தேவநேயம் – 2 பதிப்பாசிரியர் புலவர். இரா. இளங்குமரன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு நூற்பெயர் : தேவநேயம் - 2 தொகுப்பாசிரியர் : புலவர். இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2004 மறுபதிப்பு : 2015 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 312 = 320 படிகள் : 1000 விலை : உரு. 300/- நூலாக்கம் : பாவாணர் கணினி தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காராவேலர் தெரு தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 மொழி மீட்பின் மீள் வரவு தனித் தமிழ் வித்தை ஊன்றியவர் கால்டுவெலார். அதை முளைக்கச் செய்தவர் பரிதிமால் கலைஞர்; செடியாக வளர்த்தவர் நிறைமலையாம் மறைமலையடிகள்; மரமாக வளர்த்து வருபவன் யானே என்ற வீறுடையார் பாவாணர். கிறித்து பெருமான் சமய மீட்பர்; காரல்மார்க்கசு பொருளியல் மீட்பர்; மொழிமீட்பர் யானே என்னும் பெருமித மிக்கார் பாவாணர். ஆரியத்தினின்று தமிழை மீட்பதற்காக யான் அரும்பாடு பட்டு இலக்கிய இலக்கண முறையோடு கற்ற மொழிகள் முப்பது என்று எழுதிய பெருமிதத் தோன்றல் பாவாணர். மாந்தன் தோன்றியது குமரிக் கண்டத்திலேயே; அவன் பேசிய மொழியே உலக முதன்மொழி; ஆரியத்திற்கு மூலமும், திரவிடத்துக்குத் தாயும் தமிழே என்னும் மும்மணிக் கொள்கைளை நிலை நாட்டிய மலையன்ன மாண்பர் பாவாணர். அவர் சொல்லியவை எழுதியவை அனைத்தும் மெய்ம்மையின் பாற்பட்டனவே என இன்று உலக ஆய்வுப் பெருமக்களால் ஒவ்வொன்றாக மெய்ப்பிக்கப்பட்டு வருதல் கண்கூடு. இருபதாம் நூற்றாண்டைத் தம் ஆய்வு மதுகையால் தேவநேய ஊழி ஆக்கிய புகழும் வேண்டாப் புகழ் மாமணி தேவநேயப் பாவணர். அவர் மொழியாய்வுச் செய்திகள் ஒரு நூலில், ஓர் இதழில், ஒரு மலரில், ஒருகட்டுரையில், ஒரு கடிதத்தில், ஒரு பொழிவில் ஓர் உரையாடலில் அடங்கியவை அல்ல. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாக அவற்றை யெல்லாம் தொகுத்து அகர நிரலில் தொகுக்கப்பட்ட அரிய தொகுப்பே தேவநேயம் ஆகும். நெட்ட நெடுங்காலமாகத் தேவநேயத்தில் ஊன்றிய யான் அதனை அகர நிரல் தொகையாக்கி வெளியிடல் தமிழுலகுக்குப் பெரும்பயனாம் என்று எண்ணிய காலையில், தமிழ் மொழியையும் தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் தாங்கிப் பிடித்து ஊக்கும் - வளர்க்கும் - வண்மையராய் - பாவாணர்க்கு அணுக்கராய் - அவரால் உரையும் பாட்டும் ஒருங்கு கொண்ட பெருந்தொண்டராய்த் திகழ்ந்த சிங்க புரிவாழ் தமிழ்த்திரு வெ. கோவலங் கண்ணனார் அவர்கள் தமிழ் விழா ஒன்றற்காகச் சென்னை வந்த போது யானும், முனைவர் கு. திருமாறனாரும் சந்தித்து அளவளாவிய போது இக் கருத்தை யான் உரைக்க உடனே பாவாணர் அறக்கட்டளை தோற்றுவிப்பதாகவும் அதன் வழியே தேவநேயம் வெளிக் கொணரலாம் எனவும் கூறி அப்பொழுதேயே அறக்கட்டளை அமைத்தார். தேவநேயர் படைப்புகள் அனைத்திலும் உள்ள சொல்லாய்வுகளைத் திரட்டி அகர நிரல் படுத்திப் பதின்மூன்று தொகுதிகள் ஆக்கினேன். பதிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது; அச்சிடும் பொறுப்பு, பாவாணர் பல காலத்துப் பலவகையால் வெளியிட்ட நூல்களையும் கட்டுரைகளையும் ஒருங்கே தொகுத்து ஒரே நேரத்தில் வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் நாடு மொழி இனப் போராளி கோ. இளவழகனாரிடம் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அத்தேவநேயம் தமிழ் ஆய்வர், தமிழ் மீட்பர் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டும் என்னும் வேணவாவால் மீள்பதிப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடுகிறது. பாவாணர் அறக்கட்டளை நிறுவிய கோவலங்கண்ணனார் புகழ் உடல் எய்திய நிலையில், அவர் என்றும் இறவா வாழ்வினர் என்பதை நிலைப் படுத்தும் வகையில் அவர்க்குப் படையலாக்கி இப்பதிப்பு வெளிப்படுகின்றது. மொழி இன நாட்டுப் பற்றாளர் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல், பல் பதிப்புகள் காண வேண்டும். வருங்கால இளைஞர்க்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும். அதற்குத் தூண்டலும் துலக்கலுமாக இருக்க வேண்டியவர்கள் தமிழ் மீட்டெடுப்புப் பற்றுமையரும் தொண்டருமாவர். வெளியீட்டாளர்க்கும் பரப்புநர்க்கும் பெருநன்றியுடையேன். வாழிய நலனே! இன்ப அன்புடன் வாழிய நிலனே! இரா. இளங்குமரன் பதிப்புரை 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். இவர் வடமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை மீட்டெடுப்பதற்காகத் தம் வாழ்வின் முழுப் பொழுதையும் செலவிட்டவர். திராவிட மொழிகளுக்குத் தாய்மொழித் தமிழ், இந்திய மொழிகளுக்கு மூலமொழித் தமிழ், உலக மொழிகளுக்கு மூத்த மொழி தமிழ் என்பதைத் தம் பன்மொழிப் புலமையால் உலகுக்கு அறிவித்தவர். இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு சேர தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதைத் தமிழ் உலகம் அறியும். முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பாவாணர் வழி நிலை அறிஞர். வாழும் தமிழுக்கு வளம் பல சேர்ப்பவர். பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேவநேயம் என்னும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்கொள்ளும் வகையில் தொகுத்துத் தந்துள்ளார். இத்தேவநேயத் தொகுப்புகள் தமிழர் களுக்குக் கிடைத்த வைரச்சுரங்கம். இத் தொகுப்புகளை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். அறிஞருலகமும், ஆய்வுலகமும் இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை வாங்கிப் பயன் கொள்வீர். - பதிப்பாளர் கோ. இளவழகன் உள்ளுறை ஆரியத்தால் தமிழர்க்கு விளைந்த கேடுகள் 1 ஆரியத்திலுள்ள தமிழ்ச் சொற்களிற் சில 17 ஆரிய தமிழப் போர் தொன்று தொட்டதாதல் 18 ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு 23 ஆரியத் தெய்வங்கள் 27 ஆரியர் இந்தியாவிற்குட் புகவு 35 ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள் 41 ஆலமரப் பெயர் மூலம் 78 ஆலாத்தி 79 ஆவணம் 80 ஆவுந் தமிழரும் 81 ஆள்நிலப் பிரிவுகள் 86 ஆளத்தி 90 ஆற்றுப்படை 90 ஆறு 90 இகம் 90 இகல் 91 இகழும் வகைகள் 91 இசி 91 இசைத்தமிழ்த் தொன்மை 91 இஞ்சி 99 இட்டி 102 இட்டிகை 103 இடவகை 103 இடுதேள் இடுதல் 103 இடைகலை 103 இடைகழி 104 இடைக்கழகம் 104 இடைச்சொற்கள் 121 இதழ்வகை 121 `இதென்ன மூட்டை? விளையாட்டு 121 இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் 123 இந்திய நாகரிகம் தமிழரதே யாதல் 123 இந்தியா சரியான படி தெற்கிலுள்ளது 127 இந்தியொழிப்பு 128 இந்திரன் 131 இந்து மதத்தினின்று தமிழ் மதத்தைப் பிரித்தல் 131 இயற்கை மொழி 132 இரட்டியார் 132 இரத்தல் வகை ஈதல் வகைகள் 132 இராகு 133 இருகரையன் 133 இருதலைமணியன் 133 இராமாயணக்காலம் 133 `இல் என்னும் வேர்ச்சொல் 143 இல்லத்தம் 148 இலக்கணம் 148 `இலக்கணம், `இலக்கியம் 149 இலக்கணவுரை வழுக்கள் 151 இலைக்காம்பு வகை 171 இலை நரம்பு 171 இலைப்புரை கிளைத்தல் 171 இலைமறைகாய் 171 இலை வகை 171 இழைபு 172 இள் 172 இளம் பயிர்வகை 177 இளவட்டக் காசு 177 இறகுப் பெயர் 178 இறப்பு 178 இறை 178 இன்பம் 178 இன்பத்துப்பாலின் இருதிறம் 178 இன்னுதல் 179 ஈகாரச் சுட்டு 179 ஈகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி 183 ஈதல் வகை 183 ஈந்து 184 ஈயம் 184 ஈழவர் 184 `உ என்னும் வேர்ச்சொல் 184 உச்சம் 192 உட்கொள்ளும் வகை 192 உட்பகை 193 உடம்பு 193 உடல் 193 உடல் நலப் பொருத்தம் 193 உடல் வலியால் தீமை 194 உடற் பெயர் 194 உடன்போக்கு 194 உடுக்கு 195 உண்டிப் பொருத்தம் 195 உண்ணம் 195 உண்மையின் இயல்பு 195 உணர்வொலி 196 உணவு 196 `உத்தரம், `தக்கணம் எம்மொழிச் சொற்கள்? 197 உத்தி 202 உதடு 203 உந்து 203 உப்பக்கம் 203 `உம் என்னும் வேர்ச்சொல் 203 உம்பர் 209 உய் 216 உயர்திணை 222 உயிர் 222 உயிர்மெய் 222 உயிர்மெய் வரிவடிவுகளின் ஓரியலின்மை 222 உரம் 228 உரிச்சொல் விளக்கம் 228 உரிமைப்பேறு 239 உரிமைவழி 244 உரு 245 உருத்திரம் 245 உருவம் 245 உருளை 246 `உல் என்னும் வேர்ச்சொல் 254 உல் (உ) என்னுவேர்ச்சொல் 262 உலகத் தமிழ்க் கருத்தரங்குமாநாடுகள் 279 உலகம் 284 உலக முதன்மொழிக் கொள்கை 285 உலக மொழிக் குடும்பங்கள் 295 உலக மொழிகளின் தொடர்பு 301 உலக வழக்குக் கொச்சை வழக்கன்று 306 ஆரியத்தால் தமிழர்க்கு விளைந்த கேடுகள் (1) குமுகாயத் துறை ஒற்றுமைக் கேடு : நால்வரணக் கட்டுப்பாடு. புலனம் அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் (விடயம்) (பிராமணர்) (சத்திரியர்) (வைசியர்) (சூத்திரர்) தொழில் ஓதல், ஓது ஓதல், ஓதல், மேல்மூவர்க் வித்தல், வேட்டல், வேட்டல், கும் தொண்டு வேட்டல், ஈதல், நாடு ஈதல்,உழவு, செய்தல். வேட்பித்தல், காத்தல், வணிகம், ஈதல், ஏற்றல். பொருதல், நிரை காத்தல். வேட்டை யாடல். உயர்வு அறுமடங்கு மும்மடங்கு இருமடங்கு ஒருமடங்கு மேம்படுதல் அறிவால் வல்லமை காசு கூலம் அகவையால் யால் ஆநிரையால் பூணூல் பட்டு சணல் கம்பளி ------- பெண் நால்வரணத் பின் பின்இரு தன்வரணத் கொள்ளல் திலும் மூவரணத் வரணத்தில் தில். தில் பற்குச்சு நீளம் 12 விரல் 11 விரல் 10 விரல் 9 விரல் நலம்வினவல் குசலமா நோயின்றி சேமமா சுகமாயிருக் யிருக் யிருக் யிருக் கிறாயா? கிறயா? கிறாயா? கிறாயா? தானம் பெறும் போது பெற்றேன் எனல் உரக்க மெல்ல வாய்க்குள் உள்ளத்தில் அறங்கூறவை யத்திற் சான்றா ளனை ஏவல் சொல் உண்மை பொய்சொன் பொய் சொல் னால் ஆவும் சொன்னாற் விதையும் பிராமணனைக் பொன்னும் கொன்ற பழி உனக்குதவா சாரும். மனைநில மண்சுவை இனிப்பு கார்ப்பு புளிப்பு கசப்பு மனைத்திசை தெற்கு மேற்கு வடக்கு கிழக்கு மனைநோக்கு வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மரம் வேம்பு தேக்கு இலுப்பை வேங்கை அளவு கோல் நீளம் 29 விரல் 27 விரல் 25 விரல் 24 விரல் முழக்கோல் மூங்கில் ஆச்சா தேக்கு வேங்கை மட்டக் கோல் புளிமா ஆச்சா தேக்கு வேங்கை சங்கு மரம் கருங்காலி வன்னி தேக்கு புளி எழுத்து பன்னீருயிர், தநபமயர லவழள றன கஙசஞடண காக்குந் நான்முகன், வேந்தன், குபேரன், கூற்றுவன் தெய்வம் சிவன், திரு கதிரவன், வாரணன் மால், முருகன் திங்கள் பாடப்பட வேண்டும் பா வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா பாட்டோலை நறுக்கு நீளம் 24 விரல் 20 விரல் 16 விரல் 12 விரல் கலம்பகச் செய் யுள் தொகை 95 90 50 30 நாடகக் கதைக் தலைவனுக்குரிய அறம் பொரு அறம்பொரு அறம் அறம் பொருள் ளின்பம் வீடு ளின்பம் பொருள் நாடகக்கதைத் ஒன்பான் இளிவரலும் சமநிலை பெருமிதம் தலைவனுக் சுவையும் சமநிலையும் ஒழிந்தவை சமநிலையும் குரிய சுவை ஒழிந்தவை ஒழிந்தவை சோழ பாண்டி நாடுகள் பிராமணர் பிராமணர் பிராமணர் ஊர்ப் பெயர் தெருப்பெயர் வீட்டுப்பெயர் சதுர்வேதிமங்கலம் அக்கிரகாரம் அகம் சேர (மலையாள) நாடு வீட்டுப் பெயர்கள் பிராமணன் இல்லம், மனை நாயர் (பொது) வீடு நாயர் (தலைவன்) இடம், தரவாடு கொல்லர், சாலியர், ஈழவர் முதலியோர் புரை, குடி. கோவிற் பணியாளன் வாரியம், பூமடம் பறையன் (குடி) சேரி செறுமன் சாலை. இன இழிபு முதல் நிலை : பார்ப்பாரும் அந்தணரும் (ஐயரும்) பிராமணரே யென்று, தமிழப் பார்ப்பாரும் அந்தணரும் தம் நிலையினின்று தள்ளப்பட்டமை. இரண்டாம் நிலை : உழுவித்துண்ணும் வேளாளராகிய வெள்ளாளரும் சூத்திரருள் அடக்கப்பட்டமை. மூன்றாம் நிலை : அரசரும் வணிகரும் உட்படத் தமிழரெல்லாரும் சூத்திரர் எனப்பட்டமை. வெள்ளாளர் தம்மை உயர்த்தக் கருதிச் சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டது சிரித்தற்குரிய செயலாம். நாலாம் நிலை : இசை நாடகத் தொழிலும் உழவுத் தொழிலுஞ் செய்துவந்த சில வகுப்பாரைத் தீண்டாராக்கி, அவரை ஐந்தாங் குலத்தினர் (பஞ்சமர்) என்றமை. முதற்கண் பாணரும், பின்னர்ப் பறையரும், அதன்பின் பள்ளரும் தீண்டாராக்கப்பட்டனர். இறுதியிற் சான்றாரையும் தீண்டா ராக்கத் தொடங்கினர். ஆயின், ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் கிறித்துவ நெறியும் பரவியதால், சான்றார் விழித்தெழுந்து தப்பிக் கொண்டதுமன்றித் தம்மை உயர்த்தியுங் கொண்டனர். சில வகுப்பார் தீண்டாராகவே, அவருக்குப் பணி செய்யும் வண்ணானும் மஞ்சிகனும் (மயிர் வினைஞனும்) ஆகிய குடி மக்களும், பூசை செய்யும் பண்டாரமும், தீண்டாராயினர். ஐந்தாம் நிலை : தீண்டார் நாளடைவில் பிராமணருக்குக் காணார் ஆக்கப்பட்டனர். அதனால், தீண்டுவார் தீண்டார் அண்டார் காணார் எனத் தமிழர் பிராமணரை நோக்கி நால்வகைப் பட்டனர். ஆறாம் நிலை : தீண்டார் மேல்வகுப்பாரான தமிழருள்ளும் சிலர்க்கு 30 எட்டுத் தொலைவிலும் சிலர்க்கு 60 எட்டுத் தொலைவிலும், விலகி நிற்க நேர்ந்தது. ஏழாம் நிலை : மலையாள நாட்டுத் தீண்டாருள் ஒரு வகுப்பாரான நாயாடிகள், தமிழருக்கும் அல்லது மலையாளியர்க்கும் காணார் ஆயினர். தாழ்த்தப்படாத தமிழக் குலத்தாருள்ளும், உயர்வு தாழ்வு பற்றி ஒற்றுமைக் குலைவு ஏற்பட்டது. பிராமணர், நிறத்திலும் துப்புரவிலும் நாகரிகத்திலும் தமக்கு எத்துணையும் தாழ்வில்லா மரக்கறி வெள்ளாளர் சமைத்ததையும் தொட்ட வுண்டியையுங் கூட, இன்றும் உண்பதில்லை. தமிழருள் மரக்கறி வெள்ளாளரே தலைமையாகக் கருதப்படுபவர். அவருந் தாழ்த்தப்பட்டதனால், தமிழினம் முழுதும் தாழ்த்தப் பட்டதே யாகும். இன்று தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லப்படுபவர் உண்மையில் ஒடுக்கப்பட்டவரே யாவர். பிராமண வுண்டிச் சாலைகளில், முதலில், தமிழர் தலை வாயிலை யடுத்த கூடத்திலும், பிராமணர் மறைவான உள்ளறையிலும், படைக்கப்பட்டனர். அன்று, பிராமணர் எச்சிலையினின்று கறி வகைகள் எடுத்துத் தமிழர்க்குப் படைக்கப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது.1 இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில், தில்லையில் ஒரு பிராமண உண்டிச் சாலையில், பிராமணர்க்கு மட்டும் என்று ஒரு பலகை தொங்க விடப்பட்டிருந்தது. தமிழர் இங்ஙனம் தாழ்த்தப்பட்டும், பிராமணனை எதிர்க்காது, தமக்குள்ளேயே, என் குலம் உயர்ந்தது, உன் குலம் தாழ்ந்தது. என்றும், எனக்கெதிரில் நீ செருப்பணிந்து நடக்கக் கூடாது. என்றும், மேலாடையை வல்ல வாட்டாக அணியக் கூடாது. என்றும், திருமண வூர்வலத்தில் நீ பல்லக் கேறக் கூடாது. என்றும், குடை கொடி பிடிக்கக் கூடாது. என்றும், பலவாறு பிதற்றிக் கலாமுங் கலகமுஞ் செய்து வருவாராயினர். வலங்கை இடக்கை வழக்காரம் குலப்பட்டம், குடை கொடி பந்தம் முதலிய விருதுச் சின்னங்கள், வெண்கவரி வீச்சு, சிவிகை குதிரை முதலிய ஊர்தி, மேளவகை, தாரை வாங்கா முதலிய ஊதிகள், வல்ல வாட்டு, செருப்பு ஆகியவை பற்றிக் குலங்கட்கிடையே பிணக்கும் சச்சரவும் ஏற்பட்டதனால், கரிகாலன் என்னும் பெயர் கொண்டிருந்த வீர ராசேந்திரச் சோழன் (1063 - 1069) அவ்வழக்கைத் தீர்த்து வைத்த தாகத் தெரிகின்றது. காவிய மாகிய காமீகங் கண்டுகங் காகுலத்தோர் ஓவிய பாத்திர ராக விருபத்து நான்குயர்ந்த மேவிய கோட்டத் திலுங்கரி கால வளவன்மிக்க வாவிய மேன்மை கொடுத்தளித் தான்றொண்டை மண்டலமே. என்பது, கஎ-ஆம் கஅ-ஆம் நூற்றாண்டிலிருந்த படிக்காசுப் புலவர் பாடியது. சோழனுக்கு வலக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும், இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார் இடங்கையர் என்றும், பெயர் பெற்றதாக உய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரே பக்கத்தில் இருந்திருக்க முடியாது. இருகையிலும் பல குலத்தார் சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும் இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருத இடமுண்டு. சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள் தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக் காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவு கிளர்ந்தெழுந்தது. 1809-ஆம் ஆண்டு சூலை மீ 25 - ஆம் பக்கல், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத் தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (George Colman) துரை, அவ்வழக்கைத் தீர்த்து ஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ் செய்தார். வலங்கைக் குலங்கள் இடங்கைக் குலங்கள் வேளாளன், கம்மாளன், அகம்படியான், பேரிச் செட்டி, இடையன், நகரத்துச் செட்டி, சாலியன், கைக்கோளன், பட்டணவன், பள்ளி (வன்னியன்), சான்றான், வேடன், குறவன், இருளன், குறும்பன், பள்ளன், வள்ளுவன், இரட்டை மாட்டுச் செக்கான் பறையன், முதலியன முதலியன இடங்கையினும் வலங்கை பெருங்கை. மேளகாரன், கணிகை (தாசி), பணி செய்வோன் முதலிய குலங்களில் இரு வகையுமுண்டு. ஒரு சில குலங்களில் ஆடவர் ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னடநாடுகளிலும் இவ்வகுப்புக்கள் இருப்பதால், அந்நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ் நாடாயிருந்தமை அறியப்படும். இத்தமிழ்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை வலங்கை யார் வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவில் மற்றொருவர் வசிப்பதில்லை. சுபாசுபப் பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீதி வழியாக மற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங் கொண்டு போவதில்லை. கருமாதியிலு மப்படியே. இருவருக்கும் பொதுவாயுள்ள வீதியில் போவதற்குத் தடையிராது. சுவாமி களுக்கு உற்சவாதிகளும் அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலே தான் நடத்துவார்கள். என்று 1901-ஆம் ஆண்டில் எழுதியுள்ளார் (வருண சிந்தாமணி, பக். 502-3). கல்வியிழப்பு : வேதம் முதலிய பன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன் வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன. தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்விச்சாலையும் ஏற்படுத்தவில்லை. நடுநிலை நயன்மை யிழப்பு : மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனையிட்ட தனால், அப்பிராமணன் ஆவி அவனை நெடுநாள் அலைக்கழித்த தென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது. மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யில்லையென்று, சட்டமிருந்தது. முன்னேற்றத் தடை : தமிழன் தன் முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையை யுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில் தான் மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில் தவஞ்செய்து வைசியனாகலாமென்றும், இங்ஙனமே வைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்ற பின்னரே இறுதியிற் பிராமணனாக முடியுமென்றும், ஒரு திரிவாக்கக் (Evolution) கொள்கை புகுத்தப் பட்டது. இதை நம்பி ஏராளமான பொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர் எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல் கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித் தடையாகும். (2) பண்பாட்டுத் துறை மறமிழப்பு: கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள். (கலித். 103) என்று புகழப்பட்ட ஆயர் குலம், இன்று பெண்டிர் மட்டு மன்றி ஆடவரும் ஆட்டுக் குட்டிகள் என்னுமாறு, அடங்கி யொடுங்கி யமைந்தது. அன்று கூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்த கொல்லேறு கோடல் விழா, இன்று மறவராற் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாக நடைபெற்று வருகின்றது. பொதுவர் கல்லூரி அல்லது கோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும் துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒரு வடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லை ஆண்டுள்ளனர். பகுத்தறிவிழப்பு : தமிழருள் தலைமையான குலத்தானாகக் கருதப்படும் மரக்கறி வெள்ளாளன், பொற்கலத்தில் நன்னீர் கொடுப்பினும் குடிக்க மறுக்கும் பிராமணன், வெள்ளாளனின் மிகத் தாழ்ந்தவளாகக் கருதப்படும் இடைச்சி, பழமட்கலத்தில் தண்ணீர் கலந்து விற்கும் தயிரை, வானமுதம் போல் வாங்கிக் குடிப்பது கண்டும், தான் அவனின் தாழ்ந்தவனென்று மானமின்றிச் சொல்கின்றான். பிராமணரில்லா மற்ற நாடுகளிலெல்லாம் என்றும் மாறக் கூடிய தொழில் பற்றியே மக்கள் வகுப்புக்கள் ஏற்பட்டிருத்தல் கண்டும், பிராமணருள்ள இந்நாட்டில் மட்டும் குலங்கள் இறைவன் படைப்பென்று கருதுவது, பகுத்தறிவின்மையைத் தெளிவாகக் காட்டும். தன்மானமின்மை : முதற் குலோத்துங்கன் காலத்தில், பையற் பருவத்து ஆளவந்தார் வித்துவ சனகோலாகலன் என்னும் ஆக்கியாழ்வானோடு தருக்கித்து, அரசி வேதவுரைப்படி கற்பிழந்தவளென்று, வேத்தவையில் அரசன் முன் சொன்னதை அவையோர் ஒப்புக் கொண்டதும், அவ்வாறே நச்சினார்க் கினியரும் தொல்காப்பியவுரை வரைந்திருப்பதும், கோழிக் கோட்டு மன்னரான சாமொரின் குடியினர் தாம் மணந்த பெண்டிரை முதல் முந்நாள் பிராமணன் நுகர விட்டதும், தமிழரின் அல்லது தமிழ் வழியினரின் தன்மானமின்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். நெஞ்சுரமின்மை : திருவரங்கத்தில் அரங்கநாயகி மூக்குத்தியைத் திருடிய பிராமணப் பெண், அத்தெய்வம் ஏறியவளாக நடித்து, கழுநீர்ப்பானையினின்று அம்மூக்குத்தியை எடுத்துக் கொடுத்த போது, தஞ்சை விசயராகவலு நாயக்கர் தண்டியாது விட்டதும்; இறுதியாக ஆண்ட திருவாங்கூர் மன்னர் இங்கிலாந்து சென்று மீண்டவுடன், அவரது பதுமநாபர் கோவிலுக்குத் தீவைத்த, பிராமணப் பூசாரியைத் தீக்கரணியம் வினவியபோது, அது மன்னர் மேனாடு சென்றதனாற் பொங்கிய தெய்வச் சினம் என்று விடையிறுத்ததைக் கேட்டு, வாளர் விருந்ததாகச் சொல்லப் படுவதும்; சென்ற ஆண்டு தென்மொழி ஆசிரியர் பாவலர் பெருஞ் சித்திரனார், திருநெல்வேலித் திரவியம் தாயுமானவர் தென்மதக் கல்லூரித் திருவள்ளுவர் விழாவிற் சொற்பொழிவாற்றிய போது தடுத்ததும்; தமிழ திரவிடரின் நெஞ்சுரமின்மையைத் தெற்றெனத் தெரிவிக்கும். தமிழ்ப் பற்றின்மை: சில கட்சித் தலைவரும் பாவிசைப்பாளரும், கட்டாய இந்தியை ஏற்பதும் கோவில் தமிழ் வழிபாட்டைத் தடுப்பதும் தாய்மொழிப் பற்றின்மையாலேயே. (3) மொழித் துறை மொழியிழிபு : சிவனியம் மாலியம் என்னும் இரு மதமுந் தோன்றிய தமிழ், வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டது. சொல்லிழிவு : சோறு, தண்ணீர் முதலிய தூய தமிழ்ச் சொற்கள் பள்பறை வழக்கென்று தமிழராலும் பழிக்கப்பட்டன. சொல் வழக்கு வீழ்வு : கழுவாய் (பிராயச்சித்தம்) சூள் (ஆணை) முதலிய நூற்றுக்கணக்கான அருமையான தமிழ்ச் சொற்கள், வழக்கு வீழ்த்தப்பட்டன. சொல்லிறப்பு : ஆயிரக்கணக்கான இரு வழக்குத் தமிழ்ச் சொற்களும் இறந்துபட்டன. இறந்த சொற்கு என்றும் எடுத்துக் காட்டில்லை. சொற்பொருளிழப்பு : உயிர்மெய் என்பது, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட உயிரொடு கூடிய மெய் (living thing). பிராணி என்னும் வடசொல் வழக்கினால், உயிர்மெய் என்னும் சொல் தன் பொருளை இழந்தது; உயிரி என்றொரு சொல்லுந் தோன்றவில்லை. புஜம் என்னும் வடசொல் வழக்கினால், தோள் என்னும் தமிழ்ச் சொல் தன் பொருளையிழந்து, தோள்பட்டையைக் குறித்து, சுவல் என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்தியும் உள்ளது. தமிழையும் தமிழ்ச் சொற்களையும் போற்றிக் காக்க வேண்டு மென்னும் உணர்வு, இன்றும், முப்பல்கலைக் கழகத் துணைக் கண்காணகர்க்கும் கல்வியமைச்சர்க்கும் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கும் இல்லை. (4) இலக்கியத் துறை பல்லாயிரக் கணக்கான முதலிரு கழக நூல்களும் பெயருமின்றி அழிக்கப்பட்டுவிட்டன. தொல்காப்பியமும் திருக்குறளுந் தவிர, கிறித்துவிற்கு முற்பட்ட எல்லா நூல்களும் இல்லாவாயின. பொதுவிலக்கியத்தைச் சேர்ந்த பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஆகிய பாடற்றிரட்டுக்களும் கீழ்க்கணக்குப் பனுபல்களும் அல்லாது, அறிவியலும் கலையும் பற்றிய கடைக் கழகக் காலச் சிறப்பிலக்கியம் ஒன்று கூட இன்றில்லை. பதிற்றுப்பத்து முதலும் ஈறும் இன்றி நிலைபெற்று விட்டது. அகத்தியம் முதுநாரை பரதம் ஆகிய முத்தமிழ்ப் பிண்ட நூல்களும், அவற்றிற்கு முந்திய முத்தமிழ் மாபிண்ட நூல்களும், இறந்துபட்டன. பாலவ நத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர், அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான அரிய பண்டைத்தமிழ் ஏட்டுச்சுவடிகளும், மதுரைத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் ஐந்திலே ஒன்று (தீ) வைக்கப்பட்டன. திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சமற்கிருதக் கிளையும் பன்மொழிக் கலவையுமான புன்மொழியென்று, நாலரை யிலக்கம் உருபா செலவிட்டுத் தொகுக்கப்பட்ட, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியிற் காட்டப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலித் திட்டம் ஏற்படுமுன், ஒரு தமிழ்ப் போரகர முதலி தொகுக்க வேண்டு மென்றும், அதற்கு நேருஞ் செலவனைத்தும் புதுக்கோட்டை யரசு ஏற்றுக்கொள்ளு மென்றும், பாண்டித்துரைத் தேவர் தம்மிடமுள்ள புலவரைக் கொண்டு அப்பணியில் ஈடுபட வேண்டுமென்றும், அவருக்குப் புதுக்கோட்டையரசர் எழுதிவந்த நெடுநாள் எழுத்துப் போக்குவர வடுக்கு, தமக்குப் பின் வந்த பிராமணரால் அகற்றப்பட்டு விட்டதென்று, ஓய்வுபெற்ற புதுக் கோட்டைத் தலைமை நடுத்தீர்ப்பாளர் சிவஞான முதலியார் என்னிடம் சொன்னார். ஆரியக் கருத்துக்களைப் புகுத்தித் தமிழிலக்கியத்தை ஆரிய வண்ணமாக்குதற் பொருட்டே, தொல்காப்பியர் காலம் முதல், நூல்களும் நூலுரைகளும் பிராமணத் தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன. பிராமணர் அண்டிப்பிழைக்கவந்த அயலினச் சிறுகுழு வாரா யிருந்தும், தமிழ்நாட்டுக் கோவில்களில், தமிழர்க்குப் பயன்படா வாறும், தமிழ்கெடுமாறும், பல கல்வெட்டுக்கள் வடமொழியிற் பொறிக்கப்பட்டுள்ளன. (5) மதத்துறை கடவுள் மத மறைப்பு : ஊர் பேர் குணங்குறியின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை, உருவமின்றி உள்ளத்திற் கண்டு தொழும் கடவுள் நெறியை, உலகில் முதன்முதல் தெளிவாகக் கண்டவர் தமிழரேயாயினும், அதனாற் பிராமணர்க்குப் பிழைப்பில்லை யென்றும், தமிழர் அறிவொளி பெறக்கூடா தென்றும், அந்நெறி அடியோடு மறைக்கப்பட்டுள்ளது. இறைவனொடு தொடர்பின்மை : சிவனியமும் மாயோனியமும் தூய தமிழ மதங்களாயிருந்தும், அன்பான தந்தையுடன் அவனுடைய அருமை மக்கள் நேரடியாய்ப் பேச முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, மக்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தானே அவர்கட்குத் தெரியாத அயன் மொழியில் தந்தைக்குத் தெரிவித்தல்போல், கோவிலிலுள்ள பரம திருத்தந் தையும் அருட்கடலுமான இறைவன் உருவிற்கு, தமிழர் தாமே தம் நெஞ்சார்ந்த அன்பு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழிபட்டுப் படைத்து, பேரின்பப் பெருமகிழ்ச்சிபெற முடியாவாறு, படைப்புத் தேங்காயை வாங்கி யுடைத்து, தமிழர்க்குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அரைச்செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப்போட் டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்திலும் (Bank) வரி யகத்திலும் பணங் கட்டியவர் திரும்புவது போல் வழிபட்ட வரைத் திரும்பச் செய்வது, எத்துணைக் கேடான தீவினை! உயிரிழப்பு : சிறந்த சிவனடியாராக ஒழுகிய குற்றத்தினால், நந்தனார் என்னுந் தூயர், பட்டப் பகலிற் பலர் காணச் சுட்டெரிக்கப் பட்டார். இத்தகைய கொடிய நிலைமையும் 1940-ஆம் ஆண்டு வரை தென்னாட்டிலிருந்து வந்தது. (6) பொருளாட்சித் துறை பொது விழப்பு : பிராமணர், மூவேந்தரிடத்தும் கோவலன் போன்ற செல்வரிடத்தும் பல்வகைத் தானமாகப் பெற்ற, பொன்னிற்கும் ஆவிற்கும் நிலத்திற்கும் பிற பொருள்கட்கும் கங்கு கரையில்லை. சில வகுப்பாரிழப்பு : குழலினும் யாழினும் குரன்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் என்று (சிலப். 5:35-7) இளங்கோவடிகளாற் புகழ்ந்து பாடப்பெற்ற பாணர், மாட்டிறைச்சி யுண்டதனாற் புலையர் என்று இழித் திடப்பட்டு, கக-ஆம் நூற்றாண்டிற்குப்பின் தம் தொழிலையும் வருவாயையும் இழந்தனர். ஐரோப்பியரும் அவர் வழியினரும் அராபியரும் யூதரும் இன்றும் மாட்டிறைச்சி யுண்பவரே. ஆரியப் பூசாரியரும் வேதக்காலத்தில் அதை விரும்பி யுண்டவரே. தவத்திற் சிறந்த பரத்துவாசர், தம் புதல்வனுடன் காட்டில் வாழ்கையில், விருது என்னும் தச்சனிடம் பல ஆக்களை வாங்கிக் கொன்று தின்றார். செம்மறியாட்டிறைச்சியால் நான்கு மாதம் வரையும், வெள்ளாட் டிறைச்சியால் ஆறு மாதம் வரையும், காட்டெருமைக்கடா விறைச்சியால் பத்து மாதம் வரையும், தென்புலத்தார் (பிதுர்க்கள்) பொந்திகை (திருப்தி) யடைகின்றனர் என்று, மனுதரும சாத்திரத்திற் கூறப்பட்டுள்ளது. பாணர் இசைத்தொழிலை இழந்ததனால், பல இசைத் தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப்பாலை என்னும் பண் திரிவு முறை களையும், அகநிலை மருதம் புறநிலை மருதம் முதலிய பண் நுட்பங்களையும், விளக்குவார் இன்று எவரும் இல்லை. சென்னை இராயபுரம் பாதாள விக்கினேசுவரர் கோவில் தெருவிலுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர், புதுக் கோட்டைத் தட்சிணாமூர்த்தியார் போற் கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத்தாளன் மகனார் என்பது பற்றி, அவரை அரங்கிற் கழைப்பார் ஒருவருமில்லை. தனித் தமிழ்ப் புலவர் இழப்பு : மறைமலையடிகள் வழிப்பட்ட தனித் தமிழ்ப் புலவர், எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடையவரா யிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங் கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும் பல்கலைக் கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை. ஊர்ப் பெயர் மாற்றம் தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பல ஊர்ப் பெயர்கள் வட சொல்லாக மாற்றப்பட்டுள்ளன. எ-டு: தென்சொல் வடசொல் குடமூக்கு - குடந்தை கும்பகோணம் குரங்காடு துறை கபித்தலம் சிலம்பாறு நூபுரகங்கை சிற்றம்பலம் சிதம்பரம் பழமலை, முதுகுன்றம் விருத்தாசலம் புள்ளிருக்கு வேளூர், வினை தீர்த்தான் கோவில் வைத்தீசுவரன் கோவில் பொருநை தாம்பிரபரணி மயிலாடுதுறை மாயூரம் மரைக்காடு-மறைக்காடு வேதாரணியம் வடமொழியை யெதிர்த்து வெல்லும் வலிமை தமிழுக்கே யிருப்பதால், ஆரியக் கட்டுப்பாடு தமிழ் நாட்டிலேயே மிகக் கடுமையாகப் புகுத்தப்பட்டுள்ளது. ஆரியத்தினால் தமிழ் கெட்டமை தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாக, மஹாமஹோ பாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள், தங்கள் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள். இது எத்துணை உண்மையென ஆராய வேண்டும். வீண் வடசொல் வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களுக்குப் பதிலாக, வீணான வடசொற்கள் மேன் மேலும் வழங்கி வருகின்றன. அவற்றுட் சில வருமாறு: அநேக - பல அங்கவதிரம் - மேலாடை அசங்கியம் - அருவருப்பு அத்தியாவசியம் - இன்றியமை யாமை அந்தரங்கம் - மறைமுகம் அநேக - பல அப்பியாசம் - பயிற்சி அபிவிர்த்தி - மிகுவளர்ச்சி அபராதம் - குற்றம் (தண்டம்) அபிஷேகம் - திருமுழுக்கு அபூர்வம் - அருமை அமாவாசை - காருவா அர்ச்சனை - தொழுகை (வழி பாடு) அர்த்தம் - பொருள் அவசரம் - விரைவு (பர பரப்பு) அவசியம் - தேவை அவயவம் - உறுப்பு அற்புதம் - புதுமை (இறும் பூது) அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம் அன்னவதிரம் - ஊணுடை அன்னியம் - அயல் அனுபவி - நுகர் அனுஷ்டி - கைக்கொள் அதிபாரம் - அடிப்படை ஆக்கினை (ஆணை) - கட்டளை ஆகாரம் - உணவு ஆச்சரியம் - வியப்பு ஆசாரம் - ஒழுக்கம் ஆசீர்வாதம் - வாழ்த்து ஆதரி - தாங்கு (அரவணை) ஆதியோடந் தமாய் - முதலிலிருந்து முடிவுவரை ஆபத்து - அல்லல் ஆமோதி - வழிமொழி ஆரம்பம் - துவக்கம், தொடக்கம் ஆரோக்கியம் - நலம், நோயின்மை ஆலோசி - சூழ் ஆயுள் - வாழ்நாள் ஆனந்தம் - களிப்பு ஆதி - செல்வம் ஆக்ஷேபி - தடு ஆட்சேபணை - தடை இந்திரன் - வேந்தன் இருதயம் - நெஞ்சம், நெஞ் சாங்குதலை இஷ்டம் - விருப்பம் ஈவரன் - இறைவன் உத்தேசம் - மதிப்பு உத்தியோகம் - அலுவல் உபகாரம் - நன்றி உபசாரம் - வேளாண்மை உபயானுசம்மத மாய் - இருமையால் நேர்ந்து உபவாசம் - உண்ணா நோன்பு உபாத்தியாயர் - ஆசிரியர் உற்சவம் - திருவிழா உற்சாகம் - ஊக்கம் உஷ்ணம் - வெப்பம் கங்கணம் - வளையல் (காப்பு) கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு ஆக்கினை கபிலை - குரால் கருணை - அருள் கர்வம் - செருக்கு கவி - செய்யுள் கனகசபை - பொன்னம்பலம் கஷ்டம் - வருத்தம் கஷாயம் - கருக்கு காவியம் - தொடர் நிலைச்செய்யுள் காஷாயம் - காவி கிரகம் - கோள் கிரீடம் - முடி கிருகப்பிரவேசம் - புது வீடு புகல் கிருபை - அருள், இரக்கம் கிருஷிகம் - உழவு கோஷ்டி - குழாம் சக்கரவர்த்தி - மாவேந்தன் சக்தி - ஆற்றல் சகலம் - எல்லாம் சகஜம் - வழக்கம் சகுனம் - குறி, புள் சகோதரன் - உடன் பிறந்தான் சங்கடம் - இடர்ப்பாடு சங்கரி - அழி சங்கீதம் - இன்னிசை சத்தம் - ஓசை சத்தியம் - உண்மை சத்துரு - பகைவன் சந்ததி - எச்சம் சந்தி - தலைக்கூடு சந்திப்பு - கூடல் (Junction) சந்திரன் - மதி, நிலா சந்தேகம் - ஐயம், ஐயுறவு சந்தோஷம் - மகிழ்ச்சி சந்நிதி - முன்னிலை சந்நியாசி - துறவி சம்பந்தம் - தொடர்பு சம்பாஷணை - உரையாட்டு சம்பூரணம் - முழுநிறைவு சமாச்சாரம் - செய்தி சமீபம் - அண்மை சமுகம் - மன்பதை சமுசாரி - குடும்பி (குடி யானவன்) சமுச்சயம் - அயிர்ப்பு சமுத்திரம் - வாரி சர்வமானியம் - முற்றூட்டு சரணம் - அடைக்கலம் சரீரம் - உடம்பு சன்மார்க்கம் - நல்வழி சாதம் - சோறு சாதாரணம் - பொதுவகை சாதிரம் - கலை (நூல்) சாவதம் - நிலைப்பு சாக்ஷி - கண்டோன் சிங்காசனம் - அரியணை சிநேகிதம் - நட்பு சிரஞ்சீவி - நீடுவாழி சீக்கிரம் - சுருக்கு சுகம் - உடல் நலம் அல்லது இன்பம் சுத்தம் - துப்புரவு சுதந்தரம் - உரிமை சுதி (சுருதி) - கேள்வி சுபம் - மங்கலம் சுபாவம் - இயல்பு சுயமாய் - தானாய் சுயராஜ்யம் - தன்னாட்சி சுரணை (மரணை) - உணர்ச்சி சுவர்க்கம் - துறக்கம், உவணை சுவாசம் - மூச்சு (உயிர்ப்பு) சுவாமி - ஆண்டான், கடவுள் சுவாமிகள் - அடிகள் சேவகன் - இளையன் சேவை - தொண்டு (ஊழியம்) சேனாபதி - படைத் தலைவன் சேனாவீரன் - பொருநன் சேஷ்டை - குறும்பு சொப்பனம் - கனா சோதி - நோடு சௌகரியம் - ஏந்து ஞாபகம் - நினைப்பு ஞானம் - அறிவு தயவு - இரக்கம் தருமம் - அறம் தாசி - தேவரடியாள் தானியம் - கூலம், தவசம் தினம் - நாள் துக்கம் - துயரம் துரோகம் - இரண்டகம் துஷ்டன் - தீயவன் தூரம் - சேய்மை தேகம் - உடல் தைலம் - எண்ணெய் தோஷம் - சீர் (குற்றம்) நதி - ஆறு நமகாரம் - வணக்கம் நஷ்டம் - இழப்பு நக்ஷத்திரம் - வெள்ளி (நாண் மீன்) நித்திரை - தூக்கம் நியதி - யாப்புறவு நியமி - அமர்த்து நியாயம் - முறை நாசம் - அழிவு நாதம் - ஒலி நிஜம் - மெய் நிச்சயம் - தேற்றம் நீதி - நயன் பக்தன் - அடியான் (தேவ டியான்) பக்தி - தேவடிமை பகிரங்கம் - வெளிப்படை பசு - ஆன் (ஆவு) பஞ்சேந்திரியம் - ஐம்புலன் பத்திரம் - தாள் (இதழ்) பத்திரிகை - தாளிகை பத்தினி - கற்புடையாள் பதார்த்தம் - பண்டம் (கறி) பதிவிரதை - குலமகள் (கற்பு டையாள்) பந்து - இனம் பரம்பரை - தலைமுறை பரிகாசம் - நகையாடல் பரியந்தம் - வரை பக்ஷி - பறவை (புள்) பாத்திரம் - ஏனம் (தகுதி) பார்வதி - மலைமகள் பாவம் - தீவினை பானம் - குடிப்பு (குடிநீர்) பாஷை - மொழி பிச்சை - ஐயம் பிச்சைக்காரன் - இரப்போன் பிசாசு - பேய் பிரகாசம் - பேரொளி பிரகாரம் - படி பிரசங்கம் - சொற்பொழிவு பிரசவம் - பிள்ளைப்பேறு பிரசுரம் - வெளியீடு பிரத்திக்ஷணம் - கண்கூடு பிரதக்ஷிணம் - வலஞ்செய்தல் பிரயாசம் - முயற்சி பிரயாணம் - வழிப்போக்கு பிரயாணி - வழிப் போக்கன் பிரயோகம் - எடுத்தாட்சி (வழங்கல்) பிரயோஜனம் - பயன் பிரஜை - குடிகள் பிராகாரம் - சுற்றுமதில் பிராணன் - உயிர் பிராணி - உயிர்மெய் (உயிர்ப் பொருள்), உயிரி பிராயச்சித்தம் - கழுவாய் பிரியம் - விருப்பம் பிரேதம் - பிணம் புண்ணியம் - நல்வினை (அறப்பயன்) புத்தி - மதி புத்திமதி - மதியுரை புருஷன் - ஆடவன் புஷ்டி - தடிப்பு (சதைப் பிடிப்பு) புஷ்பம் - பூ புஷ்பவதியாதல் - முதுக்குறைதல் (பூப்படைதல்) பூமி - ஞாலம், நிலம் பூர்வீகம் - பழைமை பூரணசந்திரன் - முழுமதி பூஜை - வழிபாடு போதி - கற்பி, நுவல் போஜனம் - சாப்பாடு போஷி - ஊட்டு பௌரணை - நிறைமதி மத்தி - நடு மத்தியானம் - நண்பகல் (உச்சி வேளை) மயானம் - சுடுகாடு, சுடலை மரியாதை - மதிப்பு மாமிசம் - இறைச்சி மார்க்கம் - வழி மிருகம் - விலங்கு முக்தி - விடுதலை முகதுதி - முகமன் மூர்க்கன் - முரடன் மைத்துனன் - அத்தான் (கொழுந்தன்), அளியன் மோசம் - கேடு மோக்ஷம் - வீடு, பேரின்பம் யதார்த்தம் - உண்மை யமன் - கூற்றுவன் யஜமான் - தலைவன் (ஆண்டான்) யாகம் - வேள்வி யோக்கியம் - தகுதி யோசி - எண் ரகசியம் - மறைபொருள், மருமம் ரசம் - சாறு ரணம் - புண் ரத்தினம் - மணி ரதம் - தேர் ராசி - ஓரை ருசி - சுவை ரோமம் - மயிர் வஜ்ஜை - வெட்கம் லக்ஷ்மி - திருமகள் லாபம் - ஊதியம் லோபம் - இவறன்மை லோபி - இவறி (கஞ்சன்,பிசிரி) வசனம் - உரைநடை வமிசம் - மரபு வயசு - அகவை வர்க்கம் - இனம் வர்த்தகம் - வணிகம் வருஷம் - ஆண்டு வாத்தியம் - இயம் வாயு - வளி வார்த்தை - சொல் விகடம் - பகடி விசுவாசம் - நம்பிக்கை விசனம் - வாட்டம் விசாரி - வினவு, உசாவு விசேஷம் - சிறப்பு வித்தியாசம் - வேறுபாடு விநோதம் - புதுமை வியவகாரம் - வழக்கு வியவசாயம் - பயிர்த்தொழில் வியாதி - நோய் வியாபாரம் - பண்டமாற்று விரதம் - நோன்பு விரோதம் - பகை விதீரணம் - பரப்பு விஷம் - நஞ்சு வீரன் - வயவன் (விடலை) வேசி - விலைமகள் வேதம் - மறை வைத்தியம் - மருத்துவம் ஜயம் - வெற்றி ஜலதோஷம் - நீர்க்கோவை, தடுப்பு ஜன்மம் - பிறவி ஜன்னி - இசிவு ஜனம் - நரல் (நருள்) ஜனசங்கியை - குடிமதிப்பு ஜனன மரணம் - பிறப்பிறப்பு ஜாக்கிரதை - விழிப்பு ஜாதகம் - பிறப்பியம் ஜாதி - குலம் ஜீரணம் - செரிமானம் ஜீரணோத் தாரணம் - பழுது பார்ப்பு ஜீவன் - உயிர் ஜீவனம் - பிழைப்பு ஜீவியம் - வாழ்க்கை ஜோதி - சுடர் ஜோதிடன் - கணியன் தாபனம் - நிறுவனம் திரீ - பெண்டு தோத்திரி - பராவு நானம் - குளிப்பு க்ஷணம் - நொடி க்ஷீணம் - மங்கல் க்ஷேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு) இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை (அனாவசியம்) யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே வடசொற்கள் தமிழர் கட்குத் தெரியா. அவை பார்ப்பனரே தொன்றுதொட்டுச் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழைத்தவையாகும். தமிழ்நாட்டுக் கல்வியும், மதமும் பார்ப்பனர் வயப்பட்டமையான், அவ்விரண்டையும் நிலைக்களமாகக் கொண்டு, பலவகையில் புகுத்தினவாகும் தமிழிலுள்ள வடசொற்கள். இன்றும், பல வடசொற்கள் தமிழுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. பார்ப்பனர் தென்சொற்களை அறிந்திருந்தாலும், அவற்றிற்குப் பதிலாக வடசொற்களையே வழங்குவது வழக்கம். பழக்கத்தைப் பரிச்சயம் என்றும், சுவையாய் என்பதை ருசிகரமாய் அல்லது சுவாரசியமாய் என்றும் சொல்லுவர் அவர். கல்லாத தமிழர் பார்ப்பனரை உயர்ந்தாராக மயங்கின மையின், அவர் பேச்சைப் பின்பற்றுவது பெருமையென்று பின்பற்றினர். பார்ப்பனப் பாடகர், தமிழில் இப்போதுள்ள வடசொற்கள் போதாவென்று, திருமணத்தைப் பரிணயம் என்றும், அடியாரைப் பக்தரென்றும் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில், பல பொதுவான தென்சொற்களுக்குப் பதிலாக வடசொற்களை வழங்கினதுடன், ஆட்பெயரும், இடப்பெயரும் தெய்வப்பெயருமான பல சிறப்புப் பெயர்களையும் மொழி பெயர்த்து வழங்கினர் பார்ப்பனர். கயற்கண்ணி, தடங்கண்ணி, அழகன் என்னும் ஆட்பெயர்கள் முறையே மீனாக்ஷி, விசாலாக்ஷி, சுந்தரன் என்றும்; பழமலை, மறைக்காடு என்னும் இடப் பெயர்கள் முறையே விருத்தாசலம், வேதாரண்யம் என்றும்; ஆறுமுகம், சிவன், தாயுமான தெய்வம் என்னும் தெய்வப் பெயர்கள் முறையே, ஷண்முகம், சங்கரன், மாதுரு பூதேவரர் என்றும் வழங்கிவருதல் காண்க. ஒரு நாட்டார், இரண்டொருவராய், நாடு காண்பவர் போலும், வழிப்போக்கர் போலும், பிழைக்கப்போபவர் போலும், மற்றொரு நாட்டில் போயமர்ந்து, பின்பு பெருந் தொகையினரானவுடன், அந்நாட்டைக் கைப்பற்றுவது ஒரு வலக்காரமான வழியாகும்; இது மொழிக்கும் ஒக்கும். வடசொற்கள் தமிழில் மிகச் சிலவாயிருந்த பண்டைக்காலத்தில், தமிழைக் கெடுப்பதாகத் தமிழர்க்குத் தோன்றவில்லை, ஆனால், இதுபோதோ, தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததே என்று ஆராய்ச்சி யில்லாதார் நம்புமளவு அளவிறந்த வடசொற்கள் தமிழிற் கலந்துள்ளன. ஆரியத்திலுள்ள தமிழ்ச்சொற்களிற் சில சொற்கள் கவ - L. capio, Ger. haben, A.S. habhan, Dan. have, E. have, to hold or possess. கவர் - L. cupio, O. Fr. coveiter, E covert, to desire. சேர் - L. sero, to join, சேர்மானம் - L. sermonis, E. sermon, lit. an essay. உக - Goth. hauhs, Ger. hoch, Ice. har. A.S. heah, E. high. உலகு - L. vulgus, the people, E. vulgar, used by the common people. உறு - L. verus, true. ஒ.நோ. உறுதி - உண்மை. Ger. wahr, A.S. voer, E. very, adv. in a great degree, adj. true. ஒழுங்கு - L. longus, E. long. இலக்கு - L. locus. சோம்பு - L. somnus sleep. கரவு - Gk. cryptos. சமட்டு - E. smite, to strike, A.S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி - சம்மட்டி. E. hammer, A.S. hamor, Ger. hammer, Ice. hamarr, a tool for beating. E. smith, one who smites. கூடு - E. gather, A.S. gederian, gaed, a company; to gather - together = கூட. காண் - A.S. cnawan; Ice. kna, Russ. znate, L. nosco, gnosco, Gk. gignosko, Skt. Jna. (All from a base GNA, a secondary form of GAN or KAN, to know. ஒ.நோ. fh£á = m¿î; vid (Skt.), to know; vide (L.), (to see.). முன்னொட்டுகள் அல் (not) - அன் - Gk. an, A.S.un. அல் - அ. (Skt.). ஒ.நோ. நல் - ந. குள் - கு. கா : நக்கீரர், குக்கிராமம். இல் (not) - இன் - L. In. இல் (உள்) - இன் - L. - A.S. in, L. em, en, Gk. en, E. in. உம் - A.S. up. உம்பர் - Skt. upari. L. super. Gk. hyper, Goth. ufar, E. over. ம - ப - வ, போலி. கும் = குவி, கூடு, கும்ம (நி.கா.வி.எ.) - L. com, cum, Gk. syn. Skt. sam, E. com. con. together. பின்னொட்டுகள் குறுமைப்பெயர் : இட்டி - L.E. ette. கா : cigar - ette. இல் - L.E.el.le. கா : citad-el. FHî - L.-E. cule. icle. கா : animal-cule, parti-cle. தமிழ்ச்சொற்களாலான புணர்சொற்கள் ஆரிய மொழிகளில், விதப்பாய் மேலையாரிய மொழிகளில், மிகப் பலவுள. கா : compose, from கும் and போடு; concert, from கும் and சேர்; transparent, from துருவ and பார். Transparent - L.trans, through, and pareo, to appear, துரு - துருவு - துருவ - t. A.S. thurh. Ger. durch. W. trw. Skt. taras. L. trans, E. through - root tar. இத்தகைய ஆரியத் தமிழ்த் தனிச் சொற்களும் கூட்டுச் சொற் களும் நூற்றுக்கணக்கின (ஒ.மொ.) ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல் ஆரிய தமிழப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க்குள் பிரிவினை யுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப் பட்ட தென்றும், அடிமைத் தமிழரான நீதிக் கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஆரிய தமிழ(திராவிட)ப் போர், ஆரியர் இந்தியாவில் கால்வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும். பிராமண மதத்திற்கு மாறாகப் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே. பிரிவினை யென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்து கொண்டே இருந்தது. ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவர் முறைகளைத் தமிழ் நாட்டிற்குத் தீங்கு விளைப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை, நெடுகக் காணலாம். செங்குட்டுவ கனகவிசயப் போர் பதிணெண் நாழிகையும், பாரதப்போர் பதிணெண் நாளும், இராம விராவணப் போர் பதினெண் மாதமும் தேவ அசுரப்போர் பதினெண் ஆண்டும், நடந்ததாகச் சொல்லப்படும். ஆயின், ஆரிய தமிழப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்துவருகின்றது. ஆய்ந்து நோக்கின் தேவ அசுரப் போர் என்பது ஆரிய திராவிடப் போரே. சேரநாட்டுச் செங்கோல் வேந்தனும் மாபெருங் கொற்றவனுமாகிய மாவலி அசுரனென்றும் பிராமணர் பூசுரர் (நிலத்தோர்) என்றும், கூறப்படுதல் காண்க. தமிழச்சித்தர் இலக்கியத் தொண்டும், நயன்மைக் கட்சியின் (Justice Party) அரசியல் தொண்டும், ஆரிய திராவிடப் போராட்டமே. (1) நக்கீரர் கடைக்கழகக் காலத்தில், ஒரு நாள், வடமொழியறிந்த கொண்டான் என்னுங் குயவன் ஒருவன், பட்டி மண்டப மேறி வட மொழியே சிறந்தது; தமிழ் சிறந்ததன்று என்று கூற, நக்கீரர் சினந்து, முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணிலா ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தஞ் சேர்கசுவா கா என்று பாடினதும், அக் குயவன் வீழ்ந்திறந்தான். பின்பு அங்கிருந்த பிறர் அவனுக்காகப் பரிந்துபேச, ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதிய லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா என்று பாடி அவனை உயிர்ப்பித்தார். (இங்குக் கூறிய குயவன் அபார்ப்பன னேனும், வடமொழி தென்மொழி ப்போர் பார்ப்ப னராலேயே உண்டானதாதலாலும், இக்காலத்திற்போன்றே அக்காலத்தும் இவ்விரு மொழிக்கும் இகல் இருந்ததென்று தெரிவித்தற்கும், இச் செய்தி இங்குக் கூறப்பட்டது.) நக்கீரர் பார்ப்பாரேயாயினும், நடுவுநிலைமையும் வாய்மையும் தமிழ்ப்பற்றும் உடையவராதலின், ஆரியவொழுக்கத்தை அறவே விட்டுவிட்டுத் தமிழ வொழுக்கத்தை மேற்கொண்டார். தமிழின் தொன்முது பழமையையும், அதற்கு இடையிடை நேர்ந்த பல பெருந் தீங்குகளையும் நோக்குமிடத்து, நச்சினார்க்கினியர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரியார்) போன்ற ஆரியப் பார்ப்பனர் இல்லாதிருந்திருப்பின், தமிழ் மிகக் கெட்டுப் போயிருக்கும். (2) திருவள்ளுவர் அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குங் செந்தண்மை பூண்டொழுக லான். (குறள் 30) எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு, (குறள் 110) ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும், (குறள் 133) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும், (குறள் 134) அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று, (குறள் 259) ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற் கிரவின் இளிவந்த தில் (குறள் 1066) முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பன வாகும். (3) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே (புறம் 183) இது ஆரியக் கொள்கைக்கு மாறாகும். (4) கம்பர் கம்பர் ஒருமுறை வறுமையுற்றிருந்தபோது, பசியால் வாடி, ஒரு செட்டி கடைக்குச் சென்று அவல் கேட்டார். அவன் போணியாக வில்லையென்று சொல்லிவிட்டான். பின்பு, செக்காட்டிக் கொண்டிருக்கும் ஒரு செக்கானிடம் சென்று, பிண்ணாக்குக் கேட்டார். அவன் இன்னும் எண்ணெயெடுக்க வில்லை என்று சொல்லிவிட்டான். அதன்பின், ஒரு பார்ப்பான் வீட்டிற்குச் சென்று உணவு கேட்க, அவன் சூத்திரனுக்குச் சோறிட்டால் குற்றம், போ என்று சொல்லிவிட்டான். பின்பு, கம்பர் காட்டு வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது, அங்கு உழுதுகொண்டிருந்த ஓர் உழவன், கம்பர் சோர்வைக் கண்டு, தான் வைத்திருந்த கூழை அவருக்கு வார்த்து, அவர் பசியைப் போக்கினான். அப்போது கம்பர், செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும் பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும் காப்பாரே வேளாளர் காண் என்று பாடினார். கீழ்வரும் கம்பராமாயணச் செய்யுளால், பார்ப்பனர் பேரவா வுடையவர் என்று கம்பர் கருதினதாக அறியலாம். பரித்த செல்வ மொழியப் படருநாள் அருத்த வேதியர்க் கான்குல மீந்தவர் கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள் (கம்பரா, காட்சிப்படலம். 26) பார்ப்பனப் பேரவாவைப்பற்றிப் பஞ்சதந்திரக் கதையிலும் ஒரு செய்தியுளது. நட்புப்பேறு (சுகிர்லாபம்) என்னும் வலக்காரத்தைப் பற்றிய கதைகளுள், புலியும் பிராமணனும் என்பது ஒன்று. பிராமணன் புலியின் பொற்காப்பிற்கு அவாக்கொண்டு, அதனிடம் சென்றான்; தான் அதனால் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தபோது, நம்முடைய சாதிக்கு இயல்பாயிருக்கிற பேராசையினால், இந்தத் துஷ்டனிடத்தில் விசுவாசம் வைத்து மோசம் போனேன் என்று சொல்லி வருந்தினதாக அதில் கூறப்பட்டுள்ளது. சீவகசிந்தாமணியின் 400 ஆம் செய்யுளில், அந்தணர் தொழிலே னானேன் என்று அந்தணர்க்குச் சால்வு (திருப்தி) தொழிலாகக் கூறியது முனிவரை நோக்கியென்க. (5) ஔவையார் சோழன் ஒருமுறை ஔவையாரை நோக்கி எக்குலத்தானை அமைச்சனாகக் கொள்ளலாம் என்று வினவ, அவர், நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான் அந்த வரசே யரசு என்று கூறினதாகத் தனிப்பாடற் றிரட்டில் உள்ளது. காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடு ஊர்கெட நூலைவிடு ... என்பது பழமொழி. சாதி யிரண் டொழிய வேறில்லை ... இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் ... என்ற நல்வழி வெண்பாவும் ஆரியக்குல முறையை மறுத்ததாகக் கொள்ளலாம். (6) அதிவீரராம பாண்டியன் எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார் (7) சித்தர் சிவவாக்கியர் மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில் சாதிபேத மாயுருத் தரிக்குமாறு போலவே வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில் பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே பத்திரகிரியார் சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம். அகத்தியர் தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே தாயான பூரணத்தை யறிந்த பின்பு தேனென்ற வமுதமதைப் பானஞ் செய்து தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார் ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கு ஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும் நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும் நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே. பாம்பாட்டிச் சித்தர் சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம் இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதும், பார்ப்பனர் ஆரியரே என்பதும், வெள்ளிடைமலை யாதல் காண்க. பார்ப்பனர் - அபார்ப்பனர் என்று பிரித்து, ஒரு மன்பதை மற்றொரு மன்பதையை வெறுப்பது விலங்குத்தன்மையே. ஆனால், இவ் வெறுப்பை நீக்குவதற்கு, அவ்விரண்டையும் இசைக்கும் வழிகளைக் கையாளவேண்டுமே யன்றி, ஆரியரும் திராவிடரும் ஒரு குலத்தாரென்பதும், பார்ப்பனர் தமிழரே யென்பதும், தமிழ் வடமொழியினின்றும் வந்தது என்பதும் தவறாகும். இதனால், குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology) சரித்திரம் (History) என்ற முக்கலைகளும் கெடுவதாகும். ஜெர்மனியில், ஹிட்லர் யூதரைத் துரத்துவது கொடிதே. ஆனால், அவ் யூதரைக் காப்பதற்குரிய வழிகளைத் தேடாமல், யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்ஙனம் பொருந்தும்? ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு இக்கால மொழியியலும் அரசியலும்பற்றித் தமிழும் அதனின்று திரிந்த திரவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திரவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே. தமிழ் - தமிழம் - த்ரமிள - திரமிட - திரவிட - த்ராவிட - திராவிடம். (1) வரணம் : பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப் பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகுபாடும் ஒன்றே யென்று மேனோக் காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன. ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியருமான பல்வகைத் துறவிகள். அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள். 30) என்று திருவள்ளுவர் நீத்தார் பெருமை யிற் கூறியிருத்தல் காண்க. ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும்; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர்; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை. ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர்; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர். ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிறருக்குத் தொண்டு செய்ப வரும், பூணூல், வேதக்கல்வி முதலியவற்றிற்கு உரிமை யில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லாவுரிமையு முடையவருமான மேன்மக்கள். ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகு பாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இரு பிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே தோன்றி யதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழ வேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும். தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயை பில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர். (2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்) : ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகதம், வானப்பிரதம், சந்நியாசம் என நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகதம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது. (3) நூல் : ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜுர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்) ஆறுசாதிரம் (மீமாஞ்சை, நியாயம், வைசே டிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுமிருதி, யக்ஜ்ஞவல் கிய மிருதி முதலிய பதினெண் மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட் டாகமங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு) வித்தை (நால்வேத மும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், தனுர்வேதம், காந்தருவ வேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும். தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப்பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக்கழக (சங்க) நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும். தொடர்நிலைச் செய்யுள்கள் (காவியங்கள்) தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர்நிலை எனவும் வகுக்கப் பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல் (பிரபந்தம்) களாக விரிக்கப் படும். கடைக்கழகக் காலத்தையடுத் தியற்றப்பட்ட பத்துத் தொடர்நிலைச் செய்யுள்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர். இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரளவில் வட மொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும். (4) நயன் (நீதி) : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக் கொரு வகையாக நீதி கூறும். எ-டு: பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால், பிராமணனுக்கு 350 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க (மனு. 8:376). பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாயமாய்) த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசியனைத் திட்டி னால் 35 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 13 பணத்தையும் தண்டமாக விதிக்க. (மனு. 8:268). இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க. (மனு. 8:371). பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு. 8:379,80). இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமையானதாகச் சொல்லப் படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது. அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடையும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதிநூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறை யிலக்கணையாகக் கொண்டாலன்றி, அந்நூலுக்கு எள்ளளவும் பொருந்தா. தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே, வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும். கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலைசிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப் பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களே யொழிய, அம் முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வர சனுக்குந் தெரியாது. ஒரு நாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற் குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன்பாடில்லை, ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான். (5) மதம் : தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றே யென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப்பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம். இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீராதித்தர் என நால் வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவு, பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரியமான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம். (6) கருத்து : பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர்தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ள தென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்துகளாகும். தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரேயொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை. உழவை, சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை (குறள் 1031) என்றும், உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு (நல்வழி. 12) என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ, சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டுகின்றனவல்லவா? (மனு. 10:84) என்று இழித்துக் கூறுவர். ஆரியத் தெய்வங்கள் தியசுத் (தியசு -Dyas) ஒலியுள்ள வானம், வானம், வானத் தெய்வம். இச்சொல் த்யெள (Dyaus), த்யௌஷ் (Dyaush) என்ற வடிவுகளிலும் வழங்கும். தீயும் தீபோல் ஒளிதரும் சுடர்களும் ஒளி வடிவான தோற்றங்களும், முதற்காலத்தில் உலகமெங்கும் தெய்வங்களாக வணங்கப்பட்டன. குமரிநாட்டில் தீ வணக்கமும் கதிரவன் வணக்கமும் தோன்றிப் பரவிய காலத்தில், ஆரியரின் முன்னோர் ஐரோப்பாவிற்குப் பிரிந்து போயினர், அதனால், மேலை யாரியரும் கீழை யாரியரும் பிரியு முன்னரே, சுடர்களெல்லாந் தோன்றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு, அதை வணங்கி வந்தனர். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கிரேக்கமும் இலத்தீனும் வேத ஆரியமும் தோன்று முன்னரே, ஐரோப்பிய ஆரியர் வானத் தெய்வத்தைத் த்யுபாதர் (வானத் தந்தை) என்று பெயரிட்டு வணங்கி வந்ததாகவும்; அப் பெயர் (Dyu patar) வேத ஆரியத்தில் Dyaush-Pitar என்றும், கிரேக்கத்தில் Zeus pater என்றும், இலத்தீனில் Jupiter என்றும், பழைய நார்வேயத்தில் Tyr என்றும், திரிந்துள்ள தாகவும்; மாகசு முல்லர் (Max Muller) கூறுகின்றார். தேயு அல்லது தெய்வு (தெய்வம்) என்னும் தென்சொல் தியூ அல்லது த்யு என்றும், தேவு என்னும் தென்சொல் திவ் என்றும், ஆரியத்தில் திரிந்துள்ளன. எ-டு: L. deus. divus, divinus. வே. ஆ. த்யு, த்ய, திவ், திவ. திவ் என்னும் மூலத்தினின்று, ஒளியுள்ள இடத்தையுங் காலத்தை யுங் குறிக்கும் இந்திய ஆரியச் சொற்கள் தோன்றியுள்ளன. திவ = வானம், நாள் (பகல்) வே.ஆ. திவன், திவ, திவஸ = நாள் (சமற்கிருதம்) திவாகரன் = பகலைச் செய்பவன், பகலவன். தேவன் என்னும் தென்சொல், பிராகிருதத்தில் தேவ் என்றும், வேத ஆரியத்தில் தேவ என்றும், திரியும். பிருதுவி (ப்ருத்வீ). நிலமகள், த்யாவா-ப்ருத்வீ என்று வானத் தந்தையுடன் இணைத்து விளிக்கப்படுபவள். òlÉ-t.ப்U¤å. அதிதி (Aditi) அதிதி என்பவள் ஒரு பெண் தேவதை, அவட்கு மித்திரன், வருணன் முதலிய எட்டுப் பிள்ளைகள் உளர். அவள் உலகத்திற் கெல்லாம் நன்மை யளிக்கின்றாள் என்ற காரணத்தால் விச்வ ஜந்யா எனக் கூறப்படுகிறாள். சுகத்தை அளிக்கவும் பாபத்தைப் போக்கவும் வேண்டப்படுகின்றாள். (வ.நூ.வ.). வருணன் (வருண) இருக்கு வேத காலத்தில் சிறந்த தெய்வம் வருணனே. அவரே பேரரசன். அவரது ஆணைப்படியே சூரியன் தன் வழியிற் சென்று பிரகாசிப்பான். சந்திரனும் நக்ஷத்திரங்களும் இரவிற் பிரகாசிக்கும்; நதிகள் ஒரே வகையாக ஓடும். ஜலத்திற்கு அரசன் அவரே. பறவைகள், கப்பல்கள் இவற்றின் கதியை அவரே அறிவர், பிறர் செய்த செயலையும் செய்யப் போகுஞ் செயலையும் அறிவர். பூமியையும் ஸுவர் லோகத்தையும் இடம் பிறழாதபடி செய்தனர். வேள்வி செய்வோனாலும் அவன் முன்னோராலும் செய்யப்பட்ட பாவத்தை நீக்குவர். (வ.நூ.வ.) Gk. ouranos (heaven). வாரணன் - வ. வருண மித்திரன் (மித்ர) மித்திரன் பகலை ஆள்பவனென்றும், வருணன் இரவை ஆள்பவ னென்றும், வேத விளக்கவுரைஞர் சாயனர் கூறுவர். அக்கினி (அக்னி- Agni) மண்ணுலகத் தெய்வங்களுள் தலைமையானவன் அக்கினி. அவன் வானுலகிற் கதிரவனாகவும், இடைவெளி யுலகில் மின்னலாகவும், மண்ணுலகில் தீயாகவும், இருப்பன். வேள்விகளில், மேற்கும் கிழக்கும் தெற்குமாக, வட்டம் சதுரம் முக்கோணம் ஆகிய வடிவுகளில் வைக்கப்படும், காருக பத்தியம் ஆகவனீயம் தக்கிணாக் கினியம் என்னும் முத்தீ வடிவு கொள்வன். செல்வத்திற்குக் கரணியன்; இல்லறத்திற்கு நல்ல தலைவன்; அரக்கரையழிக்கச் சிறந்த துணைவன்; வேள்விப் படைப்புக்களை யெல்லாம் தேவரிடம் சேர்ப்பதால், தேவர் தூதன்; இறந்தவரை நல்லுலகிற்குக் கூட்டிச் செல்வன். பகைவரை யழிக்கவும் உணவுப் பொருள்களை விளைக்கவும் நன் மக்களைப் பெறவும், அவன் அருள் வேண்டும். L. ignis. இந்திரன் (இந்த்ர) இடைவெளியுலகிற் சிறந்த தெய்வம் இந்திரன், அவன் ஏழு தானவரையும் இலக்கக்கணக்கான தாசரையும் அழித்தனன்; சம்பரன் என்னும் அசுரனின் நூறு கோட்டைகளைத் தகர்த்து, நாற்பதாண்டின் பின் அவனைக் கண்டு கொன்று, திவோ தாசனைத் துன்பத்தினின்று விடுவித்தனன்; மக்களைத் துன்புறுத்திய பதினாயிரம் விருத்திரரை மாய்த்தனன். இத்தகைய செயல்களைப் புரிய ஏழு காற்றுக் கூட்டங்கள் (மருத் கணங்கள்) அவனுக்கு உதவும். அதனால் மருத்வான் என்று அவனுக்குப் பெயர். அவனுக்கு ஆற்றலுண்டாகுமாறு, சோம வேள்விகளில் சோமம் படைக்கப்படும். மலைகளும் கோட்டைகளும் போன்ற மழை பெய்யா முகில்களை, அவன் தகர்த்ததாகச் சொல்லப்படும். வேதக்காலத்தில் வருணனும் பிற்காலத்தில் இந்திரனும் தலைமைத் தெய்வமா யிருந்தனர். உழை (உஷ) விடியல் தெய்வம். கிரேக்கர் தெய்வம் இயோ (Eos) உரோமர் தெய்வம் ஆரோரா (Aurora). சவிதா, சாவித்திரி (ஸவிதா, ஸாவித்ரீ) கதிரவன் எழுமுன் பெறும் பெயர். சூரியன் (சூர்ய) கதிரவன் எழுந்த பின் பெறும் பெயர். த. சூரன் - வ. சூர்ய. விண்டு (விஷ்ணு) எழுகை, உச்சிச் செலவு, விழுகை ஆகிய முந்நிலை யியக்கங் கொண்ட சூரியன். ஒ.நோ. த. விண்டு = வானம். அசுவினியர் (அவின்) அசுவினி மருத்துவர் என்று சொல்லப்படும் இருவர்; கதிரவனின் குதிரை யூர்வாரும் (?) தேவ மருத்துவரு மாவர். ஆதித்தர் (ஆதித்ய - Aditya) முதலில் பிதிர்த் (பித்ரு) தெய்வங்களாகவும், பின்னர் அதிதியின் மக்களாகவும், கருதப்பட்டவர். பின்னிலையில், முதற்கண் அறுவராகவும் பின்னர் எண்மராகவும் இறுதியிற் பன்னிருவராக வுங் கணிக்கப்பட்டவர். இறுதிநிலையில் கதிரவனைப் பன்னிரு மாதத்திலும் படி நிகர்ப்பவராகக் கொள்ளப்பட்டனர். பரிசனியன் (பர்ஜன்ய) முகில் தெய்வம். Ger. பர்கன்ய (parganya), Lit. பெர்க்குன (Perkuna), Old Slav. பெருனு (இடி), Russ. பெருன். வாயு காற்றுத் தெய்வம். மருத்துக்கள் (மருத்) புயற் காற்றுத் தெய்வங்கள். மழைக்கு உதவுவதால் அல்லது மழையொடு கூடி வருவதால், இந்திரனின் தோழர் எனப்படுவர் இருபத்தொருவர் என்றும், நூற்றெண்பதின்மர் என்றும் சொல்லப்படுவர். உருத்திரன் (U¤u-Rudra) சூறாவளி அல்லது கடுங் காற்றுத் தெய்வம். ருத் (rud) என்பதை மூலமாகக் கொண்டு, அழுபவன், ஊளையிடுபவன், உரறு பவன் என்று சொற்பொரு ளுரைப்பர். சினத்தவன் அல்லது வெகுள்வோன் என்று பொருள்படும் உருத்திரன் என்னும் தென்சொல்லின் திரிபாகக் கொள்ளினும், பொருந்தும், உருத்தல் = சினத்தல், உரு - உருத்திரம் - வ. ருத்ர, E. wroth, OE. wrath. சோமன் (ஸோம) மூசாவான் (Mu#ja-vat) முதலிய மலைகளினின்று நிலா வெளிச்சத் திற் பிடுங்கிக் கொண்டு வந்த சோமக் கொடித் தண்டுகளை, இரு கல்லிடை நெருக்கிப் பிழிந்த சாற்றை வடிகட்டி, பெருங்கலங் களில் வார்த்து நெய்யும் மாவுங் கலந்து புளிக்க வைத்து, பதமான பின் குடிக்கும் நறுமண இன்சுவைப் புளிங்காடியே, தேவரும் விரும்பும் சோம பானம் என்னும் வெறிக் குடிப்பாம். இருக்கு வேதத்தின் 9ஆம் மண்டலத்திலுள்ள ககச பதிகங்கள் அனையவும், சோம தேவனையே முதிர்ந்த பத்தி வணக்கப் பான்மையில், சோமதேவன் அற்றங் காவாதவர்க்கு ஆடை அணிவிக்கின்றான்; நோயாளிகளை நலப்படுத்துகின்றான்; குருடருக்குப் பார்வை யளித்து முடவரை நடக்கச் செய்கின்றான். எல்லா வல்லமைகளும் அவனுக் குண்டு. எல்லா ஈவுகளும் அவனிடத்திலேயே பெறற் குரியன. அவன் இறவாத தெய்வத் தன்மையன்; தேவர்க்கும் மாந் தர்க்கும் இறவாமை யளிப்பவன் என்று போற்றிப் புகழ்கின்றன. ஓரிடத்தில், ஓ தூய்மை யானவனே! நித்த லொளியும் மகமையு முள்ள அப் பொன்றா வுலகிற்கு என்னை உய்ப்பாயாக. என்னும் வேண்டுதலுமுள்ளது. இவற்றை நடுநிலையாய் நோக்கின், கட் குடியன் பிதற்றல்கட்கும் இவற்றிற்கும் வேறுபாடின்மை, தெற்றெனத் தெரியும். சோமன் பக்கொசு (Bakkhos) என்னும் கிரேக்க மதுத் தெய்வத்தை ஒத்தவன். துவட்டா (த்வஷ்டா) தேவ கம்மியன். வொல்கான் (Volcan) என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன். இரிபுக்கள் (Çò-Ribhus) வாசன் (வாஜ), விபுவா (விப்வா), ரிபு என்னும் மூவர். சுதன்வ முனிவனின் புதல்வர். வியக்கத்தக்க செயல்களைச் செய்து, இந்திரனின் நட்பைப் பெற்றுத் தேவராகி, சோமத்தைப் பருகத் தகுதி யடைந்தனர். விசுவ கர்மன் (விச்வ கர்மா) உலகமைப்போன். பிரசாபதி (ப்ரஜாபதி) உயிரினம் படைப்பான். பிருகற்பதி (ப்ருகபதி - Brihaspati) தேவரின் சடங்காசிரியன் (புரோகிதன்). பிராமணசுபதி (Brahmanaspati) என்றும் சொல்லப்படுவான். வாச் (Vac) பேச்சுத்தெய்வம். பிராமணத்தில் வேதத்தாய் என்ற சொல்லப் படுபவள். பூசன் (பூஷன்) கால்நடைகளைக் காக்கும் தெய்வம் அபாம் நபாத்து (அபாம் நபாத்) கோட்டைக்குள் பெண்டிராலும் நீராலும் சூழப்பட்டிருக்கும் இடைவெளியுலகத் தெய்வம். முகிலிடை மின்னலாயிருக்கலா மென்பது ஆராய்ச்சியாளர் கருத்து. திரிதன் (த்ரித) ஓர் இந்தோ இரானியத் தெய்வம். வனற்பதி (வனபதி) ஒரு பெருமரத் தெய்வம். திதி ஓரிடத்தில் அதிதி, வருணன், மித்திரன் முதலியவருடனும், மற்றோரிடத்தில் சவிதா, பகன் (ஓர் ஆதித்தன்) முதலியவருடனும் விளிக்கப்படும் பெண் தெய்வம். சரசுவதி (ஸரவதி) முதற்கண் ஓர் ஆற்றுத் தெய்வம்; பின்னர் நாமகள். பாரதி (Bharati) ஆதித்தன் மகள்; பின்னர் நாமகள். பிதிர்க்கள் (பித்ரு) தனிப்பட்டவரின் முன்னோரும் மன்பதை முன்னோருமான பிதிருலக ஆவிகள். யமன், யமி யமன் விவசுவானின் மகன் என்றும், பிதிர்க்கள் இருக்கும் உலகத்திற்கு அரசன் என்றும், அவன் வீட்டை நாற் கண்ணும் அகன்ற மூக்குத் துளைகளும் உள்ள இரு கொடிய நாய்கள் காக்கின்றன வென்றும், அவனும் யமியும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், யமி அவனை மணக்க விரும்பிய போது உடன் பிறந்தாளை மணக்கக் கூடாதென்று அவன் மறுத்து விட்டான் என்றும், இருக்கு வேதம் பத்தாம் மண்டலம், 10-ஆம் 14-ஆம் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது. யமன் முதன் முதலாக இறந்து விண்ணுலகம் சென்ற மாந்தன் என்று, அதர்வ வேதம் கூறும். யமன் புளூட்டோ என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன். அவன் நாய்கள் புளூட்டோவின் கொடிய (செர்பெரசு Cerberus என்னும்) முத்தலை நாயை ஒத்தன. பெண் தெய்வங்கள் பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண்தெய்வங்களுடன், வேறு சில ஆண் தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை. எ-டு: ஆண்பால் பெண்பால் இந்திரன் இந்திராணீ வருணன் வருணானீ அக்கினி அக்கினாயீ அசுவின் அசுவினீ இணைத் தெய்வங்கள் த்யாவா ப்ருத்வீ, மித்ரா வருணௌ, இந்த்ராக்னீ, இந்த்ரா வருணௌ, ஸோமருத்ரௌ எனப் பல தெய்வங்கள், வேத மந்திரங்களில் அடிக்கடி இணைந்தும் விளிக்கப்படுகின்றன. கணத் தெய்வங்கள் மருத்துக்கள், ரிபுக்கள், விசுவே தேவர், வசுக்கள், உருத்திரர், ஆதித்தியர், ஆப்பிரியர் என்பவர் வெவ்வேறு தேவ குழுவார். வேள்விக்கு உரிய விறகு, தருப்பைப் புல் முதலிய பன்னிரு பொருள்கள் ஆப்பிரியர் (ஆ-ப்ரீய) என்னும் தெய்வங்களாக விளிக்கப் பெறும். மூவகைத் தெய்வங்கள் மண்ணுலகத் (பூலோக) தெய்வங்கள் பிருதுவி, துவட்டா, வனற்பதி முதலியவை. இடைவெளி யுலகத் (அந்தரிக்ஷ லோக) தெய்வங்கள் வாயு, வருணன், உருத்திரன், மருத்து, சவிதா, யமன், உழை, பிருகற்பதி முதலியன. விண்ணுலகத் (த்யுலோக) தெய்வங்கள் சூரியன், விசுவே தேவர், அசுவினியர் முதலியன. அக்கினி, இந்திரன் முதலிய சில தெய்வங்கள் மூவகை யுலகிற்கும் உரியன. வேத கால ஆரியத் தெய்வ நிலைகள் (1) எல்லாத் தெய்வங்களும் சிறு தெய்வ நிலையின. (2) வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தெய்வம் தலைமையாய் இருந்திருக்கின்றது. (3) சில தெய்வங்களைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. (4) ஒரே தெய்வத்தைப் பற்றியே பகுத்தறிவிற் கொவ்வாத முரண்பட்ட கூற்றுக்களும் உள்ளன. எ.கா. இந்திரன் தன் தாய் தந்தையரைப் படைத்தான். தக்கன் (தக்ஷன்) அதிதியைப் படைத்தான்; அதிதியிடம் தக்கன் உண்டானான். (5) இயற்கைத் தோற்றங்களெல்லாம் தெய்வங்களாக்கப் பட்டுள்ளன. (6) வாரணன் என்னும் நெய்தல் நிலத் தமிழ்த் தெய்வம், கிரேக்கரிடையும் கீழை யாரியரிடையும் வானத் தெய்வமாக மாறி, மீண்டும் தமிழர் தொடர்பால் நீர்த் தெய்வமாகவும் கடல் தெய்வமாகவும் முந்து நிலைக்குத் திரும்பிற்று. (7) இந்திரன் என்னும் வடநாட்டுத் தெய்வம், இருக்கு வேதக் காலத்தில் தோன்றவில்லை. (8) பிரமன் என்னும் ஆரியப் படைப்புத் தெய்வம், இருக்கு வேதக் காலத்தில் தோன்ற வில்லை. (9) முருகன், சிவன், காளி, திருமால் என்னும் தமிழச் சிறு தெய்வங்களையும் பெருந்தேவரையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்புமில்லை. (10) மங்கலம் அல்லது நன்மை என்று பொருள்பட்டு, அக்கினி இந்திரன் உருத்திரன் ஆகிய முச்சிறு தெய்வங்கள் பெயர்க்கும் அடை மொழியாய் வழங்கிய சிவ என்னும் எச்சச் சொல் வேறு; சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என்னும் தமிழப் பெருந்தேவன் பெயர் வேறு. ஆரியர் தெய்வ வணக்க நிலை வேத ஆரியர் தெய்வ வழிபாடெல்லாம், கொலை வேள்விப் பல் சிறு தெய்வ வணக்கமே. அசுவ மேதம் என்னும் குதிரை வேள்வி மிக அருவருப்பானது. தசரதன் குதிரை வேள்வியில், அவன் தலைமைத் தேவியான கோசலை, ஓர் இரா முழுதும் வேள்வி யாண் குதிரையைக் கட்டித் தழுவிக் கிடந்தாள் என்று, மார்க்கசகாய ஆச்சாரியார் வெளியிட்ட சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு என்னும் சுவடியிற் கூறப்பட்டிருத்தல் காண்க. பௌண்டர யாகம் என்னும் வேள்வியோ, சொல்லவும் எழுதவும் ஒண்ணா இடக்கர் மிக்கதென்று சொல்லப்படுகின்றது. மாந்தனைக் காவுகொடுக்கும் நர மேதம் என்னும் வேள்வியும் இருந்த தென்பதற்கு, சுன சேபன் கதை மட்டுமன்றி, அந்த நரமேத மக மியற்றுதற்கு என்னும் பாரதக் கூற்றும் (இராசசூ. 14) சான்றாம். மாட்டிறைச்சி யுண்டு சோம பானம் என்னும் தேட் கடுப்பன்ன தேறலை வயிறாரப் பருகிவிட்டு, இருதிணை யுயிர்களையும் இரக்கமின்றிக் காவு கொடுக்கும் சிறு தெய்வ வணக்கம், காளிக்கும் காட்டேறி தூர்த்தேறி முதலிய பேய்கட்கும், பூதங்கட்கும் காட்டு வாணரும் கல்லா மக்களும் கொடுத்து வந்த கடா வெட்டுக் கொடையினும், கொடியதே யாம். ஆரியர் மறுமைக் கொள்கை மக்கள் இறந்தபின், அவருயிரைத் தீயும் கூற்றுவனும் வேற்று லகிற்குக் கூட்டிச் செல்வர். நல்லோருயிர்கள் மக்கள் அளிக்கும் உணவால் அங்கு வாழ்ந்திருக்கும். அவை பித்ரு யாணம் (தென்புலத்தார் வழி) தேவ யாணம் (தேவர் வழி) என்னும் இருவழியால் நல்லுலகிற்குச் செல்லும். தென்புலத்தாருலகிற்கு அரசன் கூற்றுவன். அங்குச் செல்லா நல்லுயிர்கள் சுவர் லோகம் என்னும் விண்ணுலகையடையும். தீவினையர் அவ் வீருலகத் திற்கும் செல்லாது நரகிற் சேர்வர். குறிப்பு : கோவில் வழிபாடு, பெருந் தேவ மதம், கடவுட் சமயம், நாற்பொருள், வீடுபேறு என்பன பற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. (த.ம.) ஆரியர் இந்தியாவிற்குட் புகவு (தோரா. கி.மு. 1500) மேனாடுகளுள் முதற்கண் நாகரிகமடைந்தவை சுமேரியாவும் எகிப்தும் ஆகும். சுமேரியர் கொளுவுநிலை (Agglutinative) மொழி பேசிய துரேனிய அல்லது சித்திய இனத்தார். பிற்காலத்திற் சேமிய வகுப்பார் சுமேரியாவைக் கைப்பற்றினர். சுமேரிய நாகரிக வழிப்பட்டது பாபிலோனிய நாகரிகம், இரண்டிற்கும் உரிய நாடு மெசொப் பொத்தாமியா. அது தைகிரிசு ஐப்பிராத்து என்னும் ஈராறுகட் கிடையில், கீழைத்துருக்கி நீங்கலாக, உள்ள நாடாகும். இன்று கிடைத்துள்ள முதற்பழஞ் சுமேரிய வெட்டெழுத்தின் காலம் கி.மு. 3100. சுமேரிய மொழி கி.மு. 2000 வரை ஆட்சி மொழியா யிருந்தது. அதன்பின், பாபிலோனிய அக்கேடிய (Akkadian) மொழி அதன் இடத்தைக் கொண்டது. தென் பாபிலோனிய அல்லது தென் கல்தேயத் (Chaldean) தலை நகரான ஊர் என்னும் நகர் இருந்த இடத்து அகழ்வில், கி.மு.3000 ஆண்டிற்கு முற்பட்ட சேரநாட்டுத் தேக்கு உத்தரம் எடுக்கப் பட்டுள்ளது. நிலாத் தெய்வத்திற்கு அங்கொரு கோவிலும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாண்டியர் திங்களைத் தம் குடிமுதலாகக் கொண்டிருந்ததனால், முதற் காலத்தில் அதைத் தெய்வமாகவும் வணங்கியிருத்தல் வேண்டும். பொதுமக்களும் அதை வணங்கியதைப் பிறை தொழுகென்றல் என்னும் அகப்பொருட்டுறையால் அறியலாம். பூம்புகாரில் ஒரு நிலாக் கோவில் இருந்தது. நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் (சிலப். 9:13). பாபிலேனியர் கைக்கொண்ட பிற தமிழப் பழக்கவழக்கங்களை, தமிழர் தோற்றமும் பரவலும் என்னும் (ஆங்கில) நூலிற் காண்க. எகிபதிய அரசாட்சி, 31 ஆள்குடிகள் (dynasties) தொடர்ந்து, தோரா. கி.மு. 3100 இலிருந்து தோரா. கி.மு. 335 வரை இருந்து வந்தது. அதன்பின், கி.மு. 332 இல், மக்கதோனியப் பேரரசனான மாஅலெகசாந்தர் எகிபதுவைக் கைப்பற்றினான். தொன்மையில், எகிபதுவும் சுமேரியாவும் ஏறத்தாழச் சமமாகும். ஆப்பிரிக்காவின் தென்பாகத்தினின்றும் மேலையாசியாவினின்றும் அடுத்தடுத்துச் சென்ற மக்கட் கூட்டத்தாரே, நீலாற்றின் பள்ளத் தாக்கிலுள்ள சதுப்புநிலங்களையடுத்த தாழ்நிலங்களை, நாலாயிரம் ஆண்டாக மெள்ள மெள்ளத் திருத்திக் குடியிருந்தனர் என்று, எகிப்து நாட்டு வரலாறு கூறுகின்றது. அந்நாட்டிற்கம் இந்தியா விற்கும் தொன்றுதொட்டு வணிகத் தொடர்பிருந்ததாக, வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆசியாவினின்று, கடல் வழியாக, முதற்குடியேற்றக் கூட்டத்தார் கி.மு.3000 - இற்குப் பிற்படாது கிரேக்க நாட்டிற்குச் சென்றபோதே, மெசொப்பொத்தாமியாவில் ஊர் நாகரிகம் முழுவளர்ச்சி அடைந்திருந்தது. அவர்கள், செப்பறைத் தீவிலும் (Cyprus) கிரேத்தாத் தீவிலும் (Crete) சில சைக்கிலேடுகளிலும் (Cyclades), கிரேக்கத் தீவக்குறையில் மேற்குப் பாகத்தைவிட வெப்பமாகவும் காய்ந்துமிருந்த கிழக்குப் பாகத்திலும், குடியேறினார்கள். அன்று அவர்கள் பயிர்த்தொழிலிலும் கடற்செலவிலும் முல்லை வாழ்க்கையிலும் பயின்றிருந்தனர். ஆயினும், அன்றும் அவர்கள் புதுக் கற்கால நிலையிலேயே யிருந்தனர். ஏனெனின், அவர்கள் கருவிகள் கல்லாலும் பெரும்பாலும் மெலோசுத் (Melos) தீவிற் கிடைத்த புட்டிக்கண்ணாடி போன்ற எரிமலை யுறைகூழாலுமே (Obsidian) செய்யப்பட்டிருந்தன. தோரா. கி.மு. 2900 ஆன கிரேக்க உறைக்காலத் தொடக்கத்தில் (சில ஆசிரியர் உறைக்காலத்தைச் செம்புக்கால மென்றும் சரியான உறைக் காலமென்றும் பிரித்து, அதன் தொடக்கத்தைத் தோரா. கி.மு. 2600 v‹W Kªâa jh¡Ft®.), செம்பைப் பயன்படுத்தத் தெரிந்த வேறு சில கூட்டத்தாரும் சென்று, முன்பு சிதறலாகக் குடியிருந்தவரொடு கூடிக்கொண்டனர். அவர்களும் ஆசியாவினின்று சென்றவர்களாகவும், தங்கட்கு முந்தினவரின் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், பெரும்பாலும் இருந்திருக்கலாம். (பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (1970), 10, பக். 790). மெசொப்பத்தாமியாவிலும் எகிப்துவிலும் நாகரிக மாந்தனாற் செய்யப்பட்ட திருந்திய கலைகளும் தொழில்களும், ஐரோப்பாவில் முதற்கண் கிரேத்தாத் தீவின் மினோவராலும் (Minoans) கிரேக்க நாட்டு மைசீனியராலும் (Mycenaeans) உறைக் காலத்தில் தழுவப்பட்டு வளர்க்கப்பட்டன. (பிரித்தானியக் கலைக் களஞ்சியம் (1970) பக். 789.) கிரேக்கரின் நகர நாட்டுக் காலத்தில் (கி.மு. 458-404), அரசியல் மதியியல் (அகக்கரணவியல்) குமுகாயவியல் புத்தெழுச்சி யுண்டா யிற்று. கிரேக்க நாகரிகம், கி.மு. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து நண்ணிலக் கடற்கரை ஐரோப்பிய நாடு கட்கும் கருங்கடற்கரை நாடுகட்குங் கொண்டு செல்லப்பட்டது. கிரேக்கராலும் மக்க தோனியராலும் (Macedonians) கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் ஒரு பேரரசு ஏற்படுத்தப் பட்டது. மக்கதோனிய அரசனான மா அலெக்சாந்தர் (Alexander the Great - கி.மு. 356-323) சிந்துவெளி வரை அப்பேரரசை விரிவுபடுத்தினான். கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு கிரேக்கப் பேரரசை வீழ்த்தியது. உரோமப் பேரரசின் தலை நகர், கி.மு. 330-இல், உரோம நகரத்தினின்று (பின்னர்க் கான்சுத்தாந் தினோபில் எனப் பெயர்பெற்ற) பிசந்தியத் திற்கு (Byzantium) மாற்றப்பட்டபோது, பிசந்தியப் (Byzantine) பேரரசு தொடங்கிக் கி.பி. 