இந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள் TheDravidian Elements in IndianCulture ஆசிரியர் டாக்டர். கில்பெர்ட் சிலேட்டர் (1924) இன்றைய நிலையிலான முன்னுரை, இணைப்புகளுடன் தமிழாக்கம் பி. இராமநாதன் க.மு; ச.இ தமிழ் மண் சென்னை நூற் குறிப்பு நூற்பெயர் : இந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள் ஆசிரியர் : பி. இராமநாதன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்ரா & குட்வில் கம்ப்யூட்டர்ஸ் அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. பதிப்புரை இந்நூலின் மூல ஆசிரியர் அறிஞர் கில்பெர்ட் சிலேட்டர் 1915 - 1922இல் தமிழ்நாட்டில் (அன்றைய சென்னைமாகாணத் தென்பகுதி) சென்னைப்பல்கலைக் கழகத்தின் இந்தியப் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியராய்,தலைவராய்ப் பணிசெய்தவர். பொருளாதாரம் மட்டுமின்றி, வரலாறு,மொழியியல், சமூகவியல், பண்பாடு முதலிய பல்துறைகளிலும் வல்லவர். தமிழ் - தமிழர் ஆய்வை மேற்கொள்வார்க்குப் பெரிதும் உதவுவதாகியஇந்நூல், எம்பதிப்பகம் இவ்வாண்டு வெளியிடும் புதிய நூல்களில் ஒன்றாகும்.இதனை எம்பதிப்பக நூலாசிரியர்களுள் ஒருவராகிய அறிஞர் பி. இராமநாதன்செம்மையாக, நயமாகத் தமிழாக்கியுள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் நாகரிகத்தில், திராவிடப் (தமிழிய)பண்பாட்டு க் கூறுக ள் அனைத்துத் துறைகளிலும் முக்காற் பகுதிக்கும்அதிகமாக (twelve annas in the rupee) உள்ளன என்பார் சுநீதிகுமார்சட்டர்ஜி. இதனைக் கடந்த 90ஆண்டு (1924-2014) காலம்சார் பலதுறைஆய்வுகள் மேலும் வலுவாக நிறுவியுள்ளதை, பி. இராமநாதன் அவர்களுடைய“சிலேட்டரின் முடிவுகள் கடந்த 90 ஆண்டுகளில் மேலும் வலுவடைந்துள்ளமை”பற்றியதான செய்திகளை நூன்முகத்தில் காணலாம். “இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட (தமிழிய) மொழி பேசுநர்பங்கு: மறுபார்வை தேவை” என்பது குறித்த அறிஞர் ஆந்த்ரி எப். ஜோபர்க்குஅம்மையார் 1990 கட்டுரை (இந்நூலின் பக்: 119-165) இந்நூற் கருத்துகளைவிரிவாக ஆதரிப்பதைக் காணலாம். தமிழ்-தமிழர் ஆய்வை மேற்கொள்பவர்களுக்குப் பெரும் பயன்தரவல்ல இந்நூலை வெளியிடுவதில்பெருமைப்படுகிறோம். பதிப்பாளர் பொருளடக்கம் 1. திராவிடர் 2. ஆரியர் 3. திராவிட நாகரிகத்தின் தொல்பழமை 4. இந்திய சமயக் கருத்துகளின் வளர்ச்சிமுறை 5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின் பொருளாதார அடிப்படை 6. திராவிட நாகரிகத்தின் சிறப்புக் கூறுகள் 7. இந்திய நாகரிகத்துக்கு மொழி பேசுநரின் பங்களிப்பு (இன்றைய 1924 நிலை ) இணைப்பு : இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழி பேசுநர் பங்கு : மறுபார்வை தேவை - ஆந்த்ரி எப். ஜோபர்க்கு : 1990 கட்டுரை. கில்பெர்ட் ஸ்லேட்டர்(1924) முன்னுரை 1915-ஆம் ஆண்டின் கோடைப் பருவத்தின்போது சென்னைப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு என்னை இந்தியப் பொருளாதரத்துறையின் (Indian Economics)தலைமைக்குப் பரிந்துரைத்ததென்றுஅறிவிக்கப்பட்டதும், நான் தமிழ் படிக்கத் தொடங்கினேன். அப்பொழுது‘இ ந் தி ய நாக ரி க த் தி ன் மூல மு த ல் ஆரியச்சார்பானது’ என்று இன்றுஇந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியுள்ள கோட்பாட்டின் உள்ளார்ந்த வலுவில் எனக்கு முதன்முதல் ஐயமேற்பட்டது. சென்னை வந்த பின்(நகரமைப்புத் திட்ட வகையில் சென்னைஅரசாங்கத்தின் அறிவுரையாளராயிருந்த). எச்.வி. லங்காஸ்டரைக் கண்டு கலந்துரையாடியதில்,இவ்வையங்கள் பின்னும் வளர்ந்தன. அவர் எனக்கு மிகச் சுவையான பலதகவல்களைத் தந்ததுடன், சிவகங்கை பற்றிய வியத்தகு நிழற்படத் தொகுதிஒன்றையும் எனக்குக் காட்டினார். 2. 1 92 2 இளவேனில் வ ரை நான் தென்னிந் தி யாவில் தங் கி யகாலத்தில் திராவிட நாகரிகத்தின் தோற்றம், இந்திய நாகரிகத்தில் அதன்பங்கு பற்றியும், என் உள்ளம் ஓயாது சிந்தித்து வந்தது. இத்தகைய ஆர்வம்கொண்டிருந்த பிறரை நான் கண்டால், அவர்களுடனும் வாதிடுவேன்.இவ்வாறுதான் இந்நூல் கருத்துக்கள் என் எண்ணத்தில் உருவாயின. 1922-இல்நான் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லும் வரும் வரை எலியட் சுமித், பெரிஆகியவர்கள் நூல்களும் மாந்தர் இனத்தோற்ற ஆராய்ச்சி, தொல்லியல்துறைகளின் பண்பாட்டுப் பரவுதற் கொள்கை சார்ந்த நூல்களும் எனக்குத்தெரிய வரவில்லை. இந்தியாவுக்கு என் பொருளாதாரத்துறை சார்ந்த நூல்கள்தவிர மற்றப் புதிய நூல்கள் என்னை அடையவில்லை. 3. இந்நூலின் முதல் நிலை வரைவை இந்தியாவில் 1920-இல்எழுதினேன். அதனை நிறைவு படுத்துவதற்கான தூண்டுதல் தந்தவர்களான டாக்டர் ஈ.ஈ. பவர்(Power), பேராசிரியர் புளூர் (Fleure)ஆகியோருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் தட்டச்சுப்படி அச்சுத்திருத்தப்படிகளை வாசித்து புதுக் கருத்துக்களைத் தந்துதவிய பேராசிரியர்கள்புளூர், எலியட் சுமித்(Elliott smith) ஆகியோருக்கும் நான் பேரளவு கடமைப்பட்டிருக்கிறேன். அத்தகைய பல கருத்துரைகளுள் சில மட்டுமேஅவர்களுடைய கருத்துகள் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.4. முதல் இயல் சார்ந்த புளூர் குறிப்பில் ஒரு சிறு செய்தியை நான் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள் முழுமையாக ஏற்க இயலவில்லை. பண்பாட்டுக் கூறுகள் பரவிய வகையில்இ ந் தியாவையும் மெஸெபொட்டேமியாவையும் அவர் இணைத்தபோதிலும், கடல்வாணிகத்தை விடத் தரை வாழி வாணிகமே முக்கிய காரணம்என்று அவர் கருதுகிறார். மொத்தத்தில் கடல் நெறியே முக்கியத்துவம்மிக்கதாயிருக்கக்கூடும் என்று நான் கருதுகிறேன். இது ஓரளவுஅக்கால நிலைமை காரணமாகவே ஆயினும், “கடற்கரை பின் வாங்கியபின்னர் எரிது நகரின் வாழ்வு சிறுத்துப் போய்விட்டது” என்ற வரலாற்றுச்செய்தியையும் ஆதாரமாகக் கொண்டது எனது முடிவு. கி.மு. 3000-2000 காலஅளவில் தரைவழி வாணிகத்தை விடக் கடல் வாணிகத் தொடர்பேமுக்கிய மாயிருந்தது என்று உறுதியாகக் கூற இயலாவிடினும் அதற்கேமுதன்மை தரலாம். பாரசீகக்குடாவைக் கடந்தபின், கடல்வழிப்பாதை இரண்டாகப் பிரிந்து மேற்கு நோக்கிய கிளை அரேபியாவின் கடற்கரைவழியே சென்றது. அடுத்த கிளை கிழக்கு தெற்காகவும் இந்தியக் கடற்கரைஓரமாகச் சென்றது. இரண்டு கிளைகளுமே சமமுக்கியத்துவம் வாய்ந்திருக்கலாம். 5. எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழித் தொடர்புக்கு புளூர் அவர்களைவிட எலியட் சுமித்தைப் பின் பற்றி அதிக முக்கியத்துவம் தருகிறேன். அவர்களிடம் இருந்து சற்று வேறுபட்டு இவ்வாணிகத்தொடர்பு இந்தியப்பண்பாட்டை அம் மேற்றிசை நாடுகளுக்குக் கொண்டுசென்றிருக்கலாம் என்று கருதுவதிலும், ஆரியர் வரவுக்கு முன்னரேஇந்தியாவில் வலுவுடன் வழங்கிவந்த திராவிட நாகரிகம் அம்மேற்றிசை நாடுகளுக்கும் பரவியிருக்கவாய்ப்புண்டு ஆகையால்அதற்கும் அதிக முதன்மை தரவேண்டும் என்பது எனது நிலைப்பாடு ஆகும். நூன்முகம் [1924 - 2014]: தொண்ணூறு ஆண்டுகளில் இத்துறை ஆய்வில்நிகழ்ந்துள்ளவற்றின் சுருக்கம். [மேலும் பல தகவல்களுடன் இதைவிரிவாக விளக்குவது இணைப்பில் காணும் விரிவான ஆந்த்ரே எப். ஜோபெர்குகட்டுரை] இன்று இந்திய நாகரிகம் என்று வழங்கப்படும் நாகரிகக் கூறுகளில் பெரும்பாலானவை உண்மையில் தமிழர், தமிழிய நாகரிகக் கூறுகளே “இந்திய நாகரிகத்தின் அடித்தளம் திராவிட (தமிழ்) மொழி - பண்பாடு ஆகியவையே” - எஸ். ஏ. டைலர் 1973 All of Indian civilisation is built on an underlying base ofDravidian language and culture - S.A. Tyler (1973) India an Anthropological Perspective இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பின்னர்ஆங்கிலேய அறிஞர், கில்பெர்ட் சிலேட்டர் 1915-23 கால அளவில் சென்னைப்பல்கலைக்கழகத்தில் இந்தியப் பொருளியல் Indian Economics துறையைஆய்வுத்துறையாகத் தொடங்கி நிலைப் படுத்தினார். 1916 - 17 இல் சுமார் பத்துதென்னிந்தியக் கிராமங்களில்(பல இன்றைய தமிழ்நாட்டில்) பொருளியல் களஆய்வு செய்து 1918 இல் Some South Indian Villages என்னும் ஆய்வு நூலைவெளியிட்டார். [பின்னர் அதேகிராமங்களில் பி.ஜே. தாமஸ் மீண்டும் களஆய்வு செய்து 1940இல் அன்றைய நிலையை விளக்கும் ஆய்வை வெளியிட்டுள்ளார்.] 2. இவர் பல்துறை வல்லுநர். இங்கிலாந்திற்கு போன பின்னர் 1931இல் SevenShakespeares என்ற நூலை எழுதியவர் [எஸ். முத்தையா THEHINDU நாளிதழ் 20.2.2012 கட்டுரை]. பொருளியல் குறித்து ஐந்தாறுநூல்களை எழுதியுள்ளார். 1923 இல் இவர் எழுதிய இந்தியப் பண்பாட்டில்திராவிடக் [தமிழியக் ] கூறுகள் The Dravidian element in Indian Cultureநூல் (ஆங்கிலத்தில் 192 பக்கங்கள்) புகழ்பெற்றதாகும். (i) இந்தியப் பண்பாட்டில் திராவிடக் (தமிழியக்) கூறுகள்பற்றிய ஸ்லேடர் 1924 முடிவுகளைக் கடந்த 90 ஆண்டுகளின்பல்துறை ஆய்வுகள் மேலும் வலுவாக ஆதரிக்கும் நிலைமை 3. 1856 - 1980 கால கட்டத்திலேயே கால்டுவெல் மறைமலையடிகள், ஞானப் பிரகாசர், ஞா. தேவநேயப் பாவாணர் முதலியோர் நிறுவிய திராவிட மொழிக்குடும்பத் தொன்மையை இன்று பல்துறை அறிஞரும் (scholars ofvarious disciplines of Sciences and Humanities like Human Palaentology,Human Palaeogenetics, Comparative and Historical Linguistics - includingNostratic and Mother Tongue studies,) ஏற்கின்றனர். அதுமட்டுமல்லதமிழிய மொழி பேசுநரின் தொன்மை, இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இன்றைக்கு முன்னர் (இ.மு = Before Present; B.P.) 50000 -10000 வரைச் செல்கிறது. முந்து தமிழியத்தின் தொன்மையானது இந்தோஐரோப்பியம் முதலிய மொழிக் குடும்பங்களின் தாயான நாஸ்திராதிக் ,யூரேஷியாடிக் வரைச் செல்கிறது. காண்க: Chronology of the Major partof the world’slanguages accepted by scholars of Nostratic and MotherTongue studies including A.R. Bomhard Reconstructing Proto - NostraticBrill. Leiden (2008) 4. தமிழிய மொழிக்குடும்பத்தின் தொன்மை தென்னிந்தியாவிலும்இந்தியாவிலும் இமு. 70000 - 50000 அளவுக்கு முந்தியது என்பதை இன்றுநம் காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருபவர்களில் முதன்மையானவர்அமெரிக்க அறிஞர் ஸ்தீபன் ஹில்யர் லெவிட் (1943-) மேலை இந்தோஐரோப்பிய மொழிகளிலும், தொல் இந்தோ - ஐரோப்பியம், நாஸ்திராதிக்இன்றும் காணப்படும் பல தமிழிய மொழியியல் கூறுகளை நிறுவியுள்ளார்.ஞா. தேவநேயப் பாவணரின் மொழியியல் நோக்கானது ஏற்கத் தக்கதெனநிலைநாட் டி வ ரு ம் மு த ன்மையான மேலை மொழி யி ய ல றி ஞ ர் . இ வ ர்அமெரிக்காவில் நியூயார்க்கில் வாழ்பவர். அவர் (International Journalof Dravidian Linguistics IJDL) 2007 கட்டுரையில் தெரிவித்ததுகுறிப்பிடத்தக்கது:- ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வுசெய்த அறிஞர் அம்மக்களின்மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளன எனக் கண்டுள்ளனர்.உறவுமுறை (Kinship) பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. கி.மு. 6000ஐ ஒட்டிஉலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின்பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டனர் ஆஸ்திரேலியப்பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வுக்குப் புலம்பெயர்ந்தது ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 50,000 ஆண்டுகட்கு முன்னரே தமிழிய(திராவிட) மொழிபேசுநர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகின்றது.இந்த (“திராவிடர் ஏற்றம்”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவி லிருந்து வடநாடு செல்கின்றனர்; பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப்பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்த பிற நிலப்பகுதிகளில் மூல திராவிடமொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ-ஐரோப்பியம் ஆகியமொழிக்குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கு திராவிடம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்டவட்டமாகக்கூற இயலாது.” 2013 சூன் IJDL கட்டுரையில் லெவிட் முடிவுகள் வருமாறு: தமிழிய(திராவிட) மொழிகளில் நாம் காணும் ஒலியன் மாற்றங்கள்; ஒரு ஒலியனுக்குப்பகரமாக இன்னொரு ஒலியனைப் பெய்து பொருள் மாற்றம் , புதுப்பொருள்தெரிவிப்பது இவையெல்லாம் திராவிட மொழிகளில் கழிபழங்காலத்துக்குமுன்னரே இருந்ததைக் காணலாம். அம்மாற்றங்களை நாஸ்திராதிக்நிலையிலேயே முந்து திராவிடத்திடம் இருந்து கி.மு. 45000க்கு முன்னர்பெற்றுவிட்ட (இந்தோ - ஐரோப்பியம் உள்ளிட்ட) பிற நாஸ்திராதிகமொழிப் பெருங்குடும்ப மொழிகளில் (Indo European and other languagefamilies coming under Nostratic Macrofamily ) இன்றும் நிலைபெற்றுள்ளதைக் காணலாம். 5. பின்லாந்து நாட்டறிஞர் ஹானு பானு அகஸ்தி ஹகோலா தமது2009 / 2011 நூல் Lexical Affinities Between Tamil and Finnish (A Contributionto Nostratic studies from the angle of close Genetic affinitiesbetween the Dravidian and Uralic Languagefamilies ), நூலில் 765 +373 சொல்லொப்புமைகளை பரோ - எமெனோ (1983) னுநுனுசு மற்றும்செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (1985 - 2007) இவற்றையும்பயன்படுத்தி ஆய்வு செய்து தந்துள்ளார். இந்நூலில் ஹகோலா வெளியிட்டுள்ள முடிவுகள் வருமாறு:(i) 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது ஞால முதன் மொழி (MotherTongue of Man ) அந்த ஞால முதன் மொழிக்கு அடுத்த நிலையில் தோன்றிய மொழிப்பெருங் குடும்பங்களில் (Macrofamily) ஒன்றான Pre - Proto Nostratic (தொல்நாஸ்த்ராதிக்) முதன் முதலில் தென்னிந்தியாவில் நிலவி யிருக்கலாம். உலகில் இன்றுள்ளதமிழியம், இந்தோ ஐரோப்பியம், செமித்தியம், உரால் - அல்தாயிக் மொழிக் குடும்பங்கள் (மற்றும கி.மு. 3000 அளவில் வழங்கிய சுமேரியம், எலாம் ஆகிய மொழிகள்) இவற்றின்தாய்க்கு மொழியியலாளர் சூட்டியுள்ள பெயர் நாஸ்திராதிக் / யுரோசியாடிக் என்பதாகும்.ஸஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் 2000 அக்தோபரில் பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியோடு பேசும்பொழுது ஜோசப் ஹெச். கிரீன்பெர்கு கூறியது: “திராவிட மொழிக்குடும்பம் யுரேசியாடிக்கின் மகள் அல்ல; சகோதரி யாகத்தான் இருந்திருக்க முடியும்” Bh. Krishnamurthy (2003) The Dravidian languages.] “(ii) 1000 ((Before Present) BP) க்ஷஞ ஐ ஒட்டி தொல் - நாஸ்திராதிக் பேசுநர்தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய பின்னர் (தொல் திராவிட - தமிழிய -மொழியினர் இந்தியா அளவில் நிற்க) நாஸ்திராதிக்கின் ஏனைய பிரிவினர் மையக் கிழக்கு- மைய ஆசியப் பகுதியில் 10000 - 8000 BP கால அளவில் உடனுறைந்த பின்னர், சிலஆயிரம், ஆண்டுகளில் சுமேரியம், இந்தோ - ஐரோப்பியம், உரால் - அல்தாயிக்,செமித்தியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் பிரிந்து ஆசியாவில் பல பகுதிகளுக்கும், எகிப்துமுதலியவற்றுக்கும் பரவின. “ (iii) 7,000 BP (= கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து - பஞ்சாப்உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர். “(iஎ) மையக்கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் கி.மு. 6000 - 4000 அளவில்வாழ்ந்த “இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்ப மூலமொழியை (Proto - Indo – European)பேசியவர்களிடமிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்த இந்தோ இரானியப் பிரிவின்ஒரு உட்கிளையாகிய “வேத - சம்ஸ்கிருத” மொழி பேசுநர் கிமு 2500 - 1500 காலஅளவில் சிறு எண்ணிக்கையில் வடமேற்கு இந்திய (சிந்து - பஞ்சாப்) பகுதிக்கு வந்துஅங்கு தமிழிய (திராவிட) மொழி பேசுநருடன் கலந்து விட்டனர்.” 6. இந்தப் பின்புலத்தில் தென் ஆசியாவில் கழி பழங்காலத்தில் ஒருபொதுவான மூதாதை மொழி இருந்திருக்க வேண்டும். தற்போதைய மாந்தஇனம் (சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்) உலகெங்கும் பரவத்தொடங்கிய கால கட்டமே தொல்திராவிட மொழியின் தொடக்க காலம்ஆகலாம். (It may be a question of a very ancient common substratum inSouth Asia, pre -Dravidian going back even to the original peopling ofthe world) v‹wh® Colin P. Masica (Paper in The Year Book - for 2001of south Asian languages and Linguistics; New Delhi; Sage Publications) 7. (i) இன்று உலகெங்கும் உள்ள 700 கோடி மனிதர்களுமே (அதாவதுஇந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள்திராவிடர், இந்தோ ஐரோப்பியர், மங்கோலியர், செமித்தியர், நீக்ரோவர்,அமெரிக்க இந்தியர் ஆகிய அனைவருமே) ஹோமோ சேபியன்சு (HomoSapiens or Anatomically Modern Humans)என்னும் ஒரே இனத்தைச்சார்ந்தவர்கள். இவ்வினம் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரே தாயிடம் அல்லது குழுவிடம் இருந்துதோன்றியது என்பது இன்றைய அறிவியலாளர் அனைவரும் ஏற்ற முடிவு.காண்க[Nature (London) 3 May 2012 Vol. 485 பக்.25; மற்றும் Map onp.11 of Cyril Aydon (2009) A brief history of Mankind: 1,50,000 years ofHuman history (London; Constable and Robinson] எனினும் ஏறத்தாழமனிதனை யொத்த ‘முன்மாந்த’ (Hominid) இனங்கள் கடந்த 48 லட்சம் ஆண்டுகளில் தோன்றிச் சில பல லட்ச ஆண்டு வாழ்ந்த பின்னர் முற்றிலும் அழிந்தொழிந்துவிட்டன. அவற்றுள் ஹோமோ எரக்டசு இன்றைக்கு முன்னர்Before Present (இ.மு. 17 லட்சம் - கி.மு 50000) என்ற இனமும் அடங்கும்.அது மட்டுமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிப் பிற கண்டங்களிலும்பரவியிருந்தது . க்ரோமக்னான் மனிதன், பீகிங் மனிதன், ஈடல்பர்க்மனிதன், சாவக மனிதன், அத்திரம்பாக்கம் பாஸில் மனிதன் ஆகியவர்கள்(சுமார் 3 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர்கள்) இந்த ஹோமோஎரக்ட்சு வகையைச் சார்ந்தவர்களே. ஐரோப்பாவில் 40000 ஆண்டுகளுக்குமுன் வரை வாழ்ந்து பின்னர் அடியோடு அழிந்து போன நியாண்டர்தல்(Neandarthal) (கிமு 5 லட்சம் - 30000) இனமும் அவ்வாறே. (ii) விஞ்ஞானிகள் மேலும் நிறுவியுள்ளது: இன்றைக்கு 70,000 -50,000 ஆண்டுகளுக்கு முன்னர்த்தான் ஆப்பிரிக்காவை விட்டு தற்கால மாந்தஇனம் (AMH)புலம் பெயர்ந்து உலகின் பிற கண்டங்களுக்குப் பரவியதுஎன்பதாகும். அவ்வாறுபரவுமுன்னரே மாந்தன் முதன்மொழி Mother Tongueof Man உருவாகிவிட்டதுஎன்று வரலாற்று மொழியியலாளர் உட்பட பலதுறைஅறிஞரும் கருதுகின்றனர்.H.H. Hock and B.D. Joseph (2009: II Revised edition) “Languagehistory, Language change and Language relationships (Historical andComparative linguistics”Mouten de Gruyter: Berlin. p 474: “Languageoriginated about 1,00,000 -- 50000 Before Present.... by way of gesturalshift to oral channel... vocal sounds at first were emphasisive attachகில்பெர்ட் ஸ்லேட்டர் ments” (சுட்டுகளின் முதன்மை பற்றி கால்டுவெல், ஞானப்பிரகாசர் அன்றேகருதியதும் அதுவே)... (iii) அவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டுப் பெயர்ந்து பரவிய மாந்தப்பிரிவினரில் முக்கியமான ஒரு பிரிவு தென்னிந்தியா வழியாக (தென்னிந்தியாஎன்பது அக்கால கட்டத்தில் கடலோர நிலப்பகுதியாக இருந்த கண்டத்திட்டுContinental Shelf பகுதியும் சேர்ந்தது) சென்று சிலர் தென்னிந்தியாவிலேயேநிலைத்திட; வேறு சிலர் ஆஸ்திரேலியா வரை கடலோர நிலப்பகுதி வழியாகமெதுமெதுவாக, அதாவது ஒரு தலைமுறைக்கு ஒன்றிரண்டு மைல் வீதம், சென்றடைந்தனர். இந்தியக் கரை சார்ந்த கண்டத்திட்டுப் பகுதியில் அதாவது கரையோரக் கடற்பகுதியில் (Continental Shelf) ஆழ்கடல்அகழாய்வு செய்தால் இது பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கலாம்என்பர் பிளெமிங் (2004). ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் எச்சங்கள்அக்கண்டத்தில் இமு 50000 முதல் உள்ளன. (iv) இன்றைய தமிழ்நாட்டு மக்களுள் அவ்வாறு இன்றைக்கு 70000-50000 ஆண்டு முன்னர் ஆப்பிரிக்காவை விட்டு நீங்கி ஆஸ்திரேலியாவரைச் சென்றடைந்த மாந்தரின் பிறங்கடைகள் பெருமளவில் உள்ளனர்என்பதை மைடகான்டிரியல் DNA மாந்த மரபணு ஆய்வு திட்டவட்டமாகநிறுவிவிட்டது. அவ்வாய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மதுரையைச்சார்ந்த முனைவர் இராமசாமி பிச்சப்பனும் ஒருவர். 23.8.2007, 16.4.2008நாள்களில் அவர் செய்தித்தாள் நேர்காணல்களில் தெரிவித்த செய்திகள் வருமாறு:- “ஆப்பி ரி க்காவை விட்டு இன்றைக்கு 70000- 50000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறிய ஒரு குழுவினரிடம் மை DNA அடையாளக்குறியீடு M130 தோன்றியது. இன்றுள்ள ஆஸ்திரேலியப் பழங்குடிமக்கள்தொகையினருள் இரண்டில் ஒருவரிடம் இந்த M130 உள்ளது. “மதுரைப் பகுதியில் உள்ள மக்கள் பலருடைய மை DNA-வை ஆய்வுசெய்ததில் அவர்களில் 5லிருந்து 7 நபர்களிடம் இந்த M130 உள்ளது என்றுதெரிய வந்தது. அன்றைய கடற்கரைப் பகுதி வழியாக மாந்த இனத்தின் ஒருபிரிவு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கிப் புலம் பெயர்ந்தது என்பதைஇந்த ஆய்வு மெய்ப்பித்தது (Proceedings of theNational Academy ofSciences; USA ; 2001) பிரிட்டன் நாட்டு மரபணுவியலறிஞர் சர் வால்டர்பாட்மர் சொன்னது போல். “உலகில் இன்றுள்ள மக்கள் அனைவரும் (700இந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள்கோடி பேருமே) ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின்பிறங்கடைகளே.” ‘இந்திய மக்களிடையே காணப்படும் மை DNA அடையாளக் குறியீடுகளில் மிகத் தொன்மை வாய்ந்தது M130 தான். அதைவிடப் பழைமையானமை DNA குறியீடுகள்இந்தியாவில் எவரிடமும் இல்லை. ஆப்பிரிக்காவில்இக்கால மாந்த இனம் AMH உருவாகிய பின்னர் அக்கண்டத்தை விட்டுமுதலில் புலம் பெயர்ந்து இந்தியாவில் முதலில் குடியேறியவர்களின்பிறங்கடைகள் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நிறுவப்பட்டுள்ளது. 8. “(கி.மு 300 - கி.பி. 200 காலத்தைச் சார்ந்த) சங்கத் தமிழ் நூல்கள்தமிழக மண்ணிலேயே தொல் வரவாகத் தோன்றியவை என்பதைக் காட்டும்அனைத்து அடையாளங்களும் உள்ளன. எந்த நாட்டிலிருந்தோ தமது மொழியுடனும் இலக்கியத்துடனும் தமிழர் தமிழகத்துக்கு வந்து குடியேறியதாகயாதொரு ஆதாரமும் அந்நூல்களில் இல்லை என்பதையும் இதிலிருந்துஉணரலாம்.” என்ற சேவியர்தனி நாயகம் (1953) முடிவு இன்று அசைக்கமுடியாததாக உள்ளது. ஸ்லேடரின் இயல் 1இல் திராவிட மொழி பேசுநர்மெசபொதாமியா பகுதியிலிருந்து கி.மு. 3000க்குப்பின் இந்தியாவுக்குள்நுழைந்து பின்னர்த் தமிழ்நாடு வரைப் பின்னர் குடியேறினர் என்றஉன்னிப்பு இன்று அடிபட்டுவிட்டது. மாறாக, மிகப் பழங் காலத்தில் (கி.மு.5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்) முதற்கண் காவிரிக் கரையில்உருவாகிய அரப்பா நாகரிகம் இந்திய மேற்குக்கரை வழியாகத் தமிழர்களால்சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டுசெல்லப்பட்டது. என்று - திருத்தந்தை ஹீராஸ் தொன்மை இந்தோ -நண்ணிலக்கரை நாகரிக ஆய்வு (Studies in Indo Mediterranean Culture1953) நூலில் நிறுவியுள்ள முடிவையே இன்றையப் பல்துறை ஆய்வுகளும்ஆதரிக்கின்றன.“திராவிட” மொழிக் குடும்பமா? “தமிழிய” மொழிக் குடும்பமா? 9. மொழியியலில் தமிழிய (Tamilian) மொழிக்குடும்பம் என்றேகால்டுவெல் காலம் வரை வழங்கிய பெயரை அவர் தான் “திராவிட” மொழிக்குடும்பம் என மாற்றி வழங்கினார். தமிழ் என்பதன் கொச்சைத் திரிபுவடிவமே திராவிடம் என்பதாகும். மகாவம்சத்தில் “தமிள”, தண்டி எழுதிய கில்பெர்ட் ஸ்லேட்டர் அவந்திசுந்தரி கதை யில் “த்ரமிள” என்ற சொல்லும் வருகின்றன. இக்ஷ்வாகுகுடிமர பினரின் பிராகிருதக் கல்வெட்டிலும் ‘தமிள’ தான் வருகிறது. பின்னர்குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகத்தில் “தத்யதா திராவிடாதி பாஷாயம் ஏவ”(அப்படி திராவிட (=தமிழ்) மற்றும் பிறமொழிகளில்)என்னும் இடத்தில் தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-த்ரவிட-திராவிட என்று மாறிவிட்டது. ஏ.சி. பர்னெல் 1872 இந்தியன் ஆன்டிகுவாரி முதல் தொகுதியில் மேற்கண்ட தந்திர வார்த்திகப் பகுதியை அச்சிட்டபொழுது அபத்தமாக, “ஆந்த்ர த்ராவிட பாஷாயம் ஏவ”என்று அச்சிட்டார் (மேலும் பற்பல பிழைகளுடன்). இந்தத் தவறானவாசகத்தை கால்டுவெல் (1875) ஸ்டென் கோனோ (Linguistic Survey ofIndia: 1906) போன்றோர் பின்பற்றினர். இத்தவறை பி.டி. சீனிவாச ஐயங்கார் இந்தியன் ஆன்டிகுவாரி 42ஆம் தொகுதியில் (1913) தெள்ளத் தெளிவாக நிறுவியுள்ளார். (குஞ்ஞீண்ணிராஜா Annals of Oriental Research தொகுதி28 (1979) கட்டுரையில் குறித்துள்ளது போல, பர்னெல் உடைய தவறான வாசகத்தைத் தமிழறிஞர் பலரும் இன்றும் பின்பற்றி “தமிழையும், தெலுங்கையும் ஒருசேரக் குமாரிலபட்டர் குறித்தார்” என்று தவறாக எழுதிவருகின்றனர்.) 10. “திராவிடம்” என்னும் சொல்லில் இருந்து “தமிழ்” உருவானதுஎன்று கால்டுவெல் தவறாகக் குறிப்பிட்டது பற்றி அவரைக் குறை கூறல்ஒல்லாது. அக்காலத்தில் தமிழ் சார்ந்த மொழியியல் ஆய்வுகள் இருந்த நிலைஅவ்வளவுதான். ஆனால் அவருக்குப் பின்னர் 1887இல் கலித்தொகை ப்பதிப்புரையில் சி.வை. தாமோதரம் பிள்ளை தொடங்கி, கமில் சுலெபில் (JourNal of the Institute of Asian Madras IV-2: 1987) முடிய நூற்றுக் கணக்கான மொழியியலறிஞர் அனைவரும் “தமிழ்” என்னும் சொல்லின் திரிபுற்றவடிவமே “திராவிடம்” என்று ஆணித்தரமாக நிறுவியுள்ள நிலையில்இன்றும் “திராவிடம்” என்னும் சொல்லிலிருந்து “தமிழ்” என்னும் சொல்உருவாகியது என கூறிக்கொண்டிருப்பது அறியாமை. 11. தொல்திராவிடம் (Proto-Dravidian) என்று வண்ணனை மொழிநூலாய்வாளர் மீட்டுருவாக்கம் செய்வனவற்றுள் பல பிழையாய் முடிகின்றனஎன்பதையும், பழந்தமிழே இதற்குக் கட்டளைக் கல்லாகக் கொள்ளப்படவேண்டும் என்பதையும் பாவாணர் நிறுவிவிட்டார். தமிழின் திரிபுகளே பிறஇந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள் திராவிடமொழிகள். பழந்தமிழினின்றும் வேறுபட்டதாக தொல் திராவிடம் என்பது கற்பனையே என்பர் பாவாணர். ஆகவே திராவிடம், தொல் திராவிடம்என குறிப்பிடப்படுவன வெல்லாம் உண்மையில் பழந்தமிழையே குறிப்பதாகஉணர்க. எனினும் உலக அளவில் “திராவிட மொழிக் குடும்பம்” என்பது ஒருகுறியீட்டுச் சொல் ஆகிவிட்ட நிலையில் அதை நாம் பயன்படுத்துவதில்தவறில்லை. அதன் உண்மைப் பொரு ள் ‘ த மி ழி ய மொழிக் கு டு ம்பம்’என்பதே. 12. ஜி.யூ.போப் திருக்குறள் ஆங்கிலப் பெயர்ப்பை 1886இல் வெளியிட்டபொழுது அந்நூல் முன்னுரையில் கூறியது:- “(தமிழே) தென்னிந்திய மொழிகளின் தாய் ஆகும். தென்னிந்திய மொழிக் குடும்பத்தைத் தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி என்று நான் கருதுகிறேன். அக்குடும்ப மொழிகளில் எதனை ஆய்வுசெய்ய வேண்டுமென் றாலும் தமிழ்மொழிப் பின்னணியில் தான் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது” (i) அண்மை ஆண்டுகளில் தமிழிய மொழிக் குடும்பத்தின் தொன்மை- ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களின் மொழிகளையொப்ப - தென்னிந்தியாவிலும் இந்தியா விலும் இ.மு. (இன்றைக்கு முன்னர்;Before Present) 50000 வரைச் செல்கிறது. (ii) அத்தகைய தொல்தமிழியக் குடு ம்பத்திலிருந்தே இந்தோஐரோப்பியம், உரால், அல்தாய்க் போன்ற மொழிக் குடும்பங்கள் பிரிந்திருக்கவேண்டும் என இன்று கருதப்படுவதாலும், (தெலுங்கு, கன்னடம் போன்றஏனைய திராவிடமொழிகளின் தோற்றக் காலத்தை எப்படிப் பார்த்தாலும் 2000ஆண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு செல்ல இயலாது என்பதாலும்) தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே சரி; எனினும்மொழியியலில் குறியீட்டுச்சொல் ஆகிவிட்ட “திராவிட” மொழிக்குடும்பம் என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியதாகிறது. 13. எல்.வி. இராமசாமி ஐயரும் தமது Educational Reviewசூலை 1928 கட்டுரையில் பின்வருமாறு தமிழின் தொன்மையை வலியுறுத்தியுள்ளார்:- “ த மி ழி ன் மாபெரு ம் சொற் க ள ஞ் சி ய த் தி ல் உ ள் ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் தெளிவான தமிழ்வேரைக் காணமுடியும்; இன்று வழங்கும்தமிழ்ச்சொற்களிலும் மிகப்பல சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தூய கில்பெர்ட் ஸ்லேட்டர் தமிழ் வடிவத்தில் வழங்கிவந்துள்ளன. திராவிட மொழிகளிலேயே தமிழ்தான்மூலமொழியின் முழுத்தன்மையைப் பெரும் அளவுக்கு இன்றும் கொண்டுள்ளது. தமிழில் காணும் எளிமையான தெளிவான வேர்களிலிருந்துதான்சிலபல (படிமுறையான) மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய திராவிடமொழிகளிலுள்ள திராவிடச் சொற்களை விளக்க இயலுகிறது. “எனவே இந்நிலையில் தமிழ்ச்சொல் எதனையும் தூய தமிழ் ஓரசை,ஈரசை வேரின் / வேர்களின் அடிப்படையில் விள க் க இயலும்பொழுது (தமிழில் இவ்வாறு விளக்கும் பொழுது கிட்டும் அருமையான தெளிவையும்ஒளியையும் குழப்பும் வகையில்) அச் சொல்லுக்கு தொல் திராவிட ProtoDravidian வடிவத்தை உன்னிப்பது உதவாக்கரை வேலை. இங்கொன்றும்அங்கொன்றுமாக சில நேர்வுகளில் மட்டுமே பிற திராவிட மொழிகளில் உள்ளசிற்சில சொற்களை விளக்குவதற்குதொல்திராவிடச்சொல் வடிவங்களை உன்னிப்பது தேவைப்படும்.” Considering the fact that Tamil’s vast word-hoard couldbe traced to its own elementary native roots and further that someof the most ancient forms (so far as we know) have been handeddown to us in their pristine nature, Tamil represents within certainlimits the most conservative of Dravidian dialects. This viewreceives confirmation from the fact that many of the elementaryroots of Tamil are found (with modifications and alterations ofvarious degrees) in a large number of other dialects “In this view then, if a Tamil word could be satisfactorilyexplained as being normally derived from a native Tamil root itself,or a combination of roots, it would be futile to constructproto-forms of words, obscuring the relationships of root andword in Tamil, unless indeed the affinities of Tamil words androots with those of other dialects demand it.” - L.V. Ramaswami Iyer (ii) தொல் தமிழியச் சிந்து நாகரிகம் 14. 1923 ஆம் ஆண்டில் எழுதி முடித்து 1924 இல் வெளிவந்ததுஸ்லேடரின் இந்நூல். ஆனால் 1923க்குப் பின்னர்த் தான் சர் ஜான் மார்ஷல்தலைமையில் மொகெஞ்சொதரோ விலும் ஹரப்பாவிலும் அகழ்வாய்வுகள்இந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள்தொடங்கப்பட்டு முதற்கட்ட முடிவுகள் 1924 செப்தெம்பரில்தான் மார்ஷல் Il-Lustrated London News கட்டுரையில் வெளியிட்டார். அந்நாகரிகம் தமிழிய(திராவிட) நாகரிகம் (கி.மு. 7000 - 1800); அந்நாகரிக முத்திரைகள் தமிழியமொழியே என்பதை விரிவாக பி. இராமநாதன் (2012) தொல் தமிழியச் சிந்துநாகரிகம் நூலில் காணலாம். சிந்துநாகரிச் செய்திகள் வந்த பின்னர் எழுதியிருந்தால் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளை மேலும் வலுவாகத்தம் நூலில் சிலேட்டர் நிறுவியிருப்பார். (ii) ஹீராஸ் தமது 1953 “Studies in Proto Indo - MediterraneanCulture”நூலின் அறிமுகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: மிகப் பழங்காலத்தில் (கி.மு. 5000க்கும் நெடுங்காலத்துக்கு முன்னர்)முதற்கண் காவிரிக் கரையில் உருவாகிய அரப்பா நாகரிகம் இந்தியமேற்குக்கரை வழியாகத் தமிழர்களால் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து,நண்ணிலக்கரை நாடுகள் வரை கொண்டு செல்லப்பட்டது. (இந்தோ ஆரிய மொழி பேசுநரின் (சிறு எண்ணிக்கையில்) நுழைவுக்குமுன்னர்) இந்தியாவெங்கும் திராவிடமொழி பேசுநரே வசித்து வந்தனர்.(ஹெவிட் 1889; ஹால் 1913, ரிக்வேதம் உபநிஷத்துக்கள் காலத்திலிருந்தேதிராவிடத் தாக்கம் (வினைக் கொள்கை, மறுபிறப்பு, யோகம்) உள்ளது. வேத,புராணப் பகுதிகளில் பல பண்டைத் திராவிட நூல்களின் மொழி பெயர்ப்புகளே, (ஹீராசுக்கு 22.11.1942 அன்று எழுதிய கடிதத்தில் வி.எஸ். சுக்தங்கர்யுதிஷ்டிரன் கதை ஆரியர் வரவுக்கும் ரிக் வேதத்துக்கும் முந்தியது என்பதுசரியான கருத்தே’ எனத் தெரிவித்தார்.) நாகரிகமற்ற நிலையில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்தோ ஆரியர் தமது மொழியை சம்ஸ்கிருதமாக(திருந்திய மொழியாக) ஆக்கிக்கொண்டனர். (They converted their rudematter of -course speech -- a speech of shepherds and husbandmen -into a classical Sanskrit language) திராவிட மொழி பேசுநர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கும் தென்இந்தியாவிற்கும் வந்தவர்கள் அல்லர். இங்கிருந்து அங்குசென்று பின்னர் உலகெங்கும் நாகரிகத்தைப் பரப்பியர்வர்கள் இவர்களே.இத்துறை ஆய்வுகள் நிறைவடையும் பொழுது திராவிட நாகரிகமாகிய சிந்துநாகரிகம் உலக நாகரிகத் தின் தொட்டில் என்பது ஏற்கப்படும்.“the Dravidians of India, after a long period of development inthis country, travelled westwards, and settling successively in the various lands, they found their way from Mesopotamia upto the Britishisles, spread theirrace -- afterwards named Mediterranean owing to theplace where they were known anthropologically -- through the west andmade their civilization flourish in two continents, being thus the originatorsof the modern world civilization. The Mediterranean nations of theancient world were racial off-shoots of the mighty proto - Indian race”[After the problems of decipherment of Indus script and those ofthe migration of Dravidian civilisation out of India to Elam, Sumeria andthe West are solved]India will be acknowledged as the cradle of humancivilization. 15. என். லாகோவரி 1963இல் வெளியிட்ட திராவிடர் தோற்றமும் மேல்நாடுகளும் (Dravidian Origins and the West) என்னும் நூல் சிறந்தமொழியியல் மெய்மைகளை உணர்த்துவதாகும்:- “i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல்வரை ஒரே மாதிரியான “பல சொல் பிணிப்பு ஒட்டுநிலை” (Polysynthetic Suffixal)) மொழிகள், இடையீடுஇன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற்களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன.பொதுச் சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள்,எலாமைட், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்தி, போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு ஒன்றுக்கொன்று உறவுடையவை யாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) “இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள்கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு(யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்ப ட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) “இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய் மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம்.”- என். லாகோவரி (iii) வேதமொழி சம்ஸ்கிருதத்தின் தாயாகியஇந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள்முந்து இந்தோ-ஐரோப்பியத்திலேயே காணும் திராவிடக்(தமிழியக்) கூறுகள் 16. திராவிட மொழிகளின் பல இலக்கணக் கூறுகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் மூல மொழியின் அத்தகைய இ ல க் கணக் கூறுக ளி ன் அ ள வு க் கு க ழி ப ழ ந் தொன்மை வாய்ந்தவை என்பதையும்கால்டுவெல் முதலில் உணர்த்தியவர். தமது நூலின் 149-151 பக்கங்களில்தமிழிய மொழிகளிலிருந்து தான் சமஸ்கிருதம் ட், d, ண் முதலிய வளைநாஒலியன்களை (Retroflex/Lingual/Cerebra), அவ்வொலியன்களைக் கொண்ட தமிழ்ச்சொற்கள் பல உட்படக், கடன் பெற்றது என ஆணித்தரமாகநிறுவினார். 17. இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து கடன் பெறப்படாதவையும்,என்றாலும் அம்மொழிகளின் தொல்பழங் காலத் தன்மைகளையொத்தனவாகஇருப்பனவும், ஆன பின்வருவனவற்றை இ ன் று ம் திராவி ட மொ ழி க ள்கொண்டுள்ளன என்பதையும் கால்டுவெல் நிறுவினார். (அதாவது இக்காலமொழியியல் நடையில் கூறுவதானால், தொல் இந்தோ-ஐரோப்பிய மொழித்தன்மைகளைத் திராவிட மொழிகள் தாமாகவே கொண்டுள்ளதை நிறுவினார்.) (1) “ஒலிப்பு எளிமை, இனிமைக்காக ‘ந’வின் பயன்பாடு - கிரேக்க மொழியில்உள்ளது போல (2) படர்க்கையிடப் பிரதி பெயர்களிலும் வினைச் சொற்க ளிலு ம் பா ல்வேறுபாடு இருப்பது - குறிப்பாக பொதுப்பால் இருப்பது. (3) சுட்டுப் பிரதிப் பெயர்களிலும், படர்க்கைப் பிரதி பெயர்களிலும் பொதுப்பால்ஒருமையைக் காட்ட d, த் பயன்பாடு (4) லத்தீனில் உள்ளது போல பொதுப்பால் பன்மையைக் காட்ட அ பயன்பாடு (5) சேய்மைச் சுட்டுக்கு அ; அண்மைச் சுட்டுக்கு இ பயன்பாடு (6) பெர்சியன் மொழியிற்போல, பெரும்பாலும் இறந்த காலத்தைக் காட்ட த் பயன்பாடு (7) வேரில் ஒலி ஒலியனை இரட்டித்து சில சொற்களில், இறந்த காலத்தைக் காட்டுதல் (8) வினைச் சொல்லில் ஓர் உயிரெழுத்தை நீட்டி ஒலித்து வினையாலணையும் பெயர்களை அமைத்தல். “ “Primitive underived Indo-Europeanisms discoverable in theDravidian languages (in current parlance: ‘proto-Indo European featuresderived from Dravidian”):- 1.The use of n, as in Greek to prevent hiatus.” 2. The existence of gender in the pronouns of the third person, and in verbs, and in particular the existence of a neuter gender. 3. The use of d or t as the sign of the neuter singular of demonstrative pronouns of the third person. 4. The existence of a neuter plural, as in Latin, in short a. 5. The formation of the remote demonstrative from a base in a; the proximate from the base in i. 6. The formation of most preterites, as in Persian by the addition of d. 7. The formation of some preterites by the reduplication of aportion of the root. 8. The formation of a considerable number of verbal nouns by lengthening the vowel of the verbal root.” - இராபர்ட் கால்டுவெல் 18. தேவநேயப் பாவாணர் தமது செந்தமிழ்ச் செல்வி 1977-80கட்டுரைகளில் முந்து இந்தோ ஐரோப்பிய Proto Indo-European நிலையிலேயே அம்மொழியில் ஏறிவிட்ட தமிழியச் சொற்கள் சிலவற்றைக் குறிப்பிட்டார். இக்கட்டுரைகளின் ஆங்கில ஆக்கம் பி.