தேவநேயம் – 12 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 12 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312= 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங்கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப்படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! ` இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர் களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை முல்5 (வளைதற் கருத்துவேர்) 1 முல்6 (துளைத்தற் கருத்துவேர்) 7 முழுகு 24 முழுத்தக்கால் 25 முளைத்தாலி 25 முறைப்பொருத்தம் 25 முன்றாலி 25 முனி, முனிவன் - முனி 25 முனிவர் இயல்பு 26 மூசை 26 மூத்திரம் 26 மூட்டை 26 மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் 27 மூவகை மதம் 31 மூவினம் 32 மூவேந்தர் ஆரிய அடிமை முதிர்வு 32 மூவேறுவகைப்படை 35 மூளை 35 மெது 35 மேகலை 36 மேலை மொழிநூல் வரலாறு 36 மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கை கள் 43 மேலையாரிய இனச்சொற்கள் 48 மேழம் 55 மொய் 55 மொழி என்றால் என்ன? 55 மொழித்தோற்றக் கொள்கைகள் 57 மொழி தோன்றிய வகை 60 மொழிநூல் 64 மொழி நூலின் முதன்மை 89 மொழி பற்றிய சில வுண்மைகள் 95 மொழி பெயர் முறை 97 மொழியாராய்ச்சி 98 மொழியாராய்ச்சியும் மொழியகழ் வாராய்ச்சியும் ஒன்றே 117 மொழியின வுணர்வும் படி முறைக் கலப்பும் 120 மோதிரம் வைத்தல் விளையாட்டு 122 மோரியப் படையெடுப்பு 122 யாக்கை 128 யாத்தல் 128 யாம் 129 யாப்புவகை 129 யானைப் பெயர்கள் 129 வக்கா 129 வக்கு -வக், வங்க் 130 வஞ்சகம் - வஞ்சக 130 வஞ்சி 130 வட்டம் 131 வட்டணம் (1) 132 வட்டணம் (2) 132 வட்டி 132 வட்டிகை 132 வட்டு 133 வடகம் 133 வடசொல் தென்சொல் காணும் வழிகள் 133 வடசொல்லென மயங்குந் தொல் காப்பியத் தென்சொற்கள் 136 வடசொற் கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன 141 வடசொற்கள் தென்சொற்களால் விளக்கம் பெறல் 144 வடம் 146 வடமொழி 147 வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு 169 வடமொழி சென்ற தென் சொற்கள் 174 வடமொழித் தென் சொற்கள் 185 வடமொழி பல்வகைச் சொற் பெருக்கம் 209 வடமொழி வேர்ச்சொல் திரட்டின் குறைபாடுகள் 211 வடை 217 வண்ணம் (1) 218 வண்ணம் (2) 218 வண்ணனை மொழிநூல் 218 வண்ணனை மொழிநூல் வழுக்கள் 225 வண்ணனை மொழிநூல் விலக்கு 237 வண்ணான் தாழி விளையாட்டு 237 வணிகமும் போக்குவரத்தும் 239 வணிகன் 243 வதி 243 வயிரம் 249 வரணம் 245 வரணி 246 வரம் 247 வரலாற்றின் பயன் 247 வரலாறுரைப்பன 248 வரலாற்றுக் களஞ்சியம் 248 வரன் 248 வரால் 248 வரி 248 வரிகள் 249 வரிசை யறிதல் 249 வல் 250 வல்1 (வளைவுக் கருத்துவேர்) 250 வலம், வலி 266 வழக்கற்ற சொற்கள் 266 வழக்கற்ற பண்டைப் பழக்க வழக்கங்கள் 270 வழக்கற்ற விளையாட்டுக்கள் 270 வள்ளி 271 வள்ளுவ கோட்ட அமைப்புப் பற்றிய கருத்துகள் 271 வள்ளுவன் 272 வள்ளுவன் என்னும் பெயர் 272 வறுமையால் ஒழுக்கங் கெடுதல் 276 வனப்புச் சொல்வளம் 276 வளையம் 275 வனம் 281 வாடிகை 289 வாடி 289 வாணிகம் 290 வாணிகன் 290 வாய்ச்சொய்கை 290 வாய்ச்செய்கை யொலிச் சொற்கள் 292 வாரி 300 வாலம் 300 வாலுகம் 301 வாழ்த்துரை வகைகள் 301 வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள் 304 வாழ்வரசி 305 வாழையடி வாழை 305 வாளம் 305 வாளி 305 வாளிகை 306 வான்சுடர் 306 விக்கல் 306 விட்டம் 306 விட்டை 307 விடலை 307 விடி 308 விடை 309 விண்டு 309 வித்து 310 விதைத் தோல் வகை 310 விதை வகை 311 விந்து 311 வியம் 311 விரவுத்திணையொலிகள் 311 விருத்த விலக்கணம் 312 விருது 312 விருந்தோம்பல் 312 முல் 5 (வளைதற் கருத்து) சாய்தல், கோணுதல், வளைதல், நெளிதல், மடங்குதல், திருகுதல், வட்ட மாதல், முடிதல், சுற்றுதல், சுழலுதல், புரளுதல், உருளுதல், உருண்டையாதல், திரிதல், திரும்புதல், சூழ்தல் முதலிய பலவும் வளைதற் கருத்தொடு தொடர் புள்ளவையாம். முல்-வில் = வளைந்த வேட்டைக் கருவி. ஒ.நோ: முடுக்கு - விடுக்கு = (ஒரு சிறு மடக்குநீர்). வில் - விலா = வளைந்த நெஞ்செலும்பு அல்லது நெஞ்சக் கூடு. ம. வில். தெ. வில்லு. க. பில். முல் - முன் - முனி = வில் (திவா.) முனிநாண் கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96). முல் - மூல் - மூலை = 1. கோணம். மூலை முடுக்குகளும் (இராமநா. கந். 3). 2. மூலைத்திசை (W.). 3. அறைமூலை. இருட்டறை மூலையிலிருந்த குமரி (திருமந். 1514). ம. மூல. தெ. மூல. க. மூலெ. மூலைக்குத்து = 1. முற்றத்து மூலைக்கு எதிராக வீட்டுத் தலைவாயில் நிலை அமைந்திருக்கை. 2. மூலைப் பார்வை. மூலைத்திசை = பெருந்திசைகட்கு நடுவேயுள்ள கோணத்திசை. மூலைப்பார்வை = 1. கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 2. சாகுந்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைக்குத்திடுகை. மூலைமட்டம் = 1. நேர்கோணம். 2. மூலை மட்டப்பலகை (கட்டட நாமா). மூலை முடங்கி (மூலை முடக்கு) = வளைந்து செல்லும் சிறு வழி (W.). மூலையரம் = முப்பட்டையரம் (W). மூலையோடு = முகட்டுச்சியில் வேயும் ஓட்டுவகை. மூலைவாசல் = தெருவிற்கு நேராகவன்றி ஒதுக்கமாயமைந்த வாயில். மூலைவாட்டு (மூலைவாட்டம்) = மூலை வாக்கு. மூலைவிட்டம் = நாற்கோணத்தின் எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு. முல் - முர் - முரு - முருகு = பிறைபோல் வளைந்த காதணி வச்ர முருகையெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (விறலிவிடு. 703). முரு - மரு - மரை = 1. திருகுவகை. 2. விளக்குத் திரியை ஏற்றி யிறக்கும் திருகுக்காய். மரையாணி = திருகாணி. தெ. மர. க. மரெ. முரு - முரி. முரிதல் = 1. வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப் புருவமும் (மணிமே. 18:161). 2. வளைந்து ஒடிதல் (சூடா.) (கரும்பு கம்பு முதலிய வற்றை ஒடித்தற்கு அவற்றை வளைத்தல் காண்க.). 3. கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள். 473). 4. தோல்வியுறுதல். முற்றியவமரர் சேனை முரிந்தன (விநாயகபு. 34:15). 5. சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமர (கல்லா. 7). 6. தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழங் கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5:10). 7. தவறுதல். முரியுங் காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் (பெருங். வத்தவ. 12:99). 8. நீங்குதல். 9. நிலைகெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள். 899). 10. குணங்கெடுதல். ஒழுகுபால் கதிவெயிற் படமுரிந்து (திருச்செந். பிள்ளைத். செங்கீரை. 1). முரி = முரிதல் = வளைதலைச் செய்தல். புருவமும் முரி முரிந்தவே (சீவக. 2310). k., க. முரி. முரித்தல் = 1. வளைத்து ஒடித்தல். நன்சிலை முரித்திட் டம்பை வாடினன் பிடித்து நின்றான் (சீவக. 2185). 2. தோற்கச் செய்தல் (யாழ். அக.). 3. அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (திருவாலவா. 24:4). 4. திறைமையாக நடாத்துதல் (W.). வெட்டி முறித்தல் என்னும் வழக்கை நோக்குக. ம. முரிக்க. தெ. முரியு. முரி = 1. வளைவு. முரியா ரளகத் தடாதகை (திருவிளை. பயகர. 8). 2. துண்டு. 3. நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்க வாரீர். (தக்கயாகப். 736). 4. முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94). 5. சிதைவு. (சிலப். 25:146. அரும்.). 6. எழுதிய ஓலைநறுக்கு. 7. இசைப்பாவில் இறுதிப்பகுதி (சிலப். 6:35, உரை). 8. நாடகத் தமிழின் இறுதியில் வருஞ் சுரிதகம் (தொல். பொருள். 444, உரை). k., bj., f., து. முரி. முரிவு = 1. மடிப்பு (யாழ். அக.). 2. வளைந்துஓடுகை. (யாழ். அக.). 3. சுருக்குகை. புருவ முரிவுகண் டஞ்சி (முத்தொள். களம்). 4. நீங்குகை. இளையர் மார்ப முரிவில ரெழுதி வாழும் (சீவக. 372). 5. வருத்தம். பாவைமார் முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627). 6. சோம்பு (அரு. நி.). முரு - முறு - முறுகு. முறுகுதல் = (செ.கு.வி.). 1. திருகுதல் (பிங்.). 2. விரைதல். முறுகிய விசையிற் றாகி (சீவக. 796). 3. முதிர்தல். கனி முறுகி விண்டென (சூளா.சீய.7). 4. மிகுதல். வேட்கையின் முறுகி யூர்தர (சீவக. 1183). 5. கடுமையாதல். வெயின் முறுக (நாலடி. 171). 6. காந்திப்போதல். 7. செருக்குதல். வரையெடுக்க லுற்று முறுகினான் (தேவா. 289:10). (செ. குன்றாவி.) மீறுதல் (பிங்.). ம. முறுகு. முறுகு - முறுகல் = 1. திருகல். திருகல் முறுகல். பிரண்டைபோலத் திருகல் முறுகலானது (உ.வ.). 2. மிகுதியாக வெந்தது. தோசை யொன்று முறுகலாகப் போடு (உ.வ.). முறுகு - முறுக்கு. முறுக்குதல் = (செ. குன்றாவி.) 1. கயிறு முதலியன திரித்தல். வாய்மடித் திரண்டு கையு முறுக்கி (கம்பரா. மருத்து. 10). 2. முறுக்காணியைத் திருகுதல். 3. மிகைபட முறுக்கி யொடித்தல். பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அகம். 8). 4. சுழற்றுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786). 5. வெற்றிலை சுருட்டி யுண்ணுதல். (நாஞ்.). 6. கை. கால்களைப் பிசைந்து தேய்த்தல் (W.). (செ.கு.வி.). 1. செருக்குதல். 2. மாறுபடுதல். 3. சினத்தல் (யாழ். அக.). k., க. முருக்கு. தெ. முரக்கட்டு. முறுக்கு = 1. திரிக்கை. 2. திருகாணிச் சுற்று. 3. முறுக்கிச் சுட்ட பலகாரம். அடைமுறுக்கு (விநாயகபு. 39:39). 4. இதழ் முறுக்குள்ள அரும்பு. முறுக் குடைந்தலர் மலர்களும் (காஞ்சிப்பு. திருக்கண். 180). 5. நூலுருண்டை. 6. வலிப்பு (இலக். அக). 7. நெறிப்பு (W.). 8. கடுமை (இலக். அக). 9. மாறுபாடு (W.). 10. செருக்கு. 11. மிடுக்கு. கிழமாய் நரைத்து முகந்திரைந்து மிந்த முறுக்கேன் (தனிப்பா. 1, 88 : 173). முறுக்கு - முறுக்கம் = 1. திருகல். 2. முடுக்கு. 3. கடுமை. முறுக்கு - முறுக்கி = முறுக்குங் கருவி. வில்லை முறுக்கி = ஒரு கருவி (spanner). முறுக்கவரை. முறுக்காணி, முறுக்குமீசை. முறுக்கு வட்டம். முறுக்கு விரியன் முதலிய கூட்டுச் சொற்கள் முறுக்கவியல் பற்றியன. முறுக்கு - முறுக்கான் = 1. முறுக்கிய புகையிலை. 2. புகையிலை யுடன் போட்டுக்கொள்ளும் தாம்பூலம் (நாஞ்.). ம. முறுக்கான். முறு - முற்று. முற்றுதல் = 1. சூழ்தல். பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை (புறம். 29). 2. கோட்டையைச் சூழ்ந்து பொருதல். முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். புறத். 13). க. முத்து. முற்று = முற்றுகை. முற்றியார் முற்றுவிட (பு.வெ. 6:25). முற்றுகை = 1. சூழ்கை. 2. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 3. நெருக்கடி (W.). முற்றுகை - முற்றிக்கை = 1. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 2. நெருக்கடி நிலைமை. சாப்பாட்டிற்கு மெத்த முற்றிக்கையாயிருக்கிறது (இ.வ.). தெ. முத்ததி. க. முத்திகெ (g). முற்றிக்கை - முற்றிகை = கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. முறுகு - மறுகு. மறுகுதல் = 1. சுழலுதல். மறுகக் கடல்கடைந் தான் (திவ். இயற். 2 68). 2. பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (குறிஞ்சிப். 97). 3. மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ (சீவக. 946). 4. வருந்துதல். கிடந்துயிர் மறுகுவ தாயினும் (அகம். 29). 5. சிதைதல். குடன் மறுகிட (கம்பரா. இந்திரசித். 19). 6. அரைபடுதல் நறுஞ் சாந்து மறுக (மதுரைக். 553). மறுகு-மறுக்கு மறுக்குதல் = 1. மனத்தைக் கலக்குதல். மறுக்கி வல்வலைப் படுத்தி (திவ். திருவாய். 4:9:6). 2. எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் (இ.வ.). மறுக்கு = மனக்கலக்கம். மறுக்கினோ டிரியல் போயுற (கம்பரா. பள்ளிபடை. 109). மறுக்க - மறுக்கம் = 1. சுழற்சி. 2. மனக்கலக்கம் மன்பதை மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15 52). 3. துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் (தேவா. 17:4). மறுகு - மறுகல் = 1. சுழற்சி. 2. கலங்குகை. பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் (திவ். திருவாய். 9 4 4). 3. நோய் திரும்புகை (W.). மறுகல் - மறுகலி. மறுகலித்தல் = நோய் திரும்புதல் (யாழ். அக.). முறு - முறி. முறிதல் = 1. வளைந்து ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14:2). 2. தோற்றல். 3. நிலைகெடுதல். அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு. திருஞா. 77). 4. அழிதல். வீரமுறிந்த நெஞ்சினர் (விநாயகபு. 79:66). 5. தன்மை கெடுதல். பால் முறிந்து போயிற்று (உ.வ.). 6. பதந் தப்புதல். நெய் முறியக் காய்ந்ததனாற் கசக்கின்றது (உ.வ.). 7. பயனறுதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது (W.). 8. குலைதல். 9. அருள் மாறுதல். ம. முரிக. தெ. முரிக்கெனு. க. முரி. முறித்தல் = 1. ஒடித்தல். பொருசிலை முறித்த வீரன் பாரத கிருட்டிண. 141). 2. கிழித்தல். வேட்டியை இரண்டாக முறி (உ.வ.). 3. நிறுத்தி விடுதல். ஏலச்சீட்டை முறித்துவிட்டான் (உ.வ.). 4. தன்மை மாற்றுதல். ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (கம்பரா. அங்கத. 18). 5. நெசவுத்தறியில் உண்டை மறித்தல். 6. பெரு வினைகளைச் செய்து முடித்தல். நீ பலவற்றை வெட்டி முறித்து விட்டையோ? (உ.வ.). முறி = 1. துண்டு. கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப ஞானவா. சிகித். 107). 2. உடைத்த தேங்காயிற் பாதி. தேங்காய் முறி. 3. பாதி. 4. ஆவணம். மோகவாசை முறியிட்ட பெட்டியை (தாயு. சிற்ப. 1). 5. ஓலைப் பற்றுமுறி. 6. துணி. கொள்ளிமுறிப் பாதியேது (அரிச். பு. மயான 41). 7. நகர்ப்பகுதி. சேரி (பிங்.). 8. அறை (நாஞ்.). 9. உயர்ந்த வெண்கலம். முறி - மறி. மறிதல் = 1. மடங்குதல். 2. முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 3. கீழ்மேலாதல். மலைபுரை யானை மறிந்து (பு.வெ. 7:9). 4. திரும்புதல். மீளுதல். மறிதிரை (கலித். 121). 5. முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடத்து (பு. வெ. 6:14). 6. சாய்தல். எரிமறித் தன்ன நாவின் (சிறுபாண். 196). 7. விழுதல். நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201). 8. பலகாலுந் திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 9. நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி வாழ். 10. அறுபடுதல். உன் காது மறியும் (திவ். பெரியாழ் 2 3 6, அரும்). 11. தடைப்படுதல். 12. சாதல். மறிந்த மகன்றனைச்சுட (அரிச். பு. மயான. 38). மறித்தல = 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. கீழ் மேலாக்குதல் (W.). 4. தடுத்தல். மறுபிறப் போட மறித்திடுமே (திருவாச. 36:2). 5. கிடையமர்த்தல். நன்செய்க்கு மூன்று கிடை மறிக்க வேண்டும். (உ.வ.). 6. தடுத்தற் குறியாகக் கையசைத்தல். மாற்றருங் கரதல மறிக்கு மாறு (கம்பரா. உண்டாட். 21). மறி = மறியல். மறிகால் = மறுகால். மறிசல் = அணை. மறித்து = திரும்ப. மறித்தாங் கிழிந்து (மணிமே. 10:88). மறித்தும் = திரும்பவும், மீண்டும் வேலானை மறித்துங் காண்க (சீவக. 1225). மறிதரல் = மீளுகை. (பிங்.). மறிந்து - மீண்டும். மறிந்து வந்தனரே மாற்றோர் (பெருங். மகத. 19:80). மறிப்பு = மறியல். மறிபடுதல் = 1. தடுக்கப்படுதல். 2. இடையூறுபடுதல். (கோயிலொ. 13). மறியல் = 1. வணிகம், தொழில், கல்வி, போக்குவரத்து முதலியன நடைபெறா வண்ணம் தடுத்தல். 2. சிறைக்கூடம். மறிவு = 1. திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா. ப. செவியறி. 6) கேடு. (ஐங். அரும்.). முறு - முறை = 1. வளைவு. 2. வேலையாள் திருப்பம் (turn). பணி முறை மாற முந்துவர் (கம்பரா. ஊர்தேடு. 49). இன்று குழாய்த் தண்ணீர் பிடிக்க வேண்டியது யார் முறை? (உ.வ.) 3. தடவை. எழுமுறை யிறைஞ்சி (சீவக. 3052). 4. அடைவு. முறைமுறை ... கழியுமிவ் வுலகத்து (புறம். 29). 5. ஒழுங்கு. முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி (தொல். சி. பாயி.). 6. ஊழ். ஆருயிர் முறைவழிப் படூஉம் (புறம். 192). 7. ஒழுக்கம். முறையி லோயைத் தென்புலத் துய்ப்பன் (கம்பரா. வாலிவதை. 177). 8. கற்பு. முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட (பரிபா. 15:39). 9. உறவு. பொருட்டுமுறை யாதியின் (நன். 298). 10. மணஞ்செய் யுறவு. முறை மாப்பிள்ளை. முறைப்பெண். முறைகாரன். 11. உறவுமுறைப் பெயர். பெரியாரை யென்று முறைகொண்டு கூறார் (ஆசாரக். 91). 12. நேர்மை. முறைகேடு. 13. செங்கோல் நெறி. முறைகோடி மன்னவன் செய்யின் (குறள். 559). 14. நெறிமுறை. காக்கைப் பனம் பழமுறை (காக தாலீய நியாயம்). 15. நூல் வகுப்பு. பன்னிரு. திருமுறை. 16. கட்டளை நிறைவேற்றுகை. முறைசெய் வோர். 17. தன்மை. முத்தீப் பேணும் முறையெனக் கில்லென (மணிமே. 22:48). 18. உரிமை. முறைமை யென்பதொன் றுண்டு (கம்பரா. நகர் நீங்கு. 5). ம. முர. க. முரெ. தெ. மொர. முறைவன் - 1. இறைவன். நான்மறை முக்கண் முறைவ னுக்கே (பதினொ. பொன்வண். 52). 2. பாகன். மேலியன் முறைவர் நூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44:79). முறை - மிறை = வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284). மிறைக்கொளி திருத்துதல் = படைக்கலத்தின் வளைவு நீக்குதல். மிறைக் கொளி திருத்துவார் (சீவக. 2293) மிறைக்கொளுவுதல் = படைக்கல வளைவு. நீக்குதல். எஃக மிறைக் கொளீஇ (பு.வெ. 8 21). ஒ.நோ: முண்டு - மிண்டு. முடுக்கு - மிடுக்கு. முறு - மறு. மறுத்தல் = செ. குன்றாவி.) 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. மாற்றுதல். 4. தடுத்தல். மறுத்து மறுத்து மைந்தர் சார (கலித். 104). 5. தடை கூறுதல் (ஆட்சேபித்தல்). உடன்படல் மறுத் தல் (நன். 11). 6. நீக்குதல். கொல்லான் புலாலை மறுத்தானை (குறள். 260). 7. இல்லை யென்னுதல். அவர்மறுத் தகறல் காணா (கம்பரா. மிதிலைக். 125). (செ. கு. வி.). இல்லாமற்போதல். இப்பேறுதான் ஒருநாளுண்டாய் மற்றை நாள் மறுக்கையன்றிக்கே. (ஈடு, 2:7:7). மறு - மறுப்பு = 1. மறுக்கை. 2. எதிர்க்கை. 3. கண்டனம். 4. மறு வுழவு. (யாழ்ப்). 5. முன்னுழுத சாலுக்குக் குறுக்காக வுழுகை (நாஞ்.). மறுப்ப = ஓர் உவம வுருபு மாற்ற மறுப்ப ஆங்கவை யெனாஅ (தொல். உவ.11). மறுத்தருதல் = திருப்பல். மீட்டல். மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலித். 15). மறுத்தரவு = திருப்புகை, மீட்கை. யாதொன்று மென்கன் மறுத்தர வில்லாயின் (கருத். 81). மறுத்தரவு - மறுதரவு = மீட்கை. மறுதர வில்லாளை யேத்திநாம் பாட (சிலப். 24. பாட்டுமடை. இறுதி). மறுக்க = திரும்பவும். மறுக்க நீ வரக்கூடாது (உ.வ.). மறுத்து = 1. திரும்ப. மீள. மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் (குறள். 312). 2. மறுபடியும் மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு. 1 3 3). 3. திரும்பவும். மேலும், மறுத்து மின்னுமொன்றுரைத் திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128). மறுத்துரைத்தல் = தடை கூறுதல். எதிர்த் துரைத்தல். மறுத் துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்தும் (தொல். பொரு. 2). மறுத்துப் போதல் = 1. ஆவு கறவை நின்று போதல் (W.). 2.மரம் காய்ப்பு நின்று போதல் (W.). மறு - மறை = 1. மறுப்பு. 2. எதிர்மறை. தொழாதிர் என்பது மறை யின்றித் தொழுது என்று பொருள் தருமேனும் உணர்க. (மலைபடு. 231. உரை). 3. விலக்குகை. பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை (ஏலாதி. 6). எதிர்மறு - எதிர்மறை. மறுக்களித்தல் = 1. மறுத்தல். 2. நோய் திரும்புதல். மறுக்களித்துப் பேசுதல் = தான் சொன்னதை மறுத்துப் பேசுதல் (உ.வ.). மறுதலை = 1. எதிர்க் கட்சி. தன்னை மறுதலை பழித்த காலை யும் (நன். 53). 2. எதிரியின் கொள்கை. மறுதலைக் கடாஅ (தொல். மரபு. 105). 3. எதிர்ப்பொருள். இன்மை யன்மை மறு தலை யென்னும் முப்பொருள் (சி. போ. சிற். 2 1, ப. 34). 4. பகைவர். மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் (ஏலாதி. 16). 5. நிகர். அரிமாவிற்கு மறுதலை போல்வா ரொருவர் (திருக்கோ. 225). உரை). 6. இரண்டாமுறை. மறுதலை இங்கு வராதே (உ.வ.). மறுதலைத்தல் = (செ. கு. வி.). எதிரிட்டுத் தோன்றுதல். நாண முதனான்கு மண்டி யொருசார் மறுதலைப்ப (திருவிளை. வளையல். 23). (செ. குன்றாவி.) மறுத்தல். மறுதலைத் துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146). மறுதலைக்காய் = பருவ விளைச்சற்குப் பின் காய்க்கும் காய்கறி முதலியன. மறுதலைப் பெண் = மறுமனைவி. அரவ மறுதலைப் பெண் கூட்டுவிக்கும் (சினேந். 267). மறுதாய் = மாற்றாந் தாய். மறுநாள் - அடுத்த நாள். ம. மறுநாள். தெ. மறுநாடு. மறுபடி = 1. திரும்ப. 2. மற்றொரு படி (copy). 3. விடை (நாஞ்). மறுமாடி = மாடிக்கு மேல்மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக் கிறான். மறுமாலை சூடுதல் = கணவனின் அறுபான் விழாவில் நடை பெறும் மாலை மாற்றுச் சடங்கு. மறுமாற்றம் = மறுமொழி. மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பா ரின்றி (பெரியபு. திருஞான. 474). தெ. மருமாட்ட. க. மருமாத்து. மறு - மறுவல் = திரும்ப. மறுவலும் = திரும்பவும். மறுவலும் புல்லிக் கொண்டு (சீவக. 1052). மறுவலிடுதல் = 1. திரும்புதல். பின்னை மறுவவிடாதிறே (ஈடு. 2. 10:8). 2. சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை ... கமழ்தென்றல் மறுவலிடு கையாலே (ஈடு. 10:3:5). மறு - மற்று = (கு.வி.எ). 1. மறுபடியும் (W.). 2. பின். 3. வேறு. 4. மற்றப்படி. (இடைச்சொல்) 1. வினைமாற்றுக் குறிப்பு. 2. பிறிதுப் பொருட் குறிப்பு. 3. அசைநிலை. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை (தொல். இடை. 14) வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே (நன். 433) ஒ.நோ: Gk. meta, after, occasionally with sense ‘change’. மற்று - மற்ற = பிற. வேறு. மற்று - மற்றும் = 1. மேலும். 2. மீண்டும். உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344). மற்று - மற்றையது = மற்றது. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம் (நன். 434). மறு - மாறு. மாறுதல் = (செ.கு.வி.) 1. வேறுபடுதல். மாறா மனங் கொண்டு (திருநூற். 47). 2. பின்வாங்குதல். சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண். 136). 3. குறைதல். நோய் கொஞ்சம் மாறியிருக்கிறது (உ.வ.). 4. இடம் வேறுபடுதல். 5. நீங்குதல். உறக்கம் மாறினான் (கம்பரா. ஆறுசெ. 7). 6. முதுகிடு தல். மாறா மைந்தின் (மலைபடு. 332). 7. கூத்தாடுதல்(பிங்.).8. இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் (சி.போ.சிற். 2 3, ப. 47). 9. இல்லையாதல். பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை (ஈடு. 2:8:2). 10. பொய்படுதல். நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை (பரிபா. 6:8). (செ.குன்றாவி). 1. விற்றல். நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 2. பணி செய்தல். முன்னின பணிமுறைமறமுந்துவார் (கம்பரா.ஊர்தேடு. 49). 3. பிறனுக்குதவுதல். பனவனுக்காப் பாமாறி யார்க்கு (குமர. பிர. மீனாட். இரட். 5). 4. கழித்தல். மாறு மென்மலரும் (பரிபா. 6:46). 5. கைவிடுதல். புரிபுநீ புறமாறி (கலித். 15) . 6. மறுத்தல் (யாழ்ப்.). 7. எண் பெருக்குதல். ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம் (நன். 269, மயிலை). 8. அடித்தல் (இ.வ.). க. மாறு. மாறு = 1. வேறுபாடு. மாறிலாத மாக்கருணை வெள்ளமே (திருவாச. 5:91). 2. எதிர். அவன் எதற்கும் மாறாயிருக்கிறான். 3. பகை. மாற்றிரு வேந்தர் (புறம். 42). 4. ஒவ்வாதது. மாறல்ல துய்க்க (குறள். 944). 5. ஒப்பு. மாறன்மையின் ... இளையரையும் எறியான் (சீவக. 2261). 6. மாற்றுருப்படி. மாறு சாத்தி யென் பிழை பொறுப்பீர் (பெரியபு. அமர்நீதி. 24). 7. எதிர்நன்றி (பிரதி யுபகாரம்). வழக்கொடு மாறுகொளன்று (திவ். இயற். பெரிய திருவந். 13). 8. மறுமொழி. மாறெதிர் கூறி மயக்கப் படுகுவாய் (கலித். 116:15). 9. இம்மை நீங்கும் இறப்பு. நகாஅலென வந்த மாறே (புறம். 253). 10. இறப்பின் பின் பிறப்பு. மாற்றிடைச் சுழ லும் நீரார் (மேருமந். 136). 11. குப்பை கூளம் நீக்கும் துடைப்பம். சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும் (பணவிடு. 285). 12. துடைப்பம்போ லுதவும் பருத்தித்தூறு. 13. தூறுபோன்ற வளாறு. (W.). 14. வளாறு போன்ற பிரம்பு. மாற்ற லாற்றுப் புடையுண்டும் (சீவக. 2794). 15. மாறுதல் நேரும் வகை. விளங்கக் கேட்ட மாறு சொல் (புறம். 50). (இடைச்சொல்). 1. ஏதுப் பொருளிடைச் சொல். அனையை யாகன் மாறே (புறம். 4). 2. தொறுப்பொருளிடைச் சொல். பகல் மாறு வருகிறான் = பகல் தொறும் வருகிறான். மாறு - மாறன் = 1. வலிய பாண்டியன். பூந்தார் மாற (புறம். 55) 2. சடத்திற்கு மாறான நம்மாழ்வார் (சடகோபன்). சடகோபன் மாறன் திவ். திருவாய். 2:6:11). 3. மாற்றான். வல்லினைக்கோர் மாறன் (திருவரங்கத்தந். காப். 5). மாறு-மாறல் = ஏது. கரணியம் (முகாந்தரம்) (W.). மாறு - மாற்று = 1. வேறுபடுத்துகை. 2. ஒழிக்கை. மாற்றே மாற்ற லிலையே (பரிபா. 4:53). 3. மாற்று மருந்து. 4. பண்டமாற்று. 5. விலை (யாழ். அக). 6. மாற்றுடை. 7. மங்கல அமங்கல நாள்களிற் பந்தற்குக் கட்டும் வண்ணான் துணிகள். 8. பொன்வெள்ளி உரைமாற்று. மாற்றள வற்ற பொன்னுடுத்தாய் (அட்டப் அழகரந். 2). 9. உரைமாற்று நிறம். (ஈடு. 4 3 7 ஜீ). 10. எதிர். (யாழ். அக.). 11. ஒப்புமை. மாற்றிரி யாடிப் பாவையோடு (ஞானா. 6:20). 12. வலிமை. மாற்றாரை மாற்றழிக்க வல்லாளை (திவ். திருப்பா. 15). 13. ஓரேர் மாடு ஒருநாளில் உழக்கூடிய நிலம் (W.). மாற்று - மாற்றம் = 1. மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தின் (திருவாச. 1:81). 2. வஞ்சின மொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறம். 341). 3. பகை. மாறுகொ ளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3). 4. கடிவு (பரிகாரம்). 5. மாறிச் சொல்லும் விடை. மறுதலைக் கடாஅ மாற்றமும் (தொல். மரபு. 105) 6. சொல். விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள். 689). மாற்றம் ... சொல்லே (நன். 458). 7. பேச்சு. மாற்ற முரைக்கும் வினை நலம் (நான்மணி. 45). தெ. மாட்ட. க. மாத்து. மாத்தனு. பட. மாந்த். ஒ.நோ: It. motto. word, F. mot (mo), word, saying. முல் - முள் - முண் - முண - முணவு - முணகு - முணங்கு. முணங்குதல் = 1. உள்வளைதல். உள்ளடங்குதல். 2. அடங்குதல் (W.). 3. குரலையடக்கிப் பேசுதல். முணங்கு = 1. சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைபு. முடக்கம். சோம்பு (இலக். அக.). 2. அடக்கம் (சூடா.). முணங்கு நிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முணங்குநிமிர் வயமான் (புறம். 52). முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறம். 78). முணங்கு - முணக்கு முணக்குதல் = உள் வளைத்தல். வள்ளுகிர் முணக்கவும் (நற். 114). முரி = வளைவு. முரி - மூரி = சோம்பல் முறித்தல். மூரிநிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முணகு - முனகு. முனகுதல் = குரலையடக்கிப் பேசுதல். முணகு - முனங்கு. முனங்குதல் = 1. குரலையடக்கிப் பேசுதல். முணுமுணுத்தல். 2. புலம்புதல். 3. முறுமுறுத்தல். ஒ.நோ: OE moen, obs. mean, E. moan, to make a long low murmur of physical or mental suffering. to complain, to lament misfortune, to lament for dead person. முண் - மண் - மாண் = மடங்கு. பன்மாண் (பரிபா. 13:62). x.neh.: = E. fold. மடி. மடங்கு. மண் - மணி1 = (வட்ட வடிவான பொருள்கள்). 1. நாழிகை வட்டில். 2. ஒரு நாழிகை நேரம். 3. கோபுர நாழிகை மணி. 4. நாழிமணி. 5. கைம்மணி. 6. பெருவட்ட மணிப் பலகை (gong). 7. சிறுவட்ட மணிப் பலகை (சேகண்டி). 8. அறுபது நிமைய நேரம் (இக்.) 9. கடிகாரம் (இக்.). 10. மணிக்கூண்டு. மணி2 = (உருண்டை வடிவான பொருள்கள்) 1. கண்மணி. கரு மணியிற் பாவாய் (குறள். 1123). 2. பொன்மணி. மணியிரு தலை யுஞ் சேர்த்தி (சீவக. 977). 3. பாசிமணி. 4. கூலமணி. 5. உருத்தி ராக்கமணி. மாசிலாத மணிதிகழ்மேனி (பெரியபு. திருக்கூட்ட. 6). 6. சிறுமணியரிசி. 7. பெருமணியரிசி. 8. வலையோரத்திற் கட்டிய குண்டு. இனமணி விளிம்புறக் கோத்து (திருவாலவா. 22:13). 9. மீன்வலை முடிச்சு. மணிவலை. 10. நண்டு. தேள் முதலியவற்றின் கொடுக்குமணி. முள் - முட்டு - முட்டை = 1. உருண்டையான பறவை முட்டை. புலவுநாறு முட்டையை ..... கிழங்கொடு பெறூஉம் (புறம். 176). 2. உலகக் கோளம். திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது (கம்பரா. திருவடி. 66). 3. சாணியுருண்டையை வட்டமாகத் தட்டிக் காயவைத்த வறட்டி. நெருப்புக்கு முட்டையும் (அருட்பா. 1. திருவருள். 105). 4. வட்டச் சிறுகறண்டி. ஒரு முட்டை நெய் (பதினொ. கோடித். 16). ம. முட்டை. க. முட்டெ. முட்டைக்கண். முட்டைக் கண்ணீர். முட்டைக் கத்தரி. முட்டைக் காளான். முட்டைக் கோசு முதலிய காட்டுச் சொற்கள் உருண்டை வடிவான பொருள்களைக் குறிப்பன. முட்டு - முட்டான் = 1. மஞ்சட்கிழங்கு. 2. திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை. திருநீற்றிற்கு முட்டான் போடு (உ.வ.). முட்டு - முட்டி = பேய்க் கொம்மட்டி. முள் - முண்டு = உருண்டகட்டை. முண்டும் முடிச்சும். முண்டு - முண்டான் = மஞ்சட்கிழங்கு. முண்டு - முண்டை = 1. முட்டை. முண்டை விளைபழம் (பதிற். 60:6). 2. கருவிழி. முண்டை - மிண்டை = கருவிழி. விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் (கலித். 108, உரை). முட்டு - முத்து = உருண்டையான விதை. குருக்குமுத்து. குறுமுத்தம் பழம் = நீளுருண்டை வடிவான மிதுக்கம்பழம். முண் - முணம் - முடம் = 1. வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறம். 307). 2. வளைந்தது. முடத்தாழை (கலித். 136). அல்லோர்க் களிக்கு மது முடத் தெங்கே (நன். 35). 3. கைகால் வளைவு. 4. ஆடல் பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப். 3:46). முடம் - முடவன் = 1. நொண்டி காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ). 2. அருணன் (அக.நி). 3. காரி (பிங்.). முடம் - முடவு. முடவுதல் = நொண்டுதல் (யாழ்ப்.). முடவாண்டி (முடம் + ஆண்டி) = கொங்க வெள்ளாளர் குலத்திற் பிறக்கும் பிறவி முடக்குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இரப்போர் வகையினர். முடம் - முடல் - முடலை = 1. உருண்டை (பிங்.) 2. முறுக்கு. திருகல். முடலை விறகின் (மணிமே. 16:26). 3. முருடு. (திவா.). 4. கழலை. (அக. நி.). 5. மனவன்மை. நன்றுணராய முடலை முழுமக்கள் (பழ. 25). 6. பெருங் குறடு (அக. நி.). முடங்கொன்றான் - முடக்கொற்றான் = முடச் சூலையைப் போக்கும் கொடிவகை. முடம் - முடந்தை = 1. முடம். 2. வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற். 32:13). 3. விடாய்க் கட்டுநோய் (M.L.). முடம் - முடங்கு. முடங்குதல் = 1. வளைதல். அடங்கினன் முடங்கியலம்வந்து (உத்தரரா. வரையெடுத்த. 72). 2. உடம்பை வளைத்துப் படுத்துக் கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103). 3. தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கு (பதினொ. பொன்வண். 64). 4. சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை மும். 22). 5. கைகால் வழங்காமற்போதல். கைகால் முடங்கு பொறியிலி (பிரபுலிங். துதி. 1). 6. தடைப்படுதல், வேலை முடங்கிவிட்டது. 7. கெடுதல். சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372). தெ. முடுகு (g), க. முடுகு. முடங்கு = 1. முடக்குச் சூலைநோய். 2. தெருவளைவு. 3. தெருச்சந்து. முடங்கல் = 1. மடங்குகை (சூடா.) 2. சுருளோலைக் கடிதம் மண்ணுடை முடங்கல் (சிலப். 13: 90). 3. முடக்குச் சூலை (சூடா.). 4. முடத்தாழை (பிங்.). 5. பணம் முடங்கிக் கிடக்கை. 6. தடைப் படுகை. முயலு நோன்பு முடங்கலிலான் (சேதுபு. முத்தீர். 6). 7. சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30). முடங்கர் = ஈன்றணிமையில் உண்டாகும் சோர்வு. குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகம். 147). முடங்கி = 1. நோயாற்கிடையாய்க் கிடப்ப-வன்-வள். 2. நிலத்தின் மூலை நீட்டம். முடங்கு - முடக்கு = 1. வளைவு. பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற் போல சீவக. 510. உரை). 2. தெருவின் கோணம். 3. முடக்கு மோதிரம். நெளி (நெடுநல், 143-4, உரை), 4. மறைந்து அம்பெய்யும் முடக்கறை (பு. வெ. 5:1), கொளு). 5. முடங்கும் நாக்கு. அண்ண மூடெழ முடக் கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280). 6. முடக்கு நோய். 7. தடை. 8. காலத்தாழ்ப்பு. 9. வேலையின்மை. க. முடுக்கு. முடக்கு - முடக்கன் = தாழை. (சங். அக.). முடங்கு - மடங்கு. மடங்குதல் = 1. வளைதல். படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94 : 9). 2. மடக்குதல் (திவா.). 3. கோணுதல். 4. வளைந்து செல்லுதல். 5. மீளுதல் (பிங்.). 6. சொல் திரும்ப வருதல். 7. திருகுருதல் 8. நெளிதல். 9. சுருங்குதல். 10. ஒடுங்குதல் 11. குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23:119). 12. கீழ்ப்படுதல். காரொலி மடங்க ... களத்தி னார்த்த பேரொலி (கம்பராநா கபாச. 291). 13. தாழ்தல். 14. செயலறுதல். உழவினார் கைம் மடங்கின் (குறள். 1036). 15. சினமடங்குதல். 16. நிறுத்தப்படுதல் மண்டம ரின்றொடு மடங்கும் (கம்பரா. கும்ப. 267). 17. தடை யுண்ணுதல். 18. வாயடங்குதல். 19. ஒருவன் சொத்து இன்னொரு வன்பாற் சென்றடைதல். மடங்கு = மடி. அளவு. இருமடங் காக வெய்தும் (சூளா கல்யா. 165). மடங்கு - மடக்கு. மடக்குதல் = 1. வளைத்தல். 2. மடித்தல். வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17). 3. மடித்து உடுத்துதல். மடக்கினார் புலியின் றோலை (தேவா. 955:1). 4. திருப்புதல். செய்யுளில் எழுத்துஞ் சொல்லும் அடுத்தடுத்துத் திரும்பத்திரும்ப வருமாறமைத்தல். 5. மாறிமாறிச் செய்தல். 6. வென்று கீழ்ப்படுத்துதல். 7. வாயடக்குதல். 8. கால்நடை களை விளைநிலத்தில் உரத்திற்காக இராவேளையில் ஒருசேர அடக்கி வைத்தல். 9. பொருள்களைத் தன்வயப் படுத்துதல். 10. பணிவாக்குதல் 11. தடுத்தல். 12. அழித்தல். மடக்குவா யுயிரை யென்னா (கம்பரா. கும்பக. 188). மடக்கு = 1. வளைவு. 2. மூலைமுடுக்கு. 3. திருப்பு. 4. மடிப்பு. 5. மடக்குக் கத்தி. 6. மாறிமாறி வருகை. 7. செய்யுளில் எழுத்து கொல்சீர் முதலியன அடுத் தடுத்து மீண்டும் மீண்டும் பொருள் வேறுபட்டு வருவதாகிய சொல்லணிவகை. 8. தடுப்பு. 9. தடை. மடக்கு - மடக்கம் = 1. வளைவு 2. வணக்கம் 3. பணிவு. 4. மனவடக்கம் 5. நோய் திரும்புகை. மடங்கு - மடங்கல் = 1. வளைகை (திவா.). 2. கோணம் 3. தாழை (அக. நி.). 4. முற்றிவளைந்து சாய்ந்து கதிர். 5. முன்னும் பின்னும் திரும்பி நோக்கிச் செல்வதாகச் சொல்லப்படும் அரிமா. மடங் கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு.வெ.324). 6. அடக்கம். 7. ஒடுக்கம் மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 144). 8. உயிர் களைக் கவருங் கூற்றுவன் மடங்கல்போற் சினைஇ (கலித். 2.). 9. உலகொடுங்கும் ஊழிக்காலம். மடங்கற் காலை (கலித். 120). 10. உலகழிக்கும் வடவைத்தீ. மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல் (பதிற். 62. 8). 11. ஊழி முடிவு. முண்டு - மண்டு - மண்டி = காலை முடக்கி முழங்காலால் நிற்கை. ஒருகால் மண்டியாக ... மடித்துவைத்து (புறம். 80, உரை). மண்டிபோடுதல். மண்டியிடுதல் என்னும் வழக்குகளை நோக்குக. முட்டு - மட்டு - மட்டி. மட்டித்தல் = (செ. கு. வி.) மண்டலித்தல், வட்டமாதல். (செ. குன்றாவி) வட்டமாக்குதல். திரடோள்கண் மட்டித்தாட (தேவா. 12:3). மண்டு - மண்டலம் = 1. வட்டம் (பிங்.). சுடர்மண்டலம் (திருநூற். 80). 2. வட்டவடிவம் (திவா.) 3. கதிரவனையுந் திங்களையுஞ் சுற்றித் தோன்றும் கோட்டை (பரிவேடம்). 4. கதிரவன் பரிப்பு (கிராந்தி வீதி). 5. பாம்பின் சுற்று. மண்டலம் பயிலுரகர் (பாரத. குருகுல. 3). 6. வட்டவடிவான அல்லது சக்கரவடிவான படையமைப்பு (குறள். 767 உரை). 7. நாட்டின் பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்பு. 94). 8. வானவெளிப் பகுதி. முகில் மண்டலம் 9. நாட்டின் சிறுபகுதி. ஊர் (பிங்.). 10. மந்திரச் சக்கரம் 11. மண்டில நிலை (பிங்.). 12. நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாள் கொண்ட மருத்துவக் காலவட்டம். 13. குதிரைச் செலவு வகை. பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றி னானே (சீவக. 795). 14. நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியுங் கூடி வளைந்திருக்க. மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை). 15. வில்லோர் நிலையுளொன்று (சூடா.). 16. மேலுலகம், பரமண்டலம். மண்டலம் - வ. மண்டல. மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் - 1. வளைத்தல் 2. பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 3. வில்லாளி காலை வளைத்து வட்டமாக்குதல். 4. இறுதியடியின் அல்லது இறுதிப் பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்று. முதலடியின் அல்லது முதற்பாட்டின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்றாய் வருமாறு. செய்யுளிசைத்தல். மண்டலி - மடலி. மடலித்தல் = மடங்கித் திரும்புதல் (யாழ். அக.). மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்ட வடிவம். 3. வட்டக் கண்ணாடி. மையறு மண்டிலம் போலக் காட்ட (மணிமே. 25:137). 4. கதிரவன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442) 5. திங்கள், செய்வுறு மண்டிலம் (கலித். 7). 6. ஞாலம். கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 7. கதிரவனையுந் திங் களையுஞ் சுற்றிடப்படும் கோட்டை (பிங்.). 8. வட்டமாயோடுகை. செலவொடு மண்டிலஞ் சென்று (பு. வெ. 12. வென்றிப் 14). 9. குதிரைச் செலவுவகை (நாமதீப. 732). 10. வானவட்டம் (பிங்.). 11. நாட்டின் பெரும்பகுதி மண்டிலத் தருமையும் (தொல். அகத். 41) 12. நாட்டின் சிறு பகுதி. ஊர் (பிங்.). 13. கூத்தின்வகை. மண்டிலயாப்பு = நாற்சீரடிச் செய்யுள். ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப (தொல். செய். 114). மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர் (தொல். செய். 116) இங்ஙனம் மண்டில யாப்புத் தொல்காப்பியத்திலேயே சொல்லப் பட்டிருத்தலையும் என்மனார் புலவர் என்னும் முன்னூல் பலவற்றைக் குறிக்குந் தொடரையும் ஊன்றி நோக்குக; நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்னும் அகவற்பா வகைகள். தொன்றுதொட்டு வழங்கி வருவன. தமிழ் யாப்பு முறை முற்றும் ஆரியச் சார்பற்றது. மண்டில மாக்கள் = நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள். பழஞ் சோழநாட்டின் பிரிவான தொண்டை மண்டலமும். பழஞ் சேர நாட்டின் பிரிவான கொங்கு மண்டலமும் போன்ற பல மண் டலங்கள், முதற்காலத்தில் மண்டில மாக்கள் அல்லது மண்ட லிகர் என்னும் அதிகாரிகளாலேயே ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். அவர்கள் அரச குடும்பத்தினராகவோ, உழுவித்துண்ணும் வேளாண் தலைவராகவோ, குறுநில மன்னராகவோ, தண்டத்தலைவராகவோ இருந்திருக்கலாம். எண்ணூற்றுக் காவத அளவு முழுகிப்போன பழம் பாண்டி நாடான செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலமும் பனிமலை வரை பரவியிருந்த பழஞ் சேர சோழ நாடுகளும், இருந்த முது பழங்காலத்தில், முத்தமிழ் வழங்கிய முந்து தமிழகம் எத்துணையோ மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு மண்டலிகரால் ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். பாண்டியன் குடிப்பெயர்களுள் ஒன்றான பஞ்சவன் என்னுஞ் சொல், முதலிரு கழகக்கால அல்லது தலைக் கழகக்காலப் பாண்டியர், துணையரையர் (அல்லது மண்டலிகர்) ஐவரைக் கொண்டு நாடாண்டமையை யுணர்த்தும். பஞ்சவ னீடு கூனும் என்று 15 ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதர் பாடியதுபோன்றே. பழியொடு படராப் பஞ்சவ வாழி என்று 2 ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகளும் பாடியிருத்தல் வேண்டும். அஞ்சவன் என்னுஞ் சொல்லே, பிற்காலத்தில் வடமொழியிலும் தென்மொழியிலும் பஞ்சவன் என்று திரிந்ததாகத் தெரிகின்றது. (கை-ஐ-ஐயது-ஐது-ஐந்து-ஐந்தவன்-ஐஞ்சவன்-அஞ்சவன்-பஞ்சவன்). ஒ.நோ: அப்பளம் - தெ. அப்படமு. க. பப்பள - ம. பப்படம் - வ. பர்ப்பட்ட. அப்பளக்கட்டையால் மாவை அப்பளித்தமைப்பது அப்பளம். முண்டு, மண்டு, மண்டி, மண்டலம் மண்டலிகன், மண்டலித்தல், மண்டிலம் முதலிய சொற்கள் மேலையாரிய மொழிகளில் இல்லை. Mandalin (Dim. Mandolinde) என்னும் இத்தாலிய நரப்பிசைக் கருவிப் பெயரும், மண்டலியாழ் என்னும் தென்சொல்லின் திரிபாய் இருத்தல் வேண்டும். தமிழின் தென்மை, தொன்மை, முன்மை முதலிய தன்மைகளை நடுநிலையாக ஆராய்ந்தறிந்தவர்க்கு. மேற்கூறியவையெல்லாம் வெள்ளிடை மலையாம். முண்டு - முண்டி - முடி. முடிதல் = வளைந்து அல்லது சுற்றிக் கட்டுதல். முடித்தல் = 1. கூந்தலைக் கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6:7:8). 2. பூமாலை கொண்டையிற் கட்டி யணிதல். கைபுனை கண்ணி முடித்தான் (கலித் 107:15). முடி = 1. பறவை பிடிக்குங் கண்ணி (noose). 2. கட்டு. மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுதல் (உ.வ.). 3. முடிச்சு (knot). கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக் 256). 4. உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.). 5. நாற்றுமுடி. வழிமுடி நடுநரும் கல்லா. (45:14). முடி-முடிச்சு = 1. கட்டு. முடிச்சவிழ்த்தல். 2. மயிர்முடி. 3. சிறுமூட்டை மூட்டை முடிச்சு. 4. உள்நார் சுருண்ட கட்டை. முண்டும் முடிச்சுமாயிருக்கிறது. முடி - முடிப்பு = கிழி, பணமுடிப்பு. முடி - மடி. மடித்தல் = மடக்குதல். சேலையை மடித்தல். மடி = 1. மடிப்பு. மடித்த சேலை. 2. மடங்கு. இருமடியாகு பெயர். 3. மடித்த அரை யாடைப் பை (lap). 4. ஆவின் பான்முலை. 5. முடங்கித் தூங்கும் சோம்பல். மடியென்னும் மாசூர (குறள். 601). 6. கட்டுக்கிடைச் சரக்கு, மடியரிசி. 7. கட்டுக்கிடைச் சரக்கு வீச்சம், மடிநாற்றம் 8. தூய்மையின்மை. மடியாயிருக்கிறேன். மடி - மடிப்பு = 1. வளைப்பு. 2. திரைப்பு. முல்6 - (துளைத்தற் கருத்துவேர்) முல் - மூல் - மூலம் = துளைவழி, வழி, வாயில், காவிரிநீர் குழாய் மூலமாகக் கொண்டுவரப்படும், பொத்தகம் அஞ்சல் மூலம் அனுப் பப்படும், வருமான வரியைக் கணக்கர் மூலம் செலுத்தினேன். மூலம் - மூலியம் = வாயில், யார் மூலியமாய்ச் செய்தி தெரிவித் தாய்? (உ.வ.). முல் - முள் - முள்கு. முள்குதல் = உட்செல்லுதல். அமர்க்க ணாமா னருநிற முள்காது (நற். 165). முள் - முண் - மண். மண்ணுதல் = 1. முழுகுதல். பனிக்கய மண்ணி (புறம். 79). 2. நீராடுதல். குடுமி கொண்ட மண்ணுமங் கலமும் (தொல். புறத். 13). 3. கழுவுதல் மண்ணி மாசற்றநின் கூழையுள் (கலித். 107). மண்ணுறுத்தல் = 1. மஞ்சன மாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). 2. கழுவுதல். (திருமுருகு. 25, உரை). முள் - மூள் = மூளி = 1. துளையுள்ளது. 2. துளையறுந்தது. 3. உறுப்பறை. 4. உறுப்புக் குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26). 5. உறுப்புக் குறையுள்ள பொருள். எல்லாம் மூளியும் காளியுமாய்க் கிடக்கிறது (உ.வ.). 6. குறைவுள்ள கருமம். அவன் வராமையால் அந்தக் கருமம் மூளியாய்ப் போயிற்று. 7. காதணி யில்லாதவள். 8. பெண்ணைக் குறித்த ஒருவசைச் சொல். 9. பெண்ணைக் குறிக்கும் பொதுச்சொல். ஒரு நாழியாலும் வரும். ஒரு மூளியாலும் (மூழியாலும்) வரும் (பழ.). = ஒரு வீட்டிற்கு ஆக்கம் அளக்கும் நாழியாலும் வரும்; வந்த மருமகளாலும் வரும். மூளிக்காது = 1. அணியில்லாக் காது. 2. அறுபட்ட காது. மூளிக்காதி = காதணியில்லாதவள். ஒரு வசைச்சொல், ஆயின், கிழவியரைத் தாக்காது. மூளிக்குடம் = ஒரு மருங்கு வாயுடைந்த குடம். மூளி நாய் = காதறுபட்ட நாய். மூளியுதடு = பிளந்த வுதடு. மூளியோடு = சிதைந்த ஓடு. மூளி - மூழி = 1. உட்குழிந்த அகப்பை (திவா.). 2. நீர்க்கலம். மயிற் பீலியோடு மூழிநீர் கையிற் பற்றி (பெரியபு. திருஞான. 601). 3. நீர்நிலை (பிங்.). 4. துழாவிக் கடையும் மத்து (W.). மூழிவாய் - பூக்கூடை மூழிவாய் முல்லை மாலை (சீவக. 833). மூள் - மூளை = 1. எலும்பின் உள்ளீடு. 2. மண்டையின் உள்ளீடு. மூளையார் சிரத்து (திவ். பெரியதி 4:2:8). 3. மதி. அவனுக்குச் கொஞ்சங்கூட மூளையில்லை (உ.வ.). ம. மூள. ஒ.நோ: வ. மஜ்ஜா. OE. mearg, OS., OHG. marg, ON. mergr, E. marrow. முள் - முழ - முழுகு. முழுகுதல் = 1. குளித்தல். 2. அமிழ்ந்து போதல். கப்பல் முழுகிவிட்டது. 3. வினைமுயற்சியில் அழுந்தி யிருத்தல். 4. தீர்க்க முடியா அளவு கடன் மிகுதல். அவன் கடனில் முழுகி விட்டான். ம. முழுகுக. க. முழு, முழுகு. தெ. முனுகு (g). முழுகு - முழுசு. முழுசுதல் = உட்புகுதல். முழுசி வண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2:8:7). முழுசு - முழுது - முழுத்து. முழுத்துதல் = அமிழ்த்துதல். துதிக்கை முழுத்திற்று (ஈடு. 3:5:1). முழுத்து - முழுத்துவி. (பி.வி.). முழுத்துவித்தல் = அமிழ்த்துவித்தல். மன்னவரை.... முழுத்து விப்பன் செங்குருதி முன் (பாரவெண்.126). முழுகு - முழுக = முழுவதும். மதிலு மாடமு மாடகச் செய்குன்று முழுகக் குழாமீண்டி (திருவாரூ. 142). முழு - மூழ். மூழ்த்தல் = மூழ்கச் செய்தல். மூழ்த்த நாளந் நீரை மீனா யமைத்த பெருமானை (திவ். பெரியதி. 6:8:2). முழுகு - மூழ்கு. மூழ்குதல் = 1. புகுதல். வான மூழ்கிச் சில்காற் றிசைக்கும் (மதுரைக். 357). 2. அழுந்துதல். சுரையம்பு மூழ்க (கலித். 6). 3. அமிழ்தல். வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6 41). 4. தங்குதல். முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து (கலித். 16). 5. மறைதல். வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண். 170). மூழ்க அடித்தல் - மூழ்கடித்தல் = மூழ்கச் செய்தல். முழுத்து - மூழ்த்து. மூழ்த்துதல் = ஆழ்த்துதல். முழுகு = L. mergo, mergere, F. merger, E. merge. இதினின்று emerge, submerge முதலிய சொற்கள் பிறக்கும். L. mers. இதினின்று immerse, submerse முதலிய சொற்கள் பிறக்கும். முழுகு - முழுங்கு. முழுங்குதல் = (செ. கு. வி.) முழுகுதல். (செ. குன்றாவி.). தொண்டைக்குள் அல்லது வயிற்றிற்குள் முழுகச் செய்தல், விழுங்குதல், மடு முழுங்கி = ஒருவகை நெல். தெ. மிங்கு. முழுங்கு - விழுங்கு. விழுங்குதல் = பெரும்பாலும் மெல்லாமலும் வாய்க்குள் வைத்திராமலும் அல்லது பல்லிற் படாமலும் வயிற்றிற்குள் ஒரேயடியாய்ப் புகுத்திவிடுதல். ஒ.நோ: முடுக்கு - விடுக்கு. முறப்பு - விறப்பு. முழுங்கு - முங்கு. முங்குதல் = 1. நீருள் முழுகுதல். கிள்ளை ... முங்கி யெழும் (இரகு. தேனு. 14). 2. அமிழ்ந்துபோதல். முன்னிய வங்க முங்கிக் கேடுற (மணிமே. 29 : 16). 3. முழுக்கிய நீர்போல் நிரம்பி யிருத்தல். கொலை முங்குங் கனலிடுமால் (இரகு. நகரப். 25). தெ. முங்கு. ம. முங்ஙு. முங்குளிப்பான் (முங்கிக் குளிப்பான்) = நீரில் மூழ்கி யிரைதேடும் உள்ளான் என்னும் பறவை. முழுகு - முழுக்கு. முழுக்குதல் = முழுகச் செய்தல். அயில்களும் வாளுந் தோள்களின் முழுக்கினர் (கம்பரா. அதிகாய 98). க. முழுகிசு (g). முழுக்கு = 1. குளிப்பு. பல தீட்டுக்கு ஒரு முழுக்கு (உ.வ.). 2. அமிழ்வு. முழுக்காடுதல் = எண்ணெய் தேய்த்துக் குளித்தல். எண்ணெய் சேர்த்தே முழுக்காடுவார் (அறப். சத. 50). க. முழுக்காடு. முழுக்காட்டுதல் = எண்ணெய்க் குளிப்புச் செய்வித்தல். கடல் வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ சௌந்த. 103). முழுக்காளி = 1. முத்துக் குளிப்போன் (W.). 2. இழவிற்குக் குளிக்க வேண்டிய நெருங்கிய உறவினன். முழுகவிடுதல் = 1. பொருள் தொலையும்படி விடுதல். 2. அடைவு வைத்த பொருளை மீட்க முடியாதிருத்தல். முழுகாமலித்தல் = கருவுற்றிருத்தல். அவன் மனைவி மூன்று மாதம் முழுகாமலிருக்கிறாள். முழுகிக் கிடத்தல் = 1. நீரில் அமிழ்ந்திருத்தல். அடைமழையினாற் பயிர் முழுகிக் கிடக்கின்றது (உ.வ.). 2. கடலடியிற் கிடத்தல். பன்மலையடுக்கக் குமரிக்கோடு இந்துமாவாரியில் முழுகிக் கிடக் கின்றது. 3. முழுவதும் முடங்கிக் கிடத்தல். அவன் சொத்து முழுதும் வணிகத்தில் முழுகிக் கிடக் கின்றது (உ.வ.). 4. ஆழ்ந்து ஈடுபட் டிருத்தல். அவன் காமக் களியாட்டில் முழுகிக் கிடக்கிறான். முழுகிப்போதல் = 1. அமிழ்ந்து போதல். நேற்று வந்த பெரு வெள் ளத்தில் ஊர் முழுதும் முழுகிப் போயிற்று (உ.வ.). 2. அடியோடு கெடுதல். சூதாட்டினால் அவன்குடி முழுகிப் போயிற்று (உ.வ.). 3. அடைவு வைத்த சொத்து மீட்க முடியாவாறு கடனுக்கு உட் பட்டுவிடுதல். அவன் அடைவுவைத்த நிலம் முழுவதும் முழுகிப் போய்விட்டது (உ.வ.). முழுக்கு - முக்கு. முக்குதல் = 1. நீருள் முழுகுவித்தல். தீர்த்தம் ... அதிலெனை முக்கி யெடுத்து (தணிகைப்பு நந்தி. 60). 2. தலை மறைய (முழுகு) நீர்மட்டம் உயர்தல் அல்லது நீராழம் மிகுதல். நடு ஆற்றிற் போகும் போது தண்ணீர் அவனை முக்கிவிட்டது (உ.வ.). முக்கு - முக்குவன் = நுளையன், முத்துக் குளிப்பவன் அல்லது நீருள் முழுகி அல்லது வலையை நீரில் முக்கி மீன் பிடிப்பவன் (?). கடல் முக்குவன் = கடல் மீன் பிடிப்போன். முக்குவர் இலங்கை யிலும் பழஞ்சேர நாடாகிய கேரளத்திலும் உள்ளனர். சேரநாட்டு முக்குவர் ஈழவருடனும் முகவருடனும் இலங்கையினின்று வந்ததாகச் சொல்லப்படுவர் என்று, குண்டர்ட்டு தம் மலையாள - ஆங்கில அகரமுதலியிற் கூறுவர். முக்குளித்தல் (முங்கிக் குளித்தல்) = முழுகுதல். இரைகவர் ஞெண்டு முக்குளித்தூறு மளறு கிடங்கில் (திருச்செந். பிள்ளை. செங்கீ. 10). தெ. புக்கிளிஞ்சு (pukkulintsu). முக்குளிப்பான் (முங்குளிப்பான்) = உள்ளான் என்னும் சிறிய நீர்ப்பறவை வகை. முழு - முகு - முக முகத்தல் = 1. (நீரைக் குழித்தல் அல்லது துளைத் தல் போல) மொள்ளுதல். 2. நீர்ப்பொருளையுங் கூலப் பொருளை யும் கலத்தால் அல்லது படியால் மொண்டளத்தல், முகத்தலளவை. 3. தாங்கி யெடுத்தல். முகந்துயிர் மூழ்கப் புல்லி கம்பரா. கும்ப கர்ண. 129). 4. விரும்புதல். மூர்க்கரை மூர்க்கரை முகப்பர் (நல்வழி. 24). க. மொகெ (g). முக-மோ. மோத்தல் = மொள்ளுதல் (தைலவ. தைல). முக - முகவை = 1. மொண்டுகொள்ளுதல். 2. முகத்தலளவை. 3. நீர் முகக்குங் கருவி. கயிறுகுறு முகவை (பதிற். 22:14). 4. அகப்பை (W.). 5. மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள். புகர்முக முகவை (புறம். 371). 6. நெற்பொலி. முகவைப் பாட்டு = களத்திற் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்டு. பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும் (சிலப். 10: 137). முகக்கக் கொடுத்தலின் முகவையாயிற்று (மேற்படி. உரை). முக - முகில் = 1. கடல் நீரை முகந்து கொள்ளுவதாகக் கருதப்பட்ட மழைவான். கனையிருள் வானங் கடன்முகந்து (கலித். 145). முகிலுரிஞ்சுஞ் சூழி (பு.வெ. 6:22). 2. திரள் (பிங்.). க. முகில் (g), தெ. மொகுலு (g). முழு - முழை. முழைத்தல் = துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 17). முழைதல் = நுழைதல் (உ.வ.). முழை = 1. குகை. அவ்விசை முழையேற் றழைப்ப (பரிபா. 19:63). 2. துளைத்தல்போல் துழாவும் துடுப்பு (W.). முழை - முகை = குகை. கன்முகை வயப்புலி (ஐங். 246). 2. மிடா. (பிங்.). ஒ.நோ: குழை - குகை. முழை - முழைஞ்சு = 1. துளை. குழன் முழைஞ்சு களினூடு குமிழ்த்து (திவ். பெரியாழ். 3:6:11). 2. குகை. மாரி மலைமுழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா. 23). முழை - மூழை = 1. குழிந்த இடம். குன்றையம் மூல மூழைவாய் வைத்து (கம்பரா மருத்து. 116). 2. உட்குழிந்த அல்லது சமைத்த உணவை முகக்கும் அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி. 321). 3. துழாவிக் கடையும் மத்து (சது.). முள் - மள் - மடு = 1. ஆற்றிடைப் பள்ளம். ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம் (நல்வழி. 32). 2. அருவி விழும் பள்ளநீர்க் குண்டு. மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை (உ.வ.). 3. ஆற்றிடைக் குட்டை கங்கை வருநீர் மடுவுள் (திருவாச. 6:26). 4. ஆவின் பால்மடி. மடுவங்கரை = குளக்கரை. மடுத்தல் = வாயில் வைத்தல், உண்ணுதல். மடுத்தவ னஞ்சமுதா (தேவா. 238 : 3). 2. விழுங்குதல். வரவர வாய்மடுத்து (நீதிநெறி 64). 3. ஊட்டுதல். ஒண்டொடி மகளிர் மடுப்ப (புறம். 56). 4. நிறைத்த (W.). 5. சேர்த்தல். பிணக்குவை கொண்டோடிக் .... கடல் கங்கை மடுத்திடை தூராதே (கம்பரா. குகப். 21). 6. அடக்கிக் கொள்ளுதல். மடுத்து மாமலை யேந்தலுற்றான். (தேவா. 823:10). 7. உட்புகுத்துதல். குத்துதல். கூர்நுதி மடுத்தத னிறஞ்சாடி (கலித். 52:3). 8. அமிழ்த்துதல். ஞான வாரி மடுத்து (சி.சி.8:16). 9. உட்செலுத்துதல். மதியொடு பாம்பு மடுப்பென் (கலித். 144: 21). 10. மோசம்பண்ணுதல். அவனை மடுத்துவிட்டான் (இ.வ.). மடுவிடுதல் = 1. ஆற்றில் மடுவுண்டாதல். 2. கன்றைத் தாய்ப்பால் குடிக்க விடுதல். க. மடு. மடுப்படுத்தல் = ஆழ்ந்திருத்தல். மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள். (தேவா. 80:10). மடு - மடம்1 = கோழிகளை உள்ளடைக்கும் சுடுமண் கிடாப்பு. மடு - மடம்2 = 1. இரப்போர்கு உணவளிக்குமிடம் அல்லது இரப் போர் உண்டு தங்குமிடம். 2. துறவியர் தங்குமிடம். 3. வழிப் போக்கர் தங்குமிடம். 4. ஊர்ப் பொதுக் கட்டடம். இராமடமூட்டுதல் = ஆண்டுமாறிகளும் அடங்காப்பிடாரிகளு மான பிள்ளைகள் பெற்றோரைவிட்டுப் பிரிந்து பலவூர் சுற்றித் திரிந்து பல்லாண்டுகட்குப் பின் தம்மூர் மடத்தில் வந்து தங்கி யிருக்கும்போது. அவர் பெற்றோர். தம் உறவைக் காட்டிக் கொள்ளாமலே, தம் பேரன்பினால் அவர்க்கு அறுசுவை நல் லுண்டிகளை இராத்தோறும் ஆள்வாயிலாகப் படைத்து வரல். (ஈடு. 1:1:5). சங்கரநயினார் கோவிலில், அயலூரினின்று கட்டுச்சோறு கொண்டு வருவார் தங்கியுண்ண ஒரு மடமிருந்தது. அது கட்டுச்சோற்று மடம் எனப்பட்டது. சிவகாசியருகில், திருவில்லிபுத்தூர் செல்லும் பெருஞ்சாலைமேல், வழிப்போக்கர்க்குப் புளித்த தண்ணீர் வழங்க ஒரு மடமிருந்தது. அது புளித்த தண்ணீர் (புளிச்சாணி) மடம் என்னப்பட்டது. இன்றுள்ள தருமபுர திருவாவடுதுறை திருப்பனந்தாட் சிவமடங் களும், பெருஞ்செல்வங் கொண்டனவேனும், உண்மையில் துறவியர் உண்டுறையும் இடங்களே ஆதலால் மடம் என்னும் சொல், மடுத்தல் (உண்ணல்) என்னும் வினையை அடிப்படையாகக் கொண்ட தென்சொல்லே. வடமொழியாளர் தென்னாடு வந்தபின், மட்ட (matha) என்று திரித்துக் கொண்டனர். அதற்கு வடமொழியில் மூலமில்லை. மேலும், ஆரியர் வருமுன்னரே தமிழகத்திற் பேரூர் தொறும் மடமிருந்தது. மடு - மடை. 1. தொளை (திவா.). 2. வாய். 3. குளத்திற்கு வாய்போன்ற மதகு. உழவ ருடைத்த தெண்ணீர் மடை (தஞ்சைவா. 151). 4. மதகுபலகை. 5. நீரணை. 6. ஓடை. மடைதோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர் (தேவா. 372:9). 7. அணிகலக் கடைப்பூட்டு. மடையவிழ்ந்த ... வேல் (சீவக. 293). 9. அழுத்தின ஆணி. மடைகலங்கி நிலைதிரிந்தன (புறம். 97). 10. உண்ணுஞ்சோறு (பிங்.). 11. சமையல் வேலை. அடுமடைப்பேய்க்கெலாம் (கலிங். 139). 12. தெய்வப்படையல். மடையடும் பால் (கலித். 109). மடைத்தொழில் = சமையல் வேலை. மடைத்தொழிற்கு மிக்கோன் (நள. கலிநீங். 25). மடைநூல் = சமையற்கலை. மடைநூற் செய்தியும் (மணிமே. 2:22). மடைப்பள்ளி = அரண்மனை கோயில்களின் அடுக்களை அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23:37). மடையன் = சமையற்காரன். மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை (மணிமே. 21:56). மடையான் = மடையருகில் இரைதேடும் நீர்ப்பறவை வகை. மடைகிடாய் முக்கந்தன் = இராமநாதபுர மன்புலத்தில், சிற்றூர்களைச் சுற்றிப் பார்க்கும் மேலதிகாரிகட்கு வேண்டிய உணவுப்பொருள்களைக் கொடுக்கும் அதிகாரி (Rd. M. 3/3). மடைகழித்தல் = மதகு திறத்தல் (புதுவை). மடைநிற்றல் = பெற்றம் (பசு) வேண்டும் போதெல்லாம் பால் சுரத்தல். இந்த மாடு மடைநிற்காது. (சென்னை). மடை (சோறு) - ஒ. நோ : OE mete, food, OS meti, mat, OHG maz, ON matr, Goth mats, E meat. மடு - மடம் - மாடம் = சுவரிற் பொத்தகம் முதலியன வைக்க உதவும் புரை அல்லது புரை வரிசை (Shelf). மாடக்குழி = சுவரில் எண்ணெய் விளக்கு வைக்கும் சிறுபுரை. மாடப்புறா = மாளிகை. கோயில், கோபுரம், பள்ளிவாசல் முதலிய வற்றின் சுவர்ப்புரைகளில் வளர்க்கப்படும் பெரும் புறாவகை. முள் - மொள் - மொண்டான் = நீர் மொள்ளுங் கலவகை. (இ.வ.). மொள் - மொண்டை - மொந்தை - மொள் கலம். நீர் மொள்ள மொந்தைக்கும் வழியில்லை (அருட்பா. V. கந்தர் சரண. தனிப்பர். 2). 2. கள் மொண்டு வார்க்கும் அளவைக் கலம். 3. சிறு மரப்பாண்டம். 4. ஒரு கட்பறைவகை. (பிங்.). ம. மொந்த. க. முந்தெ. தெ. முந்த (t.). மொண்டை - மண்டை = 1. நீர் மொள்ளும் மட்கலம். காதல. னடி நீர் சுடு மண்டையின் ... மாற்றி (சிலப். 16:39). 2. ஒரு முகத்த லளவை. (தொல். தொகை. 28, உரை). 3. இரப்போர் கலம். புலரா மண்டை கொழுநிணம் பெருப்ப (புறம். 103). 4. இரப்போர் கலம் (கப்பரை) போன்ற தலையோடு. 5. தலையோடுள்ள தலைப்பகுதி. 6. தலை. செவ்வா யனைத்தான் வணங்கா மண்டை யிருக்கும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 61). 7. இளவரசன் மகுடம். மண்டை கவித்தல் = இளவரசுப் பட்டங்கட்டுதல். ம. மண்ட. க. மண்டெ. மொள் - மோள். மோளுதல் = துளையினின்று சிறுநீர் பாய்ச்சுதல், அல்லது கழித்தல். மோண்டுகொளி = அடக்கும் ஆற்றலின்றிப் படுக்கும் பாயிலும் உடுக்கும் உடையிலும் மோண்டு கொள்ளும் பையன் அல்லது பெண்பிள்ளை. மோள் - மோட்டிரம் - மோத்திரம் (பாண்டிநாட்டு வழக்கு) ம. முள். மோத்திரம் - மூத்திரம் - வ. மூத்ர. முழுகு முழுகு - மஜ்ஜ் (இ.வே.) முள் - முழு - முழுத்து. முழுத்துதல் = அமிழ்த்தல். முழுத்து - மூழ்த்து. முழு - முழுகு. முழுகுதல் = உட்செல்லுதல், அமிழ்தல், மீளா நிலையடைதல். முழுகு - மூழ்கு. ம. முழுகுக, க. முழு, தெ. முனுகு. முழுகு - முழுங்கு - விழுங்கு. தெ. மிங்கு. முழுங்குதல் = வாய்க்குள் முழுகச் செய்தல். முழுங்கு - முங்கு. முங்குதல் = நீர்க்குள் முழுகுதல். முழுக்கு - முக்கு (பி.வி.). க. முழுகிசு. முழுகு - L. mergo - VL majj. (வ.வ. 243). முழுத்தக்கால் மணமனையில், மணநாளுக்கு முன் 3,5,7,9 ஆகிய ஒற்றித்த நாட்களுள் ஒன்றில், நல்ல வேளையில் முழுத்தக்கால் நாட்டிப் பந்தல் அல்லது கொட்டகை போடப்பெறும். (த.தி. 22). முளைத்தாலி முளைத்தாலி யென்பது சிறுமியர் கழுத்திலணியப் பெறும் சிறுமணிமாலை. (த.தி. 82). முறைப்பொருத்தம் மணமக்கள் உறவினராயின், மண முறையின ராயிருத்தல் வேண்டும். முறையல் மணத்தினால் (In cest) நன்மகப் பேறுண்டா வதில்லை. குடிக்கும் இழுக்காம். இனி, அக்கையார் மகளை மணத்தல் முறைமணமாயினும், நெருங்கிய வுறவாயிருத்தலால் அதுவும் விலக்கற் பாலதே. கணவன் மனைவியரின் அரத்த உறவு நெருங்க நெருங்க உடல் நொய்ம்மையும் மதி மழுக்கமும், அகல அகல உடலுரமும் மதி விளக்கமும், அவர் தம் மக்கட்கு அமையும் என்பதை அறிதல் வேண்டும். (த.தி. 47) முன்றாலி மார்பில் தொங்குவது. (த.தி. 83). முனி, முனிவன் - முனி முனிதல் = 1. சினத்தல். முடிபொரு ளன்று முனியன் முனியல் (பரிபா. 20:93). 2. வெறுத்தல். முனித னினைதல் வெருஉதன் மடிமை (தொல். பொ. 269). k., f., து. முனி. முனி - முனிவு = 1. சினம். முனிவு தீர்ந்தேன் (கம்பரா. வருண. 82). 2. வெறுப்பு. (தொல். சொல். 386). ம. முனிவு, க. முனிப்பு. முனிவு - முனிவன் = உலகப் பற்றைத் துறந்த அறிவன். வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85). முனி = முனிவன் முனியுந் தம்பியும் (கம்பரா. மிதிலைக். 189). வடவர் காட்டும் மூலம் மன் = கருது. இது முன் என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னரே விளக்கப்பெற்றது. (வ.வ: 243) முனிவர் இயல்பு அழகிய குளிர்ந்த அருளையுடைய முனிவர்க்கு அந்தணர் என்று பெயர். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்றார் திருவள்ளுவர். இதனால், கைமாறு கருதாது எல்லா வுயிர்களிடத்தும் அன்பு செய்தலாகிய அருளில்லாதார்க்கு, அந்தணர் என்னும் பெயர் ஒரு சிறிதும் பொருந்தாதென்பது பெறப்படும். (சொல். 103) மூசை மூசை - மூஷ, மூஷீ முள் - முழை. முழைத்தல் = துளைத்தல். முழைத்த வான் புழை (பாரத. காண்டவ.17). முழை = குகை. அவ்விசை முழையேற் றழைப்ப (பரிபா.19:63). முழை - முழைஞ்சு = 1. துளை. குழன் முழைஞ்சுகளி னூடு குமிழ்த்து (திவ். பெரியாழ். 3:6:11). 2. குகை. மாரி மலைமுழைஞ்சில் மன்னி (திவ். திருப்பா.23). முழை - மூழை = 1. குழிந்த இடம். குன்றை யம்மூல மூழை வாய் வைத்து (கம்பரா. மருத்து.116). 2. அகப்பை. மூழை சுவையுணரா தாங்கு (நாலடி. 321). மூழை - மூசை = மண்குகை, மட்கரு. வடமொழியில் மூலமில்லை. மா.வி.அ. இச்சொல்லை மூஷ. (சுண்டெலி) என்னும் சொல்லோ டிணைக்கின்றது. (வ.வ.244) மூத்திரம் மூத்திரம் - மூத்ர (அ.வே.). முள் - (மொள்) = மோள். மோளுதல் = சிறுநீர் விடுதல். ம.முள். மோள் + திரம் = (மோட்டிரம்) - மோத்திரம் - மூத்திரம். மோள் என்னும் வினையும் மோத்திரம் என்னும் பெயர் வடிவும் இன்றும் பாண்டிநாட்டு வழக்கென அறிக. (வ.வ:244). மூட்டை மூட்டை - மூட்ட, முட்ட முள் - மூள். மூளுதல் = பொருந்துதல், கூடுதல். மூள் - மூட்டு (பி.வி.). மூட்டுதல் = 1. பொருத்துதல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631:3). 2. தைத்தல். மூட்டு = பொருத்து. மூட்டு - மூட்டை = கட்டு, பொட்டணம். பொருள் நிறைத்த கோணி. k., தெ. மூட்ட, க. மூட்டே. (வ.வ:244). மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் படர்க்கை என்னும் இடவகுப்பு, சுட்டுப்பெயர் சுட்டாப்பெயர் ஆகிய இருவகைப் பெயர்களையும் தன்னுளடக்குதலின், சுட்டுப் பெயர்களை மட்டும் தழுவும் அளவில் மூவிடப் பெயர் என்னும் தொகுதிக் குறியீட்டை ஆளுதல், குன்றத்தழுவல் என்னுங் குற்றத்தின் பாற்படுவதாம். படவே, தமிழ் முறைப்படி மூவிடச் சுட்டுப் பெயர் என்றோ, ஆங்கில முறைப்படி மூவிடப் பதிற் பெயர் என்றோ, குறியிட்டாளுதலே தக்கதாம். உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே (தெல். சொல்.1). தீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித். 109.3) சுட்டுத்தலை போகாத் தொல்குடி (சிலப். 12.21) பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் (நீதி நெறி. 20). என்பவற்றால், சுட்டாப்பெயர்களும், ஒருவகையில் ஓரளவு சுட்டுப் பெயர்களாய் அமையுமேனும், வெளிப்படையாய் அல்லது தெளிவாய்ச் சுட்டும் அல்லது பிரித்துக் காட்டும் பெயர்களே ஈண்டுச் சுட்டுப் பெயர் எனக்கொள்ளப்பட்டன வென்க. யான், யாம் என்பவற்றைத் தன்மைச் சுட்டுப்பெயர் என்றும், நீ, நீர் என்பவற்றை முன்னிலைச் சுட்டுப் பெயர் என்றும், அவன், அவள், அவர், அது, அவை என்பவற்றைச் சேய்மைச் சுட்டுப் பெயர் என்றும், இவன், இவள், இவர், இது, இவை என்பற்றை அண்மைச் சுட்டுப் பெயர் என்றும், உவன், உவள், உவர், உது, உவை என்பவற்றை முன்மை அல்லது இடைமைச் சுட்டுப் பெயர் என்றும், தான், தாம் என்பவற்றைத் தற்சுட்டுப் பெயர் என்றும் அழைக்கலாம். இவற்றுள் தன்மையும், முன்னிலையும் அல்லாத வெல்லாம் படர்க்கையாகும். ஆகவே, அறுவகைச் சுட்டுப் பெயரும் மூவிடங்கட்குள்ளேயே அடங்கு மென்றறிக. சுட்டுப்பெயர் என்னுங் குறியீடு தன்மை முன்னிலைகட்குப் பொருந்தாதெனின், பதிற்பெயர் (pronoun) என்பது முற்றும் பொருந்துவதே. படி - (படில்) - பதில். படி என்னும் தென்சொல்லே வடமொழியில் பிரதி (ப்ரதி) எனத் திரிவதாலும் அத் திரிசொற்குப் பதில் என்பதும் ஒரு பொருளாதலானும், ஒரு சிறப்புப் பெயர் களுக்குப் பதிலாக வரும் சுட்டுப் பெயரை அல்லது பொதுப் பெயரைப் பதிற்பெயர் என வழைத்தல் பொருத்தமானதே. உருது என்பது, தில்லி (Delhi) வட்டாரத்தில் 12ஆம் நூற்றாண்டில், இந்தியும், பாரசீகமும் அரபியும் கலந்து தோன்றிய கலவை மொழியே யாதலின், உருதுச்சொல் என ஒரு தனிச்சொல் இல்லையென்றும், உருதுவில் வழங்கும் தமிழ்த் திரிசொற்களுள், பதில் என்பதும் ஒன்று என்றும், பாரசீக அரபி மொழிகளிலும் சில தமிழ்ச் சொற்கள் உண்டென்றும் அறிந்து கொள்க. முதற் காலத்தில் தமிழில் தோன்றியனவாகத் தெரிகின்ற தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள், முறையே, ஏன், ஏம், ஊன், ஊம், ஆன், ஆம் என்பனவாகும். இவற்றுள் ஏன்,ஏம், என்பன ஈ என்னும் அண்மைச் சுட்டுப்பிறந்த ஈன் ஈம் என்பவற்றின் மோனைத்திரிபாகவோ, உயர்வு குறித்த ஏ என்னும் சொல்லடிப் பிறந்தனவாகவோ, இருக்கலாம். ஊன், ஊம் என்பன, இதழ்குவிவ தால் முன்னிலை யிடத்தைச் சுட்டும் ஊகாரச் சுட்டடிப் பிறந்தன வாகும். இவையெல்லாம் பிற்காலத்திற் பின்வருமாறு திரிந்துள்ளன. தன்மைப் பெயர் ஏன் - யான் - நான் (ஒருமை) ஏம் - யாம் - நாம் (பன்மை) (யாம் + கள் = யாங்கள். நாம் + கள் = நாங்கள்) முன்னிலைப் பெயர் ஊன் - நூன் - நீன் - நீ (ஒருமை) ஊம் - நூம் - நீம் (பன்மை) (ஊம் + கள் = ஊங்கள், நூம் + கள் = நூங்கள். நீம் + கள் = நீங்கள். நீ + இர் + நீவிர். ஊங்கள், நூங்கள் என்பன வழக்கற்றுப் போய் அவற்றின் வேற்றுமையடிகளான உங்கள், நுங்கள் என்பனவே எஞ்சியுள்ளன. நீன், நீம் என்னும் பெயர்கள் இன்றும் தென்நெல்லை வட்டாரத்தில் வழங்குகின்றன. ஊகார முதல் ஈகார முதலாகத் திரிவதை, தூண்டு - தீண்டு. (தூண்டாவிளக்கு - தீண்டா விளக்கு) நூறு - நீறு முதலிய திரிவு களால் அறிக. படர்க்கைப் பெயர் ஆன் - தான் (ஒருமை) ஆம் - தாம் (பன்மை) (தாம் + கள் - தாங்கள்) தான், தாம் என்பன முதற்காலத்தில் வெறும் படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக (demonstrative pronouns) இருந்து, பின்பு, படர்க்கைத் தற்சுட்டுப் பதிற் பெயர்களாக (third personal reflexive pronouns) மாறியிருக்கின்றன. இவை எங்ஙனமிருப்பினும், மூவிடப் பதிற்பெயர்களின் முதற்கால வடிவில், னகர மெய்யீறு ஒருமையும், மகர மெய்யீறு பன்மையும் உணர்த்துகின்றன என்பது தெளிவாம். இன்று வேர்ப் பொருளும் அடியும் தெரியாமல் உருமாறிக் கிடக்கும் விகுதிகளும் வேற்றுமை யுருபுகளுங்கூட, ஒரு காலத்தில் பொருளுணர்த்திய சொற்களாயிருந்தன என்பது பெறப்படும். அற்றேல் மூவிடப் பதிற்பெயர்களின் ஒருமை பன்மை யீறுகள் எச்சொற்களின் திரிபுகள் எனின், கூறுவல்:- அறிவு முதிராத முதுபழங்காலத்தில், பொருள்களின் ஒருமை பன்மை என்னும் எண் வேறுபாடுதான் உணரப்பட்டதேயன்றி, ஆண்மை, பெண்மை முதலிய பால் வேறுபாடு உணரப்பட வில்லை. ஆதலால், ஒன்று என்னும் பொருள் கொண்ட ஒன் என்னும் சொல்லையும், கூடுதலைக் குறிக்கும் உம் என்னும் சொல்லையும், முறையே ஒருமையீறாகவும் பன்மையீறாகவுங் கொண்டு, அவற்றை, ஏ,ஊ,ஆ என்னும் அடிகளோடு புணர்த்தித் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிற் பெயர்களை அமைத்தனர். ஏ + ஒன் - ஏஒன் - ஏன் ஏ + உம் - ஏஉம் - ஏம் ஊ + ஒன் - ஊஒன் - ஊன் ஊ + உம் - ஊஉம் - ஊம் ஆ + ஒன் - ஆஒன் - ஆன் ஆ + உம் - ஆஉம் - ஆம் கோஒன் என்பது கோன் என்றும், ஆஉம்(ஆவும்) என்பது ஆம் என்றும், தொக்கு நிற்றல் காண்க. ஓகார விறுதிக் கொன்னே சாரியை. (தொல். எழுத். 180) என்னும் தொல்காப்பிய நூற்பாவின் ஒன் என்பது சாரியை எனக் கூறப்பட்டது, இதற்கு, கோஒனை, கோஒனொடுஎன எடுத்துக் காட்டினார் நச்சினார்க்கினியர். இவ் ஒன் என்னும் சொல்லுறுப்பை னகர வொற்றாகக் கொண்டு, ஆமா கோனவ் வணையவும் பெறுமே (நன்.248) என்றார் பவணந்தியார். சொற்சாரியை புணர்ச்சியில் இரு சொற்கிடையே அல்லது இரு சொல்லுறுப்பிற் கிடையே வருமேயன்றி, தனிச்சொல்லின் ஈறாக வராது. அங்ஙனம் வருவதை ஈறென்று கொள்வதல்லது சாரியை யென்று கொள்வது பொருந்தாது. ஒன் என்பதும் ஒன்று என்பதும் ஒல் என்னும் ஒரே அடிப் பிறந்த சொற்களாம். ஒ - ஒல். ஒத்தல் = பொருந்துதல் . ஒல் - ஒன். ஒ.நோ: வெல் -வென். ஒல் + து = ஒன்று. ஒ.நோ: நல் + து = நன்று. ஒன்னுதல் = பொருந்துதல். ஒன்னார் = பொருந்தார். பகைவர் . ஒல் - ஒள் - ஒண். ஒண்ணுதல் = பொருந்துதல். ஒண் + து = ஒட்டு, ஒண்டு. உம் என்பது கூடுதல் பொருள் கொண்டிருப்பதை, அழகனும் முருகனும், வந்து போயும் என்னும் எண்ணும்மைத் தொடர் களால் உணர்க. பல உகர முதற் சொற்கள் அகர முதலவாகத் திரியும். எடு: முடங்கு - மடங்கு. குடும்பு - கடும்பு, குடம் - கடம். இங்ஙனமே உம் என்பதும் அம் எனத் திரிந்து வெவ்வேறு சொற்களைப் பிறப் பிக்கும். அம் - அமல். அமலுதல் = நெருங்குதல். அமல் = நிறைவு. அமலை = திரளை. அமைதல் = நெருங்குதல். அமைவு = நிறைவு. அமல் - அமர், அமர்தல் = நெருங்குதல். பிற்காலத்தில் படர்க்கைப் பன்மை யீறுகளாக எழுந்த, ஆர், கள் என்னும் சொற்களும் கூடுதல் பொருள் குறித்தனவாகவே யிருத்தல் காண்க. ஆர்தல் = பொருந்துதல், நிறைதல், அர் என்பது ஆர் என்பதன் குறுக்கம். கள்ளுதல் = பொருந்துதல். ஒத்தல், கள்ள = ஒக்க. போல. கள்ள என்பது ஓர் உவமையுருபு. கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ (தொல். உவ.11) கள் + அம் = களம் = கூட்டம், கூடுமிடம். சில மகர மெய்யீற்று அஃறிணைப் பெயர்கள் னகர மெய்யீறாகத் திரியும். இது ஒருவகைப் போலியாம். இதை, மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரக் கிளந்த வஃறிணை மேன (மொழி.49) என எதிர்மறை வகையில் தொல்காப்பியரும் மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே (எழுத். 122) என உடன்பாட்டு வகையில் நன்னூலாரும் எடுத்துக் கூறினார். தொல்காப்பிய நூற்பாவிற்கு, உதாரணம்: எகின் செகின் விழன் பயின், குயின், அழன், புழன், கடான், வயான், எனவரும்........ நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன், என இத் தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம், ஓடம் பாடம் இவைபோல்வன மயங்காதன. வரையறை னகரத்தின் மேற்செல்லும் மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம் என்பது நச்சினார்க்கினிய ருரை. இவ் எளிய உண்மையை அறியாது, அறிஞர் சிலர், நிலம் நிலன், முதலியவற்றை யான் யாம் முதலியவற்றோ டொப்பக் கொண்டு, மயங்கி, நிலன் ஒருமை யென்றும் நிலம் பன்மையென்றும் கருது கின்றனர். இது, அஃறிணை யீற்று ளகர வொற்றையும் பெண்பாலீ றாகிய ளகர வொற்றொடு மயக்கி, மதில் செதில் என்பவற்றின் போலியாகிய மதிள் செதிள் என்பனவும் பெண்பாலே யெனக் கொள்வ தொத்ததே. மேலும், ஒருமை யீறு பன்மை யீற்றிற்கு இடவகையிலேனும் முந்தியதாதலின், யான் நான் என்னும் னகர வீற்றுச் சொற்கள் யாம், நாம் என்னும் மகர வீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், இதற்கு மாறாகப் போலிச் சொற்களுள், மரம் குளம் முதலிய மகர வீற்றுச் சொற்கள் மரன் குளன் முதலிய னகர வீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், காண்க. இனி, இதழ்கள் பொருந்துவதாலேயே பிறக்கும் மகரம் முன்னண்ணத்தை நுனிநா அழுந்தப் பொருந்தும் முயற்சியாகப் பிறக்கும் னகரத்தினும் எளிதாயிருத்தலால், அதுவே முந்தித் தோன்றிய மெல்லின மெய்யாயிருத்தல் வேண்டுமென்றும், கண்டுகொள்க. இனி, மடம், சினம் முதலிய பண்புகள் பொதுவாக எண்ணப்படு பொருள்க ளாகாமையும் அறிக. ஒரு பெருமொழி பேசப்படும் இடம் மிகப் பரந்ததாயிருக்கு மாதலின், இடந்தொறும் சில எழுத்தொலிகள் வேறுபடுவது இயல்பே. அதோடு இன்னோசைப் பொருட்டும் புலவர் சிலர் தம் செய்யுட்களில் வரும் ஒரு சில சொற்களின் ஓரிடத்து ஒரெழுத்தை மற்றோரெழுத்தாக மாற்றிக் கொள்வதுமுண்டு. இது தொன்று தொட்டுப் போலியென வழங்கிவருவது மரபாயிருக்க, அதற்கு எண்ணுப் பொருளை ஏற்றிக் கூறுவது போலியென விடுக்க. (தென்றல் 1958) மூவகை மதம் மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், 1. சிறு தெய்வ வணக்கம், 2. பெருந்தேவ மதம், 3. கடவுள் சமயம் என மூவகைப்படும். இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக் காலத்திலும் துன்பக் காலத்திலும், ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங்கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள் தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனி மட்டும் படைத்து, அவ்வம்மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக் கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய் தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்தி லேனும் துறவறத்திலே னும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர் கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற வொழுகு வது, கடவுள் சமயமாம். சிறு தெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம். மூவினம் வல்லினம் மெல்லினம் இடையினம் என்பன வல்லுடம்பையும் மெல்லுடம்பையும் இடைத்தர உடம்பையும் நிகர்க்கும். (சொல்.34.) மூவேந்தர் ஆரிய அடிமை முதிர்வு கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் வேள்வி மதத்தைத் தழுவி ஆரிய அடிமைகளாய்ப் போய்விட்டதனால், இந்தியா முழுவதையும் நிலையான ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்த்து தற்பொருட்டு, நால்வரண வொழுக்கத்தை நிலைநிறுத்தும் மனுதரும சாத்திரம் என்னும் குலவொழுக்க நூல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும்; கோவிலமைப்பு, வழிபாட்டு முறை, போற்றியான் (அருச்சகன்) தகுதி, கொண் முடிபு (சித்தாந்தம்), தெய்வச் சிறப்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றை விளக்கிக் கூறும் ஆகமம் என்னும் வழிபாட்டு மறை கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலும்; சமற் கிருதத்தில் இயற்றப்பட்டு விட்டன. சிவனிய ஆகமங்கள் காமிகம் முதல் வாதுளம் வரை இருபத் தெட்டென்பர். காளி வழிபாட்டு மறையைத் தந்திரம் என்பர். தந்த்ரங்கள் ஸம்ஹிதை, ஆகமம், தந்த்ரம் என மூவகைப் படும், அவற்றுள்: ஸம்ஹிதைகள் வைஷ்ணவர்களாலும், ஆகமங்கள் சைவர்களாலும், தந்த்ரங்கள் சாக்தர்களாலும், போற்றப்படு கின்றன. அவை முற்றிலும் வைதிகக் கொள்கைகளைப் பின்பற்றியன எனக் கூறுதற்கு இடன் இல்லை. அவை தீக்ஷை கொண்டு ஆசிரிய னிடமிருந்து கொள்ளத் தக்கன. தந்த்ரங்கள் கி.