1453 வரை நீடித்தது. பிசந்தியத்திலும் அதையடுத்த சுற்றப்புறத்திலும் கிரேக்கரே யிருந்தனர். கிரேக்கப் பேரரசில் மட்டுமன்றி, உரோமப் பேரரசினும் பிசந்தியப் பேரரசிலும் கிரேக்க நாகரிகமே இணைப்புக் கூறாக இருந்து, இற்றை ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிகோலிற்று. ஆயின், அக்கிரேக்க நாகரிகத்திற்கு அடிமணை தமிழநாகரிகம் என்பதை உலகம் இன்னும் அறிந்திலது. மேலையாசியாவினின்று, கிரேக்க நாட்டிற்கு மக்கள் குடியேறு முன்பே, கொளுவுநிலை மொழிகளைப் பேசிக் கொண்டிருந்த துரேனிய இனத்தார் வட ஐரோப்பாவிற் குடியேறி விட்டனர். துருக்கியர் (Turks), காசக்கர் (Cossacks) முதலிய வகுப்பார் சேர்ந்த தார்த்தாரிய (Tartarian) இனத்தாரும் இரசியாவிற் குடியேறி இருந்தனர். அதனாலேயே, “ Scratch a Russian and you find a Tartar” என்னும் ஆங்கிலப் பழமொழி யெழுந்தது. துரேனியர்க்கும் தார்த்தாரியர்க்கும் பின், மேலையாரியரின் முன்னோரான வடதிரவிடர் வடமேலை ஐரோப்பாவிற் குடி யேறினர். அங்கு அவர் மொழி தியூத்தானிய (Teutonic) ஆரியமாகத் திரிந்தது. அது பின்னர்த் தெற்கில் இலத்தீன முறையிலும் அதன் பின் கிரேக்க முறையிலும் மாறிற்று. அதற்கடுத்த திரிபே கீழையாரிய மூலமாகும். அதுவும் பின்னர் இந்தியம் இரானியம் என்னும் இருகிளையாகப் பிரிந்தது. தியூத்தானியம் (செருமானியம்) தியூத்தானியக்கிளை (1) மேலைச் செருமானியம், (2) வடசெரு மானியம், (3) கீழைச் செருமானியம் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. பழைய ஆங்கிலம், பழைய பிரிசியம் (Frisian), பழைய சாகசனியம், பழைய உயர்செருமானியம் என்பன மேலைச் செருமானியத்தையும்; ஐசிலாந்தியம், தேனியம் (Danish), நார்வீசியம், சுவீடியம் என்பன வடசெருமானியத் தையும்; கோதியம் (Gothic), வாந்தலியம் (Vandalic) என்பன கீழைச் செருமானியத்தையும் சேர்ந்தவை யாகும். இம் முப்பிரிவுகளுஞ் சேர்ந்த தியூத்தானியத்தின் மூலநிலையே (Proto Teutonic), தியூத்தானிய முறை என்று மேற் குறிக்கப்பட்டது. பழைய ஆங்கிலம் அல்லது ஆங்கில சாகசனியம் (Anglo Saxon) என்று சொல்லப்படும் மொழியில், இன்று கிடைத்துள்ள முதற்பழைய எழுத்தேடு (document) 1200 ஆண்டகவையதே. இலத்தீன் இத்தாலியரின் முன்னோர், நடு ஐரோப்பாவிலிருந்து, கி.மு. 8ஆம் நூற்றாண்டிற்குமுன், ஆல்பசு (Alps) அப்பெனைன் (Appennines) மலைத்தொடர்களின் வழியாக வந்து குடிபுகுந்தனர். கி.மு. 753- இல், திபேர் (Tiber) ஆற்றங்கரைமேல் உரோம நகர் கட்டப்பட்டது. அந்நகரை யுட்கொண்ட இலாத்தியம் (Latium) என்னும் கோட்டத்தில் (Dt.) பேசப்பட்ட மொழியே இலத்தீன். அது கி.மு. 600-இலேயே ஒரு திரிமொழியாயிருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அது இலக்கியச் செம்மொழியாயிற்று. அதன் காலம் பின் வருமாறு ஐம்பாகுபடும். (1) பழைய இலத்தீன் - கி.மு. 75 - இற்குமுன். (2) இலக்கிய இலத்தீன் - கி.மு. 75 - கி.பி. 175 (3) பிந்திய இலத்தீன் - கி.பி. 175 - 600. (4) இடைக்கால இலத்தீன் - கி.பி. 600 - 1500 (5) இக்கால இலத்தீன் - கி.பி. 1500 - இலிருந்து. இலத்தீன முறையென்று மேற்குறித்தது இலத்தீனத்தின் மூலநிலை யையே (Proto-Latin). கிரேக்கம் கிரேக்க நாடு பல நகரநாடுகளாகத் தோன்றியதனால், கிரேக்க மொழி பல கிளைமொழிகளாகப் பிரிந்திருந்தது. அக்கிளை மொழிகள் அத்திக்கம், அயோனியம், இயோலியம், தோரியம், ஆர்க்கேடியம், சைப்பிரியம் என்பன. அவற்றுள், அத்திக்கமே சிறந்த இலக்கியச் செம்மொழியாயிற்று. அதன் திரிபான காய்னீ (Koine) என்னும் பொதுமொழியே, அலெக்சாந்தர் பேரரசிலும் பிசந்தியப் பேரரசிலும் ஆட்சிமொழியாயிருந்தது. பழங்கிரேக் கத்தின் மிகப் பிந்திய வளர்ச்சியே இக்காலக் கிரேக்கம். இத்தாலியாவிலிருந்த கிரையாய் என்னும் ஒரு சிறு மக்கட் கூட்டத்தின் பெயரினின்று, கிரீக்கு (Greek) என்னும் பெயர் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இத்தாலியும் கிரேக்க நாடும் ஒன்றையொன்று அடுத்திருப்பதனாலும், கிரேக்கப் பேரரசை யடுத்து உரோமப் பேரரசு தோன்றியமையாலும், பின்னதன் தொடர்ச்சியான பிசந்தியப் பேரரசின் காலத்தில் கிரேக்கர் தம்மை உரோமர் என்றும் தம் மொழியை உரோமேயம் (Romaic) என்றும் சொல்லிக் கொண்டமையாலும், இலத்தீனுக்கும் கிரேக்கத்திற்கும் பலசொற்கள் பொதுவா யிருப்பதனாலும், இரு மொழியும் மிக நெருங்கியவை என்பது அறியப்படும். இலக்கிய வளர்ச்சியிலும், அரசியல் வளர்ச்சியிலும் கிரேக்கம் முந்திய தேனும், மொழிநிலையில் இலத்தீன் முற்பட்டதாகும். கெலத்தியம், செருமானியம் (தியூத்தானியம்), இத்தாலியம், எல்லெனியம் (கிரேக்கம்), பாலத்தோ - சிலாவியம், அல்பானியம், அர்மீனியம், இரானியம், இந்தியம் எனத் தொண் பெருங்கிளை களையும், வேறு சில சிறு கிளைகளையுங் கொண்டது ஆரியம் என்னும் மொழிக்குடும்பம். பெருங்கிளைகளுள் முதல் நான்கும் இறுதி யொன்றுமே, தமிழ்த் திரிபாராய்ச்சிக்குச் சிறந்தவை யாகும். ஆரியம் என்பது, இனவகையில் ஐரோப்பாவில் தோன்றியதேனும், மொழிவகையில் இந்தியாவிலேயே தொடங்கி விட்டது. அதன் தொடக்க நிலை வடுகு என்னும் தெலுங்கே. வடுகு என்பது வடகு என்பதன் திரிபாகும். வடகு வடமொழி. ஆகவே, தெலுங்கு பெயராலும் திரிபாலும் வடமொழி யென்னும் சமற்கிருதத்தை ஒருபுடை யொத்ததாம். ஆரியத் தன்மை யடைந்த தெலுங்குத் திரிபுகள் (1) உரப்பொலி எ-டு: செய் - Ceyi. (2) எடுப்பொலி எ-டு: குடி (வீடு, கோயில்) - gudi, சப்பு - ஜப்பு (b), தகை (தாகம்) - daga, புகா (சோறு) - buvva. (3) மெலிவலி யிணை வலிப்பு. எ-டு: inka (இன்னும்), mancu (மூடுபனி), enta (எவ்வளவு), mant@a (மண்ட்ட) - தீக்கொழுந்து, gumpu (கும்பு). தமிழில், ங்க (nga), ஞ்ச (nja) ண்ட (nda), ந்த (nda), ம்ப (mba) என்ற மெலிவலி மெய்ம்மயக்கே இயலும். (4) தன்மை முன்னிலைப் பெயர்களின் நகரமுதல் மகரமாதல், எ-டு: நாம் - மனமு, நீர் - மீரு. (5) வினாவடி ககரமாகத் திரிதற்கு வழிவகுத்தல். எ-டு: எவற்றினை - வேட்டினி, எவற்றின் - வேட்டி. வகரம் ககரமாகத் திரிதல் இயல்பு. எ-டு: ஆவா - ஆகா, சிவப்பு - சிகப்பு, துவர் - துகர். இம்முறையில், எவ் - வெ - கெ என்று திரிந்து, பிராகிருதம் என்னும் வடதிரவிடத்திலும் ஆரிய மொழிகளிலும் வினாவடி ககரமா யமையும். எ-டு: இந்தி - கோன் = கஹான் = எங்கே. இலத்தீன் - qui = எது, quot = எத்தனை. சமற்கிருதம் - குத்ர = எங்கே, கிம் = என்ன. தன்மை யொருமைப் பெயர் இந்தி சமற்கிருதம் இலத்தீன் ஆங்கிலம் முதல்வேற்றுமை மைன் அஹம் (ego) எகொ இக், ஐ இரண்டாம் முஜே மாம், மா மே மீ மூன்றாம் முஜ்ஸே மயா - - நான்காம் முஜ்கோ மஹ்யம், மே மிஹி - ஐந்தாம் முஜ்ஸே மத் மே - ஆறாம் மேரா மம மெயீ மை ஏழாம் முஜ்மே மயி - - சூரசேனிப் பிராகிருதத்தின் வழிவந்த இக்கால மொழி இந்தி. அதில் நான் என்பது மைன் என்றும், நாம் என்பது ஹம் என்றும், திரிந்துள்ளன. தன்மைப் பன்மைப்பெயர் சூரசேனியில் ஹாம் என்றிருந்திருத்தல் வேண்டும். அது பின்னர் வடமொழியில் அஹம் என்றும், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் (அக) - (எக) - எகொ - எகோ (Gk ego) என்றும், திரிந்ததாகத் தெரிகின்றது. மெய்ம் முதற் சொற்கள் முதற்குறைத் திரிபால் உயிர்முதலாவது இயல்பே. எ-டு: மேழகம் - ஏழகம். ஆகும் என்பதன் திரிபான ஆம் (Yes) என்னும் தமிழ்ச் சொல், வடமொழியில் ஆம் என்றே திரியாதிருக்கவும், இந்தியில் ஹாம் என்று திரிந்துள்ளது. ஆதலால், நாம் - ஆம் - ஹாம் என்னும் திரிபு இயற்கைக்கு மாறான தன்று. வடமொழியிலும் மேலையாரிய மொழிகளிலும், தன்மை யொருமைப் பெயர் அகர அல்லது எகர முதலாயிருப்பினும், அதன் ஏனை வேற்றுமைகளெல்லாம் மகர முதலாகவே யிருப்பதால், அதன் எழுவாய் வேற்றுமையும் முதற்கண் மகர முதலாகவே இருந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். வடஇந்தியாவில் முதற்கண் குடியேறியவர் தமிழர் வழியினரான திரவிடரே யாதலால், வடஇந்தியமொழி வடதிரவிடம் எனப்படும். வடுகிற் கடுத்த திரிமொழி வடதிரவிடமே. வடதிரவிடருள் ஒருசாரார் வடமேற்காகச் சென்று ஐரோப்பாவில் வடமேலைப் பகுதியை (செருமானிய காண்டினேவியத்தை) அடைந்ததனால், அவ்விடத்துத் தோன்றிய தியூத்தானியம் (செருமானியம்), ஆரியக் கிளைகள் எல்லாவற்றுள்ளும் தமிழுக்கு மிக நெருக்கமாகவுள்ளது. அதன் தெற்கிலுள்ள இலத்தீனம் அதினுஞ் சற்றுத் திரிந்தும், தென்கிழக்கிலுள்ள கிரேக்கம் இலத்தீனினுஞ் சற்றுத் திரிந்தும், கிரேக்கத்திற்குக் கிழக்கில் நெடுந்தொலைவு வந்த கீழையாரியம் இலத்தீன கிரேக்கத்தினும் மிகத்திரிந்தும், உள்ளமை தமிழாரியத் திரிபு வளர்ச்சிப்பாதை வளைவைத் தெளிவாகக் காட்டும். ஆரியர் தமிழரை அடிப்படுத்திய வகைகள் (1) தமிழத் தெய்வ வணக்கத்தை மேற்கொள்ளல் ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்டமாய்க் காந்தார நாட்டு (ஆபுகானித்தானம்) வழி இந்தியாவிற்குட் புகுந்தாராயினும், அவருட் பூசாரியர் தவிரப் பிறரெல்லாம் இந்தியப் பழங்குடி மக்களொடு கலந்து போனமையால், வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஆரியத்தைப் பரப்பியவரும், ஆரியரென்று பொதுவாகச் சொல்லப்படுபவரும், பிராமணரே என்றறிதல் வேண்டும். ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதற்கும், அவரது வேதமொழி வடநாட்டுப் பிராகிருதத்தொடு கலந்து எகர ஒகரக் குறிலில்லாம லிருத்தற்கும், அவர் சிறுபான்மைய ராயிருந்து பழங்குடி மக்களொடு கலந்து போனதே கரணியமாகும். ஆரியர்க்கும் பழங்குடி மக்கட்கும் இடையே நடந்தனவாக வேதத்திற் சொல்லப்படும் போர்களெல்லாம், பிராமணியத்தை ஏற்றுக் கொண்டவர்க்கும் ஏற்காதவர்க்கும் இடைப்பட்டனவே யாம். விரல் விட்டு எண்ணத் தக்க பிராமணர் தென்னாடு வந்து, தாம் நிலத் தேவரென்றும் தம் மொழி தேவ மொழியென்றும் சொல்லி, மூவேந்தரையும் அடிப்படுத்தியதையும்; இன்றும் ஆரியச் சார்பான பேராயத் தமிழர் உரிமைத் தமிழரை வன்மையாக எதிர்ப்பதையும்; நோக்கின், தமிழ் திரிந்தும் தமிழாட்சியின்றியும் போன வடநாட்டில், ஆரியப் பூசாரியர் சில அரசரைத் துணைக் கொண்டு நாட்டு மக்களை வென்றது, ஒரு சிறிதும் வியப்பன்று. ஆரியர், முன்பு பிராகிருதரையும் பின்பு திரவிடரையும் அதன் பின் தமிழரையும் வெல்லக் கையாண்ட வழிகளுள் ஒன்று, அவர் தெய்வத்தைத் தாமும் வணங்கல். இது அடுத்துக் கெடுத்தல் என்னும் வலக்காரத்தின் பாற்பட்டது. முதலிற் சிந்துவெளியிலும், பின்னர்ச் சரசுவதி யாற்றிற்கும் திருடத்துவதி யாற்றிற்கும் இடைப்பட்ட பிரம வர்த்தத்திலும், அதன் பின் விசனசத்திற்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்குமாகப் பனிமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியா வர்த்தம் என்னும் வட இந்தியா முழுதும், பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக் கோட்டத்தை அடைந்த பின், காளி வணக்கத்தை மேற்கொண்டனர். பிராமணனே காளிக்குக் கடா வெட்டும் பூசாரியுமானான். காளி - வ.காலீ. ஆரியர் சிந்து வெளியிலிருந்த போதே, வேந்தன் வணக்க மாகிய இந்திர வணக்கத்தை மேற் கொண்டனர். வேதக் காலத்தின் இறுதியில், இந்திரனே தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது. “The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German.” - India, What can it teach us? (p.182). “...We know from the Veda itself that there were sceptics, even at that early time, who denied that there was any such thing as Indra.” - Herbert Lecturer. (p.307). இந்திர வணக்கத்தையும் காளி வணக்கத்தையும் மேற்கொண்டும், சில பிராகிருத (வட திராவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வட இந்தியா முழுவதையும் அடிப்படுத்திய பின், ஆரியர் விந்திய மலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறையிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப்படியாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலை சிறந்த நாகரிகத்தையும் நாட்டு வளத்தையும் தமிழுயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோ லாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வடநாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டி லுங் கையாண்டு முதற்கண் மூவேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்ட மிட்டு, அதன் படியே எல்லாவற்றையுஞ் செய்து வருவாராயினர். (2) ஏமாற்று வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும் பாலார் கருத்திருந்ததையும், மூவேந்தரும் முந்தியல் பேதைமை மதப் பித்தம் கொடை மடம் ஆகிய முக் குணங்களைக் கொண்டிருந்த தையும், கண்ட ஆரியர், தம் வெண்ணிறத்தையும் வேதமொழியின் வெடிப்பொலியையும் பயன்படுத்தி, தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவ மொழியென்றும் கூறி ஏமாற்றி விட்டனர். அதனால், அவர் என்ன சொன்னாலும் நம்பவும், எது கேட்டாலும் கொடுக்கவும், அவரைத் தெய்வமாக வழிபடவும், வேண்டிய தாயிற்று. தெய்வா தீனஞ் ஜத்ஸர்வம் மந்த்ரா தீனந்து தைவதம் தன் மந்த்ரம் ப்ராஹ்மணா தீனம் ப்ராமணா மமதைவதம். இதன் பொருள் - உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலாற் பிராமணரே நம் தெய்வம். ஒருசார் பழங்குடி மக்களின் பேதைமை கண்டு, பிராமணரே இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்துக் கொண்டனர். மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி. ஆதலால், மூவேந்தரும் சென்ற நெறியே பொது மக்களும் சென்றனர். திருவள்ளுவர் போன்ற தெள்ளறிஞர் எத்துணை நல்லறிவு கொளுத்தி எச்சரிப்பினும், பேதை வேந்தர் பொருட்படுத்தியிலர். பிராமணர்க்குக் கடவுட் குரிய பகவன் (பகுத்தளித்துக் காப்பவன், படியளப்பவன்) என்னும் பெயர் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் சாமி என்றனர். சொம் - சொத்து. சொம் - வ. வம், வாம். சொம் - சொம்மி - வ. வாமின். (3) நாற்பிறவிக் குலப்பிரிவினை தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பொருளிலக் கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பாற் பாகுபாட்டைத் தீய முறையிற் பயன்படுத்திக் கொண்டு, இந்தியரெல்லாரையும் தொழில் நிற அடிப்படைகளில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணப் பிறவி வகுப்புக்களாக வகுத்து, அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும், தாம் பிராமணரும் ஏனையர் ஏனை மூவகுப்பாருமாவர் என்றும், இப் பாகுபாடு இறைவன் படைப்பேயென்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர். ப்ராஹ்ம ணோய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூத தய யத்வைய: பத்வியாக்ம் ஸூத்ரோ அஜாயத. இது இருக்கு வேதம் அ-ஆம் அட்டகத்திலுள்ள புருட சூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் பகுதியைச் சேர்ந்த தாகும். (இ-ள்) பிராமணன் பிரமத்தின் முகத்தினின்றும், சத்திரியன் அதன் தோளி னின்றும், வைசியன் அதன் தொடையினின்றும், சூத்திரன் அதன் பாகத்தினின்றும், தோன்றினர். பிராமணர் தமிழகம் வந்தபின், அந்தணர் (அருளாளர்) என்னும் தமிழ முனிவர் பெயரையும் மேற்கொண்டனர். பாரதம் - அநுசாச. நீக பருவம் - பூதேவர் மகிமை யுரைத்த சருக்கத்து, அந்தணர்கள் தவவலியா லரசர்செங்கோல் நிகழ்வதெலாம் அந்தணர்க ளொழுக்கத்தா லாருயிர்கள் செறிவ தெலாம் அந்தணர்கள் நான்மறையா லருமாரி பொழிவ தெலாம் அந்தணரி லதிகருல கதிலுண்டோ புகலாயே. ஆயுள்வேண் டினர்செல்வ மாண்மைவேண் டினர்மிக்க சேயைவேண் டினர்தத்தஞ் சீலம்வேண் டினர்முத்தி நேயம்வேண் டினர்சுவர்க்க நீடுவேண் டினர்விப்பிரர் தூயதா ளினிற்றொழுது சூழ்வரே யேற்றமென. என்னுஞ் செய்யுட்களும், இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே. என்னும் புறநானூற் றடிகளும் (6:19-20), பிராமணர் இந்தியா வெங்கும் பெற்றிருந்த மாபெரு மதிப்பை யுணர்த்தும். (4) முத்திருமேனிப் புணர்ப்பு தமிழப் பொது மக்கள் அரசரைப் பின்பற்றிப் பிராமணர்க்கு எத்துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக்குறி (இலங்க) வணக்கஞ் செய்து வந்த சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார் (சிச்ன தேவ) என்று பழித்து வந்தாரேனும், தென்னாடு வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வையுணர்ந்து, அவற்றை ஆரியப்படுத்தற்கு, இறைவன் முத்தொழிலையும் வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிரமனைப் படைப்புத் தேவனென்றும், முத்தொழில் திருமாலைக் காப்புத் தேவனென்றும், முத்தொழிற் சிவனை அழிப்புத் தேவனென்றும், முத் திருமேனிக் கொள்கையைப் புகுத்திவிட்டனர். ஆயினும், தமிழர் பிரமனை ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அவனுக்குக் கோவிலும் கும்பீடும் இல்லாது போயின. அதோடு, அடி முடி தேடிய கதையால் அவன் பெரும் பொய்யனாகவும் காட்டப்பட்டான். பிராமணரோ, முத் திருமேனியரும் ஒருவரே என்பதை உணர்த்தற்கு, எங்கும் என்றும் முக்கோலுங் கையுமாய்த் திரிந்தனர். நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. (தொல். மரபியல், 71). உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் (கலித். 9). சிச்ன (தேவ) என்னும் வடசொல்லும் தென்சொல் திரிபே. சண்ணு - சண்ணம் - வ. சிச்ந. பிராமணர், அவர்க்குரிய கல்வித் தொழிற் கேற்றவாறு, கூர் மதியராய்ப் படைக்கப்படுகின்றார் என்னும் ஆரியக் கருத்தைப் பிற வகுப்பாருள்ளத்திற் பதித்தற்கே, பிராமணரின் முதல்வனாகக் கருதப்படும் பிரமனைப் படைத்துத் தெய்வமாக்கினர். ஆக்கல் தொழிற்கு நீரும் அழிப்புத் தொழிற்குத் தீயும் சிறந்தன வாதலால், நீர்க் கூறனான திருமாலைக் காப்புத் தேவனாகவும், அழல் வண்ணனான சிவனை அழிப்புத் தேவனாகவும், அமைத்தனர் போலும்! அரன் (சிவன்) என்பதன் திரிபான ஹர என்னும் வட சொற்கு அழிப்பவன் என்னும் பொருளுண்மையும், சிவனை அழிப்புத் தேவனாகக் கொள்ள ஏதுவாயிற்று. அழிப்புத் திருமேனி என்னும் பெயர் அமங்கலமாய்த் தோன்றியதனால், அதனை மறைத்துச் சிவனியரை மகிழ்விக்குமாறு, சங்கரன் (நன்மை செய்பவன்) என்றொரு பெயரைச் சிவனுக்கு இட்டனர். அப்பெயர் சிவ என்னும் வடசொற்பொருளொடும் பொருந்து வதாயிற்று. (5) தமிழாரியத் தெய்வ இணைப்பு (மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும்) சிவ என்னும் அடைபெற்ற ஆரியத் தெய்வங்களுள் ஒன்றாயிருந்ததனாலும், அழிப்புத் தொழிற்கேற்ற வலிமிக்குடைமையாலும், கடுங் காற்றுத் தெய்வமான உருத்திரன் அழிப்புத் திருமேனி என்னும் சிவனோடு ஒன்றுபடுத்தப்பட்டான். திருமாலைக் குறிக்கும் விண்டு என்னுந் தென்சொல்லை யொத்த விஷ்ணு என்னும் வடசொல் கதிரவனைக் குறித்த தேனும், சொல்லொப்புமை யொன்று பற்றியே திருமாலை ஆரியத் தெய்வமாகக் கொண்டு விட்டனர். இனி, பிரமனைத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய மகனென்றும், மாயோள் என்னுங் காளியின் தொடர்பினால் நீலி அல்லது நீலம்மை (நீலாம்பிகை) எனப் பெயர் பெற்ற மலை மகளை, மாயோன் என்னும் திருமாலின் தங்கை யென்றும்; பொருத்தமற்ற ஓர் உறவும் பொருத்தி விட்டனர். இதனால், சிவன் மகனாக்கப்பட்ட முருகன் திருமாலின் மருகனானான். நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டின் (பெரும்பாண். 402-4.) மலைமக ளோடிணைக்கப்பட்ட காளியும் திருமாலின் தங்கை யானாள். மாலவற் கிளங்கிளை (சிலப். 12:68) (6) தெய்வப் பெருக்கம் ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவினியர் இருவர் ஆகத் தேவர் முப்பத்து மூவர் எனக் கணக்கிட்டு, பின்னர் அவரை முப்பத்து முக்கோடியராகப் பெருக்கினர். இனி, தேவகணத்தாரென்று பதினெண் வகுப்பாருங் குறிக்கப் பட்டனர். அமரர் சித்தர் அசுரர் தைத்தியர் கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர் காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர் பசாசர் அந்தரர் முனிவர் உரகர் ஆகாய வாசியர் போக பூமியர் பாகு பட்டன பதினெண் கணமே. (பிங். 2:92) நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால். என்னுஞ் சிலப்பதிகார அடிகள் (5: 176-8), தமிழ வேந்தர் ஆரியர்க்கு அடிமைப்பட்டுப் போனதைக் காட்டும். முல்லை நிலத்து முகில் தெய்வமாகிய மாயோன் வணக்கத் தினின்று திருமால் மதம் தோன்றியதுபோல், குறிஞ்சி நிலத்து முருகன் (சேந்தன்) வணக்கத்தினின்று சிவமதம் தோன்றியிருப் பினும், பொதுமக்கள் பண்டை முறையிலேயே முருக வணக்கத்தை இன்றும் போற்றி வருவதனாலும் அவன் இளைஞன் எனக் கொள்ளப்படுவதாலும் அவன் சிவன் மகனாக்கப்பட்டான். முதன்முதற் சிவன் மகனென்றும் பிள்ளையார் என்றும் பெயர் பெற்றவன் முருகனே. கடைக் கழகக் காலத்திற் கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார் என்றொரு புலவரிருந்தார். அவர் தந்தை பெயராகிய கந்தப் பிள்ளை என்பது முருகன் பெயரே. புறப் பொருள் வெண்பா மாலைக் கரந்தைப் படல 21-ஆம் வெண்பாவில் வரும் வேன் முருகன் என்னுந் தொகைச் சொற்கு, வேலினை யுடைய பிள்ளையார் என்று உரை வரைந்துள்ளார் சாமுண்டி தேவநாயகர். நச்சினார்க் கினியரும், திருமுருகாற்றுப்படை யுரையில், முருகனைக் குறிக்கப் பிள்ளையார் என்னுஞ் சொல்லை ஆண்டிருக்கின்றார். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றிய விநாயகர்க்கு மூத்த பிள்ளையார் என்னும் பெயர் ஏற்பட்டது வேடிக்கைச் செய்தியே. முருக வணக்கம், கி.மு. 10 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே, குமரி நாட்டுக் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய தென்பதை அறிதல் வேண்டும். சேயோன் சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இரு வேறு வடிவமாயினும், நடை முறையில் அவை இரு வேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய் என்னும் முருகன் பெயர் குழவி என்றும் பொருள் படுதலாலும், முருகன் குமரன் என்னும் பெயர்கள் இளமை பற்றியவை யாதலாலும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டு விட்டதாகத் தெரிகின்றது. இது, பாலை நிலத் தெய்வமாகிய காளியைச் சிவன் தேவியாக்கியது போன்ற, சிவ மத விரிவளர்ச்சி. முருகனும் சிவனும் நிறத்தில் ஒத்தவரேனும், பருவம் வடிவம் தோற்றம் தேவி மாலை படைக்கலம் ஊர்தி அணி வழிபாட்டு முறை முதலியவற்றில், முற்றும் வேறுபட்டவராவர். வெறியாட்டு, காவடி யெடுப்பு, காவு கொடுப்பு, முருக வள்ளியர் இளமையும் அழகும், அவர் மயிலூர்தி முதலியன பொது மக்கள் உள்ளத்தை முற்றுங் கவர்ந்து விட்டன. அதனால், காளி சிவன் தேவியான பின்பும் தனியாக வணங்கப்பட்டது போல், முருகன் சிவன் மகனான பின்பும் தனியாக வணங்கப்பட்டான். புலவர் முருகனைச் சிவனோ டொப்பக் கொண்டு, வீடளிப் பதிகாரமும் அவனுக் குரிமைப் படுத்தினமை, திருமுருகாற்றுப்படையால் அறியப்படும். முருகன் முளைமந்திரப் பொருளைச் சிவனுக்கு விளக்கிக் கூறி, அதனால் தன் தந்தைக்குக் குரு (தகப்பன் சாமி) ஆனான் என்பதும், முருக சிவர் சமன்மையை உயர்வு நவிற்சியாற் காட்டும். முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானையை நிலவூர்தி யாக்கினது புலவர் செயல் போலும்! முருகனுக்கு மேலும், விநாயகன் என்னும் ஆனைமுகவனை ஆனைமுக வசுரன் கதையாலும், வீரபத்திரனைத் தக்கன் வேள்வி யழிப்புக் கதையாலும், வைரவனைப் பிரமன் தலை கொய்வுக் கதையாலும், சிவன் மக்களாகப் படைத்துக் கொண்டனர் ஆரியர், அவர்களை மக்கள் என்னாது மேனி வடிவுகள் (மூர்த்தங்கள்) என்பர் சற்றத் தெளிந்தோர். ஆயினும், நடைமுறையில் வேறுபா டொன்று மில்லையாம். இனி, சாத்தன் என்னும் ஐயனாரையும், சிவ மாலன் (சங்கர நாராயணன்) என்னும் புணர்ப்பில் தோன்றிய மகனாகக் கூறி, அவனை அரியரன் புதல்வன் (ஹரிஹர புத்ர) என்றனர். மேற்குறித்த கதைகளெல்லாம் கட்டுச் செய்திகளே யன்றி, உண்மையாக நிகழ்ந்தவை யல்ல. இறைவன் (சிவன்) வடிவான ஓங்காரம் வரிவடிவில் யானை யுருவத்தை யொத்திருப்பதால், அதினின்று தோன்றியதாகக் கூறிய வடிவை யானை வடிவாகவே காட்டி விட்டனர். மேலும், அதற்குப் பெருச்சாளியை (பெருத்த எலியை) ஊர்தியாக்கினது, சிறுபிள்ளையின் உத்திக்கும் பொருந்தாச் செய்தியாம். முளை மந்திரமான (பிரணவம் என்னும்) ஓங்காரத்தின் பொருள் தெரியாமையால், பிரமன் முருகனாற் குட்டப் பட்டான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது. திருமால் அணங்கு (மோகினி) வடிவு கொண்டு சிவனுக்குத் தேவி யானதால், அரி என்னும் பெயர் அரன் (சிவன்) என்பதன் பெண் பாலாகவும் இருக்கலாம். ஆயின், ஹரி என்னும் வடசொற்குப் பச்சை நிறத்தன் என்று பொருள் கூறுவர். பச்சையும் நீலமும் கருமைக்கு இனமான நிறங்களாதலாலும், திருமாலுக்குப் பச்சை (பச்சையன்) என்னும் பெயருண்மையாலும், ஹரி என்னும் சொற்குப் பச்சை யென்னும் பொருட்கரணியம் ஊட்டினது, தமிழ் வழக்கைத் தழுவியதாகவே யிருத்தல் வேண்டும். பெருமாள் என்னும் திருமால் பெயர் பெருமகள் என்பதன் மரூஉ வாகக் கொள்ளற்கு இடந்தரு மேனும், பெருமால் (மகா விஷ்ணு) என்பதன் திரிபென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். காளியை ஆரியத் தெய்வ மாக்கியதோடு, பத்திரகாளி, மாரி, பிடாரி, சண்டி (சண்டிகை), துர்க்கை, சாமுண்டி, மகிடாசுர மர்த்தனி, நிசும்ப சூதனி எனப் பல பெயர் கொடுத்து, ஆரியச் சொற்களே வழங்குமாறும், பல்வேறு பெண் தெய்வமென்று கல்லா மாந்தர் கருதுமாறும், செய்து விட்டனர். (7) தொல்கதைக் கட்டு தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும், தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும், பதினெண் தொன்மங்களையும் (புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் (உப புராணங்களையும்) இயற்றிக் கொண்டனர். அவற்றுள் கந்த புராணம் என்னும் ஒன்று மட்டும், ஓரரிசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும். முருகன் பிறப்பு இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே, இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக் கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடிகளுணர்ந்து அவன் பக்க னின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே, இறையவன் கூறாகிய முத் தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தா ராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து, இந்திரன் தான் இருடி களுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய, அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது, அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லு தற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்ற தென்று, புராணங் கூறிற்று என்பது திருமுருகாற்றுப் படை நச்சினார்க்கினியருரை (58). இது, உமையொடு புணர்ந்த காம வதுவையுள் ................................................................................. பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் என்னும் பரிபாடற் பகுதியைத் தழுவியது (5: 28-49) வள்ளி பிறப்பு தொண்டை நாட்டில், வெள்ளிமலை யருகில் மேற்பாடி என்னுஞ் சிற்றூரை, நம்பியரசன் என்னும் வேடர் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பெண் மகவின்மையால், ஒரு பெண் மகப் பேறு வேண்டி மலைத் தெய்வத்தை வழிபட்டு வந்தான். அக்காலத்தில், சிவமுனி என்பவன், அம் மலையருகில் ஐம்புல னையும் அடக்கிச் சிவன் மேல் மனத்தைச் செலுத்தித் தவஞ்செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஓர் அழகிய இளம் பெண் மான் அவனருகில் வந்து உலாவியது. அதைக் கண்டு, அவன் கரையிறந்து காமுற்று மதி மயங்கிக் பேரிடர்ப்பட்டான். அவன் காமக் காட்சியினால் அம்மான் கருவுற்று, உரிய காலத்தில் ஒரு பெண் மகவை யீன்று, வள்ளிக் கிழங்ககழ்ந்த ஒரு குழியில் இட்டுச் சென்றது. அக் குழவியைக் கண்ட நம்பியரசன் எடுத்து, வள்ளிக் கிழங்குக் குழியிற் கிடந்தது பற்றி வள்ளியென்று பெயரிட்டுத் தன் தேவியிடங் கொடுத்தான். அவள் வளர்த்தாள். சிவ முனிவன் இளம் பிணையைக் கண்டு மையல் கொண்டு பட்ட பாட்டை, போர்த் தொழில் கடந்த வைவேற் புங்கவ னருளால் வந்த சீர்த்திடு நவ்வி தன்னைச் சிவமுனி யென்னுந் தூயோன் பார்த்தலு மிளைமைச் செவ்வி படைத்திடும் பிறனிற் கண்ட தூர்த்தனின் மைய லெய்திக் காமத்தாற் சுழல லுற்றான். ஏமத்தின் வடிவஞ் சான்ற இலங்கெழிற் பிணையின் மாட்டே காமத்தின் வேட்கை வைத்துக் கவலையா லவல மெய்தி மாமத்த மளைபுக் கென்ன மனக்கருத் துடைந்து வேறா யூமத்தம் பயன்றுய்த் தார்போ லுன்மத்த னாகி யுற்றான். (கந்த. பு. வள்ளி, 21-2) என்று, கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாண மின்றிப் பாடியிருக்கின்றார். இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவுமான இக்கதைகள், அகக் கரண வளர்ச்சியும் ஒழுக்கவுயர்வுமில்லாத ஒருவன் கட்டியன வாகும். முதலி லிருந்து முடிவு வரை, கந்த புராணம் முற்றும் கட்டுக் கதையாகும். முருகனும் வள்ளியும், குமரி நாட்டிலேயே குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றி விட்டனர். இந்தப் புளுகு கந்த புராணத்திலு மில்லையே! கந்த புராணத்தி லில்லாத புளுகு எந்தப் புராணத்திலு மில்லை. என்னும் பொது மக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத் தக்கன. முருகன் சரவணம் என்னும் நாணற் காட்டுப் பொய்கையிற் பிறக்கவில்லை. அவனுக்கு ஒரே முகமும் இரு கையும்தான். அவன் சூரபதுமன் என்பவனைக் கொல்லவு மில்லை; தேவ யானை (தெய்வானை) என்பளை மணக்கவு மில்லை. காங்கேயன், சரவணன் (சரவண பவன்), ஆறு முகன் (சண்முகன்), பன்னிரு கையன், கார்த்திகேயன், முதலிய கந்த புராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா. நாற்றிசை யுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறு திசைகளை, அல்லது கோவில் கொண்டுள்ள ஆறு சிறந்த இடங்களை, முகமாகக் கொள்ளின், ஆறுமுகம் என்னும் பெயர் மட்டும் முருகனுக்குப் பொருந்தும். கந்த புராணம் போன்றே, ஏனைப் புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும் ஏற்பனவும் அல்ல எனக் கூறி விடுக்க. பிராமணருக்கு நல்லவன் என்று பொருள்படும் சுப்பிரமணியன் என்னும் வடசொற் பெயர், முன்பு திருமாலுக்கும் சிவனுக்கும் பெயராக வழங்கி, இன்று முருகனுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது. திருமால் தோற்றரவுக் கதைகள் திருமாலின் தசாவதாரம் என்னும் பத்துத் தோற்றரவுக் கதைகளும் ஒரே காலத்தில் தோன்றியவை யல்ல. முதலில் எட்டும், பின்னர்த் தொண்டும் (ஒன்பதும்), அதன் பின் பத்துமாகக் கணக்கிடப் பட்டு வந்திருக்கின்றன. முதலெட்டும் பாரதக் காலத்திற்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். சில பனுவல்கள் புத்தரைத் தொண்டாம் (ஒன்பதாம்) தோற்றரவாகக் குறிக்கும். முதல் தோற்றரவுக் கதை, சத பத பிராமணத்திற் சொல்லப்பட்டுள்ள சத்திய விரதன் கதையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அவன் கடல் கோளினின்று தப்பிய கப்பலே, மீனாக உருவகிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றது. அவன் தமிழரசன் (திர விடபதி) என்றும், அரச முனிவன் (ராஜ ரிஷி) என்றும், கூறப் பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 2-ஆம் தோற்றரவுக் கதை, சுரை (ஸுரா) யுண்டவர் சுரர் என்னும் கருத்தையோ, நில நடுக்கத்தோடு கூடிய ஒரு கடல் கோட் கதை யையோ, தழுவியதாக இருக்கலாம். 3-ஆம் தோற்றரவுக் கதை, நிலம் நீரினின்று தோன்றிற்று என்னுங் கொள்கையைத் தழுவியதாகும். உண்முறை வெள்ள மூழ்கியார் தருபு மீண்டு பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக் கூழி யாவரும் உணரா வாழி முதல்வநிற் பேணுதுந் தொழுது. (பரி. 2:10-19) 4-ஆம் தோற்றரவுக் கதை, நர மடங்கல் வடிவாகச் செதுக்கிய கற்றூண், அதைப் பொன்னன் (இரணியன்) உதைத்தவுடன் அவன் மீது விழுமாறு, எளிதாய்ப் பொருத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்ச்சி பற்றியதாயிருக்கலாம். 5-ஆம் தோற்றரவுக் கதை, ஆரியரைப் போற்றாதிருந்தமாவலி என்னும் மாபெருஞ் சேர வேந்தன் ஒரு படுகுழியில் வீழ்ந்து மறையுமாறு, ஒரு குள்ளப் பிராமணன் வாயிலாகச் செய்யப்பட்ட சூழ்ச்சி பற்றியதாயிருக்கலாம். 6-ஆம் 7-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்தன என்பதும், ஒன்று இன்னொன்றை எதிர்த்துத் தோற்றது என்பதும், தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரசர் வகுப்பை அழிக்கவே தோன்றிற்று என்பதும், உத்திக்குப் பொருந்தாதனவும் தன் முரணானவும் தோற்றர விலக்கணத்திற்கு முற்றும் மாறானவு மாகும். 8-ஆம் 9-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்திலும் நிகழ்ந்த தொடு அண்ணன் தம்பி முறைப்பட்டன வாகவும், அவற்றுள் மூத்தது மக்களினத்திற்குச் சிறந்த முறையிற் பயன்படாததாகவும், இருந்ததனால், அம் மூத்தது தோற்றர விலக்கணம் இல்லதே யாம். இனி, 10-ஆம் தோற்றரவோ வெனின், அது கலியூழி முடிவில், சம்பளம் என்னும் சிற்றூரில், விட்டுணு எச்சன் (விஷ்ணு யஜ்ஞ) என்னம் பிராமணன் இல்லத்திற் குதிரை முகத்தொடு பிறந்து, அல்லவை நீக்கி அறத்தை நிலைநிறுத்துவதாம். இது ஒரு வகையிலும் ஒவ்வாத தேனும், இதன் தீர்ப்பைக் கலியூழி முடிவுக் காலத்தினர்க்கே விட்டு விடுவது நன்று. இதுகாறுங் கூறியவற்றால், திருமாலை இயன்றவரை ஆரியத் தெய்வமாகக் காட்டுவதே, தோற்றரவுக் கதை நோக்கம் என்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்க. (8) தெய்வ வடிவு மாற்றம் பகீரதன் கதையாற் சடைமேற் கங்கையும், திங்கள் சாவம் பெற்ற கதையால் முடிமேற் பிறையும், நஞ்சுண்ட கதையாற் கழுத்திற் கருநிறமும், தாருக வனக் கதையாற் கரியுரிப் போர்வையும், பிரமன் தலை கொய்த கதையாற் கையில் மண்டையோடும், பிராமண வொப்புமையாற் பூணூலுங் குடுவையும், தமிழர் சிவன் வடிவை ஆரிய வடிவாக மாற்றின. இக்கதைகளால், கங்கை யணிந்தோன் (கங்காதரன்), மதிசூடி, பிறைசூடி (சந்திர சேகரன்), மதியழகன் (சோம சுந்தரன்), கறை மிடற்றோன் (நீல கண்டன்), மண்டையேந்தி (காபாலீ), இரப் பெடுத்தோன் (பிச்சாடனன்) முதலிய பெயர்கள் தோன்றின. பிராமணர் முட்டி புகும் பார்ப்பார் என்று பழிக்கப்பட்ட தனால், அப் பழிப்பை நீக்கச் சிவபெருமானையும் ஓர் இரப் போனாக்கி விட்டனர். தாருக வனக் கதையால், அரி யரன் (ஹரி ஹரன்), சிவமால் (சங்கர நாராயணன்) என்னும் பெயர்களும் தோன்றின. திருமாலுக்கு, நரன் மகன் (நாராயணன்), அரவணையன் (சேஷசாயி) முதலிய பெயர்களுடன், தோற்றரவுக் கதைகள் பற்றிய பல்வேறு பெயர்களும் தோன்றின. சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட வடிவுகள், குறி, அம்மை யப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந்தணன் என்னும் ஐந்தே. ஆயின், ஆரியர் இவற்றொடு ஏனையவற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்துவிட்டனர். திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக் கதைகளாற் பல்வேறு வடிவங்கள் ஏற்பட்டன. (9) தெய்வப் பெயர் மாற்றம் சிவன் பெயர்கள் எ-டு: தமிழ் சமற்கிருதம் அடியார்க்கு நல்லான் பத்த வற்சலன் (பக்த வத்சல) அம்மையப்பன் சாம்பசிவன், சாம்பமூர்த்தி உடையான் ஈசுவரன் (ஈச்வர) உலகுடையான் சகதீசுவரன், சகதீசன் (ஜகதீச) ஒரு மாவன், ஒரு மாவின் ஏகாம்பரன் (ஏகாம்ர) கீழன், ஒரு மாவடியான் ஏகாம்பர நாதன் கேடிலி அட்சயன் (அக்ஷய) சொக்கன் சுந்தரன் தாயுமானவன் மாதுரு பூதம் (மாத்ரு பூத) தான்றோன்றி சுயம்பு (வயம் பூ) தூக்கிய திருவடி குஞ்சித பாதம் தென்முக நம்பி தட்சிணா மூர்த்தி (தக்ஷிணா மூர்த்தி) நடவரசன் நடராசன் (நடராஜ) புற்றிடங் கொண்டான் வன்மீக நாதன் பெருந்தேவன் மகா தேவன் (மஹா தேவ) பெருவுடையான் பிருக தீசுவரன், மகேசுவரன் மங்கை பங்கன், அர்த்த நாரி, அர்த்த நாரீசுவரன் மாதொரு பாகன் மண வழகன் கலியாண சுந்தரன் வழித் துணையான் மார்க்க சகாயன் சிவை பெயர்கள் எ-டு: தமிழ் சமற்கிருதம் அம்மை அம்பா அழகம்மை அபிராமி,சுந்தராம்பா, சௌந்தராம்பிகை இடவி வாமி உடையாள் ஈசுவரி உலகம்மை சக தம்பா (ஜக தம்பா) உலக முழுதுடையாள் அகிலாண்டேசுவரி கயற் கண்ணி மீனாட்சி (மீனாக்ஷி) காமக் கண்ணி காமாட்சி (காமாக்ஷி) தடங் கண்ணி விசாலாட்சி (விசாலாக்ஷி) நீலம்மை நீலாம்பா, நீலாம்பிகை மலை மகள் பார்வதி திருமால் பெயர்கள் எ-டு: தமிழ் சமற்கிருதம் அரங்கன் ரங்க(ன்) அரங்கநம்பி ரங்கநாத(ன்) உலக நம்பி சக நாதன் (ஜகந் நாத) கோவலன் கோபால(ன்) பெருமால் - பெருமாள் மகா விஷ்ணு விண்டு விஷ்ணு கடவுள் பெயர்கள் (பொது) எ-டு: தமிழ் சமற்கிருதம் ஆண்டவன், ஆண்டான் சாமி (வாமின்) இயற்றியான் கர்த்தா பகவன், பகவான் பகவான், பகவத் பரஞ் சுடர் பரஞ்சோதி (பரஞ்ஜோதி) (10) இடப்பெயர் மாற்றம் தமிழ் சமற்கிருதம் அருணமலை - அண்ணாமலை அருணாசலம் இடைமருதூர் மத்தியார்ச்சுனம் கழுக் குன்றம் (கழுகுக் குன்றம்) பட்சி தீர்த்தம் சிற்றம்பலம் சிதம்பரம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கம் திரு வானைக்கா சம்புகேசுவரம் நாவலந்தீவம் சம்புத் தீவம் (ஜம்பு த்வீப) பழ மலை (முதுகுன்றம்) விருத்தாசலம் பனிமலை இமாலயம் (ஹிமாலய) - இமயம் பாதிரிபுரம் பாடலிபுரம் புக்கொளியூர் அவிநாசி பொன் மலை மேரு (பர்வதம்) பொன்னம்பலம் கனகசபை மயிலாடுதுறை மாயூரம் (மாயவரம்) மறைக்காடு (மரைக்காடு) வேதாரணியம் வினை தீர்த்தான் கோவில் வைத்தியேசுவரன் கோவில் (புள்ளிருக்கு வேளூர்) வெண்காடு சுவேதவனம் வெள்ளி மலை கைலாசம் - கைலாயம் களித்தல் (த.) = மகிழ்தல், களித்தல் (ம.) = விளையாடுதல், களி - கேல் (பிரா.) = விளையாடு. கேல் - கைல (வ.) = விளையாட்டு, மகிழ்ச்சி, இன்பம். இரு என்னும் தமிழ் வினைச் சொல், தியூத்தானத்தின் (Teutonic) வடவழக்கில் இ (is) என்றும், தென்வழக்கில் ஆர் (are) என்றும், திரிந்துள்ளது, இ என்னும் வடிவம், இலத்தீனிலும் கிரேக்கத் திலும் எ (es) என்றும், வேத ஆரியத்தில் அ (as) என்றும் திரியும். அ - ஆஸ = இருக்கை. கைல + ஆஸ = கைலாஸ. (11) சொற்பொருள் திரிப்புக் கதைகள் சிவமதம் குறிஞ்சி நிலத்திற்குரிய சேயோன் வணக்கத்தினிற்று தோன்றியமை யாலும், வீட்டுலகம் மேலே யுள்ளது என்னுங் கருத்தினாலும், நாவலந் தேயத்தில் அல்லது உலகத்தில் முதற்றிற உயரமுள்ள வெள்ளி மலை மண்ணுலகப் பேரின்ப நிலையமாகக் கொள்ளப்பட்டது. மலையை இருக்கையாகக் கொண்ட சிவை மலைமகள் எனப்பட்டாள். மகள் = பெண் தெய்வம். ஒ.நோ. நிலமகள், நாமகள், மலர்மகள். இதை நோக்காது, மலைமகள் என்னும் பெயருக்கு மலையரசன் மகள் என்று பொருள் கொண்டு, அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர். அக்கம் = முள், முண் மணி. அக்கம் என்னும் தென்சொல்லை அக்ஷ என்று திரித்து, அதற்குக் கண் என்னும் பொருளூட்டி, சிவ பெருமான் கண்களினின்று விழுந்த நீரில் தோன்றிற்றென்று கதை கட்டி, சிவ பெருமானோ டிணைக்கப்பட்ட உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வப் பெயரொடு சேர்த்து, உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) என்றனர். கொக்கிறகு என்பது ஒரு வகைப் பூவின் பெயர். வடிவிலும் நிறத்திலும் அளவிலும் கொக்கிறகை ஒத்திருப்பதால், அப் பெயர் பெற்றது. அரச மன்னார்குடி யருகிலோடும் பாம்பணி யாற்றின் வடகரையிலுள்ள, பாம்பணிக் கோயிலிற் கொக்கிறகுச் செடி யுள்ளது. இதை யறியாது, கொக்கு வடிவில் வந்த குண்டாசுரன் என்னும் அசுரனை, சிவபெருமான் கொன்று அவன் இறகை அணிந்தனன் என்று கதை கட்டினர். மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி, மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்ததனால் அவ்விடம் அப்பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக் காடு எனத் திரித்து, ஒரு காலத்தில் ஆரிய மறைகள் சிவனை வழி பட்டு வீடு பெற்ற இடமென்று, இயற்கைக்கு மாறானதும் ஒரு போதும் நிகழாததுமான பொருட் கரணியங் காட்டிவிட்டனர். (12) பகுத்தறிவைக் கொல்லும் பச்சைப் பொய்க் கதைகள் விருகன் அல்லது பன்மன் (பம) என்னும் அசுரன் சிவ பெருமானை நோக்கித் தவஞ் செய்ய, அவர் தோன்றி, என்ன ஈவு வேண்டுமென்று வினவினார். அவன், தான் எவர் தலை மேற்கை வைக்கினும் அவர் இறக்கவென ஈவு வேண்டிப் பெற்று, அதன் உண்மையறிய அப் பெருமான் தலை மீதே கை வைக்கச் சென் றான். அவர் உடனே மறைந்தருளினார். அன்று பெண்ணுருக் கொண்டு அங்கு வந்த திருமாலை அவ் வசுரன் பின் செல்ல, அவர் அவனைக் குளித்து வர ஏவினார். அவ்வாறே குளிக்குங்கால், தான் பெற்ற ஈவை மறந்து தன் தலை மேல் தானே கை வைத்து இறந்தான். காசியப முனிவன் தட்சப் பிரசாபதியின் புதல்வியர் பதின் மூவரை மணந்தனன். அம் மனைவியருள், அதிதியிடம் ஆதித்தரும், திதியிடம் தைத்தியரும், தனுவிடம் தானவரும், அனாயுவிடம் சித்தரும், பிரதையிடம் காந்தருவரும், முனியிடம் தேவமகளிரும், சுரசையிடம் இயக்கரும் அரக்கரும், இளையிடம் மரஞ் செடி கொடி புற் பூண்டுகளும், குரோத வசையிடம் அரிமா புலி முதலிய விலங்குகளும், தாமரையிடம் குதிரை கழுதை பறவை முதலி யனவும், சுரபியிடம் ஆநிரைகளும், வினதையிடம் அருணனும் கலுழனும், கத்துருவிடம் நாகரும், பிறந்தனர். இவை போலிகைக் கதைகள், அகத்தியன் கும்பத்திற் பிறந்தான் என்பது போன்ற இடக்கர்க் கதைகள் இங்கு விடப்பட்டுள்ளன. (13) கொண் முடிபு (சித்தாந்தம்) துறவினாலேயே வீடுபே றென்றும், துறவு பிராமணனுக்கே யுரிய தென்றும், பிராமணன் வாழ்க்கை மாணவம் (பிரமசரியம்), மனை வாழ்வு (கிருகத்தம்), காடுறைவு (வானப் பிரத்தம்), துறவு (சன்னியாசம்) என நானிலைப் பட்டதென்றும், ஆரியப் பார்ப்பான் (பிராமணன்), அரச மறவன் (சத்திரியன்), வேளாண் வணிகன் (வைசியன்), கீழ் மகன் (சூத்திரன்) என்னும் நால் வரணங் களும் இறைவன் படைப்பென்றும், ஒவ்வொரு வரணத்தாரும் தத்தம் குலத்தொழிலைச் செய்வதே ஒழுக்கம் (தருமம்) என்றும், சூத்திரன் தன் குலவொழுக்கத்தில் நின்று பிராமணனுக்குத் தொண்டு செய்வதனால் மறுபிறப்பில் வைசியனாகி, பின்னர் இவ்வாறே படிமுறையாகப் பிறப்புயர்ந்து இறுதியிற் பிராமண னாவானென்றும், அவ்வவ் வரணத்திற் கேற்பவே முக்குணங் களும் முந் நாடிகள் போல் மிக்குங் குறைந்தும் நிற்கு மென்றும், ஆரியர் தம் மேம்பாட்டிற் கேதுவாகத் தம் மனம்போற் கொண் முடிபு வகுத்துக் கொண்டனர். சிவனியக் கொண்முடிபில், வீடு பேற்று வாயில்கள் கோவில் தொண்டு (சரியை), வழிபாடு (கிரியை), ஓகம் (யோகம்), அறிவை (ஞானம்) என நான்காகக் கூறப்பட்டது. மாலியத்தில், கருமம் (கன்மம்), ஓதி (ஞானம்), புகலடைவு (பத்தி, பிரபத்தி) என்பன இறைவனை யடையும் நாற் படிகளாகக் கொள்ளப்பட்டன. கல்வியைப் பிராமணன் குலத் தொழிலாகக் கொண்டதினாலும், விருந்தோம்பலும் வேளாண்மையும் ஈகையும் ஒப்புரவொழு கலும் பிராமணனுக் கின்மையாலும், ஓதியே வீடு பேற்றிற்குச் சிறந்த வாயிலெனக் கூறினர். கண்ணப்ப நாயனார், இளையான் குடி மாற நாயனார் முதலிய சிறந்த அடியார்கள், வழிபாட் டாலும் தொண்டாலுமே வீடு பேறெய்தினர். உண்மையான வீடுபேற்று வாயில்கள் அறிவு அன்பு என்னும் இரண்டே. அறிவென்பது, இறைவனையும் அவனையடையும் வழியையும் பற்றி அறிந்து கொள்வது. அவ்வழி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டுமாம். அன்பென்பது தொண்டும் ஈகமும் (தியாகமும்). அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். (குறுள் 71). அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் 72). அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (திருமத். 257) அன்பெல்லாம் முட்டுண்ட விடத்து இகத்தில் தான் முடியும். நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. (குறள்: 235). அன்பு வடிவான சிவத்தை அன்பினால் தான் அடைய முடியும். மக்களிடம் அன்பில்லாதவன் இறைவனிடம் அன்பு செய்ய முடியாது. இனி, வீடு அல்லது பேரின்பம் ஒருவகைப்பட்டதாகவேயிருக்க, அதை நால் வகை வாயிலின் பயனாக உடனுலகம் (சாலோகம்), உடனண்மம் (சாமீபம்), உடனுருவம் (சாரூபம்), உடனொன்றம் (சாயுச்சியம்) என நால் வகைப்படுத்துவது, உத்திக்கும் தமிழ மரபிற்கும் ஒத்த தன்று. மும் மாசு மூன்றுள குற்ற முழுதும் நலிவன மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே. (திருமந். 2396) காமம் வெகுளி மயக்க மிவைகடிந் தேமம் பிடித்திருந் தேனுக்கு ... (திருமற். 2397) என்று திருமூலரும், காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய். (குறள். 360) என்று திருவள்ளுவரும், கூறியுள்ளவாறு, மும் மாசுகள் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றே. இவையே ஆணவம் மாயை காமியம் என்றும் சொல்லப்படும் ஆணவம் என்பது செருக்கு. அவன் ஆணவம் பிடித்தவன் என்னும் உலக வழக்கையும், அருணந்தியார் முதற்கண் மெய்கண்டாரின் இளமை நோக்கி எள்ளிச் செருக்கொடு நின்று, ஆணவம் எவ்வாறிருக்கும் என்று வினவியதற்கு, மெய்கண்டார் அருணந்தியாரைச் சுட்டி அது இவ்வாறிருக்கும். என்றதையும், நோக்குக. ஆள் - ஆண் - ஆணவம். ஆணவத்தால் தோன்றுவதே வெகுளி. மாயை என்பது மயக்கம். காமியம் என்பது காமம். அதுவே தீவினை கட் கெல்லாம் வேர். ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா வியற்கை தரும். (குறள். 370) ஆணவம் அணுவளவின தென்றும் மயக்கஞ் செய்வதென்றும், காமியம் கன்மமென்றும், ஆரியர் கூறியது தவறாம். ஆணவம் என்னுஞ் சொல்லை ஆரிய மாக்கவே, அதை அணு என்பதன் திரி சொல்லாகக் கொண்டனர். மயக்கஞ்செய்வது மாயையேயன்றி ஆணவமன்று. வினைப்பயனாகிய ஊழ் (நியதி) ஒரு தனி மெய்ப் பொருளாகக் கொள்ளப்படுவதால், அதினின்றும் வேறாக வினை (கன்மம்) என்று மாசு கொள்ள வேண்டுவதில்லை. இல்லறத்தாலும் வீடு பேறுண்டென்பது தமிழர் கொள்கை யாதலால், இருள்சேர் இருவினை என்று திருவள்ளுவர் கூறியது, தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகளையே. (14) மந்திரம் ஓங்காரம் (பிரணவம்) ஓம் என்னும் மூல மந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலி வடிவாகும். அது ஓ என்னும் ஒரேயெழுத்தே. இன்னிசை பற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே. வடமொழியில் அகர வுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பது போல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ+உ+ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்து மாவையும்) பரவாதனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர். ஓங்காரம் ஒரே யெழுத் தென்பதை, ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி (திருமந். ப. இ. உரை, 765) ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர் (திருமந். ப. இ. உரை, 741) என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனை யுணர்த்தும் எழுத்தென்பதை, ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம். ஓமெனும் ஓங்காரம் ஓண்முத்தி சித்தியே. (திருமந். ப. இ. உரை, 2627) ஓங்காரத் துள்ளே யுதித்தவைம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்காரா தீதத் துயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. (திருமந். ப. இ. உரை, 2628) என்ப வற்றாலும், அறியலாம். ஓங்கார வரி வடிவம் தமிழ் ஓகார வரிவடிவே யாதலாலும், அது யானை வடிவை யொத்ததென்று விநாயக புராணங் கூறுவதாலும், ஓங்கார மந்திரம் தமிழ் மந்திரமே யென்பது தெளிவாம். அது சிவனியத்திற் குரிய தாயினும், மாலியத்திலும் ஆளப்படுவது, முன்னதன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையையும் உணர்த்தும். திருவைந் தெழுத்து சிவ போற்றி (= சிவனே! வணக்கம்) என்பதே, தமிழர் கொண்டதும் உண்மையானதுமான திருவைந் தெழுத்தாம். மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவலி லுள்ள போற்றித் தொடர்களை நோக்குக. தென்னாடுடைய சிவனே போற்றி (போற்றி. 164) ஆரியர், சிவ போற்றி என்னும் உண்மைத் திருவைந்தெழுத்தைச் சமற்கிருதத்திற் சிவாயநம: என்று மொழிபெயர்த்துள்ளனர். சிவாய என்பது வடமொழி யுருபேற்ற தென்சொல். ய என்பது வடமொழியில் 4-ஆம் வேற்றுமை ஒருமையுருபு. அதை யேற்கும் பெயரின் அகர வீறு ஆகார வீறாக நீளும். அதனாற் சிவ என்னும் பெயர் 4-ஆம் வேற்றுமையிற் சிவாய என்னும் வடிவு கொள்ளும். அதனொடு புணரும் நம (வணக்கம்) என்னும் வடசொல் நம: என்று திரியும். ஆகவே, சிவாய நம: என்னும் இரு மொழித் தொடர்ச் சொல், உண்மையில் ஆறெழுத்தேயன்றி ஐந்தெழுத் தாகாது. அது ஈறு கெட்டுத் தமிழிற் சிவாயநம என்ற நிற்கும் போதே ஐந்தெழுத் தாகும். சிவாய நம என்பது நமசிவாய என்று தமிழில் முறைமாறி நிற்கும் போதும், நமச்சிவாய என்று இடையில் வலிமிக்கு ஆறெழுத் தாகும். நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க என்று மாணிக்க வாசகரின் சிவ புராணம் தொடங்குதல் காண்க. நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி (திருமந்.2649) சிவாய நம என்னும் இரு மொழித் தொடரைச் சிவய நம என்று இடையாகாரங் குறுக்கி, அது சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்னும் தென்சொற்களின் முதலெழுத்துத் தொகுப் பென்றும்; அவ்வெழுத்துக்கள் முறையே சிவன், ஆற்றல் (சத்தி, சிவை), ஆதன் (சீவன்), மறைப்பு (திரோதாயி) அல்லது மாசு (மலம்), மாயை என்பவற்றைக் குறிக்குமென்றும், கூறுவது உண்மைக்கும் உத்திக்கும் மொழிநூற்கும் ஒரு சிறிதும் பொருந்தாது. இது, North, East, West, South என்னும் சொற்களின் முதலெழுத்துத் தொகுப்பே ‘news’v‹D« சொல்லென்றும், அது நாற்றிசையி னின்றும் வரும் செய்திகளைக் குறிக்குமென்றும், கூறுவ தொத்ததே. சிவ என்பது, சிவம் என்னும் தென்சொல்லின் வடமொழி வடிவம். அதன் அகர வீறு ஆகார வீறானது வடமொழி யுருபுப் புணர்ச்சி விளைவு. ய வடமொழி 4-ஆம் வேற்றுமை யுருபு. நம என்பது, நம என்னும் வடசொல்லின் திரிபான நம: என்பதன் கடைக் குறை அல்லது ஈறுகேடு. இங்ஙனம், சிவாய நம: என்னும் வடமொழித் தொடரைச் சிவயநம என்று திரிப்பின், அது வடமொழித் தொடரு மாகாது. தென்மொழித் தொடரு மாகாது இடைத் தட்டில் நிற்பதாகும். அதையும் எழுத்தெழுத்தாகப் பிரிப்பின் ஒன்றுமில்லாது போம். சிவம் என்பது, செம் என்னும் அடிப் பிறந்து, ஒரு வகையிலும் திரியாது என்றும் ஒரே தன்மைத்தாய் நிற்கும் செம்பொருளாகிய கடவுளைக் குறிக்கும் தென்சொல். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு. என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க (குறள். 358) செம்பெரு மானே சிவபுரத் தரசே (திருவாச. வாழாப் பத்து, 2). சுள் - செள் - செய் - செய்ம்மை - செம்மை - செம். செம் - செவ் - செவ - சிவ - சிவம் - சிவன். செம்மை = தீயின்நிறமாகிய சிவப்பு, தீயின் தன்மையாகிய நேர்மை, கோடாமை, திரியாமை, நடுநிலை. சிவ என்பது தமிழிற் சிவன் என்பதன் விளி வடிவம், அதைச் சி, வ என்று எழுத்துப் பிரிப்பின் அச் சொல்லாகாது. சீறிட்டு நின்று சிவாய நமவென்ன (910) மருவுஞ் சிவாயமே மன்னம் உயிரும் (956) சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோத (958) தேறாச் சிவாய நமவெனத் தேறிலே (2460) தெளிய வோதிச் சிவாய நமவென்னும் (2659) தெள்ளமு தூறச் சிவாய நமவென்று (2663) திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும் (2665) சிவாய நமவெனச் சித்த மொருக்கி (2669) உருவில் சிவாய நமவென வோதே (2752) என்று திருமூல நாயனாரும், சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு (நல். 15), என்று ஔவையாரும் பாடியிருப்பதால், சிவாய நம என்பதே மூல வடிவென்றும், அது இருமொழித் தொடரென்றும், சிவய நம என்பது அதன் திரிபென்றும், சிவ என்னும் நிலைச் சொல்லே தென்சொல்லென்றும், அறிந்து கொள்க. இனி, சிவய நம என்பதை நம சிவய என்று முறை மாற்றி அது பருவியல் ஐந்தெழுத்து (தூல பஞ்சாக்ஷர) என்றும், சிவய நம என்பது நுண்ணியல் ஐந்தெழுத்து (ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், சிவய சிவ என்பது அதி நுண்ணியல் ஐந்தெழுத்து (அதி ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், திருமந்திர உரையாசிரியர் கூறுவர். ஆயின், மூலத்திற் சிவாய என்று வகர ஆகார முள்ள வடிவேயுள்ளது. ஆகவே, யாப்பு என்னும் தென் சொல்லின் முதலெழுத்தும் சிவாய என்னும் வடசொல்லின் இடையெழுத்தும், முறையே, ய என்று குறுகினதாகக் கொள்ளப்பட்டதும் வ என்று குறுக்கப்பட்டதும் தெளிவாம். இனி, சிவய, சிவ, சி என்பவற்றையும் திருவைத் தெழுத்தின் வகைகளாகக் கொள்ளுவர். அவை அங்ஙனமாகாமை வெளிப் படை. தமிழரை மயக்கிச் சிவமதத்தை ஆரிய வண்ணமாக்கற்கே, சிவாய நம என்னும் இரு மொழித் தொடர்த் திரிபின் எழுத்துக்கட்கு வெவ்வேறு குறிப்புப் பொருள் குறித்துள்ளனர். அவ்வாறே, சிவன் சத்தி சீவன் செறுமல மாயை (2660) என்று திருமூலரும் பாடியுள்ளார். ஐந்து என்னும் தொகை பற்றி, திருவைத் தெழுத் தென்பவற்றைச் சிவன் கை கால்களொடும் ஆடு மன்றங்களொடும் தொடர்பு படுத்திக் கூறுவர். திருந்துநற் சீயென் றுதறிய கையும் அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந் திருந்தநத் தீயாகுந் திருநிலை மவ்வே. (திருமந். 275). சி யாப்பு நோக்கிச் சீ என நீளும். அதை நாயோட்டும் மந்திரம் என்பர் திருமூலர். சேர்க்குந் துடிசிகரம் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக் கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான். (உ.வி. 33.) மேலாம் சிவயநம மேவுமணி பொன்வெள்ளி பாலாம்செம் போடுமண் பற்றல்போல் - மேலாம் அவனாடல் செய்வனகம் ஆல்தில்லை கூடல் தவ நெல்லை குற்றாலம் தான். சிவன் திரு நடத்தை ஐந்தொழில் நடம் என்பதால், இருமொழித் திருவைந் தெழுத்து சிவன் ஐந்தொழிலொடும் தொடர்புபடுத்தப் பெறும். இனி, ஓகநூலார், மாந்தனுடல் தொடை முதல் மண்டை வரை இரு மொழித் திருவைந் தெழுத்து வடிவில் அமைந்திருப்ப தாகவும், வரைந்து காட்டுவர். சிவாய நம என்பதில், ய, ந, ம, என்னும் மூவெழுத்துக்களையும் பிரித்துக் குறிப்புப் பொருள் கூறின், ராமாய நம, நாராயணாய நம, குமாராய நம, கணேசாய நம என்பவற்றிலும் அவ்வெழுத்துக் களைப் பிரித்து அக் குறிப்புப் பொருள் கூறல் வேண்டும், அங்ஙனங் கூறும் வழக்கம் இல்லை, அதோடு அவை ஐந்தெழுத்தும் ஆறெ ழுத்தும் ஏழெழுத்துங் கொண்ட தொடர்களைச் சேர்ந்தவை. திருமூலர் தலை சிறந்த ஓகியரும் மெய்ப்பொருளோதியரும் (தத்துவ ஞானியரும்) ஆதலால், அவர் எங்ஙனம் தவறாகக் கூறியிருக்க முடியும்? எனச் சிலர் வினவலாம். இதற்கு விடை, அவர் காலத்திற்கு முன்பே ஆரியச் சொற்களும் கருத்துக்களும் சிவனியத்தில் வேரூன்றி விட்டதனாலும், அவர் காலத்திலும் மொழியாராய்ச்சி யின்மையாலும், அவர் போலும் பெரியார்க்கும் ஆரியக் கலப்பை அறியவும் அதை நீக்கவும் இயலாது போயிற் றென்பதே. கணித அறிஞர் வரலாறறியாதது போல், மெய்ப் பொருளிய லாரும் அறிவியல் அறியார். மொழிநூல் ஓர் அறிவியல். அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குமரிநாட்டில் தோன்றிய தேனும், ஆரியரால் மறைக்கப்பட்டு விட்டது. திருமூலர் போல்வார் திங்களை யடையும் வான் கலத்தைத் தம் மன வலியால் தடுக்க முடியும். ஆயின், அதன் அமைப்பை விளக்க முடியாது. மன வலி வேறு; நூலறிவு வேறு. மந்திரம் என்பது மன வலிமையே யன்றி எழுத்தொலிப்பன்று. முன்னுதல் = கருதுதல். முன் - மன். மன் + திரம் (திறம்) = மன்றிரம் - மந்திரம். மன் - மனம். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப. (தொல். 1434). எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (குறள். 666) வீடு பேறும் நல்வாழ்வும் இறைவ னருளாற் பெறுவன வாதலின், அவன் திருப்பெயரை முழு நம்பிக்கையுடன் ஓதி வழிபடல் வேண்டும். இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. ஆயினும் தமிழ், உலக முதன் மொழியும், சிவ (இறைவன்) வழிபாடு தோன்றிய மொழியும், ஆரியத்திற்கு மூல மொழியும், இளைத்தவரும் பேசக் கூடிய மெல்லொலி மொழியும், முழுத் தூய முனிவர் வளர்த்த மொழியும், முதல் மறை இயன்ற மொழியும் ஆதலால், சிவ போற்றி என்னும் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தே சிவனுக் கேற்ற சிறந்த மந்திரமாம். நம என்னும் வடசொல் உடல் வணக்கத்தை மட்டும் குறிக்கும். போற்றி என்னும் தெய்வத் தமிழ்ச் சொல்லோ, வழுத்துதலோடு கூடிய வணக்கத்தையே குறிக்கும். சிவாய நம என்பதிலுள்ள உயிர் நாடிச் சொல், சிவ என்னும் தீந்தமிழ்ச் சொல்லே. ஆதலாற் சிவ போற்றி என்பதே அறிவுடைத் தமிழர்க்கு உரியதாம். சிவ சிவ என்றோதி வணங்கினும் போதும். சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமந். 2667). எந்த எழுத்திற்கும் குறிப்புப் பொருளாக எதையும் குறிக்கலாம். ஒவ்வொரு மதத்தாரும் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் குறிப்பர். கடவுள் வணக்கமும் முழு நம்பிக்கையும் கலந்தாலன்றி எந்த எழுத்தும் சொல்லும் பயன்படா. ஈராயிரம் ஆண்டாக வழங்கி வந்ததனால் மட்டும், எந்தத் தொடர்ச் சொல்லும் உண்மையான மந்திரம் ஆகிவிடாது. தமிழறியாத ஆரியர்க்கே சிவாய நம என்பது உரியதாம். தமிழர்க்கு உரியது சிவ போற்றி என்பதே. இது ஆரிய ஐந்தெழுத்தினும் வலிமையுள்ள தென்பதைத் தொடர்ந்தோதிக் காண்க. சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி என்று மாணிக்கவாசகரே தம் போற்றித் திருவகவலில் வழுத்தியிருத்தல் காண்க. சிவனே என்பது சேய்மை விளி வடிவும், சிவ என்பது அண்மை விளி வடிவும், ஆன ஒரே சொல்லே. சிவனை முன்னிலைப் படுத்தியோ உண்ணிலைப்படுத்தியோ விளிக்கும் போது, சிவ என்னும் வடிவே ஏற்றதாம். ஆதலால், சிவனே போற்றி என்பதும் சிவ போற்றி என்பதும் ஒன்றேயாம். இவையே, ஆரியர் தென்னாடு வருமுன்பும் இந்தியாவிற்குட் புகு முன்பும், தொன்று தொட்டு வழங்கிய குமரி நாட்டுத் தமிழர் வழக்காம். வேத மொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழை யாரியம் தேவமொழி யென்னும் ஆரிய ஏமாற்றும், தமிழரின் குருட்டு மூட நம்பிக்கை யுமே, சிவ போற்றி என்னும் ஒரு மொழி மூல உண்மைத் திருவைந் தெழுத்தை மறைத்ததென்று, உண்மையறிந்து செந்நெறி கடைப்பிடிக்க. சிவாய நம என்னும் சமற்கிருதத் தொடரும், ‘obeisance to Siva’ என்னும் ஆங்கிலத் தொடரும், பொருளளவிலும் பயனளவிலும் ஒன்றே. (15) மெய்ப் பொருளியல் எங்கும் நிறைந்துள்ள இறைவனே, சிவனியராற் சிவன் என்னும் பெயரால் வணங்கப்படுகின்றான். சிவன் பெயர்களுள் இறைவன் என்பதும் ஒன்று. இறைவன் எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் தங்குதல். இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனும் .... (மணி. 27: 89-91) என்று கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலே சிவன் வடிவங் கூறப்பட்டது. இறைவன் என்னும் பெயராலும் எண் குணத்தான் என்னும் இயல்பாலும், கடவுளும் சிவனும் ஒன்றே என்பது பெறப்படும். ஆயினும், இல்லறத்தார்க்கும் பொதுமக்கட்கும் எளிதாய் விளங்குமாறு, இறைவனையும் அவனாற்றலையும் பேருலகத் தந்தை யும் தாயுமாக உருவகித்துச் சிவனும் சிவையும் என்றனர். உலகிலுள்ள உயரிய உயிரினங்களெல்லாம் ஆணும் பெண்ணுமாக அமைந்தே கான்முளையைப் பிறப்பித்தலாலும், தாய்மைப் பண்பிலேயே அருண்மைப் பண்பு சிறந்திருத் தலாலும், இறைவனை அம்மையப்பனாகக் காட்டினர் அறிஞர். உண்மையில், இறை வனிடத்தில் ஆண்மையுமில்லை; பெண்மையுமில்லை. அவன் கட்புலனான உருவின்றி எங்கும் நிறைந்திருக்கும் ஆவிவடிவான பேராற்றல்; எண்ணுக்கும் எட்டாது எல்லாங் கடந்தவன்; இயற்கையாகவே எல்லாம் அறிந்தவன்; இமைப்பொழுதிற் கருதிய வளவிலேயே எத்துணையுமின்றி எல்லாம் படைக்க வல்லவன்; எவ்வகையிலும் பகுக்கப்படாத ஒப்புயர்வற்ற தன்னந் தனிப்பொருள்; தொடக்கமிலியாக முத்தொழிலுந் தானே செய்து வருபவன்; இம்மியும் திரியாது என்றும் ஒரே நிலைமையில் இருப்பவன். படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன் (27: 92-95) மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியக் குரவன். இங்ஙனம் மூன்றாயிருந்த சிவன் தொழிலை மறைத்தல் (துரோபவம்) அருளல் (அனுக்கிரகம்) என்னும் இரண்டு சேர்த்து ஐந்தாக்கி, அவற்றைச் செய்பவர், முறையே, நான் முகன், திருமால், உருத்திரன், பெருவுடையான் (மகேசுவரன்), என்றும் நல்லான் (சதாசிவன்) என்னும் ஐவர் என்றும்; ஐந்தொழிலும், பருவியல் (தூல) ஐந்தொழில், நுண்ணியல் (ஸூக்ஷ்ம) ஐந்தொழில், அதி நுண்ணியல் ஐந்தொழில் என மூவகைப்படுமென்றும்; சிவனைச் சிவம், ஆற்றல் (சக்தி), என்றும் நல்லான்மை (சாதாக்கியம்), பெருவுடையான்மை (ஈசுரம்), தூவறிவை அல்லது வாலறிவம் (சுத்த வித்தை) என்னும் ஐம் மெய்ப்பொருளாகக் கூறுபடுத்தி; அவற்றில், முறையே, அறிவே கொண்ட சிவனும், வினையே கொண்ட ஆற்றலும், அறிவும் வினையும் சமமாகக் கொண்ட என்றும் நல்லானும், அறிவு குன்றி வினை மிக்க பெருவுடை யானும், வினை குன்றி அறிவு மிக்க வாலறிவனும் (வித்தியேசு வரனும்) நின்று தொழிற்படுவ ரென்றும்; சிவம், ஆற்றல், ஓதை (நாதம்), விந்து என்னும் நான்கும் ஒடுக்க (லய) நிலையிலுள்ள சிவனின் உருவிலா (அரூப)த் திருமேனி களும்; என்றும் நல்லான் என்பது நுகர்வு (போக) நிலையிலுள்ள சிவனின் உருவ வுருவிலா (ரூபா ரூப) த் திருமேனியும்; பெருவுடை யான், உருத்திரன், மால், நான்முகன் என்னும் நான்கும் அதிகார நிலையிலுள்ள சிவனின் உருவ (ரூப)த் திருமேனிகளும், ஆகு மென்றும்; திருவிலங்கம் (லிங்கோற்பவன்), நல விருக்கையன் (சுகாசனன்), ஆற்றல் தோற்றி (சக்திதரமூர்த்தி), மணவழகன் (கலியாண சுந்தர மூர்த்தி), மங்கை பங்கன் (அர்த்த நாரீசுவரன்), சிவை கந்தர் சேர்ந்தான் (சோமா கந்தன்), சக்கரமீந்தான் (சக்ர வரதன்), முத்திருமேனி (திரி மூர்த்தி), மாலிடங் கொண்டான் (ஹரி யர்த்தன், சங்கர நாராயணன்), தென்முக நம்பி (தக்ஷிணா மூர்த்தி), மண்டையேந்தி (பிக்ஷாடன மூர்த்தி, காபாலீ), குறளன் முது கொடித்தான் (கங்காளன்), காமனைக் காய்ந்தான் (காமாரி), காலனை யுதைத்தான் (கால சங்கார மூர்த்தி), கடல் வளர்ந்தானைக் கொன்றான் (சலந்தராரி), முப்புர மெரித்தோன் (திரிபு ராரி), எண்காற் புள்ளுருவன் (சரபமூர்த்தி) நஞ்சுண்டான் அல்லது கறைமிடற்றன் (நீலகண்டன்), முப்பாதன் (திரிபாதன்), ஒரு பாதன் (ஏக பாதன்), பேமுருவன் (பைரவன்), விடையேறி (இடபாரூடன்), பிறை சூடி (சந்திர சேகரன்), நடவரசன் (நடராஜன்), கங்கை தாங்கி (கங்கா தரன்) என்னும் இருபத்தைந்தும் சிவ வழிபாட்டு வடிவங்கள் என்றும்; ஆற்றலை (சக்தி) விருப்பாற்றல் (இச்சா சக்தி), அறிவாற்றல் (ஞான சக்தி), வினையாற்றல் (கிரியா சக்தி), என மூன்றாக வகுத்தும், மேலும் தொண்டாக (ஒன்பதாக) விரித்தும், ஐம்பதாகப் பெருக்கியும்; மாயை (மாயா, மோஹினீ), காலம், ஊழ் (நியதி), கலை, அறிவம் (வித்தை), விழைவு (அராகம்), ஆதன் (புருஷ) என்னும் ஏழும் அறிவ மெய்ப்பொருள் (வித்யா தத்வம்) என்றும், அவற்றை இறைவன் ஈறிலி (அனந்தன்) என்னும் வாலறிவன் வாயிலாகக் கருமிய (காரிய)ப்படுத்துவா னென்றும்; இங்ஙனம் சிவமெய்ப்பொருள் ஐந்தும், அறிவ மெய்ப்பொருள் ஏழும், எல்லா மதங்கட்கும் பொதுவான ஆத மெய்ப்பொருள் இருபத்து நான்கொடு கூடி, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத் தாறென்றும், இது சிவனியக் கொண்முடிபுச் சிறப்பென்றும்; தமிழரை மயக்கி, உயர்ந்த அறிவியற் கல்வியும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரும் குருட்டுத்தனமாக நம்பி உருப் போட்டுக் கிளிப் பிள்ளைப் பாடமாக ஒப்பிக்குமாறு செய்துவிட்டனர் ஆரியர். இலங்கம் (லிங்கம்), மங்கை பங்கன், விடையேறி, நடவரசன், அந்தணன் அல்லது குரவன் என்னும் ஐந்தே தமிழர் வழிபாட்டு வடிவம் என்பது, முன்னரே கூறப்பட்டது. சிவ மெய்ப்பொருள் ஐந்தும் தூய மாயையில் தோன்றின வென்பது, எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் இறைவனை ஐங்கூறிட்டதொடு, அவனை மாயையினின்று படைத்தது மாகின்றது. ஆண் பெண் பான்மையின்றி ஒரே தன்மையாய் ஆற்றல் வடிவாயுள்ள இறைவனை, பொதுமக்கட்கு அம்மையப்பனாகக் கூறிய அணி வகையை அறியாது, மாந்தரைப் போன்ற கணவனும் மனைவியுமாகக் காட்டி, தலையுங் காலுமில்லாத பல்வேறு கதைகளைக் கட்டி, சொல்லளவாகவுள்ள சிவன் சிவைக்கு ஆண்டுதொறும் திருமணம் நடத்திவைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்! மாயை என்று ஒரு தனிப் பொருளில்லை. நாற் பூதமும் வெளியில் அணுக்களாக மறைந்து நிற்பதே மாயை. மாய்தல் மறைதல். மாய் - மாயை. ஒ.நோ. சாய் - சாயை = நிழல். மண்ணினின்றே குடமும் மரத்தினின்றே பெட்டியும் ஆதல் போல், அழிப்புக் காலத்தில் அணுக்களாக ஒடுங்கி நின்ற நிலம் நீர் தீ வளி என்னும் நாற் பூதங்களே, படைப்புக் காலத்தில் மீண்டும் திரண்டு தோன்றும். இடம் (வெளி), காலம், இறைவன் என்னும் மூன்றும், வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருள்களாம். காலம் கருத்துப் பொருளே. நில் - நிற்றம் - நித்தம் - வ. நித்ய. நித்தம் - நித்தல். ஒ.நோ. வெல் - வெற்றம், கொல் - கொற்றம். குற்று - குத்து, முற்றகம் - முத்தகம். இடம் உண்மையின் (இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது ஒரே தன்மையது. அழியும் பொருள்களை நோக்கியே இறப்பு நிகழ் வெதிர்வு என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவும் தட்ப வெப்ப நிலை வேறுபாடும் பற்றிய சிறு பொழுதும் பெரும் பொழுது மாகவும், அது பகுக்கப்படும். எதிர்வெல்லாம் நிகழ்வாகிப் பின்பு இறப்பாகிவிடும். கால்போல் நீண்டு செல்வது காலம். கால் - காலை, கால் - காலம் - வ. கால. காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. என்னும் தொல்காப்பிய நூற்பாவை (541) நோக்குக. உலவுதல் = வளைதல், சுற்றுதல், திரிதல், உருளுதல். உலவு - உலகு - உலகம் - வ. லோக. உலகு = உருண்டையா யிருப்பது, சுற்றுவது. வினை, அறிவு, விருப்பம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பன ஆதனோடு கூடிய அகக்கரணங்களும் புறக்கரணங்களுமான ஆத மெய்ப்பொருள்களாதலால், கலை, அறிவம் (வித்தை), விழைவு (அராகம்) என்னும் அறிவ மெய்ப்பொருள்கள் உண் டென்பது மிகைபடக் கூறலாம். ஆகவே, முற்கூறிய இருபத்தெண் மெய்ப் பொருள்களே உண்மையானவை என அறிக. சித்தம், குணம், முதனிலை (பிரகிருதி), மான் என்பன ஒரு பொருட் சொற்கள். திரவிட நாகரிகத்தை ஆரியமாகக் காட்டுவதற்கு, பொருட் டொகைகளைப் பெருக்குவதும் புதுச்சொற்களைப் புணர்ப்பதும் ஆரியர் வழக்கமாகும். திருவாசகத் திருவெம்பாவைப் பழைய உரை முகத்தில், தொள்ளாற்றல்களின் (நவ சக்திகளின்) பெயர் அம்பிகை, கணாம்பிகை, கௌரி, கங்கை, உமை, பராசத்தி, ஆதிசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என்றும்; உரையுள், மனோன்மணி, சர்வ பூத தமனி, பெலப்பிரதமனி, பெலவிகரணி, காளி, இரவுத்திரி, சேட்டை, வாமை, சிவசத்தி என்றும்; கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம், விழுப்பொரு ளொன்றுமின்றி வெறுஞ் சொல் லாரவாரத்தால் தமிழரை மயக்கி அடக்கி யாள்வதற்கே, புனையப்பட்டன என அறிக. சொல்லுலகம் (சத்தப் பிரபஞ்சம்) மெய்ப்பொருளியலில், மொழித் துறையில்தான், ஆரியர் ஏமாற்றும் தமிழர் ஏமாறலும் இருசாரார் அறியாமையும் விளங்கித் தோன்றுகின்றன. சொல்லுலகம், பொருளுலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) என உலகம் இரு வகைப்படும் என்றும்; அவற்றுட் சொல்லுலகம் வண்ணம் அல்லது வரணம் (வர்ண), கிளவி (பதம்), மந்திரம் (மந்த்ர) என முத்திறப்படும் என்றும்; வரணம் ஐம்பத்தொன்றும், பதம் எண்பத்தொன்றும், மந்திரம் பதினொன்றும், ஆகுமென்றும்; அறிவுக் கரணியமாயிருப்பதால், சொல்லுலகம் தூய (சுத்த) மாயையின் கருமியம் (காரியம்) என்றும்; அது உந்தியிலிருந்து எழுப்பப்படும் உதானன் என்னும் காற்றினால் விளைவதென்றும்; வாய்ச்சொல் (வாக்கு) நுண்ணிலை (சூக்குமை), கருநிலை (பைசந்தி), இடைநிலை (மத்திமை), உருநிலை (வைகரி) என நானிலைய தென்றும்; அந் நால்வகை வாய்ச்சொல்லாலேயே வேறுபடுத்துணர்வு (சவிகற்ப ஞானம்) உண்டாகும் என்றும், அவையின்றேற் பொதுப்படுத்துணர்வே (நிர்விகற்ப ஞானமே) உண்டாகும் என்றும்; ஆரியர்தம் கருத்துக்களைச் சிவனிய மெய்ப்பொருளியலிற் புகுத்திவிட்டனர். ஆரிய மந்திரம் எழுகோடி யென்னுங் கூற்று முள்ளது. சொல்லுலகம் என்று கண்கூடும் நிலையும் ஆன ஒரு தனியுலகம் இல்லவே இல்லை. வெளியிடத்திற் பொருள்கள் மோதுவதனாற் செவிப் புலனான ஒலியும் ஓசையும் தோன்றி, உடனே நீர் மேலெழுத்துப் போல் மறையும். அவற்றைக் குறிக்கும் வரிவடிவு களே, அவை எழுதப்பட்ட பொருள்கள் உள்ளவரை கட்புலனாக நிற்கும். நாடாப் பதிவானிற் பதியப்பட்ட பேச்சும் பாட்டுமான ஒலிகளும், அவை தோன்றியவுடனேயே மறையும். எல்லா வொலிகளும், கருத்தறிவிக்கும் குறிகளான சொல்லும் சொல்லுறுப்பு மாகப் பயன்படா. மாந்தன் வாயிற் பலுக்க (உச்சரிக்க)க் கூடிய ஒலிகளே சொற்களாம். ஒரு வகுப்பார் அல்லது இனத்தார் வழங்கும் சொற்றொகுதியே மொழியாம். மொழியில்லாமற் பறவையும் விலங்கும் போல் ஒரு சில வொலிகளைக் கொண்டே, முந்தியல் மாந்தர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர். முதற் காலத்திற் சொற்களாகவே மொழியொலிகள் தோன்றின. நாகரிக மாந்தன் மொழியறிவு பெற்ற பின்பே, சொற்களை எழுத்தொலிகளாகப் பகுத்தான். ஓரெழுத்தொலியாகவும் பலவெழுத்தொலியாகவும் சொற்கள் இரு வகையாய் அமையும். பல எழுத்தொலிகள் மக்களெல்லார்க்கும் பொதுவாயினும், மாந்தனின் வளர்ச்சிக் காலம், தட்ப வெப்ப நிலை முதலியவற்றின் வேறுபாட்டால், பல இனத்தார் மொழிகளில் சிலவும் பலவுமான சிறப்பெழுத்தொலிகளும் அமைந் துள்ளன. தமிழர் குமரிநாட்டில் தோன்றிய முந்திய இனத்தாராதலின், அவர் மொழியில் முப்பதொலிகளே அமைந்துள்ளன. அவை பெரும் பாலும் மிக எளியன. ஆரியர், அவருள்ளும் வேத ஆரியர், மிக மிகப் பிந்தியவராதலின், அவர் மொழியில் 51 ஒலிகள் அமைந் துள்ளன. அவற்றுட் பல ஒலித்தற்கு அரியன; சில செயற்கை யானவை. சிவனிய மெய்ப்பொருளியலில் எழுத்து 51 என்று கூறியிருப்பது, சமற்கிருதம் நோக்கியே யாம். அது தமிழர் மொழியன்று. கோலெ ழுத்துக் காலத்திலும் வட்டெழுத்துக் காலத்திலும் தமிழிலும் 51 எழுத்திருந்தன என்று கூறுவது, வரலாற்றறிவும் மொழி நூலறிவும் அறவும் இன்மையையே காட்டும். கோவில்களில் 51 விளக்கேற்றி எழுத்தாலத்தி (அக்கராலத்தி) எடுப்பதும், ஆரிய மொழி யமைப்புப் பற்றியே. எழுத்தொலி அல்லது மொழியொலி மூச்சுக் காற்றாகிய உயிர்ப்பு வளியாற் பிறக்குமேயன்றி, ஆரியர் கூறியதுபோல் உதானன் என்னும் உந்தி வளியாற் பிறவாது. காட்சியும் கருத்தும் ஆகிய இருவகைப் பொருள்களும் தோன்றிய பின்னரே, அவற்றைக் குறிக்கும் சொற்கள் மாந்தனால் அமைக்கப்பட்டன. பொருள் தோன்றிய போதே சொல்லும் உடன் தோன்றிற்றென்றும், சொல் இயற்கையாகப் பொருளு ணர்த்து மென்றும், இடுகுறியாகவும் சொற்கள் இருக்கு மென்றும், வடமொழி தேவமொழி யென்றும், அது வேறெம் மொழியினின்றும் கடன் கொள்ளாதென்றும், உண்மைக்கும் மொழி நூற்கும் மாறான பல அறியாமையும் ஏமாற்றும் ஒருங்கே கலந்த கூற்றுக்கள், தமிழுக்கும் தமிழனுக்கும் ஓரளவு கூற்றாகவே முடிந்தன. அகார முதலாக ஐம்பத்தொன் றாகி (திருமந். 2650) ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும் ஆதி யெழுத்தவை ஐம்பத்தோ டொன்றென்பர் (திருமந். 942) அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே (திருமந். 943) ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. (திருமந். 944) என்று திருமூலர் திருமந்திரத்தினின்று மேற்கோள் காட்டிப் பயனில்லை. இதற்கு விடை திருவைந்தெழுத்து விளக்கத்திலேயே கூறப்பட்டு விட்டது. ஐம்பத்தோ டொன்றென்பர். என்று பிறர் கூற்றாகக் கூறியதும் இங்குக் கூர்ந்து நோக்கத்தக்கது. உலகனைத்துந் தழுவிய வரலாறும் மொழி நூலும் போன்ற அறிவியற் செய்திகளை, ஒருசார் தமிழர்க்கு மட்டும் ஏற்குமாறு திரித்துக் கூறுவதால், கருதிய பயன் கைகூடிவிடாது. ஓர் உலகப் பொதுவுண்மையை உலக அறிஞர் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். பொய் யொடு கலந்த மெய்யும் பொய்யாகவே போம். (16) இறையுயி ருறவுக் கொள்கை இறைவனுக்கும் ஆதனுக்கும் இடைப்பட்ட உறவியல்பு பற்றி, ஒருமை (அத்துவிதம்) என்னும் ஒற்றுமையுறழும் (அபேத வாதமும்), இருமை (துவைதம்) என்னும் வேற்றுமை யுறழும் (பேத வாதமும்), சிறப்பொருமை (விசிஷ்டாத்துவிதம்) என்னும் ஒன்றிய வேற்றுமை யுறழும் (பேதா பேதவாதமும்) தோன்றியுள்ளன. இம் மூன்றற்கும் பொதுவான தூ வொருமையே (சுத்தாத்து விதமே) சிவனியக் கொள்கையென, இக்காலக் கொண் முடிபர் கூறுவர். தூ வொருமையை வெள்ளொருமை எனினும் ஒக்கும். இறைவனொடு ஆதன் இரண்டறக் கலந்ததெனின், பின்னதன் இன்ப நுகர்ச்சிக் கிடமில்லை. இரண்டும் வெவ்வேறெனின், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கு இழுக்காகும். ஆகவே, சிறப்பொருமை என்பதே உத்திக்குப் பொருந்து வதாகும். ஒருமையும் இருமையும் ஆரியராற் புகுத்தப்பட்ட கொள்கைகள். சிறப் பொருமை இராமானுசாச்சாரியரால் திருமாலியத்திற் புகுந்தப்பட்டதேனும், அதுவே பழந்தமிழ்க் கொள்கையாகும். ஆரியக் கொள்கைகள் தோன்றும் வரை, அது கூறப்படத் தேவை யின்றி மறைவாயிருந்தது. முக்கொள்கையையுந் தழுவியது தூ வொருமை யென்பது, முரண்பட்டதும் கோமுட்டி சான்றுரை போன்றதுமாகும். இறைவனின் நிழல் வடிவே எல்லாப் பொருள்களுமென்றும், காண்பன வெல்லாம் கனவிற் கண்டவை போலப் பொய்யென்றும், இம் மெய்யுணர்வைப் பெற்ற வளவிற் பிறப்பின்றி வீடுபெறலா மென்றும், கூறுவதெல்லாம் பிதற்றல்களும் பித்துரைகளுமே. இறைவனும் ஆதனும் ஒன்றென்று சொல்லிக்கொண்டே, நால்வேறு மக்கள் வகுப்பும் பிராமண வுயர்வும் பிறப்பிலமைந் தவையென்னென்று கூறுவது, எத்துணைத் தன் முரணும் நெஞ்சழுத்த முமான கூற்றாம்! (17) மதப் பிரிவுகள் சிவனியம், மாலியம் என இரண்டாகவே யிருந்த மதங்கள், குமரனியம் (கௌமாரம்), ஆனைமுகவம் (காணபத்தியம்), கதிரவம் (சௌரம்), காளியம் (சாக்தம்) என்னும் நான்கொடு ஆறாயின. சிவனியத்திற் குள்ளேயே, அகச் சமயம் ஆறென்றும் அகப் புறச் சமயம் ஆறென்றும் பன்னிரு பிரிவுகள் தோன்றின. அபிதான சிந்தாமணியார் ஊர்த்த சைவம், அனாதிசைவம் முதலிய பதினேழ் சிவனியப் பிரிவுகளைக் கூறியுள்ளனர். பாசண்டம் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு (9:15), தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று பொரு ளுரைத்துள்ளார் அடியார்க்கு நல்லார். தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன் (வளையாபதி). பாசண்டத் துறையும் இவற்றுட் பலவாம் பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே. (திவா. 12-ஆவது). மதப் பிரிவுகள் பல்கினமையால், தமிழில் வடசொற் கலப்பும், தமிழர்க்குள் பிரிவினையும், மேன் மேலும் மிக்கன. (18) கடவுட் சமய மறைப்பு உருவ வழிபாட்டினாலேயே ஆரியர்க்குப் பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத்தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும், உண்மையால், கடவுட் சமயம் மறைக்கப்பட்டது. (19) தொழுகை நூற் புணர்ப்பு திருக்கோவில்களிலெல்லாம், என்றும் பிராமணரே பூசகரா யிருந்து சமற்கிருதத்தில் வழிபாடு நடத்துமாறு, ஆகமம், தந்திரம் முதலிய தொழுகை நூல்களை அமைத்துக் கொண்டனர். ஆகமம் = தோன்றியம் (புதிதாகத் தோன்றியது). (20) தொன்ம மறவனப்புத் தொடர் சொற்பொழிவுகள் பிராமணரைத் தெய்வமாக வுயர்த்தியும் அவர்க்குத் தொண்டு செய்வதை வற்புறுத்தியுங் கூறும், தொன்ம (புராண) மறவனப்பு (இதிகாச)க் கதைகளைத் தொடர்ந்து ஊர்தொறும் விழாக் காலங்களில் இசையொடு சொல்லி வந்ததனால், ஆரியப் பற்று பொதுமக்கள் உள்ளத்திற் பசுமரத் தாணி போற் பதிந்து, அரத்தத் தோடரத்தமாய்க் கலந்து ஊறிப் போயிற்று; பாரத இராமாயணத் தொடர் சொற்பொழிவுகள், இன்றும் நடைபெறுகின்றன. ஆரியத்தால் விளைந்த கேடுகள் சில 1) கொலைத் தண்டனை யின்மை பிராமணனுக்குக் கொலைத் தண்டனையாவது, அவன் தலையை மொட்டையடித்து அவன் பொருள்களுடன் அவனை வேற்றூர்க்கு அனுப்பி விடுவதே, என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. அரசனுட்பட, யாரேனும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்று விடின், அப் பிராமணனது ஆவி கொன்றவனைத் தொடர்ந்து பழிவாங்கிவிடும் என்று, பிராமணர் ஒரு கருத்தைப் பரப்பி விட்டனர். அதனால், கேரள நாடுகளில், பிராமணக் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனை விலக்கப்பட்டிருந்தது. மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு கொலைக் குற்றவாளியான பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான். அதனாற் பிராமணரிடையே ஒரு படபடப்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றது. அது பற்றிய கதை வருமாறு : குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான். அதனால் அப் பிராமணன் ஆவி அரசனை அல்லும் பகலும் தொடர்ந்தது. அரசன் அதினின்று தப்புவதற்கு எல்லாச் சிவன் கோவில்களிலும் வழிபட்டான். இறுதியில் திருவிடை மருதூரில் அப்பழி நீங்கிற்று. ஆயினும், அரசன் கோவிலினின்று வெளியே வந்தபோது, அங்கும் அவ்வாவி காத்துக் கொண்டிருந்ததைக் கண்டு இறைவனிடம் முறையிட்டான். இறைவன் திருவுண்ணாழிகைச் சுவர்ப் பக்கத்திலுள்ள ஒரு துளைவழியாக அவனைப் பின் பக்கம் போக்கி, மேலைக் கோபுர வாசல் வழித் தப்புவித்தான். அதன் பின்னும், அரசன் அஞ்சித் தன் குதிரை மேலேறி ஒரு கல் தொலைவு விரைந்தோடித் திரும்பிப் பார்த்தபோது, பிராமணக் கொலைப் பழிப் பேய் தொடராது நின்று விட்டது கண்டான். அவ்விடமாகிய திரிபுவனத்தில், தன் நடுக்கந் தீர்த்த சிவனுக்கு ஒரு சிறந்த கோவில் கட்டினான். இக் கதையை மெய்ப்பிக்கும் பொருட்டாக, திருவிடை மருதூர்க் கோவில் திருவுண்ணாழிகைச் சுவரருகில் ஒரு துளையும், கீழை வாயிற் பக்கத்தில் பிராமணப் பேயுருவும், கோவிற் கல்வெட் டுக்கள் சிலவும், இன்றும் உள்ளன. எல்லாம் வல்ல இறைவனே பிராமணப் பேய்க்கு அஞ்சியபோது, மாபெரு வேந்தராயினும் மக்கள் அஞ்சாதிருக்க முடியுமா? நடுக்கந் தீர்த்தான் என்று பெயர்பெற்றிருக்க வேண்டிய சிவன், கம்பஹரேசுவரர் எனப் பெயர்பெற்றது, ஈசுவர சிவா என்னும் பிராமணக் குரவனின் வடமொழி வெறியாகும். 2) கோவிற் களவு தெய்வ வுடமையாகிய திருக்கோவிற் பொருட்களைத் திருடி விற்பதும் பயன்படுத்துவதும், கையாடுவதும் தீராத் தீவினை யாகக் கருதப்படும். திருப்பனந்தாட் கோவிலில் வெள்ளித் தட்டைத் திருடிய பூசகனுக்கு, ஓரிரு நாள் வேலை நிறுத்தமே தண்டனையாக இடப்பட்டது. தஞ்சாவூரை யாண்ட விசயராகவ நாயக்கர் (கி.மு. 