இராமநாதன் செய்தது(விரிவான முன்னுரையுடன்) - 2004ல் “Nostratics the light from Tamilaccording to Devaneyan ” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது:- “i) உம்பர் upari (Rg Veda); upari (Skt); super (Latin, with prosthetic s); huper (Greek); hyper (Eng). ii) உய் - Vedic and Skt = to go, walk, flow, advance iii) உருளை - urulai - rota (Latin, ‘a wheel’); roll (Eng). iv) கண்-காண் - cunning (ME), knowen (ME). know (Eng) - jnan (Skt) vi) காந்து - candeo (L); cand, candra (Skt)/ vii) காலம் - kala (Skt) viii) கும்மல் - cum (L); sum(G), sum(Skt) x) எல்லா are (Skt); hallo (E) xii) மகன் - magus (Gothic); mac/Mc (Gaelic); mann (German); man (E); manus (Vedic); manu, manushya (Skt). xiii) முன்னுதல் - mannutal-manam-manas (Skt) xv) புகா bhuj; bhukti, bhojana (Skt) xvi) பள்ளி polis (Greek) xvii) பதி - பாதம் - pada (RV); podos, pedis (Latin, Greek) xviii) புரி- pur (RV); peri (Greek) xix) பொறு- bhri (RV); phero (Greek); fero (Latin); bear (Eng); xx) பகு - paksha (Skt.), phasis (Greek), fama(Latin) xxi) பேசு- bhash (Skt.), phasis (Greek), fama (Latin) xxii) திரும்பு - strophe (Greek); torquero(Latin); torque (Eng) தொகுதிச் சொற்கள் பூனைப் பெயர்கள் kotti (Kannada) and Korri (Malayalam) katta (Greek); pucai-puss/pus/pusse (Eng.etc.) pillai-billi(Hindi): feline (L) vitaravan - vitaraka etc. (Skt.) கள் வழிப் பிறந்த நெருப்பின் பெயர்கள்: cul-sol (L), sun etc 19. பாவாணர் வழியில் முறையான மொழியியல் ஆய்வு நெறிகளைப்பின்பற்றி இந்தோ-ஐரோப்பியத்தில் ஏறியுள்ள பல நூறு தமிழியச் சொற்களைநிறுவியுள்ள அண்மைக்கால ஆய்வுகள் வருமாறு:- ப. அருளி (1985) மொழியியல் உரைகள் (5 மடலம்) பாண்டிச்சேரி (மற்றும் பின்னாளில் எழுதிய “தென்மொழி” க் கட்டுரைகள்.கு. அரசேந்திரன் (1997/2000) உலகம் பரவிய தமிழின் வேர்: கல்(2014 அச்சில்)வட இந்திய மொழிகளில் தமிழியக் கூறுகள் (செம்மொழித் தமிழாய்வு மையநிறுவனஆய்வாகச் செய்தது; “வடஇந்திய மொழி களில்” என்று குறித்துள்ள போதிலும் அவற்றுக்குமுந்தைய வேதமொழி/ சமஸ்கிருதம்; வே-ச இரண்டுக்கும் முந்தைய இந்தோ ஐரோப்பியம் என்ற தொன்மை நிலைகளிலேயே தமிழிலிருந்து சென்று ஏறிவிட்ட சொற்களையும் ஆணித்தரமாக விளக்குகிறது. 20. எச்.எஸ். டேவிட் (1966) கட்டுரைகளில் குறிப்பிடும் 21 அடிப்படைத் தமிழ்வேர்களும் (வள்/வண், உள் (உண்) உண்டு, கேள்/கேளிர், கேண்மை, கொள்/கொடு/கோடல்; கீழ்; போழ்; ஒல்; கல், கால், சால், நில், பால், பல்சில்,தொல்வல், எள், ஒள், விள்) அவை சார்ந்த சொற்றொகுதிகளும் ஒரு பான்மைபாவாணர் கருத்தோடு ஒத்து நோக்கத்தக்கனவாகும். 21. ஞானப்பிரகாசர் - தேவநேயன் கோட்பாட்டின்படி (இன்றையநாஸ்திராதிக் ஆய்வாளர் கருத்தும் அதுவே) கி.மு. 10000க்கு முன்னரே தொல்இந்தோ- ஐரோப்பியம் பேசுநர் தொல் - திராவிடம் பேசுநரிடமிருந்து பிரிந்துவிட்டனர். மைய ஆசிய புல்வெளிகளில் சில ஆண்டுகள் வாழ்ந்தனர், அவர்களில் சில குழுவினர் கி.மு. 4000-3000 அளவில் மேற்கு நோக்கிஐரோப்பாவுக்குச் சென்றனர். (அவர்களிடம் பின்னர் உருவானவையே கிரீக்,லத்தீன், கெல்டிக், செர்மானிக், சிலாவிய மொழிக் குடும்பங்களாகும்) வேறுசில குழுக்கள் கிழக்கு-தென்கிழக்கு நோக்கி இடம் பெயர்ந்த காலம் கி.மு. 2500ஐ ஒட்டி ஆகும். அவ்வாறு கிழக்கே வந்த குழுவினர் மொழிகளில் அதாவது இந்தோ ஆரிய, இரானிய மொழிகளில் பண்டு (அதாவதுகி.மு. 10000க்கு முன்னர் தொல்திராவிட மொழியினரிடமிருந்து பிரிந்தகால த்தி ல் ) உ டன் கொண்டு சென்ற தொல் திராவிட மொழிக்கூறுகளோடு சேர்த்து வடமேற்கு இந்தியாவிலும் அப்பாலும் வாழ்ந்துவந்த திராவிட மொழி பேசுநர்களிடம் இருந்து இரண்டாவது கட்டமாக(a second dose of Dravidian features) ரிக் வேதத்திலேயே புதிதாக மேலும்பல தமிழிய மொழிக் கூறுகள் சேர்க்கப்படலாயின. அத்தகைய இரண்டாவது கட்ட நிகழ்வுகளை அடுத்த பகுதி (உ) விளக்குகிறது. 22. இறுதியாக இப்பகுதியில் ஞாலமு தன்மொழி ஆய்வாளர்களின் அண்மைக்கால ஆய்விலும் தமிழ் முதன்மை பெற்றுள்ளதைக் காண்போம்.ஞால முதன்மொழி சார்ந்த ஆய்வுகளில் இன்று ஈடுபட்டுள்ளவர்கள்மெரிட் ரூலன், ஜான் பெங்ட்சன், வாக்லாவ் பிலாசக், விதாலி செவரோஷ்கின்(Merrit - Ruhlen, John Bengtson, Vaclav Blazek, Vitaly Shevoroshkin)போன்றவர்களாவர் யூரேசியாடிக் பற்றி கிரீன்பெர்க் இறப்பதற்கு முன்கடைசியாக எழுதிய நூல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் அவற்றோடுநெருங்கிய உறவுடையனவும் - யூரேசியாடிக் மொழிப் பெருங்குடும்பம். Indo-European and its closest relaties; the Eurasiatic Language Fam ily:Vol 1; Grammar; Vol II: Lexicon” ஸ்டான் போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2000/2002) என்பதாகும். 23. ஞாலமுதன்மொழி ஆய்வாளர் மெரிட் ரூலன் தனது மொழிகளின்தோற்றம் - மொழிகளின் கொடி வழி ஆய்வு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்,1994 நூலின் பக்கம் 2777இல் கூறுவது வருமாறு:“பெரும்பாலான மொழியியலறிஞர்கள் ஒத்துக் கொள்ளாவிடினும் அல்லதுஐயப்பாட்டுடன் கருதினும் இன்றுள்ள மொழிகள் அனைத்தும் (இன்றுஇறந்துவிட்ட ஆனால் முன்னர் நிலவியதற்குச் சான்றுகள் கிட்டியுள்ளமொழிகள் உட்பட) ஒரே ஞால முதன் மொழியிலிருந்து தான் தோன்றினஎன்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.” அந்நூலின் பக்கங்கள் 277-366இல் 27 முக்கியமான கருத்துகளுக்கு பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் உள்ள சொற்கள் “Global Etymologies” தரப்பட்டுள்ளன. அக்கருத்துகளுக்கு ஞால முதன்மொழியில்என்ன வேர்ச்சொல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க அது முன்னோடியாகும். அவற்றுள் பலவற்றுக்கு (ஏறத்தாழ 17க்கு)த் தமிழ்ச் சொற்களேபொருள் பொதிந்தனவாக வு ம் ஞா ல மு த ன் மொழியின் வேர்ச்சொல்வடிவை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. (“தமிழே இயன்மொழி’ எனப்பாவாணர் செப்பியதை இது மெய்ப்பிக்கிறது):-“ஞாலமுதன்மொழி வேர் திராவிடச் (தமிழ்) சொல் 1 Aja (mother, older female relative) ஆய்: mother 2. Bu (N) KA (knee, to bend) வாங்கு: to bend 3. BUR (Ashes, dust) பூழி: powder 4. KOLO (hole) ஒள்: to pierce, to make hole 5. KUAN (dog) குக்கல்/குக்கன்(குரைப்பது) 6. KUNA (woman) பெண் - கிரேக்கம் gune (4, 5,6 க்கு ரூலன் “திராவிட” மொழிச் சொல் தரவில்லை. மேலே தந்துள்ள தமிழ்ச்சொற்கள் இவ்வாசிரியன் தந்தவையே) MAKO (Child) மகன் (மழ=இளமை) 8. MALIQA (to suck, suckle, nurse, breast) மெல்லு(தல்) 9. MANA (to stay in a place) மன்னு(தல்):to bepermanent 10. MANO (man) மன்: (from மகன்) 11. MENA (to think about) முன்னு(தல்): to think 12. Pal (2) பால்: part, portion 13. PAR (to fly) பற: to fly 14. PUTI (vulva) பொச்சு 15. TEKU (leg, foot) தாவு = jump; (பர்ஜி tak தாக் =நட 16. TIK (finger, one) ஒண்ணு – ஒண்டி தெலுங்கு - ஒகடி; உரால்: odik 17. TIKA (earth) துகள்: dust »- மெரிட் ரூலன் (iv) இந்து சமயத்தின் திராவிட (தமிழிய அடிப்படை) 24. இ ன் றைய “ இ ந் து ” சமயக் கடவுள் வழிபாட் டு முறைகள், மெய்யியல் ஆகியவை முற்றிலும் தமிழிய (திராவிடச்) சார்புடையவையே;ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை 1900க்கு முன்னர் இருந்தேநல்லறிஞர் கூறிவருகின்றனர். மறைமலையடிகள் (1903: முல்லைப்பாட்டுஆராய்ச்சியுரை , 1923 தமிழர் நாகரிகம் , 1941 தமிழர் மதம்); பி.டி. சீனிவாசஐயங்கார் (1929: History of the Tamils (1940தமிழர் சமயம்) தேவநேயப் பாவாணர் (1972: தமிழர் மதம் ) ஆகியோர் உட்பட.ஆரிய வேதங்களிலிருந்து மாறுபட்ட, அவற்றுக்கு முந்திய ‘தமிழ் நான்மறைகள்’ இருந்தன வென்னும் கோட்பாட்டையும் கா. சுப்பிரமணிய பிள்ளை(1927; The Madras Christian College Magazine; பின்னர் 1920(செந்தமிழ்ச்செல்வி) முதலியோர் கொண்டிருந்தனர். 2006 பிப்ரவரி மாதத்தில் மயிலாடுதுறை - செம்பியன் கண்டியூரில் வி.சண்முகநாதன் கண்டெடுத்த புதுக் கற்காலக் கருவி ஒன்றில் சிந்துவெளி எழுத்துக்கள்நான்கு உள்ளன. அவற்றை ஐ. மகாதேவன் “முருகுஅன்” (முருகன்) என்று படித்துள்ளார்.அக்கருவியின் காலம் கி.மு. 2000-1500ஆக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். “புதுக்கற்காலத் தமிழ் மக்களும் அக்காலத்தில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்களும் ஒரேமொழியையே பேசினர் என்றும் அம்மொழி திராவிட மொழியே என்றும் இக்கண்டு பிடிப்பு நிறுவுகிறது என்பர் ஐ. மகாதேவன்.” (“The Neolithic people of Tamilnadu andthe Indus valley people shared the same language which can only beDravidian and not Indo-Aryan):1.5.2006 இந்து நாளிதழ். 25. இன்றைய வேதமதக் கருத்துக்கள் - அவற்றிற்கு எதிரான சமண, புத்தம்முதலிய கருத்துக்கள் இவற்றிற்கு இடையே முதலில் உறழ்வு, பின்னர் இணைப்புஎன்றவாறு இந்துமதம் உருவானது என்று கருதுவது அவ்வளவு சரியானதல்ல. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த, பண்டைய தொல்லிந்திய (தமிழிய) நாகரிகத்தின் புத்துயிர்ப்பே,மறுமலர்ச்சியே இன்றைய இந்து மதம் ஆகும். (The Hindu synthesis was less thedialectical reductionof orthodoxy and heterodoxy than the resurgenceof the ancient aboriginal Indus civilisation)” என்பர் டைலர் (1973) 26. “பழைய உபநிடதங்களில் மறுபிறவிக் கொள்கை புதுமையானதாகவும் சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருந்தும் பின்னர் அக்கொள்கை புத்த சமண சமயங்கள் வழியாக விரைந்து அனைவராலும் பின்பற்றப்பட்டது எவ்வாறு? எந்த மக்கள் சமூகத்தினரிடம் இருந்து புத்தர் தோன்றினாரோ, அவர்களிடையே அக்கொள்கை இருந்து இருக்க வேண்டும். எனவே தான் அது விரைவில்அனைத்து மக்களின் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.” - பிராகிங்டன் J.L. Brockington 1981: The Sacred thread ஹென்ரிச் சிம்மர் (1951) “வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம்முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன் மக்கள் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கின பின் முந்தைய உள்ளூர் ஆளுங் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றன. எடுத்துக்காட்டாகசந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. - ஹென்ரிச் சிம்மர் Heinrich Zimmer1951: Philosophies of India “இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியரல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணியத்துக்கு வந்தது”லெவின் - G.M. Bongard Levin (1986) A complex study of Ancient India “மொகஞ்சொதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்குமுந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கி விட்டனரோ”வால்பர்ட் - Stanley Wolpert 1982: A new History of India. இந்தோ ஆரிய மொழி பேசுநர் இங்கு வந்த பின்னரும் வட இந்தியாவில் வாழ்ந்துதிராவிட மொழி பேசிவந்த தொல் குடியினர் வந்தவர்களைவிடப் பெரும் ண்ணிக்கையில்இருந்தமையால் தொடர்ந்து அவரவர் இடத்தில் இருந்தனர். வட இந்தியப் பகுதியில்வாழ்ந்து வந்த தொல்குடியினர் இந்தோ ஆரிய மொழி பேசுவோருடைய அரசியல், பொருளாதார, சமயத் தாக்கத்தின் கீழ் வந்து சிலகாலம் இரு மொழி (தமது தொன்மொழி யாகிய தமிழிய மொழி - மற்றும் ஆரியர் மொழி) பேசுவோராக இருந்து நாளடைவில் தம் தொன்மொழியைக் கைவிட்டு ஆரியமொழியைக் கைக் கொண்டனர். வட இந்திய மக்களில் பெரும்பான்மையினராக இருந்த திராவிட மொழி பேசுவோர் தென் இந்தியாவுக்குச் சென்று விட்டதாகக் கருத இடமில்லை. ஆரிய வருகைக்கு முன்னர் இந்தியா வெங்கும் பரவியிருந்த திராவிட மொழிகள் அவ்வருகைக்குப் பின் வட இந்தியாவில் நலிவுற்றன் என்பதே நடந்திருக்க கூடியது. தாமஸ் டிரௌட்மன் (1981) திராவிடர் உறவு முறைரிக்வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.மு. 1500 - 1300 ஆகம். இந்தோ ஆரியமொழிப் படைப்புகளில் மிகப்பழையது அதுவே. அவ்வேதத்திலேயே இந்தோ - ஆரியமல்லாதனவும், திராவிடத் தன்மை வாய்ந்தனவுமான பல கூறுகள் - ஒலியன் மாற்றங்கள்,திராவிடத்திலிருந்து கடன்பெற்ற சொற்கள், இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவை உள்ளன. கி.மு. 1500க்கு முன்னர் சில நூற்றாண்டுகள் காலம் வடமேற்கு இந்தியாவில் வேதமொழி பேசியவர்களும் திராவிட மொழி பேசியவர்களும் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது. The Earliest Indo - Aryan textï the compiled Rg Veda, shows severalinfluences of a non -Indo - Aryan, Dravidian element in the form ofphonetic changes, introduction of loan wordfs and names etc. Thesepresuppose the coexistence of the Vedic and Dravidian speaking peoplesin a cultural contact situation for a period, perhaps of centuries, beforethe compilation of the Rg Vedas (circa 1500 - 1300 BC) - Bridget and Raymond Allchin (1988) The rise of Civilisation in India nad pakistan. (v) இந்தியாவில் வழங்கும் சாதி முறை 27. சிலேட்டர் நூலின் இயல்கள் 5- 7 இல் திராவிடமொழி பேசுநருடையே வழங்கும் சாதிமுறை முதலியவை பற்றிய அவருடைய கண்ணோட்டம் உள்ளது. அதில் பல தமிழிய மொழி பேசி வந்த தமிழக இனக்குழுவினரிடம் கூசiநௌ ஏற்கெனவே நிலவிய ஒரு வகையான (சாதி போன்ற)இனக்குழுத் தன்மைகளை வருணாசிரமக் கொள்கை வழிபட்ட தாக விரகாகஇந்தியப் பண்பாட்டில் திராவிடக் [தமிழியக்] கூறுகள் மாற்றி சாதிவேற்றுமையும் கொடுமைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்பர்ஸ்லேடர். The Aryans found a system resembling caste, already in forceamong the Dravidian inhabitants and they adopted and modified it tosuit their own purposes. 28. மறைமலையடிகள் 1923: சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்; ஏ.எல். பஷாம்1954,1955; கே.கே. பிள்ளை 1977 Cohn 1987, Dirks 1987/1992; Inden 1986/ 1990 ஆகியோர் கருத்தும் பெருமளவுக்கு இதுதான்) (vi) 1924க்கு பின்னர் இத்துறையில் ஆய்வு வளர்ச்சி 29. இந்தியக் காவியங்களின் சமயக் கோட்பாடுகளில் ஆரியமல்லாத(பெரும்பாலும் திராவிட) கோட்பாடுகளே மிகுந்துள்ளமையை ஆந்த்ரே எப்.ஸ்ஜோபெர்கு Andrea F. Sjoberg IJDL 38, (1999) பக் 71-90 கட்டுரையில்Non Aryan (mainly Dravidian) features in the religious content of theIndian epics கட்டுரையில் காண்க. அவர் Comparative Civilization Review 23: 1990 (பக் 40-74) இல் இந்திய நாகரிக வளர்ச்சிக்கு திராவிடமொழி பேசுநர் பங்களிப்பு மறு ஆய்வுதேவை என்ற 1990 கட்டுரையையும் சிலேட்டர், நூலைப்படிப்போர் பயில்வது நலம். அந்த 1990 கட்டுரையின் தமிழாக்கம் மட்டும் சிலேட்டர் நூல் முடிந்தபின்னர் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. 1. திராவிடர் “திராவிடர்” என்ற பெயர் ஒரு குருதியினத்தைக் (race)குறிக்கிறதுஎ ன் று கொள் வதை வி ட ஒ ரு மொழி யி ன த் தைக் கு றி ப் பதா க க்கொள்ளுவதே பொருத்தமானது. “திராவிட” என்ற சமஸ்கிருதப்(Sanskrit)பெயருக்குத் *தெற்கு என்ற பொருளும் உண்டு.(தமிழ் என்ற சொல்தான்நாளடைவில் தமிள், த்ரமிள, த்ரவிட, த்ராவிட எனத் திரிந்தது என்பது இன்று(2014) மொழியியலாளர் அனைவரும் ஏற்கும் கருத்து ஆகும்) திராவிடமொழிகளும் பெருமளவுக்குத் தென் இந்தியாவின் மொழிகளாகவே இருக்கின்றன. 1911-ஆம் ஆண்டைய மக்கட் கணிப்பின்படி6.20 கோடி மக்கள் பேசிய பதினைந்து மொழிகள் திராவிட மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. 2.திராவிட மொழிகளுள் பண்பாட்டில் தலைசிறந்ததும் தூய்மைமிக்கதும் தமிழே. இது இந்தியாவில் 1.80 கோடி மக்கள் பேசுவது(1921)அத்துடன் இலங்கையில் ஒரு பகுதியினரும் பர்மா, மலேசியா முதலிய பலப கு தி க ளி ல் கு டியே றி யு ள் ள த மி ழ ரு ம் உ ண் டு. சென்னை முதல் கன்னியாகுமரிவரை அதுவே தாய்மொழியாயுள்ளது. தெலுங்கு மொழியை2.40கோடி பேர் சென்னைமுதல் கஞ்சம் மாவட்டம் வரைப்பேசுகின்றனர். கன்னடம் தெக்கணப் பகுதியில் பெருவழக்கானது; (மைசூர்த்தனியரசில்அதுவே அரசு மொழி.) 1.56 கோடி மக்கள் பேசுவது மலையாளம் திருவாங்கூர்,கொச்சி, மலபார் ஆகிய பகுதிகளுக்குரியது. அது கிட்டத்தட்ட எழுபது லட்சம்மக்கள் பேசுவது. இவையே தலையான திராவிடமொழிகள். 3. (i) தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழைவிடமிகுதியாகச் சமஸ்கிருதச் சார்பான மொழிகளிலிருந்து சொற்களைக் கடன்பெற்றுள்ளன. (II) இ ந் நா ன் கு மொ ழி க ள் நீ ங் க லான ம ற் ற பதினொருதிராவிடமொழிகளும் இலக்கியத்துறைச் சிறப்பு அற்றவை. 4 . திரா வி ட மொழி க ள் இ ந் தியா வி ன் தெ ன் ப கு தி க் கு ரி ய ன என்பதற்கு முக்கியமான ஒரு விலக்கு “பிராகுவி (Brahui)” மொழி; அதன்வாழ்விடம் பலுசிஸ்தானம்; உடற்கூறு, உளப்பண்புகளிலும் பிராகுவிபேசுபவர்கள் அப்பகுதி மக்களிடமிருந்து வேறு பாடுடையவர்களாகவும், தென்இந்திய மக்களுடன் ஒப்புமைகள் பல உடையவர்களாகவும் உள்ளனர்.பிராகுவியின் இந்நிலைமை குருதியினத்தொடர்பின் (race) காரணமாக இருக்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது. 5. ஆனால், இந்தியாவில் தென் இந்திய திராவிடருக்கும்,வடஇ ந்திய மக்களுக்குமிடையே உடற்கூறு சா ர்ந்தஇனவேறுபாட் டு எ ல் லைகளை க் காணஇயலா து. காடு வாழ்பழங்குடியினங்களை நீக்கிப் பார்த்தால், மொத்தத்தில் தென்கிழக்கிலிருந்து வடமேற்கு நாடிச் செல்லுந் தோறும் சராசரி உடற்கூற்றுப்படிவம் படிப்படியாக சிறுசிறு மாறுதலடை வதையே காணலாம். 6. திராவிடரிடையே (சற்றே) தனிப்பட்ட நிலையுடையவர்கள் மீனவர்குடியினர், காடுவாழ் குடியினர் சிலரே, இவர்களில் நாகரிகம் குறைந்தஇனத்தவர்களைச் சிலர் தொல் திராவிடர் (Proto-Dravidians). என்றுவகுக்கின்றனர். வேறு சிலர் அவர்களைத் ‘திராவிடருக்கு முற்பட்டவர்’ (Pre-Dravidians); திராவிடர்களுடன் ஊடாடி அவர்கள் மொழிகளைக் கைக்கொண்டவர் என்றும் குறிக்கின்றனர், இதுவே முதல் கருத்தைவிடப் பொருத்தமானது எனலாம். 7. திராவிடமொழி பேசும் மக்களில் (முன் பத்தியிற்சுட்டிக்காட்டிய)இருசாராரைத் தவிர மற்றவர்களிடையே மிக நெருங்கிய குருதியினத்தொடர்பான ஒற்றுமை racial affinity காணப்படுகிறது. ‘திராவிடஇனம்’ என்ற தொடரை வழங்கமுடிவது இதனாலேயே. அத்தொடர் இன்றும்திராவிடமொழி பேசிவரும் மக்களைமட்டுமின்றி, ஆரியமொழி பேசுநர்இந்தியாவுக்கு வந்த பின்னர் அவர்கள் தாக்கத்தால் சமஸ்கிருதச் சாயல்கொண்ட மொழிகளை இன்று பேசும் பிற மக்களையும் சுட்டுவதாகும். 8. பிராகுவி நீங்கலாக ஏனைய திராவிட மொழிகளைச் சமஸ்கிருதச்சார்பான மொழிகள் இந்தியாவின் தென்கோடி நோக்கி நெருக்கித்தள்ளியுள்ளன என்பதிலிருந்து,“சமஸ்கிருதம் பேசிய ஆரியப் படையெடுப்பாளர்கள் ஏனைய இந்தியப் பகுதிகளிலிருந்து அவர்களை முற்றிலும்அழித்தொழித்துவிட்டார்கள், துரத்திவிட்டார்கள்” என்று கொள்வது தவறு.பிரஞ்சு மொழி இலத்தீனச் சார்பான மொழி என்பதிலிருந்து “ஜுலியஸ்சீஸரின் உரோமப்படைகள் கெல்திய மொழி பேசிய ‘கால்’ Gaul (இன்றையபிரான்°) மக்களை அழித்தொழித்துவிட்டனர்!” என்று கொள்ள முடியாது.அது போன்றதே இதும். 9(I) இத்தகைய சூழல்களில் இருமொழிகளுக்கிடையே ஏற்படும் போராட்டங்களில் வெற்றிதோல்விகளின் முடிவு ஓரளவு சுற்றுச்சார்புகளையும், ஓரளவு மொழியின் பண்பு களைம் பொறுத்தது ஆகும். ‘கால்’நாட்டில்இலத்தீன் மொழிக்கு ஒரு பெருங்குறைபாடு இருந்தது, அதைப் பேசியவர் ஒரு சின்னஞ்சிறு குழுவினர்; ஆயினும் முடிவில் எஞ்சி நின்றது அதுவே!இதற்கு உதவிய காரணங்கள் இரண்டு; ஒன்று அது வெற்றிகண்டவர் மொழிஎன்பது; மற்றொன்று, கேய்லிக், பிரிட்டானிய மொழிகளைவிட லத்தீன் மொழிஅயலார் கற்று மேற்கொள்ளச் சிறிது எளிதாயிருந்தது என்பது. (II) இந்தியாவின் மிகப்பல பகுதிகளிலும் வடமொழிச் சார்பானமொழி களுக் கும் திராவிடமொ ழிகளுக்கு மி டையே நடந் த போராட்டம்பெரிதும் பிரான்சு நாட்டுப் பண்டைய மொழியினப் போராட்டத்துடன் மிகநெருங்கிய ஒப்புமை உடையதாகவே இருந்திருக்க வேண்டும். 