தேவநேயம் 11 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 11 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 304 = 312 படிகள் : 1000 விலை : உரு. 295/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங் கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக்கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டரு மாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர் களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை பொருளாதாரம் 1 பொழில் 9 பொழுது 9 பொற்காலம் 10 பொறு (1) 23 பொறு (2) 28 போட்டி வகை 34 போலித் தமிழ்ப்பற்று 35 மக்கள் 40 மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையா? 40 மக்கள் வாழ்க்கை முறை 43 மகட்பாற் காஞ்சி 49 மகள் 49 மகன் 49 மகுடம் 59 மங்கலம் 60 மங்கல வழக்கு 60 மசி 61 மசிர் 62 மஞ்சு விரட்டு 62 மடம் 62 மடலேற்றம் 63 மண்டலம் 63 மணநாளன்றே மண மக்களைக் கூட்டுதல் 65 மணமக்கள் 65 மணாட்டுப் பெண் 65 மணி (1) 66 மணி (2) 66 மணி வகை 66 மத்தம்(இ.வே.) 67 மத்தம்(2) 68 மத்தளம் 69 மத்தளிகன் 69 மதங்கம் 69 மதச்சீர்திருத்தம் 69 மதம் என்னும் சொல் வரலாறு 75 மதம் தோன்றிய வகை 77 மதி (1) 80 மதிப்படைச் சொற்கள் 80 `மதி விளக்கம் 85 மதுரை 90 மதுரைத் தமிழ்க் கழகம் 90 மந்திரம் 95 மயிர் 96 விளையாட்டு 96 மரப்பட்டை வகை 98 மரபியல் 98 மரபு 135 மரவகை 135 மரி 135 மருத்துவமுறை உணவு 135 மருந்து 136 மருமம் 136 மல்லன் 137 மலர் சூடல் 137 மலையம் 138 மலையாளம் 138 மலையாளச் சொல் வரிசைகள் 145 மலையாளமும் தமிழும் 158 மலைவகை 165 மறநிலைகள் 166 மறம் 166 மறமும் போரும் 166 மறுதலை வகை 171 மறுப்பு வகை 172 மறுவீடு (மருவீடு) 172 மறைமலையடிகள் மாண்பு 172 மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் 173 மன் (1) 174 மன்பதை 179 மன்னன் 179 மனச் செயல்கள் 179 மனம் 179 மனை 180 மனையறம்படுத்தல் 180 மா 181 மாக்கள் 184 மாகம் 184 மாகாளி 185 மாடு 185 மாடை 185 மாணவன் 185 `மாணவன் தென்சொல்லா? வடசொல்லா? 186 மாத்திரை (1) 191 மாத்திரை (2) 192 மாதர் 193 மாந்தம் 194 மாந்தன் செருக்கடக்கம் 194 மாந்தன் தோன்றிய வகை 201 மாந்தன் நிலைகள் 203 மாந்தன் பிரிவு நடுவம் 203 மாந்தன் பிறந்தகம் 205 மாமன் 208 மாயை 210 மாராயம் 210 மாலை 213 மாலைவகை 214 மாவலி 214 மாளிகை 215 மானம் 215 மானியம் 216 மிதி 216 மீன் 216 மீனம் 216 முக்குழியாட்டம் விளையாட்டு 217 முக் குற்றம் 217 முகடி 220 முகம் 220 முகில் 221 முகிழம் 221 முகுளி 222 முட்டி 222 முட்டு 222 முண்டம் 223 முத்தம் 225 முத்திரை 226 முத்துமாரி 226 முதலைவகை 226 முதற்றாய் மொழியின் இயல்புகள் 226 முதிர்ச்சி வகைகள் 230 முரசம் 230 முருகு முதன்மை 231 முல்1 (இளமைக் கருத்துவேர்) 235 முல்2 (முன்மைக் கருத்துவேர்) 243 முல்3 (மென்மைக் கருத்துவேர்) 253 முல்4 (பொருந்தற் கருத்துவேர்) 261 பொருளாதாரம் நாட்டையாள்வதற்கும் போர் செய்தற்கும் குடிகட்கு நன்மை செய்தற்கும் அரசனுக்குப் பொருள்வேண்டும். அப்பொருள் இடைவிடாது வேண்டியிருத்தலின், அது வரும் வழிகளும் நிலையானவையாயிருத்தல் வேண்டும். அரசியல் வருவாய்கள்: மூவேந்தர்க்கு மிருந்த பொருள் வருவாய்கள், வரி, இயற்கைச் செல்வம். திறை, புதையல், பிறங்கடை (வாரிசு) இல்லாச் சொத்து, கையுறை, நன்கொடை என எழுதிறத்தன. இயற்கைச் செல்வம் யானையும் முத்தும் பொன்னும் மணியும் போல்வன. கையுறை குன்றக்குறவர் சேரன் செங்குட்டுவனுக்குக் கண்ணகியைப் பற்றிக் கூறினபோது கொடுத்த மலைப் பொருள்கள் போல்வன. (சிலப். 25 : 37-54). தெய்வத்திருமுன் கையுறையோடு செல்வது போன்று அரசத்திருமுன்னும் செல்வது மரபு. நன்கொடை கரிகால்வளவனுக்கு. அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயில் (சிலப். 5 : 103-4). போல்வது. பிற வெளிப்படை. சேரனுக்கு யானையும் பொன்னும் மணியும், சோழனுக்குப் பொன்னும் வயிரமும், பாண்டியனுக்கு யானையும், முத்தும், சிறந்த இயற்கைச் செல்வங்களாயிருந்தன. வெட்சிக் கானத்து வேட்டுவ ராட்டக் கட்சி காணாக் கடமா நல்லேறு கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக் கடிய கதழு நெடுவரைப் படப்பை .................................................................... கோடிபல வடுக்கிய பொருணுமக் குதவிய நீடுநிலை யரையத்து................................................... (புறம். 202) என்று கபிலர் பாடியிருப்பதால், கொங்குநாடு பொன்னுக்கும் மணிக்கும் சிறந்திருந்தமை அறியப்படும். கொங்குநாட்டிற் பிறந்து நெடுந்தொலைவு அதன்வழியே செல்லும் காவிரியாறு பொன்னி யெனப்பட்டதும், தமிழ் நாட்டுப் பொன் கொங்குப் பொன் எனக் சுட்டப்பெற்றதும், கவனிக்கத்தக்கன. கொங்குநாடு முற்காலத்திற் சேரனுக்கும் பிற்காலத்திற் சோழனுக்கும் உரியதாயிருந்தது. சோழநாட்டின் வடவெல்லைப் புறத்திலுள்ள கிருட்டிணை யாற்றங்கரை யிலும், அதன் கிளையான துங்கபத்திரைக் கரையி லும், வயிரச் சுரங்கங்கள் இருந்தன. உலக ஒளிமணியான கோகி னூர் வயிரம் கிருட்டிணை யாற்றங் கரையில் எடுக்கப் பெற்றதே. பாண்டிநாட்டில் வச்சிரநாடு எனப் பெயர்பெற்ற ஒரு கடற்கரை நாடு இருந்ததாகத் களவியற்காரிகை என்னும் நூல் கூறுகின்றது. இறைவகை : அரசியல் வருவாய்களுள் நிலையானதும் முதன்மை யானதும் குடிகள் செலுத்தும் வரியே. அது, நிலவரி, நீர்வரி, மனை வரி, தொழில்வரி, ஆள்வரி (Poll tax) விலங்குவரி, பொருள்வரி, உய்ப்புவரி, மணவரி, தண்டவரி, கோயில்வரி, கொடைவரி, ஊழியப்பேற்றுவரி, படைவரி, காட்சிவரி, கருவூலவரி, காசடிப் புவரி எனப் பலதிறத்தது. நீர்வரி, விளைநிலங்கட்கு நீர்நிலைகளினின்று நீரைப் பாய்ச்சிக் கொள் வதற்குச் செலுத்தும்வரி, அது ஏரிகுளப் பாய்ச்சலுக்குரிய தாயின் நிலைநீர்ப் பாட்டம் என்றும், ஆற்றுப் பாய்ச்சற்குரியதாயின் ஒழுகுநீர்ப்பாட்டம் என்றும், பெயர் பெறும். இனி, நன்னீர் புன்னீர் எனவும் வேறுபாடுண்டு. தொழில்வரி, உழவொழிந்த பிற தொழில்கட்கு வாங்கப்படுவது. விலங்குவரி, ஆடு பெற்றம் (பசு) எருது எருமை முதலிய விலங்குகட்கு வாங்கப்படுவது. உய்ப்பு வரி, நிலத்திலும் நீரிலும் பொருள்களை உய்த்தற்குச் செலுத்துவது. அது ஆயம் உல்கு சுங்கம் என்னும் பெயர்களாற் குறிக்கப்பெறும். மணவரி திருமணத்திற்கு விதிக்கப்படுவது, அது அரைக்கால் பணமாகும். தண்டவரி, குற்றவாளிகட்குத் தண்டமாக விதிக்கப் படுவது. கொடைவரி, அரசன் அந்தணர்க்குச் செய்யும் பெருங் கொடைகட்குத் தண்டப்படுவது. ஊழியப்பேற்றுவரி, ஊரவை யார் பாடி காவலன் முதலியவரின் சம்பளத்திற்காகத் தண்டப்படு வது. பாடி காவலன் சம்பளத்தை அவனே தண்டிக் கொள்ள உத்தரவிருந்தது. அவன் சம்பளம், நன்செய் விளைவில் மாவிற்கு ஒரு கலமும். புன்செய் விளைவில் மாவிற்கு ஒரு பணமும், கமுகிற்கு மரம் ஒன்றுக்கு வீசம் பணமும், கரும்பு மருக்கொழுந்து இஞ்சி எள் வாழை ஆகிய வெள்ளாண்மை யில் மாவிற்கு ஐந்து பணமும், வீட்டிற்கு ஆண்டுக்கு இரண்டு பணமும், ஆகும். வரியானது அவ்வத்தொழிற்கேற்ப ஆயம், இறை, கடன், கடமை, கறை, காணிக்கை, தீர்வை, பகுதி, பாட்டம், பூட்சி, பேறு, மகமை, மகன்மை எனப் பல்வேறு பெயர் பெற்றது. அவற்றுக்கெல்லாம் வரி என்பது பொதுப்பெயராகும். ஊர்த்தலைவன் அல்லது ஊரவையார் விதிக்கும் வரி ஊரிடுவரிப்பாடு எனப்பட்டது. வாங்கப்பட்ட வரிகள் : அக்காலத்துக் குடிகளிடத்திற் பலவகை யிலும் வாங்கப்பட்ட வரிகளாவன : அங்காடிப் பாட்டம் (அங் காடிக்கூலி), அச்சுவரி, அட்டுக் கிறை, அடிகாசு, அடிமைக்காசு, அணியிடுவான் வரி, அதிகரணத்தண்டம், அதிகாரப் பேறு (அதிகாரப்பொன்), அரிகொழி, அரி நட்டி, அரிவாட்பதக்கு, அருந்தோடு, அரைக்கால்வாசி, அழகெருது, அழகெருதுக் காட்சிக்காசு (காட்சியெருது காசு) அழுகற்சரக்கு, அள்ளுக்காசு, அளியிடுவான்வரி, அனுப்பு, ஆசுகவிகள் காசு (ஆசீவக்காசு), ஆசவக்கடமை ஆட்டைச்சம்மாதம் (ஆட்டைக்காணிக்கை), ஆண்டெழுத்துத்தேவை, ஆத்திறைப் பாட்டம், ஆதிரைப்பிள்ளை யார் நோன்பு, ஆள்நெல், ஆற்றுக்குலை, ஆற்றுப்பாட்டம், இடைப்பாட்டம் (இடைப்பூட்சி, இடைவரி), இராசாகரங் காணிக்கை, இருபதக்கட்டி, இலாஞ்சினைப்பேறு, இறைகாவல், இறைச்சோறு, இனவரி (இனக்காசு), ஈழப்புன் செய் (ஈழம்பூட்சி), ஈழற்கடிவரி, உகப்பார்பொன் (உகவைப்பொன்), உப்பாயம் (உப்புக்காசு, உப்புகோச் செய்கை), உபயம் (உபயமார்க்கம்), உரல்வரி, உல்லியக்கூலி, உலாவு காட்சி, உவச்சவரி, உழுதான்குடி, உள்வரி, உறுபாதை, உறுவுகோல், நிலன்காசு, ஊசிவாசி, ஊத்தைப் பாட்டம், ஊர்க்கணக்கர் சீவிதம் (ஊர்க்கலனை, ஊர்க் கழஞ்சு), ஊர்ச்சரிகை, ஊராட்சி, ஊரிடுவரிப்பாடு, ஊரெட்டு, எட்கடமை (எக்கடமை), எடுத்துக்கொட்டி, எடைவரி, எருமைப் பொன், எழுவை, ஏணிக்காணம், ஏர்க் காடி (ஏர்ப்பொன், ஏர்க் காணிக்கை). ஏரியாயம், ஏல்வை, ஒட்டிதற் கடமை, ஓட்டச்சு, ஓடக்கூலி, கடையடைக்காய், கடையிறை, கண்காணி, கண்காணி கணக்கர் முதல், கண்கூலி, கண்ணாலக்காணம் (கலியாணக் காணம்), கண்ணிட்டுக்காணம் (கண்ணேட்டுக் காணம்), கணக்கப்பேறு, (கணக்கிலக்கை), கதிர்க்காணம், கருவூலவரி, காட்டாள் காசு, காணவட்டம், காணிவெட்டி, காரியவாராய்ச்சி, காலத்தேவை, காவல் பரப்பு (காவற் பேறு), கீழ்வாரப் பச்சை, குசக்காணம், குடநாழி, குடிமை (குடிக்காசு, குடிக்காணம், குடியிறை), குதிரை வரி, குதிரை விலாடம், குமாரக்கச்சாணம், குலைவெட்டி, கூலம், கூற்றுநெல், கெடுபாதை, கேள்விமகமை, கைக்கணக்கு முதல், கையேற்பு, கொடிக்கடமை, கொட்டைக் கூலி, கோள்நிறை கூலி, சண்டாளப் பேறு, சந்திவிக்கிரகப் பேறு, சாட்டுவரி, சிறுபாடி காவல், சூலவரி (சூலவரிப் பொன்), செக் கிறை, செக்குமன்றாடி, செங்கொடிக்காணம், சென்னீர்வெட்டி, சென்னீரமஞ்சி, சேவகக்காசு, சோறுமாடு, தசவந்தம், தட்டடுவு, தட்டாரப் பாட்டம் (தட்டுக்காயம், தட்டொலி, தடிப்பதக்கு, தண்டல்மேனி (தண்டலிற் கடமை, தண்டவிலக்கை, தண்டற் கடமை), தண்டநாயகர் மகமை, தண்டாளர் முதல், தரகு (தரகு பாட்டம்), தலையாரிக்கம், தலைவிலை, தறியிறை, (தறிப்புடை வை), தனப்பணம், தாட்பிடியரிசி (தாப்படியரிசி) தான மானியம், திருமுன்காட்சி, திருமுகக்காணம், திங்கள்மேராமு, திங்கட் சோறு, திங்கள்நெய், திங்கள்மோகம், திரைக் காசு, துலாக் கூலி, துலாபாரவரி, தேவகுடிமை, தோணிக் கடமை, தோரணக் காணிக்கை, தோலொட்டு, நத்தவரி, நல்லா (நற்பசு), நல்லாடு, நல்லெருது, நல்லெருமை, நற்கிடா, நாட்டுக் காணிக்கை (நாட்டு வரி, நாட்டு வினியோகம்), நாட்டு பாதி, நாடு காவல், நாடு தலவாரிக்கை, நிலக் காணிக்கை, நீர்க்கூலி, நீர்நிலக் காசு, நெட் டாள், நெய் விலை, பச்சைப்பணம், பஞ்சுப்பீலி, பட்டடைவரி, பட்டிக் காடி, பட்டிக்கால், பட்டிகைக் காணம், பட்டித் தண்டம் (பட்டிப் பொன்), பட்டோலைக் காசு, படாங் கழி, படைப் பணம் (படையிலார் முறைமை), பண்குறுணி, பண்டவெட்டி, பண்ணிக்கூலி, பணவாசி, பணிக்கொத்து, பதுவாரம், பறைத்தறி, பறையிறை, பன்மை, பாசிப் பாட்டம், பாடி காவல், புத்தகம், புதாநாழி, புட்டக விலை, புரவுநெல், புலவரி, புழுகு கடமை, புறக்கடமை, (புறக்கலனை), புறம்பு, புறவெட்டி, (பேர்க் கடமை, பேர்வரி), பொற்பூ, பொன் வரி, மண்மதில், மதில் தேவை, மந்தைப் பணம், மரமச்சாதி விலை, மனைப்பணம், மாட்டுக் கறை, மாடைக் கூலி, (மாடைக் காசு), மாதப்படி (மாதாரிக்கம்), மாப் பட்டடை, மாப் பணம், மாப் பதக்கு, மாமகம், மாவிறை, முத்தாவணம், முதற்றிரமம், முப்பறமுந்நாழி, முழவரிசை, முன்னிடும் பணம், மேராழி, வகைப்பேறு, வட்டி நாழி, வண்ணாரப் பாட்டம் (வண்ணாரப் பாறை) வலங்கையிடங்கை மகன்மை, வழி நடைக்கிடும் பணம், வாசல் பணம் (வாசல் பேறு), வாடாக் கடமை, வாய்க்கால் பாட்டம், வாரக்காணம், விடைப்பேர், வினியோகம், வீட்டுத்தேவை, வீரசேலை, வெட்டி (வெட்டிக்காசு, வெட்டிப் பாட்டம், வெட்டிவரி, வெட்டி வேதினை), வெள்ளாண் வெட்டி, வெள்ளை வாரி, வேண்டுகோள் வரி, வேய்நெல், வேலிக்காக, மடக்குவரி, இங்குக் கூறப்பட்ட வரிகளெல்லாம், எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லாரிடத்தும் வாங்கப்பட்டவையல்ல. வேறு வரி குறிப்பனபோல் தோன்றும் பல பெயர்கள் ஒரே வரி குறிப்பனவாகும். இக்காலத்துத் தொழில் வரியெனப்படும் ஒன்றே, அக்காலத்துத் தொழில் தொறும் கருவிதொறும் வெவ்வேறு பெயர்பெற்று நூற்றுக்கணக்கான வரிபோல் தோன்றிற்று. ஆயினும், சங்க காலத்து வரிகளினும் பிற்காலத்து வரிகள் மிகப் பல வென்றும், இக்காலத்திலில்லாத ஆள்வரி மணவரி துலாபார வரி முதலிய சில விதப்பு வரிகள் அக்காலத்திருந்தன வென்றும், அறிதல்வேண்டும். ஆள்வரி சோழ நாட்டில் முன்னியூர் தவிரப் பிறவூர்களில் கூனர் குறளரிடத்தும் வாங்கப்பட்டதாகத் தெரிகின்றது. வரிப் பாகுபாடு : வரிகளெல்லாம், கீழிறைப்பாட்டம் (சிறுவரி) மேலிறைப் பாட்டம் (பெருவரி) என இருபாலாய்ப் பகுக்கப்பட் டிருந்தன. C®¡fHŠR Fku¡ f¢rhz« t©zhu¥ ghiw j£lhu¥ gh£l« KjÈad ÑÊiw¥ gh£lK«, ntiy¡ fhR â§fŸ nkuhK K¤jhtz« j¿¥òlit KjÈad nkÈiw¥ gh£lK« MF«.* சில வரிகள் காசாகவும், சில வரிகள் கூல (தானிய)மாகவும், சில வரிகள் அவ்விரண்டிலொன்றாகவும், செலுத்தப்பட்டன. காசாகச் செலுத்தப்பட்டவை காசாயம் (காசு கடமை) என்றும் அந்தராயப் பாட்டம் என்றும், கூலமாகச் செலுத்தப்பட்டவை மேலடியென் றும், பெயர் பெற்றன. காசு பணம் பொன் காணம் என இறும் பெயர்களெல்லாம் முன்வகையையும், அரிசி நெல் நாழி குறுணி பதக்கு என இறும் பெயர்களெல்லாம் பின்வகையையும் குறிக்கும். பெரும்பாலும் தொழில்வரிகள் பணமாகவும், நிலவரி இனமாக வும், செலுத்தப்பட்டன. செக்கிறை தறியிறை கடைவரி முதலியன ஆண்டுக்கு ஆறு பணமாகும். சந்தை அங்காடி தெரு திருவிழா முதலியவற்றில் பலவகைப் பொருள்கள் விற்கும் சில்லறைக் கடைகட்கு, நாள்வரி வாங்கப் பட்டது. நாடு முழுமைக்கும் பொதுவான செலவிற்குரிய வரிகள் குடிக ளெல்லாரிடத்தும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பயன் படும் அல்லது பயன்படுவதாகக் கருதப்படும் செலவிற்குரிய வரிகள் அக்குறிப்பிட்ட இடத்திலும், தண்டப்பட்டன. அரசனால் விதிக்கப்பட்டவும், ஊரவையாரால் விதிக்கப் பட்டவும், அறமன்றத்தாரால் விதிக்கப்பட்டவும், கோயிலதிகாரி களால் விதிக்கப்பட்டவும், சிற்றூர்த் தலைவனால் விதிக்கப்பட்ட வும், ஆக ஐவேறு தொகுதிப்பட்டிருந்தன அக்காலத்து வரிகள். அரசனுக்குச் செலுத்த வேண்டியவை அரசிறையெனப்பட்டன. மேனாட்டுப் பொருளியல் நூற்படி, நேர்வரி (Direct tax) நேரல்வரி (Indirect tax) ஆகிய இருவகை வரிகளும் அக்காலத்து வாங்கப் பட்டன. வரி கொடுப்பவனையே தாக்கும் வரி நேர்வரி என்றும், வரி கொடுப்பவனைத் தாக்காது வேறொருவனைத் தாக்கும் வரி நேரல் வரி என்றும், கூறப்படும். ஆள்வரி மணவரி முதலியன நேர் வரியும், விற்பனை வரி ஓடக் கூலி முதலியன நேரல் வரியும், ஆகும். நிலவரி : வரிகளுட் சிறந்தது நிலவரி. அதனால் அது சிறப்பாக இறை அல்லது அரசிறை எனப்படும். அதற்குச் செய்க்கடன் காணிக்கடன் என்னும் பெயர்கள் வழங்கின. வரிவிதித்தற்கு, விளைநிலம் விளையாநிலம் என இருபாலாக ஊர்நிலங்கள் பகுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள், விளையா நிலம், ஊர்ப்பொதுநிலமும் பட்டப்பாழ் என்னும் தரிசுமாக இருபகுதிப்பட்டது. இவ்விரு பகுதியும் இறையிலி நிலமாயிருந் தன. ஊர்ப்பொது நிலங்கள்; பல்வேறு சேரிகள் உள்ளிட்ட ஊர்க் குடியிருப்பு, ஊர்க்களம், அழிந்துபோன வூராகிய நத்தப்பாழ், கடைத்தெரு, கோயில், குளங்குட்டை, மடம், சத்திரம், நந்தவனம், மந்தை, கன்றுமேய்பாழ், பெருவழி, ஓடை, ஊர்நிலத்தூடறுத்துப் போன வாய்க்கால், பாறை, ஆற்றுப்படுகை, உடைப்பு, இடுகாடு, சுடுகாடு, இடுகாட்டிற்கும் சுடுகாட்டிற்கும் செல்லும்வழி, முதலியனவாகும். விளைநிலம், நீர்நிலம், கொல்லை, காடு என மூவகையாக வகுக்கப் பட்டிருந்தது. இவை, முறையே, நன்செய்யும் இறைவைப் புன்செயும் வானாவாரிக் காடுமாகும். நன்செய்கள், அவற்றின் விளை விற்குத் தக்கபடி பலதரமாகப் பாகுபாடு செய்யப் பட்டிருந்தன. நிலவரி, தீர்வை என்றும் வாரம் என்றும் இரு வகையாயிருந்தது. இவற்றுள் முன்னது ஒரு குறிப்பிட்ட அளவும், பின்னது கண்டு முதலில் ஒரு பகுதியுமாகும். தீர்வைக்குரிய நிலம் தீர்வைப்பற்று என்றும், வாரத்திற்குரிய நிலம் வாரப்பற்று என்றும், வாரத்தைப் பணமாகச் செலுத்தும் நிலம் கடமைப்பற்று என்றும், கூறப்பட்டன. பெரும்பாலும், அளந்து கண்டுமுதல் காணக்கூடிய கூல வெள்ளாண்மைக்கு வாரமும், அங்ஙனஞ் செய்ய இயலாத பிறவற்றிற்குத் தீர்வையும், விதிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. வாரம் பொதுவாய் ஆறிலொரு பங்காயிருந்தது. இது தொன்றுதொட்டு வந்தமுறையென்பது, தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை என்னுங் குறளால் அறியப்படும். வாரம் ஆறிலொரு பகுதியா யிருந்த தினாலேயே அது பகுதியெனப் பெயர் பெற்றது. வரி வாங்குவதற்குப் பொதுவாக நல்விளைவே கவனிக்கப்பட்டது. அரை விளைச்சலும், நட்டுப்பாழ் அழுகிச் சேதம் சாவி பூச்சி வெட்டு நோய் அழிவு ஆகிய அறுவகை நட்டிகளும், வரிவிதிக்கப் பெற்றில. அழிவாவது, நன்றாய் விளைந்தும் கள்வராலும் பகைவ ராலும் விலங்காலும் அழியுண்டநிலை. நல்விளைவுக் காலத்தில், வரி கண்டிப்பாய் வாங்கப்பட்டது. ஈராண்டாக வரி செலுத்தாதார் நிலமுழுதும் பறிமுதல் செய்யப் பட்டது. தஞ்சைமாவட்டத்தைச் சேர்ந்த ஓரூரில், பஞ்சக்கொடு மையால் குடிபோன மக்களின் நிலத்திற்காக, ஊரவையார் ஊர்ப்பொதுநிலத்தைத் கோயிற்கு விற்று வந்த பணத்தைக் கொண்டு, வரி செலுத்தினர் என்னுங் கல்வெட்டுச் செய்தியி னின்று, சில அரசர் காலத்தில் பஞ்சத்தினாற் பயிரிடப்படா நிலத்திற்கும் வரி வாங்கப்பட்டமை அறியலாம். பிசிராந்தையார் பாடிய காய்நெல் லறுத்து என்னும் புறப்பாட்டால் (184). நல்லரசர் காலத்திலும் கடுந்தண்டலாளர் இருந்து, குடிகளை வருத்தியமை அறியப்படும். வரிப்பளுவைக் குடிகள் தாங்கமுடியாதபடி கடுவரி விதிக்கப்படுங் காலத்தில், குடிகள் முறையிடுவதும் அரசன் வரிவீதத்தை மாற்றி யமைப்பதும் உண்டு. வரிப்பளுவினாலோ பஞ்சத்தினாலோ ஓர் ஊர் முழுதும் குடிபோயின், அவ்வூருக்குரிய வரியை அவ்வூரைக் கொண்ட நாடு ஏற்றுக் கொள்ளும். அவ்வூர், அண்மையிலுள்ள தெய்வத்திற்கு நாடு செழிக்கக் காணிக்கை செலுத்துமாறு, ஓரிரு செல்வரிடத்தில் ஒப்படைக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சி, மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், திருச்சிமாவட்டத்தைச் சேர்ந்த மருதூரில் நிகழ்ந்தது. அரசன் வலியற்ற காலத்தில், அரசனுக்கடங்காத நாட்டதிகாரி கள், தம் கண்காணிப்பிற்குட்பட்ட நாட்டு வரியைத் தாம் பயன்படுத்திக்கொள்வதுடன் வரையிறந்த கடுவரி விதிப்பது முண்டு. அன்று குடிகள் உள்ளதுரியதெல்லாம் விற்றுக்கொடுக்கநேரும். வரிதண்டும் இடத்திற்கு நிலைக்களம் என்றுபெயர். தலைநகரல் லாத வூர்களிலும் நகர்களிலும், தண்டலாளரால் தண்டப்பட்ட காசுங்கூலமுமாகிய இருவகைப்பொருள்களும், முதலாவது, நாட்டுப்பண்டாரம் என்னும் ஊர்ப் பண்டாரத்திற் சேர்க்கப்படும். நாட்டிலாயினும், தலை நகரிலாயினும், பண்டாரத்தை மேற்பார்ப்பவன் பண்டாரக் கண்காணி எனப்படுவன். பொருள்களை அளப்பதற்கும் நிறுப்பதற்கும், பண்டார நாழி என்றும் பண்டாரக்கல் என்றும் அரசமுத்திரையிட்ட படியும் நிறைகல்லும் அங்கிருக்கும். களஞ்சியம் என்றும் கருவூலம் என்றும் பண்டாரம் இருபகுதியதாகும். முன்னதில் கூலமும் பின்னதில் காசும் சேர்க்கப்படும். களஞ்சியத்திற்குக் கொட்டாரம் (கொட்ட காரம்) என்றும் பெயருண்டு. ஆண்டுதோறும், ஊர்ப்பண்டாரத் தில் சேர்க்கப்பட்டுள்ளவற்றில் செலவுபோக எஞ்சியவெல்லாம், தலைநகரிலுள்ள மூலபண்டாரத்திற்கனுப்பப் பெறும். நாட்டுப்புறத்தூர்களிலும் தலைநகரிலும் தண்டப்படும் வரிகட் கெல்லாம், தலைநகரிலுள்ள வரியதிகாரிகளால் வசதியாகக் கணக்கு வைக்கப்பட்டிருந்தது. நிலங்களின் தரங்கள் குறிக்கப் பட்டிருக்கும் புத்தகம் தரவுசாத்து என்றும், நிலவரிக் கணக்கைக் குறிக்கும் புத்தகம் வரிப் பொத்தகம் என்றும், பிறவரிக்கணக்கைக் குறிக்கும் புத்தகம் புரவுவரி என்றும், எல்லா வரிகளையும் குறிக்கும் புத்தகம் அடங்கல் என்றும், செலுத்தப் பட்ட வரித்தொகையைக் குறிக்கும் புத்தகம் வரியிலீடு என்றும், பெயர் பெற்றிருந்தன. வரிப் பொத்தகம் வரியிலீடு என்னும் புத்தகப் பெயர்கள். அவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளையுங் குறிக்கும். அரசியல் வருமானமும் குடிகள் வருமானமும் சேர்ந்த நாட்டு வருமானத்தை (National Income)¥ பெருக்குதற்குரிய பொருளா தாரம், அக்காலத்தில் இயற்றல் (Organisation), ஈட்டல் (Collection), காத்தல் (Protection), வகுத்தல் (Distribution) என்னும் நான்கு தலைப்பிற் கவனிக்கப் பெற்றது. இயற்றலாவது, மேன்மேலும் பொருள்கள் வரும்வழிகளை அமைத்தல் (Organization of resources). பொருள்களாவன நெல், மருந்து, பருத்தி, பொன், மணி, கோழி, ஆடு, மாடு, குதிரை, யானை முதலியன. அவைவரும் வழிகளாவன. பகைவரைக் கொள்ளை யடித்தலும் பிறநாடுகளைக் கைப்பற்றித் திறைகோடலும், தன் நாட்டையும் குடிகளையும் காத்தலும் முதலாயின. ஈட்டலாவது, அமைக்கப்பட்ட வருவாய்களினின்று வரும் பொருள்களை மூலபண்டாரத்திற் சேர்த்தல். காத்தலாவது, அங்ஙனஞ் சேர்க்கப்பட்ட பொருள்களை, பகை வர் கள்வர் சுற்றத்தார் அரசியல்வினைஞர் ஆகியவர் கவராமற் காத்தல். வகுத்தலாவது, அங்ஙனங் காக்கப்பட்ட பொருள்களை அறம் பொருளின் பங்களின் பொருட்டுச் செலவிடல். கடவுள், அந்தணர், அடியார், வறியார், உறுப்பறையர். வழிப்போக்கர் முதலியோர்க்குச் செலவிடுவது அறப்பொருட்டும்; பல்வகைப் புலவர்க்கும், கலைஞர்க்கும், அரசியல் வினைஞர்க்கும், படைக்கும், அரணுக்கும், அரசவுறவிற்கும், போருக்கும் செலவிடுவது பொருட்பொருட்டும்; தேவியர்க்கும், சிறந்த வூணுடைக்கும், அணிகலத்திற்கும், இசை கூத்திற்கும், மாளிகை செய்குன்று இலவந்திகைச் சோலை முதலியவற்றிற்குஞ் செலவிடுவது இன்பப் பொருட்டும்; ஆகும். கரிகால்வளவன், சேரன் செங்குட்டுவன், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் முதலிய பேரரசர் பிறநாடுகளை வென்று கொண்ட கொண்டியுந் திறையுங் கொஞ்சநஞ்சமல்ல. அரண்மனைச் செலவும் அரசியற் செலவும் போர்ச் செலவும் போக, எஞ்சிய பொற்காசுகளும் மணிகளும் கருவூலத்திற் போற்றப்பெறும், மதுரையில் குலசேகர பாண்டியன் கருவூலம், 1200 கோடித் தினாரம் என்னும் பொற்காசுகளையும், சொல்லாற் குறிக்கொணாப் பன்மணிக் குவியல்களையுங் கொண்டிருந்தது. (ப.த.ஆ.) பொழில் மாந்தன் தோன்று முன்னும் மக்கள் பெருகு முன்னும் ஞாலத்திலுள்ள நிலமெல்லாம் மரம் செடி கொடிபடர்ந்து ஒரே சோலையாய்த் தோன்றிற்று. பெருநிலப் பகுதிகளும் சிறுநிலப் பகுதிகளும் தனித்தனி பெருஞ்சோலையும் சிறு சோலையுமாக இருந்தன. இதனால் மண்ணுலகமும் அதன் கண்டங்களும் நாடுகளும் பொழில் என்னும் பொதுப் பெயர் பெற்றன. பொழில் என்பது சோலை. பொழிதல் திரளுதல்; பொழித்தல் திரட்டுதல். மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்பு பொழில். ஒரு பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறும் உரையைப் பொழிப்புரை என்றல் காண்க. (தோப்பு, தோட்டம் என்னும் ஒத்த பொருட் சொற்களும் இக்காரணம் பற்றியவையே. தொகுப்பு - தோப்பு, தோடு- தோட்டம், தோடு - திரட்சி.) (சொல் 17) பொழுது பொழுது என்பது, பெரும் பொழுது சிறுபொழுது என அடையடுத்துகின்று முறையே, இருமாத அளவான பருவ காலத்தையும் பத்து நாழிகையளவான நாட்பகுதியையும் குறிக்கும். இளவேனில் முதுவேனில் கார் குளிர் முன்பனி பின்பனி என்பன, அறு பெரும் பொழுதுகள்; காலை நண்பகல் எற்பாடு, மாலை யாமம் வைகறை என்பன, அறுசிறு பொழுதுகள். (சிறு பொழுதுகள் ஆறும், முறையே காலை 6 மணி முதல் நந்நான்கு மணியளவுகள்) வேளை என்பது, பகல்வேளை இராவேளை காலை வேளை மாலை வேளை என நாட்பகுதியைக் குறிக்கும். நேரம் என்பது, மிகக் குறுகிய காலப் பெயராய், அவன் வந்த நேரம் எழுதிக் கொண்டிருந்தேன், என வினை நிகழ் சிறு காலத்தையும் இவ்வினை செய்ய ஒருமணி நேரம் செல்லும், என வினை நிகழ் கால அளவையுங் குறிக்கும். சமையம் என்பது, நீண்டதும் குறுகியதுமான காலப் பெயராய், ஒரு பொருள் ஒன்றற்குச் சமைந்த அல்லது பக்குவமான நிலையை மட்டும் உணர்த்தும், எ.டு: சமையம் பார்த்து வந்தான். அமையம் என்பது சந்தர்ப்பம். செவ்வி என்பது, ஒருவனின் மனம் செவ்வையான அல்லது இசைவான நிலை. அற்றம் என்பது ஒருவனது விழிப்பற்ற நிலை. முறை என்பது, ஒரு வரிசையில் ஒருவனுக்கு ஒழுங்குப்படி ஒருவினை நிகழும் தடவை (turn) எ.டு : இரு முறை (two turns) (தடவை என்பதை வாட்டி என்பது வடார்க்காட்டு வழக்கு). தரம் அல்லது தடவை என்பது, வரிசை யொழுங்கில்லாமல் நிகழும் வினை நிகழ்ச்சித் தொகை. எ.டு : இரு தடவை (twice, two times) (சொல்: 51) பொற்காலம் (Gold Age) (தோரா. கி.மு. 50,000 - 30,000) தமிழர் வரலாற்றுக் காலப் பகுதிகளுள், பழங் கற்காலம் புதுக் கற்காலம் என்னும் இரண்டும் அவ்வக் காலத்தொடு முடிந்து போனவையாகும். பழங்கற்காலக் கருவிகள் புதுக்கற் காலத்திலும், புதுக்கற்காலக் கருவிகள் பெரும்பான்மையாகப் பொற் காலத்திலும், வழங்கியிரா. ஆயின், பொற்காலம் முதலிய பிற்காலக் கருவிகள் உலகுள்ள காலமெல்லாம் வழங்கும். பொற்காலம் செம்புக்காலம் உறைக்காலம் இரும்புக்காலம் எனப் பிரித்த தெல்லாம், பெரும்பாலும் அவற்றின் பயன்பாட்டுத் தொடக்கம் பற்றியே யன்றி முடிவு பற்றி யன்று. ஆயினும், முடிவு குறிக்கப்பட்டிருப்பது, அவ்வக்காலத்து மாழை பெரும் பான்மையாகப் பயன்படுத்தப்பட்ட காலத்தின் முடிவைக் குறித்தற்கே என அறிக, பொன் அணிகலத்திற்கும், செம்பும் உறையும் (வெண்கலமும்) குடவமும் (பித்தளையும்) நீர்க்கலத்திற்கும், இரும்பு எல்லாக் கருவிகட்கும், என்றும் பயன்படுத்தப்படும். இவற்றுள், பொன் மிகச் சிற்றளவாகவும் இரும்பு மிகப் பேரளவாகவும் இருக்கும். மாழைகட்குக் கூறப்பட்டுள்ள காலங்கள், மேலை யறிஞர் கூறுவனவற்றொடு ஒவ்வா. அவர் தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் முன்மையையும் அறியாராதலின், மாழைக் காலங்களைப் பிற்படக்கூறுவதில் வியப்பொன்று மில்லை. ஆரியராலும் அவரடியாராலும் மறைக்கப்பட்டுள்ள வுண்மை வெளிப்பட்டபின், மேலையரும் என் கூற்றை ஒப்புக் கொள்வது திண்ணம். பொற்காலம் என ஒன்று தமிழகம் தவிர வேறெந் நாட்டிற்கும் இருந்ததில்லை. பிற நாடுகளிலெல்லாம், பொற்காலம் என்பது, அணியியற் பொருளில், ஒழுக்கத்திலும் செல்வத்திலும் கல்வியி லும் தலைசிறந்த காலத்தைக் (Golden Age) குறிக்குமேயன்றி, செஞ்சொற்பொருளில் பொற்கருவிகளே வழங்கிய காலமொன் றைக் குறிக்காது. தமிழ் நாட்டிற்குள்ள பல்வகைத் தனிச் சிறப்புக் களுள் பொற்காலமும் ஒன்றாகும். பொலிவுற்றது பொன்னெனப் பட்டது. பொல் - பொலி - பொலிவு. பொல்- பொற்பு. பொல்லுதல் = அழகாதல், பொலிதல். பொற்ற = அழகிய, சிறந்த, பொன்னாலான. பொல் - பொன். பொல் - பொலம் - பொலன். குமரி நாட்டிற் பொற்காலமிருந்தமைக்குச் சான்றுகளாவன: (1) பொன்னின் பெயர் மாழைப் பொதுப் பெயரானமை. தமிழரால் முதன் முதற் கண்டுபிடிக்கப்பட்ட மாழை (metal) பொன்னாதலால், அதன் பெயரே பிற்காலத்திற் கண்டு பிடிக்கப் பட்ட பிறவற்றிற்கும் பொதுப் பெயராயிற்று. எ-டு : செம்பொன் = செம்பு. வெண்பொன் = வெள்ளி. கரும்பொன் = இரும்பு. தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று, என்னுங் குறளடியில் (931), பொன் என்னுஞ் சொல் அடையின்றியும் இரும்பைக் குறித்தது. நாக (ஈய) மணல் பொன்வித்து எனப்படும். (2) கடைக்கழகக் காலத்திலும் பொன் மிகுதியாக வழங்கினமை. அக்காலத்துக் காசெல்லாம் பொன்னாயிருந்தமையால், காசு பொன் என்றும், பணமுடிப்பு பொற்கிழி என்றும், பணத்தண் டம் பொன்தண்டம் என்றும், சொல்லப்பட்டன. அரசர் தம்மைப் பாடிய புலவர்க்கு இலக்கக்கணக்கிற் பொற்காசை வாரி வழங்கினர். கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகால் வள வனைப் பாடிப் பதினாறிலக்கம் பொன்பெற்றார். காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப்பாடி, நாற்பதிலக்கம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பெற்றார். காக்கைபாடினியார் நச்செள்ளையார் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப்பாடி, அணிகலனுக்கென்று துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார். கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பாடி ஓரிலக்கம் பொற்காசும் ஒரு நாடும் பெற்றார். அரிசில்கிழார் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை யைப்பாடி, தொண்ணிலக்கம் (ஒன்பது நூறாயிரம்) பொற்காசும், அரியணைக் கீடாக அமைச்சுரிமையும் பெற்றார். பெருங்குன்றூர் கிழார் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடி, முப்பத்தீராயிரம் பொற்காசும் பல்வகைப் பரிசிலும் பெற்றார். மாதவிபோல் தன் ஆடல்பாடலை அரங்கேற்றிய நாடகக் கணிகைய ரெல்லாரும், ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பெற்றனர். அரசரை யடுத்துப் பாடிய பாணரெல்லாரும் பொற்றாமரையும், பாடினியரெல்லாரும் பொன்னரி மாலையும், பரிசாகப் பெற்றனர். தில்லைச் சிற்றம்பலம் பொற்பலகையால் வேயப்பட்டிருந்தது. மதுரையம்பலம் வெள்ளியம்பாலம் என்று பெயர் பெற்றிருந்தத னால், தில்லையம்பலம் அன்று பொன்னம்பலமா யிருத்தல் வேண்டும். மூவேந்தரும் கொடைமடம்பட்டுப் பிராமணப் பூசகர்க்குத் துலைநிறைப் பொன் தானஞ்செய்து வந்தனர். கடைக்கழகக் காலத்தில் இத்துணைப் பொன்வளம் இருந்ததெனின், தலைக் கழகத்தினும் முற்பட்டு மக்கள் தொகை மிகக் குறைவாயிருந்த காலத்தில், சிற்சில கருவிகளையேனுஞ் செய்து கொள்ளப் போதிய பொன்னிருந்ததென்பது, நம்பத்தகாததன்று. (3) தென்னாப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் இன்றும் பொன் கிடைக்கின்றமை. உலகின் இன்று மிகுதியாகப் பொன் கிடைக்கும் இடங்கள், இரசியா, தென்னாப்பிரிக்கா, கானடா, அமெரிக்க ஒன்றிய நாடுகள் (U.S.A.) என்னும் நான்காம். பொன் கிடைக்கும் வகைகள், தூள் (dust), மணல் (grain), தகணை (nugget), நரம்பு (lode or vein), கலப்பு (mixture) என ஐந்து. 1850 - இல் ஆத்திரேலியப் பொன் கண்டுபிடிக்கப்பட்ட பின், பொற்பித்தர் பெருந்திரளாகப் போய் அங்குச்சரிந்தனர். பலவிடத் திற் பெருந்தகணைகள் நில மட்டத்திற்கு ஒரு நில விரலங்கட்குக் (inches) கீழேயே கண்டெடுக்கப்பட்டன. அரம்ப மலை மணல் தகணை (‘Sierra Sanda’ nugget) 1, 117 விரனையும், ஆத்தம் பெருமாட்டி (Lady Hotham) 1177 விரனையும் நல்வரவு அயலார் தகணை (Welcome Stranger Nugget), 2000 விரனைக்கு மேலும், ஆலதர்மன் தகணை (Holtermann Nugget) 200 துலத்திற்கு (lb.) மேலும் எடை நின்றன. குமரிக் கண்டம் ஆத்திரேலியாவோடும் தென்னாப்பிரிக்கா வோடும் இணைந்திருந்ததனால், அந்நடுவிடத்திலும் பொற் றகணைகள் எளிதாய்க் கிடைத்திருத்தல் வேண்டும். முழுகிப் போன குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தமிழ் நிலம் முழுதும் பழம் பாண்டிநாடாகும். சோழ நாட்டின் வடபகுதி தொண்டை மண்டலம் என்று பிரிந்தது போன்றே, சேரநாட்டின் வடபகுதியும் கொங்கு மண்டலம் எனப் பிரிந்தது. அக்கொங்கும் பின்னர்க் குடகொங்கு குணகொங்கு என இருபாற்பட்டது. கொங்குநாட்டிலும் சோழ நாட்டிலும் ஓடும் பேராறு காவேரி. அக்காவேரி பொன் கலந்த மணலைக் கொழித்ததனாற் பொன்னி யெனப்பட்டது. சோழ நாட்டில் மிகுதியாகப் பொன் கிடைத்ததனால், முதற் பராந்தகண், இரண்டாங் குலோத்துங்கள் முதலிய சோழவேந்தர் பலர் தில்லைச் சிற்றம்பலம் பொன் வேய்ந்தனர். இரண்டாம் இராசராசன், சிற்றம்பலம் மட்டுமன்றிப் பேரம்பலம் மாட மாளிகை கூடகோபுரம் முதலிய பலவற்றையும், பொன்னா லணிவித்துத் தில்லையைப் பொன்வண்ணமாக்கினான். சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும் மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய மாளிகையும் பீடிகையும் மாடமுங் கோபுரமும் சூளிகையு மத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் கோயில் திருக்காமக் கோட்டமு மக்கோயில் வாயில் திருச்சுற்று மாளிகையும் - தூயசெம் பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறம்பறுத்து முன்னிற் கடல்களுள் மூழ்குவித்த சென்னி (இராசராச தேவருலா) அரண்மனைகளில் அரசன் தங்கும் தனி மாளிகையும் பொன்னால் வேயப்பட்டிருந்தது. சுந்தரச் சோழனைப் பொன்மாளிகைத் துஞ்சிய தேவர் என்று கல்வெட்டுக் கூறுதல் காண்க. கொங்கு நாட்டிற் கிடைத்த பொன் கொங்குப் பொன் எனச் சிறப் பித்துக் கூறப்பட்டது. இன்றும் சுரங்கத்திற் பொன் னெடுக்கும் குவளாலபுரம் (கோலார்) பண்டைக் கொங்கு நாட்டைச் சேர்ந்ததே. கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப் பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும் என்னும் சிலப்பதிகார நாடு காண் காதை யடிகட்கு (132-5) செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்து மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர்மங்கலப் பாட்டுமென்க. என்று அடியார்க்கு நல்லார் உரை வரைந்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி, இதைப் பின்பற்றிப் பொன்னேர் என்பதற்கு, பருவ காலத்தில் நல்ல நாளில் முதன் முறையாக உழுங் கலப்பை என்று விளக்கங் கூறியுள்ளது. பண்டை மகதநாட்டூர்களில் ஆண்டு தோறும் முதலுழவு உழும் போது, ஊர்த்தலைவன் பொன்னாற் செய்த ஏரைப் பூட்டி உழவர் வரிசையில் முதலில் நின்று, பிறர் பின்வர, ஒரு படைச் சாலோட்டித் தொடங்கிவைப்பான் என்று சொல்லப்படுவதால், குமரி நாட்டில் அதற்கு மூலமான வழக்கம் இருந்திருக்கலா மென்று கருத இடமுண்டு. உருவப் பஃறேரிளஞ்சேட சென்னி பொற்றேரை யுடை யவனாயிந்தான். பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கடல் நிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ (புறம். 4) என்று பரணர் பாடுதல் காண்க. பண்டைத் தமிழரசரின் தேர் குதிரை யானைகள் பொற்படைகளால் அணிசெய்யப் பெற்றிருந்தன. மகிழா தீத்த இழையணி நெடுந்தேர் (புறம். 123 : 4) பாடிப் பெற்ற பொன்னணி யானை ( 177:3) வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா எண்ணு வோரே. (புறம். 116) அரசருடைய போர் முரசும் அதுபோன்ற பிற சின்னங்களும் பொன்னால் அணி செய்யப்பட்டிருந்தன. பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் (புறம்.50) கி.மு.11-ஆம் நூற்றாண்டிற்கும் 10-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் யூதேயா நாட்டை யாண்ட சாலோமோன் அரசன் (1015 - 975), ஒப்பீர் (Ophir) என்னும் இந்தியத் துறைமுகத்தினின்று வருவித்த பொருள்களுள் பொன்னும் ஒன்று. அத்துறைநகர், வேம்பாய் எனப்படும் பம்பாய் மாநகர்க்கு வடக்கே 37 கல் தொலைவிலிருந்த, உப்பரா அல்லது உப்பரகா என்று ஆராய்ச்சி யாளராற் கருதப்படுகின்றது. கால்டுவெலார் அது ஒருகால் பாண்டி நாட்டின் கீழ்க்கரையிலுள்ள உவரியா யிருக்கலா மென்று கருதினர். எதுவாயினும், ஒப்பீர் ஓர் இந்தியத்துறைநகர் என்பது உறுதி. சாலோமோன் காலத்திற் சேரநாடு குச்சரம் (குசராத்து) வரை பரவியிருந்தது. தொன்று தொட்டுப் பொன் இந்தியாவினின்று மேனாடுகட்கு ஏராளமாக ஏற்றுமதியாகி வந்ததனால், சேக்கசுப்பியர் (Shakes-peare) தம் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்னும் நாடகத் தில், பொன்னை இந்திய மாழை (metal of India) என்றார் (2:5) (4) குமரிநாட்டில் பொன் கிடைத்தமை பற்றிய நெட்டிமையார் கூற்று. ...................................................................... தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம்.9). இதன் பழையவுரை: - தம்முடைய கோவாகிய சிவந்த நீர் மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற் கெடுத்த விழாவினையுடைய நெடியோனா லுள தாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி யென்னு மாற்றின் மணலினும் பலகாலம் குமரி நாட்டு மாந்தர் முதற்காலத்தில் இயற்கை நீர்நிலைகளையே சார்ந் திருந்ததனாலும், ஆறில்லாத விடமெல்லாம் அடர்ந் திருண்ட காடாயிருந்த தனாலும், மக்கள் தொகை மிகமிகப் பெரும்பாலும் ஆறுகளையடுத்தே பரவி யிருத்தல் வேண்டும். ஆதலால், பெருமலை நாடான குறிஞ்சியையும் குறுமலை நாடான முல்லையையுங் கடந்தபின், கரடும் கல்லும் முரம்பும் பாறையும் அருகி நீர்வளமும் நிலவளமும் மிக்க மருத நிலத்திற்கே இயற்கையாகப் பரவியிருந் திருப்பர். அங்கு நெல்லும் வாழையும் போன்ற நிலைத்திணை (தாவர) வகைகளையும், அவற்றிற்கேற்ற மென்னிலத்தையுங் கண்டு, அவற்றைச் செயற்கையாக விளை விக்க முனைந்து உழைத்தனர். என்றும் நீர் வேண்டும் பயிர்களைக் கரிசல் நிலத்திலும், இடையிட்டு நீர் வேண்டும் பயிர்களைச் சிவல் நிலத்திலும் பயிரிட்டனர். செடிகொடி புற்களைதல், கல்லெடுத்தல், உரமிடுதல், பன்முறை யுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (பல்லியாடுதல்), புழுதியாக் குதல், காயவிடுதல் என்னும் பல்வகையில் திருத்தப்பட்ட நிலம் செய் எனப்பட்டது. செய்தல் திருத்துதல், பேரளவாகத் திருத்தப் பட்டது நன்செய் என்றும், சிற்றளவாகத் திருத்தப்பட்டது. புன்செய் என்றும், சொல்லப் பட்டன. நன்செய் உரம் மிகுதியாக வைக்கப்படுவதால் வயல் என்றும், (வை - (வய்) - வயல்), சேறு படுதலால் செறு என்றும், பள்ளமாயிருந்தலால் பண்ணை யென்றும், போரடிக்குங் களஞ் சேர்ந்திருப்பின் கழனி யென்றும், நீண்ட காலம் பண்படுத்தப் பட்டுப் பழமையானபின் பழனம் என்றும், பெயர் பெற்றது. நெல்வயலில் உழும்போதும் அறுவடை செய்யும் போதும் கிணைப்பறை (உறுமி) கொட்டப்பட்டது. நெல்லும் வாழையும் போன்றவற்றை நன்செயிலும், சோளமும் கேழ்வரகும் போன்றவற்றைப் புன்செயிலும், வரகும் சாமையும் போன்றவற்றை வானாவாரிக் கொல்லையிலும், பயிரிட்டனர். நீர்ப்பாசன ஏந்து (வசதி) இருக்குமிடமெல்லாம் புன்செயை நன்செயாக்கினர். பதினெண் கூலமும் எள்ளும் இஞ்சியும் மஞ்சளும் பருத்தியும் பிறவும் விளைக்கப்பட்டன. நீர்ப்பாசனத்திற்கு முதலில் ஆறும் பொய்கையும் ஆகிய இயற்கை நீர்நிலைகளையே சார்ந்திருந்தனர். பின்னர் அவையில்லாத விடங்களில், கண்ணாறுங் கால்வாயும் ஏரியுங் குளமும் வெட்டிக் கொண்டனர். அவை எல்லார்க்கும் பொதுவாயிருந்த மையாலும், கோடைக்காலத்தில் வற்றிப் போனமையாலும், ஆண்டு முழுதும் பயன்படுமாறும் சொந்தவுடமையாயிருக்கு மாறும், நீர்சுரக்குமிடமெல்லாம் கிணறுகளையும் வெட்டிக் கொண்டனர். அக்காலத்தில் மக்கள் தொகை மிகக் குறைவா யிருந்தமையாலும், நிலப்பரப்பில் முக்காற் பங்கிற்கு மேலும் மர மடர்ந்த அடவியா யிருந்தமையாலும், கோடை மழை, கால மழை, அடை மழை, படை மழை ஆகிய நால்வகை மழையும் காலந்தப்பாது பெய்து வந்தன. அ(ல்)கால வம்ப மழையும் ஒரோவொரு சமையம் பெய்தது. கால்வாய் நீரிறைக்க இறைபெட்டி (இறைகூடை), உழணி (ஓணி) முதலிய கருவிகளும், கிணற்று நீரிறைக்க ஏற்றம், கம்மாலை என்னும் பொறிகளும் தோன்றின. அம் = நீர். அம்-கம்=நீர். ஆலுதல் = ஆடுதல், சுற்றுதல், ஆல்-ஆலை = சுற்றிவரும் பொறி. செக்காலை, கரும்பாலை முதலியவற்றை நோக்குக. இன்றும், திருக்கோவலூர்க்கும் வில்லிபுரத்திற்கும் இடைப்பட்ட ஊர்களிற் சுற்றுக்கவலையாடுதல் காண்க. கம்மாலை - கமலை- கவலை, ஏற்றம் கையால் இயக்கப்படுவது. அது கைத்துலா, ஆளேறுந்துலா என இருவகை, கம்மாலை எருது பூட்டி இயக்கப் படுவது. நெற்சோறு மருதநிலத்தில் முதன்முதலாகப் பொங்கப்பட்டது. சொல்=நெல். சொல்-சொன்றி- சோறு. சிற்றுண்டியாகப் பயன்படுமாறு, அரிசிப்பொரி பொரிக்கவும் அவலிடிக்கவும் கற்றுக்கொண்டனர். பயறு வகைகளை அவித்தும் சுண்டியும் தின்றனர். அவற்றின் பருப்பாற் கும்மாயமுங் கூட்டும் சாறுங் குழம்பும் ஆக்கிச் சோற்றுடன் கலந்துண்டனர். வாழை, வழுதுணை (கத்தரி), வெண்டை, சுரை, பீர்க்கு, பூசணி முதலிய காய்களைத் தனித்தும் பருப்புடன் சேர்த்தும், கறிவகைகளாகச் சமைத்தனர். ஊனுக்கு, வயலிலும் வாய்க்காலிலும் பிடித்த மீனையும் ஆமையையும், வீட்டில் வளர்த்த ஆடு கோழிகளையும், பயன் படுத்தினர். இடையிடை முல்லைக்குங் குறிஞ்சிக்குஞ் சென்று, தமக்கு வேண்டிய விலங்கு பறவைகளை வேட்டையாடியும் வந்தனர். காரத்திற்கு மிளகையும், இளங்காரத்திற்கும் சுவைக்கும் வெங்காயத்தையும், நிறத்திற்கும் மணத்திற்கும் சளிமுறிப்பிற்கும் மஞ்சளையும், சப்பென்றிருத்தலை நீக்கிச் சுவையூட்டதற்கு உமண் என்னும் உவர்நிலத்து உப்பையும் சமையலிற் சேர்த்துக் கொண்டனர். குறிஞ்சியிலும் முல்லையிலும் பெரும்பாலும் பாலும் சூட்டி றைச்சியுமே உண்டதனால், அவ்வுணவிற்கு உவர்ப்புப் பொருள் தேவையில்லாதிருந்தது. முல்லை நிலத்தில், தினை வரகு சாமை முதலியவற்றின் அரிசியைப் பாலிலுஞ் சமைத்திருக்கலாம். மருத நிலத்திற்கு வந்தபின்பே சிறந்த முறையிற் சமையல் தொடங்கிய தால், பொங்கல் புழுங்கல் அவியல் சுண்டல் துவட்டல் புரட்டல் காய்ச்சல் பொரியல் முதலிய வினைகளை நீரிற் செய்தற்கு, உவர்ப்புச் சரக்குச் சேர்க்க வேண்டியதாயிற்று, உப்பு விளைக்கும் உவர்நீர்க் கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தை அடுக்குமுன், உமணையே பயன்படுத்தியிருத்தல் வேண்டும். உமண் என்பது உவர்மண், அதை முதலில் விற்றவர், பின்பு நெய்தல் நிலத்து உப்பளத்தில் உப்பு விளைத்தபோதும், உமணர் எனப்பட்டனர். களர்நிலத் துப்பிறந்த வுப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி.133) பொரியல் முதலில் ஆவின் நெய்யிலேயே செய்யப்பட்டது. அதனாலேயே, பின்னர் எள்ளிலிருந்தெடுக்கப்பட்ட நெய்ப் பொருள் எண்ணெய் (எள்நெய்) எனப் பெயர் பெற்றது. எள்ளின் நெய்யே முதற்காலத்திற் பெருவழக்காக வழங்கினதினால், பிற்காலத்தில், ஆவின் நெய் தவிர மற்றெல்லா நெய்வகைகட்கும் எண்ணெய் என்பது பொதுப் பெயராயிற்று. சமையற்கு வேண்டிய நெருப்பு, நாள்தொறும் ஞெலிகோலால் விரைந்து கடையப்பட்டது. அது வீடுதொறும் இறவாணத்திற் செருகப்பட்டிருந்தது. குறிஞ்சிவாணரும் முல்லைவாணரும் வேட்டைக்காரரும், அதை என்றுங் கையில் வைத்திருந்தனர். இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போல (புறம். 315 : 4) கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து (புறம். 247 : 2) புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியுங் கல்லா விடையன் போல (புறம். 331 : 4) செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் தொழுதன னெழுவேற் கைகவித் திரீஇ இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை கானதர் மயங்கிய இளையர் வல்லே தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின் இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின் (புறம். 150 : 7-13) இவை பிற்காலத்துச் செய்யுளாயினும், முற்காலத்து நிலைமையையுங் குறிக்கும். தீப்பட்ட விடத்திற் களிமண் இறுகிக் கற்போற் கெட்டி யானதைக் கண்டு, களிமண்ணாற் பானை சட்டிகளை வனைந்து சுட்டுச் சமையற் கலங்களாகப் பயன்படுத்தினர். பருத்திப் பஞ்சால் நூலிழைத்துப் பல்வகை ஆடைகளை நெய்து கொண்டனர். நூல் நூற்றல் பெண்டிராற் செய்யப்பட்டு வந்தது என்பதை, நுண்ணிய பலவாய பஞ்சுநுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பினால் ஓரிழைப் படுத்தலாம், உலகத்து நூனூற்றலென்பது என்னும் இறையனாரகப் பொருளுரைக் கூற்றாலும் (நூற்பா. 1), பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு. என்னும் நன்னூற் பொதுப்பாயிர நூற்பாவாலும் (23), அறியலாம். வீட்டிலிருந்து செய்யும் தொழிலுக்கு ஏற்றவர் பெண்டிரே. பருத்தி நூல் நூற்ற பெண்டிர் பருத்திப் பெண்டிர் என்னப் பட்டனர். பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறம். 125) கணவனொடு கூடியபெண் வீட்டுவேலையுஞ் செய்யலாம்; நன்செய் புன்செய்க் காட்டுவேலையுஞ் செய்யலாம். கணவனை யிழந்த கைம்பெண், தன் கற்பைக் காத்துக் கொண்டு பிழைக்க வீட்டுவேலையே செய்தல் கூடும். அத்தகைய வேலை அக்காலத்து நூல் நூற்றலே. ஆதலாற் கைம்பெண்டிர் அதனை மேற் கொண்டனர். ஆளில் பெண்டிர் தாளிற் செய்த நுணங்குநுண் பனுவல் போல (நற். 353) ஆடைநெசவு இருபாலாராலுஞ் செய்யப்பட்டு வந்தது. அழகிற்கும் மணத்திற்கும், பல்வகை நறுமலர்களைக் கண்ணியாகக் கட்டியும் மாலையாகத் தொடுத்தும், ஆடவர் கழுத்திலும் பெண்டிர் கொண்டை யிலும் நாள்தொறும் புதிது புதிதாக அணிந்து கொண்டனர். மருதநிலமண் கெட்டியாயிருந்ததனால், உயர்ந்த மண்சுவர் எழுப்பிப் பெருவீடு கட்டிக் கூரை வேய்ந்து கொண்டனர். ஊர்த் தலைவராயிருந்தவர், முல்லைநிலத்துக் கரடுகளிலுங் குன்றுகளிலு மிருந்து கற்கொணர்வித்து, காரை (மணல் கலந்து சுண்ணாம்புச் சாந்து) பூசிக் கல்வீடு கட்டிக் கொண்டனர். சுடுமட்கலந் தோன்றியபின் சுடுமட் கல்லுஞ் சுடுமண் ஓடுந் தோன்றியதனால், அதிகாரமுஞ் செல்வமுஞ் சிறந்தவர் காரைபூசிச் செங்கல் மனைகள் கட்டி ஓடுவேய்ந்து கொண்டனர். ஓடு வேயாது மட்டமாக முகடமைத்த காரைவீடு மச்சுவீடெனப்பட்டது. சுடுமண் என்பது, முதலில், சுட்டகலம், சுட்ட செங்கல் சுட்ட ஓடு ஆகிய மூன்றுறையுங் குறித்தது. சுடுமண் = 1. மட்கலம், (சிலப். 14 : 146. அரும்). 2. செங்கல். சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பில் (பெரும்பாண். 405). 3. ஓடு. சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் (சிலப். 14 : 146) சுட்ட செங்கல் சுடுமட் பலகை யென்றுஞ் சொல்லப்பட்டது. பயிலுஞ் சுடுமட் பலகைபல கொணர்வித்து (பெரிய பு. ஏயர்கோன். 49). இறுதியில் செங்கல் என்னும் பெயரே நிலைத்தது. பார்வைக்கு நன்றா யிருக்கவும் வண்ண ஓவியம் வரையவும், செங்கற் சுவரெல்லாம் மணல் கலவாத வெண்சாந்தினால் தீற்றப்பட்டன. வெண்சாந்து பூசிய காரைவீடு, கூரைவேய்ந்த மண் வீட்டொடு ஒப்புநோக்கிய போது விளங்கித் தோன்றியதனால், நகர் என்று பெயர் பெற்றது. நகுதல் விளங்குதல். நகு - நகர். நகர்மிக்க வூரும் சினையாகு பெயராக நகர் எனப்பட்டது. வீட்டைக் குறிக்கும் குடி என்னுஞ் சொல்லும், குடிமிக்க வூரைக் குறித்தல் காண்க. (எ-டு): மன்னார்குடி, காரைக்குடி). இம் மயக்கந் தவிர்த்து ஊரையே குறிக்க நகரி என்னுஞ் சொல் எழுந்தது. நகர்களை (காரை வீடுகளை) உடையது நகரி. பெரிய நகர் (ஊர்) நகரம் எனப்பட்டது. இக்காலத்தில் மாநகர் என்பர். அங்ஙனஞ் சொல்லத் தேவையில்லை. அம் என்பது பெருமைப் பொருள் குறிக்கும் பின்னொட்டு, எ-டு: நிலை - நிலையம் விளக்கு- விளக்கம், மதி - மதியம் = முழுநிலா. நகர்களிலேயே நாகரிகந் தோன்றியதனால், நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்னுஞ் சொல்லினின்றே திரிந்த மைந்தது. நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம். அரசன் அல்லது அவனுடைய துணையதிகாரிகள் வதிதல், அறிஞரும் புலவரும் பேராசிரியரும் வாழ்தல், கணக்காய் பள்ளிகளும் தனிப்பட்ட பெரும்புலவரின் உயர்நிலைக் கல்வி நிலையங்களும் அமைந்திருத்தல், பெரும்பாலார் எழுதப்படிக்கத் தெரிந்தவராயிருந்து திருத்தமாகப் பேசுதல், எல்லாருந் திருந்திய பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல், அழகிய ஆடையணி கள் உடல் மறைய அணியப்படுதல், துப்புரவான காரைவீடுகளும் மாடமாளிகை களும் கூடகோபுரங்களும் நேரான பெருந் தெருக்களும் புதைசாலகங்களும் இருத்தல், ஏந்தான அழகிய வூர்திகள் இயங்குதல், உயர்ந்த அறுசுவை யுண்டிகள் உண்ணப் படுதல், பலவகை யுயர்ந்த பிறநாட்டு ஐம்புல நுகர்ச்சியரும் பொருட் கடைகள் அடுத்தடுத்திருத்தல், களவுங் கொள்ளையும் நிகழாவாறு ஊர்காவலர் அல்லும் பகலுங் காத்தல், கொலையாளிகளையும் பிற குற்றவாளிகளையுந் தண்டிக்கும் அறமன்றமும், திருக்கோவில்களும் துறவியர் மடமும் சொற்பொழிவுக்கூடமும் பட்டிமண்டபமும் உண்மை, முதலிய ஏதுக்களால், நகரங்களும் நகர்களுமே நாகரிகப் பிறப்பிடமாயின. அநாகரிகனை நாட்டுப்புறத்தா னென்றும், பட்டிக்காட்டா னென்றும் சொல்வதே, இதை வலியுறுத்தும். நகர மேம்பாடுகள் நகர்களிற் குன்றியிருக்கு மேனும் நாகரிகத்திற் கேதுவானவையே. நாகரிகம் நகரிற் பிறந்ததெனின், நகரத்திற் சிறந்த தெனலாம். பாண்டியன் மதுரை ஒரு நகரம் (மாநகர்) அக்காலத்து நெல்லை (திருநெல்வேலி) ஒருநகர், வைகை மதுரை போன்றதே பஃறுளியாற்றுத் தென்மதுரை. நாகரிகத்தின் முளை குறிஞ்சி நிலத்திலேயே தோன்றியதேனும், அது முழுவளர்ச்சி யடைந்தது மருதநிலத்து நகர்ப்பாங்கே யென்றும், குறிஞ்சி நாகரிகமும் முல்லை நாகரிகமும் மருதநாகரிகத்தின் கீழ்நிலைகளே யென்றும், நெய்தல் நிலை வணிகவளர்ச்சிக்கும் செல்வப் பெருக்கிற்குமே ஏதுவென்றும், பாலை நிலை நாகரிக வளர்ச்சியின்றிப் பண்பாட்டிழிபையே காட்டுமென்றும், அறிதல் வேண்டும். மருத நிலக் குமுகாய வாழ்வில், ஒருமனை மணமும் இறப்புவரை பிரியா இல்வாழ்வும் பெரும்பான்மையாயின. ஒருவனால் மணஞ் செய்யப்பட்டமைக்கு அறிகுறியாகப் பெண்ணின் கழுத்திற் பொற்றாலி கட்டப்பட்டது. பன்மனை மணமும் தீர்வை முறையும் தொடர்ந்தனவேனும், தொல்லை மிகுதியும் பண்பாட்டிழிபும் பற்றி அவை தாழ்வாகக் கருதப்பட்டன. ஊர்த்தலைவனும் அவனுக்கு மேற்பட்ட அரசரும், இன்பச் சிறப்பு நோக்கிப் பன்மனை மணத்தையே கடைப் பிடித்தாரேனும், அதன் இழிவை அவரது தெய்வத் தன்மையான அதிகாரம் முற்றிலும் மறைத்துவிட்டது. மருத நிலத்து நிலையான குடியிருப்பும் பயிர்த்தொழிலிற் குடும்பக் கூட்டுழைப்பும், கணவன் மனைவியர் காதலை வளர்த்து மணவாழ்க்கையை நீடிக்கச் செய்தன. உயிருக்கின்றியமையாத உணவுப் பொருள்கள் ஏராளமாகக் கிடைத்ததனால், வயிறாரவுண்டு இன்புறவும், உழைக்க இயலாதவர்க்குதவி அறம் வளர்க்கவும், ஏதுவாயிற்று. பொற்கால மருதநில ஆட்சித்துறையில், தனியூராட்சிபோய், ஒரு பேரூரும் அதனைச் சூழ்ந்த உட்கிடை போன்ற சிற்றூர்களுஞ் சேர்ந்த கூட்டூராட்சி தோன்றி, பின்னர் அதற்கும் மேற்பட்ட குறுநில மன்னராட்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். தனியூராட்சி என்பது, எல்லையளவில் இக்காலத்து நாட்டாண்மைக்காரன், பெரியதனக்காரன், பட்டக்காரன், அம்பலகாரன், மூப்பன், தலைவன், கவுண்டன், குடும்பன் முதலிய பெயர்களாற் குறிக்கப்படும் குடித்தலைவன் ஆட்சி போன்றது. ஆயின், அதிகார அளவில் பிற்காலத்து வேந்தன் ஆட்சி போன்றே கோன்மை (Sovereignty) கொண்டது. கூட்டூராட்சி என்பது, கிரேக்க நாட்டு நகர நாடு (City State) போன்றது; சின்னூறூர்களும் பன்னூறூர்களுங் கொண்டது. அம்மன்னரின் அரசு வீற்றிருக்கைகளெல்லாம் நகர்கள். அமைச்சரும் படை மறவரும் அவருக்குத் துணையாயிருந்தனர். மருத நிலக்குடியிருப்புப் போன்றே, முல்லை குறிஞ்சி நிலக் குடியிருப்பு களும் ஆட்சியில் மாறுதடைந்தன. அதாவது, தனியூராட்சி போய்க் கூட்டூராட்சி தோன்றிற்று. படைத்துணை யின்மையாற் குறுநில வாட்சி தோன்றவில்லை. இவ்வாட்சி மாற்றம் பண்டமாற்று, விழாக் காண்டல், வேட்டையாடல் முதலிய தொடர்புகளால் ஏற்பட்டது. ஆயின், மருதம்போல் நாகரிக வளர்ச்சியடைய வில்லை. இதற்கு நில அமைப்பே அடிப்படைக் கரணியம். அதனால், நகரங்களுந் தோன்றவில்லை; ஊர்ப்பெயர்களும் வேறுபட்டன. மருதநிலத்து ஊரே ஊரெனப் பட்டது. உர்=உறு. உறுதல் பொருந்துதல். உர்-ஊர், உழவுத் தொழிலே நிலத்தொடு பொருந்தி நிலையாக வாழ ஏதுவாயிற்று, அதனால், சிற்றூர் பேரூர் மூதூரும் ஆயின. நகரங்கள் பெருமை பற்றிப் பேரூர் என்றும், முதுமை பற்றி மூதூர் என்றும், சொல்லப்பட்டன. வாணன் பேரூர் (மணி. 3 : 123) அதிராச் சிறப்பின் மதுரை மூதூர் (சிலப். பதி. 39) முல்லைநிலத்திற் கால்நடைகட்குப் புல்வெளி தேடி அடிக்கடி இடம் பெயர வேண்டியிருந்தது. அதனாற் கட்டை மண்மேற் கூரைவேய்ந்து, உயரமின்றித் தாழ்வான வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அதனால் அந்நிலத்தூர் பாடி எனப்பட்டது. படுத்தல்= தாழ்தல், தாழ்வாயிருத்தல். படு-பாடு-பாடி. இனி, படு-படி-பாடி என்றுமாம். வீடுகள் செறிந்திருந்ததனால், அவ்வூர் சேரி எனவும் பட்டது. குறிஞ்சி நிலக் குடியிருப்பு நிலம்பற்றிக் குறிச்சி யெனப்பட்டது. குறிஞ்சி - குறிச்சி. சிறுசிறு கூட்டமாக வாழ்ந்ததனால் சிறுகுடி யெனவும் பட்டது. குடியென்றது குடித் தொகுதியை, குடி= வட்டமான சிறு வீடு. பொற்கால மொழி, பகுசொன்னிலை (Inflexional Stage) கடந்து தொகுநிலை (Synthetic Stage) பல்தொகுநிலை (Polysynthetic Stage) என்ற நிலைகளும் அடைந்திருத்தல் வேண்டும். முறையெண் நிலை எடுத்துக்காட்டு 1. (1) அசை நிலை: ஏ, உள், பல். (2) திரிநிலை யா, உண் (உட்கொள்). (பர்-பரு-பெரு). 2. புணர்நிலை பெருமகன், செய்கை, நல்லது. 3. கொளுவுநிலை வர் +ஒத்து + இ= வருத்துவி, சுள்-சுண்+அம் + பு = சுண்ண ணம்பு- சுண்ணாம்பு 4. பகுசொன்னிலை (பெருமகன்-) பெம்மான், பிரான்; செய்கை, நன்று. 5. தொகுநிலை ஏ+ஒன்= ஏன்-யான். ஏ+உம்=ஏம்-யாம். 6. பல்தொகுநிலை எல்+அ+உம்= எல்லவும்- எல்லாம், செய்+அல்+ஒண் +அர்+இது+அ= செய்ய வொண்ணாத- செய்யொணாத - செய்யொணா. அரிது - அருது = கூடாது. செய்யருது = செய்யக் கூடாது. புதுக் கற்காலத்தில், பெயர்வினை யென்னும் சொல் வேறுபாடும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் இடவேறுபாடும், ஒருமை பன்மை யென்னும் எண் வேறுபாடுமே இருந்திருந்து, பொற்காலத்தில் இருதிணையும் ஐம்பாலும் தோன்றியிருத்தல் வேண்டும். மருதநிலச் சொற்களால் சொல்வளம் பெருகிற்று. மதவியல் வாழ்க்கையில், பொற்கால மருதநிலத் தமிழர், பழைய குறிஞ்சி முல்லைத் தெய்வங்களுடன் இறந்த அரசனையும் தெய்வமாக வணங்கியதாகத் தெரிகின்றது. அக்காலத்தில், பெரும்பண்ணைகளி லெல்லாம், தாமாக வந்து ஒட்டிக் கொண்டவரும் விலைக்கு வாங்கப்பட்டவருமாக, இருசார் அடிமையர் இருந்தனர். அவர் தப்பி ஓடிப்போனாலும் அடிமையரென்று அறியப்படுவதற்கு, அவர் காதில் துளையிடப் பட்டது. தெய்வப்பற்று மிகுந்த பிற்காலத்தில், ஆண்டி முதல் அரசன் வரை எல்லா வகுப்பாரும் தம்மை இறையடியார் என்று காட்டுதற்குத் தம் காது குத்தித் துளையிட்டுக் கொண்டதாகத் தெரிகின்றது. அத்துளை தூர்ந்து போகாவாறே, முதலில் ஓலைச்சுருளும் பின்னர்ப் பொன்னோலையும் பிறவணிகளும் பெண்டிர் அணிந்து வந்திருக்கின்றனர். பாம்படம் (நாகபடம்), தண் டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, மேலீடு என்னும் ஐவகை நகைகளை யணிதற்குத் தம் இளமையிலேயே குணுக்கு என்னும் குதம்பையால் தம் காதுத் துளையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டனர். குமரிநாட்டுடன் இணைந்திருந்த பாண்டி நாட்டில், இவ்வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. அது காது வளர்த்தல் எனப்படும். ஆடவர் தம்சோணைத் தண்டை அத்துணை நீட்டாவிடினும், குழையும் குண்டலமும் குண்டுக் கடுக்கனும் அணியுமளவு துளையை அகலித்துக் கொண்டனர். உழவுத் தொழில் வரவர வளர்ந்து முழுநேர வுழைப்பையும் வேண்டியமையாலும், அதற்குப் பல புதுக்கருவிகள் வேண்டி யிருந்தமையாலும், வாழ்க்கையிலும் நாகரிகம் வளரவளரப் புதிதுபுதிதாகப் பல தேவைகள் தோன்றியமையாலும், எல்லார்க்கும் எல்லா வேலையுஞ் செய்ய நேரமில்லை யென்றும்; நேரமிருப்பினும், விருப்பங்களும் திறமைகளும் இயற்கையாகவே மக்கட்கு வேறுபட்டிருப்பதால், எல்லாரும் எல்லா வேலையுஞ் செய்ய வியலாதென்றும்; கண்டபோது, இயற்கையாகவே பற்பல தொழிற்பாதீடுகள் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்டன. மருதநில வாழ்க்கையில், அளவான ஊர்தொறும், முதன் முதற் கோவில் வழிபாடு செய்ய ஒரு பூசகனும், காவல் செய்து வழக்குத் தீர்க்க ஒரு தலைவனும், பண்டமாற்ற ஒரு கடைக்காரனுந் தோன்றியிருத்தல் வேண்டும். அதன்பின், உழவர்க்கு வேண்டிய பொருள்களைச் செய்துதவப் பக்கத்துணையாகப் பல தொழிலாளர் படிப்படியாகத் தோன்றினர். அவரைப் பதினெண்குடி மக்கள் என்பது மரபு. (த.வ.) பொறு (1) பொறுத்தல் = 1, சுமத்தல், சிவிகை பொறுத்தானோடூர்ந்தானிடை (குறள். 37), இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (239). 2. தாங்குதல். ஆலத்து... நெடுஞ்சினை வீழ் பொறுத்தாங்கு (புறநா. 58). 3. அணிதல். அம்மணி பொறுத்திரென் றறைந்தான் (உபதேசகா. உருத்திராக்.44). 4. நோவு தாங்குதல். 5. துன்பம் பொறுத்தல். 6. மனந்தாளுதல். பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23: 6). 7. ஒரு வினையைச் சற்று நிறுத்தி வைத்தல். பொறு, அப்புறம் உண்லாம் (உ.வ.). 8. காலந்தாழ்த்தல். ஒரு மணிநேரம் பொறுத்து வந்தான். 9. நீண்ட காலந் துன்பப்பட்டு அமைதியாயிருத்தல். 10. ஒன்றிற்குப் பொறுப்பாதல். அது உன் பொறுப்பு. 11. மன்னித்தல். 12. இளக்காரங்கொடுத்தல். 12. மரக்கலம் நிலந்தட்டுதல். தோணி பொறுத்துப் போய்விட்டது. 14. செலவு தாக்குதல். வண்டி உடைந்து விட்டால் ஆயிரம் உருபா உன்னைப் பொறுத்துவிடும். 15. உவமையாகத் தகுதல். உலம்பொறுக்கலாத தோளாய் (சீவக. 402) பொறுக்க = நிரம்ப, மூக்கு முட்ட, அளவிற்கு மிஞ்சி. பொறுக்கப் பிடித்துவிட்டான். (கொச்சை வழக்கு) பொறுதி = பிறர் குற்றம் பொறுத்தல். பொறுப்பு = ஒரு கடமை நிறைவேற்றத்தை அல்லது வினைத் தவற்றை ஏற்றுக் கொள்ளுதல். பொறுமை = நீண்ட காலம் ஒன்றிற்கு அமைதியாகக் காத்திருத்தல். பொறை = நீண்டகாலந் துன்பம் பொறுத்தல். பொறாமை = பிறராக்கங் கண்டு மனம் புழுங்குதல். பொறுத்தல் என்னுஞ் சொல்லிற்கு மேற்கூறிய பொருள்களெல்லாவற்றிற்கும் அடிப்படையானது சுமத்தல் என்பதே அது உடம்பாற் சுமத்தலும் உளத்தாற் சுமத்தலும் என இரு திறப்படும். அவற்றுள் முந்தியதே முன்னது. பொறு என்னும் தூய தென்சொல், கன்னடம், மலையாளம், துளு, குடகம், கோத்தம், துடவம் முதலிய திரவிட மொழிகளில் மட்டுமன்றி, ஆரிய மொழிகள் அனையவற்றிலும் சென்று வழங்கு வது, கீழ்வரும் எடுத்துக்காட்டு விளக்கத்தால் அறியப்படும். பொறு - E bear. to carry, OE, bearan, ON. bera, OFris bera, Du. beren, OHG, beran. to bear, carry. Goth. bairan, to bear, carry, give birth to, OHG, gi-beran, MHG. gebern, G. gebaren, Arm. beram, I bear, carry, bring, bern, burden, GK, pher, pherein, to bear, carry, L. fer, feere, to bear, carry, Celt. ber, Alb. mbar, bar, I carry, drag, bir, son, OSlav, bro, birati (for earlier birti), to bring together, collect, take, breme, burden, Slavonic ber, brati, Olr. biru, I carry, We cymeraf, I take, Toch, par, to bear, bring, fetch, Zend. bar, ber, Skt, bhar, to bear, carry. ஆங்கிலச் சொற்கள் bear, to carry. bearer, peron or thing that carries, personal servant, bringer of letters or message, possessor of shares, L ferter. bearing, outward behaviour, relation, reference, part of machine that bears the friction. bairn, Child, that which is born barley, what the carth bears or brings forth. AS. bere, barley: bier-lic- barley (Max Muller). barrow, two - wheeled handcart for carrying things berth, adequate sea-room for ship, sleeping place in ship train, etc., naut, use of birth. bier, movable frame on which coffin on cropse in carried to the grave. birth, the act of being born. burden, what is borne or carried. சமற்கிருதச் சொற்கள் bhri, to bear, carry, convey, to hold (on or in). RV. bhrit, bearing carrying, brining, supporting maintaining etc. bhrita, borne, carried, gained, etc. bhritaka, broghts, fetched, hired, etc. bhriti, braring, carrying, support, maintenance, etc. bhritya, to be nourished, maintained, a dependent, servant of a king, mainister, bhara, bearing, conveying, supporting, maintaining, etc. bharana, bearing, maintaining bharat, bearing, carrying RV. Bharata, son of Dushayanta and Sakuntala. Bharata varsha, country of Bharata, name of India. Bharata khanda, name of a part of B.V. bhari, bearing, possessing, nourishing bhariman, supporting, nourishing. bhartri, a bearer, one who bears or carries, or maintains, a preserver, protector, maintainer, chief, lord, master. bharatrika, a husband, bhara, weight, load, Bharata, descended from Bharata. Bharati, a female descendent of Bharata, N. of a deity (in RV. often invoked among the April delties and esp. together with and Sarasvati); accord to Nir, viii 13, a daughter of Aditya; later identified with Saraswati, goddess of speech) இலத்தீனில் மறுவடிவச் சொல் L. portare, to carry, F. porter. E. port, to carry. L. protabilis, F. portable - E. protable, that can be carried. L. portatus, F. portaticum, E. portage. the act of carrying E. portamento, glide from one tone to another. L. portatorem, F. porteur, ME. portour, E. porter, carrier, L. portare, It. portatoglis, lit, carrier of leaves, porto folio, E. portfolio. F. porte - manteau, lit ‘cloak bearer.’ E. portmanteau. a larger traveling the bag consisting of two compartments, portare என்னும் இலத்தீனச் சொல்லிற்கு வேறுவழியில் நலிந்தும் வலிந்தும் மூலங்காட்டி யிருப்பது பொருந்தாது. பொறு என்பதன் திரிசொல்லை வருஞ்சொல்லாகக் கொண்ட மேலையாரியக் கூட்டுச் சொற்கள் fer : confer, defer, differ, infer, lucifer, offer, prefer, profffer, refer, suffer, transfer. ferate : vociferate. ference : difference, circumference, conference phor : metaphor, phoshor, phora : cataphora, anthyopo phora, phore : semaphors, ctenophore, phoreo : Gk. diaphoreo, to carry through phoron : Gk. adisphoron, phorous : phosphorous, adiophorous. phery : periplery port : deport, disport, export, import, rapport, report, support, transport, கால்டுவெலார் சொல்லராய்ச்சி Glossarial Affinities - West Indo - European Family. “Poru, to sustain to bear, to suffer pationtly, poruppu, responsibility, porumei patience, Comp. Sans. bhri (bhar), to bear; Gothic bairan, bar, beram, to bear; Old High German beram, peran; English bear, bore; Old English bearn, - child; Greek phero; Latin fer-o. Tamil distinguishes between this word and pira; to be born.... Latin in like manner distinguishes between par-io and fer-o. whilst the Teutonic tongues make no difference between bear, to sustain, and bear, to bring forth. They constitute one word, from which is formed the past participle to be born or borne and also the noun birth.” பிறந்தை என்னும் தமிழ்ச் சொல்லை ‘birth’ என்னும் ஆங்கிலச் சொல் ஒத்திருத்தலால், பிறப்பு வினையைக் குறிக்க வேறொரு சொல்லும் தியூத்தானிய மொழிகளில் முதலில் வழங்கிப் பின்பு மறைந்திருக்கலாம். கால்டுவெலார், பொறு என்னும் தென்சொற்கு இனமான ஆரியச் சொற்களை, தாமே கண்டிருப்பது இங்குப் பெரிதுங் கவனிக்கத்தக்கது. மாக்கசுமுல்லர் ஆராய்ச்சியுங் கூற்றும் “No one can help seeing that even amongst the most ordinary words in English there are some which are very much alike in sound. If these words have also some similarity in meaning we are justified in supposing that they may have a common origin. “Take for instance, such words as, to bear, burden, bier, and barrow. They all have the same constituent element, namely, br; they all have a meaning connected with bearing or carrying. Burden is what is carried; bier, what a person is carried on; barrow, in wheel-barrow, an implement for carrying things. “No doubt, this is only prima facie evidence. We must not forget that we are dealing with a modern language which has passed through many vicissitudes. In order to institute truly scientific comparisons, we should have in each case to trace these words to their Anglo-Saxon, or even to their corresponding Gothic forms. “But though it is necessary, before we institue comparisons, always to go back to the oldest forms of words which are within our reach, still for practical purposes it suffices if we kown that such words as bear, burden, bier and barrow have all beeen proved to come from one common source. “And more than this. As to bear is used in many languages in the sense of bearing children, we may safely trace to the same source such English words as brith, and bairn, a child. “Nay, as the same expression is also used of the earth-bearing fruit, we can hardly be wrong in explaining, for instance, bar-ley, as what the earth bears or brings forth. In German Getrcide, M.H.G. Getregede, literally, what is born, has become the name of every kind of corn. If we go back to Anglo-Saxon, we find boer-lic for barley, in which lic is derivative, while bere by itself meant barley. In Scotland more particularly bear continued to be used for barley and a coarse kind of barley is still called bear-barley. Barn also receives the explanation from the same quarter. For barn is contracted from bere-oern, which means barley-house, or, as also called, bere-flor. “But now we shall be asked, What are those mrysterious syllables? What is, for instance, that bar, which we discovered as the kernel of ever so many words? “These syllables have been called roots, That is, of course, nothing but a metaphorical expression........ In burden, den is formative; in birth, th is formative; in bairn, n is formative. In barn, too, n is formative, but it is different from the n in bairn, because it is really a contraction of oern. Bere-oern meant a place for bar-ley, just as horsern meant a place for horses, a stable, sleepern, a sleeping place. “There remain therefore bar with a variable vowel, and this we call a root, or an ultimate element, of speech, because it cannot be analysed any further. “This root bar, however, is not an English root. It existed long before English existed, and we find it again in Latin, Greek, Celtic, Slavonic, Zend, and Sanskrit, that is, in all the languages which form what is called the Aryan family of speech. As this root bar exists in Latin as fer, in Greek as pher, in Celtic as ber, in Slavonic as ber, in Zend as bar, and in Sanskrit as bhar, it is clear that it must have existed before these languages separated, and that, as you may imagine, must have been a very, very long time ago”. (Three Lectures on the Science of Language, pp. 20 - 23.) புல் - பொல் - பொர் - பொரு - பொறு. (பொருதல்= பொருந்துதல், பொருந்தித் தாங்குதல், ஒ.நோ: முட்டுதல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல், முட்டுக் கொடுத்தல் என்னும் வழக்கை நோக்குக. பொரு - பொருப்பு = வான்முகட்டைத் தாங்குவதாகக் கருதப்பட்ட மலை. Atlas என்னும் இலிபிய (Libeya) நாட்டுமலை வான்முகட்டைத் தாங்குவதாக. பழங்காலக் கிரேக்கரால் கருதப்பட்டமையை நோக்குக. இதினின்று. உலக முதன்மொழியும் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான தமிழினின்றே, சுமத்தலைக் குறிக்கும் (மேற்காட்டிய) ஆரியச் சொற்களெல்லாம் திரிந்துள்ளன வென்று, தெற்றெனத் தெரிந்து கொள்க. பொறு (2) (1) சொல் : பொறு (2) சொல்வகை : (part of speech or word-class) - வினை - செயப்படு பொருள் குன்றா வினையும் (transitive verb) செயப்படுபொருள் குன்றிய வினையும் (intransitive verb). (3) புடைபெயர்ச்சி : (உடிதேரபயவiடிn) - 15ஆவது வகை, பொறுக்கிறேன் (நி.கா.), பொறுத்தேன் (இ.கா.), பொறுப்பேன் (எ.கா.). (4) பொருளும் ஆட்சி மேற்கொளும் : (meanings and illustrative quotations) செயற்பெயர் வடிவு : (Gerundial form) பொறு-த்தல், (செ. குன்றா. வி.). 1. சுமத்தல், to bear, sustain. சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை (குறள். 37). இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள். 239). 2. தாங்குதல். to prop, to support, ஆலத்து... நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). 3. அணிதல், to put on. அம்மணி பொறுத்திரென் றறைந்தான் (உபதேசகா. உருத்திராக். 44), 4. உடன் கொண்டிருத்தல், to continue, to possess, as one’s own body. பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23 : 6). 5. துன்பம் பொறுத்தல். to endure, suffer. 6. குற்றம் பொறுத்தல், to bear with, to put up with. 7. இளக்காரங் கொடுத்தல், to indulge to allow. 8. மன்னித்தல், to excuse, forgive, pardon. தம்மை யிகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள். 151). 9. பிற கருத்து வேறுபாட்டை அல்லது மத வேறுபாட்டைப் பொறுத்துக் கொள்ளுதல், to tolerate. 10. பொறுப்பு (உத்தரவாதம்) ஏற்றல், to take resposibility, to be accountable for. 11. காலந் தாழ்த்தல், to delay, to postpone. 12. உவமையாகப் பெறுதல், to be similar. உலகம் பொறுக்கலாத தோளாய் (சீவக. 402). 13. அழுத்துதல், to press heavily, as a load. (செ. குன்றிய வி.) 1. பொறுமையாயிருத்தல், to be patient, exercise forbearance. 2. வினையிடை நின்று கொள்ளுதல். to stop, wait halt in doing anything. 3. விலை கொள்ளுதல், to cost, as an article; to be spent or expended on. 4. தோணி தட்டிப்போதல், to run aground, as a vessel, to strand. 5. மாட்டிக் கொள்ளுதல், to become fixed, jammed, wedged in (W.). 6. கடமையாகக் சுமருதல், to devolve upon, as a duty responsibility expense. 7. இணங்கியிருத்தல், to consent yield, comply with. 8. மிகுந்திருத்தல், to be excessive. 9. கனத்தல், to be heavy, weighty. ஏவலொருமை (imperative singular) சற்றே பொறு, wait a little. பெயரெச்சம் : (adjectival participle) (இ.கா.பெ.) இது அவனைப் பொறுத்த கருமம் (காரியம்), this is devolved on him. பொறுத்த குடும்பம், a large burdonsome family. பொறுத்த சுமை, load that presses heavily. வினையெச்சம் : (Adverbial Participle) இ.கா.வி. (past participle). ïUehŸ bghW¤Jth., come after two days. நி.கா.வி. (infinitive mood). அடிபொறுத்தாலும் வசவு பொறுக்க முடியாது. பொறுக்க உண்டுவிட்டார். He has taken excessively. பொறுக்க மிதித்தல், to tread hard, with pressure. செயற்பெயரும் தொழிற்பெயரும் (gernud and verbal noun) சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு வரிதே. (வெற்றிவேற்கை. 32). சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே (வெற்றிவேற்கை. 31). குற்றம் பொறுக்கை பெரியோர் இயல்பு. தொழிற் பண்புப்பெயர் : (abstract noun). பொறுப்பு, responsibility (உத்தரவாதம், வ.). பொறுப்பாளி. a responsible person. பொறுப்புகாரன் (யாழ. அக.). பொறுப்புள்ள பதவி. a responsible post. பொறுப்புள்ளவன். one in a responsible post or place of trust, a responsible man. பொறுப்பற்றவன், an irresponsble man. பொறுப்பற்ற தனம், irresponsibility, indifference to a trust. பொறுமை, patience. பொறாமை. எ.ம. (neg) intolerance,nvy,jelousy பொறுமைசாலி. patient person. பொறுமைக்காரன், patient man (W.). பொறுதி. forbearance, forgiveness. தொழிலாகு பெயரும் அதன் திரிபுகளும் : (Metorymical verbal noun and its derivatives) பொறை = பெ. 1. சுமை (பாரம்). (திவா.) குழையு மிழையும் பொறையா (கலித். 90); burden, load. 2. கனம், பொறை தந்தன காசொளிர் பூண் (கம்பரா. உயுத். அதிகா. 40); weight, heaviness. 3. சூல் (கருப்பம்) Pregnancy (சூடா.). 4. சிறு குன்று, அறையும் பொறையும் மணந்த தலைய (புறநா. 118); hillock. 5. மலை. நெடும் பொறை மிசைய குறுங்காற் கொன்றை (ஐங்குறு.430); mountain. 6. ஞாலம் (பூமி. வ.) (பிங்.). பொறைதரத் திரண்ட தாரு (இரகு. தசரதன் சாப. 50), earth. 7. துன்பந்தாங்கும் தன்மை. வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (குறள். 153), forbearance. 9. அடக்கம். பொறையு நாணு நீங்கினார் (கம்பரா. மீட்சி. 38); modesty meekness. 10. வலிமை. போதகாதிபன் முதலைவாயிடைப் பொறை தளர்ந்து (பாரத. ஆதி. வேத்திரகீய. 1); strength, fortitude. பொறை - பொற்றை = பெ. 1. கற்பாறை (திவ். திருச்சந். 52. வ்யா). rock. 2. சிறுமலை (பிங்.). பொற்றைமால் வரைகளோவென் புயநெடும் பொருப்பு மம்மா (கம்பரா. இலங்கை. காண். 22); hillock, mound. 3. மலை. (பிங்.). பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218.10); mountain. தூண்கள் மண்டபத்தைத் தாங்குவதுபோல் மலைகள் வான முகட்டைத் தாங்கின்றன என்னும் பண்டைக் கருத்துப்பற்றி மலை பொறையெனப்பட்டது. “Atlas .... (Atlas-antos (1) Greek god of the older family. who held up pillars of universe; (2) the mountain in Libya regarded as supporting the heavens)” “Atlantic... 1. Pertaining to mount Atlas in Libya; hence applied to sea near western shore of Africa, & later to whole ocean between Europe and Africa on east & America on west.... (f. L. f. Gk. Atlantikos. f. Atlas)” என்று எருதந்துறைச் சிற்றகரமுதலி (the concise oxford dictionary) குறித்திருத்தல் காண்க. பொறையன் = பெ. 1. சுமப்பவன். புன்னிலைப் பவத்துக் கெல்லாந் தானொரு பொறையனாகி (உபதேசகா. சிவபுண். 344); bearer, sustainer. 2. மலையரசனான சேரன். யானைக் கடுமான் பொறைய (புறநூ. 53); Cera king, as lord of the mountainous region in the Tamil country. 3. பொறுமைக்கும் பொறைக்குஞ் சிறந்த தருமபுத்திரன்; Dharmaputra, the eldest of the the Pandavas, as embodiment of patience. குறும்பொறை = பெ. சிறுமலை (பிங்.), வரையக நண்ணிக் குறும் பொறை நாடி (பதிற்றுப். 74 : 7). குறும்பொறை நாடன் = முல்லைநிலத் தலைவன் (இறை. 1 : 18) chief of the sylvan or pastral tract. இரும்பொறை = பெ. சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று (பதிற்றுப். 89 : 9). எ-டு : சேரமான் கணைக்காலிரும்பொறை; a title of the Cera kings. பொறையாளன் = பெ. 1. பொறுமைசாலி 2. தருமபுத்திரன் (பிங்.). பொறையாட்டி = 1. பொறுமையுள்ளவன். சுருங்கும் மருங்குற் பெரும் பொறை யாட்டியை (திருக்கோவை. 353); patient woman. 2. காவு (பலி) கொடுக்கும் பூசாரிப் பெண். கானப்பலி நேர்கடவுட் பொறையாட்டி வந்தாள். (பெரியபு. கண்ணப். 65); priestess who offers animals to god in sacrifice. பொறையிலான் = பெ. 1. பொறுமையில்லாதன், impatient person. 2. வேடன், savage hunter. பொறைநிலை = பெ. மனத்தை ஒரு வழிப்படுத்துதல் (தாரணை. t.); concentrated attention in yogic meditation. வினையாலணையும் பெயர் : (participal noun or appelativetive verb). பொறுத்தார் புவியாள்வர் பொறுத்தார் நாடாள்வர், பொங்கினார் காடாள்வர் (பழமொழிகள்). பசி பொறுக்காதவன் (எ.ம.), one who can not bear hunger. கூட்டுச்சொல் : (compound words) எ-டு :இரும்பொறை, குறும்பொறை, நெடும்பொறை, பொறையிலான். இணைமொழி : (words in pairs) எ-டு :அறையும் பொறையும், பெ. தொடர் மொழி : (phrase) எ-டு :பொறுப்பற்றதனம், பெ. மரபு வழக்கு : (idioms) பொறுத்திரு-த்தல் (செ. குன்றிய வினை.) To wait patiently. பொறுத்துக்கொள்-ளுதல். (செ. குன்றா வி.) To bear with. பொறுத்துப் போ-தல் : (செ. குன்றா வி.) 1. தோணிதட்டுதல் to ran aground. 2. மாட்டிக் கொள்ளுதல். to be stuck or jammed in. செ. குன்றிய வி. தொடர்ந்து பொறுத்தல், to continue. to tolerate. பொறுப்புக் கட்டு-தல் : (செ. குன்றாவி.). 1. பொறுப்பேற்றுதல் (உத்தரவாதப் படுத்துதல்), to put responsibility on 2. ஈடுகாட்டுதல், to tender as security. 3. முற்றுவித்தல் to accomplish (W.). பொறையிருந்தாற்று-தல் : (செ. குன்றா வி.) துன்பம் பொறுத்தலைக் கடைப்படித்தல், to bear with patience பொறையிருந் தாற்றுயென்னுயிரும் போற்றி னேன் (கம்பரா. சுந்தர. உருக்காட்டு. 11). பொறையுயிர்-த்தல் (செ.குன்றா வி). 1. மரக்கலம் சரக்கிறக்குதல், to be unloaded, as a vessel. 2. இளைப்பாறுமாறு சுமையிறக்குதல், to disburden and rest துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி (பொருந. 239). 3. மகப் பெறுதல். பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டில் (நன். 269, உரை); to be delivered of a child. பிறவினை (causal verb) 1. பொறுக்கவைக்கிறேன், பொறுக்கவைத்தேன், பொறுக்க வைப்பேன். பொறுக்கவை-த்தல் = (செ. குன்றா வி.). 1. சாரவைத்தல் to place, lean against. 2. மிகுசுமையேற்றுதல், to overload 3. பொறுப் பேற்றுதல், to impose a duty or expense upon 4. பொறுத்துக் கொள்ளச் செய்தல், 5. தோணி தட்டச் செய்தல் to run aground, as a vessel. 2. பொறுப்பிக்கிறேன், பொறுப்பித்தேன், பொறுப்பிப்பேன். பொறுப்பி-த்தல் = (செ. குன்றா வி.) 1. சுமத்துதல், to cause to rest on. 2. முட்டுக்கொடுத்தல், to prop; to sustain (W). 3. பொறுக்குமாறு செய்தல். திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே (அஷ்டாதச முமுட்சுப்) to cause to bear. 4. பொறுப்புக் கட்டுதல், to put responsibility on. (5) மூலமும் திரிபும் (Original and derivation) புல் - பொல், பொரு - பொறு புல்லுதல் = பொருந்துதல். பொல்லுதல் = பொருந்துதல். பொருதல் = பொருந்துதல். பொறுத்தல் = பொறுந்துதல், பொருந்தித் தாங்குதல், சுமத்தல். ஒ. நோ : முட்டுதல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல். முட்டுக் கொடுத்தல் என்பது தாங்குதல் அல்லது தாங்கவைத்தல் என்று பொருள்படுதல் காண்க. (6) இனச்சொற்கள் (congnates and allied words) திரவிடம் மலையாளம் - பொறு(க்க), கன்னடம் - பொறு. குடகம் - பொரி, கோத்தவம் - பொர், துடவம் - பிர், துளுவம் - புதெ = (சுமை.) load, burden. கோண்டி - புகுத்தானா = கனத்தல் to high heavily. OE., OS., OHG ber (an), E. bear, ON ber (a), Goth bair (an) L. fer (re) Gk. pher (ein). Skt bhar. LL port (are), to carry. port என்பதினின்று திரிந்தவையே porter, portage, portable, portative முதலிய தனிச்சொற்களும், import, export, comfort, deport, purport, rapport, report, support முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களும் fortfire, fortfolio, fortmanteau முதலிய கூட்டுச்சொற்களும். bar அல்லது bhar என்னும் ஆரிய வேர்ச்சொல் பற்றி For instance. the root bar or bhar particularly if we minde the words derived from Latin ferre and adopted English such as, for instance, fertile, far (barley), farina, barley-flower, reference, deference, conference, difference, inference, preference, transference and all the rust, would more than a hundred English words. We should not want therefore more than a hundred such roots to accounts for 10,000 words in English.” (p.26). “Thus birth was originally bhar, to bear plus a domonstrative element in English th which localises of bearing here and there”. “The sanskrit bi-bhar-mi shows us the same root reduplicated, so as to express continous action and followed by as a personal demonstrative bearing comes to mean, I bear. The English bear-able is a compound of bear with the Roman suffixable, the Latin abilis, which expresses fitness.” (p. 27) என்று மாக்கசு முல்லர் தன் மொழிநூல் பற்றிய முச் சொற்பொழிவுகள் (Three Leatures on the Science of Language) என்னும் பொத்தகத்தில் வரைந்திருப்பது கவனிக்கத் தக்கது. ஒருசில மேலை மொழி நூலாராய்ச்சியாளர் பிரதர் (brother) என்னும் ஆங்கில முறைப்பெயரையும் bar (bear) என்னும் மூலத்தினின்று திரித்து, குடும்பத்தைத் தாங்குபவர் என்று பொருட் கரணியங் கூறுகின்றனர். அஃதுண்மையாயின், பொறுத்தார் என்னும் தமிழ்ச்சொற்கு அஃது இனமாயிருக்கும். இனி, கி.