1633-1673), தம் குடிகளின் சேமத்தைக் கருதி, நாள்தோறும் தாம் உண்ணு முன் பன்னீராயிரம் பிராமணருக்கு உண்டி படைத்துவந்தார். ஓராண்டு பன்னாள் விடாப் பெருமழை பொழிந்து எங்கும் வெள்ளமாகி விட்டதனால், பிராமணருக்கு உண்டி சமைக்க விறகு கிடைக்கவில்லை. அதனால், அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துலாக்கட்டை, கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு, பலகணி முதலிய எல்லா மர வுறுப்புக்களையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த பின், பிராமண ரூண் தடையுண்ணாவாறு, அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பட்டாடைகளெல்லாம் எண்ணெயில் துவைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில், திருவரங்க நாய்ச்சியாரின் விலைமதிக்க முடியாத வயிர மூக்குத்தி களவுபோய்விட்டது. அங்குள்ள இடவகன் (தானீகன்) ஆன பிராமணப் பூசகன் திருடினானென்று அக் கோவிலதிகாரிகள் அவனை நையப் புடைத்தனர். அவன் அடி தாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான். உடனே ஒரு பிராமணப் பெண், அரங்க நாயகி தன் மீதேறியதாக நடித்து அணங்காடி, பிராமண வுண்டி சமைக்க அரண்மனைப் பட்டாடைகளை எண்ணெய் தோய்த் தெரித்த போதெழுந்த புகையைப் பொறுக்க முடியாது, மடைப்பள்ளியாரெல்லாம் ஓடிப்போய் விட்டனர். அரங்க நாயகியே ஒரு பிராமண மடை மகளாக வந்து சமைத்தாள். அவளும் புகையால் முகத்திலும் மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழு நீர்த்தொட்டியில் மூக்குச் சீந்தியபோது, அவள் மூக்குத்தி அத்தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே கிடக்கின்றது. அதற்காகக் கோவிற் பூசகனை அடிப்பது அறங்கடை. என்று விளம்ப, நாயக்கரும் அங்ஙனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து, அரங்க நாயகியே தன் அரண் மனைக்கு வந்தருளினாளென்று அளவற்ற மகிழ்ச்சி கொண்டாடி, அம்மூக்குத்தி போல் எண் மூக்குத்தியும் நாய்ச்சியார் பொற் படிமையொன்றும் செய்வித்து, மேள தாளங்களுடன் திருவரங் கத்திற்கு அட்டோலக்கமாய் அனுப்பி வைத்தார். ஆங்கூர்க் கோவிற் பூசகன், பூசை வேளையில் திருவமுது படைக்காது வெறுங்கொட்டு முழக்கம் மட்டும் செய்வித்து வந்தது, தேங்குபுக ழாங்கூர்ச் சிவனேயல் யாளியப்பா நாங்கள் பசித்திருக்கை நாயமோ - போங்காணும் கூறுசங்கு டோன்முரசு கொட்டோசை யல்லாமற் சோறுகண்ட மூளியார் சொல். என்னும் இரட்டையர் பாடல் தெரிவிக்கின்றது. சங்கர நயினார் கோவிற் சிவமால் (சங்கர நாராயணன்) செப்புப் படிமையை, செண்பகக் கண் நம்பியென்னும் பூசகன் திருடிக் கொண்டு போய்த் திருவுத்தர கோச மங்கையில் விற்று விட்டான். அவனுக்குத் தண்டனையே யில்லை. 3) தமிழ மத உட்போர் கிறித்தவமும் இசலாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறு பட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத்தொழில் செய்பவன் என்று கூறப்படும். சமயகோடிகளெலாம், தந்தெய்வம் எந்தெய்வமென் றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது என்று தாயுமானவரும், முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் என்று திருமூல நாயனாரும், தோள் கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன தாள் கண்டார் தாளேகண்டார் தடக்கைகண் டாருமஃதே வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக்கண்டார் ஊர்கொண்ட சமயத் தன்னான் உருவுகன் டாரையொத்தார். என்று கம்பரும், பாடியிருப்பதை நோக்குக. சிறுதெய்வ வணக்கத்திலேயே நீண்ட காலமாக அடிப்பட்டுக் கடவுளைப் பற்றிக் கருத்தில்லாத ஆரியர், சிவனும் திருமாலும் வேறென்று கொண்டு அவரை முத்திருமேனிக் கூண்டிற்குட் புகுத்தி, ஒவ்வொரு தொழிலே வகுத்ததனால், சிவனியரும் மாலியருமான தமிழரும் மயங்கி, முத்தொழி லிறைமை யில்லாத சிவமாலருள் எவன் பெரியவன் என்று வினாவெழுந்து, அதனால் தமிழர்க்குள்ளேயே கடும்போர் மூண்டது. சிறந்த சிவனடியானான இரண்டாங் குலோத்துங்கச் சோழன் (1138-1150) இப் போரில் ஈடுபட்டு, சிவனிலும் பெரிய தெய்வ மில்லை. என்னும் வாசகம் பொறித்த செப்புப்பட்டயத்திற் கையெழுத்திடுமாறு, திரு இராமானுச அடிகளை அழைத்தான். அடிகட்குத் தலைமாறாகக் கூரத்தாழ்வான் என்னும் மாணவகரே (சீடரே) சென்று, சிவத்திலும் பெரியது துரோணம் என்று கூறியதனால், உடனே தம் இரு கண்ணையும் இழந்தார். வடமொழியிற் சிவம் என்பது குறுணி (ஒரு மரக்கால்) என்றும், துரோணம் என்பது தூணி (இரு மரக்கால்) என்றும் திருமால் என்றும், பொருள்படும். சிவத்தினும் பெரியவன் திருமால் என்னுங் கருத்தை, இங்ஙனம் நகையாண்டி செய்து கூறியதனால், சிவனையும் குலோத்துங்கனையும் ஒருங்கே பழித்த குற்றத்திற் குள்ளானார் கூரத்தாழ்வார். இராமானுச அடிகளோ, இவ் விளைவை அறியு முன்னரே, ஒய்சள நாட்டிற்கு விரைந்து சென்று தப்பினார். சிவ வோதி நுவற்சி. (சிவ ஞான போத) ஆசிரியர் மெய்கண்டார், வரலாற்றறிவும் மொழி நூலாராய்ச்சியும் அக்காலத்தின்மையால், முத்திருமேனிக் கொள்கையினின்று தப்ப வழிதெரியாது, அந்தம் ஆதி என்மனார் புலவர் என்றொரு வட்டவழி ஏரண முறையைக் கையாண்டு, சிவனுயர்வை நாட்டினார். தொன்ம (புராண)க் கதைகளையே சான்றாகக் கொண்டு, சிவமாலரின் ஏற்றத் தாழ்வைக் கூறும் அரியர (ஹரிஹர) தார தம்மியம் என்றொரு தமிழ்ப் பனுவலு முண்டு. இது அப்பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு 4) சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழச் சார்பும். சிவனியம் மாலியம் இரண்டும் தமிழ மதங்களேனும், முந்தித் தோன்றியதனாலும், பெரும்பான்மைத் தமிழராற் கைக் கொள்ளப் பெறுவதனாலும், சிவனியமே மிகுந்த தமிழச் சார்பாயிருத்தல் வேண்டும். ஆயின், இயற்கைக்கு முரணாகத் திருமாலியமே மிகுந்த தமிழச் சார்பாக வுள்ளது. சிவனியம் மாலியம் ஆரிய வேதமே வேதமெனத் நாலாயிரத் தெய்வப் பனுவலும் தமிழராலும் ஒப்புக் ஆரிய வேதத்தோ டொப்பத் கொள்ளப்பட்டுள்ளது. திராவிட வேதம் என (த்தென் கலை)ப் பிராமணராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மெய்ப்பொருளியல் மெய்ப் பொருளியல் ஆரியக் கலப்பு மிக்கது. ஆரியக் கலப்பில்லது. திருஞான சம்பந்தராகிய நம்மாழ்வாராகிய தமிழரே பிராமணரே தலை சிறந்த தலைசிறந்த ஆழ்வார். அடியார். தில்லை நடவரசன் திருப் திருவரங்க நம்பி படிமையைக் காணவந்த திருப்படிமையைக் காண அஞ்சித் சிறந்த அடியாரான தொலைவில் நின்ற நந்தனார், தீண்டாதவர் திருப்பாணாழ்வார், திருவரங்க என்று தீயிலிட்டுக் நம்பி யேவலால் தலைமைப் கொளுத்தப்பட்டார். பூசகராகிய பிராமணர் தோள் மீது ஏற்றிக்கொண்டு வரப்பட்டுத் தெய்வத் திரு முன்பு நிறுத்தப் பெற்றார். தெய்வப் பெயரும் சமய தெய்வப் பெயரும், ஆழ்வார் குரவர் பெயரும் திருநகர்ப் பெயரும் திருநகர்ப் பெயரும் பெயரும் பெரும்பாலும் பெரும்பாலும் தென்சொற்களாக வடசொற்களாக அமைந்துள்ளன. அமைந்தும், மாற்றவும் பட்டுள்ளன. கொண் முடிபு வீடுபேற்று கொண் முடிபு வீடுபேற்று வாயில்களை ஆரிய வாயிலைத் தமிழ முறைப்படி கூறுவது. முறைப்படி கொள்வது திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் முதல்நாள் கோயில் வாயிலில் நின்று பாடினார். திருவாரூரிலும் அங்ஙனமே கோவில் வாயிலில் நின்று பாட, அதன் பின் அவர்க்கு வடதிசைக்கண் வேறு வாயில் தனியாக வகுக்கப்பட்டது. திருக்காழியிற் சம்பந்தர் அவரைக் கோயிற் புறமுன்றிற்குக் கொண்டு சென்று கும்பிடுவித்தார். நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞான சம்பந்தன் சொன்ன பண்ணியல் பாடல் ....... பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன இன்புடைப் பாடல்கள் பத்தும் .............. கண்டல்கள் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன் சொன்ன கொண்டினிதா விசைபாடி ....................... எனவும், பிறவாறும், சம்பந்தர் தம் தேவாரப் பதிகந்தொறும் இறுதியில் தம்மைப் பற்றிக் குறித்துள்ள முறைமையையும், அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின், சம்பந்தன் தன்னைப் பாடினான் சுந்தரன் பொன்னைப் பாடினான் என்னப்பன் என்னைப் பாடினான். என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருத்த முள்ளதாகவே தோன்றுகின்றது. சம்பந்தர் வேதத்தையும் வேதியரையும் வேள்வியையும் பலவிடத்தும் பாராட்டிப் போற்றியிருப்பதை நோக்குமிடத்து, அவர் சிவ நெறியை மட்டுமின்றி வேத நெறியையுங் காக்கவே, சமண மதத்தைப் பாண்டி நாட்டில் தொலைத்தார் என்று கருத நேர்கின்றது. மரைக் காட்டில், திருநாவுக்கரசர் பாடிய பதிக இறுதியில் கதவு திறந்ததும், சம்பந்தர் பாடிய பதிகத் தொடக்கத்திலேயே கதவு சாத்திக் கொண்டதும், திருவீழி மிழலையிற் சம்பந்தர் படிக்காசு வட்டங் கொடுத்தும் நாவுக்கரசர் படிக்காசு வட்டங் கொடாதும் மாற்றப்பட்டதன் விளைவான பிராமணர் சூழ்ச்சி போலும்! மறைக்காடு என்னும் பெயரே, அவ்வூர்ப் பிராமணப் பூசகரின் புரட்டை விளக்கப் போதிய சான்றோம். முத்தொழிற் சிவனை அழிப்புத் திருமேனி யாகவும், முத்தொழின் மாலைக் காப்புத் திருமேனியாகவும், ஆரியர் வகுத்ததனாலும் மாலியம் தமிழகத்தில் வரவர வளர்ந்து வந்திருக்கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன. மாலியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முதலாகச் சொல்ல வேண்டிய திணைகளை, கி.மு.7 ஆம் நூற்றாண்டிலேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லிவிட்டார். தமிழச் சிறு பிள்ளைகட்கெல்லாம், கடைக்கழகக் காலத்திற்கு முன்பிருந்தே, மத வேறுபாடின்றி ஐம்படைத் தாலி காப்பணி யாக அணியப்பட்டு வந்திருக்கின்றது. நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங் கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது. இடைக் காலத்தில், அரி ஓம் நம என்று தொடங்கி எழுத்தறிவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. (ஒ.மொ.) ஆலமரப் பெயர் மூலம் ஒரு சொல்லின் வேரைக் காண்டற்கு, முதலாவது, அச் சொல். எம்மொழிக்குரியதென்று கண்டுகொள்ளல் வேண்டும். அதன் பின், அதன் திருந்திய அல்லது இயற்கை வடிவத்தையும், அச் சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பையும், அதற்கும் அச்சொல்லின் அடிப்பகுதியின் பொருட்குமுள்ள தொடர்பை அல்லது பொருத்தத்தையும் நோக்கல் வேண்டும். ஆகுபெயராயின் அதன் இயற்பொருளையே கொள்ளல் வேண்டும். சிறப்பியல்பு, தனிச்சிறப்பும் பொதுச்சிறப்பும் என இருதிறப்படும். வாழை மரத்தின் வழவழப்பு. தனிச்சிறப்பு; இறால், கொடி, சுழி, திரிகை, நெறிப்பு, பரிதி, முடம், வளையல் முதலியவற்றின் வளைவுத்தன்மை பொதுச்சிறப்பு. ஆலமரத்தின் சிறப்பியல்பு அதன் அகற்சியே. அத்திபோல் துளிர்த்து. ஆல்போற் படர்ந்து. அரசுபோல் ஓங்கி. அறுகுபோல் வேரூன்றி. மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர் என்னும் வாழ்த்தியல் மரபுத் தொடரில். ஆல்போற் படர்ந்து என்பது கவனிக்கத்தக்கது. ஆல் போல் தழைத்து என்றும் பாட வேறுபாடுண்டு. அது சரியானதன்று. உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந் தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும் (நாலடி. 38) என்பது நாலடியார். தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே என்பது வெற்றிவேற்கை. (17) இவை ஆலமரத்தின் அகற்சியைச் சிறப்பாய் எடுத்துக்காட்டு கின்றன. அகல் என்னும் சொல். தகழியையும். அகலம் என்னும் சொல் மார்பு. மாநிலம். வானம் முதலியவற்றையும் அகற்சி பற்றிக் குறிக்கும். இவற்றுள், அகல் என்பது தகழிப் பொருளில் ஆல் என்று கொச்சை வழக்கிலும், அகலம் என்பது வான (ஆகாய)ப் பொருளில் ஆலம் என்று இலக்கிய வழக்கிலும் திரிகின்றன. இணைக் குறில்கள் இருவகை வழக்கிலும் ஒரு நெடிலாய்த் திரிவது இயல்பு. எ.கா: கொழுது - கோது சிவ-சே, சிவத்தல் - சேத்தல் தொகுப்பு - தோப்பு நுவல் - நூல் பகு - பா பகுதி - பாதி பகல் - பால் புழுதி - பூதி பெயர் - பேர் மயல் - மால் மிகு - மீ மிகுதி - மீதி வணங்கு - வாங்கு வியர் - வெயர் - வேர் வெயர்வை - வேர்வை. இங்ஙனமே, அகல் என்னும் சொல்லும் ஆல் எனத் திரிந்து அல்லது மருவி ஆலமரத்தைக் குறிக்கின்றது. பகல் - பால் என்னும் திரிபு. அகல்-ஆல் என்பதற்கு எதுகையாயிருத்தலை நோக்குக. ஆல்-ஆலம். அம் என்பது ஒரு பெருமைப்பொருள் பின்னொட்டு. ஒ.நோ. - கால்-காலம், தூண்-தூணம், நிலை-நிலையம், மதி-மதியம். விளக்கு-விளக்கம். சொற்களின் வேர்களை அல்லது மூலத்தை இடையிடைத் தவறாய்க் காட்டிச் செல்லும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி கூட, ஆல் என்னும் மரப்பெயரை அகல் என்னும் சொல்லின் திரிபாகவே காட்டியுள்ளது. (செந்தமிழ்ச் செல்வி மார்ச்சு 1964.) ஆலாத்தி ஆலாத்தி - ஆரத்தி (ஆ-ரத்தி) ஆலுதல் = ஆடுதல், சுற்றுதல். ஆல் - ஆலா - ஆலாத்து. ஒ.நோ. உல்-உலா-உலாத்து. ஆலாத்து-ஆலாத்தி = சுற்றியெடுப்பது. ஆலாத்தி சுழற்ற லென்கோ (சௌந்தரி. 103). ஆலாத்தி - ஆலத்தி - ஆரத்தி. ஆ-ரத்தி என்னும் வடசொற்கு நீக்குதல், அமைதிப்படுத்தல் (ceased, quiet) என்னும் பொருள்களே மா.வி. அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளன. (வ.வ.86.) ஆவணம் ஆவணம்1-ஆபண ஆவணம் = அங்காடித் தெரு. மல்லல் ஆவணம் மாலை யயர (நெடுநல். 44) காவணம் = சோலை, சோலைபோன்ற பந்தல், கொட்டகை. காவணம் - ஆவணம் = கடைத்தெரு (பிங்.). தெரு (திவா.). அந்தியுஞ் சதுக்கமும் ஆவண வீதியும் (சிலப். 14: 213). ஆலமரத்தடியிலும் தோப்பிலும் சந்தை கூடுவதும் அங்காடி வைப்பதும் பண்டை வழக்கம். அது இன்றும் சிலவிடத்துள்ளது. வடமொழியில் மூலம் இல்லை. ஆவணம்2 - ஆபண ஆவண்ணம் - ஆவணம் = ஆகும் எழுத்து. ஆ(ஆகு)தல் = உதவுதல், ஊழியஞ் செய்தல், வண்ணம் = எழுத்து. ஆவணம் = 1. ஊழிய ஒப்பந்தம், அடிமையோலை, ஊழியம், அடிமைத்தனம். இராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி ஆவணங்கொண்ட ... அண்ணல் (தேவா. 859:8). 2. உரிமை (பிங்.) 3. உரிமையோலை. ஓராவணத்தால் ... எனையாளுங் கொண்ட நம்பிரானார் (தேவா. 977; 5). ஆவணக்களம் (களரி) = ஆவணப் பதிவுச் சாலை. ஆவணவோலை = உரிமை முறி. அண்ணலோர் விருத்தன்போல்வந் தாவண வோலைகாட்டி (கந்தபு. வழிநடை. 12). ஆவணமாக்கள் = உரிமை அல்லது கடமைச் சூள்வாங்குவோர் பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின் (அகம். 77). (வ.வ. 86-87.) ஆவுந் தமிழரும் எல்லா நாட்டிலும் எந்நிலை நாகரித்திலும் ஆவானது அருமையாய்ப் போற்றப் படுவதே யாயினும் தமிழ்நாட்டில் அது தலைசிறப்பப் போற்றப்பட்ட தென்பது எவரும் மறுக்கொணாதது. ஆரியப் பார்ப்பனர் ஆக்கொடையையே மிகுதியாய் விரும்பிப் பெற்றமை யானும், ஆவோடு சேர்த்து வாழ்த்தப்படும் அந்தணரை ஆரீயப் பார்ப்பனரென்று இடைக்காலத்திற் பிறழவுணர்ந்தமை யானும், ஆவுக்குக் தமிழரோடுள்ள தொடர்பினும் ஆரியரோ டுள்ளது மிக்கதென்று தவறாகக் கருதப்படுகின்றது. வடமொழி யாரியர் சிந்துவெளிக்கு வந்த புதிதில் முல்லை நாகரித்தையே அடைந் திருந்தமையால். அவருக்கு ஆத் துணை இன்றியமை யாததா யிருந்திருக்கலாம். ஆனால், இதனால் தமிழர்க்கு ஆத்தொடர்பு தொன்றுதொட்ட தென்னும் உண்மை வலிமை குன்றாது. மக்கள் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகரம் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள் குறிஞ்சியிலேயே தமிழர்க்கு அல்லது தமிழரின் முன்னோர்க்கு ஆத் தொடர்பு இருந்திருத்தல் வேண்டும். ஏனெனின், ஆவானது முதன்முதல் குறிஞ்சி நிலத் திற்கே யுரிய விலங்காம். குறிஞ்சியையடுத்த முல்லை நிலத்தி லிருந்த ஆயர் ஆட்டையும் மாட்டையும் பெருவாரியாய் வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்டு வாழ்ந்தனர். அவர் ஆட்டினும் மாட்டையே சிறப்பாய் வளர்த்தனர். ஆவை மேய்ப்பவர் ஆயர் எனப் பெயர் பெற்றமை கவனிக்கத்தக்கது. ஆ என்னும் பெயர் தற்காலத்திற் பெண்பாலையே குறிப்பினும். முற்காலத்தில் இருபாற்கும் பொதுவாய் இருந்தது. இது னகரச் சாரியை பெற்று ஆன் என நிற்கும். ஆலார் கொடியாய் (திருவிளை. நரிபரி. 19) பெற்றமும் எருமையும் மரையும் ஆலே (தொல். 1560) ஆன்முகத்த னடற்கண் நாயகன் (கந்த. பானு. 95) ஆன் = எருமை. பெற்றம், மரை இவற்றின் பெண் (திவா.) ஆடு, மான், மரை, மிழா, கடமை, மாடு என்பவை முறையே ஒன்றி னொன்று சிறிது வேறுபட்ட இனமாம். மா என்பது விலங்குப் பொதுப் பெயரையும் குதிரைப் பெயராயுமுள்ளது. குதிரை மானைப்போல வேகமாய் ஓடக்கூடியது. வடிவிலும் ஓரளவு அதை ஒத்தது. மா என்பது னகரச் சாரியை பெற்று மானையுங் குதிரையையுங் குறிப்பதுடன் விலங்குப் பொதுப்பெயராயு மிருக்கும். கடமா (கடம்+மா) என்பது காட்டாவிற்கும் காட்டெருமைக்கும் பெயர். இதனால். ஆ என்னும் பெயருக்கும் மா என்னும் பெயருக்கும் ஓர் இயைபிருப்பதை உணரலாம். இவ்விரண்டும் னகரச் சாரியை பெறுவதும் இங்கு நோக்கத் தக்கது. மா என்னும் பெயரே ஆ என்று திரிந்திருக்கலாம். மாஅஅ என்று முக்காரமிடும் மாடு மாவெனப்பட்டது. மா-ஆ: மான்-ஆன் மா - மான் - மாடு. ஒ.நோ. கா-கான்-காடு. ஆ-அவன்-வாடு (தெ.) ஆ என்பது முதலில் மாடு என்று பொருட்பட்டுப் பின்பு பசுவிற்கு வரையறுக்கப்பட்டது. பண்டையுலகம் முழுமையும் மாடே, மக்கள் செல்வமாயிருந்தது; அதனால் செல்வம் மாடெனப்பட்டது. கேடில் விழுச்செல்லங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (குறள். 400) E. pecuniary = relating to money; & pecunia = money pecudes (pl.) = cattle. மக்களுக்கு முல்லை நிலத்திலேயே உழவு தோன்றிற்று; அது மருத நிலத்தில் சிறப்படைந்தது. முன்னதில் புன்செய்ப் பயிரும் பின்னதில் நன்செய்ப் பயிரும் விளைவிக்கப்பட்டன. மாடு இருநிலத்தார்க்கும் ஊனும் பாலும் உதவியதுடன், இருவகை வேளாண்மைக்கும் உழுதிறைத் துதவியது. பகடு நடந்த கூழ் என்றார் நாலடியார். மாட்டின் ஊனும் பாலும் மட்டுமல்ல; தோல், கொம்பு, உரசனை (ரோசனை), வால் மயிர், சாணம் முதலிய பிறவும் பயன்பட்டன. வீட்டைத் துப்புரவு செய்யவும் அடுப்பெரிக்கவும் பயிருக் குரமிடவும் சாணம் உதவுவது. சிறந்த உணவும் மருந்துமாகிய தயிரும் மோரும் வெண்ணெயும் நெய்யும் பாலிலிருந் தெடுக்கப் படுவன. இங்ஙனம், உணவை விளைவிப்பதும் தானும் உண வளிப்பதும் வேறு பல்வகை யுதவுவதுமாகிய மாட்டினத்தைச் செல்வமாக மட்டுமின்றி மக்கள் போலுங் கருதி வந்தனர் முன்னைத் தமிழர். (பால் முதல் நெய்யீறாக வுள்ள ஐந்தும் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) எனப்படும். இவற்றுள் இரண்டை விலக்கி அவற்றிடத்தில் ஆநீர் ஆப்பி என்பவற்றைக் கூறுவது. தமிழர் கொள்கையறியாத புராணிகர் கூற்று என்பர் துடிசை கிழார் அ. சிதம்பரனார்). ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவான் எனின் (குறள். 560) என்று வள்ளுவர் கூறுவதால் ஆவின் பயன்பாடு உணரப்படும். ஆவிற்கு நீரென் நிரப்பினும் நாலிற் கிரவின் இளிவந்த தில் (குறள். 1066) என்பது இரவைக் கண்டிப்பினும். ஆவின் அருமையை உணர்த்தாது போகவில்லை. ஆவும் ஆவேறும் (காளையும்) மிகப் பயன்படுவதுபற்றி அவற்றின் வரவு கண்டு முறையே என் அம்மை வந்தாள். அவளுக்குப் புல்லிடு. என் அப்பன் வந்தான். அவனுக்குத் தண்ணீர் காட்டு என்று அன்புரைகளைக் கூறிவந்தனர் உழவர். இவை திணை வழுவுக் கெடுத்துக்காட்டாக இலக்கணத்தில் வழிவழி கூறப் பட்டன. அதோடு, சாத்தன் சாத்தி கொற்றன் கொற்றி முடவன் முடத்தி கொடும்புற மருதன் கொடும்புற மருதி முதலிய மக்கட் பெயர்களையே ஆவுக்கும் ஆவேற்றுக்கும் இட்டு அழைத்தனர். இவை, இயற்பெயர் சினைப்பெயர் சினை முதற்பெயர் என மூவகை விரவுப் பெயராகத் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன (சொல். 174) சாத்தன் வந்தது முடவன் வந்தது சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும் முதலிய சொல்லதிகார வுரை யெடுத்துக்காட்டுகளை நோக்குக. காளை மக்கட்காக மிக உழைத்தலினால் மாடுபோ லுழைத்தல் என்னும் வழக்கெழுந்தது. காளை, விடலை என்னும் பெயர்கள் உவமையாகு பெயராக மறவர்க்கும் குறும்பரசர்க்கும் வழங்கி வந்தன. இடையூற்றைப் பொருட்படுத்தாமல் எடுத்த காரியத்தை முடிக்கும் திறவோன் பகடெனப் புகழப்பட்டான். மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து (குறள். 624) இளைஞரின் வலிமையை யறிதற்கு ஏறு தழுவல் (கொல் லேற்றைப் பிடித்து நிறுத்தல்) அளவையாகக் கொள்ளப்பட்டது. முல்லை நிலத்திலுள்ள ஆயரும் ஏறுதழுவின இளைஞர்க்கே பெண் கொடுத்து வந்தனர். ஆவின் வாலையும் எருதின் வாலையும் பற்றி ஆழமான ஆற்றைக் கடந்தனர். எருது ஊர்தியாக உதவிப் பொதியுஞ் சுமந்தது. இன்றும் வண்டி யிழுக்கின்றது. ஆவும் ஆவேறுமாகிய இரண்டும் மக்கட்குப் பயன்படுமேனும் அவற்றுள், ஆவே அமைதியுடைமையும் அமுதளித்தலும் இருபாற் கன்றீனுதலும் பற்றிச் சிறப்பாகப் போற்றப்பட்டது. பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தாற் புலிபோல என்பது பழமொழி. ஆவுக்கு வாயுறை முப்பத்திரண் டறக்கொடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. இழக்கும் பொருளும் ஆவின் வாய்ப்பட்டால் ஆக்கமாம் என்னுங் கருத்தில். பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே என்னும் பழமொழி யெழுந்தது. தான் உண்டதை மீட்டும் தன் வாய்க்குக் கொணர்ந்து அசையிட்டுச் செரிக்கச் செய்வது பற்றி, ஆவானது தலை மாணாக்கர்க்கு உவமையாகக் கூறப்பட்டது. ஆவின் தினவு தீர்த்தற் பொருட்டு, ஆவுரிஞ்சியென்றும் ஆவுரிஞ்சு தறியென்னும் ஆதீண்டு குற்றியென்றும் சொல்லப்பட்ட தறிகள் ஊர்தொறும் நட்டப்பட்டிருந்தன. மக்களால் வாழ்த்தப்படும் பொருள்களுள் ஆவும் ஒன்றாயிற்று, அறுமுறை வாழ்த்து என்னும் தொல்காப்பியப் பகுதியுரையில் (தொல். பொ. 81) முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும் என்னும் அறுவரை வாழ்த்தல் என்று உரைத்தனர் நச்சினார்க்கினியர். மக்கள் நல்வாழ்விற்கு ஆவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தே அதை வாழ்த்தினர் தமிழர். வாழ்க அந்தணர் வாழ்க ஆனினம் என்றார் திருஞான சம்பந்தரும். அந்தணர் = முனிவர். பார்ப்பார் = நூல் பார்ப்பவர். தமிழகத்தில் முதலாவது பார்ப்பார் என்றிருந்தனர் தமிழர். பின்னர் பிரா மணரும் தொழிலொப்புமை பற்றிப் பார்ப்பார் எனப்பட்டார். முதலாவது, செம்மார் என்னும் தமிழ் மரபினர் செருப்புத் தைத்துக்கொண்டிருந்து, பின்பு வடக்கிருந்து வந்த சக்கிலிய ரென்னும் தெலுங்கரும் தொழிலொப்புமை பற்றிச் செம்மார் எனப்படுதல் காண்க. ஆக்கள் மக்களைப்போல் மட்டுமன்றி அவரினும் மேலாகத் தூய்மை அல்லது தெய்வத் தன்மையுடையனவாகவுங் கருதப் பட்டன. ஒரு நாட்டிலுள்ள ஆநிரை கள்வரால் அல்லது பகைவராற் கவரப்படின், அது தூய்மைக் குறைச்சலாகவும் பேரிழப்பாகவும் கருதப்பட்டு கடும்போருக்குக் காரணமாயிற்று. ஆன்மடி யறுத்தல் மாபெருங் குற்றமாயிற்று. ஆக் கொலையோ சொல்ல வேண்டுவதில்லை. ஆன்முலை யறுத்த அறனில் லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவே (புறம். 34) என்றார் ஆலத்தூர்கிழார். எனினும், அது நன்றி மறந்த குற்றத்தை மிகுத்துக் காட்டற்கேயென வறிக. தீயன செய்யாத செங்கோன் மன்னரும் வேற்று நாட்டைக் கொள்ளக் கருதின் அந்நாட்டு ஆநிரையைத் தன் மறவர் வாயி லாய்க் கவர்ந் தோம்பினர். சில இடங்களில் ஆவிற்குக் கோயி லெடுத்தும் வழிபட்டனர். இது பகுத்தறிவிழந்த காலத்தில் நிகழ்ந்தது. ஆவிற்குக் கோவென்றும் பெயர். முல்லை நிலத்தார்க்கு அல்லது இடையர்க்கு ஆ என்றும் பெயரினின்று ஆயர் என்னும் பெயர் ஏற்பட்டது. கோ = பசு (பிங்) எருது (இ.வி. 9072) கோ என்னும் சொல் வடமொழியிலிருப்பதால் அது வடசொல்லாகி விடாது. ஆங்கிலத்திலும் அது (A.S.cu. Ger. kuh. S. go) cow என்று வழங்குகின்றது. நூற்றுக்கணக்கான தூய தென்சொற்கள் மேலை யாரிய மொழிகளினுஞ் சென்று வழங்குகின்றன. தா என்னும் வினைச்சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது உலக வழக்காலும் தாவென் கிளவி ஒப்போன் கூற்றே என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆயினும், அதன் தொழிற்பெய ரான தானம் என்பது வடமொழிச் சென்று வழங்கி வட சொல்லாகக் கருதப்படுகின்றது. தா என்னும் வினை இந்தியில் தேவ் என்றும் இலத்தீனில் தோ (do) என்றும் வழங்குகின்றது. donum, donation முதலிய ஆங்கிலச் சொற்கள் இலத்தீனிலிருந்து வந்தவை. இங்ஙனம் எத்தனையோ சொற்களுள. அவற்றுள் குடி (L. cot) என்பதும் ஒன்று. இதன் விளக்கத்தைக் கால்டுவெல் ஐயரின் ஒப்பியல் இலக்கணத்தின் முன்னுரையிற் கண்டு தெளிக. கோ + அன் = கோவன் = இடையன் கோவ னிரை மீட்டனன் (சீவக. 455) கோவன் என்னும் பெயர் கோன் என்று குறுகும். அதன்மேல் ஆன் விகுதிபெற்றுக் கோனான் என நிற்கும். கோனார் என்னும் பெயர் குடிப்பெயராய்த் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது. கோவன் என்னும் ஆயன் பெயரே திரியாதும், கோன் கோ எனத் தொக்கும் ஈறுகெட்டும் அரசனைக் குறித்தது. குடிகள் ஆக்களும் அரசன் ஆயனும் போல்வர் என்னுங் கருத்தில், அரசன் கோவன் எனப்பட்டான். கோவன் = அரசன். கோவனும் மக்களும் (சீவக. 1843). அரசன் கையிலுள்ள செங்கோலும் அவன் ஆயன் போன்றவன் என்னுங் கருத்தை வலியுறுத்தும். கிறித்தவரின் சமயாசிரியர் ஆங்கிலத்தில் shepherd என்றும் pastor என்றும் அழைக்கப்பட்டதும் இக் கருத்துப்பற்றியே, கடவுள் அனைத் துலகுக்கும் அரசனானதாலும் ஆயன் ஆநிரையைக் காப்பது போல் அவர் மக்களைக் காத்து வருவதாலும், அவரும் கோவன் எனப்பட்டார். கோவன் = சிவன் (அகநி) பசு என்னும் வடசொல் கொள்கை நூலில் மக்களை அல்லது உயிர்களைக் குறிப்பது கவனிக்கத்தக்கது. ஆமா என்னும் தமிழ்ச் சொல் காட்டுப் பசுவைக் குறிக்கும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெறின், ஆமா என்பது ஆன்மா என்றாகும். ஆனாகிய மா என்பது இதன்பொருள். இச் சொல்லே வடமொழியில் ஆத்மா என்றாகும். ஆன்மா என்னும் தென்சொல் உயிரையும் ஆத்மா என்னும் வடசொல் உடம்பையும் சிறப்பாய்க் குறித்தலை நோக்குக. கோ என்னுங் குறைச்சொல் அரசனையுந் தந்தையையுங் குறிக்கும். நின்கோ வரினு மிங்கே (கலி.116) என்னுமிடத்தில் தந்தையைக் குறித்தது. இனி ஆனிலை யுலகம் என்று மேலுலகத்தின் ஒரு பகுதி பெயர் பெற்றது. காமதேனு என்னும் கற்பித ஆ பற்றியோ, கண்ணன் பற்றியோ, வேறு காரணம் பற்றியோ, அறிகிலம். இதுகாறுங் கூறியவற்றால், தமிழர்க்கு ஆவொடு தொன்றுதொட்ட தொடர்புண்டென்றும், ஆ வென்னும் பெயர் போன்றே கோவென்னும் பெயரும் தனித்தமிழ்ச் சொல்லென்றும், வடமொழியிலிருப்பவையெல்லாம் வடசொ லல்லவென்றும், ஆரியஞ்சென்று வழங்கும் தமிழ்ச்சொல் பலப்பல வென்றும், ஆவின் அருமை பெருமையைத் தமிழர் செவ்வனே யறிந்து அதற்குத் தக அதனைப் போற்றிவந்தன ரென்றும், மக்கள் ஆக்களாகவும் அரசனும் கடவுளும் ஆயராகவுங் கருதப்பட்டன ரென்றும், இக் கருத்தே உயிர்கள் ஆன்மாவென்று தென்மொழி யிலும் பசுவென்று வடமொழியிலுங் குறிக்கப்பெற்றமைக்குக் காரணமென்றும் தெரிந்து கொள்க. ஆள்நிலப் பிரிவுகள் முத்தமிழ் நாடுகளும், ஆள்வினைப் பொருட்டு, சிறியதும் பெரியதுமான பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மூவேந்தர் முழுநாடுகளும் தனித்தனி பெருநாடு எனப்பட்டன; சோழப் பெருநாடு பல வளநாடுகளாகவும், ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல ஊர்களாக வும், பிரிக்கப்பட்டிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஊர் என்னும் அடிப்படை ஆள்நிலவுறுப் பாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூராகவுள்ள பேரூர்க்குத் தனியூர் என்றும், கூட்டூரின் பகுதியாகவுள்ள சிற்றூர்க்குப் பற்று அல்லது குறைப்பற்று என்றும் பெயர். பல பற்றுக்கள் சேர்ந்த கூட்டூர், அதிலுள்ள முதன்மையான சிற்றூராற் பெயர் பெற்றது. தனியூரான பேரூராயினும் குறைப்பற்றான சிற்றூராயினும், பார்ப்பனத் தலைமையுள்ள ஊர்களெல்லாம் சதுர்வேதிமங்கலம் என்னும் பொதுப்பெயரைக் கொண்டிருந்தன. அப்பெயர் உத்தரமேருச் சதுர்வேதிமங்கலம் என ஊர்ப்பெயரீறாக வழங்கிற்று. முதலாம் இராசராசன் காலத்தில், (கி.பி. 985-1014) சோழப் பெருநாடு, 9 வளநாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பகுக்கப்பட்டி ருந்தது. அவ்வொன்பது வளநாடுகளும் அவ்வரசனின் விருதுப் பெயர்களையே சிறப்புப் பெயர்களாகப் பெற்றிருந்தன. அவையாவன :- 1. இராசேந்திர சிங்க வளநாடு 2. இராசாச்ரய வளநாடு 3. நித்த விநோத வளநாடு 4. க்ஷத்திரிய சிகாமணி வளநாடு 5. உய்யக் கொண்டான் வளநாடு 6. அருண்மொழித்தேவ வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. இராசராச வளநாடு 9. பாண்டிய குலாசனி வளநாடு பொதுவாக, ஒரு வளநாடு ஈராற்றிற் கிடைப்பட்டதென்பர். உய்யக்கொண்டான் வளநாடு அரிசிலாற்றுக்கும் காவிரியாற் றுக்கும் இடைப்பட்டிருந்தது. பாண்டிப் பெருநாடு பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல கூற்றங்களாகவும், ஒவ்வொரு கூற்றமும் பல கூறுகளாகவும் அல்லது ஊர்களாகவும், பகுக்கப்பட்டிருந்தன. ஊர் என்பதிற்குப் பதிலாகப் பிற்காலத்தில் கிராமம் என்னும் வடசொல் வழங்கிற்று. பாண்டிநாடு முழுவதும் ஐந்து வட்டகையாக வகுக்கப்பெற்று, அவற்றை ஐந்து சிற்றரசப் பாண்டியர் ஆண்டு வந்தனர் என்றும், அதனால் பாண்டியன் பஞ்சவன் எனப்பட்டான் என்றும், அறிஞர் கூறுவர். (விசுவநாத நாயக்கர் பாண்டி நாட்டைக் கைப்பற்றியபோது, அவர் பஞ்சபாண்டியர் என்னும் ஐந்து சிற்றரசரோடு போர் செய்ய வேண்டியிருந்தது). ஒரு பெருநாடானது, வளநாடு அல்லது நாடு என்னும் பிரிவிற்கு மேற்பட்ட மாகாணப் பிரிவையுடையதாயின், அப் பெரும்பிரிவு மண்டலம் என அழைக்கப் பெறும். கொங்குமண்டலம் தொண்டை மண்டலம் என்பன ஒருகாலத்தில் முறையே சேரப் பெருநாட்டையும் சோழப் பெருநாட்டையும் சேர்ந்த மாகாணங் களாயிருந்து பின்பு தனி நாடுகளாய்ப் பிரிந்து போயின. தொண்டைநாடு (தனி நாடாய்ப் பிரிந்து போனபின்) பல கோட்டங்களாகவும், ஒவ்வொரு கோட்டமும் பல கூற்றங் களாகவும் பகுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 24 கோட்டங்களும் 96 கூற்றங்களுமிருந்தன. சிற்றூராயின் பலவூர் சேர்ந்தும், பேரூராயின் தனித்தும், ஒரு கூற்றமாக வகுக்கப்பட்டிருந்தன. தனியூர்க் கூற்றம் தற்கூற்றம் எனப்பட்டது. சேரப் பெருநாடு பாண்டிப் பெருநாடு போன்று பகுக்கப்பட்டி ருந்தது போலும். ஒரு தமிழ்ப் பேரரசன், பிற அரசரை வென்ற பின், அவரைச் சிற்றரசராகப் பாவித்து, அவர் நாடுகள் தன் நாட்டிற்கு அண்ணி யவாயின், அவற்றைத் தன் பேரரசிற்குட்பட்ட மண்டலங்களாக வகுத்து, அவற்றிற்குத் தன் விருதுப் பெயர்களை இடுவது வழக்கம். அன்று அவன் சொந்தப் பெருநாடும் ஒரு மண்டலமாக அமையும். முதலாம் இராசராசச் சோழனின் பேரரசில் அடங்கிய மண்டலங்களும், அவற்றின் சிறப்புப் பெயருமாவன: நாட்டுப் பெயர் மண்டலப் பெயர் 1. சோணாடு சோழ மண்டலம் 2. பாண்டிநாடு இராசராசப் பாண்டி மண்டலம் 3. சேர நாடு மலை மண்டலம் 4. கொங்குநாடு அதிராசராசமண்டலம் 5. தொண்டை நாடு சயங்கொண்ட சோழமண்டலம் 6. கங்கபாடி முடிகொண்ட சோழமண்டலம் 7. நுளம்பபாடி நிகரிலிச் சோழமண்டலம் 8. வேங்கை நாடு வேங்கை மண்டலம் 9. இலங்கை மும்முடிச் சோழமண்டலம் இவற்றுள், சோணாடு தன்னளவில் ஒரு பெருநாடாகவும், பேரரசுள் ஒரு மண்டலமாகவும், இருந்ததென அறிக. ஓர் அரசன் அல்லது பேரரசன், தன் ஆட்சியில், தன் ஆள்நிலப் பிரிவுகட்கு அல்லது பேரரசைச் சேர்ந்த மண்டலங்கட்குத் தன் முன்னோர் இட்ட பெயரையும் வகுத்த அளவையும் மாற்றிக் கொள்வதுண்டு. முதலாம் குலோத்துங்கச் சோழன், அதிராசராச மண்டலத்திற்குச் சோழகேரள மண்டலம் என்றும், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டிற்குக் குலோத்துங்கச் சோழவளநாடு என்றும் பெயர் மாற்றினான். அதோடு, இராசேந்திரசிங்கவள நாட்டை இரு பிரிவாக்கி, மேலைப்பிரிவிற்கு உலகுய்யவந்த வளநாடு என்றும், கீழைப் பிரிவிற்கு விருதராச பயங்கர வளநாடு என்றும், பெயரிட்டான். மூவேந்தர் ஆள்நிலத்துள்ளும் அடங்கிய சிற்றரச நாடுகள், அவற்றின் அளவிற்கும் பெருமைக்கும் தக்கவாறு, ஏதேனுமொரு மேல்வகைப் பிரிவாக வகுக்கப்பெற்றிருந்தன. அரசனின் தலைநகர், அரசிருக்கை, கோநகர், படை வீடு என்னும் பெயர்களுள் ஒன்றால் அழைக்கப் பெற்றது. இவற்றுள், அரசிருக்கை என்பது அரசன் நிலையாக வாழும் நகரையே குறிக்கும். கோநகர் என்பது அரச குடும்பத்தினர் இருந்து ஆளும் நகரையும், படை வீடு என்பது படை நிறுத்தப்பெற்று அரசன் நாடுகாவற் சுற்றுப்போக்கில் தங்கக்கூடிய நகரையும், குறிப்ப துண்டு. தலைநகர்கள், அவற்றின் பெருமை பற்றிப் பேரூர் அல்லது மாநகர் என்றும், ஆரவாரம் பற்றிக் கல்லென் பேரூர் என்றும் பழைமையான வெற்றியுடைமை பற்றிப் பழவிறன் மூதூர் என்றும், காவல் மிகுதி பற்றிக் கடிநகர் என்றும், புலவராற் சிறப்பித்துக் கூறப்பெறும். முத்தமிழ் அரசருள், ஒவ்வொருவர்க்கும் அகநாட்டுத் தலைநகர் ஒன்றும் கரைநாட்டுத் தலைநகர் ஒன்றுமாக, இவ்விரு தலைநகர் இருந்தன. இவற்றுள், முன்னது ஆட்சி வசதியும், பின்னது வணிக வசதியும், பற்றியவை. கரை நாட்டுத் தலைநகரெல்லாம் பட்டினம் என்னும் பொதுப் பெயருடையன. தலைநகரும் பிறநகருமான பேரூர்களெல்லாம் பல சேரிகளாகப் பாகுபட்டிருந்தன. ஒவ்வொரு குலத்தாரும் அல்லது வகுப்பாரும் சேர்ந்து வாழும் தெரு அல்லது தெருத்தொகுதி சேரி எனப்பட்டது. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்தும் என்று தொல்காப்பியம் (983) கூறுதல் காண்க. தெருப் பேச்சைத் தொல்காப்பியர் சேரிமொழி என்பர் (1497). உறையூரில் ஏணிச் சேரி என்பது ஒரு பகுதி. சேரிகள், பார்ப்பனச்சேரி, கம்மாளச்சேரி, தளிச்சேரி, பரத்தையர் சேரி, பறைச்சேரி, என அவ்வவ் வகுப்பாற் பெயர் பெற்றிருந்தன. தளிச்சேரி என்பது கோயிற்பணிப் பெண்டுகள் வாழுமிடம். ஒரு நகரின் மூலப் பழைமையான சேரிக்கு அடிச்சேரி என்றும், கோட்டை வாயிலுக்கு எதிராக இருக்கும் சேரிக்குத் தலைவாய்ச்சேரி என்றும் பெயர். பார்ப்பனச் சேரிக்குப் பிற்காலத்தில் அக்கிரகாரம் எனத் தனிப்பெயர் வழங்கிற்று. சேரி, பாடி எனவும்படும். ஒரு பேரூரில் உள்ள சேரிகள், அரச அரசியரின் பெயர்களைச் சிறப்புப் பெயராகப் பெற்றிருப்பதுமுண்டு. தஞ்சை மாவட் டத்தைச் சேர்ந்த திருக்களித் திட்டையில், அருண்மொழித் தேவச்சேரி, சனநாதச்சேரி, நித்தவிநோதச்சேரி, இராசராசச்சேரி, நிகரிலிச் சோழச்சேரி, அழகிய சோழச்சேரி, சிங்களாந்தகச்சேரி, குந்தவ்வைச்சேரி, சோழகுல சுந்தரிச்சேரி, இராசமார்த்தாண்டச் சேரி எனப் பதினொரு சேரிகள் இருந்தன. கடல்கோளாலும் பகைவராலும் தலைநகர்க்கு அழிவு நேர்ந்த விடத்தும், பழந்தலைநகர் வசதியற்றவிடத்தும், பிறிதொரு நகரைத் தலைநகராக்கிக் கொள்வதும் புதிய தலைநகரை அமைத்துக் கொள்வதும், தமிழரசர் வழக்கம். இவ்வகையில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தலைநகர் அமைவதுண்டு. பாண்டியர்க்குத் தென்மதுரை மணலூர் மதுரை என்பன அந்நாட்டுத் தலைநகராகவும், கவாடம் (அலைவாய்) கொற்கை காயல் என்பன கரைநாட்டுத் தலைநகராகவும்; சோழர்க்கு உறையூர் கரூவூர் அழுந்தூர் குடவாயில் திரூவாரூர் தஞ்சை ஆயிரத்தளி (நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம்,) கங்கைகொண்ட சோழபுரம் என்பன அகநாட்டுத் தலைநகராகவும், புகார் (காவிரிப் பூம்பட்டினம்) நாகபட்டினம் என்பன கரை நாட்டுத் தலைநகராகவும்; சேரர்க்கு, கருவூர் என்பது அக நாட்டுத் தலைநகராகவும், வஞ்சி கொடுங்கோளூர் காந்தளூர்ச் சாலை என்பன கரைநாட்டுத் தலைநகராகவும் இருந்திருக் கின்றன. (ப.த.ஆ.) ஆளத்தி ஆளத்தி - ஆலப்தி (ஆ-லப்தி) ஆலத்தி-ஆளத்தி = ஒரு பண்ணை வலிவு மெலிவு சமன் என்னும் முந்நிலையும் தழுவ மண்டலித்துப் பாடுதல் அல்லது இசைத்தல். ஆலத்தி சுற்றுதல் கட்புலனும் ஆளத்தி சுற்றுதல் செவிப் புலனும் ஆகும். லப் என்னும் வடசொற்கு, அலப்புதல், பிதற்றுதல், புலம்பல், விளித்தல், சொல்லுதல் என்ற பொருள்களே உள. ஆளத்தி என்னும் தமிழ்ச்சொற்கொப்பாக, ஆ-லப் என்னும் புனை சொல்லினின்று ஆலாப, ஆலாபன முதலிய சொற்களைத் திரித்திருப்பதாகத் தெரிகின்றது. (வ.வ.87.) ஆற்றுப்படை ஒரு வள்ளலிடம் பரிசுபெற்ற ஒருவன், தன் போன்ற இன்னொரு வனை அவனிடம் பரிசு பெற வழிப்படுத்துவது ஆற்றுப்படை. ஆற்றுப்படுப்பானும், படுக்கப்படுவானும் ஒரே வகுப்பினரா யிருத்தல் வேண்டும். அவ் வகுப்பின்படி ஆற்றுப்படை பெயர் பெறும். (த.இ.வ. 150-151). ஆறு நிலமெங்கும் ஒரே சோலையில் இருந்த காலத்தில் இடையிடை யோடும் ஆறுகளே, ஊடு நீந்தியும் ஓரமாய் நடந்தும் செல்லும் வழிகளாயிருந்தமையின் ஆறு எனப்பட்டது. (சொல் 18.) இகம் இகம் - இஹ (இ.வே.) இ-இகு-இகம்=இவ்வுலகம். இகு-இங்கு-இங்கண். முச்சுட்டும் முதலில் தமிழிலேயே தோன்றின. (வ.வ:87) இகல் இருவர் ஒருபொருள் பற்றி அல்லது அன்பின்மை கரணியமாகத் தம்முட் பொருது அல்லது போராடித் தோற்றற்கும் அழிதற்கும் ஏதுவான மாறுபாடு. (குறள்.அதி.86) இகழும் வகைகள் எள்ளுதல் மனத்தால் இகழுதல்; இகழ்தல் சொல்லால் இகழுதல்; பழித்தல் சொல்லால் அல்லது செயலால் இகழ்தல். (சொல்:57) இசி இசி-ஹ இளித்தல்=பல்லைக் காட்டுதல், சிரித்தல். இளி=சிரிப்பு (பிங்). இளி-இசி. இசித்தல்=சிரித்தல். ஹாய ரஸ=நகைச்சுவை (வ.வ.87) இசைத்தமிழ்த் தொன்மை ஆரியர் வருமுன்பே, கி.மு.2000 ஆண்டுகட்கு முன்னரே. குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச்சங்கத் தமிழ் முத்தமிழா யிருந்தது. தலைச்சங்கத் திறுதியில் செய்யப்பட்ட வழிநூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம். தமிழ் தோன்றி வளர்ந்தது. பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலை பெற்றதும் மனிதன் தோன்றியதும் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தென்பெருங்கடலில் அமிழ்ந்துபோனதுமான குமரிநாடே (Lemuria) யாதலின் தமிழே முதல் இசைமொழி. தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது. அதனாலேயே, இழவுக்கு அழுவதைக்கூட இசையோடு அழுவது தமிழ்ப்பெண்டிர் வழக்கம். தமிழர் இசையில் சிறந்திருந்ததினால்தான் இசையை மொழிப்பகுதியாக்கி இசைத்தமிழ் என்றனர். அதோடு நில்லாது. நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர். இயற்றமி ழின்றி இசைத்தமிழில்லை; இயற்றமிழும் இசைத் தமிழுமின்றி நாடகத்தமிழுமில்லை. ஆகவே, இயலிசை நாடகம் மூன்றும் முறையே ஒருதமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கினது வேறெந் நாட்டிலுமில்லை. இசையென்னும் தனிச்சொல் முதலாவது இசுவென்று (hissing) ஒலிக்கும் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசை யாகிய பண்ணைக் குறித்தது. இணைத்தலைக் குறிக்கும் இசை என்னும் சொல்வேறு. வடமொழியில் கீதம் (பாட்டு) என்னும் பெயர் சம் என்னும் முன்னொட்டுப் பெற்றுச் சங்கீதம் என்றாகி இசைக்கலையைக் குறித்தது. இதனால், இசைத்தமிழ் முந்தின தென்றும் இயல்பானதென்றும் அறியலாம். இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள் அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். (எழுத்து. 33) தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. (அகத். 20). துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவு. 1) பாணன் பாடினி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் (கற்பு. 52) பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே (செய். 173) தொல்காப்பியம் இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு.2000. இஃது ஒரு வழிநூலாதலின் இதிற் கூறப்பட்டுள்ளவையெல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே. இசைத்தமிழ்த் தேர்ச்சி இசைக் குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்து. அவற்றுள் சுரம் ஏழு. அவற்றின் பெயர் குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. அவற்றை இசைமுறை யிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழ் நெடில்களாலும். பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள். எழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும், இறக்க முறைக்கு அமரோசை என்றும் பெயர். ச ப வொழிந்த மற்ற ஐஞ்சுரங்களும் அரைச்சுரம் முழுச் சுரம் எனத் தனித்தனி இரு நிலைய. அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்திரம் என்றும் பெயர். எழுசுரக் கோவைக்கு நிலை என்று பெயர். மக்கள் பாட இயலும் 3 நிலை கட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும். பண்கள், பண் (7 சுரம்). பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என நாற்றிறத்தின. பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு. இவற்றுள். ஒவ் வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல் என நந்நான்கு வேறுபாடுடையது. பண்களைப் பிறப்பிக்கும் முறை, ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற் கோணப் பாலை என நால்வகைத்து. பண்களின் பெயர்களெல் லாம். குறிஞ்சி. நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச்சொற்களாகவே யிருந்தன. பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள. நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள் என்று அடியார்க்குநல்லார் கூறுவதால் (சிலப்.ப.109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம். தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர். அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும் இடைச்சங்க காலத்திலும் எண்ணிறந் திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன. கடைச்சங்க நூல் களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே. கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக் கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி(சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடு தூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு (உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை முதலியவாகப் பல்வகைய. இவை, அகமுழவு அகப்புறமுழவு புறமுழவு புறப்புறமுழவு பண்ணமைமுழவு நாண்முழவு காலைமுழவு என எழுவகைப்படும்: மீண்டும், பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொது வுறுப்பு (உபயாங்கம்) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரப்புக்கருவி பல்வகைத்து அவற்றுள், பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்யாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை. இவற்றுள் செங்கோட்டியாழே இது போதுள்ள வீணை. நரப்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப்பெயர், வீணை என்னும் பெயர் பிற்காலத்தது, பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய தமிழகத்தூர்ப் பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே, யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின் றது. யாழ்கள் செங்கோடு (சிவப்புத் தண்டி), கருங்கோடு (கறுப்புத் தண்டி) என இருநிறத்தண்டிகளையுடையவையா யிருந்தன. செங்கோட்டை யுடைய யாழ் செங்கோட்டியாழ், கருங் கோட்டுச் சீறியாழ் எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில் Fiddle எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று மேனாட்டிற்குச் சென்றதே. இதை மேனாட்டாரும் ஒப்புக்கொள் கின்றனர். இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்டதென் றும், அதனால் இராவணாசுரம் எனப்பட்டதென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி ஐந் தென்பர். மிடறு=தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி. மேற்கூறிய கருவிகளையெல்லாம் தொன்றுதொட்டுச் செய்து வந்தவரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத் திற்கே மாதங்கி (பாடினி) என்றுதான் பெயர். ஆரியப் பார்ப்பனர் ஆலாபன இசை அறியாமை பிராமணர் இசை பயிலக் கூடாதென்று பண்டு. ஒரு விலக்கிருந் தது. மனுதர்ம சாத்திரம் 4 ஆம் அத்தியாயம் 15 ஆம் விதியில், பிராமணர் பாட்டுப் பாடுவது கூத்தாடுவது... இப்படிக் கொத்த சாத்திர விருத்தமான கருத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு மந்திரம் இசையோடு பாடப்படுவதே. ஆனால் அஃது ஆலாபன இசையன்று. வடமொழி வேதமந்திரங்கள் இப்போது கூட ஆலாபித்துப் பாடப்படு வதில்லை. உதாத்தம் அனுதாத்தம் சுவரிதம் என்னும் ஒலிப்பு வேறுபாடும் மாத்திரைக் கணக்கும் வேதமந்திரத்திற்கு மிகக் கண்டிப்பானவை. ஓர் எழுத்துத் தவறாக ஒலிக்கப்படினும் மந்திரத்தின் வலி குன்றிவிடுவதுடன் ஓதின வனுக்குப் பெருங்கேடும் விளையும் என்பது வடமொழியாளர் கொள்கை. ஆதலால், காட்டாளத்தி பண்ணாளத்தி நிறவாளத்தி ஆகிய மூவகை ஆலாபனையும் வடமொழி மந்திரத்திற்கில்லை என்பது தெளிவு. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி வேதவொழுக்கத்தி னின்று தவறியதால், சில ஆரியப்பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி.35,39) கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே பாண் சேரிப் பற்கிளக்கு மாறு என்னும் பழ மொழியும் எழுந்தது. பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருப்பாணாழ்வார் முதலிய யாழ்வேந்தரெல்லாம் பாணரே. 11ஆம் நூற்றாண்டில் தேவாரத்திற்கு இசைவகுத்தது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்டாவர். தொல் காப்பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப் படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும். ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பே வடமொழி யில் இசைநூல்கள் எழுந்தன. அவர்கள் தமிழ்நாட்டில் வதிந்து பல தலைமுறையாக இசை பயின்றதினாலேயே தியாகராச ஐயர் தலைசிறந்த இசைப்புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதையும். அவருக்கும் தீட்சிதர்க்கும் முன்பே முத்துத்தாண்டவர் அரிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடியிருந்தனர் என்பதையும். அவரைப் பின்பற்றியே ஐயரும் தீட்சிதரும் பாடினர் என்பதையும், அவர்கள் தமக்கிருந்த அளவிறந்த வடமொழிப் பற்றினாலேயே திரவிட மொழிகட்குள் மிகுந்த வடமொழித் தொடர்புள்ள தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனையியற்றினார் என்ப தையும் அறிதல் வேண்டும். இசைத்தமிழ் கெட்ட வகை பாட்டுத்தொழிலால் மதிப்பு, பெருவருவாய், மக்களை வயப்படுத் தல் முதலிய பயன்களைக் கண்ட ஆரியப் பார்ப்பனர் பிற்காலத் தில் அத்துறையில் இறங்கிப் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பினால் பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விட்டனர். அவர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்று தமிழரை யேமாற்றி ஒவ்வொரு துறையிலும் முதலிடமும் முழுவிடமும் பெற்றனர். முத்தமிழ் முடிவேந்தரிடத்தும் எச்சமயத்திலும் அறிவிப்பில்லா மலே செல்லக்கூடிய பாணர் மரபினர் பார்ப்பனத் தெருவிலும் பொதுச் சாலையிலும் நடக்கவும் விடப்பட்டிலர். இசைத்தமிழ் இடைக்காலத்தில் மறைந்துபோனமைக்கு இதுவே பெருங் காரணம். இசைத்தமிழ் நூல்கள் படிப்பாரற்று எரிக்கும் சித லுக்கும் இரையாயின. இதுபோதும் பார்ப்பனர் பார்ப்பன இசை வாணரையே போற்றிப் புகழ்வதும் தமிழ் இசைவாணரைத் தூற்றியிகழ்வதும் வழக்கமாயிருந்துவருகிறது. அவர் பார்ப்பன இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமற்றிருப்பினும் இறுதி வரையிருந்து தலையாட்டியும் கைதட்டியும் பாராட்டுவதும், நாலுபக்கமும் கூலியாள்களை யிருத்திப் பாராட்டுவிப்பதும். செய்தித்தாள் கட்குச் சிறப்பித்தெழுதி விளம்பரஞ் செய்வதும். தமிழ் இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்ப முற்றிருப்பினும் முகத்தில் ஈயாடாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு இடையில் ஒவ் வொருவராய் எழுந்துபோய்விடுவதும் இன்றும் கண் கூடாகக் காண் கின்றோம். வாய்ப்பாட்டிற்கு நயினாப்பிள்ளையும், கின்னரி (பிடிலு)க்குக் கோவிந்தசாமிப் பிள்ளையும், மிருதங்கத்திற்கு அழகநம்பியும். டோலக்கிற்கு வேணுசெட்டியாரும். சிஞ்சிரி (கஞ்சிரா)க்குத் தட்சிணாமூர்த்திப்பிள்ளையும் குணக் குரலுக்குப் (கொனுக் கோல்) பக்கிரிசாமிப் பிள்ளையும் நாகசுரத்திற்குப் பொன்னு சாமிப் பிள்ளையும் வெண்பாவிற்குப் புகழேந்திபோல் தத்தம் துறையில் தனியாற்றல் படைத்த எத்துணை ஒப்புயர்வற்ற வல்லுநர்! ஆயினும், தக்க அளவு அவர்கள் போற்றப் படவில்லை. தமிழர் அயலாரைப் போற்றித் தம்மவரைப் புறக்கணித்ததினால். தமிழ் இசைவாணர்க்குப் பெரும்பாலும் இசையரங்குகளில் இடமில்லாது போயிற்று. இதனால், தமிழும் தமிழரும் ஒருங்கு கெட்டனர். இன்று வானொலி நிலையங்களில் கூடத் தமிழ் இசைவாணர்க்குப் போதுமான இடமளிக்கப் படுவதில்லையென்று எங்கும் முறையீடும் கூக்குரலுமாயிருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூற்றெழுவரான தமிழர் இங்ஙனம் தம் உரிமையும் மானமுமிழந்து எருமையினும் உணர்ச்சியற்று. இவ்விருபதாம் நூற்றாண்டில் கூலத்திற்குச் செலவும் ஞாலத்திற்குப் பொறையு மாயிருப்பது எற்றுக்கோ? அழிந்துபோன இசை நாடக நூல்கள் அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகை யோத்து, சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்ச பாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்களும்: முறுவல், குணநூல், சயந்தம், செயிற் றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத் தார் கூத்து (இலக்கியம்), சுத்தானந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அந்தோ! அயலார் சூழ்ச்சியால் மீட்பற இறந்தொழிந்தன. இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியம் பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ், தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபால கிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. அண்ணா மலை ரெட்டியார் காவடிச் சிந்து. வழிநடைப் பதங்கள். நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் இதுபோது தமிழிலுள்ளன. இன்னும் வேண்டிய வகைகளெல்லாம் வேண்டியவாறே தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்; இன்று ஆக்கப்பட்டும் வருகின்றன. இசைக்கு மொழிவரையறை யுண்மை இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் ஒருவனது மகிழ்ச்சிப் பெருக்கம். அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக்கின்றான் நாகரிக மாந்தன். ஊமையரும் விலங்குப் பறவைகளும் பேச்சின்மையால் ஒலிவடிவாய் மட்டும் மகிழ்ச் சியைக் காட்ட முடியும். ஒருவனது இசை கருத்தோடு கூடியிருப் பின். அஃது உணர்ச்சியுள்ளதும் உண்மையானதும் உயர்ந்ததுமா யிருக்கும். ஒருவரது கருத்து. தாய் மொழியிற் போல வேறெம் மொழியிலும் சிறக்க வெளிப்படாது. அறியாத மொழி யாயின் வெளிப்படுத்தவே முடியாது. மனிதனின் சிறந்த பேறுகளில் ஒன்றானதும் அவனை உயர்திணைப்படுத்துவதும் மொழியாம். அதை அவன் பயன்படுத்தாவிடின் கடைப்பட்ட அறிவிலியும் அஃறிணையுமா கின்றான். இசை ஒருவரது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்ததாதலின். அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். விளங்காத மொழியில் கட வுளை வேண்டின் அஃது உளறுவது போல்வதோடு கடவுளைப் பகடிசெய்து பழிப்பதுமாகின்றது. இசையினால் பாடுவார்க்கு மட்டுமன்றிக் கேட்பார்க்கும் இன்பம் விளைகின்றது. விளங்கும் மொழியில் பாடினால்தான் கேட்பார்க்கும் இன்பம் விளையும். பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தி யிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழன்தான் நுகர முடியும்: அயலார் நுகர முடியாது. ஆகையால், அவர் அதைக் குறை கூறுவது பொருந்தாது. மேனாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி), தாளம், சுரம்பாடல் என்ற மூன்றுமில்லை; மெட்டுகள் தாமுண்டு. ஐரோப்பாவில் இத்தாலி, இசைக்குச் சிறந்தது. ஐரோப்பா முழுதும் வழங்குவது ரோம - கிரேக்க இசையே. அவ்விசையே பண்டைக் காலத்தில் இங்கிலாந் திற்குச் சென்றது. ஆங்கில இசைக் குறியீடுகளெல்லாம் இலத்தீன் - கிரேக்கச் சொற்களே. எ-டு : (music - Gk. mousike, gamut (Gk.), solo(It.), soprano (It.), chorus (L., Gk.), choir (F.,L.Gk.), Tune.tone, Gk.tonos. இங்ஙனமிருந்தும் மெட்டு வேறுபாட்டிற்காக ஓரிரு செரு மானிய இத்தாலியப் பாட்டுகளைக் கேட்கிறார்களேயன்றி முற்றி லும் அயன்மொழிப் பாட்டைக் கேட்பதில்லை. ஆகையால், அயன்மொழிப் பாட்டைத் தழுவுமாறு பொருந்தாத ஆங்கில உவமங்கூறித் தமிழரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது தம் அறியாமையை வெளிப்படுத்துவதாகும். தெலுங்கர் வாளா (சும்மா) இருப்பவும். தெலுங்கறியாத, தமிழையே தாய்மொழி யாகக் கொண்ட ஒரு சிறு குழுவார் இசைத்தமிழை எதிர்த்துக் கூக்குரலிடுவது அவர்க்குத் தமிழ்மீதுள்ள நச்சுப் பகைமையை யன்றி வேறெதைக் காட்டுகின்றது! தமிழனாயிருந்தால் தமிழ்ப் பாட்டை வெறுக்கவும் முடியுமா? தீட்டிய மரத்தில் கூர்பார்த்தலும் கொல்லத் தெருவில் ஊசி விற்றலும் இந்து தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படை. முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. கேள்வியைச் ச்ருதி என்றும் நிலையை தாய் என்றும் மொழிபெயர்த்தனர். பண்களுக்கெல்லாம் தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ்நாட்டிலும் வழங்கச் செய்தனர். ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. ஒ.நோ.அரங்கன்-ரங்கன். சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. இந்துத் தானி இசை இசைத்தமிழின் திரிபே. அக்பர் அவைக்களத்தில் தென்னாட்டு இசைத்தமிழ் வாணரும் இருந்தனர். இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்ப வற்றிற்குத் தென்னாட் டிசையில் இன்று வழங்கும் பெயர்களே வழங்கிவரு கின்றன. கருநாடக இசை இசைத்தமிழே. புரந்தரதா என்பவர் கன்னடத் தில் சில கீர்த்தனைகள் இயற்றினார். மகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திரவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநட மன்னர் தலைமையாயிருந்ததால், திரவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர். கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும் மொழியும் தமிழின் திரிபே. ஆகவே, இசைத்தமிழே உருமாறியும் குறியீடு மாறியும் இந்துத்தான் கருநாடக இசைகளென வழங்கி வருகின்றது. சிலபல புதுமெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதினால். அவை வேறிசையாகா. இடைக்காலத்தில் தமிழர் ஊக்கப்பட்டிருப்பின் அவரும் புதுமெட்டுகள் கண்டுபிடித்திருப்பர். ஐயருக்கு முந்தின மெட்டுகளெல்லாம் தமிழ் மெட்டுகளே. இந்துத்தானிசை கருநாடக இசை தெலுங்கிசை என்பவையெல்லாம் மொழியால் வேறுபட்டவையே யன்றி இசையால் வேறுபட்டவையல்ல. அவற்றை அவ்வம் மொழிப்பெயரால் இன்னின்ன பாட்டென்று சொல்லுதலேயன்றி இசையென்று அழைத்தல் தகாது. இசைத்தமிழ்க் கலையே மொழி வேறுபட்டால் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கி வருகின்றதென்க. இசை வேறு; பாட்டு மொழி வேறு. மலையாளத்தில் சில பாட்டுகளிருப்பதால் மலையாள இசை என ஒன்று ஏற்படாது. ஆகவே, இதுபோது தமிழ்நாட்டிலுள்ள இசை, கலையால் தமிழும் மொழியால் பிறிதும் ஆகும் என்றறிந்து தீட்டிய மரத்திற் கூர்பாராமலும் கொல்லத் தெருவில் ஊசி விற்காமலும் இசைத்தமிழை ஆர்வத் துடன் தழுவுக. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (FwŸ.573) (br.br.- நளி 1943) 3. இஞ்சி சொல் இஞ்சி வழக்கிடம் : இஞ்சி1 - இலக்கியம் இஞ்சி2 - தமிழகம் சொல்வகை : பெயர்ச்சொல் இஞ்சி1 : கட்டிட வடிவான இடப்பெயர் இஞ்சி2 : அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர் வேற்றுமைப்பாட்டு வகை. முதல்வகை (சாரியை யில்லாது), எ-டு: இஞ்சியை, இஞ்சியால், இஞ்சிக்கு, இஞ்சியின், இஞ்சியது, இஞ்சியில். இயல் விளக்கம் இஞ்சி1 - செம்புருக்கிச் சாந்தாக வார்த்து இறுகக் கட்டிய திண்ணிய கோட்டை மதில் வகை. இஞ்சி2 - பித்தத்தைப் போக்குவதும், மருந்துகளிலும் கறிவகை களிலும் பெரும்பாலும் கூட்டுச் சரக்காகச் சேர்க்கப்படுவதும், கார்ப்புச் சுவையுள்ளதுமான, கிழங்குள்ள பூண்டுவகை. பொருளும் ஆட்சி மேற்கோளும் இஞ்சி1, பெ. திண்ணிய கோட்டை மதில் வகை கொடுங்க ணிஞ்சி (பதிற்றுப். 16:1). உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கு நூல் (743) என்னுந் திருக்குறளிற் குறித்துள்ள திண்மை என்னும் வகைப்படி. செம்புனைந் தியற்றிய சேணெடும் புரிசை யே (புறம்.201) இஞ்சி என்னும் மதில் வகையாகும். இஞ்சி2, பெ. 1. இஞ்சிப் பூண்டு; ginger-plant. மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து (சிலப் 10:74). 2. இஞ்சிக் கிழங்கு ginger-root. ஆட்சி மேற்கோள் இஞ்சி1 - செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி (கம்பரா.யுத்த.160) செ.சொ.பி. அகரமுதலில் இன்னும் எண் மேற்கோள் காட்டப் பெறும் விரிவஞ்சி அவை இங்கு விடப்பட்டுள. இஞ்சி வகை இஞ்சி மாங்காய் அல்லது மாங்காயிஞ்சி. ஊறுகாயாகப் பயன்படுவது; mango - ginger. கூட்டுச் சொல் இஞ்சிக் கிழங்கு bg. ginger - root. இஞ்சித்தேறு, பெ. இஞ்சித் துண்டு; small piece of green ginger. இஞ்சிப்பாகு, பெ. இஞ்சி இளகிய (லேகிய) வகை; a kind of ginger electuary. இஞ்சிப் பாவை, பெ. இஞ்சிக் கிழங்கு (மலைபடு. 125, உரை). ginger, as bearing the shape of a doll. இஞ்சி யூறுகாய் = காயச் சரக்குச் சேர்த்து எண்ணெயில் ஊற வைத்த இஞ்சி, ginger - pickle. இஞ்சி வேர், பெ. இஞ்சிக் கிழங்கு ginger - root. இஞ்சிச் சுரசம் என்பதை இஞ்சிக்கருக்கு என்றும், இஞ்சி முரப்பா என்பதை இஞ்சி வடிப்பு என்றும், சொல்லலாம். மரபு வழக்கு : இஞ்சி தின்ற குரங்குபோற் பஞ்சரித்தல் (தொந்தரவு செய்தல்). தொடர்மொழி : இஞ்சி தின்ற குரங்கு. உவமைப் பழமொழி : இஞ்சி தின்ற குரங்கு போல. சொல்லமைவு இஞ்சி (இரண்டிற்கும் பொது. இள் வேர்; இஞ்சு முதனிலை; இ வினைமுதலீறு. சொல் வரலாறு இஞ்சி1 : உல் - ஒல். ஒல்லுதல் = பொருந்துதல். உல் - உர் - உறு. உறுதல் = பொருந்துதல். செறிதல், வலியுறுதல். உறு - உறுதி = திண்ணம், வலிமை. உர் - உரம் = வலிமை உறு - உற. உறத்தல் = செறிதல், இறுகுதல். விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே (தொல்-சொல்.348) உறந்த விஞ்சி = இறுகிய மதில். cš - cŸ - mŸ = br¿î (âth.), வன்மை (சூடா.) அள்ளல் = நெருக்கம். அள்ளாகுதல் = செறிதல். அள்ளிருள் = செறிந்த இருட்டு. அள்ளுதல் = செறிதல் (சீவக. 614). உள் - இள் - (இய்) - (இய்ஞ்சு) - இஞ்சு. ஒ.நோ: குள் - (குய்) - (குய்ஞ்சு) - குஞ்சு. புள் - பிள் - பிய் - (பிய்ஞ்சு) - பிஞ்சு. கொள் - கொய். தொள் - தொய். பொள் - பொய். இஞ்சுதல் = செறிதல், இறுகுதல், திணிதல். இஞ்சு - இஞ்சி = திணிந்த மதில் வகை. பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும், பகைவரால் எளிதாகக் தாக்க முடியாவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில், ஏனை வகை மதில்களினும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி யெனப் பட்டது. இஞ்சி2 : ஈ அண்மையைச் சுட்டுமாறு உதட்டைப் பின்னுக்கு இழுத்தொலிக்கும் உயிரொலி. ஈ - ஈல் - ஈர் - ஈர்த்தல் = இழுத்தல். ஈர்தல் = இழுத்தறுத்தல், பல்லாற் கடித்திழுத்து உரித்தல், இழுத்தல், அறுத்தல். ஈல் - இல் - இள் - இழு. ஒ.நோ: கொள் கொம்பு - கொழுகொம்பு, கொள்நன் - கொழுநன். இழுத்தல் = பின்னிழுத்தல், உள்ளிழுத்தல், உறிஞ்சுதல். இள் - (இய்) - (இய்ஞ்சு) - இஞ்சு. இஞ்சுதல் = நீரை உள்ளிழுத்தல், நிலத்தில் நீர் சுவறுதல். இஞ்சு - இஞ்சி = நீரை உள்ளிழுத்துத் திரண்டிருக்கும் கிழங்கு வகை, அஃதுள்ள பூண்டு. இஞ்சி காய்ந்து நீர் வற்றினாற் சுக்கு. இஞ்சி x சுக்கு. சுக்கு = நீர் சுண்டி வறண்டிருப்பது. சுள்ளுதல் (சுள்ளெனல்) = காய்தல், நீர் வற்றுதல். சுள் - சுள்கு - சுட்கு - சுக்கு. ஒ.நோ : வெள் - வெள்கு - வெட்கு. கொள் - கொள்கு - கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை. இனச்சொல் (1) திரவிடம் : மலையாளம் - இஞ்சி, குடகம் - இஞ்சி. கோத்தம் - இஞ்ச், பிராகிருதம் (பாலி) - சிங்கி, சிங்கிவேர. (2) ஆரியம் : (சமற்கிருதம்) - ச்ருங்கவேர, பர்சி (பர்ஜி) - சிங்கிவேர. ME.gingivere, OFr. gengibre, LL gingiber. L.zingiber, Gk. zingiberis, Skt. srngavera. E.ginger. (3) பிறமொழிக் குடும்பம் - மலாய் : இஞ்சிவேர். சிறப்புக் குறிப்பு இஞ்சி தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் விளைக்கப்பெற்று வருவது, செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக் காயங் கொண்டன (மலைபடு. 125-6) இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச் சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கை (பதிற்றுப்.42:10-11) மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பாற்பகை யுறுக்கும் (சிலப்.10:74-5) என்னும் பண்டையிலக்கியப் பகுதிகளால் அறியப்படும். தமிழகத்தி லிருந்து பண்டை நாளிலும் மேனாடுகட்கு ஏற்றுமதியான சரக்குகளில் இஞ்சியும் ஒன்றாகும். அது வேராயிருப்பதால் இஞ்சி வேரென்றும், கிழங்காயிருப்பதால் இஞ்சிக் கிழங்கென்றும், பாவை போன்றிருப்பதால் இஞ்சிப்பாவை என்றும் சொல்லப் படும். இஞ்சிவேர் என்னும் சொல்லே மேனாடுகளிற் பல்வேறு வடிவில் வழக்குப் பெற்றது. திருத்தம் சமற்கிருத ஆரியர் இஞ்சியென்னும் தென்சொல்லை ஆரியச் சொல்லாகக் காட்ட வேண்டி, ச்ருங்கவேர எனத்திரித்து மான் கொம்பு போன்றது எனப் பொருட்கரணியங் காட்டுவாராயினர். இது செயற்கையானதும் பொருத்தமற்றதும் ஆகும் என்பதை, வரலாறு மட்டுமின்றிச் சொல்வடிவும் தெளியக்காட்டும். வட மொழியில் ச்ருங்க என்பது கொம்பு என்றுமட்டும் பொருள் படும். வேர என்பது உடம்பைக் குறிக்கும். இவ்விரண்டும் எங்ஙனம் இணைந்து இஞ்சியைக் குறிக்கும்? இற்றையறிவியல் களைத் தெளிய வறிந்த மேனாட்டறிஞரும், சமற்கிருத - ஆங்கில அகரமுதலியிலும், இருபதாம் நூற்றாண்டு அகரமுதலியிலும், ஆக்கசுப் போர்டுச் சிற்றகரமுதலியிலும், திரவிடச் சொற்பிறப் பியல் அகரமுதலியிலும் சமற்கிருத ஆரியர் கூற்றையே தழுவி யிருப்பது மிகமிக வியப்பிற்கிடமானதே. அவ் வகர முதலிகளுள் ளும், இருபதாம் நூற்றாண் டகரமுதலி இஞ்சி வேர் என்பதை மலையா (மலாய்)ச் சொல்லாகக் குறித்திருப்பது இன்னும் வியப்பானதே. இதற்குத் தமிழர் வெளிநாட்டினின்று வந்தேறிகள் என்று தவறாகக் கருதியிருப்பதே அடிப்படையாகும். வட நாட்டுத் திரவிட மொழியாகிய பர்சியில் சிங்கிவேர என்று வழங் குவதால் மட்டும், அது வடசொல்லாகிவிடாது. அம் மொழி அதைப் பிற்காலத்து வழக்கேற்றியிருக்கலாம். (தனிக்கட்டுரை; வ.வ. 87-88) இட்டி இட்டி - யஷ்டி இட்டி - இட்டி = ஒடுங்கிய அலகுள்ள வாள்வகை. இட்டிவேல் குந்தங் கூர்வாள் (சீவக.2764). இட்டி-ஈட்டி. f., ம.இட்டி. வடமொழியில் மூலம் இல்லை. (வ.வ:88) இட்டிகை இட்டிகை - இஷ்டகா இடு - இடுகு - இடுக்கு - இடுக்கம். இடு - இட்டு - இட்டிது = சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478). ï£oik = áWik (âth.), ஒடுக்கம் (திருக்கோ.149 உரை). இட்டிய = சிறிய (ஐங்குறு.215). இட்டளம் = நெருக்கம். இட்டிடை = சிறுகிய இடை. இட்டிடையின் மின்னிப் பொலிந்து. (திருவாச.7:16). இட்டிகை = சிறுசெங்கல். கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் (பழ.108). வடமொழியிற்செங்கல் என்றே பொதுவாகக் குறிக்கப் பட்டுள்ளது. அதில் மூலமும் இல்லை. (வ.வ:89) இடவகை இடம் அறுவகைப் பொருளின் ஒன்றான இடம்; தாவு ஒரு கூட்டத்தில் ஒருவன் இருக்குமிடம்; இருக்கை இருக்கும் ஆசனம் : வைப்பு வைத்திருக்கும் நிலம்; வரைப்பு எல்லையோடு சேர்ந்த இடம்; நிலை நிற்குமிடம் (stand); நிலையம் நிற்கும் பெரிய இடம் (Station); நிலைக்களம் ஆதாரமான இடம். (சொல் : 48) இடுதேள் இடுதல் ஒருவன் முதுகில் அல்லது தலையில் தேள் போன்றதோர் உருவை இட்டு ‘தேள்!தேள்! என்ற கத்தி அவனை அச்சுறுத்தி மகிழ்வது குறும்பர் வழக்கம். இதற்கு இடுதேள் இடுதல் என்று பெயர். இங்ஙனம் பொய்க் காரணம் காட்டி வேறு வகையில் ஒருவனைக் கலங்கப்பண்ணுவதெல்லாம் இடுதேள் இடுதல் எனப்படும். (சொல். 12) இடைகலை இடைகலை - இடாகலா (இடா+கலா) இடைகலை = இடப்பக்க மூக்குத் துளைவழி விடும் உயிர்ப்பு, பத்து நாடிகளுள் ஒன்று. இடை = இடம். இடைதல் = பின்வாங்குதல், தோற்றல், வலி குறைதல். இடை-இடம் = வலிகுறைந்த கைப்பக்கம். இடம் x வலம். இடைகலை இடைநாடி எனவும் படும். இடை-இடா (வ.) நாடி - நாடீ (வ.). (வ.வ:89) இடைகழி இடைகழி - தேஹலி (லீ). இடை+கழி = இடைகழி = இடையிற் கழிந்து செல்லும் நடை, சந்து, வாயில். இடைகழி - டேகழி - டேழி - ரேழி (கொச்சைத் திரிபுகள்) டேகழி - தேஹலி (வ.) (வ.வ:89) இடைக்கழகம் பாண்டியநாட்டின் பெரும்பகுதி மட்டுமின்றி, பஃறுளியாறும் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் மூழ்கவே, பாண்டியர் குடியில் எஞ்சியிருந்தவன் தன் பேரிழப்பை யெண்ணி வருந்தி அதற்கு ஒருவாறு ஈடுசெய்து கொள்வதுபோல், வடக்கிற் சென்று பனிமலைக் குவட்டிலும் கங்கையாற்றங்கரையிலும் தன்கயல் முத்திரையைப் பொறித்து மீண்டான். அன்று அங்கு வல்லர சின்மையாலும் பெரும்பகுதி காடாயிருந்தமையாலும், சிறிதும் அவனுக்கு எதிர்ப்பில்லாது போயிற்று. அரசியல் அக்காலத்தில் விரிவடையா திருந்ததனாலும். வடநாவலப் பகுதி மிகத் தொலைவிலுள்ளமையாலும் மொழிபெயர் தேய மாகையாலும், அவன் அங்குத் தன் குடியினன் ஒருவனைத் துணையரையனாக இருத்தி விட்டுத் தென்னாட்டிற்கே மீண்டு அதை ஆண்டு வந்தான். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி என்று (சிலப். 11 : 19 - 22) இளங்கோவடிகள் கூறுதல் காண்க. கடல்கோட்குத் தப்பிய குடிகளைக் குடியமர்த்துவதிலும், தலை நகரமைப் பதிலும், ஆட்சித்துணைவரைத் தேர்ந்தெடுப் பதிலும், படைதொகுப்பதிலும், நீண்ட காலஞ் சென்றதனால், பாண்டிய னால் நேரடியாகத் தமிழ்நிலம் முழுவதுங் கவனிக்க முடிய வில்லை. நாவலந்தேயப் பகுதிகளையாண்ட இருதுணை யரை யரும், அந்நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு இருவேந்த ராகப் பிரிந்துபோயினர். கீழ்நாடு நெல்விளைவாற் சோழ நாடென்றும், மேல்நாடு மலைச்சரிவாற் சாரல் நாடென்றும், பெயர்பெற்றிருந்ததனால்; கீழைவேந்தன் சோழன் என்றும், மேலைவேந்தன் சேரன் என்றும், ஆள்குடிப்பெயர் பெற்றனர். சொல் = நெல். சொல் - சொன்றி = சோறு. சொல் = (சொறு) - சோறு. சொல் - (சோல்) - (சோள்) - சோழ் - சோழம் - சோழன். ஒ.நோ : கல் (கருமை) - கள் - காள் - காழ் = கருமை காழ் - காழகம் = கருமை. கில் (தோண்டு) - கீள் - கெள் - கேள் - கேழல் = மண்ணைத் தோண்டும் ஆண் (பன்றி). துல் (பொருந்து) - தொள் - தோள் - தோழன். புல் (துளை) - பொல் - போள் - போழ் = பிளவு, துண்டு, வார். சோழநாடு நெல்வளமும் அதனாற் சோற்றுவளமும் மிக்கிருந்தது. முதன்முதலில் இயற்கையாகவும் நெல் அங்கு மிகுதியாக விளைந்திருத்தல் வேண்டும். வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து. என்று ஔவையார் ஒருவர் பாடியிருத்தல் காண்க. நெற்பயிர் எங்கும் மிகுதியாக விளைக்கப்படும் இக்காலத்திலும், சோழ நாட்டின் கருவகமாகிய தஞ்சை மாவட்டமே தமிழகத்தின் நெற்களஞ்சிய மாயிருத்தல் காண்க. இன்று இதற்குக் காவிரி யாற்று வளமே அடிப்படைக் கரணியமாகும். சோழனுக்குக் கிள்ளி, சென்னி, வளவன் என்றும் குடிப்பெய ருண்டு. குடமலை யென்னும் மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப்புற மாயினும் மேற்புறமாயினும், சேரநாட்டின் பெரும்பகுதி அம்மலையின் அடிவாரச் சரிவே. மலையடிவாரம் சாரல் எனப்படும். சாரல் நாட நடுநாள் (குறுந்.195). சாரல் நாட செவ்வியை யாகுமதி (மேற்படி-11 : 2). சாரல் நாட வாரலோ எனவே (மேற்படி-141 : 8). என்பன மலைப்பக்க நாட்டைச் சாரல் நாடு எனக் கூறுதல் காண்க. சாரல் - சேரல் - சேரலன். சேரல் - சேரன். சேரமகன் - சேரமான். சேரல், சேரலன், சேரன், சேரமான் என நால்வடிவிலும் சேரன்குடிப் பெயர் வழங்கும். குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு (சிலப்.பதி:1) சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க (அகம். 149:7-8). குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு (சிலப். 23:62) பான்மை நண்பாற் சேரமான் தோழரென்று பார்பரவும் (பெ.பு.கழறிற். 66) சேரனுக்கு உதியன், குடநாடன், கோதை, பொறையன், மலையன், வானவன், வானவரம்பன், வில்லன் என்னும் குடிப்பெயர்களு முண்டு. பாண்டியனுக்குப் போன்றே சேரசோழர்க்கும் நாற்படையும் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் ஐவகை யுறுதிச் சுற்றமும் அமைந்தன. மூவேந்தர்க்கும், அரசச் சின்னம் பத்தென்றும் அரசியலுறுப்பு ஏழென்றும் கொள்ளப்பட்டன. முகுடம் (முடி), செங்கோல், மாலை, முத்திரை, குடை, கொடி, முரசு, தேர், யானை, குதிரை என்பன பத்துவகைச் சின்னம். கொடியும் முத்திரையும் குறிவடிவில் ஒன்றேனும், பொருள் வடிவிலும் பயன்பாட்டு வகையிலும் வேறாம். நாடு, குடி, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என்னும் ஏழும் அரசியலுறுப்பாம். நாடில்லாமற் குடியில்லையாதலின், நாட்டைக் குடியுள் அடக்கி, படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையான் அரசருள் ஏறு. என்றார் திருவள்ளுவர் (குறள்.381). ஆயினும், நாடும் ஓர் உறுப்பாம் என்பதை அறிவித்தற்கே, அதை 74-ஆம் அதிகாரத் தலைப்பாக்கினார். நாடில்லாமற் குடியில்லை; ஆயின், குடியில்லாமல் நாடுண்டு. அரசனின் சின்னம் (அடையாளம்) வேறு; அரசனின் அரசிய லுறுப்பு வேறு. அரசியலுறுப்பு ஏழும் சேர்ந்து ஓர் உடம்பும், அரசன் அதன் உயிரும், ஆகும். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம். (புறம்.186). உறுப்புஞ் சின்னமும் ஒன்றென மயக்கி, பெயர் (நாமம்), நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்று திருவாசகமும், ஆறும் மலையும் யானையுங் குதிரையும் நாடு மூரும் கொடியு முரசும் தாருந் தேருந் தசாங்க மெனப்படும், என்று திவாகர வுரிச்சொற் றொகுதியும், மலை, யாறு, நாடு, ஊர், மலை, குதிரை, யானை, கொடி, முரசு, தானை என்று சூடாமணி யுரிச்சொற் றொகுதியும்; யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு, தார், கொடி என்று வெண்பாப் பாட்டியலும், மலையே யாறே நாடே யூரே பறையே பரியே களிறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம். என்று பன்னிருபாட்டியலும், மலைநதி நாடூர் வனைதார் இவுளி கொலைமத களிறு கொடிமுர சாணை இவையே தசாங்கம் என்மனார் புலவர். என்று இலக்கண விளக்கமும், கூறும். இவற்றின் பொருந் தாமையை எண்ணிக் காண்க. முடிகோல் மாலை முத்திரை குடைகொடி முரசுதேர் யானை குதிரை சின்னம். படைகுடி கூழமைச்சு நட்பரண் நாடோ டுடையான் அரசருள் ஏறு. இவை உரைச் செய்யுள் எனக் கொள்க. முகுடம் என்பது தென்சொல்லே. முகு - முகிள். முகிள்தல் = அரும்புதல். முகிள்-முகிழ் = அரும்பு. முகிழ்-முகிழம்-பேரரும்பு. முகிழ்-முகிழி. முகிழித்தல் = அரும்புதல். முகிள்-முகுள்-முகுளம் = பேரரும்பு, மொட்டு. முகுள்-முகுளி. முகுளித்தல் = க.அரும்புதல். உ.குவிதல். முகுளிக்கும்..... அரவிந்த நூறாயிரம் (தண்டி.62) முகுளம்-முகுடம் = குவிந்த அரசர் மணிமுடி. முகுடமும் பெருஞ்சேனையும் (பாரத.குரு.14). முகுடம் - வ. முகுட்ட. முகுடம்-மகுடம் = மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா. முதற்போ. 246). மகுடம்-வ. மகுட்ட. பரே தம் சமற்கிருத மொழியில் (Sanskrit Language) முகுடம் தென்சொல்லேயென்று காட்டியிருப்பதைக் காண்க. (பக்.385). நாட்டுத் தட்டல்லாத சிறந்த குலக்குதிரைகள் புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், கனவட்டம், கோரம் முதலிய பலவகைகளாக வகுக்கப்பட்டிருந்தன. அவற்றுள், பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம்; சேரன் குதிரை பாடலம்; சிற்றரசர் குதிரை கந்துகம். திசைபற்றிப் பாண்டியநாடு தென்புலம் என்றும், சோழநாடு குணபுலம் என்றும், சேரநாடு குடபுலம் என்றும், சொல்லப் பட்டன. பாண்டியனுக்குத் தென்னன் அல்லது தென்னவன் என்னும் பெயரும் எழுந்தது. முந்நாடும், தனித்தனி நாடென்றும் ஒருங்கே தமிழகம் என்றும் பெயர்பெற்றன. கடல் கோட்குப்பின் எஞ்சியிருந்த பழம்பாண்டி நாட்டுப் பகுதியின் ஊடு, குமரி என்னும் பேரியாறு ஓடிற்று. தெனாஅ துருகெழு குமரி (புறம். 6:2) என்பதனால் அதன் பெருமையும் வேகமும் அறியப்படும். வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண வுவாத்தி அபஞ்சிகன் என்போன் பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்ட மஞ்சித் தென்றிசைக் குமரி யாடிய வருவோள் என்பதனால் (மணி.13:3-7), பண்டைநாளில், வடநாட்டிற் கங்கையாற்றின் கரையில் வாழ்ந்தோரும், தம் தீவினை போக்க வந்து நீராடுமாறு, குமரியாறு ஒரு சிறந்த திருநீர்நிலையாக விருந்ததையறியலாம். பாண்டியன் தன் தலைநகரைக் குமரியாற்றின் கயவாயில் அமைத்ததாகத் தெரிகின்றது. கயவாய் என்பது ஆறு கடலொடு கலக்குமிடம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு.528). பாண்டியன் தலைநகர் கடல்வழியாக வருவோர்க்கு வாயில் போல் இருந்தமையால், கதவம் அல்லது கதவபுரம் என்று பெயர்பெற்றிருக்கலாம். கபாடபுரம் என்னும் வடசொல் அலைவாய் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் இருக்கலாம். கடத்தல் கடந்துசெல்லுதல். கட-கடை = வாயில். கட-கடவு = கடந்து செல்லும் வழி. கடவு-கதவு = வாயில், வாயிலடைப்பு. ஒ. நோ : door = door-shutter, entrance. கதவு-கதவம் = பெருங்கதவு. கதவம்-வ. கவாட-கபாட (முறைமாற்றுப் போலி). வடமொழியில் இச்சொற்கு மூலம் இல்லை. குமரிமலை, கடல்கொண்ட நாட்டில் எவ்வாறு அமைந் திருந்தது என்று ஆயுமிடத்து, அந்நாட்டின் பகுதிகளை நன்கறிந்து காட்டு எலியட்டு (Scott Elliot) எழுதியுள்ள மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுட்போந்த படத்தினாலே, ஒரு பெரு மலையானது மேலைக்கடலில் தொடங்கி ...... மட காசுக்கர் (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது..... இம்மலையைத் தமிழிற் குமரியென்றும் வட மொழியில் மகேந்திரம் என்றும், முன்னோர் கூறினாரென்ப தற்குக் காரணமுண்டு. சிவதருமோத்திரம் என்னுஞ் சைவவுபாக மத்தில், பொதியிற்குத் தென்பால் மகேந்திர முண்டென்றும், அந் நூலுரையுள் தெற்குமுதல் வடக்கு ஈறாக அஃது இருந்ததென் றும், கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ள தேசம் பொன்மய மான இலங்கை யென்றும் குறிக்கப்படுகின்றது. என்று, பேரா கா.சுப்பிரமணியப் பிள்ளை சை.சி.நூ.ப. கழகப்பதிப்பான தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியத்திற்குத் தாம் வரைந்துள்ள ஆராய்ச்சி முன்னுரையிற் கூறியுள்ளார். உன்னதத்தென் மயேந்திரமே யுயர்மலையஞ் சையகிரி வின்னவிலுஞ் சுத்திகமே யிருக்குமுயர் விந்தியமே பன்னுபுகழ் மிகுபாரி யாத்திரமே யெனப்பகர்ந்த இன்னகிரி யேழுமுதற் குமரிதலத் திசைந்தனவே. அங்கமெதிர் நிரனிறையாற் சமாக்கியமு மணிமலையுஞ் சங்கமுந்தண் குமுதமுநல் வராகமெனுந் தலந்தானுந் துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின் அங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம். (சிவதருமோத்திரம், கோபுரவியல், 47, 48) இச்செய்யுட்களினின்று, இடைக்கழகக் காலத்தில், குமரி முனைக்குத் தெற்கில் பழைய குமரிமலைத் தொடரின் பகுதி யாகவோ தனியாகவோ ஒருமலையிருந்ததென்றும், அதினின்றே குமரியாறு தோன்றிக் கிழக்கு நோக்கி யோடிய தென்றும், இலங்கை இந்தியாவோடு இணைந்திருந்ததென்றும், குமரி யாறும் பொருநையாறும் இலங்கையூடும் ஓடியிருக்கலாமென் றும், பாண்டிநாடு குமரிமுனையினின்று 500 கல் தொலைவு தெற்கே நீண்டிருந்திருக்கலாமென்றும், உய்த்துணரப்படும். சோழனுக்கு உறையூரும், சேரனுக்குத் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கருவூரும், தலைநகராயிருந்தன. பாண்டியன் தலைநகர், ஆட்சிக்கும் நீர்வாணிகத்திற்கும் ஒருங்கே பயன்பட்டது. நெல்லை மதுரை முகவை மாவட்டங்களின் மேல் பகுதியும் கொங்குநாடும் வேம்பாய் (Bombay) மாநிலத்தின் மேல்பாகமும் சேர நாடாயிருந்தன. கதவபுரம் கட்டியமைக்கப்பட்டுப் பல்லாண்டு சென்றபின், இரண்டாம் கழகம் அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர் ஐம்பத்தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டுப் பாடினார் மூவாயிரத்தெழுநூற்றுவர் என்றும், அக்கழகத்தை நடத்திவந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்றும், அவருட் பாவரங்கேறி னார் ஐவர் என்றும், கழகம் இருந்த கால நீட்சி மூவாயிரத்தெழு நூற்றாண்டு என்றும், இறையனாரகப் பொருளுரை கூறுகின்றது. தலைக்கழக வரலாற்றிற் போன்றே, இதன் வரலாற்றிலும் பல செய்திகள் தள்ளத்தக்கன. கழக மிருந்தது மட்டும் உண்மையான செய்தியாகும். இடைக்கழக நூல்நிலையத்தில் இருந்த நூல்கள் எண்ணாயிரத்தெச்சம் என்று, ஒரு செவிமரபுச் செய்தி வழங்கி வருகின்றது. செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் மாபெரும் பகுதியைக் கடல் கொண்டுவிட்டதனால், தலைக்கழகத்தில் 549-ஆக இருந்த புலவர் தொகை 59-ஆகக் குன்றிற்று. மூவேந்தரும் ஒரே குடியினரும் ஒரே மொழியினருமாதலால், தம்முட் பெண்கொண்டுங் கொடுத்தும் இயன்றவரை ஒற்று மையைப் பேணி வந்தனர். ஆயினும், ஒரோவொரு சமையத்து, பழவிறல்தாயத்தோ டமையாது புதுவிறல் தாயத்தை நச்சிய பேராசைப் பெருவலிவேந்தன், ஏனைவேந்த னொருவனொடு பொருது அவன் நாட்டைக் கைப்பற்றுவதற்குத் தோற்றுவாயாக, தன்நாட்டுப் பாலைநில மறவரை யேவி அவன் நாட்டு முல்லை நிலத்து ஆநிரைகளைக் கவர்ந்து வரச்செய்து, அவனைப் போருக்குத் தூண்டுவதும் நேர்ந்தது. இதை, வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே (தொல். 1002) வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும். (தொல். 1003) வஞ்சி தானே முல்லையது புறனே. (மேற்படி 1007). எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. (தொல். 1008) என்பவற்றால் அறியலாம். ஒரு வேந்தன் இன்னொரு வேந்தனுக்குப் பெண் கொடுக்க மறுத்த போதும், ஒரு வேந்தன் கொடுங்கோலாட்சி செய்யின் ஒரு செங்கோல் வேந்தன் அவனைத் திருத்தும்போதும், போர் நிகழும். ஆயின், அன்று நிரை கவர்தலும் நிரை மீட்டலுமின்றி நேரடி யாகப் போர் தொடுக்கப்படும். பாலைநிலத் தலைவர், வேந்தரால் ஏவப்படும்போது மட்டுமன்றி, வலிமை யற்ற வேந்தர் ஆளும்போதும், அடுத்துள்ள முல்லை நிலத்து ஆநிரைகளைக் கவர்வது வழக்கம். இங்ஙனம் ஒருபுறம் பாலை மறவரால் நிரை கவரப்பட்டும், மற்றொருபுறம் கோநாய் புலி முதலிய காட்டுவிலங்குகளால் மந்தையாடுமாடுகள் அடிக்கப்பட்டும், இடர்ப்பட்டு வந்த இடையர், தற்காப்பு வினையிலும் தடுப்பு வினையிலும் தொடர்ந்து ஈடுபட்டதனால், நாளடைவில் குறிஞ்சிநிலக் குறவர்க்கும் பாலை நில மறவர்க்கும் எள்ளளவும் இளைக்காத காளையரும் ஆளியரும் ஆயினர். ஆயினும், பாலை நிலத்தார் போல் வலியப் போர்க்குச் சென்றதில்லை. ஆயின், வந்த போரை விட்டதில்லை. ஆயர்போல் ஆய்ச்சியரும் மறமிகுந்த பாலைநிலத் திற்கும் சென்று ஆனைந்து விற்றனர். பாலை நிலத்தார்போற் சூறையாடலையும் போர்புரிதலையும் வாழ்க்கைத் தொழிலாகக் கொள்ளாது, ஆடவர் ஆடுமா டெருமையாகிய முந்நிரைகளை மேய்த்தும், வானவாரிப் பயிர் களை விளைத்தும்; பெண்டிர் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய்யாகிய ஆனைந்தைக் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய முந்நிலத்தும் விற்றும்; அமைதியாக வாழ்க்கை நடத்திவந்த ஆயர், தம் மறத்தைக் குன்றாமற் காத்தற்கும் தம் உடல் வலிமையை மேன்மேல் வளர்த்தற்கும், ஏறுதழுவல் என்னும் பெண்கோடல் முறையை ஏற்படுத்தினர். ஆயர் குலத்தில் வினைவல பாங்கரல்லாத உயர் குடியிற்பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும், பிறந்தவுடன் அவ்வப்பெண்ணின் பெயரால் ஒவ்வொரு சேங்கன்று ஒதுக்கப்பெற்றது. அக் கன்று களை, வேலையிற் பழக்காதும் விதையடிக்காதும் சிறந்த வூட்டங் கொடுத்து வளர்த்து வந்தனர். அவை கொழுத்துப் பருத்து, காளைப் பருவத்தில், கடைந்தெடுத்த கருங்காலித் தூண்கள் போன்ற கால்களுடனும், உருண்டு திரண்ட உடலுடனும், மதர்த்துச் சிவந்த கண்களுடனும். கண்டார் அஞ்சும் கடுந் தோற்றத்தை அடைந்தன. ஆண்டுதோறும், பூப்படைந்து மணத் திற்கேற்ற கன்னியர்க்குரிய காளைகளை யெல்லாம், கொம்பு திருத்திக் கூராக்கி, ஒரு குறித்த நன்னாளில், அழகாகச் சுவடிக் கப்பட்ட ஒரு தொழுவத்திற்குள் அடைத்து, ஒவ்வொரு குமரியை யும் மணக்க விரும்பும் ஆயர்குலக் குமரர் அவ்வக் குமரிக்குரிய காளையைத் தனிப்படப்பிடித்தடக்கி நிறுத்துமாறு, அவற்றைத் திறந்து விட்டனர். அவை இருமருங்குங் கூடிநிற்கும் பெருங் கூட்டத்தைக் கண்டும், அக்கூட்டத்தாரின் ஆரவாரத்தொடு கூடிய பல்லியப் பேரோசையைக் கேட்டும், மருண்டு மிரண்டு, கூற்றவன் தூதர்போற் கொடிய பார்வையுடன், வாலை முறுக்கியும் காலைக் கிளப்பியும் உடலை வளைத்தும் கழுத்தைத் திரித்தும், குளம்பு பட்ட விடமெல்லாம் தீப்பறக்கக் குதித் தோடியபோது, ஏறுதழுவுங் குமரர் பலர் எதிர் நின்ற கொம்பைப் பற்றியும், அள்ளையிற் பாய்ந்து கழுத்தைத் தழுவியும், பின் சென்று காலை வாரியும், பிறவாறும், தாம் குறித்த காளையை அடக்கி நிறுத்த இயன்றவரை முயன்றனர். சிலர் கண்ட அளவில் அஞ்சி நின்று விட்டனர். சிலர் மறு விழாவிற்குக் கடத்தி வைத்தனர். சிலர் சிறு புண்ணொடு திரும்பினர். சிலர் விழுப்புண் பட்டனர். சிலர் குடல் சரிந்து அங்கேயே மாண்டனர். சிலர் வென்றனர். வென்றவர் தம் விலைமதிப்பில்லாப் பரிசைப் பெற்று விண்ணின்பந் துய்த்தனர். கடல்கோளின் பின், கடல்கோளச்சத்தாலும் மக்கட் பெருக்கின் விளைவாகவும், பெருங்கூட்டத்தார் வடநாவலஞ் சென்று, குடியமர்ந்தனர். அங்குத் தம் தாய்நாட்டை நினைவு கூர்தற்கு, தொழுநை யாற்றங் கரையடுத்து ஒரு நகரமைத்து அதற்கு மதுரை என்று பெயரிட்டனர். அது தென்வாரியில் முழுகிப் போன பஃறுளி மதுரையை நோக்கி, தமிழரால் வடமதுரை எனப் பட்டது. அதனால், பஃறுளி மதுரையும் வடமதுரை நோக்கித் தென்மதுரையெனப்பட்டது. ஆகவே, வட தென் என்பன உறவியல் அடைகளே என அறிக. மது என்னும் ஓர் அரசன் பெயரால் அவன் தலைநகர் மதுபுரி எனப்பட்டதென்றும், அது பின்னர் மதுரை - மத்ரா என்று திரிந்ததென்றும், கூறுவது பொருந்தாது. மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை (திவ்.