10. திராவிடமொழிகள் யாவுமே கற்பதற்கு மிகவும் கடுமையுடையவை. வடமொழிச் சார்பான மொழிகளைவிட அவை கடுமையானவை என்பது எவ்வளவு தொலைவு உண்மை என்று இன்றும் காணலாம். திராவிட மொழிகள் நாட்டு மொழிகளாயிருக்குமிடங்களில் ஐரோப்பிய அதிகாரி களுக்கும் அவர்களின் இந்தியப் பணியாட்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு மொழி எப்போதும் ஆங்கிலமாகவே இருக்கிறது. ஏனைய இந்தியப் பகுதிகளிலோ அது எப்போதும் இந்துஸ்தானியாகத்தான் இருக்கிறது. சென்னையில்பக்கிங்காம் கர்நாட்டிக் ஆலைகளை ஐரோப்பிய மேலாண்மை நிறுவியபோது,இந்திய மொழிபெயர்ப்பாளர்களை வைத்துச் செயல்படவில்லை. மாற்று முறைஒன்று காணப்பட்டது .தொழிலாளர் பிள்ளைகளுக்கும் பகுதி நேரத் தொழிலாளர்களுக்கும் பள்ளிகள் வைத்து ஆங்கிலங் கற்றுக்கொடுக்கும்முறையை மிக எளிதாகப் பின்பற்றி வெற்றிபெற முடிந்தது. இதிலிருந்துதிராவிடர் பெரும்பான்மைக் குடிமக்களாய், அவர்களிடையே சிறுகுழுவினரான ஆரியப் படையெடுப்பாளர்கள் ஆட்சியினத்தவர்களாக அமைவுறும் இடங்களிலெல்லாம், ஆளும் இனத்தவர் ஆளப் படும்இனத்தவர்களுடன் கலந்து மறைந்து விட்டபோதிலுங்கூட, ஆரியச்சார்பான ஆட்சி யாளர் மொழியே நாட்டு மொழியாகிவிடுகிறது என்றுகாணலாம். திராவிட மொழிகளும் வடமொழி சார்ந்த மொழிகளும் உறவாடும்இடங்களிலெல்லாம் திராவிடமொழி அழிவுற்று, வடமொழி சார்ந்த மொழிவெற்றி பெற்றோங்கும் மரபு இன்றும் தொடர்ந்து நிகழ்கிறது. 11. குருதியினப் பரவல் (racial spread)சான்றுகளால் இந்தியாவின்இனஆக்கத்தில் திராவிட இனக்கூறே மற்றெல்லா இனக்கூறுகளையும்விஞ்சிக் காணப்படுகிறது. மொத்தத்தில் இன்று மொழிகளின் பரவல்குருதியினப் பரவல் இரண்டும் ஒன்றுபோலவே உள்ளன. இதுமட்டுமன்று;வேறு ஒரு செய்தியும் குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதத்தின் ஒலிப்புமுறையானது, தமிழ்போன்ற திராவிட மொழிகளுக்கும், மற்ற இந்தோ – ஜெர்மானிய(ஆரியஇன) மொழிகளுக்கும் இடைப்பட்ட நிலையிலேயே அமைந்திருக்கிறது. இன்று நமக்குக் கிட்டியுள்ள வடிவில் இருக்குவேதம் உருவான காலத்திலேயே சமஸ்கிருதமொழி பேசிய மக்களில் ஒரு கணிசமானபகுதியினர் திராவிட இனத்தவராகவே இருந்தனர். 12. இங்ஙனமாயின், இத்திராவிடர் யார்? இந்தியாவுக்கு வெளியேயுள்ள மக்கட் பகுதியினருடன் அவர்கள் இனமுறைத் தொடர்புகள்எத்தகையவை? அவர்கள் இந்தியாவுக்கு எவ்வாறு வந்தனர்? ‘நடுநிலக்கடல்இனம் Mediterrranean race’. என்பதை அகன்ற பொருளில், (அவ்வினத்தொடர்புடைய அனைத்தையும் குறிப்பதாகக்) கொண்டால், திராவிடமக்களின் தலைமை இனக்கூறு நடுநிலக்கடல் இனத்தின் ஒரு கிளையேஎனலாம். பொதுவாக நோக்கினால் தலையோட்டுப்படிவம், மயிரமைதிப்பண்பு நிறம், கண்நிறம், உறுப்பமைதி, உடலமைதிகள் ஆகியவற்றில் அவ்வினத்தவருடன் திராவிடர் குறிப்பிடத்தக்க ஒற்றுமை உடையவர்கள் எனலாம். 13. இரு சாரரிடையேயும் மிகத் தெளிவாகக் குறிப்பிடத்தக்க வேறுபாடுஒன்றே ஒன்றுதான். அதுவே மேனிநிறம். பொதுவாகத் திராவிடர் நிறம்மற்றவரைவிடக் கறுப்புச்சாயல் மிக்கது. ஆனால், சராசரி இத்தாலியர் அல்லது சப்பானியரின் செம்பொன்மேனி நிறத்திலிருந்து நீகிரோவின் கறுப்பு நிறம்வரையுள்ள எல்லா வகை நிறங்களும் அவர்களிடையே உள்ளன. மயிர்நிறம்,முகத்தோற்றம் முதலியவற்றில் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன; ஒருமுனையில் பம்பித்த சுருட்டை மயிரையும் மறுமுனையில் மென்மையையும்காணலாம். நடுநிலக் கடற்பகுதி மக்களைவிடத் திண்ணமான உதடுகளும்சப்பையான மூக்குகளும் அவர்களில் சிலரிடம் உள்ளன. 14. இவ்வேறுபாடுகள் யாவும், திராவிடர் இந்தியாவுக்குள் வந்தபின்,அவர்களுக்கு முன்னரே இங்கு வாழ்ந்த கறுப்பு மேனி, திண்ணிய உதடுகளைஉடைய முன்னைப் பழங்குடி மக்களுடன் இனக்கலப்புப் பெற்றதனால்ஏற்பட்டவையே என எனக்குத் தோற்றுகிறது. திராவிடர் இக்கலப்பினால்மேனிநிறம் மாறி வெப்பமண்டலத்தில் பிழைத்து வாழும் ஆற்றலைப்பெற்றிருக்க வேண்டும். இம்மாறுதலால் அவர்கள் அழகமைதி ஒரு சிறிதுகுறைந்துள்ளது; சிறப்பாகத் தமிழகத்தில் தான் இது ஏற்பட்டுள்ளது. 15. ‘ஆங்கிலோ இந்தியர்’ என்று முன்பு அழைக்கப்பட்ட இந்திய வாழ்ஐரோப்பி யரிடையே சென்னையில் வழங்கிய பழமொழி. “தீவினையின் மருட்சிவலையிலிருந்து எம்மைக் காப்பாற்றுவீராக’ என்ற வேண்டுகோளுக்கு இணங்கிக் ர்த்தர் உலகுக்கு த்தமிழக நங்கையை அனுப்பினார் !”என்பதாகும். திராவிட மக்களில் தென்கோடியிலுள்ள தமிழ்ப் பெண்டிரைப்பொதுவாகக் குறிப்பதில் இது சற்று மிகைப்படுத்தியதாகும்! தெலுங்கர்,கன்னடியர், மலையாளிகள் ஆகியவரைப் பார்க்கிலும் தமிழர் கருமைச்சாயல் கூடியவராயும், மேனிவனப்புக்குறைந்தவராகவுமே உள்ளனர். பொதுவாகத்தெற்கே செல்லுந்தோறும் வேளாண்மை செய்யும் மக்களிடையேயும், சிறப்பாக‘ஆதிதிராவிடர்’ என்று சென்னை அரசாங்கம் குறிப்பிடும் மக்களிடையேயும், திராவிடருக்கு முற்பட்ட Pre Dravidian இனமக்களின் சாயல் மிகுதியாகவேஇருக்கிறது. 16(I) திராவிடரின் நிற மாறுபாட்டுக்குக் காரணமான பண்புக்கூறுகள் இரண்டு வகைப்பட்டவை. மிகப்பெரும்பாலான பொதுமக்கள்கடுவெயிலில் இருந்து உழைக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். அத்துடன்அரையில் இரண்டு முழத் துணியும் தலைக்குட்டையையும் தவிர வேறுபாதுகாப்பு இல்லை. எனவே தோலின் கருநிற அணுக்கள் நல்ல பாதுகாப்பாகஅமைகின்றன. இந்நிலையில் இயற்கையின் தேர் வு முறைப் ப டி எ ல்லாஇந்தியரையும் போலவே திராவிடரும் வெண்பொன்னிறத்தையே பெரிதும்பாராட்டுகின்றனர்! (II) நாடகமேடைகளில் பெண்களாக நடிக்கும் சிறுவர்கள் முகத்தில்வெண்பொடி பூசி அதை வெண்பொன்நிறமாக்க அரும்பாடுபடுகின்றனர்.ஐரோப்பியர் பார்வையில் அது முழு வெற்றி பெறவில்லைஎன்பது வேறு! மணப்பெண்கள் வகையில் செந்நிறத்திற்கேற்ப மதிப்பு உயர்கிறது. மண விளம்ரங்களில் மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டார் ஆகிய இரு சாராருமே நிறத்தை வற்புறுத்துகின்றனர். (III) மேல்நி லை க் கு டும்ப ங் க ளி ல் மாப்பிள்ளையை இணங் க ச்செய்வதற்காக மாமனார் தரும் சீதனம் பெண்கள் செந்நிறமாயிருக்கும்அளவுக்குக் குறைவு. இதனால் செந்நிறம், சாதியைக் குறிக்கும் வடமொழிச்சொல்லே முதலில் நிறத்தைக் குறிக்கிறது. சாதிமுறை உயர்வு தாழ்வும் ஓரளவு செந்நிறம், கருநிறம் என்றவாறே அமைந்துள்ளது. 17. ஆக திராவிடர் நடுநிலக்கடற்பகுதிப் பேரினத்தின் ஒரு கிளையினர்;பிற இனக்குருதிக்கலப்பால் சிறிது மாறுபட்டுள்ளனர் என்பதை ஓரளவுக்குஏற்றுக் கொண்டால், அவர்கள் தம் மூலமுதலிடத்திலிருந்து தொல்பழங்காலத்திலேயே இந்தியா வுக்கு வந்துவிட்டனரெனலாம். நடுக்கடல் இனம்Mediterranean race கிழக்காப் பிரிக்காவிலிருந்து வந்திருக்கலாம்; அவர்களில் ஒரு பகுதியினர் அரைபியா, தென் பாரசிகம் வழியாக இந்தியாவுக்கு வந்தனர் என்று கொள்ளலாம் என்பர் ஜி. எலியட் சுமித். 18. இக்கோட்பாட்டுக்கு எதிர்க் கோட்பாடு, நடுநிலக்கடல்இனத்தின் மூலமுதலிடமே இந்தியாவில்தான் என்பதே. இன்றைய சிந்துகங்கைச் சமவெளி பண்டு கடலாயிருந்த பழமை ஊழியில் தென் இந்தியாஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததென்றும், மூலத் திராவிடக்குடியகம்அதுவென்றும், இச்செய்தி தமிழ் மரபுரைகளில் தொனிக்கிற தென்றும் காட்டமுயல்வது பொருத்தமற்றது, ஏற்றுக்கொள்ள இயலாதது.(கண்டங் கள்இன்றைய நிலையை ஒருகோடி ஆண்டுக்கு மன்னரே அடைந்துவிட்டன! அப்பொழுது மனிதக்குரங்கு இனம் கூட உருவாகவில்லை!!) 19. எகிப்தில் நடுநிலக்கடலினம் மிகப்பெரும் பழமை உடையதுஎன்பதும், ‘மேலீடாகப் பார்க்கும் அளவிலேயே திராவிட இனப்பண்புக்கும் அதன்சூழலுக்கும் இருக்கும் பொருத்தத்தைவிட, நடுநிலக்கடலினத்தின் பண்புடன்அதன் சூழல் பெரிதும் பொருந்தியிருக்கிறது என்பதும் சரியான முடிபு எதுஎ ன் பதைத் தி ண் ணமாகக் காட்டுகி ன் ற ன . சென்னையி லி ரு ந் துஇங்கிலாந்துக்கு வரும் மாணவர் அக் குளிர் நாட்டு நிலைமையுடன் எளிதாகஇசைந்து விடுகிறார்; மாறாகச் சென்னைக்கு வந்ததும் இப்பகுதி வெப்பநிலையில் நான் இடர்ப்பட்டேன். 20. திராவிடர் வெளியிலிருந்து வந்தார்களானால், எந்த வழியாகவந்திருக்கலாம்? “முற்காலப் பண்பாடுகளின் இடப்பெயர்ச்சிகள்” என்றநூலில் (பக்கம்:80) பேராசிரியர் கிராஃவ்டன் எலியட் சுமித் “புதியபண்பாட்டுக்குரிய மக்கள் அதாவது மேல்திசையிலிருந்து வந்த கடல்வழிப் பயணிகள் திராவிடருக்கு முற்பட்ட மக்களுடன் குருதிக்கலப்புற்று அதன் பயனாகத் திராவிடராயினர்”என்கிறார். அவர்கள் கி.மு.3000 முதற்கொண்டு, பொதுவாகவும்; சிறப்பாக, கி.மு. 800-ஐ அடுத்துப்பெருவாரியாகவும், புறப்பட்டு, எகிப்தில் உருவாகி வளர்ந்த ஞாயிற்றுக் கல்(heliolithic)வழிபாட்டுப் பண்பாட்டுடன் சென்று, பிற இடப் பண்பாடுகளையும் கலந்து கொண்டவராய், பழைய உலகு புதிய உலகு இரண்டின் கடல்தீரங்களிலும் பரந்தனர். (II) அவர் கூறறு ‘முததுச்செம்படவரும்மீன் செம்படவரும் உலோகவாணருமான இம்மேனாட்டுக் கடலோடிகள், பல்லாயிரம் மைல் கடல் பயணம் வழிப் பரந்தனர்’ என்பதாகும். எனவே அப்படிக் குடியேறியவருள் ஆடவர் பலராக இருந்திருக்க முடியாது; பெண்டிர் சிலர்கூட இருத்தல்அரிது. அவர் குறிப்பிடும் அப்பழங் காலத்தில், சிறந்த திராவிடப் பண்புஉருவாவதற்குப் போதிய கால இடைவெளி இருந்திருக்க வழியில்லை; ஆரியப்படையெடுப்பைமிகப் பிந்தியதாகக் கொண்டாலும் அதற்கும் முன்னரேமேனாட்டு கீழ்நாட்டுப் பண்டை மரபுகள் கலந்து புதுமரபு ஒருவாகி,வளர்ந்திருக்க முடியாது. கி.மு. 1000 - 800 காலகட்டத்துக்கு முன்னரேதிராவிடர் இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. 21. திரு. டப்ள்யூ.ஜே.பெரி (1923: The children of the sun ‘கதிரவன் சேய்கள்’ என்ற நூலில்)எகிப்திய நாகரிகத்தினர் ஆறாவது எகிப்திய அரசகுல மரபுக்காலம் 3 (கி.மு.2500)முதல் இந்தியக் கடற்கரைகளுடன் போக்குவரவுத் தொடர்பு கொண்டி ருந்தனர் என்பதற்கான சான்றுகள் தருகிறார். “பண்டைக் கடலோடிகள்” (1917) என்ற கட்டுரையில் எலியட் சுமித் இதே முற்பட்ட காலக்குறிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இப்புதுக்கருத்து பொருத்தமிக்கதே. ஆனால் அதனையும் ஒரு சிறு மாறுதலுடன் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. (சிந்து நாகரிகம் கி.மு.3000க்கும் மிக முற்பட்ட தென்பது 1924க்குப்பின்னர் அகழ்வாய்வில் தெரியவந்துள்ளது.) 22. கடல்வழிப் பயணக்கோட்பாட்டை மறுத்தால் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் நிலவழியை ஏற்கநேரும். பலுச்சிஸ்தான் கிழக்கெல்லையை அடுத்துத் தற்போது பிராகுவி இனம் அமைந்திருப்பதை மனதிற்கொண்டால் (கைபர் கணவாய் வழி நுழையும்) ஆப்கானிஸ்தான் வழி பொருந்தாது. இன்னொரு பாதை மெசபொட்டேமியாவையும் இந்தியாவையும் இணைக்கும் இரயில்போக்குவரத்துக்காக1920 களில் ஆராய்ந்து கைவிடப்பட்ட பழம்பாதை ஆகும். அது பாரசீக வளைகுடாவிலிருந்து வடகிழக்காகக் குவெட்டா வந்து பின் தெற்கு நோக்கிப் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. இதுவே அவர்கள் வந்த பாதையாயிருக்கலாம். 23(I) மெசபொட்டேமியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள பகுதி வறட்சி யடைந்தது இடைக்காலத்திலே தான் என் று நமக்கு த் தெரியவருகி ற து . திராவிடர் இங்கு வ ந் த கால த் தி ல் வேடர் , மீனவர் குழு வினராகவே இருந்தனர் எனலாம். அத்தகையவர் தொடர்ந்து முன்னேறத் தூண்டுவதற்குப் போதுமான நீர்வளம், செடியினவளம், வேட்டை உயிரினவளம் ஆகியவை இவ்விடங்களில் இருந்தன என்று கொள்ளலாம். கொண்டால், திராவிடரின் முதற்புடை பெயர்ச்சி (migration) பினீசியரின் முதற் புடைபெயர்ச்சியைப் பெரிதும் ஒத்ததாகிறது. ஏனெனில் பினீசியர் மரபுக்கதைகளின்படியே, அவர்கள் பாரசிக வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு அரேபியக் கடற்கரை வழியாகச் செங்கடற்பகுதிசென்று, அதன் பின்னரே நிலையாகப் பாலஸ்தீனக் கடற்கரைப் பகுதியில் தங்கினர் என்று அறிகிறோம். (II). அக்காலத்தில் அரேபியா பிற மக்களைத் தன்பக்கமாகக் ஈர்த்து உள்நாட்டில் குடியேற்றுவிக்கும் நிலையில் இல்லை எனலாம். ஆனால் இந்தியாவின் மேல்புறக் கரையில் சிந்து ஆறும், காம்பே வளைகுடாவில் தொடங்கிப் பாலக்காட்டுக் கணவாய்வரை (இன்று இரயில் பாதை செல்லும் போக்கில்) சென்ற பழையபாதையும் இருந்தன. நிலவியல் அடிப்படையில் வளமான இந்தியச் சமவெளிகளை நோக்கி மக்களை ஈர்க்க, இவ்வாய்ப்புகள் போதியவை. 24.(அ). திராவிடர் வந்த காலவரையறைபற்றி இனி ஆராய்வோம். திராவிட நாகரிகம் இந்தியாவிலேயே உருவானது. வெளிச்சூழல்களின் தடங்க ள் அதில் சில இருந்தாலும் , அது பெ ரும்பாலும் இந்தியச் சூழ லிடையே உருவானதே எ ன் ப து கீழே வி ள க் க ப் படு ம் . எனவே இவ்வகையில் கீழ்வரும் செய்திகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்: 1 . ந டு நி ல க் க ட ல் வெளி யி லி ரு ந் து ப லு ச் சி ஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வரும் பாதை கட்டாயமாக மெசபொட்டேமியா வழிச் சென்றிருக்க வேண்டும். 2. மேலே விளக்கிய சூழ்நிலைகளை நோக்க இப்புடைபெயர்ச்சி சுமேரிய நாகரிகத் தோற்றத்துக்கு முற்பட்டதாயிருக்க வேண்டும். (ஆ) திராவிடர் பாபிலோனியா வழியாகவே வந்தும், இந்தியாவுக்கு வேளாண்மைப் பண்பாட்டைக் கொண்டு வந்திருக்கவில்லை என்றால், பாபிலோனியாவில் வேளாண்மைப் பண்பாடு பிறப்பதற்குமுன்னர் அவர்கள் அவ்வழியாக வந்திருக்க வேண்டும். (மாறாக அவர்கள் அவ்வறிவைத் தம்முடன் கொண்டுவந்தனர் என்றால், உண்மை இதற்கு நேர்மாறாயிருந்திருக்க வேண்டும்.) (இ) இந்தப் புடைபெயர்ச்சி வகையிலும், இதுபோன்ற வேட்டுவ வாழ்க்கைப் படிநிலையில் உள்ள பிற புடைபெயர்ச்சிகள் வகையிலும் போதிய திட்டமான விவரங்கள் தெரிவதில்லை; காரணங்களை உன்னிக்கத்தான் இயலும். இவ்வாழ்க்கைப் படித்தரத்தி லுள்ளவர்கள் புடைபெயர்வது எளிதே; ஆனாலும் ஏதேனும் வலிமைவாய்ந்த தூண்டு தலில்லாமல் இத்தகைய புடைபெயர்ச்சி நடந்திருக்கும் எனக் கூறமுடியாது. 25. தட்பவெப்ப மாறுதல்களை நீக்கிப் பார்த்தால், ‘வேட்டைக் கருவிகளில் முக்கியமான கருவி மேம்பாடும்’ தூண்டுதலுக்குக் காரணமா யிருந்திருக்கலாம். வளைதடி, ஈட்டி தவிர வேறு கருவிகள் இல்லாத ஒரு நிலப்பகுதியில், ஒரு இடத்தில் வில், அம்பு கண்டு பிடிக்கப்பட்டன என்று வைத்துக்கொள்வோம். மு த லி ல் அவ் விட த் தி ல் உணவு மிகுதியாகக் கிடைக்கும்; இறப்பினைவிடப் பிறப்பு மிகுதியாகும்; ஆனால் நாளடைவில் வேட்டை வில ங் கு க ளி ல் எண்ணிக்கை குறைந்து புதிய வேட்டை நிலங் களை நாடிப் புதுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் எத்திசையிலாவது இடம் பெயர நேரிடும். மானைக்கொல்லும் கருவியால் மனிதனையும் கொல்லலாம். ஆகவே புதுக்கருவிக்காரர் புடைபெயர்ச்சியை (migration)பிறர் தடுக்க முடியாது. அக்கருவியைக் கைக்கொண்ட வரோ எனில், உடன் கலந்து தாமும் புடைபெயரவே எண்ணுவர். 26. வேளாண்மைக்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் உள்ள இனங்கள் (races), பண்பாடுகள் ஆகியவற்றின் புடைபெயர்ச்சிபற்றிக் கிடைத்துள்ள பல தகவல்களை ஒருங்கு இணைத்துப் பார்த்தால் மேற் கொண்ட கருதுகோள் சரியாகவே தோன்றுகிறது. அயலார் புடை பெயர்ச்சி (migration) இல்லாமலும் பண்பாட்டுக் கூறுகள் பரவியுள்ளன புடைபெயர்ச்சியுடன் இணைந்தும் பலகூறுகள் பரவியுள்ளன. இணைந்து நடைபெற்ற இடங்களிலெல்லாம் புதுவரவினர் ‘வேட்டையில் பயன்படும் ஏதாவது புதுக் கருவிகளை’ உ டன் கொண்n ட வ ந்து ள் ளன ர். எடு த்து க் காட்டக ந டு நி ல க் க ட ல் இ ன த் த வ ரு ம் அ ஸி லி ய ப் (Az i l i a n) பண்பாட்டினரும் வடக்கு நோக்கிப் பரவுகை யில் வில் அம்புகளைக் கொண்டு சென்றனர். மேற்கு நோக்கிச் சென்ற மாக்லெமோசியப் (Maglemosian) பண்பாட்டினர் வேட்டை நாய்களைத் தம்முடன் கொண்டுசென்றனர். ஆக திராவிடர் இந்தியாவிற்குள் வருவதற்கு வேட்டையின் வகைதுறைக் கருவிகளில் நிகழ்ந்த மேம்பாடு காரணமாயிருந்திருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது. 27.(I)இன்றிருக்கும் மொழிகளிலிருந்தே பண்டைத் திராவிட வேடுவர்களின் மனநிலை பற்றிய நுண்ணிய (ஆனால் முழுவிளக்கமற்ற) ஒளி கிட்டுகிறது. திராவிட மொழிகளில் தமிழே தூய்மைமிக்கதாதலால், அதன் உதவியை நாடுவோம். தமிழ் மிக அகலவிரிவுடைய நாகரிகத்தின் நீண்டகால வளர்ச்சியில் உருவானது. ஆயினும் அந்நாகரிகத்தைத் தோற்றுவித்து அம்மொழியை செம்மைப் படுத்திய மனப்பண்பு அவர்கள் வேட்டுவ மூதாதையரிடத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். (ஒருக்கால் அம்மூதாதை யரிடம் அப்பண்பு முதிராநிலையில் இருந்திருக்கலாம்.) (II) தமிழ்மொழி அதன் நயநுட்பம், அறிவுத் திட்பம் முதவிய வற்றில் மீ ப்பெ ரு ம் தனிச் சி ற ப் பு டை ய து . அ தனைச் சொல்ஓ ட்டு நிலை மொழி(Agglutinative language )என்பர். ஆயினும் சொல்திரிபு மொழியின் தொடக்க நிலையில் உள்ளதென்றே (Initial Inflexional stage) அதைக் குறிப்பது சரி. அதில் வினைகளுக்குத் திணை, பால், இட, விகுதிகள் உண்டு. ஆனால் அவை அவ்வவ் இடப்பெயர்களின் திரிபுகளே; படர்க்கை ஒருமைக்குரிய ஆண்பால், பெண்பால், அஃறிணைவடிவங்கள் அவன், அவள், அது என்பவை; எல்லாக் காலங்களுக்கும் உரிய இதே இடங்களின் வினை விகுதிகள் ஆன், ஆள், அது என்பவையே. (II) ஆனால் பெயர்களுக்கும், இடப்பெயர்களுக்கும் விகுதிகள் உண்டு. இவையும் பெரும்பாலான இடங்களில் தனிச்சொற்கள் என்று தெளிவாகத் தெரியும். பெரும்பாலும் எல்லாப் பெயர்ச்சொற்களும் ஒரே மாதிரியாகத் திரிபடைகின்றன. வேற்றுமை விகுதிகளும் ஒருமை பன்மை இரண்டிலும் மாறுபாடற்றவை. பன்மைக்குப் பன்மை விகுதியை முதலில் சேர்த்துப் பின்னர் வேற்றுமையுடன் உ ரு பு பெ று வதே அ த ற் கு ரி ய சி ற ப் பு . ( மா ட் டு க் கு ; மாடுகளுக்கு) (III) எதிர்மறை வினையாக்கத்தில் திராவிடச் சிந்தனை நுட்பம் நன்கு விளங்கும். நிகழ்கால வினைக்கு நிகழ்காலச் சின்னமாகிய நிகழ்கால இடைநிலை வேண்டும். அதுபோலவே இறந்தகாலத்துக்கும், எதிர் காலத்துக்கும் அவ்வக் காலத்துக்குரிய இடைநிலைகள் வேண்டும். இத்தகைய (காலம் காட்டும்) இடைகளின் இணைப்பு இல்லாமல் பகுதியுடன் நேரடியாக இடவிகுதி இணைக்கப்பட்டால், வினை யின் செயல் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்திலும் நிகழவில்லை என்று மறுக்கப்படுகிறது - அதாவது அது எதிர்மறை (negative) ஆகிவிடுகிறுது. செய்தல் என்னும் பொருளுடைய செய் என்ற வினைப்பகுதியை எடுத்துக் கொண்டால். நிகழ்காலம்: (செய்-கிற்-ஏன்) செய்கிறேன். இறந்தகாலம்: (செய்-த்-ஏன்) செய்தேன். எதிர்காலம்: (செய்-வ்-ஏன்) செய்வேன்.ஆனால் எதிர்மறை; (செய்-ஏன்) செய்யேன். (மிகையான யகரம் புணரியல் முறையில் வேண்டிய உடம்படுமெய் மட்டுமே.) இங்கே ‘செய்யேன்’ என்ற எதிர்மறையின் முழுப்பொருள் செய்கிறே னில்லை, செய்தேனில்லை, செய்வேனில்லை என்பதே. இது அறிவு நுட்பமும் தி றமு ம் வாய்ந்த முறை. ஆயினும் எ தி ர் மறையி ன் எல்லா நுண்ணயங் களையும் இங்கு விளக்கவில்லை. தமிழர் மற்ற எல்லா மொழிகளிலும் நம் ஆங்கிலத்திலும் இருப்பது போன்றே, “இல்லை” என்ற சொல்லையும் கொண்டுள்ளனர். இதில் பிறமொழிகளைப் போலவே இடம் மட்டுமின்றிக் காலமும் குறிக்கப்படுகிறது. (இஃதன்றிக் காலம்குறித்து, இடம் குறிக்காத மற்றொரு எதிர்மறையும், காலம் இடம் இரண்டும் குறிக்காத மற்றோர் எதிர்மறையும் உள்ளன.) (IV) வினாவா சகங்களிலும் இதை நிலையைக் காண்கிறோம் . வாசகத்தில் எந்தச் சொல்லுடனும் சேர்க்கக்கூடிய இடைநிலையாகிய “ஆ” ஒரு வினாக்குறியீடு. அது இலத்தீன் மொழியிலுள்ள “நெ” என்ற அசை போன்றது. ஐயக்குறிப்புடன் இதேபோன்று எல்லாச் சொற்களுடனும் சேர்க்கக்கூடிய மற்றொரு வினாக் குறி “ஓ” என்பது. இது இலத்தீன் மொழியின் “தும்” அடையை ஒத்தது. இலத்தீனத்திலுள்ள “நொன்னெ” (=இல்லையா!) என்ற அசையின் பொருள் வேண்டுமானால், ‘இல்லை’ என்ற சொல்லை அசைகளுடன் சேர்க்கின்றனர். ஆனால் இச்சொல்லுடன் “ஆ” “ஓ” என்ற அசைகளை நேரடியாகச் சேர்க்காமல், வினாக்குறிப்பு ஏற்கும் அடிப்படைச் சொல்லுடன் சேர்க்கின்றனர். சுருங்கக்கூறினால், தமிழ் மொழியின் வினா ஆக்கமுறை மாந்தன் சிந்தனை நயத்தைச் சிறப்பாகக் காட்டுகிறது. (V) இம்மொழியின் மற்றொரு தனிச்சிறப்பு உயர்வு வழக்குகள் மிகப்பல என்பது ஆகும் . உயர்வுப் பன்மை முன்னிலையில் மட்டு மின்றிப் படர்க்கையிலும் இடம் பெறுகிறது. இது சிறப்பாக, வல்லாண்மையுடைய மன்னர், மரபுமுறை வழுவாத அரசவையோர், சமயகுரவர் ஆகியவர்கள் இடம் பெற்றிருந்த பிற்கால சமூக அமைப்பு முறையின் விளைவே என்னலாம். (VI) தமிழ் யாப்புமுறை கிரேக்க இலத்தீன மொழிகளைப் போலவே அளவு (quality)அடிப்படையானது. அதில் எதுகை உண்டு; ஆனால் இவ்வெதுகை அடியீற்றி லல்ல, அடியின் முதலில் இடம்பெறுகிறது. மோனை உண்டு; ஆனால் இது யாப்படிகளை இணைப்பதன்று, அடியினுள் இயல்வது. 