பி. 10 ஆம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணியில் கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் (சீவக. 62) என்று உய்த்தல் அல்லது ஏற்றிச்செல்லுதல் என்னும் பொருளில் ஆளப் பெற்றிருக்கும் கரைதல் என்னும் தூய தமிழ்ச்சொல், கேரி (carry) என்னும் ஆங்கிலச் சொல்லை ஒலியிலும் பொருளிலும் குறித்திருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. கரை என்பது பழங்கன்னடத்திலும் கர என்னும் வடிவிலுள்ளது. ஆங்கில அகரமுதலிகள் carry என்னும் சொல்லை வண்டியைக் குறிக்கும் கார் (car) என்பதனொடு தொடர்புபடுத்துகின்றன. ஆங்கிலர் வருகைக்கு ஆறு நூற்றாண்டிற்கு முற்பட்ட கரை என்னுஞ்சொல் ஆங்கிலத்தினின்று வந்திருக்க முடியாது. ME. & ONF carre f.L. carrus. cum four wheeled vehicle, f. celt karrom OS, Olr. O Welsh karr, E. car. இங்ஙனம் நூற்றுக்கணக்கான அடிப்படை ஆரியச்சொற்கள் தமிழ்ச் சொற்களோடு ஒத்திருப்பதுடன் தமிழிலேயே வேர்களைக் கொண்டிருப்பதால் அவ்வொப்புமை தற்செயலாக நேர்த்திருக்க முடியாது. சிறப்புக் குறிப்பு ஆரியத்தில் வழங்கும் தமிழ்ச்சொற்களுள் பொறு என்பதும் ஒன்று. மேலையாரியத்திலும் கீழையாரியத்திலும் வழங்கும் வடிவுகளை நோக்கின், தியூத்தானியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொற்கு மிக நெருக்கமாகவும், இலத்தீனச் சொல்லும் கிரேக்கச் சொல்லும் சற்றுத் திரிந்தும் சமற்கிருதச் சொல் மிகத் திரிந்தும் இருப்பதைக் காணலாம். ஒகரம் எகரமாகத் திரிவது இயல்பே. எ-டு : சொருகு - செருகு. இம்முறைப்படி பொறு என்பது ஆங்கிலத்திலும் இலத்தீனிலும் கிரேக்கத்திலும் ber, fer, pher எனத் திரிந்துள்ளது. சமற்கிருதத்தில் bhar என்று ஒகரம் அகரமாகத் திரிந்துள்ளதும் இயல்பேயாயினும் அஃது எடுப்பொலியும் மூச்சொலியும் கூடி மிகத் திரிந்துள்ளமை காண்க. அத்திரிபே கலவைத் தமிழில் பரி என வழங்குகின்றது. Port என்னும் இலத்தீனச் சொல் பொறுத்தல் என்னும் தொழிற் பெயரினின்று திரிந்திருக்கலாம். திருத்தம் சென்னை யகரமுதலியில் bhar என்னும் சமற்கிருதச் சொல்லொடு ஒப்புநோக்குமாறு ஏவி, அத்திரிபையே மூலம்போற் குறிப்பாகக் குறித்திருப்பது தவறாகும். போட்டி வகை இகல் : பகைமையால் இடும்போட்டி; இசல் : விளையாட்டாக இடும் போட்டி; வீம்பு : வம்பிற்கு இடும் போட்டி; (சொல்: 59) போலித் தமிழ்ப்பற்று உலகிற் பல பொருள்கள் போலியாகவுள்ளன. பொதுவாக, வெளிப் பார்வையில் போலிப் பொருள்களே உண்மைப் பொருள்களி னும் பொலிந்து தோன்றுகின்றன. இப் பொதுவியல்பு போலித் தமிழ்ப் பற்றாளர்க்கு விலக்கன்று. (1) அயன்மொழிப் பெயர் ஆரியர் வருமுன் தமிழர் பெயரெல்லாம் தூய தமிழ்ச் சொற்க ளாகவே யிருந்தன என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அவர் வந்து ஆயிரம் ஆண்டுகட்குப் பிற்பட்ட கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் பெயருள்ளும் தொண்டே (ஒன்பதே) முழுமையாகவோ பகுதியாகவோ வடசொல்லா யிருந்தன. அக் காலத்தில் மொழியாராய்ச்சி இன்றுள்ள வகையிலும் அளவிலும் இல்லை. ஆரியமும் பிராகிருகதமுங் கலந்த வேதமொழியும், அதனொடு தமிழ்கலந்த சமற்கிருதம் என்னும் வடமொழியும், தேவமொழியென முற்றிலும் நம்பப்பட்டன. அங்ஙனமிருந்தும் ஆரியரொடு பழகிய தமிழ்ப் புலவருள் ஐந்திலொரு பகுதியினரே வடசொற்பெயர் தாங்கினர். ஆரியர் தொடர்பு சிறிதுமற்ற நாட்டுப்புறத் தமிழர் பெயர் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொல்லாகவே யிருந்திருத்தல் வேண்டும். எனினும், அன்றிலிருந்து 1916ஆம் ஆண்டு வரை, வடசொற்கள் தமிழ்ப் பேச்சிலும் இலக்கி யத்திலும் தமிழின் தொண்டை நெரியுமளவு சிறிது சிறிதாய் மேன்மேலும் தொடர்ந்து கலந்து வந்ததினால். தமிழர் பெயரும் அந் நிலைமை யடைந்தன. தமிழர்க்கு நற்காலமாக, 1916ஆம் ஆண்டு தவத்திரு மறைமலை யடிகள் வடசொற்களை அறவே களைந்து, தமிழ்ப்பயிர் மீண்டும் தழைத்தோங்குமாறு செய்தருளினார்கள். அன்றிலிருந்து தனித் தமிழ் கல்லாப் பொதுமக்களிடையும் கடுகிப் பரவி வருகின்றது. ஆயின், இந்நிலைமைக்கு முற்றும் மாறாக, தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் தமிழ்க்காவலரும் தமிழ அமைச்சரும் வடசொற் பெயர் தாங்கிவருவது வியக்கத்தக்க வேடிக்கைச் செய்தியே. அவர் வடசொற் பெயர் தாம் தாங்குவது மட்டுமன்றித் தம் மக்கட்கும் பேரப்பிள்ளைகட்கும் இட்டு ஆரியமரபை அழியாது காத்து வருகின்றனர். பேரா. பரிதிமாற் கலைஞன் பிராமணராயிருந்தும் தனித்தமிழுக்கு வித்தூன்றித் தம் பெயரைத் தூய் தமிழ்ச் சொல்லாக மாற்றிக் கொண்டார். தமிழ்ப் பெயர் தாங்காதவர் உண்மைத் தமிழ்ப் பற்றுற்றுள்ளவராக இருக்கவே முடியாது. இம் மூவகையாரும். சிறப்பாகத் தமிழ்நாட்டு அமைச்சர், தாமும் தம் கான்முளையரும் தமிழப் பெயர் தாங்காக் குற்றத்தை மறைக்க ஒருவழி கண்டுபிடித்திருக்கின்றனர். அஃது அரசியல் அலுவலகங்கட்கும் தாம் தங்கியிருக்கும் கட்டடங்கட்கும் தமிழ்ப் பெயரிடுவதே. ஐயறிவுள்ள அரிமாவும் வரிமாவும் கரிமாவும் நரிமாவும் முதலிய விலங்குகட்கும் தமிழ்ப் பெயர் சூட்டின் அவை இம்மியும் எதிர்க்காது ஏற்றுக் கொள்ளும். அங்ஙனமிருக்க, ஓரறிவுயிருமற்ற கட்டடங்கள் அமைதியாய் ஏற்காது என் செய்யும்? இனி. கட்டடங்கட்குப் பெயரிடுவதில் ஓர் ஏந்தும் (வசதியும்) உள்ளது. விலங்காயின், அவற்றின் கழுத்திற் கட்டித் தொங்கவிட்ட பெயர்ப் பலகைகளைச் சிதைத்துவிடலாம் அல்லது எங்கேனும் வீழ்த்திடலாம். கட்டடங்களோ பெருமழை பெய்தாலொழியப் பெயர் அழியப் பெறா; நிலநடுக்கம் உண்டானாலொழியப் பலகை சிதையப்பெறா. இனி, நகரப் பேரியங்கிகளில் திருக்குறள் எழுதிவைப்பது அல்லது திருக்குறட்பலகை ஆணியறைந்து வைப்பதும், திருக்குறள் அறிவையோ, தமிழ்ப் பற்றையோ, அவற்றில் ஏறிச் செல்வார்க்கு உண்டாக்கிவிடாது. முன்னும் பின்னும் நிற்கும் அல்லது இருக்கும் ஆள் தெரியாதவாறு சிறிது நேரம் நெருக்கி நின்று. இறங்குமிடம் சென்று சேர்வதைக் கவனிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்து ஏந்தாகச் சீட்டு வாங்கவும் இயலாத வழிப் போக்கர், திருக்குறட் பலகையிருக்குமிடங் கண்டு வாசித்து அதன் பொருளுணர்ந்து அதன்படி நடப்பர் என்பது, வெண்ணெய் தடவிக் கொக்குப் பிடிப்பதை நம்புவதினுங் கேடானதே. ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ் (குறள் 156) என்னுங் குறளைப் படித்துப் பொருளுணர்ந்திருந்தால், சென்ற ஆண்டு (1968) மாணவர்க்கும் சென்னை மாநகரப் பேரியங்கித் தொழிலாளர்க்கும், இடை நிகழ்ந்த சச்சரவு நேர்ந்தேயிராது. குறள் நெறியைக் கைக் கொள்ளாமற் குறளைப் பார்த்தால் மட்டும் போதுமெனின், ஒவ்வொரு கட்டடத்திலும் சுவருக்கொரு குறளோ குறளதிகாரமோ எழுதி. சிறுகட்டடங் களில் ஓரீரியலையும் பெருங்கட்டடங்களில் ஓரிருபாலையும் மாபெருங் கட்டடங்களில் முப்பாலையும் முடித்துவிடலாம். மேலும், தனிப்பட்டவர் பேரியங்கிகளிலும் மாட்டுவண்டி குதிரை வண்டிகளிலும் ஒவ்வொரு குறள் அட்டை தொங்க விடலாம். திருவள்ளுவர் கள்நெறியைக் கண்டிப்பது போன்றே கவறாட்டை யுங் கண்டிக்கிறார். கவறாட்டுத் தன்மையுள்ள சீட்டாட் டெல்லாம் கவறாட்டே. 2. கலவை நடைப்பேச்சு இற்றைத் தமிழிற் கலந்துள்ள அயன்மொழிச் சொற்களெல்லாம் ஒவ்வொரு சொல்லாகத் தமிழிற் புகுந்தவை அல்லது புகுத்தப் பட்டவையே. அவை புகுத்தப்படுமுன் அவற்றால் இன்று வழக்கு வீழ்த்தப்பட்டுள்ள தூய தமிழ்ச்சொற்களெல்லாம் எல்லார்க்கும் எளிதாய்ப் பொருள் விளக்கினவே. அவற்றின் இடத்தில் இன்று எளிதுணர் பொருட்சொற்கள் போல் வழங்கும் அயற்சொற் களும் தொடக்கத்தில் அரிதுணர் பொருட்சொற்களாயிருந்தனவே. ஆதலால், எளிய வழக்குச் சொற்களை நீக்கிவிட்டு அரிய வழக்கற்ற சொற்களைப் புகுத்துதல் கூடாதென்று கூறுவார், அறிவாராய்ச்சியில்லாதவரும் தமிழ்ப் பகைவருமே யாவர். ஒருநாளுக்கு ஓர் அயற் சொல்லை விலக்கினாலும் ஓரீராண்டிற்குள் ஒருவர் தனித்தமிழ் பேசப் பயின்று கொள்ளலாம். ஒவ்வொருவரும் நூற்றிற்கு நூறு தூய்மையாகப் பேசாவிடினும் இயன்றவரை பேசினாற் போதும்! (3) வழுநடைப் பேச்சு இனி. தூய தமிழையும் இலக்கணப் பிழையின்றித் திருந்திய வடிவிற் பேசுவதே கற்றோர்க் கழகாம். கல்விக் கழகு கசடற மொழிதல். என்றார் அதிவீரராம பாண்டியர். பண்டைக் காலத்திற் குமரிநாட்டிற் பொது மக்களும் திருத்தமாய்ப் பேசி வந்தனர். இன்று புலமக்களும் பிழையின்றிப் பேசுவதில்லை. கொச்சைத் தமிழை விரும்பும் காமில் சுவலெபில் என்னும் செக்கோசிலாவக்கியத் தமிழறிஞரும் தம் தமிழ் வரலாற்றிலக்கணச் சொற்பொழிவுகள் (Lectures on Historical Grammar of Tamil) என்னும் ஆங்கிலச் சுவடியில், எழுத்திற்கும் முறைப்பட்ட பேச்சிற்கும் பயன்படுத்தப்பெறும் இலக்கிய நடைத் தமிழை, தமிழ்நாட்டுத் தலைசிறந்த கல்வியாளரும் வழக்கமான உரையாட்டில் ஒருபோதும் கையாள்வதில்லை. பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தம் மனைவியாரொடு அல்லது மக்களொடு பேசும் போது சொல்கிறேன் என்று சொல்வதில்லை, சொல்ரேன் என்றே சொல்கிறார். தமிழ் எழுத்தாளர் ஒருவர் தம் நண்பரொடு பேசும்போது, இல்லா விட்டால் என்ற வடிவத்தையன்று, இல்லாட்ட என்ற வடிவத்தையே பயன்படுத்துகின்றார். (பக். 5-6) என்று இற்றைத் தமிழ்ப் பேராசிரியரையும் எழுத்தாளரையும் பழித்திருக்கின்றார். வழுநடையைப் போன்றே இலக்கண நடையும் வழக்கமாயின் எளிதாவதே. சில சொற்களின் வழுவடிவம் உண்மையில் திருந்திய வடிவத்தினும் பலுக்கல் (உச்சரிப்பு) அரிதாயிருக்கும். ஆயினும், வழக்கங் கரணியமாக எளிதாக வாய்க்கு வரும். எடுத்துக்காட்டாக, தஞ்சை வட்டாரத்தில் எண்பது என்னும் சொல்லின் எம்பளது என்னும் திருந்தா வடிவம் எளிதாக வழங்குதல் காண்க. (4) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் திருத்தம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, வேண்டு மென்றே தமிழ் சமற்கிருதத்தின் கிளை என்று அயலார் கருதுமாறு, தொகுக்கப்பட்டுள்ளது. இதில், அக்கை, அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு) அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்), அரசு (அரசன்), அரத்தம், அவை (அவையம்) ஆசிரியன் (ஆசிரியம்) ஆணி, ஆயிரம், இலக்கணம், இலக்கியம், உவணம் (சுவணம்), உவமை, உரு (உருவு, உருபு, உருவம்). உலகு (உலகம்), ஐயன் முதலிய ஆயிரக்கணக்கான அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் ஆரியச் சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. பேரா. பரோ, பேரா. எமனோ ஆகிய மேனாட்டுப் பேராசிரியர் இதை அடிப்படையாகக் கொண்டதினாலேயே, தம் திரவிட ஒப்பியல் அகரமுதலியையும் குன்றக் கூறலாகவும் வழுப்படவுந் தொகுத்துள்ளனர். இந்தி தமிழ்நாட்டிற் புகுவதற்கும் கடந்த ஈருலகத் தமிழ் மாநாடுகளும் தமிழ்ப் பழிப்பு மாநாடுகளாக முடிந்தமைக்கும், சென்னைப் ப.க.க.த. அகரமுதலியே கரணியம். இதைத் திருத்துமாறு அரசிற்கு எத்துணையோ தமிழ்ப் பேராசிரியரும் தமிழ் மன்றங்களும் எத்துணையோ முறை வேண்டியும். அஃது இம்மியும் பொருட்படுத்தவில்லை. (5) கடந்த 2ஆம் உலகத் தமிழ்மாநாடு தமிழ்நாட்டுத் தலைநகரில், மறைமலையடிகள் வாழ்ந்த இடத்தில் நடந்தும் கோலாலம்பூர் மாநாட்டைவிடக் கேடாக முடிந்தது. மறைமலையடிகள் வழியினர் விலக்கப்பட்டனர். வங்கநாட்டுப் பிராமணர் மொழித்துறைத் தலைவராயினர். தில்லியில் நடுவணாட்டுத் துறையைச் சேர்ந்த பிராமணரொருவர், தமிழெழுத்தும் தொல்காப்பியமும் அசோகன் கல்வெட்டிற்குப் பின் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் தோன்றினவென அச்சிட்ட கட்டுரை படித்தார். பிரெஞ்சுக்கார ரொருவர், பண்டைக்காலத்தில் சமற்கிருதமே இந்தியப் பொதுமொழியாயிருந்ததென்றும், அதன்வழி வந்ததே தமிழென்றும், கட்டுரை படித்தார். திரு. காமில் சுவெலபிலார் மறைமலை யடிகளையும் நாவலர் சோமசுந்தர பாரதியையும் புரட்சிப்பாவலர் பாரதிதாசனையும் மொழித்துறைப் பண்பாடற்றவராக வன்மையாகக் கண்டித்த கட்டுரையொன்றை அச்சிட்டு வழங்கினார். தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரும் இதைத் தடுக்கவில்லை. தமிழரசும் கண்டிக்கவில்லை. மாநாடு பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. (6) தமிழ்நாட்டு அரசினர் பேரியங்கிப் போக்குவரத்துத்துறை வண்டிகளிலும் அலுவலகங்களிலும், தமிழ்க் கூட்டுச் சொற்களும் தொடர்களும் புணர்ச்சிப் பிழையாக எழுதப் பட்டுள. (7) கல்லூரிகளிற் கற்பிக்கப்படும் அறிவியல் துறைப் பாடங்கட்குரிய குறியீடுகள் முற்றும் தனித்தமிழில் மொழி பெயர்க்கப்பட வில்லை. (8) வழக்கற்று வரும் தமிழ்ச்சொற்களைத் தொகுக்கவும், இசை நாடகம் கணியம் மருத்துவம் முதலிய துறைக்குறியீடுகளை ஆரியர் வருமுன் னிருந்ததுபோல் தூய தமிழாக்கவும், கோயில் வழிபாட்டைத் தமிழில் நடைபெறுவிக்கவும், இன்னும் ஒரு முயற்சியும் செய்யப்பெறவில்லை. ஆயினும், தமிழ் அரியணை யேறிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. (9) தனித்தமிழ் ஆராய்ச்சி நூல்கட்கும் தமிழ் வரலாற்று நூற்கும் தனித்தமிழ் ஏடுகட்டும் அரசியலுதவி ஒருசிறிதுமில்லை. (10) மறைமலையடிகளார் வழியினர் தமிழ்த்தொண்டு செய்ய ஆவலாகக் காத்திருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு, அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு அரைகுறையான தகுதி யுடையவரே அமர்த்தப்படுகின்றனர். (11) தமிழின் பெயரால் அரசியற்கட்சி வளர்க்கப்படுகின்றதே யொழிய, தமிழ் வளர்ச்சிக்கான தகுந்த வழி ஏதும் கையாளப் பெறவில்லை. இவற்றையெல்லாங் கவனியாது இந்தியெதிர்ப்புக் கூட்டங்கள் நடத்துவதும் திருவள்ளுவர் ஈராயிர ஆண்டுவிழாப் பற்றி அறிக்கை விடுவதும், வணிக வளர்ச்சியும் பெயர் விளம்பரமும் நோக்கியனவே யன்றி வேறல்ல. அயன்மொழிப் பெயரை மாற்றாது தமிழ்ப்பற்றுக் காட்டுவதெல்லாம். பெற்றோர்க்கு ஓரளவு உதவினும் அவரைப் பிறரிடத்து மற்றோராகக் காட்டி மறைப்பது போன்றதே. (தென்மொழி கும்பம் 1969.) போன்மை (Likeness) வகை ஓவியம் : வரையப்படும் சித்திரம். கட்டளை : உருவம் வார்க்கும் அச்சு. சிலை : நினைவு கூர்தற்கு ஒருவரைப் போல் செய்து வைத்த உருவம். படிமை : தெய்வச் சிலை. பதுமை : தனிப்பட்டவரைக் குறியாது பொதுவாய்ச் செய்து வைக்கப்பட்ட ஆண் பெண் உருவம். பொம்மை : சிறு பதுமை. பாவை : கனவளவில்லாத தோற்பாவை அல்லது கண்பாவை. (சொல். 41). மக்கள் மக்கள் தங்களைப் பயிருக்கு அல்லது மரத்திற்கு ஒப்பாகக் கருதிக் கொள்வது வழக்கம் கடவுட் காப்பைக் கருதி, ‘மரத்தை நட்டவன் தண்ணீர்விட மாட்டானா? என்று கூறுவதும், மண மக்களை ஆயிரங்காலத்துப் பயிர் என்றழைப்பதும் உலக வழக்கு சொல். மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டையா? மத வெறியும் அதனா லேற்படும் போருமே, மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும் அமைதியாய் முன்னேறுவதற்கும் தடையாய் நிற்கின்றன. மதம் தன்னளவில் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை யன்று. தமிழர் எல்லாத் துறையிலும் தலை சிறந்து சீருஞ் சிறப்புமாக வாழ்ந்தது, குமரிநாட்டு மத வாழ்க்கைக் காலமே. இன்றும் அறிவியல் கம்மியத் துறைகளில் தலை சிறந்து திங்களை யடைந்த அமெரிக்கர், கடவுள் நம்பிக்கை யுள்ளவரே. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் உண்மையை யுணர்ந்து, மாந்த ரெல்லாரும் கடவுளின் மக்களான உடன் பிறப் பென்று கருதி, யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று அன்பொடு கூடி வாழ்வதற்கே மதம் ஏற்பட்டது. ஆயின், மாந்தர் தம் மனம் போனவாறு மதத்தைத் திரித்து, தம்மொடு மாறுபட்ட கருத்தினரைப் பகைத்து, அவரி னின்று பிரிந்து போவதும் அவரொடு பொருவதும், வெறியான மதத்தின் விளைவே யன்றி நெறியான மதத்தின் விளைவன்று. பன்னூற்றாண்டு கூடி வாழ்ந்த இந்தியரும் பாக்கித்தானியரும், பகைவராய்ப் பிரிந்து போனமைக்கு, மதவெறியே கரணியம். மக்கள் அகக் கரண வளர்ச்சிக் கேற்றவாறு, மதம் முந்நிலைப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்த நிலையான கடவுட் சமயத்தைக் கடைப் பிடிப்பின், கோவில் குளமோ, உருவ வழிபாடோ தேவையில்லை. அதனால், பால் நெய் முதலியன பாழாவதும் அரசிறையான பொதுப் பணச் செலவும் ஏற்படா. உருவ வழிபாட்டை விரும்பியவரும், தனிப்பட்டவராகவோ பலர் கூடியோ, வீண் செலவு செய்யாது வழிபட்டு, விடுமுறை நாளிலும் வேலையில்லா நாளிலும் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விழாக் கொண்டாடி, பிறரைப் பகைக்கா திருப்பின், அதனாலுங் கேடில்லை. ஆகவே, இவ் விரு வகையாலும், மதத்தால் மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையில்லை யென்பது பெறப்படுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருப்பது, பிறவிக் குலப் பிரிவினையே யன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப் பான குமுகாயக் கொடு நோய். பிராமணன் தன்னை நிலத் தேவ னென்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி ஏமாற்றி, மதத் துறையுட் புகுந்து, கோவில் வழிபாட்டை யும், இரு வகைச் சடங்கு நடாத்தத்தையும் தன் குலத் தொழிலாகக் கொண்டதனாலேயே, மக்களுடன் மதமுங் கெட்ட தன்றிக் கடவுள் நம்பிக்கையா லன்று. இந் நிலைமை என்றும் நிலைத்தற் பொருட்டே, தமிழருள் துப்புரவில் உயர்ந்தவன் வீட்டிலும் தான் தண்ணீருங் குடிப்பதில்லை யென்று தன்னை எல்லார்க்கும் மேலாக வுயர்த்தியும், தமிழர்க்கு ஒற்றுமையும் உரமும் ஒருமித்த முன்னேற்றமும் ஏற்படாவாறு, அவரை நூற்றுக் கணக்கான ஏற்றத் தாழ்வுள்ள பிறவிக் குலக் கூண்டுகளுள் அடைத்தும், வைத் திருக்கின்றான் பிராமணன். ஆகவே, தமிழரை முன்னேற்று தற்கு, பிராமணியத்தை மதத்தி னின்று முற்றிலும் பிரிப்பதே அறிஞர் மேற் கொள்ளத் தக்க செய்தியாம். மதத் துறையிலுள்ள குற்றங் குறைகளை நீக்காது மதத்தையே ஒழிக்க வேண்டுமென் பது, சோற்றி லுள்ள கற்களைப் பொறுக்காது சோற்றையே கொட்டி விடுவது போன்றதே. சோறு முழுவதையும் கல்லென்றோ மண லென்றோ ஒருவன் கருதுவா னாயின், அது அவன் புறக் கண்ணின் அல்லது அகக் கண்ணின் கோளாறே யாகும். மதத்திற் குற்றங் களைவது எளிதன்று; எல்லார்க்கும் இயல்வது மன்று. பரந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் பண்பாடும் பொறு மையும் உள்ளவரே, மதத்தைச் சீர்திருத்த முடியும். மூவாயிரம் ஆண்டாக ஈண்டி யுள்ள அழுக்குக் குன்றை ஒரே தலை முறையில் அகற்றி விட முடியாது. இன்றும் தமிழருட் பெரும் பாலார் கடவுள் நம்பிக்கை யுள்ள வராதலால், கடவு ளில்லை யென்று சொல்லச் சொல்ல, அது ஆரிய மேம்பாட்டிற்கும் ஏமாற்றிற்கும் அரண் செய்ததேயாகின் றது. மாந்தன் மனத்தை இறுகப் பிணிக்கக் கூடிய பற்றுக்களுள், மிகுந்த வலிமை யுடையது மதப் பற்று அல்லது கடவுட் பற்றே. தமிழன் அரும்பாடு பட்டுக் கண்ட மதத்தை ஆரியனது எனின், ஆரியனுக்கு உயர்வும் தமிழனுக்குத் தாழ்வும் ஏற்படுவதோடு, உறைத்த மதப் பற்றுள்ள தமிழனுக் கிருக்கும் ஆரிய அடிமைத் தனம் இடும்புத் தனமாக இறுகவே செய்கின்றது. அதனால் ஆரியன் சுறண்டலும் அதிகரிக்கின்றது. இது கண்ணாரக் காணும் செய்தி. மாந்தன் புற நாகரித்தினும் சிறந்தது அக நாகரிகம். அதன் விளைவே பல்வேறு பண்பாட்டறிவியல்கள். அவற்றுள் தலைமையானது மதவியல் அல்லது மெய்ப் பொருளியல் என்றே, மேலையராலும் கருதப் பெறுகின்றது. அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (71) என்பது திருக்குறள் மறை. அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. (257) என்பது திருமந்திர மறை. இங்ஙனம் உயர்ந்த தேவிக அறத்தை வலியுறுத்தும் மதவியல், பகுத்தறிவிற்கு மாறான தென்று எந்தப் பகுத்தறிவாளன் சொல்ல முடியும்? கத்தரிக்கா யறுக்க வாங்கிய கத்தி கழுத் தறுக்குங் கருவியா யிருப்பின், அது கழுத் தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந்தரை யெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன் பிறப் பன்பால் ஒன்றுபட் டின்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை, ஒரு தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும், பிறர் தாழவும் பயன்படுத்தின், அக் குற்றம் எங்ஙன் மதவியலைச் சாரும்? இன்று கடவு ளில்லை யென்று சொல்வாரும் கொள்வாரும், தமக்குச் சமமானவரும் தம்முடன் உண்ணும் தகுதி யுடைய வருமான வகுப்பாருடனும் மணவுறவு கலவாது, ஆரியன் வகுத்த வழியிலேயே நின்று, என்றும் தம் பிறவிக் குலத்துள்ளேயே கொள்வனை கொடுப்பனை செய்து கொள்வது, எங்ஙனம் பகுத்தறிவுச் செயலாகும்? இதனாலும், மதம் மக்கள் முன்னேற்றத் திற்கு முட்டுக்கட்டை யன்றென்பது பெறப்படுகின்ற தன்றோ? பழியோரிடம் பளகோரிடம். ஆரியம் என்ற பேரு மில்லாத குமரிநாட்டிலும், கடவுள் நம்பிக்கை யில்லாதவர் சில ரிருந்தனர். பிராமண வகுப்பில்லாத பிறநாடுகளிலும், கடவுள் நம்பிக்கையில்லாத பல ரிருக்கின்றனர். இது பிறவிக் குணங்களுள் ஒன்று. கடவுளும் மறுமையும் இல்லை யென்று கூறும் உலகியம் (லோகாயத) என்னும் மதம், கடைக் கழகக் காலத்தில் தமிழகத் திலிருந்தைமை, பாங்குறும் உலோகா யதமே பௌத்தம் என்னும் மணிமேகலை யடியால் (27:28) அறியப்படும். இம் மதவியலை நூலாக விரித் துரைத்தவன் சார்வாகன் (Ca#rva#ka). அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது (குறள். 1075) என்பது உண்மை யாதலால், ஓரளவு நல்லொழுக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் வகையிலேனும், மதத்தால் நன்மை யுண்டென்று கருதி, மதத்தின் பெயரால் உண்மையில் தீங்கு செய்யும் பிறவிக் குலப் பிரிவினையையே, அறவே ஒழித்தல் வேண்டும். மக்கள் வாழ்க்கைமுறை நாட்டுவாழ்க்கைநிலை : இக்காலத்திற்போலச் சரித்திர நூல்கள் முற் காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுள்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாட வேண்டுமென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறி வழக்கம் எனப்படும். அதாவது, உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும், இனியதும் இன்னா ததுங் கலந்து உள்ளதாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும். குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும், பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவதன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்ஙனமே பிறவும். பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவ னாகு பெயர்). இவற்றின் பெயர்களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள்; ஏனைய பூப்பெயர்கள். பாலை என்பது பிறநாட்டி லுள்ளதுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் றானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப். 11:12-16) என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க. பாலையின் முது வேனிற்கால நிலையே, பிரிவிற்குரியதாக அகப்பொருட் செய்யுள் களிற் கூறப்படும். மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்துபோனது, குறிஞ்சியினின்று போவதும், அயல்நாட்டி னின்று வந்து குடி புகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள், முன்னது மக்கட்பெருக்கால் படிப்படியாய் நிகழ்வது; பின்னது தெரிந்துகோடலால் ஒரே சமையத்தும் நிகழக் கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ்நாட்டில் நிகழ்ந்த தென்க. குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த கால முண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும். தமிழ்நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றியபின்பாதலின், குறிஞ்சியில்மட்டும் மக்களிருந்த தொன்னிலை அப்போது மறைந்துபோயிற்று. அதனாற் குறிக்கப்படவில்லை. ஆயினும் அதைக் கருத்தளவை யான் அறிந்துகொள்ளலாம். மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த்தானிருந்திருக்க வேண்டும். அவரையே ஆதம் ஏவையென்று கிறித்துமதமும் இலாம் மதமுங் கூறுகின்றன. இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய பின், குறிஞ்சியில் இடம்போதாமல், சிலர் முல்லைக்குச் சென்றனர். முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலாயிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டையாடியும் உண்டு வந்த மக்கள், இயற்கையாய் விளையும் மரவுணவு போதாமை யாலும், வேண்டியபோதெல்லாம் ஊனுணவு கிடையாமை யாலும், செய்கையாய்ப் பயிர்பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத்தொடங்கினர். இதற்கு மரமடர்ந்த குறிஞ்சி வசதி யாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குகட்கும் ஓரளவு தப்பினர். மாந்தன் முதன்முதலாய் வளர்த்த விலங்கு ஆவே. ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது மாவெனப்பட்டது. மா-மான்-மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று, ஆவிற்கின மான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப்பெயரா யிருந்து. பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப் பட்ட விலங்கு மா(ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற் கெல்லாம் பொதுப்பெயராயிற்று. ஆ என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று. மரவுணவும் ஊனுணவும் மக்கட்கு வேண்டியவாயுள்ளமையின், உழவும் ஆவோம்பலும் ஒருங்கே தோன்றினவென்னலாம். ஆவானது பால் தந்ததுடன் உழவிற்கு வேண்டிய கன்றுகளையும் ஈன்றது. புல்வெளிகளில் மாடுகளை மேய்த்துக் கொண்டு, சிறிது புன்செய்ப் பயிர்களையும் விளைத்துக் கொண்டனர் முல்லை நிலத்தார். மாடு பறையரால்மட்டும் தின்னப்படு கின்றது. மேனாடுகளில் அதை எல்லாரும் உண்கின்றனர். முல்லைநிலத்திற் போதுமான நீர்வளமும் நிலவளமுமில்லா மையால், மக்கள் அடுத்தாற்போல், மீனைப் பெரிதும் விரும்பி னவர் நெய்தல்நிலத்திற்கும் கூலத்தைப் பெரிதும் விருப்பினவர் மருதநிலத்திற்குமாகப் பிரிந்துபோயினர். பாலைநிலவாணர்க்கு முதுவேனிலில் உணவு கிடையாமையால், அன்று அவர் ஆறலைக்கவும் சூறை கொள்ளவும் நேர்ந்தது. ஐந்து நிலத்திலும் மாந்தர் பரவியபின், குறிஞ்சிநிலத்தார் குறி சொல்வதால் குறவர் என்றும், பாலைநிலத்தார் போர்த் தொழில் செய்து மறம் (வீரம்) சிறந்திருந் தமையின் மறவர் என்றும், முல்லைநிலத்தார் குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையிலிருந்த மையால் இடையர் என்றும் ஆவைக் காத்தலால் ஆயர் என்றும், மருதநிலத்தார் உழவைச் சிறப்பாய்ச் செய்ததால் உழவர் என்றும், நெய்தல் நிலத்தார் படவுத் தொழில் செய்தமையின் படவர் அல்லது பரவர் என்றுங் கூறப்பட்டார். படகு படவு. க-வ, போலி. படவர்-பரவர்-பரதவர். ட-ர, போலி. படவர் செந்நிறமா யிருப்பதால் செம்படவர் எனப்பட்டார். பரதவர் விரித்தல் திரிபு. நகரவாழ்க்கை நிலை மாந்தர் மருதநிலத்திற்கு வந்தபின் நிலையாய்க் குடியிருக்கத் தொடங்கினர்; அதனால் குடியானவர் எனப்பட்டனர். நிலை யாய்க் குடியிருந்ததினால், மருத நிலத்தூர்கள் மூதூரும் பேரூரும் நகரும் மாநகரு மாயின. மருதநிலத்தூர்கள் பிற நிலத்தூர்களினும் பலவகையிற் சிறந்திருந்தமையால், ஊர் என்றே யழைக்கப் பட்டன. ஊர் நகர் என்னும் பெயர்கள், முதலில் தனி வீட்டையும், பின்பு, வீட்டுத் தொகுதியான ஊரையும் குறித்தன. நகர் என்பது பிற்காலத்தில் பேரூருக்கு வரையறுக்கப்பட்டது. நிலையான வாழ்க்கையாலும், மாந்தர் பெருக்காலும், முதன் முதல் நகரத்திலேயே நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகரம் என்னும் சொல்லினின்றும் பிறந்ததே. அரசியல் மாந்தர் நிலையாயுள்ள இடத்தில் ஆட்பொருட் பாதுகாப் பிருப்பதும். நிலையில்லாத இடத்தில் அவையில்லாதிருப்பதும் இயல்பு. மருதநிலத்தில் மாந்தர் நிலையாயிருந்தமையின், ஆட் பொருட் பாதுகாப்பிற்கு முதலாவது காவலும், பின்பு ஊராண்மை நாட்டாண்மைகளும், அதன் பின் அரசியலும் தோன்றின. குடிகளை ஒரு மந்தைபோன்றும் அரசனை அதன் மேய்ப்பன் போன்றுங் கருதினர். அதனால், அரசன் கோன் எனப்பட்டான். அவன் கையில், அரசிற்கு அடையாளமாக ஒரு மேய்ப்பன் கோலுங் கொடுக்கப்பட்டது. அது நேராயிருந்தமை பற்றிச் செங் கோல் எனப்பட்டது. செங்கோல் செம்மையான அரசாட்சிக்கு அடையாளம். கோ = பசு. கோ + அன் = கோவன் - கோன் - கோ(ன்). கோன் என்னும் சொல் ஆவென்னும் பொருளில் ஆரிய மொழிகளிற் பெருவழக்காக வழங்குகின்றது. Swed. - Dan. ko, Du. koe, Skt. go, Ger. kuh, Ice. kyr. Irish - Gael. bo, L. bos, Gk. bous. கோ என்னுஞ் சொல், ஆவென்னும் பொருளில் தமிழில் வழங்கா மையாலும், ஆரியத்தில் வழங்குவதினாலும் அதை ஆரியச்சொல் என்று கொள்ளற்க. பசுவைக் குறிக்க, ஆ, பெற்றம் என ஏனையிரு சொற்கள் வழங்குவதினாலேயே, கோ என்னும் சொல் அப் பொருளில் வழக்கற்றதென்க. கோவையுடையவன் கோன். அன் ஈற்றில் அகரம் தொக்கது. ஒ.நோ: யாவர் - யார். கோவன், கோன் என்னும் பெயர்கள் இயற்பொருளில் இடை யனையும், உருவகப் பொருளில் அரசனையுங் குறிக்கும். கோவனிரை மீட்டனன் (சீவக. 455) என்பதில் இடையனையும், கோவனும் மக்களும் (சீவக. 1843) என்பதில் அரசனையும் கோவன் என்னுஞ் சொல் குறித்தது. கோன் கோனார் (உயர்வுப்பன்மை) என்னும் பெயர்கள் இடையர்க்குக் குடிப்பெயராய் வழங்குகின்றன. கோன் என்னும் சொல், செங்கோன் கடுங்கோன் என்னும் பெயர்களில் அரசனைக் குறித்தது. அரசன் என்னும் பொருளில், கோன் என்னும் பெயரே ஈறு கெட்டுக் கோ என்றாகும். தலைக்கழகக் காலத் தரசர் பெயர் செங்கோன் கடுங்கோன் என்று வழங்கினதையும், கடைக்கழகக் காலத்தரசர் பெயர் (பாலைபாடிய பெருங்) கடுங்கோ, இளங்கோ (அடிகள்) என்று வழங்கினதையும், கோ என்னும் பெயர் பசுப்பொருளுக் கேற்பதையும் கோன் என்னும் பெயர் அரசனுக் கும் இடையனுக்கு மன்றிப் பசுவுக் கேலாமையையும் நோக்குக. கோ என்பதை, ஆ மா என்பவற்றோடு சேர்த்து, ஆமா கோனவ் வணையவும் பெறுமே (நன். 248) என்று பவணந்தியார் கூறியது தவறாகும். கோ என்னும் பெயர் பெற்றத்திற்கு வழக்கற்றுப் போனமையின், கோன் என்பதின் ஈறுகெட்ட வடிவம், அரசனைக் குறிக்கும் போது மயக்கத்திற் கிடமில்லை. தா என்னும் சொல் ஆரிய மொழிகளில் வழங்கினும், தமிழுக்கு எங்ஙனம் உரியதோ, அங்ஙனமே கோ என்னுஞ் சொல்லும் உரிய தென்க. தொழிற்பெருக்கமும் குலப் பிரிவும் மருதநிலத்தில் முதலாவது உழவர் என்னும் ஒரே வகுப்பார் இருந்தனர். பின்பு, முறையே வணிகம் அரசியல் துறவு என்பன பற்றி, அவ் வகுப்பினின்றும் பிரிந்து போனவர், வாணிகர் அரசர் அந்தணர் எனப்பட்டார். உழவர் முதலிய நாற்பாலும் பிற்காலத்தில் ஏற்றத்தலைமை முறையில் தலைமாற்றிக் கூறப்பட்டன. உழவர் கடையிற் கூறப்பட்டமையின் கடையர் எனப்பட்டார். கொல், நெசவு முதலிய கைத்தொழில்பற்றிப் பின்பு உழவர் குலத்தினின்றே பலர் பிரிந்தனர். உழவர் பிறரைநோக்க, வேளாண்மையில் (உபசாரத்தில்) சிறந்திருந்தமை யின் வேளாளர் எனப்பட்டார். அவருள் வறிய ராயினார் உழுதுண்பாரும் செல்வராயினார் உழுவித்துண்பாரு மாயினர். இவரே நிறம்பற்றி முறையே கருங்களமர் அல்லது காராளர் என்றும், வெண்களமர் அல்லது வெள்ளாளர் என்றுங் கூறப்படு பவர். களத்தில் வேலை செய்பவர் களமர். கருங்களமரும் ஒழுக்கம், ஊண், இடம், பழக்கவழக்கம் முதலியனபற்றிப் பிற்காலத்திற் பற்பல குலமாய்ப் பிரிந்து போயினர். இங்ஙனமே பிறகுலத்தாரும். நகரத்தில் அரசியல் தோன்றினபின் திணைமயக்கம் ஏற்பட்டது. முல்லை நிலத்திலிருந்த இடையரும் பாலைநிலத்திலிருந்த கள்ளர் மறவரும், நெய்தல நிலத்திலிருந்த செம்படவரும், குறிஞ்சிநிலத்தி லிருந்த குறவரும் நகரத்திற்கு வந்து தத்தம் தொழிலைச் செய் வாராயினர். அவருட் கள்ளரும் மறவரும் முறையே சோழனுக்கும் பாண்டியனுக்கும் படைஞராயினர். பண்டைத் தமிழ்நாட்டின் வெற்றிச் சிறப்பிற்கு இவ்விரு குலமும் பெருங்காரணம். கள்ளர் தனித் தமிழராயிருப்பவும், அவரைப் பல்லவரென்று ஓர் அயல் வகுப்பாராகக் கூறி வருகின்றனர் சிலர். பல்லவர் என்பார். கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையும், சோழநாட்டை அல்லது தொண்டை மண்டலத்தை யாண்ட ஓர் அரசக் குடும்பத்தாரேயன்றித் தனிக் குலத்தினரல்லர். அவருடைய குடிகளும் படைஞரும் தமிழரே. அவருக்குத் தனிமொழியும் தனிமதமுமில்லை. தமிழ்நாட்டு மொழிகளும் மதங்களுமே அவர்க்கிருந்தனவும். செல்வமும் மறமும் படைத்த எவனும், ஒரு படையைத் திரட்டிக்கொண்டு ஒரு நாட்டைக் கைப்பற்ற என்றும் இடமுண்டு. பல்லவர்க்கிருந்த பட்டப் பெயர்களும், தொண்டையன் என்பதும் ஒன்று. பல்லவர்க்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே, சோழநாட்டின் வடபாகத்திற்குத் தொண்டைமண்டலம் என்றும், அதன் அரசனுக்குத் தொண்டைமான் என்றும் பெயர் வழங்கினமை பெரும்பாணாற்றுப்படையா லறியப்படும். அவ்வாற்றுப்படைத் தலைவனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகால் வளவனையும் பாடியுள்ளார். கரிகால் வளவன் காலம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டாகும். ஆகையால், புதுக்கோட்டை அரசரைத் தொண்டைமான் என்னும் பட்டம் பற்றிப் பல்லவ மரபினராகக் கூறுதல் பொருந்தாதென்க. மேலும் தொண்டைமான் என்பது தனித்தமிழ்ச் சொல்லாதலுங் காண்க. வழிபாடும் மதமும் வழிபாடாவது ஒரு சிறுதெய்வத்தையேனும் முழுமுதற் கடவுளை யேனும் வணங்கும் வணக்கம். மதமாவது வீடுபேறு கருதி முழுமுதற் கடவுளை யடையும் பெருநெறி. மதி + அம் = மதம். மதித்தல் - கருதுதல். கடவுளைப்பற்றிய மதிப்பு மதமாகும். மதத்திற்குச் சமயம் என்றும் பெயருண்டு. சமை + அம் = (சமையம்) - சமயம். சமைதல் - பக்குவமாதல். பெண்டிர் பூப்படைதலையும் அரிசி சோறாதலையும் சமைதல் என்று சொல்லுவதும், பக்குவமாதல் என்னுங் கருத்துப்பற்றியே. மதம் ஆன்மாக்களை வீடு பேற்றிற்குப் பக்குவப்படுத்தலால் சமயம் எனப்பட்டது. சமையம் = பக்குவமான வேளை, வேளை, சமயம் பக்குவமாக்கும் நெறி அல்லது கொள்கை. வேளையைக் குறிக்கும் சமையம் என்னும் சொல், மதத்தைக் குறித்தற்கு ஐகாரம் அகரமாயிற்று. ஒரு சொல் பொருள் வேறுபடுதற்கு எழுத்து மாறுவது, ஒரு சொல்லியல் நூல் நெறிமுறையாகும். கா : பழைமை (தொன்மை) - பழமை (புராணம்); முதலியார் - முதலியோர். நொடிப்பழமை, பழமை பேசுதல் என்னும் வழக்குகளை நோக்குக. (த.ம.) மகட்பாற் காஞ்சி ஒரு மறக்குடிப் பெண்ணை மணக்க விரும்பிய வேந்தன், அக்குடியார் அதற்கிசையா விடத்து, பெரும்படை யொடு சென்று அவரொடு போர் புரிவதுண்டு. அம்மறவர் தம் குடியின் மானத்தைக் காத்தற்கு அஞ்சாது எதிர்ப்பர். இது மகட்பாற் காஞ்சி எனப்படும் (த.தி.11). மகள் மகள் - மஹிலா மழ - மழவு - மகவு. மழ - மக - மகன், மகள். மகள் = 1. புதல்வி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித். 56) 2. பெண். ஆய மகணீயாயின் (கலித். 107). 3. மனைவி. மனக்கினி யாற்கு நீமக ளாயதூஉம் (மணி 21:30). வடவர் காட்டும் மஹ் என்னும் மூலம் மகிழ், மகிழ்வி என்று பொருள்படும். (வ.வ: 212). மகன் மகன் இளமைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சொல். உல் - முல் - மெல் - மென்மை. இந். முலாயம் = மெல்லிய. பிறப்பு அல்லது தோற்றக் கருத்தினின்று, முன்வரல், முன்மை, இளமை, சிறுமை, மென்மை, அழகு முதலிய கருத்துக்கள் கிளைக்கும். மெல் - E. mellon, soft, L. mollis, soft, E. mollify, to make soft. மெல்லுதல் = கடினமான வுணவைப் பல்லால் அரைத்து மெலிதாக்குதல். ஒ.நோ : L. mol. to grind, to make soft by grinding L. mola, E mill, building with machinery for grinding corn. E. molar, f. L. molaris, mammal’s back teeth serving to grind. E. muller, tool used for grinding powders on slab, upper part of the millstone, f. ME. mulour f. mul, to grind. L. mola, millstone. மெல் - மெலி - மெலிவு. மெல் - மெலகு. மெல்குதல் = மெலிதாதல். மெல் - மெலு - மெலுக்கு = மென்மை. மெல் - மெது - வ. ம்ருது, E. smooth, OE. smoth, smethe, smeeth, க.மெது. மெது - மெத்து. மெத்தெனல் = மெதுவாயிருத்தல். மெத்தெனவு = மென்மையான சொல், குணம், ஊறு, பொருள். வெட்டெனவு மெத்தெனவை வெல்லாவாம் (மூதுரை, 33). மெத்து - மெத்தை = மெதுவான இருக்கை, படுக்கை, தலையணை. மெலுக்கு - மெதுக்கு. மெதுக்கிடுதல் = மென்மையாதல் மென்மையா யிருத்தல். மெது - மெதுவு - மெதுகு. மெது - மெதுப்பு. மெல் - மெல்ல = மெதுவாக. மெல்ல - மெள்ள = பைய. மெல் - மெல்லம் - மெள்ளம். முல் - முன் - முன்னி = காட்டில் இயற்கையாக விளையும் சிறு பயற்றுவகை. முன் - முனி = யானைக்கன்று. முனியுடைக் கவளம் போல (கலித். 360). முன் - மின் - L. min, small. இவ் வேர்ச்சொல்லினின்று பின்வருமாறு பல சொற்கள் திரிந்துள்ளன. mince (to cut small), miniature, minicab, minify, minim, minimal, minimalise, minimum, minion, minish (diminish), minister (servant, one who is small), ministerial, ministration, ministrant, ministrative, ministry, minimize, minor, monority, minus, minuscule, minute, minutia. முன் - முனகு - முனங்கு. முனகுதல் (முனங்குதல்) = மெதுவாக வாய்க்குட் சொல்லுதல், முணு முணுத்தல். ஒ.நோ : ஆநு., நு. அடியn, வடி அயமந டடிற அரசஅரச. முல் - முள் - முளு. முளுதல் = அரிசி வெந்து முண்டி வருதல். சோறு முளுந்து வருகிறது. முள் - முளை. முளைதல் = முளைத்தல். விதை இன்னும் முளைய வில்லை (உ.வ.) முளைத்தல் = 1. தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10:8). 2. எழுதல். காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப (மணி. 8:18). ம. முளை. க. மொளெ. தெ. மொலத்சு. முளையன் = சிறுவன். முளையான் = சிறு குழந்தை, இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது? (w). முளை = 1. வித்தினின்று வெளிப்படுவது. வித்திய வெண் முளை (ஐங்குறு. 29). 2. இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 16). 3. மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங் குபு (சீவக. 223). 4. முளையான். 5. மகன் (பிங்.). 6. மூங்கில் முளை. 7. புண்முளை. 8. மூலமுளை. 9. திரிகை முளை. 10. கதவுக்குடுமி. 11. குறுந்தறி. ம. முள, து. முளெ, க. மொளெ, தெ. மொலக்க. முள் - முர் - முரு - முருகு = 1. இளமை (திவா). 2. அழகு (பிங்.). 3. எழுச்சி (திவா.). 4. முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக் - 611). 5. தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 6. வேலன் வெறியாட்டு. முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 7. திருவிழா. முருகயர் பாணியும் (சூளா. நாட். 7). 8. திருமுருகாற்றுப் படை. முருகு பொருநாறு (தனிப்பா.). முருகு - முருகன். ம. முருகன், க. முருக (g). முரு - முறு - முறி. முறிதல் = துளிர்த்தல். முறிந்த கோல முகிழ் முலையார் (சீவக. 2358). முறி = 1. தளிர். முறிமேனி (குறள். 1113). 2. கொழுந்திலை. இலையே முறியே தளிரே தோடே (தொல். மர. 88). முள் - முண்டு. முண்டுதல் = வித்தின் முளை முளுத்தல் அல்லது முட்டுதல். முள் - முட்டு = இளம் பிஞ்சு. முட்டுக்காய் = முற்றாத இளநீர். முட்டுக் குரும்பை = சிறு குரும்பை. முட்டு - மொட்டு = 1. அரும்பு. மொட்டறா மலர் (திருவாச 29:8). 2. தேரின் கூம்பு. மாமொட் டொடிந்து ... மான்றேர் சிதைய (பாரத. நான்கா நாள். 24). மொட்டு - மொட்டை. மொட்டைப் பயல் = மணமாகாத இளைஞன், இளவட்டம். (பொதுவாக இழிவுக் குறிப்பு). முள் - முண் - முண. முணமுணத்தல் = மெதுவாக வாய்க்குட் பேசுதல். முண் - முணு. முணு முணுத்தல் = மெதுவாக வாய்க்குட் பேசுதல். முணு - முணுக்கு. முணுக்கு முணுக்கெனல் = சிறு குழவி சிறிது சிறிதாகத் தாய்ப்பாலுண்ணுதல். முணமுண - மொண மொண. மொண மொண வெனல் = வாய்க்குட் சொல்லுதல். சுற்றிவந்து மொண மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா (சிவவாக். பா.) முணுக்கு - முடுக்கு = 1. சிற்றளவான குடிநீர். 2. சிறு தெருச் சந்து. முடுக்கு - முடுக்கர் = குறுந்தெரு. முடுக்கரும் வீதியும் (சிலப். 5:182). முடுக்கு - விடுக்கு = சிற்றளவான குடிநீர். முண் - மண் - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக் காக்கை, மணிக்காடை. மணிக்குடல், மணிக்கை, மணிப்புறா முதலிய கூட்டுச் சொற்களை நோக்குக. மண் - மண்ணை = இளமை (பிங்.). மணி - மாணி = 1. சிறியது. 2. மாணவன், பள்ளிப்பிள்ளை. 3. மணமாகாதவன். 4. குறளன். கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2:61), மாணிக் குறளுரு வாய மாயன் (திவ். பெரியாழ். 5:2:5). மாணி - மாணவன் - த. மாணவ. மாணவன் - வ. மாணவக - சு. மாணாக்கன். முள் - முழு - முகு. ஒ. நோ: தொள் - தொழு - தொகு. முகு - முகுள் - முகுளம் = 1. அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த (திருவாலவா. 4 : 14). 2. ஐந்து விரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3 : 18, உரை). 3. (ஓகம்) இருகாலும் ஒக்கவைத்து மண்டலமாக இருக்கும் இருக்கை வகை. (தத்துவப். 109, உரை). 4. மூளையின் பின் பகுதியான முள்ளந் தண்டுக் கொடியின் குவடு (சிகரம்), (இங். வை. பக். 27). முகுளம் - வ. முகுல. முகுள் - முகுளி. முகுளித்தல் - குவிதல். முகுளிக்கும் ... அரவிந்த நூறாயிரம் (தண்டி. 62). முகுள் - முகுளம் - முகுடம் = முடிக்கலம். முகுடமும் பெருஞ் சேனையும் (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று (திவா.). முகுட - வ. முகுட்ட. முகுளம் - முகுரம் = தளிர். (சங். அக.). முகுரம் - வ. முகுர. முகுடம் - மகுடம் = 1. மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246). 2. தலைப்பாகை வகை. 3. கோவில் தேரின் கும்பம். 4. ஓலைச் சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. 5. மாதர் காதணி வகை. 6. மத்தளம் முதலியவற்றின் விளிம்பு. 7. பறை வகை. 8. பதிகம், பதின் பதிகம் (சதகம்) முதலியவற்றின் பாட்டுத் தோறும் ஈற்றில் வரும் பொதுச் சொற்றொடர். 9. கட்டுரைத் தலைப்பு. மகுடம் - வ. மக்குட்ட. பேரா. பரோவும் (Burrow) மகுடம் என்பது தென்சொல்லென்று குறித்திருத்தல் காண்க. முகிள் - முகிழ். முகிழ்த்தல் = 1. அரும்புதல் அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் .... பரந்த (சீவக. 551). 2. தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்). 3. குவிதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7) - செ. குன்றாவி. 1. ஈனுதல். அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81 : 154). 2. தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163). முகிழ்தல் = குவிதல். முகிழ்ந்து வீங்கிள முலை (சீவக. 1004). முகிழ் = 1. அரும்பு. குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந் நீட்டார் (நாலடி. 262). 2. பூவின் காம்படி. 3. மொக்குள். பெயறுளி முகிழென (கலித். 56). 4. தேங்காய் மடல். 5. தயிர் முதலியவற்றின் கட்டி. 6. ஐந்து விரலுந் தம்மில் தலைகுவிந்து உயர்ந்து நிற்கும் இணையா விணைக்கை வகை (W.) முகிழ் - முகிழம் = பேரரும்பு. (சது.). முகிழ் - முகிழி. முகிழித்தல் = குவிதல். முகு - முகை. முகைதல் = அரும்புதல். பொய்கை முகைந்த தாமரை (ஐங்குறு. 6). முகைத்தல் = அரும்புதல். முகை = அரும்பு. முகை மொக்குளுள்ளது நாற்றம்போல் (குறள். 1274). முகு - முகம் = 1. தலையின் முன்புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள். 93). 2. தோற்றம். களிமுகக் களிறன்னான் (சீவக. 298). 3. முன்பு. ஈன்றாள் முகத்தேயு மின்னாதால் (குறள். 923). 4. நோக்கு. புகுமுகம் புரிதல் (தொல். மெய்ப். 13). 5. தொடக்கம். (W.). 6. நாடகச் சந்தி ஐந்தனுள் முதலது. (சிலப். 3:13, உரை). 7. நடிகர் அரங்கத்திற்கு வருமுன் நிகழுங் கூத்து. (சிலப். 3: 147, உரை). 8. கட்டியின் முனை. 9. நுனி. அயின் முகக்கணை (கம்பரா. ஆற்றுப். 14). 10. முகமன். முகம்பல பேசி யறியேன் (தேவா. 742:2). 11. ஊழ்கம் (தியானம்) செல்வன் ... இரண்டுருவ மோதி நேர்முக நோக்கினானே (சீவக. 1289). 12. முதன்மை. (W). 13. மூலம். 14. வாய். மொழிகின்ற முகத்தான் (கம்பரா. மாலிவ. 74). 15. வாயில் (சங். அக). 16. கழி. (பிங்). 17. மேலிடம். (W). 18. இடம். (திருக்கோ. 356, உரை). 19. வடிவம். 20. காரணம். 21. ஏழாம் வேற்றுமை யுருபு. இனிய செய்திநின் னார்வலர் முகத்தே (புறநா. 12). முகம் - வ. முக (mukha). முகஞ்செய்தல் = (செ. கு. வி.). 1. தோன்றுதல். முகஞ் செய்காரிகை (பெருங். உஞ்சைக். 35 : 49). 2. முன்னாதல். தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக. 6275) - (செ. குன்றா வி.) முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408). முகம் என்பது, நிலைச் சொல்லாகவும் வருஞ் சொல்லாகவும் எத்துணையோ கூட்டுச் சொற்களில் தொன்று தொட்டு வழங்கி வருகின்றது. எ.டு. முகவுரை, முகக்களை, முகச்சாடை, முகதலை, முகநட்பு, முகப்பழக்கம், முகமண்டபம், முகவாய்க் கட்டை. அறிமுகம், கழிமுகம், சுரிமுகம், திருமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம், மறைமுகம், முனைமுகம். முகம் என்னுஞ் சொல்லிற்குத் தோற்றம் அல்லது முன் பக்கம் என்பதே அடிப்படைப்பொருள். வடமொழியாளர் அதற்கு வாய் என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டு, அதற்கேற்பப் பொருந்தாப் பொய்த்தலாக ஒரு கரணியங் காட்டுவர். முகம் - முகடு = 1. உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல்லுணவின் (பெரும்பாண். 246). 2. உயர்வு. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609). 3. தலை. முகடூர் மயிர்கடிந்த செய்கை யாரும் (தேவா. 936 : 10). 4. முதுகுப்புறம். சொல்லத் தகுமுகட் டொட்டகம் (கனா. 15). 5. வீட்டின் மேற்கூரை. (W). 6. முகட்டுவளை. இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு (ஆசாரக். 23). 7. வான்முகடு. வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. மருத்து. 30). க. தெ. மொகடு (g). முகடு - முகடி = முகட்டில் தங்குவதாகக் கருதப்படும் மூதேவி. மடியுளாள் மாமுகடி யென்ப (குறள். 617). முகம் = முகத்தில் முன் நீண்டுள்ள மூக்கு. முகம் - முக, முகத்தல் = மூக்கால் முகர்தல். முக - மோ. மோப்பக் குழையு மனிச்சம் (குறள். 90). மோ - மோப்பு - மோப்பம். முகதலை = பெண்டிர் சேலை முகப்பு (முன்றானை). முக - முகப்பு = 1. முன்னிலை. இருந்திடா யெங்கள் கண் முகப்பே 2. முற்பகுதி. 3. வீட்டின் முன் கட்டிடம். முகத் தணிந்த முகப்பு (அரிச். பு. இந்திர. 20). 4. அணிகலப் பொருத்துவாய். 5. முகதலை. முகம் - முகமன் = 1. மதிப்புறவுச் சொல், பாராட்டுரை. முன்னையிற் புனைந்து முகமனளித்தும் (கல்லா. 13). 2. வழுத்து. புகழ்ந்துமுன் னுரைப்பதென் முகம்மனே (தேவா. 863 : 3). 3. முகத்தெதிர் உயர்வு நவிற்சி. முகமாதல் = உடன்படுதல். (சீவக. 1120, உரை). முகமை = முதன்மை, தலைமை, முகமையாயிருந்து எடுத்து நடத்தினான். முகமை - முகாமை. முகம் - முகர். முகர்தல் = மோத்தல். முகர் - மோர். முகர் - முகரி = 1. முன்புறம். 2. தொடக்கம். 3. தலைமை. 4. மூக்கினடி. முகரி - முகரிமை = 1. தலைமை. முகரிமை யடைந்தவன்றோல் முகத்தவன் (கந்தபு. கயமுகனுற். 49). 2. பேரறிவு. முகரிமை சானற்றவர் (சேதுபு. பலதீ. 30). முகர் - முகரை = 1. முகம். (இழிவுக் குறிப்பு). அவன் முகரையைப் பார் (உ.வ.) 2. முகவாய்க்கட்டை. 3. மூக்கினடி. முகரையா லுழுத தொய்யில் (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). தெ. மோர, க. மோரெ, இந், முக்ரா (kh). 4. மூக்கல்லாத முகப்பகுதி. அவன் மூஞ்சி முகரையெல்லாங் கரி. (உ.வ.). முகரைக் கட்டை = 1. முகவாய்க் கட்டை. 2. பொலிவற்ற முகம். முகரை - மோரை = 1. முகம். 2. முகவாய்க் கட்டை. முகவணை = 1. முகப்பு. 2. முகவுரை. 3. வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருக்குமிடம். 4. முகவணைக் கல் நிலைகால் அருகணை முகவணை ... கட்டினதும் (கோயிலொ. 138). முகவணைக்கல் = வாசலின் மேலுள்ள உத்தரப் படிக்கல் (W). முகவழி = மூலம். அவன் முகவழியாகப் போகவேண்டும். முகவாசல் = தலைவாசல். முகவாய் - மோவாய். முகவாய்க் கட்டை - மோவாய்க் கட்டை. முகவன் = ஒரு குழும்பின் படிநிகராளி (Agent). முகவியர் = இன்முகமா யுள்ளோர். முன்பட்ட தொழிந் நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார். (சீவக. 2045). முகவு = மாளிகை முகப்பு. முகவெட்டி = ஓர் அலுவலன். (S. I. I. iii, 118). முகம் - முகன் - முகனை = 1. முன்புறம். 2. தொடக்கம். 3. முன்னெழுத்து. 4. முன்சினம். ஏன் இவ்வளவு முகனை உனக்கு? (இ.வ.) 5. அதே நேரம். (தக்ஷணம்). நான் வந்த முகனையிலே அவன்போய் விட்டான். (W.). 6. தலைமை. அவன் முகனை பண்ணுகிறான். (W.). முகனை - மோனை = மோனைத் தொடை. மோனை யெதுகை முரணே யியைபென (தொல். செய். 87). 2. முதன்மை. மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா. சிவபுண். 63). முள் - மொள் - மொழு - மொகு - மொக்கு = 1. பூமொட்டு. 2. ஆடைகளில் மொக்குப் போற் செய்யப்படும் வேலைப்பாடு. 3. நிலத்திலிடும் பூக்கோலம். 4. குத்து விளக்கின் தகழி (W). மொக்கு - மொக்குள் = 1. மலரும் பருவத் தரும்பு. முகை மொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள். 1274). 2. நீர்க்குமிழி. (படுமழை மொக்குளின்) (நாலடி. 27). க. முகுள் (g). மொக்குள் - மொக்குளி. மொக்குளித்தல் = 1. குமிழியுண்டாதல். (w). 2. திரளுதல். (யாழ். அக.) க. முக்குளிசு. மொக்குளிப்பான் = கொப்புளிப்பான், அம்மைக் கொப்புளம். மொக்கை = முகம். முள் - மள் - மள்ளன் = இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). மள் - மழ = 1. இளமை. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14). 2. குழந்தை. அழுமழப்போலும் (திருக்கோ. 147). மழ - மழவு = 1. இளமை. 2. குழந்தை. மழவு - மழவன் = 1. இளைஞன். மழவர்த மனையன மணவொலி (கம்பரா. நாட்டுப். 50). மழ - மழல் - மழலை = 1. இளமை. பெருமழலை வெள்ளேற்றினர் (தேவா. 579 : 5). 2. புதுமை. மழலைத்தேன் (ஈடு, 6:2:5). 3. திருந்தாச் சொல். தம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர் (குறள். 66). 4. மென்மொழி. மழலைவா யின் முறுவற் றையலாள் (சீவக. 181). மழலை - மதலை = 1. மழலைமொழி. (w). 2. குழந்தை 3. மகன். (பிங்.). மழல் - மழல் - மழறு. மழறுதல் = மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6:2:5). மழ-மட-மடம் = 1. இளமை. அஞ்சன் மடவனமே (நள. சுயம். 27). 2. மென்மை. தெளிநடை மடப்பிணை (புறநா. 23). 3. அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17. உரைப்பாட்டு மடை). 4. அறியாமை. மடப்பட லின்றிச் சூழு மதிவல்லார் (சீவக. 1927). 5. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை, மகளிர் குணம் நான்கனுள் ஒன்று. வாலிழை மடமங்கையர் (புறநா. 11). மட - மடப்பு - மடப்பம் = மடம். மடம் - மடந்தை = 1. பெண்டு. இடைக்குல மடந்தை (சிலப். 16:2). 2. இளம்பெண் பருவம் ஏழனுள் ஒன்று, 14-19 அகவைப்பட்டது (பிங்.). தெ. மடந்தி, க. மடதி. மடவரல் (மடம் வரல்) = 1. மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89). 2. பெண்டு. மடவர னோக்கம் (குறள். 1085). மடவன் = அறிவிலான். மடவள் = அறிவிலாள். மடவார் = 1. மகளிர். 2. மூடர். மழ - மக = 1. இளமை. (யாழ். அக.). 2. பிள்ளை, குட்டி. மந்திம்மக (சீவக. 1897). 3. மகன், மகள். மகமுறை தடுப்ப (மலைபடு. 185). மக - மகன் (க. மதம்) = 1. ஆண் குழந்தை. 2. புதல்வன். தன்மகன் றாயுயர்வும் (தொல். கற். 31). 3. ஆடவன். செய்ந் நன்றி கொன்ற மகற்கு (குறள். 110). 4. மாந்தன். 5. சிறந்தோன். நூல்கற்ற மகன்றுணையா நல்ல கொளல். (நாலடி. 136) 6. போர்மறவன். வேந்தன் மனம்போல் வந்த மகன் (பு. வெ. 2:5). 7. கணவன். நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் (மணி. 21: 29). தெ. மகண்டு. மக - மகள் = 1. பெண் குழந்தை. 2. புதல்வி. நல்கூர்ந்தார் செல்வ மகள் (கலித் 56). 3. பெண்டு. ஆயமகள் நீயாயின் (கலித். 107). 4. மனைவி. மனக்கினி யாற்கு நீமகளாய தூஉம் (மணி. 21:30). மகள் - மகடு - மகடூஉ. மகடூஉ வறிசொல் (தொல். சொல். 2). மக - மகவு = 1. குழந்தை. மகவு முலைவருட (கம்பரா. தைல. 13). 2. குரங்கின் குட்டி. (தொல். மர. 14). மகன் - (மகர்) - மகார் (பலர் பால்) = 1. புதல்வர். அவுணர் கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58). 2. சிறுபிள்ளைகள். இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71:7). மகார் - மார் (பலர் பாலீறு). எ.டு. அண்ணன் மார், தாய்மார். மகள் - மகளிர் (பலர்பால்) = பெண்டிர் வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்த லல்லது (புறநா. 10). மகன் - மான் - மன் (ஆண் பாலீறுகள்). எ.டு. பணிமகன், பெருமான், செறுமன். மகள் - மாள் (பெண்பா லீறுகள்). எ.டு. பணிமகள், வேண்மாள். மக + கள் = மக்கள் (மரூஉப் புணர்ச்சி). மக்கள் - (இருபாற் பொதுப் பலர்பாற் பெயர்) = 1. சிறு பிள்ளைகள். எ.டு. ஆண்மக்கள், பெண்மக்கள், இருபால் மக்கள். 2. வளர்ச்சியுற்ற மாந்தர். எ.டு. ஆண்மக்கள், (ஆடவர்), பெண்மக்கள் (பெண்டிர்), இருபால் மக்கள் (இருபான் மாந்தர்). மக்கள் தாமே ஆறறி வுயிரே (தொல். மர. 33). உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே (தொல். கிளவி. 1) என்று தொல்காப்பியங் கூறுவதால், இலக்கண நூலிலும் அற நூலிலும் பண்பட்ட மாந்தரே மக்களென்றும், பண்படா மாந்தரெல்லாம் மாக்களென்றும், குறிக்கப்படுவரென்பது போதரும். எ.டு. விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர். (குறள். 410) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென். (. 420) மகன் என்னும் தென்சொல், கோதிய (gothic) மொழியில் மகு (magus) என்னும், கேலிய (Gaelic) மொழியில் மக் (mac) என்றும், திரிந்து வழங்குகின்றது. “Mac (mak) A Gaelic word signifying son, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, &c. It is synonymous with Son in names of Tentonic origin ... It is allied to Goth magus, a son, fem. magaths (G. magd, a maid)”. I.D.E.L. Vol. III. p. 91. Gadhelic (Gaelic), a. Of or pertaining to that branch of the Celtic race which comprises the Erse of Ireland, the Gaels of Scotland and the Manx of the Isle of Man. - The Imperial Dictionary of the English Language, Vol. II, p. 352. Goth, n. One of an ancient Teutonic race of people, first heard of as inhabiting the shores of the Baltic. - Do. p. 413. Mac என்னும் கேலியச் சொல் Mc என்று குறுகியும் வழங்கும். எ.டு. : Mc Adam. மகன் - மான் - மன் = மாந்தன். மன்பது = மக்கட் டொகுதி. மன்பது மறுக்கத் துன்பங் களை வோன் (பரிபா. 15:52). மன்பது - மன்பதை = 1. மக்களினம். மன்பதை காக்குநின் புரைமை (புறநா. 210). 2. படைமக்கட் டொகுதி. மன்பதை பெயர (பதிற்றுப். 77:3). மன் - Teut. man, Skt, manu. “MAN, a human being. (E). ME. man, Chaucer, C.T.I. 43. A.S. mann, also mon; Grein, ii. 105 + Du man; Ice. madr (for manur); also man; Dan mand (with excrescent d); Goth, manna; G mann; (the G. mensch = mannich, i.e. mannish human). Allied to Skt. manu, Vedic manus -, a man. B. connected by some with Skt. man, to think. See Mind. But it is unlikely that the orig Sense could have been thinker. Skeat’s Etymological Dictionary of the English Language, p. 358. மன் - வ. மநு. மநு, thinking creature, man, Manu. மநுஷ, a man. மநுஷீ, a woman மநுஷ்ய, human, manly; human being, man. மநுஷ்வத், as a man. மந்வந்தர (nt), age of a Manu. மாநவ, descended from or belonging to Man or Manu. மாநவய, to act like man. மாநவீய, descended or derived from Manu. மாநுஷ்ய, human nature or condition. - Monier William’s Sanskrit - English Dictionary : Man என்னும் ஆங்கிலச் சொல்லையும் மநு என்னும் சமற்கிருதச் சொல்லையும் முறையே mind. மந என்னும் சொற்களோடு தொடர்பு படுத்தி thinking animal, thinking creature என்று மேலையர் சிலர் பொருள் கூறுவர். அது தவறு. இடைச் சேர்ப்பு முகு - முக்கு - இருதெரு கோணம்படக் கூடும் மூக்குப் போன்ற மூலை. முக்குவேறு; முடுக்கு (சந்து) வேறு. முக்கு - முக்கை = ஆறு திரும்பும் அல்லது ஈராறு கூடும் இடத்து முக்குப் போன்ற மூலை. முக்கு - மூக்கு = 1. முகத்தின் முன் நீண்டுள்ள உறுப்பு. 2. பறவை யலகு. 3. யானைத் துதிக்கை. 4. கலங்களின் வாயில் மூக்குப்போல் நீண்டுள்ள உறுப்பு. 5. இலை நுனி. 6. கொண்டைக் கடலைப் பயற்றின் முனை, 7. வித்தின் முளை. 8. வண்டிப்பாரின் மூக்கு வடிவான முனைப்பகுதி. ம. bj., து. மூக்கு, க. மூகு (g). மூக்கு - முக்கன் = 1. எடுப்பான மூக்குள்ளவன். 2. மீன்கொத்தி. மகுடம் மகுடம் - மகுட ( t|) முகுட ( t|) முகம் - முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி. முகடு = 1. உச்சி. முகடு துமித்தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246). 2. வீட்டின் உச்சி. 3. வானமுகடு. வானெடு முகட்டை யுற்றனன் (கம்பரா. மருத்து. 30). 4. தலை. முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் (தேவா. 936 : 10). 5. உயர்வு. முனிமை முகடாய மூவா முதல்வன் (சீவக. 1609). முகடு - (முகடம்) - மகுடம் = உச்சிமயிர் முடி, மணிமுடி, தேர் முடி, ஒருபொருட் பல பாட்டுப் பொது முடிவு. இனி, முகிழ் - முகிழம் - முகுளம் - முகுடம் - மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம். மாமொட்டொடிந்து ... மான்றேர் சிதைய (பாரத. நான்கா நாள். 24). பேரா. பரோ. இச்சொல்லைத் தென்சொல்லென்றே கூறுதல் காண்க. (The Sanskrit Language, p. 381). (வ.வ.) முகுடம் பிறை வடிவினதென்றும், கிரீடம் குவிந்ததென்றும், மௌலி மும்முனையதென்றும் மா. வி. அ. கூறும். (வ.வ: 212-213). மங்கலம் மங்கலம் - மங்கல மங்கு - மங்கல் - மஞ்சல் = மங்கலான நிறம். அந்நிறக் கிழங்கு (மஞ்சள்). மஞ்சல் - மஞ்சள். ஒ.நோ : பொங்கு - பொஞ்சு, இங்கே - இஞ்சே (கொச்சை). மங்கல் - மங்கலம் = 1. மஞ்சளால் அல்லது மஞ்சள் நீரால் குறிக்கப்பெறும் நன்னிலைமை. மங்கல மகளிரொடு மாலை சூட்டி (புறம். 332) 2. திருமணம். மங்கல வாழ்த்துப் பாடல் (சிலப்.). 3. திருமணத்தாலி. மற்றைநல் லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ (கம்பரா. உருக்காட்டு. 35). 4. மங்கல நிகழ்ச்சி. சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும் (தொல். 1037). (வ.வ.) 5. மங்கலச் சின்னம். எண் மங்கலமும் மங்கலம் பதினாறும். 6. மங்கல வழக்கு (நன். 267). 7. நன்மை. மங்கல மென்ப மனைமாட்சி (குறள். 60) மங்கலம் - மங்களம். (வ.வ: 213) மங்கலம் - மங்களம். வடவர் - காட்டும் மூலம். மங்க் = செல், இயங்கு. பகுத்தறிவுடையார் கண்டு தெளிக. (தி.ம. 751). மங்கல வழக்கு ஒருவர் துன்புறும் போது, அவரை ஆற்றித் தேற்றுவதும் அவரொடு தாமும் சேர்ந்து துன்புறுவதும், உயர்ந்தோர் இயல்பு. கண்ணன்ன கேளிரை இழப்பதும், எரி போன்ற வறுமையால் வாடுவதும் பெருந்துன்பமாம். அத்துன்பங்களை அவற்றிற்குரிய சொல்லாற் குறிப்பினும் அவற்றால் துன்புறுவோர்க்குத் துன்பம் பெருகுமென்று கருதி, இன்பமும் நன்மையும் குறிக்கும் சொற்களால் அவற்றைக் குறித்து வந்தனர் பண்டை மேலோர். இதனை மங்கல வழக் கென்பர் இலக்கணவாசிரியர். செத்தானைத் துஞ்சினான் என்றும், சாவைப் பெரும் பிறிது என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும், தாலியறுதலைத் தாலி பெருகிற்று என்றும் வறுமையை நிரப்பு என்றும், வறுமைப் பாட்டை நல் கூர்தல் என்றும் கூறுவது மங்கல வழக்காம். துஞ்சுதல் தூங்குதல். நிரப்பு நிறைவு, நல் கூர்தல் நன்மை மிகுதல். இனி, சாவுக் கேதுவான நச்சுயிரிகளையும் மங்கலச் சொல்லாற் குறிப்பது வழக்கம். எ.டு. நல்ல பாம்பு. (சொல். 112.) மசி மசி - மஷி மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல், கடைந்து களி அல்லது கூழாக்குதல். மத்தி - மதி. மதித்தல் = மத்தினாற் கடைவதுபோற் கைவிரலாற் குழைத்தல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக. மதி - மசி. மசித்தல் = குழைத்தல். மசிதல் = குழைதல். மசி - மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து மசித்த (குழைத்த) வண்டி மை. எழுது மையும் இங்ஙனமே வேறு பொருளை மசித்து அமைக்கப் பெறும். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2) மசி = எழுதுமை. மசிகலந் தெழுதப்பட்ட (சூளா. தூது. 83). மசிக்கூடு, மசிக்குப்பி என்பன உலக வழக்கு. மசி - மயி - மை. கருநிறத்தைக் குறிக்கும் மை என்னும் சொல்வேறு. மால் - மா - மை. வடவர் காட்டும் மூலம் மஷ் = சிதை, சேதப்படுத்து. மா. வி. அ. இச் சொல்லின் கீழ், “(Prob. invented to serve as the source of the words below)” என்று குறித்திருப்பது கவனிக்கத் தக்கது. மஷி என்பது மேலையாரிய வழியாய் வடமொழி பெற்ற தென் சொல் திரிபுகளுள் ஒன்றாகும். OE masc, E mash, mess, Dan mask, Sw. maska, Sc. mask, MLG mesch, MHG meisch, G maisch. (வ.வ. 213-214) மசிர் மசிர் - ச்மச்ரு (இ.வே.). மை = கருநிறம். மை - மயிர் = கரிய முடி. ஒ.நோ : ஐ - அயிர், தை - தயிர், பை - பயிர், வை - வயிர். மா. வி. அ. “(of unknown derivation, but of. sÝman)”. “sÝman, n. the body, Nir.; the mouth, L. (both meanings prob. invented to explain sÝmasÝa#na and sÝmasÝru)” என்று குறித்திருத்தல் காண்க. (வ.வ.214). மஞ்சு விரட்டு ஏறு தழுவல் என்னும் பண்டை வழக்கமே இன்று கள்ளர் மறவரிடைச் சல்லிக்கட்டு என்றும் மஞ்சு விரட்டு என்றும் வழங்கி வருகின்றது. (த.தி.5) மடம் மடுத்தல் = உண்ணுதல். மடு - மடை = உணவு. மடைத்தொழில் = சமையல் தொழில். மடையன் = சமைப்போன். மடைப்பள்ளி = சமையலறை அல்லது சமையல் மனை. மடை நூல் = சமையற்கலை நூல். மடு - மடம் = அறவுணவுச்சாலை, துறவியரும் இரப்போரும் உண்டு தங்கும் இடம், சமயச் சார்பான துறவியர் விடுதி, துறவியர் கல்லூரி. தமிழகத்திற் பேரூர்தொறும் மடமுண்டு. அதில் பண்டாரம் பரதேசி என்னும் ஆண்டிகளும் இரப்போரும் அயலூர் எளியாரும் தங்குவர். ஆண்டிகள் கூடி மடங்கட்டினாற்போல். என்பது பழமொழி. ஆண்டிமடம் என்பது பெருவழக்கு. செல்வப் பெற்றோர், தமக்கடங்காது தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற மக்கள் பல்லாண்டு கழித்துத் தம்மூர் மடத்திற்கு வந்து தங்குவாராயின், தம் உறவைக் காட்டிக்கொள்ளாதே அவர்க்கு இரவில் நல்லுணவளிப்பது வழக்கம். அதற்கு இராமடம் ஊட்டுதல் என்று பெயர். வடமொழியில் மடம் என்னும் தென்சொல் மட (mat%|ha) என்று திரியும். அதற்கு, “a hut, cottage, (esp.) the retired hut (or cell) of an ascetic (or student), ..... a cloister, college (esp. for young Brahmans), temple .....” என்று மா. வி. அ. பொருள் கூறும். இதற்கு மட் (mat|h) என்பதை மூலமாகக் காட்டுவர். அது மூலமன்று என்பதை, “(prob. invented for the word below) என்று மா. வி. அ. கூறுவதினின்று தெரிந்து கொள்க. வடவர் கூறும் மூலப்பொருள் வருமாறு :- தாது பாடம் - to dwell or to be intoxicated. வோபதேவர் - to grind. (வ.வ.) மடலேற்றம் முதுபழக்காலத்தில், ஒரு கடுங்காதலன் அல்லது காதற்பித்தன் அவன் காதலியை மணத்தற்கு அவள் பெற்றோர் இசையாவிடின், அவளைப் பெறுதற்கு மடலேற்றம் என்னும் உயிர்ச்சேதத்திற் கிட மான ஒரு வன்முறையைக் கையாள்வதுண்டு. அது இக்காலத்துச் சத்தியாக்கிரகமென்னும் பாடு கிடப்புப் போன்றது. மடலேறத் துணிந்த காதலன், நீர்ச்சேலை ஒன்றேயுடுத்து உடம் பெலாஞ் சாம்பற் பூசி எருக்கமாலை யணிந்து, தன் காதலியின் ஊர் நடுவே தவநிலையிலமர்ந்து, அவள் உருவை வரைந்த ஒரு துணியைக் கையிலேந்தி, அதை உற்று நோக்கிய வண்ணமாய் வாளாவிருப்பன். அதனைக் கண்ட அவ்வூரார் நீ ஆய்வு (சோதனை) தருகின்றாயா? எனக்கேட்பர். அவன் தருகின்றேன் எனின், பனங்கருக்கு மட்டையாற் செய்த ஒரு பொய்க் குதிரை யின் மேல் அவனையேற்றித் தெரு நெடுக இழுத்துச் செல்வர். அங்ஙனம் இழுக்கும் போது, அவன் உடம்பிற் கருக்கறுத்துக் காயம் பட்டவிடமெல்லாம் வெளுத்துத் தோன்றின் அவனுக்கு அவன் காதலியை மணமுடித்து வைப்பர்; அல்லாக்கால் வையார். (த.தி. 8,9) மண்டலம் மண்டலம் - மண்டல முல் - முன் - முனி = வில். முல் - வில். ஒ.நோ : முழுங்கு - விழுங்கு. முல் - முர் - முரி. முரிதல் = வளைதல். முரி - மூரி = வளைவு. முர் - முரு - முருகு = பிறைபோல் வளைந்த காதணி. முரு - முறு = முறுகு. முறுகுதல் = வளைதல், திருகுதல். முறுகு - முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு - முறுக்கம். முறு - முற்று - முற்றுகை = சூழ்கை. முறு - முறை = வளைவு, தடவை (turn). முறை - மிறை = வளைவு. முறு - முறி. முறிதல் = வளைதல். முறி - மறி. மறிதல் = மடங்குதல். முல் - (முள்) - முண்டு = உருட்சி, திரட்சி, முண்டு - முண்டை = உருண்டை, முட்டை. முண்டை விளைபழம் (பதிற். 60:6). முள் - முட்டு - முட்டை. முட்டு - முட்டான் - திருநீற்றுருண்டை. (வ.வ.) முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள்வளைதல். முணம் - முடம் = வளைவு, கால் வளைவு. முடம் - முடவு - முடவன். முடம் - முடங்கு, முடங்குதல் = வளைதல். முடங்கு - மடங்கு. முடக்கு - மடக்கு. முடக்கம் - மடக்கம். முடம் - முடந்தை = வளைந்தது. முடம் - (முடல்) - முடலை = குறடு, உருண்டை. முடி - முடிச்சு = வளைத்துக் கட்டியது, மரத் திருகல். முண்டும் முடிச்சும் என்னும் வழக்கை நோக்குக. முண்டு - மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டி. மண்டி யிடல் = முழங்காலை மடக்குதல். மண்டு - மண்டலம் = வட்டம், நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற்பகுதி, வட்டவடிவம், வட்டமாய்ச் சுற்றிவருகை, வட்டமான பொருள். (வ.வ.) கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்பன தொன்று தொட்ட வழக்கு. மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = வட்டமாதல், வட்டமாகச் சுற்றிவருதல், ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) ஈறும் முதலும் ஒன்றித்து வருதல். மண்டலி = வட்டமான பொறிகளுள்ள பாம்பு. மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்டமான இடம். பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறம். 30) 3. வட்டமான கதிரவன். பகல்செய் மண்டிலம் (பெரும்பாண். 442). 4. வட்டமான திங்கள். செய்வுறு மண்டிலம் (கலித். 7). 5. வட்டமான கண்ணாடி. மையறு மண்டிலம் (மணி. 25. 137). (வ.வ.). 6. வட்டமான ஞாலம். கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 7. ஞாலப்பகுதியான நாடு, நாட்டுப்பகுதி. மண்டிலத் தருமையும் (தொல். பொ. 41). 8. கூத்தின் மண்டில நிலை. 9. வட்டமாயோடுகை. செலவொடு மண்டிலஞ் சென்று (பு.வெ.12, வென்றிப். 14). 10. வட்டமாயோடுங் குதிரை (பிங்.). மண்டிலங் கொட்பு (இன்னா. 35). 11. அளவடி. மண்டில யாப்பும் (தொல். 1372). 12. செய்யுளின் எல்லாவடியும் அளவொத்து வருதல். எ.டு. நிலை மண்டில வாசிரியம், மண்டிலம் (விருத்தம்). மண் - மணி = நாழிகை வட்டில், மணியடிக்கும் வட்டமான வெண்கலத் தட்டு, மணியென்னுங் கால அளவு, உருண்டை, உருண்டையான விதை. இச் சொற்கு வடமொழியில் இத்தகைய வரலாறுமில்லை; மூலமுமில்லை. (வ.வ. 214-216) மண நாளன்றே மணமக்களைக் கூட்டுதல் சில பெற்றோர், மணத்தின் நோக்கத்தையே உணராது நீண்ட கால மாக இன்பந்துய்த்து வெறுத்த தங்களைப் போன்றே இள மண மக்களையுங் கருதிக் கொள்கின்றனர். கள வொழுக்க இன்பம் வாய்க்காத மணமக்கட்கெல்லாம் மணநாளின்பமே சிறந்தது என்பதை அறிதல் வேண்டும். மேலும் மணநாளிற் கூடாமையால், ஒழுக்கக்கேடு, ஐயுறவு, மதியாமை, அன்பின்மை, நீடுகூடி வாழாமை முதலியன இருசாரும் ஏற்படுதற்கிடமாம். (த.தி.59). மணமக்கள் கணவன் மனைவியுமாக ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைவராய் இல்லறம் தொடங்கும் இருவரும், திருமணத்தன்று மணமக்கள் எனப்படுவர். அவ்விருவரையும் பிரித்துக் கூறுங்கால், மணமகன் மணமகள் என்றும், மணவாளன் மணவாட்டி என்றும், பெண் மாப்பிள்ளை (மணவாளப்பிள்ளை) என்றும், பெண் பிள்ளை என்றும், கூறுவது வழக்கம். மணமகனைப் பிள்ளை என்பது வடார்க்காடு வழக்கு. (த.தி.முன். vi). குலவெறி மெல்ல மெல்லச் சுற்றவெறியை உண்டு பண்ணிற்று ஒரு முறை காரப் பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, எங்கே வேறிடத்தில் மணம் முடிந்துவிடுகின்றதோ என்னும் அச்சத்தினால், பிள்ளைப் பருவத்திலேயே அவர்க்கு மணம் செய்து வைப்பது வழக்கமாய் விட்டது. சிலர் தொட்டிற் குழந்தைக்கும் மணம் செய்து வைத்ததுண்டு. அது தொட்டில் மணம் எனப்பட்டது. ஒருத்தி கன்னியாய் இறந்தால் தீக்கதியடைவாள் என்னும் ஆரியக் கொள்கையும், இளமை மணத்திற்குக் காரணமாயிற்று. (த.தி.37). மணாட்டுப்பெண் மணாட்டுப் பெண் என்பது முறையே மாட்டுப்பெண் நாட்டுப் பெண் என மருவி, மருமகள் என்னும் பொருளில், தஞ்சை வட்டாரத்தில் வழங்கி வருகின்றது. (த.தி. முன். vi). மணி (1) மணி - மணி (இ.வே.) மண்ணுதல் = கழுவுதல்; மண் - மண்ணி - மணி = கழுவப் பெற்ற ஒளிக்கல். மண்ணி யறிப மணிநலம் (நான் மணி. 5). வடமொழியில் இச்சொல் அகரமுதலிகளில் மட்டும் உளதென்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. (வ.வ. 216). மணி : மண்ணுதல் = கழுவுதல். மண் - மண்ணி - மணி = கழுவப்பெற்ற ஒளிக்கல். மண்ணி யறிப மணி நலம் (நான்மணி. 5) மணி - மணி. மணி (2) மணி - மாணி = 1. குறள்வடிவம். (திவ். பெரியாழ். 1 : 4 : 1, வா.). 2. சிறுவன். 3. மாணவன். கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2:61) மாணி - மாண் = 1. கற்குஞ் சிறுவன். மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதி. 8:10:8). 2. குறளன். குறுமாணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164:5). மாணி - மாணவன். ஒ.நோ : பள்ளிப்பிள்ளை, E. pupil. இனி, மண் - மாண் - மாணி என்றுமாம். வடமொழியிலும் மாணவ என்னுஞ் சொற்கு இளைஞன், குறளன் என்னும் பொருள்களே உள. மாணவன் - மாணவகன் - மாணாக்கன். (வ.வ. 228). மணி வகை கூலம் நெல் புல் (கம்பு) முதலிய தானியம்; பயறு அவரை உழுந்து முதலி யவை; கடலை வேர்க்கடலை கொண்டைக்கடலை; முதலியவை விதை கத்தரி மிளகாய் முதலியவற்றின் வித்து; காழ் புளி காஞ்சிரை முதலியவற்றின் வித்து; கொட்டை மா பனை முதலியவற்றின் வித்து; தேங்காய் தென்னையின் வித்து. அவரை துவரை முதலிய பயறுகள் முதிரை என்று பெயர் பெறும். வித்து என்பது முளைக்க வைக்கும் எல்லா மணிகட்கும் பொதுப் பெயராம். (கடலையும் பயற்றில் ஒருவகையே; கடையப் படுவது கடலை; வறுத்தலும் கடைதலொக்கும்). (சொல்: 70). மத்தம் (இ.வே.) மத்தம் - மத்த மதம் - மத (இ.வே.) மது - மது (dh) - இ.வே. முத்துதல் = பொருந்துதல், சேர்தல், கலத்தல். முத்து - மத்து - மத்தம் = கலக்கம், மயக்கம். மத்தமாம் பிணி நோய்க்கு (தேவா. 426 : 3). ஒ.நோ: கல - கலுழ் - கலுழி = கலக்கம். கல - கலங்கு - கலக்கு - கலக்கம். முயங்குதல் = தழுவுதல், கூடுதல், கலத்தல். முயங்கு - மயங்கு - மயக்கு - மயக்கம் = கலப்பு, கலக்கம். முய - முயல் - மயல் - மால் = மயக்கம். வெறுத்தல் = செறிதல், கலத்தல், வெறு - வெறி = கலக்கம் மயக்கம். கலத்தற் கருத்தினின்று கலக்கக் கருத்துத் தோன்றுதல் காண்க. மத்து = பித்தியம் (பைத்தியம்) உண்டாக்கும் சாற்றுச் செடி (ஊமத்தை). நன்மத்தை நாகத்தயல் சூடிய நம்பனே போல் (கம்பரா. உருக்கா. 81). மத்து - மத்தம் (ஊமத்தை). மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923 : 8). மத்தம் என்னுந் தென்சொல்லையே உன்னென்னும் முன் னொட்டுச் சேர்த்து வடசொல்லாக்கினர். மத்து - மத்தை (ஊமத்தை) - (மலை.). மத்தம் - வ. உன்மத்த - ஊமத்தம், ஊமத்தை. மத்தம் = மயக்கந்தரும் கடாம். மத்தமா = யானை. மத்தம் - மதம். மதமா = யானை. மதம் - மதர். மதர்த்தல் = 1. செருக்குதல். 2. களித்தல். மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கும் (கம்பரா. நாட்டுப். 24.). (வ.வ.) 3. மதங்கொள்ளுதல். மதர்விடையிற் சீறி (பு. வெ. 7 : 14) மதர் - மதர்வை = செருக்கு, களிப்பு, மயக்கம். மதம் - மதன் = 1. செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278) 2. மடமை. 3. கலக்கம். மதம் = 1. யானைக்கடாம். மதயானை (சீவக. 2485). 2. மதுவெறி (மலைபடு. 173, உரை). 3. தேன். மதங்கமழ் கோதை (சீவக. 2584). 4. காம மிகை. 5. வெறி. 6. செருக்கு. போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப பரிபா. 18:1. மதம் - மத. மதத்தல் = மயங்குதல், கள்ளுண்டு களித்தல், காமம் மிகுதல், மதங்கொள்ளுதல், செருக்குதல். (வ.வ.) மத - மதக்கம் = மயக்கம். மதமதப்பு = திமிர், செருக்கு. மத்து - மது = 1. கள். மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சிபோல (தொல். பொ. 114, உரை). 2. தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25 : 38). மத்து - மட்டு = 1. கள். வெப்புடைய மட்டுண்டு (புறம். 24). 2. தேன். மட்டுவா யவிழ்ந்த தண்டார் (சீவக. 1145). 3. இன்சாறு. கருப்புமட்டு வாய்மடுத்து (திருவாச 5 : 80). 4. காமக்குடிப்பு மட்டுடை மணமகள் (சீவக. 98). 5. கட்சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறம். 113). மட்டுவார் குழலம்மை என்பது மலைமகள் பெயர்களுள் ஒன்று. மதம் - OE gemad, E mad. மது - Gk. methu AS medu, ME mede, OE meodu. E mead, OHG metu, MLG mede, ON mjqthr, L mel. G meth, Russ med, W medd, Lith. middus, Sw mjod, Dan miod, Ice mjodr, D mede. மது என்னுஞ் சொல் தமிழில் அருகியும் வடமொழியிற் பெருகி யும் வழங்குவதனாலேயே, அது வடசொல்லெனக் கருதப்படு கின்றது. (வ.வ. 218-220). மத்தம் (2) மத்தம் - மந்த்த மொதுமொதெனல் = மக்கள் திரளுதற்குறிப்பு. மொது - மொத்து. மொத்துதுல் = வீங்குதல், பருத்தல். மொத்து = பருத்தது. மொத்து - மத்து = அடியில் திரண்ட கடை கருவி. ஆயர் மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421.). பருமத்தினா லடித்த (காளமேகம்). மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மத்து = மத்தம் = தயிர்கடைகருவி. ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித். 110). மத்தி - மத், மந்த் (வ.வ.217) மத்தளம் மத்தளம் - மர்தல மொத்துதல் = வீங்குதல், பருத்தல். மொத்தம் = பருமன், முழுமை, பொது, கூட்டுத்தொகை. மொத்து = உடல்தடிப்பு, மதித்தடிப்பு, மடமை. மொத்தி = புடைப்பு. மொத்தை = பருமன். உருண்டை, மடப் பெண், மோத்தை = செம்மறியாட்டுக்கடா. மொத்தளம் = மொத்தம். கூட்டம். மொத்தளம் - மத்தளம் = பருமேளம். ஒ.நோ : மொத்து - மத்து. மொத்திகை - மத்திகை, மொண்டை - மண்டை. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை (திருப்பு). மத்தளம் - மத்தளி - மத்தளிகன் = மத்தளம் இயக்குவோன். (வ.வ. 216). மத்தளிகன் மத்தளிகன் - மர்தலிக மர்தலிக என்னும் வடிவம் மா. வி. அ. வில் இல்லை. சென்னைப் ப.க.க.த.அ. வில் மட்டும் உளது. (வ.வ.217). மதங்கம் மதங்கம் - ம்ருதங்க மதங்கம் என்பது மத்தளத்தின் சிறுமை. இடக்கண்ணையும் வலக்கண்ணை யும் தொடர்ந்து தட்டுவதால் ஏற்படும் ஒலியினின்று இப்பெயர் பெற்றது. மதங்கமொடு துந்துபி ... முழங்கவே (திருவாத. பு. கடவுள். 1). ம்ருதங்க என்னும் சொல் பின்வருமாறு இருவகையுள் ஒன்றில் தோன்றியிருக்கலாமென்று மா. வி. அ. கூறும். (1) ம்ருதம் + க = அடிக்கும்போது செல்வது (“going about while being beaten”) இப்பொருளில் க (ga) என்பது கம் (gam) என்பதன் கடைக் குறை. (2) மர்தல - ம்ருதங்க. ஆரியர் வருமுன்பே தமிழ் முத்தமிழாய் வழங்கிற்றென்பதும் மதங்கம் ஆட்டிற்கும் பாட்டிற்கும் உரிய இசைத்தமிழ்க் கருவி யென்பதும், அறிக. (வ.வ.217). மதச்சீர்திருத்தம் 1. திருக்கோவில் தமிழ் வழிபாடு கிறித்தவம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு உரோம நகரத்தினின்று பிரித் தானுக்குட் புகுத்தப்பட்டது. அதைப் புகுத்தியவர் மறைமொழி இலத்தீனமா யிருந்ததனால், கோவில் வழிபாடு அம் மொழியிலே யே நடைபெற்று வந்தது. ஆயின், 16 ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லுத்தர் என்னும் செருமானியர், போப்பாண்டவரின் அதிகாரத்தை யெதிர்த்துப் பெருங் கிளர்ச்சி செய்து சீர்திருத் தத்தை யேற்படுத்திய பின், எல்லா நாடுகளிலு முள்ள சீர்திருத்தக் கிறித்தவக் கோவில்களில், அவ்வந் நாட்டுத் தாய்மொழியிலேயே வழிபாடு நடந்து வருகின்றது. இங்ஙனம், ஐரோப்பியரும் ஆங்கி லரும், தம் உரிமை யுணர்ச்சியால், அயல் நாட்டினின்று அயன் மொழி வாயிலாக வந்தமதத்தையும், தம் தாய்மொழி மதமாக மாற்றிக் கொண்டனர். தமிழரோ, தமிழ் நாட்டில் தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட மத வழிபாட்டை, ஒருபோதும், வழக்கில் இல்லாத, ஒருவர்க்கும் தெரியாத அயல் நாட்டு இலக்கிய மொழியில் நடைபெறுவித்து, செவிடர் போல் நின்று மீள்கின்றனர். சிவனியமும் மாலியமும் தூய தமிழ மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவன் அருமை மக்கள் நெஞ்சு கலந்து நேரடியாய்ப் பேசி இன்புற முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, அவர்கள் கொண்டு வந்த தின்பண்டங் களையும் தானே வாங்கிக் கொடுத்து, அவர்கள் தந்தையைப் போற்றிப் புகழ்வது போலும், தந்தை அவர்களை வாழ்த்துவது போலும், தானே மனப்பாடஞ் செய்து கொண்டனவும் அவர் கட்குப் பொருள் தெரியாதனவுமான சில தொடர்களைச் சொல்லி, அதன்பின் அவர்களே விலகிக் கொள்ளுமாறு செய்வதுபோல், கோவிலிலுள்ள பரமத் திருத் தந்தையும் அருட் கடலுமான இறைவனுருவிற்கு, தமிழர் தாமே தம் அன்பார்ந்த நெஞ்சு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து, பேரின்பப் பெரு மகிழ்ச்சி யைப் பெற முடியாவாறு, வடநாட்டி னின்று வந்த பிராமணன் இடைநின்று, படைப்புத் தேங்காயை வாங்கித் தானே யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருத் தில் தான் உருப்போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரியகத்திலும் பணஞ் செலுத்தியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை ஏமாற்றும் துணிச்சலுமான தீச் செயலாம்! ஆங்கிலப் பட்டக் கல்வியரும் அறிவியல் ஆராய்ச்சியாளரும் இதற்கு இணங்கி யிருப்பது, எத்துணை இழி தகவான அடிமைத் தனமாம்! தமிழர் இருவகைச் சடங்குகளையும் கோவில் வழி பாட்டையும் தமிழிலேயே நடைபெறச் செய்தல் வேண்டும். பொதுக் கூட்டங்களில், அவைத் தலைவர் ‘அம்மையப்பன் திருவடிபோற்றி! என்றே ஒலிக்க. அவையினர் ‘அரகர (அரவர) மாதேவா! என்று ஆர்ப்பரிக்க. 2. பல் வகுப்புக் கோவிற் பூசகர் பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, தமிழ்ப் பற்று, தெய்வ நம்பிக்கை, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகிய எழுவகைத் தகுதியும் உள்ளவரை, எல்லா வகுப்பி னின்றும் பூசகராகத் தெரிந்தெடுத்துப் பணி யாற்றுவித்தல் வேண்டும். இதற்கு மாறா யிருப்பவரை அரசு தண்டித்தலும் வேண்டும். 