திருப்பா. 5) என்று ஆண்டாள் தென்மதுரையொடு ஒப்புநோக்கியே பாடுதல் காண்க. பாண்டியன் கடல்கோட்குப்பின் பனிமலை சென்று அதன் மேற் கயற்பொறி பொறித்து, கங்கையாற்றங்கரை நகரில் தன் உறவின னைத் துணையரையனாக அமர்த்திவிட்டு வந்தது போன்றே, சோழனும் தான் வேந்தனானபின் பனிமலைமேற் புலிப்பொறி பொறித்து, கங்கைநாட்டை ஆளுமாறு ஒரு படிநிகராளியை அமர்த்தி விட்டு வந்தான். இங்ஙனம், பாண்டியர் குடியான திங்கள் மரபும் சோழர் குடியான கதிரவன் மரபும் வடநாட்டில் நிறுவப்பெற்றன. வடநாடு மொழிபெயர் தேயமாயினும், தமிழரும் அங்குக் குடியிருந்ததனாலும், திரிமொழியாளர்க்கும் தமிழ் ஓரளவு விளங்கியதனாலும், கற்றார் அனைவர்க்கும் தமிழே இலக்கிய மொழியாயிருந்தமையாலும், சேர சோழ பாண்டியம் போலும் வல்லரசு அங்கின்மையாலும், சில்லாயிரம் ஆண்டுகள் தமிழரசு அங்குச் செவ்வன் நடைபெற்றது. தலைக்கழகத்திற் போன்றே, இடைக்கழகத்திலும் முந்நாட்டையுஞ் சேர்ந்த தமிழகத் தலைமைப் புலவரெல்லாரும் கலந்திருந்து, முதுநூலாய்ந்தும் புதுநூலியற்றியும் வந்தனர். பாண்டிய நாட்டின் பெரும்பகுதியை ஏற்கெனவே கடல் கொண்ட தனாலும், கதவபுரம் கடல் வாயிலிருந்ததனாலும், ஆழ் கடலிற் செல்லும் நாவாயும் வங்கமும் போன்ற பெருங்கலங்கள் தமிழகத் திற் புணர்க்கப்பட்டதனாலும், பாண்டியன் முன் விழிப்பாயிந் தது, மறுகடல்கோள் நேரின் குடும்பத்தொடு தப்புமாறு, ஒரு பெருங்கலத்தை என்றும் அணியமாய் வைத்திருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள் தமிழிலக்கியத்திற் இரண்டாம் கடல் கோள், தோரா. கி.மு.2500-இல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அக்கடல்கோளால், நாகநாடு என்று சொல்லப்படும் கீழ்த்திசை நிலப்பகுதி, ஏறத்தாழ 1200 கல் தொலைவு பரப்புள்ளது மூழ்கிப் போயிற்று. அதுவே, தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை யின்றேழ் நாளி லிருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே பூமிநடுக் குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும். என்று மணிமேகலையில் (9:17-22), முன்னறிவிப்புப் போற் கூறப்பட்ட பின்னறிவுப்புச் செய்தி. கதவபுரமும் குமரியாற்றிற்குத் தென்பால் நிலமும் மூழ்கிப் போயின. இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்துவிட்டது. வங்கக் குடாக்கடல், புதிதாகத் தோன்றியதனால், தொல்கதை (புராண) முறையில் சகரரொடு தொடர்புபடுத்தித் தொடுகடல் எனப் பட்டது. தொடுதல் தோண்டுதல். வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்குங் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் என்று (புறம்.6), காரிகிழார் பாடுதல் காண்க. உருகெழு குமரி என்பதற்கு, உட்குந் திறம் பொருந்திய கன்னியாறு என்றே பழைய உரையாசிரியர் கூறுவதையும் நோக்குக. குமரியாறிருக்கவும் அதன் கயவாயிலிருந்த கதவபுரம் மூழ்கியது, காவிரியாறிருக்கவும் அதன் கயவாயிலிருந்த காவிரிப் பூம்பட்டினம் மூழ்கியது போலாம். கோவலன் காலத்திலேயே வங்கக்கடல் இருந்ததனால்தான் அவன் மாமன் மாநாய்கன் (மாநாவிகன்) நீர்வாணிகத் தலைவனா யிருக்கவும், சாதுவன் கலத்திற் சென்று கீழைத்தீவுகளுடன் வாணிகஞ் செய்யவும், இயன்றது. கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் நாகமுத்திரையுங் கொண்டிருந்ததனால், நாகர் எனப்பட்டார். அவர்நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகரும் அநாகரிகருமாக இருசார் மாந்தரும் இருந்தனர். கீழ்நில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னவர் (மணி. 9:55) என்றும், நாக நாடு நடுக்கின் றாள்பவன் வாகை வேலோன் வளைவணன் (மணி. 24:54-5) என்றும், குறிக்கப்பட்டவர் நாகரிக மக்கள். நக்க சாரணர் நாகர் என்றும் (மணி.16:15) நக்க சாரணர் நயமிலர் தோன்றி .................................................... ஊனுடை யிவ்வுடம் புணவென் றெழுப்பலும் என்றும் (மணி. 56-59), குறிக்கப்பட்டவர் நரவூனுண்ணிகளான விலங்காண்டி மாக்கள். வங்கக் கடல் தோன்றுமுன் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகலும் குடியேறியதனால், அவர் சேர்ந்த வூர்கள் நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர்பெற்றன. அங்கமெதிர் என்னுஞ் சிவதருமோத்திரச் செய்யுளின் (கோபுர. 48) சிறப்புரையில் கனகமயமான இலங்கையென்னுந் தேசம், இரத்னபூமியுடன் கூடியைஞ்ஞூறு யோசனை சமுத்திரத்துக்குட் புகுந்திருக்குமென்க. என்னுங் குறிப்பும், சேண்டொடர் சிமையத் தெய்வ மகேந்திரத் தும்பர்ச் சென்றான் (மகேந்.25) கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர் வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன (கடல்தாவு. 21) என்னும் கம்பராமாயண அடிகளும், இங்குக் கவனிக்கத்தக்கன. ஆரியத் தொல்கதை மயக்கினால், இடைக்காலப் பெரும் புலவரும், நாகர் என்னும் மாந்தரினத்தாரைப் பாம்பினமாகக் கருதிவிட்டனர். கீழ்நாடு என்பதையும் கிழக்கு நாடென்று கொள்ளாது, நிலத்திற்கும் நீருக்கும் கீழுள்ள நாடென்று கொண்டுவிட்டனர். கடல்கோள் நிகழ்ந்தவுடன், பாண்டியன் முன்னரே தான் அணியமாக வைத்திருந்த பெருங்கலத்திலேறி வெள்ளத்தைக் கடந்து, கொற்கைத்துறைப்பக்கம் வந்து சேர்ந்திருத்தல் வேண்டும். அதன்பின், கடல்கோட்குத் தப்பிய தன் குடிகள் வாழ்வதற்கு, சோழ நாட்டிலும் சேர நாட்டிலும் தென்கோடிப் பகுதிகளை வென்று கொடுத்தான் என்பது, மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன். என்னும் முல்லைக் கலித் (104) தரவால் அறியக் கிடக்கின்றது. மேவார் நாடு, வலியினான் வணக்கிய என்னுங் குறிப்புக் களால், சேர சோழர் நிலந்தர இணங்காமையும் பாண்டியன் பொருது வென்றதும், அறியப்படும். அடியிற் றன்னளவு .............. தென்னவன் வாழி, என்னும் சிலப்பதி காரப் பகுதியுரையில், அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும் சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னு மிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன் வாழ்வானாக வென்றவாறு. என்று அடியார்க்கு நல்லார் வரைந்திருப்பது, இரண்டாம் கடல் கோட்குப் பிற்பட்ட செய்தியையே குறிக்கும். முதற் கடல்கோட்குப்பின் நிகழ்ந்தது போன்றே, இரண்டாம் கடல்கோட்குப் பின்னும், தென்னாட்டு மக்கள் வடதிசையும் வடநாட்டு மக்கள் வடமேலைத் திசையும் பரவிச் சென்றனர். கடல்கோட் செய்தி பாபிலோனையும் எட்டிற்று. முதற் கடல்கோள் மாபேரளவினதாயிருந்து ஞாலத்தின் மேற் புறத்தைப் பலவிடத்தும் மிக மாற்றியிருப்பினும், அது மிகப் பழங்காலத்ததாதலின், அது பற்றிய செய்தி பிறநாட்டு வரலாறு களில் இடம் பெறவில்லை. ஆயின், இரண்டாம் கடல்கோட் செய்தி, முதற்கண் பாபிலோனிய நாட்டிலும் பின்னர் யூதேயா விலும் அதன்பின் பிறநாடுகளிலும் பரவி, அவ்வந் நாட்டுச் செய்தியாக நிலைத்து விட்டது. பாபிலோனியாவில். கி.மு.2000 ஆண்டுகட்கு முன்பே, கடல்கோள் போன்ற ஒரு தொடர்மழை வெள்ளக் கதை வழங்கி வந்திருக்கின்றது. அதையே யூதர் கொண்டு கூறியதாகக் தெரிகின்றது. தென் கல்தேயத் தலைநகராகிய ஊர் என்னும் பாபிலோனிய நாட்டுப் பேரூரில், ஆபிரகாம் கி.மு. 1996-இல் பிறந்தான். அவன் மரபில் வந்த மோசே (கி.மு.1571-1451), எழுதினதாகச் சொல்லப் படும் திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis) 7-ஆம் அதிகாரத்தில் உள்ள வெள்ளக் கதை, பாபிலோனியக் கதைக்கு ஏறத்தாழ 500 ஆண்டு பிற்பட்டது. வெள்ளக்கதை வழங்கும் நாடுகளிலெல்லாம், கலத்தின் வாயி லாகக் கடல்கோட்குத் தப்பிய பாண்டியன் போல் ஒவ்வொருவன் சொல்லப்படுகின்றான். கல்தேயர் (பாபிலோனிய) நாட்டில் சிசுத்துரசு (Xisuthrus) அல்லது அசிசு அதரா (Hasis adra); யூத நாட்டில் நோவா (Nova); கிரேக்க நாட்டில் ஒசீசெசு (Ogyges) அல்லது தியூக்கேலியன் (Deucalion); சீன நாட்டில் போகி (Fohi). பிற்காலத்தில் வேத ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் ஓரளவு உண்மையறிந்ததனால், சத்தியவிரதன் என்னும் திராவிட பதி என்றனர். பல்வேறு நாடுகளிற் கடல்கோட்கு அல்லது வெள்ளத்திற்குக் குறிக்கப்பட்ட காலம்- நாடு காலம் பாபிலோனியா தோரா . கி.மு. 3000-இதற்குச் சற்று முன்பு. யூதேயா (Bible) 2348 இலங்கை 2387 தமிழகம் தோரா. 2500 ஒயன்னெசு போன்றே, பலர் கிழக்கினின்று பாரசீகக் குடாக் கடல் வழியாகப் பின்னர் இடையிட்டிடையிட்டு வந்ததாக, பாபி லோனியச் செங்கற் பட்டயங்கள் கூறுகின்றன. திருப்பொத்தகம் (Bible), படைப்பியல் (Genesis), 6-ஆம் அதிகாரம் முதலிரு திருமொழிகள், மாந்தர் ஞாலத்தின்மேற் பெருகத் தொடங்கி, அவர்கட்கு மகளிர் பிறந்தபோது, தேவகுமரர் மாந்தர் மகளிரை மிக அழகுள்ளவரென்று கண்டு, அவர்களுள் தமக்குப் பெண்களைத் தெரிந்து கொண்டார்கள். என்றிருப்பது, குமரி நாட்டினின்று நாகரிக வளர்ச்சியில்லா நிலையில் மேனாடு சென்ற மாந்தர் வழியினர், நாளடைவில் வெள்ளையராகி, பிற்காலத்தில் அங்குச் சென்ற நாகரிக மாந்தரின் மகளிரை மணந்து கொண்ட னர் என்பதையே, குறிக்கும். அதே அதிகாரம் 4-அம் திருமொழியில், அக்காலத்தில் அரக்கர் ஞாலத்திலிருந்தனர் என்பது, ஆப்பிரிக்க மாந்தர் அக்காலத்தி லும் கருத்தும் பருத்தும் இருந்ததையே காட்டும். இனி, 7-ஆம் 8-ஆம் அதிகாரங்களில் வெள்ளச் செய்தியையும், 9-ஆம் 10-ஆம் அதிகாரங்களில் நோவாவின் மரபுப் பெருக்கத்தை யும், கூறியபின், 11-ஆம் அதிகாரம் 2-ஆம் திருமொழி, மக்கள் கிழக்கே யிருந்து வழிநடந்து வருகையில், சினெயார் நாட்டிற் சமநிலத்தைக் கண்டு, அங்கே குடியிருந்தனர். என்றிருப்பது, கடல்கோட்குப்பின், நாவலந் தேயத்தினின்று ஒரு கூட்டத்தார் நில வழியாக மேலையாசியா சென்று தங்கினர் என்பதையே, தெரிவிக்கும். கடல்கோளச்சத்தினால் மட்டுமன்றி, வாணிகஞ் செய்தற்கும், தமிழர் பலர் வடக்கே சென்று கங்கை நாட்டிற் குடியேறினர். குறிஞ்சித் தெய்வமாகிய சேயோன் வணக்கத்தினின்றே சிவநெறி திரிந்ததனால், சிவனுக்கும் மலையகமே சிறந்த இருக்கையாகக் கொள்ளப்பட்டது. பனிமலை கடலடியினின்றெழுந்த பின்பும், குமரிமலையின் பெருமை குன்றாதிருந்ததனால், அஃதிருந்தவரை பாண்டியன் பெருமிதத்தோடிருந்தான். அஃது மூழ்கியபின், அவன் தன் நாட்டின் சிறுமையையும் தாழ்வையும் நீக்குவதற்காக மட்டுமன்றி, தன் குடி தொன்று தொட்டு வழிபட்டுவந்த சிவனுக்கு ஒரு தகுந்த இருக்கை யமைக்கவுமே, பனிமலையைக் கைக்கொண்டான். அம்மலையின் மேற்பகுதி வெண்பனிக்கட்டி மூடி என்றும் வெண்ணிறமாய்த் தோன்றுவதால், வெள்ளிமலை யெனப்பட்டது. அதன் கொடுமுடியே சிவனிருக்கையாகவும் மண்ணுலகப் பேரின்ப நிலையமாகவும், சிவநெறியாராற் கருதப் பெற்றது. பாண்டியர் பன்முறை பனிமலைமேற் கயற்பொறி பொறித்தது, வேத்தியல் மட்டுமின்றித் தேவியல் தொடர்புங் கொண்டதாகும். இக்காலத் தமிழகச் சிவமடங்களும் வெள்ளி மலைத் தொடர்பு கூறுதல் காண்க. சிவனடியார்க்குச் சிறந்த அக்கமணி (உருத்திராக்கம்), பனிமலை யடிவாரத்துள்ள நேபாள நாட்டிலேயே தொன்று தொட்டு விளைகின்றது. பஃறுளியாறு மூழ்கிய பின் கங்கையாறே நாவலந் தேயப் பேரியாறானதனாலும், வெள்ளிமலையைத் தன் குடுமி யாகக் கொண்ட பனிமலையினின்று அது தோன்றி வருவதாலும், சிவநெறியார்க்கு அதுவே தலைசிறந்த திருநீர்நிலையாயிற்று. இதனால், சமயப்பற்றாலும் தமிழர் பலர், சிறப்பாகப் பெருஞ் செல்வர், கங்கை நாட்டிற் குடியேறினர். அதன் விளைவாகத் திருக்கேதாரம் வாரணாசி (காசி) முதலிய சிவநகர்கள் வட நாட்டில் தோன்றின. காவிரிப் புதல்வர் என்பதுபோல், தமிழக வேளாளருட் சிலர் தம்மைக் கங்கை குலத்தார் என்று சொல்லிக் கொண்டனர். கங்கையம்மன் என்னும் நாட்டுப்புறத் தெய்வமும் தோன்றிற்று. சிவநெறியார்க்கு நேபாளத்தினின்று அக்கமணி வருவது போன்றே, அரசர்க்கும் தெய்வப் படிமைகட்கும் வீச வெண்கவரி யும், கூந்தலில்லாப் பெண்டிர் கொண்டை முடிக்கக் கருங்கவரி யும், பனிமலை யடிவாரத்தினின்றும் திபேத்தினின்றும் வந்திருக் கின்றன. நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி யயல தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம் (புறம்.132) என்பதனால், கவரிமயிர் தரும் எருமை பனிமலை யடிவாரத்திற் புல்மேய்ந்ததைத் தமிழர் கண்ணாரக் கண்டமை அறியப்படும். கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசல் மேவற் சேயிழை மகளிர் (பதிற்.43:1-2) என்பது, பண்டைக்காலப் பெண்டிரும் கவரிமுடி யணிந்ததைத் தெரிவிக்கும். கவரிமா என்னும் எருமைக்குக் கியாக்கு (gyak) என்பது திபேத்தில் வழங்கும் பெயர். ஆங்கிலத்தில் அது யாக்கு (yak) என்றும், தமிழில் ஆகு என்றும் திரியும். ஆகு கவரி சீகரம் சவரி. (பிங். 8:135). இதில், ஆகு என்பது முதலாகுபெயராக முடியைக் குறித்தது. கவரிமா ஒருவகை எருமையாதலால், கல்லாடர் தமிழ்நாட்டு எருமையையும் கவரி என்று குறித்துவிட்டார். படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியும் (கல்லா. 53:30). இதைப் பிங்கலமும் காரான் மகிடம் கவிரி காரா என்று பின்பற்றி விட்டது. வணிகர் மட்டுமன்றி, அடியாரும் புலவரும் அரசரும் படை மறவரும் அடிக்கடி வடநாடு சென்று வந்ததனால், அந்நாட்டு இயற்கையமைப்பும் அரசியலும் மக்கள் வாழ்க்கை முறையும் சிறப்பு நிகழ்ச்சிகளும், தமிழர்க்குத் தெரிந்து இலக்கியத்திலும் குறிக்கப்பட்டன. கங்கை சிந்தாறுகளும், சோணை, வாரணை, அசி, தொழுனை முதலிய கங்கைக் கிளைகளும் பண்டைத் தமிழ்ப் புலவர்க்குத் தெரிந்திருந்தன. கங்கை நாட்டில் முதற்கண் குமரிநாட்டினின்று சென்ற தமிழரே குடியிருந்தமையால், ஊர்ப்பெயர்கள் பெரும்பாலும் ஊர், நகர், புரம், புரி எனத் தமிழீறே பெற்றன. முதலிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும் புரி என்பது கோட்டையுள்ள நகரையுங் குறித்து, பின்னர்ப் பொது வீறுகளாயின. புரம்=உயர்வு, உயர்ந்த கட்டிடம். புரி=வளைவு, வளைந்த (சூழ்ந்த) கோட்டை. பாதிரிபுரம் என்பது பிற்காலத்தில் பாடலிபுர எனத் திரிந்தது. காளிவணக்கங் கொண்ட தமிழர் சிலர், வங்கத்திற் குடியேறிக் கங்கைக் கரையிற் காளி கோவிலுடன் அமைத்த நகரே காளிக்கோட்டம். காளி (பாலைநிலத்) தமிழ்த் தெய்வம். காளி கோட்டம் என்னும் இரண்டும் தூய தென்சொல். காளிக் கோட்டம் என்பது, இன்று ஆங்கிலச் சொல் வழியாகக் கல்கத்தா எனத் திரிந்துள்ளது. கங்கைக் கயவாய் அடுத்துத் தம்லுக் அல்லது தமுல்க் என்னும் பெயர் கொண்டுள்ள துறை நகர்ப் பெயர், தமிழகம் என்னும் சொல்லின் திரிபாயிருக்கலாம். தமலித்தி என்று பாலிமொழியிலும், தம்ரலிப்தி என்று சமற்கிருதத்திலும் வழங்கும் இடப்பெயர், தமிழ்நத்தி அல்லது தமிழுலாத்தி என்பது போன்ற தென்சொல்லின் திரிபா யிருக்கலாம். வேம்பாய் (Bombay) மாநிலப் பகுதி முழுதும் பதினெண்குடி வேளிர் பரவியிருந்ததனால், வேளகம் எனப்பட்டது. கண்ணன் ஆண்டகுச்சரநாட்டு மேற்பகுதியின் தலைநகர்ப் பெயரான துவாரகை என்னும் சொல், துவரை என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. எருமை (மைசூர்) நாட்டுத் துவரை நகரில் கி.பி.2-ஆம் நூற்றாண்டு ஆண்டுகொண்டிருந்த இருங்கோ வேள், தன் ஆள்குடியின் 49-ஆம் தலைமுறையினன் என்று சொல்லப்படுவதால், அவன் குடி முதல்வன் கண்ணன் காலத்த வனாகவே யிருந்திருத்தல் வேண்டும். அது கி.மு.1000. செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே ............................. (புறம். 261) என்று இருங்கோவேள் கபிலரால் விளிக்கப் பெற்றமையையும், அவன் வேள் என்று பெயர் பெற்றிருந்தமையையும் நோக்குக. ஒட்டர (Orissa) நாட்டுத் தலைநகரின் பெயரான கடகம் (Cuttack) என்னும் சொல், கோட்டை மதிலைக் குறிக்கும் தூய தென் சொல்லே. மதிலாற் சூழப்பட்டதனால் அந்நகர் கடகம் எனப் பெயர் பெற்றது. இன்று தெலுங்கு நாட்டுப் பகுதிகளாக விருக்கும் நெல்லூர் குண்டூர் மாவட்டங்கள், முன்னர்த் தமிழ்நிலமா யிருந்ததை, அவற்றின் பெயர்களே தெரிவிக்கும். நெல்லூர் மாவட்டத்தூடு ஓடும் வடபெண்ணையாறு, தமிழ்நாட்டுச் தென்பெண்ணை யாற்றுடன் ஒப்புநோக்கி யிடப்பெற்ற பெயர் கொண்டதென்பது, சொல்லாமலே அறியப்படும். கருநாடகம் (கன்னடம்), துளு, குடகம் முதலிய நாடுகள் கடைக் கழகக் காலத்திலும் தமிழ்நிலங்களாகவே யிருந்தன. பாண்டியன் வெற்றிச் செயல் வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் தின்னிசைய முரசமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட நாடார நன்கிழிதரும் ஆடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லின் ஊர்கொண்ட வுயர்கொற்றவ (மதுரைக். 75-88) என்று, மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை, அவன் முன்னோருள் ஒருவன் செய்த வெற்றிச் செயலை அவன்மேலேற்றிக்கூறி விளித்தார். அவ்வெற்றிச் செயல், கடல்கடந்து சென்று, சாவகம் என்னும் சாலித் தீவைக் கைப் பற்றியதாகும். சாலி என்பது செந்நெல் என்று பொருள்படும் தென்சொல், பிற்காலத்திற் பாண்டியனொடு சென்ற பிராமணப் பூசகன் ஒருவன், சாலி என்பது ஒரு தவசப் பெயராயிருத்தலால், அதை வடமொழியில் யவ என்று மொழிபெயர்த்தான். அது பின்னர் ஜவ-ஜாவ எனத் திரிந்து தமிழிற் சாவகம் என்னும் வடிவு கொண்டது. சாலித்தீவின் தலைநகர் சாலியூர். சாலித்தீவைப் பாண்டியன் கைப்பற்றியபின், தமிழர் அங்குச் சென்று குடியேறினர். அதனால், அத்தீவின் பல பிரிவுப்பெயர்கள் இன்றும் பாண்டியன், மதியன், புகார், பாண்டிய வாசம், மலையன்கோ, கந்தளி, செம்பூட்சேய் என்று தமிழ்ப்பெயர்களே கொண்டு விளங்குகின்றன என்றும்; மீனன் காப்பு என்னுமிடத் துள்ள மலையர், தம் முன்னோர் இந்தியாவினின்று வந்ததாகக் கூறுகின்றனர் என்றும்; கெரினி (Gerini) என்னும் ஆசிரியர், அங்கு வழங்கும் மலையன் கோலன் (Maleon Kolan) என்னுங்குடிப் பெயரை, மலையர் சோழர் என்னும் தமிழரசர் குடிப்பெயர் களுடன் இணைத்துக் காட்டுகின்றனர் என்றும்; திருவிசியம் (ஸ்ரீ விஜய) என்னும் அரையத் தலைவனுக்குச் சுறவக்கொடியும் திருமாற விசயோத்துங்கன் (ஸ்ரீ மாற விஜயோத்துங்கன்) என்னும் பெயரும் உண்டென்றும்; ரா.ராகவையங்கார் தாம் எழுதியுள்ள தமிழ் வரலாறு என்னும் நூலிற் கூறியுள்ளார். (பக்.338-9) மீனன் மீனவன்; அதாவது மீனக்கொடியுடைய பாண்டியன், மீனன் காப்பு என்பது பாண்டியன் காவலுள்ள இடம் என்று பொருள்படும். தமிழர் படிப்படியாகப் பக்கத்துத் தீவுகளிலும் நிலங்களிலும் பரவினதாகத் தெரிகின்றது. சாலிக்கு வடக்கிழக்கில் ஒரு சிறு சீவு மதுரா என்றும், வடமேற்கில் ஒரு பெருந்தீவு சுமதுரா (Sumatra) என்றும், வடக்கில் ஒரு மாபெருந் தீவு பொருநையோ (Borneo) என்றும், சுமதுராவிற்கு வடக்கிலுள்ள தீவக்குறை மலையா (Malaya) என்றும், பெயர் பெற்றுள்ளன. பொருநை (தாம்பர பரணி) என்பது பாண்டி நாட்டு ஆற்றுப் பெயர். மலையம் என்பது பொதியலைப் பெயர். சுமதுரா என்பதன் முன்னொட்டும் சிங்கபுரம் (Singapore) என்னும் தீவுப் பெயரும், ஆரியச் சார்பால் ஏற்பட்டனவாகும். புரம் என்னும் ஈறு தமிழ். இடைச்சொற்கள் (1) ஒலிக் குறிப்புக்கள் எ-டு : தும், துப் (துந்துபி) (2) விளியொலிகள் எ-டு : ஊ, ஏ, ஓ - ஹூ, ஹே, ஹோ (3) உணர்ச்சிக் குறிப்பொலிகள் எ-டு : வியப்பு - ஆ - ஹா, ஓ, ஹாஹா மகிழ்ச்சி - ஹோ இரக்கம் - ஆ, ஓ நோவு - ஆ, ஈ, ஆ-ஹா, (உம்-) ஹும் நினைவு - ஏ, ஓ கழிவு வருத்தம் - ஆ இகழ்ச்சி = ஏ, (உம்-) ஹும் உடன்பாடு-(உம்-) ஹும் (வ.வ.) இதழ்வகை அல்லி அகவிதழ்; புல்லி புறவிதழ்; இதழ் சிறியது; மடல் பெரியது. (சொல் : 67) இதென்ன மூட்டை? விளையாட்டு பல பிள்ளைகள் கூடினவிடத்து, ஒரு பெரிய பிள்ளை பிறரை யெல்லாம் வட்டமாக இருத்தி, அவர்கள் கைகளை விரித்து நிலத்தின்மேற் குப்புற வைக்கச் செய்து, ஒரு மரபுத்தொடர்ச் சொற்களைத் தனித்தனி சொல்லி ஒவ்வொரு சொல்லாலும் ஒவ்வொரு கையைச் சுட்டி, இறுதிச் சொல்லாற் குறிக்கப்பட்ட பிள்ளையை உங்கள் அப்பன் பேர் என்ன! என்று கேட்கும். அதற்கு அப்பிள்ளை முருங்கைப்பூ என்னும். பின்பு அப் பெரிய பிள்ளை முருங்கைப்பூ தின்றவனே? (ளே!) முள்ளாந் தண்ணீர் குடித்தவனே! (ளே!) பாம்புக்கை படக்கென்று எடுத்துக் கொள் என்று சொல்லும். முருங்கைப்பூ..... குடித்தவனே! (ளே) என்னும் பகுதியால், சொல்லுக் கொருவராக நான்கு பிள்ளைகள் சுட்டப்பெறும். குடித்தவனே! (ளே) என்று முடியும் பிள்ளை, உடனே ஒரு கையை எடுத்துப் பின்னால் வைத்துக்கொள்ள வேண்டும். குடித்தவனே! (ளே) என்று இரண்டாம் முறை முடியும் பிள்ளை, இன்னொருகையையும் எடுத்துப் பின்னால் வைத்துக் கொள்ளவேண்டும். இங்ஙனம் திரும்பத் திரும்பச் செய்யின், இறுதியில் ஒரு பிள்ளை அகப்பட்டுக் கொள்ளும். அப்பிள்ளை தன் இருகைகளையும் மடக்கி ஒன்றன்மேலொன் றாய்க் கீழேவைக்க, மற்றப் பிள்ளைகளும் தம் கைகளை அவ்வாறே அவற்றின்மேல் அடுக்கி வைப்பர். பெரிய பிள்ளை கீழே சாணிபோட்டு மெழுகலாமா? மண் போட்டு மெழுகலாமா? என்று கேட்டு, பிறர் சாணிபோட்டு மெழுகு என்றால், தன் அகங்கையால் அடிக்கையின் கீழ்ப் பூசுவதுபோல் தடவ வேண்டும்; மண்போட்டு மெழுகு என்றால், புறங்கையால் அவ்வாறு செய்யவேண்டும். பின்பு மீண்டும், தீட்டின கத்தியில் வெட்டலாமா? தீட்டாத கத்தியில் வெட்டலாமா? என்று பெரிய பிள்ளை கேட்டு, தீட்டின கத்தியில் என்றால் ஐந்துவிரலும் நெருக்கி நீட்டிப் பக்கவாட்டாலும், தீட்டாத கத்தியில் என்றால் மணிக்கைப் பக்கத்தாலும் வெட்ட வேண்டும். இனி, வெட்டுஞ் செயல்பற்றி, முற்கூறிய வினாவிற்குப் பதிலாக, அடியில் வெட்டட்டுமா? நுனியில் வெட்டட்டுமா? என்று கேட்டு. அடியில் வெட்டு என்றால் குத்துக்கையடுக்கின் அடியிலும், நுனியில் வெட்டு என்றால் அதன் நுனியிலும் வெட்டுவதுமுண்டு. பின்பு மீண்டும் முன்முறைப்படி கைகளை அடுக்கி வைக்க வேண்டும். பெரிய பிள்ளை ஒவ்வொரு கையாய்த் தொட்டு இதென்ன மூட்டை? இதென்ன மூட்டை? என்று கேட்கும். பிறர் அரிசி மூட்டை, பருப்பு மூட்டை, புளி மூட்டை. உப்பு மூட்டை என ஒவ்வொரு சரக்கின் பெயராற் கூறுவர். ஒவ்வொரு மூட்டையிலும் கொஞ்சங் கொஞ்சந் தாருங்கள் என்று பெரிய பிள்ளை கேட்கும். பிறர் தரமாட்டோம் என்பர். அதனாற் பெரிய பிள்ளை, எல்லாரையும் கண்ணை மூடிக் கொண்டு குப்புறக் கவிழ்ந்துகொள்ளச் சொல்வாள். அவர் அங்ஙனஞ் செய்தபின், உங்கள் அப்பா வருகிறார்கள், உங்கள் அம்மா வருகிறார்கள் என்று ஏமாற்றி யாரையேனும் எழ வைத்து, அப்பிள்ளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையான அடி பெரியபிள்ளை கொடுக்கும். ஒரு வரும் ஏமாறி எழாவிடின், விளையாட்டுப் போதும், எழுந்திருங்கள் என்று சொல்லி, எல்லோரும் எழுந்தபின் எல்லார்க்கும் அடிகொடுக்கும். இதோடு ஆட்டம் முடியும். இந்திய நாகரிகம் ஆரியரதெனக் காட்டக் கையாளப்படும் வழிகள் 1. பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்ட வரலாற்றை மறைத்தலும் மறுத்தலும். 2. பாண்டியர் நிறுவிய முத்தமிழ்க் கழக உண்மையை மறுத்தல். 3. தமிழ்நாட்டு வரலாற்றை வடக்கினின்றும் வேதக் காலத்தி னின்றும் தொடங்கல். 4. தென்னாட்டுப் பழங்குடி மக்களாகிய தமிழரை வந்தேறி களாகவும் கலவையினமாகவுங் காட்டல். 5. தமிழ் முன்னூல்களையும் முதனூல்களையும் பின்னூல்களாக வும் வழி நூல்களாகவும் காட்டல். 6. குமரிக்கண்ட இடப்பெயர்களையும் தெய்வப் பெயர்களை யும் மூவேந்தர் குடிப்பெயர்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டல். 7. கட்டுக்கதைகளையும் ஆரியச் சொற்களையும் புகுத்தி, இருபெருந் தமிழ்ச் சமயங்களாகிய சிவநெறியையும் திருமால் நெறியையும் ஆரிய வண்ணமாக்கலும், தமிழைக் கோயில் வழி பாட்டிற்குத் தகாத தென்று தள்ளலும். 8. மூவேந்தர் பேதைமையால் ஆரியம் வேரூன்றிய கடைக்கழகக் கால நூல்களினின்று ஆரியச் சார்பான சான்று காட்டல். 9. தமிழ் வடமொழிக்கிளையென்று அயலார் கருதுமாறு, அடிப்படைத் தமிழ்ச் சொற்கட்கெல்லாம் வலிந்தும் நலிந்தும் வடசொன் மூலங் காட்டல். 10. வடமொழி தேவமொழியென்றும், பிராமணர் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், வேதக்கால ஆரியப் பூசாரியரால் புகுத்தப் பட்ட ஏமாற்றுக் கருத்துக்களையும், பிறப்புத் தொடர்பான குலப்பிரிவினையையும், தொடர்ந்து போற்றல். 11. சமயச்சார்பான சொற்பொழிவுகளாற் பொது மக்களை அறியாமையில் அமிழ்த்துதல். 12. உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற்பதவியில்லாவாறு செய்தல். இந்திய நாகரிகம் தமிழரதே யாதல் வேத ஆரியர் மேலயாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு.2000-1500. அன்று அவர் கன்று காலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையினராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பார சீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்ற தாயும் இருந்தது இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ்வேத மொழி வடஇந்தியப் பிராகிருதத் தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச் சொற்களுண்மை யாலும் தெரியவருகின்றது. தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற் றாசிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. தமிழ், வேத ஆரியத்திற்கு முந்திய தாயிருப்பதோடு வேதப் பெயர்களே தமிழ்ச் சொற்களின் திரிபாகவுமிருக்கின்றன. வேதம் :விழித்தல் பார்த்தல், காணுதல், அறிதல். விழி = அறிவு, ஓதி (ஞானம்). தேறார் விழியிலா மாந்தர் (திருமந்திரம், 177) விழி - L.Vide-Vise. Skt. Vid-Veda. ஒ.நோ : குழல் - குடல், ஒடி - ஒசி. சுருதி : செவியுறுதல் - கேட்டல். செவியுறு-ச்ரு-ச்ருதி = கேள்வி. முற்காலத்தில் எழுதப்பெறாது கேட்டேயறியப் பட்டுவந்த ஆரிய மறை. மண்டலம் : முல்-முன்-முனி-வில். முல்-முர்-முரி. முரிதல் = வளைதல். முரி-மூரி = வளைவு. முர்-முரு-முருகு = வளைந்த காதணி. முரு-முறு-முறுகு. முறுகுதல் = வளைதல்; திருகுதல். முறுகு-முறுக்கு = திருகல், திருகிய தின்பண்டம். முறுக்கு-முறுக்கம். முறு-முற்று-முற்றுகை = நகரைச் சூழ்கை. முறு-முறை-மிறை = வளைவு. முறு-முறி. முறிதல் = வளைதல். முறி-மறி. மறிதல் = வளைதல், மடங்குதல். முல்-(முள்)-முண்டு = உருட்சி, திரட்சி. முண்டு-முண்டை உருண்டை, முட்டை. முண்டை விளைபழம் (பதிற். 60:6) முள்-முட்டு-முட்டை. முள்-(முண்)-முணம்-முணங்கு. முணங்குதல் = உள் வளைதல். முணம்-முடம் வளைவு. முடம்-முடங்கு. முடங்குதல் = வளைதல். முடங்கு-மடங்கு. முடங்கு-முடக்கு = மடக்கு. முடம்-(முடல்)-முடலை = குறடு, உருண்டை. முண்டு-மண்டு. மண்டுதல் = வளைதல். மண்டு-மண்டி, மண்டியிடல் = முழங்காலை மடக்குதல். மண்டு-மண்டலம் வட்டம், நாட்டுப் பகுதி, காலப் பகுதி, நூற்பகுதி. கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் வழக்குக் களை நோக்குக. மண்டலம்-மண்டலி, மண்டலித்தல் = செய்யுளின் எல்லா அடிகளும் அளவொத்து வருதல். ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) முதலும் ஈறும் ஒன்றித்து வருதல். மண்டலம்-மண்டிலம் - 1. வட்டம். 2. வட்டக் கண்ணாடி. 3. வட்டமான சுடர். (ஞாயிறு, திங்கள்) 4. நிலப்பகுதி. மண்டிலத் தருமையும் (தொல். அகத்.41) 5. அளவொத்த அடிகளைக் கொண்ட செய்யுள். அ-இ. அலம்-இலம். ஒ.நோ. அனம்-இனம். பட்டனம் - பட்டினம். இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் எனும் அரைச் செயற்கையான இலக்கிய நடை வழக்கை அல்லது பொத்தக மொழியை அமைத்து, அதிற்பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டனர். தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்கள், தமிழ் தோன்றியது முழுகிப்போன குமரிக் கண்டத்தில் 50,000 ஆண்டுகட்குமுன். தமிழ் நாகரிகம் தோன்றியது 20,000 ஆண்டுகட்குமுன். தமிழிலக் கண விலக்கியம் தோன்றியது கி.மு.10,000 ஆண்டுகட்குமுன். இந்திய நாகரிக அடிப்படை தமிழ் நாகரிகமே. ஆயினும், இன்று அது அறியப்படாமலிருப்பதற்குக் கரணியம் (காரணம்): ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழிலக்கியம் அனைத்தும் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனமையும், ஆரியக் குலப் பிரிவினையால் தமிழர் பல வகையிலும் தாழ்த்தப்பட்டிருப்பதும்; இவற்றிற்கு நேர்மாறாக, இந்தியக் கலைகளும் அறிவியல்களும் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ள சமற்கிருத நூல்களே இன்றிருப் பதும், அவற்றையெல்லாம் முதனூல்களே யென்று வடவர் வலிப்பதும், குலவரிசையிலும் கல்வித் துறையிலும் ஆரியர் உயர்த்தப்பட்டிருப்பதுமே. ஒரு திருடன் தான் திருடிய பொருளைத் தனதென்றே வலிப்பி னும், அப்பொருளின் வரலாறு அதுபிறனது என்பதை மெய்ப் பிப்பதுபோல், தமிழ் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு ஆகிய மூன்றும், இந்திய நாகரிகம் தமிழரதே என்பதை ஐயந்திரிபற நாட்டுகின்றன. ஆயினும், இவ்வரலாற்றை மேலையர் அறியார். தமிழரும் இதுவரை அவருக்கு அறிவித்திலர். இற்றைத் தமிழில் வடசொற்களும் தமிழுலகத்தில் வடநூல் முறைகளும் ஆரியக் கருத்துக்களும் மிகுதியாகப் புகுத்தப்பட்டிருப்பதும், கோயில் வழிபாடு, சமற்கிருதத்தில் பிராமணப் பூசாரியரால் நடைபெற்று வருவதும், தமிழரின் இயற்பெயர் பெரும்பாலும் வடசொல்லா யிருப்பதும், தமிழைக் காட்டிக்கொடுக்கும் தந்நலத்தார் தலைமைப் பதவி தாங்கிக்கொண்டு தமிழப்பொது மக்கட்குத் தெரியாதபடி தமிழ் நாகரிகத்தை மறைப்பதும், வடமொழி யாளர் கூற்றை மேலையர்க்கு மெய்போற் காட்டுகின்றனர். பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையால் பொய்போ லும்மே பொய்போ லும்மே. என்னும் வெற்றிவேற்கை வெண் செந்துறைகட்கேற்ப, ஆரியர் தமிழர் நிலைகள் நிற்கின்றன. ஆயினும் பொதுவியல்பிற்கு விலக்காக கில்பெட்டு சிலேற்றர் (Gilbert Slater) என்னும் சென்னைப் பல்கலைக்கழக மேனாட் பொருளியல் நூற் பேராசிரியர், தம் இந்திய நாகரிகத்தில் திரவிடக் கூறு (Dravidian Element in Indian Culture) என்னும் நூலில், திரவிடர் இங்ஙனம் மொழியில் ஆரியப் படுத்தப்பட்டபோது, ஆரியர் நாகரிகப் பண்பாட்டில் திரவிடப்படுத்த பெற்றனர் (“While the Dravidians were thus Aryanised in language the Aryans were Dravidised in Culture”) என்று நடுநிலைத் தீர்ப்புக் கூறி யிருப்பது, தமிழரும் திரவிடரும் மகிழ்ந்து பாராட்டற்குரியது. இந்திய நாகரிகம் மட்டுமன்றி உலக நாகரிகமே இந்திய ஆரியர தென்று காட்டுதற்கு, வேதகாலத்தை அளவிறந்து முன் தள்ளி வைக்கும் முயற்சியொன்று இன்று வடஇந்தியாவில் நடை பெற்று வருகின்றது. அறியப்பட்ட தம்பியின் அகவை (வயது) உயர்த்திக் கூறப்படின், அண்ணனின் அகவை தானே உயர்தல் காண்க. இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது வட இந்தியாவில் சமகிருதத்தையும் அதன் சரித்திரத்தையும் படித்து, இந்து நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது. அக் காரியத்தை மிகக் கேடானதும் மிகச் சிக்க லானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீபகற்பமே இன்றும் சரியான இந்தியா வாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலார் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும், மொழிகளையும், சமுதாய ஏற்பாடுகளையுமே இன்றும் தெளி வாகக் கொண்டிருந்து வருகிறார்கள். இங்கேகூட, சரித்திராசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்றும் அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாத வாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுளது. ஆனால், எங்கே னும் ஓரிடத்திலும் அதை வெற்றிபெறப் பிரித் தெடுக்க முடியுமானால் அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகிறோமோ அவ்வளவு பிரித்தெடுக்க வசதி அதிகரிக்கும். அங்ஙனமாயின், கலைமுறைப்பட்ட இந்திய சரித்திராசிரியன் தனது படிப்பை, இதுவரை மிக நீடச் சிறந்ததென்று பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்றும் தொடங்காமல் கிருஷ்ண காவேரி வைகையாற்றுச் சமவெளிகளினின்றும் தொடங்க வேண்டும். இங்ஙனம் இருபத்தைந்தாண்டு கட்கு முன்பே இருபெருஞ் சரித்திரப் புலவர் எழுதியிருப்பவும். இந்திய சரித்திராசிரியர்கள் இதைச் சற்றும் கவனியாது, இன்றும் வடநாட்டையும் ஆரியத் தையுமே தலைமையாகவும் அடிப்படையாகவுங் கொண்டு, இந்திய சரித்திரத்தை நேர்மாறாக எழுதி வருவது பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம். இந்தியாவில், வடபாகத்தில் ஆரிய திராவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்றே. இந்தியாவில் ஆரியர் என்பது கீழ்நாட்டாரியரென்று மொழிநூலார் கூறும் சமகிருத ஆரியரை. தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பனரென்னும் ஒரு குலத்தாரே. பிறருள், பிற்காலத்து வந்த மேனாட்டாரும். அவரது கலப்புற்ற இந்தியரான சட்டைக்காரரும், உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முகமதியரும் தவிர, மற்றவரெல் லாம் தனித்தமிழரே. தமிழ்நாட்டின் வடபாகத்தில் லப்பையென்றும், கீழ்ப் பாகத்தில் மரைக்காயர் என்றும், தென்பாகத்தில் ராவுத்தர் என்றும், மலையாளத்தில் மாப்பிள்ளை என்றும், நால்வகையாகச் சொல்லப்படும் முகமதியரெல்லாம். தோற்றத்தால் வேறுபட்டுக் காணிலும், பிறப்பால் தமிழ்நாட்டுக் கிறிதவரைப்போலத் தமிழர் அல்லது திராவிடரேயாவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நாயுடு, ரெட்டி, கோமுட்டி, சக்கிலியர் முதலிய வகுப்பார். இக்கால மொழி முறைப்படி தமிழராகக் கருதப்படாவிடினும். தமிழருக்கு நெருங்கின இனத்தாராவர். இவர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நாயக்க மன்னருடன் ஆந்திர நாட்டினின்றும் தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். மலையாளம், கன்னடம், துளு முதலிய பிற திராவிட மொழிகளைப் பேசும் அப்பார்ப்பனரும் தமிழருக்குத் தெலுங் கரைப் போல் இனத்தாராவர். ஆரியரும் திராவிடமும் வடநாட்டிற் பிரிக்க முடியாதவாறு கலந்து போனாலும். அங்கும் பிராமணர் மட்டும் தொன்று தொட்டுத் தங்கள் குலத்தைக் கூடியவரை தூய்மையாய்க் காத்துவந்ததாகவே தெரிகின்றது. இந்தியொழிப்பு (1) இந்தியைப் புகுத்திய சூழ்நிலை எல்லா வகையிலும் நலம்பயப்பதும் இந்திய ஓராட்சிக்கும் தன்னாட்சிக்கும் வழிகோலியதும் ஈடிணையற்றதுமான, ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியா யிருக்கும்போது, பொது மொழி வினாவிற்கே இடமின்மை. திடுமென்று விடுதலை (ஆங்கிலராட்சிநீக்கம்) கிடைத்ததால், தேசமெங்கும் மருட்சியும் மகிழ்ச்சியும் மலிந்து, எதிர்க்கட்சி களெல்லாம் அடங்கியொடுங்கி, பேராயத்தலைவர் எது செய்யினும் எதிர்ப்பிற் கிடமில்லா திருந்தமை. தமிழரும் திரவிடருமான தென்னாட்டுப் பேராயத்தாரெல்லாம் ஆரிய அடிமைத்தனத்தில் ஆழ்ந்துள்ளமை. (2) இந்தியைப் புகுத்தியமுறைகேடு விடுதலை பெறுமுன் இந்தியைப் பற்றி முடிபு செய்யாமை. அரசியற் கட்சித்தலைவர் கல்வித்துறையிலும் மொழித்துறை யிலும் அடாது தலையிட்டமை. கல்வியதிகாரிகள் மொழியறிஞர் ஆகியோரின் கருத்தைக் கேளாமை. பொதுமொழித் திட்டக்குழுவில் மொழிக்கொரு படிநிக ராளியைச் (Representative) சேர்க்காமல், இந்திக்குப் பலவுறுப் பினரைச் சேர்த்துக் கொண்டமை. தமிழுக்கு மறைமலையடிகளையேனும் சோமசுந்தர பாரதியை யேனும் சேர்க்காமை. தொடர்ந்து நடைபெற்ற முக்கூட்டத்திலும் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் சரிசமக் குடவோலை கிடைத்தும், குழுத்தலைவர் நடுநிலை திறம்பித் தம் குடவோலையை இந்திக்கிட்டமை. (3) இந்தியின் தகுதியின்மை இக்கால அறிவியலிலக்கியத்தோடு, வடமொழியிலும் தமிழிலு முள்ள பண்டை யிலக்கியமுமின்மை. சொல்வளமில்லாச் சிறுமொழியும், மிகத்திரிந்த கொச்சை மொழியும், வளர்ச்சிக் கேற்ற வேர்ச்சொல் இல்லாமொழியும் வடஇந்திய ஒருநாட்டு மொழியும், தென்னாட்டார்க்கு ஆங்கிலம் போன்றே அயன்மொழியு மாயிருத்தல். (4) ஆங்கிலம் அயன்மொழியன்மை இந்தியருள் ஒருவகுப்பாரான ஆங்கிலோ இந்தியரின் தாய் மொழியா யிருத்தல். நூற்றிற்கெழுபது கிரேக்க இலத்தீனமும், பத்து ஆங்கில சாகசனிய மும், பத்துத் தமிழும், பத்து ஏனை மொழிகளுமாக ஏறத்தாழ எல்லா மொழிச் சொற்களையும் தன்னகத்துக் கொண்டு உலகப் பொதுக் கலவை மொழியா யிருத்தல். தமிழுக்கு மிக நெருக்கமாயிருத்தல். (5) ஆங்கிலத்தின் இன்றியமையாமை இக்கால அறிவியல் தோன்றியதும் வளர்ந்துவருவதுமான மொழி யாயிருத்தல். மூவிலக்கத்திற்குமேல் ஐயிலக்கம் வரை மதிப்புள்ள சொற்களைக் கொண்டு, இற்றைமாந்தன் நுண்கருத்துக்களையெல்லாம் தெரிவிக்கும் மாபெரு வளமொழியாயிருத்தல். இன்று உலகப்பொது மொழிகளுள் ஒன்றாயும், எதிர்காலத்தில் உலகப் பொதுமொழியாய் வழங்கக் கூடியதுமாயிருத்தல். இந்தியப் பல்கலைக் கழகங்களின் தொடர்பு மொழியாயிருத்தல். இந்தியவொற்றுமைக்கும் இந்தியரின் வெளிச் செலவிற்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பிழைப்பிற்கும் இன்றியமையாத மொழியாயிருத்தல். (6) இந்தியால் வருங்கேடு இரண்டாந்தரக் குடிவாணர் நிலை, இந்தியார்க்கு ஏனையர் என்றும் அடிமைப்பட்டிருத்தல், மாணவர்க்கு மும்மொழிக் கல்விச்சுமை, தமிழாங்கிலம் மட்டுங் கற்றவர்க்கு வேலையின்மை முதலியன. (7) இந்தியார் ஏமாற்று இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பதும் ஆங்கிலக் கல்வி தேவையில்லை என்பதும், மும்மொழித் திட்டத்தையே யாமுங் கடைப்பிடிப்போம் என்பதும் துணிச்சலான முதல்தர ஏமாற்றே. இந்தியாரின் மும்மொழித்திட்டம் பிறமொழியார்க்கே; தாம் இந்தியும் ஆங்கிலமும் ஆகிய இரு மொழித்திட்டமே மேற் கொள்வர். ஆங்கில அறிவின்றி இக்காலம் வாழ இயலாதாதலால், இந்தியை இந்தியா முழுவதும் புகுத்தும்வரை, ஆங்கிலத்தை மறைமுகமாகவும் அதன்பின் வெளிப்படையாகவுங் கற்பர். (8) நேரு உறுதிமொழியும் நீலியுறுதிமொழியும் ஒன்றே நேரு உறுதிமொழி, இந்தித் திணிப்புப் பிந்திநிகழும் என்பதே யன்றி நீக்கப்படும் என்பதன்று. இது மும்மொழித்திட்டத்தை மேற் கொண்ட திரவிடநாடுகட்கே ஏற்கும்; இருமொழித் திட்டத்தைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு ஏற்கவே ஏற்காது. ஆதலால் அது தனித்தே உடனடியாக முழுவலிமையுடன் இந்தித் தொடர்பை எதிர்த்தொழித்தல் வேண்டும். தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்று சொன்னவனுக்கு, ஒருகிழமை பொறுத்துத் தூக்குவோம் என்பது நன்மை பயக்கும் விடையன்று. (9) தமிழ்நாட்டரசின் கடமை அரசினர் அலுவலகமாயினும் தனியார் அலுவலகமாயினும், பெயர்ப் பலகைகளில் தமிழும் ஆங்கிலமுமன்றி இந்திச்சொல் இருத்தல் கூடாது. தமிழ்நாட்டில் வழங்கும் அஞ்சற் படிவங்களும் அட்டை உறை முத்திரைகளும் தமிழாங்கிலச் சொற்களையே கொண்டிருத்தல் வேண்டும். சென்னை மாநகரிலுள்ள தென்னிந்திய இந்திப் பரப்பற்கழகம் தமிழுக்குத் தீங்குவிளைத்துவரலால், உடனே தமிழ்நாட்டினின்று நீக்கப்படல் வேண்டும். (10) இரு மொழித் திட்டம் கல்வித்துறையில் அடிமுதல் முடிவரை இருமொழித் திட்டத் தையே கடைப்பிடித்தல் வேண்டும். கல்விநேரமல்லாத வேளை யிலும், கல்வி நிலையங்களில் இந்திகற்பிக்கப்படல் கூடாது. இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவரைத் தமிழ்ப் பகைவராகக் கொண்டு, நாட்டிரண்டகக் குற்றத்திற்குரிய தண்டனையிடல் வேண்டும். தமிழ்நாடு போன்றே திரவிடநாடுகளும் இருமொழித் திட்டத்தை மேற்கொள்ளத் தூண்ட வேண்டும். இந்திரன் இந்திரன் என்பது வடஇந்தியத் திராவிடர் வேந்தன் என்னும் மருத நிலத் தமிழ்த் தெய்வத்திற்கு வழங்கிய பெயர். இத்தெய்வ மும் இச்சொல்லும் மேலையாரிடத்தில் இல்லை என்று மாக்கசு முல்லர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. (தி.ம.பின்.) இந்து மதத்தினின்று தமிழ் மதத்தைப் பிரித்தல் இந்துமதம் என்பது ஒரு தனி மதமன்று. தமிழர் மதம் இரண்டும் ஆரியர் படைத்துக்கொண்ட பிரம வணக்கமுங் கலந்த கலவையே இந்துமதம். சிவமதம் (சிவனியம்) திருமால்மதம் (மாலியர்) இரண்டும் தூய தமிழர் மதங்கள். இவை, முறையே, குறிஞ்சிநிலச் சேயோன் வணக்கத்தையும் முல்லைநில மாயோன் வணக்கத்தையும் மூலமாகக் கொண்டவை. சமணமும் புத்தமும் அல்லது கிறித்தவ மும் இசலாமும் போல, இவ்விரண்டும் முற்றும் வேறுபட் டவை. திருவானைக்காச் சிவனடியார் திருவரங்கஞ்சென்று திருமாலை யும், திருவரங்கத் திருமாலடியார் திருவானைக்கா சென்று சிவனையும், தொழார். சிவனும் திருமாலும் தனித்தனி முத்தொழி லிறைவன் என்பதே, இவ்விரு மதக் கொள்கையும். ஆரியப் பூசாரியர் தமிழ மதங்களை ஆரியப்படுத்தும் பொருட்டு, இறைவன் முத்தொழிலைத் தனித்தனி பிரித்து, தாம் படைத்துக்கொண்ட நான்முகனைப் படைப்புத் திருமேனி யென்றும், திருமாலைக் காப்புத்திருமேனி யென்றும், சிவனை அழிப்புத் திருமேனியென்றும் வகுத்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்று வித்துவிட்டனர். ஆயினும், இது இன்றும் புராண ஏட்டளவில் உள்ளதேயன்றி நடைமுறையிற் கைக்கொள்ளப்படவில்லை. தமிழர் நான்முகனை எங்கேனும் வணங்குவது மில்லை. ஆரியர் இந்து மதத்தில் தம் சிறுதெய்வ வணக்கத்தையும் பல தெய்வ வணக்கத்தையும் வேள்வி வளர்ப்பையும் புகுத்தியிருப்ப தனாலும், பிராமணப் பூசாரியரைக் கொண்டு சமற்கிருதத்தி லேயே வழிபாட்டை நடத்துவதனாலும், இதனால் தமிழுக்கு இழிவும், தமிழர்க்கு இழிவோடு பிழைப் பின்மையும் நேர்வத னாலும், தமிழர் தம் மதத்தைத் தூய்மைப்படுத்தி ஆரிய அடிமைத் தனித்தினின்று விலகிக்கொள்வதே தக்கதாம். ஆதலால், இறைவனைச் சிவன் என்னும் பெயரால் வழிபடுபவன் தன்னைச் சிவனியன் (சிவ மதத்தான்) என்றும், திருமால் என்னும் பெயரால் வழிபடுபவன் மாலியன் (திருமால் மதத்தான்) என்றும், சொல்லல் வேண்டும். பொதுப்படச் சொல்லின், தென்மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்றே சொல்ல வேண்டும். இந்து என்பது ஆரிய அடிமைத் தனத்தையே குறிக்கும். இயற்கை மொழி உணர்ச்சி யொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (Vocative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்வினை யொலி கள், குழவிவளர்ப் பொலிகள் (Nursury Sounds), சுட்டொலிகள் (Deicite Sounds), என்னும் எழுவகை யொலிகளைக் கொண்டது இயற்கைமொழி (Natural Language) அல்லது முழைத்தல் மொழி (Inarticulate Speech) (த.இ.வ.) இரட்டியார் கம்பளர் காம்பிலிச் சீமையினின்றும், இரட்டியார் இரட்ட பாடியினின்றும், ஒட்டர் ஒட்டர அல்லது ஒரிசாச் சீமையி னின்றும் வந்தவராவர். (சொல்.27) இரத்தல் வகை ஈதல் வகைகள் ஈ என்று இரத்தல் இழிந்தோன் செயல்; தா என்று கேட்டல் ஒத்தோன் செயல்; கொடு என்று கட்டளையிடுதல் உயர்ந்தோன் செயல்; ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே தா என் கிளவி ஒப்போன் கூற்றே கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே என்பன தொல்காப்பியம். (எச்சவியல், 49, 50, 51). ஆதலால், ஈதல் என்பது இழிந்தோர்க் களித்தல்; தருதல் என்பது ஒத்தோர்க் களித்தல்; கொடுத்தல் என்பது உயர்ந்தோர்க்களித்தல். அளித்தல் என்பது அன்பினாற் கொடுத்தலையும்; இடுதல் என்பது கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதலையும்; வழங்கல் என்பது எடுத்துக் கொடுத்தலையும் குறிக்கும். அருளுதல் என்பது அருளிக் கொடுத்தல். (சொல்-56.) இராகு இராகு-ராஹு இராகு கரும்பாம்பு (பிங்.) என்றும் கருங்கோள் என்றும் சொல்லப்படும். இர்-இரு-இருமை=கருமை. இர்-இரா-இரவு. இர்-இருள்-இருட்டு. இரா-இராகு. வடமொழியிற் பற்றுவது (to seize, take hold of) என்று பொருள் படும் ரப் (rabh) என்னும் சொல்லை மூலமாகக் காட்டுவது, பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தியாம். (வ.வ : 89) இருகரையன் ஆற்றின் நடுவில் இருந்துகொண்டு அதன் இருகரைகளில் எதனை அடைவதென்று துணியாது இடர்ப்படுபவனைப்போல, ஒரு காரியத்தைச் செய்வதா தவிர்வதா என இருமனமாகி இருப்பவனுக்கு இருகரையன் என்று பெயர். (சொல்-12.) இருதலைமணியன் பாம்பு வகைகளுள் மங்குணி (மழுங்குணி) என்பதொன்று. அதற்குத் தலையும் வாலும் வேறுபாடில்லாமல் இருகடையும் ஒத்திருப்பதாலும், தலைப்பக்கமும் வாற்பக்கமும் அது செல்ல முடியும் ஆதலாலும் அதற்கு இருதலை மணியன் என்று பெயர். பகைநட்பு ஆகிய ஈரிடத்தும் சென்று இருசாரார்க்கும் நல்லவ னாக நடிப்பவன் இருதலைமணியனை ஒத்திருத்தலால் அவனை யும் அப்பெயரால் அழைப்பர். (சொல்.12) இராமாயணக்காலம் (தோரா. கி.மு.1300-1200) சோழன் வேந்தனானபின் வடநாட்டில் தன் படிநிகராளியாக அமர்த்திய சோழக்குடியினன் வழிமரபே, சமற்கிருத இலக்கியத் திற் சூரிய வமிசம் என்று சொல்லப்படுவது. அவ்வழியில் வந்தவனே இராமன். கம்பராமயணம், பாலகாண்டம், குலமுறை கிளத்து படலத்தில், இராமனின் முன்னோராகச் சொல்லப்பட்டவர் பதினால்வர். mt® bga®fŸ; kD, ãUJ (ntd‹ kf‹), ï£RthF, fF¤j‹ (fF¤[‹), gh‰flš filªJ mKjˤjt‹ (ÃÄ?), மாந்தாதா, முசுகுந்தன், சிபி, சாகரர், பகீரதன், நூறு குதிரை வேள்வி (அசுவமேதம்) செய்தவன், இராகு, அசன், தகரதன் என்பன. ஒரு காலத்தில் கலுழன் விண்ணுலகை யடைந்து, அங்கிருந்த அமிழ்தத்தைக் கவர்ந்து சென்றான். இந்திரன் தான் திரும்பி வருமளவும் விண்ணகரைக் காக்க முசுகுந்தச் சோழனை அமர்த்தி, அவனுக்குத் துணையாக ஒரு பூதத்தையும் நிறுத்தி விட்டு, அமிழ்தத்தை மீட்கச் சென்று விட்டான். அக்காலை அவுணர் திரண்டு வந்து முசுகுந்தனொடு பொருது தோற்றோடினர். பின்னர் ஒரு வஞ்சனையால் அவனை வெல்லக் கருதி, அவர் மீண்டும் வந்து, அவன் அகக்கண்ணும் காரிருளில் மூழ்குமாறு ஒரு பேரிருள் அம்பை விடுத்தனர். அவன் செய்வதறியாது மயங்கி நிற்கும்போது, அவன் துணைப்பூதம் ஒரு மந்திரத்தை உதவ அதனால் தெளிந்து, அவுணரைக் கொன்று குவித்தான். மீண்டு வந்த இந்திரன் செய்தியறிந்து, முசுகுந்தனுக்கு நிலையாகவுதவு மாறு அப்பூதத்தையும் அவனுடன் அனுப்பினான். அது புகாரில் நாளங்கடியில் நின்று நாள் தொறும் படைய லுண்டு வந்தது. இக்கதையே சிலப்பதிகாரத்தில், கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி யூக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ இருந்துபலி யுண்ணும் இடனும் (6:7-13) என்று கூறப்பட்டுள்ளது. சீன நாட்டிற்கு வானவர் நாடு என்றொரு பெயருண்டு. அந்நாடு பூதக்கதைகட்குப் பெயர்போன தென்பது அலாடின் கதையால் அறியப்படும். முசுகுந்தன் சீனநாட்டரசன் ஒருவனொடு நட்புக் கொண்டிருந்து, அவன் நகருக்குச் சென்றிருக்கலாம். அன்று கலுழவேகன் என்பானொருவன் அமிர்தபதி என்பாளொருத்தியைக் கவர்ந்து சென்றிருக்கலாம். சீனவரசன் முசுகுந்தனைத் தன் நகரைக் காக்குமாறு இருத்தி விட்டு அமிர்தபதியை மீட்கச் சென்றபின், ஊணர் (Huns-A]z®) என்னும் நடு ஆசியவாணர் சீனத்தலை நகரைத் தாக்கி முசுகுந்தனால் முறியடிக்கப் பட்டிருக்கலாம். சீன அரசன் தனக்குத் துணையென்று கொண்டிருந்த பூதப்படி மையைப் புகாருக்கு அனுப்பியிருக்கலாம். புலவர் குழந்தையார் முசுகுந்தனை முதுகாந்தன் என்பர். முசுப்போற் குந்தியிருப்பவன் என்னும் பொருள் கொண்ட தாயின், முசுகுந்தன் என்பது தூய தென்சொல்லே. முற்பிறப்பில் முசுக்கலையா யிருந்தான் என்னுங் கதை இக்காலத்திற் கொள்ளத் தக்க தன்று. சிபி என்பவன், புறாவைத் துரத்திய பருந்திற்குத் தன் தசையை அறுத்துக் கொடுத்த செம்பி அல்லது செம்பியன் என்னும் சோழனே. அவன் பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது. இதையறியாத (அல்லது அறிந்தே ஏமாற்றுகின்ற) வடமொழிப் புலவர், சோழர் சிபி என்னும் வடநாட்டு ஆரிய வரசனின் வழியினராகக் கூறி மகிழ்வர். இராமன் காலத்தவனான பரசுராமன், கார்த்த வீரியார்ச்சுனன் மக்கள் எய்த இருபத்தோரம்பு பட்டு இருபத்தொரு முறை தன் மார்பில் அடித்துக் கொண்டிறந்த, தன் தாயைக் கொன்றதற்குப் பழி வாங்குமாறு, இருபத்தொரு தலைமுறை அரசரைக் கருவறுக்க வஞ்சினங் கூறினானென்றும், அதன் தொடர்பாகக் காந்தன் என்னும் சோழனைக் கொல்லப் புகார் வரும்போது, அச்சோழன் தன் அரசப் பொறையைத் தன் காதற் கணிகை மகனாகிய ககந்தனிடம் ஒப்புவித்து, நான் அகத்திய முனிவர் கட்டளைப்படி திரும்புமளவும் நீ இதை ஏற்றுத் தாங்கு என்று சொல்லி நாட்டை விட்டுப் போனதாக ஒரு கதை, மணிமேகலை யிற் கூறப்பட்டுள்ளது. மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகாதொளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசு ராமன்நின் பால்வந் தணுகான் அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே யியைந்த நாமம் இப்பதிக் கிட்டீங் குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள் (மணி.22:25-39). இதனால், இராமன் காலமும் அகத்தியன் காலமும் காந்தன் காலமும் ஒன்றென்பதும், புகாரின் பழமையும், மூவேந்தர் குடிகளின் தொன்மையும் அறியப்படும். அகத்தியர் வேதக் காலத்தில் வடஇந்தியாவில் நிகழ்ந்த இனப்போர்களெல் லாம், ஆரியச் சூழ்ச்சியால் பழங்குடிமக்களும் வடதிரவிடரு மான ஒரே இனத்திற்குள் நிகழ்ந்தவையே. உலகமுதல் உயர்தனிச் செம்மொழி பேசியவரும், ஒப்புயர்வற்ற இலக்கிய விலக்கண முடையவரும், பல்துறைப் பண்பாட்டு நாகரிகரும், கூற்றுவனை யும் அறைகூவிக் குமைக்கும் படையினரும், கடல் கடந்து பல நாடுகளைக் கைப்பற்றிவரும், மாபேரினத்தாருமான பண்டைத் தமிழர்; கல்வியறி வில்லாதவரும், கையோங்கினுங் காதவழியோடு பவரும், கையுங்காலுமாக வந்தவரும், இரந்துண்டே வாழ்ப வரும், விரல்விட்டும் எண்ண வேண்டாத சிறு தொகையினரு மான, ஆரியப் பூசாரிகட்கு அடிமைப்பட்டுப் போனதையும்; இவ்விருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆரிய வயப்பட்ட பேராயத் தமிழர், உரிமை வேண்டும் நயன்மைக் கட்சித் தமிழரைப் பகைத்து வென்றதையும் இன்றும் எதிர்ப்பதையும்; நோக்கு மிடத்து, வடநாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியப் பூசாரிகட்கு அடங்கிப்போனது ஒருசிறிதும் வியப்பன்று. தமிழரைக் கொண்டே தமிழரை அடக்கி யொடுக்கி வருவது போல், நாட்டு மக்களைக் கொண்டே நாட்டுமக்களை வென்றிருக்கின்றனர் வடக்கிலும். ஆரியப் பூசாரிகள் சிந்து வெளியினின்று கங்கை வெளிக்கு வந்தபின், வேத மந்திரங்களின் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடைநூல்கள் எழுந்தன. பல் வேள்விச்சாலை முதுகுடுமிப் பெருவழுதியும் அரசவேள்வி (ராஜ ஸூய) வேட்ட பெருநற்கிள்ளியும் பல் யானைச் செல்குழு குட்டுவனும் போன்ற அரசரைத் தமிழகத்தில் துணைக்கொண்டது போன்றே, விதேக நாட்டு மாதவன் போன்ற அரசரை வடநாட்டில் துணைக் கொண்டு ஆரிய வேள்வி மதத்தைப் பரப்பியிருக்கின்றனர் என்பது, சதபத பிராமணத்தால் தெரிய வருகின்றது (1, 4 : 1 : 10). வேள்வி எல்லாம் வல்லதும் அளவிலா ஆற்றலுடையதுமாகு மென்றும், வேள்வியாசிரியனே மக்களுட் பெரியவ னென்றும், அவன் வேள்வி வளர்ப்ப தனாலேயே மழை பெய்து பயிர் விளைந்து ஆ சுரந்து உலகம் நடைபெறு கிறதென்றும், கருத்துக் கள் பரப்பப்பட்டன. ஆரியப் பூசாரி பெரியவன் என்னுங் கருத் தில் பிரமன் (brahman) எனப்பட்டான். பிராமன் = பிராமணன் பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69). பிரமகத்தி = பிராமணக் கொலை. பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் (சேதுபு.தனுக். 57). பிரம காதகன் = பிராமணனைக் கொன்றவன். பிரம காயத்திரி = பிராமணர் நாடோறும் ஓதும் மந்திரம். பிரம குலம் = பிராமண வகுப்பு. பிரம சர்ப்பம் = பிராமணப் பாம்பு. பிரம சூத்திரம் = பூணூல் (பிராமணன் அணிவது). பிரம தாயம் = பிராமணர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம். பிரம தீர்த்தம் = நீரில் தருப்பையைத் தோய்த்து உடம்பில் தடவுகை. பிரம தேயம் = பிராமணர்க்குத் தானமாகக் கொடுக்கப் பட்ட ஊர். பிரம மாராயன், = பிராமண அமைச்சன் பட்டப்பெயர். பிரம ராயன் பிரம முடி(முடிச்சு) = பிராமணின் பூணூலிலுள்ள ஒரு வகை முடிச்சு. பிரம முனி (ரிஷி) = பிராமண முனிவன். பிரம ராக்கதன் = தீச்சா வடைந்த பிராமணப் பேய். பிரம யோனி = பிராமணப் பிறப்பு. பிரம விந்து = பிராமணனுக்குப் பிறந்தவன். பெரு-பெருகு-வ. ப்ருஹ். பெருங்கதை, பெருவுடையார் என்னும் தென்சொற் களின் மொழி பெயர்ப்பே, ப்ருஹத் கதா, ப்ருஹ தீவர என்னும் வடசொற்கள். பெருமன்-வ. ப்ரஹ்மன்-பிரமன். பிரமனுக் குரியது பிராமணம். பிராமணத்திற்குரியவன் பிராமணன். பிராமணர் தென்னாட்டுத் தமிழ நாகரிகச் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு, இங்கும் தம் மேம்பாட்டை நிறுவுமாறு, நைமிச அடவியில் அடிக்கடி மாநாடு கூடிச் சூழ்ந்ததாகத் தெரிகின்றது. ஒரு நிமை (நொடி) நேரத்தில் ஒரு பெரும்படை கொல்லப்பட்ட இடம், நைமிசம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படு கின்றது. இமை-நிமை-வ. நிமி-நிமிஷ-நைமிஷ-நைமிச. நைமிசாடவி மாநாட்டுத் தீர்மானத்தின்படி, அகத்தியர் தென்னாடு நோக்கிப் புறப்பட்டார். அவர் காசியினின்று விந்த மலையடைந்து, அங்கிருந்து தண்டக அடவி வந்து தங்கி, அதன்பின் காஞ்சியடைந்து, பின் காவிரி தோன்றும் சையம் என்னும் குடகுமலை சென்று, குடமலை வழியாகப் பொதிய மலை போய்ச் சேர்ந்ததாகக் காஞ்சிப்புராணங் கூறுகின்றது. விந்தமலை கடக்க முடியாத தென்று ஆரியர் நெடுநாளாகக் கருதிக் கொண்டிருந்ததனால், அகத்தியர் அதைக் கடந்து வந்த போது அதன் செருக்கை யடக்கினதாகக் கூறினர். யோகமுறு பேருயிர்கள் தாமுலைவு றாமல் ஏகுநெறி யாதெனமி தித்தடியி னேறி மேகநெடு மலைதவழ் விந்தமெனும் விண்டோய் நாகமது நாகமுற நாகமென நின்றான். என்பது கம்பராமாயணம் (ஆரணி.அகத்.39). இராமன் தன் மனைவியொடும் தம்பியொடும் காட்டிற்கு வந்த தண்டக அடவியில் அகத்தியரைக் கண்டபோது, அம்முனிவர் இராமனை அங்கேயே யிருந்து அரக்கரைக் கொல்லச் சொன்னா ரென்றும்; அதற்கு இராமன் தான் அதற்காகவே வந்திருப்பதால், இன்னும் சற்றுத் தெற்கே தள்ளிப் போய் அரக்கர் வரும் வழியிற் காத்திருக்க வேண்டுமென்று சொன்னானென்றும்; அதற்கு அகத்தியர் இசைந்து, வில்லும் வாளும் அம்பும் புட்டிலுங் கொடுத்துப் பஞ்சவடியிற் போயிருக்கச் சென்னாரென்றும்; கம்பராமாயணங் கூறுகின்றது. விழுமியது சொற்றனையிவ் வில்லிதிவண் மேனாள் முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும் வழிபடவி ருப்பதிது தன்னைவடி வாளிக் குழுவழுவில் புட்டிலொடு கோடியென நல்கி. இப்புவன முற்றுமொரு தட்டினிடை யிட்டால் ஒப்புவர விற்றெனவு ரைப்பரிய வாளும் வெப்புருவு பெற்றவரன் மேருவரை வில்லா முப்புரமெ ரித்ததனி மொய்க்கணையு நல்கா. என்பன அகத்தியர் இராமனுக்குப் படைக்கலம் வழங்கியது பற்றியன (கம்ப.அகத்.55,56). அகத்தியர் காசியிற் புறப்படு முன்னரே சிவபெருமானிடந் தமிழ் கற்றார் என்னுங் கதையும், அகத்தியருக்கு அடுத்தே ஒரு பிராமணக்கூட்டம் வந்து தண்டக அடவியில் தங்கியிருந்ததும், அகத்தியர் இராமனுக்கு வில்லும் வாளும் வழங்கியதும், நோக்கு மிடத்து, ஓர் ஆரியக் குடியேற்றக் கூட்டத்தின் தலை வராகவே அகத்தியர் திட்டமிட்டு வந்ததாகத் தெரிகின்றது. அவர் தமிழகம் வந்து முத்தமிழுங் கற்று, ஒரு முத்தமிழிலக்கணம் இயற்றி, அதற்கு அகத்தியம் எனப் பெயரிட்டார். தமிழ முனிவர் போற்பொதிய மலையில் தங்கி, ஆரியரும் தமிழருமான மாணவர் பலருக்குத் தமிழ் கற்பித்தார். ஆரிய மாணவருள் ஒருவனான இந்திரன் என்பவன், இயற்றமி ழிலக்கணத்தைத் தழுவி, பொருள் ஆரியத்திற் கேற்காமையால் அதை நீக்கி, எழுத்தும் சொல்லும் பற்றி முதல் ஆரிய இலக்கண நூலை இயற்றி, அதற்கு ஐந்திரம் எனப் பெயரிட்டான். அதைப் பின்பற்றியே பிராதிசாக்கியங்கள் என்னும் ஆரிய வேதச் சிற்றி லக்கணங்கள் தோன்றியிருத்தல் வேண்டும். இந்திரன் தமிழெழுத்தினின்று கிரந்த எழுத்தை வகுத்தே நூலியற்றி யிருத்தல் வேண்டும். கான்சுத்தாந்தியசு பெசுக்கி (Constantius Beschi) என்னும் வீரமாமுனிவர், இத்தாலியா நாட்டினின்று 18-ஆம் நூற்றாண் டில் இங்குவந்து, வேம்பாய் (Bombay) மண்டலத்தைச் சேர்ந்த கோவாவில் தமிழ்கற்று, தமிழ்நாட்டிற் பொதுமக்களொடு தொடர்பு கொண்டு சமயப்பணியாற்றி, 3615 மண்டிலம் (விருத்தம்) கொண்ட தேம்பாவணி என்னும் சிறந்த பாவியத்தை யும், 370 நூற்பா கொண்ட ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்னும் அரிய இலக்கண நூலையும், இயற்றியதை நோக்கின், அகத்தியர் முத்தமிழிலக்கணம் இயற்றியது அத்துணை வியப்பிற் கிடமானதன்று. அகத்தியம் ஆரியரால் அழியுண்டபின், பிற நூல்களிலுள்ள அகத்திய மேற்கோள்களெல்லாம் தொகுக்கப்பட்டன. முதற்கண் தொகுத்த சிறு தொகுப்பு சிற்றகத்தியம் என்றும், பின்னர்த் தொகுத்த பெருந் தொகுப்பு பேரகத்தியம் என்றும், பெயர் பெற்ற தாகத் தெரிகின்றது. பிற்காலத்தில் அவையும் இறந்தொழிந்தன. சிவபெருமான் திருமணத்திற்கு வந்த பதினெண் கணத்தாரையும் தாங்காது பனிமலை யமிழ்ந்ததனால், ஞாலத்தின் வடதிசை தாழ்ந்து தென்றிசை யுயர, தேவர் வேண்டுகோட்கிணங்கி அகத்தி யர் தெற்கில் வந்து பொதிய மலைமேல் நின்றபின், இரு திசையும் சமநிலைப்பட்டன என்னுங் கதை, ஒரு காலத்திற் பனிமலை கடலடி யிருந்ததையும், தெற்கிற் பனிமலை போல் உயர்ந்திருந்த குமரிமலை முழுகினதையுமே, குறிக்கும். இனி, அணிவகையிற் பொருள் கொள்ளின், இலக்கியத் துறையி லும் பொருளியல் குமுகாயவியல் அரசியல் முதலிய வாழ்க்கைத் துறைகளிலும், வடக்கில் தாழ்ந்திருந்தஆரியம் அகத்தியர் தெற்கே வந்தபின் உயர்ந்த தென்றும், தெற்கில் அவற்றில் உயர்ந் திருந்த தமிழம் தாழ்ந்ததென்றும், கொள்ளலாம். இவ்வகையி லேயே, மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரம் பொருள்படு வதாகும். அகத்தியரை யடுத்தே நாரதரும் தென்னாடு வந்து, இசைத் தமிழ்கற்றுப் பஞ்சபாரதீயம் என்னும் இசைத்தமிழ் நூலை இயற்றியிருத்தல் வேண்டும். இனி இசைத்தமிழ்நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலா உள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன. என்று 14-ஆம் நூற்றாண்டினரான அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரைப்பாயிரத்துள் வரைந்திருத்தல் காண்க. நாரதன் வீணை நயந்தெரி பாடலும் .................................................... மங்கல மிழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளென (சிலப்.6:18-23) என்பதனாலும், நாரதனின் தமிழகத் தொடர்பும் இசைப்புலமை யும் அறியப்படும். வீணை என்பது தமிழர் நரப்புக்கருவி. நரம்பு விண்ணென இசைப்பது வீணை. நோயினால் நரம்பு வலிக்கும் போது, நரம்பு விண்விண் எனத் தெறிக்கின்றது என்று கூறும் வழக்கை நோக்குக. விண்-வீண்-வீணை=வ.வீணா. மூங்கிலைக் குறிக்கும் வேணு என்னும் வடசொல்லினின்று, வீணை அல்லது வீணா என்னும் சொல்லைத் திரிப்பது பொருந்தாது. வேதக்காலத்தில் ஆரியருக்கு நரப்புக் கருவியுமில்லை; இசைப்புலமையுமில்லை. ஒருநரம்பில் ஒரே யிசை (சுரம்) இசைப்பது யாழ் என்றும், ஒரு நரம்பில் மெலிவு சமன் வலிவு என்னும் முந்நிலைகளுள் ஒன்றும் பலவும் இசைப்பது வீணை என்றும், வேறுபாடறிக. செங்கோட்டி யாழும் சகோட யாழும் வீணை வகைகளே. இவற்றுள் முன்னது மெட்டுள்ளது; பின்னது கோட்டியம் (கோட்டு வாத்தியம்) போல் மெட்டில்லது. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் என்று அடியார்க்கு நல்லார் குறித்திருப்பதால், தமிழ்ப் பரதநூலே வடமொழி நட நூலாகிய பரத சாத்திரத்திற்கு முதனூலென அறிக. முதனூலின் பெயரையே வழிநூற்கும் இடுவது ஓர் ஆரிய வலக்காரம். முதனூலை அழித்து விட்டு வழிநூலை முதனூலென்பது அவர் வழக்கம். ஆதிவாயி லார் வெண்பாவில் இயற்றிய பரத சேனாபதியம் என்னும் நாடகத்தமிழ் நூல் இறந்துபட்டது. இன்று வழங்கும் பரத சேனாபதியம் வேறு. இராமாயணம் என்பது, கதையை நோக்கினும், பாவியத்தை (காவியத்தை) நோக்கினும், பாரதம்போல் அத்துணை வரலாற்று முறைப்பட்டதும் தெளிவும் திட்டமுமான செய்திகளைக் கொண்டதும் அன்று. வடநாட்டில் நாற்பதுவகை இராமாயணக் கதைகள் வழங்கு கின்றனவென்றும், அவற்றுள் ஒன்றில் இராமன் தன் தங்கையான சீதையை மணந்தான் என்றும், இன்னொன்றில் இராமன் இராவணனின் மனைவியான சீதையைக் கவர்ந்து கொண்டான் என்றும், இருப்பதாகச் சொல்கின்றனர். இராமன் கோதாவரிக்குத் தெற்கில் வரவில்லை யென்றும், சீதையைக் கவர்ந்த அரக்கன் வாழ்ந்த இலங்கை கோதாவரி யாற்றிடைத்திட்டேயென்றும், தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் நிகழ்ந்தனவாகச் சொல்லப்படும் செய்திகளெல்லாம் பிற்காலத்துக் கட்டுக்கதையென்றும், ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். இதற்கு ஏதுக்களாவன- (1) இராமன் தன் மனைவியுடன் தம்பியுடனும், கோதா வரிக் கரையிலுள்ளதும் ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருந் ததுமான பஞ்சவடியில் தங்கினமை. (2) இராவணன் சீதையைப் பஞ்சவடியிற் கவர்ந்தமை. (3) இலங்கை என்னும் சொற்கு ஆற்றிடைக் குறை என்னும் பொருளுண்மையும், கோதாவரி நடுவில் ஓர் ஆற்றிடைக்குறையுண்மை யும். (4) கி.மு. 3-ஆம் நூற்றாண்டை மோரியர்க்குமுன், வட நாட்டார் ஒருவரும் தமிழகத்தின்மேற் படையெடுக் காமை. (5) இராமன் படையைக் குரக்குப்படையென்றதும், குரங்கு கட்கு உயர்திணைத் தன்மை கூறியதும், அனு மான் என்னும் குரங்கைப் பன்மொழிப் புலவனென்றும் தொண்ணிலக்கணப் (நவ வியாகரண) பண்டிதனென்றும் பாராட்டியதும். (6) சீதையைத் தேடுமாறு இராமன் குரங்குகளை விடுத்த போது, கோதாவரிக்கு வடக்கிலுள்ள விந்தமலை, நருமதையாறு, ஏமகூடம், தண்டக அடவி, முண்டத் துறைச் சோலை, பாண்டுமலை ஆகிய இடங்களைப் பார்க்கச் சொன்னதுடன், கோதாவரியும் அடையுங்கள் என்றமை. (7) எருமையூர்க்கு (மைசூர்க்கு) வடக்கிலுள்ள கிட்கிந்தை மலை, அன்று சேரநாட்டைச் சேர்ந்து மாவலி (மகாபலி) வேந்தன் ஆட்சிக்குட் பட்டிருந்தமை. (8) இராமவிலக்குமணர் வெள்ளக்கணக்கான குரக்குப் படையுடன் சோழநாடு வழியாகப் பாண்டிநாடு வந்து, கடலுக்கணை கட்டி இலங்கை புகுந்து, இராவண னொடு பதினெண்மாதம் பொருது வென்று அரக்கர் குலத்தை வேரறுத்தனர் என்னும் செய்தி, சோழனுக்கும் பாண்டியனுக்கும் தெரியாது போனமை. (9) இராமன் விந்தமலைக்குத் தெற்கில், முனிவர் என்னும் ஆரியப் பூசாரிகளும் அரக்கரும் சடாயு என்னும் கழுகும் குரங்குகளும் தவிர, தமிழரையும் வேறு மக்களையுங் காணாமை. (10) பீடுமன், இராமன் காலத்தவனான பரசுராமனிடம் விற்கலை பயின்றவனாயினும், இராமனையோ இராமாயணத்தையோ அறியா திருந்தமை. (11) இராமாயணக் கதை இடத்திற் கிடமும், இராமாயணப் பாவியம் ஆசிரியர்க்காசிரியரும், சிறிதும் பெரிதும் வேறுபட்டிருத்தல். (12) இராமாயணப் பாவியம், மேன்மேலும் உயர்வுநவிற்சி யும் இடைச்செருகலும் பிற்சேர்க்கையும் கதை மாற்றமுங்கொண்டு வந்துள்ளமை. இராமாயணப் பனுவல் முதன்முதல் வான்மீகியாரால் சிற்றள வாகப் பாடப்பட்டிருக்கலாம். பாரதக் காலத்திற்குப் பின் பதின் தோற்றரவு (தசாவதாரம்) வகுக்கப்பட்டபோது, அது விரி வடையத் தொடங்கி யிருக்கலாம். பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம் ஒருபகல் எழுவர் எய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கின் தவத்துக் கையவி யனைத்தும் ஆற்றா தாகலின் கைவிட் டனரே காதலர் அதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே என்னும் புறப்பாட்டு (358) வான்மீகியார் என்னும் புலவ ரொருவர் பாடியதாகவுள்ளது. இது அரசு நிலையாமையையும் தவத்தின் மேன்மையையும் அழகாக எடுத்துக் கூறுவது. ஆசிரியர் பெயரையும் பாட்டின் பொருளையும் நோக்குமிடத்து, இவர் இராமாயண வான்மீகியார் தாமோ, அன்றி அவர் வழியினரோ என்னும் எண்ணம் மின்போல் தோன்றி மறைகின்றது. அகத்தியர் வழிகாட்டியபின் தமிழகம் வந்த பிராமணர், தென்னாட்டாரும் வடநாட்டார் போன்றே மதப்பித்தரா யிருந்தது கண்டு, தாம் நிலத்தேவரென்றும் தம் மொழி தேவ மொழியென்றும் ஏமாற்றி, குமரிமுதல் பனிமலைவரை இந்தியப் பழங்குடி மக்கள் அனைவரையும், உலகில் மக்களுள்ள கால மெல்லாம் தமக்கும் தம் வழியினர்க்கும் அடிமைப்படுத்துதற் பொருட்டு, குமுகாயத் துறையில் ஒன்றும் சமயத்துறையில் ஒன்றுமாக ஈரனைத்திந்தியத் திட்டங்களை வகுத்துவிட்டனர். இல் என்னும் வேர்ச்சொல் இல் (இளமைக் கருத்து வேர்) இல் உல்-உல்லரி = தளிர். உல்-உலவை = இளந்தழை. உல்-இல். இன்மை = மென்மை, நொய்ம்மை, இளமை, சிறுமை. எளிமை, வறுமை, இராமை. இல்-இல = இலவு, நொய்ய பஞ்சுள்ளது. இல-இலவு. ïyî-Skt. laghu = கனமின்மை, எளிமை. இலவு-இலவம் = இலவு, சிறிது (அற்பம்). M.ilavam. இலவம் (அற்பம்) - Skt. lava. இல்-இலை = இலைவகைகளுள் மென்மையானது. இலம் = வறுமை. இலம்என் கிளவிக்குப் படுவரு காலை (தொல்.எழுத்.316) இலம்படுதல் = வறுமையடைதல். இலம்படு-இலம்பாடு = வறுமை. இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய (மலைபடு.576) இலம்-இலம்மை = வறுமை. இடுக்கண் (யாப்பு). இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை. (தொல்.உரி.62) இலம்படு-இலம்படை = வறுமை. இலம்படை வந்துழி (fªjò.மூth.46) இலை-இலக்கு = வித்தின் முளையூன்றியபின் வரும் முதல் இலைகள். இல்-இள்-இள. இளத்தல் = மெல்லிதாதல். உடம்பு இளந்துவிட்டது என்னும் உலக வழக்கை நோக்குக, இளமை = மென்மை, இளம்பருவம், அறிவு முதிராமை. இளகு-இளகுதல் = மெல்குதல், நெகிழ்தல், உருகுதல். M. இளகு இளகு-இளக்கு-இளக்கம். M. இளக்கம். இளகு-இளஃகு. இளஃகுதுல் = தளிர்த்தல், இன்னுயிர் ....................... இளஃக்குமே (சீவக.149) இளக்கரித்தல் = தளர்தல், வேகந்தணிதல், கருமத்தில் விழிப்பின்றி யிருந்தல். இளக்கரி - இளக்காரம் = கழிகண்ணோட்டம், மன நெகிழ்ச்சி, மதிப்பின்மை. இளப்பம் = மதிப்புக் குறைவு, தாழ்வு. M. இளப்பம். இளவல் = தம்பி, இளைஞன், முற்றாதது. இளங்கிளை = தங்கை. மாலவற் கிளங்கிளை (சிலப்.12:68) இளந்தலை = இளமை, எளிமை, கனமின்மை, முற்றாமரப்பகுதி. இளந்தை - இளைமை. இளந்தாரி = இளைஞன், இளைஞை. இளந்தேவி = இளவரசி. இளமட்டம் = இளைஞன். இளமட்டம்-இளவட்டம். இளம்படியர் = இளம்பெண்கள். வானிளம்படியர் (திவ். பெரியாழ். 3,6,3) இளங் கேள்வி = உதவிக் கோயிற் கண்காணியர். இளங்கோ = இளவரசன். இளங்கொற்றி = ஈன்றணிமை ஆவு. இளங்கதிர் = எழுஞாயிற்றின் கதிர். M. இளங்கதிர். இளங்கம்பு = கம்பு வகை. இளங்கலையன் = நெல் வகை. இளங்கருக்கு = சிறிது காய்ச்சிய கருக்கு (கஷாயம்) இளங்காட்டுத்தரிசு = பத்தாண்டுப் புறம் போக்கு. இளங்கார் = நெல் வகை. இளங்கால் = தென்றல், வெற்றிலையிளங்கொடி, இளமைப் பருவம். இளங்காலை = வைகறை, இளமைப்பருவம். இளங்குரல் = குழந்தையின் குரல். இளங்குழம்பு = திண்ணமில்லாத சாறு, ஒருவகைக் குழம்பு. இளங்கொடி = ஆவின் நஞ்சுக்கொடி, இளம்பெண். இளங்கோயில் = பழங்கோயில் பழுது பார்க்கப்படும்பொழுது கட்டப்பெறும் குறுங்காலக் கோயில். இளஞ்சாயம் = சிறிது தோய்த்த சாயம். இளஞ்சார்வு = குருத் தோலை (யாழ்). இளஞ்சிவப்பு = வெளிறிய சிவப்பு. இளஞ்சூடு = சிறிது சுடுகை. இளஞ்சூல் = முதிராக் கரு. இளந்தண்டு = முளைக்கீரை. இளந்தெய்வம் = சிறு தெய்வம். இளந்தோய்ச்சல் = தயிர் சிறிது திரைதல், அலகைச் சிறிது பதப்படுத்துதல். இளநகை = புன்சிரிப்பு. K.elanage இளநாக்கடித்தல் = உடன்பாடின்மைபோற் காட்டுதல். இளநிலா = அந்தி நலா. இளநீர் = முற்றாத தேங்காய்நீர், மணியின் இளநிறம். T.edaniru, K.elaniru, ஆ. இளநீர். இளநீர்க்கட்டு = உண்ணாக்கு நோய் (Tonsillitis) இளநீலம் = வெளிறிய நீலம். இளநெஞ்சு = இரக்கமுள்ள மனம். இளம்பசி = சிறுபசி. இளம்பதம் = முற்றாநிலை, சிறிது வெந்த அல்லது காய்ந்த நிலை, இளவரசுப் பதவி. இளம்பறியல் = முற்றாத நிலையில் பறிக்குங் காய். இளம்பிறை = சிறுபிறை. இளமணற்பாய்தல் = மனமிளகி ஈடுபடுதல். இளமழை = சிறு பெயல் முகில். இளமார்பு = கருப்பூர வகை. இளமையாடுதல் = திரிபுணர்ச்சியுறுதல். மந்தி .......................... இளமையாடி யிருக்கும் வனத்து (சீவக. 2491). இளவடி = காலாட்படை. நின்ற இளவணி கலங்கி (ஈடு.7, 4, 1) இளவன் = ஒருவகை நஞ்சு. இளவாடை = வடக்கிருந்துவரும் மென்காற்று. இளவாளிப்பு = ஈரம். இளவிளவெனல் = பயிர் பசுஞ் செழிப்பாயிருத்தல். இளவுச்சி = நண்பகற்கு அணித்தான முற்பொழுது. இளவெந்நீர் = சிறிது சுடும் நீர். இளவெயில் = காலை வெயில். இளவெழுத்து = திருந்தா வெழுத்து. இளவேனில் = வெப்பம் முதிராக் கோடை. இள-இளை = இளமை. K.ele. இளைச்சி = தங்கை. அகில முண்டார்க்கு நேரிளைச்சி (திருப்புகழ், 1037) இளைத்தல் = மெலிதல், சோர்தல், பின்னடைதல், வறுமைப் படுதல், வளங்குறைதல். இளைப்பு = சோர்வு, களைப்பு. இளைது = முதிராதது. இளைது-இளைசு-இளசு. இளையர் = இளைஞர், வேலைக்காரர். இளையவன் = அகவையிற் குறைந்தவன், தம்பி. இளையவள் = திருமகள். இளையன் = தம்பி. இளையான் = தங்கை, திருமகள், பின்முறை மனைவி. இள் = எள். எள்ளல் = குறைவாய் மதித்தல், இகழ்தல். எள் = 1. மிகச் சிறு கூல வகை. 2. ஒரு சிற்றளவு (8 கடுகு) K.M. எள். Tu. எண்மெ. எள்-எண்-எள். எண்ணெ னுணவுப்பெயர் (தொல்.எழுத்து,308) எண்மை = எளிமை. எள்ள = இகழ, ஓர் உவமவுருபு. எள்ள விழைய இறப்ப நிகர்ப்ப (தொல்.உவ.11) எள்-எள்கு. எள்குதல்=1. இகழ்தல். எள்கலின்றி ... ஈசனை வழிபாடு செய்வாள் (தேவா.1049:10) 2. கூசுதல், ஒடுங்குதல். பழிவந்து மூடுமென் றெள்குதுமே (திருக்கோவை. 9) 3. அஞ்சுதல். எண்டிசையோரும் எள்க (சீவக.1749) 4. வருந்துதல். செங்களம் பற்றினின் றெள்கும் புன்மாலை (திவ்.இயற்.திருவிருத்,7) எள்கு-எஃகு, எஃகுதல் = நெகிழ்தல், அவிழ்தல், உருகுதல். எஃகு-உருக்கு, உருக்கினாற் செய்யப்படும் படைக்கலன் பொது. ஒ.நோ: இள-இளகு. எஃகுபடுதல் = இளகின நிலையடைதல். உருகக் காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும் (சிலப்.15: 210. உரை) எள்-எளி. எளிதல் = எளிமையடைதல். பொருதிறல் வன்மைய திலனா ளெயிந்தான் (கந்தபு.அக்கினிமுகா.90) எளித்தல் = தாழ்த்திக் கூறுதல். எளித்தல் ஏத்தல் (தொல்.பொ.207) எளிமை = எளிதாய்ச் செய்யும் நிலை, தாழ்வு, வறுமை, தளர்வு. எளிய விலை = குறைந்த விலை. எளியன் = வறியவன், தாழ்ந்தோன், எளிதாய் அடையப்படுபவன். எளிவு = எளிய தன்மை. உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே (திவ்.திருவாய்.1, 3, 1) எளுமை = எளிமை. எள்-எய். எய்த்தல் = 1. இளைத்தல். எய்த்த மெய்யே னெய்யே னாகி (பொருங.68) 2. உடம்பு வருந்துதல். எய்யாமை யெல்லா வறமுந் தரும் (குறள்.296) 3. குறைவுறுதல். எய்த்தெழு பிறையினை விளைவின் றாக (இரகு. யாகப்.8) எய்ப்பு = 1. இளைப்பு. எய்ப்பானார்க் கின்புறு தேனளித்து (தேவா.189:8) 2. வறுமைக் காலம். எய்ப்பினில் வைப் பென்பது (பழ.358) எய்ப்புழி வைப்பாம் என (பழ.136) எய்ப்பில்வைப்பு = இளைத்த காலத்தில் உதவுதற்கு ஈட்டி வைக்கப்படும் ஏமப்பொருள். அப்பாவென் னெய்ப்பில் வைப்பே (தாயு, பராபர.25) எய்ப்பினில் வைப்பு = எய்ப்பில் வைப்பு (Provident Fund) நல்லடியார் மனத் தெய்ப்பினரில் வைப்பே (தேவா.818:2) எள் - ஏள் - ஏளனம் = இகழ்ச்சி. ஏள் - ஏளிதம் = இகழ்தல். ஏள் - ஏசு. ஏசுதல் = இகழ்தல். ஏள் = ஏழ் - ஏழை. ஏழை = 1. வறியவன். 2. அறியாமை. ஏழைத் தன்மையோ வில்லை தோழி (கலித் 55:23 உரை) 3. அறிவிலான், அறிவிலாள். ஏமுற்ற வரினும் ஏழை (குறள்.873) 4. பெண். எருதேறி யேழையுடனே (தேவா. 1171 : 2) ஏழைமை = வறுமை, அறியாமை. ஏள்-ஏட்டை = 1. வறுமை. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன (நாலடி.358). 2. இளைப்பு. வெண்ணிணத்த செந்தடிக்கே யேட்டைப் பட்டு (சீவக.1552) இன்மை = வறுமை, குறைவு, இல்லாமை. Cf. E. less, deficient, minus. வளங்குன்றிய நாடு, செயப்படு பொருள் குன்றிய வினை என்னும் தொடர்ப் பொருள்களையும் ஒப்புநோக்கி யுணர்க. இல் = இல்லை. இல், இல்லை என்பன, உள் உண்டு என்னும் வினைகட்கு எதிர்மறையாம். உள் என்னும் வினை மலையாளப் பழமொழிகளில் இன்றும் வழங்குகின்றது. இல்லத்தம் ஆண் மகப் பேறில்லாத பெற்றோர், தம் மருகனைத் தம் இல்லத்தி லேயே இருத்திக் கொள்வர். இவ் ஏற்பாட்டை இல்லத்தம் என்பர் கன்னடர். இலக்கணம் இலக்கணம் - லக்ஷண இலக்கு-இலக்கணம் = சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காக, கூறப்பெறும் மொழி யமைதி (Grammar). வடமொழியில் குறி, குறிக்கோள், இயல், இயல்விளக்கம் (defini-tion), விளக்கக் காட்டு (illustration) என்னும் பொருள்களிலேயே லக்ஷ்ண என்னும் சொல்லை ஆள்வர். லக்ஷ் என்னும் சொற்கு லக் (lag=that which is attached or fixed என்பதை மூலமாகக் காட்ட முயல்வது பொருந்தாது. (வ.வ.90) இலக்கம் இலக்கம்-லக்ஷ இலக்கு-இலக்கம் = குறி. இலக்க முடம்பிடும்பைக்கு (குறள்.627) (வ.வ.90) இலக்கம்2 : இலக்கு = இலை, எய்யுங்குறி, குறி, குறிக்கோள், குறித்த இடம். ஒரு குறித்த இடத்தை இலக்கு என்பது பாண்டி நாட்டு வழக்கு. ïy¡F-yº(t.), இலக்கு-இலக்கம்-லக்ஷ (வ.) (தி.ம : 738) இலக்கணம், இலக்கியம் இலக்கணம், இலக்கியம் என்ற இரு சொற்களும் தென் சொல்லா என்று ஆராயுமுன். அவற்றால் குறிக்கப்பெறும் இரண் டும் தென்மொழியிலுண்டா என்று காணல்வேண்டும். இலக் கணமும் இலக்கியமும் தொன்று தொட்டுத் தமிழுக்கு இருந்து வருவது மட்டுமன்றி. முதன் முதலாகவும் அவை நாவலந் தேயத்தில் எழுந்த மொழி, தென்மொழியே என்பது மிகையன்று. இலக்கணமும் இலக்கியமும் தொன்றுதொட்டுத் தமிழுக்கு இருந்திருப்பின். அவற்றைக் குறிக்கச் சொல்லும் தமிழில் இருந் திருத்தல் வேண்டும். இதற்கு இலக்கணம், இலக்கியம் என்ற இருசொல் தவிர வேறு தென்சொல்லுண்டா வெனின் எதுவு மில்லை. சிலர், இலக்கியத்திற்குச் செய்யுள் என்பதும், இலக்கணத்திற்கு நூல் என்பதும் தமிழ்ப்பெயர் என்பர். செய்யுள் என்பது யாப்பு வடிவிற்குப் பெயர் என்பதைத் தொல்காப்பியர் யாப்பிலக்கண வியலுக்குச் செய்யுளியல் என்று பெயரிட்டதையும். அவ்வியலின் முதல் நூற்பாவே மாத்திரை முதலிய 26 உறுப்புகளையும். அம்மை முதலிய எட்டொடு கூட்டி. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே என்று கூறுவதையும், 127ஆம், 128ஆம் நூற்பாக்கள் செவியுறை யும் அங்கதமும் பற்றிவரும் செய்யுள்களை முறையே செவியுறைச் செய்யுள் என்றும், அங்கதச் செய்யுள் என்றும் கூறுவதையும். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் (162) செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின் (234) செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி (241) என்ற பிறவிடத்தெல்லாம் செய்யுள் என்னும் சொல் யாப்பு வடிவத்தையே குறிப்பதையும். பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் யாப்பின் வழியது என்மனார் புலவர் (78) என யாப்பு என்று முன்னர்க் கூறியதையே. எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் எனச் செய்யுள் என்று பின்னர் ஆசிரியர் பெயர் மாற்றிக் கூறியதை யும். நூலுக்குரை செய்யுள் உரைநடை ஆகிய இரு வடிவிலும் பண்டைக் காலத்திருந்ததினால் அவற்றுள் ஒன்றான செய்யுள் வடிவுரையே எழுநிலத்துள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ள தென்ப தையும். செய்யுள் உரைநடை ஆகிய இரண்டையும் தழுவியதே இலக்கியம் என்பதையும் நோக்கிக் காண்பாராக. காவியம் (Epic) தமிழில் தொடர்நிலைச் செய்யுள் எனப்பட்டதையும் காண்க. செய்யுளைக் குறித்தற்கு யாப்பு, பா, பாட்டு முதலிய பிற பெயர்களுமுண்டேயெனின். அவையெல்லாம் பருப்பொருங் களில் ஒரு பொருட் சொல்லாயினும் நுண்பொருளில் வேறு பட்டவை என்பதை அறிதல் வேண்டும். அவ் வேறுபாடாவன: யாப்பு : metrical composition. செய்யுள் : poem, poetry. பா : variety of metre. பாட்டு : ode தூக்கு : metrical rhythm. செய்யுள் என்பது தனிப்பட்ட செய்யுளையும் (Poem), செய்யுட் டொகுதியையும் (Poetry), செய்யுள் நடையையும் குறிக்கும். செய்யுள் என்பது செய்யப்படுவது என்னும் பொருளையுடையது. செய். பகுதி : உள். விகுதி. வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் என்றார் பவணந்தியார். poem அல்லது poetry என்னும் ஆங்கிலச்சொல்லும் இதே பொருளைக் கொண்டிருப்பது வியக்கத்தக்கது. E.poem, (from) F.poeme, (from) L.poema, (from). Gk.poema - poiema - poieo = make. Gk. poiesis - poesis = making, poetry, E.poesy. Gk. poietes - poetes = maker, poet, E.poet. இனி, நூல் என்னுஞ் சொல்லை ஆராய்வாம். நூல் என்பது, ஒரு மொழியின் அல்லது கலையின் அல்லது வேறேதேனுமொரு பொருளின் ஒழுங்கை அல்லது இயல்பை எடுத்துக் கூறும் புத்தகத்தையும், அதன் பின்பு ஆகுபெயர்ப் பொருளில் அது பற்றிய கலையையுங் குறிக்குமே யன்றி. அவ்வொழுங்கை அல்லது இயல்பையே குறிக்காது. எடுத்துக்காட்டாக, ஒரு மொழியின் ஒழுங்கைப்பற்றி வினவினால், அதன் இலக்கணமென்ன என்று கேட்பது முறையாகுமேயன்றி, அதன் நூல் என்ன என்று கேட்பது முறையாகாகது. அது வழக்கு மன்று. இலக்கணம் என்பது grammar அல்லது definition என்றும், நூல் என்பது treatise என்றும் பொருள் படும். இவற்றுள், முன்னது இலக்கண நூலையும், பின்னது ஒரு நூலால் அல்லது நூற்றொகுதியால் உணர்த்தப்பெறும் அறிவுக் கலையையும் (Science) குறிக்கும்போது ஆகுபெயராம். logos என்னும் கிரேக்கச்சொல், முதலாவது சொல்லையே குறித்துப் பின்னர் ஆங்கிலத்தில் உரையாட்டையும் நூலையும் கலையை யும் குறித்தமை காண்க. ஆயின், இப் பிற்பொருள்களில் அது logue என்றும் logg என்றும் திரிவதுடன், தொகைச் சொற்களின் ஈறாகவும் (suffix) மாறிவிடும். இலக்கணம் என்னும் சொல் நூலைக் குறிக்கும்போது மொழியிலக்கண முட்பட்ட எல்லாக் கலையிலக்கணங்களையும் கூறும் புத்தகங்கட்கெல்லாம் பொதுப் பெயர் என்றும் வேறுபாடு உணர்தல் வேண்டும். இனி, ஒருசிலர் புலம், இயல் என்ற சொற்கள் தமிழில் இலக் கணத்தைக் குறிக்கும் என்பர். புலம் என்னும் சொல்லின் இயற்பொருள் அறிவு என்பதே. இச்சொல்லின் அடிப் பிறந்த புலமை புலவர் என்ற சொற்களும், அறிவுடைமை அறிஞர் என்றே பொருள்படும். இத்தகைய பொதுச்சொல் மொழியிலக்கணத்தைச் சிறப்பாகச் சுட்டுதற்குப் பொருந்தாது. புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் என்று பனம்பாரனார் கூறியிருப்பினும், அது பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் பெருவழக்காக வழங்கியதும் இல்லை. அறிவுநூல் களெல்லாவற்றையும் பொதுவாகப் புலம் என்பது செய்யுள் வழக்கம். புலம் புரியந்தணர் என்னும் பரிபாடற் றொடரில் (6 : 45) மறைநூல் புலம் எனப்பட்டது. இஃது ஓர் ஆகுபெயர். வேதம் என்னும் வடசொல்லுக்கும் அறிவு என்பதே இயற்பொருளாகும். (ɤ(=m¿.)