28. தமிழிசை காற்சுரங்கள் (quarter tones )அடிப்படையானது. அதாவது இசைநிலையிலுள்ள ஏழு சுரங்களின் இடத்தில் தமிழிசையில் இருபத்தெட்டுச் சுரங்கள் உண்டு. 29. நுட்ப ஆராய்ச்சித்திறமும் முழுநிறை விளக்கப் பண்பும் இந்தியப் பண்பாட்டின் தனிச்சிறப்புப் பண்புகள். இவை இப்பண்புகளை இயற்றவும் இயக்கவும் வல்ல சிறந்த மக்களினத்தினிடமிருந்தே தோற்றியிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் தமிழ் மொழி வளர்ச்சியிலும் இடம் பெற்றது இயல்பே. திராவிட மொழிகளில் தூய்மைமிக்க தமிழ் இச்சிறப்புகளை உச்ச அளவில் கொண்டிலங்குகிறது; வேறு எந்த இந்திய மொழியையும் விட தமிழில் இப்பண்பு மிகுதி. பேராசிரியர் ஹெச்.ஜே. ஃவ்ளூரின் (ழ.து.குடநரசந) குறிப்பு தென்னிந்திய மக்களின் இனப்பிரிவுகளும் (சயஉநள) அவற்றிடையே பண்டு இருந்த பண்பாட்டுத் தொடர்புகளும்: 30.தென்னிந்திய மக்களிடையே தலை(மண்டையோட்டு)வடிவமைதி (craniology) பல்வேறு வகைப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியத் தென் பாதியில் அது நீண்டு ஒடுங்கிச் (dolicocephaly)சற்று உயர்ந்துள்ளது. ஒரு சில தனியிடங்கள் நீங்கலாக, திராவிட இந்தியாவில் தலைகள் பொதுவாக நீளமாகவே இருக்கின்றன. மேனி மட்டும் பொன்னிறமாய் இருப்பினும் மற்றப்படி இத்துடன் ஒத்த மண்டையோட்டுமாதிரிகள் (types) தென்மேற்கு ஆசியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஆகவே (நிறம், மூக்குப் பரிமாணம் தவிர மற்றப்படி) அரேபியாவிலுள்ள செமித்தியத் தலை, திராவிடத் தலை படிவ ஒற்றுமைபற்றி ஐயப்பட வேண்டியதில்லை. இதுபோலவே வட ஆப்பிரிக்கா மற்றும் நடுநிலக்கடலில் பரந்த மேலைப் பகுதி சூழ்ந்த நாடு களின் மக்களின் சராசரி பரிமாணங்களுடனும் ஒப்புடையது. 31. மிக நீண்டொடுங்கிய உயர்தலைகள், குட்டையான அகன்ற மூக்குகள், முனைப்பான (பலர் திண்ணிய உதடுகளுடன்) மோவாய்கள் ஆகியவற்றை உடைய தனி நபர்களை நாம் மேற்கூறிய எல்லா இனக் குழுவினரிடையிலுமே(races) பார்க்கிறோம். இப்பண்புகள் மூலம் அவர்கள் பிரான்சிலுள்ள ‘கிரிமால்டி’க் குகையிலிருந்தும் (Grimaldi caves) ‘கோம்பே க ப் பெ’ லி லி ரு ந் து ம் (Comb e c a pe l l e) அ கழா ய் வி ல் கண்டெடுத்த பழங்காலப் படிவ மாதிரிகளின் வழிவந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்களைப் போன்ற பண்டைப் படிவங்களின் படிவ வளர்ச்சி முதிர்ச்சியின் விளைவாகவே, ஐபீரியத் தீவக் குறையிலிருந்து (ஸ்பெய்ன், போர்ச்சுகல்) தென்னாடு வரை தற்காலம் தலைமை வாய்ந்துள்ள இனங்கள் எழுந்துள்ளன; பற்பல சூழல் தாக்குதல்களால் அவர்கள் வளர்ச்சி யடைந்த முறை மட்டும் ஓரளவு வேறு பட்டிருக்கலாம். 32. தென்மேற்கு ஆசியாவில் குளிர்காலம் நீண்டது. ஆகவே மூச்சுக்காற்று மூச்சுப்பைக்குள் செல்லும் வழியில் அதனை வெதுவெதுப் பாக்குவதற்கேற்ற முறையில் நீண்ட மூக்கு அமைந்துள்ளது. இதனால் முகத்தின் பொது முனைப்பும் மிகுந்துள்ளது. வடஆப்பிரிக்காவிலும் தென் இந்தியாவிலும் வெப்பமண்டலத்தின் தட்பவெப்ப நிலை மேனியின் கரு நிறக்கூறுகளைப் பேரளவு பெருக்கியுள்ளது. அத்துடன் தோலின் மயிர்த் தொளைகள் தளர்ச்சியடைவதால் மயிர்பல இடங்களில் சுருட்டையாகும் போக்கும் உண்டு. ஆயினும் இம்மாற்றங்கள் ஆப்பிரிக்காவில் ஹாமித்திய இனத்தார் வாழும் வடஆப்பிரிக்கப் பகுதிக்கு தெற்கேயுள்ள அகல்சமவெளி யில்தான் முழுநிறைவு பெறமுடிந்துள்ளது. ஆனால் தென் இந்தியாவில் தெற்கு நோக்கி வருந்தோறும் அது அருகி அருகி வந்து, முற்றிலும் மறைந்துவிட்டது. நடுநிலக்கடற்பகுதியில் வெப்பங் குறைந்த தட்பவெப்ப நிலைச் சூழலாலும், வடஐரோப்பிய, வடமேற்கு ஐரோப்பிய மக்கள் தொடர்பு களாலும் கருநிறக் கூறுகள் வளர்ச்சி குறைந்தது; அத்துடன் முகச்சாயல் களும் பேரளவில் ஒழுங்குபட்டுள்ளன. 33. ஐரோப்பாவின் பழங்கற்கால ஊழிகளில் நீண்டநாட்களாக (சகாரா, அரேபியா, பாரசிகம், துருக்கிஸ்தானம் ஆகிய இடங்கள் இடைக்காலங் களிலிருந்து இன்றுவரை இருப்பதுபோலிராமல்) மனிதவாழ்க்கைக்கு மிகவும் உகந்த சூழ்நிலை இருந்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட இம்மாறு தலுக்குக்காரணம் பனிக்கட்டி ஊழியின் பிற்பகுதியில் பனிமண்டலம் குறைந்து அதனால் வெப்பமண்டலம் வடக்குநோக்கிச் சென்றதேயாகும். சிறிதளவு கருநிறக்கூறும் நீண்டதலைவடிவமும் (dolicocephalic) உடைய மனிதஇனம் ஐபீரி யத்தீவக்குறை தொடங் கி வடஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, தென்இந்தியா ஆகிய இடங்களடங்கிய ஒரு பெரும்நிலப்பரப்பில் பரவி யிருந்தனர் என்று கொள்ளலாம். 34. இ ங்கே கூ றிய த ட் பவெ ப் ப நி லை மா றுபா ட் டு ட ன் மே ற் கு நடுநிலக்கடல் பகுதி, சூடானிய (ஹாமித்தியஇன)ப் பகுதி, செமித்திய (அரேபியாவைச் சூழ்ந்த ஈரப்பண்பு தோய்ந்த நில)ப் பகுதிகள், ஈரானியப் பகுதி, இந்தியப் பகுதி ஆகியவற்றுக்கிடையே நூற்றுக்கு நூறுவரை இல்லாவிட்டாலும், பெருமளவு மாறுபாடுகள் ஏற்பட்டன. அதுமட்டுமன்றி, மேற்கூறியது போன்ற சற்றுக் கவர்ச்சிமிகுந்த நன்னிலங்களை நோக்கி மக்கட்செறிவு பரவவும் தொடங்கிற்று. 35. இதனால்தான், மனித இனக் கூற்றாராய்ச்சியாளர்கள் நடுநிலக் கடல் இனம், ஹாமித்திய இனம், செமித்திய இனம், ஈரானிய இனம், திராவிட இனம் என்று வகுத்த பல இனமா திரிகளின் (racial types) எச்சமிச்சங்களை மேற்கூறிய மண்டலங்கள் எல்லாவற்றிலுமே காண முடிகிறது. ஆனால் அதேசமயம் ஒவ்வொரு பகுதியிலும் அவ்வப் பகுதியின் சூழலுக்கு உகந்தபடி வளர்ச்சி முறை நோக்கிய முன்னேற்றத்தையும் காண்கிறோம். இதனால் ஒவ்வோரிடத்திலும் பேரளவான வேறுபாடுகளையும், அவற்றின் ஊடாக அடிப்படையில் பேரளவான பொது ஒற்றுமைகளையும் காண்கிறோம். இவ்வொற்றுமை இம்மண்டலத்துக்கு வெளியிலும் பல இடங்களில் உண்டாயினும், அவற்றை நாம் இப்போது இங்கே கவனிக்கத் தேவையில்லை. 36. எடுத்துக்காட்டாக, நடுநிலக்கடல் இனம் ஆப்பிரிக்க இனங்களுடன் தொடர்புகள் உடையது; ஹாமித்திய இனத்திலிருந்து அது சில பரிமாணங் களில் மட்டுமே மாறுபடுகின்றது என்று கூற இடமுண்டு. தொடக்கத்தில் மாறுபாடு மிகுதியில்லாத ஒரே சூழ்நிலையில் அடைந்த வளர்ச்சி அவர்களை அடிப்படை ஒற்றுமை உடையவர்களாக்கிவிட்டது. இதுபோலவே செமித்திய, ஈரானிய, திராவிட அல்லது இந்திய இனங்களும் ஒன்றுக்கு ஒன்று படிப்படியான மாறுதல்களைக் காட்டுகின்றன. தென் இந்தியா இந்த மாறுதல் இயக்கத்தில் ஒரு கடைக்கோடியாகும். ஒரு புறம் தென் இந்தியாவிற்குள்ளேயே இந்த மாறுதல் படிகள்பலவற்றைப் பார்க்கிறோம். மறுபுறம் இவற்றுடன் மேலை நாடுகளில் உள்ள பல ஒற்றுமைகளையும் மிகத் தெளிவாகக் காண்கிறோம். 37. புதிய கற்காலத் தொடக்க முதலாக ஐரோப்பாவில் வாழ்க்கை வளத்துக்குரிய பல புதுப்புனைவுகள் ஏற்பட்டதற்கான சான்றுகள் கிடைக் கின்றன. புதிய செடியினம், உயிரினங்கள் உருவாக்கப்பட்டன . இதிலிருந்து குடும்ப நிலை முன்னேறியிருந் ததென்று ம், கு ழந்தைகளுக் கான மெல் லுணவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின என்றும் அறிய முடிகிறது. பின்னர் மட்பாண்டக்கலை வளர்ந்தது . மரம் வெட்டுவதற்கான ஆப்பு வடிவான கோடரி தோன்றியது. சக்கரங்களும் நாகரிகத்துக்குரிய அதுபோன்ற பல நுணுக்கக் கருவி முறைகளும் சாதனங்களும் ஏற்பட்டன. பழைய கருவிகலும் திருந்தின நயமாயின. இம்முன்னேற்றங்கள் பெரும்பாலும் பாலைத் பகுதிகளிலிருந்து வெளியேறியவர் களிடமே காணப்பெறுகின்றன. பலூச்சிஸ்தானத்தின் கடற்கரைப் பகுதி இத்தகைய புடைபெயர்ச்சிக்குரிய மண்டலம் என்பதை, அதன் பிற்பகுதியில் இன்றும் பிராகுவி மொழி எஞ்சியிருப்பதன் மூலம் உணரலாம். 38. யூப்ரட்டிஸ், டைக்ரிஸ் ஆற்றுத் தாழ் நிலங்களில் பிற் காலங்களில் மாபெரும் நாகரிகங்கள் ஏற்பட்டதை நோக்க, இந்தியாவில் உருவான திராவிட நாகரிகத்தின் மீது தொன்றுதொட்டுப் பாபிலோனிய நாகரிகத் தாக்க விளைவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறன்று. 39. கி.மு. 800-வரை கடற்போக்குவரத்துத் தொடர்பு மிகவும் குறைவே என்று அணிமைவரை நம்பப்பட்டிருந்தது. ஆனால் மினோவா நாக ரி க ம் , கி ரீ த் நா க ரி க மூ லமாக , அ ர ச ம ர பு க் கு மு ற் ப ட் ட எகிப்துடனும் (predynastic Egypt) , கி.மு. மூவாயிர ஆண்டுக்குரிய சுமேருடனும் தொடர் புடையதாயிருந்தது. அத்துடன் தொ ல் லி ய ல் ஆய் வு மூ ல ம் அ து மே ற் கு ஐரோப்பாவு ட னு ம் தொடர்புடையதாயிருந்தது தெரிகிறது. ஆகவே, கடற்போக்குவரவுத் தொடர்பு ஏற்பட்ட காலம் அதற்கும் நெடுங்காலம் முற்பட்டதென்றும், கி.மு. 3000லிருந்தே மிகப் பேரளவாயிருந்ததென்றும் காணலாம். 40. சுமேரியப் பழங்கதைகளின்படி, தேவர்கள் மக்களுக்கு நாகரிகப் பண்பாட்டை முதன் முதலில் கொடுத்த பொன்னுலகம் பாரசீக வளை குடாவினை அடுத்த ‘தில்முன்’ (Dilmun) என்று கூறப்படுகிறது. மேலும் சூசா, மூசியன், ஊர், எரிது முதலிய முற்பட்ட நாகரிகங்களுக்குரிய ஒரே நிறத்தின் பலதிறச் சாயல்களமைந்த, உருக்கணக்கியல் (geometry)படிவங்கள் வாய்ந்த மட்பாண்டங்கள், பிற புதுக்கற்கால நாகரிகப் பண்புகள் ஆகியவற்றின் தடயங்களை, புஷயர்த்தீவில் கண்டதாக பெசார்டு(M.Pezard)குறிக்கிறார். தைகிரிஸ் ஆற்று மேல் பகுதியை அடைந்தபின்னர் சுமேரியர் நாகரிகம் விரைந்த திடீர் வளர்ச்சி பெற்றது பேரீந்துமரச் சூழலின் காரணமாகவே ஆகும். அவர்களின் எழுத்துப் பதிவுகளிலேயே (cuneiform tablets) “தில்முன் ஈந்தம் பனைகள் நிறைந்த இடம்” என்று குறிக்கப்படுகிறது. 41. எலம், சுமேர் ஆகிய இரண்டு இடங்களிலுமுள்ள வண்ண மட்பாண்டங்களின் தோற்றம் கி.மு. 4000-க்கும் முன்னர் செல்கிறது. சூசாவும் அதே காலத்ததே. ஆனால், பேரீந்துகள் பற்றிய விவரம் கிடைப்பது கி.மு.3200 முதல் தான். சார்கன் (Sargon) என்ற அரசன் (ஏறத்தாழ கி.மு.2800-ல்) சைப்ரசுடன் (Cyprus) தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. (கேம்பிரிட்ஜ் பண்டை வரலாறு. ஏடு1-இயல் 10 (1923)) பண்டை நாட்களில் எரிது, வகாஷ் ஆகியவை கடற்கரை நகரங்களாயிருந்தன. ஆனால் ஹமுராபியின் காலத்திற்குப்பின் (கி.மு.2100) கடல் பின் வாங்கி, எரிது நகர் சிறப்பிழந்தது. நேரடியாகவே இந்தியாவுக்கும் மெஸபொட்டேமியாவுக்கும் நாகரிகத் தொடர்பு இ ரு ந்த து என் று காட்டக் கா ல வ ரை யறையுடைய அகழாய்வுச் சான்றுகள் கிட்டாவிட்டாலும், இச்செய்திகளால் அத்தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. (1924 க்குப்பின் சிந்து நாகரிக அகழாய்வுச் செய்திகள் வெளிவந்து அத்தகைய தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுவிட்டது) 42. ‘முற்கால நாகரிகப் புடை பெயர்ச்சி’ (Migrations of Early Cultures) என்ற நூலின் ஆசிரியர் கிராப்டன் எலியட் சுமித், ‘கதிரவன் சேய்கள்’ என்ற நூலின் ஆசிரியர் டப்ள்யூ. ஜே. பெரியும் வியந்து குறிப்பிடும் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிக்கூறு “உலோகக் கனித்தடங்களுடன் தொடர்புடையதாக க் கு றி க் க ப் பெறு ம் க ல் சி ன் ன ங் க ள் Megaliths தெக்கணத்தில் காணப்பெறுவது” பற்றியது. இக்கல்மாடங்கள் ஒருபுறம் பசிபிக் மாக்கடல் பகுதியிலுள்ள இதே போன்ற கல்மாடங்களுடனும் மற்றொரு புறம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே ஜார்ஜியா, யூக்ஸின், கிரிமியா, திரேஸ் ஆகிய இடங்களில் காணப்படுபவற்றுடனும் தொடர்புடையவை என்று கூறலாம். 43. இந்தக் கடல்வழித் தொடர்பு இந்தியாவுடன் கி.மு. 3000 லிருந்தே உண்டு என்று திரு.பெரி கருதுகிறார். ஆனால் மாடக்கற்களின் (dolmens)பரப்பு நோக்க நிலவழித் தொடர்பையும் கருதலாம். தவிர “பிராகுவி” சான்றும் கடல்வழி, நிலவழி ஆகிய இரு வழிகளுக்கும் பொது ஆதாரமாகவே உள்ளது. இங்ஙனமாக ஏற்கெனவே நீடித்து நிலவி ஊன்றியிருந்த மெஸபெட்டோமி யாவின் உயர்ந்த நாகரிகத்தின் தாக்கம் கி.மு.2500-க்கு முன்பு இல்லா விட்டாலும், குறைந்த அளவு அக்காலத்திலேனும், திராவிட இந்தியாவின் மீது ஏற்பட்டதெனலாம் . முற்காலக் கடல்வழி வாணிகத்துறையில் மேற்கு, தென் n மற்கு ஐரோப்பாவில் எத்தனையோ கடற்கரைப் பகுதிகளில் அகல் மண்டையோடு (brachycephalic) மனிதர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். இவ்வகையில் திரு.ஹார்னெல்(Hornell. 1923 லிவர்ப்பூல் பிரிட்டிஷ் சங்க உரையில்) சுட்டிக் காட்டியுள்ளபடி இந்தியாவின் தென்மேற்கு, தென்கிழக்குக் கரைகளில் அகல் மண்டையோடுடைய மீன்படவர் இருப்பதை ஆராய்ச்சியாளர் கவனிக்க வேண்டும். 44. முடிவாக, நம் கண்முன் ஏற்படும் கருத்தோவியம் இது: இந்தியாவில் மு ற்கால மனித இ ன ம் அ ழி வு படா ம ல் எ ஞ் சி யி ரு ந் த து . ப டி ப் ப டியாக வரண்டுவரும் பகுதிகளிலிருந்து புதுக்கற்காலம்முதல் நடுநிலக்கடல் இனம், ஹாமித்திய இனம், செமித்திய இனம் என்று கூறப்படும் பல்வகை நீண்ட தலையோட்டு (dolicocephalic) மக்கள் வரவால் அது படிப்படியாக வளர்ச்சி பெற்றது. அவர்களே பெரும்பாலும் அவ்வக்காலத்துக்குரிய பல கருவி மேம்பாடுகளையும் கொண்டுவந்திருக்கலாம். முற்றிலும் வேடராயிருந்த நிலையிருந்து இவை அவர்களை உயர்த்தியதுடன், வேளாண்மையின் தொடக்க நிலை வளர்ச்சியைக் கூட அவைகளே ஏற்படுத்தியிருக்கக் கூடும். 45. கி.மு. 3000 ஆண்டுகாலத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு பொதுப் பண்பு யாதெனில், நெடுந்தொலைவுத் தொடர்புகள் ஏற்பட்டதாகும். இது இந்தியாவிலும் தடம் பதிக்காமலிருக்க முடியாது. இவ்வகையில் மேல் திசையுடன் ஏற்பட்ட தொடர்புக்குரிய மூன்று நெறிகளாவன: (1) மெசபொட்டேமியாவிலிருந்து கடல்வழியாகப் பாரசிகக்குடா, அராபிக்கடல் கரையோரமாகவரும் நெறி. (2) மெஸபொட்டேமியாவிலிருந்து இந்தியா வரும் நிலப்பாதைகள். (3) எரித்ரியன் கடல் (செங்கடல்)சுற்றுப் பயணம் (Periplus of the Erythrean Sea) என்ற நூல் விவரித்துள்ளபடி செங்கடலிலும், பண்ட் (Punt) நாட்டிலும் உள்ள எகிப்தியத் துறைமுகங்களிலிருந்து வரும் கடல்நெறி. 46. ஆரியர் வருகைக்குக் குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன் பாகவே இங்ஙனம் இந்தியா வந்தடைந்த பண்பாட்டுக்கூறுகள் ஏற்கெனவே இந்தியாவில் குடிபுகுந்திருந்த மற்ற உயர் இனங்களுடன் கூடிக் கலப்புற்றன என்றும், திராவிடப் பண்பாடு அக்கலப்பின் வழி ஏற்பட்டதே என்றும் கூறுவது பொருந்துவதாகும். பேராசிரியர் புளூர் அனுப்பிய பின் குறிப்பு 47. இந்தக் குறிப்புகள் ஆசிரியர்(சிலேட்டர்) ஆராய்ச்சிக்குப்பயன் படுத்திட முற்குறிப்பாக முதலில் தரப்பட்டிருந்தது. பிறஆய்வுரைகள் அடிப்படையில்தான் ஜியூபிரிடா ரிக்கரியின் ‘ஆசிய மனித இனக் கூற்றாராய்ச்சியின் பருவரைக்கோடுகள்’ (Outlines of a Systematic Anthropology of Asia: Giufrida Ruggeri).). (கல்கத்தா, 1921) கேம்பிரிட்ஜ் பண்டை வரலாறு (பக்,2923), மனித இன ஆராய்ச்சி சார்ந்த ராயல் கழக இதழ் (Journal of the Royal Anthropological Institute). (1916, 1918, 1921) “மனிதன்” (Man) என்ற இதழ் உள்ள ஹெச்.ஜே. புளூர் கட்டுரைகள் முதலியவவையே மூலச்சான்றுகளாகிய அப்பிற ஆய்வுரைகள் ஆகும். 2. ஆரியர் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளைச் சரியாக மதிப்பிடு வதற்குப் பெருந்தடையாக உள்ளது “ஆரியக் கட்டுக்கதை” (Aryan myth) பரப்பப்பட்டு அதுவே சரி எனப் பலரும்(தவறாகக்) கருதுவதுதான். தாம் ஆரியர், தம் சமயமும் தம் நாகரிகமும் ஆரியச் சார்பானவை என்ற (ஆதாரமற்ற) எண்ணத்தை இந்தியருள் பெரும்பான்மையினர் ஆர்வக் கோளாறினால் கொண்டுள்ளனர். 2 . இ ந் தியா வி னு ள் வ டமேற் கி லி ரு ந் து நுழை ந் து ச ம் ஸ் கி ரு த மொழியைக் இங்கு கொண்டுவந்து புகுத்தியவர்கள் என்ற பொருளுடன் ‘ஆரியர்’ என்ற பெயரை வழங்கினால் தவறில்லை. ஆனால் மாக்ஸ் மூலர் (Max Mueller)பெருவழக்காகப் பரப்பியபடி, “மற்றெல்லா இனங்களையும்விட ஆரியர் நாகரிக மேம்பாடுடையவர்கள்; ஐரோப்பா, ஆசியாவில் எங்கோ இருந்ததாக உன்னிக்கப்படும் ஆரியத்தாயகத்திலிருந்து பெயர்ந்து பாரசிகம், ஐரோப்பா ஆகிய இடங்களிலெல்லாம் குடியேறியவர்கள்; ஆங்காங்கு வாழ்ந்த முந்தைய மக்கள் அனைவரும் சிந்தனை, உடற்கூறு, பண்பாடு இவற்றில் ஆரியரைவிடத் தாழ்ந்தவர்கள்; அவர்களைத் துரத்திவிட்டு அல்லது அடக்கிவிட்டு அவ்விடங்களைத்தமதாக்கிக் கொண்டு, அவற்றை “இந்தோ- ஐரோப்பிய மொழி”யின் கிளைகளான சமஸ்கிருதம் போன்றவற்றைப் பேசுபவர் களுக் கு அடிமையாக்கினர்” என்ற பொருள்பட ஆரியர் என்ற சொல்லை வழங்குவது நேர்மையற்றது. 3. அத் தவறான கருதுகோளை உண்மைச் செய்திகளுடன் பொருத்தி மெய்ப்பிக்க வலிந்து செய்த முயற்சிகள் தகர்ந்துவிட்டன. இறுதியில் இனம் race என்பது மொழி அடிப்படையில் மட்டும் அமையாது என மாக்ஸ் மூலரே ஒத்துக்கொண்டார். ஆயினும் ஐரோப்பாவில் இக்கோட்பாடு இன்னும் (1924) முழுமையாகக் கைவிடப்படாமல் உள்ளது. ஹெச்.ஜி.வெல்ஸ் தம் “மாந்தர் வரலாற்றில்” (History of mankind) ‘நார்டிக் ஆரியர்’ (Nordic Aryans) என்ற சொல்லை வழங்குகிறார். ஆனால், ஆரியர் இனத் தொடர்புக்கூறுகள் எதுவாயினும், வடமேற்கு ஐரோப்பியருக்குரிய தனித் தன்மைகளான நீலநிறக் கண்களும், வெண்ணிற மேனியும் மூல ஆரியர்கள் பண்பாக ஒருகாலும் இருந்திருக்க முடியாது. ஆனால் நீலநிற சாம்பல்நிறக் கண்களை இந்தியரிடம் மேல் கடற்கரையில் மட்டுமே ஒரு சிலரிடம் காணலாம் கடல் வாணிகத் தொடர்பு காரணமாக. 4. இந்தியாவில் ஆரியக் கோட்பாடு மக்களது ஆதாரமற்ற உணர்ச்சியின் அடி ப்படையிலேயே இ ய ங் கு கின் றது ; தா ங் க ள் ஆரி ய ர் எ ன் ப தி லு ம் , ஆரியரிலும் தாங்களே மூத்தமரபினர் என்பதிலும் இந்தியர்கள் போலிப் பெருமை கொள்கின்றனர். ‘பிரிட்டிஷ், பிரஞ்சு, ஜெர்மன் ஆரியர்’ தங்களை விடக் குறைந்தகால வரலாறுடைய ஆரியர் என்றும், மிக அணிமைக் காலம்வரை அவர்கள் ஆரியரின் முழு நாகரிக முதிர்ச்சி பெறாத நிலையின ராகவே இருந்தனர் என்றும் எண்ணித் தற்பெருமை கொள்கின்றனர். முந்திய இயலில் குறிப்பிட்ட “திராவிட இனத்தின் பண்டை இனத்தொடர்புகள், பண்டை இனப் பண்பாட்டுக் கலப்பு” ஆகியவற்றைப் பற்றி பெரும்பாலான இந்தியருக்கு ஒன்றுமே தெரியாது என்பதால், திராவிடராக எவரும் கருதப்பட விரும்புவதில்லை; அங்ஙனம் கருதினால் தங்களை மேலை ஐரோப்பியருடன் இனத்தொடர்பு அற்ற மட்ட இனமாகக் கருதுவர் என்று அஞ்சுகின்றனர்!. ஆரியராகக் கருதினால், மதிப்புயர்வு கிடைக்குமென்பது தவிர இக்கோட்பாட்டுக்கு வேறு ஆதாரம் இல்லை. 5. அணிமையில் மயர்ஸ் (Myres) குதிரை பற்றிய தம் வரலாற்றாராய்ச் சியில் கேம்ப்ரிட்ஜ் பண்டைவரலாறு ஏடு 1 : பக்கம்-106-7. ஆரியர் பரவல், அதன் காலம், அவர்கள் அடிப்படைப் பண்புகள் ஆகியவை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். “பழங்காலமுதல் உணவுக்காக குதிரை வேட்டையாடப்பட்டு வந்துள்ளது. ஆனால், நடு ஆசிய மேட்டு நிலத்துக்கு வெளியே, எங்கும் பால்தரும் வீட்டு விலங்காகக்கூட அது பழக்கப் படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் கிட்டவில்லை. “ஐரோப்பாவில் ‘ஹால்ஸ்டட்’ Halstatt பகுதியில் வழங்கிய நாகரிகம் தான் “ குதிரையை ஏறியூர்வதற் கும் வண்டியிழுப்பதற்கும் ஒருங்கே பயன்படுத்திய” முதல் நாகரிகம் ஆகும். ஆசியாவில் இதற்கான முதல் தெளிவான சான்று, கி.