3. வழிபாட்டில் வீண் செலவு நிறுத்தம் கோவில்களிற் படைக்கப்படும் உணவுப் பொருட்கள், வழிபடு வார்க்கும் பூசகர்க்கும் இரப்போர்க்கும் ஏழைகட்கும் பயன்படும். ஆவின், பால் முழுக்கு, நெய்யாட்டுப் போன்றவை ஒருவர்க்கும் பயன்படா. இறைவனுக்கும் ஏற்காது. மக்கட் டொகைப் பெருக்க மும் வேலை யில்லாத் திண்டாட்டமும் பொருள் விலை யுயர்வும் வறுமையும் வறட்சியும் மிக்க இக்காலத்தில், ஏழை மக்கள் குடிக்கக் கூழுமின்றிப் பசியும் பட்டினியுமாய்க் கிடந்து வருந்து கையிலும், தற்கொலை செய்து வருகையிலும், உயிரற்ற ஓருருவத் தின் மேற் குடங் குடமாய்ப் பாலைக் கொட்டுபவனை, இறைவன் அடியான் என்னாது கொடியான் என்றே கருதுவன். இறை வனுக்கு எண்ணில்லா எல்லா வுலகும் என்றும் சொந்தம். அவனுக்கு ஒரு பொருளும் தேவை யில்லை. அவனே எல்லார்க்கும் எல்லாவற்றையும் அளிப்பவன். அவன் விரும்புவது மனம் ஒன்றே. அதை முழுமையும் அளிக்க முடியாதவர், பூசகர்க்கும் ஏழை கட்கும் பல்வகைப் பணி செய்யும் பொது மக்கட்கும் பயன் படுமாறு, தத் தமக்கு இயன்றவளவு பல்வகைப் பொருள்களைக் காணிக்கை யாகப் படைக்கலாம். 4. உருவிலா வழிபாடு துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல்லறத் தார்க்கும் உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழிபாட்டி னால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப்படாது போம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும். உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில் தான் இறைவனைக் காட்ட முடியும். அதுவே அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறி வில்லா யானை வடிவிற் படிவமமைத்து வணங்குவது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறாக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙன மாயின் இறைவனுக்கு எங்ஙனமிருக்கும்! கசினி மகமது கற் படிமைகளை யுடைத்துப் பொற் படிமைகளை உருக்குவான்; சண்பகக் கண் நம்பி செப்புப் படிமையைத் திருடிக் காடு மேடாய் இழுத்துச் சென்று விற்பான், படிமை ஒன்றுஞ் செய்யாது. விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில் நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் - மெள்ளவே ஆடெடுக்குங் கள்வரைப்போ லஞ்சா தெமைக்கரிசற் காடுதொறு மேயிழுத்தக் கால். ஒருவனது தெய்வப் படிமையே அவன் வீட்டுப் படிக்கல்லாக வந்து அமையினும் அமையலாம். இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க. துறவறம் உயர்ந்த அறிவு நெறி யாதலால் பட்டினத்தாரும் தாயுமானவரும் போன்ற உண்மைத் துறவிய ரெல்லாம், உருவ வழிபாட்டை அறியாமைச் செயலாகவே கருதினர். இறைவனுக்கு நெஞ்சக் கோயிலே இனிய தென்று திருவள்ளுவரும் திருமூலரும் கண்டனர். மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (குறள். 3) உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (திருமந். 705) படமாடக் கோயில் பகவற்கொன் றீயில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயில் பகவற்க தாமே ( 1821) மதத்தை யொழித்து விட்டாற் பிராமணியம் அடியோடொழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லி வருகின்றனர். உருவ வணக்கத்தை ஒழித்து விட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம். தமிழ் நாட்டில் உருவிலா வழிபாடு பதினெண் சித்தர் காலத்தில் தோன்றிய தென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்ட தென்றும், தவறாகக் கருதப்படுகின்றது. உலகில் முதன் முதல் கடவுளை உணர்ந்தவர் தமிழறிவரே. கடவுள் என்னும் சொல், குமரி நாட்டில் தலைக் கழகக் காலத்திலேயே தோன்றிய தாகும். முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந் தொகுக்கப்பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தல் காண்க. ஆரியர் வந்தபின், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது; கடவுள் என்னும் சொல்லின் பொருளும் குறைக்கப் பட்டது. 5. இந்து மதம் என்னாது தென்மதம் எனல் 1. இந்து என்பது வடநாடுகளுள் ஒன்றின் பெயரான சிந்து என்பதன் திரிபு. சிந்து = ஓர் ஆறு, அது பாயும் நாடு. சிந்து என்னும் பெயர் பாரசீகத்தில் ஹிந்து எனத் திரிந்தது. பிற்காலத்தில் அதினின்று இந்தியா என்னும் பெயர் கிரேக்கத்தில் தோன்றிற்று. வேத ஆரியர் முதன் முதல் சிந்து வெளியில் தங்கி யிருந்ததனால், ஹிந்து என்பது நாளடைவில் நாவலந் தேயம் முழுமைக்கும் பெயராயிற்று. ஆரியர் தம் வேள்வி மதத்தொடு தமிழ மதங்களையும் இணைத்து, அக் கலவையைத் தமதென்று காட்டி, இந்தியா முழுதும் பரவி இந்தியர் எல்லாரும் அக் கலவை மதத்தைத் தழுவும்படி செய்து விட்டதனால், ஹிந்து என்னும் தேசப் பெயர், அத் தேச மக்களையும் அம் மக்கள் மதத்தையும் குறிக்கலாயிற்று. அது தமிழில் இந்து எனத் திரிந்தது. 2. இந்து மதம் என்பது, ஒரு தனி மதமன்றி ஆரியமும் தமிழமுஞ் சேர்ந்த கலவை மதம். 3. இந்து மதத் தெய்வங்களான முத்திரு மேனிகளுள், படைப்புத் தொழிலனான நான் முகன் (பிரமன்) என்னும் ஆரியத் தெய்வத்தை, தமிழர் தொடக்கந் தொட்டு ஒப்புக் கொள்ள வில்லை. அவன் சிவனையே ஏமாற்றின படுமோசப் பொய்யன் என்றும், ஓங்காரப் பொருள் தெரியாது முருகனாற் குட்டுப் பட்டவன் என்றும், கதைகள் தோன்றியுள்ளன. 4. சிவன் என்றும் திருமால் என்றும் இருவேறு பெயராற் குறிக்கப்படும் ஒரே இறைவன், காப்புத் தெய்வ மென்றும் அழிப்புத் தெய்வ மென்றும் இரு வேறு தெய்வங்களாகக் காட்டப் பட்டுள்ளான். 5. முத் தொழில் இறைவனான சிவன் அல்லது திருமால், ஒரே தொழில் தலைவனாகக் குறிக்கப் பட்டுள்ளான். 6. ஒரே இறைவனை இரு வேறு தெய்வமாகக் காட்டியதால், சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்னும் மதப் போர் மூண்டுள்ளது. 7. பொய்யும் புரட்டுமான பல கதைகளும் கொள்கைகளும் கூற்றுக்களும், ஆரியத் தொன்மங்களிலும் கொண் முடிபியலி லும் மெய்ப் பொருளியலிலும் கூறப் பட்டுள்ளன. 8. ஆரியன் நிலத் தேவன் என்று உயர்த்தப் பட்டும், தமிழன் சூத்திரன் என்று தாழ்த்தப் பட்டும், உள்ளனர். 9. இந்து மதத்தால் தமிழப் பண்பாடு அழிக்கப் படுகின்றது. 10. இந்து மதத்தால் தமிழ் வழிபாடு எதிர்க்கப் படுகின்றது. ஆதலால், இனிமேல், சிவ நெறியான் தன்னைச் சிவனியன் என்றும், திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே, குறித்தல் வேண்டும். இரு நெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின், தென் மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்று குறித்தல் வேண்டும். இந்து உயர்நிலைப் பள்ளியென்றும், இந்துக் கல்லூரி யென்றும், தமிழ் நாடெங்கும் இருக்கும் கல்வி நிலையப் பெயர்களைத் தென்னவர் உயர்நிலைப் பள்ளி, தென்னவர் கல்லூரி யென்று மாற்றல் வேண்டும். மூத்த தலை முறையைச் சேர்ந்த பெரியோர் பெரும்பாலும் அடிமையராயும் பேடியராயும் இருத்தலால், இளந்தலை முறையைச் சேர்ந்த மாணவரே பெருங் கிளர்ச்சி செய்து இம் மாற்றத்தைச் செய்தல் வேண்டும். இந்து என்னுஞ் சொல் ஆரிய அடிமைத் தனத்தைக் குறித்தலால், உரிமைத் தமிழர் அச்சொல்லால் தம்மைக் குறித்தல் பெரு மானக்கேடான செயலாகும். முதற்கண், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தென் தலை நகராகிய திருநெல்வேலியில் உள்ள, திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் பெயரை, திரவியம் தாயுமானவர் தென்னவர் கல்லூரியென்று நெல்லைத் தமிழ மாணவர் மாற்றி, ஏனைக் கல்வி நிலைய மாணவர்க்கும் நல்வழி காட்டுவாராக. 6. எல்லா மதமும் தனித்தமிழ் போற்றல் கடவுள் புறக் கண்ணாற் காணப் படாமையாலும், மதம் மறுமையை நோக்கிய தாதலாலும், மக்கள் மனப்பான்மை பல்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், உள்நாட்டு மத மென்றும் வெளி நாட்டு மதமென்றும் வேறுபாடு காட்டாது கருத்து வேறு பாட்டிற்கு இடந் தந்து, தனித் தமிழைப் போற்றுவதையே எல்லா மதத்தாரும் கடைப்பிடித்தல் வேண்டும். மதத்தை அழிக்க முடியுமா? கடவுள் நம்பிக்கை யில்லாத தற்பெருமை வேந்தரும், நெறி தப்பிய அறிவிய லாராய்ச்சியாளரும், பொதுவுடைமைக் கொள்கையினரும், கடவுட் கொள்கையை ஒழிக்கத் தம்மால் இயன்றவரை முயன்று வந்திருக்கின்றனர். மதவியல் முற்றும் மனத்தைப் பொறுத்த தாதலின், அதை எவரும் அழிக்க வியலாது சாக்கிய நாயனார் பகைவர் போன்று சிவப் படிமையைக் கல்லாலடித்தே, சிவனடியா ராயினார் எனின், வேறு என்ன சொல்லவிருக்கின்றது! மேலும், பொதுவுடைமை இறைவனுக் கேற்றதே. மக்க ளெல்லார்க்கும் உண வெனின், தந்தை மகிழத்தானே செய்வான்! அங்ஙனமே பரமத் தந்தையும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான் (குறள். 1062) என்றார் திருவள்ளுவர். கிறித்தவர் எதிர் நோக்கும் ஆயிரவாண்டு அரசாட்சியும் பொதுவுடைமை வகையில் தான் இயலும். கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் - இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும் உரையாடினும் உண்ணினும் - இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலு மாதலின், மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியா தென அறிக. (த.ம.) மதம் என்னும் சொல் வரலாறு ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுட் பின்னிரண்டும் வடமொழி யென்னும் சமற்கிருதத்திலும் வழங்குவதாலும், அம்மொழி பிறமொழியி னின்று கடன் கொள்ளாத தேவமொழி யென்னும் நம்பிக்கை இடைக்காலத் தமிழருள்ளத்திற் பதிக்கப் பட்டிருந்ததனாலும், அவ்விரு சொல்லும் வடசொல்லே யென்று இன்றும் கருதப்பட்டு வருகின்றன. முத்துதல் = 1. பொருந்துதல் அல்லது சேர்தல். திரு முத்து ஆரம் = திருமகள் சேரு மாரம்; கழை போய் விண் முத்தும் என்றாற்போல. (சீவக. 504, நச். உரை) 2. மென்மையாகத் தொடுதல். 3. முத்தமிடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறம். 41). முத்து - முட்டு. முட்டுதல் = 1. வன்மையாகத் தொடுதல், மோதுதல். துள்ளித் தூண் முட்டுமாங் கீழ் (நாலடி. 94). 2. முட்டித் தாங்குதல். 3. முடிதல். முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும் (தொல். பொ. 435). 1. முட்டு. தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் உணர்த்தும். ஒ.நோ: ஒத்து - ஒட்டு, குத்து-குட்டு. முட்டு = தாக்கு, பொருத்து, முடிவு. முட்டு - மட்டு - முடிவு, அளவு. முத்து - மத்து = அளவு. மத்து - மத்தி - மதி. மதித்தல் = 1. அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண் மதியாமை (திரிகடு. 26). 2. கருதுதல். ஆடலை மதித்தான் (கந்தபு. திருவிளை. 1). 3. பொருட் படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச. 5:12). மதி = அளவிடப்பட்ட பண்டம். எ.டு. ஏற்றுமதி, இறக்குமதி. மதி - மதிப்பு = 1. அளவிடுகை. 2. பொருட் படுத்துகை, கண்ணியப் படுத்துகை. உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் (தேவா. 1014 : 7). 3. கருத்து. மண்ணுல காளு மதிப்பை யொழித்தே (பிரமோத். 8 : 99). தோராயம். 5. கண்ணியம். தெ. மதிம்பு. மதி - மதம் = 1. பெரிதாக மதிப்பது. 2. கருத்து. 3. கொள்கை. நெறிமுறை. 5. சமயம். தத்த மதங்களே யமைவதாக. (திருவாச. 4. 52). வ. மத. (mata). மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று திரிப்பர். மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது. கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச் சொல்லும், மத்து என்னும், வடிவினின்றே திரிந்திருத்தலை நோக்குக. முத்து - மொத்து - மத்து = மொத்தையாக விருக்கும் கடைகருவி. மத்து - மத்தி, மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மத்தி - மதி. மதித்தல் = 1. கடைதல். மந்தரங் கொடு மதித்த நாள் சேதுபு. சங்கர. 20). 2. கடைதல் போல் விரலா லழுத்தி மசியச் செய்தல் .. மதி - மசி. மசிதல் = கடைந்தது போற் களியாதல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக. மத்து என்னும் பெயரை மந்த (mantha) என்றும், மத்தித்தல் என்னும் வினையை மத் (math) என்றும், சமற்கிருதத்தில் திரித்திருக்கின்றனர். இவற்றிற்கு வேர் தமிழிலேயே யன்றி வடமொழியி லில்லை. அளத்தற் பொருள் குறித்த mete என்னும் ஆங்கில வினைச் சொல் கவனிக்கத் தக்கது. E mete (to measure), OE, OS metan ON meta, Goth. mitan, OHG mezzan. E. meter = person or thing that measures. Metron (measure) என்னும் கிரேக்கச் சொல் மாத்திரை என்பதன் திரிபு. மா - மாத்திரம் - மாத்திரை - வ. மாத்ரா. மாத்தல் என்னும் வினை தமிழில் வழக்கற்றது. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே என்னும் நன்னூல் நூற்பாவினின்று (11), ஒரு பொருள் அல்லது நெறிமுறை (principle) இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றதும் இவ்வகையிலேயே என்றும், அறிந்து கொள்க. தெய்வம் உண்மை யின்மை, தெய்வத்தின் தன்மை, தெய்வத்தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மையின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வுநிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர் மதித்துக் கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப் படுவதாகும். தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது. தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லையென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம் நம்பா மதம் என மதம் இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப்பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப் பற்பல திறத்தனவா யுள்ளன. (த.ம. : வ.வ.) மதம் தோன்றிய வகை 1. அச்சம் காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் வேட்டையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்பு போலும் நச்சுயிரிக்கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாரனவான பேய் கட்கும், அஞ்சிய அச்சமே தெய்வ வணக்கத்தை அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல்லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர். நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமை யிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சுவதே, பல்வேறு மத வொழுக்கங்கட்கும் பெரும்பாலும் அடிப்படைக் கரணியமா யிருக்கின்றது. அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமைவிலக்கலைக் குறிக் கோளாகக் கொண்டது. 2. முற்காப்பு மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்று தொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால் தடுக்க முடியாத கொள்ளை நோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கு மேற்பட்ட சில மறைவான தெய்வங்களே ஆற்றலுள்ளவை யென்று கருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத்துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தீயும் பாம்பும் பேயும் என்றுமுள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன. 3. நன்றியறிவு பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமை வரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோரன்ன பிறவற்றையும்; தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந்தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே. 4. பாராட்டு இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி) யாகிய தறுகண் மறவனுக்கும், மழை வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன் கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றிய தாகும். தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (குறள். 55) என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும். பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே. தீயானது, கொல்லுந்தன்மையால் அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட்டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும், உரியதாயிற்று. 5. அன்பு இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத்தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்த பின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்பு பற்றியதாகும். இதினின்றே, விண்ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று. 6. கருதுகோள் முதற்காலத்தில் குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந்நிலத்திற் கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெருநிலத்திற்கும் பேராற்றிற்கும் பெருந் தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பண்பிற்கும், சாதல்தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது. கண்ணாற்காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங் களெல்லாம் கருதுகோளின் விளைவேயாகும். நீரூட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவு பற்றி வணங்குவது வேறு; அதற்குத் தனித் தெய்வமுண்டென்று கருதுவது வேறு. 7. அறிவுவளர்ச்சி மாந்தன் நாகரிகமடைந்து அறிவு வளர்ந்து பண்பாடுற்ற பின், மறுமையும் கடவுளுண்மையும் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியாகும். மக்கள் மனப்பாங்கும் அறிவுநிலையும் பல்வேறு வகைப் பட்டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின. அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு முரணாக, பல்வேறு மூடப் பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப் பதுண்மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக்காரரின் சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக்கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும். மதமும் சமயமும் பெரும்பாலும் நம்பிகையைப் பொறுத்தன. (த.ம.) மதி(1) மதி - மதி மதி = 1. அளவு, அளவீடு. 2. அளந்தறியும் அறிவுக் கரணம். மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு (குறள். 636) 3. பகுத்தறிவு. மதியிலி மடநெஞ்சே (திருவாச. 5: 33). 4. அறிவு. மதிமை சாலா மருட்கை நான்கே (தொல். பொ. 255). வடவர் மன் (கருது) என்னும் சொல்லினின்று மதம், மதி என்னும் சொற்களைத் திரிப்பர். மன் என்பது வேறுவழிச் சொல்லாயிருப்ப தோடு தூயதமிழ்ச்சொல் என்பது, (வ.வ.218) மதி (2) மதி : முத்துதல் மெல்ல முட்டுதல். முட்டு மட்டு = அளவு. முத்து மத்து = அளவு. மத்து மத்தி மதி. மதித்தல் = அளவிடுதல். அளந்தறிதல். மதி = அளந்தறியும் அகக்கரணம், அளவிடப் படும் பொருள், பகுத்தறிவு, அறிவு. மதி - மதி, மிதி (வ.). மதிப்படைச் சொற்கள் மக்கள் பெயருக்குமுன் மதிப்புக்குறித்துச் சேர்க்கும் அடைச் சொற்கள் கீழ்வருமாறு : பெயர் அடைச்சொல் மணமாகாதஇளைஞன்பெயருக்குமுன்... குமரன் (Master) மணமாகாத இளைஞை பெயருக்கு முன் ... குமரி (Miss) இளந்தை (Youth)கடந்தஆடவன்பெயருக்குமுன்... திருவாளன் (Mr.) இளந்தைகடந்jபெண்டி‹பெயருக்Fமு‹... திருவாட்டி (Mrs.) கண்ணியம்வாய்ந்jஆடவ‹பெயருக்Fமு‹... பெருமான் கண்ணியம் வாய்ந்த பெண்டின் பெயருக்குமுன்...bgUkh£o னகரமெய்யும் ளகரமெய்யும் இகரவுயிரும் இறுதியிற் கொண்ட ஒருமை யீறுகள் உலக வழக்கில் உயர்வு குறியாமையின், கல்வி செல்வம் பதவி அறிவு, மூப்பு முதலியவற்றால் உயர்வு பெற்றவர் பெயரையும், அவர் பெயருக்கு முன்வரும் அடைச்சொல்லையும், உயர்வுப் பன்மை வடிவிலேயே குறித்தல் வேண்டும். ஒருமை உயர்வுப் பன்மை பன்மை அழகன் அழகனார் அழகர், அழகன்மார் தந்தை தந்தையார் தந்தையர், (தந்தைமார்) அப்பன் அப்பனார் அப்பன்மார் தகப்பன் தகப்பனார் தகப்பன்மார் அம்மை அம்மையார் அம்மையர், அம்மைமார் தாய் தாயார் தாயர் தாய்மார் இளைஞன் இளைஞனார் இளைஞர் குமரன் குமரனார் குமரர், குமரன்மார் இளைஞை இளைஞையார் இளைஞையர் குமரி குமரியார் குமரியர், குமரிமார் ஆடவன் ஆடவனார் ஆடவர், ஆடவன்மார் திருவாளன் திருவாளர் திருவாளர், திருவாளன்மார் திருவாளனார் திருவாட்டி திருவாட்டியார் திருவாட்டிமார் பெண்டு பெண்டார் பெண்டிர் (உயர்வு) பெண்டுகள் (உயர்வின்மை) பெருமான் பெருமானார் பெருமானர், பெருமான்மார் பெருமாட்டி பெருமாட்டியார் பெருமாட்டியர், பெருமாட்டிமார் துறவி துறவியார் துறவியர் அடிகள் அடிகள், அடிகளார் அடிகண்மார் இளந்தையர் என்பது இருபாற் பொதுப்பன்மைப் பெயர் (Young men or women or both) இளந்தை = இளமை. மகரமெய்யீற்று இயற்பெயரை (Proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல் வேண்டின், னகர மெய்யீற்றுப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். எ.டு. பெயர் உயர்வுப் பன்மை பன்மை செல்வம்-செல்வன் செல்வனார் செல்வர், செல்வன்மார் மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக அர் ஈறு பன்மையையும் ஆர் ஈறு உயர்வுப் பன்மையையும் உணர்த்தும் என அறிந்து கொள்க. குமரன் என்னும் தென்சொல் கும் என்னும் அடிப்பிறந்து. கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன் என்னும் பொருளில் இளைஞனையே குறித்தது. இதன் பெண்பால் வடி வான குமரி என்னும் சொல்லும் இதே பொருளில் இளைஞையைக் குறித்தது. கும் - கும்முதல் = கூடுதல். திரளுதல். கும் - கும்மல் = குவியல். கும் - குமி - குவி - குவை, குவால், குவிவு, குவவு. குமி - குமியல் - குவியல், கும்மிருட்டு = திணிந்த காரிருள். குவவுத்தோள் = திரண்டதோள். கும் - கும்பு - கும்பல் = கூட்டம், கும்புதல் = கூடுதல். கும்பு = கூட்டம். கும் - குமர் = திரண்ட இளமை, இளமை கன்னிமை அழியாத் தன்மை. குமர் - குமரன், குமரி. குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வமான காளியும், என்றும் இளமையர் என்னுங் கருத்துப்பற்றியே முறையே குமரன், குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப் போன பழம் பாண்டிநாட்டுத் தென்கோடி மலையும் வடகோடி யாறும் குமரியெனப் பெயர் பெற்றிருந்தன. குமரி மலையின் பெயராலேயே, மூழ்கிப் போன தென்கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலை யிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும். வடமொழியாளர் தமிழன் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின்வருமாறு குமரன், குமரியென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரித்தும் மிகுத்தும் உள்ளனர். குமரன் - குமார = குழந்தை, பையன், இளைஞன், மகன் (இருக்கு வேதம்). குமரி = குமாரீ = சிறுமி, பத்திலிருந்து பன்னீரகவைப் பட்டவள், இளைஞை, மகள் (அதர்வவேதம்). இவ் விரு சொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு மூலத்தையும் கீழ்வருமாறு திரித்துள்ளனர். கு + மார = எளிதாக இறப்பது. இப் பகுப்பும் சொற்பொருட் கரணியமும் இயற்கைக்கு மாறாகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன், மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக. ï‹W«, ‘ïªj¢ Rikia¤ ö¡f Koahj Ú xU Fkudh? என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதையும், கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப்பெண்ணுக்கு ஒரு பிள்ளை என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக. குமரன் குமரி என்னும் சொற்கள் வடசொல்லென்று நீக்கிவிடின், வட மொழியாளர் கூற்றை ஒத்துக்கொண்டதாகவும், குமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க. திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள், தெய்வத்தன்மை என்பதும் ஒன்று. எ.டு. திருக்கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் திரு என்பது தெய்வத் தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும். மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல். திரு. என்று குறுகி நிற்கும் போது முற்றுப்புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மை யுணர்த்தும் திரு என்னும் சொல்லோடொப்பக் கொண்டு மயங்க நேரும். எ.டு. திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்). திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்). இறையடியார் பெயரே. பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை. துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத் தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதையும் அடைச்சொல்லாக ஆளலாம். எ.டு. தவத்திருக்குன்றக்குடியடிகள் தமிழ்த்திரு மறைமலை யடிகள் மறைத்திரு மணியம் அவர்கள் ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிவமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது பெருந்தவத் திரு என்று குறிக்கலாம். திருமதி என்னும் அடைச்சொல், திரு. என்னும் தென்சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இரு பிறப்பி (Hybrid) ஆதலால், அதை அறவே விலக்கல் வேண்டும். திருமகன் - திருமாள் - ஸ்ரீமத் (வ.) - ஸ்ரீமதீ (பெண்பால்) திருமதி - ஸ்ரீமதீ. ஸ்ரீ. திருவாட்டி என்னும் தூய தென் சொல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது. பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் (குறள். 831) என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென்சொல்லாகக் கருதிக் கொண்டனர் போலும்! அறிவுத் திறனைக் குறிக்கும் மதி என்னும் தென்சொல் வேறு; பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியீறு வேறு. இனி மதிப்படைச் சொற்கள், (1) முன்னடைச் சொற்கள், (2) பின்னடைச் சொற்கள் என இரு வகைய. கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப் பின், அவர்கள் என்று குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது, உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை. எ.டு. திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள். ஆற்றலும் தேர்வுப்பட்டமும் புலமையும் தொழிலும் குறித்து வரும் சொற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை. எ.டு. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் புலவர் சின்னாண்டார் பேராசிரியர் சொக்கப்பனார் மருத்துவர் கண்ணப்பர் நாவலர் வேங்கடசாமி நாட்டார் புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.D. நாயுடு) பண்டாரகர் (Dr.) சாலை இளந் திரையனார். பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப் பெறும். எ.டு. புலவர் புகழேந்தியார். புகழேந்திப் புலவர் பெரியார் ஈ.வே.இரா. ஈ.வே. இராப். பெரியார். அவர்கள் என்னும் பின்னடையை எவர் பெயருக்கும் பின் குறிக்க லாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொறுத்தது. அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச்சொற்களைப் பின்வருமாறு மொழிபெயர்க்கலாம். எ.டு. பத்மஸ்ரீ : தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள். செர் (Sir) : வயவர் தியாகராசச் செட்டியார் அவர்கள் ராஜா செர் (Rajah Sir) : அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள் ராய் பஹதூர் : அரைய ஆண்டகை. ராவ் பஹதூர்: அராவ ஆண்டகை பவானந்தம் பிள்ளை அவர்கள். திவான் பஹதூர்: அமைச்ச ஆண்டகை நாராயணசாமிப் பிள்ளை அவர்கள். ராவ் சாஹிப்: அராவ அண்ணல் கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள். அரசியற் பதவிகள் பற்றிய முன்னடைகள் The Hon’ble - பெருந்தகை The Rt. Hon’ble - மா பெருந்தகை His Worship - வணங்கு தகை His Lordship - குரிசில் தகை His Excellency - மேன்மை தங்கிய His Highness - உயர்வு தங்கிய His Majesty - மாட்சிமை தங்கிய மதவியல் பற்றிய முன்னடைகள் Rev. - கனம் Rt. Rev. - மா கனம் His Grace - அருட்டிரு His Holiness - தவத்திரு (முதன்மொழி 2.9.1971) மதி விளக்கம் சொல்லியல் (Etymology) மொழிநூலுள் (Philology) அடங்கு மேனும், பல சொற்கள் பல மொழிகட்குப் பொதுவாயிருத்த லானும், ஒரு மொழிச் சொல் வெவ்வேறு வகையில் பிற மொழிச் சென்று வழங்குதலானும், மொழியாராய்ச்சி செய்யாதார் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் தகாது. மொழியாராய்ச்சிக்கு மொழி நூலிலக்கியக் கல்வி மட்டுமன்றி பல்வேறு மொழிகளின் இலக்கண அறிவும் சொற்றொகுதி யறிவும் வேண்டும். பொருட்பாடுநோக்கிச் சொற்களை. (1) ஒரு பொருட் பல சொல் (Synonyms). (2) பல பொருளொரு சொல் (Homonyms). என இரு வகையாகப் பகுத்தனர் பண்டைத் தமிழ் இலக்கணியர். இவற்றை முறையே, ஒரு பொருட்சொல், பல பொருட் சொல் எனக் குறுக்கியும் வழங்கலாம். ஒரு பொருட் சொல் என்பது ஒரேயொரு பொருளுள்ள சொல் என்றும் பொருள்படினும் ஒரு பொருட் பலசொல் என்பது ஒருமைக்கு ஏற்காமையானும். இரட்டுறற் சொற்கள் பல இடம்நோக்கிப் பொருள் வேறு பாடுணர்த்தலானும், ஒரு பொருட்சொல் என்னும் குறியீட்டிற்கு இரட்டுறன்மை இழுக்காகாதென்க. இனி, பல பொருட் சொல்லும். (1) ஒரு வேர்ப் பல பொருட்சொல் (Homonymy). (2) பல வேர்ப் பல பொருட்சொல் (Polysemy). என இரு திறப்படும். கடு என்னும் சொல். மிகுதி, வன்மை, வலி, விரைவு, காரம், கொடுமை முதலிய பல பொருளை ஒரே வேர்ப் பொருளடியில் உணர்த்துதலால் ஒரு வேர்ப் பல பொருட் சொல்லும்; மாண்டான் என்னும் சொல், மாண், மாள் என்னும் இரு வேறு வினைப்பகுதிகளின் படர்க்கை ஆண்பால் இறந்த கால முற்றாதலின் பல வேர்ப் பல பொருட் சொல்லும்; ஆகும். ஒரு பொருட் சொல்லும் இங்ஙனமே ஒரு வேருடைமையும் பல வேருடைமையும்பற்றி இரு திறப்படும். மதி என்னும் சொல், பருத்தல், கடைதல், கொழுத்தல், மதங்கொள்ளுதல், மயக்கம், கள், யானை, நிலா, இனிமை, கருவாப்பட்டை, அளவு, மதிப்பு, அறிவு, அசைச்சொல் முதலிய பொருள்களில் ஒரு வேர்ப் பல பொருட் சொல்லான தென் சொல்லும், பெண்பால் அடை மொழியீறாக வரின், மான் என்னும் தம் ஈற்றினின்று திரிந்த வட சொல்லும் ஆகும். இவ் விரண்டிற்கும் எவ்வகைத் தொடர்புமில்லை. இவற்றின் வரலாறு வருமாறு : முத்து - மத்து - மத்தி - மதி. உ - அ (அள்ளைத் திரிபு). முத்துதல் = சேர்தல். (சீவக. 504). முகத்தொடு முகம் சேர்தல். பல பொருள்கள் அல்லது கூறுகள் ஒன்றுசேரின் திரட்சி யுண்டாகுமாதலால், சேர்தற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும். சேரே திரட்சி (தொல். சொல். 363) முத்து - முத்தை = திரட்சி (சூடா), சோற்றுருண்டை. முத்தை - மொத்தை = பருமன், உருண்டை. மொத்தை - மோத்தை = பருத்த வெள்ளாட்டுக்கடா. முத்து - மொத்து - மொத்தம் = திரட்சி, முழுமை. முத்து = திரண்ட விதை, மணி, கிளிஞ்சிலில் விளையுங் கல், கொப்புளம். முத்து - முத்தம் = பெரிய முத்து, இச் சொல் வடமொழியில் முக்த வென்று திரியும். அம் பெருமைப் பொருள் ஈறு. முத்து - மத்து = திரண்ட தயிர் முதலியன கடைகருவி. மத்து - மத்தம் ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறு (கலித். 110). மத்து - மத்தி, மத்தித்தல் = கடைதல். மத்தி - மதி. மதித்தல் = கடைதல், விரலால் அல்லது கையால் நசுக்கிப் பசைபோலாக்குதல். மதி - மசி. மசிதல் = பசைபோலாதல் (த.வி.) மசித்தல் = பசை போலாக்குதல் (பி.வி.) மத்து, மத்தம் என்பன மந்த (mantha) என்றும்; மத்தி, மதி என்பன மத் (math) என்றும், மசி என்பது மஷ் என்றும், வடமொழியில் திரியும். மத்தம் = எருமைக்கடா, இச்சொல் வடமொழியில் மத்த எனத் திரியும். பொதுவாக, ஓர் இயங்குதிணை உயிரியின் உடம்பு பருத்தலால் கொழுத்தலும் மதங்கொள்ளுதலும் உண்டாகும். மதித்தல் = 1. பருத்தல், உப்புதல். 2. கொழுத்தல் செருக்குதல் மதித்தெதிர் தெவ்வா (இரகு. மீட்சி 37) 3. மதங்கொள்ளுதல். மதித்த களிற்றினின் (கம்பரா. பஞ்சசே. 56) மதி = மதயானை. கோண் மதித்திடர் கிடந்தன, (கம்பரா. நாகபாச. 136) மதி - மதம் = மிகுதி. பெருமை, வலிமை, வளம், செருக்கு, மதநீர். மதம் - மதன் = மிகுதி, வலிமை, செருக்கு. மத்தம் = மதம், மத்தமா = யானை, மத்தம் - மதம் என்றுமாம். மத்தன் = கொழுத்தவன். மத்த னிராவணன் கொதித்தான் (இராமநா. உயுத். 44). மத்தம், மத்தன் என்பன மத்த என்று வடமொழியில் திரியும். மதம் - மதர். மதர்த்தல் = மிகுதல், செழித்தல், கொழுத்தல், மதங்கொள்ளுதல், செருக்குதல். பல பொருள்கள் அல்லது வழிகள் அல்லது கருத்துக்கள் கலத்தலால், கலக்கமும் மயக்கமும் உண்டாகும். மத்தித்தல் = கலத்தல், மருந்து கலத்தல். மத்தம் = மயக்கம். மத்தம் - மதம் - மதன் = கலக்கம். ஒ.நோ : குல - குலவு - கலவு, கலவுதல் = கலத்தல் குலவுதல் = கூடுதல். குல - கல - கலங்கு - கலக்கு - கலக்கம். முய - முயங்கு - முயக்கம். முயங்குதல் = தழுவுதல், கலத்தல். முய - மய - மயங்கு - மயக்கு - மயக்கம் = கூட்டம், கலக்கம். மயத்தல் = மயங்குதல். மயந்துளேனுலக வாழ்க்கையை (அருட்பா. அபயத்திறன். 14). மயக்கக் கருத்தினின்று, உணர்வின்மை (மூர்ச்சை) வெறி, கோட்டி (பைத்தியம்), காமம் ஆகிய கருத்துக்கள் தோன்றும். மத்தம் = மயக்கம், குடிவெறி, கோட்டி, ஊமத்தை. மத்தம் - மத்தன் = மதிமயங்கியவன், கோட்டி பிடித்தவன். மத்தம் - மதம் = குடிவெறி, கோட்டி. மத்து = ஊமத்தை, மதத்தல் = மயங்குதல். மத்து, மத்தம், மத்தன் என்னும் இம் முச்சொல்லும் வடமொழியில் மத்த எனத் திரியும்; மத என்பது mada எனத் திரியும். செருக்கு. யானை மதம் ஆகிய இரு கருத்தும் மயக்கக் கருத்தினின்று தோன்றியதாகவுங் கொள்ளலாம். ஒ.நோ: களி-களிறு. களித்தல் = கள்ளுண்டு வெறித்தல், மயங்குதல். நிலவொளியால் கோட்டி யுண்டாகுமென்று பண்டைக் காலத்தில் கீழ் நாட்டிலும் மேல்நாட்டிலும் ஒரு கருத்திருந்ததால், திங்களுக்கு மயக்கந் தருவது என்னும் பொருள்பற்றி ஒரு பெயருண்டாயிற்று. மத்து - (மத்தி) - மதி: அல்லது மதம் - மதி = திங்கள். Luna (Latin) = திங்கள், Lunacy (Eng.) = கோட்டி. மதி = மாதம் (மதியால் அளக்கப்படும் கால அளவு). மதி - மாதம் - மாஸ (வ.). மதிப் பெயரினின்றே மாதப் பெயர் உண்டாகும். திங்கள் = மதி, மாதம், (Moon-month). மதி என்னும் சொற்கு வடமொழியில் திங்கட் பொருள் இல்லை. இயல்பாகத் தகரம் சகரமாகத் திரியுமேயன்றிச் சகரம் தகரமாகத் திரியாது. ஆதலால், மாதம் என்பது தென் சொல்லாதல் தெளிவு. ஆயினும், ஆரிய மயக்கால் தமிழர் பேதுறுவது அவர் பேதைமையே. ஏற்கெனவே திங்கட் சொல் மதியையும் ஒரு கிழமையையும் குறித்தலால், அதை மேலுமொரு பொருளில் வழங்கி மயக்குதல் வழுவாகும். மயக்கந் தரும் கள் அல்லது தேன் இனித்தலால், மயக்கக் கருத்தில் மதுக் கருத்தும் தோன்றும். மத்து - மட்டு = தேன், கள். மத்து - மது - மதுர் - மதுரி - மதுரம். மது - மதம் = தேன். மதங்கமழ் கோதை (சீவக. 2584). மது = தேன், கள், இனிமை, அதிமதுரம். மது - மதி = அதிமதுரம். மட்டு என்பது madya என்றும், மது என்பது madhu என்றும் வடமொழியில் திரியும். இனி, முத்து என்பதன் வல்வடிவான முட்டு என்னும் சொல், ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டுதலால் அறியப்படும் இயக்க முடிவை அல்லது வழி எல்லையை உணர்த்துதலால், சேர்தல் அல்லது பொருந்துதற் கருத்தில் எல்லை அல்லது அளவுக்கருத்தும் தோன்றும். முகத்தாற் பொருந்துதல் முத்துதலும் தலையாற் பொருந்துதல் முட்டுதலும் ஆதலின், அவற்றின், மென்மை வன்மை குறிக்க, முறையே தகர டகரம் வந்தனவென அறிக. இங்ஙனமே முட்டியால் முதுகில் அறைதல் குத்துதலும் மண்டையில் அறைதல் குட்டுதலும் ஆதல் காண்க. ஆயினும், முதற்காலத்தில் தகரச் சொல்லே டகரச்சொற் பொருளையுங் குறித்தது. முட்டுதல் = முடிதல். முட்டு - மட்டு = முடிவு, எல்லை, அளவு, மட்டு - மட்டம். (மத்து) - (மத்தி) - மதி. மதித்தல் = அளவிடுதல், உள்ளத்தால் அளவிடுதல், உயர்வாகக் கருதுதல், கருத்தாகக் கொள்ளுதல். மதிப்பு = ஏறத்தாழக் கணிப்பு (கணிசம்), உயர்வு. மதி = மதிப்பு, அளவிடப்பட்ட பண்டம் (ஏற்றுமதி, இறக்குமதி), அளந்தறியும் பகுத்தறிவு, அறிவுப்புலன், மதி - மதம் = கொள்கை சமயம், நூற்கொள்கை. மதி என்னும் சொல் முன்னிலை படர்க்கை யசைநிலையாய் வருங்கால், அளவு என்னுங் கருத்தில் அது போதும் என்றேனும், அறிவு என்னும் கருத்தில் அது அறிவாகும் என்றேனும் பொருள்படும். பழஞ்சேர நாடாகிய கேரளத்தில், மதி என்பது போதும் என்னும் பொருளில் இன்று வழங்குகின்றது. மதம் (சமயம்) என்பது வடமொழியில் mata என வழங்கும். அளவீடு என்னும் கருத்தொழித்து, இதுகாறுங் கூறிய எல்லாப் பொருள்களிலும், மதி என்பதனொடு தொடர்புடைய மத, மதம், மதன், மதர் முதலிய சொற்கள் தமிழில் வழங்கி வருகின்றன. முழுகிப் போன குமரிக்கண்டத்தொடு பல உலக வழக்குச் சொற்களும், இறந்துபட்ட பண்டையிலக்கியத்தொடு பல செய்யுள் வழக்குச் சொற்களும், மறைந்துபோனமையால், பல சொற்கோவைகளின், இடையிலிருந்த அண்டுகளை இன்று காட்டமுடியவில்லை. மகன் என்னும் சொல் வருமொழியாகவும் ஈறாகவும் வருங்கால் மான் என்று மருவும். எ.டு. : மருமகன் - மருமான், பெருமகன் - பெருமான். இங்ஙனமே திருமகன் என்பது திருமான் என்று திரியும். திரு என்பதை வடமொழியார் ஸ்ரீ என்று திரித்துக் கொண்டதால் திருமான் என்பது ஸ்ரீமான் எனத் திரிந்தது. இதனைச் சீமான் என எழுத்தொடு புணர்ந்த சொல் லாக்கினர் தமிழர். திருவரங்கம் - ஸ்ரீரங்கம் - சீரங்கம் என்னும் திரிவையும் நோக்குக. சீமான் என்பதன் பெண்பால் சீமாட்டி யாதலால், ஸ்ரீமான் என்பதன் பெண்பால் ஸ்ரீமாட்டி யும் திருமான் என்பதன் பெண்பால் திருமாட்டியும் ஆதல் வேண்டும். திருவாட்டி என்பது திருவாளன் என்பதன் பெண்பால் மருமகன் என்பதன் பெண்பால் மருமாட்டி என்றும் பெருமான் என்பதன் பெண்பால் பெருமாட்டி என்றும் வழங்குதல் காண்க. கலை மருமாட்டி (திருவிளை, திருமண 62). பெருமாட்டி (திவா) பெருமான் - பிரான் பெருமாட்டி - பிராட்டி இவை மரூஉச் சிதைவு. வான் என்னும் ஈற்றினின்று வத், வதீ என்று முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் திரித்துக் கொண்டது போன்றே, மான் என்னும் ஈற்றினின்றும் மத், மதீ என்று திரித்துக் கொண்டனர் வடமொழியாளர். ஆதலால், பெண்பாற் பெயர்க்குத் திருமதி என்று அடைகொடுக்காது திருமாட்டி என்று கொடுத்தல் வேண்டும். ஸ்ரீமான் ஸ்ரீமதீ என்பன வட சொல் வடிவுகள். ஸ்ரீமதீ என்பது எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் போது திருமதி என்றாகும். இவ் வடிவை விலக்க வேண்டும். மதுரை மதுரை - மதுரா (dh). மதி - மதிரை. ஒ. நோ குதி - குதிரை. மதி - மதிரை - மதுரை = மதிக்குலத்தவனான பாண்டியன் முதல் தலைநகர் (தென்மதுரை), கண்ணன் ஆண்ட வடமதுரை, அப் பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியர் தலைநகர் (வைகை மதுரை). சிவபெருமான் தம் சடைமுடியிலுள்ள திங்களினின்று மதுவைப் பொழிந்த இடம் (வைகை) மதுரை எனப்பெற்றது என்றும், மது என்னும் அரசன் ஆண்டதினால் மதுபுர என்று ஏற்பட்டபெயர் மத்ரா (வட மதுரை) எனத் திரிந்ததென்றும், காரணங்காட்டுவர். (வ.வ.230). மதுரைத் தமிழ்க் கழகம் தமிழ்மொழியும் இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் வரலாறும் போற்றுதல் பற்றி, வருகின்ற புத்தாண்டு வாழ்த்துப் போல் 1981 சனுவரித் தொடக்கத்தில், பாடல்மிக்க கூடலுற்ற மாட மதுரையில் பனிமலை யெழுச்சியும் குமரிமலை முழுக்கும் கண்ணெதிரில் நிகழ்ந்தாற்போல் காட்டவிருக்கும் திரைப்படப் பிடிப்பும். சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழ் என்று மாணிக்கவாசகர் பாடிய தமிழ் வளர்க்குங் கழகம் ஒன்று நிறுவும் திட்டமும், உலகம் பாராட்டுமளவு தலைசிறந்தனவாகும். இவற்றுள், கனவுபோல் தோன்றி மறையும் திரைப்படத்தினும், நனவாக நிலைத்து நின்று நாட்டிற்கு நலம் பயக்கும் கழக நிறுவனம் சாலச் சிறந்த தென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. ஒரே கழகம் பண்டைத் தமிழகம் சேர சோழ பாண்டியம் என்னும் மூவேந்தக மாகப் பிரிந்து, குமரிமலைமுதற் பனிமலை வரை பரவியிருந்த தேனும், பாண்டியம் என்னும் ஒரே நாட்டில், ஒவ்வொரு காலத் திலும் ஒரே கழகம் இருந்து வந்தது. தமிழுலகெங்கணுமுள்ள தலைமைப் புலவரெல்லாம் அதிற் கலந்திருந்தனர். தலையிடை கடையென முக்கழகம் இருந்ததாகச் சொல்லப் படினும், பாண்டிநாட்டிலேயே பாண்டியரே கழகம் நிறுவி வந்ததால், உண்மையில் அம் மூன்றும் ஒன்றே. கடல்கோளாற் பாண்டியராட்சி இடையீடுபட்டதினாலேயே, மூவேறிடத்தில் மூவேறு காலத்தில் கழகம் நிறுவ நேர்ந்தது. இரு கடல்கோளும் நிகழ்ந்திராவிடின், தலைக்கழகம் என்னும் ஒன்றே இறுதிவரை தொடர்ந்திருந்திருக்கும். பழம் பாண்டிநாடாகிய குமரிநாடு, தமிழ் தோன்றிய நிலமாத லாலும், அயன்மொழி வாடை இம்மியும் வீசாத செந்தமிழ் நாடாதலாலும், பாண்டியர்க்குத் தாய்மொழிப் பற்றுத் ததும்பி வழிந்ததனாலும், தமிழ்மகளே கலைமகளுமாயிருந்தத னாலும், அறிவை வளர்த்தல் அரசன் கடமையாதலாலும், பாண்டியர்க்குத் தமிழை வளர்த்துப் போற்றிக் காக்கும் கழகம் நிறுவாதிருத்தல் இயலவில்லை. 17 ஆம் நூற்றாண்டிலிருந்த தளவாய் இரகுநாத சேதுபதி யென்னும் சிற்றரசர் பன்னிரு புலவரைப் போற்றிக் காக்கவும், இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பாலவநத்தம் வேள் பாண்டித் துரைத்தேவர் புலவர் இருவரைப் போற்றிக் காக்கவும் நூற்று வர்க்கு மேற்பட்டவரை ஆட்டை விழாவிற் கூட்டவும் ஆற்றலரா யிருந்திருக்கவும், பத்தாயிரம் ஆண்டுகட்கு முன் இந்தியா அளவு நிலப்பரப்புள்ள குமரிநாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்ட பாண்டி யனுக்குத் தமிழ்ப்பற்றும், புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்மரைப் போற்றிக் காக்கும் செல்வச் சிறப்பும் இருந்திராதென்று கொள்வது, எத்துணை இரங்கத்தக்கதாகும்! தலைக்கழகத்தில் அகத்தியரும் தொல்காப்பியரும் இருந்ததில்லை. தலைக்கழகக் காலம் கி.மு. தோரா 10,000 - 5,000. அகத்தியர் தமிழகம் வந்த காலம் கி.மு. தோரா. 1200. தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு தமிழின் முதுபழந் தொன்மையாலும், வரலாற்றறிவும் காலவாராய்ச்சியும் இன்மையினாலும், முக்கழக வரலாற்றில் முன்னவரையும் பின்னவரையும் ஒருகாலத்தவராக மயக்கிவிட்டனர். இதனால், கழகமே யிருந்ததில்லை யென்பது காட்டிக் கொடுக்குந் தன்மையைத்தான் காட்டும். நகர அடிப்படையிலும், மாவட்ட அடிப்படையிலும், மாநில அடிப்படையிலும், நாட்டு அடிப்படையிலும், பல்வேறு தமிழ்க் கழகங்களைத் தோற்றியிருப்பதை அறவே நீக்கிவிட்டு, பழம் பாண்டிநாட்டுத் தமிழ்க் கழகம் போன்று ஒரே உலகப் பொது மாபெருந் தமிழ்க் கழகம் நிறுவ வேண்டும். அதன் கிளைகள் பல்வேறிடங்களில் இருக்கலாம். நில வரம்பின்மை தமிழர் பல நாடுகளிலும் தீவுகளிலும் குடியேறியிருப்பதால், தமிழுலகம் அனைத்தையும் தழுவிய தமிழ்க் கழகமாயிருத்தல் வேண்டும். தொகை வரம்பின்மை தலைக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர்; இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மர், கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மர். நிலப்பரப்பிற் கேற்றவாறு புலவர் தொகை வேறுபட்டிருந்தது. மற்றப்படி, சிவனியப் புலவர் எழுவர், திருமாலியப் புலவர் எழுவர், சமணப் புலவர் எழுவர், புத்தப் புலவர் எழுவர், ஆரிய மதப் புலவர் எழுவர், உலகியல் மதப் புலவர் எழுவர், மதமற்ற புலவர் எழுவர் என்றோ, வேறு வகையாகவோ புலவர் தொகை அமையவில்லை. தகுதியுடையவர் அனைவரும் இடம்பெறல் வேண்டும். புலவர் தகுதி ஒரு தமிழ்ப்புலவர் கல்லூரியில் மாணவராகப் பயின்றோ தனியாக ஒரு பெரும் புலவரிடம் கற்றோ, பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும் தேர்வெழுதித் தேறிப் புலவர் பட்டம் பெற்றவர்க்குள், நுவலாசிரியராகவோ (போதகாசிரியராகவோ), நூலாசிரியராக வோ, உரையாசிரியராகவோ, இதழாசிரியராகவோ, ஆராய்ச்சியா ளராகவோ பல்லாண்டு பணியாற்றி அவரவர் துறையில் அதிகாரி யென அறிஞரால் ஒப்புக்கொள்ளப்பட்டவரே, தமிழ்ப்புலவர் கழக வுறுப்பினராகத் தக்கார். இலக்கண அறிவும் புலவர் பட்டமும் இன்றியமையாத அடிப் படைத் தகுதியாகும். ஆங்கிலத்திற் பட்டம் பெற்றவரையே ஒப்புக் கொள்ளும் முறையைத் தமிழிலும் கடைப்பிடித்தல் வேண்டும். மேடைப் பேச்சாளராகவோ இதழாசிரியராகவோ இருந்தால் மட்டும் போதாது. இலக்கண அறிவிற்குப் பல்கலைக் கழகப் புலவர் பட்டமே சான்றாதல் வேண்டும். தேர்வெழுதாது பெறும் கண்ணியப் (Honorary) பட்டமும் சான்றாகாது. வரிசையறிதல் புலமைச் சான்றான பல்வேறு திறங்களுள், கடைக்கழகச் செய்யுட்கும் பனுவற்கும் உரை வரையும் ஆற்றல் சாலச் சிறந்தது. நாவலர் வேங்கடசாமி நாட்டாருக்குப் பின் அடுத்தபடியாக அத் திறமையுடையார். முதுபெரும் புலவர் உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளையே. அவரைத் தலைவராகக் கொண்டு புலவரைத் தேர்ந்தெடுப்பது தலைசிறந்த வகையாகும். புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புன லூர பொதுமக்கட் காகாதே பாம்பறி யும்பாம்பின் கால். (பா. 7) அவருக்கு அடுத்தவர் முதுபெரும் புலவர் வேணுகோபாலப் பிள்ளையே. தமிழ்ப்புலவருள், வையாபுரி (Heretic School) வழியினர் என்றும், மறைமலையடிகள் வழியினர் (Orthodox School) என்றும், இரு முரண்பட்ட கூட்டத்தார் உளர். மறைமலையடிகள் போல் முற்றும் தனித்தமிழே வழங்க வேண்டும் என்பதை எவரும் மறுக்கலாம். ஆயின், உண்மையான வரலாற்றை ஒருவரும் மறுக்கவோ மறைக்கவோ மாற்றவோ ஒண்ணாது. ஆதலால், சமற்கிருதத்திலிருந்து தமிழ் வந்ததென்றும், அடிப்படைத் தமிழ்ச்சொற்களெல்லாம் சமற்கிருதமென்றும், பாணினீயத்தின் வழிப்பட்டது தொல்காப்பியம் என்றும், சிந்துவெளி நாகரிகம் ஆரியர தென்றும், இருக்கு வேதத்திற்குப் பிற்பட்டது தமிழ் என்றும், தமிழர் வடமொழிப் பரத சாத்திரத்தினின்று நடமும் நாடகமுங் கற்றுக் கொண்டனர் என்றும், கொச்சைத் தமிழையும் செந்தமிழ்போற் கொள்ளவேண்டு மென்றும், அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று தமிழ் நெடுங்கணக்குத் தோன்றிற் றென்றும், வடமொழி தேவமொழி யென்றும், பிராமணர் நிலத்தேவர் என்றும், திருக்கோயில் வழிபாடு வடமொழியிலேயே நடைபெறல் வேண்டுமென்றும், இந்தியை எதிர்த்தல் கூடாதென்றும், தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்றும், பிறவாறுந் தமிழுக்கு மாறாகவும் கேடாகவும் சொல் வாரும் எழுதுவாரும் எல்லாம் தமிழ்க்கழகத்தில் இடம்பெறத் தக்காரல்லர். தமிழை முழுத்தூய்மையாகப் பேசாவிடினும், இயன்றவரை தூய்மையாகப் பேச முயல வேண்டும்: தமிழ்ப்பெயருந் தாங்க வேண்டும். உலகப் பொதுமை இன குல மத இட கட்சி வேறுபாடின்றித் தகுதியொன்றே பற்றி, எல்லாருஞ் சேர்தற்கேற்ற கழகமா யிருத்தல் வேண்டும். இருப்பிடம் மதுரை. நடைமுறை பல்துறைப்பட்ட தமிழாராய்ச்சியே தமிழ்க்கழகத்தின் தலைமைப் பணியாயிருத்தல் வேண்டும். பண்டைத் தமிழ்க்கழகங்களும் செய்த பணி இதுவே. அவர் தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரை யென்ப. அவர் தமிழாராய்ந்தது கபாடபுரம் என்ப. அவர் தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப, என்றே முக்கழகப் பணியும்பற்றி முக்கழக வரலாறு கூறுதல் காண்க. சிறைவான் ... உயர்மதிற் கூடலி னாய்ந்த வொண்டீந்தமிழ் என்றே மாணிக்கவாசகரும் பாடியிருத்தல் காண்க. ஆராய்ச்சித் தகுதி, மதிநுட்பம், பரந்த கல்வி, நடுநிலைமை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறி யவா என்னும் ஆறாம். இவ்வாறும் இல்லார் போலியாராய்ச்சியார், பொருளீட்டவே வல்லார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இக் கழகமும் ஒன்றாகவே யிருக்கலாம். உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை மதுரையிலேயே யிருப்பதால், அடிக்கடி சென்று கழக ஆராய்ச்சியை மேற்பார்த்து வரலாம். நாடாட்சித் தலைவர் (முதலமைச்சர்) பாண்டியன்போல் என்றும் நிறுவனத் தலைவராயிருப்பார். ஆண்டுதோறும் ஆட்டைவிழாவும் அரங்கேற்றமும் நிகழலாம். அரங்கேற்றமும் பரிசளிப்பும் பண்டை நாட்போன்றே நடந்தேறல் வேண்டும். கழகத்தில் அரங்கேறிய நூலே நாட்டில் உலவுதலும் நிலவுதலும் வேண்டும். செலவு பொருள் வருவாய்கள் தமிழ்நாட்டரசு ஒதுக்கீடு. நடுவணரசு ஒதுக்கீடு, திரவிடநாடுகளின் ஒதுக்கீடு, பெருஞ்செல்வர் நன்கொடை, தமிழ்நாட்டுத் திருமடங் களின் திருத்தானம், திருப்பதி வேங்கடவர் திருவீகை, பல்கலைக் கழகங்களின் பணவுதவி, ஒன்றிய நாட்டினங்களின் கல்வியறிவியற் பண்பாட்டுக் கழக (UNESCO) ஒப்புரவுத்தொகை, பல்கலைக்கழக நல்கைக் குழு (U.G.C.) நல்கை முதலியன கழகச் செலவிற்குப் பொருள்தேடும் வழிவகைகளாம். கழகப் பெயர் முதலிரு கழகங்களும் கழகம், கூடல், தொகை, அவை, மன்றம் முதலிய சொற்களாலேயே குறிக்கப்பட்டு வந்தன. அக் காலத்தில் ஆரியம் என்னும் பேரும் தோன்றவில்லை. சங்கம் என்னும் வடசொல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே சமணரொடு தமிழகம் புகுந்திருத்தல் வேண்டும். பதினாறாம் நூற்றாண்டினரான பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில், கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து என்று பாடியிருப்பதால், இன்றும் கழகம் என்னும் சொல்லையே ஆளலாம். வடமொழியிற் சங்கம் என்னும் சொல் ஸம்க (samga) என்னும் வடிவுபெறும். அதை samgha என்றும் திரித்து ஸம்ஹன் என்பதன் திரிபாகக் கூறுவர். ஸம்க என்னுஞ் சொற்கு உடன்செல்லுதல் அல்லது ஒன்றுசேர்தல், கூடுதல் என்பதே பொருள். கும்முதல் = கூடுதல், குவிதல், கும் - கும்மல் (குவியல்) - L. cumulus, heap. உம் - கும் - கும்பு - கும்பல். கும்மலிடு - L. cumulate. கும் - L. cum - E. cum, com. L. cum (கும்), Gk. sum (ஸும்), Skt. sam (ஸம்) = உடன், கூட. E. sym. ஏ(ஏகு) - யா - இ. ஜா. fh(ga#); E. go, Skt. gam, to go. Skt. gam - ga, samga = to go together, to unite. Samgha = combination, collection, assembly, association, society. இதனால், சங்கம் (ஸம்க) என்னும் வடசொல்லும் தென்சொல்லின் திரிபே என்று தெரிந்துகொள்க. ஆகவே, கழகம் என்னும் சொல்லே இருமடிப் பொருத்தமாகும். (செ.செ.) மந்திரம் மந்திரம்1 - மந்த்ர (இ.வே.). முன்னுதல் = கருதுதல். முன் - மன். மன் + திரம் (திறம்) = மந்திரம். எண்ணத்தின் திண்மையினால். எண்ணியவாறு நிறைவேறும் எண்ணம் அல்லது கூற்று அல்லது பாட்டு மந்திரமாம். எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (குறள். 666) மந்திரம் = 1. எண்ணம் (பிங்.). 2. சூழ்வினை 3. சூழ்வினைஞர் (மந்திரிமார்) அவை. மன்னவன் றனக்கு நாயேன் மந்திரத் துள்ளேன் (கம்பரா. உருக்காட். 31) 3. கொண்முடிபு (சித்தாந்த) மந்திர நூல். போகமிகு மந்திரமா மறையொன்று (திருமுறை கண். 26) 4. சாவிப்புக் கூற்று. (வ.வ.) மந்திரம் - மந்திரி = அரசனுக்குச் சூழ்வினைத் துணையா யிருப்பவன். மந்திரக்காரன் = சாவிப்பு மந்திரம் பண்ணுபவன் (மந்திரவாதி). மந்திரம் - மந்திரி. மந்திரித்தல் = (செ. குன்றாவினை) 1. மந்திரத்தால் அடக்குதல். 3. மந்திரத்தால் ஊழ்குதல் (தியானித்தல்). மந்திரிப்பார் மனத்துளானை (தேவா. 590 : 4) 4. கூடிச்சூழ்தல். மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6,3). 5. மந்திர மன்றாட்டுச் செய்தல். சிரத்தினஞ் சுற்றபின்னை மீண்டிட மந்திரிப்பார் (பிரபோத, 5,7) (வ.வ.) மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் (தொல். 932) நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (. 1434) என்று தொல்காப்பியமும், நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) என்று திருக்குறளுங் கூறுவதால், திருமந்திரம் போன்ற மறை நூல்கள் அக்காலத் திருந்தமை அறியப்படும். பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் என்னும் தொல்காப்பிய நூற்பாவும் (1336) அதை வலியுறுத்தும், வாய்மொழி யென்றது மந்திரத்தை. எண்ணத்தின் திண்மையே அல்லது மன்னும் திறமே மந்திரமாதலால், மன் என்னுஞ் சொல்லும் மந்திரத்தைக் குறிக்கும் (பிங்.). (வ.வ: 221-222: தி.ம. 751). மயிர் மயிர் : மை = கருமை. மை - (மய்) - மயிர் = கரிய முடி. ஒ. நோ: ஐ - அயிர், பை - பயிர், உய் - உயிர், செய் - செயிர், செயிர்த்தல் = சிவத்தல், சினத்தல். மயிர் - மசிர் - ச்மச்ரு (வ.). (தி.ம.751). மயில் மயில் - மயூர மை = கருநிறம். இல் = இடம், கண். மை - மயி + இல் = மயில் = கரிய அல்லது நீலப் பீலிக் கண்களை யுடையது. மயில் தமிழகக் குறிஞ்சி நிலப் பறவை; குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனூர்தி. வடவர் ஐயுற்றுக் காட்டும் மூலம் மா2 = ஒலி (to sound). (வ.வ. 222, 223). மரக்கல வகை புணை - நீரில் மிதக்கும் கட்டை. தெப்பம் - பலமிதப்புக் கட்டைகளின் சேர்க்கை. கட்டுமரம் - இருகடையும் வளைந்த மரக்கட்டு. தோணி - தோண்டப்பட்ட மரம் போல்வது. ஓடம் - வேகமாகச் செல்லும் தட்டையான தோணி. திமில் - திரண்ட மீன் படகு (திண்டிமில்வன் பரதவர் புறம். 24). பஃறி - பன்றி போன்ற வடிவமுள்ள தோணி. பரிசல் - வட்டமான பிரம்புத் தோணி. அம்பி - விலங்கு முகம் அல்லது பறவை முகம் போன்ற முகப்பையுடைய மரத்தோணி. படகு - பாய்கட்டிய தோணி. நாவாய் - நீரைக் கொழித்துச் செல்லும் போர்க் கலம். கப்பல் - பலபாய் கட்டி வணிகச் சரக்கேற்றிச் செல்லும் பெருங்கலம். (சொல். 44) மரக்குரங்கு விளையாட்டு (கொம்பரசன் குழையரசன்) ஆட்டின் பெயர் : சிறுவர் மரத்திற் குரங்குபோல் ஏறி விளையாடும் ஆட்டு மரக் குரங்கு என்பதாம். இது பாண்டி நாட்டில் கொம்பரசன் குழையரசன் என வழங்கும். ஆடுவார் தொகை : இருவர்க்கு மேற்பட்ட பலர் இதை ஆடுவர். ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் ஒரு மரத்தருகே ஒரு வட்டக் கோட்டுக்குள் நின்றுகொண்டு ஒவ்வொருவனாய் இடக் காலை மடக்கித் தூக்கி, அதன் கவட்டூடு ஒரு கல்லையாவது குச்சை யாவது எறிவர். குறைந்த தொலைவு போக்கியவன், பிறர் மரத்தி லேறிப் பிடிக்கச் சொன்ன பின் அவரைப் பிடித்தல் வேண்டும். பிடிக்கிறவன் மரத்திலேறும்போது, சிலர் மரத்தினின்றும் குதித்து வட்டத்திற்குட் போய் நின்று கொள்வர். சிலர் கிளைக்குக் கிளைதாவி ஆட்டங் காட்டுவர். வட்டத்திற்குட் போய் நிற்குமுன் யாரேனும் தொடப்பட்டுவிட்டால், அவன் அடுத்த ஆட்டையில் பிறரை முன் சொன்னவாறு பிடித்தல் வேண்டும். மரக்கிளைகளி லிருக்கும்போது கொம்பரசன் குழையரசன் என்று பாண்டி நாட்டுச் சிறுவர் தம்மைக் கூறிக்கொள்வர். ஆட்டுத் தோற்றம் : குரங்குகளின் செயலினின்று இவ் ஆட்டுத் தோன்றியிருத்தல் வேண்டும். ஆட்டின் பயன் : மரமேறப் பயிலுதல் இவ் வாட்டின் பயனாம். மரப்பட்டை வகை பட்டை புளி வேம்பு முதலியவற்றின் பட்டை; சிறாம்பு தென்னை பனை முதலியவற்றின் பட்டை; மட்டை அல்லது தடை வாழை யின் பட்டை. (பட்டை என்னும் பெயர் வாழைத் தடைக்கும் வழங்கும்). (சொல். 71). மரபியல் 1. வழக்கியல் வகை சொற்களும் சொற்றொடர்களும் வழங்கிவருவது வழக்கு. அது, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இருபாற்படும். இயல்பு வழக்கு 1. இலக்கணமுடையது, 2. இலக்கணப்போலி, 3. மரூஉ, என மூவகைப்படும். இலக்கணந்தவறாத சொல்லும் சொற்றொடரும் இலக்கண முடைய (இலக்கண) வழக்காம். எ.டு. யானை, யானை மலையில் வாழும். இலக்கணம் சிறிது தவறியும் இலக்கணமுடையது போல வழங்கும் சொல்லும் சொற்றொடரும்,இலக்கணப் போலி வழக்காம். எ.டு. விசிறி - சிவிறி (எழுத்துமுறை மாற்று) கோவில் - கோயில் (உடம்படுமெய்ம் மாற்று) நகர்ப்புறம் - புறநகர் (சொன்முறை மாற்று) சொற்களும் சொற்றொடரும் மருவி வழங்குவது மரூஉ வழக்காம். மருவுதலாவது சிதைதல் அல்லது குறுகுதல். எ.டு. வாழ்நன் - வாணன். திருச்சிராப்பள்ளி - திருச்சி. தகுதி வழக்கு 1. இடக்கரடக்கல், 2. மங்கலம், 3. குழூஉக்குறி என மூவகைப்படும் அவையில் சொல்லத்தகாத இடக்கரான பொருளை அல்லது கருத்தை அடக்கி (அஃதாவது மறைத்து)ச் சொல்வது, இடக் கரடக்கல் வழக்காம். எ.டு. பன்றியொடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின்னும். அமங்கலமான கருத்தை மங்கலச் சொல்லாலும் சொற்றொட ராலும் குறிப்பது, மங்கல வழக்காம். எ.டு. துஞ்சினான் இறைவன் திருவடி நிழலடைந்தான் இயற்கை யெய்தினான் (செத்தான்) திருநாடலங்கரித்தான் பெரும்பிறிது (சாவு) உற்றான் பிறர்க்குப் புலனாகாதவாறு, ஒரு குழுவார் மட்டும் தமக்குள் மறைபொருளவாக வழங்கும் குறிகள் அல்லது சொற்கள், குழூஉக் குறியாம். எ.டு. கருந்தலை (1/4) இரு குரங்குக்கை (முசுமுசுக்கை) குறிப்பு : ஒரு நாட்டில் ஒரு பகுதிக்கே சிறப்பாயுரிய திசை வழக்கையும், உயர்ந்தோரல்லாதார் வழங்கும் இழி வழக்கையும், அயன்மொழி தழுவிய அயல்வழக்கையும், கட்டுரைகளிலும் நூல்களிலும் வழங்குதல் கூடாது. திசை வழக்கு எ.டு. தஞ்சை வடார்க்காடு கோவை கெட்டுப் தாரைவார்ந்து கூடப்போயிற்று போயிற்று போயிற்று (காணாமற் போயிற்று) திசைவழக்கு அவ்வவ்விடத்திற்கு ஏற்கும்; நாடு முழுமைக்கும் ஏற்காது. இழி வழக்கு வெளுத்துவாரிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு இங்கே வேகாது. அயல் வழக்கு பிழை திருத்தம் விளையாட்டில் நன்றாய்ச் நன்றாய் விளையாடினார்கள் செய்தார்கள் பயிற்சியெடுக்க வேண்டும். பயிற்சி செய்யவேண்டும் கூட்டத்திற் பங்கெடுத்துக் கூட்டத்தைச் சேர்ந்து நடத்துங்கள் கொள்ளுங்கள். இங்குக் கூறிய அயல்வழக்கு ஆங்கிலமொழியைத் தழுவியது. சில சொற்கள், உலக வழக்கில் ஒரு வகைப் பொருளும் செய்யுள் வழக்கில் ஒருவகைப் பொருளும் தரும். கட்டுரைகளில், இடத்திற்கேற்ப இருவகையுளொன்றைத் தழுவலாம். எ.டு. நாற்றம் = தீ நாற்றம் (உலக வழக்கு) நாற்றம் = நறுநாற்றம் (செய்யுள் வழக்கு) 2. பெயர்ச்சொல் 1. பண்புப்பெயர்கள் கருமை = பெருமை, வலிமை, பழைமை, கொடுமை, கீழ்மை, தீமை.கருங்கண் = கண்ணேறு (திருஷ்டிதோஷம்). கருங்கந்து = நெற்களத்தில் பொலிக்கு அடுத்த விழும் பதர். கருங்கறி = வளமான சதை. கருங்காடு = சுடுகாடு. கருங்காய் = இளம்பாக்கு, கொஞ்சங்குறைய முற்றிய காய். கருங்குணம் = தீக்குணம். கருங்கூத்து = இழிதரக கூத்து, அநாகரிகக் கூத்து. கருங்கை = வேலையில் அடிப்பட்டுக் கருத்த கை, வலிய கை, கொல்லுங்கை. கருஞ்சரக்கு = கூலம் (தானியம்), சாராயம். கருஞ்சார் = இடுப்புப்பொருத்து (Hip-joint). கருஞ்செய் = நன்செய். கருஞ்சேவகம் = பெருவீரச்செயல். கருந்தமிழ் = கருகலான தமிழ். கருந்தறை, கருநிலம் = பாழ்நிலம், பயன்படாத நிலம். கருந்தலை = போரில் இறக்கும் தலை, முடிவு. கருந்தனம் = பெருஞ்செல்வம், பொன். கருந்தாள் = அறுபட்ட தாளடி. கருந்திட்டை, கருந்திடர் = பெரிய மேடு. கருந்தொழில் = உறுதியான வேலைப்பாடு, கடுவுழைப்பு கொலைத்தொழில். கருநடம் = இழிதர நடம். கருநாக்கு = தீய நாக்கு. கருநாக்கன் = கஞ்சன், தீயன். கருநாடகம் = இழிதர நாடகம், அநாகரிக நாடகம். கருநாழிகை = இரவு. கருநாள் = அமங்கல நாள், தீநாள். கருநீலப்பிறப்பு = நாகநிலைக்குச் சிறிது மேற்பட்ட பிறவி. கருநூல் = சூனிய (செய்வினை) நூல். கருப்பு = பேய், பஞ்சம். கரும்பாடு = ஏரியில் அல்லது குளத்தில் கரைக்கும் நீருக்கும் இடையிலுள்ள நிலம். கரும்பிறப்பு = நரகப்பிறவி. கருமகள் = சண்டாளி. கருமகன் = சண்டாளன், கொல்லன். கருமானம் = சூனியவித்தை. கருமேனி = பொந்துடம்பு, (தூலசரீரம்) கருவலி = மிகுந்த பலம். கருவாளி = மதிநுட்பன். கருவினை = பாவம், தீவினை. கருவூலம் = பொக்கிஷவறை. கார்வினை = பாவத்தொழில், தீச்செயல். காரறிவு = மயக்கம் பொருந்திய அறிவு. செம்மை = செவ்வை, நேர்மை, ஒழுங்கு, துப்புரவு, அழகு, பெருமை, சிறப்பு, நன்மை. செங்களம் = போர்க்களம். செங்காய் = பழுக்கும் பருவக்காய். செங்காய்ப்புண் = பழுக்காத புண். செங்குணக்கு = நேர்கிழக்கு. செங்குத்து = நேர் குத்து. செங்கை = கொடைக்கை. செங்கோடு = செங்குத்தான மலை. செங்கோல் = நேர்மையான ஆட்சி, நேரான கோல். செஞ்ச, செஞ்செவே = நேராக, முழுதும். செஞ்சம், செஞ்சு = நேர்மை, சரிமை (Correctness) முழுமை. செஞ்செயல் =நேர்மையான செயல். செஞ்செவியர் = செல்வர். செஞ்செழிப்பு = பெருஞ்செழிப்பு, ஏராளம். செஞ்சொல் = திருந்திய சொல், வெளிப்படைச்சொல். செஞ்சோறு = அரசன் தன்பொருட்டுப் போரில் இறக்கக் கருதிய வீரனுக்குக் காலமெல்லாம் அளிக்கும் சோறு. செஞ்ஞானி = சிறந்த ஞானி. செந்தட்டு = அந்தரத்தட்டு, தன்மேல் விழும் அடியைத் தடுக்கை, ஏவின காரியத்தைத் தட்டுகை. செந்தமிழ் = இலக்கணத்தமிழ், தூயதமிழ். செந்தலிப்பு = செழிப்பு. செந்தூக்கு = நேராகத் தூக்குகை. செந்தொடை = மோனையெதுகையில்லாத யாப்பு. செந்நடை = செவ்வியநடை. செந்நிறுவுதல் = நன்னெறியில் நிறுத்துதல். செந்நெறி = செவ்விய வழி, நன்னெறி. செந்நிலம் = போர்க்களம். செம்பத்தி = உண்மையான அன்பு. செம்பாகம், செம்பாதி, செம்பால் நேர்பாதி. செம்புண் = ஆறும் நிலையிலுள்ள புண். செம்பொருள் = நேர்பொருள், உண்மைப்பொருள், சிறந்த பொருள், கடவுள், அறம். செம்மல் = தலைமை, வலிமை, தலைவன், இறைவன். செம்மாத்தல் = இறுமாத்தல், மிகமகிழ்தல். செம்மொழி = நற்சொல், திருந்தியமொழி. நீலம் நீலன் = கொடியவன் நீலி = கொடியவள் பசுமை = இளமை ஈரம், குளிர்ச்சி, அழகு, இனிமை, புதுமை, வேகாமை. பச்சுடம்பு, பச்சையுடம்பு = பிள்ளைப்பேற்றால் இளந்தவுடம்பு. பச்சை = இடக்கர், வெளிப்படை. பச்சைப்பேச்சு = இடக்கர் பேச்சு, மறையாப்பேச்சு. பச்சைக்கள்ளன் = பெருந்திருடன். பச்சைக்குறவன் = பெரும்பாசாங்குக் காரன். பச்சைக்கொல்லன் = வேலைத்திறமையற்ற கொல்லன். பச்சைப்பதம் = கூலத்தின் முற்றாப்பருவம், நன்றாய் வேகாத நிலை. பச்சைப்புண், பசும்புண் = ஆறியிராத புண், புதுப்புண். பச்சைப்புளுகன் = பெரும்பொய்யன். பச்சைப்பூ = பால்குடிக்கிற குழந்தை. பச்சைப்பொய் = முழுப்பொய். பச்சைப் பசும்பொய் = பெரு முழுப்பொய். பச்சைமண் = இளங்குழந்தை பச்சைவெட்டு = பக்குவம் செய்யப்படாதநிலை, பழுக்காதநிலை. பச்சை வெட்டுக்கல் = கூடாத செங்கல். பசுங்குடி = யோக்கியமான குடி, உழவன். பசுந்தமிழ், பைந்தமிழ் = இனிய தமிழ். பசும்பை = வணிகர் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை. பைங்கூழ் = இளம்பயிர். பைஞ்சேறு = சாணம். பொன்மை = பொலிவு, அழகு, விளக்கம். பொற்ப = பொலிவுபெற. வெண்மை = வெறுமை, வெளிப்படை, அறிவின்மை, கள்ள மின்மை, உள்ளீடின்மை. வெண்கடன், வெண்ணிலைக்கடன் = ஈடுகாட்டாது வாங்குங் கடன். வெண்காவல் = வெறுங்காவல் (Simple imprisonment). வெண்கை = தொழில்செய்து பழகாத கை. வெண்சோறு = வெறுஞ்சோறு. வெண்டேர் = கானல் (Mirage). வெண்ணிலம் = வெறுந்தரை, மணல்தரை. வெண்ணோவு, வெண்ணோக்காடு = பிள்ளைப்பேற்றிற்குமுன் உண்டாகும் வெறு வேதனை. வெண்பதம் = இளஞ்சூட்டுப்பதம். வெண்பாட்டம் = முன்பணமின்றி விடுங் குத்தகை. வெண்புழுக்கல், வெண்புழுக்கு, வெண்புழுங்கல் = இளம்புழுக்கல், இளம்புழுக்கலரிசி. வெண்மட்டக் கருத்து = மேலெழுந்த வாரித்தீர்மானம் (Superflcial judgement). வெண்மட்டம் = மேலெழுந்தவாரி, நுணுக்கமின்மை. வெண்மட்டவேலை = நுணுக்கமில்லாத வேலை, மேலெழுந்த வாரியாகச் செய்யும் வேலை. வெள்வீச்சு = ஆடம்பரப்பேச்சு. வெள்வெடி = குண்டு இல்லாத தோட்டா. வெள்ளந்தி = கள்ளங்கவடற்றவன். வெள்ளடி = சாதாரணம். வெள்ளடி வெருட்டு = பெட்டைமிரட்டு. வெள்ளவெளி = பரவெளி. வெள்ளறிவு = அவிவேகம். வெள்ளிடி = கோடையில் மழைபெய்யாது இடிக்கும் இடி எதிர் பாராது திடுமெனவரும் துன்பம். வெள்ளிடை, வெள்ளிடைமலை = மிகத்தெளிவாயிருப்பது. வெள்ளிது = வெளிப்படையானது. வெள்ளிலை = வெற்றிலை. வெள்ளுயிர் = தூய ஆன்மா. வெள்ளுருட்டு = வெற்றச்சுறுத்தம். வெள்ளுழவு = சிறிது ஈரமுள்ள நிலத்தில் உழும் உழவு. வெள்ளெழுத்து = எழுத்து விளக்கமாய்த் தெரியாமைக்கே துவான பார்வைக்குறை (Long sight). வெள்ளென = அதிகாலையில், இருட்டுமுன், குறித்த காலத்திற்கு முன்பே. வெள்ளேடு = வெற்றேடு. வெள்ளேறன் = பழுதான இரும்பு (Scrap iron). வெள்ளை = கள்ளமற்றவன். வெள்ளைக்கவி = பொருட்செறிவில்லாத பாட்டு. வெள்ளைக்கோட்டி = பயனில்பேச்சு, பயனிலபேசும் அறிவிலார் கூட்டம். வெள்ளைச்சொல் = எளியசொல், திருந்தாச்சொல். வெள்ளைத்தமிழ் = எளிய நடைத்தமிழ். வெள்ளைத்தனம் = கள்ளமின்மை. வெள்ளைநோக்கு = கள்ளமற்ற பார்வை. வெள்ளைப்புண் = ஊன்வெளுத்து எளிதிலாறாத புண். வெள்ளைப்பூச்சு = தவற்றை மறைக்கை. வெள்ளைப்பேச்சு = வெளிப்படையான பேச்சு, கள்ளமற்ற பேச்சு. வெள்ளைபூசுதல் = தவற்றை மறைத்தல். வெள்ளைமகன் = மூடன். வெள்ளைமதி = அறியாமை, அறிவுக்குறைவு. வெள்ளைமழை = சிறு மழை. வெள்ளைமனம் = கவடற்ற மனம். வெள்ளொக்கல் = குற்றமற்ற இனம், செல்வமுள்ள கிளைஞர். வெள்ளோக்காளம் = உமிழ்நீரை மட்டும் வெளியேற்றும் குமட்டல். வெள்ளோட்டம் = புதுத்தேரை முதன்முதலாக ஓட்டிப் பார்த்தல் பயன்படுத்துவதற்கு முந்திய நோட்டம் (பரீட்சை). வெள்ளோலை = எழுதப்படாத ஓலை. 2. மரபுப்பெயர்கள் 1. ஆண்பாற்பெயர்கள் உயிரினப் பெயர் ஆண்பாற்பெயர் யானை, பன்றி களிறு குரங்கு கடுவன், திம்மன் எருமை கண்டி பன்றி கேழல் புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை ஒருத்தல் அரிமா, பன்றி, புல்வாய், உழை - புல்வாய், உழை (மான் வகைகள்) கவரி எருமை மாடு, மரை, சுறா ஏறு அரிமா, புலி, குரங்கு, பனை ஏற்றை மாடு, எருமை, புலி, மரை, புல்வாய், சுறா, முதலை, (இடங்கர், கராம் - இடங்கர், கராம் என்பன முதலை வகைகள்) வரால், வாளை, மயில், புல்லூறு. போத்து புல்வாய் இரலை புல்வாய், உழை, முசு கலை ஆடு மோத்தை, தகர், உதள் அப்பர், மேழகம், (ஏழகம்), செச்சை பறவைகள், குதிரை சேவல் குதிரை, மாடு, புல்வாய் சே மாட்டுக்கன்று எருமைக் செங்கன்று கன்று ஆடு, மாடு, எருமை மாடு கடா எருமை, யானை, மாடு பகடு, காளை, எருது ஆண்பாற்குச் சிறப்புப்பெயர் பெறாத உயிரினங்களின் ஆண்பா லெல்லாம், ஆண் என்னும் அடைமொழி பெற்ற பொதுப் பெயராற் குறிக்கப்பெறும். எ.டு. ஆண்கரடி, ஆண்பல்லி. ii. பெண்பாற் பெயர் உயிரினப்பெயர் பெண்பாற்பெயர் யானை பிடி ஒட்டகம், குதிரை, கழுதை மறை பெட்டை பறவைகள் பெட்டை, பெடை, பேடை கோழி, கூகை, மயில் அளகு புல்வாய், நவ்வி (நவ்வி ஒருவகை மான்), கவரி பிணை பன்றி, புல்வாய், நாய், கரடி பிணா, பிணவு, பிணவல், பிணவு மாடு, எருமை, மரை ஆ, ஆன், மாடு, எருமை, மரை, நாகு நந்து, (சங்கு) ஆடு மூடு, கடமை, மறி பன்றி, நாய், நரி பாட்டி குரங்கு, (முசு, ஊகம் - முசு, ஊகம் என்பன குரங்கு வகைகள்) மந்தி மாடு, எருமை கிடேரி பெண்பாற்குச் சிறப்புப்பெயர் பெறாத உயிரினங்களின் பெண்பா லெல்லாம், பெண் என்னும் அடைமொழி பெற்ற பொதுப்பெய ராற் குறிக்கப்பெறும். எ.டு. பெண் மடங்கல், பெண்பல்லி, மடங்கல் = சிங்கம். iii. இளமைப்பெயர் உயிரினப்பெயர் இளமைப்பெயர் பறவைகள், ஊர்வன பார்ப்பு, பிள்ளை பறவைகள், நண்டு, மீன், தேள் குஞ்சு காக்கை, கிளி, கீரி பிள்ளை மூங்கா, வெருகு குட்டி, பறழ் அணில் குட்டி, பறழ், பிள்ளை எலி குட்டி, குஞ்சு பன்றி, புலி, முயல், நரி குருளை, குட்டி, பறழ், பிள்ளை நாய் குருளை, குட்டி, பறழ் ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய், மான், மறி அழுங்கு குரங்கு குட்டி, மகவு, பிள்ளை, பறழ் பார்ப்பு ஆடு, குதிரை, மான் குட்டி யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம் கன்று யானை, ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, குழவி முசு, ஊகம் அரிமா, ஓநாய் குருளை, குட்டி மாந்தன் குழலி, மகவு, பிள்ளை, சேய், குழந்தை, பாப்பா ஆளி அணங்கு யானை கயந்தலை, களபம், கன்று கரடி குடாவடி, குட்டி காசறை (கத்தூரிமான்) கரு நாவி (புனுகுப்பூனை) பிள்ளை உடும்பு, ஓணான், பாம்பு குட்டி மாடு, எருமை கன்று பூனை, வாவல் (வௌவால்) குட்டி பேன் செள் பயிர்கள், செடிகள் நாற்று மரங்கள் கன்று தென்னை பிள்ளை பொதுவாக, முட்டையிடுபவற்றின் இளமைப்பெயர் குஞ்சு என்பதும், நேரடியாக ஈனுபவற்றின் இளமைப்பெயர் குட்டி என்பதுமாகும். பிள்ளைகுட்டி கடைக்குட்டி முதலிய வழக்குகளில், குட்டி என்னும் பெயர் மக்கட்கும் உரியதாகும். சில உயிரினங்களின் இளமைப்பெயர், ஏதேனும் ஓர் அடை மொழி பெற்ற பொதுப்பெயராகவே வழங்கும். எ.டு. நரிக்கெளிறு, அரைத்தவளை, குட்டிவிளா, பிள்ளை விளாத்தி. iv. சினைப்பெயர் இலைப்பெயர் முதற்பெயர் சினைப்பெயர் தென்னை, பனை முதலியவை ஓலை சோளம், கரும்பு முதலியவை தோகை நெல், புல் முதலியவை தாள் வாழை, மா முதலியவை இலை பிஞ்சுப்பெயர் தென்னை, பனை குரும்பை மா வடு பலா மூசு வாழை கச்சல் வித்துப்பெயர் மிளகாய், கத்தரி முதலியன விதை நெல், சோளம் முதலியன மணி ஆமணக்கு, வேம்பு முத்து முதலியன பலா, மா முதலியன கொட்டை உள்ளீட்டுப்பெயர் நெல், கம்பு, அரிசி முதலியன அவரை, துவரை முதலியன பருப்பு வாழை, மா, முதலியன சதை பலா, சீத்தா முதலியன சுளை முருங்கை, கற்றாழை சோறு முதலியன குலைப்பெயர் மா, புளி, முதலியன கொத்து முந்திரி, ஈந்து குலை முதலியன வாழை தாறு நெல், சோளம் கதிர் முதலியன இங்ஙனமே, பிற சினைப்பெயர்களையும் மரபுப்படி வழங்குக. v. ஆடையணிப்பெயர் ஆடவர்க்குரியன பெண்டிர்க்குரியன வேட்டி சேலை, புடைவை ஏத்தாப்பு மாராப்பு (மார்யாப்பு) கடுக்கன் கம்மல் கழல் சிலம்பு vi. மேய்ப்பன்பெயர் விலங்குப்பெயர் மேய்ப்பன்பெயர் ஆடு இடையன், ஆட்டுக்காரன் மாடு இடையன், மாட்டுக்காரன் குதிரை பாகன், தோட்டி யானை பாகன் பிற விலங்குகளின் மேய்ப்பரைக்குறித்தற்கு, விலங்குப் பெயருடன் காரன் என்னும் பின்னொட்டையாவது, மேய்ச்சி என்னும் பெயரையாவது, சேர்த்துக்கொள்க. எ.டு. பன்றிக்காரன், பன்றிமேய்ச்சி. 3. வினைச்சொல் 1. இசைக்கருவி வினைகள் தோற்கருவிகள் : கஞ்சிராத்தட்டினார், மதங்கம் (மிருதங்கம்) தட்டினார், தவல் அடித்தார், பறைபறைந்தார், தப்பு அடித்தார், முரசு அறைந்தார், கொட்டுக்கொட்டினார். துளைக்கருவிகள் : குழல் ஊதினார்; நாதசுரம் ஊதினார், இசைத்தார்; சங்கு ஊதினார், வாய்வைத்தார், குறித்தார்; கொம்பு ஊதினார், வாய்வைத்தார், குறித்தார். நரம்புக்கருவிகள் : கின்னரி (Fiddle) இழுத்தார், இசைத்தார், எழுவினார்; யாழ் (வீணை) எழுவினார், உளர்ந்தார், முரன்றார், இசைத்தார்; தம்புரா மீட்டினார்; கோட்டு எழுவினார், இசைத்தார்; சித்தார் இசைத்தார், எழுவினார். கஞ்சக்கருவிகள் : சாலர் அடித்தார், தட்டினார்; முகர்சிங்கு அடித்தார்; சப்பளாக்கட்டை அடித்தார், தட்டினார்; கிறிக்கட்டை அடித்தார். பலவகைக் கருவிகள் இயம் இயம்பினார்; இசைக்கருவிகளை இசைத்தார், இயக்கினார். 2. உண்டி வினைகள் உண்பன : சோறு உண்டார், சாப்பிட்டார்; சாப்பாடு சாப்பிட்டார்; உணவு உண்டார். தின்பன : பலகாரம் தின்றார், சிற்றுண்டி அருந்தினார். பருகுவன : தண்ணீர் குடித்தார்; காப்பி குடித்தார்; மோர் குடித்தார், உறிஞ்சினார். காப்பிசாப்பிட்டார், தண்ணீர்சாப்பிட்டார் எனக் கூறுதல் வழுவாம். 3. மழை வினைகள் மழைதூறினது, மழைபெய்தது, மழைபொழிந்தது (சொரிந்தது), மழை கொட்டினது, (ஊற்றினது). இவ்வினைகள், முறையே, மேன்மேலும் வலிதாய்ப் பெய்யும் நிலைகளைக் குறிக்கும். 4. சினை வினைகள் i. அடிவினைகள் அடிக்கீழ்ப்படுதல் = ஒருவன் இன்னொருவனுடைய ஆணைக் குள்ளாதல். அடிசாய்தல் = அடியில் நிழல்சாய்தல். அடித்திரும்புதல் = அடியில் நிழல்சாய்தல், உச்சிமேற் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல். அடிதொடுதல் = பிறர்பாதந்தொட்டு ஆணையிடுதல். அடிநகர்தல் = இடம்விட்டுப் பெயர்தல். அடிப்படுதல் = கீழ்ப்படிதல். அடிபிடித்தல் = அடிச்சுவடு பற்றிப்போதல், தொடருதல், துப்பறிதல். அடிபார்த்தல் = நிழலளந்து பொழுதறிதல். அடிபிழைத்தல் = நெறிதவறிநடத்தல். அடிபிறக்கிடுதல் = பின்வாங்குதல், தோற்றோடுதல். அடிபெயர்தல், அடிபெயர்த்தல் = காலெடுத்துவைத்தல். அடியிரட்டித்தல் = முன்செல்லாமல் நின்ற இடத்திலேயே காலைத்தூக்கி வைத்தல். அடியிலேயுறைதல், அடியுறைதல் = வழிபடுதல், அடிநிழலில் நிற்றல், ஒருவனுடைய பாதுகாப்பிற்குள்ளாதல். அடியொற்றுதல் = பின்பற்றுதல். அடிவிளக்குதல் = பாதங்கழுவியுபசரித்தல். ii. கண்வினைகள் கண்கலத்தல் = ஒருவரையொருவர் பார்த்தல், எதிர்ப்படுதல், கண்களவுகொள்ளுதல் = தான் பிறனைப்பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைப் பார்த்தல். கண்கனலுதல் = கோபத்தாற் கண்சிவத்தல். கண்காட்டிவிடுதல் = கண்சாடையால் ஏவிவிடுதல், கண்கெடச்செய்தல் = அறிந்திருந்து தீமைசெய்தல். (எ.டு.) வேட்டைக்காரன் தன் கூட்டாளியைக் கண்கெடச் சுட்டான்). கண்கெடப்பேசுதல் = கண்டொன்று சொல்லுதல். கண்சாத்துதல் = அன்போடு பார்த்தல். கண்சாய்தல் = அறிவுதளர்தல், அன்புகுறைதல். கண்சுருட்டுதல் = அழகினால் வசீகரித்தல், ஒருவனுக்குத் தூக்கமயக்கமாதல். கண்சுழலுதல் = விழிசுழன்று மயங்குதல். கண்செறியிடுதல் = முழுதும் பரவி அடைத்துக் கொள்ளுதல். கண்டு கழித்தல் = வெறுப்புண்டாகும் வரை நுகர்ந்து விலக்குதல், தானே சமைத்துச் சுவை அல்லது உண்ணும் ஆர்வம் கெடுதல். கண்டுகாணுதல் = கவனமாய்ப்பார்த்தல். கண்டுபாவித்தல் = ஒருவினையைப் பின்பற்றிச் செய்தல் (To imitate an action). கண்ணகற்றுதல் = துயில்நீங்கி விழித்தல். கண்ணடைதல் = பயிரின் குருத்து வெளித்தள்ளாமல் நின்று போதல், பால் முதலியன வேறுபட்டுக்கெடுதல்; (எ.டு. கண்ணடைந்த பால்). கண்ணழித்தல் = பதவுரை கூறுதல். கண்ணறுதல் = அன்புகுறைதல், நட்புக்குலைதல், நீங்குதல். கண்ணாற்சுடுதல் = கண்ணேறு (திருஷ்டி) படப்பார்த்தல். கண்ணார்வித்தல் = கண்ணுக்கு இன்பமூட்டுதல். கண்ணிற்றல் = எதிர்நிற்றல். கண்ணுக்குக்கண்ணாதல் = மிக அருமையான உறவாதல். கண்ணூறுகழித்தல், கண்ணெச்சில்கழித்தல் = திருஷ்டிதோஷம் போக்குதல். கண்ணெறிதல் = கடைக்கண்ணாற் பார்த்தல். கண்ணொட்டுதல் = கண் தூக்கநிலையடைதல். கண்ணோடுதல் = விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல், இரங்குதல். கண்திறத்தல் = உருவ ஓவியங்கட்கு விழியமைத்தல், பருகுமாறு இளநீரைச் சீவுதல், சிலந்தி அல்லது கொப்புளம் நுனியில் உடைதல், வானம் வெளிவாங்குதல், அறிவு உண்டாகுதல், கல்வி கற்பித்தல். கண்தெறித்தல் = பெருவெளிச்சத்தாற் கண்ணொளி மழுங்குதல். கண்பசத்தல் = துன்பத்தாற் கண்ணின் நிறம் மாறுதல். கண்படுதல் = தூங்குதல், திருஷ்டிபடுதல். கண்பரிதல் = மூட்டறுதல். கண்பறைதல் = கண்ணொளி குறைதல். கண்பிதுங்குதல் = வேலைக்கடினத்தால் வருத்தமிகுதல். கண்புதைதல் = அறிவுகெடுதல். கண்மலர்தல் = விழித்தல். கண்மாறுதல் = தோன்றி உடனே மறைதல், நிலைதாழ்தல், அன்பு குறைந்து புறக்கணித்தல். கண்முகிழ்த்தல் = கண்மூடுதல், தூங்குதல். கண்மூடுதல் = இறத்தல். கண்வழுக்குதல் = கண்கூசுதல். கண்வளர்தல் = தூங்குதல். கண்வாங்குதல் = கண்ணைக் கவர்தல், கவனிப்பு நீங்குதல், தூர்வையெடுத்தல். கண்விடுதல் = துளையுண்டாதல். கண்விதும்புதல் = காதலர் ஒருவரையொருவர் விரைந்து காண விரும்புதல். iii. கழுத்துவினைகள் கழுத்திருந்துவிடுதல் = பாரத்தாற் கழுத்து அமுங்குதல். (எ.டு. அவனுக்குக் கழுத்து இருந்துவிட்டது). கழுத்திற் கட்டுதல் = வலிந்து பொறுப்பாளியாக்குதல். கழுத்துக்கொடுத்தல் = தன் வருத்தம் பாராமற் பிறர் காரியத்தை ஏற்று நிற்றல், வாழ்க்கைப்படுதல். கழுத்துமுறித்தல், கழுத்தை முறித்தல் = வருத்துதல். கழுத்தைக்கட்டுதல் = விடாது நெருக்குதல். iv. காது வினைகள் காதறுத்தல் = ஆவணத்தை (பத்திரத்தை) அறுதியாகத் தீர்த்துக் கிழித்தல். காதிலடிபடுதல் = ஒரு செய்தி அடிக்கடி கேட்கப்படுதல். காதுகிழித்தல், காதுகிள்ளுதல் = ஆவணத்தைத் தீர்த்துக் கிழித்தல். காதுகுத்துதல் = தாள் மூலையில் துளையிடுதல், வஞ்சித்தல். காதுபெருக்குதல், காதுவளர்த்தல் = காதுச் சோணையிலுள்ள துளையைப் பெரிதாக்குதல். காதைக் கடித்தல் = காதோரமாக முகத்தைவைத்து மறைபொருள் சொல்லுதல், கோட்சொல்லுதல். v. கால் வினைகள் கால்கிளர்தல் = ஓடுதல், படையெடுத்துச் செல்லுதல். கால்கெஞ்சுதல் = கால் ஓய்ந்து மேற்கொண்டு நடக்கமுடியா திருத்தல். கால்கொள்ளுதல் = விழாவிற்குத் தொடக்கம் செய்தல், சிலை செதுக்கக் கற்கொள்ளுதல், பரவி இடத்தை யடைத்தல். கால் சாய்தல் = கெடுதல், அழிதல். கால் சீத்தல் = கோழிபோற் காலாற் கிளைத்தல், துடைத்துப் போக்குதல். கால் தாங்குதல் = காலையிழுத்து நடத்தல். கால் பின்னுதல் = நோயினாற் கால்கள் ஒன்றுக்கொன்று குறுக்காதல், முட்டிக்கால் தட்டுதல், கால் முளைத்தல் = குழந்தை நடக்கத் தொடங்குதல். (எ.டு. குழந்தைக்குக் கால் முளைத்துவிட்டது). கால் வாங்குதல் = கால் வழுக்குதல், உயிர்மெய் நெடிற்குறி வரைதல். கால் வார்த்தல் = கொடிக்காலில் ஆடி மாதம் அகத்தி விதையை ஊன்றுதல். கால் விடுதல் = குலவுறவு நீங்குதல். கால் விழுந்துபோதல் = பக்கவாதத்தாற் கால் அசைவற்றுப் போதல். காலாட்டுதல் = நெசவுத் தொழில் செய்தல். காலாடுதல் = முயற்சியாற் செல்வஞ் சிறந்திருத்தல். (எ.டு. அவனுக்கு இன்று காலாடுகின்றது). காலாணி யறுதல் = உள்ளங்கால் உரங்கெடுதல், வலிமை செல்வம் முதலியன குறைதல். காலாறுதல் = நடை ஓய்ந்து இளைப்பாறுதல், காலில் அரத்த வோட்டம் உண்டாக உலாவுதல். காலிறங்குதல் = மழைக்காலிறங்குதல், அரையாடையின் அடி விளிம்பு தாழ்தல். காலூறுதல் = வழிப்போக்குக் குறியாகக் காலில் தினவுண்டாதல், பிள்ளைகட்கு ஓடியாட விருப்புண்டாதல், கணவனுக்குப் பணம் வரற் குறியாக மனைவிக்குக் காலில் தினவுண்டாதல். காலூன்றுதல் = பந்தற்கால் நாட்டுதல், மழைக்காலிறங்குதல், நிலைபெறுதல். காலைச் சுற்றுதல் = தொடர்ந்து பற்றுதல். காலொட்டுதல் = குறைவைச் சரிப்படுத்துதல். காலோடுதல் = ஒரு காரியத்தில் முயற்சியுண்டாதல். அகலக்கால் வைத்தல் = அளவுக்குமிஞ்சிய இடங்களைக் கைப்பற்றுதல் அல்லது கொள்ளுதல். vi. கை வினைகள் கைக்கோரணி காட்டுதல் = இறக்குந் தறுவாயிலிருத்தல். கைகலத்தல் = தழுவுதல் கூடுதல், சண்டையிடுதல். கைகவித்தல் = கைச்சாடையால் அடக்குதல், அபயமளித்தல். கைகாட்டுதல் = திறமை காட்டுதல். கைகாணுதல் = அனுபவத்தில் அறிதல். கைகெடுதல் = வறுமையடைதல். கைகொடுத்தல் = துன்பத்தில் உதவிசெய்தல், கைகுலுக்கக் கை நீட்டுதல். கைகோத்தல் = நட்புச்செய்தல். கைச்சுழிப்படுதல், கைச்சுழியாதல் = சரியாக விதையாமையால் பயிர் சிலவிடத்திற் கூட்டமாக வளர்தல். கைசலித்தல் = கொடை ஓய்தல், வேளாண்மை (உபசாரம்) ஒழிதல். கைசோர்தல் = கைவிட்டுப்போதல் வறுமையடைதல். கைதலை வைத்தல் = பெருந்துயரடைதல். கைதளர்தல் = வறுமையடைதல். கைதருதல் = துன்பத்தில் உதவுதல். கைதாங்குதல் = கையால் தாங்குதல், கேடடையாமல் காத்தல். கைதாழ்தல் = செல்வநிலை தளர்தல். கைதிருந்துதல் = கையெழுத்து வினைத்திறமை முதலியன திருந்துதல். கைதீண்டுதல் = அடித்தல், தீயநோக்கொடு தொடுதல். கைதுடைத்தல் = விட்டு நீங்குதல். கைதூக்கிவிடுதல் = நீரில் அழுந்துவோரை எடுத்துக் காத்தல், வறுமையில் அல்லது துன்பத்திற் காத்தல். கைந்நிறுத்துதல் = நிலைநிறுத்துதல், அடக்குதல். கைநிமிர்தல் = வளர்ந்து பருவமடைதல். கைநீட்டுதல் = அடித்தல், கொடுத்தல், இரத்தல், திருடுதல். கைநீளுதல் = அடிக்கவோ, கொடுக்கவோ, திருடவோ கை நீளுதல். கைநனைத்தல் = பிறர் வீட்டில் பசியாற்றிக்கொள்ளுதல். கைநாட்டுதல் = கையெழுத்திடுதல். கைநெகிழ்தல் = கைதவறவிடுதல். கைநொடித்தல் = செல்வநிலை கெடுதல். கைநொடு நொடுத்தல் = கண்டதெல்லாவற்றையும் தொடுதல். கைப்பாடுபடுதல் = கையால் உழைத்தல். கைப்பிடித்தல் = மணஞ்செய்தல். கைப்பிடியாய்ப் பிடித்தல் = நேரிற் கையாற் பிடித்தல், கையுங் களவுமாய்ப் பிடித்தல். கைபார்த்தல் = உதவி நாடுதல், கைபூசுதல் = உண்ட கையைக் கழுவுதல். கைபோட்டுக் கொடுத்தல் = கைபோட்டு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தல். கைம்மறித்தல் = கையால் தடுத்தல், கைகவித்து விலக்குதல். கைம்மிகுதல் = அளவுகடத்தல். கைமுகிழ்த்தல் = கைகூப்புதல். கைமாறுதல் = ஒருவர் கையினின்று மற்றொருவர் கைக்குச் செல்லுதல், வேலையாள் மாறுதல், கட்சி மாறுதல், ஒழுக்கம் மாறுதல். கையடித்தல் = கையடித்து உறுதி தருதல். கையடிப்படுதல் = ஒருபொருள் பல கை கடந்து செல்லுதல். கையடைத்தல் = பிறர்கையில் ஒப்புவித்தல். கையமர்த்துதல் = கையிற்சைகை காட்டி அமைதியாயிருக்கச் செய்தல், கையாற்சைகை காட்டி ஆட்களை அமர்த்துதல். கையயர்தல் = கைசோர்தல், நிலைமை தாழ்தல். கையரிக் கொள்ளுதல் = வாரி அரித்துக்கொள்ளுதல். கையழிதல், கையறுதல் = செயலற்று வருந்துதல், ஒன்றுஞ் செய்யாமல் வருந்துதல். கையளித்தல் = ஒப்படைத்தல். கையிளைத்தல் = செல்வநிலை தளர்தல். கையுண்ணுதல் = பிறர் கையில் உண்டு வாழ்தல். கையைக் கட்டுதல் = ஒன்றும் செய்யாதபடி தடுத்தல். கையைக் கடித்தல் = நட்டமாதல். கையைக் குறுக்குதல் = செலவைக் குறைத்தல், கஞ்சனாதல். கையோடுதல் = வேகமாக எழுதுதல். கையுதிர்க்கொள்ளுதல் = விட்டு விலகும்படி கையசைத்துக் குறிப்பிடுதல். கைவற்றுதல், கைவறளுதல் = பொருளறுதல், கொடை ஓய்தல். கைவருதல் = ஒன்றைச் செய்யக் கையெழுகை, தேர்ச்சி பெறுதல். கைவாரங் கொள்ளுதல் = அதிகாரத்தை மேற்கொள்ளுதல், கூத்தை நிறுத்தும் பொருட்டுக் கையை உயரவெடுத்து வீசுதல். கைவிதிர்த்தல் = மறுப்பு, அச்சம் முதலியவற்றைக் குறித்துக் கையசைத்தல். கைவிரித்தல் = இன்மை குறித்தல், கொடை மறுத்தல். vii. செவி வினைகள் செவிக்கேறுதல் = கேட்டற்கினியதா யிருத்தல். செவிக்கொள்ளுதல் = கேட்டல். செவிசாய்த்தல் = இணங்கிக் கேட்டல். செவி தின்னுதல் = மறைபொருளாக ஓதுதல். செவிப்படுதல் = கேட்கப்படுதல். செவிமடுத்தல் = கேட்டல். செவியடித்தல் = யானைபோலக் காதாட்டுதல். செவியறிவுறுத்துதல் = நல்லறிவு புகட்டுதல். viii. தலை வினைகள் தலைக்கட்டுதல் = அன்பாய் நடத்துதல், பாதுகாத்தல், ஒப்புவித்தல். தலைக்கூடுதல் = ஒன்றுசேர்தல், நிறைவேறுதல். தலைக்கேறுதல் = பித்தவேகம் தலைக்கேறுதல், செருக்கு முதிர்தல். தலைக்கை தருதல் = கையால் தழுவி அன்பு காட்டுதல். தலைச்செல்லுதல் = சென்று கூடுதல். தலைசிறத்தல் = மிகத் தலைமையாதல். தலைசுற்றியாடுதல், தலைசுற்றுதல் = இறுமாப்புக் கொள்ளுதல், செருக்குண்டாதல். தலை தடுமாறுதல் = கலக்கமடைதல், சீர்குலைதல். தலைகுலுக்குதல் = உடன்பாடு இகழ்ச்சி முதலியவற்றைக் குறிக்கத் தலையசைத்தல். தலைதொடுதல் = தலையைத்தொட்டு ஆணையிடுதல். தலைநின்றொழுகுதல் = தலைமையாக நின்று அல்லது அணுகி நின்று பணிசெய்தல். தலைப்படுதல் = கூடுதல், எதிர்ப்படுதல், மேற்கொள்ளுதல், தலைமையாதல், தொடங்குதல். தலைப்போகுதல் = முடிவுவரை செல்லுதல். தலைமயங்குதல் = ஆள்நெருங்குதல், கலந்திருத்தல். தலைமேற்கொள்ளுதல் = மிகச் சிறப்பாயேற்றல், பொறுப்பேற்றல். தலையரங்கேறுதல் = தன் கல்வித் திறமையை முதன் முதல் அவையோர்க்குக் காட்டுதல். தலையளி செய்தல் = முகமலர்ந்து இன்சொற் சொல்லுதல், சிறந்த அன்பு செய்தல். தலையைத் தடவுதல் = வஞ்சித்தல், ஏமாற்றிப் பொருள் பெறல். தலைவழித்தல் = தலைச்சவரம் பண்ணுதல், அளக்கும்படியின் தலையைத் தட்டுதல். ix. நாக்கு (நா) வினைகள் நாக்குச்சாதல் = நாக்குச் சுவையுணர்ச்சியை இழத்தல். நாக்குத் தட்டுதல் = திக்கிப்பேசுதல், பூட்டின் நாக்குக் கெடுதல். நாக்குத் தடித்தல் = நாமரத்துப்போதல். நாக்குத் தாளம்போடுதல் = உணவுகொள்ள ஆவலாயிருத்தல், அளவுகடந்து நகையாடுதல் (பரிகசித்தல்). நாக்குத் திருந்துதல் = உச்சரிப்பு திருத்தமாயிருத்தல். நாக்குத் தெறிக்கப் பேசுதல் = பெரியோரைப் பழித்தல். நாக்கு நீட்டுதல் = அளவுகடந்து பேசுதல். நாக்கு நீளுதல் = அடக்கமின்றிப் பேசுதல். (எ.