-ntj«). பனம்பாரனார் கூற்றில் உள்ள புலம் என்னுஞ் சொல், பொதுவாக அறிவு அல்லது அறிவுநூல் எல்லாவற்றையும் குறிப்பதாயினும், இடம் நோக்கிச் சிறப்பாக இலக்கணத்தை அல்லது இலக்கண நூலைக் குறிப்ப தாகக் கொள்ளப்படும். ஆனால், இது ஆட்சிபற்றியதேயன்றி இயல்புபற்றியதன்று. இதனால் புலம் என்பது இலக்கணப் பெயராகாது. இனி, இயல் என்ற சொல்லோவெனின், அது எல்லாப் பொரு ளுக்கும் உரிய தன்மையை அல்லது இயல்பைப் பொதுப்படை யாகச் சுட்டுவதன்றி வேறொன்றும் குறியாமையின். இலக்கணப் பெயராதற்கு எள்ளளவும் ஏற்றதன்றாம். இயல் = தன்மை. இயன்மொழி வாழ்த்து= ஒருவனுடைய சிறந்த தன்மைகளை எடுத்துக் கூறிப் புகழ்வது. இயல் = இயல்பு. இயற்கை. பிற மொழிகளில் இலக்கணம் தோன்று முன்பும், ஆரியர் வருமுன்பும் தொன்றுதொட்டும், தமிழில் இலக்கண இலக்கியம் இருந்து வருவதுடன். இன்றும், தமிழில்தான், பிற மொழிகளுக் கெல்லாமில்லாத பொருளிலக்கணமும் இருந்து வருகின்றது. இதனாலேயே, கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்த இப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்று பரிந்துரைத்தார் பரஞ்சோதி முனிவர். இனி, இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் வடமொழி வடிவான லக்ஷணம், லக்ஷ்யம் என்வற்றிற்கு வடமொழியில், grammar, literature என்னும் பொருளுண்டாவெனின், அதுவு மில்லை. வடமொழியில் அவற்றின் பொருளாவன: லக்ஷண = குறி, அடையாளம், இயல்பு, தன்மை, குணம், அழகு, (முதலியன). லக்ஷ்யம் = குறிக்கப்பட்டது. வரையறுக்கப்பட்டது, வரணிக்கப் பட்டது. குறிக்கோள், நோக்கு, குறிக்கோளுடையது (முதலியன). இவ்விரு சொற்களின் அடிப்படைக் கருத்தும் குறி என்பதே யாகும். ஆனால், இவற்றின் மூலம் ரஞ்ச் (ranj) என்பதன் திரிவான ரக்த (rakta) என்றும், லக் (lag) என்றும், இருவேறு வகையாகச் சொல்லப்பட்டுகின்றது. ரஞ்ச் = வரணம் பூசப் பெறு, நிறங்கொள், விளங்கு, ஒளிர். இச்சொல் ரங் (rang) என்பதன் திரிபாகும். லக் = இசை, இணை, கட்டு, ஒட்டு. இச்சொல், lego என்னும் கிரேக்கச் சொல்லுக்கும், ligne என்னும் இலத்தீன் சொல்லுக்கும் இனச் சொல்லாகும். லக்ஷண, லக்ஷ்ய என்னும் சொற்களுடன், லக்ஷம் (நூறாயிரம்). லக்ஷ்மன் அல்லது லக்ஷ்மணன், லக்ஷ்மீ முதலிய சொற்களும், வடமொழியில் தொடர்புறுத்தப்பட்டுள்ளன. லக்ஷ்மன், லக்ஷ்மணன் = சிறந்த குறிகளை அல்லது நல்லிலக்கணங்களை யுடையவன். லக்ஷ்மீ = நற்குறியை அல்லது அதிர்ஷ்டத்தை யுடைவள்; அதிர்ஷ்டசாலி அல்லது தெய்வம். லஷ்மீ என்னும் சொல்லுக்குச் சிலர் லக் (lag) என்பதையும், சிலர் லஞ்ச் (lanj) என்பதையும், மூலமாகக் காட்டுகின்றனர். லஞ்ச் = ஒளிர், விளங்கு, திகழ். லஷணம், லக்ஷ்யம் என்னும் இருசொற்களும், வடமொழியில் இலக்கணம் இலக்கியம் என்று பொருள்படாததோடு, இலக் கணம், இலக்கியம் என்னும் தமிழ்ச் சொற்களைப்போல, குறிப் பொருளையே அடிப்படையாகவும், விளங்குதற் பொருள் தரும் இலங்கு என்னும் சொல்லையே மூலமாகவும் கொண்டுள்ளன. இது மிகக் கவனிக்கத்தக்கது. வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்க வ்யாகரணம் என்னும் சொல்லும், இலக்கியத்தைக் குறிக்கச் சாகித்யம் என்னும் சொல் லும் உள்ளன. தமிழிலோ இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்களைத் தவிர வேறெதுவுமில்லை. அஃதோடு, அவ்விரு சொற்களுக்கும் வேர் தமிழில்தான் உள்ளது. அஃதெங்ஙன மெனின், காட்டுவல்: எழுச்சிப் பொருளையுணர்த்தும் எகர வெழுத்தை அடியாகக் கொண்ட எல் என்னுஞ்சொல், எழுகின்ற அல்லது உதிக்கின்ற கதிரவனையும் அதன் ஒளியையும் குறிக்கும். எல்லே யிலக்கம் என்பது தொல்காப்பியம் (இடை 21) எல் = கதிரவன், வெயில், ஒளி, பகல் எல் - என்று கதிரவன். என்று - என்றவன் = கதிரவன் என்று - என்றூழ் = கதிரவன் முதிர்ச்சி, கோடை. எகரம் அல்லது ஏகாரம் எழுச்சிப் பொரு ளுணர்த்துவதை, எழு, எம்பு, எவ்வு, எக்கு, எடு, ஏண், ஏணி, ஏணை, ஏத்து, (ஏற்றிச் சொல்), ஏந்து, ஏல், ஏறு, erect, edify, cructate முதலிய சொற்களிற் காண்க. உயர்ச்சிப் பொருளும் எழுச்சிப் பொருளோடொக்கும். எல் - எல்கு - எலகு - இலகு = விளங்கு. சொற்களின் மோனைத்திரிபில் இகரம் எகரமாகவும் எகரம் இகரமாகவும் திரிவது இயல்பே. இலகு - இலங்கு = விளங்கு. இலங்கு = ஏரி, குளம். தெளிந்த நீர் பளிங்குபோல் விளங்குதலால். ஏரி இலங்கு எனப்பட்டது போலும்! மீன்க ணற்றே அதன்சுனை என்று கபிலர் பறம்புமலைச் சுனையை நிலாவிற்கு ஒப்பிட்டுக் கூறியது கவனிக்கத்தக்கது. இலங்கு - இலஞ்சு - இலஞ்சி = ஏரி, குளம். லஞ்சு (lanj), ரங்கு (rang) என்னும் வடசொற்கட்கு இலங்கு என்னும் தென்சொல்லே மூலமாகும். இலங்கு - லங்கு - ரங்கு (வ) லங்கு - லஞ்சு - ரஞ்சு - ரக்த (வ) இலங்கு - இலங்கை = ஆற்றிடைக்குறை, தீவு, இராவணன் ஆண்ட நகரம் அல்லது தீவு. பெருநீரிடைப்பட்ட சிறுநிலம் தனித்து விளங்குவதால் இலங்கை எனப்பட்டது போலும்! இலங்கு-இலக்கு = விளங்கு, விளக்கம். இலக்குதல் = சொலிப்பித்தல், விளங்கவைத்தல், வரைதல், எழுதுதல், குறித்தல். இரீரகை யிலக்குக (சைவச. பொது.274). வரணந்தீட்டிப் படம் வரைவதும் எழுத்தெழுதுவதும் விளங்க வைத்தலாகும். முதற்காலத்தில் படவெழுத்தே (Linoglyph) வழக்கி லிருந்தது. இன்றும் எழுதுதல் என்னுஞ் சொல். வரணப்படம் வரைதலையும் எழுத்தெழுதுதலையுங் குறித்தல் காண்க. கண்ணுக்கு மறைந்துள்ள பொருள்களை விளக்கு விளக்குதல் போல, எழுத்தும் கண்ணுக்கு மறைந்துள்ள கருத்துகளை விளக்குவதாகும், எழுதலும் குறித்தலும் ஒன்றே. இலக்கு - இலக்கி = எழுது. இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக்கித்து (சீவக.180) இலக்கு அல்லது இலக்கி என்னுந் தென்சொல்லே வடமொழியில் லிக் எனத் திரியும், இது மிகமிகக் கவனிக்கத்தக்கது. லிக்=எழுது, லிகித= எழுதப்பட்டது. லிபி=எழுத்து, லேகக்= எழுத்தாளன், லேக=எழுதப்பட்டது, லேகனீ= எழுதுகோல்- இவ்வாறு இலக்கு என்னுஞ் சொல் வடமொழியில் பலவாறாகத் திரிசொற்களை உண்டு பண்ணியுள்ளது. இலக்கு = குறிப்பொருள், அம்பெய்யுங் குறி, அடையாளம், குறித்த இடம். குறித்த சமையம், குறித்த அல்லது நாடிய பொருள், பொரக்குறித்த எதிரி. குறித்த அளவு. இலக்கு வைத்தல் = குறிவைத்தல், இலக்குப்பார்த்தல் = குறி பார்த்தல், சமையம் பார்த்தல் - இவை இன்றும் தமிழ் வழக்காம். இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல் (குறள்.627) என்றார் திருவள்ளுவர். ஒரு குறித்த இடத்தை இன்றும் இலக்கு என்பர் நெல்லை நாட்டார். இலக்கு என்னும் சொல்லே, இலத்தீனில் locus என்று திரிந்து, ஆங்கிலத்தில், local, locate/ locative முதலிய சொற்களைப் பிறப்பிக்கும். குறித்த இடம் என்னும் சிறப்புப் பொருளைத் தரும் தமிழ்ச்சொல், இலத்தீனில் தன் சிறப்புப் பொருளையிழந்து, இடம் என்னும் பொதுப்பொருளையே தருதல் காண்க. இங்ஙனமே, ஒப்போன் கேட்டலைக் குறிக்கும் தா என்னும் தமிழ்ச் சொல், இலத்தீனில் கேட்டலை மட்டும் குறிக்கும் do என்னும் திசைச்சொல்லாகத் திரிந்துள்ளது. எய்வதற்குக் கொண்ட குறியன்றி, எடுத்துக்காட்டுவதற்குக் கொண்ட குறியும், இலக்கு என்றே சொல்லப்படும். உடன்பிறப்பன்பிற்கு இலக்கானவர் இளங்கோவடிகள் என்னும் சொற்றொடரில், இலக்கானவர் என்பது எடுத்துக்காட் டானவர் என்று பொருள்படும். இப்பொருளில் இலக்கு என்னும் சொல் இலக்கியம் என்னும் வடிவம் எய்தும், ஒரு கருத்தை அல்லது கூற்றை இலங்க (விளங்க) வைக்கும் பொருள் இலக்கு எனப்பட்டது. ஆங்கிலத்திலுள்ள illustrate என்னும் சொல்லும் இப்பொருளதே. L. illustro = to light up, to illuminate, il = in, lustro = to make light. இலக்கு - இலக்கம் = ஒளி, குறிப்பொருள், எண்குறி, எண்ணிடம், எண், பேரெண்ணாகிய நூறாயிரம். இலக்கமிடுதல் = கணக்கிடுதல். முதலாவது நூறாயிரத்திற்கும் நூறு நூறாயிரத்திற்கும் தமிழில் தனிச்சொல் இல்லை. பின்னர், பேரிலக்கமாகிய நூறாயிரம் இலக்க மென்றும், கடைசி யிலக்கமாகிய நூறு நூறாயிரம் கோடி யென்றும் சொல்லப்பட்டன. இலக்கம் - லக்ஷ(வ) - லாக்(உ)- lac (E) கோடி - கோட்டி (வ) - (குடோடு (உ) crore (E) இலக்கு - இலக்கர், இலக்காரம் = ஆடை ஆடை ஆள்களை விளங்கச் செய்வதால் இலக்கர் எனப்பட்டது. ஆடை யில்லாதவன் அரைமனிதன் இலக்கு - இலக்கை = ஆடை, சம்பளம். சம்பளம் ஒரு குறியெதிர்ப்பாதலால் இலக்கை யெனப் பெயர் பெற்றது. இலங்கு - இலஞ்சு - இலஞ்சினை - இலாஞ்சினை = குறி, அடை யாளம், முத்திரை, இலஞ்சினை - இலச்சினை = குறி, முத்திரை, இலாஞ்சினை - லாஞ்சன (வ). எழுத்தைக் குறிக்கும் இலக்கு என்னும் சொல், ஆகுபெயராய்ச் சொல்லையும் மொழியையும் உணர்த்தி, அணம் விகுதி பெற்று மொழியின் நூற்றொகுதியையுங் குறிக்கும். Logos என்னும் கிரேக்கச் சொல் சொல்லையும், கட்டுரையையும் நூலையுங் குறித்தல் காண்க. அச் சொல்லும் இலக்கம் என்னும் தென்சொல்லுக்கு இனமானதே. GK. gramma = a letter; gramma - grammar (E.) L. litera = a letter; litera - literature (E.) இங்ஙனம், ஆங்கிலத்திலுள்ள இலக்கணவிலக்கியப் பெயர் களும், எழுத்தைக் குறிக்குஞ் சொல்லினின்றே பிறந்துள்ளமை கவனிக்கத்தக்கது. இலக்கணம் என்னும் தென்சொல்லினின்றே, லக்ஷணா என்னும் வடசொல்லும் திரிக்கப்பட்டு, பின்பு தமிழில் இலக்கணை என வழங்குகின்றது. லக்ஷணா = குறிப்புப் பொருள். விட்ட விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும் விடாத விலக் கணை ஆகிய மூன்றும் குறிப்பாய்ப் பொருளுணர்த்துவனவே. இலக்கணைக்கினமான ஆகுபெயர் குறிப்பாய்ப் பொருளுணர்த்து வனவற்றோடு (பவணந்தியாரால்) சேர்க்கப் பெற்றிருத்தல் காண்க. தமிழில், இலக்கணம் இலக்கியம் என்னும் சொற்கள், வேர்ப் பொருளைத் தாங்கி நின்று, எழுத்தையுங் குறித்து, Grammar, literature என்னும் பொருளைத் தருகின்றன. வடமொழியிலோ, அவற்றுக்கு நேரான லக்ஷணம் லக்ஷ்யம் என்னும் சொற்கள் வேர்ச்சொல் அற்று, எழுத்தைக் குறிக்கும்போது லிக் என வேறொரு வடிவம் பூண்டு, இலக்கண விலக்கியத்தைக் குறிக்காது குணங்குறிப் பொருளையே தாங்கி நிற்கின்றன. இவ்வேறு பாட்டைக் கண்டு கொள்க. இதுகாறும் கூறியவற்றால், இலக்கணம், இலக்கியம் என்னும் சொல்லிரண்டும் தென்சொல்லே யென்று தெற்றெனத் தெளிக. இலக்கணம், இலக்கியம் என்னும் இரண்டையுங் குறிக்கத் தமிழில் அணங்கம் அணங்கியம் என வேறிரு சொற்களும் உள. அஞ்சணங்கம் - ஐந்திலக்கணம், அஞ்சணங்கியம் - ஐந்திலக்கியம் (யாழ்ப்பாண அகராதி), அணங்கம் - இலக்கணம் (பொதிகை நிகண்டு). அணங்குதல் - ஒலித்தல். புகையணங்க (புறப்பொருள் வெண்பாமலை 10, 18). இவை சென்னைப் பல்கலைக் கழக அகராதியின் இணைப்பு மடலத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. அணங்கு=ஒலி, எழுத்து, அணங்கு - அணங்கம் = இலக்கணம். அணங்கு - அணங்கியம் = இலக்கியம். அணங்கு என்னும் வினைச்சொல் தூய தனித்தமிழ்ச் சொல்லாத லில், அணங்கம், அணங்கியம் என்னும் பெயர்களை வடசொல் லெனத் தலைசிறந்த தமிழ்ப் பகைவரும் வாய்திறவார் என்பது தெளிதருதேற்றம். - செந்தமிழ்ச் செல்வி ஏப்பிரல் 1948 இலக்கியப் பாகுபாடு புலவியம் (Art) கலை நூல் தொழிற்கலை கவின்கலை அறிவியல் கம்மியம் (Science) Technology) இயற்கை செயற்கை உயர்திணை அஃறிணை விரவுத்திணை பூதநூல் வேதிநூல் உயிரி உயிரிலி இலக்கியம் இலக்கியம் - லக்ஷ்ய இலக்கு - இலக்கம் = சிறந்த வாழ்க்கையிலக்கை விளக்கிக் கூறும் வனப்பு (காவியம்) வடமொழியில் லக்ஷ்ய என்ற சொற்கும் இலக்கான பொருள் என்றே பொருள் கூறுவர். (வ.வ : 90) இலக்கியம், இலக்கணம் வடமொழியும் தென்மொழியும் எனது உனது என்று, எங்குந் தொடர்ந் தெதிர்வழக்காடற் கிடமான எண்ணிறந்த சொற்களுள், இலக்கியம். இலக்கணம் என்பன இரண்டாம். உலகில் அடுத்தடுத்து வாழும் மக்கள் தம்முட் கொண்டுங் கொடுத்தும் பொருள்களை மாற்றிக் கொள்வது போலும், அடுத் தடுத்து வாழும் வகுப்பார் அல்லது நாட்டார் தம்முட் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது போலும், அடுத்தடுத்து வழங்கும் மொழிகளும் தம்முட் கொண்டுங் கொடுத்தும் சொற் களை மாற்றிக் கொள்கின்றன. இனி, உலகமொழிகளெல்லாம் ஒருதாய் வயிற்றினவென்று மொழி நூல் வல்லார் கண்ட முடிவிற்கேற்ப. அடுத்து வழங்காது நெட்டிடையிட்டு வழங்கும் மொழிகட்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாயிருத்தலை ஆராய்ச்சியாற் காணலாம். ஆங்கிலம் ஏறத்தாழ 6,000 மைல்கட்கப்பால் வழங்கினும் ஆயிரக் கணக்கான தென்சொற்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளது. உதாரணமாகச் சில சொற்களை ஈண்டுக் காட்டுதும். Abba - அப்பன். Abbot, the father of an abbey. Abbey, a monastery under an abbot. All - எல்லாம். Alum - அளம் = உப்பு. Alone = All - one, ஒன்று Alone = A + long, ஓழுங்கு = நீளம் Angel, அஞ்சல் a divine messenger. தபாற்காரனை அஞ்சற்காரன் என்பதும், தபால் ஆபீசை அஞ்சல் ஆபீசு என்பதும் நெல்லை வழக்கு. Amiable, amicable, amo - அமர். Amour mk®. L. Amor, love. ஆத்திசூடி அமர்ந்த தேவனை (ஔவை) அமர்தல் மேவல் (தொல்காப்பியம்) Axle - அச்சில் Bar - பார், a rod, a hindrance, the railing that encloses a space in a court of law. கட்டப்பார், கட்டப்பார்க்கம்பி, கட்டப்பாரை பாவீற் றிருந்தகலை பாரறச் சென்ற கேள்வி (சீவகசிந்தாமணி) பாரற - தடையற Bark - படகு r-d. cf. Coorg - குடகு Battalian - பட்டாளம் Battery - பட்டறை Beak - மூக்கு b-m போலி: ப-ம Bear - பொறு Betel - வெற்றிலை Body - படிவு, படிவம் from the root - படி Burrough - புரம் from the root - புரி Bottle - புட்டில், புட்டி Bull - புல்லம் ஏறொடு மூரி புல்லம் (சூடாமணி நிகண்டு) Bun - பணி or பண்ணி, பண்ணியம், பணியாரம், பண்ணிகாரம், Cash - காசு Chaff - சாவி Clan - குலன், a family or tribe. Clay - களி Crack - கிறுக்கு, கிறுக்கன் Crook - கொடுக்கு d-r. Cry - கரை Cumulate - கும்மலிடு Cumulus - கும்மல் Curl - சுருள் c-s சுருட்டை முடி Curry - கறி இச்சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தினின்றும் தமிழுக்கு வந்தவை யல்ல. ஆங்கிலம் வருமுன்னரே இவை தமிழில் உள்ளன. ஆறா யிரம் கல்லிடையிட்ட ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இத்துணைப் பொதுச் சொற்களிருக்குமாயின். ஏறத்தாழ 5,000 ஆண்டுகளாக அடுத்தடுத்து வழங்கும் வடமொழிக்கும் தென்மொழிக்கும் எத்துணைப் பொதுச் சொற்களிருத்தல் வேண்டும்? இப்பொதுச் சொற்களெல்லாம் மொழி நூன் முறையில் கூர்ந்து நோக்கு வார்க்குத் தூய தென்சொற்களென்றே தோன்றா நிற்கும், வட மொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவாயுள்ள சொற்களை, வடசொல்லென்பாரும் தென் சொல்லென்பாருமாம் இருசாரார் மொழி நூலறிஞர். வடமொழியைப் போன்றே தென்மொழியும் சிறந்ததொரு தாய்மொழியாதலின், வடமொழியினின்றும் தென்மொழிக்கு வந்துள்ள சொற்களைப் போலவே தென்மொழி யினின்றும் வடமொழிக்குச் சென்றுள்ள சொற்களும் பன்னூற் றுக்கணக்கின. அவற்றுள் இரண்டு இலக்கியம், இலக்கணம் என்பன. (தமிழ்ப்பொழில் விடை 1934) இலக்கணவுரை வழுக்கள் 1. ஒற்றளபெடை ஙஞண நமன என்னும் நன்னூற் சூத்திரத்திற்கு. சூத்திரத்துக் கூறப்பட்ட பத்தொற்றும் ஆய்தம் ஒன்றுமாகப் பதினோ ரெழுத்தும், குறிற்கீழிடை, குறிலிணைக் கீழிடை, குறிற் கீழிக்கடை, குறிலிணைக் கீழ்க்கடை என்னும் நான்கிடத்தும் அளபெடுக்க ஒற்றள பெடை மொத்தம் நாற்பத்து நான்காம். அவற்றுள் ஆய்த மானது இயல்பீறாக வேனும் விதியீறாக வேனும் சொல்லுக் கீற்றில் வாராமையால் குறிற் கீழ்க்கடை குறிலிக் கீழ்க்கடை என்னும் இரண்டிடத்தையுங் கழிக்க ஒற்றளபெடை நாற்பத் திரண்டாதல் காண்க என்றே முன்னைப் பின்னை உரையாசிரிய ரெல்லாம் உரைத்தார். குற்றியலுகரம் குறிற்கீழன்றிக் குறிலிணைக்கீழ் வாராதென்பது. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே என்னும் சூத்திரத்தாற் றெளிவாம். அதன் உரையிலும். விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத ரிலஃஃகு முத்தி னினம் என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல, ஓசை நிறைத்தற் பொருட்டு ஒற்றில்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க என்றார் மயிலைநாதர். ஆகவே குறிலிணைக்கீழ் ஆய்தம் வாராதென்பது பெறப்பட்டது. இனி, அல் + திணை = அஃறிணை, முள் + தீது = முஃடீது. ஆவ் + கடிய = அஃகடிய என விதியீறாய் ஆய்தம் வருதலின் ஈற்றில் வாராதென்பதும் போலியுரையென மறுக்கப்படும். ஆகவே, ஆய்தம் குறிற்கீழிடை குறிற்கீழ்க்கடை என்னும் ஈரிடத்தும் வந்து அளபெழும் என்றும், குறிலிணைக் கீழிடை குறிலிணைக் கீழ்க்கடை என்னுமீரிடத்தும் வாராதென்றும், அவ் விரண்டிடத் தையுமே கழிக்க ஒற்றள பெடை மொத்தம் நாற்பத்திரண்டாம் என்றும் கண்டுகொள்க. 2. ஏவலொருமை நடவா மடிசீ என்னும் ஏவல்வினைச் சூத்திர உரையில் செய் என்னும் பகுதியொடு ஆய் விகுதி புணர்ந்து செய்யாய் என நின்று. பின்பு அவ்விகுதி கெட்டு மீண்டும் செய் என நிற்பதே ஏவலொருமை யெனச் சிலர் உரைத்தார். விகுதி புணர்ந்து கெடுவது இங்கிலீசு சமற்கிருதம் போன்ற ஆரியமொழிகட் கியல்பேயன்றித் தமிழுக்கியல்பாகாது. Cut, set என்னும் வினைகள் இறந்த காலத்தில் விகுதி பெற்றிழந்து மீண்டும் பகுதியளவாகவேயிருக்கும். விகுதி புணர்ந்து கெடுவதாயின், அங்ஙனம் கெடாத சில வினைகளுமிருத்தல் வேண்டும். அங்ஙன மின்மையின் செய் என்னும் வாய்பாடே ஏவலொருமை யென்று துணியப்படும். மேலும், செய்யாய் என்பது முன்னிலை எதிர்மறை ஒருமை எதிர்கால வினைமுற்றுச் சொல். அது ஓசை வேறுபாட்டான் வேண்டு கோளாங்கால் செய்யாயா என வினாப்பொருள் பட்டுப் பின்பு அவ்வினாவே செய் என உடன்பாட்டுப் பொருள் தந்து நிற்கும். ஏவலொருமை விகுதி புணர்ந்து கெடுவதாயின் ஏவற்பன்மையும் விகுதி புணர்ந்து கெடல் வேண்டும். அங்ஙனம் கெடாமையின், ஒருமை விகுதி மட்டும் புணர்ந்து கெடுமென்றல் பொருந்தாது. இன்னோரன்ன இடங்களிலெல்லாம் வடமொழியியல் வேறு தென்மொழி யியல் வேறு என்பதைத் தெற்றென வுணர்தல் வேண்டும். அங்ஙனம் உணராதாரே. செய்என் ஏவல் வினைப்பகாப் பதமே என வெள்ளிடையாய் ஆசிரியர் கூறினும் அதனையும் உணராது இவ்வாறு மயங்கக் கூறுவர். 3. தொழிற்பெயர் விகுதி பாடு என்பது ஒரு தொழிற் பெயர் விகுதி யென்றும், கோட்பாடு என்பது அதற்குதாரண மென்றும் மாணவர்க்குப் பாடமாயுள்ள இலக்கணங்களெல்லாம் மயங்கிக் கூறாநிற்கும். கோள் என்பது ஒரு முதனிலை திரிந்த தொழிற்பெயர். பின்பு படு என்னும் துணைவினை சேர்ந்து அதுவும் முதனிலை திரிந்து பாடு என்றாயிற்று. பாடு என்பது விகுதியாயின் கோள் என்பது பகுதி யாதல் வேண்டும். அங்ஙனமாகாமையின் அஃதுரை யன்மை யறிக. புறப்படு, கடப்படு என்பவை புறப்பாடு கடப்பாடு என்றா னாற்போலக் கோட்படு என்பதும் கோட்பாடு என்றாயிற்று. வாய்பாடு என்பதிலோ வெனின் அதிலும் படு என்னும் துணை வினையே முதனிலை திரிந்ததாதல் வேண்டும். 4. எழுவாயுருபு அவற்றுள், எழுவா யுருபு திரிபில் பெயரே என்னும் சூத்திர வுரையில், தமக்கென வாராய்ச்சியின்றிச் சுவாமிநாத தேசிகர் போன்ற பிறர் கூற்றுகளையே கொண்டு கூறும் ஒருசார் ஆசிரியர். எழுவாய் வேற்றுமைக்கு ஐ முதலானவை போன்ற உருபு இல்லாதிருந் தாலும், உரையிற்கோடல் என்கிற உத்தியால் ஆனவன், ஆகின்றவன், ஆவான்; என்றவன், என்கின்றவன், என்பவன்; அவன் முதலாக ஐம்பாலிலும் வருகிற சொல் லுருபுகள் உண்டெனக் கொள்க என்று வழுப்படவுரைத்தனர். அவர் தமிழிலக்கணத்தையே அறியார். எழுவாய்க்கு இயற்கை வடிவன்றி வேறுருபில்லை யென்று தொல்காப்பியமும் நன்னூலும் துலங்கக் கூறும். ஆனவன் முதலிய மூன்றும், என்றவன் முதலிய மூன்றும் முறையே ஆ (ஆகு), என் என்ற வினைப்பகுதிகளினின்றும் பிறந்த வினையா லணையும் பெயர்கள். வேற்றுமை உருபெல்லாம் பெயர்க்கு ஈறாயன்றித் தமித்து வாரா. இடைச்சொல்லாதலின் தமித்து வருவதும் பெயர்ச்சொல்லாயிருப்பதும், ஐம்பால் காட்டுவதும் அவற்றுக்கு இலக்கண மாகா. ஒரு பெயர்க்கு மற்றொரு பெயர் உருபாய் வருமென்றல் எட்டுணையும் பொருந்தாத தொன்றாம். கொண்டு, நிமித்தம் முதலிய வினையும் பெயரும் பிற வேற்றுமை களுக்குச் சொல்லுருபாய் வருமே யெனின், அவையும் அவ்வவ் வேற்றுமைப் பொருள்பட வருமேயன்றி அவைதானே வேற்றுமை யுருபன்மையும், இடைச்சொல் லாகாமையும் அறிந்து கொள்க. ஆனவன் முதலிய ஆறு பெயர்களும், சாத்தன், சாத்தி என்ற பெயர்களைப் போலவே ஆனவனை, ஆனவனால், ஆனவனுக்கு என எண் வேற்றுமைப்படுதலின், அவை பெயர்களேயன்றி வேற்றுமையுருபாகாமை யறிக. பெயருக்கு வேற்றுமை யன்றி வேற்றுமையுருபிற்கு வேற்றுமை யின்று. சாத்தன், சாத்தி முதலிய பெயர்கள் மிகக் குறுகி யிருத்தலின், கட்டுரை வகையான் ஓசை நீடற்பொருட்டு சாத்தனானவன், சாத்தியானவள் என்று சிலராற் கூறப்படுவதன்றிப் பிற வேற்றுமை யுருபுகளைப் போல எவ்விடத்தும் எல்லாரானும் கூறப்படுவ தல்ல. ஆகவே முதல் வேற்றுமைக்கு உருபுண்டென்பது போலியுரை யென மறுக்க. 5. எழுவாய்ச் சொல் எழுவாய் பெயர்ச்சொல்லாகவே யிருக்குமென்று இதுகாறும் எல்லாச் சிற்றிலக்கணங்களுள்ளும் கூறப்பட்டது. அது ஆராய்ச்சியின்றி வழிவழி வந்ததோர் கூற்றாம். எழுவாய் நிகழ்கால வினையெச்சமாகவும் இருக்கும். எ-டு : அவனுக்குப் பாடத் தெரியும் = அவனுக்குப் பாட்டுத் தெரியும். பாட என்பது எழுவாய். ஆங்கிலத்தில் infinitive mood (நிகழ்கால வினையெச்சம்) எழுவாயாய் வருதலை ஒப்புநோக்குக. இன்னோரன்ன இடங்களி லெல்லாம் ஒத்துப் பார்வை இலக்கணமே (Comparative Grammar) பயன்படு மென்க. இனிச் செயப்படுபொருளும் எழுவாய் போல நிகழ்கால வினையெச்சமா யிருக்குமென்றறிக. எ-டு : அவன் பாடத் தெரிந்து கொண்டான் = அவன் பாட்டைத் தெரிந்து கொண்டான். பாட செயப்படுபொருள். 6. உரிச் சொல் (Poetic Diction) உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை ........................................................ எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (தொல்சொல் 782) என்னும் தொல்காப்பியர் சூத்திரத்திற்குச் சேனாவரையர் தமக்கியல்பில்லா விடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின், உரிச் சொல் லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென்பாரு முளர். இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை. போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி ஒரு சொல் பொருட்குரித்தாதலே யன்றி ஒருசொற் பலபொருட்கும் பல சொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென் றும். அவை பெயரும் வினையும் போல ஈறுபற்றிப் பொரு ளுணர்த்த லாகாமையின் வெளிப்படாத வற்றை வெளிப்பட்ட வற்றோடு சார்த்தித் தம்மை யெடுத்தோதியே அப்பொரு ளுணர்த்தப் படுமென்றும், உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையு முணர்த்தியவாறு. மெய்தடுமாறலும் ஒருசொற் பல பொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட்குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினா ரேனும், உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண் பென்னும் பொருட்குரியவாய் வருதலே யாம் என்று உரை வரைந்தார். நச்சினார்க்கினியரும் இவ்வாறே உரை கூறினார். எல்லாச் சொற்களம் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்பு பற்றியே தோன்றியிருத்தலின், இசை குறிப்புப் பண்பிற்குரியன உரிச்சொல்லென்பது பொருந்தா; பொருந்துமாயின் இசை குறிப்புப் பண்பு பற்றிய சொற்களெல்லாம் உரிச் சொல்லாதல் வேண்டும். அங்ஙனமாகாமையும், இசையுங் குறிப்பும் பண்பி லடங்குதலும், பண்புப் பெயர் அறுவகைப் பெயருள் ஒன்றா தலும், ஒருசார் தொழிலும் பண்பின்பாற்பட்டுத் தொழிற் பண்பெனப்படுதலும், வினைச் சொற்களிற் பெரும்பாலன இசையுங் குறிப்பும் பற்றி வருதலும், இலக்கண முணர்ந்தார்க் கெல்லாம் எளிது புலனாம். மெய்தடுமாறல் சொற்களுக்கெல்லாம் பொதுவியல்பாதலின் அதுவும் ஒரு சிறப்பிலக்கணமன்று. ஒரு சொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட் குரிமையும் பெயர் வினை யிடை யுரி நான்கிற்கும் பொதுவான திரிசொல் இலக்கணமாதலை, ஒரு பொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒரு சொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி (தொல். 882) என்பதனாற் கண்டுகொள்க. பெயர்க்கும் வினைக்கும் உரிமை பூண்டு நிற்பன உரிச்சொல் லெனின், இடைச்சொல்லும் அங்ஙனம் உரிமை பூண்டு நிற்றலின் அதுவும் இலக்கணமன்மை யறிக. இனி, உரிச்சொல் இலக்கணந்தான் என்னையோ வெனிற் கூறுதும்: சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே (தொல். 643) என்பதால் இலக்கண வகையிற் சொற்கள் பெயர் வினை என இரண்டேயென்பதும், இடைச்சொல்லாவன அப் பெயரிடை யும் வினையிடையும் வரும் உறுப்புகளென்பதும், அவ்வுறுப்பு களின்றிப் பெயர்ப் பகுபதங்களும் வினைப்பகுபதங்களுமில்லை யென்பதும், தனித்துவரும் இடைச்சொற் களெல்லாம் பெயர் வினை யொன்றனுள் அடங்கு மென்பதும், உரிச்சொல் லென்பதோர் இலக்கணவகைச் சொல்லன் றென்பதும், அது பெயராகவும் வினையாகவு மிருக்குமென்பதும், செய்யுட்குரிய திரிசொற்கட் கெல்லாம் பொருளுணர்த்துவதே உரியியலென்ப தும், செய்யுட்குரிய சொற்களே உரிச்சொல் லெனப்பட்டன வென்பதும் அறியப்படும். நன்னூலாரும். பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (நன்.442) எனத் தெள்ளிதிற் றெரித்தார். அதுவுமன்றி, இன்ன தின்னுழி இன்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா நல்லோ ருரிச்சொலில் நயந்தனர் கொளலே. (நன். 460) எனவும் புறனடை யோதினார். இதில் பிங்கல முதலிய நிகண்டுகளை யெல்லாம் உரிச்சொல் லென்றமையும், அவை செய்யுட்குரிய பலவகை யருஞ்சொற் களுக்கும் பொருள் கூறுதலையும், அவற்றுள் காங்கேயர் நிகண்டு உரிச்சொல்லென்றே பெயர் பெற்றமையும் கண்டுகொள்க. தமிழறிவும் திரிசொல் வழக்கும் மிக்கிருந்த காலத்தில் செய்யுட் சொற்களெல்லாம் இயற்சொற்போல் எளிதாய்ப் பொருள் விளக்குவனவாயின. பின்பு அவை குன்றிய காலத்து அவற்றைத் தனித்தனி அகராதியியல்பில் எடுத்தோதிப் பொருள்கூற வேண்டியதாயிற்று. பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின், தம்மை யெடுத்தோதியே அப் பொருளுணர்த்தப் படுதலானும் என்றார் சேனாவரையரும். ஒவ்வொருசொல்லை யும் தனித்தனியெடுத்தோதிப் பொருள் கூறுவதென்றால், அது செய்யுட் சொல்லாய் உலக வழக்கி லில்லாததென்பது எளிதிற் புலனாம், உரிச்சொற்கட்கெல்லாம் பொருள் கூறுவதைத் தொல்காப்பிய உரியியலுட் கண்டுகொள்க. உரியியலென்பதே செய்யுட்குரிய அருஞ்சொற்கட் கெல்லாம் பொருளுணர்த்தும் அகராதித் தொடக்கம். பின்பு அது விரிவான நூலாய் நீண்டு நிகண்டு எனப்பட்டது. நிகள்-நீள். அகலம் நிகளம் என்பதோர் பண்டை வழக்கு. நிகளம் - சங்கிலி; நீளமாயிருப்பது. நிகளம் நீளமென மருவிற்று. பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே (தொல். சொல். 874) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல்.சொல். 877) எனத் தொல்காப்பியர் உரியியலுட் பொதுப்படக் கூறுவதும் இதனை வலியுறுத்தும். பெயரும் வினையுமே முதன்முதலுண்டான சொற்கள். அவற்றினின்றும் பிற்காலத்து இடைச்சொல் வகுக்கப்பட்டது. அதற்கும் பின்பு உரிச்சொற் பாகுபாடுண்டாயிற்று. 7. இடுகுறிப் பெயர் அ,ஆ என்றற் றொடக்கத்தன, இடுகுறிச் சிறப்புப் பெயர் என்பது நன்னூற் பழையவுரை. அ, ஆ என்பவை எழுத்துகளே யன்றி அவற்றின் பெயர்களாகா. எழுத்தாவது ஒலி, ஒரு பொருள் வேறு, அதன் பெயர் வேறு, குடம் என்பது ஒரு பொருள், அப்பொருள் வேறு; அதைக் குறிக்கும் குடம் என்னும் சொல் வேறு. அ, ஆ என்பவை எழுத்துகளாகிய பொருள்கள், உயிர், குறில், நெடில் என்பனவே அவற்றின் பெயர்கள், ஒரு பொருள் பெயரின்றியும் யாதானு மோர் புலனாகச் சுட்டப்படும். அ,ஆ என்பவை பெயர்களாயின் அவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் அவையன்றி வேறாதல் வேண்டும். அங்ஙனமின்மையின் அஃதுரை யன்மை யறிக. அன்றியும் இடுகுறியென்றோர் பெயர் யாண்டுமிலது. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அற்றேல், மக்கட்கிடும் இயற்பெயர்களோவெனின், அவையும் முதலாவது இடப்படும்போது காரணப் பெயர்களாகவே யிருந்திருத்தல் வேண்டும். (எ-டு: முருகன் = இளைஞன். Victor - வெற்றி பெற்றவன்) பின்னரும் அவை, தெய்வப்பற்று, அதிகாரி மாட்டன்பு. இனமுறை, இன்னோசை, விழுமிய பொருள், உயர்நோக்கம் என்பவற்றுள் ஒன்று பற்றியே மக்கட்கிடப்பட்டு வருகின்றன. மக்கட்கிடப்படும் இயற்பெயரெல்லாம் முதலாவது பொருள் குறித்தனவென்றும், பின்பு மக்கட்பன்மையால் மகவு தோறும் புதுப் பெயரிடுதலருமை பற்றிப் பழம்பெயர்களே மீண்டும் மீண்டும் பிறர்க்கிடப்படுகின்றன வென்றும் பெயின் (Bain) என்னும் ஆங்கிலப் புலவர் தம் இலக்கணத்திற் கூறியுள்ளார். இடுகுறிப்பெய ருண்டென்னும் இழுக்குணர்ச்சியே சிலர் தவற் றாராய்ச்சிக்கும் காரணமாயிருந்து வருகின்றது. தாவரங்களுள் இடுகுறிப் பெயருடையவையெல்லாம் தமிழ் நாட்டிற்குரிய வென்றும், காரணப் பெயருடையவை யெல்லாம் அயல்நாட்டிற்குரியவென்றும், வெற்றிலை (வெறுமை + இலை) மிளகாய் (மிளகு + காய்) முதலியவை காரணப் பெயருடைமை யால் அயல்நாட்டினின்று வந்தவையென்றும், வாழை, வேம்பு முதலியவை இடுகுறிப் பெயருடைமையால் தமிழ்நாட்டிற்குரிய வென்றும், இயற்கைப் பொருட் கட்டுரை என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளுக்கும் தனிமொழியாயும் தொடர் மொழியா யும் ஒன்றும் பலவும் பெயரிருக்குமென்றும். சொற்கள் தோன்றி ஊழிக்கணக்கான காலங்களாகியிருத்தலின் அவற்றுட் பலவற் றின் பொருள்கள் இறந்தும் மறைந்தும் இருக்கின்றன வென்றும், வெற்றிலைக்கு அடை என்று மறுபெயர் பண்டை நூல்களிற் கூறப்பட்டுள்ளதென்றும், அவரையினத்தைச் சேர்ந்த காய் கொத்தவரை யென்னப்பட்டாற்போல், மிளகினத்தைச் சேர்ந்த காய் மிளகா யென்னப்பட்டதென்றும், வழவழ வென்றிருப்பது வாழையென்றும், வெம்மையான காலத்தில் தழைப்பது வேம்பு என்றும் அந்நூலாசிரியர் அறிந்திலர் போலும். இக்காலத்திற் சிலர் ஆங்கிலமுணர்ந்த மாத்திரையானே தமிழு முணர்ந்தோமென்று தமிழாராயத் தொடங்குகின்றனர். அது நால்வர் கண்ணிலார் நால்வாய் கண்ட தொக்கும். இதுகாறும் கூறியவற்றை ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. 8. போலி (நன். 122, உரை) முதற்போலி இடைப்போலிகளின்பின் முறையே சொல்ல வேண்டிய இவ்விறுதிப் போலியை முன்னே சொன்னதனால். கரும்பு சுரும்பர், வண்டு - வண்டர், சிறகு - சிறகர், இடக்கு - இடக்கர் எனச் சிலர் குற்றியலுகரப் பெயரினிறுதி உகரத்துக்கு அர் என்பது போலியாக வருதலும்.... கொள்க என்பது. கடைப் போலியின் சிறப்புப் பற்றியும் அதன் பெருவழக்குப் பற்றியுமே அது முதலிற் கூறப்பட்டது. அது ஒருகால் ஒன்றைக் குறிப்பினும். பந்தல் - பந்தர், குடல் - குடர் போன்ற போலிகளே கொள்ளப்படுமல்லது வண்டு - வண்டர், சிறகு - சிறகர் என்பவை கொள்ளப்படா. குற்றியலுகரங்கள் மிகக் குறுகிய ஓசையுடையனவாய்ச் சொல்லுக் கீற்றிலிருப்பது உச்சரிப்பிற் கெளிதாயிராமை பற்றி அவற்றை (நீட்டி) எளிதாக்குவதற்கு அம், அல், அர், இ முதலிய சாரியைகள் வருவதுண்டு. அவை போலியாகா. அர் என்பது போலியாயின் ஏனையவும் போலியாதல் வேண்டும். அவை சாரியையாதலின் அஃது போலியுரையென மறுக்க. எ-கு: குன்று - குன்றம் சுக்கு - சுக்கல் நெஞ்சு - நெஞ்சம் குச்சு - குச்சி இடக்கு - இடக்கர் குஞ்சு - குஞ்சி அர் என்பது சாரியையாக நூல்களிற் கூறப்படவில்லை. ஆயினும், அது சாரியை யென்றே கொள்ளற்பாற்று. அல் என்பதன் ஈற்றுப் போலி எனினும் அமையும். இனி, பித்து - பிச்சு, வைத்த - வைச்ச எனத் தகரத்துக்குச் சகரம் போலியாக வருதலும் அடங்கும் வழியறிந்து அமைத்துக் கொள்க என்பது மேற்சூத்திர முடிவுரையாகும். பிச்சு, வைச்ச என்பவை செய்யுள் விகாரமேயன்றிப் போலியாகா, அவை போலியாயின் கொச்சை (Barbarism) யென்பதொன் றின்றிக் கல்லாமாக்கள் பேசுவதெல்லாம் போலியுளடங்கு மென்றும். ஆச்சென்றா லாயிரம் பாட்டா காதா ஆப்பிட்டுக்கொண் டடிபட்ட சொக்கேசருக் காசைப்பட்டு என்னும் செய்யுளடிகளிலுள்ள ஆச்சு. ஆப்பிட்டு என்பவும் உலக வழக்கில் திருந்திய மொழிகளாகுமென்றும் மறுக்க. 9. பதவியல் நன்னூற் பதவிய லுரைமுகத்தில், இவ் வியலுக்கு ஆதாரம் பெரும்பாலும் வடமொழியாதலால் அது தோன்ற மொழி யியல் எனப் பெயர் குறியாமல் பதவியல் எனப் பெயர் குறித்தார் போலும் என்று ஆசிரியர் கருத்தை ஒருவாறு ஊடுருவி யறிந் தாற்போற் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்திற் பதவிய லென்றோர் இயலில் பகுபத உறுப்புகளெல்லாம் தொகுத்துக் கூறப்படாவிடினும் எழுத்ததி காரம் சொல்லதிகாரமென்னு மீரதிகாரங்களிலும் ஆங்காங்கு வேறுவேறு கூறப்பட்டுள்ளன. பகுதியும் விகுதியும் பெயரியல் வினையியல் இடையியல்களுள், சாரியையும் விகாரமும் புணரியல்களுள்ளும், இடைநிலை யொன்றும் புணரியல் இடையியல்களுள்ளும் தொல்காப்பியத் திற் கூறப்பட்டுள்ளமை காண்க. தொல்காப்பியக் காலத்து மக்கள் நுண்ணறிவினராதலின், அவர்க்குப் பலவியல்களுள்ளும் வேறு வேறு கூறப்பட்டுள்ள பகுபத வுறுப்புகளை மீண்டுமோரியலில் தொகுத்துக் கூற வேண்டாதாயிற்று. நன்னூற் காலத்தில் மக்களறிவு குறைந் தமையின் அவற்றைத் தொகுத்துக் கூறவும் வேண்டியதாயிற்று. தொல்காப்பியத்திற் கூறப்படாத பகுபத விலக்கணத்தை வட மொழி தழுவிப் புதிதாய்ச் செய்தார் பவணந்தியாரெனின், அவர் காலம் வரையும் தமிழானது ஆங்கிலம் போலப் பதவியன் மொழி யாயிருந்தில தெனவும், அவரது நன்னூலாலேயே வடமொழி போலப் பதவியன் மொழியாயிற்றெனவும் இயற்கைக்கும் மொழி நூலுக்கும் முரண்படுமன்றோ? ஆதலால் தொல்காப்பியர் காலத் திலேயே பகுபத விலக்கண மிருந்ததென்றும், அது தொல் காப்பியத்தில் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளதென்றும், அதை மறுத்துமோரியலில் தொகுத்துக் கூறுவது அற்றை முறைப்படி கூறியது கூறலென்னும் குற்றமாகுமென்றும் உய்த்துணர்ந்து கொள்க. 10. திசைச்சொல் திசைச் சொல்லானது பன்னிரு கொடுந்தமிழ் நாட்டினின்றும் வந்து செந்தமிழில் வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களேயன்றிப் பிறமொழிச் சொற்களாகா. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். சொல். 883) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அதை யுணராது, செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிமொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (நன். 273) என்று பதினெண்மொழி நிலங்களையும் கூட்டியுரைத்தார் பவணந்தியார். சேனாவரையர். நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரிய ரெல்லாம் கொடுந்தமிழ்ச் சொற்களையே திசைச்சொற்கு உதாரணங் காட்டினர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளெல்லாம் பண்டைக் கொடுந்தமிழ்களாதலின் திசைச் சொற் குதாரணங் காட்டப்பட்டன. வடமொழி யொன்றே தொல்காப்பியர் காலத்து இந்து தேசத்தில் வழங்கின பிறமொழியாகும். அது திசைச்சொல்லினின்றும் பிரிக்கப்பட்டு வடசொல்லென விதந்து கூறப்பட்டது. இதனால் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச் சொற்களென்றும் பிற மொழிகளெல்லாம் வடசொற்போல அவ்வம் மொழிப் பெயராலேயே குறிக்கப்படு மென்றும், அவை திசைச் சொல்லுளடங்காவென்றும் பெறப்படு மாறு காண்க, இங்கிலீசு. இந்துத்தானி, போர்த்துக்கீ முதலிய பிறமொழிச் சொற்களையெல்லாம் திசைச் சொல்லாக இவற்றைச் சிற்றிலக்கணங்கள் கூறாநிற்கும். அவற்றை ஆங்கிலச் சொல், இந்துத்தானிச்சொல், போர்த்துக்கீசியச் சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டும். இவை அக்காலத் தின்மையின் தொல்காப்பியத்திற் கூறப்பட்டில. பிறமொழிச் சொற்களையெல்லாம் தாராளமாய்த் தமிழில் வழங்குமாறு திசைச் சொல்லாக் கொள்ள இலக்கணிகள் இடந் தந்தாராயின். ஏராளமான பிறமொழிச் சொற்கள் யாதும் வரம்பின்றித் தமிழிற் கலந்து அதன் இனிமையையும் தனிமையையும் குலைத்துவிடுதல் திண்ணம். அதோடு அவை தமிழுக்கு இன்றியமையாதவை யென்றும், அவையின்றித் தமிழில் முற்றப் பொருளறிவுறுத்தலமையாதென்றும், எண்ணப் படும், ஆதலின் இலக்கணிகள் இடந்தந்திலர். இங்கிலீசு போன்ற மொழிகட்கே திசைச் சொற்கள் இன்றியமையாதவையாகும். தமிழிலிருந்த எத்துணையோ சொற்கள் வழக்கின்றி இறந் தொழிந்தன. ஆயினும் இற்றைக் காலத்தும், பிறசொற் கலவாது கருத்தெல்லாவற்றையும் உணர்த்தவல்லது தமிழ் ஒன்றேயாகும். ஆங்கிலத்தை வடமொழி யுதவியின்றித் தமிழில் மொழி பெயர்க்க முடியாதென்று சிலர் கருதுகின்றனர். மூலப்பகுதி களினின்றும் இயற்சொற்களினின்றும் திரிசொற்களும் தொடர்ச்சொற்களும் ஆக்குமாறு அவரறிந்தாராயின் அங்ஙனம் கருதார். ஒவ்வொரு மொழியினும் பிறமொழியைச் செவ்வையாய் மொழி பெயர்ப்பது அரிதாகும். ஆயினும், தமிழில் ஏனையவற் றிற்போல் அத்துணை அரிதன்று, இதுபோது நூல் வழக்கினும் உலக வழக்கிலுமுள்ள தமிழ்ச் சொற்களையே தமிழ் மக்கள் அறிந்திலர். தமிழுக்கு வடமொழி யுதவி வேண்டாதிருக்க, வடசொல்லை யேன் தமிழிலக்கணங் கூற வேண்டுமெனின், வடமொழி தமிழுக்கு இடத்தால் அணித்தாதலின் போக்குவரவுபற்றியும் மொழி பெயர்ப்புப் பற்றியும் வடமொழியிலுள்ள நூற்பெயர் களும் ஆட்பெயர்களுமாய்த் தமிழில் வந்து வழங்கிய சிறப்புப் பெயர்களே வடசொல்லெனப் பட்டனவென்றும், மொழி வழக் கிற்கும் கருத்தறிவிப்பிற்கும் வேண்டிய பிற பொதுச் சொற்கள் தமிழில் வந்து வழங்குமாறு கூறப்பட்டில வென்றும் பண்டை நூல்களெல்லாம் வடமொழி விரவாத செந்தமிழ் நூல்களென்றும் கூறிவிடுக்க. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் ......................................................... ................................âir¢brhš (நள்.273) எனவே, செந்தமிழ் நாட்டை நாற்றிசையும் சூழ்ந்த பன்னிரு கொடுந் தமிழ்நாடுகளினின்று வந்து வழங்கும் கொடுந்தமிழ்ச் சொற்களே திசைச் சொற்களென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழுக்கு வேண்டுவ வல்லவென்றும், ஒருகால் வேண்டினும், வடசொற்போல அவ்வம் மொழியாற் குறிக்கப்படுமென்றும், அறிந்து கொள்க. 11. எதிர்மறையும்மை சாத்தன் வருதற்குமுரியன்என்பதுவாராமைக்குமுரியன்என்னும்எதிர்மறையைஒழிபாகஉடைத்தாய்நிற்றலின்.எதிர்மறை, இஃது அஃறிணைÉரவுப்bபயÇயல்புமாUளவே vனப்gண்புgற்றியும்tரும்.ïJ ãறிதோர்bபாருளைத்jழுவாதுxருbபாருளின்Éனையைkறுத்துÃற்றலின்vச்சத்தின்nவறாயிற்று.nkš Máரியர்vதிர்மறைஎ¢rம் என்wiமயின்இஃது vச்சத்âன்கூறாகு«என்றுÉரித்து¡கூறினா®நச்சினhர்க்கினியர். இதேcjhuz¤ij ஏனைச் சிற்றிலக்கணத்தாரெல்லாரும் வழிவழி காட்டி வந்தனர். சாத்தன் வருதற்கு முரியன் என்பது வராமைக்கு முரியனென் பதைத் தழுவி நிற்றலின், அது ஏனையது தழீஇய எச்சவும்மை யன்றி எதிர்மறையும்மை யாகாது. அது பிறிதொரு பொருளைத் தழுவாவிடினும் பிறதொருவினையைத் தழுவி நிற்குமாறறிக. சாத்தன் வருதற்கு முரியன் என்பது எதிர்மறை யும்மையாயின், சாத்தன் வராமைக்கு முரியன் என்பது உடன்பாட்டும்மையாதல் வேண்டும். உடன்பாட்டை ஒழிபாயுடைத்தாய் நிற்றலின், அவ்வாறு உடன்பாட்டும்மை சூத்திரத்திற் கூறப்படாமையின் அஃதுரையன்மை யறிக. பின்னை யாதோதான் எதிர்மறையும்மை யெனின்; நாள் தவறினும் நாத்தவறான் என்புழி, நாள்; தவறினும் என்பது தவறாது என்னும் ஒழிபை உடைத்தாய் நிற்றலின் அதுவே எதிர்மறையும்மையென்க. கடல் வற்றினுங் கங்கை வற்றாது. தெய்வம் தீமை செய்யினும் கொற்றன் தீமை செய்யான் என்பனவும் இவை போன்ற பிறவுமதற்குதாரணம். (செந்தமிழ்ச் செல்வி சுறவம் 1932) இலைக்காம்பு வகை அடிதாள் தோகை இவற்றின் காம்பு; காம்பு இலையின் காம்பு; மட்டை ஓலையின் காம்பு இலை நரம்பு நரம்பு காம்பின் தொடர்ச்சியாக இலையின் நுனிவரை செல்வது; நரம்பு நரம்பின் கிளை (சொல்: 66) இலைப்புரை கிளைத்தல் இலைவிழுந்து மேவிக் கிடக்கும் சிறு குழிகளையெல்லாம் கிண்டிக் கிளைத்து ஒரு பொருளைத் தேடிப் பார்த்தலுக்கு இலைப் புரை கிளைத்தல் என்று பெயர். இவ்வழக்கு ஒருவனை எல்லா இடமும் துருவித் தேடிப் பார்த்தலையும் குறிக்கும். (சொல் 11, 12.) இலைமறைகாய் இலைக்குள் மறைந்து கிடந்து சிலர்கண்ணுக்குத் தோன்றாது சிலர் கண்ணுக்கு மட்டும் தோன்றும் காய், இலைமறை காய், முந்திய ஆசிரியர்க்குத் தோன்றாது பிந்தின ஆசிரியர்க்குத் தோன்றும் மொழியியல்புகளை இலைமறைகாய் என்பது இலக்கண ஆசிரியர் வழக்கம். (சொல். 14) இலை வகை இலை - புளி, வேம்பு முதலியவற்றின் இலை: தாள் - நெல், புல் முதலியவற்றின் இலை; தோகை - சோளம் கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை - தென்னை, பனை முதலியவற்றின் இலை; (சொல் : 66.) இழைபு இழைபு என்பது ஒருநூல் வகை. அது, தொல்காப்பியத்தில், ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்களம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். (பொருள் 557) எனக் கூறப்பட்டுள்ளது. இழைபு என்னும் பெயர் நூலை அல்லது இழைத்தலைக் குறிக்கும் இழை என்னும் சொல் அடியாய்ப் பிறந்ததாகும். (சொல்.7) இள் இள் (இணைதற் கருத்து வேர்) உல்-ஒல். ஒல்லுதல் = பொருந்துதல். உல்-(இல்)-இள். இள்-இழை. இழைதல் (செ.குன்றிய வி.) 1. நெருங்கிப் பழகுதல். அவர்களிருவரும் இப்போது நிரம்ப இழைகிறார்கள் என்பது உலக வழக்கு. 2. கூடுதல். இழைந்தவர் நலத்தை யெய்தி (சீவக. 2720) 3. பிணைதல். பாம்புகள் ஒன்றோடொன்று இழையும். (உ.வ.) 4. மனம் பொருந்துதல். இழையச் சொல்லி (சீவக. 1593) இழைத்தல் (செ.குன்றா வி.) = 1. பின்னுதல், பாயிழைத்தல் (யாழ்ப்பாண உ.வ.) 2. பதித்தல். மணியினிழைத்த செய்குன்றின் (நைடத. நகர,6) 3. திரட்டி வைத்தல், பொங்கரி னிழைத்த (மாறன. பக்.294) 4. செய்தல். இழைத்தவிச் சிற்றிலை (திவ், நாய்ச். 2.2) 5. அமைத்தல். பொற்பா விழைத்துக் கொளற்பாலர் (சீவக.4) 6. கூறுதல். கிழவனை நெருங்கி யிழைத்து (தொல்.பொ.150) இள்-(இண்)-இணர் = 1. பூங்கொத்து. இணரூழ்த்தும் நாறா மலரனையர் (குறள். 650) 2. காய்க்குலை. இணர்ப் பெண்ணை (பட்டினப். 18) 3. வழி மரபு. 4. இணரோங்கி வந்தாரை. (பழ.72) இண் - இணகு= உவமை. இணகிறந்த தகன்ற பாசம் (ஞானா.45) இணகு - இணங்கு. (பெ.) = 1. இணக்கம். உள்ளப் பெறா ரிணங்கை யொழிவேனோ (திருப்பு.288) 2. ஒப்பு. இணங்காகு முனக்கவளே (திருக்கோ.68) 3. நட்பின - ன் -ள். அவனது இணங்கு (தொல்.சொல்.80சேனா.) (வினை) = 1. மனம் பொருந்து. 2. நட்புச் செய். இணங்கு - இணங்கல் - உடன்பாடு. 3. இரண்டு. இணங்கற் பிஞ்சு (உ.வ.) இணங்கன் = நண்பன். வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா. 28:27) இணங்கி = தோழி. (பிங்.) இணங்கர் = ஒப்பு. கற்பிற் கிணங்க ரின்மையான் (கம்பரா. மீட்சி.147) இணங்கலர் = பகைவர். இணங்கார் = பகைவர். ïz§F (br.F‹¿a É.)- ïz¡F (br.F‹wh É.), = இசைவி. (பெ) = 1. இசைவு. இணக்குறுமென் னேழைனுமதான் (தாயு. பராபர. 273) 2. ஒப்பு. இணக்கிலாததோ ரின்பமே (திருவாச. 30 : 1) இணக்குப் பார்வை = பார்வை விலங்கு. இணக்கு - இணக்கும் = 1. இசைப்பு. 2. பொருத்தம். 3. நட்பு. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் (கொன்றைவே.) 4. உடன்பாடு. 5. திருத்தம். இணக்கோலை = உடன்படிக்கை முறி. இணாப்புதல் = ஏய்த்தல். (யாழ்) இணாப்பு = ஏய்ப்பு. (யாழ்) ஏய்த்தலாவது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல். இணைதல். (செ.குன்றிய வி.). - 1. சேர்தல். இணைந்துடன் வருவதிணைக்கை (சிலப். 3 : 18. உரை) 2. உடன்படுதல். 3. ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு.53) இணைத்தல். (செ.குன்றா வி.) = 1 சேர்த்தல். 2. கட்டுதல். இணைத்த கோதை (திருமுரு.200) இணை = 1. சேர்வு. 2. ஒப்பு. 3. இரண்டு. 4. இரட்டை. குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில் (தொல்.1261) 5. துணை. 6. உதவி. இணைப்பு = 1. இசைப்பு. 2. ஒப்பு. இணைப்பரும் பெருமை (திருவாச. 3 : 46) இணைபிரியாமை = ஆணும் பெண்ணும் துணைபிரியா திருத்தல். இணையடித்தல் = முட்டுக்கால் தட்டுதல். இணையணை = பலவணை. இணையணை மேம்படத் திருந்து துயில் (சிலப்.4 : 67) இணைவன் = இணைந்திருப்பவன். இணைவனா மெய்ப்பொருட்கும் (திவ். திருவாய். 2, 8, 1) இணைவிழைச்சு = புணர்ச்சி. இணைவிழைச்சு தீதென்ப (இறை.1. உரை. பக்.9) இள்-(இய்)-இயை, இயைதல் (செ. குன்றிய வி.) = 1 பொருந்துதல். என்போடியைந்த தொடர்பு (குறள். 73) 2. இணங்குதல் 3. நிரம்புதல். மாக்கடல்கண் டியைய மாந்தி (திணைமாலை, 100) (செ. குன்றா வி.) = ஒத்தல். (நன். 367). இயைதல் - இயைத்தல். (செ.குன்றா வி.) = பொருந்துதல். இயைவு = சேர்க்கை (திவா.). இயைவு - இயைபு= 1. புணர்ச்சி. (தொல். சொல். 308) 2. பொருத்தம். பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் (குறள். 573) 3. இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென்னும் தொடர்பு முறை (நன்.சிறப்புப். விருத்.) 4. எழுத் தொத்துவரும் தொடைவகை. (யாப். காரிகை. உறுப். 16) 5. மெல்லின இடையின மெய்களுள் ஒன்றில் முடியும் செய்யுட்களைக் கொண்ட வனப்பு வகை. (தொல். பொ.552) இயை - இசை இசைதல் (செ. குன்றிய வி.). = 1. பொருந்துதல். 2. ஒத்துச் சேர்தல். 3. உடன்படுதல். விண்பெறினு மிசையார் (திருநூற். 83) 4. கிடைத்தல். கனக மிசையப் பெறஅது (திருவாச. 2 : 39) 5. இயலுதல். இசையா வொருபொருள் (நாலடி.111) இசைத்தல் (செ.குன்றா வி.) = 1 கட்டுதல் (திவா.) 2. உண்டுபண்ணுதல். இறுதியை யிசைத்த கந்தனை (விநாயக பு.75 : 573) 3. ஒத்தல். கூற்றிசைக்கு மென (பாரத. இராச. 52) 4. மிகக் கொடுத்தல். (பிங்.) இசைவு = 1. பொருந்துகை. இசைவில வெல்லாம் (பெருங். மகத. 15 : 9) 2. தகுதி. 3. உடன்பாடு. மறையோரிசைவினால் (பெரியபு. சண்டேசுர. 24) 4. ஏற்றது. இசைவு கேடு = 1. பொருத்தமின்மை. 2. கருமத்தவறு. இசைகுடிமானம் = நாட்டுக்கோட்டைச் செட்டியாரால் எழுதப் பெறும் திருமண ஒப்பந்தம். இசையோலை = ஒப்பந்த வோலை. இயை = (எய்) = ஏய் ஏய்தல் (செ.குன்றிய வி.) = 1. பொருந்துதல். (திவ். பெரியதி. 1,7,3) ஏய்ந்த பேழ்வாய் 2. தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374) (செ.குன்றாவி.) = 1. ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5,1,8) 2. எதிர்ப்படுதல். ஏயினா ரின்றி யினிது (ஐந். ஐம். 11) ஏய்த்தல் (செ. குன்றா வி.). = 1. பொருந்தச் சொல்லுதல். பொய்குறளை யேய்ப்பார் (பழ. 77) 2. ஒத்தல். அல்லிப்பாவை யாடுவனப் பேய்ப்ப (புறம். 33 : 17) 3. ஏமாற்றுதல். ஏய = ஓர் உவமவுருபு. (தண்டி. 33) ஏய்ப்ப = ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290) ஏய்வு = உவமை. (திவா.) ஏயான் = ஒரு தொழிலைச் செய்தற்குத் தகாதவன். மாவலியை யேயா னிரப்ப (திவ். பெரியதி. 1, 5, 6) ஏய் - ஏ = உம்மைச் சொற்போல் எண்ணுப் பொருளில் வரும் ஓர் இடைச்சொல். எ-டு: இரண்டேகால் - (எண்ணல்) கழஞ்சே குன்றி - (எடுத்தல்) கலனே பதக்கு - (முகத்தல்) முழமே விரல் - (நீட்டல்) தோடே மடலே ஓலை யென்றா (தொல். 1586) நிலமே நீரே தீயே இயை என்னும் சொல்லின் திரிபான ஏய் என்னும் சொற்குப் பொருந்தல் அல்லது கூடுதற் பொருளுண்மையால், அதன் கடைக்குறையான ஏகார விடைச்சொல், எண்ணுப் பொருளில் வந்ததென வறிக. இதுகாறும் கூறியவற்றால், இள் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படைப் பொருள் பொருந்துதல் என்பது உணரப்படும். இளம் பயிர்வகை நாற்று நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை; கன்று மா புளி வாழை முதலியவற்றின் இளநிலை: கருந்து வாழையின் இளநிலை; பிள்ளை தென்னையின் இளநிலை; குட்டி விளாவின் இளநிலை; மடல் அல்லது வடலி பனையின் இளநிலை: பைங்கூழ் நெல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர். (சொல் : 71) இளவட்டக் காசு திருமணத்தன்று மணமக்கள் ஊர்வலம் வருவதும், சில சிற்றூர் களில் அயலூர் மணமகன் வந்து ஒரு பெண்ணை மணந்து மீளும்போது, அவ்வூர் இளைஞர் இளவட்டக்காசு என்னும் கைநீட்டம் கேட்பதும், பண்டைக் காலத்தில் ஒரு பெண்ணை நோக்கிப் பல இளைஞர் போட்டியிட்டுப் பொருததைக் குறிப்பாய் உணர்த்தும். (த.தி : 5) இறகுப் பெயர் தூவு அல்லது தூவி பறவையின் உடம்பிலுள்ள சிறு தூவு; இறகு சிறகிலும் வாலிலுமுள்ள பெருந்தூவு. (சொல் : 52.) இறப்பு மக்கள் பிறப்பு கண்விழிப்பும், அவரது இறப்பு கண்ணடைப்பும் போன்றது, வாழ்க்கை முழுவதும் ஒரு பகல் நடவடிக்கை போன்றதே. பெற்றோர் தம் பிள்ளைகளைத் தம் கண்ணுள்ளபோதே கரையேற்ற வேண்டும் என்று சொல்வது வழக்கம். பகல் முடிந்து இரவு வந்த பின் கண் மூடித் தூங்குவது போல் வாழ்க்கை முடிந்த போதும் மக்கள் தம் கண் மூடி விழியாத் துயில் கொள்வர். உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 239) துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் (குறள் 926) என்றார் திருவள்ளுவர் (சொல். 9) இறை இறை அல்லது இறைவன் என்பது, அரசனுக்கும் கடவுட்கும் பொதுப் பெயர். கடவுள் எங்கும் தங்கியிருப்பது போல அரச னுடைய ஆணை, அவனுடைய நாடெங்கும் தங்கியிருக்கிறது என்பது கருத்து. இறுத்தல் - தங்குதல். சொல்.24. இறைவன் தாள் - தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையும் தண்டுமாய் இருத்தலின் பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப் பட இறைவன் திருவடிகள் நற்றாளாம். (தி.ம.37) இன்பம் நாடக நடிப்பு, அழகிய இயற்கைக் காட்சி, திருவிழா, இசை யரங்கு, சொற்பொழிவு, நால்வகை அறுசுவை உண்டி, நன்காற்று, இனிய இல்லற வாழ்வு, தட்பவெப்பச் சமநிலை, நிலை விளை யாட்டு, நீர் விளையாட்டு, வேலைவாய்ப்பு, வரிப்பளு இன்மை, செங்கோலாட்சி முதலியன. (குறள் 738) இன்பத்துப்பாலின் இருதிறம் சில ஆரிய நூல்களைக் கற்ற துணையானே தம்மைச் சிறந்த அறிஞராகக் கருதிக் கொள்ளும் மடத்தலைவரும் போலித்துறவி யரும், திருக்குறள் இன்பத்துப்பாலைக் கொண்டிருப்பதால் துறவியர் கற்கத் தக்க நூலன்றென்று துணிந்து கூறுவர். இறைவ னுக்கும் ஆதனுக்கு மிடைப்பட்ட அன்பை உவமை வாயிலாக விளக்குதற்கு, கணவன் மனைவியரிடைப்பட்ட காதலினுஞ் சிறந்தது வேறின்மை யானேயே, சிவனடியாருட் சிறந்த மாணிக்க வாசகர் சிற்றம்பலக் கோவையைப் பாடினாரென்றும், அதன் வெளிப்பொருள் உலகநெறியும் உட்பொருள் வீட்டுநெறியும் பற்றினவென்றும், அறிந்து கொள்க. ஆரணங்கா ணென்ப ரந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங்கா ணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங்கா ணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே. (தனியன்) இத்தகையதே திருக்குற ளின்பத்துப் பாலுமென்சு. இன்னுதல் இன்னுதல் இனித்தல் அல்லது இன்பமாதல். இன்-இன்பு-இன்பம் . இன்-இனி. இன்னா, இனிய என்பதன் எதிர் மறையான பலவின்பால் வினையாலணையும் பெயர். (தி.ம.178) ஈகாரச் சுட்டு அண்மை, பின்மை, இழுத்தல் 1. அண்மை முன்மையைக் குறித்தற்கு முன்னோக்கிக் குவிந்த வாயிதழ், முன்மைக்குப் பிற்பட்ட அண்மையைக் குறித்ததற்குப் பின் னோக்கு முகத்தால் ஈகாரத்தைத் தோற்றுவித்தது. அது அண்மைச் சுட்டாயிற்று. அண்மைச் சுட்டு பெயர் : ஈது - இது. ஈன் = இவ்விடம், இவ்வுலகம்; ஈனோர் = இவர், இவ்வுலகத்தார். இல் - இஃது - இத்து இவ் - இவ - இவை. இவன், இவள், இவர். இகம் = இவ்வுலகம், இவ்விடம், ஞாலம். (மு.தா) பெயரெச்சம்: ஈ - இ. ஈன் - இன் - இன்ன. ஈன் - ஈன - இந்த. வினையெச்சம்: ஈங்கு - இங்கு - இங்கா - இங்கை. ஈங்கு - ஈங்கண் - ஈங்கன் - ஈங்கனம் ஈங்கன்-இங்கன்-இங்ஙனம் இங்கன் - இங்ஙன் - இங்ஙனம் ஈண்டு: இவண். இம் - இம்பு - இம்பர். வினையெச்சமும் இடைச்சொல்லும் : இன் - இன்று. இன் - இன்னே: இன் - இன்னும் = இதுவரையும்: இன் - இனி. இன்னினி (அடுக்கு): இன் - இன்னா இத - இதா - இதோ - இதோள் - இதோளி. (மு.தா) இந்தா - இந்தோ. 2. பின்மை முன்மைக்குப் பின்மையான அண்மையைக் குறித்ததற்கு வாயிதழ் பிற்படுவதால், ஈகாரச் சுட்டு அண்மைக்கடுத்துப் பின்மை யுணர்த்திற்று. 1. பின்மை (காலமும் இடமும்) இன் - இனி = இனிமேல், பின்பு. இன் - இன்னும் = இதற்கு மேலும். பின் - பின்னம் - பின்னர். பின்- பின்னே. பின் - பின்பு. பின்-பின்று- பிந்து. பின்-பிற்கு பின்-பிற்பாடு (பின்+பாடு). பின் - பிற- பிறவு - பிறகு - பிறக்கு. பிறக்கிடுதல்= பின்னுக்குச் செல்லுதல். பிறக்கு - பிறங்கு - பிறங்கடை = பின்னால் வரும் உரிமையாளன் (வாரிசு). பின் - பினம் - பிறம் - பிறம்பு: பிறம்பத்தங்கால் - பின்னங்கால். பிறம் - பிடம் - பிடர் - பிடரி = தலையின் பின்புறம். பிடம் - பிட்டம் = பின்புறம், பின்புறத்தின் கடை அல்லது அடிப்பகுதி (குண்டி). பிட்டம் - புட்டம், பிட்டம் - பிட்டி-புட்டி= பறவையின் பின்புறம். பிறம் - புறம் - புறன். புறக்கடை = வீட்டின் பின் பக்கம். புறங்கூறுதல் = பின்னாற் பழித்தல், புறன் - (புரனி) - புறணி = புறங்கூற்று. புறனே = பின்பு, பிந்தி : புறனண்டை = பின்புறம். பிறகு - புறகு = பின்பு. II மறுநிலை இன் - இன்னும் = திரும்பவும், மேலும், வேறும்: இன்னொன்று = வேறொன்று. இன்னொரு = வேறொரு, மற்ற. இன் - ஏன். ஏனோர் = மற்றோர். ஏன்- ஏனை= மற்ற. பின் = திரும்ப, வேறு. பின்னும் = திரும்பவும். பின்னும் பின்னும் = திரும்பத் திரும்ப. பின்னொன்று = வேறொன்று. பின்னே யார்? = வேறு யார்? பின - பிற- பிறிது. பிற- பிறகு= வேறு. பிறகு- பிறக்கு = வேறாக. பிறம் - பிறன் + வேறொருவன், மற்றவன், அயலான், பிறம் - புறம் - புறம்பு = மற்றை. III முதுகு முதுகு பின்புறமிருப்பதால் பின்மைப் பெயர் முதுகைக் குறித்தற்காயிற்று. பின்- பிற்கு. பிறம்- பிறவு-பிறகு= முதுகு. =பிறகு - பிறக்கு = முதுகு. பிறகு - புறகு. பிறக்கு - புறக்கு. புறக்கிடுதல்= புறங்காட்டுதல். பிறம் - புறம் - புறன், புறம் =முதுகு. புறம்- புறம்பு = முதுகு. பிறம்- பிறன்- வெரிந்த- வெந்-வென்=முதுகு. பிறம்- பிடம்-பிட்டம்- முதுகு. IV மேற்புறம் விலங்குகட்கும் பறவைகட்கும் குப்புறப்படுத்திருக்கும் மாந்தனுக் கும் முதுகு மேற்புறமாயிருப்பதால், முதுகின் பெயர் மேற் புறத்தைக் குறித்தது. புறம்= மேற்பக்கம், பக்கம். புறம்- புறன்-(புறனி)-புறணி= மேற்புறம். V வெளிப்புறம் மடிக்கப்படும் அல்லது கருட்டப்படும் பொருள்கட்கு முன் பக்கம் உட்புறமும் பின்பக்கம் வெளிப்புறமும் போன்றிருத்த லாலும், உயிரற்ற கனப்பொருள்கட்கு மேற்புறம் முழுதும் வெளிப்புறமாயிருந்தலாலும், மேற்புறத்தைக் குறிக்கும் புறம் என்னும் சொல் வெளிப்புறத்தையுங் குறித்தது: புறம்= வெளி, வெளிப்பக்கம், புறப் பொருள். புறம்- புறவு- புறகு= வெளிப்புறம், புறம்பானவன். புறகு- புறக்கு. புறம்- புறம்பு= வெளிப்புறம். புறம்பு- புறம்பர். புறப்படு- புறப்பாடு, புறப்படுதல்= வெளி வருதல். உள்ளும் புறம்பும் அகமும் புறமும் என்னுந் தொடர்களால், புறம் என்னும் சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப் பக்கத்தைக் குறிப்பது தெளிவாம். மூடின கையின் உட்புறமா யிருப்பது உள்ளங்கை அல்லது அகங்கை என்றும், அதன் வெளிப்புறமாயிருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க. புறம் = மருத நிலத்திற்குப் புறம்பான முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி. புறம்- புறவு= முல்லை, குறிஞ்சி. புறம்- புறம்பு- புறம்பணை= முல்லை, குறிஞ்சி. புறம்- புற= முல்லை நிறப் பறவை வகை, புற-புறா- புறவு- புறவம். பிட்டம்- பீட்டன் = புறம்பானவன். VI பின்னிடல் இள்- இளித்தல்= வாயிதழைப் பின்னுக்கிழுத்தல். வாயைத் திறந்து பல்லைக் காட்டல். இள்-இரி, இரிதல்= பின்னுக்கோடுதல், தோற்றோடுதல், ஓடுதல், இள்-இட, இடத்தல்= இலை பூ முதலியவற்றைப் பின்னுக்கிழுத் தொடித்தல். இள்-(இண்)- இணுங்கு, இணுங்குதல்= திருகிப் பின்னுக் கிழுத்தல், பின்னுக்கிழுத் தொடித்தல். இட-இடக்கு= பிற்செலவு. குதிரை இடக்குப் பண்ணுகிறது என்னும் வழக்கைக் காண்க. இட-இடை. இடைதல்= பின்வாங்குதல். இடை- இடைஞ்சல் = பின்வாங்கச் செய்யும் தடை. இட-இடறு. இடறுதல்= பின்னுக்குத் தள்ளுதல். இழுத்தல் இயல்பாக இழுத்தலென்பது, முன்னாலுள்ள பொருளைப் பின்னுக்கு வலிந்து கொணர்தலாதலின், பின்மைக் கருத்தில் இழுத்தற் கருத்துத் தோன்றிற்று. i இழுப்பு இள்- இளை- இளைப்பு. இளைத்தல்= மூச்சு வேகமாய் இழுத்தல். இள்-இழு-இழுப்பு, இழு- இழுவை. இழு-இழை= இழுக்கப்பட்ட நூல். இழைத்தல்= நூல் இழைத்தல், உளியை இழுத்துத் தேய்த்தல், இழை- இழைப்பு, இழைப்புளி= இழைக்கும் உளி. இள்- இரு- ஈர். ஈர்த்தல்= இழுத்தல், இழுத்தறுத்தல். ஈர்- ஈருள்= மூச்சிழுக்கும் உறுப்பாகிய ஈரல். ஈர்- ஈரல். ஈர்-ஈர்க்கு= அறுக்கும் அல்லது அறுக்கப்பட்ட சிம்பு. II இழுப்புநோய் இள்- இளை- இளைப்பு. இளை-ஈளை= காசம். இள்-இழு- இழுப்பு. இழு-இசு-இசிவு= சன்னி. இசித்தல்= நரம்பிழுத்தல். (மு.தா.) ஈகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி ஈகாரச் சுட்டு, முதலாவது அண்மையைக் குறிக்கும். அண்மை முன்மைக்குப் பின்மையாதலாலும், ஈகாரத்தையொலிக்கும் போது வாய் பின்னுக்கிழுப்பதாலும், அண்மைக் கடுத்த ஈகாரச் சுட்டுக் கருத்து பின்மையாகும். பின்மைக் கருத்தில் தோன்றுவது பிற்படற் கருத்து. மாந்தன் நின்ற நிலையில் இயற்கையாய் ஒன்றை இழுப்பது முன்னின்று பின்னாதலின், பிற்படற் கருத்தினின்று பிற்படுத்தற் கருத்தாகிய இழுத்தற் கருத்துப் பிறக்கும். மேனோக்கிச் சென்ற பொருள் பிற்படுதல் இறங்கலாதலின், பிற்படற் கருத்தினின்று இறங்கல் அல்லது கீழுறற் கருத்துத் தோன்றும். ஈகாரச் சுட்டாலுணர்த்தப்பெறும் பெருங் கருத்துக்கள், அண்மை பின்மை கீழுறல் என்னும் மூன்றே. முதுகிற்குப் பின் நிகழ்வது ஒருவருக்குந் தெரியாமையானும், முன்னோக்கிக் கொண்டு பின்னுக்குச் செல்வது மாந்தனுக்கும் மற்றவுயிரிகட்கும். இயற்கை யன்மையானும், பின்மைக் கருத்தில் வேறொன்றுந் தோன்றற் கில்லை. மேனின்றிறங்கும் ஒரு பொருள் நிலத்தில் அல்லது நீரில் விழுந்து அதற்குள் புகினும் கீழுறல் அல்லது இறங்குதலாகிய அளவே ஈகாரச் சுட்டுக் கருத்தெல்லைக்குட் பட்டதாம். ஒரு பொருளுக்குட் புகுவதெல்லாம் துளைத்தலின் பாற்பட்டதாக லின். அது ஊகாரச் சுட்டின் ஆட்சிக்குட்பட்டதென அறிக. ஈதல் வகை இடத்தில் வறியார்க்கு நிலமும், கருவியில் வறியார்க்குப் பொறியும், நலத்தில் வறியார்க்கு மருந்தும், அறிவில் வறியார்க்கு நூலும் காப்பில் வறியார்க்குப் பாதுகாப்பும் அளிப்பதும் ஈதல் வகைகளே (தி.ம.138) ஈந்து ஈந்து ஹிந்தால ஈர்தல்= அறுத்தல். உயிரீரும் வாளது (குறள் .334) ஈர் = நுண்மை. ஈரயிர் மருங்கின (சிலப்.6: 146). ஈர் - ஈர்ந்து- ஈந்து= கிளையில்லா மரங்கட்குள் மிகச் சிறிய ஓலையுள்ளது, அல்லது ஏறுவாரை அறுக்கும் அடியினது. ம. ஈத்த, தெ. ஈத்த. (வ.வ : 90) ஈயம் ஈயம் - ஸீஸ (வே) இள் - இள் - இளகு, இள் - இய் - ஈ - ஈயம் = எளிதில், இளகுவது. (வ.வ : 90) ஈழவர் மக்கள் பற்பல சமயங்களில் தமிழ் நாட்டினின்று ஈழத்திற்குக் குடியேறியது போன்றே, ஈழத்தினின்றும் தமிழ் நாட்டிற்குக் குடியேறி வந்திருக்கின்றனர். கரிகால் வளவன் ஈழத்தின் மேல் படையெடுத்துப் பன்னீராயிரம் குடிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து காவிரிக்குக் கரை கட்டுவித்ததாக அவன் மெய்க் கீர்த்தி கூறும். இங்ஙனம் கொண்டு வரப்பட்ட வரும் குடியேறிய வருமே ஈழவர் எனப்பட்டனர். மலையாள நாட்டில் இவரைத் தீவார் அல்லது தீயார் என்பர். (சொல். 27) உ என்னும் வேர்ச்சொல் (உகரச்சுட்டு) முன்மைச்சுட்டு உ (முன்மைக் கருத்து வேர்) உகரத்தை ஒலிக்குங்கால், இதழ் குவிந்து முன்னோக்குவதால், உகரச்சீட்டு, முதற்கண், பேசுவோனின் முன்னிடத்தைக் குறித்தது. உதுக்காண் = என்முன் பார் ! உதா, உதோ உந்தா, உந்தோ = என் முன்னே ! உதோள் உதோளி = எனக்கு முன்னிடத்தில். உந்த = எனக்கு முன்னுள்ள. உங்கு, ஊங்கு = எனக்கு முன். உவன் = எனக்கு முன் நிற்பவன். இங்ஙனமே, உவள், உவர், உது, உவை என ஏனைப் பாலிலும் ஒட்டுக. உகரச் சுட்டு தமிழ் நாட்டில் வழக்கற்றது, ஆயினும், யாழ்ப் பாணத்தில் வழங்குவதாகத் தெரிகின்றது. இது குடியேற்றப் பாதுகாப்பு என்னும் நெறிமுறைப்பட்டது. முன் என்னும் சொல் முன்னிடத்தையும், முற்காலத்தையும் உணர்த்துவதுபோல், உகரச்சுட்டும் உணர்த்தும். ஊங்கு= முன்பு உணரா வூங்கே (குறுந். 297) ஊங்கண் = முற்காலம். ஊங்க ணோங்கிய வுரவோன் றன்னை (மணி.21: 181) ஊங்கணோர் = முன்னோர். தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினையின் (புறம். 39) முன்னிலைப் பெயர் முன்னிலையிடப் பெயர்கள் முன்னால் நிற்பவனைச் சுட்டுவதால், அவை உகரச் சுட்டடியினின்றே தோன்றியுள்ளன. முதல் நிலை எழுவாய் வேற்றுமையடி ஒருமை : ஊன் உன் பன்மை : ஊம் உம் இரண்டாம் நிலை எழுவாய் வேற்றுமையடி ஒருமை : நூன் நுன் பன்மை : நூம் நும் முன்றாம் நிலை எழுவாய் வேற்றுமையடி ஒருமை: நீன் நின் பன்மை : நீம் நிம் சில சொற்களின் ஊகாரமுதல், ஈகாரமுதலாகத் திரியும். ஒ.நோ : தூண்டு - தீண்டு தூண்டா விளக்கு - தீண்டா விளக்கு நூறு - நீறு பூளை - பீளை பூறு - பீறு நாலாம் நிலை ஒருமை : நீ பன்மை : நீயிர், நீவிர், நீர் ஐந்தாம் நிலை எழுவாய் வேற்றுமையடி இரட்டைப்பன்மை ஊங்கள் உங்கள் நூங்கள் நுங்கள் நீங்கள் நிங்கள் தமிழர் தமக்குள் பிறரை இழிந்தோன், ஒத்தோன், உயர்ந்தோன் என மூவகைப்படுத்தி, அதற்கேற்பப் பெயரும் வினையும் அமைத்த காலத்தில், ஒருமைப் பெயர் இழிந்தோனையும், ஒற்றைப் பன்மைப் பெயர் ஒத்த மதிப்புள்ளோனையும் இரட்டைப் பன்மைப் பெயர் உயர்ந்தோனையும் குறிக்க ஆளப்பெற்றன. நீயிர், நீவிர், நீர் என்பன செயற்கை முறையில் திரிந்ததனாலும், நீங்கள் என்னும் சொல் வழக்குண்மையாலும், கள்ளீறு பெறா. உகரச் சுட்டு இற்றைத் தமிழ் நாட்டில் வழக்கற்றது போன்றே, முன்னிலைப் பெயர்களின் பல முன்னை வடிவங்களும் வழக் கற்றன. இவையெல்லாம் குமரிநாட்டில் வழங்கி வந்தவையே. உயரச் சுட்டு நிலத்தினின்று மேலெழும் மரஞ் செடி கொடிகட்கும், மண்ணி னின்று விண்ணிற்கெழும் பறவையினங்கட்கும், முன்னேற்றம் மேற்செலவாயிருத் தலால், உகரச்சுட்டு உயரக் கருத்தையும் தழுவலாயிற்று. உக்கம் = 1. தலை. உக்கத்துமேலும் நடு (கலித்.94) 2. கட்டித் தூக்கும் கயிறு. Te. uggamu, K.ugga, Tu. uggi. உகத்தல் = உயர்தல். உகப்பே உயர்வு (தொல். சொல்.306) உகலுதல் = குதித்தல். உகலியாழ் கடலோங்கு பாருளீர். (தேவா. 75.1) உகளுதல் = குதித்தல். இரலை.... யுகள (குறுந்.6) உச்சம் = உயரம். உச்சம் - Skt. ucca. உச்சி = முடி, மீமிசை. K.M. ucci. உச்சாணி = எல்லாவற்றினும் உயரமானது. எ - டு : உச்சாணிக் கிளை. உத்தரம் = 1. உயரத்திலுள்ள விட்டம் 2. உயரமான வடதிசை Skt. uttara. 3. வடவனல் (பிங்.) உத்தி = திருமகளுருவம் பொறித்த தலையணி. தெய்வ வுத்தியொடு (திருமுரு. 23) உப்பு = பொருமியெழும் உவர்மண், உப்புக்கல், உம்பர் = 1. மேல், மேலே. யான்வருந்தி உம்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு, கோச்செங்.5) 2. மேலிடம் மாடத்தும்பர் (ஞானா.9,6) 3. வானம். உம்பருச்சியிற்... கதிர் பரப்பு கடவுள் (திருவிளை. தண்ணீர்.29) 4. தேவருலகம். உம்பரிற் கிடந்துண்ண (நாலடி. 37) 5. தேவர். M. umber. ஒலியடங்கு முலகாளு மும்பர் தாமே (திவ். பெரியதி. 7, 8,10) உம்பரார் = தேவர். உம்பரார்க்கு முரைப்பருந் தகைய ரானார் (சீவக. 1678) உம்பன் = உயர்ந்தோன். உம்பரீச ரும்பன் (ஞானா. பாயிரம். 7,4) உம்பர் - உம்பரம் - அம்பரம் = வானம். உம்பல் = 1. எழுச்சி (பிங்.) 2. யானை (உயரமான விலங்கு). யானைக் கமர ரும்பல் (திருவள்ளுவ. 36) உமண் = உப்புமண், உப்பு. உயர் = உயரம், உயர்வு, உயர்த்தி, உயர்ச்சி. M.uyar. உவ்வி = தலை (திவா.) உவண் = மேலிடம். (சீவக. 2858.) உவணம் - 1. உயர்ச்சி (திவா.) 2. பருந்து, கலுழன். உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? (பழமொழி) கலுழன் - கருட (வ.) உவணன் = பருந்து, கலுழன் (திவா.) உவணம் - சுவணம் - சுபர்ண (வ.) உவணை = தேவருலகம். ஆதரித் துவணைமே லுறைந்தான் (சேதுபு. விது. 54) உவர் = மேலெழும் உப்பு, உவர்நிலம். உவப்பு= உயரம் (பிங்.) உவர் - இவர். இவர் தல்- உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959) உவச்சன் = காளியை ஏத்தும் பூசாரி. உவச்சன் - ஓச்சன். உறி= உயரக் கட்டித் தூக்கும் தொடர். உன்னுதல் = மேலெழுதல். ஊர்தல் = ஏறிச்செல்லுதல். ஊர்தி = ஏறிச் செல்லும் விலங்கு, பறவை, வண்டி முதலியன. ஊர்தி வால்வெள் ளேறே (புறம். 1) மோனைத் திரிபு உ - ஒ - ஓ. ஓய்யாரம் = 1. உள்ளத் துயர்ச்சி. 2. அட்டோலகம் (ஆடம்பரம்) ஒயில் = 1. ஒய்யார நடை. 2. குதித்தாடும் கும்மிவகை. ஓங்குதல் = உயர்தல். ஓங்கு - ஓக்கு (பிறவினை), ஓக்கு - ஓக்கம் = உயர்ச்சி, பெருக்கம். ஓங்கல் = 1. உயர்ச்சி. 2. எழுச்சி. 3. மலை. 4. யானை ஓச்சுதல் = உயர்த்துதல். ஓச்சம் = உயர்வு. வெவ்வர் ஒச்சம் பெருக (பதிற்றுப். 41, 20) ஓவர் = ஏத்தாளர். ஓவரும் பாட (சீவக. 1844) பக்கத் திரிபு உ - அ. உம்பரம் - அம்பரம். அண் = மேல், மேல்வாய், அண்ணம் = மேல்வாய். அண்ணன் = மேலோன், மூத்த உடன்பிறந்தோன். அண்ணல் = தலைவன், அரசன். அண்ணாள்வி = அண்ணாவி = வினையாட்டுத் தலைவன். அண்ணாத்தல் = மேனோக்குதல், தலைநிமிர்தல். அணத்தல் = தலையெடுத்தல். அணர்தல் - மேனோக்கிச் செல்லுதல். அணர் = மேல்வாய்ப்புறம். அணர்= அணரி= மேல்வாய்ப்புறம். பின்னைத் திரிபு உ-இ. ஓ-நோ: புரண்டை - பிரண்டை. முடுக்கு - மிடுக்கு. உவர் - இவர். ï-<.-v-V (மோனை.) உ -எ. ஒ- நோ: குழுமு - கெழுமு. எக்குதல் = வயிற்றுப் பக்கத்தை மேலெழுவித்தல். எஃகுதல் = பஞ்சை மேலெழச் செய்தல். எட்டுதல் = உயர்ந்து தொடுதல். எடுத்தல் = தூக்குதல். எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேல் தொகையைப் பெருக்குதல், எத்துதல் = மேனோக்கி வெட்டியிழுத்தல், அல்லது உதைத்தல். எத்து = எற்று. எம்புதல் = எழுதல். எவ்வுதல் = குதித்தெழுதல். எழுதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல், எழும்புதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல். ஏ= உயர்ச்சி, பெருமை. ஏபெற் றாகும் (தொல்.உரி.7) ஏங்குதல் = நுரையீரலை யெழுவித்துப் பெருமூச்சு விடுதல். ஏண் = உயர்ச்சி. ஏண்- ஏணி= உயரச் செல்லும் கருவி. ஏண்-சேண்= உயர்ச்சி. ஏண்- ஏணை= தொங்கும் தொட்டில். ஏத்தாப்பு (ஏத்த யாப்பு) = மேலணியும் வல்லவாட்டு. ஏத்துதல் = உயர்த்திப் புகழ்தல், வழுத்துதல். ஏந்துதல் = உயரக் கையில் தாங்குதல், ஏந்தல் = குடிகளைத் தாங்கும் காவலன். ஏப்பம் = வயிற்றினின்று மேலெழுங் காற்று. ஏர்தல் = எழுதல். ஏலுதல் = கையால் அல்லது மனத்தால் ஏந்துதல். ஏறுதல் = மேற்செல்லுதல். மெய்ம்முதற் சேர்க்கை உங்கு-(துங்கு)-துங்கம்=உயர்வு. உங்கு-(புங்கு)-புங்கம்=உயர்வு. (துங்கு)-தூங்கு-தொங்கு. தூங்குதல் = நிலத்திற் படாது உயரத்திலிருத்தல், தொங்குதல், தொங்கும் ஏணையில் அல்லது கட்டிலில் உறங்குதல். தூங்கு = தூக்கு (பிறவினை). தூக்குதல் = உயர்த்துதல், தொங்கவிடுதல். தூக்கு = தூக்கணம். தொங்கு-தொங்கல் = குறை. தொங்கு-தொகு-தொகை = குறை. உங்கு-நுங்கு-நூங்கு-நூக்கு-நூக்கம் = உயரம். உம்-சும்-சும, சுமத்தல் = தலைமேற் பொறை கொள்ளுதல். சும-சுமை-சிமை = மலையுச்சி. சிமை = சிமையம். ME. f. AF OF summe, somme f. L.Summa, f. Summus, highest. E. Sum. ME. f. OF sohmet, sommette; som. top, f. L. summum, neut. g.summus. E.summit. சும-(சுமல்)-சுவல் = சுமக்கும் தோட்பட்டை. உயர்வும் மேலும் குறித்து வடமொழியாளர் ஆளும் உத் (ut, ud) என்னும் முன்னொட்டு தமிழ் உகரச்சுட்டடிப் பிறந்ததே. எ-டு: உத்துங்கள் (uttunga). உத்தூளனம் (uddhulana). துங்கன், தூள் என்பனவும் தமிழ்ச் சொற்களே. துங்கம்-துங்கன். துகள்-தூள்-தூளி. பின்மைச்சுட்டு கால முன்பின்கள் ஒன்றோடொன்று மயங்குவதாலும், குறுக்காக வளரும் விலங்குகளின் (மக்கள் ஏறிச்செல்லும்) உயர்ந்த உடற்பகுதி முதுகாயிருத்தலாலும், உகரச்சுட்டு பின் புறத்தையும் குறிக்கலாயிற்று. உப்பக்கம் = பின்பக்கம், முதுகு. ஊழையும் உப்பக்கம் காண்பர் (குறள்.620). உம்பல் = வழிப் பிறந்தோன், பின்னோன். நல்லிசைச் சென்றோ ரும்பல் (மலைபடு.540) பண்டைக்காலம் முற்காலம் எனப்படுதலால், அதற்கெதிரான வருங்காலம் பிற்காலம் எனப்படும். உத்திரம் = வினாவிற்குப் பின் தரும் விடை அல்லது மறு மொழி. உத்தரவு = வேண்டுகோட்குப் பின் தரும் விடையோலை. உம்மை = மறுமை. உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் (நாலடி.58) செய்யும் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றின் உம்மீறும், உகரச்சுட்டடிப் பிறந்ததே. ஆறைங் காதம் நம் அகனாட் டும்பர் (சிலப்.10:42) என்னுமிடத்து உம்பர் என்னும் சொல் அப்பால் என்று பொருள் படுவதாலும், உகரச்சுட்டு தமிழிலும் வழக்கற்றுப் போனதினா லும், அண்மையொடு ஒப்புநோக்கின் முன்மை சிறு சேய்மையாத லாலும், தமிழை அடிப்படையாகக் கொண்ட வட நாட்டு மொழிகளில் உகரம் சேய்மைச் சுட்டாகவே வழங்கி வருகின்றது. எ-டு : உதர் (இந்தி) = அங்கே. உங்கு (சாட்டு Jhat) = அங்கே. உயர்வுக் கருத்தில் மிகுதிக் கருத்தும் கலந்திருத்தலால், உகரச் சுட்டு அல்லது அச்சுட்டடிச் சொல் சிறுபான்மை மிகுதிப் பொருளையும் உணர்த்தும். எ-டு : ஊங்கு = மிகுதி (சூடா) தூங்குதல் = மிகுதல் நூங்கு = மிகுதி உகை உகை-அஜ உ-உகை. உகைத்தல் = முன்தள்ளுதல், செலுத்துதல். உகை-அகை. அகைத்தல் = செலுத்துதல் (சூடா). பெருந்தோணி பற்றி யுகைத்தலும் (திருவாச. 30:4). அகை-கை. கைத்தல் = செலுத்துதல். mif-GK ago, L. ago, S aj. (வ.வ: 90) உச்சம் உச்சம்-உச்ச உ-உச்சி = தலை, உச்சந்தலை, முகட்டு நுனி, வான முகடு, நண்பகல். உச்சி-உச்சம். உச்சம்போது = உச்சிப்பொழுது. உச்சம் போதே ஊரூர் திரிய (தேவா.289:9). உச்சந்தலை-உச்சித்தலை (வ.வ:91) உட்கொள்ளும் வகை அசைத்தல் விலங்கு போல் அசையிட்டுத் தின்னுதல், அதுக்குதல் சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறி மாறி ஒதுக்குதல்; அரித்தல் பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்து தல் சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்; ஆர்தல் வயிறு நிரம்பவுண்ணுதல்; உண்ணுதல் எதையும் உட்கொள்ளுதல்; உதப்புதல் (குதப்புதல்) வாயிலிருந்து வெளிவரும்படி மிகுதியாய்ச் சவைத்தல்; உறிஞ்சுதல் ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்; ஒதுக்குதல் ஒரு கன்னத்தில் அடக்குதல்; கடித்தல் கடினமான தைப் பல்லால் உடைத்தல்; கரும்புதல் ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்; கறித்தல் மெல்லக் கடித்தல்; குடித்தல் கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளு தல் குதட்டுதல் கால்நடைபோல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்; கொறித்தல் ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்; சப்புதல் சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்; சவைத்தல் வெற்றிலை, புகையிலை முதலியவற்றை மெல்லுதல்; சாப்பிடுதல் சோறுண்ணுதல்; சுவைத்தல் ஒன்றன் சுவையை நுகர்தல்; சூப்புதல் கடினமானதைச் சப்புதல்; தின்னுதல் மென்று உட்கொள்ளுதல்; நக்குதல் நாவினால் தொடுதல்; பருகுதல் கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்; மாந்துதல் ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்; முக்குதல் அல்லது மொக்குதல் வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்; மெல்லுதல் பல்லால் அரைத்தல்; மேய்தல் மேலாகப் புல்லைத் தின்னுதல்; விழுங்குதல் மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட் கொள்ளுதல்; மிசைத்தல் மிச்சில் உண்ணுதல். (சொல் : 55) உட்பகை அகத்தாரே தன்னலம் நோக்கியும் கலாம் பற்றியும் தம் இனத் தாரைப் புறத்தாரான பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தல். (தி.மி. அதி. 89) உடம்பு உயிரில்லாத பொருள்கள் எத்தனையோ வேறுபட்ட வண்ணம் வடிவு அளவு சுவை முதலிய தன்மைகளையுடையவனாய் இருந்தாலும் அவற்றை எல்லாம் உடம்பொடு தொடர்பு படுத்தி ஒன்றாகக் கொண்டு அவற்றுக்கு உடம்பு அல்லது மெய் என ஒரே பெயரிட்டதற்குக் காரணம் அண்டத்தை ஒத்தது பிண்டம் என்றும், உயிரற்ற பொருளளைத்தும் ஐம்பூதச் சேர்க்கை அல்லது வேறுபாடு என்றும் முன்னைத் தமிழர் அறிந்திருந்தமையே. (சொல்.31.) உடல் உடல், உடம்பு, குடம்பை, கூடு, மெய், யாக்கை, முடை, கட்டை என உடம்பிற்கு வழங்கும் பெயர்களின் காரணத்தை நோக்கின் அப்பெயர்களை இட்ட மக்களின் உயரிய அறிவு புலனாம். உடல் - உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடன் இருப்பது, உடல் அல்லது உடம்பு. கூடு - குஞ்சு பொரித்த பின் தொடர்பு நீங்கும் முட்டைக் கூடு போல உயிரைவிட்டு நீங்குவது குடம்பை அல்லது கூடு. (குறள். 333) மெய் - உயிரை மேலாகப் பொதிந்திப்பது மெய். யாக்கை - தோல் நரம்பு எலும்பு தசை அரத்தம் முதலிய எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பெற்றிருப்பது அல்லது முடையப்பட்டிருப்பது யாக்கை அல்லது முடை. கட்டை - உயிர்நீங்கிய பின் கட்டை போலக்கிடந்து எரிவது அல்லது மண்ணோடு மண்ணாய்ப் போவது கட்டை (சொல். 31) உடல் நலப் பொருத்தம் மணமக்கள் இன்பந் துய்த்தற்கும் இல்லறம் நடத்தற்கும் இன்றியமையாதது உடல் நலம். சில நோய்கள் மறைவாயிருக்கும், அல்லது மறைக்கப்பட்டிருக்கும். ஆதலால், தக்க மருத்துவப் பண்டிதரைக் கொண்டு மணமக்களை நோட்டஞ் செய்தல் வேண்டும். அல்லாக்கால் ஒருவரால் இன்னொருவர் நோய்ப்படுவ துடன், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் வழிவழி நோய்ப் பட்டு வருந்த வேண்டியிருக்கும். (த.தி. 43,44.) உடல் வலியால் தீமை ஒருவர்க்கு உடல் போன்றதே உள்ளமும் வலிமையடைதல் வேண்டும். உள்ள வலிமைக்கு அடிப்படை அறிவே. இதனால், அறிவை உரன் என்றார் திருவள்ளுவர். உரன்-வலிமை. உரன்என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோற் வித்து (குறள்-24) என்பது குறள். அறிவே ஆற்றல் (Knowledge is power) என்பர் ஆங்கிலரும். உளவலிமையோடு கூடிய உடல்வலிமை கூடத் தீமை விளைக்கும் என்பது, துறவியர் கருத்து. இதனாலேயே அவர் நோன்பாலும் தவத்தாலும் தம் உடலை ஒடுக்குவர். உளவலிமையோடு கூடாத உடல் வலிமையோ. பிறர்க்குப் பெருந்தீங்கு விளைப்பது திண்ணம். உடல் பருத்தவனைக் குண்டன் என்றும் தடியன் என்றும் கூறுவது உலக வழக்கு. இப்பெயர்கள் தீயவன் அல்லது கொடிய வன் என்னும் பொருளைப் பெற்றுள்ளன. தேவார ஆசிரியரும் திவ்வியப்பனுவல் ஆசிரியருங்கூடச் சமணரைக் குண்டர் என்று கூறுவர். உடல் தடித்தவன் குறும்பு அல்லது தீங்கு செய்வான் என்பது, மேற்கூறிய வற்றால் விளங்கும். (சொல்: 111) உடற் பெயர் உடல் - உடம்பில் கைகால் தலை அற்ற நடுப்பகுதி. உடம்பு - முழு உடம்பு (இவை ஆட்சிப் பொருள்கள்) உடக்கு - உள்ளீடு அற்ற உடம்புக் கூடு யாக்கை - எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது. மெய் - உயிரை மேலாகப் பொதிந்திருப்பது. மேனி - உடம்பின் மேற்புறம். (சொல். 40) உடன்போக்கு உடன் போக்காவது, களவொழுக்கம் தடைப்பட்ட விபத்து, அல்லது காதலியின் பெற்றோர் அவளைத் தர இசையாவிடத்து, காதலன் அவளை வேற்றூர்க்கேனும் தன் வீட்டிற்கேனும் அழைத்துக் கொண்டு போய் விடல். (த.தி. 6) உடுக்கு உடுக்கு-ஹுடுக்க உடு = ஒடு. உடுக்கு = ஓடுக்கு. ஓடு-ஒடுகு-ஒடுங்கு-ஓடுக்கு-ஒடுக்கம். உடுகு, உடுங்கு, ஒடுகு என்பன இறந்துபட்டன. உடுக்கு = இடையொடுங்கிய சிறுபறை. உடுக்கு-உடுக்கை. வடமொழியில் மூலமில்லை. (வ.வ:91) உண்டிப் பொருத்தம் மரவுணவும் புலாலுணவும் ஆகிய இரண்டனுள்ளும் ஒன்றில் ஒத்திருத்தலும், ஒவ்வாது வேறுபடின் அவ்வேறு பாட்டிற்கு இடந்தரலும் உண்டிப் பொருத்தமாம். (த.தி.44) உண்ணம் உண்ணம்-உஷ்ண (இ.வே.) உள்-உண்-உண்மை = வெப்பம். உண்ண வண்ணத் தொளிநஞ்சமுண்டு (தேவா.510:6). உண் = உண. உணத்தல் = காய்தல், உலர்தல். உண் = உணத்து. உணத்துதல் = காயப்போடுதல், உலர்த்துதல். தலையை (முடியை) உணத்துதல் என்பது நெல்லை நாட்டு வழக்கு. மிளகாய் வற்றலை உணந்த மிளகாய் என்பது மேலே வடார்க்காட்டு வழக்கு. உண-உணங்கு. உணங்குதல்=உலர்தல். தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும் (தமிழ்நா.154.) உணங்கல் = உலர்ந்த கூலம், வற்றல். உணங்கு-உணக்கம். உள்-ஒள்-ஒளி-ஒளிர்-ஒளிறு. ஒள்-ஒண்மை = விளக்கம். (வ.வ:91) உண்மையின் இயல்பு உண்மை என்பது சொல்லை மட்டும் பற்றிய அறமன்று. உள்ளும் புறமும் ஒத்திருப்பதே உண்மை. உள்ளம் வாய் மெய் ஆகிய முக்கரணங்களும், ஒருங்கே உண்மையில் ஒத்திருத்தல் வேண்டும். இவ்வியல்பையறிந்தே, உண்மை, வாய்மை, மெய்ம்மை என உண்மைக்கு முப்பெயரிட்டனர் முன்னோர். உள்ளத்தைப் பற்றியது உண்மை. வாயைப் பற்றியது வாய்மை; மெய்மைப் பற்றியது மெய்ம்மை. (மெய்ம்மை என்னுஞ் சொல்லை மெய் என்னும் உடம்பின் பெயரடிப் பிறந்ததாகக் கொள்ளுதலால் பொய்யான வுடம்பை மெய்யென்பது மங்கல வழக்கு என, இலக்கண உரையாசிரியர் கூறுவது பொருந்தாது.) உண்மை சொல்லை மட்டும் பற்றியதென்னும் தப்புக்கொள்கை யாலேயே, பொல்லாதவர் பொய்யாணையிடுவதும் பிறர் அதை நம்பி ஒப்புக்கொள்வதும், நேர்கின்றன. உளத்தொடு பொருந்தாது சொல்லொடும் மெய்யொடும் மட்டும் பொருந்துவது ஒருபோதும் உண்மையாகாது. உளத்தொடு பொருந்திய உண்மையுரைப்பவர் திருந்திய வொழுக்க முடைய வராயிருத்தல் திண்ணம் என்னும் கருத்தே, பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற சொய்யாமை செய்யாமை நன்று (குறள்-297) என்ற குறளின் அடிப்படை என்க. (சொல் : 110.) உணர்வொலி மக்கள் தம் உள்ளத்துத் தோன்றும் உணர்வுகளை, தம்மையறியாமலே உடன் வெளிப்படுத்தும் வாயில் ஒலிகள், உணர்வொலிகளாம். எடுத்துக்காட்டு: உணர்வு ஒலிகள் மகிழ்ச்சி ஆ, ஊ, ஏ, ஐ, ஆய், ஓ நோவு ஆ, ஈ, ஊ வியப்பு ஆ ஆ ஆ (ஆவா) - ஆகா, ஏ, ஐ, ஓ இழிவு ஊ, பூ இரக்கம் ஆ, ஆஆ-ஆவா தெளிவு ஓ, ஓஓ-ஓவோ-ஓகோ இவை போல்வனவே பிறவும். இவ்வொலிகள், குரல் வேறுபாட்டாலும், மாத்திரை வேறுபாட் டாலும், அசையழுத்த (Accent) வேறுபாட்டாலும், அலகுநிலை (Pitch) வேறுபாட்டாலும், அவ்வவ்வமையத்திற் கேற்ப வெவ்வேறு உணர்வுகளை உணர்த்தும். சில உணர்வுகள் மெல்லிய சகரவொலியால் மட்டும் உணர்த்தப் படும். அவை என் என்னுந் துணைவினை சேர்த்துக் கூறப்பெறும். எ-டு : ஊசு ஊசெனல் (உறைத்தற் குறிப்பு). (மு.தா.) உணவு உண்பன தின்பன பருகுவன நக்குவன என உணவு நால்வகை. சோறும் களியுமாகச் சமைக்கப்பெறும் நெல், புல் (கம்பு) முதலியன உண்பன. காய்கறிகள் தின்பன. பாலும் பதனீரும் (தெளிவும்) பருகுவன. தேனும் நெகிழ்நிலைப் பயினும் நக்குவன. (தி.