பி. ஐந்தாம் நூற் றாண்டின் பின்னரே உண்டாயின என்பர். என்று (P.S) சுப்பிர மணிய சாத்திரியார் கூறுவர் (வடமொழி நூல் வரலாறு, பக். 309). சமற்கிருத மொழியும் பிராமணப் போற்றியானும் ஆரியத் தொல் கதைகளுந் தவிர, ஆகமப் பொருள் அனையவும் ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் தமிழிலும் உள்ளவையே என்றறிதல் வேண்டும். ஆகமம் என்னும் சொற்கே, புதிதாக வந்தது அல்லது தோன்றியது என்பது தான் பொருள். எல்லா வகையிலும் ஆரியத்தை எதிர்க்கக் கூடிய தமிழ நாகரிகக் கோட்டையான தென்னாடு பிடிபட்டுப் போகவே, இந்தியா முழுதும் மதத் துறையிலுங் குலத்துறையிலும் ஆரிய வயப்பட்டுவிட்டது. பிராமணப் பூசகனே சமற்கிருதத்திற் போற்றி செய்வது, தமிழ் நாட்டுக் கோவில் மரபாயிற்று. முதற் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - 953), வேதம் வல்ல பிராமணர்க்கு வீரநாராயணபுரம் முதலிய ஊர்களை முற்றூட்டாகக் கொடுத்து, பொற் கருப்பைத் தானமும் ஆள்நிறைப் பொன் தானமுஞ் செய்தான். ஆற்றூர் (ஆத்தூர்), திருத்தவத்துறைக் (லால்குடி) கோயில்களில், பூசைவேளையில் திருப்பதிகம் ஓதப் பிராமணரை அமர்த்தினான். முதலாம் இராசராசன் (கி.பி. 985 - 1014) கட்டின தஞ்சைப் பெரு வுடையார் கோவிற் கோபுரம், தாசுமகால் இந்தியாவிற்குத் தருவதினும் பதின்மடங்கு பெருமை தமிழகத்திற்குத் தருவதாகும். ஆயின், அவனும் அடிமையானதனால், சோழ மார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் என்னும் திருவியலூரில், ஆள்நிறைப் பொன் தானஞ் செய்தான்; அவன் தேவியும் பொற் கருப்பைத் தானஞ் செய்தாள். அவனுக்குக் குருக்களாயிருந்தவர்கள் இலாடம், காசி, காசுமீரம் முதலிய வடநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பிராமணர்கள். அவர்கள் பெருமடத் தலைவர்களாயிருந்து அரசியலில் மிகுந்த சொற் செல்வு பெற்று விளங்கினர். இலாடம் வங்க நாட்டின் ஒரு பகுதி. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள் மொத்தம் 96000 என்று சொல்லப்படுகின்றது. இன்று கிடைத்திருப்பவை எழுநூற்றுத் தொண்பத் தாறே (796). இவற் றுள் ஒருசிலவே இராசராசன் காலத்திற் கோவில்களிற் பாடப் படும் வழக்கிலிருந்தன. ஏனையவற்றின் ஏடுகளை யெல்லாம் பிராமணர் தொகுத்து, தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குளிட்டுப் பூட்டி விட்டனர், இராசராசன் இம்மருமத்தை யறிந்து, அவ் வறையைத் திறக்கச் சொன்னான். கோவிற் சொத்தைக் கொள்ளை யடித்துக் கொண்டிருந்த, தில்லை வாழந்தணர் என்னும் மூவாயிரம் பிராமணரும் மறுத்துத் தடுத்தனர். இராசராசன் ஒரு சூழ்ச்சி செய்து திறப்பித்தான். சிதல் அரித்த ஓர் ஏட்டுக் குவியல் காட்சியளித்தது. உடனே, அரசே! கவலற்க. இக்காலத்திற்கு வேண்டியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, வேண்டாத வற்றை யெல்லாம் யாமே சிதலரிக்க விட்டேம். என்று ஒரு வானுரை யெழுந்தது! சூத்திர வேந்தன் நிலத்தேவரை ஒன்றும் செய்ய இயலவில்லை. இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரனும் (கி.பி. 1014 - 1042), தஞ்சைப் பெரிய கோவிலிற் பூசைசெய்து வந்த தன் குருவாகிய சர்வ சிவ பண்டிதருக்கும், ஆரிய நாட்டிலும் மத்திய நாட்டிலும் கௌட (வங்க) நாட்டிலுமிருந்த அவர் மாணவருக்கும், ஆண்டுதோறும் ஈராயிரங் கலம் நெல் குரவ நுகர்ச்சியாகக் (ஆசாரிய போகமாகக்) கொடுக்குமாறு கட்டளை பிறப்பித்தான். கி.பி. 1036-இல், எண்ணாயிரம் என்னும் இடத்தில், 300 பிராமண மாணவரும் 10 பிராமண ஆசிரியரும் கொண்ட ஓர் இலவச மறைநூல் விடுதிக் கல்லூரி கட்டித் தானஞ் செய்தான். வீரராசேந்திரச் சோழன் (கி.பி. 1062 - 1067) திருமுக்கூடல் என்னு மிடத்தில், பிராமண மாணவர்க்கு வேதமும் பிறநூற் கலைகளும் கற்பிக்குமாறு, மருத்துவச்சாலையொடு கூடிய ஓர் இலவச விடுதிக் கல்லூரியைக் கட்டிக் கொடுத்தான். மூன்றாங் குலோத்துங்கன் (1178 - 1218) திருவொற்றியூரிற் பிராமண மாணவர்க்குப் பாணினீயம் கற்பிக்குமாறு, வியாகரண தான வியாக்கியான மண்டபம் ஒன்று அமைத்து, அதற்கு 60 வேலி நிலங் கொண்ட குலோத்துங்கன் காவனுர் என்ற ஊரை இறையிலி யாக்கினான். அவன் குருவும் இலாட நாட்டுப் பிராமணரே. பல கோவில்களில் துலாபார மண்டபம் என்றே ஒன்று கட்டப் பட்டிருந்தது. துலாபாரம் என்று ஒரு வரியும் குடிகளிடம் வாங்கப்பட்டது. சோழர் போன்றே பாண்டியரும் ஒழுகினர். சேரரைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம் குடிகள் பொதுப்பணம், தமிழும் தமிழனும் தளரவும், பிரா மணனும் பிராமணியமும் வளர்ந்தோங்கவும், வாரியிறைக்கப் பட்டது. கடுங்கோன், காய்சினவழுதி, இளஞ்சேட்சென்னி, நெடுங்கிள்ளி, மாவலி, உதியஞ் சேரலாதன் என்றிருந்த அரசர் தனித் தமிழ்ப் பெயர்களெல்லாம்; ஜடில பராந்தகன், விஜயாலயன், பாகர வர்மன் என வடசொற் பெயர்களாக மாறின. பாண்டியர் பெயருக்கு முன் மாறவர்மன் ஜடாவர்மன் என்பனவும், சோழர் பெயருக்கு முன் ராஜகேசரி பரகேசரி என்பனவும், அடைமொழிகளாகச் சேர்க்கப்பட்டன. அரசர் மெய்க்கீர்த்திகள் வதி ஸ்ரீ என்று தொடங்கின. இடை யிடை சமற்கிருதச் சொற்கள் கலந்தன. முன்னும் பின்னும் சமற் கிருதச் சொலவங்களும் (சுலோகங்களும்)அமைந்தன. சமற்கிருதச் சொற்களும் சொலவங்கள் போன்றே கிரந்த எழுத்தில் வெட்டப் பட்டன. கல்வெட்டு சிலாசாசனம் என்றும், செப்பு வெட்டு தாமிர சாசனம் என்றும், பெயர் பெற்றன. மதத்துறையிற் போன்றே மற்றத்துறைகளிலும் மூவேந்தரும் பிராமணர்க்கு எடுப்பார் கைப்பிள்ளைக ளாயினர். தமிழ் சமற் கிருத வார்ப்பகத்தில் வார்க்கப்பட்டது. வடசொல் மிகுந்து, கொச்சை வழக்கும் இலக்கண வழுக்களும் புகுந்து, தமிழ்ப் புலவர் கை கடந்து, பகைவர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. அரை குறையா யிருந்ததும், நாயக்கர் ஆட்சியிலும் தஞ்சை மராட்டிய மன்னராட்சியிலும் நிரம்பி விட்டது. தஞ்சைச் சரபோசி மன்னர், தம் சரசுவதி மகால் என்னும் கலைக்கூடத்தில் தொகுத்துள்ள 22000-இற்கு மேற்பட்ட பொத்தகங்களுள், பெரும்பாலன சமற்கிருதமே. மூவேறுவகைப்படை நிலைப்படை கூலிப்படை என்றும் நாட்டுப்படை காட்டுப்படை என்றும் துணைப்படை பகைப்படை என்றும் மூவேறுவகையில் இவ் விரண்டாக வகுக்கப்படும். (குறள். 762). கூலிப்படை போர்க்காலத்திற்கு மட்டும் கூலிக்கு அமர்த்திக் கொள்வது நாட்டுப்படை செங்குந்தர் கைக்கிளையர் படை போல்வது. காட்டுப்படை கள்ளர் மறவர் படைபோல்வது. நிலைப்படை என்றும் நாட்டுப் படையாகவே இருக்கும் - அது மூலப்படை எனவும்படும். (குறள் 762) மூளை மூளை - மஜ்ஜன் (இ.வே.). முள் - மூளை = எலும்பிற்கு அல்லது மண்டையோட்டிற்கு உள்ளிருப்பது. ம. மூள. OS. OHG marg, OE mearg, E marrow, ON mergr. (வ.வ:244). மெது மெது - ம்ருது (வே.) மெல் - மெது - மெத்து - மெத்தை. மெது - க. மெது. மெத்தை - ம. மெத்த, தெ. மெத்த, க. மெத்தை. மெது - மெதுக்கு = சோறு. தெ. மெதுக்கு. மெத்தெனவு - தெ. மெத்தன, க. மெத்தனெ. மெது - மெதுகு - மெருகு. OE smoth, smette, smeeth; E smooth. (வ.வ: 244-245) மேகலை மேகலை - மேகலா (kh) மேகலம் - மேகலை = பெண்டிர் அரையில் ஆடையின்மேல் அணியும் எண்கோவைப் பட்டிகையான அணிகலம். மேகலை தமிழர் அணிகலங்களுள் ஒன்று. (வ.வ.245). மேலை மொழிநூல் வரலாறு வரலாற்றுத் தந்தை என்று சொல்லப்பெறும் எரோதாத்தசு (Herodotus, கி.மு. 485 - 425), மொழிகளுள் முதலது எது என்று கண்டுபிடிக்க, ஓர் எகிபதிய அரசன் இருகுழவிகளைப் பிறந்த வுடன் வேறாகப் பிரித்து வளர்த்ததாகவும், அவற்றுள் ஒன்று பெகோ என்னும் பிரிசியச் (Phrygian) சொல்லை முந்திச் சொல்லியதால், பிரிசிய மொழியே உலக முதன்மொழியென்று முடிபு செய்ததாகவும் தம் நூலொன்றிற் குறித்திருக்கின்றார். பிளேற்றோ (Plato, கி.மு. 427 -347) என்னும் அத்தேனிய மெய்ப் பொருளியலார் சொல்லிற்கும் பொருளிற்குமுள்ள தொடர்பு இயற்கையான தென்றும், அவர்தம் தலைமை மாணவரான அரிசுற்றாட்டில் (Aristotle, கி.மு. 384 - 322) அது செயற்கையானது அல்லது மரபு வழிப்பட்டது என்றும், கொண்டனர். இத்துணையே எகிபதியரும் கிரேக்கரும் செய்த மொழியாராய்ச்சி. பிரித்தானில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வந்தேறிமொழியாகத் தோன்றிய ஆங்கிலம் என்னும் முக்குலக் கூட்டுமொழி, முதலில் கெலத்தியத்தோடும் (Keltic) 6ஆம் நூற்றாண்டில் இலத்தீனோடும் 8ஆம் நூற்றாண்டிற் காண்டினேவியத்தோடும் 11ஆம் நூற் றாண்டிற் பிரெஞ்சு மொழியோடும் கலந்தாலும், 14ஆம் 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி (Renaissance) என்னும் இலத்தீன் கிரேக்கக் கல்வியே ஆங்கிலரின் இலக்கியச் செம்மொழிக் கல்வித் தொடக்கமாகும். அன்றும். Philology என்னும் மொழிநூற்பெயர், ஒரு மொழியை அதனைப் பேசும் மக்களின் அகக்கரண அறிவியல் மதவியல் குமுகவியல் வளர்ச்சியை அறியும் வாயிலாகக் குறித்ததேயன்றி, அம்மொழியையே கற்கும் பொருளாகக் குறிக்கவில்லை. Philology என்னும் கிரேக்கச்சொல் விழைநூல் என்று பொருள்படுவதாகும். விழைதல் மிக விரும்புதல். இலத்தீன் கிரேக்கமொழிகள் மிக விரும்பிக் கற்கப்பெற்றதினால், அவற்றின் கல்வி அப்பெயர் பெற்றது. 18ஆம் நூற்றாண்டிலேயே இற்றை மொழியாராய்ச்சி தோன்றிற்று. அவ்வறிவியற்கு, Science of Language, Linguistics (Linguistic Science). Glottology முதலிய பல பெயர்கள் புதிதாய்த் தோன்றினும், Philology என்னும் பழம்பெயரே சென்ற நூற்றாண்டுவரை பெருவழக்காய் வழங்கிற்று. ஆயின் மொழியாராய்ச் சியையும் பன்மொழியொப் பியலையுங் குறித்தற்கு ஒப்பியல் (Comparative) என்னும் அடை கொடுக்கப்பெற்றது. இற்றை ஒப்பியன் மொழிநூல் உருவாவதற்கு இன்றியமையாத அடிப்படை வேலை செய்தவர்கள், உலகமெங்கும் பரவித் தங்கிய ஐரோப்பிய விடையூழியரும் (Missionaries) குடியேற்ற நாடுகளின் அரசியலதிகாரிகளுமே. இந்தியாவிற்கு வந்த ஆங்கில அரசியல் அதிகாரிகளுள், வயவர் சாள்சு வில்கின்சு (Sir Charles Wilkins) என்பவர் சமற்கிருதங்கற்று, 1784ஆம் ஆண்டில் பகவற்கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; வயவர் வில்லியம் சோன்சு (Sir William Jones) என்பவர், பன்மொழி கற்றுத் தேர்ந்து 1772இல் பாரசீக இலக் கணமும் 1780இல் ஏழ் அரபிச் செய்யுள் மொழிபெயர்ப்பும், 1794-இல் சாகுந்தலம், இதோபதேசம், சில வேதப்பகுதிகள், மனுதரும சாத்திரம் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பும், வெளியிட்டார், இவரே சமற்கிருதத்திற்கும் மேலையாரிய மொழிகட்குமுள்ள நெருங்கிய தொடர்பை முதன்முதல் உலகிற்கு வெளிப்படுத் தினார். இவர்காலத்திலேயே இற்றை ஒப்பியன்மொழிநூலும் தொடங்கிற்று. இவர் கண்திறந்துவிட்டதன் பயனாக, 19ஆம் நூற்றாண்டிற் பொதுவாகப் பல்வேறு மொழிகளின் இலக்கண நூல்களும் அகர முதலிகளும் சிறப்பாக ஆரியமொழிகளின் ஒப்பியல் ஆராய்ச்சியும் தோன்றின. பல்வேறு மொழி நூலறிஞர், பல்வேறு மொழிகளையும் மொழிக் குடும்பங்களையும் சிற்றளவாக வும் பேரளவாகவும் வெவ்வேறு வகையில் ஆராய்ந்து, மொழிநூல் அறி வியலை மேன் மேலும் வளர்ந்து வந்தனர். கோல்புரூக்கு (Corlbrooke) என்னும் ஆங்கிலர் 1805-இல் சமற்கிருத இலக்கணமும், காம்பெல் (Campbell) என்பவர் 1816-இல் தெலுங் கிலக்கணமும், இயற்றி வெளியிட்டார். பிரெட்சுதார்ப்பு (Bredsdorff) என்பவர், 1821இல் சொற்கள் திரிவதற்குக் கரணியங்கள் 7 என வகுத்துக்காட்டினார். வில்லியம் கேரி (William Carey) என்னும் ஆங்கில விடையூழியர், 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட இந்திய மொழிகளை யெல்லாங் கற்று அவற்றில் திருமறையை (Bible) மொழி பெயர்த்தது மன்றி, வட இந்திய மொழிகளெல்லாம் ஆரியம் என்றும் தென்னிந்திய மொழிகளெல்லாம் அவற்றினின்றும் வேறுபட்ட திரவிடம் என்றும் பிரித்துக் காட்டினார். யாக்கோபு கிரிம் (Jacob Grimm) என்னும் செருமானிய மொழி நூலறிஞர் முதலாம் மெய்பெயர்வு (First Consonant - Shifting) என்றும் கிரிம் நெறியீடு (Grimm’s Law) என்றும் சொல்லப்பெறும் ஆரிய இனமொழி மெய்ம்மாற்ற மூவகை நெறிமுறைகளை 1922 - இல் கண்டறிந்தார். அவையாவன:- 1. Bh, dh, gh, ஆகிய ஆரிய மூச்சொலி முழங்கு நிறுத்தங்கள் (Aspirated voiced stops) பின்னர் முறையே, b,d,g ஆகிய முழங்கு நிறுத்தங் களாகத் (Voiced stops) திரிந்தன. 2. ஆரிய முழங்கு நிறுத்தங்கள் பின்னர் முறையே, p, t, k, ஆகிய முழங்கா நிறுத்தங்களாகத் (Voiceless stops) திரிந்தன. 3. ஆரிய முழங்கா நிறுத்தங்கள், பின்னர் முறையே f, th, h ஆகிய முழங்கா உரசிகளாகத் (Voiceless fricatives) திரிந்தன. இவற்றின் ஒருசார் இலக்கணவழு இவர்க்குப் பின் வந்த வெர்னெர் (Verner) என்பவரால் திருத்தப்பெற்றது. யாக்கோபு கீரிம் தியூத்தானிய இலக்கணமும் இயற்றி வெளியிட்டார் (1819-37) பிரான்சு பாப்பு (Franz Bopp) என்பவர், சமற்கிருதம், செந்து (Zend), கிரேக்கம், இலத்தீன், இலித்துவானியன், பழஞ் சிலாவோனியம், கோதியம், செரு மானியம் ஆகிய மொழிகளின் ஒப்பியல் இலக்கணத்தை 6 மடலமாக வெளியிட்டார் (1833-52). இவரால் ஒப்பியன் மொழிநூல் வளர்ச்சியடைந்தது. இராப்பு (K.M. Rapp) என்பவர், கிரேக்கு, கோதியம், இலத்தீன் ஆகிய மொழிகளின் ஒலி முறைகளையும், அவற்றின் வழி வந்த இடைக்கால இக்கால மொழிகளின் ஒலிமுறைத் திரிபுகளையும் ஆய்ந்து, முந்நிலைகளையுங் காட்டி 4 மடங்குகள், முறையே, 1936, 1839, 1840, 1841) ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார். பாட்டு (Pott) என்னும் செருமானியர் (1802-27). மொழி வளர்ச்சி நிலைகள் அசை நிலை (Isolating), கொளுவுநிலை (Agglutinating), பகுசொன்னிலை (Flexional), பஃறொகைநிலை (Incorporating), என நாலாக வகுத்தார். வில்சன் (H.H. Wilson) என்னும் ஆங்கிலர், 1813-இல் விட்டுணு புராணமும், 1841-இல் சமற்கிருத இலக்கணமும் வெளியிட்டார். ஆகத்து கிளேச்சர் (August Schleicher) என்பவர் (1821-68) முதனிலை ஆரியத்தின் (Proto - Aryan) மறுவமைப்பைச் (Reconstruction) செய்தார்; இந்தோ - ஆரிய மொழிகளின் ஒப்பியலிலக்கணம் வெளியிட்டார். மாக்கசு முல்லர் (Max Muller) என்னும் செருமானிய மொழிநூற் பேரறிஞர் (1823-1900), பன்மொழிகளை, சிறப்பாக ஆரிய மொழி களை, கற்றுத் தேர்ந்து, 1844-இல் இதோபதேச மொழி பெயர்ப் பையும், 1849 முதல் 1879 வரை இருக்கு வேத 6 மடலங்களையும், 1859-இல் சமற்கிருத இலக்கிய வரலாற்றையும், 1861 முதல் 1863 வரை மொழிநூற் கட்டுரைகளின் (Lectures on the Science of Language) இரு மடலங்களையும், 1888-இல் சொல் வரலாறுகளையும் (Biographies of words), வெளியிட்டார். பல்லாண்டுகளாகக் கீழைத் திருப்பனுவல்களையும் (Sacred Books of the East) பதிப்பித்தார். அவற்றின் வாயிலாகச் சமற்கிருதப் பற்றையும் ஊட்டி வந்தார். மேலை மொழி நூல் வல்லாருள் தலைவராகக் கொள்ளப் படுபவர் இவரே. இவராலேயே ஒப்பியன்மொழிநூல் ஒருவாறு நிறைவடைந்து உலகெங்கும் பரவிற்று. ஆட்டோ போத்திலிங்கு (Otto Bohtlingk) என்னும் செருமானியர் (1815 -1904), 1839-இல் பாணினியிலக்கணத்தையும், 1845-இல் சமற்கிருதச் சிறப்புப் பகுதிகளையும், அதன்பின் 1856 முதல் 1875 வரை தொகுத்த 7 மடலங் கொண்ட சமற்கிருத அகர முதலியையும், வெளியிட்டார். இவ்வகர முதலித் தொகுப்பில் உருடால்பு ராத்தும் (Rudolph Roth) உடனுழைத்தார். யோசியா துவைத்து விற்றினி (Josiah Dwight Whitney) என்னும் அமெரிக்கர், 1856-இல் அதர்வ வேத சங்கிதையையும், 1875-இல் மொழியிற் கருவியும் வடிவமும் என்னும் நூலையும், 1873-5-இல் கீழைக்கலை மொழி நூலாய்வு என்னும் நூலையும், 1876-இல் மொழியின் வாழ்க்கையும் வளர்ச்சியும் என்னும் நூலையும், 1879-இல் சமற்கிருத இலக்கணத்தையும், 1881-இல் மொழியிற் கலப்பு என்னும்நூலையும் வெளியிட்டார்; பேத்திலிங்கின் அகரமுதலிக்கும் இடையிடை சொற்கள் உதவினார். இவர் சில சமயங்களில் மாக்கசு முல்லர் கொள்கையைக் கடிந்ததுண்டு. 1856-இல் கால்டுவெல் மேற்காணியார் (Bishop), தம் உலகப் புகழ்பெற்ற திரவிட ஒப்பியல் இலக்கணத்தை வெளியிட்டார். அந் நூல் தமிழின் சிறப்பையும் தமிழன் பெருமையையும் உலகத் திற் கெடுத்துக் காட்டுவதிற் சாண் ஏறி முழஞ் சறுக்கினதாகும். கால்டுவெல் ஐயர் அயர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்து, பண்டைச் செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டின் தென்பால் தங்கி, பதினெண்ணாண்டு அயராதுழைத்துத் தமிழைச் சிறப்பாக ஆய்ந்து கற்றபின் தம் ஒப்பிய லிலக்கணத்தை எழுதினாரேனும், அக்காலத்துச் சூழ்நிலைகளும் சுற்றுச் சார்பும் அவர் தமிழின் உண்மையான இயல்பை அறியாமுடியாவாறு அமைந்திருந்தன. 1. இதுபோதுள்ள பண்டைத் தமிழ்நூலாகிய தொல்காப்பியமும் கடைக்கழக நூல்களும், அக்காலத் தலைமைத் தமிழ்ப் புலவர்க்குந் தெரியாது மறையுண்டு கிடந்தன. 2. மறைமலையடிகள் போலுந் தனித்தமிழ்ப் புலவர் அக்காலத்தில் இல்லை. 3. தமிழன் பிறந்தகம் குமரிநாடென்பது அக்காலத்து ஒருவர்க்குந் தெரியாது. 4. இக்காலத்திற் போன்ற இனவிழிப்புணர்ச்சி அக்காலத் தமிழர்க்கில்லை. 5. எல்லா வகையிலும் ஆரிய மேம்பாட்டைத் தமிழர் அனைவரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். இனி, ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டதும், இந்திய நாகரிகம் முழுவதையும் காட்டும் இலக்கியம் இன்று சமற்கிருதத்திலிருப்பதும், எல்லாத் துறையிலும் பிராமணர் முன்னேறியிருப்பதும் கால்டுவெலார்க்குத் தமிழ் நாகரிகத்தைப் பற்றியிருந்த தாழ்வான கருத்தை வலியுறுத்தி விட்டன. தமிழ்நாகரிகம் கொற்கையில் தோன்றி ஆரியர் வருமுன் நகர நாட்டு (City State) நிலையே அடைந்திருந்ததென்றும், தமிழர்க்கு ஆழ்கடற் செலவின்மையால் இலங்கை தவிர வேறொரு தீவுந் தெரியாதென்றும், தமிழ் நெடுங்கணக்கும் எண்வேற்றுமையமைப்பும் சமற்கிருதத்தைப் பின்பற்றியவை யென்றும், உயர்கலைகளை யெல்லாம் தமிழர் ஆரியரிடத் தினின்று கற்றுக் கொண்டனரென் றும், பல அடிப்படைத் தென் சொற்களை வடசொற் களென்றும், கூறித் தம் அறிதல் வாய்ப்புக் குறைவினால் தமிழரை மிகமிகத் தாழ்த்தி யெழுதி விட்டனர். இரண்டாம் பதிப்பில் ஓரளவு தமிழ்ப் பெருமையை வெளியிட்ட தற்கும், மலையாள மொழியறிஞரான குண்டர்ட்டு, தமிழறிஞ ரான போப்பு, கன்னட மொழியறிஞரான கிற்றெல் முதலியோரே பெரிதுங் கரணியம் என அறிதல் வேண்டும். பேரா. (K.A.) நீலகண்ட சாத்திரியார் தம் தமிழர் வரலாறும் கலைநாகரிகமும் என்னும் நூலில், தமிழரைத் தாழ்த்தி யெழுதிய தற்குக் கால்டுவெலார் மதிப்பீட்டையே சான்றாகக் காட்டியிருப் பதால், கால்டுவெலார் ஒப்பியல் இலக்கணத்தை இற்றைக் கேலாதென்று தள்ளுவதே தக்கதாம். கோல் (cole) என்பவர் 1867-இல் குடகுமொழியின் தொடக்க இலக்கணத்தை வெளியிட்டார். சாண் பீம்சு (John Beames) என்பவர் 1867-இல் இந்திய மொழிநூற் சட்டகம் என்னும் நூலையும், இக்கால இந்திய ஆரிய மொழி களின் ஒப்பியல் இலக்கண மும்மடலங்களை முறையே 1872, 1875, 1879 ஆகிய ஆண்டுகளிலும், வெளியிட்டார். குண்டர்ட்டு (Gundert) என்னும் செருமானிய ஐயர் 1868-இல் மலையாள - ஆங்கில அகரமுதலியை வெளியிட்டார். 1872-இல் ஆர்டென் (Arden) ஐயரின் தமிழ் தெலுங் கிலக்கணங் களும், பிரிகேல் (Brigel) என்பவரின் துளுவிலக்கணமும், வெளி வந்தன. 1873-இல் போப்பு ஐயரின் துடவ மொழி யிலக்கணச் சட்டகம் வெளி வந்தது. 1880-இல் ஓயெர்ண்லே (A.F.R. Hoernle) என்பவரின் கௌட மொழிகளின் இலக்கணம் வெளிவந்தது. 1884-இல் ஏர்ணத்து துரோசு (Ernest Droese) என்பவரின் மாலத் தோப் (Malto) புகுமுக விலக்கணமும், 1890-இல் வில்லியம் சன் என்பவரின் கோண்டிச் சொற்றொகுதியோடு கூடிய இலக்கண மும், 1894-ல் கிற்றெலின் (Kittel) கன்னட ஆங்கில அகரமுதலியும், 1899-இல் மானியர் வில்லியம்சின் சமற்கிருத ஆங்கில அகரமுதலி யும், வெளிவந்தன. இந்நூற்றாண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த மொழிநூல்களுள் முதன்மையானவை, கிரையர்சன் (1903-28), எடுவர்டு சப்பீ, (Edward Sapir, 1921) ஆட்டோ செசுப்பெர்சென் (Jesperson 1922) வெந்திரையசு (Vendryes 1325), புளூம்பீல்டு (Bloomfield 1933), பிரொடரிக்கு பாடுமேர் (Frederick Bodmer, 1944) கிளீசன் (Gleason, 1955) இலாகோ வாரி (Lahohvary, 1963), பார்பெர் (1964) என்பவர் எழுதியனவாகும். இவற்றுள் கிரையர்சன் தொகுத்த இந்திய மொழிப் பரப்பளவை, (Linguistic Survey of India) இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகச்சிறப்புடையதாகும். இது 20 மடலங்கொண்டது; இந்திய மொழிகளையெல்லாம் ஆய்ந்து 179 மொழிகளும் 544 நடை மொழிகளுமாகக் (Dialects) கணக்கிட்டு, ஒவ்வொன்றன் இயல்பையும் இலக்கிய விலக்கணங்களையும் குடும்பவுறவையும் எடுத்துக்காட்டுடன் விரிவாக விளக்குவது. சப்பீர் மொழியின் அமைப்பையும் வளர்ச்சியையும் கலப்பையும் அயலாரால் தழுவப் பெருந்தன்மையையும், செசுப்பெர்சென் மொழிகளின் தோற்ற வளர்ச்சி மாற்றங்களையும், வெந்திரையசு எழுத்தொலி முறை களையும் சொல்லின் வடிவு பொருள் வளர்ச்சிகளையும் மொழிகளையும் வரிவடிவுத் தோற்றத்தையும், புளூம்பீல்டு உலகமொழிகளையும் ஒலிவகைகளையும் சொற் றொடர் முறைகளையும் சொன்மாற்றங்களையும் சொற்கடன் கோடல் வகைகளையும் பாடுமேர் மேலைக் குறுங்கணக்கு (Alpha-bet) வரலாற்றையும் சொற்றொடர் நெறிமுறைகளையும் மொழி களின் பாகு பாட்டையும் செயற்கையுலக மொழிகளையும் மேலை யாரியச் சொற்றொகுதி களையும் சொன்மூலங்களையும், மேரியோ பெய்மொழியின் வரலாறு அமைப்பு பயன்பாடு முதலியவற்றை யும், கிளீசன் வண்ணனை மொழி நூலையும், இலாகோவாரி இந்தியாவிற்கும் நண்ணிலக்கடற்கரைக்கும் இடைப்பட்ட மொழிகளின் படிமுறைத்திரிபையும், பார்பெர் மொழிவரலாற் றையும், எழுத்துவரலாற்றையும் மொழிக் குடும்பங்களையும் ஆங்கில மொழிவரலாற்றையும் சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளனர். இந்நூற்றாண்டிலெழுந்த திரவிடமொழிகளின் இலக்கணங் களும் அகரமுதலிகளும் ஆவன:- 1903 - கிற்றெலின் கன்னட இலக்கணம், 1909 - தெனிசு தீஎசு. பிரே எழுதிய பிராகுவீ மொழியின் அறிமுகமும், இலக்கணமும், - முதற்பாகம். 1911 - குல்சே எழுதிய குவீமொழி யிலக்கணம். 1913- பிராண்மேயர் (Frohnmeyer) எழுதிய மலையாள இலக்கணம். 1924 - கிரிகுனாடு எழுதிய ஒராவொன் மொழி அகரமுதலியும் இலக்கணமும். 1928 - பின்பீல்டு எழுதிய கூய்மொழி யிலக்கணம். 1924-36 சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி 7 மடலம். 1944 - பரோவும் பட்டாச்சாரியாவும் சேர்ந்தெழுதிய பர்சிமொழி 1955 - எமனோ எழுதிய கோலாமி ஒரு திரவிடமொழி. 1956 - பட்டாச்சாரியா எழுதிய கொண்டாமொழி (இலக்கணமும் சொற்றொகுதியும்) 1957 - பட்டாச்சாரியா எழுதிய ஒல்லாரி ஒரு திராவிடமொழி. 1961 - பரோவும் எமெனோவும் இணைந்து தொகுத்த திரவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி. இங்ஙனமே ஏனையிந்தியமொழிகட்கும் பிறநாட்டு மொழிகட்கும், இலக்கண நூல்களும் அகரமுதலிகளும் வெவ்வேறு ஆசிரியரால் இயற்றப் பட்டன. ஒரு மொழிக்கே சிறப்பும் உலகப் பொதுவுமான எழுத்தொலி யிலக்கணங்களும் (Phonetic works) ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றின. ஆங்கிலத்திற் போன்றே செருமனிய பிரெஞ்சுமொழிகளிலும், மொழிநூல்களும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளும் பன்மொழி யிலக்கணங்களும் அகரமுதலிகளும் ஏராளமாக எழுந்தன. ஆயின், மேலையர், பொதுவாக, சமற்கிருதத்திற்கே அளவிறந்த முதன்மை கொடுத்து அதனையே சிறப்பாக ஆய்ந்து வந்தனர். எல்லாமொழியகரமுதலிகளுள்ளும் மிகமிகக் கேடானதும் உண்மைக்கு மாறானதும் வழுமலிந்ததும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியே. அது தமிழ்ப்பகைவரான பிராமண ரால் திரு. வையா புரிப்பிள்ளையின் துணைகொண்டு தமிழைக் கெடுத்தற்கே தொகுக்கப்பட்டது. அதன் எண்பெருங் குற்றங் களாவன:- 1. ஆயிரக்கணக்கான தென்சொல் இன்மை. 2. ஆயிரக்கணக்கான வேண்டா அயற்சொல் உண்மை. 3. சொற்பொருளெல்லாங் கூறப்படாமை. 4. கூறப்பட்டுள்ள பல பொருள்களின் வழுவியன்மை. 5. அடிப்படைத் தென்சொற்களுட் பெரும்பாலனவற்றிற்கு ஆரிய மூலங்குறிக்கப் பட்டுள்ளமை. 6. வேறுபட்ட பல சொற்கள் ஒரே மூலத்தனவாகக் காட்டப் பட்டுள்ளமை. 7. சொற்களின் ஒலிமுறை வரிபெயர்ப்பில் (Transliteration) உண்மைக்கு மாறா யுள்ளமை. 8. இயற்சொல்லின்கீழ்த் திரிசொற்களும் பிறந்தையின் (Genus) கீழ் இனங்களும் (Species) காட்டப்பெறாது, எல்லாம் ஒரே அளவான எழுத்துவடிவில் அகரவரிசையாய் அமைக்கப்பட்டுள்ளமை. இவ்வகரமுதலியை அடிப்படையாகக் கொண்டதினாலேயே, பர்பரோவும் பர். எமெனோவும் தொகுத்த திரவிட ஒப்பியல் அகர முதலி பல்வகையிலும் வழுப்பட்டுள்ளதென்க. அது ஒப்பியல் அகரமுதலி யாகவேயிருப்பினும், சொற்பிறப்பியல் (Etymological) அகரமுதலியென்று பெயர்பெற்றிருப்பதே அதன் அடிப்படைத் தவற்றைக் காட்டும். ஒரு மொழியின் இலக்கியத்தை அயலார் கற்றுத் தேர்ச்சி பெறலாம். ஆயின், ஒரு மொழிப் பேச்சில் அங்ஙனம் தேர்ச்சிபெற முடியாது. ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பான சொன்மரபுகளும் வழக்காறுகளும் உள. அவற்றை அம்மொழி நாட்டார் அறிவிக்கவே அறியமுடியும். அவற்றை அந்நாட்டார்போல் இயற்கையாக ஆள ஓரிரு தலைமுறையேனும் அந்நாட்டில் வதிந்து அவரோடு இரண்டறக் கலந்து பழகியிருக்கவேண்டும். பிராமணர் இன்னும் தமிழரொடு நெருங்கிப் பழகாமையால் தமிழைச் செவ்வையாய் அறியவில்லை. அதோடு தமிழை வெறுத்து வடசொற்களைப் புகுத்தித் தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்தவுஞ் செய்கின்றனர். மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள் முதன்முதல் தமிழகத்தில் வந்து வழங்கிய அயன்மொழி வட மொழியே யாதலால், அக்காலத்து மொழிகளைத் தென்மொழி வடமொழியென இரு வகுப்பாகவும், தென்மொழியைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என இருவகை யாகவும், செந்தமிழை இயற்சொல் (Primitives) திரிசொல் (Derivatives) என இரு கூறாகவும், வகுத்து: கொடுந்தமிழ்நாட்டுச் சிறப்புச் சொற்களை மட்டும் திசைச் சொல் (Provincialism) எனத் தழுவி: திரிசொற்களையெல்லாம் முதனிலை, ஈறு, உருபு, இடைநிலை, புணர்ச்சி, சாரியை, திரிபு (விகாரம்) என ஏழுறுப்பாகப் பகுத்து, இருவகைச் சொற்கும் இயற்பொருள் ஆக்கப் பொருள் ஆட்சிப் பொருள் வேர்ப்பொருள் (மொழிப்பொருட் காரணம்) என்னும் நால்வகைப் பொருளுங் கண்டு: வலித்தல் மெலித்தல் தொகுத்தல் விரித்தல் நீட்டல் குறுக்கல் என்றும், போலி என்றும், சிதைவு என்றும் குறை என்றும், மரூஉ என்றும். சொற்றிரிபு முறைகட்குப் பெயரிட்டும்: கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப் பியத்திற்கு முன்பே. மொழிநூற்கு அடிகோலிவிட்டனர் நம் மூதறிஞரான முன்னோர். தொல்காப்பியம், முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்த சார்பிற் சார்பு நூலாதலின், மேற்கூறிய மொழிநூற் கூறுகளுள் வடசொல் என்பது தவிர ஏனையவெல்லாம், தலைக்கழகக் காலத்தினின்று வழிவழி வந்தனவேயாம். ஆதலால், பிற்காலத் திரிமொழிகளாகிய ஆரியத்தையும் அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தையும் அடிப்படை யாக வைத்தாய்ந்து, மேலையர் உண்மைக்கும் உத்திக்கும் மாறாகக் கூறும் போலி நெறிமுறைகள் கொள்ளத்தக்கனவல்ல. அவையாவன: 1. மலைவாணரெல்லாரும் பழங்குடி மக்களெனல் மொழியில்லாத முதற்கால (Primitive) அநாகரிக மாந்தரெல் லாரும், இயற்கை விளைவுண்டு மரத்திலும் குகையிலும் தங்கி மலையில் வதிந்தது உண்மையே. ஆயின், நீலமலைத் துடவரும் கோத்தரும் பெலுச்சித்தானப் பிராகுவீயரும், முதற்கால மாந்தர் வழியினர் அல்லர். அவர்கள் நாகரிகக் காலத்தில் கொள்ளைக்கும் போருக்கும் அஞ்சிப் பாதுகாப்பைத் தேடிக் குறிஞ்சி நிலத்தி லிருந்தும் முல்லை நிலத்திலிருந்தும், சிறுபான்மை மருத நிலத்தி லிருந்தும், மலையேறி உச்சிக்குச் சென்று குடிபுகுந்தவரின் வழியினரே. இதை அவர் ஊணுடை யுறையுளும் தொழிலும் மொழியும் காட்டும். அவர்கள் மொழி கீழ்நிலத்து நாகரிக மொழியின் கொச்சைத் திரிபே. எ-கா: தமிழ் துடவம் யான், நான் ஒன் ஐயன்(தந்தை) இன்,எயி மகன் மக் எருது எத் ஒன்று ஒத் உறங்கு வற்க் கும்பிடு குபிட் முந்துகாலத் தமிழர் நிலை குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. 2. சொற்குறுக்கமெல்லாம் வேர்ச்சொல்லெனல் ஒரு மொழியின் சொற்கள் முந்துநிலையிலும் கொச்சை நிலையிலும் குறுகி நிற்கும். மலைவாணர் பேசுவது கொச்சை நடையாதலின், அவர் சொற்கள் பெரும்பாலும் ஓரசையாகவும் ஓரெழுத்தாகவும் குறுகி நிற்பது இயல்பு. இதை வேர்ச்சொல்லாகக் கருதி இற்றை மலைவாணரைப் பழங்குடி மக்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வர் மேலையர். எ-கா: தமிழ் பிராகுவீ ஏன்(யான்) ஈ இரு அர் அவர்கள் ஓவ்க் வாய்கள் பாக் எது மூலம்? எது திரிபு என்பது, சொல்லமைப்பை நோக்கினால் தெரிய வரும். 3. இலக்கியச் சொற்பொருள் வரிசையே இயற்கைச் சொற்பொருள் வரிசையெனல். ஒரு சொல்லின் பல வடிவங்களும் பொருள்களும் தோன்றிய காலவொழுங்கை, அவை முதன்முதலாகத் தோன்றியபொழுதே, அறிய முடியும், இலக்கியத்திற் புதிதாகத் தோன்றியவை தவிரப் பிறவெல்லாம், பழைய மொழிநிலையில் தோன்றிய வரிசைப் படியன்றி, அவ்வவ் விடத்தின் தேவைக்கேற்றவாறே, முன்னது பின்னும் பின்னது முன்னுமாக ஆளப்பெறும், ஆதலால், இலக்கி யத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சொல்லின் வடிவையோ பொருளையோ முன்னது பின்னதென்று துணியமுடியாது. ஆயின், இயற்கையையும் உளநூலையும் தழுவி ஏரணமுறைப் படி, சொற்பொருள் வரிசையொழுங்கைப் பெரும்பாலும் உய்த்துணரலாம். பள்ளி என்னுஞ் சொல்லிற்குப் படுக்கை, தூக்கம், படுக்கையறை, அறை,வீடு, இடம், விலங்கு, துயிலிடம், சாலை, அறச்சாலை, மடம், பள்ளிக்கூடம், தவப்பள்ளி, அரண்மனை, கோவில், சமண புத்தர் தொழுகைமனை, பணிக்களம், அரசன், துறவி ஆகியோர் கல்லறை, இடைச்சேரி, சிற்றூர், நகரம் முதலிய பல பொருள்கள் உள. அவற்றுள் இடம் என்பது வீடு என்பதன் பின்னரே தோன்றி யிருத்தல் வேண்டும். ஆயின், இற்றைத் தமிழ்நூல்களுள் முதல தாகிய தொல்காப்பியத்தில், சொல்லிய பள்ளி நிலையின வாயினும் (எழுத்து.18) என்று, பள்ளி என்னும் சொல் இடம் என்னும் வழிப்பொருளில் ஆளப்பட்டி ருப்பதால், அதையே முதற்பொருளாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்துள்ளது. இங்ஙனமே, மேலைமொழி நூலாரும், இலக்கியத் தில் முந்தியாளப்பட்ட வடிவும் பொருளும் முந்தியவை யென்றும், பிந்தியாளப் பட்ட வடிவும் பொருளும் பிந்தியவையென்றும், கொண்டிருக்கின்றனர். பள்ளிஎன்னும் சொல்லின் முதனிலை பள்ளத்தை அல்லது தாழ்மட்டத்தைக் குறிப்பதால், படுக்கை என்பதே அதன் முதற் பொருளாகும். நிற்கையிலும் இருக்கையும், இருக்கையினும் படுக்கையும் அதனாற் படுக்கும் இடம் அல்லது விரிப்பும் தாழ் மட்டமாயிருத்தல் காண்க. பள்ளி கொண்டான் பள்ளியெழுச்சி என்னும் வழக்குளையும் நோக்குக. பள் - படு - படுக்கை, படை, பாடி, பாடை, பாடு. பாட்டாம் = தட்டையரம். படை என்பது முதலில் அடிப்படை யையே குறித்தது. ஆரியமொழிகள் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற் பொருள்கள் அவற்றிலேயே தோன்றியன வல்ல. 4. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் எனல் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல் காப்பியம் (பொருளியல். 1). இங்ஙனஞ் சொல்வதும் சொல்லக் கூடியதும் தமிழ் ஒன்றே. ஏனெனின், பெரும்பாற் சொற்களை இன்றும் இயல் வடிவிற் கொண்டுள்ளது அஃதொன்றே. ஏனை மொழிச் சொற்கள் பெரும்பாலும் திரிவடிவிலும் சிதைவடிவிலு மிருப்பதால், அவற்றின் வேர்ப் பொருளைக் காணல் இயலாது. எ-கா: தமிழ் பிறமொழி பொருள் மாறு-மாற்றம் மாட்ட (தெலுங்கு) சொல் இடைகழி தேஹலீ(சமற்கிருதம்) வீட்டின்நடை (இடைகழி-டேகழி- (கொச்சைத்திரிபு) டேகழி என்பதன் திரிபே டேழி-ரேழி) தேஹலீ இஞ்சிவேர்(இஞ்சு- ஜிஞ்சர் (ஆங்கிலம்) இஞ்சி இஞ்சி) பசு-பை-பைது- பைதொ (கிரேக்கம்) பையன் பைதல் வள்-வர்-வார்- மாரின(இலத்தீன்) கடற்குரிய வாரணம்-வாரண தமிழிலும் பல சொற்களைக் கண்ட அல்லது கேட்டமட்டில் அவற்றின் வேர்ப் பொருளைக் காணமுடியாது. சிலவற்றில் அது விளங்கித் தோன்றும்: சிலவற்றில் மறைந்து நிற்கும். மறைந்து நிற்பவற்றை ஆய்ந்தே காணல் வேண்டும். அதனால், மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் தொல் காப்பியர். (உரி.96). எ-கா: சுள் - சுடு - சுடல் - சுடலை (விழிப்பத் தோன்றுவது) புல் - புள் - புழல் - புடல் - புடலை (விழிப்பத் தோன்றாதது) மேலை மொழி நூலார் இயன்மொழியாகிய தமிழை அடிப்படை யாகக் கொள்ளாது திரிமொழியாகிய சமற்கிருதத்தை அடிப் படையாகக் கொண்டு ஆய்ந்ததனாலேயே, வேர்ப்பொருள் காணாதுகுன்று முட்டிய குருடர் போல் இடர்ப்பட்டு, எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்று முடிபு செய்தனர். 5. இந்திய நாகரிகம் ஆரியர் கண்டது எனல் தமிழ் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராயாது, தமிழர் நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவரென்றும், கலவை யினத்தாரென்றும், வேத ஆரியரால் நாகரிகப்படுத்தப் பட்டவ ரென்றும், குருட்டுத்தனமாகவும், குரங்குப் பிடியாகவும் கொண்டுள்ளனர். இதற்கு ஆராய்ச்சியின்மை மட்டுமன்றி, இனவுணர்ச்சியும் கரணியமாகும். குமரிநாடு முழுகிப் போனதும், முதலிரு கழக நூல்களும் இறந்து பட்டதும், மதத்துறையில் தமிழும் குமுகாயத்துறையில் தமிழரும் தாழ்த்தப் பட்டிருப்பதும், இவற்றிற்கு மாறாக, இந்திய நாகரிக இலக்கியம் இன்று பெரும்பாலும் சமற்கிருதத்திலிருப் பதும், சமற்கிருதம் தேவமொழியென்றும் பிராமணர் பிறப்பி லுயர்ந்தவரென்றும் உயர்த்தப் பட்டிருப்பதும், மேனாட்டார் மேலோட்டமாய்க் காணும் வேற்றுமை நிலைமைகளாகும். 6. சமற்கிருதம் ஆரியத்தின் மூலம் எனல். தமிழின் அல்லது தமிழரின் பிறந்தகம் குமரிநாடென்றும், தமிழ் திரிந்து திரவிடமும் திரவிடம் திரிந்து ஆரியமும் ஆயிற்றென்றும், மேனாட்டினின்று வந்து வழக்கற்ற ஆரியம் வடநாட்டுப் பிராகிரு தங்களொடு கலந்து வேதமொழி யாயிற்றென்றும், வேதமொழி தமிழொடு கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary Dialect) தோன்றிற்றென்றும், உண்மை யறியாத அல்லது அறிய விரும்பாத மேலை மொழி நூலார், சமற்கிருதத்தையே ஆரியத்தின் மூலமென்று கொண்டு, சட்டைக் கேற்ப உடம்பை வெட்டுவது போலப் பல ஒவ்வாத நெறிமுறை களைக் கொண்டு, வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) என்னும் வழுவியற் போலி யறிவியலை வளர்த்து வருகின்றனர். (கட்டுரைப் பொழில் - கரந்தைத் தமிழ்ச்சங்க மணிவிழா மலர் 1973.) மேலையாரிய இனச் சொற்கள் பண்பட்ட மொழியில் ஒரு கருத்தைத் தெரிவிப்பது பெரும்பாலும் சொற்றொடரேயாயினும், ஒவ்வொரு மொழியும் சொற்களாக வன்றிச் சொற்றொடர்களாகத் தோன்றாமையால், உண்மையில் மொழி என்பது முழுநிறைவான சொற்றொகுதியே. வேத ஆரியரின் முன்னோர் மேனாட்டினின்று வந்தமையால், அவர் மொழி மேலையாரிய மொழிகளை ஒத்திருந்தது. எ-டு: தன்மை முன்னிலைப் பெயர்கள் பொருள் GK L Ger E S யான்-நான் ego ego ich ic(OE),I aham யாம்,நாம் hemeis nos wir we vayam நீ su tu du thou tvam நீம்(நீர்) humeis vos euch,ihr you yuyam (வ.வ.) சில முறைப் பெயர்கள் தந்தை pater pater vater father pitru தாய் meter mater mutter mother ma#tru மகன் - - sohn son sunu மகள் thugatar - tochter daughter duhitru உடன்பிறந் frater frater bruder brother bhratru தான் உடன்பிறந் - (sostor schwe sister svasru தாள் sosor) -ster சில உறுப்புப் பெயர்கள் பொருள் S Gk L. Ger E தலை kapala kafale eaput haupt head புருவம் bhru o-phrus - — brow கண் aks|a osse oculos auge eye மூக்கு na#si — nasus nase nose பல் dant ontas dens zahn tooth களம்(மிடறு) gala — collum — — gula நெஞ்சாங் hrudaya kardia cordis herza heart குலை,வயிறு udara delphis uterus — —- (கருப்பை) கால்முட்டி janu gonu genu knie knee (கணு) பாதம் pada, pod ped fuss foot pa#da உகிர்(நகம்) nakha - - - nail தோல் carma derma - - - எலும்பு asthi osteon - - - எலும்பு majja - - marg marrow மூளை மனம் manas - mens - mind (வ.வ.) சில எண்ணுப் பெயர்கள் ஒன்று eka eis,en unus eins one இரண்டு dvi duo duo zwei two மூன்று thri treis tres drei three நான்கு chathur tettares quatuor vier four ஐந்து panchan pentre qninque funf five ஆறு s|as| hex sex sechs six ஏழு sapthan hepta septem steben seven எட்டு as|t|am okto octo acht eight ஒன்பது navan ennea novem neun nine பத்து dasan deka decem zehn ten இருபது vimsathi eikosi(n) viginti zwanzig twenty நூறு satha ekaton centum hundert hundred (வ.வ.) சில பொதுச்சொற்கள் பொருள் வடமொழி மேலையாரியம் வளைவு anka Gk hankas, L uncus அச்சு aks|a L axis, Gk axon, OG ahsa, Mod Ger achse, Lith assis தீ agni L ignis முடிவு anta E end, OE ende, OS endi, OHG enti, ON endir, Goth andeis. நுனி agra Gk akros நீர் ap L aqua, Goth ahva(river) OG aha affa, Lith upp (river), அப்பால் apa Gk apo, Lab, Goth of, E. of. (வ.வ.) எதிர்முக abhi L ob. குதிரை aŠva L equus, Gk hippos. எருது uks|an E ox, OEoxa, Goth auhsa, Armen esn. E நீர் udaka Gk hudor, L unda, E water, Ger wasser. எழு udi L ori. உம்பர் upari OG obar, Mod G uber, E over, Goth ufar, L super Gk huper. காலவகை karan|a Gk chronos. நடுவண் kendra Gk kentron, L centrum, (வ.வ.) E centre. வீடு grha(?) E kirk, ON kirkja, OE circe, OS kirika, OHG kirihha, E church. வெப்பம் gharma E warm, Ger warm, Goth (ghr|. v.i.)varmya, L formus, Gk thermos. சக்கரம் cakra L circum, E circle, Gk kuklos. ஞாலம் ku Gk ge. தச்சன் taks|a Gk tekton. மரம் taru, dru, Gk drus, E tree, Ger (வ.வ.) da#ru zehren, trewo, Goth triu. btŸË(cL)ta#raka E star, Gk aster, L stella. துளை dva#r Gk thura E door Ger tor, (வாசல்) L. fores, porta. வீடு dama L domus Gk domos. தெய்வம் daiva L devo, Gk theos. நிலம் dhara L terra. நாகம் na#ga E snake OE snaca MLG snake ON snakr. (வ.வ.) பெயர் na#man E name, OE nama, OS, OHG namo, Ger name, Goth namo, ON nafn, L nomen, Gk onoma. கீழ் ni, nica E neath, OE neoth, OS nith, OHG nid, On neth, AS nither, Ger nider, Slva nizu,GK eni. முதல் pratama Gk protos, L primus. ஆடவன், Purus|a (?) L persona, E person மூவிடத்து ளொன்று முன் puras, pura# Gk pro, L pro, Slav, pra, pu#rva, pra pro, Lith pra, E fore, Goth faur, faura, Ger, Vor. (வ.வ.) ஒருவகை bhu#rja E birch OHG birihha OE மரம் bierce, berc, ON bjork. கரு bhrun|a L embryo, Gk embruon. மீன் matsya L piscis, E fish. மத்தம் matta, mad E mad, OS med, OHG (கிறுக்கு) meit Goth maiths மது(கள்.தேன்) madhu s lav medu E mead, Ger meth, Lith midus, L mel. (வ.வ.) நடுவண் madhya L medius, E mid, middle, Ger mitte, Gk messos. மா (பெரிய) mah L magnus, Gk megas. மன் manu, manusa E man, OE man(n) OS. (மாந்தன்) OHG man, Goth manna ON mathr. மாத்திரம், matra# Gk metron, metreo, L metior, மாத்திரை mensus, mersura E measure, (அளவு) Slav mera, Lith mera E meter, metre. வடிவம் mu#rta Gk morphe. எலி, mu#s|ika L mus, O.S, OHG, ON சுண்டெலி mus, OE mu#s, E mouse. (வ.வ.) ï¥bghGJnu,nu# Gk nu, nun, L nune, Ger nu, nun, AS nu, nu#, OE nu#, E now. நுகம் yuga E yoke, L jugum. உண் மை yata# Gk etumos, eteos. யான மணப் vadhu# E wed (to mary). பெண் பன்றி vara#ka u varken, L pork. ஆடை vastra L vestis, E vesture. சொல் va#rtha# E, OE, OS word, OHG wort, ON orth, Goth waurd, Ger worte, L verbam. (வ.வ.) வாரி (கடல்) varidhi L mare. வால் va#la,va#ra Gk oura. உருவம் vlgraha L flgura, E figure. வெள்ளை sveta E white, OE, OS hwit, OHG (h) wiz, ON hvitr, Goth hweits. நாய் sunaka L canis. பன்றி su#kara L sukula. நரி sr|ga#la E jackal, Turk chakal, (வ.வ.) pers shagal சொந்த sva L suus, Gk sphos, Goth sik, Ger sich. பனி hi#ma L hiems Gk kheimon, khimos, Slav zima, Lith zema. அருந்து ad E eat, Goth it, L ed, Gk (உண்) ed, Ger ess, Arm ut. நெருக்கித் u#rj L urge, Gk orago, Goth தூண்டு vrik, Lith verz. போ gam E go, OE, OS ga#n, OHG ga#n, gen. பேராசைப் gr|dh E greed (n), OS graedig gL(adj.), OS gradag, OHG gratac, ON grathugr, Goth gredags. ஆராய் circ (?) E search, L circare. பிற jan Gk gen, L gen(erare), E kin (வ.வ.) வாழ் ji#v Gk zoo. நீட்டு tan L tens, E tend. வெப்ப tap L tepere, E tepid(adj.). மாயிரு துர- tur E drive, OE drif, OS drib, துரத்து OHG trib, ON drifa, Goth dreib. பழக்கு dam L domare, Gk dmos, E tame. ஓடித்திரி dram Gk dromos. தா da# L do, donare- குடி(பருகு) pa# L bib, E bib. கூ,கூவு ku, ku# E coo, Gk kokuo. மடி,மரி mr| L mori. முழுகு majj L mergo, mers, E merge. (வ.வ.) நுகம்பூட்டு yuj E yoke, OE geoc, OHG joh, OS, Goth juk, ON ok, L jugare. சிவப்பாயிரு rudh E red, AS read, Ger rot, Goth rauths, Slva rudru, Lith rudas, raudas, L ruber, rufus, Gk eruth-ros. வரிசைப் rac E range. படுத்து வெட்டு lup E lop neh¡F(gh®)lok E look, OE locian, OS locon OHG luogen. பேசு vad Lith vad. சிதைத்துத் vadh Gk Gtheo (வ.வ.) துன்புறுத்து வெல் van E win, L venia, Goth gawinnan, Ger gewinnen அறி vid L vid, Slav, ved, Goth wit, wait, Cer Wizz, wiss, AS wat, E wot, wit, Gk edein. நெய் ve E weave, OE wef, ON vefa, OHG web. வீங்கு svi E swell, OE, OS,OHG swellan, ON svella. உட்கார் sat E sit, L sed. தை siv E sew, OE si(o)w, OHG siuw, ON syj, Goth siuj, L sue. நில் stha# L sta, E, OE, OS, Goth, ON stand, OHG stant, Ger stan, slav, sta, Lith sto, Gk i-sta திருடு sten L steal, OE, OS, OHG stel, ON stel, Goth stil. வியர் svid E sweat, ME swet(e). OE swat, OS swe#t, OHG sweiz, ON sveit, Ger swizz, L sudare, Gk iddros. k»œ hlad E glad (v.t.), OE glaed, OS glad, ON glathr, OHG glat. ஒலி svan E swan; Ger schwan, AS swin, L sonare. ï‹Rit svad E sweet (a.&n.) OE யாயிரு swete, OS swoti, HOG s(w)uozi, ON soetr, L suavis, suad, Goth suts. (வ.வ.) (இரு என்னும் துணை வினைச்சொல்) பொருள் S Gk L Ger E இருக்கிறேன் asmi esmi sum bin am இருக்கிறோம் ’smas esmes ’sumus sind are இருக்கிறாய் asi eis es bist art இருக்கிறீர்(கள்) stha este estis seid are இருக்-கிறான்-ள், கின்றது asti esti est ist is இருக்-கிறார்(கள்)- கின்றன santi eisi sunt sind are இதுகாறும் காட்டப் பெற்றவை எடுத்துக் காட்டுச் சொற்களே. இவற்றினின்று, வேத ஆரியரின் முன்னோர் மொழி எவ்வாறு மேலையாரிய மொழிகட்கு இனமாயிருந்த தென்பதைத் தெளி வாய்க் கண்டு கொள்ளலாம். (வ.வ). பொதுவாக, மேலையாரிய மொழிக் குடும்பங்கட்குள் தியூத்தானி யம் முந்திய நிலையையும், கிரேக்கம், சிலாவோனியம் முதலியவை பிந்திய நிலையையும், காட்டுகின்றன. இதனால், ஐரோப்பாவின் வடமேற்கோடியிலிருந்து தென்கீழ்க்கோடி நோக்கி ஆரியமொழி கள் படிப்படியாய்த் திரிந்து வந்திருப்பதை அறியலாம். சில சொற்கள் இப் பொதுவியல்பிற்கு மாறாகத் தியூத்தானியத்தில் மிகத் திரிந்துள்ளன. இதற்கு அவை இந்தியாவினின்று முதலில் ஐரோப்பா சென்றுள்ளமையே கரணியம். எ-டு: எண்ணுப் பெயர்களும் சிலவுறுப்புப் பெயர்களும். ஆரிய மொழிகளுள் மிகத் திரிந்தது கீழையாரியம் என்பது முன்பு காட்டப்பட்டது. ஒருசில தமிழ்ச் சொற்கள் மேலையாரிய வழியாகவும் நேரடி யாகவும் வடமொழியிற் புகுந்துள்ளன. (வ.வ.) எ-டு: ருத் (rudh) - மேலைவழி ரக்த (அரத்த) - நேர்வழி அரத்தம் என்னும் குருதிப் பெயரே பண்பியாகு பெயராக அதன் நிறத்தையுங் குறிக்கும். 2. பிராகிருதச் சொற்கள் மேலையாரியத்திலும் தமிழிலும் தென்திரவிடத்திலும் இல்லாத வேதமொழிச் சொற்களெல்லாம், பிராகிருதச் சொற்களே. v-L.: ஆதி, கிராமம். (வ.வ.) மேழம் மேழம் - மேஷ (இ.வே.) மேழகம் - மேஷக. (வ.வ:245) மொய் உறவினர் மொய் வைக்கும்போது, மணவீட்டார் தமக்கு முன்பு செய்த அளவே செய்யவேண்டும் என்று கருத வேண்டுவதில்லை. தம் செல்வ நிலைக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ செய்யலாம்: அல்லாக்கால் அது வட்டியில்லாக் கடன்போலிருந்து தன் சிறப்பையிழக்கும். மண வீட்டாரும் உறவினர் நிலையறிந்து பெருந் தன்மையாய் இருந்து கொள்ளல் வேண்டும். (த.தி.61). மொழி என்றால் என்ன? ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழியாம். அவ் வொலி சொல்லுஞ் சொற்றொடருமாயிருக்கும். சொல்லும் ஒரெழுத்துச் சொல் ஈரெழுத்துச் சொல் முதலியவாகப் பலவகைத்து, ஓர் ஒலி வேறு; அதனால் உணர்த்தப்படும் பொருள்வேறு. ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு வரிவடிவெழுத்திற்கும் ஒலிவடி வெழுத்திற்கும் உள்ளதே. காற்று இயங்குவதினாலும் இரு அல்லது பல பொருள்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் ஓசை பிறக்கும். அவ் வோசைக்கு இயல்பாய்ப் பொருளில்லை. அவ் வோசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டதே மொழியாம். காற்றியக்கம் வெள்ளிடையியங்கு வதும் உயிரி (பிராணி)களின் வாய்வழி இயங்குவதும் என இரு வகைத்து. இவற்றுள், பின்னதன் பயனாய ஒலிகளே பெரும் பாலும் மொழிக் கருவியாம். ஒலிக்கு இயல்பாய்ப் பொருளுணர்த் தும் தன்மை யிருப்பின், உலகமெங்கும் என்றும் ஒரு மொழியா யும் அதுவும் கல்லாமலே அறியப்படுவதாயு மிருக்கும். அங்ஙனம் இன்மையறிக. மொழிநூலின் திறமறியாத சிலர், ஓசை நிலைப்பானது ஆகவே ஓசைவடிவான மொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது; ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானவை; புதிதாயுண்டாயவையல்ல என்று கூறுவது போன்றதே. ஒவ்வொரு நாட்டாரும் பெரும்பாலும் வெவ்வேறு மொழியைப் பேசி வருகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் மொழி யைக் கற்றாலொழியப் பேச முடியாது. ஒரு நாட்டாருள்ளும் குழந்தைகள் பெரியோர் வாயிலாய்க் கேட்டா லொழியத் தம் தாய் மொழியைப் பேசமுடியாது. குழவிப் பருவத்திலேயே தம் நாட்டாரினின்று பிரிக்கப்பட்டு மொழி வழங்காத அல்லது தாய்மொழி வழங்காத இடத்தில் நிலையாய் வாழ்ந்தவர்கள் தாய்மொழியைப் பேச முடியாது. முழுச் செவிடர் பிறர் பேசு வதைக் கேட்க இயலாமையாலேயே பெரும்பாலும் ஊமையரா கின்றனர். விலங்குகளையும் பறவைகளையும் போன்று, மிகச் சில ஒலிகளால் மிகச் சில கருத்துகளைத் தெரிவித்துக் கொண்ட தமக்கென மொழியில்லாத அநாகரிக மக்களும் சில காடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந்துள்ளது. ஒருவனுக்குப் பிறப்பிலேயே தாய்மொழி யறிவில்லை; அதைப் பேசுந்திறன் அல்லது கற்குந்திறன் மட்டுமுண்டு. ஓராண்டுக் குழந்தை அம்மா, அப்பா, பாச்சி, (பால்), சோச்சி (சோறு) முதலிய பெயர்களையும், ஒன்றரையாண்டுக் குழந்தை அவற்றொடு வா, போ முதலிய வினைகளையும், ஈராண்டுக் குழந்தை தன் கருத்திற்குரிய சொற்களெல்லாவற்றையும் சொல்லக் கற்றுக் கொள்கிறது. அல்லது கற்பிக்கப்படுகிறது. மூவாண்டுக் குழந்தை நன்றாய்ப் பேசுகிறது; பின்பு வீட்டைவிட்டு வெளியேறிப் பொருள்களையும் செய்திகளையும் அறிய அறியச் சொற் றொகுதியும் பெருகி வருகிறது; அதன்பின் கல்வியினால் பல சொற்கள் புதிதாய் அறியப்படுகின்றன. இங்ஙனம் ஒருவன் வளர வளர, அறிவு பெருகப் பெருக, தன் சொற்றொகுதியை மிகுத்துக் கொண்டே போகின்றான். ஒரு குழந்தை தன் பெற்றோரிடத் தினின்று பேசக் கற்றுக்கொண்டாற்போல, ஒரு நாட்டார் தம் முன்னோரிடத்தினின்று பேசக் கற்றுக்கொள்கின்றனர். மேற்கூறிய காரணங்களால், மாந்தன் ஒரு காலத்தில் மொழி யில்லாதிருந்தான் என்பதும், மொழியமைந்த பின் வழிவழிப் பின்னோ ரெல்லாம் முன்னோரிடத்தினின்று மொழியைக் கற்று வருகின்றனர் என்பதும் உய்த்துணரப்படும். உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தினின்றே பரவிப் போயினர் என்பதும், ஒரு தாய்வயிற்றினரே என்பதும் ஆராய்ச்சியாற் கண்ட முடிபுகளாம். மாந்தன் முதலாவது தோன்றிய இடத்தில் மக்கள் மொழியில்லாமலே சிலகாலம் வாழ்ந்து வந்தனர். மொழியில்லாத நிலையில் சில முறையும் மொழி தோன்றியபின் சில முறையுமாக மக்கள் பலதிசைக்கும் பல முறை பரவிப் போயிருக்கின்றனர். மொழியில்லாது பிரிந்துபோனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழி களை ஆக்கிக்கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ் சொற்களைத் திரித்துங் கொண்டனர். ஆயினும், தொடர்புடைய மக்களெல்லாம் தொடர்புடைய மொழிகளைப் பேசி வருவதும், மக்கள் தொடர் பின் பெருமை சிறுமைக்கேற்ப அவர்கள் மொழிகளின் தொடர் பும் மிக்கும் குறைந்து மிருப்பதும் இயல்பாம். இதற்கு, அமெரிக்க நீகிரோவைப் போல அநாகரிக மொழியராயும் கோவாப் போர்த்துக்கீசியரைப் போலச் சிறுபான்மையராயு மிருந்து, அயன்மொழிகளைக் கடைப்பிடிப்பது விலக்காம். மொழித்தோற்றக் கொள்கைகள் அறிவியற்பட்ட மொழியாராய்ச்சி தோன்றுமுன், மொழியின் அல்லது மொழிகளின் தோற்றத்தைப்பற்றி அறிஞரிடைப் பல்வேறு தவறான கருத்துக்கள் இருந்துவந்தன. அவையாவன:- 1. தெய்வக் கொள்கை (Divine Theory) இது இறைவனே மொழிகளைப்படைத்தான் என்பது. இதுவே முதன்முதல் எல்லா நாடுகளிலும் கொள்ளப் பெற்றுப் பின்பு தள்ளப்பட்டது. இதை மறுக்கும் ஏதுக்கள்: 1. மொழியில்லாமலும் சில விலங்காண்டி மக்கள் உள்ளனர். 2. சிலமொழிகள் சிறியனவாகவும் அநாகரிகமாகவும் உள்ளன. 3. எவரும் கற்காமல் இயல்பாகத் தம் தாய் மொழியைப் பேச இயலாது. 4. மக்கள் முயற்சியால் சிறுமொழிகளும் பெருமொழிகளாக வளர்ந்துள்ளன. 5. திரிபினாலும் கலப்பினாலும் பல புதுமொழிகள் தோன்றி யுள்ளன. 6. மக்களெல்லாரும் என்றும் ஒரேமொழியைப் பேசுமாறு இறைவன் செய்திருக்கலாம். 7. இறைவன் படைத்திருந்தால் மொழிகள் இன்றிருப்பதினும் மிகச்சிறப்பாகவும் குற்றங்குறையற்றும் இருந்திருக்கும். 2. ஒப்பந்தக் கொள்கை (Contract Theory) இது மக்கள் கூடி இன்ன ஒலி இன்ன பொருளுணர்த்துக என்று ஒப்பந்தஞ் செய்து கொண்டது மொழி என்பது. இது உரூசோ கொள்கை. இது வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிக்குங் கதைபோல் தன் மறுப்புக் கொள்கையாதலால் ஆய்விற்குரியதன்றாம். 3. தூண்டுணர்ச்சிக் கொள்கை (Instinct Theory) இது, இயற்கையாக மாந்தனிடையெழுந்த தூண்டுணர்ச்சியொலி களால் மொழிதோன்றிற் றென்பது. இது காண்டிலக்கு கொள்கை. இதுவும் இறைவன் படைப்புக் கொள்கைபோல் ஏரணமுறைக்கு ஒவ்வாததே. 4. குறிப்பொலிக் கொள்கை (Pooh-Pooh Theory) இது மாந்தனின் இன்ப துன்பக் குறிப்பொலிகளால் மொழி தோன்றிற் றென்பது. குறிப்பொலிகள், ஒருசில கருத்துக்களையேயன்றி எல்லாக் கருத்துக் களையும் உணர்த்தும் சொற்றொகுதியைத் தோற்று விக்கும் ஆற்றலற்றவை யாகும். 5. ஒப்பொலிக் கொள்கை (Bow-wow Theory) இது விலங்கு பறவைகளாலும் பல்வேறு நிகழ்ச்சிகளாலும் எழும் ஒலிகளைப் பின்பற்றிய சொற்களைக் கொண்டு மொழி தோன்றிற் றென்பது. ஒப்பொலிகளும் எல்லா கருத்துக்களையும் உணர்த்தும் சொற் களைப் பிறப்பிக்கும் ஆற்றலற்றவையே. 6. மணியொலிக் கொள்கை (Ding-dong Theory) இது, மணியடித்தவுடன் ஒலியெழுவது போல் கருத்துத் தோன்றிய வுடன் சொல் வெளிப்படும் என்பது. இது மாக்கசு முல்லர் கொண்டு பின்பு விட்டுவிட்டது. சொல்லிற்கும் பொருளிற்கும் இயல்பான தொடர்புண்டு என்னும் வழூஉக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இது. 7. அயாவுயிர்ப்புக் கொள்கை (Yo-he-ho Theory) இது, மக்கள் கூடி உடலைவருத்தி ஒரு வேலையைச் செய்யும் போது மூச்சடக்கி வெளியிடும் ஒலிகளால் மொழி தோன்றிற் றென்பது. இது நாய்ரே கொள்கை. இதுவும் உணர்ச்சியொலிக் கொள்கை யொத்ததே. 8. சைகைக் கொள்கை (Gesture Theory) இது, கருத்தறிவிக்கும் இரு வாயில்களுள் சைகை முந்தியது என்றும், ஒலிவடிவான மொழி அதன் வழிப்பட்டதென்றும், கூறுவது. சைகையில்லாமல் ஒலியும் ஒலியில்லாமற் சைகையும் இருதிணை யுயிர்களிடத்தும் தோன்றுவதால், இவ்விரண்டிற்கும் ஒன்றுபட்ட உறவு இல்லையென்பது தெளிவு. ஒலியொடு வடிய வாய்ச்செய்கையால் மொழி தோன்றிற்று என்பது (Mouth gesture theory) சைகைக் கொள்கையின் மற்றொரு வகை. இதைக் கொண்டவர் ரிச்சார்டு பேகெற்று. 9. தொடர்புக் கொள்கை (Contact Theory) இது, முதலில் பிறரொடு தொடர்பு கொள்ளக் குரலிடுவதும், பின்பு பொதுவாகக் கரைவதும் அதன்பின் ஒருவரைச் சிறப்பாக விளிப்பதும், அதன்பின் ஒன்றைச் செய்ய ஏவுவதுமாக மொழி தோன்றிற்று என்பது. இது ரெவெசு (Revesz) கொள்கை. இது, பிறரொடு தொடர்பு கொள்வதில் நேரும் உளநிகழ்ச்சிகளை வரிசைப் படுத்திக் கூறுகின்றதேயன்றி, மொழி தோன்றிய வகையை விளக்குகின்றிலது. 10. பாட்டொலிக் கொள்கை (Musical Theory) இது, முந்தியல் மாந்தர் வினை முடிவில் தம் கருத்தைப் பாட் டொலியாக அல்லது இன்னிசையொலித் தொடராக வெளிப் படுத்தினர் என்றும், அவற்றினின்று அலகுடைக்கும் நெடுஞ் சொற்கள் தோன்றினவென்றும், அவை உயர்ந்த இசையிலும் அலகிலும் ஒலித்தனவென்றும், அவற்றினின்றே பிற்காலச் சொற்கள் தோன்றினவென்றும், கூறுவது. இது செசுப்பெர்சென் கொள்கை. வாய்க்கு வந்தபடி உளறும் இசையொலிகளினின்று, ஒழுங்கான பெயர் வினை யிடைச் சொற்களும் அவற்றின் பல்வேறு வடிவு களும் தோன்றினவென்பது, முட்செடிகளினின்று முக்கனிகளும் தோன்றின என்பதையே ஒக்கும். இனி, உணர்வொலிக்கொள்கை (Emotion Theory) என்பதும் ஒன்றுண்டு. இங்ஙனம் 18-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டுவரை மேலை மொழிநூலார் மொழித் தோற்றத்தை ஆய்ந்துவந்ததும், இன்னும் உண்மை காண இயலாதவராயிருக் கின்றனர். இதற்கு முந்தியல் இயன்மொழியாகிய தமிழை அடிப்படையாகக் கொள்ளாது பிந்தியல் திரிமொழியாகிய சமற்கிருதத்தை அல்லது ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டதே கரணியம். முழைத்தல்மொழி, (Inarticulate Speech), இழைத்தல்மொழி (Articulate Speech) என மொழி இருவகைப்படும் இவற்றுள் முன்னது உணர்ச்சியொலிகள், விளியொலிகள் முதலிய எழுவகை யொலிகளாலும், பின்னது சுட்டொலி வளர்ச்சியாலும், ஆயின. மொழி தோன்றிய வகை உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் இயன்மொழிகள் (Primitive Languages) திரிமொழிகள் (Derivative Languages) என இருவகைப்படும். ஒன்றையும் சாராது தானே இயல்பாகத் தோன்றிய மொழி இயன்மொழி; ஒரு மொழியினின்று திரிந்த மொழி திரிமொழி. மொழிகளெல்லாம் ஒரேயளவான சொல்வளமுடையனவல்ல. மக்களின் கருத்து அல்லது அறிவு வெளிப்பாட்டொலியே சொல். உண்பதும் உடுப்பதும் துயில்வதுமே தொழிலாகக் கொண்ட அநாகரிக மலைவாணரின் அல்லது காட்டு வாணரின் கருத்துக்கள் மிகமிகச் சில. அதனால், அவர்கள் மொழிகளிலுள்ள சொற்களும் மிகமிகச் சில. பல தொழிலுள்ள நாகரிகம் வாய்ந்த மருதவாணரின் அல்லது நாட்டு மக்களின் கருத்துக்கள் மிகப்பல. அதனால், அவர்களின் மொழிச்சொற்களும் மிகப்பல. எத்தொழிலையும் அநாகரிகன் செய்யுமுறைக்கும் நாகரிகன் செய்யுமுறைக்கும் வேறுபாடுண்டு. இவ்வியல்புப்படி, அநாகரிகன் திருத்தமின்றியும் நாகரிகன் திருத்தமாயும் பேசுகிறான். ஆகையால், அநாகரிக நாகரிக மக்களின் மொழிச் சொற்கள் சின்மை பன்மையால் மட்டுமன்றித் திருந்தாமையும் திருத்தமும்பற்றியும் வேறுபடு கின்றன. திருத்தமும் கருத்துத்திருத்தம் சொற்றிருத்தம் என இரு பாற்பட்டது. ஆகவே, ஒரு நாட்டாரின் நாகரிகத்தை யறிவதற்கு அவரது மொழிபோற் சிறந்த கருவி அல்லது வாயில் பிறிதொன் றில்லை. ஒரு மொழியார் அநாகரிகராயின், அவர் பிற நாகரிக மக்களொடு கூடும்போது, தம் அநாகரிக நிலைக்கு அல்லது சொல்லளவுக்குத் தக்கவாறு, நாகரிகரின் சொற்களைக் கடன்கொள்ள வேண்டிய திருக்கும். இஃது இயன்மொழி திரிமொழி ஆகிய இருவகை மொழிக்கும் ஏற்கும். ஏனெனின், சொற்குறைவும் சொன்னிறைவும் அவ்விருவகைக்குமுண்டு. பல மொழிகள் ஒன்றாய்க் கலப்பின் கலவை மொழியாம். அது இருமொழிக் கலவை பன்மொழிக் கலவை என இருவகைப்படும். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களிருந்த மாத்திரையானே, அதைக் கலவை யென்னமுடியாது. உண்மையில் இன்றியமையாத காற்பங்குச் சொற்களையாவது கடன்கொண்ட மொழியையே கலவை மொழியென்னலாம். இயன்மொழி வகையில், திருந்தாமொழிக்குத் தென்கண்ட (ஆதிரேலிய) தென் ஆப்பிரிக்க மொழிகளையும் திருந்தி மொழிக்குத் தமிழையும்; திரிமொழி வகையில், திருந்தா மொழிக்குத் துடாகோட்டா முதலிய மொழிகளையும் திருந்திய மொழிக்குத் தெலுங்கு கருநடம் முதலிய மொழிகளையும்; கலவை மொழி வகையில், திருந்தாமொழிக்குக் கோண்டி பத்ரி முதலிய மொழி களையும் திருந்திய மொழிக்குத் தெலுங்கு ஆங்கிலம் ஆதலிய மொழிகளையும்; இரு மொழிக்கலவைக்கு மராட்டி தெலுங்கு முதலிய மொழிகளையும் பன்மொழிக் கலவைக்கு ஆங்கிலம் இந்தி முதலிய மொழிகளையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம். மொழியின் இயல்பான தோற்றத்தை ஓர் இயன்மொழியால் அறியமுடியுமேயன்றித் திரிமொழியால் அறியமுடியாது. மொழி நூற்பெரும்புலவர் மாக்சுமுல்லர் சீனமொழியினின்றும் தென் கண்டத் தீவுகளின் மொழிகளினின்றுமே மொழியின் இயல்பான தோற்றத்தை யுணர்ந்தார். உலகப் பெருமொழிகளில் வடமொழி திரிபு முதிர்ந்த தாதலின், அதனைக் கொண்டு மொழியின் இயல்பான தோற்றத்தையறிய விரும்புவார், பேரன் பாட்டனைப் பெற்றவன் என்று கொள்ளு பவரேயாவர். தமிழோ இயன் மொழியாயும் மிகத் திருந்தியதாயும் மொழி வளர்ச்சியின் பல நிலைகளைக் காட்டக் கூடியதாயு மிருத்தலின், மொழியின் இயல்பான தோற்றத்தை யறிதற்குத் தலைசிறந்த வாயிலாகும். மொழி முதலாவது தனித்தனி ஒலிகளாக அல்லது அசைகளாகவே தோன்றிற்று. ஒரு கருத்து இப்போது பல சொற்களுள்ள வாக்கிய மாக அமைந்தாலும், அது முதலாவது வாக்கியமாகத் தோன்ற வில்லை. ஏனெனின், வாக்கிய அமைப்புக்கு வேண்டும் சொற்களெல் லாம் அப்போது இல்லை. மனிதனுக்குக் கருத்துப் பெருகபெருக ஒலிகளும் அல்லது சொற்களும் பெருகிக் கொண்டே வந்தன. மெள்ள மெள்ளச் சிறிது சிறிதாய்ப் பெருகிக் கொண்டு வந்த அவ்வொலிக் கூட்டமே மொழியாகும். ஒருவனின் உள்ளத்திலெழும் கருத்து வேறு, அதனைப் பிறர்க்குப் புலப்படுத்தும் ஒலி வேறு. ஒரு கருத்தைப் புலப்படுத்த ஒரு வாக்கிய வொலியே வேண்டும் என்னும் யாப்புறவில்லை. நன்றாய்ப் பேச்சுக் கற்ற பிள்ளை கூட அம்மா! எனக்குச் சோறு வேண்டும் என்னும் நாற்சொற்றொடரை அம்மா! சோறு என்று இரு சொல்லில் அடக்கிவிடுகிறது. பெரியோர் பேச்சிலும், ‘நீ அங்கே போனாயா?’ என்னும் வினாவிற்குப் ‘போனேன்’ அல்லது ‘ஆம்’ என்னும் விடையும் ‘அவர் என்றைக்கு வருவார்? என்னும் வினாவிற்கு நாளைக்கு என்னும் விடையும் ஒவ்வொரு சொல்லாயே நின்று ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றன. ஒரு சில சொற்களையே கற்ற குழந்தை, எனக்குப் பால் வேண்டும் என்னுங் கருத்தை, பா பாசி பாலு பால் என்னுஞ் சொல் வடிவங் களுள் ஒன்றினாலேயே குறிக்கின்றது. அதற்குமேற் சொல்ல அதனிடம் சொற்களில்லை. இந்நிலையை அயன்மொழியை அரைகுறையாய்க் கற்றவரிடமும் காணலாம். ஆங்கிலம் நன்றா யறியாத ஒருவன் ஓர் ஆங்கிலக் கடைக்காரனிடம் சென்றால், ‘எனக்கு ஒரு கத்தி வேண்டும்’ என்பதை “மnகைந” என்றும், ‘இதன் விலை என்ன? என்பதை “Price?” என்றும் ஒரே சொல்லால் குறிக்க லாமன்றோ? இவன் தன் மொழிக்குப் பெரியவனாயினும் அயன் மொழிக்குக் குழந்தையாயிருக்கின்றான். குழந்தையும் நோயாளி யும் பெரும்பாலும் ஒவ்வொரு சொல்லாலேயே தம் கருத்தை யறிவிக்கின்றனர். பெரியோர் தாய்மொழியிற் பேசும் பேச்சில் ஒருசொல்விடை தொகை வாக்கியங்களாகக் கருதப் படலாம். ஆனால், அயன்மொழி நன்றாயறியாதான் அம்மொழியிற் பேசி னால், தாய்மொழியில் தோன்றும் சொற்கள் அவ்வயன் மொழி யில் தோன்றாமையும், ஒரு குழந்தை பேசின் தாய் மொழியிலும் சொற்கள் தோன்றாமையும் உணர்க. மொழி நிரம்பாத முந்துகால (Primitive) மாந்தன், கருத்து வெளியீட்டில் குழந்தைபோன்றவன். அவன் ஆ ஈ வா போ கீ மே முதலிய சில தனி யசைகளாலும் சில சைகைகளாலுமே, தன் கருத்தைப் புலப்படுத்தினான். இவ்வியல்பை இன்றும் சில மலைவாணரிடமும் தென்கண்டத்தீவாரிடமும் காணலாம். இந்நிலையை ஒருவாறு விலங்கு நிலைக்கு ஒப்பிடலாம். ஓர் இயன்மொழி 1. அசைநிலை 2. சொன்னிலை என இரு நிலை களையுடையது. அசைநிலையாவது பெயர் வினை இடை என இலக்கணச் சொற்றன்மைப்படாமல் தனித்தனி யசைகள் ஒவ்வொரு பொருளையுணர்த்தும் நிலை; சொன்னிலையாவது இலக்கணச் சொற்றன்மைப்பட்ட நிலை. அதும் 1. அசைச்சொல் (கண், ஆ) 2. புணர்ச்சொல் (கண்ணவன்) 3. பகுசொல் (கண்ணன்) 4. தொடர்ச்சொல் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள் தொடர்ச்சொல் 1. தொகாநிலைத்தொடர் (தண்ணீர், செங்கால் நாரை) 2. தொகை நிலைத்தொடர் (யாய், சாத்தந்தை) என இரு வகையானது. மொழி வளரவளர எழுத்துக்கலையும் வளர்ந்துவரும். உலகில் முதலாவது பட வெழுத்தும் (Hieroglyph) பின்பு கருத்தெழுத்தும் (Ideograph) தோன்றின. அதன்பின் அசை யெழுத்தும் (Syllabic Character) ஒலியெழுத்தும் (Phonetic Character) முறையே தோன்றின. இவற்றுள் முன்னவையிரண்டும் கருத்தோடும் பின்னவை யிரண் டும் மொழியோடும் தொடர் புற்றவை. பெருவளர்ச்சி யடைந்த ஒரு நாகரிக மக்கள் மொழியில்தான் பின்னீரெழுத்துக் களைக் காணலாம். ஒரு மொழியை அல்லது பேச்சைப் பல வாக்கியங்களாகவும் ஒரு வாக்கியத்தைப் பல சொற்களாகவும், ஒரு சொல்லைப் பல எழுத்துக்களாகவும் பகுத்துக்கொள்வது, ஒரு மொழி பெரு வளர்ச்சியடைந்தபின் அதன் இலக்கணத்தை யெடுத்துக்கூறும் போது நிகழ்வதாகும். மொழித்தோற்றம் வேறு: இலக்கணத் தோற்றம் வேறு. மொழி அசையொலிகளாய்த் தோன்றினதே யன்றி எழுத்தொலிகளாய்த் தோன்றவில்லை. எழுத்தே இலக்கண வகையில் ஒரு மொழியின் அலகு (Unit); வாக்கியம் அலகன்று. ஏனெனின், வாக்கியம் ஒரு குறித்த அளவுள்ளதன்று. மூவகை வாக்கியங்களுள் ஒன்றான கலப்பு (Complex) வாக்கியம் வரம்பிறந் தோடுவது. மனுமுறைகண்ட வாசகத்தில் பல பக்கங்கள் வருகின்ற அதிகாரங்கள் சில ஒவ்வொரு வாக்கியமாக அமைந் துள்ளன. இங்ஙனம் ஒரு புத்தகம் முழுமையும் ஒரே வாக்கியமாக்கலாம். புணர் (Compound) வாக்கியமும் வரம்பிறந்ததே. இனி, தனி (Simple) வாக்கியத்தை எடுத்துக்கொண்டாலும் அதுவும் பல கருத்துக் களைத் தழுவக்கூடியதாகின்றது. இக்கரந்தை மாணவன் இனிய தமிழ் நடை எளிதாய் எழுதுவான் என்னும் வாக்கியத்தில் 1. கரந்தை மாணவன் 2. இனிய தமிழ் 3. எளிதாய் எழுதுவான் எனக் குறைந்தது மூன்று கருத்துக்களிருத்தல் காண்க. பல கருத்துக் களைக் கூறும் கலப்பு வாக்கியங்களையும் புணர்வாக்கியங்களை யும் பொருள் கெடாமல் தனி வாக்கியங்களாக மாற்றவு முடியு மென்பதை, ஆங்கில விலக்கணங்களில் கண்டு தெளிக. இனி, மூவகை வாக்கியமுங் கலந்த கலவை (Mixed) வாக்கியம் என்பதும் ஒன்றுண்டெனவறிக. மொழிநூற்படி நோக்கின், ஒவ்வொரு பகாச் சொல்லும் ஒவ் வொரு கருத்தையும் ஒவ்வொரு பகு சொல்லும் பற்பல கருத்துக் களையும் குறிப்பனவாகும். ஆ வா கண் என்னும் பகாச் சொற்கள் ஒவ்வொரு கருத்தையே குறித்தன. ஆக்கம் வருவான் கண்ணன் என்ற பகுசொற்கள் பற்பல கருத்துக்களைக் குறித்தன. பின்ன வற்றுள், வருவான் என்பது மூன்று கருத்துக்களையும் ஏனைய இவ்விருகருத்துக்களையும் குறித்தன. வருதற்றொழிலைக் குறிக்கும் வா என்னும் பகுதியும் எதிர்காலத்தை யுணர்த்தும் வ் என்னும் இடைநிலையும், ஆண்பாலையுணர்த்தும் அன் என்னும் ஈறும் சேர்ந்தே வருவான் என்னும் சொல் உண்டாயிற்று. ஆகவே, பகுதி விகுதி இடைநிலை என்னும் சொல்லுறுப்புக்களுங் கூட ஒவ்வொரு பொருளையுணர்த்துவனவாயின. இனி, பகாச் சொல்லுங்கூடப் பல பொருள்களை யுணர்த்த இடமுண்டு. கண் (கள் >f©) என்னும் சொல் கருமையென்னும் குணமும் அதை யுடைய கண் என்னும் உறுப்பும் ஆகிய இருபொருள்களை யுணர்த் தல் காண்க. கருமை என்னும் குணத்தைமட்டும் கருதுவது பொருளும், அது கருமை யுடையது எனக்கருதுவது கருத்துமாகும். Mfnt., ஒவ்வொரு பொருளும் கருத்தாகவும் மாறக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். நெய்யே தொன்னைக்காதாரம் என்பது போலத் திரிபிற் சிறந்த வடமொழியை இயன்மொழியாகக் கொள்வாரே, இங்ஙனம் வாக்கியத்தை மொழியலகாகக் கொண்டு இடர்ப்படுவர். மேலும், வடமொழியை உலக முதன் மூலமொழியாகக் கொண்டு வலிப்பவர் மொழி நூன் மாணவராதற்குங் கூடத் தகுதியற்ற வராவர். ஆ, ஈ, ஊ என்னும் ஒலிகளை மொழி மூல வொலிகளாகக் கூறுவது இன்று மலை யேறிவிட்டதெனின், அது குன்றின் மேலிட்ட விளக்குப் போல விளங்குதற்கு மலையேறி விட்டதென்க. மொழிநூல் 1. மொழி மொழியாவது மக்கள் தம் கருத்தை ஒருவருக்கொருவர் வெளியிடு தற்குக் கருவியாகும் ஒலித்தொகுதி. 2. மொழிவகை உலகமொழிகள் மொத்தம் 860 என்று பல்பி (Balbi) என்பவர் தமது திணைப்படத்தில் (Atlas) குறிக்கின்றார். மாக்முல்லர் (Max Muller) அவை தொள்ளாயிரத்திற்குக் குறையா என்கிறார். (Lectures on the Science of Language, Vol. I, p. 27). ஏறத்தாழ ஆயிரம் எனினும் தவறாகாது. மொழிகளையெல்லாம், பலப்பல முறையில், பலப்பல வகையாக வகுக்கலாம். அவ் வகைகளாவன: 1. அசைநிலை (Monosyllabic or Isolating), புணர்நிலை (Compounding), பகுசொன்னிலை (Inflectional or Polysyllabic), தொகுநிலை (Synthetic), பல்தொகுநிலை (Polysynthetic) அல்லது கொளுவுநிலை (Agglutinative), பிரிநிலை (Analytical) என்று அறுவகையாக வகுப்பது ஒரு முறை. அவற்றுள், அசைநிலையாவது, சொற்களெல்லாம் ஓரசையாக நிற்பது. காட்டு: வள், செல், வா, போ, தமிழ், மொழி, சீனமொழி அசைநிலைக்குச் சிறந்ததாகும். புணர்நிலையாவது, இரு தனிச்சொற்கள் புணர்ந்து நிற்பது. கா: தமிழ்மொழி, மருமகன். துரேனிய மொழிகளிற் சீனமொழிந்தவை (பின்னியம் (Finnish), ஹங்கேரியம் (Hungarian), துருக்கியம் (Turkish), தமிழ் முதலியன) புனர் நிலைக்குச் சிறந்தவையாய்ச் சொல்லப்படும். பகுசொன்னிலையாவது, புணர்நிலைச் சொற்களில் ஒன்று குறுகித் தனித்தன்மையிழந்து, சொல்லுறுப்பாய் நிற்பது. கா: மருமான், வில்லவன் (வில் + அவன்), வில்லான், பகுசொன்னி லைக்கு ஆரியமொழிகள் சிறந்தனவாகக் கூறப்படும். தொகுநிலையாவது, புணர்நிலைச்சொற்களின் இடையில், எழுத்துக் களும் அசைகளும் தொக்குநிற்பது. கா: ஆதன் + தந்தை = ஆந்தை: பெரு + மகன் (பெருமான்) - பிரான், அல்லது பெம்மான். பல்தொகுநிலையாவது, பன்மொழித் தொடரினிடையே பல அசைகள் அல்லது சொற்கள் தொக்கு நிற்பது. கா: நச்செள்ளையார் (நல் + செள்ளை + அவர்), சேர சோழ பாண்டியர். அமெரிக்கமொழிகள் பல்தொகுநிலைக்குச் சிறந்தன வாகக் கூறப்படும். மெக்சிக (Mexican) மொழியில் ‘ achichillacachocan’ என்னும் பல்தொகுநிலைத் தொடர், நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழும் இடம் என்று பொருள்படுவதாம் . (யடவ-நீர், உhiஉhடைவiஉ -சிவந்த, tlactl - மாந்தன், chorea -mG) ( Historical outlines of English Accidence, p. 2.) பிரிநிலையாவது, பகுசொன்னிலைச் சொற்கள் ஈறிழந்து நிற்பது. கா: வந்தேன் - வந்து (மலையாளம்); brekan (O.E.) - break (Infinitive). 2. மூலமொழி (Parent Language), கிளைமொழி (Daughter Language), உடன்மொழி (Sister Language) என மூவகையாக வகுப்பது ஒரு முறை. திராவிடக் குடும்பத்தில், தமிழ் மூலமொழி; தெலுங்கு, கன்னடம் (கருநடம்), மலையாளம் முதலியவை தமிழுக்குக் கிளை மொழி யும், தம்முள் ஒன்றோடொன்று உடன்மொழியுமாகும். நீலமலை யிலுள்ள படகம் (படகர்மொழி) கன்னடத்தின் கிளைமொழி. 3. இயன்மொழி (Primitive Language), திரிமொழி (Derivative Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் முறையே காட்டாகக் கொள்க. 4. இயற்கைமொழி (Natural Language), செயற்கை மொழி (Artificial Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை. தமிழ் ஓர் இயற்கைமொழி. உவில்க்கின் கண்காணியார் (Bishop Wilkins) எழுதிய கற்பனை மொழி (‘ A Real Character and a Philosophical Language’) செயற்கை மொழிக்குக் காட்டாகும் (L.S.L. Vol.II, p.p. 50-63) காங்கிர தலைவர்கள் உருது விற்கும் இந்திக்கும் இடைத்தரமாக, இந்துதானி என ஒன்றை அமைப்பதாகச் சொல்வது அரைச் செயற்கைக் கலவை மொழியாகும். 5. தனிமொழி (Independent Language), சார்மொழி (Dependent Language), கலவை மொழி (Composite or Mixed Language)vd மூவகையாக வகுப்பது ஒருமுறை. இவை மூன்றுக்கும், முறையே, தமிழையும் பிற திராவிட மொழி களையும், ஆங்கிலத்தையும் காட்டாகக் கூறலாம். 6. முதுமொழி (Ancient Language), புதுமொழி (New Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழும் இந்தியும் காட்டாகும். 7. இலக்கியமொழி (Classical Language), வறுமொழி (Poor Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்குத் தமிழையும் குடகையும் காட்டாகக் கூறலாம். 8. செம்மொழி அல்லது திருந்தியமொழி (Cultivated Language), புன்மொழி அல்லது திருந்தாமொழி (Uncultivated Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. திராவிடக் குடும்பத்தில், தமிழ், தெலுங்கு முதலியவை செம் மொழிகள்; துடா, கோட்டா முதலியவை புன்மொழிகள். 9. அலைமொழி (Nomad Language), நிலைமொழி (State Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. அலைந்து திரியும் மக்கள் பேசுவது அலைமொழி; ஓரிடத்தில் நிலைத்த மக்கள் பேசுவது நிலைமொழி. 10. தாய்மொழி (Mother Tongue), அயன்மொழி (Foreign Language) என இருவகையாக வகுப்பது ஒரு முறை. 11. வழங்குமொழி (Living Language), வழங்காமொழி (Dead Language) என இருவகையாக வகுப்பது ஒருமுறை. இவற்றுக்கு, முறையே, தமிழையும் வடமொழியையும் காட்டாகக் கொள்க. ஒரு பெருமொழியில் பல வழக்குகள் (Dialect) உண்டு. அவற்றை மொழிவழக்கெனலாம். அவை, இடவழக்கு (Local Dialect), திசை வழக்கு (Provincial Dialect), குலவழக்கு (Class Dialect) திணைவழக்கு (Regional Dialect) என நால்வகைப்படும். ஒருமொழி நீடித்து வழங்குமாயின், முற்கால (Old) வழக்கு, இடைக்கால (Middle) வழக்கு, தற்கால (Modern) வழக்கு என முந் நிலைகளையடைந் திருக்கும். ஒருமொழி உயர்ந்ததும் தாழ்ந்ததுமான இருவழக்குகளை யுடையதா யிருப்பின், அவை முறையே உயர் (High), தாழ் (Low) என்னும் அடைகள் பெற்று, அம்மொழிப் பெயராற் குறிக்கப் படும் (கா: உயர்ஜெர்மன் - High German, தாழ் ஜெர்மன் - Low German) தமிழில் இவை செந்தமிழ் கொடுந்தமிழ் என வழங்கும். ஒரு மொழியில், எழுத்தில் வழங்கும் வழக்கு நூல்வழக்கு (Literary Dialect) என்றும், பேச்சில் வழங்கும் வழக்கு உலக வழக்கு (Colloquial Dialect) என்றும் கூறப்படும். 3. மொழிக்குலம் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும் பற்றி, துரேனியம் (Turanian) ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங்களாக வகுக்கப்பட்டிருக் கின்றன. ஒவ்வொரு குலமும் பல குடும்பங்களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது. தமிழ் துரேனியக் குலத்தில்(திராவிடக் குடும்பம் ஒரு சிறு குழுவா யிருந்தாலும் முக்குலத்தினின்றும் வேறாகத் தனித்துக் கூறப்படற் குரியது திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத் திற்கு இந்தோ- ஐரோப்பியம் (Indo - European), அல்லது இந்தோ- ஜெர்மானியம் (Indo- Germanic) என்றும் பிற பெயர்களுமுண்டு. மொழி நூல் நெறிமுறைகள் 1. மொழி நூல் ஒரு தனிக்கலை. பலர் மொழிநூல் ஒரு தனிக்கலை யென்பதை இன்னும் அறிந்திலர். பண்டிதர்கள் பொதுவாய்த் தங்களிடம் யாரேனும் ஒரு சொல்லுக்கு மூலங்கேட்டால், அதற்கு ஏதாவது சொல்லா திருப்பின் இழிவென்றெண்ணி, பொருந்தப் புளுகல் என்னும் உத்திபற்றி ஏதேனுமொன்றைச் சொல்லிவிடு கின்றனர். பாண்டித் தியம் வேறு, மொழிநூற் புலமை வேறு என்பதை அவர் அறிந்திலர். காலஞ்சென்ற ஒரு பெருந் தமிழ்ப்பண்டிதர், திருச்சிராப் பள்ளியில் ஒருமுறை வடை என்னும் தின்பண்டப் பெயர், வடு என்னும் மூலத்தினின்றும் பிறந்ததென்றும், அப் பண்டத்தின் நடுவில் துளையிருப்பது அதற்கொரு வடு (குற்றம்) வென்றும் கூறியுள்ளனர். வடை என்பது வள் என்னும் வேரினின்று பிறந்த தென்பதையும், வட்டமானது என்னும் பொருளுடைய தென் பதையும், உழுந்து மாவிற்குள் எண்ணெய் எளிதாய்ச் செல்லும் படி துளையிடுவ தென்பதையும், துளையினால் சுவையாவது மணமாவது கெடா தென்பதையும் அவர் அறிந்திலர். ஒத்துப்பார்க்க: பெள் + தை = பெட்டை - பெடை: வள்+தை = வட்டை - வடை. பெள் = விரும்பு, வள் = வளை. 2. மொழிநூல் என்றும் ஒப்பியல் தன்மையுள்ளது அட்டையாடல் என்பதன் பொருள் உணர்தற்குத் தெலுங் கறிவும், கன்னட அறிவும் வேண்டியதா யிருக்கின்றது. அட்ட அல்லது அட்டெ = முண்டம் (தெ.க.) (வேங்கடராஜுலு ரெட்டியார் கட்டுரை (தமிழ்ப்பொழில்). அம்பு (வளையல்), அம்பி ( படகு, காளான்), ஆம்பி (காளான்) என்னும் சொற்களின் வேர்க்கருத்தை லத்தீனினுள்ள ampi என்னுஞ் சொல்லும், கிரேக்கிலுள்ள ambhi என்னுஞ் சொல்லும் உணர்த்துகின்றன. amphi = round; amphitheatre என்னும் தொகைச் சொல்லை நோக்குக. 3. மொழிநூல் பிறகலைச் சார்புள்ளது மொழிநூல், கணிதத்தைப்போலப் பிறகலை சாராத கலையன்று. மொழிநூலின் ஒவ்வொரு கூற்றும், அவ்வக் கலைக்குப் பொருந்திய தாயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலுள்ள teak என்னுஞ் சொல், தேக்கு என்னும் தமிழ்ச்சொல்லே யென்பதற்குத் திணைநூல் (Geography) சான்றாகும். இந்தியாவில், விந்திய மலைக்கு வடக்கே தேக்கு வளர்வதில்லை என்று, ராகொஸின் (Ragozin) தமது வேதகால இந்தியா (Vedic Inida) என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார். எழுத்தொலிகளை ஒலிப்பதில் வயிறு, நுரையீரல், மூச்சுக்குழாய், தொண்டை, நா, அண்ணம், பல், உதடு, மூக்கு ஆகிய பலவுறுப் புகள் தொடர்புறு வதால், உடல்நூலும் (Physiology); உள்ளக்கருத்துகளின் வெளிப்பாடே மொழியாதலின், உளநூலும் (Psychology); மொழிகளைப் பேசும் மக்களின் இடமாற்றத்தையும் நாகரிக வளர்ச்சியை யும் அறிந்திருக்க வேண்டியதால், சரித்திரமும் (History); தட்பவெப்ப நிலைக்கும் அவ்வந் நாட்டுப் பொருள்கட்கும் தக்கபடி, ஒலியும் சொல்லும் மாறுபடுவதால், திணைநூலும் (Geography); நாகரிக மக்களின் மொழிகள், மதவியலைப் பெரிதுந் தழுவியிருப் பதால், மதநூல் (Theology), பழமை நூல் (Mythology), பட்டாங்கு நூல் (Philosophy) முதலிய கலைகளும்; இன்னும், சுருங்கக்கூறின் பல கலைகளும் மொழிநூற் பயிற்சிக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். 