டு.) அவனுக்கு நாக்கு நீள்கின்றது. நாக்குப் புரளுதல் = சொல் தவறுதல். நாக்கு வளைத்தல் = பழித்தல். நாக்கு வாங்கிப் போதல் = இறும்பூதினால் (அதிசயத்தினால்) பேசமுடியாதபடி நா உள்ளிழுக்கப்படுதல், தாகத்தால் நா வறளுதல். நாக்கு வாங்குதல் = நாவை உள்ளிழுத்தல், களைத்துப்போதல், களைக்கப் பண்ணுதல். நாக்கு விழுதல் = நாக்கு திமிர்வாதப்படுதல். நாக்கொட்டுதல் = நாவறளுதல். நாவசைத்தல் = பேசுதல். நாவடைத்துப்போதல் = பேசமுடியாமற் போதல். நாவுழற்றுதல் = பொறாமைப்பட்டுப் பேசுதல். x. பல் வினைகள் பல்லுப்படுதல் = வசைமொழி அல்லது சாபம் பலித்தல். பல்லைக் கடித்துக்கொண்டு செய்தல் = கட்டாயத்திற்காக ஒன்றை வெறுப்புடன் செய்தல். xi. மண்டை வினைகள் மண்டை துள்ளுதல் = செருக்கு மிகுதல். மண்டை வறளுதல் = எண்ணெய் முழுக்கில்லாமல் தலையெரிதல், மதிகெடுதல். xii. முக வினைகள் முகங்காட்டுதல் = காட்சி கொடுத்தல். முகங்காணுதல், முகங்கொள்ளுதல் = கட்டி உடைவதற்குமுன் முனை வைத்தல். முகங் குறாவுதல் = துன்பத்தால் முகம் பொலிவிழத்தல். முகஞ்சின்னம் போதல் = வெட்கத்தால் முகங் கருகுதல். முகஞ்செய்தல் = நோக்குதல், தோன்றுதல், முன்னாதல். முகத்திலருப்ப மிறங்குதல், முகத்திலரும்புதல், முகத்திற் கரிக்கோடிடுதல் = மீசை முளைத்தல். முகந்தருதல் = பட்சங் காட்டுதல். முகந்திருத்துதல் = வாட்டந் தவிர்த்தல். முகம்புகுதல் = அருளுக்காக எதிர்சென்று நிற்றல். முகம் வழித்தல் = முகச்சவரம் செய்தல். முகமறுத்தல் = கண்ணோட்டமின்றிப் பேசுதல். முகமாதல் = உடன்படுதல். முகமுகம் பார்த்தல் = முகத்தை முகம் பார்த்தல். முகமுறிதல் = கண்ணோட்டங் கெடுதல், வெறுப்படைதல். முகமொட்டுதல் = சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல். xiii. வயிற்று வினைகள் வயிற்றிலிட்டுக் கொள்ளுதல் = பெருந்துயரால் உடம்பு நலியச் செய்தல். வயிற்றைத் திறத்தல் = கருக்கொள்ளுமாறு கடவுள் அருள்தல். வயிற்றைப் பெருக்குதல் = உண்ணும் அளவை அதிகப்படுத்துதல், நிரம்ப வுண்ணுதல். வயிறடைத்தல் = உண்ணும் விருப்பம் இல்லாதிருத்தல், மலடாயிருத்தல், கருத்தரிக்கும் தன்மையற்றுப்போதல். வயிறு கடித்தல், வயிறு கிண்டுதல், வயிறு கிள்ளுதல் = பசிநோவு மிகுதல். வயிறு கழுவுதல் = அரும்பாடுபட்டு உணவுதேடிப் பிழைத்தல். வயிறு வாய்த்தல் = மகப்பெறுதல். வயிறு வாழ்தல் = வேண்டிய உணவு உடையவனாதல், உயிர் வாழ்தல். xib. வாய் வினைகள் வாய் திறத்தல் = புண்கட்டி உடைதல், பேசத்தொடங்குதல். வாய்போக்குதல் = எளிதில் வாக்குக் கொடுத்தல். வாய்மடுத்தல் = உட்கொள்ளுதல். வாய் மலர்தல் = பேசுதல். வாய்முட்டுப் போடுதல் = மறைபொருளை வெளியிடாதிருக் குமாறு கையூட்டுக் கொடுத்தல். வாய்மூத்தல் = பேச்சிற் சிறத்தல், பேசமுந்துதல். வாய்மூழ்த்தல் = வாய்மூடுதல், பேசாதிருத்தல். வாய்மொழிதல் = அபிமந்திரித்தல். வாய்வழங்குதல் = உண்ணுதல். வாய்விடுதல் = ஒலித்தல். வாயாவி போக்குதல் = கொட்டாவி விடுதல், வீண்பேச்சுப் பேசுதல். வாயிலே போடுதல் = பேசவொட்டாது குறுக்கிட்டுப் பேசித் தடைசெய்தல். 4. ஒருபொருட் பல சொற்கள் ஒரே பொருள்பற்றிப் பல சொற்கள் வழங்கலாம்; அல்லது வழங்குவதாகத் தோன்றலாம். அவையெல்லாம் பருப்பொருளில் ஒத்தனவேயன்றி, நுண்பொருளில் ஒத்தனவல்ல. அவற்றின் நுண்பொருளறிந்து அவ்வப் பொருளில் வழங்குதல் வேண்டும். எ.டு. கொசு என்பது, கட்டுக்கடை நீரிலும், இனிப்புப்பொருள் களிலும் மொய்த்துக்கொண்டிருந்து, மக்களைக் கடிக்காத ஒரு சிற்றீ வகை. ஒலுங்கு என்பது, சாக்கடையிலும் சதுப்பு நிலங்களிலுமிருப்பதாய், கொசுவினும் நீண்டு பருத்ததாய், மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் ஒரு சிற்றீ வகை. வாவல் (வௌவால்) என்பது, மரங்களில் தொங்கிக் கொண்டிருந்து கனிகளையுண்டு வாழும் பெரு வௌவால், துரிஞ்சில் என்பது, சந்து பொந்துகளிற் புகுந்திருந்து, இரவில் ஊருக்குள் பறந்து திரிந்து, சிறு பூச்சிகளைப் பிடித்துத் திண்ணும் சிறு வௌவால். சொல்லுதலைக் குறிக்கப் பல சொற்கள் உள, அவற்றின் நுண்பொருள் வருமாறு : சொல்லுதல் ஒருவனிடம் பொதுவாக ஒன்றைத் தெரிவித்தல். பேசுதல் ஒரு மொழியைக் கையாளுதல். கூறுதல் ஒன்றைக் கூறுபடுத்தி அல்லது வகைப்படுத்திச் சொல்லுதல். சாற்றுதல் முக்கியமான செய்தியைப் பொதுமக்கட் கறிவித்தல். மொழிதல் ஒவ்வொரு சொல்லையும் தெளிவாய் சொல்லுதல். என்னுதல் ஒருவன் கூற்றைத் தெரிவித்தல். கிளத்தல் ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்லுதல். பன்னுதல் பல பொருள்களுள் ஒவ்வொன்றையும் தனித்தனி குறித்துச் சொல்லுதல். நுவலுதல் நூற்பொருளை நுணுக்கமாகச் சொல்லுதல். உரைத்தல் நூலுக்கு உரை கூறுதல் அல்லது ஒன்றை விளக்கிச் சொல்லுதல். நவிலுதல் ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைப் பலகாலும் ஓதிப் பயிலுதல். பகர்தல் ஒரு பொருளின் விலையைச் சொல்லுதல். நொடித்தல் கதை அல்லது வரலாறு சொல்லுதல். செப்புதல் ஒரு வினாவிற்கு விடை சொல்லுதல். அறைதல் ஒன்றை உரக்க அல்லது வலியுறச் சொல்லுதல். மாறுதல் உரையாட்டில் மாறி மாறிச் சொல்லுதல். விள்ளுதல் ஒன்றை வெளிவிட்டுச் சொல்லுதல். விளம்புதல் ஒன்றைப் பலர்க்கு அறிவித்தல். புகலுதல் ஒன்றை விரும்பிச் சொல்லுதல். இசைத்தல் ஒன்றைக் கோவைபட அல்லது ஒழுங்கு படச் சொல்லுதல். கழறுதல் கடிந்து சொல்லுதல். இயம்புதல் இன்னிசையுடன் சொல்லுதல். கரைதல் அழுதுகொண்டு அல்லது இரங்கிச் சொல்லுதல். இங்ஙனமே ஏனைச் சொற்களின் நுண்பொருளையும் அறிந்து கடைப்பிடிக்க. 5. இணைமொழிகள் (Words in Pairs) அக்கம் பக்கம் பார்த்துப் பேசு; அக்குத் தொக்கு இல்லாதவன் (அகதி); அகடவிகடமாய்ப் பேசுகிறான்; அஞ்சிலே பிஞ்சிலே அறியவேண்டும்; அடக்கவொடுக்கமாயிருக்கிறான்; அடங்கி யொடுங்கியிரு; அடரடி படரடியாய் (கடும்போராய், பெருங் குழப்பமாய்)க் கிடக்கிறது; அவன் இவனுக்கு அடிதண்டம் பிடிதண்டம் (முற்றிலும் அடிமைப் பட்டவன்); அடுகிடை படுகிடையாய்க் கிடத்தல்; (நினைத்ததைப் பெறுமளவும் ஒருவனது வீட்டின்முன் படுத்துக் கிடத்தல், பாயும் படுக்கையுமாய்க் கிடத்தல்;) அடிப்பும் அணைப்புமா யிருக்கவேண்டும்; அடுப்பும் துடுப்புமாய் (சமைத்துக்கொண்டு) இருக்கிற நேரம்; அடையலும் விடியலும் குருடருக்கில்லை; அண்ட பிண்டம் ஒத்த இயல்பு டையன; அண்டை வீடு அடுத்த வீடு பகையாயிருக்கக்கூடாது; அண்டை யயலெல்லாம் தேடிப் பார்த்தேன்; அந்தியுஞ் சந்தியும் பூசை நடக்கிறது; அயர்த்தது மறந்ததை எடுத்துக் கொண்டுபோ; அரதேசி (அகதேசி) பரதேசி கட்கு உணவளிக்க வேண்டும்; அரிசி தவசி விலையேறிவிட்டது; அருவுருவாகிய இறைவன்; அவனுடைய அருமை பெருமை தெரியவில்லை; வேலையை அரைகுறையாய் நிறுத்திவிட்டான்; அல்லுஞ் சில்லுமாய் (சிறு சிறு தொகையாய்)ப் பணம் செலவாகி விட்டது; அல்லும் பகலும் பாடுபடுகிறான்; அல்லை தொல்லை யெல்லாம் தீர வேண்டும்; அலுங்கிக் குலுங்கிப் போயிற்று; அலுக்கிக் குலுக்கிக் கொண்டுவந்தான்; அலுத்துப் புலுத்து வந்திருந்தான்; அலைத்துக் குலைத்துக் கெடுத்துவிட்டான்; அழிந்தொழிந்து போயிற்று; அழுகையுங் கண்ணீருமாய் வந்து சேர்ந்தான்; அழுங்கிப் புழுங்கி (பொறாமை மிக்கு)ச் சாகிறான்; அழுத்தந் திருத்தமாய்ப் படித்திருக்கின்றான்; அள்ளாடித் தள்ளாடி நடக்கின்றான்; அழுது தொழுது வாங்கி விட்டான்; அற்ற குற்றம் (கேடு பழுது) பார்க்க ஆளில்லை; அறமறம் அறிந்து ஒழுகவேண்டும்; அறுக்கப் பொறுக்கப் பாடுபட்டும் குடிக்கக் கஞ்சியில்லை; அடுத்து மடுத்துக் கேட்கவேண்டும். ஆக்கமுங்கேடும் அனைவர்க்கும் உண்டு; ஆக்கியரித்துப் போடுகிறவள் மனைவி; ஆட்டும் பாட்டுமாயிருக்கிறது அவன் வீடு; ஆடல்பாடல் கண்டுங் கேட்டும் களித்தான்; காதை ஆட்டி அலைத்து வருகிறாள்; தூணை ஆட்டியசைத்துப் பார்த்தேன்; ஆடிப்பாடிச் சென்றால் அவன் பரிசளிப்பான்; ஆடியசைந்து நடக்கின்றான்; ஆடையணி யலங்காரமும் வேண்டும்; ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத கிணறு; ஆண்டான் அடிமை என்ற வேறு பாடில்லை; ஆதாளிபாதாளியாய் (ஆரவாரமாய்) இருக்கிறது; ஆதியந்தம் இல்லாதவர் கடவுள்; ஆய்ந்தோய்ந்து பார்த்து நட்புச்செய்யவேண்டும்; நேற்றிரவு கவுண்டருக்கு ஆயிற்றுப் போயிற்று என்று கிடந்தது; அவன் ஆயிற்றா போயிற்று என்று அரட்டினான்; ஆலே பூலே என்று அலப்பிக் கொண்டிருக் கின்றான்; ஊர்முழுதும் ஆழும்பாழுமாய் (அழிந்து)க் கிடக் கின்றது; ஆளும் தேளும் அற்ற இடம்; அவனை ஆற்றித் தேற்றி வை; ஆற அமர (பொறுமையாய்)க் காரியஞ் செய்ய வேண்டும்; ஆனைக்கும் பூனைக்கும் உள்ள தூரம். இசகு பிசகாய் நடக்கின்றான், அகப்பட்டுக் கொண்டான்; இண்டும் இடுக்கும் கைவிட்டுப் பார்த்தான்; இயங்கு திணை நிலைத்திணை (தாவர சங்கமம்) ஆகிய இருவகைச் சொத்தும் உண்டு; இயலும் செயலும் ஒத்திருக்கும்; இழுப்பும் பறிப்புமாய்க் கிடக்கின்றது; இளைத்துக் களைத்துப் போனான்; இன்னார் இனியர் என்று அவனுக்கில்லை. ஈகை யிரக்கம் (ஈவிரக்கம்) இருக்கவேண்டும்; ஈடும் எடுப்பும் (ஒப்பும் உயர்வும்) அற்றவன்; ஈடுசோடு இல்லாதவள்; ஈயெறும்பு மொய்க்கும். உடைநடையால் உயர்வு தாழ்வு அறியப்படும்; உண்டியுறையுள் வசதி இங்குண்டு; உண்டுடுத்து வாழவேண்டும்; உருட்டும் புரட்டும் என்னிடம் பலிக்காது; உருண்டு திரண்டு இருக்கும் உருளைக்கிழங்கு; உருவும் திருவும் ஒத்த காதலர்; உள்ளது உரியதெல்லாம் விற்றுவிட்டான்; உற்றார் உறவினர் உதவுவர். ஊண் உடை சிறக்கவேண்டும்; ஊண் உறக்கம் ஒழிந்து வேலைசெய்தான்; ஊதியமும் இழப்பும் வணிகத்திற்கியல்பு. எக்கசக்கமாய் (ஏறமுடியாமல்) இருக்கிறது மரம்; எக்கசக்கமாய் (தப்பமுடியாதபடி) மாட்டிக்கொண்டான்; எக்காளமும் ஏடாசியுமாய் (பரிகாசமாய்ப்) பேசுகிறான்; எய்படை எறிபடை (அதிர சதிரம்) கொண்டு பொருதார்கள். ஏங்கித் தேங்கித் தவிக்கிறான்; ஏட்டிக்குப் போட்டியாய்ச் செய்கிறான்; ஏடாகோடம் (ஏறுமாறு) பண்ணுகிறான்; ஏமமும் சாமமும் கூத்தாடுகின்றனர்; ஏழை பாழை பிழைக்க வேண்டும்; ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் இருக்கக்கூடாது; ஏற்றத் தாழ்ச்சி யாயிருக்கிறது விட்டம்; ஏறஇறங்கப் பார்க்கின்றான். ஒட்டி யுலர்ந்து போயிற்று வயிறு; ஒட்டு உறவு அற்றுப்போய் விட்டது; ஒண்டி சண்டியாய்க் காட்டுவழி போகக் கூடாது; ஒன்றாய் மன்றாய் (வேறுபாடின்றிக் கலந்து)க் குடியிருக்கிறார்கள். ஓட்டமும் நடையுமாய்ப் போய்ச் சேர்ந்தோம்; ஓட்டை உடைசல் போட்டுவைக்கும் அறை; ஓட்டை சாட்டை யிருந்தால் கொடு; ஓடியாடித் திரிகிறான்; ஓய்வு சாய்வு ஒருநாளும் எனக்கில்லை. சரக்கு கங்குகரையற்றுக் கிடக்கின்றது; கஞ்சிதண்ணீர் அவனுக்குச் செல்லவில்லை; கட்டியு முட்டியுமாய் உழுது போட்டிருக்கின்றான்; எதற்கும் ஒரு கட்டுமட்டு (அளவு) வேண்டும்; கடா விடைகளால் பொருளை விளக்கினார்; கண்டது கடியதெல்லாம் சொல்லக்கூடாது; கண்டவன் கடியவனெல்லாம் வந்து சாப்பிட்டான்; கணக்குவழக்கில்லாமல் கொண்டுபோனான்; கண்டதுண்டமாய் நறுக்கிவிடுவேன்; கண்ணீருங் கம்பலையுமாய்க் காலங்கழிக்கிறோம்; கண்ணும் கருத்துமாய்ப் பேண வேண்டும்; கத்திக்கதறிச் சொன்னேன்; கந்தல் கூளமாய் (கந்தர கோலமாய்)க் கிடக்கின்றது; கப்புங்கவருமாய்க் கிளைத்திருக்கின்றது; கந்தலும் பொத்தலும் உடுத்திக்கொண்டு திரிகின்றான்; கரடு முரடான துணி; கரை துறை தெரியவில்லை; கல்லுங் கரடுமான வழி; கல்லுங் கரம்புமாய்க் கிடக்கின்ற நிலம்; கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; கலியாணங் காட்சிக்குப் போக மாட்டான்; கைகால்கள் கழுக்கு மொழுக்கென்று (பருத்துக் கொழ கொழத்து) இருக்கின்றன; களங்கமளங்கமற்றுப் பேச வேண்டும்; கள்ளங்கவடில்லாதவன்; கற்பும் பொற்பும் உடையவள்; கற்றோர்க்கும் மற்றோர்க்கும் விளங்கும் நடை; கன்று கயந்தலை (பிள்ளைகுட்டி); கன்றுகாலி வரும் நேரம்; கனவோ, நனவோ? காக்கனும் போக்கனும் (அயலானும் வழிப்போக்கனும்) கொள்ளை கொண்டு போனார்கள்; பிள்ளைகள் காச்சுப்பூச் சென்று (காச்சுமூச்சென்று) கத்திக்கொண்டிருக்கிறார்கள்; எங்கு பார்த்தாலும் காடுஞ் செடியுமாய் இருக்கின்றது. காடுமேடாய் அலைந்து திரிகின்றான்; காதிலே கழுத்திலே ஒன்றுமில்லை; காமா சோமா (கன்னாபின்னா) என்று கத்திக் கொண்டிருக் கின்றான்; பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன; காரசாரமற்ற (மதிகேடான) பிள்ளைகள்; கானான் கோனான் என்று நாதாங்கிக் கடுக்கன் தொங்குகின்றது. கிட்டத்தட்ட (ஏறக்குறைய); கிட்டமுட்ட அவனை வர விடாதே; கிண்டிக் கிளறி (கிண்டிக் கிளைத்து) வைத்துவிட்டது; கிணறு குட்டை யிருந்தால் குளிக்கலாம்; கிழங்கெட்டை (கிழடு கெட்டை) வீட்டிலிருப்பது நல்லது. ஆடு கீரைகுழை தின்னும்; கீரியும் பாம்பும் போலப் பகை. குஞ்சுங் குழுவானுமாய் இருக்கிறது அவன் குடும்பம்; குட்டி குறுமான் எல்லாம் வந்துவிட்டன; குண்டக்கமண்டக்கமாய் அவனைக் கட்டித் தூக்கிக்கொண்டு போனார்கள்; தரை குண்டுங் குழியுமாய் இருக்கின்றது; குணங்குற்றம் யாருக்கு முண்டு; குணங் குறிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; காதில் குத்தலுங் குடைச்சலுமாய் இருக்கின்றது; அரிசியைக் குத்திக் கொழித்து ஆக்க வேண்டும்; வீடுவாசல் குப்பை கூளமாய்க் கிடக்கிறது; கும்பக்குழிய அளந்தான்; கும்பிக் கொதித்து நிற்கின்றாள் மனைவி; கும்பிட்டுக் கூத்தாடி வாங்கினான்; குலங்கோத்திரம் பார்த்துப் பெண்கொள்வர்; குலமுங் குணமும் ஒத்த காதலர்; குழந்தை குட்டி பெருத்தவன்; குளங் குட்டையில் தண்ணீரில்லை; குற்றங் குறைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும்; குற்ற நற்றம் பார்க்கக் கூடாது; குறுக்கும் நெடுக்கும் சரிகைக்கரை இருக்கின்றது; குறுக்கும் மறுக்கும் திரிகிறான். கூட்டநாட்டம் இப்போது நடக்கிறதில்லை; கூட்டிக் குமித்து வைத்தான்; கூட்டிக் குறைத்துப் பேசுவான்; கூடக் குறைய இருந்தால் சொல்; கூடமாட வேலை செய்; கூடிக் குலாவித் திரிகின்றனர். கெஞ்சிக்கெதறிக் கேட்டான். கேட்பார் கேள்வியில்லை; கேட்பாரும் மேய்ப்பாரு மற்றுத் திரிகின்றான்; கேள்விமுறை இல்லை; கேளுங் கிளையும் கெட்டார்க் கில்லை. கையுங் களவுமாய்ப் பிடிக்கப்பட்டான்; கையுங்காலும் வைத்துக்கொண்டு சும்மாயிருக்கமாட்டேன் என்கிறான்; கையுங் காலுமாய் (ஒன்றுமில்லாத வறியவனாய்) வந்து சேர்ந்தான்; கையுமெய்யுமாய்க் கண்டுபிடிக்கப்பட்டான். கொக்கு குருவி எல்லாம் போய்விட்டன; கொஞ்சிக் குலாவிப் பேசுகின்றனர்; கொஞ்ச நஞ்சமாவது மீத்துவைக்க வேண்டும்; கொட்டுகுழல் இல்லாமல் சடங்கு நடந்தது; கொடிவழியில் கலியாணஞ் செய்வர்; கொடுக்கல் வாங்கல் (கொடை வாங்கல்) நிரம்ப இருக்கின்றது; கொண்டான் கொடுத்தான் இடத்திலே நெடுநாள் தங்கக்கூடாது; கொண்டு கொடுத்து வாழவேண்டும்; வறியவர் கொத்தடிமை குலவடிமையாய் வாழ நேர்ந்தது; காயைக் கொத்திக் குதறி வைத்திருக்கின்றான்; கொத்தோடே குலையோடே கொண்டு போனான்; மரம் கொப்புங் குழையு மாய்த் தழைத்திருக்கின்றது; கொள்வனை கொடுப்பனை அவர்களிடையில்லை. கோட்டை கொத்தளமெல்லாம் காவல் செய்யப்பட்டன; தெருக்கள் கோணல்மாணலாயிருக்கின்றன; கோயில் குளம் கடவுளை நம்பாதவனுக்கில்லை; கோலுங் கொடுக்குமாய்க் கட்டிக்கொண்டு திரிகின்றான்; கோள்குண்டுணி சொல்கிறவனை நம்பக்கூடாது. சட்டதிட்டங்கட்கு உட்பட்டு நடக்கவேண்டும்; சண்டு சருகு அரிக்கின்றாள்; சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. சண்டை சல்லியத்திற்கு (சண்டை சாடிக்கு)ப் போகமாட்டான்; சந்தி சதுக்கங்களிற் சிலை நிறுத்தப்பெறும்; சந்து பொந்தெல்லாம் தேடிப்பார்த்தான்; சப்புஞ்சவரும் வாங்கிக்கொண்டு வந்திருக் கின்றான்; தோல் சவண்டு துவண்டு கிடக்கின்றது; மா(மாவு) சளித்துப் புளித்துப் போயிற்று; சழிவு நெளிவு இல்லாத பெட்டியாய் வாங்கு. சாக்குப்போக்குச் சொல்லக்கூடாது; அவன் சாகப் பிழைக்கக் கிடந்தான்; அவன் குற்றஞ் செய்தாலும் சாடை மாடையாய் விட்டுவிடு; சுவர் சாய்ந்து சரிந்து கிடக்கின்றது. வேலையைச் சாயலாய் மாயலாய் (சாலாமாலா)ச் செய்து வைத்திருக்கின்றான்; அவனைச் சாவிழவு தள்ளிவைத்திருக்கின்றது. சிக்கடிமுக்கடியாய்க் கிடக்கிறது நூல்; உடம்பெல்லாம் சிக்குஞ் சிரங்குமாய் இருக்கின்றது; சிட்டி சிரட்டை யெல்லாம் தண்ணீர் ஊற்றிவைத்திருக்கின்றது; சோற்றைச் சிந்திச் சிதறிச் சீரழிக்கின்றான்; சிந்துமணி சிதறுமணி யெல்லாம் பொறுக்கிக் கொண்டாள்; சிறுதனம் சீராட்டு (சீதனம் சீராட்டு) அவளுக்கு நிரம்பக் கிடைத்தது; சின்னது சிறியதிற்கு ஒன்றுங் காட்டக்கூடாது; வண்டி சின்னபின்னமாய்ச் சிதைந்து கிடக்கின்றது. சீட்டுநாட்டுப் போட்டு வைத்திருக்க வேண்டும்; சீத்துப் பூத்தென்று சீறினது பாம்பு; அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார்கள்; சீரியர் பூரியர் (மேலோர் கீழோர்) சீருஞ் சிறப்புமாய் வாழ்ந்திருந்தான்; சீருஞ் செட்டுமாய்ப் பிழைக்க வேண்டும்; சீவிச்சிக்கெடுத்துச் சடை பின்னினாள்; சீவிச் சிங்காரித்து வருகின்றாள்; சீறிச் சினந்து விழுந்தான். சுள்ளி சுப்பல் பொறுக்கி எரிக்கின்றாள்; படுக்கையைச் சுற்றிச் சுருட்டிக் கொண்டுபோய்விட்டான்; சுற்று முற்றும் பார்த்தான். செடி கொடி போட்டால் காய் காய்க்கும்; செடி செத்தை யெல்லாம் அகற்றவேண்டும். சொத்து சுகம் அவனுக்கு ஒன்றுமில்லை; சொள்ளை சொட்டை ஏதாவது சொல்லுவான். தட்டாமல் தடுக்காமல் (தட்டாமல் முட்டாமல்) தாராளமாய் வாசல்வழி கொண்டுபோக முடியுமா? மட்கலங்களைத் தட்டிக்கொட்டி வாங்கவேண்டும்; தட்டுத்தடங்கலின்றிப் பேசினான்; தட்டுத்தடுமாறி விழுந்தான்; தட்டுத்தடையின்றிப் பேசுகிறான்; தட்டுமுட்டு வாங்க வேண்டும்; தடுத்து மடுத்துச் சொல்ல ஆளில்லை; தடை விடை (ஆட்சேப சமாதானம்) நிகழ்ந்தன; தண்ணீர் வெந்நீர் கொடுக்க ஆள்வேண்டும்; தத்தித் தொத்திச் சுவரில் ஏறினான்; தப்பித்தவறி இந்தப்பக்கம் வராதே; தப்புத் தவறுமாய்ப் பேசுகிறான்; தடங்கல் மடங்கலின்றிச் செல்லலாம். தாங்கித் தடுக்கி அவளைக் கூட்டிக்கொண்டு வந்தான்; தாய் பிள்ளை (உறவினர்) ஒருவரும் வரவில்லை; தாயும் சேயும் நலம். திண்டு தலையணை போட்டுப் படுத்துக் கொண்டான்; திண்டு முண்டு (தில்லுமுல்லு) பண்ணுகின்றான்; கொம்பு திருகல்முறு கலாய் இருக்கின்றது. துட்டுத்துக்காணி கையிலிருக்க வேண்டும்; மரம் துண்டு துணுக்காக இருக்கிறது; மேசையினின்று விழுந்த துண்டு துணக்கைகளை நாய் தின்றது; போர்க்களத்தில் துண்டுந் துணியு மாக உடல்கள் கிடந்தன; துணிமணிகளைப் போற்றி வைக்க வேண்டும்; பையன் சுடுமணலில் துள்ளித் துடித்து விட்டான். தூசிதுப்பட்டை (தூசி துரும்பு); நெற்களத்தைத் தூர்த்துத் துடைத்துவிட்டார்கள். தேக்கித்தெவிட்டிப் போனார்கள் விருந்தினரெல்லாம்; ஆட்டைத் தேடியோடிப் பிடிக்க வேண்டும்; தேர் திருவிழாவிற்கு ஏராளமான பேர் வருவார்கள்; சந்தனக்கட்டை தேய்ந்து மாய்ந்து போய்விட்டது. தொகுத்தும் வகுத்தும் சொல்லவேண்டும்; தொடுத்து மடுத்துச் செய்துமுடிக்க வேண்டும். தோட்டந்துரவு ஏராளமாக அவனுக்குண்டு; தோலும் எலும்புமாய்ப் போனான். நகைநட்டு அணிந்திருந்தால் மதிப்பார்கள்; நங்கை நாத்தூணாள் குறைசொல்லாதபடி நடந்துகொள்ள வேண்டும்; நச்சும் பிச்சும் எனக்கு வேண்டாம்; நயபயத்தால் ஆளவேண்டும்; நரைதிரை வருமுன்னமே நல்வினை செய்ய வேண்டும்; நல்லது பொல்லது நடந்தால் நாலுபேர்க்குச் சாப்பாடு கிடைக்கும்; நலம் பொலம் இரண்டும் அனுபவிக்க வேண்டும்; நலிந்தும் வலிந்தும் பொருள் கொள்ளக் கூடாது; நன்னியுங் குன்னியும் (நன்னி குன்னி) நிறைய வந்திருந்தன. நாட்டிலும் காட்டிலும் மக்கள் வாழ்கின்றனர்; நாடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்; நாடு நகரெல்லாம் இதே பேச்சு; நாணிக்கோணி நடக்கின்றாள்; நாயும் பேயும் போன்ற தீயமக்கள்; நாளுங்கிழமையும் பார்த்துச் செய்தாலும் வருவது வந்தே தீரும்; நாளுங் கோளும் நம்மை என்ன செய்யும்? நிரந்து கலந்து பேசி முடிவு செய்யுங்கள்; நிலபுலம் அவனுக்கு நிரம்பவுண்டு; நீட்டி நிமிர்ந்து சாய்ந்து கொண்டான். நீக்குப்போக்கு (இடைவெளி, ஓய்வு ஒழிவு;) இல்லை. நெட்டை கட்டை (கூடுதல் குறைதல்) இருந்தாலும் சரியென்று போகவேண்டும். நேருங் கூருமாய் (நெட்டையும் குட்டையுமாய்)க் காயை அறுத்துப் போட்டிருக்கின்றது. நைந்து பிய்ந்து போய்விட்டது துணி; இஞ்சியை நைய நறுங்கத் தட்டிப் போடு. நொண்டி சண்டிக்கு (நொண்டி நுடத்திற்கு) உதவ வேண்டும். நோய் நொம்பலம் (நோவு நொடி) வந்தால் கவனிக்க ஆளில்லை. பங்கு பாகம் கேட்கின்றான்; பட்டது கெட்டதெல்லாம் சொன்னான்; பட்டம் பதவிகட்கு ஆசைப்படுகின்றான்; பட்டி தொட்டி யெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும்; பட்டினியும் பசியுமாய்க் கிடந்து வருந்துகின்றான்; பட்டுப் பழகித் தெரியவேண்டும்; பம்பை பறட்டையாய்த் தலையை வைத்துக் கொண்டிருக்கின்றனர்; பம்மிப் பதுங்கித் திரிகின்றான்; பயறு பச்சை நன்றாய் விளைந்திருக்கின்றன; பயிர் பச்சை நன்றாய் விளையவில்லை; மக்களினம் பல்கிப் பெருகி வருகின்றது; பழக்க வழக்கம் நன்றாயிருக்க வேண்டும்; பழி பாவங்கட்கு அஞ்சவேண்டும்; கொடி பற்றிப் படர்ந்து செல்கின்றது. பாங்கு பரிசனை (நன்னடை) யறிந்து ஒழுகவேண்டும்; எந்நேரமும் பாட்டும் படிப்பும்தான்; பாயும் படுக்கையுமாய்க் கிடக்கின்றான்; பாலும் தேனும் ஓடும் தேசம்; பாலும் பழமும் உண்டு வளர்ந்தவன். பிய்த்துப் பிடுங்கிவிடுவார்கள்; பிள்ளை குட்டி யில்லாதவன்; பிறப்பு வளர்ப்பு வெவ்வேறு ஊர்; செடியுங் கொடியும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. புல் பூண்டு மழைக்காலத்தில் முளைக்கும். பூச்சி பொட்டை (பூச்சிபொட்டு) வழியிலிருந்தாலும் இருக்கும்; பூவும் பிஞ்சுமாயிருக்கிறது பீர்க்கு. பெண்டு பிள்ளைகட்குத் தேடிவைக்க வேண்டும்; பெற்றது பிறந்தது பிற்காலத்தில் உதவும். பேரும் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது. பொக்கும் பொடியும் காற்றில் பறந்துவிடும்; பொங்கிப் பொரித்துப் போடுவது யார்? பொட்டுப் பொடியெல்லாம் நீக்கிவிட வேண்டும்; சோலை முழுதும் பொந்தும் புதருமாய் இருக்கின்றது; பொய்யும் புலையும் (பொய்யும் புளுகும்) சொல்லித் திரிகின்றான். போக்கிரி சாக்கிரியுடன் சேரக்கூடாது; அவனுக்குப் போக்கு புகல் ஒன்றுமில்லை; அவரைப் போற்றிப் புகழ்ந்து பேசினார்கள். மக்கி (மங்கி) மழுங்கிப்போன கத்தி; மட்டு மதிப்பு இருக்கவேண்டும்; மண் மனை யெல்லாம் விற்றுவிட்டான்; வீடு மண்ணும் மதிலுமாய்க் கிடக்கின்றது; மந்திர தந்திரம் வல்லவன்; மயங்கித் தியங்கி நிற்கின்றான்; மயக்கமும் தியக்கமுமாய்க் கிடக்கின்றான்; மரமட்டை யிருந்தால் எரிக்கலாம்; மருந்து மாயம் தெரிந்தவன்; மலைக்கும் மடுவுக்குமுள்ள தூரம்; மழை தண்ணீர் அங்கு உண்டா? இங்கு மழையுந் தண்ணீருமாய் இருக்கின்றது. மாசு மறு அற்றவன்; மாடு கன்று வைத்திருக்கின்றான்; மான ஈனம் சிறிதும் அவனுக்கில்லை. மிச்சம் மிகுதியைச் சேர்த்துவை; மினுக்கித் தளுக்கித் திரிகின்றாள். முக்கலும் முனங்கலும் எதற்கு? முக்கித் தக்கி மூட்டையைத் தூக்கிவிட்டான்; யானை முட்டி மோதிக் கதவை முறித்து விட்டது; விறகு முண்டும் முடிச்சுமாய்க் கிடக்கின்றது; குழந்தையை முத்தி மோந்து அணைத்துக் கொண்டாள்; நிலத்தில் முள்ளுங் குருக்கும் முளைத்துவிட்டது; காடெங்கும் முள்ளும் முடையுமாய்க் கிடக்கின்றது; முற்ற முடிய இருந்து சொற்பொழிவைக் கேட்க வேண்டும். மூச்சுப் பேச்சு இல்லை; மூலை முடங்கியிற் போய் உறங்குகின்றான்; மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தேன்; ஆயுதங்களெல்லாம் மூழியுங் காளியுமாய்க் கிடக்கின்றன. வகைதொகையாய்ப் பேசவேண்டும்; வந்தது போனதைப் பூசவேண்டும்; வந்தனை வழிபாடு நடந்துவருகின்றது; வம்பு தும்பு வேண்டா; வழிதுறை தெரியவில்லை; வழிவகை சொல்லிக்கொடு; குளம் வற்றி வறண்டு போய்விட்டது. வாட்டஞ்சாட்டமா யிருக்கிறான் பையன்; அங்கணம் வாட்டஞ்சாட்டமாயிருக்க வேண்டும்; கதிரை வாட்டி வதக்கித் தின்றார்கள்; வலியவர் எளியவரை வாட்டி வதைத்து வருகின்றனர்; மலர் வாடி வதங்கிப்போய்விட்டது; அவன் நிலத்திற்கு வாய்க்கால் வரப்பு இல்லை; வருவது வாய்க்கும் கைக்கும் எட்டவில்லை; வாய்க்குங் கைக்குமாயிருக்கிற நேரம்; வாரி வகிர்ந்து உச்சியெடுக்க வேண்டும்; வாழ்விலும் தாழ்விலும் கணவன் மனைவியர் பிரிதல் கூடாது; வானகமும் வையகமும் அதற்கு ஈடல்ல. விட்டகுறை தொட்டகுறை முடிக்க வேண்டும்; விடேன் தொடேன் என்று தொடர்ந்தான்; விண்ணுக்கும் மண்ணுக்கு முள்ள தூரம்; விதிவிலக்கு அறிந்து ஒழுகவேண்டும்; விருந்து வேற்று வந்தால் வேளாண்மை செய்ய வேண்டும்; விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒரு பொருளை ஆராய வேண்டும்; வீடுங் குடித்தனமுமாய் அவனை இருத்திவைத்தார்கள்; வீடும் விளக்குமாய் இருப்பது நல்லது; வீரசூரமாய்ப் பேசினான். வெட்கி விறைத்துப் போனான்; வெட்டுங் குத்துமாய்க் கிடக்கின்றது; வெட்டுப்பழி குத்துப்பழி நேர்ந்துவிடும்; சோறு வெந்து விரிந்துவிட்டது; வெள்ளையுஞ் சொள்ளையுமாய்ப் போகவேண்டும். வேரும் தூரும் கறையான் அரித்துவிட்டது; வேர்த்துப் பூத்து (வேர்த்து விருவிருத்து) ஓடிவந்தான்; வேலைவெட்டி யில்லாதவன். 6. மரபுத் தொடர்மொழிகள் (Idiomatic Phrases and Expressions) அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அகப்பற்று புறப்பற்றுக் களை அறவே ஒழித்து, அடக்கு வாரற்ற கழுக்காணியாய், அடி தண்டம் பிடி தண்டமாய் அடிமைப்பட்டு, அடிதலை தடுமாறி, அடிமுதல் முடிவரை, அடிமை முதல் அரசன்வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அடுப்பங்கரையில் ஆம்பிபூப்ப, அண்டபிண்ட அனைத்துப் பொருள்களும் (அனைத்துயிர் களும்), அமிழ்தினுமினிய தமிழ்(மொழி), அரிதுணர் பொருள வற்றை எளிதுணர் பொருளவாக்கி, அரைக்காசிற்கும் வழியில்லா மல், அழுதபிள்ளையும் வாய் மூடும் அதிகாரம், அன்புள்ள அரச னும் அறிவுள்ள அமைச்சனும், அறமுதல் நான்கும் திறமுற ஆற்றி. ஆக்கவழிப்பாற்றல் (சாபானுக்கிரக சக்தி) அடைந்து, ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய், ஆசைகாட்டி மோசஞ் செய்து, ஆகாயத் தாமரையும் ஆமை மயிர்க்கம்பலமும், ஆடையணியலங் காரனாய்; ஆடையின்றி வாடையின் மெலிந்து கையதுகொண்டு பெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇ, ஆண்டி முதல் அரசன்வரை, ஆண்டில் இளையனாய் அறிவில் முதிய னாய், ஆருமற்ற அத்தவனக்காடு, ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக் கேற்ற வேடமுங் காலத்திற்கேற்ற கோலமும், ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் வைத்து. இட்டடி நோக எடுத்தடி கொப்புளிக்க, இடம் பொருள் ஏவல், இட்டது சட்டம் வைத்தது வரிசை, இந்திரன் முதலிய இறையவர் பதமும் அந்தமிலின்பத் தழிவில் வீடும், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாய், இம்மை மறுமை நற்கதிகள் (வீடு), இயன்றவரை முயன்று, இருகையினுமேந்தித் தலையில் தாங்கிக் கண்ணிலொற்றி, இருதோணியிற் கால்வைத்து, இருபகட்டொரு சகடு, இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்), இருவினை யொப்பு மலபரிபாகம், இலவுகாத்த கிளிபோல் ஏமாறி, இலைமறை காய்போல் மறைந்துகிடந்த, இலக்கண விலக்கியம் விளக்கமாய்க் கற்று, இறைவனுக்கே வெளிச்சம், இறுதிவரினும் உறுதிகூறி, இன்னோரன்ன. ஈர்ங்கை விதிராத இவறி (உலோபி). உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர், உடல்கரண வுலகவின்பங்கள் (தனுகரண புவனபோகம்), உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாமல், உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து, உப்புக்கும் உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து, உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியுங்கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துக்கள்), உருவுந்திருவுங் குலமுங் குணமும் ஒத்தவராய், உலகவழக்கு செய்யுள் வழக்கிற்கொப்ப, உலகமெல்லாம் ஒருகுடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற, உள்ளங்கை நெல்லிக்கனிபோல், உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறம்பும் ஒத்து, உள்ளொன்று புறம்பொன்று பேசாமல், உற்றுநோக்கி ஊகித்தறிந்து, உற்றோர் மகிழ மற்றோர் புகழ, உள்மதம் இல்மதம் (ஆதிகம் நாதிகம்). ஊணுறக்கமொழிந்து, ஊரார் உடமைக்குப் பேராசைகொண்டு, ஊரார் உடமைக்குப் பேயாய்த் திரிந்து, ஊரார் பகைக்கும் தீராப் பழிக்கும் ஆளாய், ஊருக்குழைத்து ஊதாரியாய்ப் பிழைத்து. எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்றிருந்து, எச்சிற்கையாற் காக்கை விரட்டாதவன், எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்டு, எடுத்த காரியம் இடை யூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார் கைப்பிள்ளையாய், எட்டிரண்டும் அறியாத, எண்சாணுடம்பு ஒருசாணாகக் குன்றி, எண்ணத்தொலையாது ஏட்டிலடங் காது, எண்ணுக்கும் எட்டா இறைவன், எந்நாட்டினு மினிய தென்னாட்டில், எல்லார்க்கும் நல்லவனாய், எல்லாம்வல்ல இறைவன், எழுமையும் வழுவாத உழுவலன்பு, என்றித் தொடக்கத்தார். ஏராளமாயும் தாராளமாயும், ஏழாம் நரகிற்கும் கீழாம் நரகம், ஏழை பாழை களை வயிற்றிலடித்து வாயில் மண்ணைப்போட்டு, ஏனோதானோ என்றிராமல். ஐயந்திரிபறக் கற்று. ஒட்டிய வயிறும் உலர்ந்த உதடுமாய், ஒரு கண்ணில் எண்ணெயும் ஒரு கண்ணிற் சுண்ணாம்பும் தடவாமல் ஒரு பக்கம் பாலும் ஒரு பக்கம் நீரும் ஒழுக, ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர், ஒன்றுக்கும் பற்றாத நாயேன். ஓடும் பொன்னும் ஒப்ப நினைக்கும், ஓல்உடன் ஆடிப்பால் உடன் பருகி. கடன்மடை திறந்தாற்போலக் கவிபாட வல்லவராய், கட்டிய ணைத்து உச்சி மோந்து, கடைந்தெடுத்த கழிபெருமடையன், கடன்வாங்கி உடன்வாங்கி உடலைத்தேற்றி, கண்கண்ட தெய்வம், கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், கண்ணாற் கண்டதைக் கையாற் செய்து, கண்ணீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது, கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக்கு யிராகவுமிருந்து, கண்ணைக் கவர்ந்து பார்வையைப் பறித்து உள்ளத்தைக் கொள்ளை கொண் டது, கண்மணிபோற் காத்து, கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போக, கண்மூடித்தனமாய்க் காலங் கழித்து, கதிரவனுந் திங்களுமுள்ள காலமெல்லாம், கயல்விழியுங் குயில் மொழியும், கரி பரி தேர் கால் முதலியன (ரத கஜ துரக பதாதி) கருவிலே திரு வுடையார், கல்வியறி வொழுக்கங்களிற் சிறந்து, கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்கு விளங்காமல். காடிடையிட்டும் நாடிடையிட்டும், காடுவாவென வீடு போவென, காமவெகுளி மயக்கங்கள், காரியத்திற் கண்ணுங் கருத்துமாயிருந்து, காலா லிட்டதைக் கையாற் செய்து, காலாலிட்டதைத் தலைமேற் கொண்டு, காற்றினுங் கடுகிச்சென்று, காலனும் அஞ்சும் கடுங் கண் மறவர். குடிக்கக் கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குண்டுங் குழியுங் திண்டுந் திருசும், குமரிமுதல் இமயம் வரை, குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குற்றத்தைத் தள்ளிக் குணத்தைக் கொண்டு, குறுகுறு நடந்து குதலை மொழிந்து. கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கூற்றினும் கொடியவர், கூற்றத்தைக் கையால் விளிக்கும் கொடுமறவர். கெட்டுக் கீழை வழியாகி. கைகட்டி வாய் புதைத்து, கைக்கெட்டினது வாய்க் கெட்டாமல், கைம்மாறு கருதாமல். கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக் காத்தல், கொடுப்பாரும் அடுப்பாருமின்றி, கொண்டைமேற் காற்றடிக்க (கவலையின்றி), கொல்லத்தெருவில் ஊசி விற்கிறவன். கோடாகோடிச் சூரியவொளியுள்ள, கோடியுந்தேடிக் கொடிமரமும் நட்டி. சட்டங்கள் கற்றும் பட்டங்கள் பெற்றும், சதுர வேதனைப் பட்டுச் சம்பாதித்து, சந்தன களபகாசறை (கதூரி), சம்பளமும் உம்பளமும் பெற்று. சாதுரியமாயும் மாதுரியமாயும் பேசி. சிந்தையுமொழியுஞ் செல்லாநிலைமைத்தாகலின், சிறுகக்கட்டிப் பெருக வாழ்ந்து, சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினர். சுவையொளி யூறோசை நாற்றம். செய்வன செய்து தவிர்வன தவிர்ந்து. சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும், சொற்சுவை பொருட் சுவைகளிற் சிறந்து, சொன்மதியும் தன்மதியும் (சொற்புத்தியும் சுயபுத்தியும்) இல்லாமல், சொன்னயமும் பொருணயமும், சொன்னோக்கும் பொருணோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும். சோற்றுக்குச் செலவும் பாருக்குப் பாரமுமாய். தட்டுக்கெட்டுத் தடுமாறி, தட்டுத் தடையின்றித் தாராளமாய்ப் பேசவல்ல, தட்பவெப்ப நிலை (சீதோஷ்ண திதி), தமிழ்நாடு செய்த தவப் பயனாகத் தோன்றி தலையால் வந்ததைக் காலால் தள்ளி, தலையுங் காலுந் தெரியாது தம்முள் மயங்கி, தவிடுபொடி யாய்த் தகர்த்தெறிந்து, தவித்த முயலை அடிப்பவன், தளர்நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன், தன்னுயிர்போல் மன்னுயிரெண்ணுந் தண்ணளியான். தான்றோன்றித் தம்பிரான். திறம்படவும் தேம்படவும் பேசி. துணைக்குத் துணையாய்த் தொண்டைக்குழிக்கு வினையாய், துரும்பைத் தூணாக்கிப் பேனைப் பெருமாளாக்கி, துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல். தெற்கு வடக்குத் தெரியாதவன், தென்றல் வீசித்தேன் சொரிந்து வண்டு பாடும் வளமரக்கா. தேனினுமினிய தீஞ்சொல், தேனினுமினிய தென்மொழி. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் (தொகை வகை விரிவாய்), தொடக்கம் நடுவிறுதி, தொல்காப்பியத்தும் தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று, தொல்காப்பியத்தைப் பல்காற் பயின்று. தோன்றாத் துணையாயிருந்து. நடையுடை பாவனை, நரை திரை மூப்பு, நல்லதைக் கொண்டு அல்லதைத் தள்ளி, நம்பா மதம் (நாதிகம்) பேசி நாத்தழும்பேறி. நாட்டுக்கு நாற்காதம், நாடவைத்துக் கேடுசெய்து, நாடியைப் பிடித்து நல்ல சொற்சொல்லி, நாத்தளர்ந்து வாய் குழறி, நாநயமும் நாணயமும், நாயொன்று சொல்லப் பேயொன்று சொல்ல, நால்வேதம் ஆறு சாத்திரம் பதினெண் புராணம் அறுபத்து நான்கு கலைஞானம், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும். நின்று நெளித்து நீட்டி நிமிர்ந்து. நீர்சூழ்ந்த நிலவுலகம், நீறுபூத்த நெருப்பு. நுண்மாண் நுழைபுலம், நுனிப்புல் மேய்ச்சலாய். நூன்மதி துய்ப்பிற்கு (சுருதியுக்தி யனுபவங்கட்கு)ப் பொருந்த. நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெடுஞ்சாண் கிடையாய் நிலத்தில் விழுந்து, நெற்றியின் வேர்வை நிலத்தில்விழப் பாடுபட்டு. நோயும் நொடியும் பாயும்படுக்கையுமாய்க் கிடந்து. பகலென்றுமில்லாமல் இரவென்றுமில்லாமல் பாடுபட்டு, பகை நட்பு அயல் என்னும் முத்திறத்தும் ஒத்து, பட்டபாடும் கெட்ட கேடும், பட்டிமாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித்திரிந்து, படைநாலும் புடைசூழ, படைப்புக்காப் பழிப்பு, பணத்தைப் பணமென்றும் காசைக் காசென்றும் பாராமல், பருத்தமேனியுங் கருத்த கண்களும், பருந்துங் கிளியும் பாங்காய் வாழ, பல்உடன் உற்றுச் சொல் உடன்கற்று, பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி. பார்த்த கண்ணும் பூத்துப்போய். பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடு. புலவர்க்கும் விளங்காப்பொருள், புலனைந்தும் பொறிகலங்கி, புலியும் மானும் ஒருதுறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை. பொய்யும் புலையும் புனைசுருட்டும் பொல்லாப் புழுமலி நோய்ப்புன் குரம்பை பொல்லாரை நீக்கி நல்லாரைக் காத்தல் (துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனம்), பொன்னே பூவே கண்ணே கனியே என்று புகழ்ந்து, பொன்னொரு தட்டிலே பூவொரு தட்டிலே வைத்துப் போற்றி. மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர், மணிமந்திர மருந்து, மயிலாடக் குயில்பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மலைவிழுங்கி மகதேவன், மனமொழி மெய்கள் (மனோவாக்குக் காயங்கள்), மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணி, மனம்போன போக்கெல்லாம் போய். மாடமாளிகை கூடகோபுரம், மானங்கெட்ட மழுங்கல். முயற்கோடும் குதிரைக்கொம்பும், முன்னுக்குப்பின் முரண்பட. மேலெழுந்தவாரியாகப் படித்து. மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோட்டு யாருக்கு வந்த விருந்தோ என்றிருந்து. வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வடிகட்டிய முட்டாள், வயிறொட்டி வாய்புலர்ந்து, வரம் வாங்கி வந்தவன், வழிதுறை தெரியாமல், வழிமேல் விழி வைத்து. வாய்க்கெட்டினது வயிற்றுக்கெட்டாமல், வாழ்நாளை வீழ் நாளாக (வீணாளாக)க் கழித்து, வாழையடி வாழையாய் வந்த, வானுறவோங்கி வளம்பெற வளர்ந்து. விண்ணோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப்புடைக்க வுண்டு. வெட்டவெளிச்சம் பட்டப்பகலாய் விளங்க, வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் தெரிய, வெறுவாய்ச் சொல்வீரர். வேதாகம புராணேதிகாசங்கள். (சொல்.) மரபு பல தலைமுறையாகத் தொடர்ந்து வரும் குலத்தொடர்ச்சி கொடியும் மரமும் போல் நீண்டும் தொடர்ந்தும் இருத்தலின் அதனைக் கொடி என்றும், கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். வித்தும் வேரும் அடியும் கிளையும் குச்சுங் கொழுந்துமாகத் தொடர்ந் தோங்கும் மரம்போல மேன்மேல் தொடர்ந்து செல்லும் குலத் தொடர்ச்சி மரபு எனப்பட்டது. தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழக் காற்றையும் மரபு என்பது முண்டு. தொல்காப்பியத்திலுள்ள மரபியல் என்னும் இயற்பெயர் இப்பொருள் பற்றியதே. (சொல். 3). மரவகை ஆண்மரம் காயாதது; பெண்மரம் காய்ப்பது; கோளிவெளிப் படையாய்ப் பூவாது காய்ப்பது; வயிரம் விளைந்த மரம்; வெளிறு விளையாதமரம். மரி மரி - ம்ரு (இ.வே.) மடி - மரி. ஒ. நோ. கடி - கரி. மரி + அணம் = மரணம். இது ஒரு திரவிடச் சொல். L. n. ori (மொரி). (வ.வ.223). மருத்துவமுறை உணவு பச்சரிசி சூடுண்டாக்கும் ஆதலால் வெப்பநாட்டிற்கு ஏற்காதென்று புழுங்கல் அரிசி ஆக்கப்படுகின்றது. அதைச் சம தண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்கு (அரிசியை)த் தீட்டும்போது நீக்கும் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளி மிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரை என்னும் கொத்தவரை பித்தமிகுப்பதென்று முதலில் அவித்து இறுக்கப்படும். காறல் உண்டாக்கும் காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச் சரக்காகக் கூட்டுவனவற்றுள் மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும், கொத்து மல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக் கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசிமிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப் படுத்தும். பெருங்காயம் வளியை வெளியேற்றும். இஞ்சி பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும். தேங்காய் நீர்க் கோவை என்னும் தடுமத்தை (மூக்குச் சளியை) நீக்கும்; கறிவேப்பிலை மண மூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். இவையெல்லாம் சேர்த்த துவரம் பருப்புக் குழம்பும் சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும் கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடற்புண் ஆற்றும் நெய்யோடும் உடலுக்கு உரஞ்செய்து கழிமாசுக் கட்டை (மலபந்தத்தை) நீக்கும். கீரையொடும், குளிர்ச்சிதந்து பித்தம் போக்கும் எலுமிச்சை ஊறுகாயொடும் அறுசுவைப்பட உண்ட தமிழன் அற்றது போற்றி உணின் நோய் உண்டாகாது. (தி.ம.942). மருந்து மருத்துவ வேரும் தழையும் அவற்றால் செய்யப்பட்ட கலவைகளும் பொதுவாகச் சிறப்பான நறுமண முடைமையால் மருந்து எனப்பெயர் பெற்றன. மரு என்பது நன்மணம். மருக்கொழுந்து என்னும் உலக வழக்கையும், மருவார் கொன்றை (தேவா. 530; 1) என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக. மரு - மருந்து. சிறந்த மருந்துத் தழைகள் எல்லாம் மலைகளில் இருப்பதாலும், மலைகளில் வாழும் சித்தரே அவற்றைப் பற்றிய அறிவில் தேர்ச்சி பெற்றிருந்ததாலும், தமிழக மருத்துவ அகர முதலி மலையகராதி என்றும் தமிழ மருத்துவம் சித்த மருத்துவம் என்றும் பெயர் பெற்றன. (தி.ம. அதி. 95). மருமம் மருமம் - மர்மன் (இ.வே.) மருவுதல் = தழுவுதல். மரு - மார் - மார்பு - மார்பம் = தழுவும் உறுப்பாகிய நெஞ்சு. மார் = மார்பு. க. மார். இப்பாதகன் மாரினெய்வ னென்று (கம்பரா. இராவணன் வதை. 192) ஊரிலே கலியாணம், மாரிலே சந்தனம் (பழமொழி) மார்பு = நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள். 1288). மார்பம் = நெஞ்சு. பொன்றுஞ்சு மார்பம் (சிலப். 11:64). மரு - மருமம் = 1. மார்பு. மருமத்தி னெறிவேல் (கம்பரா. கையடை. 11). 2. மறைவிடம், 3. மறைபொருள் (இரகசியம்). 4. உயிர்நிலை. எங்கு மருமத் திடைக்குளிப்ப (பு. வெ. 7.23). ஒ.நோ. L arca = chest, arcanum = mystery, secret. வடவர் காட்டும் மூலம் ம்ரு = மரி. மர்மன் = மரணத்திற்கேதுவான இடம், சேதப்படத்தக்க உறுப்பு, உயிர் நாடி நிலை. மரி என்பது தென்சொற் றிரிபு. (வ.வ.223). மல்லன் மல்லன் - மல்ல முல் - மல் = 1. பருமை. 2. வலிமை (பிங்.). 3. மற்போர்த் தொழில். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268) 4. மற்போர் செய்பவன். மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11 : 2 : 3) (வ.வ. 233-234) மல் - மல்லன் = மற்போர் செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு.வெ. 9 : 4) மல் - மல்லம் = மற்போர். மல் = வலிமை. மல்லல் = வலிமை. முல் - மொல் - மொலு. மொலு மொலு - மொது மொது. மொலு மொலு, மொலோர் என்பன மொய்த்தல் அல்லது திரளுதற் குறிப்புக்கள். மொல் - (மொள்) - மொய் = நெருக்கம், கூட்டம், திணுக்கம், பெருமை, வலிமை, போர். மல் = மல்கு. மல்குதல் = கூடுதல், மிகுதல், நிறைதல். மல் = கூடிச் செய்யும் போர். மல் - மலை. மலைதல் - பொருதல். வடவர் மல் = (mal, mall வைத்திரு, கொண்டிரு, உடமை. கொள்) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். மல்லி - மல்லி, மல்லிகை - மல்லிகா. (வ.வ.) மலர் சூடல் நிரை கவர்தல், நிரை மீட்டல், படையெடுத்தல், முற்றுகையிடல், மதில் காத்தல், பொருதல், ஊன்றிப்பொருதல், வெற்றி கொண் டாடல் முதலிய போர்வினை கட்கு ஆக்கந்தருவதாகக் கருதியே முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி தும்பை, வாகை மலர்களை முன்னைத் தமிழர் சூடியிருத்தல் வேண்டும். சில தழைகளும் பூக்களும் அவற்றின் மருத்துவ ஆற்றல் பற்றியும் அணியப் பட்டிருக்கலாம். (சொல். 20). மலையம் மலையம் - மலய மலை - மலையம் = பொதியமலை. ஓங்குயர் மலையத் தருந்தவன் உரைப்ப (மணி. 1:3). அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. ஐகாரம் அகரமானது. சமற்கிருத வடிவைப் பின்பற்றி. ஒ.நோ: நிலையம் - நிலய, வளையம் - வலய. (வ.வ.234) மலையாளம் மலையாளப் பெயர் கேரளம், மலையாளம் என்பன தற்போது மலையாள நாட்டையும், அங்கு வழங்கும் மொழியையும் குறிக்கும் பெயர்களாம். கழக (சங்க)க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடாயிருக் கின்றது. கீழ்ப்பாகம் கொங்குநாடும் (கோயம்புத்தூர், சேலம், கோட்டகப் பகுதிகள்), கங்கநாடும் (சேலம் மைசூர்ச் சீமைப் பகுதிகள்) ஆகும். மறன், திறன் முதலிய பெயர்கள் முறையே மறல், திறல் என்று திரிந்தாற் போல, சேரன் என்னும் பெயரும் சேரல் எனப் போலியாகிப் பின்பு அன் ஈறுபெற்றுச் சேரலன் என வழங்கிற்று. எ.டு. சேரன் செங்குட்டுவன்; களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ்சேரல். தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்) செறுமா வுகைக்கும் சேரலன் காண்க (திருமுகப்பாசுரம்) சேரலன் என்னும் பெயர் முறையே கேரலன், கேரளன் என மரு விற்று, இம் மரூஉ வடிவங்கள் பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்துங் காணப்படவில்லை; பிந்திய நூல்களில்தாம் காணப்படுகின்றன. இதனால் இவை பிற்காலத்தன என்பது தெளிவு. ச-க, போலி ஒ.நோ: சீர்த்தி-கீர்த்தி, செம்பு - கெம்பு (க.) ல-ள, போலி, ஒ.நோ: செதில்-செதிள், வேலை-வேளை. பாண்டியன் என்னும் பெயர் பாண்டியம் என ஈறு திரிந்து பாண்டியன் செய்திகளைக் குறித்தாற்போல, கேரலன் கேரளன் என்னும் பெயர்களும், கேரலம் கேரளம் என ஈறு திரிந்து சேர நாட்டையும், அந் நாட்டு மொழியையுங் குறிக்கும். மலையாள நாட்டெல்லை மேற்குத் தொடர்ச்சி (குட) மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரி (மங்களபுரம்)லிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும், தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு (திருவாங்கூர்) என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம். தென்னை மரத்தின் வடமொழிப் பெயராகிய நாளிகேரம் என்பது, கேரம் என முதற்குறையாய்ப் பின்பு கேரளம் என விரிந்து அம் மரம் மிகுதியாய் வளரும் மலையாள நாட்டைக் குறித்த தென்பது பொருந்தக் கூறும் பொய்ம்மைக் கூற்றாகும். வட மொழிக்கும் வடமொழியாளர்க்கும் உயர்வும் அதனால் தமிழுக் கும் தமிழர்க்கும் இழிவும் கற்பிக்கப்பட்ட புராணக் காலத்தில், வடமொழித் தொடர்பை உயர்வென மயங்கிய மலையாள நாட்டார், கேரளம் என்னும் பெயர்க்கு வடமொழி மூலத்தையும், கேரள நாட்டிற்குப் பரசுராமக்ஷேத்திரம் என்னும் புதுப்பெயரை யும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டனர். பரசுராமர்க்கு முந்தியே வழங்கிய பெயர் சேரநாடு என்பதும், அவர் இறுதிக் காலத்தில் தவஞ் செய்த இடமாகக் கூறியிருப்பது சேரநாட்டிற்கு வடக்கி லுள்ள கடற்கரைப் பகுதி யென்பதும் அறிதல் வேண்டும். (பண்டைச் சேரநாடு கூர்ச்சரம் (குஜரத் வரையில் தொடர்ந்திருந்த தாலும், வடநாட்டு ஆரியர் தென்னாட்டிலும் வந்து குடி புகுந்த தாலும், பரசுராமர் தவஞ்செய்த இடத்திற்கு ஏற்பட்ட பரசுராம க்ஷேத்திரம் என்னும் பெயர் அவ்விடத்தோடு தொடர்ந்த தென்பாகத்தையும் பிற்காலத்தில் தழுவலா யிற்று. இந்து (சிந்து) என்னும் வடநாட்டுப் பகுதியின் பெயர் தென்னாட்டையும் தழுவினாற்போல. பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரால் இயற்றப்பட்ட தாகத் தெரிகின்ற கேரளோத்பத்தி என்னும் புராணத்தில், பிராமணர் பஞ்சாபினின்று பரசுராமரால் தென்கன்னடத்திலுள்ள கோகர்ணத்தில் முதல் முதல் குடி யேற்றப் பட்டனர் என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதை S. சீனிவாச ஐயங்கார் தமது தமிழாராய்ச்சி (Tamil Studies) என்னும் நூலில் (ப. 348) மறுத்து, பிராமணரைக் கோகர்ணத்தில் குடி யேற்றியவன் கடம்ப மரபினரின் முதல்வனான மயூரவர்மன் என்றும், அவன் காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றுங் கூறியுள்ளார். மலையாளம் என்னும் பெயர் அண்மையில் தோன்றியதாகும். சேரநாடு மலைநாடாதலால் சேரநாட்டான் மலையாளி யெனப் பட்டான். மலை + ஆளி = மலையாளி. ஆளி = ஆள். முதலாளி. தொழிலாளி, வங்காளி, பங்காளி முதலிய பெயர்களை நோக்குக. மலையாளியின் நாடும் மொழியும் மலையாளம் எனப்பட்டன. ஒ.நோ : வங்காளி - வங்காளம். சேரநாடு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழரசரும் செந் தமிழ்ப் புலவரும் திகழ்ந்த செந்தமிழ் நாடாயிருந்தது. (நன்னூற் சிறப்புப்பாயிரத்தில் குணகடல் குடகம் குமரி வேங்கடம், எனுநான் கெல்லையினிருந்தமிழ்க் கடலுள் என்று கூறியிருத்த லால் 12 ஆம் நூற்றாண்டில் சேரநாடு கொடுந்தமிழ் நாடாயிருந் தமை பெறப்படும்). ஐங்குறு நூறும் பதிற்றுப்பத்தும் ஆகிய கழக நூல்களும், சிலப்பதிகாரம் ஆகிய கழக மருவிய நூலும், புறப்பொருள் வெண்பா மாலையும், சேரமான் பெருமான் நாயனாரின் ஆதியுலாவும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியும் மலையாள நாடெனப்படும் சேர நாட்டில் எழுந்த செந்தமிழ் நூல்களே. பதினாலாம் நூற்றாண்டில் (கி.பி. 1320) வீரராகவ சக்கரவர்த்தி யால் பொறிக்கப்பட்ட கோட்டயம் செப்பேட்டு மொழி வாதில் (வாயில்) ஒண்டாயில் (உண்டாகில்), எழுந்நள்ளி (எழுந்தருளி) முதலிய சில மலையாளத் திரிபுகளுடன் கூடிய தமிழே. அதே நூற்றாண்டில் (கி.பி. 1350) இயற்றப்பட்ட கண்ணச்சப் பணிக்கர் இராமாயண மொழியும் இத்தகையதே. எ.டு. கொண்டலிந் நேரிருண்டு சுருண்டு நீண்டொளி வார்ந்து திங்ஙும், குந்தள பாரமோடு முகில் குலத்திட மின்னல் போலே, புண்டரீகேக்ஷணந் நரிகெப் பொலிந்தவள சீதசொந்நாள். இதில், குந்தளபாரம் புண்டரீகேக்ஷணன் என்னும் இரண்டே வடசொற்கள். இவற்றுள்ளும் குந்தளம் என்பது கூந்தல் - என்னும் தென்சொல் திரிபு; வார்ந்து - வார்ந்நு திணுங்கும் - திங்ஙும். இடை - இட. அருகே - அரிகெ. போர்த்துக்கீசிய விடைத்தொண்டர் (Missionaries) முதன்முதல் மலையாளக் கரையில் வந்திறங்கினர் என்றும், மலையாள நாட்டு மொழியைத் தமக்கு முந்திய அரபியர் போல மலபார் என்றழைத்தனர் என்றும், கீழ்கரையிலும் இலங்கைக் கரையிலும் வழங்கிய மொழி (தமிழ்) அதை யொத்திருக்கக் கண்டு அதையும் அப் பெயரால் அழைத்தனர் என்றும் அவர்கள் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காட்டில் 1577 அல்லது 9 இல் முதன் முதல் தமிழெழுத்தில் அச்சிட்ட புத்தக மொழியை மலவார் அல்லது தமிழ் (Malavar or Tamil) என்று குறித்தனர் என்றும் கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார். (முன்னுரை பக். 10-13). இதனால், 16 ஆம் நூற்றாண்டுவரை மலையாள நாட்டுமொழி கொடுந்தமிழா யிருந்த தென்றும், அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற்றென்றும் அறியலாம். மலையாளம் மிகத் தெளிவாய்ப் பிரிந்துபோனது 17 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1650) ஆரியவெழுத்தை வகுத்தும், பெரு வாரியாய் ஆரியச் சொற்களையும் விகுதிகளையும் புகுத்தியும், சேரநாட்டு மொழியைச் சிதைத்த துஞ்சத்து எழுத்தச்சனாலேயே. 1860 ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19 ஆம் நூற்றாண்டுவரை மலையாளியர் தமிழையும் கற்றுவந்தனரென்றும் அதன் பின்புதான் அவ் வழக்கம் அடி யோடு விடப்பட்டதென்றும் முதியோர் கூறுகின்றனர். மலையாள நாட்டில் பார்ப்பனரொழிந்த மற்றக் குலத்தா ரெல்லாம் தமிழர் அல்லது திரவிடரே. குயவர், பணிக்கர், பாணர், ஆயர், ஈழவர், கவுடர் (கவுண்டர்) முதலிய பல குலத்தினர் தமிழ் நாட்டிலும் உள்ளனர். நாயர், நாயாடி, வாரியர், செறுமன் முதலிய குலத்தினர் மலையாளத்திற்குச் சிறப்பாயிருந்த தாலும், அவர் குடிப்பெயரெல்லாம் தனித் தமிழே. தாழ்ந்தது உயர்ந்தது என்று முறையே பொருள் தரும் கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள் குடமலைக் கீழ்நாட்டிற்கே ஏற்றவை. இவை மலையாளத்திலும் வழங்குவது மலையாளநாடு தமிழ்நாட்டுப் பகுதியே யென்பதையும் மலையாளியர் தமிழ் மரபினரே என்பதையும் உணர்த்தும். பிற்காலத்தில் மேற்குத் திசைக்குப் படு ஞாயிறு என ஒரு பெயரை அவர்கள் புனைந்து கொண்டாலும், அதுவும் தனித்தமிழே என்பதை அறிதல் வேண்டும். மலையாள நாட்டு அல்லது சேரநாட்டுத் துறைமுகங்கள் பழந்தமிழ் நூல்களில் பெருங்கடல் வாணிக நிலையங்களாகக் கூறப்பட்டுள்ளன. செங்கோற், குட்டுவன் தொண்டி (ஐங். 178) ............................................... சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிரி யார்ப்பென (அகம். 148) கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமும் கடற்றாரமும், தலைப்பெய்து வருநர்க்கீயும் புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன் முழங்குகடல் முழவின் முசிரி யன்ன (புறம். 343) இயற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சி (பத். 3) மலையாள நாட்டிலுள்ள பல சிவநகரங்களும் விண்ணகரங் களும் நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப் பட்டுள்ளன. கோகர்ணம் திருச்செங்குன்றூர் (கொல்லத்திற் கருகிலுள்ளது) என்பன அப்பராலும் சம்பந்தராலும் 7 ஆம் நூற்றாண்டிலும், திருவஞ்சைக்களம் சுந்தரரால் 9 ஆம் நூற்றாண்டிலும், நேரிற் பாடப்பட்டுள்ளன. திருமுழிக்களம், திருநாவாய், திருவல்லவாழ் என்பன திருமங்கையாழ்வார் 8 ஆம் நூற்றாண்டில் நேரிற் சென்று கண்டவை. இவற்றுடன் திருவனந்தபுரம், திருவண் பரிகாரம், திருக்காட்கரை, திருப்புலியூர், திருச்செங் குன்றூர், திருவண்வண்டூர், திருவத்தரு, திருக்கடித் தானம், திருவாறன் விளை என்பன நம்மாழ்வாரால் (கி.பி. 920) குறிக்கப்படுகின்றன. வித்துவக்கோடு குலசேகராழ்வாரால் 8 ஆம் நூற்றாண்டிற் பாடப்பட்டது (தமிழாராய்ச்சி, ப. 347) மேற்கூறிய திருநகரங்கள் 10 ஆம் நூற்றாண்டுவரை செந்தமிழ் நிலையங்களா யிருந்திரா விட்டால் பாடல் பெற்ற நகரங்களாயிரா என்பது திண்ணம். மலையாளத்திலுள்ள பழைமையான ஊர்ப் பெயர்களெல்லாம் இன்றும் தனித்தமிழாயே யிருக்கின்றன. கோடு (கோழிக்கோடு - Calicut), சேரி (தலைச்சேரி), குளம் (எர்ணாக்குளம்), புரம் (அங்காடி புரம்), நாடு (வலையநாடு), ஊர் (கண்ணனூர்), குன்றம் (பூங்குன்னம்), கா (கன்னங்காவு), காடு (பாலைக்காடு - Palghat), குடி (சாக்குடி), வாசல் (பள்ளிவாசல்), அங்காடி (பரப்பனங்காடி), தோட்டம், பாடி, துறை (திருப்புனித்துறை), குறிச்சி, ஏரி, கரை (கொட்டாரக் கரை), களம் (திருவஞ்சைக் களம்), இருப்பு முதலியன தனித்தமிழ் ஊர்ப் பெயரீறுகளாம். கோடு = மலை. கா= சோலை. பழஞ்சேரநாட்டின் கீழ்ப்பகுதியின் தென்பாகம் (கொங்கு நாடு) இன்றும் தமிழ்நாடா யிருக்கின்றது; வடபாகத்திற் கன்னடம் புகுந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கொடுந்தமிழ் நாடுகளாகக் குறிக்கப்பட்ட வேணாடு, பூழி நாடு, குட்ட நாடு, குட நாடு, மலை நாடு என்பன இற்றை மலையாள நாட்டுப் பகுதிகளாயுள்ளன. பூழியன் உதியன் கொங்கன் பொறையன் வானவன் கட்டுவன் வான வரம்பன் வில்லவன் குடநாடன் வஞ்சி வேந்தன் கொல்லிச் சிலம்பன் கோதை கேரளன் போந்தின் கண்ணிக்கோன் பொருநைத் துறைவன் சேரன் மலையமான் கோச் சேரன் பெயரே என்பது திவாகரம் இவற்றுள் கொங்கன், கொல்லிச் சிலம்பன், பொருநை (ஆன் பொருநை)த் துறைவன் என்னும் பெயர்கள், கோயம்புத்தூர் சேலம் ஆகிய இரு கோட்டகங்களும் சேரநாட்டைச் சேர்ந்தன என்பதை விளக்கும். கொங்கன் = கொங்கு நாட்டரசன், கொங்கு நாடு கோயம்புத்தூர்க் கோட்டகப் பகுதி. கொல்லிமலை சேலங் கோட்டகத்தைச் சேர்ந்தது. சேரர் குடியில் ஒரு கிளையினரான அதிகமான் மரபினர் சேலத்தைச் சேர்ந்த தகடூரை (தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டல், திதியைப் பக்க மென்றல் முதலிய பழந்தமிழ் வழக்கங்கள் இன்றும் மலையாள நாட்டில் தானுள்ளன. தொன்றுதொட்டுச் சேரநாட்டு மெலித்தல் திரிபு சொற்கள் சில சோழ பாண்டி நாடுகளிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன. எ.டு. திரிநவும் (தொல். 83) பழனி, (புறம் 113) பழுனிய (மணி. 328) அறியுனன் (புறம் 134) (திரிகின்ற திரிகுன்ன - திரியுன்ன - திரியுன - திரின - திரிந) பழுத்து - பழுன்னு - பழுன்னு - பழுநி - பழுதி, மகிழ்கின்றான் - மகிழுன்னான் - மகிழுநன் - மகிழ்நன். வாழ்கின் றான் - வாழுன்னான் - வாழுநன் - வாழ்நன் - வாணன். இனி, திரியும் - திரியுன் + அ = திரியுன - திரின - திரிந என்றுமாம். இங்ஙனமே பிறவும், னகரத்தினும் நகரம் முந்தினதெனக் கொள்ளவும் இடமுண்டு. ஆங்கனம் - அங்கனம் - அங்ஙனம் - அன்னணம். ஆஓ வாகும் பெயருமா ருளவே ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே (தொல். 680) என்று கூறியதும் சேரநாட்டிற்கே சிறப்பாய் ஏற்கும். இவற்றால், பண்டை முத்தமிழ் நாட்டுத் தொடர்பையும், சேரநாட்டு வினைமுற்றுகள் பாலீறு பெற்றதையும் அறியலாம். .......... வண்டமி ழிகழ்ந்த காய்வேற் றடக்கைக் கனகனும் விசையனும் செங்குட்டு வன்றன் சினவலைப் படுதலும் என்று சிலப்பதிகாரத்திலும், வடதிசை யெல்லை யிமய மாகத் தென்னங் குமரியொ டாயிடை யரசர் முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ (பதித். 43) என்று பதிற்றுப்பத்திலும் பாடப்பட்டுள்ள சேர நாட்டுச் சீரிய மறம் இன்று ஆரிய அடிமைப்பட்டு அணுவளவுத் தமிழுணர்ச்சி யின்றிக் கிடப்பது நினைக்குந்தோறும் நெஞ்சைப் புண்படுத்து வதாயிருக்கின்றது. மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள் 1. சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப்பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு கொள்ளாதிருந்தமை. 2. 12 ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13 ஆம் நூற்றாண் டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை. 3. வடமொழிக்கும் வடமொழியாளர்க்கும் தெய்வ உயர்வு கற்பிக்கப் பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும். 4. மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை. 5. மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை. 6. மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல். மலையாளம் திரிந்த முறைகள் 1. முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல். எ.டு. வந்தான் - வந்து. 2. மெலித்தல் திரிவு. எ.டு. எழுந்து - எழுந்நு, அங்கு - அங்ஙு, கழுகு - கழுங்ஙு. குஞ்சி - குஞ்ஞி, வீழ்ந்து - வீணு. 3. நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடைநிலை உன்னு எனத் திரிதல். எ.டு: செய்கின்ற - செய்குன்னு - செய்யுன்னு. 4. வேற்றுமை யுருபுத் திரிவு. எ.டு. அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய - உடே - டே - றே. 5. போலித் திரிவு. எ.டு. நரம்பு - ஞரம்பு, செய்ம்மின் - செய்வின். 6. கொச்சைத் திரிவும் தொகுத்தலும், எ.டு: உள்ள - ஒள்ள, மலை - மல, அகற்றுக - அகத்துக இரு - இரி, புறா - ப்ராவு, கனா - கினாவு, வேண்டும் - வேணம், செய்யவேண்டும் - செய்யேண்டு, போக வேண்டும் - போகேணம். 7. றகர ரகர வேறுபாடின்மை. எ.டு: உறவு - உரவு. 8. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக வான் பான் ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் திரிபுகளும் வழங்கல். எ.டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் - நடக்கான் = நடக்க, வருவான் = வர. 9. சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல். எ.டு. வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்), = நீர். மூரி (கிழஎருது) - எருது, நோக்கு (கூர்ந்து பார்) = பார். 10. சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல். எ.டு: அதே = ஆம், வளரே = மிக, மதி = போதும்; வலிய = பெரிய. 11. ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை வழங்கல். எ.டு. சொல் (த.) - பறை (ம.) கூப்பிடு (த.) விளி (ம.). 12. ஆய் என்னும் வினையெச்ச வீறு ஆயிட்டு என வழங்கல். எ.டு: சிவப்பாய் - சிவப்பாயிட்டு. 13. நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை. எ.டு: ஆயாள் (அவ் ஆள்), ஈமூரி (இம் மூரி). 14. ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடிவில் வழங்கல். எ.டு. தா-தரிக, தர. 15. துணை வினை வேறுபாடு. எ.டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்). பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது). 16. செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல். எ.டு: ஞான், நீ, அவன் - போகும். 17. றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல். 18. வழக்கற்ற சொல் வழங்கல். எ.டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி. 19. புதுச்சொற்கள். எ.டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு. 20. வினைமரபு வேறுபாடு எ.டு: முட்ட புழுங்ஙுக (அவிக்க), விளக்கு கெடுக்க (அணைக்க), முட்டுக் குத்துக (கொடுக்க), காலுற முறிக்க (வெட்டுக), மடங்ஙி (திரும்பி) வருக. குறிப்பு: சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச்சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர். மலையாளச் சொல் வரிசைகள் 1. பெயர்ச் சொற்கள் தன்மை முன்னிலை படர்க்கை தற்சுட்டு ஒருமை ஞான் நீ அவன், இவன் தான் அவள், இவள், அது, இது பன்மை நாம் நிங்கள் அவர், இவர் தங்ஙள் நம்மள் அவ, இவ தாங்ஙள் ஞங்கள் தாங்கள் 2. வினாப் பெயர் ஆண் பெண் பொது அஃறிணை ஒருமை : எவன் எவள் ஆர் எது, யாது பன்மை : எவர் யார் எந்து, எவ யாவர் யாவ என்னது (த.) = எந்து (ம.) 3. முறைப் பெயர் அப்பன், அம்ம, அம்மாயி (பாட்டி), மகன், மகள், மருமகன், மருமகள், பேரன் முதலிய முறைப்பெயர்கள் செந்தமிழ்ச் சொற்களாகும். மூத்தச்சன், மூத்தப்பன், பேரப்பன்; மூத்தம்ம, மூத்தச்சி; வலியச்சன் (பெரியப்பன்), வலியப்பன், இளையப்பன் குஞ்ஞச்சன் (சிற்றப்பன்), பெண்ணப்பன் (மாமன்). பெண்ணம்ம (மாமி), கெட்டியவன் (கணவன்), கெட்டியவள் (மனைவி) முதலிய முறைப்பெயர்கள் கொடுந் தமிழ்ச் சொற்களாகும். ஜ்யேஷ்டன், ஜ்யேஷ்டத்தி, அனுஜன், அனுஜத்தி முதலிய வடசொற் பெயர்கள் வழக்கூன்றியதால், அண்ணன், அக்கை, தம்பி, தங்கை முதலிய செந்தமிழ்ப் பெயர்கள் மலையாளத்தில் வழக்கு வீழ்ந்தன. அச்சி, அப்பச்சி என்னும் ஒருபான் முறைப்பெயர்கள் செந்தமிழ் நாட்டில் சில குலத்தாரிடை வழங்குகின்றன. இவையும் இவற்றின் ஆண்பால் வடிவங்களான அச்சன், அப்பச்சன் என்பனவும் ஒருங்கே மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. குறிப்பு : அத்தன் - அச்சன், அத்தி - அச்சி, த-ச, போலி. 4. மக்கட் பெயர் அடியார், அப்பக்காரன், அப்பட்டன், ஆள், ஆள் கொல்லி, இடயன், இரப்பாளி, இளையவன், உடயவன், ஊமன், எளியவன், கணியான், கள்ளன், கன்னியாள், குட்டி (பிள்ளை), குடியன், குருடன், கூலிக்காரன், கொல்லன், சக்காள் (செக்கான்), செவிடன், செறியவன் (சிறியவன்), தச்சன், தாந்தோன்னி (தான்தோன்றி), தூதன், தோழன், நல்லன், பாணன், பைதல் (பையன்), போக்கிரி, மடியன், மந்திரி, மலயாளி, முதலாளி, மூப்பன், வண்டிக்காரன், வம்பன், வலியவன், வழிப்போக்கன் முதலியன. பறயுன்னவன் செய்யுன்னவன் முதலிய வினையாலணையும் பெயர்களும், காணி தின்னி முதலிய செய்வான் பெயர்களுந் தமிழ் முறையி லமைந்தவையே. 5. விலங்குப் பெயர் ஆன (ஆனை), ஆடு, எரும (எருமை), ஒட்டகம், கழுத (கழுதை), வெருகு, கரடி, கன்னு (கன்று), காலிகள், காள (காளை), குதிர (குதிரை), குரங்ஙு (குரங்கு), நரி, நாய், பன்னி (பன்றி), புலி, பூச்ச (பூசை = பூனை), மான், முயலு, மூரி, குறுக்கன் (குறுநரி). 6. பறவைப் பெயர் ஈச்ச (ஈ), கழுக (கழுகு), காக்க (காக்கை), குயில், கூமன் (கூகை), கொக்கு, செங்ஙாலி (செங்காலி = புறா), தாராவு (தாரா), பருந்து, பிடக்கோழி (பெட்டைக் கோழி), ப்ராவு (புறா), மயில், வண்டு, வாவல், தத்த (தத்தை = கிளி), கிளி. 7. ஊர்வனவற்றின் பெயர் இரிம்பு (எறும்பு), ஓந்து (ஓந்தி), எலி, கீரி, சுண்டெலி, தேள், பாம்பு, புழு, ஞாங்கூழ், சிதல். 8. நீர் வாழ்வனவற்றின் பெயர் ஞாண்டு (நண்டு), தவள (தவளை), மீன், அயில (அயிரை), ஆரல், முதல (முதலை) முதலியன. 9. மரஞ்செடிப் பெயர் அவர (அவரை), ஆல், இஞ்சி, உழுன்னு (உழுந்து), எள், ஏலம், கருமுளகு, கீர (கீரை), செடி, செறு பயறு (சிறுபயறு), சேம்பு, சேன (சேனை) தெங்கு, நெல், படோல் (புடலை), பயறு, பருத்தி, பன (பனை), பிலாவு (பலா), புல், புளி, புகையில (புகையிலை) மரம், மஞ்ஞள் (மஞ்சள்), மா, முதிர (முதிரை = காணம்), முள்ளங்கி, வழுதுணங்காய் (= கத்தரிக்காய்), வாழ (வாழை), வெண்டக்கி (வெண்டைக்காய்), வெள்ளரி, வெற்றில (வெற்றிலை), பட்டாணிப் பயறு, உருளக்கிழங்கு, முந்திரிங்ங (முந்திரிகை), ஞாறு (நாற்று), கள (களை), சூரல் = பிரம்பு, வேம்பு, ஞாணல், ஞாவல் (நாவல்) முதலியன. 10. கருவிப்பெயர் அரம், ஆணி, ஈர்ச்சவாள், உரலு, உலக்க (உலக்கை), ஏத்தம் (ஏற்றம்), உளி, கத்தி, கத்திரி, கரண்டி, கோட்டு, (கொட்டு), கோடாலி, சக்கு (செக்கு), சாட்ட (சாட்டை), சுத்திக (சுத்திகை), சுழிக்குற்றி, சூலம், துடுப்பு, துருத்தி, நுகம், மழு, முள், மூல மட்டம், வாள், வில், குண்டல் (தூண்டில்), நங்கூரம் முதலியன. 11. ஐம்பூதப் பெயர் நிலம், வெள்ளம், தீ, காற்று, விண்ணு. 12. உலோகப் பெயர் இரிம்பு (இரும்பு), ஈயம், உருக்கு, செம்பு, தகரம், துத்தநாகம், பிச்சள (பித்தனை), பொன், வஜ்ரம் (வயிரம்), வெள்ளி. 13. ஊர்திப் பெயர் ஓடி, ஓடம், கப்பல், தேர், தோணி, படகு, வண்டி முதலியன. 14. உணவுப் பெயர் அரி (அரிசி), அப்பம், இர (இரை), இறச்சி (இறைச்சி), உப்பு, உற (உறை மோர்), ஊண், எண்ண (எண்ணெய்), கஞ்ஞி (கஞ்சி), கடுகு, கறி, சோறு, தயிர், தவிடு, தீன், தேன், தை (நெய்), பலஹாரம் (பலகாரம்), பால், மசால (மசாலை), மருன்னு (மருந்து), முட்ட (முட்டை), முளகு தண்ணி (மிளகு தண்ணீர்), மோர், வெண்ண (வெண்ணெய்) முதலியன. 15. ஆடையணிப் பெயர் உடுப்பு, கம்பிளி (கம்பளி), கால் சட்ட, காலுற (காலுறை), குப்பாயம், குடுத்த (குடித்துணி), சிலம்பு, செரிப்பு (செருப்பு), தலக்கெட்டு, தலப்பாவு (தலைப்பாகை), பட்டு, பாவாட (பாவாடை), புடவ (புடவை), மோதிரம், மூக்குத்தி, வள (வளை) முதலியன. 16. தட்டுமுட்டுப் பெயர் அண (அணை), கயிறு, கலம், கிண்டி (கெண்டி), குட (குடை), கட்டி, சாக்கு, தொட்டி, பலக (பலகை), பாய், மேச (மேசை), விளக்கு, சீப்பு, கண்ணாடி, புதகம் (பொத்தகம்), கடியாரம், தட்டு, கிண்ணம், செம்பு, பொக்கணம், பெட்டி, முறம் முதலியன. 17. இடப் பெயர் அகம், அங்ஙாடி (அங்காடி), இட (இடம்), இற (இறவு), உல (உலை), எழுத்துப் பள்ளி (பள்ளிக்கூடம்), கடல், கர (கரை), கல்லற (கல்லறை), காடு, கிணறு, கிழக்கு, குடி (=வீடு), குடில், குழி, குளம், கோட்ட (கோட்டை), சுவர், தீவு, துறமுகம் (துறைமுகம்), தெக்கு, தெரு; தோட்டம், நாடு, பட்டணம், பாற (பாறை), புறம், மல (மலை), மதிலு, மாளிக (மாளிகை), முற்றம், மூல (மூலை), லோகம் (உலகம்), வடக்கு, வயல், வழி, வாதில் (வாசல்), வானம், வீடு, குண்டு, (அறை), சேரி, இல்லம், கழனி, கேணி. 18. காலப் பெயர் காலம், சமயம், நாள், நேரம், பக்கம் (திதி), பகல், போழ் (போழ்து), மண்டலம், மணி, மாசம் (மாதம்). ராத்திரி (இராத்திரி), ராவு (இரா), ஞான்னு (ஞான்று), முதலியன. 19. சினைப் பெயர் இதள் (இதழ்), இல (இலை), ஈரல், உடல், எச்சில், ஓல (ஓலை), கண்ணு, கழுத்து, காம்பு, காய், கால், கை, குடல், குளம்பு, கொம்பு, சிரட்ட (சிரட்டை), சிறகு, செகிள், செதும்பல், செவி, சோர (சோரி = அரத்தம்), சூச (சூசை), தண்டு, தல (தலை), தல முடி, தளிர், துட (தொடை), தும்பிக்கை, தூவல் (தூவு), தோல், தோள், நரம்பு, நாடி, நார், நாவு, நெஞ்ஞு (நெஞ்சு), படம், பல்லு, பழம், பாள (பாளை), பித்தம், பூவி, மயிர், முகம், முல (முலை), முள், முள, (முளை), முழங்காலு, மீச (மீசை), முட்டு, மூக்கு, மொட்டு, ரத்தம் (அரத்தம்), வயிறு, வால், பித்து, விரல், வேர், அலர். 20. பல்பொருட் பெயர் ஊஞ்சல், இடி, ஒலி, மெழுகு, பொடி, பேர், கூலி, மஷி (மை), சுமடு (சுமை, புக (புகை), மழ (மழை), சேறு, வில (விலை), வெளிச்சம், படம் (பாடம்), அச்சு, சாண்கம் (சாணம்), கடம் (கடன்), சூது, துண (துணை), பட (படை), வெடி, மண், மணல், பணம், தூண், நூல், கல்லு, சுண்ணாம்பு, உத்தரம், விட்டம், விறகு, கழுக்கோல், வாரி, ஓடு, பட்டிக (பட்டிகை), தலயண (தலையணை), பூட்டு, தாக்கோல் (திறவுகோல்), துரும்பு, சாம்பல், திரி, கொக்க (கொக்கி), பச (பசை), சரடு, கூடு, குஞ்ஞு (குஞ்சு), கந்தகம், சுருட்டு, சவம், பந்தம், பந்து, பம்பரம், கொடி, வெண்சாமரம், மத்தளம், வெயில், வளம், சுடர், நுர (நுரை). 21. குணப்பெயர் அகலம், அயல், அளவு, அழுக்கு, ஆழம், இடுக்கு, இன்பம், உயரம், உரப்பு, (= உறுதி), கரிப்பு, குற்றம், கைப்பு, சூடு, நீளம், பச்ச (பச்சை), மானம், வம்பு, வேகம், கடினம், சிவப்பு, வெள்ள (வெள்ளை), நன்ம, தின்ம (தீமை), பழம, புதும, நீலம், கருப்பு, மேன்ம, நாணம், வல்லம முதலியன. 22. நோய்ப் பெயர் காச்சல் (காய்ச்சல்), குடலேற்றம், குடச்சல் (குடைச்சல்), குரு, சூல (சூலை), பக்கவாதம் முதலியன. 23. எண்ணுப் பெயர் ஒன்ணு பதினொன்னு முப்பது ரண்டு பந்திரண்டு நால்பது மூன்னு பதிமூன்னு அம்பது இரண்டாயிரம் நாலு பதிநாலு அறுபது மூவாயிரம் அஞ்சு பதினஞ்சு எழுபது ஐயாயிரம் ஆறு பதினாறு எண்பது ஒம்பதினாயிரம் ஏழு பதினேழு தொண்ணூறு பதினாயிரம் எட்டு பதினெட்டு நூறு முப்பதினாயிரம் ஒம்பது பத்தொம்பது ஆயிரம் நால்பதினாயிரம் பத்து இருபது எண்ணாயிரம் லக்ஷம் (இலக்கம்) கோடி கீழிலக்கம் : காணி, மாகாணி, அரைக்கால், கால், அர (அரை), முக்கால். எண்ணடி உயர்திணைப் பெயர் : ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், பந்திருவர் (பன்னிருவர்), பதினால்வர், நூற்றுவர் முதலியன. 24. தொழிற் பெயர் 1. முதனிலைத் தொழிற்பெயர்; அடி, பிடி, வெட்டு, களி, பண. 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்; ஊண், தீன், சூடு, போர். 3. முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்; தவி-தாகம், படி-பாடம்; 4. முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்; ஆடு-ஆட்டு, பாடு- பாட்டு. 5. முதனிலை வலியிரட்டித்து விகுதிபெற்ற தொழிற் பெயர்; ஏறு-ஏற்றம், ஓடு - ஓட்டம். 6. விகுதிபெற்ற பெயர். விகுதி தொழிற்பெயர் விகுதி தொழிற்பெயர் அ(ஐ) பக(பகை) பு பிறப்பு அல் துப்பல் வு(உ) வரவு விறயல் (விறையல்) க(கை) செய்க சல் பாச்சல்(பாய்ச்சல்) தம் பிடித்தல் வி கேள்வி தி பொறுதி 7. காலங்காட்டுந் தொழிற்பெயர்; செய்தது, செய்யுன்னது, செய்வது. 8. எதிர்மறைத் தொழிற்பெயர்; செய்யாய்க, அறியாய்க. 9. பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்; சண்டை. வினையாலணையும் பெயர் தெரிநிலை : செய்தவன், செய்யுன்னவன், செய்வோன் முதலியன குறிப்பு : வலியவன், செறியவன், பழையது, புதியது முதலியன. ii. வினைச்சொற்கள் சில முக்கிய வினைகள் அகல், அஞ்சு, அடி, அடெ (அடை), அமிழ், அரி, அர (அரை), அலறு, அள, அலி (அளி), அறி, ஆகு, ஆடு, ஆழ், ஆள், இடறு, இடி, இடு, இர, இரு, இருள், இறங்ஙு (இறங்கு), உடு, உழு, உணர், உதிர், உந்து, உமிழ், உயிர், உரி, உழு, உறங்ஙு (உறங்கு), எடு, எத்து (எய்து), எதிர், எழு, எழுது, ஏல், ஒலி, ஓம்பு, ஓடு. கடி, கசக்கு, கத்ரி (கத்தரி), கழி, கழுகு (கழுவு), கர (கரை), கரை (= அழு), கவிழ், கற, கன, கா, காணு, காய், கிட, குடி, குத்து, கெட்டு (கட்டு), கெடு, கேள், கொரு, கொத்து, கொல், கோட்டாவி விடு, கோர், கோலு, சாகு, சார், சிரி, சீந்து, சும, சுடு, எருள், சுழல், குழு, செத்து (செதுக்கு), செய், செல், சொறி, ஞெளி, (நெளி), தகு, தங்ஙு (தங்கு), தவு, தட்டு, தணி, தழுவு, தள், தா (தரிக), தாளி, தாண்டு, தாழ், தின், தீர், துடெ (துடை), துடங்ஙு (தொடங்கு), துவர்த்து, துற (திற), துப்பு (தும்மூ), துளெ (துளை), தே (தேய்), தொழு, தோள், தோன்னு (தொன்று), நட, நக்கு, நடு, நக (நகை), நடுங்கு, நம்பு, நனெ (நனை), நர (நரை), நல்கு, நாறு, நிரத்து, நில், நிவிர் (நிமிர்), நிறெ (நிறை), நீங்ஙு, நீந்து, நீள், நீற்று, நுழ (நுழை), நூல், நெய், நோ, நோக்கு, நோல். பகெ (பகை), பரி (படி), பழு, பற, பறி, பற்று, பாடு, பாய், பிரள் (புரள்), பிரி, பிளர், பிற, புகழ், புகு, புளி, புறப்பெடு, பெறு, பொறு, போகு, மற, மறு, மாறு, மிகு, மெதி (மிதி), மேய், ராகு (அராவு), வலிக்கு (இழு), வள (வளை), வறள், வற்று, வா (வரிக), வாங்குபிடி, விடு, வித (விதை), வில், விளி, விள (விளை), விற, (விறை), வீழ், வீள் (மீள்), வெக்க (வைக்க), வெட்டு வெளிப்பெடு வேகு. குறிப்பு : மலையாள வினைகளெல்லாம் ஏவலாகும் போது பெரும்பாலும் வியங்கோள் வடிவுகொள்ளும். எ.டு: செய் - செய்யுக, தா - தரிக. வினைச்சொல் வடிவங்கள் தமிழ் மலையாளம் பகுதி செய் செய் ஏவல் ஒருமை செய் செய்க ஏவல் பன்மை செய்யும் செய்க செய்ம்மின் செய்வின் இணையேவல் ஒருமை செய்யட்டு செய்யட்டே பன்மை செய்யட்டும் செய்யடடே இ.கா.வி.மு. செய்தாள் மு-ன செய்து நி.கா.வி.மு. செய்கின்றாள் செய்யுன்னு செய்கின்றாள் மு-ன எ.கா.வி.மு. செய்வான், செய்வாள் மு-ன செய்யும் இ.கா.பெ.எ. செய்த செய்த நி.கா.பெ.எ. செய்கிற செய்யுன்ன எ.கா.பெ.எ. செய்யும் செய்யும் எ.ம.பெ.எ. செய்யாதி செய்யாத இ.கா.வி.எ. செய்து செய்து நி.கா.வி.எ. செய்ய செய்வான் எ.கா.வி.எ. செய்யின் செய்கில் செய்தால் செய்தால் எ.ம.வி.எ. செய்யாதே செய்தாதெ விதி.வி.எ. செய்யவேண்டும் செய்யயேணம் விலக்கு.வி.எ. செய்யவேண்டா செய்யேண்ட செயப்.வி. செய்யப்படு செய்யப்பெடு ஆற்றல்.வி.உ. செய்யமுடியும் செய்வான் பாடுண்டு ஆற்றல். வி.எ.ம. செய்யமுடியாது செய்வான்பாடில்ல எ.ம.ஏ. ஒருமை செய்யாதே செய்யருதெ v.ம்.V.g‹ik செய்யாதேயும் செய்யருதெ குறிப்பு : மலையாள வினை முற்றுக்கள் திணைபால் காட்டா; ஆதலின், இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம். துணைவினைகள் துணைவினை தமிழ் மலையாளம் பொருள் கொள் செய்துகொள் செய்துகொள்க தற்பொருட்டு கொள் செய்து செய்துகொண்டு தொடர்ச்சி கொண்டு வினையெச்சம் இடு செய்திட்டு செய்திட்டு இறந்தகால நிறைவு வினையெச்சம் வை செய்துவை செய்துவெக்க செய்திருக்கை விடு செய்துவிடு செய்துவிடுக செய்து முடிக்கை கொடு செய்துகொடு செய்து கொடுக்க பிறர்க் குதவல் தா செய்து தா செய்து தரிக பிறர்க் குதவல் இரு செய்திரு செய்திரிக்க செய்திருக்கை வா செய்து வா செய்து வரிக வினைத் தொடர்ச்சி தீர் செய்து தீர் செய்து தீருக செய்து முடிப்ப இரு செய்ய இரு செய்வான் இரிக்க தொடங்கு நிலை அருள் செய்தருள் செய்தருளுக வேண்டுதல் ஆகு என்னும் துணைவினை இறந்த காலம் : ஞான் ஆயி = நான் ஆனேன். நீ ஆயி = நீ ஆனாய்? அவன் ஆயி = அவன் ஆனான். நிகழ் காலம் : ஞான் ஆகுன்னு = நான் இருக்கிறேன். நீ ஆகுன்னு = நீ இருக்கிறாய். அவன் ஆகுன்னு = அவன் இருக்கிறான். எதிர் காலம் : ஞான் ஆகும் = நான் இருப்பேன். நீ ஆகும் = நீ இருப்பாய். அவன் ஆகும்= அவன் இருப்பான். இரு என்னும் துணைவினை (கலவைக்காலம்) இ.கா. ஞான் செய்திருன்னு = நான் செய்திருந்தேன். நீ செய்திருன்னு = நீ செய்ந்திருந்தாய். அவன் செய்திருன்னு = அவன் செய்திருந்தான். நி.கா. ஞான் செய்திருக்குன்னு = நான் செய்திருக்கிறேன். நீ செய்திருக்குன்னு = நீ செய்திருக்கிறாய். அவன் செய்திருக்குன்னு = அவன் செய்திருக்கிறான்.. எ.கா. ஞான் செய்திருக்கும் = நான் செய்திருப்பேன். நீ செய்திருக்கும் = நீ செய்திருப்பாய். அவ செய்திருக்கும் = அவன் செய்திருப்பான். உண்டு இல்லை என்னும் துணைவினைகள் எனிக்குண்டு = எனக்குண்டு எனிக்கில்ல = எனக்கில்லை நினக்குண்டு = உனக்குண்டு நினக்கில்ல = உனக்கில்லை அவனுண்டு = அவனுக்குண்டு அவனிக்கில்ல = அவனுக்கில்லை அல்ல என்னும் துணைவினை ஞான் அல்ல = நான் அல்லேன் நீ அல்ல = நீ அல்லை அவன் அல்ல = அவன் அல்லன் குறிப்பு : தமிழிலும் உலக வழக்கில் அல்ல என்னும் பலவின்பால் வடிவம் வழுவாக இருதிணை யைம்பால் மூவிடங்கட்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. சில புணர்வினைகள் அடுத்துவா, உண்டாகு, காத்திரு, கொண்டுவா, பறஞ்ஞூவெக்க, வைத்திரு, வெளிப்பெடு, கொண்டுபோ, தாணுபோக. தன்வினை பிறவினையாகும் வழிகள் 1. பகுதி வலி யிரட்டல் - எ.டு: உருகு - உருக்கு. உண்டாகு - உண்டாக்கு, மாறு - மாற்று. 2. பகுதி (மெலி) வலித்தல் - எ.டு: கலங்ஙு - கலக்கு. 3. விகுதி பெறுதல் - எ.டு: காண் - காணி (காண்பி) நீள் - நீட்டு, கடி - கடிப்பி, சும - சுமத்து, காய் - காச்சு (காய்ச்சு). குறிப்புப் பெயரெச்சங்கள் வலிய (பெரிய), நல்ல, செறிய (சிறிய), பழய (பழைய), புதிய, சில, பல முதலியன. குறிப்பு : வினை யெச்சங்கள் - நன்னாயி, முழுவன், வேகம், முதலியன. இடைச்சொற்கள் 1. வேற்றுமை யுருபுகள் 1 ஆம் வேற்றுமை மகன் ஞான் அவன் வீடு 2 ஆம் வேற்றுமை மகனெ என்னெ அவனெ வீட்டினெ 3 ஆம் வேற்றுமை மகனால், என்னால், அவனால், வீட்டினால். மகனோடு என்னோடு அவனோடு வீட்டினோடு 4 ஆம் வேற்றுமை மகன்னு எனிக்கு அவன்னு வீட்டின்னு 5 ஆம் வேற்றுமை மகனில் என்னில் அவனில் வீட்டில் நின்னு நின்னு நின்னு நின்னு 6 ஆம் வேற்றுமை மகன்றெ என்றே அவன்றெ வீட்டின்றெ 7 ஆம் வேற்றுமை மகனில் என்னில் அவனில் வீட்டில் 8 ஆம் வேற்றுமை மகனே - - வீடே 2. சுட்டெழுத்துக்கள் - அ, ஆ, இ, ஈ 3. வினா வெழுத்துக்கள் - எ, யா, ஓ 4. எண்ணிடைச் சொல் - உம் 5. உவம உருபு - போலெ, கணக்கே; 6. பால் விகுதிகள் ஆ. பா: அன், ஆன், ஆளன், ஆளி, இ, காரன், ஒன், மன். பெ.பா: அள், ஆள், அத்தி, அச்சி, அசி, ஆட்டி, ஆத்தி, இ, இச்சி, ஒள், காரத்தி, மி. ப.பா: அர், ஆர், ஒ, கார், காரர், மர், மார் ஒ.பா: அது, து. பல்.பா: கள், வ. 7. சுட்டடிச் சொற்கள் அப்போள் (அப்போழ்து), அவிடே (அவ்விடை), அவ்விடம், அன்னு (அன்று), அங்ஙனே (அங்ஙனே), அங்ஙு (அங்கு), அங்ஙோட்டு (அங்கிட்டு), இங்ஙனமே இகரச் சுட்டும். 8. வினாவடிச் சொற்கள் எப்போள், எவிடே, என்னு (என்று) முதலியன. 9. எண்முறை யொட்டு ஆம். எ.