ம.43) உத்தரம், தக்கணம் எம்மொழிச் சொற்கள்? தமிழன் பிறந்தகமாகிய குமரி நாட்டில். முதற்கண் தோன்றிய நாற்றிசைப் பெயர்கள், தென், வடம், கீழ் மேல் என்பன. அவை 4ஆம் வேற்றுமைக்குரிய குவ் வுருபேற்றுத் தெற்கு, வடக்கு, கிழக்கு (கீழ்க்கு), மேற்கு என்றாகி. பின்னர் ஆட்சிபற்றி முதல் வேற்றுமையாகவே வழக்கூன்றி விட்டன. அவற்றுள், முன்னிரண்டும் நிலைத்திணைச் சிறப்பும், பின் னிரண்டும் நில மட்டமும் பற்றியன. தென் என்பது தென்னை. தென்னுதல் = கோணுதல். பெரும் பாலுந் தென்னிக் கொண்டிருப்பதால் தென்னை அப்பெயர் பெற்றது. தென் - தென்னை, தென் - தென்கு - தெற்கு. தென்னை இயற்கையாகத் தோன்றியது குமரிக்கண்டத்தில். இக்காலத்தில் தென்னையின் பல வகைகள் இந்தோ மலையாவின் இயற்கையாக வளர்வதால் அந் நிலப்பகுதியே தென்னையின் பிறந்தகமாயிருக்கலாமென்று கருதப்படுகின்றது. ஆயின் அப் பகுதியும் குமரிக் கண்டத்தைச் சேர்ந்ததேயென்பதை அறிதல் வேண்டும். பஃறுளி யாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காவத நிலப்பரப்பிலிருந்து பல்வேறு நாடுகளைக் குறிக்குமிடத்து, அடியார்க்கு நல்லார் ஏழ்தெங்க நாட்டையே முற்படக் குறித்திருத்தலால். அந் நாடுகள் குமரிக்கண்டத்தின் தென்கோடியடுத்திருந்தமை பெறப்படும். தென்கோடியில் தென்னை சிறப்பாக வளர்ந்ததனாலேயே, தென்றிசை அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும். இங்ஙனமே நாவலந் தேயத்தின் வடகோடியிலும் வடமரம் (ஆலமரம்) சிறந்து வளர்ந்ததனால். வடதிசை அப்பெயர் பெற்றது. வடநாவலப் பகுதியான வங்கத்தில் அது சிறப்பாக வளர்வதாலேயே. மேலைப் பயிர்நூலாரும் அதற்கு வங்காள அத்தி (Ficushem-galensis) என இலத்தீனப் பெயரிட்டிருக் கின்றனர். ஆலமரம் சூழ விழுதுவிட்டு வட்டமாக அகன்று வளர்வதால். வடம் எனப் பெயர்பெற்றது. வல்-வள்-வட்டு-வட்டம்-வடம். ஒ.நோ : பட்டம்-படம் = துணி மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலியும், வட (vata) என்னும் ஆலமரப் பெயருக்கு வட்டம் என்பதையே பொருட் கரணியமாகக் கூறுகின்றது. வட்டம் - வ வட (வட்ட) வடமொழியென்னும் சமற்கிருதத்தில், வட்டம் என்பது வ்ருத்த என்றே யிருக்குமென்பது கவனிக்கத்தக்கது. வட்டம் (தமிழ்) - வட்ட (பிராகிருதம்) - வ்ருத் (சமற்கிருதம்) நில மட்டம் இற்றைத் தமிழ் நாட்டிற் போன்றே குமரிக் கண்டத் திலும், மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால், அவ்விரு திசைகளும் முறையே மேல் கீழ் எனப்பெயர் பெற்றன. உலகில் உயர்ந்த பனிமலை. ஒரு காலத்தில் கடற்கரையாய் இருந்தது. அன்று வடதிசை கடலால் தாழ்ந்தும், தென்திசை குமரிமலையால் உயர்ந்தும், இருந்தன. பின்னர் பனிமலை யெழுந்தபின் இருதிசையும் சமமாயின. அதன்பின் குமரிமலை மூழ்கிவிடவே, வடதிசையுயர்ந்தும் தென்றிசை தாழ்ந்தும் போயின. ஆதலால், வடதிசைக்கு உத்தரம் என்னும் பெயரும் தென்றிசைக்குத் தக்கணம் என்னும் பெயரும் தோன்றின. அவற்றொடு ஏனையிரு திசைக்கும், கீழ் மேல் என்னும் பழைய கரணியம் பற்றியே குணம் குடம் என்னும் இரு பெயர்களும் உடன்தோன்றின. குள்-குழி. குள்-குண்டு = பள்ளம். குள்-குண்-குணம் = பள்ளம். குண்டுங் குழியுமாயிருக்கிறது என்னும் வழக்கை நோக்குக. குடு-குடுமி = உச்சி, மாடவுச்சி, தலையுச்சி, உச்சிக்கொண்டை, உச்சிமுடி, மகுடம், மலையுச்சி, கொடுமுடி. குடு-குடம் = உயர்ச்சி, மேடு, குடநாடு = உயர்ந்த மலைநாடான சேரநாடு, மேல்நாடு. கிழக்கு மேற்கு என்னுஞ் சொற்களையொத்து. குணம் குடம் என்பனவும் குணக்கு குடக்கு எனக் குவ்வுருபேற்றன. தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழியாதலால், சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடத்தையுஞ் சுட்டும் ஆ (அ) ஈ (இ) ஊ (உ) என்னும் முச்சுட்டும் முதன்முதல் மாந்தன் வாயில் தோன்றிய சுட்டொலிகளாக மட்டுமின்றி உயிரொலி களாகவும் இருக்கின்றன. இதனாலேயே, அவை தமிழ் நெடுங் கணக்கில் முதலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இன்றும் ஆரியமொழிகளிற்போல் மறையாதும் திரியாதும் இயல்பாகவே தமிழில் வழங்கி வருகின்றன. சுட்டுவகையிலும் அதன் வழிப்பட்ட மூவிடப் பெயர் வகையிலும், தமிழ் (திரவிடம்) ஆரியத்திற்கு (சமற்கிருத்திற்கு) முந்திய தென்றும், உலக முதன் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய தென்றும், கால்டுவெலார் தம் ஒப்பியலிலக்கணத்தில் ஆங்காங்கு மிகவெடுத்துரைத்துச் செல்லுதல் காண்க. முன்னிலைப் பெயர்: ஊன்-உன் (ஒருமை) ஊம்-உம் (பன்மை) உவன், உவள், உவர், உது, உவை, உங்கு என்பன முன்னிலைப் பொருள்களையும் இடத்தையுமே குறித்தலால், உகர அல்லது ஊகாரச்சுட்டு முதன்மைச் சுட்டே. முன்மை சேய்மைக்கும் அண் மைக்கும் இடைப்பட்ட தாதலால், இடைமைச் சுட்டென்பது ஒருமருங்கு பொருந்தும். ஆயின், சேய்மைக்கு வரம்பில்லை யாதலால், முன்மை இடைமையாகலாம். இடைமை என்றும் முன்மையாகாது. முன்மை அண்மைக்குச் சற்றுச் சேய்மையாதலால் முன்மைச் சுட்டு, தமிழிற் சிறுபான்மை சிறு சேய்மையையும் வடநாட்டு மொழிகளிற் சேய்மையையும் உணர்த்தும். எ-டு: உங்கு = நீ (நீங்கள்) இருக்குமிடத்து தனயரைக் கண்டிரோ வுங்கணென்ன (சேதுபு 6:39) உதோள் - உதர் (இந்தி) = அங்கு. முன்மைக் கருத்தினின்று முற்செலவுக் கருத்துத் தோன்றும். எ-டு: உய் = முன்செல். முற்செலுத்து, உந்து = முன்தள்ளு உகை = முற்செலுத்து. நிலமட்டத்திற்கும் நீர் மட்டத்திற்கும் மேற்பட்ட முற்செலவு பக்கவாட்டிலும் மேனோக்கியுமிருக்குமாதலால் முன்மைச்சுட்டு உயர்ச்சிக் கருத்தையுந் தழுவும். எ-டு: உக்கம் = கட்டித் தூக்குங் கயிறு. உகப்பு = உயர்வு உகள்தல் = குதித்தல் உகளித்தல் = குதித்தல். உகைத்தல் = எழுதல். உச்சம் = உயர்நிலை உச்சி = உயரிடம். உத்தரம் = 1) முகட்டுக் குறுக்குப் பெருமரம் அல்லது இருப்புவிட்டம். 2) மேன்மடங்கல் = கூற்றுவன், கூற்றுவன் போல் அழிக்குந் தீ உத்தரமந்திரி = தலைமை யமைச்சர். உப்புதல் = பருத்தெழுதல் உம்பல் = உயர்ந்த யானை உம்பர் = மேல், மேலுலகம், தேவர் உம்பன் = உயர்ந்தோன் உயர்தல் = மேலெழுதல், மேற்படுதல் உவண் = மேலிடம், உவணம் = உயரப் பறக்கும் கலுழன் உவனை = தேவருலகம். உறி = உயரக் கட்டித் தூக்குங் கயிறு அல்லது தொடரி. உன்னுதல் = உயரக் குதித்தல் ஊர்தல் = ஏறிச் செல்லுதல் ஊங்கு = உயர்வு, மேன்மை. உத்தரம் = 1. பனிமலையால் உயர்ந்த திசையான வடக்கு (திவா) Uttara, mfn cp.fr.1.ud; opposed to adbara. upper, higher, superior (e.g. uttare dantas, the upper teeth), RV, AV, TS. CHUP; Ragh, and c, northern (because the northern part of India is high), AV; Mn; Susr.; pancat & c. என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகரமுதலி கூறுதல் காண்க. 2. வடக்கில் தோன்றும் ஊழித்தீ (பிங்). உத்தர மடங்கல் = வடவனல் என்னும் ஊழித்தீ (தி.வா.) குமரிநாட்டுக் காலத்தில் தமிழர் (நெய்தல்நிலப் பரவர்) சுற்றுக் கடலோடிகளா யிருந்ததனால், வடமுனையில் அவ்வப்போது தோன்றும் ஒரு பல்வண்ண வொளியைக் கண்டு, அதற்கு வடவை அல்லது வடவனல் என்று பெயரிட்டனர். அதையே ஊழி யிறுதியில் உலகையழிக்கும் தீயாகவும் கருதினர். வடவா வனலு மடநடைப் பிடியும் அருமைப் பெயருங் குதிரையும் வடலை (பிங்.986) வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து (அந்தகக்.தனிப்.) வெள்ளத் திடைவாழ் வடவனலை (கம்பரா. தைலமா.86) கடுகிய வடவனலத் தீனைவைத்தது அனல்-அனலம் (கலிங்.402) அக்கடலின் மீதுவட வனல்நிற்க வில்லையோ (தாயு.பரிபூர.9) மேலையர் வடவனலை, Aurora (down) Borealis (northern) என்று இலத்தீனிலும் northern light என்று ஆங்கிலத்திலும், வழங்குவது முற்றும் பொருளொத்திருத்தல் காண்க. வடமொழியாளர் வடவை என்னும் தென்சொல்லை, வடவா, வடவா முகம், வடவாமுகாக்கினி, படபா, படபாமுகம், படபா முகாக்கனி என்று திரித்தும் விரித்தும், பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றிய நெருப்பென்று, பொருந்தாப் பொய்த்த லாகப் பொருள்கூறுவர். அதைத் தமிழர் நம்பிய பின்னரே. வடவைக் கனன்மாவும் (தக்கயாகப்.694) என்று ஒட்டக் கூத்தரும் பாடநேர்ந்தது. இதனால், தமிழ்ச்சொல் திரிக்கப்பட்ட தொடு தமிழர் மதியும் திரிக்கப்பட்டமை காண்க. j¡F = jhœî bj., க.தக்கு (taggu) அவர்க்குத் தக்குத் தொண்டை அவர் தக்கிலே பாடுகிறார். என்னும் வழக்குகளை நோக்குக. தக்கு - தக்கணம் = நிலமட்டத்தில் தாழ்ந்த தென்றிசை. தென்னாடு (deccan) தக்கணம் - வ.தக்ஷிணம் வடமொழியாளர், தக்ஷிணம் என்னும் சொல்லைத் தெற்கு என்னும் பொருளில், தக்ஷிணாக்கினி, தக்ஷிணாயனம், தக்ஷிணா சலம் (பொதியம்), தக்ஷிண பாஞ்சாலம், தக்ஷிணாமூர்த்தி என ஆளுவர் ஆயின், தக்ஷிணம் என்னும் சொல்லிற்குத் தக்ஷ் என்பதை மூலமாகக்கொண்டு அதற்குத் திறமையாயிருத்தல் அல்லது வலமையோடிருத்தல் என்று பொருள்கூறி, கிழக்கு நோக்கும் போது தென்றிசை வலப்புறமும் வடதிசை இடப்புறமும் இருப்பதால் தக்ஷிணம் என்னும் சொற்கு வலம் என்றும் உத்தரம் என்னும் சொற்கு இடம் என்றும் பொருள் தோன்றினவென்று கரணியங் காட்டுவர். தக்ஷிணம் பரி = வலம் வா. வலஞ்சுற்று. ப்ரதக்ஷிண = வலம் வருகை, வலஞ் சுற்றுகை. தகுதியென்னுஞ் சொற்கு வல்லமையென்றும் பொருளிருப்பதால் தக்ஷ் என்னும் வடசொல் தகு என்னுந் தென்சொல்லின் திரிபாகவுமிருக்கலாம். ஒ.நோ. : L.dexter = of or on the right-hand side. E. dexterous = deft, adroit, clever, using right hand by preference E, ME. deft = dexterous, skilful. E, daft. ME.daffte = OE ged & fte (Goth gadaban to be fit) orig. Sense, fitting, suitable. தக்ஷ் என்னும் வடசொற்கும். (dexter) என்னும் இலத்தீனச் சொற்கும். மூலம் எதுவாயினும், உத்தரம், தக்கணம் என்னும் இரு திசைச்சொல்லும் தென்சொல்லேயென்பதற்குச் சான்று களாவன:- 1. உத்தரம், தக்கணம் என்பனவற்றோடு சேர்ந்து வழங்கப்பெறும் குணம் குடம் என்னும் திசைப்பெயர்கள் தூய தென்சொல். அவை வடமொழியில் இல்லை. அவற்றோடு சேர்ந்த ஏனை யிரண்டும் தென்சொல்லாகவேயிருத்தல் வேண்டும். 2. உயர்ந்தோன் தாழ்ந்தோன் என்பன போல, உத்தரம் தக்கணம் என்னும் இரண்டும் ஒன்றிற்கொன்று எதிரான உறவியற் குறியீடுகள் (relative terms.) சமற்கிருதத்தில். உத்தரம் என்பதற்கு நிலவுயர்ச்சியையும் தக்ஷிணம் என்பதற்கு வலப்புறத்தையும், கரணியமாகக் காட்டுவது பொருந்தாது. 3. உத்தரம் என்னும் சொல்லிற்கு அடியான உகரச் சுட்டும். தக்கணம் என்னும் சொல்லிற்கு மூலமான தக்கு என்னும் முதனிலையும் தூய தமிழ். 4. குமரிநாட்டில் தோன்றிய தமிழ் சமற்கிருதத்திற்கு முந்தியது. 5. உத்திரம் தக்கணம் என்னும் நாட்டுப்பெயர்கள் அல்லது திசைப்பெயர்கள், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும் தொன்றுதொட்டு வாழும் நாவலந் தேயத்திலன்றி, வேறெவ் வாரிய நாட்டிலும் என்றேனும் வழங்கியதில்லை. கடவுள் வழிபாடின்றிக் கதிரவன் வணக்கத்தையே சிறப்பாகக் கொண்ட வேதஆரியர். இந்தியாவிற்குட் புகுந்தபின்னரே, காலைக் கதிரவ வணக்கத்தின் போது தக்கணம் வலப்புறமும் உத்தரம் இடப்புறமும் இருத்தல் கண்டு. அவ்விருதிசைப் பெயர் கட்கும் முறையே வலம் இடம் எனப் பொருள் கொண்டிருத்தல் வேண்டும். கிழக்கு முதலிய முன்றோன்றிய நாற்றிசைப் பெயரும் உலக வழக்கில் ஆழ ஊன்றிவிட்டதனால், குணக்கு (குணம்) முதலிய பிற்றோன்றிய நாற்றிசைப் பெயரும் செய்யுள் வழக்கென்னும் இலக்கிய வழக்கிலேயே இடம்பெறலாயின. உலக வழக்கிலின்மையாலும் பொய்யுடை வடவர் சொல் வன்மையினாலுமே, உத்தரம் தக்கணம் என்னும் இரு தென் சொற்களும் வடசொல்லெனும் மயக்கத்திற்கு இடமாயினவென, இக்கட்டுரையினின்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. முதல்தரம், கடைத்தரம், மேல்தரம், கீழ்த்தரம், நடுத்தரம், இடைத்தரம், சிறுதரம், பெருந்தரம், என்பன போன்றதே உத்தரம் (உயர்ந்த நிலை) என்னும் வழக்கும் என்க. வடமொழியாளர் இவ்வடிவை உறழ்தரம் (comparative degree) ஆக்கிக் கொண்டனர். அதனால் உத்+தர (ud+tara) என்று பகுப்பர். அதுகண்டு மயங்கற்க. முரட்டுக் குறுக்குப் பெருமரம் உத்தரம் என்று பெயர்பெற் றிருத்தலையும் நோக்குக. - மதுரை எழுத்தாளர் மன்றம் 16ஆம் ஆண்டுவிழாச் சிறப்புமலர் 1974. உத்தி உத்தி-யுக்தி உத்தல் = பொருந்துதல். உ-ஒ. ஒத்தல் = பொருந்துதல். உத்தி = புணர்ப்பு, பொருத்தம், பொருத்தமானதை அறியும் அகக்காரணம், நூற்கும் உரைக்கும் பொருந்தும் நெறிமுறை. உ-யு (இ.வே.) உத்தி என்பதில் உத் என்னும் செயற்கை யடியை வடமொழியார் யுஜ் (இ.வே.) என்று திரிப்பர். விளையாட்டில் இவ்விருவராய்ச் சேர்ந்துவரும் சேர்க்கையைக் குறிக்கும் உத்தி என்னும் சொல்லும் இதுவே. தெ. உத்தி (uddi). கழித்தலை அல்லது தள்ளுதலைக் குறிக்கும் உத்து என்னும் சொல்லும் உகர அடியினதே. உ-உந்து. உந்துதல் = முன்தள்ளுதல், தள்ளுதல். ம. உந்து. உந்து - உத்து. பொன்னெல்லா முத்தி யெறிந்து (கலித். 64) உ-யு (இ.வே.) to keep away, ward off. (t.t:92-93.) உதடு உதடு-ஓஷ்ட (இ.வே.) - ostha. (உதழ்) - உதடு = வாயில் முன்னிருப்பது அல்லது பொருந்துவது. உதழ்-இதழ். வடவர் காட்டும் உஷ் (உள்-ஒள்) மூலமன்று. (வ.வ:93) உந்து உந்து-உந்த் (und)-ï.nt. உந்துதல்-நீரெழுதல். உந்துநீர்க் கங்கை (கூர்மபு. இராமனவ. 39). உந்து-உந்தி = நீர். (பிங்.) L.unda, Gk hudor, Goth vato, Lith wandu, E water, OHG wazar. உந்த்-உத்-உத-உதக (இ.வே.) = நீர். VL ud or und = to flow or Spring, as water. (வ.வ:93) உப்பக்கம் பின்பக்கம் அல்லது முதுகு. உப்பக்கங்காணுதல் புறங்காணுதல். அதாவது வெல்லுதல். (குறள்.620.) உம் என்னும் வேர்ச்சொல் உம் (கூடுதற் கருத்து வேர்) உம்முதல் = கூடுதல், இணைதல், உடனிருத்தல், பொருந்துதல், ஒட்டுதல், ஒத்தல். உம் என்னும் சொற்குக் கூடுதற் பொருள் இருத்தலாலேயே, அது இன்றும் எண்ணுப் பொருளிடைச் சொல்லாக வழங்குகின்றது. எ-டு : அறமும் பொருளும் இன்பமும் வீடும் வந்தும் போயும். ம.உம், க.உம். எண்ணும்மை இடைச்சொல் பல பொருள்களை அல்லது சொற்களை ஒன்று சேர்த்தல் காண்க. உம்மிடைச் சொற்குக் கூடுதற் பொருளிருப்பதை, இரு வகைச் சிறப்பும்மைக்கும் பகரமாக (பதிலாக), கூட என்னும் சொல் ஆளப் பெறின் பொருள் மாறாதிருப்பதாலும் அறியலாம். எ-டு: புலவர்க்கும் தெரியாத பொருள் = புலவர்க்குக் கூடத் தெரியாத பொருள். புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை = புலையன்கூட விரும்பாப் புன்புலால் யாக்கை. யாம், நாம், நீம், தாம் முதலிய மூவிடப் பெயர்களின் பன்மையுணர்த்தும் மகரவொற்றும், உம்மிடைச் சொற்குறையே. உம்-உமி = கூலங்களில் அரிசி பருப்பொடு கூடியிருக்கும் கூடுபோன்ற மெல்லிய தொலி. ம.உமி, து.உமி, க.உம்மி, தெ.உமக்க. உமிதல் = இதழ் (உதடு) கூட்டித் துப்புதல். உமி - உமிழ். ம. உமி, உமிழ்; தெ. உழியு, து. ubbi. உவமை-உவமம்-உவமன். உம்-உவ்-உவ-உவமை = ஒப்பு. உவமை-உவமி. உவ-உவமானம்-உவமானி. ம்-வ். ஒப்புநோக்க: அம்மை-அவ்வை, செம்மை-செவ்வை. உவமை-உபமா (வ), உவமானம்-உபமான (வ). உவத்தல் = உளத்தாற் பொருந்துதல், விரும்புதல். உம்-உன்-உன்னு, உன்னுதல் = பேச இதழ் (உதடு) கூட்டுதல். பேச வுன்னுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ம்-ன், ஒ.நோ: அம்மை-அன்னை, நிலம்-நிலன். உன்-உன்னியம் = சொந்தம். உன்னியம்-உன்னியன் = சொந்தக்காரன். உன்னியர் = சுற்றத்தார். உவ-உக. உகத்தல் (1) = விரும்புதல். வ்-க். ஒ.நோ: சிவப்பு-சிகப்பு, ஆவா-ஆகா (இடைச்சொல்). உகத்தல் (2) = இணைதல் உக-உகம் = நுகம், இணை. OE. geoe, E.yoke, OHG. G. Joch, OS., Goth juk, ON. ok, L.jugum, Skt. yuga. உன்-உல்-உர். ன்-ல். ஒ.நோ : திறன் - திறல், செய்வன்-செய்வல். ல்-ர். ஒ.நோ : குடல் - குடர், பந்தல்-பந்தர். உர்-ஊர் = கூட்டமான மக்கட் குடியிருப்பு. ம.ஊர், க.ஊர், தெ.ஊரு, து.ஊரு, ஊர்தல் = நிலத்தொடு அல்லது உடம்பொடு பொருந்தி நகர்தல். ம.ஊர். உர்-உரம் = பொருந்தித் தழுவும் மார்பு, செறிவால் ஏற்படும் திடம், உறுதி, வலிமை. ம.உரம்=வலிமை. Skt. uras = மார்பு. உர்-உர-உரசு. உரசுதல் = பொருந்தித் தேய்த்தல். உரசு-உரைசு-உரைஞ்சு. உரைஞ்சுதல் = பொருந்தித் தேய்த்தல். உர்-உரை. உரைதல் = உரசுதல். உரைத்தல் = தேய்த்தல். உரை-உராய். உராய்தல் = பொருந்தித் தேய்த்தல். உராய்-உராய்ஞ்சு. உராய்ஞ்சுதல் = பொருந்தித் தேய்த்தல். ம.உரசு, தெ.ராயு. உர்-உரி-உரிஞ் = உராய்தல். உரிஞ்-உரிஞு, உரிஞுதல் = உராய்தல். உரிஞ் - உரிஞ்சு, உரிஞ்சுதல் = உராய்தல். உர்-உரி = உடம்பொடு பொருந்தியுள்ள தோல். மரப்பட்டை. உரி-உரிவை = தோல். ம.உரி. உரித்தல் = தோலைப் பெயர்த்தல். ம.உரி, க.உரிச்சு, தெ.ஒலுத்சு. உரி = பொருந்திய உறவு அல்லது உடைமை. உரி - உரிமை. உரி - உரித்து. உர் - உரு. உருத்தல் = ஒத்தல். நின் புகழுருவின கை (பரிபாடல். 3:82) ர்-ற். ஒ.நோ : ஒளிர்-ஒளிறு. முரி-முறி. உர்-உறு. உறுதல் = பொருந்துதல், உறழ்தல், நேர்தல், அடைதல், தங்குதல், பெறுதல், வலுத்தல். க.உறு. உறு-உறுப்பு = பொருந்திய பாகம் அல்லது பகுதி. உற்றுக் கேட்டல் = பொருந்திக் கேட்டல் உறு-உறவு. உறவன், உறவினன், உறவாளி, உறவாடுதல்; உறல், உறன்முறை; உற்றார். உறாதான் = பொருந்தாதான், பகைவன். உறார் = பகைவர். உறாமை=பகைமை. உறு-உறுத்து, உறூஉ. செவியறிவுறூஉ = செவியுறுத்தும் அறிவுரை. உறுத்துதல் = அழுத்துதல். உறு-உறை. உறைத்தல் = அழுந்திப் பொருந்துதல், நாவைக் கடுமையாய்த் தாக்குதல், காரமாதல். உறை = ஓரிடத்திற் பொருந்தியது, இட்டது, இடுவது. கண்ணுறை = மேலிடுவது, மேலீடு. கையுறை = காணிக்கை. வாயுறை = உணவு, மருந்து. செவியுறை = காது மருந்து, அறிவுரை. உறுதல் = ஒத்தல். உறு-உறழ். உறழ்தல் = ஒத்து மாறுபடுதல், மாறுபட்டுச் சொற்போர் நிகழ்த்துதல், சொற்புணர்ச்சியில் இயல்பும் திரிபுமாதல், பெருக்கல். உறழ- ஓர் உவமவுருபு. (தொல்.1232) உறு-உறை. உறைத்தல் = ஒத்தல். இலங்குமுத் துறைக்கும் எயிறு (ஐங்.185) உறுநன் = சேர்ந்தவன். உறுதல் = நேர்தல், உற்றது, உறுவது. உற்றுழி, உற்றவிடத்து = துன்பம் நேர்ந்தவிடத்து. உறு-உறுவல் = துன்பம். உறு-ஊறு = துன்பம். உறுகண் = துன்பம், நோய், வறுமை. உறுதல் = பொருந்தித் தங்குதல், தங்கிக் குடியிருத்தல். உறு-உறை, உறையுள் = குடியிருக்கும் வீடு. உறை = கத்தியிருக்கும் கூடு; தலையணை, மெத்தை முதலிய வற்றை மூடும் பை. உறு-உறவி = உடலில் தங்கும் உயிர், ஆதன் (ஆன்மா) உறுதல் = செறிதல். மிகுதல், வலிமையுறல். உறு = உற. உறப்பு = செறிவு. விறப்பும் உறப்பும் வெறிப்பும் செறிவே (தொல். உரியியல்.49). உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்.உரி.3). உறு = மிக்க. உறுவன் = மிக்கோன். உறு-உறுதி, உறுதலை, ம.உறுதி, தெ.உறுதி, க.உறுபு. உறு-உறை. உறைதல் = திரைதல், கட்டியாதல், இறுகுதல். உறைமோர்-பாலை உறையச் செய்யும் மோர். உறைபனி = இறுகிய பனி. உல்-உள் = பொருந்தியுள்ளது, உள்ளது. இச்சொல் இப்பொருளில் இன்று சோழ பாண்டி நாடுகளில் வழக்கற்று, சேர நாடாகிய மலையாள நாட்டில் மட்டும் வழங்கி வருகின்றது. எ-டு: கேளியே உள்ளு, கண்டிட்டில்ல = கேள்விப் பாடாகத்தான் உள்ளது, கண்டதில்லை. ம.உள், க.உள். உள்+அது = உள்ளது. உள்+து = உண்டு. உள்ளது-உளது, உண்டு. ம.உண்டு, து.உண்டு. க.உண்ட்டு. ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்றும், வினையா லணையும் பெயருமாகிய உண்டு என்னும் சொல், இன்று பால் வழுவமைதியாக இருதிணையைம்பால் மூவிட ஈரெண்கட்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. இன்றும், அதுவுண்டு, மரமுண்டு, என்பவற்றில் ஒன்றன் பாற் படர்க்கைக் குறிப்புவினை முற்றாகவும், உண்டு பண்ணு (உள்ளது பண்ணு), உண்டாக்கு (உள்ளதாக்கு), என்பவற்றில் ஒன்றன்பாற் படர்க்கை வினையாலணையும் பெயராகவும், ஆளப்பெறுதல் காண்க. ம.உண்டாக்கு. உள்-உண்மை = உள்ளதாயிருக்கும் தன்மை. உள்ளத்தொடு பொருந்தியது என்னும் பொருள் மொழிநூற்கு ஒவ்வாது. வாய்மை = வாய்ப்பது, நிறைவேறுவது. மெய்ம்மை = உடம்பு போல் உண்மையானது (Substance, Substantiality.) உண்மை வாய்மை மெய்ம்மை என்னும் சொற்களின் முக்கரணத் தொடர்பு, தன்னேர்ச்சியான (Accidental) போலியே. ம.உண்மை. உள்-உளி = பொருந்திய இடம், இடம். உளி-உழி = பொருந்திய இடம், இடம், அமையம். உள்-உடு. ஒ.நோ : தொள் = தொடு, பள்-படு. உடு-உடன்-கூட. ம.உடன். க.ஒடன். உடனே = கூடிய அதே நேரத்தில். உடன்-உடந்தை = கூட்டு, கூட்டாளி. உடன்-உடங்கு = கூட, ஒருங்கு. உடன்படுதல் = ஒத்திசைதல். உடன்படு - உடன்பாடு - தெ. ஒட பாட்டு. உடன்படு-உடன்படிக்கை. உடன்பாடு-உடம்படு-உடம்படிக்கை. ம.உடம்படி, தெ.ஒடம்படிக்க, க.ஒடபடிக்கெ. து.ஒடம்படிக்கை உடு-ஒடு = கூட. (3ஆம் வேற்றுமை யுருபு). ஒடு-ஒடு = கூட. (3ஆம் வே.உ.) உடு-உடை-உடைமை-உடமை. ம.உடம, தெ. ஒடமெ, க.ஒடமெ. உடை-உடையான், உடையார். உடையவன்-ம. உடையவன். தெ.ஒடயடு. உடைமை = உடன்கொண்டிருப்பது. உடைமை = உடன்கொண்டிருக்கும் பொருள், சொத்து, உடுத்தல் = உடம்போடு அணிதல். ம.உடு. க.உடு. உடு-உடுப்பு, உடுக்கை, உடை-ம. உட, க.உடெ. உடுப்பு-ம. உடுப்பு, தெ. உடுபு, க.உடுபு. உடு = உடைபோற் கோட்டை மதிலைச் சுற்றியிருக்கும் அகழி. உடு-உடுவை = அகழி. ஒ.நோ : நீராரும் கடலுடுத்த நிலமடந்தை. (மனோன்மணீயம், தமிழ்த் தெய்வ வணக்கம்.) உடு-உடும்பு = உடன்சேரச் சுவரைப்பற்றும் ஊருயிரி, க.உடு, து.உடு, ம.உடும்பு, தெ. உடுமு. உடு-உடல் = உடனிருக்கும் கூடு. ம.உடல், து.உடல், க.ஒடல், தெ.ஒடலு. உடல்-உடர், உடலம், உடம்பு, உடக்கு. ம.உடம்பு, க.ஒடம்பி. உடல்வினை = உடலொடு (பிறவியொடு) கூடிய நிகழ்கால நுகர்ச்சிவினை (பிராரத்த கருமம்). உடன்வந்தி = உடன்வந்த நிகழ்கால நுகர்ச்சிவினை. உடு-உடன்-உடம்பை = மண்ணொடு கலந்த கலங்கல் நீர். உடு-உடல். உடலுதல் = 1. உறழ்ந்து மாறுபடுதல். உடலினே னல்லேன் (ஐங்குறு.66) 2. சினத்தல். உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை (புறம்.77) உடல் = மாறுபாடு (பு.வெ.8:1). உடலுநர் = பகைவர். உடல்-உடறு. உடறுதல் = சினத்தல். உடல்-உடற்று (பிறவினை). உடற்றுதல்-சினப்பித்தல். உல்-உ. ஒ.நோ : பொல்-பொ, குல்-கு. பொத்தல் = துளைத்தல். கு = குறு, சிறு. எ-டு : குக் (கிராமம்.) உத்தல் = பொருந்துதல், தகுதல். உ-உத்தம் = பொருத்தம், தகுதி. உத்தம்-யுக்த(வ) உ-உத்தி=1. விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரித்தற்கு இவ்விருவராய்ச் சேர்தல். உத்திகட்டுதல் என்பது உலக வழக்கு. Tel. uddi. 2. சேர்க்கை. 3. பொருந்தும் முறை. நுதலிப்புகுதல் முதலிய முப்பத்திரு நூலுரை நெறி முறைகள். 4. மதிநுட்பம். உத்தி-யுக்தி(வ) உ-உக்கம் = பெருந்திய பக்கம், இடை (waist). உக்கம் சேர்த்திய தொருகை (முருகு.108). ஒ.நோ:மருங்கு (பக்கம்)-மருங்குல் (இடை). M.ukkam. உக்கம்-உக்கல் = பக்கம். M. ukkal. உக்கல்-உக்கலை = மருங்கின் பக்கம் (Hips). FU(Kur)-FU¡F (Kurukh) (வே.க.) உம்பர் நெடுஞ்சேண் வெளிநாட்டாரான கால்டு வெலார் தொல்காப்பிய மும் கடைக் கழகப் பனுவல்களும் தமிழ்ப் பெரும் புலவர்க்குத் தெரியாது மறைந்தும், தமிழன் பிறந்தகம் குமரி நாடென்னுங் கருத்து ஒருவருள்ளத்திலும் தோன்ற வழியில்லாதும், இருந்த காலத்தில், மறைமலையடிகள் போலும் வழிகாட்டியார் ஒருவரு மின்றித் தாமே தமியராய்த் தமிழைக் கற்றாய்ந்தாரேனும், நடு நிலையாக ஆய்ந்ததனால், தமிழின் உலக முதன்மையைக் கண்டு, திரவிடச் சுட்டுகள் சமற்கிருதத்தினின்று கடன்கொள்ளப்பட்ட வையல்ல. அதற்கு மாறாக, அவை, சமற்கிருதச் சுட்டுகட்கும் அத னொடு சேர்ந்த வேறுபல இந்திய-ஐரோப்பியக் குடும்ப மொழிச் சுட்டுகட்கும் மூலமான, யாப்பேத்தியச் (Japhetic) சுட்டடிகளை ஒத்துள்ளன. (திரவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், சென்னைப் பதிப்பு, பக்.422) என்று திண்ணமுறக் கூறியுள்ளார். சமற்கிருதத்தின் தனியுடைமையல்லாத நூற்றுக்கணக்கான அடிப்படைச் சொற்கள், அதற்கும் தமிழுக்கும் பொதுவாக வுள்ளன. அவற்றுட் பெரும்பாலான தமிழ் என்பது, அறிவியற் சொல்லியலால் இன்று வெட்ட வெளியாகின்றது. வடமொழி யாளர் குறிக்கோட் சொல்லியல் (Tendentious Etymology) கொண்டே, அவற்றையெல்லாம் வடசொல் லென்றே இதுவரை ஏமாற்றி வந்திருக்கின்றனர். ஆரிய மொழிச் சுட்டுகட்கெல்லாம் தமிழ்ச் சுட்டுகளே அடிப் படையாதலால், வேறு பொருட் சொற்களை வடமொழியாளர் உடனடியாய் ஒப்புக்கொள்ளாவிடினும், சுட்டுப்பொருட் சொற்களைத் தமிழ்ச் சொல்லென்று ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது. தமிழ்ச் சுட்டுகள், மூவேறிடத்தைத் தப்பாது சுட்டும் மூவேறு தனியெழுத்தொலிகள் அல்லது ஓரெழுத்துச் சொற்கள்; ஆரியச் சுட்டுகளோ பெரும்பாலும் இடமாறிக் குறிப்பனவும், ஈரிடத் திற்குப் பொதுவானவும், அடி திரிந்தனவுமான பலவெழுத்துச் சொற்கள். இஃதொன்றே தமிழ்ச்சுட்டின் முன்மை காட்டச் சாலும். ஆரியமொழிகளிற் சென்று வழங்கும் தமிழ்ச் சுட்டுச் சொற்கள் பலவிருப்பினும், இங்கு உம்பர் என்னுஞ் சொல்லே எடுத்துக் கொள்ளப்பட்டது. எண்பெயர் முறைபிறப் புருவமாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்னும் பத்து அகத்திலக்கணத்திற்கும், கிளவி புணர்ச்சி யென்னும் இரு புறத்திலக்கணத்திற்கும், இடமானதும்; உயிர்மெய் உயிர்மெய் என்னும் பாகுபாடும் உயிர் மெய்த் தனிவடிவும் உடையதும், முதன்முதல் மாந்தன் வாயில் தோன்றிய ஆ ஈ ஊ (அ இ உ) என்னும் முச்சுட்டுகளையே முதற்கண் கொண்டதுமான நெடுங்கணக்கு, உலகில் முதன் முதல் தோன்றியது தமிழிலேயே தமிழ்நெடுங் கணக்கின் வளர்ச்சியே வடமொழி வண்ணமாலை. இதைப் பிறழ வுணர்ந்தார் கால்டுவெலார். ஆ ஈ ஊ என்னும் மூன்றும், முறையே, சேய்மைச் சுட்டும் அண்மைச்சுட்டும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட முன்மைச் சுட்டும் ஆகும். இவற்றுள் ஏதேனும் ஒன்றை ஒலிக்கும் நிலையில், ஏனையிரண்டையும் ஒலிக்க வியலாது. ஆதலால், இவை விரல்போற் சுட்டிகள் (Pointers) ஆயின. இது தமிழின் அல்லது திராவிடத்தின் சிறப்பியல்பு. மாந்தன் இயக்கம் அல்லது செலவு நிலத்தின்மேலும் மலையின்மேலும் நிகழ்வதால், முன்மைச்சுட்டு இடம் நோக்கி உயிர்ச்சிச் சுட்டுமாகும். காலமுன் இடமுன் என முன் இருவகைப்படும் ஒன்றோடொன்று மயங்குவதால், முன்மைச்சுட்டு பின்மைச் சுட்டாகவும் இலக்கியத்தில் அருகி வழங்கும். ஒ.நோ: L. Sursum deorsum = up and down, backwards and forwards. ஊ-உ முன்மைச்சுட்டு. முதற்காலத்தில் நெடிலாகவேயிருந்த சுட்டுகள், பிற் காலத்திற் குறிலாகவுங் குறுகின. உவன் = முன்னாலிருப்பவன் உது = முன்னாலிருப்பது உது! cnjh!-K‹nd! (இடைச்சொல்) உதோள், உதோளி = முன்னிடத்தில் ஊன், ஊம், ஊங்கள்-வழக்கற்ற முன்னிலைப் பெயர்கள். உ உயர்ச்சிச்சுட்டு உக்கம், உகப்பு, உங்கு, உச்சி, உத்தரம், உம்பல் (யானை), உயர், ஊர்தல் (ஏறுதல்), உவண், உறி, உன்னு என்பன உயர்ச்சி பற்றிய உகரச் சுட்டடிச் சொற்கள். c«-c«ò-c«g® (bg.)=1. மேலிடம். மாடத் தும்பர் (ஞானா.9:6) 2. உயர்ச்சி. (திவா.) 3. மேல்வெளி, வானம், விசும்பு. உம்ப ருச்சியிற்... கதிர் பரப்பு கடவுள் ( ) 4. தேவருலகம். உம்பர்க் கிடந்துண்ண (நாலடி:37). 5.தேவர். ஒலிகடல்சூ ழுலகா ளும்பர் தாமே (திவ்.பெரியதி.7:8:10). (குறிப்பு வினையெச்சம்) 1. அப்பால், ஆறைங் காதநம் மகநாட் டும்பர் (சிலப், 10:42). 2. மேலே. யான் வருந்தி யும்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு. கோச்செங்.5). ம. உம்பர் = தேவர். உம்பர் என்னுஞ் சொல் தேவரைக் குறிக்கும்போது, உம்பு+அர் என்று பிரிக்கலாம். இந்.ஊப்பர் = மேலே, வஹ் கித்தாப் அல்மாரீகே ஊப்பர் ஹை = அந்தப் பொத்தகம் நிலைப் பேழைக்கு மேலேயிருக்கிறது. வ. (சமற்.) உப்பரி = மேல். மேலே, மேற்பக்கம், மேனோக்கி மேற்கொண்டு, அப்பால், அப்புறம். இச்சொல், வடமொழியில், வேரில்லாததும், வேற்றுமைப் படுக்கப்படாததும், குறிப்பு வினையெச்சமாகவும் (adv.) முன்னொட்டாகவும் (pref) ஆளப்படுவதும், ஆன தனிச்சொல், ஆதலால், தென் சொற்றரிபு என்பது தெளிவு. வேத ஆரியரின் முன்னோர் ஆபுகானித்தானம் என்னும் காந்தார நாட்டிற் பேசிவந்த (கிரேக்கத்திற்கு நெருங்கிய) மொழி, அவர் வட இந்தியாவிற்குட் புகுந்து அங்கிருந்த பழத்திரவிடப் பேரினத் தொடு கலந்தபின், பிராகிருதம் என்னும் பழந்திரவிட மொழி களுடன் கலந்து வேதமொழியாயிற்று. பின்னர், வேதமொழி தமிழொடு கலந்து சமற்கிருதம் தோன்றிற்று. வேதமொழியும் சமற்கிருதமும் எழுதப்பட்ட இலக்கிய மொழிகளேயன்றிப் பேசப்பட்ட வழக்கு மொழிகளல்ல. உலக மாந்தருள் மொழிப்பற்றில் தலை சிறந்தவர், பிற் காலத்திற் பிராமணர் எனப் பெயர் பூண்ட ஆரியப் பூசாரியரே. சமற்கிருதம் வழக்கு மொழியாயிருந்திருப்பின் அவர் எப்பாடுபட்டும் அதிற் பேச்சு வழக்கைப் போற்றிக் காத்திருப்பர். வேதமொழியும் சமற்கிருதமும் மூவகையில் வேறுபட்டவை. வேதமொழி சமற்கிரும் 1. முந்தியது (கி.மு.1500-1000) பிந்தியது (கி.மு.1000- இக் காலமும் எதிர்காலமும்) 2. வழக்கற்ற சொற்களைக் கொண்டது. வழக்கற்ற சொற்களை நீக்கியது 3. சொல்வளங் குன்றியது (முதலிரு கழக நூல்களையும் மொழி பெயர்க்குமளவு சொல்வள மிக்கது. வேதமொழியை வேத சமற்கிருதம் (Vedic Sanskrit) என்று சொல்வது, முற்காலப் படுத்தம் (Prochronism) என்னுங் குற்ற மாகும். வேதமொழியும் சமற்கிருதமும் ஒரு காலத்தில் வழக்கு மொழியாயிருந்தன என்று மேலே மொழிநூலார் கொள்வது, தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்தையும் முன்மையையும் அறியாமையால் நேர்ந்த விளைவே. இந்தியிலுள்ள ஊப்பர் என்னுஞ் சொல், அம்மொழிக்கு நேர் மூலமான சூரசேனிப் பிராகிருதத்திலும், பெரும்பாலும் உப்பர் என்று வழங்கியிருத்தல் வேண்டும். அதிலிருந்து இலத்தீனத்திற்குச் சென்று சுப்பெர் (Super) என்று திரிந்தது. சொற்களின் உயிர்முதல் இங்ஙனம் சகர மெய்யேறுவது இயல்பே. ஒ.நோ : உதை-சுதை (உதைக்கும் ஆ) உருள்-சுருள். உலவு-சுலவு, உவணம்-சுவணம், உழல்-சுழல். Super என்னும் இலத்தீனச்சொல், மேலுள்ள, மேற்பட்ட, மேலை, மேனோக்கிய, மேற்செல்லும், மேற்கொள்ளக் கூடிய, மேனோக்கான, மேலான என்னும் குறிப்புப் பெயரெச்சப் பொருள்களிலும்; மீது, மேல், மேலே, மேலாக, மேனோக்காக, மேனோக்கி, மேலும், மேற்பட்டு, மேற்கொண்டு, அதிகமாக, அப்பால், அப்பாற்பட்டு. அப்புறம் என்னும் குறிப்பு வினை யெச்சப் பொருள்களிலும்; முன்னொட்டாகவும் அடைசொல் லாகவும் வழங்கும். எ-டு: Supera - supra, above. Superabilis, It. superabile, OF., E superable. Superaddo, E.superadd. Superbus, E superb. Supercilious, E. supercilious, with raised eyebrows. Superficies, E. superfice. Superfluus, E superfluous. Superhumanus, E. superhuman. Superior, It. superiore, Sp., Pg., OF., E. superior. Supernus, It., Sp., Pg. superno, OF. superne, E. supern. Superscribo, E. superscribe. Supremus, E. supreme. Super என்னும் இலத்தீனச் சொல்லின் பகரம் சில கிளை மொழிகளில் வகரமாக மாறுகின்றது. L. superanus, It. soprano, sovrano, Sp., Pg. soberano. MDu. soferein, sov(e)rein, OF. soverain, souverein, mod. F.souverain, E. sovereign. E. soprano = the highest kind of female voice. Sp. sobrecargo, E. supercargo = person in merchantship managing sales etc., of cargo. Super என்னும் இலத்தீன முன்னொட்டு பிரெஞ்சிலும் அதன் வழியாக ஆங்கிலத்திலும் sur என்று தொக்கும் வழங்கம். எ-டு: surplus, surround, surcharge, surveillance. Sur என்னும் sir என்றும் திரியும். எ-டு: surloin-sirloin = supperloin. sur என்பது su என்றும் குறுகும். எ-டு : su(r)sum, upward. Super என்னும் இலத்தீனச் சொல் கிரேக்கத்தில் huper என்று திரிந்துள்ளது. சகர முதற் சொற்கள் கிரேக்கத்தில் ஹகர முதலாகத் திரிதல் இயல்பே. எ-டு: இலத்தீனம் கிரேக்கம் ஆங்கிலம் sex hex six septem hepta seven semi hemi same (Goth) similis homos sama (ON) somnus hupnos (slup) ஆங்கிலத்தில், huper என்னும் கிரேக்கச் சொல் hyper என்று திரியும். எ-டு : hyperbole, hypereritic, hypergamy, hypermetric, hypermetropia, hyperphysical, hypertension, hypertrophy. உம்பர் என்னும் சொல், இலத்தீனத்திற்கும் அப்பாற்பட்ட செருமானியக் குடும்ப மொழிகளில் கிரேக்கத்தினும் மிகத் திரிந் திருப்பினும், சகர மெய்ம் முதல் கொள்ளாது தமிழ்ச் சொல்லை ஓருபுடையொத்து uber, up என்று இருவேறு வடிவிலும் அவற்றின் மேலுந்திரிந்தும் வழங்குவது, வரலாற்றுத் தொடர்பில் மிகக் கவனிக்கத் தக்கது. Uber OHG, uber (adv.), ubiri (prep), MHG. uber, G.uber, ober, Goth. ufar (prep. & adv.) OS. obar, OMG. obar, MG. ober, OFris. over, MDu, MLG., Du., LG. over, D. over OE. ofer, Sw. ofver, ON, yfer. உகரத்திற்கு ஒகர ஓகாரமும், பகரத்திற்கு வகரமும், வகரத்திற்கு ‘f’-c«, இனவெழுத்துக்களாதலால், மேற்குறித்த சொல் லெல்லாம் ஒன்றொடொன்று தொடர்புடையனவே. Above என்னும், ஆங்கிலச் சொல் a+be+ufan என்னும் முச்சொற் கூட்டு. அண் (nkš)-on-an-a. ó-skt. bhu-E. be. பூத்தல் = தோன்றுதல், உண்டாதல், உண்டா யிருத்தல். பூத்தலிற் பூவாமை நன்று (நீதிநெறி.) புகு - பொகு - பொகில் - அரும்பு. புகு-பூ. c«ò-upa-fufa-uf(ufan). இங்ஙனம், பல செருமானியக் கூட்டுச் சொற்களின் உறுப்பாகத் தமிழ்ச் சொற்கள் உருத்தெரியாது திரிந்து பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. செருமானியம் என்பது தியூத்தானியம் (Teutonic). வட செருமானியம், கீழைச் செருமானியம், மேலைச் செருமானியம் எனச் செருமானியப் பெருங்குடும்பம் முச்சிறு குடும்பங்களாகப் பிரிக்கப்படும். ஆங்கிலம் மேலைச் செருமானியத்தைச் சேர்ந்தது. கோதியம் (Gothic) கீழைச் செருமானியம்; காண்டினேவியம் (Scandinavian) வடசெருமானியம்; பல செருமானியச் சொற்கள், ஐரோப்பாவின் தெற்கில் வழங்கும் இத்தாலியச் சொற்களினும் கிரேக்கச் சொற்களினும், தமிழுக்கு மிக நெருக்கமாயிருக்கின்றன. up OE. upp. up, OFris. up, op, OL Fr. up, MDu. up, OS. up. ML G., LG, up, ON. upp, Norw. upp. MSw. up, op, Sw. upp, WFris. op, Du, op, Da. op, NFris. ap, Goth, iup, OHG. uf, MHG. uf, ouf, G. auf. உம்பு-உப்பு-உப்-உவ். தென்கிழக் கைரோப்பாவை யடுத்த மேலை யாசியாவினின்று வந்ததாகத் தெரிகின்ற கீழையாரியம், ஈரானியம், இந்தியம் என இரு கிளைகளுள்ளது. ஈரானியத்தின் முதுநிலை செந்து (zend); புதுநிலை பாரசீகம் (persian). இந்தியத்தின் முதுநிலை வேதமொழி; புதுநிலை சமற்கிருதம். உம்பர்-உப்பைரி (செந்து), உப்பரி (வேதமொழி) இத்தாலியச் சொற்போல் சகர மெய்ம்முதல் பெறாமலும், கிரேக்கச் சொற்போல் ஹகரமுதலாகத் திரியாதும், உகர முதலதாகவே தமிழ்ச்சொற் போலும் ஒருசார் செருமானியத்தை யொத்தும், கீழையாரியச் சொற்கள் வழங்குவது கவனிக்கத் தக்கது. ஆரிய வல்லினம் தமிழ் வல்லினத்தை நோக்கக் கடியனவாதலால், upari, upairi என ஒற்றைப் பகரத்தொடு குறிக்கப்படும் ஆரியச் சொற்கள் தமிழ் ஒலியியற்கேற்ப இரட்டைப் பகரத்தொடு குறிப்பட்டன, என அறிக. குமரி நிலத்தமிழினின்று திரவிடமும், திரவிடத்தினின்று பிராகிருதமும், பிராகிருதத்தினின்று ஆரியமும் திரிந்திருத்தலால், வேதமொழி திரிமொழியேயன்றித் தமிழ்போல் இயன்மொழி யன்று. ஆதலால், உப்பரி என்னும் வேதமொழிச் சொல் உம்பர் என்னும் தென்சொற்றிரிபே யென்பது தெரிதரு தேற்றம். upari ya, to go upwards. Upari sailam gam, to go over the mountain. Sahasram satani upari casiau, 1000 and 800 in addition. upari payah pibet, he must drink milk afterwards. upary upari sarvesam atisthat, he stood at the very head of all. atmanam tasya upari ksiptva, having thrown himself upon him. mamopari vikaritatih, changed in feeling with regard to me. putrasyopari kruddhah, enraged towards his son. muhurtad upari, after a minute. upari kuti, an upper room. upary upari, higher and higher, repeatedly, continuously (R.V.) இவ்வெடுத்துக்காட்டுக்களினின்று வடமொழி உப்பரிச் சொல் லாட்சி தென்மொழி உம்பர்ச் சொல்லாட்சியை யொத்திருப் பதைக் காணலாம். வடமொழி யென்னுஞ் சொல், பொதுவாகச் சமற்கிருதத்தைக் குறிப்பினும், வடுகு (வடகு), வடநாட்டு மொழி, பிராகிருதம், வேத மொழி, சமற்கிருதம், இந்திய ஆரியம் என்னும் ஆறுபொருட்கும் பொதுவாகும். திரவிட மொழிகள் தமிழுக்கு நெருங்கிய இனமேனும், தொன்மை, தூய்மை, செம்மை, சொல்வளம், தனியிலக்கியம், பொருளிலக்கணம், வரலாற்றுச் சான்றுடைமை முதலிய தனிச் சிறப்புக்கள் பற்றி, தமிழ் திராவிடத்தினின்று பிரித்தறியப்படும். அம்பர், இம்பர், உம்பர், எம்பர் எனச் சுட்டு வினாச்சொற்கள் மட்டுமன்றி, இடக்கர், இடங்கர் எனப் பிறசொற்களும் அர் ஈறு பெற்றிருப்பதால், super, hyper, uber, ufar, over என்பன, up, upper என்றும் பிற்காலச் சொற்போல் உயர்தரச்சொல் (compa-rative term) அல்ல. உப்பரி, உப்பைரி என்னும் வடிவுகளையும் நோக்குக. உய் இதழ் குவித்தொலிக்கும் ஊகாரம் அல்லது உகரம் ஆகிய முன்மைச் சுட்டு, முன்னிடத்தையும் முன்னுள்ள பொருள்களை யுங் குறிப்பது மட்டுமன்றி, முன்செல்லும் அல்லது முதற்செலுத் தும் வினைகளைக் குறிக்குஞ் சொற்களையும் தோற்றுவித் துள்ளது. உகைத்தல் = முற்செலுத்துதல். செலுத்துதல். உத்துதல் = முன் தள்ளுதல், தள்ளுதல், கழித்தல். உதைத்தல் = காலால் முன்னோக்கித் தள்ளுதல், காலால் தள்ளுதல் அல்லது ஓங்கி மிதித்தல். உந்துதல் = முன்தள்ளுதல். உசுக்காட்டல் = நாயை முன்னோக்கி ஒன்றன்மேல் ஏவுதல். உச்சுக்காட்டல் உஞற்றுதல் = தூண்டுதல், உள்ளத்தைத் தூண்டி யுழைத்தல். உள்ளுதல் = உள்ளத்தை முற்செலுத்துதல், ஊக்கங் கொள்ளுதல். ஊங்கு = ஊக்கு. ஊங்குதல் = முன்னோக்கித் தள்ளும் ஊஞ்சலில் ஆடுதல், பூங்கணாய மூக்க ஊங்காள் (நற்.90) ஒ.நோ : உந்து-உந்தல்-உஞ்சல்-ஊஞ்சல்-ஊசல். ஊக்குதல் = ஊஞ்சலை முன்னோக்கித் தள்ளுதல் அல்லது ஆட்டுதல், உள்ளத்தை முற்செலுத்துதல். ஊக்கங் கொள்ளுதல், பிறருக்கு ஊக்க மூட்டுதல், தூண்டுதல். ஒ.நோ: L. urgere, press, drive. E.urge, drive forcibly, impel, cause to proceed with effort. Gk. orgao, Goth. vrika, Lith, verzin, Skt. urj-urja=power, strength, vigour. இலத்தீன் சொல்லும் சமற்கிருதச் சொல்லும் உகர ஊகார முதலனவாயிருத்தலை நோக்குக. ஊதுதல் = வாயிலிருந்து காற்றை முன்னோக்கிச் செலுத்துதல். உய்தல்=1. முன்செல்லுதல், செல்லுதல். 2. சென்ற துன்பத்தினின்று அல்லது கேட்டினின்று தப்புதல். இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் (குறள்.700). 3.நீங்குதல். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41:17). 4, தப்பிப் பிழைத்தல், வாழ்தல். உண்ணா வறுங் கடும் புய்தல் வேண்டி (புறநா.181). 5. ஈடேறுதல், வீடு பெறுதல். தினைத்தனைப்பொழுது மறந் துய்வேனோ (தேவா.5:1) உய்த்தல் = 1. செலுத்துதல். நன்றின்பா லுய்ப்பதறிவு (குறள்.422). 2. 2படைக்கலம் விடுத்தல். அம்புய்க்கும் போர் (கம்பரா. மாரீச.186). 3. நடத்துதல். உய்த்திருமிச்சை செய்தி (சி.சி.1:62, நிரம்ப). 4. அனுப்புதல் பட்டிமை யோலை யுய்ப்பான் (திருவிளை. மெய்க்கா. 13). 5. கொண்டு போதல். வேட்டுவ ருய்த்தன ரோவென (சீவக.425). 6. நுகர்தல். காதல காத லறியாமை யுய்க்கிற்பின் (குறள்.440) 7. ஆட்சி செலுத்துதல். ஞாலமுழுது முய்த்திடு மகவு (பாரத. சம்பவ.10). 8. அறிவித்தல். அவ்வழி யரசர்க் குய்த்தார்க்கு (சீவக.1407). 9. கொடுத்தல் மீளி யாளர்க்கு மிகவுய்த் தன்று (பு.வெ.3:9, கொளு) 10. துன்ப நீக்குதல், பல்வினைக் கிருளின் றுன்னற வுய்க்கும் (திருக்கோ.175). 11. உய்யச் செய்தல். உய்த்த வியோகரூபர் (சதாசிவ.29). உய்யக் கொண்டான், உய்யவந்த தேவநாயனார் என்னும் பெயர்களில், உய்தல் மீட்புறுதலைக் குறிக்கும். உய்யப்பிணக்கம் = வாழ்க்கைப் போராட்டம் (Struggle for existence). உய்த்துணர்தல் = மனத்தைச் செலுத்தி ஆராய்ந்தறிதல். உய்த்தலில் பொருண்மை-எளிதாய்ப் பொருள் விளங்கும்தன்மை. உய்தி = 1. தப்புகை, நீங்குகை. (புறநா.34, உரை 2. கழுவாய் (பரிகாரம்). செய்தி கொன்றார்க் குய்தி யில்லென (புறநா.34). 3. ஈடேற்றம், வீடுபேறு. சார்பறுத் துய்தியும் (மணி.25:5). உய்வு = 1. உயிர் தப்புகை. எரியாற் சுடப்படினு முய்வுண்டாம் (குறள்.896). 2. கழுவாய். உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்.110). 3. ஈடேற்றம், உய்வுபாய மற்றின்மை தேறி (திவ்.திருவாய், 4:3:11). உய்-உயவு=உயிர் பிழைக்கச் செய்யும் வழி. உய்யா வருநோய்க் குயவாகும் (கலித்.139). உயவுநெய் = வண்டிச் சக்கரத்திற்கு இடும் மசகு. அஃதா லுயவுநெய் யுட்குளிக்குமாறு (பழ.385). மக்களின் கருத்துக்களை ஒலிவடிவான சொற்கள் தெரிவிக் கின்றன; மாந்தன் அறிவு வளர வளர, கருத்துக்கள் ஒன்றிலிருந் தென்றாகக் கிளைக்கின்றன. மூலக் கருத்தைக் குறிக்குஞ் சொல்லி னின்று கிளைக் கருத்தைக் குறிக்குஞ் சொல்லை வேறுபடுத்திக் காட்ட, பற்பல வகையிற் பல்வேறு முறைகள் கையாளப்பட்டுள. அவற்றுள் ஒன்று எழுத்துத் திரிபு. சொல்லின் முதலிடை கடை யென்னும் மூவிடத்திலுமுள்ள உயிர் மெய் என்னும் இருவகை யெழுத்தும், பல்வேறெழுத்தாகத் திரியும். உயிரெழுத்துக்களுள் ஒன்றான உகரம் ஏனை நாற்குறிலாகவுத் திரியும். எ-டு : உ-அ. உகை-அகை, குடும்பு - கடும்பு. உ-இ. உவர்தல்-இவர்தல், புரண்டை-பிரண்டை. உ-எ. உரி-எரி, குழு-கெழு. உ-ஒ. உல்லி-ஒல்லி, துளை-தொளை. இங்ஙனமே, உய் என்னுஞ் சொல்லும் திரியும். உய்-ஒய். ஒய்தல் = (செ.க.வி.) 1. விட்டொதுங்குதல். ஒய்யெனத் தெழித்தாங்கு (சிலப்.15:48, உரை). 2. தப்புதல். ஓடியொளித் தொய்யப் போவானிலை காண்மின் (பரிபா. 20:39). (செ.குன்றா.வி.) 1. செலுத்துதல். ஒய்யும் நீர்வழிக் கரும்பினும் (பதிற்றுப்.87:4). 2. கொண்டு போதல், உப்பொயொழுகை யெண்ணும் (புறநா.116). 3. கொண்டுபோய்க் கொடுத்தல். வளராப் பார்ப்பிற் கல்கிரை யொய்யும் (நற்.356). 4. போக்குதல்; நீக்குதல். ஒய்யா வினைப்பயனுண்ணுங் காலை (சிலப்.14:33). 5. இழுத்தல். கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் (அகநா.68). ஒய்-ஒய்யல்=1. செலுத்துகை. (பிங்). 2. கொடுக்கை. cŒ-cÆ® = jhdhf ïa§fhj cl«ig ïa¡F« mšyJ brY¤J« MÉ (âth.), 2. ஆதன் (ஆன்மா), தன்னுயிர் தானறப் பெற்றானை (குறள்268). 3. உயிர்மெய், உயிரி (பிராணி). எல்லா வுயிருந் தொழும் (குறள்.260). 4. பிறப்போரை (சன்மலக்கினம்) உயிர்க்கிரு பாலினும் (விதான. சாதக.19) 5. தனித்தியங்கும் உயிர் போன்ற தனித் தொலிக்கும் உயிரெழுத்து. உயிருமுடம்புமா முப்பது முதலே (நன்.59). 6. உயிர்வளி (பிராணவாயு). வைகரியில் ... உயிரணைந்து வந்தமொழி (சிவப்பிர.2:20). 7. காற்று, (பிங்.) 8. ஓசை, வள்ளுயிர்த் தெள்விளி (குறிஞ்சிப்.100). 9. ஒருகால அளவு. ஒரு நாழிகையில் 4320 இல் ஒரு கூறு. (கணக்கதி.பக்.13). k.cÆ®, f.cá®, bj., து. உசுரு. உயிர்த்தல் = செ. கு.வி. 1. உயிர் பெற்றெழுதல். 2. தொழிற்படுதல். அவ்வுடலினின் றுயிர்ப்ப வைம்பொறிகள் (சி.போ.3:4). 3. மூச்செறிதல். உரைதடு மாறாவுயிர்த்து (பாரத. பதினெட்.173). 4. கமழ்தல். உயிர்த்த தாமத்தன (கம்பரா.நிகும்.114). 5. இறுதி மூச்சு விடுதல், இறத்தல். உயிர்ப்பது மோம்பி (சீவக.1989)-செ. குன்றாவி. 1. ஈனுதல். குழந்தையை யுயிர்த்த மலடிக் குவமை கொண்டாள் (கம்பரா. உருக்காட்.65). 2. மோத்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள்.1101). 3. கூறுதல், பேசுதல். வீட் டுயிர்த் தழுங்கினும் (தொல்.கள.20). 4. பெருக்குதல். அம் மூவாறு முயிரொடு முயிர்ப்ப (நேமிநா.3, உரை). 5. வெளிப்படுத் துதல். கொங்குயிர்த்த பூந்தடத் துலாய் (நைடத.நாட்டு.3). உயிர்ப்பு = 1. உயிர்த்தெழுகை. 2. சோர்வு நீங்கிப் புது வலிமை யடைகை. 3. மூச்சு. ஊனினுயிர்ப்பை யொடுக்கி (தேவா.1173:3). 4. தெய்வப் படிமையிலுள்ள தெய்வ ஆற்றலை வருவிக்கை. 5. காற்று. ஒள்ளென வீழ்வுறுமுயிர்ப் பின் காவலன் (கந்தபு. திருவவ.13). 6. நறுமணம். உயிர்க்குமல் லுயிர்ப்பெதிரோடி (பாரத குருகுல.91). 7. இளைப்பாறுகை. நின்னுயவு நோய்க் குயிர்ப்பாகி (கலித்.35). உய்-வ. அய்-அய = செல்கை. அய-அயத = செல்கை, நடக்கை, சாலை, பாதை (இருக்கு வேதம்) உத்தர + அயத = உத்தராயண = கதிரவன் வடசெலவு. தக்ஷிண+அயந = தக்ஷிணாயந = கதிரவன் தென்செலவு. உய்-இய்-இயல். இயலுதல் = 1. நடத்தல். அரிவையொடு மென்மெல வியலி (ஐங்குறு.175). 2. உலாவுதல். பீலி மஞ்ஞையி னியலி (பெரும்பாண்.31). 3. இயங்குதல், அசைதல். 4. அணுகுதல். திருந்தடி நூபுரமார்ப்ப வியலி (கலித்.83:16). 5. ஒத்தல். பொன்னியலுந் திருமேனி (திருவாச. 49:6). 6. உடன்படுதல். யாதுநீ கருதிற்றன்ன தியன்றனன் (ஞானவா. வைராக்.42). 7. பொருந்துதல். வெயிலியல் வெஞ்சுரம் (W.). 8. தங்குதல். மாவியல்கின்ற வீர மகேந்திர புரத்துக்கு (கந்தபு ஏமகூ.4). 9. நேர்தல். இயன்றதென் பொருட்டினா லிவ்விட ருனக்கு (கம்பரா குகப்.40). 10. செய்யப்படுதல். சிறியவர்கட் கெற்றாலி யன்றதோ நா (நாலடி.353). 11. கூடியதாதல். இயல்வது கரவேல் (ஆத்திசூடி). இயல் = 1. செலவு. புள்ளியற் கலிமா (தொல்.பொ.194). 2. ஒழுக்கம். (சூடா). 3. ஒப்பு. மின்னியற்சடை மாதவர் (திருவிளை. குண்டோ. 2). 4. தன்மை. ஈண்டு செலன் மரபிற் றன்னியல் வழாஅது (புறநா.25:2). 5. இயற்கை. 6. இயற்றமிழ் (பிங்.). 7. நூல். இயலோதேல் (சைவச.பொது.346). நூற்பகுதி அரசியல் (குறள்). இயல்-இயல்வு = 1. இயற்கை. 2. ஒன்றைப் பெறுவதற்கேற்ற ஆம்புடை (உபாயம்). ஏனமாய் நின்றார்க் கியல்வு (திவ்.இயற்.1:12). இயல்-இயல்பு = 1. தன்மை. இயல்பு காண்டோற்றி மாய்கை (சி.சி.1:3) 2. நற்குணம். ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44). 3. ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் (குறிஞ்சிப்.15). 4. முறை. இயல்பினானில்வாழ்க்கை வாழ்பவன் (குறள்.47). 5. வரலாறு. உலகீன்றாடக்கன் மகளா யுதித்த வியல்பும் (கூர்மபு.திருக்கலி.1). இயல்-இயற்கை = 1. தன்மை. எண்ணாராத் துயர் விளைக்கு மிவையென்ன வுலகியற்கை (திவ்.திருவாய்.4:9:1). 2. இலக்கணம். பிரமசாரி யியற்கையைத் தெரித்த வாறும் (கூர்மபு.அநுக்கி.23). 3. நிலைமை. வறுமையான இயற்கை (W). 4. கொள்கை. பெரியவ ரியற்கை (கம்பரா. அயோத். மந்திர.63). 5. வழக்கம். உலகத் தியற்கையறிந்து செயல் (குறள்.637). 6. இயல்பான உலக முதல் கருப்பொருள்கள். இயல்-இயற்று (பி.வி.) இயற்றுதல் = 1. நடத்துதல். நெஞ்சே யியற்றுவா யெம்மொடு (திவ். இயற். பெரிய திருவந். 1). 2. செய்தல். இசையா தெனினு மியற்றியோ ராற்றால் (நாலடி.194). 3. படைத்தல். கெடுக வுலகியற்றியான் (குறள்.1062). 4. நூல்செய்தல். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். 5. தேடுதல். ஒண்பொருள் காழ்ப்ப வியற்றி யார்க்கு (குறள்.760). இயல்-ஏல். ஏலுதல் = 1. நிகழ்தல். 2. பொருந்துதல். 3. செய்ய முடிதல். இது உன்னாற் செய்ய ஏலுமா? ஏன்றதைச் செய். இய்-இய-இயவு = 1. செலவு. இடைநெறிக் கிடந்த வியவுக்கொண் மருங்கில் (சிலப்.11:168). 2. வழி. இயவிடை வருவோன் (மணி.13:16). இய-இயவுள் = 1. வழி. (அகநா.29 உரை). 2. நடத்துகை. 3. தலைமை. இயவுள் யானை (அகநா.29). 4. எப்பொருட்கும் தலைவனான இறைவன். பெரியோ ரேத்தும் பெரும் பொருளியவுள் (திருமுரு.274). 5. தெய்வம். (பிங்.) ம.இயவுள். இய-இயவை = வழி. (திவா.). இயவு-இயகு-இயங்கு. இயங்குதல் = 1. அசைதல். 2. செல்லுதல். (திவா.). 3. உலாவுதல். (பிங்). ம. இயங்ஙு. இயங்கு = செல்லுகை. இயங்கிடை யறுத்த கங்குல். (சீவக.1360). இயங்கு-இயக்கு-இயக்கம் = 1. அசைவு. 2. நடமாட்டம். நாணகத் தில்லா ரியக்கம் (குறள்.1020). 3. செல்கை. 4. வழி. எறிநீ ரடைகரை யியக்கந் தன்னில் (சிலப்.10:90) 4. அசைவுக் குறிப்பு. கண்ணிணை யியக்கம் (மணி.25:8.) 5. இசை நடப்பு. மெலிவு சமன் வலிவு என்னும் மூவகை யியக்கம். மூவகை யியக்கமு முறையுளிக் கழிப்பி (சிலப்.8:42). 6. குழலிசைத்தல். இன்புற வீயக்கி (சிலப்.3:66). 7. சிறுநீர் மலக்கழிவு. ஈரியக்க நடைவழி.... விடுதல் (காஞ்சிப்பு.ஒழுக்க.42). 8. ஒரு புதிய சீர்திருத்தப் போராட்டம் அல்லது பரப்புரை மறைமலையடிகளின் தனித் தமிழியக்கம். இய-எய்-எய்து. எய்துதல் = (செ.குன்றா வீ). 1. அணுகுதல். நெடியோ யெய்த வந்தனம் (புறநா.10). 2. சென்றடைதல், சேர்தல். தூநிறக் கங்கையான் சூழ வெய்தினான் (பாரத. குருகுல.34). 3. அடைதல், பெறுதல். ஏமவைக லெய்தின்றா லுலகே (குறுந். கடவுள் வாழ்த்து.). - (செ.கு.வி.) 1. நிகழ்தல். எட்டி குமரனெய்திய துரைப்போன் (மணி. 4:64). 2. வந்துசேர்தல். மாசெனக் கெய்தவும் (கம்பரா.சிறப்.6). 3. பொருந்துதல். காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் (குறள்.516). 4. போதியதாதல். சுனைவாய்ச் சிறுநீரை யெய்தா தென்றெண்ணி (ஐந்.ஐம்.38). ம.எய்து, தெ.எயிது. எய்-ஏய். ஏய்தல் = (செ.கு.வி.) 1. பொருந்துதல். ஏய்ந்த பேழ்வாய் (திவ்.பெரியதி. 1:7:3). 2. தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ.374). 3. ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ்.திருவாய். 5:1:8). - (செ.குன்றா.வி.) எதிர்ப்படுதல். புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந்.ஐம்.11). ஏய்த்தல் = 1. ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா.33). 2. பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ.77). 3. வஞ்சித்தல், ஏமாற்றுதல். (உ.வ.). ஏய்-ஏ-யா-யாத்திரை = வழிச்செலவு. தகடூர் யாத்திரை. யாத்திரை-வ. யாத்ரா. ஏ-ஏகு. ஏகுதல் = செல்லுதல், போதல். தாய்த்தாய்க் கொண்டேகு மளித்திவ் வுலகு (நாலடி.15). 2. நடத்தல். (பிங்.) 3. கழலுதல். நல்வளையேக (பு.வெ.11, பெண்பாற்.12). ஒ.நோ: போ-போகு. யா-ஜா. (இந்தி). ஜா-கா (ga). கயா (gaya) = போனான். கா (ga)-t. கம் (gam), கமந (gamana) = செலவு. OE, OS. gan, OHG. gan, gen. E. go. பகரம் ஜகரமாவது இந்தி ஆரிய மொழி யியல்பு. எ-டு: இந்தி. ít‹ (t.)-ஜth‹, யாத்ரா-ஜாத்ரா-யோகி-ஜோகி. t.bastd-L. juvenilis, E.juvenile. வ. íf (g.)-E. yoke, L.jugo, conjugo, to yoke to gether. E. conjugate. இய்-வ. இ (i), to go, walk; to flow; to blow; to advance, spread, get about; to go to or towards (with acc.) come, RV.; AV.; S Br.; M Bh.; R.; Hit; Ragh. & c.; to go away, escape, pass, retire, RV.; AV.; SBr, to arise from, come from, RV.; Ch up.; to return (in this sense only fut). M Bh.; R.; (with punar) to come back again, return, M Bh.; R.; Pancat. & c.; to succeed, Mn. iii, 127; to arrive at, reach, obtain, RV.; AV.; SBr.; Sak.; Hit. & c.; to fall into, come to.; to approach with prayers, gain by asking (of. ita); to undertake anything (with acc.); to be employed in, go on with, continue in any condition or relation (with a part, or instr., e.g. asura rakshasani mridyananani yanti, “the Asuras and Rakshasas are being continually crushed,” SBr. i, 1, 4, 14. (மானியர் உல்லியம்சு சமற்கிருத-ஆங்கில, அகர முதலி பக்.163). ஏ-வ. V (a) to go, come near or towards, go near, approach, RV.; AV.; SBr. etc.; to reach, attain, enter, come into (a state or position), Mn. xil, 125. eta, come near, approached, RV. iti, arrival, approach, RV. x, 91:4 ( 227). உயர்திணை பகுத்தறிவுள்ள உயிர்களைக் குறிக்கும் சொற்களை உயர்திணை என்று வகுத்தனர். (சொல்.34.) உயிர் உடம்பை உய்ப்பது அல்லது செலுத்துவது உயிர். உள்ளிருக்கும் உயிரை மேலாகப் பொதிந்திருக்கும் உடம்பு மெய். உயிரை யுடைய மெய், உயிர்மெய். (உயிரும் மெய்யும் கூடியது உயிர்மெய் என்பது பொருந்தாது. இக்கூற்று உயிர்மெய் என்னும் சொல் உலகவழக்கற்றபின் எழுந்தது. பிராணனையுடையது பிராணி என்பது போல் உயிரை யுடைய மெய் உயிர்மெய் என்பதே பொருத்தமாம்.) (சொல்.31) உயிர்மெய் எழுத்துக்களில், வேறோர் எழுத்தின் உதவியின்றித் தானே ஒலிக்கும் உயிரெழுத்து தானாய் இயங்கும் உயிரையும், உயிரெழுத் தின் உதவியின்றித் தனித் தொலியாத மெய்யெழுத்து உயிரின்றி இயங்காத உடம்பையும், உயிரோடு கூடிய மெய்யெழுத்து உயிரோடு கூடிய உடம்பையும் ஒத்திருத்தலால் அம்மூவகை எழுத்திற்கும் அம்மூவகைப் பொருட் பெயர்களையே உவமை யாகு பெயராக இட்டனர் முதனூலாசிரியர். (சொல். 34.) உயிர்மெய் வரிவடிவுகளின் ஓரியலின்மை தொடக்க வகுப்பில் எழுத்து எழுதிப் பயிலும் சிறுபிள்ளைக்கு. க, கா, ங, ஙா, ச, சா, ஞ, ஞா, ட, டா என்று எழுதிக்காட்டி, ணவ் விற்கு அடுத்த எழுத்தை எழுதச் சொன்னால், ணா என்றுதான் எழுதும். இதனால், ஓரியலாக எழுதுவதே இயற்கை யென்றும், முந்திய வகையென்றும், சிறுபிள்ளைக்கும் சொல்லாமலே தெரியும் என்றும், அறிந்துகொள்ளலாம். இவ்வியற்கை முறையை மாற்றி ஏன் எழுதினர் முன்னோர் அல்லது இலக்கண ஆசிரியர் எனின். கூட்டெழுத்தில் அல்லது விரைவெழுத்தில் ணவ்வடிவுங் காலுஞ் சேர்த்தெழுதின். காலும் ஒரு கோணச் சுழிபோல் தோன்றி ணகர ஆகாரத்தை இரு னகரமாகக் கருதி மயங்க இடந்தரு மாதலின். அதை நீக்குதற்கே என்க. இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஔ என்னும் ஏழுயிரும் ஏறும் ணகர மெய் வடிவுகள். அத்தகைய மயக்கத்திற்கு இடந்தராமையால், தி, தீ, து, தூ, தெ, தே, தௌ என்பன போன்றே ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணௌ என்று இயற்கையான முறையில் எழுதப்படுகின்றன. ஐகார வுயிர்மெய்க்கு னகரம்போல் தோன்றும் இரட்டைக் கொம்பும், ஒகர ஓகாரமெய்கட்குக் கொம்புங் காலும். இயற்கை முறையில் வரின், பல சுழிகள் போல் தோன்றி மேற்கூறிய மயக்கத்தை மிகுக்குமாதலின், அவ்வுயிர் மெய்கள் வேறுபட்ட வடிவில் எழுதப்படுகின்றன. இரு அல்லது முக்கோணச் சுழியெழுத்துகள் போன்றே இரு வளைவுள்ள எழுத்துகளும் சிலவிடத்து மயக்கத் தருவனவா யிருத்தலால், அத்தகைய இடங்களில் அவையும் இயற்கைக்கு மாறான வடிவில் எழுதப்படுகின்றன. றகர வடிவு இருவளைவுள்ளதா யிருந்தும். ஏன் ஐகார வுயிர்மெய் வடிவில், றை என்றே இயற்கை வடிவில் எழுதப்படுகின்ற தெனின். அதற்குக் கோடு கீழிறங்கியிருப்பதால் மயக்கத்திற்கிடமில்லாது தடுக்கின்ற தென்க. இதனால், இன்றியமையாத இடங்களிலேயே ஐகார வுயிர்மெய்க்குக் கொக்குக் கழுத்துப் போன்ற மேற் கொடுக்குக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிக. இனி, ஆங்கிலத்தில் இல்லாத உயிர்மெய்யெழுத்துகள் தமிழில் இருப்பதால், எழுத்துகள் பல்கித் தட்டச்சடிப்பில் மிகுந்த இடர்ப்பாடுண்டாக்குகின்றனவென்றும், தொலைவரி யடிப்புக் காலத்தை நீட்டிக் கின்றனவென்றும், குறைகூறித் தமிழெழுத்து களைக் குறைக்க வேண்டும் என்பர் சிலர். வடமொழி நெடுங்கணக்கிலும் அதைப் பின்பற்றிய வடநாட்டு மொழிகளிலும் திராவிட மொழிகளிலும் உள்ள வண்ணமாலை களிலும், வல்லினம் ஐந்தும் நந்நான்கு வகையாயிருப்பதொடு. சகரத்திற்கினமான இசுப்பொலிகளும் (sibilants) மூன்றாக வுள்ளன. உயிர்மெய்களின் உகரக்குறி, எழுத்து வடிவிற்கேற்பத் தெலுங் கிலுங் கன்னடத்திலும் இருவேறு வகையாயும், மலையாளத்தில் நால்வேறு வகையாகவும் உள்ளது. சேமிய மொழிகளில் உயிர்மெய்க்குத் தனிவடிவில்லாவிடினும். மெய்வடிவு சொன் முதலிடைகடை யென்னும் மூவிடத்திற் கேற்பப் பெரும்பாலும் வேறுபடுகின்றது. மேலும், பற்பல எழுத்துகளின் வடிவுகள் ஒவ்வொன்றாகவேயிருந்து. புள்ளிகளின் மேல்கீழ்உள் என்னும் இடவேறுபாட்டாலும், ஒன்று இரண்டு மூன்று நான்கு என்னும் தொகை வேறுபாட்டாலுமே. வேறு பகுத்தறியப்படுகின்றன. இனி, அ இ உ என்னும் முதன் மூவுயிர்க் கும் தனி வடிவுகளில்லையென்று கருதப்படுகின்றது. ஒரு குறுங்கீச்சு மேலும் கீழும் தடித்தும் எழுதப்படுவதால், முறையே மூவுயிர்க் குறில்களும் குறிக்கப்படுகின்றன. அவற்றின் நெடில் களைக் குறிக்க அலிப் (அலெப்), வா, யே என்னும் எழுத்துகள் முறையே சேர்க்கப்படுகின்றன. வா என்னும் ஒரேயெழுத்து வகரமாகவும் உகரமாகவும், யே என்னும் ஒரேயெழுத்து யகரமாகவும் இகரமாகவும் பயன்படுத்தப் படுகின்றன. ஆங்கில வண்ணமாலையின் ஒழுங்கின்மை அனைவரும் அறிந்ததே. In the English tongue we speak Why is break not rhymed with freak Well you tell me why it's true We say sew but likewise jew. Beard sounds not the same as heard Cord is different from word And since pay is rhymed with say Why not paid with said I pray. Cow is cow but low is low Shoe is never rhymed with foe And in short it seems to me Sound and letter disagree. என்று Lord Cromer என்னும் ஓர் ஆங்கிலப் பெருமகனாரே பாடி யுள்ளார். ஆயினும், ஒருவரும் அதைத் திருத்தக் கருதவில்லை. ஈரிடமே கொள்கிளும் எழுத்துகளை ணொ, ணோ, றொ, றோ என்றெழுதின் மூவிடங் கொள்ளும், கால் சேர்க்காமையால் அவை முடம்பட்டு நடக்க முடியாது வருந்தவுமில்லை; கால்வேண்டுமென்று நம்மிடம் முறையிடவுமில்லை. எழுத்து மாற்றம் எவ்வகையிலுந் தமிழுக்குத் தேவையேயில்லை. இன்று எழுத்தை மாற்றின், மனையகங்களிலும் அலுவலகங் களிலும் நூலகங்களிலுமுள்ள கோடிக்கணக்கான மரபெழுத்து நூல்களையெல்லாம் மாற்றியாகல் வேண்டும். அவற்றிற்கு ஈடு செய்ய இறைவனும் வரான். புதிய மாற்றெழுத்து நூல்களை யெல்லாம் அச்சிட ஒரு தலைமுறையாகும்; கோடிக் கணக்கான பணமுஞ் செலவழியும். அவற்றைக் கொடுக்கும் வள்ளல்கள் இனிமேல்தான் பிறக்க வேண்டும். ஏற்கெனவேயுள்ள நூல்களை வேண்டுமாயின், கரிவலம் வந்த நல்லூரிற் போல் எரியூட்டுவதற்குத் தோன்றியங்கள் (ஆகமங்கள்) துணை செய்யலாம். ஆயின், அதற்கும் ஆரியமறை யோது வார்க்குப் பணங்கொடுத்தல் வேண்டும். எழுத்து மாற்றுவதால் ஒரு நன்மையுமில்லை. கேடோ அளவற்ற தாகும். இனி, எழுத்து மாற்றமும் ஒருவகைப்பட்டதன்று. பெரியார் எழுத்துமுறை ஒன்று; பிறர்கூறும் எழுத்துமுறை வெவ்வேறு. உயிர்மெய் வரிவடிவுகளை. ஒருவர் கிரந்தம் போற் புணர்க்க வேண்டும் என்பர். ஒருவர் வடமொழிபோற் புணர்க்க வேண்டும் என்பர் ஒருவர் பிராமிபோற் புணர்க்க வேண்டும் என்பர். பிறர் வெவ்வேறு வகையிற் புணர்க்க வேண்டும் என்பர். ஒருசிலர் உயிர்மெய்யே வேண்டியதில்லையென்றும், ஆங்கிலம்போல் மெய்யையும் உயிரையும் அடுத்தடுத் தெழுதினாற்போதும் என்றும் கூறுவர். இங்ஙனம் வடிவுபற்றிய கருத்து வேறுபாடுகள் ஒருபக்கம் இருக்க, சிலர் பிறமொழிச் சிறப்பெழுத்துகளைத் தமிழிற் புகுத்த வேண்டுமென்பர். அவரும், வடமொழிச் சிறப்பெழுத்துகளை மட்டும் புகுத்த வேண்டும் என்பாரும், ஆங்கிலச் சிறப்பெழுத்து களை மட்டும் புகுத்த வேண்டும் என்பாரும், பிறமொழிச் சிறப்பெழுத்துகளையுஞ் சேர்க்க வேண்டும் என்பாருமாய்ப் பல திறத்தர். பாண்டியர் முதலிரு கழகம் போன்ற தொன்றின்மையால், இங்ஙனம் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் வரம்பின்றிப் பாழாக்கப்பட்டு வருகின்றன. இன்று எழுத்து மாற்றத்தை விரும்புவார் தகுதி நோக்கின், பெரும் புலமையும் மரபுகாக்கும் பொறுப்புத்தன்மையும் ஒருவர்க்கு மில்லை யென்றே தெரியவரும். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள், 10, 11-6-1934 அன்று, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் நடைபெற்ற சென்னை மாநிலத் தமிழர் முதல் மாநாட்டில் தலைமை தாங்கி, ஆற்றிய சொற்பொழிவில் ஒரு பகுதி வருமாறு: பழந்தமிழ்க் காலமுதல் வடசொற்களும் திசைச்சொற்களும் தமிழில் இன்றியமையாதவிடத்து வழங்கி வந்திருக்கின்றன. ஆனால், அவ்வாறு வழங்கி வருகின்றபோது, அவை தமிழியலுக்கு ஏற்ப உருமாறித் தொழில் புரிய வேண்டுமென்பது ஆன்றோர் வகுத்த தமிழ்மரபு. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே என்பது நூற்பா. வடவெழுத்துகளிற் பல தமிழியலுக்கு முரண்படுதலின், அவற்றை நீக்கி எழுதுவதே முறையென முதறிஞர் கண்டனர். வடசொற்கள் பெரிதும் வழங்கத் தலைப்பட்ட பிற்காலத்திலும், இவ் வியலுக்கு மாறுபடா வண்ணம் நன்னூலார் விதி வகுத்தார். சங்கால முதல் இதுகாறும் தோன்றிவரும் சிறந்த நூல்கள் யாவும், இம் மொழிமரபு வழுவாமல் பாதுகாத்து வருகின்றன. ஒரு சிலர், தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்துள்ளனவென் றும், அவற்றை அகற்ற வேண்டுமென்றும், கூறுகின்றனர். குரோமர் என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக் கணத்திற் காணப்பெறும் சில குறைகளைத் தொகுத்து ஒரு கவியில் விளக்கியுள்ளார். எனினும், ஆங்கில மொழியின் வளர்ச்சி சிறிதுங்குன்றவில்லை. அச்சுக்கோப்போரின் துன்பத்திற்காகச் சிலர், தமிழ் எழுத்துகளிற் சிலவற்றை அகற்ற விரும்புகின்றனர். வேறு சிலர் ‘f’ என்ற ஆங்கில எழுத்தையும் தமிழிற் சேர்க்கக் கருதுகின்றனர். இவை எம்மொழியாளரும் கைக்கொள்ளாதவை. வீரமாமுனிவர் போப்பையர் போன்ற அயல்நாட்டார்கூட இவ்வாறு சொல்லத் துணியவில்லை. வடகலை தென்கலை உணர்ந்த நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றார் வட நூலார் கொள்கையில் அடிப்பட்டிருந்தும், தமிழமரபு இழுக்கா வண்ணம் உரைநூல்கள் இயற்றினார்களே! ஆங்கிலம், வட மொழி ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்ய நிரம்ப இடமிருந்தும் அவற்றைத் திருத்தத் துணியாதபோது, தமிழ்மொழியைத் திருத்தலாமென்பது பேதைமையாகும். கலைநூல்களில் வழங்கும் குறியீட்டுச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் நூலிலோ வழக்கிலோ கிடைத்தால், அவற்றைப் பயன்படுத்த வேண்டும்; இல்லாதபோது தமிழில் படைத்துக் கொள்ள வேண்டும்.... செருமானியர் அறிவுநூற் பொருள்களைக் குறிப்பதற்கான சொற்களைத் தம் தாய்மொழியிலேயே ஆக்கிக் கொண்டனர். இம் முறையைத் தமிழரும் பின்பற்றலாம். பெரும் புலவரும் பெருந் தமிழ்க்காவலரும் இங்ஙனம் எழுத்து மாற்றத்தை எதிர்ப்பது கவனிக்கத்தக்கது. பெரியார் ஒரு பெரியார், அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று. செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங் களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தொடு வாழச்செய் வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர்போல் தம்மைக் காட்டிக் கொள்பவர். இளையரும் முளையருமாயிருந்த காலத்தே. நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்புகொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டதோ, அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனுஞ் சொன்னால், அதெல்லாம் நீங்களே தமிழ்ப் பண்டிதர்களாகச் சேர்ந்துகொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப்போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்க ளிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத்தொண்டு செய்பவன் என்பார். ஒருமுறை என் ஒப்பியன் மொழிநூல்பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப் பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுமிருக்கிறேன். ஓருமுறை, நான் காட்டுப்பாடியிலிருந்தபோது, எனக்கு வருவாயில்லையென்று தெரிந்து. என் வீடு தேடிக் கொஞ்சம் பணங்கொடுக்க வந்து, நான் ஊரில் இல்லாதால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். பின்பு, நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்தபோது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து, இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்திற் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது. அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர். நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்கட்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவதுபோல், பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராம ணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும். ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும், அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்தது மில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தானியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை. கலப்பு மணம், பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை விட்டுவிட்டு, எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது. பண்டத்தை விட்டுவிட்டு படிவத்தைப் பற்றுவதே யாகும். தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழி யாக ஏற்பவருமான வையா புரிகளுடன் கூடிக்கொள்வதும், தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்ப தும், மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுது வதும், பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின் பாற்பட்டன வாகா. பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது. பெரியார் விழாக் கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள் வதும், விடிய விடியச் சொற்பொழிவாற்றுவதும், பெரியார் படிமைக்கு மாலையணிவதும், பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்? இதுகாறும் தமிழ்நாட்டில், தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே.இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர். அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவர்; தம் சிறு கொள்கைக்குப் பெறு வெற்றி பெறவே, பெரியார் விழாவைப் பெருவாய்ப்பாகக் கொண்டுள்ளனர். உரம் உர்-உறு = மிக்க. உறு-உறுதி = வலிமை. உர்-உரம் = வலிமை, நிலத்திற்கு அல்லது பயிருக்கு வலிமை தரும் எரு, உடம்பில் வலிய உறுப்பான மார்பு. இனி, உரம் = தழுவும் உறுப்பு என்றுமாம். உர்=உறு. உறுதல் = பொருந்துதல், தழுவுதல். ஒ.நோ : மரு (மருவு)-மார்-மார்பு-மார்பம். மருவுதல் = பொருந்துதல், தழுவுதல். வடவர் காட்டும் ரு (r) என்னும் மூலம் பொருந்தாமை காண்க. (வ.வ: 93) உரிச்சொல் விளக்கம் உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (தொல்.782) என்பது தொல்காப்பிய உரிச்சொல் இலக்கணச் சூத்திரம். இதற்கு. இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற் றென்பாரு முளர் என்று சேனாவரையர் உரை கூறியுள்ளார். இதனால் சேனாவரையர் காலத்திலேயே உரிச்சொல் செய்யுட்குரிய சொல் என்று ஒருவரோ பலரோ உரை கூறியுள்ளதாகத் தெரிகின்றது. நால்வகைச் சொற்களில் பெயர் - வினை, இடை என்ற மூன்றே இலக்கணவகைச் சொற்களாகும். உரிச்சொல்லென்பது ஓர் இலக்கியவகைச் சொல்லேயன்றி இலக்கணவகைச் சொல்லன்று. அது பெயராகவுமிருக்கும். வினையாகவுமிருக்கும், இடையாகவு மிருக்கும். எ-டு: பெயர் வினை இடை மாலை (இயல்பு) வார்தல் (நீடல்) பே - அச்சக்குறிப்பு எறுழ் (வலி) இரங்கல் (வருந்தல்) ஐ - வியப்புக்குறிப்பு பண்ணை (விளையாட்டு) பாய்தல் (பரத்தல்). சேனாவரையரும் கறுப்பு, தவ வென்பன பெயர் வினைப்போலி, துவைத்தல், துவைக்கு மென்பன பெயர் வினைக்கு முதனிலையாயின என்று கூறியுள்ளார். சூத்திரத்தில், இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றல், பெயரினும் வினையினும் மெய்தடுமாறல், ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒருபொருட்குரிமையும் தோன்றல், பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல் என உரிச்சொற்குக் கூறிய நான்கிலக்கணங்களுள் முதல் மூன்றும் எல்லாச் சொற்கும் பொதுவாம். இறுதியொன்றே உரிச்சொற்குச் சிறப்பாம். பெயரும் வினையும் இடையும் பெரும்பாலும் இசை குறிப்புப் பண்பிற் றோன்றியவையே. எ-டு: இசை குறிப்பு பண்பு பெயர் ஒலி துணி வெள்ளை வினை ஒலித்தல் துணித்தல் வெளுத்தல் இடை ஒல் துண் வெள் பெயரினும் வினையினும் மெய் தடுமாறி என்னும் பகுதிக்கு. பெயரினும் வினையினும் மெய்தடுமாறி என்பது உரிச்சொல்லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி எ-று. அவை தடுமாறுங்கால் பெயர் வினைகளைச் சார்ந்தும். அவற்றிற்கு அங்கமாகியும் வரும். உறுவலி என்பது பெயரைச் சார்ந்து வந்தது. உறக்கொண்டான் என்பது வினையைச் சார்ந்து வந்தது. உறுவன் என்றவழிப் பெயர்க்கு அங்கமாயிற்று, என்று உரை வரைந்தார் தெய்வச்சிலையார். இதனின்றும் பெயர் வினை இடைகள் மெய்தடுமாறுவதும் எளிதாயுணரப்படும். மெய்தடுமாறல் வடிவந் திரிதல். சேவடி என்பதிற் பெயர் பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. ஒருப்பட்டான் என்பதிற் பெயர் வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. கண்ணன் என்பதிற் பெயர் பெயருக்கு அங்கமாயிற்று. (கடைக்) கணித்தான் என்பதிற் பெயர் வினைக்கு அங்கமாயிற்று. வார்கயிறு என்பதில் வினை பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. சாக்குத்தினான் என்பதில் வினை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. பாடகன் என்பதில் வினை பெயருக்கு அங்கமாயிற்று. வந்தான் என்பதில் வினை வினைக்கு அங்கமாயிற்று. தில்லைச்சொல் என்பதில் இடை பெயரைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. ஒல்ல ஒலித்தது என்பதில் இடை வினையைச் சார்ந்து மெய் தடுமாறிற்று. மற்றவன் என்பதில் இடை பெயருக்கு அங்கமாயிற்று. என்றான் என்பதில் இடை வினைக்கு அங்கமாயிற்று. இனி, ஒருசொற் பலபொருட் குரிமையும் பலசொல் ஒரு பொருட்குரிமையும் ஒவ்வோர் சொல்லிலுமுள்ள பலபொரு ளொருசொல்லும் ஒருபொருட் பலசொல்லுமாகும். வேழம் என்பது கரும்பு, மூங்கில், யானை என்று பலபொருள் படும் பலபொருளொருசொற் பெயர். வரைந்தான் என்பது எழுதினான், மணந்தான், நீக்கினான் என்று பல பொருள்படும் பலபொரு ளொருசொல் வினை. கொன் என்பது அச்சம், பயனின்மை, காலம், பெருமை எனப் பல பொருள்படும் பலபொரு ளொருசொல் இடை. தாவு என்பது வலி, வருத்தம் எனப் பலபொருள்படும் பலபொரு ளொருசொல் உரி. வேழம், கைம்மலை, ஓங்கல் என்பன யானையைக் குறிக்கும் ஒருபொருட் பலசொற் பெயர். நீக்கினான், அகற்றினான், விலக்கினான் என்பன ஒருபொருட் பலசொல் வினை. ஆ, ஏ, ஓ என்பன வினாப் பொருளில் வரும் ஒருபொருட் பலசொல் இடை. சால, உறு, தவ, நனி என்பன மிகுதிப் பொருளை யுணர்த்தும் ஒருபொருட் பலசொல் உரி. ஒருபொருட் பலசொல், பலபொரு ளொருசொல் என்பன திரிசொற்பாகுபாடுமாகும். ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி (தொல்.882). என்பது தொல்காப்பியம். ஆகவே மேற்கூறிய மூன்றும் உரிச்சொல் லிலக்கண மன்மை பெறப்படும். இனி உரிச்சொல் இலக்கணம் யாதெனின், பயிலாத வற்றை.... பொருள்வேறு கிளத்தல் (தொல்.சொல்.297) என்பதேயாம். இதற்கு, கேட்பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத் தின்கண் யாதானுமொரு சொல்லாயினும் வேறுவேறு பொரு ளுணர்த்தப்படும் என்றவாறு என்று சேனாவரையரும். பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின் என்பது உரிச்சொற்கள் தத்தம் மரபினாற் சென்று நிற்குமிடத்து. வழக்கின்கட் பயின்று நடவாத சொற் களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி எ-று. பயிலாத சொல் லாவன: உறு, தவ, நனி, பயின்ற சொல்லாவன: மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சேர்த்துதலாவது இச்சொற்கள் இச் சொல்லின் பொருள்படும் எனக்கூட்டுதல். எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல் என்பது தானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக எ-று என்று தெய்வச்சிலையாரும் உரை கூறியுள்ளனர். இதனால் உரிச்சொற்கள் வழக்கிற் பயிலாத சொற்களென்றும், அவை செய்யுட்கே யுரியவென்றும், அவற்றிற்கு இடம் நோக்கிப் பொருள்கொள்ள வேண்டுமென்றும், அவற்றுட் சில பகுதிப் பொருள் தராமற் பிறபொருள் தருமென்றும் அறிந்துகொள்க. உரிச்சொல் செய்யுட் சொல் என்பது உறு, கெழு, மல்லல், அலமரல், மழவு, கதழ்வு, கெடவரல், தட, நிழத்தல், துவன்று. முரஞ்சல், பொற்பு. பணைத்தல், பையுள், தெவ், சும்மை, கழும், விழுமம், கமம், கவவு, இலம்பாடு, வியல், நாம் (அச்சம்) வய, துய, உசா, வயா, நொசிவு, புனிறு, யாணர், யாணு, வை (கூர்மை), எறுழ் முதலிய உரிச்சொற்களைக் கண்ட வளவானே அல்லது கேட்ட வளவானே அறியப்படும். உரிச்சொற்கள் செய்யுட் சொற்கள் ஆனமைபற்றிய ஒவ்வோர் உரிச்சொல்லையும் தனித்தனி எடுத்துக் கூறிப் பொருள் கூறினர் ஆசிரியர். பெயர் வினை இடையென்ற மற்ற மூன்று சொற்கட்கும் இலக்கணம் மட்டுங் கூறியவர் உரிச்சொற்குத் தனித் தனிப் பொருள் கூறிச் செல்கின்றனர். அக்காலத்து அகராதி யின்மையால், செய்யுளில்வரும் அருஞ்சொற்கட்கெல்லாம் ஆசிரியரே பொருள் கூறவேண்டியதாயிற்று. நிகண்டுகளெல் லாம் நெடுங்காலத்திற்குப் பிறப்பட்டவையே. முதன்முத லெழுந்த நிகண்டு திவாகரம். பின்பு பிங்கலந்தை, சூடாமணி முதலிய நிகண்டுகள் தோன்றின. திவாகரத்தின் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு. தொல்காப்பியத்தின் காலமோ கிறித்துவுக்குப் பன்னூற்றாண்டு முந்தியதாகும். தொல்காப்பியக் காலத்தைக் கி.மு. பத்தாம் நூற்றாண்டென்றும், நான்காம் நூற்றாண்டென்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். ஆயினும், கிறித்துவுக்கு முற்பட்டதென்பது மட்டும் தேற்றமாகும். உரிச்சொல் செய்யுட்சொல் என்பதை அறிந்தே. பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் (நன்.442) என விளங்கக் கூறினர் பவணந்தியார். உரி என்பது உரிமை, உரிச்சொல் என்பது ஒன்றற்குரிய சொல். எதற்குரிய சொல் என்பதுமட்டும் குறிப்பிற் கூறினரேயன்றி வெளிப்படையாய்க் கூறிற்றிலர் தொல்காப்பியர். அதோடு ஒருசொற் பலபொருட் குரிமை, பலசொல் ஒருபொருட் குரிமை என உரிச்சொல் லிலக்கணச் சூத்திரத்தில் பிற சொற்றொடர்களோடு உரி என்னும் சொல்லைப் புணர்த்தது. அதன் சிறப்புப் பொருன் குன்றிச் சிலர்க்குக் கவர்படு பொருள் நிலையாகத் தோன்றற்குக் காரணமாயிற்று. நன்னூலில் செய்யுட் குரியன என்னும் ஒரே சொற்றொடரில் உரி என்னும் சொல்லைப் புணர்த்து அதன் சிறப்புப் பொருள் தோன்றச் செய்தார் பவணந்தியார். இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி என்று தொல்காப்பியத்திலும், பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி (நன்.442) என்று நன்னூலிலும் உரியென்னும் சொல்லைப் புணர்த்தாது உரிச்சொற் பொருட் பாகுபாடே அல்லது உரிச்சொல் நிலைக் களப் பாகுபாடே கூறியிருப்பதால், இசைகுறிப்புப் பண்பென் னும் பொருட்கு உரிய சொல் உரிச்சொல் என்று சேனாவரையர் கூறுவது பொருந்தாது. ஒரு சொற் பலபொருட் குரிமை, பல சொல் ஒருபொருட் குரிமை என்று தொல்காப்பியர் உரியென்ற சொல்லைப் புணர்த்துக் கூறிய சொற்றொடர்களையும், ஒரு குணம் பலகுணந் தழுவி என மாற்றிக் கூறினார் பவணந்தியார். இதனால் உரிச்சொல் செய்யுட்சொல்லே யென்பதை வெள்ளிடை மலைபோல் விளங்க வைத்தனர். தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களிற் கூறப்பட்ட உரியியலே செய்யுளகராதிகளான நிகண்டுகட்குத் தோற்றுவா யாகும். செய்யுளிற் சிறப்பாக வழங்கிப் பொருள் விளங்காத அருஞ்சொற்களையெல்லாம் தனித்தனியெடுத்துப் பொருள் கூறினர் முன்னை யாசிரியர். மக்கட்கு அறிவாற்றலும் நினை வாற்றலும் குறைந்த பிற்காலத்தில் மிகப்பல செய்யுட் சொற் கட்குப் பொருள் கூறவேண்டி யிருந்ததினாலும். அவையெல்லா வற்றையும் கூற ஓர் இலக்கண நூல் இடந்தராமையானும், அவற்றைக் கூறுதற்கென்றே நிகண்டு என்னும் நூல் எழுந்தது. ஒரு மாணாக்கன் செய்யுள் வழக்கான சிறப்புச் சொற்களையெல் லாம் முன்னமே யறிந்தானாயின் பின்பு செய்யும் நூல்களைக் கற்கும்போது பொருளுணர்ச்சி எளிதாயிருக்கும். இதனால் செய்யுட் சொற்களிற் பெரும்பாலானவற்றை மாணாக்கர் மனப்பாடம் செய்ய வைத்தனர் பண்டைக் கணக்காயர். இதே நோக்கத்துடன்தான் நிகண்டுகளும் எழுதப்பட்டன. மக்கட்கு இளமையில் நினைவாற்றல் மிக்கிருப்பதால் அதைப் பயன் படுத்தக் கருதியே மாணாக்கர்க்கு நிகண்டுகளை மனப்பாடஞ் செய்வித்தனர். நிகண்டுகள் நிறைவும் விளக்கமும் பற்றி வரவர நீண்டு வந்தன. திவாகரத்தினும் பிங்கலமும், பிங்கலத்தினும் சூடாமணியும் நீண்டிருத்தல் காண்க. நிகண்டுகள் செய்யுட் சொற்களைக் கூறுவனவேயன்றி உலகவழக்குச் சொற்களைக் கூறுவனவல்ல. இற்றைய அகராதிகளே இருவகை வழக்குச் சொற்களையும் எடுத்துக் கூறும். நிகண்டுகள் உரிச்சொல் லகராதிகள் அல்லது செய்யுட்சொல் லகராதிகள் என்பதை. இன்ன தின்னுழி யின்னண மியலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம் நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே (நன்.460). என்னும் நன்னூல் உரியியற் புறனடைச் சூத்திரத்தானு முணர்க. உரிச்சொல் நிகண்டு என்றே ஒரு நிகண்டுமுள்ளது. அகராதி என்பது அகரமுதற் சொற்களைக் கூறுவதென்றே பொருள் படினும், இனவிலக்கணமாக நிகண்டிற்கும் பெயராகக் கொள்ளப்படும். இங்ஙனம் உரிச்சொல் செய்யுட் சொல்லாயிருக்கவும். உரிச் சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப் படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே ஒருசொற் பலபொருட்குரிமை தோன்றினும். பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர். எழுத்ததி காரத்துள் இதனைக் குறைச்சொற் கிளவி என்று ஓதினமையால், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவை யென்று கொள்ளப்படும். அவையும் குறைச்சொல்லாதலான். அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின். வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (சூ.2) என்றாராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்கள் ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க. தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின், அவ் விருசொற்கும் m§fkh....ண்L¡ கூறப்படுகின்றன என்றார் தெய்வச்சிலையார். இதையே சிவஞான முனிவருந் தழுவினர். உரிச்சொல் தாது (வினைப்பகுதி) ஆயின் தாதுவைக் குறியாது அலமரல், தெருமரல், கூர்ப்பு, வார்தல் என்று தொழிற் பெயர் களை ஏன் குறித்தல் வேண்டும்? தொழிற்பெயர் தமிழில் தாதுவைக் குறிக்கும் வகையில் ஒன்றென்று கூறின். குரு, மல்லல், மழவு, பண்ணை, வம்பு, தெவ், நாம், வாள், எறுழ் முதலிய பெயர்ச்சொற்கள் ஏன் காட்டப்படுகின்றன? பெயர்ச் சொற்கட்குப் பிரதிபதிகமே யன்றித் தாதுவின்றே! இனி, வினைச்சொற்களுள்ளும் பகுதிப்பொருள் ஒன்றும், உரிச்சொற் பொருளொன்றுமா யிருத்தலின், பகுதியைக் கூறி என்ன பயன்? செல்லல் என்னும் தொழிற்பெயர் உரிச்சொல்லாகி இன்னா மையை உணர்த்தும்; செல் என்னும் பகுதி போதலையே உணர்த்தும். கருவி என்னும் தொழிற்பெயர் உரிச்சொல்லாகித் தொகுதியை உணர்த்தும்; கரு என்னும் பகுதி கருத்தலையே உணர்த்தும். எய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் உரிச்சொல்லாகி அறியாமையை உணர்த்தும்; எய்தல் என்னும் உடன்பாட்டு வினை அம்புவிடுத்தலையே உணர்த்தும் இதை. அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும், எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின், எய்யாமை எதிர்மறை யன்மையறிக என்னும் சேனாவரைய ருரையானு மறிக. உலக வழக்கினுள்ளும் உடன்பாட்டி லொன்றும் எதிர் மறையி லொன்றுமாக வெவ்வேறு பொருள்படும் வினைகளுள. எ-டு: உடன்பாடு எதிர்மறை பொறுமை (patience) பொறாமை (jealously) தொல்காப்பிய எழுத்ததிகார ஈற்றயற் சூத்திரத்தில், குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி (தொல்.எழுத்து. 