4. மொழிகளெல்லாம் ஓரளவில் தொடர்புடையன. சில சொற்களும், அவற்றையாளும் நெறிமுறைகளும், பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றன. கா: தமிழ் - மன், E - man, A.S. - mann, Skt. - மநு. தமிழ் - தா, L. - do, Skt. - da.; தமிழ் - நாவாய், L. - navis, Skt. - நௌ. தனிக்குறிலையடுத்த மெய் உயிர்வரின் இரட்டுவது பல மொழிகட்குப் பொதுவாயிருக்கின்றது. கா: தமிழ் - மண் + உலகம் = மண்ணுலகம், வெள் + ஆடு = வெள்ளாடு. ஆங்கிலம் - thin + er = thinner, sit + ing = sitting. 5. மொழிகளுக்குள் இன அளவிற்குத் தக்கபடி ஒப்புமையிருக்கும். 6. மொழிகளை ஆராயும்போது, முன்னை மொழியை முன்வைத்தும் பின்னை மொழியைப் பின்வைத்தும் ஆராயவேண்டும். சிலர் தமிழுக்கு மிகப் பிற்பட்டனவும், தமிழினின்றே தோன்றினவும், மிகத் திரிந்துள்ளன வும், ஆரியக் கலப்பு மிக்குள்ளனவுமான மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளுக்குப் பிற்காலத்தில் வடமொழியைப் பின்பற்றி எழுதியுள்ள கேரளபாணினீயம், கர்னாடக ஸப்தமணி தர்ப்பணம் போன்ற நூல்களைத் துணைக்கொண்டு தமிழியல்பை ஆராய்வது, நரிவாலைக் கொண்டு கடலாழம் பார்ப்பதும், தந்தையை மகன் பெற்றதாகக் கொள்வதும் போன்றதே. அந் நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், மலைகல்லி எலி பிடித்தல் போல மிகச் சிறியதாகும்; மேலும், உண்மை காணாதபடி மயக்கத்தையும் ஊட்டும். மொழி நூல் ஆராய்ச்சிக்கு வேண்டிய மனவிரிவையடைவதற்கு, ஆங்கிலத்தில் மாரி (Morris), ஆங்க (Angus), கீற்று (Skeat), வீற்று (Sweet), உவிட்னி (Whitney) முதலியோர் எழுதிய இலக்கணங்களைப் படித்தல் வேண்டும். நுண்ணறிஞரும் பெரும் புலவருமான வேங்கடராஜுலு ரெட்டியார் வடமொழியையும் பிற்காலத்திலக்கணங்களையும் பின்பற்றிய தால் தாம் எழுதியுள்ள இலக்கணக் கட்டுரைகள், திராவிட மொழியின் மூவிடப்பெயர் என்னும் இலக்கணங்களுள், சில சோர்வுபட்டுள்ளார். அவையாவன: 1. தமிழில் உகரவீற்றுச் சொற்கள் மூன்றேயென்பது. தொல்காப்பியத்தில், மொழிமரபில், உச்ச காரம் இருமொழிக் குரித்தே உப்ப காரம் ஒன்றென மொழிப (41,42) என்று கூறியது, முற்றியலுகர வீற்றையேயன்றிக் குற்றிய லுகர வீற்றையன்று. குற்றியலுகரம் ஈரெழுத்திற்குக் குறையாத சொல்லின் ஈற்றில் வல்லின மெய்யூர்ந்தன்றித் தனித்துவருதல் இல்லை என்று சொல்லப்படுகிறது. மறுகு, செருக்கு என்பனபோன்ற சொற் களினிடையிலும், அது, பொறு என்பன போன்ற சொற்களின் ஈற்றிலும் உள்ள உகரத்தை (இக்கால வியல்பு நோக்கி)க் குற்றிய லுகரமேயெனக் கொள்ள இடமிருப்பினும், உ,து எனத் தனித்தும், உரல், முகம் எனச் சொன் முதலிலும் வரும் உகரத்தைக் குற்றிய லுகரமாகக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. உகரம், குற்று கரம், குற்றியலுகரம் என்னும் சொற்களில் வரும் உகரங்களும் முற்றியலுகரங்களே, இவற்றுள் பின்ன வற்றில் குறு, குற்றியல் என்னும் அடைமொழிகளால், குறுகிய உகரம் பொருளளவில் குறிக்கப்படு கின்றதே யன்றி ஒலியளவிலன்று. ஆகவே உச்சகாரம் உப்பகாரம் என்பவை முற்றியலுகரத்தைக் குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம். மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகர வீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன. சுக்கு, குச்சு, பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றிய லுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர். பு,து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற் பெயர் களும், து,சு என்னும் ஈறுகளைக் கொண்ட எண்ணிறந்த பிற வினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே, உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும் (36) என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு உச்சகாரம்........ உரித்தே என்றும், உப்பகாரம் .... மொழிப.... என்றும் முற்றுகரத்தை விதந்தோ தினார் தொல்காப்பியர். 2. தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது. தொல்காப்பியப் புணரியலில், மெய்யீ றெல்லாம் புள்ளி யொடு நிலையல் (2) குற்றிய லுகரமும் அற்றென மொழிப (3) என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறியதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல்காப்பியர் என்றார் ரெட்டியார். குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக் காலத்தி லிருந்ததென்பது பெறப்படுமேயன்றி, ஆசிரியர் குற்றிய லுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது பெறப்படாது. பண்டைத் தமிழர் நுண்ணிய செவிப்புலன் வாய்ந்திருந்தமையின், குற்றுகரம் முற்றுகரத்தினும் குறுகினதென்பதைக் காட்டும் பொருட்டுப் புள்ளியிட்டெழுதினர். குற்றுகரத்தின்மேல் அரைமதி (அல்லது குறும்பிறை) வைத்தெழு துவது இன்றும் தென்மலையாள நாட்டில் உள்ளது என்று ரெட்டியாரே கூறுகின்றார். மலையாள நாட்டில், இற்றைத் தமிழ்நாட்டிலில்லாத பல பண்டைத் தமிழ் வழக்கங்கள் உள்ளன. தொல்காப்பியர் காலத்தில், குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டெழு தினாராயின், அவ் வழக்கம் ஏன் பிற்காலத்திலில்லை என்று கேட்கலாம். அதற்கு விடை கூறுகின்றேன். தொல்காப்பியர் காலத்தில், எகர ஒகர உயிர்களையும் அவையேறின மெய்களையும், மேற்புள்ளியிட்டுக் காட்டுவது வழக்கமாயிருந்த தென்பது, நூன்மரபிலுள்ள, மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (16) என்னும் நூற்பாக்களான் அறியலாம். ஏகார ஓகாரங்களும், அவையேறின மெய்களும், புள்ளி பெறாமையாலேயே, தத்தம் குறில்களினின்றும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. ஆனால் 17ஆம் நூற்றாண்டில் இவ் வழக்கம் அற்றுப்போய்விட்ட தென்பது, தமிழில் எகர ஒகர உயிரேறின மெய்களும், ஏகார ஓகார உயிரேறின மெய்களும், வேறுபாடின்றி யெழுதப்பட்ட மையால், பின்னவற்றை வேறுபடுத்திக் காட்டற்கு வீரமா முனிவர் கொம்புகளை மேற்சுழித்தெழுதினதாகக் கொடுந்தமிழ் இலக் கணத்திற் கூறியிருப்பதால் அறியப்படும். இங்ஙனமே குற்றுகரப் புள்ளியும் வழக்கு வீழ்ந்ததெனக் கொள்க. தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி (எழுத்து. 43) என்னும் நன்னூல் நூற்பாவின் உரையில், ஆண்டு என்ற மிகையானே......... குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப் பாரும் உளர் எனக்கொள்க என்று கூறியிருத்தலின், அவ் வழக்குச் சில நூற்றாண்டு கட்கு முன்தான் வீழ்ந்ததென அறியலாம். தமிழ்நாட்டிற் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கல்விக்களம் பார்ப்பனர் கைப்பட்டுவிட்டதினாலும், தமிழ் வறள வடமொழியை வளம்படுத்துவதே அவர் கடைப்பிடியாதலாலும், தமிழர் உயர் நிலைக் கல்வியை இழந்து விட்டதினாலும் தமிழ் எழுத்துமுறை கவனிப்பாரின்றிச் சீர்கேடடைந்தது. புள்ளிபெறும் என்பதினாலேயே, குற்றுகரத்தை மெய்யீறாகக் கொள்ளின், மொழிமரபில், மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் (15) எகர ஒகரத் தியற்கையும் அற்றே (16) என்று தொல்காப்பியர் கூறியிருப்பதால், எகர ஒகர வீறுகளையும் மெய்யீறாகக் கொள்ளவேண்டும். அங்ஙனம் கொள்ளலாகாமை வெளிப்படை. இனி, கண்+யாது = கண்ணியாது என்பதுபோன்றே, சுக்கு + யாது = சுக்கியாது என்று புணர்வதால், குற்றியலுகரம் மெய்யீறாகக் கொள்ளப் படுமென்றார் ரெட்டியார். அங்ஙனமாயின், கதவு + யாது = கதவியாது என்று முற்றுகரமும் புணர்வதால், அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு, உகரவுயிரே தமிழுக்கில்லை யென்றாகும். ஆகையால், அவர் கூற்று உண்மையன்மை யறிக. வடமொழியில், புரிக், விராட், சத் என்று வல்லின மெய்யீறு வந்திருப்பது பற்றித் தமிழிலும் அவ்வாறே வருமென்றும், குற்றிய லுகரமெல்லாம் மெய்யீறேயென்றும் கொள்வது தமிழ் முறைக்கு நேர்மாறாகும். குற்றியலுகரமெல்லாம் மெய்யீறாயின், எனக்கு, பாய்ச்சு, கட்டு (கண்+து), தாட்டு (தாள் + து), வாழ்த்து, பிடிப்பு, கொட்பு, திரும்பு, பாற்று (பால்+து), அற்று (அன்+து) என்பவற் றின் உண்மையான வடிவங்கள், முறையே, எனக்க், பாய்ச்ச், கட்ட், தாட்ட், வாழ்த்த், பிடிப்ப், கொட்ப், திரும்ப், பாற்ற், அற்ற் என்பன வாதல்வேண்டும், அங்ஙனமாகாமை அறிக. தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டி ருப்பின், குற்றியலுகரம்..... எழுத்தோ ரன்ன என்று, அதை ஓர் தனியெழுத்தாகக் கூறியிரார். குற்றியலுகரமாவது, இடத்தினாலும் சார்பினாலும் குறுகியும் சிறிது வேறுபட்டும் ஒலிக்கும் இயல்பான உகரமே. குற்றியலுகரம் வருமிடத்தில் முற்றுகரமிருக்க முடியாது. வல்லின மெய்கள், மெல்லின மெய்யும் இடையின மெய்யும் போலன்றிச் சிக்கெனக் காற்றைத் தடுத்தலான் (checks of breath), நீரோட்டம் கல்லில் முட்டி வேகந்தணிகிறதுபோல, ஓசையானது தடைப்பட்டு, ஈற்றிலுள்ள உகரம் குன்றி யொலிக்கின்றதெனக் கொள்க. 3. பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன என்பது. ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி (45) என்று, சொல்லீற்று மெய்களைப் பதினொன்றேயென்று தேற்றே காரங் கொடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆதலால், வல்லின மெய் சொல்லீறாமெனக் கொள்ள எள்ளளவும் இடமில்லை. உரிஞ், பொருந் முதலிய சொற்களும், மண், மீன் முதலிய சொற் களும் உகரம்பெற்று வழங்குவதை, வல்லின மெய்யீறுகள் உகரம் பெற்றுத் தமிழில் வழங்குவதாகத் தாம் கொண்ட கொள்கைக்குச் சான்றாக எடுத்துக்காட்டினார் ரெட்டியார். உரிஞு, பொருநு, மண்ணு, மீனு என்று முதலில் உகரவீறா யிருந்த சொற்கள், பிற்காலத்தில் உகரவீறு கெட்டு உரிஞ், பொருந், மண், மீன் என வழங்கினவேயன்றி, முதலில் மெய்யீறாயிருந்த சொற்கள் பிற்காலத்தில் உகரவீறுபெற்று வழங்கினவல்ல. தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழி யொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப் பெற்றபோது, மெல்லின இடையின மெய்களி னின்று மட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ்வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும், சில மெல்லின இடையின மெய்யீற்றுச் சொற்கள், பகாச் சொன்னிலையில் அங்ஙனம் மெய்யீறாக நிற்குமேயன்றிப் பகுசொன்னிலை யில் நில்லா. கா: பண்- பண்ணுகிறான், அள் - அள்ளுகிறான். இவை பண்கிறான், அள்கிறான் என்று வழங்காமை காண்க. இதனால், உயிரீற்றுநிலை முந்தியதேயன்றி, மெய்யீற்று நிலை முந்தியதன்று என்பது அறியப்படும். ஆரிய மொழிகள் தமிழுக்குப் பிந்தினவையாதலானும், திரிபு வளர்ச்சி மிக்கவை யாதலானும், அவற்றில் வல்லின மெய்யும் ஈறாகக் கொள்ளப்பட்டது. பின்னியத்திலும் (Finnish), வடதுரேனிய மொழிகளுள் யூரலிய (Uralic) வகுப்பு முழுவதிலும், சொன்முதலில் இணை மெய் களையும், சொல்லீற்றில் ஒரு மெய்யையும் சேர்ப்பதில்லை. கிளா (glas) என்னும் ஜெர்மனியச்சொல் பின்னியத்தில் லாசி என்றெழுதப்படுகிறது. மக் (smak), ற்றார் (stor), ற்றிரான்று (Stand) என்னும் சுவீடியச் (Swedish) சொற்கள் முறையே, மக்கு, சூரி, ரந்த என்றெழுதப்படுகின்றன என்று (L.S.L. Vol. II, P. 207) மாக்கசு முல்லர் கூறுகிறார். திராவிடம் துரேனியக் கிளையாகக் கொள்ளப்படுவதையும், ஹாபிற்றல், பாங்க், ப்வீ முதலிய ஆங்கிலச் சொற்கள் முறையே, ஆபத்திரி, பாங்கி, பீசு என்று உயிரீறாகத் தமிழில் வழங்குவதையும் நோக்குக. 4. வல்லினமெய் இரட்டித்தல் இல்லை என்பது. வல்லின மெய் இரட்டித்தல் என்பதே யில்லையென்றும், ஆட்டு, போக்கு முதலிய பிறவினைகள் எல்லாம், ஆடு + து = ஆட் + து = ஆட்டு, போகு + து = போக் + து = போக்கு, என்ற முறையிலேயே அமைவனவென்றும் கூறியுள்ளார் ரெட்டியார். தன்வினைப் பகுதியின் ஈற்றெழுத்தில் அழுத்தம் (Stress) விழுவ தால் அது பிறவினையாகக் கூடுமென்பது. உப்ப கார மொன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்மே (தொல்.மொழி. 43) என்னும் நூற்பாவாற் குறிக்கப்பட்டது. ஆடு, போகு முதலிய தன் வினைகளின் ஈற்றெழுத்துக்கள் மேல், அழுத்தம் விழுவதாலேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடு வது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழி யில் இந் நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது. அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததேயன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலி யிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதி னர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதி னால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவ தாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல் களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை ஒன்றென மொழிப என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம். காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்த முற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித்தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள்களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும். கா: காட்டுவிலங்கு, ஆற்றுநீர். நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றியனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டாகும் இறுக்கத்திற் கொப்பிடலாம். புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட்டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினாலேயே, புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றாகவும் எச்சமாகவும் வழங்கப் பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனி வடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது. போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத்தத் தால் ஈறு இரட்டித்தவையே. சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும், சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார். பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இரு வகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க. 5. அரவு என்றொரு தொழிற்பெயரீறு இல்லையென்பது. அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே, கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார். ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும் என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக்கின்றன. அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம் என்னும் தொழிற்பெயரா லறியப்படும். அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும். அரம் - (அரமு) - அரவு. ஒ.நோ. உரம் - உரவு, தடம் - தடவு, புறம் - புறவு. 6. மூவிடப்பெயர் வினாப்பெயர்களின் அமைப்பு, உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது. அ,இ,உ,எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச் சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப் பெயர் முன்னிலைப்பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்து களின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். மேற்கூறிய நாற்பாற் பெயர் களும் அரிவரித் தோற்றத்திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்று தற்கு) முந்தினவென்பதே. 7. மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம். ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக் கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழுமுடிபிற் கிடமாகும். கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, Parlia-ment என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லியலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும். Condemn - L. condemno, from con intensive, damno to damn. Parliament - Lit. ‘a parleying or speaking,’ Fr. parlement - parler. to speak, ment, a Lat. suffix. பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல்லாயுமிருத்தல் காண்க. சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடு கின்றமையின், அவற்றின் மூலவடிவை யறிந்தே பொருள் காண வேண்டும். மூலம் வேர் (root), தண்டு (stem) என இருவகைப்படும். வளையம் என்னும் சொல்லுக்கு வளை என்பது தண்டு; வள் என்பது வேர். (வேரும் முதல் வேர் (primitive root), வழிவேர் (Secondary root) சார்பு வேர் (Tertiary root) என மூவகைப்படும். அவற்றுள், முதல்வேர் மட்டும் மீண்டும் மூவகைப்படும். இவையெல்லாம் பின்னர் விளக்கப்படும்).தண்டை அடியென்றுங் கூறலாம். மூலமும் பகுதியும் தம்முளொரு வேறுபாடுடையன. புரந்தான் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும் பகுதியுமாகும். ஆனால், புரந்தரன் என்னுஞ் சொல்லுக்கு, புர என்பது மூலமும், புரந்தா என்பது பகுதியுமாகும். மொழிகளுக்கிடையிலுள்ள தொடர்பைக் காண்பதற்கு, மூவிடப் பெயர், வினாப்பெயர், முக்கியமான முறைப்பெயர், எண்ப் பெயர், வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளின் பெயர், சினைப்பெயர், வா,போ என்பன போன்ற முக்கிய வினைகள் என்பனவே போது மாயினும், பல சொற்களும் தெரிந்திருப்பின் சொல்லியல்பும் சொற்பொருளும் விளக்கம் பெறுதலின், அகராதியையே துணைக்கொள்வது மிகச் சிறந்ததாகும். 8. ஒருவர் தம் இடத்திலிருந்துகொண்டே மொழிநூல் பயிலலாம். ஒருவர் ஒரு மொழியை அறிய, அது வழங்கும் இடத்திற்குச் செல்வது இன்றியமையாத தன்று; தம் இடத்திலிருந்துகொண்டே தக்கோர் எழுதிய இலக்கணங்களையும் அகராதிகளையுந் துணை கொண்டு அயன்மொழிகளைக் கற்கலாம். 9. ஒரு மொழியறிவு பிறமொழி யறிவுக்குத் துணையாகும். ஒரு மொழியிலுள்ள சில சொற்களின் மூலம் பிற மொழியிலேயே அறியக் கிடப்பதாலும், ஒரு மொழியின் இலக்கணிகள் கண்டு பிடிக்காத, அம்மொழிக்குரிய சில இலக்கணவுண்மைகள், பிற மொழியிலக்கணிகளால் கண்டுபிடிக்கப் பட்டிருப்பத னாலும், உலகத் தாய்மொழியின் இயல்பையும் வளர்ச்சியையும் அறியத் தக்க பல நெறிமுறைகள் பல மொழிகளிலும் பரவிக் கிடத்தலா லும், மொழிகளை அறிய அறிய ஒருவரின் அறிவு பெருகுவதா லும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழி யறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும். 10. தாய்மொழி முன்னும் அயன்மொழி பின்னும் கற்கப்பட வேண்டும். ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடுமாயினும், அதன் மரபையும் இலக்கணத்தையும் கற்றே யறிய வேண்டிய திருக்கின்றது, தாய்மொழியியல்பை யறியு முன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர். தமிழைக் கல்லாது ஆங்கிலத்தையே பயின்ற சில தமிழர், பெரும் பாலுங் கிறிதவர், நன்றாய் விளையாடினார்கள் என்பதை விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் என்று கூறுதல் காண்க. 11. முக்குல மொழிகளும் ஒரே மூலத்தின. (L.S.L. Vol.I. pp. 35,375, 387) ஒரு மரத்தில், ஒரே அடியினின்று பல கவைகளும், அக்கவை களினின்றுபல கிளைகளும், அக் கிளைகளினின்று பல கொம்பு களும், அக் கொம்புகளினின்று பல கப்புகளும், அக் கப்பு களினின்று பல வளார்களும் தோன்றுகின்றன. இங்ஙனமே, உலக மூல மொழியினின்று, பல குலநிலைகளும், அக் குலநிலைகளி னின்று, பல குடும்ப நிலைகளும், அக் குடும்ப நிலைகளினின்று பல மொழிகளும், அம் மொழிகளினின்று பல கிளை மொழிகள் அல்லது மொழி வழக்குகளும் தோன்றியுள்ளன. உலக மொழிகளின் முக்குலத் தாய்களும் ஒரே மூலத்தின என்று, சென்ற நூற்றாண்டிலேயே, மாக்கசு முல்லர் தேற்றமாய்க் கூறிவிட்டார். பண்டைக்காலத்தில், ஆரியர் வருமுன், இந்தியா முழுதும், பல மொழிவழக்குகளாக வேறுபட்ட ஒரே மொழி (தமிழ்) வழங்கின தாகச் சில தொல்காப்பியக் குறிப்புகளாலும் மொழிநூலாராய்ச் சியாலும் அறியக் கிடக்கின்றது. ஆரியர் வந்த பிறகுங்கூட, உண்மையான மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டவை, வடக்கில் சம கிருதமும் தெற்கில் தமிழுமாக இரண்டே யென்பது, வடமொழி தென்மொழியென்னும் அவற்றின் பெயர்களாலேயே அறியப் படும். இன்றும், தென்னாட்டு மொழிகளை யெல்லாம் தமிழுக்குள்ளும் வடநாட்டு மொழிகளையெல்லாம் சமகிருதத்திகுள்ளும் அடக்கிவிடலாம். திராவிடக் குடும்பம் முழுதும் தமிழுக்குள் அடங்குவது போலப் பிற குடும்பங்களும் ஒவ்வொரு மொழிக் குள் அடங்கிவிடும். இந்த முறையையே தொடர்ந்து பின்பற்றி னால், இறுதியில், துரேனியம் ஆரியம் சேமியம் என்னும் முக்குல நிலைகளே எஞ்சி நிற்கும். அவற்றையும் ஒன்றாயடக்குவதற்குரிய நெறிமுறைகள் இல்லாமற் போகவில்லை. (நோவாவுக்கு முந்திய காலத்தில், கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்) உலக முழுவதும் ஒரே மொழியும் ஒரே பேச்சுமாய் இருந்தது என்று, கிறிதவ மறையில் ஆதியாகமம் 11ஆம் அதிகாரம் முதற் கிளவியில் கூறப்பட்டுள்ளது. இன்றும், ஒரு உலக மூலமொழியைத் தேற்றஞ் செய்வதற்கான பல சான்றுகள் உள்ளன. அவையாவன: 1. மக்கள் தொகை வரவர மிகுதல். 2. எல்லாமொழிகளின் அரிவரியும் அ ஆவில் தொடங்கல். 3. அம்மா, அப்பா என்னும் பெயர்களும், மூவிடப்பெயர் வினாப் பெயர் வேர்களும், பல சொற்களும் பல மொழி கட்கும் பொது வாயிருத்தல். 4. எண்கள் பத்துப்பத்தாகவே பல நாடுகளில் எண்ணப்படல். 5. நெருப்பு, சூரியன், நாகம் முதலியவற்றின் வழிபாடு பண்டை யுலகெங்கு மிருந்தமை. 6. நெட்டிடையிட்ட நாட்டார்க்கும் கருத்தொருமிப்பு. கா: ஆங்கிலம் தமிழ் tonic(from tone) ஒலித்தல் (தழைத்தல்) to catch fire தீப்பற்று to fall in love வீழ்(தாம்வீழ்வார்....cyF”) blacksmith கருமான் முதலாவது கணவனும் மனையியுமாக இல்லறந் தொடங்கும் இருவர், பின்பு பெரிய குடும்பமாகப் பெருகுவதையும், நாளடை வில் சிற்றூர் நகரும் நகர் மாநகருமாவதையும், குடி மதிப்பறிக் கைகளில் வரவர மக்கட்டொகை மிகுந்து வருவதையும் காண் பார்க்கு, மக்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றினர் என்பது புலனா காமற் போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரே மூலத்தினவாதல் வேண்டும். மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன். “ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும்போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர்.” முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும். மக்கள் பெரும்பாலும் தட்பவெப்ப நிலை வேறுபாட்டாலேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும் நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையரா கவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும். 12. ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய. உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Onomatopoeic theory)யும், சிலர் உணர்ச்சி யொலிக்கொள்கை (Interjectional theory) யும், சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory) யும் எடுத்துக் கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும். மொழி இயற்கையாய் தோன்றியதென்னும் இயற்கைக் கொள்கை (Natural theory) யும், இடுகுறிகளாய்த் தோன்றிற்றென்றும் இடுகுறிக் கொள்கை (Arbitrary theory) யும், பலர் கூடி இன்ன பொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு முடிவுக் கொள்கை (Conventional theory) யும், கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் கொள்கை (Divine theory) யும் இக்காலத்திற் கேலா. 13. இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது. சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற்றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப்பெயர்களை யிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா. ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டுமென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ் விலக்கணத்தை அம் மொழி யிழதுவிடுகிறது என்று மாக்கசு முல்லர் கூறுகிறார். (L.S.L. Vol. I. p. 47). எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல். 639) என்றார் தொல்காப்பியர். 14. உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும். திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமகிருதத்தை, இன்றும், சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன்மொழி யாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத் திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாக முடியும்?. உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளை யுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலைகளைக் கொண்ட தாய், இடுகுறியில்லதாய், தனிமொழியா யிருத்தல் வேண்டும். 15. சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும். மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப்படு கின்றது. 16. மொழி மாந்தன் mik¥ng. (L.S.L. Vol. I, p. 31) மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே, எப்பிக்கூர (Epicurus), அரிற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தே யிருந்தது. ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிதவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர். தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை. 17. மொழி மக்கள் கூட்டுறவா லாயது. மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானா யின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது. ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப்பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும். இக்காலத்தில் உவில்க்கின் போன்ற ஒருவர், இடுகுறிகளைக் கொண்டு ஒரு புது மொழியமைக்க முடியுமாயினும், இயற்கை யாய்ப் பொருள் குறித்தெழுந்த உலக முதன்மொழி ஒருவரால் தனிப்பட இயற்றப்பட்டதாகாது. 18. மொழி அசைகளாகவும் சொற்களாகவும் தோன்றிற்று. மொழியின் கடைசிச் சிற்றுறுப்பு எழுத்தாகக் கூறுவது, எழுத்தும் இலக்கணமும் ஏற்பட்ட பிற்காலத்ததாகும். தமிழிலக்கணத்திற் கூறப்படும் நால்வகைச் சொற்களுள், இலக்கணவகைச் சொற்கள் என்று கூறத்தக்கவை பெயர் வினை இடை என்னும் முதல் மூன்றுமே. இறுதியிலுள்ள உரிச்சொல் இலக்கணவகைச் சொல்லன்றென்பது பின்னர் விளக்கப்படும். மூவகைச் சொற்களுள் முந்தித் தோன்றியது இடை; அதன் பின்னது வினை; அதன் பின்னது பெயர். கா: கூ(என்று கத்தினான்) - இடைச்சொல் கூவி - வினைச்சொல் கூவல் - பெயர்ச்சொல் தமிழுக்கு இலக்கணம் ஏற்பட்டபோது, இம்மூவகைச் சொற் களும் தருக்கநூன் முறைப்படி, கீழிறக்கப் பெருமை முறையில் மாற்றிக் கூறப்பட்டன. மொழித்தோற்றம் முதலாவது சொற்றொடர் அமைப்பைத் தழுவியதென்று சாய் கூறுவது, மொழிநூன் முறைக்கு மாறானது. 19. மொழி ஒரே சமயத்தில் உண்டானதன்று. மக்கட்கு வரவரக் கருத்து வளர்கின்றது. அதனால் மொழியும் வளர்கின்றது. முதல் மாந்தன் குழந்தைபோல்வன். அவனுக்கு ஊணுடை முதலிய சில பொருள்களிருந்தால் போதும். நாகரிகம் வளர வளரத்தான் கருத்துகள் பல்கும். அப்போது சொற்களும் பல்கும். மாந்தன் முதன்முதல் தோன்றியதற்கும், மக்கட்குள் கூட்டுறவுண் டானதற்கும் இடையில், நெடுங்காலம் சென்றிருக்க வேண்டு மாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சி யிலிருந்துதான் பின்னர் மொழி உருவாகியிருக்கும். 20. மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும். கலைகள் இயற்கலை (Physical Science), ஆக்கக்கலை (Historical Science) என இருவகைப்படும், பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக்கலையும் ஓர் ஆக்கக் கலையே. 21. மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ஆக்கப் பெற்றவை. 22. ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம். ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன: 1. மன்பதைப்பெருக்கம் ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை, முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும். பொதுவாய், 100 மைல் சேய்மையில் இரண்டொரு சொற்களும், 200 மைல் சேய்மையில் சில சொற்களும், 400 மைல் சேய்மையில் மொழிவழக்கும், அதற்கப்பால் மொழியும் வேறுபடுவதியல்பு. இப் பொதுவிதிக்குச் சில தவிர்ச்சி (exception) களுமுண்டு. 2. ஒலித்திரிபு (Phonetic Decay and Phonetic Variation) 1. சோம்பலால். கா. பளம் (பழம்) ii. உறுப்பு வேறுபாட்டால். தட்பவெப்பநிலை, நிலச்சிறப்பு, ஊண், தொழில், பழக்கவழக்கம், இயற்கை முதலிய காரணங்களால், எழுத்தொலிக்குக் கருவியாகும் உறுப்புகள், ஒவ்வொரு நாட்டாரிடத்தும் நுட்பமாய் வேறுபடுகின்றன. அதனால், ஒலிப்புமுறையும் வேறுபடுகின்றது. மலையாளத்தில் வலி மெலியாதலும் (Nasalization) கன்னடத்தில் பகரம் ஹகரமாதலும், தெலுங்கில் ழகரம் டகரமாதலும் காண்க. 3. சொற்றிரிபு (Verbal Changes) i. ஈறுகெடல் (Discardance of Inflection) ii. ஈறுதிரிதல் (Inflectional Changes) iii. போலி (Mutation) iv. இலக்கணப்போலி (Metathesis) v. மரூஉ (Disguise) vi. சிதைவு (Corruption) vii. முக்குறை (Apherosis Syncope and Apocope) viii. முச்சேர்ப்பு (Prosthesis, Epenthesis and Epithesis) ix. அறுதிரிபு x. எதுகை (Rhyming) xi. வழூஉப்பகுப்பு (Metanalysis) xii. x¥ò( Analogy) xiii. மேற்படையமைப்பு (Superstructure) (உண்டு என்னும் தமிழ் வினைமுற்றைப் பகுதியாகக்கொண்டு உண்டாடு, உண்டாதி முதலிய தெலுங்கு வினைமுற்றுகளை யமைப்பது, மேற்படை யமைப்பாகும். 4. பொருட்டிரிபு (Semantic Changes). i. வேறுபடுத்தல் (Differentiation) ii. விதப்பித்தல் (Specialisation of general terms) iii. பொதுப்பித்தல் (Generalisation of special terms) iv. இழிபு (Degradation) v. உயர்பு (Elevation) vi. விரிபு (Extention) vii. அணி (Metaphor) viii. சுருக்கல் (Contraction) ix. வரையறை (Restriction) x. வழக்கு (Usage) 1. இலக்கணமுடையது; 2. வழுவுள்ளது. 5. சொற்றெரிந்து கோடல் (Natural Selection) தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மனை என்னுஞ் சொல்லையும் தமிழினின்றும் தெரிந்துகொண்டது சொற்றெரிந்து கோடல். 6. வழக்கற்ற சொல் வழங்கல் (Colonial Preservation)(English, past and present by Trench. p. 55) நோலை என்னும் தமிழ்ச்சொல்லின் மூலம் தெலுங்கில் நூன (எள்நெய்) என்று வழங்குவது வழக்கற்ற சொல் வழங்கல். 7. புதுச்சொல்லாக்கம். தாய்வழக்கி லில்லாத சொல், தொகைச்சொல், ஈறு, ஒட்டுச் சொற்கள் முதலியவற்றைப் புதிதாய் ஆக்கிக் கொள்ளல். 8. தாய்வழக்கொடு தொடர்பின்மை. சேரநாட்டுத் தமிழ், சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பின், தமிழொடு தொடர்பின்மையாலேயே வேறு மொழியாய்ப் பிரிய நேர்ந்தது. 9. பிறமொழிக் கலப்பு (Admixture of foreign elements) மேற்கூறிய திரிபு முறைகளெல்லாம், சோம்பலாலும் அறியாமை யாலும் நேர்ந்து ஒரு பயனும் பயவாதிருப்பின், மொழிச்சிதைவு (Linguistic Corruption) என்னும் கேட்டிற்குக் காரணமாகும்; அங்ஙனமன்றி, அதற்கு மறுதலையாயிருப்பின், மொழி வழக்கு வளர்ச்சி (Dialectic Regeneration) என்னும் ஆக்கத்திற்குக் காரண மாகும். தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகள் தமிழினின்றும் பிரிந்து போனது, திராவிடர் தவறுமன்று, ஆரியர் தவறுமன்று, மொழி வழக்கு வளர்ச்சியேயாகும். ஆனால், அம் மொழிகளில் வடசொற் களைக் கலந்ததும், அம் மொழிகளைத் தமிழினின்றும் வேறுபடுத் தினதும் திராவிட மொழிகளுக்கு வடமொழியைத் தாயாகக் காட் டியதும், தமிழைத் தாழ்த்திவிட்டு வட மொழியைத் தலைமை யாக்கியதும், ஆரியத்தால் திராவிடர்க்கு நேர்ந்த தீமைகளாகும், மிகப் பெரிய திராவிட மன்பதையை ஆரியர் முதலாவது பல பிரிவாகப் பிரித்தது மொழியினால் என்பது, இதனால் விளங்கும். மொழியினால் திராவிடரைப் பல பிரிவாகப் பிரித்தபின், மதத்தாலும் வரணவொழுக்கத்தாலும் தமிழரைப் பல பிரிவாகப் பிரித்தனர். (இதுபோது நாட்டியலியக்கத்தாலும் தமிழர் பிரிக்கப் படுகின்றனர்.) தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள், செந்தமிழ் நாட்டிற்குச் சேயவாதலாலும், சேர சோழ பாண்டிய ஆட்சிகட்கப்பாற்பட்ட வாதலாலும், சில நல்ல சொல்வடிவுகளை யுடையவாதலாலும், தமிழினின்றும் பிரிந்து கிளைமொழிகளாய், வேறாக வெண்ணப் படுவதற்குத் தகுதியுடையனவே. ஆனால். 12ஆம் நூற்றாண்டுவரை சேரநாட்டுத் தமிழாயிருந்த மலையாள மொழி. தமிழினின்றும் வேறாக எண்ணப்படுவதற்குச் சற்றும் தகுதியுடையதன்று. மலையாள மொழியைக் கெடுத்த ஆரியருள் தலைமையானவர், தமிழெழுத்தின் வகைகளான வட்டெழுத்திலும் கோலெழுத் திலுமே தங்கள் மொழியை எழுதிவந்த மலையாளிகட்கு, ஆரியவெழுத்தை யமைத்துக் கொடுத்த துஞ்சத்து எழுத்தச்சன் என்பதற்கு எள்ளளவும் ஐயமேயில்லை. 23. ஒரு மொழி சில காரணத்தால் திரியலாம் ஒரு மொழி திரிதற்குக் காரணங்களாவன 1. பேசுவோர் நாடோடிகளாயிருத்தல் 2. பேசுவோர் சிறு குழுவினராயிருத்தல் 3. வரிவடிவின்மை 4. அரசியலின்மை 5. தாங்குநரின்மை 6. சிதைவுகாப்பின்மை 7. சொன்மாற்றம் - i. பணிவுடைமையால் ii. தனிமக்கள் விருப்பத்தால் 24. ஒரு மொழி சில காரணங்களால் வழக்கழியலாம். ஒரு மொழி வழக்கழிதற்குக் காரணங்களாவன: 1. செயற்கை வளர்ச்சி முதிர்பு. கா: சமகிருதம். 2. பேசுவோர் அநாகரிகராயிருந்து பிறநாகரிக மொழியை மேற்கொள்ளல். ஆப்பிரிக்காவினின்றும் அமெரிக்கா சென்ற நீகரோவர், தம் மொழிகளை விட்டுவிட்டு, ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டமை காண்க. 3. பேசுவோர் சிறு குழுவாய்ப் பிறமொழி பேசும் பெரும் பான்மையோர் நடுவிலிருத்தல். 4. போர், கொள்ளைநோய், எரிமலைக் கொதிப்பு முதலிய வற்றால் ஒரு மொழியா ரெல்லாரும் அழிக்கப்படல். 25. ஒரு மொழி புதிதாய்த் தோன்றலாம். புதுமொழி தோன்றும் வகைகள் i. செயற்கை கா: எபெரான்ற்றோ (Esperanto) ii. கலவை கா: இந்தி iii.bkhÊtH¡F வளர்ச்சி கா: தெலுங்கு. 26. அடுத்தடுத்து வழங்கும் மொழிகள் தம்முள் ஒன்றினொன்று கடன் கொள்ளும். 27. ஒரு தனிமொழி பேசுவோர் தொன்றுதொட்டுத் தனிக் குலத்தினரா யிருந்திருத்தல் வேண்டும். பிற மொழியோடு சிறிதும் தொடர்பில்லாத ஒரு தான்றோன்றி மொழியிருப்பின், அதைப் பேசுவோர் தொன்றுதொட்டுப் பிற குலத்தாரொடு தொடர்பில்லாத ஒரு தனிக் குலத்தினராயிருத்தல் வேண்டும். 28. மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். 29. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசுவோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது. 30. மொழிநூலாளர் பல மொழிகளைப் பேசவேண்டும் என்னும் யாப்புறவில்லை. முக்கியமான இரண்டொரு மொழிகளிற் பேசுந்திறனும், பிற மொழிகளின் இலக்கணவறிவும் சொல்லறிவும், மொழி நூலார்க்கிருந்தாற் போதும். 31. ஒரே மொழி பேசுவோரெல்லாம் ஓரினத்தாரல்லர். பார்ப்பனரும் தமிழரும் ஒரே மொழி பேசுவதால் ஓரினமாகார். 32. மக்கள் நாகரிகத்தைக் காட்டுவதற்கு மொழியே சிறந்த அடையாளம். விலங்கினின்றும் மாந்தனை வேறுபடுத்துவது மொழியொன்றே. அம் மொழியும் பலதிறப்பட்டு, அவற்றைப் பேசும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுவதாகும். 33. மொழிநூற் கலைக்கு நடுவுநிலையும் பொறுமையும் வேண்டும். இவ் விதி எல்லாக் கலைக்கும் பொதுவாயினும், மொழிநூற் கலைக்குச் சிறப்பாய் வேண்டுமென்பதற்கு இங்குக் கூறப்பட்டது. ஒருவர் பெருமை பாராட்டிக்கொள்ளும் பொருள்களுள், தாய் மொழியும் ஒன்று. ஆகையால், அதன் மீதுள்ள பற்றினால் நடுவு நிலையை நெகிழவிடக் கூடாது. தமிழ்நாட்டில், நடுவுநிலை யாராய்ச்சிக்குத் தடையாக ஈருணர்ச்சிக ளிருந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று, ஆரியத்திற்கு மாறாக இருப்பது உண்மையாயினும் கூறக்கூடாதென்பது. இன்னொன்று மதப்பற்று, சுவாமிநாத தேசிகர் திருவாசகம், பெரிய புராணம் முதலியவற்றைப் படிக்கலாமென்றும், சீவக சிந்தாமணி, சிலப்பதி காரம் முதலியவற்றைப் படிக்கக்கூடாதென்றும் கூறியது மதப் பற்றாகும். ஓர் ஆராய்ச்சியாளன் ஒன்றை ஆராயும்போது, தன்னை மதமற்றவன்போலக் கருதினாலொழிய, அதன் உண்மை காணமுடியாதென்பது தேற்றம். காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும். இனி, சிலர் கால்டுவெல் கூறியவாறு, ஒப்பியலறிவின்றி, ஒரு துறை யிலேயே அமிழ்ந்து, உள்ளம் பரந்து விரியாமல் குவிந் தொடுங்கப் பெறுகின்றனர். நுண்ணிய மதியும் சிறந்த ஆராய்ச்சி யியல்பும் உள்ள, காலஞ்சென்ற பா,வே. மாணிக்கநாயகர் ஒப்பியலறி வின்மை யாற் பல செய்திகளை உண்மைக்கு மாறாகக் கூறிவிட்டனர். ஓங்கார வடிவினின்றும் தமிழெழுத்துகள் வந்தன வென்றும்; ஓ என்னும் வடிவம் உம என்னும் மலைமகள் பெயரும் லிங்கக் குறியும் சேர்ந்ததென்றும், சிவாயநம என்னும் திருவைந்தெழுத் தில், வகரம் அருளையும் யகரம் உயிரையும் நகரம் திரோதத்தை யும் மகரம் மலத்தையுங் குறிக்குமென்றும், ஆய்தம் மூச்சொலியென் றும், அதன் துணைகொண்டு அரபி, ஹெபிரேயம் போன்ற மொழி களைத் தமிழில் எழுதலாமென்றும், உடம்படு மெய் என்பது உடம்பு + அடும் + மெய் என்று பிரிந்து, பிறவியைக் கெடுப்ப தென்று பொருள்படுமென்றும், ஒகரத்தின் மேல் பண்டைக் காலத்திற் புள்ளியிட்டெழுதினது, சிவ பெருமானின் தக்கண வடிவத்தைக் காட்டுதற்கென்றும், பலவாறு மயங்கிக் கூறினர் பா,வே. மாணிக்கநாயகர். இவையெல்லாம் பலவகை மலைவுகளுடையன என்பது ஆராய்ச்சியாளர் எல்லார்க்கும் புலனாகும். ஆயினும், இவற்றுள் ஒன்றைமட்டும், ஏனையோர்க்கும் தெரியும்படி இங்குக் கூறுகின்றேன். ய், வ் என்னும் மெய்கள் தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் ஈருயிர்களைப் புணர்த்தாலும், இடையில் உடம்படு (உடன் படுத்தும்) மெய்களாய்த் தோன்றத்தான் செய்யும். இது எல்லா மொழிக்கும் பொதுவான ஒலிநூல் விதி. கா : he + is =ëÆÞ, my + object =ikah¥b#¡‰‰ - ய், fuel =¥Éôbtš, go + and (see) = கோவன்று - வ். Drawer, sower முதலிய ஆங்கிலச்சொற்களில், வகரவுடம்படு மெய்க்குப் பதிலாக யகரவுடம்படுமெய் வருகிறதேயெனின், வகரத்தினும் யகரம் ஒலித்தற்கெளிதாதல்பற்றி, பிற்காலத்தில் யகரவுடம்படுமெய் பெருவழக்காயிற்றெனக் கொள்க. தமிழிலும் இங்ஙனமே. ஆயிடை, கோயில், சும்மாயிரு முதலிய வழக்குகளைக் காண்க. மாணிக்க நாயகரைப் பின்பற்றுஞ் சிலர், அவரைப் போன்றே பல சொற்கட்குத் தவறான பொருளும், தமது கருத்திற்கிசையாத நூற்பாக்களையும் சொல்வடிவங்களையும் இடைச்செருகலும் பாடவேறுபாடு மென்றும் கூறி வருகின்றனர். அவர் விரி நோக்கடைவாராக. மேனாட்டார் நடுநிலையும் ஒப்பியலறிவும் உடையராயினும், தமிழின் உண்மைத்தன்மையைக் காண முடியாமைக்குப் பின் வருபவை காரணங்களாகும்; 1. தமிழ் தற்போது இந்தியாவின் தென்கோடியில் ஒரு சிறு நிலப்பரப்பில் வழங்கல். 2. (தமிழுட்பட) இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வட சொற்கள் கலந்திருத்தல். 3. (கடல்கோளாலும், ஆரியத்தாலும், தமிழர் தவற்றாலும் பண்டைத் தமிழ்நூல்கள் அழிந்துபோனபின்) இந்தியக் கலை நூல்களெல்லாம் இப்போது வடமொழியிலிருத்தல். 4. இதுபோது பல துறைகளிலும் பார்ப்பனர் உயர்வாயும் தமிழர் தாழ்வாயுமிருத்தல். 5. பார்ப்பனர் தமிழரின் மதத்தலைவராயிருத்தல். 6. தமிழைப்பற்றித் தமிழரே அறியாதிருத்தல். 7. ஐரோப்பியர் தமிழைச் சரியாய்க் கல்லாமை. கால்டுவெல் கண்காணியார், தமிழ் வடமொழித் துணை வேண் டாத தனிமொழி யென்றறிந்தும், தமிழர் உயர்நிலைக் கலைகளை ஆரியரிடத்தினின்றும் கற்றதாகத் தவற்றெண்ணங் கொண்டமை யால், தமிழில் மனம், ஆன்மா என்பவற்றைக் குறிக்கச் சொல் லில்லையென்றும், திரவிடம், சேரன், சோழன், பாண்டியன் என்னும் பெயர்கள் வடசொற்கள் என்றும், இன்ன என்னும் வடிவிற்கொத்த அகரச் சுட்டடிச்சொல் தமிழிலில்லை யென்றும், பிறவாறும் பிழைபடக் கூறினர். உவில்லியம் (William), கோல்புரூக் (Colebrooke), மூய்ர் (Muir) முதலியவரோவெனின், தமிழைச் சிறிதுங் கல்லாது, வட மொழியிலேயே மூழ்கிக் கிடந்து, இந்திய நாகரிகமெல்லாம் ஆரிய வழியாகக் கூறிவிட்டனர். மொழிநூற்கலையும் நூலாராய்ச்சியும் வரவர வளர்ந்து வரு கின்றன. ஆகையால், சென்ற நூற்றாண்டில் தோன்றிய பல மொழி நூற் கருத்துகள் இந் நூற்றாண்டில் அடிபடும். பார்ப்பனர், ஆரியத்தை உயர்த்திக் கூறிய மேனாட்டார் சிலரின் கூற்றுகளைத் தங்கட்கேற்ற சான்றுகளாகப் பற்றிக்கொண்டு, அவற்றை மாற்று கின்ற புத்தாராய்ச்சி தோன்றாதபடி, பல வகையில் தமிழரை மட்டந்தட்டி வருகின்றனர். மேனாட்டில், உண்மை காண வேண்டுமென்று பெரு முயற்சி நடந்து வருகின்றது; ஆனால் கீழ் நாட்டிலோ உண்மையை மறைக்கவேண்டு மென்றே பெருமுயற்சி நடந்துவருகின்றது. கால்டுவெல் கண்காணியாரின் திராவிட ஒப்பியல் இலக்கணத்தின் முதலிரு பதிப்புகளிலும், இல்லாத (திராவிட நாகரிகத்தை யிழித்துக் கூறும்) சில மேற் கொள்கள், மூன்றாம் பதிப்பிற் காணப்படுகின்றன. இவை யெல்லாம் மொழி நூற் கலையின் முன்னேற்றத்தைக் குறியாது பிற்போக்கையே குறிக்கும். மொழிநூலின் முதன்மை ஒரு நாட்டு வரலாறு, 1. எழுதப்பட்ட வரலாறு (Written History), 2. எழுதப்படா வரலாறு (Unwritten History) என இருதிறப்படும். கிறித்துவிற்குப் பிற்பட்ட நாடாயின், பெரும்பாலும் எழுதப் பட்டிருக்கும்; முற்பட்டதாயின், எழுதப்பட்டோ படாதோ இருக்கும். எழுதப்படா வரலாறு, 1. அறியப்பட்ட வரலாறு (Known History) 2. அறியப்படா வரலாறு (Unknown History) என இரு திறத்தது. வரலாற்றுக் குறிப்புக்களும் கருவிகளும் சான்று களும் போதிய அளவு இருப்பின், அறியப்படும்; இன்றேல் இல்லை. இனி, எழுதப்பட்ட வரலாறும், மெய் வரலாறு (True History), பொய் வரலாறு (False History) என இருவகைத்து: ஒரு நாட்டு வரலாறு அந்நாட்டின்மேற் பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படின் பெரும்பாலும் மெய்யா யிருக்கும்: வேற்றினப் பகைவராலும் தன்னினக் கொண்டான் மாராலும் (Quislings) எழுதப்படின் பெரும்பாலும் பொய்யாயிருக் கும். தமிழ்நாட்டு வரலாற்றாசிரியருள் P.T. சீநிவாசையங்காரும், இராமச்சந்திர தீட்சிதரும், T.R. சேச ஐயங்காரும் தவிரப் பிறரெல்லாரும் பெரும்பாலும் ஆரியச் சார்பானவரும் நடுநிலை திறம்பியவருமாதலின், கிறித்துவிற்குப் பிற்பட்ட வரலாற்றைப் பெரும்பாலும் உள்ளபடியும், முற்பட்ட வரலாற்றை முற்றும் திரித்தும் எழுதியிருக்கின்றனர். இதற்குக் கரணியம், கிறித்துவிற்கு முற்பட்டது பெரும்பாலும் ஆரியக் கலப்பு இல்லதாயும், தமிழர்க்குப் பெருமை தருவதாயும், பிற்பட்டது ஆரியக் கலப்பு உள்ளதாயும், ஆரியர்க்கே பெருமை தருவதாயும் இருப்பதே. எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படும் சான்றுகள், இலக்கியம், வெட்டெழுத்து (Inscriptions) பழம்பொருள் நூல்கள் (Archaeology) என மூவகைப்படும். இலக்கியத்துள் தொல்காப் பியமும் இரண்டொரு புறநானூற்றுச் செய்யுட்களும் திருக்குறளும் தவிர மற்றப் பண்டைத் தமிழ் நூல்களெல்லாம் அழியுண்டு போனமையால் கிறித்துவிற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய இலக்கியச் சான்று இல்லாதே போயிற்று; இது போதுள்ள வெட்டெழுத்துக்கள் பெரும்பாலும் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாதலின், அவையும் பயன்பட வில்லை. இனி, பழம் பொருட் கலையோவெனின், கற்காலத்து இருப்புக் காலத்துப் பருப்பொருட் செய்திகளைத் தவிர, ஒழுங் கான வரலாற்றிற்குரிய நுண் குறிப்புக்களைத் தெரிவிக்காததா யிருப்பதாலும், அதையும் ஆராய்தற்குரிய முதற்காலத் தமிழக மாகிய பழம் பாண்டிய நாடு (குமரிக்கண்டம்) முழுதும் முழுகிப் போனமையாலும், அதுவும் பயன்படாததே. ஆகவே, எஞ்சி நிற்கும் ஒரே சான்று மொழியே. தமிழ், ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரிக் கண்டத்தில் தானாகத் தோன்றி முழுவளர்ச்சி திரிபு உறவு முதலியவற்றை விளக்கும் மொழிநூலின் துணை கொண்டே, தமிழின் இயல்பையும் பழந்தமிழ் நாட்டு வரலாற்றையும் ஒருவாறு அறியமுடியும். மொழிநூலின் வரையறை (Definition) மொழிகள் தோன்றிய வகை, அவை வளர்ந்த முறை, அவற்றுள் ஒன்றோடொன்றுக்குள்ள தொடர்பு முதலியவற்றை விளக்கும் நூல் மொழிநூலாம் (Philology). ஒரே மொழியிலுள்ள சொற்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் பாகுபாடு, அமைப்பு, பிறப்பு, பொருளுர்த்துமுறை, திரிபு முதலியவற்றை ஆளும் நெறிமுறைகளை விளக்கும் நூல் சொல் லியல் நூலாம். (Etymology). ஆகவே, சொல்லியல்நூல் மொழி நூலின் உட்கூறாம். இவற்றுள், முன்னது பின்னதனுள் அடங்கும்; பின்னது முன்னதனுள் அடங்காது. மொழிநூல் இன்னும் உருவாகாமை மொழிநூலைப்பற்றி மக்களுக்கு இன்னும் சரியான உணர்ச்சியும் நம்பிக்கையும் ஏற்படவில்லை. கணிதம், வானூல் முதலிய கலைகளைப்போல மொழிநூலும் ஒரு திட்டமான நெறிமுறைப் பட்ட கலையே. சிலர் மொழிநூலைச் சொல்லியல் நூலாகக் கொண்டும் சொற்களின் பிறப்பு வளர்ச்சிகளைப்பற்றிய நெறி முறைகளை அறியாதும், ஒலி யொப்புமையும் பொருந்தப் புகலல் என்னும் உத்தியும்பற்றிச் சொற்கட்குத் தாறுமாறாய்ப் பொருட் காரணமும் மூலமும் கூறிவருகின்றனர். இதனால், மொழிநூலே ஓர் உன்ன அல்லது கற்பனைக் கலைதான் என்கிற முடிபைப் பலர் கொண்டுவிட்டனர். பலகலைகள் ஆய்வு (Empirical) நிலைகடந்து உருவாகியுள்ளன. மொழிநூல் இன்னும் ஆய்வு நிலையில்தா னுள்ளது; ஆயினும், மிக அணுகிய காலத்தில் உருவாகிவிடும் என்பது திண்ணம். மேனாட்டு வானூற்கலை சர் ஐசக்கு நியூட்டன் காலத்தில்தான் அவரால் உருவாயிற்று. அதற்குமுன் அது வழிவரம் பின்றிப் பழிபடு நிலையில்தா னிருந்தது. அது போன்றே இற்றை மொழி நூலும். உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தினின்று பல முறையாகப் பரவிப் போனவர்களே என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளுள. அங்ஙனம் பரவிச்சென்றவர்கள் மொழி தோன்றுமுன் சென்றவரும் மொழி தோன்றியபின் சென்றவரும் என இருதிறத்தார். மொழி தோன்றுமுன் சென்றவர் தாம் குடியேறிய நாட்டில் நாளடைவில் தத்தம் சுற்றுச் சார்பிற்கும் கருத்திற்கும் ஒலிக்குந் திறனுக்கும் ஏற்றவாறு ஒவ்வோர் மொழியை ஆக்கிக் கொண்டனர். அத்தகைய மொழிகளிடையே சில மொழியாக்க நெறிமுறைகளையன்றிச் சொல்லொப்புமை காண்பது மிகவும் அரிது. தென் ஆப்பிரிக்க மொழிகளும் சினம் சப்பான் முதலிய கீழ்நாட்டு மொழிகளும், அமெரிக்கப் பழங்குடி மொழிகளும் இவ்வகைக் கெடுத்துக் காட்டாம். ஆரியரும் திராவிடரும் மொழி தோன்றியபின் பிரிந்து போனவராதலின், அவ்விருசாரார் மொழிகட்கும் சொல்லிலும் நெறிமுறையிலும் பெரியதோர் நெருக்கமுண்டாம். ஆயினும், அவர் இடத்தில் நெட்டிடையிட்டுப் பிரிந்து காலத்தில் நெட் டிடையிட்டுக் கூடியமையின், இடைக்காலத்தில் ஒலிமுறையிலும் சொல்லமைப்பிலும் சொற்றொடர் இலக்கணத்திலும் மிகுந்த வேறுபாடு உண்டாய்விட்டது. ஒரு சிக்குப்பட்ட நூற்கண்டைச் சிக்கலெடுப்பதற்கு முதலாவது அதன் இரு முனைகளில் ஒன்றைக் காணவேண்டும். ஒரு பொரு ளுரிமை பற்றிய வழக்கைத் தீர்ப்பதற்கு முதலாவது, முதன்முதல் அதை வைத்திருந்தவன் யார் என்று அறியவேண்டும். அங்ஙனமே. மொழிநூலை உருவாக்குவதற்கு, முதலாவது, மாந்தன் தோன்றிய இடம் எது வென்றும் தொடர்புள்ள மொழிகட்குள் எது முந்தியது என்றும் அறிதல் வேண்டும், பொதுவாக, முந்திய மொழிகளில் சொல்வடிவம் இயல்பாயும் பிந்திய மொழிகளில் திரிந்தும் இருக் கும். திரிந்தமொழியை முந்தினதாகவும் இயல்பான மொழியைப் பிந்தினதாகவுங் கொண்டு ஆராயப்புகின், பேரனைப் பாட்ட னாகக் கொண்டு மரபுவழி கூறுவதும் சிறிது சிதைந்துபோன ஏட்டை அல்லது கல்வெட்டைத் தலைகீழ் வைத்துத் தவறாகப் பொருள் கொள்வதும் போன்றதேயாகும். மேனாட்டார் இன் னும் தமிழைச் செவ்வையாய் ஆராயாத தினாலேயே, அவர்கள் மொழிநூல் இயன்மொழித் தோற்றத்தை அல்லது வேர்ச்சொல் தோற்றத்தை அறியமுடியாத சொல்லியல் நூலாயும் இனமொழி நூலாயும் நின்றுவிட்டது. மொழிநூலுக்குத் தமிழின் முக்கியம் மாந்தன் முதன்முதல் தோன்றியவிடம் குமரி நாடே (Lemuria) யென்பது தமிழறியாமலே சில மேனாட்டுக்கலை வல்லார் கண்ட முடிபாகும். தமிழ்ச் சரித்திரமும் திரவிட மொழிநூலும் இதற்குத் தக்க சான்று பகர்கின்றன. திரவிடருக்குள் மொழியிலும் இலக்கியத் திலும் நாகரிகத்திலும் தூய்மைப்பட்டவர் இன்றும் தென்னாட்டி லுள்ள தமிழரே. தமிழ்நாட்டுள்ளும் மொழித் திருத்தம் தெற்கு நோக்கியதே. தமிழரின் முன்னோர் இருந்தது தென்பெருங் கடலில் முழுகியுள்ள குமரி நாடு. அது ஒரு காலத்தில் கோடிக்கணக் கான அல்லது இலக்கக்கணக்கான ஆண்டுகள் நிலை பெற்றிருந் தது. பனிமலை (இமயம்) தோன்றியதற்கு முன்பே அது தொன்முது நாடாயிருந்தது. தமிழ் வடக்கு நோக்கிச் செல்லச் செல்லச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு திரவிடமாகின்றது. திரவிடமும் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து பின்பு ஆரிய மாகின்றது. திரவிடச் சொற்கள் ஐரோப்பாவரை சென்று இலத்தீன் கிரேக்கம் முதலிய முதுபெருமொழிகளிலும் கலந்துள்ளன. இந்தியாவின் பழங்குடிகள் திரவிடரே. இவற்றை நோக்கும்போது, தமிழ்ச் சரித்திரம் இந்திய சரித்திரத்திற்கும் திரவிடமொழி நூலுக்கும் மட்டுமன்றி, உலக சரித்திரத்திற்கும் இந்திய ஐரோப்பிய ஒப்பியன் மொழி நூலுக்குமே அடிப்படையாகு மென்பது புலனாம். தமிழ் குமரி நாட்டில் தானே தோன்றிய மொழியாதலானும், திரவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு முதற்றாயாகவும் இருத்தலானும், சொல்லியல் திறவுகோலையும் மொழிநூல் திறவுகோலையும் தன்னகத்தேயே கொண்டுள்ளது. தமிழ் திரவிடத் தாயென்பது இப்பாகத்தின் பிற்பகுதியிலும், தமிழ்ச் சொல்லாக்க முறைகள் செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகள் என்னும் நூலிலும் கூறப்படும். தமிழின் தலைமையை அறிதற்குத் தடைகள் உலக மொழிகளுக்குள் தமிழ் தலைமையானதாயிருப்பினும், 1. சரித்திரமறியாமை, 2. சொல்லியலகராதியின்மை, 3. முதுநூல்க ளிறந்துபட்டமை, 4. மொழிபற்றிய தவறான அரசியற் கட்சிக் கொள்கை, 5. கலவை மொழிநடை, 6. தமிழன் அடிமையுணர்ச்சி, 7. தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் ஆட்சியிடங் களிலுமிருத்தல், 8. ஆராய்ச்சியின்மை, 9. மதப்பற்றினால் பிறமொழி தழுவல், 10. பெரும்பான்மைத் தமிழரின் கல்லாமை முதலிய காரணங்களால் தமிழின் பெருமை தமிழராலும் அறியப் படாமல் இருக்கின்றது. இந்திய சரித்திரத்தைத் தெற்கிருந்து தொடங்க வேண்டும் என்பதையும்; இந்திய நாகரிகம் திரவிடம் என்பதையும்; திரவிட உடலமைப்பைத் திரவிட மன்னர், தமிழ வேளிர், வேளாளர் முதலியார் முதலிய குலத்தினர் என்றிவரிடைத் தான் காண முடியுமென்பதையும்; திரவிடனைக் காட்டு மிராண்டி யாகச் சரித்திர நூல்களிற் காட்டியிருப்பதும் கூறியிருப்பதும் பெருந் தவறென்பதையும்; ஆரியர் வருமுன்பே, அன்றன்று, பனி மலை தோன்றுமுன்பே, குமரி நாட்டில் சைவமும் (சேயோன் வழிபாடு) மாலியமும் (மாயோன் வழிபாடு) முறையே குறிஞ்சி முல்லைத் தமிழர் மதங்களாயிருந்தன என்பதையும்; உலகியலும் மதவியலும் பற்றிய திருந்திய பழக்கங்கள் இன்றும் தென்னாட்டி லேயே உள்ளன என்பதையும்; எந்நாட்டிலும் மக்களுள் தாழ்ந்தோர் உயர்ந்தோர் என இரு சாரார் இருப்பது போல் தமிழ் நாட்டிலும் தொன்று தொட்டு உள்ளனரென்பதையும்; அவருள் உயர்ந்தோரின் மதங்களையும் பழக்கவழக்கங்களையுமே ஆரியர் மேற்கொண்டு அவற்றைத் தமவாகக் காட்டினர் என்பதையும்; மொழிகளில் தேவமொழியென ஒன்றில்லை யென்பதையும்; அங்ஙனமிருப்பின், அது இயற்கையும் எளிமையும் வெளிப் படை யும் நடுநிலை அன்பு பிறப்பொப்பு வேளாண்மை முதலிய கருத் தறிவிப்பும் பற்றித் தமிழேயாம் என்பதையும்; பழந்தமிழர் பிற துறைகளிற் போன்றே மொழி, இலக்கியம், இலக்கணம் என்பவற் றிலும் தலைசிறந்திருந்தனர் என்பதையும்; தாம் கருதிய எல்லாக் கருத்துக்களையும் அறிந்த எல்லாப் பொருள்களையும் குறிக்கச் சொல்லமைத் திருந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும். இதனால், வடமொழியை முதன்மொழியாயும் வடநூலை முத னூலாயும் வைத்துத் தமிழாராயப்புகின், உண்மைக்கு நேர் மாறான முடிபுகளே தோன்று மென்பதையும், வீர சோழியம் இலக்கணக்கொத்து பிரயோகவிவேகம் முதலியன அளவை நூல் களாகா என்பதையும் உணர்தல் வேண்டும். இயல்பான மொழிகளும் சொற்களும் ஒரு நெறிப்பட்டே தோன்றி இயங்குகின்றமையின், முறைப்படியாராயின் அவற்றின் நெறிமுறைகளை யெல்லாம் கண்டு கொள்ளலாம் என்பது, இச் சுட்டு விளக்கத்தை நடுநிலையாய் நுணுகி நோக்குவார்க்கு இனிது புலனாம். எனது மொழியாராய்ச்சி குன்றாவாறு இடையிடை ஊக்கிவரும் என் நண்பர் திருமான் வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும் பிறர்க்கும் யான் மிகமிகக் கடப்பாடுடையேன். இவ்வாராய்ச்சிக்கும் அதன் வெளியீட்டிற்கும் தோன்றாத் துணையாயிருந்துதவியருளும் எல்லா வல்ல இறைவன் திருவடி களை நெஞ்சார நினைத்துத் தலையார வணங்குகின்றேன். மொழிநூற் குலைவு மொழிநூலானது வரலாற்றியல், வண்ணனையியல், ஒப்பு நோக்கியல் என்னும் மூவியல்களையும் ஒருங்கேயுடையதேனும், மேலைமொழிநூலார் இயன்மொழியாகிய தமிழை அடிப்படை யாகக் கொள்ளாது திரிபில் திரிபாகிய ஆரியத்தை அடிப்படை யாக வைத்து ஆய்ந்ததினால், மூலமொழியையும் அது தோன்றிய வகையையுங் காணாது குன்று முட்டிய குரீ இப்போல் இடர்ப் பட்டு, வரலாற்றியலை அடியோடு விலக்கிவிட்டு வண்ணனை யியலையும் ஒப்பியலையுமே கையாண்டு வருகின்றனர். ஒரு குடும்பத்திலுள்ள மக்களுள் ஒவ்வொருவரையும் பற்றி, இவர் இன்னபாலினர்; இன்ன நிறத்தர்; இன்னவளர்த்தியர்; இன்ன தோற்றத்தர்; இன்ன இயல்பினர்; இன்ன திறமையர் என்று கூறுவது போன்றது வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics). ஒரு குடும்பத்தார் எல்லாரையும் ஒப்புநோக்கி, இக்குடும்பத்தில் இத்தனையர் ஆடவர்; இத்தனையர் பெண்டிர்; இத்தனையர் சிவப்பர்; இத்தனையர் கருப்பர்; இத்தனையர் நெடியர்; இத் தனையர் குறியர்; இத்தனையர் ஒத்தவர்; இத்தனையர் வேறுபட்ட வர் என்றுரைப்பது போன்றது ஒப்பியன் மொழிநூல். (Comparative Linguistics). ஒரு குடும்பத்தாருள், இன்னார் தந்தையர்; இன்னார் தாயார்; இன்னார் புதல்வர்; இன்னார் புதல்வியர்; இன்னார் தமையனார்; இன்னார் தம்பிமார்; இன்னார் தமக்கையார்; இன்னார் தங்கை மார் என்றிங்கனங் கூறுவது போன்றது வரலாற்று மொழிநூல் (Historical Linguistics.). வரலாற்று மொழிநூல் மொழிகளின் தோற்ற வளர்ச்சிகளைக் கூறுவதால் ஏனையீரியல்களினுஞ் சிறந்ததாம். ஒப்பியன் மொழிநூல் வரலாற்றை அறியத் துணைசெய்வதால், அதற்கு அடுத்தபடியாகச் சிறந்ததாம். வண்ணனைமொழிநூல் பிறமொழித் தொடர்பு நோக்காது ஒரு மொழியை வண்ணிப்பது மட்டும் செய்வதால், உண்மையில் இலக்கணத்தின்பாற் படுவதே. இங்ஙனம் இம் மூன்றியல்பும் முறையே தலையிடை கடையாம். மேலையர் மூலமொழியையும் மொழி தோன்றிய வகையையும் அறியாமையால், அவர் வரலாற்று மொழிநூலென்று கொள்வது, இலக்கியத் துணைகொண்டு ஒரு மொழியின் அல்லது மொழிக் குடும்பத்தின் பல்வேறு நிலைகளைத் தொடர்ச்சியாகக் கால முறைப்படி கூறுவதேயன்றி வேறன்று. இது ஒரு மொழியின் முழுச் சொற்றொகுதியை மட்டுமன்றித் தனிச் சொற்களையுந் தழுவும். சென்ற நூற்றாண்டிறுதிவரை உலக முதன்மொழி எதுவென்று கண்டுபிடிக்கப்படாவிடினும், என்றேனும் ஒருநாள் அது கண்டுபிடிக்கப்படும் என்னும் நம்பிக்கையோ நம்பாசையோ மேனாடுகளில் இருந்து வந்தது, இந்நூற்றாண்டிலோ அது முற்றுங் கைவிடப்பட்டுவிட்டது. அதன் விளைவே வண்ணனை மொழிநூல். இதைச் சிறப்பாக வளர்த்து வருபவர் அமெரிக்கரே. அவர் தமிழைச் செங்கொள்கைத் தமிழ்ப் புலவர் வாயிலாகக் கற்கும் வரை, இவ்வழுவியல் மொழிநூல் மேனாடுகளில் தொட ரத்தான் செய்யும். ஆயினும் தமிழர் ஆரிய அடிமைத் தனத்தாற் பிறந்த தம் தாழ்வுணர்ச்சி நீங்கிப் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்ப்பாராயின், தமிழின் முன்மையையும் பிறமொழி களின் வழிநிலைத்தன்மையையும் காணத் தவறார் என்பது திண்ணம். மொழி பற்றிய சில வுண்மைகள் 1. மொழிமாந்தன் அமைப்பே. உலக மொழிகளுள் எதுவும் இறைவன் படைத்ததன்று. இயற்கை யொலிகளான கிளவிகளும் செயற்கை யொலிகளான சொற்களு மாக, ஒவ்வொன்றாய்ப் பையப் பையப் பல்லாயிர மாண்டுக் காலஞ் செலவிட்டு, ஒரு மக்கட் கூட்டத்தார் கூட்டுற வால் ஓர் ஒழுங்குபட அமைத்துக்கொண்ட ஒலித்தொகுதியே மொழி. உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் முதல் நாலாயிரம் வரை வெவ்வேறு தொகையினவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. மாந்த ரெல்லாரும் ஓரிணைப் பெற்றோரினின்று தோன்றிப் பல்கி வேறு பட்டிருத்தல் போன்றே, மொழிகளும் ஒரே மூல மொழியினின்று திரிந்து பல்வேறு வகையில் வேறுபட்டிருத்தல் வேண்டும். 2. கருத்துநிகழ்விற்கு மொழி தேவையில்லை. நிலைத்திணை தவிர மற்றெல்லா உயிரினங்கட்கும் கருத்துண்டு. மொழிபேசாத ஊமையரும் பேசுவார் போன்றே கருதுவர். சிறப்பாகக் கட்டபொம்மன் இளவலை நோக்குக. உணர்ச்சி, விருப்பு, சூழ்வு, துணிபு, மகிழ்ச்சி, இரங்கல், நினைப்பு என்னும் எழுவகையே கருத்தின் இயல்கள். இவற்றிற்கு மொழி தேவையில்லை. 3. தாய்மொழியுங் கற்கப்படுவதே. ஒரு குழவியை அரையாண்டிற்குள் தாயினின்று பிரித்து மக்கள் மொழித் தொடர்பில்லாது வைத்து வளர்த்தால், எத்தனையாண் டாயினும் எம்மொழியும் பேசாது. ஒரு தமிழக் குழவியைப் பிறந்தவுடன் ஓர் ஆங்கில மாதிடம் வளர்க்கவிட்டால், அது நாளடைவில் ஆங்கில மொழியே பேசும்; ஓர் அரபி மாதிடம் வளர்க்க விட்டால், வாயமைப்பு நுண் வேறுபாட்டால் ஒலிப்பு முறையிற் சற்று இடர்ப்படினும், அரபி மொழியே பேசும். ஒவ்வொரு பிள்ளையும், குழந்தைப் பருவத்திற் பெற்றோரிடமும், பிள்ளைப் பருவத்திற் பெற்றோர் உற்றோரிடமும், பையற் பருவத்திற் பெற்றோர் உற்றோர் மற்றோரிடமும், ஒவ்வொரு சொல்லாக முயற்சி வருத்தமும் வினையுணர்ச்சியு மின்றிக் கற்றே தன் தாய் மொழியைப் பேசப் பயில்கிறது. தாய்மொழியை நன்கு பேசக் கற்றபின்பும், அதிற் பேசுவதை நிறுத்திவிட்டுப் பல்லாண்டு அயன்மொழியிலேயே பேசிவரின், தாய்மொழிப் பேச்சாற்றல் மிகக்குறையும். 4. மொழிவாழிடம் நாவே. மொழியென்பது, ஒரு விலங்கும் பூதமும் போன்று மக்கட்கு அப்பாற்பட்ட ஓர் உருவமன்று. ஒரு மக்கள் வகுப்பார் தம் கருத் துக்களைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வாயிலாகப் பயன்படுத்தப் படும் ஒலித்தொகுதியே மொழி. ஒலி நிகழ்வது வாயில். ஆகவே, மொழிவாழிடம் நாவே. மொழிவலர் நாவலர். மொழித் தெய்வம் நாமகள். ஒரு சொல்லை வழங்காவிடின், அது ஒலியிழக்கும். அதனால் இறந்துபடும். அது இலக்கியத்தில் எழுதப்படாவிடின், பிணம்போற் கிடப்பதுமின்றி மறைந் தொழியும், பல சொற்கள் ஒலியிழப்பின் ஒரு பகுதியும், எல்லாச்சொற்களும் ஒலியிழப்பின் முழுவதும், ஒரு மொழி யழியும். ஒருமொழி ஆட்சிமொழியாயின், பொதுமக்கள் அதன் சொற்களையே ஆள விரும்புவர்; அதனால், இந்தியால் தமிழ் கெடாது என்று பேராயத்தலைவர் சொல்வது பிதற்றலே. ஆங்கிலம் ஆட்சிமொழியானது தமிழில் இல்லாத அறிவியல் இலக்கியச் சிறப்பினாலேயே. அவ்வியல்பு இந்திக்கில்லை. மேலும், ஆங்கிலர்க்குத் தமிழை யொழிக்க வேண்டும் என்னும் குறிக் கோளில்லை. வடமொழியார்க்கும் இந்தியார்க்கும் அஃதுண்டு. மொழியென்பது உண்மையில் ஒலித்தொகுதியே. மக்கள் அறிவுங்கருத்தும் சேய்மையர்க்கும் பிற்காலத்தார்க்கும் பயன் படு மாறு, மொழியின் ஒலியுறுப்புக்களைக் கட்புலனாகிய வரிவடி வில் எழுதிக்காட்டுவதே இலக்கியம் என்னும் எழுத்து மொழி. ஆகவே, மக்களின்றிக் கருத்தில்லை; கருத்தின்றி ஒலியில்லை; ஒலி யின்றி வரிவடிவென்னும் எழுத்தில்லை; எழுத்தின்றி எழுதப் பட்ட இலக்கியமில்லை. ஆகவே, ஆரியவேதம் மாந்தனாலும் இறைவனாலும் இயற்றப் படாது தானே தோன்றிற்றென்றும், மரைக்காடு என்னும் ஊர்ப் பெயரை மறைக்காடு என்று மாற்றி, வேதங்கள் வழிபட்டுத் திருக்காப்புச்செய்த இடமென்றும், கூறி மக்களை யேமாற்றுவது, துணிச்சலான பொய்யும் கடுந் தண்டனைக்குரிய குற்றமுமாகும். 5. சமற்கிருதம் இலக்கிய மொழியே. இந்திய ஆரியர் மொழி வழக்கற்றபின் எழுந்த வேத இலக்கிய மொழி தமிழொடு கலந்துற்ற விரிவே சமற்கிருதம். அது ஒரு காலும் பேசப்பட்டதன்று. ஆதலால், அது பிறந்ததுமில்லை; இறந்ததுமில்லை; செயற்கையாகப் புனையப்பட்ட பாவை போன்றதே. இதை மேலையர் இனி அறிவர். 6. எல்லா மொழியும் கடன் கொண்டு வளர்ச்சி பெறா. உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. கடிவாளமுஞ் சேணமும் இட்டாலும் கழுதை குதிரையாகாது. ஒரு மொழி வளர்ச்சியடைய, ஏற்கெனவே சொற்பெருக்கும் வேர்க்சொல் வளமுங் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது, ஆங்கிலம்போற் புதுப்புனைவாளர் மொழியாயிருத்தல் வேண்டும். இரண்டு மில்லா இந்தி போன்ற இந்திய மொழிகளெல்லாம் ஆங்கிலம் போல் அறிவியல் மொழிகளாகப் பண்படுத்தப் படவேண்டு மென்று, அளவிறந்து பொதுமக்கள் பணத்தைச் செலவிட்டு, ஆங்கிலத்தை யொழிக்கப் பார்க்கும் மூடக் கொள்கையையும் முட்டாள் தனத்தையும், பகடித் தனமாய்ப் பழித்துக்காட்டத் தென்னாலியிராமன் போன்ற திறமிக்க நகையாண்டி நாட்டி லில்லை. 7. செந்தமிழும் நாப்பழக்கம் தாய்மொழியில் தேர்ச்சி பெறுதற்கே பேச்சுப் பழக்கம் வேண்டு மெனின், அயன் மொழியில் திறம்பெற அதன் இன்றியமை யாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. ஆங்கிலங் கற்கும் மாணவர்க்கு இலக்கணங் கற்பித்தல் மட்டும் போதாது; பேச்சுப் பயிற்சிக்கும் போதிய வாய்ப்பளித்தல் வேண்டும். மொழிபெயர் முறை ஒரு மொழியிலுள்ள சொற்களை அல்லது குறியீடுகளை வேறு மொழியில் பெயர்க்கும் முறைகள் ஐந்தாம். அவையாவன:- 1. நேர்ச்சொல் (எ.கா: Pen -ötš) 2. வேர்ப்பொருட் சொல். (எ.கா: motor - இயங்கி) 3. சிறப்பியற் சொல். ( எ-கா: train - புகை வண்டி) 4. ஒப்பொலிச் சொல் 5. முதலெழுத்துச் சொல் இவற்றுள், முதலது முன்னமேயுள்ள சொல், ஏனையவெல்லாம் புதிதாய் ஆக்கப்பெறுவன. இவ் ஐ வகையுள், முதல் மூன்றும் தமிழ் தனித்தியங்குமா? என்னும் முந்திய கட்டுரையிற் கூறப்பட்டுள. ஏனையிரண்டே இங்குக் கூறப்பெறும். ஒப்பொலிச் சொல்லாவது, ஒலியிலும் பொருளிலும் ஒக்குமாறு அமைத்துக்கொள்ளப் பெறும் சொல். எ-கா: ஆங்கிலம் தமிழ் Parliament பாராளுமன்று bracket பிறைக்கோடு Parliamentv‹gJ பேசுங்களம் என்று பொருள்படும் தனிச்சொல் (ஒரு சொல்). பாராளுமன்று என்பது பாரை ஆளும் மன்று என்று பொருள்படும் முச்சொற்றொடர். Parler என்பது பேசு என்று பொருள்படும் பிரெஞ்சு வினைச் சொல்; ment என்பது ஒரு பிரெஞ்சுத் தொழிற் பெயரீறு. ஆகவே, இவ்விரு சொற்கட்கும் எள்ளளவும் தொடர்பில்லை ஆயினும்,ஒலியிலும் பொருளிலும் பேரளவு ஒத்திருக்கின்றன. braccal என்பது breeches (குறுங்காற் சட்டைகள்) என்று பொருள் படும் இலத்தீன் சொல். braga என்பது அதன் இசுப்பானியத் (Spanish) திரிபு. bragueta என்பது அதன் குறுமைப்பொருள் வடிவம் (diminutive). அதனின்று முதலில் bragget என்றும், பின்னர் bracket என்றும் ஆங்கிலச் சொல் திரிந்தது. பிறைக் கோடு என்பது பிறைபோல் வளைந்துள்ள கோடு என்று பொருள்படும் இரு சொற்றொடர். இவற்றிற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆயினும், ஒலியும் பொருளும் ஒத்துள்ளன. இங்ஙனம் அமைதல் மிக அருமையாதலின், ஒரு சில சொற்கள் தாம் இம் முறையில் அமைக்கப்பெறும். முதலெழுத்துச் சொல்லாவது, ஒரு பொருளைப் பற்றிய வண்ணனைச் சொற்கள் முதலெழுத்துக்களை மட்டும் சேர்த்து ஒரு பெயர் அல்லது குறியீடு அமைத்தல். எ-கா: Radar. இது, radio detection and ranging என்னும் நாற்சொல் முதலெழுத்துக் கோப்பு. இம்முறை பற்றியே, கதிரியத் துப்பறிவும் வீச்சீடும் என்னும் முற்சொற்களின் முதலெழுத்துக் களைச் சேர்த்துக் கதுவீ என்றோ, (வானூர்தி மரக்கலம் கடற்கரை முதலியவற்றின்) வாக்கும் (direction) வீச்சும் (range) காணி என்னும் பொருளில் வாவீணி என்றோ, அமைத்துக்கொள்ளலாம். ஆங்கிலக் குறியீடுகளெல்லாம் பொருளளவில் பெருவளங் கொண்டன வேனும், சொல்லளவில் மிக எளிய முறையிலேயே அமைந்துள்ளன. மேற்கூறிய ஐம் முறைகளையும் கையாளின் எல்லா அறிவியற் குறியீடுகளையும் தமிழில் எளிதாய் மொழி பெயர்த்துவிடலாம். தாய்மொழிப் பற்றொன்றே தேவை. (தென்மொழி.) மொழியாராய்ச்சி (COMPARATIVE PHILOLOGY) உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப்பெருங் கவைகளா யடங்கும். இவற்றுள் ஒவ்வொரு கவையும் பற்பல கிளைகளாய்ப் பிரியும்,. ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மொழித் தொகுதியாகும். இவற்றுள், துரேனியக் கவையில் திராவிடக் (Dravidian)»is¡F¤ தலைமையாகக் கருதப்படுவது அமிழ்தினுமினிய தமிழ்மொழியே. ஒரு மரத்தில், சிறு கிளைகட்கு நேர் இயைபு இன்றேனும் அவற் றைத் தாங்கும் பெருங்கவைகட்கு அடிமரத்துடன் நேர் இயை பிருப்பதுபோல, உலக மொழித்தொகுதிகட்குள் சிறு பிரிவுகட்கு நேர் இயைபின்றேனும் அவற்றிற்கு மூலமான பெரும் பிரிவுகட்கு நேரியைபு திட்டமாயுள்ளதாம். எல்லாக் கிளைகட்கும் மூலமான ஓர் அடிமரமிருப்பதுபோல எல்லா மொழிகட்கும் மூலமான ஒரு தாய்மொழியு மிருத்தல் வேண்டும். உலகத்திலுள்ள மக்களெல் லாம் ஒரு தாய் வழியினராதலின் அவர் வழங்கும் மொழிகளும் ஒருதாய் வயிற்று வழியிலாதல் வேண்டும். உலகத்தின் மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் கி.மு.2000 ஆண்டுகட்குமுன் இந்துமகா சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனதும் தலைச்சங்கமிருந்ததுமான குமரிநாடே. ஆத்திரேலியா, தென்னிந் தியா, தென்னாப்பிரிக்கா என்ற மூன்றும் ஆதியில் நிலத்தாலிசைந் திருந்தன வென்று மோனாட்டுப் பண்டிதர்கள் கண்ட வுண்மையே இதற்குப் போதிய சான்றாம். ஆகவே, மக்கள் முதன்முதற் பேசிய மொழி தமிழேயாதல் வேண்டும். எல்லா மொழிகளும் இயற்கை செயற்கையென இருபாலா யடங்கும். இவற்றுள் தமிழ் ஒன்றுமே இயற்கை. ஏனையவெல் லாம் செயற்கை. ஆதலான், தமிழ் இயன்மொழி (Primitive Language) என்றும், ஏனைய திரிமொழி (Derivative Languages) என்றும் கூறப்படும். எல்லா மொழிகட்குமுள்ள பெரும்பாற் சொற்களைப் பகுதிப் பொருளுடன் இயற்கை வடிவில் வழங்குவது தமிழே யென்று மொழிநூலால் (Philology) விளங்குகின்றது. அவற்றுள் ஆங்கிலம் (English), கிரேக்கு (Greek), இலத்தீன் (Latin) என்ற மும் மொழிகளிலும் சென்று வழங்கும் தென்சொற்கள் ஆயிரக்கணக் கின வென்பதை ஐந்நூற்றுக்கு மேற்பட்டவற்றால் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் காட்டுதும்: Abba - அப்பன் Abbey - a monastery presided over by an abbot. Abbot - the father of an abbey Abide, a + bide, bide -tâ: பதி - வதி - வதிதல் = தங்குதல் Abode, bode - பதி Accumulate, ad + cumulus. cumulus- கும்மல். குமி - கும்மல், குமியல். Acre, Gk. agros -அகரம். Add - அடு, அடை, அடுக்கு. Admire, ad + mire. L. miror - மருள். Agony, Gk. agon - இகல். Agriculture, agros - அகரம். culture - கல்லல். Ah, Aha - ஆ! Alias, Gk. allos - அல்லது. All - எல்லாம். Allegory - அல்லகுறி (a description of one thing under the image of another). Alone, all + one . one - ஒன்று Along, long - ஒழுங்கு - நீளம். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல். சொல். உரி. 19) ஒழுகு - ஒழுங்கு - ஒழுக்கம். Aloof - அலக்கு, அலாக்கு. Alum - அளம். Amalgam, malgam - முள்கு. முள்கல் = கலத்தல். Amateur, L. amo - அமர். to love அமர்தல் மேவல் (தொல். சொல். உரி. 84) ஆத்தி சூடியமர்ந்த தேவனை (ஔவை) Amaze, a + maze. maze - மய, மயங்கு, மசங்கு. Amethyst, Gk. amethystos a - அ. methu - மது Amiable, amo - அமர் Amicable, amo - அமர் Amour, L. amor - அமர். to love Anaglyph, Gk. ana - அண்ணம் - மேல். glypho - குழிப்பு. Analogue - அண்ண இலக்கம், இலக்கம் = சொல். Anatomy, Gk. ano - அண்ணம். temno -JÄ. Anchor - நங்கூரம். L. ancora, Gk. agkura Anemometer, Gk. anemos - ஆன்மா. meter - மாத்திரை. Angel - அஞ்சல். Animal, L. anima, Gk. anemos -M‹kh Anna - அணா. Annual, L. annus - ஆண்டு. Anus - அண்டி Anxiety - ஏங்கு, ஏக்கம். Aorta, Gk. aeiro - ஏர் = எழுச்சி. உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுருகு) Apply - அப்பு. Apprehend, ad + prehend. prehend - புரிந்துகொள், hend - get -bfhŸ. Appeal, L. ad + pello; pello - விளி (பிலிசு - தெலுங்கு). Arch - அரசு. Archon - அரசன். Architect - அரசத்தச்சன். Are - இரு. Area - அழுவம். Ashes - அடலை. Assert, L. ad + sero. sero -nr®. Assign, L. ad + signum; signum - சின்னம். Astrology, star - தாரகை. இலக்கம் or இலக்கியம். At - இடை Attack - தாக்கு (prosthesis). Attar - அத்தர். Attorney - அத்தாணி. Attract, L. ad + traho. traho, draw திரை. திரைத்தல் = இழுத்தல். திரைத்துக் கட்டு என்னும் வழக்கு நோக்குக.. Audacity - அடம். Augment - ஆக்கம். Avail, L. ad + valeo, valeo - வலி to be strong. Avarice, L. avaritia - இவறல் இவறலும் மாண்பிறந்த மானமும் (குறள். 432). Axle - அச்சு. Babe - பார்ப்பு, பாப்பா. Back - பிறக்கு (இடைக்குறை). Bandy - பண்டி. Bag - பக்கறை. Baggage - பக்கறை. Ban - பன் Bang, Bangue - பங்கி. Banyan - வாணியன், the Indian fig - tree so called by the English because the Banyans (merchants)held their markets under it. Bar - பார், பாரை, a rod; v.t. to hinder பாவீற் றிருந்த காலை பாரறச் சென்ற கேள்வி (சீவக. க. பா.1) பாரற = தடையற. Bard - பாணன். Bark - படகு. Barometer - பாரமாத்திரை. Barrel - புழை. Barrier - பார். Barrister - one qualified to plead at the bar. Basket, perhaps - பழக்கூடை. Bat - மட்டை Battalion - பட்டாளம். Battery - பட்டறை. Bay - பாய். ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள (தொல். சொல். உரி. 63) Beak - மூக்கு. Bear - பொறு. Beauty, from beau - பொ, பொல், பொன். பொலி + உ = பொலிவு. பொலி + அம் = பொலம். பொல் + பு = பொற்பு. பொல் + தி = பொற்றி - beauty பொற்றதோர் பவழந் தன்மேல் (சீவக.2247) பொற்றது = பொலிவு பெற்றது, பொல் பகுதி. Bed - படை, படுக்கை. Bee - வீ,ஈ. Beetle - விட்டில். Betel - வெற்றிலை. Bhang - பங்கி. Bill, L. bulla - புள்ளி. பள்ளிக் கணக்குப் புள்ளிக் குதவாது (உலக வழக்கு) Bird - பறவை. Birth - பிறப்பு. Bolt - பாள் (கம்பி). Bore - பொள். Borough - புரம். bourg, burgh. Bottle - புட்டில். Bowl - வள்ளம், a round cup. Boy - பையன். Blame - பிழை. Blare - பிளிறு. Bleach - வெளு. Blink - விழி. Blunt - மழுங்கு. Boast - பீத்து(கொச்சை) Boat - ஓடம். Body - படிவம் - வடிவம். Break - பிள. Broad - பரந்த. Breadth - பரப்பு. Brush - பரசு, பரசுதல் = பெருக்குதல். Bud - மொட்டு. Bull - புல்லம். ஏறொடு மூரி புல்லம் (சூடா.) Bull - புள்ளி. Bun - பணி, பண்ணிகாரம் - பணிகாரம் - பணியாரம். Bunch - மஞ்சரி. Burden - பொறை. Burial - புதையல். Bush - புதர். Butler - bottler - புட்டிலர். Butt - புட்டி, முட்டி. Buttock - புட்டம். Cachirration - கெக்கரித்தல். Caitiff - கைதி Calamity - கலி. Calf - களபம். Calico - a cloth from calicut, கோழிக்கோடு, கள்ளிக்கோட்டை. Can - கூடு. Can - கெண்டி. Candy - கண்டு - சர்க்கரை. Cane - கன்னல். a reed. Canton - கண்டம். Cantonment. Canto - காண்டம். Canvas, Gk. cannabis - சணப்பு. Card - கடிதம். Care, L. carus - கரிசு. Carve - குழி. Cash - காசு. Catamaran - கட்டுமரம். Caution, L. Caveo - கவல்,கவனி. Cave - குவை, குகை. Cellar - கல்லறை. Chaff - சாவி. Chair - குறிச்சி (ch = k). Cheetah - சிறுத்தை. Cheroot - சுருட்டு. Chew - சவை. Child - குழந்தை (ch =k). Chit - சிட்டு Choir, L. chorus - குரவை, a dance in a ring. Clan - குலன். Class - குழு. Clay - களி. Clock - கடிகை. Coat - குடி. குடித்துணி (உலக வழக்கு). Cold - குளிர்ந்த Collar, L. collum - களம், கழுத்து. College - கழகம், originally a collection of men. (Chambers’ Dictionary). Colon - குழல் - குடல். Colour - கெழு. குருவுங் கெழுவு நிறனா கும்மே (தொல். சொல். உரி.5) Column - கால். Comedy - nfhkhË.originally a ludicrous spectacle. Gk. komoidia. Comely - காமர். Comic - adj. of comedy. Cone - கொனை. a point. Cool - குளிர். Coolie - கூலி. Coot - கூழை. Copper - br¥ò.(c = ch). Corn - சோளம். Corner - கோணம். Cot - குடி. Cottage - குடிசை. Cotton - கொட்டை = பஞ்சு. Court - nfh£l«.Gk. chortos. Cover - கவி. Covet - கவர் = விரும்பு. Cow - கோ. Coward - கோழை, குவளை - கோழை. Crab - கடப்பான். Crack - கிறுக்கு. Crane - குருகு. Crew - குழு. Crime - கருமம். Crook - கொடுக்கு. Cross - குறுக்கு. Crow - கரை. Cry - கரை. Crypt - கரப்பு. Cuddy - கூடு. Culture - கல், பகுதி. Cumber - கும்பல். Cumulate - கும்மலிடு. Curl - சுருள் (c = s) Curry - கறி. Cycle - சக்கரம். Cyclopaedia, Gk. kyklos - சக்கரம். paideia - படிப்பு. Daddy - தாதை. Dance - தாண்டவம். Dare - தீரம். Deity - தெய்வம். Dense - திண். Derive - திரி. Desert, L. de + sero. sero - சேர். Devotion - தபம் - தவம். Digest, L. dis - gero. gero - செரி. Dignity - தகை. Divine - தெய்வ, திவ்விய. Donation, L. donum - தானம். Drag - திரை. Draw - திரை. Drive - துர. Drone - சுரும்பு = ஆண்வண்டு. Ear - அள் - கலப்பை. Ear - அள் - காது. Ear - ஏர் - கலப்பை. Early - ஏல. Echo - இசை. Economy - சிக்கனம். Err - இழுகு. Every - ஒவ்வொரு. Face - Kf«.(c = k). Facility - ஏந்து, வசதி. Fade - வாடு. Fairy, from fay - பேய். Falcon - வலியன். Fall - விழு. Fallacy - மாலம். Fascinate - வசி. Faste - விசை. Fast - பசி. Fate - விதி. Fault - வழு. Fay - பேய். Fear - வெருவு. Feed - ஊட்டு. Fiddle - Éliy.