டு. : ஒன்னாம், ரண்டாம், பத்தாம், பதினெட்டாம், நூறாம். தொடர்ச்சொற்கள் முழம் இடுக வெயில் தாழுக, இடவும் வலவும், அடவுகள் பிழெக்க, நல்ல அடி, வயிற்றின்னு அடிக்க, சொல்படிக்கு நடக்க, நாடு கடத்துக, நாற்றம் பிடிக்க, அறிமுகம் உண்டாக்க, நாள் போக்குக, நிறய உண்டிட்டு, அறுதி செய்க, நீந்திக் கரேறுக, நூல் ஓட்டுக, ஒன்னின்னும் ஆகா, பட்டிணி கிடக்குக, பள்ளி கொள்க, ஆஞ்சி நோக்குக, பழகிப் போயி, பழி வாங்ஙுக, ஆணயிடுக, பா விடுக, பாளயம் இறங்ஙுக, புறம்காட்டுக, உறக்கம் பிடிக்க, புகஞ்ஞு போயி, புடம் வெக்க, புடம் இடுக, வாயி பொத்துக, உள்ளத்தில் பற்றுக, மனம் பொறுக்க, வீடு எடுக்க, பொத்திப் பிடிக்க, ஒழிச்சுதரிக (Vacate) போயாண்டு, ஒரு நாளு மில்ல, கடம் கொள்க, போக்கு வரவு, கடம் கொடுக்க, கடம் ஒழிக்க, போராதெ போக, குறியிடுக, மழ பெய்க, மழ நில்க்க, கணக்கு தீர்க்க, மாற்றம் செய்க, மாற்று மருன்னு, கப்பல் இறக்க, கப்பல் ஏறுக, மாலயிடுக, மினக்கெடுக, கப்பம் கெட்டுக, கப்பல் ஓட்டுக, காடாயி கிடக்க, தலமுடி வீழுக, முட்டக்கோழி, முறயிடக, முறம் தூற்றுக, தீ காயுக, நிலாவு காயின்னு, மூக்கு சீந்துக, மூரிநிவிர்க, மேளம் கொட்டுக, மேல்கீழாக, கார்யம் நடக்க, மொட்ட அடிக்க, மோதிரக் கை, வயற்றுப்பாட, கூட்டிக்கொண்டு போக, வல வீசக, ஒருவழி கல்பிக்க, வழியெ போயி, கை விடுக, வழிவிடுக, வாரிக்கொடக்க, உப்பு விளயிக்க, விட கொடுக்க, விடகொள்க, விடவாங்ஙுக, வில ஏறுக, தாகம் தீர்க்க, விளக்கு வெக்க, வீறு காட்டுக, வெறும் வயிற்றில், வெள்ள வீசக, வேலி அடெக்க, வேலி கெட்டுக, தாங்ஙி பறக, தாணு கொடுக்க, முட்டெக்கு உலாவுக, திக்க முட்டுக, நாவெடுத்து பறக, உள்ளது கொடுக்க, நோன்பு நோல்க்க, நோன்பு காக்க, மங்களம் கூறுக, மணி தட்டுக. மதிகெடுக்க, மறுமுகம் நோக்க, காடு மறஞ்ஞு பார்க்க, கூட்டிப் பழக, மிழுங்ஙிப் பறக, கெட்டி, நில்குன்ன வெள்ளம், முகத்திட் டடிக்க, கோட்டானி இடுக, கண்டிச்சு பறக, மொழியும் மொழி கேடும், சம்மணம் குத்தி இரிக்க, வழி பிறெக்க, சாடி வீணுகடிக்க, சாகாதது எல்லாம் தின்னுக, வாட்டம் பிடிக்க (ஒரு பக்கம் சாய்க), பெண்ணினெ வாழிக்க (வாழ்விக்க), புறத்தாக வண்டி கெட்டு, தீன்பண்டம், என்னென்னேக்கும் (என்றென் றைக்கும்), பிறவிக் குருடன், பால் காச்சு, இடவிடாதெ கள பறி, தீப்பெட்டி முதலியன. பகிர்வுப் பெயர் ஓரோன்னு (ஒவ்வொன்று), ஈரண்டு (இவ்விரண்டு), மும்மூன்னு, நன்னாலு, அய்யஞ்சு, பதுப்பத்து (பப்பத்து). மரபுத் தொடர்கள் அகவும் புறவும் நோக்க, அவன் துலஞ்ஞு போயி, அதின்றெ இப்புறவும் அப்புறவும் நோக்காதே, உருட்டும் பிரட்டும் பறக, பொத்திப் பொதிஞ்ஞு வைக்க, எனிக்கு எந்து போயி, கடிகடி என்னு பறக, கணக்கும் கார்யவும், கண்ணு மிழிக்குன்னதின் மும்பே, கரகண்டவன், முகம் முறிச்சு பறக, களவும் கய்யுமா யகப்படுக, ஒருநாள் முங்கூட்டி, காடு வாவா வீடு போபோ என்னு பறயுன்ன காலம், காணிச்சுக் கொடுக்க, நின்றெ முகத்து மிச முளச் சிட்டில்லே, அவன்றே கார்யம் கழிஞ்ஞு, இதில் கார்யம் ஒன்னு மில்ல, மற்றொருத்தன் சொல்லப்பட்டிக்கு நடக்குன்னவன்; ரண்டும் கெட்ட, ஒரு கையாயிருக்க, கைகண்ட, வெட்டா வெளிச்சம், சூசிமுனயெ கொண்டு குத்து வானுள்ள நிலம் கொடுக்குன்னில்ல, ஊரும் உடலும் இல்ல, என்றெ வீட்டில் எச்சிலும் குப்பயும் ஆயி, இவன் ஒரு ஆணி ஆகுன்னு, ஒன்னும் இறங்ஙாத சமயம், உந்தும் தள்ளம் (அடிபிடி), நஞ்சு தின்ன போலே ஆயி, ஏந்தி ஏந்திக்கொண்டு நடக்க, கண்ணிம கூட்டி யில்ல, உந்தலும் பிடியுமாக, கரகாணுக, உடல் ஒம்பதுகாணும் விறெக்க, ரண்டு கையிலும் சிரட்டபிடிச்சு போக. வாக்கியங்கள் (சொற்றொடர்கள்) ஞான் ஆ ஆளோடு ஈ குதிரயெ வாங்கி = நான் அவ் ஆளிடம் இக் குதிரையை வாங்கினேன். அச்சன் புறப்பெட்டு போய சேஷம் ஒருத்தன் வந்நு என்றெ சோறு தின்னு = அத்தன் (அப்பன்) புறப்பட்டுப் போனபின்பு. ஒருத்தன் வந்து என்னுடைய சோற்றைத் தின்றான். என்றே செரிப்பு வெடிப்பாக்கெணம் என்னு ஞான் திவஸந் தோறும் கல்பிக்குன்னென்கிலும், நீ இது ஒரிக்கலும் நன்னாயி செய்யாறில்ல = என்னுடைய செருப்பைத் துப்புரவாக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் சொன்னாலும் நீ இதை ஒருகாலும் நன்றாய்ச் செய்கிறதில்லை. பழமொழிகள் (பழஞ்சொல் - ம.) அகத்திட்டால் புறத்தறியாம் அரி (அரிசி) எறிஞ்ஞால் ஆயிரம் காக்க. அளவு கடன்னால் அம்ருதும் நஞ்சு. ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணாம். ஆயிரம் மாகாணி அறுபத்து ரண்டர. இக்கரனின்னு நோக்கும்போல் அக்கர பச்ச. இரிம்பூர கல்லும் தேயும். ஈர் எடுத்தால் பேன் கூலியோ. கடலில் காயம் கலக்கியது போலெ. காமத்தின்னு கண்ணில்ல. காற்றுள்ள போள் தூற்றணும். கார்யத்தின்னு கழுத காலும் பிடிக்கேணம். குரங்ஙின்றெ கய்யில் பூமால கிட்டியதுபோலெ. குரக்குன்ன நாயி கடிக்கயில்ல. கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம். கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம். தாழே கொய்தவன் ஏறே சுமக்கேணம். தீயில்லாதெ புகயுண்டாக யில்ல. நரி நரெச்சாலும் கடிக்கும். நிலாவினெ நோக்கி நாயி குரக்கும்போலெ. பலதுள்ளி பெரு வெள்ளம். மரத்தின்னு காயி கனமோ? மருன்னும் விருன்னும் மூன்னு நாள். மலர்ன்னு கிடன்னு துப்பியால் மாறத்து விழும். மீங்கண்டம் வேண்டாத பூச்சயில்ல. ரண்டு தோணியில் கால் வெச்சுது போலெ. தாழ = அடியில். ஏற = மிகுதியாக. ஒரு கதை ஒரு அக்ரஹாரத்தில் ஒரு பிராமணன் பார்த்திருன்னு. அவன்னு மகன் ஒன்னே உண்டாயிருன்னு. ஒரு நாள் அவன் ஒரு வழிக்கு யாத்ர புறப்பெட்டு, மகனெயும் கூட்டிக்கொண்டு போயி, வழியில் வெச்சு ஆ செறுக்கன் அச்சனெ விளிச்சு, அய்யோ! புலி வருன்னு என்னு உறக்கே நிலவிளிச்சு. அச்சன் திரிஞ்ஞு நோக்கியபோள் புலியெ கண்டில்ல. அவர் பின்னேயும் குறய தூரம் போயபோள் வாதவத்தில் ஒரு புலி வன்னு செறுக்கனெ பிடிச்சு, ஆ செறுக் கன் வீண்டும் அச்சனெ விளிச்சு, தன்றெ மகன் மும்பேபோலே களிவாக்க பறயுன்னு என்னு விசாரிச்சு திரிஞ்ஞு நோக்கியில்ல. புலி செறுக்கனெ கொன்னு தின்னு. இதன் சொன்மொழிபெயர்ப்பு ஒரு பார்ப்பனச் சேரியில் ஒரு பார்ப்பான் வதிந்திருந்தான். அவனுக்கு மகன் ஒருவனே உண்டாயிருந்தான். ஒரு நாள் அவன் ஒரு வழிப்போக்குப் புறப்பட்டு மகனையுங் கூட்டிக் கொண்டு போனான். வழியில் வைத்து அச் சிறுக்கன் (சிறுவன்) அத்தனை (அப்பனை) விளித்து, ஐயோ! புலி வருகிறது என்று உரக்கக் கத்தினான். அத்தன் திரும்பி நோக்கிய போழ்து புலியைக் கண்டில்லை. அவர்கள் பின்னேயும் குறைந்த தொலைவு போய போழ்து உண்மையில் ஒரு புலி வந்து சிறுக்கனைப் பிடித்தது. அச் சிறுக்கன் மீண்டும் அத்தனை விளித்தான். தன்னுடைய மகன் முன்பேபோல விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று எண்ணித் திரும்பிப் பார்க்கவில்லை. புலி சிறுக்கனைக் கொன்று தின்றது. குறிப்பு : சிறுக்கன் (ஆ. பா.) - சிறுக்கி (பெ. பா.) தமிழில் சிறுக்கன் செய்யுள் வழக்கு; சிறுக்கி உலக வழக்கு களி (ம.) விளையாட்டு (த.). (தி.தா.) மலையாளமும் தமிழும் இந் நாவலந் தேயத்துப் பழைய மொழிகளிற் பெரும்பாலன, வடமொழி, தென்மொழி என்னும் இருபெரு மொழிகளுள் அடங்கும். அவற்றுள், வடமொழிச் சார்பின வடஇந்தியாவிலும், தென்மொழிச் சார்பின தென்னிந்தியாவிலும் வழங்கிவருகின்றன. ஆரியம் இந்தியாவிற்குட் புகுமுன்னரே, திரவிடம் இங்கு எண்ணரு நூற்றாண்டுகளாக வழங்கி வந்ததால், இந்தியாவின் தொன்முதுமொழி திரவிடம் என்னும் தென்மொழியே. குமரி முதல் பனிமலை (இமயம்) வரை ஒரு காலத்தில் இந்தியா முழுதும் தென்மொழியே வழங்கிவந்ததென்பதற்கு, பெலுச்சித் தானத்திலும் வங்காளத்திலும், முறையே, பிராகுவி அரசமகால் என்னும் திரவிட மொழிகள் வழங்கி வருவதும், வடநாட்டு ஆரியமொழி களின் அடிப்படை ஒரு மருங்கு திரவிடமாயிருப்பதும். குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதற்கு என்னும் சிலப்பதிகார வாழ்த்துக் காதை உரைப் பாட்டுமடை யெடுப்புத்தொடரும் போதிய சான்றாம். இனி, கடைக்கழகக் காலம்வரை வேங்கடத்திற்குத் தெற்குப்பட்ட நாவல்நிலம் முழுவதும் தமிழ்நாடா யிருந்தமை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து (தொல். சி. பா) வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையிற் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே (சிறுகாக்கைபாடினியம்) நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு (சிலப் வேனிற்காதை) குமரி வேங்கடங் குணகுட கடலா மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில் (சிலப். நூற்கட்டுரை) என்னும் செய்யுட் பகுதிகளாலும், இற்றை மலையாள நாடு அற்றைச் சேரநாடா யிருந்தமையாலும் அறியப்படும். ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல் (சேரநாடு) பென் தூவல் பாத்ரூம் குளிமுறி டிராயர்(மேசை) வலிப்பு காம்பவுண்டு பரம்பு வேக்கன்சி ஒழிவு கோட்டு குப்பாயம் வெராந்தா கோலாயி உச்சி, ஆண்டு, துவக்கம் முதலிய தென்சொற்கள் தமிழ் நாட்டிலும் வழங்கினும் மலையாள நாட்டிற்போல் அத்துணைப் பெருவழக்காகவும் நாடு முழுமையும் வழங்குகின்றில. இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்கு எதிர்ப்பாற் சொற்கள் இன்று மலையாளநாட்டு வழக்கிலேயே உள்ளன. எ.டு. தமிழ் மலையாளம் அச்சி(தாய், தமக்கை) அச்சன்(தந்தை) சிறுக்கி செறுக்கன்(சிறுக்கன்) தம்பிரான் தம்பிராட்டி சோழ பாண்டி நாடுகளில் வழக்கற்றுப்போன சில ஒருசொல் வினைகள், சேரநாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன. எ.டு. மலையாளம் இற்றைத் தமிழ் (ஒரு சொல்வினை) (இரு சொல்வினை) கட்குன்னு-கக்குன்னு களவு செய்கிறான் குலெக்குன்னு குலைதள்ளுகிறது முருடுன்னு முருடாகின்றது குழிக்குன்னு குழி தோண்டுகிறான் சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளமொழியின் வாயிலாகவே இன்று அறியக்கிடக்கின்றது. எ.டு. ஆழ்ச்ச = கிழமை, ஆழ்ச்சவட்டம் = வாரம் பகர்க்குக = படியெடுக்க பையானி = தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப் பாம்பு. நொண்ணு = உள்வாய். முத்தாழம் (முற்றாலம்) = காலையுண்டி அத்தாழம் (அற்றாலம்) = இராவுண்டி. அயக்கூற, ஆகோலி, ஏட்ட, குளவன், நோங்ஙல்(கல்), மாலா முதலியன, தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கிவரும் மீன் பெயர்கள். திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென்சொற்கள் மாபெருந் தொகையின. எ.டு: கயறு = ஏறு (ஏவல் வினை) கரிச்சல் = குடலை குறுக்கன் = நரி, குள்ளநரி கோளாம்பி = படிக்கம் பகரம் = பதில், பதிலாக மேடி = வாங்கு (ஏ.வி) வெடிப்பாக்கு = துப்புரவாக்கு (ஏ.வி.) வெளுத்தோடன், அலக்குக்காரன் = வண்ணான் சூட்ட = தீவட்டி. மலையாளத்தில் வழங்கும் திசைச்சொற்களுட் பெரும்பாலன சற்றே பொருள் திரிந்த தமிழ்ச்சொற்களே. எ.டு: அதே = ஆம் (yes) அடுக்கல் = பக்கம், கிட்ட, இடம் என்றெ அடுக்கல் = என்னிடம் ஒடுக்கம் = முடிவு, முடிவில் களி = விளையாடு (களித்தாடு) குட்டி = பிள்ளை தெற்று = தப்பு, பிழை நேராக்க = செப்பனிடுக செறுமன் = களமன், களத்தடிமை செறு = வயல் வலிய = பெரிய வளரே = மிக விடக்கு = கெட்ட விடக்குகுட்டி = கெட்ட பிள்ளை கழியும் = முடியும். செய்வான் கழியும் = செய்யமுடியும் கள(களை) = விடு, வன்னுகள = வந்துவிடு மதி = போதும் (போதிய அளவு) கேரளத்தில் சிறப்பாகப் பயிரிடப்பெறும் தென்னைமரம் பற்றி மலையாளத் தில் வழங்கும் பற்பல பெயர்கள் கவனிக்கத் தக்கன. நால்வகைத் தெங்கு 1. சாதாரணத் (பொதுவகை) தெங்ஙு 2. செந்தெங்ஙு 3. கைதத் தாளி 4. காப்பாடன் தெங்ஙு தெங்கமர இருநிலைகள் 1. தைத்தெங்ஙு 2. பலத்தெங்ஙு தைத்தெங்கின் முந்நிலைகள் 1. மொட்டத்தை 2. கிளியோலத்தை 3. குழித்தை தைத்தெங்க முருட்டின் இருநிலைகள் 1. குதிரக்கொளம்பன் 2. ஆனயடியன் தெங்கின் உறுப்புகள் அல்லி(அலச்சில்) = தென்னம்பூ கொதும்பல் = பாளை மூடி குலச்சில் = பாளைத்தண்டு வெளிச்சில் = சிறுகுரும்பை கரிக்கு = பெருங்குரும்பை ஏணு = தேங்காயின் மூலை மொத்தி = இதக்கை (calyx) செகரி = தேங்காய்மட்டை கழம்பு = பருப்பு பயல = வழுக்கை நால்வகைக் கள் 1. இளய கள்ளு 2. மதுரக் கள்ளு 3. கைப்புக் கள்ளு 4. மூத்த கள்ளு சில தென்சொற்கள் பழம் பொருளிலேயே இன்றும் மலையாள நாட்டில் வழங்குகின்றன. எ.டு: கோயிலகம் = அரண்மனை அம்பலம் = கோயில் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், சிற்றம்பலம், பேரம்பலம் என்னும் வழக்குகளை நோக்குக. வெயில்என் கிளவி மழையியல் நிலையும் (தொல். புள்ளி. 82) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி வெயில் என்னும் நிலை மொழி அத்துச் சாரியை பெற்றும் புணரும் புணர்ச்சியை, இன்று, வெயிலத்துச் சென்னு, வெயிலத்துப் போகருது என மலையாள நாட்டு வழக்கில்தான் காண்கின்றோம். பதிற்றுப்பத்து என்னும் புணர்மொழிப் பெயரோடொத்த முப்பதிற்றுப்பத்து, அம்பதிற்று நாலு முதலிய இற்றுச் சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன. சில மலையாள நாட்டுத் தென்சொற்கள் முந்து நிலையையே இன்றும் தாங்கி நிற்கின்றன. எ.டு: மலையாளம் தமிழ் அரி அரிசி உள்ளு(உள்) உண்டு நல்லு(நல்) நன்று எல் எலும்பு பரந்து பருந்து போழ் போழ்து அரி யெறிஞ்ஞால் ஆயிரம் காக்க, கரயுன்ன குட்டிக்கே பாலுள்ளு, வம்பனோடு வழுது நல்லு என்பன மலையாளப் பழமொழிகள். புரம் = உயர்வு. புரையுயர் பாகும் என்பது தொல்காப்பியம் (உரி.4). புரம் - பரம் = மேல். சொற்றிரிவில் உகரமுதல் அகரமுதலாதல் இயல்பு. எ.டு. முடங்கு - மடங்கு. குடும்பு - கடும்பு. குடம் - கடம். பரம்பு - பறம்பு = (உயர்ந்த) மலை. பரண் = மேலிடம். பரந்து - பருந்து உயரமாகப் பறக்கும் பறவை. உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்னும் தமிழ்ப் பழமொழியும், பணத்தின்னு மீதெ பரந்தும் பறக்கயில்ல என்னும் மலையாளப் பழஞ்சொல்லும் இங்கு நோக்கத்தக்கன. பரந்து என்னும் சொல்லின் இடையிலுள்ள அகரம், ஈற்றிலுள்ள உகரச்சார்பால் உகரமாயிற்று. இது உயிரிசைவு மாற்றம் (Harmonious sequence of vowels) என்னும் நெறிமுறை யாம். ஒ.நோ. பரம்பு-பரும்பு. பராந்து, பிராந்து என்னும் உலகவழக்கும் இங்கு நோக்கத்தக்கன. போழ் - போழ்து - பொழுது - போது. போழ்து - போழ்தம். ஒ.நோ: வீழ் - வீழ்து - விழுது. தமிழிலுள்ள சில இலக்கணச் சொல்வகைகளின் வரன்முறை. மலையாளச் சொற்றுணை கொண்டே அறியமுடிகின்றது. எ.டு. 1. நிகழ்கால இடைநிலை கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்நு, உந்நு என்று மலையாளத்திலும். குந் - உந்(உன்) - ந் என்று தமிழிலும் திரியும். எ.டு. செய்கின்றான் - செய்குந்நான் - செய்குநன். செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன். மகிழ்நன், வாணர் (வாழ்நர்), ஆஅகுந (தொல். 932), களையுநர் (குறள். 879). பாடுநர், ஈகுநர் (புறம். 235), பகருநர், ஓசுநர், தருநர் (சிலப். இந்திர.) முதலிய நிகழ்கால வினையாலணையும் பெயர்களெல்லாம், மேற்கூறிய வகையில் அமைந்தவையே. கின்று என்னும் இயல்நிலைக்கும் குந் - உந் - ந் என்னும் இறுதித் திரிநிலைகட்கும் உள்ள தொடர்பை. குந்நு, உந்நு என்னும் இடைத்திரி நிலைகளாகிய மலையாள வடிவுகளே காட்டி நிற்றல் காண்க. இவ் நிகழ்கால இடைநிலையின் இயல்பை விரிவாக விளக்கினாம். ஆண்டுக் காண்க. 2. எதிர்மறை ஏவல்வினை செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல் அல்லது முன்னிலை விலக்குவினை. மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். தமிழ் வடிவில் விளங்காத இயல்பு மலையாள வடிவில் விளங்கித் தோன்றுகின்றது. செய்யருது என்பது செய்யரிது என்பதன் திரிபு. செய்யரிது என்பது செய்ய முடியாது என்னும் பொருளது. பெரும்பாலும் முடியாமை அல்லது இயலாமைப் பொருட்டுச் சொற்களே விலக்கு வினையா கின்றன. செய்யக்கூடும், செய்யக்கூடாது, செய்யப்படும், செய்யப்படாது என்னும் வினைகள். உடன்பாட்டு வடிவில் முடிதற்பொருளையும் எதிர்மறை வடிவில் முடியாமைப் பொருளை அடியாகக் கொண்டு விலக்குப்பொருளையும், முறையே, உணர்த்துதல் காண்க. செய்யாதே என்னும் வினை செய்யருதே என்னும் ஏகாரவீற்று வடிவின் திரிபாம். ஆயின், செய்யாதே என்பது தமிழில் ஒருமைக்கு மட்டும் உரித்தா யிருக்க, செய்யருது என்பது மலையாளத்தில் ஒருமை பன்மை இருமைக்கும் பொதுவாம். செய்யருதே என்பது மலையாளத்தில் செய்யருதெ என்றும் நிற்கும். இனி, அருது என்பது மலையாளத்தில் துணைவினையாய் மட்டுமன்றித் தனிவினையாகவும் வரும். எ.டு: ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இவ் ஆட்கு வேறு வேலை கூடாது. 3. இகரவீற்று இறந்தகால வினையெச்சம் இறந்தகால வினையெச்ச வடிவுடன் ஆல் விகுதி சேர்வதால், ஒருசார் எதிர்கால வினையெச்சந் தோன்றும். எ.டு: வந்து + ஆல் - வந்தால் கண்டு + ஆல் - கண்டால் சென்று + ஆல் - சென்றால் கிட்டி + ஆல் - கிட்டியால் - கிட்டினால் யகரம் சிலவிடத்து நகரமாக மாறுவது இயல்பு. ஒ.நோ: யான் - நான், யமன் - நமன். இம் முறையில், எழுதியால் - எழுதினால், ஊதியால் - ஊதினால், தீண்டியால் - தீண்டினால், கூடியால் - கூடினால், தோன்றியால் - தோன்றினால், தேறியால் - தேறினால் என யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களி லெல்லாம். அவ் யகரமெய் னகரமெய்யாகத் திரியப் பெறும். இம் முறையிலேயே. ஆயால் - ஆனால், போயால் - போனால் எனவும் வரும். ஆயின், ஆயினால், போயினால் எங்ஙனம் ஆயினவெனின் ஆயி போயி என்னும் வடிவுகளே ஆல் விகுதி சேர்ந்து ஆயியால் - ஆயினால், போயி யால் - போயினால் என முறையே திரிந்தன வென்க. இதனால் இன் என ஓர் இறந்தகால விடைநிலை இல்லை என்பதும் பெற்றாம். இறந்தகால வினையெச்ச வடிவுகளே, முதற்காலத்தில் இற்றை மலையாளத்திற்போல் முற்றாகவுமிருந்து பின்னர் முற்றை வேறுபடுத்துவான் வேண்டி பாலீறு பெற்றனவாதலின், இறந்தகால முற்றுகளை உறுப்புப் பிரித்துக் காட்டற்கு முதற்கண் எச்சமும் ஈறுமாகவே பிரித்துக் கோடல் வேண்டும். எ.டு: வந்து + ஆன் - வந்தான் கண்டு + ஆன் - கண்டான் சென்று + ஆன் - சென்றான் காட்டி + ஆன் - காட்டியான் - காட்டினான் போயி + ஆன் - போயியான் - போயினான் போயி - போய் + ஆன் - போயான் - போனான் இங்ஙனம் பிரித்துக் காணும்போது, நிலைமொழிக்கு உகர வுயிர்மெய் யீறும் இகர வுயிர்மெய் யீறுமன்றி இன் ஈறின்மை கண்டு தெளிக. எழுதியால், கிட்டியால் என்னும் யகர வுடம்படுமெய் பெற்ற எதிர்கால வினையெச்சங்களும், ஆயி, போயி என்னும் இகரவீற்று இறந்தகால வினை யெச்சங்களும், சோழ பாண்டி நாடுகளில் வழக்கு வீழ்ந்து போயினும், மலையாள(சேர) நாட்டில் இன்றும் வழக்காற்றில் இருந்துவருகின்றன. இவையே முந்திய வடிவுகளாம். இகர யகரம் இறுதி விரவும் (தொல். மொழி. 25) என்னும் தொல்காப்பிய நூற்பா இங்குக் கவனிக்கத்தக்கது. நாஇ - நாயி - நாய் என்பதுபோன்றே ஆஇ - ஆயி - ஆய் என்பதும் என அறிக. இனி, வடநாட்டு மொழியாகிய இந்தியிலும் பிற ஆரிய மொழி களிலும் எழுவாய்ப் பெயரையும் பெயர்ப் பயனிலையையும் இணைக்கும் இரு என்னும் புணர்ப்புச் சொற்கும் (copula), மலையாளம் அடிகோலி யிருந்திருக்கின்றது என்னலாம் எ.டு: இது எந்தாகுன்னு (எந்தாணு)? இது ஒரு மரமாகுன்னு (மரமாணு). யஃ கியா ஹை? What is this? யஃ பேட் iA. This is a tree. இனி, மொழித்துறையில் மட்டுமன்றிக் கலைத்துறையிலும் பழந் தமிழ் மரபு மலையாள நாட்டிலேயே போற்றப்பட்டு வருவதைக் காணலாம். மாதங்களை ஓரைப் பெயராற் குறிப்பதும் கதகளி என்னுங் கூத்துவகையும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளே. இதுகாறும் கூறியவற்றால், மலையாளம் வடமொழி கலந்த சேர நாட்டுக் கொடுந்தமிழே என்றும், அது தமிழ்த்தூய்மைக்கும் திரவிடச் சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சிக்கும் பெரிதும் துணையாவதென்றும், அதிலுள்ள தென்சொற்கள் கலந்தா லன்றித் தமிழ்ச்சொற்றொகுதி நிரம்பாதென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. (செந்தமிழ்ச் செல்வி நவம்பர் 1955) மலைவகை அறை சிறுபறை; முரம்பு சரட் பாங்கான மேட்டுநிலம்; காடு கற்பாங்கான பெருந்திடல்; பொற்றை, பொறை, பொச்சை, பெரும்பாறை; பறம்பு சிறு குன்று; குன்று குன்றம் கோடு சிறுமலை; குறும்பு அரணான சிறுமலை; மலை மரமடர்ந்து வளமான குன்றுக் கூட்டம்; பொருப்பு பக்கமலை; அடுக்கம் மலையடுக்கு; விலங்கல் நாட்டின் குறுக்காகவுள்ள மலை. விண்டு விண்ணளாவியமலை; ஓங்கல் உயர்ந்தமலை; சிலம்பு எதிரொலிக் கும் மலை; வரை மூங்கில் வளரும் மலை. குவடு, கோடு மலைச் சிகரம்; முடி உச்சிச்சிகரம்; கொடுமுடி உச்சிச் சிகரவுச்சி. கவான் இரு குவடுகள் சேருமிடம்; வெற்பு அடிமலை; சாரல் மலையடி வாரம் (சொல்.48). மறநிலைகள் மறம் வீரம்; துணிவு வினை முயற்சிக் கேற்றவீரம்; துணிச்சல் நிலைமைக்கு மிஞ்சிய வீரம்; உரன் அல்லது திடம் அல்லது திண்மை மனவுறுதி; திடாரிக்கம் தைரியம்; திண்ணக்கம் நெஞ்சழுத்தம்; தறுகண்மை இறப்பிற்கஞ்சாத வீரம். (சொல். 58). மறம் மறம் என்னுங் கலம்பகவுறுப்பு, அரசன் பெண் கேட்டு விடுத்த திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை நோக்கி, மறவர் எச்சரித்தும் அச்சுறுத்தியும் விடுப்பதாகக் கூறும். (த.தி.11) மறமும் போரும் நாடுகாவல் நன்மை செய்தல் பொருதல் ஆகிய மூவகை அரச வினைகளுள், இறுதியது அரசர்க்குச் சிறந்ததாதலின், அது வினையென்னும் பொதுச்சொல்லால் விதந்து குறிக்கப்பெறுவது மரபு. அரசர் போர், ஆசை, பாதுகாப்பு, பகை, தண்டனை, மறம், அருள் என்னும் அறுவகைக் காரணத்தாற் பிறக்கும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, புகழாசை, விண் ணாசை என ஆசை ஐவகைப்படும். தற்காப்பு, நாட்டுக் காப்பு, மதக்காப்பு எனப் பாதுகாப்பு மூவகைப்படும். பழிதீர்ப்பு, பழம் பகை, பொறாமை எனப் பகை மூவகைப்படும். பிறவரசரின் இகழ்ச்சிபற்றியதும் திறையிறாமை பற்றியதும் படையெடுப்புப் பற்றியதும் எனத் தண்டனை மூவகைப்படும். மறம் ஒன்றே, அது கடு மறம். தன் குடிகள் மீது கொண்டதும் பிறர் குடிகள் மீது கொண்ட தும் என அருள் இரு வகைப்படும். இவற்றுள் முன்னது, கடல்கோள் நேர்ந்தவிடத்து வாழ் நிலமில்லாக் குடிகட்குப் பிறர் நாட்டுப் பகுதிகளை வென்று தருவது போன்றது; பின்னது, கொடுங்கோல் மன்னர் ஆட்சியினின்று அவர் குடிகளை மீட்பது போன்றது. இனி, ஓர் அரசன் இறந்தபின் நேர்பிறங்கடை யில்லா விடத்து நிகழும் தாயப்போரும் உண்டு. அது தன்னுரிமை காப்பதாகலின் தற்காப்பின் பாற்படும். அரசர் தம் பகையரசர் திறத்து நடந்துகொள்ளும் முறை, இன் சொல், பிரிப்பு, கூட்டு, கொடை, உடன்படிக்கை, சந்து, தண்டனை, அசைவின்மை, ஆகுலம், அரட்டு, வஞ்சனை, ஒளிவு, புகலடைவு, மற்போர், கலைப்போர் எனப்பதினைந்து திறந்தது, பிரிப்பென்பது, பகையரசரின் துணைவரை அவரினின்று, பிரித்து விடுவது. கூட்டு என்பது, பகையரசரின் துணைவரைத் தம்மொடு கூட்டிக் கொள்வதும், பிறவரசரைத் தம்மொடு கூட்டிக் கொள் வதும், என இருவகையது. சந்து என்பது, இருபகை யரசரை மூன்றாம் அரசன் இசைத்து வைப்பது. தண்டனை என்பது, போர், அசைவின்மை யென்பது, பகையைப் பொருட்படுத்தாது வாளா விருத்தல். ஆகுலம் என்பது, ஆரவாரம். அது தொண்டைமான் ஔவையார்க்குத் தன் படைக்கலக் கொட் டிலைக் காட்டியதும், போர்க்களத்தில் பகைவர் அஞ்சுமாறு படைகளை அணிவகுத்து நிறுத்துவதும், போன்றது, அரட்டு என்பது, நெடுமொழி அல்லது வஞ்சினம். வஞ்சனையென்பது, மறைந்திருந்து தாக்குவதும், மூவேந்தரும் பாரியையும் முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனா ரையும் வஞ்சித்துக் கொன்றதும், போன்றது. ஒளிவு என்பது, மலையிற்போய் ஒளிந்து கொள்வது. புகலடைவு என்பது, வேற்றரச னிடம் சென்று அடைக்கலம் புகுவது. மற்போர் என்பது, படை வலியால் வெல்ல வியலாத போது மாற்றரசனை மற்போரால் வெல்வது. கலைப்போர் என்பது, இராவணன் தென்னாட்டிற் புகாதவாறு அகத்தியர் பாண்டியன் சார்பாக அவனை இசையாற் பிணித்தது போல்வது. பழங்காலத்தில், ஓர் அரசன் தன் பகை வனைப் போரில் வெல்ல முடியாவிடின், அவனை வேறொரு கலையில் வெல்வதும் சிறுபான்மை நிகழ்ந்து வந்தது. பிற வெளிப் படை. பண்டைக்காலத்தில், போர்வினை, வெட்சி கரந்தை வஞ்சி தும்பை உழிஞை நொச்சி காஞ்சி என எழுவகைப் பட்டிருந்தது. அவ்வெழுவகையும், முறையே, வெட்சி கரந்தை முதலிய எழுவகைப் பூக்கள் அல்லது பூமாலைகள் சூடிப் பொரப் பட்ட மையால், அப்பெயர் பெற்றன. வெட்சி என்பது பகைவர் அல்லது வேற்றரசர் நாட்டிலுள்ள ஆநிரைகளைக் கவர்வது. இது ஒரு நாட்டு மறவர் தாமே கவர்வதும், தம் அரசனால் ஏவப்பட்டுக் கவர்வதும், என இருவகை. இவற்றுள், முன்னது தன்னுறு தொழில் என்றும், பின்னது மன்னுறு தொழில் என்றும், கூறப் படும். கரந்தை யென்பது கவரப்பட்ட ஆநிரைகளை மீட்டல். வஞ்சியென்பது, வேற்று நாட்டின்மேற் படையெடுத்துச் செல்லல். தும்பை யென்பது, ஒரு வெளிநிலத்திற் பொருதல். உழிஞையென் பது, ஓர் அரசன் வேற்றரசன் நகரை முற்றுகையிடல், நொச்சி யென்பது, முற்றுகையிடப்பட்டவன் தன் நகரைக் காத்தல். காஞ்சி யென்பது, நிலையாமை விளங்கித் தோன்றும்படி எண்ணிறந்தவர் விரைந்து படுமாறு, இருபடைகளும் ஊன்றிப் பொருதல். போர் செய்தற்கு, அரசன் நாட் பார்த்தலும் அவனுடைய மறவர் குறிபார்த்தலும் மரபு. அரசன் பெருங்கணியை வினவி நல்ல நாட் குறித்து, அதில் படையொடு போருக்குப் புறப்பட வசதியில்லா விடின், அன்று தன் குடையையும் வாளையும் கோட்டை வாயி லுக்கு வெளியே போக்கிவைப்பது வழக்கம். இது குடை நாட் கோள் என்றும் வாள்நாட்கோள் என்றும், கூறப்படும். சிறுபான் மை முரசையும் இங்ஙனம் போக்கிவைப்பதுண்டு. பொதுவாக, போருக்குப் பரணிநாள் சிறந்ததாகக் கொள்ளப்படும். மறவர் குறிபார்த்தல், வாய்ப்புள் உன்னம் புள்விரிச்சி என நால்வகைப்படும். வாய்ப்புள் என்பது, தற்செயலாகப் பிறர் வாயினின்று கேட்கப்பெறும் மங்கலச் சொல் அல்லது நற்சொல். உன்னம் என்பது, ஒரு குறிப்பிட்ட உன்னமரம் தழைத்துவரின் தம் அரசனுக்கு வெற்றி யென்றும், அது பட்டுப்போயின் அவனுக்குத் தோல்வி யென்றும், படை மறவர் குறித்துக்கொள்ளுதல். புள் என்பது, ஆந்தை கூகை முதலிய பறவைகள் ஒலிக்குந் தரமும் காகம் வல்லூறு முதலிய பறவைகள் பறக்குந் திசையும் பற்றிக் குறித்துக்கொள்ளும் நிமித்தம். விரிச்சி யென்பது. போர்மறவர் போய்த் தங்கியிருக்குமிடத்தில் நள்ளிரவில் ஓர்த்துக்கேட்கும் வானச்சொல். அரசர் தம் மகப்பேற்றுக் காலத்தில் பொதுவாய்ப் போருக்குச் செல்வதில்லை. போருக்குச் செல்வதற்கு இரண்டொரு நாட்கு முன்பு, வள்ளுவன் யானை மீதேறி முரசறைந்து அதைப் பற்றித் தலைநகரத்தார்க்கு அறிவிப்பான். போருக்குப் புறப்படுமுன் அரசன் படைமறவரை ஊக்குவித்தற் பொருட்டு அவர்க்கு ஒரு சிறந்த விருந்தளிப்பது வழக்கம். அது பெருஞ்சோற்றுநிலை எனப்படும். அதன்பின், போர் மறவர்க்கு அடையாளப்பூவும் போர்ப்பூவும் படைக்கலங் களும் அரசனால் வழங்கப்பெறும். படைத்தலைவர்க்கும் சிறந்த மறவர்க்கும் இயற்கைப் பூவிற்குப் பதிலாகப் பொற்பூ அளிக்கப் பெறுவதுமுண்டு. அரசன் தானும் போருக்குச் செல்வதுமுண்டு; செல்லாமையு முண்டு; செல்வதே பெரும்பான்மை. அரசன் தனக்கு வெற்றி யென்று முழுவுறுதியாயிருப்பின், பகைவர் நாட்டைக் கைப்பற்று முன்னரே, அதைத் தன் இரவலர்க்கும் படைத் தலைவர்க்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவதும், ஓரோவிடத் துண்டு. அது கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம் எனப்படும், (தொல். 1013). போருக்குப் புறப்படும் அன்று போர்முரசுகள் முழக்கப்பெறும். போர்மறவர், குளித்து வட்டுடையணிந்து படைக்கலந்தாங்கிப் பூச்சூடி அணிவகுத்து, கொற்றவைக்கு நரபலியிட்டு, நெடு மொழியும் வஞ்சினமுங்கூறி யாரவாரித்து, நகருக்கு வலமாகப் புறப்பட்டுச் செல்வர். பொன்னுலகப் பேற்றை விரும்பும் சில மறவர் பொற்றகட்டை வாயிலிட்டுக் கொள்வதுண்டென்பது, சிந்தாமணியால் தெரிய வருகின்றது, (778). போர்ப்படைகள் பகை நாட்டூடு செல்லும்போது கொள்ளையடித்துச் செல்வது வழக்கம். பண்டைக்காலப் போர்க்கருவிகள், எய்படை, எறிபடை, குத்துப் படை, வெட்டுப்படை, அடிபடை, தடுபடை என அறுவகைய. வில்லம்பு எய்படை; விட்டேறு எறிபடை; வேல் ஈட்டி குந்தம் முதலியன குத்துப்படை; வாள் வெட்டுப்படை; மழு தண்டு முதலியன அடிபடை; கவசம் கேடகம் முதலியன தடுபடை. இனி, எரிமருந்து கல்வெட்டிற் குறிக்கப்பட்டிருப்பதால், இப்போது வேடிக்கைக்காக விடப்படும் வாணம், (அக்கினியா திரம் என்று புராணங் கூறுவது வாணத்தைப் போலும்!) பழங் காலத்தில் உழிஞைப் போரில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. படைகள் போருக்குச் செல்லும்போது, பொதுவாக, முதலாவது காலாட்படை யும், இரண்டாவது குதிரைப்படையும், மூன்றாவது தேர்ப்படையும், நான்காவது யானைப்படையும் செல்லும். ஒவ்வொரு படையிலும் சேனைக்கணிமகன் என்னும் கணியன் இருப்பான். சேனை முழுவதிற்கும் பொதுவான கணியன் சேனைப் பெருங்கணி எனப்படுவான். தன் நாட்டில் நடக்கும் போராயினும், அயல்நாட்டில் நடக்கும் போராயினும், அரசன் செல்லும் போதெல்லாம் அவனுடன் புலவர் பாணர் கூத்தர் முதலியோரும் செல்வது வழக்கம். சேரன் செங்குட்டுவனுடன் வடநாடு சென்ற நாடக மகளிர் நூற்றிருவரும், குயிலுவர் (வாத் தியக்காரர்) இரு நூற்றெண்மரும், நகைவேழம்பர் நூற்றுவரும், ஆவர். தலைநகருக்குத் தொலைவான இடத்தில் நடக்கும் போருக் கெல்லாம் பாசறை அமைத்து முள்வேலி கோலப் பெறும். அது வேனிற்காலத்தில் அமைக்கப்பெறின் வேனிற் பாசறையென்றும், குளிர்காலத்தில் அமைக்கப்பெறின் கூதற்பாசறை யென்றும், பெயர் பெறும். மற்றக் காலங்களில் நீண்ட நாட் போர்கள் பொதுவாக நிகழ்த்தப் பெறுவதில்லை. வேனிற்போர் கார் தொடங்குமுன் அல்லது தொடங்கியவுடன் முடிக்கப்படும். எந்தப் போருக்கும் இத்துணைக்காலம் என்னும் யாப்புறவில்லை. போருக்குச் செல்லுங்காலம் படைகளின் நிலைமையையும் போர்க் களத்தின் தொலைவையும் பொறுத்தது. ஒருநாட் போரு முண்டு; பல்லாண்டுப் போருமுண்டு. சேரன் செங்குட்டுவன் ஈராண்டெட்டு மாதமும், முதற்குலோத்துங்கன் ஈராண்டும், வடநாட்டுப் போரிற் செலவிட்டனர். பாசறை பாடிவீடு எனவும் படும். போர் தொடங்குமுன், போர்க்களத்தை யடுத்த வூர்களிலுள்ள ஆநிரைகள், பார்ப்பனர், பெண்டிர், மகப்பெறாதோர், பிணியாளர், சிறுவர், முதியோர் முதலியோர் அவ்விடத்தினின் றகன்று பாதுகாவலான இடத்தை அடையும் படி எச்சரிக்கப் பெறுவர். போர்க்களத்திற்குப் பறந்தலை என்று பெயர். போர் தொடங்கும்போது, யானைப்படை மிகுந்த அரசர் தம் யானைகளை விட்டுப் பகைப்படைகளை யுழக்கச் செய்வர். அவ்வச்சமயத்திற்கேற்ப, சதுரம், நீள்சதுரம், வில், வளையம், வட்டம், அரைவட்டம், சக்கரம், சிறை விரிபறவை முதலிய வெவ் வேறு வடிவில் சேனைகள் அமைக்கப்படும். போர் நெடுகலும் முரசுகள் முழங்கும். பகையரசன் தலையையேனும் பகைப் படைத்தலைவன் தலையையேனும் கொண்டுவந்து காட்டிய பொருநனுக்கு, அரசன் பெருங்கொடை யளிப்பன். அது தலைமாராயம் எனப்படும். பொதுவாய், கரி பரி தேர் கால் என்னும் நால்வகைப்படைகளுள் ஒவ்வொன்றும் தன்தன் இனத்துடனேயே பொரும். அங்ஙனமே படைமறவர் படைத்தலைவர் அரசர் ஆகிய முத்தரத்தாரும் தத்தம் தரத்தினருடனேயே பொருவர். படைஞர் முன்பும் படைத்தலைவர் பின்பும் அரசர், இறுதியும் பொருவது இயல்பு. சிறுபான்மை படை மயக்கம் ஏற்பட்டு இம்முறை மாறியும் நிகழும். பலநாட்போராயின், பகல்தொறும் பொருது இராத் தொறும் பாசறையில் தங்குவர். போரிடையே, தோற்கும் நிலையிலிருக்கும் அரசன் போர்க்களத்தி னின்றும் பாசறையினின்றும் தூதுவிடுப்பதும், மாற்றரசன் அதை மதித்து உடன்படிக்கைக் கிணங்குவதும், மதியாது தூதனைச் சிறை யிடுவதும் பெண் கோலம் பூணுவித்து அனுப்புவதும் உண்டு. ஆடையிழந்தவன், குடுமி குலைந்தவன், ஆயுதமிழந்தவன், பாசறை புகுந்தவன், தோற்றோடுபவன் முதலியோரொடு பொருதலும்; புண்பட்டு விழுந்தவனைக் கொல்லுதலும்; படைமடமாகக் கருதப்பட்டன. போர் முடிவு, அரசனுட்பட அனைவரும் பொருது மடிதல், ஈரரசரும் உடன்படிக்கை செய்தல், சிறை பிடிக்கப்பட்ட அரசன் திறை கொடுத்தல், தோற்ற அரசன் ஓடிப்போதல், ஆகிய நால்வகை நிலைகளுள் ஒன்றாயிருக்கும். வென்ற அரசன், வெல்லப்பட்ட அரசனை நட்பரசனாக்கி மண வுறவு பூணல், சிற்றரசனாக்கித் திறையிடுவித்தல், பெருந் தண்டம் இறுவித்தல், காட்டிற்குத் துரத்திப் பதிலாளியமர்த்தல், மானக்கேடு செய்தும் செய்யாதும் சிறையிடல், கொல்லுதல் ஆகிய அறுவகைச் செயல்களுள் ஒன்றைச் செய்வன். பிற்கூறப் பட்ட முந்நிலைகளிலும், தோற்ற அரசனின் தேவிமார் வென்ற அரசனின் தலைநகரிலுள்ள வேளம் என்னும் சிறைக்கோட்டத் தில் சிறையிடப்படுவதுண்டு. கரிகால்வளவனும் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறையும்போல், சிறையினின்று தப்பித் தம் உரிமையையும் நாட்டையும் மீளப் பெற்றாருமுளர். போர் முடிந்தபின், அரசன் தன் மறவருள் காயப்பட்டவரைத் தேற்றலும் போற்றலும், பொருதுபட்டவரின் மக்கட்கு நன்கொடையளித்தலும், வழக்கம். வெற்றியரசன் தோற்ற அரசனொடு நட்புறவு பூணாவிடத்து, அவன் தலைநகரைக் கொள்ளையடித்தல், அதனை எரியூட்டுதல், அங்குள்ள வயலழித்தல் முதலிய அழிப்புத் தொழிலும்; கட்டிட மும் மதிலுமிடித்துக் கவடி வித்துதல், கடிமரந் தடிதல், காவற் பொய்கையை யானைகளை விட்டுக் கலக்கல், நாடு நகர் முதலிய வற்றின் பெயரை மாற்றல் (3 ஆம் குலோத்துங்கச்சோழன், பாண்டி மண்டலத்திற்குச் சோழ பாண்டி மண்டலம் என்றும், மதுரைக்கு முடித்தலை கொண்ட சோழபுரம் என்றும், பாண்டியனது ஓலக்க மண்டபத்திற்குச் சேர பாண்டியர் தம்பிரான் என்றும், பெயர் மாற்றினான்). முதலிய அவமானத் தொழிலும்; செய்து பெருமை கொள்வது பெரும் பான்மை. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள், கருவூலமும் விருதுகளும் யானை குதிரையும் அரசனைச் சேரும்; மற்றவை மறவரைச் சேரும். வென்ற இடத்தில், கல்வெட்டல், வெற்றித்தூண் நாட்டல், பெரு மலையிருப்பின் அதில் தன் இலச்சினையைப் பொறித்தல், தன் ஆணை அடிப்படும்வரை தங்கியிருத்தல் முதலிய செயல்களை யும் வெற்றியரசன் மேற்கொள்வதுண்டு. வெற்றிவிழா, இயலும் போதெல்லாம், வென்ற அரசன் தலைநகர் வெல்லப் பட்ட அரசன் தலைநகர் ஆகிய ஈரிடத்தும் கொண்டாடப் பெறும். இவற்றுள் முன்னையிடத்தில் அது தப்பாது நிகழும். போரில் நேர்ந்த குற்றங்கட்குக் கழுவாயாக, கோயிற்கும் மறையோர்க்கும் சிறந்த கொடைகள் நிகழ்த்தப்பெறும். போரிற்பட்ட படைத்தலைவர்க்கும் சிறந்த மறவர்க்கும், அவருடைய ஊரும்பேரும் போரும் சீரும் பொறிக்கப்பட்ட கல் நடப்பெறும். அது நடுகல் என்றும் பட்டவன் குறி என்றும் அழைக்கப்பெறும். நடுகல்லை நீர்ப்படைசெய்து அதற்கு மாலை சூட்டிப் படைப்பதும், கோயிலெடுத்து விழவயர்வதும் உண்டு. (ப.த.ஆ.) மறுதலை வகை எதிர் - Opposite திரித்தல் - Alteration பகை - Enimity மறுதலிப்பு - Denial மாற்றுமை அல்லது மறுதலை - Contrariety மறுப்பு - Refutation மறை - Negation எதிர்மறை - Strong negation மாற்றம் - Transference மாற்று - Antidote மாறு - Exchange முரண் - Contradiction விலக்கு - Prohibition வேற்றுமை - Difference வேறுபாடு - Change. (சொல். 41) மறுப்பு வகை மறுப்பு பிறர் கொள்கையை அல்லது கூற்றை மறுத்தல் (Refutation); கண்டனம் பிறர் கொள்கையையாவது கூற்றையாவது கண்டித்தல் (Censure): அங்கதம் பிறர் கொள்கையையேனும் கூற்றையேனும் பழித்தல் (Satire). (சொல் : 60). மறுவீடு (மருவீடு) மணமான பின், 3 ஆம், 5 ஆம், 7 ஆம், 9 ஆம் நாட்களுள் ஒன்றில், மணமக்கள், மணமகன் வீட்டில் மணம் நடந்தால். மணமகள் வீட்டிற்கும், மணமகள் வீட்டில் மணம் நடந்தால் மண மகன் வீட்டிற்குமாம வீடு மாறுவர். இது மறுவீடு (அல்லது மரு வீடு) போதல் எனப்படும். மறு வீடு மணமகள் வீடாயின், அங்கு மணமகனுக்குச் செய்யப்படும் விருந்து மரு அல்லது மருவு எனப் பெயர் பெறும். (த.தி. 25) மறைமலையடிகள் மாண்பு தம் வாழ்நாள் முழுதும் தமக்கென வாழாது தமிழ்க்கெனவும் தமிழர்க் கெனவும் வாழ்ந்து, ஆரியத்தாற்குறைப்புண்டும் அயற்சொற்களால் நெருக்குண்டும் சுருக்குண்டும் அகப்பகை வரால் இழிப்புண்டும் பழிப்புண்டும் அடியோடழிந்துபோம் நிலையிலிருந்த தமிழைத் தம் முக்கரணத்தாலும் ஒல்லும் வகையாற் செல்லும் வழியெல்லாம் ஓவாது போற்றிக்காத்து, ஆரியத்தினின்று அறவே மீட்டு, பல்லவபுரம் பொதுநிலைக்கழகம் நிறுவியும், அறிவுக்கடல் ஆராய்ச்சியிதழ் நடத்தியும், அவகைளிற் சொற்பொழிவாற்றியும், பல்வேறு துறைகளிற் பயன்மிக்க நூல்களியற்றியும், தென்மதுரைத் தீந்தமிழை மீண்டும் தோற்று வித்து, இனி இவ்வுலகுள்ளளவுந் தொடரும் புத்தூழியைத் தொடங்கி வைத்த ஒப்புயர்வற்ற மாபெருந் தமிழறிஞர் மறைமலையடிகள். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தனித்தமிழ் என்பது, மறைமலையடிகள் புதிதாகத் தோற்றுவித்த தும் அவரொடு முடிந்து போவதுமான ஓர் ஏற்பாடன்று. பால் எங்ஙனம் தனிப்பாலாகவே தோன்றிப் பின்னர் விற்பனையாளரின் பேராசையால் தண்ணீர் கலக்கப்படுமோ, அங்ஙனமே தமிழும் முதற்கன் தனித்தமிழாகவே தோன்றிப் பின்னர் ஆரியரின் பொறா மையால் வடசொற்கலக்கப்பட்டது; ஆங்கிலர் வருமுன் ஆங்கிலச் சொல் கலவாதிருந்தது போன்றே, ஆரியர் வருமுன் ஆரியச் சொல்லுங் கலவாதிருந்தது. முதலிரு கழகக் காலத்தும், வேந்தர் பெயர்களும் பொதுமக்கள் பெயர்களும் முழுத்தூய தமிழ்ச்சொற்களாகவே யிருந்தன. எ.டு. பாண்டியர் சோழர் சேரர் கடுங்கோன் இளஞ்சேட் சென்னி சேரலாதன் காய்சினவழுதி தொடித்தோட்செம்பியன் செங்குட்டுவன் இளமாறன் பெருநற்கிள்ளி கணைக்காலிரும் நெடுஞ்செழியன் மாவளவன் பொறை சேரமான் மாக்கோதை பொதுமக்கள் : ஆதன், பூதன், கண்ணன், பண்ணன், காடன், கோடன், நன்னன், பான்னன், நாகன், பேகன், தென்னவன், மன்னவன், தேவன், மூவன். வள்ளுவன், மள்ளுவன், வேலன், மூலன், மருதன், விருதன், இன்று வடநாடும் தென்னாடும் ஒன்றென்னும்படி பெயர்கள் மாறியுள்ளன. தென்சொல்வளங் குறைந்த மூவகை 1. பழம்பாண்டி நாடு முழுகிப்போனமையால் அந்நாட்டு உலக வழக்குச் சொற்கள் மறைந்தமை. 2. பண்டும் இடையும் தமிழிலக்கியம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்டாமையால், அவற்றின் இலக்கிய வழக்குச் சொற்கள் ஒழிந்தமை. 3. தமிழர் அயற்சொற்களை வழங்கினமையால் அவற்றிற்கு நேரான தென்சொற்கள் இறந்துபட்டமை. தமிழ் தனித்து வழங்காது என்று சிலர் கருதுதற்குக் காரணங்கள் (1) ஆயிரக்கணக்கான தென்சொற்கள் இறந்துபட்டமை. (2) வட மொழிச் சென்று வழங்கும் நூற்றுக்கணக்கான தென்சொற்களை வடசொற்களென்று தவறாகக் கருதுகை. (2) புதுச்சொற்களை வேண்டிய அளவு புனைந்து கொள்ளலாம் என்னும் அறிவின்மை. மன் (1) மன் - மநு (இ.வே.) முன் - மன் = கருதும் ஆறாம் அறிவுள்ள மாந்தன். மன்பது = மக்களினம். மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15:52) மன்பது - மன்பதை = 1. மக்களினம். மன்பதை காக்குநின் புரைமை (புறம். 210) 2. மக்கட் கூட்டம், படை. மன்பதை பெயர (பதிற்றுப். 77:3) OS, OHG man, OE, man (n), E mar, Goth manna. (வ.வ. 225) மன் முன்னுதல் = கருதுதல், எண்ணுதல், சூழ்தல். AS munan = to think. முன் - மன்ப = பகுத்தறிவும் மதிநுட்பமுங் கொண்டு சிறப்பாகக் கருதி யறியும் மாந்தன். மன்பதை = மக்கட் கூட்டம். ஆறறி வதுவே யவற்றொடு மனனே (தொல். 152. 6) மக்கள் தாமே யாறறி வுயிரே (தொல் 153) மன் - மநு (வ.), டீநு அயn, டீளு, டீழழு அயn, நு அயn, ழுடிவா. அயnயே. (தி.ம.751) மன் (2) உன் - உன்னல் = வி. 1. கருதுதல். உன்னலே தியானம் (கந்தபு. திருநகர. 81). 2. நினைத்தல். பெ. 1. கருதுகை (பிங்.) உன்னல் காலே ஊன்றல் அரையே முறுத்தல் முக்கால் விடுத்தல் ஒன்றே. 2. மனம் (பிங்.). ம. உன்னு, க. உன்னிசு. உன்னலர் = கருதார், பகைவர். உன் - உன்னம் = 1. கருத்து. (திவா.). 2. ஊழ்கம், (தியானம்), அகத்தியான் பள்ளியை பள்ளியை யுன்னஞ் செய்த (தேவா. 847: 2). 3. மனம் (திவா.). 4. கருதுங்குறி, குறியாகக் கொள்ளும் மரம். ஓடா உடல்வேந் தடுக்கியவுன்ன நிலையும் (தொல். புறத். 5). உன் - உன்னி. உன்னித்தல் = ஊழ்குதல் (தியானித்தல்). கண்ண பிரான் கழல் வாழ்த்துமி னுன்னித்தே (திவ். திருவாய். 4:6:9). உன்னி = ஊழ்குதற்குரிய பொருள். ஞாலமுன்னியைக் காண்டு நாங்கூரிலே (திவ். பெரியதி. 10:1:3). உன்னிப்பு = 1. கவனிப்பு. அவன் உன்னிப்பாய்க் கேட்கிறான். 2. உய்த்துணர்வு (ஊகிப்பு.). 3. தப்பாக் குறிப்பு இருட்டிலும் உன்னிப்பாக எடுத்துவிட்டான் (W). 4. மதிக் கூர்மை (W). உன் - முன் = மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். கள. 36). க. முன்னு. முன் - முன்னம் = 1. கருத்து. முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3). 2. குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61). 3. குறிப்புப் பொருள் முன்னவிலக்கு (தண்டி. 42). 4. இம் மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னார் எனப் படிப்போர் அறியுமாறு செய்யப்படும் செய்யுளுறுப்பு. முன்னம் பொருளே துறைவகை எனாஅ (தொல். செய்.1). 5. மனம் (திவா.). முன்னம் - முனம் - மனம் = கருதும் புலம். முன் - மன் = சூழும் மந்திரம். (பிங்.). மன்னுதல் = கருதுதல், சூழ்தல். மன் + திரம் = மந்திரம். ஒ.நோ: மன் + து = மன்று - மந்து - மந்தை. மந்திரம் = 1. திண்ணிய எண்ணம் (பிங்.), மனவுறுதி. 2. சூழ்வு (ஆலோசனை) (பிங்.). 3. அரசியல் பற்றிய அரசன் அல்லது அமைச்சன் சூழ்வு. 4. அமைச்சர் குழு, மந்திரிகள் சவை. மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்துள்ளேன் (கம்பரா. உருக்காட். 31). 4. மறைமொழி. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல். செய். 176) 4. திருமூலர் திருமந்திரம் போன்ற நூல், 5. சிவபோற்றி (சிவாயநம.) என்பதுபோன்ற உருப்போடும் திருமொழி. 6. திருவைந்தெழுத்தி லுள்ள உயிர்நாடி யெழுத்து, சி. நாயோட்டு மந்திரம் நாதனிருப் பிடம் (திருமந். 2672). 7. வசிய மந்திரம். 10. சாவிப்பு மந்திரம். 11. பேய் மந்திரம். 12. மாயம். மந்திரம் - வ. மந்த்ர (mantra). மந்திரக்கலப்பை = மந்திர மன்றாட்டிற்குரிய பண்டங்கள். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36 : 226). மந்திரக்காரன் = மந்திரஞ் செய்பவன் (W.). மந்திரக்கிழவர் = சூழ்வுக்குழுவார். மந்திரக் கிழவரை வருகென் றேவினான் (கம்பரா. அயோத். மந்திர. 4). மந்திரக்கூறை = பூசைப்பட்டு. (W.). மந்திரக்கோட்டி = சூழ்வுக்குழு. மனமுணக் கிளந்த மந்திரக் கோட்டியுள் (பெருங். உஞ்சைக். 36 : 277). மந்திரக்கோடி = மந்திர வாழ்த்தொடு மணமகள் பெறும் புடைவை. மந்திரக் கோடி யுடுத்தி (திவ். நாய்ச். 6 : 3). மந்திரக்கலை = மந்திர நூல். மந்திரக்காவி = செங்காவி தோய்த்த துறவியுடை. (W). மந்திரச் சுற்றம் = மந்திரக் கிழவர். மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி (மணி. 28 : 184). மந்திரச்சாலை = அரசன் அமைச்சரொடு சூழ்வுசெய்யும் தனி மண்டபம். மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான் (சூளா. குமார. 41). மந்திரத்தோழி = தலைவியின் அணுக்கப் பாங்கி. யாப்பியா யினியெனு மந்திரத் தோழியொடு (பெருங். மகத. 9:54). மந்திரத்தெய்வம் = மந்திரத்திற்குரிய தெய்வம். மந்திர நாயகன் = மந்திரத் தெய்வம். மந்திரப் படலம் = அரசன் சூழ்வு செய்வதைக் கூறும் பாவியப் (காவியப்) பகுதி. மந்திரப் பொருத்தம் = மந்திரம் ஓதுபவனுக்கும் மந்திரத்திற்கு முள்ள பொருத்தம். மந்திரப்பொருள் = மந்திரச் செய்தி, மந்திரப் பொருள் வயின் ஆஅ குநவும் (தொல். எச்ச. 53). மந்திர பதம் = மந்திரிப் பதவி. மந்திரம் பண்ணுதல் = 1. மந்திரம் ஓதுதல். 2. பேய் மந்திரஞ் செய்தல். 3. மாயஞ் செய்தல். மந்திரமாலை = திருமூலர் திருமந்திரம். ஞானம் முதல் நான்கு மலர் நற்றிருமந் திரமாலை (பெரியபு. திருமூல. 26). மந்திரமைந்து = ஐந்தெழுத்து மந்திரம். மந்திரமைந்து ... அதன்செவிச் செப்புகின்றான் (சீவக. 945). மந்திரர் = அமைச்சர். (சூடா). மந்திரவாள் = 1. மந்திர ஆற்றல் வாய்ந்த வாள். (W.). 2. அரசன் வாள். (W.). மந்திரவாளி = மந்திரக்காரன். மந்திரவோலை = அரசன் திருமுகம். மந்திர வோலை போக்கிய வண்ணமும் (பெருங். மகத. 25 : 39). மந்திரம் - மந்திரி. மந்திரித்தல் = செ. குன்றாவி. 1. சூழ்தல் (ஆலோசித்தல்). மகட்பேசி மந்திரித்து (திவ். நாய்ச். 6:3). 2. மந்திரத்தால் ஊழ்குதல். மந்திரிப் பார் மனத்துளானை (தேவா. 590:4). 3. மந்திர வலிமையால் எதிரியை அடக்குதல் அல்லது பிறரைக் கட்டுப்படுத்துதல். 4. மந்திரத்தால் நோய் நீக்குதல். 5. மந்திரம் ஓதிக் குழையடித்தல். 6. மந்திர ஆற்றலுண்டாக்குதல். நீரை மந்திரித்துக் கொடுத்தான். செ.கு.வி. மந்திரம் ஓதுதல். மந்திரித்தல் என்னும் வினைச்சொல் வடிவம் வடமொழியில் இல்லை. மந்திரி = பெ. 1. அமைச்சன். பழுதெண்ணு மந்திரியின் (குறள். 639). 2. வருங்காலச் செய்தி சொல்வோன். மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல் (வெற்றி வேற்கை. 8) மந்திரி = வ. மந்த்ரின் (mantrin). தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழில் மந்திரம் இருந்ததென்பதும், வாய்மொழி என்பது போன்றே மந்திரம் என்பதும் தென்சொல் என்பதும், தெற்றெனத் தெரிந்து கொள்க. சிலர், வாய்மொழி யென்றொரு சொல் தமிழிலிருப்பதால், மந்திரம் என்பது வடசொல்லெனக் கருதுவர். தமிழ் முன் மொழியும் இயன்மொழியும் வளமொழியும் வழங்கு மொழியு மாகு மென்றும், வடமொழி பின்மொழியும் திரிமொழியும் கலவை மொழியும் இலக்கிய நடை மொழியுமாகுமென்றும் வேறுபாடு அவர் அறிதல் வேண்டும். ஐம்பெருங் குழுவையும் எண் பேராயத்தையும் துணைக் கொண்ட செங்கோற் கோவரசு குமரிக் கண்டத்திலேயே தோன்றி விட்டதனாலும், அக் காலத்து அரசன் தெய்வத்தோடொப்பக் கருதப் பட்டதனாலும்,அரசனது கட்டளையை எழுதுவோர் திருமந்திர வோலை யென்றும், அவரின் தலைவர் திருமந்திர வோலை நாயகம் என்றும், தொன்று தொட்டுச் சொல்லப்பட்டு வந்தனர். ஆரியர் வருகைக்கு முந்திய தனித் தமிழிலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதனால், பண்டை வழக்குச் சொற்களை இன்று கல்வெட்டுக்களிலேயே காண முடிகின்றது. மந்திரம் என்னுஞ் சொல்லிற்கு மன் என்பது மூலமாக வடமொழி அகர முதலிகளிற் காட்டப்பட்டிருப்பதனாலேயே மந்திரம் என்பது வடசொல்லாகி விடாது. மன் என்பது முன் என்பதன் திரிபென்று மேலே விளக்கப்பட்டுள்ளமை காண்க. உன் - முன் - முனம் - மனம் - வ. மன - L. mens. மன - மனசு - மனது என்னும் திரிபு தமிழுக்கு வேண்டியதில்லை. ஆங்கிலத்தி லுள்ள mind என்னும் சொல்லிற்கு men என்பதே மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அது இலத்தீன் சொல்லினின்று அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. ஒ.நோ: உரம் - வ. உர. கிளேன் (Klein), தம் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகர முதலியில், மனத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் இனச் சொற்களையும் மூலத்தையும் தொடர்புள்ள திரிசொற்களையும் பின்வருமாறு காட்டுகின்றார். E. mind. n. ME mind mynd. minde, munde, fr. OE. gemynd. ‘memory, remembrance’, rel. to OHG. gimunt, Goth. gamunds, of s.m., OS. minna OHG. minna, OFris. MDu., MHG., G mine (orig. ‘memory, loving memory’), ON. minni. ‘mind’, Dan. minde, ‘memory, mind’, Goth muns, ‘thought’, munan, ‘to remember’, fr. I. - E base men. ‘to think, remember, have one’s mind aroused, apply oneself to’, whence also OI. matih matih (for mantis), ‘thought, opinion’, manas, ‘spirit, passion’, manyate#,‘thinks’ munih, ‘inspired’, Toch, Amna, thought, Arm.i-manam ‘I understand’, Gk. menos ‘desire, ardor, spirit, passion’, memona, I remember, wish, long, yearn, strive’, mentor, ‘adviser, mnasuai, to remember, mimneskein, ‘to remind, call to mind’, mnesis, ‘remembrance, memory’, meesios, pertaining to memory, amnesia, forgetfulness, mneme. remembrance, memory, mnemon, ‘mindful, remembering’, maemonikos, ‘of memory, having a good memory’, mainesuai, ‘to be mad’, mania, ‘madness, frenzy’, mantis, ‘seer’, manteia, ‘oracel, divination’, matos, in automatos, ‘acting of one’s own will (compounded of autos, ‘self’ and mntos, ‘thinging’), L. mens, gen. mentis (for I. - E. mntis), ‘mind, understanding, reason’, menini, meminisse, ‘to remember’, menere, monere, ‘to remind, warn, advise, instruct’, monstrun an evil omen, portent, mouster (for mone strom, lit. ‘that which serves as a warning’ fr. morere), monstrere, ‘to show, point out, indicate’, Lith. mintis, ‘thought, idea’, utmintis, ‘rememberance’, OSlav. mineti, to believe, think’, pameti, ‘rememberance’, Russ. pamjat, ‘memory’, OIr. domoiniur, ‘I believe, think’. இனி அவர் காட்டும் திரிசொற்கள் வருமாறு : minnesinger, minikin, admonish, amentia, amnesia, amnesty, anamnesis, automatic, Clymnestra, Comment, dement, dementia, demonstrate, Epimethens, Eumenides, bentamente, Macnad, man, manas, - mancy, mandarin, mania, mantic, mantis, mantra, mathematic, memento, mental, mention, Mentor, mnemonic, mnesie, mnestic, monition, monitor, monstrance, monster, monument. Muse, muster, necromaney, Promotheus, reminiscence, remonstrance, remonstrate, summon, tardamente, Trichomanes, Zamenis. கிளேன், மதி, man என்னுஞ் சொற்களை மன் என்னுஞ் சொல்லொடு தொடர்பு படுத்தியுள்ளார். அஃதொன்று தவிர மற்றவை யெல்லாம் சரியே. அவர் காட்டிய சொற்களினின்று, மனம் என்பது தூய தென்சொல் லென்றும், அதன் மூலமான மன் என்பதே mind என்பதற்கும் அதன் இனச் சொற்கட்கும் மூல மென்பதும், தெற்றெனத் தெரிந்து கொள்க. ஓரறிவுயிருக்கு மேம்பட்ட உயிரினங்கட்கெல்லாம் கருத்துப் புலன் இருப்பதால், man = thinking animal என்பது பொருந்தாது. Mind என்னுஞ் சொல் வரலாற்றில், AS gemynd, memory, mind, thought (where the prefixed ge makes no difference); Formed (with the usual vowel - change of u to y) from AS.) munan, to think என்று கீற்று (Skeat) தம் ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் குறிக்கின்றார். munan என்பதில் mum முதனிலை; an நிகழ்கால வினையெச்சவீறு முன்(னு) வான் - முன்னான் - முனன். வான் நி. கா. வி. எ. ஈறு. வான் - ஆன் - அன், ஆன் என்பதே மலையாள நி. கா. வி. எ. ஈறாயிருத்தல் காண்க. மன்பதை மன் - மாந்தன் (OF, OS, GHG, Skt. மநு) மன்பதை = மக்கட் கூட்டம். (தி.ம.72) மன்னன் மன்னன் - குறுநிலத்தரசன். வேந்தன் - அவனை அடக்கியாளும் பெருநில அரசன் (தி.ம.முக.10) மனச் செயல்கள் முன்னுதல் கருத்தோடும் கருத்தில்லாமலும் ஒன்றை உளத்திற் கொள்ளுதல் (To Think) உள்ளுதல் ஒன்றை ஊக்கத்தோடு முன்னுதல்; உன்னித்தல் ஒன்றை முன்னிக் கண்டு பிடிக்க முயலுதல் (to guess); உணர்தல் புலன் வழியாலன்றி நேரடியாக உள்ளத்தால் அறிதல்; அறிதல் புலன் வழியாக உள்ளத்தாற் காணுதல்; உகத்தல் ஒன்றைச் சிறப்பாக விரும்புதல் (to choose); ஊகித்தல் காரண காரியங்களில் ஒன்றை யொன்றாலறிதல் (to infer); எண்ணுதல்; யோசித்தல்; ஓர்தல் ஒன்றி அல்லது பொருந்த வுணர்தல்; ஓய்தல் நுணுகி ஆய்தல் : உன்னுதல் தியானித்தல்; கண்ணுதல் கவனமாய் முன்னிப்பார்த்தல் (to consider). மனச் செயல்கள் கணித்தல் கணக்கிட்டுக் கண்டுபிடித்தல் (to calculate); கருதுதல் சற்று விருப்பத்தோடு முன்னுதல் (to intend); சூழ்தல் ஆலோசித்தல்; தெரிதல் ஒன்றன் தன்மை யறிதல்; தெரித்தல் தெரிந்தெடுத்தல் (to select); தெளிதல் ஐயம் அகலுதல் அல்லது கலக்கம் நீங்குதல்; தேறுதல் உறுதி கொள்ளுதல்; நம்புதல்; தேர்தல் பரீட்சித்தல், ஆய்ந்தெடுத்தல்; நினைத்தல் ஞாபகம் கொள்ளுதல் (to remember); மதித்தல் நிதானித்தல்; மானித்தல் முன்னியளத்தல்; தீர்மானித்தல் முன்னியளந்து முடிவு செய்தல்; உசாவுதல் உரையாடி ஆலோசித்தல் (Discussion); கொள்ளுதல் ஒன்றை நம்புதல்; உட்கொள்ளுதல் உள்ளத்திற் கொள்ளுதல். (சொல். 57). மனம் மனம் : முன்னுதல் கருதுதல். முன் - முன்னம் = மனம் (திவா.) முன்னம் - முனம் - மனம் - மன (வ.). L mens, (AS munan - to think) OE (ge) mynd, ME mynd, E mind. (தி.ம. 752) மனம் - மன (இ.வே.) உன்னுதல் = 1. கருதுதல். 2. ஊழ்குதல் (தியானித்தல்). உன்னலே தியானம் (கந்தபு. திருநகர. 81). ம. உன்னு, க. உன்னிசு. உன் - உன்னம் = 1. கருத்து (திவா.). 2. ஊழ்கம் (தியானம்). அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த (தேவா. 847.2) 3. மனம் (திவா.). ம. உன்னம் உன் - உன்னல் = 1. கருதுகை (பிங்.). உன்னல் காலே ஊன்றல் அரையே. முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே (உரைநூற்பா). 2. மனம் (பிங்.). உன்னுதல் - முன்னுதல் = முற்படக் கருதுதல், கருதுதல். (வ.வ.) வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3) தெ. முன்னு. க. முன்னு. AS munan = to think. முன் - முன்னம் = 1. கருத்து. முன்ன முகத்தி னுணர்ந்து (புறம். 3). 2. மனம் (திவா.). 3. குறிப்பு. முன்னத்தா னொன்று குறித்தாய்போற் காட்டினை (கலித். 61) முன் - முன்னல் = 1. கருத்து, நெஞ்சு, மனம். (சூடா.). முன் = மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொ. 127). முன்னம் - முனம் - மனம். மனத்தொடு வாய்மை மொழியின் (குறள். 295). மனம் - மனன். ஆறறி வதுவே அவற்றொடு மனனே (தொல். 1526). L. mens, OE gemynd, ME mynd, E mind. (வ.வ. 224-225). மனை kid - khd (ï.nt.)., = வீடு மன்னுதல் = பொருந்துதல், தங்குதல், மிகுதல், கூடுதல், நிலை பெறுதல். மன் - மனை = நிலையாகத் தங்கும் வீடு. E manse, L mansus fr. mans, remain. வடவர் மா (அள) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். (வ.வ. 225). மனையறம்படுத்தல் மண வினைகளெல்லாம் முடிந்த பின், கோவலன் கண்ணகி போலும் செல்வக்குடி மணமக்களை இல்லறத்திற்குரிய பொருள்களெல்லாம் இட்டு நிரப்பப் பெற்ற ஒரு தனி மனையில் இருத்துவது மரபு. அது மனையறப்படுத்தல் எனப்படும். (த.தி.25). மா மா2 (மக) - மஹா (இ.வே.). மகிழ் - மஹ் KG¤jš = âuSjš, gU¤jš., முழுமையாதல். முழு = பருத்த. முழுமுதல் தொலைந்த கோளி யாலத்து (புறம்.58). முழுத்த = முழுவளர்ச்சி யடைந்த. முழுத்த ஆண்பிள்ளைக்கு மூன்று வெற்றிலை. (பழமொழி). முழு - முகு. ஒ.நோ: தொழு - தொகு, புழு - புகு. முகு - மிகு - மிகல். முகு - மகு - மகிழ். ஒ. நோ: நெகு - நெகிழ். மகிழ்தல் = மலர்தல் அகமலர்தல், களித்தல். முகு - முகை = கூட்டம் (பிங்.). முகு - மொகு - மொக்கு - மொக்கன் = தடித்தவன். மொக்கு - மொக்கை = பருமன். மொக்கைச் சோளம் - மக்கைச் சோளம் - மக்காச் சோளம். மொக்காளி - மக்காளி = மிகத்தடித்தவன். (வ.வ.) மகு - மகம் = பருமை, பெருமை. மகம் - மக - மா = பெரிய. மகக்கதை - மாக்கதை. எடுக்கும் மாக்கதை (பெரிய.பாயிரம்.3). மகம் - மகன் = பெரியோன், சிறந்தோன் (சூடா.). நூல்கற்ற மகன்றுணையா நல்ல கொளல் (நாலடி. 136) மகன் - மான் = பெரியோன். மானே தொழுகை வலி (சி.போ.12:4, வெண்பா 3). மிகு - க. மிகு. மிக்கு - தெ. மிக்கிலி. OG michel, E mickle, much. மகம் - Gk megas, L. magnus. வடசொன்மூலம் மஹ் = மிகு, மகிழ். ஆதலால், மஹ் என்பது மகு என்பதன் திரிபே. மேலும், மா.வி.அ. “orig.magh” என்று குறித் திருத்தலுங் காண்க. (வ.வ: 225 - 226). மா2 - மா (இ.வே. = அள). மாத்தல் = அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா - மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்னும் உலக வழக்கை நோக்குக. மேலை வடார்க்காட்டில் ஒரு பொருளின் விலையை எம்மாத்திரம்(எம்மாத்தம்) என்று வினவும் வழக்கு இன்று முள்ளது. அங்கேயே நாட்டுப் படியை மானம் என்கின்றனர். மா + அனம் = மானம் = அளவு, படி, மதிப்பு. மா - மாத்திரை = அளவிட்ட மருந்து, கண்ணிமைக் கால அளவு. மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ (வ.வ.) என்பது தொல்காப்பியம் (1259). அளவு என்பது போன்றே மாத்திரை என்பதும் தென்சொல்லே. மாத்திரை என்பது, ஆரியர் வருமுன்பே தமிழகத்து வழங்கிய மருத்துவ நூற் குறியீடு. பண்டைக்காலத்து, மா என்னுஞ் சொல் வெவ்வேறு அளவு குறித்து வழங்கிவந்தது. மா = 1. ஒரு நிலை. (தொல்.எழுத்.170, உரை). 2. ஒரு கீழ்வாயிலக்கம் (1/20) - (பிங்.) ம. மா, தெ. மாவு. 3. ஒரு நில அளவு (1/20 வேலி). மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறம்.184). (வ.வ:226-227). மா என்னும் வேர்ச்சொல் மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல். மத - மதவு = மயக்கம், பேதைமை. மதவே மடனும் வலியு மாகும் என்றார் தொல்காப்பியர். மத - மதம் - மதர் = மயக்கம். மதம் - மத்தம் = மயக்கம், பைத்தியம். நிலவினால் மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப் பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம் - மதன் = வலி. ஒ.நோ: சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity), from luna, the moon. மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றுங் கூறப்பட்டன. மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற் பொருள் பெற்றது. L metior, Goth, mitan. Ger. messen, A.S.metan, E. mete, Skt. மிதி. மதி - (மது) - மத்து - மட்டு. மதி என்னுஞ் சொல்லே மா என்று மருவியிருக்கலாம்; ஒ.நோ: பகு - பா, மிகு - மீ. எங்ஙனமாயினும், மா என்னும் வேர்ச் சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை. மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு. மா + அனம் = மானம் = அளவு. வருமானம் = வரும்படி. மானம் என்னும் சொல் அளவு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும். மானம் = 1. படி (வடார்க்காட்டு வழக்கு) = அளவு, ஒப்பு, கா: சமானம் (இரு.) = அளவு, மதிப்பு, மானம் - honour(L.) = மதிப்புப்பற்றியளிக்கும் பரிசு. கா : சன்மானம் (இரு.) = தன்மதிப்பு. உயிர்நீப்பர் மானம் வரின் (குறள். 969) = பெருமை. = அகங்காரம். களிமடி மானி (நன்.39) = அளவு, வரையறை, விலக்கு. மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை (மொழி.14) என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும். டாக்டர் பி.எ. சாதிரியார் ஆனம் என்று பிரித்தது அதினும் குற்றமாகும். கடிநிலை யின்றே (புள்ளி. 94), வரைநிலை யின்றே (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, மானமில்லை என்பதனுடன் ஒப்பு நோக்குக. = அளவு கருவி. = அளவு, ஒரு தொழிற்பெயரீறு. கா : சேர்மானம். மானம் (மதிப்பு) x அவமானம். அவி + அம் = அவம் = அழிவு. மானம் என்பது, அளவு அளவை என்னும் பொருளில் வட மொழியில் மாணம் என்று திரியும். கா: பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும். மானித்தல் = அளத்தல் வெப்பத்தை அளப்பது வெப்பமானி. =மதித்தல். கா: அபிமானி (இரு பிறப்பி). மதித்தளிக்கும் நிலம் மானியம் - மானிபம். =அளவையாலறிதல். கா: அனுமானி. உவமானம் (ஒத்த அளவு) - உபமான(வ.) உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ.நோ: like = to be pleased with, to resemble. விழைய நாட என்பவை உவம வுருபுகள். உவமை - உவமம் - உவமன். உவமை - உபமா (வ). மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவமவுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும். Moon, lit. the ‘measurer of time’ found in all the Teut. languages, also in O.Slav, menso, mensis, Gk. mene, all from root ma, to measure என்றார் சேம்பராரும். Moon - month. Moon day - Monday. Moon என்பது மிகப் பழைமையான சொல்லென்பர் மாக்கசு முல்லர். மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு. Gk. metron, L. mensura, Fr. mesure, E. measure. Fr.-L. metrum, E. metre, poetical measure; E. meter, a measurer. Geometry, Fr. - L. - Gk. - geometria - geometreo, to measure land - ge, the earth, metreo, to measure. கூ - ge. கூவளையம் - குவலையம் = நிலவட்டம். Mother என்னும் முறைப்பெயரும் மா என்பதன் அடிப் பிறந்த தாகவே சொல்லப்படுகிறது. Mother, M.E. moder - A.S. moder, cog. with Dut. moder, Ice. modhir, Ger. mutter, Ir. and Gael. mathair, Russ. mate, L. mater, Gk. meter, Skt. mata matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார். மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர். mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா + து = மாது. மாது + அர் = மாதர் = பெண், காதல். அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள் உயர்திணையில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்க வேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர். மாதர் காதல் என்றார் தொல்காப்பியர். எழுமாதர் = the seven divine mothers, Matron, Fr. - L. matrona, a married lady, - mater, mother. Matter, matrix, matriculate, matrimoney முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப்படுகின்றன. மாத்திரை - மாத்திரி - மாதிரி. F. madulus, Fr. modele, E. model. மாதிரி - மாதிரிகை. (மாத்ரகா,வ.) மாக்கள் மக்கள் பகுத்தறிவுள்ள உயிரினமாயினும் அவருள் எல்லாரும் அதைப் பெறாமையால் பகுத்தறிவடையாத குழந்தைகளையும் பிள்ளைகளையும் குழந்தை வருகிறது பிள்ளை வருகிறது எனப் பால் ஈறுகொடாது எண்ணீறே கொடுத்துக் கூறியும், பருவமடைந்தவருள்ளும்பலர் பகுத்தறிவைப் பெறாமையால் அவரை மாக்கள் என்று பிரித்தும் வந்தது பழந்தமிழரின் பெரும் புலமையை உணர்த்தும். (சொல்.32). மாகம் மாகம் - நாக (இ.வே.) மால் - மா = கருமை. மாயிரும் பீலி (சிலப்.2:53). மா - மாகம் = 1. முகில் (சீவக. 569, உரை). 2. கரிய வானம். மாக விசும்பின் (பிறம். 35). 3. மேலிடம். மாக மாடத்து (கம்பரா. மிதிலைக். 83). 4. விண்ணுலகம். மாகந்தொட நனிநிவந்த கொடி (ஞான. 34:15). வடகர் காட்டும் மூலம்: (1) நம் = வளை (to bend). 2. ந + அக = நோவில்லாத இடம். (வ.வ: 227). மாகாளி மாகாளி - மஹா காலீ (வ.வ: 227). மாடு முதற்காலத்தில் ஆவும் காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதனால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலை நாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப் பெற்றது. L. Pecu - Cattle. Peeunia - Money. E. Pecumiary - (Coinsis - ling) of money. (தி.ம.325) மாடை மாடை - மாஷ மழ - மாழை = 1. மழமழப்பான பொன். (பிங்.) உருகி மாழையும் வெள்ளியும் (தணிகைப்பு. சீபரி. 374). 2. பொற்கட்டி (பிங்.) கனக மாழையால் (சீவக.913). மாழை - மாடை = பழம் பொற்காசு. வந்த மாடை நெல்லாக்கி (S.I.I. iii, 137) (வ.வ: 228). மாணவன் மாணவன் - மாணவ. முள் - முளை = இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக.16). முளையான் = சிறுவன், சிறுபிள்ளை. முள் - மள் - மழ = 1. இளமை. மழவுங் குழவும் இளமைப் பொருள. (தொல். சொல். 311). 2. குழந்தை. அழுமழப்போலும் (திருக்கோ.147). மழ - மாழை = இளமை. மாழை மடமான் பிணையியல் (கலித்.131). மள் - மள்ளன் = இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு.262). மள் - மண் - மணி = சிறியது, ஒரு சிறுமைப்பொருள் முன்னொட்டு. எ-டு: மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணித்தக் காளி, மணிப்பயறு, மணிப்புறா. (வ.வ.) மாணவன் தென்சொல்லா? வடசொல்லா? தென்சொல்லா வடசொல்லா என்று ஐயுறப்படும் சொற்கட்கு, கீழ்க்காணும் நிலைமைகளிற் பல வொத்திருப்பின் தென்சொல் லென்றும், இராவிடின் வடசொல்லென்றும் துணியலாம். 1. வேரும் வேர்ப்பொருளும் தமிழிலிருத்தல். 2. கிளைச்சொற்களும் வழிச்சொற்களும், தமிழில் மட்டுமாயினும் தமிழிலும் திரவிட மொழிகளிலுமாயினும், சிறு பெருங் குலமாகவோ குடும்பமாகவோ இருத்தல். 3. சங்கநூல்களில் ஆட்சிபெற்றிருத்தல், அல்லது தொன்று தொட்ட உலகவழக்கில் வழங்கிவரல். 4. தமிழெழுத்துகளால் (தமிழொலிகளால்) அமைந்திருத்தல். 5. நாட்டுப்புறத்துக் கல்லாமக்களால் பெரும்பான்மையாகவோ சிறப் பாகவோ வழங்கப்பெறல். 6. (ஐயுறப்படும் சொல்லால்) குறிக்கப்பெறும் பொருள் அல்லது கருத்துத் தமிழ்நாட்டில் அல்லது தமிழர் உள்ளத்தில் தொன்றுதொட்டே (அஃதாவது ஆரியர் வருமுன் பிருந்தே) இருந்து வரல். 7. சொல்வடிவு அல்லது சொல்லமைதி தமிழுக்கேற்றல். இனி, மாணவன் என்னும் சொல்லுக்குச் சிறுவன் என்பதே வேர்ப் பொருளாம். மக்கள் ஆசிரியனிடத்துக் கற்கும் பருவம் சிறுபருவ மாதலால், சிறுவனைக் குறிக்கும் சொல்லே கற்போனையும் குறித்தது. இன்றும், பிள்ளைகள் என்றும், பள்ளிப் பிள்ளைகள் என்றும் மாணவர் அழைக்கப் பெறுதல் காண்க. ஆங்கிலத்திலும், சிறுவனைக் குறிக்கும் சில சொற்கள் மாண வனையுங் குறிக்கின்றன. Pupil. n. (L. pupillus, pupilla, dim.s. of pupas, a boy; pupa, a girl.) 1. A young person of either sex under the care of an instructor or tutor; a scholar; a disciple. - The Imperial Dcictionary, p. 573. Pedagogue. n. (Gk. paidagogus - pais, paidos, a child and ago, to lead) A teacher of children; one whose occupation is to instruct young children; a school master now used generally by way of contempt (Ibid.p.396). மாணவன் என்னும் சொல்லின் அடி (Stem) மண் என்பதாகும். இவ்வடியின் வேர் (Root) முள் என்பது. இவ் வேரின் இயல்பு வடிவம் முல். முல் என்பது சிறுமையை அல்லது இளமையை உணர்த்தும் வேர்ச் சொற்களுள் ஒன்று. முல் - (முன்) - முனி = (கன்று), யானைக்கன்று முனியுடைக் கவளம் போல (நற்.360). முல் - முள் - முளை = 1. இளமை முளையமை திங்கள் (கம்பரா. கும்பகர்ணன் வரைப் படலம்.16) 2. மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக.223). 3. சிறுகுழந்தை. முளை - முளையான் = சிறுகுழந்தை. முள் - முளி - முறி = தளிர். முறிமேனி (குறள். 1113) முறிதல் = துளிர்த்தல். முறிந்த கோல (சீவக. 2358) முறி - மறி = சில விலங்கின் குட்டி யாடும் குதிரையும் நல்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே (தொல்.1510) முள் - முட்டு = சிறுபொருள். முட்டுக்காய் = சிறுகாய். முட்டுக் குரும்பை = சிறு குரும்பை. முட்டு - முட்டை = சிறு கரண்டி. முட்டை = மொட்டை. மொட்டைப்பயல் = சிறு பயல். முள் - முடு - முடுக்கு = சிறு சந்து. மொழிவளர்ச்சியில் சொற்கள் அடையும் பல்வகைத் திரிபுகளுள், இனத்திரிபு என்பது ஒன்று. அதில் உயிரினத் திரிபு என்பது ஒரு பிரிவு. ஓருயிர் மற்றோ ருயிராகத்திரிவது உயிரினத் திரிபாம். எந்த வுயிரும் வேறெந்த உயிராகவும் திரியலாம். ஆயினும், பெரும் பான்மையாக இயல்கின்ற சில முறைப்பட்ட உயிரினத் திரிபுகள் உள்ளன. அவற்றுள் உ-அ என்பது ஒன்று. எ-டு: குடும்பு - கடும்பு துணை - தனை குடம் - கடம் முடங்கு - மடங்கு குட்டை - கட்டை முறி - மறி (=வளை) துளிர் - தளிர் முள் - மள் மள் - மள்ளன் = இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகு. 262) மள் - மழ ரகார ழகாரம் குற்றொற் றாகா (தொல்.49) ஆதலால், மழ் என்னும் வடிவம் தோன்றாது. மழ = 1. இளமை. மழவும் குழவும் இளமைப் பொருள (தொல்.796) 2. குழந்தை. அழுமழப் போலும் (திருக்கோ. 147) மழ - மழவு = இளமை, குழந்தை. மழபுலவர் = பள்ளியிற் படிக்கும் சிறார். மையாட லாடன் மழபுலவர் மாறெழுத்து (பரிபா.11:88) மழமழப்பு = மென்மை. மழலை = இளமை, மென்மொழி, குழந்தைமொழி, புதுமை. மழலைத்தேன் = புதுத்தேன். மழவன் = 1. இளைஞன் (பிங்.) மழவர்த மனையன மணவொலி (கம்பரா.நாட்டுப்படலம்.50) 2. வீரன் மழவர் பெரும (புறம்.90) மழறுதல் = மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ்.திருவாய்மொழி, 6:2:5) மழ - மாழை = இளமை. மாழை மடமான் பிணையியல் (கலித்.131) மழ - (மழை) - வழை = புதுமை. பாகரிறை வழைமது நுகர்பு (பரிபா. 11:66) ம - வ. மெய்யினத் திரிபு. ஒ.நோ: மிஞ்சு - விஞ்சு. மழ - மழு - மழுக்கை - வழுக்கை. வழுக்கைப்பயல் = சிறு பயல். வழுக்கை - வழுக்கட்டை = சிறு பிள்ளை. வழை - வழைச்சு = புதுமை. சாடியின் வழைச்சற விளைந்த (பெரும்பா. 280) புதுமை சிறுமை அழகு வீரம் முதலியன இளமையொடு தொடர்புடைய கருத்துகள். அதனால், இளமையைக் குறிக்கும் சொற்கள் இப்பொருள்களை உணர்த்தின. மழலை - மதலை = குழந்தை மொழி, குழந்தை, மகன். மதலைக்கிளி = இளங்கிளி. மழ - (மத) - மட - மடம் = இளமை, மென்மை, அழகு, அறியாமை. மடமை = 1. மென்மை. தெளிநடை மடப்பிணை (புறம்.23) 2. அறியாமை அறிவு பெரும்பாலும் ஆண்டுப் பெருக்கத்தால் அடையப் பெறுவதால், இளமையில் அறியாமை மிகுந்திருப்பது இயல்பு. இதனால், இளமைச்சொல் அறியாமையை உணர்த்திற்று. மள் - (மண்) - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணிக் கோரை, மணிச்சம்பா, மணிச்சுறா, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்பயல், மணிப்புன்கு, மணிப்புறா, மணிப்பொச்சம், மணியீரல் முதலிய வழக்குகளை நோக்குக. மண் - மாண் - 1. சிறுவன், இளைஞன், மணவாதான் (பிரமசாரி), மாணாகி வைய மளந்ததுவும் (திவ். பெரியதிருமொழி:8:10:8) 2. குறள், குறளன். குறுமா ணுருவன் தற்குறியாக் கொண்டாடும் (தேவாரம் 164:5) மாண் - மாணி = 1. மணவாதான், மாணவன் கருமாணி யாயிரந்த கள்வனே (திவ். இயற்பா. 2:61) 2. குறள் வடிவம் (திவ். பெரியாழ்வார் திருமொழி திருமொழி, 1: 4: 1 வாபதேச வியாக்கியானம்). 3. சிற்றுறுப்பு. மாணி என்னும் சொல் கன்னடத்திலு முளது. மாண், மாணி என்னும் சொற்கள் வடமொழியி லில்லை. மாண் - மாணவன் = சிறுவன், கற்போன். மாணவன் - மாணவகன் = இளைஞன், கற்போன், மணவாதான், சிறுவன், அறிவீனன். யாழ்ப்பாண அகராதியில், மாணவகன் என்னும் சொல்லுக்கு 8 முதல் 16 ஆண்டுக்குட்பட்ட சிறுவன் என்னும் பொருள் குறிக்கப் பட்டுள்ளது. பொதுவாகக் கல்விகற்கும் பருவம் மணத்திற்கு முந்தியதாத லாலும், மணப்பருவம் ஆடவனுக்குப் பதினாறாண்டென்று அகப்பொருளிலக்கணங் கூறுவதாலும், 8 ஆண்டு முதல் 16 ஆண்டுவரைப்பட்ட இளைஞனை மாணவகன் என்று அழைப்பது தமிழ்மரபிற்கே மிகப் பொருத்தமாம். இன்றும், வசதியுள்ள ஆட வர்க்கெல்லாம் பதினாறாம் ஆண்டிலேயே மணம் நிகழ்கின்றது. ஆரியமணம் எட்டனுள் ஒன்றான பிரமம் என்பது. நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது (தொல். பொருள்.92, உரை) தமிழன் 48 ஆண்டுவரை மணவா திருத்தல் மிக அரிதாகும். வெப்பநாட்டார் முந்தியும் தட்ப நாட்டார் பிந்தியும் மணத்தல் இயற்கை விளைவாகும். இன்றும், மேனாட்டார் பெரும்பாலும் நாற்பதியாண்டு நிரம்பிய பின்னரே மணக்கின்றனர். இந்திய ஆரியரின் முன்னோர் ஆதியில் வடக்கும் வடமேற்குமுள்ள குளிர்நாடுகளிற் குடியிருந்ததினால், அவர்க்கு நாற்பதியாண்டு மணவாதிருக்க முடிந்தது. தமிழர்க்கோ இந் நிலை அன்று மில்லை: இன்றுமில்லை ஆதலால், இளங்கற்றுச் சொல்லியை மாணவகன் என்பது தமிழ்வழக்கேயாகும். மாணவகம் = கல்வி (சிந்தாமணி நிகண்டு) மாணவன் - (மாணகன்) - (மாணக்கன்) - மாணாக்கன். மாணவி மாணாக்கி என்பன பெண்பால் வடிவங்கள். மாணவன் மாணவகன் என்னும் ஈர் ஆண் பெயரும் வட மொழி யில், முறையே, மாணவ மாணவக என ஈறுகெட்டு வழங்குகின் றன. மாணவிகா என்பது வடமொழிப் பெண்பாற் பெயர். மாணாக்கன் என்னும் ஆண்பால் வடிவமும் மாணவி மாணாக்கி என்னும் பெண்பால் வடிவங்களும் மாணவன் என்பதற்கு அடிவழியான கொடிவழிச் சொற்களும் வடமொழியி லில்லை. னகரவீற்றுத் தமிழ்ப் பெயர்கள் வடமொழியிற் பெரும்பாலும் ஈறுகெட்டு வழங்குவது இயல்பு. தொல்காப்பியத்திற்கு ஆத்திரேயன் பேராசிரியன் வகுத்த பொதுப் பாயிரத்தில், இன்னோ ரன்ன தொன்னெறி மரபினர் பல்பெருஞ் சிறப்பின் நல்லா சிரியர் ................................................................................ உடையோ ராகி நடையறிந் தொழுகுநர் நன்மா ணாக்கர் என்ப..................... எனக் கூறப்பட்டுள்ளது. ஆசிரியன், மாணாக்கன் என்னும் இரண்டும் தனித்தமிழ்ச் சொற்களாகும். மாணவன், மாணவகன், மாணாக்கன் என்னும் மூவடிவங்களும், தமிழெழுத்துகளாலேயே அமைந்தவை. ஆரியர் வருமுன்பே தமிழர் கல்வியில் துறைபோயிருந்தனர். ஆசிரிய மாணவ மரபில் கல்வி வழங்கி வந்தது. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் (குறள்.395) செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும் (குறள். 412) என்பவை பிற்காலத்தவையாயினும், முற்கால நிலைமையையும் உணர்த்துதல் காண்க. இனி, ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி (தொல். 1598) சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற உரைப்பது உரையெனப் படுமே. (தொல். 1603) முதலிய பகுதிகளும், முற்காட்டிய பொதுப்பாயிரப் பகுதியும், ஆசிரிய வாயிற் கல்வியை உணர்த்துதல் காண்க. ஆசிரிய மாணவர் ஆரியர்க்கு முற்பட்ட பண்டைக்காலத்தே தமிழ்நாட்டிலிருந்ததினால் அவரைக் குறித்தற்குச் சொற்களும் பழந்தமிழில் இருந்திருத்தல் வேண்டும். கற்போன், கொள்வோன், கோளாளன், கேட்போன் முதலிய மாணவன் பெயர்களும்: கற்பிப்போன், நுவல்வோன், உரைப்போன் முதலிய ஆசிரியன் பெயர்களும்: சூத்திரங்களிலும் செய்யுள்களிலும் மோனையெதுகைக் கேற்ற வாறு அமைக்கப்பெறும் பொதுச் சொற்களேயன்றி, மரபு நெறிப் பட்ட சிறப்புச் சொற்களல்ல. கற்றுச்சொல்லி என்பது இடைக்காலத்தெழுந்த தொடர்மொழிப் பெயர். மாணவன் என்னும் சொல்லின் அமைப்பும் தமிழ்முறைப் பட்டதே. மாண், பகுதி: அவன், விகுதி. ஊனவன், கானவன், வானவன், மீனவன் முதலிய பெயர்களை நோக்குக. இவற்றின் பகுதிகளை ஒரு கால் ஊனம், கானம் முதலிய மகர வீற்று வடிவங் களாகக் கொள்ளினும், ஆனவன், கோனவன் முதலிய பெயர் களின் பகுதிகளை அங்ஙனங் கொள்ள முடியாமை காண்க. ஆனவர் = இடையர் (அக.நி.). மாணவகன் என்பது மாணவன் என்பதன் விரித்தல். மாணாக்கன் என்பது மாணவன் என்பதன் திரித்தல். மாணவன் - மாணவி. மாணாக்கன் - மாணாக்கி என ஆண்பாற் பெயர் அன்னீறும், பெண்பாற்பெயர் இகரவீறும் பெற்றிருப்பது, தமிழுக்குச் சிறப்பாம். இதுகாறும் கூறியவற்றால், தென்சொற்கு விதிக்கப்பட்ட எழுநிலைமைகளுள் ஆறு (1,2,3,4,6,7) மாணவன் என்னும் சொல்லுக்கு ஏற்றல் காண்க. (செந்தமிழ்ச் செல்வி நவம்பர் 1949) மாத்திரை (1) மாத்தல் அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவு குறித்த சொல். மா + அனம் = மானம் = அளவு. படி (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா + திரம் = மாத்திரம் = அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லை வழக்கு. இதன் விலை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்பது மேலை வடார்க்காட்டு வழக்கு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித்.47. 22). (தி.மா.241) மா + திரை = மாத்திரை (மருந்தளவு அல்லது எழுத் தொலியளவு) மா என்பது தொன்று தொட்டு வழங்கிவரும் தமிழ்க்கீழ்வாய் எண்ணுப் பெயர்களுள் ஒன்று. அதன் அளவு (க/20) (1/20) மா (ம.), மாவு (தெ.). அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ்வளவால் ஏற்பட்ட எண்ணுப் பெயர்கள். ஒரு வேலியில் இருபதில் ஒன்றான நில அளவுமா எனப்படும். மாநிறை வில்லதும் பன்னாட்காகும் (புறம்.184) (தி.ம.241) ஓர் எடையில் இருபதில் ஒன்றான நிறையும் மா எனப்படும் (தொல் 170 உரை). இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர். ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத் தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால், இருக்குவேதத்தில் மா. மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டி ருத்தல் நோக்கிமயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அது மாத்திரம், கேட்ட மாத்திரத்தில் மாத்திரைக்கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப்பொது வழக்காக வழங்குதல் காண்க. அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல்வளத் தையே காட்டும்.மாத்திரை யின்றி நடக்குமேல் நாலடி. 242) தி.ம.24 என்பதனால் மாத்திரை என்பதன் அடிப்படைப்பொருள் அளவு என்பதே என்று அறிந்து கொள்க. மாத்திரம் - மாத்ர (வ.). மாத்திரை - மாத்ரா (வ.). Metram L. Metron (G.K.) Meter (E.) Metre (E.) என்னும் மேலையாரியச் சொற்கள் Mete (மதி - அளவிடு) என்னும் முதனிலையினின்று திரிந்தவை. (தி.ம.241 -242) மாத்திரை (2) மாத்திரை - மாத்ரா (இ.வே.) Gk metron, L meter, E meter, metre, measure. இச்சொல் மேலை யாரியத்திலிருப்பதனால் மட்டும் ஆரியச் சொல் ஆகிவிடாது. மேலை யாரியத்திலும் நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள் தென்சொல்லா யிருப்பதை, The Primary Classical Language of the World என்னும் நூலைக்கண்டு தெளிக. (வ.வ:227). மாதம் - மா, மாஸ (இ.வே.) மதித்தல் = அளவிடுதல். மதி =1. அளவு. 2. அளவிடப்பெற்ற பொருள். ஏற்றுமதி, இறக்குமதி என்னும் சொற்களை நோக்குக. 3. பக்கம், மாதம் முதலிய கால அளவிற்குத் துணையான நிலா. மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள்.782). 4. நிலவினாற் கணிக்கப் பெறும் கால அளவு (மாதம்). 5. ஓரை. ஆறிரு மதியினும் (சிலப். 26: 25). மதி - மாதம். ஒ. நோ: மானம் = அளவு. As mona, E moon, Gk men, mene, L mensis, Mena, Ger mano, mane, Mond, Goth mena, Lith menu, menesis, Slav meseci. (வ.வ.) இனி, மத்து - மத்தி - மதி = மயக்கஞ் செய்யும் நிலா என்றுமாம். ஒ.நோ: L luna = moon, lunatic = insane, lunacy = insanity. வடவர் மா3 (அள) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அதன் பொருந்தாமையையும்,ஒருகாற் பொருந்துவதாகக் கருதினும் அதுவும் தென்சொல்லே யாதலையும், காண்க. சென்னை ப.க.க.த. அ. மாஸ - மாதம் என்று தலைகீழாகக் காட்டும். மதி என்னும் மூலத்தினின்று, மாதம் என்னும் தகரச் சொல்லன்றி மாஸ என்னும் ஸகரச் சொல் எங்ஙன் தோன்றும்? (வ.வ:229). மாதர் மாதர் - மாத்ரு (இ.வே.) = தாய். மா = அழகு. மாவீழ் பள்ளி (ஞானா. 10:6). மா - மாது = 1. அழகு. மாது குலாயமென்னோக்கி (திருக்கோ.316) 2. (அழகுள்ள) பெண். வாட்டடங்கண் மாதே (திருவாச. 7 :1) 3. (பெரும்பாலும் அழகினால் ஏற்படும்) காதல். மாதுகு மயிலினல்லார் (சீவக. 363). மாது - மாதர் = 1. அழகு. (பிங்). மாதர்கொண் மாதரெல்லாம் (திருவாத. 4. திருவம்பல.40). 2. பெண். மறுவுண்டோ மாதர் முகத்து (குறள்.117). 3. காதல். மாதர் காதல் (தொல். சொல்.328). (வ.வ:230). மாதர் - மாதராள் = (அழகுள்ள) பெண். மடமொழி மாதராள் நாலடி 384). பெண்கள் பெரும்பாலும் தாய்மாராதலாலும், தெய்வப் பெண்டிர் தாய்போற் கருதப் பெறுவதாலும், பெண்ணின் பெயர் தாய்க் கருத்தையுங் கொள்ளும். எ-டு: மலைமகள், மலைமடந்தை, மலைமாது. இம்முறையிலேயே, மாதர் என்னும் சொல்லும் தாய்ப்பொருளைப் பெற்றது. Gk mater, L mater, E mother. G. muotar, mutter, other, Lith mote, Slav mati. வடவர் காட்டும் மூலம் மா3 = அள. “derivation from 3. ma# very doubtful” என்று மா. வி.அ. குறித்திருத்தல் காண்க. (வ.வ: 229 - 230) மாந்தம் மாந்தம் - மாந்த மொத்து = 1. தடித்த - வன் - வள் - து. 2. சுறுசுறுப்பில்லாத - வன் - வள் - து. மொத்து - மத்து - மந்து - மந்தம் = செரிமான வுறுப்பின் சுறுசுறுப்பின்மை, செரியாமை. மந்தம் - மாந்தம் = செரியாமையாற் குழந்தைகட் குண்டாகும் நோய். வடவர் காட்டும் மூலமும் இதுவே. (வ.வ:230) மாந்தன் செருக்கடக்கம் இவ் வுலகிலுள்ள உயிரினத் தொகுதியுள், மாந்தன் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ற மதியுடைமைபற்றி உயர்ந்தவனே. அதனால், அவன் தன்னை உயர்திணை என்று கூறிக்கொண்டது உத்திக்கும் பொருந்துவதே. ஆயினும் அவன் தன்னை இறப்ப மதித்து, இயலாது என்னும் சொல் என் அகரமுதலியில் இல்லையென்றும், எண்பெருஞ் சித்துக்களை அடைவேன் என்றும், இறைவனே இல்லை யென்றும், உலக முழுவதையும் ஒரே குண்டில் ஒழித்துவிடுவேன் என்றும், தருக்கியும் செருக்கியும் தட்டுக்கெட்டுத் தடுமாறிக் கெடாவண்ணம், அவன் அவிந் தடங்கி அறிவுபெறும் வகையில், அஃறிணையுயிர்கட்கும் சிற்சில பேறுகளை ஒத்த அளவிலும் உயர்ந்த அளவிலும் இறைவன் அருளியிருப்பது மிகமிகக் கவனிக்கத்தக்கது. 