன்துயர் பொறாஅன் மயங்கினன் கொல்லொன மலரடி வருடித் தலைத்தாள் நெடுமொழி தன்செவி கோளாள் கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள் மன்னவன் செல்வழிச் செல்க யானெனத் தன்னுயில் கொண்டவ னுயிர்தே டினள்போல் பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் 3780. கொற்ற வேந்தன் கொடுங்கோற் றன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல் தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள் நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று ஓழிவின் றுரைத்தீண் டூழி யூழி வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத் செங்குட்டுவன் கருத்துரை தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன், எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன் 3790. உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்திற் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்லெனத் துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு செங்குட்டுவன் வினா 3800. உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும் செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யாரென மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி கோப்பெருந்தேவியின் நுட்பவிடை காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகனா டடைந்தவிப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென அமைச்சர் குறிப்பு மாலை வெண்குடை மன்னவன் விரும்பி நூலறி புலவரை நோக்க ஆங்கவர் 3810. ஒற்கா மரபிற் பொதியி லன்றியும் விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக் கற்கால் கொள்ளினும் கடவு ளாகும் கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் செங்குட்டுவன் பெருமித நோக்கம் பொதிளளயிற் குன்றத்துக் கற்கால் கொண்டு முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல் மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று இமயம் நோக்கிய வஞ்சி புன்மயிர்ச் சடைமுடிப் புலரா உடுக்கை 3820. முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின், வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும் முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் தென்றிசை என்தன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும் 3830. நிலவுக்கதிர் அளைந்த நீள்பெருஞ் சென்னி அலர்மந் தாரமொடு ஆங்கயல் மலர்ந்த வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக், குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடுமா ராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன்பெரு வஞ்சியும் பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் 3840. புட்கைச் சேனை பொலியச் சூட்டிப் பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென் வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப் வில்லவன் கோதை பேச்சு செங்குட்டுவன் தமிழகவென்றி பல்யாண்டு வாழ்கநின் கொற்றம் ஈங்கென வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும் நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைபுறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன தக்கண வென்றி கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் 3850. பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது வடநாட்டு வென்றி கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருசெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் உலகத் தமிழகம் இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் 3860. முதுநீ ருலகில் முழுவதும் இல்லை தமிழ்த்திருமுகம் எழுதல் இமய மால்வரைக் கெங்கோன் செல்வது கடவு ளெழுதவோர் கற்கே யாதலின் வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கென அழும்பில்வேள் குறிப்பு நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா வம்பணி யானை வேந்தர் ஒற்றே தஞ்செவிப் படுக்கைத் தகைமைய வன்றோ 3870. அறைபறை யென்றே அழும்பில்வேள் உரைப்ப பறையறைதல் நிறையருந் தானை வேந்தனும் நேர்ந்து கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த வாடா வஞ்சி மாநர் புக்கபின் வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி உலகங் காக்கென விற்றலைக் கொண்ட வியன்பே ரியமத்தொர் கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின், வடதிசை மருங்கின் மன்னரெல்லாம் இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின், 3880. கடற்கடம் பெறிந்த கடும்போர் வார்த்தையும் விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும் கேட்டு வாழுமின் கேளீராயின் தோட்டுணை துறக்கும் குறவொடு வாழுமின் தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க சேனா முகமென வாழ்த்தி இறையியல் யானை யெருத்தத் தேற்றி 3887. அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென். (194) 26. கால்கோட் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) செங்குட்டுவன் வஞ்சினம் 3888. அறைபறை யெழுந்தபின் அரிமான் ஏந்திய முறைமுதற் கட்டில் இறைமகன் ஏற ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி முன்னிய திசையின் முறைமொழி கேட்ப வியம்படு தானை விறலோக் கெல்லாம் உயர்ந்தோங்கு வெண்குடை உரவோன் கூறும் இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியும் தரூஉம் 3990. வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது வறிது மீளுமென் வாய்வா ளாகில் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறூஉங் கோலே னாகென ஆசான் புகழ்ச்சி ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும் சீழ்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால் அஞ்சினர்க் களிக்கும் அடுபோர் அண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ 3910. இமைய வரம்பநின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற கணிவன் அறிவிப்பு ஆறிரு மதியினும் காருக வடிப்பயின்று ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம் இருநில மருங்கின் மன்னரெல் லாம்நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யெனென் றேத்த வாளும் குடையும் புறப்படல் மீளா வென்றி வேந்தன் கேட்டு 3920. வாளும் குடையும் வடதிசைப் பெயர்க்கென, உரவுமண் சுமந்த அரவுத்தலை பனிப்பப் பொரு நரார்பொடு முரசெழுந் தொலிப்ப இரவிடங் கொடுத்த நிரைமணி விளக்கின் விரவுக்கொடி யடுக்கத்து நிரயத் தானையோடு ஐம்பெருங் குழவும் எண்பே ராயமும் வெம்பரி யானை வேந்தற் கோங்கிய கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும் மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப் 3930. பிண்டம் உண்ணும் பெருங்களிற் றெருத்தின் மறமிகு வாளும் மாலைவெண் குடையும் புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப் புரைநீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர வஞ்சிமாலை சூடல் அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து சிவனடி புனைதல் ஞாலங் காவலர் நாட்டிறை பயிரும் 3940. காலை முரசம் கடைமுகத் தெழுதலும் நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி உருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக் கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன் திருமால் சேடம் தாங்கல் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன் 3950. சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி வஞ்சிநகர் நீங்கல் நாடக மடந்தையர் ஆடரங் கியாங்கணும் வடையிற் பொலிந்து கொற்ற வேந்தே வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையோடு ஓடை யானையின் உயர்முகத் தோங்க வெண்குடை நீழலெம் வெள்வளை கவரும் 3960. கண்களி கொள்ளுங் காட்சியை யாகென மாகதப் புல்வரும் வைதா ளிகரும் சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வலன் ஏந்தத் தானவர் தம்மேல் தம்பதி நீங்கும் வானவன் போல வஞ்சி நீங்கித் நீலகிரியில் தங்கல் தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட 3970. உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு ஆலும் புரவி அணித்தேர்த் தானையொடு நீல கிரியின் நெடும்புறத் திறுத்தாங்கு ஆடியல் யானையும் தேரும் மாவும் பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற் பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்தன் இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் பெரும்பே ரமளி ஏறிய பின்னர் முனிவர் வேண்டலும் வாழ்த்தலும் இயங்குபடை அரவத் தீண்டொலி இசைப்ப 3980. விசும்பியங்கு முனிவர் வியன்நிலம் ஆளும் இந்திர திருவனைக் காண்குதும் என்றே அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து மன்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச் செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் மலயத் தேகுதும் வான்பே ரிமய நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின் அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர் 3990. பெருநில மன்ன பேணல்நின் கடனென்று ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர் கொங்கணர் கூத்து வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடஞ்சுமந் தோங்கிய வளரிள வனமுலைக் கருங்கயல் நெடுங்கட் காரிகை யொரொடு இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய 4000. அரும்பவிழ் வேனில் வந்தது வாரார் காதலர் என்னும் மேதகு சிறப்பின் மாதர்ப் பாணி வரியொடு தோன்றக் குடகர் கூத்து கோல்வளை மாதே கோலங் கொள்ளாய் காலங் காணாய் கடிதிடித் துரறிக் காரோ வந்தது காதலர் ஏறிய தேரோ வந்தது செய்வினை முடித்தெனக் காஅர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட் கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத் ஓவர் வாழ்த்து தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து 4010. வாள்வினை முடித்து மறவாள் வேந்தன் ஊழி வாழியென் றோவர் தோன்றக் பரிசளிப்பு கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின் ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி தூதன் சஞ்சயன் வருகை நாடக மகளிரீ ரைம்பத் திருவரும் கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும் தொண்ணுற் றறுவகைப் பாசண் டத்துறை நண்ணிய நூற்றுவர் நகைவேழூம்பரும் கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும் 4020. கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும் ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும் எய்யா வடவளத் திருபதி னாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்சுக முதல்வரீ ரைஞ்ஞூற் றுவரும் சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே வாயி லோரென வாயில்வந் திசைப்ப நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும் 4030. சஞ்சயன் தன்னொடு வருக ஈங்கெனச், செங்கோல் வேந்தன் திருவிளங் கவையத்துச் சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல ஏத்தி நூற்றுவர் கன்னர் தூதுச்செய்தி ஆணையிற் புகுந்தவீ ரைம்பத் திருவரொடு மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த நூற்றுவர் கன்னரும் கோற்றொழில் வேந்தே வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது கடவு ளெழுதவோர் கற்கே யாயின் ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு 4040. வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு யாந்தரும் ஆற்றலம் என்றனர் என்று வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென அருந்தமிழாற்றல் அடல்வேல் மன்னர் ஆருயி ருண்ணும் கடலந் தானைக் காவலன் உரைக்கும் பால குமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது 4050. நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன வங்கப் பெருநிரை செய்க நாமெனச் தென்னவர் திறை சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள் எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர் சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு ஆங்கவர் ஏகிய பின்னர் மன்னிய கங்கை கடந்திருத்தல் 4060. வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய நாடாள் செல்வர் நல்வலன் ஏத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு ஓங்குநீர் வேலி உத்தரம் மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் தானை மறவோன் தன்முன் வட பகைவர்கள் உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் 4070. சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம் தென்தழி ழாற்றல் காண்குதும் யாமெனக் கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்ந்து மேல்வர போர் முரசு இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர் காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர் 4080. வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர் இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில் உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் போர்க்களத்தூசி சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர் கறைத்தோல் மறவர் கடுந்தே ரூருநர் வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும் விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும் 4090. நடுங்குதொழி லொழிந்தாங் கொடுங்கியுள் செறியத் கவந்தம் ஆடல் தாரும் தாரும் தாமிடை மயங்கத் தோளும் தலையும் துணிந்துவே றாகிய சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட செங்குட்டுவன் தும்பை மலைதல் அடுந்தேர்த் தானை ஆரிய வரசர் கடும்படை மக்களைக் கொன்று களங்குவித்து 4100. நெடுந்தேர்க் கொடுஞ்சியும் கடுங்களிற் றெருத்தமும் விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபக லெல்லையின் உண்ணும் என்பது ஆரிய வரசர் அமர்க்களத் தறிய நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன் போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய கனகவிசயர் சிறைப்பாடு வாய்வா ளாண்மையின் வண்தமிழ் இகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும் 4110. ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும் ஏய்த்துப் பிழைத்தோர் சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர் பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர் பாடு பாணியர் பல்லியத் தோளினர் ஆடு கூத்த ராகி எங்கணும் ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக் மறக்கள விருந்து கச்சை யானைக் காவலர் நடுங்கக் கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக 4120. ஆளழி வாங்கி அதரி திரித்த வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித், தொடியிடை நெடுங்கை தூங்கத் தூக்கி முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்திக் கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடலகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வணன் தேரூர் செருவும் பாடிப் பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப் பின்தேர்க் குரவைப் பேயாடு பறந்தலை முடித்தலை அடுப்பிற் பிடர்த்தலைத் தாழித் 4130. தொடித்தோள் துடிப்பின் துழைஇய ஊன்சோறு மறப்போய் வாலுவன் வயினறிந் தூட்டச் சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென வாய்மை காத்தல் மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன் வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர் தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை காற்றூ தாளரைப் போற்றிக் காமினென பத்தினிக்கல் கொள்ளல் வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த பல்வேற் றானைப் படைபல ஏவிப் பொற்கோட் டிமையத்துப் பொறுவறு பத்தினிக் 4141. கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென் (254) 27. நீர்ப்படைக் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) பத்தினிக்கல்லை நீர்ப்படுத்தல் 4142. வடபே ரிமயத்து வான்தரு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின் சினவேல் முன்பிற செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச், செறிகழல் வேந்தன் தென்தமி ழாற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரைச் செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தbhகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று 4150. யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள வருபெருந் தானை மறக்கள மருங்கின் ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட் டுவன்தன் சினவேற் றானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை நூற்றிறன் மாக்களின் நீர்ப்படை செய்து பாடி வீற்றிருக்கை மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும் பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும் 4160. உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும் திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும் ஆரிய மன்னர் அழகுற அமைத்த தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண் வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு வீரர்க்குச் சிறப்புச் செய்தல் நீணில மன்னர் நெஞ்சுபுகல் அழித்து வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர் உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர் 4170. நாள்விலைக் கிளையுள் நல்லமர் அழுவத்து வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைகள் தம்மொடு கிளர்பூ ணாகத்து வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர், மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத்தார் வாகை தம்முடைக் கணிந்தோர், திண்தேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப் புண்தோய் குருதியிற் பொலிந்த மைந்தர், 4180. மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக் கூற்றுக்கண் டோட அரிந்துகளங் கொண்டோர், நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர், வருக தாமென வாகைப் பொலந்தோடு பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத் தோடார் போந்தை தும்பையொடு முடித்துப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன் மாடலன் சொல்நயம் ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின் மாடல மறையோன் வந்து தோன்றி 4190. வாழ்க எங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் செங்குட்டுவன் வினாயம் பகைப்புலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறம் கூறினை நான்மறை யாள யாதுநீ கூறிய உரைப்பொருள் ஈங்கென மாடலன் விளக்கம் மாடல மறையோன் மன்னவற் குரைக்கும் கானலந் தண்துறைக் கடல்விளை யாட்டினுள் மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு 4200. ஊடற் காலத் தூழ்வினை உருத்தெழக் கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன் மாட மூதூர் மதுரை புக்காங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி குடவர் கோவே நின்னாடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி யேறினள் மாதரி உயிர்விடல் இன்னும் கேட்டருள் இகல்வேற் றடக்கை மன்னர் கோவே யான்வருங் காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு 4210. குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன். ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின் வாய்வாள் தென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் தன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும் தாதெரு மன்றத்து மாதரி எழுந்து கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள் குடையும் கோலும் பிழைத்த வோவென இடையிருள் யாமத் தெரியகம் புக்கத்து கவுந்தி உயிர்விடல் 4220. தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம் நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி என்னோ டிவர்வினை உருத்த தோவென உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும் கோவலன் பெற்றோர் நிலை பெற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச் செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும் 4230. செல்கோல் வேந்தற் குற்றதும் கேட்டுக் கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும், துறந்தோன் மனைவி மகன்துயர் பெறா அள் இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும் கண்ணகி பெற்றோர் நிலை கண்ணகி தாதை கடவுளர் கோலத்து 4240. அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன் புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும், தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும் மாதவி துறவு மற்றது கேட்டு மாதவி மடந்தை நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன் மணிமே கலையை வான்துயர் உறுக்கும் கணிகையர் கோலங் காணா தொழிகெனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும், 4250. என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின் நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன் மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத் செங்குட்டுவன் செய்தி வினவல் தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடா வஞ்சி வானவர் பெருந்தகை மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென மாடலன் புகழ்ச்சி நீடு வாழியரோ நீணில வேந்தென மாடல மறையோன் மன்னவந் குரைக்கும் நின மைத்துன வளவன் கிள்ளிபொடு பொருந்தா 4260. ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர் இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் வளநா டழிக்கும் மாண்பின ராதலின் ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன் பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்! பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்! பாண்டி நாட்டாட்சி கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர் 4270. ஒருமுறை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை உயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைத் தென்புல மருங்கில் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின் நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் 4280. ஊழிதொ றூழி உலகங் காத்து வாழ்க எங்கோ வாழிய பெரிதென கணிவன் அறிவிப்பு மறையோன் கூறிய மாற்ற மெல்லாம் இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப் பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச் செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் 4290. எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த செங்குட்டுவன் செய்தி வினவல் நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள் குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச் சித்திர விதானத்துச் செம்பொற் வீடிகைக் கோயிலிருக்கைக் கோமகன் ஏறி வாயி லாளரின் மாடலற் கூஉய் 4300. இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோற் றன்மை தீதின் றொவென சோழ நாட்டாட்சி எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும் 4310. திரிந்துவே றாகுங் காலமும் உண்டோ தீதோ இல்லைச் செல்லற் காலையும் காவிரி புரக்கு நாடுகிழ வோற்கென்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே மாடலுனுக்குக் கொடை பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந் திரட்டித் தோடார் போந்தை வேலோன் தன்னிறை மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு நூற்றவர் கன்னர்க்கு விடை ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச் சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித் செங்குட்டுவன் தற்பெருமை 4320. தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் சுருளிடு தாடி மருள்படு பூங்குழல் அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள் வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர் 4330. அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல் தெரியாது மலைந்த கனக விசயரை இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித் நாடு திரும்பல் திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும் பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப் பயிலிளந் தாமரைப் பல்வண்டு யாழ்செய வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளுங் கொற்ற வேந்தன் வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் 4340. தென்திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு கோப்பெருந்தேவி பிரிவுத்துயர் நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து கதிர்செல வொழித்த கனக மாளிகை முத்துதிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை இலங்கொளி மணிநிரை இடையிடை வகுத்த விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய மடையமை செறுவின் வான்பொற் கட்டில் புடைதிரள் தமனியப் பொற்கால் அமளிமிசை இணைபுணர் எகினத் திளமயிர் செறித்த 4350. துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு தேவியை ஆற்றுவித்தல் எறிந்துகளங் கொண்ட இயல்தேர்க் கொற்றம் அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர் தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப் பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச் சிறுகுறுங் கூனும் குறளும் சென்று பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென குறிஞ்சிப் பாட்டு அமைவிளை தேறல் மாந்திய கானவன் கவண்விடு புடையூஉக் காவல் கைவிட 4360. வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த வாகை தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கெனத் திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும் மருதப்பாட்டு வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக் கவடி வித்திய கழுதையே ருழவன் குடவர் கோமான் வந்தான் நாளைப் படுநுகம் பூணாய் பகடே மன்னர் 4370. அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும் தொடுப்போர் உழவர் ஓதைப் பாணியும் முல்லைப்பாட்டு தண்ணான் பொருநை ஆடுநர் இட்ட வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை வண்டுண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை முண்டகக் கோதையொடு முடிந்த குஞ்சியின் முருகுவிரி தாமரை முழுமலர் தோயக் குருகலர் தாழைக் கோட்டுமிசை யிருந்து வில்லவன் வந்தான் வியம்பே ரிமயத்துப் 4380. பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக் காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் கோவலர் ஊதுங் குழலின் பாணியும் நெற்தற் பாட்டு வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக் குண்டுநீர் அடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி ஈன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளிர் ஓதை யாயத்து வழங்குதொடி முன்கை மலர ஏந்தி வானவன் வந்தான் வளரிள வனமுலை தோலம் உணீஇய தும்பை போந்தையொடு 4390. வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் செங்குட்டுவன் புணர்ச்சி ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி வால்வளை செறிய வலம்புரி வலனெழ மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து குஞ்சுர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள 4397. வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென் (259) 28. நடுகற் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மாலை வரவு 4398. தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை மண்ணகம் நிழற்செய மறவாள் ஏந்திய நிலந்தரு திருவின் நெடுயோன் தனாது வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர் ஒண்தொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய் வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர் உலக மன்னவன் வாழ்கென் றேத்திப் பலர்தொழ வந்த மலரவிழ் மாலை மறப்புண்ணுக்கு மருந்து போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல் வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் யானை வெண்கோ டழுத்திய மார்பும் நீள்வேல் கிழித்த நெடும்புண் ஆகமும் 4410. எய்கணை கிழித்த பகட்டெழில் அகலமும் வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும் மைம்மலர் உண்கண் மடந்தையர் அடங்காக் கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த மனைவியர் முறுவல் இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக் 4420. கருங்கயல் பிறழும் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும் மாந்தளிர் மேனி மடவோர் தம்மால் ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக் இன்னிசை விருந்து காசறைத் திலகக் கருங்கறை கிடந்த மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலும் கோதையும் கோலமும் கண்மார் நிழல்கால் மண்டிலம் தம்மெதில் நிறுத்தி வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப் புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க் 4430. குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின் அந்தீங் குறிஞ்சி அகவல் மகளிரின் மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து திங்கள் வரவு முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன் குடிபுறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க, மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த 4440. வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும் மண்ணீட் டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும் வெண்கால் அமளியும் விதானவே திகைகளும் தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் நிலா முற்றத்தில் அரசியும் அரசனும் படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து இடைநின் றோங்கிய நெடுநிலை மேருவின் கொடிமதில் மூதூர் நடுநின் றோங்கிய தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின் வருவை வேண்மாள் மங்கல மடந்தை மதியேர் வண்ணம் காணிய வருவழி 4450. எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன ஒருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும் பண்கனி பாடலும் பரந்தன ஒருசார் மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் கூனும் குறளும் கொண்டன ஒருசார் வண்ணமும் சுண்ணமும் மலர்பூம் பிணையலும் பொண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒருசார் பூவும் புகையும் மேலிய விரையும் தூவியஞ் சேக்கை சூழ்ந்தன ஒருசார் 4460. ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும் சேடியர் செவ்வியின் ஏந்தினர் ஒருசார் ஆங்கவன் தன்னுடன் அணிமணி யரங்கம் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித் கொட்டிச் சேதம் காணல் திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும் செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகம் துளங்காது மேகலை ஒலியாது மென்முலை அசையாது 4470. வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரு நால்வகை மறைவோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்தவன் ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன் வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் நீலன் அறிவுப்பு நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் மாடல மறையோன் தன்னொடும் தோன்றி வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின் 4480. கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன் அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு தமரிற் சென்று தகையடி வணங்க சோழன் மதியாமை நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு வாளும் குடையும் மறக்களத் தொழித்துக் கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை 4490. வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத் தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன் சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை பாண்டியன் மதியாமை ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே ஓங்குசீர் மதுரை மன்னவற் காண ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த சமயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்து 4500. உமையொரு பாகத் தொருவனை வணங்கி அமர்க்களம் அரசன தாகத் துறந்து தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல் கொதியழற் சீற்றங் கொண்டோன் தம்மேல் கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்று ஏனை மன்னர் இருவரும் கூறிய நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத் செங்குட்டுவன் சினத்தல் தாமரைச் செங்கண் தழல்நிறங் கொள்ளக் கோமகன் நகதலும் குறையாக் கேள்வி மாடலன் அறவுரை மாடலன் எழுந்து மன்னவர் மன்னே 4510. வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் செங்குட்டுவன் வென்றிகள் கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின், ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைச்செரு வென்று நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக், கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி, உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரை கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய் நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே 4520. புரையோர் தம்மொடு பொருந்த புணர்ந்த அரைச ரேறே அமைகநின் சீற்றம் ஐம்பதாண்டு மறவாழ்க்கை மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி இகழா தென்சொற் கேட்டல் வேண்டும் வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந்திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை யாக்கை நிலையாமை 4530. வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில் கடற்கடம் பெறிந்த காவல னாயினும் விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும் நான்மறை யாளன் செய்யுட் கொண்டு மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக் கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் வன்சொல் யவனர் வளநா டாண்டு பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும் 4540. மிகப்பெருந் தானையோ டிருஞ்செரு வோட்டி அகப்பா எறிந்த அருந்திற லாயினும் உருகெழு மரபின் அயிரை மண்ணி இருகடல் நீரும் ஆடினோ னாயினும் சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் செல்வம் நிலையாமை மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த் 4550. தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரிற் கண்டனை யல்லையோ காவல் வேந்தே இளமை நிலையாமை இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே நரைமுதில் யாக்கை நீயும் கண்டனை வினைவழி உயிர் விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் 4560. விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர் கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும் ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின் அறவேள்வி எழுமுடி மார்ப நீ யேந்திய திகிரி வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே அரும்பொருட் பரிசிலேன் அல்லேன் யானும் பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர் 4570. மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன் வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை 4580. வேள்விக் கிழத்தி இவளொடும் கூடித் தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற ஊழியோ டூழி யுலகம் காத்து நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று மறையோன் மறைநா வுழுது வான்பொருள் இறையோன் செவிசெறு வாக வித்தலின் செங்குட்டுவன் வேள்வி செய்தல் வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத் துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் நான்மறை மரபின் நயந்தெரி நாவின் கேள்வி முடித்த வேள்வி மாக்களை 4590. மாடல மறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி கனகவிசயரைப் பெருமைப்படுத்தல் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறை திறை விடுத்தல் 4600. சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும் கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென அழும்பில் வேளொடு ஆயக் கணக்கரை முழங்குநீர் வேலி மூதூர் ஏவி கண்ணகி காட்டும் தமிழகம் சோழன் சிறப்பு அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் ஆர்வினை சென்னை யரசற் களித்துச் பாண்டியன் சிறப்பு செங்கோல் வளைய உயிர்வா ழாமை 4610. தென்புலங் காவல் மன்னவற் களித்து சேரன் சிறப்பு வஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசை மருங்கின் மன்னவர் அறியக் குடதிசை வாழுங் கொற்றவற் களித்து பத்தினிக் கோட்டம் வகுத்தல் மதுரை மூதூர் மாநகர் கேடுறக் கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப் பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை அளக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி 4620. சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று மேலோர் விழையும் நூனெறி மாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து கல் நடுதல் இமையவர் உறையும் இமையச் செவ்வரைச் சிமையச் சென்னித் தெய்வம் பரசிக் கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்கென ஏவினன் 4631. வடதிசை வணக்கிய மன்னவ ரேறென். (234) 29. வாழ்த்துக் காதை (கொச்சகக்கலி) உரைப்பாட்டுமடை - கதைத்தொகுப்பு செங்குட்டுவன் வென்றியும் பத்தினி வழிபாடும் 4632. குமரியொடு வடமிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை வடஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்தமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்குவில் புலிகயல் பொறித்தநாள் எம் போலும் முடிமன்னர் ஈங்கில்லைபோலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த விடத்து ஆங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாம் என்ற வார்த்தை இடந்துரப்ப, ஆரியநாட்டு அரசோட்டி அவர் முடித்தலை அணங்காகிய பேரிமயக் கற்சுமத்திப் பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர் யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீள்முடியாற் பலர்தொழு படிமங்காட்டித் தடமுலைப் பூசலாட்டியைக் கடவுண் மங்கலம் செய்தபின்னாள் கண்ணகிதன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி. பெண்கள் நால்வர் வருகை அலம்வந்த மதிமுகத்திற் சில செங்கயல் நீர் உமிழம் பொடியாடிய கருமுகில் தன்புறம் புதைத்த அறம்பழித்தக் கோவலன்தன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன்தன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர்கண்டு மண்ணரசர் பெருந்தோன்றல் உண்ணீரற்று உயிரிழந்தமை மாமறை யோன் வாய்க்கேட்டு மாசாத்துவான் தான்குறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெருந்துன்பம் எய்திக் காவற்பெண்டும் அடித்தோழியும் கடவுட் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன்கூடிச் சேயிழையைக் காண்டும் என்று மதுரைமாநகர் புகுந்து முதிராமுலைப் பூசல்கேட்டு ஆங்கு அடைக்கலம் இழந்து உயிரிழந்த இடைக்குலமகளிடம் எய்தி ஐயையவள் மகளோடும் வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக் கோமகள் தன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவதற்குத் திறமுரைப்பர்மன்; செங்குட்டுவனுக்கு அறிமுகம் தேவந்தி சொல் 4633. முடிமன்னர் மூவரும் காத்தோம்பும் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் பொந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர் காவற்பெண்டு சொல் 4638. மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர் தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர் அடித்தோழி சொல் 4643. தற்பயந்தாட் கில்லை தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை கற்புக் கடம்பூண்டு காதலன் பின் போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர் பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர். கண்ணகியை நோக்கி தேவந்தி அரற்று 4648. செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழி. காவற்பெண்டு அரற்று 4653. கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை. அடித்தோழி அரற்று 4658. காதலன் தன்வீவும் காதலிநீ பட்டதூஉம் ஏதிலார் தாங்கூறும் ஏச்சுரையும் கேட்டேங்கிப் போதியின்கீழ் மாதவர்முன் புண்ணியதா னம்புரிந்த மாதவி தன்துறவும் கேட்டாயோ தோழீ மணிமே கலைதுறவும் கேட்டாயோ தோழீ. தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது 4663. ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்தோம்ப வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலா வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ செங்குட்டுவன் கூற்று 4668. என்னேயி தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல் பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலைவளைக்கை நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர் மின்னுக் கொடியொன்று மீவிசும்பில் தோன்றுமால். செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டியது 4672. தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில் நல்விருந் தாயினான் நானவன் தன்மகள் வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம். வஞ்சிமகளிர் சொல் 4676. வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம் கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் தன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய உயிர்வாழர் பாண்டியரென்று எங்கோ முறைநா இயம்பவிந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் தன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம். ஆயத்தார் சொல் 4685. வானவன் எங்கோ மகளென்றாம்; வையையார் கோனவன்தான் பெற்ற கொடியென்றாள்-வானவனை வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை வாழ்த்துவாள் தேவ மகள். வாழ்த்து 4689. தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ! வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை குழு மதுரையார் கோமான்தன் தொல்குலமே. மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ! வாழியரோ வாழி வருபுனல் நீர்த் தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்தன் தொல்குலமே எல்லாநாம் காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார். அம்மானை வரி சோழனை வாழ்த்தல் 4700. வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலகம் ஏத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யார் அம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 4710. கடவரைகள் ஓரெட்டும் கண்ணிமையா காண வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யார் அம்மானை வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்திக் கெட்டும் குடைநிழலிற்கொண்டளித்த கொற்றவன் காண்அம்மானை கொற்றவன்தன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை நம்மனையிற் பாடுந் தகையெலாம் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன் அம்மென் புகார் நகரம் பாடேலோ ரம்மானை. கந்துகவரி பாண்டியனை வாழ்த்தல் 4721. பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைகள் ஆர்ப்பவார்ப்ப எங்கணும் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; பின்னுமுன்னும் எங்கணும் பெயர்ந்துவந்த தெழுந்துலாய் மின்னுமின் னிளங்கொடி வியனிலத் திழிந்தெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன்வாழ்க என்றுபந் தடித்துமே; துன்னிவந்து கைத்தலத் திருந்ததில்லை நீணிலம் தன்னினின்றும் அந்தரத் தெழுந்ததில்லை தானெனத் தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன் வாழ்க என்றுபந் தடித்துமே. ஊசல்வரி சேரனை வாழ்த்தல் 4733. வடங்கொள் மணியூசல் மேலிரீஇ ஐயை உடங்கொருவர் கைநிமிர்த்தாங் கொற்றைமே லூக்கக் கடம்பு முதல்தடிந்த காவலனைப் பாடிக் குடங்கைநெடுங் கண்பிறழ ஆடாமோ ஊசல் கொடுவிற் பொறிபாடி ஆடாமோ ஊசல்; ஓரைவீ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல்; வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல் தென்குமரி யாண்ட செருவிற் கயற்புலியான் மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல் விறல்விற் பொறிபாடி ஆடாமோ ஊசல். வள்ளைப் பாட்டு மூவரையும் வாழ்த்தல் 4748. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்தன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் வேப்பந்தார் நெஞ்சுணக்கும் பாடலே பாடல்; சந்துரற் பெய்து தகைசால் அணிமுத்தம் வஞ்சி மகளிர் குறுவரே வான்கோட்டால் 4760. கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்த நிலம்போர்த்த பாடலே பாடல் பனந்தோ டுளங்கவரும் பாடலே பாடலி கண்ணகி வாழ்த்து ஆங்கு, நீணில மன்னர் நெடுவிற் பொறையன்நல் தாள்தொழார் வாழ்த்தல் நமக்கரிது சூழொழிய எங்கோ மடந்தையும் ஏத்தினாள் நீடுழி 4766. செங்குட் டுவன்வாழ்க என்று. (135) 30. வரந்தரு காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) செங்குட்டுவன் வினவல் 4767. வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக் மணிமேகலை துறவு வரலாறு கோமகன் கொற்றம் குறைவின் றோங்கி நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி அணிமே கலையார் ஆயத் தோங்கிய மணிமே கலைதன் வான்துற வுரைக்கும் மாதவி தாயின் கவலை மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவம் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் 4780. ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின புணர்முலை விழுந்தன புல்லகம் அகன்றது தளரிடை நுணுகலும் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின தலைக்கோ லாசான் பின்னுள னாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார் யாது நின்கருத் தென்செய் கோவென மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப மாதவி மகட்குக் காட்டிய நெறி 4790. வருகவென் மடமகள் மணிமே கலையென்று உருவி லாளன் ஒருபெருஞ் சிலையொடு விரைமலர் வாளி வெறுநிலத் தெறியக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்தறம் படுத்தனள்; ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பம் தாம்நனி எய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்துற வெமக்குச் சாற்றினள் என்றே 4800. அன்புறு நன்மொழி அருளொடும் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் தெய்வம் ஏறிய தேவந்திகை உரை குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத் துடித்தனள் புருவம் துவரிதழ்ச் செவ்வாய் மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள் திருமுகம் வியத்தனள் கால்பெயர்த் தெழுந்தனள் பலரறி வாராத் தெருட்சியன் மருட்சியள் 4810. உலறிய நாவினள் உயர்மொழி கூறித் தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான் கொய்தளிர்ச் குறிஞ்சிக் கோமான் தன்முன் கடவுண் மங்கலம் காணிய வந்த மடமொழி நல்லார் மாணிழை யோருள் அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் சூடக மாடத் தரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் பிறப்பு உணர்த்தும் நீர் மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் 4820. செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பில் பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய அணிகயம் பலவுள ஆங்கவை யிடையது கடிப்பகை நுண்கலும் கவரிதழ்க் குறுங்கலும் இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனையத னுள்புக் காடினர் பண்டைப் பிறவிய ராகுவர் ஆதலின் ஆங்கது தொணர்த்hங் காயிழை கோட்டத்து ஓங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக் குறிக்கோள் தகையது கொள்கெனத் தந்தேன் 4830. உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றே கதிரொழி காறுங் கடவுட் டன்மை முதிரா தந்நீர் முத்திற மகளிரைத் தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர் ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய் பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல் மாடல மறையோய் வந்தேன் என்றலும் பாசண்டச் சாத்தன் வரலாறு மன்னவன் விம்மிதம் எய்தியம் மாடலன் தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து கேளிது மன்னா கெடுகநின் தீயது 4840. மாலதி யென்பாள் மாற்றள் குழவியைப் பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக் கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி ஆற்றாத் தன்மையள் ஆரஞர் எய்திப் பாசண் டன்பாற் பாடு கிடந்தாட்கு ஆசில் குழவி யதன்வடி வாகி வந்தனன் அன்னைநீ வான்துயர் ஒழிகெனச் செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப் பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பால் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து 4850. தேவந் திகையைத் தீவலஞ் செய்து நாலீ ராண்டு நடந்ததற் பின்னர் மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து நீவா என்றே நீங்கிய சாத்தன், மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் அங்குறை மறையோ னாகத் தோன்றி உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து குறிக்கோள் கூறிப் போயினன் வாரான் மாடலன் நீர் தெளித்தல் ஆங்கது கொண்டு போந்தேன் ஆதலின் ஈங்கிம் மறையோள் தன்மேல் தோன்றி 4860. அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன் மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப ஒளித்த பிறப்புவந்த துற்றதை யாதலின் கண்ணகி தாய் புலம்பல் புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட்டு யாருமில் ஒருதனிக் காதலன் தன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்துணைத் தோழீ வான்துயர் நீக்கும் மாதே வாராய். கோவலன் தாய் புலம்பல் 4870. என்னோ டிருந்த இலங்கிழை நங்கை தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம் யானது பொறெஎன் என்மகன் வாராய் மாதரி புலம்பல் வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன் உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின் வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன் எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப் பொன்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன் 4880. குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் முதியோர் மொழியின் முன்றில் நின்றழத் ஆசைக்குத் தக்கபிறப்பு தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூல் பார்பன் முன்னிய துரைப்போன் மறையோன் உற்ற வான்துயர் நீங்க உறைகவுள் வெழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி தன்மேல் காதல ராதலின் 4890. மேனிலை யுலகத் தவருடன் போகும் தாவா நல்லறஞ் செய்தில ரதனால், அஞ்செஞ் சாயல் அஞ்சா தணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற் பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின் அற்புளம் சிறந்தாங் கரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் உடன்வயிற் றொராய் ஒருங்குடன் தோன்றினர் ஆயர் முதுமகள் ஆயிழை தன்மேல் போய பிறப்பிற் பொருந்திய காதலின் 4900. ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள் வினைக்கேற்ற விளைவு நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோன் அருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் 4910. கையகத் தன்போற் கண்டனை யன்றே ஊழிதோ றூழி யுலகம் காத்து நீடுவா ழியரோ நெடுந்தகை என்ற மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து பத்தினிக்கு நாள்வழிபாடு பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக் கலிகெழு கூடல் கதழெரி மண்ட முலைமுகம் திருகிய மூவா மேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப் பூவும் புகையும் மேவிய விரையும் 4920. தேவந் திகையைச் செய்கென் றருளி வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர் அரசர்கள் வரம்பெறல் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் 4930. தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல் ஆங்கது கேட்ட அரசனும் அரசரும் ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் தன்னொடுங் கூடித் தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின் இளங்கோவின் துறவு வரலாறு யானும் சென்றேன் என்னெதி தெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி, வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை 4940. நுந்தை தாணிழல் இருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்கும் திருப்பொறி யுண்டேன்று உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயிற் படியோர் தம்முன் அகலிடப் பாரம் அகல நீக்கிச் சிந்தை செல்லாச் சேணேடுந் தூரத்து அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி 4950. தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! இளங்கோவின் வேண்டுகோள் பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் புகழ்மின் பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் அறவோர் அவைக்களம் அகலா தணுகுமின் 4960. பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் யாக்கையும் நிலையா உளநாள் வரையா தொல்லுவ தொழியாது செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் 4968. மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென். (202) கட்டுரை முடியுடை வேந்தர் மூவ ருள்ளும் குடதிசை யாளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பதுவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் 4975. ஒடியா இன்பத் தவதுறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் வரியும் குரவையும் விரவிய கொள்கையின் புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு பெங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக் 4983. கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று. வஞ்சிக்காண்டம் முற்றிற்று நூற்கட்டுரை குமரி வேங்கடம் குணகுட கடலா மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற் செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம் மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் ஒத்த பரபின் ஒழுக்கொடு புணர 4990. எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை இழுக்கா யாப்பின் அகனும் புறனும் அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும் ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்றிவை தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில் ஆடிநன் னிழலின் நீடிருங் குன்றம் காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய 5001. சிலப்பதி காரம் முற்றும் (18) சிலப்பதிகாரம் முற்றும் மணிமேகலை பதிகம் (நிலைமண்டில ஆசிரியப்பா) சம்பாபதித் தெய்வம் இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடை யாட்டி பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்திசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் 5. சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு என்பாள் சம்பா பதியினள் காவிரியை வரவேற்றல் செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் 10. கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற 15. ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு ஆணு விசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு 20. அன்னை கேளிங் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப், பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் 25. தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பவத் தொன்மூ தாட்டி கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து, தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் 30. என்பெயர்ப் படுத்தவிவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென இருபாற் பெயரிய உருகெழு மூதூர் நூலின் உட்பிரிவுகள் முப்பது ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப் பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச் 35. சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் வயந்த மாலையால் மாதவிக் குரைத்ததும் மணிமே கலைதான் மாமலர் கொய்ய அணிமலர்ப் பூம்பொழில் அகவையிற் சென்றதும் ஆங்கப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் 40. பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும் மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும் 45. உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயிலெடுப் பியதூஉம் ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள் தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும் உழந்தோள் ஆங்கணோர் ஒளிமணிப் பீடிகைப் 50. பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும் உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும் தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும் 55. பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும் அறவண வடிகள் ஆபுத் திரன்திறம் நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பால் 60. சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் மற்றப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக் கவ்வூர்ப் பெருந்தெரு வடைந்ததும் பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையிற் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் 65. காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று ஆனைத் தீர்கெடுத் தம்பலம் அடைந்ததும் அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன் 70. வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன் ஆயிழை தன்னை அகலா தணுகலும் 75. வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் ஐயரி யுண்கண் அவன்துயர் பொறாஅள் தெய்வக் கிளவியின் தெளிந்த வண்ணமும் அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் 80. சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும் நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்தாங்கு ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும் ஆங்கவன் தன்னோ டணியிழை போகி ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும் 85. உற்றவள் ஆங்கோர் உயர்தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும் நவையறு நன்பொருள் உரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும் ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து 90. பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும் இளங்கோ நூல் கேட்டல் 95. இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென். 1. விழாவறை காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) இந்திரவிழா வந்த வரலாறு 1. உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருந்தவன் உரைப்பத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று மண்ணகத் தென்தன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது 10. கவராக் கேள்வியோர் கடவா ராகலின் விழாவைத் தொடங்கச் செய்தல் மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்குரும் தந்துறை போகிய அமயக் கணக்கரும் அகலா ராகிக் கரந்துரு வெய்திய கடவு ளாளரும் பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம் 20. விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும் தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும் ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென முரசறைதல் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின் 30. கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் ஊரும் கோலும் வாழ்க திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி வான மும்மாரி பொழிக மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக. நகரை அணி செய்க தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள நால்வேறு தேவரும் நடத்தகு சிறப்பில் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள் 40. இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப் பொன்னகர் வறிதாப் போதுவ தென்பது தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின் தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின். 50. விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின், கதலிகைக் கொடியும் காழூன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் வழிபாடு செய்க நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் அறிவு பரப்புக தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் 60. ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்றா மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமும் செய்யா தகலுமின் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும் தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரு நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென வளம் சுரக்க ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முர சியம்பிப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி 72. அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென. (72) 2. ஊரலருரைத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சித்திராபதியின் பெருங்கவலை 73. நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள் காவற் றெய்வதம் தேவர்கோற் கெடுத்த தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் மணிமே கலையொடு மாதவி வாராத் தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச் சித்திரா பதிதான் செல்லலுற் றிரங்கித் தத்தரி நெடுங்கண் தன்மகள் தோழி 80. வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப் பயங்கெழு மாநகர் அலரெடுத் துரையென வயந்தமாலை செல்லல் வயந்த மாலையும் மாதவி துறவுக்கு அயர்ந்துமெய் வாடிய அழிவின ளாதலின் மணிமே கலையொடு மாதவி யிருந்த அணிமலர் மண்டபடத் தகவயிற் செலீஇ ஆடிய சாயல் ஆயிழை மடந்தை வாடிய மேனி கண்டுளம் வருந்திப் பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய் உன்னோ டிவ்வூர் உற்றதொன் றுண்டுகொல் மாதவியின் நாடகப் புலமை 90. வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும் சுந்தரச் சுண்ணமும் தூநீ ராடலும் பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும் காயக் கரணமும் கண்ணிய துணர்தலும் கட்டுரை வகையும் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலராய்ந்து தொடுத்தலும் 100. கோலங் கோடலும் கோவையின் கோப்பும் காலக் கணிதமும் கலைகளின் துணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை ஊரலர் நற்றவம் புரிந்தது நாணுடைத் தென்றே அலகில் மூதூர் ஆன்றவ ரல்லது பலர்தொகு புரைக்கும் பண்பில் வாய்மொழி நயம்பா டில்லை நாணுடைத் தென்ற வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும் மாதவி அலரை மதியாமை 110. காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் கண்ணகி மாபெரும் பத்தினி காதலர் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர்; ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் 120. பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள் மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீ ராடிய கதிரிள வனமுலை திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய கண்ணகி மகள் மணிமேகலை மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் புத்தமதம் சேர்தல் 130. ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய் ஈங்கின் மாதவர் உறைவிடம் புகுந்தேன் மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து மாபெருந் துன்பம் கொண்டுள மயங்கிக் காதலன் உற்ற கடுந்துயர் கூறப் பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவ தறிகென் றருளி 140. ஐவகைச் சீலத் தமைதியும் காட்டி உய்வகை இவைகொளென் றுரவோன் அருளினன் மைத்தடங் கண்ணார் தமக்குமெற் பயந்த சித்திரா பதிக்கும் செப்பு நீயென வயந்தமாலையின் ஏமாற்றம் ஆங்கவள் உரைகேட் டரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் 147. கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்தென். (75) 3. மலர்வனம்புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலையின் அழுகை 148. வயந்த மாலைக்கு மாதவி உரைத்த உயங்குநோய் வருத்தத் துரைமுன் தோன்றி மாமலர் நாற்றம் போல்மணி மேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின், தந்தையும் தாயும் தாம்நனி யுழந்த வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக் காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை மாதர் செங்கண் வரிவனப் பழித்துப் புலம்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர் இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட, மாதவி மணிமே கலைமுகம் நோக்கித் தாமரை தண்மதி சேர்ந்தது போலக் 160. காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றதும் மணிமேகலையின் அழகு மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும்; குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத் தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும் மணிமே கலைதன் மதிமுகம் தன்னுள் அணிகிதழ் நீலத் தாய்மலர் ஓட்டிய கடைமணி யுகுநீர் கண்டன னாயின் 170. படையிட்டு நடுங்கும் காமன்; பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் சுதமதியின் வரலாறு ஆங்ஙனம் அன்றியும் அணியிழை கேளாய் ஈங்கிந் நகரத்து யான்வருங் காரணம்; பாரா வாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பையிற் கௌசிகன் என்போன் இருபிறப் பாளன் ஒருமக ளுள்ளேன் ஒருதனி யஞ்சேன் ஓரா நெஞ்சமோடு ஆரா மத்திடை அலர்கொய் வேன்தனை. 180. மாருத வேகனென் பானோர் விஞ்சையன் திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற் படுத்தனன் ஆங்கவன் பான்மையேன் ஆயினேன்; ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை யாயினும் மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான் 190. தனித்தலர் கொய்யும் தகைமைய ளல்லள் இலவந்திகைச்சோலை பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் உய்யானம் விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள் மண்ணவர் விழையார் வானவ ரல்லது பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும் வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார் சம்பாதி கவேர வனங்கள் 200. வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரனாங் கிருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய யாப்புடைத் தாக அறிந்தோர் எய்தார் உவவனம் அருளும்ள அன்பும் ஆயிரு ரோம்பும் ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் பகவன தாணையிற் பன்மரம் பூக்கும் உவவனம் என்பதொன் றுண்டத னுள்ளது பளிக்கறை மண்டபத்துத் தாமரைப் பீடிகை 210. விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டத னுள்ளது தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின் அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல்யாண்டு கழியினும்; மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய் கடம்பூண் டோர்தெய்வம் கருத்திடை வைத்தோர் ஆங்கவர் அடிக்கிடின் அவரடி தானுறும் நீங்கா தியானங்கணும் நினைப்பில ராயிடின்; 220. ஈங்கிதன் காரணம் என்னை என்றியேல் சிந்தை யின்றியும் செய்வினை யுறுமெனும் வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும் பயங்கெழு மாமலர் இட்டுக் காட்ட மயன்பண் டிழைத்த மரபின ததுதான் அவ்வனம் அல்ல தணியிழை நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மை தானிலள் மணிமேகலை மலர்வனம் செல்லல் மணிமே கலையொடு மாமலர் கொய்ய 230. அணியிழை நல்லாய் யானும் போவலென்று அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீஇச் குடிகாரன் காட்சி சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன் தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்து காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி உண்ணா நோன்போ டுயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை, வந்தீர் அடிகள்நும் மலரடி தொழுதேன் 240. எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர் புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும் தன்வயின் தரூஉமென் தலைமகன் உரைத்தது கொலையும் உண்டோ கொழுமடற் றெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று 250. உண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும் பித்தன் காட்சி கணவிரி மாலை கட்டிய திரணையன் குவிமுகிழ் எருக்கிற் கோத்த மாலையன் சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்தம் மெய்ம்முழு துறீஇப் பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழுஉம் சுழலலுஞ் சுழலும் ஓடலும் ஓடும் ஒருசிறை யொதுங்கி 260. நீடலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டுநிற் குநரும் பேடிக்காட்சி சுரியற் றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவள வாள் நகை ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து 270. வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் ஓவியக் காட்சி வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும் குழந்தைக்காட்சி விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியில் 280. பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்யணி முச்சி மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில் தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து 290. இலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும் மணிமேகலையைக் கண்டோர் வருத்தம் விராடன் பேருர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி, அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள் மாமலர் கொய்ய மலர்வனம் தான்புகின் நல்லிள வன்னம் நாணா தாங்குள 300. வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை மாமயில் ஆங்குள வந்துமுன் நிற்பன சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன் பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக்கு எஞ்சல் கொல்லோ இசையுந வல்ல என்றிவை சொல்லி யாவரும் இனைந்துகச் மலர்வனம் புகுதல் செந்தளிர்ச் சேவடி நிலம்வடு வுறாமல் குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும் 310. பிடவமும் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத் தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு 318. மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். (171) 4. பளிக்கறை புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) இயற்கைக் காட்சிகள் 319. பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில்நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்று ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரை நின்றாலும் ஒரு மயில் தனக்குக் 330. கம்புட் சேவற் கனைகுரல் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் இயங்குதேர் வீதி எழுதுகள் சேர்ந்து வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல் விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய கோடுடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண் மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து தாதுண் வண்டின மீதுகடி செங்கையின் அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச் 340. செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காணெனப் பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட மணிமே கலையும் மலர்வனம் காண்புழி களிற்றை அடங்கிய உதய குமரன் மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் உருகெழு மீதூர் மீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய கூம்புமுதல் முறைய வீங்குபிணி அவிழ்ந்து கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு 350. இதைசிதைந் தார்ப்பத் திரைபொரு முந்நீர் இயங்குதிசை யறியாது யாங்கணும் ஓடி மயங்குகால் எடுத்த வங்கம் போலக் காழோர் கையற மேலோர் இன்றிப் பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக் கோவியல் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்கு இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற் படாஅ தொருவழித் தங்காது பாகும் பறையும் பருந்தின் பந்தரும் 360. ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக் கால வேகம் களிமயக் குற்றென, விடுபரிக் குதிரையின் விரைந்துசென் றெய்திக் கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி அணித்தேர்த் தானையொ டரசிளங் குமரன் மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றிக் காரலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன் எட்டி குமரனை வினவல் நாடக மடந்தையர் நலங்கெழு வீதி 370. ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித் தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன் தன்னை மாதர் தன்னொடு மயங்கினை யிருந்தோய் யாதுநீ உற்ற இடுக்கண் என்றலும் ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு 380. பாங்கிற் சென்று தான்தொழு தேத்தி எட்டிகுமரன் துயரம் மட்டவிழ் அலங்கல் மன்ன குமரற்கு எட்டி குமரன் எய்திய துரைப்போன் வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமே கலையொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது இதுயான் உற்ற இடும்பை என்றலும் உதயகுமரன் வேட்கை 390. மதுமலர்த் தாரோன் மனமகிழ் வெய்தி ஆங்கவள் தன்னையென் அணித்தே ரேற்றி ஏங்கியான் வருவேன் என்றவற் குரைத்தாங்கு ஓடுமழை கிழியும் மதியம் போல மாட வீதியின் மணித்தேர் கடைஇக் காரணி பூம்பொழிற் கடைமுகம் குறுகவத் தேரொலி மாதல் செவிமுதல் இசைத்தலும் மணிமேகலை அஞ்சல் சித்திரா பதியோ டுதய குமரனுற்று என்மேல் வைத்த உள்ளத் தானென வயந்த மாலை மாதவிக் கொருநாள் 400. கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை ஈங்கென் செவிமுதல் இசைத்ததென் செய்கென அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் மண்டபம் ஒளிதல் சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுவென்று ஒளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ ஆங்கது தனக்கோர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழை தன்னைக் உதயகுமரன் காமவுரை கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்திப் 410. பன்மலர்ப் பூம்பொழிற் பகல்முளைத் ததுபோல் பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசினங் குமரன் ஆருமில் ஒருசிறை ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன் வளரிள வனமுலை மடந்தை மெல்லியல் தளரிடை யறியும் தன்மையள் கொல்லோ? விளையா மழலை விளைந்து மெல்லியல் முளையெயி றரும்பி முத்துநிரைத் தனகொல்? செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி 420. வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல்? மாதவர் உறைவிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியளிங் கெய்திய துரையெனப் சுதமதி அறிவுரை பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும் இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ? உடம்பின் இழிவு அனைய தாயினும் யாயொன்று கிளப்பல் 430. வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது மூப்புவிளி வுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளம் தன்பா லுடையது மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் என்றவள் உரைத்த இசைபடு தீஞ்சொல் சென்றவன் உள்ளம் சேரா முன்னர்ப் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின் 443. இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென். (125) 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) உதயகுமரன் மயக்கம் 444. இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப் பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத் திருவின் செய்யோள் ஆடிய பாவையின் விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவி லாளனோ டுருவம் பெயர்ப்ப. 450. ஓவியன் உள்ளத் துள்ளியது வியப்போன் காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து தாழொளி மண்டபம் தன்கையில் தடைஇச் சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத் தாள்நின் இளங்கொடி யுரையெனக் மணிமேகலை தவநிலை குருகுபெயர்க் குன்றம் கொன்றோ னன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள் ஆயினிப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி 460. காமற் கடந்த வாய்மையள் என்றே தூமலர்க் கூந்தற் சுதமதி உரைப்பச் உதயகுமரன் அவலநிலை சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் செவ்விய ளாயினென் செவ்விய ளாகென அவ்விய நெஞ்சமொ டகல்வோன் ஆயிடை உதயகுமரன் வினவல் அஞ்செஞ் சாயல் அராந்தா ணத்துளோர் விஞ்ஞையன் இட்ட விளங்கிழை என்றே கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை 470. ஈங்கிவள் தன்னோ டெய்திய துரையென சுதமதி தந்தையின் அன்பு வாழ்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி ஈங்கிவள் தன்னோ டெய்திய காரணம் வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்; யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழலோம் பாளன் பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய ஏற்கெடுத் திரங்கிக் தற்றக வுடைமையின் 480. குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப் பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் கடல்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங்கு யாங்ஙனம் வந்தனை எம்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்தாங்கு ஓதல் அந்தணர்க் கொவ்வே னாயினும் காதலன் ஆதலிற் கைவிட லீயான் இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில் பரந்துபடு மனைதொறும் திரிவோன் ஒருநாள் சமணர் இரங்காமை 490. புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புணிணினன் கணவிரி மாலை கைக்கொண் டென்ன நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி என்மகள் இருந்த இடமென் றெண்ணித் தன்னுறு துன்பம் தாங்காது புகுந்து சமணீர் காணுஞ் சரணென் றோனை இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு மையறு படிவத்து மாதவர் புறத்தெமைக் கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம் பௌத்த முனிவன் உதவி அறவோர் உளீரோ ஆருமி லோமெனப் 500. புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற மங்குல்நோய் மாடம் மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பொன்னின் திகழும் பொலம்பூ வாடையன் என்னுற் றனிரோ என்றெமை நோக்கி அன்புடன் அளைஇய அருண்மொழி யதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்து தன்கைப்பாத்திரம் என்கைத் தந்தாங்கு எந்தைக் குற்ற இடும்பை நீங்க 510. எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி சங்க தருமன் தாமெனக் கருளிய புத்த வணக்கம் எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் உலக நோன்பிற் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் 520. காமற் கடந்த வாமன் பாதம் தiகைபா ராட்டுத லல்லது யாவதும் மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென உதயகுமரன் நீங்கல் அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன் வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச் சித்திரா பதியாற் சேர்தலும் உண்டென்று அப்பொழி லாங்கவன் அயர்ந்து போய்பின் மணிமேகலையின் மனத்திட்பம் பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக் கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள் 530. வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென்று இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத் தியற்கை இதுவே யாயின் கெடுகதன் திறமென, மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள் மணிமேகலா தெய்வம் இந்திர கோடணை விழாவணி விரும்பி வந்து காண்குறூஉ மணிமேகலா தெய்வம் பதியகத் துறையுமோர் பைந்தொடு யாகி 540. மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப் புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ! குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய் முற்ற உணர்த்த முதல்வா என்கோ! காமற் கடந்தோய் ஏம மாயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ! ஆயிர வாரத் தாழியன் திருந்தடி நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென்று எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து 550. ஒருதன திரிவதொத் தோதியின் ஒதுங்கி நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும் மாலைக் காலம் புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நன்னீர் அகழிப் புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயில்மருங் கியன்ற வான்பணைத் தோளி தருநிலை வச்சிரம் எனவிரு கோட்டம் எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி 560. ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும் குடதிசை மருங்கிற் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும், அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மல் ஏற. 570. அன்றிற் பேடை அரிக்குரல் அழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப் பவளச் செங்காற் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா முலைபொழி தீம்பால் எழுதுகள் அவிப்பக் கன்றுநினை குரல மன்றுவழிப் படர அந்தி அந்தணர் செந்தீப் பேணப் பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப யாழோர் மருதத் தின்னரம் புளரக் கோவலர் முல்லைக் குழல்மேற் கொள்ள அமரக வருங்கிற் கணவனை யிழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு அந்தி என்னும் பசலைமெய் யாட்டி 584. வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். (141) 6. சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலா தெய்வம் தோன்றல் 585. அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசறு விசும்பின் மறுநிறம் கிளர 590. ஆசற விளங்கிய அந்தீந் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய, உருவு கொண்ட மின்னே போலத் திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப் பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச் சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி ஈங்கு நின்றீர் என்னுற் றீரென 600. ஆங்கவள் ஆங்கவன் கூறிய துரைத்தலும் தெய்வத்தின் அறிவிப்பு அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியா நோக்கம் தவிர்ந்தில னாகி அறத்தோர் வனமென் றகன்றன னாயினும் புறத்தோர் வீதியிற் பொருந்துதல் ஓழியான் பெருந்தெரு ஒழித்திப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி மிக்க மாதவர் விரும்பினர் உறையும் சக்கர வாளக் கோட்டம் புக்கால் கங்குல் கழியினும் கடுநவை யெய்தாது 610. அங்குநீர் போமென் றருந்தெய்வம் உரைப்ப சக்கரவானக்கோட்டத்தின் வரலாறு வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அஞ்செஞ் சாயல் நீயும் அல்லது நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாம் சுடுகாட்டுக் கோட்டம் என்றல துரையார் சக்கர வாளக் கோட்டம் அஃதென மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் ஈங்கிதன் காரணம் என்னை யோவென ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன் மாதவி மகளொடு வல்லிருள் வரினும் 620. நீகேள் என்றே நேரிழை கூறுமிந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்கா டீங்கிதன் அயலது நால்வகை வாயில் ஊரா நற்றோர் ஓவியப் படுத்துத் தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும் நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்து உள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் 630. தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை பல்வகைக் கோட்டங்கள் உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறஞ் சுற்றிப் பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும் அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் 640. நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் அருந்திறற் கடவுள் திருந்துபலிக் கந்தமும் நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும் தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும் தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும் ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து பல்வகை இன்னா ஓசைகள் 650. சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் தரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும் துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும் பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும் நீண்முக நரியின் தீவிளைக் கூவும் சாவோர்ப பயிரும் கூகையின் குரலும் 660. புலவூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் நன்னீர்ப் புணரி நளிகட லோதையின் இன்னா இசையொலி என்றுநின் றறாது பல்வகை மன்றங்கள் தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கிக் கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும் மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண்ணிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து புள்ளிறை கூரும் வெள்ளில் மன்றமும் 670. குடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும் அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும் வெள்ளிற் பாடையும் உள்ளீட் டறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் நெல்லும் பொரியும் சில்பலி யரிசியும் 680. யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை சுடலையறம் தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான் இளையோர் என்னான் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ் வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ! சுடலைப் பேய்க் கூத்து ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச் 690. சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றோன் என்பும் தடியும் உதிரமும் யாக்கையென்று அன்புறு மாக்கட் கறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு உலப்பில் இன்பமோ டுளைக்கும் ஓதையும் கலைப்புற அல்குலி கழுகுகுடைந் துண்டு நிலைத்தலை நெடுவிளி யெடுக்கும் ஓதையும் கடகவும் செறிந்த கைகைய்த தீநாய் உடையக் கல்வி ஒடுங்கா ஓதையும் 700. சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை காய்ந்தபசி எருவை கவர்ந்தூ ணோதையும் பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து மண்கணை முழவ மாக ஆங்கோர் கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ என்னா திரங்காது கண்டொட் டுண்டு சுவையடி பெயர்த்துக் 710. தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக் கண்ட சார்ங்கலன் சாதல் கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்கு எம்மனை காணாய் ஈமச் சுடலையின் வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத் தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும் தாய் முறையீடு பார்ப்பான் தன்னொடு கண்ணிழந் திருந்தவித் தீத்தொழி லாட்டியென் சிறுவன் தன்னை யாருமி தமியேன் என்பது நோக்காது ஆருயி ருண்ட தணங்கோ பேயோ 720. துறையும் மன்றமும் தொல்வலி மரனும் உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் தகவிலை கொல்லோ சம்பா பதியென மகன்மெய் காக்கையை மார்புறத் தழீஇ ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில் கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக் கடிவழங்கு வாயிலிற் கடுந்துய ரெய்தி இடையிருள் யாமத் தென்னையீங் கழைத்தனை என்னுற் றனையோ எனக்குரை என்றே பொன்னிற் பொலிந்து நிறத்தாள் தோன்ற 730. ஆருமி லாட்டியேன் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட் டெய்தினோன் தன்னை அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காணென அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணா பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது மாபெருந் துன்பம்நீ ஒழிவாய் என்றலும், என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளிலென் கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும் 740. இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும் சாம்பாபதியின் நேர்விடை முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள் ஐயம் உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல் ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல் ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல் கொலையற மாமெனுங் கொடுந்தொழில் மாக்கள் அவலப் படிற்றுரை ஆங்கது மடவாய் உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர் இலரோ இந்த ஈமப் புறங்காட்டு 750. அரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம் நிரயக் கொடுமொழி நீயொழி என்றலும் தாய் உயிர்விடும் துணிவு தேவர் தருவர் வரமென் றொருமுறை நான்மறை யந்தணர் நன்னூல் உரைக்கும் மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின் யானோ காவேன் என்னுயி ரீங்கென சம்பாபதியின் ஆற்றல் ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது ஆழித் தாழி யகவரத் திரிவோர் தாந்தரின் யானும் தருகுவன் மடவாய் ஈங்கெ னாற்றலும் காண்பாய் என்றே, 760. நால்வகை மரபின் அரூபப் பிரமரும் நானால் வகையின் உரூபப் பிறமரும் இருவகைச் சுடரும் இருமூ வகையிற் பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும் பல்வகை அசுரரும் படுதுய ருறூஉம் எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும் கோளும் தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி அரந்தை கெடுமிவள் அருந்துயர் இதுவெனச் 770. சம்பா பதிதான் உரைத்தவம் முறையே எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்ட கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி ஈமச் சுடலையின் மகனையிட் டிறந்தபின் சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற எங்குவாழ் தேவரும் கூடிய இடந்தனில் சக்கரவாளக் கோட்டத்தின் அமைப்பு சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையில் நின்ற எழுவகைக் குன்றமும் நால்வகை மரபின் மாபெருந் தீவும் 780. ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும் பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயி ரிடங்களும் பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து மிக்க மயனால் இழைக்கப்பட்ட சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண் இடுபிணக் கோட்டத் தெயிற்புறம் ஆதலின் சுடுகாட்டுக் கோட்ட மென்றால் துரையார் இதன்வர விதுவென் றிருந்தெய்வம் உரைக்க மணிபல்லவத்தில் மணிமேகலை 790. மதனில் நெஞ்சமொடு வான்துய ரெய்திப் பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத் தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப், பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்திசை மருங்கிற் சென்று திரை யுடுத்த மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் 798. அணியிழை தன்னைவைத் தகன்றது தானென். (214) 7. துயிலெழுப்பிய காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) உதயகுமரனுக்கு இடித்துரை 799. மணிமே கலைதனை மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி மணிமே கலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதய குமரன் உறுதுய ரெய்திக் கங்குல் கழியிலென் கையகத் தாளெனப் பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன் 810. தன்னுயி ரென்னும் தகுதியின் றாகும் தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிகென் றவன்வயின் உரைத்தபின் சுதமதிக்குத் தெளிவுரை உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி, இந்திர கோடணை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம் ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர் 820. வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்தீங்கு இன்றேழ் நாளில் இந்நகர் மருங்கே வந்து தோன்றும் மடக்கொடி நன்னாள் களிப்புமாண் செல்வக் காவற் பேரூர் ஒளித்துரு வெய்தினும் உன்திறம் ஒளியாள் ஆங்கவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள மாதவி தனக்கியான் வந்த வண்ணமும் ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும் 830. உரையாய் நீயவள் என்திறம் உணரும் திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக் கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென் நாமம் செய்த நன்னாள் நள்ளிருள் காமன் கையறக் கடுநவை யறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட் குரையென்று அந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் யோயபின் வெந்துய ரெய்திச் சுதமதி எழுந்தாங்கு நள்ளிரவு 840. அகல்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கும் அரங்கியல் மகளிரின் கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை கொளைவல் லாயமொ டிசைகூட் டுண்டு வளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த வெம்மைவெய் துறாது தன்மையில் திரியவும், பண்பில் காதலன் பரத்தமை நோனாது உண்கண் சிவந்தாங் கொல்குகொடி போன்று 850. தெருட்டவும் தெருளா தூடலொடு துயில்வோர் விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும், தளர்நடை யாயமொடு தங்கா தோடி விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை யெறிந்து தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும் இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் காவுறை பறவையும் நாவுள் அழுந்தி 860. விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று பழவிறல் மூதூர் பாயல்கொள் நடுநாள் இரவொலிகள் கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர் ஏத்தொலி யரவமும் உறையுணின் றொடுங்கிய உண்ணா உயக்கத்து நிறையழி யானை நெடுங்கூ விளியும் தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர்க்காப் பாளர் எறிதுடி ஓதையும் முழங்குநீர் முன்துறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் தோப்பியுண் டயர்ந்து 870. பழஞ்செருக் குற்ற அனந்தப் பாணியும் அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப் புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளனா டரவமும் வலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும் புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென இடிக்குரல் முழக்கத் திடும்பலி யோதையும் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் 880. கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் தந்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும் பல்வே றோதையும் பரந்தொருங் கிசைப்பக் சுதமதி உலகவறவியில் இருத்தல் கேட்டுளங் கலங்கி ஊட்டிருள் அழுவத்து முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில் திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கண் 890. பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறவியின் ஒருபுடை இருத்தலும் பழம்பிறப்பு உணர்தல் கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத் திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்; இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் தேவி தயங்கிணர்க் கோதை தாரை சாவுற மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய் 900. காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே மாருத வேகனோ டிந்தகர் புகுந்து தரை தவ்வை தன்னொடு கூடிய வீரை யாகிய சுதமதி கேளாய் இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து தன்பிறப் பதனொடு நின்பிறப் புணர்ந்தீங்கு இலக்குமி யாகிய நினக்கிளை யாள்வரும்; அஞ்சலென் றுரைத்த தவ்வுரை கேட்டு நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் வைகறை ஒலிகள் காவ லாளர் கண்துயில் கொள்ளத் 910. தூமென் சேர்க்கைத் துயில்கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப் பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப் பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப் பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப் பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக் கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக் 920. கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் குயிலுவர் கடைதொறும்ப ண்ணியம் பரந்தெழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ ஊர்துயி லெடுப்ப உரவுநீர் அழுவத்துத் காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் மாதவிக்கு அறிவித்தல் ஏவுறு மஞ்ஞையின் இனைந்தடி வருந்த மாநகர் வீதி மருங்கிற் போகிப் போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும் நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துய ருழப்ப இன்னுயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் 932. துன்னிய துரைத்த சுதமதி தானென். (134) 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலை துயிலொழிதல் 933. ஈங்கிவள் இன்னண மாக இருங்கடல் வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத் தத்துநீர் அடைகரைச் சங்குழு தொடுப்பின் முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு விரைமரம் உருட்டும் திரையுலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின் ஆம்பலும் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி 940. வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும் வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர் அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி சுதமதியைக் காணாத் துயரம் காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று பண்டறி கிளையொடு பதியும் காணாள் கண்டறி யாதன கண்ணிற் காணா நீல மாக்கடல் நெட்டிடை யன்றியும் 950. காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது? சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை நனவோ கனவோ என்பதை அறியேன் மனநடுக் குறூஉம் மாற்றம் தாராய் வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும் எல்வளை வாராய் விட்டகன் றனையோ? விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம்செய்தனள் கொல்லோ அறியேன் ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத் தந்தையை நினைந்தழுதல் 960. திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் அன்னச் சேவல் அரச னாகப் பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப் பாசறை மன்னர் பாடி போல வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும் துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் யாங்கணும் திரிவோள் பாங்கினங் காணாள், குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி 970. வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில் தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக் கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயா வோவென் றழுவோள் முன்னர் தருமபீடிகை தோன்றல் விரித்திலங் கவிரொளி சிறந்துகதில் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று விதிமாண் ஆடியின் வட்டங் குயின்று 980. பதும சதுர மீமிசை விளங்கி அறவோற் கமைந்த ஆசனம் என்றே நறுமல ரல்லது பிறமரம் சொரியாது பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது தேவர்கோன் இட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம் கீழ்நில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி எமதீ தென்றே எடுக்க லாற்றார் தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார் 990. செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதீ தென்றே பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும் பொருவறு சிறப்பிற் புரையோர் ஏத்தும் 995. தரும பீடிகை தோன்றிய தாங்கென். (93) 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலை பழம்பிறப்புணர்தல் 996. ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் காந்தளஞ் செங்கை தலைமேற் குவிந்தன தலைமேற் குவிந்த கையள் செங்கண் முலைமேற் கலுழ்ந்துமுத் தத்திர ளுகுத்ததின் 1000. இடமுறை மும்முறை வலமுறை வாராக் கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு எழுவோள் பிறப்பு வழுவின் றுணர்ந்து பிரமதருமன் எதிர்கால அறிவு தொழுதகை மாதவ துணிபொருள் உணர்ந்தோய் காயங் கரையில்நீ யுரைத்ததை யெல்லாம் வாயே யாகுதல் மயக்கற உணர்ந்தேன் காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவ தேயம் பொறைகெட வாழும் அத்தி பதியெனும் அரசாள் வேந்தன் 1010. மைத்துன னாகிய பிரம தருமன்! ஆங்கவன் தன்பால் அணைந்தற னுரைப்போய் தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை இன்றேழ் நாளில் இருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறு யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்; இதன்பால் ஒழிகென இருநில வேந்தனும் மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம் 1020. ஆவும் மாவும் கொண்டுகழி கென்றே பறையிற் சாற்றி நிறையருந் தானையோடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச் சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத் தங்கா தந்நகர் வீழ்ந்துகே டெய்தலும், மருளறு புலவநின் மலரடி யதனை அரசொடு மக்க ளெல்லாம் ஈண்டிச் 1030. சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள் மணிமேகலையின் முற்பிறப்பு வாழ்க்கை அரவக் கடலொலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒருபெருந் தேவி அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று இலக்குமி யென்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன் அத்தி பதியெனும் அரசன் பெருந்தேவி சித்திபுரம் ஆளுஞ் சீதரன் திருமகள் நீல பதியெனும் நேரிழை வயிற்றில் 1040. காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய இராகுலன் தனக்குப் புக்கேன் அவனொடு பராவரு மரபினின் பாதம் பணிதலும் பிரமதருமன் சொல்லிய செய்திகள் எட்டிரு நாளிலிவ் விராகுலன் தன்னைத் திட்டி விடமுணும் செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாதலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர்ச் சென்று பிறப் பெய்துதி அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள் 1050. மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத் தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும், வேத வெந்திறல் நாகநாட் டரசர் சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப் பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும் திருந்தொளி யாசனம் சென்றுகை தொழுதி அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு இன்றியா னுரைத்த உரைதெளி வாயெனச் 1060. சாதுயர் கேட்டுத் தளர்ந்துகு மனத்தேன் காதலன் பிறப்பும் காட்டா யோவென ஆங்குனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம் பாங்கின் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும் என்றெடுத் தோதினை தெய்வத்தை எதிர்பார்த்தல் ஆங்கத் தெய்வதம் வாரா தோவென 1066. ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தானென். (71) 10. மந்திரங் கொடுத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலா தெய்வம் வருகை 1067. அறவோன் ஆசனத் தாயிழை யறிந்த பிறவிய ளாயினள் பெற்றியும் ஐதென விரைமலர் ஏந்தி விசும்பூ டிழிந்து பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம் முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப புத்தபீடிகையை வணங்கல் உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப் பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச் சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர் இளவள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன் நீயே யாகிநிற் கமைந்தவிவ் வாசனம் 1080. தாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப் மணிமேகலையின் பழைய இல்லறம் பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி உன்திரு வருளால் என்பிறப் புணர்ந்தேன் என்பெருங் கணவன் யாங்குளன் என்றலும் இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு புலத்தகை யெய்தினை பூம்பொழில் அகவயின் இடங்கழி காமமொ டடங்கா னாயவன் மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச் 1090. சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன் தெருமரல் ஒழித்தாங் கிரத்தின தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன் வெங்கதி ரமயத்து வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை நல்கூர் நுசுப்பினை நாணினை யிறைஞ்ச இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது 1100. நாநல் கூர்ந்தனை என்றவன் தன்னொடு பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு சாதுசக்கரனுக்கு அழுதுபடைத்தல் அமர கேள்நின் தமரல மாயினும் அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாமுன் குறிப்பினம் என்றலும் எம்மனை உண்கேன் ஈங்குக் கொணர்கென அந்நாள் அவனுண் டருளிய அவ்வறம் நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும் தெய்வத்தின் நோக்கம் உவவன மருங்கில் உண்பால் தோன்றிய உதய குமரன் அவனுன் னிராகுலன் 1110. ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்குமுன் டாகலின் கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துரு வெங்களர் வீழ்வது போன்மென அறத்தின வித்தாங் காகிய உன்னையோர் திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன் மாதவி சுதமதி பிறப்புக்கள் இன்னும் கேளாய் இலக்குமி நீதின் தவ்வையர் ஆவோர் தரையும் வீரையும் ஆங்கவர் தம்மை அங்கநாட் டகவயின் கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் 1120. துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்; அவருடன் ஆங்கவன் அகன்மலை யாடிக் கங்கைப் பேரியாற் றடைகரை இருந்துழி, மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன் பாற்சென் றோனை ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன் பாங்குளி மாதவன் பாதம் பணிதலும் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி விலங்கும் தம்முன் வேரூஉம்பகை நீக்கி 1130. உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத் தொன்றுகா லத்து நின்றறம் உரைத்த குன்ற மருங்கிற் குற்றங் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கிது பாதபங் கயமலை எனும் பெயர்த் தாயது; தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப் பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென அன்றவன் உரைத்த அவ்வுரை பிழையாது சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின் மாதவி யாகியும் சுதமதி யாகியும் 1140. கோதையஞ்சாயல் நின்னொடு கூடினர் மூன்று மந்திரங்கள் அறிபிறப் புற்றணை அறம்பா டறநித்னை பிறவறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள் இளையள் வளையோள் என்றுனக்கு யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும் அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறல் மந்திரம் கொள்கென வாய்மையின் ஓதி மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் 1150. பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன் திருவறம் எய்துதல் சித்தமென் றுணர்நீ மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி மறந்ததும் உண்டென மறித்தாங் கிழிந்து சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெரு மத்திரம் இரும்பசி யறுக்குமென்று ஆங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து 1159. நீங்கிய தாங்கு நெடுந்தெய்வம் தானென். (93) 11. பாத்திரம் பெற்ற காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) தீவதிலகையின் வினா 1160. மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர் மணிபல லவத்திடை மணிமே கலைதான் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் காவதம் திரியக் கடவுட் கோலத்துத் தீவ திலகை செவ்வனம் தோன்றிக் கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும் மணிமேகலை தன்வரலாறு கூறல் எப்பிறப் பகத்துள் யார்நீ என்றது? பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய் 1170. போய பிறவியில் பூமியங் கிழவன் இராகுலன் மனையான் இலக்குமி என்பேர்; ஆய பிறவியில் ஆடலங் கணிகை மாதவி யீன்ற மணிமே கலையான்; என்பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணரவிம் மன்பெரும் பீடிகை என்பிறப் புணர்ந்தேன் ஈங்கென் வரவிதீங் கெய்திய பயனிது பூங்கொடி யன்னாய் யார்நீ என்றலும் தீவதிலகை வரலாறு ஆயிழை தன்பிறப் பறிந்தமை அறிந்த தீவ திலகை செவ்வனம் உரைக்கும்; 1180. ஈங்கிதன் அயலகத் திரத்தின தீவத்து ஓங்குயர் சமந்தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடியிணை யாகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குள தாதலின் தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெயர் இதுகேள் மணிமேகலையைப் புகழ்தல் தரும தலைவன் தலைமையின் உரைத்த 1190. பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர் கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி உரிய துலகத் தொருதலை யாக ஆங்ஙன மாகிய அணியிழை இதுகேள் அமுதசுரபி தோன்று நாள் ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னுங் கொழுநீ ரிலஞ்சி இருதிள வேனிலில் எரிகதி ரிடபத்து 1200. ஒரு பதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய் அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது நின்னாங்கு வருவது போலும் நேரிழை ஆங்கதிற் பெய்த ஆருயில் மருந்து வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது தான்தொலை வில்லாத் தகைமைய தாகும் 1210. நறுமலர்க் கோதை நின்னூ ராங்கண் அறவணன் தன்பாற் கோட்குவை இதன்திறம் பாத்திரப் பேறு என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித் தீவ திலகை தன்னொடும் கூடிக் கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும் எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழுந்தகை மரபிற் பாத்திரம் புகுதலும் புத்தனைப் போற்றல் பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி 1220. மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி பிறர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி 1230. வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற்கு அடங்கா தென்ற ஆயிழை முன்னர்ப் பசியின் கொடுமை போதி நீழற் பொருந்தித் தோன்றும் நாதன் பாதம் நவைகெட ஏத்தித் தீவ திலகை சேயிழைக் குரைக்கும்; குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர் 1240. இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது புன்மரம் புகையப் புகையழற் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசுதலை நீங்கிய அருமறை யந்தணன் இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன் அரும்பசி களைய ஆற்றுவது காணான் திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழைவளந் தருதலின் மன்னுயிர் ஓங்கிப் 1250. பிழையா விளையுளும் பெருகிய தன்றோ; ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக் கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும் பாத்திரம் பெறக் காரணம் விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன் திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி 1260. உயிரோடு வேவேன் உணர்வொழி காலத்து வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரன் தனையான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன் ஆங்கதன் பயனே அருயிர் மருந்தாய் ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது மணிமேகலையின் இன்பம் நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து வித்தி நல்லறம் விளைந்த அதன்பயன் துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி 1270. வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை நின்று புண்கண் கூர்ந்துமுன் அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்; ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித் தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேனென பாத்திரத்தின் ஆற்றல் மறந்தேன் அதன்திறம் நீயெடுத் துரைத்தனை அறங்கரி யாக அருள்சுரந் தூட்டும் 1280. சிறந்தோர்க் கல்லது செவ்வனம் சுரவாது ஆங்ஙன மாயினை அதன்பயன் அறிந்தனை ஈங்குநின் றெழுவாய் என்றவள் உரைப்பத் மணிமேகலை வீடுதிரும்பல் தீவ திலகை தன்னடி வணங்கி மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக் கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு வானூ டெழுந்து மணிமே கலைதான், வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்த தென்மகள் வாராள் வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் 1290. வந்து தோன்றி அவர்மயக் கங்களைந்து அந்தில் அவர்க்கோர் அற்புதம் கூறும் இதவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் தேவி அமுத பதிவயிற் றரிதில் தோன்றித் தவ்வைய ராகிய தாரையும் வீரையும் அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன், வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் செய்தவம் பெறுமின் அறவண அடிகள் தம்பாற் பெறுமின் 1300. செயிதொடி நல்லீர் உம்றிப் பீங்கிஃது ஆபுத் திரன்கை அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத் தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் பழுதறு மாதவன் பாதம் படர்கேம் 1305. எழுகென எழுந்தனள் இளங்கொடி தானென். (149) 12. அறவணர்த் தொழுத காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) அறவணவடிகளைத் தொழுதல் 1306. ஆங்கவர் தம்முடன் அறவண வடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரைமூ தாளன் உறைவிடம் குறுகி மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி மும்முறை வணங்கி முறையுளி ஏத்திப் மணிமேகலை நிகழ்ந்தவை கூறல் புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதய குமரனாங் குற்றுரை செய்ததும் மணிமே கலாதெய்வம் மணிபல் லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் 1320. தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ்வினை உருப்ப விளந்துகே டெய்தி மாதவி யாகியும் சுதமதி யாகியும் கோதையஞ் சாயல் நின்னொடும் வடினர் ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால் பூங்கொடி நல்லாய் கேளென் றுரைத்ததும் உரைத்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம் தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும் தெய்வம் போயபின் தீவ திலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் 1330. அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால் கேளென் றுரைத்துக் கிளரொளி மாதெய்வம் போகென மடந்தை போந்த வண்ணமும் மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் மணிமே கலையுரை மாதவன் கேட்டுத் மாதவி சுதமதி முற்பிறப்பு தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப் பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன்; 1340. நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த அந்நா ளன்றியும் அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணை யாகிய பாதபங் கயமலை பரவிச் செல்வேன் கச்சய மாளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னையோர் சூழ்பொழிற் கண்டேன்; மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின் றோவென அழிதக வுள்ளமொ டரற்றின னாகி ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன் 1350. புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கது கேட்டோ ரரமியம் ஏறித் தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம் கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன்; ஆடுங் கூத்தியர் அணியே போல வேற்றொர் அணியொடு வந்தீ ரோவென மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் மக்கள் நன்னெறிப் படாமை 1360. பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகா தாகி இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண்ணடைத்தாங்குச் செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது; தண்பனி விழுங்கிய செங்கதில் மண்டிலம் உண்டென உணர்தல் அல்லது யாவதும் 1370. கண்டினிது விளங்காக் காட்சி போன்றது; சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும் ஆங்கத் துளைவழி உகுநீர் போல ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச் சொல்லலும் உண்டுயான் சொல்லுதல் தேற்றார் மல்லல்மா ஞாலத்து மக்களே யாதலின் புத்தன் தோன்றுதல் சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம் தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப, 1380. இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில் பேரறி வாளன் தோன்று மதற் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம் உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம் நல்லன நிகழ்த்தல் கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன் அவிரொளி காட்டும் மணியே போன்று 1390. மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றுங் காலைத் திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத் தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மாநிலம் வளம்படும் ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா வளிவலங் கொட்கும் மாதிரம் வளம்படும் நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும் பறவை பயன்துய்த் துறைபதி நீங்கா 1400. விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் கலங்கஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி மணிமேகலையின் செயல்கள் மாதர் நின்னால் வருவன இவ்வூர் 1410. ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் மாதவி சுதமதி நன்னெறி ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங் கயமலை பரசினர் ஆதலின் ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு ஓங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப் பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் தவபெரு நல்லறம் ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும் 1420. மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை மக்கள் தேவர் எனவிரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின் மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட 1426. எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென். (121) 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை தோட்டத்தில் குழந்தை 1427. மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய ஆபுத் திரன்திறம் அணியிழை கேளாய் வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித் தென்திசைக் குமரி யாடிய வருவோள் சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித் தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத் ஆ காத்தல் தாயில் தூவாக் குழவித்துயர் கேட்டோர் ஆவந் தணைந்தாங் கதன்துயர் தீர நாவால் நக்கி நன்பா லூட்டி 1440. போகா தெழுநாட் புறங்காத் தோம்ப இளம்பூதி வளர்த்தல் வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்தாங்கு ஆமகன் அல்லன் என் மகன் என்றே காதலி தன்னொடு கைதொழு தெடுத்து, நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத் தம்பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி மார்பிடை முந்நூல் வனையா முன்னர் 1450. நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம் நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின் ஆபுத்திரன் அருட்செயல் அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில் குரூஉம்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்றாங்கு அஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு 1460. நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக் கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட நள்ளிருட் கொண்டு நடக்குவன் என்னும் உள்ளம் கரந்தாங் கொருபுடை ஒதுங்கி அல்லிடை ஆக்கொண் டப்பதி அகன்றோன் கல்லதர் அத்தம் கடவா நின்றுழி அந்தணர் துன்புறுத்தல் அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம் கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் 1470. புலைச்சிறு மகனே போக்கப் படுதியென்று அலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப ஆ பிழைத்தல் ஆட்டிநின் றலைக்கும் அந்தணர் உவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக் காட்டிடை நல்லாக் கதழ்ந்து கிளர்ந்தோட ஆவின் தொண்டு ஆபுத் திரன்தான் ஆங்கவர்க் குரைப்போன் நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் 1480. அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை? முதுமறை அந்தணிர் முன்னிய துரைமோ. ஆ புத்திரனென இகழ்தல் பொன்னணி நேமி வலங்கொள்சக் கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ் வாமக னாதற் கொத்தனை அறியாய் நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும் பிறப்பின் பொதுமை ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி 1490. புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென்று ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னு லகத்தென ஆபுத்திரன் பிறந்த வரலாறு ஆங்கவர் தம்முளோர் அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன்பிறப்பு யானறி குவனென நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக் 1500. குமரி பாதங் கொள்கையின் வணங்கித் தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை யாது நின்னூர் ஈங்கென் வரவென மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும் வார ணாசியோர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியாள் பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக் காப்புக் கடைகழிந்து கணவனை யிகழ்ந்தேன்; எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கண் குமரி யாடிய வருவேன் 1510. பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக் கிரங்கே னாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்; செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்று அல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன் கொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின் புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென ஆபுத்திரன் தாய்ப்பற்று ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ 1520. முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூல் மார்பீர் பெய்யுரை யாமோ? சாலிக் குண்டோ தவறென உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப ஆபுத்திரன் பட்ட துன்பங்கள் ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே தாதை பூதியும் தன்மனை கடிதர ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும் கிராமம் எங்கணும் கடிஞையிற் கல்லிட 1530. மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை தான்சென் றெய்திச் ஆபுத்திரன் இரந்தீகை சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக் காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருகவென் றிசைத்துடன் ஊட்டி உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக் 1541. கண்படை கொள்ளும் காவலன் தானென். (115) 14. பாத்திர மரபு கூறிய காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) ஆபுத்திரன் ஈகைக்கவலை 1542. ஆங்கவற் கொருநாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய் மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇத் துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் ஆற்றுவது காணான் ஆரஞர் எய்தக் பாத்திரம் பெறுகை 1550. கேளிது மாதோ கெடுகநின் தீதென யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் தேவி சிந்தா விளக்குத் தோன்றி, ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும் சிந்தாதேவி வாழ்த்து சிந்தா தேவி செழுங்கலை நியமித்து நந்தா விளக்கே நாமிசைப் பாவாய் 1560. வானோர் தலைவி மண்ணோர் முதல்வி ஏனோர் உற்ற இடர்களை வாயெனத் தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி வரையா ஈகை ஆங்கவர் பசிதீர்த் தந்நாள் தொட்டு வாங்குகை வருந்த மன்னுயிர் ஓம்பலின் மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடையின் றொலிப்ப இந்திரன் செருக்கு ஈண்டுநீர் ஞாலத் திவன் செயல் இந்திரன் 1570. பாண்டு கம்பளம் துளக்கிய தாகலின், தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கையோர் மறையோ னாகி மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி, இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து உன்பெரும் தானத் துறுபயன் கொள்கென ஆபுத்திரன் இந்திரனை மதியாமை வெள்ளை மகன்போல் விலாவிற நக்கீங்கு எள்ளினன் போமென் றெடுத்துரை செய்வோன், ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல் 1580. காண்தகு சிறப்பினும் கடவுள ரல்லது அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே! வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர் திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை; உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ யாவையீங் களிப்பன் தேவர்கோன் என்றலும் இந்திரன் தீயநோக்கம் 1590. புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங் கிரப்போர்க் காணா தேமாந் திருப்ப நிரப்பின் றெய்திய நீணிலம் அடங்கலும் பரப்பு நீராற் பல்வளம் சுரக்கென ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணோன் ஓங்குயர் பெருஞ்சிறப் புலகோர்க் களித்தலும், பன்னீராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவளம் இழந்தது வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்பப் பசிப்புயிர் அறியாப் பான்மைத் தாகலின் 1600. ஆருயி ரோம்புநன் அம்பலப் பீடிகை ஊணொலி அரவம் ஒடுங்கிய தாகி விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமைய தாக ஆபுத்திரன் தனிமை ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் யாரிவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்கு அருந்தே மாந்த ஆருயிர் முதல்வனை 1610. இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒருதனி வரூஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன் தன்முன், மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின் ஊனுயிர் மடிந்த துரவோய் என்றலும் சாவகநாடு புறப்படல் அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்தவென் பாத்திரம் ஏந்தி அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென 1620. வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக் கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன் இழிந்தோன் ஏறினன் என்றிதை யெடுத்து வழங்குநீர் வங்கம் வல்லிருட் போதலும் மணிபல்லவத்தில் ஆபுத்திரன் வங்கம் போயபின் வருந்துதுயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் மன்னுயிர் ஓம்புமிம் மாபெரும் பாத்திரம் என்னுயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் 1630. தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் சுமந்தேன் பாத்திரம் என்றனன் தொழுது ஆபுத்திரன் உயர்ந்த உள்ளம் கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியின் ஓரியாண் டொருநாள் தோன்றென விடுவோன் அருளறம் பூண்டாங் காருயி ரோம்புநர் உளரெனில் அவர்கைப் புகுவாய் என்றாங்கு உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்ப்புழி அந்நாள் ஆங்கவன் தன்பாற் சென்றே என்னுற் றனையோ என்றியான் கேட்பத் தன்னுற் றனபல தானொடுத் துரைத்தனன் ஆபுத்திரன் மறுபிறப்பு 1640. குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக் குடதிசைச் சென்ற ஞாயிறு போல மணிபல லவத்திடை மன்னுடம் பிட்டுத் தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு சாவகம் ஆளுந் தலைத்தாள் வேந்தன் 1645. ஆவயிற் றுதித்தனன் ஆங்கவன் தானென். (105) 15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சாவகநாட்டில் ஆவும் ஆபுத்திரனும் 1646. இன்னும் கேளாய் இளங்கொடி மாதே அந்நாள் அவனை ஓம்பிய நல்லாத் தண்ணென் சாவகத் தவள மால்வரை மண்முகன் என்னும் மாமுனி இடவயின் பொன்னின் கோட்டது பொற்குளம் புடையது தன்னலம் பிறர்தொழத் தான்சென் றெய்தி ஈனா முன்னம் இன்னுயிர்க் கெல்லாம் தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும், மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும் குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன் அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப் 1660. பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தற்காத் தளித்த தகையா அதனை ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின் ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத் தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்கு ஒருதா னாகி உலகுதொழத் தோன்றினன் ஆபுத்திரன் புத்தன் அனையன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் 1670. மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்ணக மெல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நன்னீர் போதொடு சோரிந்தது போதி மாதவன் பூமியில் தோன்றும் கால மன்றியும் கண்டன சிறப்பெனச் சக்கர வாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்திற் பாவை அருளு மாயிடின் 1680. அறிகுவம் என்றே செறியிருட் சேறலும், மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தணியா உயிருயச் சாவகத் துதித்தனன் ஆங்கவன் தன்நிறம் அறவணன் அறியுமென்று ஈங்கென் நாவை வருத்திய திதுகேள் ஆபுத்திர மன்னன் மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி மக்களை யில்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின் 1690. நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் காவிரிநாட்டில் வறுமை துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோ அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல்லுயிர்க் கெல்லாம் அலத்தற் காலை யாகிய தாயிழை வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை யொழித்துவைத் தாங்கு வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும் அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென மணிமேகலை பாத்திரம் ஏந்தல் 1700. மாதவன் உரைத்தலும் மணிமே கலைதான் தாயர் நம்மொடு தாழ்ந்துபல ஏத்திக் கைக்கொண் டெடுத்த கடவுட் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும், ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும் மெலித்துகு நெஞ்சின் விடலும் தூர்த்தரும் கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் 1710. உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம்பரி வெய்தி, உதய குமரன் உளங்கொண் டொளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப் பிச்சைப் பாத்திரம் கையினேந் தியது திப்பியம் என்றே சிந்தைநோய் கூர பிச்சை புகுதல் மணமனை மறுகின் மாதவி யீன்ற அணிமலர்ப் பூம்கொம் பகமலி யுவகையில் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தக வுடைத்தெனக் 1720. குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒருதனி யோங்கிய திருமலர் போன்று வான்தரு கற்பின் மனையுறை மகளிரில் தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள்; வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்றிசைப் பொதியிலோர் சிற்றியாற் றடைகரை மாதவன் தன்னால் வல்வினை யுருப்பச் சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம் வீவில் வெம்பசி வேட்கையொடு திருதரும் 1731. காயசண் டிகையெனும் காரிகை தானென். (86) 16. ஆதிரை பிச்சையிட்ட காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) ஆதிரையின் வரலாறு - சாதுவன் பரத்தமை 1732. ஈங்கிவன் செய்தி கேளென விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள், ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி அணியிழை தன்னை அகன்றனன் போகிக் கணிகை யொருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின் 1740. பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக் காண மிலியெனக் கையுதிர் கோடலும் கடலிற் பிழைத்தல் வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி நளியிரு முந்நீர் வளிகலன் வெளவ ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன் ஆதிரை தீப்புகுதல் நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர் 1750. இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவுற் றானென, ஆதிரை நல்லாள் ஆங்கது தான்கேட்டு ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீ ரோவெனச் சாற்றினள் கழறிச் சுடலைக் கானில் தொடுக்குழிப் படுத்து முடலை விறகின் முளியெரி பொத்தி மிக்கவென் கணவன், வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றவள் புகுதலும் தீ சுடாமை 1760. படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரி உறாஅது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொன்னிறம் வழாது விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த திருவின் செய்யோள் போன்றினி திருப்பத் தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும் வானொலிச் செய்தி ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி 1770. நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன் சந்திர தத்தன் எனுமோர் வாணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் ஆதிரையின் பத்தினிமை ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கைபுக் காடிப் போதுவாள் போன்று மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென் கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப் 1780. புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் சாதுவன் மொழிப்பயன் ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல் மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து துஞ்சுதுயில் கொள்ளவச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் 1790. ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும், மற்றவர் பாடை மயக்கறு மரபிற் கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித் தொழுதுரை யாடி ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய் ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் நீயென அவருடன் போகிக் குருமகன் தோற்றம் கள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்தது போலப் 1800. பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப் பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக் கோடுயர் மாநிழற் குளிர்ந்த பின்னவன் ஈங்குநீ வந்த காரணம் என்னென ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும் அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் குருமகன் விருந்தோம்பல் வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து 1810. வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் குருமகன் வியப்பு பெண்டிரும் உண்டிரும் இன்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத் தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும் சாதுவன் மெய்ந்நெறி கூறல் மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும் 1820. அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் கண்டனை யாகெனக் கடுநகை எய்தி குருமகன் புத்துணர்வு உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர் இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய் அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள் உயிருண்மை உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடல் தடிந்தெரி ஊட்டினும் தானுண ராதெனின் 1830. உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ வினைப்பிறவி போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது யானோ வல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பீண் டொழிய உயிர்பல காவதம் கடந்துசேண் சேறல் கனவினும் காண்குவை ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையிற் புகுவது தெளிநீ குருமகன் பணிவுரை என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும் நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு 1840. உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் தமக்கொழி மரபிற் சாவுறு காறும் எமக்காம் நல்லறம் எடுத்துரை என்றலும் சாதுவன் அறவுரை நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன் உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின் அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன் சாதுவன் வீடுதிரும்பல் ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம் 1850. ஆங்குளக் காகும் அரும்பொருள் கொள்கெனப் பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து சந்திர தத்தம் என்னும் வாணிகன் வங்கம் சேர்ந்ததில் வந்துடன் ஏறி இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து தன்மனை நன்பல தானமும் செய்தனன் ஆதிரை பிச்சையிடல் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் 1860. பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென மனையகம் புகுந்து மணிமே கலைதான் பினையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலங்கொண்டு துயரறு கிளவியோடு அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென 1866. ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென். (135) 17. உலகவறவி புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலை அமுதுவழங்கல் 1867. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத் தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி காயசண்டிகை பசியொழிதல் யானைத் தீநோய் அகவயிற் றடக்கிய காயசண் டிகையெனும் காரிகை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்ட தாற்றாக் கட்டழற் கடும்பசிப் 1880. பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்; அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி துன்னிய என்னோய் துடைப்பாய் என்றலும் எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம் பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் காயசண்டிகையின் குறும்பு மாசில் வாலொளி வடதிசைச் சேடிக் காசில்காஞ் சனபுரக் கடிநகர் உள்ளேன் விஞ்சையன் தன்னொடென் வெவ்வினை உருப்பத் 1890. தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்; கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த இடுமணற் கானியாற் றியைந்தொருங் கிருந்தேன், புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விரிச்சிகன் என்போன் பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனையதோர் இருங்கனி நாவற் பழமொன் றேந்தித் தேக்கிலை வைத்துச் சேணாறு பரப்பிற் பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன் தீவைன உருத்தலின் செருக்கொடு சென்றேன் 1900. காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் முனிவன் சாபம் உண்டல் வேட்கையின் உரூஉம் விருச்சிகன் கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது ஈரா றாண்டில் ஒருகனி தருவது அக்கினி யுண்டோர் ஆறீ ராண்டு மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் பன்னீ ராண்டில் ஒருநா ளல்லது உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய் அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து 1910. தந்தித் தீயால் தனித்துயர் உழந்து முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு உண்ணு நாளுன் உறுபசி களைகென அந்நாள் ஆங்கவன் இட்ட சாபம் இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை கணவனைப் பிரிதல் வாடுபசி உழந்து மாமுனி போயபின் பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென் அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி ஆரணங் காகிய அருந்தவன் தன்னால் 1920. காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை வானூ டெழுகென மந்திரம் மறந்தேன் வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி ஆங்கவன் ஆங்கெனக் கருளொடும் உரைப்போன் காவிரிப்பூம்பட்டினம் வருதல் சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் 1930. ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி நோற்றோர் உறைவதோர் நோன்கர் உண்டார்; பலநா ளாயினும் நலனொடு போகி அப்பதிப் புகுவென் றவனருள் செய்ய இப்பதிப் புகுந்தீங்கு யானுறை கின்றேன் இந்திர கோடணை விழவணி வருநாள் வந்து தோன்றியிம் மாநகர் மருங்கே என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கிப் பின்வரும் யாண்டவன் எண்ணினன் கழியும் காயசண்டிகை அறிவிப்பு தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் 1940. மணிமே கலையென் வான்பதிப் படர்கேன் துக்கம் துடைக்குந் துகளறு மாதவர் சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறவி ஒன்றுண் டதனிடை ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர் ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால் வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென்று ஆங்கவன் போகிய பின்னர் ஆயிழை மணிமேகலையின் அழைப்பு 1950. ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி வலமுறை மும்முறை வந்தனை செய்தவ் வுலக வறவியின் ஒருதனி யேறிப் பதியோர் தம்மொடு பலர்தொழு தேத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய தந்துணைப் பாவையைத் தான்தொழு தேத்தி வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக் கருவி மாமழை தோன்றிய தென்னப் பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு அமுத சுரபியோ டாயிழை தோன்றி, ஆபுத் திரன்கை அமுத சுரபியிஃது யாவரும் வருக ஏற்போர் தாமென ஊணொலி அரவத் தொலியெழுந் தன்றே 1964. யாணர்ப் பேரூர் அம்பல மருங்கென். (98) 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சித்திராபதியின் வெகுளி 1965. ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக் கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான் 1970. கூத்தியல் மடந்தையர்க் கெல்லாங் கூறும்; கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக் கன்றே நன்னெடும் பேரூர் இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது பரத்தைக் குலவொழுக்கம் காதலன் வீயக் கடுந்துய ரெய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளியிரும் பொய்கை யாடுநர் போல முளியெரி புகூஉம் முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் 1980. கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் வினையொழி காலைத் திருவின் செல்வி அனையே மாகி ஆடவர்த் துறப்பேம்; தாபதக் கோலத் தாங்கின மென்பது யாவரும் நகூஉம் இயல்பின தன்றே சித்திராபதியின் வஞ்சினம் மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி 1990. போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய உதய குமரனாம் உலகாள் வண்டின் சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக் கைக்கொண் டாங்கவள் ஏந்திய கடிஞையைப் பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி மற்றவன் தன்னால் மணிமே கலைதனைப் பொற்றேர்க் கொண்டு போதே னாகில், சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் அனையே னாகி அரங்கக் கூத்தியர் 2000. மனையகம் புகாஅ மரபினன் என்றே வஞ்சினஞ் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து உதயகுமரனைக் காணல் வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து செறிவளை நல்லார் சிலர்புறஞ் சூழக் குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் கடந்தேர் வீதி காலிற் போகி இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும் தருமணல் ஞெமிரிய திருநா றொருசிறைப் பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த் 2010. திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத் துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை கொண்டிரு மருங்கும் கோதையர் வீச இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப் உதயகுமரன் நலம்வினவல் திருந்தெயி றிலங்கச் செவ்வியின் நக்கவன் மாதவி மணிமே கலையுடன் எய்திய தாபதக் கோலம் தவறின் றோவென சித்திராபதி வேட்கைவிளைத்தல் அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப 2020. ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய நாடகம் விரும்ப நன்னலம் கவினிக் காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது; உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத் தாயது வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென உதயகுமரன் நிகழ்ந்தவை கூறல் ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன், 2030. மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க் காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்திள வனமுலை இறைநெறித் ததூஉம் ஒத்தொளில் பவளத் துள்ளொளி சிறந்த முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம் அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பிய தூஉம், மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் 2040. அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும், பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென் உளங்கொண் டொளித்தாள் உயிர்காப் பிட்டென்று இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப் பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ எய்யா மையலேன் யானென் றவன்சொலச் சித்திராபதியின் எடுத்துக்காட்டுக்கள் 2050. சித்திரா பதிதான் சிறுநகை எய்தி அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில் காமக் கள்ளாட் டிடைமயக் குற்றன தேவர்க் காயினுஞ் சிலவோ செப்பின் மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும், மேருக் குன்றத் தூருநீர்ச் சரவணத்து அருந்திறல் முனிவர்க காரணங் காகிய பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் 2060. தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம் கேட்டும் அறிதியோ வாட்டிறற் குரிசில் உதயகுமரன்பால் முறையிடல் கன்னிக் காவலும் கடியிற் காவலும் தன்னுறு கணவன் சாவுறிற் காவலும் நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்தங் கடியிற் பிறந்தாள் அல்லள்; நாடவர் காண நல்லரங் கேறி ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச் கருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் 2070. செலுக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப் பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப் பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற் கென்றலும் உதயகுமரன் அடங்காவேட்கை உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி ஆயிழை யிருந்த அம்பலம் எய்திக் காடமர் செல்வி கடிப்பசி களைய 2080. ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத் தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் இடங்கழி காமமொ டடங்கா னாகி தவத்திற்குக் காரணம் வினவல் உடம்போ டென்தன் உள்ளகம் புகுந்தன் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவந் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத் தானே தமியள் நின்றோள் முன்னர் யானே கேட்டல் இயல்பெனச் சென்று 2090. நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப மணிமேகலை காரணம் கூறல் என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன்னடி தொழுதலும் தகவென வணங்கி, அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் இறைவனை முன்கை ஈங்கிவன் பற்றினும் தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல் நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக் கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில் தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில் 2100. பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன். மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ கேட்டனை யாயின் வேட்டது செய்கென மணிமேகலை உருமாறல் வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி முத்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு 2110. ஆடவர் செய்தி அறிகுநர் யாரெனத் தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி மாய விஞ்சை மந்திரம் ஓதிக் காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய் மணிமே கலைதான் வந்து தோன்ற உதயகுமரன் வஞ்சினம் அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக் குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண் டிகைதன் கையிற் காட்டி மாயையின் ஒளித்த மணிமே கலைதனை 2120. ஈங்கிம் மண்ணீட்டு யாரென உணர்கேன்; ஆங்கவள் இவளென் றருளா யாயிடின் பன்னா ளாயினும் பாடு கிப்பேன்; இன்னும் கேளாய் இமையோர் பாவாய் பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும் அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும் முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும் குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக் கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி 2130. வல்வா யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென முதியாள் உன்தன் கோட்டம் புகுந்த மதிவாள் முகத்து மயிமே கலைதனை ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன் 2136. இதுகுறை என்றனன் இறைமகன் தானென். (172) 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சித்திரத்தெய்வம் இடித்துரை 2137. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன் 2140. நாடாது துணிந்து நாநல்கூர்ந் தனையென வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் உதயகுமரன் வியப்புரை உதய குமரன் உள்ளம் கலங்கிப் பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி, அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் பையர வல்குல் பலர்பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் முத்தை முதல்வி அடிவிழைத் தாயெனச் 2150. சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின் பின்னறி வாமெனப் பெயர்வோன் தன்னை உதயகுமரன் உட்கொதிப்பு அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ணப் பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு நீல யானை மேலோர் இன்றிக் காமர் செங்கை நீட்டி வண்டுபடு பூநாறு கடாஅம் செருக்கிக் கால்கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின் 2160. நகர நம்பியர் வளையோர் தம்முடன் மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகுளங் கிழிப்பப் பொறாஅ நெஞ்சிற் புகையெறி பொத்திப் பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின் மணிமேகலை சிறைச்சாலையில் உணவளித்தல் உறையுட் கடிகை உள்வரிக் கொண்ட மறுவில் செய்கை மணிமே கலைதான் மாதவி மகளாய் மன்றம் திரிதரின் காவலன் மகனோ கைவிட லீயான் காய்பசி யாட்டி காயசண் டிகையென 2170. ஊர்முழு தறியும் உருவம் கொண்டே, ஆற்றா மாக்கட் காற்றும் துணையாகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடனவர் மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராமென, முதியாள் கோட்டத் தகவையின் இருந்த அமுத சுரபியை அங்கையின் வாங்கிப் பதியகம் திரிதரும் பைந்தொடி நங்கை அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம் 2180. விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும் சிறைக்காவலர்கள் வியப்பு ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து கோட்டங் காவலர் கோமகன் தனக்கிப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் யாப்புடைத் தாக இசைத்துமென் றேகி சோழவரசன் தேவியொடு இருத்தல் நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன் அடியிற் படியை யடக்கிய அந்நாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை 2190. மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு போதவிழ் பூடம்பொழில் புகுந்தனன் புக்குக் இயற்கைக் காட்சிகள் கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும், புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையும் தோகையும் கூடி இருசிறை விரித்தாங் கெழுந்துடன் கொட்பன 2200. ஒருசிறைக் கண்டாங் குண்மகிழ் வெய்தி மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும், கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையைச் செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப் பைங்கிளி யூட்டுமோர் பாவையாம் என்றும், அணிமலர்ப் பூம்பொழில் அகவையின் இருந்த பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க் கியற்றிய மாமணி யூசல் 2210. கடுவனூக் குவது கண்டுநகை எய்தியும் பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு வால்வீ செறிந்த மராஅம் கண்டு நெடியோன் முன்னொடு நின்றன னாமெனத் தொடிசேர் செங்கையில் தொழுதுநின் றேத்தியும் இன்பச் சூழ்நிலை ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர் நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் குழலோடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர் 2220. பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர் ஆரம் பரிந்த முத்தங் கோப்போர் ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர் குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர் அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர் நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து பொழில் விளையாட்டு குருந்தும் தளவும் திருந்துமலர்ச் செருந்தியும் 2230. முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் பொருந்துபு நின்று திருந்துநகை செய்து குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் பிறழ்நதுபாய் மானும் இறும்பகலா வெறியும் வம்மெனக் கூஉம் மகிழ்துணை யொடுதன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று மன்னவன் தானும் மலர்க்கணை மைந்தனும் இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும் 2240. பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும் ஒளித்தறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும் யாங்கணும் திரிந்து தாழ்ந்துவிளை யாடி வேந்தன் அரசு வீற்றிருக்கை மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டினி தியற்றிய கண்கவர் செய்விணைப் பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் 2250. தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற் பைஞ்சோறு மெழுகாப் பசும்பொன் மண்ட பத்து இந்திர திருவன் சென்றினி தேறலும் வேந்து வாழ்த்து வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால் சேய்நிலத் தன்றியும் செவ்வியின் வணங்கி, எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையும் தேரும் மாவும் மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த தலைத்தாச் சேனையொடு மலைத்துததலை வந்தோர் 2260. சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி ஒளியொடு வாழி ஊழிதோ றூழி வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் காவலாளர் செய்திசொல்லல் யானைத் தீநோக் கயர்ந்துமெய் வாடியிம் மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர் அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து 2270. பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்கவூண் சுரந்தனள் ஊழிதோ றூழி உலகங் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும் வேந்தன்முன் மணிமேகலை வருக வருக மடக்கொடி தானென்று அருள்புரி நெஞ்சமோ டரசன் கூறலின் வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று ஆய்கழல் வேந்தன் அருள்வாழியவெனத் தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார் 2280. யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும் பாத்திரப் பெருமை விரைத்தார் வேந்தே நீநீடு வாழி விஞ்சை மகள்யான் விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை வானம் வாய்க்க மண்வளம் பெருகுக தீதின் றாக கோமகற் கீங்கிது ஐயக் கடிஞை அம்பல மருங்கோர் தெய்வந் தந்தது திப்பிய மாயது யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது. 2290. ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென மணிமேகலையின் சீர்திருத்தம் யான்செயற் பாலதென் இளங்கொடிக் கொன்று வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும் சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து அறவோர்க் காக்கும் அதுவா ழியரென அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக் கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் 2298. அறவோர்க் காக்கினன் அரசாள் வேந்தென். (192) 20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) உதயகுமரன் இன்னாவேட்கை 2299. அரசன் ஆணையின் ஆயிழை அருளால் நிரயக் கொடுஞ்சிறை நீக்கி கோட்டம் தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான் யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப் பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும் அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டுரைச் செல்வக் காப்புடைத் தாக ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் சிறையோர் கோட்டஞ் சத்தருள் நெஞ்சத்து 2310. அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும் கேட்டன னாகியத் தோட்டார் குழலியை மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று பற்றினன் கொண்டென் பொற்றேர் ஏற்றிக் கற்றறி விச்சையும் கேட்டவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து பலர்பசி களையப் பாவைதான் ஒழுங்கிய உலக வறவியின் ஊடுசென் றேறலும் காயசண்டிகையின் கணவன் வருகை 2320. மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்துக் கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தால் மாதவன் மாதர்க் கிட்ட சாபம் ஈரா றாண்டு வந்தது வாராள் காயசண் டிகையெனக் கையற வெய்திக் காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து பூத சதுக்கமும் மூரச் சோலையும் மாதவ ரிடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன் ஏந்திள வனமுலை 2330. மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு அறியாப் புகழ்ச்சி இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே யாயினும் உண்போர் பலரால்; ஆணைத் தீநோய் அரும்பசி களைய வான வாழ்க்கையர் அருளினர் கொல்லெனப் பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும் உடலின் பொய்யழகு விழையா உள்ளமொ டவன்பால் நீங்கி உதய குமரன் தன்பாற் சென்று நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித் தண்ணறல் வண்ணம் திரிந்துவே றாகி 2340. பெண்மண லாகிய கூந்தல் காணாய் பிறைநுதல் வண்ணம் காணா யோநீ நரைமையில் திரைதோல் தகையின் றாயது விறல்விற் புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்றுவே றாயின கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ நிரைமுத் தனைய நகையும் காணாய் சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின இலவிதழ்ச் செவ்வாய் காணா யோநீ 2350. புலவுப் புண்பொற் புலால்புறத் திடுவது வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும்பை போல வீழ்ந்துவே றாயின தாழ்ந்தொசி தெங்கின மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளும் காணாய் நரம்பொடு விடுதோல் உகிர்த்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய் வாழைத் தண்டே போன்ற குறங்கிணை 2360. தாழைத் தண்டின் உணங்கல் காணாய் ஆவக் கணைக்கால் காணா யோநீ மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ தளிரடி வண்ணம் காணா யோநீ முளிமுதிர் தெங்கின உதிர்கா யுணங்கல் பூவினும் சாந்தினும் புலால்மறைத்து யாத்து தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனென விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும் காஞ்சனன் வஞ்சக மறைவு தற்பா ராட்டுமென் சொற்பயன் கொள்ளாள் 2370. பிறன்பின் செல்லும் பிறன்போல் நோக்கும் மதுக்கமழ் அகங்கல் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் பவளக் கடிகையில் தவளவாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழாஅள் ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந் தனளென இகலெரி பொத்தி மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள் புற்றடங் கரவிற் புக்கொளித் தடங்கினன் காஞ்சனன் என்னுங் கதிர்வாள் விஞ்சையன் உதயகுமரன் மீளாவேட்கை 2380. ஆங்கவள் உரைத்த அரசிளங் குமரனும் களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான் வளைசேர் செங்கை மணிமே கலையே காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி மாய விஞ்சையின் மனமயக் குறுத்தனள் அம்பல மருங்கில் அயர்ந்தறி வுரைத்தவிவ் வம்பலன் தன்னொடிவ் வைகிருள் ஒழியாள் இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறி குவனென மனங்கொண் டெழுந்து வான்தேர்ப் பாகனை மீன்திகழ் கொடியனைக் 2390. கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை உயாவுத் துணையாக வயாவொடும் போகி உதயகுமரன் சாகப்புகுதல் ஊர்துஞ்சு யாமத் தொருதனி யெழுந்து வேழம் வேட்டெழும் வெம்புலி போலக் கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை யிருந்த அம்பலம் அணைந்து வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல ஆகம் தோய்ந்த சாந்தல ருறுத்த ஊழடி யிட்டதன் உள்ளகம் புகுதலும் காஞ்சனன் கொலைசெய்தல் 2400. ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன் ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத் தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக் காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம் போகுவல் என்றே அவள்பாற் புகுதலும் கந்திற்பாவையின் காப்பு நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக் கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும் 2410. அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன மணிமே கலையவள மறைந்துரு வெய்தினள் காயசண்டிகையின் முடிநிலை காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி வானம் போவுழி வந்தது கேளாய் அந்தரஞ் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார்; போவா ருளரெனிற் பொங்கிய சினத்தள் சாயையின் வாங்கித் தன்வயிற் றிடூஉம்; விந்தம் காக்கும் விந்தா கடிகை அம்மலை மிசைப் போய் அவள்வயிற் றடங்கினள். 2420. கைம்மை கொள்ளேல் கஞ்சன இதுகேள் வினைப்பின் வினை ஊழ்வினை வந்திங் குதய குமரனை ஆருயி ருண்ட தாயினும் அறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும் என்றிவை தெய்வம் கூறலும் எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை யுருத்தெழு 2427. விஞ்சையன்போயினன் விலங்குவிண்படர்ந்தென். (129) 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலை தன்னுருக்கொள்ளல் 2428. கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின் குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் முதியாள் கோட்டத் தகவயிற் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கினள் எழுந்து விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற் குற்றதும் மன்றப் பொதியிற் கந்துடை நெடுநிலைக் கடவுட் பாவை அங்கவற் குரைத்த அற்புதக் கிளவியும் கேட்டனள் எழுந்து கெடுகவிவ் விருவெனக் தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித் உதயகுமரனுக்கு அழுதல் திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள் கட்டழல் ஈமத் தென்னுயிர் சுட்டேன்; 2440. உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி மணிபல் லவத்திடை யென்னையாங் குய்த்துப் பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி உன்பிறப் பெல்லாம் ஒழிவின் றுரைத்தலின், பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன் காதல! 2450. வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோவென விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி அழுதனள் ஏங்கி அயாவுயிர்த் தெழுதலும் கந்திற்பாவை மணிமேகலையைத் தடுத்தல் செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் நினைக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை 2460. தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளல் என்றிவை சொல்லி இருந்தெய்வம் உரைத்தலும் மணிமேகலை காரணம் கேட்டல் பொன்திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன் திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும் நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான் விஞ்சையன் வாளின் இவன்விளிந் ததூஉம் 2470. அறிதலும் அறிதியோ அறிந்தனை யாயின் பெறுவேன் தில்லநின் பேரருள் ஈங்கென உதயகுமரன் பழவினை ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத் தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும்; காயங் கரையெனும் பேரியாற் றடைகரை மாயமில் மாதவன் வருபொரு ளுரைத்து மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் பிரம தருமனைப் பேணினி ராகிய அடிசிற் சிறப்புயாம் அடிகளுக் காக்குதல் விடியல் வேலை வேண்டினம் என்றலும் 2480. மாலை நீங்க மனமகிழ் வெய்திக் காலை தோன்ற வேலையின் வரூஉம் மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச் சீலம் நீங்காச் செய்தவத் தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்றத் தோளும் தலையும் துணிந்துவே றாக வாளிற் றப்பிய வல்வினை யன்றே விராமலர்க் கூந்தல் மெல்லியல் நின்னோடு இராகுலன் தன்னை யிட்டக லாதது வினைவிளைவு 2490. தலைவன் காக்கும் தம்பொருட் டாகிய அவல வெவ்வினை என்போர் அறியார் அறஞ்செய் காத லன்பினி னாயினும் மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழியாது ஆங்கவ் வினைவந் தணுகுங் காலைத் தீங்குறும் உயிரே செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது மணிமேகலையின் எதிர்கால நிகழ்ச்சிகள் இன்னும் கேளாய் இளங்கொடி நல்லாய் 2500. மன்னவன் மகற்கு வருந்துதுய ரெய்தி மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக் காவலன் நின்னையும் காவல்செய் தாங்கிடும்; இடுசிறை நீக்கி இராசமா தேவி கூட வைக்குங் கோட்பின ளாகி மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூறவவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டுக் காதலி நின்னையும் காவல் நீக்குவள்; அரசாள் செல்வத் தாபுத் திரன்பால் 2510. புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை; போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி மாநீர் வங்கத் தவனொடும் எழுந்து மாயமில் செய்தி மணிபல் லவமெனும் தீவகத் தின்னும் சேறலும் உண்டால்; தீவ திலகையின் தன்திறங் கேட்டுச் சாவக மன்னன் தன்னா டடைந்தபின் ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை பல்சமயப்போர் ஆங்கந் நகரத் தறிபொருள் வினாவும் 2520. ஓங்கயி கேள்வி உயர்ந்தோர் பலரால்; இறைவன் எங்கோன் எவ்வுயி ரனைத்தும் முறைமையிற் படைத்த முதல்வனென் போர்களும் தன்னுரு வில்லோன் பிறவுருப் படைப்போன் அன்னோன் இறைவ னாகுமென் போர்களும் துன்ப நோன்பித் தொடர்ப்பா டறுத்தாங்கு இன்ப வுலகுச்சி யிருத்துமென் போர்களும் பூத விகாரப் புணர்ப்பெண் போர்களும் பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறும் அந்நாள், 2530. இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோ டென்னையென் றறைந்தோன் தன்னைப் பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி; எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை; ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக் காம்பன தோளி கனாமயக் குற்றனை என்றவன் உரைக்கும் இளங்கொடி நல்லாய் அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை; 2540. தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும் வாயே யென்று மயக்கொழி மடவாய் தெய்வம் பேசல் வழுவறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியா யாயின் ஆங்கது கேளாய் முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும் கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக் 2550. காப்புடை மாநகர்க் காவலும் கண்ணி யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும் கந்திற்பாவையின் வரலாறு என்திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் மன்பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன் துவதிகன் என்பேன் தொன்றுமுதிர் கந்தின் மயனெனக் கொப்பா வகுத்த பாவையின் 2560. நீங்கேன் யானென் நிலையது கேளாய்; மாந்தர் அறிவது வானவர் அறியார் ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன் ஆவதை இந்நகர்க் காருரைத் தனரோ அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம் உடனுறைந் தார்போல் ஒழியா தெழுதிப் பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின் மணிமே கலையான் வருபொரு ளெல்லாம் துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத் 2570. தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள் ஈறுகடை போக எனக்கருள் என்றலும் மணிமேகலைக்கு மேல் நிகழ்வன துவதிக னுரைக்கும் சொல்லலுஞ் சொல்லுவேன் வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து பொன்னெயிற் காஞ்சி நகர்கவின் அழிய ஆங்கது கேட்ட ஆருயிர் மருந்தாய் ஈங்கிம் முதியாள் இடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் தையல்நிற் பயந்தோர் தம்மொடு போகி 2580. அறவணன் தானும் ஆங்குள னாதலின் செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை; அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப் பிறவணம் ஒழிந்துநின் பெற்றியை யாகி வறனோ டுலகின் மழைவளந் தரூஉம் அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை; ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும் ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள; பிறவறம் உரைத்தோர் பெற்றிமை யெல்லாம் அறவணன் தனக்குநீ யுரைத்த அந்நாள் 2590. தவமும் தருமமும் சார்பிற் றோற்றமும் பவமறு மாக்கமும் பான்மையின் உரைத்து மறவிருள் இரிய மன்னுயிர் ஏமுற அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு புத்த ஞாயறு தோன்றுங் காறும் செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா இத்தலம் நீங்கேன் இளங்கோடி யானும் தாயரும் நீயும் தவறின் றாக வாய்வ தாகநின் மனப்பாட் டறமென ஆங்கவன் உரைத்தலும் அவன்மொழி பிழையாய் 2600. பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் மணிமேகலையின் முடிபுநிலை கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம் ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய்; மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து பிறர்க்கறம் அருளும் பெரியோன் தனக்குத் தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி மணிமேகலையின் நல்வினைப்பயன் இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை ஊங்க ணோங்கிய உரவோன் தன்னை வாங்குநிரை யெடுத்த மணிமே கலாதெய்வம் 2610. சாது சக்கரற் காரமு தீத்தோய் ஈது நின்பிறப் பென்பது தெளிந்தே, உவவன மருங்கில் நின்பால் தோன்றி மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேளெனத் துவதிகன் உரைத்தலும் துயர்க்கடல் நீங்கி அவதி யறிந்த அணியிழை நல்லாள் வலையொழி மஞ்ஞையின் மனமயக் கொழிதலும் 2617. உலகுதுயி லெழுப்பினன் மலர்கதி ரோனென். (190) 22. சிறைசெய் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மாதவர் காப்புச்செயல் 2618. கடவுள் மண்டிலம் காரிருள் சீப்ப நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் உதய குமரற் குற்றதை யுரைப்பச் சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து மாதவ ரெல்லாம் மணிமே கலைதனை இளங்கொடி அறிவதும் உண்டோ இதுவெனத் துளங்கா தாங்கவள் உற்றதை உரைத்தலும் ஆங்கவன் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத் தொளித்து மாதவர் அரசவாழ்த்து மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக் கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங்கு 2630. உயர்ந்தோங் குச்சி உவாமதி போல நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகழ்செய வேலும் கோலும் அருட்கண் விழிக்க! தீதின்றுருள்கநீ ஏந்திய திகிரி! நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம் மனக்கினி தாக வாழிய வேந்தே! செய்திசொல்லும் செம்முறை இன்றே யல்ல இப்பதி மருங்கில் கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர் பாற்சென் றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் 2640. தீவினை உருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் ககந்தன் அரசனாதல் மன்மருங் கறுத்த மழுவாள் நெடுயோன் தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக் கன்னி யேவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ, நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய், 2650. அரசா ளுரிமை நின்பால் இன்மையின் பரசு ராமனின் பால்வந் தணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி என்றே இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங்கு உள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள் பத்தினியைக் காமுறுதல் தெள்ளுநீர்க் காவிரி யாடினள் உரூஉம் ளபார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின் யாப்பறை யென்றே யெண்ணின னாகிக் 2660. காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீவா என்ன நேரிழை கலங்கி மருதியின் கற்பு மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறனுளம் புரிநூல் மார்பன் முத்தீப் பேணும் முறையெனக் கில்லென மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள் பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் கொண்டோற் பிழைத்த குற்றம் தானிலேன் கண்டோன் நெஞ்சிற் கரப்பெளி தாயினேன் 2670. வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் யான்செய் குற்றம் யானறி கில்லேன் பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துக் தெய்வம் நீயெனச் சேயிழை அரற்றலும் சதுக்கப்பூதத்தின் விளக்கம் மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி நீகேன் என்றே நேரிழைக் குரைக்கும் தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு 2680. விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுட் பேணல் கடவியை யாகலின் மடவரல் ஏவ மழையும் பெய்யாது நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை ஆங்கவை ஒழிகுவை யாயின் ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும்நின் மொழியது பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக் கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம் மன்முறை எழுநாள் வைத்தவன் வழூஉம் 2690. பின்முறை யல்ல தென்முறை இல்லை ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டென காமுற்றோன் அழிதல் இகந்த பூதம் எடுத்துரை செய்ததப் பூத முரைத்த நாளால் ஆங்கவன் தாதை வாளால் தடியவும் பட்டனன் விசாகை தவம் இன்னுங் கேளாய் இருங்கடல் உடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவர் ஏறே தரும தத்தனும் தன்மா மன்கள் 2700. பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித் தெய்வங் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர் மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனள் என்றே ஊர்முழு தலரெழப், புனையா ஓவியம் புறம்போந் தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை உலக அறவியி னூடுசென் றேறி இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய் உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீயென, 2710. மாநக ருள்ளீர் மழைதரும் இவளென நாவுடைப் பாவை நங்கையை எடுத்தலும் தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின் மைய லூரோ மனமா சொழியாது மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன் இப்பிறப் பிவனொடுங் கூடேன் என்றே நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின் தருமத்தம் தவம் தரும தத்தனும் தந்தையும் தாயரும் பெருநர் தன்னைப் பிறகிட் டேகித் 2720. தாழ்தரு துன்பம் தலையெடுத் தாயென நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி மிக்கோர் உறையும் விழுப்பெருஞ் செல்வத்துத் தக்கண மதுரை தான்சென் றடைந்தபின் தரும தத்தனும் தன்மா மன்மகள் விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது பெண்டிரைப் பேணேன் இப்பிறப் பொழிகெனக் கொண்ட விரதம் தன்னுட் கூறி வாணிக மரபின் வருபொரு ளீட்டி நீணிதிச் செல்வனாய் நீணில வேந்தனின் 2730. எட்டிப் பூபெற் றிருமுப் பதிற்றியாண்டு ஒட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன் தருமதத்தன் மயக்கம் அந்த ணாளன் ஒருவன் சென்றீங்கு என்செய் தனையோ இருநிதிச் செல்வ பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும் புத்தே ளுலகம் புகாஅர் என்பது கேட்டும் அறிதியோ கேட்டனை யாயின் நீட்டித் திராது நின்னகர் அடைகெனத் தக்கண மதுரை தான்வறி தாக இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே விசாகையின் தெளிவுரை 2740. மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டுப் பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன இளமையும் காமமும் யாங்கொளித் தனவோ உளனில் லாள எனக்கீங் குரையாய் 2750. இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன் அப்பிறப்பு யான்நின் னடித்தொழில் கேட்குவன் இளமையும் நில்லாத யாக்கையும் நில்லாது வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது தானஞ் செய்யெனத் தரும தத்தனும் மாமகன் மகள்பால் வான்பொருள் காட்டி ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம் ஓங்கிரு வானத்து மீனினும் பலவால் தவத்தியைக் காமுறுதல் 2760. குமரி மூத்தவக் கொடுங்குழை நல்லாள் அமரன் அருளால் அகனகர் இடூஉம் படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச் சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த விரிபூ மாலை விரும்பினன் வாங்கித் தொல்லோர் கூறிய மணமீ தாமென எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி 2770. மாலை வாங்க ஏறிய செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின், ஏறிய செங்கை யிழிந்தில திந்தக் காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டுக் காமுற்றோன் அழிவு கடுஞ்சினம் திருகி மகன்துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளா லெறிந்தனன் ஊழிதோ றூழி உலகங் காத்து வாழி எங்கோ மன்னவ என்று மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும் வேந்தன் வினா வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டன் 2780. இன்றே யல்ல என்றெடுத் துரைத்து நன்னறி மாதவிர் நலம்பல காட்டினிர் இன்றும் உளதோ இவ்வினை உரைமென வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத் காமக்குற்றம் தீதின் றாக செங்கோல் வேந்தென மாதவர் தம்முளோர் மாதவன் உரைக்கும் முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் கடியப் பட்டன ஐந்துள அவற்றில் கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகுங் காமம் தம்பால் 2790. ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் நீங்கா ரன்றே நீணில் வேந்தே தாங்கா நகரம் தன்னிடை யுழப்போர் கொலைக்குமுன் நிகழ்ந்தவை சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள் காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்; மற்றவள் பெற்ற மணிமே கலைதான் முற்றா முலையினள் முதிராக் கிளவியள் செங்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும் 2800. ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள்; ஆங்கவள் அவ்வியல் பினளே யாயினும் நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமங் காழ்கொள ஆரிருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்; காயசண் டிகைவடி வாயினள் காரிகை காயசண் டிகையும் ஆங்குளள் ஆதலின் காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன தோன்றி ஈங்கிவள் பொருட்டால் வந்தனன் இவனென 2810. ஆங்கவன் தீவினை யுருத்த தாகலின் மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன் உதய குமரன் ஒழியா னாக வினையின் ஆட்சி ஆங்கவள் தன்னை அம்பலத் தேற்றி ஓங்கியிருள் யாமத் திவனையாங் குய்த்துக் காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கவன் தன்கை வாளால் அம்பலத்து 2820. ஈங்கிவன் தன்னை எறிந்ததென் றேத்தி மாதவர் தம்முளோர் மாதவன் உரைத்தலும் வேந்தன் செங்கோன்மை சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி யான் செயற் பால திளங்கோன் தன்னைத் தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன்; மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால்; மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தோற்றிக் கணிகை மகளையும் காவல்செய் கென்றனன் 2832. அணிகிளர் அடிமுடி யரசாள் வேந்தென். (215) 23. சிறைவிடு காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) அரசியை ஆற்றுவித்தல் 2833. மன்னவன் அருளால் வாசந் தவையெனும் நன்னெடுங் கூந்தல் நரைமூ தாட்டி, அரசற் காயினும் குமரற் காயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க் காயினும் கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள், இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி 2840. கலங்கஞர் ஒழியக் கடிதுசென் றெய்தி அழுதடி வீழா தாயிழை தன்னைத் தொழுதுமுன் னின்று தோன்ற வாழ்த்திக் கொற்றங் கொண்டு குடிபுறங் காத்துச் செற்ற தெவ்வர் தேஎந்தம தாக்கியும் தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென மூத்து விளிதலிக் குடிப்பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே; தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று 2850. என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது மன்பதை காக்கும் மன்னவன் தன்முன் துன்பங் கொள்ளேல் என்றவள் போயபின் அரசியின் வஞ்சகம் கையாற் றுள்ளங் கரந்தகத் தடக்கிப் பொற்றாற் றொழுக்கம் கொண்டுபுற மறைத்து வஞ்சஞ் செய்குவன் மணிமே லையென்று அஞ்சி லோதி அரசனுக் கொருநாள் பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன்; கரும்புடைத் தடக்கைக் காமன் கையற 2860. அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும் அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச் சிறைதக் கன்று செங்கோல் வேந்தெனச், சிறப்பின் பாலார் மக்கள்; அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச் செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல, என்னோ டிருப்பினும் இருக்கவிவ் விளங்கொடி தன்னோ டெடுப்பினும் தகைக்குநர் இல்லென்று அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு 2870. கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு பித்தூட்டல் அறிவு திரித்திவ் வகனக ரெல்லாம் அறிதரு கோலம்யான் செய்குவல் என்றே மயற்பகை யூட்ட மறுபிறப் புணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவின ளாகக் தவம் கெடுத்தல் கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் வல்லாங்குச் செய்து மணிமே கலைதன் இணைவளர் இளமுலை ஏந்தெழி லாகத்துப் புணர்குறி செய்து பொருந்தினள் என்னும் பான்மைக் கட்டுரை பலர்க்குரை என்றே 2880. காணம் பலவும் கைந்நிறை கொடுப்ப, ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த பாங்கில் ஒருசிறைப் பாடுசென் றணைதலும் தேவி வஞ்சம் இதுவெனத் தெளிந்து நாவியல் மந்திரம் நடுங்கா தோதி ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக் காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி அரச ருரிமையில் ஆடவர் அணுகார் நீரயக் கொடுமகள் நினைப்பறி யேனென்று அகநகர் கைவிட் டாங்கவன் போயபின் பட்டினியிடல் 2890. மகனைநோய் செய்தாள் வைப்ப தென்னென்று உய்யா நோயின் ஊணொழிந்த தனளெனப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப ஊணொழி மந்திரம் உடைமையின் அந்த வாணுதல் மேனி வருந்தா திருப்ப அரசியின் அச்சத்தொழுகை ஐயென விம்மி ஆயிழை நடுங்கிச் செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் என்மகற் குற்ற இடுக்கண் பொறாது பொன்னே ரனையாய் பொறுக்கென் றவள்தொழ எவ்வுயிர்க்கும் அன்புசெய் நீல பதிதன் வயிற்றில் தோன்றிய 2900. ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை அழற்கண் நாகம் ஆருயிர் உண்ண விழித்த லாற்றேன் என்னுயிர் சுடுநாள் யாங்கிருந் தழுதனை இளங்கோன் தனக்குப் பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை; உடற்கழு தனையோ உயிர்க்கழு தனையோ உடற்கழு தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க்கழு தனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது 2910. அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் உதயகுமரன் கொலைவினை மற்றுன் மகனை மாபெருந் தேவி செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே மணிமேகலையின் மந்திர ஆற்றல் யாங்கறிந் தனையோ ஈங்கிது நீயெனின் பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென 2920. மொய்ம்மலர்ப் பூங்பொழில் புக்கது முதலாத் தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா உற்றதை யெல்லாம் ஒழிவின் றுரைத்து மற்றும் உரைசெயும் மணிமே கலைதான் மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் கல்லாக் கயவன் காரிருள் தான்வர நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்ததேன் ஊணொழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது அரசியைத் தெளிவித்தல் 2930. அந்தரம் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலென் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்னை தீர்ப்பது பொருட்டால்; தையால் உன்தன் தடுமாற் றவலத்து எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய் காமம் ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியொடு தான்வே றாகி மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப் 2940. புதல்வன் தன்னையோர் புரிநூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான்புணர்ந் தறிந்துபின் தன்னுயிர் நீத்ததும் கொலை நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறுகிழிந் தோடக் கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப் பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்கண்டு 2950. ஓட்டி யெய்தோன் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ வாட்டடங் கண்ணி கள் கடாஅ யானைமுன் கட்கா முற்றோர் விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வது உண்ட கள்ளின் உறுசெருக் காவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய் பொய் பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர் கையாற் றவலம் கடந்ததும் உண்டோ களவு களவோர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் இளவேய்த் தோளாய்க் கிதுவென வேண்டா 2960. மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை துன்பந் தருவன துறத்தல் வேண்டும் அரசி தெளிதல் கற்ற கல்வி யன்றாற் காரிகை செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர்; மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட் கில்லாது நிரப்புநர்; திருந்தேர் எல்வளை செல்லுல கறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்; துன்பம் அறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர் மன்பதைக் கெல்லாம் அன்பொழி யாரென, 2970. ஞான நன்னீர் நன்கனம் தெளித்துத் தேனார் ஓதி செவிமுதல் வார்த்து மகன்துயர் நெருப்பா மனம்விற காக அகஞ்சுடு வெந்தீ ஆயிழை அவிப்பத் தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து மாறுகொண் டோரா மனத்தின ளாகி ஆங்கவள் தொழுதலும் ஆயிழை பொறாஅள் தான்தொழு தேத்தித் தகுதி செய்திலை காதலற் பயந்தோ யன்றியும் காவலன் 2979. மாபெருந் தேவியென் றெதிர்வணங் கினளென். (147) 24. ஆபுத்திரனாடு அடைந்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சித்திராபதியின் அச்சம் 2980. மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக் காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு தன்குலப் பெருமைபேசல் அரவேர் அல்குல் அருந்தவ மடவார் உரவோற் களித்த ஒருபத் தொருவரும் ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் 2990. ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும் திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன் உருப்பசி முனிந்த என்குலத் தொருத்தியும் ஒன்று கடைநின்ற ஆறிரு பதின்மரித் தொன்றுபடு மாநகர்ந் தோன்றிய நாள்முதல் யானுறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந் தேவி மாதர் யாரினும் திருந்தா நெஞ்சம் பூவிலை யீத்தவன் பொன்றினன் என்று மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 3000. பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும் நகுத லல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை யன்மையின் கிள்ளி பீலிவளையைக் காமுறுதல் மன்னவன் மகனே யன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்ணும் உண்டால்; உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப் பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல் கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 3010. பூநாறு சோலை யாருமில் ஒருசிறைத் தானே தமியள் ஒருத்தி தோன்ற, இன்னள் ஆர்கொல் ஈங்கிவள் என்று மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக் கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் உற்றுணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன் மயிலையும் செயலையும் மாவும் குவளையும் பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த மலர்வாய் அம்பின் வாசங் கமழப் 3020. பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப கிள்ளியின் பிரிவுத்துயர் ஒருமதி யெல்லை கழிப்பினும் உரையாள் பொருவரு பூங்கொடி போயின அந்நாள் யாங்கொளித் தனளவ் விளங்கொடி என்றே வேந்தரை யட்டோன் மெல்லியல் தேர்வுழி, நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் தோன்ற, மன்னவன் அவனை வணங்கி முன்னின்று என்னுயி ரனையாள் ஈங்கொளித் தாளுளள் அன்னா ளொருத்தியைக் கண்டிரோ அடிகள் 3030. சொல்லுமின் என்று தொழவவ னுரைப்பான் பீலிவளை வரலாறு கண்டிலே னாயினும் காரிகை தன்னைப் பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய பீலிவளை என்போள் பிற்நத அந்நாள் இரவிகுலத் தொருவன் இணைமுலை தோயக் கருவொடு வருனெமக் கணியெடுத் துரைத்தனன் ஆங்கப் புதல்வன் வரூஉம் அல்லது 3040. பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள் சாரணன் இடித்துரை தீவகச் சாந்தி செய்யா நாளுன் காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம் மணிமே கலைதன் வாய்மொழி யாலது தணியா திந்திர சாபமுண் டாகலின், ஆங்குப்பதி யழிதலும் ஈங்குப்பதி கெடுதலும் வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக் காசில் மாநகர் கடல்வயிறு புகாமல் வாசவன் விழாக்கோள் மறவேல் என்று மாதவன் போயின அந்நாள் தொட்டுமிக் 3050. காவல் மாநகர் கலக்கொழி யாதல் சித்திராபதி வேண்டல் தன்பெயர் மடந்தை துயருறு மாயின் மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டென அஞ்சினேன் அரசன் தேவியென் றேத்தி நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருகென இராசமா தேவி சித்திராபதியை இகழ்தல் கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி 3060. நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள் என்னொரு டிருக்குமென் றீங்கிவை சொல்வுழி அறவணவடிகள் வருகை மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத் துணிகயம் துகள்படத் துளங்கிய வதுபோல் தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி அறவணர் அடிவீழ்ந் தாங்கவர் தம்முடன் மறவேல் மன்னவன் தேவிதன் பால்வரத், தேவியும் ஆயமும் சித்திரா பதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் 3070. எழுந்தெதில் சென்றாங் கிணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க, அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும் இணைவளை நல்லாள் இராசமா தேவி அருந்தவர்க் கமைந்த ஆசனம் காட்டித் திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தவென் காண்டகு நல்வினை நும்மையீங் கழைத்தது நாத்தொலை வில்லா யாயினும் தளர்ந்து மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத் 3080. தேவி கேளாய் செய்தவ யாக்கையின் மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன் பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே இதுகேள் பன்னிரு சார்புகள் பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் அறியா ராயின் ஆழ்நர கறிகுவர் பேதைமை 3090. பேதைமை யென்பது யாதென வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் பிறப்பு வகை உலக மூன்றினும் உயிராம் உலகம் அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே; நல்வினை தீவினை என்றிரு வகையால் சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி 3100. வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும் தீவினைப் பிறப்பு தீவினை யென்பது யாதென வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப் 3110. பத்து வகையாற் பயன்தெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயும் நரகரு மாகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் நல்வினைப் பிறப்பு நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் அறவணவடிகள் விடைபெறல் 3120. அரசன் தேவியொ டாயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக்கு இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் என்றவன் எழுதலும் இளங்கொடி யெழுந்து மணிமேகலை விடைபெறல் நன்றறி மாதவன் நல்லடி வணங்கித் தேவியும் ஆயமும் சித்திரா பதியும் மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின்; 3130. இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின் மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர்; ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள் மாசில் மணிபல் லவம்தொழு தேத்தி வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல்; எனக்கிடர் உண்டென் றிரங்கல் வேண்டா மனக்கினி யீரென் றவரையும் வணங்கி மணிமேகலை ஆபுத்திரானாடு அடைதல் வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி 3140. உலக வறவியும் முதியாள் குடிகையும் இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்துசென் றாயிழை இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்தோர் பூம்பொழி லகவயின் இழிந்து பொறையுயிர்த்து ஆங்குவாழ் மாதவன் அடியிணை வணங்கி இந்நகர்ப் பேர்யா திந்நக ராளும் மன்னவன் யாரென மாதவன் கூறும்; நாக புரமிது நன்னகர் ஆள்வோன் பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன் 3150. ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது மண்ணும் மரனும் வளம்பல தரூஉம் உண்ணின் றுருக்கும் நோயுயிர்க் கில்லெனத் தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன் 3155. நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தானென். (179) 25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) புண்ணியராசன் வினவல் 3156. அரசன் உரிமையோ டப்பொழில் புகுந்து தரும சாவகன் தன்னடி வணங்கி, அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும் சார்பிற் றோற்றமுஞ் சார்பறுத் துய்தியும் ஆரியன் அமைதியும் அமைவுறக்கேட்டுப், பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள் கண்ணிணை வியயக்கமும் காமனோ டியங்கா அங்கையிற் பாத்திரம் கொண்டறங் கேட்கும் இங்கிணை யில்லாள் இவள்யா ரென்னக் மணிமேகலையின் சிறப்பையறிதல் காவலற் றொழுது கஞ்சுகன் உரைப்போன் நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் யாவரு மில்லை இவள்திற மெல்லாம் கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக் 3170. கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன் மாதவன் அறவணன் இவள்பிறப் புணர்ந்தாங்கு ஓதினன் என்றியான் அன்றே யுரைத்தேன் ஆங்கவ ளிவளவ் வகனகர் நீங்கி ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி மணிமேகலை அறிவுறுத்தல் நின்கைப் பாத்திரம் என்கைப் புகுந்தது மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய் அப்பிறப் பறிந்திலை யாயினும் ஆவயிற்று இப்பிறப் பறிந்திலை என்செய் தனையோ? 3180. மணிப்பல் லவம்வலங் கொண்டா லல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாய் ஆங்கு வருவாய் அரசநீ என்றப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று கையறு விசும்பின் மடக்கொடி எழுந்து மணிபல்லவத்தில் மணிமேகலை வெய்யவன் குடபால் வீழா முன்னர் வானின் றிழிந்து மறிதிரை யுலாவும் பூநா றடைகரை எங்கணும் போகி மணிப்பல லவம்வலங் கொண்டு மடக்கொடி பிணிப்பறு மாதவன் பீடிகை காண்டலும் 3190. தொழுதுவலங் கொள்ளவத் தூமணிப் பீடிகைப் பழுதில் காட்சி தன்பிறப் புணர்த்தக் காயங் கரையெனும் பேரியாற் றடைகரை பிரமதருமன் அறவுரை மாயமில் மாதவன் தன்னடி பணிந்து தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப் பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும் கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின் நல்வினை அயரா தோம்புமின் 3200. புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோன் உலகுயக் கோடற் கொருவன் தோன்றும் அந்நாள் அவனறம் கேட்டோ ரல்லது இன்னாப் பிறவி இழுக்குந ரில்லை மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் போற்றுமின் அறமெனச் சாற்றிக் காட்டி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர் தருமபீடிகையின் ஆற்றல் அவ்வுரை கேட்டுநும் அடிதொழு தேத்த வெவ்வுரை எங்கட்கு விளம்பினி ராதலின் பெரியவன் தோன்றா முன்னரிப் பீடிகை 3210. கரியவன் இட்ட காரணந் தானும் மன்பெரும் பீடிகை மாய்ந்துயிர் நீங்கிய என்பிறப் புணர்த்தலும் என்னென்று யான் தொழ முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது மற்றப் பீடிகை தன்மிசைப் பொறாஅது பீடிகை பொறுத்த பின்ன ரல்லது வானவன் வணங்கான் மற்றவ் வானவன் பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத் தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் ஆயிழை பிறவியும் 3220. இருளறக் காட்டும் என்றெடுத் துரைத்தது அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி இன்றெனக் கென்றே ஏத்தி வலங்கொண்டு ஈங்கிவள் இன்னண மாக இறைவனும் அரசன் தன்பிறப்பை அறிதல் ஆங்கப் பொழில்விட் டகநகர் புக்குத் தந்தை முனியாத் தாய்பசு வாக வந்த பிறவியும் மாமுனி யருளால் குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் மாமுனி யருளால் மக்களை யில்லோன் 3230. பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும் ஆய்தொடி அரிவை அமரசுந் தரியெனும் தாய்வாய்க் கேட்டுத் தாழ்துய ரெய்தி இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து துறவெண்ணம் செருவேல் மன்னர் செவ்விபார்த் துணங்க அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி நாடகங் கண்டு பாடற் பான்மையில் கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர் ஊடற் செவ்வி பார்த்துநீ டாது 3240. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து தேமரு கொங்கையிற் குங்குமம் எழுதி அங்கையில் துறுமலர் சுரிகுழற் சூட்டி நறுமுகை அமிழ்துறூஉந் திருநகை யருந்தி மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக் கருப்பு வில்லி அருப்புக்கணை தூவத் தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித் தெளிந்த நாதனென் செவிமுத லிட்டவித்து ஏத மின்றாய் இன்று விளைந்தது 3250. மணிமே கலைதான் காரண மாகவென்று அணிமணி நீண்முடி யரசன் கூற மந்திரி மறுப்புரை மனம்வே றாயினன் மன்னென மந்திரி சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி எங்கோ வாழி என்சொற் கேண்மதி; நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங்கு ஈன்றாள் குழவிக் கிரங்கா ளாகித் தான்தனி தின்னுந் தகைமைய தாயது. 3260. காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல் தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது மண்வளம் பிழையாது ஊனுடை யுயிர்கள் உறுபசி யறியா நீயொழி காலை நின்னா டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம் துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின் இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ 3270. பெறுதி விரும்பினை யாகுவை யன்றே தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பும் மன்னுயிர் முதல்வன் அறிமுமீ தன்றால் மதிமா றோர்ந்தனை மன்னவ என்றே முதுமொழி கூற முதல்வன் கேட்டு அரசன் மணிபல்லவம் அடைதல் மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த தணியா வேட்கை தணித்தற் கரிதால்; அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் ஒருமதி யெல்லை காத்தல்நின் கடனெனக் கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் 3280. இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்தி வங்கம் ஏறினன் மணிபல் லவத்திடைத் தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும், புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக் காவலன் தன்னொடும் கடற்றிரை யுலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து பெருமகன் காணாய் பிறப்புணர் விக்கும் தரும பீடிகை இதுவெனக் காட்ட தன்பிறப்பு உணர்தல் வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு 3290. உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட என்பிறப் பறிந்தேன் என்னிடர் தீர்ந்தேன் சிந்தா தேவியைப் போற்றல் தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்! மாரி நடுநாள் வயிறுகாய் பசியால் ஆரிருள் அஞ்சா தம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு அருந்தூண் காணா தழுங்குவேன் கையில் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது 3300. ஏடா! அழியல் எழுந்திது கொள்கென அமுத சுரபி அங்கையில் தந்தென் பவமறு வித்த வானோர் பாவாய்! உணர்வில் தோன்றி உரைப்பொரு ளுணர்த்தும் அணிதிகழ் அவிரொளி மடந்தை நின்னடி தேவ ராயினும் பிரம ராயினும் நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி பிறந்த பிறவிகள் பேணுத லல்லது மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி மன்னவன் மணிமே கலையுடன் எழுந்து 3310. தென்மேற் காகச் சென்று திரையுலாம் கோமுகி என்னும் பொய்கையின் கரையோர் தூமலர்ப் புன்னைத் துறைநிழல் இருப்ப தீவதிலகையின் வஞ்சப்புகழ்ச்சி ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது காவற் றெய்வதம் கண்டுவந் தெய்தி, அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர் பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர் 3320. ஒன்பது செட்டிகள் உடலென் பிவைகாண்; ஆங்கவர் இடவுண் டவருடன் வந்தோர் ஏங்கிமெய் வைத்தோர் என்பும் இவைகாண்; ஊர்திரை தொகுத்த உயர்மணல் புதைப்ப ஆய்மலர்ப் புன்னை அணிநிழற் கீழால் அன்புடை யாருயிர் அரசற் கருளிய என்புடை யாக்கை யிருந்தது காணாய்; நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப் பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய் கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை காவிரிப்பூம்பட்டினக் கடல்கோள் 3330. பலர்தொழு பாத்திரம் கையின் ஏந்திய மடவரல் நல்லாய் நின்தன் மாநகர் கடல்வயிறு புக்கது காரணம் கேளாய் கிள்ளி மகனை இழத்தல் நாக நன்னா டாள்வோன் தன்மகள் பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள் பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித் தீவகம் வலஞ்செய்து தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலந்கொண் டேத்துழிக் கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப 3340. அங்கவன் பாற்சென் றவன்திறம் அறிந்து கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும், பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப் பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக் கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள் இலங்குநீர் அடைகரை அக்கலங் கெட்டது கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப இந்திரவிழா கொண்டாடாமை 3350. மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன் நன்மணி யிழந்த நாகம் போன்று கானலும் கடலும் கரையும் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது; மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள் அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென விட்டனள் சாபம் பட்ட திதுவால்; கடவுள் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன் போல விரிதிரை வந்து வியனகர் விழுங்க ஒருதனி போயினன் உலக மன்னவன்; 3360. அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர்; பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள் உரைத்தன கேட்க உருகுவை யாயினின் மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம் முன்னாள் எடுத்ததும் அந்நாள் ஆங்கவன் அறவர சாண்டதும் அறவணன் தன்பால் மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின் ஆபுத்திரன் பழைய உடற்பற்று மன்னவன் இரங்கி மணிமே கலையுடன் 3370. துன்னிய தூமணல் அகழத் தோன்றி ஊன்பிணி யவிழவும் உடலென் பொடுங்கித் தான்பிணி யவிழாத் தகைமைய தாகி வெண்சுதை வேந்தவண் இருக்கையின் இருந்த பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து மணிமேகலை அறம் உணர்த்தல் என்னுற் றனையோ இலங்கிதழ்த் தாரோய் நின்னாட டைந்தியான் நின்னையீங் கழைத்தது மன்னா நின்தன் மறுபிறப் புணர்த்தி அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் 3380. நின்பெயர் நிறுத்த நீணிலம் ஆளும் அரசர் தாமே அருளறம் பூண்டால் பொருளும் உண்டோ பிறபுரை தீர்த்தற்கு அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும் என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறஞ் செய்கேன் என்பிறப் புணர்த்தி என்னைநீ படைத்தனை 3390. நின்திறம் நீங்க லாற்றேன் யானெனப் புன்கண் கொள்ளல்நீ போந்ததற் கிரங்கிநின் மன்பெரு நாடு வாயொடுத் தழைக்கும் மணிமேகலை வஞ்சிநகர் செல்லல் வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று 3394. அந்தரத் தெழுந்தனள் அணியிழை தானென். (239) 26. வஞ்சிமாநகர் புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) மணிமேகலையின் தொழுகை 3395. அணியிழை அந்தரம் ஆறா எழுந்து தணியாக் காதல் தாய்கண் ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து 3400. வணங்கி நின்று குணம்பல ஏத்தி அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டுமென் றழுதுமுன் னிற்ப கண்ணகி பழவினை கூறல் ஒருபெரும் பத்தினிக் கடவுளாங் குரைப்போள் எம்மிறைக் குற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள், மதுரா பதியெனும் மாபெருந் தெய்வம் இதுநீர் முன்செய் வினையின் பயனால்; காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத் 3410. தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்க புரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள் கின்றோர் அடற்செரு வுறுநாள் மூவிரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்திற் பொருள்வேட்டுப் பல்கலன் கொண்டு பலரறி யாமல் எல்வளை யாளோ டரிபுரம் எய்திப் பண்டக் கலம்பகர் சங்கமன் தன்னைப் கண்டனர் கூறத் தையல்நின் கணவன் பார்த்திபன் தொழில்செயும் பரதன் என்னும் 3420. தீத்தொழி லாளன் தெற்றெனப் பற்றி ஒற்றன் இவனென உரைத்து மன்னற்குக் குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன்; ஆங்கவன் மனைவி அழுதன ளரற்றி ஏங்கிமெய் பெயர்ப்போள் இறுவரை யேறி இட்ட சாபம் கட்டிய தாகும் மேற்பிறப்புக்கள் உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் மேற்செய்தல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்; 3430. அவ்வினை யிறுதியின் அடுசினப் பாவம் எவ்வகை யானும் எய்துத லொழியாது உம்ப ரில்வழி இம்பரிற் பல்பிறப்பு யாங்கணும் இருவினை யுய்த்துமைப் போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் புத்த தருமம் கேட்டல் மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும் கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்துத் 3440. துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப் போதி மூலம் பொருந்திவந் தருளித் தீதறு நால்வகை வாய்மையும் தெரிந்து பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் அந்நிலை யெல்லாம் அழிவுறு வகையும் இற்றென இயம்பிக் குற்றவீ டெய்தி எண்ணருஞ் சக்கர வாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்குங் காலைப் கோவலனும் கண்ணகியும் வீடெய்தல் பைந்தொடி! தந்தை யுடனே பகவன் இந்திர விகாரம் எழுமேத் துதலின் 3450. துன்பக் கதியில் தோற்றர வின்றி அன்புறு மனத்தோ டவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம் அத்திற மாயினும் அநேக காலம் எத்திறத் தார்க்கும் இருத்தியுஞ் செய்குவம் மணிமேகலைக்குக் கண்ணகி அறிவுரை நறைகமழ் கூந்தல் நங்கை நீயும் முறைமையின் இந்த மூதூ ரகத்தே அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு மெய்வகை யின்மை நினக்கே விளங்கிய 3460. பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய் இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும் மணிமேகலை வேற்றுருக்கொள்ளல் இளையள் வளையோ ளென்றுனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்கென மையறு சிறப்பின் தெய்வதம் தந்த மந்திரம் ஓதியோர் மாதவன் வடிவாய்த் தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து நற்றவ முனிவரும் கற்றடங் கினரும் நன்னெறி காணிய தொன்னூற் புலவரும் 3470. எங்கணும் விளங்கிய எயிற்புற விருக்கையில் செங்குட்டுவன் வடநாட்டுவென்றி செங்குட் டுவனெனும் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியிற் போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய நிலநா டெல்லைதன் மலைநா டென்னக் கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்கத் தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக், கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி வங்க நாவியின் அதன்வடக் கிழிந்து, 3480. கனக விசயர் முதற்பல வேந்தர் அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச் சிமையம் ஓங்கிய இமைய மால்வரைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் விற்றிறல் வெய்யோன் தன்புகழ் விளங்கப் பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் 3488. பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென். (94) 27. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை (இணைக்குறளாசிரியப்பா) அளவை வாதி 3489. நவையறு நன்பொருள் உரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறஞ் சார்ந்து வைதிக மாக்கத் தளவை வாதியை எய்தினள் எய்திநின் கடைப்பிடி யியம்பென வேத வியாதனும் கிருத கோடியும் ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர் பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் தத்தம் வகையால் தாம்பகர்ந் திட்டனர் பத்தளவை காண்டல கருதல் உவமம் ஆகமம் ஆண்டைய அருத்தா பத்தியோ டியல்பு ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு 3500. எய்தியுண் டாநெறி என்றிவை தம்மால் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும் காட்சி மருளில் காட்சி ஐவகை யாகும் கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற் சுவையும் மெய்யால் ஊறுமெனச் சொன்ன இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத் துக்கமும் சுகமும் எனத்துயக் கறவறிந்து உயிரும் வாயினும் மனமுமூ றின்றிப் பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச் 3510. சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேச நாம சாதி குணக்கிரி யையின் அறிவ தாகும் கருத்து கருத்தள வாவது குறிக்கொள் அனுமா னத்தனு மேயத் தகைமை யுணருந் தன்மைய தாகும்; மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம் பொதுவெனப் படுவது சாதன சாத்தியம் இவையந் நுவய மின்றா யிருந்தும் கடந்திகழ் யானைக் கானவொலி கேட்டோன் 3520. உடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் எச்ச மென்பது வெள்ளவே துவினால் நிச்சயித் தத்தலை மழைநிகழ் வுரைத்தல் முதலென மொழிவது கருக்கொண் முகில்கண்டு இதுமழை பெய்யும் எனவியம் பிடுதல் என்னும் ஏதுவின் ஒன்றுமுக் காலம் தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி மாண்ட வுயிர்முதல் மாசின் றாகிக் காண்டற் பொருளாற் கண்டில துணர்தல் உவமம் உவம மாவ தொப்புமை யளவை 3530. கவய மாவாப் போலுமெனக் கருதல் நூல் ஆகம வளவை அறிவ னூலாற் போக புவனம் உண்டெனப் புலங்கொளல் பொருட்பேறு அருத்தா பத்தி ஆய்க்குடி கங்கை இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல் இயல்பு இயல்பு யானைமே லிருந்தோன் தோட்டிக்கு அயலொன் றீயா ததுவே கொடுத்தல் உலகுரை ஐதிகம் என்ப துலகுரை இம்மரத்து எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல் இன்மை அபாவம் என்ப தின்மையோர் பொருளைக் 3540. தவாதவ் விடத்துத் தானிலை யென்றல் மீட்சி மீட்சி யென்ப திராமன் வென் றானென மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல் உள்ளநெறி உள்ளநெறி யென்பது நாராசத் திரிவிற் கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல் எட்டு அளவைக் குற்றங்கள் எட்டுள பிரமா ணாபா சங்கள் சுட்டுணர் வொடுதிரி யக்கோடல் ஐயம் தேராது தெளிதல் கண்டுண ராமை எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல் சுட்டுணர்வு நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது 3550. எனைப்பொரு ளுண்மை மாத்திரை காண்டல் திரியக்கோடல் திரியக் கோடல் ஒன்றையொன் றென்றல் விரிகதிர் இப்பியை வெள்ளியென் றுணர்தல் ஐயம் ஐய மென்ப தொன்றை நிச்சயியா மையல் தறியோ மகனோ என்றல் தேராது தெளிதல் தேராது தெளிதல் செண்டு வெளியில் ஓராது தறியை மகனென உணர்தல் கண்டுணராமை கண்டுண ராமை கடுமாப் புலியொன்று அண்டலை முதலிய கண்டுமறி யாமை இல் வழக்கு இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன 3560. சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல் உணர்ந்ததை உணர்தல் உணர்ந்ததை யுணர்தல் உறுபனிக் குத்தீப் புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல் நினைப்பு நினைப்பெனப் படுவது காரணம் நிகழாது நினக்கிவர் தாயும் தந்தையும் என்று பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள் பாங்குறும் உலோகா யதமே பௌத்தம் சாங்கியம் நையா யிகம்வை சேடிகம் மீமாஞ் சகமாம் சமயவா சிரியர் தாம்பிரு கற்பதி சினனே கபிலன் 3570. அக்க பாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம் உவமானம் அருத்தா பத்தி அபாவம் இவையே யிப்போ தியன்றுள அளவைகள் சைவவாதி என்றவன் தன்னைவிட் டிறைவ னீசனென நின்ற சைவ வாதிநேர் படுதலும் பரசுநின் தெய்வம் எப்படித் தென்ன இருசுட ரோடிய மானனைம் பூதமென்று எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனும் கலையுருவி னோனும் 3580. படைத்துவிளை யாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்நீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோன் இறைவன் ஆகுமென் றுரைத்தனன் பிரமவாதி பேருல கெல்லாம் பிர வாதியோர் தேவன் இட்ட முட்டை யென்றனன் வைணவவாதி காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினன் நாரணன் காப்பென் றுரைத்தனன் வேதவாதி கற்பங் கைசற் தங்கால் எண்கண் தெற்றென் நிருத்தம் செவிசிக் கைமூக்கு 3590. உற்ற வியாகர ணமுகம் பெற்றுச் சார்பிற் றோன்றா ஆரண வேதக்கு ஆதி யந்த மில்லையது நெறியெனும் வேதியன் உரையின் விதியுங் கேட்டு மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற எத்திறத் தினுமிசை யாதிவ ருரையென ஆசீவகவாதி ஆசீ வகநூல் அறிந்த புராணனைப் பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென ஐந்தணுக்கள் எல்லையில் பொருள்களில் எங்குமெப் பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படு கின்ற 3600. வரம்பி லறிவன் இறைநூல் பொருள்களைந் துரந்தரு முயிரோ டொருநால் வகையணு; அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும் நிலநீர் தீக்காற் றெனநால் வகையின மலைமரம் உடம்பெனத் திரள்வதுஞ் செய்யும்; வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும்; அவ்வகை யறிவ துயிரெனப் படுமே அணுக்களின் இயல்பு வற்ப மாகி யுறுநிலத் தாழ்ந்து சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய் 3610. இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத் தெறுதலும் மேற்சே ரியல்பும் உடைத்தாம் காற்று விலங்கி யசைத்தல் கடனிவை பரமாணுக்களின் நிலை வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால் ஆதி யில்லாப் பரமா ணுக்கள் தீதுற்று யாவதுஞ் சிதைவது செய்யா புதிதாய்ப் பிறந்தோன் றொன்றிற் புகுதா முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா அன்றியும் அவல்போற் பரப்பதுஞ் செய்யா 3620. உலாவும் தாழும் உயர்வதுஞ் செய்யும் குலாமலை பிறவாக் கூடும் பலவும் பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம் வேயாத் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதிபோற் செழுநில வரைப்பாம் பெயர் பெறுதல் நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற் குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் ஒன்று முக்கா லரைகா லாயுறும் துன்றுமிக் கதனாற் பெயர்சொலப் படுமே 3630. இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச் சிக்கென் பதுவும் நீரா யிழிவதும் தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் ஆய தொழிலை அடைந்திட மாட்டா அணுவையறிதல் ஓரணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் தேரார் பூதந் திடச்சியுள் ஏனோர் மாலைப் போதில் ஒருமயி ரறியார் சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும் எழுநிறப் பிறப்பு கருமம் பிறப்பும் கருநீலப் பிறப்பும் பசுமம் பிறப்பும் செம்ம் பிறப்பும் 3640. பொன்ன பிறப்பும் வெணண் பிறப்பும் என்றிவ் வாறு பிறப்பினும் மேவிப் பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர் கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர் அழியல் வேண்டார் அதுவுறற் பாலார் இதுசெம் போக்கின் இயல்பிது தப்பும் அதுமண் டலமென் றறியல் வேண்டும் மற்கலி நூலின் வகை பெறுதலும் இழத்தலும் இடையூ றுறுதலும் உறுமிடத் தெய்தலும் துக்கசுக முறுதலும் பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் 3650. கருவிற் பட்ட பொழுதே கலக்கும் இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத்தகும் முன்னுள ஊழே பின்னுமுறு விப்பது மற்கலி நூலின் வகையிது வென்னச் நிகண்டவாதி சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை நீயுரை நின்னாற் புகழுந் தலைவன்யார் நூற்பொருள் யாவை அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பென விளம்ப லுறுவோன் பத்துப்பொருள்களும் அவற்றின் இயல்பும் இந்திரர் தொழப்படும் இறைவனெம் மிறைவன் 3660. தந்த நூற்பொருள் தன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமும் காலா காயமும் தீதில் சீவனும் பரமா ணுக்களும் நல்வினை யூந்தீ வினையுமவ் வினையாற் செய்வுறு பந்தமும் வீடுமத் திறத்த; ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும் தோன்றுசார் வொன்றின் தன்மைய தாயும் அநித்தமும் நித்தமு மாகி நின்று நுனித்த குணத்தோர் கணத்தின் கண்ணே தோற்றமும் நிலையும் கேடும் என்னும் 3670. மாற்றரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்; நிம்ப முளைத்து நிகழ்தல் நித்தியம் நிம்பத் தப்பொரு ளன்மை அநித்தியம் பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் இயற்றி யப்பய றழிதலு மேதுத் தருமாத்திகாயம் தருமாத்தி காயம் தானெங்கு முளதாய்ப் பொருள்களை நடத்தும் பொருத்த நித்தியமா அதன்மாத்திகாயம் அப்படித் தாகிய தன்மாத்தி காயமும் எப்பொருள் களையும் நிறுத்த லியற்றும் காலம் காலம் கணிக மெனுங்குறு நிகழ்ச்சியும் 3680. ஏலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும் ஆக்குமா காயம் எல்லாப் பொருட்கும் பூக்குமிடங் கொடுக்கும் புரிவிற் றாகும் சீவன் சீவன் உடம்போ டொத்துக் கூடித் தாவில்சுவை முதலிய புலன்களை நுகரும் அணு முதலியன ஓரணு புற்கலம் புறவுரு வாகும்; சீர்சால் நல்வினை தீவினை யவைசெயும்; வருவழி யிரண்டையும் மாற்றி முன்செய் அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல் அதுவீ டாகும் என்றனன் அவன்பின் சாங்கியவாதி மூலப்பகுதி 3690. இதுசாங் கியமதம் என்றெடுத் துரைப்போன் தனையறி வரிதாய்த் தான்முக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமை பொதுவாய் எல்லாப் பொருளும் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து மூலப்பகுதியில் தோன்றுவன மானென் றுரைத்த புத்தி வெளிப்பட்டு அதன்கணா காயம் வெளிப்பட் டதன்கண் வாயு வெளிப்பட் டதன்கண் அங்கி யானது வெளிப்பட் டதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட் டதின்மண் வெளிப்பட்டு 3700. அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு ஆர்ப்புறு மனத்தாங் கார விகாரமும் ஆகா யத்திற் செவியொலி விகாரமும் வாயுவில் தொக்கும் ஊறெனும் விகாரமும் அங்கியிற் கண்ணும் ஒளியுமாம் விகாரமும் தங்கிய அப்பில்வாய் சுவையெனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட் டிவற்றில் தொக்கு விகாரமாய் வாக்குப் பாணிபாத பாயுருபத் தமென ஆக்கிய இவைவெளிப் பட்டிங் கறைந்த 3710. பூத விகாரத் தால்மலை மரமுதல் ஓதில் வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து வந்த வழியே யிவைசென் றடங்கி அந்தமில் பிரளய மாயிறு மளவும் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம் புருடன் அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி அப்பொரு ளெல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாய் 3720. நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன் இருபத்தைந்து பொருள்கள் புலமார் பொருள்கள் இருபத் தைந்துள நிலநீர் தீவளி ஆகா யம்மே மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே உறுசுவை யொளியூ றோசைநாற் றம்மே வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம் ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம் உயிரெனும் ஆன்மா ஒன்றொடும் ஆமெனச் செயிரறச் செப்பிய திறமும் கேட்டு வைசேடிகவாதி - ஆறு கூறுகள் வைசே டிகநின் வழக்குரை யென்னப் 3730. பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் சாமா னியமும் விசேடமும் கூட்டமும் ஆமாறு கூறாம் அதிற்பொரு ளென்பது பொருள் குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான் ஞாலநீர் தீவளி ஆகா யந்திசை காலம் ஆன்மா மனமிவற் றுள்நிலம் ஒலியூறு நிறஞ்சுவை நாற்றமொ டைந்தும் பயில்குண முடைத்து நின்ற நான்கும் சுவைமுத லொரோகுணம் அவைகுறை யுடைய குணம் 3740. ஓசை யூறு நிறநாற் றஞ்சுவை மாசில் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் என்னு நீர்மை பக்கமுத லனேகம் கண்ணிய பொருளின் குணங்க ளாகும் கருமம் முதலியன பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய உண்மை தருமுதற் பொதுத்தான் போதலும் நிற்றலும் பொதுக்குண மாதலிற் சாதலும் நிகழ்தலும் அப்பொருட் டன்மை ஒன்றணு கூட்டம் குணமுங் குணியுமென்று 3750. ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே பூதவாதி பூத வாதியைப் புகழ்நீ யென்னத் தாதகிப் பூவும் கட்டியும் இட்டு மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு உற்றிடும் பூதத் துணர்வு தோன்றிடும் அவ்வுணர் வவ்வப் பூதத் தழிவுகளின் வெவ்வேறு புரிவும் பறையோ சையிற்கெடும் உயிரொடுங் கூட்டிய உணர்வுடைப் பூதமும் உயிரில் லாத உணர்வில் பூதமும் அவ்வப் பூத வழியவை பிறக்கும்; 3760. மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே கண்கூ டல்லது கருத்தள வழியும் இம்மையும் இம்மைப் பயனுமிப் பிறப்பே பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல் என்றலும் எல்லா மார்க்கமுங் கேட்டு பூதவாதியை மறுத்தல் நன்றல வாயினும் நான்மா றுரைக்கிலேன் பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின் அறிந்தோ ருண்டோ என்றுநக் கிடுதலும் தெய்வ மயக்கினும் கனாவுறு திறத்தினும் 3770. மைய லுறு வோர் மனம்வே றாம்வகை ஐயம் அன்றி யில்லையென் றலும்நின் தந்தைதா யரையனு மானத் தாலலது இந்த ஞாலத் தெவ்வகை யறிவாய் மெய்யுணர் வின்றிமெய்ப் பொருளுணர் வரிய ஐய மல்லதிது சொல்லப் பெறாயென உள்வரிக் கோலமோ டுன்னிய பொருளுரைத்து 3777. ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கென். (289) 28. கச்சிமாநகர் புக்க காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) வஞ்சியின் புறஞ்சேரி 3778. ஆங்குத் தாயரொ டறவணர்த் தேர்ந்து வாங்குவிற் றானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞைவெம் படையும் போற்புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து பல்வகை மணநீர் சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும் புவிகா வலன்தன் புண்ணிய நன்னாள் சிவிறியும் கொம்பும் சிதறுவிரை நீரும் மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கைநறு நீரும் 3790. அறஞ்செய் மாக்கள் அகில்முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும் உறுப்புமுரண் உறாமற் கந்தவுத் தியினால் செறித்தரைப் போர்தஞ் செழுமனை நீரும் என்றிந் நீரே எங்கும் பாய்தலில் கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பின வாகித் மதில் வாயில் தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூமிசை பரந்து பொறிவண் டார்ப்ப இந்திர தனுவென விலங்ககழ் உடுத்து 3800. வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய கடிமதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் பசுமிளை பரந்து பல்தொழி நிறைந்த வெள்ளிக் குன்றம் உள்கிழிந் தன்ன நெடுநிலை தோறும் நிலாச்சுதை மலரும் கொடியிடை வாயில் குறுகினள் புக்குக் பல்வகை வீதிகள் கடைகாப் பமைந்த காவ லாளர் மிடைகொண் டியங்கும் வியன்மலி மறுகும் பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர் 3810. மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொல் தச்சரும் மண்ணீட் டாளரும் வரந்தர வெழுதிய ஓவிய மாக்களும் தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் மாலைக் காரரும் காலக் கணிதரும் நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப நிலங்கலங் கண்டம் நிகழக் காட்டும் 3820. பாணர் என்றிவர் பல்வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும் வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்தியல் பறிந்த கூத்தியர் மறுகும் பால்வே றாக எண்வகைப் பட்ட கூலங் குவைஇய கூல மறுகும் மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும் போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை 3830. வண்ண அறுவையர் வளர்ந்திகழ் மறுகும் பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் அரசியல் மறுகும் அமைச்சியல் மறுகும் எனைப்பெருந் தொழில்செய் ஏனோர் மறுகும் சிறந்த இடங்கள் மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குறு வடிப்போர் கவின்பெறு வீதியும் சேனோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும் வேணவா மிகுக்கும் விரைமரக் காவும் 3840. விண்ணவர் தங்கள் விசும்பிடம் மறந்து நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை யிடங்களும் கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு மாசாத்துவானைக் காணல் அந்தர சாரிகள் அமர்ந்தினி துறையும் இந்திர விகாரம் எனவெழில் பெற்று நவையறு நாதன் நல்லறம் பகர்வோர் உறையும் பள்ளிபுக் கிறைவளை நல்லாள் 3850. கோவலன் தாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்துதன் பாத்திர தானமும் மணிமேகலை நிகழ்ந்தவை கூறல் தானப் பயத்தாற் சாவக மன்னவன் ஊனமொன் றின்றி உலகாள் செல்வமும் செல்வற் கொணர்ந்தத் தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும் உணர்ந்தோன் முன்னர் உயர்தெய்வந் தோன்றி மனங்கவல் கெடுத்ததும் மாநகர் கடல்கொள அறவண வடிகளும் தாயரும் ஆங்குவிட்டு இறவா திப்பதிப் புகுந்தது கேட்டதும் 3860. சாவக மன்னன் தன்னா டெய்தத் தீவகம் விட்டித் திருநகர் புகுந்ததும் புக்கபின் அந்தப் பொய்யுரு வுடனே தக்க சமயிகள் தந்திறம் கேட்டதும் அவ்வவர் சமயத் தறிபொரு ளெல்லாம் செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும் நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும் சொல்லின ளாதலின் தூயோய் நின்னையென் மாசாத்துவான் துறவு நல்வினைப் பயன்கொல் நான்கண்ட டதுவெனத் 3870. தையல் கேள்நின் தாதையும் தாயும் செய்ததீ வினையிற் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்புகொள் அறத்திற் கருகனேன் ஆதலின் மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து தினைத்தனை யாயினும் செல்வமும் யாக்கையும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் சாரணர் அறவழி புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர்ச் சேர்ந்தது கேளாய் 3880. குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள் துப்படு செவ்வாய்த் துடியிடை யாரொடும் இப்பொழில் புகுந்தாங் கிருந்த எல்லையுள், இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் அரைசற் கேது அவ்வழி நிகழ்தலின் புரையோர் தாமுமிப் பூம்பொழில் இழிந்து 3890. கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி முற்றவம் உடைமையின் முனிகளை ஏத்திப் பங்கயச் சேவடி விளங்கிப் பான்மையின் அங்கவர்க் கறுசுவை நால்வகை யமிழ்தம் பாத்திரத் தளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவை யாரொடும் ஏத்தினன் இறைஞ்சலில் பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும் அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை இன்ப வாரமு திறைவன் செவிமுதல் துன்ப நீங்கச் சொரியும் அந்நாள் கோவலன் முன்னோன் புத்தசயித்தியம் 3900. நின்பெருந் தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆதலின் தாங்கா நல்லறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையிற் படைத்ததை யன்றித் தன்னான் இயன்ற தனம்பல கோடி எழுநா ளெல்லையுள் இரவலர்க் கீத்துத் தொழுதவம் புரிந்தோன் சுகதற் கியற்றிய வானோங்கு சிமயத்து வாலொளிச் சயித்தம் ஈனோர்க் கெல்லாம் இடர்கெட இயன்றது 3910. கண்டு கொழுதேத்துங் காதலின் வந்தித் தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் காவிரிப் பட்டனம் கடல்கொளும் என்றவத் தூவுரை கேட்டுத் துணிந்திவ ணிருந்தது கோவலன் கண்ணகி பின்னிலை இன்னும் கேளாய் நன்னெறி மாதே தீவினை யுருப்பச் சென்றநின் தாதையும் தேவரில் தோற்றிமுற் செய்தவப் பயத்தால் ஆங்கத் தீவினை இன்னும் துய்த்துப் பூங்கொடி முன்னவன் போதியில் நல்லறம் தாங்கிய தவத்தால் தான்தவம் தாங்கிக் 3920. காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாதன் நல்லறங் கேட்டுவீ டெய்துமென்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொற்பயன் உணர்ந்தேன் தோகை யானும் அந்நாள் ஆங்கவன் அறநெறி கேட்குவன் மணிமேகலை கச்சிக்குச்செல்லல் நின்னது தன்மையந் நெடுநிலைக் கந்தில்துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை யன்றோ தவநெறி அறவணன் சாற்றக் கேட்டனன்; ஆங்கவன் தானும்நின் னறத்திற் கேதுப் பூங்கொடி கச்சி மாநக ராதலின் 3930. மற்றம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப்பதிப் படர்ந்தனர் அன்னதை யன்றியும் அணியிழை கேளாய் பொன்னெயிற் காஞ்சி நாடுகவின் அழிந்து மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலின் அந்நகர் மாதவர்க் கைய மிடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர் காணாய் ஆருயிர் மருந்தே அந்நாட் டகவயின் காரெனத் தோன்றிக் காத்தல்நின் கடனென அருந்தவன் அருள ஆயிழை வணங்கித் 3940. திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்திக் கொடிமதில் மூதூர்க் குடக்கணின் றோங்கி வடதிசை மருங்கின் வானத் தியங்கித் சேதியம் தொழுதல் தேவர் கோமான் காவல் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது கண்டுளங் கசிந்த ஒண்டொடி நங்கை பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி 3950. செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய சேதியந் தொழுது தென்மேற் காகத் தாதணி பூம்பொழில் தான்சென் றெய்தலும் சோழன் மணிமேகலையைக் காணல் வையங் காவலன் தன்பாற் சென்று கைதொழு திறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன் கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலந் தீவில் தானனி மிக்கோள் அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு தங்கா திப்பதித் தருமத வனத்தே 3960. வந்து தோன்றினள் மாமழை போலென மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக் கந்திற் பாவை கட்டுரை யெல்லாம் வாயா கின்றன வந்தித் தேத்தி ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று தன்வருத்தம் கூறல் செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம் அலத்தற் காலை யாகிய தறியேன் மயங்குவேன் முன்னரோர் மாதெய்வந் தோன்றி கச்சியில் மணிபல்லவம் 3970. உயங்கா தொழிநின் னுயர்தவத் தாலோர் காரிகை தோன்றும் அவள்பெருங் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகனிலம் உய்யும் ஆங்கவள் அருளால் அமரர்கோன் ஏவலில் தாங்கா மாரியும் தானனி பொழியும் அன்னாள் இந்த அகநகர் புகுந்த பின்னாள் நிகழும் பேரறம் பலவால். கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது பாரக வீதியிற் பண்டையோர் இழைத்த கோமுகி யென்னும் கொழுநீ ரிலஞ்சியொடு 3980. மாமணி பல்லவம் வந்த தீங்கெனப் பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத் தெய்வதம் போயபின் செய்தியா மமைத்தது இவ்விடம் என்றே அவ்விடங் காட்டவத் தீவகம் போன்ற காவகம் பொருந்திக் கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள் கோயில்கள் அமைத்தல் பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டி அங்கப் பீடிகை யிதுவென அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத் தீவ திலகையும் திருமணி மேகலா 3990. மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு ஒத்த கோயில் உளத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் பசிப்பிணி தீர்த்தல் பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும் அங்கையின் ஏந்திய அமுத சுரபியை வைத்துநின் றெல்லா உயிரும் வருகெனப் பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின் மொய்த்த மூவறு பாடை மாக்களில் காணார் கேளார் கால்முட மானோர் 4000. பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூ றாயிரம் விலங்கின் தொகுதியும் மன்னுயி ரடங்கலும் வந்தோருங் கீண்டி அருந்தியோர்க் கெல்லாம் ஆருயிர் மருந்தாய் பெருந்தவர் கைப்பெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப் 4010. வசித்தொழில் உதவி வளந்தந் ததுவெனப் பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் மணிமேகலை மாற்றுரு விடுதல் செல்லுங் காலைத் தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண வடிகளும் மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச் சாலை நண்ணினர் சேறலும், சென்றவர் தம்மைத் திருவடி வணங்கி நன்றென விரும்பி நல்லடி கழுவி ஆசனத் தேற்றி அறுசுவை நால்வகைப் போனகம் ஏந்திப் பொழுதினிற் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து வாய்வ தாகவென் மனப்பாட் டறமென 4022. மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென். (245) 29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை (இணைக்குறளாசிரியப்பா) இந்திரன் இட்ட சாபம் 4023. இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி அறந்திகழ் நாவின் அறவணன் உரைப்போன், வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலி வளைதான் பயந்த புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித் தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும் வணங்கிக் கொண்டவன் வங்கம் ஏற்றிக் 4030. கொணர்ந்திடும் அந்நாள் கூரியருள் யாமத்து அடைகரைத் கணித்தா அம்பி கெடுதலும், மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது அரைசற் குணர்த்தலும் அவனயர் வுற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் மணிமேகலா தெய்வத்தின் உதவி நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுறப் பொன்னின் ஊசி பசுங்கம் பளத்து 4040. துன்னிய தென்னத் தொடுகடல் உழந்துழி எழுநா ளெல்லை இடுக்கண்வந் தெய்தா வழவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையில் தனாது பாண்டு கம்பளம் தானடுக் குற்ற தன்மை நோக்கி, ஆதி முதல்வன் போதி மூலத்து நாத னாவோன் நளிநீர்ப் பரப்பின் எவ்வமுற் றான்தன தெவ்வந் தீரெனப் பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும் அறவர சாளவும் அறவாழி உருட்டவும் 4050. பிறவிதோ றுதவும் பெற்றியள் என்றே சாரணர் அறிந்தோர் காரணங் கூற அந்த வுதவிக் காங்கவள் பெயரைத் தந்தையிட் டனனினைத் தையல்நின் துறவியும் அன்றே கனவின் நனவென அறைந்த மென்பூ மேனிமணி மேகலா தெய்வம் என்பவட் கொப்ப அவனிடு சாபத்து நகர்கடல் கொள்ளநின் தாயரும் யானும் பகருநின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம் மணிமேகலை மெய்ப்பொருள் கேட்டல் என்றலும் அறவணன் தாளிணை யிறைஞ்சிப் 4060. பொன்திகழ் புத்த பீடிகை போற்றும் தீவ திலகையும் இத்திறஞ் செப்பினள் ஆதலின் அன்ன அணிநகர் மருங்கே வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும் நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே அவ்வுரு வென்ன வைவகைச் சமயமும் செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன் அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன நொடிகுவென் நங்காய் நுண்ணிதிற் கேள்நீ அளவை இரண்டு ஆதி சிநேந்திரன் அளவை யிரண்டே 4070. ஏதமில் பிரத்தியம் கருத்தள வென்னச் காட்சியளவை சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி விட்டனர் நாம சாதிகுணக் கிரியைகள் மற்றவை அனுமா னத்துமடை யும்மெனக் கருத்தளவை காரண காரிய சாமா னியக் கருத்து ஓரிற் பிழைக்கையும் உண்டு பிழை யாதது கனலிற் புகைபோற் காரியக் கருத்தே ஏனை யளவைக் ளெல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமான மாம்பிற பிறர்கூறும் அனுமானவுறுப்புக்கள் பக்கம் ஏதுத் திட்டார்ந்தம் உபநயம் 4080. நிகமனம் என்ன ஐந்துள அவற்றிற் பக்கம் இம்மலை நெருப்புடைத் தென்றல் புகையுடைத் தாதலால் எனல் பொருந்தேது வகையமை யடுக்களை போல்நிட் டாந்தம் உபநயம் மலையும் புகையுடைத் தென்றல் நிகமனம் புகையுடத் தேநெருப் புடைத்தெனல் வைதன்மிய திட்டாந்தம் நெருப்புடைத் தல்லாது யாதொன் றதுபுகைப் பொருத்த மின்று புனல்போல் என்றல் மேவிய பக்கத்து மீட்சி மொழியாய் வைதன் மியதிட் டாந்த மாகும் பக்க வகைகள் 4090. தூய காரிய வேதுச் சுபாவம் ஆயிற் சத்தம் அநித்தம் என்றல் பக்கம் பண்ணப் படுத லாலெனல் பக்க தன்ம வசன மாகும்; யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது அநித்தம் கடம்போல் என்றல் சபக்கத் தொடர்ச்சி யாதொன் றநித்தமல் லாதது பண்ணப் படாத தாகாசம் போலெனல் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி யென்க: அநன்னு வயத்திற் பிரமாணம் ஆவது. 4100. இவ்வெள் ளிடைக்கண் குடமிலை யென்றால் செவ்விய பக்கந் தோன்றாமை யில்லெனல் பக்க தன்ம வசன மாகும்; இன்மையிற் கண்டிலம் முயற்கோ டென்றல் அந்நெறிச் சபக்கம் யாதொன் றுண்டது தோற்றர வடுக்கும் கைந்நெல்லி போலெனல் ஏற்ற விபக்கத் துரையென லாகும் ஏது இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன என்னைகா ரியம்புகை சாதித்த தென்னின் புகையுள விடத்து நெருப்புண் டென்னும் 4110. அன்னுவயத் தாலும் நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும் புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின் காரிய ஏது பிழை நேரிய புகையில் நிகழ்ந்துண் டான ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம் வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின் மேனோக் கிக்கறுத் திருப்பபகைத் திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் அன்னுவய அனுமானம் பிழை அன்னு வயஞ்சா திக்கின் முன்னும் கழுதை யையும் கணிகை யையும் 4120. தம்மில் ஒருகா லத்தோ ரிடத்தே அன்னு வயங்கண் டான்பிற் காலத்துக் கழுதையைக் கண்ட விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டும் அதுகூ டாநெருப்பு வெதிரேக அனுமானம் பிழை இலாவிடத் துப்புகை யிலையென நேரத் திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் நாய்வா லில்லாக் கழுதையின் பிடரில் நரிவாலும் இலையாக் காணப் பட்ட அதனையே கொண்டு பிறிதோ ரிடத்து நரிவாலி னால்நாய் வாலையனு மித்தல் 4130. அரிதாம் அதனால் அதுவும் ஆகாது திட்டாந்தம் ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் திட்டந் தத்தி லேசென் றடங்கும் நன்பக்கம் பக்கம் ஏதுத் திட்டாந் தங்கள் ஒக்க நல்லவும் தீயவும் உளவதில் வெளிப்பட் டுள்ள தன்மி யினையும் வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம் பிறிதின் வேறாம் வேறுபாட் டினையும் தன்கட் சார்த்திய நயந்தருத லுடையது நன்கென் பக்கமென நாட்டுக அதுதான் 4140. சத்தம் அநித்தம் நித்தமென் றொன்றைப் பற்றி நாட்டப் படுவது தன்மி சத்தம் சாத்திய தன்ம மாவது நித்தா நித்தம் நிகழுநல் லேது நல்லேது மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்துண் டாதலும் விபக்கத் தின்றியே விடுதலும் சபக்கம் சாதிக் கிற்பொருள் தன்னாற் பக்கத்து ஓதிய பொதுவகை யொன்றி யிருத்தல் சத்த அநித்தம் சாத்திய மாயின் 4150. ஒத்த அநித்தம் கடாதி போலெனல் விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று அநித்தமல் லாதது பண்ணப் படாதது ஆஅ காசம் போலென் றாகும் பண்ணப் படுதலுஞ் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத் திலுமாய் விபக்கத் தின்றி அநித்தத் தினுக்கு மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற் றென்க நல் திட்டாந்தம் ஏதமில் திட்டாந் தம்மிரு வகைய சாதன் மியம்வை தன்மி யம்மெனச் 4160. சாதன் மியமெனப் படுவது தானே அநித்தங் கடாதி அன்னுவயத் தென்கை வைதன் மியதிட் டாந்தம் சாத்தியம் எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை இத்திறம் நல்ல சாதனத் தொத்தன போலிகள் தீய பக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக் காட்டும் ஆவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள் பக்கப்போலி ஒன்பது பக்கப் போலி யொன்பது வகைப்படும் 4170. பிரத்தி யக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர சித்த விசேடணம் அப்பிர சித்த விசேடியம் அப்பிர சித்த வுபயம் அப்பிர சித்த சம்பந் தம்மென ஒன்பதின் விரிவு எண்ணி விவற்றுள் பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொள லாகும் சத்தஞ் செவிக்குப் புலனன் றென்றல்; மற்றனு மான விருத்த மாவது 4180. கருத்தள வையைமா றாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்; சுவசன விருத்தந்தன் சொல்மாறி யியம்பல் என்தாய் மலடி யென்றே யியம்பல்; உலக விருத்தம் உலகின்மா றாமுரை இலகுமதி சந்திரன் அல்ல என்றல்; ஆகம விருத்தந்தன் நூன்மா றறைதல் அநித்த வாதியா யுள்ளவை சேடிகன் அநித்தி யத்தைநித் தியமென நுவறல்; அப்பி சித்த விசேடண மாவது 4190. தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக் குறித்துச் சத்தம் விநாசி யென்றால் அவனசி நாச வாதி யாதலின் சாத்திய விநாசமப் பிரசித்த மாகும், அப்பிர சித்த வேசிடிய மாவது எதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான் என்றால் அவன நான்ம வாதி 4200. ஆதலின் தன்மி யப்பிர சித்தம்; அப்பிர சித்த வுபய மாவது மாறா னோற்குத் தன்மி சாத்தியம் ஏறா தப்பிர சித்தமா யிருத்தல் பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச் சுகமுத லியதொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால் சுகமுமான் மாவும் தாமிசை யாமையில் அப்பிரசித் தோபயம்; அப்பிர சித்த சம்பந்தம் ஆவது எதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல் 4210. மாறாம் பௌத்தற்குச் சத்த அநித்தம் கூறில் அவன்ன் கொள்வைகஃ தாகலில் வேறு சாதிக்க வேண்டா தாகும் ஏதுப்போலி மூன்று ஏதுப் போலி ஓதின்மூன் றாகும் அசித்தம் அநைகாந் திகம்விருத் தம்மென அசித்தம் தொகையும் விரிவும் உபயா சித்தம் அன்னியதரா சித்தம் சித்தா சித்தம் ஆசிரயா சித்தம் எனநான் கசித்தம் உபயா சித்தம் சாதன வேது இருவர்க்கும் இன்றிச் சத்தம் அநித்தம் கட்புலத் தென்றல் 4220. அன்னியதரா சித்தம் மாறாய் நின்றாற்கு உன்னிய ஏது அன்றா யொழிதல் சத்தஞ் செயலுறல் அநித்தம் என்னின் சித்த வெளிப்பா டல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக் கசித்தம் ஆகும்; சித்தா சித்த மாவது ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல் ஆவி பனியென ஐயுறா நின்றே தூய புகைநெருப் புண்டெனத் துணிதல் ஆசிரயா சித்தம் மாறா னவனுக்கு 4230. ஏற்ற தன்மி யின்மை காட்டுதல் ஆகாசம், சத்த குணத்தாற் பொருளாம் என்னின் ஆகா சம்பொரு ளல்லவென் பாற்குத் தன்மி அசித்தம் அநைகாந் திகமும் அநைகாந்திகம் தொகையும் விரிவும் சாதா ரணமசா தாரணம் சபக்கைக தேச விருத்தி விபக்க வியாபி விபக்கை தேச விருத்தி சபக்க வியாபி உபயைக தேசட விருத்தி விருத்த வியபி சாரியென் றாறு. சாதாரணம் சபக்க விபக்கத் துக்கும் 4240. ஏதுப் பொதுவா யிருத்தல் சத்தம் அநித்தம் அறியப் படுதலின் என்றால் அறியப் படுதல்நித் தாநித்தம் இரண்டுக்கும் செறியுங் கடம்போல் அநித்தத் தறிவோ ஆகா சம்போல நித்தத் தறிவோ என்னல் அசாதா ரணமா வதுதான் உன்னிய பக்கத் துண்டாம் ஏதுச் சபக்க விபக்கம் தம்மிலின் றாதல் சத்தம் நித்தங் கேட்கப் படுதலின் என்னிற் கேட்கப் படலெனும் ஏதுப் 4250. பக்கத் துள்ள தாயின் அல்லது சபக்க விபக்கத்து மீட்சித் தாதலிற் சங்கயம் எய்தி அநேகாந் திகமாம்; சபக்கை தேச விருத்தி விபக்க வியாபி யாவ தேதுச் சபக்கத்து ஓரிடத் தெய்தி விபக்கத் தெங்கும் உண்டாத லாகும் சத்தம் செயலிடைத் தோன்றா தாகும் அநித்தம் ஆகலின் என்றால் அநித்தம் என்ற ஏதுச் செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்கம் 4260. மின்னினும் ஆகா சத்தினும் மின்னின் நிகழ்ந்தா காசத்திற் காணா தாகலின் அநித்தம் கடாதியின் ஒத்தலிற் கடம்போல் அழிந்து செயலில் தோன்றுமோ மின்போல் அழிந்து செயலில் தோன்றா தோவெனல்; விபக்கைக தேச விருத்தி சபக்க வியாபி யாவ தேது விபக்கத்து ஓரிடத் துற்றுச் சமக்கத்தொத் தியறல் சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்தமா தலினெனின் 4270. அநித்த வேதுச் செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகா யத்தினும் மின்னினும் மின்னின் நிகழ்ந்தா காசத்துக் காணாது சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய் ஏகாந்தம் அல்ல மின்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோவெனல்; உபயைக தேச விருத்தி யேதுச் சபக்கத் தினும்விபக் கத்தினும் ஆகி ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்தம் 4280. நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் அமூர்த்த வேதுநித்தத் தினுக்குச் சபக்கவா காச பரமா ணுக்களின் ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம் பரமாணுவினிக ழாமை யானும் விபக்க மான கடசுகா திகளிற் சுகத்து நிகழ்ந்து கடத்தொழிந் தமையினும் ஏகதே சத்து நிகழ்வதே காந்தமன்று அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம்போல் அநித்தமோ எனல்; 4290. விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய் விருந்த ஏதுவிற் கும்மிடங் கொடுத்தல் சத்தம் அனித்தம் செயலிடைத் தோன்றலின் ஒத்த தெனினச் செயலிடை தோன்றற்கு சபக்கமா யுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தம் கேட்கப் படுதலிற் சத்தத் துவம்போ லெனச் சாற்றிடுதல் இரண்டினுஞ் சங்கயமாய் ஏகாந்தம் அல்ல விருத்தம் தொகையும் விரியும் விருத்தத் தன்னைத் திருத்தக விளம்பில் தன்மச் சொரூப விபரீத சாதனம் 4300. தன்ம விசேட விபரீத சாதனம் தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மி விசேட விபரீத சாதனம் என்ன நான்கு வகைய தாகுமத் தன்மச் சொரூப விபரீத சாதனம் சொன்ன ஏதுவிற் சாத்திய தன்மத்து உருவங் கெடுதல் சத்தம் நித்தம் பண்ணப் படுதலின் என்றால் பண்ணப் படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட்டு 4310. அநித்தம் சாதித்த லான்விப ரீதம்; தன்ம விசேட விபரீத சாதனம் சொன்ன ஏதுச் சாத்திய தன்மம் தன்னிடை விசேடம் கெடச்சா தித்தல் கண்முதல் ஓர்க்கும் இந்திரி யங்கள் எண்ணிற் பரார்த்தம் தொக்குநிற் றலினால் சயனா சனங்கள் போல என்றால் தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச் சயனா சனத்தின் பரார்த்தம்போற் கண்முதல் இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச் 4320. சயனா சனவா னைப்போ லாகிக் கண்முதல் இந்தியத் துக்கும் பரனாய்ச் சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள ஆன்மா வைச்சா வயவ மாகச் சாதித் துச்சாத் தியதன் மத்தின் விசேடங் கெடுத்த லின்விப ரீதம்; தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மி யுடைய சொரூபமாத் திரத்தினை ஏதுத் தானே விபரீதப் படுத்தல் பாவம் திரவியம் கன்ம மன்று 4330. குணமு மன்றெத் திரவிய மாமெக் குணகன் மத்துண் மையின்வே றாதலால் சாமா னியவிசே டம்போல் என்றால் பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற் றின்னிடை யுண்மை வேறாதலா லென்று காட்டப் பட்ட ஏது மூன்றினுடை உண்மை பேதுப் படுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியத் தில்லா மையினும் திட்டாந் தத்திற் சாமானியம் விசேடம் போக்கிப் பிறிதொன் றில்லாமை யானும் 4340. பாவம் என்று பகர்ந்ததன் மியினை அபாவ மாக்குத லான்விப ரீதம்; தன்மி விசேட விபரீத சாதனம் தன்மி விசேட அபாவஞ் சாதித்தல் முன்னம் காட்டப் பட்ட ஏதுவே பாவமா கின்றது கருத்தா வுடைய கிரியையும் குணமுமாம் அதனை விபரீதம் ஆக்கிய தாதலால் தன்மி விசேடம் கெடுத்தது தீய எடுத்துக்காட் டாவன திட்டாந்தப் போலி இரண்டு தாமே திட்டாந்த ஆபா சங்கள் 4350. திட்டாந் தம்மிரு வகைப்படு மென்றுமுற் கூறப் பட்டன இங்கண் அவற்றுள் சாதன்மிய திட்டாந்தவகை ஐந்து சாதன் மியதிட் டாந்தவா பாசம் ஓதில் ஐந்து வகையுள தாகும் சாதன தன்ம விகலமுஞ் சாத்திய தன்ம விகலமும் உபய தன்ம விகலமும் அநன்னு வயம்விப ரீதான் னுவய மென்ன வைதன் மியதிட் வைதன்மிய திட்டாந்தவகை ஐந்து டாந்த ஆபா சமுமை வகைய சாத்தி யாவி யாவி ருத்தி 4360. சாத னாவி யாவி ருத்தி உபயாவி யாவி ருத்தியவ் வெதிரேகம் விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் சாதன்மிய திட்டாந்த விரி சாதன தன்ம விகலம் ஆவது திட்டாந் தத்திற் சாதனம் குறைவது சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன் றமூர்த்தமது நித்தம் ஆதலாற் காண்புற்றது பரமாணு விலெனில் திட்டாந் தப்பர மாணு நித்தத் தோடு மூர்த்தம் ஆதலாற் 4370. சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச் சாதன தன்மவமூர்த் தத்துவம் குறையும்; சாத்திய தன்ம விகலம் ஆவது காட்டப் பட்ட திட்டாந் தத்திற் சாத்திய தன்மம் குறைவு படுதல் சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் யாதொன்று யாதொன் றமூர்த்தமது நித்தம் புத்தி போஓல் என்றால் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட புத்தி அமூர்த்த மாகி நின்றே 4380. அநித்தம் ஆதலாற் சாதன அமூர்த்தத்துவம் நிரம்பிச் சாத்திய நித்தத்துவம் குறையும்; உபய தன்ம விகலம் ஆவது காட்டப் பட்ட திட்டாந் தத்திலே சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் அன்றியும் அதுதான் சன்னும் அசன்னும் என்றிரு வகையாம் இவற்றுட்சன் னாவுள உபய தன்ம விகலம் ஆவது உள்ள பொருட்கட் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல் 4390. சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன் றமூர்த்தமது நித்தம் கடம்போல் எனிற்றிட் டாந்த மாகக் காட்டப் பட்டகடம் தானுண் டாகிச் சாத்திய மாயுள நித்தத் துவமும் சாதன மாயுள அமூர்த்தத்து வமும்குறையும்; அசன்னா வுள்ள உபயதன்ம விகலம் இல்லாப் பொருட்கண் சாத்திய சாதனம் என்னும் இரண்டும் குறையக் காட்டுதல் சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் 4400. யாதொன்று யாதொன்று மூர்த்தம தநித்தம் ஆகாசம் போலெனுந் திட்டாந் தத்துச் சாத்திய தன்மமா யுள்ள அநித்தமும் சாதன தன்மமா யுள்ள மூர்த்தமும் இரண்டும் ஆகாசம் அசத்தென் பானுக்கு அதன்கண் இன்மை யானே குறையும் உண்டென் பானுக் காகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்; அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே 4410. இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல் சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் யாதொன்று யாதொன்று கிருத்தம் தநித்தமெனும் அன்னுவயம் சொல்லாது குடத்தின் கண்ணே கிருத்த அநித்தம் காணப் பட்ட என்றால் அன்னுவயம் தெரியா தாகும்; விபரீதான் னுவயம் வியாபகத் துடைய அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல் சத்தம் அநித்தம் கிருத்தத் தாலெனின் யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தமென 4420. வியாப்பியத் தால்வியா பகத்தைக் கருதாது யாதொன்று யாதொன் றநித்தமது கிருத்தமென வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல் அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை இன்றியும் நிகழ்த லின்விப ரீதமாம் வைதன்மிய திட்டாந்த விரி வைதன்மிய திட்டாந் தத்துச் சாத்தி யாவியா விருத்தி யாவது சாதன தன்மம் மீண்டு சாத்திய தன்மம் மீளா தொழிதல் சத்தம் நித்தம் அமூர்த்தத் தென்றால் 4430. யாதொன்று யாதொன்று நித்தமு மன்றது அமூர்த்தமும் அன்று பரமாணுப் போலெனின் அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட பரமாணு நித்தமாய் மூர்த்தமும் ஆதலின் சாதன அமூர்த்தம் மீண்டு சாத்திய நித்த மீளா தொழிதல்; சாத னாவியா விருத்தி யாவது சாத்திய தன்மம் மீண்டு சாதன தன்மம் மீளா தொழிதல் சத்தம் நித்தம் அமூர்த்தத் தென்றால் 4440. யாதொன்று யாதொன்று நித்த மன்றஃது அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால் வைதன் மியதிட் டாந்த மாகக் காட்டப் பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் சாத்திய மான நித்தியம் மீண்டு சாதன மான அமூர்த்தம் மீளாது; உபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட வைதன் மியதிட் டாந்தத்தி னின்று சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் 4450. உண்மையின் உபயா வியாவி ருத்தி இன்மையின் உபயா வியாவி ருத்தி எனவிரு வகை உண்மையின் உபயாவி யாவிருத்தி உள்ள பொருள்கண் சாத்திய சாதனம் மீளா தபடி வைதன் மியதிட் டாந்தங் காட்டல் சத்தம் நிச்சம் அமூர்த்தம் ஆதலின் என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தமன்று அமூர்த்தமு மன்றா காசம்போ லென்றால் வைதன்மியா திட்டாந்த மாகக் காட்டப்பட்ட 4460. ஆகா சம்பொரு ளென்பாற்கு ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் சாத்திய நித்தமுஞ் சாதனமா வுள்ள அமூர்த்தமு மிரண்டு மீண்டில இன்மையின் உபயாவி யாவிருத்தி யாவது சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் என்றவிடத்து யாதொன்று யாதொன் றநித்தம் மூர்த்தமு மன்றா காசம் போலென வைதன் மியதிட் டாந்தங் காட்டில் ஆகா சம்பொரு ளல்லவென் பானுக்கு 4470. ஆகாசந் தானே யுண்மையின் மையினால் சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் மீட்சியும் மீளா மையுமிலை யாகும்; அவ்வெதி ரேகம் ஆவது சாத்தியம் இல்லா விடத்துச் சாதனம் இன்மை சொல்லாதே விடுத லாகும் சத்தம் நித்தம் பண்ணப் படாமையால் என்றால் யாதொன்று யாதொன்று நித்த மன்று பண்ணப் படுவ தல்லா ததுவும் அன்றெனு மிவ்வெதி ரேகம் தெரியச் 4480. சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப் படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான் என்னின் வெதிரே கம்தெரி யாது; விபரீத வெதிரேகம் ஆவது பிரிவைத் தலைதடு மாறச் சொல்லுதல் சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் என்றால் என்று நின்ற விடத்து யாதோ ரிடத்து நித்தமு மில்லையவ் விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே யாதோ ரிடத்து மூர்த்தமு மில்லையவ் 4490. விடத்து நித்தமும் இல்லை என்றால் வெதிரேகம் மாறு கொள்ளு மெனக்கொள்க நாட்டிய இப்படித் தீயசா தனத்தாற் காட்டும் அனுமான ஆபா சத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால் 4495. ஐயமின்றி அறிந்துகொள் ஆய்ந்தென். (473) 30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (இணைக்குறளாசிரியப்பா) மணிமேகலையின் சரண் 4496. தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச் சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின் புத்த சங்கம் முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன் அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத் துடித லோகம் ஒழியத் தோன்றிப் போதி மூலம் பொருந்தியிருந்து மாரனை வென்று வீர னாகிக் குற்ற மூன்றும் முற்ற அறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை இறந்த காலத் தெண்ணில்புத் தர்களும் 4510. சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது புத்த தருமத்தின் தொகை ஈரறு பொருளின் ஈந்தநெறி யுடைத்தாய்ச் சார்பிற் றோன்றித் தத்தமில் மீட்டும் இலக்கணத் தொடர்தலின் மண்டில வகையாய் அறியக் காட்டி, எதிர்முறை யோப்ப மீட்சியு மாகி ஈங்கி தில்லா வழியில் லாகி ஈங்கி துள்ள வழியுண் டாகலின் தக்க தக்க சார்பிற் றோற்றமெனச் சொற்றகப் பட்டும் இலக்கணத் தொடர்பால் 4520. கருதப் பட்டும் கண்டநான் குடைத்தாய் மருவிய சந்தி வகைமூன் றுடைத்தாய்த் தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த் தோற்றற் கேற்ற காலமூன் றுடைத்தாய்க் குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில் வறிய துன்பமென நோக்க உலையா வீட்டிற் குறுதி யாகி, நால்வகை வாய்மைக்குச் சார்பிட னாகி ஐந்துவகைக் கந்தத் தமைதி யாகி மெய்வகை யாறு வழக்குமுகம் எய்தி 4530. நயங்கள் நான்காற் பயன்கள் எய்தி இயன்றநால் வகையால் வினாவிடை யுடைத்தாய், நின்மிதி யின்றி ஊழ்பா டின்றிப் பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப் பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய் யானு மின்றி என்னது மின்றிப் போனது மின்றி வந்தது மின்றி முடித்தலு மின்றி முடிவு மின்றி வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய பன்னிரு நிதானம் 4540. பேதமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோர் அறியிற் பெரும்பே றறிகுவர் அறியா ராயின் ஆழ்நர கறிகுவர் பேதைமை பேதமை யென்பது யாதென வினவின் ஓதிய இவற்றை புணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் செய்கை 4550. உலக மூன்றினும் உயிராம் உலகம் அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே; நல்வினை தீவினை யென்றிரு வகையாற் சொல்லப் பட்ட கருவிற் சார்தலும் கருவிற் பட்ட பொழுதினுள் தோன்றி வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்டு மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும் தீவினை யென்பது யாதென வினவின் 4560. ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பெய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று உள்ளந் தன்னின் உருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்தெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயும் நரகரு மாகிக் 4570. கலங்கிய வுள்ளக் கவலையில் தோன்றுவர், நல்வினை யென்பது யாதென வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் உணர்வு உணர்வெனப் படுவ துறங்குவோர் உணர்விற் புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே அருவுரு அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த 4580. உயிரும் உடம்பும் ஆகும் என்ப வாயில் வாயில் ஆறும் ஆயுங் காலை உள்ளம் உறுவிக்க உறுமிடன் ஆகும் ஊறு ஊறென வுரைப்ப துள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப நுகர்வு வேட்கை நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்; வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை பற்று, பவம் பற்றெனப் படுவது பசைஇய அறிவே; பவமெனப் படுவது கரும வீட்டம் தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல் தோற்றம் 4590. பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின் உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளிற் காரண காரிய உருக்களில் தோன்றல் வினைப்பயன் பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையில் திரிந்துடம் பிடும்பை புரிதல்; மூப்பென மொழிவ தந்தத் தளவும் தாக்குநிலை யாமையின் தாந்தளர்ந் திடுதல்; சாக்கா டென்ப தருவுருத் தன்மை யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல் துன்பச் சார்பு பேதைமை சார்வாச் செய்கை யாகும் 4600. செய்கை சார்வா உணர்ச்சி யாகும் உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் அருவுருச் சார்வா வாயி லாகும் வாயில் சார்வா ஊறா கும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் வேட்கை சார்ந்து பற்றா கும்மே பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரண மாக வருமே யேனை வழிமுறைத் தோற்றம் 4610. தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரும் என்ப ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி துன்பமீட்சி பேதைமை மீளச் செய்கை மீளும் செய்கை மீள உணர்ச்சி மீளும் உணர்ச்சி மீள அருவுரு மீளும் அருவுரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் 4620. நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் தோற்றம் மீளப் பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்கா டவலம் அரற்றுக் கவலை கையா றென்றிக் கடையில் துன்பம் எல்லா மீளுவிவ் வகையான் மீட்சி நான்கு கண்டம் ஆதிக் கண்டம் ஆகும் என்ப 4630. பேதைமை செய்கை யென்றிவை யிரண்டும் காரண வகைய ஆத லானே; இரண்டாங் கண்டம் ஆகும் என்ப உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன முன்னவற் றியல்பால் துன்னிய ஆதலின்; மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக் கரும ஈட்ட மெனக்கட் டுரைப்பவை மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுள் குற்றமும் வினையும் ஆக லானே; 4640. நான்காங் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம் எனவிவை பிறப்பில் உழக்குபய னாதலின் மூன்று சந்தி பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி; நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி; கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி மூன்று பிறப்பு மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே 4650. தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும் உணர்வுள் ளடங்க உருவாய்த் தோன்றியும் உணர்வும் உருவம் உடங்கத் தோன்றிப் புணர்தரு மக்கள் தெய்வம்விலங் காகையும் மூன்று காலம் கால மூன்றும் கருதுங் காலை இறந்த காலம் என்னல் வேண்டும் மறந்த பேதைமை செய்கையா னவற்றை; நிகழ்ந்த காலமென நேரப் படுமே உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே 4660. தோற்றம் என்றிவை சொல்லுங் காலை; எதிர்கா லம்மென இசைக்கப் படுமே பிறப்பே பிணியே மூப்பே சாவே அவல மாற்றுக் கவலைகை யாறுகள் குற்றம், வினை, பயன் குலவிய குற்றமெனக் கூறப் படுமே அவாவே பற்றே பேதைமை யென்றிவை; புனையுடை பவமும் வினைசெய லாகும்; உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை நிகழ்ச்சிப்பயன் ஆங்கே நேருங் காலைக் வீடு 4670. குற்றமும் வினையும் பயனும் துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா எப்பொரு ளுக்கும் ஆன்மா இலையென இப்படி யுணரும் இவைவீட் டியல்பாம் நால்வகை வாய்மை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலைகை யாறென நுவலப் படுவன நோயா கும்மே; அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் 4680. கரும ஈட்டமிவை காரண மாகும்; துன்பந் தோற்றம் பற்றே காரணம்; இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய உரையே வாய்மை நான்காவது ஐந்து கந்தம் உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள வறிவிவை ஐங்கந்தம் ஆவன அறுவகை வழக்கு அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பின் தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த உண்மை வழக்கும் இன்மை வழக்கும் 4690. உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்குமெனச் அவற்றின் இயல்பு சொல்லிய தொகைத்திறம் உடம்புநீர் நாடு தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந் நிகழ்ச்சியில் அவற்றை நெல்லென வழங்குதல்; இயல்பு மிகுத்துரை ஈறுடைத் தென்றும் தோன்றிற் றென்றும் மூத்த தென்றும் மூன்றின் ஒன்றின் இயல்புமிகுத் துரைத்தல்; 4700. இயைந்துரை யென்ப தெழுத்துப்பல கூடச் சொல்லெனத் தோற்றம் பலநாட் கூடிய எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்; அதன் விளக்கம் உள்வழக் குணர்வில் வழக்கு முயற்கோடு உள்ளது சார்ந்த வுள்வழக் காகுஞ் சித்தத் துடனே யொத்த நுகர்ச்சி உள்ளது சார்ந்த இல்வழக் காகுஞ் சித்தமுற் பவித்தது மின்போ லென்கை இல்லது சார்ந்த வுண்மைவழக் காகுங் காரண மின்றிக் காரிய நேர்தல் 4710. இல்லது சார்ந்த இல்வழக் காகும் இயற்கோ டின்மையிற் றோற்றமு மில்லெனல் நான்கு நயம் நான்கு நயமெனத் தோன்றப் படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பென்க காரண காரியம் ஆகிய பொருள்களை ஒன்றா வுணர்தல் ஒற்றுமை நயமாம்; வீற்றுவீற் றாக வேதனை கொள்வது வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்; பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு ஒன்றிய காரணம் உதவுகா ரியத்தைக் 4720. தருதற் குள்ளம் தானிலை என்றல் புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும்; நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றுமெனல் நல்ல வியல்புநயம் இவற்றினாங் கொள்பயன் அவற்றின் பயன் தொக்க பொருளல தொன்றில்லை என்றும் அப்பொரு ளிடைப்பற் றாகா தென்றும் செவ்h னொடுகோட் பாடிலை என்றும் எய்துகா ரணத்தால் காரியம் என்றும் அதுவு மன்றத லாதது மன்றென்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் நால்வகை வினாவிடை 4730. வினாவிடை நான்குள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய்வா ளாமையெனத் தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் கேடுண் டென்றல் துணிந்துசொல லாகும்; செத்தான் பிறப்பா னோபிற வானோ என்று செப்பின் பற்றிறந் தானோ அன்மக னோவெனல் மிகக்கூ றிட்டு மொழிதலென விளம்புவர்; வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ 4740. பனைமுந் திற்றோ வெனக் கட்டுரைசெய் என்றால் எம்முட்டைக் கெப்பனை என்றல்; வாய்வா ளாமை ஆகா யப்பூப் பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு மாற்றம் உரையா திருத்தல் அறவண அடிகளின் மங்கலமொழி கட்டும் வீடும் அதன்கா ரணத்தது ஒட்டித் தருதற் குரியோ ரில்லை; யாமேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம்; அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத் 4750. தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல், மைத்திரி கருணா முதிதையென் றறிந்து திருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுக சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி யுய்த்து மயக்கங் கடிக இந்நால் வகையான் மனத்திருணீங் கென்று முன்பின் மலையா மங்கல மொழியின் ஞான தீபம் நன்கனங் காட்டத் மணிமேகலையின் நோன்பு தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் 4759. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றனளென். (294) மணிமேகலை முற்றும் அருஞ்சொற் பொருள் அகடு-நடுவிடம் அகநகை-இகழ்ச்சிச் சிறப்பு அகநிலை-ஊர் அகலம்-மார்பு அகலுள்-ஊர், தெரு அகவல்-பாடுதல் அகன்சுரை-உள்ளிடம் அகவை-வயது அகவையா-அடங்க அங்காடி-கடைவீதி அசும்பு-சேறு அச்சிரம்-முன்பனிக்காலம் அஞர்-துன்பம் அஞ்ஞை-அன்னை அஞ்சனம்-மை அடர்-தகடு அடும்பு-அடப்பம்பூ அடை-இலை அட்டில்-அடுக்களை அணங்கு-தீண்டி வருத்தும் தேய்வம் அதரிதிரித்தல்-கடாவிடுதல் அதர்-வழி அதள்-தோள் அதிர-காட்டு மல்லிகை அத்தம்-பாலைவழி அத்திரி-கோவேறு கழுதை அந்தரி-துர்க்கை அந்தில்-அவ்விடம் அந்தி-முச்சந்தி, மாலை அமரி-சாவில்லாதவள் அமர்தல்-விரும்புதல்,பொருந்துதல் அமலை-திரட்சி, சோற்றுருண்டை அமை-மூங்கில் அமைதல்-நீங்குதல் அமுதசுரபி-சோறு வழங்கும் ஓடு அம்பணம்-மரக்கால் அம்பி-ஓடம் அம்மணம்-திருமணம் அயர்தல்-கொண்டாடல், சோர்தல் அயாவுயிர்த்தல்-பெருமூசசு விடல் அயிராணி-இந்திராணி அயிரை-சேரநாட்டு யாறு அயிர்-புகைக்கும் மணப்பொருள் அயிர்தல்-ஐயப்படல் அயினி-சோற்றுணவு அரசுவா-பட்டத்து யானை அரணம்-கேடயவகை அரத்தம்-செந்நிறம் அரந்தை-துயர் அரமியம்-நிலா முற்றம் அராந்தாணம்-சமணப் பள்ளி அரி-பரல், கேடு, சிங்கம் அரிதாரம் - கத்தூரி அரிமயிர் - மெதுவான மயிர் அரிமான்-சிங்கம் அரியகம்-காற்சரிவணி அரியாயோகம்-அரைப் பட்டிகை அரில்-நெருக்கம் அலத்தகம்-செம்பஞ்சுக் குழம்பு அலர்-பழி அலவல்-வருந்தல் அவதி-எல்லை அவை-குற்று, இடி அவ்வை-தாய், முதியவள் அழல்-காத்திகைநாள் அழி-நேற்போர் அழுங்கல்-வாய்விட்டழுதல் அழும்பில்-ஓர் ஊரின் பெயர் அழுவம்-பரப்பு அளை-மோர், புற்று அறப்பரிசாரம்-துறவோரைப் பேணல் அறமனை-இல்லறம் அறல் மணல் அறவி-அறநெறி, தவத்தி அறவை-அறம் அறவோர்-சமண பௌத்தர் அறனோடு-அமுத சுரபி அறிவன்-புத்த தேவன் அறுவை-புடைவை, தோளிலிடும் உறி அறை-பாறை அறைபோதல்-கால்வாங்கி விடல் அற்புளம்-அன்புள்ளம் அற்றம்-சமயம் அனந்தர்-கள்மயக்கம் ஆ-பசு, ஆச்சாமரம் ஆசு-நுட்பம் ஆசீவகம்-மற்கலிமதம் ஆடு-வெற்றி ஆணு-அன்பு ஆமந்திரிகை-இடக்கை மத்தளம் ஆம்பி-நீர் இறைக்கும் பத்தர் ஆயக்கணக்கர்-வரியலுவலர் ஆயம்-தோழியர், உரிமை ஆயுள்வேதர்-மருத்துவர் ஆர்-ஆத்தி ஆரணம்-வேதம் ஆராமம்-பொழில் ஆரியன்-புத்தன் ஆர்த்தல்-ஊட்டுதல் ஆலமர்செல்வன்-சிவன் ஆலும்புரவி-கனைக்கும் குதிரை ஆவணவீதி-கடைத்தெரு ஆவம்-அம்புப்புட்டில் ஆழி-தேர்க்கால் ஆனா-நீங்காத ஆன்பொருநை-சேர நாட்டு ஓர் யாறு இஞ்சி-மதில் இடங்கர்-முதலை இடங்கழி-வரம்பு கடந்த இடி-இடித்த மா இடுகும்-பெலியும் இடுமணல்-காற்று இட்ட மணல் இடைகழி-இடைவழி இணர்-கொத்து இந்திரர்-தேவர் இப்பி-சிப்பி இமில்-திமில் இமிழ்தல்-ஒலித்தல் இயக்கி-ஊர்த்தெய்வம் இயம்-வாத்தியம் இயவு-செலவு இரங்குதல்-முழங்குதல் இரத்தி-இலந்தை மரம் இரியல்-கெடுதல் இருங்கூத்தல்-கருங் கூந்தல் இருத்தி-சித்தி இலஞ்சி-நீர்நிலை இலம்பாடு-வறுமை இலவந்திகை-ஒரு சோலையின் பெயர் இவுளி-குதிரை இளங்கால் தூதன்-குயில் இளை-கட்டுவேலி இறங்குதல்-தாழ்தல் இறும்பு-குறுங்காடு இறும்பூது-வியப்பு இறை-சிறிது, முன்கை, இறவாரம் இனைதல்-வருந்தல் இன்னணம்-இவ்வாறு ஈகை-பொன் ஈண்டுதல்-திரளுதல் ஈரயிர்-பொடிமணல் ஈரேழ்கோவை-சகோடயாழ் ஈனோர்-இவ்வுலகத்தோர் உடங்கு-கூட உடம்பிடி-வேல் உணக்குதல்-வாட்டுதல் உணங்கல்-வற்றல் உண்கண்-மைதீட்டிய கண் உத்தரகுரு-இன்பவுலகு உந்தி-ஆற்றிடைக்குறை உம்பர்-மேலிடம் உயவல்-வருந்தல் உயிராணி-உயிராதரவு உய்தி-விடுதி உய்யா-ஒழிக்க முடியாத உய்யானம்-அரசன் சோலை உரகர்-நாகர் உரிமை-மனைவி உரு-அச்சம் உருத்தல்-சினத்தல் உருமு-இடி உருவிலாளன்-காமன் உரை-சொல் உலவா-குறையாத உவணச்சேவல்-கருடன் உழிஞ்சல்-வாகை உழை-வாணாசுரன் மகள் உளியம்-கரடி உள்வரிக்கோலம்-வேற்று வடிவம் உறுகண்-துன்பம் உறுக்கும்-வருத்தும் உறுவன்-சிறந்தவன் உறை-துளி ஊக்க-மேலேதூக்க ஊங்கணோர்-முன்னோர் ஊரல்-குளுவைப்பறவை ஊர்தல்-பரத்தல் எகினம்-மான் எஞ்சலார்-அயலார் எடுப்ப-எழுப்ப எட்டி-வணிகப்பட்டப் பெயர் எண்கு-கரடி எய்தல்-தொடுத்தல் எய்யா-அறியாத எயில்-மதில் எயிற்றி-வேட்டுவிச்சி எருத்தம்-பிடரி எருவை-பருந்து எல்-ஒளி, இரவு எல்லா-தோழி எவ்வம்-துன்பம் எழால்-யாழ் எழினி-திரைச்சீலை எழுச்சிப்பாலை-புறப்படுந் தன்மை எழு-கணைய மரம் எற்படுபொழுது-மாலை என்பு-எலும்பு என்றூழ்-கொடை வெயில் ஏ-அம்பு ஏகை-கீற்று ஏச்சுரை-இகழ்ச்சி ஏணி-எல்லை ஏனம்-பன்றி ஐது-அழகிய ஐயரி-மெல்லிய வரி ஐயவி-வெண்சிறு கடுகு ஐயை-கொற்றவை ஒடியா-அழியாத ஒட்டுப் புதவம்-இரட்டைக் கதவு ஒய்யென-யானையை அதட்டும் சொல் ஒய்யா-தவிர்க்க முடியாத ஒலித்தல்-தழைத்தல் ஓ-மதகு நீர் தடுக்கும் பலகை ஓசனித்தல்-முயலுதல் ஓசுநர்-செக்காரர் ஓடை-யானை நெற்றிப் பட்டம் ஓதம்-வெள்ளம் கச்சை-யானை அடிவயிற்றில் கட்டும் கயிறு கஞ்சுகம்-சட்டை கடமலை-யானை கடவுளர்-முனிவர் கடி-அச்சம்,விளக்கம்,பேய் கடிஞை-பிச்சைப்பாத்திரம் கடிப்பு-பறையடிக்கும் குச்சி கடுத்தல்-ஐயங்கொளல் கடைகழிமகளிர்-பரத்தையர் கடைக்கூட்ட-ஒருப்படுத்த கடைசியர்-உழவுப்பெண்கள் கட்சி-காடு கட்டல்-களைபறித்தல் கட்போர்-களவு செய்வோர் கண்படை-உறங்கல் கண்டன்-நிறத்திரை கண்ணுளாளர்-கூத்தர் கண்ணுள் வினைஞர்- உருக்குத்தட்டார் கண்ணெழுத்து-குறியீட்டெழுத்து கதலிகைக்கொடி-துகிற்கொடி கத்திகை-மாலை கந்தன்-அருகன் கந்தசாலி-மணமுள்ளநெல் கந்தவுத்தி-மணப்பொடி செய்முறை கந்து-தூண் கந்துகம்-பந்து கயந்தலை-பெரியதலை (யானை) கயவாய்-காவிரிப்பூம்பட்டினம் கயில்-பிடரி கயிற்கடை-கொக்கி கரண்டை-கரகம் கராம்-முதலை கரி-சான்று கரிமா-யானை கருங்கை-வலியகை கருவி-தொகுதி கரைதல்-ஓசைப்படுதல் கலம்-கப்பல், யாழ், நகை கலாம்-போர் கலி-ஆரவாரம் கலுழ்தல்-கலங்கல் கவயமா-காட்டுப்பசு கவலை-முடுக்கு கவவு-தழுவுதல் கவான்-துடை கவிர்-முள் முருங்கை கவேரக்கன்னி-காவிரியாறு கவைக்கோல்-பறிக்கும்கருவி கவையடி-பிளந்த அடி களமர்-உழவர் கறிவல்லி-மிளகுக்கொடி கறைவீடு-திறை தள்ளுபடி கற்கடகம்-நண்டு கன்னல்-நாழிகைவட்டில் கன்னிகாரம்-கோங்கமரம் காசறை-கத்தூரி காணம்-பொன் காணிகா-காண்க காம்பு-மூங்கில் காரகல்-அப்பஞ் சுடுஞ் சட்டி காராளர்-வேளாளர் காரி-கரிக்குருவி காருகமடந்தை-இல்லறப் பெண் காலதர்-பலகணி (சன்னல்) கால்-வண்டி, காற்று கால்கோள்-தொடங்கல் காவுதல்-தோளில் சுமத்தல் காழகம்-கரிய உடை காழியர்-பிட்டு விற்பிகள் காழ்-குத்துக்கோல், கோவை கிளவி-சொல் குச்சரக்குடிகை-சிறிய கோட்டம் குடக்கண்-திரண்ட கண் குடதிசை-மேற்றிசை குடிஞை-கோட்டான் குணதிசை-கீழ்த்திசை குணில்-பறையடிகுச்சி குண்டுநீர்-ஆழநீர் குயம்-அரிவாள் குயிலுவர்-தோற்கருவி இசையாளர் குரல்-கொத்து குரு-கொப்புளம் குரூஉ-நிறம் குருகு-துருத்திமூககு, குருக்கத்தி குழிசி-பானை குழியம்-தடி குறங்கு-துடை குறுமகன்-கீழ்மகன் குறுநர்-களைபறிப்பார் கூடை-அவிநயக்கை கூம்பு-பாய்மரம் கூலம்-பலதானியம் கூவியர்-அப்பஞ்சுடுவோர் கூறை-ஆடை கேழ்-நிறம் கேட்டைக்க-கேட்பாயாக கேவணம்-கல்லழுத்துங்குழி கைக்கோல்-குறடு கைத்தூண்-சிறுமைதரும் உணவு கைம்மை-சிறுமை கையற்ற-செயலற்ற கையுதிர்க்கோடல்-கையசைத்துப் போ எனல் கையுறை-காணிக்கை கைவினை-கைத்தொழில் கொடி-ஒழுங்கு கொடுமரம்-வில் கொட்பு-சுழற்சி கொண்டல்-கீழ்காற்று கொண்டி-கொள்ளை கொளை-இசை, பாட்டு கோடணை-விழா கோட்டி-குழு கோட்டுமா-யானை கோழி-உறையூர் கௌரியர்-பாண்டியர் சகடம்-வண்டி சதுக்கம்-நாற்சந்தி சயித்தம்-பகவன்கோயில் சலம்-வஞ்சகம், நீர் சாத்து-வணிகக் கூட்டம் சாலினி-பூசைமகள் சாறு-விழா சிங்கா-கெடாத சிதவல்-கந்தை சித்திரம்-வஞ்சனை சிமிலி-உறி சிரல்-மீன்குத்தி சிலம்பு-மலை சிவிறி-விசிறி சிறுபுறம்-பிடரி சிறை-பக்கம் சீத்தல்-கலைத்தல்,போக்குதல் சீமின்-திறந்திடுங்கள் சுடுமண்-செங்கல் சுணங்கு-தேமல் சுருங்கைவீதி-நிலத்துள் செல்லும் சுருக்கு வழி சுவல்-தோள் சூடகம்-கடகம் சூதர்-நின்றேத்துவோர் சூர்-அச்சம் செகில்-சிவப்பு செங்குணக்கு-நேர் கிழக்கு செம்மல்-பழம்பூ செயலை-அசோகமரம் செயிர்-குற்றம் செயிர்ப்பு-வெகுளி செரு-போர் செல்லல்-துன்பம் செவ்வனம்-செம்மை செறு-வயல் சேற்றம்-கறுவு சேடி-விஞ்சையர் நகரம் சேதா-நல்ல பசு சேதியம்-புத்தன் கோயில் சோ-வாணாசுரன் நகரம் ஞாட்பு-போர் ஞாயில் - மதிலுறுப்பு ஞாழல் - புலிநகக்கொன்றை ஞமிறு-வண்டு ஞெகிழம்-சிலம்பு ஞெமிர்தல்-பரத்தல் தடவு-தூபமுட்டி தடி-தசை தடிந்து-வெட்டி தணத்தல்-பிரிதல் தண்டலை-சோலை தண்டா-தணியாத தண்ணுமை-மத்தளம் தண்பதம்-புனலாட்டு ததர்-கொத்து தந்திரம்-நூல் தமனியம் - பொன் தமாலம்-பச்சிலை தலைச்சாவகன்-முதன் மாணாக்கன் தவளம்-வெண்மை தவாத-கெடாத தவ்வை-தாய் தளவு-செம்முல்லை தாங்கும்-தடுக்கும் தாதகி-அத்திப்பூ தாடி-மோவாய் தாபதர்-முனிவர் தாரம்-பலபண்டம், இசை தார்-தூசிப்படை தாலம்-பனை தால்-நாக்கு திப்பியம்-வியப்பு திமில்-படகு திருமுகம்-கடிதம் திரையல்-வெற்றிலை தீவகச்சாந்தி-இந்திர விழா துகிர்-பவளம் துடவை-தோட்டம் துணிச்சிதர்-கிழிந்த கந்தல் துரகம் குதிரை துருத்தி-ஆற்றிடைத்திட்டு துவைத்தல்-ஒலித்தல் துன்னகாரர்-தையற்காரர் தூசு-பட்டு தூவி-அன்னத்தின் மென் சிறகு தெழித்து-அதட்டி தைவரல்-தடவல் தொடுப்பு-விதைப்பு தொழுனை-யமுனையாறு தொளி-சேறு தோடு-தொகுதி தோப்பி-நெல்லால் ஆய கள் தோம்-குற்றம் தோரியமகளிர்-சூடி முதிர்ந்த மகளிர் தோல்-கேடயம் நகுலம்-கீரி நரந்தை-நாரத்தை நல்கூர்தல்-வறுமை நவியம்-கோடரி நவை-குற்றம் நன்கனம்-நன்முறையில் நாம்-அஞ்சத்தக்க நாவாய்-படகு நாறுதல்-தோன்றுதல் நிகர்-ஒளி நிம்பம்-வேம்பு நிரப்பு-வறுமை நியமம்-கோயில் நிவப்பு-உயர்ச்சி நின்மிதி-நியமிக்கப்படுதல் நீர்ப்பிழா-நீர் இறை கூடை நூபுரம்-சிலம்பு நூழில்-கொன்று குவித்தல் நெய்தல்-சாப்பறை நென்னல்-நேற்று நொடிதல்-சொல்லுதல் நொசி-நுண்மை நொடை-விலை நோலை-எள்ளுருண்டை பகல்-நடுவுநிலைமை படம்-ஆடை படர்-வருத்தம் படாகை-பெருங்கொடி படிப்புறம்-வழிபாட்டு வைப்பு படிறு-பொய் பட்டடை-அடிமனை பட்டிமை-கொடுமை பட்டாங்கு-உள்ளபடி பணி-பாம்பு பணிலம்-சங்கு பணை-பறை,கிளை பண்ணை-தோட்டம் பழம்-உணவு பயம்பு-யானைக்குழி பயிர்தல்-அழைத்தல் பரசல்-தொழுதல் பரி-செலவு, மிகுதி பழனம்-நீர்நிலை பழிச்சுதல்-போற்றுதல் பளிதம்-கற்பூரம் பறந்தலை-போர்க்களம், சுடுகாடு பறாக்குருகு-உலைத்துருத்தி பறை-ஒருமுகத்தலளவை பாகல்-பலா பாகு-யானைப்பாகன் பாசவர்-வெற்றிலை விற்பிகள் பாடகம்-காலணி பாடி-நகர் பாடுகிடத்தல்-வரல் வேண்டல் பாடை-மொழி பாணி-தாளம், பாட்டு பாண்டில்-வண்டி, கஞ்சதாளம் பாத்தரும்-பகுத்தற்கரிய பாத்தியன்-அடியான் பாய்தல்-பரத்தல் பாரமிதை-வீடுகரை சேர்க்கும் வழிகள் பாழி-வலிமை பிசி-இடுகதை பிஞ்ஞை-நப்பின்னை பிடகநெறி-பௌத்த ஆகம நெறி பிணிமுகம்-மயில், யானை பித்தை-குடுமி பிறங்கல்-மலை பீடிகை-வணிகர் தெரு புகர்-குற்றம், புள்ளி புகார்-ஆற்றுமுகம் புகைக்கொடி-தூமகேது புதா-பெருநாரை புத்தேள்-தேவர் புறந்தரல்-பேணுதல் புனிறு-ஈன்றணுமை புன்கண்-துன்பம் பூட்கை-கொள்கை பூத்தவஞ்சி-வஞ்சிக்கொடி பூப்பலி-பூ வழிபாடு பூவல்-செம்மண் பூவாவஞ்சி-வஞ்சிநகரம் பெரும்பிறிது-இறத்தல் பெண்ணை-பனை பெற்றி-தன்மை பைதல்-துன்பம் பைத்தரவு-பாம்பின்படம் பையுள்-துன்பம் பொங்கர்-பழம்பூ பொங்கழி-தூற்றாத நெற்பொலி பொச்சாப்பு-மறதி பொதியறை-காற்றுப்புகாத நிலவறை பொதும்பர்-மரச்செறிவு பொய்தல்-விளையாட்டு பொறி-புள்ளி பொறை-சிறுமலை, பொறுமை பொற்படி-பொன்னுலகம் போதி-அரசமரம் போந்தை-பனைமாலை பௌவம்-கடல் மஞ்சு-மேகம் மகள்-மனைவி மகன்-கணவன் மஞ்ஞை-மயில் மடை-சோறு, மூட்டுவாய் மடைமை-ஆக்குந்தன்மை மண்ணீடு-சுதைப்பொம்மை மண்ணுதல்-கழுவுதல், குளித்தல் மதுகரம்-வண்டு மரப்புணை-கட்டுமரம் மரங்கு-ஒருவகை மீன் மல்லல்-வளம் மன்பதை-சமுதாயம் மாகதர்-இருந்தேத்துவோர் மாகம்-வானம் மாணி-மணமாகா இளைஞன் மாதர்-அழகு மாதவி-குருக்கத்திச் செடி மாதிரம்-திசை மாத்திரை-இயல்பு மாரன்-மன்மதன் மாயிரு-மிகப்பெரிய மால்மகன்-பித்தன் மிடல்-வலிமை மிளை-காவற்காடு மீக்கூற்று-புகழ் மீயான்-மாலுமி முகமடை-மிடறு முக்காழ்-மூன்று சரம் முடலை-கரடுமுரடு முட்டா-தட்டுமுட்டில்லாத முதுக்குறை-பேரறிவு முந்நீர்-கடல் முருந்து-மயிலிறகின் அடி முழுத்தம்-நற்பொழுது முறி-தளிர் முன்பு-வலிமை மூவா-முதிராத மூதை-பழைமை மெய்ப்பை-சட்டை மைந்து-வலி யாணர்-புதிய வருவாய் யாப்பறை-உறுதியின்மை யாப்புறவு-பொருத்தம் யோசனை-நீண்ட தொலைவு வகுந்து-வழி வக்கிரித்திடல்-சுற்றியெறிதல் வசி-மழை வட்டிகை-எழுதுகோல் வட்டுடை-அரையுடை வணர்-வளைவு வம்பு-புதுமை, கச்சு, மணம் வயா-வேட்கை வலவை-வல்லமை வல்-சூது கருவி வழிவளம்-வழிப்பறி வளாகம்-பரப்பு வற்பம்-வன்மை வாரணம்-உறையூர்,கோழி,சங்கு, யானை வால்-தூய்மை வாலுகன்-பாகஞ்செய்வோன் வாலுகம்-மணற்குன்று வாலியோன்-பலராமன் வாள்-ஒளி விசித்தல்-கட்டுதல் விடர்-குகை, காமுகர் விட்டேற்றாளர்-தறுதலைகள் விதானம்-மேற்கட்டி வியம்-ஏவல் விரகினில்-நயமாக விரகுளி-தந்திரம் விலோதனம்-கொடி விழுக்கு-கொழுப்பு விழுமம்-துன்பம் வீ-மறைவு, பூ வீற்றுவீற்றாக-வேறுவேறாக வெண்பலி-சாம்பல் வெதிரம்-மூங்கில் வெரிந்-முதுகு வெள்ளில்விளாமரம் வெறுக்கை-செல்வம் வேணவா-வேட்கை வேதிகை-திண்ணை வேதினம்-ஈர்வாள் வேது-ஒத்தடம் வேயாமாடம்-நிலாமுற்றம் வை-கூர்மை வையகம்-வண்டி, உலகம் சிலப்பதிகார மாந்தர் பெண்கள் கண்ணகி கண்ணகி தாய் குற்றிளையாள் கோவலன் தாய் மாதவி மாதவி தாய் வசந்தமாலை கூனி மணிமேகலை மாதரி ஐயை கன்னியர் எழுவர் பாண்டியமாதேவி குற்றேவல் மகளிர் சேரமாதேவி கவுந்தி மாலதி தேவந்தி காவற் பெண்டு அடித்தோழி பொலனறுங் கொடியன்னார் வம்பப்பரத்தை சாலினி ஊரரவம் கேட்ட ஒருத்தி மதுரை மகளிர் குறுமகளிர் வஞ்சி மகளிர் விஞ்சை வீரன் மனைவி வனசாரிணி மதுரைத் தெய்வம் ஆண்கள் கோவலன் மாசாத்துவான் மாநாய்கன் சோழவேந்தன் நெடுஞ்செழியன் பொற்கொல்லன் வாயிலோன் ஊர் காப்பாளர் கம்பலை மாக்கள் செங்குட்டுவன் இளங்கோ சாத்தனார் வில்லவன் கோதை அழும்பில்வேள் நீலன் சஞ்சயன் ஆசான் கணிவன் கனகவிசயர் கயவாகு குடகக்கொங்கர் மாளுவ வேந்தர் வறுமொழியாளன் மதுரைப்பாணர் குன்றக் குறவர் மாடலன் கோசிகன் மாங்காட்டோன் முனிவர் சாரணர் தாத்தன் ஞாயிறு எரியங்கி அமர்க்கரசன் தமர். மணிமேகலை மாந்தர் பெண்கள் மணிமேகலை (இலக்குமி) மாதவி (தாரை) சுதமதி (வீரை) சித்திராபதி வயந்தமாலை ஆதிரை இராசமாதேவி (நீலபதி) வாசந்தவை கண்ணகி மணிமேகலா தெய்வம் தீவதிலகை காயசண்டிகை கந்திற்பாவை சித்திரத் தெய்வம் பேடி கண்டோர் கிளைக்கதையில் மருதி விசாகை பீலிவகை கோதமை சாலி இளம்பூதி மனைவி சம்பாபதி சிந்தா தேவி ஆ ஆண்கள் உதயகுமரன் (இராகுலன்) புண்ணியராசன் (ஆபுத்திரன்) அறவணன் எட்டிகுமரன் சனமித்திரன் மாவண் கிள்ளி இளங்கிள்ளி மாசாத்துவான் கோவலன் கௌசிகன் சங்கதருமன் மாதவர் சமயக் கணக்கர்கள் மாருதவேகன் காஞ்சனன் விழாவறைவோன் குடிகாரன் பித்தன் கல்லா இளைஞன் காவலர்கள் கிளைக்கதையில் சாதுவன் குருமகன் இளமகன் இளம்பூதி அந்தணர்கள் சார்ங்கலன் தருமதத்தன் ககந்தன் மக்கள் நெடுமுடிக்கிள்ளி துச்சயன் சாரணன் பிரமதருமன் சாதுசக்கரன் விருச்சிகன் மண்முகன் இந்திரன் 