(see violin in Chambers’) Fiend - பேந்து. Filial, L. filus - பிள்ளை. Firm - உரம். Flag - விலோதம். Flash - பளிச்சு (ஒளிக்குறிப்பு) Flesh - விழுக்கு. Flog - விளாசு. Flood - வழாறு. Flora - ky®.florin, a coin stamped with the lily flower. Flower - மலர் Folio - ஓலை. Fool - மாளி, கோமாளி - a court fool. Foot - பாதம். Forest - புறவு. Form - உருவம். Frame - வரம்பு. Freeze - உறை. Frill - விறையல். Fry - வறு. Full - முழு. Fury - வெறி. Fuss - பூசல் = ஆரவாரம். Galleon - கலம் - கப்பல். Gallery - கலவறை. கலம் = அணி Gallon - கலம். Gallop - கலிப்பு or கெலிப்பு. Gate - கடை, கடவு. Gather - கூடு. Gaunt - கோதை. Geology, Gk. ge - கூ, logos - இலக்கம். Geometry, Gk. ge - கூ, metry - மாத்திரை. Get - கொள். Ghoul - கூளி. Giddy - கிடுகிடுத்த. Ginger - இஞ்சி. Girl - FUis.a child. Globe - கோளம். Goal - கழை. God - கடவுள். Gore - கறை. Grain - களஞ்சு - கழஞ்சு. Granary - களஞ்சியம். Grave - குழி. Grease - கொழுப்பு. Group - கருவி (தொகுதி) Guano - சாணி. Guava - கொய்யா. Guide - காட்டு. Gulf - குலவு. Hail - ஆலி (=ஆலங்கட்டி). Hall - சாலை. Hang - தூங்கு. Hard - கடினம். Haricot - அவரைக்கொட்டை. Heap - குப்பை. Hear - கேள். Heath - இதை. a barren open country. Heathen, from heath. Hell - அளி, அளறு. Herd - கிடை. Heritage - உரித்து. Hero - வீரன். High - உக. உகப்பே யுயர்வு (தொல். சொல். உரி.9) Hoarse - கோரம். Hockey - hookey - கொக்கி. Hole - குழி. Honour - மானம். Hood - கூடு. Hook - கொக்கி. Hookah - உக்கா. Horn - கோணம் - கோடு. Horror - அரள். How - எவ்வது. Howl - ஊளை. Huge - உகந்த. Hut - குடி. Hyperbole - உப்பர்ப்போலி, உம்பர் - உப்பர், புகலி - போலி. In - இல். Inn - இல். Iron - இரும்பு. Isagon, Gk. isos - இசை. gonia - கோணம் Item, Skt. இதம் - இப்படி, இ. பகுதி. Jackass, Jack - சேவு (=ஆண்). Jar - சால், சாடி. Javelin - சவளம். Jeer - கேலி. Joint - சந்து. Jury - சூள். Kail - கீரை. Keen - கூர். Kid - குட்டி, குட்டன் = வெள்ளாட்டுக் குட்டி. Kill - கொல். Kiln - காள(வாய்). Kin - கிளை. Kiss - கொஞ்சு. Knee, Gk. gonu - கணு. Lakh - இலக்கம். Leather - உதள். Legible, L. lego - இலகு. Lemon - எலாமிச்சை. Lime - எலாமிச்சை. Local , L. locus - இலக்கு = இடம் Logic, Gk. logos - இலக்கம் = தருக்கம். Lone, alone, all + one - எல்லாம் ஒன்று - தனிமை. Long - ஒழுங்கு. Lull - லாலாட்டு. Mad - மத்த. Maid - மாது. Mall - மழு. Mammoth - மாமதம். Man - மன். Manage, to handle. L. manus. H. manicas - மணிக்கை. Mango - மாங்காய். Mantle - Ûªnjhš.a loose outer garment. Manub, from manus Many - மன் - மிகுந்த. Mare - மறி. (=பெண்குதிரை). Marine, L. marinus - வாரணம். Marrow - மூளை. Marvel - மருள். Mat - மாற்று. Match - மட்டம். Maze - மச, மசங்கு, மய - மச. Mead - மட்டு - மது. Meal - மெல்லப்படுவது. Meat - மடை. Melon - முலாம். Melt - மெல்கு. Mere - வெறு. Merge - முழுகு. Mess - மிசை. Metre - மாத்திரை. Might - மைந்து. Mind - மனம். Miracle - மருட்கை. Miser - பிசிரி. Moan - முணங்கு. Mole - மறு. Money - மனவு, மணி. Mood - படி. Moor - முல்லை. Moringa - முருங்கை. Mosquito, dim. of musca - மசகு. Moss - பாசி. Moth - மூட்டைப் (பாச்சா), Mould - புழுதி. Mould - KiH.mouldwarp - முழைவார்ப்பு. Mouth - மடை. Much - மிக. Mucus - மூக்கு. Mud - மண். Mural adj. L. murus - புரிசை. Murmur - முறுமுறு. Myth - மித்தை. Nacre , a white matter - நிகர் (ஒளி). Nadir - நாட (போல). Nag - நாகு. Nation - நாடு. native - நாட்டான். Nature - நாற்றம். நாறு = தோன்று. Navigate, L. navis - நாவாய் ago - உகை. Near - நெருங்கு. Need - நாடு. Nerve - நரம்பு. Nice - நயம். Ninny - நன்னி. Nod - நடுங்கு. Nook - முக்கு. Note - நோடு. Notion - நோட்டம். Nut - நெற்று. On - அண் (=மேல்). One - ஒன்று. Opium - அபின். Page - பாங்கன். Page - பக்கம். Pain - பையுள். Palace - மாளிகை. Palaeology, Gk. Palaios - பழைய: logos - இலக்கம். Palanquin - பல்லக்கு Pan - பானை Pandit - பண்டிதன். Par - புரை(=ஒப்பு). Passion - பாடு. Paste - பசை. Path - பாதை. Pathos - வாதை. Pave - பாவு. Peak - மூக்கு. Pawn - பணயம். Pearl - பரல். Pecuniary, L. pecu - பசு. Pedagogue, Gk. paidos - பைதல்: ago - உகை. Peer - புரை(=ஒப்பு,உயர்வு). Peril - பருவரல். Perry, Pear - பேரி. Pestle - முசலி (=உலக்கை). Petal - மடல் (=இதழ்). Petty - பிட்டு (=சிறிய). Philology,Gk. philos - விழைவு; logos - இலக்கம். Phonetic, Gk. phone - வாணி. Pick, syncope of - பொறுக்கு. Piece - பிச்சு. பிய் +சு = பிய்ச்சு - பிச்சு. Pitcher - பத்தர் (= குடம்). Place - வளாகம் (p = k) Plain - வெளி. Plank - பலகை. Play - விளை(யாடு). Plausible - பழிச்சவல்ல. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள (தொல்.உரி.84). Ply - வளை. Pock - பொக்குளம். Poem - பா, பண். Police, the system of regulations of a town, Gk. Polis - பாழி = நகர். Polish - (பள)பளப்பு. Politics, from polis. Polygon - பலகோணம். Pool (பழி = சிறுகுளம்) Pore (புரை = துளை). Port - புதவு. Portia - பூவரசு. Pot - பாண்டம். Pouch - பொச்சு. Pour - வார். Powder - பொடி. Practise - பழகு. Praise - பரசு. Prate - பினாத்து. Price - பரிசு = விலை. Prize - பரிசு. Pride - பெருமை. Puberty - பூப்பு, பூப்படைவு. Pulpit - பலிபீடம்.. Pupa - பார்ப்பு. Pussy - பூசை - பூனை. Put - போடு. Putty - புட்டி. Puzzle - மசக்கு. Pyre - பொறி. Race - இராசி. Rajah - அரசன். Red - இரத்த. Rice - அரிசி. Ring - கறங்கு. Roar - உரறு. Roll - உருள். Round - உருண்ட. Rude - முரடு. Saccharine - சருக்கரை. Sack - சாக்கு. Saddle - சேணம். Sail - சேலை. Sake - சாக்கு. Salaam - சலாம் (= வளைவு, வணக்கம்) தந்தலை தாழ்தல் சலாஞ் செய்தல் (உரிச்சொல் நிகண்டு) Saloon - சாலை. Sandal - சாந்தம் - சந்தனம் Satan - சாத்தான். Savour - சுவை. Scale - சிலும்பு. Sculpture - சிற்பம். Semblance, L. similis - சமம். Series, L. sero - சேர். Sermon - சேர்மானம். Serry - செறி. Serum - சீலம். Shake - அசைக்கு for அசை (வடார்க்காட்டு வழக்கு). Share - TW.(sh = k). Sharp - கூர்ப்பு (ஆன). Shawl - சால்வை. Shell - சோழி. Sheet - சீட்டு. Shed - சிந்து. Shed - கொட்டு - கொட்டகை. Ship - கப்பல். Shirt, a short garment - குட்டை. Shore - கரை. Short - குட்டை. Shrink - சுருங்கு. Sign - சின்னம். Simile - சமம். Sky - காயம் = ஆகாயம். Slack - சுணக்கம். Slave - சிலதி. Slip - சறுக்கு. Slope - சரிவு. Smoke - புகை. Smooth - மெது. Snake - நாகம். Sneak - ef®.to creep. Solar, adj. L. sol - சூரன். Sound - சந்தம். Soup - சூப்பு. Speech - பேச்சு. Spire - புரி = வளைவு. Spot - பொட்டு. Spread - பரத்து. Spy - வேய். Squash - கசக்கு. Squirrel, dim. of Gk. skiouros - கீரி. Star - தாரகை. Sugar - சருக்கரை. Summit - சிமை. ஆடுகழை நரலுஞ் சேட்சிமை (புறம். 120) Sup - சப்பு. Swear - சூள். Taber, Tambour - தம்புரு. Tank - தாங்கல் (=குளம்). Tarry - தரி. Teak - தேக்கு. Telephone - தொலைவாணி. Terminus - தீர்மானம். Terrace - தளம். Territory - தரைத்தலம். Theology, Gk. theos - தெய்வம். logos - இலக்கம். Through - துருவ. Thread - திரி. Thrive - தழை. Thrust - துருத்து. Till - bjhŸ.to cultivate, to dig. Timid - திமிர். Tire - அயர். Tissue - தசை. Toleration - தாளுதல் (=பொறுத்தல்). Tone - தொனி. Tract - திரை = இழு. Train - திரை. Transact, L. trans - துருவ. ago - உகை. Transparent - துருவிப் பார்க்கும். Tree - தரு. Trick - திருக்கு. Trophy - திருப்பு. Truck - திரிகை .a wheel. Tube - தூம்பு. Turn - திரும்பு. Umber - அம்பர், ஒரு பிசின். Vain - வீண். Valiant - வலியுள்ள. Value - விலை. Vary - வேறு(படு). Varnish - வண்ணம். Vault - வளைவு. Vermicule, L. vermis - உலம். culus - குழவு. Very - உறு. Vest - வேட்டி. Victory - வெற்றி. Viol, Violin, Low L. vidula - விடலை. Vulture - வலசார். Walk - ஒழுகு (=நட). Wall, L. vallum - வாளம். Want - வேண்டு. Wanton - வேண்டுமென்று செய்பவன். War - போர். Warm - உரும் (=வெப்பம்). Wax - வீங்கு. Way - வாய். Wet - ஓதம். Wether - உதள். மோத்தையும் தகரும் உதளும் அப்பரும், யாத்த என்ப யாட்டின் கண்ணே (தொல். மரபு. 47) While - வேளை. White - வெள்ளை,வெட்டை. Wide - வீதி. Will - உள்ளம். Wind - வளி. With - உடன். Wonder - விந்தை. Worm - உலம் - புழு. Worth - பெறுதி. Yean - ஈன். Yet - இன்னும். Yoke - நுகம். Yonder - ஆண்டை. Zenith - சென்னி. (செந்தமிழ்ச் செல்வி ஆடவை 1931.) மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றே மொழி யென்பது, ஒரு மக்களின் பேசும் பேச்சிலும் இயற்றும் இலக்கியத்திலும் ஆளும் சொற்களின் முழுமையான சொற் றொகுதி, சொற்களன்றி, மொழியென்று தனி வேறாக ஒன்று மில்லை. ஆதலால் சொல்லாராய்ச்சியே மொழியாராய்ச்சிக்கு அடிப்படை. சொல்லாராய்ச்சி ஒரு அல்லது பல சொற்களின் வரலாறுபற்றி யிருக்கலாம். அங்ஙனமே, மொழியாராய்ச்சியும் ஒரு அல்லது பல மொழிகளின் வரலாறுபற்றி யிருக்கலாம். மொழியென்பது, சொல்லையும் ஒரு மக்களினத்தின் சொற் றொகுதியையும் குறித்தலால், மொழியாராய்ச்சி என்பது சொல்லா ராய்ச்சியைக் குறித்தற்கும் இடமுண்டு. மொழிகளுள், இந்தியும் மலையாளமும் போன்று புதியவும் உள: கிரேக்கமும் இலத்தீனமும் போன்று முதியவும் உள. தமிழோ, முதியவற்றுள்ளும் முதிய முதன்மொழி. புதுமொழிகளும் முதுமொழிகளின் திரிபாகவே தோன்றியிருத்தலால், சொல்லா ராய்ச்சியைப் பொறுத்தமட்டில், இருவகை மொழியும் ஒன்றே. ஆய்தல் என்பது, ஒரு பொருளை நுணுகி நோக்கி அதன் உண்மைத் தன்மையை உணர்தல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (தொல். உரி. 32) ஆர்தல் நிரம்புதல். ஆர ஆய்தல் ஆராய்தல். அகழ்தல் என்பது தோண்டுதல். மேன்மட்டத்தில் தோன்றாது புதைந்து அல்லது மறைந்து கிடப்பதைக் கல்லியெடுத்தல் தோண்டுதல். அதுபோன்று ஆழ்ந்து ஆராய்தலும் தோண்டுதல். ஒ.நோ: தோண்டு - தேண்டு - தேடு - தேட்டம். நோண்டு - நோடு - நோட்டம், நோடு - நாடு - நாட்டம். நோண்டு - நேண்டு - நேடு - நேட்டம். பொதுவாக, சொற்களின் வேர்ப் பொருளைத் தெளிவாகக் காட்டக்கூடிய மொழி தமிழ் ஒன்றே. அதனால். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (பெய.1) என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. ஆயினும், தமிழிலும், எல்லாச் சொல்லும் கண்டமட்டில் அல்லது கேட்டமட்டில் வேர்ப்பொரு ளுணர்த்துவன அல்ல. பல சொற்களை ஆழ்ந் தகழ்ந்தாராய்ந்தே, அவற்றின் வேர்ச்சொல்லையும் மூலப்பொரு ளையும் அறிதல் கூடும். அதனால் மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (உரி. 96) என்று தொல்காப்பியமே கூறுகின்றது. சொற்கள், ஒரு பொருட்சொல் என்றும், பல்பொருட்சொல் என்றும், பொருளுணர்த்தும் வகையில் இருவகைப் பட்டுள்ளன. பல்பொருட் சொல்லும், ஒரு வேர்ச்சொல் என்றும், பல்வேர்ச் சொல் என்றும், இருதிறப்பட்டுள்ளன. ஆதலால், வடி வொப்புமை யொன்றே நோக்கிப் பல்வேர்ச் சொல்லை ஒரு வேர்ச் சொல் லென்று மயங்குதல் தவறாம். எடுத்துக்காட்டாக, வெள் என்னும் இயற்சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இது வெப்பம், வெண்ணிறம், வெறுமை, விருப்பம் முதலிய பல்பொருளுணர்த்துவது. அவற்றுள், வெப்பமும் விருப் பமும், நம்நாட்டுத் தட்பவெப்ப நிலையும் அதன் விளைவாக எழும் மக்கட் கருத்தும் நோக்கின், ஒன்றோடொன்று முரண்பட் டனவாகும். நம்நாடு பொதுவாக வெப்பநாடாயிருப்பினும், கோடைக் காலத் திற் குளிர்ந்த குடிப்பையும் மாரிக்காலத்தில் வெப்பக் குடிப்பை யும் விரும்புகின்றோம். சம தட்பவெப்ப நாடுகளிலும் மிகு தட்ப நாடுகளிலும் என்றும் குளிர்ந்திருப்பதால், அந் நாடுகளிலுள்ள மக்கள் வெப்பத்தை விரும்புவது இயல்பே. அதனால், தியாக ராசப் பாடகர் பாட்டைச் செவிகுளிரக் கேட்டு இன்புற்றேன் என்று நமர் சொல்வது போன்று, அமெரிக்க நாட்டுத் தலைவர்க்குச் செருமனியில் வெதுவெதுப்பான (warm) வரவேற்பிருந்தது என்று குளிர்நாட்டார் கூறக் கேட்கின்றோம். தமிழில் வெம்மை என்னும் சொல்லிற்கு வெப்பம், விருப்பம் என்னும் இருபொருளும் உள்ளன. உருமமும் கருமமும் உருப்பமும் வெப்பமும் அழனமும் கோரமும் அழலும் வெம்மை (7:105) என்பது பிங்கலம். வெம்மை வேண்டல் (தொல். உரி. 36) வெள் - வெட்டை = 1. வெப்பம். அனல் வெட்டையாற் சுருண்டு (இராமநா. யுத். 14) 2. நிலக்கொதி (W). 3. காமச்சூடு. காம வெட்டையிலே மதிமயங்கி (தனிப்பா.) வெட்டைச்சூடு என்பது பெருவழக்கு. தெ. வெட்ட, க. வெட்டெ. வெள் என்னும் இயற்சொல்லடிப் பிறந்த வெய்ய, வெய்யோன் முதலிய சொற்கள் வெப்பத்தைப் போன்றே விருப்பத்தையும் உணர்த்துகின்றன. இதனால், தமிழரின் முன்னோர் ஒரு காலத்தில் குளிர்நாட்டிலும் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று சொல் லாராய்ச்சி யில்லார் முடிவுகொள்ள நேர்கின்றது. கடல் கொண்ட குமரிநாட்டின் தென்கோடி வெப்ப மண்டலத்தின் தென்னெல்லைக் குட்பட்டதே. தமிழ்ச்சொற்கள் பெரும்பாலும் உகரச் சுட்டடியிற் பிறந் துள்ளன. உ- உல் என்னும் மூல அடி, குல், சுல், துல், நுல், புல், முல் என்னும் ஆறு வழியடிகளாகப் பிரிந்தும், திரிந்தும், பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பிறப்பித்துள்ளன. வகரம் உகரமுதல் கொள்ளாமையால், வுகர அடியாகப் பிறந்த சொல் ஒன்றுமில்லை. ஆதலால், ஒலிக்குறிப்புச் சொற்களொழிந்த வகர மெய்ம்முதற் சொற்களெல்லாம் பகர முதலடியினின்றோ மகர முதலடியினின்றோதான் தோன்றியுள்ளன. வெள் என்னும் இயற்சொல், வெப்பப் பொருளில் மெள் என்னும் அடியினின்றும், விருப்பப் பொருளில் பெள் என்னும் அடியினின்றும் திரிந்துள்ளது. முள் - முளி. முளிதல் = எரிதல். முளி - மிளி - மிளிர். மிளிர்தல் = எரிதல். விளங்குதல். மிள் - மின் = ஒளி. ஒளி நெருப்பின் இயல். முள் - மிள் - மெள் - வெள் - வெய் - வெய்ய = வெப்பமான. வெய்யோன் = வெப்பமானவன், கதிரவன், கொடியோன். ளகரமெய் யகரமாகத் திரிதல் பெரும்பான்மை. எ-கா: கொள் - கொய், தொள் - தொய். பிள் - பிய். பொள் - பொய் - பை. வள் - (வய்) - வை = கூர்மை. புல்லுதல் = பொருந்துதல், விரும்புதல். புல் - புர் - புரி. புரிதல் = விரும்புதல். புல் - புள் - பிள் - பிண் - பிணா, பிணவு, பிணவல், பிணை, பிள் - பெள் - பெண் - பேண், பெட்டல் = விரும்பல். பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல். உரி. 40). பெள் - வெள் - வெப்ப = விருப்பமான, வெய்யோன் = விரும்பியவன், காதலன். வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை = வெப்பம், விருப்பம். திரிசொற்களில் யகரமெய் தொகுவது இயல்பே. எ-கா: வேய் - வேய்ந்தோன் - வேந்தன். தேய் - தேய்வு - தேவு - தேவன். இங்ஙனம், சொற்களின் மூலத்தை ஆழ்ந்தாய்ந்துதான் காண வொண்ணும், தமிழரின் முன்னோர் குமரிநாட்டில் நண்ணிலக்கோட்டை அடுத்தே வாழ்ந்தவர். நாள் முழுதும் வெயிலில் உழைப்பவர் கருத்தும், நிழலில் வாழ்பவர் வெளுத்தும், இருப்பர். வெண் களமர் X கருங்களமர், வெள்ளாளர் X காராளர் என்னும் பெயரிணைகளை நோக்குக. உழுதுண்பவர் வெயிலிலும், உழுவித்துண்போர் நிழலிலும் இன்றும் வாழ்தல் காண்க. இனி, உணவுச் சிறப்பினாலும் உண்ணா வறுமையாலும் வெளுத்தும் கருத்தும் போவதும் உண்டு. வெள்ளொக்கல் X காரொக்கல் என்னும் பெயரிணையை நோக்குக. தமிழர் வெப்பமிக்க குமரிநாட்டினின்றே மேனாடுகட்குச் சென்றமையை, V.R. இராமச்சந்திர தீட்சிதரின் origin and Spread of the Tamils என்னும் மறுக்கொணா அரிய ஆராய்ச்சி வரலாற்று நூலை நோக்கிக் காண்க. மாந்தன் முதற்பெற்றோர் நண்ணிலக்கோட்டை யடுத்த நாட்டிலேயே வாழ்ந்திருத்தல் கூடும். மேலைநாட்டு மொழியாராய்ச்சியாளர் என்னென்ன உண்மை காண்பினும், அவையெல்லாம் குமரிநாட்டு மாந்தன் தோற்றத்திற் கோ தமிழன் தோற்றத்திற்கோ முரணாக இருத்தல் முடியாதென் பதையும், மொழியாராய்ச்சியும் மொழியகழ்வாராய்ச்சியும் ஒன்றேயென்பதையும், இதனால் திட்டவட்டமாய்த் தெரிந்து கொள்க. (செந்தமிழ்ச் செல்வி அகுதோவர் 1980) மொழியின வுணர்வும் படிமுறைக் கலப்பும் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில், இன்றுள்ள பிறவிக் குலங்கள் பிறநாடுகளில் இல்லாவிடினும், செல்வநிலை, பட்டம், தொழில், மதம், கட்சி, பழங்குடி என்பன பற்றிய பொதுவகை யான வகுப்புக்கள் இருக்கின்றன. இருப்பினும், அவையெல்லாம் நாட்டுமொழி வகையில் ஓரினமாய் ஒன்றுபட்டு விடுகின்றன. ஒரு நாட்டிற் பன்மொழியினங்கள் தனித்தனிப் பெருந்தொகை மக்களைக் கொண்டிருப்பின், அப் பன்மொழிகளும் அங்கு நாட்டு மொழிகளாகச் சமநிலையடைகின்றன. தமிழ்நாட்டிலோ, ஆரிய வழியினருக்கும் தமிழே தாய்மொழியாயிருந்தும், அவரது இரண்டகத்தாலும் அவர்க்கடிமைப்பட்ட அரசியற் கட்சியாளரின் பேதைமையாலும், வேற்று மொழிகளே போற்றப்பட்டு நாட்டு மொழி தூற்றப்படுகின்றது. இக் கேட்டுநிலை எவ்வகையிலும் உடனே மாற்றப்படல் வேண்டும். அல்லாக்கால், தமிழ் வாழவும் தமிழன் முன்னேறவும் எள்ளளவும் இடமில்லை. கடந்த மூவாயிரம் ஆண்டாகத் தமிழ ருள்ளத்தில் ஊட்டப்பட்ட ஆரிய நஞ்சைத் திடுமென்று வெளியேற்ற முடியாதாதலின், படிப்படியாகத்தான் தமிழர் குமுகாயம் திருந்தி வரல் வேண்டும். முதற்கண், ஒரே குலத்திலுள்ள அகமணப் பிரிவுகளெல்லாம் புறமணப் பிரிவுகளாகலாம். அதையடுத்து, தெற்கும் வடக்கும் வெவ்வேறு பெயர் கொண்டுள்ள ஒரே குலத்தார் ஒரே பெயர் கொள்ளலாம். எ- டு: நாடாரும் கிராமணியாரும், கைக்கோளரும் செங்குந்தரும். அதன்பின், வேளாண் குடியினின்றே படைத்தலைமைப் பதவி பற்றிப் பிரிந்த முதலியார் குலத்தினர், பிள்ளைப் பட்டமுள்ள மரக்கறி வெள்ளாளருடன் மணவுறவு கொள்ளலாம். அதன்பின், முக்குலத்தார் (கள்ளர், மறவர், அகம்படியர்) ஒரே குலத்தாராகலாம். அதன்பின், உண்டாட்டிற் கலந்துகொள்ளுங் குலங்கள் மண வுறவிலும் கலக்கலாம். அதன்பின், சற்றே ஏற்றத் தாழ்வுள்ள குலங்கள், முன்பு உண்டாட்டிற் கலந்து பின்பு கொள்வனை கொடுப்பனையுஞ் செய்து கொள்ள லாம். அங்ஙனஞ் செய்யும்போது, ஒரு குலத்தாரின் உணவுமுறை இன்னொரு குலத்தார்க்கு ஏற்காவிடின், அதை மாற்றிவிட வேண்டும். இறுதியில், கல்வியிலும் நாகரிகத்திலும் துப்புரவிலும் உயர்ந்து, ஒத்த பதவியில் அல்லது நிலைமையிலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பங்களுடன், உயர்ந்த வகுப்பாரும் இருவகை யிலும் உறவாடலாம். தாழ்த்தப்பட்டோரின் உயர்விற்கு இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி இன்றியமையாதது. அதனால்தான், தன் மானவுணர்ச்சியும் துப்புரவும் உண்டாகும். துப்புரவும் நாகரிகமும் இன்றேல் தீண்டாமை ஒழியாது. தீண்டாமை ஒழிந்த பின்னும், சலக்குப் புரை வாருதலும் முடி திருத்துதலும் போன்ற தொழில் செய்வார் வீட்டிலுண்டல் எல்லார்க்கும் ஏற்காது. தமிழர் தமிழருடன் உறவு கலந்தபின், தெலுங்கர் கன்னடர் முதலிய திரவிடரொடும் உறவு கலக்கலாம். அதன்பின், தமிழ்ப் பற்றுள்ள இந்தி மக்களொடும் மணத்தொடர்பு கொள்ளலாம். மக்கள் தாமாகத் திருந்தாவிடின், எதிர்காலத்தில் உண்மையான பொதுவுடைமையாட்சி வந்து விரைந்து திருத்தி விடும். இன்று பொதுவுடைமையென்று உலகில் வழங்குவது கூட்டுடைமையின் (Socialism) முனைந்த வகையே யன்றி வேறன்று. மோதிரம் வைத்தல் விளையாட்டு ஆடுவாரெல்லாரும் இருகட்சியாகப் பிரிந்துகொண்டு, கட்சிக் கொருவராக இருவரொழிய ஏனையரெல்லாம், கட்சி வாரியாய் இரு வரிசையாக எதிரெதிர் உட்கார்ந்து கொள்வர். உட்காராத இருவரும் தத்தம் கட்சி வரிசையின் பின்னால் நின்று கொண் டிருப்பர். அவருள் ஒருவர் ஒரு மோதிரத்தைக் கையில் வைத்துக் கொண்டு குனிந்து, தம் வரிசையில் ஒவ்வொருவர் பின்னாலும் அதை வைப்பதாக நடித்து, யாரேனும் ஒருவர் பின்னால் வைத்துவிட்டு வரிசை நெடுகலும் சென்றபின் நிமிர்ந்து நிற்பர். எதிர் வரிசைக்குப் பின்னால் நிற்பவர், மோதிரம் வைக்கப்பட்ட இடத்தை இன்னாருக்குப் பின் என்று சுட்டிக்கூற வேண்டும். சரியாய்ச் சொல்லிவிடின், அடுத்தமுறை எதிர் வரிசையாள் மோதிரம் வைத்தல் வேண்டும்; இல்லாவிடின் முன்வைத்தவரே வைத்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து ஆடப்பெறும். கீழே யிருப்பவர் ஆட்டு நெடுகலும் உட்கார்ந்து கொண்டே யிருப்பார். (த.நா.வி.) மோரியப் படையெடுப்பு (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு) தமிழகத்தின் மேல் முதன்முதலாகப் படையெடுக்கத் துணிந்த வடஇந்திய (மகதநாட்டு மோரிய) அரசன் பிந்துசாரன் (கி.மு. 301 -273), ஒரு பெரும்படையைத் தென்னாட்டிற் கனுப்பினான். அப்படை கோசர் என்னும் ஒருவகைப் பொருநரைத் துணைக் கொண்டு, தென்கன்னடம் என்னும் கொண்கானத்தின் கடற்கரைப் பகுதியான துளுநாட்டிற் புகுந்து, அதை யாண்டுகொண்டிருந்த நன்னன் என்னும் தமிழ் மன்னனை நாட்டைவிட்டு ஓட்டி விட்டது. இதனை, அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல என்னும் குறுந்தொகைப் பாட்டால் (73) அறியலாம். பின்னர், கோசர் தென்கிழக்காக வந்து கொங்குநாட்டுப் பழையன் மோகூரைத் தாக்கினர். அவன் அவரைப் புறங்கண்டு துரத்தினான். அதன்பின் கோசருக்குத் துணையாக மகதத்தினின்று ஒரு புதுப்படை வந்தது. அது வரும்போது, அதைச் சேர்ந்த தேர்களும் சரக்கு வண்டிகளும் வருவதற்குத் தடையாயிருந்த பாறைகளை யெல்லாந் தகர்த்து, பாதையைச் செவ்வைப் படுத்திக்கொண்டு வந்தது. அது, துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவி யறைவாய் என்னும் அகப்பாட்டுப் பகுதியால் (251) அறியப்படும். இனி, அப்படை வடுகரையும் துணைக்கொண்டு வந்த தென்பது, முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறை யிறந்து (அகம். 281) என்னும் மாமூலர் கூற்றால் தெரிய வருகின்றது. ஆகவே, வடுகர் கோசர் மோரியர் என்னும் மூவின மறவரைக் கொண்டது அப்படை என்பதை அறியலாம். வடுகரையும் கோசரையும் புறங்காணின் மோரியர் தாமே புறங்காட்டுவர் என்பதை அறிந்த சோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக் காக்கும் கடமையை யுணர்ந்து, முன்பு வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி (அகம் 205), பின்பு கொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரே யடியாக மோரியரைத் தமிழகத்தி னின்று துரத்திச் செருப்பாழி யெறிந்த என்னும் விருதடை மொழியும் பெற்றான். இதனை, எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி (அகம். 375) என்பதனால் அறியலாம். அவன் வடவடுகர் வாளோட்டிய (புறம். 378) செயல் சற்றுப் பிந்தினதா யிருக்கலாம். வட வடுகர் கலிங்கநாட்டுத் தெலுங்கர். கீரந்தையின் வீட்டுக் கதவைத் தட்டி, அதனால் வேண்டாது தன் கையைக் குறைத்துக்கொண்ட கொற்கைப் பாண்டியனும், மகனை முறை செய்த மனுமுறை கண்ட சோழனும், கி.மு. 2-ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம். மனுமுறை என்றது வடமொழி மனுதரும சாத்திர முறையை யன்று. அந்நூலின் காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் தோன்றிய ஆரியதரும நூல்களும், நடுநிலையின்றிக் குலத்திற் கொருமுறை கூறுவனவே. கன்றைக் கொன்றதற்குக் கழுவாய் அல்லது தண்டனை யென்னென்று சோழன் வினவியபோது, பொற்கன்று செய்து பிராமணர்க்குக் கொடுத்து, ஆநிரையொடு காடு சென்று ஒரு மாதம் புன்மேய்ந்து வரவேண்டுமென்று, பிராமணர் கூறினர். அதை அவன் ஒப்புக் கொள்ளாது, உயிருக் குயிரே யீடென்று தன் மகன் மேல் தேரேற்றிக் கொன்றான். வட நூல்களிற் கதிரவன் குல அரசருள் முதல்வனாகக் குறிக்கப் பெறும் மனு, தமிழ்ப்பெயர் கொண்ட ஒரு சோழனா யிருந்திருத் தல் வேண்டும். அவன் கண்ட நடுநிலை முறையையே, மகனை முறை செய்த சோழன் சிறப்புப் பெயர் குறித்தல் வேண்டும். தில்லையிலிருந்து பாணினீயத்திற்கு விரிவுரை (பாஷ்யம்) வரைந்த பதஞ்சலியார் கி.மு. 2-ஆம் நூற்றாண்டினரே. பேசு - வ. - பாஷ் - பாஷ்யம். ஆரியம் தமிழகத்தில் வேரூன்றி, நால்வரணமும் பிறப்பிலமைந் தவை யென்றும், பிராமணன் நிலத்தேவன் என்றும், துறவால் மட்டும் வீடுபேறென்றும், துறவு பிராமணனுக்கே வுரிய தென் றும், பிராமணன் வேள்வி வளர்ப்பதனாலேயே உலகம் நடை பெறுகின்ற தென்றும், பிராமணனுக்குத் தொண்டு செய்வதனா லேயே ஏனை மூவரணத்தாரும் மறுமையில் நன்னிலை யடைவ ரென்றும், பல தீய கொள்கைகள்தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டு வருவது கண்ட திருவள்ளுவர், தமிழரின் கண் திறக்கவும் அவரை முன்னேற்றவும் தம் திருக்குறளை இயற்றிய ருளினது கி.மு. 2-ஆம் நூற்றாண்டாகும். என் திருக்குறள் தமிழ் மரபுரையைப் பார்க்க. பிராமணர்க்கு முற்றும் அடிமையாகித் தமிழகத்தைப் பாழாக்கிய பாண்டியருள் தலைசிறந்த பல்வேள்விச் சாலை (யாகசாலை) முதுகுடுமிப் பெருவழுதி, கி.மு. முதல் நூற்றாண்டினனாயிருந் திருக்கலாம். இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே (புறம்.6) என்று, வேதமோதிய பிராமணரை யெல்லாம் முனிவர் என்று கூறி, அவருக்குமுன் தன் குடுமியவிழ்ந்து விழுமாறு தலை குனிந்து வணங்கும்படி, முதுகுடுமிப் பாண்டியனை வேண்டிய காரிகிழார் என்னும் தமிழத் தமிழ்ப் புலவன் நிலைமையை நோக்கும்போது, எத்துணை யுணவுத்தட் டிருப்பினும் இக்காலமே நற்காலம் என்று தெரிகின்றது. இனி, பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல (மதுரைக். 759 - 763) என்னும் அடிகள், தொல்காப்பியம் அரங்கேறிய காலத்து நிலந்தரு திருவிற் பாண்டியனும், நான்மறை முற்றிய அதங் கோட்டாசானைக் கொண்டு பல்வேள்வி செய்தவன் தானோ என்று ஐயுறச் செய்கின்றன. கி.பி. முதல் நூற்றாண்டினனான கரிகால் வளவன், இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலிற் றிருமா வளவன் வாளுங் குடையு மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணிய திசைமுகம் போகிய வந்நாள் அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவ ருறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்த னுவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும் பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின விவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும் அரும்பெறன் மரபின் மண்டபம் (சிலப். 5: 89-110) நிறுவி, காடுகொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம்பெருக்கி .................................................................................... கோயிலொடு குடிநிறீஇ. (பட்டினப். 283 -6) காவிரிக்குக் கரைகட்டி வேலி நிலம் ஆயிரங் கலம் நெல் விளையச் செய்து, நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவுங் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய வீண்டி (பட்டினப். 185 - 192) பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக மாந்தரும், (சிலப். 5: 16-7) கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் (சிலப். 5:29-34) வேறு பல தொழிலாளரும் தழைத்தோங்கச் செய்தான். ஆயின், அவனும் ஆரியச் சாய்கடையில் வீழ்ந்து, அறமறக் கண்ட நெறிமா ணவையத்து முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை யெருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் தது (புறம். 224) மிகமிக வருந்தத் தக்கதே. கி.பி. 2-ஆம் நூற்றாண்டினரான, ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனும், கண்ணகிக்குப் படிமை சமைத்த சேரன் செங்குட்டு வனும், தமிழினத்தின் பெருமையைக் காத்ததனாற் பாராட்டத் தக்கவரே. ஆரியப் படை என்றது ஆந்திரப் பேரரசின் (கி.மு. 567 - கி.பி.220) வடுகப் படையை. வடநாட்டில் அல்லது வடக்கில் உள்ளவரை யெல்லாம் ஆரியரென்னும் வழக்கு இடைக்காலத்தில் எழுந்து விட்டது. ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணா யிரு. என்னும் பழமொழியில், ஆரியக் கூத்தென்றது வடுகரின் கழைக்கூத்தையே. புதைய லெடுத்தவ னென்று சிறையிலிடப்பட்ட வார்த்திகனை விடுதலை செய்தபின், நெடுஞ்செழியன் நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நும் கடனென மன்னிப்புக் கேட்டதுடன், தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கியதே அளவிற்கு மிஞ்சினதாம். அதற்கும் மேல், நெடுஞ்செழியன் வார்த்திகன் காலில் விழுந்து வணங்கியது தமிழினத்திற்கே அழியாப் பேரிழிவாம். இதனால் அற்றைப் பிராமணர் கொட்டமும் தமிழர் அடிமைத்தனமும் தெளிவாம். கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி என்று (சிலப். 23:120 -1) இளங்கோவடிகள் படிமாற்றணியால் மறைத்துக் கூறியிருத்தல் காண்க. கோப்பெருந்தேவியின் ஊடலால் ஏற்பட்ட மனக்கலக்க நிலையில், நெடுஞ்செழியன் ஆய்ந்துபாராது கோவலனைக் கொன்றது கடுங்குற்ற மாயினும், பொன்செய் கொல்லன் றன்சொற் கேட்ட யானோ வரசன் யானே கள்வன் மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவ தில்லென் றிணையடி தொழுதுவீழ்ந் தனளே (சிலப். 20:75 -81) என்னுஞ் செய்தி, வளைந்தகோலை உடனே நிமிர்த்திவிட்டது. இதனாற் பாண்டியன் செங்கோன்மையும் வெளியாயிற்று. சேரன் செங்குட்டுவன், தமிழரசரை யிகழ்ந்த கனக விசயர்மேல், பனிமலையிலெடுத்த பத்தினித்தெய்வப் படிமைக் கல்லை ஏற்றிக் கொணர்ந்தது, என்றும் தமிழர்க்குப் பெருமை தருவதே. ஆயினும், அக்கல்லைக் கங்கைக் கரையில் நீராட்டிய போது, மாடலன் என்னும் பிராமணனுக்குத் துலைநிறைத் தானமாக 50 துலாம் பொன் கொடுத்ததும், கொடுங்கோளூரில் அவன் சொன்னவுடன் வேள்வி செய்ததும், அவனது ஆரிய அடிமைத் தனத்தைத் தெளிவாகக் காட்டும். செங்குட்டுவன் பத்தினிப் படிமைக்குக் கல்லெடுக்க வடநாடு சென்றபோது பேரியாற்றங் கரையிலிருந்து ஒரேநாளில் தன் தலைநகர்க்குத் திரும்பிய தனாலும், நீலமலையில் தங்கினதனாலும், திரும்பி வந்தக்கால் நெய்தல் நில மகளிர் வரவேற்றுப் பாடிய தனாலும், அவன் காலத்தில் கொடுங்கோளூரே தலைநகராக இருந்ததாகத் தெரிகின்றது. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுதும் அவன் அதிகாரத்திற் குட்பட்டிருந்ததனால், அவன் விரும்பியிருப்பின் கொங்கு நாட்டுக் கருவூரை மீண்டும் தலை நகராகக் கொண்டிருத்தல்கூடும். ஆயின், அவன் முன்னோரே அதை விட்டுவிட்டதனாலும், நாட்டை வளம்படுத்தும் நீர் வணிகத்திற்குப் பூம்புகார் போல் ஒரு துறைநகரே ஏற்றதா யிருந்ததனாலும் கொடுங்கோளூரி லேயே நிலைத்து விட்டான். திருமால் கோவிலாகிய ஆடகமாடம், கருவூரிற் போன்று கொடுங்கோளூரிலும் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். அக் காலத்திற் பொன்னிற்குப் பஞ்சமில்லை. செங்குட்டுவன் காலத்திற் கொங்கு நாட்டுப் பகுதியை யாண்ட சேரர் குடியினர், தகடூர் அதிகமான் சரவடியினரே. நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றிருந்ததனாலும், செங்குட்டுவன் படை கங்கையைக் கடத்தற்கு நூற்றுவர் கன்னர் (சாதகர்ணி? சாதவாகனர்?) உதவியதனாலும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் ஆந்திரப் பேரரசிற்குத் தமிழ்நாடு உட்பட்டிருந்த தென்று கொள்ள இடமில்லை. யாக்கை ஆகுபெயர். எழுவகைத் தாதுக்களால் யாக்கப் பட்டது யாக்கை. யாத்தல் கட்டுதல். (தி.ம. 942) யாத்தல் யாத்தல் கட்டுதல். அரையாப்பு, கழல்யாப்பு, மார்யாப்பு (மாராப்பு) விதலையாப்பு. (தி.ம.100) யாம் பெருமிதப் பன்மை அல்லது அரசப் பன்மை (தி.ம. 1123) யாப்புவகை யாப்பு - சொற்களைப் பாவாக இசைத்தல் (Metrical Composition) செய்யுள் - அடிவரையறுத்த மொழி நடை (Poetry) பா - செய்யுள் வகை (Poetic Metre) பாவினம் - இலக்கணம் நிரம்பாத பா. நூற்பா - இலக்கணம் கூறும் சூத்திரம். பாட்டு - பாடப்படும் தனிச் செய்யுள். இசைப்பா - (Poem Song) கீர்த்தனை - கடவுளின் கீர்த்தியைக் கூறும் இசைப்பாட்டு (Lyric) பண்ணத்தி - நாடோடிப்பாட்டு தேவபாணி - தெய்வத்தை வழுத்தும் செய்யுட்பா. பண் - இராகம். பாண் - இசைத்தொழில் (சொல்.42). யானைப்பெயர்கள் [gybga®fŸ ஒரே பருப்பொருளைக் குறிப்பன வாயினும் அவை யாவும் வெவ்வேறு காரணம் பற்றியன என்றறிதல் nt©L«] உம்பல் - உயர்ந்தது; உவா - திரண்டது. ஓங்கல் - மலைபோன்றது; கரி - கரியது; கள்வன் - கரியது; கறையடி - உரல்போன்ற பாதத்தை யுடையது; குஞ்சரம் - திரண்டது; கைம்மா - துதிக்கையை யுடைய விலங்கு; கைம்மலை - கையை யுடைய மலை போன்றது; தும்பி - துளையுள்ள கையையுடையது; நால்வாய் - தொங்குகின்ற வாயையுடையது; புகர்முகம் - முகத்தில் புள்ளியுடையது; புழைக்கை (பூட்கை) துளையுள்ள கையையுடையது; பெருமா - பெரியவிலங்கு; பொங்கடி - பெரிய. பாதத்தையுடையது; யானை (ஏனை)கரியது; வழுவை - உருண்டு திரண்டது; வாரணம் - சங்குபோன்ற தலையுடையது; அல்லது புல்லை வாரிப்போடுவது. (வேழம் - வெள்ளை யானை போலும்) (சொல். 63). வக்கா வக்கா-பக வக்கா=கொக்குவகை. வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே. (குற்றா. குற. 93 : 2). வக்கா-வங்கா=பறவை வகை. வங்காக் கடந்த செங்காற் பேடை (குறுந். 151). (வ.வ. 245) வங்கு-வக், வங்க் வள்-வண்-வணம்-வணர்-வளைவு, யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. வளர்-வணரி=வளைதடி. வணம்-வணங்கு-வாங்கு-வங்கு-வங்கி=நெளி வளையல், வளைந்த கத்தி. வணங்குதல் - வளைதல். வணக்கம் = வளைவு. வில்வணக்கம் (குறள். 827) வாங்கு = வளைவு. வாங்குதலை=வளைதல். வாங்குகதிர் வரகின் (முல்லைப் 98). வாங்கு-வாங்கா=வளைந்த ஊதுகருவி. வங்கம்=வளைவு, ஆற்றுவளைவு. (வ.வ. 245) வஞ்சகம்-வஞ்சக வஞ்சனம்-வண்சன இரு மொழியிலும் வங்கு என்பதே மூலம். ஆயின், வடவர் வக்கு (வக்) என்னும் வலித்தல் வடிவிற் காட்டுவர். இதினின்றே வக்ர, வக்ரீகரண முதலிய வடசொற்கள் பிறக்கும். ஒருவனை ஏமாற்றுவது வட்டஞ் சுற்றி அவனை வளைவது போலிருத்தலால், வளைதற்கருத்தில் ஏமாற்றுக் கருத்துப் பிறந்தது. circumvent என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக. (வ.வ. 246) வஞ்சி வஞ்சி-வஞ்ச் வங்கு-வஞ்சு-வஞ்சி. ஒ.நோ: அங்கு-அஞ்சு. பொங்கு-பொஞ்சு. வஞ்சி-வஞ்சகம், வஞ்சகம், வஞ்சனம், வஞ்சனை. வஞ்சு=வஞ்சகம். "வஞ்சே வல்லரே" (தேவா. 828:3) (வ.வ.245) வஞ்சி : வங்குதல் வளைதல், வங்கு-வஞ்சு-வஞ்சி. ஒ.நோ: அங்க (வளை)-அஞ்சு, பொங்கு-பொஞ்சு. ஒருவனை வஞ்சிப்பது அவன் தப்பமுடியாவாறு வட்டஞ்சுற்றி வளைவது போலிருத்தலால், வளைதற் கருத்தில் வஞ்சித்தற் கருத்துப் பிறந்தது. Circumvent என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக. வஞ்சி-வஞ்சம், வஞ்சகம், வஞ்சனம், வஞ்சனை. வஞ்சி : வஞ்ச்(வ.), வஞ்சகம்-- வஞ்சக (வ.), வஞ்சனம்-- வஞ்சன (வ.). (தி.ம : 753.) வட்டம் வட்டம்-வ்ருத்த (இ.வே.). வல்-வள்-வட்டு-வட்டம்=1. வளைவு. வில்லை வட்டப்பட வாங்கி (தேவா. 5: 9). 2. வளைதடி. புகரினர் சூழ் வட்டத்தவை (பரிபா. 15 : 61) 3. வட்டவடிவம். 4. கதிவனை அல்லது திங்களைச் சுற்றிய கோட்டை. 5. வண்டிச்சக்கரம். 6. திரிகை, 7. தோட்கடகம் (பிங்.). 8. வட்டமான அப்பவகை. பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் (பெரும்பாண். 378). 9. வட்டக்கல். வடவர் தந்த வான்கேழ் வட்டம் (நெடுநல். 51). (வ.வ.) 10. நிறைகோல் தட்டு. வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே (திருமந். 1781). 11. வட்டக் கேடகம். ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). 12. ஆலவட்டம் (வட்டப்பெரு விசிறி.) 13. வட்டமான நீர்ச்சால் (பிங்.). 14. வளைந்த குளம் (பிங்.). 14. சுற்றுப் பக்கம் கோயில் வட்டமெல்லாம் (சீவக. 949). 15. சிலவூர்களைக் கொண்ட நாட்டுப் பகுதி. 16. வட்டமான செலவு. (வ.வ.) புரவிவட்டந் தான்புகக் காட்டுகின்றாற்கு (சீவக. 442). 17. ஒரு சுற்று. 18. ஒரு கோள் வானமண்டலத்தை ஒரு முறை சுற்றிவருங் காலம். 19. ஒரு தடவை. விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து. (விநாயகபு. 74:214) 20. தோறும். "ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு" (S.I.I.ii, 122, 27). இச்சொற்கு இன்னும் பலபொருள்கள் உள. முதன்மை யானவையே இங்குக் குறிக்கப்பட்டுள. வள்-வள்கு-வட்கு. வட்டுதல்=வளைதல், வணங்குதல். வட்கார்=வணங்கார், பகைவர். வட்கார்-வட்கர். வட்கு என்னும் வடிவம் வடிமொழியிலில்லை. வட்டம்-வட்டகை=நாட்டுப்பகுதி, வட்டில், சிறு கிண்ணம், வட் டகை என்னும் வடிவம் வடமொழியி லில்லை. (வ.வ: 246-247) வட்டணம் (1) வட்டணம்-அட்டன வட்டம்-வட்டணம்=கேடகம் இட்ட வட்டணங்கண் மேலெறிந்த வேல் (கலிங். 413). வட்டணம்-வட்டணி. வட்டணித்தல்=வட்டமாதல், வட்ட மாக்குதல். வட்டணி என்னும் வினை வடிவம் வடமொழியி லில்லை. (வ.வ:247) வட்டணம் (2) வட்டணம்-வர்த்தன வட்டணம்-வட்டணை=வட்டம், வட்டமான செலவு, இடம் வலம் சுற்றுகை, வட்டமான தாளக் கருவி, வட்டக் கேடகம், உருண்டை. வட்டரவு=வட்ட வடிவு. வட்டு-வட்டன்=வட்டுப்போல் உருண்டு திரண்டவன். குறுவட்டா.......... கூனின்பிறப்பு (கலித். 94). இவ்வடிவம் வடமொழியில் இல்லை. வட்டம்-வட்டாரம்=சுற்றுப்புற நாட்டுப்பகுதி. தெ. வட்டாரமு, க.து. வட்டார. வட்டாரம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. வட்டு-வட்டா=வட்டமான கலம் வட்டாவுந் தாம்பூலமுந் துகிலுந் தாங்கிநிற்ப. (சீதக்.). (வ.வ: 247-248) வட்டி வட்டி-வர்த்தி வட்டு-வட்டி. வட்டித்தல்-வட்டமாதல், சுழலுதல், சுழற்றுதல், சுற்றிக் கட்டுதல், வளைத்தல், வளைத்தெழுதுதல், உருட்டுதல். க. பட்டிசு (bad@d@isu). வட்டி=கடகப்பெட்டி, கூடை. (வ.வ: 248). வட்டிகை வட்டிகை-வர்த்திகா வட்டி-வட்டிகை = 1. சித்திரம். வட்டிகைப் பாவை நோக்கி (சீவக. 2085). 2. சித்திரமெழுதுங்கோல். வட்டிமைச் செய்தியின் (மணி. 4 : 57) 3. வட்டம். 4. சுற்றளவு. 5. கூடை. 6. பரிசல். 7. ஒருவகை விருது. இவற்றுள் முதலிரு பொருள்களே வடமொழியில் உள. வட்டி-வட்டில்=வட்டமான உண்கலம், கிண்ணம், கடகப் பெட்டி, நாழிகை வட்டில், ஒருவகை விருது. க. பட்டலு (b) இவ்வடிவம் வடமொழியில் இல்லை. வட்டு=வட்டமான சில், வட்டமான சூதாட்டுக் கருவி, வட்டமான கருப்புக்கட்டி. இவ்வடிவம் வடமொழியில் இல்லை. வட்டை=சக்கரத்தின் சூட்டு, வட்டகை, பிரா. வட்டா. இவ்வடிவம் வடமொழியில் இல்லை. (வ.வ: 248) வட்டு வட்டு வள்--வட்டு=வட்டமான விளையாட்டு அல்லது சூதாட்டக் கருவி. வள் + து = வட்டு. வட்டு - வட்டம் - வ்ருத்த (வ.). (தி.ம : 753) வடகம் வடகம் -வடக (t@) வட்டம்-வடம்-வடகு-வடகம்=அரைத்த பருப்புடன் கறிச் சரக்குச் சேர்த்துலர்த்திய தாளிப்புருண்டை. (வ.வ : 248) வடசொல் தென்சொல் காணும்வழிகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதிவரை வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் பெரும்பாலும் வடசொல்லே என்னும் தவ றான கருத்து, தமிழருள்ளத்திலும் நிலைத்திருந்தது. வடமொழி யிலும் தென்சொற்களுண்மை கண்டு அவ் வுண்மையை முதன் முதல் வெளிப்படுத்தியவர் பண்டாரகர் (Dr.) குண்டர்ட்டு, கால்டு வெல், போப்பு என்னும் மேலையறிஞராவர். இவருள் இடைஞர், தலைசிறந்தவர். அவரும், தென் சொல்லை வடசொல்லினின்று பிரித்துணரும் வழிகளைக் கூறினரேயன்றி, வடசொல்லைத் தென்சொல்லி னின்று பிரித்துணரும் வழிகளைக் கூறினாரல்லர். ஏனெனின் அது அவரது திரவிட ஒப்பியல் இலக்கணத்திற்குத் தேவையானதன்று. ஆயினும், அவர் தென் சொற்குக் கூறிய விதி களைத் துணைக்கொண்டே வடசொற்கும் சிலவற்றை வகுத்துக் கொள்ளலாம். அவை வருமாறு. வட சொற்கள் : 1. மூலவடிவில் ஆரியவெழுத்தும் ஆரிய மெய்ம்மயக்கமும் அமைந்திருப்பன. 2. பண்டைத் தமிழில் வழங்காது பிறகாலத் தமிழில் வடமொழி யினின்று வந்து வழங்குவன. 3. தமிழில் வேரின்றி ஆரியத்திலேயே வேர் கொண்டிருப்பன. 4. தமிழும் தமிழினின்று திரிந்த திரவிடமுமான எல்லா மொழி களிலும் வழங்காது. அவற்றுள் ஒன்றில்மட்டும் வழங்குவன. 5. மேலையாரிய மொழிகளிலும் வழங்குவன. 6. ஆரியத்திற் சிறப்புப் பொருள் அல்லது சிறப்பு வினைத் தொடர்பு கொண்டிருப்பன. சில தென் சொற்கள் தமிழினும் வடமொழியிற் பெருவாரியாய் வழங்குவதால் பெரும்பான்மை வழக்கு வடசொன்மைக்குச் சான்றாகாதென வறிக. மேற்கூறிய விதிகள் அல்லது நிலைப்பாடுகள் ஒன்றிற்கு மேற் பொருந்திருப்பின், அவற்றிலே மிகுதிக்குத் தக்கவாறு வட சொன்மை தேற்றமாம். ஆயினும், அவை கணித முறைப்பட்ட துல்லிய விதிகளல்ல. ஆதலால், பரந்த மொழிநூற் கல்வியும் நெடுநாட் சொல்லாராய்ச்சியும் சிற்நத நடுநிலையுமிலவேல் அவை பெரிதும் பயன்படா. உண்மையான தென்சொல்லைத் தென்சொல்லென்று கூறுவதும் நடுவின்மையில் எதிரிகள் கூற லாம். ஆயின் ஆழ்ந்த ஆராய்ச்சியும் தூய மனச்சான்றும் வலி யுறுத்தின் எவருக்கும் எள்ளளவும் அஞ்சவேண்டுவதின்று. சிலர் அறிவாராய்ச்சி வலிமையின்றித் தம் பட்டம் பதவிச் சிறப்பால் ஒரு முடிபிற்கு வருகின்றனர். அது மிகத் தவறாம். பண்டைத் தமிழில் வழங்காது பிற்காலத் தமிழில் இருவகை வழக்கிலும் வழங்கும் வடசொற்களுள் `பசு' என்பது ஒன்றாகும். இது வடசொல்லென்பது வெளிப்படையாயினும், ஒருசார் தமிழ்ப் பேராசிரியர் இதைத் தென்சொல்லென்பதால், மாணவரும் ஆராய்ச்சி யில்லாதாரும் மயங்குவதற்கு, இடனாவதுடன், அவரவர் விரும்பியவாறே பல வட சொல் தென்சொலெனவும் பல தென் சொல் வடசொலெனவும் பட்டு, உண்மையான ஆராய்ச்சி வலியற்றுப் போய்விடுகின்றது. பல அடிப்படைத் தென்சொல்லை வட சொல்லென்று கூறும் வடமொழியாளர் கூற்றும் வலியுற்றுவிடுகின்றது. பசுவைக் குறிக்கும் தூயதென்சொற்கள், ஆ (ஆன்), கறவை. குடஞ்சுட்டு, குரால், கோ, சுரை, பெற்றம் (இருபாற்பொது) என்பன. இவற்றுள், கறவை என்பது பால் கறக்கப்படுவது. சுரை என்பது மடி பெருத்தது; குடஞ்சுட்டு என்பது ஒரு குடம் பால் கறப்பது: குரால் என்பது புகார் (கபில) நிறந்தது. பெற்றம் என்பது மிகப் பருத்துயர்ந்தது: ஆ, கோ என்பன பொதுப்பெயர். இவற் றுள் ஆ என்பது தமிழிலும் திரவிடத்திலும் மட்டும் வழங்கும்: கோ என்பது ஆரியத்திலும் வழங்கும். E.cow, A.Sax, cu, G. kub, D. and Dan. koe, Ice. ku, Sc. kye, skt. go, gaus. கோவை மேய்ப்பவன் அல்லது வளர்ப்பவன் கோவன், கோவன் - கோன் - கோனான். ஒ.நோ : ஆயன் - ஆவை வளர்க்கும் இடையன். பசு என்னும் வடசொல், பாசத்தினாற் கட்டப்படுவது என்னும் வேர்ப் பொருளது. பாசம் = கயிறு. ஆரிய வேள்வியிற் கட்டப் படும் உயிரிகள். மாந்தன், ஆன், குதிரை, வெள்ளாடு, செம்மறி யாடு என்னும் ஐந்தென்று அதர்வவேதம் (xi, 2, 9 etc) கூறுவதாக, மானியர் வில்லியம்சு தம் வடமொழியாங்கில வகராதியிற் காட்டுவர். (பக்-611). பசு என்பது முதற்காலத்தில், பொதுவாக, கட்டப்பட்ட ஒரு விலங்கை மட்டும் தனிப்படவும் தொகுதியாகவும் (இருபாற் பொதுப் பெயராகக்) குறித்து. பின்பு வேள்வி யுயிரிப் பெயராக வழங்கி, அதன்பின் ஆவிற்குச் சிறப்பாக வழங்கி வந்திருக்கின்றது. ஆரிய வழக்கைத் தழுவியே. பசு என்னும் சொல் தமிழிலும், செய்யுள் வழக்கில் விலங்கு. காளை என்னும் பொருள்களில் வழங்கியிருக்கின்றது. "பசுவேறித் திரிவானோர் பவன்" (தேவா. 760.4) என்னுமிடத்திற் காளையையும், "பசுக் களைப் போலச் செல்லும் நடையால்" (பதினொ. பட்டினத்திருவேகம். 32) என்னுமிடத்தில் விலங்கை யும், பசு என்னும் சொல் குறித்தல் காண்க. ஆன் என்னும் தூய பெண்பாற் சொல், தமிழ் மரபிற்கு மாறாக. ஆன்முகத்தன் அடற்கண்நாயகன். (கந்தபு. பானுகோ. 95) என்னுமிடத்திற் காளையைக் குறிப்பதும் ஆரிய வழக்கைத் தழுவியே. பசு என்பது ஆவை மட்டுங் குறிப்பது வழக்கமாகும். வேத ஆரியர் தமிழரோடு தொடர்பு கொண்டு சிவநெறிக் கொண் முடிபு (சைவ சித்தாந்தம்) கற்றபின்னரே, பாசம், பசு, பசுபதி என்னும் பெயர்கள், முறையே. தளை (மலம்), புலம்பன் (ஆன்மா). இறை என்னும் பொருள்களில் அணியியன் முறையில் ஆளப் பெற்றன. பசு என்னும் சொற்கு இனமாக, இலத்தீனில், peck (cattle) bos என்னும் சொற்களும், கிரேக்கத்தில bous என்னும் சொல்லும் உள்ளன. இவற்றுள் பின்னிரண்டையும் gaus என்னும் வட சொல்லோடிணைப்பர் மேலை மொழி நூலாரும் அகராதி யாளரும். இது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை. ஆயினும் ககரத்திற்கும் பகரத்திற்கும் போலித் தொடர் பிருப்பதால், அதை முற்றும் மறத்தற்கில்லை. Pecu என்னும் இயற் சொல்லினின்று திரிந்து பணத்தைக் குறிக்கும் Pecunia (money) என்னும் இலத்தின் பெயர்ச் சொல்லும், Pecuniary என்னும் ஆங்கிலப் பெயரெச்சமும், செல்வத்தைக் குறிக்கும் மாடு என்னும் சொல்லொடு ஒப்புநோக்கற் குரியன. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (குறள். 340) கோ (ஆன்) என்னும் தென்சொல் மேலையாரிய மொழிகளிலும் சென்று வழங்குவதும், pecunia என்னும் இலத்தீன் சொல் மாடு என்னும் தென்சொல்லொத்துச் செல்வத்தை யுணர்த்துவதும், பேராசிரியர் பி.டி. சீநிவாச ஐயங்காரும், பண்டாரகர் இராமச் சந்திர தீட்சிதரும் கூறியுள்ளவாறு, குமரிக்கண்டத் தமிழருள் ஒரு கூட்டத்தாரே மேலை நாடு சென்று ஆரியராக மாறி யுள் ளமையை உணர்த்தும். இதுகாறுங் கூறியவற்றால், பசு என்பது வடசொல்லேயென்றும், அதைத் தென்சொல்லென்பதால் பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகிப் பல தூய தென் சொல்லும் வடசொல்லாகத் தோன்று மென்றும், ஆதலால் அதனால் தீமையே யன்றி நன்மையில்லை யென்றும், பசும்புல்லைத் தின்பது பசுவென்பது சற்றும் பொருந்தா தென்றும், அறிந்துகொள்க. இனி, பாசம் என்னும் வடசொல், பசுமை, பசை, பாசி என்னும் தென் சொற்களுள் ஒன்றன் திரிபெனக் கொள்ள இடமிருப் பினும், இந்தியத் தோலாற் செய்யப்படும் பாதக்கூடு (boot) இந்தியக் காலணியாகாமை போன்றே. bj‹ brhšÈÅ‹W âǪJ xU áw¥ò¥ bghUis íz®¤J« tlbkhʤ âÇ brhšY« bj‹ brhšyhfhik f©LbfhŸf.(jÄœ¥ghit 4ஆம் ஆண்டுச் சிறப்புமலர்) (மதுரை எழுத்தாளர் மன்றம்) வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள் இற்றை முழுத்தமிழ் நூல்களுள் முன்மையது தொல்காப்பியமாத லின் அதில் வந்துள்ள வடசொற்கள் ஆசை, வைசியர் போன்ற ஐந்தாறே யாகும். வடசொல்லென மயங்கும் அதன் பிற சொற் களெல்லாம் தூய தென்சொல்லே யாதல் வெள்ளிடைமலை. ஆயினும் ஆராய்ச்சி யில்லார்க்கு அறிவிப்பான் வேண்டி அவற்றை முறையே ஒவ்வொன்றா யெடுத்து மொழிநூற் படி விளக்குவாம். படிமை பல்புகழ் நிறுத்த படிமை யோனே. (தொல். பாயிரம்) மேவிய சிறப்பின் ஏனோர் யடிமைய (தொல். அகத். 30) படிமை என்னுஞ் சொல் படி என்னும் வினையடியாகப் பிறந்தது. படி என்பது படு என்பதன் மறுவடிவம். இவ்விரண்டும் பட் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் தோன்றியவை. படுதல் = படிதல் i. = . வீழ்தல். ii. ஒலித்தல். வீழ்தற்பொருளின் அடிப்படையாகப் படி என்பதனின்றும் பல கருத்துக்களும் சொற்களும் பிறக்கும். படிதல் = 1. விழுதல் : கீழ்த்தங்கல், நிலைபெறுதல், பழகுதல். பேசி முடிவாதல். (எ-டு) விலை படிந்தது. 2. விழுதல். - ஒருவரின் அடிவணங்கல், அடிப்படுதல், கீழ்ப் படிதல். தாழ்மையா யிருத்தல். 3. விழுதல் : சாய்ந்து அல்லது மடங்கி விழுதல், நிலத்தில் அல்லது உடம்பிற் படுதல். (எ-டு) பயிர் நிலத்திற் படிந்திருக்கிறது. சடைநாயின் உரோமம் படிந்திருக்கிறது. மயிர் தலையிற் படிந்திருக்கிறது. பன்றியின் வயிறு நிலத்திற் படிகிறது. 4. விழுதல் : ஒன்றில் ஒன்று விழுந்து அதன் உருவம் அமைதல். படி (பெயர்) = ஒன்றிலொன்று விழுந்ததனாலான உருவம், அதன் வடிவம், அளவு, மாதிரி, வகை. படி = 1 a copy (எ-டு) படியோலை opposed to மூவவோலை. மூட்சியிற் கிழித்த வோலை படியோலை மூல வோலை. (தடுத்தாட்கொண்ட புராணம்) an article, உருப்படி 2. அளவு (பொது) grade, படிப்படியாய், வாயிற்படி, படிக்கட்டு, படி, படிக்காசு. நிறை - படிக்கல் முகத்தல் - ஒரு படி, படியளக்கிறவன் - காக்கிறவன். படி = bata, allowance. 3. விதம் அல்லது வகை. அப்படி, இப்படி, எப்படி, அதன்படி, சொன்னபடி, மேற்படி. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு (ஔவையார்) சொன்னபடி கேளாதவன். எனக்கொரு படியாய் வருகிறது. படியாய் - வடியாய் (போலித்திரிபு). 4. Form. படி + வு = படிவு + அம் = படிவம் (ப-வ. போலி) E. body; a.S. bodig; Hind. பதன். படி - (n.) copy, duplicate, anything of equal value, exchange, answer, return, substitution. படி - படில். cf. குடி - குடில், விட்டி - விட்டில். படில் - பதில் - வதில் (corruption). பதில் = return, answer, substitutin. பதிலாள் = substitute. பதிலாளி = representative. படி என்னும் சொல்லே வடமொழியில் ப்ரதி என்றாகும். வடசொற்களின் மெய்ம்முதல்களை ரகரம் சேர்த்தெழுதுவது பெருவழக்கு. (எ-டு) பவளம் - ப்ரவாளம் : தமிழம் - த்ரவிடம் ட - த cf. படாகை - பதாகை. படி - ப்ரதி ப்ரதி என்னும் சொல்லுக்கு வடமொழியில் மூலமில்லை. ப்ரதி என்னும் உபசர்க்கம் பெற்று. ப்ரதிநிதி என்னும் பெயருண் டாகும். படி (v.imp.) = விழு. படி - வடி to fall down, to filter, to select - வடிகட்டுதல். to cast as moulten metal- வடித்துச செய்தல். to abate, as water நீர்வடிதல். to hang low, as the lobe of the ear - காது வடிதல். படி - பதி (v.imp.) - to fall, to make impression on the mind, to be comprehended, to be memorised - மனத்திற் படியவில்லை. மனத்திற் பதியவில்லை. பதி = to fall down, to settle down, to dwell. பதிதல்-வதிதல் = தங்குதல், வசித்தல். பதி. (n.) an abode, a town. "பதிபெயர் வினாதல்" (அகப்பொருள்), காசியம்பதி. E. above (v.) a + bidan; = to wait. A.S. abidan = a + bidanï bidan = to wait. பதி = bide. cf. மதுரை - Madura. abode (n.) from abide. Hind. Ahmadabad, Allahabad. இவற்றில் abad (ஆபாத்) என்று பிரித்து நிர்மாணிக்கப்பட்ட என்று பொருள் கூறுவது சிறப்பாய்த் தோன்றவில்லை. "இலாஹா பாத் - இலாஹியால் நிர்மாணிக்கப்பட்ட, ஹைதராபாத் = ஹைதரால் நிர்மாணிக்கப்பட்ட" - ஹிந்தி தமிழ் வபோதினி. பதி = to register; பதிவு = impression, resgistratin, to make impression. பதி = to register; பதிவு = impression registration, to make impression. பதிப்பு = printing, edition. அச்சிற் பதித்தல். பதிப்பித்தல். பதிபோடு - to crouch, to transplant. பதியம் போடுதல் அல்லது வைத்தல் - to transplant a cluster of saplings, to graft, to heap up cowdung in a regular shape. பதி - to sink in, to print : பதி + அம் = பதம் (1) கால். (2) நிலை. பதி + அம் = பாதம். foot (முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர், ஆகுபெயர்). cf. படி + அம் = பாடம். தவி + அம் = தாவம், தாகம். கொள் + தல் = கோடல். செல் + தல் = சேறல். E. foot; A.S. fot; L. pedis; GK. podos; Skt. பாத். L. pedis-pedal, pedestrian, pedestal; G.K. podos- tripodstand. பாதம் - பாதை : Telugu பாட்ட ; E. path. Skt. பாட-பாதப. the root of a tree, a tree. E. Botany. lit. the science of trees. படி - பாடி a cluster of low - roofed huts, a military encampment படி = form, image, likness. படி + மை = படிமை. மை an abstract noun suffix. cf. அடி + மை = அடிமை : குடி + மை - குடிமை. படிமை - 1. form, image, 2. appearance. 3.robe of an asceitc 4. religious conduct of an ascetic. படிமை - (பதிமை) - பதுமை. இகரம் உகரமாய்த் திரிவது பெரும்பான்மை. (எ-டு.) இழிந்தோர் வழக்கு : பிள்ளை - புள்ளை பிட்டு - புட்டு பிண்ணாக்கு - புண்ணாக்கு பிடு - புடு இழிவழக்கேனும் உயர்வழக்கேனும் சொற்றிரிபு விதி ஒன்றே. உயர் வழக்காயின் கொள்ளப்படும்; இழிவழக்காயின் தள்ளப்படும். இதுவே இவை தம்முள் வேற்றுமை. (எ-டு) கொள்ளப்படுவன தள்ளப்படுவன அ-எ பரு - பெரு (கத்திரிக்காய்) - கெத்திரிக்காய் ப-வ பதி - வதி (பதில்) - வதில் படிமை என்னும் சொல்லே வடமொழியில் ப்ரதிமா என்றாகும். வடமொழியில் ப்ரதி என்ற சொற்கு மூலமில்லை. மா என்பது பண்புப்பெயர் விகுதியன்று. ப்ரதிமா, அணிமா, மகிமா முதலிய மாவீற்றுப் பெயர்களையெல்லாம் பகாப்பதங்களென்றே கொள்ளுவர் வடநூலார். வடவெழுத்துத் திரிபைக் கூறுஞ் சூத்திரத்து `ஆவீறையும்' என்றார் பவணந்தியார். வடமொழி யாகாரம் தமிழில் ஐகார மாவது போன்றே. தமிழ் ஐகாரமும் வடமொழியில் ஆகார மாகும். ஆங்கிலப் பவுன் இந்திய ரூபாவாக மாறினால் இந்திய ரூபாக்களும் ஆங்கிலப் பவுனாக மாறுமன்றோ? அது போன்றே. எ-டு : தமிழ் வடமொழி (சாய் -பகுதி) சாயை சாயா (மால்-பகுதி) மாலை மாலா பலர் `ஆவீறையும்' என்பதன் மறுதலையை யுணராது ஐகார வீற்றுத் தமிழ்ச்சொற்களை யெல்லாம் `குர்ரம்' வாய்பாட்டில் ஆகாரவீற்று வட சொற்றிரிபாகக் கொள்ளுவர். தென்சொற்களை வடசொற்களாக்கும் முறைகள் பலவுள. அவற்றுள் ப்ரதிமா என்னுஞ் சொல்லிற் கொண்டன மூன்று. அவையாவன : 1. ப - ப்ர 2. டி - தி (ட - து) 3. மை - மா மொழிமுதன் மெய்யொடு ரகரம் சேர்த்த வளவானே தூய தென் சொற்களையும் வடசொல்லென மயங்குகின்றனர் தமிழறிஞர். இனி வேறுபல மாறுதல் கூடின் அவர் மயங்குதலைச் சொல்லவும் வேண்டுமோ? "பிறக்கு-பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவென்க" என்றார் அடியார்க்குநல்லார் (சிலப். ப. 162). பின் - பின்பு. பின்று. பின் - பிறந்து, பிற, பிறகு, பிறக்கு. இத்துணைத் தெளிவாகப் பிறக்கு என்பதன் மூலமும் பிறவடிவும் தமிழிலிருந்தும் அடியார்க்குநல்லார் அதனை வடசொல்லெனப் பிறழவுணர்ந்தமைக்கு ஊழ்வினையல்லது வேறொரு காரணங் கண்டிலம். `பிறக்கொழிய' என்பதற்குப் `பின்னிட்டொழிய' என்று அரும்பதவுரைகள் உரைத்தலையும் குறிக்கும். படி - to read, to learn, to sing, to memorise. Skt. பட். படி + அம் = பாடம். இதுகாறுங் கூறியவற்றால் படிமை என்பது தென்சொல்லே யென்றும், ப்ரதிமா என்பது அதன் திரிபே என்றும், இரு மொழிக்கும் பொதுச்சொற்களை வடிவுபற்றி மயங்காது பகுதிப் பொருளறிந்து இன்ன மொழியெனத் துணிதல் வேண்டு மென்றும் அறிந்து கடைப்பிடிக்க. ("செந்தமிழ்ச் செல்வி" துலை 1936.) வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன (1.) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல். (2.) தமிழின் தூய்மை கெடல். (3.) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல். குடும்பம், இல், குடி, குலம் , வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலைமுறையுள்ள அல்லது பல தலைமுறை யடங்கின) குடும்பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரங்களையும், ஜாதியையும், நிறம் பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பனபோன்ற) பெரும் பிரிவுகளையும், குலவழித் தொடர்பை யும் (descent) குறிப்பனவாகும்.24 ஆனால், இப்பொருள் வேறு பாடு இன்று எல்லார்க்கும் புலனாவதில்லை. பசும்பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும்25 பசுவின் பால் பசுப்பால் என்றே கூறத் தக்கது. பசுப்பாலை ஆவின்பால் என்றனர் முன்னோர். காட்டு என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொருளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது. (4) புதுச்சொற் புனைவின்மை தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆதிகம், நாதிகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பாமதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும். (5) தென்சொல் வடசொல் போலத் தோன்றல் கலை, மீனம் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வடசொற்கள் போலத் தோன்றுகின்றன. (6). தென்சொல்லை வடசொல்போல ஒலித்தல் குட்டம், முட்டி என்னும் தமிழ்ச்சொற்கள் குஷ்டம், முஷ்டி என்று வடமொழியில் வழங்குவதுபோல, வேட்டி என்னும் தமிழ்ச்சொல்லும், உலக வழக்கில் வேஷ்டி என்று தவறாய் வழங்குதலும் `வேங்கட' என்பது வெங்கட்ட என்று வலித்தலும் காண்க. (7) சில சொற்கள் தென்சொல்லா வடசொல்லாவென்று மயங்கற்கிடமாதல். எ-டு : மந்திரம். (8) தமிழர் தாய்மொழியுணர்ச்சி யிழத்தல். ஏற்கெனவே ஏராளமான வடசொற்கள் தமிழில் வந்து அடர்ந்த பின், மகமதிய ஆட்சியில் பல உருதுச்சொற்கள் தமிழில் வந்து கலந்தன. அவற்றுட் சிலவாவன : அகமாத் கோஷா பவுஞ்சு ஜமாபந்தி அசல் சபாஷ் பிராது ஜமீன் அதாலத் சாமான் பைசல் ஜமேதார் அமீனா சுபேதார் மகஜர் ஜல்தி அமுல் டபேதார் மசோதா ஜவாப் அர்ஜீ டாணா மஜூதி ஜவாப்தாரி அவுல்தார் தமாஷ் மராமத் ஜவான் ஆஜர் ததவேஜ் மாஜி ஜாகிர்தார் உண்டியல் தாக்கல் மிட்டாதார் ஜாகை உஷார் தாக்கீது மிட்டாய் ஜாட்டி கச்சேரி தாசில்தார் ரத்து ஜாப்தா கசாய் தாலுக்கா ரஜா ஜாமீன் (கசாப்பு) தைலி ராஜீநாமா ஜாரி கஜானா தொகையரா லங்கோடு ஜால்ரா காலி நகல் லடாய் ஜாலக் கில்லேதார் நமூனா லாடம் ஜாலர் கிது நாஷ்ட்டா லுங்கி ஜிகினா கோலி பசலி லேவாதேவி ஜிம்கானா கைதி படுதா வார்சு ஜிமிக்கி கொத்தவால் பர்வா ஜப்தி ஜில்லா ஜீனி ஜோர் ஷரா ஷோக் ஜெண்டா ஷர்பத் ஷாய் ஹுக்கா ஜேப்பு ஷரத்து ஷராப்பு ஹோதா (இவற்றுள் சில. உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.) மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூறுவேண்டு வதில்லை. தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச் சொற்கள் கலந்துள்ளன. எ-டு: காங்கிர (இங்கிலீஷ்), மகாத்மா சத்தியாக்கிரகம், வந்தே மாதரம், பாரதமாதா, ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரா பாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை. இங்ஙனம் பற்பல மொழிகளிளின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது, தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழி யுணர்ச்சி யில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வய மில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது. பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல். பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம் ; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்; பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பா வாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்; கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப் பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும். தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துகள் தமிழ் நூல்களிற் கலத்தல். வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல். இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடுநிலை அறிஞர் அறிந்துகொள்க. வடசொற்கள் தென்சொற்களால் விளக்கம்பெறல் பல வடசொற்களின் வேர் தமிழிலும் திரவிட மொழிகளிலுமே காணக்கிடக்கின்றன. எ-டு : புது-புதல் = அரும்பு. புதல்-புதல்வு-புதல்வன் = மகன், புதல்வி= மகள். புதல்வன்-புத்ர=பிள்ளை, மகன் (இ.வே); புத்ரீ = மகள். புத் என்னும் நரகத்தினின்று பெற்றோரை மீட்பவன் புத்ர என்பது, வடவர் பொருந்தப் பொய்த்தலாகப் படைத்துக் கூறும் செய்தியாகும். இதற்குத் த்ரா (காப்போன்) என்னம் சொல்லுண்மையே துணையாம். (வ.வ.) புத்ர என்னும் சொல்லின்கீழ், "etym.doubtful" என்றும், புத் என்னும் சொல்லின்கீழ், "a word invented to explain putra or put-tra" என்றும், மா.வி.அ. குறித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆயின், புஷ்2 (ஊட்டங்கொடு) என்பது மூலமா யிருக்கலாம் என்று அது கருதுவதும் தவறாகும். சார்தூல(வே.) = புலி, வேங்கை. இது சாரதோல என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாகச் சொல்லப்படுகின்றது. சார=வரி. தோல=தோல். வரித்தோலையுடையது என்னும் பொருட்காரணம் பொருத்த மானதே. இதற்கு வடமொழியில் மூலமில்லை. மா.வி.அ. "of unknown derivation" என்று குறித்திருத்தல் காண்க. வடமொழி எண்ணுப் பெயர்கள் பெரும்பாலும் தென்சொற் களாலேயே விளக்கம் பெறுவனவாயுள்ளன. (வ.வ.) ஏக- (k) ஒ-ஒக்கல்=ஒப்பு, இனம். ஒக்க= ஒப்ப, ஒருங்கு. தெ. ஒக்க-ஒரு. ஒகட்டி=ஒன்று. ஒக்க - (எக்க) - ஏக (வ). ஒ. நோ: சொருகு-செருகு. வட மொழியில் எகரமின்மையால் எக்க - ஏக என்றாயிற்று. கால்டுவெலாரும் இங்ஙனங் கருதுவதைக் காண்க. தமிழ் முதல் எண்ணுப் பெயரின் மறுவடிவான ஒன் (ஒன்னு, ஒன்று, ஒண்ணு) என்பது மேலையாரியத்தில் வழங்குவதையும் நோக்குக. com. - Teut. one, OE an, Du een, G ein, GK oinos, oine#, L unus. த்வி (d) இது துமி என்னுஞ் சொல்லினின்று திரிந்ததா யிருக்கலாம். துமித்தல்=வெட்டுதல், இரண்டாகப் பகுத்தல். ஒரு வெட்டில் ஆகக் கூடிய துண்டுகள் இரண்டே. "bt£L x‹W, J©L ïu©L." என்னும் சொலவடையை நோக்குக. (வ.வ.) துமி-துவி-த்வி. ஒ.நோ: குமி-குவி. இரண்டு என்னும் தமிழ் எண்ணுப் பெயரின் வேர்ப்பொருளும் இதுவேயா யிருத்தல் காண்க. ஈர்தல் = அறுத்தல், பிளத்தல். ஈர்-இர்-இரது-இரடு- இரண்டு. த்ரி நார்க்கயிறும் நூற்கயிறும் திரிப்பதற்குப் பொதுவாகச் சேர்ப்பது முபபுரியே. திரிக்கும் புரித்தொகை பற்றித் திரி என்னும் மூன்றாம் எண்ணுப் பெயர் தோன்றியிருக்கலாம். திரி-த்ரி. சதுர் (c) சட்டம்-சடம்-சடல்-சதர், சதிர், சதுர்=நாற்கோணம், நாற்புறம், நான்கு. சடல்-சடலம்-சதரம்,சதுரம்=நாற்கோணம்,நாற்புறம், நான்கு. (வ.வ.) பஞ்ச்சன் ஐந்து-அஞ்சு-பஞ்சு-பஞ்ச்சு-பஞ்ச்சன் ஒ.நோ: அஞ்சவன்-பஞ்சவன் (பாண்டியன்). அப்பளம்-அப்படம்-பப்படம் (ம.). அப்பன்-அப்பா-பப்பா (E.f.F.f.L.) ஷஷ் ஆறு என்னும் தமிழெண்ணுப் பெயர் மத (சமயநெறி) வகை பற்றித் தோன்றியது. சாஸன என்னும் வடசொற்கு மதம் என்னும் பொருளுண்டு. ஆதலால், சா-ஷஷ் என்ற திரிந்திருக்கலாம். ஏழ் என்னும் தமிழ் எண்ணுப் பெயர் எழுவும் இசைத்தொகை பற்றித் தோன்றி யிருத்தலால், வடமொழியிலும் அதைப் பின்பற்றி முதலெழுத்து மாறி ஸப்தன் என்னும் சொல் அமைந்திருக்கலாம். சப்த (b) - ஸப்தன். சப்த= ஒலி, ஓசை. பொருள் மாறும்போது எழுத்துக்கள் மாறுவதும் இயல்பே. (வ.வ.). அஷ்ட்டன் எட்டு (அட்டு)-அஷ்ட - அஷ்ட்டன். எ.அ.ஒ.நோ வெறுமை - வறுமை. நவன் தொண்டு (ஒன்பது) என்னும் தமிழ் எண்ணுப் பெயர், உடம்பிலுள்ள ஒள்பான் தொளைபற்றித் தோன்றியதாகும். ஒள், கொள், சொள், தொள், நொள், பொள், மொள் என்னும் ஏழடி களும் தொளைத்தலை அல்லது தொளையைக் குறிப்பனவே. நொள்-நெள்ளல், நொள்ளை. நொள்-நெள்-நெள்ளல்-ஞெள்ளல்=பள்ளம், குழி, குழிந்த தெரு (புறம். 15). நெள்-நெளி. நெளிமருங்கு - குறிந்த இடம் (புறம். 18). நொள்-நொள்வு-நொவு-(நவு)-நவி-வெட்டுக் கோடரி. நவி-நவியம். ஒருகால் நவு - நவம்- நவன் என்றாகியிருக்கலாம். (வ.வ.). தசன் (d) தசன-பல், கடி (கடிப்பு). தச - கடி. தம்2 - கடி, ) to bite. தந்த்த = பல் (இ.வே.). தத் - பல் (இ.வே.). பத்து என்னும் தமிழ் எண்ணுப் பெயர் பல் என்னும் சொல்லி னின்று திரிந்தது. ஆயின், அது பல என்று பொருள் படுவது. வடவர் தவறாக அதைக் கடிக்கும் பல்லைக் குறிக்குஞ் சொல்லாகக் கருதி, தசன் என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் போலும்! ஸஹர அயிர்=நுண்மணல். அயிர்=அயிரம்=ஆயிரம்ஷமணல் போன்ற பெருந்தொகை. ஆயிரம் (அயிரம்)-ஹர-ஸஹர. `ஸ' முன்னொட்டு. இனி, க சாவிர-வ, ஸஹர என்றுமாம். இ. ஹஸார் (z), பெ. haza#r. (வ.வ.) லக்ஷ இலக்கம்-லக்ஷ=பெரிய இலக்கம் (எண்). கோடி (t@) கோடி-கோடி (t@)= ஒழுங்கான கடைசி யெண். அடுக்கிய கோடிப் பெயர்களாகிய குமுதம், சங்கம் முதலியன தமிழினின்று கடன் கொண்டவையே. ஸமுத்ர என்பது வாரணம் என்பதன் மொழிபெயர்ப்பாகும். (வ.வ.) வடம் வடம்-வட (t@) வட்டம்-வடம்=1. வட்டமாகப் பரவும் ஆலமரம். வடநிழற்கண் ணூடிருந்த குருவே (தாயு. கருணா. 41). 2. உருண்டு திரண்ட கயிறு. கமலை (கம்மாலை) வடம், தேர்வடம் முதலியவற்றை நோக்குக. 3. உருண்டு திரண்ட பொற்கொடி அல்லது மணிக்கோவை. "Vat@a, m. (perhaps Pra#kri@t for vr@ita, 'surrounded. covered"v‹W மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. (வ.வ: 248-249). வடமொழி சமற்கிருதத்தை வடமொழியென்றும் தமிழைத் தென்மொழி யென்றும் தொன்று தொட்டு வழங்கி விடுவதால், முன்னது வடக்கினின்று வந்த அயன் மொழி என்றும், பின்னது முதலில் இருந்தே தெற்கின்கண் வழங்கி வந்த நாட்டுமொழியென்றும் தெள்ளத் தெளிவாக அறியலாம். மொழிக்குச் சொன்னது மொழியாளர்க்கும் ஒக்கும் சிலர் வரலாற்றுண்மைக்கு மாறாக வடமொழியும் முற்காலத்தில் இருந்தே தென்னாட்டில் வழங்கி வந்த தென்பர். அவர்க்கு வடமொழி என்னும் பெயரே வாயடைத்தல் காண்க. (சொல். 21). 1. வடமொழி: எழுத்தியல் (1) வண்ணமால (வர்ண மாலா) வடமொழி நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு வர்ணமாலா எனப்பெறும். வண்ணம்-வர்ண. மாலை-மாலா. வர்ண, அக்ஷர என்பன எழுத்தின் பொதுப் பெயர்கள். இவற்றுட் பின்னது அசையையுங் குறிக்கும். (வ.வ.) வகையும் தொகையும் உயிரெழுத்துக்கள் (13) : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, ஏ, ஐ, ஓ, ஔ. a, a#, i, i, u, u#, r@u, r@u#, l@u, e#, ai, o, au. அனுவார விஸர்க (ப) : மெய்யெழுத்துக்கள் (33): (வ.வ.) ஐவர்க்கம் (25) k, kh, g, gh, n@ c, ch, j, jh, n# t@. t@h, d@, d@h, n@ t, th, d, dh. n p, ph, b, bh, m இடையினம் (4) ய், ர், ல், வ் இரைப்பினம் (3) ச், ஷ், மூச்சொலி (1) ஹ். பாகுபாடும் பெயரும் உயிரெழுத்து அச் (ac) என்றும் வர என்றும் பூத (bhu#ta) என்றும், அவற்றுள் குறில் ஹ்ரவ என்றும் நெடில் தீர்க்க (di#rgha) எ என்றும், பெயர்பெறும். மெய்யெழுத்து ஹல் என்றும் வ்யஞ்சன என்றும் பெயர் பெறும் . அவற்றுள் ஐவர்க்கமும் பர்சா (Mutes) என்றும், இடையினம். அந்ததா (antastha# : Semi-vowels) என்றும், இரைப்பின்மும் மூச்சொலியும் (Aspirate) உஷ்மாண் : (Sibilants) என்றும் பெயர் பெறும். ஐவர்க்கங்களும், முறையே, ஒலிபற்றிக் கவர்க்கம் kavarga), சவர்க்கம் (ca#varga), டவர்க்கம் (t@avarga), தவர்க்கம் (tavarga), பவர்க்கம் (pavarga) என்றும்; பிறப்பிடம்பற்றிக் கண்ட்யா : (Gutturals), தாலவ்யா : (Palatals), மூர்தன்யா : (Murdhanya#:- Linguals or Cerebrals) தந்த்யா : (dantya# :- Dentals), ஓஷ்ட்யா : (Labials) என்றும், சொல்லப்பெறும். (2) ஒலியும் பிறப்பும் உயிரெழுத்துக்களுள்; ருகரம் குற்றியலுகரம் சேர்ந்த ரகரமாகும்; ரூகாரம் அதன் நெடில் அல்லது நீட்டம். லுகரம் குற்றிய லுகரம் சேர்ந்த லகரம். அனுவார என்பது முந்தின வுயிரை யடுத்தொலிக்கும் மகர வகை. விஸர்க்கம் (விஸாக) என்பது ஆய்தப் போலி; ஆயின் வரி வடிவின்றி உயிரேறப் பெறுவது; ஸகரத்தின் திரிபாக வரக்கூடியது. k, kh ஆகியவற்றின் முன்னும் p, ph ஆகியவற்றின் முன்னும் வந்து அரை விஸர்க்கமாக ஒலிக்கும் ஒலிக்கு, முறையே, ஜிஹ்வா முலீய என்றும் உபத்மானீய (dh) என்றும் பெயர். முன்னதற்கு மிடறும் பின்னதற்கு இதழும் பிறப்பிடமாம். சிலவிடத்து, உயிர்களும் ய ப ல ஆகிய இடையின மெய்களும் மூக்கொலியுடன் இசைக்கும். அன்று அவை அனுநாசிகம் எனப்படும். ஊஷ்மாணங்களுள் : ஹகரத்திற் மிடறும், சகரத்திற்கு இடை யண்ணமும், ஷகரத்திற்கு முன்னண்ணமும், ஸகரத்திற்குப் பல்லண்ணமும், பிறப்பிடமாம். ஐ, ஔ என்னும் இரு நெடிலும் முதற்காலத்தில் ஆய், ஆவ் என நீண்டொலித்தன வென்றும், ஆரியம் தமிழொடு தொடர்பு கொண்டபின், அவை தமிழிற்போல் அய், அவ் எனக் குறுகி யொலிக் கின்றனவென்றும், கூறுவர். தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான பிற எழுத்துக்க ளெல்லாம், தமிழிற்போன்றே ஒலிக்குமென அறிக. ஏ, ஒ இரண்டும் தமிழில் எகர ஒகரங்களின் நீட்டமான தனி யொலிகளாகக் (Simple vowels) கொள்ளப்பெறும்; சமற்கிருதத் தில் தவறாகப் புணரொலிகளாகக் (Diphthongs) கொள்ளப் பெறு கின்றன. இதற்கு அம்மொழியில் எகர ஒகர மின்மையும் குணசந் தியுமே காரணம். அ,ஆ+இ,ஈ - ஏ. எ-டு : மஹா + இந்திர(ன்) = மஹேந்திர (ன்) அ, ஆ+உ, ஊ=ஒ. எ-டு : குல + உத்துங்கன் = குலோத்துங்கன் (3) எழுத்துச் சாரியை காரமும் கரமும் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை என்பது தொல் காப்பியம் (134) உயிரெழுத்தின் உதவியின்றித் தாமாக வொலிக்காத மெய் யெழுத்துக்களை ஒலிப்பித்தற் பொருட்டும், தாமாக வொலிக் கும் உயிரெழுத்துக்களையும் எளிதாக ஒலிப்பித்தற் பொருட்டும், சில துணையொலிகளைப் பண்டைத் தமிழிலக்கண நூலார் அமைத்துள்ளனர். அவை சாரியை எனப்பெறும். உயிரெழுத்துக்களுள் குறிற்குக் கரமும் நெடிற்குக் காரமும் சாரியையாம். ஐகார ஔகாரங்கட்குக் கான் என்பது சிறப்புச் சாரியை. இதைக் குறிற்கும் மெய்க்கும் பயன்படுத்தியது பிற்காலத் ததாகத் தெரிகின்றது. மெய்யெழுத்துக்கட்கு அவ்வும் அகரமும் சாரியை. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். (தொல். 46) எ-டு: வல்லெழுத் தென்ப கசட தபற. (தொல். 19) வகரக் கிளவி நான்மொழி யீற்றது. (க்ஷ. 81). வடமொழி மெய்களும் தமிழ் முறைப்படியே அகரமொடு இயங்குகின்றன. உயிர்மெய் கட்குள் குறிற்குக் கரமும் நெடிற்கு மெய்ச் சாரியையொடு கூடிய உயிர்நெடிற் சாரியையும் சாரியையாம். எ-டு : ககரம் (க), ககர ஆகாரம் (கா). ஆய்தத்திற்கு அ-கேனம் என்பது சாரியையாம். எ-டு. அஃகேனம். இது தொல்காப்பியத்திற் சொல்லப்பெற வில்லை. இங்ஙனம் தமிழெழுத்துச் சாரியை யொழுங்கு நிறைவாக அமைந்துள்ளது. வடமொழியார் கரம், காரம் என்னும் இரண்டையே தமிழி னின்று கொண்டுள்ளனர். அதோடு குறிற்கு இரண்டையும் வேறு பாடின்றி ஆள்வர். இதனாற் சாரியை யமைப்பின் தமிழ் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. கரம், காரம் என்பன வடமொழியில் கர, கார என்று ஈறுகெட்டு நிற்கும். சாரியை என்னுங் குறியீடும் வட மொழியிலில்லை. ரகார ழகாரம் குற்றொற் றகா. (தொல். 49). உஊ காரம் நவவொடு நவிலா. (தொல். 74) என்பன போன்றவற்றைச் செய்யுள் திரிபில் அடக்குதல் வேண்டும். கரமும் கானும் நெட்டெழுத் திலவே. (தொல்.. 135) என்று விலக்கியபின், ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும். (தொல். 137) என்று தொல்காப்பியரே முரண்படக் கூறுவதால், வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய. (தொல். 136). என்றுஅவர் குறித்திருப்பது குமரிநாட்டு வழக்கொடு பொருந் தியதாய்த் தோன்றவில்லை. (4) முறை மேலையாரிய மொழிகட்குள் ஒன்றிற்காவது முறை என்னும் எழுத்திலக்கணம் இன்றுமில்லை. வேத ஆரியர் எழுத்தும் இலக்கியமுமின்றி இந்தியாவிற்குட் புகுந்தனர். வேத மொழிக்கும் வேதத்திற்கும் எழுதாக்கிளவி என்று பெயர். வேதத்தைக் குறிக்கும் ச்ருதி (கேள்வி) என்னும் பெயரே ஆரியர்க்கு எழுத்தின்மையை உணர்த்தும். இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே முதன்முதல் நெடுங் கணக்கு வகுத்ததும் அதற்கு முறையமைத்ததும் தமிழரே. வேத ஆரியர் தென்னாடு வந்து தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி வடமொழிக்குக் கிரந்த வண்ணமாலையை அமைத்துக் கொண்டனர். உயிர் முன்னும் மெய் பின்னும், உயிருள் ஆ ஈ ஊ முன்னும் ஏ ஓ பின்னும், ஒவ்வோர் உயிரிலும் குறில் முன்னும் நெடில் பின்னும், ஏயின் பின் ஐயும் ஓவின் பின் ஔவும், ஆய்த மொத்த விஸர்க்கம் உயிர்க்கும் மெய்க்கும் இடையும், மெய்யுள் வலி வகை முன்னும் மெலி பின்னுமாகக் கசடதப முறையிலும், அவற்றிற்குப் பின் இடையினம் யரலவ முறையிலும், அமைந்திருப்பது, வட மொழி வண்ணமாலை தமிழ் நெடுங்கணக்கு முறையை முற்றுந் தழுவிய தென்பதை, எத்துணைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது! இஃதொன்றே வடமொழியின் பின்மையைக் காட்டப் போதிய சான்றாம். உயிர் வரிசையுட் செருகப்பட்ட சிறப்பெழுத்துக்களை நோக்கி னும், முற்றுகரத்தை யடுத்துக் குற்றுகரமும், ரகரக் குற்றுகரத்தின் பின் லகரக் குற்றுகரமும் வைக்கப்பெற்றிருப்பது, எத்துணைத் தமிழ் முறையொட்டியது! (5) அளபு அளவு என்பது எழுத்தொலியின் மாத்திரை அல்லது அளவு. அளபு, மாத்திரை என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுள் முன்னது தமிழ்ச் சிறப்புச் சொல்; பின்னது தென்மொழிக்கும் வட மொழிக்கும் பொதுச் சொல். மெய்க்கு அரையும் குறிற்கு ஒன்றும் நெடிற்கு இரண்டும் மாத்திரை என்பது இருமொழிக்கும் பொது. வடமொழியில் ப்லுதம் என்னும் அளபெடையையும் உயிர் அல்லது உயிர்மெய் வகைகளுள் ஒன்றாகச் சேர்த்து, அதற்கு மும்மாத்திரை என வகுத்துள்ளனர். அளபெடை தமிழிலும் உண்டு. ஆயின் அதை ஒழுங்கான உயிர் வகையாகக் கொண்டிலர். ஏனெனின், அது உலகியல் அல்லது இயற்கையளபெடையில் மும்மாத்திரை முதல் பத்து அல்லது பன்னிரு மாத்திரைவரை நீண்டளபெடுக்கும். செயற்கையாகிய செய்யுளியல் அளபெடை குறுகியொலிப்பினும், அருகியும் திட்டமான மாத்திரை வரம்பின்யுமே நிகழும். அளபெடையையும் ஓர் உயிர் வகையாகக் கொண்டது வட மொழியிலக்கணத்தின் பின்மையையே காட்டும். (6) வடிவம் வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ் நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்த வெழுத்து. அதன் காலம் தோரா. கி.மு. 10-ஆம் நூற்றாண்டு. ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணம் தொல்காப்பியத் திற்கு முந்திய நூலாதலால், வடமொழிக் கிரந்தவெழுத்து அதற்கு ஓரிரு நூற்றாண்டு முற்பட்டதாயிருத்தல் வேண்டும். கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்பயடுத்தப்பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர். இன்றுள்ள தேவநாகரி கி.பி. 