1. நீடுவாழ்வு மாந்தன் இவ்வுலகில் அடையும் பேறுகளுள் நீடுவாழ்வும் ஒன்றாம். இன்பச் சிறப்பு அதன் மிகுதியை மட்டுமின்றி நீட்சியையும் தழுவும். உயிரினங்களின் வாழ்நாட் பேரெல்லையை நோக்கின், இனம் உயர வுயர வாழ்நாள் குறுகுவதைக் காணலாம். உயிரினம் வாழ்நாட் பேரெல்லை (ஆண்டு) மாந்தன் 100 யானை 100 ஆமை 120 முதலை 300 திமிங்கிலம் 500 br«ku«(American red-wood) 4000 கலிபோர்னியாவிலுள்ள ஒரு மரத்தின் (sherman) அகவை ஐயாயிரம் ஆண்டு வரை மதிக்கப்பெறுகின்றது. மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை. என்று கபிலர் கூறினாரேனும், இக்காலத்தில் அறுபதாண்டிற்கு மேற்பட்ட தெல்லாம் இறைவனால் அளிக்கப்பெறும் நீட்டிப் பென்று கருதப்படுகின்றது. நூறாண்டிற்கு மேற்பட்டவரும் ஒரோவொருவர் ஆங்காங்கிருப்பது உண்மை யேனும், அது அருகிய வழக்காதலின் கணக்கிற் கொள்ளப்படுவதன்று. ஆகவே, அறுபதாண்டு வாணரும் இக் காலத்து நீடுவாழியராம். அசுவத்தாமன், மாவலி, (மகாபலி) முதலிய எழுவரும் என்றும் வாழியர் என்றும், மார்க்கண்டேயன் என்றும் பதினாறாட்டை யிளைஞன் என்றும், கூறுவதெல்லாம் பொருளொடு புணராப் புன்மொழியென விலக்குக. இனி, முதுபழங்கால மக்கள் பன்னூறாண்டு வாழ்ந்திருந்ததாக மறைநூல்கள் கூறுகின்றனவே யெனின், அதற்கேற்ப அஃறிணை யுயிரிகளின் வாழ்நாளும் நீண்டிருந்ததெனக் கூறி விடுக்க. 2. வன்மை. திமிங்கிலமும் யானையும் ஒட்டகமும் பருமைக்கும், அரிமாவும் வேங்கையும் காண்டாவும் வலிமைக்கும், சிறந்தவை. உடற் பருமை, உறுப்புரம் ஆகிய இரண்டினாலும் வன்மையுண்டாம், இவ் விரண்டுமற்ற பாம்பும் சுரமண்டலமும் போன்ற சிற்றுயி ரிகள் நச்சுறுப்பினால் வன்மை பெற்றுள்ளன. பாம்பைக் கண் டாற் படையும் நடுங்கும், சுரமண்டலம் கடித்தாற் பரமண் டலம், அரணை தீண்டினால் மரணம் (உயிரி - பிராணி) இற்றை மாந்தன் துமுக்கி (துப்பாக்கி)யொடு வேட்டைக்குச் செல்லினும், குண்டு தப்பினாற் கொடுவிலங்கால் கொல்லப் படுவது திண்ணம். இனி, பருமையும் வலிமையும் பெற்ற இருதிணை யுயிரிகளையும் எளிதிற் கொல்லத்தக்க ஊனக் கண்ணிற்குத் தெரியாத, நுண்ணிய உலண்டுகளும் (germs) உள்ளன. 3. அழகு இயங்குதிணை (சங்கமம்) உயிரிகளுள், சில பறவையினங்கள் அழகிற்குச் சிறந்தவை. மயிலும் கிளியும் அழகிற்கு எடுத்துக் காட்டாதலின், அவற்றின் பெயர்கள் அழகிய பெண்டிர்க்கு உவமையாகு பெயராக இலக்கியத்தில் வழங்கிவருகின்றன. பாலித் தீவிலுள்ள விண்ணகப் பறவைகள் (paradise birds) வண்ணத் தாலும் வண்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவை. நிலைத்திணை (தாவரம்) உயிரிகளுள்ளும் ஒரு சில மரஞ் செடி கொடிகளும் அவற்றின் உறுப்புகளும் கண்கவர் கவின் கொண்ட வை. அதனாலேயே, ஆடை யணிகளையும் கட்டடங்களையும் தட்டுமுட்டு களையும் அணி செய்யும் ஓவியம். பெரும்பாலும் இலை வடிவாகவும் மலர் வடிவாகவும் இருக்கின்றது. இலை முகப் பைம் பூண் என்றார் குமரகுருபரர். பூவாராடை என்றார் உலோச்சனார் (புறம்.274). பூக்கனிந்து என்றார் முடத்தாமக்கண்ணியார் (பொருந.82). 4. நாற்றமின்மை மாந்தன் நாள்தொறும் மூவேளையும் முழுகிக் குளித்தாலும் சவர்க்காரமிட்டுத் தேய்த்தாலும், சாந்தமும் சுண்ணமும் பூசினாலும் வியர்வை நாற்றம் அவனைவிட்டு விலகுவதில்லை. பல விலங்குகளும் பறவைகளும் பன்னாட் குளியாதிருப்பினும், அவற்றின் உடலம் தீ நாற்றம் தருவதில்லை. 5. எச்சிலன்மை கலத்தில் அல்லது இலையில் படைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் மாந்தன் கைபடினும் எச்சாம். ஆயின் அணிலுங் கிளியும் கடித்த காய் கனிகளும், ஈயும் எறும்பும் மொய்த்த உண்டிவகைகளும், நாய் கௌவிய வேட்டையுயிரிகளும் எவர்க்கும் ஏற்பாம். ..... ................... ..... ............ நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு (36) என்பது பழமொழிச் செய்யுள். இனி, மாந்தன் கைபடினும் விரைந்து கெடும் கண்ணுறையும் (மசாலையும்)கறிவகைகளும், கோழி, குருவி முதலிய சில பறவை களும் ஆடு, மாடு முதலிய சில விலங்குகளும் வாய் வைப்பினும் கெடுவதில்லை. 6. தீட்டன்மை அரசன் இறப்பினும் இழவு கேட்கச் செல்பவர்க்குத் தீட்டாம். ஆயின், செத்த விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பின் எவருக்கும் தீட்டில்லை. 7. கழிபொருள் தூய்மை மாட்டின், சிறப்பாக ஆவின், சிறுநீரும் சாணமும் நிலத்தையும் தளத்தையும் துப்புரவாக்கும் கருவிகளாக மட்டுமன்றி, இருபால் மக்கட்கும் தீட்டுக் கழிக்கும் திருப்பொருள்களாகவும், இத்தேயத்தில் தொன்றுதொட்டு ஆளப்பெற்று வருகின்றன. புலம்பனின் (ஆன்மாவின்) மும்மலத்தையும் போக்குவதாகக் கருதி, சிவநெறியாரால் மேனிமுழுதும் பூசப்பெறும் திறுநீறு, ஆவின் எருச்சாம்பலே. இனி, சிவனடியார் மட்டுமன்றிச் சிவபெருமானும் திருநீறு பூசுவதாகச் சொல்லப்பெறும். பூசுவதும் திருநீறு என்றார் மாணிக்கவாசகர் (திருச்சாழல்). ஆவின் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் ஆகியவற்றின் கலவையாகிய ஆனைந்து (பஞ்சகவ்வியம்) சிவன் கோயில்களில் தெய்வச்சிலைத் திருமுழுக்கிற்குப் பயன்படுத்தப் பெறுகின்றது. திருமால் நெறிப் பெண்டிர் சிலர் பிள்ளைப்பேற்றுத் தீட்டுக் கழிக்க ஆனைந்து உட்கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது. காலஞ்சென்ற துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தன் கலவையே ஆனைந்து என்பர். இது உத்திக்குப் பொருத்தமே: ஆயின் இற்றை வழக்கிலில்லை. 8. ஒழுங்கு மாந்தன் தோன்றி ஐந்திலக்கம் ஆண்டிற்கு மேலாயினும் இன்னும் பல நாட்டு மாந்தரிடைக் கூட்டுறவும் ஒழுங்கும் தோன்றவில்லை. நீரில் வாழும் இறாவும் மீனும் கூட்டங் கூட்டமாக இயங்கு கின்றன. நிலத்தில் வாழும் ஓநாயும் மானும் போன்ற விலங்குகள் மந்தை மந்தையாக மேய்ந்து தத்தம் சேக்கை திரும்புகின்றன. நிலத்திலும் வானிலும் இயங்கும் வெட்டுக்கிளிகளும் குருவிகளும் படை படையாகப் பறந்திறங்குகின்றன. சில வெட்டுக்கிளிப் படைகள் வெயில் மறையுமளவு இலக்கக் கணக்கான கிளிகள் செறிந்தவை. ஒரு தேன் கூட்டிலுள்ள நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒரு தாயும் பல ஆணும் கழிபல பெண்ணும் சேர்ந்த ஒரு குடும்பமாய் இருந்து தத்தம் வேலையை ஒழுங்காகச் செய்து வருகின்றன. சிறுமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பெறும் சிற்றெறும்பும், இலக்கக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஒரு வளைக்குள் குடியிருந்து எக்காரணத்தையிட்டும் ஏனை வளையெறும்பு களோடு மோதாமல், ஊணிருக்குமிடத்தை ஒற்றாலறிந்து தலைமையும், முற்காவலும் பிற்காவலும் அமைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாகவோ சிற்சிலவாகவோ ஒழுங்கான வரிசை யாகச் சென்று, இழுக்கவியலாததை இருந்த விடத்தும் இழுக்க வியல்வதை வளைக்கு இழுத்துச் சென்றும் ஒற்றுமையாகப் பகுத்துண்டு தொன்றுதொட்டு நடாத்திவரும் உயரிய குடியரசு, மேனாட்டாரும் நாணித் தலைகுனியத்தக்க வியத்தகு செய்தியாம். நாய் முகத்தையுடைய ஒருவகைக் குரங்கினம் (baboon) வேலைப் பகுப்பும் ஆட்சியொழுங்கும் உடையதென நூல்கள் கூறும். 9. பண்பாடு மாந்தரிடைக் காண்டற்கரிய பல பண்பாட்டுக் குணங்கள் அஃறிணை யுயிர்களிடத்துக் காணப்படுகின்றன. குருவி, காகம், புறா முதலிய பறவைகள் ஒருமனை மணத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றன. அன்றில், மகன்றில் என்னும் பறவைகள் இணைபிரியாது வாழ்ந்து ஒன்றையொன்று பிரிவாற் றாமல் உடனிறக்கும் உண்மைக் காதலன. கவரிமான் என்னும் திபேத்தியக் காட்டெருமை, தன் உடம் பினின்று ஒரு மயிர் வீழினும் உயிர்விடத்தக்க தலையாய மான முடையது. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (குறள். 969) என்றார் திருவள்ளுவர். காகம் ஓரிடத்து உணவைக் கண்டவுடன் தன் இனத்தை அழைத்து உடனுண்கின்றது. காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள (குறள். 572) என்றார் திருவள்ளுவர். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று (குறள். 108) கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் (குறள்.109) என்னும் இரு குறள்கட்கும் இலக்காயது நாயினம் ஒன்றே. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் (நாலடியார். 213) என்னும் உண்மை என்றும் எங்கும் காணலாம். கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி... ... (190) என்னும் புறப்பகுதி, புலி பசிப்பினும் இடப்பக்கம் விழுந்த விலங்கை உண்ணாக் கோட்பாடுடையது எனத் தெரிவிக்கும். கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல்... ... ... (99) என்னும் குறுந்தொகைச் செய்யுள், ஒரு மந்தியின் தலையாய காதலையும், அதன் குட்டியைப் பேணும் பொறுப்புணர்ச்சி யையும், அக் குட்டியை ஏற்றுக் கொண்ட பிற குரங்குகளின் கூட்டுற வன்பையும், ஒருங்கே உணர்த்தும். 10. மதிநுட்பம். விலங்குகட்குள் நரி வலக்காரத்தில் (தந்திரத்தில்) சிறந்ததென்பது மரபுக் கூற்று. வலக்காரம் மதிநுட்பக் கூறுகளுள் ஒன்று. குறவை மீன், எலி, மூட்டைப்பூச்சி முதலிய உயிரினங்கள் மாந்தர் கைக்குத் தப்புவதற்குக் கையாளும் விரகுகள் (உபாயங்கள்) அவற்றின் மதிநுட்பத்தைச் சிறப்பக் காட்டும். 11. புலநுணுக்கம் பாம்பு சிறப்பாக நல்ல பாம்பு, கூர்ங்கட் புலனாலும் மோப்பத் தினாலும் எல்லா ஆட்களையும் எளிதாய் அடையாளங் கண்டுகொள்கின்றது. அதனால், ஒருவனால் அடியுண்டு தப்பிய நாகம் பின்னர் அவனைக் கண்டு கொன்றுவிடும் என்பது உலக நம்பிக்கை. மலையாள நாட்டு இல்லங்களில் படைப்பினாலும் பூசையினாலும் பேணப்பெறும் நாகங்கள், தம்மைப் பேணுவோர் இருண்ட இரவில் தம் பக்கமாகச் செல்லினும், அவரையும் அவரொடு கூட வரும் பிறரையும் கடிப்பதில்லை என்று, செய்தித்தாட்கள் அறிவிக்கின்றன. பாம்பு நுண்ணிய செவிப் புலனும் உடையது. அரவம் அரவம் அறியும் என்பது பழமொழி. இடியோசை நாகத்திற்கு இன்னாதது. கழுகினம் நெடுந்தொலைவில் கிடக்கும் விடக்கூனையும் முகர்ந்தறியும் ஆற்றலுடையது. வழக்கற்றுப்போன அசுணம் என்னும் விலங்கு, இன்னிசைக்குச் சிறந்த எஃகு செவியுடைய தென்றும், அதனை வேட்டையாடுபவர் அதனருகே மறைவிலிருந்து இனிய யாழை இயக்கி அது இன்புற்று மயங்கி நிற்கும்போது திடுமெனக் கடும்பறை யறைய, அது உடனே இறந்துவிடுமென்றும், இலக்கியம் கூறும். யானை நீடிய நினைவாற்றலுடையது. 12. வினைத்திறம் வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோருமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது என்னும் ஔவையார் பாடலொன்றே சில அஃறிணை யுயிரிகளின் வினைத்திறத்தைக் காட்டப் போதுமானது. 13. பயன்பாடு உணவு, மருந்து, கருவி, வினைத்துணை, காட்சியின்பம், காவல், ஆடையணி, நறுவிரை, உறையுள், தட்டுமுட்டு முதலிய பல்வேறு வகையில் இயங்குதிணை, நிலைத்திணை., ஆகிய இருபால் அஃறிணை யுயிரிகளும், உடம்பு முழுமையும் மட்டுமன்றி உறுப்புறுப்பாகவும், மாந்தர்க்குப் பயன்பட்டு வருகின்றன. மாடு செல்வம்போற் பயன்படுவதால், மாடு என்பதே செல்வத்திற்குப் பெயராயிற்று, (pecuniary என்ற ஆங்கிலச் சொல்லும் இக்கருத்ததே - L. peccv = cattle). 14. பன்னா ளுணவேற்றல் ஒட்டகம் ஒரு மாதத்திற்கு வேண்டும் உணவை ஒருங்கே உட்கொள்ள வல்லது. ஒருநா ளுணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ வறியா இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது என்று புலம்பினார் ஔவையார். 15. நீடுண்ணாமை ஒட்டகம் பன்னாளுணவை ஒருங்குட் கொள்ளலில் நீடுண்ணாமையும் அடங்கும். மூட்டைப்பூச்சி மும்மாதம் உண்ணா துயிர் பிழைக்கும். 16. பிறந்தவுடன் இயங்கல் சில பறவைக் குஞ்சுகளும் விலங்குக் குட்டிகளும் பிறந்தவுடன் இயங்க வல்லன. 17. மூவிட வாழ்க்கை சில ஊருயிரிகள் நிலத்திலும், நீரிலும், சில பறவைகள் நிலம் நீர் வான் ஆகிய மூவிடத்திலும் இயங்க வல்லன. 18. வெட்ட வெட்டத் தளிர்த்தல் எல்லா நிலைத்திணை உயிரிகளும் வெட்ட வெட்டத் தளிர்க்கும். வாதமடக்கி போன்ற சில மரத்தின் கிளைகள், காய்ந்த பின்பும் மழை பெய்யின் தளிர்க்கும். அட்டை, பூரான் போன்ற பூச்சிகள் நடுவில் வெட்டுண்ட பின்பும் பிழைக்கும். 19. காப்பு சில மரஞ்செடி கொடிகளும் அவற்றின் உறுப்புக்களும் நோயி னின்றும் பேயினின்றும் காக்கும் திறத்தனவாய்க் கொள்ளப் பெறும். மூவேந்தரின் அடையாளப் பூக்களும், போர்ப்பூக்களும், கடிமரங்களும் இத்தகையன. வேப்பிலை யும் வெண்சிறு கடுகும் பேய்க்காப்பெனப்படும். நரிக்கொம்பு மிகுந்த பொங்கை (அதிர்ஷ்டத்தை) உண்டு பண்ணும் என்பது பொது மக்கள் நம்பிக்கை. 20. தெய்வம் சில விலங்கு பறவைகளின் உருவங்கள் தொன்றுதொட்டுத் தெய்வங்களாக வணங்கப்பட்டு வருகின்றன. கலுழனும் (கருடன்) நல்லபாம்பும் இன்றும் உயிருள்ள நிலையில் தொழப்பெறு கின்றன. நன்மைப் பேறும் தீங்கச்சமும் தெய்வத் தொடர்பும் இதற்குக் காரணமாம். இறுதியிற் கூறிய இரண்டும் மூடப்பழக்கமே யாயினும் பெரும்பாலும் மாந்தர்க் கில்லாத சிறப்பைக் காட்டுகின்றன. சிலர் மாந்தர்க்குப் பேசுந்திறன் பிறவுயிரிகட் கில்லாத பெருஞ் சிறப்பென்பர். சில கிளிகளும் பூவைகளும் கற்றுக்கொடுத்த அளவிலாவது பேசுந்திறனுடையன. இதுகாறும் கூறியவற்றால், மாந்தன் எக்காரணத்தையிட்டும் செருக்கடை யாது. முடிசார்ந்த மன்னரும் முடிவி லொரு பிடி சாம்பராகும் உண்மையை நினைந்து, இறைவன் திருவடியடைந்து உய்வானாக. (தென்மொழி 1959.) மாந்தன் தோன்றிய வகை உயிரினங்கள், அடிமட்டத்திலிருந்து உச்சிநிலை வரை, படி முறையாய்த் தாழ்ந்த இனத்திலிருந்து உயர்ந்த இனமான ஒன்றினொன்று தோன்றி வளர்ந்தன வென்று, நிலநூலார் (Geologists) உயிர்நூலார் (Biologists), மாந்தனூலார் (Anthropolo gists) முதலிய அறிவியல் நூலாரால் நம்பப்படினும், கடவுள் நம்பிக்கையில் உறைத்து நிற்கும் பெரும்பான் மக்களால் ஒப்புக்கொள்ளப் பெறவில்லை. இங்ஙனம், மாந்தன் தோற்றம் பற்றித் திரிபாக்கம் (Evolution) கடவுட்படைப்பு (Divine Creation) என இருவேறு கொள்கைகள் உள. திரிபாக்கக் கொள்கையரும், திரிபாக்கம் இறைவனால் நிகழ்த்தப் பெற்றதென்று கொள்ளும் நம்புமதத்தாரும் (Theists), அது இயற்கையாய் நிகழ்ந்ததென்று கொள்ளும் நம்பாமதத்தாரும் (Atheists), என இரு சாரார். குரங்கு வகைகளுள் காட்டு மாந்தன் (Orang-outang), குரக்கு மாந்தன் (Pithecanthropos) முதலிய மாந்தற் போலிகள் (Anthropoids) தோற்றத்தில் மாந்தனை ஓரளவு ஒத்திருப்பினும் தோல் மென்மை, மூளை வளர்ச்சி, பேச்சுத்திறன், நகையழுகை மெய்ப்பாடுகள் முதலிய மாந்தன் சிறப்பியல்புகளின்றி விலங்கு நிலையிலேயே இருத்தலால், குரக்கினம் உடலமைப்பில் மாந்தனுக்கடுத்த நிலை யிலுள்ள விலங்கினம் என்று கொள்வதல்லது, குரங்கினின்று மாந்தன் தோன்றினான் என்று கொள்வது பொருந்தாது. இங்ஙனமே ஏனையினங்கட்கும் வடிவொப்புமையன்றிப் பிறப்புத் தொடர்பு கொள்வதற்கிடமில்லை. காலந்தோறும் உயிரினங்கள் வேறுபட்டும் உள்ளன. பல்வேறு நிலப்படைகளிற் காணப்பெறும் எலும்புக் கூடுகளும் கல்லுடம்புகளும் (Fossils) தாழ்ந்த இனங்களைக் கீழும் உயர்ந்த இனங்களை மேலுமாகக் காட்டுகின்றனவெனின், அது இறைவன் உயிரினங்களை ஏறுவரி சையிற் படைத்தானென்று கொள்வதற்கன்றித் திரிபாக்கக் கொள்கைக்குச் சான்றாகாது. மாந்தன் துமுக்கி (gun) போன்ற பொறியியற் படைக்கலங்களை ஆக்கிக் கொள்ளு முன்பும், அவன் தோன்று முன்பும், இருந்த கைம்மலைகளும், பனையும் தென்னையும் போன்ற பாம்பு பல்லிகளும் எருமையளவான பெரு வாவல்களும், வலிமைமிக் கிருந்தும் வளர்ச்சியின்றியும் எஞ்சாதும் இறந்துபட்டன. ஆகவே, ஏனையினங்களைப் போன்றே மாந்தனையும் இறைவன் படைத்தானென்று கொள்வதே சாலப் பொருத்தமாம். மாந்தன் தோற்றம் பற்றியும், ஒரு வயிற் பிறப்பு (Monogeny), பலவயிற் பிறப்பு, (Polygeny) என இருவேறு கொள்கை யுள. வரலாற்றிற் பின்னுக்குச் செல்லச் செல்ல மாந்தர் தொகை சிறுத்துப் போவதாலும், இன்று மக்கட்டொகை மிக்குள்ள பல தீவுகளும் நிலப்பகுதிகளும் ஒரு காலத்தில் மாந்தன் குடியிருப் பின்றி யிருந்தமையாலும், தட்பவெப்ப நிலையினாலேயே மக்கள் நிறம் வேறுபட்டுத் தோன்றுவதனாலும், எந்நாட்டு ஆடவனும் எந் நாட்டுப் பெண்டொடும் கூடி வாழ்வதனாலும், எவரும் எந்நாட்டு மொழியையுங் கற்கவும் எந்நாட்டு நாகரிகத்தையும் மேற்கொள்ளவும் இயல் வதனாலும், பல நாட்டுப் பழக்கவழக் கங்கள் ஒத்திருப்பதாலும், பலமொழிகள் ஒன்றோடொன்று தொடர்புடைமையாலும், மொழிகள் திரிபாலுங் கலப்பாலுமே ஒன்று பலவாய்ப் பெருகி வந்திருப்பதனாலும், மக்களுறவினின்று பிரிக்கப்பட்ட பிள்ளைகள் ஒரு மொழியும் பேசாமையாலும், பலநாட்டு அறிஞர் கருத்து ஒன்று படுவதாலும், மன்பதை முழுவதும் அநாகரிக நிலையிலிருந்தே நாகரிகத்தை யடைந்திருப்பதனாலும், ஒரே பெற்றோரிணையினின்றே மக்களெல்லாம் தோன்றியிருத்தல் வேண்டும். இது வரலாறு தழுவிய முடிபே யன்றிச் சமயக் கொள்கையன்று. மாந்தன் நிலைகள் 1. தேவ மாந்தன் (Homo Divinus). 2. இயற்கை மாந்தன் (Homo Naturalis). 3. அறிவுடை மாந்தன் (Homo Sapiens) தேவ மாந்தன் என்னும் நிலையைக் கிறித்தவ இசலாம் மதங்களே கொள்கின்றன. சிவனிய (சைவ) மாலிய (வைணவ) சமண புத்த மதங்கள் கொள்வன ஏனையிரண்டுமே. அவ்விரண்டையும் அவை தளையுயிர் என ஒன்றாகவே கொள்கின்றன. தேவ மாந்தன் உலகில் வாழ்ந்ததாகச் சொல்லப்படினும், நடை யுடை மொழி முதலியவற்றில் உலகியல் மாந்தனின்றும் வேறு பட்ட வனாதலால், அவன் செய்தி ஈண்டாராய்ச்சிக் குரியதன்று. உலக முழுதும் பரவிய இயற்கை மாந்தர் முதற்கண் விலங்காண்டி (Savage) நிலையிலேயே இருந்தனர். பின்னர் அவருட் பலர் அரைநாகரிக நிலை யடைந்தனர். அதன் பின்னர் அறிவுடை மாந்தர் என்னும் நாகரிக மாந்தர் தோன்றினர். ஆதலால், உலக மாந்தர் இன்று இம் மூவகை நிலையிற் காணப்படுகின்றனர். ஆயினும், நாகரிக மாந்தர் தொடர்பினால் விலங்காண்டியார் மிகச் சிறுபான்மையராகியுள்ளனர். விலங்காண்டி நிலைக்கும் அரை நாகரிகத்திற்கும் இடைப்பட்ட நிலையை அநாகரிகம் (Barbarism) எனலாம். முதன்முதல் தோன்றிய அறிவுடை மாந்தன் தமிழனே. பண் பாட்டியல் மாந்தனூலும் அவன் தோற்றத்தோடேயே தொடங்கு கின்றது. மாந்தன் பிரிபு நடுவம் (Centre of Diffusion of Man) மாந்தனினம் குமரிக்கண்டத்தினின்றே ஞாலத்தின் பல் வேறிடங் கட்கும் பிரிந்துபோயிருத்தல் வேண்டும். இதற்குச் சான்றுகள் 1. இற்றையுலகில் முந்தியல் மாந்தராயுள்ள ஆத்திரேலியரும் தென்னாப்பிரிக்கரும் குமரிக்கண்டத்தைச் சேர்ந்தவரே. தென்னமெரிக்கரும் குமரிக்கண்டத்தினின்றே சென்றிருத்தல் வேண்டும். 2. குமரிக்கண்டம் நண்ணிலக்கோட்டைச் சார்ந்த ஞாலநடு விடம். 3. தமிழ் சொல்வளர்ச்சியின் ஐவேறு நிலைகளைக் காட்டி நிற்றலால், அசைநிலைக் காலத்தில் சீனரும் மங்கோலியரும் கொளுவுநிலைக் காலத்தில் ஊரல். ஆல்தேக்க மொழியினரும், பகுசொன்னிலைக் காலத்தில் மேலையாரியரும், பிரிந்து போயிருக்கலாமென்று கொள்ளப் போதிய இடமுண்டு. ஆத்திரேலியரும் ஆப்பிரிக்கரும் மொழித் தொடக்கநிலையில் தாம் இருந்த இடத்திலேயே தங்கிவிட்டனர். திரவிடர் நேர் வடக்கே தொடர்ந்து சென்று செந்தமிழைக் கொடுந் தமிழாகவும் கொச்சைத் தமிழாகவும் சிதைத்துக் கொண்டவர். 4. பண்டை யெகிபதிய வரலாற்றை ஆராய்ந்த வில்லியர் தூவர்ட்டு (Villiers Stuart) என்பவர், ஐரோப்பியரின் முன்னோருட் பெரும்பாலார் ஆசியாவினின்று பாபெல் மந்தெபு (Babel Mandeb) என்னும் நீரிணைப்பு (Straits) வழியாக ஆப்பிரிக்கக் கரையேறி எத்தியோப்பியாவிற் சில காலந் தங்கியபின், எகிபது நாட்டு நீலாற்று வெளிநிலத் திற்குப்பரவினரென்றும், பின்பு அங்கிருந்து நண்ணிலக் கடல் கடந்து ஐரோப்பாவிற் குடியேறி ஆரியராக மாறினரென்றும், எகிபதியக் குறுநில மன்னரெல்லாரையும் முதன் முதலாக ஒன்றாக இணைத்து ஓரரசாட்சி நிறுவிய மெனெசு (Menes) வேந்தனும் தெற்கத்தியானேயென்றும், எகிபதிய மொழி ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் மூலமான அசைநிலை மொழியென்றும், அது சமற்கிருதத்திற்கு மூவாயிரம் ஆண்டு முற்பட்டதென்றும், தம் ஓர் எகிபதிய அரசியின் பள்ளி படைப் படமாடம் (The Funeral Tent of An-Fgyptian Queen) என்னும் வரலாற்றாராய்ச்சி நூலின் இறுதியிற் கூறியுள்ளார். முற்காலத்தில் அரபிக்கடற்பரப்பு நிலமாயிருந்ததினால் குமரிக்கண்டத் தினர் நிலவழியாக வட ஆப்பிரிக்காவிற்குச் சென்றிருத்தல் கூடும். 5. நோவா காலத்துப் பெருவெள்ளத்தின் பின் மக்கள் கிழக் கினின்று வந்தார்களென்று திருமறை கூறுகின்றது. மக்கள் கிழக்கேயிருந்து வழிச் செல்கையில் சினெயார் நாட்டிலே சமநிலத்தைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள். (முதற் பொத்தகம், 11:2.) 6. நோவா காலத்திற்கு முன்பே ஐரோப்பாவிற் குடியேறிய மக்கள் வெள்ளையராகிவிட்டனர். தேவ புதல்வர் மாந்தர் மகளிரை மிகுந்த அழகியராகக் கண்டு, அவர்களிடமிருந்து தங்கட்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். (திருமறை, மு.பொ., 6:2) அக்காலத்து மக்கள் வெள்ளையரைத் தேவரென்று கருதினர். அந்நாட்களிற் பாரில் அரக்கர் இருந்தனர். (திருமறை, மு. bgh., 6:4) அரக்கர் எனப்பட்டவர் ஆப்பிரிக்கரா யிருந்திருத்தல் வேண்டும். 7. ஐவேறு அல்லது அறுவேறு மொழிநிலைகளில், மாந்தரினத் தார் வெவ்வேறு திசைநோக்கிப் பிரிந்து சென்று வெவ்வேறு மொழியினராகவும் நிறத்தினராகவும் இனத்தினராகவும் மாறுதற்கு ஏற்றவாறு, மிகப் பழமையான தாய்நிலப் பகுதி குமரிக்கண்டம் ஒன்றே. 8. தமிழ்ச்சொற்கள் மட்டுமன்றித் தமிழர் பழக்கவழக்கங்களும் பண்டை யுலகமெங்கும் பரவியிருந்திருக்கின்றன. 9. நாடு முழுவதும் முழுகுமாறு நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளக் கதை, ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையிற் சொல்லப் பெறுகின்றது. ஒருகால், இக்கதை, பழம்பாண்டி நாட்டைத் தன்னுட் கொண்ட குமரிக்கண்டக் கடல்கோள்களுள் ஒன்றைக் குறித்ததாக இருக்கலாம். தமிழ்நாட்டுக் கடல்கோள்களுள் ஒன்றைக் கூறும் சதாபத பிராமணம் என்னும் வேதக்கால வடநூல், ஒரு கடல் கோளுக்குத் தப்பிய அரசனைத் திராவிடபதி என்று அவன் பேழை தங்கிய இடத்தை வடமலை (குடமலை) என்றும் குறிக்கின்றது. நாட்டிலுள்ள விலங்கு பறவைகளெல்லாம் ஒவ்வொரிணை உள்ளடங்கு மாறு, மாபெரு மரக்கலத்தை 4500 ஆண்டுகட்கு முன் செய்யக்கூடியவன் தமிழன் ஒருவனே, 10. தமிழரின் எழுநாட் கிழமை தொன்றுதொட்டு நாகரிக நாடுகளி லெல்லாம் வழங்கிவருகின்றது. மாந்தன் பிறந்தகம் தென்னிலம் மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றிய கருதுகோள்:- மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென் கரையை நெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக் கூடியபடி அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும் (Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென் கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்ததென்றும், கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக்கணக்கியல் உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக்கண்டத்திற்குச் சிறப்பாகவுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா (Lemuria) எனப் பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக் கொள்வோமாயின், மாந்த இனங்கள் இடம் பெயர்ந்து ஆங்காங்குக் குடியேறியிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும். (M.A.M.P. பக். 33, அடிக்குறிப்பு (2). மாந்த இனவாராய்ச்சி, வடபாகத்திலும் நண்ணிலக் கடற் கரையிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர், தென்னிந்தியா வழியாகத்தான் அவ்விடங்கட்குச் சென்றிருந்தார் என்பது, எவ்வகையிலும் நடந்திருக்கக் கூடாத செய்தியன்று என்பதைக் காட்டும். இந்தியக் கீழ்கரையிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக் கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரியகாலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாத தாயிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்ட தாகும். (M.A.M.. பக். 111). இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-இல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecan thropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப் பட்டுள்ளது. 1961-இல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof. Leakey) என்னும் ஆங்கில மாந்தனூலறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய நெற்றுடைப்பான் (Nut cracker Man or Sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற் குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙனமிருப்பினும், சாலித் தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக் கண்ட மாதலின், அந்நிலத்தி லேயே மாந்தன் தோன்றினா னென்றும், அத்தோற்றம் கி.மு. 5,00,000 ஆண்டுகட்கு முந்திய தென்றும், மறுப்பச்சமின்றிக் கூறலாம். உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நீர் நிலப்பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், இந்துமாவாரி ஒரு காலத்தில் சந்தாத்தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்க்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில்வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். . இக்கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்.” (C.T.S.I. Vol. 1, பக்.20) என்று கூறுகின்றார். நிலவியல் வரலாற் றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ்ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப் போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், கோடியாண்டு கட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது. என்பர். இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறைவகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய தென, நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர். முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ்ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமாயிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே. நண்ணிலக்கோடு (Equator) அதனூ டேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க. முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரை மயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும். ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக. முதற்கால மாந்தன் காட்டுவிலங்காண்டியாகவும் அநாகரி கனாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக் கண்டமே. ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும். ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல். பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியாவிற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது. நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப் படும் மெசொப்பொத்தேமியாவும், கடலடியில் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்ட மிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ளமுடியாது. அதைவளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளி போற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம்மணற்பாலைகளும் பல வுள. பிறநாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை. இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலைவற்றி நிலைத்திணை(தாவரம்) பட்டு நிலங்காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடைமாறி மாரிபெய்தபின், அப்பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடிகொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங்குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர். இதனால், பண்டைத்தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடா யிருந்ததென் பதற்கு எள்ளளவும் இழுக்கில்லையென்க. மாமன் மாமன் - மாமா1, மாமக அம்மை - அம்மான் = அம்மையின் உடன்பிறந்தாள். அத்தன் (தந்தை) - அத்தை = அத்தனின் உடன்பிறந்தாள். அம்மான் மனைவி அத்தையென்றும், அத்தை கணவன் அம்மான் என்றும், அழைக்கப் பெறுவர். ஒருவன் அம்மான் மகளையும் அத்தை மகளையும், ஒருத்தி அம்மான் மகனையும் அத்தை மகனையும் மணப்பது முறை மரபு. இங்ஙனம் நெருங்கிய உறவில் மணமகனோ மணமகளோ இல்லாதபோதும், அயலில் மணமகனோ மணமகளோ செல்வத் திலும் அழகிலும் பிறவற்றிலும் சிறந்திருக்கும்போதும், அயலில் மணவுறவு கொள்வது வழக்கம். (வ.வ.) மகனின் மனைவியையும் மகளின் கணவனையும் மக்களைப் போற் கருதவேண்டுமென்றும், அவர்களும் கணவன் தன் மனைவி பெற்றோரையும் மனைவி தன் கணவன் பெற்றோரையும் தன்தன் சொந்தப் பெற்றோரைப் போற் கருதவேண்டுமென்றும், பண்டைத் தமிழர் தீர்மானித்தே, மகன் மனைவியை மருமகள் (மருவிய மகள்) என்றும் மகள் கணவனை மருமகன் (மருவிய மகன்) என்றும் அழைத்தனர். மருவுதல் = பொருந்துதல், குடும்பத்தொடு கலத்தல், இனமாகத் தழுவுதல். அயலில் மணவுறவு கொண்டபோது, மனைவியின் தந்தையையும் கணவனின் தந்தையையும் மருவம்மான் (மருவிய அம்மான்) என்று அழைத்திருக்கலாம். மருவம்மான் - மாமான். (வ.வ.) மணவுறவு கொண்ட அம்மானும் மருவம்மானும் முறையளவில் ஒரே நிலையிலிருப்பதால், பெண்கொடுத்த அல்லது பெண் கொண்ட அம்மானும் மாமன் எனப் பெற்றான். அதன்பின் மணவுறவு கொள்ளாத அம்மானும் அப்பெயர்ப் பெற்றான். மாமான் மகளே (திவ். திருப்பா.9). மாமான் - மாமன். ம. மாமன், தெ. மாம. மாமனு மருகனும் போலு மன்பின் (சீவ. 43). சில குலத்திலும் குடும்பத்திலும் ஒருத்தி தன் அம்மானை மணந்து கொள்ளும் வழக்கமிருப்பதால், கணவனை மாமன் என்றழைக்கும் நிலைமையும் நேர்ந்தது. ஒருவன் தன் அக்கை அல்லது தங்கை மகளை மணப்பதும் இதுவே. (வ.வ.). மாமன் - மாமி = 1. அம்மான் மனைவி. அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா. 1228 :1). 2. அத்தை. 3. மனைவி அல்லது கணவன் தாய். சிறக்கு மாமியர் மூவர்க்கும் (கம்பரா. சூளா.33). அம்மான் மாமி - அம்மாமி (ஆரியப் பார்ப்பன வழக்கு) = 1. அம்மான் மனைவி. 2. மாமன் மனைவி. அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி (சிலப்.29. தேவந்தியரற்று). (வ.வ.) வடமொழியில் மாமி என்னும் பெண்பால் வடிவில்லை. மாம (மாமக) என்னும் ஆண்பாற் சொற்கு மம (எனது) என்னும் தன்மை யொருமைப் பெயரின் 6-ஆம் வேற்றுமையடியை மூலமாகக் காட்டுவர். மாம = எனக்குரியவன். “அயஜஅயஜ, அ. (fr. mama, lit. ‘belonging to mine’) dear friend, uncle (only in voc.sg. as a term of affection among animals in fables), Pancat” என்று மா. வி.அ. (பக். 810) கூறுதல் காண்க. (வ.வ: 231-232) மாய்கை = மயக்கம், மயக்கக் காதல். மாய் - மாயை = 1. மறைவு. 2. மாயக்கலை. மாயையி னொளித்த மணிமே கலைதனை (மணி. 18:155) 3. மறைப்பாற்றல் (திரோதான சத்தி). 4. பொய்த்தோற்றம், 5. பொய்த்தோற்ற உலகம். தோன்றிக்கெடு மாயாகாரி யத்தை மெய்யெனநீ கண்டனையே (அருட்பா, 1, நெஞ்சறி. 527). 6. ஐம்பூதமூலம். பூதலய மாகின்ற மாயைமுத லென்பர் சிலர் (தாயு.பரிபூரணா.6). ஒ.நோ: சாய் - சாயை - வ. சாயா (உயஜலயஜ). (வ.வ:232). மாயை மாயை - மாயா (இ.வே.) மாள் - மாய் மாய்தல் = மறைதல், மறந்துபோதல், இறத்தல், அழிதல். மாய் - மாயம் = 1. திடுமறைவு. 2. மயக்கம். 3. நிலையின்மை. என்மாய வாக்கை யிதனுட் புக்கு (திவ்.திருவாய்.10:7:3). 4. பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (தொல்.பொ.114). 5. பாசாங்கு. 6. ஏமாற்று (வஞ்சனை). மாய மகளிர் முயக்கு (குறள். 918). 7. பொய்த் தோற்றம் (மாயை). வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்கு புக்கான் (கம்பரா.மாயா சீதை. 96). 8. மாயக்கலை. (வ.வ:) மாராயம் மாராயம் என்பது, செயற்கரிய செய்த அமைச்சரும் படைத் தலைவரும் மறவரும் புலவரும் பிறரும் மாராயனாகிய வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. அது மாராயம் பெற்ற நெடுமொழி யாகும் என்று வஞ்சித் திணைத்துறையாகத் தொல்காப்பியப் புறத்திணையியலில் (81) குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கூறியுள்ளார். மாராயம் பெற்ற நெடுமொழியாலும் - வேந்தனாற் சிறப்பெய்திய வதனால் தானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்லும். சிறப்பாவன:- ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படைவேண்டிய வாறு செய்க என்றது: இஃது அப் படைக்கு ஒருவனைத் தலை வனாக்கி அவன் கூறியவே செய்க அப் படை என்று வரையறை செய்தது. போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெலாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதிப் பட்டத் திவன் இது பிறர் கூறிய நெடுமொழி. துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின் கால மாரியின் அம்பு தைப்பினும் வயற் கெண்டையின் வேல் பிறழினும் பொலம்புனை யோடை அண்ணல் யானை இலங்குவான் மருப்பின் நுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசில் மகளிர் மன்றல் நன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்ப அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே (புறம்.287) இது தண்ணடை பெறுகின்றது. தண்ணடை - நாடு, மருதநிலத்தூர். வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே (மரபியல்.83) என்று தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, புறப்பொருள் வெண்பாமாலை மாராய வஞ்சி என்னுந் துறைக்குக் கூறும், நேராரம் பூண்ட நெடுத்தகை நேர்கழலான் சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் - போரார் நறவேய் கமழ்தெரியல் நண்ணா ரெறிந்த மறவே லிலைமுகந்த மார்பு என்னும் வெண்பா, போர்மறவர் முத்தாரங்களை மாராயமாகப் பெறும் செய்தியைக் குறிக்கின்றது. இனி பகையரசன் தலையையோ அவனுடைய படைத்தலைவன் தலையையோ கொண்டுவந்து கொடுத்த மறவனுக்கு வேந்தன் செய்யும் சிறப்பு தலைமாராயம் என்னும் காஞ்சித்திணைத் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்பட்டுள்ளது. பகைவனின் தலையைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் செய்த மாராயம் தலைமாராயம். அதற்குரிய வெண்பா. உவன்தலை யென்னும் உறழ்வின்றி யொன்னார் இவன்தலையென் றேத்த வியலும் - அவன்தலை தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு. என்பது இது தருவானது பெருவாழ்விற்கேற்ற பெருஞ் செல் வத்தைக் குறிக்கின்றது. இனி, நாடும் ஊரும் ஆரமும் செல்வமும் முதலிய உடமைகளைக் கொடுப்பதுடன், மாராயன் என்னும் பட்டத்தையும் அரும்பணி யாற்றிய அமைச்சர் படைத் தலைவர் கருமத்தலைவர் முதலி யோர்க்கு வேந்தன் மாராயமாகக் கொடுப்பது வழக்கம். பஞ்சவன் மாராயன் ....... கொங்காள்வான் என்று கல்வெட்டில் வருதல் காண்க. அரிவர்த்தன பாண்டியனின் அமைச்சராகிய மாணிக்கவாசகர் பிராமணரா யிருந்ததினால், தென்னவன் பிரமராயன் என்னும் பட்டத்தை மாராயமாகப் பெற்றார். முரஞ்சியூரிலிருந்த முடிநாகர் மரபைச் சேர்ந்த புலவர் ஒருவர் முடிநாகராயர் என்னும் பட்டம் பெற்றார் போலும்! பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த அரசர், குறுநில மன்னர் என்னும் சிற்றரசரும் பெருநில மன்னர் என்னும் பேரரசருமாக இரு திறத்தினர். சேர, சோழ, பாண்டியர் மூவரும் பேரரசர்: பிறறெல்லாம் சிற்றரசர். பின்னவர் வேளிர் எனவும் பெயர் பெறுவர். அரசன் என்னும் சொல் அரைசன், அரையன் என்றும் முறையே திரிந்து வழங்கும். அரையன் என்னுஞ் சொல்லாற் குறிக்கப் பெறும்போது, பேரரசன் மாவரையன் எனப்படுவான். மாவரையன் என்பது மாராயன் என மருவும். மாராயன் செய்யும் சிறப்பு மாராயம் எனப்பட்டது. நச்சினார்க்கினியர், ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம் என்றுரைத்து மாராயம் என்பது என்னதென்று விளக்கினாரே யொழிய, மாராயம் என்னுஞ் சொல்லிற்குப் பொருள் கூறினா ரல்லர். அவர் ஒரு மொழி நூலதிகாரியுமல்லர்: அவர் காலத்தில் மொழியாராய்ச்சியும் இல்லை. ஆகவே, மாராயம் என்பது, மாராயனால் செய்யப்படும் சிறப்பென்றே பொருள்படுவதாகும். அச் சிறப்பு செல்வக்கொடை பட்டமளிப்பு என இரு வகைப்படும். பொதுவாக படைத் தலைவர்க்கு ஏனாதிப்பட்டமும், அமைச்சருக்குக் காவிதிப் பட்டமும், வணிகர்க்கு எட்டிப் பட்டமும் வழங்கப் பெறும். ஏனாதி நல்லுதடன், ஏனாதி திருக்கிள்ளி, ஏனாதி நாயனார் (சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவர்) முதலிய பல ஏனாதிப் பட்டத்தினர் பெயர்கள் இலக்கியத்திற் காணப்படுகின்றன. காவிதி என்னும் சொல்லிற்குத் திவாகரத்தில் மந்திரி யென்னும் பொருளும். சூடாமணி நிகண்டில் கணக்கர் என்னும் பொருளும் கூறப்பட்டுள. எட்டி காவிதியர்க்குக் கொடுக்கப்படும் பொற்பூ, எட்டிப்பூ, காவிதிப்பூ என்றும், நாடு அல்லது ஊர் எட்டிப் புரவு காவிதிப்புரவு என்றும், முறையே பெயர் பெறும் வணிக மாதர் இவ்விரு பட்டங்களையும் பெற்றதாகக் கூறும் எட்டி காவிதிப் பட்டந் தாங்கிய மயிலியன் மாதர் என்னும் பெருங் கதைக்கூற்று எத்தகைய தென்று திட்டமாய்த் தெரியவில்லை. ஒருகால் கணவர் பட்டங்களை அவர்களும் தாங்கி வந்தனர் போலும்! ஏனாதிக்குக் கொடுக்கப்படும் அடையாளம் மோதிரமாகும். அது ஏனாதி மோதிரம் எனப்படும். வேந்தனாற் பெறும் பெருஞ்சிறப்பு மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரிய நற்செய்தி யாதலால், மாராயம் என்னும் சொல்லிற்கு மகிழ்ச்சி, பாராட்டு நற்செய்தி முதலிய பொருள்களுந் தோன்றி யுள்ளன. மாலை மாலை - மாலா முல் - முள் - முள்கு. முள்குதல் = முயங்குதல். இளமுலை முகிழ்செய முள்கிய (கலித். 125). முள் - (முய்) - முய - முயங்கு - முயக்கு - முயக்கம். முயங்கு - மயங்கு - மயக்கு - மயக்கம். முய - மய. மயத்தல் = மயங்குதல். மயந்துளே னுலகவாழ்க் கையை (அருட்பா, vi, அபயத்திறன்.14). முய - முயல் - மயல் = மயக்கம். மயலிலங்குத் துயர் (தேவா. 121:2). ம. மய்யல், தெ. மயல, க. மயமு. மயல் - மால் = மயக்கம். மாலுதல் = மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செவி யெருவை (அகம். 3). மயக்கக் கருத்திற்கு அடிப்படை கலத்தற் கருத்தே. (வ.வ.) மயங்குதல் = கலத்தல். மயக்குதல் (பி.வி.) = கலத்தல். பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறம்.34). மால் - மாலை = 1. பல மலர்கள் கலக்குந்தொடை. 2. பகலும் இரவும் கலக்கும் அந்திவேளை. மசங்கல், மசங்கு பொழுது, மசண்டை, மயண்டை என்னும் வழக்குகளை நோக்குக. மயங்கு - மசங்கு. மயல் - மயன்றை - மயண்டை - மசண்டை. தொடைப் பொருளில் கலத்தற் கருத்தும், அந்திவேளைப் பொரு ளில் கலத்தற் கருத்தொடு கலக்கக் கருத்தும், அமைந்துள்ளன என அறிக. கண் தெரியாது கலங்குவதும் இராத்தங்க இடமின்றிக் கலங்குவதும் காதலர் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து கலங்குவதும், மாலைக்கால மயக்க வகைகளாம், இதனையே மருண்மாலை என்னும் இலக்கிய வழக்கு உணர்த்தும். வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. (வ.வ:233.) மாலைவகை கண்ணி - இவ்விரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை. தார் - கட்டிமாலை தொங்கல் - தொங்கல் விட்டுக் கட்டியமாலை கதம்பம் அல்லது கத்திகை - பலவகைப் பூக்களால் தொடுத்த மாலை. படலை - பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை. தெரியல் - தெரிந்தெடுத்த மலராலாய மாலை. அலங்கல் - சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை. தொடலை - தொடுத்த மாலை. பிணையல் - பின்னிய மாலை. கோவை - கோத்த மாலை கோதை - கொண்டை மாலை சிகழிகை - தலை அல்லது உச்சி மாலை சூட்டு - நெற்றிமாலை ஆரம் - முத்து மாலை (சொல்.43) மாவலி மாவலி - மஹாபலி (b) மாவலி = பெரு வலிமையுள்ள ஒரு பழஞ் சேரவேந்தன். மூரிவார் சிலை மாவலி (மணி. 19:54). ஒ.நோ: உறுவலி = மிகுந்த வலிமையுள்ளோன். உறுவலி தாக்கினானே (சீவக. 2282). மதவலி (மீமிசைச் சொல்) = மிக வலிமையுள்ளோன். வலம்புரி பொறித்த வண்கை மதவலி (சீவக.204). மாவலிவாணன் = மாவலி வழிவந்த ஒரு சிற்றரச ஆள்குடியான். வையமொரு கோலாற் புரந்தருள் மாவலிவாணன் (S.I.I.iv,98). (வ.வ:234.) மாளிகை மாளிகை - மாலிகா மல் - மால். மாலுதல் = மாட்சிப்படுதல். மான்றபூண் முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 194). மால் = பெருமை (பிங்.). மால் - மாள் - மாண் - மாண்பு, மாட்சி. மாள் - மாளிகை = 1 மாடமுள்ள பெருவீடு.(பிங்.) மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார் (பெரியபு.கோச்.செங்.16). 2. மாடம் போன்ற கோயில். உத்தர கோசமங்கை ........... மாளிகை பாடி (திருவாச.16:3). வடவர் மாலிகா என்னும் சொல்லை மாலா என்பதனொடு தொடர்புபடுத்தி, மேன்மாடியுள்ள வீடு என்று பொருளுரைப்பர். மலரடுக்குப் போன்ற மாடியடுக்கு என்பது அவர் கருத்துப் போலும்! “ a white - washed upeer - storied house” என்னும் பொருளை மா.வி. அ. எங்ஙன் பெற்றதோ, அறிகிலம். (வ.வ:234). மானம் மானம் - மான = பெருமை (Greatness). மல் - மல்லை = பெருமை. மல்லைச் செல்வ வடமொழி மறை வாணர் (திவ்.திருவாய். 8:9:8). மல் - மன். மன்னுதல் = மிகுதல். விதவாதன மன்னே. (நன்.165). மன் = மிகுதற் குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்ததன்று மன்னே (புறம். 75). மன் = 1. பெருமை. 2. பெரியோன், தலைவன். மன்னுயிர் நீத்தவேலின் (பு.வெ. 4:23,கொளு). 3. கணவன். 4. அரசன். மன் - மன்னன். மன் - மான் - மானம் = பெருமை. புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் (தொல்.பொ.41). மானம் - மான = மதிப்பு (Honour) மா + அனம் = மானம் = அளவீடு, அளவு, அளவை, மதிப்பு. மா. வி. அ.வும் சென்னைப் ப. க. க. த. அ . வும் இவ்விரு சொல்லை யும் ஒரு சொல்லாகக் காட்டுகின்றன. (வ.வ.234 - 235). மானியம் மானியம் = மான்ய மானம் - மானி. மானித்தல் = அளத்தல், மதித்தல், பெருமைப் படுத்துதல், தன்னை மிக மதித்துச் செருக்குதல். ஒ.நோ: தீர்மானம் = முடிவு. தீர்மானித்தல் = முடிவு செய்தல், முடிபு கொள்ளுதல். மானம் - மானி = அளக்குங் கருவி, தன்மானமுள்ளவன், செருக்கன். மானி - மானியம் = புலவரையும் மறவரையும் மதித்துச் செய்யும் சிறப்பு, அவர்க்களிக்கும் முற்றூட்டு அல்லது இறையிலி (சர்வ மானியம்), கோயில்கட்கும் அறச்சாலைகட்கும் விடும் அறப்புறம் (இறையிலிநிலம்). மானியம் - மானிபம். இவ்வடிவம் வடமொழியிலில்லை. நிலமானியம் (Endowment of land) என்னும் பொருளும் மா.வி.அ.விற் குறிக்கப் பெறவில்லை. (வ.வ:235). மிதி மிதி - ம்ருத் (d.). மிதித்தல் = பாதத்தை மேல்வைத்தல், பாதத்தால் தேய்த்தல். (வ.வ.235) மீன் மீன் : மின் - மீன் = மின்னும் வெண்ணிறமீன், மின்னும் வெள்ளி அல்லது வான்சுடர். வெள்ளாட்டின் பெயர் அதன் இனமான காராட்டிற்கும் செவ் வாட்டிற்கும் பொதுப்பெயராக வழங்கினாற்போல, மின்றும் கெண்டை மீன் பெயர் அதன் இனமான பிறவகைகட்கும் வழங்கி வருகின்ற தென்க. மீன் - மீனம் (பெருமீன்) - மீன (வ.). (தி.ம. : 752). மீனம் மீனம் - மீன மீன் - மீனம் (திவா.). அம் பெருமைப் பொருட் பின்னொட்டு, மீன் என்னும் வடிவம் வடமொழியிலில்லை. வடவர் காட்டும் மூலம் மீ1 = குறை, சிறு, அழி; வழிதப்பு, வழிவிலகு; மீறு, கலக்கடி, மாற்று, திரிவது (சஞ்சரிப்பது) என்று மூலப் பொருள் கூறுவர். சிறுத்தற் பொருளில் மீ என்பது மின் (min) என்னும் இலத்தீன் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது. (வ.வ. 235-236). முக்குழியாட்டம் விளையாட்டு இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங் காயள வான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக் கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, முக்குழியாட்டம் எனப்படும். இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நில விரவிலும் ஆடப்பெறும். திருச்சி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர். (த.நா.வி.) முக் குற்றம் ஆதனின் (ஆன்மாவின்) அல்லது மாந்தனின் குற்றங்களை யெல்லாம் மூன்றாக அடக்கி, அவற்றை ஆசை, சினம், அறியாமை என முறைப்படுத்திக் கூறினர் நம் முன்னோர். அவற்றையே, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமங் கெடக்கெடு நோய் (குறள். 360) என்றார் திருவள்ளுவர். காமம். ஆசை; வெகுளி, சினம்; மயக்கம், அறியாமை, வெகுளி, சினம் என்பன ஒருபொருட் சொல்லா யினும், வேகும் நெருப்பைப் போல வெம்மை மிக்க சினமே வெகுளி என அறிக. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது (குறள். 29) என்னுங் குறளை நோக்குக. பொதுவாக, அறியாமையே துன்பத்திற்கெல்லாம் மூலமாகச் சொல்லப்படு கின்றது. ஒரு பொருளைத் தவறாகப் பயன்படுத்து வதாலும், ஒரு கொடிய உயிரியிடம் அல்லது பொறியிடம் அல்லது இயற்கையிடம் அகப்பட்டுக் கொள்வதாலும், ஒரு தீய பொருளை நல்லதென்று நுகர்வதாலும், துன்புறுவது மெய்யே. ஆயின், அவற்றை அண்டாமலும் நுகராமலும் இருந்த விடத்திற் பாதுகாப்பாக விருப்பின், பெரும்பாலும் துன்பத்திற்குத் தப்பிக் கொள்ளலாம். ஒரு பொருளைத் தேடிச் சென்று அது கிடையாக் கால் துன்புறுவதற்கு, அது பற்றிய அறிவும் ஓரளவு கரணியமாம். ஆகவே, உண்மையில் துன்பத்திற்கு மூலக் கரணியமாயிருப்பது ஆசையேயன்றி வேறன்று. இன்ப துன்பங்களை விளை விக்கும் நல்வினை தீவினைகளைச் செய்விப்பதும், ஒருவனுடைய ஆசையே யன்றி அறியாமையன்று. அதனாலேயே, அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள். 361) அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும் (குறள். 368) இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின் (குறள். 369) ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். (குறள். 370) என்றார் திருவள்ளுவர். அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தைத் துறவறவியலின் இறுதியில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கதாம். காமம் அல்லது ஆசை துன்பத்திற்கு மூலக் கரணியமாயிருப்பத னாலேயே அது முன்வைக்கப்பட்டது. விரும்பியதொன்று கிடை யாமையால் அல்லது வெறுப்பான தொன்றை இன்னொருவன் செய்ததனால், சினம் அல்லது வெகுளி பிறப்பது இயல்பே. ஆயின், காமத்திற்கும் வெகுளிக்கும் இடை நிலம் (middle ground) இருப்பத னால். வெகுளி என்பது காமம் என்பதன் எதிர்ச்சொல்லே (contrary term) யன்றி மறுதலைச் சொல் (contradictory term) அன்று விரும்பாத பொருள்மே லெல்லாம் ஒருவனுக்கு வெறுப்புண்டாகாது. அம் மனப்பான்மை நொதுமல் நிலை யொத்ததே. காமத்தொடு எதிர்நிலைத் தொடர்பு கொண்டிருப்பதால், வெகுளி அதன்பின் வைக்கப்பட்டது. மயக்கம் என்றது அறியாமையே அறிவு முற்றறிவும் சிற்றறிவும் என இருவகைப்பட்டிருப்பது போன்றே. அறியாமையும் முற்றறியாமையும் சிற்றறியாமையும் என இருதிறப்படும். ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமை முற்றறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பிறழ வுணர்தல் சிற்றறியாமை ஒன்றை அதுவோ இதுவோ என மயங்கல்; அறிவிற்கும் அறியாமைக்கும் இடைப்பட்ட ஐயநிலை. சிற்றறியாமை திரிபு என்றும், முற்றறிவு தெளிவு என்றும், சொல்லப்பெறும். காம வெகுளி மயக்கம் என்னும் மூன்றையும் வடவர் ஐந்தாக விரிப்பர். குற்றங்க ளைந்தாவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன; இவற்றை வடநூலார் பஞ்சக் கிலேசமென்பர் என்று 38 ஆம் குறளுரையிலும். அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவாவும், அது பற்றி அப் பொருட்கட் செல்லுமாசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங் கோபமுமென வடநூலார் குற்ற மைந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக் கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணு மடங்குதலான், மூன்றென்றார். என்று 360 ஆம் குறளுரையிலும், பரிமேலழகர் கூறியிருத்தல் காண்க. அகங்காரம் என்னும் சொல், வடமொழியில் வினை முதனிலை யின்றி அஹம்-கார என நின்று, நான் என்னும் அகப்பற்றை யுணர்த்து மென்றும், தமிழில் அகங்கரி என்னும் முதனிலையடிப் பிறந்து அகங்கரிப்பு அல்லது செருக்கு என்று பொருள்படும் தொழிற்பெயர் அல்லது தொழிற் பண்புப் பெயராகுமென்றும். வேறுபாடறிக. அகம், மனம், கரித்தல், கடுத்தல் அல்லது மிகுதல். அகம் + கரி = அகங்கரி - அகங்கரிப்பு. அகங்காரம் வட மொழி யில். அஹம் - கார என்பது எனது என்னும் புறப்பற்றை யுணர்த்தும் மமகார என்பதன் மறுதலைச் சொல்லாம். தமிழில் அத்தகைய நிலையின்மையை நோக்குக. இதனால் இருசொல்லும் வெவ்வே றெனவும், வடிவொப்புமையினாலும் ஆராய்ச்சியின்மை யாலும் தமிழரால் அறியாதும், வடவரால் அறிந்தும், ஒன்றோ டொன்று மயக்கப் படுகின்றன வென்றும் அறிக. இனி, ஆரியச் சார்பான சிவனியக் கொண்முடிபில் (சைவ சித்தாந் தத்தில்), ஆணவம், மாயை, காமியம் எனக் கூறியிருக்கும் மும் மலப் பெயரும், காம வெகுளி மயக்கம் என்பவற்றின் திரிப்பே. ஆணவம் என்பது ஆண் என்னும் அடிப்பிறந்து அகங்காரத்தை அல்லது வெகுளியைக் குறிப்பது; அணு என்னும் அடிப்பிறந்து அறியாமையைக் குறிப்பதன்று. மயக்கம் என்பதே அறியாமையை (உயிரொடு நிலையான தொடர்பற்ற உடம்பை நான் என உணரும் திரிபுணர்ச்சியை) உணர்த்தும். ஐம்பூதங் கட்கும் மூலமான மாயை வேறு; பிறழ்வுணர்ச்சியைக் குறிக்கும் மயக்கம் வேறு, மாய் + ஐ = மாயை (மாய்ந்த அல்லது மறைந்த நிலை), ஒ. நோ: சாய் + ஐ = சாயை = சாயா (வ.). மாயை - மாயா (வ.) காமம் - காமியம் = விருப்பமானவை. கார்மிய என்பதன் திரிபாகக் கொண்டு இருவகை வினையென்று கூறுவது பொருந்தாது. திருவள்ளுவர் இல்லறத்தாலும் வீடுபேறுண்டெனக் கூறியிருத்த லாலும் சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரிய புராணங் கூறுதலாலும் நுகர்ச்சியினாலும் நல்வினை யாலும் பழந்தீவினை போக்கப்படு மாதலாலும் தீவினை கலவாது இறைவழிபாட்டோடு கூடிய நல்வினைத் தொகுதியும் பிறவிக்குக் கரணியமாம் என்பது உத்திக்குப் பொருந்தாமையாலும், இவ் வுலகிற் பிறந்து வளர்ந்து கற்றுத் துறந்து ஒரு வினையும் செய்யா மல் வீடுபெறலாமென்பது இயலாத தாதலாலும், நல்வினை தீவினைகள் மேற்குறித்தவாறு தூலமாச் செய்யப்படும் பொழுது ஆகாமியம் என்றும் பின் சூக்குமமாய நிலைபெற்று நிற்கும்பொழுது சஞ்சிதம் என்றும், பின் இன்ப துன்பங்களாய் வந்து பயன்படும்பொழுது பிராரத்தம் என்றும் பெயர் பெறும் பிராரத்தமே ஊழ் எனப்படுகின்றது நல்வினை தீவினை என இருவகைப்பட்டு விரியால் எண்ணிறந்தனவாய் நிற்றலின் சடமாயும் பலவாயும் உள்ள இவை காரியம், என்பதும் அதனால் இவை தோற்றமும் அழிவும் உடையன என்பதும், அதனால் மூல கன்மமே காரண கன்மமாய்த் தோற்றக் கேடின்றி நிற்கும் என்பதும். பெறப்படும். என்று அறப்புரவளாகம் (தருமையா தீனம்) வெளியிட்டுள்ள சித்தாந்தத் தெளிவியல் என்னும் கொண்முடிபுத் தெளிவியல் கூறுவது (பக். 160) அறிவாராய்ச்சி மிக்க இக் காலத்திற் கேற்காது. ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் மூன்றையும் முறையே எதிர்வு, இறப்பு, நிகழ்வு எனத் தூய தமிழிற் கூறலாம். முகடி கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னும் சொற்குப்பாழ் என்னும் பொருள் இருப்பதால் பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி என்றுமாம் அவளது பேய்த் தன்மையாலும் வறுமைப் பஞ்சத்தன்மையாலும் அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப் பட்டது. (குறள். 617). முகம் முகம் - முக (kh)- இ.வே. முகம் = முன்பக்கம், தலையின் முன்பக்கம், முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, நுனி, தொடக்கம், முன்பு, முதன்மை. இவை யெல்லாம் முன்மைக் கருத்தைப் பொதுவாகக் கொண்டவை. இப்பொருள்கட்கெல்லாம் அடிப்படை தோன்றற் கருத்தே. இயல்பான தோற்றமும் இயக்கமும் முன்னோக்கியே நிகழ்வதால், ஒரு பொருள் தோன்றும்போது அதன் முன்புறமே தெரியும். முகஞ் செய்தல் = 1. தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக். 35 : 49) 2. முன்னாதல். தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 3. நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) (வ.வ.) முகம் = 1. தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298) 2. நோக்கு. புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261). முகு = முகிழ். முகிழ்தல் = அரும்புதல். முகிழ்த்தல் = தோன்றுதல். மூவகையுலகு முகிழ்த்தன்ன முறையே (ஐங்குறு. கடவுள்). முகு - முகை. முகைதல் = அரும்புதல். பொய்கை முகைந்த தாமரை (ஐங்குறு. 6). அரும்புதல் = தோன்றுதல். முகிழ்த்தல் = தோற்றுவித்தல், ஈனுதல். முகு என்னும் அடிபோன்றே, உகு, நுகு, புகு என்னும் அடிகளும் தோன்றற்கருத்துச் சொற்களைத் தோற்று வித்துள்ளன. (வ.வ.) உகு - உகை - அகை. அகைதல் = துளிர்த்தல். கொய்குழை யகை காஞ்சி (கலித். 74) நுகு - நுகும்பு = பனை, வாழை முதலியவற்றின் குருத்து. பனை நுகும்பன்ன (புறம். 249). புகு - பொகு - பொகில் = அரும்பு. முகம் - முகர் - முகரை = மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி. முகர் - முகரி - முதன்மை, தலைமை. முகம் - முகவு = முன்மண்டபம். முகம். முகப்பு = வீட்டின் முற்பகுதி, அணிகலப் பொருத்துவாய். முகம் - முகமை = முதன்மை. தலைமை, முகமை = முகாமை. முகம் - முகன் - முகனை = முன்புறம், தொடக்கம், முதலெழுத்து. முகனை - மோனை = முதலெழுத்து ஒத்து வருகை. (வ.வ.) முகம் - முக. முகத்தல் = மூக்கால் நுகர்தல். முக - மோ - மோப்பு - மோப்பம். முகம் - முகர். முகர்தல் = மோத்தல். வடமொழியில் முக என்னுஞ் சொற்கு மூலமில்லை. வடவர் அச்சொற்கு முகம் என்பதைவிட வாய் என்பதையே சிறப்புப் பொருளாகக் கொள்வதால், பின்வருமாறு பொருந்தப் பொய்த்தலாக மொழிப் பொருட் காரணங் கூறுவதுமுண்டு. முக = மு + க (kha). க = கன் (தோண்டு). முக = தோண்டப்பட்ட கிடங்குபோன்ற வாய். இது ஒரு நகையாட்டுச் செய்தியாக இருப்பதொடு, கன் (khan) என்னும் சொல்லும் தென்சொல்லாகவே யிருத்தல் காண்க. கல்லுதல் = தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரில் தோண்டும் துளை. (வ.வ. 236-237) முகில் முகப்பது முகில் : முகந்தபின் மேல் எழுவது எழிலி. கடல் நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாதலால் பண்டை நம்பிக்கையும் ஒரு மருங்கு உண்மை யானதே. (தி.ம. 46). முகிழம் முகிழம் - முகுல, முகுர முகு - முகிழ். முகிழ்தல் = அரும்புதல், தோன்றுதல். முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம் = மலரும் பருவத்தரும்பு. முகிழ் - முகிழி. முகிழித்தல் = அரும்புதல். முகு - முகை = அரும்பு. முகைதல் = அரும்புதல். முகு - முகுள் - முகுளம் = அரும்பு. முகுள் - முகுளி. முகுளித்தல் = குவிதல். க. முகுள் = முகிழ். (வ.வ. 237). முகுளி முகுளி - முகுலீ முகு - மொக்கு = மொட்டு. க. மொக்கு (gg), தெ. மொக்க. (gg). மொக்கு - மொக்குள் = 1. பேரரும்பு. க. முகுல் (g). முகைமொக்கு ளுள்ளது நாற்றம் (குறள். 1274) 2. மொக்குள் போன்ற நீர்க்குமிழி. படுமழை மொக்குளின் (நாலடி. 27) (வ.வ. 238.) முட்டி முட்டி - முஷ்டி (இ.வே.) முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். பொ. 112) 2. மோதுதல். 3. தாக்குதல். 4. இறுகப் பிடித்தல். குழலாள் ..... கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தரரா. திக்குவி.16) 5. பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (கம்பரா. நட்புக். 50). முட்டு - முட்டி = 1. தாக்குதற்கு விரல் முடக்கிய கை. 2. கைக்குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56) (வ.வ.) 3. நான்கு விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை யழுத்தும் இணையா விணைக்கை. (சிலப். 318, உரை). 4. படைக்கலம் பிடிக்கும் வகை. துய்ய பாசுபதத் தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன் றவ. 129) 5. கையுள் மறைத்ததை இன்னதென்று கூறும் கலை. வடவர் காட்டும் மூலம் முஷ் = திருடு, கொள்ளையடி, சிறை கொண்டு போ; உளங்கவர், மகிழ்ச்சியால் மயக்கு உடை, அழி. “MusÝt|i, m. f. stealing, filching, W.; the clenched hand, fist (perhaps orig. ‘the hand closed to grasp anything stolen’)”. (வ.வ. 238) முட்டு முட்டு - மித் (th) - இ.வே. முட்டுதல் = எதிர்ப்படுதல், பொருந்துதல், மோதுதல். (வ.வ. 238) முண்டம் முண்டம் - முண்ட (முள்) - மொள் - மொண் - மண். மண்ணுதல் = மழித்தல். இந்தக் கத்தி மண்ணாது என்னும் வழக்கை நோக்குக. மொண் - மொண்ணன் = வழுக்கைத் தலையன். வன்கண்ணர் மொண்ணரை (தேவா. 705 : 4) மொண் - மொண்ணை = வழுக்கை. கூர்மையின்மை. மொண்ணையன் = அறிவு மழுங்கியவன். மொண்ணை - மண்ணை = 1. கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகம். 24). 2. மூடன். இம்மணியை நின்மணியொடு கலக்கும் மண்ணைதா னுளனோ (மேருமந். 303). (மொள்) - மொழு - மொழச்சு. மொழச்சுதல் = மழித்தல். மொழு - மழு - மழி. மழித்தல் = மொட்டையடித்தல், தலை வறண்டுதல். (வ.வ.) மழித்தலும் நீட்டலும் வேண்டாவாம் (குறள். 280) மழித்தலை = மொட்டைத்தலை. கொய்ம்மழித் தலையொடு கைம்மையுற (புறம். 261). மழி - வழி. முகம் வழித்தல், நாக்கு வழித்தல் என்பன உலக வழக்கு. வழி - வழல். வழலுதல் = மயிர் நீங்குவதுபோல் தோலுரிதல். வழல் - வழற்று (பி.வி.). வழல் - வழன்று - வரன்று - வறண்டு. வழன்றுதல் = தோலுரிதல். வரன்றுதல் = வழித்து வாருதல். மணிவரன்றி வீழுமருவி (நாலடி. 369) வறண்டுதல் = வழித்தல். தலை வறண்டுதல் என்பது பாண்டி நாட்டு வழக்கு. களைவறண்டி, பாதாள வறண்டி என்னும் கருவிகளைக் கருதுக. மொழு - மொழுப்பு - மோப்பு - மோப்பி = முண்டை. தெ. மோப்பி, க. மோப்பு. (வ.வ.) மொழு - மொழுக்கு. மொழுக்குதல் = வழித்த தலைபோற் சமனாகுமாறு உழுத நிலத்திற் பரம்படித்தல். மொழுக்கு - மொழுக்கன் = வேலைப்பாடில்லாது வழுக்கையான அணிகலம். மொழுக்கன் - மொழுங்கன் - மழுங்கன் = வேலைப்பாடில்லாத அணி. மொழு - மழு. மழுமட்டை, மழுகூழை (வால் முற்றுமற்றது) என்னும் வழக்குக்களை நோக்குக. மழு - மழுகு. மழுகுதல் = மொட்டையாதல், மழுங்குதல். நுதிமுக மழுகிய ..... வெண்கோட்டு (அகம். 24) மழுகு - மழுக்கு ..... மழுக்கம் = மொட்டை, கூரின்மை. மழுகு - மழுங்கு. மழுங்குதல் = 1. கூர்நீங்கி மொட்டையாதல். நுதிமழுங்கிய (புறம். 4). 1. மதிக்கூர்மை குறைதல் உதிக்கின்ற புத்தியும் மழுங்கிடும் (திருவேங். சத. 15) மொழு - மோழல் = மொட்டை மூஞ்சியுள்ள பன்றி (பிங்.). மொழு - மோழை = 1. மொட்டை. 2. கொம்பிலா மாடு. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும் (பழமொழி) 3. மரத்தின் அடிமுண்டம். 4. மடமை. 5. நொய் சேராத கஞ்சி. மொட்டைக் கூழ் என்னும் வழக்கை நோக்குக. மோழைமுகம் = பன்றி. முள் - முண் - முண்டு - முண்டம் = 1. மழித்த தலை. சடையுமுண்டமுஞ் சிகையும் (அரிச். பு. விவாக. 2). 2. வழுக்கைத்தலை. 3. அம்மணம். முண்டக்கட்டை = மயிரில்லாத் தலைபோல் ஆடையில்லா வுடம்பு. 4. தலையில்லா வுடம்பு. முண்டம் - முண்டன் = 1. மழித்த தலையன். கண்டராய் முண்டராகி (தேவா. 269: 3). 2. அமணன். 3. மஞ்சிகன் (நாவிதன்). முண்டன் - முண்டை (பெ. பா.) = தலைமழித்த கைம்பெண், கைம்பெண். முண்டை - முண்டைச்சி (இரட்டைப் பெ.பா.) முண்டு - முண்டி. முண்டித்தல் = தலையை மொட்டையடித்தல். தலைமுண்டிக்கு மொட்டரை (தேவா. 423 : 4) முண்டி = மழித்த தலையன், மஞ்சிகன். முண்டி + அனம் = முண்டனம் (தலைமழிக்கை). மொள் - மொட்டு = மொட்டை, கூரின்மை. மொட்டம்பு (பிங்.). மொட்டு - மொட்டம். மொட்டந்தலை = மொட்டைத்தலை. மொட்டந் தலையிற் பட்டங்கட்டியாள வந்தானோ? மொட்டு - மொட்டை. ம. மொட்டு, தெ. மொத்து (dd). மொட்டைத் தன்மையைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும், உருட்சியைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும் வெவ்வேறென அறிக. வடவர் காட்டும் முண்ட் (mu|n|d) என்னும் மூலம் செயற்கை யென்பது தெளிவு. “mun|d| (prob. artificial, to serve as the supposed source of the words below), cl, I. P. to cut (khan|d|ane = chidi), Dha#tup. ix, 40; to crush, grind, ix, 38 (v.l. for mut|); cl. I. A#. to, cleanse’ or to sink’ or ‘to shave” என்று மா. வி. அ. குறித்திருத்தல் காண்க. (வ.வ. 239-241). முத்தம் முத்தம் - முக்தா முள் - முட்டு - முத்து = 1. உருண்டை வடிவாயிருக்கும் சிறு பொருள். 2. தொண் (நவ) மணிகளுள் ஒன்று. முல்லை முகைமுறுவன் முத்தென்று (நாலடி. 45) 3. ஆமணக்கு விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (காளமேகம்) 4. அம்மைநோய்க் கொப்புளம் 5. கண்ணீர்த் துளி. பருமுத்துறையும் (சீவக. 1518) ஆமணக்கு முத்து (கொட்டை முத்து), குருக்குமுத்து, புளிய முத்து, வேப்பமுத்து என்பன ஓரளவு உருண்டை வடிவான விதைகள். (வ.வ.) முத்துச்சம்பா, முத்துச்சோளம், முத்துமாதுளை என்பனவும்அத்தகையனவே. முத்துக்குளிப்பு மன்னார்குடாக் கடலில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முத்தூர்க்கூற்றம் என்பது பாண்டிநாட்டின் கீழ்கரைப் பகுதி. உரோம நாட்டிற்கு ஏற்றுமதியான பாண்டி நாட்டு முத்து வரலாற்றுப் புகழ் பெற்றது. முத்து - முத்தம். அம் பெருமைப் பொருட் பின்னொட்டு. வடவர், முக்தா என்னும் சொல்லை முச் (c) என்னும் வினை முதனிலையொடு தொடர்புபடுத்தி, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் காரணங் கூறுவது எத்துணை வேடிக்கையானது! முச் = விடு, விடுதலை செய். (வ.வ. 241-242) முத்திரை முத்திரை - முத்ரா (d) முகம் - முகர் = அரசனது முக அல்லது தலையுருவம் பொறித்த முத்திரை. பெர், முஹர். முக + திரம் = மோதிரம், முத்திரையிட்ட விரலணி. முத்திரை மோதிரம் என்னும் வழக்கை நோக்குக. முகத்திரம் - (முத்திரம்) - முத்திரை. ஒ.நோ : மாத்திரம் - மாத்திரை. வடவர் முத்ர (மகிழ்ச்சியான) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். (வ.வ.242) முத்துமாரி அம்மைக் கொப்புளம் முத்துப் போன்று இருத்தலால் அதை முத்தென்றே அழைப்பர். அதனால், மாரிக்கு முத்துமாரியம்மன் என்றொருபெயர் வழக்கும் உண்டு. (சொல். 9) முதலைவகை முதலை - (Gavia) தென்னாசியாவில் பெரும்பான்மையாக உள்ளது. இடங்கர் - (Crocodile) வட ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக உள்ளது. கராம் - (Allegator) தென் அமெரிக்காவில் பெரும்பான்மையாக உள்ளது. (சொல். 40) முதற்றாய் மொழியின் இயல்புகள் உலகமொழிகள் பல்லாயிரக்கணக்காகப் பரவிக்கிடப்பினும். அவற்றுக் கெல்லாம் ஓரளவில் மூலமாக அல்லது முதலாக ஒரு பெருந் தாய்மொழி யிருந்திருத்தல் வேண்டும் என்பது. மொழி நூலாற் போந்த முடிபாம். மக்களெல்லாம் ஒரு தாய் வயிற்றினர் என்று கொள்ளப்படா விடினும். மாந்தன் தோன்றிய இடம் ஒன்றே என்பது மாந்தனூ லால் தெரிய வருதலால், உலகமொழிகட்கெல்லாம் ஆதியில் ஏதேனுமொரு தொடர்பிருந்திருத்தல் வேண்டும். மொழிகள் யாவும் சிற்றளவாகவும் பேரளவாகவும் திரிந்து கொண்டே யிருப்பதால், அவற்றுக்குள்ள தொடர்பு முதற்காலத் திலிருந்ததுபோல் இக்காலத்தில் தெளிவாயில்லை. ஆயினும், ஆழ்ந்து ஆராயுங்கால், அப் பழந்தொடர்பைக் கண்டறிதற்குச் சில சான்றுகள் கிடைக்கின்றன. இதுபோதுள்ள மொழிகளுள், முதற்றாய்மொழியாகக் கருதப்படக் கூடியவை. வடமொழி (சமற்கிருதம்), தென்மொழி (தமிழ்) என்னும் இரண்டே இவற்றுள் வடமொழி யொன்றே மேனாட் டாரால் விரிவாகவும் விளக்கமாகவும் அறியப் பட்டுள்ளது. தமிழைத் தமிழரும் செவ்வையாயறிந்தாரல்லர். அதனால், வடமொழி யொன்றையே, முதற்றாய்மொழியாயிருந்திருக்கலாம் என மேனாட்டார் கருதி வருவதில், யாதொரு குற்றமும் தப்பெண்ணமு மில்லை. ஒரு போலிக்கொள்கையை அல்லது பொய்க்கொள்கையை எத்துணைப் பேர் கொண்டிருப்பினும், அது நீடித்து நில்லாது, உண்மை என்றைக்கேனும் வெளிப் படுவது திண்ணம். முதற்றாய்மொழிக்கு, அதற்குரிய சில சிறப்பியல்புகளும் நிலைமை களும் உண்டு. அவை, வடமொழி, தென்மொழி என்னும் இரண்டுள் எதற்குள்ளன என்று பார்ப்போமாயின், முதற்றாய் மொழியைக் கண்டுவிடலாம். முதற்றாய் மொழியின் இயல்புகள் 1. மிகப் பழைமையானதா யிருத்தல் 2. பெரும்பாலும் எல்லா மொழிக்கும் பொதுவான எளிய ஒலிகளையே கொண்டிருத்தல். 3. கூட்டுவரி(சம்யுக்தாக்ஷரம்), மெய்ம்முதல், க ச த ப மெய்களின் பின் வேற்று மெய் வரவு(வேற்றுநிலை மெய்ம்மயக்கம்), வல்லின மெய்யீறு முதலியன வில்லாதிருத்தல். 4. முன்னொட்டுகளை (உபசர்க்கங்களை) மிகுதியாகக் கொள்ளாமை. 5. இடுகுறிப்பெய ரில்லாதிருத்தல். 6. ஏறத்தாழ எல்லாச் சொற்கட்கும் வேர்ப்பொருள் உணர்த்தல். 7. பல மொழிகட்கும் அடிப்படைச்சொல் வழங்கி யிருத்தல். 8. பன்மொழிப் பொதுச்சொற்களின் மூல வடிவத்தைக் கொண்டிருத்தல். 9. சொல்வளமுடைமை. 10. நெடுங்காலம் கழியினும் மிகச் சிறிதே திரிதல். 11. இயற்கையான முறையில் வளர்ந்திருத்தல். 12. இயன்மொழியாயன்றித் திரிமொழியா யில்லாதிருத்தல். 13. பொருள்பற்றியன்றி ஈறுபற்றிப் பாலுணர்த்தாமை. 14. பொருட்பாகுபாடு செய்வதில் எளிய முறையைத் தழுவியிருத்தல். 15. முதற்கால மக்களின் எளிய கருத்துகளைக் கொண்டிருத்தல். முதற்றாய்மொழியின் நிலைமைகள் 1. மாந்தன் தோன்றியிருக்கக்கூடிய இடத்தில் தோன்றியிருத்தல். 2. உலகப் பழங்குடி மக்களாற் பேசப்பட்டிருத்தல். இங்குக் கூறப்பட்ட இயல்புகளும் நிலைமைகளும் இருமொழி களுள்ளும் எதற்குரியனவென்று வினவின், தமிழுக்கேயுரியன வென்று பகைவரும் விடையிறுப்பர், பகுத்தறிவும் நடுநிலையும் உடையராயின், ............................................................ நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு ஆதலால், வேண்டுமென்று சொல்பவர் எதையும் சொல்வர். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்நேர் இலாத தமிழ். என்று பழங்காலத்திலும் தமிழின் தாய்மையைப்பற்றித் தமிழறி ஞர்க்கு நல்லுணர்ச்சியிருந்தது. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் குலப்பிரிவினையினால், தமிழர்க்குண்டான தாழ்வுணர்ச்சியினாலேயே, தமிழின் தலைமையை ஒப்புக் கொள்ளும் துணிவில்லை. இத் துணிவின்மையே தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதுந் தடையாயுள்ளது. ஆயினும் தமிழர் தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி இனிமேலாயினும் உண்மையறியவும் தாய்மொழியைப் பேணவும் தலைப்படுவாராக, எத்துணை வடசொற்கள் தமிழிற் கலந்திருப்பினும், அவை எட்டுணையும் தமிழுக்கு வேண்டியவல்ல. வேண்டுமாயின், தமிழ் தன்னிடத்துள்ள வடசொற்களை முற்றும் விலக்குவது மட்டு மன்று; வடமொழித் துணையின்றியே தழைத்தோங்குதலும் கூடும் என்று கால்டுவெல் கண்காணியார் கூறியது முற்றும் உண்மையே. தமிழ்ச்சொற்கள் வடமொழிச் சென்று வழங்கின், அவற்றைத் தமிழ்ச் சொற்களென்று கொள்வதல்லது வடசொற்க ளென்று மயங்குவது, பகுத்தறிவிற்குப் பொருந்தாது. கலை என்னும் தமிழ்ச்சொல், வடமொழிச் சென்று வழங்குவ தினால் மட்டும் வடசொல்லாகிவிடாது. கலை என்பது, கல் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர்; நில்-நிலை, வில்-விலை, கொல்-கொலை என்பனபோல. இனி, கற்றேன் கற்கிறேன் கற்பேன்; கற்றேம் கற்கின்றேம் கற்பேம் கற்றாய் கற்கின்றாய் கற்பாய்; கற்றீர் கற்கின்றீர் கற்பீர்; கற்றான் கற்கின்றான் கற்பான்; கற்றாள் கற்கின்றாள் கற்பாள்; கற்றார் கற்கின்றார் கற்பார்; கற்றது கற்கின்றது கற்கும்; கற்றன கற்கின்றன கற்கும் என இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் புடை பெயர்ந் தது கல் என்னும் வினை. வடமொழியிலோ பகுதியுமின்றிப் புடைபெயர்ச்சியுமின்றிக் கலா என்னும் சொல் தனித்தே நிற்கும். மேலும், கலா என்னும் சொல் லுக்கு வடமொழியிற் கூறப்படும் பகுதிப்பொருள், பிரிவு அல்லது பகுதி என்பதே மதியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல் லுக்கு இப் பொருள் பொருந்துமேயன்றிக் கல்வியின் பிரிவைக் குறிக்கும் கலை என்னும் சொல்லுக்குப் பொருந்தாது. பொருந் துவதாகத் தோன்றினும் உண்மையாகாது. பொருத்தம் வேறு; உண்மை வேறு. கல்லென்னும் பகுதியினின்று, கற்றல், கற்கை, கல்வி, கலை, கற்பு முதலிய பல மொழிப்பெயர்கள் தோன்றும். இவையெல்லாம் பகுதிப் பொருளில் ஒன்றாயிருப்பினும், விகுதிப்பொருளில் வேறென்பதை அறிதல் வேண்டும். பொருள் திரியும்போது சொல்லும் உடன் திரியவேண்டும் என்னும் சொல்லாக்க நெறிமுறைபற்றி, வெவ்வேறு விகுதிகள் பகுதியோடு சேர்ந்து வெவ்வேறு நுண்பொருளை யுணர்த்தும். விகுதி புணர்வ தெல்லாம் பொருளை வேறு படுத்தற்கே பகுதிப்பொருள் விகுதி கூட ஓரளவு பொருளை வேறுபடுத்தத்தான் செய்யும். அவ் வேறுபாடு மிக நுண்ணிதாயிருப்பதால், அதைக் கவனிப்பதில்லை ஒப்பில் போலி எனப்படுவதிலும் எங்ஙனம் சிறிது ஒப்புண்டோ, அங்ஙனமே பகுதிப்பொருள் விகுதி என்பதிலும் சிறிது பொருள் வேறுபாட்டில் இடமுண்டு. ஒவ்வொரு சொல்லுக்கும் முதற்பொருள் வழிப்பொருள் என இருவகைப் பொருளுண்டு. காரணச் சொற்களிலெல்லாம் முதற்பொருள் வேர்ப்பொருளையே பற்றியிருக்கும். தமிழிற் காரணச் சொல்லன்றி இடுகுறிச் சொல்லில்லை. வழிப்பொருள் காரணம்பற்றியு மிருக்கலாம்; ஆட்சி பற்றியு மிருக்கலாம். ஆட்சிப்பொருள் வேர்ப்பொருளைத் தழுவவேண்டுவதில்லை. நீர்நிலையில் மக்கள் கூடும் இடத்திற்குத் துறை என்று பெயர். துறுதல் = நெருங்குதல், கூடுதல், துறுவது துறை (துறு + ஐ). இச் சொல் நிலத்திலும் மக்கள் கூடும் இடத்தையும், அகப்பொருள் நாடகத்தில் தலைவன் தலைவி முதலியோர் ஒருவரோடொருவர் அல்லது ஒருவரோடு பிறர் கூடும் இடத்தையும், அங்ஙனம் கூடி ஒருவர் கூறும் கூற்றையும், அக் கூற்றைப் பாடும் ஒருவகைச் செய்யுளையும், ஒவ்வோர் இடமும் அல்லது கூற்றும் அல்லது செய்யுளும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பிரிவை யுணர்த்து தலால் ஒன்றன் பிரிவையும் (Department, Branch) முறையே குறிக்கும். இவற்றுள் பிரிவு என்பது வழிப்பொருளேயன்றி முதற் பொரு ளன்று. துறை என்னும் சொல்லின் வேர் கூட்டத்தைக் குறிக்குமே யன்றி அதன் மறுதலையான பிரிவைக் குறிக்காது. இங்ஙனமே கலை என்னும் சொல்லின் வழிப்பொருளும் பகுதி என்பதாகும். ஒவ்வொரு கலையும் கல்வியின் ஒரு துறையாய் அல்லது பகுதியாயிருப்பதால், கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் தோன்றிற்று. கல்வித்துறை பகுதி என்னும் இரு பொருள்களுள், முந்தினது முன்னதேயன்றிப் பின்னதன்று. கல் என்னும் வினைப்பகுதிக்குக் கலைப்பொருள் உரியதே யன்றிப் பகுதி அல்லது பிரிவுப்பொருள் உரியதன்று. ஆதலால், வடமொழி யிற் கூறப்படும் பகுதிப்பொருளும் தமிழ்ப்பொருளை அடிப் படையாய்க் கொண்டதே. கலை என்னும் சொல்லுக்குப் பகுதி என்னும் பொருள் ஒருவகையிற் பொருந்திற்றேனும், மீனம் (மீன் + அம்) என்னுஞ் சொல்லுக்குச் சஞ்சரிப்பது என்னும் பொருள் ஒருசிறிதும் பொருந்தாது. மின்னுவது மீன் என்பது மிகத் தெளிவாகவும் இயல்பாகவுமிருக்க, அதை விலக்கிவிட்டுச் சஞ்சரிப்பது என்று பொருள் கூறுவது. மீனம் என்னும் தென்சொல்லை வடசொல்லாகக் காட்ட வேண்டியே. இங்ஙனம் பொருந்தப் புளுகலும் பொருந்தாப் புளு கலும் எல்லாம், தமிழரின் பேதைமை காரணமாக எழுபவையே. ஆதலால், பகுத்தறிவு படைத்த தமிழர் யாவரும் இனிமேலாயி னும் பேதைமை விட்டு மேதைமை மேற்கொள்க. (செந்தமிழ்ச் செல்வி சனவரி 194) முதிர்ச்சி வகைகள் பழுத்தல் மா வாழை முதலியவற்றின் காய் முதிர்ச்சி முற்றல் சுரை பூசணி முதலியவற்றின் காய் முதிர்ச்சி நெற்று தேங்காய் பீர்க்கு முதலியவற்றின் காய் முதிர்ச்சி விளைச்சல் நெல் சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி (சொல். 68) முரசம் முரசம் - முரஜ முருள் - முருடு = 1. பெருங்குறடு. 2. முடிச்சுள்ள மரக்கணு. 3. உருண்ட மரக்கட்டை. வன்பராய் முருடொக்குமென் சிந்தை (திருவாச. 23 : 4) 4. பறைப்பொது (பிங்.). 5. பெரு மத்தளம். முருடதிர்ந்தன (சிலப். மங்கல.). முருடு - (முருசு) - முரசு. இடியென முழங்கு முரசின் (புறம். 17). முரசு - முரசம் = பெருமுரசு. திண்பிணி முரச மிடைப்புலத் திரங்க (புறம். 288). வடமொழியில் மூலமில்லை. “fr. mura + ja?” என்று வினவுகின்றது மா.வி.அ. (வ.வ. 242). முருகு முதன்மை முருகு முதன்மை யென்பது முருகனின் முதன்மை என்று பொருள்படுவது. முதன்மை என்னுஞ்சொல் முன்மை, தலைமை யென இருபொருள் தரும். 1. முருகு என்னுஞ் சொல் வரலாறு உல் - முல் - முன் - முனி = (கன்று), யானைக்கன்று, முனியுடைக் கவளம் போல (நற். 360). முன் L. min = Small, minimus = Smallest. இவ் விலத்தீன் சொற்களினின்று, mini (e.g. minibus, minicale), miniature, minify, minim, minimal, minimalize, minimus, minor, minute முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும் முல் - முள் - முளை = 1. தோன்றுவது, தோன்றியது, 2. இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 16) 3. மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக. 223) ம. முள. து. முளெ. க. மொளெ. தெ. மொள. முளை - முளையான் = சிறுகுழந்தை, இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (உ.வ.). முள் - மள் - மள்ளன் = 1. இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). 2. குறிஞ்சி நிலத்தில் வாழ்வோன். (சூடா). 3. மறவன். வீரன். களம்புகு மள்ளர் (கலித். 306). மள் - மழ = 1. இளமை. மழவுங் குழவும் இளமைப் பொருள. (தொல். உரி 14) 2. குழந்தை. அழுமழப் போலும் (திருக்கோ. 147). மழ - மழவு. (பிங்.). மழவு - மழவன் = 1. இளைஞன். மழவர்தம னையன மண வொலி (கம்பரா. நாட்டுப். 50). 2. மறவன். மழவர் பெரும (புறநா. 96). மழ - மழல் - மழலை = 1. இளமை. பெருமழலை வெள்ளேற்றினர் (தேவா. 579) 2. குழந்தைகளின் திருந்தாச் சொல். தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர் (குறள். 66) 3. மென்மொழி, மழலைவாயின் முறுவற் றையலாள் (சீவக. 181). மழல் - மழறு. மழறுதல் = மென்மையாதல், மழறு தேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6:2:5). மழ - மாழை = 1. இளமை. மாழை மடமான் பிணையியல் வென்றாய் (கலி. 131). 2. அழகு. மாழைநோக்கொன்றும் மாட்டேன் மினே (திவ். திருவாய். 2:4:10). 3. பேதைமை. மாழை மென்னோக்கி (திருக்கோவை. 61). மழ - மக = 1. இளமை. (யாழ். அக). 2. பிள்ளை மந் திம்மக (சீவக. 18). 3. மகன் அல்லது மகள். மக முறை தடுப்ப (மலைபடு. 185) க.ம.க. மக - மகவு = 1. குழந்தை. மகவுமுலை வருட (கம்பரா. தைல. 13) 2.மகன்.கொண்டதோர்மகவினாசை(அரிச்.பு.மயான.20). 3. குரங்குக் குட்டி. (தொல். மர. 14). க. மகவு (g). மக-மகன். க. மகம் (g) மக - மகள். ம.க. - மகள் (g). “mac (mak). a Gaelic word signifying son, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor & c. It is synonymous with son fem, in names of teutonic origin. It is allied with Goth. magus. a son. magattes (G. magd, a maid)”. The Imperial Dictionary of the English Language (Vol. III, p. 91). முள் - (முர்) - முருகு = 1. இளமை. (திவா). 2. அழகு. (பிங்.). 3. முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக் . 611) 4. தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 5. வேலன் வெறியாட்டு முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 6. முருகன் திருவிழா. முருகயர் பாணியும் (சூளா. நாட். 7). முருகு - முருகன் = 1. கட்டிளமையோன். (திவா). 2. முருகதேவன். 3. வேலன் வெறியாட்டாளன். முதியாளோடு முருகனை முறையிற் கூவி (கந். பு. வள்ளி. 155). இளமைக்குரிய பண்பு அழகும் மறமும், முதற்காலக் குறிஞ்சிநிலவாணர் பிற்காலப் பாலை நிலவாணர் போன்றே கடு மறவராயிருந்தனர். அதனால் தம் தெய்வம் இளமையும் மறமும் அழகும் உடையோன் என்று கருதி, முருகன் என்று பெயரிட்டனர். அழகுக் கருத்தினும் இளமைக் கருத்தே முந்தியது ஆயின், திரு.வி.க. தம் முருகன் அல்லது அழகு என்னும் கட்டுரையில் அழகுக் கருத்தையே முந்தியதாக அல்லது முதன்மையானதாகக் கொண்டார். முரு - முருந்து = 1. கொழுந்து (சங். அக.). இளந்தளிர். (அரு. நி.). 2. தென்னை பனை முதலியவற்றின் வெண்குருத்து (சூடா.). முரு - முறு - முறி - தளிர். முறிமேனி (குறள். 1113). முறி - மறி = விலங்கின்குட்டி. பார்ப்பும் - மறியும் என்று - இளமைப் பெயரே (தொல். மர. 1). மரஞ்செடி கொடிகள் அடர்ந்தும் அடிக்கடி மழை பொழிந்தும் இருண்டும் குளிர்ந்தும் இருந்த குறிஞ்சியில், ஒளி பெறவும் குளிர் போக்கவும் மட்டுமன்றி, கிழங்கு சுடவும் கொடுவிலங்கைத் துரத்தவும், நெருப்பு இன்றியமையாததா யிருந்ததினால், அவ்வப் போது மரங்கள் உரசி இயற்கையாகத் தோன்றும் நெருப்பைத் தம் தெய்வ வெளிப்பாடாகக் கருதி, குறிஞ்சி நில மக்கள் முருகனுக்குச் சேயோன் (சிவந்தவன்) என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. தங்களைப்போல் வேற்படை யுடையோன் என்றும், குறிஞ்சிநிலக் கடப்பமாலை யணிவோனென்றும் கருதி வேலனென்றும் கடம்பனென்றும் பெயரிட்டனர். அரசன், வேந்தன் என்னும் பெயர்கள் ஈறுகுன்றி அரசு, வேந்து என்று வழங்குவது போன்று, சேயோன், முருகன் என்னும் பெயர்களும், முறையே, சேய், முருகு என இலக்கியத்தில் வழங்கும். 2. முருகன் முன்மை (வணக்க நிலை) முதற்காலத் திணைநிலைத் தெய்வ நூற்பாவில் சேயோன் மேயமைவரை உலகமும் என்று தொல்காப்பியர் முருகனையே குறிஞ்சி நிலத் தெய்வமாகக் குறிக்கின்றனர். குமரிநாட்டில், முதற்காலத்தில், முருகன் குறிஞ்சி நிலத்திற்கே சிறப்பாக வுரிய தெய்வமாக, அறுவடையும் திருமணமும் போன்ற இன்பக் காலத்திலும், நோயும் பஞ்சமும் போன்ற துன்பக் காலத்திலும், அவ்வப் போது இம்மைப் பயன் நோக்கியே, மதுரை வீரனும் எல்லையம்மனும் போல வணங்கப்பட்டான். பிற்காலத்தில் ஐந்திணை வாழ்க்கை யேற்பட்டபின், வெறியாடும் வேலனாலும், குறி கூறும் குறத்தியாலும் முருக வணக்கம் மருதநிலத்தில் புகுந்தது. 3. சிவன் பின்மை (மத நிலை) மருத நிலத்து மக்கட் பெருக்காலும் நாகரிக வளர்ச்சியாலும், உழவு, வாணிகம், காவல், கல்வி என்னும் நால்வகைத் தொழிலும், வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நால்வகைத் தொழில் வகுப்பாரும் தோன்றியபின், மறுமை நோக்கும் மத வுணர்ச்சியும் ஏற்பட்டு, குறிஞ்சி நிலச்சேயோன் வணக்கத் தினின்று சிவமதமும், முல்லை நில மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும் தோன்றின. ஆயின், சிவன் சேயோனினும் வேறுபட்டவனென்றும், இளமை நீங்கிய நடுப் பருவத்தானென்றும், சிவை அல்லது மலைமகள் என்னும் தேவியுடையனென்றும், காளையூர்தியனென்றும், தில்லை மன்றாடி யென்றும், வீட்டின்பந் தருபவ னென்றும், மறைகளாற் போற்றவும் மெய்ப் பொருள் நூல்களால் ஆயவும் படுபவனென்றும், நிலையான கருத்துகள் எழுந்துவிட்டன. ஆரியப் பூசகர் முருகனை மகனாகவும் சிவனைத் தந்தையாகவும் இருவரையும் ஆரியத் தெய்வங்களாகவும் காட்டி, பல தொன்மங் களையும் (புராணங்களையும்) தீட்டி விட்டனர். இதனால் அத் தெய்வங்களின் உருவத் தோற்றமும் வழிபாட்டுமுறையும் மிக மாறிவிட்டன. சேய் என்னுஞ் சொல்லிற்கு முருகன் குழந்தை, என்று இரு பொருளிருப்பதும், இளைஞனைக் குறிக்கும் குமரன் என்னுஞ் சொல் வடமொழியில் குமார என்று திரிந்து மகனைக் குறிப்பதும். தொன்மிகர்க்குத் (புராணிகர்க்குத்) துணையாயின. 4. சேயோனுக்கும் சிவனுக்குமுள்ள ஒற்றுமை சிவனுஞ் சிவையும் பெற்றோர் போன்றும், முருகனும் வள்ளியும் மகனும் மருமகளும் போன்றும், தோற்றமளிப்பினும், முருக வழி பாட்டில் தனிப் பற்றுள்ளவர், முருகனுஞ் சிவனும் ஒன்றே யென்று கொள்ளற்கேற்ற ஒற்றுமைச் சான்றுகளையுங் கண்டுள்ளனர். 1. இருவருக்கும் நெருப்புப் பூத அடிப்படையில், சேயோன் என்றும் சிவன் அல்லது செய்யவன் (செய்யோன்) என்றும் பெயர் தோன்றியுள்ளமை. இதனால் சிவாயநம என்பது முருகனுக்கும் ஏற்கும். 2. இருவருக்கும் மலைக்கோயில்கள் சிறப்பிருக்கையா யிருக்கை. 3. இருவர் ஊர்திகளும் படைக்கலங்களும் மலரணிகளும் குறிஞ்சி நிலத்திற் குரியனவாயிருத்தல். 4. இருவர்க்கும் முகங் கண் கைகள் முப்பதாய் முடிகை. 5. முருகனும் வீடளிப்பவனாகத் திருமுருகாற்றுப்படை கூறல். 