மு. 2100-க்குரிய ஒரு பாபிலோனியப் களிமண் ஓட்டுப் பொறிப்பேயாகும். அது, ‘கீழ்த்திசைக்குரிய, மலைப்பகுதிக்குரிய, கழுதைகள்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதுவரைக் கழுதை மட்டுமே வழங்கிவந்த ஜாக்ராஸ் மலைத்தொடருக்கு மேற்கேயுள்ள மக்களுக்கு அது அன்று புதிய பழக்கமாகவே இருந்திருக்கிறது. 6. குதிரையின் வரவு ஈரானிலிருந்தும், அதற்கப்பாலிருந்தும் திரண்டு படையெடுத்து வந்து, கி.மு.1750-இல் பாபிலோனின் ‘காசைட்’ Kassite மரபை நிறுவிய புதிய மக்களுக்குரியதாகவே குறிக்கப்பெறுகிறது. முல்லை நிலநாகரிகத்தைத் தானாகப் பிறப்பித்து வளர்க்கும் தன்மை ஈரானிய மேட்டு நிலத்தில் இன்றும் இல்லை, அன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லைஎனவே, மேற்சொன்ன படையெடுப்பு இன்னும் சற்று வடகிழக்கிலிருந்து, அதாவது சர்மேஷியன்(Sarmatian) சமவெளியிலியுந்தே தொடங் கி யி ருக்கலாம். சமகாலத்தில் இ ல்லாவிட்டாலும் முக்கியத்துவத்தில் அதே வடதிசைத் தாயகத்திலிருந்து(பின்னர்) இந்தியாவுக்குப் புடைபெயர்ந்து வந்த ஆரியமொழி பேசிய மக்கள் வரவுடன் அது தொடர்புடையதே. ஐரோப்பாவில் நீப்பர் ஆறு கடந்து கலிஷியா (Galicia) வழியாக பொஹீமியாவுக்கும், பால்கன் தீவக்குறை வழியாகச் சிறிய ஆசியாவுக்கும் சென்ற புடைப்பெயர்ச்சிகளுடனும் இதனைத் தொடர்புபடுத்தலாம். 7. எனவே, ஆரியர்கள் மற்ற இனங்களை நோக்க நாகரிகம் குன்றியவர்கள்(barbaric invaders)தாம் எனினும் விரைந்து, மிகப்பலர் படையெடுக்கச் சாதகமான குதிரைகளுடன் வந்திருக்க வேண்டும் என்று கருதலாம். குதிரைவீரர்களைப் பயன்படுத்தி அரசியல் ஆதிக்கம் பெற்றனர். சுமேரியரும் திராவிடரும் செல்வம், நாகரிகம் போன்றவற்றில் மேம்பட்டிருந்தாலும், ஆற்றலும் வெற்றியும் தரும் குதிரைப் படை அவர்களிடம் இல்லை; சக்தியற்றவர்களாகவே இருந்தனர். அவர் களுடைய திரண்ட செல்வமும் பகைவர்களை ஈர்த்தது. குதிரை மட்டுமின்றி பல புதுமைகளையும் (இறந்தோரை எரியூட்டும் வழக்கம், அதனுடன் தொடர்புடையதான “இறப்புக்குப் பின் மறுஉலகில் உயர்நிலை” பற்றிய கோட்பாடு முதலியவை) கொணர்ந்தனர். இவை திராவிடருடைய பழைய நம்பிக்கைகளை அழிக்காவிடினும் உடன் கலந்துவிட்டன. 8. குதிரை பயன்பட்ட நாகரிகம், குதிரைக்கு முற்பட்ட கால நாகரிகம் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுகளை ஒப்பிடும் கிரேக்க புராணக் கதை ஒன்று உண்டு. தேவன் பாசிடானும் (Poseidon) தேவி அதேனாவும், அதேன்ஸ் (Athens) நகரத்திற்கு யார் பெயரை வைப்பது என்பது பற்றிப் போட்டியிட்டனர். யார் தரும் நன்கொடை மதிப்புயர்வடையதோ, அவர் பெயரையே ஏற்பதென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாசிடான் குதிரையைக் கொடுத்தார். அதேனா தேவதாரு மரத்தை (Olive tree). அளித்தார். தேவர்கள் நடுவர் குழு அதேனா பக்கமே தீர்ப்பளித்தது. ஏனெனில், அதேனாவின் நன்கொடை அமைதி சார்ந்தது. பாசிடானின் நன்கொடையோ போருக்கே பயன்படுவது. இதையொத்த காரணங்களினால் எகிப்திய நாகரிகத்தை ஹிக்ஸோ நாகரிகத்துக்கும், ரோமன்-கிரேக்க நாகரிகத்தை அதனை வீழ்த்திய துருக்கிய நாகரிகத்துக்கும் மேம்பட்டதாக கருதலாமானால், ஆரியப் படையெடுப்புக் கால திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகத்துக்கு மேம்பட்டதாகக் கருதத் தடையில்லை! 9. இந்திய நாகரிகத்தைப் பொறுத்தும் இதுபோலவே, (இன்னும் முக்கியமாக திராவிட ஆரிய நாகரிகக்கூறுகள் எந்த விழுக்காட்டளவில் ஒன்றுகூடியிணைந்துள்ளன என்னும் வகையில்) நாம் நடுநிலையுடன் ஆராயவேண்டும். முற்கால கிரேக்க வரலாற்றின் ஒப்புமை இதற்குத் துணைசெய்வது ஆகும். ஆனால், ஒப்புமை முற்றிலும் சரியானதாக இருக்க வேண்டுமாயின், நாம் அதனைச் சற்று மாறுபடுத்திக் கற்பனைசெய்து பார்க்க வேண்டும். நாகரிகமற்ற ஆரிய, கிரேக்க முரடர்கள் படையெடுப்புகள் மினோவ, மீசினிய நாகரிகங்களை முற்றிலும் அழித்தன என்பது வரலாறு. ஆனால் “அங்ஙனம் அழிக்காமல் கொரிந்த் வளைகுடாவைக் கடந்து அம்முரடர்கள் செல்லவில்லை எ ன் று ம் ; பெலப்பொனெஸ் தீ வ க் குறை மட்டும் தன் பண்டைய மொழியையும் பண்பாட்டையும் காத்து நிலைபெற வைத்துக்கொண்டது” என்றும் (நடக்காத ஒன்றை) நாம் கற்பனை செய்தால், கிரேக்க நாட்டு வரலாறு எவ்வாறு இருந்திருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்! 10. இந்தியாவுக்கு நேரில் வந்த வெளிநாட்டாளர் பலர் முடிவுகளில் ஒரு முரண்பாட்டைக் காணலாம். இந்திய மக்களில் பெரும்பாலோரின் அடிப்படை இன ஒற்றுமை கண்டு வியப்படைவதுடன் இந்தியர் பெரிதும் இனத்தால் திராவிடரே என்னும் சரியான முடிவையும் ஏற்றுக் கொள்கிறார்கள்; ஆயினும் அதேசமயம் இந்திய நாகரிகம், சமயம், மெய்விளக்கத் தத்துவங் கள் ஆகியவை அனைத்தும் ஆரியச் சார்பானவை! என்னும் பாமரத் தனமான கோட்பாட்டையும் ஆழ்ந்த சிந்தனையின்றி ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வகையிலேயே, “ஞாயிறும் நாகமும்” (The Sun and the Serpant) என்ற சிறந்த நூலில் சி.எப்.ஓல்டுஹாம் (Oldham) வடஇந்தியப் பொது மக்களின் திராவிட இனச்சார்பை எடுத்துக் காட்டிவிட்டு, அதன்பின்னரும் பிராமண மதம் ஆரியர் உருவாக்கியது என்றும்; நாக (திராவிட) அரசாட்சியிலும் ‘பிராமணரே ஆதிக்க நிலையில் இருந்தனர்’ என்று வடமொழி இலக்கியம் குறிப்பதாலேயே, “அந்த அரசுகள் அத்தனையும் ஆரியமயமாகிவிட்டன என்று கருதலாம்” என்கிறார். ஆயினும் பிராமண சாதியில் உச்சநிலை உயர்வும் சரி, சாதி வேறுபாடும் சரி, இவற்றின் அடிப்படையில் அவர்களை ஆரிய மரபு என்று கூறுவதற்குச் சிறிதேனும் ஆதாரம் இல்லை. மாக்ஸ்மூலர் (சிறு துணுக்குகள் ( Chips) ஏடு:2 பக்கம்- 311) கூறுவது காண்க. “வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் ம னு குறிப்பதும் இன்று வழக்கிலுள்ளதுமான சாதிமுறை இடம் பெற்றுள்ளதா? “இல்லை” என்ற ஒரே சொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுத்து விட லாம்.பெரு ஞ்சி க்க ல் வா ய்ந்த சாதி அமைப் பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய ஆதாரமும் இல்லை, அதுபோலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு ஆதாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால்வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத இழிவுக்குறியிட்டுத் தீண்டத்தகாதவ ராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி ஆகியவர்களின் அச்சந்தரும் செயல்முறைகள்; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம்; திருமாலின் தெய்வீக அருஞ்செயல்கள், இவை பற்றி, வேதத்தில் ஒன்றும் இல்லை. ‘கடவுளுக்குரிய மதிப்பைத் தமதெனக் கொண்டு தம்மையே பழி க் கு ள்ளா க் கிக் கொள்ளு ம் ஒ ரு கு ருமார் கு ழு வி ன் வீ ம் புரிமைக ள் ’, “ம னி த இ ன த் தி ன் கிளைகளை விலங்கிலும் கீழாக இழிவுபடுத்தும் முறை” ஆகியவற்றை ஆதரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மண ஆதரவு, விதவை மறுமணத் தடை, கணவன் பிணத்துடன் கைம்பெண்ணை உயிருடன் எரிக்கும் கொடுமை இவற்றை ஆதரித்து வேதத்தில் ஒரு வாசகங்கூட இல்லை. இவை யாவும் வேதத்தின் தத்துவத்துக்கும் சொல்லுக்கும் மாறுபட்டவை.” 11. சாதிமுறை; பிராமணர் தெய்விகத்தன்மை, காளி, சிவன், திருமால், சிவன் துணைவி பார்வதி, சிவன் மகன்கள் முருகன், கணபதி, திருமாலின் இறுதி அவதாரமான கண்ணன், ஆகியோர் வழிபாடு - இத்தனையும் வெளி யிலிருந்து வந்தவை, “ஆரியர் வேத அடிப்படையிலான” இந்திய நாகரிகத் துடன் ஒட்டிக் கொண்ட மாசுகள் என்றும் ஒதுக்கிவிட முடியாது. அவை இந்தியப் பண்பாட்டின் அடிப்படை உயிர் நிலைக்கூறுகள் ஆகும். காளி, சிவன், திருமால், முதலியவர்கள் வேதத்தெய்வங்களும் அல்லர்; ஆரியருடையவருமல்ல என்பது தெளிவு. அவர்களைத் திராவிடர் கடவுள்கள் என்று கூறுவது தவிர வேறு வழி இல்லை. 12. இதுபோலவே சாதிமுறை ஆரிய வழக்கமல்ல,என்னும் பொழுது அது திராவிடர் வழக்கமா என்ற கேள்வி எழுகிறது. இது சற்றுச் சிக்கல் வாய்ந்தது. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கோட்பாடு, “சாதி முறை ஆரியர் இந்தியாவில் குடியேறி வாழ்ந்தபின் இங்கே ஓர் உயர்ந்த வேளாண்மை, கைத்தொழில் சார்ந்த வாழ்வை நிறுவினர், அதன் பின்னரே சாதி ஆரியர்களிடையே தோன்றியது ; அதன் அடிப்படை பொருளியல் சார்ந்தது” என்பது ஆகும். அத்துடன் அது மிக எளிய, ஆனால் பயனுடைய தொழிற் பாகுபாட்டு முறையாக அது அமைந்ததென்றும், “தொழில் நுணுக்கப் பயிற்சியளிக்கும் வகையில் பிறப்பு அடிப்படையான தொழி ல் மரபேமி க எளிதான , இ ய ற்கையான முறையாகும்” என்றும் கூறுவர். சாதிமுறை இம்மாதிரி ஏதோ ஒரு நிலையில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, இன்றும் இதேமுறையில் புதிய சாதிகள் எழுவதைக் காட்டலாம். பேராசிரியர் ராதா கமல் முக்கர்ஜி ‘இந்தியப் பொருளியலின் அடித்தளங்கள்’ என்ற நூலில் இதற்கான சுவைமிக்க எடுத்துக்காட்டு ஒன்று தருகிறார்: வங்காள நாட்டின் செக்கு வாணிகர் யாவரும், எண்ணெய் விதைகள் அரைக்கப்படும் செக்குக் குழியின் அடியில் துளைஒன்றை இடும் புதுமுறைப் பழக்கம் வரும் வரை, ஒரே சாதியாய்த் தான் இருந்தனர்; அப்பழக்கம் வந்தபின் புதிய முறையை மேற்கொண்டவர் ஒரு தனிச் சாதியாகவும், பழைய முறைப்படி எண்ணெயைக் கூடிய மட்டும் மொண்டு எடுத்து, மீந்ததைத் துணியில் தோய்த்துப் பிழிந்து வந்தவர்களைவிடச் சமூக சாதிப்படியில் தாழ்ந்தவர்களாகவும் ஆயினர். 13. ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதியின் தோற்றம் பொருளியல் சார்ந்ததெனக் கொள்வதைவிட மிகுதியாக, அரசியல் சார்ந்ததென்றே கொள்கின்றனர். சாதியின் படிப்படியான உயர்வு முறையிலும், சாதியுயர்வு பேரளவில் செந்நிறம் (fair colouration) நோக்கிச் செல்லும் நிலையிலும் அவர்கள் முனைந்து கருத்துச் செலுத்தி அதனைச் சிறிது மிகைப்படுத்தினர். ஆகவே, சாதிமுறை வடமேற்குக் கணவாய் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக வந்த படையெடுப்புக்களின் விளைவு என்றும், ஒவ்வொரு படையெடுப் பாளரும் முந்திய படையெடுப்பாளரை விட மிகுதியான செந்நிறம் உயரமான பாரித்த உடல், போர்ப்பண்பு இவற்றை உடையவராகவும் இருந்தனரென்றும் அவர்கள் கருதினர். ஒவ்வொரு புதிய படையெடுப்புக்குழுவும் தேசமுழுவதும் பரந்து, முன்படையெடுப்புகளில் வந்துவிட்ட மக்களிடையே பெண்கள் எடுத்தனராயினும், தம் இன உயர்வுச் செருக்கினால் தூண்டப்பட்டு, தம் பிள்ளைகள், சிறப்பாகப் பெண் குழந்தைகள், நாட்டு மக்களுடன் மணஞ் செய்து கலப்பதைக் கண்டிப்பான விதிகளால் தடுத்தனர். இதனால், அவர்கள் மரபினர் (பிறரோடு கலவாத) ஒரு தனிச் சாதி ஆயினர். 14. மேற்கூறிய இரண்டு கோட்பாடுகளிலும் ஓரளவு உண்மையின் கூறுகள் இருக்கின்றன எனினும், இன்றைய நிலையையும் கவனித்து அவற்றில் நாம் சில திருத்தங்கள் செய்யவேண்டியுள்ளது. இருகோட்பாடு களின்படியுமே தென் இந்தியாவை விட வட இந்தியாவே சாதிமுறையின் சிறப்பான வாழ்வகமாய் இருந்திருக்க வேண்டும். (ஏனெனில், முதற் கோட்பாட்டின்படி வடஇந்தியாதான் மிகுதியும் ஆரியமயமாகியுள்ளது. இரண்டாவதின்படி அடுத்தடுத்து அந்நியர் படையெடுப்புக்கு ஆளானது வட இந்தியாவே).ஆனாலும் நிலைமை இதற்கு நேர்மாறானதென்பது நன்கு அறிந்த உண்மை. வட இந்தியாவைவிடத் தென் இந்தியாவில் தான் சாதி முறைமை வலுப்பெற்றதாக, பெருக்கமுடையதாக, சமூக வாழ்வில் மிகப்பெரும் பங்குடையதாக இருக்கிறது. அதுமட்டுமன்று. அரபிக்கடலுக்கும் மேற்குத் தொடர்ச்சிமலைக்கும் இடையிலுள்ள மலையாளத் தீரம் வடக்கிலிருந்து நிலவழிவந்த படையெடுப்புக்களுக்குச் சிறிதும் இடமில்லாமல் துண்டுபட்டுக்கிடக்கும் ஒரு பகுதியாகும். ஆனால் மலையா ளத்தில் தான் சாதிமுறை உ ச்சநி லைக்கு முதிர்ந்து உள்ளது! இது ஒன்றே சாதிமுறை ஆரியரிடம் தோன்றியதன்று, திராவிடரிடையே தோன்றியது என்று காட்டப்போதிய தாகும். சாதிமுறை எங்ஙனம் தோன்றி வளர்ச்சியடைந்தது என்பது பின்னர் விளக்கப்படும். 15. மேலே சொன்ன “ஞாயிறும் நாகமும்” நூலில் ஓல்டுஹாம் (Oldham)ஆரியப்படையெடுப்பின்போது இருந்த திராவிட இந்தியாவின் நாகரிகம் பற்றி வேதங்களிலும், வடமொழி இதிகாசங்களிலும் காணப் பெறும் பகுதிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். ஆரியர்கள் அக்காலத்தில் சிறிதளவு வேளாண்மை அறிந்தவர்களாயினும், முக்கியமாக அவர்கள் நாடோடி மேய்ச்சல் நில நாகரிகத்தினராகவே இருந்தனர் என்பதில் ஐயமில்லை. திராவிடர்களோ இதை விடச் சிறந்த நாகரிகப்படியில் இருந் தனர். ஆரியப்படையெடுப்புக்குப் பிந்தைய நிலைமையை க் குறிக்காமல், படையெடு ப் புக் கா ல நி லைமையை கு றி ப்பி டு வ து வேதங்களில் மிகப் பழைய இருக்குவேதமே. மேற்கூறிய கருத்தை வலியுறுத்த இந்த இருக்கு வேதத்திலிருந்து ஓல்டுஹாம் தரும் பின்வரும் மேற்கோள்களை காட்டினாலே போதுமானது. “ திவோ தா சனுக்காக, இ ந்தி ரன் ச ம்பரனுடைய நூறு கோட்டை களைத் தகர்த்தான்” “இந்திரனே, இடியேற்றுப்படை ஏந்தியவனே, நீ புருகூதனுக்காக வேண்டிப் போரிட்டு ஏழு நகரங்களையும் வீழ்த்தினாய்; சுதாஸுக்காக வேண்டி அன்ஹாஸின் செல்வத்தை வேரறுத்தாய்!” “மனித இனத்திடம் அன்புகொண்டு, நீ பிப்ருவின் நகரங்களை முறியடித்தாய். தஸ்யூக்களுடன் போராடுகையில், நீ ரிஜிஸ்வானைக் காப்பாற்றினாய்.” “துணிகரமாக நீ சுஷ்னாவின் செல்வத்தைத் துடைத்தாய். அவன் கோட்டைகளைத் தகர்த்தாய்.”கோட்டைகள், நகரங்கள், செல்வம்-திராவிட நாகரிகத்தின் மேம்பாட்டைக் காட்ட இவை போதுமானவை. மேலும் ஓல்டுஹாம் கூறுவதாவது: “இவை யன்றி, திராவிட அசுரரின் பண்புகளாகச் சமஸ்கிருத ஏடுகள் ‘இன்பவாழ்க்கை வாய்ப்புகள், மந்திரதந்திரம், மேம்பட்ட சிற்பத்திறன், இறந்தவரை உயிர்ப்பிக்கும் திறன்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன!” இச்செய்திகள் தெரியப்படுத்தும் உண்மைகளை ஒதுக்கிவிடக் கூடாது. இவற்றிலிருந்து ஆரியருக்கு முற்பட்ட திராவிட இந்தியாவிலேயே ஆரியரிட மி ல்லாத, ஆனா ல் இன்றை ய இந் து ம த த் தி ல் உ யிர் நிலைப் பண்பாயுள்ள, ஒரு மந்திரக் குருமார் வகுப்பு அல்லது சாதி (priest magician class or caste)இருந்ததென்று அறியலாம். அத்துடன் பிராமணசாதி, (வீரர் அல்லது) சத்திரியர் சாதிக்கு மேற்பட்ட பிராமண ஆதிக்கம் இரண்டும் திராவிட மரபுகளே என்பதையும் இதுவே நேரிடையாக நிறுவுகிறது. தெளிவான இந்த முடிவுக்கு ஓல்டுஹாம் வரவில்லையானாலும், அவர் மேற்கோளாகக் காட்டும் நுண்ணிய சான்றுகளே அதை நிறுவப் போதியவை. 16.(i) ஓல்டுஹாம் (80-ஆம் பக்கத்தில்) குறிப்பிடுகிறபடி, கண்ணன் (கிருஷ்ணன்) பிராமணர்களின் சிறப்பான பாதுகாவலன். அவர்கள் கால்களைக் கழுவி மரியாதை செய்வது அவன் வழக்கம். ‘ஆரியரல்லாத வருக்குரிய கருமேனி உடையவன் அவன்’ என்ற மரபைக் கலைமரபு இன்றும் மாறாமல் காத்து வந்துள்ளது; அவன் நிறம் எப்போதும் நீலமாகவே தீட்டப் படுகிறது. பிறப்பு வகையிலும், அவன் திருமாலின் அவதாரம் மட்டுமன்றி, ஆர்யகன் என்ற நாகர் தலைவனின் கொள்ளுப் பேரனான வாசுதேவன் மகன். “நாகர்” என்ற சொல் பாம்பையும் குறிக்கும்; மனிதருக்கு வழங்கப்படும் போது நாகவழிபாட்டினரையும் குறிக்கும். சமஸ்கிருத இதிகாச ஏடுகளில் அது பொதுவாக அசுர, தஸ்யூ, தைத்ய, தானவ ஆகிய சொற்களின் மறு வடிவமாகவே, வட இந்தியாவில் அதுவரை வென்றடக்கப் படாதிருந்த திராவிடரைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்குகிறது. (II) மீண்டும் (78-ஆம் பக்கத்தில்): “கண்ணனின் தமையனான பலராமன் தலைமீது பல பாம்புகளின் படங்கள் கவிந்து காப்பளிப்பதாகக் காட்டப்படுகிறது. அவன் சேடநாகனின் அவதாரம் எனப்படுகிறான். கண்ணன் இறந்தபோது அவன் வாய்வழியாக, ஒரு பெரிய பாம்பு வடிவில், அவன் ஆன்மா வெளியேறிச் சென்றது.” (III)மகாபாரதத்திலிருந்து (அதே78-ம் பக்கத்தில்): “அசுரர் (திராவிடர்) களின் தலைமைக்குருவான சுக்கிரன் தன்னுடைய தவத்தின் பெருமையால் தன்னை இருகூறாக்கிக்கொண்டு தைத்தியர்கள் (திராவிடர்கள்), தேவர்கள் (ஆரியர்கள்) ஆகிய இரு சாராருக்குமே சமயகுரு ஆனான்,” திராவிடர் களின் விரி வான குருமா ர்சாதி யானது தனது சம யத்து றை ஆட்சியை ஆரியர் மீதும் வெற்றிகரமாகச் சுமத்திற்று என்பதை இது நிறுவகிறது. (iV) விஷ்ணுபுராணம் தரும் தகவலின்படி சுக்கிரன் அல்லது உசானஸ் என்பவன் எரிஓம்பி, மந்திரங்கள் கூறி, ஆரியர் தெய்வமான இந்திரனுக்கெதிராக அசுரர்கள் அல்லது திராவிடர்களின் வெற்றிக்காக அதர்வண வேதத்தை ஓதினான்; அவனே (ஆரியரான தேவர்களால் கொல்லப்பட்ட) திராவிட தானவர்களுக்கு உயிரூட்டினான். சுக்கிரன் பிருகு என்ற பெரிய ரிஷியின் மகன்; பிருகுவும் ஒரு திராவிட குரு மந்திரவாதியே (priest magician) ஆனாலும் பிருகுவின் மக்கள் பிராமணர். அத்துடன் தைத்திய (திராவிட) மன்னனான ஹிரண்யகசிபுவுக்கு பிருகுவழியினர் சமய குருமாராயிருந்தனர். 17. ஓல்டுஹாம் தரும் இத்தனை சான்றுகளுடன் நன்கு அறிந்த வேறு இரண்டு செய்திகளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். (1) பிராமணர்கள் தொடக்கத்திலேயே ஆரியருடைய புரோகித வகுப்பாயிருந்துவந்தவர்களானால், இந்து சமூகத்தில் பிராமணர் ஆதிக்க மேற்பட்டிருப்பதுபோல், இந் திரன், வருணன்முதலிய ரிக்வேதத் தெய்வங்களின் வணக்கம்தான் இந்து மதத்தில் தலைமை பெற்றிருக்கும். வேதங்களை இந்து சமயம் மதித்த போதிலும், இந்திரன் முதலிய வேதக்கடவுளர் வணக்கம் மறைந்தே போய்விட்டது. அவர்கள் இடத்தில் வேதச்சார்பற்ற தெய்வங்கள்தாம் இன்று உள்ளன. (2) பிராமணசாதியின் தனிக்குறியீட்டுச் சின்னம் ‘ஒருதோள் மீதும் எதிர்க் கையின்அடியிலுமாக’ அணியும் பஞ்சுப்பூணூல் ஆகும். இச் சாதியினர் முதற்கண் பஞ்சுநூற்றல் தொழிலுடன் தொடர்புடையவர்களா யிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. ஆனால், பருத்திநூற்பு ஒருபோதும் வேத ஆரியரிடையே தோன்றியிருக்க முடியாது என்பது உறுதி. ஆரிய °டெப்பி(Steppe) புல்வெளி நிலங்களிலிருந்த மேய்ச்சல் நில மக்கள், (pastoral tries). அவர்கள் அருகில் பிற மக்கள் உழுது பயிரிட்டுவந்த நிலங்களின் மீது அவ்வப்போது படையெடுத்துச் சூறையாடி வந்ததையே ‘ஆரியப் படையெடுப்பு Aryan invasion’ எனக் கொள்வதே அறிவுக்குப் பொருந்துவது. தொல்லியலாளர் அண்மையில் நிறுவியுள்ளபடி, ஆடுமாடு வளர்க்கும் நாகரிகத்துக்கு முன்னரே உணவுப்பயிர் பயிரிடுதல் தொடங்கி யிருக்க வேண்டும் . முதலில் ஓரிரு பயிர்களைச் சிறு அளவில் மேற் கொள்ளுதல் intensive agriculture; பின்னர் பெருமகசூல் தரக்கூடிய பயிர்களை விரிந்த நிலப்பரப்பில் பயிரிடுதல் நிகழ்ந்திருக்கும். இது இயற்கைக்கு முரண்பட்டதாகத் தோன்றினும், உண்மை இதுதான். மாடுகளும் ஆடுகளும் எகிப்திய மெசபெட்டோமிய வேளாண்மக்களால் பழக்கப் பட்டிருந்தன. அவர்களையடுத்திருந்த வேட்டுவ மரபினரிடையே கால்நடை வளர்க்கும் பயிற்சி அதைவிடக் கடுமையான வேளாண்மை பரவுமுன்னரே பரந்து நி லவியிரு க்க வேண்டும் என்பதில் தடையில்லை.(நீராவி இயந்திரம் இங்கிலாந்தில் முதலில் சுரங்கவேலை, பின்னர் நெசவு, இறுதியில் போக்குவரத்து என்றவாறு பயன்படுத்தப்பட்டது. எனினும் தொலைவு நாடுகளில் அப்பயன்பாடு தலை கீழாக, போக்குவரத்து, நெசவு, சுரங்கம் என்று அமைந்தது! 18. வேட்டுவ நிலையிலிருந்து ‘மேய்ச்சல் வாழ்வு’ pastoral நிலைக்கு மாறியதும், பிறப்பு பெருகி இறப்பு குறைந்திருக்கும். குழந்தைகளுக்குக் கால்நடைகளின் பால் கிடைப்பதனால், தாய்ப்பால்கொடுக்கவேண்டிய கால அளவு குறைகிறது. பிள்ளைகள் இறப்பு குறைவதுடன் அவர்கள் வளர்ச்சியும் விரைவா கி ற து . தா ய் க் கு ம் மாட் டு ப்பால் கிடைப்பதன் காரணமாக, பிள்ளைப்பேற்றுத் தளர்ச்சி குறைகிறது. ‘இனப்பெருக்க வன்மையுடைய’ இளமைப்பருவம் தாய்மாருக்கு நீடிக்கிறது. தாயே பால்கொடுக்க வேண்டிய காலஅளவு ஒவ்வொரு பிள்ளைப்பேற்றின் பின்னும் குறைவதனால் பிள்ளைப் பேறும் அடுத்தடுத்து ஏற்படுகிறது. ஓரளவு மக்கள் தொகையினர் வாழ் வதற்குப் போதிய நிலம் சில தலைமுறைகளுக்குப்பின்னர் போதாதாகிறது. முதலில் வேட்டைக்குப் பயன்பட்ட பரப்பு, பின்னர்ச்சில காலம் மேய்ச்சல் நில(முல்லை) வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் நாளடைவில் முல்லை நில வாழ்க்கைக்கும் அது போதாதாகிவிடுகிறது. 