482). என்றதனை வினைப்பகுதியென்றும் உரிச்சொல்லென்றும் கூறினார் தெய்வச்சிலையார். நச்சினார்க்கினியரும் தம் உரையில், குறிப்பினானும் பண்பினானும் இசையினானும் பிறந்து, ஒரு வழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச் சொற்களும் என்றே முற்கூறினாரேனும். கண் விண்ண விணைத்தது, விண் விணைத்தது. இவை குறிப்புரிச் சொல்; ஆடை வெள்ள விளர்த்தது. வெள்விளர்த்தது. இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல ஒலித்தது, ஒல்லொலித்தது. இவை இசையுரிச்சொல். ஒல்லொலி நீர் பாய்வதே போலுந் துறைவன் என்றார் செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்க லாகாமையின் நெறிப்பட வாரா என்றார். விண்ண விணைத்தது தெறிப்புத் தோன்றத் தெறித்த தென்றும், விண்விணைத்தது தெறிப்புத் தெறித்ததென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. வினையே குறிப்பே (சொல். 258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றோடு கூட்டியவழி இடைச்சொல்லாதலின் விண்ணென விணைத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க என்று பிற்கூறியதிலிருந்து, சூத்திரத்திற் குறைச்சொற் கிளவியெனக் குறித்தது இடைச் சொல்லே யென்றும், விண்ண, வெள்ள என்று குறையாய் நிற்றலின் குறைச்சொற் கிளவியெனப்பட்டதென்றும் அறிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் குறைச் சொற்கிளவி என்னும் பெயரால் வினைப் பகுதியையே குறித்திருப்பாராயின், எச்சவியலில், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூவகைக் குறைகளைக் குறிக்குமிடத்து. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல் எனச் சூத்திரம் செய்திரார். குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல என்னும் அடுத்த சூத்திரத்தினால் மூவகைக் குறைகளும் பெயர்ச் சொற்களே யென்பது பெறப்படும். ஆகையால், குறைச்சொல் என்பது குறைந்த சொற்கட்கெல்லாம் பொதுப்பெயரேயன்றி வினைப்பகுதிக்கே யுரிய சிறப்புக் குறியீடு அன்றென்பது தெரிந்துகொள்க. உரிச்சொல்லென்பது வினைப்பகுதியேயாயின், வேற்றுமை மயங்கியலுள், வினையே செய்வது என்னும் சூத்திரத்தில் வினை என்பதனாலும், எச்சவியலுள். செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே (தொல்.சொல்.593) என்னுஞ் சூத்திரத்தானும் வினைப்பகுதியைத் தொல்காப்பியர் குறித்திருத்தலின், அதை மீண்டும் உரியியல் என்றோரியலிற் கூறுவது கூறியது கூறலாமென்க. இனி, வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. (தொல்.சொல்.783) என்று தொல்காப்பியர் உரிச்சொல்லை வெளிப்படு சொல், வெளிப்படாச் சொல் என இருவகைப்படுத்தியிருப்பதால். உரிச்சொல் வெளிப்படாச் சொல்லாகவேயிருக்கின்ற செய்யுட் சொல்லன்று எனக் கூறுவர் சிலர். உலகத்திற் பல வகுப்பாருக்குள்ளும் பல குழூஉக்குறிகள் வழங்கி வருகின்றன. ஒரு குழுவினைப் பிறர்க்குத் தெரியாவண்ணம் மறை பொருளனவாகத் தமக்குள் வழங்கிக்கொள்ளும் குறிகளே குழூஉக்குறியாகும். ஆயினும் நாளடைவில் சில குழூஉக் குறி களின் பொருள்கள் பிறர்க்கு வெளியாகிவிடுகின்றன. அங்ஙனம் பொருள் வெளியான குழூஉக்குறிகள் உண்மையில் குழூஉக்குறி யென்றே கூறப்படுகின்றன. கள்ளைக் குறிக்கும் குதிரை யென்னுஞ் சொல்லும், பொன்னைக் குறிக்கும் பறியென்னுஞ் சொல்லும் எல்லாரானும் பொருளறியப்படினும் இன்னும் குழூஉக்குறி யாகவே கூறப்படும். அதுபோலச் செய்யுட் சொற்களான உரிச் சொற்களும் பொருளறியப்பட்ட பின்னும் உரிச்சொல்லெனவே படும். ஆனால், உலக வழக்கிற்கு வந்தவைமட்டும் உரிச்சொல் லாகா. சொற்கள் வழக்கு மிகுதிபற்றிப் பொருளறியப்படுவதும், வழக் கின்மைபற்றிப் பொருளறியப்படாமையுமுண்டு. வழக்குக் காலந்தோறும் மாறிக்கொண்டேயிருக்கும். தொல்காப்பியர் தம் காலத்தில் உலகவழக்கில் வழங்காதனவாகக் குறிக்கின்ற பசப்பு, அதிர்வு, தீர்தல், பழுது, முழுது, செழுமை, சேர் முதலிய சொற்கள் இக்காலத்துப் பெருவழக்காக வழங்குகின்றன. தொல்காப்பியர் காலத்தில் இவை வழங்கியிருப்பின் இவற்றுக்குப் பொருள் கூறியிரார். இனித் தம் காலத்தில் புதிதாய் வழங்கினவாக அவர் கூறும் கடுவன். கோட்டான், தத்தை, பூசை முதலிய ஏழு சொற்களில், கோட்டான், பூசை என்னுமிரண்டே இக்காலத்து வழங்குகின்றன. ஏனைய வழக்கிறந்தன. பூசை என்பது இக் காலத்துப் பூனை என வழங்குகின்றது. ஆகையால், தொல்காப்பியர் கூறிய உரிச்சொற்களெல்லாம் அக்காலத்துச் செய்யுட் சொற்களாயிருந்தன வென்றும், அவற்றுட் சில இக்காலத்து உலக வழக்கில் வழங்குகின்றன வென்றும், அவை இக்காலத்து உரிச்சொல்லாகாவென்றும் அறிந்துகொள்க. இனி, உரிச்சொல்லென்பது எல்லோர்க்கும் பொருள்விளங்காத செய்யுட் சொல்லாயின், திரிசொல் என்பதும் எல்லோர்க்கும் பொருள் விளங்காத செய்யுட் சொல்லாயிருத்தலின் உரிச்சொல் லாமோ வெனின், கூறுதும்: இயற்சொல், திரிசொல் என்பன இயல்பாய்ப் பொருளுணர்த்தும் சொல். இயற்சொற் றன்மையினின்றுந் திரிந்து அரிதாய்ப் பொருளுணர்த்தும் சொல் எனப் பொதுவாய்ப் கூறப்படினும், சொற்பொருள் நோக்கின் இயல்பான சொல் (Primitive word), இயல்பான சொல்லினின்றும் திரிந்த சொல் (Derivative) என்றே கூறற்கேற்றன. இது திரிசொற் சூத்திரத்திற்கு. 1. திரிசொல்லாவது உறுப்புத்திரிதலும் முழுவதும் திரிதலுமென இரு வகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்ப உறுப்புத்திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன.... திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் என்பதனாற் பெறவைத்தார் என்று சேனாவரையர் கூறிய உரையானும், இதையொட்டி நச்சினார்க்கினியர் கூறிய உரையானும் உணரப்படும். உரிச்சொல் செய்யுட் சொல்லாகவே யிருத்தலானும், ஓர் இலக்கண வகைச் சொல்லன்மையானும், பெயர், வினை, இடை என்னும் முச்சொல்லாயு மிருத்தலானும், பிரயோகம்பற்றியே இன்ன சொல்லெனக் கூறப்படுவதாகும். தொல்காப்பியர் எச்சவியலுள். இடைச்சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லை விசேடிக்கும் கொல்லே என்னும் பொருளில். இடைச்சொல் லெல்லாம், வேற்றுமைச் சொல்லே என்று சூத்திரத்து. இப்பொருளை உரிச்சொல்லும் ஒருபுடை தழுவும்படி அதையடுத்து. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய என்று கூறினார். இதற்குச் சேனாவரையர். உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லாதற்கும் உரியன உரியவாம்: எல்லாம் உரியவாகா என்றவாறு. எனவே, உரிச்சொல் லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப்பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். வேறுபடுக்குஞ் சொல்லே யாவன உறு, தவ, நனி என்னுஞ் தொடக்கத்தன. இருநிலைமையுமுடையன குரு. கெழு, செல்லல், இன்னல் என்னுஞ் தொடக்கத்தன. உறுபொருள், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு, கேழ்கிளரகலம், செங்கேழ்: செல்லனோய், அருஞ்செல்லல், இன்னற் குறிப்பு. பெயரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இரு நிலைமையுடையவாய் வருமாறும். வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குருவிளங்கிற்று; செல்லறீர எனத் தாமே நின்று வினை கொள்வன, விசேடிக்கப்படுந் தன்மை யுடையவாதலின், விசேடிக்கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித்தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடியாதும் வருவனவும், வழக்குஞ் செய்யுளு நோக்கியுணர்க என்று உரை கூறினர். இதனால், உரிச்சொல் என்பது பெயராகவும் வினையாகவும். அவற்றிற்கு அடையாகவும் வருமென்றும், பெயருக்கு அடை யாங்கால் குறிப்புப் பெயரெச்சம் போல்வதென்றும், வினைக்கு அடையாங்கால் குறிப்பு வினையெச்சம் போல்வதென்றும், பெயருரிச்சொல் வினையுரிச் சொல் என்னும் இரு வகையுள் எல்லா வுரிச்சொல்லும் அடங்காவென்றும் அறிந்துகொள்க. இதுகாறுங் கூறியவாற்றால் உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே யென்றும். அதற்குப் பிறவாறு கூறலெல்லாம் போலி யுரையென்றும். உரிச்சொல் ஓர் இலக்கணவகைத் தனிச்சொல் லன்றென்றும், அது பிரயோகத்திற்கேற்ப இன்ன சொல்லென்று கூறப்படுமென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க. ( செந்தமிழ்ச் செல்வி கடகம் 1935) உரிமைப்பேறு ஒருவர்க்கு உரியது உரிமை. அது புறவுடல் பற்றியதும் அகவுடல் பற்றியதும் ஆக இருதிறப்படும். முன்னது எல்லார்க்கும் பொது: பின்னது பண்பட்ட மக்கட்கே சிறப்பு. மாந்தர்க்கு ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அல்லது சிற்சில உரிமைகள் தேவை. அவை நீர்வேட்கையும் உணவு வேட்கையும் போன்றவை. அவற்றை முயன்றோ, பிறரை வேண்டியோ, அவரோடு போராடியோ, பெறல் வேண்டும். இருதிற வுரிமைகளும் பின்வருமாறு ஐவகைப்படும். 1. வளர்வுரிமை கணவன் மனைவியரின் இன்பக் கூட்டத்தோடு பிள்ளைப்பேறு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால், பெற்றோர் விரும்பினும் விரும்பாவிடினும் பெரும்பாலும் பிள்ளைகள் பிறந்துவிடு கின்றன. நிலத்தில் விதைத்த விதை முளைத்தல் போன்றே பிள்ளைப்பேறும் இருப்பதால், கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி (30) என்று நாலடியார் கூறுவது பொருந்தாது. பிள்ளைகள் பெற் றோர் வினையாலேயே பெறப்படுவதால், அவற்றை வளர்ப்பது அவர் கடமையும், அவரால் வளர்க்கப்படுவது அவற்றின் உரிமையும், ஆகின்றது. எம்மைக் கேளாது ஏன் பிறந்தாய்? என்று, பெற்றோர் தம் பிள்ளை வளர்ப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. குழவி பிறந்தவுடன் உணவிற்கு அழுவதே, ஓர் உரிமை வேட்கை யும் அதைப் பெறும் முயற்சியும் ஆகின்றது. சில சமயங்களில் தாய் வீட்டு வேலையில் ஆழ்ந்திருக்கும்போது, உரிய வேளையில் தன் சேய்க்குப் பால் கொடாதிருப்பதும் உண்டு. அவ்வேளையில் குழந்தையின் அழுகையொலி கேட்டுத் தாய் பால் கொடுப்பது வழக்கம். அதனால், அழுதபிள்ளை பால் குடிக்கும் என்னும் பழமொழியும் எழுந்தது. குழவிப் பருவத்திலும் குழந்தைப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் வளர்ப்பதும், பையற் பருவத்திலும் இளமட்டப் பருவத்திலும் உணவளித்துக் காப்பதோடு ஓர் அலுவற்கோ தொழிலுக்கோ பயிற்றுவிப்பதும், பருவம் வந்தபின் மணஞ் செய்து வைப்பதும், பெற்றோரின் கடமையாம். அந்நன்மை களைப் பெறுவது பிள்ளைகளின் உரிமையாம். கைத்தொழிற் பயிற்சியினுங் கல்விப் பயிற்சி சிறந்ததாதலாலும், இருவகைப் பயிற்சியும் ஒருங்கே பெறுதலுங் கூடுமாதலாலும், தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். (குறள்.67) ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள்.69) என்று திருவாய்மலர்ந்தார் திருவள்ளுவர். 2. வாழ்வுரிமை ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்குக் கல்விப் பயிற்சி அல்லது தொழிற் பயிற்சி, வேலைப்பேறு, பாதுகாப்பு - இம் மூன்றும் இன்றியமையாதன. ஒரு குடும்பத்திற் பிறந்தவனுக்கு எங்ஙனம் வளர்வுரிமையுண்டோ, அங்ஙனமே ஒரு நாட்டிற் பிறந்தவனுக்கு வாழ்வுரிமையுண்டு. அதற்குரிய மூன்றையும் அளிக்கக் கூடியதும் கடமைப்பட்டுள்ளதும், ஆளும் அரசே. பயிற்சியின்றி எவ்வேலையும் பெறவும் செய்யவும் இயலாதாகை யால், நாட்டிற் பிறந்தவர்க்கெல்லாம். அவரவர் திறமை,விருப்பம், உடற்கூறு, மனப்பான்மை, மதிவன்மை முதலியவற்றிற்குத் தக்கவாறு, வெவ்வேறு துறையிற் பயிற்சியளித்தல் வேண்டும். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். ஆதலால், முதற்கண், நாலகவைக்கு மேற்பட்ட எல்லாப் பிள்ளை கட்கும் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியளித்தல் வேண்டும். எந்த அமைப்பும் நிலையாகவும் உறுதியாகவும் இருத்தற்கு அடிப்படை அகன் றிருத்தல் வேண்டும். இன்றேல், மேற்படை குலைந்துபோம். விளையும் பயிர் முளையில் தெரியும். ஆதலால், துவக்கப் பள்ளிக் கல்விப் பருவத்திலேயே, பெற்றோரும் ஆசிரியரும் பிள்ளைகளின் திறமையையும் மனப்பான்மையையும் கூர்ந்து நோக்கியறிந்து, அகக்கரண வலிமை விஞ்சியவரை மேற்கல்விப் பயிற்சிக்கும், புறக்கரண வலிமை விஞ்சியவரைத் தொழிற் பயிற்சிக்கும், அனுப்புதல் வேண்டும். மேற்கல்விப் பயிற்சியிலும், அன்பும் தொண்டு மனப்பான்மையும் உள்ளவரை மருத்துவக் கல்விக்கும் நாவன்மையும் நினைவாற்ற லும் நடுநிலையும் உள்ளவரைச் சட்டக் கல்விக்கும், ஓவிய வரைவாற்றலும் புதுப்புனைவுத் திறனும் கணித மதியும் உள்ள வரைப் பொறிவினை அல்லது சூழ்ச்சியவினைக் கல்விக்கும். இடைவிடாப் படிப்பும் எடுத்து விளக்குந் திறனும் உள்ளவரை ஆசிரியப் பயிற்சிக் கல்விக்கும், வளர்த்தியும் உடல் வலிமையும் அஞ்சாமையும் துணிசெயல் மறமும் உள்ளவரைப் படைத் துறைக் கல்விக்கும், இன்குரலும் இசைவிருப்பும் நீள்விரலும் உள்ளவரை இசைக்கல்விக்கும், தெய்வப்பத்தியும் தூயவொழுக்க மும் மறைநூல் விருப்பும் உள்ளவரை மதவியற் கல்விக்கும், இவ்வாறே பிற துறைகட்கும் தெரிந்தெடுத்தல் வேண்டும். கல்லூரிகளில் இடமில்லாவிடின், புதுக்கல்லூரிகளைத் தோற்று வித்தல் வேண்டும். காரைக் கட்டடம் இல்லாவிடின் கூரைக் கட்டடத்திலேனும் தொடங்குதல் வேண்டும். கணிதம் வேண்டியவனை வரலாற்று வகுப்பிலும், மருத்துவப் பயிற்சி விரும்புபவனைச் சட்டக் கல்லூரியிலும், இங்ஙனமே ஏனைத் துறைகளிலும் தாறுமாறாகச் சேர்ப்பது, வண்டியிற் கட்டவேண்டிய காளையை வீட்டுக் காவற்கும், வீட்டுக் காவற் குரிய நாயை இறைவையேற்றத்திற்கும், பொதி சுமக்க வேண்டிய கழுதையை ஊர்வலத்திற்கும், ஊர்வலத்திற்குரிய யானையை நரகல் வண்டிக்கும், வைப்பதும் கட்டுவதும் அமர்த்துவதும் போன்றதே. தொழிற்பயிற்சியாயினும் மேற்கல்விப் பயிற்சியாயினும், பயிற்சி பெற்ற எல்லாரும் வேலைக்குரியர். பலருக்கு வேலையில்லை யென்று கைவிரிப்பது பொறுப்பாட்சியன்று. மக்கள்தொகை மிக்கிருப்பின், அதைப் பல்வேறு வழிகளில் மட்டுப்படுத்தலாம். ஆயின். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (குறள்.1062) என்று திருவள்ளுவர் இறைவன் மீதே வசை பாடியிருத்தலை நோக்குக. மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிய இக்காலத்தில், தனியுடைமை யாட்சிக்கு இடமின்றேல், அளவுடைமையாட்சியும். அதுவும் போதாதெனின் கூட்டுடைமையாட்சியும், இன்றியமையாதன வாம். ஒரு நாட்டிற் பிறந்து வேலைப் பயிற்சி பெற்ற எல்லார்க்கும் குலமதக் கட்சி வேறுபாடின்றித் திறமைக்கேற்றவாறு வேலை யளிப்பதே கூட்டுடைமையாட்சியாம். அதுவே இரசியாவிலும் சீனாவிலும் இன்று இருந்துவருவது. அதைப் பொதுவுடைமை யாட்சியென்பது தவறு. பொதுவுடமையாட்சி பணமின்றிக் குடும்ப வாழ்க்கைபோல் நடப்பது. அது ஒரு நாட்டிற்கு ஏற்காது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள்.302) என்று அக்காலத்திலேயே திருவள்ளுவர் கூறியிருத்தல் காண்க. அளவுடைமையாட்சி யெனினும் வரம்புடைமையாட்சி யெனி னும் ஒக்கும். இனி, குருடர் முடவர் முதலியோர் ஐயம் (பிச்சை) பெறுவதும், வறிய நாடுகள் செல்வ நாடுகளினின்று உதவி பெறுவதும் வாழ்வுரிமையின்பாற் படுவதே. 3. விடுதலையுரிமை தனிப்பட்ட அடிமை தன் தலைவனிடத்தினின்றும், பண்ணை யாள்கள் தம் ஆண்டையினின்றும், ஒரு குலத்தார் இன்னொரு குலத்தாரினின்றும், ஒரு நாட்டார் இன்னொரு நாட்டாரி னின்றும், விடுதலை பெறுவது விடுதலையுரிமையாம். ஆடவர்போற் கல்வி பெறுவதும் தேர்தல்களிற் குடவோலையிடு வதும், அலுவலகங்களில் ஆடவருடன் வேலை செய்வதும், கணவன் இறந்தபின் கைம்மை (கைம்பெண்) வாழ்வு வாழ்வதும் மறுமணம் செய்து கொள்வதும், பெண்டிர் பெற வேண்டிய உரிமைகளாம். குலக் கட்டுப்பாடும் பெற்றோர் தடையும் மீறிச் சிறந்த முறையில் உலகம் போற்றுமாறு கூடி வாழ்வது, மணமக்கள் உரிமையாம். இனி, கட்சித் தலைவர்க்குரியது பேச்சுரிமை: எழுத்தாளருக்கும் நூலாசிரியருக்கும் உரியது எழுத்துரிமை: ஒருவன் தன் தாய் மொழியிற் பேச இடமிருப்பது மொழியுரிமை; ஒரு வகுப்பார் ஒருவகை உணவையுண்ணச் சட்டத் தடையில்லா திருப்பது உணவுரிமை. இனி, தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமான உலக முதல் உயர்தனிச் செம்மொழியாதலால் அனைத்திந்திய ஆட்சி மொழியாகத் தமிழும் அமைவது தமிழரின் மொழி யுரிமையாம். 4.பொதுநலவுரிமை தனி வாழ்க்கையில் ஒருவன் எவ்வளவும் ஈட்டலாம்; எங்குஞ் செல்லலாம். ஆயின், கூட்டு வாழ்க்கையில், பொதுநலம்பற்றிப் பற்பல கட்டுப்பாடுகளும் வரம்பீடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை தனிவாழ்க்கையில் உரிமைத் தடையேனும், கூட்டு வாழ்க்கையில் உரிமையேயாம். இரு பிள்ளைகட்குமேற் பெறக்கூடாதென்பது பிள்ளை வரம்பீடு: பதினைந்து செய்கட்குமேல் நிலம் வைத்திருக்கக் கூடா தென்பது, செல்வ வரம்பீட்டில் ஒருவகையான நிலவரம்பீடு. இவையெல்லாம், ஒரு மாநகரிற் பகல் வேளையில் போக்குவரத்து மிக்க இடத்தில், ஒருவன் ஒரு சாலையின் குறுக்கே செல்லக் கூடாதென்பது போன்றவையே. 5. மதவுரிமை உலகிற் காணப்பட்ட பொருள்களைப் பற்றியும் கருத்து வேறு பாடிருக்குமாறு. மக்கள் மனப்பான்மை பல்திறப் பட்டுள்ளது. ஆகவே, காணப்படாத கடவுளைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் கருத்து வேறு பாட்டிற்கு எத்துணை யிடமுண்டென் பதைச் சொல்லவே வேண்டுவதில்லை. மதநம்பிக்கையெல்லாம் ஏரண முறைக்கும் அறிவியல் மெய்ப்பிப் பிற்கும் அடங்காது. அப்பாற்பட்டு, ஓரளவு குருட்டுத்தன மாகவோ குரங்குப் பிடியாகவோ இருப்பினும், உயிர்வாழ்வை யும் பொருட்படுத்தாத அளவிற்கு மக்கள் மனத்தை இறுகப் பிணிக்கும் செய்திகளுள் தலைசிறந்தது மதமாதலால், பண்பாடு மிக்க செங்கோலரசெல்லாம், தம் குடிகட்கு மதவுரிமை யளித்தேயுள்ளன. நம் இந்தியக் குடியரசு பன்னாட்டுக் கூட்டாட்சியாதலால், மதவுரிமை யளித்திருப்பது மிகத் தக்கதே. இனி, சிவமதமும் திருமால் மதமும் தென்னாட்டுத் தூய தமிழ் மதங்களாதலால், இனிமேல் தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில், பயிற்சி பெற்ற பல்வகைத் தமிழ் வகுப்பாரே, தமிழில் மட்டும் வழிபாடாற்றுதல் வேண்டும். இது தமிழர் மதவுரிமையாகும். பிராமணர் வெளிநாட்டினின்று வந்தேறிகளின் வழியினரா தலாலும், சிறுபான்மையராதலாலும், தமிழையே தாய்மொழி யாகக் கொண்டிருப்பதாலும். ஆரியம் திரவிடத்தின் திரிபாதலா லும், ஆரிய மந்திரங்களெல்லாம் தமிழர் அறியாத சிறுதெய்வக் கொலைவேள்வி வழிபாடு பற்றியனவாதலாலும், சமற்கிருதம் வேதமொழியும் தமிழுங் கலந்த இலக்கிய மொழியாதலாலும், ஆரியமொழி தேவமொழியென்றும் பிராமணர் நிலத்தேவரென் றும் ஏமாற்றப்பட்டதனாலேயே, இடைக்காலத் தமிழர் பிராமணர் ஆரிய மந்திரங்களைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு செய்ய இடந்தந்தனரா தலாலும். அவ் வேமாற்று இன்னுந் தொடர இம்மியுந் தகுதி யில்லை என அறிக. பிராமணர் தமிழுக்கு உண்மையாயிருந்து தமிழிலேயே வழிபாடு நடத்தின், அவர் பூசைத் தொழிலைத் தொடர்ந்து செய்யலாம். இதுகாறும் உயர்திணையான மக்களின் பல்வேறு உரிமைகள் கூறப்பட்டன. இனி, வாயில்லா ஏழை அஃறிணை உயிரினங்கள் சிலவற்றின் உரிமையை நாம் நமதுபோற் பேண வேண்டாவா? அதையும் பேணாவிடின், நாம் உயர்திணையென்று தருக்குவது எங்ஙன் தகும்? மாடுகளும், குதிரைகளும், ஏருழவும் நீரிறைக்கவும் வண்டியிழுக் கவும், இரவும் பகலும் வற்புறுத்தப்பட்டு, போதிய வுணவின்றியும் முரட்டுத் தனமாக அடியுண்டும் குத்துண்டும், புண்மேற் புண்பட்டும் எத்துணைத் துன்பப்படுகின்றன! அவை எங்ஙன் யாரிடம் முறையிடும்? எங்ஙனம் மாநாடு கூடும்? எங்ஙனம் கூட்டணி சேரும்? எங்ஙனம் வேலை நிறுத்தஞ் செய்யும்? உண்ணாநோன்பினாலும் வன்செயலாலும் தம் தொல்லை களையும் துன்பங்களையும் தெரிவிக்கவோ தீர்த்துக் கொள்ளவோ இம்மியும் அவற்றிற்கு இடமில்லையே! மக்களிடத்து அன்பு செய்ய வேண்டுமென்றும், மற்ற வுயிர்க ளிடத்து அருள்பூண்டொழுக வேண்டுமென்றும், ஆயிரக்கணக் கான பனுவல்களும் நம்மிடத்துள்ளன, இருந்தும் என்ன பயன்? அமெரிக்கரும் மேனாட்டாரும் நம்போல நடிக்காவிடினும், பொறிவினைப் புரட்சியை உண்டுபண்ணி எல்லா வினைகளை யும் சூழ்ச்சியத் துணைகொண்டே செய்துவருவதால், குதிரையின மும் கழுதையினமும் முற்றும் விடுதலை பெற்றுள்ளன. மாட் டினம் உணவிற்கன்றி வேறெவ் வகையிலுங் கொல்லப்படுவ தில்லை. நாமும் மேலையர்போற் பொறிவினைப் புரட்சியை யுண்டாக்கி, மேற்கூறிய விலங்கினங்களின் உரிமையைக் காப்போமாக. (உரிமை வேட்கை பொங்கல் மலர் 1973.) உரிமை வழி மக்களுக்குத் தலைமுறை தலைமுறையாய் உரிமை தொடர்ந்து வரும்வழி தந்தைவழி தாய்வழி அல்லது மகன்வழி மகள்வழி என இரண்டாம். இவற்றுள் தாய்வழியே பழந்தமிழ் நாட்டில் வழங்கி வந்த தென்பதற்குத் தாயம் என்னும் பெயரே சான்றாம். தாய்வழிப் பெறுவது தாயம். தந்தைவழி அல்லது மகன்வழி ஆண்வழியும், தாய்வழி அல்லது மகள் வழி பெண் வழியும் ஆகும். ஆத்திரேலியா என்னும் தென் கண்டத்தில் பெண்வழி உரிமையே இருந்து வருவதாகச் சொல்லப்படுகின்றது. மகள் பெறுவது மருமகனுக்கே உரியது ஆதலால் மகள்வழித் தாயம் மருமக்கள் தாயம் எனப்படும். ஒருவனது சொத்தை அவனுடைய உடன்பிறந்தாளின் ஆண்மக்கள் அடைவதெனச் சொல்லப்படும் மருமக்கள் தாயம் மலையாள நாட்டில் இன்றும் வழங்கி வருகின்றது. சோழ பாண்டிய நாடுகளில் மக்கள் தாயம் வழங்கிவர சேர நாடாகிய மலையாளத்தில் மட்டும் மருமக்கள் தாயம் வழங்கி வரக்காரணம் அந்நாடு குடமலையால் பிரிக்கப் பட்டிருப்பதும், நெடுங்காலமாக ஏனையிரு தமிழ்நாடு களுடனும் தொடர்பு கொள்ளாமையுமே. மருமக்கள் தாயமே பண்டைத் தமிழ் நாட்டில் வழங்கி வந்தமை யால் வழித்தோன்றல் மருகன் எனப்பட்டான். இப்பெயர் மருமகன் என்பதன் மரூஉ. (சொல்.21,22.) உரு உகு1-உஷ் (இ.வே.) உகுத்தல் = சிந்துதல், சிதறுதல், தெளித்தல். (வ.வ:90.) உரு: உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம். வடிவம், வடிவுடைப் பொருள், தனிப்பொருள் (உருப்படி), வடிவம் போன்ற இயல் வரம்பு. உரு-உருவு-உருவம்-ரூப (வ.) உருவு-உருபு = வேற்றுமை வடிவம், அவ்வடிவு குறித்த எழுத்து அல்லது அசை அல்லது சொல். (தி.ம:738) உரு2-ருஹ் (இ.வே.) cU¤jš = Kis¤jš (âth.), தோன்றுதல். உரு-அரு-அரும்பு. அரும்புதல் = தோன்றுதல். Uà = Kis, jË® (ï.nt.), உரு-உருத்து-ருத் (rudh) = to sprout, shoot (இ.வே.). (வ.வ:93-94) உருத்திரம் உருத்திரம் - ருத்ர உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்ப நூறி (புறம். 25:10). 2, சினத்தல். ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று (பு.வெ.3:2) 3. பெருஞ்சினங் கொள்ளுதல். ஒருபக லெல்லா முருத்தெழுந்து (கலி. 39:23). உரு-உருத்திரம் = சினம். Os wreth, OE wrath, E wrath, wroth, OHG reid, ON reithr (வ.வ:94) உருவம் cUt«-%g (ï.nt.)-rupa. உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம், வடிவுடைப் பொருள், உடல். உரு-உருவு-உருவம். உருவு-உருபு-வேற்றுமை வடிவம், அதைக் குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது சொல். ஒ.நோ: அளவு-அளபு. உருப்படி = உருவின்படி, தனிப்பொருள். உருப்போடுதல் = அக்கு, மணி முதலிய உருக்களை எண்ணி மந்திரம் ஓதுதல், அதுபோற் பன்முறை நவின்று (சொல்லி) மனப்பாடஞ் செய்தல். வேற்றுமை யுருபு என்பது, ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்திய தலைக்கழகக் காலத்திலேயே தோன்றிய தமிழிலக்கணக் குறியீடெனவறிக. rupa என்னுஞ் சொல்லை rup என்று குறுக்கி வினையாகவும் ஆள்வர் வடவர். (வ.வ:94) உருளை உல்-உலம் = 1. உருட்சி. 2. திரட்சி. உலங்கொள் சங்கத்தார்கலி (தேவா.112:8). 3. திரண்டகல். உலஞ் செய்த வைரக்குன்ற மோரிரண் டனைய தோளான் (சீவக. 2915). உலம் வருதல் = 1. சுழலுதல். 2. நெஞ்சு உழலுதல். உயிர்க்கு முசாஅ முலம்வரும் (கலித்.145:4). உலம் வருதல்-உலமருதல் = மனஞ் சுழலுதல். கலங்கி வருந்துதல், துன்புறுதல். புலம்பியா முலமர (கலித்.83:2). உலம்வரல்-உலமரல் = துன்பம் (சூடா.) உலமால்-அலமரல் = சுழற்சி. அலமால் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி (தொல்.உரி.13). உலம்-அலம் = 1. சுழற்சி. 2. துன்பம். அலமகன் முத்தியுண்டாம். (சூத. எக்கிய. பூ.2:8) உல்-உல-உலப்பு-அலப்பு = மனக்கலக்கம். அலப்பா யாகாசத்தை நோக்கி (திவ்.திருவாய். 5:8:4) உல-உலக்கை = 1. உருண்டு நீண்ட உரற்குற்றுக் கருவி. மிளகெறி யுலக்கையின் (பதிற்றுப்.41). 2. உலக்கைபோன்ற போர்ப் படைக்கலம். உலக்கை சூலம் வேல் (கந்தபு. சதமுகன்.15). 4. உலக்கை வடிவான ஓண நாண்மீன். (பிங்.) 5. வெருகன் கிழங்கு. (தைலவ. தைல.84). ம.உலக்க, க.ஒலக்கே. உலத்தல் = சுற்றுதல். உல-உலவு. உலவுதல் = அலைதல், திரிதல். ஒருங்கு திரை யுலவுசடை (திருவாச. 38:1) 2. வீசுதல், பரத்தல். உலவு-உலவை = 1. காற்று. (திவா.). 2. ஊதை நோய் (வாதரோகம்). வழுத்துலவைக் குலமுழுதும் (தைலவ. தைல.88). உலவையான் = காற்றுத்தேவன். (கந்தபு.அரசு.7). உல-உலா=1. அரசன் தலைநகரைச் சுற்றி வரும் பவனி. போந்தானுலா (சங்கர.உலா.) 2. அரசனுலாவைப் பற்றிய பனுவல் (பிரபந்தம், கலிவெண்பா வுலாவாம் (வெண்பாப். செய். 27). 3. மக்கள் காற்றாடச் சுற்றிவரல். உலா-உலாவு. உலாவுதல் = 1. சூழ்தல். தூசுலாய்க் கிடந்த (சீவக.550). 2. சுற்றித் திரிதல். 3. பவனி வருதல். (w.) 4. இயங்குதல், வீசுதல், வந்துலாய்த் துயர் செய்யும் வாடை. (பு.வெ 8:16, கொளு) 5. பரவுதல். (வெள்ளம்) உயிரென வுலாய தன்றே (கம்பரா.ஆற்றுப்.20). உலா-உலாங்கு = காவட்டம் புல். உலாங்கு-உலாஞ்சு. உலாஞ்சுதல் = 1. தலை சுற்றுதல், கிறுகிறுத்தல். 2. அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது. உலா-உலாத்து. உலாத்துதல் = (செ.கு.வி) உலாவுதல், ஊர்வலத்திற் செல்லுதல். (காளத்.உலா.223). (செ.குன்றாவி) 1. உலாவச் செய்தல் குதிரையை உலாத்திவா. (உ.வ.) 2. பரவச் செய்தல், 3. அசைத் தாட்டுதல். கொண்டையுலாத்தி = கொண்டையை ஆட்டும் பறவை. வேட்டியை உலாத்திக் கொண்டு போகிறான். (உ.வ.) ம.உலாத்து. உலாத்து = உலாவுகை. உலாத்துக்கட்டை = கதவு நின்றாடுஞ் சுழியாணி. உலாத்துக் கதவு = பிணையற் கதவு, மடக்குக் கதவு. உலவு-உலகு = 1. சுற்றி வருங்கோள். 2. உலகப் பொது. 3. ஞாலம். 4. ஞாலமும் அதிலுள்ள இரு திணைப் பொருள்களும். 5. உலக மக்கள், மன்பதை. 6. நன்மக்கள். 7. ஞாலப் பகுதி. உலகு-உலகம் = 1. ஞாலம் (பிங்.) 2. உலகத்தொகுதி, உலக முண்டபெருவாயா (திவ. திருவாய் 6:10:1). 2. நிலப்பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல்.அகத். 5) 3. உயிரினங்கள். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுரு.1) 4. மக்கட்டொகுதி. கால முலக முயிரே யுடம்பே (தொல். சொல். 57). 5. பொதுமக்கள், உலக வறவி. 6. ஊர் மக்கள். உலக விடைகழி. 7. நன் மக்கள். உலகத்தோ டொட்ட வொழுதல் (குறள்.140). 8. வழக்கம். ஒழுக்க நடையே யுலகம தாகும் (மாறன.320). உலகம் என்னுஞ் சொல்லிலுள்ள அம்மீறு பெருமைப் பொருட் பின்னொட்டு (Aug. suf.) ஒ.நோ: கம்பு (stick) - கம்பம் (pillar), நிலை (Stand) - நிலையம் (station), மதி (moon) - மதியம் (full moon), விளக்கு (lamp), - விளக்கம் (light house). அரங்கு-அரங்கம், கடுகு-கடுகம், குண்டு-குண்டம், குன்று-குன்றம், சங்கு-சங்கம், துண்டு-துண்டம், நகர்-நகரம், முத்து-முத்தம் முதலிய பல சொற்களில் அம்மீறு தன் பெருமைப் பொருளை யிழந்துள்ளது. இங்ஙனமே உலகம் என்பதும். குடும்பு-குடும்பம் என்பதிலோ, அம்மீறு தன் சிறப்புப் பொருளை யிழந்ததுமன்றி, அதற்கு நேர்மாறான சிறுமைப் பொருளையுந் தருகின்றது. குடும்பம் என்பது, சிறிதும் பெரிதுமான ஒரு தனிக் குடும்பத்தையே குறிக்கும்போது, குடும்பு என்பது பல குடும்பஞ் சேர்ந்த சேரியை அல்லது ஊர்ப்பகுதியைக் குறிக்கின்றது. (உத்தரமேரூர்க் கல்வெட்டைப் பார்க்க). பாண்டியராட்சியும் பண்டைப் பைந்தமிழ்க் கழகமும் இன்மையே, இத்தகைய வழுவழக்கிற்குக் கரணியம். மொழி வரலாற்றையும் சொல்லமைப்பையும் அறியாத அல்லது பிறழவுணர்ந்த தமிழ்ப்புலவர் சிலர், உலகம் என்னுஞ் சொல்லின் கடைக்குறையே உலகு என்னும் வடிவென்று கொள்வர். பகவன் முதற்றே யுலகு (குறள்.1) நீரின் றமையா துலகெனின் (குறள்.20) வகைதெரிவான் கட்டே யுலகு (குறள்.27) பெருமை பிறங்கிற் றுலகு (குறள்.23) உலகவாம் பேரறிவாளன் றிரு (குறள். 215) என்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள். 211) எனச் செய்யுள் வழக்கிலும்; உலகளவு, உலகியல், உலகாளி, உலகழிவு என உலக வழக்கிலும்; உலகு என்னுஞ்சொல் உலகம் என்னும் வடிவு போன்றே பெருவழக்காய் வழங்குதலையும், சொல்லமைதி யொன்றுங் குறையாதிருத்தலையும், நோக்குக. உலகு என்பதன் விரித்தலே உலகம். உலகம் என்னும் சொல்வடிவு, வடமொழியில் லோக என்றும், சூரசேனிப் பிராகிருத வழிவந்த இந்தியில் லோக் என்றும், திரியும். உலக சவை - லோக்ஸபா. தமிழுக்கு அடுத்து வடபால் வழங்குவதால் (வடகு) என்று பெயர் பெற்ற தெலுங்கில், உலகம் என்னும் தமிழ்ச்சொல் லோகமு என்று திரிந்துள்ளது. இது தெலுங்கியல் பென்பது, உரல்-தெ. ரோலு என்னும் திரிபால் அறியப்படும். பிற்காலச் சேண் வடமொழியாகிய சமற்கிருதத்தில், லோகமு என்னுந் தெலுங்க வடிவு ஈறு கெட்டு லோக என்றாயிற்று. இங்ஙனம் ஈறு கெடுவது சமற்கிருத வியல்பே. x.neh: m«gy«-m«gy, mu§f«-u§f, fLf«-fLf (!), fhy«-fhy, FL«g«-FL«g (!), rfl«-rfl (!), சங்கம் (சங்கு)-சங்க (nkh), தண்டம்-தண்ட (d-), தானம்-தான (d-), திடம்-த்ருட (drdha), நகரம்-நகர (g), நாகரிகம்-நாகரிக (-g-), நாகம்-நாக (g), நாடகம்-நாடக (t@), நீலம்-நீல, நீரம்-நீர, பக்கம்-பக்ஷ, பாகம்-பாக (bhaga), பூதம் (பெரும்பேய்)-பூத (bh), மங்கலம்-மங்கல மண்டபம்-மண்டப (p), மண்டலம்-மண்டல, மீனம்-மீன, முகம்-முக (kh), மாதம்-மாஸ, வாலம்-வால. இவையும் இவைபோன்ற பிறவும் வடமொழியென்னும் சமற்கிருதத்திற்கு இன்றியமையாதனவாயிருப்பதால், வட மொழியாளர் தமிழரின் பேதைமையைப் பெரிதும் பயன்படுத்தி, சமற்கிருதம் தேவமொழியாதலால், அதிலுள்ள சொற்களெல் லாம் அதற்குரியனவேயென்றும், தமிழே சமற்கிருதத்தினின்று தனக்கின்றியமையாத அடிப்படைச் சொற்களையெல்லாம் கடன் கொண்டுள்ளதென்றும், தொன்றுதொட்டுத் துணிச் சலுடன் ஏமாற்றி வந்திருக்கின்றனர். சமற்கிருதம் தேவமொழியென்பது, பிராமணன் நிலத்தேவன் (பூசுரன்) என்பதையே முற்றுந் தழுவிய தென்றும், சமற்கிருதச் சொற்களில் ஐந்திலிருபகுதி தூய தமிழென்றும், அறிதல் வேண்டும். கடன்கொண்ட தமிழ்ச் சொற்களையெல்லாம் சமற்கிருதச் சொல்லென்று காட்டற்கு, பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் குறிக்கோட் சொற் பிறப்பிய லையே (Tendentious Etymology), வடமொழியாளர் கையாண்டு வந்திருக்கின்றனர். லோக என்னும் சொல்லிற்கு அவர் கூறும் பொருட்கரணியம், பார்க்கப்படுவது என்பதே. லோக் என்னும் ஆரியச் சொல் லிற்குப் பார் (look) என்பது பொருள். ஆதலால், அதை மூல மாகக் கொண்டு அங்ஙனங் கூறினர். அச்சொல் look என்னும் ஆங்கிலச் சொல்லொடு தொடர்புடையது. OE. locian, OS locon, OHG. luogen, WG. lok. லோக் என்னும் ஆரியச்சொல் நோக்கு என்னும் தென்சொல்லின் திரிபே. நகர (னகர) லகரங்கள் ஒன்றோடொன்று மயங்கும். நோக்கு என்பது இந்தியில் தேக் என்று திரிந்துள்ளது. உலகு (உலகம்) என்னுஞ் சொல்லிற்கு, உருண்டையானது அல்லது சுற்றிவருவது என்னும் பொருள் பொருந்துமா, அல்லது பார்க்கப்படுவது என்னும் பொருள் பொருந்துமா, என்று அறிஞர் கண்டுகொள்க. உலகம் என்னும் சொல் பொதுமக்களைக் குறிப்பது பெருவழக்கு. எ-டு: உலகம் என்ன சொல்லும்? ஒ.நோ. L. Vulgus (volgus), the people, common people, the great multitude, the public. L. vulgaris - E. vulgar, characteristic of the common people. உலவு-அலவு-அலவன் = வளைந்த குறடு போன்ற முன்கால் களையுடைய நண்டு. அலவு-அலகு=1. குறடு. 2. குறடுபோன்ற தாடை. அலகைப் பேர்த்துவிட்டான். 3. தாடை போன்ற அரணைக் கொடிறு. அரணை அலகு திறக்கிற தில்லை. (பழ.) அலகு-அலக்கு = துறடு, துறட்டி. உல்-உள்-உழல், உழலுதல் =1. சுழலுதல். (பிங்.) 2. அலைதல், திரிதல், ஆட்பார்த் துழலு மருளில் கூற்றுண்மையால் (நாலடி.20). 3. இயங்குதல், வீசுதல். சிறுகாற் றுழலும் (கல்லா, கண.) 4. நிலைகெடுதல். அந்தக் குடி உழன்று போயிற்று. உழல்-உழலை=1. சுற்றிவரும் செக்குலக்கை. 2. சுழலும் குறுக்குமரம். உழலைமரத்தைப் போற் றொட்டன. (கலித்.106). 3. கணைய மரம். வேழம்.... உழலையும் பாய்ந்திறுத்து (பு.வெ.12, வென்றிப்.8). 4. மாட்டின் கழுத்திற் கட்டும் உழலைக் கழுந்து. உழற்சி = 1. சுழற்சி. 2. அலைகை. உழற்றல் = (செ.குன்றாவி.) 1. சுழற்றுதல். 2. அலையச் செய்தல். என்னை யவமே யுழற்றி (திருக்கோ.100, உரை, அவ.) - (செ.கு.வி.) கைகால் நோவாற் புரளுதல். உழன்றி = மாட்டின் கழுத்திற் கட்டும் உழலைக் கழுந்து. உழிதல் = அலைதல். உழிதலை யொழிந்துள ருமையுந் தாமுமே (தேவா.553:10). உழிதருதல் = அலைதல். உன்மத்த மேற்கொண் டுழிதருமே (திருவாச. 5:7) உல்-உர்-உருள். உருள்தல் = 1. தொடர்ந்து புரளுதல். திண்வரை யுருள்கிலேன் (திருவாச. 5:39). 2. உருண்டு திரளுதல். சிலந்திக் கட்டி உருண்டு வருகிறது. 3. புரண்டழிதல். உலகெலா முருளு மின்றென (சீவக. 2452). 4. செல்லுதல். நூல்வழி யுருள்விலா மனத்தவர்க்கு (சூளா. முத்தி. 13). 5. (சக்கரம்) உருண்டுசெல்லுதல். உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (குறள்.667). ம.1, க.உருள், தெ.உரலு. உருள்=1. சக்கரம். 2. வண்டி, தேர். 3. சகட நாண் மீன். உருளரிசி = உருண்டையான கொத்துமல்லி. (திவா.) உருள்-உருளி = 1. வட்டம். உருளி மாமதி (சீவக.532). 2. சக்கரம். 3. திரிகையின் மேற்கல். 4. க.உருளி உருளை வல்லா யுருளி கதுமென மண்ட (பதிற்றுப்.27:11). உருள்-உருளை = 1. சக்கரம் சகடிரு சக்கர வுருளையு ளுய்க்கவே (பாரத. வேத்திர. 50). 2. உருண்டை 3. உருளைக்கிழங்கு. உருள்-உருண்டை = 1. கோளவடிவம். 2. கோளம் குண்டு உருண்டையான பொருள். 3. கவளம். 4. திரட்சி. உருண்டை-உண்டை = 1. உருண்டையானது 2. உருண்டையான பொருள்கள்; பொரியுண்டை, சோறுண்டை, வெல்லவுண்டை, மண்ணுண்டை, வில்லுண்டை, கஞ்சாவுண்டை முதலியன. 3. கோள், உலகம், அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் (திருவாச. திருவண்ட) 4. கவளம். 5. கும்பு, கூட்டம். கோவுண்டை கோட்டாறழிவித்த கோன் (பரிபா. 6:396, உரை). உருண்டை-உருட்டை = உருண்டையான விளையாட்டுக்காய். உருட்டை யென வைத்து விளையாடு பைங்கழற்காய் (திருப்போ. சந்.பிள்ளைத். அம்புலி.6). உருளை-உருடை = 1. சக்கரம். 2. வண்டி. உருடை யூடு திரியும் (சேதுபு. முத்தீர்.42). cUil-nuhil-nuhij-L rota, a wheel. L.roto, to cause to turn round like a wheel. to whirl round, swing round. L. rotula a little wheel. L.rotula, roundly. L.rotunditos, roundness. rotundity (Plin.) L. rotundo, to round, make round. L. rotundus, round, circular, spherical. இவற்றினின்று, பின்வருமாறு ஆங்கிலச் சொற்கள் தோன்றியுந் திரிந்துமுள்ளன. E. rota, list of persons acting, or duties to be done, in rotation. E. rotary, acting by rotation. E. rotate, v. move round axis or centre, revolve. adj. wheel-shaped. E. rotation, rotating, recurrence, recurrent series or period, regular succession in office, in, by, rotation. E.rotator, muscle that rotates a limb etc. E. rotifer, wheel-animalcule, member of class Rotifera with rotatory organs used in swimming. E. rotograph, prints of MS. page etc. got by sensitized roll. E. rotor, rotary part of machine. E. rotund, a circular, round, rotundate. E. rotunda, building of circular ground - plan, esp. Done with dome. Roll என்னும் ஆங்கிலச் சொல் உருள் என்பதை ஒத்திருக்கின்றது. ஆயின், அதை rotula அல்லது rotilla என்னும் இலத்தீன் குறுமைப் பொருட் சொல்லினின்று (dim.n.) திரிக்கின்றனர் மேலையறிஞர். இது வட்டவழித் திரிப்பு. L.rotulus. தமிழில் இல் என்பது ஒரு குறுமைப் பொருட் பின்னொட் டென்பது இங்குக் கவனிக்கத்தக்கது. எ-டு:குடி (வீடு)-குடில் (குடிசை), தொட்டி-தொட்டில் (சிறு தொட்டி), விட்டி-விட்டில். தொட்டில் (சிறு ஆடு கட்டில்) இன்று ஏணையென்று தவறாக வழங்குகின்றது. E. roll, n. cyclinder formed by turning flexible fabric such as paper or cloth over and over upon itself without folding, v.more or send or go in some direction by turning over and over on axis often with aid to gravitation. ME. & OF. rolle, role. E.roller, cylinder of wood, stone, metal, etc. E. role, actor’s part, one’s function. F.role=roll. E. roly-poly, pudding made of sheet of paste covered with jam etc., formed into roll, and boiled. Round என்னும் ஆங்கிலச் சொல்லும் உருண்டை என்பதை ஒத்திருக்கின்றது. ஆயின், அதை rotundus என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிப்பர் மேலையறிஞர். இதுவும் வட்டவழித் திரிப்பு. E.round, n. round object. v. invest with, assume, round shape. a. spherical or circular or cylindrical or approaching these forms. adv. with more or less circular motion ME. &. OF. rund, round. E. roundel, small disc. E. roundelay, short simple song with refrain. E. rounder, one complete run of player through all the bases arranged in a round. E. roundly, adv. in thorough-going manner. E. rondeau, F. rondel, a poem with opening words used twice as refrain. E. rondel, special form of rondeau. ME. &. OF. rond, round. E. rondo, It. & F. rondeau. E. rondure, round outline or object. F. rondeur, round. தமிழில், உகர முதல் மூல வேர்ச் சொல், க ச த ந ப ம என்னும் ஆறு சொன்முதல் மெய்யெழுத்துக்களொடுங்கூடி, ஆறு வழி வேர்களை அல்லது வழியடிகளைப் பிறப்பிக்கின்றது. இங்ஙனமே உருள் என்ற சொல்லும். உருள் ஒ.நோ: E. whirl, swing round and round, revolve.ON. hvirfla, rotate. E. whorl, ring of leaves, one turn of a spiral, disc on spindle. ME. wharwyl whorail. குறள்-குருளுதல் = சுருளுதல். சுருளாதல். சுருண்ட வார்குழல் (திருவிசை. திருவாலி. 1:3). ஒ.நோ: MDu krull G krollen, LG. Du., Efris. krullen to curl E. curl. சுருள் - ஒ.நோ: E. Swirl, eddy. Se., Norw. svirla, Du. Zwirrelen, to whirl, G. schwirrlen, to totter. துருள்-(தூள்)-(துரடு)-துறடு-துறட்டி-தோட்டி = வளைந்து அலகு. ஒ.நோ: E. twirl, to revolve, spin, whirl. நுருள்-நெருள்-நெருடு. நெருடுதல் = நூலை உருட்டித் திரித்தல். இழை நீக்கி நூனெருடு மேழை யறிவேனோ (தமிழ்நா.) புருள்-புருளை-புருடை-பிருடை = யாழின் அல்லது நரப்புக் கருவியின் முறுக்காணி. தெ.பிரட. க.பிரடெ. முருள்-முருடு = உருண்ட முண்டு அல்லது முடிச்சுக் கட்டை. உருள்-உருட்டு. உருட்டுதல் = 1. உருண்டையாகச் செய்தல். முருடீர்ந்துருட்டற்கு (கம்பரா.மாரீசன்.139) 1. உருளச் செய்தல். அறக்கதிராழி திறப்பட வுருட்டி (மணி. 5:76). 3. மருட்டுதல். கடபட வென்றுருட்டுதற்கோ (தாயு.நின்ற.3). க.ம. உருட்டு. உருட்டு = 1. சரிவு. 2. வளைவு. 3. சக்கரம். உருட்டோட வோடிய தேர் (குலோத். கோ.212). 4. மோதிரவகை. 5. உருண்டையான பொருள். 6. திரட்சி. 7. உருட்டுகை. 8. ஏமாற்றுகை. 9. வெருட்டு. உர்-உறு-இறு-இற. இறத்தல் = சாய்தல், சரிதல். இற-இறப்பு = இறவாணம், இறவாரம். இறப்பிற்றுயின்று (திருக்கோ.328). இற-இறவு=1. (வளைந்த) இறா. கடலிறவின் சூடு தின்றும் (பட்டினப்.63). 2. (வட்டமான) தேன்கூடு. (ஞானவா. தாழூர.69). இற-இறா = இறால். கயலொடு பச்சிறாப் பிறழும் (பெரும் பாண். 270). இறா-இறால் = 1. இறா. 2. தேன்கூடு (நள. கலிநீங்.14). 3. நளி (கார்த்திகை). (திவா.) இறா-இறாட்டு =1. இறால். 2. தேன்கூடு. 3. கையிறாட்டை. இறாட்டு-இறாட்டை = நூல் நூற்கும் சக்கரம். இறாட்டு-இறாட்டினம் = 1. நூற்கும் சக்கரம். 2. நீரிறைக்கும் உருளி. 3.விளையாட்டுச் சுழல் தேர் அல்லது குடை. 4. பஞ்சரைக்கும் பொறி. இறவு-இறகு-சிறகு-சிறகர். இறகு-இறகர். இறகு-இறக்கை-தெ. ரெக்க. இற-இறை=1. இறவாணம். குறியிறைக் குரம்பை (புறநா. 129). 2. மூலை, முடங்கிறை (முல்லை.87). 3. வளைந்த (பெண்டிர்) முன்கை. எல்வளை யிறையூ ரும்மே (கலித்.) 7. ïwF.(ã§.) 8. சிறகு. இறைதல் = வணங்குதல். இணையடி யிறைமின் (பதினோ. ஆளு. திருக்கலம். 48). இறை-இறைஞ்சு. இறைஞ்சுதல் = 1. வணங்குதல். எழிலார் கழலிறைஞ்சி (திருவாச. 1:21). 2. தாழ்தல். குலையிறைஞ்சிய கோட்டாழை (புறநா.17). 3. வீழ்ந்து கிடத்தல். புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி (கலித். 3:13). உல் என்னும் வேர்ச்சொல் உல்1 (எரிதற் கருத்து வேர்) உல்-உல. உலத்தல் = காய்தல், வற்றுதல், சாதல், அழிதல், முடிதல், கழிதல். உல-உலவை = வற்றிய கிளை. அலங்க லுலவை யேறி யொய்யென (குறுந்.79) உல்-உலர். உலர்தல் = காய்தல், வாடுதல், M.Ular உலர்-உலறு. உலறுதல் = வற்றுதல், வாடுதல், சினத்தல். உலறல் = கடுஞ்சினம் (திவாகரம்). உல்-உலை = நெருப்புள்ள அடுப்பு, சமைத்தற்குக் காய்ச்ச வேண்டிய நீர், கொல்லன் உலை. M.ula, K. ole. உல்-உள்-உண்-உண்ணம் = வெப்பம். உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு (தேவா.510,6) c©z«-cZz (S.), un (Mhr.) உண்-உண. உணத்தல் = காய்தல். மிளகாய்வற்றலை உணந்த மிளகாய் என்பது வடார்க் காட்டு ஆம்பூர் வட்டத்து வழக்கு. உண-உணத்து, (பிறவினை). தலை உணந்துவிட்டது தலையை உணத்து என்பன நெல்லை மாவட்ட வழக்கு. உண-உணங்கு. உணங்குதல் = காய்தல். தினைவிளைத்தார் முற்றந்தினை யுணங்கும் (தமிழ்நா. 154). M. unannu (உணங்ஙு), K. onagu. உணங்கு-உணக்கு (பிறவினை.) தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள்.1037). உல்-உர்-உரு. உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்பநூறி (புறம். 25,10) 2. பெருஞ்சினங் கொள்ளுதல். ஒருபகலெல்லா முருத்தெழுந்து (கலித். 39,23). 3. முதிர்தல். பண்டையூழ்வினை யுருத்தென் (சிலப். 16, 217) உரு = நெருப்பு. K., Tu. uri, to burn; Lat. uro, to burn; Armenian or, fire; Afghan or, war; Heb. ur, fire or light. உரு-உருகு. உருகுதல் - வெப்பத்தால் இளகுதல், மன நெகிழ்தல். மெலிதல். M. uruhu. உரு-உருக்கு (பிறவினை). உருக்குதல் = இளகச் செய்தல். அழித்தல், வருத்துதல். உருகு = உருக்கு = எஃகு, உருக்கின பொருள். M. urukku, K. urku, T. ukku. உரு-உரும்-உருமி. உருமித்தல் = வெப்பமாதல், புழுங்குதல். உரும்-உருமம் = வெப்பம். வெப்பமிக்க நண்பகல், கோடைக்காலம். உரும்-உரும்பு = கொதிப்பு. உரும்பில் கூற்றத் தன்னநின் (பதிற்றுப்.26, 13) உரு-உருப்பு=1. வெப்பம். கன்மிசை யிருப்பிறக் கனைதுளி சிதறென (கலி.16,7) 2. அடுக்களை. 3. சினத்தீ. உருப்பற நினைத்தனை யாதலின் (பதிற்றுப்.50,16). 4. கொடுமை. உருப்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி (பெரும்பாண்.447) உருப்பு-உருப்பம் = 1. வெப்பம். அவணுறைந்தன உருப்பமெழ (அரிச். பு.விவா. 104) 2. சினம் உள்-ஒள்-ஒண்மை = 1. விளக்கம். ஒப்பின் மாநக ரொண்மை (சீவக.535) 2. இயற்கையழகு. ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும் (பெருங். உஞ்சைக். 34, 151). 3. நல்லறிவு. ஒண்மை யுடையம் யாம் (குறள்.844) ஒண்ணுதல் = ஒள்ளிய நெற்றியுடைய பெண். ஒண்ணுதற் கோஒ உடைந்ததே (குறள்.1081) ஒள்-ஒள்ளி = வெள்ளி (சுக்கிரன்), செம்பொன். ஒள்ளிமை = அறிவு விளக்கம். ஒள்ளியன் = அறிவுடையோன். ஒளியார்முன் ஒள்ளியராதல் (குறள்.714) ஒள்ளியோன் = வெள்ளி. (சுக்கிரன்) ஒள்ளொளி = மிக்கவொளி. ஒள்-ஒட்பு-ஒட்பம் = அறிவு. கல்லாதா னொட்பம் கழியநன் றாயினும் (குறள்.454) ஒள்-ஒளி = வெளிச்சம், மின்னல், கதிரவன், திங்கள், உடு, நெருப்பு, வெயில், விளக்கு, கண், அறிவு, புகழ் பெருமை, கடவுட்டன்மை. K. ola, M. oli. ஒளியவன் = கதிரவன் ஒளி-ஒளிர்-ஒளிறு. ஒளிர்தல் = விளங்குதல். உள்ளத் தொளிர்கின்ற வொளியே (திருவாச.37,5) ஒளிறுதல் = விளங்குதல். ஒளிறுவாள் மறவரும் (மணி.1,68) உல்-எல் = 1. நெருப்பு. 2. ஒளி. 3. கதிரவன். எற்படக் கண்போல் மலர்ந்த (திருமுரு. 74) Cf. Gk. helios, sun. 4. வெயில் (பிங்கலம்) 5. பகல். எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி (புறம்.170) 6. நாள் (பிங்கலம்) எல்-எல்லவன்=1. கதிரவன். எல்லவன் வீழு முன்னம் (பாரத. பதினெட்.119) 2. திங்கள் (அகராதி நிகண்டு). எல்-எல்லார் = தேவர். பனிவானத் தெல்லார் கண்ணும் (சீவக.364) எல்-எல்லோன் = கதிரவன் (பிங்.) எல்-எல்லி = 1. கதிரவன் (பிங்.) 2. பகல். இரவோ டெல்லியு மேத்துவார் (தேவா.344,8) எல்லினான் = கதிரவன். புயங்க முண்டுமிழ்ந்த வெல்லினான் (கந்தபு. அக்கினி. 228) எல்-எர்-எரி. எரிதல் = 1. சொலித்தல் (சுவாலித்தல்). எரிதல் தீயொடு (திவ். திருவாய். 3, 6, 5,) 2. விளங்குதல் (பிரகாசித்தல்). எரியுஞ் செம்பொன் மணிமுடி (சூளு.மந்தி.6) 3. எரிச்சலுண்டாதல். 4. பொறாமைப்படுதல். 5. மனம் வருந்துதல். 6. சினத்தல். 7. முதிர்தல். எரிகின்ற மூப்பினாலும் (கம்பரா. மருந்து. 17) T. eriyu, K.uri, M. eri, Tu, eri. எரி = நெருப்பு, ஒளி, அளறு (நரகம்) எரி = நெருப்பு நிறம், சிவப்பு. ஏரிநகை = வெட்சிமலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா.13,59) எரிப்பூ = செம்மலர். எரிப்பூம் பழனம் (புறம்.249) எரிமலர் = 1. முருக்குமலர். எரிமலர்ப் பவளச் செவ்வாய் (சீவக.2741) 2. செந்தாமரை. செல்வ னெரிமலர்ச் சேவடியை (சீவக. 2741) எர்-எரு. எருமணம் = செங்குவளை. (பிங்.) எரு-எருவை =1. குருதி (திவாகரம்). 2. செம்பு. எருவை யுருக்கினா லன்ன குருதி (கம்பரா.கும்பக. 248) 3. உடல் சிவந்திருக்கும் பருந்து. விசும்பா டெருவை பசுந்தடி தடுப்ப (புறம் 64,4) நெருப்பு சிவந்திருப்பதால் நெருப்புக் கருத்தில் சிவப்புக் கருத்துத் தோன்றுமென்பதை அழல்வண்ணன், தீவண்ணன், செந்தீவண்ணன் முதலிய சிவன் பெயர்களால் உணர்க. அழல்வண்ணன் (தேவா. 1055,5) தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில் (தேவா.1230, 6) எல்-என்ற = கதிரவன். என்றைத் தொட விண்ணிலெழுந் துறலால் (கந்தபு. விந்தகிரீ.4) என்று-என்றூழ் = 1. கதிரவன். என்றூழ் மாமலை மறையும் (குறுந்.215) 2. வெயில் என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டு (சிலப். 14,121) 3. கோடைக்காலம். என்றூழ்வாட வறல் போல (புறம்.75) எருப்பு (தெலுங்கு) = சிவப்பு. எரங்காடு = செந்நிலம். இல்-இலந்தை = செம்பழமுள்ள முட்செடி. இலந்தை இரந்தை (இலந்தை) இரந்தையின் கனி (சேதுபு.காசிப. 46) இல்-இர்-இரத்தி = இலந்தை. இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து (புறம்.34, 62). ï®-ïuh» = átªj nfœtuF, M., T., K., Tu. ragi. உல்-அல்-அலத்தம் = 1. செம்பருத்தி. 2. செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அலத்தம்-அலத்தை = செம்பஞ்சு. அல்-அலந்தல் = செங்கத்ரி. அலந்தல்-அலந்தலி = செங்கத்ரி அலத்தம், அலத்தகம் என்னும் தென்சொற்களை ஆரியப் படுத்துவான் வேண்டிமுறையே, அ-லகத், அ-லக்தக என உடலை இரு துண்டாய் வெட்டுவதுபோல், இரு கூறாய்ச் சிதைத்துப் பொருள் கூறுவர் வடமொழியாளர். அல்-அர்-அரக்கு = 1. சிவப்பு. Skt. rakta. 2. சாதிலிங்கம். 3. செம்மெழுகு. Skt. raksha. அரக்காம்பல் = செவ்வாம்பல் (பிங்.) அரக்குக் காந்தம் = செங்காந்தக் கல். அரக்குச் சாயம் = செஞ்சாயம். அரக்குநீர் = 1. அரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7,25). 2. சாதிலிங்கம் கலந்த நீர். அரக்குநீர்ச் சிவிறியேந்தி (சீவக.2657) 3. சிவந்த ஆலத்தி நீர். அரக்கு நீர் சுழற்றி (விநாயகபு. 80, 277) அரக்கு மஞ்சள் = செம்மஞ்சள். mu¡F (br«bkGF)-M.arakku; K., Tu. aragu. Hindi, lakh; Skt, laksha, raksha; E, lac. அரக்கு-அரக்கம் = 1. அரத்தம். 2. அரக்கு (பதிற்றுப்பத்து, 30, 27) அர்-அருணம் = 1. சிவப்பு. 2. சிந்தூரம். 3. செம்மறியாடு. அருணமலை = நெருப்புப் பிழம்பாய் நின்றதாகக் கூறப்பெறும் செம்மலை. அருணமலை-அண்ணாமலை (திருவண்ணாமலை). அருணம்-அருணன் = புறப்படும்போது சிவந்து தோன்றும் கதிரவன். அர்-அரத்தம் = 1. சிவப்பு. அரத்த வேணியர் (கந்தபு.முதனா.82). 2. குருதி. அரத்தமுன் டொளிரும் வாளவுணர் (நைடத. நளன்தூ.14) 3. பவழம் (திவா.) 4. செம்பருத்தி. 5. செம்பரத்தை. 6. செங்கழுநீர். 7. செவ்வாடை வகை. 8. அரக்கு (திவா.) அரத்தம்-அரத்தன் = செவ்வாய்க் கோள் (பிங்.) அரத்தம்-அரத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அரத்தக மருளச் செய்த சீறடி (சீவக.2459) இனி, அலத்தகம்-அரத்தகம் என்றுமாம். அரத்தம் (FUâ)-Skt. rakta. அரத்தம் (át¥ò)-OE, read OS, rod, E.red, OHG. rot, ON rauthr, Coth, rauths, L, rufus, rubeus. ஓவிய வேலைப்பாடமைந்த செந்நிறப் பட்டாடை பண்டை நாளில் அரத்தப் பூம்பட்டாடை யெனப்பட்டது. அரத்தப் பூம்பட்டரைமிசை யுடீஇ (சிலப்.14,86) வடமொழியிலுள்ள சொற்களெல்லாம் வடசொல்லேயென்று இடைக் காலத்தில் ஒரு தவறான கருத்து மக்கள் மனத்தில் வேரூன்றியிருந்ததினால், அரத்தம் என்னும் தென்சொல்லின் வடசொல் வடிவான ரக்த என்பதையே மூலமாகக் கொண்டு, அதைத் தமிழ் முறைக்கேற்ப இகரம் முன்னிட்டு இரத்தம் எனச் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர். இது, அரங்கன் என்னும் தென்சொல்லை ரங்கன் என்னும் வடசொல் வடிவின் திரிபாகக் கொண்டு, இரங்கன் என்று தமிழில் தவறாக எழுதுவ தொத்ததே. âthfu« (8m« ü‰wh©L), ã§fy« (10M« ü‰wh©L?), சூடாமணி (16ஆம் நூற்றாண்டு) முதலிய சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) இடைக்காலத்தனவாதலின், அவற்றுள்ளும் இரத்தம் என்னும் வடிவு இடம் பெற்றுள்ளது. இது பிற்கால இலக்கியங்கள் அவ்வடிவை யாள இடந் தந்துவிட்டது. ஆயினும், இது மொழிநூலறிவாராய்ச்சி மிக்க காலமாதலாலும், இலக்கிய வழுவைக் களைதற்கு ஒரு கால வரம்பின்மையானும், இனி, தனிச்சொல்லாயினும் தொடர்ச் சொல்லாயினும் இரத்தம் என்னும் வடிவை அரத்தம் என்றே திருத்தி ஆளுதல் தக்கதாம். அரத்தம் என்பதை நிலைச் சொல்லாகக் கொண்டு இருவகை வழக்கிலும் பெரும்பான்மையாக வரும் தொடர்ச் சொற்கள், அரத்தக்கட்டி, அரத்தக்கட்டு, அரத்தக் கண்ணன், அரத்தக் கலப்பு, அரத்தக் கவிச்சு, அரத்தக் கழிச்சல், அரத்தக் கறை, அரத்தக் கனப்பு, அரத்தக் காட்டேறி, அரத்தக் காணிக்கை, அரத்தக் குழல், அரத்தக் குழாய், அரத்தக் குறைச்சல், அரத்தக் கொதிப்பு, அரத்தக் கொழுப்பு, அரத்தக் கோமாரி, அரத்தக் குமுதம், அரத்தக் குன்மம், அரத்தச் சிவப்பு, அரத்தச் சுரப்பு, அரத்தச் சுருட்டை, அரத்தச் சூறை, அரத்தப் பலி, அரத்தப் பழி, அரத்தப் பிண்டம், அரத்தப் பித்தம், அரத்தப் புடையன், அரத்தப் பெருக்கு, அரத்தப் போளம், அரத்த மடக்கி, அரத்த மண்டலம், அரத்த மண்டலி, அரத்த மாடன், அரத்த மானியம், அரத்த முடி, அரத்த மூத்திரம், அரத்த மூலம், அரத்த வடி, அரத்த வலிப்பு, அரத்த வழலை, அரத்த வள்ளி, அரத்த விந்து, அரத்த விரியன், அரத்த வுறவு, அரத்த வெட்டை, அரத்த வெறி, அரத்த வேர்வை, அரத்த வோட்டம் என்பன. அர்-அரளி = செம்பருத்தி. நெருப்பு சிவந்த பொருள்களுள் ஒன்று. அதனால் நெருப்பு நிறம் என்பது செந்நிறத்தைக் குறிக்கும். சிவந்த பொருட் பெயர்களே பண்பியாகு பெயராகச் செந் நிறத்தை உணர்த்துவதுமுண்டு. எ-டு: பவழவாய் = சிவந்த உதடு. குருதிக் காந்தள் = செங்காந்தன். இம்முறையிலேயே, அரக்கு, அரத்தம் என்னும் பெயர்களும் செந்நிறத்தை யுணர்த்தும். அலத்தம், அரத்தம் என்னும் சொற்கட்கு மூலமான அல், அர் என்பனவும்; இலந்தை இலத்தி என்னும் சொற்கட்கு மூலமான இல், இர் என்பனவும்; எல்லி, எரி, என்னும் சொற்கட்கு மூலமான எல், எர் என்பனவும்; ஒன்றோடொன்று தொடர்புடையனவாய், உல் என்னும் அடி வேரினின்று தோன்றி, நெருப்பையோ, நெருப் பின் நிறத்தையோ, அந்நிறமுள்ள பொருள்களையோ, உணர்த்து மென்பதும்; அரத்தம் அரக்கு, அலத்தகம் என்னும் சொற்கள் இலந்தை, இரத்தி என்பன போன்றே தூய தென்சொற்கள் என்பதும்; தெற்றெனத் தெரிந்து கொள்க. அரக்கு என்பது சிவப்பு நிறத்தையும், அரக்கம் என்பது அரக்கு, அரத்தம் முதலிய செந்நிறப் பொருள்களையும் குறிப்பதனாலும்; அமெரிக்கப் பழங்குடி மக்களுள் ஒரு சாரார் செவ்விந்தியர் எனப்படுவதாலும்; அரக்கர் என்னும் வகுப்பார் பழங்காலத்தின ராகத் தொல்கதைகள் கூறுவதனாலும், அரக்கன் என்னும் பெயர் செந்நிறம் பற்றிய அரக்கு என்னுஞ் சொல்லினின்று திரிந்திருப்ப தாக அறிஞர் சிலர் கருதினர். அஃது அரக்கு என்னும் வினைச் சொல்லினின்று திரிந்ததாகும். அரக்குதல் = வருத்துதல், அழித்தல். எல்லரக்கும் அயில் நுதிவே லிராவணனும் (கம்பரா. ஊர்தேடு. 230). அரக்குகின்றவன் அரக்கன்; அரட்டுகின்றவன் அரட்டன் என்பதுபோல். அரக்கரெல்லாம் மக்களை வருத்தினவராகவே கூறப்படுவர். அரக்கன் என்பது மீட்டல் (இரட்சித்தல்) என்று பொருள்படும். ரக்ஷ என்னும் வடசொல்லினின்று திரிந்ததன்று. (வே.க.) உல் என்னும் வேர்ச்சொல் உல்2 (வளைதற் கருத்து வேர்) உல்-உலம் = 1. உருண்டு திரண்ட கல். உலஞ் செய்த ...... தோளான் (சீவக.2915). 2. திரட்சி. உலங்கொள் சங்கத்தார்கலி (தேவா.112:8). உலம்-உலவு. உலவுதல் = 1. சுற்றுதல். 2. திரிதல். 3. உலாவுதல். ஒருங்குதிரை யுலவுசடை (திருவாச. 38:1). உலவு-உரவு. உரவுதல் = உலாவுதல். உரவுநீரழுவத் தோடு கலம் (பெரும்பாண்.350). உல்-உல-உலக்கை = 1. உரலிற் கூலம் முதலியன குற்றும் உருண்டு நீண்ட கருவி. மிளகெறி யுலக்கையின் (பதிற்றுப்.41). 2. ஒரு படைக்கலம். உலக்கை சூலம் வேல் (கந்தபு. சதமுகன்.15) 3. உருண்ட வெருகன் கிழங்கு. ம. உலகக. க.ஒலக்கெ. உலண்டு = உருண்டு நீண்ட கோற்புழு. உல-உலவை = 1. சுற்றி வீசும் காற்று. (திவா.) 2. ஊதை (வாத) நோய். வழுத்துலவைக் குலமுழுதும் (தைலவ. தைல. 88). உலவையான = காற்றுத் தெய்வம். (கந்தபு. அரசு. 7). உலவு-உலகு = 1. 1. உருண்ட ஞாலம். 2. உருண்ட அல்லது சுற்றிவரும் கோள். ம. உலகு. உலகு-உலகம் = 1. பெரிய உலகு. 2. ஞாலம். (பிங்.) 3. உலகப் பொது. (திவ்.திருவாய். 6:10:1). 4. நிலப் பகுதி. மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல்.அகத்.5). 5. மக்கட் டொகுதி. 6. நன்மக்கள். உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் (திருமுரு. 124). 7. உயிரினங்கள். உலக முவப்ப வலனேர்பு திரிதரு (திருமுரு. 1). 8. உயர் குணம் (பிங்.) 9. ஒழுக்கநடை. ஒழுக்க நடையே யுலகம தாகும். (மாறன, 320). உலகம்-வ. லோக. இ. லோக். லோக் என்னுஞ் சொற்கு வடவர் கூறும் பொருட் கரணியம் பார்க்கப்படுவது என்பது. இதன் பொருந்தாமையை அறிஞர் காண்க. காலம் உலகம் உயிரே உடம்பே என்னும் தொல்காப்பிய நூற்பா (541) காலம் என்னும் சொல்லைத் தென்சொல்லாகவே கொள்ளுதலையும் நோக்குக. உலம் வருதல் = 1. சுழலுதல். 2. நெஞ்சு உழலுதல். உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் (கலித்.145:4). உலம்வா-உலமா. உலமருதல் = 1. சுழலுதல். 2. உழலுதல். புலம்பியா முலமரா (கலித்.83:2). உலம்வரல்-உலமரல் = 1. உழலுதல். 2. துன்பம். (சூடா.). உலம் வருதல் - அலம் வருதல். உலமருதல் - அலமருதல். உலமரல் - அலமரல். உல்-உலா = 1. சுற்றி வரல். 2. அரசன் நகர்வலம் சுற்றிவரும் பவனி. போந்தானுலா (சங்கர. உலா.) 3. அரசனுலா பற்றிய பனுவல். கலிவெண்பா வுலாவாம். (வெண்பாப்.செய்.27). உலாமடல் = ஒரு பனுவல். (இலக்.வி.857). உலா-உலகம் = ஓர் உவமவுருபு. வேயுலாந் தோளினார் (சீவக.1581). உலா-உலாவு. உலாவுதல் = 1. சுற்றி வருதல். நிலவுலாவிய நீர்மலி வேணியன் (பெரியபு. பாயி. 1). 2. பவனி வருதல். 3. சூழ்தல். தூசுலாய்க் கிடந்த (சீவக. 550). 4. பரவுதல். உயிரென வுலாய தன்றே (கம்பரா. ஆற்றுப். 20). 5. இயங்குதல். வந்துலாய்த் துயர் செய்யும் வாடை (பு.வெ.8:16, கொளு). ம. உலாவு. உலா-உலாத்து. உலாத்துதல் = (செ. குன்றிய வி.) உலாவுதல். (செ.குன்றா.வி.) 1. உலாவச் செய்தல். 1. பரவச் செய்தல். ம.உலாத்து. உலாத்துக் கட்டை = கதவு நின்றாடுஞ் சுழியாணி. உலாத்து-உலாத்தி. கொண்டை யுலாத்தி = ஒரு குருவி. உலா-உலாஞ்சு. உலாஞ்சுதுல் = 1. தலை சுற்றுதல். 2. அசைந்தாடுதல். கப்பல் உலாஞ்சுகிறது. (உ.வ.). உல்-உலு-உலுக்கு. உலுக்குதல் = 1. அசைத்தல். 2. அசைத்து உதிர்த்தல். bj., க. உலுக்கு. அசைத்தல் என்பது, ஒன்றை வலமும் இடமும் அல்லது முன்னும் பின்னும் பன்முறை விரைந்து சாய்த்தல். சாய்தல் வளைதல் வகைகளுள் ஒன்று. உலு-உலுத்து. உலுத்துதல் = அசைத் துதிர்த்தல். உலு-உலுப்பு. உலுப்புதல் = அசைத் துதிர்த்தல். உல்-உள்-உழல். உழலுதல் = 1. சுழலுதல். (பிங்.) 2. காற்றியங்குதல். சிறுகாற் றுழலும். (கல்லா. கண.) 3. அலைதல். ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் (நாலடி.20). 4. நிலைகெடுதல். 5. துன்புறுதல். உழல்-உழலை = 1. சுழன்று வரும் செக்குலக்கை. 2. உருண்டு நீண்ட குறுக்குமரம். உழலை மரத்தைப் போற்றெட்டன (கலித்.106). 3. கணைய மரம். வேழம்.... உழலையும் பாய்ந்திறுத்து (பு.வெ.12, வென்றிப் 8). உழலைத்தடி (உழலைமரம்) = மாட்டின் கழுத்திற் கட்டும் கழுந்து. உழல்-உழற்சி = 1. சுழற்சி. 2. அலைகை. 3. வருத்தம். உழல்-உழற்று. உழற்றுதல் = 1. சுழற்றுதல். 2. அலையச் செய்தல். என்னையவமே யுழற்றி (திருக்கோ. 100, உரை). உழல்-உழறு. உழறுதல் = அலைதல். உழறலர் ஞானச் சுடர் விளக்காய் (திவ். இயற். திருவிருத். 58). உழல்-உழன்றி = மாட்டின் கழுத்திற் கட்டும் கழுந்து. உழிதல் = 1. அலைதல். உழிதலை யொழிந்துள ருமையுத் தாமுமே (தேவா. 553:10). 2. வளைதல். உழி-உழிஞை = பகையரண் முற்றும் (குழும்) மறவர் சூடும் கொற்றான் மாலை. உழிஞை முடிபுனைந்து (பு.வெ. 6:1). 2. உழிஞைத்திணை. (தொல்.பொ.64). ம. உழிஞ்ஞ. உழிதருதல் = 1. திரிதல். உன்மத்தம் மேற்கொண்டுழிதருமே (திருவாச. 5:7). 2. இடமாறியலைதல். மண் மேல்... உழிதரக் கண்டோம். (திவ்.திருவாய்.5:2:1). உல்-உர் உருள். உருளுதல் = 1. புரளுதல். திண்வரை யுருள்கிலேன் (திருவாச. 5:39). 2. உருண்டு திரளுதல். 3. புரண்டழிதல் உலகெலா முருளு மின்றென் (சீவக.2452). k., f.cUŸ., தெ.உரலு. உருள் = 1. தேர்ச்சக்கரம். உருள்பூத் தண்டார் (திருமுரு.11). 2. வண்டி. (திவா.) 3. சகடமீன். (சூடா). k., க.உருள். உருள்-உருளி = 1. வட்டம். உருளி மாமதி (சீவக.532). 2. சக்கரம். வல்வா யுருளி கதுமென மண்ட (பதிற்றுப்.27:77). க.உருளி. உருள்-உருளை = 1. சக்கரம். சகடிரு சக்கர வுருளைகளாய்க்கவே (பாரத. வேத்திர. 50). 2. உருண்ட கிழங்கு வகை. 3. கமலை யேற்றத்தில் வாற்கயிறு படும் உருளை. ம. உருள. cUis-cUil-nuhij-L. rota, wheel. ஒ.நோ. புருள்-புருளை-புருடை-பிருடை. உருடை = வண்டி. உருடையூடு திரியும் (சேதுபு. முத்தீர்.42). உருள்-உருண்டை = 1. உருண்டையான பொருள். 2. கவளம். 3. திரட்சி. உருண்டை-உண்டை. தெ.உண்ட. அண்டப்பகுதியினுண்டைப் பிறக்கம் (திருவாச. திருவண்.) உருள்-உருட்டு -1. உருட்டுகை. 2. சக்கரம். உருட்டோட வோடிய தேர் (குலோத். கோ. 212.) 3. திரட்சி. 4. வெருட்டு 5. புரளும் குரலிசை. 6. மலைச் சரிவு. 7. ஏமாற்றுகை. உருட்டுப் புரட்டு. பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும். உலம்-அலம் = 1. கவைக்கால் அல்லது கொடுக்குள்ள தேன். (திவா.) 2. நளியோரை (விருச்சிகராசி). அலவன் = கவைக்கால் நண்டு. ஆடு மலவனை யன்ன மருள்செய் (சீவக. 516). அலம்2 = சுழற்சி, துன்பம். அலமகல் முத்தியுண்டாம் (சூத. எக்கிய. பூ. 2:8). அலக்கண் = துன்பம். (பிங்.). அலம்-அலவு. அலவுதல் = வருந்துதல். அன்பனைக் காணாத தலவுமென் னெஞ்சன்றே (சிலப். 18:17). அலவு-அலகு = 1. வளைந்த குறடு. 2. உயிரிகளின் கொடிறு. அரணை அலகு திறக்காது. (பழமொழி). 3. தாடை. 4. வளைந்த நெற்கதிர். அலகுடை நீழலவர் (குறள்.1034). அலகு-அலக்கு = துறட்டுக் கோல். உல்-அல்-அல்லல் = துன்பம். அழிவின்கண் அல்ல லுழப்பதாம் நட்பு (குறள்.787). ம.அல்லல். க.அல்ல. தெ. அல்லரி. அல்-அல்லா. அல்லாத்தல் = துன்பமுறுதல். வயவுநோய் நலிதலி னல்லாந்தார் (கலித்.29). அல்லாடுதல் = 1. அலைதல். 2. தொந்தரவு படுதல். bj., க. அல்லாடு. அல்-அல்லை = துன்பம். அல்லைதொல்லை = மிக்க துன்பம். அலத்தல் = 1. துன்ப முறுதுல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால். (குறள்.1303). 2. வறுமைப் படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித்.133). அலந்தோன் = துன்பமடைந்தவன். (திருமுரு. 271). கறிக்கு அலந்தவன் என்பது உலக வழக்கு. அலந்தை = துன்பம். அலந்தை-அரந்தை = துன்பம். அலந்தலை = 1. துன்பம் (திவா.) 2. கலக்கம். இவன் பேச்சும் அலந்தலையாய் (திவ். பெரியாழ். 3:7:1). அலங்குதல் = 1. அசைதல். அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. மனந் தத்தளித்தல். 3. இரங்குதல். (பிங்.) ம. அலங்ங. து. அலங்கு. bj., க. அல்கு. அலங்கல் = அசையும் பூமாலை. அலக்குதல் = அசைவித்தல். சங்கலக்குந் தடங்கடல்வாய் (தேவா. 739:3). அலக்கழிதல் = வருந்துதல். நானலக் கழிந்தேன் (தேவா. 507:3). அலக்கழித்தல் = 1. அலைத்து வருத்துதல். (பணவிடு. கண்ணி. 177). 2. கெடுத்தல். தக்கன் பெருவேள்வியங் கலக்கழித்து (தேவா. 236:1). அலசுதல் = (செ. குன்றிய. வி.). 1. அலைதல். இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு (மணி. 9:7). 2. வருந்துதல். திருவுடம் பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப்ப.18). 3. சோர்தல். ம.அலசுக. bj., க. அலச்சு. (செ. குன்றாவி.) 1. ஆடையை நீரிற் கசக்கிக் கழுவுதல். 2. வாயடங்குமாறு திறம்படக் கடிந்து பேசுதல். அவனை நன்றாய் அலசிவிட்டான். (உ.வ.). து.அலசு. bj., க. அலச்சு. அலசடி = துன்பம். அலம்புதல் = (செ.குன்றிய வி.) அலைதல். வண்டலம்புஞ் சோலை (திவ். திருவாய். 2:8:11). (செ. குன்றா வி.) 1. அலைத்தல். (திவ். பெரியாழ். 4:2:1). 2. கழுவுதல். வடிம்பலம்ப நின்றான் (புறநா. 9, உரை). அலப்புதல் = 1. வாயசைத்தல். 2. வீண் பேச்சுப் பேசுதல். 3. பிதற்றுதல். அலப்பிய தக்கன் பெருவேள்வி (தேவா. 236:1). அலுங்குதல் = சிறிது அசைதல். அலுக்குதல் = சிறிது அசைத்தல். அலுங்கு-அணுங்கு. அனுங்குதல் = 1. அசைதல். 2. வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா. நகர. 25). அலுக்கு-அனுக்கு. அனுக்குதல் = 1. அசைத்தல். 2. வருந்துதல். அல்-அலு. அலுத்தல் = 1. அசைதல். 2. களைத்தல். 3. சோர்தல். அலுத்துப் புலுத்து = மிகக் களைத்து. க. அல. தெ. அலயு. அலுப்பு = தளர்வு, களைப்பு. k., bj., க. அலுப்பு. அலு-அலுவல் = 1. உடல் தளரச் செய்யும் வேலை. 2. வேலை. சமயமிதுவென் றலுவலிட்டு (மீனாட்சி. பிள்ளைத். 70). அல்-அலை. அலைதல் = 1. அசைதல். அலைந்தன நாகம் (கந்தபு. முதனாட். 50). 2. திரிதல். புசிப்புக் கலைந்திடல் (தாயு.சித்தர். 5.) 3. வருந்துதல். k., தெ, அல. f., துளு. அலெ. அல்-அலை-அசை. அசைதலாவது, இடமும் வலமும் அல்லது மேலுங் கீழும் சாய்தல். சாய்தல் வளைதல் வகைகளுள் ஒன்று; வளைதலின் தொடக்கம் எனினுமாம். பொழுது சாய்தல் என்னும் வழக்கை நோக்குக. அசைதல் = 1. நுடங்குதல். அசையியற் குண்டு (குறள்.1098) 2. ஆடுதல். (பிங்.) 3. இயங்குதல். அவனன்றி யோரணுவு மசையாது (தாயு. எங்கு. 1). 4. மெல்லச் செல்லுதல். 5. விட்டுப் போதல். அசைந்திடா தொழிகவென (ஞானவா. சிகித். 70). 6. நீங்குதல். அசையாது நிற்கும் பழி (ஆசாரக். 74). 7. ஓய்தல். நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி (சிறுபாண். 32). 8. கலங்குதல். அந்தக னசைந்து நின்றான் (கந்தபு. சிங்க. 310). 9. இளைப்பாறுதல். புன்மேய்த் தசைஇ (பு.வெ.1:11). 10. சோம்புதல். இலமென் றசைஇ யிருப்பாரை (குறள்.1040). 11. தங்குதல். கல்லென் சீறூர் எல்லியி னசைஇ (அகநா. 63). 12. கிடத்தல். குறங்கின் மிசை யசை இய தொருகை (திருமுரு. 109.). தெ. அசியாடு. அசைத்தல் = 1. ஆட்டுதல். நந்திபிரான் திருப்பிரம்பை யசைத்தருள (காஞ்சிப்பு. மணிகண். 34). 2. அசைத்துக் கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா. 322:1) 3. அலகசைத்துத் தின்னுதல். 4. நாவசைத்துச் சொல்லுதல். சேடனாயிர நாவினாலு மசைக்கினும் (குற்றா. தல. திருக்குற்றா. 70). 5. தட்டுதல். கதவஞ் சேர்த் தசைத்தகை (கலித்.68). 6. வருத்துதல். உயங்குநாய் நாவின் நல்லெழி லசைஇ (சிறுபாண்.17). அசை = 1. அசைச் சொல். 2. செய்யுளுறுப்பு வகை. 3. தாளக் காலப்பகுதி கொட்டு மசையும் (சிலப். 3:16, உரை). 4. விலங்குகள் இரை மெல்கை. 5. சுவடித் தூக்கு. அசைவு = 1. சலனம். 2. தளர்வு. 3. சோம்பு. 4. நிலைமை கெட்டு வருந்தும் வருத்தம். இளிவே யிழவே யசைவே (தொல். மெய்ப் பாட். 5), 5. தோல்வி, அசைவில படை (தேவா. 568:6). அசைவு செய்தல் = உண்ணுதல். நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா. 568:6). அசை-வ. அச்-அசன (உணவு). அசை-அசங்கு. அசங்குதல் = அசைதல். சங்கர நான் முகர் கைத்தலம் விண்டசங்க (கம்பரா. இராவணன் வதை. 28). அசங்கு-அசக்கு. அசக்குதல் = அசைத்தல். அகடசக் கரவின் மணியா (கந்தபு.கடவுள்வா.). ஒ.நோ : OE Scacan, OS Skakan, ON Skaka, E. Shake. அசக்கு-அயக்கு. அயக்குதல் = அசைத்தல். குன்றுகளயக்கவின் (கம்பரா. சேதுப. 10). அசை-அயை-அயர். அயர்தல் = 1. தளர்தல். அயலார்போ லயர் வேனோ (திருவாச. 32 : 9). 2. உணர் வழிதல். அயர்ந்து உறங்குகிறான். (உ.வ.) 3. மயக்க மடைதல். 4. மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு.வெ. 10, காஞ்சி.2). 5. அறிவிழத்தல். ஐம்புல வேடரி னயர்ந்தனை மறந்தென (சிவஞா. 8). 6. மதி மயங்குதல். அணைவுறு வைகலி னயர்ந்தனன் மயங்கி (சிலப். 3:173). 7. வழிபடுதல். பலிசெய் தயரா நிற்கும் (திருக்கோ. 348). 8. தெய்வமேறி யாடுதல். சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் (பெரியபு. திருக்குறி. 7). 9. விளையாடுதல். பிரிவி லாய முரியதொன் றயர (குறுந்.144). 10. தளருமளவு வேலை செய்தல். 11. செய்தல். (திவா.). ம. அயர்(க்க). தெ. அயிலு. அயர்தி = 1. சோர்வு. 2 மறதி. அயர்-அசர். அயர்தி-அசர்தி-அசதி. அசரப் போடுதல் = தளரவிடுதல், காலந்தாழ்த்துதல். அயை-அயா = தளர்ச்சி. (திவா.). அயாவுயிர்த்தல் = (செ.குன்றிய வி.) 1. களைப்பு நீங்கல். 2. வருத்தந் தீர்தல். அமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600.) 3. நெட்டுயிர்த்தல். அழுதனளேங்கி யயாவுயிர்த் தெழுதலும் (மணி. 21 : 26). (செ. குன்றா வி.) இளைப்பாற்றுதல். எம்மைச் சுமந் தயாவுயிர்த்த வாண்மை (சீவக. 2947). அயா-அயாவு. அயாவுதல் = வருந்துதல். மானயா நோக்கியர் (சீவக. 1822). அயை-ஆய். ஆய்தல் = 1. அசைதல். ஆய்மறியே (திருக்கோ.125, உரை). 2. சோர்தல். 3. வருந்துதல். ஐய விடைமடவா யாய (திணைமாலை. 17). 3. கொண்டாடுதல். ஆயு மடுதிறலாற்கு (பு.வெ.4:16). ஆய் = வருத்தம். (அக. நி.). k., க, து. ஆய். அல்-ஆல். ஆலுதல் = 1. சுற்றுதல். 2. சுற்றியாடுதல். கரைநின் றாலு மொருமயில் தனக்கு (மணி.4:11). 3. களித்தல். (திவ். திருமாலை. 14, வியாக்). 4. தங்குதல். (கலித். 36:2, உரை). க. ஆல். ஆல்-ஆலை = 1. சுற்றியாடும் கரும்பாலை. ஆலைபா யோதை (சேதுபு. நாட்டு. 93). 2. அலைவுறுதல். 3. மனஞ் சுழலுதல். நெஞ்ச மாலைபாய்த் துள்ள மழிகின்றேன் (அருட்பா, விண்ணப்பக்கலி, 406). ஆலைமாலை = தொந்தரவு. ஆல்-ஆலா = வட்டமிட்டுப் பறக்கும் பறவை வகை. கம் (நீர்) + ஆலை = கம்மாலை-கமலை = கிணற்று நீரிறைக்கும் காளையேற்றம். முதற் காலத்தில் கமலை சுற்றிவரும் அமைப்பா யிருந்தது. இக்காலத்தும் தொண்டை நாட்டின் தென்பாகத்தில் சுற்றுக் கவலை ஆடுதல் காண்க. காளை யேற்றத்தைக் கமலை யென்பது பாண்டிநாட்டு வழக்கு; கவலையென்பது சோழ கொங்கு நாட்டு வழக்கு. தெ. கபிலெ, க. கபிலெ, கபலி, ம.கப்பி, து. கபி. கன்னடத்திலும் தெலுங்கிலும் வகரம் பகரமாகத் திரிவதால், அதைத் துணைக் கொண்டு கவலையைக் கபிலை என்று திரித்து, அதை வடசொல்லாகக் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலி. கபிலை என்பது குரால் (புகர்நிற ஆன்). ஆவைக் கட்டி நீரிறைக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. கவலை என்னும் தென்சொல்லை வடசொல்லாக்கவே, கபிலை என்னும் வட சொல்லை ஆண்டுள்ளனர் தமிழ்ப்பகைவர். கம் என்பதும் தென் சொல்லே. அம் = நீர். அம்-கம். இனி, கருமம் என்பதன் குறுக்கமான கம் என்னுஞ் சொல், முதல் தொழிலான பயிர்த் தொழிலைக் குறித்தது எனினுமாம். ஆல்-ஆலத்தி = வழிபாட்டிலும் கண்ணெச்சில் கழித்தலிலும், விளக்கு முத்து சோறு முதலியவற்றைச் சுற்றியெடுத்தல். கூத்தும் ஆலத்தியுங் கண்டு (சீவக.2468, உரை). ஆலத்தி யெடுத்தல், ஆலத்தி சுற்றுதல், ஆலத்தி வழித்தல் என்பன உலக வழக்கு. மரமதைக் கண்டு மாதர் மரமொடு மரமெடுத்தார் (தனிப்பா. 2ஆம் பாகம்). மரமொடு மரம் = ஆலத்தி. வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங் கையிலே (ஈடு, 1:8:9). முத்தைத் தட்டில் வைத்துச் சுற்றுதல் முத்தாலத்தி. முத்தாலத்தி கொண் டெண்ணாயிர மடவார்சூழ (தமிழ்நா. 240). சோற்றுருண்டையைத் தட்டில் வைத்துச் சுற்றுதல் சோற்றாலத்தி (அன்னாலத்தி). ஆலத்தி-வ. ஆரத்தி. ஆலத்தி-ஆலாத்தி. ஆலாத்தி சுழற்ற லென்கோ (சௌந்தரி. 103). ஆலத்தி-ஆளத்தி = மெலிவு சமன் வலிவு என்னும் முந்நிலை களிலும் இசை வட்டமிட்டுப் பாடுதல். மகரத்தி னொற்றாற் சுருதி விரவும் பகருங் குறினெடில்பா ரித்து-நிகரிலாத் தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி மன்னாவிச் சொல்லின் வகை. குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்து நின்றார்ந்த மந்நகரந் தவ்வொடு - நன்றாக நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க ஆளத்தி யாமென் றறி என்பன அடியார்க்கு நல்லாருரை மேற்கொள் (சிலப்.3:26). ஆளத்தி-வ. ஆலப்தி. ஆல்-ஆள்-ஆழி = 1. வட்டம். (பிங்.) 2. மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக. 833). 3. கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற் சுழி. ஆழியாற் காணாமோ யாம் (ஐந்.ஐம்.43). 4. சக்கரம். (பிங்.). 5. குயவன் சக்கரம். மட்கலத் தாழியென்ன (கம்பரா. வாலிவ. 37). 6. சக்கரப் படைக்கலம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ். திருவாய். 7:4:1). 7. கட்டளைச் சக்கரம். ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா. சிவவிரத. 16). ஆழிமால்வரை = சக்கரவாளமலை. ஆழிமால் வரைக்கப்புறம் புகினும் (புறத். ஆசிரியமாலை). ஆல்-ஆர்-ஆரம் = 1. பறவைக் கழுத்து வட்ட வரி. 2. பதக்கம். (திவா.). ஆள்-ஆடு. ஆடுதல் = 1. அசைதல். ஆடுகழை (கலித்.41). 2. உலாவுதல். இளமழை யாடும் (கலித். 41). 3. சுற்றுதல். பம்பரம் ஆடுகிறது. 4. சுற்றி வருதல். செக்காடுகிறது. 5. நடஞ் செய்தல். அம்பலத்தாடுவான் (பெரியபு. கடவுள்.). 6. கூத்தாடுதல் (பிங்.) 7. நாடகம் நடித்தல். 8.விளையாடுதல். அகன்மலை யாடி (மணி.10:55). 9. அலைதல். ஆடித் திரிந்து நான் கற்றதுங் கேட்டதும் (தாயு. சச்சிதா. 5). 10. சண்டையில் திரிதல். வருந்தி-ஆடினாள் பாடினாள் (ஔவை. தனிப்பாடல்). 11. அளவிற்கு மிஞ்சி அதிகாரஞ் செலுத்துதல். 12. ஒரு துணைவினை. எ-டு: நீராடு, போராடு, சொல்லாடு, மல்லாடு, சேறாடு, நீறாடு. k., bj., f., து. ஆடு. ஆடு-ஆடகன் = ஆடுவோன் (நடிகன், விளையாடி). ஆடு-ஆட்டு = 1. கூத்து. பாட்டு மாட்டும் விரைஇ (மதுரைக். 616). 2. விளையாட்டு. அன்ன வகை யாட்டயர்ந்து (பரிபா. 10:97). 3. அசைப்பு. ஓர் ஆட்டு ஆட்டினான். 4. ஆடுவிப்பு. ம. ஆட்டு. ஆட்டு-ஆட்டம் = 1. அசைவு. 2. உலாவல். அஞ்சன மேனியை யாட்டங் காணேன் (திவ். திருவாய்.10:3:3). 3. கூத்தாட்டு. 4. விளையாட்டு. 5. நாடக நடிப்பு. 6. ஒருமுறை நாடகமாடுகை அல்லது விளையாடுகை. ஒரு நாளைக்கு எத்தனை ஆட்டம்? 7. அளவிற்குமிஞ்சி அதிகாரஞ் செலுத்தல். ஆடாத ஆட்டம் ஆடினான். 8. அலைக்கழிப்பு. என்னை ஆட்டங்காட்டுகிறான். 9. முரண்டு. ஊருக்குப் போக வேண்டுமென்று ஒரே ஆட்டம் ஆடினான். ம.ஆட்டம். bj., f., து. ஆட்ட. ஆட்டு-ஆட்டகம் = நீராட்டுச்சாலை, ஆட்டகத்தி லானைந் துகந்தார் போலும் (தேவா. 720:4). ஆட்டு-ஆட்டை = ஒருமுறை விளையாட்டு. எ-டு : முதலாட்டை, கடைசியாட்டை. ஆட்டு-ஆட்டாளி = கருமத்தலைவன். உங்கள் கருமங்களுக் கெல்லாம் நான் ஆட்டாளியா? (உ.வ.). ஆடு-ஆடி = 1. கூத்தாடி. மணிப்பை யரவினாடி (பாரத. அருச்சுனன்றவ. 113). 2. விளையாடி. 3. உருவ நிழலாடுங் கண்ணாடி. பொன்னி னாடியிற் பொருந்துபு நிற்போர் (மணி. 19:90). 4. பளிங்கு. விதிமா ணாடியின் வட்டங் குயின்று (மணி. 8:47). கண்+ஆடி = கண்ணாடி. ம. கண்ணாடி. ஆடு-ஆடை = 1. அசையும் மெல்லிய துணி. 2. உடை (பிங்.) 3. ஆடை போற் பரக்கும் காய்ச்சிய பாலேடு. ஆடைதனை யொதுக்கிடும் (அழகர்கல. 87). பால்+ஆடை = பாலாடை. பனை+ஆடை = பனையாடை-பன்னாடை. பனையரையில் ஆடை போன்றிருப்பதால், நெய்யரி பனை யாடை யெனப்பட்டது. பன்னாடை = 1. பனை தெங்கு முதலியவற்றின் மட்டையடியில், அலசலான முரட்டுச் சணல் துணிபோல் ஒட்டிக் கொண் டிருக்கும் உறுப்பு. 2. அலசலான முரட்டுத் துணி வகை (W.). 3. நல்லதைத் தள்ளி அல்லதைக் கொள்ளும் பேதை அல்லது முட்டாள். பன்னாடை நெய்யரியாகப் பயன்படுத்தப் பெறுவதாலும், சாற்றைப் போக்கிச் சக்கையைப் பற்றிக் கொள்வதாலும், பயனுள்ளதை விட்டுவிட்டுப் பயனற்ற செய்தியைப் பற்றிக் கொள்ளும் பேதைக் குவமையாயிற்று. அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம்ஆ டெருமை நெய்யரி அன்னர் தலையிடை கடைமா ணாக்கர் என்பது நன்னூற் பாயிரம் (38). பனையுறுப்பின் பெயர் தென்னை யுறுப்பிற்கானது ஒப்புமை பற்றி யென்க. ஒ.நோ : எண்ணெய் = எள் நெய், வேறு நெய். உல் (உ) என்னும் வேர்ச்சொல் உல்3 (உள்ளொடுங்கற் கருத்துவேர்) உல்-உல்கு. உல்குதல் = உள்வளைதல், ஒடுங்குதல், சிறுத்தல். உல்-உல்வி = ஒல்லி. உல்லி-ஒல்லி. ஒல்லொல்லி = மிக மெலிந்த ஆள். உல்லாடி-ஒல்லியான ஆள். உல்லாடி-ஒல்லாடி = மெல்லிய ஆள். உல்-உள்-உள்கு. உள்குதல் = உள்ளழிதல், ஒடுங்குதல், மனந்தளர்தல். சிந்தையுள்கி (இரகு. அயனுதய.20). உள்கு-உளுக்கு-உளுக்கா. உளுக்காத்தல் = 1. சுவர் கீழிறங்குதல். 2. கீழிருத்தல், ஒடுங்கியிருத்தல், இருத்தல். சோளேந்திர சிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் (ஈடு, 6, 4, 9.) உளுக்கா-உளுக்கார். உளுக்கார்தல் என்பது இன்றும் நாட்டுப்புற வழக்காம். உளுக்கார்-உட்கார். உட்கார்தல் = கீழ் அல்லது இருக்கையில் இருத்தல். எங்ஙனம் அமர்ந்திருப்பினும், நிற்கும் நிலையினும் உட்கார்ந் திருக்கும் இருப்பு உருவ அளவில் ஒடுங்கியிருத்தல் காண்க. உட்கார்-உட்கார்த்து (பிறவினை.) உட்கார்த்துதல் = உட்காரவைத்தல். உள்கு-உட்கு. உட்குதல் = 1. அஞ்சுதல். K.ugi. நண்ணாரும் உட்குமென் பீடு. (குறள்.1088). 2. நாணுதல். சேரன் .... உட்காதே. (தமிழ்நா. ஔவை) உட்கு-உக்கு. ஒ.நோ: மட்கு-மக்கு. உக்குதல் = 1. மெலிதல். துயரத்தால் மெலிதலை உக்கிப்போதல் என்பர். 2. உளுத்தல், உரங்கெடுதல். உக்கின மரம் என்பது உலக வழக்கு. M. ukku. உக்கு-உக்கம் = ஒடுங்கிய இடை. M. ukkam. உக்கஞ் சேர்த்திய தொருகை (திருமுரு. 108). உக்கல் = 1. உளுத்தது 2. பதனழிவு. உக்கம்-உக்கல்-ஒக்கல் = இடுப்பு (எனினுமாம்). உக்கல்-உக்கலை-ஒக்கலை = இடுப்பு (எனினுமாம்). M. ukkal. உக்கி = இருகாதையும் இருகையால் மாறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தெழும் தோப்புக்கரணம் என்னும் தண்டனை வகை. உக்கிடு = நாணத்தைக் குறிக்கும் குறிப்புச்சொல். உடுக்கு-இடையொடுங்கு பறை. உடுக்கு-உடுக்கை = இடையொடுங்கு பறை. நிலையாய் உடுக்கை வாசிப்பான் (S.I.I.ii, 254) cL¡if-Skt. Hudukka. உடு-இடு-இடை = ஒடுங்கின அல்லது சிறுத்த உறுப்பு. இடு-இடுப்பு = இடையின் பக்கம். இடு-இடுகு. இடுகுதல் = ஒடுங்குதல், சிறுத்தல். இடுகு-இடுக்கு = ஒடுங்கிய இடைவெளி. இடுக்கு-இடுக்கல் = ஒடுங்கிய இடைவெளி. இடுக்குதல் = ஒடுக்கி அல்லது நெருக்கிப்பிடித்தல். இடுக்கு-இடுக்கி = நெருக்கிப் பிடிக்கும் கருவி. இடுக்கம் = நெருக்கம், இடைவெளியொடுக்கம். இட்டளம் = நெருக்கம், தளர்வு. பரமபதத்தில் இட்டளமுந் தீர்ந்தது (ஈடு. 3,8,2). இட்டறுதி = இக்கட்டான சமையம், வறுமை. இட்டிடை = 1. சிறுத்த இடை. இட்டிடையின் மின்னிப் பொலிந்து (திருவாச. 7:16). 2. சிறிது. இட்டிடை யிடைதனக்கு (கந்தபு. தெய்வ. யா.183). 3. இடையூறு. மிகுபிணி யிட்டிடைசெய (திருப்பு.1053). இட்டிடைஞ்சல் = வறுமை, துன்பம். இட்டிது = 1. சிறிது. ஆகா றளவிட்டி தாயினும் (குறள்.478). 2. அண்மை. இட்டிதாக வந்துரைமினோ (தேவா. 1240:2) இட்டிமை = சிறுமை, ஒடுக்கம். இட்டிய = சிறிய (ஐங்குறு. 215). இட்டு = சிறிது. இட்டிடை = சிறிய இடைவெளி. இட்டேறி = சிறிய வண்டிப்பாதை. இட்டி = சிறு செங்கல். இட்டி-இட்டிகை = மிகச்சிறிய செங்கல். இடுக்கண் = துன்பம், இரக்கம். இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம். இடுக்கிடை = நெருக்கம் இடுகுதல் = 1. ஒடுங்குதல். கண்களை யிடுகக்கோட்டி (சீவக. 2086). 2. சிறுகுதல். இடுகிடைத்தோகாய் (கம்பரா.சித்திர.19). இடுங்குதல் - உள்ளொடுங்குதல். கண்ணிடுங்கி (திவ்.பெரியதி. 1, 3, 4). இடும்பை = 1. துன்பம். எமஞ்சாலா இடும்பை (தொல். பொ. 50). 2. வறுமை. இடும்மையால் அடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5). 3. நோய். கரப்பிடும்பை இல்லாரைக் காணிள் (குறள்.1056). 4. தீமை. பூதம்... இடும்பை செய்திடும் (மணி 1:22). இடுவல்-இடுக்கு. இண்டு = மிகச்சிறிய இடைவெளி அல்லது துளை. இண்டும் இடுக்கும் என்பது உலகவழக்கு. உச்சட்டை = ஒல்லி. உச்சட்டை-ஒச்சட்டை = ஒல்லி. உச்சட்டை-உஞ்சட்டை = ஒல்லி. உஞ்சட்டை-ஒஞ்சட்டை = ஒல்லி. உச்சந்தம் = தணிவு. உச்சந்தம்-ஒச்சந்தம் = தணிவு. உறத்தல் = மிகச் சிறிதாதல். உறக்குந் துணையதோர் ஆலம்வித் தீண்டி (நாலடி. 38). உற-உறகு. உறகுதல் - ஒடுங்கித் தூங்குதல். பறவை யரையா வுறங்கல் (திவ்.பெரியாழ். 5, 2, 9). K. oragu. உறகு-உறங்க. உறங்குதல் = 1. ஒடுங்குதல். தண்டலைக்கா வுறங்கின (தமிழ்நா. 132). 2. தூங்குதல். உறங்குவது போலுஞ் சாக்காடு (குறள்.839). 3. சோர்தல். 4. தங்குதல். தாமரை யுறங்குஞ் செய்யாள் (கம்பரா. நாட்டுப். 6). K.oran’gu, M. urannu, உறங்காப்புளி = இரவில் இலைகுவியாத புளிய மரம். உறங்கு-உறக்கு (பிறவினை). M. urakkam. உறண்டுதல் = மெலிதல், நோய்தல். உறண்டு-உறட்டு (பி.வி.) உறட்டலன் = மெலிந்தவன், உடல்வற்றியவன். உறை = மிகக் குறைவானது. உறைவிற்குலா நுகலாள்விலை (திருக்கோவை, 266) உறையிடுதல் = பேரெண்ணைக் குறிக்க ஒன்று என்னும் சிற்றெண்ணைக் குறியாய்க் கொள்ளுதல். உறையிடத் தேய்ந்திடும் இவ்வந்தி வானத் துடுக்குலமே (அஷ்டப். திருவேங்கடத் தந்தாதி, 34) உல்-ஒல்-ஒல்லட்டை = ஒல்லியானவன். ஒல்-ஒல்கு. ஒல்குதல் = 1. தளர்தல். ஒல்க லுள்ள மொடு (புறம்.135:8) 2. மெலிதல். ஒல்குதேவியை (கந்தபு. காமதகன. 61). 3. குழைதல். ஒல்கு தீம்பண்டம் (சீவக. 62). 4. சுருங்குதல். ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் (குறள்.136). 5. ஒதுங்குதல். பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி (சீவக. 595). 