6. இருவரையும் நான்முக திருமாலர்க்கு மேலவராகக் கதைகள் விளம்பல். 7. சிவனியக் கொண்முடியும் (சித்தாந்தமும்) மெய்ப் பொருட் கோவையும் முருகனுக்கும் ஏற்றல். 8. இருவரும்அகத்தியற்குத் தமிழாசிரியராகச் சொல்லப்படுதல். 9. வள்ளி குறிஞ்சி நிலத் தேவியாதலால், மலைமகள் என்னும் பெயர் அவளுக்கும் பொருந்தும். மலைமகள் = மலைத்தேவி. 10. முல்லை நிலத்து மாயோன் என்னும் வணக்கநிலைத் தெய்வம் மதநிலைத் தெய்வமாக (பெருந்தேவனாக) மாறியபோது, முருகனுஞ் சிவனும் போன்றே வேறுபாடு ஏற்படவில்லை. 5. முருகன் கவர்ச்சி இயற்கை வளஞ் சிறந்த குறிஞ்சி நிலத்தில், இளமையும் அழகும் இணைந்த முருகனும் வள்ளியும், அரசருங் காண விரும்பும் அழகிய ஆண்மயில் மீதமர்ந்து. அடியார்க்கு அளிக்கும் கண்கவர் கவின் காட்சியும், காவடி நோன்பின் மாட்சியும், முருகநேயர்க்கு முழுமனக் கவர்ச்சியென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. 6. முருகன் முதன்மை இனி, முருகனே சிவனுக்கு ஓங்காரப் பொருளை உணர்த்தினான் என்று சிவனியரும் ஒப்புக் கொள்ளுஞ் செய்தி. மகவே மாந்தனின் தந்தை (The child is father to the man) என்னும் பழமொழிக் கருத்தையுணர்த்தி முருகனின் முதன்மையை நாட்டுகின்றது. காந்தம் (காந்தம்) உள்ளிட்ட பதினெண் புராணங்களைப் புனைந்த வியாசர் காலம் கி.மு. 1000 அல்லது 1200. தமிழகத்தில் முருக வணக்கந் தோன்றியது கி.மு. 1,00,000. தமிழ்நிலப் பறவைகளுள் வெற்றி காணும்வரை வீறு மறப் போரிடுவது குறிஞ்சி நிலக் கோழிச் சேவல் ஒன்றே. அதனால், குறிஞ்சிநில மறவர் தம் மறத்தெய்வ முருகனுக்குக் கோழிச் சேவலைக் கொடிச் சின்னமாக்கினர். இதையுணராது காலஞ் சென்ற கே.ஏ.நீலகண்ட சாத்திரியார், முருகன் என்னும் பெயர் சேவலைக் குறிக்கும் முர்கா என்னும் பாரசீகச் சொல்லி னின்று திரிந்ததாகக் கருதியது. எத்துணை இழிதகவானது என்பதைப் பகுத்தறிவுள்ள நடுநிலையறிஞர் கண்டுகொள்க. (நன்னீராட்டு நறுமலர், குன்றக்குடி, 1973) முல்1 (இளமைக் கருத்துவேர்) இளமை என்பது ஓர் உயிரியின் பிறப்பிற்கும் முழு வளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலைமை அல்லது காலம். அது பிறந்த நிலை யினின்று தொடங்கி, புனிற்றிளமை, சிற்றிளமை, பேரிளமை என முந்நிலைப்பட்டதாகும். பிறப்பெனினும் தோற்றமெனினும் ஒக்கும். இயற்கையான தோற்றம் அல்லது இயக்கமெல்லாம் முன்னோக் கியே நிகழ்தலால், தோற்றக் கருத்தில் முன்னோக்கல் அல்லது முகங்காட்டற் கருத்து இரண்டறக் கலந்துள்ளது. இனி, இளமைப் பருவத்திலேயே உருவச் சிறுமையும் உடல் மென்மையும் அழகு நிறைவும் மறவுணர்ச்சியும் வலிமை மிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால், இளமைக் கருத்திற் சிறுமை மென்மை அழகு மறம் வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும். முல் - முன் - முனி = யானைக் கன்று. முனியுடைக் கவனம் போல் (நற். 360). முன் - முன்னி = முல்லை நிலத்தில் இயற்கையாக விளையும் ஒரு சிறு பயறு. ஒ.நோ: L. Min, small. இதனின்றே. minify, minim, minimum, minish, minor, minute முதலிய பல சொற்கள் திரிந்துள்ளதாகத் தெரிகின்றது. முல் - முள் - முளை = 1. வித்தினின்று முளைத்த சிறு வெளிப்பாடு. வித்திய வெண்முளை (ஐங்குறு. 29). 2. இளமை. முளையமை திங்கள் (கம்பரா. கும்பக. 10), 3. மரக்கன்று. அதன்றாள் வழியே முளையோங்குபு (சீவக. 223). 4. சிறுபிள்ளை. 5. மகன். (பிங்.). ம. முள. து. முளெ. க. மொளெ. தெ. மொலக்க. முளைத்தல் = 1. முளை தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10 : 8). 2. கதிரவன் தோன்றுதல் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8 : 18). ம. முளை. க. மொளெ. தெ. மொலத்சு. முளை - முளையான் = சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது (W). முள் - முளு - முசு - மூசு = பிஞ்சு. பலாமுசு. (உ.வ.). x.neh.: உளு - உசு. ள - ச. போலித்திரிபு. முள் - முட்டு. முட்டுக் குரும்பை = சிறு தென்னம் பிஞ்சு. அல்லது பனம் பிஞ்சு. முட்டு - மொட்டு = அரும்பு. மொட்டருமலர் (திருவாச. 29 : 8). மொட்டு - மொட்டை = மணமாகாத இளைஞன் (W.) மொட்டைப் பையன் (உ.வ.). முளு - முழு - முகு - முகிழ். ஒ.நோ: தொழு - தொகு. முகிழ்த்தல் = (செ.கு.வி.) 1. அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் (சீவக. 551). 2. தோன்றுதல். மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே (ஐந்குறு. கடவுள்). கூம்பும் மலர்போற் குவிதல் அல்லது மூடுதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7). (செ.குன்றாவி.). 1. ஈனுதல். அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 8:154). 2. தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163). க. முகுள் (g). முகிழ் = 1. அரும்பு. குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந் நீட்டார் (நாலடி. 262). 2. குமிழி. பெயறுளி முகிழென (கலித். 56). முகிழ் - முகிழம் = மலரும் பருவத்துப் பேரரும்பு (சது.). ய. முகுல. முகிழ் - முகிழி, முகிழித்தல் = முகிழ்த்தல். முகிழி - முகிழிதம் = முகிழ்தம் = அரும்பல், அரும்பு. பொன்னின். முகிழிதம் விளைத்து (குற்றா. தல. நாட்டுச். 9). முகிழ் - முகிள். முகிழம் - முகிளம். முகிழிதம் - முகிளிதம். முகிள் - முகுள் - முகுளம் = 1. அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த (திவாலவா. 4 : 14). 2. ஒரு கையின் ஐந்து விரலும் நிமிர்ந்து நுளி பொருந்திக் கூம்பி நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3 : 18), உரை). வ. முகுல. முகுளம் - முகுடம் = மணிமுடி. முகுடமும் பெருஞ் சேனையும் (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று. (திவா.). முகுடம் - வ. முக்குட்ட. முகுடம் - மகுடம் = 1. மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246.). 2. தேர்க் குப்பம். 3. ஓலைச்சுவடியின் மணி முடிச்சுக் கொண்டை. மகுடம் - வ. மக்குட்ட. பேரா. பரோ தம் சமற்கிருத மொழி என்னும் நூலின் இறுதியில், முகுடம் (மகுடம்) என்பது திரவிடச் சொல்லென்று குறித்திருத்தல் காண்க. முகிள் - முகுள் - முகுளி. முளித்தல் = கவிதல். முருளிக்கும் ... அரவிந்தம் (தண்டி. 62). முகு - முகை = அரும்பு. முகை மொக்குளுள்ளது நாற்றம் போல் (குறள். 1274). முகைதல் = அரும்புதல். முகு - மொகு - மொக்கு = பூ மொட்டு. 2. மொட்டுப் போற் செய்யப்படும் ஓவிய வேலைப்பாடு. 3. நிலத்தின்மேல் இடும் பூக்கோலம். க. மொக்கு (gg) தெ. மொக்க. (gg). மொக்கு - மொக்குள் = 1. மலரும் பருவத்துப் பேரரும்பு. முகைமொக்குளுள்ளது நாற்றம் போல (குறள். 1274). 2. நீர்க்குமிழி. படுமழை மொக்குளின் (நாலடி. 27). க. முகுதல். (g). மொக்குள் - மொக்குளி. மொக்குளித்தல் = 1. குமிழியுண்டாதல். (w). 2. திரளுதல். (யாழ். அக.). க. முக்குளிசு. முள் - முண் - முண. முணமுணத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். சுற்றிவந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா (சிவவாக. 58). முண - முணு. முணுமுணுத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். முணு - முணுக்கு. முணுக்கு முணுக்கெனல் = குழவி தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடித்தல். முண் - மண் - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்காக்கை. மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை. மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்புறா. மணிப்பயறு முதலிய கூட்டுச் சொற்களை நோக்குக. முணுக்கு - முடுக்கு = சிறுசந்து. முடுக்கு - முடுக்கர் = குறுந்தெரு. முடுக்கரும் வீதியும் (சிலப். 5 : 187) முடுக்கு - முக்கு = சந்து. ம. முக்கு. முது - முகம் = 1. தேற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298). 2. முன்பு. ஈன்றாள் முகத்தேயு மின்னாதால் (குறள். 923). 3. தலையின் முன்புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள். 93). 4. நோக்கு. புதுமுகம் புரிதல் (தொல். மெய்ப். 13). 5. முகமன். முகம்பல பேசி யறியேன் (தேவா. 742 : 2) 6. வீட்டின் முன்புறம். 7. நாடகச்சந்தி ஐந்தனுள் முதலது. (சிலப். 3 : 13 உரை). 8. தொடக்கம். (w.) 9. முகத்தில் முன் நீண்டுள்ள மூக்கு. முகஞ் செய்தல் = 1. தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக் 35 : 49). 2. முன்னாதல் தோற்றினான் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 3. நோக்குத முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408). முகக் கொம்பு. முகதலை, முகமண்டபம், முகவாசல், முகவுரை: உரைமுகம், கழிமுகம், துறைமுகம், நூன்முகம், போர் முகம் என்னும் கூட்டுச் சொற்களில், முகம் என்னுஞ் சொல் முன்புறத்தையே குறித்தல் காண்க. முகமை = 1. முன்மை. 2. தலைமை. அவன் முகமையாயிருந்து கூட்டத்தை நடத்தி வைத்தான். (உ.வ.). முகம் - முகன் (போலி). முகம். முகன் - வ. முக (mukha). முகன் - முகனை = 1. முன்புறம். 2. தொடக்கம். 3. உரைநடைச் சொற்களின் அல்லது செய்யுட்சீர் அடிகளின் முதலெழுத்துகள் ஒத்து வருதல். 4. தலைமை. அவன் முகனை பண்ணுகிறான் (w.). 5. அந்நொடியே, நான்வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (w) 6. முன்சினம். உனக்கேன் இவ்வளவு முகனை? (உ.வ.). முகனைக்கல் = கோயில் முதலியவற்றில் வாசற்காலின் மேலுள்ள உத்தரக்கல். முகனைக்காரன் = முதலாளி. (w). முகனை முடிவு = தொடக்க விறுதி. (w). முகனை - மோனை = 1. முதன்மை. மோனை மங்கலத் தியற்றுவ (உபதேசகா. சிவபுண். 63). 2. செய்யுளடியிற் சீர்தொறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. அடி தொறுந் தலையெழுத்தொப்பது மோனை, (தொல். செய். 91). முகம் - முகர் = 1. முகம். 2. மூக்கு. முகர்தல் = மணமறிதல். முகர் = மோர் - மோ. மோத்தல் = மணிமறிதல். மோப்பக் குழையும் அளிச்சம் (குறள். 90). மோ - மோப்பு - மோப்பம் = பணமுகர்வு. முகர்-முகரி=1. தொடக்கம் 2. முன்புறம் 3. தலைமை. 4. மூக்கின் அடி. முகரிமை = 1. தலைமை. முகரிமை யடைந்தவன் தோல் முகத்தவன் (கந்தபு. கயமுகனுற். 49). 2. பேரறிவு. (பிங்.). முகரிமைசால் நற்றவர் (சேதுபு. பலதீ. 30). முகர் - முகரை = 1. பழிக்கப்படும் முகம். அவன் முகரையைப் பார் எப்படி யிருக்கிறதென்று (உ.வ.). மூக்கினடி. முகவுரையா லுழுத தொய்யில் (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). மு. இந்த. முக்ரா (mukhra). முகரை - மோரை - 1. பழிக்கப்படும் முகம். 2. முகவாய்க்கட்டை தெ. மோர. க. மோரெ. முகவாய் - மோவாய் - முகத்தில் வாய்க்குக் கீழுள்ள நாடி. குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறம். 257). முகு - முக - முகப்பு = 1. முற்பகுதி 2. வீட்டின் முன்புறக் கட்டிடம். முகத்தணிந்த முகப்பு (அரிச். பு. இந்திர. 20). 3. அணிகலங்களின் முன்புறப் பொருத்துவாய். 4. சேலையின் முகதலை. 5. முன்னிலை. இருந்திடா யெங்கள்கண் முகப்பே (திவ். திருவாய் 9:2:7). முள் - மள் - மள்ளன் = 1. இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுருகு. 262). மறவன். படைமறவன். களம்புகு மள்ளர் (கலித். 106). 3. குறிஞ்சிநில வாணர். (சூடா.). மள் - மள - மழ = 1. இளமை. மழவும் குழவும் இளமைப் பொருள (தொல். உரி. 14). 2. குழந்தை. அழுமழப் போலும் (திருக்கோ. 147). மழ - மழவு = 1. இளமை. 2. குழந்தை. மழவு - மழவன் = 1. இளஞன். மழவர்த மனையன மணவொலி (கம்பரா. நாட்டுப். 50). மழ - மழம் - மழல் - மழலை = 1. இளமை. பெருமழலை வெள்ளேற்றினர் (தேவா. 570 : 5). 2. குழந்தைகளின் இனிய, திருந்தாச் சொல். தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர் (குறள். 66). மழ - மழம் - மடம் = 1. இளமை. அஞ்சன் மடவனமே (நள. சுயம். 27). 2. இளமைக்குரிய மென்மை. தெளிநடை மடப்பிணை (புறம். 23), 3. இளமைக்குரிய அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டு மடை). 4. இளமைக்குரிய அறியாமை. கொடை மடம் படுதலல்லது படைமடம் படான் (புறம். 142). 5. பெண்பாற் குணம் நான்கனுள் ஒன்றான (கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய) பேதைமை. வாலிழை மடமங்கையர் (புறம். 11). மழ - மட - மடப்பு - மடப்பம் = 1. மென்மை. 2. இணக்கம். 3. பேதைமை. மடம் - மடவன் = அறிவிலான். மடவர் மெல்லியர் செல்லினும் (புறம். 106). மடவள் = அறிவிலாள். மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே (ஐந்குறு. 67). மடவாள் = பெண். குழன் மடவாள் கூறுடையாளொரு பாகம் (திருவாச. 5:17). மடவி = பெண். மடவியரைச் சிந்தை விருப்பறா செய்வித்தல் (கொக்கோ. பாயி. 12). மடம் - மடந்தை = 1. பெண். இடைக்குல மடந்தை (சிலப். 16:2). 2. பதினான்கு முதல் பத்தொன்பது அகவை வரையப்பட்ட பெண். (பிங்.). தெ. மடத்தி. க. மடதி. மடம்வால் - மடவரல் = 1. மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறம். 89). 2. பெண். மடவரனோக்கம் (குறள். 1085). மடமை - மடைமை = அறியாமை. மடையன் = அறிவிலி. மழ - மக = 1. இளமை. (யாழ் அக.). 2. 2. பிள்ளை. மந்திம்மக (சீவக. 1897). 3. மகன் அல்லது மகள். மகமுறை தடுப்ப. (மலைபடு: 185). க. மக. (g). மழவு - மகவு = 1. குழந்தை.மகவுமுலை வருட (கம்பரா. தைல. 13). 2. மகன். கொண்டதோர் மகவினாசை (அரிச். பு. மயான. 20). 3. மரத்தில் வாழும் விலங்கின் குட்டி. கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப. (தொல். மர. 13). மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான (மேற்படி 14) க. மகவு (g). மக - மகன் = 1. குழந்தை. (w). 2. ஆண்பிள்ளை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள். 110). 3. புதல்வன். மகன்தா யுயர்பும் (தொல். கற். 33). 4. சிறந்தோன். நூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல் (நாலடி. 136). 5. போர் மறவன். வேந்தன் மனம்போல வந்த மகன் (பு.வெ. 2 : 5). 6. கணவன். நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் (மணி. 21 : 29). 7. விளையாடும் பருவத்துப் பெண் பெயரீறு. பெண்மை யடுத்த மகனென் கிளவியும் (தொல். பெய. 11). புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை. மாறோக்கத்தார் இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப. (சேனா. உரை.). மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. க. மகம் (g). ஒ.நோ: mac (mak). A. Gaelic word signifying so, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, & c. It is synonymous with Son in tentonic origin ... and with mab or Map (shortened into Ab or Ap) in Webh names. It is allied to Goth. magus, a son fen, magaths (G. magd, a maid.). (The Imperial Dictionary of the English Language.) மக - மகள் = 1. பெண். ஆயமகணீ யாயின் (கலித். 107). 2. புதல்வி. நல்கூர்ந்தாள் செல் மகள் (கலித். 56). 3. மனைவி. மனக்கினி, யார்க்கு நீ மகளாயதூஉம் 9 மணி. 21 : 30). 4. பெண் தெய்வம். எ.டு. திருமகள். 5. தெய்வத்தாய். எ.டு. நிலமகள். ம. மகள். க. மகள் (g). மகள் - மகடு = 1. பெண். 2. மனைவி. (அகு.நி.). மகடு - மகடூஉ = 1. பெண். ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல் (தொல். கிளவி. 6). 2. மனைவி. இற்பொலி மகடூஉப் போல (புறம். 331). ஒ.நோ: வ. மஹிலா = பெண்டு, பெண் மஹீலா = பெண்டு. மஹேலா = பெண்டு. மஹேலிகா = பெண்டு. மகளிர் மன்றம் மஹில சங்க எனப்படுகின்றது. மகள் என்னும் சொல்லே மஹில என்று திரிந்திருத்தல் வேண்டும். மஹிலா என்னும் சொல்லிற்குக் காட்டப்படும் மூலம் மஹ் என் பதே. அம் மூலத்திற்கு மகிழ் அல்லது மிகு என்பது பொருளாகக் கூறப்படுகின்றது. அதுவே பொருளாயின். அதுவும் மஹிலா என்பது தமிழ்ச் சொற்றிரிபென்பதற்குச் சான்றாதல் காண்க. மகார் = 1. புதல்வர். அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர.58). 2. சிறுபிள்ளைகள். இளந்துணை மகாரின் (பதிற்றுப். 71:7). மகன் - மான் (ஆண்பாற் பெயரீறு). எ.டு. திருமகன் - திருமான், கருமகன் - கருமான், பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான், சேரமான், வெளிமான். மகள் - மாள் (பெண்பாற் பெயரீறு). எ.டு: பெருமகள் - பெருமாள் - பெருமா (கொச்சை); வேண்மாள். மகர் - மார் (பலர்பாற் பெயரீறு). எ.டு: அண்ணன்மார். ஆசிரியன்மார். மழலை - மதலை = 1. குழந்தை. 2. மகன். (பிங்.). மதலை யிற்றமை கேட்டலும் (சேதுபு. அக்கினி. 82). மதலைக் கிளி = இளங்கிளி. மதலைக் கிளியின் மழலைப் பாடலும் (பெருங். உஞ்சைக். 48 : 164). முள் - முரு - முருகு = 1. இளமை. (திவா. 2. அழகு. (பிங்.). 3. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன். அருங்கடி வேலன் முருகொடு வளைஇ (மதுரைக். 611). 4. தெய்வம். முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல (புறம். 259). 5. வேலன் வெறியாட்டு. முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன் (குறுந். 362). 6. திருவிழா. (திவா.). முருகயர் பாணியும் (சூளா. நாட். 7). 7. படையல் விருந்து. படையோர்க்கு முரகயா (மதுரைக். 38). 8. திருமுருகாற்றுப் படை. முருகு பொருநாறு (தனிப்பா). முருகு - முருகன் = 1. கட்டிளைஞன். (திவா.). 2. குமரன் என்னும் குறிஞ்சிநிலத் தெய்வம். 3. வெறியாடும் வேலன். முதியாளோடு முரகனை முறையிற் கூவி (கந்தபு. வள்ளி. 155). 4. பாலைநிலத் தலைவன். (அரு. நி.). குறிஞ்சி நிலத் தேவனை இளைஞனென்று கருதியே. குறிஞ்சி நில மக்கள் முருகன் என்றனர். ஒ.நோ: குமரன் = இளைஞன். முருகன். ம. முருகன். க. முருக. (ப.). முரு - முறு - முற் = 1. தளிர். முறிமேனி (குறள். 1113). 2. கொழுந்துல். இலையே முறியே தளிரே தோடே (தொல். மர. 88). 3. இலை (யாழ். அக). முறிதல் = துளிர்த்தல். முறிந்த கோல முகிழாமுலையார் (சீவக. 2358). முறி - மறி = 1. குதிரை மான் முதலிய விலங்கின் இளமை. பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என் றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே (தொல். மர. 1) யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே (மேற்படி. 12) 2. அழுங்கின் குட்டி (பிங்.). 3. மான்குட்டி மறிகொள்கையன் (தேவா. 980 : 10). 4. செம்மறியாடு. மறியுடையாயர் மாதர் (கம்பரா. ஆற்று. 15). 5. மேழ ஓரை. (சூடா.). 6. ஆடு. குதிரை, கழுதை முதலியவற்றின் இளம்பெட்டை, பெண் விலங்கு. ஒ.நோ: நாகு = இளமை. சில விலங்கின் பெட்டை (மைடு) க.து.மரி. மண் - மாண் - மாணி = 1. இளமை. 2. அழகு. மாணிக்குறளுருவாய மாயன் (திவ். பெரியாழ். 5:2:5). அரும் 3. பள்ளிச் சிறுவன் கரு மாணியா யிரந்த கள்வனே (திங். இயற். 2 : 61). 3. குறள் வடிவம். மண் - மாண் = 1. பள்ளிச் சிறுவன். மாணாகி வையமளந்ததுவும் (திவ். பெரியதி. 8:10:8). 2. குறள் வடிவம் குறளன். குறுமா ணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164 : 5). மாண்மகன் = பள்ளிச்சிறுவன். பண்டு மாண் மகன்றன் செயல் பார்த்தவோ (தக்கயாகப். 672). மாண் - மாணவன் = 1. பள்ளிச் சிறுவன். மஞ்சனைக் குறுகியொரு மாணவப் படிவமொரு (உத்தரரா. அனுமப். 6). மாணவன் - வ. மாணவ. மாணவன் - மாணவகன் = 1. மாணி, மண்மாகா இளைஞன் பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேச்சு. 40). 2. பள்ளிச் சிறுவன். ஓலைக் கணக்கன், மழபுலவன். ஆசான் முன்னே துயில மாணவகரை (திருமந். 2163). 3. எட்டுமுதல் பத்தாண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக). மாணவன் - வ. மாணவக. மாணவகன் - மாணாக்கன் = கற்போன், பள்ளிச் சிறுவன் இவனோரிள மாணாக்கன் (குறுந். 33). (வே.க.) முல்2 (முன்மைக் கருத்துவேர்) தோற்றக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட இளமைக் கருத்து வேர்ச் சொல்லின் உடனிலைக் கருத்துக்கள், சிறுமை மென்மை அழகு மறம் வலிமை என்பன. தோற்றமும் இளமையும் ஓருயிரியின் வாழ்க்கையில் முற்பட்ட நிலை களாதலாலும், தோற்றமென்பது ஒன்று இன்னொன்றி னின்று முன் வருதலாத லாலும், தோற்றக் கருத்தின் வழிநிலைக் கருத்து முன்மையென்பது அறியப்படும். முன்மை யென்பது காலமுன் இடமுன் என இரு திறப்படும். கால முன்மை முதன்மையையும் முதுமையையும் குறிக்கும். முதுமை முதிர்ச்சியில் முற்றும். முல் - மூல் - மூலம் = 1. விதையினின்று முன்தோன்றும் முளை. 2. முளையின் மாற்றமாகிய வேர். 3. திரண்ட வேராகிய கிழங்கு (பிங்.). முதிர்கனி மூல முனிக்கண மறுப்ப (கல்லா. 38). 4. வேரை யொட்டிய அடிமரம். போதி மூலம் பொருந்தி (மணிமே. 26: 47). 5. அடிப்படை 6. முதல் (ஆதி). மூலவோலை மாட்சியிற் காட்ட (பெரியபு. தடுத். 56). 7. ஐம்பூத முதனிலை (மூலப் பிரகிருதி). மூலமு மறனும் ... கனலும் (பரிபா. 13:24) 8. கரணியம் (காரணம்). மூல மாகிய மும்மலம் (திருவாச. 2:111). 9. அடிமல மாகிய ஆணவம். மூலமாகிய மும்மலம் (திருவாச. 2:111). 9. அடிமல மாகிய ஆணவம். மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய் (தேவா. 845:9). 10. அடிவாயாகிய அண்டி. 11. அண்டியில் முளைபோல் தோன்றும் நோய் (அக. நி.). மூலம் - வ. மூல. மூல் - மூலி = 1. மருந்தாக வுதவும் வேருடைய புல் பூண்டு செடி கொடி. பாதாள மூலி படருமே (நல்வழி. 23). 2. மருந்துவேர். 3. கரணிய முதல்வன். மூலி - வ. மூலின். மூலி - மூலிகை = மருந்துவேர் (w). 2. மருந்து வேர்ச்செடி. மூலிகை - வ. மூலிகா. முல் - முன் = 1. முதல் (பிங்.). 2. காலமுன். பின்றூங்கி முன்னெழுஉம் பேதையே (தனிப்பா). யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே (பழ.). 3. இடமுன். என்னைமுன் நில்லன்முன் தெவ்விர் (குறள். 771). முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க (தனிப்பா.). 4. அண்ணன். அறுமுகேசன்முன் (திரு வாலவா. காப்பு. 2). 5. பழமை. முன்சொல்(பிங்.) = பழமொழி. ம. க. முண். தெ. முனு. முன் - முன்னம். நம்மினு முன்ன முணர்ந்த வளை (குறள். 1277). க. முன்னம். முன்னம் - முன்னர். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள். 435). முன் - முன்னை = 1. பழமை. முன்னைப் பழம் பொருட்கும் (திருவாச. 7:9). 2. அக்கை. என்ற னன்னை நும்முன்னை (கம்பரா. மிதிலைக். 124). 3. அண்ணன். (திவா.). K‹nd - k., க. முன்னெ. முன்னன் = அண்ணன். பெட்பொடு முன்னனைக் காணும் (இரகு. அவதாரநீங். 13). முன்னவன் = 1. தேவன். முன்னவன் போதியில் (மணிமே. 28: 141). 2. சிவபிரான். முன்னவன் கூடல் (கல்லா. 32 : 10). 3. அண்ணன். முன்னவன் வினவ (கம்பரா. வேள். 4). முன்னவள் = அக்கை (பிங்.). 2. மூதேவி. முன்னவள் பதாகை யோடு - வற்துற்ற வாபோல் (கந்தபு. சிங்கமு. 443). முன்னோன் = 1. கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3:29). 2. குல முன்னைத் தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் (மணிமே. 28: 123-4). 3. தந்தை. வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3:13.கொளு). 4. அண்ணன். தம் முன்னோர் தந்தை தாய் (பு.வெ. 9:33). முன்னுதல் = 1. எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 2. முற்படுதல். முன்னி யாடு பின்யான்..... உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). முன்தானை - முன்றானை = சேலைக் கடைமுனை. முன்றானை யிலே முடிந்தாளலாம்படி (ஈடு. 1:10:11). முன்-முன்பு = (பெ.) 1. முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறம். 14). 2. முற்காலம். 3. பழமை (கு.வி.எ.). முன் - முனி = நுனி. முன் - முனை = 1. முன். அத்தி னகரம் அகரமுனை யில்லை (தொல். புண. 23). 2. நுனி. வெய்ய முனைத்தண்டு (சீவக. 1136. பாட வேறுபாடு 3. கூர்மை. 4. கடலுட் செல்லும் நீண்டு கூரிய நிலப்பகுதி 5. முகம் (ஈடு. 10:5:10) 6. தலைமை (அக.நி). 1. முன்னிலையில். தலையில் வணங்கவு மாங்கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5 : 3 : 7). 2. முன்காலத்தில். முன்புநின் றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117). முன் - முன்று - முன்றில் = வீட்டின் முன்னிடம் பலவின் சுளையுடை முன்றில் (நற். 77). தெ. முங்கிலி. முன்றில் - முற்றில் - முற்றம் (முன்றகம் - முன்றம் - முற்றம் (?)) = 1. வீட்டு முற்றம். மணன்மலி முற்றம் புக்க சான்றோர் (புறம். 178). 2. ஊர் முற்றம். வஞ்சி முற்றம் வயக்கள னாக (புறம். 373). 3. பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகம். 51). முன்று - முந்து. முந்துதல் = 1. முற்படுதல். முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (குறள். 715). 2. எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28). 3. விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7). 4. மேலெழுதல். உந்தி முதலா முந்துவளி தோன்றி (தொல். எழுத்து. 83). 5. முதன்மையாதல். அவையின் முந்தி யிருப்பச் செயல் (குறள். 67). 6. சிறத்தல். 7. பழமையாதல் க. முந்து. முந்து = 1. முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரு. 10). 2. முன்பு. 3. தொடக்கம் (ஆதி). முந்து நடுவு முடிவுமாகிய (திருவாச. 18:5). முந்து - முந்தன் = கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி.சி. 4:28). முந்துநூல் = முன்னூல். முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (தொல். சிறப்புப்). முந்தி = (பெ.) 1. முன்னிடம். 2. முன்றானை. பொதுமாதர் முந்தியே தொடுமிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). 3. (கு.வி.எ) முற்காலம். முந்திவா னோர்கள் வந்து (தேவா. 477 : 8). முந்து - முந்தை = (பெ.) 1. முற்காலம். முந்தைத்தான் கேட்ட வாறே (சீவக. 545). 2. பழைமை (பிங்.). 3. முன்னோன். தந்தையாயென் றிவர்க்கு ... முந்தைவழி நின்று (பு.வெ. 9:33) 4. (கு.வி.எ.). குவி வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறம். 10). முந்தை - முத்தை = முன்னிடம். முத்தை வரூஉங் காலந் தோன்றின் (தொல். எழுத்து. 164). க. முந்தெ. முந்திசினோர் - முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே (பதிற். 69 : 17). முந்தி + ஈயினோர் = முந்தியீயினோர் - முந்தீயினோர் - முந்தீசினோர் - முந்திசினோர். ஈதல் = இடுதல். ஈ ஒரு துணைவினை. ஒ.நோ: வந்து + இடு = வந்திடு = வந்துவிடு. உரைத்து + இடு = உரைத்திடு. ஈ - ஈயினார்: (பலர்பால் இறந்தகால வினைமுற்றும் வினையா லணையும் பெயரும்). ஈயினவர் - ஈயினார் (வினையாலணையும் பெயர்) - ஈயினோர் = ஈந்தோர். ஒ.நோ: ஆயினார் - ஆயினோர். போயினார் - போயினோர். ஈதல் என்னும் வினை, இவ்வகையில் மூவிடத்தும் துணைவினையாக வரும். முன்னிலை யிடத்திற்கு எடுத்துக்காட்டு இறந்துபட்டது. இவ் வாய்பாட்டு வினைமுற்று அல்லது வினையாலணையும் பெயர், தன்மையிலும் படர்க்கையிலும் ஈறு குன்றியும் வரும். ஈறு குன்றாது வருவது படர்க்கையிற் பெரும்பான்மை. தன்மையில் ஈறு குன்றாது வருவதற்கு இக்காலத் தெடுத்துக்காட்டில்லை. எ.டு: ஈறு குன்றா வினையாலணையும் பெயர் சிறந்திசினோர் (தொல். உயிர். 93) அறிந்திசி னோரே (குறுந். 18). படைத்திசி னோரே (புறம். 18). ஈறு குன்றிய வினைமுற்று தன்மை மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே (தொல். எழுத்து. பிறப். 20); படர்க்கை. பாடல் சான்ற விறல்வேந்த னும்மே ... துப்புறுவர் புறம்பெற் றிசினே (புறம். 11). நுவன்றீயினேன் - நுவன்றீசினேன் - நுவன்றிசினேன் - நுவன்றிசின். புறம் பெற்றீயினான் - புறம்பெற்றீசினான் - புறம்பெற்றிசினான் – புறம்பெற்றி சின். முந்திரி1 = 1,320 ஆகிய கீழ்வா யிலக்கம். முந்திரிமேற் காணி மிகுவதேல் (நாலடி. 346). முந்து + இரி = முந்திரி. இரிதல் = விலகுதல், பிளத்தல், கெடுதல். இரிசல் = பிளவு. ஒ.நோ: பின்னம் = 1. பிளவு. 2. கீழ்வா யிலக்கம். E. fraction, f L. frang, break கீழ்வா யிலக்கங்களுள் முந்தியது முந்திரி யெனப்பட்டது. முந்திரி2 = அண்டிமா (cashew). முன் + துரி = முந்துரி - முந்திரி. துருத்தல் = முன் தள்ளுதல் (த.வி.). துருத்துதல் = முன்தள்ளுதல் (பி.வி.). முந்திரிக்கொட்டை பழத்திற்கு வெளியே முன் தள்ளிக் கொண்டிருத்தலால், அதன் பழமும் மரமும் முந்திரி யெனப்பட்டன. அண்டிமா என்பதும் இப் பொருளதே. அண்டியில் (அடியில்) கொட்டையுடைய பழமா அண்டிமா. தெ. முந்த மாமிடி. முந்தூழ் = பழவினை (E). முந்து - முது - முதல் = 1. தொடக்கம் (ஆதி). முதலூழி யிறுதிக்கண் (சிலப். 8:1, உரை) 2. முதலிலிருப்பது. முதல்நீ டும்மே (தொல். எழுத்து 458). 3. கரணியம் (காரணம்). நோய்முத னாடி (குறள். 948), 4. மூல கரணியனான கடவுள். மூவா முதலாய் நின்ற முதல்வா (திருவாச. 27 : 10). 5. முதலானவன். முதலாய நல்லா னருளல்லால் (திவ். இயற். 1:5). 6. தலைமை வரிசை. முதன் மாணாக்கன். 7. அடைகொளி (விசேடியம்) (சைவப்). 8. மூலவைப்பு. முதலிலார்க் கூதிய மில்லை (குறள். 449). 9. வேர். முதலினூட்டுநீர் (அரிச். பு. மீட்சி. 17). 10. கிழங்கு. 11. அடிப்பாகம். வாடிய வள்ளி முதலரிந் தற்று (குறள். 1304). 12. அடிமரம். வேங்கையைக் கறுவுகொண்டதன்முதற் குத்திய மதயானை (கலித். 38). 13. இடம். சுரன் முதன் மராத்த வரிநிழல் (சிறுபாண். 8). 14. முதற்பொருள். முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப. (தொல். அகத். 4). 15. பிண்டப் பொருள். முதலுஞ் சினையும் (தொல். வேற்றுமை. 6). 16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள். திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும் (S.I.I.III, 215 : 11). 17. இசைப்பாட்டு வகை (சிலப். 3: 41-2, உரை). 18. வணிகப் பண்டக் கொள்விலை. 19. முதலெழுத்து. எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே (நன். 58). (கு. பெ. எ.). முதலான, முதலாயிரம். (கு.வி.எ.). 1. முதலில். முதல்வந்தவன். 2. கூட தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது (உ.வ.). (இ.சொ.) 1. 5 ஆம் வே. உருபு. அடிமுதல் முடிவரை (உ.வ.) 2. 7 ஆம் வே. உருபு. குணமுதற் றோன்றிய ... மதியின் (மதுரைக். 195). க. முதல். முதலுதல் = (செ. கு. வி). 1. முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். மொழி. 33.). 2. தொடக்கமுடைய தாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1). (செ. குன்றாவி.). முதலாகக் கொண்டிருத்தல். அகர முதல வெழுத்தெல்லாம் (குறள். 1). முதல்வன் = 1. தலைவன். மூவர்க்கு முதல்வ ரானார் (தேவா. 453:2). 2. கடவுள். ஞாலமூன் றடித்தாய முதல்வன் (கலித். 124). 3. அரசன். (திவா.) 4. தந்தை. தன்முதல்வன் பெரும்பெயர் (கலித். 75). முதலவன் = குலமுதல்வன். முதலவன் முதலிய முந்தையோர் (கம்பரா. பள்ளிபடை 50). முதலோன் = கடவுள், செஞ்சடை முதலோன் (கம்பரா. நிகும் பலை. 142). முதலி = 1. தலைவன். எங்கள் முன்பெரு முதலி யல்லை யோவென (பெரியபு. கண்ணப். 177). 2. பெரியோன். மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா. 78). 3. ஒருசார் வெள்ளாளருக்கும் செங்குந்தருக்கும் ஒருசார் தஞ்சை மாவட்டச் சமணருக்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். க. bkhjÈf(g). முதலியார் - மேற்குறித்த மூவகுப்பார்க்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். முதலியோர் = முதலிய பிறர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவர். மறைமலையடிகள். சோமசுந்தர பாரதியார் முதலியோ ராவர். முதலியாண்டான் = 1. இராமானுசரின் மாணவரான ஒரு திருமாலடியார். 2. இராமனுசரின் திருவடி நிலை மகுடம். முதன்மை = தலைமை. கணித மாக்களை முடிவுற நோக்கியோர் முதன்மை கூறி (கம்பரா. மந்தரை. 1). முதலிமை = தலைமை (புதுக். கல்வெட்டு. 361). முதலாளி - 1. மூலவைப்புள்ளவன். 2. பெருநிலக்கிழார். 3. தொழிற் சாலை அல்லது வணிகநிலைய உரிமையாளர். 4. தலைவன். முது - முதார் - முதாரி = முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (முத்துக். பிள். 17). முந்து - முது - முதுமை = 1. பழமை (பிங்.). 2. மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணிமே. 4 : 107). 3. முதுமொழி (சூடா). 4. முற்றின நிலை (பிங்.). 5. முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். புறத். 24). முதுகண் = 1. முதன்மைக் களைகண். முற்றிழை மகளிர்க்கு முதுகணாமென (பெருங். உஞ்சைக். 36 : 198). 2. பேரறிவுரைஞன். முதுகாடு = 1. பழங்காடு (திவா.). 2. சுடுகாடு. முதுகாட்டிடை - நடமாடி (தேவா. 773 : 1). முதுகுடி = குறிஞ்சியும் முல்லையும் இணைந்து வறளும் பாலை நிலத்தில் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்து வாளொடு முற்றோன்றி மூத்த மறவர் குலம். முதுக்குடி. முரசுகடிப் பிகூஉம் முதுக்குடிப் பிறந்தோன். (மணிமே. 1:31). முதுகுரவர் = தாய் தந்தையர். எம்முது குரவ ரென்னுற் றனர்கொல் (சிலப். 16:60). முதுசொம் = முன்னோர் தேட்டு (யாழ்ப்.). முதுசொல் = பழமொழி. தம்பானை சாய்ப்பற்றா ரென்னு முதுசொல்லும் (திருவிசை. வேணாட். 2). முதுபாலை = காட்டிற் கணவனை யிழந்த தலைவி தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. நனிமிக சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் (தொல். புறத். 24) முதுவெழுத்து = தேறின எழுத்து (W.). முதுவேனில் = கடுங்கோடை. முதுவர் = 1. மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43). 2. அறிவாற்றல் மிக்கோர். முதுவருள் முந்து கிளவாச் செறிவு (குறள். 715). 3. மந்திரிமார். 4. புலவர். 5. ஒருசார் மலைவாணர். முதுவோர் = 1. அரசன். ஆசிரியன். தாய், தந்தை, அண்ணன் முதலிய பெரியோர். முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (சிறுபாண். 231). 2. மூத்தோர். 3. அமைச்சர். 4. அறிவான் மிக்கோர். 5. புலவர். முதியன் = மூத்தவன். இளையரு முதியருங் கிளையுடன்றுவன்றி (அகம். 30). முதியன் = 1. மூத்தவன். (கலித். 25). 2. அகவை முதிர்ந்தோன். 3. நான்முகன். தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2). முதியாள் = 1. மூத்தவள். 2. தேவராட்டி. தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு (பெரியபு. கண்ணப்ப. 52). முதுவல் = பழைமையாற் பழுதானது. முது - முதார். முதார்மாடு = பால் முற்றிய ஆன். முதார் - முதாரி = 1. முதுமை. முதாரிப் பாண (புறம். 138). 2. பால் மறக்குங் கன்று (w.). 3. முதார் மாடு (சங். அக.). 4. முற்றியது. முதாரிக்காய். (சிலப். 16 : 24. அரும்). முது = பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). இளமையில் அறிவின்மையும் முதுமையில் அறிவுண்மையும், பட்டறி வின்மை யுண்மையால் ஏற்படும் இயற்கை நிலைமை யென்பதை. மடம் முது என்னுஞ் சொற்கள் உணர்த்துதல் காண்க. முது - முதுக்கு = அறிவு. தெருட்சி, பேரறிவு. முதுக்கு + உறை = முதுக்குறை. முதுக்குறைதல் = அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள். 707). உறைதல் = தங்குதல். 2. பெண் பூப்படைதல் (தெருளுதல்). முதுக்குறைவு = 1. பேரறிவு. ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (நீதிநெறி. 33). 2. பெண் தெருளுகை (பூப்படைவு). முதுக்குறை = பேரறிவு. முதுக்குறை நங்கை (சிலப். 15 : 202). முது + குறைவு = முதுக்குறைவு = பேதைமை (சூடா.). முது - முதிர். முதிர்தல் = 1. முதுமை மிகுதல். அகவை முதிர்ந்தவர். 2. விளைவு முற்றுதல். 3. கருநிரம்புதல். சூன் முதிர்பு (புறம். 161). 4. நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 5. கடுமையாதல். முதிர்வேனில் (சங். அக.) 6. சொல் திருந்துதல். முதிராக் கிளவியள் (மணிமே. 22:181). க. முது. தெ. முதுரு. முதிர் - முதிர்ச்சி = 1. முற்றிய விளைவு. 2. முதுமை மிகுதி. 3. பழுத்த பருவம். 4. முதுக்குறைவு (திவா.). 5. வினை பயன்றரு நிலை. முதிர் - முதிரி - முதிரிமை = முதுமை (யாழ். அக). L. maturare, F. maturer, M.E. maturus, ripe, E. mature. முது - முதை = பழங்கொல்லை. முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் (குறுந். 204). முதை - முதையல் = பழங்காடு (சூடா.). 2. கடுகு (சங். அக.). முது - (முத்து) - முற்று. முற்றுதல் = (செ.கு.வி.) 1. முதுமை யடைதல் (பிங்.). 2. முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி. 19). 3. முழு வளர்ச்சியுறுதல். ஓர் முற்றா வுருவாகி (திவ். திருவாய். 8:3:4). 4. தேர்ச்சி பெறுதல். புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678). 5. மூண்டெழுதல். முற்றெரிபோற் பொங்கி (பு.வெ.8:16). 6. வயிரங் கொள்ளுதல் (சூடா.). 7. நிறைவேறுதல். இமையோர்க் குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11). 8. முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி. 231). 9. இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2 : 10 : 1). 10. கடுத்தல். 11. நிறைவேறுதல். (செ. குன்றா வி.) 1. செய்து முடித்தல். வேள்வி முற்றி (புறம். 15). 2. அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்பு வந்து (கம்பரா. கும்பகர். 311). ம. முத்துக. முற்றிழை = 1. வேலைப்பாடு திருந்திய அணிகலம். 2. அதை யணிந்த பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரிய. தி. 3:7:8). முற்றல் = 1. மூப்பு (சூடா). 2. முதிர்ச்சி. 3. முற்றியது. முற்றன் மூங்கில் (திவ். திருச்சந். 52). 4. வயிரம். 5. முற்றிய பழக்காய். முற்றற் சிறுமந்தி - குற்றிப்பறிக்கும் (நாலடி. 237). 6. நெற்று. 7. முடிகை (சூடா.). 8. திண்மை. முற்றல் யானை (திவ். திருச்சந். 52). முற்ற = முடிய. முற்ற முடிய = முழுதும் முடியும்வரை. முற்றும் = முழுதும். முற்று முணர்ந்தவ ரில்லை முற்று - முற்றன் = முழுநிறைவன். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648 : 9). முற்றிமை = முதிர்ந்த அறிவு. முற்றிமை சொல்லின் (சீவக. 2511). முற்று = முற்றி. முற்றித்தல் = முடித்தல். கரும மாயினும் முடியும் வாயின் முற்றித்து (பெருங். மகத. 1:69). முது - மூது = முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டி களங்காண். 18). க. மூதி. மூதறிதல் = 1. அறிவு முதிர்தல். 2. பழமையான செய்திகளை யறிதல். மூதறியு மம்மனைமார் சொல்லுவார் (திவ். இயற். சிறிய. ம. 19). மூதா = கிழ ஆன். வளைதலை மூதா (பதிற். 13:5). மூதாய் = பாட்டி மூதணங்கு = காளி (சூடா.). மூதிரி = 1. கிழமாடு. 2. கிழ எருமை. 3. எருமை (சது.). மூதிரி - மூரி = 1. பெருமை. மூரிக் கடற்றானை (பு.வெ. 3:3). 2. வலிமை. மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 3. பழமை (W.). 4. கிழம். மூரி யெருத்தா லுழவு (இன். நாற். 21). 5. எருமை. மோட்டிள மூரி யுழக்க (கம்பரா. அகலிகை 69). 6. எருது. நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு (பதிற்றுப். 67 : 15). 7. விடையோரை (திவா). ம. மூரி. bj., f., து. முரி. மூதில் = 1. பழங்குடி. 2. பழமையான மறக்குடி. தமியன் வந்த மூதிலாள (புறம். 284). மூதுணர்தல் = நன்றாக வுணர்தல். மூதுணர்ந்தவ ரன்றி மொழிவாரோ (உபதேசகா. சிவபுண். 229). மூதுரை = 1. பழமொழி. மூழையுப் பறியாத தென்னு மூதுரையு மிலளே (திவ். பெரியாழ். 3:7:4). 2. பிற்கால ஔவையார் இயற்றிய ஓர் அறநூல். மூதுவர் = முன்னோர். விண்ணாட்டவர் மூதுவர் (திருவிருத். 2). மூதை = (பெ.). 1. பழங்கொல்லை. 2. காளி. (W.). (கு.பெ.எ.). முந்தை. முதைவினை கடைக்கூட்ட (சிலப். 9) இறுதி வெண்பா). முது - மூ. மூத்தல் = 1. அகவை யுயர்தல். மூத்தோன் வருக வென்னாது (புறம். 183). 2. முதுமை யுறுதல். தமியண் மூத்தற்று (குறள். 1007). 3. முடிதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1). 4. கெடுதல். மதிலெய்த மூசரச் சிலை முதல்வர்க்கு (தேவா. 936 : 4). மூ = மூப்பு. (யாழ். அக.). மூத்தண்ணன் = பெரியண்ணன். மூத்ததிகாரம் = தலைமை யதிகாரம் (T.A.S.). மூத்த திருப்பதிகம் = காரைக்காலம்மையார் இயற்றிய பதிகம். (பெரியபு. காரைக்கா. 63). மூத்தப்பன் = பாட்டன். எம்மு னெந்தை மூத்தப்பன் (தேவா. 1086: 9). ம. முத்தப்பன். மூத்த பிள்ளை = திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். மூத்தவன் = 1. அகவையிற் பெரியவன். 2. அண்ணன் மூத்தவற்கரசு வேண்டிய முன்புதூதெழுந்தருளி (திங். பெரியதி. 4:6:7). 3. மேலோன். (w.). மூத்தார் = 1. மூத்தோர். மூத்தாரிளையார் (ஆசாரக். 35). 2. கணவனின் தமையனார். மூத்தவள் - மூத்தாள் = 1. முதியவள். (பிங்) 2. அக்கை 3. முதல் மனைவி. 4. மூதேவி (யாழ். அக). மூத்தோர் = 1. முதியவர். விருத்தினர் மூத்தோர் (ஆசாரக். 22). 2. பண்டிதர். (திவா.) 3. மந்திரிமார். (திவா.). மூத்தோன் = 1. அகவை மேற்பட்டவன் 2. அண்ணன். (பிங்.). 3. முதியவன். 4. 48 - ற்கு மேல் 64 அகவைக் குட்பட்டவன். (w.). மூ - மூப்பு = 1. அகவை யுயர்வு. 2. முதுமை. முனிதக்க மூப்புள (நாலடி. 92). 3. தலைமை. (யாழ். அக). 4. ஒட்டாரச் செருக்கு. தன் மூப்பு = முற்றதிகாரம். ம. மூப்பு. bj., க. முப்பு. மூப்பன் = 1. சில குலத்தாரின் ஊர்த் தலைவன். 2. சில குலத்தாரின் பட்டப்பெயர். மூப்பான் = 1. அகவை மேற்பட்டவன். 2. ஆட்டத்தில் வென்றவன். 3. முதியவன். 4. சிவபிரான். மூப்பான் மழுவும் (jÅ¥gh.i.32:61). மூப்பர் = 1. பெரியோர். மூப்பரை யிகழ்ந்தோமாகில் (அரிச். பு. நகர்நீ. 151). 2. கிறித்தவக் குருமாருள் ஒருவகையார் (Deacons) - w. மூப்பி = 1. முதுமகள். மூப்பிமாராலே ...... நீராட்டி (சீவக. 1892. உரை). 2. தலைவி. (w.). மூப்புக்கழிவு = 1. ஊர்த் தலைவனுக்குச் சேரவேண்டிய பொருள். (M.M.509). 2. வரித் தொகையிலிருந்து ஊர்த் தலைவனுக்குரியதைக் கொடுத்ததனாற் கழிக்கப்படும் பகுதி. மூப்பு முகனை = தலைமை பற்றிவரும் சொற் செல்வு (யாழ்ப்). மூதேவி = 1. திருமகளுக்கு முந்திப் பிறந்தவளென்று சொல்லப் படும் வறுமைப் பெண் தெய்வம். 2. சோம்பல். பகல் தூக்கம். மூதேவியடைந்து முடங்கிக் கிடக்கிறாள். (உ.வ.). 3. ஆக்கங் கெட்ட சோம்பேறிப் பெண். 4. ஒருவசைச் சொல். முல்3 (மென்மைக் கருத்துவேர்) எல்லா உயிரினங்கட்கும், இளமையிற் பெரும்பாலும் உடல் மென்மையாயிருப்பது இயல்பே. மாந்தரினத்துள், ஆடவனினும் பெண்டு மெல்லுடம்பியாயினும், குழவிப் பருவத்தில் இருபாலும் ஒருநிகரான மென்மையாகவே யிருத்தல் காண்க. பச்சிளமையிலும் சிற்றிளமையிலும் உடம்பும் தன்மையும் மென்மையா யிருப்பதால், இளமைக் கருத்தினின்று மென்மைக் கருத்துத் தோன்றிற்று. மென்மை அதையுடைய பொருளுக்கேற்ற வாறு பலதிறப்படும். முல் - மெல் = மெதுவான. ஆம்பல் மெல்லடை கிழிய (அகம். 56). மெல் - மென்மை = 1. மெதுவுத் தன்மை. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (தொல். உரி. 24). 2. வலியின்மை. மேவற்க மென்மை பகைவ ரகத்து (குறள். 877). 3. மெல்லெழுத்து. மேவு மென்மை மூக்கு (நன். 75). 4. அமைதி. மெல்லிய நல்லாருள் மென்மை (நாலடி. 188). 5. தாழ்வு. மென்சொ லேனும் ..... இகழார் (கந்தபு. அவையட. 3). 6. சிறுமை, நுண்மை. மெல்ல = 1. மெதுவாக. சிற்றளவாக. தானோக்கி மெல்ல நகும். (குறள். 1094). 2. அமைதியாக, அடக்கமாக. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி (புறம். 73). க. மெல்லெனெ. தெ. bkšyfh(g). மெல்லென = மெல்ல. மெல்லெனல் = 1. மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (தொல். கற்பு. 5). 2. குரல் தாழ்த்திப் பேசற் குறிப்பு. மெல்லெனக் கிளந்தன மாக (பொருந. 122). 3. மந்தக்குறிப்பு (சூடா.). மெல்லன் = மெல்லிய தன்மையன். மெல்லடை = மெல்லிய அடை. அப்ப வகை (பிங்.). மெல்லணை = 1. மெத்தை மெல்லணைமேல் முன்துயின்றாய் (திவ். பெருமாள். 9:3). 2. சட்டை (சூடா.). மெல்லரி = உயர்ந்த சிறிய அரிசிவகை. உலைதந்த மெல்லரி (திருமந். 422). மெல்லம் புலம்பு = மணலால் மெல்லிய நெய்தல் நிலம் (திருக்கோ. 379, உரை). மென்கால் = மென்காற்று. தென்றல். மென்கால் பூவளவிய தெய்த (கம்பரா. வனம்புகு. 2). மென்சொல் = 1. இனிய சொல் (நாமதீப. 668). 2. அன்பான சொல் (w). மென்பறை = பறவைக் குஞ்சு. மென்பறை விளிக்குரல் (ஐங். 86). மென்பால் = மருதநிலம். வளம்வீங் கிருக்கை ... மென்பா றோறும் (பதிற். 75:8). மென்பிணி = சிறுதுயில். மயக்கத்துப் பொழுது கொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற். 50:21). மென்புரட்டு = கைம்மாற்றிலே பணம் புரட்டுகை (யாழ். அக). மென்புலம் = 1. நீர்வளத்தால் மெல்லிய மருதநிலம். மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந (புறம். 42). 2. மணலால் மெல்லிய நெய்தல் நிலம். மென்புலக் கொண்கன் (ஐங். 119). மென்றொடர் = மெல்லின மெய்யை ஈற்றயலாகக் கொண்ட சொல். வன்றொடர் மென்றொடர் (தொல். குற்றிய. 1). மென்னகை = புன்சிரிப்பு. கவர்தலைச் சூலி மென்னகை விளைத்து (உபதேசகா. சிவவிரத. 163). மென்னடை = மெதுவான நடை. மென்னடை யன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5 : 5). 2. அன்னம் (பிங்.). மென்னிலை = நடன நளிநயக் கைவகை (w). மென்மெல = மெல்ல மெல்ல. மென்மெல வியலி வீதி போந்து (பெருங். வத்தவ. 17:99). மெல்-மெல்கு. மெல்குதல் = 1. மெதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15: 138. அரும்.). 2. நொய்ய தாதல். மெல்கிடு கவள வல்குநிலை புகுதரும் (அகம். 56). 3. இளகுதல். ஒ.நோ. E. melt, become or make soft by liquifying by heat; OE. meltan, mieltan, ON. meta (digest). E. molten (melted). E. smelt (extract metal from ore by melting). MDu. or MLG. smelten. E. malt, OE. mealt, OS. malt, OHG. malz, ON. malt. cog. w. melt. மெல்(லு)தல் = 1. கடின அல்லது விழுங்க முடியாத உணவைப் பல்லால் அரைத்து மென்மையாக்குதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62). 2. விடாது கடித்து தொல்லைப்படுத்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக் கின்றான் (உ.வ.). மெல்லி = மெல்லியலுடைய பெண். மெல்லி நல்லாள் தோள்சேர் (ஆத்திசூ). மெல்லிக்கை = சிறியது. பருமனற்றது (w.). மெல்லிது = 1. மென்மையான பொருள். மலரினும் மெல்லிது காமம் (குறள். 1289). 2. ஒல்லியானது. 3. சிறியது. மெல்லிது - மெல்லிசு. மெல்லிதரம் - மெல்லிசரம். மெல்லிசை = மெதுவான ஓசை. மெல்லிசை வண்ணம் = மெல்லெழுத்து மிகுந்துவரும் செய்யுளோசை. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே (தொல். செய். 215). மெல்லியல் = 1. மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (குறுந். 89). 2. பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (கம்பரா. மாயாசனக. 18). 3. இளங்கொம்பு (சூடா.). மெல்லியர் = 1. வலிமை யில்லாதவர். தேவர் மெல்லியர் (கம்பரா. யுத்த. மந்திரப். 32). 2. உடல் மெலிந்தவர் (w.). 3. எளியவர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி. 299). 4. புல்லிய குணமுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறம். 106). 5. பெண்டிர் (w). மெல்லியலாள் = பெண். மெல்லியலா ளொடும்பாடி (தேவா. 284 : 8). மெல்லியன் = அறிவு குன்றியவன் (புறம். 184). மெல்லினம் = மெல்லொலியுடைய மெய்யெழுத்துகள். (நன். 69). மெல்லெழுத்து = மெல்லின மெய். மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. (தொல். நூன். 20). மெல்லொற்று = மெல்லின மெய். மெல்லொற்றுத் தொடர் மொழி (தொல். குற்றிய. 9). மெல்வினை = பணி(சரியை), பத்தி(கிரியை) என்னும் மத வினைகள். எளிதானவற்றை மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப். 17) ஒ.நோ: மெல்: E. mellow, soft, OE. mela, melw, Gk. melakos, soft. L. mollis, soft; molluscus, soft-bodied animal; mollusca, sub-kingdom of soft-bodied animals. F. mollusque, E. mollusc. L. mollificare, make soft; F. mollifier, E. mollify. Rom. molliare, Of. mollier, moisten, E. moil. E. mild, gentle; OE. milde, OS. mildi, OHG. milt; ON. mildr; Goth. milds. மென்கண் = இரக்கம். மென்கண் பெருகி னறம்பெருகும் (நான்மணி. 92). மென்கணம் = மெல்லின மெய்கள் (நன். 158. உரை). ஒ.நோ: Goth. mel, grind; malma, sand; ON. malmr, ore; E. malm, soft chalky rock; OE. mealm, cog. w. OS., OHG. melm, dust. E. meal, OE. mela, OS., OHG. melo, ON. mjol, cog. w. L. molere, grind E. mill, building fitted with machinery for grinding corn. OE. mylen, OS. mulin, OHG. muli(n) f. LL. molinum, L. mila, mill f. mole, grind. E. molar, grinder (mammal’s back teeth serving to grind) f. molaris (mela, millstone). E. mull (Sc.), snuff box (bar. of mill), box originally having a grinder. E. muller, tool used for grinding powders etc. on slab. ME. mol, mulour f. mul, grind. E. mullock (Austral.), refuse from which gold has been extracted, f. dial. mull, dust, rel. to OE. mgl. dust, MDu. mul, mol. f. Gme root mul-, grind. E. multure, toll of grain or flour paid to muller. ME. or OF. milture f. med. L. molitura f. molere, grind. மெல் - மெள் - மெள்ள - மெல்ல. மெள்ள வெழுந்தரி யென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6). மெள் - மெள்ளென = மெல்லென. மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடந் தன்னை யெறும்பு (திருவாச. 6: 24). மெள்-மெள்ளம் = விரைவின்மை. மெள்ளமாய்ப் போ (உ.வ.). மெல்-மெலி. மெலிதல் = 1. வலி குறைதல். 2. உடல் இளைத்தல். ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6:10). 3. எளியராதல் (w.). 4. வருந்துதல் அளப்பினாள் மெலிகிற் பாள் (காசிக. மகளிர் - 8) 5. கெடுதல் - மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318 : 10). 6. வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது (புறம். 21, உரை). 7. முரலில் (சுரத்தில்) தாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய (சிலப். 3:92). மெலிவு = 1. தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ.11. பெண் பாற். 5). 2. களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5). 3. பாடு. எங்களுக் குண்டான மெலிவுகளுஞ் சொல்லி (Insc. Pudu. 799). 4. துன்பம். 5. தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (கம்பரா. முதற்போ. 181). 6. கொடுமை. வலியவர் மெலிவு செய்தால் (கம்பரா. வாலிவதை. 80). 7. சமனுக்குக் கீழ்ப்பட்ட ஓசை. வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம் (சிலப். 3:93). மெலித்தல் = செய்யுள் திரிபுகள் ஆறனுள், வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல் அல்லது மாற்றப்படுதல். (நன். 155). மெலிந்தோன் = 1. வலியற்றவன். 2. நோய்ந்தவன். 3. ஏழை. மெலிப்பு = 1. மெலித்தல். மெலியச் செய்தல். 2. மெல்லெழுத்து. வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் (தொல். தொகை.. 15). மெலியவன் = வலியற்றவன். மெலியவர் பால தேயோ வொழுக்கமும் விழுப்பந் தானும் (கம்பரா. வாலிவதை. 80). மெலியார் = வலியற்றவர். மெலியார்மேன் மேக பகை (குறள். 861). மெலிகோல் = கொடுங்கோல். மெலிகோல் செய்தே னாகுக (புறம். 71). மெல் - மெலு = எடைக் குறைவான காசு. (w). மெலு - மெலுக்கு = மென்மை (w). மெலுக்கு - மெலுக்குவை = மென்மை (w.) தெ. மெலக்குவ. மெலு - மெது. ல-த. போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை - சதங்கை. கலம்பம் - கதம்பம். மெது = 1. மென்மை 2. வேகமின்மை 3. அமைதி (w.). 4. மந்தம். 5. மழுக்கம். க. மெது. வ. ம்ருது. ஒ.நோ: E. smooth. OE. smooth (once usu. smethe, whence dial. smeeth). நாகம் என்னும் தமிழ்ச்சொல் snake என்று செருமானிய மொழிகளில் சகர முதன்மிகையொடு வழங்குவது போன்றே. மெது வென்னும் சொல்லும் வழங்குகின்ற தென்க. தமிழ்ச்சொற்களின் மகரவுறுப்பின்பின் ரகரத்தை இடைச் செருகுவது சமற்கிருத இயல்பே. எ.டு. அமுது(சோறு) - அம்ருத. மடி-மரி-ம்ரு. மிதி-ம்ருத். சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலியில். ம்ருது என்னும் சமற் கிருதச் சொல்லினின்று மெது என்னும் தென்சொல் திரிந்துள்ள தாகக் காட்டப்பட்டுள்ளது. மெது மெதுத்தல் = மெதுவாயிருத்தல் (w.). மெதுமெதுப்பு = மெதுத்தன்மை (w.). மெது - மெதுக்கு = சோறு (w.). தெ. மெதுக்கு. அரிசி அவிந்தபின் மெதுவாயிருத்தல் காண்க. மெதுக்கிடுதல் = மெதுவாயிருத்தல். மெதுகு = மென்மை. மெதுகரம் = நுண்ணிய வேலைப்பாட்டில் மெதுவாக அராவும் சன்ன அரம். மெதுகாணி (மெதுகு + ஆணி) = மெருகிடும் ஒரு கருவி. மெதுவடை = மெதுவாயிருக்கும் உழுந்து வடை. மெது - மெத்து - மெத்தென = மெதுவாக. மெத்தெனல் = 1. மென்மைக்குறிப்பு. மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19). 2. அமைதிக்குறிப்பு. 3. காலத் தாழ்ச்சிக் குறிப்பு. மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் (திருவாலவா. 62 : 7). 4. மந்தக் குறிப்பு (ஈடு. 1:10:11). க. மெத்தனெ. மெத்தெனவு = 1. அமைந்த குணம். 2. வளைந்து கொடுக்குந் தன்மை. 3. கவலையின்மை. மெத்தெனவு - மெத்தனவு = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை. மெத்தனவிற் றுயிலுங்கால் (திருவாலவா. 27:70). மெத்தனவு - மெத்தனம் = 1. காலத்தாழ்ப்பு 2. கவலையின்மை. பொருட்படுத்தாமை. மெத்து - மெத்தை = மெதுவான படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5:1:7). கனகதண்டி மேலுக்குப் போட மெத்தையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.) 2. பஞ்சணை. 3. துயிலிடம் (திவா.). 4. சட்டை (பிங்.). 5. வேட்டையாடுவோர் தோளிலிடும் அணை. வலத்தோளிலே இட்ட மெத்தையும் (திவ். திருநெடுந். 21, வியா. ப. 170). ம. தெ. மெத்த. க. மெத்தெ. மெத்தைக் கட்டில் = மெதுவணை பரப்பிய கட்டில். மெத்தைச் சட்டை = பஞ்சு உள்வைத்துத் தைத்த சட்டை. மெத்தைப் பாய் = மெத்தைமேல் விரிக்கும் பட்டுப் பாய். ம. மெத்தப் பாயி. மெதுகு - மெருகு. ஒ.நோ: விதை - விரை. மெருகு = மெதுவான பளபளப்பு. ம.தெ. க.து. bkUF(g). மெதுகரம் - மெருகரம் = மெருகு வேலையிற் பயன்படும் அரவகை. (C.G.). மெதுகாணி - மெருகாணி = மெருகுவளை யென்னும் தட்டார் கருவி. மெருகிடுதல் - பளபளப்பு உண்டாக்குதல் (w.). மெருகுக்கல் = மெருகிட உதவுங் கல் (C.E.M.). மெருகுச் சுண்ணாம்பு = சுவரிற் பூசும் சிப்பிச் சாந்து போன்ற நுண்ணிய சுண்ணச் சாந்து. மெருகு தேய்த்தல் = மெருகிடுதல். மெருகு போடுதல் = மெருகிடுதல். மெருகு மண் = தட்டார் மெருகிடுதற் குதவும் மண்வகை. மெருகு வளை = மெருகிட உதவும் தட்டார் கருவிவகை. மெருகெண்ணெய் = 1. பளபளப்பிற்காக மரப்பண்டங்களின் மேற் பூசும் எண்ணெய் (W.). 2. மினுக்கெண்ணெய் (யாழ். அக.). மெருகோடு = மேற்புறத்திற் பளபளப்புள்ள ஓடு (C.E.M.). மெல்கு - மெழுகு = 1. மெதுத்தன்மை. (அழகர்கல. 10). 2. இளகிய அல்லது களிப்பதமான மருந்து. 3. அரக்கு. மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி (குறுந். 155). 4. ஆவின் சாணம். துய்ய மெழுகுடன் (திருமந். 1720). 5. சந்தனம். மெழுகு செய்தல் = மெதுவாக்குதல். புரவி கருவிகொ டுரிஞ்சிமிக மெழுகு செய்து (அழகர்கல. 10). மெழுகுதல் = 1. மேனியிற் சந்தனம் பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53). 2. நிலத்தைச் சாணமிட்டுத் துப்புரவு செய்தல். நின்றிருக் கோயி றூகேன் மெழுகேன் (திருவாச. 5:14). 3. குற்றத்தை மறைத்துப் பேசிவிடுதல். மெழுகு - மெழுக்கு = 1. சாணத்தால் மெழுகுகை. புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்கு மிட்டு (தேவா. 727:3). 2. சாணம். திருவலகும் திருமெழுக்கும் தோண்டியுங் கொண்டு (பெரியபு. திருநாவுக். 68). 3. மேற் பூச்சுப் பொருள். வேரியின் மெழுக்கார்த்த மென்பூ நிலத்து (சீவக. 129). 4. அரக்கு. 5. பிசின். ம. மெழுக்கு. மெழுக்கு - மெழுக்கம் = சாணத்தால் மெழுகிய இடம்.மலரணி மெழுக்க மேறி (பட்டினப். 248). மெழுக்குத்துணி = 1. மெழுகு பூசின துணி. 2. நீர்க்காப்புத்துணி. 3. நிலக்கரி நெய்யிட்ட போர்வை (Tarpaulin). மெழுக்கூட்டுதல் = மேற்பூச்சிடுதல். மெழுகிடுதல் = 1. நூலின்மேல் மெழுகு பூசுதல். 2. சாணமிட்டு நிலத்தை அல்லது திண்ணையைத் துப்புரவு செய்தல். 3. படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகுக்களிம்பு = சிரங்கிற்கிடும் களிம்பு மருந்துவகை. மெழுகு கட்டுதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகு கட்டி வார்த்தல் = மெழுகு கருவில் உருக்கின மாழைகளை (உலோகங்களை) வார்த்துப் படிமை யமைத்தல். மெழுகு சாணை = 1. மெழுகால் துடைத்த உரைகல். 2. மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக் கல் (W.). மெழுகு சாத்துதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். சிற்பர்களான் மெழுகு சாத்தி (திருவாலவா. 45:2). மெழுகு சீலை = மெழுக்குத் துணி. மெழுகு சேர்வை = மெழுகுக் களிம்பு (W.). மெழுகுத்தண்டு = மெழுகுத் திரி (யாழ். அக). மெழுகுத்திரி = மெழுகு திரி. மெழுகுத்துணி = மெழுக்குத் துணி. மெழுகு பதம் = காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகுபோல் திரண்டுவரும் பதம். மெழுகு பனையன் = அம்மைநோய் வகை (யாழ். அக). மெழுகு பாகல் = பாகல்வகை (மூ.அ). மெழுகு பாளம் = மெழுகு தகடு. மெழுகு பீர்க்கு = பீர்க்குவகை (உ.வ.). மெழுகு பூச்சு =படிமைமேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு. மெழுகு பொம்மை = 1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் படிமை. 2. மெய்வருத்தந் தாங்கமுடியாதவ - ன்-ள். க. மேனதுபொம்பெ (b.). மெழுகு போடுதல் = மரப்பண்டங்கட்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப் பூசுதல் (W.). மெழுகுமண் = கருக்கட்டும் பசைமண் (W). மெழுகு முட்டம் = மெழுகு பாளம் (இடவழக்கு). மெழுகெண்ணெய் = மரப்பண்டங்கட்கு மெருகிட உதவும் மெழுகு சேர்த்த பூச்செண்ணெய் (இ.வ.). மெழுகெழுதுதல் = துணியில் அச்சடிக்க மெழுகால் உருவ மெழுதுதல் (இ.வ.). கவனிப்பு ல ள ழ என்னும் மூன்று இனவொலிகளுள், முந்தியது லகரமே ல திரண்டு ளகரமும். ள திரண்டு ழகரமும் ஆகும். எ.டு. கால்-காள்-காழ் (கருமை). லகரம் நேரடியாய் ழகரமாவது முண்டு. எ.டு: மால் - மழை. இனி, இத்தகைய சொற்றிரிவுகளில், இடைப்பட்ட ளகரச்சொல் இறந்துபட்ட தெனினுமாம். முல்4 (பொருந்தற் கருத்துவேர்) பொருந்தற் கருத்தினின்று ஒத்தல், முட்டுதல், சேர்தல், கூடுதல், மணத்தல், கலத்தல், பொருதல் முதலிய கருத்துகளும்; ஒத்தற் கருத்தினின்று, அளவிடுதல், மதித்தல், செருக்குதல் முதலிய கருத்துகளும்; சேர்தற் கருத்தினின்று திரளுதல், பருத்தல், விரிதல், மிகுதல், செழித்தல், அழகாதல் முதலிய கருத்துகளும்; பருத்தற் கருத்தினின்று மொத்தமாதல், வலுத்தல் முதலிய கருத்துகளும்; கலத்தற் கருத்தினின்று கலக்கம், மயக்கம் முதலிய கருத்துகளும்; மயக்கக் கருத்தினின்று இருட்சி, கருமை முதலிய கருத்துகளும் வழிநிலைக் கருத்துகளாகப் பிறக்கும். இவற்றினின்று மேற்கொண் டும் சில கிளைக் கருத்துகள் தோன்றும். முல்-முல்லை = குத்தகை (யாழ்ப்). முல்லைக்காரன் = குத்தகைக் காரன் (யாழ்ப்). ஒரு பொருள் முழுவதையும் குறித்த காலத்திற்குப் பயன்படுத்தச் செய்துகொள்ளும் ஒப்பந்தம் குத்தகை. முல்லை - மொல்லை = 1. மேழம் (பருத்த செம்மறியாட்டுக் கடா). 2. மேழவோரை (சூடா. உள். 9). மொல்லையிற் போடுதல் = குடும்பப் பொதுச் செலவிற்குக் கொடுத்தல். மொல் - மொலு. மொலு மொலு வெனல் = ஈக்கள் மொய்த்தற் குறிப்பு. மொல் - மொலோர். மொலோரெனல் = சிறுமீன் கூட்டம் நீர்ட்டத்தில் துள்ளிவரும் ஒலிக் குறிப்பு. x.neh.: அர. முலாகாத் = சந்திப்பு. இந். மில்னா = சந்திக்கை, சந்திக்க : மில் = சந்தி (முதனிலை). முல் - மல் = 1. பருமை (யாழ்ப்). 2. வளம். மற்றுன்று மாமலரிட்டு (திருக்கோ. 178). 3. வலிமை (பிங்.). 4.மற்போர். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268) 5. மல்லன். மல்லொடு கஞ்சனுந் துஞ்ச வென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11:2:3). 6. கண்ணபிரான் மல்ல னாய் வாணாசுரனை வென்றாடிய கூத்து. (பிங்.). பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள் பொருந்துவதால் (ஒன்று சேர்வதால்) திரட்சி அல்லது பருமை உண்டாகும். ஒ.நோ: சேரே திரட்சி (தொல். உரி. 65). மிகுதியால் வளமும் பருமையால் வலிமையும் உண்டாகும். இருவர் அல்லது இரு படைகள் பொருந்தி அல்லது கூடிப் பொருவதே போர். பொரு (பொருந்து) - போர். கல-கலாம். கலகம். கைகலத்தல் என்னும் வழக்கையும் நோக்குக. மல்-மல்லல் = 1. மிகுதி. 2. வளம். மல்லல் வளனே (தொல். உரி. 7). 3. செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11:121). 4. வலிமை. மல்லன் மழவிடை யூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு. 3). 5. பொலிவு (சூடா). 6. அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (திருக்கோ. 58, பேரா). மல்-மலை. மலைதல் = 1. ஒத்தல். கவிகை மாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 2. எதிர்த்தல் (சூடா.). 3. பகைத்து மாறுபடுதல். இகன்மலைந் தெழுந்த போதில் (சீவக. 747). 4. போராடுதல். தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர் (திருவாச. 4:53). க. மலெ. மலைத்தல் = 1. மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு.வெ. 3:24). 2. பொருதல். வேந்தனோடு ... மலைத்தனை யென்பது (புறம். 36). 3. வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறம். 10). மலை = 1. ஈட்டம், சொன்மலை (திருமுருகு. 263). 2. மிகுதி. 3. வளமுள்ள பெரிய இடம். வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே (நன். பொதுப்பா. 28). மலையினும் மாணப் பெரிது (குறள். 124). 4. போர்த் தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331). ம. மல. க. மலெ. மல்-மல்கு. மல்குதல் = 1. அதிகரித்தல், மிகுதல். மணநிரை மல்கிய மன்று (பு.வெ.1:13). 2. நிறைதல். திசையாவு மல்கின்றே (1607). 3. செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21). மல்கு - மல்கா - மல்லா. மல்லாத்தல் = 1. மலர்ந்தாற்போல் முகம் மேனோக்கிக் கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத் தள்ளி (திருமந். 199). 2. தோற்றுப்போதல் (உ.வ.). மல்கா - மல்காத்து (பி.வி.). மல்காத்துதல் = 1. கொடி முதலிய வற்றைப் படரவிடுதல். 2. முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். மல்லா - மல்லார். மல்லார்தல் = 1. பரத்தல். விரிதல். 2. முகம் மேனோக்கிக் கிடத்தல். கை காலைப் பரப்பிக் கொண்டு மல்லார்ந்து கிடக்கிறான் (உ.வ.). மல்லார் - மல்லாரி = 1. பரந்த பறைவகை 2. அகன்று பருத்தவள். மானங்கெட்ட மல்லாரி (உ.வ.). மல்லாரி - மல்லரி = பறைவகை (சங். அக.). மல்-மல்லாரி = சண்டைக்காரி (W.). மல்லார் - மலர். மலர்தல் = 1. மிகுதல். செழுமல ராவிநீங்கு மெல்லையில் (சீவக. 3079). 2. பரத்தல். வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற். 88:1). 3. அகலித்தல். மலரத் திறந்த வாயில் (குறிஞ்சிப். 203). 4. மொட்டு விரிதல். வரைமேற் காந்தள் மலராக்கால் (நாலடி. 283). 5. மனமகிழ்தல். வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல் (பெரியபு. தடுத்தாட் 161). 6. முகமலர்தல். பூம்புன லூரன்புக .... முகமலர்ந்த கோதை (திருக்கோ. 363, கொளு). மலர்த்தல் = 1. மொட்டு விரியச் செய்தல். 2. குப்புறக் கிடப்பவனை மல்லாக்கச் செய்தல். 3. மற்போரில் தோற்கடித்தல். 4. ஏமாற்றுதல். 5. வாங்கின கடனைக் கொடாமற்போதல். முகம் மலர் போன்றதென்பதும், முகம் மேனோக்கிக் கிடத்தல் மொட்டு விரிந்த நிலையையும் முகங் குப்புறக் கிடத்தல் மலர்ந்த பூக் குவிந்த நிலையையும் ஒக்குமென்பதும் கருத்து. மலர் - அவர். மல் - மல்லி = அகன்று தடித்தவள் (யாழ்ப்.). மல்-மல்லன் = 1. மற்போர்செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு.வெ. 9:4). 2. பெருமையிற் சிறந்தோன் (பிங்.). மல்லன் - வ. மல்ல. மல் - மல்லம் = 1. அகன்ற தட்டம் (அ.க.நி.). 2. கன்னம்(கதுப்பு) (யாழ். அக.). 3. மற்போர் (w.). 4. வலிமை. மல்லம். வ. மல்ல. மல்-மல்லை = 1. பெருமை. மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் (திவ். திருவாய். 8:9). 2. வளம். மல்லைப் பழனத்து (பதினொ. ஆளுடை திருவுலா. 8). மல்-மலி. மலிதல் = 1. விம்முதல். பருத்தல். முலை மலிந்து (பு.வெ. 11. பெண். 2). 2. மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 3. பரத்தல். மலைமலிந் தன்னமார்பும் (பு.வெ. 11. பெண். 2). 4. விரைதல். நீ மலிந்து செல்வாய் (பு.வெ.11, பெண். 4). 5. நெருங்குதல். (தொல். சொல். 396, உரை). 6. நிறைதல். மலிகடற் றண் சேர்ப்ப (நாலடி. 98). 7. விலை நயத்தல் (உ.வ.). 8. புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலு மூடலும் (தொல். பொருள். 41). 9. செருக்குதல். மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே (புறம்.77). 10. செருக்கிச் சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு.வெ.10:4, கொளு). மலி-மலிவு = 1. மிகுதி. 2. நிறைவு. மனைவேள்வி மலிவுரைத் தன்று (பு.வெ. 9.:27). 3. உயர்வு. இம்முப்பாலும். மாமலி வுடனே மற்ற மெலிவொடு சமனு மாமே (சூடா. 12:10). 4. நயவிலை. மலிவு குறைவது விசாரித்திடுவர். (அறப். சத. 83). 5. மகிழ்ச்சி. மலிவுடை யுள்ளத்தான் (பரிபா. 19: 88). 6. புணர்ச்சியின்ப மகிழ்ச்சி. மலிவும் புலவியும் (தொல். செய். 185). மலிவு - மலிபு = மிகுதி. வாடையது மலிபு (பு.வெ. 8:16). மலி - மலிர். மலிர்தல் = 1. பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117). 2. நீர் முதலியன ஒழுகுதல். பின்னு மலிரும் பிசிர்போல (பரிபா. 6 : 83), 3. பயிலுதல், அடிக்கடி வருதல். கனியின் மலரின் மலிர்கால் (பரிபா. 8:54). மல் - மால் = 1. பெருமை. சினமால் விடையுடையான் (திருவாச. 34:3). 2. பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்ற மால் (சீவக. 286). 3. வளமை (அக. நி). 4. மலை (அக.நி.). மால் - மாள் - மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.). மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 2. அரண்மனை (பிங்.). 3. கோயில். உத்தரகோச மங்கை ..... மாளிகைபாடி (திருவாச. 16:3). மாளிகை - வ. மாளிகா. மாளிகைச் சாந்து = உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8 வியா.). மாள் - மாண். மாணுதல் = மிகுதல் = 1. மிகுதல். பருத்தல். மலையினும் மாணப் பெரிது. (குறள். 124). 2. நிறைதல். மாணாப் பிறப்பு (குறள். 1002). 3. நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள். 177). 4. சிறத்தல். மாட்சிமைப்படுதல். மாண் - மாண்பு = 1. பெருமை (யாழ். அக.). 2. மாட்சிமை இல்லவண் மாண்பானால் (குறள். 53). 3. நன்மை (அரு.நி.) 4. அழகு அரன்மிடற்றின் மாண்ப தன்றே (திருக்கோ. 323). மாண்-மாட்சி = 1. மகமை (மகிமை). எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள். 750). 2. தெளிவு. விளக்கம் மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56). 3. அழகு நூலோர் புகழ்ந்த மாட்சிய ... புரவி (பெரும்பாண். 487). 4. இயல்பு மரபுநிலை தெரியா மாட்சிய (தொல். மரபு 94). மாட்சி = மாட்சிமை = மகமைத் தன்மை. மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபுபோல (சிலப். 16:23, உரை). மாண் - மாட்சிமை. மாணெழில் ..... தோளாய் (கலித். 20:15). மாண் - மாணம் = 1. மாட்சிமை. (அக.நி.) மாண் - மாணல் = 1. மாட்சிமை. 2. நன்மை (அரு. நி.). மாணம் - மாடம் = 1. வானளாவிய பன்னிலை மாளிகை. மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச. 16:4). எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்கு (நறுந். 54). 2. மேட்டிடத்திற் கட்டிய பெருங்கோயில். எண்டோ ளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ். பெரியதி. 5:6:8). 3. மேனிலை. ம. மாடம். க. மாட. தெ. khLF(g). மாடம் - மாடி = மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.). மாள் - மாழை = 1. மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.). மாள் - மாழை = 1. திரட்சி (பிங்.). 2. கனியக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). 3. மாதர் கூட்டம். (அக. நி.). மல் - மன். மன்னுதல் = (செ.கு.வி.). 1. பொருந்துதல். மன்னா சொகினம் (பு.வெ. 10:11). 2 மிகுதல். மன்னிய வேதந் தரும் (ஆசாரக். 96). 3. தங்குதல். உத்தரை வயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1. பரிட்சத்து வின்றோ. 1). 4. நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள். 556). 5. உறுதியாய் நிற்றல் (W.). (செ. குன்றா வி.) அடுத்தல் (பிங்.). ஒ.நோ: L. manere, stay. L. remanere, E. remain. மன் (இடை) = 1. மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறம். 75). 2. பெரும்பான்மைக் குறிப்பு. கசதப மிகும்வித வாதன மன்னே (நன். 165). 3. நிலைபேற்றுக் குறிப்பு. மன்னே .... நிலைபே றாகும் (நன். 432). ஒ.நோ: OE. mang, OS., OHG. manag, Goth. manags, E. many. g = y. மன் - மன்று = 1. அவை. அம்பலம். 2. தில்லைப் பொன்னம்பலம். தென்றில்லை மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4 : 92). 3. அறங் கூறவை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145). 4. ஆன்கணம். மன்றாடி சொல்ல (திருவாலவா. 52 : 5. அடிக்குறிப்பு). 5. ஆன்தொழு. ஆன்கணம் ... மன்றுநிரை புகுதர (குறிஞ்சிப். 218). 6. மரத்தடித் திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியிலும் (தஞ்சைவா. 34). 7. மக்கள் கூடும் நாற்சந்தி. மன்றிலே தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு. 3:6:3) 8. மணம். மன்றலர் செழுந்துளவு (கம்பரா. திருவவ. 24). பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதற்கேற்ப. ஒன்றன் மணம் அதனொடு சேர்ந்த இன்னொன்றிற் கலத்தலால், மணம் மன்றெனப்பட்டது. மன்றுபடுதல் = அம்பலத்திற்கு வருதல். வெளிப்படுதல். காம மறையிறந்து மன்று படும் (குறள். 1138). மன்று - மன்றம் = 1. அவையம் (பிங்.). 2. அறங்கூறவையம். அறனவின் மன்றத் துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35). 3. பொன்னம்பல முள்ள தில்லை (பிங்.). 4. மரத்தடிப் பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுருகு. 226). 5. குதிரைகளைப் பயிற்றும் செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறம். 220, உரை). 6. போர்க்களப் பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க் கொண்ட குருதி மன்றத்து (பதிற். 35 : 8). 7. மக்கள் கூடும் வெளியிடம். மன்றம் போழும் மணியுடை நெடுந்தேர் (குறுந். 301). 8. ஆன் தொழு. புன்றலை மன்றம் (குறுந். 64). 9. பேய்கள் கூடுமிடம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டு மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும் (மணிமே. 6:82-3) 10. பறவைகள் கூடுமிடம். புள்ளிறை கூரும் வெள்ளில் மன்றமும் (மணிமே. 6 : 85). 11. மக்கள் குடியிருக்கும் வீடு. வதியுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71) 12. நெடுந்தெரு (சூடா). 13. நோன்பிகள் கூடுமிடம். கடலை நோன்பிக ளொடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணிமே. 6:86-7) 14. மணம் (பிங்.). அம் ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டாதலால், மன்றம் என்பது இலக்கண நெறிப்படி பெருமன்றைக் குறிக்கும். மன்று - மன்றகம் = அம்பலம். மன்றகத்தே நம்பி மாட மெடுத்தது (திருமந். 148). மன்று - மன்றல் = 1. தமிழத் திருமணம். 2. இருபாற் கூட்டம். மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள் (தொல். களவு. 1), 3. புணர்ச்சி. மன்றன் மாமயில் (சீவக. 2171). 4. நெடுந்தெரு. மன்றல் வருஞ்சேனை (குற்றா. குற. 73:2). மணம் (பிங்.). மன்று-மந்து = 1. ஆன்கணம். 2. ஆன்தொழு. 3. எருமைநிரை. 4. நீலமலைத் துடவர் குடியிருப்பு. எ.டு: ஒற்றைக்கல் மந்து (Ootacamund). துடவர்க்கு எருமைநிரை யோம்பலே பிழைப்புவழியாதலால். அவர் குடியிருப்பு மந்து எனப்பட்டது. ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் இருந்த வூர்கள். பட்டியென்றே பெயரீறு பெற்றிருத்தலை நோக்குக. ஒரே பெருங்கல் இருந்த மந்து ஒற்றைக்கல் மந்து எனப்பட்டது. தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஒரு கல் நாடு அல்லது ஓராங்கல் (Warangal) நாடு எனப் பெயர் பெற்றிருத்தலைக் காண்க. ஆங்கிலர் முதன்முதல் நீலமலையில் அடைந்த இடம் ஒற்றைக்கல் மந்து. அதனால் அது சிறப்புப் பெற்றது. அதன் பெயரின் ஆங்கில வடிவை யொட்டி. உதகமண்டலம் என்னும் பெயரை அமைத் தும் கொண்டனர் வடமொழி வெறியர். அதன் மரூஉவான உதகை என்பதற்குத் தலைமாறாக, ஒற்றகை என்று வழங்குவதே தமிழ்நெறிக் கேற்றதாம். மந்து - மந்தை = 1. கால்நடைக் கூட்டம். ஆடுமாடுகள் மந்தை மந்தையாய் மேய்கின்றன (உ.வ.). 2. ஊரின் பொது மேய்ச்சலிடம், மந்தைவெளி (உ.வ.). 3. ஊரிடைப் பொது வெளியிடம். 4. ஆடுமாடு மேய்க்கும் குலத்தாருள் ஒரு பிரிவுப் பெயர். தெ. மந்து. க. மந்தெ. மன் - மனை = 1. பலர் கூடி அல்லது நிலைத்து வதியும் வீடு. சீர்கெழு வளமனை திளைத்து (சீவக. 828). 2. வீடு கட்டுதற்கரிய வெறுநிலம். ஒரு மனை 2400 சதுரஅடி (உ.வ.). 3. அல்லும் பகலும் வீட்டில் வதியும் மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148). 4. வீட்டில் வதியும் குடும்பம். 5. துறவுக்கு எதிரான இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடையளாகி (குறள். 51). 6. சூதாட்டிற்கு அல்லது கணியத்திற்கு வரையும் அறை. ம. மன. க. மனெ. ஒ.நோ: E. manor, f. ME. f. AF. maner, OF. manoir, f.L. manere, remain. E. manse, f. ME. f. med. L. mansus, house (manere, mans, remain). E. mansion, large residence, f. ME. f. OF. f. L. mansionen, f. mansus, f. manere, mans, remain. மனை-மனைவி = 1. மனையிலுறையும் வாழ்க்கைத் துணைவி. இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895). 2. முல்லை மருத நிலங்களின் தலைவி (திவா.). 3. மனையுடையாள். பூமுளரி மனைவி (உபதேசகா. சிவவிரத. 215). மன் + திரம் = மன்றிரம் - மந்திரம் = 1. வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138). 2. அரண்மனை (பிங்.). 3. தேவர் கோயில் (பிங்.). ஆதி தனது மந்தி ரத்து (கந்தபு. காமதகன. 67). 4. உறைவிடம். மான் மதங் கமழ்கொடி மந்தி ரந்தொறும் (பாரத. வேத்திர. 29). 5. மண்டபம். 6. குகை. அரிமந்திரம் புகுந்தா லானை மருப்பும் (நீதிவெண். 2). 7. குதிரைச் சாலை (பிங்.) 8. குதிரைக் கூட்டம் (சூடா.). மந்திரம் - வ. மந்திர. மக்கள் உறைவிடத்தையும் அரிமாக் குகையையும் குதிரைக் கூடத்தையும் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் ஒன்றே. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, குதிரைச் சாலையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல்லை வேறென மயங்கிப் பிரித்துக் கூறியது வழுவாகும். மக்கள் படுக்கை, விலங்கின் படுக்கை, பறவைக் கூடு ஆகிய மூன்றையும், சேக்கை யென்னும் ஒரே சொல் பொதுவாகக் குறித்தல் காண்க. சூழ்வினையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் வேறு. அது அமைப்பில் ஒத்திருப்பினும். அதன் முதனிலையான மன் என்னும் சொல் முன் என்பதன் திரிபாகும். முன்னுதல் = கருதுதல். சூழ்தல். மன் + திரம் - மன்றிரம் - மந்திரம் - வ. மந்த்ர. மன் = மந்திரம். (பிங்.) இது முதனிலைத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும். மன்(பெ.) = 1. பெருமை. (யாழ். அக.). 2. தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டா. 47). 3. கடவுள் (பிங்.). 4. கணவன் மங்கை யுன்றன் மன்னன் (பிரமோத். 111). மன்-மன்னவன் = 1. அரசன். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள். 388). 2. விண்ணுலக வேந்தன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5 : 173). மன்றுதல்1 = 1. மிகுதல். 2. உறுதியாதல். 3. தெளிவாதல். மன்ற (நி.கா.வி.எ.) = 1. மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு. தேவ. போற். 6). 2. தேற்றமாக. சென்று நின்றோர்க்குந் தோன்று மன்ற (புறம். 114). மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல். இடை. 17). 3. தெளிவாக. நோற்றோர் மன்றநின் பகைவர் (புறம். 26). மன்றுதல்2 = தண்டஞ் செய்தல் அடிகெட மன்றி விடல் (பழ. 288). இது அறமன்றின் செயல். மன் - மான். மானுதல் = ஒத்தல். மன்னர் சேனையை மானு மன்றே (கம்பரா. ஆற்று. 14). மான் - மான = போல (உவமை யுருபு). வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் (தொல். உவம. 1) அன்ன ஆங்க மான இறப்ப என்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம் (தொல். உவம. 12) மான் = ஒப்பு (பிங்.). மான் - மானம் = 1. ஒப்புமை. மான மில்லுயர் மணிவண்ணன் (சீவக. 2747). 2. அளவு. 3. பட்டணம் படியில் அரைப்படிக்குச் சற்று மிகுந்த முகத்தலளவு (ஆம்பூர் வழக்கு). 4. அவ்வளவு கருவி. 5. உரையாணி (திருக்கோ. 335, உரை). 6. கணிப்பு. சூரமானம். 7. அளவைக் கூறு. இருமானம். மும்மானம். 8. மதிப்பு. கண்ணியம். நன்றேகாண் மான முடையார் மதிப்பு (நாலடி. 294). 9. பெருமை புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் (தொல். அகத். 41). 10. வலிமை (சூடா.) 11. தன்மதிப்பு. இளிவரின் வாழாதமான முடையார் (குறள். 970). மறத்திடை மானமேற் கொண்டு (பு.வெ. 5:6). 12. கற்பு. 13. பூட்கை. வஞ்சினம். அப்படியே செய்வேனென மானஞ் செய்து (இராமநா. அயோத். 7). 14. புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382). 15. மானக்கேட் டுணர்ச்சி. உயிர்நீப்பர் மானம் வரின். (குறள். 969) மானந் தலைவருவ செய்பவோ (நாலடி. 198). 16. வெட்கம். வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145). 17. பொருளளவு எ.டு. வருமானம். (இடை.) 1. அளவு குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ.டு. பெறு மானம். 2. நிலை குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ.டு. கட்டு மானம். ஒ.நோ: “moon (A. Sax. mona, the moon(masc.); cog. O. Fris. mona, Goth. mena, Ice. mani, Dan. maane, D. maan, OHG. mane, (the Mod. G. mena, moon, is a derivative like E. month). Lith. menu, Gr. mene, Per. ma. Skt. mas, all meaning the moon; from a root ma, to measure; the moon was early adopted as a measure of time, hence the name.” - The Imperial Dictionary. மான்-மானி. மானித்தல் = (செ.கு.வி.). 1. நாணுதல். மானவுணர்ச்சி யால் வெட்குதல். கூற்றமும் மானித்து (பு.வெ. 7 : 25, உரை). 2. செருக்குதல். நின்னைப் பணியாது மானித்து நின்ற அரசன் (நீல. 529. உரை). (செ. குன்றாவி.) 1. அளவிடுதல். 2. மதித்தல். பெருமைப்படுத்துதல். நாணி மானித்தோமே நாமென்பார் (கானத். உலா. 243). ஒ.நோ: தீர்மானம் - தீர்மானி. மானம் - மானி = 1. மதிப்பு அல்லது கண்ணியமுள்ளவ-ன்-ள். 2. செருக்குள்ளவ-ன்-ள். களிமடி மானி (நன். 39). மான் - மா. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயின். மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ்வாயிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால், நிலவளவையில் ஒரு வேலியின் 1/20 பாகம் மா எனப்படுகின்றது. மாநிறை வில்லதும் பன்னாட்காகும் (புறம். 184) என்பது. இதன் தொன்றுதொட்ட வழக்கை யுணர்த்தும். மா - மாத்திரம் = 1. அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47 : 22). அவன் எனக்கு எம் மாத்திரம்? (உ.