19. மேய்ச்சல் நிலத்தின் வளத்தை முழுதும் பயன்படுத்தித் தீர்ந்த பின்பும் மக்கட்பெருக்கம் நிற்பதில்லை; அப்போது அழிவு ஏற்பட்டுத் தானாக வேண்டும். பேரரசுகளையும் வீழ்த்திய ஹிக்ஸா°, ஹுணர், மங்கோலிய, துருக்கிய சர்வநாசப்படையெடுப்புகள் போல. மேய்ச்சல் நிலப்படையெடுப்பாளர் குதிரை வளர்ப்பவராயிருந்தால், அழிவு பயங்கர மாகும். இந்தியா இந்த ஆபத்திலிருந்து ஓரளவுக்குத் தொலைவில் இருந்த போதிலும், அதுவும் பலமுறை இத்தகைய படையெடுப்புகளுக்கு ஆளாகியிருக்கிறது . பாபரி ன் (மங்கோலியர்) 1526 மொகலாயப் படையெடுப்பு இவற்றுள் கடைசியானது எனலாம். வேதங்கள் கூறும் ‘இந்திரன் தலைமையில் நடந்த ஆரியப் படையெடுப்பு’ முதலாவது ஆகலாம். இடைப்பட்ட காலத்துப் படையெடுப்புகள் பல. 20. இந்தியாவினுள் ஆரியர் பெரும்பாலும் கைபர் கணவாய் வழியாகத் தான் வந்திருக்க வேண்டும். பஞ்சாபின் வடக்கு மூலையில் அக்காலகட்டத்தில் மக்கள் நெருக்கம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும். ஆகவே, அதில் அவர்களும் அப்பகுதிவாழ் அவர்களின் கால்நடைகளும் பெருகி வளர இடமிருந்தது. பின்னர் திராவிடர், உடன் ஆரியரின் இனப்போராட்டம் தொடங்கியிருக்கும்- பின் வருமாறு மூன்று படிகளில் (i) முதலாவது (இருக்குவேதம் குறிப்பிடுவது): இதில் கொலையும் கொள்ளையும் இடம்பெற்றன. படையெடுப்பாளரின் விரைந்த போக்கு வரத்து ஆற்றல் (குதிரைப் பயன்பாடு) அவர்களுக்கு பேருதவியா யிருந்தது. எதிர்ப்புமுனை ஒவ்வொன்றுக்கும் எதிராகத் தங்கள் முழுப் படையுடன் போரிட்டு வென்றனர். “உரித்சா விழுங்கப்பட்டது. பாலா வீழ்த்தப்பட்டது. பிப்ருவின் நகரங்களும் ஏழு நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. சுஷ்னாவின் கோட்டைகள் தகர்க்கப்பட்டு. அவன் செல்வத்தை இந்திரனை வழிபட்டவர்கள் கொள்ளை கொண்டனர்.” (ii) இரண்டாவது, படையெடுப்பாளர் எவருக்கும் உடனடி யாகவோ நாளடைவிலோ ஏற்படும் அனுபவத்தால் “கொன்றழிப்பதைவிட திராவிடரை அடிமைப் படுத்தி ஆள்வதே ஆதாயம்” என்று உணர்ந்தனர். இதன்பின் ஆரிய அரசுகள் ஏற்பட்டன. அவற்றைக் காத்தவர் ஆரியப் படை வீரர். திராவிட உழவரும் தொழிலாளரும் உழைத்து அரசை வளப்படுத்தினர். (iii) மூன்றாவது இதிகாசங்கள் காட்டுவதைப்போல. பல்வேறு ஆரிய அரசுகளும் தமக்குள் போரிட்டுக் கொண்டனர்(கட்சி சேர்த்துக் கொண்டு) அவர்களைச் சூழ்ந்து இன்னும் ஆண்டுவந்த திராவிட அரசுகளையும் சில நேர்வுகளில் தேவைக்கேற்பக் கட்சி சேர்த்துக்கொண்டனர். 20.(அ) இரண்டாவது படியிலும், (இன்னும் மிகுதியாக, மூன்றாவது படியிலும்), ஆரியர் திராவிடர் இருவரிடையிலும் பல காரியங்கள் நடந்தேறின. இருவரிடையே மணத்தொடர்புகள் ஏற்பட்டன. எம்மொழியின்கை ஓங்குவது என்பது குறித்து போராட்டம் எழுந்தது. முரடர்களான - ஆனால் மூளைத்திறம் குறைந்த- ஆரியர்கள், வேதங்களில் “திருந்தாப் பேச்சினர்”(the ill-speaking man என்று)தாமே பழித்த திராவிடரின் மொழியினை முயன்று ஏன் கற்கவேண்டும்? மாறாகத் திராவிடரே சம்ஸ்க்ருதம் கற்கவேண்டியிருந் தது.அன்று என்ன நடந்திருக்குமென்பதை அண்மைக் காலத்திய தென் இந்தியாவில் நிகழ்ந்ததிலிருந்தே அறியலாம். (ஆ) டியூப்ளே தோற்றபின் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாண ஆட்சியுரிமை பெற்றது. ஆங்கில மொழித்திறன்தான் ஆதாய ஆற்ற ல் , செல்வாக்கு இவற்றுக்குவழியாயிற்று . காலங்காலமாக எழுத்து, படிப்பு, மூளைப்பணியில் ஈடுபட்டு வந்தவர்களும் வியத்தகு நினைவாற்றல் கொண்டவர்களுமான பிராமண சாதியினர் இதனைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். (இ) இன்றைய(1924) தமிழகத்தில் இன்னும் சில பழைய “கோவில் பிராமணர்”(temple Brahmins) ஆங்கிலத்தை விட சம்ஸ்கிருதத்திலும், ஷேக்ஸ்பியரைவிட வேதங்களிலும் வல்லவர்கள். ஆனால், அத்தகையோர் பிராமணசாதியில் மிகச் சிறுபான்மையினரே. தமிழ்ப் பிராமணரில் பெரும் பான்மையோர் தமிழைவிட ஆங்கிலத்தைத் திருத்தமாகப் பேசுகிறார்கள்; திருத்தமாகவும் விரைவாகவும் எழுதுகின்றனர்; அதிகம் படிப்பது ஆங்கில நூல்களையும் ஆங்கில இலக்கியத்தையுமே . இதனால் அரசாங்க அலுவலகங்களிலும், வாணிக மனைகளிலும் சரி, பணியாளர் யாவரும் (ஏறத்தாழ) முற்றிலும் பிராமணராகவே உள்ளனர். சட்டத்துறை, பத்திரிகைத் துறை முழுவதும் அவர்கள் ஆதிக்கம்தான். 21. இதே சூழ் நி லைகளும் வாய்ப்பு களும் தான் அன்று பஞ்சாபில் ஆரியர் நுழைந்த பகுதியிலும் ஒட்டிய பகுதிகளிலும் உள்ள திராவிடப் பிராமணர்களைத் தூண்டியிருக்க வேண்டும். சம்ஸ்கிருதத்தை அவர்கள் தங்கள் மொழியாக ஏற்றுத் தங்களையே வேதங்களின் காவலராகவும், கொள்கைவிளக்க அறிஞர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். அவர்களுடைய சமய குரு - மந்திரவாத மரபு இவ்வகையில் அவர்களுக்கு ஆதரவாயிருந்தது. ஏனெனில், அம்மரபின் உள்ளார்ந்த தத்துவம் ஒன்றே ஒன்று தான் - ஏதேனும் மறை நுணுக்கத் தத்துவத்தை(recondite or esoteric learning) ஊடுருவி ஆராய்ந்து அதன் மூலம் பொதுமக்களிடமிருந்து தம்மை ஒரு புனித சாதியாக வேறுபடுத்திக் காட்டுவது, அல்லது வேறு எந்த வகையிலாவது செல்வாக்கும் ஆதிக்கமும் பெறுவது, என்பதேயாம். இங்ஙனம் அன்று பஞ்சாப் பகுதி வாழ் திராவிட பிராமணர் சமஸ்கிருதத்தை அல்லது சம்ஸ்கிருதச் சார்பான மொழிகளை அப்பகுதித் திராவிடரிடையே பரப்பும் முயற்சியில் முன்னின்றதனால், மற்றவர் களும் படிப்படியாக, (சிலர் குறைந்த ஆர்வத்துடன் சிலர் மிகுதியான உழைப்புடன்) அதே வழியைப் பின்பற்றலாயினர் எனலாம். சென்னை மாகாணத்தில் ஆங்கிலப் பரவல் வகையில் (1800க்குப் பின்னர்)நேர்ந்தது போலவே அன்று வடநாட்டிலும் நடந்திருக்கும். 22.(i) வட இந்தியத் திராவிடர் இங்ஙனம் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர், ஆரியர்கள் பண்பாட்டில் திராவிட மயமாக்கப் பட்டனர். இதன் முழுமையான விளக்கத்தைப்பின் இயல்களில் காண்க. ஆனால், இம்மாறுபாட்டின் ஒரு கூறு ‘ஆரியர்கள் பிராமண சாதி யினரின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டனர்’ என்பதாகும். (ii) (குருமார் சாதி (priesty caste எனத் தனிப்படப் பயிற்சிபெற்ற குழு எதுவும் இல்லாத) இந்தோ-ஆரிய மொழி பேசுநர் இந்தியாவினுள் புகுந்த பின்னர் இங்கிருந்த திராவிடருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தற்காலிக மாகவாவது, குருமார்சாதி தன் ஆதிக்க நிலையிலிருந்து வீழ்ச்சியடைந்தது. படைவீரர்சாதி அந்த இடத்தில் உயர்வு பெற்றது. சில நூற்றாண்டுகள் வரை இந்த நிலை மாறவில்லை. ஆனால், பிற்றை நூற்றாண்டுகளில் இந்தியச் சூழ்நிலைத் தாக்குதலின் பயனாக இந்நிலை மாறியது. (iii) கோடை வெயிலின் கடுவெப்பம், பருவமழையின் பெரு வெள்ளம், புயல், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவை அனைத்தும் சேர்ந்து வாளோச்சிய (சத்திரிய) மக்களைவிட ‘இயற்கை யாற்றல்களைக் கட்டுப்படுத்தவல்லவர்கள் என்று கூறிக் கொண்ட பிராமணர்களை உயர்ந்தவராக்கின.’ சினங்கொண்டெழுந்த தெய்வங்களை அமைதிப் படுத்திச் சீற்றம் தணிப்பவர்களை மக்கள் மதிக்கும் சூழ்நிலையினால் தான், பிராமணசாதி மீண்டும் தன் முதன்மையை நிலைநிறுத்திக் கொண்டது. (iv) அண்மைக் காலத்தில் முகலாயர் பேரரசுக்காலத்தில் கூட இத்தகைய வீழ்ச்சி மீட்சிகளுக்குச் சான்று உள்ளது. அச்சமயம் ஏற்பட்ட இதே வகைச் சமூக எழுச்சிகளின் பயனாக உயர்நிலையெய்தியவர்கள் சிவாஜியின் மராட்டிய (சூத்திர) சாதியினர். ஆனால், அதனையடுத்து விரைவில் பிராமண ஆதிக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. 23. வேத காலத்திலேயே பிராமணசாதியானது குருதிக்கலப்பால் பெரிதும் ஆரிய மயமாயிருக்கவேண்டும் என்பதையும் உய்த்துணரலாம். ஆற்றல்மிக்க மனிதர் எளிதில், அழகு மிக்க பெண்களை மணக்க முடியும் என்ற நிலையே இதற்குக் காரணம்.  3. திராவிட நாகரிகத்தின் தொல்பழமை ‘ஆரிய சம்ஸ்கிருத நாகரிகமே திராவிட நாகரிகத்தைவிடப் பழமை யானது, இந்திய நாகரிகமே ஆரிய, சமஸ்கிருதத்தில் தோன்றியது’ என்னும் பொதுவான (ஆனால் தவறான) கருத்துக்குக் காரணம் மறுக்கமுடியாத பண்டை எழுத்துச்சான்று களோ,தொல்லியல் சான்றுகளோ தென் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதுதான். விரைவில் அழியும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தியமை, சுவடிகளைப் பனைஓலையில் எழுதியமை, வெப்பமும் ஈரமும்மிக்க தட்பவெப்ப நிலை, பூச்சிகளால் அழிவு இவற்றால் சான்றுகள் அழிந்துவிட்டன. (திராவிட (தமிழிய) நாகரிகம் என்று அனைவரும் ஏற்பதும், கி.மு.3000 லேயே தலை சிறந்து விளங்கிய துமான சிந்து நாகரிகத் தொல்லியல் சான்றுகள் சிலேட்டர் எழுதிய காலத்தில் வெளிவரவில்லை!) 2. தொல்பழங் கோயில்களின் தோற்றக்காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை, ஆயினும் அவை இயேசு பிறப்புக்கு முற்பட்டது என்றோ, அதற்கு அணிமையான தென்றோ கூறுவதற்கில்லை. இந்நிலையிலும், (கல்மாடங்கள் (dolmens), பிறவகை நயமற்ற (rude) கற் சின்னங்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு) மிகப்பழைய எச்சங்களை நோக்கினாலும், அவை தமக்கும் முந்தைய தொல்பழமை வாய்ந்த சிற்பக்கலையிலிருந்து உருவானதைத் தெளிவாகக்காட்டுகின்றன. 3. (i) கருங்கல்லானது சிற்பப் பணிக்கு எளிதாக இடந்தருவது அன்று. ஆனால் பழங்காலக் கற்கோயில் கட்டிடங்களில் மிக நுணுக்க மான அழகிய சித்திர வேலைப்பாடுகள் உள்ளன. பல நூறு ஆண்டு களாக (எளிதிற் செய்யக்கூடிய) மரச்சிற்பவேலையில் பழகிப் பழகித் தேர்ச்சி பெற்ற வேலைத்திறனை நாம் காண்கிறேம். கல்லில் கோயில்களும் அரண்மனைகளும் முதன்முதலில் கட்டிய பிறநாட்டவர் கள், நேரடியாகக் கல்லில் சிற்பவேலை செய்யத் தொடங்கி அந்தக்கல் சிற்பக்கலையையே படிப்படியாக நுண்மையாக மேம்படுத்தி வளர்ச்சி பெற்றார்கள். இந்தியாவில் அப்படிஅல்ல. எடுத்த எடுப்பிலேயே தென்னிந்தி யாவில் கற்சிற்பம் மிகநுட்பம் வாய்ந்ததாக அமைந்ததற்குக் காரணம் இங்கு சி ற் பிகள்மு தலில் மரச்சி ற்பம் போன்றவற்றி ல் நெடுங் காலம் உழைத்துத் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டதுதான். எனவே கற்சிற்ப வேலையில் எவரும் பெற்றிராத சிறந்த நுணுக்கங் களை எடுத்த எடுப்பிலேயே கல்லில் செய்து காட்டியுள்ளனர். (ii) மதுரைச் சிவன் கோயிலிலும் மீனாட்சியம்மன் கோயிலிலும் பார்ப்பவரை மலைக்க வைக்கும் சிற்பங்கள் உள்ளன. ஐரோப்பியர் பலர் பார்வைக்கு அவை அருவருப்பாகக்கூடத் தோன்றலாம். ஆனால், பெரும் பாலான இந்தியர் அவற்றைப் பேரழகும் வீறமைதியும் உடையன என்று கருதி வியக்கின்றனர். (iii) திராவிடக் கோயிற் சிற்பவரலாறு முழுவதையும் பண்டை நகரான காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் பார்த்து விடலாம். அங்கே பாழடைந்த நிலையில் உள்ள தென் இந்தியாவின் மிகப்பழமை வாய்ந்த கற்கோயில்கள், பழமை சற்றுக் குறைந்த ஆனால் பழுதற்ற நிலையில் இன்றும் வழிபாடு நிகழும் கோயில்கள்; நாட்டுக்கோட்டைச் செட்டிகள் செலவில் புதுப்பித்து விரிவுப் படு த் த ப்ப ட்டு வ ரு ம் கோயி ல் க ள் , ஆகிய அனைத்தையும் காணலாம். அவைமட்டு மின்றி நெல்வயல்களினூடாக, (அன்று மரவேலையால் அமைந்த கோயில் முழுதும் கரையானரித்து பலநூறு ஆண்டுகள் ஆகி அழிந்த பின்பும்), அவற்றின் எச்சமாக அன்றே கல்லில் செதுக்கிய கருங்கல் இலிங்கங்களை மட்டும் இன்றும் காணலாம். 4. செம்மணற் கற்களாலும் வெண்சலவைக் கற்களாலும் (red sand stone,white marble) இழைத்த மொகலாயப் பேரரசர் கல்லறை, அரண்மனை, மசூதி ஆகியவை வட இந்தியாவில் வீறுபெற்றுள்ளன. இராஜபுத்திர அரசர் அரண்மனைகளில் காணும் சிற்பங்களை “தென் இந்தியாவில் உள்ள சிற்பங்களையும் விட அழகு வாய்ந்தவையாக” ஐரோப்பியர் கருதுகின்றனர். எனினும் இந்துக் கோயில்கள் என்றால் தெற்கிலுள்ள மாபெரும் கோயில்களின் கம்பீரமும் , கட்டுமானம், சிற்பவேலைச் சிறப்புகளும் வாய்ந்தவை எவையும் வடநாட்டில் இன்று இல்லை. 5(அ) தமிழ்நாட்டில் காவிரி முதலிய ஆற்று நீர்வேளாண்மை சிறந்து விளங்கிய பகுதிகளில் திராவிடக் கோயில்களில் சிற்பம் முதலிய கலைகள் சிறிதும் தடைபடாமல் 1565-இல் விஜய நகரப் பேரரசு விழும் வரைத் தொடர்ந்து வளர்ச்சிபெற்றன. அதற்குப்பின்கூட, தற்காலிக, அரைகுறைத் தடங்கலே ஏற்பட்டது. எடுத்துக் காட்டாக16ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த கலைப்படைப்பு மதுரைத் திருமலைநாயக்கர் அரண்மனைதான்; மேலும் இன்று கூட ( 1 9 2 4 ) இ ரு ப் பு ப் பாதை இணைப் பில்லாத சிலகங்கை நகரைச் சூழ இருந்துகொண்டு தேர்ச்சிபெற்ற இளைஞரைப் பயிற்றுவித்து அனுப்பி, பர்மாவில் அரிசி வாணிகத்தில் பணம் போட்டு அதை வளர்ப்பவர்களும், இந்தியாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் வட்டிக்கடைகள் மூலம் வங்கித் தொழில் நடத்துபவருமான நாட்டுக்கோட்டைச் செட்டிமார் அந்நகரையே பழைய திராவிடக் கலைமரபின் இன்றைய புதிய மைய கலைக்கூடமாக்கியுள்ளனர். இங்கே கலையார்வமிக்க செட்டிமார் தங்கள் நேரடிப் பார்வையிலேயே சிற்ப விற்பன்னர் (மேஸ்திரி)களைப் பயிற்றுவித்து, அவர்கள் மூலம் பிற நகரங்களில் சிவன் கோயில் கட்டுகின்றனர்; பழைய கோவில்கனைப் புதுப்பிக்கின்றனர்; அவர்கள் சாதி மரபு வட்டித் தொழிலில் ஈட்டும் ஆதாயத்தில் பத்திலொரு பங்கை இவ்வழியில் செலவிட வேண்டும் என்பதாகும். (ஆ) இங்ஙனம் ரிக்வேதகாலம் அளவுக்குப்பழமை வாய்ந்த எதுவும் திராவிட கட்டடக் கலைச்சின்னம் எதுவும் இன்று இல்லை எனினும் அக்கலை உருவாகிய சூழல் மொத்தத்தில் திராவிட நாகரிகம் ஆரிய நாகரிகத்தை விடப் பேரளவு பழமையானது என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. 6(i) இலக்கியவகையிலும் நிலை இதுவே. இன்றிருக்கும் இலக்கியத் துறையில் தமிழிலோ மற்ற எந்த மொழியிலோ தொல் பழமைக்குரிய இலக்கியம் இருப்பதாகக் கூறமுடியாது. (சங்க இலக்கியப் பாடல்கள் பல கி.மு. 300வரைச் செல்கின்றன என்பதும் தொல்காப்பியம்-குறிப்பாக எழுத்து, சொல் அதிகாரங்கள் கி.மு. 500க்கும் முன்னதாகலாம் என்பதும் சிலேட்டர் காலத்தி ல் நி று வ ப்படவில்லை) சமஸ்கிருதத்தின் இலக்கிய இலக்கணப் பெருமை முழுவதும் சங்க இலக்கிய காலத்துக்குப்பிற்பட்டதும் தமிழியத் தாக்கம் வாய்ந்ததுவும் ஆகும். (ii)ஆயினும் தமிழின் மொழியியல்பண்பே - நுண்ணிய கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிக்கும் பேராற்றல் பெற் றி ரு க் கு ம் தன்மைதான். மொழிகளின் வளர்ச்சிப்படியில் இந்தோ ஜெர்மானிய (ஐரோப்பிய) மொழி யினம் சொல்திரிபியல் (Inflectional) படியில் உள்ளது. மாறாக திராவிட மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் நிலைக்கு முற்பட்டதான ஒட்டுநிலை (Agglutinative) நிலையில் உள்ளதையும் தமிழின் முழுநிறைச் செம்மையையும் (perfection) இணைத்துப் பார்த்தால், நிலையாக அமைந்த வாழ்க்கை முறை, ஆட்சி முறை ஆகியவற்றைக்கொண்ட திராவிடர் ஏனைய இனங்களுக்கு முற்பட்டே, நனிநாகரிகம் அடைந்துவிட்டவர்கள் என்பது தெளிவு. (iii) ஏனைய நாகரிகம் சார்ந்த மற்றொரு சான்றும் உண்டு கிரேக்க மொழியானது சொல் திரிபியல்(highly inflected)நிலையிலிருந்த கால கட்டத்திலேயே முழுநிறைச்செம்மை அடைந்தது. ஆனால், ஆங்கில மொழி தனது சொல்திரிபு நிலையை Inflections முற்றிலும் இழந்த பின்புதான் முழுநிறை பண்படைந்தது. காரணம் என்ன? கிரேக்க நாகரிக வளர்ச்சி யானது ஆங்கில நாகரிகம் வளர்நிலை அடைந்த கி.பி.1500க்குச் சுமார் 2000ஆண்டுகட்கு முன்னரே உச்சகட்டத்தை அடைந்து விட்டதுதான். திராவிட நாகரிகமும் இதுபோல இந்தோ ஐரோப்பிய மொழி யினங்களுக்கு மிகமுற்பட்ட காலத்திலேயே முழுநிறை பண்பு பெற்றுவிட்டது. 7(i). வருங்காலத்தில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் திராவிட மொழிகள் இரண்டிலும் தேர்ச்சியுடைய ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற் களைக் கூர்ந்து மேலும் ஆராய வேண்டும். அவற்றுள் வடமொழிக்கும், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான சொற்களை வடமொழியிலிருந்து தமிழ் பெற்றுக் கொண்டது என்று கொள்ளலாம். ஏனைய சொற்களை சம்ஸ்கிருதம் ஒன்று தமிழிலிருந்து, பிற திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருத்தல் வேண்டும்; (அல்லது அழிந்து விட்ட வடஇந்தியத் திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருக்க வேண்டும்) இத்தகைய ஆய்வின்மூலம் ஆரியரும் திராவிடரும் முதன் முதல் தொடர்பு கொள்ளும்போது அவரவர் பண்பாட்டு நிலைபற்றி உண்மையை அறிந்து கொள்ளலாம். (ii) தமிழ்-வடமொழிச் சொல்ஒப்பாய்வில் ஓரளவு இறங்கிய ஒருவர் என்னிடம் “பூக்களைப் பற்றிய சொற்களும் மாலை கட்டுவதைப் பற்றிய சொற்களும் திராவிட மொழிகளுக்குரியவை” என்று கூறினார். இது உண்மையாயின் இதுவும் முக்கியமானதே. 8(i) இதுபோலவே தமிழ் ஆண்டுத்தொகுப்பு முறை, (பஞ்சாங்கம்) Tamil calender இவ்வகையில் முக்கியமானது. தென்னாட்டுப்பஞ்சாங்க உருவாக்கத்தில் இரண்டு முறைகள் வழங்குகின்றன: ஒன்று மதத்துறை சார்ந்தது, மற்றொன்று வாழ்க்கைத்துறை சார்ந்தது. முன்னது (தெலுங்குப் பஞ்சாங்கம் உட்பட எல்லா ஆசியப் பஞ்சாங்கங் களையும் போலவே) மதிமுறை(சந்திரமானம்) lunar calender சார்ந்தது. இது பற்றிக் குறிப்பிட எதுவுமில்லை. (ii) ஆனால், சமயஞ் சாராத (தமிழ்)ஆண்டுத் தொகுப்பு civil calender நூற்றுக்குநூறு ஞாயிற்றுச் சார்பானது (சூரியமானம்). (மேனாட்டு முறைபோல, மதி முறைப்படி முதலில் கணித்த மாதத்தை ஞாயிற்று முறைப்படி கணித்த ஆண்டுகளுடன் பின்னர் ஒட்டவைத்து இணைத்துக்கொள்ளும் முறையன்று) சற்றும் மட்டுமழுப் பலில்லாமல் நூற்றுக்குநூறு ஞாயிற்று முறையாகும். ஏனெனில், அது ஒரு மாதத்தில் இத்தனை முழுநாட்கள் இருக்கவேண்டும் என்று கூடப்பார்ப்பதில்லை! வான்மண்டலம் (ecliptic) பன்னிரண்டு மனையகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு ஒரு புது மனையகத்தில் புகும் நேரம் காலையாயினும் சரி, நண்பகலாயினும் சரி, இரவாயினும் சரி, அந்தக் கணத்திலேயே மாதம் பிறக்கிறது. நாட்களும் ஞாயிற்றெழுச்சியுடன் தொடங்குகிறது. (iii)ஆனால், ஞாயிற்றெழுச்சி என்பதும் இந்தியாவில் ஏதேனும் ஒரு பகுதியில் ஞாயிறு தோன்றும் வேளையன்று; உலகநடு நேர் கோட்டை, Equator நடுநிரைகோடு Meridian சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட இலக்கில் ஞாயிறு எழும் வேளைதான் அது. தமிழரின் இந்த நடுநிரைகோடு தமி ழ ருடைய பண்டைய வானியலாராய்ச்சி நிலையம் அமைந்திருந்த இடத்துக்கு நேராயிருந்திருக்க வேண்டும். 9. உலகின் இத்தனியுயர் சிறப்புக்குரிய ஆண்டுக் கணிப்பு முறையை திராவிடர் எப்போது உருவாக்கினர் என்து தெரியவில்லை. ஆனால், அது தனிச் சிறப்புடையது; நடைமுறையில் எவ்வளவு வசதிக் குறைவா யி ரு ந்தா லு ம் அதைப் பொருட்படுத்தாமல் அம்முறை பிடிவாதமாகப் பின்பற்றப்படுகிறது; மற்றெல்லாப் பஞ்சாங்க முறைகளையும் விட அது துல்லியமான வானிலைக்கணிப்பிலிருந்து உருவானது என்பவை குறிப்பிடத் தக்கன. இந்தியாவிலேயே, ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் இல்லாத பகுதி யிவேயே - அதாவது தமிழகத்திலேயே - திராவிட அறிவியல் இங்கேயே தோன்றித் தொடர்ந்து வளர்ச்சி பெற்றிருந்ததை இது நிறுவுகிறது. 10. வேதங்கள் சுட்டும் திராவிட நகரங்கள், திராவிடக் கலைகள் ஆகியவை பற்றிய சில குறிப்புகள் தவிர, திராவிட நாகரிகத்தின் தொல் பழமையை அறுதியிட்டு நிறுவும் வேறு எதையும் இன்று குறிப்பிட இயல வில்லை. (கி.