4-ஆம் நூற்றாண்டிற் கருக் கொண்டு 11ஆம் நூற்றாண்டில் முழுநிறைவடைந்தது. அதையும் உற்று நோக்கின், அதற்கும் கிரந்தவெழுத்திற்குமுள்ள நுண்ணிய வடிவொப்புமை புலனாகும். தேவமொழி யென்னும் வடமொழிக்கு நகரங்களில் ஆளப் பெற்ற எழுத்து தேவநாகரி. தேவர் நகரங்களில் ஆளப்பெற்றது தேவ நாகரி என்பர் வடமொழியாளர். அவர் தேவரென்று நாணாது குறிப்பது பிராமணரை. எழுத்து வடிவம் அனுநாசிகம் ஜிஹ்வாமூலீய - (k, kh ஆகியவற்றின் முன்) உபத்மானீய - (p, ph ஆகியவற்றின் முன்) தமிழ்க் கையெழுத்தில் சில கூட்டெழுத்துக்களை ஆள்வது போல், வடமொழி அச்செழுத்தில் ஏராளமான கூட்டெழுத்துக் களை அமைத்திருக்கின்றனர். அவை சந்தியக்ஷரம் எனப்படும். எ-டு : க்ஷ-க்ஷ, ச்ரீ-ஸ்ரீ இவை கிரந்தம். இங்ஙனம் தேவநாகரியில் ஏராளமாகவுண்டு. மெய்யைக் குறிக்கக் கிரந்தத்தில் மேற்புள்ளியும் தேவநாகரியிற் கீழிழுப்பும் இட்டதும், இருவகையெழுத்திலும் உயிர்மெய்க்குத் தனி வடிவமைத்தும், முற்றும் தமிழைப் பின்பற்றியே. (7) புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி, சொற்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும். தமிழிலக்கணத்தை முதன் முதல் ஆய்ந்து கண்டு நூலியற்றியவர் தலைசிறந்த முனிவர் என்பது, வினையின் நீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். என்னும் தொல்காப்பிய நூற்பாவால் (1594) விளங்கும். முனிவர் மெய்ப்பொருளுணர்வு முதிர்ந்தவராதலின், உலகிலுள்ள எல்லாப் பொருள் களும் உயிர், உயிரில்லது (மெய்), உயிருள்ளது (உயிர்மெய்) என மூவகையாக இருக்கக்கண்டு, அவற்றை யொத்த மூவகை எழுத்தொலிகட்கும் அவற்றின் பெயரையே உவமையாகு பெயராக இட்டு, உயிர்மெய்க்குத் தனி வடிவும் அமைத்தனர். இதனால், உயிர்மெய்யொலியை உயிரும் மெய்யுமாக முதன் முதற் பகுத்தவர் தமிழர் என்பதும், உயிர்மெய்யிலேயே எழுத்துப் புணர்ச்சி தோன்றிவிட்டதென்பதும், தெளிவாம். சொற்புணர்ச்சி எல்லா மொழிகளிலுமுண்டு. ஆயின், இயன் மொழியிலேயே புணர்ச்சி ஒழுங்காகவும் புணர்ச்சொற்கள் எளிதாய்ப் பகுக்கக் கூடியனவாகவுமிருக்கும். திரிமொழிகளில் தனிச்சொல்லும் கூட்டுச் சொல்லும் பெரும்பாலும் திரிந்திருப்ப தாலும், திரிபுப் புணர்ச்சி நிகழவேண்டிய விடத்தும் இயல்புப் புணர்ச்சியே பெரும்பான்மையாய் நிகழ்வதாலும், திரிபுப் புணர்ச்சி நிகழ்ந்தவிடத்தும் அது வரிவடிவிற் காட்டப் பெறாமை யாலும், அவற்றிற் புணர்ச்சியிலக்கணம் வகுக்கப் பெரிதும் இடமில்லை. சமற்கிருதம் திரிமொழியாயினும், தொன்று தொட்டுத் தமிழொடு தொடர்பு கொண்டமையானும், ஐந்திலிரு பகுதிக்குக் குறையாது தமிழாயிருத்தலானும். தமிழைத் தழுவியே இலக்கணஞ் செய்யப் பெற்றமையானும், புணர்ச்சியிலக்கணம் அதற்கமைந்ததென்க. ஆயினும், திரிமொழியாதலின், தமிழ்ப் புணர்ச்சிபோற் பெரும்பாலும் ஒழுங்குபடாது எத்துணையோ விலக்குக்களைக் கொண்டுள்ளதென அறிக. வடமொழிப் புணர்ச்சியும் தமிழ்ப் புணர்ச்சி போன்றே உயிரீறும் மெய்யீறும் பற்றி இருவகைப்படும். உயிரீற்றுப் புணர்ச்சியை அச்ஸந்தி அல்லது வரஸந்தி என்றும், மெய்யீற்றுப் புணர்ச்சியை ஹல்ஸந்தி என்றுங் கூறுவர். உயிரீற்றுப் புணர்ச்சியில், குணம், விருத்தி என்னும் இருவகை உயிர்த்திரிபுகள் வடமொழிக்குச் சிறப்பானவை. இன்னின்ன சிற்றுயிர்கட்கு (Simple Vowels) இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் குணம் என்றும், இன்னின்ன வுயிர்கள் அல்லது அசைகள் விருத்தி என்றும், வகுக்கக்ப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கீழ்வருங்கட்டமைப்பிற் கண்டு கொள்க. இயலுயிர் அ இ,ஈ உ,ஊ ரு,ரூ லு குணவுயிர் அ ஏ ஓ அர் அல் விருத்தியுயிர் ஆ ஐ ஔ ஆர் ஆல் தீர்க்கஸந்தி என்னும் மூவகை நெடிற்புணர்ச்சி, குளாம்பல் (குள ஆம்பல்), புதூர் (புது ஊர்) என்னும் மரூஉப் புணர்ச்சியொத் தவையே. தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் முப்புணர்ச்சித் திரிபுகளும், ஆகம(ம்), ஆதேச(ம்), லோப(ம்)எனமொழிபெயர்க்கப்பட்டுள. எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை முதலீ றிடைநிலை போலி யொன்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. என நன்னூலார் (57) கூறும் பன்னிருவகை எழுத்திலக்கணங் களுள், முதல் ஈறு இடைநிலை என்னும் மூன்றும் திரிமொழி யாகிய வடமொழிக்கில்லை. (8) வடமொழியெழுத்துப் பெருக்கம் கிரேக்கக் குறுங்கணக்கு (24) A (a and a#), B,G (g and n(), D, E, Z, E#, TH, I (i and i), K, L, M, N, X, O, P, R, S ( s and z), T, U (u and u#)))), PH, KH, PS, O. இவற்றுள் TH, X (ks), PH, KH, PS என்னும் ஐந்தே புணர் மெய்கள்; X (ks) வடமொழியில் க்ஷ (ks) ஆக வளர்ந்துள்ளது. இலத்தீன் குறுங்கணக்கு (21) A, B, C, D, E, F, Z, H, I (J), K, L, M, N, O, P, Q, R, S, T, V (U), X இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய். அதுவும் மூச்சொலியற்றது. C=G. J=Y. தீயூத்தானியக் குறுங்கணக்கு (ஆங்கிலம்) A, B, C, D, E, F, G, H, I, J, K, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. இவற்றுள் X (ks) ஒன்றே புணர்மெய். கிரேக்க அரிவரி பினீசியரிடத்தினின்றும், இலத்தீன் அரிவரி கிரேக்கரிடத்தினின்றும், பெறப்பட்டவையாகும். இன்று ஐரோப்பா முழுதும் வழங்கும் ஆரியமொழி அரிவரிகள், இலத்தீன் அரிவரியைத் தழுவியவையே. ஆங்கிலம் பிற்கால மொழியாதலால், சில பிற்கால வொலிகள் இணைவரிகளால் (Diagraphs) குறிக்கப்பெறுகின்றன. எ-டு : ch=¢r, sh=õ. சமற்கிருதம் ஆரியமும் திரவிடமுங் கலந்த மொழியாதலின், பல முதிரொலிகளைக் கொண்டிருப்பதுடன், வல்லின் ஐவகை யுள்ளும் பொலி (Voiced) யொலியுடனும் பொலியா (Voiceless) வொலியுடனும் மூச்சொலியை ஒழுங்காகச் சேர்த்து அவற்றிற்குத் தனி வடிவம் அமைத்துள்ளது. kh, gh; ch, jh; t@h, dh; th, dh; ph, bh என்னும் பத்துக் கூட்டு மெய் கட்கும், வடமொழி யில் தனி வடிவம் அமைந்திருத்தல் காண்க. இந்நிலைமை வேறெம் மொழியிலுமில்லை. (9) வடமொழி வண்ணமாலையின் பின்மை வடமொழி வண்ணமாலையின் பின்மை பின்வருஞ் சான்று களால் துணியப்பெறும். (1) வடமொழியின் பின்மை. (2) ஆரிய வேதம் பன்னூற்றாண்டு எழுதாக் கிளவியாயிருந்தமை. (3) தமிழெழுத்தைப் பின்பற்றிய கிரந்தம் தேவநாகரிக்கு முற்பட்டமை. (4) ஒலி வடிவு, மாத்திரை, சாரியை, வரிவடிவு, முறை முதலிய வற்றில் இயன்றவரை தமிழைப் பின்பற்றியிருத்தல். (5) ஒலிப்பெருக்கம். (6) கூட்டு மெய்கட்குத் தனி வடிவு கொண்டுள்ளமை. ஐவர்க்கங்களும் கவர்க்கம் சவர்க்கம் (e) என முதன்மெய்யா லேயே பெயர்பெற்றி ருப்பதால், அம்முதன்மெய்யின் திரிபே பிற்பட்ட மூன்றும் என்பது பெறப்படுதல் காண்க. இனி, தமிழ்ப்பொலியா வொலிச் சொற்கள் திரவிடத்திற் பொலி வொலிச்சொற் களாகவும், ஆங்கிலப் பொலியாவொலிச் சொற்கள் இலத்தீன் கிரேக்கத்திற் பொலிவொலிச் சொற் களாகவும், திரிந்திருத்தலையும் நோக்கித் தெளிக. இனி, வடமொழியைவருக்க முதன்மெய்களும் தமிழ் வல்லி னத்தின் வலித்த வடிவே யென்பதையும் கண்டறிக. (7) மேலையாரியம்போற் குறுங்கணக்கு மட்டுங் கொண்டிராது தமிழ்போல் நெடுங்கணக்குங் கொண்டிருத்தல். (வ.வ.) (10) வடமொழி வண்ணமாலையின் ஒழுங்கின்மை (1) ரு, ரூ, லு என்னும் உயிர்மெய்கள் உயிரினத்திற் சேர்க்கப் பட்டிருத்தல் (2) தேவநாகரியிற் சில எழுத்துக்கட்கு ஒன்றோடொன்றை மயக்கற்கேற்றவாறு வடிவமைந்திருத்தல். (3) மகரவொலியாகிய அனுவாரக்குறி மெல்லினப் பொதுவா யிருத்தல். (11) வடமொழிக் குறுங்கணக்கு நூற்பாக்கள் 1. "அ இ உ ண்," 2. "ருலுக்," 3. "ஏஓங்." 4. "ஐஒளச்" (ந). 5. "ஹயவரட்" (வ@). 6. "லண்." 7. "ஞமஙணநம்" 8. " துழஹ க்ஷழஹ ஞ்." 9. " ழுழஹ னுழஹ னுழஹ ஷ்." 19. "ஜ க்ஷஹ ழுஹ னுஹ னுஹ ச்" 11. "முழஹ ஞழஹ ஊழஹ கூழஹ கூழஹ ஊஹ கூ@ஹ கூஹ வ்" 12. " முஹ ஞஹ ய்." 13. "சஷஸர்." 14. "ஹல்." இப்பதினால் நூற்பாக்கட்கும் மகேசுவர சூத்திரங்கள் அல்லது சிவசூத்திரங்கள் என்று பெயர். இவை பாணினீயத்தொடு பொது வாகச் சேர்த்துக் கூறப்படினும், சிவபெருமானாற் செய்யப்பெற்ற வையென்றும், அவர் துடியைப் பதினான்முறை இயக்க இப்பதி னால் ஒலித்தொகுதிகளும் தோன்றினவென்றும், வடமொழி யாளர் கூறுவர். வடமொழியையே தேவமொழி யென்பார் இங்ஙனங் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. ஆயினும் துணிச்ச லான ஏமாற்றே. அஷ்டாத்யாயீ என்னும் பாணினியிலக்கணத்தின் மூலப் பாடத்தில் இவை சேர்க்கப் பெறாமையாலும், பாணினீய நூற் பாக்கள் போல் அதிகாரவியல் எண் பெறாமையாலும், நன்னூற் பொதுப் பாயிர நூற்பாக்கள்போல் முன்னரே பலராற் செய்யப் பட்டு வழிவழி திருந்தி வந்தவையாயுமிருக்கலாம். இந்நூற்பாக்களின் இறுதியெழுத்துக்கட்கு இத் என்று பெயர். ஒரு நூற்பாவின் முதலெழுத்தையும் அதன்பின் வரும் ஒர்இத்தை யும் சேர்ப்பின் ப்ரத்யாகார என்னுங் குறியீடாகும். அக்குறியீடு. அதன் முதலெழுத்தையும், அதன் ஈரெழுத்திற்கும் இடைப்பட்ட இத்தல்லா எல்லா நூற்பா எழுத்துக்களையும் குறிக்க உதவும். இம்முறையில், அண் என்பது அகரத்தையும் அகர இகர வுகரங் களையுங் குறிக்கும். அச் என்பது எல்லா உயிர்களையும், ஹல் என்பது எல்லா மெய்களையும், அல் என்பது எல்லா உயிர் களையும் மெய்களையும் குறிக்கும். இதனால், மேற்கூறிய பதினால் நூற்பாக்கட்கும் பிரத்தியாகார சூத்திரங்கள் என்றும் பெயர். 2. வடமொழி: சொல்லியல் எல்லா மொழிகளிலும் இலக்கணவகைச் சொற்கள் பெயர்வினை இடை என மூன்றே. இவை சிக்ஷை, நிருக்தம் என்னும் தொடக்க வட நூல்களில், நாம (ம்), ஆக்யாத் (ம்), நிபாத் (ம்) எனக் குறிக்கப்பட்டன. பாணினி இவற்றை முறையே சுபந்தம், திஙந்தம் அவ்யய(ம்) எனக் குறித்தார். உபஸர்க்கம் என்னும் முன்னொட்டு நிபாதத்துள் அடங்கும். ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்பே, நாமம் என்னுஞ் சொல் மேலையாரியத்தில் namon, nomem என்று வழங்கியதாகத் தெரிவதாலும், தியூத்தானியத்தில் வினையாகவும் வழங்கிவருவத னாலும், ஒரு கால் அது மேலையாரியச் சொல்லாக இருப்பினும் இருக்கலாம். ஆக்யாத (kh) என்னும்சொல், சொல் என்றே பொருள் படுவது. இது பொருளிலும் ஆட்சியிலும் verb (L. verbum) என்னும் ஆங்கிலச் சொல்லையொத்தது. கியா=சொல். verb=brhš. நிபாத என்பது நிபத் என்னம் கூட்டு முதனிலையினின்று திரிந்தது. நி=கீழ். பத்=விழு. நிபாத=நெறி திறம்பியது, ஒழுங்கற்று. படி (த.) - பத். வேற்றுமை யுருபேற்ற பெயரும் காலவெண்ணிடங் காட்டும் ஈறேற்ற வினையும் பதம் எனப்படும். (11) பெயர்ச்சொல் (ஸுபந்த) தாது எனப்படும் முதனிலையொடு, கிருத் எனப்படும் பெயரடி யிடையொட்டும் தத்திதன் எனப்படும் வழிநிலை யிடை யொட்டும் சேர்ந்த வடிவிற்குப் பிரகிருதி அல்லது பிராதிபதிகம் என்று பெயர். இப்பிராதிபதிகத்துடன் வேற்றுமை யுருபு சேரின் பெயர்ப்பதமாம். அது சுபந்தம் எனப்படும். சுப் (ஸுப்) என்பது வேற்றுமை யுருபுகளையெல்லாம் பொதுவாகக் குறிக்கும் பாணினீயக் குறியீடு. அந்தம் ஈறு. கிருத் ஈறு கிருதந்தம் என்றும். தத்தித ஈறு தத்திதாந்தம் என்றும் சொல்லப்படும். இவையிரண்டிற்கும் பிரத்யம் என்பது வட மொழிப் பொதுப்பெயர். பிராதிபதிகத்திலும் பெயர்ப்பதத்திலும் க்ருத், தத்திதன் ஆகிய இருவகையிடை யொட்டும் சேர்ந்துமிருக்கலாம்; அவ்விரண்டி லொன்று தனித்துயிருக்கலாம். பால் (லிங்க) வடமொழியில் திணையில்லை; பால்மட்டும் உண்டு. அது புல்லிங்கம் (ஆண்பால்), திரீலிங்கம் (பெண்பால்), நபும்ஸக லிங்கம் (அலிப்பால்), என மூவகைப்படும். வடமொழிப் பால்வகுப்பு இயற்கையான பொருளியல்பு பற்றிய தன்று; பெரும்பாலும் செயற்கையான இலக்கண முறை பற்றியது. சில பெயர்களே உண்மையான பால்காட்டும். எ-டு : புதகம் (ஆ. gh.), சிலா (பெ.பா.) = கல். மனைவியைக் குறிக்கும் தாரம் (ஆ. பா) பாரியா (பெ. gh.), களத்திரம் (அ. பா.) என்னும் முச்சொற்களும், பால் வேறுபடும். எண் (வசன) வடமொழியில், ஏகவசனம் (ஒருமை), த்விவசனம் (இருமை), பஹு வசனம் (பன்மை) என எண் மூவகைப்படும். மேலையாரியத்தைச் சேர்ந்த தியூத்தானியத்திலும் இலத்தீனிலும் இருமையெண் இல்லை; சமற்கிருதத்திற்கு மிக நெருங்கிய கிரேக்கத்தில் தான் உண்டு. இடம் (புருஷ) இடம் தமிழிற் போன்றே வடமொழியிலும் மூன்றாம். அவை உத்தம புருஷ (தன்மை), மத்யம் புருஷ (முன்னிலை), ப்ரதமபுருஷ (படர்கை) எனப்படும். வேற்றுமை (விபக்தி) கிரேக்க இலக்கணத்தில், எழுவாய் வேற்றுமை விளிவேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கிழமை வேற்றுமை, கொடை வேற் றுமை என்னும் ஐவேற்றுமைகளும், இலத்தீன் இலக்கணத்தில் எழுவாய்வேற்றுமை, கிழமைவேற்றுமை, கொடை வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, விளிவேற்றுமை, நீக்கவேற்றுமை, என்னும் அறுவேற்றுமைகளுமே, கூறப்படு கின்றன. முதற்கால ஆங்கிலத்தில் எழுவாய், விளி, செய்பொருள், கிழமை, கொடை, கருவி என்னும் அறுவேற்றுமைகள் இருந்ததாகச் சொல்லப்படு கின்றது. ஆயின் மேலையாரிய மொழி ஒன்றிலாவது எண் வேற்றுமை சொல்லப்படவில்லை. வடமொழியிலோ தமிழிற்போல் எண்வேற்றுமை காட்டப் பெறுவதுடன், அவற்றின் வரிசையும் பெயரும் பொருளும் முற்றும் தமிழை ஒத்திருக்கின்றன. வேற்றுமைப்பெயர் வேற்றமைப்பொருள் தமிழ் வடமொழி தமிழ் வடமொழி முதல் வேற்றுமை ப்ரதமா விபக்தி வினைமுதல் கர்த்தா இரண்டாம் " த்விதீயா " செய்பொருள் கர்ம(ம்) மூன்றாம் " த்ருதீயா " வினைமுதல், கருவி கர்த்தா,கரணம் நான்காம் " சதுர்த்தீ " கொடை ஸம்பிரதானம் ஐந்தாம் " பஞ்சமீ " நீக்கம் உபாதானம் ஆறாம் " ஷஷ்டீ " கிழமை ஸம்பந்த(ம்) ஏழாம் " ஸப்தமீ " இடம் அதிகரணம் எட்டாம் (விளி) " ஸம்போதன " விளி ஸம்போதனம் ப்ரதமா இங்ஙனம் முற்றும் ஒத்திருப்பதால், வடமொழி வண்ணமாலை போன்றே வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவிய தென்பது வெள்ளிடைமலை. விபக்தி என்னும் சொல்லே விள்-பகு என்பதன் திரிபான வி-பஜ் என்னும் கூட்டுமுதனிலையினின்று திரிந்து வேறு பிரிப்பு என்று பொருள்படும் மொழிபெயர்ப் பாகும். தமிழில் எண்வேற்றுமையும் எண்வரிசையால்மட்டுமின்றி, எழுவாய், செய்பொருள், கருவி, கொடை, நீக்கம், கிழமை, இடம், விளி எனப் பொருள்பற்றியும்; பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி என உருபுபற்றியும்; பெயர்பெறும். வடமொழியில் எட்டாம் வேற்றுமை எண்ணாற் பெயர்பெறா திருப்பதும் கவனிக்கத் தக்கதாம். தமிழ் இயன்மொழியாதலால் அதில் முதல் வேற்றுமைக்கு உருபில்லை; சமற்கிருதம் திரிமொழியாதலின், அதற்கு அஃதுண்டு. வடசொற்கள் ஈற்றிற் கேற்ப வேற்றுமையுருபுகள் சிறிதும் பெரிதும் வேறுபடும். இங்கு அகரவீறொன்று காட்டப்பெறும். ராம (வேற்றுமைப்படா வடிவு) ஒருமை இருமை பன்னை முதல் வேற்றமை ராம: ராமௌ ராமா: இராண்டாம் வேற்றுமை ராமம் " ராமான் மூன்றாம் வேற்றுமை ராமேண ராமாப்யாம் ராமை : நான்காம் வேற்றுமை ராமாய் " ராமேப்ய: ஐந்தாம் வேற்றுமை ராமாத் " " ஆறாம் வேற்றுமை ராமய ராமயோ: ராமாணாம் ஏழாம் வேற்றுமை ராமே " ராமேஷு விளி வேற்றுமை ஹே ராம ஹே ராமென ஹே ராமா 3-ஆம் 4-ஆம் 5-ஆம் வேற்றுமைகளிலும் 6-ஆம் 7-ஆம் வேற்றுமைகளிலும் இருமை வடிவும், 5-ஆம் 6-ஆம் வேற்றுமை களிற் பன்மை வடிவும், எல்லா ஈற்றுப் பெயர்கட்கும் பெரும்பாலும் ஒத்தேயிருக்கும். வடமொழியிற் பெயரெச்சங்களும் (விசேஷணங்களும்) வேற்றுமைப்படும். அய என்னும் 6-ஆம் வேற்றுமை யொருமை யுருபு, உடைய என்னும் சொல்லுருபின் திரிபாயிருக்கலாம். (2) வினைச்சொல் (திஙந்த) தாது என்னும் முதனிலையொடு காலவெண்ணிடங் காட்டும் ஈறு சேரின் வினைப்ப தமாம். அது திஙந்தம் எனப்படும். திங் என்பது வினையீறுகளையெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பாணினியக் குறியீடு. சமற்கிருத வினைகள், ஆறுகாலங்களும் (Tenses) நான்கு படிசு களும் (Moods) மூன்று உறவுகளும் (Voices) கொள்ளும். காலம் கால என்றும், படிசு அர்த்த என்றும், உறவு ப்ரயோக என்றும், பெயர் பெறும். ஆறுகாலங்களும் நான்கு படிசுகளும் லக்கரங்கள் எனப்படும். வடமொழியில் எல்லா வினை வகைகட்கும் இடுகுறியான குறியீடுண்டு. அறுகாலம் காலவகை வடமொழிப் பெயர் வடமொழிக் குறியீடு நிகழ்காலம் வர்த்தமான : y£(t@) இறந்தகாலம் - இன்றலா இ.கா. அனத்யதனபூத : லங் சேய்மை " பரோக்ஷபூத : லிட் (t@) வரையிலா " பூத : லுங் எதிர்காலம் - முதல் எ. கா. பவிஷ்யன் லுட் இரண்டாம் எ. கா அனத்யதன பவிஷ்யன் லுட் நாற்படிசு தமிழ்ப்பெயர் வடமொழிப்பெயர் வடமொழிக் குறியீடு ஏவல் வினை ஆஜ்ஞா லோட் (t@ ) ஆற்றல் வினை விதி லிங் வாழ்த்துவினை ஆசீ : ஆசீர்லிங் நிலைப்பாட்டுவினை ஸங்கேத லுங் லோட் (t@ ) என்று ஓர் இணைப்புப் படிசு (Subjunctive Mood) வேதமொழியி லிருப்பதாகவும், பின்பு வழக்கற்றுப் போன தாகவுஞ் சொல்லப்படும். மூவுறவு தமிழ்ப் பெயர் வடமொழிப் பெயர் எடுத்துக்காட்டு செய்வினை கர்த்தரிப்ரயோக ராம: ஸத்யம் பாஷதே செயப்பாட்டுவினை கர்மணிப்ரயோக ஹரிணா பலம் பக்ஷ்யதே தன்பாட்டுவினை பாவேப்ரயோக ராமேண கம்யதே. சமற்கிருத வினைமுற்றீறுகள், தற்பொருட்டுவினை (ஆத்மனே பத) ஈறுகள் என்றும், மற்பொருட்டுவினை (பரமைபத) ஈறுகள் என்றும், இருவகைப்பட்டுள்ளன. சில வினைகள் தற்பொருட்டு வினையீறுகளையும், சில வினைகள் மற்பொருட்டு வினையீறு களையும், சில வினைகள் இரண்டையும் ஏற்கும். முன்னொட்டுச் சேர்க்கையால், த. பொ. வினை ம. பொ. வினையாகவும், ம. பொ. வினை த. பொ. வினையாகவும் மாறுவதுண்டு. த.பொ. வினைப்பயன் செய்வானையும், ம.பொ. வினைப்பயன் பிறனையுஞ் சாரும். எ-டு : தேவதத்த : யஜதே (t@)= தேவதத்தன் தனக்கு வேட்கிறான். தேவதத்த : யஜதி (t@) = தேவதத்தன் பிறனுக்கு வேட்கிறான். வேட்டல் வேள்வி செய்தல். எல்லா வினைகளும் பத்து லக்கரங்களிலும் மூவிடத்தும் மூவெண்ணிலும் புடைபெயரும். நிகழ்காலம், இன்றலா இறந்தகாலம், ஏவல்வினை, ஆற்றல் வினை ஆகிய நாலிலக்கரங்களிலும், வினைகள் சில வேறுபாடடை கின்றன. அவ்வேறுபாடு விகரண(ம்) எனப்படும். வேறுபாடடை யும் லக்கரங்கள் ஸார்வதாதுக என்றும், வேறு பாடடையா லக்கரங்கள் அர்த்த தாதுக என்றும், சொல்லப்படும். விகரணம்பற்றி வினைகள் பத்துக் கணங்களாக வகுக்கப்பட் டிருக்கின்றன. இப்பத்துக் கணங்களும் மீண்டும் இரு தொகுதி களாகப் பகுக்கப்பட்டுள. முதலாம் இரண்டாம் மூன்றாம் பத்தாங் கணங்கள் முதல் தொகுதியும், ஏனைய இரண்டாம் தொகுதியும் ஆகும். முதல் தொகுதி வினையடிகள் அகரத்தில் இற்று என்றுந் திரியாது நிற்கும்; இரண்டாந் தொகுதி வினையடிகள் அகரத்தில் இறாது திரிந்துவரும். வடமொழிச் செயப்பாட்டிறந்தகால வினையெச்சவீறாகிய `த', தமிழிறந்தகால வினையெச்ச வீறாகிய துவ்வை ஒருபுடை யொத்தது. வடமொழி எதிர்மறையேவ லசையாக வரும் `மா', வ;தது என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. கூடாது என்னும் எதிர்மறையாற்றல்வினை விலக்குப் பொருளையும் உணர்த்தும். நீ போகக்கூடாது=நீ போகாதே, நீ போகவேண்டாம். ஒல்லும்=கூடும். ஒல்லாது=கூடாது. ஒல்லாது-(தெ.) ஒத்து (வேண்டாம்)-வத்து-(இ.) மத். வேதகாலச் சூரசேனியிலும் மத்து என்றே இருந்திருக்கலாம். மத்து-மத்-மா(வ.) Gk.me#. மா பை : (bh) = அஞ்சாதே. வடமொழியில், த்வித்வலிட் என்னும் சேய்மை யிறந்தகால வினை யும் ஸன் என்னும் ஆர்வ வினையும் முதனிலை யிரட்டித்தல், சில தமிழ் இறந்தகால வினைகள் முதனிலையிறுதி வலி இரட்டிப் பதையொத்தது. கிரேக்க மொழியிலும் இத்தகைய இரட்டிப் புண்டு. வடமொழி திரிமொழியாதலின், அதன் வினைகட்கு வேர்ச் சொற்கள் அம்மொழியிலில்லை. அவை பெரும்பாலும் இயன் மொழியாகிய தமிழில்தான் உள்ளன. ஆயினும், வடமொழி தேவ மொழியென்னும் ஏமாற்றிற்கேற்ப வடமொழி வினைச் சொற் களின் முதனிலைகளையும் (Themes) அடிகளையும் (Stems) வேர் களாகக் (Roots) காட்டியுள்ளனர். மேனாட்டாரும், தமிழை வரலாற்று முறைப்படி ஆராயாமையால், வடமொழியை இயன்மொழியென்றும், ஆரியத் தாய்மொழியென்றும் மயங்கி, வடவர் காட்டியுள்ள போலி வேர்ச்சொற்களை உண்மையான வேர்ச்சொற்களென்றே நம்பியிருக்கின்றனர். வடவர் காட்டியுள்ள தாதுக்கள் (வேர்ச்சொற்கள்) ஏறத்தாழ 1750. அவை எங்ஙனம் தவறானவை என்பது, இங்கு ஐந்தாதுக்களால் எடுத்துக் காட்டப்பெறும். கீர்த் சீர்=சிறப்பு, புகழ். சீர்-சீர்த்தி=பெரும்புகழ். சீர்த்தி மிகுபுகழ். (தொல். 796). சீர்த்தி-கீர்த்தி. ச-க. ஒ.நோ : செய் - (கெய்)-கை, செம்பு-கெம்பு, சேரலம்-கேரளம், சேது-கேது. சீர் என்னும் முதனிலையும், `தி' என்னும் ஈறும், `த்' ஆகிய புணர்ச்சித் தோன்றலும், கொண்ட சீர்த்தி என்னும் தொழிற் பெயரின் (அல்லது தொழிலாகு பெயரின்) முற்பகுதித் திரிபாகிய கீர்த் என்பதை முதனிலையாகக் கொள்வது எத்துணை யியற்கைக்கு மாறானது! வடமொழி நூன்மொழியேயாதலால், அதில் எச்சொல் வடிவையும் எப்பொருளிலும் ஆளலாம். கீர்த்தி என்பதனொடு நேர்த்தி என்பதனை ஒப்பு நோக்குக. இனி, இதற்கு வேராக, க்ரு2 என்பதைப் பாணினியார் (3 : 3 : 97) குறித்துள்ளார். அது கரை என்னும் தென்சொல்லின் திரிபே. கரைதல் = 1. அழைத்தல். "கலங்கரை விளக்கம்" (சிலப்.). 2. சொல்லுதல், கற்பித் அறங்கரை நாவின் நான்மறை முற்றிய (தொல்.சி.பா) 3. எடுத்துச் சொல்லுதல், புகழ்தல். அழைத்தலைக் குறிக்கும் அகவல் என்னும் சொற்போல், கரைதல் என்னும் சொல்லும் பாடுதலை உணர்த்தும். ஆதலால், வட மொழியிற் பாணனை அல்லது பாவலனைக் காரு (இ.வே.) என்பர். ஜ்ரு »H«-Gk. கெரோன் (gero#n)-t. ஜரா. ஜ்ரு என்பது செயற்கைவேர். அதற்குக் கிழமாகு என்னும் பொருள் பொருந்தாது. மந்த்ர் முன்னுதல்=கருதுதல், எண்ணுதல், சூழ்தல். முன்-மன்+திரம் (திறம்)=மந்திரம். ஒ. நோ: மன் + து = மன்று-மந்து-மந்தை. மந்திரம்-மந்த்ர(வ.). மந்த்ர என்னும் வடிவினின்று மந்த்ர் என்றொரு செயற்கைச் சொல்லையமைத்து, அதை முதனிலை யாகவோ வேராகவோ காட்டுவது. எத்துணை நகைப்பிற்கிட மானது! அது. உசாவு அல்லது சூழ் என்னும் பொருளை எங்ஙன் ஏற்கும்? வருத் வள்-வட்டு (வள்+து) - வட்டம்-வ்ருத்த(வ.). L verto (to turn). ஒ. நோ : நட்டம் (நடம்)-ந்ருத்த(வ). வ்ருத்த என்னும் திரிசொல்லினின்று, வ்ருத் என்னும் பகுதியை வெட்டி, அதை வேராகக் காட்டுவது எத்துணைச் செயற்கை முறை! இங்ஙனம் எத்தனையோ தமிழ்த் தொழிற் பெயர்கள் ஆரிய மொழிகளில் முதனிலையாகவும் வேராகவும் காட்டவும் ஆளவும் பெறுகின்றன. வேப் விது-விதிர்-விதிர்ப்பு=நடுக்கம். "mâ®î« É⮥ò« eL¡fŠ brŒí«." (தொல். 799). É⮥ò-nt¥ (t.)= நடுங்கு. வேப்-வேபன= அதிர்ச்சி. (3) இடைச்சொல் (அவ்யய) உபஸர்க்கம்(முன்னொட்டு) அதி (ati, adhi) அந்தர் (antar), அந்தர (antara) இல் (உள்) - L in-inter-t. அந்தர்-அந்தர, அந்த: அநு அல்லுதல்=பொருந்துதல். அல்-அன்-அநு=உடன், பின். அப (apa) அப்பால்- Gk apo, வ. அப. (வ.வ.) உத் உ=மேல். உ-உகள், உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர், உவண், உறை (உயரம்), உன்னு. c-c¤(t.)=nkš. உப (upa) உத்தல் = பொருந்துதல். உத்தி=பொருத்தம், பொருந்து முறை, விளையாடுவார் இணை. உ-ஒ. ஒத்தல்=பொருந்துதல். உ-உவ்=உவ. உவத்தல்=ஒத்தல், உளம் பொருந்துதல், விரும்புதல், மகிழ்தல். உவ-உவமை=ஒப்பு. உ-உவ்வு-ஓய்வு. உவ்வு-உவ்வ-உவ=ஒக்க, பொருந்த, உடன். உவ-உப (வ.) (வ.வ.) அல்-அன்-அந்-ந (முறை மாற்று). நி1 இல் (உள்) - இன்-இந்-நி=உள். நி2 இல்-இன்-இந்-நி=இன்மையாக, மாறாக. ப்ரதி படி-ப்ரதி பர பிற-பர guh òw«-òw-gu(t.)-guh=m¥ghš,ã‹,khwhf. பரி புரிதல்=வளைதல். புரி-பரி=வட்டமாக, சுற்றி. வி விள்-வி=வேறாக. ஸம் கும்முதல்=கூடுதல். F«k-L cum-Gk sys-t. ஸம். குறிப்புச் சொற்களும் அசைகளும் வியப்புக் குறிப்பு : ஆ, ஏ, ஐ, ஒ. இவை இருமொழிப் பொது. M-Ah (t.), ஆகா-ஹாஹா (வ.). துயரக் குறிப்பு : ஆவா-ஹாஹா அத்தன்-அத்தோ-அந்தோ-ஹந்த(வ). அக்கை-அக்-அகோ-அஹோ(வ.). (வ.வ.) விளியசைகள் ஏ-ஹே, ஓ-ஹோ mnl-mnu (t.)-nu. mnlnl-mnunu (t.)-nunu. பாலீறுகள் தமிழ் ஈறு வடமொழியீறு எடுத்துக்காட்டு (பெண்பால்) அனி ஆநி உபாத்யாயாநீ இ ஈ சுந்தரீ ஐ ஆ ஆர்யா கை கா கன்யகா அர் (உயர்வுப்பன்மை) ரு மாத்ரு (ஆண்பால்) அன் அந் ராஜந் (வ.வ.) அன் அ பாண்ட்ய(பாண்டியன்) அர் (உயர்வுப் பன்மை) ரு ப்ராத்ரு மன் மந் வர்மந் மான் மாந் அர்யமாந் இணைப்பிடைச் சொல் உம்உந் தாகும் இடனுமா ருண்டே. (தொல். 777) என்பதால், பெயரெச்ச வினைமுற்றீறன்றி எண்ணிடைச் சொல்லான உம்மும் உந்தாகத் திரிவது பெற்றாம். உந்து-வ. உத்த OE, E and. (வ.வ.) சுட்டும் வினாவும் சுட்டும் வினாவும், ஆரியமும் சேமியமுமான பிறமொழிகளிலெல் லாம் சொற்களாகவே யிருக்கின்றன. தமிழிலோ அவை சொற் களாக மட்டுமின்றிச் சொற்கட்கு மூலமான எழுத்துக்களாகவும் இருக்கின்றன. அவ்வெழுத்துக்கள் உண்மையில் ஓரெழுத்துச் சொற்களே. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி. குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு. ஆஏ ஓஅம் மூன்றும் வினாஅ. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி. என்று தொல்காப்பியம் (43, 44, 301, 31, 32, 552) கூறுவதாலும், சுட்டும் வினாவும் இன்றும் தனி நெடிலாகத் திரவிடத்திலும் வடதிரவிடக் கான் முளையாகிய இந்தியிலும் வழங்குவதாலும், குறில் நெடில் பலுக்க வெளிதா யிருப்பதனாலும், ஆண்டு ஈண்டு யாண்டு (ஏண்டு) என்னுஞ் சொற்கட்கு முதல் குறுகிய வடிவின் மையாலும், சுட்டு வினாவெழுத்துக்கள் முதற்காலத்தில் நீண்டே யிருந்து பின்னர்க் குறுகியமை அறியப்படும். சுட்டடிகளும் வினாவடிகளும் தனியெழுத்துக்களா யிருப்பத னால், அவற்றை இடைச் சொல்லென்று கொண்டனர் முன்னோர். அவை தனியெழுத்துக்களாயினும், பொருளுணர்த்துவ தாற் சொல் லாயும் பலவெழுத்துச் சொற்போன்றே பொருள் நிரம்பியும், இருப்பதை அறிக. ஆவூர், அவ்வூர், அந்தவூர் என்னும் மூன்றும் ஒன்றே. அ = அந்த (that) That என்னும் ஆங்கிலச் சொற்போன்றே, அ, அந்த என்பனவும் சுட்டுப் பெயரெச்சம் (Demonstrative Adjective) என அறிக. பெயரைத் தழுவுவதெல்லாம் பெயரெச்சமே. அது தெரிநிலை வினையாகவு மிருக்கலாம்; குறிப்பு வினையாகவு மிருக்கலாம்; பிறவாறும் இருக்கலாம். இயல்பான சுட்டுக்கள் சேய்மை, அண்மை, முன்மை என மூன்றே. ஆகவே, அவற்றைக் குறிக்கும் ஒலிகள் அல்லது எழுத்துக்களும் ஆ (அ). ஈ. (இ), ஊ (உ) என்னும் மூன்றே. இவை குமரிக்கண்டத்தில் தமிழ்த் தோற்றக் காலத்தில் கைச் சுட்டுக்களுக்குப் பகரமாக (பதிலாக) வாய்ச்சுட்டுக்களாகத் தோன்றிய ஒலிகள், இம்மூவொலிகளன்றி வேறெவ்வொலிகளும் அம்மூவிடத்தையும் சுட்டாமையை ஒலித்துக் காண்க. முச்சுட்டும் முதன்முதல் தமிழில் தோன்றியதனாலேயே, அவை தமிழிலும் அதன் வழிப்பட்ட திரவிடத்திலும் இன்றும் தனியெழுத்து வடிவிலிருப்பதுடன், மூவிடத்தையும் ஒழுங்காகச் சுட்டவும் செய்கின்றன. இஃதொன்றே தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்னும் உண்மையைக் காட்டவும் நாட்டவும் போதிய சான்றாம். வடமொழி திரிமொழி யாதலின், அதிற்சுட்டெழுத்தில்லா திருப்பதொடு, சுட்டுச் சொற்கள் இடமாறியுஞ் சுட்டுகின்றன. எ-டு : அத்ர=இங்கே. அத்ய=இன்றைக்கு. அதுநா=இப்போது. சில அகரச் சுட்டுச் சொற்கள் சேய்மை யண்மையாகிய ஈரிடத்தையுஞ் சுட்டுகின்றன. எ-டு : அத=அது, இது. சில இகரச் சுட்டுக்கள் ஏகாரமாகத் திரிந்துள்ளன. எ-டு : ஏதத்=இது, ஏவம்=இப்படி. சில சுட்டுக்களின் சார்பு மெய்யான தகரம் ஸகரமாகத் திரிந்துள்ளது. எ-டு : தத் (d) = அவன், அவள், அது. (வ.வ) இதன் வேற்றுமைப்பாடு (Declension) வருமாறு :- ஒருமை இருமை பன்மை ஆ பா ஸ தௌ தே முதல் வேற்றுமை பெ.பா. ஸா தே தா: " அ.பா தத் தே தானி " ஒ. நோ : OE si#o, se#o, sie, E she. வினாவெழுத்தும் வடமொழியில்லை. அதோடு, ஏகார (எகர) வடியின் திரிவான யகரவடியும் ககரவடியுமே வடமொழியி லுள்ளன. ஏ-யா. ஏது-யாது. ஏவன்-யாவன். இவை தமிழ். ஏ-எ-எவ்-வெ-கெ. தெலுங்கில் எவற்றினை என்பது வேட்டினி என்று திரிதல் காண்க. தமிழில் உறவியல் (Relative) வினாவும் நேர்வினாவும் ஒரே வகையடிகொண்டிருக்கும். வடமொழியில் உறவியல்வினா யகரவடி கொண்டும் நேர்வினா ககர வடிகொண்டும் உள்ளன. எ-டு : உறவியல் வினாச்சொல் நேர்வினாச்சொல் யத் (d) கிம்=யார், எது யத்ர குத்ர=எங்கு யத : குத்:=எங்கிருந்து யதா (d) கதா (d) = எப்போது இந்தியில் உறவியல் யகர வினாவடி ஜகர வடியாகத் திரிந்துள்ளது. 3. வடமொழி: தொடரியல் (1) தொகைச் சொல் (ஸமாஸ) வேதமொழியின் மூலமாகிய மேலையாரிய முறைப்படி சமற்கிருதச் சொற்றொடரமைப்பு ஒரு மருங்கு வேறுபட்டி ருப்பினும், வேத மொழியின் வடதிரவிட அல்லது பிராகிருதக் கலப்பினாலும், சமற் கிருதத்தின் தமிழ்த் தொடர்பினாலும், அது ஒரு மருங்கு தமிழையும் தழுவியுள்ளது. சமாசம் என்னும் சமற்கிருதக் கூட்டுச் சொற்கள் அல்லது தொகைச் சொற்கள் பின்வருமாறு ஐவகைப்படும். (1) துவந்துவம் (த்வந்த்வ) உம்மைத் தொகை (2) தற்புருடன் (தத்புருஷ) வேற்றுமைத் தொகை (3)கருமதாரயன் (கருமதாரய) பண்புத்தொகை (இருபெயரொட்டு) (4) பகுவிரீகி (பகுவ்ரீஹி) அன்மொழித் தொகை. (5) அவ்வியயீபவாம் (அவ்யீபாவ) இடைச் சொல்லியல் தொகை அல்லது வினையெச்சவியல் தொகை. ஸமாஸ என்னும் சொல்லை, ஸம் + அ2 என்று பகுப்பர். ஸம்=கூட. அ=எறி. ஸமாஸ=(இருசொல்லை) உடனிட்டது. கருமதாரயனைப் பல இலக்கண நூல்கள் தற்புருடனில் அடக்கிக் கூறும். அது பொருந்தாது. எண்ணுப் பண்புத் தொகையைத் தனியாய்ப் பிரித்துத் த்விகு என்று பெயர் கொடுப்பர். பொதுவாக நோக்கின், வடமொழிச் சமாசப் பகுப்பினும் தமிழ்த் தொகை தொடர்ப் பகுப்பு மிகச் சிறந்தது. அடுக்குத் தொடர் (வீப்ஸா) தமிழிற் போன்றே வடமொழியிலும் சொற்கள் அடுக்கிவரலாம். எ-டு : வ்ருக்ஷ்ம் வ்ருக்ஷ்ம் ஸிஞ்சதி=மரம் மரமாய்த் தண்ணீர் ஊற்றுகிறான். (2) சொற்றொடர் (வாக்ய) வடமொழிச் சொற்றொடர்ச் சொல்வரிசை பெரும்பாலும் தமிழ் முறையை ஒத்ததே. எழுவாய் முன்னும் செயப்படுபொருள் இடையும் பயனிலை. பின்னும் வருவதே இயல்பான முறை. பாலக : க்ரந்தம் படதி=பையன் பொத்தகத்தைப் படிக்கிறான். [ th ïnk ghyfh th M«u« ¡UàzªJ.=mtdhtJ இந்தப் பையன்களாவது மாம்பழத்தை எடுத்துக் கொள்ளட்டும். சொற்றொடரின் மூவுறுப்பும் அடைமொழியொடும் வரும். அடைமொழி பொதுவாக அடைகொளிக்கு முன்நிற்கும். எ-டு : ரூபவதி த்ரீ = அழகான பெண். அப்யகார்யஸதம் க்ருத்வா பர்த்தவ்யா=நூறு தீவினைகளைச் செய்தும் காக்கப்படவேண்டும். இரு, உண்டு என்னும் இணைப்பு வினையின்றிப் பெயரும் பயனிலையாக வருவதுண்டு. எ-டு : ஸிம்ஹ : ச்வாபதராஜ : = அரிமா விலங்கரசு. ஏஷ மே நிச்சய : = இது என் தீர்மானம். இனி, சொற்றொடரின் மூவுறுப்புக்களும், ஏதேனும் ஒரு பயன் நோக்கி, பொருள் மாறா வகையில் மேற்குறித்த முறை மாறியும் வரும். மணீம் சோரயதி தேந : = மணியைத் திருடுகிறான் திருடன். இனி, கூட்டுக் கிளவியப் பயில்வு, நெடுந்தொடர் யாப்பு, சார்புக் கிளவியங்கட்குப் பகரமாக எச்சவினை வரல், முற்றுவினைக் கீடாக இறந்தகால வினையெச்ச ஆட்சி, நேரல் கூற்றின்மை முதலிய கூறுகளிலும், வடமொழிச் சொற்றொடரமைப்பு தமிழைத் தழுவியதே. வடமொழியிலக்கணம் எழுத்து, சொல், சொற்றொடர் என்னும் மூன்றொடு முடிகிறது. செய்யுளிலக்கணம் சந்த என்றும், அணி யிலக்கணம் அலங்கார சாதிரம் என்றும் வேறு நூல்கள்போல் வெவ்வேறாகக் கூறப்படும். தமிழில் வடமொழியில்லாப் பொருளிலக்கண முண்மையாலும், பண்டை யிலக்கிய மெல்லாம் செய்யுள் வடிவி லிருந்தமையா லும், சொல்லையடுத்த மொழியறுப்பு பொருளென்று கொண்டு, அதனுள்ளே செய்யுளையும் உடம்பின் இயற்கையழகு போற் செய்யுளிலமைந் திருக்கும் அணியையும் அடக்கி விட்டனர், மெய்ப் பொருளியல் முற்றத் துறைபோய மேதகு பண்டைத் தமிழ் நூலோர். நன்னூல், சின்னூல் முதலிய தென்னூலும் எழுத்துஞ் சொல்லும் சொற்றொடருமே கூறுகின்றனவேயெனின், அவை வடநூன் முறை தழுவிய பின்னூலென்றும், தொல்காப்பியம்போல் நிறை வான பிண்ட நூலாகாது குறைவான துண்ட நூலே யென்றும், கூறி விடுக்க. வடமொழி என்பது ஒருகாலும் பேசப்படாத நூன்மொழியே யாதலின், அதன் வரலாறென்பது உண்மையில் இலக்கிய வரலாறே. (வ.வ.) வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு 1. எழுத்துக்களின் தொகை (உண்மையானபடி) வட மொழியில் 42 : தென்மொழியில் 30. 2. வடமொழியொலிகள் வலியன; தென்மொழியொலிகள் மெலியன. 3. மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு. 4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை. 5. வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும். 6. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும். 7. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை. 8. முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை. 9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை. 10. பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன. 11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை. 12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை. 13. குறிப்புவினை வடமொழியில் இல்லை. 14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமையேற்கும். 15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும். 16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வரு மொழியா யிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகி யுமே அங்ஙனம் வரும். 17. வினைத்தொகை வடமொழியில் இல்லை. 18. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை. 19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடு களும் இனங்களும் வடமொழியில் இல்லை. 20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை. இனி, வடமொழி மேனாட்டரிய மொழிகளைச் சேர்ந்ததென் பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க. 1. தன்மை முன்னிலைப் பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. Eng. நான் aham ego ego ieh I(ie O.E) நாம் vayam emeis nos wir we நீ tvam tu, su tu du thou நீர் yuyam suge vos euch, ihr you 2. சில முறைப்பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. தந்தை pitru pater pater vater father (fader o.e) தாய் matru meter muter matter mother மகன் sunu huios sohn son மகள் duhitru thugatar tochter daughter உடன்பிறந்தான் bhraru frater frater bruder brother உடன்பிறந்தாள் svasru sosor schwester sister (orig. sostor) 3. சில உறுப்புப் பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. தலை kapala kafale caput haupt head (heafod,O.E) மூக்கு nasa nasus nose உள்ளம், குலைக்காய் hrudaya kardia crodis herza heart பல் dant ontos dens zahn tooth கால்முட்டி janu gonu genu knie 4. எண்ணுப் பெயர்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. ஒன்று eka eis, en unus eins one இரண்டு dvi duo duo zwei two மூன்று thri treis tres drei three நான்கு chathur tettares quatuor vier four ஐந்து panchan pente quinque fnnu five ஆறு shash eks sex sechs six ஏழு sapthan epta septem stemben seven எட்டு ashtan okto octo acht eight ஒன்பது navan ennea novem neun nine பத்து dasan deka decem zehn ten இருபது visathi eikati viminti zwanzig twenty நூறு satha ekaton centum hundert hundred 5. சில பொதுச்சொற்கள் தமிழ் Skt. Gk. L. Ger. E. வாசல் dhvara thura fores tor door நடு madhya messos medius mitte middle (methyos) வெப்பம் gharma thermos formus warm warm உண் ad edein dere essen eat அறி vid eidon video wissen wit மரம் daru drus zehren tree நீர் uda udor unda wasser water வேர் (வேர்வை) svid idros sudare swizzan sweat அறி jna gnomi gnosco kennen know சொல் vartha eiro verbam worte word (to speak) பிற jan genea genea generate பெயர் naman onoma nomen name name உண்மை yata eteos etymon etymo-logy 6. `இரு' என்னும் வினைச்சொல் தமிழ் Skt. Gk. L. Ger. A.S. இருக்கிறேன் asmi esmi sum bin eom இருக்கிறோம் 'smas esmes sumus sind sind இருக்கிறாய் asi eis es bist eart இருக்கிறீர்(கள்) satha este estis sied sind இருக்கிறான் asti esti est ist is இருக்கிறார்(கள்) santi eisi sunt sind sind மேனாட்டாரிய மொழிகட்கும் வடமொழிக்கும் சொற்களில் ஒப்புமை யிருப்பதுபோலவே, இலக்கண நெறிமுறைகளிலும் ஒப்புமை யிருக்கின்றது. பார்ப்பனர் தென்னாட்டிற்கு வந்த புதிதில், தமிழைச் சரியாய்ப் பேசமுடியவில்லை. இப்போதுள்ள மேனாட்டாரின் தமிழ்ப் பேச்சுப் போன்றே, அக்காலப் பார்ப்பனர் பேச்சும் நகைப்பை விளைவித்தது. அதனால், தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் (1-ஆம் சூ.) உரையில், ஆரியர் கூறும் தமிழை நகைச் சுவைக்குக் காட்டாக எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். கபிலர், நச்சி னார்க்கினியர் முதலிய தமிழறிஞர் பலர் ஆரியப் பார்ப்பன ரேனும், அவர் ஒரு சிறு தொகையினரே யாவர். பெரும்பாற்பட்ட பார்ப்பனர் புதிதாய் வந்தவராயும் தமிழைச் சரியாகக் கல்லாதவராயும் இருந்தமையின், தமிழைச் செவ்வையாயப் பேசமுடிவில்லை. மேனாட்டாருள் பெகி, கால்டுவெல், போப், உவின்லோ முதலிய பல சிறந்த தமிழறிஞரிருந்ததையும், பிறருக்கு அவரைப்போல் தமிழைச் செவ்வையாய்ப் பேச முடியாமையையும் மேற்கூறியதுடன் ஒப்பிட்டுக் காண்க. தமிழர்க்கும், வடமொழி அதன் செயற்கையொலி மிகுதிபற்றி நன்றாய்க் கற்க வராமையின், "பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ" என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய். (தேவா. 844:5) என்று கூறியதும் இக் கருத்துப்பற்றியே. குலவழக்கு : பார்ப்பனர் இப்போது நன்றாய்த் தமிழறிந்தவராகக், கருதப்படினும், வடமொழிப்பற்றுக் காரணமாக, இயன்றவரை வடசொற்களைக் கலந்து மணிப்பவள நடையிற் பேசுவதே வழக்கம், சாப்பாடு, காரணமாக, அடைமானம், தண்ணீர், திரு விழா, குடியிருப்பு, கலியாணம் முதலிய சொற்களுக்குப் பதிலாக, முறையே போஜனம், வியாஜமாக, போக்கியம், தீர்த்தம், உத்சவம், வாசம், விவாகம் முதலிய சொற்களையே வழங்குவர். இவர்க ளிடத்தினின்றே தமிழரும் பல வடசொற்களைக் கற்றுத் தம் பேச்சில் வேண்டாது வழங்குகின்றனர். ஆங்கிலச் சொற் களைத் தமிழிற் கலந்து பேசுவது உயர்வென்று தவறாய் இப்போது எண்ணப்படுவது போலவே, வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் முற்காலத்தில் உயர்வா யெண்ணப்பட்டது. இதற்குக் காரணம் பார்ப்பனத் தலைமையே. அம்மாமி, அம்மாஞ்சி (அம்மான்சேய்), அத்திம்பேர் (அத்தியன்பர்) முதலிய முறைப்பெயர் வடிவங்களும், சாஸனம் (பட்டயம்) தீர்த்தம் முதலிய பொருட்பெயர்களும், அவா போய்ப்பட்டா, நேக்கு, போட்டுண்டு, சொல்றேள் (அவர்கள் போய்விட்டார்கள், எனக்கு, போட்டுக்கொண்டு, சொல்கிறீர்கள்) என்பன போன்ற கொச்சை வழக்கும், ஆடவர் பெண்டிருள் மூத்தாரையும் அடீ என்ற விளிப்பதும், பார்ப்பனத் தமிழ்ப் பேச்சிற்கு ஒரு தனித்தன்மை யூட்டுவனவாகும். பார்ப்பனர் சில தனிச்சொற்களால் தங்களையும் தங்கள் பொருள்களையும் பிரித்துக் காட்டுவதுமுண்டு. உ-ம் : மங்கலம், சதுர்வேதி மங்கலம் - ஊர் அக்கிராகாரம் - குடியிருப்பு பிரமஸ்ரீ - அடைமொழி பிரமதாயம் - மானியம் பிரமராயன் - அரசப்பட்டம் குமாரன் - மகன் பட்டவிருத்தி - வேதங்கற்ற பிரா மணனுக்கு விட்ட இறையிலி நிலம் பார்ப்பனர் தமிழ்ப்பற்றின்மை, தனித்தமிழை விரும்பாததி னாலும், யூனிவர்சிட்டி, கூல் பைனல் என்று ஆங்கிலச் சொற் களை மொழிபெயர்க்காது வழங்குவதினாலும் அறியப்படும். (5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வசதியில்லாத பொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். அங்ஙனமிருப்ப வரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாள ராயுமே யிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தையிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடு கூடப் பார்ப்பனருக்குத் தனியாக வுளது. (6) ஒழுக்கம் : பார்ப்பனர் தமிழ முறைப்படி, விருந்தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல் லாமை, துறவு முதலிய அறங்களின்மையில் துறவறத் தாருமல்லர். இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள். 81) ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும விருந்து செய்வது விருந் தோம்பலாகாது. வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே. எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டு மென்ற ஏற்பாடு இன்றும் இருந்துவருகின்றது. வடமொழிச் சென்ற தென்சொற்கள் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் Turanian, Semitic, Aryan என முப் பெரும் பிரிவுகளா யடங்கும். அவற்றுள் ஆரியக் கவையில் Teutonic கிளைக்குத் தலைமையானது வடமொழி யென்னும் சமற்கிருதம்; ஏனைய German, Dutch, English முதலியன. மேனாட்டு மொழியாராய்ச்சிப் புலவர், இலக்கண ஒற்றுமை யாலும் இலக்கியச் சொற்களின் ஒற்றுமையாலும் வடமொழியைச் செருமன் மொழிக்கு இனமாகக் கண்டிருக்கின்றனர். ஆகவே, இந்திய ஆரியரும் செரு மானியரும் ஒரு காலத்தில் ஒரே வகுப் பினராய் ஒரேயிடத்தில் (மேலாசியா) வாழ்ந்திருக்க வேண்டும். சரித்திர நூல்களெல்லாம் பெரும்பாலும் கிறித்து வுக்குப் பிற்பட்டனவாதலின், அவர்க்கு முற்பட்ட வரலாறுகளையெல் லாம் உணர்தற்கு மொழிநூலே சிறந்த கருவியாக்கின்றது. ஒரு வகுப்பாரை இன்னாரென உணர்தற்கு அவரது பேச்சினும் சிறந்த கருவி பிறிதொன்றில்லை. நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (குறள். 959) ஆகவே, இந்திய ஆரியர் செருமானியர்க்கு இனமென்றும் அவர் பேசிய மொழியும் செருமனுக்கு இனமென்றும் அறியப்படும். அதை அவ்விரு மொழிகட்கும் இன்றியமையாத சில பொதுச் சொற்களாற் காட்டுதும். இங்கிலீஷ் செருமன் மொழியினின்றும் பிறந்ததாதலின், கீழ்வரும் இங்கிலீஷ் சொற்களெல்லாம் செருமனென்றே தெளிக. (Jutes, Saxons, Angles என்ற மூவகைச் செருமானிய வகுப்பினரே கி.மு. 449-ல் செருமனியினின்றும் பிரித்தானியாவுக்குப் போய் இங்கிலீஷ் மொழியை வழங்கினவர்.) English சமற்கிருதம் English சமற்கிருதம் brother பிராதா decimal, decem தசம் book புதகம் dentem தந்தம் common சாமானியம் eight அஷ்டம் create சிருஷ்டி establish தாபி daughter தௌஹித்ரி father பிதா (மகளின் மகள்) germ கிருமி generation b#dd« str.(anold suffix) திரீ gravity குருத்துவம் stand தா (root) house ஆசயம் shaving க்ஷவரம் heart ஹிருதயம் special விசேஷம் item இதம் seven சப்தம் inter அந்தர் six சஷ்டி idea ஐதீகம் sui சுயம் ignorance அஜ்ஞானம் serve சேவி ignition, ignis அக்னி she சா murther,murder ம்ருத் sweat வேத mother மாதா terra தரை mediator மத்தியதர் tree தரு name நாமம் two த்வா nose நாசி three திரீ nine நவம் that தத்: person புருஷன் they- தே prime பிரதமம் voice, vocal வாக்கு preacher புரோகிதர் (verto (root) விருத்தம் science சாதிரம் word வார்த்தை இனி இலக்கண ஒற்றுமைகளாவன : 1. மெய் மொழி முதலாதல் 2. ஒருமை இருமை பன்மை என எண் மூன்றாதல் 3. பெயரெச்சங்கள் பால் எண் வேற்றுமைகளைக் காட்டல் 4. இலக்கணப் பால் (grammatical gender) 5. வினைமுற்றுகள் பால் காட்டாமை 6. பயனிலை வினைச்சொல்லாயே யிருத்தல் இவை போன்றவை இன்னும் எத்துணையோ உள. முக்கிய மானவை மட்டும் இங்கு உதாரணமாகக் குறிக்கப்பட்டன. ஆரியம் என்னும் குறியீடு முதன்முதல் ஆரிய மொழிகள் எல்லா வற்றிற்கும் பொதுவாய் வழங்கிற்று. பின்பு Teutonic வகுப்புக்கு மட்டும வழங்கத் தலைப்பட்டது. அதன் பின்பு இந்திய ஆரிய மொழியாகிய சமற்கிருதத்திற்கே சிறப்பாய் வழங்கிற்று. இந்திய ஆரியர் நால் வகுப்பாராயினும், அவர்களுக்குள் பிராமணர் மட்டும் இக் குறியீட்டைத் தமக்கும் தம் மொழிக்கும் வரை யறுத்துக்கொண்டனர். ஆரிய வகுப்பு மொழிகளுள் Latin, Greek என்ற இரண்டும் முற்பட்டவை. Teutonic மொழிகள் அவற்றிற்கு பிற்பட்டவை. ஐரோப்பிய அரசுகட்கெல்லாம் முந்திய கிரேக்க சரித்திரம் கி.மு. 3000ஆம் ஆண்டினின்று தொடங்குகின்றது. ஆகவே, சமற்கிருத ஆரியர் வட இந்தியாவிற் குடியேறினதும் அதே காலமாய்த்தா னிருக்கவேண்டும். உலகில் முதன்முதல் உண்டானது தமிழ். தமிழர் (கி.மு. 8000) குமரிநாட்டினின்றும் வடக்கே போய்ச் சின்ன ஆசியாவில் குடியேறினர் என்பது பாபிலோனியக் குகை வெட்டாலும் குழி வெட்டாலும் தெரிய வருகின்றது. அங்கேதான் தமிழ் சேமியக் (Semitic) கிளையாகத் திரிந்தது. எபிரேயம் (Hebrew), அரபி (Arabic) முதலியன சேமியக் கிளை மொழிகள். அவற்றையடுத்து Latin, Greek முதலிய ஆரியக் கிளை மொழிகள் பிறந்தன. ஒரு தாய் மொழியினின்றும் ஒரு கிளைமொழி உண்டாயிருப்பின் அதன் இன்றியமையாத முதற் சொற்களெல்லாம் தாய்மொழியா யிருக்கும். ஏனையவெல்லாம் அதற்கச் சொந்தமான ஆக்கச் சொற்களே. அவற்றுள் ஒரு பகுதி பிறமொழிகளினின்றும் கடன் கொண்ட திசைச்சொற்களாயிருக்கும். ஒரு மொழியின் ஆக்கச் சொற் பெருக்கத்திற்கும் சுருக்கத்திற்கும் காரணம் அம் மொழியை வழங்கும் மக்களறிவே யாகும். ஆரியக் கிளைகளில் ஒன்றாகிய Teutonic என்பது Greko-Latin என்ற பெருங்கிளையினின்றும் கிளைத்தபொழுதே (அதாவது சமற் கிருத ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்னமே) அதில் நூற்றுக்கணக் கான தமிழ்ச்சொற்கள் கலந்திருந்தன. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து தமிழரோடு (கி.மு.2500) கலந்தபின் எண்ணிறந்த தென் சொற்கள் வடமொழியிற் கலந்தன. ஆரியர் வருமுன்னும் வந்த பொழுதும் வடஇந்தியாவில் வழங்கிவந்தவை யெல்லாம் கொடுந் தமிழ் மொழிகளே. ஆரிய வருகைக்கு முன் சமற்கிருதத்தில் அல்லது Teutonic மொழி களிற் கலந்திருந்த தென்சொற்களிற் சில: Tamil English Sanskrit அரத்தம், இரத்தம் red ரக்தம் அரசன் Rajah ராஜா அகம் Gk.eikos, house ஆசயம் ஆன்மா animos ஆத்மா இலக்கம் lakh லக்ஷம் உதகம் water உதகம் எட்டு eight அஷ்டம் கோடி crore கோட்டி சக்கரம் circle சக்கரம் சக்கரை saccharine சர்க்கரை சின்னம் signum சின்னம் தரை terra தரா தரு tree தரு நாகம் snake நாகம் நாவாய் L. navis நௌகு பாதர் father பிதா பாதம் foot பாதம் பேசு speak பாஷி மன் man மநு மத்தி mid மத்தி மனம் mind மன மாத்திரை metre மாத்ரா மாதர் mother மாதா வண்ணம் varnish வர்ணம் வடிவம் body ப்ரதிமா வரை marry வரி வாரணம் L. marinus வருணர் வேட்டி L. vestis வேஷ்டி vesture வத்ரம் சமற்கிருதத்திற்கு முதற்காவியம் இராமாயணம். இராமர் இருந்தது இடைச்சங்க காலம். ஆகவே, தொல்காப்பியமும் அகத்தியமும் இராமாயணத்திற்கு முற்பட்டனவாம். வட மொழிக்கு முதல் இலக்கணம் பாணினீயம். பாணினி பாரதத்திற் கும் பிற்பட்டவர். பாரதகாலம் 1000 B.C.; இராமாயண காலமோ 2000 B.C.; ஆகவே, பாணினீயம் தொல்காப்பி யத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்டதாகும். ஆரிய வருகைக்கு முன்னமே தமிழர் முத்தமிழிலும் பல்கலை களிலும் தேர்ந்திருந்தனர். அகத்தியம் வழிநூலே யன்றி முதனுலாகாது. இனி, வடமொழிச் சென்ற தென்சொற்களாவன: மதம் மதி + அம் = மதம். தேய் + உ = தேய்வு - தேவு - தே - தீ. தேய்வு + அம் - தேய்வம் - தெய்வம் Gk. Theos. தேய்வம் - தேவம் - தேவன். தெய்வம் என்பது முதலாவது நெருப்பையும் பின்பு சிவத்தையுங் குறிக்கும். (திருவாசக விரிவுரை காண்க) சிவ + ம் = சிவம் - சிவன் - சிவை. உரு + திரம் = உருத்திரம் - உருத்திரம் - ருத்ரன் = சினன். உருத்தல் = சினத்தல், திரம் தொழிற்பெயர் விகுதி. அரி + அம் = அரம் - அரன். ஓ - ஓம் - ஓங்காரம் or ஓகாரம். ஓவென்பது மூல வொலிக்குறிப்பு. ஒல், ஒலி, ஓலம், ஒசை, ஓதை முதலிய ஓசைபற்றிய சொற்களெல்லாம் ஓகர ஓகார முதன் மொழிகளாதல் காண்க. ரீ என்பது ரீங்காரமானாற் போல ஓ என்பது ஓங்காரமாயிற்று. உரு + திரம் + ஆக்கம் = உருத்திராக்கம் - ருத்திராக்ஷம் (உருத்தி ராக்க விளக்கங் காண்க.) வி + பூதி = விபூதி. புழுதி - பூதி; வி, உபசர்க்கம். ஆணவம் : ஆள் - ஆண் - ஆண்மை - ஆணவம். மாய் + ஐ = மாயை : ஐ. - தொ. பெ.வி. காமி + அம் = காமியம், காம் + இயம் என்றும் பிரிக்கலாம். ணஇயம் ஒரு தொழிற்பெயர் விகுதி. காம் + அம் = காமம். காம் + அர் = காமர். குமரன், குமரி - கொம்மை (திரட்சி) என்னும் பண்பினடியாகப் பிறந்தவை. cf. virgin Gk. orago - to swell. சேய் (zeus), முருகன், வேலன் என்பன குமரற்கு மறுபெயர்கள். சண்டிகை - சள்- சள்ளை - சண்டை - சண்டன் - சண்டி - சண்டிகை. காளி : கள் - கள்ளம் - காளம் - காளி. - களம் - களங்கம் = கரும்பு. சின்ன : சின + அம் = சினம் - சினன். விஷ்ணு : விண் - விண்டு. விண்ணைப்போல் நீலமாயும் எங்கும் நிறைந்துமிருப்பவன். மாயோன் : மா - மாய் - மாயோன். மா = கருப்பு. கிருஷ்ணன் : கள் - கள்ளன் - கண்ணன். மாயோன், கண்ணன் முதலிய பெயர்கள் கிருஷ்ணாவதாரத்திற் புதிதாய் உண்டானவை யல்ல. அதற்கு முந்தியே வழங்கினவை. "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டிருப்பது காண்க. அரங்கன் :- அரங்கம் - அரங்கன். அரங்கம் = ஆற்றிடைக்குறை. இராமன் :- இராமம் - இராமன். இராமம் என்பது திருமண்காப்பு. இராமம் = இரேகை வரி. இராமக் கரும்பு என்னும் வழக்கு நோக்குக. வடநாட்டில் இதைத் தவறாக நாமம் என்று வழங்குகின்றனர். இராமர் ஒரு வைணவ பக்தர். இராமருக்கு முன்பே மால் வழிபாடு தமிழ்நாட்டி லிருந்தது. இரண்டு, அலம்பு, இலக்கு, உலாத்து முதலிய சொற்கள் உயிர்முதல் நீங்கி வழங்குவதுபோல அரங்கன் இராமன் முதலிய சொற்களும் உயிர் முதல் நீங்கி வழங்குகின்றன. நாராயணன்: நாரம் + அயனன். வருணன் : வார் + அணன் - வாரணம் - வாரணன் - வருணன். வார் + இ = வாரி. வார் + இதி = வாரிதி. ஆத்மா : ஆன் + மா - ஆன்மா. ஆன் - பசு. மா பெருமைப் பொருள் விகுதி. மான் என்பது ஈறு குறைந்து நின்றதெனினும் ஒக்கும். Gk. animos. வடமொழியில் ஆதமா சரீரத்தைக் குறிக்கும். நரன் : நரை + அன் = நரன் = நரைப்பவன். பதி : பதிக்குத் தலைவன் : இடவாகு பெயர். பதி = நகர். வீடு. பசு : பாசத்தாற் கட்டப்பட்டது பசு. பாசம் : பசுமை - பச்சை - பாசி - பாசம், பாசம். பாசம் போற் பிணிக்குங் கயிறு: கயிறுபோற் பிணிக்கும் மலம். பாசம் என்பதற்கு ஆசை யென்று பொருள் கூறினும் பொருந்தும். நரகம் : நரகல் - நரகம். cf. dungeon, from dung காயம் - ஆகாயம். காயம் = கருப்பு. `காயப் பெயர்வயின்' என்று தொல்காப்பியத்துள் வருதல் காண்க. பூதம் : பொது - பொதுக்கு - பொந்து - பூதம். உலகம் : உல + கு = உலகு. உலகு + அம் = உலகம். உலத்தல் = அழிதல். நீர் + அம் = நீரம் - நாரம் - நார் + அம். சலி + அம் = சலம். சலி + அனம் = சலனம். சலி + அதி = சலதி. சலித்தல் = அசைதல். சலிப்பு என்னும் உலக வழக்கையும் அசைவு என்னும் மெய்ப்பாட்டையும் ஒப்பு நோக்குக. காலம் - கால் + அம் = காலம். சமை + அம் = சமையம். (விதி முதனிலைத் தொழிலாகுபெயர்.) வானநூல் சூரியன் - சுர் - சுரன் - சூரன் - சூரியன். Gk. sol. சுர் என்பது ஒரு வெம்மைக் குறிப்பு. சுர் + அம் = சுரம் = காய்ச்சல். பாலைநிலம். மதி - காலத்தை மதித்தற் கிடமானது. மதி + அம் = மாதம் cf. Moon. மானி + அம் = மானம். மதியால் உண்டாவது மத்தம். cf. L. lunacy, from luna. தாரகை - தார் போல்வன. புதன் : புத்தன் - புதன். புத்தி - உத்தி. சனி : சல் - சல்லியம் - சனி. கோள்கள் ஏழேயன்றி ஒன்பதாகா. ஆயின் நாள்களும் ஏழன்றி ஒன்பதாயிருத்தல் வேண்டுமென்றறிக. இராசி = (race) கூட்டம். மேஷம் : மேழகம் - மேழம் - மேஷம். ரிஷபம் : விடை - விடலை - விடபம் - இடபம். ஆ + விடை = ஆவிடை. விடைத்திருப்பது விடை. cf. குண்டாயிருப்பது குண்டை. கோழிவிடை என்னும் உலகவழக்கைக் காண்க. கும்பம் : கும் - குமி - கும்பம். கும்பல் = குவிதல். கும்பு + இடு = கும்பிடு. கும்பு + அல் = கும்பல். கும்பு + அம் = கும்பம். கும்பு + அனை = கும்பனை (company). கும்பு - கூம்பு. குமி - குவி. கும்பு - குப்பு. குமி + ழ் = குமிழ். குப்பு + ஐ = குப்பை. குப்பு + அல் = குப்பல். மீனம் : மின் - மீன் - மீனம். கன்னி: கன் + இ = கன்னி. கன்னுதல் = பழுத்தல். cf. maturity, from mature - to ripen. துலாம்: தால் - தாலம் - துலை - துலாம். சிங்கம்: சிங்கு + அம் = சிங்கம், அழிப்பது. சிங்கல் = குறைதல், அழிதல். கற்கடகம்:- கல் + கடகம் = கற்கடகம், கல்நண்டு வடவை: வடம் + ஐ = வடவை, வடக்குள்ள நெருப்பு c.f. Aurora Borealis, the northern light. aurora - fire; borealis - northern. வடவை + முகம் = வடவைமுகம். இதைப் பெடவா முகம் எனத் திரித்துப் பெட்டைக் குதிரை என்று பொருளுரைப்பர். வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து -வீரராகவர் அக்கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ -தாயுமானவர் பூகோளம் கோளம்: குழு - கோளம் - கோலி. மண்டலம்: மண் + தலம் = மண்டலம் = வட்டம். பூமி வட்டமாயிருப்பது தமிழர்க்குத் தெரிந்திருந்தது. இடை யென்னும் உறுப்புப்பெயர் அம்சாரியை பெற்று இடமா னாற் போல, தலை யென்னும் உறுப்புப்பெயர் அம்சாரியை பெற்றுத் தலமாயிற்று. இடப்பெயர்கள் பெரும்பாலும் சினைப்பெயர்களாகவே யிருக்கும். கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்னிடை கடைதலை வலமிடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். (தொல்.சொல்.வேற்.20) மண்டலம் - மண்டிலம். மண்டலித்தல் - வட்டமிடுதல். திங்கள் மண்டிலம் = திங்கள் வட்டம். கண்டம் : கண் - கண்டு - கண்டம். தீவு: தீர் - உ = தீர்வு - தீவு. தரைப் பாகத்தினின்றும் தீர்த்திருப்பது. இதைத் த்வீயம் என்று திரித்து இரு பக்கத்தில் நீரால் சூழப் பட்டிருப்பதென்று பொருளுரைப்பர். இலக்கணம் : இலக்கு + அணம் = இலக்கணம் - லக்ஷணம். இலக்கு + இயம் = இலக்கியம் - லக்ஷியம். இலக்கித்தல் = எழுதுதல் (சீவக. 180) cf. grammer from Gk. gramma, a letter, Gk. grapho, to write literature from letter. கரம், காரம், கான், ஏனம் - தமிழ் எழுத்துச் சாரியைகள். ஆய்தம் : ஆய் + தம் = ஆய்தம். ஆய்தல் = ஆரிதல். மாத்திரை: மா + திரை = மாத்திரை. மாத்தல் = அளத்தல். மா + திரம் = மாத்திரம். மா என்பது ஓர் எண்ணளவுக்கும் ஒரு பரப்பளவுக்கும் பெயர். பகுதி : பகு + தி = பகுதி - பாதி. பகு - வகு. பகு + அம் = பக்கம் = பக்ஷம் - பாகம். பக்கம் - பாங்கு - பாங்கன். பகு + அல் = பக்கல் - பகல் - பால். பகு + ஐ = பகை; பகு - பா; பாத்தீடு - பாதீடு. பா + தி = பாத்தி. பகுதி - பிரக்ருதி. மூலம்: முள் - முளை - மூலம். விகுதி : விகு + தி = விகுதி. விகு - வீ. வீதல் = முடிதல். விகுதி - விக்ருதி. சூத்திரம்: சூ + திரம் = சூத்திரம், சருக்கம். வண்ணம்: பண் - பண்ணம் - வண்ணம் - வண்ணகம். சந்தம்: - ஒலிக்குறிப்புப் பற்றியது. சந்தடி என்பது வழக்கு. பண்ணத்தி: பண் + அத்தி = பண்ணத்தி. உருபு: உரு + பு = உருபு; உரு + உ = உருவு. உருவு + அம் = உருவம். உருத்தல், தோன்றுதல். உரு x அரு. cf. உறு x அறு. உருவம் from ரூபம். காரணம்: கரு - கருவி - கரணம் காரணம் - காரியம். கரு - கருப்பு - கருப்பம். மேகம் சூல்கொண்ட பின் கருத்திருத்தல் காண்க. ஏது: ஏது என்று வினவுவதற்குக் காரணமாயிருப்பது. vf. the why; the how. அம்போதரங்கம்: அம்பு + தரங்கம். அம் - அம்பு; தரங்கு + அம் = தரங்கம், கரையைக் குத்துவது. உவமை: உவ + மை - உவமை. உவத்தல் = விருப்புதல். உவம வுருபுகள் பெரும்பாலும் விருப்பு வெறுப்புப் பொருள்களிலேயே வரும். உவமை - உபமானம். எ-டு: நாட = விரும்ப. புகல - போல. புகலல் - விரும்பல். vf. like, similar, to be pleased with. உருவகம்: உரு + அகம் = உருவகம். ஒன்றை மற்றோர் உருவாகச் சொல்லுதல். உருவகம் - ரூபகம். இசை, நாடகம் சுரம்: சுரை + அம் = சுரம். சுரை = துளை. நாகத்திற்குப் பிரியமானது நாகசுரம். தொனி: தொள் - தொளை - தொண்டை - தொனி. இராகம்: அராகம் - இராகம். கலிப்பா வுறுப்பு. தாண்டவம்: தாள் - தாண்டு - தாண்டவம். நடம் - நட - நடி - நடம் - நட்டம். நடி + அம் - நடம். நடி + அகம் = நாடகம். மண்டலம் = mandoline. சுரவீணை - saraphina. குடம் - குடை + அம் = குடம், வளைந்திருப்பது. குடம் - கடம். அரசு அரி - அரம் - அரவு - அரசு - அரசன், Gk. archon. அரைசன் - அரையன் - Roy, Royal. மரங்கட்குள் அரசு போன்றிருப்பது அரசமரம். சேரன்: சாரல் - சேரல் - சேரன் - சேரலன் - கேரளன். சோழன்: சோளம் - சோழம் - சோழன். கள்ளர்வெட்டி (மக்கா)ச் சோளம் சோழநாட்டில்தான் சிறப்பாய் விளைகிறது. பாண்டியன்: பாண்டி + அன் = பாண்டியன், வீரன். பாண்டி = வட்டம். பாண்டில் = எருது. பாண்டியன் காளை போன்றவன். பாண்டவர் சம்பந்தப்பட்டவன் என்று Caldwell கூறியிருப்பது தவறு. பாண்டியன் பெயர் பாரதத்திற்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திற் கூறப் பட்டுள்ளது. சாமம்: சமம் - சாமம். பேதம்: பேதி + அம் = பேதம். தானம்: தா + அனம் = தானம். தண்டம்: தண்டி - தண்டு - தண்டம். தண்டி + அனை = தண்டனை. தண்டி - தடி. தடித்தல் - பருத்தல். தடிதல் = வெட்டுதல். முதல் தண்டனை தடியாலடிப்பதா யிருந்தது. சினைப்பெயர்கள் முகம்: முகர் - முக + ம் = முகம். முகத்தல். முக - மோ. முகர் - நுகர். முகம் - நுகம். முகம் - மூக்கு - மூஞ்சி - முகடு. முக + பு = முகப்பு. முக + வை. முகவை. முகம் முதலாவது மூக்கின் பெயராயிருந்து பின்பு தானியாகு பெயராய் முகத்திற்காயிற்று. வடமொழியில் வாயை மட்டும் குறிக்கும். இரத்தம்: அரத்தம் - இரத்தம். அரக்கு, அலத்தகம் இரத்தி என்பவை செந்நிறத்தைக் குறிக்கும். பித்து + அம் = பித்தம் - பைத்தியம். கரு + பு = கருப்பு. கருப்பு + அம் - கருப்பம். மொழி - முழம் - முட்டு - முட்டி - முஷ்டி பதி + அம் = பாதம். சினைப் பெயர்கள் வடிவம் = படி - படிவு - வடிவம், body, பிரதிமா. படி - வடி - வடிவு - வடிவம். வட்டம்: வள் + தம் = வட்டம். வள் + இ = வளி. வள் + தி = வட்டி - வண்டி வள் + அம் = வள்ளம். வள் + து = வட்டு - வண்டு = வளையல். வள் + தை = வட்டை - வடை. வளை +அம் = வளையம். வள் + ஐ = வளை. வளை + அல் - வளையல். வளையம் வடமொழியில் வலயம் என்று வழங்கும். வட்டம் விருத்தத்தின் திரிபன்று. திசைப் பெயர்கள் திக்கு + ஐ = திகை. திகைத்தற்குக் காரணமாயிருப்பது. திகை - திசை. குண்டு - குண்டம் - குணம் - குணக்கு. குடம்: குடை - குடம். கதிரவன் வளையுமிடம் - குடக்கு. உத்தரம்: உ + தரம் = உத்தரம். உ = மேல், உயர்வு. தெற்கு + அணம் - தெற்கணம் - தெக்கணம் - தக்கணம். தெக் கணம் - Deccan. cf. கொங்கு + அணம் = கொங்கணம். எண்ணுப் பெயர்கள் இலக்கம் = எண். இப் பொதுப் பெயரே நூறாயிரத்துக்குச் சிறப்புப் பெயராயிற்று. lakh - லக்ஷம். எட்டு - அஷ்டம். கோடி - கோட்டி. கோடி = கடைசி யெண். நானா - நால் - நாலா - நானா. பல்வகைச் சொற்கள் தமிழம் - த்ராவிடம். வேட்டி: வெட்டுவது வேட்டி. வேட்டி - வேஷ்டி. cf. துணிப்பது துணி; அறுப்பது அறுவை. முட்டி - முட்டியாற் செய்யும் போர். முட்டி - முஷ்டி. vf. wrestle from wrist. காகம் - காக்கா - காக்கை காகம். மயில் - மயூரம். கூகை - கூகம். கலை - கல் + ஐ. படி + அம் - பாடம். சுற்றுரு - சூத்ரம். கலி + யாணம் = கலியாணம். கலித்தல் = தழைத்தல். யாணம் = புதுமை. புதுவருவாய். பழம் - பலம். பழு + அம் = பழம். அடவி - அடர்ந்திருப்பது. பரி + அம் = பாரம் - பாரி. தரி + அம் = தாரம். தருக்கு + அம் = தருக்கம் - மிகுத்துக் காட்டுதல். குடி - குடில் - குடிலம் - குடீரம். சாய் + ஐ = சாயை. இ - இதம் = இப்படி. பவளம் - ப்ரவாளம். நீல் + அம் = நீலம். இனி, அக்கா, அத்தா, ஆணி, அம்மா, அம்பா, அடவி, ஆளி, கடு, காவேரி, குசம், கூச்சம், குடி, கூன், குளம், கோட்டை, கட்டில், சாம், சா, பட்டணம், பொன், பள்ளி, வெள் முதலியன வடமொழியினின்றும் கால்டுவெல் கண்காணியார் எடுத்துக் காட்டிய தென்சொற் களாம். இன்னும் இவை போன்ற ஆயிரக் கணக்கான தென்சொற்கள் வடமொழிவாய்ப் பட்டுள்ளன. வடமொழியிலுள்ளதெல்லாம் வடசொற்கள் என்று மொழி நூலுணராதார் சிலர் கொண்டிருக்கின்றனர். மூல முதன்மொழி யாகிய தமிழ் தவிர வேறு எந்த மொழியாவது பிறசொற்க ளில்லாததில்லை. ஒரு சொல்லை இன்ன மொழியென்று அறிதற்கு அதன் பகுதிப் பொருளையும் அதனின்றும் திரிந்த பல்வேறு சொற்களையும் பார்க்கவேண்டும். அவை எந்த மொழி யிலுள்ளனவோ அந்த மொழிக்கே அது உரியதாம். வினைச் சொல்லாயின் புடைபெயர்ச்சி (Conjugation) வேண்டும். பெயர்ச் சொல்லாயின் பெயரிலக்கணம் (Declension) வேண்டும் கல் என்னும் வினை கற்றான், கற்றாள், கற்றார், கற்றது, கற்ற, கற்க, கற்பித்தான், கற்கப்பட்டது, கற்றிலன், கலை எனப் பல வடிவுகளிலும் புடைபெயர வேண்டும். வடமொழியிலோ அது கலா (கலை) எனத் தொழிலாகுபெயராய் மட்டும் நிற்கும். இஃதோர் உதாரணம். சில வடமொழிப் பற்றுடையார் முனிவர் என்னும் சொல்லுக்கு முனி என்பது பகுதியென் றறியாமல், மவுனம் செய்பவர் முனிவர் என்று வடமொழிவழி யுரைப்பர். `ஐயன்' என்னும் தமிழ் முறைப் பெயரை ஆரியன் என்பதின் சிதைவாகக் கூறுவர். இங்ஙனமே ஏனைச் சொற்களுக்கும் அவர் வடமொழியைக் கற்பிப்பதுண்டு. ஒரு வகுப்பாராவது பிற வகுப்பாருடன் இயைபின்றித் தாமாய் உலகத்தில் வந்தவரல்லர். அங்ஙனமே தமிழ் தவிர ஒரு மொழியா வது பிறமொழியின் கலப்பின்றித் தானாய் வந்ததன்று என்று தெளிக. ("செந்தமிழ்ச் செல்வி" கடகம் 1931) வடமொழித் தென்சொற்கள் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் ஒரு பெருந் தாய்மொழியி னின்றும் உதித்தவை யென்பது வரலாற்று நூல் (History), குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology) முதலிய பல நூல்களாலும் வலியுறுத்தப்படும். ஆயினும், திசைச்சொல் வகையில் ஒரு வகுப்பார் புதியன வாய் ஆக்கிக் கொண்டனவும் தாய்மொழியி னின்றும் புதியனவாய்த் திரித்துக்கொண்டனவு மான இருவகைச் சொற்கள் ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பாகும். இவ் விருவகைச் சொற்களும் ஒரு கிளைமொழிக்குரிய அதன் தாய்மொழியைச் சாரும்; ஒரு தாய்மொழிக் குரியவை ஒரு பெருந் தாய் மொழியைச் சாரும். திராவிட மொழிகளை நோக்கத் தமிழ் ஒரு தாய்மொழி யும், ஆரிய மொழிகளை நோக்கத் தமிழ் ஒரு பெருந் தாய்மொழியு மாகும். எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் இறந்துபட்டமையாலும், ஆரியச் சொற்களில் பல உருத் தெரியாதவாறு அத்துணைத் திரிந்துள்ளதி னாலும், பல வடசொற்கள் வடமொழிச் சிறப்புச் சொற்களாகவே தோன்றாநிற்கும். ஏனைச் சொற்களை இது போதுள்ள தென் சொற் றுணைகொண்டே தென்சொல்லெனக் காட்டல் மொழி நூலான் முட்டின்றி முடிவதாகும். இடுகுறிச் சொற்களாயின் இவ் வரம்பிற் குட்படா. ஒரு சொல்லை ஒரு மொழிக் குரியதென்று அறிதற்கு அதன் பகுதி (stem) அல்லது மூலம் (root) எம்மொழியிலுள்ள தென்று அறிதல் வேண்டும். ஒரு சொல்லின் பகுதி அல்லது மூலம் பலமொழியி லிருப்பின், எம்மொழியில், பகுதி இயற்கையானதென்றும், பொருள் சிறந்த தென்றும் அறிதல் வேண்டும். பல மொழியிலும், பகுதி வடிவிலும் பொருளிலும் ஒத்திருப்பின், எம்மொழியில் அதன் திரிசொற்களுள வென்றும், அவையும் பல மொழியிலிருப்பின், எதில் அவை கழிபலவென்றும் காண்டல் வேண்டும். எத்துணையோ தென்சொற்களை வடசொற்களென்று பன் மொழிப் பேரறிஞருங்கூடப் பகர்ந்து வருகின்றனர். அவற்றுட் சில வருமாறு: அகங்காரம். அகம் + காரம். அகம் - அவ்வுலக, வானுலகு. மோக்ஷம். அகரச்சுட்டடியாப் பிறந்தது: சேய்மையிலுள்ள வானுலகத்தைக் குறிப்பது; அம்பர் என்னும் சொற்போல. அ - அம்பர் - அம்பரம். இகரச் சுட்டடியாப் பிறந்த இகம், இம்பர் என்னும் சொற்கள் அண்மைச் சுட்டாய் இவ்வுலகத்தைக் குறித்தல் காண்க. விண்ணுலகையும் மண்ணுலகையும் சேய்மை அண்மைபற்றி அவ்வுலகம் இவ்வுலகம் என்பது மரபு. அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க் கிவ்வுலக மில்லாகி யாங்கு (குறள். 247) என்றார் திருவள்ளுவரும். வீடு என்னும் முத்திப் பெயர் இல்லத்தை உணர்த்தினாற்போல. அகம் என்னும் பெயரும் இல்லத்தை உணர்த்தும் வீடு = விடுதலை: விடுவது வீடு. பிறவித் துன்பத்தினின்றும் விடுதலை செய்வது பேரின்ப வீடு. வெயின் மழைத் துன்பத்தினின்றும் விடுதலை செய்வது இவ்வுலக வீடு. இல் என்னும் வீட்டுப் பெயர் ஏழாம் வேற்றுமை உருபாய் உட்பாகத்தைக் குறித்தாற் போல, அகம் என்னும் வீட்டுப் பெயரும் உட்பாகத்தையும் உள்ளத்தையும் குறிக்கும் `அகம்என் கிளவி' எனத் தனித்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத் துள்ளும் கூறப் பட்டுள்ளது. காரம்: கரி என்னும் வினையடியாப் பிறந்த தொழிற்பெயர். கரி + அம் = காரம்: முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர். cf: படி + அம் = பாடம். தவி + அம் = தாவம். கரித்தல் மிகுதல். காரம் மிகுதி. கரி என்பது கடி என்னும் உரிச்சொல்லின் திரிபு. ட-ர, போலி. ஒ.நோ: படவர் - வரவர். முகடி - முகரி. உப்புக்கரிக்கும், உப்புக் கடுக்கும் என்பன ஒருபொருள்பற்றிய உலக வழக்கு. கடி என்னும் உரிச்சொற் பொருள்களுள் மிகுதியும் ஒன்று. காரம் என்னும் சொல் முதலாவது மிகுதியை உணர்த்திப் பின்பு உறைப்பு மிகுதியை உணர்த்தும். கரி என்னும் சொல்லே அதி என்னும் உபசர்க்கம் (prefix) பெற்று அதிகரி என நிற்கும். அதிகரிப்பது அதிகாரம். அகம் கரிப்பது அகங்காரம். அகங்காரம் - ஆங்காரம். அதி என்பது ஒரு மிகுதிப் பொருளுபசர்க்கம் (intensive prefix). அதிகாரத்தை (ஆணை மிகுதியை or ஆற்றன் மிகுதியை) உடையவன் அதிகாரி. ஒரு நூலின் பெரும்பாகம் அதிகாரம். அகம் கரிப்பது அகங்காரம். அகங்காரம் - ஆங்காரம். அகண்டம்: அ + கண்டம். அ. எதிர்மறை உபசர்க்கம்: அல் என்பதன் குறுக்கம். அல் என்னும் எதிர்மறைச் சொல்லே un என்று ஆரியமொழிகளில் திரியும். இல் என்பது il, in, im, என்று திரியும். கண்டம்: கண் - கணு - கண்டு - கண்டம். கண்டு - கண்டி. cf: துண்டு - துண்டி. தண்டு - தண்டி - தடி. கண்போன்று இருப்பது கணு. கணுக்கணுவாய் நறுக்குவது கண்டு. கண்டு என்னும் பெயரினின்று கண்டி என்னும் வினையுண் டாகும். கண்டித்தல் கணுக்கணுவாய் அல்லது துண்டுதுண்டாய் வெட்டுதலும், அங்ஙனம் வெட்டுதல்போற் கடுமொழி கூறலும். கண்டிப்பது கண்டம். கண்டி + அம் = கண்டம். cf. துண்டி + அம் = துண்டம். தண்டி + அம் = தண்டம். கண்டி என்னும் சொல் இடைக் குறைந்து கடி என்றும் நிற்கும். cf. தண்டி - தடி கண்டம் என்பதன் நீட்டல் காண்டம். cf. கரணம் - காரணம். கண்டம் = துண்டு, பாகம், பிரிவு. கண்டம் என்பது சதைப்பாகம் நிலப்பாகங்களையும், காண்டம் (canto) என்பது நூற்பாகங்களையும் குறிக்கும். Canto என்னும் ஆங்கிலச் சொல்லை cano (to sing) என்னும் இலத்தீன் வினையடிப் பிறப்பாகக் கொள்வது சிறந்ததன்று. அகதி: அ - அல் என்பதன் கடைக்குறை. கதி - செலவு. கட என்பதன் திரிபு. கதித்தல் - செல்லுதல். கதி + அம் = கதம். இராக்கதம் - இராச் செலவு. இராக்கதன் - இராச்சென்று உணவு தேர்பவன். இராக்கதன் - ராக்ஷஸன் (Transliteration) நிசி = இரவு: சரம் - அசைவு, செலவு. அகந்தை : அகம் - அகந்தை, அகத்தின் மிகுதி. அகம் = மனம். cf. குடம் - குடந்தை (கும்பகோணம்). உடம் - உடந்தை. cf. உள்ளம் = ஊக்கம். உள்ளத்தின் மிகுதி. அகராதி: அகரம் + ஆதி. அகரம் - கரம் சாரியை. ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னும் வடமொழியில் இலக்கணம் வகுக்கப்படுமுன்னும், தமிழில் இலக்கண நூல்களிருந்தன. அவற்றின் வழிநூல்களே அகத்தியமும் தொல்காப்பியமும். கரம், காரம் முதலிய எழுத்துச் சாரியைகள் மேனாட்டு மொழிகட் கில்லை. ஆதி பொதுச்சொல். அகாரணம்: அ + காரணம். கரணம் - கரணம். கரு + அணம் = கரணம். கருத்தல் - மேகம் கருத்தலைக் குறிக்கும். கரு - கார். மேகம் சூல் கொள்ளும்போது கருத்திருத்திலின் மக்களின் சூலும் கரு. கருப்பம் எனப்படும். மேகம் கருத்து மழைபொழிவது உலக வினைகட்கெல்லாம் காரணமா யிருத்தலின் கரு என்பது காரணத்தையும் குறிக்கும். வானின் றுலகம் வழங்கி வருதலான். (குறள்.11) என்றார் திருவள்ளுவரும். கரணம், கருவி என்பன கரு என்னும் ஒருவினைத் தொழிற் பெயர்கள். திரிகரணம் = முக்கருவி. அந்தக்கரணம் - உட்கருவி. கரணம் அணம் விகுதி. கருவி - வி விகுதி. கரணத்தின் நீட்டம் கரணம். கருவி மேகத்தின் தொகுதியையும் உணர்த்தும்; எ-டு: `கருவி மாமழை', `கருவி தொகுதி' - தொல்காப்பியம். கரு - கார். கார் + அணம் = காரணம். கார் + இயம் = காரியம். இயம் தொழிற்பெயர் விகுதி. அகாலம். அ + காலம். காலம்: கால்+அம்=காலம். அம் சாரியை. கால் உடம்பின் காற்பாகமாகிய உறுப்பு. கால் = 1. leg 2. தூண், கால் போல்வது 3. canal - கால்போல் நீண்டோடுவது 4. வம்சம் - கால்போலத் தொடர்வது 5. காற்று - கால்போலச் சென்று வீசுவது 6. time - கால்போலச் சென்று வீசுவது அங்குட்டம். அம் + குட்டம். அம் = அழகு. குட்டம் - குட்டையான விரல். அசரம். அ + சரம். சரி + அம் = சரம். தொழிற்பெயர். சரிதல் = அசைதல், சாய்தல். சலி - சரி; போலி எனினும் ஒக்கும். சரம் அசையும் பொருளைக் குறிக்கும்போது தொழிலாகு பெயர். அசலம். அ + சலம் = அசலம் = மலை. அசையாதது. சலி + அம் = சலம். தொழிற்பெயர். சலித்தல் - அசைத்தல். சலம் - நீர். சலிப்பது. தொழிலாகு பெயர். சலம் என்பது தென்னாட்டில் நீர்ப்பொருள்களில் ஒன்றாகிய சீழுக்கு வழங்கி வருகின்றது. சலம் என்னும் தென்சொல்லையே ஜலம் எனத் திரித்தனர் ஆரியரும் தமிழரும். `ஜெட்டியார் கடைக்கு ஜென்று ஜேலம் ஜீனி வாங்கி வா' என்று இன்றைக்கும் தமிழ்மக்கள் தென்சொற்களை வடசொற்போலத் திரித்து வழங்குதல் காண்க. சலிப்பு என்பது களைப்பு என்ற பொருள்பட்டாற் போல, அதன் பரியாயச் சொல்லாகிய அசைவு என்பதும் களைப்பு என்று பொருள்படும். இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே. (தொல். 