6. வறுமைப்படுதல். ஓல்கிடத் துலப்பிலா வுணர்விலார் (கலித். 25). 7. மனம் அடங்குதல். ஒல்காதார் வாய்விட்டுலம்புப (நீதிநெறி. 72). ஒல்கு-ஒஃகு, ஒஃகுதல் = பின்வாங்குதல், தோற்றல். ஏற்ற தெவ்வருக் கொல்கினன் (கம்பரா. பள்ளியடை.106). ஒல்கு-ஒற்கு. ஒற்குதல் = 1. குறைதல். ஒற்கா மரபிற் பொதியி லன்றியும் (சிலப். 25:117) 2. தளர்தல். ஒற்கா வுள்ளத் தொழியா னாகலின் (மணி. 15:18) ஒற்கு-ஒற்கம் = 1. குறைவு. ஒற்கமில் வளன் (கந்தபு.மேரு. 70). 2. தளர்ச்சி. ஒற்கத்தி னூற்றாந் துணை (குறள். 414) 3. வறுமை. (தொல்.சொல்.360). 4. அடக்கம். ஒற்கமன் றூத்தைவா யங்காத்தல் (நீதிநெறி. 23). ஒஞ்சுதல் = நாணுதல். ஒஞ்சு-ஒஞ்சி. ஒஞ்சித்தல் = நாணுதல். ஒஞ்சு-ஒச்சம் (தொ.பெ.) = 1. குறை, குறைவு. 2. நாணம் ஒச்சித்தல் = நாணுதல். ஒச்சியம் = கூச்சம். ஒச்சி-ஒசி. ஒசிதல் =1. நாணுதல். கண்ணரக்கி நோக்கா தொசிந்து (சீவக. 2511) 2. சாய்தல். வாயருகு வந்தொசிந்து (சீவக. 595) 3. நுடங்குதல். மாந்துண ரொசிய வேறி (குளா. இரத. 44). 4. முறிதல். 5. ஓய்தல். 6. வருந்துதல். நுண்ணிடை யொசியப் புல்லினான். (சீவக. 989). ஒசிந்தநோக்கு = ஒதுக்கப் பார்வை. ஒடு-ஒடுங்கு. ஒடுங்குதல் = 1. சுருங்குதல். 2. குவிதல். தாமரையின் தடம்போ தொடுங்க (திவ். இயற். திருவிருத். 76). 3. ஒதுங்குதல் மேலையோன் புடைதனி லொடுங்கியே (கந்தபு. தாரகன் வதை. 164). 4. அடங்குதல். என்னிதயமு மொடுங்கவில்லை (தாயு. ஆனந்தமா. 9). 5. கீழ்ப்படிதல். 6. உள்ளொடுங்குதல், உட்கலத்தல். ஒடுங்கி = ஆமை. ஒடுக்கி = 1. கலங்களின் அதுக்கு. 2.அடக்கம். ஒடு-ஒடி. ஒடிதல் = முறிதல். ஒடித்துக்கேட்டல் = விலையைக் குறைத்துக் கேட்டல். ஒடு-ஒசி. ஒ.நோ : குடவன்-குசவன், பிடி-பிசி (பொய்). பொய் சொல்லுதலைப் பொய் பிடித்தல் என்பது சேலம் வட்டார வழக்கு. ஒடுங்கு-அடங்கு-அடக்கு-அடக்கம். அடங்குதல் - 1. சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல் ஒடுங்கு-ஒதுங்கு-ஒதுக்கு-ஒதுக்கம். ஒதுங்குதல் = 1. ஒடுங்குதல். 2. விலகுதல். 3. வறுமையடைதல். 4. சாதல். ஒதுங்கு-அதுங்கு-அதுக்கு-அதுக்கம். அதுங்குதல் = உள்ளொடுங்குதல், கலம் நெளிதல். அதுக்குதல் = வாயிலடக்குதல், அமுக்குதல். அதுக்கு = ஒடுக்கு, கலநெளிவு. ஒதுக்கு-ஒருங்கு. ஒருங்குதல் = 1. ஒடுங்குதல். உரமொருங்கியது ... வாலியது மார்பு (கம்பரா. யுத்த. மந்திர. 90). 2. அழிதல். நமரெல்லாரும் ஒங்கினர் சமரில் (பிரபோத, 38:1) ஒ.நோ : விதை-விரை. ஒருங்கு-ஒருக்கு. ஒருக்குதல் = 1. அடக்குதல். மனத்தை யொருக்கு மொருக்கத்தி னுள்னே (பதினொ. திருவிடைமும். 24). 2. அழித்தல். இன்றொருக்கினே னித்தனைவீரரை (கம்பரா. பிரமா. 195). இனி, ஓடுங்கு-ஒருங்கு என்றுமாம். ஒ.நோ : அடுப்பங்கடை-அடுப்பங்கரை, படவர்-பரவர். ஒன்று சேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்னும் சொல்லும், ஒடுங்கு தலைக் குறிக்கும் ஒருங்கு என்னும் சொல்லும், வெவ்வேறாம். ஒன்று சேர்தற்கருத்திற் சாதற்கருத்திற் கிடமின்மை காண்க. ஒல்கு-அல்க. அல்குதல் = 1. சுருங்குதல். 2. அழிதல். அளியினாற் றொழுவார்வினை யல்குமே (தேவா. 168:10) 3. தங்குதல் (பிங்.) ஒ.நோ : ஒதுங்குதல் = புகலடைதல். ஒதுக்கு = 1. பிறர் வீட்டிற் குடியிருக்கை. 2. புகலிடம். ஒதுக்கிடம் = 1. ஒதுங்குமிடம். 2. தங்கும் விடுதி. 3. அண்டிவதியுமிடம். ஒதுக்கம் = இருப்பிடம். V‰¿D¡ bfhJ¡f« bršt ËÅiz ky®¢nrto bfhL¤j (Ótf., 3100). ஒதுக்கக்கருத்தில் தங்கற்கருத்துத் தோன்றிற்று. அல்கல்-1. குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66). 2. வறுமை. (திவா). 3. தங்குகை (அகம்.20). அல்குநர் = தங்கும் குடிகள். அல்குநர் போகிய வூரோ ரன்னர் (கலித். 23). அல்கு-அஃகு. அஃகுதல் = 1. அளவிற் குறுகுதுல். (நன். 60). 2. சுருங்குதல், கற்பக் கழிமடம் அஃகும் (நான்மணி. 20). 3. குவிதல். ஆம்பல்... மீட்டஃகுதலும் (காஞ்சிப்பு. திருக்கண்.104). 4. நுண்ணிதாதல். அஃகியகன்ற வறிவு (குறள்.175). 5. மனங்குன்றுதல். 6. கழிந்துபோதல். அல்லாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா. 69). அஃகல் = 1. சிறிதாகை (திவா.) 2. வறுமை. (திவா.) அல்கு-அற்கு. அற்குதல் = நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம் (குறள்.333). தங்கற்கருத்தில் நிலைபேற்றுக் கருத்துத் தோன்றும். அற்கு-அற்கம் = அடக்கம். அற்கமொன்றும் அறிவுறாள் (திவ். திருவாய். 6, 5, 4). குடிகள் அரசனுக்கு அடங்கி வரி கொடுப்பதால், உல்கு என்னும் சொல் தென்சொல்லாகவுமிருக்கலாம். சுல்க (Sulka) என்னும் வடசொல் மணமகட் கொள்ளும் பரிசத்தையே சிறப்பாய்க் குறிக்கும். உல்கு என்னும் சொல்லேனும், சுல்க என்னும் வடசொல்லின் திரிபான சுங்கம் என்னும் சொல்லேனும், தமிழிற் பரிசத்தைக் குறிப்பதில்லை. உல்கு தென்சொல்லாயின், உல்கு-சுல்க(வ.) சுங்கம் என்று திரிந்திருத்தல் வேண்டும். தென் சொல்லின் திரிபான வடசொல்லினின்று திரிந்த சொல்லும் பிற்காலத் தமிழில் வழங்கும். எ-டு : தென்சொல் வடசொல் தென்சொல்திரிபு அரத்தம் ரக்த இரத்தம் திரு ஸ்ரீ சீ. உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள் முதற் கருத்தரங்கு, முறைப்படி தமிழ்நாட்டில் நடைபெறாது, அயல்நாடான மலையாவில் நடைபெற்றது. கட்சித் தலைவர் பலர் சுற்றுலாச் செல்வதுபோற் குடும்பத்துடனும் அங்குச் சென்றனர். இரண்டாம் கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. தமிழன் பர் பலர் என்னைப் பற்றித் திரு. அண்ணாத்துரையார்க்கு எழுதினதினால், அவர் தம் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்த்தாட்கள் (Tamil Paper) என்னும் கடைப்பட்ட அ-ஆம் கட்டுரைக் குழுவில், இறுதியில் என் பெயரைச் சேர்த்துக் கொண்டார். எனக்குரிய குழு மொழிநூல், அதற்குத் தலைவரா யிருந்தவர் வங்கப் பிராமணரான பர். சட்டர்சி. தமிழ் வல்லுயிருள்ள வழங்கு மொழியாதலால், உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு, மறைமலையடிகள் இல்லாத காலத்தில் அவர்கள் வழிப்பட்ட ஒரு மொழிநூலறிஞரான தமிழ்ப் புலவர் தலைமையில், தமிழருள்ள நாட்டில் தமிழிலேயே நடைபெறல் வேண்டும். அகப் பகைவரும் புறப்பகைவரும் அறவே விலக்கப் படல் வேண்டும். கட்டுரைகளெல்லாம் தமிழிலேயே படிக்கப் படல் வேண்டும். தமிழிற் பேசவோ எழுதவோ படிக்கவோ ஆற்றலில்லார் பார்வையாளராக மட்டும் இருத்தல் வேண்டும். கருத்தரங்கு மாநாட்டு மண்டபத்திற்கருகில் அமைக்கப்படும் மாபெரும் பந்தற்கீழ், பொதுமக்கள் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளையும் உரத்தொலிப் பான்கள் (Loud Speakers) வாயிலாகக் கேட்டறிதல் வேண்டும். மாநாடு முடிந்தபின், அதன் நடபடி(க்கை)கள் ஆங்கில அறிக்கை வாயிலாக அயல்நாட்டார்க்கு அறிவிக்கப்படல் வேண்டும். இம்முறையில் எம் மாநாடும் நடைபெறவில்லை. சென்னைக் கருத்தரங்கு மாநாட்டில் தமிழ்க் கட்டுரை படிப்போர்க்கு வழிகாட்டியாக விடுக்கப்பட்ட, ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான விளக்கக் குறிப்புகள் என்னும் அறிவிப்பில், யாதும் ஊரே யாவருங் கேளிர் என்கிற தமிழ் மூதுரையில் பொருத்தமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒன்றே உலகம் என்னும் நம் வாழ்வு முறையின் உயர்வு நவிற்சியற்ற காட்சியை வழங்குவதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். ..................... கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய பழங்குடி என்பது போன்ற தக்க ஆதாரமில்லாத தற்பெருமை யான கூற்றுக்கள், எதையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும் நம்முடைய தகுதியிலும் திறமையிலும் அவ நம்பிக்கை தான் ஏற்படச் செய்யும். என்றுள்ளது இஃதொன்றே, திருத் தனிநாயகம் உலகத் தமிழ்ப் பேரவை வையாபுரிகள் கூட்டம் என்பதைக் காட்டப் போதிய சான்றாம். உலகத் தமிழ்ப் பேரவைத் தலைவரான, தமிழறியாத பேரா. பில்லியோசா, பண்டைநாளில் சமற்கிருதமே இந்தியப் பொது மொழியாயிருந்த தென்றார். ஆரிய மொழியினரான திரு. ஐரா வதம்மகாதேவன் தமிழெழுத்தைப் பிராமியெழுத்தோடு தொடர்புபடுத்தி, தமிழெழுத்தும் தொல்காப்பியமும். கி.மு.2-அம் நூற்றாண்டில் தோன்றின என்றார். கொச்சைத் தமிழ் நச்சியா ரான பர்.காமில் சுவலெபில், மறைமலையடிகளும் சோமசுந்தர பாரதியாரும் பாரதிதாசனும் தமிழைக் கெடுத்தவர் என்று அறிவித்தார். அவர் நற்றிணை என்னும் கடைக்கழகச் செய்யுட் பனுவலையும் நாலுவேலி நிலம் என்னும் கடுங்கொச்சை நாடகப் பொத்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு, தமிழ் தோன்றிய காலம் கி.மு. 1500 என்று கணித்திருப்பதும், அது சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டிருப்பதும், இன்றைத் தமிழர் மாபெரும் பேதையர் கூட்டம் என்பதையே காட்டும். பாரிசு மாநகரில் நடந்த 3-ஆம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடும், சுற்றுலாக் கூட்டமாகவே நடந்தது. அதிற் கலந்து கொண்ட கட்சித் தலைவரையெல்லாம் தகுதி வாய்ந்தவரே யென்று, பொறுப்பற்றதனமாய் எழுதினார் ஒரு பொறுப்பு வாய்ந்த தமிழ்ப் பேராசிரியர். சிந்து வெளி நாகரிகம் திரவிடரது என்பது பர்.காமில் சுவெலபிலால் மறுக்கப்பட்டு, அதன் தீர்ப்பு திரு. ஐராவதம் மகாதேவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலகத் தமிழ்ப் பேரவையின் நோக்கம் ஆராய்ச்சியேயன்றி, தமிழை வளர்ப்பதோ பரப்புவதோ அன்றென்று திருத்தனிநாயகத்தால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. பட்டம் பெறுவதும் பதவியுயர்த்துவதும் பெரும் பொருளீட்டு வதுமே வணிகப் புலவர் குறிக்கோள். இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. (குறள். 374) குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பதை, வையாபுரிகள் போன்றே வணிகப் புலவரும் ஒத்துக் கொள்வதில்லை. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். (குறள்.850). A History of South India, The History and Culture of the Tamils, New Light on the Indus Civilization, Aryatarangini முதலிய எத்தனையோ வரலாற்று நூல்கள், தமிழுக்கும் தமிழர்க்கும் கேடாக வெளி யிடப்பட்டு வருகின்றன. அவற்றை வணிகப் புலவர் கண்டிப்பதே யில்லை. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர். (குறள். 1072) வணிகப் புலவர் சிலர், பண்டாரகர்ப் பட்டம் பெற்ற அளவில், தம்மை அனைத்து மறிந்தவரென்றும் எல்லாம் வல்லுநரென்றும் இறப்ப மதித்து, பல்கலைக் கழகத் துணைக் கண்காணகரையும் அமைச்சரையும் ஏமாற்றி வருகின்றனர். தான் அறியாதான் என்பதை அறியாதான் முட்டாள், அவனை விட்டொழி. (“He who knows not that he knows not is a fool, shun him.”) என்பது ஓர் ஆங்கிலப் பொன்மொழி. பிறநாட்டார்க்குக் கொச்சையும் (Barbarism) உலக வழக்கும் (Colloquialism) ஒன்றாம். தமிழர்க்கோ அவை முறையே தள்ளத் தக்கதும் கொள்ளத் தக்கதுமாய் வெவ்வேறாம். பர். காமில் சுவெலபில், தம் Lectures on Historical Grammer on Tamil என்னும் ஆங்கிலச் சுவடியில், கொச்சைத் தமிழையும் உலக வழக்குத் தமிழொடு சேர்க்கும் முப்பேராசிரியரை வானளாவப் புகழ்ந்து, “the three most eminent Tamil scholars of our time” என்று (பக். 12) குறித்திருக்கின்றார். அம்மூவருள், ஒருவர் மொழி நூலையே அறியாதவர்; ஒருவர் மேலையர் மொழிநூல்களைப் படித்து மட்டும் இருப்பவர்; ஒருவர் சமற்கிருத அடிப்படையில் தமிழாய்ந்தவர். இந்நூற்றாண்டில் முப்பெருந்தமிழ்ப் புலவர் என்று சொல்லத் தக்கார், மறைமலையடிகளும் சாமிநாதையரும் கா. சுப்பிரமணியப் பிள்ளையுமே. சமற்கிருதப் பேராசிரியரான பர். பரோவும் பர்.எமெனோவும் சிறந்த அறிஞரேனும், தமிழைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகர முதலி கொண்டும், திரவிட மொழிகளை அவற்றிலுள்ள அகர முதலிகள் கொண்டும், படித்தவரேயன்றி, திரவிடமொழி கட்குத் தாயான தமிழை ஆழ்ந்து ஆய்ந்தவரல்லர். அதனால், ஆரியமொழி திராவிடத்தினின்று 500 சொற்கள் போற் கடன் கொண்டுள்ளதே யன்றி, ஆரிய மொழியமைப்பிற்குள் திராவிடம் புகவில்லை யென்று, முடிபு கொண்டு விட்டனர். எத்துணைப் பேரறிஞராயினும், அடிப்படை தவறாயின் முடிபும் தவறாகவே யிருக்கும். மேலை மொழிநூலார் எல்லாரும், தமிழர் நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தேறிகள் என்னும் தவறான கொள்கையினரே. ஒரு நாட்டு இலக்கியத்தை அயலார் கற்று அதில் தேர்ச்சி பெறலாம். ஆயின், அதன் மொழியை, அதைத் தாய்மொழியாகக் கொண்டவரோடு பிள்ளைப் பருவத்தினின்று நெருங்கிப் பழகினாலொழிய, ஒரே தலைமுறையில் அவர் போல் முற்றக் கற்க முடியாது. ஓய்வு பெற்ற சமற்கிருதப் பேராசிரியான பரோவும் (T.Burrow) எமெனோவும் (M.B. Emeneau) தொகுத்துள்ள திரவிட அகர முதலி, திரவிடச் சொற் பிறப்பியல் அகர முதலி (A Dravidian Etymological Dictionary) என்று பெயர் பெற்றிருப்பினும், உண்மையில் ஓர் ஒப்பியல் அகர முதலியே (A Comparative Lexicon). கால்டுவெலார் கருத்திற் கிணங்கத் தமிழை ஆழ்ந்து கற்றுத் திரவிடமொழிகளைக் கொடிவழி முறைப்படி (Geneological method) ஆராயாது, இற்றை வண்ணனை மொழிநூல் (Descriptive Linguistics) போல் ஒப்பியல் முறைப்படி (Comparative method) மட்டும் நோக்கி, தமிழிலுள்ள தவறான சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியையும், தமிழைத் தாய்மொழியாகப் பயன் படுத்திக் கொண்டே அதை இயல்பாக வெறுக்கும் பிராமணக் குலத்தைச் சேர்ந்த (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் எழுதிய தொல்காப்பிய எழுத்ததிகார சொல்லதிகாரக் குறிப்புரைகளையும், அளவை நூல்களல்லாத பிறவற்றையும், தமிழறியாதவர் தொகுத்த திரவிட மொழி யகர முதலிகளையுமே, அடிப்படையாகக் கொண்டு தொகுத்ததனால், அவர் அகரமுதலி பின்வருமாறு பல பிழைபாடுகள் மலிந்துள்ளது. (1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய தென்னும் அடிப்படை யுண்மையை அறியாமை. (2) சமற்கிருதம் முந்தியதென்றும் அதனால் தமிழ் வளம் படுத்தப் பட்டதென்றும் ஒரு முற்கோள் (prejudice) உடைமை. (3) அங்கணம் (anganam) என்பதை ankanam என்றும், அஞ்சு (anju) என்பதை ancu என்றும், ஆண்டி (andi) என்பதை anti என்றும், அந்தணன் (andanam) என்பதை antanan என்றும், அம்பு (ambu) என்பதை ampu என்றும், தவறாக ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்த்துள்ளமை. (4) பல தென் சொற்களை ஆரியமாக அல்லது சமற்கிருத மாகக் காட்டியுள்ளமை. எ-டு : சமற்கிருதம் தமிழ் ஆர்ய-பிரா. அச்சன் அஜ்ஜ ஸகர ஆயிரம் (5) பல தென்சொற்களை ஐயுறவுபடக் குறித்துள்ளமை. எ-டு : ஆணி - Cf. ani காக்கை - Cf. kaka முகம் - Cf. mukha கான் - kan கானம் Cf. kanana (6) சில தமிழ்ச் சொற்கும் திரவிடச் சொற்கும் தவறாக மூலங் காட்டப்பட்டுள்ளமை. எ-டு : தோட்டம் < தொடு (தோண்டு) உரா (பிராகுவீ) = வீடு < ஊர். தோடு = திராட்சி. தோடு-தோட்டம். ஒ.நோ : தொகுப்பு-தோப்பு. உறை (உறையுள்) = வீடு. உறை-உரா. (7) சில கூட்டுச் சொற்கள் தவறாகப் பிரிக்கப் பட் டுள்ளமை. (எ-டு) : தகப்பன் = தகு=அப்பன். தம்+அப்பன் = தமப்பன்-தகப்பன் என்பதே உண்மை நிலையாம். (8) ஆயிரக் கணக்கான தென் சொற்கள் விடுபட்டுப் போன சென்னை அகர முதலியிலுள்ள தமிழ்ச் சொற்களும், எல்லாம் காட்டப்படாமை. (9) ஒரு சொற்கேனும் வரலாறு வரையப் படாமை. (10) வட இந்தியச் சொற்களையெல்லாம் சமற்கிருத மென்று கொண்டுள்ளமை. இவற்றால், இற்றை மேலைத் தமிழறிஞருள் தலைசிறந்த பேராசிரியன்மாரும் பண்டாரகன்மாரும் தமிழதிகாரிகளல்லர் என்றும், அவர்கள் கலந்து கொண்டதனால் உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடுகள் சிறப்புற்றுவிடா என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. கால்டுவெலார் திரவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கண 3-ஆம் பதிப்பில், முன்னுரையிலுள்ள திரவிட மொழிகளின் முதுபழஞ் சான்றுகள் என்னும் பகுதியில், ‘Komaria Akron’ என்னும் தலைப்பின் கீழுள்ள அடிக்குறிப்பில் (பக்.96). “Compare Cymri (Wales). “It is stated that the original home of the Cwmry, Cumri or Cymry, was in the Southern Hindustan, the Southern extremity of which, Cape Comorin, takes its name from the same root.” - From a Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swansea, 1903-Editors.” என்று கனம் வயற்று ஐயரும் (Rev. J.L. Wyatt, M.A.) (T.) இராமகிருட்டிண பிள்ளையும் (B.A.) குறித்திருத்தலைக் கூர்ந்து நோக்குக. பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் தமிழ்நாட்டில் மிக்கிருப்பதால், அவற்றை யெல்லாம் நீக்கி, எவருக்கும் அஞ்சாது நடுநிலையில் நின்று முன்னோர் முறையில் தமிழை வளர்த்தற்கு, 1969ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலகம் உலகம்-லோக (loka)- வே. உல்-உலம் = உருட்சி, திரட்சி, உருண்ட கல். உலம்வா-உலமா. உலமருதல் = சுழலுதல், உழலுதல். உலக்கை = உருண்டு நீண்ட பெருந்தடி. உலண்டு = உருண்டு நீண்ட புழு. உலம்-உலவு. உலவுதல் = சுற்றுதல், திரிதல். உலா = சுற்றி வருதல், அரசன் வலமாக நகரைச் சுற்றி வருதல், அதைப் பாடிய பனுவல். உலாவுதல் = சுற்றி வருதல். உலாத்துதல் = சுற்றி வருதல். உலாஞ்சுதல் = தலை சுற்றுதல். உலம்-உலவு-உலகு. ஒ.நோ : புறம்-புறவு-புறகு. உலகு=உருண்டையானது அல்லது சுற்றி வருவது. ஒ.நோ : கொள்-கோள். கொட்டுதல் = சுற்றி வருதல். உலகு-உலகம். (வ.வ.) மூவுலகம், ஈரேழுலகம், உலகமெல்லாம் என்னும் வழக்குக்கள், உலகமம் என்னும் சொல்லின் பொதுமையைக் குறிக்கும். கதிரவன், திங்கள் என்னும் இரு சுடரின் உருண்ட வடிவும் சூழ்வருகைத் தோற்றமும் உலகங்கள் பொதுவாய் உருண்டையா னவை என்றும் பெருவெளியில் வட்டமாகச் சுற்றி வருகின்றன வென்றும், இரு கருத்துக்களைத் தோற்றுவித்தன. வடமொழியில் லோக என்னுஞ் சொற்குப் பார்க்கப்பட்ட இடம் என்றே பொருள் கூறுவர். அங்ஙனமே பொருட்காரணமுங் காட்டுவர். லோக் = பார். E. look. இதனால், உலகத்தைக் குறிக்கும் லோக என்னும் வடசொல் தென்சொல்லின் திரிபென்பது தெள்ளத் தெளிவாம். உலகம் என்னும் சொல்வழக்கு தொன்று தொட்டது. கால முலகம் (தொல். 541). (வ.வ:96) உலகு : உல்-உலா = சுற்றிவருதல். உல்-உல-உலவு-உலாவு. உலாவுதல் = வளைதல், வட்டமாதல், சுற்றுதல், திரிதல், உலவு-உலகு = உருண்டையாயிருப்பது. சுற்றிவருவது. உலகு-உலகம்-லோக (வ.) வடமொழியில் லோக என்னும் சொற்குக் கூறப்படும் பொருட் கரணியம் பார்க்கப்படுவது என்பதே. அது look என்னும் ஆங்கிலச் சொல்லொடு தொடர் புடையது. அது வேறு; உலகத்தைக் குறிக்கும் தென் சொல்லின் திரிபு வேறு. காலம் உலகம் உயிரே யுடம்பே (தொல். 541) என்று ஆசியர் எடுத்தோதுதலால் இவையெல்லாந் தென்சொல்லேயென்று நச்சினார்க்கினியருங் கூறுதல் காண்க. (தி.ம : 738) உலகம் உலகம் என்றது (உலகத் தோடொட்ட ஒழுகல்) வரையறைப் பட்ட இடவாகுபெயர். அறநூல்களில் எல்லா ஒழுக்க முறைகளும் சொல்லப்படாமை யாலும் காலந்தோறும் பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழ்தலானும் ஒழுக்க வகையில் உயர்ந் தோரைப் பின்பற்றுதல் இன்றியமையாதது ஆயிற்று. கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும் பயனாதலின் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் வேண்டும். ஒழுகுதல் பின்பற்றி ஒழுகுதல். (தி.மி. 110.) உலக முதன்மொழிக் கொள்கை 1. மாந்தன் தோன்றியது குமரிநாடாயிருக்கலாம் என்பது இதற்குச் சான்றுகளும் காரணங்களும் : (1) குமரி நாட்டின் பழைமை. (2) ஹெக்கேல் கிளேற்றர் முதலியோர் இலெமுரியா மாந்தன் தோன்றிய இடமாகக் கூறியிருத்தல். (3) குமரிநாட்டு மொழியின் தொன்மையும் முன்மையும். (4) தென்னாட்டுப் பெருங்கடல்கோட் கதை உலக முழுதும் வழங்கல். (5) மக்கள் கிழக்கிலிருந்து வந்தார் என்று யூத சரித்திரங் கூறல்1. (6) தொன்மரபினரான மாந்தர் பெரும்பாலும் தென்ஞாலத்திலிருத்தல். (7) குமரிநாடிருந்த இடம் ஞாலத்தின் நடுமையமா யிருத்தல். (8) குளிரினும் வெம்மையே மக்கட்கேற்றல். (9) தென்ஞாலத்தின் வளமை. உலகத்திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன. (10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென் ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக் கூடியதா யிருத்தல். குறிப்பு : கிறித்துவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)¡F வடக்கே 30ஆம் 40ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயே உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென்பாகத்திலேயே நிலம் மிக்கிருந்த தென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறிய வேண்டும். ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத்தோடு இணைத்துக் கூறியிருக்கிறது. யூதர் முதல்மக்கள் வகுப்பாரல்லர் என்பதற்குக் காரணங்கள்: (i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப் பட்டுள்ளமை. இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளன வாகச் சொல்லப்படுவது. தமிழ்மொழி தோன்றிய காலம் எவ் வகையிலும் கி.மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது. (ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறியிருத்தல். (iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல். (iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல். தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள்ளையரான ஆரியர். ஆரியரைத் தேவரென்று சொல்லத்தக்கவர் தென் னாட்டிலிருந்து சென்ற கருப்பராயிருந்திருத்தல் வேண்டும். (v) உலக முழுதும் ஒரே மொழி வழங்கிற்றென்று ஆதியாக மத்திற் கூறியிருத்தலும், எபிரேய மொழி உலக முதன் மொழியாதற் கேற்காமையும். (vi) எபிரேய மொழியில் பல தமிழ்ச்சொற்கள் சிதைந்து கிடத்தல். கா : ஆப் (அப்பன்), ஆம் (அம்மை), நூன் (மீன்), வாவ் (வளைவு), மேம் (மேகம் = நீர்), பே (வாய்). மேகம் என்பது மேலேயுள்ள நீர் என்று பொருள்படும் தமிழ்ச்சொல்லே. மே (மேல்)+கம்(நீர்) = மேகம். ஆதாம் (மாந்தன்) என்னும் முதல் எபிரேயப்பெயர் ஆதோம் (சிவப்பு) என்பதின் திரிவாகச் சொல்லப்படுகிறது. ஆதோம் என்பது அரத்தம் (சிவப்பு) என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபா யிருக்கலாம். (vii) ஆதியாகமத்திற் படைப்பைப்பற்றிக் கூறுமிடத்தே, வாரம் என்னும் எழுநாளளவைக் கூறியிருத்தல். பகலும் இரவும் சேர்ந்த நாள் என்னும் அளவு முதலிலிருந் துள்ளது. ஆனால், எழுகோள்களைக் கண்டுபிடித்த பின், அவற் றின் பெயரால் உண்டான வாரம் என்னும் அளவு பிற்காலத்தது. மோசே உலக சரித்திர மறிந்தவரல்லர். அவர் அக்காலத்து மக்க ளின் அறிவுநிலைக்கேற்றபடி, பழைமை முறையிற் படைப்பைப் பற்றிக் கூறினார். இயேசுபெருமான் தாமே திருவாய் மலர்ந் தருளினதே, கிறித்துவர் ஐயமின்றிக் கொள்ளத்தக்கது. கடவுள் நினைத்தவளவில் எல்லாவற்றையும் படைப்பவர். அதற்கு வாய்ச்சொல்லும் ஏழுநாளும் வேண்டியதில்லை. 2. தமிழ் உலக முதற்பெருமொழியா யிருக்கலாமென்பது இதற்குச் சான்றுகளும் காரணங்களும்: (1) தமிழ் நாட்டின் பழைமை. (2) தமிழின் பழைமை. (3) தமிழின் எளிய வொலிகள். (4) தமிழில் இடு குறிச்சொல்லும் சுட்டசையும் (Definite Article) இல்லாமை. (5) தமிழில் ஒட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல். (6) அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப்பெயர்கள் பல வடிவில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல். (7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக மொழிகள் எல்லாவற்றிலு மிருத்தல். (8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒருசிறிது தமிழிற் காணப்படல். வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை. சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது+இல்), சிறியிலை (சிறு+இலை) முதலிய தொடர்மொழிகளில் உளது. சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு. கா : பொன் (அழகிது) - பெயர்ச்சொல். (அது) பொன் வினைச் சொல். பொன் (வளையல்) - பெயரெச்சம். பொன் (விளைந்த களத்தூர்) - வினையெச்சம். பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம். (9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயு முள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல். fh : juju - tear, jfjf - jà (t.), உசு - ரளா, சளப்பு - saliva, செக்கக் கெக்க - L.cachinno, V.E.cachinnation. (10) அயன்மொழிச் சொற்கள் பலவற்றிற்கு வேர் தமிழி லிருத்தல். முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச் சொற்களின் அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர் களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின் மொழி பெயர்ப்பாயிருத்தல். பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழுகோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாதவளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித்திருத்தலே. அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ்வளவுகள் முதன்முதற் குமரிநாட்டிலேயே தோன்றியவை. ஆங்கிலத்தில் உள்ள வார நாட் பெயர்களில், Sunday, Monday, Tuesday, Saturday என்னும் நான்கும் தமிழ்ப்பெயர்களின் மொழிபெயர்ப்பா யிருக்கின்றன. Tues என்பது zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படுகிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர்களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன. zues கிரக்கப் பெருந்தெய்வம். கிரேக்கர் தமிழ்நாட்டில் மிகப்பழங் காலத்தி லேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமா யிருந்ததும். தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத் தக்கன. இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஒரைப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே யிருக்கின்றன. I. Aries (ram), ii. Taurus (bull), iii. Gemini (twins). iv. Cancer (crab), v. Leo. (lion), vi. Virgo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix. Sagittarius (archer or bow), x. Capricorn (the goat - horned = shark), xi. Aquarius (water-bearer = pitcher) xii. Pisces (fish). (12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை. (13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச் சொற்களாயிருத்தல். (14) சொற்றொடரில் தமிழ்ச்சொன்முறை இயல்பாயிருத்தல். பன்னிரண்டு என்னும் சொன்முறை பத்தோடு இரண்டு சேர்ந்தது என்பதைக் குறிப்பதாகும். வடமொழியில் துவாதசம் என்னும் முறை இயற்கைக்கு மாறானதாகும். (15) தமிழ் உலக முதன்மொழி ஆய்வுக்கு நிற்றல். தமிழொடு பிற மொழிகள் ஒவ்வாமைக்குக் காரணங்கள் (1) தமிழின் பல்வேறு நிலைகளில் மக்கள் பிரிந்து போனமை. தமிழ் குறிப்பொலி நிலையி லிருந்தபோதும், அசை நிலையி லிருந்தபோதும், புணர்நிலையிலிருந்தபோதும், பகுசொன்னிலையி லிருந்தபோதும், தொகுநிலையிலிருந்த போதுமாகப் பற்பல சமயங்களில், குமரிநாட்டினின்றும் மக்கள் கிழக்கும் மேற்கும் வடக்குமாகப் பிரிந்துபோயிருக்கின்றனர். (2) குறிப்பொலி நிலையிலும் அசைநிலையிலும் பிரிந்த மாந்தர் அவற்றை அடிப்டையாகக் கொண்டு, பல் வேறு சொற்களை அமைத்துக்கொண்டமை. (3) பிரிந்துபோன மக்கள் மூலச்சொற்களை மறந்துவிட்டுப் புதுச்சொற்களை ஆக்கிக்கொண்டமை. (4) தட்பவெப்பநிலை உணவு முதலியவற்றால் உறுப்புத் திரிந்து, அதனால் உச்சரிப்புத் திரிந்தமை. கா : தோகை - Pers. tawus. Gk. taos, L.pavo, A.S. pawe, E. pea-peacock. nr-nrî-(nr¡F) - A.S. coc, E.cock. ஒ.நோ : நா-நாவு-நாக்கு. (5) பெரும்பாற் சொற்கள் போலி மரூஉ சிதைவு முதலிய முறைகளில் திரிந்தமை. (6) மூலமொழியி லில்லாத வொலிகள் தோன்றினமை. (7) மூலமொழி யிலக்கணத்தினின்றும் வேறுபட்ட இலக் கணம் எழுதப்பெற்றமை. (8) பெரியோரை மதித்தல் காரணமாகச் சொற்களை மாற்றல். பலநீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாக மாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றி விடுகின்றனர். இவ்வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம். வடமொழி உலக முதன்மொழியாக முடியாமை மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன்மொழியாயிருக்கலாமென்று கருதுகின்றனர். உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே. குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்தபோது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசைநிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீனம் வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரி கின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனி யம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை. பால்டிக் கடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்குவதும், சுவீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுள்ள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறியிருப் பதும் இக் கொள்கைக்குச் சான்றுகளாம். ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவகைய: (1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன்சென்றவை. கா: தமிழ் வடஇந்தியம் மேலையாரியம் கீழையாரியம் நான் மைன் me நாம் ஹம் wir, we vayam நூன் தூ du, tu tvam நூம் தும் ye, you yuyam இருத்தி eart, es asi (2) ஆரியர் இந்தியாவிற்கு வருமுன் இடைக்காலத்திற் சென்றவை, அல்லது நேரே மேலையாரியஞ் சென்றவை. கா : தமிழ் மேலையாரியம் கீழையாரியம் ஆன்மா animos atma நாவாய் navis nau வேட்டி vetis vasthra இஞ்சிவேர் zingiber, zingiberi sringa-vera இரும்(பு) iren, eisen ayas (3) ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின் அல்லது கீழையாரிய வாயிலாகச் சென்றவை. கா : தமிழ் மேலையாரியம் கீழையாரியம் கப்பி ape kapi குருமம் thermos, formus, warm gharma அகம் (மனம்) ego, Ich, Ic, I aham தா(நில்) sta, esta sta படி-பதி-வதி wes, wis, was vas குறிப்பு : (1) அரக்கு, அரக்கம், அரத்தம், அலத்தம், அலத்தகம், இரத்தி இலந்தை முதலிய தென்சொற்களை நோக்கின், அர் அல்லது இர் என்னும் ஒரு வேர்ச்சொல் சிவப்புப் பொருளை யுணர்த்துவது தெளிவாகும். அருக்கன், அருணம், அருணன் முதலிய (வட) சொற்களும் இவ்வேரினின்றே பிறந்தனவாகும். இங்ஙனம் பல வட தென் சொற்கள் ஒரே மூலத்தன. (2) கப்பு = மரக்கிளை. கப்பில் வாழ்வது கப்பி. கோடு வாழ் குரங்கு (மரபியல். 13) என்றார் தொல்காப்பியரும். (3) குரு = வெப்பம், வெப்பத்தால் தோன்றும் கொப்புளம். ஒளி, ஒளிவடிவான ஆசிரியன். குரு = சிவப்பு. குருதி, குருதிக் காந்தள், குருதிவாரம் என்னும் சொற்களை நோக்குக. குருவுங்கெழுவும் நிறனா கும்மே (உரி. 5) என்றார் தொல்காப்பியர். குருத்தல் தோன்றுதல். குருப்பது குருத்து. குரு-உரு. குருமம்-உருமம். (4) அகம் = அவ்விடம், அவ்வுலகம், வீடு, உள், உள்ளம், (நான்). ஒ.நோ : இகம் = இவ்விடம், இவ்வுலகம், இகபரம் என்னும் வழக்கை நோக்குக. வீடு = துறக்கம், இல்லம். இல் = வீடு, உள், உள் = உட்புறம், மனம். உள்+அம் = உள்ளம்-உளம். உள்ளம் என்று பொருள்படும் அகம் என்னும் தமிழ்ச்சொல்லையே. நான் என்னும் பொருளில் வழங்கினர் வடமொழியாரியர். ஆன்மா என்னுஞ் சொல்லை, ஆத்மனேபத, ஆதமநிவேதனம் முதலிய தொடர்களில் தன்னைக் குறிக்க வழங்குதல் காண்க. அகம் ஒ புறம். மேலையாரிய மொழிகளில் முதலாவது தன்மை யொருமைப் பெயராக வழங்கியது me என்பது. min, me, mee முதலிய வேற்றுமை பெற்ற பெயர்கள் me என்பதினின்று தோன்றுமேயொழிய அகம் என்பதினின்று தோன்றா2 (Historical Outlines of English Accidence. P. 127). go என்னும் வினையின் இறந்தகால வடிவம் வழக்கற்று. அதற்குப் பதிலாக wend என்பதின் இறந்தகால வடிவமாகிய went என்பது வழங்குவது போன்றது அகம் என்பது. (5) sta என்னும் சொல் esta என்று மேலையாரியத்தில் வழங்குவது, பண்டைக்காலத்தில் மேனாட்டாரும் இகூல் (School) என்று சொல்லும் தமிழர் நிலையிலிருந்தனர் என்பதைக் காட்டும். தரவு = இடம். தாக்கு = நிலை. தாக்குப் பிடித்தல் என்னும் வழக்கு நோக்குக. புரி, புரம் என்னும் நகர்ப்பெயர்கள் ஆரிய மொழிகளிலெல்லாம் வழங்குவதும், தொல்லாரியர்க்கும் தமிழர்க்குமிருந்த தொடர்பைக் காட்டும். புரிதல் = வளைதல். L. spira, Gk. speira, E.spire. புரி = வளைந்த அல்லது திருகிய இழை. ஒ.நோ : thread, from thrawan (âÇ), to twist. புரிதல் = மனத்திற் பதிதல், விளங்குதல். L. prehendo = புரிகொள். E.prehend - appehend, comprehend etc. புரி-புரீ (வ.) = வளைந்த மதில், கோட்டை. மதிலாற் சூழப்பட்ட நகர். ஒ.நோ : கோடு + ஐ = கோட்டை. கோடு + அம் = கோட்டம் - Koshta (Skt.) = மதில் சூழ்ந்த கோயில். வடமொழியிற் கோஷ்ட என்பதை, கோ (பசு) என்பதினின்று பிறந்ததாகக் கூறுவது பொருந்தாது. அது தொழுவம் என்று பொருள்படினும் கோட்டம் அல்லது கொட்டம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே. கொடு + அம் = கொட்டம். கொடு + இல் = கொட்டில். புரி + சை = புரிசை. புரி + அம் = புரம் - E.borough, burgh, புரி - bury. கோபுரம் = அரசன்மனை, அரசநகர். முதலாவது அரசன் வெள்ளத்தினின்றும் பகைவரி னின்றும் தற்காக்க எழுநிலை மாடத்தில் அல்லது உயர்ந்த கட்டடத்தில் வதிந்தான். பின்பு அது மிகவுயரமாய் வடிவுமாறிக் கோவிலுறுப்பாயிற்று. ஒ.நோ : கோயில் = அரசன் மனை, தெய்வ இருப்பிடம். புரம்-புர. புரத்தல் காத்தல். புரவலன் புரப்பதில் வல்லவன், புரந்தருபவன் புரந்தரன். ஒ.நோ : A.S.beorgan, Ger. bergen. to protect, from burg. மேலையாசியப் பாங்கரில், துரேனியமும் ஆரியமும் சேர்ந்து சேமியம் தோன்றியிருப்பதாகத் தெரிகிறது. பால்டிக் பாங்கரினின்று. முதலாரியர் காக்கச மலையின் தென்பாகத்தில் வந்து குடியேறி யிருக்கின்றனர். பின்பு அங்கிருந்து மேற்கொரு பிரிவாரும் கிழக்கொரு பிரிவாரும் பிரிந்து போயிருக்கின்றனர். கிழக்கே வந்தவரே இந்திய ஆரியர். இந்தியா விற்கு வந்த ஆரியருள் ஒரு பிரிவார் திரும்பவும் மேலையாசியா விற்குச் சென்றிருக்கின்றனர்3. (3.L.S.L.Vol.1. PP. 287, 288) அவரே பெர்சிய அல்லது ஸெந்து (zend) ஆரியர். இந்திய ஆரியரது மொழி இந்தியாவிற்கு வருமுன் இப்போதுள்ள நிலையிலில்லை. இலத்தீன், கிரேக்கம், ஜெர்மானியம் என்ற மூன்று மொழிகட்கும் நெருங்கிய நிலையிலேயே யிருந்தது; அப்போது ஆரியம் என்னும் பொதுப் பெயரேயன்றி ஒரு விதப்புப் பெயரும் அதற்கில்லை. இந்திய ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின்னரே, அவரது மொழிக்குச் சமகிருதம் என்னும் ஆரியப்பெயரும், வடமொழி என்னும் தென்மொழிப்பெயரும் தோன்றின. வடமொழிக்கு வேதகால வடிவும் பிற்கால வடிவுமென இரு நிலைகளுண்டு. வேத காலத்திலேயே, வடஇந்தியத் திராவிட மொழிச் சொற்கள் பல வடமொழியிற் கலந்துவிட்டன. வடஇந்திய மொழிகளெல்லாம், உண்மையில் திராவிடத்திற்கும் ஆரியத்திற்கும் பிறந்த இருபிறப்பி மொழிகளேயன்றி, தனி ஆரியக் கிளைகளல்ல. மேனாட்டாரிய மொழிகட்கில்லாது, சமகிருதத்திற்கும் திராவிடத்திற்கும் பொதுவாயுள்ளவையெல்லாம், தமிழினின் றும் வடமொழி பெற்றவையே. கா : உயிர்மெய்ப்புணர்ச்சி, ட ண முதலிய சில ஒலிகள், எழுத்து முறை, எட்டு என்னும் வேற்றுமைத்தொகையும் அவற்றின் முறையும், சில கலைநூல்கள் முதலியன. வடமொழியில் வழங்கும் நூற்றுக்கணக்கான சொற்கள் தென் சொற்களாம். வடநூல்களிலுள்ள பொருள்களிற் பெரும்பாலன, ஆரியர் வருமுன்னமே வடஇந்தியாவில் அல்லது இந்தியாவில் வழங்கி யவையென்றும், அவற்றைக் குறிக்கும் சொற்களே ஆரிய மயமென்றும் அறிதல் வேண்டும். உலக மொழிகள் எல்லாவற்றிலும், வளர்ச்சியிலும் திரிபிலும் முதிர்ந்தது வடமொழியாகும். இதனாலேயே நன்றாகச் செய்யப் பட்டது என்னும் பொருள் கொண்ட சமகிருத் என்னும் பெயரை வடமொழி ஆரியரே அம்மொழிக்கிட்டுக் கொண்டனர். வடமொழியை ஆரியத்திற்குக்கூட மூலமொழியாகக் கொள்ள வில்லை மேனாட்டார்4. (Principles of Comparative Philosophy. P. vii). வடமொழி முதிர்ச்சியைக் காட்ட இங்கு ஒரு சான்று கூறுகின் றேன். மெய்யெழுத்துகளின் தொகை தென்கண்ட (ஆத்திரேலிய) மொழிகளில் 8; பலநீசிய (Polynesian) மொழிகளில் 10; பின்னியத்தில் 11; மங்கோலியத்தில் 18; இலத் தீனிலும் கிரேக்கிலும் 17; ஆங்கிலத்தில் 20; எபிரேயத்தில் 23; காப்பிரி (Kaffir) யில் 26; அரபியில் 28; பெர்சியத்தில் 31; துருக் கியத்தில் 32; வடமொழியில் 39; அரபி, பெர்சியம், சமகிருதம் என்னும் மூன்றன் கலவையான இந்துதானியில் 48. இத் தொகைகள் மாக்கசு முல்லர் கூறியன. இவற்றுள் ஒன்றிரண்டு கூடினும் குறையினும் இவற்றைக் கூறியதின் பயன் மாறாதிருத்தல் காண்க. இங்குக் கூறியவற்றால், வடமொழி உலக முதன்மொழி யாவதினும், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கு மென்க. முடிவு தமிழே உலக முதல் இலக்கியமொழி. இதன்பெருமை சென்ற 2000 ஆண்டுகளாக மறைபட்டுக்கிடந்து, இன்று மொழிநூற் கலையால் வௌளிடை மலையாய் விளங்குகின்றது. பண்டைத் தமிழர்க்கும், இற்றைத் தமிழர்க்கும் எல்லாத் துறைகளிலும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வேறுபாடாகும். தமிழை முன்னோர் செந்தமிழாகவும் தனித்தமிழாகவுமே வளர்த்தனர். அங்ஙனமே இனிமேலும் வளர்க்க வேண்டும். வளர்ப்பு முறை தமிழுக்கும் பிறமொழிகட்கும் வேறுபட்ட தாகும். பிறமொழிகளில் கொடுவழக்குகளெல்லாம் செவ்வழக் காகும்; தமிழிலோ கொடுவழக்குகள் கொள்ளப்படாது. என்றும் செந்தமிழே கொள்ளப்படும். கா : ஆங்கிலத்தில் ச, சில சொற்களில் ஒலிக்கப்படாவிட்டாலும் குற்ற மில்லை; தமிழிலோ அவர்கள் என்பதை அவக என்றொலித் தால் குற்றமாம். இந்தியில் சொல்லீற்று னகர மெய்அரைமெய்யா யொலிப்பது குற்றமன்று; தமிழில் அங்ஙனம் ஒலிப்பது குற்றம். தெலுங்கில் பப்பு என்பது குற்றமன்று; தமிழிலோ குற்றம். இங்ஙனமே பிறவும் பற்பல வழக்குகள் தமிழ்நாட்டில் வழங்கினா லும், செந்தமிழையே அளவையாகக் கொண்டதினாலேயே தமிழ் இதுநாள் வரைக்கும் பெரும்பாலும் திரியாது வந்திருக்கின்றது. தமிழ் கடன்சொற்களால் தளர்ந்ததன்றி வளர்ந்ததன்று. கடன் கோடலால் ஒர் ஏழைக்கு நன்மை; ஆனால் செல்வனுக்கோ இழிவு. அதுபோல் கடன்சொற்களால் பிறமொழிக்கு வளர்ச்சி; தமிழுக்கோ தளர்ச்சி. முதலாவது, பிணிக்கு நோய் என்று தமிழ்ச்சொல்மட்டும் தமிழ்நாட்டில் வழங்கியது; பின்பு ஆரியம் வந்தபின் வியாதி என்னும் சொல் வழங்கிற்று; அதன் பின் ஆங்கிலம் வந்தபின் சீக்கு என்னும் சொல் வழங்குகிறது. இதுவே தமிழுக்குப் பிறமொழியா லுண்டாகும் வளர்ச்சி; இனி இந்தி வரின் பீமாரி என்னும் சொல்லும் வழங்கும்போலும்! தென்மொழியை வடமொழியோடு கலவாமல் தனியே வளர்க்க வேண்டும். தமிழ்வெறி என்று தமிழ்ப் பகைவர் கூறுவதற்கு இது ஆரியநாடன்று. இந்தியா முழுதும் ஒருகால் பரவியிருந்த தமிழ் இன்று தென்கோடியில் ஒடுங்கிக் கிடக்கின்றது. தன்னாடான இங்கும் தமிழுக்கிடமில்லையென்றால் வேறெங்கது செல்லும்? தமிழ்நாடொழிந்த இந்தியா முழுதும் ஆரியத்திற் கிடமாயிருக் கும்போது, இத் தமிழ் நாட்டையாவது ஏன் தமிழுக்கு விடக் கூடாது? தமிழ் இதுபோது அடைந்துள்ள தாழ்நிலையும், இற்றைத் தமிழர் தாய்மொழியுணர்ச்சி யில்லாதிருப்பதும், அவரது அடிமைநிலையைச் சிறப்பக் காட்டும். பார்ப்பனரும் அபார்ப்பனரும் இனிமேல் ஒற்றுமையாயிருந்து தமிழைச் சிறப்பாய் வளர்க்க வேண்டும். தமிழ்நாட்டுக் கிழார்களும் வேளிரும் மடங்களும், தமிழை வளர்த்தால் அது சிறந்தோங்கும். இங்குக் கூறிய சில சொன்மூலங்கள் மாறலாம். ஆனால் மொழி களைப்பற்றிய பெருமுடிபுகள் மாறா. செய்யுது என்னும் தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்றில் உது என்பது ஈறென்றும், முன்மைச் சுட்டாகிய ஊகாரத்தினின்று நூன் நூம் என்பவை தோன்றினவென்றுங் கொள்ளலாம். இவை புது மாற்றங்களாம். (ஒ.மொ.) உலக மொழிக் குடும்பங்கள் உலகமெங்கும், சிறப்பாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும், பல்வேறு மொழியாராய்ச்சியாளரும் மொழி நூலாசிரியரும், தமித்தும் இணைந்தும் கூடியும், பல்வேறு மொழியிலக்கணங்களையும் அகரமுதலிகளையுந் துணைக் கொண்டும் தாமாகப் பல மொழிகளைக் கற்றும், கடந்த முந் நூறாண்டுகளாகச் செய்துவந்த ஆராய்ச்சியின் பயனாக, பெரும் பாலும் உலகமொழிகளெல்லாம் சிறியவும் பெரியவுமான பல் வேறு மொழிக் குடும்பங்களாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:- (1) ஆத்திரேலியாக் கண்டத்தின் பழங்குடி மக்கள் பேசும் மொழி களெல்லாம் சேர்ந்து ஆத்திரேலியம் என்னும் குடும்பமாகும். (2) நியூ கினியாவிலும் அதையடுத்த தீவுகளிலும் பேசப்படும் பாப்புவன் (Popuan) என்னும் குடும்பவுறவு இன்னும் அறியப் பெறவில்லை. (3) நியூகினியா வொழிந்த மலையாத் தீவுக்கணத்தினின்று, மேற்கே மடகாசுக்கர்த் தீவுவரையும் பேசப்படும் மொழிகள் மலையோ - பாலினீசியம் என்னும் பெருங்குடும்பமாகும். இது கீழையது, மேலையது (இந்தோனேசியம்) என இருபாற் பட்டது. கீழையது, மைக்கரோனீசியம், பாலினீசியம், மெலனீ சியம் என்னும் முப்பிரிவு கொண்டது. மேலையது, கீழையிந்தியத் தீவுகளிற் (East Indies) பேசப்படுவது. (4) தென்னிந்தியாவிலும் நடுவிந்தியாவிலும் வடஇந்தியாவின் கீழைக் கோடியிலும் மேலைக்கோடியிலும் பேசப்படும் மொழிகள், தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை மேலை வழக்கில் திரவிடம் (Dravidian) எனப்படும். இற்றை யாராய்ச்சியால், ஆரியக் கலப்பை நீக்கமுடியாத தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளே திரவிடம் என்றும், அதை நீக்கமுடியும் தமிழ் அவற்றினின்று பிரிந்து தனித்து நிற்பதென் றும், வேறுபடுத்தப்பட்டுள்ளன. தென்மொழிக் குடும்பத்தைத் தென்னிந்தியம் அல்லது தமிழியம் என்றும் கூறலாம். தென்னிந்தியக் குடும்பத்தை முதன்முதல் தெளிவாகப் பிரித்துக் காட்டி, அதன்மொழிகளைப் பதின்மூன்றாகக் கணக்கிட்டவர் கால்டுவெலார். அக்கணக்கைப் பரோவும் எமெனோவும் விரிவுபடுத்தி இன்று பத்தொன்பதாகக் காட்டியுள்ளனர். (5) தென்கிழக்காசியாவிலும் நடுவிந்தியாவின் மலைகளிலும் அசாமிலும் கடாரம் எனப்படும் பர்மாவின் வடகோடி தென்கோடிகளிலும் நக்கவாரத் தீவுகளிலும் (Nicobar Islands) பேசப்படும் பல மொழிகள், ஆத்திரோ - ஆசியம் (Austro-Asiatic) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். இக்குடும்பம் மான்-குமேர் (Mon-Khmer) என்றும் பெயர்பெறும். நடுவிந்தியாவிற் பேசப்படும் இக்குடும்பம் முண்டா அல்லது கோலாரிய மொழிகள் கெர்வாரீ, கூர்க்கூ, கறியா, சுலாங், சவரா,ள் கடபா என ஆறென்றும், அவற்றுள் முதுலது சந்தாலீ, முண்டாரீ, பூமிசு. பிரார், கோடா, ஓ (Ho), தூரீ. அசுரீ, அகரியா, கொர்வா எனப் பத்து நடைமொழிகளைக் கொண்டதென்றும்; கிரையர்சன் கூறுவர். இவற்றுள் கடபா என்பது ஒரு திரவிடமொழி என்னுஞ் செய்தி வெளியாகியுள்ளது. முண்டா மொழிகளை ஒரு தனிச் சிறு குடும்பமாகப் பிரித்துக் காட்டியவர் மாக்கசு முல்லராவர். (6) சீன-திபேத்தம் (Sino-Tibetan) என்னுங் குடும்பம் சீன தேசத்திலும் திபேத்து நாட்டிலும் பேசப்படும் மொழிகளைக் கொண்டதாகும். இது திபேத்தோ-பர்மியம், சீனம் என்னும் இரு கிளைகளையுடையது. (7) தென்மேற்குச் சீனத்திலும் ஜனான் தீவிலும் தாய் நாட்டிலும் இந்தோ-சீனத்திலும் பர்மாவின் ஒருபகுதியிலும் பேசப்படும் மொழித்தொகுதி கதாய் (Kadai) என்னும் குடும்பமாகும். இது மலையோ - பாலினீசியத்திற்கு இனமானதாகவும் இருக்கலாம். (8) வடநடு ஐரோப்பாவிலும் கீழை ஐரோப்பாவிலும் சின்ன ஆசியாவிலும் வட ஆசியாவிலும் பேசப்படும் (ஆரியமும் சேமியமும் அல்லாத) பல மொழிகள், ஊரல்-ஆலத்தேயம் (Ural-Altaic) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். இக் குடும்பத்தைத் துரேனியம் அல்லது சித்தியம் என்பர் கால்டுவெலார். இக்குடும்பம் ஊரலியம் (Uralian), ஆலத்தேயம் என்னும் இரு கிளைகளைக் கொண்டது. சாமோயெதம், அங்கேரியம், பின்னியம், இலாப்பியம், எசுத் தோனியம் என்பன ஊரலியத்தையும்; துருக்கியம், மங்கோலியம், மஞ்சு என்பன ஆலத்தேயத்தையும் சேர்ந்தன வாகும். (9) காக்கேசிய மலைத்தொடரையடுத்து வழங்கும் பல மொழிகள், வடகாக்கேசியம் என்றும் தென்காக்கேசியம் என்றும் இரு குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. (10) ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும், ஐரோப்பியர் குடியேறி யுள்ள வடதென் அமெரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் ஆப்பிரிக்கப்பகுதிகளிலும், பேசப்படும் மொழிகள் இந்தோ - ஐரோப்பியம் என்றும் இந்தோ-செருமானியம் என்றும் ஆரியம் என்றும் சொல்லப்பெறும் மாபெருங் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். இக் குடும்பமே எல்லா மொழிக்குடும்பத்துள்ளும் பெரியதாம். இது மேலையது, நடுவணது, கீழையது என முறையே ஒன்றி னொன்று சிறிய முக்கவைகளையுடையது. செலத்தியம் (Celtic), இத்தாலியம் (இலத்தீனம்), தியூத்தானியம் (செருமானியம்), தொக்காரியம், எல்லெனியம் (கிரக்கம்) இலெத்தியம் என்பன மேலையாரியத்தையும்; பாலத்தியம் (Baltic), சிலாவோனியம், அல்பானியம், அர்மீனியம், இத்தைத்தம் (Hittite) என்பன நடுவணாரியத்தையும்; ஈரானியம் (பாரசீகம்), இந்திய ஆரியம் என்பன கீழையாரியத்தையும் சேர்ந்த கிளை களாகும். வேதமொழியும் அதற்குப் பிற்பட்ட சமற்கிருதமும் இந்திய ஆரியமாகும். வட இந்தியாவிலும் நடுவிந்தியாவிலும் ஒருகாலத்தில் திரவிட மொழிகளாயிருந்தவை, பின்னர் ஆரியக் கலப்பால் ஆரியமொழி களாக மாறியுள்ளன. தமிழே திரவிடமாகவும் திரவிடமே ஆரியமாகவும் மாறியிருப் பினும், தமிழ் இந்திய ஆரியரால் மறைக்கப் பட்டுள்ளமையாலும் தமிழ் தோன்றிய குமரிநாடு மூழ்கிப் போனமையாலும், மேலை யாரியர் உண்மைநிலையறியாது ஆரியத்தை ஓரு தனிமொழியின் வளர்ச்சியாகக் கருதி அதற்கு மூலமென ஒன்றைப் படைத்து, அதற்கு முதல் இந்தோ-ஐரோப்பியம் (Proto-Info-European) எனப் பெயரிட்டுள்ளனர். (11) மேலையாசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் பண்டுபேசப் பட்ட அக்காடியம் (அசீரியம், பாபிலோனியம்) அரமேயம், சிரியம், மோவாபியம், பினீசியம், எபிரேயம் என்னும் மொழிகளும், இன்று பேசப்படும் அரபியும், வடகிழக் காப்பிரிக்காவிற் பேசப்படும் எத்தியோப்பிய (அமரிக்கு) மொழியும், சேமியம் (Semitic) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தனவாகும். (12) பண்டை எகிப்தியமும் இன்று எத்தியோப்பியாவில் வழங்கும் கோபதியமும் (Coptic), சோமாலி, பெர்பெர் சது (chad) முதலிய மொழிகளும், ஆமியம் (Hamitic) என்னும் மொழிக் குடும்பமாகும். பண்டை எகிப்திய வழிவந்த கோபதியம் இன்று எத்தியோப்பிய வழிபாட்டு மொழியாக மட்டும் வழங்குகின்றது. சேமியத்தையும் ஆமியத்தையும் இணைத்து ஆமிய-சேமியம் (Hamito-Semitic) என ஒரு குடும்பமாகக் கூறுவதுண்டு. அரமேயம் இன்று தமசுச்கு (Damascus) நகர்ப்பக்கத்தில் முச்சிறு குமுகங்களாற் பேசப்படுவதாகப் பாடுமேர் கூறுவர். (13) சூடான் நாட்டில் மிகச்சிறிதே அறியப்பட்டுள்ள பல சிறு மொழிக் குடும்பங்கள் உள்ளன. (14) நீலாற்றின் மேற்பள்ளத்தாக்கை நடுவாகக் கொண்டு தெற்கே தங்கனியிக்கா வரையும் மேற்கே சதுவேரி வரையும் பரந்துள்ள, நிலப்பகுதியிற் பேசப்படும் மொழிக் குடும்பம் சரி-நீல் (Chari-Nile) என்பதாகும். (15) சதுவேரியின் வடக்கும் கிழக்குமாகவுள்ள நிலப்பகுதியிற் பேசப்படும் மொழிக் குடும்பம் நடுச்சகாரம் (Central Saharan) எனப்படும். (16) மேலையாப்பிரிக்காவின் பெரும்பகுதியிலும், பொதுவாக நடுக்கோட்டின் தென்பா லாப்பிரிக்காவிலும் வழங்கும் நைசர்-காங்கோ (Niger-Congo) என்னும் மொழிக் குடும்பம் ஆப்பிரிக்காவில் முதற்றர முதன்மை வாய்ந்ததாகும். இதிற் பல கிளைகள் உள. அவற்றுள் நடுக்கிளையின் ஒரு பிரிவான பந்து (Bantu) மொழித் தொகுதி, மற்றெல்லா நைசர் - காங்கோ மொழிகளும் வழங்கும் மொத்த நிலப்பரப்பினும் பரந்த நிலப்பகுதியில், வழங்குவதும், வேறெத்தொகுதியினும் மிகுந்த மொழிகளையும் நடைமொழி களையுங் கொண்டது மாகும். (17) தென்னாப்பிரிக்காவிற் பேசப்படும் புசுமன் (Bushman) மொழிகளும் ஆட்டன்றாட்டு (Hottentot) மொழியும் வேறி ரண்டும் சேர்ந்து காய்சன் (Khoisan) மொழிகள் எனப்படும். (18) தென்னமெரிக்காவின் பழங்குடி மக்கள் மொழிகள் ஐரோப்பிய மொழிகளாற் பெரும்பாலும் வழக்கு வீழ்த்தப் பட்டுள்ளன. எஞ்சியுள்ளவற்றுட் சிறந்த நான்குள் ஒன்று பிரசீல் நாட்டுப் பொதுக் கலவை மொழியாகும். இன்றுள் ளவை குடும்பப் பாகுபாட்டிற்கு இடந்தராதன வாகும். இடையமெரிக்க மொழிகளுள்ளும் பல வழக்கு வீழ்த்தப்பட்டுச் சிலவே எஞ்சியுள்ளன. அவற்றுள்ளும் ஒரு சில வழக்கு வீழ்ந்து வருகின்றன. ஐரோப்பிய மொழிகளில் வழக்கு வீழ்த்தப்பட்டனவும் படாதன வுமான வடஅமெரிக்கா மொழிகளைப்பற்றிப் பண்டையாசிரி யரும் இற்றையாசிரியரும் வரைந்தும் வண்ணித்துமுள்ள வற்றைத் துணைக்கொண்டு, கிளீசன் என்னும் அமெரிக்க மொழி நூலாசிரியர், தம் வண்ணனை மொழிநூலின் புகுமுக விலக்கணத் திற் பின்வருமாறு மொழிக் குடும்பப் பாகுபாடு செய்துள்ளார். (1) அல்காங்குவியன் மொழிகள் (Algonquian languages) இவை கீழைக் கரையிற் கோரோலினாவிலிருந்து வடக்கே லேபிரடார் வரை பேசப்பட்டன. (2) நாச்செசு - மசுக்கோசியக் குடும்பம் (Natchez-Muskogeam) இது தென்கிழக்கு ஒன்றிய நாடுகளிற் பேசப்பட்டது. இது அமெரிக்கா மொழிக்குடும்பங்கள் எல்லாவற்றுள்ளும் பெரியது. (3) இரக்குவாயக் குடும்பம் (Iroquoian) இதன் முதன்மைப்பகுதி திருஇலாரென்சுப் பள்ளத்தாக்கு. நடுவிலும் கீழைப் பென்சில்வேனியாவிலும் பேசப்பட்டது. (4) சியௌவக் குடும்பம் (Siouan) இது வடக்குப் பெருவெளி நிலங்களிற் (Great Plains) பேசப்பட்டது. (5) கதோவக் குடும்பம் (Caddoan) இது சியௌவக்குடும்ப நிலப்பரப்பிற்குத் தெற்கிற் பேசப்பட்டது. (6) துனிக்கக் குடும்பம் (Tunican) இது மிசிசிப்பிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியிற் பேசப்பட்டது. (7) யுச்சிக் குடும்பம் (Yuchi) இது தெனெசீயிற் பேசப்பட்ட ஒற்றைமொழிக் குடும்பம். (8) எசுக்கிமோ-அலியத்து மொழிகள் (Eskimo-Aluet Is) இவை வடமுனைக்கரைகளிலும் அவற்றையடுத்த கரைகளிலும், இலேபர்டாரிலிருந்தும் கிரீன்லாந்திலிருந்தும் அலாசுக்காவரை பேசப்படுகின்றன. (9) சலிசம் (Salishan), வக்கசம் (Wakashan), சிமக்குவம் (Chimakuan) என்னும் முக்குடும்பங்கள். இவை வடமேற்கில் கொலம்பியா ஆற்றுப் பள்ளத்தாக்கி லிருந்து அலாசுக்காவரை பேசப்படும் மொழிகளுட் பெரும்பாலான வற்றைக் கொண்டன. ஏனையவற்றுள் நான்கு ஒற்றைமொழிக் குடும்பங்களும் உள்ளன. அவை அலாசுக்காவிற் பேசப்படும் ஐதாவும் (Haida) திலிங்கித்தும் (Tlingit), அவற்றையடுத்துத் தெற்கிற் பேசப்படும் சிமிசியமும் (Tsimshian) கிழக்கிற் பேசப்படும் குத்தெனையும் (Kutenai), ஆகும். (10) இரித்துவான் (Ritwan) உள்ளிட்ட 25 குடும்பங்கள். இவை ஒரிகள், கலிபோர்னியா ஆகிய நாடுகளின் பெரும்பகுதியிற் பேசப்படுகின்றன; வட அமெரிக்க மொழிக்குடும்பங்களுள் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியாயுள்ளன. இவற்றுள் இரித்துவான் ஒழிந்த ஏனையவெல்லாம், பெனுட் டியம் (Penutian), ஒக்கம் (Hokan) என்னும் இரு கூட்டுக் குடும்பங் களாக அமைகின்றன. (11) மாயக் குடும்பம் (Mayan) இது மெகசிக்கோ நிலவிணைப்பினின்று ஒண்டூராசு (Honduras) வரை முற்றடக்கமாகப் பேசப்படும் மொழித்தொகுதியாகும். இதுவே இடைய மெரிக்காவில் மிகத் தெளிவாக வரையறுக்கப் பெற்றதும் மிக முதன்மையானதுமாகும். (12) ஆத்தொமாங்குவேயக் (Otomanguean) கூட்டுத்தொகுதி. இது மாயக்குடும்பத்திற்கு மேற்கிலும் வடக்கிலும் வழங்கும் பன்மொழித் தொகுதிக் கூட்டாகும். (13) உத்தோ-அசுத்தெக்கக் (Uto-Aztecan) குடும்பம் இது பெருநிலத்தாழியிலும் (Great Basin) கொலரேடோப் பள்ளத்தாக்கிலும் பேசப்படுவதாகும். (14) அத்தபாசுக்கக் குடும்பம் (Athabaskan) இதன் பேருடற்பகுதி கானடாவின் வடமேற்கிலும் அலாசுக்கா விலும் உள்ளது. இதைச்சேர்ந்த மொழிகள் உத்தோ-அசுத்தெக்கக் குடும்பத்தின் தலைமையிடத்தை ஊடறுத்துத் தெற்கே மெகசிக்கோவரையிலும் பரவி வந்துள்ளன. (15) தனோவம் (Tanoan), கெரெசம் (Keresan) சுனி (Zuni) என்னும் முக்குடும்பங்கள். இவை அசுத்தெக்கக் குடும்பத்திற்கு இனமானவை. வட அமெரிக்க மொழிகளுட் சில இன்னுங் கற்கப்பெறவில்லை; சில அரைகுறையாகக் கற்கப் பெற்றுள்ளன; முற்றுங் கற்கப் பெற்றவை பற்றியுங் கருத்து வேறுபாடுள. ஆதலால், வட அமெரிக்க மொழிக் குடும்பப்பாகுபாடு சிறிதும் பெரிதும் மாற்றமடையலாம். இங்ஙனம் மேலைமொழியாராய்ச்சியாளர் ஒப்பியலைத் துணைக் கொண்டு உலக மொழிகளைப் பல்வேறு குடும்பங்களாகப் பாகுபடுத்தினரேயன்றி, அவற்றின் முன்மை பின்மைகளையும் உலக முதன்மொழியையும் அது தோன்றிய வகையையும் இன்னும் அறிந்திலர். இனமற்ற மொழிகள் சுமேரியாவில் வழங்கிய சுமேரிய மொழியும், இத்தாலியாவில் வழங்கிய எத்திரசுக்க (Etruscan) மொழியும், பிரனீசு மலைநாட்டில் வழங்கும் பாசுக்க (Basque) மொழியும், கொரியாவில் வழங்கும் கொரிய மொழியும், சப்பானில் வழங்கும் சப்பானிய மொழியும் வேறு சிலவும் இனமற்றனவாகச் சொல்லப்படும் மொழிகளாகும். உலக மொழிகள் மொத்தம் 2796 எனக் கணக்கிடப் பெற்றுள் ளன. ஏறத்தாழ மூவாயிரம் எனக் கொள்ளினும் குற்றமாகாது. உலக மொழிகளின் தொடர்பு உலக மாந்தரெல்லாம் ஒரு தாய் வழியினர் என்பது மாந்தனூ லால் தெரியவருவதால், அவர் வழங்கிவரும் பல்வேறு மொழி களும் ஒரு தாய்வழியினவாய்த்தா னிருத்தல் வேண்டும். ஆயினும், மாந்தன் தோன்றிய குமரிநாட்டினின்று, முதற்றாய்மொழி வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறு திசையி லுள்ள பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோனதனால், இடத்தாலும் காலத்தாலும் நெட்டிடைப்படப் பிரிந்துபோன அம் மக்களின் மொழிகள் பல்வேறு வகைகளில் வளர்ந்து திரிந்து மூலமொழி யின் வேறு பட்டும் மாறுபட்டும் உள்ளன. ஆயினும், ஆய்ந்து நோக்கின், உலகமொழி கட்கெல்லாம் மூல நிலையான ஒரு மொழி உண்டென்பது புலனாகும். எல்லா மொழிகட்கும், முதலாவது மரபியல் (Geneology), வடிவியல் (Morphology) என்னும் இருவகையில் உறவு காணலாம். மரபியலாவது, பாட்டனும் தந்தையும் மகனும் பேரனும் போல, அல்லது அடியுங் கவையும் கொம்புங் கிளையும்போல, ஒன்றி னொன்று பிறந்தும் கிளைத்தும் வரும் தொடர்ச்சி பற்றியது. மேனாட்டில் ஆரிய செருமானிய ஆங்கில மொழிகளும், கீழ் நாட்டில் தமிழ் கன்னட படக மொழிகளும் இத் தொடர்பிற் கெடுத்துக்காட்டாம். குணங்குறிகளிற் பெற்றோர்க்கும் பிள்ளை கட்குமுள்ள ஒப்புமைபோல, சொன்னிலையிலும் சொல்லாக்க நெறிமுறையிலும் மரபியலுறவுற்ற மொழிகளிடை ஒப்புமை யுண்டு. வடிவியலாவது, குழவி நிலையும் பிள்ளைமையும் இளமையும் மகன்மையும் முதன்மையும்போல, அல்லது புல்லும் பூண்டும் செடியும் கெடியும் மரமும்போல, மொழிவளர்ச்சி தொடர்ச்சி களின் பல்வேறு நிலைகளைப் பற்றியது. அந் நிலைகள் அசைநிலை (Monosyllabic), புணர்நிலை (Compoun-ding), பகுசொன்னிலை (Inflexional), திரிநிலை, கொளுவுநிலை (Agglutivative), தொகைநிலை (Synthetic), சிதைநிலை என எழுவகைய. அவற்றுள், அகைநிலையாவது, மா, பொன் என்பவைபோல, ஒரு மொழிச் சொற்களெல்லாம் ஓரசைச் சொற்களாயிருந்து, குரல் வேறுபாட் டாலும் இட வேறுபாட்டாலும் வெவ்வேறு பொருள் பயப்பன வாயும் வெவ்வேறு சொல்வகைப் படுவனவாயுமிருத்தல். சீன மொழிகளும் இந்து-சீன (Indo-Chinese) மொழிகளும் இத்தகைய எடுத்துக்காட்டாக, சன் (Shan) என்னும் இந்து-சீன மொழியில், கௌ என்னும் அசைச்சொல்லுக்கு, நான், பழைமையாயிரு ஒன்பது, கொண்டை, பேய்க் கஞ்சாமை ஆந்தை முறையீடு கெண்டைக்கால் புதியாமரம் பால்சம் செடி, ஆலை எனப் பலபொருளுள. இப்பொருள்களெல்லாம் குரல் வேறுபட்டால் குறிக்கப்படுவன. சில மொழிகளிற் பதினைந்திற்கு மேலும் குரல் வேறுபாடுண்டு. ஒரே சொல் வடிவு திரியாது இடவேறுபாட்டால் வெவ்வேறு சொல்வகைப்படுவது பல மொழிகட்கும் பொதுவேனும், அசைநிலை மொழிகட்குச் சிறப்பாம். அது பொன் யாது, இது பொன், பொன் வளையல், நெல் பொன் விளைந்தது என்னும் தொடர்களில் பொன் என்னும் சொல். முறையே, பெயரும் வினையும் பெயரெச்சமும் வினையெச்சமுமாயிருத்தல் போன்றது. புணர்நிலையாவது, பாய்மா, மாசெல்சுரம் என்றாற் போலச் சொற்கள் திரியாது புணர்ந்து ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றல். பகுசொன்னிலையாவது, வில்லவன்-வில்லான்-வில்லன் என இருசொற் புணர்ந்து. நிலைச்சொல் பகுதியும் வருஞ்சொல் விகுதியுமாக மாறி ஒரு சொல்லாய் நிற்றல். திரிநிலையாவது, ஆங்கிலத்தில், ‘man’ என்றும் பெயர்ச்சொல் பன்மை குறிக்க ‘men’ என்றும், ‘give’ என்னும் வினைச் சொல் இறந்தகாலங்காட்ட ‘gave’ என்றும் திரிந்தாற் போன்றது. இதை, உள்திரிநிலை அல்லது இடைதிரிநிலை எனவுங் கூறலாம். சேமிய (Semitic) மொழிகள் திரிநிலைக்குச் சிறந்தவை. அவற்றுள் வேர்ச்சொற்களெல்லாம் மும்மெய்யாலமைந்தவை. அவற்றினின்று திரிந்த சொற்கூட்டங்கள் பெரும்பாலும் மூவிடவுயிர் வேறுபாட் டாலேயே பொருள் வேறுபாட்டை யுணர்த்துகின்றன. எ-கா : அரபிமொழியில் க்த்ப் என்ற மும்மெய்ச் சேர்க்கை ஒரு வேர்ச்சொல். இதனின்று பிறந்த சொற்களாவன: கதப = எழுதினான்; கத்ப் = எழுத்து; காதிப் = எழுத்தாளன்: மக்தூப் = எழுதி; தக்திப் = எழுதுவித்தல்; முக்காதபத் = எழுத்துப் போக்குவரத்து நடத்தல்; இக்தாப் = சொல்வ தெழுதுவித்தல்; தக்காதுப் = ஒருவர்க்கொருவர் எழுதுதல்; முத்தக்காதிப் = எழுத்துப்போக்குவரத்து நடத்துவோன்; மக்தப் = எழுதும் பள்ளி; கித்தாப் = புத்தகம்; கித்பத் அல்லது கித்தாபத் = வெட்டெழுத்து. கொளுவுநிலையாவது, ஒரு நெடுஞ்சொற்றொடர்ப் பொரு ளமையுமாறு, ஒரு சொல்லொடு பல ஈறுகளை மேன்மேலும் சங்கிலிபோற்கொளுவிவைத்தல். தமிழில், போக்குவிப்பி என்பதுபோன்ற மும்மடியேவல் கொளுவுநிலைப் பட்டதே. சித்தியமொழிகளும் முண்டாமொழிகளும் கொளுவு நிலைக்குச் சிறந்தவை. எ-கா: முண்டாமொழியில், தல் என்பது அடி எனப் பொருள் படும் வினைச்சொல். த - ப - ல் -ஒச்சோ - அகன் - தஃன் - தயெ - திங் -அ- எ என்னும் கொளுவுநிலைத் தொடர், என்னவனுடை யவன் தன்னைப் பொருவிக்கவிடத் தொடர்வான் (He who belongs to him who belongs to me, will continue letting himself be caused to fight.) எனப் பொருள்படுவதாகும். இது தல் என்னும் பகுதியொடு பல ஈறுகள் கொளுவிய தொடர். தொகைநிலையாவது, பலசொற்கள் இடைதொகப் புணர்ந்து ஒரு தொடராய் நிற்றல். அமெரிக்க மொழிகள், அவற்றுள்ளும் சிறப்பாக மெக்சிக மொழிகள், (Mexican) தொகைநிலைக்குச் சிறந்தவை. எ-கா: மெக்சிக மொழியில், அல்த் = நீர்: சிச்சில்திக் = சிவந்த: த்லக்த்ல்= மாந்தன்: சொரிய = அழு, இச் சொற்கள். அச்சிச் சில்லகச் சொகன் என்னும் தொகை நிலைத் தொடராகப் புணர்ந்து நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழுமிடம் எனப் பொருள் தருகின்றது. இங்ஙனம் பல சொற்கள் தொக்க, தொகை நிலையைப் பல்தொகை (Polysnthetic) அல்லது இணைப்புநிலை (Incorporating) என அழைப்பர். சிதை நிலையாவது, சோம்பல், நாகரிகத்தாழ்வு, தட்ப வெப்ப நிலை வேறுபாடு முதலிய காரணங்களால் சொற்கள் குறுகியும் திரிந்தும் சிதைந்து நிற்றல். சிதைநிலைக்கு இந்திமொழி சிறந்த எடுத்துக்காட்டாம். தமிழ் இந்தி வடமொழி இந்தி புகல் - போல் க்ருஹம் - கர் நோக்கு - தேக் கருமம் - காம் கொஞ்சம் - குச் வருச்சிகம் - பிச்சு நேரம் - தேர் வார்த்தா - பாத் ஓரம் - ஓர் பஞ்சம் - பாஞ்ச் உழுந்து - உடத் கர்ணம் - கான் மேற்காட்டிய எழுநிலைகளுள், அசைநிலை புணர்நிலை பகுசொன்னிலை ஆகிய முதல் மூன்றும் அடைந்துள்ளது தமிழ். இம்மூன்றே இயல்பாக முழு வளர்ச்சியுள்ள ஒரு மொழி அடைய வேண்டியவை. ஏனையவெல்லாம் மொழியினங்களின் தனிப்பட்ட இயல்புகளேயன்றி மேல்வளர்ச்சி நிலைகளல்ல. தமிழே திரிந்து திரவிடமாகியிருப்பதால், தமிழுக்கும் திராவிட மொழிகட்கு முள்ள மரபியலுறவு மிகத் தெளிவாம், திரவிடத்தின் திரிபு ஆரியமாதலால், தமிழுக்கும் ஆரியத்திற்கும் இரண்டாங் கூட்டுறவுண்டு, ஆயினும், ஆராய்ச்சியின்மையால் பலர் இதை அறிவதில்லை. திரவிடம்போல அத்துணை மரபியலுறவுறாது சேய்மைப்பட்ட பிறமொழிகள்கூட, சில பல தமிழ்ச் சொற்களையும் நெறிமுறை களையுங் கொண்டிருப்பதுடன், மொழிகட்கெல்லாம் அடிப் படையான சொல் வரிசையைச் சேர்ந்த மூவிடப் பெயர்கட்கும் தமிழ்ச் சொற்களையே அல்லது அவற்றின் திரிபையே கொண் டுள்ளன. தமிழ் மூவிடப் பெயர்களுள் அல்லது அவற்றின் திரிபுகளுள் ஒன்றேனும் இல்லாத அல்லது வழங்காத மொழியே உலகிலில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். எ-கா: நூன், நூம்: நீன், நீம் என்பன பழந்தமிழ் முன்னிலைப் பெயர்கள். இவற்றின் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். இவற்றுள், நீன் என்னுஞ் சொல் இன்றும் தென்னாட்டு வழக்கிலுள்ளது. நூன் நூம் என்பன இருவகை வழக்கும் அறினும், அவற்றின் வேற்றுமைத் திரிபான நுன் நும் என்னும் அடிகள் இன்றும் செய்யுள் வழக்கிலுள்ளன. நீன் என்னுஞ் சொல்லின் கடைக்குறையான நீ என்பது இருவகை வழக்கிலும் உள்ளது. நூன் என்பது தூ, து, தெள, த்வம், என்றும் நூம் என்பது தும், யூ, யூயம் என்றும் ஆரியத்தில் வழங்குகின்றன. நூன் - நூ- தூ- து - தௌ - த்வம், நூம் - தூம் - தும். e.- த. போலி. நூம் - யூம் - யூ: யூம் = யூயம். ந - ய, போலி. நீ என்பது சீன மொழியில் நி எனக் குறுகி வழங்குகின்றது: நிமென் என்பது இதன் பன்மை. பொர்னு என்னும் ஆப்பிரிக்க மொழியில் நி என்பதே முன்னிலை யொருமைப் பெயர். சில பழஞ் சித்திய மொழிகளில் நீ என்னும் பெயர் தமிழிற் போன்றே சிறிதும் திரியாமல் வழங்கிவந்தது. ஆத்திரேலிய மொழிகளின் முன்னிலை யொருமை நின்ன, ஙின்னீ, ஙிந்தெ, என்பன: இருமை நிவ, நுர என்பன: பன்மை நிமெதூ என்பது. இங்ஙனமே, ஏனை யிடப் பெயர்களும் இயல்புவடிவில் அல்லது திரிபுவடியில் ஏறத்தாழ எல்லா மொழிகட்கும் பொதுவாக வுள்ளன. இதனால், மூவிடப் பெயர்களைப் பற்றிக் கால்டுவெல் ஐயர் பின்வருவாறு கூறுகின்றனர். மொழிகட்கும் மொழிக்குடும்பங்கட்குமுள்ள உறவைப் பதிற் பெயர்கள் மிக விளக்கிக் காட்டுகின்றன. ஏனெனில், மூவிடப் பதிற் பெயர்கள், சிறப்பாகத் தன்மை முன்னிலை யொருமைப் பெயர்கள், பிறசொல் வகைகளைவிட நிலைத்தவையாயிருந்து நெட்டூழி கழியினும் பெரும்பாலும் திரிவதேயில்லை. அவை, எண்ணுப் பெயர்களிலும், வேற்றுமையுருபுகளினும், வினையீறு களினும் நிலைப்புத் தன்மையுடையன. அவை ஏனையவற்றைப் போன்றே திரிதற்கிட மிருப்பினும், அவற்றின் தொடர்புகளையும் கிளைப்புகளையும், ஏறத்தாழ உலகமொழிகளெல்லாவற்றிலும், அவை காலத்தாலும் இடத்தாலும் எத்துணைச் சேய்மைப்பட் டிருப்பினும் காணலாம், முதலாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந் திருந்து, பின்னர், காலக்கடப்பாலும் திரிபுமிகையாலும் வேறினப் பட்ட சில மொழிகளின் தொடர்பை அல்லது உறவைக் காட்டு வதாயிருப்பது, மூவிடப் பெயராகிய சொல்வகை யொன்றே. இக் குறிப்பு, சிறப்பாக எல்லாச் சொல்வகைகளுள்ளும் மிகுந்த நிலைப்புத் தன்மை யுள்ளனவாகத் தோன்றுகின்ற தன்மைப் பெயர்கட் கேற்கும். (திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக் கணம், 2ஆம் பதிப்பு, ப.254). மூவிடப் பெயர்களைப் போன்றே, அம்மை அப்பன் என்ற முறைப் பெயர்களும், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும், ஏதேனும் ஒரு வடிவில் காணப்படுகின்றன. குழந்தை முதன் முதற் கற்றுக் கொள்வனவும் தமிழுக்கே சிறப்பாக வுரியவுமான இவ்விரு முறைப் பெயர்களும். எல்லா மொழிகளிலும் வழங்கி வருவது, அவற்றின் உறவைக்காட்டும் சான்றேயாம். இதுகாறுங் கூறியவற்றால், மக்களினங்கட்குள்ள தொடர்பு போன்றே மொழிக்குடும்பங்கட்குள்ள தொடர்பும் அண்மையும் சேய்மையுமாகப் பலபடி நிலைப்பட்டதென்றும், சொற்கள் ஒத்திராவிடத்துச் சொல்லாக்க நெறிமுறைகளும், சொல்லாக்க நெறிமுறைகள் ஒத்திராவிடத்து மொழி வளர்ச்சி நிலைகளும், மொழி வளர்ச்சி நிலைகள் ஒத்திராவிடத்து மூவிடப் பெயர் இருகுரவர் பெயர்களும் ஒத்திருக்குமென்றும்; ஒத்த சொற்களின் பெரும்பான்மை சிறுபான்மை ஒரு சின்மைகள் பன்மொழி யுறவின் பல்வேறு அளவைக் காட்டுமென்றும்; எல்லா மொழி கட்கும் பொதுவாக ஒரு சில சொற்களும் நெறிமுறைகளுமேனும் இருக்கவே இருக்கும் என்றும்: மாந்தன் தோன்றிய குமரிநாட்டி னின்று அந்நாட்டு மொழிவளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் மக்கள் பல்வேறிடங்கட்குப் பிரிந்துபோய்ப் பல்வேறு வகை களில் தங்கள் மொழிகளை வளர்த்துக் கொண்டமையே. உலக மொழிகளின் வேறுபாட்டிற்கும் தமிழுக்கும் பிறவற்றிற்குமுள்ள தொடர்பிற்குங் காரணமென்றும் அறிந்து கொள்க. (செந்தமிழ்ச் செல்வி திசம்பர் 1948) உலக வழக்குக் கொச்சை வழக்கன்று இலக்கியமுள்ள எல்லா மொழிகளிலும் உலக வழக்கும் இலக்கிய வழக்கும் எனச் சொல்வழக்கு இருவகைப்பட்டுத்தான் இருக்கும். ஆயின் தமிழில் மட்டும் பண்டையிலக்கியமெல்லாம் செய்யுளி லேயே இருந்தமையால், இலக்கிய வழக்குச் செய்யுள் வழக்கெனப் பட்டது. வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் என்று பனம்பாரனார் கூறுதல் காண்க. இதில் வழக்குஞ் செய்யுளும் என்று சுருக்கிக் கூறியது முறையே உலக வழக்கை யும், செய்யுள் வழக்கையும். பொது மக்களும் புலமக்களுமாகிய எல்லார் வாயிலும் வழங்குதல் பற்றி, உலக வழக்கே வழக்கெனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. சிறுபான்மையரான புல மக்களே பாடும் செய்யுளிருத்தல் பற்றிச் செய்யுள் வழங்குச் செய்யு ளென்றே குறிக்கப்பட்டது. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூலர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர் (தொல். செய். 78) என்னும் தொல்காப்பிய நூற்பா உரைநடையிலிருக்க வேண்டிய மூலச் செய்யுளுரையும் கல்லா மக்களும் கூறும் விடுகதைகளும், பண்டை நாளிற் செய்யுள் வடிவிலிருந் தமையைக் குறித்தல் காண்க. உரையின் ஒருவகையே அருங்சொற்கட்குப் பொருள் கூறும் உரிச்சொற் றொகுதியும் (நிகண்டும்). திவாகரம், பிங்கலம் முதலிய உரிச்சொற்றொகுதிகள் இன்றும் செய்யுள் வடிவிலேயே இருத்தலை நோக்குக. உலகம் என்னும் இடவாகு பெயர் உலகத்திலுள்ள மக்க ளெல்லாரையும் பொதுவாகக் குறிப்பினும், சொல் வழக்கைப் பொறுத்தவரையில், நாகரிகத்திலும் அறிவிலுஞ் சிறந்த பண்புடை மக்களையே சிறப்பாக வுணர்த்தும். வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட்டாக லான என்று தொல்காப்பியம் பிரிநிலை யேகாரங் கொடுத்து வரையறுத்துக் கூறுதல் காண்க. இங்ஙனமிருப்பவும், தமிழ்ப் பகைவரான ஆரியரும் அவர் வழிப்பட்ட மேலையரும் கோடன்மாரும் தமிழியல்பறியாத் தமிழ்ப் பேராசிரியரும், கல்லா மக்களும், கீழ் மக்கள் வழங்கும் இழிவழக்கையும் (Slang), கொச்சை வழக்கையும் (Barbarism) உலக வழக்கொடு (Colleqqualism) சேர்த்தொன்றாகக் கொண்டு. தமிழ் மரபொடும் இலக்கண நூலாரொடும் முரண்படுவர். மனைவியைப் பெண்சாதி என்பதும், பீர்க்கங்காயைப் பீக்கங்கா என்பதும் இவைபோன்ற பிறவும் இழிவழக்காம். வந்தது என்பதை வந்துச்சு என்றும், வைத்திருக்கிறான் என்பதை வச்சிருக்கான் என்றும் வழங்குவது கொச்சை வழக்காம். இத்தகைய வழுக்க ளின்றி இலக்கண நடையிற் பேசுவதே உயர்ந்தோர் வழக்கான உலக வழக்காம். ஆயின், சில தென்சொற்கள் கற்றார்க்கேயன்றி மற்றோர்க்குப் பொருள் விளங்காதனவாகவும், அவற்றிற்கு நேரான வடசொற் களும் பிற சொற்களும் எளிதிற் பொருளுணர்த்து வனவாகவும் இருத்தலாலும், கருத்தறிவிக்குங் கருவியே மொழியாதலாலும், தூயநடை தமிழுக்கேற்காதெனின், சில தென்சொற்களை வழங்காமையாலேயே அவை அருஞ்சொற்களாக மாறினவென் றும், ஒரு காலத்தில் எளிய சொற்களாகவே அவை வழங்கிவந்தன என்றும், அவற்றின் வழக்கைப் புதுப்பிப்பின் மீண்டும் அவை எளிய சொற்களாக மாறிவிடுமென்றும், தமிழின் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அதன் சொல்வளம் இன்றியமையாததென்றும், வடசொற்கள் தேவமொழிச் சொல்லென்னும் ஏமாற்றினாலேயே தேவையின்றி வடவரால் புகுத்தப்பட்டன என்றும், அவற்றைத் தாராளமாக வழங்கினதினாலேயே தமிழர் தாய்மொழி உணர்ச்சி இழந்து பிற மொழிச் சொற்களையும் வழங்கத் தலைப்பட்டன ரென்றும், அறிவாராய்ச்சியும் உரிமையுணர்ச்சியும் தன்மானப் பண்பும் மிக்க இக்காலத்தில் தமிழைத் தூய்மையாக வழங்குதலே தக்கதென்றும், அதுவே தமிழன் முன்னேறும் வழியென்றும், பிறமொழிச் சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண் டவை அல்ல என்றும், தமிழின் தூய்மையைக் குலைப்பவ ரெல்லாம் வாள்போற் பகைவரும், கேள்போற் பகைவருமே யென்றும் கூறி விடுக்க. இனி வடமொழித் துணையின்றித் தமிழைத் தனித்து வழங்க இயலாதென்றும், இருசார் பகைவரும் கூறிக் கலாய்ப்பர். உலகிலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழ் ஒன்றே பிறமொழித் துணையின்றித் தனித்து வழங்கவல்லதென்றும் தேவமொழி யென்றும் அரிய மூலமொழியென்றும் தமிழை வளம்படுத்திய மொழியென்றும் தம்பட்டமடித்துக் கொள்ளும் வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழேயென்றும், வடமொழியே தமிழ்த் துணையின்றி வழங்காதென்றும், இவ்வுண்மை அண்மையி லேயே வெட்ட வெளிச்சமாகுமென்றும், அவர் அறிவாராக. செய்யுள் வழக்கு, குறிப்பிட்ட சொற்களையும், சொல் வடிவுகளை யுமே வழிவழி வழங்கி வருவதாலும், சுருங்கச் சொல்லல் என்னும் அழகைப் பெரிதாகப் பேணுவதாலும், உலக வழக்கினின்றும் மிகவும் நடைவேறுபட்டதாகும். பண்டைச் செய்யுளிவெல்லாம் காடை, கதுவாலி என்னும் பறவைகள் குறும்பூழ், சிவல் என்னும் சொற்களாலேயே முறையே குறிக்கப் பெறும், செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செய்ம்மன, செயின் முதலிய செய்யுள் வினையெச்ச வடிவுகள் உலக வழக்கிலும் செய்து கொண்டு, செய்கிறதற்கு, செய்தால், செய்துவிட்டால் முதலிய உலக வழக்கு வினையெச்ச வடிவுகள் செய்யுள் வழக்கிலும் இடம் பெறுவதில்லை. முழுங்கு என்னும் வடிவே மூலமாயினும், அதன் திரிபான விழுங்கு என்பதே செய்யுட்கேற்றதாகக் கொள்ளப்பெறும், இங்ஙனமே மிஞ்சு என்பதினும் அதன் திரிபான விஞ்சு என்பதே சிறந்ததாம், கொண்டுவா என்பதன் திரிபான கொண்டா என்பது செய்யுளில் இடம்பெறாது: ஆயின் கொண்டா என்பதன் திரிபான கொணா, கொணர் என்பவை இடம்பெறும். மக்களை உயர்ந்தோர், ஒத்தோர், இழிந்தோர் என மூவகுப்பாராக வகுத்து அதற்கேற்ப ஈறு கொடுத்துப் பெயரையும் வினையையும் ஆள்வது முற்றும் உலகவழக்கேயன்றிச் செய்யுள் வழக்கன்று, ஒருமை பன்மை என்னும் எண் பகுப்பே செய்யுட் குரியதாம். பெயர் வினை இழிந்தோன் நீன், நீ, அவன் வா,வந்தான் ஒத்தோன் நீம், நீர் (நீயிர்) அவர் வாரும், வந்தார் உயர்ந்தோன் நீங்கள், அவர்கள் வாருங்கள், வந்தார்கள் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கின் சொல்லா றல்ல. (தொல். 510) என்று தொல்காப்பியம் தெளிவாகக் கூறதல் காண்க. இனி வினையின் முக்கால வடிவும் ஆங்கிலத்திற்போல் தனித்தனி தனிப்பு (Indefinite), தொடர்ச்சி (Continuous), நிறைவு (Perfect) நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous) என்னும் நால்வகை கொண்டியங்குவதும், தமிழில் உலக வழக்கே அன்றிச் செய்யுள் வழக்கன்று. சிலர் செய்யுள் வழக்கையே அடிப்படையாகக் கொண்டு, உலக வழக்கிற்குச் சிறப்பாக உரிய கூறுகளையெல் லாம், பிற்காலத்தனவாகக் கூறுவர். அவர் மொழியியலை சிறப்பாகத் தமிழியலை அறியார். செய்யுள் வழக்கினும் உலக வழக்கே முந்தியதென்பதை அறிதல் வேண்டும். எ-டு: இறந்தகாலம் தனிப்பு - வந்தான் தொடர்ச்சி - வந்து கொண்டிருந்தான் நிறைவு - வந்திருந்தான் நிறைவுத் தொடர்ச்சி - வந்து கொண்டிருந்திருந்தான். நிகழ்காலம் தனிப்பு - வருகின்றான் தொடர்ச்சி - வந்து கொண்டிருக்கின்றான் நிறைவு - வந்திருக்கிறான் நிறைவுத் தொடர்ச்சி - வந்து கொண்டிருந்திருக்கின்றான் எதிர்காலம் தனிப்பு - வருவான் தொடர்ச்சி - வந்து கொண்டிருப்பான். நிறைவு - வந்திருப்பான் நிறைவுத் தொடர்ச்சி - வந்து கொண்டிருந்திருப்பான் இறந்த கால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கு வீழ்ந்தது. எதிர்கால நிறைவும், நிறைவுத் தொடர்ச்சியும் இறந்த காலத்தையும் உணர்த்தும். ஆங்கில நிகழ்கால வினையெச்சத்திற்கு (Present Participle) ஒத்த செய்து கொண்டு என்னும் தமிழ்த் தொடர்ச்சி வினையெச்ச வாய்பாடு, தொன்று தொட்ட வழக்கேயன்றி இடைக்காலத் ததோ, ஆங்கிலத்தைப் பின்பற்றியதோ அன்று. கொள் என்னும் தற்பொருட்டுத் (Reflexive) துணைவினை (Auxiliary Verb) எங்ஙனம் தமிழ் மரபினதோ அங்ஙனமே கொண்டு என்னும் தொடர்ச்சி காலத் துணை வினையெச்சமும் தமிழ் மரபினதாம். தமிழிலக் கண நூலார் நிகழ்கால வினையெச்சமாகக் குறிக்கும் செய்ய என்னும் வாய்பாடு, தம் எழுவாய் வினையொடு முடியும்போது, ஆங்கிலப் பொருட்டு வினையெச்சத்தை (Infinitive Mood) யொத்து எதிர்காலத்தை யுணர்த்துவதால், உண்மையில் எதிர்கால வினையெச்சமேயாம். செயின் (செய்தால்) என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை ஐய வினையெச்சம் (Subjunctive mood) என்று குறிப்பதே தக்கதாம். தனிப்பு என்னும் காலவகை வழக்குஞ் செய்யுளும் என்னும் இருவகை வழக்கிற்கும் பொதுவாம். நிறைவும் செய்யுட்கு ஏற்கும். எ-டு: ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள்ள தாதலின் (மணி - 3: 4) எதிர்ந்துள்ளது எதிர்ந்திருக்கின்றது. (நிகழ் கால நிறைவு) தொடர்ச்சி வினையெச்சப் பொருள் செய்யுளில் முற்றெச்சத்தால் உணர்த்தப்பெறும். எ-டு: ஆடினிர் பாடினிர் செலினே (புறம் - 109: 17) ஆடினிர் பாடினிர் = ஆடிக்கொண்டும், பாடிக் கொண்டும், இடவேற்றுமை உருபேற்ற தொழிற் பெயரும் இலக்கிய வழக்கில் தொடர்ச்சி வினைப் பொருளுணர்த்தும். எ-டு : தட்டுப்புடைக்கண் - தட்டுப்புடைத்துக் கொண்டிருந்த (கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கும்) போது. நிறைவுத் தொடர்ச்சி செய்யுளில் இடம் பெறாது. செய்யுள் வழக்கு உலக வழக்கினின்று பெரிதும் வேறுபட்டும். தமிழ் தமிழத் தமிழ்ப் பெரும்புலவரும் மருளுமாறு தொன்முது தோற்றத்ததாயும், இருக்கவும், செக்கோசிலோவோக்கிய நாட்டு கொச்சைத் தமிழ்ப் புலவரான காமில் சுவெலபில் என்பார். ஆரிய முறையில் தமிழைச் சில்லாண்டு கற்றபின் தம்மைத் தமிழ்ப் பேரதிகாரியாகக் கருதி, நற்றிணையென்னும் பண்டை அகப் பொருட் செய்யுட் பனுவலையும், நாலுவேலி நிலம் என்னும் இற்றைக் கடுங்கொச்சைத் தமிழ் உரைநடை நாடகப் பனுவலை யும் அடிப்படையாகக் கொண்டு நரி தன்வாலை விட்டுக் கடலாழங் கண்டாற்போல் தமிழின் தொன்மையை ஆய்ந்து அதன் தோற்றம் கி.மு.1500 என்று வரையறுத்திருப்பது, தன் னாராய்ச்சி இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்க்கு எத்துணை அறிவியல் உண்மையாகக் காட்சியளிப்பினும், முறைப்பட்ட மொழியாராய்ச்சியாளருக்கு எத்துணை நகை யாட்டிற்குரிய பகடிக் கூத்தாம். இனி, செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொல். 883) என்னும் தொல்காப்பிய நூற்பாவைப் பிறழவுணர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய (திரவிடம் என்னும்) கொடுந் தமிழ் மொழிகளின் கொச்சைச் சொற்களையே திசைச் சொல் லென்று, இலக்கண நூலார் கொண்டதாகக் கூறுவாருமுளர், கொடுந்தமிழ் மொழிகளின் பெரும்பாற் சொற்கள் கொச்சை முறையில் திரிந்திருப்பினும், அவையல்லாத, திருந்திய வடிவுச் சொற்களையே தேவையான இடத்துச் செந்தமிழார் மேற்கொண் டனர் என்பதை அறிதல் வேண்டும். தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும் குட்டநாட்டார் தாயைத் தள்ளை யென்றும், நாயை ஞள்ளை யென்றும்; குடநாட்டார் தந்தையை அச்ச னென்றும்; சீதநாட்டார் ஏடாவென்பதனை எலுவனென்றும், தோழியை இகுளையென்றும், தம்மாமி யென்பதனை தந்துவையென்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலி என்றும், சிறு குளத்தைப் பாழி யென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறு வென்றும், சிறு குளத்தை கேணியென்றும்; அருவா வடதலையார் குறுணியை குட்டை யென்றும் வழங்குப. இனிச் சிங்களம் அந்தோ வென்பது; கருநடம் கரைய சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; தெலுங்கு எருத்தைப் பாண்டி லென்பது; துளு மாமரத்தை கொக்கென்பது, ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க என்றே நச்சினார்க்கினியர் திசைச் சொற்கு எடுத்துக்காட்டியிருத்தலையும், ஏனையுரையாசிரியரும் அவரைப் போன்றே யன்றி வேணும் (வேண்டும்), லேது (இலது) பாளெ (வாழை) முதலிய கொச்சைத் திரிபுகளை எடுத்துக் காட்டாமை யும் நோக்கித் தெளிக. மேனாட்டார் இற்றை அறிவியல் துறைகளைக் கண்டு நுட்பமாக வளர்த்து மேன்மேலும் முன்னேறிவருபவரே யன்றி, தொன்று தொட்டுவரும் மொழித் துறையில் பண்டைத் தமிழர்போல் தேர்ச்சி பெற்றவரல்லர். ஓரொலிக்குப் பலவரி வடிவும் ஒரு வரிவடிவிற்குப் பலவொலியும் கொண்டதும். உயிர்மெய்க்குத் தனி வரிவடிவில்லதும், தனியொலியை இணைவரியாலும் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதி வரியாலும் குறிப்பதும், ஒலிக் காத ஊமை வரிகளுடையதும், எத்தனை உயர்கல்வி கற்பினும் ஆசிரியன்துணை அல்லது அகரமுதலித் துணையின்றி ஒரு சொல்லைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறை அறிய வியலாததும் அவர் மொழியாகும். இற்றை அறிவியல்களை எல்லாம் கண்டத னாலும், மேன்மேலும் வியக்கவும் மருளவும்தக்க புதுப்புனைவு களைத் தொடர்ந்து இயற்றிக் கொண்டே வருவதனாலும், எல்லாத் துறைகளிலும் வெள்ளையர் சொல்வதே விழுமிய உண்மையென இந்தியருட் பெரும்பாலோர் சிறப்பாகத் தமிழர் கருதுகின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் அதன் மரபையும் மேலையரின் மொழியமைப்பு மரபுகளோடு ஒப்புநோக்கின், மொழித் துறையிற் கீழையரே இன்றும் மேலையர் என்பது விளங்கித் தோன்றும். பேதைமை என்பது கற்றோர் கல்லார் ஆகிய இரு சாரார்க்கும் பொதுத் தன்மையாகும். ஆதலால் பட்டக்கல்வி, கற்றமட்டில் ஒருவர் தம் பிறவிக் குணமான பேதைமை நீங்கப் பெறார். ஆகவே, கல்லாப் பேதையர் போன்றே கற்ற பேதையரும் உளர் என அறிக. சென்ற நூற்றாண்டுவரை, மொழிநூற்கல்வி கால்டுவெல் போன்ற நுண்மதியும் நடுநிலையும் சிறந்த பேரறிஞரால் நன்முறையில் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நூற்றாண்டில் ஆரியத்தையே அடிப்படையாகக் கொண்டு தலைகீழாக ஆய்ந்த மேலையர், மொழி மூலத்தைக் காணாது முட்டுப்பட்டு, வரலாற்று முறையை அடியோடு வண்ணனை முறையையே வளர்த்து வருகின்றனர். அதனால் தம்மையும் தம் மொழிகளையும் போன்றே பிறரையும் பிறர் மொழிகளையும் கருதி, இலக்கண அறிவும், மொழிப்பண் பாடும் புலமையும் இல்லாத பொதுமக்கள் தம் வாய் கோணியவா றெல்லாம் ஒலித்து பேசுங் கொச்சை வழக்கையே அளவை மொழியாகக் கொண்டு அதனையே உலக வழக்கெனப் போற்றி வருகின்றனர். இது தமிழிற்கு எள்ளளவும் ஏற்காதென்றும் உலக வழக்கு வேறு கொச்சை வழக்கு வேறென்றும் மொழித்துறையில் மேனாட்டார் இன்னும் தமிழரிடமிருந்தே அறிவு பெறற்குரியர் என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க. (முதன்மொழி (15.2.1971))