வ.). வடார்க்காட்டு ஆம்பூரில், ஒரு பொருளின் விலையை வினவும் போது, அதன் விலை எம்மாத்தம்? என்பது இன்றும் உலக வழக்கு. எம்மாத்திரம் என்பது எம்மாத்தம் என்று சிதைந்துள்ளது. மா-மாத்திரம் = 1. அளவு. 2. மட்டும். வால் மாத்திரம் நுழைய வில்லை (உ.வ.). 3. தனிமை (சங். அக). மட்டும், தனிமை என்னும் இரு பொருட்கும் அடிப்படை அளவு என்னும் பொருளே. சென்னைப் பல்கலைக்கழக தமிழகரமுதலி அளவைக் குறிக்கும் மாத்திரம் என்னும் சொல்லை வேறாகப் பிரித்துக் கூறியுள்ளது. ஒ.நோ: மட்டு = அளவு; மட்டும் = மாத்திரம், தனிமையாய். மாத்திரம் - வ. மாத்ர. மாத்திரத்தில் = அளவில், உடனே, அதைக் கேட்ட மாத்திரத்திற் கொடுத்துவிட்டான் (உ.வ.). மாத்திரம் - மாத்திரை = 1. அளவு. மாத்திரை யின்றி நடக்குமேல் (நாலடி. 242). 2. நொடிப்பொழுதான கால அளவு. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை (தொல். எழுத்து. 6). சக மூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (திருநூற். 25). 3. செய்யுள் உறுப்புகளுள் ஒன்று (எழுத்தொலி யளவு). மாத்திரை யெழுத்தியல் அசைவகை எனாஅ ..... நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென ..... வகுத்துரைத் தனரே (தொல். செய். 1). 4. ஒரு மாத்திரை யொலிக்குங் குற்றெழுத்து (யாழ். அக.). 5. கால விரைவு (பிங்.). 6. மிகச் சுருக்கமான இடம் அரை மாத்திரை யிலடங்குமடி (தேவா. 970 : 7). 7. அளவாகச் செய்யப்படும் மருந்துக் குளிகை (அரு.நி.) 8. முரல் (இசைச்சுரப்) பகுதி (திவா.) 9. காதணி வகை செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17 : 157). மாத்திரைக்கோல்= அளவுகோல். மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி 4). 2. இறும்பர்(சித்தர்) கையிற் கொள்ளும் வரையிட்ட மந்திரக்கோல். விளங்கு செங்கை யின் மாத்திரைக் கோலும் (திருவாலவா. 13:4). 3. மந்திரக்காரன் கைக்கோல் (W.). மாத்திரைச் சுருக்கம். மாத்திரைப் பெருக்கம் என்பன சொல்லணி வகைகள். சுருக்கம். பெருக்கம் என்பவற்றைச் சுதகம். வருத்தனம் என்னம் வடசொல்லாற் குறிப்பர். முத்தமிழிலக்கணமும் இறும்ப(சித்த) மருத்துவமும், ஆரியர் வருகைக்கு முற்பட்டன என்பதை அறிதல் வேண்டும். மாத்திரை - வ. மாத்ரா. பல பொருள்கள் ஒன்றுசேர்வதால், குழம்பலும் குழப்பமும் கலக்கமும் மயக்கமும் உண்டாகும். நீரும் மண்ணும் சேரின் கலங்கல் அல்லது கலுழி யெனப்படுவதும், நீரும் பிற பொருளும் சேர்ந்து திண்ணமாயின் குழம்பு அல்லது குழம்பல் எனப் படுவதும், பகலும் இரவும் மயங்கும் (கலக்கும்) வேளை மசங்கல் (மயங்கல்) எனப்படுவதும் காண்க. ஒ.நோ: கல - கலகு - கலங்கு - கலக்கு - கலக்கம். ஒரு கவர்த்த வழியைக் காணின் எது வழியென்று தெரியாது கலங்கவும். அறியாதார் பலர் கூடியிருக்கக் காணின் அவருட் காண வேண்டி யவர் யாரென்று தெரியாது மயங்கவும் நேரும். இதனால். பொருட்கலக்கம் மனக்கலக்கத்திற்கும் ஏதுவாம். அமைதியான மனத்தில் கவலை அல்லது அச்சம் கலப்பின் மனக்கலக்கம் உண்டாகும். மனத்தெளிவு முற்றும் நீங்குவதே மயக்கம். அது தீய பொருள் உடம்பிற் கலப்பதாலும் உண்டாகும். மல்-மலை. மலைதல் = மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல் பற்றி மலையற்க (சி.போ.பா. 6:2. ப. 146). மலைத்தல் = மயங்குதல். சிறுவன் விடுதிப் பள்ளிக்கு வெளியூர் சென்றபோது. வீட்டை நினைத்து வழியில் மலைத்து மலைத்து நின்றான். மல் - மல - மலகு - மலங்கு. மலங்குதல் = 1. நீர் முதலியன குழம்புதல். மலங்கிவன் றிரைபெயர்ந்து (தேவா. 130:9). 2. கண் கலங்குதல். நெடுங்கண் புகுவன்கண் மலங்க (சீவக. 1067). 3. கண்ணீர் ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243). ஒ.நோ: கலுழி = கண்ணீர். 4. மனங்கலங்குதல். ஒன்பது வாயிற் குடிலை மலங்க (திருவாச. 1:55). 5. கெடுதல். கதிர்வேன் மலங்க (சீவக. 1613). மலங்கு - மலக்கு. மலக்குதல் = கலக்குதல். மலக்கு நாவுடையேற்கு (திருவாய். 6:4:9). மலக்கு = மயக்கம். மலக்கு - மலக்கம் = 1. மாறு. நவரத்தினங்களாற் கட்டி இடை நிலங்களை ..... பொற்றகட்டாலே செறிய மலக்கமாகக் கட்டி (சிலப். 3:117. உரை). 2. மனக்கலக்கம். மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5). 3. துன்பம். உற்ற மலக்க முண்டா கினாக (கம்பரா. இராவணன்களங். 18). மலங்கு = பாம்பென்று மயங்குதற் கிடமான விலாங்குமீன். மலங்கு - மலாங்கு = விலாங்குமீன். மலங்கு - (மலாங்கு) - விலாங்கு. மல் - மால். மாலுதல் = 1. பொருந்துதல். ஒத்தல். 2. மயங்குதல். மான்று வேட் டெழுந்த செஞ்செவி யெருவை (அகம். 3). மால் = 1. மயக்கம் புரோம் பழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. மயக்கும் ஆசை. என்பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 3. ஆசை வகைகளுள் கடுமையான காமம். மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று (பரிபா. 10:42). 4. இடம் பொருள் தெரியா வண்ணம் கண்ணை மயக்கும் இருட்டு. 5. இருள் நிறமான கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). 6. கருநிறமான திருமால். நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (முல்லைப். 3.). 7. கருமுகில். சிலைமா லுருமு (தஞ்சை. 164). 8. ஆரிய முத்திருமேனிக் கொள்கைப்படி காவல் தொழிலால் திருமாலை யொத்தவனான மாலியச்சோழன் (பிங்.). x.neh.: Gk. melas, black. இருளைக் குறிக்கும் dark என்னும் ஆங்கிலச் சொல். கருமை. அறியாமை என்னும் பொருள்களையுங் குறித்தல் காண்க. மால் - மாலை = 1. தொடுக்கப்பட்டது வரிசையாகப் பொருந்தியது. 2. தொடுத்த பூந்தொடை மாலைபோற் றூங்குஞ் சினை (கலித். 106 : 27). 3. மலர்மாலைபோல் தொடுத்த அல்லது கட்டிய மணிமாலை அல்லது முத்துமாலை 4. பூமாலை போன்ற பாமாலை. எ.டு. திருவேகம்ப மாலை. திருவரங்கத்து மாலை. 5. வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397). மாலை மாற்றே (யாப். வி.ப. 493). 6. முத்துமாலை போன்ற வடிவம். மாலை மாலை யாகக் கண்ணீரை வடித்தாள் (உ.வ.). 7. கயிறு. மாலையு மணியும் (பரிபா. 5:67). 8. மாலைபோன்ற பெண். (திருக்கோ. 1. உரை. ப. 9). 9. பாண்குடிப் பெண்ணாகிய விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (திருவாலவா. 54:26). 10. மயக்கம், கலப்பு 11. பகலும் இரவுங் கலக்கும் அந்திப் பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள். 1135). 12. இரா. மாலையும் படா விழித்திரளது (தக்கயாகப். 155). 13. இருள். மாலைமென் கேசம் (திருப்பு. 32). 14. குற்றம் (தொல். சொல். 396). உரை). 15. பச்சைக்கற் குற்றம் (சிலப். 14 : 184, உரை). பூமாலையையும் பொழுதுமாலையையுங் குறிக்கும் மாலை யென்னுஞ் சொல் ஒன்றே. சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில், அவ்விரண்டையுங் குறிக்குஞ் சொல் வெவ்வேறென்று காட்டப்பட்டுள்ளது. இது பூமாலையைக் குறிக்குஞ் சொல்லை, வடசொல்லென்று காட்ட வகுத்த சூழ்ச்சியே. மாலை - வ. மாலா. மாலை - மாலிகை = சிறுமாலை. கை சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ. குடி = குடிகை (சிறு கோயில்). மாலிகை - வ. மாலிகா(மாலை). வடசொல் சிறுமைப் பொருளை இழந்து நிற்றல் காண்க. மால் - மான். மான்றல் = 1. ஐயுறுதல் (திவா.) 2. மயங்குதல் (சூடா.). மால் - மாலம் = 1. மயக்கு. 2. ஏமாற்று. 3. நடிப்பு. மால் - மான் - வான் = 1. கருமை. 2. நீலவானம். வானுயர் தோற்றம் (குறள். 272). 3. தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 4. வீட்டுலகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10:6:5). 5. மூலக் கருப்பொருள். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 6. கருமுகில். ஏறொடு வான்ஞெமிர்ந்து (மதுரைக். 243). 7. மழை வானின் றுலகம் வழங்கி வருதலான் (குறள். 11). 8. அமுதம். வான் சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி (தேவா. 586 : 1). வான் ... தானமிழ்தம் என்றுணரற் பாற்று (குறள். 11). 9. நன்மை. வரியணி சுடர்வான் பொய்கை (பட்டினப். 38). 10. அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). ம. வானு. மான் - மானம் = 1. கருமை. 2. நீலவானம். 3. கருமுகில். 4. மழை. 5. குற்ற அளவு, குற்ற நிலை மெய்நிலை மயக்க மான மில்லை (தொல். எழுத். மொழி. 14) வானத்தை மானம் என்பதே கல்லா மாந்தர் உலக வழக்கு. கருமை என்னும் பொருளடிப்படை யிலேயே. மானம் என்னும் சொல் குற்றப் பொருள் கொண்ட தாகத் தெரிகின்றது. வான் - வானம் = 1. காயம் என்னும் நீலவானம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105). 2. தேவருலகு. வான மூன்றிய மதலை போல (பெரும்பாண். 346). 3. கருமுகில். ஒல்லாது வானம் பெயல் (குறள். 559). 4. மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணிமே. 19: 149). தெ. வான, க. பான (b). மல்-மர்-மரு. மருவுதல் = 1. கலந்திருத்தல். மருவார் சாயல் (சீவக. 725). 2. தழுவுதல். மருவுமின் மாண்டா ரறம் (நாலடி. 36). 3. பயிலுதல். பாத்தூண் மரீஇ யவனை (குறள். 227). 4. வழக்கப் படுதல். மரீஇய பண்பே (தொல். பொருள். 308). 5. புணர்தல். வெம்புலை மாதர் ... மருவும் வேட்கையான் (பிரமோத. 4:4). 6. ஊழ்குதல் (தியானித்தல்). கழல்களை மருவாதவர் மேல்மன்னும் பாவமே (தேவா. 501:1). ஊழ்குதல். மனத்தாற் பொருந்துதல். மரு-மருமம் = 1. தழுவும் மார்பு. மருமத்தி னெறிவேல் (கம்பரா. கையடை. 11). 2. உயிர்நாடியான உறுப்பு. எங்கு மருமத்திடைக் குளிப்ப (பு.வெ. 7: 23). 3. மறைபொருள் (இரகசியம்). (சங். அக). 4. உடம்பு. மந்தர வலியின் மருமம் (ஞான. 59 : 20). மரு - மார் = 1. நெஞ்சு, மார்பு. இப்பாதகன் மாரி னெய்வ னென்று (கம்பரா. இராவணன் வதை. 192). ஊரில் கலியாணம். மாரில் சந்தனம். (பழ.). 2. நான்கு முழமான நீட்டலளவை. க. மார். மார்க்கண்டம், மார்க்கவசம், மார்க்குழி, மார்க்கூடு, மார்வலி, மார்யாப்பு (மாராப்பு) முதலியன மரபு வழக்கான கூட்டுச் சொற்கள். மார்-மார்பு = 1. நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள். 1288). 2. பெண் நெஞ்சு, முலை, மாரில் கைபோடுகிறான் (உ.வ.) 3. வடிம்பு. ஏணி யெய்தா நீணெடு மார்பின் ... கூடு (பெரும்பாண். 245). 4. தடாகப் பரப்பு. மார்பின்மை படி ... குலவரை (பரிபா. 15 : 9), 5. அகலம் (சது.). 6. நான்முழ நீளம். ம. மார்பு. மார்பு - மார்பம் = நெஞ்சு, மார்பு. பொன்றுஞ்சு மார்பம். (சிலப். 19:61). மார்பம் - மார்பகம். மரு - மருங்கு = 1. (பொருந்தும்) பக்கம். கனையெரி யுரறிய மருங்கு நோக்கி (புறம். 23). 2. விலாப்பக்கம். கயிறு பிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின் (புறம். 3). 3. இடைப்பக்கம். இடை (சூடா.). 4. எல்லை. மருங்கறி வாரா மலையினும் பெரிதே (கலித். 48). 5. இடம் (பிங்.). 6. சுற்றம். அவனின் மருங் குடையார் மாநிலத்தில். (குறள். 526). 7. குலம். சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுருகு. 275). 8. செல்வம். மண்மேல் மருங்குடையவர்க் கல்லார் (சீவக. 2924). 9. நூல். தொன்மருங் கறிஞர் (குறிஞ்சிப். 18). க. மக்கலு (gg). மருங்கு - மருங்குல் = 1. இடைப் பக்கமாகிய இடுப்பு. 2. இடை கொம்பரார் மருங்கின் மங்கை கூற (திருவாச. 5:67). 3. வயிறு. பசிபடு மருங்குலை (புறம். 260). 4. யானை மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352). மரு1 = மணமக்கள் பெண்வீட்டில் முதன் முறையாகக் கலந்துண்ணும் விருந்து. மரு - மருவு. மருவுதல் = சொற்சிதைவு இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குதல். மருவு - மரூஉ = 1. நட்பு. மரூஉச்செய் தியார்மாட்டுத் தங்கு மனத்தாத் (நாலடி. 246). 2. இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குஞ் சொற்சிதைவு. மருமகன் = 1. மகன்போலப் பொருந்தும் மகள் கணவன் 2. ஒருவனின் உடன்பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். இவ் விருவரும் மருமகன் நிலைமைக்கு வரக்கூடியவர். மருமகன் - மருமான் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மருமான் றன்னை மகவென (கல்லா. 15). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். இமவானார் மருமானாரிவரென்று (தேவா. 756 : 2). 3. வழித்தோன்றல். குடபுலங் காவலர் மருமான் (சிறுபாண். 47). மருமகன் - மருகன் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மலைக்கு மருகனைப் பாடிப் பாடி (திருவாச. 9:6). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 3. வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற். 63:16). மருகன் - மருகு = 1. மருகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். (யாழ். அக). மருகென்றே யவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். (யாழ். அக.) மருகன் - மருகி (பெ.பா.) மரு2 = 1. ஒன்றிலிருந்து இன்னொன்றொடு கலக்கும் மணம். பூவொடு சேர்ந்த நாரும் மணம்பெரும் (பழ.). புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு (நாலடி. 139) என்பவற்றை நோக்குக. ஒ.நோ: மணத்தல் = கலத்தல். மணம் = இருவகை நாற்றம். வெறுத்தல் = செறிதல். வெறு - வெறி = மணம். விரவுதல் = கலத்தல். விர - விரை = மணம். மருவார் கொன்றை (தேவா. 530:1). 2. நறுமணச் செடிவகை (மலை). 3. மருக்கொழுந்து. மருவுக்கு வாசனைபோல் வந்ததால் (வெங்கைக்கோ. 112). 4. இடம் (பிங்.). மரு - மருகு = தவனம் என்னும் நறுமணச்செடி. மரு - மருந்து = நோய் தீர்க்கும் பொருள். மருந்தாகும் வேரும் தழையும் பெரும்பாலும் மணம் மிக்கிருப்பதால், நோய் நீக்கும் பொருள் மருந்தெனப்பட்டது. மருந்தென வேண்டாவாம் (குறள். 942). 2. பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89). 3. சாவை நீக்கும் அமுதம். கடல்கலக்கி மருந்து கைக் கொண்டு (கல்லா. 41:26). 4. பசிநோய் மருந்தான சோறும் நீரும். இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் (புறம். 70). 5. நீர். 6. இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81). 7. வெடிமருந்து. 8. வசிய மருந்து 9. செய்வினை மருந்து. ம. மருன்னு. தெ. மந்து. க. மர்து. மருத்து - மருத்துவம் - மருத்துவன். மருந்து - மருந்தம் = (மருந்தாகப் பயன்படும்) நஞ்சு (W.). மரு - மருள். மருள்தல் = 1. ஒத்தல். அணைமரு ளின்றுயில் (கலித். 14). 2. வியத்தல். இவ்வே ழுலகு மருள (பரிபா. 5:35). 3. மயங்குதல். மதிமருண்டு (குறள். 1229). 4. வெருவுதல். சிறார் மன்று மருண்டு நோக்கி (புறம். 46). க. மருள். மருள் = 1. மயக்கம். வெருவுறு மருளின் (சீவக. 2290). 2. திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (குறள். 199). 3. பிறப்பு முதல் அறிவின்றி மயங்கியிருக்கும் எச்சப் பிறவி. மாவும் மருளும் (புறம். 28). 4. வியப்பு. மருள் பரந்த வெண்ணிலவு (திணைமாலை 96). 5. கள் (யாழ். அக). 6. கோட்டி (பைத்தியம்) (யாழ். அக.). 7. குறிஞ்சி யாழ்த்திறம் எட்டனுள் ஒன்று (பிங்.) 8. மருளிந்தளப் பண். மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் (திவ். நாய்ச். 9:8). 9. பேய். (பிங்.). 10. பேய் கொள்ளல். 11. புல்லுரு (W.). மருளன் = 1. அறிவு மயக்கன். பட்டப்பகற் பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 2. தெய்வமேறி. 3. மதவெறியன். மருளாளி = 1. தேவராளன். 2. தெய்வமேறி. 3. பேயாடி. 4. மருள ஓர் உவமவுருபு. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய (தொல். உ.வ. 15). மருளி = 1. மயக்கம். மருளிகொண் மடநோக்கம் (கலித். 14). 2. மதிமயங்கி. மருளிதான் மயங்கி (யசோதர. 2:42). மருட்கை = 1. மயக்கம். ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கி (தொல். பொருள். 659). 2. எண்வகை மெய்ப்பாட்டுள் ஒன்றான வியப்பு. நகையே அழுகை இளிவரல் மருட்கை (தொல். மெய்ப். 3). மருட்பா = வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் கலவைப்பா. (தொல். பொருள். 398). மருண்மா = மதம்படு யானை (திவா).. மருள் - மிரள். மிரளுதல் = மயங்கி அஞ்சுதல். மருட்டு - மிரட்டு. மருட்டி = மிரட்டி. மிரள் - மெரள். மெரளுதல் = மயங்கி அஞ்சுதல். மெரள் = மெருள். மெருளுதல் = மயங்கி அஞ்சுதல். அருளுதல். மெருள் = அச்சம். (நன். 10, மயிலை). மெருளி = மயங்கியஞ்சி, அச்சங்கொள்ளி. மெருள் - வெருள். வெருளுதல் = 1. மருளுதல். எனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32:3). 2. அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24:84). 3. மாடு குதிரை முதலியன மிரண்டு கலைதல். வெருள் = 1. அஞ்சத் தக்கது. நின்புக ழிகழ்வார் வெருளே (திருவாச. 6:17). 2. மனக்கலக்கம் (சூடா.). வெருளி = 1. மருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 2. வெருளச் செய்யும் புல்லுரு முதலியன. 3. வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு. வெருளி மாந்தர் (சீவக. 73). வெருள் - வெரு = அச்சம். வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் (குறள். 563). வெருவரு நோன்றாள் ... கரிகால் வளவன் (பொருந. 147). வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் (தொல். பொருள். 111). வெரு-வ. பிரு (b). ஒ.நோ: OE. foer, OS. var. OHG. fara, G. (ge) fahr. ON. far, E. fear. வெரு - வெருவு. வெருவுதல் = அஞ்சுதல். யானை வெரூஉம் புலிதாக்குறின். (குறள். 599). வெருவு = அச்சம். தெ. வெரப்பு. வெருவருதல் = 1. அஞ்சுதல். வெருவந்த செய்யாமை (குறள்.). 2. அச்சந்தருதல். வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (பதிற். 70. பதி.). வெருவா - வெருவந்தம் = அச்சம் (w.). வெருவெருத்தல் = அஞ்சுதல். உயிர்நடுங்கி ... வெருவெருத்து நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49). வெருவு - வெருகு = அஞ்சத்தக்க காட்டுப் பூனை. வெருக்கு விடை யன்ன (புறம். 324). க. பெர்கு - பெக்கு. வெருகு - வெருக்கு = அச்சம். வெருக்கு வெருக்கென் றிருக்கிறது. (உ.வ.). மரு - மறு - மறுகு = பண்டங்கள் செறிந்த பெருங்கடைத்தெரு. கூலமறுகு = எண்வகைக் கூலங்கள் செறிந்த மறுகு (சிலப். 8:73. அடியார். உரை). மால் - மார் - மாரி = 1. கருமுகில். மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள். 211). 2. மழை. மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறம். 35). 3. மழைக்காலம். மாரி மலைமுழைஞ் சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா. 23). 4. நீர் (பிங்.). k., து. மாரி. மால் - மழை = 1. கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6:46). 2. நீருண்ட கருமுகில். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி. 361). 3. மழைக்கால். மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4. முகில் பொழியும் நீர். கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 55). 5. குளிர்ச்சி. பெருமழைக் கண் (குறள். 1239). மழைத்தல் = 1. கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை. 132). 2. மழை நிறைந்திருத்தல். மழைத்த வானமே (கம்பரா. கார்கால. 2). 3. குளிர்தல். மழைத்த மந்தமா ருதத்தினால் (பெரியபு. திருஞான. 150). மழை - ம. மழ. க. மளெ. மல் - மறு = 1. கருப்பு. 2. களங்கம். மதிமறுச் செய்யோள் (பரிபா. 2 : 20). . குற்றம் (பிங்.). மறுவில் செய்தி மூவகைக் காலமும் (தொல். புறத். 20). 4. தீமை. நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர் (உ.வ.). 5. அடையாளம். 6. பாலுண்ணி (W.). 7. தோல் மேலுள்ள கரும்புள்ளி (mole). மச்சம். மறுவாயிரத் தெட்டணிந்து (சீவக. 2). மல் (மால்) = கருமை. ஒ.நோ: OE. mal, OHG. meil, Goth. mail, E. mole, spot, blemish, small lump on human skin. மருமம் = 1. தழுவும் மார்பு. 2. நெஞ்சு. 3. முலை. மருமம் - மம்மம் - அம்மம் = 1. முலை. 2. முலைப்பால். அம்ம முண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2:2:1). 3. குழந்தையுணவு (குழந்தை வளர்ப்புச் சொல்). ம. அம்மிஞ்ஞி. க. அம்மி. ஒ.நோ: கருமம் - கம்மம் - கம் = செய்கை, தொழில், உழவு, கொல். இந். காம் = வேலை. பெருமான் - பெம்மான். மம்மம் - L. mamma, E. mamma, milk - secreting organ of female in mammals. E. mammal, one of the animals having mammale(pl.) for nourishment of young. E. mamilla (L. dim. of mamma), nipple of female breast. மருமம் - வ. மர்மன். வ. ம்ரு-மர் = சா (to die). மர்மன் = mortal spot, vulnerable point, any vital member or organ என்பது வடமொழியாளர் கூறும் பொருட் கரணியம். இதன் பொருத்தத்தை அறிஞர் கண்டுகொள்க. மருளல் = மயங்கல். வியத்தல். ஒ.நோ: E. marvel, ME. f. OF. mervveille f. LL. mirabilia, neut. p. of L. mirablis (mirari, wonder at). E. mirror (looking-glass) f. ME. f. OF. f. Rom. mirare, look at, f. L. mirari, wonder at. மேலையர் முதன்முதல் முகக் கண்ணாடியைக் கண்டதும் வியந்ததாகத் தெரிகின்றது. அங்ஙனமே ஏனை நாட்டாரும் வியந்திருத்தல் வேண்டும். முல் - முள் - முள்கு. முள்குதல் = முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125) முள் - முளி = 1. உடல் மூட்டு. திகழ் முச்சா ணென்பு முளியற (தத்துவப். 133). 2. மரக்கணு (யாழ். அக.) 3. கணுக்கால். (w.). முளி - முழி = எலும்புப் பூட்டு. மூட்டு. ம. முளி. க. முடி. முழி - மொழி = 1. முழங்கை முழங்கால் முதலியவற்றின் பொருத்து. மொழி பிசகிவிட்டது (உ.வ.). 2. மரஞ்செடி கொடிகளின் கணு. மொழியு மினியீர் ... மதுரக் கழைகாள் (அழகர்கல. 67). 3. கரும்பின் இருகணுவிற் கிடைப்பட்ட பகுதி. 4. கரும்பின் மொழிபோற் சொற்றொடர்க் குறுப்பான சொல். ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். மொழி. 12) 5. சொற்றொடரான பேச்சு (Articulate speech of, articulate = connected by joints). மொழிபெயர் தேஎத்த ராயினும். (குறுந். 11) முழி - முழம் = கைந்நடுப் பொருத்தினின்று அதன் நுனிவரை யுள்ள நீட்டலளவு. உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம் (நல்வழி. 28). முழங்கை (முழம் + கை) = நடுப்பொருத்தினின்று நுனிவரைப் பட்ட அல்லது முழு அளவான கை. முழம் போடுதல் = 1. முழங்கையால் அளத்தல். 2. ஆளின் தன்மையை ஆய்ந்து மதிப்பிடுதல். முழங்கால் (முழம் + கால்) = நடுப்பொருத்தினின்று அடிவரைப் பட்ட அல்லது முழ அளவான கால். முழந்தாள் (முழம் + தாள்) - முழந்து = முழங்கால் (சூடா.). ம. முழம். து. முழம். க. மொழ. தெ. முர. முள் - முழு - முழுவு. முழுவுதல் = 1. பொருந்தித் தொடுதல். 2. முத்தமிடுதல். வந்தென் முலைமுழுவித் தழுவி (திருக்கோ. 227). 3. தழுவுதல். முழுவு - முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. முழுவற் கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6). முழுவல் - உழுவல் = அன்பு. பழுத்த வுழுவ லமரர் (விநாயகபு. 72:54). உழுவலன்பு = எழுமையுந் தொடர்ந்த அன்பு. (தொல். களவு. 34. உரை). முழுவு - முழுசு. முழுசுதல் = 1. முட்டுதல். பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால் சுரக்கும். (ஈடு. 5:3:3). 2. முத்துதல். அழுந்தத் தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9:6). ஒ.நோ: பரபு - பரசு. விரவு - விரசு. முழுவல் - முழால் = தழுவுகை. சிறார்முலை முழாலிற் பில்கி (சீவக. 2541). முழுவு - முழவு. முழவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழவு - முழாவு. முழாவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழுத்தல் = திரளுதல், பருத்தல், முழுத்த ஆண்பிள்ளை (உ.வ.). முழு ஆள் - முழாள் = வளர்ச்சியடைந்த பெரிய ஆள். முழு - முழா = 1. திரண்ட முரசு (பிங்.). 2. குடகுழா (சிலப். 141. உரை). முழா - முழவு = 1. முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399). 2. குடமுழா (பிங்.) 3. தம்பட்டம் (பிங்.). ம. முழாவு. முழவுக்கனி = திரண்ட பலாப்பழம் (சங். அக.). முழவு - முழவம் = 1. பெருமுரசு. மண்கனை முழவம் விம்ம (சீவக. 628). 2. குடமுழா. தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப். 3:141). ஒ.நோ: முரசு - முரசம். அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. முழா - முழ - முழங்கு. முழங்குதல் = 1. பெரிதொலித்தல். எழிலி முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392). 2. பலருமறியச் சாற்றுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினு முழங்கும் (இலக். கொத். 7). முழங்கு - முழக்கு - முழக்கம். முழா - முழாசு. முழாசுதல் = பெருநாவிட்டு எரிதல் (யாழ்ப்.). முழாசு = பெருந்தீநா (யாழ்ப்.). முழு = (கு.பெ.எ.) 1. பருத்த. முழுமுத றொலைந்த கோளி யாலத்து (புறம். 58). 2. மிகுந்த, மொத்த, நிறைவான, எல்லா. எ.டு. முழுமூடன், முழுத்தொகை, முழுமதி, முழுவுலகாளி (இறைவன்). முழுக்க (கு.வி.எ.). = முழுதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை). முழுத்த = முதிர்ச்சிபெற்ற. முழுத்த வின்பக் கடல் (திருக்கரு. கலித். அந்.). முழு - முழுது = எல்லாம், எஞ்சாமை. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே (தொல். உரி. 28). முழுது - முழுசு. எல்லாப் பணியாரத்தையும் முழுசு முழுசாய்த் தின்றுவிட்டான் (உ.வ.). முழுது - முழுந்து = முழுமை. முழுந்து சுகவடிவாம் (ஞானவா. சனக. 14). முழு - முழுமன் = 1. முழுது. 2. அரைக்கும்போது சிதையாது விழும் முழுக் கூலமணி. முழுமன் - முழுவன் = முழுது. கடன் முழுவனும் தீர்த்துவிட்டான் (உ.வ.). முழு - முழுமை = 1. பருமை. துங்கமுழு வுடற்சமணச் சூழ்ந்து மகிழ்வார் (பெரியபு. திருநாவு. 39). 2. எல்லாம் (பிங்.). முழுவது - முழுது - முழுதோன் = கடவுள். முழுதோன் காண்க (திருவாச. 3:29). முழா - மிழாபருத்த ஆண்மான் (stag = male of red deer or of other large kinds of deer - C.O.D.). மிழா - மேழம் = செம்மறியாட்டுக் கடா. மேழம் - மேடம் = 1. செம்மறியாட்டுக் கடா (பிங்.). 2. மேடவோரை (பிங்.). 3. மேடமதி (சித்திரை). மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110). மேடம் - வ. மேஷ. மேழம் - மேழகம் = செம்மறியாட்டுக்கடா. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). மேழகம் - ஏழகம் = செம்மறியாட்டுக் கடா. ஏழகம் - பிரா. ஏளக. ஒ.நோ: E. elk, large animal of the deer kind found in N. Europe and N. America. ME. elke, OE. elh, eoth. மேழகம் - மேடகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. மேடவோரை. மேடகம் - வ. மேடக. ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு = செம்மறியாடு. வெள்ளாடு. ஆடு. யாடுங் குதிரையும் (தொல். மரபு. 12). ஒன்றிடை யார வுறினுங் குளகு சென்றுசென் றருந்தல் யாட்டின் சீரே என்னும் பழம் பொதுப்பாயிரச் செய்யுள். வெள்ளாட்டைக் குறித்தது. யாடு - ஆடு = 1. ஆட்டுப்பொது. 2. மேடவோரை. திண்ணிலை மருப்பி னாடுதலை யாக (நெடுநல். 160). ம. ஆடு. க. ஆடு. து. ஏடு. ஒ.நோ: ஏது - யாது, ஏவர் - யாவர் - யார் - ஆர். மானும் ஆடும் நெருங்கிய இனமாயிருத்தல் கவனிக்கத்தக்கது. ஆடு என்னுஞ் சொல். இற்றை நிலையில் இருவகை யாட்டிற்கும் பொதுவேனும், முதற்காலத்தில் செம்மறியாட்டையே சிறப்பாகக் குறித்தது. முழா - முடா - மிடா = பெரு மண்பானை. சோறு செப்பி னாயிரம் மிடா (சீவக. 692). 2. பானை (பிங்.). மிடாத்தவளை = பெருந்தவளை (M.M. 90). முழு - மொழு - மொழுக்கு - மொழுக்கன் = தடித்தவன் (யாழ். அக). மொழுக்கு - மொழுக்கட்டை = தடித்த - வன் - வள் (இ.வ.). மொழு - மொழுப்பு = சோலை செறிந்த பைதிரம் (பிரதேசம்). மொழு - மொழியன் = பெரும் பேன் (யாழ். அக.). மொழு - மொகு - மொக்கு = 1. மரக்கணு (யாழ். அக.). 2. பருமன். மொக்கு - மொக்கன் = தடித்த - வன் - வள் - து (இ.வ.). மொக்கன் - மொங்கன் = தடித்த - வன் - வள் - து. மொங்கன் - மொங்கான் = பருத்துக் கனத்த பொருள் (உ.வ.). மொங்கான் தவளை = பருத்த பச்சைத்தவளை. மொக்கு - மொக்கை = 1. பருமன். 2. கூரின்மை. எழுதுகோல் மொக்கையாகி விட்டது (உ.வ.). 3. புணர்ச்சி. மொக்கை போடுதல் = புணர்தல். மொக்கைச்சோளம் = பருத்த அமெரிக்கச் சோளம். மொக்கைச் சோளம் - மக்கைச் சோளம் - மக்காச்சோளம். மொக்கையாளி - மக்கையாளி - மக்காளி = மிகப் பருத்தவன் (உ.வ.). மொக்கை - மொக்கட்டை = மழுக்கமானது (இ.வ.). முல் - முது - முத்து. முத்துதல் = 1. சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 2. ஒன்றையொன்று தொடுதல். 3. அன்பிற் கறிகுறியாக இருவர் முகங்கள் அல்லது உதடுகள் பொருந்தித் தொடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறம். 41). முத்து - முத்தம். 4. திரளுதல். முத்தங் கொள்ளுதல் = 1. தொடுதல். பொருந்துதல். சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள் (சீவக. 2312). 2. புல்லுதல், தழுவுதல். முலைமுத்தங் கொள்ள (சீவக. 2312). 3. முத்தமிடுதல். தாய்வாய் முத்தங் கொள்ள (பெரியபு. கண்ணப்ப. 23). முத்து - முத்தி = முத்தம் (kiss). மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183). முத்து = 1. ஆமணக்கு. வேம்பு. புளி முதலியவற்றின் உருண்டு திரண்ட விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. 1:3:2). 2. நெய்யுள்ள விதை. 3. உருண்டு திரண்ட கிளிஞ்சில் வெண்மணி. முல்லை முகைமுறுவல் முத்தென்று (நாலடி. 45). 4. கிளிஞ்சில் முத்துப் போன்ற மாதுளை விதை. 5. வெண்மணி போன்ற கண்ணீர்த் துளி. பருமுத்துறையும் (சீவக. 1518). 6. வெண்முத்துப் போன்ற வெள்ளரிசி. 7. ஆட்டக் காய்களாகப் பயன்படும் புளிய முத்து 8. 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை. 9. வெண்முத்துப்போன்ற அம்மைக் கொப்புளம். பிள்ளைக்கு உடம்பு முழுதும் முத்துப் போட்டிருக்கிறது (உ.வ.). 10. வெண்முத்துப்போற் சிறந்த பொருள் அல்லது தன்மை. முதல் விலை முத்துவிலை (பழ.). முத்து-முத்தம் = பருமுத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற். 39). 2. பேராமணக்குக் கொட்டை 3. பச்சைக்கற் குற்றங்களு ளொன்று. (திருவிளை. மாணிக்கம். 67). அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ. விளக்கு - விளக்கம், மதி - மதியம், நிலை - நிலையம். முத்தம் - வ. முக்த. முத்து - முத்தை = 1. திரட்சி (சூடா.). 2. சோற்றுருண்டை (w.). தெ. முத்த (Mudda). குறுமுத்தம் பழம் = மிதுக்கம் பழம். மொலு - மொது. மொதுமொது வெனல் = திரளுதற் குறிப்பு. மொது மொதுவென்று மக்கள் (சனங்கள்) குவிந்தார்கள் (உ.வ.). 2. கொழுந்து வளர்தற் குறிப்பு. மொதுமொதுவெனல் - மொதுமொதெனல். மொது - மொத்து. மொத்துதல் = 1. உரக்க அல்லது வலுக்க அடித்தல். எல்லாருஞ் சேர்ந்து நன்றாய் மொத்திவிட்டார்கள் (உ.வ.). எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66). தெ. மொத்து. க. மோது. து. முத்தெ. மொத்து = 1. வலுத்த அடி. மோது திரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7), 2. வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக் கிறது (உ.வ.). மொத்து - மொத்தி = புடைப்பு (யாழ்ப்.). மொத்து = 1. தடித்த - வன் - வள் - து. 2. சுறுசுறுப்பில்லாத - வன் - வள் - து. 3. மூடத்தனமுள்ள - வன் - வள் - து. தெ. மொத்து (moddu), க. மொத்த (modda). மொத்துப் பிண்டம் = மொத்து 1,2,3. மொத்துக் கட்டை = மொத்து 1,2,3. மொத்தன் = (ஆ.பா.). 1. தடித்தவன். 2. சோம்பேறி. 3. மூடன். மொத்தன் - (பெ. பா). மொத்தி, மொத்தை. க. மொத்தி (moddi). மொத்து - மொத்திகை - மத்திகை = குதிரையை அடிக்கும் சமட்டி. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 2. தடிக்கம்பு. கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54). Gk. mastix, mastigos = குதிரைச் சமட்டி. ஒ - அ. சொல்லாக்கத் திரிபு. ஒ.நோ: கொம்பு - கம்பு, ஒட்டு - அட்டு, தொண்டையார்பேட்டை - தண்டையார் பேட்டை. மொத்து - மொத்தம் = 1. gUk‹ (W.)., திண்ணம். கட்டிற்கால் மொத்தமாயிருத்தல் வேண்டும் (உ.வ.). எலுமிச்சம்பழத்தோல் மொத்தமாயிருத்தல் கூடாது. 2. கூட்டுத்தொகை. தேர்வு எழுதினவர் எல்லாரும் மொத்தம் எத்தனை பேர்? (உ.வ.). 3. முழுமை. எல்லாக் காய்களையும் மொத்தமாய் விலை பேசி வாங்கிக்கொள் (உ.வ.). வரவு செலவுக் கணக்குப் பார்த்தால் மொத்தத்தில் இழப்பிராது. 4. பொது எல்லாரையும் மொத்தமாய்த் திட்டிவிட்டான் (உ.வ.). 5. பெரும்பான்மை. மொத்தவிலை வணிகர் (உ.வ.). மொத்து - மொத்தளம் = (யாழ். அக.) 1. மொத்தம். 2. கூட்டம். மொத்தளம் - மத்தளம் = இருந்தடிக்கும் பெருமதங்கம் (மிருதங்கம்) அல்லது இருதலை முழா. மொத்து - மொத்தை = 1. பருமன் (யாழ். அக.). 2. உருண்டை சோற்றுருண்டை. தெ. முத்த (mudda), க. முத்தெ (mudde). மொத்தையுரு = நெட்டுரு. மொத்தையுருப் போட்டுத் தேறிவிட்டான் (உ.வ.). மொத்தை - மொச்சை = தமிழ்நாட்டுப் பயற்று வகைகளுள் மிக மொத்தமானது; வீட்டவரைக்கு இனமான காட்டவரை. மொத்தை - மோத்தை = 1. செம்மறியாட்டுக் கடா. மோத்தையுந் தகரும் உதரும் அப்பரும் (தொல். மரபு. 2). மேழவோரை (சூடா. உள். 9). 3. வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின ... தாழம்பூ மோத்தைபோ லிருப்பன (தற். 211, உரை). க. மோத்து. மொத்து - மொந்து - மொந்தன் = பெருவாழை; கதலிக்கு எதிரானது. தெ. பொந்த (bonta). மொந்து - மொந்தணி = 1. மரத்தின் கணு (யாழ்ப்.). 2. மூடப்பெண் (யாழ். அக.). மொந்தணி - மொந்தணியன் = 1. பருத்தது. 2. சோற்றுருண்டை. மொத்தையுரு - மொந்தையுரு. மொத்து - மத்து = 1. பருப்பு கீரை முதலியன கடையுங் கருவி. 2. தயிர் கடையுங் கருவி. ஆயர் மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). மத்து - வ. மந்த (mantha). கடைகருவி அடியில் மொத்தமாயிருப்பதனால் மத்தெனப்பட்டது. மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். பாற் சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.). மத்தி - வ. மத் (math). மத்தி - மதி. மதித்தல் = 1. கடைதல். மந்த ரங்கொடு மதித்தநாள் (சேதுபு. சங்கர. 20). 2. மத்தினாற் கடைந்தாற்போல் கையினால் அல்லது கைவிரலால் அழுத்திக் களிப்பதமாக்கல். குழந்தைக்குச் சோற்றை நன்றாய் மதித்து ஊட்டு (உ.வ.). மதி-மசி. மசிதல் = களிப்பதமாகக் கடைபடுதல் அல்லது குழைதல். சோறு நன்றாய் வேகாததனால் மசியவில்லை (உ.வ.). 2. பிறர் விருப்பிற்கு இணங்குதல். ஆள் எளிதில் மசிய மாட்டான் (உ.வ.). மசி - வ. மஷ். மசித்தல் = 1. கடைந்து அல்லது பிசைந்து குழையச் செய்தல். 2. மைக்கட்டியை அல்லது களிம்பை நீரிற் குழைத்து எழுதுமை யுருவாக்குதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2). மசி = எழுதுமை. மசிகலந் தெழுதப் பட்ட (சூளா. தூது. 83). 2. வண்டி மசகு. மசி - வ. மஷி. மசி - மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து வண்டியச்சிற் கிடும் மை. தெ. மசக (masaka). மசிக்குப்பி = மசிக்கூடு. மசி - மயி - மை = 1. வண்டி மசகு. 2. கண்ணிற்கிடும் கரிய களிம்பு (அஞ்சனம்). மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235 : 10). 3. எழுதும் அல்லது ஏட்டிற் பூசும் கரிக்குழம்பு. 4. மந்திர வினையிற் கையாளுங் கரும் பசை. 5. மையின் கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகம். 89). மைம்மீன் புகையினும் (புறம். 117). 6. இருள். மைபடு மருங்குல் (புறம். 50). 7. இருண்ட பசுமை. மையிருங் கானம் (அகம். 43). 8. கருமுகில். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5). 9. கரிய ஆடு (வெள்ளாடு). மையூன் மொசித்த வொக்கலொடு (புறம். 96). வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33). 10. கரிய எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப (அகம். 41). 11. கருமைக்கு இனமான நீலநிற விண் (அரு. நி.). 12. கரிய களங்கம். மைதீர்ந் தன்று மதியு மன்று (கலித். 55). 13. அழுக்கு. மையில் செந்துகிர் (கலித். 85). 14. குற்றம் மையிலறிவினர் (புறம். 22 : 8). 15. கரிசு (பாவம்). தீவினை. மைதீர்த்தல் (சினேந். 457). 16. கருமுகில் நீர் (யாழ். அக.). அல்லது நீலக்கடல்நீர். மை - மைஞ்சு = கருமுகில். முகில் (நன். 122. மயிலை). மைஞ்சு - மஞ்சு = 1. முகில். யாக்கை மலையாடு மஞ்சுபோற்றோன்றி (நாலடி. 28). 2. வெண்முகில். மஞ்செனநின்றுலவும் (சீவக. 2853). 3. பனி (பிங்.) 4. மூடுபனி (இ.வ.). x.neh.: ஐ - ஐந்து - அஞ்சு. மைத்தல் = 1. கருத்தல். மைத்திருள் கூர்ந்த (மணிமே. 12 : 85). 2. ஒளி மழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணர் (சீவக. 2333). மை - மைப்பு = கருப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (காஞ்சிப்பு. அரிசாப. 2.). மைக்கூடு (கூண்டு) = 1. எழுதும் மைப்புட்டி. 2. கண்மைச் சிமிழ். முத்து - முட்டு. முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். களவு. 21). 2. எதிர்த்தல். 3. மோது தல். துள்ளித்தூண் முட்டுமாங் கீழ் (நாலடி. 64). விலங்குகள் கொம்பால் தாக்குதல். வாயில் நிலையால் தலை தாக்குண்ணுதல். 4. பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (கம்பரா. நட்புக். 50). 5. பொருந்தித் தொடுதல். 6. தாங்குதல். 7. பிடித்தல். குழலாள் ..... கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தரரா. திக்குவி. 16). 8. முடிதல். முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் (தொல். செய். 122). 9. நிறைதல். தோய முட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய். 79). 10. தடுத்தல். 11. தடைப்படுதல். வெண்ணெல்லி னரிசி முட்டாது பெறுகுவீர் (மலைபடு. 564). 12. குன்றுதல். முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர் (சிலப். 15:197). 13. இடர்ப்படுதல். 14. தீட்டுப்படுதல். 15. தேடுதல். நாடிநாங் கொணருது நளினத் தாளைவான் மூடிய வுலகினை முற்றுமுட் டியென்று (கம்பரா. சம்பாதி. 7) ம. முட்டுக. க. முட்டு. முட்டு = 1. முழங்கை முழங்கால் விரல்கள் ஆகியவற்றின் பொருத்து. 2. குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக் கின்றன (உ.வ.). 3. பற்றுக்கோடு. விலங்குகள். கொம்பால் தாக்குகை 4. தடை. முட்டுவயிற் கழறல். (தொல். மெய்ப். 23). 5. முட்டுப் பாடு. 6. கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சிவக. 1216). 7. குறைவு. மூவேழ் துறையு முட்டின்று போகிய (புறம். 166). 8. கண்டுமுட்டு கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் (பெரியபு. திருஞான. 692). 9. மாதவிடாய் (W.). முட்டடி = அண்மை (W.). முட்டுதல் = நெருங்குதல். முட்டத்தட்ட = கிட்டத்தட்ட. முட்டடித்தல் = கோலியாட்டில் தோற்றவனுடைய முட்டில் (விரற்பொருத்தில்) வென்றவன் கோலியா வடித்தல். முட்டடைப்பான் = வயிற்றை வீங்கச் செய்யும் மாட்டுநோய். (M. cm. D. I. 248.). முட்ட = முடிய, முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத கிருட். 103). முட்டத்தட்டுதல் = 1. மரத்திலுள்ள பழங்களெல்லாவற்றையும் பறித்தல். 2. முழுதும் இல்லாதிருத்தல் (உ.வ.). முட்ட முடிய = முற்றிலும் முடிவுவரை. முட்ட முடிபோக = இறுதிவரை. முட்டு = முட்டம் = மதி முட்டுப்பாடு (மதிக்குறைவு) ஆகிய மடமை. முட்டம் - முட்டன் = மூடன் (W.). முட்டத்தனம் = மூடத்தன்மை (W.). முட்டாட்டம் = (W.). 1. முட்டாள் தன்மை. 2. அறியாமையா லுண்டாகுஞ் செருக்கு. அவன் முட்டாட்ட மாடுகிறான். (உ.வ.). முட்டாள்1 (முட்டு + ஆள்) = மூடன். முட்டா ளரக்கர் (திருப்பு. 141). ம. முட்டாள். முட்டாள்2 = முட்டும் (முட்டித் தாங்கும்) ஆள், தாங்கும் உருவம், அணிகத்தின் (வாகனத்தின்) கீழ் அதைத் தாங்குவது போல் வைக்கும் படிமை. க. முட்டாள். முட்டரிசி = நன்றாய் வேகாத (வேக்காடு குன்றிய) அரிசி (உ.வ.). முட்டம் = 1. பொருந்திய பக்கம், பக்கச்சரிவு. நளிமலை முட்டமும் (பெருங். வத்தவ. 2:43). 2. பலர் கூடி வாழும் ஊர் (சூடா.). குரங்கணின் முட்டம் (சிவன் கோயில்). ஒ.நோ: முட்டா = 1. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 2. சொத்து (w.). முட்டா - மிட்டா = 1. நாட்டுப் பகுதி, வட்டம் 2. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 3. சொத்து. 4. உரிமை. மிட்டா - இந். மிட்டா (mittha). முட்டுதல் = கூடுதல், பொருந்துதல். ஒ.நோ: OE. mitan, OS. motian, ON. moeta, Goth. (ga) motjan, E. meet. OE. motian, E. moot, assembly. E. wikenagemot = Anglo - Saxon national council or parliament. OE. witena. wise mens. (ge) mot, meeting. முட்டாட்டம் = முட்டுகை. முட்டு - ஒ.நோ: E. butt, meet end to end. முட்டு = தாங்கல். ஒ.நோ: ME. buttress, OF. bouterez, mod. F. bouteret, f. bouter, E. buttress f. butt. OF. abutex (but, end), end on, E. abut, border upon, abutment, a lateral support. முட்டுக்கட்டுதல் = 1. கட்டை முதலியவற்றைத் தாங்கலாகக் கொடுத்தல். 2. முழங்காலைக் கைகளாற் கட்டுதல். முட்டுக் கட்டி உட்காராதே (உ.வ.). 3. எல்லை கட்டுதல் (யாழ்ப்.). 4. வழியடைத்தல் (w.). முட்டுக்கட்டியாடுதல் = பொய்க்காற் கட்டையில் நின்று நடத்தல். முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச் சுவர் முதலிய தொடர்ச்சொற்கள் தாங்கல் கொடுத்தலையும். முட்டுக்கட்டை, முட்டுத்தொய்வு (மூச்சுவிட முடியாமை), முட்டுப்பாடு முதலிய தொடர்ச்சொற்கள் தடைபண்ணுதலையும்; முட்டுமுடுகு. முட்டிடை முதலிய தொடர்ச்சொற்கள் வழியிடுக் கத்தையும்; முட்டுச்சீலை, முட்டுப் பட்டினி, முட்டுப் பாந்தை முதலிய தொடர்ச்சொற்கள் தீட்டுப்பாட்டையும்; முட்டுக்கால் தட்டுதல். முட்டுக்குட்டு. முட்டுக் குத்துதல் (முழங்கால்மேல் நிற்றல்), முட்டுப்பிடிப்பு, முட்டுவலி, முட்டுவீக்கம் முதலிய தொடர்ச்சொற்கள் முழங்கால் வினையையும் உணர்த்தும். முட்டுதல் = நெருங்குதல், இடுகுதல். முட்டு - முட்டி = 1. விரற் பொருத்துத் தெரியும்படி முடக்கிய கை. 2. முட்டிக்கையாற் குத்துங் குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56). 3. நால் விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப் பிடிக்கும் இணையா வினைக்கை. (சிலப். 3: 18, உரை). 4. கைப்பிடியளவு. முட்டி மாத்திர மேனும் (சேதுபு. இராமதீ. 3). 5. பிடியளவாக இடும் ஐயம் (பிச்சை). முட்டிபுகும் பார்ப்பார் (தனிப்பா.). 6. படைக்கலம் பிடிக்கும் வகை. துய்ய பாசுபதத் தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129). 7. ஒருவர் தம் கையுள் மறைத்ததை இன்னொருவர் தாமாக அறிந்து கூறுங் கலை : 8. திருவிழாவில் ஊரெல்லைத் தெய்வத்திற்கும் படைக்குஞ் சோறு. 9. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. முட்டுதல் என்பது ஒரு பொருளின் தலை அல்லது கடை இன்னொரு பொருள்மேற் படுதலாதலால், முட்டும் பகுதியினின்று முடிவு அல்லது எல்லைப் பொருள் தோன்றிற்று. எல்லைக்கறுப்பன் (கருப்பன்). எல்லைப்பிடாரி, எல்லையம்மன் என்னும் பெயர்கள், சிற்றூர்வாணரின் எல்லைத் தெய்வ வணக்கத்தைக் குறிக்கும். முட்டி - வ. முஷ்டி. முட்டிக்கால் = 1. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. 2. முட்டிக்காற் பின்னல். (W.). முட்டிக்கால் தட்டுதல் = முழங்காற் சிப்பிகள் ஒன்றோடொன்று உரசுதல். முட்டிக்காலன் = முட்டிகள் தட்டும்படி நடப்பவன் (W.). முட்டிக்காற் கழுதை = பின்னங்கால் முட்டிகள் தட்டும்படி நடக்குங் கழுதை. முட்டிச்சண்டை = முட்டிக்கைப்போர் (W). முட்டிப்பிச்சை = பிடியரிசி யையம். முட்டியடித்தல் = 1. முட்டிச் சண்டையிடுதல். 2. முட்டிப் போர் செய்தல் போல் வருந்தித் திண்டாடுதல். வேலைக்கு முட்டியடிக்கிறான் (உ.வ.). முட்டிக்கால் என்பது போன்றே முட்டிக்கை என்பதும் பொருத்தையே சிறப்பாகக் குறிக்கும். முன்னது காற்பொருத்தும் பின்னது விரற்பொருத்தும் ஆகும். முள் - மூள். மூளுதல் = 1. பொருந்துதல். 2. தீப்பற்றுதல் 3. சினங்கிளம்புதல். 4. மிகுதல். 5. முனைதல். முதலற முடிக்க மூண்டான் (கம்பரா. மாயாசீ. 96). மூள் - மூட்டு (பி.வி). மூட்டுதல் = 1. பொருத்துதல். 2. இணைத்தல். இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631 : 3). 3. தைத்தல். இந்தக் கோணியை மூட்டு (உ.வ.). 4. தீப்பற்ற வைத்தல். மூட்டிய தீ (நாலடி. 224). 5. தீ. மூட்டுவதுபோற் சினமூட்டுதல். 6. பகை மூட்டிச் சண்டைக்குத் தூண்டுதல். இருவருக்கும் நன்றாய் மூட்டிவிட்டு விட்டான் (உ.வ.). 7. ஒன்றைச் செலுத்துதல். கடுகுபு கதிர்மூட்டி (கலித். 8). ம. மூட்டுக. தெ. மூட்டிஞ்சு (Muttintsu). மூட்டு = 1. உடல். அணி முதலியவற்றின் பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113). 2. சந்திப்பு (யாழ். அக.). 3. தையல். 4. கட்டு. வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து (கந்தபு. மீட்சிப். 8). 5. கட்டப்பட்டது (W.). 6. குதிரைக் கடிவாளம் (பிங்.). 7. மனவெழுச்சி. 8. வாழையிலைக் கற்றை. மூட்டுமூட்டாய்ப் பிரிந்துபோய் விட்டது (உ.வ.). 9. பொத்தகக் கட்டடப் பகுதி. k., தெ. மூட்டு. க. மூட்டை. மூட்டு - மூட்டை = 1. பொட்டணம். இந்தத் துணிகளையும் மூட்டையில் வைத்துக் கட்டு (உ.வ.). 2. பொதி. அரிசி மூட்டைகளை யெல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டுபோய் விட்டார்கள். 3. அறுபது பட்டணம்படி கொண்ட ஒரு கோணியளவு. 4. பெரும்பொய். அவன் மூட்டை யளக்கிறான். ம. மூட்ட. தெ. மூட்ட. து. மூட்டே. மூட்டை - மூடை = 1. பொதி. பொதிமூடைப் போரேறி (பட்டினப். 137). 2. மிகச் செறிந்த கூலக்கோட்டை கடுந்தெற்று மூடை (புறம். 285). 3. கூலக்குதிர். கழுந்தெற்று மூடையின் (பொருந. 245). மூட்டு - மாட்டு. மாட்டுதல் = 1. இணைத்தல். அம்பினை மாட்டி யென்னே (கம்பரா. நிகும்பலை. 96) 3. செருகுதல். சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர் (நற். 19). 2. தொகுத்தல். அடுப் பினின் மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73). 4. மனத்திற் கொள்ளுதல் சொன்மாலை யீரைந்து மாட்டிய சிந்தை (திருவிசை. கருவூ. 8:10). 5. தீப்பற்றவைத்தல். விறகிற் ... செந்தீ மாட்டி (சிறுபாண். 156). 6. விளக்குக் கொளுத்துதல். நெய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398). 7. அடித்தல். வின்முறிய மாட் டானோ (தனிப்பா.). நன்றாய் மாட்டு மாட்டென்று மாட்டி விட்டான் (உ.வ.). 8. பயன்படுத்துதல். வள்ளறான் வல்ல வெல்லா மாட்டினன் (சீவக. 1274). தெ. மாட்டு. மாட்டு = தொடர்புள்ள சொற்கள் ஒரு பாட்டில் அடுத்திருப் பினும் நெட்டிடையிட்டுக் கிடப்பினும், பொருந்தும் வகையிற் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுமுறை. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையிலும் இயன்றுபொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (தொல். செய். 208) மூட்டு - மூட்டம் = 1. உலைமுகம் (யாழ். அக.). 2. சொக்கப்பனை (W.). 3. விறகு (யாழ். அக.). 4. கம்மக் கருவி வகை (யாழ். அக.). மூட்டு - முட்டான் - முட்டான் = அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம். முள் - முய் - முய - முயகு - முயங்கு. முயங்குதல் = 1. பொருந்துதல். முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6:20). 2. தழுவுதல். முயங்கி கைகளை யூக்க (குறள். 1238). 3. புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 4. செய்தல். மணவினை முயங்க லில்லென்று (சூளா. தூது. 100). முயங்கிக் கொள்ளுதல் = கணவனும் மனைவியுமாக வாழ்தல். (w.). முயங்கு - முயக்கு = தழுவுகை. வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள். 1108). முன்பு மாதவப் பயத்தி னாலவண் முயக்கமர் வார் (தணிகைப்பு. நாட்டுப். 48). முயக்கு - முயக்கம் = 1. தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள். 913). 2. புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (ஐங். 93. உரை). 3. தொடர்பு. ஆணவத்தின் முயக்கமற்று (தணிகைப்பு. நந்தி. 110). முயங்கு - மயங்கு மயங்குதல் = 1. நெருங்குதல். 2. கலத்தல். 3. ஒத்தல். காரிருள் மயங்குமணி மேனியன் (பரிபா. 15:50). 4. கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம். 19). 5. மயங்கின வாய்ப்புளும் (பு.வெ.10 சிறப். 11) 6. அறிவு கெடுதல் புலான் மயங்காண் (ஏலா.2). 7. மருளுதல். 8. வேற்றுவய மாதல். 9. வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி ... வாழ் நாளைப் போக்குவார் (நாலடி. 327). 10. மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத் தேவர் (கல்லா. 82:30). 11. நிலையழிதல் ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (மணிமே. 23 : 104). 12. வருந்துதல். முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகம். 26). 13. தாக்குண்ணுதல். காலொடு மயங்கிய கலிழ்கட லென (பரிபா. 8 : 31). 14. ஐயுறுதல். 15. தயங்குதல். அவரைப் போய்ப் பார்ப்பதற்கு மயங்குகிறான் (உ.வ.). 16. உணர்ச்சி யிழத்தல். மயங்கிசைச் கொச்சகம் = உறுப்புக்கள் மயங்கியும் மிக்கும் குறைந்தும் வரும் கொச்சகக் கலி. முயக்கு - மயக்கு = 1. போர்செய்கை. இரும்புலி மயக்குற்ற (கலித். 48). 2. கலக்கம். கனாமயக் குற்றேன் (மணிமே. 11. 104). 3. மருளச் செய்யுஞ் செய்கை. மாய மயக்கு மயக்கே (திவ். திருவாய். 8:7:3). மயக்குதல் = 1. கலத்தல். பாற்பெய் புன்கந் தேனோடு மயக்கி (புறம். 34). 2. சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189:4). 3. மனங் குழம்பச் செய்தல். குறளை பேசி மயக்கி விடினும் (நாலடி. 189). 4. மருளச் செய்தல். மாய மயக்கு மயக்கா னென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8:7:4). 5. வேற்றுவயப் படுத்துதல். (கம்பரா. இராவணன்கோ. 51). 6. நிலை கெடுத்தல். வள்ளையாய் கொடிமயக்கி (அகம். 6). 7. சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங். 99). 8. உணர்ச்சி யிழக்கச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி ... துகைத்தான் (கம்பரா. மகுட. 5). முயக்கம் - மயக்கம் = 1. கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62 : 18). 2. ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். வேற்றுமை மயக்கம். (நன். 317, உரை). 3. எழுத்துப் புணர்ச்சி. உடனிலை மெய்ம்மயக்கம். வேற்றுநிலை மெய்ம்மயக்கம். மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபால் மயக்கும் (நாள். 110) 4. இருபாற் கலப்பாகிய அலித்தன்மை (W.). 5. அறிவின் திரிபு. 6. அறியாமை. காம வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங்டெ (குறள். 360). 7. காமநோய் (அரு. நி.). 8. உணர்விழப்பு. மயங்க - மசங்கு. மசங்குதல் = 1. மயங்குதல் (தேவா. 567 : 10). 2. ஒளி குறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). முயகு - மயகு - மசகு. மசகுதல் = 1. சுணங்கி நிற்றல். 2. மனந் தடுமாறுதல். மசகு = நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம் (யாழ்ப்ப). மசங்கு - மசங்கல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திப் பொழுது. 2. மயக்கம். மசங்கற்சமண் மண்டைக் கையர். (தேவா. 567 : 10). மசங்கு - மசக்கு. மசக்குதல் = 1. குழப்புதல். 2. மயங்கச் செய்தல். லீலையிலேயுற முறை மசக்கவும் (திருப்பு. 838). மசக்கு - மசக்கம் = 1. மயக்கம். 2. மந்தம். 3. மசக்கை. மசக்கல் = மசங்கல். மயக்கி - மசக்கி = அழகாலும் தளுக்காலும் மயக்குபவள். மசக்கை = சூலிக்கு உண்டாகும் மயக்கம். முய - மய. மயத்தல் = மயங்குதல். மயந்துளே னுலக வாழ்க் கையை (அருட்பா. VI, அபயத்திறன். 14). மய-மயல் = 1. ஐயுறவு. மயலறு சீர்த்தி (பு.வெ.9:7). 2. மயக்கம். மயலிலங்குந் தூயர் (தேவா. 121:2). 3. மந்தம் (யாழ். அக.). 4. ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற (கல்லா. 20:6). 5. காம விழைவு. மாதர் மயலுறு வார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203). 6. கோட்டி (பைத்தியம்). மயற்பெருங் காதலென் பேதைக்கு (திவ். திருவாய். 4:4:10). 7. மாயை. மயலாரும் யானு மறியேம் (கம்பரா. நாகபா. 258). 8. அச்சம் (யாழ். அக.). 9. பேய் (பிங்.). 10. செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (சீவக. 128). ம. மய்யல். தெ. மயல, க. மயமு. மயல் - மயற்கை = 1. மயக்கம். மயற்கை யில்லவர் (சீவக. 1346). 2. செத்தை (சீவக. 1393, உரை). மயல் - மயர். மயர்தல் = 1. மயங்குதல். 2. திகைத்தல். வைது கொன்றன னோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244). 3. சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 4. உணர் வழிதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்தபு. திருவி. 80). மயர் = மயக்கம். மயரறுக்குங் காமக் கடவுள் (பரிபா. 15:37). மயர் - மயர்வு = 1. சோர்வு. 2. அறிவுமயக்கம் (பிங்.). 3. அறியாமை (அஞ்ஞானம்). மயர்வற மதிநல மருளினன் (திவ். திருவாய். 1:1:1). மயர் - மயரி = 1. அறிவிலி. மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13). 2. காமுகன். மயரிகள் சொற்பொருள் கொண்டு (திருநூற். 53). 3. பித்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணிமே. 22: 75). மயல் - மையல் = 1. செல்வம் முதலியவற்றால் வருஞ் செருக்கு. மையல் ..... மன்னன் (சீவக. 589). 2. காம மயக்கம். மையல் செய் தென்னை மனங்கவர்ந் தானே யென்னும் (திவ். திருவாய். 7:2:6). 3. கோட்டி (பைத்தியம்). மைய லொருவன் களித்தற்றால் (குறள். 838). 4. யானை மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37:232). 5. கருவூமத்தை (மலை). மையலவர் = பித்தர். மையலவர் போல மனம்பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013). மையலார் = 1. பித்தர். 2. மாய வினைஞர். மண்மயக்கு மயக்குடை மையலார் (இரகு. யாகப். 35). மையலி = மாய வினையாட்டி (யாழ். அக.). மையனோக்கம் = துயரப் பார்வை. மைய னோக்கம் படவரு மிரக்கம் (தொல். மெய்ப். 13, உரை). மய-மையா. மையாத்தல் = 1. மயங்குதல். மலர்காணின் மையாத்தி நெஞ்சே (குறள். 1112). 2. ஒளி மழுங்குதல். விண்மே லொளி யெல்லா மையாந் தொடுங்கி (பு.வெ.9:13). 3. பொலிவழிதல். மாந்த ரென்பவரொருவரு மின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப்பு. நகரேற். 101). முள் - மள் - மள்கு. மள்குதல் = 1. ஒளி குறைதல். 2. குறைதல். மள்கலில் பெருங்கொடை (கம்பரா. கார்கால. 104) மள்கு - மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். முத்துத் தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6:16). மழுகு - மழுங்கு. மழுங்குதல் = 1. ஒளி குறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146). 2. பொலிவழிதல் (திவா.). 3. கவனிப்பின்றி மறைந்துபோதல் (W.). 4. கெடுதல். மழுங்கு - மழுக்கு. மழுக்குதல் = ஒளி குறையச் செய்தல். மழுக்கு - மழுக்கம் = ஒளி குறைகை. மழுங்கு - மங்கு. மங்குதல் = 1. ஒளி குறைதல். 2. நிறங் குன்றுதல். 3. பெருமை குறைதல். 4. குறைதல். தாக மங்குத லின்மையால் (விநாயகபு. 80:94). 5. வாட்டமுறுதல் (W.). 6. கெடுதல். தீவினைத் தெவ்வென்னும் பேர்மங்க (திருநூற். 19). 7. சாதல். மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ. சந். மட்டுவிருத். 7). க. மக்கு (maggu). மங்கு - மங்கல் = 1. ஒளி மழுக்கம் (சங். அக.). 2. இருள் கலந்த நேரம். 3. கெடுகை. மங்குங் காலம் = வளங் குன்றுங்காலம். மங்குங் காலம் மா; பொங்குங் காலம் புளி (பழ.). மங்குநோய்முகன் (சனி) = வாழ்நாளில் முதலில் வந்து ஏழரையாண்டு தீங்கு செய்யும் நோய்முகன் (சனி). மங்கு = 1. கேடு. தெ. மங்கு. க. பங்கு (banku). 2. வங்கு (W.). மங்கு - வங்கு = 1. மேனியில் மங்கல் நிறமாகப் படரும் ஒருவகைப் படைநோய். 2. குளித்தபின் துவர்த்தாத மேனியிற் காணும் படைபோன்ற தோற்றம். 3. நாய்ச்சொறி. மங்கு - மங்குல் = 1. ஒளிக் குறைவு. 2. கண்தெரியாவாறு ஒளி குறைந்த மூடுபனி. மங்குல் மனங்கவர (பு.வெ. 9:45). 3. இருட்சி. மங்குல் மாப்புகை (புறம். 103). 4. இரவு (திவா.). 5. இருண்ட முகில். மங்குறோய் மணிமாட ..... நெடுவீதி (தேவா. 41:7). 6. கரிய வானம். மங்குல்வாய் விளக்கு மண்டலமே (திருக்கோ. 177). 7. வானவெளிப் பக்கமாகிய திசை. புயன் மங்குலி னறைபொங்க (கலித். 105 : 25). முள் - முய் - மய் - மை = கருப்பு. இருள். மைம்மை = கருமை. இருண்மை. மைம்மை - மைம்மைப்பு = கண்ணிருளல். கண் மங்கல். பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழ. 298). மைம்மை - மைமை - மைமல் = மாலைநேரம் (யாழ். அக.). மைம்மை - மம்மல் = அந்தி நேரம். மம்மல் - மம்மர் = 1. மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங் காகும் (நாலடி. 14). 2. காமம் (W.). 3. கல்லாமை. காணாக் குருடராச் செய்வது மம்மர் (நான்மணி. 24). 4. துயரம் (பிங்.). மம்ம ரறுக்கு மருந்து கண்டாய் (தேவா. 845:8). மய - மயப்பு - மப்பு = 1. மயக்கம். 2. மட்டித்தனம். 3. செருக்கு. அவனுடைய மப்பை அடக்க வேண்டும் (உ.வ.). 4. முகில் மூட்டம். 5. செரியாமை. தெ. க. மப்பு (mabbu). மள்கு - மட்கு. மட்குதல் = 1. மயங்குதல். மட்கிய சிந்தை (கம்பரா. தைல. 5). 2. ஒளி மங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோத். 12). 3. அழுக்கடைதல். 4. வலி குன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத. மீட்சி. 176). ஒ.நோ: வெள் - வெள்கு - வெட்கு. மட்கு - மக்கு. மக்குதல் = 1. ஒளி மழுங்குதல். 2. அழுக்கேறுதல் (W.). தெ.க. k¡F(maggu). 3. கருத்துப்போதல். வெள்ளி மக்கி விட்டது. 4. மந்தமாதல். மக்கிய ஞானத் தீயால் (கைவல். தத். 90). 4. கெட்டுப்போதல் (W.). 5. அழிதல் (W.). மக்கு = 1. மந்தன். அவன் கணக்கில் மக்கு (உ.வ.). 2. அறிவிலி. 3. சுவர் வெடிப்பில் அடைக்கும் அடைமண். 4. மரவேலையிற் சந்து தெரியாமல் அடைக்கும் தூள். மக்கு - மக்கன் - மந்தன். மக்கு - மக்கல் = 1. கருத்துப்போன வெள்ளி. 2. கெட்டுப்போன அரிசி. குறிப்பு : ஒரு கருத்து ஒரு அல்லது பல வழிகளில் தோன்றலாம். மள்கு - மாள்கு - மாழ்கு. மாழ்குதல் = 1. கலத்தல் (W.). 2. மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா: மாரீசன் வதை. 237). 3. சோம்புதல் (திவா.). 4. மங்குதல், கெடுதல். ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை (குறள். 653). ப.க. khœF(g). மாழ்கு - மாழா. மாழாத்தல் = 1. ஒளி மழுங்குதல். நாண்மதியே ... மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2:1:6). 2. மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95). மாழா - மாழாம்பலம் = தூக்கம் (அக. நி.). மாள்கு - மாள். மாளுதல் = 1. கெடுதல். 2. கழிதல். மாளா வின்ப வெள்ளம் (திவ். திருவாய். 4: 7: 2). 3. அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு. 4:7:3). 4. சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5:93). 5. முடிதல். 6. செய்ய முடிதல், இயலுதல். அது என்னால் மாளாது (உ.வ.). மாள் - மாய். ஒ.நோ: நோள் - நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு. மாய்தல் = 1. ஒளி மழுங்குதல். பகன்மாய (கலித். 143). 2. கவலை மிகுதியால் வருந்துதல். 3. அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்து கொண்டிருக்கிறேன் (உ.வ.). 4. மறத்தல். மாயா வுள்ளமொடு பரிசிறுன்னி (புறநா. 139). 5. மறைதல். களிறுமாய் செருந்தியொடு (மதுரைக். 172). 6. அழிதல் குடியொடு ... மாய்வர் நிலத்து (குறள். 898). 7. இறத்தல். தம்மொடு தம்பெயர் கொண்டனர் மாய்ந்தோர் மலைபடு. 553). k., bj., f., து. மாய். மாய்த்தல் = 1. மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக் 247). 2. வருத்துதல் (உ.வ.). 3. கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4:3:4). 4. அழித்தல். குரம்பையிது மாய்க்க. மாட்டேன் (திருவாச. 5:54). மாய் - மாய்கை = 1. மயக்கம். 2. பொய்த் தோற்றம். மாய் - மாய்ச்சல் = 1. வருத்தம். (W.) 2. மறைவு (சது). 3. சாவு (யாழ். அக.). மாய் - மாய்ப்பு = 1. மறைவு (W.) 2. சாவு (W.). மாய் - மாய்வு = 1. மறைவு (சூடா.). 2. சாவு மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன் வதை. 182). மாய் - மாயம் = 1. கருமை (கறுப்பு). (சூடா). 2. மயக்கம். வியப்பு. மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100. உரை). 3. கனவு. மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ (சிலப். 16:61). 4. நிலையின்மை என்மாய யாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய். 1073). 5. பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (தொல். களவு. 22). 6. அறியாமை (அஞ்ஞானம்). மாய நீங்கிய சிந்தனை (கம்பரா. சித்திர. 51). 7. வஞ்சனை. மாய மகளிர் முயக்கு (குறள். 918). 8. மாயை வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் (கம்பரா. மாயா சீதை. 96). மாயமாலம் = 1. பாசாங்கு. 2. மோசடி 3. tŠridíŸs ngŒ.(W.). மாயமாலம் - மாய்மாலம். மாயம் - மாயன் = 1. கரியன். வண்ணமு மாய னவனிவன் சேயன் (தொல். உவம. 30. உரை). 2. திருமால். மாயனாய் ... மலரவ னாகி (தேவா. 1050:6). 3. வஞ்சகன் (பிங்.). மாயன் - மாயவன் = திருமால். பெரியவனை மாயவனை (சிலப். 17, படர்க்கைப் பரவல்). மாயவள் = 1. கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (கலித் 35). 2. காளி. மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6 59). மாயன் - மாயோன் = 1. கருநிறமுடையோன் (பரிபா. 3: 1, உரை). 2. திருமால். மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். அகத். 5). மாயோள் = 1. கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந. 14). 2. மாமை நிறமுடையவள். மாயோள் பசலை நீக்கினன் (ஐங். 145). 3. வஞ்சகி (W.). 4. காளி. மாய் - மாயை. ஒ.நோ: சாய் - சாயை. மாயை = 1. காளி (பிங்.). 2. மறைப்பாற்றல் (திரோதான சக்தி) - (நாமதீப. 753). 3. பொய்த் தோற்றம். 4. பொய்த் தோற்றவுரு. 5. மாயக்கலை (மாயவித்தை). மாயையி னொளித்த மணிமே கலைதனை (மணிமே. 18 155). 6. வஞ்சகம் (சூடா.). 7. மூல முதனிலை (பிரகிருதி) பூதலய மாகின்ற மாயை முதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). மாயை - வ. மாயா. ஒ.நோ : சாயை - வ. சாயா (chaya). சாய்தல் = நிழல் விழுதல். சாயை = நிழல், மாள் - மாட்டு (பி.வி.) ஒ.நோ: நீள் - நீட்டு. மாளுதல் = முடிதல். செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல். செய்து முடித்தல். நான் இதைச் செய்ய மாட்டுவேன் = என்னால் இதைச் செய்ய முடியும். நான் இதைச் செய்ய மாட்டேன் = என்னால் இதைச் செய்ய முடியாது (முன்னைப் பொருள்) 2. நான் இதைச் செய்ய விரும்பேன் (இற்றைப் பொருள்). இங்ஙனமே, கூடுதல் முடிதல் ஆகிய துணைவினைகளும், உடன்பாட்டில் இயலுதற் பொருளையும், எதிர்மறையில் அல்லது அஃதின்றி அதனொடு விருப்பின்மை அல்லது விலக்குப் பொருளையும் உணர்த்தும். எ.டு. நான் வரக்கூடாது (விலக்கு). நான் சொல்ல முடியாது (இயலாமையும் விருப்பின்மையும்). இப் பொருள்களின் நேர்ச்சி இடத்தையும் காலங் குறித்த சொல்லையும் பொறுத்திருக்கும். எ.டு. நீ சொல்ல முடியாது (இயலாமை மட்டும்). நாளைக்கு நான் இதைச் செய்யமாட்டேன் (விருப்பின்மையும் இயலாமை யும்). தமிழிற் பெரும்பாலும் துணைவினையாக வழங்கும் மாட்டுதல் என்னும் சொல் கன்னடத்தில், செய்தல் என்னும் பொருளில் தலைமை வினையாகவே வழங்குகின்றது. எ.டு: நானு ஈ கெலச மாடுவெனு = நான் இவ் வேலையைச் செய்வேன். மள் - மண் - மண. மணத்தல் = 1. பொருந்துதல். மத்தகத் தருவியின் மணந்த வோடைய (சீவக. 2211). 2. வந்து கூடுதல். நிரை மணந்த காலையே (சீவக. 418). கலத்தல். அறையும் பொறையு மணந்த தலைய (புறம். 118). 4. நேர்தல். மருவுற மணந்த நம்பு (கலித். 46). 5. கமழ்தல். மணந்த சோலையும் (அரிச். பு. விவாக. 98). 6. அணைத்தல். திருந்திழை மென்றோள் மணந்தவன் (கலித். 131). 7. புணர்தல் (பிங்.). மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் (கலித். 24). 8. மணம்புரிதல் மணந்தார் பிரிவுள்ளி (நாலடி. 397). 9. கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகைய வாய். (கலித். 25). மண-மணம் = 1. கூடுகை. எதிலார் மணந்தனில் மனம்போக்கும் (காசிக. மகளிர். 10). 2. அன்பினைந்திணை. கைக்கிளை. பெருந் திணை என்னும் மணவகை. 3. நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354). 4. நறுமணப் பொருள் மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447). 5. மதிப்பு பணமுள்ள வனுக்கே மணமுண்டு (பழ). 6. நன்னிலை. மக்கி மணங் குலைந்து (இராமநா. உயுத். 81). மணமலி = மருக்கொழுந்து (மலை.) மள் - மறு. ஒ.நோ : வெள் - வெறு. வெள்ளிலை - வெற்றிலை. மறு - மறை. மறைதல் = 1. இருட்குட் புகுதல். 2. ஒளிந்து கொள்ளு தல். புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள். 274). 3. தோன்றாதொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239). மறைத்தல் = 1. ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை (குறள். 1253). 2. மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள். 846). 3. தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (குறள். 1029). மறை = 1. மறைகை. 2. மறைவுச் செய்திகள். நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித். 133). 3. மறைக்கை. வெயின்மறைக் கொண்ட (புறம். 60). 4. கேடகம் (அக.நி.). 5. பெண்குறி. அடியி லிருந்த மறை மாண்பை (அருட்பா. 1. இங்கித. 94). 6. களவுப் புணர்ச்சி மறையல ராகி மன்றத் தஃதே (குறுந். 97). 7. உருக்கரந்த கோலம். மறைவல்லன் (சீவக. 2027). 8. மறைவிடம் (சங். அக.). 9. புகலிடம். வாசவன் ... மறைபுகாது (குற்றா. தல. தக்கன் வேள்வி. 44). 10. சிறைக்கூடம். மறையிடை வந்து (கந்தபு. வீரவாகு சயந் 22). 11. வஞ்சனை. மறையிற்றன் யாழ்கேட்ட மானையருளாது (கலித். 143). 12. மறைபொருள் (இரகசியம்). புறப்படுத்தா னாகு மறை (குறள். 596). 13. மறைவாகச் செய்யும் மந்திரச் சூழ்வினை. இராமனருமறைக்கு (அகம். 70). 14. பொதுமக்கட்குத் தெரியாத மறை பொருள் கொண்ட மதவியல் அறிவுநூல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். செய். 176). 15. ஆரிய வேதம். அளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல். பிறப். 20) 16. ஆரிய மெய்ப்பொருள் நூல் (உபநிடதம்). வேதத்து மறைநீ (பரிபா. 3: 66). 17. ஆரியத் தொழன்மறை (ஆகமம்). மறைமுறை யறிந்த வறிவினை கிழவரும் (ஞான. 35). 18. அறிவியல் நூல். நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். நூன். 33). ஒ.நோ: கள் - கர் - கரு - கருமை, கள் - களவு, கள் - கர் - கர - கரவு. முட்டு - முட்டி - முடி. மாந்தரும் அஃறிணைப் பொருள்களும் மாந்தரை அல்லது அஃறிணைப் பொருள்களை முட்டுவது தலையாலேயே யாதலால், தலையும் தலைபோன்ற உச்சிப் பகுதியும் தலையிலுள்ள உறுப்பும் அணிகலமும் முடியெனப் பெயர் பெறும். முடி = 1. தலை. அதுவே சிவன் முடிமேற் றான்கண்டு (திவ். திருவாய். 2:8:6). 2. ஆடவர் உச்சிக் குடுமி (பிங்.). 3. பெண்டிர் கொண்டை போடும் ஐம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.) 4. தலைமயிர். முடிக் காணிக்கை (உ.வ.). 5. மயிர். பன்றிமுடி (உ.வ.). 6. தலையிலணியும் மகுடம். ஞாயிற் றணி வனப்பமைந்த ..... புனைமுடி (பரிபா. 13:2). 7. மலையுச்சி. முடியை மோயின னின்றுழி (கம்பரா. மீட்சி. 186). 8. தேங்காய்க் குடுமி (யாழ்ப்.). விலங்கு மயிரையும் முடியென்றது, மயிர் என்பது இடக்கர்ச் சொல்லாகி மயிரை முடியென்னும் இடக்கரடக்கல் வழக்கெழுந்த பிற்காலத்ததாகும். நாற்றுமுடி, மூட்டைமுடிச்சு முதலிய கூட்டுச் சொற்களிலுள்ள முடியென்னும் சொல் வளைத்தல் அல்லது சுற்றுதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட வேறொரு சொல்லினின்று தோன்றியதாகும். நட்டமாக நிற்கும் பொருள்களின் உச்சிப்பகுதி அவற்றிற்கு முடிபோன் றிருத்தலால் அது முடியெனப்பட்டது. மலையுச்சி வான முகட்டை முட்டிக்கொண்டிருப்பதாகப் பாடவும் சொல்ல வும் படுதல் காண்க. மலை முடிகளுள் உயர்ந்தது கொடுமுடி. முடி யென்னுஞ் சொல் ஒரு பொருளின் முடிவான இறுதிப் பகுதியைக் குறித்தலால், ஒரு வினை முடிதலைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் அஃது ஆளப்பட்டது. கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே என்னும் 32 ஆம் புறப் பாட்டடியில், உச்சிக் குடுமியைக் குறிக்குஞ் சொல்லே, சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுங் குறித்தல் காண்க. முடிதல் = 1. இறுதியாதல். கூட்டம் முடிந்தவுடன் தலைவர் போய் விட்டார் (உ.வ.). 2. முற்றுப்பெறுதல். இவ் விதழுடன் செந்தமிழ்ச் செல்வியின் 50 ஆம் சிலம்பு முடிகின்றது. 3. நிறைவேறுதல். முட்டின்றி மூன்றும் முடியுமேல் (நாலடி. 250). 4. செய்ய முடிதல். இயலுதல். குறுகிய காலத்தில் என்னால் அதைச் செய்ய முடியாது (உ.வ.). 5. வாழ்நாள் முடிந்து இறத்தல். கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு.வெ. 10. சிறப்பிற். 9. கொளு). 6. அழிதல். மூவேந்தர் குலமும் 16 ஆம் நூற்றாண்டொடு முடிந்து விட்டது. x.neh.: மாளுதல் = இறத்தல், செய்ய முடிதல்; இயலுதல். ம. முடிக. க. முடி. முடித்தல் = 1. முற்றுவித்தல். நூல் முழுவதையும் மும்மாதத்திற்குள் எழுதி முடித்துவிட்டார் (உ.வ.). நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத் திடர்முடித்தான் (கம்பரா. மிதிலை. 88). 2. நிறைவேற்றுதல். அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன் (புறம். 171). 3. அழித்தல். சேனையை .... முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98). முடி - மடி - மடிதல் = 1. சாதல். வல்லது மடிதலே யென்னின் மாறுதிர் (கம்பரா. அதிகா. 6). 2. அழிதல். குடிமடிந்து குற்றம் பெருகும் (குறள். 604). மடித்தல் = அழித்தல். முரனெலா மடிப்ப (கம்பரா. தாடகை. 35). முட்டு - மட்டு = 1 அளவு. மட்டுப்படாக் கொங்கை மானார் (கம்பர்). 2. நில அளவுவகை. 3. எல்லை. வடிவுக்கோர் மட்டுண் டாமோ (ஞானவா. தேவா. 1). 4. குத்து மதிப்பு. 5. அடக்கம். 6. சிக்கன அளவு மட்டாய்ச் செலவடு (W.). 7. ஒப்பு. 8. சிறுமை. 9. தாழ்வு. 10. குறைவு. ஒன்றோடொன்று முட்டுகிற நிலையிலேயே ஒன்றன் நீள அளவு தெரிதல் காண்க. k., தெ. க. மட்டு. மட்டு - மட்டம் = 1. அளவு. 2. சமநிலை. 3. அளவுகோல். 4. எல்லை (W.). 5. குத்துமதிப்பு (உத்தேசம்) (W.). 6. ஒப்பு, சமவெண் (W.) 7. சிறுமை மட்டப் பூ. (S. I. I. II. 184). 8. தாழ்வு. குறைவு. 9. அடக்கம். 10. செட்டு. 11. நடுத்தர நிலை. 12. சிறுதரக் குதிரை. 13. ஆணானைக் குட்டி (யாழ்ப்.). 14. ஒரே உயரமுள்ள நிலை. 15. வாழை. கரும்பு முதலியவற்றின் கன்று (W..). 16. மூன்றொத்துடைய தாளம் (சிலப் 3:151, உரை). 17. கேடகம். 18. பொன் மணியின் உறுப்புவகை (W.). க. மட்ட. மட்டக்கோல், மட்டங் கட்டுதல், மட்டச் சுவர், மட்டஞ் செய்தல், மட்டத்தரம், மட்டந் தட்டுதல், மட்டநூல், மட்டப்பலகை, மட்டப்பா (மொட்டை மாடி), மட்டப்பொன், மட்டம் பார்த்தல், மட்டம் பிடித்தல், மட்டம் போடுதல், மட்ட வேலைக் காரன், மட்ட விழைப்புளி, மட்டவேலை முதலிய வழக்குச் சொற்களை நோக்குக. இளமட்டம் = 1. குறுமட்டக் குதிரை. 2. இளம்பருவத்தோன். இளமட்டம் - இளவட்டம் = இளைஞன். மட்டு - மட்டி = 1. (தாழ்ந்த மதிநிலையுள்ள) மூடன் அறியாத ... மூடமட்டி (திருப்பு. 195). 2. பரும்படி. 3. மட்டிக்காரை. 4. மக்கு. 5. ஒழுங்கின்மை. 6. மட்டி வாழை (நாஞ்). மட்டித்தாள். மட்டித்தையல், மட்டிப்புடைவை, மட்டிவேலை முதலிய வழக்குகளை நோக்குக. bj., க. மட்டி (maddi). மட்டு - மட்டை = 1. பயனற்ற - வன் - வள் - து. இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும் (விறலிவிடு. 889). 2. மட்டமான நெல். 3. மட்டமான அரிசி. மட்டுக் கட்டுதல். மட்டுக்கு மிஞ்சுதல். மட்டுக் கோணம், மட்டுக்கோல், மட்டுத் தப்புதல், மட்டுத் திட்டம், மட்டுப்படுதல், மட்டுப் பிடித்தல், மட்டு மதிப்பு (மட்டு மரியாதை), மட்டு மதியம், மட்டு மருங்கு முதலிய வழக்குகளை நோக்குக. முத்துதல் (முட்டுதல்) = பொருந்துதல், ஒத்தல். முத்து (முட்டு) - மத்து (மட்டு) = அளவு. மத்து - மத்தி. மத்தித்தல் = அளவிடுதல். மத்தி - மதி. மதித்தல் = 1. அளவிடுதல். மண் விழைந்து வாழ்நாள் மதியாமை (திரிகடு. 29). 2. கருதுதல். ஆடலை மதித்தான் (கந்தபு. திருவிளை. 1). 3. பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச 5:12) 4. ஊழ்குதல் (தியானித்தல்). நந்தியங் குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13). 5. துணிதல். தேர்மணிக் குரலென விவண்மதிக்குமன் (கலித். 126:7). மதி - வ. மதி. மிதி. OE., OS metan., OHG. mezzan, ON meta, Goth. metan, E. mete, to measure. மதி = 1. மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப் 92). 2. இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோ டுடையார்க்கு (குறள். 636). 3. பகுத்தறிவு. மதியிலி மடநெஞ்சே (திவாச. 5 33). 4. அறியும் புலன் (intellect) 5. அறிவுடைமை. மதிமை சாலா மருட்கை நான்கே (தொல். மெய்ப். 7). மதி - மதம் = 1. மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே. (நன். பொதுப். 11) 2. அம்மை யிம்மை யும்மை(மறுமை) நிலைகளை மதித்தறிந்து கடைப்பிடிக்குங் கொள்கை. எ.டு. சிவமதம், திருமால் மதம், கடவுண் மதம். முத்துதல் = பொருந்துதல், கலத்தல். முத்து - மத்து = கலப்பு, கலக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் பித்தம். மயக்கந் தரும் கள், தீங்கள்ளாகிய தேன், பித்த முண்டாக்கும் ஊமத்தை. மத்து - மட்டு = 1. கள். வெப்புடைய மட்டுண்டு (புறம். 24). 2. தேன். மட்டுவா யவிழந்த தண்டார் (சீவக. 1145). மட்டுவார் குழலம்மை = மலைமகளின் பெயர்களுள் ஒன்று. 3. இன்சாறு. கருப்புமட்டு வாய் மடுத்து (திருவாச. 5:80). 4. காமக் குடிப்பு. மட்டுடை மணமகள் (சீவக. 98). 5. மட்டு வைக்குஞ் சாடி மட்டுவாய் திறப்பவும் (புறம். 113). 6. (தேனிற்குந் தீங்கள்ளிற்கு முரிய) நறுமணம். மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற். 23). மத்து - மத்தம் = 1. மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (தேவா. 426 : 3). 2. வெறி, களிப்பு. மத்தக் கரியுரியோன் (திருக்கோ. 388). 3. யானை மதம் (திருக்கோ. 388, உரை) 4. செருக்கு (உரி. நி.) 5. கோட்டி (பைத்தியம்). மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5:3). 6. கருவூமத்தை மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923:8). மத்தம் - வ. மத்த. மத்து - மது = 1. கள். மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல (தொல். பொருள். 114. ப. 495). 2. தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25:38). 3. இலுப்பைப்பூ முதலியவற்றினின்று காய்ச்சி யிறக்கும் வெறிநீர் (சங். அக.). 4. அமுதம் (சங். அக.). 5. இனிமை (அக.). 6. பராசம் (மகரந்தம்) (சங். அக.). 7. அதிமதுரம் (மலை). வ. மது. (madhu), OE. meodu, MLG. mede. OHG. metu, ON. mjathr, E mead, alcoholic liquor of fermented honey and water. Gk methu, wine. L mel. honey. மத்தம் - மத்தன். 1. மதிமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102). 2. பித்தன். மத்தனேன் பெறுமாய மலமாய (தாயு. பொன்னை. 35). 3. பேரூக்க முள்ளவன். பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து (திருவாச. 153). 4. கொழுப் புள்ளவன். மத்தனி ராவணன் கொதித்தான் (இராமநா. உயுத். 44). மத்தன் - வ. மத்த. மத்து - மத்தி - மதி = மயக்கஞ் செய்யும் திங்கள். இப் பொருள் வடமொழியில் இல்லை. ஒ.நோ: L. luna, moon. L. lunaticus - E. lunatic, insane person. E. lunacy, insanity. பண்டைக் காலத்தில். நிலவொளியாற் கோட்டியுண்டாவதாக ஒரு கருத்து உலக முழுதும் பரவியிருந்தது. மது - மதம் = 1. கள்(மது). 2. மதுக்களிப்பு (மலைபடு. 173, உரை). 3. தேன் ... மதங்கமழ் கோதை (சீவக. 2584). 4. வெளி (சங். அக.). 5. மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் (நான்மணி. 7). 6. செருக்கு. போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (பரிபா. 18 1). 7. வலிமை. படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4:18). 8. காம வேட்கைமிகுதி (திருக்கோ. 69. உரை). 9. யானைக்கடம். மதநீர் (சீவக. 2485). 10. நிலவளம் (W.). 11. காசறை (கதூரி) நறுமை. மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும் (பரிபா. 10 92). 12. கன்மதம். (தைலவ. தைல. 125). 13. வீரியம் (யாழ். அக.). 14. மிகுதி (யாழ் அக.). 15. பெருமை (யாழ். அக.). மது - மதுகை = 1. வலிமை. அனைமதுகையர் கொல் (குறுந். 290). 2. அறிவு. வானுயர் மதுகை வாட்டும் (சீவக. 664). மது - மதுங்கு. மதுங்குதல் = இனிமையாதல். மதுங்கிய வார்கனி (திருமந். 2914) மதம் - மதன் = 1. கலக்கம் (யாழ். அக.). 2. மடமை. மதனுடை நோன்றாள் (திருமுருகு. 7 உரை). 3. செருக்கு மதனுடை நோன்றாள் (பட்டினப் 278). 4. வலிமை, மதனுடை முழவுத்தோள் (புறம். 50). 5. மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறம். 75). 6. அழகு (பிங்.). 7. மாட்சிமை (பிங்.). 8. மிகுதி (யாழ். அக). மதன் - மதனம் = 1. தேனீ (யாழ். அக.) 2. தேன்மெழுகு (யாழ். அக.). 3. மருக்காரை (மலை.). 4. பெருமிதம் (யாழ். அக.). 5. காமம் (பிங்.). 6. புணர்ச்சி விருப்பம் (பிங்.). 7. இளவேனில் (யாழ். அக.). 8. ஒரு சாம்பல் நிறக் கடல்மீன். 9. ஒரு வெண்ணிறக் கடல்மீன். மதம் - மதர். மதர்த்தல் = 1. களித்தல். மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம் (கம்பரா. நாட்டுப். 24). 2. மதங்கொள்ளுதல். மதர் விடையிற் சீறி (பு. வெ. 714). 3. செருக்குதல் (W.). 4. மரஞ்செடிகள் மட்டிற்கு மிஞ்சிக் கொழுத்தல். 5. செழித்தல். 6. மிகுதல். மதரரி மழைக்கண் (சீவக. 2803). மதர் = 1. யானை மதநீர் (நாமதீப. 207). 2. செருக்கு. அரிமதர் மழைக் கண்ணீர் (கலித். 77). 3. மகிழ்ச்சி (திவா.). 4. மிகுதி (பிங்.). 5. வீரம் (அரு.நி.). மதர் - மதர்வு. 1. ஆசைப் பெருக்கம் (யாழ். அக.). 2. உள்ளக்களிப்பு (பிங்.). 3. இறுமாப்பு. 4. வலிமை (சூடா.). 5. செழிப்பு 6. அழகு (சூடா.). 7. மிகுதி (திவா.). மதர் - மதர்வை = 1. மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடந்தென (சீவக. 322). 2. களிப்பு (பிங்.) 3. செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தபு. தெய்வயா. 64). 4. செழிப்பு. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25). மதர்வு - மதவு = வலிமை. மதவுநடை நல்லான் (அகம். 14). மதவு - மத. மதத்தல் = 1. மயங்குதல் (W.). 2. களித்தல். 3. செருக்குதல். 4. கொழுத்தல். 5. காம மிகுதல். 6. மதங்கொள்ளுதல். மிகவும் மதத்து மதம் பொழிந்து (ஞானவா. திருவா. 47). மத - வ. மத. மத = 1. மிகுதி. 2. வலிமை. 3. அழகு. 4. மடமை. மதவே மடனும் வலியு மாகும் (தொல். உரி. 79). மதவு - மதகு - மதங்கு - மதக்கு - மதக்கம். ஒ.நோ: மயங்கு - மயக்கு - மயக்கம். மதக்கம் = பேருண்டி, குடி, கஞ்சா முதலியவற்றா லுண்டாகும் மயக்கம். ஆறு மதக்கத்தினா லல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது. (அவிவே. கதை). 2. களைப்பு (யாழ். அக.). மதமதப்பு = 1. செழிப்பு (திருவிருத். 9, வியா. ப. 71). 2. திமிர் (W.). 3. உணர்ச் யின்மை (W.). 