199) சலித்தல்-அசைத்து மாத்தெள்ளுதலையுங் குறிக்கும். சலிக்கும் கருவி-சலிப்பான். சல்லடை எனப்படும். சலி+அடை=சல்லடை. அஞ்சலி. அஞ்சல்-அஞ்சலி. அஞ்சலி = வணக்கம், அஞ்சிச் செய்வது. அதிகம். அதி-அதை என்னும் சொல்லின் திரிபு. அசைத்தல் - வீங்குதல், பருத்தல், மிகுதல். அதி+இகம் = அதிகம், தொழிற்பெயர். அதி என்பது மிகுதிப்பொருள் உபசர்க்கமாய் வரும். அதிமதுரம். அதி + மதுரம் = அதிமதுரம், ஒரு சரக்கு. மதுரம் = கள், தேன், மதர்ப்புச் செய்வது. மதமத என்பது எரிப்புப்பற்றிய குறிப்புச்சொல். மத-மதர்-மதுர்-மதுரம்-மது. அதிவேகம். அதி + வேகம். வேகம் = வேகு + அம். = வேதல், சூடு, எரிதல். ஒரு பொருள் வேகும்போது விரைவாய் எரிதலின் விரைவு மேகம் எனப்படும். சுறுசுறுப்பைச் சூட்டிக்கை யென்பர். xUÉid K«KukhŒ elªjhš `beU¥bgGªJ nt»wnj!' என்பர் தென்னாட்டார். அநுசிதம். அந் + உசிதம். அந்-அல் என்பதன் திரிபு உசிதம் = உயர்வு. சிறப்பு, உகரச் சுட்டடியாகப் பிறந்தது. உயர்வுபற்றிய சொற்களெல்லாம் பெரும்பாலும் உகரச் சுட்டடி யாகவே பிறக்கும். எ-டு : உயர்வு, உம்பர், உன்னதம், உச்சி, உச்சிதம். உத் (உபசர்க்கம்), உத்துங்கன். அநுதாபம். அநு+தாபம். அநு-உபசர்க்கம். அநு, அண்ணு என்பதன் திரிபு. அண்ணுதல் = கிட்டுதல், கூடுதல் தவி + அம் = தாவம்-தாபம். தவித்தல்-நீர்வேட்டல், வருந்தல், விருப்புதல், இரங்குதல். அநுதாபம் = இரக்கம், அநு = உடன், கூட, துணையான. அநுமதி. அநு + மதி. மதி = அறிவு மதித்தல் = அளத்தல், அளந்தறிதல், நிதானித்தல், பெரிதாய் எண்ணுதல். அநுமானம் அநு-மானம். மானி + அம் = மானம். தொழிற்பெயர் மானித்தல் = அளத்தல், மதித்தல் மானம்-அளவு படியை மானம் என்பது வடார்க்காட்டு வழக்கு khd«-Moon, காலத்தை அளப்பது cf. மதி-மாதம். அவமானம் = மதிப்பின்மை உபமானம் = துணை, அளவு, ஒத்த சன்மானம் = நல்ல மதிப்பு, மதித்தளிக்கும் பரிசு அபிமானம் = மிக மதித்தல் பெறுமானம் = பெறும் அளவு, மதிப்பு வருமானம் = வரும் அளவு, வருவாய் கட்டுமானம் = கட்டும் அளவு, கட்டடம் +மானம் விகுதி உபமானத்தாலறியப்படுவது உபமேயம். மானம் = அளவு, விதம். khd«-manner மானம் மானை என்று உலகவழக்கில் திரியும். `ïªj khid¡F¥ ngh£nl‹ v‹whš v‹dthÆU¡F«?' என்பது ஓர் உலகவழக்கு (தென்னாடு). மானி = அளப்பது, அளப்பவன், மதிப்பது, மதிப்பவன் உஷ்ணமானி = வெப்பத்தை அளப்பது வாயுமானி = காற்றை அளப்பது அபிமானி = ஒரு பொருளை மதிப்பவன் மானம் - மாணம் பரிமாணம் - அளவு பிரமாணம் - அளவு, அளவை, அளவையாலறியும் உண்மைப் பொருள், உண்மையாகக் கூறும் ஆணை. பிரமாணத்தா லறியப்படுவது பிரமேயம். அநு, அவ, உப, சன். அபி. பரி, பிர என்பன பொருள் உள்ளவும் இல்லவுமான உபசர்க்கங்கள். பெறுமானம் முதலிய மூன்று சொற்களில் மானம் தொழிற் பெயர் விகுதியாகவுங் கொள்ளப்படும். அந்தப்புரம். அந்தர்+புரம். mªj®-inter. இல் (= உள்) என்னும் சொல் ஆரியமொழிகளில் in என்று திரியும். cf. இல் (= வீடு) - inn = சத்திரம். in என்பதின் உறழ்தரம் (Comparative degree) inter என்பது. inter-mªj®. அந்தர்ப்புரம்-அந்தப்புரம்-நிலைமொழி யீறுகெட்டது. புரம்: புரி + அம் = புரம். தொழிற்பெயர். புரிதல் = வளைதல். cf. spire. புரம்=கோட்டை. வளைந்திருப்பது தொழிலாகு பெயர். cf. கோட்டம் from கோடு = வளை. கோடு + அம் = கோட்டம். கோடு + ஐ = கோட்டை. nfh£l«-Caster, (Eng) கோஷ்டகம் (Skf.) பண்டைக் காலத்தில் ஒவ்வொரு நகரும் ஒவ்வொரு கோட்டையாற் சூழப்பட்டிருந்தது. அதனாற் புரம் அல்லது கோட்டையென்று கூறப்பட்டது. திரிசிரபுரம். பீஜபுரம்-பீஜப்பூர். புரி - முதனிலைத் தொழிலாகு பெயர். புரம் - borough, berg, burgh - Edinburgh. புரி - bery, pury, bury - Canterbury. கோட்டை - caster. நால்வாசங் கோட்டை, பாளையங் கோட்டை. Lancaster. Doncaster. புரம்-அரண்மனை, கோட்டையாற் சூழப்பட்டது. cf. ef®-a town or a palace. அந்தப்புரம்-உள் அரண்மனை. புரி என்னும் தென்சொல் புரீ என வடசொல்லாகுமே யன்றிப் புரீ என்னும் வடசொல் புரி எனத் தென்சொல்லாகாது. இகர வீற்றுத் தென்சொற்கள் வடமொழியில் ஈகாரவீறு பெறும். cf. காஞ்சி - காஞ்சீ. காஞ்சி - ஒரு தமிழ்நாட்டு மரப்பெயர். பின்பு தானியாகு பெயராய் ஒரு நகரைக் குறிக்கும். `ஈயீ றிகரமும்' என நன்னூலார் கூறியது மொழிபெயர்க்கப்படாத வடமொழிச் சிறப்புப் பெயர்கட்கேயன்றிப் பிற சொற்கட் கன்றெனத் தெளிக. அந்தோ. அந்தோ! இரக்கக் குறிப்பு. அத்தோ என்பதன் திரிபு. அத்தன் - அத்தோ! அந்தோ! அத்தோ என்பது அத்தன் என்பதன் விளி. இரக்கக் குறிப்புக ளெல்லாம் பெரும்பாலும் தாய் தந்தை பெயர்களின் விளியாகவே யிருக்கும். துன்பம் வருங்கால் தாய்தந்தையரையே விளிப்பது மக்கள் வழக்கம். அவரினுஞ் சிறந்தார் பிறரின்மையின். இரக்கமென்பது தற்பொருட் டிரங்கலும் பிறர்பொருட்டிரங் கலுமென இருவகை. இரக்கம் = அழுகை, வருத்தம். எ-டு : தந்தை பெயர் தாய் பெயர் அப்பன் - அப்பா! அம்மை - அம்யா! அச்சன் - அச்சோ! அன்னை - அன்னோ! அத்தன் - அத்தோ! - அந்தோ ஐயன் - ஐயோ! அந்தோ என்பது வடசொல்லு மன்று; சிங்களச் செல்லுமன்று. அபங்கம்: அ + பங்கம். அ - அன் என்பதன் குறை. பங்கம் = பங்கு + அம். பகு - பக்கு - பங்கு. பகுக்கப்படுவது அல்லது பக்கிருப்பது பக்கு. பக்கு என்பதன் மெலித்தல் பங்கு. cf. போக்கு - போங்கு. பக்கு என்பது பகுதி யிரட்டித்த தொழிற்பெயர்; பாட்டு, திருட்டு என்பன போல. பக்கு. பங்கு = பாகம், குறை, பிளவு. பக்கு + அம் = பக்கம். பங்கு + அம் = பங்கம்: அம் சாரியை. மானபங்கம் = மானக்குறை. நிலம் ஏரால் அல்லது மண்வெட்டியாற் பகுக்கப்பட்டுச் சேறாவதால், சேறு பங்கமெனப்பட்டது. `பங்கப் பழனத் துழுமுழவர்' - புகழேந்தி. பங்கி - பங்கையுடையது. அபசாரம்: அப + சாரம். அப. அவ என்பதன் திரி. அவம் = அழிவு: அவி பகுதி. சரி + அம் = சாரம். தொழிற்பெயர். சலி - சரி, போலி. ல - ர cf. பந்தல் - பந்தர். கூதல் - கூதர். சரித்தல் = அசைதல், நடத்தல், ஒழுக்கம். அபசாரம் செய்பவள் அபிசாரி. ஆ + சரி = ஆசரி ஆசரி + அம் - ஆசாரம். அனு + சரி = அனுசரி அன் + ஆசாரம் = அனாசாரம். ஆ. அனு உபசர்க்கங்கள். ஆசாரத்தை யுடையவன் ஆசாரி, ஆசாரியன். அபதூறு: அப + தூறு. அவம் = அவி + அம். தொழிற்பெயர். அவிதல் = அழிதல். அவ - அப. தூறுவது - தூறு: முதனிலைத் தொழிற்பெயர். தூறு = சிந்து. மழை தூறுவதுபோலப் பழிமொழியைத் (அவமான சொல்லைத்) தூற்றுவது அவதூறு. அபமரணம்: அப + மரணம். அவ - அப. மரணம் = மரி + அணம், அணம் தொழிற்பெயர் விகுதி. மடி - மரி. (போலி) ட - ர. cf. கடி - கரி, படவர் - பரவர். மரியாதவர் அமரர். அபரம்: அ + பரம். அ, அல் என்பதன் குறை. பரம் = பர + அம். பரத்தல் = விரிதல், பெருத்தல், மேற்படுதல். பரம் என்பது மிகுதிப் பொருளில் மேலிடத்தை யுணர்த்தும். இதன் பரியாயச் சொல்லாகிய மிகல் என்னுஞ் சொல்லும் அங்ஙனமே. மிகு - மிகல் - மேல். மேலிடம் உயரத்தின் மிகுதியாகும் நட்டுக்குத் தலாய் (vertical) ஒரு பொருள் மிக்கிருக்கும்போது உயரமா யிருத்தல் காண்க. பரம் = மேல். அபரம் = கீழ். பரன் = மேலானவன் - கடவுள். பராபரன் = மேலும் கீழுமுள்ள பொருள்களா யிருப்பவன். பரன் - சிவன், ஆண்பால். பரை - சிவை (பார்வதி), பெண்பால். பரம் + அன் = பரமன். பரதேசம் = பரம் + தேசம். பரம் - Foreign. L. foras பரலோகம் = பரம் + லோகம். பரதேசம் - பக்கமாகப் (sidewise) பரந்தது. பரலோகம் - மேனோக்கிப் பரந்தது - ஒரு பொருள் பரக்கும்போது விரிந்து தூரமாகும். மேனோக்கிய பரப்பு உயரம். பக்கமான பரப்புத் தூரம். பரந்த (தூரமான) தேசம் = பரதேசம். பரதேசத்தான் - பரதேசி. பரம் + காலன் = பரகாலன். பரம் + கேசரி = பரகேசரி. பரம் = தூரம், அயல் பிறிது. பரகாலன் - பிறர்க்குக் காலன் போன்றவன். அபரூபம்: அப + ரூபயம். அவ - அப. உருவம் - ரூபம். உரு - உருவு - உருவம் - ரூபம். உருவு - உருபம் - ரூபம். உருத்தல் = எரிதல். சினத்தல், தோன்றுதல். உரும் = (warm) வெப்பம் = (இடி), (நெருப்பானது). உருத்தல் - சினத்தல். சினம் - நெருப்புப்போல்வது. cf. கனல் = நெருபபு. கனலுதல் = சினத்தல். அழல் = நெருப்பு. அழலுதல் = சினத்தல். உருத்தல் = தோன்றுதல். வடிவம் நெருப்பின் தன்மை. நெருப்பால் ஒளியும் ஒளியால் உருவமும் தோன்றும். உருபு = உருவம். வடிவம். வேற்றுமையின் வடிவைக் காட்டும் அசை உருபு எனப்பட்டது. "எழுவா யுருபு திரிபில் பெயரே" என்னும் சூத்திரத்தில், உருபு என்பது வடிவென்றே பொருள்படுதல் காண்க. உருபம் என்னும் சொல்லே ரண்டு. ரம்ப என்னும் சொற்களைப் போல முதல் கெட்டுப் பின்பு அயல் நீண்டு ரூபம் என்றாகும். உரு என்பது முதனிலைத் தொழிலாகு பெயர். உரு x அரு. cf. உறு x அறு. உருபம் x அருபம். அருபமானவன் அருபி. உருபி. உருபி - உரூபி. அருபமானவன் அருபி. அருபி - அரூபி. உரு = வடிவம். முதனிலைத் தொழிலாகுபெயர். உரு என்னும் சொல் வடிவுப் பொருளில் உலகவழக்கில் மிகுதியும் வழங்கி வருகின்றது. உரு = வடிவுடைப் பொருள். சுற்றுரு = தாலிக்கொடியில் தாலியோடு சேர்ந்த பல வடிவான சிறுநகைகள். கழுத்தைச் சுற்றியுள்ள உருக்கள் என்பது பொருள். உருப்படி = ஒரு பொருள். உருவாகு = உண்டாகு. உருப்படு = வளர், தேறு, பெரியவனாகு. உருக்குலை. உருமாறு = வடிவுமாறு, மெலி. உருச்சேவி = விக்கிரகத்தை வணங்கு. உருப்போடு = விக்கிரகத்திற்குரிய மந்திரம் ஜெபி. உருவேற்று = மந்திரம் ஜெபி, உபதேசி. உருபி = உருவத்தையுடையது. ருப்பி, Hindi, Skt. and English. அமங்கலம்: அ + மங்கலம். நன்கலம் - (நங்கலம்) - மங்கலம். நன்கலம் - தாலி, சிறந்த அணி. நன்கலம் அணியத்தக்க நிலை மங்கலம். நன்கலம் - மங்கலம். ந - ம, போலி. cf. நாம் - மேமு (தெலுங்கு). மாட்டுப்பெண் - நாட்டுப்பெண் முனி-நுனி ம-ந. போலி. மங்கலத்தை யுடைவள் மங்கலி - மங்கலை. மங்கலம் - மங்கலியம் - மங்கிலியம் - மாங்கலியம் - மாங்கிலியம். மங்கலம் - மங்களம். மங்கலம் = மங்கலியம் அணிகின்ற திருமணம். திருமணம் போன்ற நல்வினை. எ-டு: மண்ணுமங்கலம் = நன்மை. அமராபதி: அமரர் + பதி. பதி = பதிந்திருக்கும் இடம். பதிதல் = தங்கியிருத்தல். பொருந்தியிருத்தல். நிலையாயிருத்தல். வசித்தல். பதி - வதி. ப - வ, போலி. cf. பகு-வகு. பதி - ஊர், நகர் (முதனிலைத் தொழிலாகுபெயர்). அமராபதி - அமராவதி. பதி + அம் = பதம். அமரர் + பதம் = அமராபதம். gâ-bad- (Hindi) - பாத்து. ஐதராபதி - Hyderabad - ஹைதராபாத்து. அமாத்தியர்: அண்மை + ச் + அர் = அண்மைச்சர் - அமைச்சர். cf. அரண்மனை - அரமனை (உலகவழக்கு). அமைச்சர் அரசனுக்கு அண்மையி லிருப்பவர். அமைச்சர் - அமாத்தியர். அவிழுது: அவிழ்-அவிழ்து-அமுது. அவிழ்தல் - விரிதல். அவிழ் = சோற்றுப்பருக்கை, வெந்து விரிந்த அரிசி. அவிழ்து = சோறு. அவிழ்து = அமுது. வ-ம, போலி. அவிழ்து + அம் = அவிழ்தம் - அமுதம். அமுது படைத்தல் = சோறிடுதல். அம்பிகை: அம்மை-அம்மாள்-அம்மா - அம்பா - அம்பிகா - அம்பிகை. அம்பு: கம் - ஓர் ஒலிக்குறிப்பு. கம் = நீர், ஒலிப்பது. கம்-அம். cf. கனல் - அனல், தழல் - அழல். அம் - அம்பு (filÉÇ-Epenthesis). cf. உடல் - (உடம்)-உடம்பு. அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா, செந்தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்றாகும். அம்பு (arrow) போலப் பெய்யும் மழைநீர் அம்பு எனினும் ஒக்கும். அரணியம்: அரண் + இயம். இயம் ஒரு விகுதி (suffix). அரணியம் = காடு. அரணாயிருப்பது. நால்வகை அரண்களிற் காட்டரண் ஒன்று. அரணியம் - ஆரணியம். அரன்: அர் - ஓர் ஒலிக்குறிப்பு. அர் + அம் = அரம். ஒரு கருவி, அர் என்று ஒலிப்பது. அரம் - அரம்போல் தேய்த்தல், அழித்தல். அரம் - துன்பம். அழிவு செய்வது. அரம் (harm) - அரந்தை (மரூஉ). அரம் = அச்சம், துன்பத்தினாலாவது. அரள் = அஞ்சு. அரள் - horro. அரற்று = அஞ்சிக் கதறு. அரன் = தேவன். அஞ்சத் தக்கவன், வருத்துபவன். மலையிலும் காட்டிலுமுள்ள தெய்வங்கள் தமியரை வருத்துமென்பது தமிழ்நாட்டுக் கொள்கை. குறிஞ்சித்திணைச் செய்யுள்களில் சூரர மகளிர் என்பது பெருவழக்காய் வருவதைச் சங்க நூல்களிற் காணலாம். சூர் = அச்சம். அரமகளிர் = தெய்வப் பெண்டிர். அரன் = சிவன், மலைத்தெய்வம். மலைநாட்டிலேயே சைவம் முதன்முதல் தோன்றிற்று. குறிஞ்சித் தெய்வமாகிய முருகன் சிவபிரானது மகன். அகத்தியர் முதலிய பண்டை முனிவரும் மலையிலேயே வதிந்தனர். அரன் = உருத்திரன்: ஊழியிறுதியில் உலகையழிப்பவன். அரன் - ஹரன். cf. ஆலீ - hail. அர் + இ = அரி - அழிப்பது. அரித்தல் - பூச்சிகள் பொருள்களை அழித்தல். அரி = சிங்கம், விலங்குகளை அழிப்பது. சுரஅரி - (ஜ்வரஹரி) - காய்ச்சலை அழிக்கும் மருந்து. அரி = விஷ்ணு, சிங்கவடிவு கொண்டவன். சிவனுக்கு மனைவியா யிருந்தவன் எனினும் ஒக்கும். அரன் ஆண்பால். அரி பெண்பால். அரி - ஹரி. அராகம்: அர் - ஓர் ஒலிக்குறிப்பு. அராகம் = பண், சந்தம், ஓசை. அராகம் = இராகம். vf. அறு - இறு. இராகம் = பண், விருப்பம். பண் இனிமையா யிருத்தலின் எவருக்கும் விருப்பாம் cf. Music- that which amuses. அனுராகம் = காதல். அராகம் முடுகிய ஓசையுள்ள ஒரு கலியுறுப்பு. செந்தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்துட் கூறப்பட்டுள்ளது. அராகம் எனினும் வண்ணகம் எனினும் ஒக்கும். வண்ணகம் = பண், ஒசை. அராகம் என்பது இயற்றமிழ்க்கன்றி இசைத்தமிழ்க்கும் இன்றி யமையாததோர் சொல்லாம். இசைத்தமிழும் பொருளிலக் கணமும் ஆரிய வருகைக்கு முன்பே தமிழ்ர்க்கிருந்தவை. அலட்சியம்: அ + லட்சியம். இலக்கியம் - லக்ஷியம். இலக்கியம் - குறி, உதாரணம் (Literature) இலக்கு பகுதி. அவமதி: அவம் + மதி மதித்தல் = அளவிடுதல், உயர்வா யெண்ணுதல். மதி = அளந்தறியும் சரக்கு. ஏற்றுமதி, இறக்குமதி. மதித்தல்=நிதானித்தல், மனத்தாலளத்தல். மதி=சந்திரன், ஒருமாத காலத்தை அளவிடுவது. மதி + அம் = மாதம். மதி + உ = மாது மதி + அர் = மாதர் உணவை அளவாய்ப் பகிர்பவள், பெண் தாய். மாது - மாதா. Skt. மதி = அறிவு. Knowledge. சம்மதி = இசைவு. அறிந்து இசைவது. அனுமதி = உத்தரவு. அறிந்து விடுப்பது. மதி = மதித்தளிக்கும் பரிசு, வெகுமதி. மதி + அம் = மதம், கடவுளை அல்லது வீட்டைப்பற்றிய மதிப்பு அல்லது கொள்கை. அவலட்சணம்: அவம் + லக்ஷணம். இலக்கணம் = லக்ஷணம். இலக்கு - பகுதி இலக்கணம் = இலக்கியத்தின் ஒழுங்கு அல்லது அழகு. அவி: அவி = உணவு. நெய் (அவிக்கப்படுவது). அவிநயசாலை: அபி + நயம் + சாலை. அபி மிகுதிப் பொருளுணர்த்தும் ஒரு வடமொழி உபசர்க்கம். நயம் = நேர்த்தி. (தென்சொல்) நயம் nicety: ய-ச, போலி. அபிநயம் = மிக நேர்த்தியான ஆட்டம் அல்லது ஆட்டத்தின் உறுப்பு. அபிநயம் ஓர் ஒருமொழித் தொடர் (Hybrid). நை + அம் = (நையம்) - நயம், தொழிற்பெயர். cf. வை + உ = வயவு. நைதல் = நுட்பமாக நொறுக்கப்படுதல். நயம் = நுட்பம். அபிநயம் = நுட்பமான ஆட்டம். சாலை: சால் + ஐ = சாலை. சாலுதல் = நிறைதல். பருத்தல். விசாலித்தல். சால (நிகழ்கால வினையெச்சம்) மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச்சொல். சாலை = அகன்ற பாதை. அகன்ற கூடம். பாடசாலை = பாடம் படிக்கப்படும் கூடம். சாலை = saloon, hall சால் + பு = சால்பு = நிறைவு. பெருந்தன்மை. சால் + வை = சால்வை (shawl), உடம்பு நிறையப் போர்ப்பது. சான்றோர் = அறிவு நிறைந்தோர், வீரம் நிறைந்தோர். சாலு = நிறையும், போதும் (தெலுங்கு). அவிவேகம்: அ + வி + வேகம். அ - எதிர்மறை உபசர்க்கம். வி - மிகுதிப்பொருள் உபசர்க்கம். வேகு + அம் = வேகம் = நெருப்பு. எரிதல். வேகம் = அறிவு, நெருப்பின் தன்மையுள்ளது. நெருப்பு எங்ஙனம் ஒரு பொருளை விரைந்து பற்றுமோ அங்ஙனமே அறிவும் ஒரு பொருளை விரைந்து பற்றும். அறிவும் விரைவுமுள்ளவனைச் சூட்டிக்கையுள்ளவன் என்பது உலக வழக்கம். ஆகாயம்: ஆ + காயம். ஆ, முதல்விரி (prothesis) "காயப் பெயர்வயின்" என்றார் கொல்காப்பியர். கயம் = பள்ளம், குளம், கறுப்பு. ஆழமான நீர் கறுப்பதியல்பு. கயம் - காயம் (நீட்டல்). கயம் - கசம், போலி. இருண்ட இருட்டை இருட்டுக் கசமென்பர் தென்னாட்டார். காயா - கருநிறமான பூ. காயம் = வானம் (கரியது). ஆ + காயம் = ஆகாயம் - ஆகாசம். யா-ச, போலி. ஆசயம்: அகம் (Tamil) - eikos (Gk.) - ஆசயம் (Skt.) - house (E). அகம் = வீடு. ஆசயம் = இருப்பிடம்: எ-டு: இரத்தாசயம். ஆஞ்ஞை: ஆள்-ஆண்-ஆணை-ஆஜ்ஞா. `ஆவீறையும்' என்று பவணந்தியார் தமிழுக்குக் கூறிய முறையே ஐயீறாகவும் என்று வடமொழிக்கு மாற்றிக் கூறுக. ஆத்துமம்: ஆன் + மா = ஆன்மா. ஆ = பசு, ன் - சாரியை. ஆன்மா-ஆமா=பசு. காட்டுப்பசு. மா என்பது விலங்குப் பொதுப்பெயர். ஆமா ஒரு சொல். உயிர்களைப் பசுக்கள் என்பது சைவசித்தாந்த வழக்கு. ஆன்மா = உயிர், animos (L.) = life. animal = பிராணி. ஆத்மா - Skt. ஆத்மி (Hindi). ஆதாம் = முதல் மனிதன் (Hebrew). உயிர் என்பது தமிழில் ஒரு பிராணியைக் குறித்தாற்போல ஆத்மா என்பது வடமொழி. உருது முதலிய மொழிகளில் ஒரு மனிதனைக் குறிக்கும். ஆத்மா - ஆத்துமம். ஆலாபனம்: ஆலாபி + அனம் = ஆலாபனம். ஆல் - ஆலாபி. ஆலுதல் = வட்டமாக ஆடுதல். `மயிலால' - கலித்தொகை. ஆலாபித்தல் = ஓர் இராகத்தை வட்டமாகச் சுற்றிச்சுற்றிப் பாடுதல். ஆலாபி + அனை = ஆலாபனை. ஆலத்தி - ஆளத்தி = விளக்கை அல்லது இராகத்தை வட்டமாகச் சுற்றுவித்தல். ரிஷபம் - இடபம். விடை - விடபம்-இடபம். விடை - விடலை. விலங்குகளிலும், சிறப்பாய்ப் பறவைகளிலும் இளமையாய்ப் பருத்திருப்பவற்றை விடை என்பது வழக்கு. விடை - விடைத் திருப்பது முதனிலைத் தொழிலாகுபெயர். விடைத்தல்-பருத்தல். விடை என்பது விடபம் என்று திரியும். பம் ஒரு விகுதி. cf. வாலம்-வாலிபம். விடபம் என்பது முதன்மெய் நீங்கி இடபம் என்று நிற்கும். cf. சமை - அமை. வளை-அளை. விடை என்பது விடலை என்றும் திரியும். விடை என்னும் பெயரும் அதன் திரிபுகளும் பல விலங்கிற்கும் பொதுவேனும், சிறப்பாக மாட்டிற்காளங்கன்றையே குறிப்பது நூன்மரபு. தோடுடையசெவியன் விடையேறி. காளை என்னும் பெயர் உவமையாகு பெயராய் ஓர் இளைஞனை அல்லது வீரனை உணர்த்தினாற்போல. அதன் பரியாயப் பெயராகிய விடை என்ப தும் அதன் திரிபுகளும் இளைஞரை அல்லது வீரரை உணர்த்தும். பாலைமக்களான மறவரின் தலைவன் விடலை எனப்படுவது காண்க. ஓர் இளைஞனை விடலைப்பையன் என்பதும், இளங்கோழி களைச் சேவல்விடை கோழிவிடை என்பதும் இன்றும் தென் னாட்டு வழக்கு. விடலை என்னும் கன்றுப்பெயர் இலத்தீன் மொழியில் vitula என்று திரியும். இதி, இத்தியாதி: இகரச்சுட்டு பகுதி. வடமொழிக்குச் சுட்டுச் சொல்லேயன்றிச் சுட்டெழுத்தில்லை. இரத்தம்: அரத்தம் = சிவப்பு. அரத்தம்-அரத்தகம்-அலத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு. அரத்தம் என்னும் சொல்லுக்குப் பகுதி வழக்கற்றது. இதற்கும் இதற்கினமான பிற சொற்கட்கும் அர் அல்லது அரம் என்பது மூலமா யிருக்கின்றது. அரக்கு = சிவந்திருப்பது. அரத்தம்ம - இரத்தம். அ - இ. போலி. இரத்தி = இலந்தை, சிவந்த கனியை யுடைய செடி. அலத்தகம், இலந்தை என்னும் சொற்களில் லகரம் போலி. இரத்தி - இலத்தி - இலந்தை. அரத்தம் - ரத்தம். Skt. red, E. இரம்பம்: அர் ஓர் ஒலிக்குறிப்பு. அர் அர் என்னும் ஒலிபடத் தேய்த்தல். அராவுதல். அராவுவது அரம். அரம்போல் அறுக்கும் ஆயுதம் அரம்பம். அரங்குதல் = தேய்தல், அழிதல் (தன்வினை). அரக்குதல் = தேய்த்தல், அழித்தல் (பிறவினை). அரந்தை = துன்பம், அறுப்பதுபோல் துன்பம் செய்வது. அரித்தல் = தேய்த்தல், அறுத்தல், அழித்தல். அரம்பம் - இரம்பம். அ - இ, போலி. இராக்கதன்: இரா + கதம் + அன் = இராக்கதன். இரா = இரவு. கதம் = செலவு, கதி - பகதி. கதித்தல் = செல்லுதல். அன்-விகுதி. இரவில் சென்று உணவு தேடுபவன் இராக்கதன். இராக்கதன் ராக்ஷஸன். Skt. க்க-க்ஷ. இராக்கதன் என்பதன் மொழிபெயர்ப்பே நிசாசரன் என்னும் வடசொற்பெயர். நிசி = இரவு, சரன் - செல்பவன். இராக்கதன் என்பது முறையே இராக்கன், அரக்கன் என்று திரியும். அரக்கன் என்பதற்கு அழிப்பவன் என்று பொருள் கூறினும் அமையும். இராக்கன், இராக்கி என்னும் பெயர்கள் முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும், இன்னும் தென்னாட்டில் சில வகுப்பார்க்குள் இடப்படுகின்றன. இராக்கதர் பண்டைக்காலத்திலேயே தமிழ்நாட்டி லிருந்ததால், அவரைக் குறிக்கும் பெயரும் தமிழிலிருத்தல் வேண்டும். இராசன் : அரசு-அரசன்-ராஜன். அரம் = அழித்தல். See அரன், அரம்-அரசு. அரன் = தெய்வம், சிவன். அரசு + அன் = அரசன் = தேவன் போன்றவன். அரசு = தலைமை. மரங்கட்குள் தலைமையானது அரசமரம். தேக்கு, கருங்காலி முதலியவை உறுதியாயிருப்பினும் அரசுபோல் ஓங்கி வளர்வதில்லை. "ஆல்போற் படர்ந்து அரசுபோ லோங்கி" என்னும் உலகியல் திருமண வாழ்த்தை நோக்குக. ஆலமரம் அதிகமாய்ப் படரினும், விழுதூன்றியபின் அடி தளர்ந்துபோம். அரசு ஓங்கிவளர்ந்து நெடுநாளிருக்கும். அதனால் பிள்ளையார் கோயில், மணவறை, பட்டஞ்சூட்டு விழாவகம் முதலியவற்றில் அரசங் கன்றையே நடுவர். அரசு, பூவரசு என்பன ஓரின மரங்கள், மேனாட்டார் இலை வடிவொப்புமை பற்றிச் சில மரங்களை ஓரினமாக்கினாற் போலப் பண்டைத் தமிழரும் இலைவடி வொப்புமைபற்றி அரசையும் பூவரசையும் ஓரின மாக்கினர். பூவையுடைய அரசு பூவரசு, அரசமரத்திற்குப் பூவின்மை யறிக. அரசன் என்னும் தென்சொல்லே ராஜன் என்று வடமொழியில் திரியும். அரசன் என்பதை ராஜன் என்னும் வடசொற்றிரிபாகத் தடுமாறக் கூறுவர் மொழிநூல் அறியாதார் சிலர். அரசு, பூவரசு என்னும் மரப்பெயர்கள் ஆரிய வருகைக்கு முன்பே தமிழ் நாட்டில் வழங்கிய பழந் தமிழ்ப்பெயர்கள் என்பதையேனும் அவர் அறிவாராக. அரசன் - ராஜன், Skt. ராஜ் (இந்துதானி) ராஜன் - இராஜன் - இராசன் (தற்பவம்) ராஜ்யம் - ராச்சியம் - இராச்சியம். ராஜன் என்னும் சொல்லினின்று rego, regent, region, regicide, regular முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். அரசன்-அரைசன், அ-ஐ போலி அரைசன்-அரையன், ச-ய போலி. அரயன்-ராயன் Skt. roy; E.Vice-Roy. ராயர் என்பது அரசரையும் ஒரு பார்ப்பனக் குடியையும் உணர்த்தும். இராசகாரியம், இராச சின்னம், இராஜஸ்ரீ, இராசநீதி, இராராசன், இராசவசீகரம், இராசவீதி, இராசாக்கினை, இராசாதிகாரம், இராசாதிபதி, இராசாத்தி, இராசாளி முதலிய தொடர்மொழிக ளெல்லாம் அரசகாரியம், அரச சின்னம் முதலிய செந்தமிழ்த் தொடர்களின் திரிபுகளே யென்றறிந்து கொள்க. இராத்திரி. இராத்திரம். இரா + திரி = இராத்திரி. இரா+திரம்=இராத்திரம். திரம் என்பது ஒரு விகுதிச் (suffix) சொல். cf. சாயுந்திரம் - சாய்ந்திரம். திரம் - திரி இரா - இருண்டிருப்பது. இருமை = கருமை, இரண்டு, இரவு என்னும் பெயர்கள் ரண்டு, ராவு என்று திரிந்தாற்போல, இராத்திரி, இராத்திரம் என்னும் பெயர்களும் ராத்ரி, ராத்ரம் என்று திரியும். உசிதம்: உசிதம் = உயர்வு. உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது. லட்சணம்: லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடசொற்கள் இலக் கணம். இலக்கியம் என்னும் தென்சொற்களின் திரிபே. லட்சம். இலக்கம்-லக்ஷம். தமிழிலுள்ள எண்ணுப்பெயர்களெல்லாம் உகரவீற்றன என்று கொண்டு, தமிழர்க்கு ஆதியில் 100 வரையில்தான் எண்ணத் தெரிந்ததென்றும், 999 வரையில்தான் தமிழிலக்கமென்றும், ஆயிரம், இலக்கம், கோடி என்னும் பெயர்கள் வடசொற்களென் றும் சிலர் கூறுகின்றனர். வான நூல் கணித நூல் முதலிய கலைகளில் எத்துணையோ வல்லுநரும் சிற்றிலக்கம், பொன் னிலக்கம் முதலிய அளவைகளையும் ஆய்தக்குறுக்கம் மகரக் குறுக்கம் முதலிய மாத்திரை நுணுக்கங்களையும் அறிவதில் நுண்மாண் நுழைபுலத்தினரும், வெள்ளம், ஆம்பல் முதலிய பேரெண்களைக் குறியிட்டாண்டவருமான முன்னைத் தமிழ்ர்க்கு மூன்று தானங்கட்குமேல் எண்ணத் தெரியாது என்பது எங்ஙன் பொருந்தும்? "ஆயிரக் கிளவி வரூஉங் காலை" எனத் தொல்காப்பியத்துட் கூறியிருப்பதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆயிரம் என்னும் எண்ணும் அதன் பெயரும் தமிழ்நாட்டில் வழங்கி யிருந்தமை அறியப்படும். இலக்கமென்பது ஒரு பெரிய இலக்கம் (எண்). கோடி என்பது கோடி (கடைசி) யெண். இலக்கம் தமிழ். lakh E. லக்ஷ்ம் Skt. கோடி தமிழ். கோட்டி, Skt. குடோடு Arabic, crore, E. வௌகீகம். உலகம்-லோகம்-லௌகீகம். உலகு + அம் = உலகம். உலகு = உலப்பது: உலத்தல் = அழிதல். `கால முலகம்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால், உலகம் என்னும் சொல் தொல்காப்பியருக்கு முன்பே தமிழ்நாட்டில் வழங்கிய தென்றும், செந்தமிழ்ச்சொல் என்றும் அறியப்படும். உலகம் என்பதன் திரிபாகிய லோகம் என்னும் சொல் வடமொழி யில் லௌகீகம் எனத் தத்திதாந்தமாகும். சாமம். சமம்-சாமம். இரவு மூன்று சமபாகமாகப் பகுக்கப்பட்டதினால், ஒவ்வொரு பாகமும் சாமமெனப்பட்டது. ஒரு சாமம் பத்து நாழிகை. சாமம்-யாமம். ச-ய போலி. மூன்று சாமங்களும் முதற்சாமம், நடுச்சாமம், கடைச்சாமம் என உலகவழக்கிலும், மாலையாமம், நள்ளியாமம், வைகறையாமம் எனச் செய்யுள் வழக்கிலும் கூறப்படும். யாமம் என்பது சிறப்பாக நடுச் சாமத்தைக் குறிக்கும். சின்னம். சின்னம்=அடையாளம். `சின்னம் அல்லாக் காலை யான' `எண்ணிடை யிட்டுச சின்னங் குன்றியும்' எனச் சின்னம் என்பது கலிப்பாவின் ஓருறுப்புப் பெயராகத் தொல்காப்பியத்துட் கூறப்பட்டிருப்பதால், தமிழ்ச் சொல்லாத லறியப்படும். குடை, கொடி முதலியவை அரச அடையாளங்களாதலின் சின்ன மெனப்படும். அரச சின்னங்களைப் பற்றிக் கூறும் செய்யுள் சின்னப்பூ. சின்னம்- sign (Eng) ஒருவரின் அடையாளமாகிய கையெழுத்து. sign-signal. தானம். தா + அனம் = தானம் - தாநம். (வ) தா பகுதி, அனம் விகுதி. தா என்னும் தமிழ்ப்பகுதியே இலத்தீனில் do என்றும். இந்துத்தானியில் தேவ் என்றும் திரியும். jhd«-donum, Lat, donation, E. தேவதை. தேய்-(தேய்வு)-தேவன். தேய்வு-(தேய்வம்)-தெய்வம். தேவு-தே. தேய்த்தல் = உரசுதல், கடைதல். மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதாலும், மக்கள் தீக்கடை கோலாற் கடைவதாலும் நெருப்புண்டாகும். பொருள்கள் தேய்வதால் உண்டாவது தேயு. தேய் + உ = தேயு: தேயு-தே-தீ. தேய்-தே. தே+உ = தேவு தேவு+அன்=தேவன். தீப்போல்வது தெய்வம். njî-Theos. Gk; Deus. L. Deity; E. தேவு-தேவம்-தேவதம்-தேவதை. தெய்வம்-தெய்வதம். பரிபாகம். பரு-பரி. மிகுதிப் பொருளுணர்த்தும் உபசர்க்கம். பகு+அம்=பாகம். முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர். பகு+தி=பகுதி-பாதி. பகு+அல்=பகல்-பால். பகு+ஐ=பகை. பகு+அம்=பக்கல் பகுதியிரட்டித்து விகுதி பெற்ற தொழிற்பெயர். பகு+அல்=பக்கல் பகு+பு=பகுப்பு. பகு-வகு. வகு+ ஐ = வகை-அகை. பகு+பகிர். வகு-வகிர். வகு + பு=வகுப்பு. பகு-பா. பா + தி = பாத்தி. பாத்து + இடு = பாத்திடு. இடு துணைவினை. பாத்திடு-பாத்தீடு-பாதீடு, முதனிலை திரிந்த தொழிற்பெயர். பாதம். பதி + அம் = பாதம், முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர். நிலத்திற் பதிவது பாதம். முகம். மூசு மூசு என்பது மூச்சுப்பற்றிய ஒலிக்குறிப்பு. மூசு மூசு என்று உயிர்ப்பது மூச்சு. மூச்சுவிடும் உறுப்பு (மூச்சி)-மூஞ்சி. மூச்சு-மூக்கு=1. மூச்சுவிடும் உறுப்பு. 2. மூக்கிலுள்ள மலம். _¡F-peak, Eng. முக்குப்போன்ற சிகரம். மூக்கு-(மூக்கம்)-(முக்கம்)-முகம். முகத்தல்=மூக்கினால் மணமறிதல். முக-முகர், முகர்தல்-மணமறிதல். முக-மோ `மோப்பக் குழையும் அனிச்சம்' (குறள். 90) முகர்-நுகர்; நுகர்தல்=1. மணமறிதல். 2. இன்பந் துய்த்தல். முகத்தல்=விரும்புதல் `மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்' (உபலக்ஷணம்) முக-மோ. மோ + கம் = மோகம். மோகம்-மோகி; மோகித்தல் = காதலித்தல். மோகி + அனம் = மோகனம். மோகனம் செய்யும் பேய் மகள், மோகினி-மோகினி. முகம்-முகடு = 1. கூரை, மோனோக்கிய மூக்குப் போல்வது 2. உச்சி. அண்ட முகடு = வானத்தின் உச்சி. முகடு + இ = முகடி = 1. முகட்டுத்தரத்திலுள்ள பேய், 2. மூதேவி. முகடி-முகரி. முகடி-மோடி = 1. பேய். 2. காளி. முகடு + பூச்சி = முகட்டுப் பூச்சி - மோட்டுப் பூச்சி. - மூட்டை, bug. மூட்டை +பாய்ச்சால் - மூட்டைப்பாய்ச்சால் – மூட்டையைத் தின்பது. முகடு-மோடு-மேடு, மோடு=1. உயரமான தரை. 2. பெருமை. மூக்கு=1. பறவையின் அலகு. மூக்குப் போல நீண்டிருப்பது. beak, E. 2. கெண்டிமூக்கு, மூக்குப்போல்வது. 3. பயற்றின் முனைப்பக்கம், மூக்குப்போல்வது. 4. துருத்தியின் குழல், மூக்குப் போல்வது. மூக்கு-முக்கு=1. மூலை, nook, E. 2. சிறு தெரு, மூக்குப்போல் ஓடுங்கியது. முகம் = face. மூக்கையுடையது. (தானியாகு பெயர்) அல்லது மூக்கு போல முன்பக்கமுள்ள உறுப்பு. (உவமையாகு பெயர்.) முகம் = 1. பக்கம்-வடக்கு முகம். = 2. எதிர்-காற்று முகம். = 3. முன் பக்கம். துறைமுகம் = நெய்தல் நகர்க்கு முகம் போல்வது. நூன்முகம் = நூலுக்கு முகம் போல்வது. திருமுகம் = முகம்போலப் பேசும் கடிதம். ஒருமுகம் = ஒருநோக்கு. நேர்முகம் -நேர்ச்சி. போர்முகம் = போர்க்களத்தின் முன்பக்கம். முகதலை = சேலையின் முன்பக்கம். முகம் = மேற்பக்கம். இலைமுகப் பைம்பூணிறை. முகமன் = முகதுதி. முகத்தல் = தன் பக்கத்திற் கொள்ளுதல். முகவை = முகத்தலளவு. முகில் = மேகம், நீரை முகப்பது. முகப்பு = 1. ஓர் கொடியின் முன்பக்கம். 2. ஒரு கட்டடத்தின் முன்பக்கம். முகம்-முகி-முகிழ். முகிதம்-கூடுதல். முகிழ்-அரும்பு, மூக்குப்போலக் குவிந்தது. முகிழ்-மொக்குள்-மொக்கு. முகிழ்-முகை, முகிழ்த்தல் = தோன்றுதல். முகிழ்-மூழ். மூழ்த்தல் = அரும்புதல் போல வாய் மூடுதல். மூழ்-மூடு-மூ - முதல் = மூடுதல். முகம்-முகர் = 1. முகம். 2. முகத்தையுடைய முத்திரை. முகர்-முகரை = முகம். (தென்னாட்டு வழக்கு) முகர்-முகரா-மொகரா - அரசன் முகத்தை யுடைய ஒரு நாணயம். முகம் + திரம் = (முகத்திரம்) மோதிரம், முகத்தை யுடையது. முகம்+திரை = முகத்திரை-முத்திரை. முகத்தையுடையது. திரம்-திரை. முகம்-நுகம் = yoke, வண்டியின் முகத்திலிருப்பது, முகக்கோல் - மோக்கோல் - மோக்கால். முகம்-முகன், முகனை-மோனை - சீர்முகத்திலுள்ள எழுத்துகள் ஒன்றி வருதல். முகன்-முன், இடைக்குறை. முன்றானை-முந்தாணி. முன்-முன்னே, முன்னை-முன் + ஐ = முனை, போர்முனை. முன-முன்பு-முன் + இ = முனி-நுனி, நுதி, முனை-நுனை. முன்-முந்து-முன்று-முந்தல்-முதல், இடைக்குறை. முதல் + இ = முதலி: முதலி + ஆர் = முதலியார். முதல் + ஆளி = முதலாளி. முதன்மை-முதுமை. முதியோர், முதுகுடி மூதூர், மூதுரை. இங்ஙனம், முகம் என்னும் சொல், பகுதி யுடையதாயும் முதலா வது மூக்கையும் பின்பு முகத்தையும் குறிப்பதாயும், நூற்றுக்கடுத்த திரிசொற்களை (Derivation) யுடையதாயும் தமிழிலுள்ளது; வடமொழியிலோ பகுதியற்றதாய் வாய் என்னும் ஒரே பொருள் யுணர்த்துவதாயுள்ளது. ஆதலால், முகம் என்பது தென்சொல் லாதல் தெற்றென விளங்கும். வடமொழிக்கும் தென்மொழிக்கு முள்ள பொதுச் சொற்களை வடசொல் அல்லது தென்சொல் என்று கண்டறிதற்குக் கால்டுவெல் கண்காணியர் (Bishop Cald-well) கூறிய விதியறிந்து கடைப்பிடிக்க. மூஞ்சு + எலி = மூஞ்செலி-மூஞ்சுரு. தூங்கு மூஞ்சி-ஓர் மரம். அழு மூஞ்சி, அடுமூஞ்சி. முகம்=முன், முகாமை-முதன்மை, தலைமை. முகவரி = under முகவெட்டி வருணம் வரி+அணம்=வரணம் + cf. மரி+அணம்=மரணம். வரணம்=வர்ணம்-வண்ணம்-வருணம். வண்ணம்-பண்ணம்-பண்ணத்தி. cf. வண்டி-பண்டி. பண்ணம்-பண். வண்ணம்-வண்ணகம். வரித்தல் = வரைதல், எழுதுதல், பாடுதல். வரி என்பது இசைப்பாடல்களில் ஒன்று. அது ஆற்றுவரி கானல்வரி முதலிய பலவகைப்படும். வர்ணம் = நிறம், varnish, E. = குலம், நிறத்தினா லறியப்படுவது. = செய்யுள் அல்லது இசைப்பாடல், வரைவது போல வருணித்துப் பாடுவது. வர்ணம்-வரணி; வாணி = வண்ணி - வருணி. வர்ணித்தல் = 1. வரைதல். 2. வரைதல்போலச் சிறப்பித்துக் கூறுதல். செய்யுளும் சித்திரமும் ஒரு பொருளின் வடிவைக் காட்டுவதில் ஒன்றுக்கொன் றினமாகும். முன்னது அகக்கண்ணுக்கும் பின்னது புறக்கண்ணுக்கும் புலனாம். இதுகாறும் கூறியவற்றால், எத்தனையோ தென்சொற்கள் வட மொழிச் சொன்றுள்ளன வென்றும், அவை விழிப்பத் தோன்றா விடினும் ஆராயத் தோன்றும் எனவும், அறிந்துகொள்க. (செந்த மிழ்ச் செல்வி, சுறவம் 1935.) 13. வடமொழி பல்வகைச் சொற்பெருக்கம் ஆரியர் தென்னாட்டிற்கு வந்ததிலிருந்து மறைமலையடிகள் காலம் வரை, தமிழ் வளர்ச்சி யடையவில்லை. ஏற்கெனவே அமைந்திருந்த பல சொற்களும் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்த்தப் பட்டு வந்திருக்கின்றன. வடமொழியோ தமிழை இன்றியமையாத துணையாகக் கொண்டு, தமிழுக்கே மாறாக இடையறாது மேன்மேலும் சொல் வளர்ச்சி யடைந்து வந்திருக் கின்றது. (1) காண் - (த்யூத்). கான், கன், கென், க்னோ-(இலத்.). க்னோ (g) - (கி.) க்னோ (g) - இ.வே. ஜ்யா=அறி. ஜ்ஞா என்றும் அடியினின்று திரிந்த சொற்கள் : எ-டு: i. முன்னொட்டுப் பெறாதவை: ஜ்ஞாத்வ=மதியுடைமை ஜ்ஞாத்ர=அகக்கரணம் ஜ்ஞாப்தி=அறிக்கை, உணர்கை ஜ்ஞாந=அறிவு, ஓதி ஜ்ஞாதி=நெருங்கிய உறவினன் ஜ்ஞாநி=அறிஞன் ஜ்ஞாத்ரு=அறிவோன் ஜ்ஞாபக=அறிவிக்கை நினைப்பிகை ஜ்ஞாதேய=இனமை ஜ்ஞேய=அறியப்படுவது (வ.வ) ii. முன்னொட்டுப் பெற்றவை: அஜ்ஞா, அஜ்ஞாதி, அஜ்ஞாந, அஜ்ஞாநி, அஜ்ஞேய; அநுஜ்ஞப்தி, அனுஜ்ஞா, அநுஜ்ஞாந, அநுஜ்ஞாபக, அநுஜ்ஞாபந; ப்ரஜ்ஞா, ப்ரஜ்ஞ, ப்ரஜ்ஞாத்ரு, ப்ரஜ்ஞாந, ப்ரஜ்ஞாபந; ப்ரதிஜ்ஞா. விஜ்ஞாந, விஜ்ஞாநி, விஜ்ஞாபக, விஜ்ஞாபந (விண்ணப்பம்), விஜ்ஞாப்தி, விஜ்ஞேய; ஸம்ஜ்ஞா (ஸமிக்கை), ஸம்ஜ்ஞாபந, ஸம்ஜ்ஞாந, ஸம்ஜ்ஞாநி. (2) பூ-இ. வே. பூ (bhu#). E be, OTeut beo, Gk phu, L fu. (வ.வ.) பூ (bhu#) என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ.டு: i. முன்னொட்டுப் பெறாதவை: பின்வருஞ் சொற்களின் முதற் பகரமெல்லாம் (bh) என்னும் கனைப்பொலி அல்லது மூச்சொடு கூடிய எடுப்பொலி என அறிக. புவ, புவத் (d), புவந, புவ, புவி, பூ பூத, பூதி, பூமந், பூமி, பூய, பூர், பவ, பகவ, பவத், பவந, பவந்த்த, பவாநீ, பவித்ரா, பவித், பவிஷ்ய, பவீத்வ, பவீய, பவ்ய; பாவ, பாவக. பாவந, பாவி-பாவிந், பாவிக, பாவித்ர. (வ.வ.) ii. முன்னொட்டுப் பெற்றவை: அபவ, அபாவ, அபாவந, அபாவிந்; அதிபூ, அதிபூத; அநுபூ, அநுபவ, அநுபாவ, அநுபாவக, அநுபாவந, அநுபாவிந், அநுபூத, அநுபூதி; அப (p) பூ, அபபூதி; அபி (bh) பூ, அபிபவ, அபிபவந, அபிபாவக, அபிபாவத, அபிபாவிந், அபிபு, அபிபூத, அபிபூதி, அபிபூய, அபிபூவந்; உத் (d) பூ, உத்பவ, உத்பாவ, உத்பாவந, உத்பாவிந், உத்பூத, உத்பூதி; சம்பூ, சம்பு: தத்பவ, தத்பாவ, தத்பூத; ப்ரபூ, ப்ரபு, ப்ரபவந, ப்ரபாவ, ப்ரபாவந, ப்ரபூத, ப்ரபூதி, பரிபூ, பரிபவ, பரிபவந, பரிபவிந், பரிபாவந, பரிபூத, பரிபூதி, ப்ரதிபூ, ப்ரதிபாவ; ஸம்பூ, ஸம்பாவித, ஸம்பவ, ஸம்பாவந; வபாவ, வயம்பூ, வயம்பு, வயம்புவ, வயம்பூத. (3) மா-மா (இ.வே.) = அள. மா என்னும் அடியினின்று திரிந்த சொற்கள் எ - டு: i. முன்னொட்டுப் பெறாதவை: மாந, மாத்ர, மாத்ரு, மாதி. ii. முன்னொட்டுப் பெற்றவை: அநுமா, அநுமாந, அநுமிதி, அநுமேய; அபமா, அபமாந, அபமாநிந்; உபமா, உபமாதி, உபமாத்ரு, உபமாந, உபமிதி, உபமேய; நிர்மா, நிர்மாண, நிர்மாத்ரு, நிர்மிதி; ப்ரமா, ப்ரமாண, ப்ரமாத்ரு, ப்ரமிதி, ப்ரமேய; ப்ரதிமா, ப்ரதிமாந, ப்ரதிமிதி; பரிமா, பரிமாண, பரிமிதி, பரிமேய. சமாந, சந்மாந; ஸம்மா, ஸம்மாந, ஸம்மாத்ரு, ஸம்மிதி. (வ.வ.) 14. இடுகுறிச் சொற்கள் ஸம்வர்த்த, ஆவர்த்த என்பன போன்ற முகிற்பெயர்களும், சங்கராபரணம், நாதநாமக்கிரியை என்பன போன்ற பண்ணுப் பெயர்களும், இவைபோன்ற பிறவும், இடுகுறிச் சொற்களாம். ஆட்பெயர்கள் இக்காலத்திற் பெரும்பாலும் இடுகுறிகளாகவே எங்கும் இடப்பெறு கின்றன. தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்பன போல வடமொழிப் புராணங்களில் வரும் படைப்புப் பெயர்கள் இடு குறியுள் இடுகுறியாகும். பஞ்சதந்திரக் கதைகளுள் வரும் புனை பெயர்களும் இத்தகையனவே. (வ.வ.) வடமொழி வேர்ச்சொல் திரட்டின் குறைபாடுகள் (1) சொன்னிலை சொன்மூலம் வேர் (Root), அடி (Stem), முதனிலை (Theme) என மூவகைப்படும். வேரும் முதல்வேர், வழிவேர், சார்புவேர் என முத்திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும். முளைக்கு மூலம் வித்தே. அடி என்பது கவையுங் கொம்புங் கிளையும் போத்துங் குச்சுமாகப் பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழியிலேயே தெளிவாய்க் காணப்பெறும். வடவர் திரிபுற்ற முதனிலைகளையும் சொற்களையுமே வேர்ச்சொல்லாகக் கொண்டுள்ளனர். எ-டு: சுள்-சுஷ், பகு-பஜ் (bh) - முதனிலை bgUF-¥Uà(b)-tÊ முதனிலை செவியுறு-ச்ரு-மரூஉ முதனிலை. சுண்ணம்-சூர்ண் (c), வட்டு-வட்-சொன்னிலை. (வ.வ.) (2) பல்வடிவச் சொற்கள் எ-டு: அத் (d) = உண், அச் (s$)=c©. அ=இரு, ஆ=உட்கார். (4.) இனக்கருத்துச் சொற்கள் எ-டு: உச் (c) = தொகு, cŠ¢(ch)=mǤJj தொகு. (5) பல்வகைச் சொற்கள் எ-டு: ஓலண்ட்=வெளியெறி, கண்டூய்=தேய். (6) பல்மெய்ச் சொற்கள் எ-டு: ஸாந்த்வ்=அமைதிப்படுத்து, த்ருக்ஷ்=செல் (வ.வ.) (7) பிற்காலவெழுத்துச்சொற்கள் எ-டு: காங்க்ஷ்=ஆசைப்படு, ஸதம்ப் (bh) = அசையாமல் நிறுத்து. (8) படைப்புச் சொற்கள் எ-டு : கல்ய, பிண்ட் (9) ஒரு சொல்லைப் பலசொல்லாக்கல் எ-டு: சாய்-சாயை-சாயா (c). சாய்-சாய (சாய்கை.படுக்கை). சாய்-ஸாயம் (சாயுங்காலம்). பகு-பக்கம்-பக்ஷ பகு-பாகு-பாகம்-பாக (bh). (10) தொடர்பிலாப் பொருள் கூறல் எ-டு : ஈஜ்=போ, கண்டனஞ்செய். ப்ருஹ்4 = பேசு, ஒளிர். (வ.வ.) (11) செயற்கைப் பொருளிணைப்பு எ-டு: வர்ஷ்=மழைபெய், மழைபோல் அம்புமொழி, அம்பெய்யும் ஆண்மை பெறு. வர்ஷ்-வ்ரஷ-வ்ருஷப-ருஷப. (12) ஒருபொருட் பல சொற்களின் மிகை பின்வருஞ் சொற்களெல்லாம் போதலைக் குறிப்பனவாம். (வ.வ.) அங்க் (g), அங்க் (gh), அச் (c), அஜ், அப்ர (bh), அம், அய், அஹ், இ, இக் (kh), இங்க் (g), இட் (t@), இஷ், இ, ஈஜ், ஈர், இஷ், உக் (kh), ரு, ருஜ், ரூ, ஏஷ், கங்க், கட் (t@), கம்ப் (b), கல், க, கேப், கப் (kh, b), கர்வ் (kh), கம் (g), கர்ப் (gh), கூர் (g), க்லுச் (g, c), க்லுஞ்ச், டிக் (t@), டீக் (t@), டீ, டௌக், தங்க் (g), தஞ்ச், தய், திக், தில், தீக், து, தூர் (பரபரப்பாய்), த்ருக்ஷ், த்ரங்க், த்ரக், த்ர, த்ரிக் (kh), த்ரௌக், த்வய்க் (g), தக்ஷ் (d), (விரை வாய்), து (d), தந்வ் (dh), த்ரு (dh), த்ரஜ் (dh), த்ரிஜ் (dh), த்யஜ் (dh), நேஷ், பட் (t@) பண்ட் (d@), பய், பத் (th), பத் (d), பர்ப், பர்ப் (b), பல், பஷ். பி, பே, ப்ரேஷ், ப்லிஹ், ப்லீர், பண் (ph) கல் (ph), பேல் (ph), பம்ப் (b), பர்ப் (b), பி (b), மங்க் (g), மப்ர (bh), மய், மவ்ர், மீவ், மேப், ம்ருச் (c), ம்லுச் (c) யா, (வ.வ.) ரக் (kh), ரங்க் (g), ரங்க் (gh), (சுருக்காய்), ரப் (ph), ரய், ரி, ரீ, ரு, ருண்ட், ரேப், ரேப் (b), லக் (kh), லங்க் (kh), லங்க் (g), லய், லர்ப் (b), லிங்க் (kh), லிங்க் (g), லிச், லுட் (t@h), லுண்ட் (t@) லுண்ட் (t@h), லேப், லைண். வக், வக் (kh), வங்க், வங்க் (g), வஜ், வஞ்ச் (c), வப்ர (bh), வர்ப் (ph), வல்க் (g), வல்ல், வக், வர, வேல், வ்ய, வ்ரீ, வ்லீ. சஞ்ச் (c), சத் (d), சப் (b), சர்ப் (b), சல், சவ், சிக் (kh), சுக், சுந், சேல், சோண், ச்யே, ச்ரக், ச்ரக், (g), ச்ரி, ச்ரு, ச்லங்க் (g), ச்வங்க், ச்வச் (c), ச்வஜ், ச்வட் (t@h), ச்வப்ர (bh), ஷ்வக்க், ஷ்வஷ்க்; ஸம்ப் (b), ஸய், ஸர்ப் (b), ஸல், ஸாத் (dh), ஹு, ரு, ஸேக், ஸேல், கு (தாண்டி), த்ருக்ஷ். ஹ்வல் (நெளிந்து). இவற்றுட் சில வேறுபட்ட போக்குகளைக் குறிப்பினும், இத்தனை சொற்கள் ஒரே பொருள் குறிக்குமென்பது ஐயத்திற்கிடமானதா யிருக்கின்றது. இங்ஙனமே, உண், கொல், என்னும், பொருள்கள் பற்றியும் ஏராளமான சொற்கள் உள்ளன. (வ.வ.) (13) எளிதாய்ப் பொருள் வளர்த்தல் பல வடசொற்கட்குப் போதற் பொருளை முதலிற் குறித்து, அதன்பின் வேண்டிய பொருட்களையெல்லாம் பொருந்தா வகையிற் பொருத்திக் கொள்கின்றனர். எ-டு: ரு4-செல், இயங்கு, எழு, உயரநோக்கு; ஒன்றை நோக்கிச் செல், தலைக்கூடு, மேல்விழு, சேர், பெறு; ஒருவன் பங்கிற்கு விழு, நிகழ், நேர்; இயக்கு, தூண்டு, எழுப்பு, உயர்த்து, இயக்கு, எறி; ஊடெறி, துளை, துருவு; உள்ளிடு, வை, பதி, இறுக்கு. இவை வேதப் பொருட்கள். பிற்கால நூற்களில் இன்னுஞ் சில பொருள்கள் கூறப்பட்டுள. (வ.வ.) (14) மூலங் கூறப்படாமை எ-டு: க்ருஷ்ண=கருப்பு, கரிய. க்ருஷ்பக்ஷ=கரும்பக்கம் (தேய் பிறை). கண்ணன் பிறக்கு முன்பே இச்சொல் வேதத்தில் உள்ளது. இது இருவகையாய் வந்திருக்கலாம். க. கரு-கருள். கருளுதல் = கருத்தல். கருள்-க்ருக்ஷ்- கிருஷ்ண. உ. கள்-கண்-கண்ணன்=கரியன். கண்ணன் - க்ருஷ்ண. ஒ. நோ: உள்=உண்-உண்-உண்ணன்-உஷ்ண. `ரு' இடைச்சொருகல். ஒ. நோ: கத்(தி) - க்ருத். (15) தமிழ் மூலம் மறைக்கப்பட்டுள்ளமை நூற்றுக்கணக்கான வடசொற்கட்கு மூலம் அல்லது முதனிலை தமிழிலிருக்கவும், அவற்றைக் குறியாது வடசொல்லின் பெயர் வடிவினின்றே வினைச்சொல்லைச் செயற்கையாகத் திரித்திருக் கின்றனர். சமற்கிருதம் உலக வழக்கிலில்லாத இலக்கிய நடை மொழியாதலின் (Literary dialect), அதிற் பெயரடி, வினைகளை, விருப்பம்போல் மிக எளிதாகத் திரித்துக் கொள்ளலாம். `தாதுபாட' என்னும் வடமொழி வேர்ச் சொற்றிரட்டின் ஆசிரியர், தந்து புனைந்துரைத்தல் என்னும் உத்தியை இவ்வகையில் தாராள மாகக் கையாண்டுள்ளனர். எ-டு: பிண்டம் என்னும் பெயர் பிடி என்னும் தமிழ் வினையின் முனனை வடிவான பிண்டி என்பதின்று திரிந்திருக்கவும், தாது பாடம் அதற்குப் பிண்ட் என்றொரு செயற்கை மூல வினையைப் படைத்து, கட்டியாக அல்லது உருண்டையாகத் திரள், ஒன்றுசேர், பொருந்து, கூடு என்று பொருளூரைத்துள்ளது. இது பெயரடி வினை என்பதை "prob. Nom. fr. next." என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. Nom. = Nominal verb. (வ.வ.) வியாகரணம் என்னும் சொல் விளக்கம் இலக்கணம், இலக்கியம் என்னும் இரு சொற்களும் தென் சொற்களாதலால், தொன்றுதொட்டு நூலும் வனப்பும் என இரு பாற்பட்ட தமிழ்ச் செய்யுட்டொகுதிகட்கே முறையே பெய ராகி வழங்கி வந்திருக்கின்றன. இவற்றிற்கு நேர் வட சொற்கள் வியா கரணம் (வ்யாகரண), சாகித்தியம் (ஸாஹித்ய) என்பனவாகும். வ்யாகரண என்னும் சமற்கிருதச் சொல் வி+ஆ+க்ரு என்னும் முக்கூற்றுக் கூட்டுச் சொல். `வி'3 என்பது, வேறு அல்லது துண்டாக என்று பொருள்படும் முன்னொட்டு; `ஆ' என்பது சொல்வேறுபடுத்தலன்றித் தனக் கென ஒரு பொருளில்லா இடையொட்டு, க்ரு என்பது செய் என்று பொருள் படும் வினை முதனிலை. வ்யாக்ரு=துண்டு செய், வேறு பிரி, பகு, கூறுபடுத்து, விளக்கு. வ்யாகரண=வேறுபடுத்தம், கூறுபடுப்பு (Analysis), விளக்கம், இலக்கணம் (Grammer). `வி'3 என்னும் முன்னொட்டு த்வி (இரண்டு என்னும் சொல் வினின்று திரிந்திருக்கலாமென்று மா. வி. அ. கூறும். இரண் டாக்குதல் என்னும் கருத்தினின்று பகுத்தற் கருத்து தோன்றுவது இயல்பே. ஆயின், விள் என்னும் தென்சொல்லின் கடைக் குறை யாக `வி' என்னும் வடமொழி முன்னொட்டைக் கொள்வதே மிகப் பொருத்தமாம். ஒ. நோ: அல்-அ, குள்-கு, நல்-ந, பொள்-பொ. விள்ளுதல்=பிளத்தல், பிரிதல், பகுதல், வேறுபடுதல், கூறுபடுதல். விள்-விறு-வீறு-வீற்று. வீற்று வீற்று=துண்டு துண்டாய். வீறு-வேறு-வேற்று. `ஆ' என்னும் இடையொட்டு ஆக என்னும் வினையெச்ச வீற்றின் கடைக் குறையாகவு மிருக்கலாம். பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு. என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவில் (24), சொல்லாக என்பது சொல்லா என்றும், சேயிழையாக என்பது சேயிழையா என்றும், ஆகவீறு ஆவீறாக ஈறு குன்றி நிற்றல் காண்க. வ்யாக்ரு என்னும் சொற்கு, வேறாகச் செய் என்னும் பொருளும் பொருந்து தல் காண்க. க்ரு என்பது, கருவி கருமம் என்னும் தென்சொற்கட்கு முதனிலை யாகிய கரு என்பதன் முதன்மெய்ந் நீக்கமே. இவ்வினை கடைக் கழகத்திற்கு முன்பே வழக்கற்றது. சொல்லைக் கூறுபடுப்பதும் சொற்றொடரைக் கூறுபடுப்பதும் சொற்றொகுதியாகிய மொழியைக் கூறுபடுப்பதும், ஆக, மூவகைக் கூறுபடுப்பே வியாகரணம். (வ.வ.) 16. வடவர் காட்டும் வேர்ச்சொற்கள் வேர்ச்சொற்களன்மை வேதமொழி வழக்கற்ற கலவைத் திரிமொழியாதலாலும், சமற்கிருதம் அரைச் செயற்கையான இலக்கிய நடைமொழியாத லாலும், வடசொற்களினின்று பெரும்பாலும் வேர்ச்சொற் களை அறிய முடியாது. இடைகழி என்பது முறையே டேகழி, டேழி, ரேழி எனக் கொச்சைத் திரிபுகளில் வேர்ச்சொல்லும் பொருளும் தோன்ற வில்லை. இங்ஙனமே, தமிழ் போன்ற இயன்மொழியில் தோன்றும் வேர்ச்சொற்கள் ஆரியம் போன்ற திரிமொழிகளில் அத்துணைத் தெளிவாய்த் தோன்றா; அவற்றுள்ளும், திரிபில் திரிபாகிய சமகிருதத்திற் பெரும்பாலும் தோன்றவே தோன்றா. வடமொழியாளர் தம் மொழியைத் தேவமொழி யென்று காட்டி, தமிழை என்றும் அதற்கு அடிப்படுத்தல் வேண்டி, வடசொற்களின் முதனிலைகளை அல்லது முதலைசைகளை யெல்லாம் வேர்ச்சொல்லென்று கொண்டு அவற்றைப் பிரித்துக் கோவைப் படுத்தி மொத்தம் 1,750 வேர்ச்சொற்களெனக் கணக்கிட்டிருக் கின்றனர். அவற்றுட் பல பல்பொரு ளொருசொற்க ளாதலால், மேலையர் அவற்றை ஆய்ந்து கண்டு வேர்ச்சொற்றொகையை 2,490 ஆகப் பெருக்கியுள்ளனர். ஆயின், சிறந்த ஆராய்ச்சியாளர் எல்லா வேர்ச்சொற்களையும் 12-இற்குள் அடக்கிவிடலாம் எனக் கருதுகின்றனர். மேலையர் வடமொழி வேர்ச்சொற் றிரட்டுகளின் குறை பாட்டை ஒருவாறுணர்ந்த வராயினும், தமிழைச் செவ்வையாய்க் கல்லாமையால் அவற்றைத் திருத்தியமைக்கும் ஆற்றலற்றவரா யுள்ளனர். வடவை-வடபா (b) வடவா, படவா (b) படபா (b, b). வடம்-வடவை=வடதிசை நெருப்பு (Aurora borealis). "வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து" (தனிப்பாடல்). வடவனல்=வடவை. அக்கடலின்மீது வடவனல் நிற்கவிலையோ (தாயு. பரிபூர.9). வெள்ளத் திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா. 86). வடவனலம்=வடவை. கடுகிய வடவனலத்திடை வைத்தது (கலிங். 402). வடந்தை=வடக்கிலுள்ளது. வடந்தைத்தீ=வடவை. சுடர்ந்தெரி வடந்தைத் தீயும் (காஞ்சிப்பு. இருபத். 384) உத்தர மடங்கல்=வடவை (திவா.). உத்தரம்=வடக்கு. மடங்கல்=ஊழித்தீ. உத்தரம்=வடக்கிலுள்ள ஊழித்தீ (பிங்.). பண்டைத் தமிழர் சுற்றுக் கடலோடிகளா (Circumnavigators) யிருந்தமையால், வடமுனையில் ஒரோவொருகால் தோன்றும் மின்னொளியைக் கண்டு அதற்கு வடவை அல்லது வடவனல் எனப் பெயரிட்டிருந்தனர். குமரிக் கண்டத்திற் பல பேரழிவுகள் நேர்ந்ததினால், ஊழியிறுதியழிவிற்கு அவ்வடவையே காரண மென்றுங் கருதினர். தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்றுமேனும், பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது. "Aurora, n Luninous atmospheric (prob. electrical) phenomenon radiating from earth's northern (borealis) or southern (australis) magnetic pole" என்று COD கூறுதல் காண்க. (வ.வ.) வடவர் வடவை என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, வடபா என்னும் அதன் வடமொழி வடிவிற்குப் பெண் குதிரை என்று பொருளிருத்தலால், அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டி வடபாக்னி என்றும் வடபா முகாக்னி என்றும் பெயரிட்டு, பெண்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று பொருளும் விரித்துவிட்டனர். அக்கதை வருமாறு:- கிருதவீரியன் மக்கள், பிருகு முனிவர் ஈட்டிவைத்த பெருஞ் செல்வத்தைக் கவரவேண்டி அம் முனிவரின் மக்களையும் பேரப் பிள்ளைகளையுங் கரு நிலையிங் கொன்றதினால், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு பெண் தன் கருவைத் தன் தொடையில் மறைத்து வைத்திருந்து, அது பிறந்தபின் ஔர்வ எனப் பெயரிட் டான். (ஊரு=தொடை. ஔர்வ=தொடையிற் பிறந்தவன்). கொன்ற வரிடம் பழிவாங்கும் பொருட்டுத் தவஞ்செய்ய, அத்தவத்தி னின்று உலகையே அழித்துவிடத்தக்க ஒரு பெருந் தீ கிளர்ந் தெழுந்தது. அதைக் கண்டு அவன் முன்னோர் அஞ்சி அதைக் கடலில் இட்டுவிடுமாறு கட்டளையிட, அவனும் அதற்கிணங்கி அங்ஙனமே இட்டு விட்டான். அது ஒரு பெண்குதிரை முக வடிவு கொண்டு அங்குத் தங்கிற்று. மா. வி. அ. இக்கதையையும் வரைந்து, வடபாக்னி என்னுஞ் சொற்கு, "`mare's fire,' submarine fire or the fire of the lower regions (fabled to emerge from a cavity called the 'mare's mouth' under the sea at the South pole") என்று விளக்கமுங் கூறியுள்ளது. மேலையர் தமிழைக் கல்லாமையால் விளையும் தீங்கு இதனால் வெளியாகின்றது. (வ.வ: 249-250) வடை வடை-வடா வட்டை-வடை=வட்டமான பலகார வகை. ஒ. நோ: பெட்டை-பெடை. "globule, round mass or cake, L." என்று மா. வி. அ. வும் குறித்திருத் தல் காண்க. (வ.வ: 250) வண்ணம் (1) செய்யுள் ஒலிப்புமுறை ஓசை, சந்தம், வண்ணம் என மூவகைப் படும். அவற்றுள் வண்ணம் என்பது, எல்லா அடியும் மாத்திரை யும் எழுத்தினமும் சீரும் ஒத்துவரப் பாடுவது. அதை நூற்றுக் கணக்கான வகையில் பல்லாயிரமாகப்பாடுவது இறைவன் திருவருள் பொற்றவர்க்கே இயலும் (த.இ.வ.48) வண்ணம் (2) வண்ணம்-வள்-வளை, வளைத்தல்=வளைத்தெழுதுதல், எழுது தல் வரைதல். உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல்.ககங) (தி.ம:753) வள்-வண்-வண்ணம்= (க) வளைத்தெழுதும் எழுத்து அல்லது ஓவியம். எழுத்திலும் ஓவியத்திலுமுள்ள கோடுகளெல்லாம் பெரும்பாலும் வளைந்திருப்பதையும், கோடு, வரி, வரை என்னுஞ் சொற்கள் வளைதற் கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருப்பதையும், நோக்குக. 1. எழுதும் மை அல்லது கலவைநீர். 2. எழுதிய கலவை நீரின்நிறம். 3. நிறவகை, வகை 4. ஓவிய அழகு, அழகு. 5. செய்யுள் ஓசைவகை, சிறப்போசைச் செய்யுள், பாட்டு, மெட்டு, பண். வள்-(வர்)-வரி-வரணம் (வரி+அணம்=நிறம், நிறம் பற்றிய குலவகை. வரிதல்=எழுதுதல். வரித்தல்=எழுதுதல். வண்ணம்-வண்ணி-வண்ணனை. வரணம்-- வரணி -- வரணை. ஒ. நோ: திள்=திண்--திண்ணை; திள்--(திர்)--திரள்-- திரளை-- திரணை. திண்ணை திரணை என்பன போன்றே, வண்ணம் வரணம் அல்லது வண்ணனை வரணனை என்பனவும், ஒரே வேரின வாயினும் வெவ்வேறயினின்று கிளைத்திருத்தலை நோக்குக. வண்ணனை மொழிநூல் இன்று தனிக் கலையாக வழங்கியும் வளர்ந்துவரும் மொழிநூல் 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் முளைத் தெழுந்ததேனும். அதற்கு வித்துத் தமிழ்நாட்டில் கி.மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இடப்பட்டதென்பது எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனிவே (தொல்.640) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்.877) இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (தொல்.880) வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (தொல்.884) என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் உணரலாகும். மேனாடுகளில் கடந்த முந் நூற்றாண்டுகளாக வளர்க்கப்பெற்று வரும் மொழிநூல், தொடக்கத்தில் ஆங்கிலத்தில், (Science of speech, Science of Language, Linguistic Science, Linguistics, Glottology, Philology) எனப் பல பெயர்களைப் பெற்றிருந்தது. இவற்றுள் (Lin-guistics, Philology) என்னும் இரண்டே இறுதியில் நிலைபெற்றன. மொழிநூல், ஒரே சமயத்தில், வரலாறு தழுவியதாகவும் ஒப்பு நோக்கியதாகவும் பல கூறுகளாகப் பகுக்கப்படாததாகவும் உள்ளது. மாக்கசு முல்லர் (Max Muller), விற்றினி (Whitney), செசுப் பெர்சென் (Jespersen) முதலிய மொழி நூற் பேரறிஞரெல்லாம் மேற்கூறிய முறையிலேயே மொழி நூலை வளர்த்து வந்தனர். ஆயின், அண்மையில், சில மேலை மொழி நூலறிஞர், சிறப்பாக அமெரிக்கர், மொழிநூலை, 1. வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) 2. வரலாற்று மொழிநூல் (Historical Linguistics) 3. ஒப்பியல் மொழிநூல் (Comparative Linguistics) என முக்கூறாகப் பகுத்து, அவற்றுள் வண்ணனை மொழி நூலையே சிறப்பாக வளர்த்து வருகின்றனர். இதன் பல குறைகள் உண்மைக்கு மாறாகவும் தமிழுக்குக் கேடாகவும் உள்ளன. அவையாவன. 1. வரலாறு தழுவாதது வரலாறு எக்கலைக்கும் அடிப்படையாய் மட்டுமின்றி முதுகந் தண்டாயுமுள்ளதென்பது, உலகறிந்த உண்மை. கலைகளுள்ளும், மொழிநூல் வரலாற்றியலை இன்றியமையாது தழுவியதென்பது சொல்லாமலே பெறப்படும். ஆயினும், வரலாற்றுத் தொடர் பின்றி உண்மை தழுவாத உயிரற்ற நிலையில் வண்ணனை மொழி நூல் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது, அந் நூலாரின் முயற்சி யின்மை, கலையுணர்ச்சியின்மை, நடுநிலையின்மை ஆகியவற் றுள் ஒன்றையே காட்டும். 2. ஆரிய அடிப்படை கொண்டது முந்தியல் செம்மொழியாகிய தமிழை ஆராயாமையால், மொழி நூல் திறவுகோல் தமிழிலேயே பொதிந்து கிடப்பதை அறியாது. திரிபில் திரிபும் செயற்கையில் செயற்கையும் ஆரியத்தின் முடியு மாகிய சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு, மொழிநூற் செய்திகளையும் மொழிகளையும் மொழியுறுப்புகளையும் முன் பின்னாகவும் கீழ்மேலாகவும் முறைபிறழக் கூறிவருவது வண்ணனை மொழிநூல். தமிழ் ஆரியத்தின் அடி என்பதை இன்னும் மேலையர் உணர்ந் திலர். 3. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது தமிழ்போலும் இயன்மொழியை ஆராயாது ஆரியமாகிய திரிமொழிகளையே ஆய்ந்ததினால், எல்லாமொழிச் சொற்களும் இடுகுறிகளே என்னும் தவறான முடிவிற்கு வந்துள்ளனர் இற்றை அமெரிக்க மொழிநூலாசிரியர். தமிழில் இடுகுறிச் சொல்லே இல்லையென்பதற்கு . "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே." என்னும் தொல்காப்பிய நூற்பா வொன்றே போதிய சான்றாம். "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்பது, சொல் வேர்ப்பொருள் பார்த்த வுடன் அல்லது மிகத் தெளிவாகத் தோன்றாது (சில சொற்களில்) எனப் பொருள்படுமேயன்றித் தோன்றவே தோன்றாது எனப் பொருள்படுவதன்று. இயற்சொற்களில் தெளிவாகத் தோன்றும் வேர்ப்பொருள் திரிசொற்களில் மறைந்துபோம் என்னும் உண்மையைக் கீழ்க் குறித்த சொற்களினின்று அறிக. இயற்சொல் திரிசொல் இடைகழி ரேழி வெண்ணெய் வென்ன (தெலுங்கு) Episcope Biscop மொழி தோன்றிய வகையை விளக்கி நிற்பது உலக முழுமை யினும் தமிழ் ஒன்றே. 4. சொற்கள் தம்மளவிற் பொருளுணர்த்தாது அவற்றின் முறைப் பாட்டினாலேயே பொருளுணர்துவன என்பது, இது மொழி தோன்றிய முறையை அறியாமையால் நேர்ந்த தவறாகும். இக்காலத்தும், குழந்தைகளும் நோயாளியரும் அயன்மொழித் துவக்க மாணவரும் சில வேளைகளில் ஒரு சொல்லாலேயே தம் கருத்தைத் தெரிவித்தல் காண்க. 5. ஆயிரம் ஆண்டிற்கொரு முறை நூற்றிற்குப் பத்தொன்பது விழுக்காடு எல்லாச் சொற்களும் மாறிவிடுகின்றன என்பது. எல்லா மொழிகளிலும், அடிப்படைச் சொற்கள் உட்பட, ஆயிரம் ஆண்டிற் கொருமுறை நூற்றுக்கு 19 மேனி எல்லாச் சொற்களும் வழக்கற்றுப் புதுச்சொற்கள் தோன்றுகின்றன என்று அமெரிக்க மொழிநூலார் கொண்டு, இவ்வடிப்படையில் சொன்மாற்றக் காலக்கணிப்பு (Glotto Ghronology) என ஒரு கணிப்பு முறையும் வகுத்திருக்கின்றனர். அது வருமாறு: "ஒரு மொழி இருகிளைகளாகப் பிரிந்துவிடின், ஆயிரம் ஆண் டிற்குப் பின் ஒவ்வொன்றும் மூலச் சொற்றொகுதியில் நூற்றிற்குப் பத்தொன்பது இழந்துவிட்டு, எண்பத்தொன்றே கொண்டு நிற்கும். மூலச்சொற்கள் 200 ஆயின், ஒவ்வொன்றிலும் 162 எஞ்சி நிற்கும். ஆயின், ஒரே சொற்றொகுதியை இரண்டும் இழக்கும் என்று கருதக் காரணமில்லை, ஒன்று இன்னொன்று கொண்டு நிற்பதிலும் இழந்ததிலும் தனித்தனி நூற்றுக்கு 81 தாங்கி நிற்கும் என்பது பெரும்பால் நிகழக் கூடியது. இங்ஙனமாயின், ஒவ் வொன்றும் மூலப் பொதுச் சொற் றொகுதியில் 132 அல்லது நூற்றுக்கு 66 கொண்டு நிற்கும் . இக் கணிப்பின்படி, இரு மொழி களில், அடிப்படைச் சொற் றொகுதியில் நூற்றுக்கு 66 இனச் சொல்லாயிருந்தால் அவை பிரிந்துபோய் ஆயிரம் ஆண்டாயிற் றென்றும், 44 இனச்சொல்லா யிருப்பின், பெரும்பாலும் ஈராயிரம் ஆண்டா யிருக்கு மென்றும், அறிந்துகொள்ளலாம்." இக் கணிப்பின்படி ஒவவொரு மொழியும் ஐயாயிரம் ஆண்டிற் குள் முற்றும் மாறிவிட வேண்டும். கி.மு. 7ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியம் இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முந்தியது. அதிலுள்ள உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் இன்றும் தமிழ்நாட்டில் வழங்கி வருவதோடு. அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு (தொல்.31) நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (தொல்.43) பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். (தொல்.59) என்பன போன்ற எத்துணையோ நூற்பாக்களும், இற்றை முறை யில் அமைந்து எல்லாரும் எளிதுணரக் கிடக்கின்றன. இதனால், மேற்காட்டிய அமெரிக்கச் சொன்மாற்றக் காலக்கணிப்பு முற்றும் புரைபட்டதென்க. 6. எல்லா மொழிகளும் திருந்தியவையே என்பது "இயன்மொழி யென்றும் திரிமொழி யென்றும், திருந்தியமொழி யென்றும் திருந்தாமொழி யென்றும், மொழிகட்குள் பாகுபா டில்லை. எல்லாம் திருந்தியவையே, சுருட்டு என்பது தெலுங்கில் சுட்டு என்றிருப்பின், அதற்கு அது சரியே. பொன் என்பது கன்ன டத்தில் ஹொன்னு என்றிருப்பின், அதற்கு அது திருந்தியதே". இவ்வாறு கொள்வது வண்ணனை மொழிநூல். "உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்குப் பொல் லாப்பு." தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழின் திரிபு என்றால், தெலுங்கர்க்கும் கன்னடருக்கும் வருத்தம் பிறக்கும். ஆதலால், இருசாரார்க்கும் பொதுவாகக் கூறுவது சிறந்தமுறை என்பது, வண்ணனை மொழிநூலார் கருத்து. இம் முறையொட்டிச் சில தமிழ்ப் பேராசிரியரும், திரவிடம் என்பது, தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பல மொழிகளின் தொகுதிப் பெயர். அவையெல்லாம் ஓரினமொழி கள் என்று கொள்வதல்லது தமிழ் பிற திரவிட மொழிகளின் தாயெனக் கூறுவது பொருந்தாது," எனக் கட்டுரைப்பர். தனிப்பட்டவர் செய்திகளில் ஒருவர், ஒருவர் குற்றங்குறைகளை மறைக்கலாமேயன்றி, ஒரு நாட்டு மக்களெல்லார்க்கும் பொது வான மொழித் துறையிலும் கலைத்துறையிலும் குற்றங்குறை களை மறைப்பது பண்பாடன்று. 7. இலக்கணத்தைப் பழிப்பது எல்லா முதுமொழிகளிலும் இலக்கண நூல்கள் அழகிய முறை யில் அறிஞரால் இயற்றப்பெற்றுள்ளன. அங்ஙனமிருப்பினும், அவற்றின் அருமையறியாது, அவற்றை வரைதுறையின்றிப் பழித்து, மாணவரை மயக்குவனவும் பொருட்சிறப்பற்றனவும் ஓரீறு கொண்டனவும் ஒன்றையொன்று பற்றுவனவுமான பல குறியீடுகளைப் புதிதாய்ப் படைத்து அவற்றைச் செவ்வையாய் விளக்கவும், இயலாது இடர்ப்படுவது, வண்ணனை மொழி நூலாசிரியர் வழக்கமாக இருந்துவருகின்றது. இது மிகப் பரந்த செய்தியாதலின், இதை விரிக்காது இம்மட்டில் நிறுத்துகின்றேன். 8. ஒலிக்குறிகளை (Phonetic Symbols) அளவைப்படுத்தாதது வண்ணனைமொழி நூலாரால் ஒப்புக்கொள்ளப்பெறும் பல எழுத்தொலி நூல்கள், வெவ்வேறு குறிகளைக் கையாண்டுள்ளன. அவற்றை இன்னும் ஒரு நெறிப்படுத்தியிலர். ஒருவர் எல்லா மொழிகளையும் தாய்மொழியாகவுடையார் போன்றே பேசவியலும் என்பது, வண்ணனை மொழி நூற் கொள்கையர் தருக்கு. ஆயின், இதுகாறும் ஒருவரும் அதனை மெய்ப்பித்துக் காட்டியிலர். 9. கிளை வழக்கைப் பெருக்குவது இடவழக்கும் குலவழக்கும் பற்றி ஒவ்வொரு பெருமொழியிலும் சில கிளைவழக்குகள் (Dialects) ஏற்படுவது இயல்பே. ஆயின், ஞாலவியற் கிளைவழக்கு (Geographical Dialect) என்றும், ஊர்க் கிளை வழக்கு (Dialect of a village town or city) என்றும், கூட்டர வியற் கிளைவழக்கு, (Social Dialect) என்றும், குடும்பக் கிளை வழக்கு (Family Dialect) என்றும், தனிப்பட்டவர் கிளைவழக்கு (Individual Dialect) என்றும், வண்ணனை தொழி நூலாற் வரம் பின்றி வகுத்துக் காட்டுவது வியப்பினும் வியப்பே. 10. பேசுவதே மொழி என்பது பேச்சு வழக்கின் உள்ளதே உண்மையான மொழியென்றும், எழுத்து வழக்கிலுள்ளதெல்லாம் ஏட்டு மொழியென்றும், திருந்திய வழக்கென்றும் கொச்சை வழக்கென்றும் வேறு பாடில்லையென்றும், கொச்சை வழக்கு எவ்வளவு கேடாய்த் திரிந்திரிப்பினும் அதெல்லாங் கொள்ளத் தக்கதேயென்றும், வண்ணனை மொழிநூலார் ஏனைத் திரிபுடை மொழிகளுக்குக் கூறுவது போன்றே இயன்மொழியும் இலக்கணச் செம்மொழியு மாகிய தமிழிற்கும் கூறுகின்றனர். பிற மொழிகளிட்கில்லாத செம்மையென்னும் வரம்பு தமிழுக் குண்மையையும், இடைக்காலத்தில் தமிழ் ஆரியத்தால் அழிப் புண்டதையும், இக்காலத்தும் தமிழ் வளர்ச்சி பகைவரால் தடுப் புண்டு வருவதையும், அவர் அறியார். தமிழ் ஒருவன் எங்ஙனம் பிழைப்பட பேசினும், மேடையேறிப் பேசுங்காலும் ஏடெடுத்தெழுதும் போதும் இலக்கண நடையைக் கையாள வேண்டுமென்பது தொன்றுதொட்டு வரும் மரபு. எப்படி எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே. தமிழ்நாட்டில் மிகக் கொச்சையாய்ப் பேசப்படும் மாவட்டம் வடார்க்காடு. அங்கும் அங்கத்து நடையில் மேடையேறிப் பேசுவாரும் நூலெழுவாரும் ஒருவருமிலர். இத்தகைய வரம் புண்மையாலேயே தமிழ் இன்றுவரை இருந்து வருகின்றது. இடைக்காலத்தில், தமிழ் சிதைக்கப்பட்டமையாலும், தமிழ்க் காவலரான புலவர் பிழைப்பற்றுப் போனமையாலும், நூற்றுக் கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் மறைந்து வேற்று மொழிச் சொற்கள் வேண்டாது புகுந்துவிட்டன. இதனால், முகில், எழிலி, மஞ்சு, கால், மால், வான், எனப் பல சொற்கள் இருப்பவும், மேகம் என்னும் வடசொல்லே வழங்கவும், முகில் என்னும் தன் சொற்கு மேகம் என்னும் அயற் சொல்லாற் பொருள் கூறுவும் நேர்ந்துவிட்டது. இது தமிழர் விரும்பி மேற் கொண்ட நிலைமையன்று. ஆண்கள் பெண்கள் என்னும் வழங்கு தமிழ்ச்சொற்கட்குப் பதிலாகப் புருஷர் திரீகள் என்னும் வழங்கா வடசொற்களைப் புகைவண்டி நிலையங்களிற் புகுத்தியிருப் பதும், வானொலி என்பதை ஆகாசவாணி என்று மாற்றியிருப் பதும், தமிழைக் கெடுத்தற்கும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதற் கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாம். தமிழர் தக்க வழிகாட்டியின்றித் தாய்மொழி யுணர்ச்சியற்றுப் போய், ஏற்கனவே காற்பங்கு வடசொற்களைக் கலந்ததொடு இன்று அரைப்பங்கு ஆங்கிலச் சொற்களையும் கலந்து, இடையிடை பாரசீகம் அரபி முதலிய பிற மொழிச் சொற்களையும் பெய்து, கலவை நடையாக வழங்கும் கசட்டு மொழி. பல்லாயிரம் ஆண்டு களாகப் பண்படுத்திச் சீரியோர் வளர்த்த செந்தமிழாகுமோ! வேலையில்லாத் திண்டாட்டம் மிக்க இக் காலத்தில், இளைஞர் சிலர் தம் தகுதியைப் பெருக்கி வருவாயை யுயர்த்த வட அமெரிக்கா சென்று ஈராண்டிருந்து மீண்டு, ஆராய்ச்சியென்னும் பெயரால் அருந்தமிழைக் குலைத்துவருவது எத்துணை இரங்கத் தக்க செய்தி! அவர்கள் என்னும் சொல்லின் கொச்சை வடிவுகளான அவக, அவுக, அவிக, அவிய, அவியல் அவங்க, அவுங்க, அவிங்க, அவா என்பவற்றையெல்லாம் அளவையாகக்கொண்டு ஆராய்வதினும், நகராண்மைக் குப்பையைக் கிண்டிக் கிளைப்பது நன்மை பயக்குமே! தமிழைத் தமிழ்நாட்டில் தக்கார்வாய்க் கல்லாது அமெரிக்கா சென்று ஆய்வதற்குத் தமிழொலிகளைத் தவறாகப் பதிவு செய்த ஒலிப்பெட்டிகளன்றி வேறு அங்கு என்னுள்ளது? உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆராயாது சில ஒலிக்குறிகளை மட்டும் அமெரிக்காவிற் கற்றுவந்ததினால் என்ன பயன்? அக் குறிகளை இங்கிருந்தே கற்கலாமே! தமிழர் பேசுவதெல்லாம் தமிழெனின், கூல், காலேஜ், கிளா, டிவிஷன், பீரியடு, ஹெட்மாட்டர், சார், (Sir) புக், நோட்புக், பேப்பர், பென், பென்சில், ரப்பர், பேக்கு, (bag) கார்டியன், லீவு, லேட் (late) டிராயிங், சயன்சு முதலிய சொல்களெல்லாம் தமிழாதல் வேண்டுமே! அங்ஙனமாயின், தமிழ் ஆங்கிலத்தின் கிளைமொழியாகவன்றோ மாறிவிடும்! அங்ஙனம் மாறாமை அனைவரும் அறிவர். ஆதலால், இடைக்காலத் திருண்நிலையில் ஏற்பட்ட கேட்டையும் அதன்வழி வந்த தீங்குகளையும் அறவே நீக்கி, தமிழைப் பண்டுபோல் தூய்மைப்படுத்துவதே, அறிவா ராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் மிக்க இற்றைத் தமிழர்க் கேற்றதாம். இனி, மலைவாணரான திரவிடரெல்லாம் பழங்குடி மக்களென் றும், அவர்கள் பேசுவன முந்திய மொழிகளென்றும், தமிழ் வல்லினம் வடமொழி ஐவருக்க முதலொலிகளை யொத்ததென் றும், தமிழ் அரிவரி வடமொழி நெடுங்கணக்கைப் பின்பற்றிய தென்றும், சில தவறான கருத்துகள் மேலை மொழி நூலறிஞ ரிடைத் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. இவற்றையெல் லாம் மறுப்பின் மற்றொன்று விரித்தலாகும். ஆயினும், குறிஞ்சி நிலத்திலுள்ள மாந்தர் தமிழர் நாகரிக வளர்ச்சி யின் முதல் நிலையைத் தாங்கி நின்ற காலம் முழுகிப்போன குமரிக்கண்டத்திலேயே கடந்துவிட்ட தென்றும், இற்றை நாவலந்தேய மலைவாணரெல்லாம் மலையடி வாரத்தில் மாடு மேய்த்தும் உழவுத்தொழில் செய்தும்வந்து அக் காலத்து அடிக் கடி நிகழ்ந்துவந்த போருக்கும் கொள்ளைக்கும் தப்புமாறு மலை மேற்சென்று வாழ்ந்தவர் வழியினரென்றும்; தமிழ் வல்லின வொலிகள் வடமொழி ஐவருக்க முதலொலிகளினும் மெல்லிய வென்றும்; தமிழ் நெடுங் கணக்கே வடமொழி நெடுங்கணக்கிற்கு மூலமென்றும்; ஈண்டைக்கறிந்து கொள்க. இதுகாறுங் கூறியவற்றால், வரலாற்றைச் சிறிதும் நோக்காது, வடமொழியைத் தலைமையாகவும் திரவிடமொழிகளை யெல்லாம் ஒன்றோடொன்று சமமாகவும் கொண்டு, தமிழுக்குக் கேடு விளையுமாறு கொச்சைச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் அளவைப்படுத்துவதே வண்ணனை மொழி நூலின் இயல்பென்றும், இது தமிழைக் காட்டிக் கொடுத்துத் தந்நலம் பெருக்கும் வாய்ப் பென்றும், கண்டுகொள்க. 2. வண்ணனை மொழிநூல் வழுக்கள் க. அடிப்படைத் தவறுகள் (1) தமிழர் கிரேக்க நாட்டினின்று அல்லது நண்ணிலக் கடற்கரை யினின்று வந்தேறிகள் ஆவர் என்பது. (2) நீகரோவர் ஆத்திரேலியர், முந்து நண்ணிலக் கடற்கரையர், நண்ணிலக் கடற்கரையர், அர்மீனியர், காண்டினேவியர் ஆகிய அறுவகைக் கலவையினத்தார் தமிழர் என்பது. (3) வேதமொழியும் சமற்கிருதமும் ஒன்றென்பது. (4) சமற்கிருதம் பண்டை உலகவழக்கு மொழி என்பது. வேதமொழியே வழக்கற்றும் பிராகிருதங் கலந்தும் போய் விட்டது. அதன்பின் வேதமொழியொடு தமிழைக் கலந்து ஆக்கிய சமற்கிருதம். இலக்கிய நடைமொழியே யன்றி உலக வழக்கு மொழியன்று. அதன் நிலைமை படிமையும் பாவையும் போன்றதென அறிக. அது பிறந்ததுமில்லை; இறந்ததுமில்லை. (5) சமற்கிருதம் ஆரியமூலம் என்பது: சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய இலக்கியச் செம் மொழிகளை சிறப்பாகச் சமற்கிருதத்தை, ஆரிய மொழிகட்கு மூலமாகக் கொண்டே, கிரிம் நெறியீடு என்னும் ஆரிய இனமொழி மெய்ம்மாற்ற வாய்பாடு வகுக்கப்பட்டுள்ளது. இது கடை மகனைத் தலைமகனாக வைத்து உடன்பிறந்தார் வரிசையைத் தலை கீழாக அமைப்பது போன்றது. எ-டு (i) MÇa மூச்சொலி முழங்கு நிறுத்தங்கள் முழங்கு நிறுத்தங்களாகத் திரிந்தன என்பது. சமற்கிருதம் கிரேக்கம் இலத்தீன் கோதியம் செருமானியம் ஆங்கிலம் bhar phero fero baria biru bear bhu phuo fu-i ____ bi-n be dva#ra thura fores daur tor door (=dhva#ra) இங்குக் காட்டப்பட்டுள்ள முச்சொற்கட்கும் மூலம், முறையே பொறு, பூ, துள்-துளை என்னும் தமிழ்ச் சொற்களாகும். பொறுத் தல் = சுமத்தல். "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை" (குறள்.37). பூத்தல் = தோன்றுதல், இருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று" (நீதிநெறி, 6). துளை = வாசல். மாக்கசு முல்லர், bear, burden, bier, barrow, birth, bairn, barley, barn, என்று ஆங்கிலத்திலும்; ber என்று செலத்தியத்திலும் சிலாவோ னியத்திலும்; bar என்று செந்திலும்; உள்ள சொற்களெல்லாம் bar என்னும் வேரினின்று பிறந்த பொறுத்தற் கருத்துச் சொற்க ளென்று, `மொழிநூல் பற்றிய முச்சொற் பொழிவுகள்' (Three Lectures on the Science of Language) என்னும் நூலிற் கூறியுள்ளார் (பக். 20-34). ஐரோப்பாவின் வடமேல் கோடியிலுள்ள தியூத்தானியச் சொற்கள் தமிழ்ச் சொற்கட்கு மிக நெருங்கியும், அக்கண்டத்தின் தென்கோடி நடுவிலும் தென்கிழக்கிலுமுள்ள இலத்தீன் கிரேக்கச் சொற்கள் அவற்றினின்று சற்றுத்திரிந்தும், இந்தியாவிலுள்ள வேதமொழி அல்லது சமற்கிருதச் சொற்கள் மிகத் திரிந்தும், இருத்தலையும், நெறியீட்டொடு பொருத்துவதற்காக dva#ra என்னும் சமற்கிருதச் சொல்லை dhva#ra என்று திரித்தலையும்; நோக்குக. (ii) ஆரிய முழங்கு நிறுத்தங்கள் முழங்கா நிறுத்தங்களாகத் திரிந்தன என்பது. எ-டு: இலத்தீன் கிரேக்கம் தியூத்தானியம் ago ago aka(1ce.), to drive geru gonu knee (E.) இவை முறையே அகை, கணு என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபாகும். உகைத்தல் = செலுத்துதல். உகை-அகை. அகைத்தல் = செலுத்துதல். கணு = பொருத்து, முட்டு. சமற்கிருதத்தில் இச்சொற்கள் அஜ் (செலுத்து) என்றும் ஜானு (முட்டு) என்றும் கிரிம் நெறியீட்டிற்கு மாறாகத் திரிந்திருக்கும் காண்க. (iii) ஆரிய முழங்கா நிறுத்தங்கள் உரசிகளாகத் திரிந்தன என்பது. எ-டு: சமற்கிருதம் இலத்தீன் கிரேக்கம் கோதியம் ஆங்கிலம் செருமானியம் padam pedem poda fotus foot fuss இது பதம் - பாதம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபாம். நிலத்திற் பதிவது பாதம். பதி-பதம்-பாதம். அடி (bottom part) வேறு; பாதம் வேறு. பாதம் வைத்த தண்டு என்னும் வழக்கை நோக்குக. இங்குக் காட்டியவற்றால், சமற்கிருதம் ஆரிய மூலமன்மை அறிக. (6) சமற்கிருதத்தின் வழியது பிராகிருதம் என்பது. பிராகிருதம்=முந்திச் செய்யப் பெற்றது. ம்கிருதம்= வேதமொழியொடு பிராகிருதம் கலந்து செய்யப்பெற்றது. சமற்கிருதத்திற்கு முந்தியே தோன்றி வழங்கிவந்த இந்திய வட்டார மொழிகளே பிராகிருதங்கள். சில வடசொற்கள் தமிழிற் கலந்து திரிந்துள்ளது போன்றே (எ-டு. தோத்ர-சோத்தம். த்ருஷ்டாந்த-திட்டாந்தம்), பல வடசொற்கள் பிராகிருதங்களிற் கலந்து திரிந்துள்ளன. இவை மேற்படைச் சொற்களேயன்றி அடிப் படைச் சொற்களாகா. வடசொற்களால் சில தமிழ்ச் சொற்கள் வழக்கு வீழ்த்தப் பட்டும் இறந்துபட்டும் போனது போன்றே, பல பிராகிருதச் சொற்களும் போயுள்ளன. அதனாற் பிராகிருதங்கள் வடசொற் கலப்பு மிகைபற்றிச் சமற்கிருதக் கிளைகள் போல் தோன்றுகின்றன. (7) சில வடசொற்கள் பிராகிருத வாயிலாக அடிப்படைத் தமிழ்ச்சொற்களாயின என்பது. எ-டு: "வட்டம் > Pkt. vat@@@@t@a < Skt. vr@tta" (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி, பக். 3468) வகரம் உகரத்தொடு கூடி மொழிமுதலாகாமையால், சுட்டடி வகரமுதற் சொற்களெல்லாம் பெரும்பாலும் பகர முதற் சொல்லின் அல்லது மகரமுதற் சொல்லின் திரிபாகவேயிருக்கும். எ-டு: பகு-வகு, மிஞ்சு-விஞ்சு. இங்ஙனமே மல் என்னும் அடி வல் எனத் திரிந்துள்ளது. முல்-மல்-வல். முல்-முர்-முரி. முரிதல் = வகைதல். முரி-முறி. வல்லுதல்-வளைதல். வல்=வட்டு (சூதாடுகருவி). வல்லம்=ஓலைச் கூடை. வல்-வல்லி-வளைந்த கொடி. வல்லி-வல்லீ (வ.). வல்-வல, வலத்தல்=வளைதல், வளைத்தல், சுற்றுதல், சூழ்தல். வல்-வலி. வலித்தல்=சுளித்தல், வலி-வலிச்சம் = முகச்சளிப்பு. வல்-வலை=சூழும் கயிற்றுப் பொறி. வல்-வள், வள்-வள்ளம்=வளைவு, வட்டக் கிண்ணம், படி, மரக்கால், சிறுதோணி. வள்-வள்ளி=கொடி. வள்ளியம்=மரக்கலம். வள்-வளவு=வளைவு. வள்-வளர்-வளரி=வளைதடி. வளர்-வணர்=யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. வணர்-வணரி=வளை தடி. வளர்-வளார்-வளையும் சிறுபோத்து. வளாகம் = வளைந்த இடம், பறம்பு. வளி=வளைந்து வீசுங் காற்று. வளி-வசி-வசிவு=வளைவு. வளை-வளைவு, வளையம், வளைவி, வளையல், வளைசல். வளையம்-வலய(வ.).tis-tiz. வளை-வனை வனைதல்= சக்கரத்தைச் சுற்றி மட்கலஞ் செய்தல். வாள்=வளைந்த கத்தி. வாளம்=வட்டம், சக்கரவாளம்-சக்கர வால(வ.). வாளி=வட்டமாயோடுகை. வாளி-பாலி(வ). வாளி=வளைந்த பிடி, வளையமான அணி. வாளி-வாளிகை=காதணி. வாளி-வாலீ(வ.). வாளி-வாசி=தெய்வப் படிமை மேல்வளைவு. வாசி-வாசிகை. வள்-வண்-வணம்-வணக்கு-வணக்கம்=வளைவு, உடல் வளைவு, வழிபாடு. வணங்கு-வாங்கு-வங்கு வங்கி-நெளிவளையல், வளைந்த கத்தி. வாங்கி-வாங்கா= வளைந்த ஊதுகருவி. வங்கு-வங்கம்=வளைவு, ஆற்று வளைவு. வள்+து வண்டு=கைவளை, சங்கு, வட்டமான அறுகாற் சிறு பறவை, பெருவிரலும் வளைந்து நிற்கும் இணையா விணைக்கை, வளைத்து வைக்கும் வைக்கோற் பழுதை. வள்+தி=வண்டி=சக்கரம், சகடம், வண்டி-பண்டி- பாண்டி= வட்டு, கூடாரவண்டி, உருண்டு திரண்ட காளை. பாண்டி-பாண்டியம்=எருது, உழவு. பாண்டி-பாண்டில்=வட்டம், வட்டத்தோல், தேர்வட்டை, வட்டக்கட்டில், வெண்கலத் தாளம், வண்டி, கிண்ணி, எருது. வள்-வள்கு-வட்கு. வட்குதல்=வணங்குதல். வட்கார்=வணங்கார், பகைவர். வட்கு-வக்கு-வக்கா-வளைந்த கழுத்துள்ள பறவை. வக்கா-பக்க(வ.) வக்கா-வங்கா. வள்+து=வட்டு-வட்டமான சில், வட்டமான கருப்புக் கட்டி. வட்டு-வட்டம்-வட்டன்= உருண்டுதிரண்டவன். வட்டம் என்னும் சொல் வட்டவடிவான இருபதிற்கு மேற்பட்ட காட்சிப் பொருள் களைத் தொன்று தொட்டுக் குறித்து வருகின்றது. திருத்தம், தோறும், விழுக்காடு என்பன வட்டக்கருத்தை அடிப்படை யாகக் கொண்ட கருத்துப் பொருள்களாகும். வட்டக் கிலுகிலுப்பை, வட்டத்தாமரை, வட்டத்திருப்பி, வட்டத் தாளி. வட்டத்துத்தி, வட்டநரிவெருட்டி, வட்டப்பாலை என்பன வும் பிறவும், தொன்று தொட்டு வழங்கிவரும் நிலைத்திணைப் பெயர்களாகும். வட்டங் கூடுதல். வட்டம்பிரிதல், வட்டசட்டம், வட்டதிட்டம் என்பன வழக்கியன் மரபுச்சொற்கள். வட்டம்-வருத்த (வ.). இச்சொல் உருண்டையையுங் குறிக்கும். வட்டம்-வட்டகை=சிறு நாட்டுப்பகுதி. வட்டணம்=வட்டமான கேடகம். வட்டணம்-அட்டண(வ). வட்டணித்தல்=வட்டமாதல், வட்டமாக்குதல். வட்டணை=வட்டம், கேடகம், தாளக்கருவி, வட்டமானசெலவு, உருண்டை. வட்டா=கீழும் மேலும் பரப்பொத்த வட்டக்கிண்ணம். வட்டாரம்=நாட்டுப்பகுதி. வட்டித்தல்=வட்டமாதல் சுழலுதல், உருட்டுதல். வட்டி=வட்டமான கடகப்பெட்டி, கூடை, படி, படியளவு. வட்டிகை=சுற்றளவு, கூடை, பரிசல், வளைத்தெழுதும் தூரிகை வட்டி-வட்டில்=வட்டமான உண்கலம், நாழிகை வட்டில். வட்டை=சக்கரச் சுற்றுவளைமரம், தேர், வட்டப்பக்கா. வடகம்=கறிச்சரக்குச் சேர்த்துத் தாளிக்கும் உருண்டை. வடகம்-வடக (t@)-t. வட்டை-வடை=வட்டமான பலகாரவகை. வடை-வடா(வ). வடையம் = நெல்லிப் பழவடை, வெற்றிலை பாக்குப்பொட்டலம் வாடுதல் = வளைதல், சாய்தல், சோர்தல், மனமழிதல், மெலிதல், உலர்தல், பட்டுப்போதல். வாட்டம்=சாய்வு, வாட்டசாட்டம்=சாய்வுப்போக்கு. வாடி=வளைந்த இடம், மதில், அடைப்பிடம், வளைசல், மண்டி. வாடி-வாடீ (t@) -t. வாடம்=வட்டம், ஒன்றறுவாடம்=ஒன்றுவிட்டொரு நாள் வாடகை=சுற்றுவட்டம், வட்டகை. "அரசூர் வாடகையில்" (S.I.I. iii 109) வாடகை- வாட்டிகா (வ.). வாடகை-வாடை=சிற்றூர், தெரு, வழி. வாடை-வாட்டா (வ.). வள்-(வர்)-வரி=வளைந்த கோடு, கோடு, எழுத்து. வர்-வார்-வாரம்=சரிவு, மலைச்சரிவு, தாழ்வாரம், கடல், வார்-வாரி= வளைந்த கடல், வார்-வாரணம்=கடல், சங்கு. வாரணம்-வாரணம்=கடல் அல்லது நெய்தல் நிலத் தெய்வம். thÇ-thÇ (t.); வாரணம்-வாரண (வ.). வாரணன்-வருண (வ.). வளைவு அல்லது வட்டக்கருத்தினின்று கிளைத்துள்ள பல்வேறு கருத்துச் சொற்கள் இங்குக் காட்டப்பட்டில். வல் என்னும் அடி மல் என்பதினின்று திரிந்திருப்பதையும், வல் என்பதினின்று வாரணம் என்பதுவரையும் காட்டப்பட்டுள்ள சொற்களெல்லாம் நேரே கோவையாகத் தொடர்பு கொண்டிருப் பதையும், வடமொழியில் இங்ஙனமின்றி இடையிடையுள்ள ஒருசில சொற்களே வழங்குவதையும், பெரும்பாற் சொற்கள், தமிழ் உலக வழக்கில் அடிப்படைச் சொற்களாக விருப்பதையும், `வல் வருத்த' என்னும் இரண்டையும் வடமொழியார் வெவ்வேறு மூலங்களாகக் காட்டுவதையும், நோக்குவார்க்கு வட்டம் என்பது தூய தென்சொல்லென்றும், அதுவே பிராகிருதத்தில் வட்ட என்றும் சமற்கிருதத்தில் வருத்த என்றும் முறையே திரிந்துள்ள தென்றும், தெற்றெனத் தெரியலாகும். ஒ. நோ. : eo-el«-e£l« (j.)-ªU¤j (த.). Valve (L.valva), vert (L.vertere) volve, (L.volvere), wallow (L.volvere), marina (L.mare, marinus) முதலிய பற்பல மேலையாரியச் சொற் களெல்லாம், வள், வளவு, வட்டம், (வருத்த), வாரி, வாரணம் முதலிய தென்சொற்களினின்று திரிந்தனவே. ஒருசில வடசொற்கள் பிராகிருதவாயிலாகத் தமிழில் வந்து திரிந்துள்ளது உண்மையே-ஆயின் தமிழுக்கு எத்துணையும் வேண்டாதன என அறிக. (8) தமிழ் சமற்கிருதத்தால் வளம் பெற்றது என்பது. சமற்கிருதச் சொற்கலப்பால், தமிழ்ச் சொற்களுட் பல இறந்து பட்டும் பல வழக்கிறந்தும் பல பொருளிழந்தும் அல்லது மாறி யுமே உள்ளன. (9) இந்திய நாகரிகம் ஆரியரது என்பது. ஆரிய வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டதினாலேயே, சமற்கிருதநூல்கள் முதனூல்களும் மூலநூல் களும் போல் தோன்றுகின்றன. (10) ஆரியம் தனிமொழி என்பது. ஆரியம் திரிமொழி என்பதை, என் The Primary Classical Language of the World என்னும் நூலைக் கண்டு தெளிக. (11) வட இந்தியாவிலுள்ளனவெல்லாம் ஆரியம் என்பது. ஆரியர் வருமுன் வடஇந்திய வாணருட் பெரும்பாலார் திரவிடரேயாதலின், வடஇந்தியக் கலை நாகரிகக் கூறுகளுட் பெரும்பகுதி திரவிடமே என அறிக. (12) ஆரியம் எல்லாவகையிலும் அளவைப்பட்டது என்பது. மேனாட்டு நாகரிகம் முந்நூற்றாண்டுக் காலத்ததே யாதலின், அதற்குமுன் உலகிற் சிறந்திருந்தது தமிழ நாகரிகமே. (13) நாகரிகம் குறுந்தலை (Brachycephalic) மக்களிடத்திலேயே சிறந்து தோன்றிற்றென்பது. தமிழ நாகரிகம் குமரிநாட்டிலேயே பெருவளர்ச்சியடைந்து விட்டதனால், மாந்தன் நாகரிகம் நீள்தலை (Dolichocephalic) மக்களிடத்தும் தோன்றக்கூடியதேயாம். (14) கொளுவுநிலை தென்னிந்திய அல்லது சித்திய மொழிகட்கே உரியது என்பது. கொளுவுநிலை (Agglutination) என்பது பிறவினைக்கேயன்றி எல்லாவினைகட்கும் பெயர்கட்கும் உரியதன்று. தென்மொழியிலும் சித்திய மொழியிலும் கொளுவுநிலை பிற வினைச் சொல்லின் பின் நிகழின், ஆரியமொழியில் அது வினைச் சொல்லின் முன் நிகழ்கின்றது. எ-டு: forest, afforest, disafforest, anti-disafforestation, re-anti-disafforestation. (15) சொல்லின் ஈறுமுதனிலையினின்று பிரியாது அதனொடு இரண்டறக் கலந்து நிற்பது, சொல்லின் திரிபு முதிர்ச்சியை யன்றி மொழியின் உயர்நிலையைக் குறிக்காது: புதுத்தண்டின் பூண் பிரியக் கூடிய நிலையையும் துருப்பிடித்த பழந்தண்டின் பூண் பிரியமுடியாத நிலையையும் ஒப்புநோக்கிக் காண்க. (16) இருமையெண் மொழியின் உயர்வளர்ச்சியைக் காட்டும் என்பது. அநாகரிக மாந்தர் பேசும் முண்டாமொழிகளிலும் இருமை யெண் இருப்பதால் அது மொழியின் சிறப்பு வளர்ச்சியைக் குறிக்காது. (17) சொற்பால் அல்லது இலக்கணப்பால் மக்களின் உருவலிப்புத் (Imagination) திறனைக் காட்டும் என்பது. உயிரில்லாப் பொருள்கட்கு உயிர்த்தன்மையூட்டுவது சிறு பிள்ளைகட்கும் இயல்பாம். (18) சொல் இயல்பாகப் பொருளுணர்த்தும் என்பது. ஒரு சில ஒலிக்குறிப்புக்களன்றிப் பிறசொற்களெல்லாம் கற்றா லன்றிப் பொருளுணர்த்தா. (19) மொழியலகு (Unit of speech) சொற்றொடர் அல்லது சொல்லியம் (Sentence) என்பது. ஒவ்வொரு சொல்லாகவே மொழி தோன்றியிருப்பதனாலும், ஒரு கருத்தை ஒருதனிச்சொல்லும் உணர்த்துமாதலாலும் சொல்லே மொழியலகாம். (20) எண்ணத்திற்கு மொழி இன்றியமையாத தென்பது. ஊமையர் உள்ளத்திலும் எண்ணம் நிகழ்வதாலும் விலங்கு பறவைகளும் எண்ணி வினை செய்வதாகவே தெரிவதனாலும், மொழியின்றியும் எண்ணம் நிகழக் கூடியதே. உ. நெறிமுறைய தவறுகள் (1) எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது. தமிழில் எல்லாச் சொற்களும் வேர்ப் பொருளுணர்த்துவதாலும், எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. (610) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (877) என்று தொல்காப்பியங் கூறுவதாலும், இந்நெறிமுறை தவறான தாம். (2) எல்லா மொழிகளும் ஆயிரவாண்டிற் கொருமுறை அடிப் படைச்சொல் உட்பட முற்றும் மாறிவிடுகின்றன என்பது. தமிழ் பல்லாயிரம் ஆண்டாக மாறாதிருப்பதால், இதுவும் தவறானதே. (3) பொதுமக்கள் பேசுவதே மொழி என்பது. வரலாற்றிற் கெட்டாத பண்டைக் காலத்திலேயே, உயிரும் உயிரும் உயிரில்லதும் உயிருள்ளமாகவுள்ள மூவகை இயற்கைப் பொருள்களையொப்ப, உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என எழுத்தொலிகளை முதன்முதல் மூவகையாகப் பகுத்து, அதற் கேற்ப மூவகை வடிவமைத்து. ஒரொலிக்கு ஒரே வரியும் ஒரு வரிக்கு ஒரே ஒலியுமாக நெடுங்கணக்கு வகுத்து, பேசுகிறபடியே எழுதியும் எழுதுகிறபடியே பேசியும் பொருள்களைப் பகுத்தறி வுள்ளதும் இல்லதும் என இருதிணையாக வகுத்து அதற்கேற்பச் சொல்வடிவுகளை யமைத்தும்; செய்யுளிலேயே பேசுந்திறனை வளர்த்துக் கருத்துக்களையெல்லாம் மெய்ப்பாடு தோன்ற வெளிப்படுத்தற்கேற்ற பல்வகைப் பிரிவு கொண்ட நால்வகைப் பாக்களைப்படைத்து, எல்லா இலக்கியத்தையும் செய்யுளிலேயே இயற்றியும்: எழுத்து சொல் யாப்பணியொடு இன்றும் பிற மொழிகட்கில்லாத பொருளிலக்கணத்தை வகுத்தும்; சொல்லும் சொற்றொடரும் என்றும் இலக்கணவடிவு சிதையாதிருந்தற் பொருட்டுச் செந்தமிழ் என்னும் வரம்பிட்டும்; மொழித்துறை யில் ஒப்புயர்வற்ற நாகரிமடைந்தவர் தமிழரே. அவர் இட்ட செம்மை என்னும் வரம்பே, பல்லாயிரம் ஆண்டின் பின்பும் பிற மொழிகள் போல் உருத்தெரியாதவாறு திரியாது உலக வழக்கழிந் தொழிந்து மறையாதும், தமிழைக்காக்கும் வல்லரணாயிருந்து வருகின்றது. இவ்வரணைச் வண்ணனை மொழிநூலின் பெயரால் தகர்க்கப்பார்க்கின்றனர். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான. (1592) என்று தொல்காப்பியங் கூறுவதால், புலவரும் உயர்ந்தோரும் பேசும் வழக்கே தமிழுக்கு உலகவழக்காம். அவை பண்டைச் செய்யுளில் இடம் பெறாத காடை, தவசம் முதலிய பெயர்ச் சொற்களும் செய்துகொண்டு, செய்கின்ற முதலிய வினைச் சொல்வாய்பாடுகளும் அன்னா, அந்தா முதலிய இடைச்சொற் களும், கேழ்ப்பை (கேழ்வ வரகு) தடிம்பல் முதலிய சொல்வடிவு களும், ஒருவரைக்குறிக்கும் உயர்வுப் பன்மைச் சொற்களும். கூடப்போதல், கொடித்தட்டல் முதலிய வழக்குக்களுமேயன்றி, கொச்சைச் சொற்களும் வழூஉச் சொற்களும் இடக்கர்ச் சொற்களும், ஆகா. உடைவகையிலும் ஊர்திவகையிலும் தமிழர் மேலையரைப் பின்பற்றுவது போன்று, மொழித்துறையில் மேலையரே தமிழரைப் பின்பற்றுதல் வேண்டும். (4) எல்லா நடைமொழிகளும் கொள்ளத்தக்கனவே என்பது. இது எல்லாக் கீழ்மக்களின் தீய ஒழுக்கங்களையும் இழிந்த பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றதே. நரிக்குறவன் நடைமொழியை யெல்லாம் ஆராய்வதி லும் நகராண்மைக் குப்பையைக் கிளைப்பின் ஏதேனும் நற்பொருள் கிடைப்பது திண்ணம். முத்திற மொழிநூல்போல் வண்ணனைமொழிநூற்குப் போதிய ஆராய்ச்சிக்கிடம் இன்மையாலேயே, இத்தகைய இழிதகைய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இது "வேலையில்லாத மஞ்சிகன் (அம்பட்டன்) வெண்கழுதையைப் பிடித்துச் சிரைத்தானாம்." என்னும் பழமொழியையே நினைவுறுத்துகின்றது. இனி, நடைமொழிகளையும் ஒரு வரைதுறையின்றி, வட்டார நடைமொழி (Regional Dialect), உள்ளூர் நடைமொழி (Local Dialect) வகுப்பு நடைமொழி (Class Dialect), குமுக நடைமொழி (Communal Dialect), குடும்ப நடைமொழி (Family Dialect) தனிப்பட்டவர் நடைமொழி (Personal Dialect), எனப்பலவாறு வகுத்துள்ளனர் மேலையர். தமிழர்போல் ஒரு சிறந்த இலக்கண நடைமொழியை அளவைப்படுத்திப் பேச்சுவழக்கையும் பலுக்கல் (உச்சரிப்பு) முறையையுங் கட்டுப்படுத்தாது, சண்டிக் குதிரையும் பட்டிமாடும்போல் போன போன போக் கெல்லாந்திரிய விட்டு கீழோர் வழக்கையும் மேலோர் வழக்கொப்பக் கொண்டு, அவற்றை எழுத்துவடிவில் எழுதிக் காட்டவும் வழியின்றி இடர்ப்படுவது எத்துணைப் பண்பாடற்ற செயலாம்! (5) மலைவாணர் முந்தியல் மாந்தர் என்பது. தமிழரின் முந்தியல் (Primitive) நிலைமை குமரி நாட்டிலேயே கழிந்துவிட்டமையாலும், போருக்குங் கொள்ளைக்குந் தப்பிக் கீழிருந்தே சில வகுப்பார் மலையேறி வாழ்வதாலும், மலைவாணர் மொழிகளெல்லாம் மொழியின் முந்துநிலையைக் காட்டாது திரிவு நிலையையே காட்டுவதாலும், மலைவாணர் முந்தியல் மாந்தரல்லர் என்பது தெள்ளத் தெளிவாம். (எ-டு) தமிழ் பிராகுவீ (பெலுச்சித்தான மலையடி வாணர் மொழி செவி கவ் வாய்கள் பாக் வழி-வயி-வாய்-பாய்-பா கள் (பன்மையீறு)-க-க். தமிழ் துடவம் (நீலமலைவாணர் மொழி) மகன் மக் மண்டை மட் முள்-மள்-மழ-மக-மகன்-மக். மொள்-மொண்டை(மொந்தை)-மண்டை-மண்ட்-மட் (6) வாய்ப்பயிற்சியால் எல்லா மொழியொலிகளையும் ஒருவர் பயின்று கொள்ளலாம் என்பது. சில மொழியொலிகள் அயல்நாட்டு மக்களால் ஒலிக்க இயலா மையால், அவற்றை அவை வழங்கு நாடுகளிற் பல்லாண்டோ சில தலைமுறையோ குடியிருந்துதான் பயிலமுடியும். ஓர் அமெரிக்கர் சென்னையில் அண்ணாமலைநகருக்குப் புகை வண்டிச் சீட்டு வாங்கவேண்டியவர் தவறாக ஒலித்ததனால், ஆனைமலைக்கு வாங்கிச் சென்று விட்டார். (7) அயன்மொழிச் சொற்களுள் சிலவற்றின் வடிவுகொண்டு, பிற வற்றின் வடிவையும் ஒத்தமைவு (Analogy) முறையில் அமைத்துக் கொள்ளலாம் என்பது. இலக்கண வகையில் ஒத்தசொற்கள் பொதுவாக ஒரொழுங்கு பட்டிருப்பினும், சிறுபான்மை நெறிக்கு விலக்காகவுமிருப்பதால், ஒத்தமைவுமுறை எல்லாவிடத்துஞ் செல்லாதாகும். எ-டு: சொற்புணர்ச்சி வலிமிகல் மெலிமிகல் வாழைப்பூ தாழம்பூ (தாழை + பூ) அவரைக்காய் துவரங்காய் (துவரை + காய்) புன்னைத்தோப்பு தென்னந்தோப்பு (தென்னை + தோப்பு) இறந்தகால வினையெச்சம் சொல்-சொல்லி தெள்-தெள்ளி நில்-நின்று கொள்-கொண்டு வில்-விற்று கள்-கட்டு (8) ஒரு குடும்ப மொழிகளின் பொதுவியல்பைக்கொண்டு அவற்றின் தாய்மொழியை மீள அமைக்கலாம் என்பது இது, இறந்துபோன ஒரு தாயின் உருவப்படத்தை அவள் புதல்வி யரின் உருவப் படங்களை ஒப்புநோக்கி அமைக்கலாம் என்பது போன்றதே. இனி, வண்ணனை மொழிநூலார் வரலாற்றாய்ச்சியை அடியோடு விட்டுவிட்டமையால், ஒரு குடும்ப மொழிகளின் மூலமொழியிருக்கும்போதே அதையறியாது வேறொரு புதுமொழியை ஆக்கித் தாயாகக் காட்டுகின்றனர். (9) ஒரு சொல்லின் வடிவும் பொருளும், ஒரிலக்கியத்தில் முந்தி வரின் முந்தியவையென்றும், பிந்திவரின் பிந்தியவை யென்றும் கொள்வது. ஒரு புதுமொழியில் புதிது புதிதாகச் சொல்லும் பொருளும் தோன்றுவதால், அதற்குத்தான் இந்நெறிமுறை பெரும்பாலும் ஏற்கும். முழுவளர்ச்சியடைந்த ஒரு முதுமொழியில் ஒரு சொல்லின் பொருள்கள் அவை தோன்றிய வரிசையிலன்றி இடத்தின் தேவைக்கேற்ப ஆளப்பெறுவதால், அவற்றினின்று அவற்றின் முன்மையின்மையை அறியமுடியாது. பள்ளி என்னும் சொல்லின் இருபது பொருள்களுள் இடைப் பட்டதான இடம் என்பது, இன்றுள்ள முதல் தொன்னூலாகிய தொல்காப்பியத்தில், சொல்லிய பள்ளி எழுதரு வளியின் (102) என்று வந்திருத்தல் காண்க. (10) ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரியும் திரிபில் ஒருவழிப் போக்கையே கொள்வது. மேலையாரியமொழிகளிற் பொதுவாகக் ககரம் சகரமாகத் திரிந் துள்ளது. ஆயின், இந்திய மொழிகளில், சிறப்பாகத் தென்மொழி யில் அவை இருவழிப்போக்காகவுந் திரியும். எ-டு : ச-க க-ச செம்பு-கெம்பு கீரை-சீரை(ம.) செய்-கை கெடு-செடு(தெ.) (11) சொன்மாற்றக் காலக்கணிப்பால் (Glottochronology) இன மொழிகள் ஒன்றினின்றொன்று பிரிந்துபோன காலத்தைக் கணித் தறியலாம் என்பது. இதன் விளக்கம் வருமாறு ஒரு மொழியின் முதற்றகை அடிப்படைச் சொற்கள் ஆயிர வாண்டிற்கொருமுறை நூற்றிற்கு 19 விழுக்காடு இறந்துபடுகின் றன. இரு மொழிகள் பிரிந்துபோய் ஆயிரவாண்டிற்குப் பின் பழம் பொதுச் சொற்றொகுதியில் நூற்றுமேனி 19 இழந்து, 81 தனித்தனி போற்றிக்கொண்டிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். மூலப்பொதுத் தொகுதி 200 சொற்கொண்ட தென்றால், முதலாம் மொழி இரண்டாம் மொழியைப் போன்றே 162 சொற்களை வைத்துக்கொண்டிருக்கும். ஆயின், இரு மொழிகளும் ஒரே தொகுதியான சொற்களை இழக்குமென்று எண்ண இடமில்லை. பெரும்பாலும் நேரக் கூடியபடி, இரண்டாம் மொழி முதலாம் மொழி வைத்துக்கொண்டிருக்கும் 162 சொற்களிலும் இழந்து போன 38 சொற்களிலும் நூற்றுமேனி 81-ஐத் தாங்கி நிற்கும். அங்ஙனமாயின், இரு மொழிகளும் ஏறத்தாழ மூலத் தொகுதியில் நூற்றுமேனி 132-ஐ அல்லது 66-ஐப் பொதுவாகக் கொண் டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இக்கணிப்பைத் தலைகீழாக மாற்றி, மூலச் சொற்றொகுதியில் நூற்றுமேனி 66 இரு மொழிகட்கு இனச் சொற்களாயிருந்தால், அவை பிரிந்துபோய் ஆயிரம் ஆண்டாயிற்றென்றும்; நூற்று மேனி 44 இனச் சொற்களாயிருந்தால், அவை ஈராயிரம் ஆண் டிற்குமுன் பிரிந்தனவென்றும், அறிந்துகொள்ளலாம். இது எத்துணை உன்னிப்பைத் (Guess) தழுவியதென்பதையும் எங்ஙனம் உண்மைக்கு மாறாக இருக்கக்கூடும் என்பதையும், பகுத்தறிவாளர் கண்டுகொள்க. (12) மொழித்தோற்றம் மொழிநூற்கு அப்பாற்பட்டு உடலியல் மாந்தனூலைத் தழுவியதென்பது. மாந்தன் கீழினத்தினின்று தோன்றாது இறைவனாற் படைக்கப் பெற்றானென்று கொள்ளின், இக்கொள்கை முற்றும் வழுவாதல் காண்க. தமிழ்போலும் இயன்மொழியை அடிப்படையாகக் கொள்ளாது, ஆரியம் அல்லது சமற்கிருதம்போலும் திரிபில் திரிபான மொழியை அடிப்படையாகக்கொண்டு ஆய்ந்ததின் விளைவே, மம்மருக்கும் மயலுக்கும் கரணியம் என அறிக. வண்ணனை மொழிநூல் விலக்கு மேலை மொழிநூலார், தமிழின் தொன்மை முன்மை யறியாது சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்தாய்ந்து மொழிமூலத்தை அறிய முடியாது முட்டுண்டு, இயற்கைக்கும் உண்மைக்கும் உத்திக்கும் மாறாக, வரலாற்றுத் தொடர்பை அறவே விலக்கி அறிவியன் முறைப்படாததும் நிறைவற்றதுமான வண்ணனை மொழிநூல் என்னும் புதுமொழிநூல் முறையைத் தோற்றுவித் துள்ளனர். இது தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் புகுத்தப் பட்டுள்ளது. இது பழந்தமிழிலக்கண நூலார் இட்ட செந்தமிழ் வரம்பு மீறி அவர் விலக்கின கொடுந்தமிழையும் கொச்சைத்தமிழையும் ஏற்றுக் கொள்வதனாலும், மொழிகளின் கொடிவழி முறையை அறிய முடியாவாறு வரலாற்றை விலக்குவதனாலும், தமிழின் வளர்ச்சிக்கு நிலையான வலுத்த முட்டுக்கட்டையிடுவதனாலும், சொற்களின் வேரையும் மூலப் பொருளையும் காணும் முயற்சியை அறவே தடுப்பதனாலும், தமிழ்நாட்டு முப்பல்கலைக் கழகங்க ளின்றும் உடனே விலக்கப்படற் பாலதாம். அதிகாரிகள் இதை உடனடியாய்க் கவனித்து நீக்கி, கால்டுவெல் ஐயர் காலத்து வரலாற்றூ மொழி நூலை மீண்டும் புகுத்துதல் செயற்பாலதாம். வண்ணான் தாழி விளையாட்டு ஆட்டின் பெயர்: பாண்டி நாட்டில், வண்ணாரக் குலத்தையும் தாழ்த்தக்கப்பட்ட வகுப்புக்களையும் சேர்ந்த சிறுவர் வண்ணான் துறையில் ஆடையொலிப்பது போல் நடித்தாடும் ஆட்டு வண்ணான் தாழி. தாழி என்பது அலசுவதற்குத் துணிகள் வைக்கப் பட்டிருக்கும் பெரும்பானை. ஆடுவோர் தொகை: பொதுவாக, நால்வார்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். ஆடு கருவி: ஒரு துணி மூட்டை இதற்கு வேண்டுங்கருவியாம். ஆடிடம்: ஊர்ப் பொட்டலிலும் அகன்ற தெருவிலும் இது ஆடப்பெறும். ஆடு முறை: ஆடுவார் அனைவரும் ஒவ்வொரு துணி போட வேண்டும். அவை ஒரு மூட்டையாகக் கட்டப்படும். அதை ஒருவன் எடுத்துத் தன் பிடரியில் வைத்துக் கொண்டு, மருள்கொண்ட தேவராளன் போல் ஆடி வரிசையாய் நிற்கும் ஏனையோருள் ஒருவன்மேல் கண்ணை மூடிக்கொண்டு எறிவான். அது யார் மேல் விழுந்ததோ அவன் அதைத் தன் பிடரியில் வைத்து இருகை யாலும், பிடித்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். மூட்டையை எறிந்தவன், அதில் இரண்டோர் அடியடித்துவிட்டு, "கூழ் குடிக்கப்போகிறேன்," என்று சொல்லிச் சற்றுத் தொலை போய் மீள்வான். அதற்குள் ஏனையோரெல்லாம் அம்மூட்டையில் தொப்புத் தொப்பென்று அடித்து மகிழ்வர். போய் மீண்டவன் அவருள் ஒருவனைத் தொட முயல்வான். அவன் அணுகியவுடன் அனைவரும் ஓடிப்போவர். அவன் ஒருவனைத் தொடுமுன் இன்னொருவன் மூட்டையில் அடித்துவிடின், அத் தொடுகை கணக்கில்லை. இன்னொருவன் மூட்டையில் அடிக்குமுன் ஒருவனைத் தொட்டுவிடின், தொடப்பட்டவன் மூட்டையை வாங்கித் தன் பிடரிமேல் வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண் டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன். பின்பு பிறரைத் தொடு பவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரொடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான். இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப் பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும் தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடு பவனாகவும், மாறிக்கொண்டே வருவர். புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடியடித்து விட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும், மரபாம். மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்கு வதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன், பின்பு தன் வினைவிளைவை மிகுதியாய் அறுக்க நேரும். விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான். ஆட்டுத் தோற்ற விளக்கம்: வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்புமுண்டு. பெண் ணும். பழங் காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் வண்ணாரப் பாட்டம் அல்லது வண்ணாரப் பாறை என்னும் தொழில் வரி செலுத்த வேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன் னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத் தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாக விருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென் றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஒடியிருப்பர். அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான். இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுப வன் வண்ணானையும், பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும் போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஓடித் தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும். ஆட்டின் பயன்: ஓடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடி படாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ் விளை யாட்டின் பயனாம். (த.நா.வி.) வணிகமும் போக்குவரத்தும் உழவினால் விளைக்கப்படும் பொருள்களையும் கைத் தொழி லாற் செய்யப்படும் பொருள்களையும் உள் நாட்டிற் பகிரவும், உள்நாட்டுப் பொருள்களை வெளிநாட்டிலும் வெளி நாட்டுப் பொருள்களை உள் நாட்டிலும் பரப்பவும், பெரும் பொளீட்டி நாட்டுச் செல்வத்தைப் பெருக்கவும், வணிகம் இன்றியமையாத தென்று கண்ட பண்டையரசர், அதனை ஒல்லும் வாயெல்லாம் ஊக்கிவந்தனர். நகரந்தொறும் வணிகர் குழுமம் (Merchant Guild) இருந்தது. நாட்டுப்புற நகராட்சி பெரும்பாலும் நகர வணிகர் கையில் இருந்தது. நகரங்களையெல்லாம் அரசன் நேரடியாக மேற் பார்த்து வந்தனன். தலைமை வணிகனுக்கு எட்டிப் பட்டமும் எட்டிப்புரவும் அளிக்கப்பட்டது. வணிகர் குழுமங்கட்கு வலஞ்சை மணிக்கிராமம் அஞ்சுவண்ணம் முதலிய பட்டங்களும் அளிக்கப்பட்டன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பே, நிலவாணிகம் நீர் வாணிகம் ஆகிய இருவகை வணிகமும் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந் தன. நிலங்கடந்து செய்யும் நில வணிகம் காலிற்பிரிவு என்றும், நீர்கடந்து செய்யும் நீர் வாணிகம் கலத்திற் பிரிவு என்றும், கூறப் பட்டன. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தால் (980), தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே நீர்வாணிகம் சிறந்திருந்தமை அறியப்படும். நிலப்போக்குவரத்து: தடிவழி யென்றும் பெருவழியென்றும் கூறப் படும் சாலைகள் நாடெங்கும் இருந்தன. அவை 64 சாண் அகலமும் இரு மருங்கும் மரங்களும் உள்ளனவாயிருந்தன. `கோட்டாற்றுச்சாலை' `மதுரைப் பெருவழி' `அரங்கம் நோக்கிப் போந்த பெருவழி' `கொங்குவழி' `தடிகைவழி' `வடுகவழி' முதலிய பெயர்களால், தமிழ்நாட்டுப் பெருநகர்கள் மட்டுமின்றித் தென்னாட்டுச் சீமைகளும் சாலைகளால் இணைக்கப்பட்டிந் தமை புலனாம். தொண்டை நாட்டின் மேற்கெல்லை ஒரு பெரு வழியாயிருந்த தென்பது, `மேற்குப் பெருவழியாம்' என்னும் கம்பர் கூற்றால் அறியப்படும். ஆங்காங்குள்ள ஊரவையார் அவரவர் ஊரருகேயுள்ள தடிவழிப் பகுதிகளைக் கவனித்து வந்தனர். வேட்டைக்குச் சென்ற அரசன் "நெடுமான் றேரோடு பாகனை நிலவுமணற் கான்யாற்று நிற்கப் பணித்து........ இரும்பொழில் புகும்" என நக்கீரர் கூறி யிருப்பதால், இயன்றவிடமெல்லாம் சங்க காலத் தரசர் தேரேறிச் சென்றனரென்றும், அதற்குரிய வழிவசதிகள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்றும், ஊகிக்கலாம். சாலைகள் பிரியுமிடங்களில் அல்லது சேருமிடங்களில், அவ்வச் சாலை செல்லும் ஊர்ப் பெயர் பொறித்த வழிகாட்டி மரங்கள் நாட்டப்பட்டிருந்தன. மாடு, குதிரை, கோவேறுகழுதை ஆகிய மூவகைப் பொதி மாக் களையுடைய வணிகச்சாத்துக்கள், அடிக்கடி சாலைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. கோவலனும் கண்ணகியும் கௌந்தியடிகளும் அருவிலைச் சிலம் புடன் புகாரிலிருந்து முப்பது காதத் தொலைவிலுள்ள மதுரைக் கும், தேவந்தியும் கண்ணகியின் செவிலியும் அடித்தோழியும் புகாரிலிருந்து மதுரை வழியாய் வஞ்சிக்கும், மணிமேகலை புகாரி லிருந்து வஞ்சிக்கும் பின்னர் வஞ்சியிலிருந்து காஞ்சிக்கும், மாடலன் புகாரினின்று குமரிக்கும் பின்னர்க் கங்கைக்கும், பராசரன் சோணாட்டினின்று சேர நாட்டிற்கும் பின்பு பெரும் பொருளுடன் பாண்டி நாட்டு வழியாகத் தன்னூருக்கும், யாதோர் இடர்ப்பாடுமின்றிச் சென்றதால், அக்காலத்தில் வழிப் போக்கர்க்கு வேண்டும் வழிவசதியும் பாதுகாப்பும் நிரம்ப விருந்தமை யறியப்படும். தமிழரசர் அடிக்கடி வடநாட்டின்மேற் படையெடுத்துச் சென் றதும்; அவருள் சேரன் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவில், 100 தேர்களும் 500 யானைகளும் 10,000 குதிரைகளும், 20,000 பண்டமேற்றிய வண்டிகளும், 1,000 சட்டையிட்ட அதிகாரி களும், மாபெருந் தொகையினரான காலாட் படைஞரும். 102 நாடக மகளிரும், 208 குயிலுவரும், 100 நகைவேழம்பரும், உடன் சென்றதும்; அக்காலத்திருந்த போக்குவரத்து வசதியை ஒருவாறுணர்த்தும். `அனுப்பு' என்றொரு வரி முற்காலத்து வாங்கப்பட்டதினால், ஒருகால் அஞ்சல் ஏற்பாடு அக்காலத்திருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. நீர்ப் போக்குவரத்து : பஃறுளியாறு முழுகு முன்னரே, கிழக்கில் சாவகம் மலையா காழகம் (பர்மா) சீனம் முதலிய தேசங் களுடனும், மேற்கில் அரபியா பாபிலோனியா கல்தேயா முதலிய தேசங்களுடனும், தமிழகம் வணிகஞ் செய்து வந்தது. சீனக்கண்ணாடி சீனக்காரம் சீனக்கிண்ணம் சீனச் சூடன் சீனப் பட்டு முதலிய பண்டங்கள் சீனத்தினின்றும் இலவங்கப்பட்டை, கிராம்பூ, சாதிக்காய், சாதிப்பத்திரி முதலிய சரக்குகள் நாகநாடுகள் என்னும் கீழிந்தியத்தீவுக் கூட்டத்தினின்றும்,1 தமிழரசரின் நால்வகைப் படைகளுள் ஒன்றான் குதிரைப் படைக்கு வேண்டுங் குதிரைகள் அரபியாவினின்றும், சித்திரப் பேழை பாவை விளக்கு மது முதலிய பொருள்கள் யவன நாடுகளினின்றும், தமிழகத் திற்குக் கலங்களில் வந்திறங்கின. தேக்கு, தோகை (மயில்), அரிசி, அகில், சந்தனம், இஞ்சி, கொட்டை (பஞ்சுச் சுருள்), வெற்றிலை, அடைக்காய் (பாக்கு) முதலிய பல பொருள்கட்குத் தமிழ்ப் பெயர்களே மேலை மொழிகளில் வழங்குவது, பழந்தமிழ் நாட்டு ஏற்றுமதிச் சிறப்பைக் காட்டும். கல்தேயா நாட்டைச்சேர்ந்த ஊர் என்னும் இடத்தில் அகழ்ந் தெடுக்கப்பட்ட ஒரு தமிழ் நாட்டுத் தேக்கவுத்தரம், கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. கி.மு. 1000 ஆண்டு கட்கு முற்பட்ட சாலமோன் என்னும் யூதவரசன் காலத்தில் தமிழகத்தினின்று யூதேயாவிற்கு ஏற்றுமதியான தோகையின் பெயர், யூத மொழியான எபிரேயத்தில் துகி என வழங்கி வந்தது. கடல்வாணிகத்தைப் பெருக்குதற்பொருட்டு, கி.மு. 55இல் பாண்டியன் ரோமவரசனுக்கும், கி.பி. 1015இல் முதலாம் இராச ராசனும், கி.பி. 1033இல் இராசேந்திரனும், கி.பி.1077இல் முதற் குலோத்துங்கனும், சீனவரசனுக்கும்; தூது விடுத்தனர். முத்தமிழ் நாட்டுக் கடற்கரையிலும், ஒரு காலத்திற்கு ஒன்றும் பலவுமாக, வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு துறைமுகங்கள் அமைந்திருந்தன. சோழ நாட்டிற்கு மயிலை, மல்லை, புகார், காரைக்கால், நாகை, தொண்டி முதலியனவும்; பாண்டி நாட் டிற்குக் கவாடம், கொற்கை, காயல் முதலியனவும்; சேர நாட்டிற்கு வஞ்சி, முசிறி, தொண்டி, மாந்தை, நறவூர், கொடுங்கோளூர், காந்தளூர், விழிஞம், கோழிக்கோடு முதலியனவும்; துறை நகர்களாய் இருந்து வந்தன. துறைமுகந்தோறும் கலங்கரை விளக்கம் (Light House) இருந்தது. புகார் கவாடம் வஞ்சிபோன்ற தலைமை அல்லது கோநகர்த் துறைமுகங்களில், பல்வேறு நாட்டுக் கலங்கள் பல்வகைப் பண்டங் களை நாள்தோறும் ஏற்றுவதும், இறக்குவதுமாயிருந்தன. ஏற்றுமதியும் இறக்குமதியுமான அளவிடப்படாத பண்டப் பொதிகள், ஆயத்திற்காக நிறுக்கப்பட்டு அவ்வத் தமிழ்நாட்டரச முத்திரை பொறிக்கப்பட்டபின், துறைமுகத்தைவிட்டு நீங்கும் வரை சிறந்த காவல் செய்யப்பட்டிருந்தன. அணியவும் சேயவு மான பல்வேறு நாட்டிலிருந்து வந்த புலம்பெயர் மாக்கள் தங்குவ தற்கு, வசதியாகச் சேரிகளும் விடுதிகளும் இருந்தன. தமிழகக் கீழ்க் கடற்கரையில் நாகநாட்டார் குமரி முதல் வங்கம் வரை பல நகரங்களில் வந்து தங்கியிருந்தமையால், அவை நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரி எனப்பெயர் பெற்றன. மீன் பிடிக்கும் கட்டுமரம் முதல் குதிரைப் படையேற்றத்தக்க நாவாய் வரை, பலதரப்பட்ட மரக்கலங்கள் தமிழ்நாட்டு வணிகர்க்குச் சொந்தமாயிருந்தன. ஏலேலசிங்கன், கோவலன் முன்னோர், பட்டினத்தார் என்னும் திருவெண்காடர் முதலியோர் பெருங்கல வணிகராவர் "ஏலேலசிங்கன் கப்பல் ஏழுகடல் சென்றாலும் மீளும்" என்பது பழமொழியாகும். சேரன் செங்குட்டுவன் "கடற்கடம் பெறிந்த காவலன்" என்றும், "கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்றும், புகழப் பெறுவ தால்; அக்காலத்தரசர் பகைவராலும் கடற்கொள்ளைக் கார ராலும் விளைக்கப்படும் தீங்குகளைப் போக்கிக் கடல் வணி கத்தைக் காத்தமை ஊகிக்கப்படும், பீலிவளை நாக நாட்டி னின்று புகார் வந்து மீளவும், மணிமேகலை ஈழத்திற்கும் சாவகத் திற்கும் சென்று மீளவும், வசதியும் பாதுகாவலுமான மரக்கலப் போக்குவரத்து அக்காலத்திருந்தது. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் தென்கடல் முத்துங் குணகடற் றுகிருங் கங்கை வாரியுங் காவிரிப் பயனு மீழத் துணவுங் காழகத் தாக்கமு மரியவும் பெரியவு நெரிய வீண்டி என்னும் பட்டினப்பாலைப் பகுதியால் (185-192), புகாருக்கு வந்து சேர்ந்த இருவகை வணிகப் பொருட் பெருக்கை ஒருவா றுணரலாம். வணிகன் tÂf‹ - tÂ{ (ï.nt.), வணிஜ பண்ணுதல்=செய்தல், உண்டாக்குதல், விளைவித்தல், உருவாக்கு தல், இச்சொற்கு வடவர் கூறும் பண்டமாற்றுப் பொருள் கற்பனையே. பண்ணியம் = 1. பண்ணப்பட்ட பொருள் பண்டம், பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விளைஞர் (மதுரைக்; 405). காம ருருவிற் றாம்வேண்டும் பண்ணியம் (மதுரைக் 422). சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் (மதுரைக். 506). 2. விற்கப்படும் வணிகப்பொருள் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ (மணி 7,24). பண்ணிய விலைஞர் = பண்டவாணிகர். பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய விலைஞர் (பதிற்றுப். 76:5). பண்ணியாரம்-பண்ணிகாரம்=பலபண்டம் (திவா.). தெ. பண்யாரமு. பண்ணியன்-(பண்ணிகன்)-(பணிகன்)-வணிகன். ஒ.நோ. பண்ணியாரம்-பண்ணிகாரம். பண்ணியாரம்-பணி யாரம்.பகு-வகு. வணிகன்-வணிகம். வணிகன்-வாணிகன்- வாணிகம். வாணிகன்-வாணியன். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. (தொல்.1578). (வ.வ.) Guj, van@iyo, baniya, A. banyan, Port. banian, E banian banyan வணிகன்-வணிகு. ஒ.நோ: வேந்தன் (வேய்ந்தோன்)- வேந்து. அதன்கண் வணிகொருவ னுளன் (மேருமந். 230) (வ.வ.253-254) வணிகு - வணிஜ். இனி, பொருள் பண்ணுபவன் (ஈட்டுபவன்) பணிகன் என்றுமாம். "vanij. m. (also written banij.) a merchant, trader RV. & . &" என்பது மா. வி. அ. வதி வதி-வ பதிதல்=தங்குதல். பதிசென்று பதிந்தனன் (தணிகைப்பு. பிரமன். 2). பதி=1. உறைவிடம் (திவா.) பதியிற் கலங்கிய மீன். (குறள் 1116) 2. வீடு (திவா.) 3. கோயில் (சங். அக.) 4. நகரம். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1:15) மதுரையம்பதி, தில்லையம்பதி முதலியன இலக்கிய வழக்கு. பதி-வதி.ஒ. நோ: பகு-வகு, படிவு-வடிவு. வதிதல்=தங்குதல். வதிமண் வம்பலர் வாயவிழ்ந் தன்னார் (பரிபா.10:20). வதி=தங்குமிடம். மாவதி சேர (கலித். 119). (வ.வ. 254) வதி-வ-வாஸ. x.neh.: மதி-ம-மாஸ (மதம்). (வ.வ.) வயிரம் வயிரம்-வஜ்ர வல்-வள்=வலிமை (பிங்) வள்வார் முரசு (பு.வெ.3.2. கொளு). வள்-(வள்)-வை-வயிர்=திண்ணிய கொம்பு. திண்காழ் வயிரெழுந் திசைப்ப (திருமுரு.120). இதன் உரை: - "திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக் கொலிப்ப"-நச். வயிர்த்தல்=1. வயிரங்கொள்ளுதல். வயிர்த்தன ணிலத்தினுயர் வானமினி தென்பாள் (பாரத. சம்பவ. (102) (வ.வ.) 2. சொற்றங்கொள்ளுதல். வயிர்-வயிரி=1 வன்னெஞ்சன் 2. செற்றமுள்ள பகைவன். வயிரித்தல்=மனம் முதலியன கடினமாதல், ஒட்டாரம் (பிடிவாதம்) செய்தல். வயிர்-வயிரம்=1.திண்மை. உலந்தரு வயிரத்திண்டோள் (கம்பரா. பூக்கோ. 10) 2. வலிமை. தோள்வயிரந் தோன்ற (சீவக. 645.) 3. மரவயிரம் (பிங்) 4. தொண்மணியுள் ஒன்று. வயிரப்பொற்றோடு (சிலப். 29, செங்குட்டுவன் கூற்று.) (வ.வ. 254-255) 5. மனவயிரமாகிய செற்றம். வடமொழியில் இதற்கு மூலமில்லை. "Another vaj or uj, 'to be hard or strong' may be inferred from ugra, ojas, vajra, va#ja, (qq.vv.) the last of which gave rise to the Nom. va#jaya." என்று மா.வி அ. குறித்திருப்பதை நோக்குக. (வ.வ.) வரணம் வரணம்-- வர்ண (வ.), வரணி--வர்ண (வ.), வண்ணம் வண்ணி என்னும் முந்திய அடிச்சொற்கட்கு நேர் சொற்கள் வடமொழி யின்மையும் கவனிக்கத்தக்கதே. (தி.ம : 754) வரணம் -வர்ண (இ.வே.). வள்-வளை. வளைத்தல்-எழுதுதல், வரைதல். உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுவல்.113). வள்-வட்டு-வட்டி. வட்டித்தல்=1. வளைத்தல். (இலக்.அக.) 2. எழுதுதல். சிலப். 21, 46, அரும்.). எழுத்திலும் ஓவியத்திலும் வளைகோடும் வளைபூச்சும் நிரம்பி யிருப்பதால், வளைத்தற் கருத்தில் எழுதுதற் கருத்துத் தோன்றிற்று. வள்-வண்-வண்ணம்=1. வளைத்தெழுதும் எழுத்து அல்லது ஓவியம் 2. எழுதும் மை அல்லது கலவை நீர். பலகை வண்ண நுண்டுகிலிகை (சீவக. 1107). (வ.வ.) 3. எழுதிய கலவை நீரின் நிறம். வான்சுதை வண்ணங் கொளல். (குறள். 714) 4. ஓவிய அழகு. பிறைநுதல் வண்ண மாகின்று (புறம்.1). (வ.வ.) 5. அழகிய கோலம். 6. ஓவியக்கலவை, நிறத்தின் வகை, வகை. 7. ஓசை வகை, பாட்டு, செய்யுள், சிறப்போசைச் செய்யுள், மெட்டு, பண். வண்ணமாலை=நெடுங்கணக்கு (எழுத்துக் கோவை). வண்ணத்துப் பூச்சி-வண்ணாத்திப் பூச்சி-பல நிறம் அல்லது கோலமுள்ள பூச்சி. வண்ணத்தான், வண்ணான் = ஆடைகளை நன்றாய் வண்ணஞ் செய்பவன். வண்ணக்கன்=பொற்காசுகளின் அல்லது பொற்கட்டிகளின் மாற்று நிறத்தை அல்லது திறத்தை நோட்டஞ் செய்பவன். வண்ணமகள்=கோலம் (அலங்காரம்) செய்பவள். வண்ணம்-வண்ணம்=1. முடுகிய வோசைக் கலிப்பா வுறுப்பு. 2. வரணித்துப்புகழ்கை. வண்ணம்-வண்ணி. வண்ணித்தல்=பலவகையில் அல்லது பல்வேறு ஓசைபடப் புகழ்ந்து பாடுதல். வண்ணி-வண்ணிகன்=எழுத்தாளன். வள்-வர்-வரி. வரிதல்=1. எழுதுதல் (பிங்.). 2. சித்திரமெழுதுதல், பூசுதல் வரிவனப் புற்ற வல்லிப் பாவை (புறம். 33) (வ.வ.) வரித்தல்=1. எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக.2532). 2. சித்திரமெழுதுதல், பூசுதல். 3. கோலஞ் செய்தல். அணிமலர் துறைதொறும் வரிக்கும் (ஐங். 117). வரி=1. வளைகோடு (வரிப்புலி=வேங்கை), 2. கோடு, 3. எழுத்து (அரிவரி=அரியென்று தொடங்கும் நெடுங்கணக்கு) 4. இசைப் பாட்டு. வரிநவில் கொள்கை (சிலப். 38) 5. நிறம். வரியணிசுடர் வான்பொய்கை (பட்டினப்.38) 6. அழகு. வரிவளை (பு.வெ. 11,12). (வ.வ : 251-252) தெ. வரி, க. பரெ (b) ம. வரெ. வரி+அணம்=வரணம் எழுத்து, பூச்சு, நிறம், வகை, அழகு, நிறம்பற்றிய குலம். (வ.வ.) வரணி வரணி-வர்ண் வரணம்-வரணி. வரணித்தல்=புனைந்துரைத்தல். வரணம், வரணி என்னும் இரு சொல்லும், வடசொல் வடிவைப் பின்பற்றி வருண, வருணி எனத் தமிழில் வழுப்பட எழுதப்பட் டுள்ளன. gh©o eh£o‰ Fy« Édî«nghJ "v‹d tuz«?" என்றே இன்றும் ரகர வடிவில் நாட்டுப் புறத்தில் வழங்குதல் காண்க. வண்ணம், வரணம் என்னும் இரு சொல்லும் ஒரே மூலத்தினின்று தோன்றியவையே. ஆயின், முன்னது அடிப்படை மூலமாகிய வள் என்பதினின்றும், பின்னது மேற்படை மூலமாகிய வரி என்பதினின்றும், திரிந்தவையாகும். வள்-வண்-வண்ணம்-வண்ணி-வண்ணனை. (வள்-வர்) வரி-வரணம்-வரணி-வரணனை. ஒ.நோ : திள்-திண்-திண்ணை (அடிப்படை மூலம்). (திள்-திர்) திரள்-திரளை-திரணை(மேற்படை மூலம்). (வ.வ.) திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்றும் தோன்றிய ஒருபொருட் சொற்களே, இவையிரண்டும் இன்றும் நெல்லைநாட்டு உலக வழக்காம். இங்ஙனமே வண்ணம், வரணம் என்பனவும். வண்ணம் என்னும் அடிப்படை மூலத்திரிபு வடமொழியி லின்மையும், வரணம் (வர்ண) என்னும் மேற்படை மூலந்திரிபே அதிலுண்மையும், கவனிக்கத் தக்கன. வண்ணக வொத்தாழிசைக்கலி என்னும் செய்யுள் வகைப் பெயர், தொல்காப்பியர் முந்து நூலிற்கண்ட இலக்கணக் குறியீடாதலின், தலைக்கழகக் காலத்தது என்று அறிதல் வேண்டும். வர்ண் என்று வடவர் காட்டும் மூலம் செய்கையே. ""var@n (rather Nom. fr. var@n@a") என்று மா.வி.அ. குறித்திருத்தல் காண்க. (வ.வ: 252-253) வரம் புரம் = மேல், மேன்மாடம். புரம்-பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம்-வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) மேலுலகம், வீட்டுலகம். (தி.ம.49) வரலாற்றின் பயன் கலைகளும் (Arts) அறிவியல்களும் (Sciences) (1) தற்சார்புள்ளது (Independent) (2) மற்சார்புள்ளது (Dependent) என இருதிறப்படும். தற்சார் பறிவியங்களுள் ஒன்றான வரலாறு, ஏனையறிவியங்கட் கெல்லாம் அடிமணையாயும் முதுகந்தண்டாயும் இருப்பதாகும். ஒவ்வொரு துறையிலும், தொடக்கந்தொட்டுவரும் ஆசிரியரின் அல்லது அறிஞரின் வரலாற்று முறைப்பட்ட அறிவுத்தொகுதியே ஒருகலை அறிவியம். காட்சியும் கருத்துமாகிய ஒவ்வொரு பொருட்கும் வரலாறிருப் பினும் ஒரு நாடு, அதன் மக்கள், அவர்கள் மொழி, அவர்கள் நாகரிகம், ஆட்சி ஆகிய சிலவற்றின் வரலாறே சிறப்பாக வரலா றெனப்படும். ஒரு நாட்டு வரலாறு அந்நாட்டின் பழங்குடி மக்களையும் (Abori-gines) வந்தேறி களையும் (Immigrants) பிரித்துக் காட்டுவதால் ஒரு வீட்டுக்காரனுக்கு அவ்வீட்டு ஆவணம் ஏமக்காப்பாவது போல், ஒரு நாட்டுப் பழங்குடி மக்கட்கும் அந்நாட்டு வரலாறு சில வுரிமை வகையில் ஏமக்காப்பாம். இனி, வரலாறின்றி ஒரு மொழியின் உண்மையான இயல்பை அறிவதும் அரிதாம். வரலாறுரைப்பன ஒரு நாட்டின் பண்டை வரலாற்றை அறியப் புத்தகமும் செய்யுளுந்தான் வேண்டும் என்பது இல்லை. அந்நாட்டு மொழி அல்லது சொற்கள் கூட வரலாறுரைப்பன ஆகும். "பழங்கால மக்களின் கூட்டுறவு நிலை அரசியல் நிலை இவற்றின் நினைவுச் சின்னங்களை இற்றைச் சொற்களிற் கண்டு, அவற்றைப் பற்றித் தம் கருத்தை அறிவிக்குமாறு ஆசிரியர் அவற்றைக் குறித்து வைத்தல் வேண்டும். ஒவ்வொரு நாட்டாரின் உள்ளுறு வாழ்க்கையும் அவரது மொழியிற் பெயரா எழுத்திற் பொறிக்கப் பட்டு வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது: நாட்டு வரலாறு பழக்க வழக்கம் ஒழுக்கவிதிகள் ஆகியவற்றைப் பொருள் வழக்கற்ற சொற்களினின்றும் வெளிப்படுத்தாத ஆசிரியர் மிகத் தவறியவராவர்" என்று கிரகம் என்றும் ஆங்கிலேய ஆசிரியர் கூறுகின்றார். English Word - Book by John Graham. சொல். 16. வரலாற்றுக் களஞ்சியம் சொற்களும் ஒவ்வொரு வரலாற்றுண்மையை உணர்த்தக் கூடும் என்றும் விரிவான அகராதி ஒரு வரலாற்றுக் களஞ்சியம் என் றும், வரலாற்றுச் சொற்களையும் வரலாற்று நூல்களைப் போலப் போற்ற வேண்டும் என்றும், அவற்றுள்ளும் வழக்கற்ற சொற் களை மிகக் கருத்தாய்ப் போற்ற வேண்டும் என்றும் அறிக. (சொல் -30.) வரன் வரன் : புரம்=உயர்ச்சி, உயரமான கட்டிடம், கோபுரமுள்ள நகர். கோபுரம் = அரசனிருக்கும் உயரமான கட்டிடம், உயரமான காவற் கூண்டு. புரையுயர் பாகும். (தொல். எ. அரு.). புரம்--பரம்= மேலுலகம் : பரம்--வரம்-- வரன் = மேலான வீட்டுலகம். (தி.ம. 754) வரால் வரால் - முரல வரி=நீளம்; வரி-வரால் - குறவையிலும் நீண்டிருப்பது. E murrel. முர் (சூழ்,பின்னு, பிணை) என்பது மூலமாயிருக்கலாமென்று. மா.வி.அ. கருதுவது சரியன்று. (வ.வ. 255) வரி வரி - வ்ரீஹி (அ.வே.). வரி=வரிச்சம்பா, வரியுள்ள நெல், நெல் (பிங்.). எடுத்துவரி முறத்தினிலிட்டு (தனிப்பாடல்). மா.வி.அ "of doubtful derivation"v‹W குறித்திருத்தல் காண்க. (வ.வ: 255). வரிகள் குசக்காணம், தறிக்கடமை, தட்டாறப்பாட்டம், கிடைப்பூட்சி, செக்கிறை, வண்ணாரப் பாறை, தரகுபாட்டம், ஓடக்கூலி, நல்லா, நல்லெருது முதலியன. கலியாணக்காணம் என்பது மணமக்கள் செலுத்தியவரி. அது இக்காலத்துப் பதிவுமணக் கட்டணம் போல்வது. கள்ளிறக்குவார் செலுத்திய வரி மேனிப் பொன் எனப்பட்டது. ஈழ நாட்டில் இருந்து ஈழவர் வந்தபின்னரே அது ஈழம் பூட்சி எனப் பெயர் மாறிற்று. தென்னையும் பனையும் தொன்று தொட்டுத் தமிழகத்தில் இருந்து வருகின்றன. நாடு காவல் (பாடிகாவல்), நீராணி (நீர்க்கூலி) முதலிய சிலவரிகள் ஊரவையாரால் வாங்கப்பட்டனவாம். (திருக். 754) வரிசை யறிதல் அரசன் அல்லது ஆட்சித்தலைவன் கலைஞர், புலவர், பாவலர் அறிஞர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பணித்திறவோர் முதலி யோர்க்குப் பரிசளிக்கும்போதும் பட்டம் வழங்கும்போதும் வேறு சிறப்புச் செய்யும்போதும், அவரவர் தகுதியுந் தரமுமாகிய வரிசையறிந்து செய்தல் வேண்டும். பரிசளித்தல் எளிது; வரிசையறிந்தளித்தல் அரிது. ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ அரிதே பெரிதும் இதல் எளிதே மாவண் டோன்றல் அதுநற் கறிந்தனை யாயின் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121) என்று, கபிலர் மலையமான் திருமுடிக்காரியை நோக்கிப் பாடி னார். இவ்வேண்டுகோள் எல்லா ஈகையாளர்க்கும் ஏற்கும். தமிழர் வழிகாட்டியருள் திருவள்ளுவர்க்கு அடுத்தவர் மறை மலையடிகளே; பெரும்புலவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் வல்லவர். பேரா. ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரைவேந்தர்; சிந்தா மணிச் செல்வர் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை இலக்கணப் புலவர்; மயிலை. சீனிவேங்கடசாமி வரலாற்றாய்ச்சியாளர். பாவலருள் இசைப் பாட்டிசைப்பாரும் செய்யுள் செய்வாரும் செய்யுள் செய்வாருளுள் ளும், தமிழ் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு பலவகைப் பனுவல் இயற்றுவாரும் பாடுவாரும் வெவ்வேறு. கலைஞர்க்குப் பரிசளிக்கும்போது, தகுதியை மட்டுமின்றித் தேவையையும் கவனித்தல் வேண்டும். அடிக்கடி இசை யரங்கு நிகழ்த்தி ஆயிரக் கணக்காகப் பொருள் பெறும் மிடற்றிசை ஞர்க்குப் பொற்றாமரையும், அங்ஙனமே, நடவரங்கு நிகழ்த்திப் பெரும்பொருள் பெறும் நடனியர்க்குத் தலைக்கோலும் வழங்கி னாற் போதும். இயல் இசை நாடகம் மூன்றும் முத்தமிழ் எனப்படுதலாலும், இயலில் தேர்ச்சி பெறவும் மதிநுட்பமும் நெடுங்கால வுழைப்பும் வேண்டியிருத்தலாலும், பரிசளவில் அல்லது சிறப்புச் செய்யும் வகையில், வேறுபாடின்றி, முத்தமிழ்ப் புலவரையும் சமமாகவே கருதுதல் வேண்டும். மிடற்றிசை வாய்ப்பாட்டு. வல் வல் - வல் வல் - வல. வலத்தல்=1. வளைத்தல். 2. சூழ்தல். இழை வலந்த (புறம். 136). 3. சுற்றுதல் நெடுங்கொடி.... வாங்குசினை வலக்கும். (புறம்.52). வலந்தம்=வளைவு, (வ.வ: 255) வல்1 (வளைவுக் கருத்துவேர்) முழைத்தல் மொழி (Natural language), இழைத்தல் மொழி (Arti-culate Speech) என்னும் இருவகை மொழிகளுட் பின்னது பெரும் பாலும் உகரச் சுட்டடியாய்ப் பிறந்திருத்தலின், உகரமேறிச் சொன்முதலாகாத வகரமுதற் சொற்க ளெல்லாம். புல் என்னும் பகர முதலடியினின்றோ முல் என்னும் மகர முதலடியினின்றோ தான் பிறந்துள்ளன. எ-டு : பகு - வகு, பால் - வால் (வெள்ளை), பிள் - விள். பெள் - வெள் (விரும்பு) - வெய். மல் - வல், மழி - வழி, மானம் - வானம், மிஞ்சு - விஞ்சு. முல் - மல் - வல், வல்லம் = வட்டமான ஓலைக்கூடை. வல் - வல்லி = வளைந்த கொடி வல்லி யனையாள் (பு.வெ.பெண்பாற் 12 உரை) வல்லி - வ. வல்லீ. வல் - வல. வலத்தல் = சூழ்தல். நெடுங்கொடி வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும். (புறம். 52). மல்-மலார் (C.G.) = வளைந்த இளம்போத்து. (twig) தெ. மலாரமு. மலார்-வலார். வலாஅர் வல்லிற் குலாவரக் கோலி. (புறம். 324) வலார்-வளார். புளியம் வளாரால் மோதுவிப்பாய். (தேவா. 1039:1) வளார் - வளாறு. வல்-வலி. வலித்தல் = 1. வளைத்தல் (சூடா.) 2. தண்டால் நீரை வளைத்துப் படகோட்டு தல். 3. முகத்தை வளைத்து வலிச்சங் காட்டுதல். 4. வில்வளைய இழுத்தல். சார்ங்கம் வளைய வலிக்கும். (திவ். நாய்ச். 5:8) 5. சுண்டியிழத்தல். 6. இசிவுண்டாதல். 7. சுண்டி யிழுத்தாற்போல நோவுண்டாதல். வலி = நோவு. வல் - வலை - உயிரிகளைச் சூழ்ந்து அகப்படுத்தும் கயிற்றுக் கருவி. புலிகொண்மார் நிறுத்த வலையுள். (கலித். 65). 2. சூழ்ச்சி. அகப்பட்டேன்.......... வாசுதேவன் வலையுளே. (திவ். திருவாய். 5:3:6) ம. தெ. வல. க. பலெ. (b) வல்-வள்-வள்ளம் = 1. வட்ட உண்கலம், வட்டில். வள்ளத் தவனேந்த....... மதுமகிழ்ந்தார். (சீவக. 2700). 2. நாழிகை வட்டில் (சூடா.). 3. மரக்கால் (பிங்.). 4. நான்மரக்கால் கொண்ட அளவு (W.) 5. நான்கு அல்லது எட்டுப்படி கொண்ட அளவு. 6. சிறு தோணி. "வள்ளப் பட்டன மகர கடலென" (கம்பரா. அட்சகு. 28) வள்ளக்கால் வளைந்த கால் (இ.வ.). வள்-வள்ளி=1. கொடி "வாடிய வள்ளி முதலரிந் தற்று" (குறள். 1304) 2. கொடி போன்று தொடர்ந்து இருப்பது `மேக வள்ளி' (தொல். புறத். 33, உரை). வள்ளி-வள்ளியம் =மரக்கலம் (சது.). வள்-வள-வளவு = வீட்டுச் சுற்றுப் பரப்பு. வீட்டுத் தொகுதி, வீடு. "வளவிற் கமைந்த வாயிற் றாகி" (பெருங். இலாவாண. 6:77). 2. வீட்டுப் புறம். (W.). வள-வளர்-வளரி=பிறைபோல் வளைந்த வளரித்தடி (boomerang). வள-வளா- சுற்றுப் பரப்பு. குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று (குறள். 523). வளா-வளாவு. வளாவுதல்=1, சூழ்தல். "இளவெயில் வளாவ" (பரிபா. 15.27) "மகோததி வளாவும் பூதலம்" (கம்பரா. தேரேறு. 42). 2. சுற்றி மூடுதல். "பைந்துகில்.....bt«Kiynkš வளாய்" (சீவக. 2634). வளா +அக« =வளாக« =1. வளைக்கை, சூழ்கை (சூடா.). 2. சூழ்ந்த இடம், இடம். "புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட் சென்றிலேன்" (தேவா. 1193:1). 3. கடல் சூழ்ந்த உலகம். "முந்நீர் வளாக மெல்லாம்" (கலித். 146). 4. நிலப்பெருங் கண்டம். "ஏழ்பெரு வளாக வேந்தர்" (கம்பரா. திருமுடி. 6). 5. தேசம். "வேறோர் வளாகம் துற்றான்..... வணிகன்" (கந்தபு. மார்க். 142). 6. தினைப்புனப் பரப்பு. "குன்றும் யாறுங் குவடும் வளாகமும் (குற்றா. தல. வேடன் கலம். 28). 7. தோட்டம். வளா - வளாஞ்சி = வளார், (இ.வ.). வள் - வளி = வளைந்து வீசுங் காற்று. "வளிவழங்கு மல்லன்மா ஞாலஞ் கரி" (குறள். 245). 2. உடம்பிலுள்ள ஊதைக் கூறு. "வளிமுதலா வெண்ணிய மூன்று" (குறள். 941). வள - வளை, வளைதல் = 1. கோணுதல். 2. குனிந்து தாழ்தல். "முற்ற மூத்துக் கோல்துணையா முன்னடி நோக்கி வளைந்து" (திவ். பெரியதி. 1:3:1). 3. தோற்று வணங்குதல். "வளையா வயவரும்" (பு.வெ. 7. 18). 4. திடமறுதல் (சீவக. 1068, உரை). 5. செங்கோல் வளைவது போன்று ஆட்சி நேர்மையினின்று விலகுதல். "வளை யாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்" (சிலப். 19:16). 6. வருந்துதல் உடம்பு வளைந்து வேலை செய்வதில்லை. (உ.வ.). "வளையார் பசியின்" (பதினொ. திருவிடை. மும்மணிக். 27). 7. சுற்றுதல். - (செ. குன்றாவி.) 1. சூழ்தல். "வளைகடல் வலையிற் சூழ்ந்து" (சீவக. 1115). 2. சுற்றி வருதல். "வையக முழுதுடன் வளைஇ" (புறம். 69). வளைய வளைய = திரும்பத் திரும்ப. வளைத்தல் = 1. வளையச்செய்தல். 2. சூழ்தல். "இருமுட் புரிசை யேற வளைஇ" (முல்லைப். 27). 3. தடுத்தல். "வள்ள னீங்கப் பெறாய் வளைத்தேனென" (சீவக. 889). 4. பற்றுதல். 5. கவர்தல். கொள்ளைக்காரர் எல்லாவற்றையும் வளைத்துக்கொண்டு போய்விட்டார்கள் (உ.வ.) 6. சொன்ன சொல்லை மாற்றுதல். வளைத்து வளைத்துப் பேசுகிறான் (உ.வ.). 7. வளைத்து எழுதுதல். "உருவப் பல்பூ வொருகொடி வளைஇ" (நெடுநல். 113). 8. அணிதல். "சடைமுடிமேல் முடிவெண்டிங்கள் வளைத்தானை" (தேவா.871:1) வளை = 1. வளையல். "முன்கை யிறையிறவா நின்ற வளை" (குறள். 1157). 2. சக்கரப்படை. "தாங்கணைப் பணிலமும் வளை யும்" (கம்பரா. உருக்காட்டுப். 43). 3. சங்கு "வளையொடு புரையும் வாலி யோற்கு" (பரிபா. 2:20). 4. வட்டத்துளை, எலி நண்டு முதலியவற்றின் வளை. 5. சுற்றிடம். "பரிமேச்சுர மங்கலத்து ளகப்பட்ட வளையில்" (S.I.I.i, 151;72). க. பளெ (b). வளை - வளையம் = 1. வட்டம் (அக.நி.). 2. கைவளை (W.) 3. முடியிற் சூடும் வளையமாலை. 4. தாமரைச் சுருள் (பிங்). 5. சுற்று. 6. ஒரு கோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங் காலம். 7. குளம். (W.). வளை - வ. வலய. வளை - வளையல் = 1. வளைவுள்ளது. (யாழ். அக.). 2. கைவளை. வளையல் விற்ற படலம். வளை - வளைவு = 1. வளைவுள்ளது. (யாழ். அக.). 2. கைவளை. வளையல் விற்ற படலம். வளை - வளைவு = கோணல். 2. கட்டடத்தில் அமைக்கும் வில்வடிவு. 3. வட்டம். 4. சுற்று. 5. வீட்டுப்புறம் (W.) 6. பணிவு (யாழ். அக). வளைவி - 1. வீட்டிறப்பு. 2. வளையல். வளை-வனை. வனைதல் = வண்ணம் = 1. வளைத்தொழுதுகை. 2. எழுதும் ஓவியம். 3. எழுதும் எழுத்து. 4. சித்திர மெழுதுங் கலவை. "பலகை வண்ண நுண் டுகிலிகை" (சீவக. 1107). 5. கலவை நிறம். 6. நிறம். "வெளியார்முன் வான்சுதை வண்ணங்கொளல்" (குறள். 714). "வண்ணம் வடிவே அளவே சுவையே" (தொல். வேற். 17). 7. ஓவிய அழகு. 8. அழகு. "பிறைநுதல் வண்ணமாகின்று" (புறம்.1). 9. இயற்கை யழகு. "வண்ணமுந் தேசு மொளியுந் திகழ" (பரிபா. 12: 20). 10. செயற்கை யழகு. ஒப்பனை (அக.நி.). 11. சிறப்பு. "கைவண்ண மிங்குக் கண்டேன்" (கம்பரா. அகலிகை. 82). 12. நன்மை (யாழ். அக.) 13. குணம். "நிரலுடைமையும் வண்ணமுந் துணையும்" (குறிஞ்சிப். 31). 14. வடிவு (பிங்.). 15. குலம் (தொல். புறத். 27, உரை). 16. இனம். "வண்ணம் வண்ணத்த மலர்" (குறிஞ்சிப். 114). 17. வகை. "தலைச்செல்லா வண்ணத்தால்" (குறள். 561). 18. ஓசைவகை. "வண்ணந் தானே நாலைந் தென்ப" (தொல். செய். 210). 19. சிறந்த ஓசைவகைப் பாட்டு, வண்ணத்திரட்டு. 20. முடுகிய ஓசையுள்ள கலியுறுப்பு. முடுகியல் (பிங்.) 21. இன்னிசைப் பண் (இராகம்) (சது.) 22. இன்னிசைப் பாட்டு. "கோதை தானே யிட்ட தோர் வண்ணந்தன்னை" (சீவக. 1996). ஒ. நோ : தில் - திள் - திண் - திண்ணம் வண்ணம் - பிரா. வண்ண. வண்ணம் - வண்ணன் = நிறத்தன். எ - டு : அழல்வண்ணம், கார்வண்ணன். ஒ. நோ : திண்ணம் - திண்ணன். வண் - வண்ணி, வண்ணித்தல் = ஓர் ஒவியத்தைப் பல்வேறு நிறங்களாலும் நுண்வினைகளாலுஞ் சிறப்பிப்பதும், ஓர் அணிகத்தை (வாகனத்தை)ப் பன்னிற அழகிய பொருள்களாற் சுவடிப்பதும், ஓர் உடம்பைப் பன்னிற ஆடையணிகளால் அழகு படுத்துவதும் போன்று, இறைவனை அல்லது ஒரு தவைனைப் பல்வேறு கருத்துகளாலும் பல்வகைச் செய்யுளுறுப்புகளாலும் சிறப்பித்துப் புகழ்தல்: அல்லது, பொருளிடங் காலங்களுள் ஒன்றன் இயல் செயலுறுப்பு களெல்லாவற்றையும் விளத்தமாக (விவரமாக) எடுத்துக் கூறுதல். ஒ. நோ : திண்ணம் - திண்ணி - திணி. வண்ணி - வண்ணகம் = 1. வண்ணித்துப் புகழ்கை. "வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப்படும்" (தொல். செய். 140, உரை). 2. ஒரு கலிப்பா வுறுப்பு. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா - தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னுங் கலியுறுப் பாறும் வந்து, முழு நிறைவாகும் கலிப்பா என்னும் பாவகை. ஒருவன் தன் காதலை வெளிப்படுத்தற்கும், கடவுளை வழுத்தற் கும், வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாப்போல் மிகப் பொருத்த மான செய்யுள் வகையை வேறெம் மொழியிலுங் காண வியலாது. ஒ. நோ : திண்ணம் - திண்ணகம். வண்ணி - வண்ணனை - வண்ணித்துப் புகழ்கை. வண்ணக்கம்மர் = 1. வண்ணப்பூச்சு வினைஞர், வண்ணவோவியர். வத்தநாட்டு வண்ணக் கம்மரும் (பெருங். உஞ்சைக் 58: 44). வண்ணக்கன் = காசு நோட்டகன் (நாணய சோதகன்). வண்ணக் கன் சாத்தனார் (நற்). வடம வண்ணக்கன் தாமோதர னார் (புறம். 172). பொற்காசை உரைத்துப் பார்த்து அதன் மாற்று வண்ணத் தால் (நிறத்தால்) காசின் இயல்பையறியும் நோட்டக் காரன், வண்ணக்கன். வண்ணமாலை = நெடுங்கணக்கு (சங். அக.). வண்ண மகள் = கோலஞ் செய்பவள். வண்ணத்தான் = வண்ணான், ஆடையழுக் ககற்றி வண்ணஞ் செய்பவன். வண் - வணர். வணர்தல் = 1. வளைதல். "வணர்ந்தேந்து மருப்பின்" (மலைபடு. 37). மயிர் குழன்றிருத்தல். "வெறிகமழ் வணரைம்பால்" (கலித். 57). வணர் = 1. யாழ்க்கோட்டின் வளைந்த பகுதி. "வணரளவு சாணும்" (சிலப் பாயி. 9). 2. கட்டட வேலை வளைவு (W). வணர் - வண - வணங்கு. வணங்குதல். இனி, வளரி - வணரி என்றுமாம். வண் - வண - வணங்கு. வணங்குதல் = 1. வளைதல். 2. நுடங்குதல். "வணங்கிடை" (பு.வெ. 7:27). 3. பணிந்தடங்குதல். "வணங்கிய வாயினர்" (குறள். 419). 4. ஏவற்றொழில் செய்தல். "நம்மில் வந்து வணங்கியும்" (கலித். 76). (செ. குன்றாவி) 1. வழிபடுதல். "எண்குணத்தான் றாளை வணங் காத்தலை" (குறள். 9). 2. சூழ்ந்துகொள்ளுதல் "வணங்குமிப் பிறப்பிவை நினையாது" (திருவாச. 41 : 6). க. பக்கு (baggu) வணங்கு - வணங்கி, பொழுதுவணங்கி = கதிரவனை நோக்கி வளையும் பூ (சூரியகாந்தி). வணங்கார் = பகைவர். வணங்கு - வணக்கு. வணக்குதல் = 1. வளைவித்தல். 2. பணியச் செய்தல். "மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" (அகம். 61). தெ. வந்த்சுட்ட (vantsuta), க. பக்கிசு (baggiu). வணக்கு - வணக்கம் = 1. வளைகை. "வில் வணக்கந் தீங்கு குறித் தமையான்" (குறள். 827). 2. வழிபாடு. "குறைவிலா வென்னெடு வணக்கங் கூறி" (கம்பரா. தைல. 38). நூன்முகத்திற் கூறும் கடவுள் வணக்கம். "வாழ்த்தும் வணக்கமும் பொருளியல் புரைத்தலு மென மூவகைப்படும்" (சி.போ.பா. மங்க. பக். 1). 4. கண்ணியப் படுத்துகை (யாழ். அக). வணக்கு - வணக்கி, யானை வணக்கி = யானத் துறட்டி. வணங்கு - வங்கு = 1. கப்பலின் விலாச் சட்டங்கள் 2. எலி முதலியவற்றின் வளை. வங்கு - வங்கி = 1. நெளிவளையல். 2. நெளிவாள். 3. நெளி மோதிரம் (வங்கி நெளிவு). bj., க. வங்கி (nk), து. வக்கி (gg). வங்கு - வங்கம் = 1. வளைவு. 2. ஆற்று வளைவு (யாழ். அக.) 3. வளைந்த அல்லது வட்டவடிவமான கப்பல். "வாலிதை யெடுத்த வளிதரு வங்கம்" (மதுரைக். 536) வங்கு - வங்கியம் = வளைந்த ஊதிசைக் கருவி. "வங்கியம் பல தேன் வளிம்பின்" (கம்பரா. கைகேயி. 60). இயம் = இசைக்கருவி. வங்கு - வங்கா = 1. வளைந்த ஊதுகொம்பு (W.). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை. "வங்காக் கடந்த செங்காற் பேடை" (குறந். 151), வளைந்த தாரை. வங்கு - வாங்கு. வாங்குதல் = (செ.குன்றாவி) 1. வளைத்தல் "கொடு மரம் வாங்கி" (கல்லா. 4). 2. வளைத்து நாண்பூட்டுதல். "நாண்வாங்க லாது விற்கொண்டு" (இராகு. திக்குவி. 231). 3. வளைத்து இழுத்தல், இழுத்தல், "மத்த மொலிப்ப வாங்கி", (பெரும்பாண். 156). 4. மூச்சு இழுத்து, உட்கொள்ளுதல். மூச்சு வாங்குகின்றான் (உ.வ.). 5. கொள்ளுதல், ஏற்றல் "வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும்" (திருவாச. 5: 68). 6. விலைக்குக் கொள்ளுதல். "மாதவி மாலை கோவலன் வாங்கி" (சிலப். 3171). 7. பெறுதல். "எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே" (தேவா. 456: 8). 8. இழுத்து வரைதல். ககரத்துக்குக் கால் வாங்கிகனாற் காவாகும். (உ.வ.) 9. இழுத்து ஒதுக்குதல். இந்த வண்டி போகும்படி அந்த வண்டியை வாங்கிக் கொள் (உ.வ.) 10. வில் நாணிழுத்து அம்பைச் செலுத்துதல். "சமணர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே போத வாங்கி" (தேவா. 658 7). 12. ஒதுக்கி நீக்குதல். "வாங்குமின் மனத்துயர்" (கம்பரா. மீட்சிப். 278). 13. பிரித்தெடுத்தல். "தானே என்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின்" (தொல். புறத். 1, உரை) 14. பெயர்த்தல். "புற்றம் வாங்கிக் குரும்பி கொண்டும்" (அகம். 72). 15. ஒடித்தல் "வேழம் ....... கரும்பின் கழைவாங்கும்" (கலித். 40). 16. வெட்டுதல், கை கால்களை வாங்கிவிடுவேன் (உ.வ.). 17. பிரம்பை வளைத்து அடித்தல். பிரம்பை யெடுத்து அவனை நாலு வாங்கு வாங்கினான் (உ.வ. 18. அழித்தல். "விண்ணு மண்ணக முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்." (திருவாச. 5: 96). (செ.வி.). 1. வளைதல் "வாங்குகதிர் வரகின்" (முல்லைப் 98).2. வளைந்து அசைதல். "வளிவாங்கு சினைய மாமரம்" (பரிபா. 7:14). 3. குலைதல். பகைவர் தண்டுவாங்கிப் போயிற்று (W.). 4. மெலிதல் உடம்புவாங்கிப் போயிற்று (உ.வ.). 5. உள்ளிழுத்தல். மழைத் தண்ணீரையெல்லாம் நிலம் வாங்கிக்கொண்டது (உ.வ.).6. குறைதல். வீக்கம் வாங்கியிருக்கிறது (உ.வ.) 7. ஒதுங்குதல்.8. பின்வாங்குதல். "விரைவின் வாங்கி..... பிழைத்த சேனை பின்வர" (திருவாலவா. 49:20). 9. திறத்தல், அந்தக் கடையின் கதவு ஒருபுறம் வாங்கியிருந்தது. (உ.வ.). ம. தெ. வாங்கு வாங்கு = 1. வளைவு (நாமதீப. 768). 2. பிரம்படி. பிரம்பையெடுத்து அவனை நாலு வாங்கு வாங்கு (உ.வ.). 3. சொல்லடி வசவு. அவள் வாங்கின வாங்கு அவள் வாழ்நாளுக்குப் போதும் (உ.வ.) 4. வங்கி. க. பாகு (g) = வளைவு. வாங்கு - இ - பாங்க் (வங்கி). வாங்கு - வாங்கம் = வளைந்த கடல். வாங்கம் - வ. வாங்க (vanka). வாங்கறுவாள் = வளைந்த அறுவாள். வாங்கு - வாங்கா = வளைந்த ஊதுகொம்பு அல்லது தாரை. வாங்கா - உ. பாங்கா (nk). வாங்கு வாங்கல் = நெடுந் தொலைவு. காவேரிப் பாக்கத்திலிருந்து சுங்குவார் சத்திரம் ஒரு பெரு வாங்கல் (உ.வ.). வாங்கல் = இழுத்தல். இழுததல் = நீளுதல். நீளச்செய்தல். வாங்குபிடித்தல் = பொருத்து விட்ட அல்லது பிளந்துபோன இரு பகுதிகளை இழுத்துத் தகட்டால் இணைத்தல். வள் - வள்கு - வட்கு. வட்குதல் = வளைதல், வணங்குதல், தாழ்தல், "வாடிய காலத்தும் வட்குபவோ" (பழ. 204). வட்கார் = வணங்கார், பகைவர். "வட்கார் நிரையன் றழலெழ வெய்து நின்றோன்" (திருக்கோ. 152). வட்கு - வக்கு = 1. மூத்திரக் குண்டிக்காய். 2. உருண்டையான விதைக்கொட்டை. ப்ரா. வக்க. வ. வ்ருக்க. வக்கு - வக்கா = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை வகை. "வக்காவு நாரையுங் கொக்கும் படுக்கவே" (குற்றா. குற. 93:2). ஒ.நோ : கொள் - கொள்கு - கொட்கு - கொக்கு = வளைந்த கழுத் துள்ள நீர்ப்பறவை. வக்கா - வ. பக (baka). வக்கு - வக்கரம் - வக்கரி. வக்கரித்தல் = கோணுதல், வளைதல், மடங்குதல், மடங்கித் திரும்புதல், ஆளத்தி செய்தல். வண் - வண்டு = 1. கைவளை. "கைவண்டுங் கண்கண்டு மோடக் கலையோட" (ஆதி. உலா. 98). 2. சங்கு (பிங்.). 3. பெருவிரலும் அணி விரலும் வளைந்து நுனியொன்றச் சிறுவிரல் நிமிர்ந்து, சுட்டுவிர லும் நடுவிரலும் நெகிழ வளைந்து நிற்கும் இணையா வினைக்கை வகை. (சிலப். 3 18, உரை). 4. தேன் மலரைச்சுற்றி வட்டமிடும், வண்டு கரும்பு தேன் ஞிமிறு என்னும் நால்வகைப் பட்ட அறுகாற் சிறு பறவை. "யாழிசை கொண்ட வினவண்டிமிர்ந்தார்ப்ப" (கலித். 131). "வண்டுகாள் மகிழ் தேனினங்காள்" (சீவக. 892). 5. தவசம் அளக்கும் போது கீழே விழுவதைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற் புரி வளையம். 6. வழிப்போக்கில் மாடுகளின் உணவிற்காக வண்டிக் கூண்டைச் சுற்றித் தொங்கவிடும் வைக்கோற் பழுதை. வண்டு கட்டுதல் = பானையின் வாயைச் சுற்றிச் சீலையால் மூடிக் கட்டுதல். வண்டு விடுதல் = வைக்கோலைப் புரியாத் திரித்தல். வண் - வண்டன் = வட்ட நறுக்கம் (விருத்த சேதனம்) செய்யப் பட்டவன் (யாழ். அக.). வண்டு - வண்டி = வைக்கோலைப் புரியாகத் திரித்தல். வண் - வண்டன் = வட்ட நறுக்கம் (விருத்த சேதனம்) செய்யப் பட்டவன் (யாழ். அக.). வண்டு - வண்டி = 1. சக்கரம். 2. சகடம். `வண்டியை யேறினாள்' (சீவக. 2054, உரை). 3. ஒரு வண்டிப் பொறை (பாரம்). ம. t©o, bj., க. பண்டி. சகடம் என்னும் பொருளில், வண்டி என்னுஞ் சொல் பண்டி என்பதன் திரிபாகத் தெரிகின்றது. ஏனெனின், பண்டி என்னும் வடிவே சீவக சிந்தாமணி மூலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் , பாண்டி, பாண்டில் என்பவற்றை யொத்த வகர முதற்சொற்கள் இருவகை வழக்கிலுமில்லை. ஒருகால், வண்டியென்னும் வடிவே தொன்றுதொட்டு உலக வழக்காயிருந்திருக்கலாம். வண்டி யென்னும் வடுக கன்னட வடிவம், வகர பகரத் திரிபின் விளைவாம். வண்டு - வந்து = வளைந்து வீசுங் காற்று. "வந்தெனக் கந்தனூற் கணைதொடர்" (கந்தபு. சூர. வதை. 188). வள் - வட்டு. ஒ.நோ : கள் - கட்டு, பள் - பட்டு. கள்ளுதல் = கூடுதல், சேர்தல், பொருந்துதல், ஒத்தல். கட்டுதல் = ஒன்றுசேர்த்தல். பள்ளுதல் = பளபளப்பாதல் (வழக்கிறந்த வினை). பள் - பள-பளபள-பளபளப்பு. பள்-பளி-பளிச்சு. பளிச்செனல் = ஒளி வீசுதல். பளி-பளிங்கு. பட்டுப் பட்டெனல் - நிலவொளி விளங்குதல். வட்டு = 1. வட்டில் 2. பாண்டி விளையாட்டிற்குரிய வட்டச்சில். 3. சூதாட்டிற்குரிய வட்டக் கருவி. "கையாடு வட்டிற் றோன்றும்" (அகம். 108). 4. குடைக்கம்பிகள் கூடும் சிறு சக்கரம். 5. வட்டப் பளைவெல்லக் கட்டி. 6. திரட்சி (சூடா.). 7. திரண்டபொருள். "முட்டி வட்டனைய கோல முத்துவாய்" (சீவக. 2950). வட்டெழுத்து = வளைந்த தமிழெழுத்து வகை. வட்டணை = வட்டமான மெத்தை யணை "வட்டணை...... இரீஇயினாரே" (சீவக. 2433). வட்டு - வட்டம் = (பெ.). 1. வளைவு. "வில்லை வட்டப்பட வாங்கி" (தேவா. 5:9). 2. ஒருவகை வளரித்தடி. "புகரிணர்சூழ் வட்டத் தவை" (பரிபா. 15:61), (பிங்.). 3. தோட்கடகம் (வாகுவளையம்). 4. வண்டிச் சக்கரம் (யாழ். அக.) 5. குயவன் சக்கரம் (பிங்.). 6. கதிரவனையுந் திங்களையுஞ் சூழும் கோட்டை (ஒளிவளையம்) 7. அப்பவகை. "பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம்" (பெரும் பாண். 378). 8. கேடகம் "ஐயிரு வட்டமொ டெஃகுவலந்திரிப்ப" (திருமுருகு. 111). 9. துலைத்தட்டு. "வட்டம் தொத்தது வாணிபம் வாய்த்ததே" (திருமந். 1781). 10. ஆலவட்டம். "செங்கேழ் வட்டஞ் சுருக்கி" (நெடுநல் 58). 11. வட்டப்பாறை. "வடவர் தந்த வான்கேழ் வட்டம்" (நெடுநல். 51). 12. தையிலையின் நடுப்பாகம். 13. கைம்மணி (பிங்.). 14. நீர்ச்சால் (பிங்.). 15. கொள்கலம் (யாழ். அக.). 16. குளம் (பிங்.). 17. வட்டமரம் (W.). 18. களத்திற் சூடடிப்பதற்கு வட்டமாகப் பரப்பியநெற்கதிர் (நாஞ்.) 19. சில வூர்களைக் கொண்ட நாட்டுப் பிரிவு. 20. சுற்றியுள்ள நிலப்பரப்பு. "கோயில் வட்டமெல்லாம்" (சீவக. 949). 21. வட்டச் செலவு. "தார் பொலி புரவிவட்டந் தான்புகக் காட்டு கின்றாற்கு" (சீவக. 442). 22. ஒரு சுற்று (W.). 23. ஒரு கோள் வானமண்டலத்தை ஒருமுறை சுற்றிவருங் காலம். அவன் சென்று ஒரு வியாழ வட்டமாயிற்று (உ.வ.). 24. திருத்தம். வட்டமாய்ப் பேசினான். (இ.வ.). 25. தடவை. "விநாயகர் நாமத்தை நூற்றெட்டு வட்டஞ் செய்து" (விநாயகபு. 74. 214). 26. (இடை.). தோறும். ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு..... பலிசை. (S.I.I.II.122:27) வட்டம்- பிரா. வட்ட, வ. வருத்த. vert, vers. வட்டமணியம் = நட்டாண்மை. வட்டங் கூட்டுதல் = அணியமாதல். வட்டம் - வட்டகை = 1. சிறுவட்டில். "செம்பொற் றூமணி வட்டகையோடு" (காஞ்சிப்பு. தழுவக். 333). 2. சிறுகிண்ணம். "கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்ப" (சீவக. 938). 3. நிலப் பரப்பு. "ஊர் நாற்காத வட்டகை" (சிலப். 5 : 133, உரை). 4. அடைப்புக் கட்டிய நிலம் (W.). 5. சுற்றுப்புறம். 6. நாட்டுப் பிரிவு. வட்டகை மணியம் - வட்டமணியம் (W.). வட்டம் - வட்டணம் = 1. வட்டக்கேடகம். "இட்ட வட்ட ணங்கள் மேலெறிந்த வேல்" (கலிங் 413). 2. நெடுவட்டக் கேடகம் (யாழ். அக.) வட்டணம் - வ. அட்டன. வட்டணம் - வட்டணி. வட்டணித்தல் = 1. வட்டமாதல். 2. வட்டமாக்குதல். வட்டகணிப்பு = வட்டமாயிருக்கை. "குண்டல மென்று வட்ட ணிப்பைச் சொல்லவுமாம்" (திருவிருத். 57, வியா. ப. 318). வட்டணம் - வட்டணை = 1. வட்ட வடிவம். "வாயினூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தி" (தேவா. 507 2). 2. கேடகம் "மன்னவர் காண வட்டணைவா ளெடுத்து" (கல்லா 48 8 ) 3. தாளக்கருவி. "கொம்மைக் குயவட்டணை கொண்டிலனோ" (கம்பரா. அதிகாயன். 9). 4. தாளம் போடுகை (பிங்.). 5. அடிக்கை (அரு.நி.). 6. உருண்டை. 7. இடசாரி வல சாரியாகச் சுற்றுகை. "சுற்றிவரும் வட்டணயிற் றோன்றாவகை கலந்து" (பெரியபு. ஏனாதி. 29). 8. வட்டமான செலவு. "மாப்புண்டர வாசியின் வட்டணைமேல்" (கம்பரா படைத். 98). 9. தொழுதற்கு அறிகுறியாகத் தாமரை மொட்டுப் போலக் கைகளைக் குவிக்கை. "வகைதெரி மாக்கட்கு வட்டனை காட்டி" (மணிமே 7:43). 10. வக்கணை. "வட்டணை பேசுவர்" (பதினொ.கோபப்பிர. 85). வட்டம் - வட்டரவு - வட்டவடிவு (யாழ்ப்). வட்டு - வட்டறவு = முடிவாக அறுதியிடுகை (யாழ். அக.). வட்டம் - வட்டன் = (பெ.) உருண்டு திரண்ட வுடம்பினன். "குறுவட்டா நின்னி னிழிந்ததோ கூனின் பிறப்பு" (கலித் 94:27). (இடை.) தோறும். "ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலி சையாக" (S.I.I.II, 69:3). வட்டம் - வட்டா = திறமை, சமர்த்து, (திருவிருத். 71. அரும். ப.371). தெ. வட்டாரி. வட்டம் - வட்டாரம் = 1. சுற்றுப்புறம். 2. நிலப் பரப்பு. தெ. வட்டாரமு, து. வட்டார, க. வட்டார. வட்டு - வட்டி. வட்டித்தல் = (செ.கு.வி.) 1. வட்டமாதல். (யாழ். அக.). 2. சுழலுதல். "வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள்" (அகம். 218). 3. தாளவொற்றறுத்தல் (சூடா.). 4. சூளுரைத்தல். "வட்டித்து விட்டாளெறிந்தாள்" (சிலப். 21:45). (செ. குன்றாவி). 1. வளைத்தல் (இலக். அக.). 2. வளைத்து எழுதுதல் (சிலப். 21:46இ அரும். 3. சுழற்றுதல் "மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து" (புறம். 42). 4. உருட்டுதல். "கழகத்துத் தவிராது வட்டிப்ப" (கலித். 136). சுற்றிக் கட்டுதல். "அலகில் மாலை யார்ப்ப வட்டித்து" (புறம். 394). 6. பரி மாறுதல் (W.). 7. தோள் புடைத்தல். "செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார்" (பழ. 326). வட்டி = 1. கடகப் பெட்டி "வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும்" (புறம் 33). 2. கூடை "பல்கல வட்டியர்" (அகம். 391). 3. நாழி. (தொல். எழுத்து. 170). 4. கிண்ணம் (அக.நி.). 5. ஒரு விருது. வட்டி - வட்டிகை = 1. வட்டம் (யாழ். அக.). 2. சுற்றளவு 3. கூடை (பிங்). 4. கைம்மணி (யாழ். அக.). 5. ஓடவகை. "துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ" (பெருங். உஞ்சைக். 40:46). 6. ஒருவகை விருது. "அலகில் வட்டிகை தழல் விழித்தலால்" (கலிங். 333). 7. சித்திர மெழுதுங்கோல் "வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்" (மணிமே. 4:57). 8. சித்திரம். "வட்டிகைப் பாவை நோக்கி" (சீவக. 2085). வட்டிப்பு = 1. வட்டம். (யாழ். அக.). 2. சூள் (நாமதீப. 667). வட்டி - வட்டில் = 1. வட்டமான (வெண்கல) உண்கலம். 2. கிண்ணம். "பொன் வட்டில் பிடித்து" (திவ். பெருமாள். 4:3). 3. நாழி (தொல். எழுத்து. 170 : இளம்பூ). 4. நாழிகை வட்டில். 5. அம்புக் கூடு. "வாளி வட்டில் புறம்வைத்து" (கம்பரா.தேரேறு. 39). 6. கூடை (அக.நி.). 7. ஒருவகை விருது. "ஏறுமால் யானையே சிவிகை யந்தளக மீச்சோப்பி வட்டில்" (தேவா. 692:7). 8. அப்பளஞ்செய்ய உருட்டி வைக்கும் மாவுருண்டை (இ.வ.). க. பட்டலு (b) வட்டிற்பூ = தாமரைப்பூ. வட்டு - வட்டை = 1. வேங்கையின் உடல்வரி (W.). 2. சக்கரத்தின் மேல் வளைமரப் பலகை. "உருள்கின்ற மணிவட்டை" (சிலப். 29, உரைப்பாட்டு மடை). 3. தேர் (யாழ். அக.). 4. நிலப்பரப்பு. 5. வட்டப் பக்கா என்னும் பட்டணம் படி. (நாஞ்). வட்டக் கருத்துச் சொற்களுள் வட்டு, வட்டகை, வட்டணி, வட்ட ணை, வட்டரவு, வட்டா, வட்டாணி, வட்டாரம், வட்டித்தல், வட்டில், வட்டை என்னும் வடிவுகள் வடமொழியில் இல்லை. வட்டம் என்பது வருத்த என்னும் வடிவிலும் வட்டணம் என்பது அட்டன (ந) என்னும் வடிவிலும் வழங்குகின்றன. ஏனையவற்றிற் கெல்லாம் வருத்த என்பதையே மூலமாகக் காட்டுவது எத் துணையும் பொருந்தாது. வட்டை - வடை = தேர்ச்சக்கர வடிவாகச் செய்யப்படும் உழுந்துப் பலகாரம். படை - வ. வடா. வடை - வடையம் = 1. நெல்லக்கனி முதலியவற்றை அரைத்துத் தட்டிய வடை. 2. பொட்டலமாகக் கட்டிய வெற்றிலை பாக்கு (தஞ்). வட்டம்-வடம் = 1. வட்டவடிவம் (அக. நி.). 2.). வட்டமாகப் படரும் ஆலமரம், "வடநீழற் கண்ணூட்டிருந்த குருவே" (தாயு. கருணா. 1). 3. திரண்ட கயிறு. கமலை வடம், தேர் வடம், 4. திரண்டபொன்நாண். மணிவடம். "வடங்கள் அசையும்படி உடுத்து" (திருமுருகு. 204, உரை). வடம் (ஆலமரம்) - வ. வட (vata). இப் பொருளில் இச் சொற்கு வட மொழியில் வேரில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத- ஆங்கில அகரமுதலியில். perhaps Prakrit for vrita surrounded, covered' என்று பொருட்காரணங் கூறியிருத்தலை நோக்குக. வடம் - வடகு-வடகம் = தாளிப்புத் துணைக் கரணமாக, அரைத்த மாவுடன் கறிச்சரக்குகள் சேர்த்துப் பொரித்து. வெயிலில் உலர்த்திய நறுமணவுருண்டை. வடகம் - வ. வடக (vataka). வள்-வர்-வரி. வரிதல் = 1. எழுதுதல் (பிங்.). 2. சித்திரமெழுதுதல். "வல்லோன் றைஇய வரிவனப் புற்ற வல்லிப் பாவை" (புறம். 33.). 3. பூசுதல். 4. மூடுதல். "புண்ணை மறைய வரிந்து" (திவ். திருவா. 5:1:5). 5. கட்டுதல். "வரிந்த கச்சையன்" (சூளா. சீய. 11). வரித்தல் = 1. எழுதுதல். "வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை" (சீவக. 2532). 2. சித்திர மெழுதுதல். 3. பூசுதல் (சூடா.). 4. கோலஞ் செய்தல். "புன்னை யணிமலர் துறைதொறும் வரிக்கும்" (ஐங். 117). 5. கட்டுதல். "வரிக்குங் காட்சியிலா வறிவே" (ஞானவா. மாவலி. 48). 6. வரைந்து கொள்ளுதல். 7. திருமணஞ் செய்தல். வரி = 1. கோடு. "நுண்ணிய வரியொடு திரண்டு" (சீவக. 1702). 2. தொய்யில் வரைவு. "மணிவரி தைஇயும்" (கலித். 76). 3. கைவரை (பிங்.). 4. வரிசை, ஒழுங்கு. "குருகி னெடுவரி பொற்ப" (பதிற். 83:2). 5. எழுத்து (நாமதீப. 673). 6. நிறம். "வரியணிசுடர் வான் பொய்கை" (பட்டினப். 38). 7. அழகு. "வரிவளை" (பு.வெ. 11 : 12). 8. வடிவு (அக.நி.). 9. இசைவகை. 10. இசைப்பாட்டு. "வரிநவில் கொள்கை" (சிலப். 13 : 38). 11. வரிக்கூத்து. "கண்கூடு வரியும்" (சிலப். 3 : 14). 12. கடைக்கழக நூல்களுள் ஒன்று (இறை. 1. ப. 5). 13. கட்டு. "வரிச்சிலையாற் றந்த வளம்" (பு.வெ. 1 : 16). 14. குடியிறை (பிங்.). 15. நெல். "எடுத்துவரி முற்றத் தினிலிட்டு" (தனிப்பா I, 354 : 41). 16. நீளம் (சூடா.). தெ. வரி. ம. வரெ. க. பரெ. (b). வரி-வரிசை - 1. ஒழுங்கு (சூடா). 2. நிரை. தொடர். 3. தகுதி. "வரிசையறிதலும் வரையாது கொடுத்தலும்" (சிறுபாண். 217). 4. மேம்பாடு. "ஆடுகொள் வரிசைக் கொப்பப் பாடுவல்" (புறம். 53). 5. மதிப்பு. (மரியாதை). "பொற்புற வரிசை செய்வான்" (திருவிளை. இந்திரன்முடி. 37). 6. பாராட்டு. "வரிசைப் பெரும் பாட்டெல்லாம்" (கலித். 85). 7. அரசராற் பெருஞ் சிறப்பு. "பொற்பட்ட முன்னா வரிசைகள்" (திருவாலவா. 28:93). 8. அரசர் சிறப்புச் சின்னம். "சாமரை யக்க மாதியாம் வரிசையிற் கமைந்த" (கம்பரா. நிந்தனை. 12). 9. சீர்வகையிற் செய்யும் நன்கொடை. "மாமி வரவிட்ட வரிசை யென்று" (விறலிவிடு. 533). தெ. வருச. வரி - வரிச்சு = 1. கோடுபோல் நீண்ட கட்டு வரிச்சல். "வரிச்சுமேல் விரிச்சு மூட்டியே" (கம்பரா. சித்திர. 46). வரிச்சு - வரிச்சல். வரி + அணம் = வரணம். ஓ.நோ : மடி - மரி + அணம் = மரணம். வரணம் = 1. சூழ்கை (யாழ். அக. ). 2. சுற்றுமதில் (இலக். அக.). 3. மறைக்கை (இலக். அக.). 4. சட்டை (நாமதீப. 454). 5. எழுத்து. 6. நிறம். 7. வகை. 8. சூலம். 9. ஓசைவகை (வண்ணம்). 10. முரற்பாட்டு (தான வர்ணம்). 11. பாட்டிசை (வர்ணமெட்டு). வரணமாலை = வண்ணமாலை (நெடுங்கணக்கு). வரணம்-வ, வர்ண, வரண. வரண அல்லது வர்ண என்னும் வடசொல்லே தமிழில் வண்ணம் என்று திரிந்து வழங்குவதாகப் பேராசிரியர் உட்படப் பலருங் கருதிக் கொண்டிருக்கின்றனர். வண்ணம், வரணம் என்னும் இருசொல்லும் ஒரு சிறிது வடிவு வேறுபட்டன வேனும், ஒரே வேரினின்று முறையே கிழ்ப்படையினு மேற்படையிலுமாகத் தோன்றினவென் றறிதல் வேண்டும். ஒ.நோ : திண்ணை, திரணை. தில்லுமுல்லு = திண்டுமுண்டு. தில் - தெல் - தெள் - தெறு - தெற்று - தெற்றி = திண்ணை. தில் - திள் - திண் - திண்ணை = திரண்டமேடை. திள் - திண்டு - திள் - திட்டு - திட்டை. தில் - திர் - திரள் - திரளை - திரணை = திண்ணை. திண்ணை. திரணை என்னும் இருசொல்லும், கீழ்ப்படையிலும் மேற்படை யிலுமாக ஒரே வேரினின்று தோன்றி ஒரே பொருளை யுணர்த்து தல் காண்க. இங்ஙனமே வண்ணம், வரணம் என்னும் இரு சொல்லு மெனக் கண்டு தெளிக. `திண்ணை' `திரணை' யின் திரிபன்று: அங்ஙனமே. `வண்ணம்' `வரணத்' தின் திரிபன்று. `வண்ணகவொத் தாழிசை' வரணகவொத் தாழிசையென்று வழங்காமையும் நோக்குக. வரணம் - வரணி. வரணித்தல் = பலநிறங்களைக் கொண்டு ஓர் ஓவியத்தைச் சிறப்பித் தாற் போன்று, பல சொற்களையும் அணிகளையுங் கொண்டு ஒரு பொருளைப் புனைந் துரைத்தல். வரணி - வ. வர்ண். வரணி என்பதை வர்ணி யென்றோ வருணி யென்றோ தமிழில் எழுதுவது தவறாகும். வரணி - வரணனை - வ. வர்ணனா. வண்ணம், வண்ணி, வண்ணனை, வண்ணகம், வண்ணக்கன் என்னும் வடிவங்கள் வடமொழியிற் புகவில்லை. மறைத்தற் கருத்தும் எழுதுதற் கருத்தும் வரணித்தற் கருத்தும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையே. ஆதலால், சூழ்தலும் மறைத்தலும் பற்றிய சொல்லை வேறாகவும், நிறமும் வண்ணனை யும் பற்றிய சொல்லை வேறாகவும் தமிழிற் பிரித்தல் கூடாது. எழுதுதல் என்பது வண்ணலோவியம் வரைதலையும் குறிக்கும். வண்ண அல்லது நிறக்கருத்தினின்றே குலம், இசை, வண்ணனை முதலிய கருத்துகள் கிளைத்துள்ளன. எழுத்தும் வண்ணப்பட மும் பெரும்பாலும் வளைத்தே எழுதவும், வரையவும் படுவதை இன்றுங் காண்க. வரி (வரை)-வரந்து-வரந்தை = எல்லை, ஓரம். வரந்து-வரத்து = எல்லை. "இந் நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடிமக்களை" (Pudu. Insc. 176.). வரி-வரம்பு = எல்லை. வரம்பு- வரம்பு = வயல் வரம்பான திட்டு. வரி-வரை. வரைதல் = 1. எழுதுதல். 2. சித்திரம் எழுதுதல். 3. கோடிட்டு எல்லை குறித்தல். 4. அளவு படுத்துதல். "வரையாப் பூச லொண்ணுதன் மகளிர்" (புறம் 25). திட்டஞ் செய்தல். (புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென்" (மலைபடு. 557). 6. அடக்குதல். "வரைகிலேன் புலன்க ளைந்தும்" (தேவா. 631:1). 7. விலக்குதல். "உருவுகொளல் வரையார்" (தொல். எழுத்து. 41). 8. கைவிடுதல். "கொள்கலம் வரைதலின்" (கலித். 133). 9. மறுத்தல் வரிசையறிதல். "கொடைமட மென்ப தம்ம வரையாது கொடுத்த லாமே" (சூடா.). 10. நேர்மைவழியில் ஈட்டுதல். "வரைபொருள் வேட்கையேன்" (சிலப். 10:51). 11. தனக்குரியதாக்குதல். "அறன்வரை யான்" (குறள். 150). 12. மணஞ்செய்தல். "வெளிப்பட வரைதல் படாமை வரைதல்" (தொல். களவு. 49). வரை (எழுது) - தெ. வராயு. வரை = 1. கோடு. 2. வரி. (இரேகை). 3. எழுத்து (பிங்) 4. கணுவரை யுள்ள மூங்கில். "மால்வரை நிவந்த வெற்பின்" (திருமுருகு. 12). 5. சுவர்போல் நிலத்தை வரையறுக்கும் மலை. "பனிபடு நெடுவரை" (புறம்.6). 6. எல்லை. "வளவரை" (குறள். 480). 7. சிறுவரம்பு (W.). 8. நீர்க்கரை (சூடா.). 9. அளவு. "உளவரை" (குறள். 480). 10. கால வரம்பு. காலம் "சிறுவரை" (பு.வெ. 12, பெண்பாற். 17). 11. இட வரம்பு. இடம். "மலைவரை மாலை" (பரிபா. 10 : 1). மட்டுணர்த்தும் சொல். வரை, வரையும், வரைக்கும். வரை - வரைப்பு = 1. எழுதுகை. "வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்" (பெருங். உஞ்சைக். 34 : 168). 2. எல்லை "இடைநில வரைப்பின்" (மணிமே. 28 : 24). 3. மதில். "அருங்கடி வரைப்பி னூர்கவி னழிய" (பட்டினப் 269). 4. வரைந்துகொள்ளப்பட்ட இடம். "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (தொல். செய். 78). 5. சுவர் சூழ்ந்த இடம் (சீவக. 949, உரை). 6. மாளிகை. "துணை யொடு திளைக்குங் காப்புடை வரைப்பின்" (அகம். 34). 7. குளம். "புனல் வரைப்பகம் புகுந்தோறும்" (பொருந. 240). 8. ஞாலம், உலகம். "தண்கடல் வரைப்பில்" (பெரும்பாண். 18). வள்-வர்-வார். வார்தல் = சாய்தல், வளைதல். வார்-வாரம்=1. சரிவாயிருக்கும் மலைச்சாரல். "வாரம தெங்கும் பண்டி களூர" (இரகு.திக்கு. 258). 2. சாய்வா யிருக்கும் தாழ்வாரம். வார்-வாரி = 1. மதிற்சுற்று. "வடவரை நிவப்பிற் சூழ வாரியாப் புரிவித்து" (கந்தபு. அசுரர்யாக. 36). 2. செண்டுவெளி. "குஞ்சரம் வாரியுள் வளைத்தவே" (சீவக. 275). 3. நிலஞ் சூழ்ந்த கடல் (பிங்.). வாரி (கடல்). வ - வாரி L. mare. வார்-வாரணம் = 1. வளைவு, சூழ்வு. 2. வட்டமான கேடகம் (W.). 3. உள்வளைந்த சங்கு (பிங்.). 4. நிலஞ்சூழ்ந்த கடல். 5. சூழ்வதால் அல்லது சுற்றி மூடுவதால் ஏற்படும் மறைப்பு. "வாரண மாயை" (பாரத. திரௌ. 17). 6. தடை. 7. கவசம் (பிங்.). 8. சட்டை (சூடா.) 9. காப்பு (W.). வாரணம் (கடல்)- வ. வாருண. L. marinus வள்-வாள்=வளைவு. வாள் வரி =வேங்கைப்புலி. "மதகரிக் களபமும் வாள்வரிப் பறழும்" (சிலப். 25 : 49). வாள்-வாளம் = வட்டம். "வாள மாகவோர் பவளமால் வரை ...... வளைந்தென்ன" (பாரத. காண்டவ. 11). 2. சக்கரவாள மலைத் தொடர் (யாழ். அக.). 3. சக்கரவாகப்பறவை. "மங்கைமார் தடமுலையெனப் பொலிவன வாளம்" (கம்பரா. பம்மை. 21). வாளம்-வ. வால. வாள்-வாளி=1. வளையமான மூக்கணி. 2. வளையமான காதணி. "வாளி முத்தும்" (குமர. பிர. முத்து. பிள். 11). வாளி-வ. வாலீ. வாளி - வாளிகை = சிறு காது வளையம் "சுட்டிகையும் வாளிகையும்" (தினொ. திருக்கைலாய. 68). வாளிகை-வ. வாலிகா. வாளி = வட்டமாயோடுகை. "வாளி வெம்பரி" (பாரத. குரு. 108). வாளிபோதல் = குதிரை வட்டமாயோடுதல். "மாதிர முறப்பல வாளி போதுமால்" (பாரத. சூது. 121). வாளி-வ. பாலி. வடசொல்லின் பகர முதலை நோக்குக. வாள்-வாடு-வட்டம் = சாய்வு. அங்கணம் வாட்டஞ் சாட்டமாயிருக்கவேண்டும் (உ.வ.). வாளி-வாசி = அணிவளைவான திருவாசி, "மாணிக்க வாசி முந்து சிங் காதனம்" (திருவாலவா, 37 : 75). வாசி-வாசிகை = திருவாசி. ஒ.நோ : உளு - உசு, இளி-இசி. வலம், வலி வலம், வலி : வல், வலி வலம் - பல (வ), L. valere வகரம் பகரமாகத் (b) திரிந்துள்ளது வடசொல்லின் பின்மையைக் காட்டும். (தி.ம : 754). வழக்கற்ற சொற்கள் அகவை (வயது) அகநாழிகை அல்லது உண்ணாழிகை (கர்ப்பக்கிருகம்) அங்காடி (கடைத்தெரு) நாளங்காடி (பகற்கடைத்தெரு), அல்லங்காடி (மாலைக் கடைத்தெரு) அடுத்தூண் (ஜீவனத்திற்கு விட்ட நிலம்.) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்றுமதில்) அணல் (தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (Readiness) அணுக்கத் தொண்டன் (Personal atterdant) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக் கிருகவாயில்) அரியணை அல்லது அரசுக்கட்டில் (சிங்காசனம்) அறைகூவல் (சவால் விடுதல்) அறம் (தருமம்) ஆசிரியன் (உபாத்தியாயன்) ஆடவன் (புருஷன்) ஆடிடம் (விளையாடுமிடம்) ஆடை (வதிரம்) ஆரோசை (ஆராகணம்), அமரோசை (அவரோகணம்) ஆவணம் (பத்திரம்) ஆளுங்கணம் (Managing Committee) ஆளோட்டி அல்லது ஆளொதுங்கி (காவற்கூடு - (Sentry Box). ஆளோடி (குளத்தின் மதிலுள்புறமாக மக்கள் நடப்பதற்குக் கட்டிய வழி) இசை அல்லது இன்னிசை (சங்கீதம்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை). இதழ்குவி பா (ஓட்டியம்) இதழகல் பா (நீரோட்டியம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்) இயம் (வாத்தியம்), இயவன் (வாத்தியக்காரன்) இயம்புதல் (வாத்தியம் வாசித்தல்). இழப்பு (நஷ்டம்) இளந்த நாக்கடித்தல் (ஆராயாது வாக்களித்தல்) இளவேனில் (வசந்தம்) உகப்பு (choice) உறாவரை அல்லது முற்றூட்டு (சர்வமானியம்) ஊட்டகர், ஊட்டுநர் (போஷகர்) ஊட்டுப்புரை (அன்ன சத்திரம்) ஊதியம் (இலாபம்) ஊமையாமொழி (அஜபா மந்திரம்) ஐயம் அல்லது இரப்பு (பிக்ஷை) ஐயம் அல்லது அயிர்ப்பு (சந்தேகம்) ஒப்புரவு (உபகாரம்) ஒரு நாயகம் (Universal Dominion) ஓம்படுத்தல் அல்லது ஓம்படை (மக்களைப் பாதுகாப்பிற் கொப்புவித்தல்) ஓமாலிகை (வாசனைச் சரக்கு) ஓரை (இராசி, இலக்கணம்). ஓலக்கம் (அரசு வீற்றிருக்கை, Durbar) ஓவியம் (சித்திரம்) கண்ணெச்சில் (கண்திருஷ்டி) கரிசு (பாவம்) கருவூலம் (Tresury, பொக்கிசசாலை) கலங்கரை விளக்கம் (Light House) கழுவாய் (பிராயச் சித்தம்) குரல் அல்லது கேள்வி (சுருதி-சுதி) குடவோலை (Ballot Paper) குடும்பு (Ward) கூலம் (தானியம்) கூற்றம் (தாலுகா) கூற்றுவன் (யமன்) கேள்வி (விசாரணை) கையடை (பாதுகாக்கும்படி ஒப்புவித்த பொருள், Trust) கையறம் (சரமகவி, Elegy) கையூட்டு (லஞ்சம்) கோட்டம் (ஜில்லா) கோள் கோண்மீன் (கிரகம்) சலக்கரணை (சௌகரியம்) சார்ச்சி வழக்கு (உபசார வழக்கு) சால்பு (திருப்தி) சாறு (இரசம்) சுவடன் அல்லது சுவைஞன் (இரசிகன்) சுவை (காவியரசம்) சிற்றூர் (கிராமம்) தக்கை முறுக்கி (Spanner) தவப்பழி (Hunger Strike) தாழ் சீலை (இலங்கோடு) தாள் அல்லது இதழ் (பத்திரம், பத்திரிகை) திணைக்களம் (Department) திருமுழுக்கு (அபிஷேகம், ஞானநானம்) துய்ப்பு (அனுபவம்) தெரிப்பு (தெரிந்தெடுக்கை, Selection) தேற்றம் (நிச்சயம்) நட்டா முட்டி (Layman) நரல் (ஜனம்) நாள், நாண்மீன் (27 நக்ஷத்திரங்களில் ஒன்று) நால்வகைச் செய்யுள்: கடும்பா இன்பா மிறைப்பா பெரும்பா அல்லது, கடுமை, இனிமை, மிறை அகலம் (ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்). நினா (தாய்) வலிவு மெலிவு சமன் (தாரம் மந்தரம் மத்திபம்) நீர்ச்சீலை (கௌபீனம், கோவனம்) நுகர்ச்சி (அனுபோகம்) நெஞ்சாங்குலை (இருதயம்) நெடுஞ்சாண் கிடை வணக்கம் (சாடாங்க நமகாரம்) பதியெழுகை (Evacuation) படமாடம் (சிறுகூடாரம் Tent) பண்டுவம், பரிகாரம் (சிகிச்சை) பலகணி (ஜன்னல்) பற்றுமுறி (ரசீது) பாடுகிடத்தல் (வரங்கிடத்தல்) பிள்ளையார்நோன்பு (விநாயக சதுர்த்தி) பிறங்கடை (வாரிசு) புரவுவரி (Revenue) புலம்பன் (ஆன்மா) பெண்டு (திரீ) பொது நாயகம் (Universal Sovereignty) பொருநன் (சிப்பாய், Soldier) பொருள் (அர்த்தம்) முடிசூட்டு (மகுடாபிஷேகம்) மதங்கம் (மிருதங்கம்) மதவலி (Sando) மருத்துவன் (வைத்தியன்) மருப்பு (தந்தம்) மறை (வேதம்) மழம் அல்லது மறம் (வீரன்), மழவன் அல்லது மறவன் (வீரன்). மன்பதை (Mankind) மீகாமன், மீகான், நீகான் (மாலுமி) மெய்ப்பாடு (பாவம்) மெய்ப்பித்தல் (ரூசுப்படுத்துதல்) வடக்கிருத்தல் (மானங்கெட வருமிடத்து உண்மை நோன்பிருந்து உயிர் துறத்தல்) வலவன் (சாரதி) வழக்காரம் (பிராது) வழிபடுதல் (ஆராதித்தல்) வழுவாய் (பாவம்) வாய்வாளாமை (மௌனம்) வியப்பு (ஆச்சரியம்) விறல் (சத்துவம்) விலங்கு (மிருகம்) விசி (Bench) வேளாண்மை (உபசாரம்) வீடு (மோக்ஷம்) மேலும் பின் வரும் சொற்களும் வழக்கற்றவையே! சாத்தன், கொற்றன், மருதன், ஆதன், பூதன், கீரன், பேகன், பாரி, காரி, நள்ளி, குமணன், வெளியன், தித்தன், தம்பி, கம்பன், கூத்தன், கண்ணன், முருகன் புகழேந்தி, அடியார்க்கு நல்லான், நச்சினார்க் கினியன், பரிமேலழகன், தோலாவழக்கன் முதலிய எண்ணிறந்த மக்கட் பெயர்களும் கயற்கண்ணி (மீனாக்ஷி), கலைமகள் (சரவதி), மலைமகள் (பார்வதி), திருமகள் (லக்ஷ்மி) முதலிய பற்பல தெய்வப் பெயர்களும், பொருநை. (தாம்பிரபரணி), தில்லை (சிதம்பரம்), முறைக்காடு (வேதாரணியம்), பழமலை அல்லது முதுகுன்றம் (விருத்தாசலம்) முதலிய இடப்பெயர்கள் அறிவன் (புதன்), காரி (சனி). (சொல்.88) வழக்கற்ற பண்டைப் பழக்க வழக்கங்கள் புதிதாக வந்தவரையும் வழிச்செல்வோரையும் விருந்தோம்பல் காட்டிலிருந்து கடுந்தவஞ் செய்தல். குன்றேறி யானைப்போர் காண்டல். பெண்டிர் கண்ணிற்கு மைதீட்டல். காதலன் மடலேற்றம். வழக்கற்ற விளையாட்டுக்கள் 1. அறியப்பட்டவை (1) ஆண்பாற் பகுதி வட்டு இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும். (2) பெண்பாற் பகுதி அ. பல பந்து ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இரு மகளிர் 7 பந்தும் 12 பந்தும் கொண்டாடியது பெருங்கதையுள் ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு. ஆ. அம்மானை மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறு டையதும் `அம்மானை' என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே. உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின் எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம். குரவை எழுவர் அல்லது பன்னிருவர் மகளிர், வட்டமாகச் சுற்றிவந்து பாடியாடும் கூத்து, குரவையாம். இது இரு பொழுதாட்டாகத் தெரிகின்றது. 2. அறியப்படாதவை சாழல், கெள்ளேணம் முதலியன. பந்து புளியங்கொட்டை முதலியன கொண்டு விளையாடும் ஓர் ஆட்டு, `அச்சுப்பூட்டி விளையாடுதல்' என்னும் பெயரால், ராட்டிலர் (Rottler) அகராதியிற் குறிக்கப் பெற்றுளது. வழக்கு வீழும் நிலையிலுள்ள சொற்கள் Élh¥ão (ituh¡»a«), jLk« mšyJ Ú®¡nfhit (#ynjhõ«) C¡f«, (c‰rhf«), âUÉHh (c‰rt«), ÉÊ¥ò ({h¡»uij) ïu§F« ÃiyÆš, `mËa‹!' `mËaŸ!' `mËa®!' `mËa!' என்று சொல்லும் வழக்கு வேரூன்றியுளது. (சொல். 88) வள்ளி வள்ளி-வல்லி வள்-வள்ளி=வளைந்த கொடிபோன்ற பெண், குறிஞ்சி நிலப் பெண், முருகன்தேவி. ஒ.நோ: கொடு-கொடி=வளைந்த தண்டு. கொடி - கொடிச்சி = குறிஞ்சி நிலப் பெண். கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல் (ஐங். 296) (வ.வ: 256) வள்ளுவர் கோட்ட அமைப்புப்பற்றிய கருத்துகள் 1. திருவள்ளுவர் உலக முழுதும் ஒப்புயர்வற்ற தெய்வப் புலவ ராதலின். அவர் கோட்டம் திருவள்ளுவர் கோட்டம் என்றே பெயர் பெறுதல் வேண்டும். 2. தமிழ் மறையாக இயற்றியதே உலகப் பொதுமறையான தென் பதை, தேர்ச் சக்கரத்தில் உள்பரப்பில் தமிழ்மறை என்றும், வெளிவிட்டத்தில் உலகப் பொதுமறை என்றும் பொறித் துக்காட்ட லாம். 3) அறத்துப்பால் இல்லறம் துறவறம் என இருவியல் கொண் டிருப் பதால், அறத்தைக் குறிக்கும் கருங்கல் தேர்த்தட்டும் இருபடை கொண்டிருத்தல் நன்று. 4) இல்லறத்தினாலும் பேரின்ப வீடு பெறலாமென்று திருவள் ளுவர் கூறியிருப்பதால், கருங்கல் தட்டின் இருபடையிலும் சுற்றிவர ஓரத்தில் பச்சை கண்ணிற்கினிய நிறமாதலால் பேரின்பத்தைக் குறிக்கும். 5) தேர்க் கும்பத்தில் நாற்புறமும் `அன்பு,' `அறிவு,' `அமைதி,' என்னும் சொற்களுள் ஒன்றைப் பொறிக்கலாம். வள்ளுவன் வள் என்னும் அடிச் சொற்குள்ள பலபொருள்களுள் மூன்று, கூர்மை, வலிமை, வண்மை என்பன. ஆதலால் வள்ளுவன் என்னும் சொற்கு, கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று முப்பொருள் கொள்ளலாம். (தி.ம.5) வள்ளுவன் அரசன் கட்டளையையே முரசறைந் தறிவிப்பவன். வள்ளுவன் என்னும் பெயர் வள்ளுவன் எனும் பெயர் முதன்முதல் பறையருள் ஒரு பிரிவாராய் அரசன் ஆணையை அவரது நகர மக்கட்கு யானை மீதேறிப் பெரும்பறை (பேரிகை) யறைந்தறிவிக்கும் விளம்பரத் தலை வனைக் குறித்தது. இத்தலைவன் அரசாணையை மக்கட் கறிவிக்கும் அளவில் இற்றை விளம்பர மந்திரி போல்வன். வள்ளுவர் பறையர் குலத்தொரு பிரிவினரென்பது, அவரது பறையறையும் தொழிலாலும், வள்ளுவப் பறையன் என்றோர் சொல்லுண்மையாலும். இக்காலத்தும் அவர் பறையரினும் உயர்ந்தவராயிருப்பினும் பிற உயர் குலத்தாரால் இழிவா யெண்ணப்படுவதாலும் பறையர்க்குக் குருவாயிருப்பதாலும் அறியப்படும். பண்டைக்காலத்தில் குலப்பிரிவினை பிற்காலத்திற்போல் மிகக் கொடிதா யிராமையானும், வள்ளுவர் அரசர் வினையைச் செய்து வந்தமையாலும் அவர்க்கு இழிவு இருந்திலது. அச்சு வித்தை மிகச் சிறந்து பத்திரிகைகளாலும் துண்டறிக்கை களாலும் விரைந்து செய்தி பரப்பும் இக்காலத்தும், வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைச் செய்திகளையும் பறையறைந்து விளம்பரஞ் செய்யும் வழக்கு வீழ்ந்திலது. பண்டைக்காலத்தில் பறையறைதலொன்றே செய்தி பரப்பும் சிறந்த வாயிலாகும். இதனால், பறையறைதல் என்னும் தொழிற்பெயருங்கூட விளம்பரத்தைக் குறிப்பதாகும். "நாக்கடிப்பாக வாய்ப்பறை யறைந்து சாற்றக் கேண்மின்" என்றார் கபிலரும். பொது மக்கட்குப் பறையறைபவர் அல்லது விளம்பரஞ் செய்பவர் பறையரெனும் பொதுப் பெயராலும், அரசர்க்கு அவ் வினைகளைச் செய்பவர் வள்ளுவர் எனும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்பட்டனர். ஒரே வினையை, அது எத்துணை இழிந்த தாயினும், அரசர்க்குச் செய்பவர் உயர்வதும், பொது மக்கட்குச் செய்பவர் இழிவதும் எந்நாட்டிலும் இயல்பாம். உதாரணமாக, அரசர்க்கு மயிர்வினை செய்பவன் சாதாரண அம்பட்டரினும் உயர்வாயெண்ணப்படுவான். அவர் பொது மக்கட்கு வினை செய்வதும், அங்ஙனம் செய்பவருடன் உறவு கலப்பதுமில்லை; தன்போன்ற பிற அரச அம்பட்டருடனேயே கொள்வினை கொடுப்பனையும் வைத்துக் கொள்வான். இங்ஙனமே பொதுக் குலமான பறையரினின்றும் வள்ளுவர் தனிக்குலமாகப் பிரிய நேர்ந்தது. பண்டை நூல்களில் வள்ளுவன் தொழில் அரசராணையைப் பறையறைந் தறிவிப்பதாகவே கூறப்பட்டுள்ளது. "வள்ளுவார் முரசமூதூ ரறைகென வருளினானே" என்றார் சீவகசிந்தா மணி யாசிரியர் திருத்தக்கதேவர் (செய். 2149). இதில் வள்ளுவன் என்பது இசைப்பற்றி வள்ளுவார் என நீண்டது. இனி வள்ளுவன் என்னும் பெயரின் மூலத்தை ஆராயினும் அது பறையறையும் தொழிலுக்கு ஏற்ற பொருளையே தராநிற்கும். வள்ளுவன் எனும் சொல் வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்தது. வள் என்பது பறைக்கு வேண்டிய தோலையும் வாரையும் அவற்றாற் செய்யப்படும் பல பொருள்களையுங் குறிப்பதாகும். வள் = வார் (சூடாமணி நிகண்டு) வள் = வாளுறை (அகராதி நிகண்டு) வள் = கடிவாளம் (அகநானூறு. 4). வள் என்னும் மூலம் புவ்வீறு பெற்றும் இப் பொருள்களை உணர்த்தும். வள்பு தெரிந்தூர் மதிவலவநின் புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே (486) என ஐங்குறுநூற்றில் கடிவாளத்தையும், மாசற விசித்த வார்புற வள்பின்...... உருகெழு முரசம் (50) எனப் புறநானூற்றில் வாரையும் வள்பு என்னும் சொல் குறித்தது. வள் என்னும் மூலத்தினின்றும் பிறந்த வள்ளுரம் என்னுஞ் சொல் தோலின் இனப்பொருளான ஊனை (மாமிசத்தை)க் குறிக்கும். வள் என்னுஞ்சொல் உகரச்சாரியையும் அன் ஈறும் பெற்று வள்ளுவன் என்றாயது. வள்ளுவன் அரச சம்பந்தமான தொழிலைச் செய்பவனாதலின், பிங்கல நிகண்டில். வள்ளுவன் சாக்கை யெனும்பெயர் அரசர்க் குள்படு கருமத் தலைவர்க் கொன்றும். என்று கூறப்பட்டுள்ளது. இதில் `வள்ளுவன்' என்பதற்கு எதுகை யாயும், சம்பந்தப்பட்ட என்னும் பொருளிலும் வந்த `உள்படு' என்னும் சாமானியத் தொடரை மிகச்சிறந்த பொருளதாகக் கொண்டு `அரசர்க் குள்படு கருமம்' என்பது ஆங்கில நாட்டுச் சேம்பர்லேன் (Chamberlian) போன்ற ஓர் அதிகாரத்தைக் குறிக்கு மென்பர். இது எமக்கு உடன்பாடன்று. இனிச் சார்பினாலும் வள்ளுவன் தொழில் யாங் கூறியதே என்பது போதரும், மேற்கூறிய சூத்திரத்தில் `வள்ளுவன்' என்பதை அடுத்து நிற்கும் `சாக்கை' யெனும் பெயர், வெற்றிக் காலத்தும் அமைதிக்காலத்தும் அரசர்க்குக் கூத்தாடி மகிழ்ச்சியை யுண்டு பண்ணும் வேத்தியற் கூத்தரைக் குறிக்கும். வள்ளுவரும் சாக்கை யரும் தமக்குக் கீழ்ப்பட்ட பல துணைவரையும் தத்தம் தொழிற்கு முழுப்பொறுப்பு முடைமையான் கருமத் தலைவ ரெனப்பட்டார். 10ஆம் நூற்றாண்டி லியற்றப்பட்ட சீவகசிந்தாமணியில் வள்ளுவன் அரசாணையைப் பறையறைந்து விளம்பரஞ் செய்பவனாகக் கூறப்படுவதலால், அதற்கு இரண்டொரு நூற்றாண்டிற்கு முந்திய பிங்கலத்திலும் அதுவேயாதல் வேண்டும். பண்டைக்காலத்திற் பாணர்க்கு இசைத்தொழிலே குலத் தொழி லாயினும், அவருட் பலர் அதில் பிழைப்பின்மைபற்றிப் பிற தொழிலை மேற்கொண்டது போல், வள்ளுவரும் அரச வினை யில்லாரெல்லாம் கணி (சோதிட)த் தொழில் புரிந்து வந்தனர். சாதகங் கணித்தலும் குறிசொல்லுதலும் இக் காலத்தும் வள்ளுவர்க்குரிய. பண்டைக்காலத்திலேயே வள்ளுவர் நிமித்திகத் தொழிலுஞ் செய்துவந்தமையின், வள்ளுவர் எனும் பெயர் நிமித்திகன் எனும் பொருளையுந் தழுவியது. (சிந்தாமணி 419). நிமித்திகன் நிமித்தம் (சகுனம்) கூறுபவன். வள்ளுவன் குறி சொல்லுவதனால், அத் தொழிற்கு வள்ளுவ சாத்திரமென்றும், அவனுக்கு வள்ளுவப் பண்டாரமென்றும் பெயர் உண்டு. பண்டாரமென்பது முற் காலத்தில் நூலகங்கட்கும் பல நூல் பயின்ற புலவர்க்கு அல்லது ஞானிகட்கும் வழங்கிய பெயர். அது பின்பு முறையே துறவு பூண்ட அறிஞர்க்கும் போலித் துறவிகளுக்கும், பெயராயிற்று. புறநானூற்றிற் சில பாடல்களில் நாஞ்சில் என்னும் மலைக்குத் தலைவனான ஒருவன் வள்ளுவன் என்னும் பெயராற் கூறப்படு கிறான். அவன் ஒருகாற் சேரனுக்கும், பின்பு பாண்டி யனுக்கும் படைத்தலைவனாயிருந்ததாகத் தெரிகின்றது. அவன் 137, 140, 380ஆம் புறப்பாட்டுகளில் பொருநன் என்று விளிக்கப்படுகின் றான். பொருநன் என்னும் பெயர் ஏர்க்களம் பாடுவோன், போர்க் களம் பாடுவோன், பரணி பாடுவோன் என்னும் மூவகைப் புலவருள் அல்லது பாடகருள் ஒருவரையாவது போர் வீரனையாவது குறிக்கும். இங்குக் கூறப்பட்ட நாஞ்சில் வள்ளுவன் ஓர் படைத் தலைவனாதலின் போர்த் தொழிற்பற்றியே பொருநன் எனப் பட்டான். வள்ளுவக் குலத்தானனொருவனே ஒர் அருஞ்செயல்பற்றி அல்லது சிறந்த போர்த்தொழில்பற்றி நாஞ்சில் என்னும் மலையைக் கொண்ட ஒரு சிறு நாடு (சேரனால் அல்லது பாண்டி யனால்) கொடுக்கப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் போர் வீரர் பெரும்பாலும் மறவரும் கள்ளரு மாயிருந்தா ரேனும், பிற குலத்தாரும் அத் தொழிற்கு எத் துணையும் விலக்கப்பட்டில ரென்பது தேற்றம். ஆதலால் நாஞ்சில் வள்ளுவனை வள்ளுவக் குலத்தானாகக் கூறுவதற்குப் பெரிதுந் தடையில்லை. திருவிதாங் கூர்ச் சீமையைச் சேர்ந்த ஒரு நாடு வள்ளுவ நாடெனப்படுகின்றது. அது ஒருவேளை நாஞ்சில் வள்ளுவன் நாடாயிருந் திருக்கலாம். இனி, வள்ளுவன் என்னும் பெயரே வள்ளல் என்னும் பெயரின் மறுவடிவாகக் கொண்டு, அதற்கு உபகாரி என்னும் பொருளும் உரித்தாக்குவர். வள்ளல் என்னும் பெயரும் வள் என்னும் மூலத்தி னின்றே பிறந்ததாயினும், அம் மூலம் உபகாரி யென்னும் பொரு ளில் வரும்போது, வள்ளல், வள்ளியன், வள்ளியான், வள்ளி யோன், என்ற வடிவுகளை ஏற்பதல்லது வள்ளுவன் என்னும் வடிவை எவ்விடத்தும் ஏலாமையின், அது போலியுரையென மறுக்க. இதுகாறுங் கூறியவற்றால், வள்ளுவன் என்பது குலப்பெயரே யென்றும், அது நிமித்திகனையும் குறிக்குமென்றும், உபகாரி யென்னும் பொருளில் வாராதென்றும் அறிந்துகொள்க. (The Putturian, Feb 1939) வளையம் வளையம்-வலய வள்-வளை-வளையம்=வட்டம், வளையல். (வ.வ: 256) வறுமையால் ஒழுக்கங் கெடுதல் உயர்ந்த மக்கள் வறுமையிலும் செம்மையாயிருத்தல் கூடு மாயினும், பொதுவாக வறுமையால் ஒழுக்கங்கெடுவதே மக்க ளியல்பாம். போக்கிலி என்னும் சொல் ஒரு போக்குமில்லாத ஏழையைக் குறிக்கும் சொல். அது போக்கிரி எனத் திரிந்து, கருதியதைச் செய்துவிடும் கயவனைக் குறிக்கும். இச்சொற்றிரிபும் பொருட்டிரிபும், உணவுக்கில்லாதவன் ஒழுக்கங் கெடுவதும் வலிந்து பொருள் வௌவுவதும் திண்ணம் என்னும் பொது வுண்மை உணர்த்துவனவாகும். சிறு கூரை வீட்டைக் குச்சுவீடு என்றும், குச்சில் என்றும் கூறுவது வழக்கம். குடிசையில் வசிப்பவளைக் குறிக்கும் குச்சுக்காரி என்னும் சொல், ஒழுக்கங் கெட்டவளை யுணர்த்துவதும், மேற் கூறிய உண்மையை வலியுறுத்தும். (சொல்: 105) வனப்புச் சொல்வளம் தொல்காப்பியர் காலத்தில், செய்யுள் எழுவதற்குரிய நிலைக் களங்கள், பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழு வகையாய் வகுக்கப்பெற்றிருந்தன. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல்லோ டவ்வேழ் நிலத்தும வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (தொல். 1336) என்பது தொல்காப்பிய நூற்பா. அவ் வெழுவகை நிலைக்களத்துள், பாட்டு என்பது அம்மை (1491, அழகு (1942), தொன்மை (1493), தோல் (1494), விருந்து 91495), இயைபு (1496), புலன் (1497), இழைபு (1498) என எண்வகை வனப்பாக வகுக்கப் பெற்றிருந்தது. வனப்பு என்னும் தூய தீந்தமிழ்ச் சொல் இருக்கவும், அதற்குப் பகரமாகக் காவியம் என்னும் வடசொல்லைக் காப்பியம் என்று திரித்து. நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர். (மணிமே. 19:80) என்று, முதன்முதலாக ஆண்டவன், சீத்தலைச் சாத்தன். தொல்காப்பியத்தில் இலக்கணம் கூறப்பெற்ற எண்வகை வனப்பிற்கும் இலக்கியமாயிருந்த பனுவல்களெல்லாம், அறவே இறந்துபட்டன. ஆதலால், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பத்து வனப்புகளும், ஐம்பெருங் காப்பியமென்றும் ஐஞ்சிறு காப்பியமென்றும், அக் காலத் திறுதியில் இரு கூறாக வகுக்கப்பட்டன. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் பெருவனப்பு: நீலகேசி, சூளா மணி, யசோதரகாவியம், பெருங்கதை, நாககுமார காவியம் என்னும் ஐந்தும் சிறுவனப்பு ஆகும். பெருவனப்புள் இறுதியிற் குறிக்கப் பட்ட இரண்டும், சிறுவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட ஒன்றும் இன்றில்லை. வனப்பைப் பிற்காலத்திலக்கணியர், தொடர்நிலைச் செய்யுள் தனிநிலைச் செய்யுள் என்று இருவகையாகவுள் குறிப்பாராயினர். ஒப்புயர்வற்ற ஒருவனைத் தலைவனாகக் கொண்ட நீண்ட கதை தழுவி, காண்டம் படலம் முதலிய பெரும் பகுப்புகளைக் கொண்டு, பல்வேறு வகைப்பட்ட காலம், இடம், நிகழ்ச்சி, மக்கள் வாழ்க்கைமுறை, தொழில், பழக்கவழக்கம், அரசியல், ஊணுடையுறையுள், நிலைத்திணையும் இயங்குதிணையுமாகிய மற்ற வுயிரினங்கள் முதலிய பொருள்களைப் பற்றிய வண்ணனை களை யுடையதாய், விரிவாய் வரும் வனப்பிலன்றி, வேறெல் வகைப் பனுவலிலும், சொல்வளத்தைப் பேரளவாகக் காண முடி யாது. அவ் வனப்புச் சொல்வளமும், வனப்பாசிரியனின் புலமைத் திறத்தைப் பெரிதும் பொறுத்ததாகும். ஐம்பெரு வனப்புகளுள் சிலப்பதிகாரமும் சிந்தாமணியும், சிறு வனப்புகளுள் பெருங்கதையுமே சொல்வளமுடையன. இம் மூன்றும் முறையே தலையிடை கடையாம். சிலப்பதிகாரச் சிறப்புச் சொற்கள் அகவை = வயது (வ.). அதள்புனையரணம் = தோற்கைத்தளம் (glove). அரிமுகவம்பி = மடங்கல்(சிங்க) முகமுள்ள படகு. அலவை = வியபிசாரம். இலவந்திகை = நீர் நிறைத்து வெளியேற்றும் பொறியமைந்த குளம், அதையடுத்த சோலை. இறும்பூது = அதிசயம் (வ.). புதுமை (wonder). உள்வரிக்கோலம் = மாறுகோலம் (disguise). ஏதம் = அபாயம் (வ). (danger). ஓசுநர் = கலவினைஞர் (sailors). கண்ணெழுத்து = மூட்டைகளின் மேல் எழுதிய முகவரி (super- scription). கலங்கரை விளக்கம் = Light House காசறை = கதூரி(வ.) மான். காழியர் = பிட்டு வாணிகர். காலதர் = சாளர வகை. குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாய் நின்று ஆடிவரும் கூத்து. கூவியர் = அப்ப வாணிகர். சுருங்கை = கரந்து படை, கீழ்நிலவழி (Subterranean passage). திரையல் = வெற்றிலைச் சுருள். நீரணி மாடம் = பள்ளியோடம். பதியெழுவு = நகரவாணர் வெளியேற்றம் (Evacuation). கரிமுகவம்பி = யானை முகமுள்ள படகு வகை. பாடுகிடத்தல் = சத்தியாக்கிரகம்(வ.) பண்ணுதல். வம்பமாக்கள் = புதிதாய் வந்தோர், அயல்நாட்டார். வையம் = குதிரை பூட்டிய தேர்போன்ற வண்டி (Coach). இனி, நால்வகைப் பெரும் பண்ணும், நால்வகைப் பண்பகுப்பும், நால்வகைப் பண்குலமும், நால்வகைப் பாலையும், நால்வகை நரம்பும், எண்வகை எழாலும், எண்வகை இசைக்கரணமும், நால் வகை முழவும், இருவகைத் தாளத் தொகுதியும், நாற்பணியுறுப் பும், பத்து வகை இசைப்பாவும், மூவகை வரிப்பாட்டும், மூவகைச் சார்த்துவரியும், பிறவுமாகிய இசைத்தமிழ்ப் பகுதிகளும்: பல் வகைப்பட்ட இருவேறு கூத்தும், பதினோராடலும், எண்களும் வரிக்கூத்தும, இருவகைக் குரவையும், முப்பத் திருவகை நளி வினையும் (அபிநயமும்), மூவகை யெழினியும், பிறவுமாகிய நாடகத் தமிழ்ப் பகுதிகளும் சிலப்பதிகாரத்திற்கே சிறப்பாம். மாதவி காலத்து மகளிர் அணிகள் 1. விரலணி = கான்மோதிரம் 15. பவழ வளை 2. பரியகம் = காற்சவடி 16. வாளைப்பகுவாய் மோதிரம் 3. நூபுரம் = சிலம்பு 17. மணி மோதிரம் 4. பாடகம் = ஒருவகைக் காலணி 18. மரகதத்தாள்செறி=மரகதக்கடைசெறி 5. சதங்கை 19. சங்கிலி = வீரச்சங்கிலி 6. அரியகம் = பாதசாலம் 20. நுண்ஞாண் 7. குறங்கு செறி = கவான்நெறி 21. ஆரம் 8. விரிசிகை = முப்பத்திருவட 22. கயிற்கடையொழுதியகோவை= மேகலை பின்றாலி 9. கண்டிகை = மாணிக்க வளை 23. இந்திரநீலக்கடிப்பிள்ளை = நீலக்குதம்பை 10. தோள்வளை 24. தெய்வவுத்தி = சீதேவி 11. சூடகம் 25. வலம்புரி 12. கைவளை = பொன்வளை 26. தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை 13. பரியகம் = பாசித் தாமணி, 27. புல்லகம் = தென்பல்லியும் கைச்சரி வடபல்லியும் 14. வால்வளை = சங்கவளை, வெள்ளிவளை மகளிர் நீராடுவதற்குரிய பத்துத் துவர், ஐந்துவிரை, முப்பத் திருவகை ஓமாலிகை முதலியனவும் சிலப்பதிகாரக் கடலாடு காதையிற் குறிக்கப் பெற்றுள. அவற்றின் விரிவை அடியார்க்கு நல்லார் உரையிற் காண்க. ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரை மதிற்பொறிகள் 1. வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய (எந்திர) வில். 2. கருவிரலூகம்=கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி. 3. கல்லுமிழ் கவண். 4. பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவ தாய நெய். 5. பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா. 6. காய்பொன்னுலை = உருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலை. 7. கல்லிடு கூடை = இடங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங் கூடை. 8. தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கிமதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி. 9. தொடக்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி. 10. ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி. 11. கவை = கிடங்கிலேறின் மறியத்தள்ளும் இருப்புக்கவை. 12. கைபெயரூசி = மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி. 13. சென்றெறி சிரல் = மாற்றார் மேற்சென்று கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி. 14. பன்றி = மதிற்றலையி லேறினா ருடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி. 15. பிற = நூற்றுவரைக்கொல்லி (கதக்கினி), தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகு பொறி, புலிப்பொறி, குடப் பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி முதலியன. சிந்தாமணிச் சிறப்புச் சொற்கள் அணிகம் = ஊர்தி (Conveyance, Vehicle) ஆம்புடை = வினைசெய் வழி (Means, Expedient) உவளகம் = அந்தப்புரம் (வ.) (zenana). உவனித்தல் = அம்பெய்யத் தொடங்குதல். உழைக் கண்ணாளர் = அருகிலிருக்கும் கண்போன்ற அன்பர். ஓசனித்தல் = பறவை சிறகடித்தல். கல்லூரி = கல்வி கற்கும் இடம் (College). பிழியல் = பிழிந்தெடுத்த கள் அல்லது இன்சாறு. வடகம் = மேலாடை. வளமனை = பொருள் நிறைந்த சிறப்பில்லம். இனி, யாழ் என்னும் வீணைக் கருவிக்குரிய குற்றங்களையும், பாம்பு நஞ்சின் எழு வேகங்களையும், குழந்தை வளர்ப்பு முறை யையும், அறுவகைப் பெரும்பொழுதிற்கேற்ற ஊணுடைகளை யும், விரித்துக் கூறுவதும் சிந்தாமணிக்குச் சிறப்பென்க. ஆயின், இவை பொருள்வளத்தின் பாற்படும். பெருங்கதைச் சிறப்புச் சொற்கள் தச்சம் = ஒரு பேரெண். கடிகையாரம் = கடிகாரம். இது தூய தென்சொல்லே. கடிகாயந் திரம் என்னும் வடசொல்லின் திரிபன்று. கடிகை = வட்டமானது, ஆரம் = ஓர் ஈறு. கார்முகம் = வானவில். குப்பாயம் = மேற்சட்டை (Coat). ஓதி = புறக்கண்ணாற் காணவியலாத நெடுந்தொலைவுச் செய்திகளையும் அகக்கண்ணாற் கண்டறியும் ஆற்றல். திருவில் = வானவில். தேசியச்சேரி = அயல்நாட்டவர் சேர்ந்துவாழும் குடியிருப்பு. நானம் = தேய்த்துக் குளிக்கும் விரைநெய் (வாசனை யெண்ணெய்). படமாடம் = கூடாரம் (Tent). பாம்புரி = ஆளோடி. பீடிகை = ஒற்றையிருக்கை யூர்தி. மணிமேகலைச் சிறப்புச் சொற்கள் ஆண்டலைப்புள் = ஆண்டலை வடிவான, இறந்துபட்ட ஒரு பறவையினம். ஆலமர் செல்வன் = தட்சிணாமூர்த்தி(வ.). பொதியறை = காற்றுவர வழியில்லாத நிலவறை. வட்டிகை = எழுதுகோல் (Painter's brush). வட்டுடை = அரைக்காற் சட்டை (Drawers). இங்ஙனமே ஏனை வனப்புகளிலும் ஒருசில சொற்கள் சிறப்பாக வுளவென அறிக. ("செந்தமிழ்ச் செல்வி") வனம் வளம்-வன-(இ. வே.) வனம் = அழகு. "வனமுலை" (கலித். 97). வனப்பு = அழகு. "செவ்வானத்து வனப்பு" (புறம். 4). (வ.வ: 256) `வா' என்னும் வினைச்சொல் வரலாறு வள்-வர்-வார்-வ. வர்-வரு. சொல்லாக்கத்தில் ட த ல ழ ள ஐந்தும் ரகரமாகத் திரியும். அத் திரிவில் லகரளகரம் பேரளவும், அவ் விரண்டனுள்ளும் ளகரம் பெரும்பான்மையும், ஆகும். எ-டு: ட - ர : கடு-கடி-கரி, படவர்-பரவர். த - ர : விதை-விரை. ல - ர : உலவு-உரவு, குலவை-குரவை, குதில்-குதிர், பந்தல்-பந்தர். ழ - ர : புழை-புரை. ள - ர : அள்-அர்-அரு-அருகு, கள்-கர்-கரு,சுள் - சுர், தெளி- தெரி, நீள்-நீர், பிள்-பிர்-பிரி, முள்-முர்-முரு-முருகு (இளமை), விள்-விர்-விரி. முதற்காலத்தில் முதனிலையாக வழங்கி வந்த சில வினைச் சொற்கள் வழக்கற்றுப் போனதினால், இன்று அவற்றிற்குத் தலைமாறாக அவற்றின் தொழிற் பெயர்களே தமித்தும் துணை வினையொடு கூடியும் வழங்கி வருகின்றன. எ-டு: முதனிலை முற்காலப் புடைபெயர்ச்சி இக்காலப் புடைபெயர்ச்சி நகு நக்கான் நகைத்தான் தள் தட்டான், தட்கின்றான், தளைத்தான், தட்பான் தளைக்கின்றான், தளைப்பான். கள் கட்டான், கட்சின்றான், களவுசெய்தான், களவு கட்பான் செய்கின்றான், களவு செய்வான். களவாண்டான், களவாள்கின்றான், களவாள்வான்; வள வாடினான், களவாடுகின்றான், களவாடுவான்; என்பனவும் தொழிற்பெயர் துணைவினை கூடி முதனிலையாகிப் புடை பெயர்ந்தனவே. ஆள், ஆடு என்பன துணைவினைகள், களவுபண், களவடி, களவுகாண் என்பனவும் துணைவினை கொண்டனவே. இக் காலத்தில் `வளை' என்று வழங்கிவரும் முதனிலை முற்காலத்தில் `வள்' என்றே வழங்கிற்று. வள்ளுதல் = வளைதல். வள்வு = வளைவு. வள்ளம் = வளைவு, வட்டம், வளைந்த அல்லது வட்டமான பொருள் (தொழிலாகு பெயர்). வள்ளி = வளைந்த கொடி. ஒருவன் தன் உறைவிடத்தினின்று அல்லது இருப்பிடத்தினின்று ஒரிடத்திற்குப் போனபின், அங்கிருந்து உறைவிடத்திற்கு வருவது முன்பின்னாகத் திரும்பியே யாதலால், திரும்பற் கருத்தினின்றே வருகைக் கருத்துப் பிறந்தது. அதனால், திரும்பற்பொருட் சொல்லினின்றே வருகைப் பொருட்சொல். தோன்றிற்று. திரும்புதல் = வளைதல், திசைமாறி நோக்கி நிற்றல், மீளுதல். மீளுதல் = திரும்பிவருதல், காலையிற் சென்று மாலையில் திரும்பி னான் என்றால், திரும்பினான் என்பது திரும்பி வந்ததைக் குறித்தல் காண்க. வலமாகவோ இடமாகவோ திரும்புதலுங் கூடுமேனும், ஒருவன் தான் போன இடத்தினின்று புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வருவது முன்பின்னாகத் திரும்பியே யென்பது. சொல்லாமலே விளங்கும், திரும்பு என்னும் சொற்போன்றே, வளைதலைக் குறிக்கும் வேறுசில சொற்களும் மீளுதலைக் குறிக்கின்றன. திரிதல் = வளைதல், மீளுதல். மடங்குதல் = வளைதல், மீளுதல். மறிதல் = வளைதல், மீளுதல். திரிதல் மீளுதல். (பிங். 7:202) மறிதர லென்பது மீளுத லாகும் (திவா. 9) மறிதரல் திரிதரல் மடங்கல் மீளுதல் (பிங். 7:444) அளைமறிபாப்பு என்னும் பொருள்கோட் பெயரிலும், மறியென் னுஞ் சொல் வளைதலையும் திசைமாறித் திரும்பு தலையுங் குறித்தல் காண்க. ஆங்கிலத்தில் வளைதலை அல்லது திரும்புதலைக் குறிக்கும் turn என்னும் சொல், re என்னும் முன்னொட்டுப் பெற்றுத் திரும்பி வருதலைக் குறிக்கின்றது. He never turned up this side என்னும் தொடரியத்தில், அச் சொல் up என்னும் முன்னீட்டொடு கூடி, வருகைப் பொருளையும் உணர்த்துகின்றது. இதுகாறுங் கூறியவற்றால், `வா' என்னும் வினைச்சொல் வளை தலைக் குறிக்கும் `வள்' என்னும் முதனிலையினின்றே திரிந் துள்ளமை பெறப்படும். இற்றை முதனிலையான வளையென்னுஞ் சொல்லும், வளைய வளைய என்னும் நிகழ்கால வினையெச்ச வடுக்கிலும், வளைத்து வளைத்து என்னும் இறந்தகால வினையெச்ச வடுக்கிலும், திரும்ப திரும்ப என்னும் பொருள் தோற்றுவித்தலைக் காண்க. இதனால், கீழ்ப்படை முதனிலையான வள் என்னுஞ் சொல்லும், முற்காலத்தில் இப் பொருளுணர்த்தினமை உய்த்துணரப்படும். வள்-வர்-வார்-வா-வ. வர்-வரு. இனி, வள்-வாள்-வார் என்றுமாம். வாள் - வாளம் = வட்டம், வாள்-வாளி = வட்டமாயோடுகை. வார்-வர்-வரு. தமிழ் வினைச்சொற்களின் முதனிலை பெரும்பாலும் ஏவ வொருமை வடிவிலேயே யுள்ளது. அவற்றுட் சிலவற்றில் மட்டும், ஏவலொருமை வடிவினின்று முதனிலை வேறுபட்டுள்ளது. அவ் வேறுபாடு மிக்க வினைகளுள் ஒன்று `வா' என்பது. அதன் ஆட்சி யிலும் புடைபெயர்ச்சியிலும், வா, வார், வர், வ, வரு என்னும் ஐவேறு வடிவுகள் காணப்படுகின்றன. ஏவல் வடிவு, பொதுவாக முதனிலையளவில் ஒருமை பன்மை யிரண்டிற்கும் பொதுவாகவே யிருக்கும். ஆயின், வருதல் வினை யில் அவ்விரண்டும் வேறுபட்டுள. ஒருமை பன்மை வா வாரும் (வார்+உம்) வாருங்கள் (வார்+உம்+கள்) வம்மின் (வரு-வர்-வ+மின்) பாரும் என்னும் பன்மை யேவலிற் பார் என்பது முதனிலையா யிருத்தல் போன்று, வாரும் என்பதில் வார் என்பதே முதனிலை யென்பது தேற்றம். ஆதலால், வார் என்னும் வடிவினின்றே ஏனை நால்வாடிவுகளுந் திரித்திருத்தல் வேண்டும். மேற்குறித்த ஐ வடிவுகளின் ஆட்சியும் வருமாறு. 1. வார் வாரானை (வருகை) என்னும் வினைப்பெயர்: வாராமை என்னும் எதிர்மறை வினைப்பெயர்: வாரான், வாராதான் என்னும் எ.ம. வினையாலணையும் பெயர்கள்: வாரான் என்னும் எ.ம. வினை முற்று: வாராய், வாரும், வாரீர் என்னும் உடன்பாட்டு ஏவல் வினைகள்: வாரல், வாராதி, வாராதே, வாராதீர், வாராதிர், வாரன் மின் என்னும் எ.ம. ஏவல் வினைகள்: வாரல், வாரற்க என்னும் எ.ம. வியங்கோள் வினைகள்: வாரா, வாராத என்னும் எ.ம. பெயரெச்சங்கள்: வாராது, வாராதே, வாராமை, வாராமல், வாராமே, வாராக்கால், வாராவிடின் என்னும் எ.ம. வினையெச் சங்கள் ஆகியவற்றில் வார் என்னும் வடிவம் நிலைத்துள்ளது. 2. வா வா என்னும் ஒருமையேவல் வினையில் மட்டும் வா என்னும் வடிவம் நிலைத்துள்ளது. 3. வ வந்தான் என்னும் இறந்தகால வினைமுற்று: வந்தவன், வந்தான் என்னும் இ. கா. வினையாலணையும் பெயர்கள்: வந்த என்னும் இ. கா. பெயரெச்சம்: வந்து, வந்தால், வந்தக்கால், வந்தவிடத்து என்னும் வினையெச்சங்கள் ஆகியவற்றில் வ என்னும் வடிவம் நிலைத்துள்ளது. வம்மின், வம்மோ என்னும் பன்மை யேவல் வினைகள் வருமின், வருமோ என்பவற்றின் திரிபாயே யிருத்தல் வேண்டும். ஒருசில முதனிலைகளின் நெடின்முதல் இறந்தகால வினையிற் குறுகும். ஒ.நோ: தா - தந்தான் சா - (சத்தான்) - செத்தான் நோ - நொந்தான் காண் - கண்டான் 4. வர் வரவு, வரல், வரத்து என்னும் வினைப்பெயர்கள்: வராமை என்னும் எ.ம வினைப்பெயர்: வராதவன், வராதான் என்னும் எ.ம. வினையாலணையும் பெயர்கள்: வரல், வரேல், வராதி, வராதே, வராதிர். வராதீர், வரன்மின் என்னும் எ. ம. ஏவல் வினைகள்; வரல், வரற்க என்னும் எ.ம. வியங்கோள் வினைகள்; வரா, வராத என்னும் எ. ம. பெயரெச்சங்கள்; வர என்னும் நி. கா. பெயரெச்சம்; வரின் என்னும் எ. கா. பெயரெச்சம்; வராது, வராமை, வராமல், வராமே, வராக்கால், வராவிடின் என்னும் எ.ம. வினையெச் சங்கள் ஆகியவற்றில் வர் என்னும் வடிவம் நிலைத்துள்ளது. 5. வரு வருதல், வருகை என்னும் வினைப்பெயர்கள்: வருமை (மறு பிறப்பு) என்னும் பண்புப்பெயர்: வருகின்றவன், வருகின்றான், வருமவன் (வருபவன்), வருவான் என்னும் வினையாலணையும் பெயர்கள்: வருகின்றான், வருவான் என்னும் வினைமுற்றுகள்: வருதி, வருதிர் என்னும் ஏவல் வினைகள்: வருக. வருதல் என்னும் வியங்கோள் வினைகள்: வருவி, வருத்து என்னும் பிறவினைகள்: வருகின்ற, வரும் என்னும் பெயரெச் சங்கள்; வருவாய் என்னும் வினைத்தொகை ஆகியவற்றில் வரு என்னும் வடிவம் நிலைத் துள்ளது. இற்றைத் தமிழில் வா என்று திரிந்துள்ள அல்லது ஈறுகெட் டுள்ள வார் என்னும் மூலத்தமிழ் முதனிலை அல்லது ஒருமை யேவல், பிற திரவிட மொழிகளிற் பின்வருமாறு திரிந்துள்ளது. வா - கோத்தம், கோலாமி. வா, வரி(க) - மலையாளம் வா, வாமு, வ. - குய (kui) வா, வர் - வடபா. வரா, வரட் - கோண்டி (g). வர் - நாய்க்கீ. வெர் - பர்சி (j). பா (b) - கன்னடம், குடுகு. ப, பர் (b) - பிராகுவி (Brahui). பர் (பினி), பா (b) - துளு. பர் (b) - மாலதோ. பர் (னா) (b) - குருக்கு (ஒராஒன்). ரா - தெலுங்கு. ராவா - கொண்டா. போ - துடவம் (Toda). இத் திரிபுகளெல்லாம் மேற்காட்டிய தமிழ்த் திரிபுகளுள் அடங் கும்; அல்லது அவற்றால் விளக்கப்படும். இவற்றுள் முதன்மை யானவை வா - பா (b), வர் - வ்ரா - ரா. வா - போ. என்னும் மூன்றே. 1. கன்னடத்தில் வகரமுதற் சொற்கள் பெரும்பாலும் எடுப் பொலிப் பகரமுதலவாக (b) மாறிவிடுகின்றன. எ - டு: தமிழ் கன்னடம் தமிழ் கன்னடம் வங்கு (வளை) பங்கு (nk) வழங்கு பழகு (g) வட்டம் பட்ட வழலிக்கை பழல்கெ வடுகு படகு (g) வழி பளி வணங்கு பக்கு (gg) வள்ளம் பள்ள வயல் பயல் வளர் பளெ வயலை பயலு வளா பளா (bh) வயிறு பசிறு வளை பளெ வரை பரெ வற்று பத்து வலம் பல வற பறு வல்லாளன் பல்லாள வரகு பரகு வலை பலெ வறிது பறிது வாவல் பாவல் வறுகு பறுகு (g) இங்ஙனமே சில ஏனைத் திரவிட மொழிகளிலும். 2. தெலுங்கிற் சில சொற்களின் முதலீரெழுத்துகள் முன்பின்னாக முறை மாறிவிடுகின்றன. அன்று முதலெழுத்தாகிய உயிர்க்குறில் நீண்டுவிடுகின்றது. எ-டு: தமிழ் தெலுங்கு தமிழ் தெலுங்கு அறை ராய் உகிர் கோரு (g) இலது லேது உள் லோ உரல் ரோலு எழு லேய் வரை (எழுது) என்னுஞ்சொல் இம் முறையில் வராயு என்று திரிந்தபின், ராயு என்று முதன்மெய் கெட்டும் வழங்கின்றது. இவ்வகையினதே வர்-வ்ரா-ரா (வா) என்னுந் திரிபும். 3. துடவ மொழியில் பல சொற்களின் ஆகார முதல் ஓகார முதலாகத் திரிந்துள்ளது. தமிழ் துடவம் தமிழ் துடவம் ஆடு ஓட் நாய் நோய் ஆறு ஓற் நாவு நோவ் கா கோவ் நான்கு நோங்க் காண் கோண் பாசி போதி காய் கோய் பாம்பு போப் கால் கோல் மார் (மார்பு) மோர் தாய் தோய் மான் மோவ் தான் தோன் வாய் போய் வாழ் போத்க் ஆ-ஓ திரிபும், வ-ப திரிபும் சேர்ந்து வாய்-போய் என்று திரிந்தது போன்றதே. வா-போ திரிபும். குமரிநிலத் தமிழே திரவிட மொழிகட்கொல்லாந் தாயாதலின், இக்காலத் தமிழிலும் ஒருசில சொற்கள் திரிந்திருப்பினும், அவற் றின் திருந்திய வடிவத்தையும் ஆணிவேரையும் அறிந்து கொள்ள, போதிய சான்று அத் தமிழிலேயே உள்ளதென்று அறிதல் வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. (தொல்.பெப.1) பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். (மேற்படி.2) தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (மேற்படி.3) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்.96) பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்திக் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். (மேற்படி 1) முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல் தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே. (தொல்.பெய. 91) இங்ஙனம் வேறெவ்வகை மொழியிலுங் கூறப்படவில்லை. கூறவும் இயலாது, பிறமொழிகள் திரிமொழிகளாதலான். அத்தகைத் தன்னேரில்லாதது இயன்மொழியான தமிழே. வா என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் போ என்பது. அது புகு என்பதன் திரிபு. புகுதல் உள்ளே செல்லுதல். வருதல் உள்ளிருந்து வெளியே திரும்பி வருதல். இவ் விழை இவ் வூசியின் காதிற்குள் போகுமா என்னும் வழக்கை நோக்குக. வணங்குதல் என்னுஞ் சொல், முதலில் உடம்பு வளைந்து அல்லது தலை குனிந்து கும்பிடு தலையே குறித்தது. இன்றோ, பொதுவாகக் கைகுவித்தலை மட்டுங் குறிக்கின்றது. இங்ஙனமே, முன்பு ஒன்றன் உட்புகுதலைக் குறித்த போ என்னுஞ் சொல், இன்று ஓரிடத் திற்குச் செல்லுதலை மட்டுங் குறிக்கின்றது. தொடக்கத்தில், ஒன்றைத் துளைத்து ஊடுருவிச் சென்றதைக் குறித்த துருவுதல் என்னும் சொல், இன்று `நாடு துருவுதல்' வான் துருவுதல்' என்று திறந்த வெளியிடத்தைக் கடந்து செல்லுதலையுங் குறித்தல் காண்க. இது போன்றே, ஓரிடத்தினின்று திரும்பி வருதல் என்று முதற்கண் பொருள் பட்டவார்தல் அல்லது வருதல் என்னும் வினைச்சொல், இன்று வருதல் என்றுமட்டும் பொருள் படுகின்றது. இன்றும், தன் இடத்தினின்று புறப்படும் ஒருவன் தன்னையே நோக்கிச் சொல்லின், போய் வருகிறேன் என்றுதான் சொல்வான். வந்து போகிறேன் எனின், அஃது அயன்மனையிற் சொல்வதா யிருத்தல் வேண்டும்: அல்லது தானே மீண்டும் தன்மனைக்கு வந்து போதலைக் குறித்ததாகல் வேண்டும். ஒருவனால், தன் இடத்தினின்று நீங்குவதெல்லாம் செல்லுதல் வினையாலும் தன் இடத்தைச் சேர்வதெல்லாம் வருதல் வினை யாலும் குறிக்கப்படுதலின், நீ வருக, அவன் வருக என்று, முன் னிலையானும் படர்க்கையானுமாகிய பிறர் தன்னிடம் சேரும் வினையும் வருகை வினையாலேயே குறிக்கப்படும். அவ்வீரிடத் தாரும் அத் தன்மையான முன்னிலைப்படுத்தின், நான் வருகிறேன். நான் வருகிறேன் என்று தனித்தனி சொல்லலாம். அவ்வாறன்றி நான் செல்கிறேன் எனின், அது படர்க்கையானின் இடத்தை நோக்கியதாகவே யிருத்தல் கூடும். இனி, வார் அல்லது வா என்னும் வினைச்சொல் பல்வேறு வடிவில் திரவிட மொழிகளில் வழங்குவது மட்டுமின்றி, மேலை ஆரிய மொழியாகிய இலத்தீனிலும், சென்று மூலத்தை யொட்டி வழங்குவது வியக்கத் தக்கதாகும். ளகரமெய் தமிழிலும் திரவிடத்திலும் னகரமெய்யாகவுந் திரியும். எ-டு: தெள்-தென்-தேன், தெளிவு, தேறல் என்னும் சொற்களை நோக்குக. கொள்-தெ. கொன், கொனு, தெ. கொனி = கொண்டு. வள்-வன்-வென்- L. veni to come. Veni என்னும் மூலத்தினின்று, advent, avenue, circumvent, convene, event, inervene, invent, prevent, revenue, subvent, supervene, venue முதலிய சொற்கள் திரிந் துள்ளன. இவற்றுள் ஒவ்வொன்றினின்றும் சில பல சொற்கள் கிளைத்துள்ளன. எ-டு: convene-convent, conventual, convention, conventional, conventionary, conventicle, convenient, convenience முதலியன. கலிபோர்னியாப் பல்கலைக்கழகச் சமற்கிருதமொழி நூற் பேராசிரியர் எம். பி. எமெனோ (M.B. Emeneau) திரவிட மொழி நூலும் இன நூலும் நாட்டுப்புறக் கதைகளும்பற்றி எழுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட கட்டுரைக் தொகுதியில் (Collected Papers) 6ஆம் கட்டுரை `வா' `தா' என்னும் வினைச்சொற்கள்பற்றிய அவர் ஆராய்ச்சி முடிபு களும் உள்ளன. அவை வருமாறு: 1. வ, த என்பன மூலத்திரவிட அடிகள் (Proto Dravidian stems). 2. அ, அர் என்பன அவ் வடிகள் தன்மை முன்னிலை வினைகளாகும் போது சேர்க்கப்படும் இடைமாற்ற ஈறுகள் (transition suffixes). 3. அ உடன்பாடு வடிவுகளிலும், அர் எதிர்மறை வடிவுகளிலும் ஆளப்பட்டன. 4. அ+அ = ஆ என்பது சொல்லொலியன் மறுநிலை மாற்று (Morphonemic alternation). 5. வ, வந்த் என்பன வா என்னும் வினைக்கும், த, தந்த் என்பன தா என்னும் வினைக்கும், உரிய இணையடிகள். 6. பழந்தமிழில் வார் என்றிருந்த எதிர்மறையடி புதுத் தமிழில் வர் என்று குறுகிற்று. 7. குய்மொழி திரவிட மொழியாராய்ச்சிக்குத் தமிழினும் மிகத் துணை புரிவது. இவற்றின் பொருந்தாமையை ஈண்டு விளக்கின் விரியும். அறிஞர் கண்டுகொள்க. தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமைத் தன்மைகளை யும் வேர்ச்சொல் விளக்கத்தையும் தமிழரே அறியாதிருக்கும் போது, அயன்மொழி பேசும் வெளிநாட்டார் சமற்கிருத அடிப் படையில் திரவிட மூலமொழியின் அடிமுடி காண்பது, நால்வர் பாராதார் நால்வாய் கண்ட கதையே யொக்கும். வாடகை வாடகை-பாடக் (bh, t@) வாழ்-(வாழகை)-வாடகை=வீட்டிற் குடியிருத்தற்குக் கட்டும் மாத அல்லது ஆட்டைக் கட்டணம். பின்பு இயங்கு திணைப்பொருள்களைப் பயன்படுத்தற்குக் கொடுக்குங் கட்டணமும் இப்பெயர்பெற்றது. வடவர் பட் (bhat@) என்னுஞ் சொல்லை மூலமாகக்காட்டி, அதையும் ப்ருத்த (bhr@ta) என்பதன் திரிபாக்குவர். bhr@ = பொறு. bhr@ta = தாங்கப்பெற்றவன், கூலிக்கு அமர்த்தப்பெற்ற வேலைக் காரன் அல்லது உழைப்பாளி அல்லது படைஞன். அவ்வகையி லும் மூலம் தமிழ்ச் சொல்லே, bghW-bhr@. (வ.வ: 256) வாடி வாடி-வாடீ (t@) வாடுதல்=வளைதல், பயிர் பச்சை வளைந்து பட்டுப்போதல். வட்டம்=வளைவு, பொலி வழிவு. அங்கணம் வாட்டசாட்டமாயிருந்தால் தண்ணீர் சரட்டென்று போகும் என்ற வழக்கை நோக்குக. வாடு-வாடி=வளைசல், அடைப்பு, சூழவேலி கோலிய விறகுக் கடை அல்லது மரக்கடை. (வ.வ: 256) வாணிகம் வாணிகம் : பண்ணுதல்=செய்தல், உண்டாகுதல், விளைவித்தல் பண்-பண்ணியம்=பல்வேறு விற்பனைப்பண்டம். (தி.ம : 754) வாணிகன் வாணிகன் -- வாணியன். வணிகன்--வணிகு. tÂF-- tÂ{ (t.), வணிகன்--வணிஜ (வ.). (தி.ம: 755). வாய்ச்செய்கை சில வாய்ச் செய்கைகளால் ஏற்படும் வாய் நிலைகளை, அச் செய்கைகளைக் குறிக்குஞ் சொற்கள் முற்றுமாயினும் ஒரு மருங்காயினும் அமைக்குமாயின், அவை வாய்ச்சொய்கை யொலியடிப் பிறந்தவையாம். எ-டு: செய்கை செய்கைக்கேற்கும் சொல் ஒலி வாய் திறத்தல் அ,ஆ அங்கா வாய்(பெருமூச்சிற்கும் கொட்டாவிக்கும்) ஆ ஆவி வாய்ப்பற்றுதல் அவ் அவ்வு-வவ்வு-கவ்வு பல்லைக் காட்டுதல் ஈ இளி காற்றை வாய்வழி முன்றள்ளல் ஊ ஊது `ஆ வென்று வாயைத் திறக்கிறான்', `ஈ யென்று பல்லைக் காட்டு கிறான்' என்னும் வழக்கையும் அவ் என்று சொல்லும்போது கவ்வுகிற வாய்நிலை யமைவதையும் காண்க. (1) ஆவி ஆவித்தல்=வாய்திறத்தல்; வாய்திறந்து பெருமூச்சு விடுதல், கொட்டாவி விடுதல். ஆவி=வாய்வழிவரும் காற்று, மூச்சு (உயிர்ப்பு), உயிர், ஆன்மா, உயிர்போன்ற தோற்றம். (2) அவ்வு அவ்வு-வவ்வு-கவ்வு. இவை முறையே, ஔவு, வௌவு, கௌவு என்றும் வகைப்படும். அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஔ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். அவ்வு (ஔவு) தல்-வாயாற் பற்றுதல். கன்று புல்லை அவ்வி (ஔவி)த் தின்கிறது என்பது வழக்கு. அவ்-அவ-அவா = வாயினாற் பற்றுதல்போல் மனத்தினாற் பற்றும் ஆசை. அவ-அவவு-அவாவு. அவாவுதல் - ஆசைப்படுதல். அவாவு - ஆவு. ஆவுதல் = ஆசைப்படுதல் ஆவு - ஆவல். ஆர்வத்தோடணைத்தலை ஆவிச்சேர்ந்து கட்டுதல் என்பர். வவ்வுதல் = வாய்ப்பற்றுதல்போற் கைப்பற்றுதல், பறித்தல். வவ்வு வாவு - வாவல் = பெருவிருப்பம். கவ்வுதல் = வாயாற் பற்றுதல். கவ்-கவ-கவர். கவர்தல்=பற்றுதல், விரும்புதல். கவர்வு விருப்பாகும் (தொல். உரியியல், 65) கவ-கா-காதல். கா-காம்-காமம்-காமர். காம் + உறு = காமுறு. காமம்-காமன். கவ்வுதல்=கவ்வித்தின்னுதல், தின்னுதல். கவ்வு-கப்பு. கப்புதல்=கவளங்கவளமாக விழுங்குதல். கவ்வு-கவளம்=ஒருமுறை கவ்வும் அல்லது தின்னும் அளவான உணவு. கவ்வு-கவியம்-கவிகம்=கறுழ் (bit). கவ-கவவு=கவ்வுதல், கவ்வினாற்போல் அணைத்தல், அகப்படுத்தல், அகத்திடுதல். கவவகத் திடுதல் (தொல். உரியியல். 59). கவவுக்கை = அணைத்த கை. கவர்தல் = பற்றுதல், அகப்படுத்துதல், வசப்படுத்துதல். கவர்-கவர்ச்சி. கவ்வு-கப்பு=கவர்ச்சி. கவர்தல்=பற்றுதல். பறித்தல், கவாஅன்=கவருங் கள்வன். கவர்-கவறு=கவருஞ் சூதாட்டு, சூதாடு கருவி. கவ்வு-கவுசனை-கவிசனை=அகத்திடும் உறை. கவ்வு-கப்பு. கப்புதல்=அகத்திடுதல், மூடுதல். கவ-கவை. கவைத்தல்=அகத்திடுதல், இரு கையாலும் அணைத்தல். கவ்வு - (கவள்) - கவளி = கவ்வினாற்போல் மேலும் கீழும் சட்டம் வைத்துக்கட்டும் புத்தகக்கட்டு, கட்டு, வெற்றிலைக்கட்டு. கவளி-கவளிகை. கவ்வு-கவுள்=கவ்வும் அலகு, கன்னம், உள்வாய். மேல்வாய் கீழ்வாயலகுகள் கவ்வுங் குறடு போலிருத்தலால், அலகு கொடிறு எனப்படுதல் காண்க. (கொடிறு-குறடு). கவ - கவை = கவ்வும் அலகு போன்ற சவட்டை, கிளை. கவ-கவவு =கவட்டை. கவர்தல்=கவ்வும் அலகு போற் பிரிதல். கவர்=பிரிவு. கவை, கிளை. கவராசம் = இரு கவருள்ள கருவி. (Divider). கவ்வு - கப்பு = கிளை. (கவள்) - கவடு = கவை போன்ற தொடைச்சந்து, கவர், கவட்டை, கிளை. கவடு-கவட்டி=கவை. தொடைச் சந்து, கவடு - கவட்டை=கவை, பிரிவு, கிளை, சுண்டுவில். (கவள்) - கவண் = கவட்டைபோன்ற கயிற்றுக்கருவி. கவண்-கவணை. கவண்-- கவண்டு - கவண்டி. கவணை கவண்டு கவண்டி என்னும் மூன்றும் கவண் என்பதன் மறுவடிவங்களே. கவ-கவான்=தொடைச்சந்து, தொடை, தொடைச் சந்துபோல் இருமலைக்குவடுகள் பொருந்திருக்கும் இடம். கவ-கவல். கவலுதல்=பல கவர்படுதல். பலகவர் படுதல் போலப் பல நினைவுகொண்டு கலங்குதல். கவல் - கவலை = கவை, கிளை, கவர்த்த வழி, பல நினைவுக்கலக்கம், அக்கறை. கவல்-கவலி. கவலித்தல் = கவலைப்படுதல். கவ்-கவ்வை=கவலை, கவலைப்பட்டுச் செய்யுங்காரியம், காரியம், வேலை. கவ் - கவை = காரியம். ஒரு காரியத்திற்கும் பயன்படாத வனைக் கவைக்குதவாதவன் என்பர். கவலி-கவனி. கவனித்தல் = கவலையோடு (கருத்தோடு) பார்த்தல். கவனி-கவனம். (மு.தா). வாய்ச்செய்கை யொலிச்சொற்கள் மாந்தன் இயற்கையாகவும் செயற்கையாகவும் தன் வாயினாற் செய்யும் சில செய்கைகளும் சைகைகளும், ஒவ்வோர் ஒலியைப் பிறப்பித்தற் கேற்ற வாய்வடிவை யமைத்து, அவ் வொலிகளின் வாயிலாய் அச் செயல்களைக் குறிக்கும். சொற்களைப் பிறப்பித் திருக்கின்றன. அச் சொற்கட்கு மூலமான அவ்வொலிகள் வாய்ச் செய்கை யொலிகளாம். அவ்(வு) ஒன்றைக் கவ்வுதலை யொத்த வாய்ச்செகைநிலை, அவ் என்னும் ஒலியைத் தோற்றுவித்தற் கேற்றதாதல் காண்க. மேல்வாய்ப் பல் கீழுதட்டொடு பொருந்துவதே கவ்வும் நிலையாம். இந் நிலை வகரமெய்யொலிப்பிற்கே ஏற்கும். பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும். (தொல். 98) மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (நன். 85) அவ் - கவ் - வவ். அவ் - அவ்வு - கவ்வு - வவ்வு. முதற்காலத்தில் அவ் என்னும் வடிவே. வாயினாலும் கையி னாலும் மனத்தாலும் பற்றும் மூவகைப் பற்றையும் குறித்தது. பிற்காலத்தில் அவ்வுதல் என்னுஞ் சொல் மனத்தினாற் பற்று தலுக்கும், கவ்வுதல் என்னுஞ் சொல் வாயினாற் பற்றுதலுக்கும், வவ்வுதல் என்னுஞ் சொல் கையினாற் பற்றுதலுக்கும் வரை யறுக்கப் பெற்றன. ஆயினும், இன்றும், அவ்வுதல் என்பது உலக வழக்கில் வாயினாற் பற்றுதலை உணர்த்தும். எ- கா: கன்று புல்லை அவ்வித் தின்கிறது. அவ் - ஔ, கவ் - கௌ, வவ் - வௌ. அவ்வு - ஔவு, கவ்வு - கௌவு, வவ்வு - வௌவு. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56) என்பதற் கொத்து, அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஔஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்றொரு நூற்பாவும் இருந்திருத்தல் வேண்டும். கன்று புல்லை ஔவித் தின்கிறது. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி. 70) தெ. கவியு வௌவிய வஞ்சி வலம்புனைய (பு.வெ. 3:2) வாய் ஒன்றைக் கௌவும்போது மேல்வாயும் கீழ்வாயும் குறட்டின் ஈரலகுபோன்ற பற்றுவதால், கவ்வுதல் (அல்லது கௌவுதல்) என்னும் சொற்குக் குறடுபோற் கவைத்திருத்தல் என்னும் கருத்துத் தோன்றிற்று. வாயின் கவைத் தன்மையை, மாந்தன் வாயினும் விலங்கு மூஞ்சியும், விலங்கு மூஞ்சியினும் பறவை மூக்கும் தெளிவாய்க் காட்டும். அவ் என்னும் சொல்லினின்று, வாயினாற் பற்றுதலையும் மனத்தி னாற் பற்றுதலையுங் குறிக்கும் சில சொற்கள் தோன்றியுள்ளன. அவக்கு என்பது விரைந்து கௌவுதலையும், அவக்காசி என்பது விரைந்து கௌவும் ஆசையையும் உணர்த்தும். அவ் - அவா - அவவு. அவவுக்கை விடுதலு முண்டு (கலித். 14) அவவு - அவாவு. அவாவுதல் = விரும்புதல். அவாய்நிலை = ஒரு சொல் தன்னொடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய இன்னொரு சொல்லை அவாவி(வேண்டி) நிற்றல். அவாவு - ஆவு. ஆவுதல் = விரும்புதல். செந்நெலங் கழனிச் செய்வேட் டாவிய மறையோன். (உபதேசகா. சிவத்துரோ. 12)) ஆவிச் சேர்ந்து கட்டினான் என்பது உலக வழக்கு. ஆவு - ஆவல். ம. ஆவல். கவ்வு என்னும் சொல்லினின்று, கௌவுதற் கருத்தை அடிப்படை யாகக் கொண்ட சில சொற்களும், கவைத்தற் கருத்தை அடிப் படையாகக் கொண்ட பல சொற்களும், கையினாற் பற்றுதலைக் குறிக்கும் சில சொற்களும், மனத்தால் அல்லது மனத்தைப் பற்றும் சில சொற்களும் தோன்றியுள்ளன. கௌவுதல் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய். (நாலடி. 322) கவுள் = கன்னம். கண்ணீர் கவுளலைப்ப (சீவக. 2050) கவளம் = கௌவும் அல்லது வாய்கொள்ளும் அளவான உணவுருண்டை. கவளம் = கவழம். கவழ மறியான் கைபுனை வேழம் (கலித். 80) கவ்வு - கப்பு. கப்புதல் = கெள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல் அல்லது விழுங்குதல். அவல்பொரி கப்பிய கரிமுகன் (திருப்பு. விநாயகர். 1) கவியம் = கடிவாளம்(பிங்). கவியம் - Pkt. kaviya. கவிகம் = கடிவாள இரும்பு. கவிகம் - Skt. kavika. கவைத்தல் கவ் - கவல் - கவர். கவ்வு - கவட்டை. கவர்தல் = பல காலாகப் பிரிதல். காவிரி வந்து கவர்பூட்ட. (புறம. 35:8) கவர்த்தல் = 1. வழிகள் பிரிதல். அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும். (சிலப். 11:73) kh., தெ. கவ, க. கவலு. 2. கவடுபடுதல். கவர் = 1. நீர்க்காற் கிளை. தெற்குநோக்கி நீர்பாய்கிற கவருக்கு (S.I.I.iii, 45) 2. பல்பிரிவு. மகளிர் நெஞ்சம்போற் பலகவர்களும் பட்டது. (சீவக. 1212). 3. மரக்கிளை. 4. சூலக்கிளையலகு. ம., தெ., து. கவ. க. கவல். கவர்க்கால் (கவராயுள்ள முட்டுக்கட்டை, சுவையுள்ள மரம், கிளை வாய்க்கால்), கவர்க் குளம்பு, கவர்ச்சுத்தியல், கவர்த்தடி, கவர்நெறி, கவராசம் (divider) முதலிய சொற்களை நோக்குக. கவர்படு பொருண்மொழி = பல்வேறு பொருள்தரும் சொல் அல்லது சொற்றொடர். கவர்கோடல் = பலவாறாகக் கருதி ஐயுறல். கவர்கோடல் தோன்றாது. (மணிமே. 27: 22) கவடு = 1. மரக்கிளை, கவருள்ள மரக்கிளை. காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட்டு. (சீவக. 1389) 2. தொடச்சந்து. கவடு நுழைந்த பயல் என்பது உலக வழக்கு. கவட்டி = ஓர் எட்டு. 3. பகுப்பு. கவடுபடக் கவைஇய...... உந்தி. (மலைபடு. 34) தெ. கவட்ட. கவட்டடி = மரக்கிளைக் கவர், கவை. ம. கவ, க. கவத்த. கவட்டை = கவை, கவண். கவண் = கவைபோல் இருபுறமும் கயிறு அல்லது வாருள்ள கல்லெறி கருவீ. கடுவிசைக் கவணி னெறிந்த சிறுகல். (அகம். 292) ம. கவண், க., து, கவணெ. கவண் - கவணை. கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும். (கலித். 23) கவண்-கவண்டு-கவண்டி. கவணம் = சீலைத்துணியை இரண்டாகக் கவர்படக் கிழித்துக் கட்டும் காயக்கட்டு. கவணி = கவணத்திற்கு குதவும் மெல்லிய சீலை. ம. கவணி. கவணை = கவைபோல் அமைக்கும் மாட்டுத்தொட்டி. கவையணை-கவணை. தெ. கவணமு. கவடு-கவடி = பிளவுபட்ட பலகறை. k., க. கவடி, தெ. கவ்வ (gavva). கவடி - காடி = மாட்டுத்தொட்டி. கவளி = 1. கவண்போல் அமைத்துத் தூக்கும் பொத்தகக் கட்டு. புத்தகக் கவளி யேந்தி. (பெரியபு. மெய்ப் 7) 2. புத்தகக் கட்டுப்போன்ற வெற்றிலைக் கட்டு. கவளி-கவளிகை = சிறு கவளி. புத்தகங் கட்டி யார்த்த கவளிகையே கொலோ. (சேதுபு.இராமதீர். 49) ftËif-Skt. kavalika (கவலிக்கா). கவான் = 1. கவைபோன்ற தொடைச்சந்து, தொடை. கழுமிய வுவகையிற் கவாற்கொண்ட டிருந்து. (மணிமே. பதி. 27) 2. தொடைச்சந்து போன்ற மலைப்பக்கம். மால்வரைக் கவான். (பட்டினப். 138) கவை = பிளவு, பிரிவு, கவர், கிளை, கவட்டை. கவைக்கால், கவைக்குளம்பு, கவைக்கொம்பு, கவைக்கோல், கவைத்தாம்பு, கவைத்தாளலவன் (பெரும்பாண். 208). கவைநா, கவைமுட் கருவி, கவையடி முதலிய தொடர்ச்சொற்களை நோக்குக. ம. கவ. கவ்வு-கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு. கப்புங் கவரும் என்பது உலக வழக்கு. கப்பு-கப்பி. கப்பித்தல் = கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது. (பெரும்பாண். 208, உரை) கப்பு-கப்பை. கப்பைக்கால் = கவட்டுக்கால். கவ்வு-காவு. காவுதல் = 1. தண்டின் இருபுறமும் கவைபோற் கலத்தை அல்லது பொருளைத் தொங்கவிட்டுத் தோளிற் சுமத்தல். காவினெங் கலனே. (புறம். 206) 2. தோளிற் சுமத்தல், சுமத்தல். ஊனைக் காவி யுழிதர்வர் (தேவா. 338:1) காவு + அடி = காவடி = 1. காவுதடி. 2. முருகன் காவடி 3. சோற்றுக் காவடி. 4. தண்ணீர்க் காவடி. காவடி-காவட்டு = கள்ளுக் காவடி. காவு-கா = 1. காவடித் தண்டு. காமமு நாணு முயிர்காவாத் தூங்கும். (குறள். 1163) 2. காவடி போன்ற துலாக்கோல். 3. துலாம் போன்ற ஒரு நிறை. காவென் நிறையும். (தொல். எழுத்து. 169) கப்பு = காவுந்தோள். கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த. (திவ். பெரியாழ். 3 : 1 : 5) கவல்-கவலை = 1. மரக்கிளை(பிங்.). 2. கவர்த்த வழி, பல தெருக்கள் கூடுமிடம். மன்றமுங்கவலையும்..... திரிந்து. (சிலப். 14: 24). கவலை முற்றம். (முல்லைப். 30) 3. மனக்கவற்சி, மனவருத்தம் (கவர்த்த எண்ணம்). ம. கவல. 4. அச்சத்தோடு கூடிய அக்கறை. கவலுதல் = கவலாறாகக் கருதி வருந்துதல். க. கவலு. கவல்-கவலம், கவலை. கவல்-கவலி. கவலித்தல் = fவலுதல்.fit = fரிசனை,mக்கறை.f›it = கவலை. கவ்வையாற் கலங்குமனம். (திருக்காளத். பு. 18 : 27). கைப்பற்று கவ-கவவு = 1. கையால் தழுவுதல். கண்ணு நுதலுங் கவுளுங் கவவியார்க்கு. (கலித். 83 : 17). 2. முயங்குதல் கவவிநாம் விடுத்தக்கால். (கலித். 35) கவவொடு மயங்கிய காலை யான். (தொல். பொருள். 173). இரு கையாலும் தழுவுதல் ஈரலகாற் கவ்வுதல் போலிருத்தல் காண்க. 3. அகத்திடுதல். கவவகத் திடுதல். (தொல். சொல். 357) செவ்வாய் கவவின வாணகை. (திருக்கோ. 108) 4. உள்ளீடு. கவவொடு பிடித்த வகையமை மோதகம் (மதுரைக். 626) கவவுக்கை = அணைத்த கை. திங்கண் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய். (சிலப். 7: 52) கவர்தல் = 1. முயங்குதல். கவர்கணைச் சாமனார் தம்முன் (கலித். 94 : 12) 3. பறித்தல், பறித்துண்ணுதல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (குறள். 100) 4. கொள்ளையடித்தல். வீடறக் கவர்ந்த வினைமொழிந் தன்று (பு.வெ. 3 : 15, கொளு) 5. பெறுதல். வறியோர்கவர....எறிந்து (தஞ்சைவா. 20) கவர்ந்தூண் = அடித்துண்ணும் உணவு. பசியெருவை கவர்ந்தூ ணோதையும் (மணிமே. 6 : 117) கவைத்தல் = 1. அணைத்தல். ஒவ்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ (குறிஞ்சிப். 185) 2. அகத்திடுதல்.ஆரங் கவைஇய மார்பே (புறம் 19 : 18)கவறு = 1. பிறர் பொருளைக் கவரும் சூதாட்டம்................................. கள்ளுங் கவறுந் திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள். 920) 2. சூதாடு கருவி. அரும்பொற் கவறங் குறள (சீவக. 927) மனப்பற்று கவர்தல் =விரும்புதல். கவர்வுவிருப் பாகும் (தொல். சொல். 362). கவவுதல் = விரும்புதல். கலிங்கம்............ கவவிக் கிடந்த குறங்கினாள் (சீவக. 1058) கவர்ச்சி = விருப்பம். கவர்ச்சி = மனத்தை இழுக்கை. கப்பு = கவர்ச்சி. கப்பின்றா மீசன் கழல் (சிவ. போ. 11, 5, வெண்.) கவ - க.காதல் = விரும்புதல்,nguன்புகெhள்ளுதல்.கா - காவு. காவுதல் = நச்சுதல். தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள் (தேவா. 338 : 1) கா + அம் - காம் = விருப்பம், காதல். ஒ. நோ : ஏ + உம் = ஏம் - யாம் - நாம். காம் + உறு = காமுறு. காமுறுதல் = 1. விரும்புதல். இன்பமே காமுறுவ ரேழையர் (நாலடி. 60) 2. வேண்டுதல். கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலித். 16) காம் - காமு - காமம். ஒ. நோ : விழு - விழும் - விழுமு - விழுமம். குழு - குழும் - குழுமு - குழுமம், பரு - பரும் - பருமு - பருமன். காமு - காமுகம் - காமுகன் - Skt. kamuka (காமுக்க). காம் + மரு - காமரு - காமர் = விரும்பத்தக்க, அழகிய. காமர் கடும்புனல் (கலித். 39) காமர் கயல்புரள (நளவெ.) காம் + அர் - காமர் = காமுகர். காம் + இ - காமி = காமுகன். களிமடி மானி காமி கள்வன் (நன். 38). காமி - Skt. kamin (காமின்). காமித்தல் = 1. விரும்புதல். ஒ.நோ: காதல் - காதலி. தப்புதி யறத்தை யேழாய் தருமத்தைக் காமி யாதே (கம்பரா. நிந்த. 54) 2. காமங் கொள்ளுதல். காமம் = கணவன் மனைவியரிடைப்பட்ட காதல், மணம். காமத்துப்பால் என்னும் திருக்குறட் பகுதிப் பெயரை நோக்குக. சிவகாமி = சிவனைக் காதலிக்கும் மலைமகள். ஒ. நோ: வேட்டல் = விரும்புதல், காதலித்தல், வேள் = திருமணம். காமம் - Gk. gamos (marriage), Skt. kama. (காம). காமம் என்னும் சொல் முதற்காலத்திற் பொதுவான ஆசை யையே குறித்தது. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (குறள். 360) நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (குறள். 605) என்னும் குறள்களை நோக்குக. பிறகாலத்தில், அச் சொல் காதல் என்னும் சொற்போல் ஆட வரின் பெண்ணாசையை யும் பெண்டிரின் ஆணாசையையும் சிறப்பாய்க் குறிக்கலாயிற்று. அப் பொருளிலும், உயரிய இரு தலைக் காமத்தையும் ஒருமனை மணத்தையுமே குறிக்க அது திருவள்ளுவரால் ஆளப்பெற்றது. ஆயின், இன்று, அது இடங் கழியையும் இணைவிழைச்சு விருப்பத்தையுமே குறிக்குமளவு இழிபடைந்துள்ளது. காமம்-காமம் = மணக்காதல் உண்டாக்கும் தெய்வம். The Indian Cupid. fhk‹-Skt. kama (காம). வாரணம் வாரணம்-வாருண, வருண வரிதல்=வளைதல். வரி-வார்-வாரணம்=நிலத்தைச் சூழ்ந்துள்ள கடல், "வாரணஞ் சூழ்புவி" (தனிப்பாடல்). வாரணம் வாரணன் = கடல்தெய்வம். வடவர் வ்ரு (கவி, மறை, சூழ்) என்பதை மூலமாகக்காட்டி அனைத்தையும் மூடும் வானம் ("All-enveloping sky" என்று பொருள் கூறுவர். இது வருணனை மழைத் தெய்வ மாகக் கொண்ட இடைக்காலத்திற்கு மட்டும் பொருந்துமே யன்றி, கடல் தெய்வமாகக்கொண்ட முற்கால பிற்கால நிலை மைக்குப் பொருந்தாது. தமிழர் வாரணனை என்றும் கடல்தெய்வமாகவே கொண்டனர். வருணன் மேய பெருமண லுலகமும். (தொல். 951). இது வாரணன் மேய நீர்மண லுலகமும் என்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியர் வருண என்னும் வடசொல் வடிவிற்கேற்ப வருணன் என்று திரிந்துக்கொண்டார். வடவர் காட்டும் வ்ரு என்னும் மூலத்திற்குச் சூழ்தற் பொருளு முள்ளது. இனி, வரி என்னும் தமிழ்ச்சொற்கு மூடுதற் பொருளுமுள்ளது. வரிதல்=மூடுதல். புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய். 5 : 1 : 5). வளைவுக் கருத்தடிப்படையிலேயே, வாரணம் என்பது கேடகத் தையும் சங்கையும் குறிக்கும். (வ.வ: 257). வாரி வாரி-வாரி (இ. வே.) வார்தல்=ஒழுகுதல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள. (தொல். 800). வார்-வாரி=நீர், வெள்ளம், கடல், நீர்நிலை. வார் = நீர். வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத அருச்சுனன்றவ-159). (வ.வ: 257) வாலம் வாலம்-வால, பால (b), வார வார்-வால்=நீண்ட வுறுப்பு. ஒ. நோ: நீர்-நீல். வால் குழைக்கு நாய் (நாலடி. 213). வால்-வாலம்=1. வால். வாலமும் பணமு மிருங்கையிற் பற்றி (காஞ்சிப்பு. மணிகண். 14) வ. வ-17. 2. நீண்டு ஒடுங்கிய துணி அல்லது கந்தை. வாலமுகம்=நீண்டமுகம் (உ.வ.). (வ.வ: 257-258). வாலுகம் வாலுகம்-வாலுக, பாலுக (b) = மணல் வால்=வெள்ளை. வாலுகம்=வெண்மணல். வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பின். (சிலப். 6: 121). மா. வி. அ. "of doubtful derivation" என்று குறித்திருத்தல் காண்க. (வ.வ : 258). வாழ்த்துரை வகைகள் இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து என வாழ்த்துரை மூவகைப்படும். ஒருவருடைய சிறந்த பண்புகளையும் அரிய ஆற்றல்களையும் எடுத்துரைத்துப் புகழ்வது அல்லது வாழ்த்துவது, இயன்மொழி வாழ்த்து. அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும். (தொல்.புறத் : 35) மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன். இயல்பே மொழியினும் அத்துறை யாகும். (பு.வெ. 9:195) கடவுள் (அல்லது நீ வணங்கும் தெய்வம்) உன்னைப் பாதுகாக்க, நீ வழிவழி செல்வத்தோடு சிறந்து விளங்குக என்று, ஒருவரை வாழ்த்துவது புறநிலை வாழ்த்து. வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே..... (தொல்.செய். 109). நோயாளிக்கு முன்பு கசப்பாகவும் காரமாகவுமிருந்து வருத் தினும், பின்பு நலம் பயக்கும் மருந்து, போன்று. நெறி தவறிய வருக்கு அல்லது அறியாதவருக்கு முன்பு கேட்பதற்கு வெறுப்பாக இருப்பினும், பின்பு நன்மை பயக்கும் நல்லறிவுரை கூறுவது வாயுறை வாழ்த்து. வாயுறை, மருந்து. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்(று) ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. (தொல்.செய்.111) வாழ்த்துதல் என்பது ஒருவரை நலமாக நீடு வாழவைத்தல், அது. முற்றத் துறந்த முழு முனிவரான நிறைமொழி மாந்தர் அல்லது ஆன்றவிந் தடங்கிய சான்றோர் "நீடு வாழ்க" என்று சொல்வ தனாலும், முதறிஞர் கூறும் அறவுரை அல்லது அறிவுரையாலும் நிகழும். தனிப்பட்டவர்க்கு இவ்விரு வழியும் இயலும்: ஒரு தொகுதியார்க்கோ பின்னதே ஏற்கும். திருவள்ளுவர், உலகினர் அனைவர்க்கும், சிறப்பாகத் தமிழர்க்கு, உரைத்த அறவுரையும் அறிவுரையுமான திருக்குறள், திருவள்ளுவ மாலையில் மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் புலவர் பெயரிலுள்ள. இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும் மன்பதைக் கெல்லாம் மனமகிழ-அன்பொழியா துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து. என்னும் வெண்பாவின்படி, `வாயுறை வாழ்த்து' எனப்படினும் உண்மையிற் `புறநிலை வாழ்த்து'ங் கலந்ததேயாகும். இயன்மொழி வாழ்த்திற் கடவுள் வாழ்த்தும் அடங்குவதனாலும், கடவுளை ஒருவர் புகழ்வதன்றி வாழவைத்தல் என்பது பொருந் தாமையாலும், மாந்தரைப் புகழ்வதற்கும் கடவுளைப் புகழ்வதற் கும் வேறு பாடுண்மையாலும், கடவுள் வாழ்த்திலுள்ள சிறப் பான அச்சத்தோடு கூடிய அன்பு வணக்கத்தைக் குறித்தற்கு. வாழ்த்து என்னும் சொல்லின்று வழுத்து (வ. துதி) என்னும் சொல் திரிக்கப்பட்டது. வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று. (குறள். 1317) என்னும் திருக்குறளில், வழுத்தினாள் என்னுஞ் சொல்லை வாழ்த் தினாள் என்னும் பொருளில் திருவள்ளுவர் ஆண்டி ருப்பினும், அதைப் பாவலன் உரிமை (poetic licence) யென்றே அமைத்தல் வேண்டும். கடவுளை வழுத்தும் சிறப்பான கலிப்பா வகைகள் தேவபாணி யெனப்படும். ஆரியர் தமிழகம் வந்தபின் "வருணப் பூதர் நால் வகைப் பாணியும்" (சிலப். 6, 35-6) எனச் சிறுதெய்வ வழுத்தும் தேவபாணியெனப்பட்டமையால், முத்தொழில் புரிவோன் என்னுங் கொள்கைபற்றிக் கடவுளையொத்த சிவன் அல்லது திருமால் வழுத்துகள் பெருந்தேவபாணியெனப்பட்டன. கோட்டம் 2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கோட்டம் என்று பெயர் குறிக்கப்பெற்ற கோயில்கள் புறநிலைக் கோட்டம் (சிலப். 5: 180) = ஸ்ரீ கோயில் என்னும் அருகன் கோயில். அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம். (சிலப். 9 : 9-13). அமரர்தரு = தேவருலகத்துக் கற்பக மரம். வெள்யானை = ஐராவதம் என்னும் தேவர் கோனின் வெள்ளையானை. வெள்ளை நாகர் = வெண்ணிறப் பலராமர். உச்சிக்கிழான் = கதிரவன். ஊர் = சிவனிருக்கையாகிய கைலாயம் என்னும் வெள்ளிமலை. வேல் = வேலன் என்னும் முருகன். வச்சிரம் = தேவர் கோன் வயிரப் படைக்கலம். புறம்பணையான் = ஊர்ப் புறத்தையடுத்த ஐயனார் என்னும் சாத்தன். காமவேள் கோட்டம் (சிலப். 9 : 60). மணிவண்ணன் கோட்டம் (சிலப். 10 : 10) = திருமால் கோயில். ஐயை கோட்டம் (சிலப். 12 : 4) = காளி கோயில். பத்தினிக் கோட்டம் (சிலப். 30 : 51) = கண்ணகி கோயில். சுடுகாட்டுக் கோட்டம் அல்லது சக்கரவாளக் கோட்டம் (மணி. 6:30-1) = உலகம் முப்பத்தொன்றையும் தன்னுள்ளடக்கிய சக்கரவாளம் என்னும் கோளத்திலுள்ள, எல்லாத் தேவர்க்கும் பூம்புகார்ச் சுடுகாட்டையடுத்துச் சமைக்கப்பட்ட மாபெருங் கோயில். முதியோள் கோட்டம் (மணி: 22:3) = நாவலந் தேயக் காவல் தேவியாகிய சம்பாபதி கோயில். இனி, இறந்துபோன அந்தணர்க்கும் அரசர்க்கும் கற்புடைப் பெண்டிர்க்கும். உற்றா ருறவினராற் சமைக்கப்பட்ட பள்ளி படைகளும் (சமாதிகளும்) கல்லறைகளும், கோட்டமென்றே மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ளன. அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் .............................................................................................................................. இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலை கோட்டமும. (மணி. 6: 54-59). இனி. இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின் சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார். (மணி. 203-4) என்று, சுடலையும் கோட்டமென்றே குறிக்கப்பட்டிருப்பதால், மதிலால் அல்லது வேலியாற் சூழப்பட்ட எவ்விடமும் கோட்டம் என்னும் பெயருக்குரியதென்பது அறியப்படும். வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள் மக்களின் மண்ணுலக வாழ்நாட் பேரெல்லை வரவரக் குறைந்து, இன்று நூறாண்டாகக் கொள்ளப்படுகின்றது. "மாந்தர்க்கு வயது நூறல்ல தில்லை" என்பது கபிலரகவல். ஒருவர் தாம் நினைத்தவுடன் எதிர்வந்து நிற்கும் உறவினரையோ நண்ப ரையோ பார்த்து, உங்கட்கு அகவை நூறு (நூறாண்டு) என்பது உலக வழக்கு. `மக்கள் நூறாண்டு வாழ்க்கை' என்று ஒரு நூலும் மறைமலையடிகள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்னும் உண்மையினாலும், பிள்ளை பிறந்து ஓராண்டிருப்பதும் உறுதியன்மையாலும், கருவி லேயே இறந்து சாப்பிள்ளையும் வெளிப்படுவதனாலும், கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு, முக்கால் நூற்றாண்டு, நூற் றாண்டு முதலிய பல்லாண்டு வாழ்வுகள் மட்டுமின்றி, பிறந்த நாளும் ஆண்டு நிறைவு நாட்களும் பெரும்பாலும் செல்வப் பெற்றோரால் அல்லது உற்றோராற் கொண்டாடப்படுகின்றன. குழவியோ பிள்ளையோ இளந்தையரோ வளர்ச்சி முற்றிய ஆளோசேதமின்றிக் காக்கப்பட்டு வந்தமைபற்றி, இறைவனுக்கு நன்றியொடு காணிக்கை செலுத்துவதும், இயன்றளவு பணஞ் செலவிட்டு உற்றார் உறவினருடன் உண்டாடி மகிழ்வதும், இக் கொண்டாட்டங்களின் நோக்கமாகும். அரசன் அல்லது அரசி பிறந்தநாள் ஆட்டை விழா, நாண் மங்கலம் என்றும், வெள்ளணி விழா என்றும் சொல்லப்பெறும். மேனாடுகளில் தோன்றிய கால் நூற்றாண்டு விழா வெள்ளிவிழா (Silver Jubilee) என்றும், அரை நூற்றாண்டு விழா பொன் விழா (Golden Jubilee) எனப்படும். விகுத்தோரியா (Victoria) அரசியார் ஆட்சியின் அறுபான் ஆட்டை விழா 1987-ஆம் ஆண்டு கொண் டாடப்பட்டது. வயிர விழாவை மணிவிழா என்றுங் கூறலாம். அறுபது நாழிகை ஒரு நாளென்றும், அறுபது நாள் ஒரு பெரும்பொழுது என்றும் காலக் கணிப்புண்மையும் `அறுபதிற்கு மேற் கிறுகிறுப்பு' என்னும் கீழ்நாட்டுக் கொள்கையும், வலு விறக்கத் (Climacteric) தொடக்கம் அறுபதாமாண் டென்னும், மேனாட்டுக் கொள்கையும் கி.மு. 57-ல் தொடங்கிய விக்கிரம சகாத்தம் என்னும் அறுபானாண்டு மானத்திற்கும், அறுபா னாட்டை விழாவிற்கும் கரணியமா யிருந்திருக்கலாம். முக்கால் நூற்றாண்டிற்கும் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட எண்பான் ஆட்டை விழாவைக் கதிரிய விழா (Radium Jubilee) என்னலாம். நூற்றாண்டிற்கு மேற்பட்ட கால விழாவை அருட்கதிர் விழா எனல் தகும். இரசிய தேசச் சாக்சியா நாட்டு சிராலி மிசிலிமோவ் (Shirali Mislimov) என்பவர் 168 ஆண்டுகளும் அவருடைய துணைவியார் பக்கு தாழி (Baku Tadzhi) என்பார் 107 ஆண்டுகளும் வாழ்ந்தனர். வாழ்வரசி மனைக் கிழத்தியை வாழ்வரசி என்பது நெல்லை நாட்டு வழக்கு. (த.தி. முன் vi) வாழையடி வாழை தந்தை மகன் வழிமுறையாக அல்லது ஆசிரிய மாணவ வழிமுறை யாகத் தொடர்ந்துவரும் வரன்முறையை வாழையடி வாழை முறை என்பர். வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் (சொல். 4) என்றார் இராமலிங்க அடிகளும். வாளம் வாளம்-வால வள்-வாள்-வாளம்=வட்டம், வட்டமான மதில், மதில் போன்ற மலைத்தொடர். (வ.வ: 258) வாளி வாளி1- பாலி வூள்-வாள்-வாளி=வட்டமாயோடுகை. மாதிர முறப்பல வாளி போதுமால் (பாரத. சூது. 121). வாளி வெம்பரி (பாரத. குரு. 108). மா.வி.அ. சுற்றளவு (Circumference) என்று மட்டுங் குறித்துள்ளது. வாளி2 - வாலீ வள்-வாள்-வாளி=வளையம், வளைந்த அல்லது வளை வடிவான காதணி. வாளிமுத்தும் (குமர. பிர. முத்து. பிள். 11). (t.t.: 258) வாளிகை வாளிகை-வாலிகா வாளி-வாளிகை=வளைய வடிவான காதணி. சுட்டிகையும் வாளிகையும் (பதினொ. திருக்கைலாய. 68). (வ.வ: 258) வான் சுடர் : வெள்ளி - வெண்மையாக இரவில் தெரியும் சிறு சுடர்ப் பொதுப் பெயர். நாள் - இருபத்தேழு நாண் மீன்களின் பொதுப்பெயர். கோள் - ஏழு கோள்களின் பொதுப் பெயர். மீன் - நாள்மீன் அல்லது கோள்மீன். ஓரை - பன்னீர் இராசியின் பொதுப் பெயர். (சொல். 41). விக்கல் விக்கல்-ஹிக்கா விக்கு-விக்குள், விக்கல். உண்ணுநீர் விக்கினா னென்றேனா (கலித். 51). நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் (குறள். 355). நெஞ்சே விக்கல் வராது கண்டாய். தெ. வெக்கில்லு, க. பிக்கலு (b), ம. எக்கில் E hicker, hiccup, hiccough. (வ.வ: 258-259) விக்குள்: விக்கு--விக்கல்-விக்குள் (ஒலிக்குறிப்புச்சொல்) விக்கல்-ஹிக்கா (வ.), E hiccup. hiccough. இவ்வொலிக்குறிப்புச்சொல் குமரிநாட்டிலேயே தோன்றிவிட்டது. ஆதலால் அதன் திரியே ஆங்கிலச்சொல்லும் வடசொல்லும். விகுதி வேறுபாட்டால் நுண்பொருள் வேறுபாடு: வாழ்தல் - வசித்தல் : வாழ்க்கை - உயிரோடு இருக்கும் காலம்; வாழ்வு - இன்பமாக அல்லது சிறப்பாகப் பிழைத்தல்; வாழ்ச்சி - வாழுமிடம்; நிறுத்தல் - துலைக்கோலில் தூக்குதல்; நிறுத்தல் - படுக்கையில் கிடப்பதை நட்டுக்கு நிற்கவைத்தல்; நிற்பித்தல் - ஒருவனை நிற்க வைத்தல்; நிற்பாட்டல் - ஒரு காரிய நிகழ்ச்சியைத் தற்காலிக மாவது நிலையாகவாவது நீக்குதல். விட்டம் வட்டம்-விஷ்ட விள்-விடு-விட்டம். விள்ளுதல்=பிரிதல். விடுதல்=பிரித்தல். விட்டம்=1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப் பிரிக்கும் கோடு. 2. குறுக்குத்தரம் இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகம். 167). குருட்டுப் பூனை விட்டத்திற் பாய்ந்தது போல. (பழமொழி). (வ.வ. 259) விட்டை விட்டை-விஷ்டா விள்ளுதல்=நீங்குதல், வெளிப்படுத்துதல். விள்-விட்டை. கழுதை விட்டையைக் கைநிறைய ஏந்தினாற் போல (பழமொழி). வடவர் விஷ்3 என்பதை மூலமாகக் காட்டி, அதன் புணர்ப்புத் திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர். விள்-விஷ் (மலம்). ஓ. நோ: உள்-உஷ், சுள்-சுஷ். விள்-விண். பிள்-விள். பிள்-(பிய்)-பீ. பிள்-பீள்-பீளை = கண்மலம். (வ.வ : 259) விடலை விடலை. (L. vitula, Gk italos, S. vatsa. விடை என்பது விலங்கினத்தின் ஆண்பாலைக் குறிக்கும் பொதுச் சொல்லாயினும், வழக்கு மிகுதிபற்றிச் சிறப்பாகக் காளையையே உணர்த்தும். வடவர் காட்டும மூலம் வ்ருஷ் (மழைபெய்) என்பதே. மழைக் கருத்தினின்று, ஆண்மைக் கருத்தை இருவேறு வகையில் கடுகள வும் பகுத்தறிவிற் கொவ்வாதவாறு வலிந்து வருத்தியிருக்கின்றனர். வ்ருஷ்=மழைபெய் (இ. nt.), மழைபோல் அம்பைப் பொழி, ஆண்மைகொள், பிறப்பிப்பு ஆற்றல் பெறு. வ்ருஷன்-("ஒருகால், முதலில் `பெய்கின்ற, தெளிக்கின்ற, சினைப் பிக்கின்ற') ஆண்மை யுள்ள, வலிமையுள்ள, மைந்துள்ள (இ.வே); ஆடவன், ஆண், ஆண்விலங்கு, காளை, ஆண் குதிரை, தலைவன். வ்ருஷ=ஆடவன், ஆண், கணவன், ஆண்விலங்கு, காளை, விடையோரை, தலைவன், தலைசிறந்தது. வ்ருஷப (bh) = வ்ருஷன் (இ. வே.). வ்ருஷப-ருஷப=காளை (இ. வே). (வ.வ) வ்ருஷப என்பதன் முதற்குறையே ருஷப என்பது. ஆயினும், வடவர் அது வந்த வழியை அறியாமலோ, வடசொல்லாகக் காட்டல் வேண்டி வேண்டுமென்றோ, ருஷ்2 என்பதை ருஷப என்னும் வடிவிற்கு மூலமாகக் காட்டுவர். ருஷ்2 = செல், இயங்கு; குத்து, கொல்; உந்து, தள். விடை என்னும் சொல்லின் திரிபாதலாலேயே, வ்ருஷ என்பதில் வகரமுள்ளது. ஆயின், வ்ருஷ் (மழைபெய்) என்னுஞ் சொல் லொடு அதைத் தொடர்புபடுத்தி உத்திக்கொவ்வா முறையில் பொருள் தொடர்பு காட்டினர். அதனோடமையாது, ருஷப என்னும் முதற்குறைத் திரிபையும் வேறு சொல்லாகக் கொண்டு, அதற்கும் பொருந்தா முறையிற் பொருள் பொருத்தினர். விடை என்பது கொச்சை வடிவில் விட என்று நிற்கும். இடையின விடைச் செருகல் வழக்கப்படி வி-வ்ரு என்றும், மெய்த்திரிபு மரபுப்படி ட-ஷ என்றும், திரிந்தனவென உண்மை அறிக. (வ.வ: 260-261). விடி : விடி-வ்யுஷ்டி (இ. வே.) வெ-வெளு. வெளுத்தல் = 1. வெண்மையாதல். 2. விடிதல். கிழக்கு வெளுத்தது (உ.வ.). வெள்-வெளி. வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல். 2. விடிதல். வெளி-வெடி. ஒ.நோ: வெளி-வெடி=திறந்தவெளி (பிங்.) களிறு-கடிறு, கெளிறு, கெடிறு. வெடிதல்=விடிதல். `என்றூழ் வெடியாத போதிற் கொய்தான்' (செவ்வந்திப்பு. உறையூரழி. 47). வெடி=விடிவெள்ளி (பிங்.). வெடியல்=விடியல். வெடிவு=விடிவு. வெடி-வி. விடிதல்=கதிரொளி தோன்றுதல். (வ.வ.) வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே (சீவக. 219). விடி=விடிகாலை. விடிபக லிரவென் றறிவரிதாய் (திவ். பெரிய. 4:10: 8). விடி-விடியல். "வைகுறு விடியல்" (தொல். பொ. 8). விடியல் வைகறை யிடூஉ முர. (அகம். 196). விடி-விடிவு-விடிவை. விடிவை சங்கொலிக்கும் (திவ்திருவாய் 6:1:9). மா.வி. அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு:- வ்யுஷ்1 (ப்யுஷ்)=1. எரி. 2. பிரி. 3. தள், வெளிவிடு. வி + வ2 (ஒளிர்) = வ்யுஷ்2 (vy - us) = விடியல் (அ. வே). வ்யுஷி (7-ஆம் வேற்) - இ.வே.). வ்யுஷித 7-ஆம வேற்.) = Éoaš.ங வ்யுஷ்ட = விடிந்து. வ்யுஷ்டி = விடியல் (இ.வே.). இதை நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ் என்று திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின்றனர் என்பது தெரியவருகின்றது. உள் (ஒள்) - உஷ் என்பது, முன்னரே உண்ணம் (உஷ்ண) என்னும் சொல்லின்கீழ்க் காட்டப்பெற்றது. (வ.வ : 259 - 260) விடை விடை-வ்ருஷ, வ்ருஷப விடைத்தல்=விம்முதல், பருத்தல், விறைத்தல், செருக்குதல். விலங்கினத்திற் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை என்னும் சொல் விலங்கின் ஆண்பாலை உணர்த்தும். விடை = 1. காளை. பீடுடைய போர்விடையன் (தேவா. 539 : 2). 2. எருமைக்கடா. மதர் விடையிற் சீறி (பு.வெ. 7 : 14). 3. வெள்ளாட்டுக்கடா. மாடந்தோறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33). 4. ஆண்மரை. மரையான் கதழ்விடை (மலைபடு. 331) 5. ஆண்வெருகு. வெருக்கு விடையன்ன (புறம். 324) விடை-விடலை=இளங்காளை, காளை போன்ற மறவன், பாலை நிலத் தலைவன். (வ.வ.) விண்டு விண்டு-விஷ்ணு விள்ளுதல்=விரிதல், வெளியாதல். விள்-வெள்-வெளி. விள்-விண்=1. விரிந்த அல்லது வெளியாகிய வானம். விண்பொரு புகழ் விறல்வஞ்சி (புறம். 11) 2. வானத்திலுள்ள முகில் (திவா.). 3. மேலுலகம். விண்மீதிருப்பாய் (திவ். திருவாய். 6:9:5). விண்-விண்டு=1. வானம். "விண்டுலாய் நிமிர் கிரவுஞ்சகிரி. (கந்தபு. தாரக 2)" 2. முகில் (பிங்). 3. வானளாவு மலை. விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி (மதுரைக். 202). 4. வானவெளியில் இயங்குங் காற்று (பிங்.). 5. திருமால் (பிங்.). (வ.வ.) குமரிக்கண்ட முல்லை நிலத்து மக்கள், தங்கட்கும் தங்கள் ஆடு மாடுகட்கும் இன்றியமையாத மழையைத்தரும் தெய்வமென்று கருதியே, கரிய வானத்தை அல்லது முகிலை மாயோன் (கரியோன்) என்னும் பெயரால் வணங்கிவந்தனர். ஒ. நோ: மால் = முகில், மரியோன்: இச்சொல்லே திரு என்னும் அடைபெற்றுத் திருமால் எனத் தெய்வப்பெயராய் வழங்கி வருகின்றது. ஆரியர் வேதக்காலத்தில் கதிரவனையே விஷ்ணு என்றழைத்தனர். பின்னர், தமிழரொடு தொடர்பு கொண்டு தமிழ் மதத்தை மேற் கொண்ட பின்பே, விஷ்ணு என்னும் சொல் திருமாலைக் குறிக்க லாயிற்று. வடவர் காட்டும் மூலம் விஷ்1 = வேலைசெய், ஓடு, மேம்படு, மூடு உண். மா. வி. அ. "prob. for vish/ "All-pervader' or 'Worker'" என்று கருதும். எங்கும் நிறைந்திருப்பது என்னும் கருத்தில், விஷ் என்பது விள் என்பதன் திரிபே. ஒ. நோ: உள்-உஷ், சுள்-சுஷ். (வ.வ : 261-262) வித்து வித்து என்பது முளைக்க வைக்கும் எல்லா மணிகட்கும் பொதுப் பெயராம். (சொல் : 70). வித்து (2) வித்து-(விதை)-வீஜ, பீஜ (இ. வே.) வித்து = 1. விதை. சுரைவித்துப் போலுந்தம் பல். (நாலடி : 315) 2. விந்து (நாமதுப, 601). 3. காரணம். நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் (குறள். 138). k., bjh., து. வித்து, க. பித்து. மா. வி. அ. "of doubtful origin என்று குறித்திருத்தல் காண்க. ஆங்கிலர் `மதுரையை' மெஜுரா என ஒலித்ததையும் நோக்குக. (வ.வ : 262 - 263) விதைத் தோல் வகை தொலி மெல்லியது; தோல் திண்ணமானது; தோடு சற்று வன்மையானது; ஓடு மிக வன்மையானது; சிரட்டை அல்லது கொட்டாங்கச்சி தேங்காயின் ஓடு. (சொல். 70) விதை வகை மணி விளைந்தது; பதர் அல்லது பதடி விளையாதது. (சொல். 69) விந்து விந்து-பிந்து, விந்து (அ. வே.) வித்து-விந்து=1. வித்துப்போன்ற நீர்த்துளி 2. நீர்த்துளியாகிய கருநீர் (சுக்கிலம்). 3. உலகத்திற்கு வித்துப்போன்ற மாயை. விந்துவின் மாயையாகி (சி.சி. 1 : 19). (வ.வ : 262) வியம் வியம்-வியத் (இ. வே.) விள்ளுதல்=விரிதல். விள்-(விய்) - வியம் = விரிவு. "வியம்பெறு தோற்றமும்" (திருக் காளத். பு. ஞானோப 62). வடவர் வி-யத் என்று பிரித்துப் பிரிந்து போகை என்று பொருள் கூறி, யத் என்பதற்கு இ5 என்பது மூலமெனக் காட்டுவர். இவ் `இ' என்பது இயல் என்னும் தமிழ்ச்சொல்லின் முதனிலையாகிய இய்யே என்று முன்னரே காட்டப்பெற்றது. வியம்-வியன்-வியல்=அகலம். ஒ. நோ: திறம்-திறன்-திறல். வியலென் கிளவி யகலப் பொருட்டே. (தொல். சொல். 354). வியன்=1. அகலம், 2. பெருமை (திவா.) 3. வானம். வியனிடை முழுவது கெட (தேவா. 833 : 7) (வ.வ : 263) விரவுத்திணையொலிகள் ஒலியடி வினைகள் கத்து, கூ - கூவு - கூப்பு - கூப்பிடு., (நு. உடிடி) அடி, அறை, பறை, சீறு, ஆலி, ஆரி, வீறிடு, இரை, வெட்டு. ஒலியடிப் பெயர்கள் குறட்டை, ஓ - ஓசை - ஒதை, இசை (E.hiss), ஒவ் - ஒலி, கல் - கலி, அர் - அரவம், (3) விரவுத்திணை யொலிகள் ஒலிக்குறிப்பு சொல் அ(ள்) அழு இர் இரை ஈ இயம், இயம்பு, இயங்கு*, இயை- இசை ஏ ஏங்கு (ஏங்குதல் = ஒலித்தல்) ஓ ஓசை-ஓதை. கர் கரை கூ கூ, கூவு, கூப்பு - கூப்பிடு-கூப்பீடு- கூப்பாடு ; கூச்சல், கூகை பட்டு படு (படுதல்=ஒலித்தல்) பேரோசையைக் குறிக்கும் போது, ஓகாரமும் ஓகார உயிர் மெய்யுமாகிய இடைச்சொல்லாற் குறிப்பது வழக்கம். (மு.தா.) விருத்த விலக்கணம் விருத்த விலக்கணங் கூறும் நூல்கள், காளிதாஸரின் ச்ருத போதம், கேதாரபட்டரின் விருத்தரத்நாகரம், ஸோமேந்திரரின் ஸுவிருத்த திலகம் முதலியன. வடமொழி விருத்தம் வேறு; தமிழ் மண்டிலச் செய்யுள் வேறு. பின்னதை விருத்தம் என்பது வழுவாம். விருது விருது-விருத, பிருத, பிரத வெல்-(வில்)-(விர்) - விறு-(வில்)-வீறு= வெற்றி. வீறு பெற வோச்சி (மதுரைக். 54). (விர்)-விருது=1. வெற்றிப்பட்டம். கயல்விரு தனங்கன் (தனிப்பாடல்). 3. வெற்றிச் சின்னம் பருதி.....ÉUJnk‰ கொண்டுலாம் வேனில் (கம்பரா. தாடகை. 5) வடவர் காட்டும் மூலம் :- வி-ருத் (d = அழு, கரை, எங்கு, புலம்பு, துயர்கொண்டாடு. விருத = புகழ்;சசிச் செய்யுள், பாடாண்பாட்டு, ஏத்துரை. இரங்கற் செய்யுளாகிய கையறு நிலையில் ஒரு தலைவனை அல்லது வள்ளலைப் புகழ்ந்து பாடுவது வழக்கமேனும், அழுகைக் கருத்தில் வெற்றிக்கருத்துத் தோன்றுமா என்பதை அறிஞர் ஆய்ந்து காண்க. (வ.வ : 263 - 264) விருந்தோம்பல் விரும்புவது என்னம் வேர்ப் பொருளைக் கொண்ட விருந்து என்னும் சொல், பின்பு விரும்பப் பெற்ற புதியவற்றையும், அவர் நிலைமையான புதுமையையும் அவர்களிக்கும் சிறந்த உணவை யும் முறையே குறித்து, இன்று உறவினர்க்கும் நண்பர்க்கும் படைக்கும் சிறந்த உணவையே குறிக்கும் இழிபடைந்துள்ளது. பண்டை விருந்தினர் புதியராய் இருந்தமையால் புதுவர் எனவும் பட்டார். (தி.ம. 79)