மு.3000லேயே சிறந்திருந்த சிந்து நாகரிகம் பற்றி அன்று தெரியாது) ஆயினும் தென் இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாகரிகமையங்களுக்கும் இடையேயுள்ள தொல்பழந் தொடர்புகளைப் பற்றிய ஏராளமான சான்றுகளை ஜி. எலியட் சுமித், வில்ப்ரெட் எச். °காப், ஜே. வில்ப்ரெட் ஜாக்ஸன், டப்ளியூ. ஜே. பெரி முதலிய பலரின் ஆய்வு நூல்களில் காணலாம். அவற்றையெல்லாம் பொது நிலை வாசகர்க்கும் புரியும்படி பெரி “ஞாயிற்றின் சேய்கள்”(Children of the Sun) என்ற தம் நூலில் தொகுத்துரைத்துள்ளார். ஏனைய ஆதாரங்களில் இருந்து எனக்குக் கிடைத்த ஒரு சில செய்திகள் வருமாறு. (i)லோகன் எழுதிய சிறந்த “மலபார் மாவட்டக் கையேடு”(Malabar District Manual) இல் இந்தியாவின் மேல் கடற்கரையில் இலட்சத் தீவுகளுக்கு தெற்கே மினிக்காய் தீவின் மொழிபற்றிய ஒரு அரிய செய்தியைக் குறிப்பிகிறது. அம்மக்கள் மொழியில் எண்கள் 100-வரை வெளியுலகிலுள்ள பதினடுக்கு முறையல்லாமல், (Decimal system) பன்னீரடுக்கு முறை (Duo- Decimal system)சார்ந்ததாயிருக்கிறது என்பதை அவர் குறிப்பிடுகிறார். மினிகாய் எண்ணுப் பெயர்கள் வருமாறு: 1. ஏக்கே 23. தோலோஸ் எக்லுஸ் 2. தே 24. பஸிஹி 3. தினே 25. பஸிஹி ஏக்கே 4. ஹத்தரி 36. திந்தோலோஸ் 5. பஹே 48. பனஸ் 6. ஹயே 60. பத்தோலோஸ் 7. ஹத்தி 72. பஹித்தி 8. அரெக் 84. ஹைதொலோஸ் 9. நுவே 96. ஹியா 10. திஹே 100. ஹியாஹத்திரி (அல்லது ஸத்திகா) 11. ஏகாரா எக்லுஸ் 101. ஸத்திகா ஏக்கே 12. தொலோஸ் 200. தே சத்திகா.....(என்ற வாறு) 13. தொலோஸ் - ஏக்கே 14. தொலோஸ் - தே ( எ ன் றவாறு ) நூறு என்பதற்கான சொல் இந்தியப் பகுதியிலிருந்து வந்துள்ளது; பன்னீ ரடுக்குமுறை யானது முரணான இடையீடாகவே வந்துள்ளது. அப்பன்னீரடுக்கு முறையின் தோற்றம் எங்கே? பன்னீரடுக்கு முறையைக் கணக்கியலில் நிலைநாட்டுவதென்பது நம்மாலேயே முடியாத செயல்! மினிக்காய்த் தீவிலுள்ள மக்கள் அதைத் தாமே உருவாக்கியிருக்க முடியாது; இந்த இந்தியா விலிருந்தும் பெற்றிருக்க முடியாது. அதற்குரியதாக நாம் நினைக்கக்கூடும் மிக அணித்தான மூலப்பிறப்பிடம் மெசெபொட்டேமியா தான். ஆனால் எண்களுக்கான இச் சொற்களை மேலும் ஆய்வு செய்தால் சால்டியத் தொடர்பை நிறுவமுடியுமா இல்லையா என்பது தெரியவில்லை. (ii) கல்மாடங்கள், கற்பேழை, கற்குவைகள் (dolmens,kistvaens, cairns)ஆகியவற்றில் இந்தியா வ ள முடை யதென் ப து ம் , பண்டைக் கடலோடி இனத்தின் ஞாயிற்றுக்கல் (heliolithic)வணக்க நாகரிகத்தின் தாக்கம் இந்தியாவரை வந்துள்ளது என்பதும் யாவருக்கும் தெரிந்தது, ஆனால் இந்த அளவுக்கு எல்லாருக்கும் தெரியவராத செய்தியும் ஒன்று உண்டு. ஹைதராபாத்துக் கற்குவைகளிடையே ஹைதராபாத்து தொல்லியலாய்வுக் கழகம் நடத்திய ஆய்வில் உள்வெட்டுக்கீற்றுக் (incised) குறிகளுடைய பாண்டங்கள் கிடைத்தன. அவற்றுட் பல குறியீடுகள் ஸர் ஆர்தர் எவான்ஸ் அகழ்வில் கிரீட், மினோவா நாகரிகச் சின்னங்களில் கண்டவற்றுடன் முற்றிலும் ஒத்துள்ளன. (iii) (அ) முதல் உலகப்போர் தொடங்கிய1914க்குச் சற்று முன்பு இந்தியத் தென்கோடியில் ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த நாகரிகச் சின்னங் கள் சென்னைப் பொருட்காட்சி சாலையிலுள்ளன. அவற்றுள் புதைகுழிக்குரிய பெரிய மட்பாண்டங்களும் அவற்றினுள் வளைந்து மடிந்த எலும்புக்கூடுகளும் பல்வேறு வீட்டுவிலங்குகளின் வெண்கல உருவங் களும் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் உயிர்த்துடிப்புடைய தோற்ற முடையது ஒரு சாதாரணத் தெருநாய் ஆகும். (ஆ) உருவங்களில் மிகப்பல எருமை உருவங்கள் ஆகும். இவற்றுள் ஒரு எருதின் உருவங்கூட இல்லை காரணம் என்ன? எருதுகள் இந்தியாவுக்குள் புகுவதற்கு முற்பட்ட (ஆனால் எருமைகளைப் பழக்கியதற்குப் பிற்பட்ட) காலத்தவை. (இ) காட்டெருது(bison,gaur) என்றும் இந்தியாவில் பழக்கப்படவே யில்லை. பழக்கப்பட்ட இன்றைய இந்திய எருது எந்த இடத்திலிருந்து வந்தது எ ன் று தெ ரி ய வி ல்லையாயினும் , அ து இ ந் தியா வு க் கு ம் வெளி யிலிருந்து தான் வந்திருக்க வேண்டும். (ஈ) ஆதிச்சநல்லூர் எச்சங்களுள் மிக மெல்லிதாக அடித்துத் துவைக்கப்பட்ட தங்க நெற்றிப்பட்ட இழைகள் காணப்படுகின்றன. இவைகள் பெரிதும் குருமார்களின் (priests) நெற்றிப்பட்டங்களாக அமைந்தவையே எனலாம். அவை முற்றிலும் மினோவாநாகரிக கிரீட்தீவில் கண்டெடுத்த வற்றைப் போன்றிருக்கின்றன. ஒரு வெண்கல உருவம் எஸ்கிமோ இனத் தவருக்குரிய ஆடையை அணிந்த ஒரு பெண்ணின் உருவம்போலத் தோன்றுகிறது. (உ) இந்தத் தங்க நெற்றிப்பட்டத்தையோ, ஹைதராபாத்துக் கற் குவியல்களில் உள்ள மட்பாண்டங்களின் உள்வெட்டுக்கீற்றுகளையோ சான்றாகக் கோண்டு, ஆரியருக்கு முற்பட்ட திராவிடர்களுக்கும் கினாசஸைத் (Knossos)தலைநகராகக் கொண்டு வாழ்ந்த கடலோடி நாகரிகத்தினருக்கும் நேரடித்தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூற இயலாது. பினீஷியர் களுக்கு முன்னரே மினோவர்கள் நண்ணிலத் கடல் தீரங்களிலும், ஒருகால் பிரிட்டன் உட்பட அட்லாண்டிக் தீரங்களிலும், சென்று பரந்த தொடர்பு கொண்டிருந்தார்கள். ஆனால் செங்கடல், பாரசீக வளைகுடா, இந்துமாக்கடல் ஆகியவற்றுடனும் மினோவா அன்றே தொடர்பு கொண்டதற்கான சான்றுகள் இல்லை. மாறாக மினோவர்கள் மேற்கு நோக்கியும் பினிஷியர் கிழக்கு, தெற்கு நோக்கியும் கிட்டத்தட்ட சமகாலத்தில் பரவத் தொடங்கியிருக்கலாம். சரியொத்த இவ்விரு நாகரிகப்பரவல்கள்தாம் கப்பல்கட்டும் தொழிலை யும் கடல் வாணிகத்தையும் உலகெங்கும் பரப்பினவென்று கருதுவதை விட அவற்றை அவ்விருவருமே எகிப்தியரிடமிருந்து கற்றனர் என்பதே பொருத்தமாகும். ஹைதராபாத் கற்குகைப் பாண்டங்களின் - எழுத்துப் பொறிப்புகள் (letter signs) பெரும்பாலும் பினிஷியத் தொடர்பு, மினோவத் தொடர்பு ஆகிய இரண்டின் விளைவுகளாக இருக்கலாம். பினீஷியக் குருமாரும் நெற்றிப்பட்டம் அணிந்தவர்கள்தாம். (இன்றும் தூத்துக்குடி பகுதிப் பரதவர் களுடைய சாதித் தலைவர்களுக்கு ‘பட்டங்கட்டி’ என்ற பெயர் வழங்குகிறது.) 1 1 . திராவிடக்கலை நேரடியாகவோ மறைமுகமாகவோ கினாசசுடன் (Knossos) தொடர்புறவு உள்ளதாகத் தெரிகிறது. தெய்வங்கள் சிவனைப் போல் ஆண்பாலாயினும் சரி, காளியைப்போல் பெண்பாலாயினும் சரி, இருபால்களுமே மிகைப்படுத்தப்பட்ட ஒடுங்கிய இடையுடையவராக, (அதுவும் இடையை ஒடுக்குவதற்கேற்ற பெல்ட் போன்ற எதுவும் இல்லாமலே) காட்டப்படுகின்றனர். ஆனால் மினோவக் கலையில் இடை இன்னும் சிறிது; ஆனால் ஆடவரும் பெண்டிரும் உலோக ஒட்டியாணம் அணிபவராகக் காட்டப்பட்டுள்ளனர். இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே அணியப் பட்டு என்றும் அகற்றப்படாமல் இருந்திருக்கலாம். இங்ஙனம் இடையைச் சிறுக்கவைக்கும் பழக்கம் இந்தியாவுக்குள் பரவாவிடினும், அப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைமரபு மட்டும் இந்தியாவரை வந்து பரவிற்று என்று தோன்றுகிறது. 12. மக்கள் பழக்க வழக்க மரபுகள், தொன்மங்கள் இவற்றிலிருந்து சான்றுகள் தருவதற்கேற்ற அளவில் எனக்கு நாட்டுப்புறவியல் புலமை போதாதாகையால் ஒன்றிரண்டை மட்டுமே தருகிறேன்: (i) ஏழு அறிவர்களுடனும் பலவகை விதைகளுடனும் ஊழிப் பெருவெள்ளத்தில் மனு மிதந்து நின்றார் என்னும் தொன்மம் பெரு வெள்ளம் பற்றிய பாபிலோனிய மரபின் மறு படிவமே. (ii) ‘கடலைக் கடைந்த கதை’ ஐயத்துக் கிடமின்றிப் பண்டைத் திராவிடக் கடல் வாணிகத்தையே விவரிக்கிறது. தேவர்கள் அமுதம் என்ற தேறலைப் பெறக் கடல் கடைந்தனர். அதற்கான கருவி அமைக்க நாகதெய்வம் ஆகிய அனந்தன் மந்தர மலையைக் கல்லி எடுத்தான். (இந்நிகழ்வின் உட் பொருள் நான்காம் இயலில் விளக்கப்படும்) கடல் கடைந்து கிடைத்த பொருள்கள் வரிசைமுறைப்படி அம்பர் (gums), வாசனைச்சத்துகள் (essences), தங்கம், தேறல், வெண் குதிரை, கௌஸ்துவமணி, இறுதியில் ‘வெண்ணிறக் கலத்தில் வந்த அமுதம்’ ஆகியவை. அவ்வெண்ணிறக் கலத்தைப் அடைய தேவருக்கும் அசுரருக்குமிடையே வாழ்வா- சாவா போராட்டம் ஏற்பட்டது. இறுதியில் தேவர்களே வெற்றி பெற்று அதை மலைப்பகுதிகளுக்குக் கொண்டு சென்று விட்டனர். இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் பொருள் பொதிந்தவை. ஆனால், புதிராக இருக்கும் கேள்வியாவது: “அந்த அமுதம்! ஆ, அது இனிய கள்ளா,(beer) கடுந்தேறலா? கேய்லிக்(Gaelic) கலவை என்பார் சிலர். ஆனால் சாக்சன் ஆகிய நான் ‘சாக்சன் மதுவே’ என்கிறேன்.” ‘கால்வெர்லி’யின் இந்தக் கேலி உண்மையைத் தொனிப்பதாகவே அமைகிறது. ஏனெனில், பின்வரும் இரண்டில் ஒன்றாகவே அது இருந்திருக்கக் கூடும். (1) அமுதத்தேறல் எகிப்தியக் கடுந்தேறலே. 2) அது இனிய கள் (Whisky-toddy) அன்று, கள்ளே Toddy தான் ஈந்துப்பனையின் இனஞ்சார்ந்த பனை அல்லது தெங்கின் வெட்டப் பட்ட பாளையிலிருந்து வடித்துப் புளிக்கவைக்கப்படும் குடிவகையே அது. இந்தியாவில் மிகப்பெரும்பான்மை வழக் குடைய மயக்கக்குடி இதுவே. பிரிட்டனின் கடுந்தேறலை (beer) விட இது கடுமையானது; 8% ஆல்கஹால் உடையது. கள்ளிறக்கும் தொழில் இந்தியாவுக்குக் கடல் வழியாக ஈந்துப் பனையின் தாயக நாடான மெசொபெட்டோமியாவி லிருந்தே வந்திருக்கலாம். 13. இன்றைக்கு 5000 - 4000 ஆண்டு முன்னர் கடல் வழியாக எகிப்திலிருந்து அல்லது பாபிலோனியாவிலிருந்து அல்லது இரண்டிடங்களிலிருந்தும், திராவிட இந்தியா பல பண்பாடுகளின் மூல விதைகளைப் பெற்றது; அவ்விதைகள் இங்கே செழிப்பான நிலத்தில் வேரூன்றி மேலும் வ ள ர் ந் தன எ னலாம். ( திராவிடரைவிடக் குறைந்த சிந்தனையாற்றல் கொண்ட இனங்களிடையே இவ் விதைகள் உணங்கி உயிர்ப்பில்லாச் சின்னங்களாகிப் படிப்படியாக நலிவுற்றப் போயின. “ஞாயிற்றின் சேய்கள்” நூலில் பெரி இதை நன்கு விளக்கியுள்ளார்.) ஆனால், இந்தியாவிலோ இப்பண்பாட்டு விதைகள் மேலும் வளர்ச்சி பெற்றன; திராவிட இனத்தின் உள்ளார்ந்த சிந்தனைத் திறத்தால் தூண்டப்பெற்று, இந்தியத் தட்பவெப்பச் சூழலுக்கேற்ப மேலும் வளர்ச்சி பெற்றது. 14. மேலே கண்டவற்றிலிருந்து, நாம் ஒருவாறு கீழ்க்கண்ட முடிவு களுக்கு வரலாம். (i) ஆரிய நாகரிகத்தை நாம் ஒரு ‘நாகரிகம்’ என்று கூற இயலுமானால், அதைவிட மிகவும் வளர்ந்த விரிந்த திராவிட நாகரிகம் ஆரியர் இந்தியாவில் நுழையுங் காலத்திலேயே திராவிடரிடம் இருந்தது. (ii) திராவிட நாகரிகத்துக்கு பிற நாகரிகத் தொடர்பு உண்டா என்றால், அத்தொடர்பை எகிப்து, மெசபொட்டோமியாவில் தான் தேடவேண்டும். அத்தொடர்பு கடல் வழி வாணிகமே யாகும். (iii) நாகரிக வளர்ச்சியில் மதக் கருத்துக்களுக்கிருந்த வலிமையிலும் குருமார் வகுப்பு சாதிக்கு(priestly class or caste) இருந்த ஆதிக்கத்திலும் திராவிட நாகரிகமானது எகிப்து, மெசெபொட்டோமிய நாகரிகங்களைப் போன்றே இருந்தது. (iஎ) எகிப்தியர் செங்கடலைக் கண்டுணர்ந்து பண்ட் (punt) நாட்டை அடைந்தது, எகிப்து இந்தியத் தொடர்பின் முதற் படியாயிற்று. திராவிடர்களும் தொன்மைக் காலத்திலேயே கடலோடிகளாயிருந்தவர் தாம். ஆனால், அவர்கள் கடலோடிப் பண்பு எகிப்தியரைவிட சற்றுக் குறை வாயிருந்தது. அவர்கள் எகிப்தியப் படகுகளை முன்மாதிரிகளாகக் கொண் டிருப்பர் என்பார் எலியட்ஸ்மித். 15. இவ்விடத்தில் நாம் மேலும் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி உண்டு. மேற்குக் கடற்கரையிலுள்ள ‘அழிபொழி’களும் (back waters) காயல்களும் கடற்பயணத்துக்கு ஒரு நாற்றங்காலாக அமைந்துள்ளவை. இக்காயல்களில் முதற்பயிற்சி பெற்றுப் பின்னர், திறந்த பெருங்கடலில் மேலும் பயிற்சி வளரத் தூண்டுதலாக வடகிழக்குப் பருவக்காற்று சில மாதங்கள் தொடர்ந்து வீசுகின்றது. மேலைக் கடலிலுள்ள சிறந்த மீன்வளமும் அவர்களை ஊக்கியது. (ஆயினும், இந்தியக் கடற்கரையிலுள்ள இதே தூண்டுதல் வாய்ப்புக்கள் ஆப்பிரிக்கக் கடற்கரையின் பல பகுதிகளிலும் இருந்தபோதிலும், எகிப்தியர் நீங்கலாக மற்றப் பகுதிகளில் இருந்த ஆப்பிரிக்க மக்கள் படகு, கப்பல் பக்கமே போனதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது) குறிப்பு: பேராசிரியர் எலியட்ஸ்மித் கருத்து: “ஆதிச்சநல்லூரிலிருந்து நான் இரண்டு மண்டையோடுகளை ஆய்வு செய்தேன். ஒன்று தொடக்ககால அசல் எகிப்திய மண்டையோடு போன்றே இருந்தது. மற்றது சிறிதளவு மாறி இருப்பினும் “சற்றே மாறுபட்ட எகிப்திய தலையோடு” எனக் கூறத்தக்கதுதான்   4. இந்திய சமயக்கருத்துக்கள் தோற்றமும் வளர்ச்சியும் இன்றுள்ள இந்துமதக் கோட்பாடுகளை வேதங்களில் முதன்மையாகக் குறிப்பிடும் தெய்வங்கள், அவற்றின் செய்கைகள் ஆகியவற்றோடு தொடர்பு படுத்திடக் கடுமையான முயற்சிகள் பல இதுவரை நடந்துள்ள போதிலும் ஒன்று கூட வெற்றிபெறவில்லை. இந்திரனை விஷ்ணு, சிவன் இவர்களோடு இணைக்கவே முடியாது, வேதங்களில் காளி வழிபாடு இல்லை; இன்றைய இந்து மதத்தில் மாருத் (Marut) என்னும் வேதக்கடவுளர் இல்லை, ஆகவே வேதங்களை உருவாக்கியவர் எண்ணப்போக்கு வேறு; இன்றைய இந்து சமயத்தின் அடிப்படை எண்ணப் போக்குகள் வேறு. 2. வேத சூக்தங்களும், இந்து சமயமும் வேறுவேறு வகை மனப்பான்மையின் விளைவுகள் ஆகும். வேதங்கள் சிறுபிள்ளைத் தனமான எண்ணவோட்டத்தைப் காட்டுகின்றன - வியத்தகு இயற்கை ஆற்றல்களை, காட்சிகளை தெய்வங்களாகக் கருதி ஒவ்வொரு தெய்வத்தை அப்படியே வேதங்களில் தெய்வமாகக் கொண்டன. நேர்மாறாக, இந்து சமயம் நுட்பமான தத்துவ ஆராய்ச்சிப் போக்கு உடையது; பிரபஞ்சத்தின் அமைப்பு ஆற்றல்கள் இவைபற்றி ஆழமாக மேலும் மேலும் நயமான கோட்பாடுகளை உருவாக்கிச் செழுமையான தத்துவத்தைப்படைத்தது. 3. தென்னிந்தியர் இன்று வணங்கும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றிலிருந்தே நாம் இந்தப்படிமுறைவளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம். எகிப்தின் வரண்ட மணற்பரப்பு கி.மு.3000 லிருந்து அங்கு வாழ்ந்து வந்த மாந்தர் நாகரிக வளர்ச்சியைப் பாதுகாத்து வருவதுபோலவே, திராவிட உள்ளப் பாங்கும், சமுதாய வாழ்க்கை முறையும் இவற்றை மேற்கொண்ட போதும் பண்டைக் கொள்கை கோட்பாடுகளையும் கைவிட்டு விடாமல் (புதியன வற்றோடு முரணாத வகையில்) இன்றுவரையில் பேணிவருவனவாகும். 4. இ ந் தி ய ர் ம த த் தி ன் மி க ப் ப ழ ங் கூறு களுள் ஒ ன் று நா க ம் (நல்லபாம்பு) வணக்கம் ஆகும். இந்தியா முழுதும் அந்நாகம் மிகுதி. இந்திய கிராமப்புறக் கதைகளிலும் நாகதெய்வம் அடிக்கடி வருவதுடன் நல்லவற்றையும் செய் கி ற து . வேத கால த் தி ல் நாக வணக்கம்தான் திராவிடரிடையே ஓங்கியிருந்தது என்பதை ‘நாகர்’ என்ற சொல்லையே பிற்காலத்தில் திராவிடரைச் சுட்டுவதற்காக சம°கிருத இலக்கியம் பயன்படுத்து வதிலிருந்து உணரலாம். 5. பெர்குஸன் (Fergusson) தரும் அமராவதி உருவச் சிற்ப நிழற் படங்களிலிருந்து (The Sun and the serpant பக்.178) புத்த சமயத்திற்கும் நல்லபாம்பு வணக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை நிறுவுவதாக ஓல்டுஹாம் கூறுவார். மேலும் அவர் கூறுவது: “கபிலவாஸ்துவை மகத அரசன் அழித்தபோது இறந்த சாக்கியர்களுக்காக நிறுவிய ஸ்தூபங்களை 1898இல் திறந்த பார்த்தபோது ஒவ்வொன்றிலும் ஒரு நாகவடிவம் இருந்தது. இத்தகைய ஒரு பேழையில் இருந்த தங்க நாகத்தின் மீது மகாநாமன் என்ற பெயர் பொறித்திருந்தது. இவர் புத்த பகவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்; புத்தர் துறவியானபொழுது, தமக்குரிமையான அரசிருக்கையை வேண்டாம் என்று ஒதுக்கியதால் அவ்விருக்கையில் அமர்ந்தவர் இம் மகாநாமனே ஆவார்.” 6. நல்லபாம்பு இந்தியாவுக்கே உரிய பாம்புவகை என்று அழுத்த மாகக் கூறலாம். இந்தியாவில் நச்சுயிரிகளால் ஏற்படும் மாந்தர் சாவுகளில் பெரும்பாலானவை பாம்புக்கடிச் சாவுகளே. அதுவும் பெரும்பாலும் நல்ல பாம்புக் கடிச்சாவுகளே. நிலைமை இப்படி இருக்கும் பொழுது ‘திராவிடர் பாம்பு வணக்கத்தைப் பாரசிக நாடுகளிலிருந்து தம்முடன் கொண்டு வந்தனர்’ என்று ஓல்டுஹாம் கூறுவதும், ‘எகிப்திலிருந்து வந்த பழக்கம்’ என்று எலியட் சுமித், பெரி ஆகியோர் கொள்வதும், (அதாவது இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்தது நாகவணக்கம் என்ற கருத்தை மறுப்பதும்)வியப்புக்குரியதாக இருக்கிறது! 7. பண்டைக்காலத்தில் இந்தியா தவிரப் பிற நாடுகளிலும், எகிப்து உட்பட்ட ஆப்பிரிக்கா, மேனலைஆசிய நாடுகள் பொன்ற வற்றிலும் நல்ல பாம்புகள் இன்றுள்ளதை விட மிகுதியாயிருந்திருக்கலாம். தவிர (எகிப்தியரின் தலயணிச்சூட்டிலும் நல்ல பாம்புருவம் இருந்தது). ஆக, இந்திய சமயத்தின் நல்ல பாம்பு வணக்கம் எகிப்திய நாட்டில் இருந்தும் வந்திருக்கலாம். ‘வெளியிலிருந்து ஏதோ ஒரு வகைப் பாம்பு வணக்கம் இந்தியாவுக்குள் புகுந்தது, என்று கொண்டாலும், அதே இனத்தின் கொடூரமான வகையான “நல்லபாம்பு” இந்தியாவில் மிகுதியாக இருந்தமையால் பாம்பு வணக்கம் எளிதில் பரவி இங்கே நிலைபெற்று வளர்ந்தது என்றும் கொள்ளலாம். 8. தென்னிந்திய மேற்குக்கரை நாயர்கள் மிக முன்னேறிய, படித்த சாதிகளுள் ஒன்றைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழ்வில்(விநோதமான) நிகழ்ச்சி ஒன்றைக்கண்டிருக்கிறேன். கொச்சி அரசின் மாந்தரின ஆராய்ச்சி யாளர் மற்றும் மியூசியம், விலங்குக் காட்சிச் சாலைப் பொறுப்பாளர் அனந்தகிருஷ்ணய்யருடன் நான் திருச்சூரில் ஒரு நாயர் குடும்ப இல்லத் திற்குச் போனேன். ஆங்கில, பிரஞ்சுமொழிகளிலும் பேசும் ஆற்றலுடைய, நாகரிகமிக்க கருநாடக இசையும் வல்ல நாயர் பெண் ஒருத்தி எங்களை வரவேற்றாள். அவள் தம்பி 12 வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டாசிரியர் ஒருவரிடன் அல்ஜிப்ரா பயின்று கொண்டிருந்தான். நாங்கள் வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்துக்குச் சென்றபோது அங்கே மரஞ்செடி கொடிகளுக் கிடையே நாகக் கோயில் ஒன்று சிறிதாக இருந்தது; அதில் கருங்கல் நாக வடிவங்கள் இருந்தன (படம் விரித்த கோலத்தில்). சுற்றிலும் கம்பி வேலிகள் இருந்தன. தோட்டத்தில் உயிருள்ள பாம்புகளும் இருந்திருக்கும். ஆனால், என் கண்ணில்படவில்லை. இக்கோவிலுக்கு உரியநாட்களில், காலங்களில் வந்து ஒரு நம்பூதிரி பிராமணன் பூசை செய்துவந்தான்- பாம்புகள் அவ்வீட்டு மக்களைக் கடிக்காமலிருப்பதற்காக. 9. நல்லபாம்பை மிகப்பழமையானதெனக் கருதத்தக்க மற்றொரு அசல் திராவிடர் தெய்வம் முனிசாமி. முனிசாமி என்றால் ‘கடுஞ்சினமிக்க தெய்வம்’ என்றுபொருள்; பொல்லாத தெய்வம். சிலவகை மரங்களிலும் வீடுகளிலும் அவர்குடிகொண்டிருப்பார். தான் இருப்பதைத் தெரிவிக்க, யாராவது ஒருவருக்குத் தீங்கு விளைக்கும் வகையில் முனிசாமித் தெய்வம் ஒரு மரத்தின் கிளையை கீழே செல்பவர், வாழ்பவர் ஆகியோருக்குத் தீங்கோ சாவோ ஏற்படும் படி முறிந்துவிழச் செய்யும். முனிசாமி இருப்பதாகத் தெரிந்தாலோ ஐயப்பட்டாலோ அவருக்குக் கோபம் தணிக்கப் பூசைகள் போடப்படும். முனிசாமி இருக்கும் மரத்தடியில் சிறு கை விளக்கேற்றி அவரைச்சாந்தப் படுத்தலாம். அவ்வப்போது பழம், பூக்களையும் வைத்துக் கும்பிடலாம். வீட்டில் முனிசாமி குடியிருந்தால் ஆண்டுதோறும் விழாஎடுத்து பூசை போட்டாக வேண்டும். 10. முனிசாமி வணக்கம் தென்னிந்தியா முழுவதும் இருக்கிறது. குறும்பில் அவர் இங்கிலாந்து ‘பக்’ போன்ற தமாஷ் பேர்வழி! சென்னை யில் அவர் எழும்பூர் மியூசியப் புறவெளியில் ஒரு மரத்தடியில் இருக்கிறார். புராட்டஸ்டண்ட் கிருத்தவ மாவட்ட பிஷப் இல்லத்திலுள்ள ஒரு மரத்தடியும் முனிசாமி இருப்பிடம்தான்! மேனாட்டு அறிவியல், கிறித்துவ சமயம் இவற்றை யாரும் கண்டு கொள்ளாமல், அவ்விரு மரங்களினடியிலே சிறு விளக்குகள் எரிந்து வந்தன - இன்றும் எரிந்துகொண்டிருக்கலாம்! 11. முனிசாமி கோயில் ஒன்றுக்கு ஒரு ஆண்டுப்பூசைச் செலவுக்கு என்னிடம் பணம் கேட்டபொழுது, முனிசாமி வீடுகளிலும் இருப்பார் என்றுஉணர்ந்தேன். முனிசாமி புகுந்திருந்த வீடு முன்னர் படைத்தலைவர்(Commander in Chief) இருந்த வீடேயாகும். பின்னர் அது பலவகையில்பயன்பட்டு, இறுதியில் அரசுத்துறைப் பணிமனையிடங்கள் அங்கு இருந்தன. 12. “முனிசாமி அந்த வீட்டில் குடிகொண்டுள்ளதாக கருத என்ன சான்று? ஏதாவது ஆபத்து நடந்துள்ளதா?” என்று கேட்டேன். “இது வரை ஒன்றும் செய்யவில்லை தான். ஆயினும் ஒரு வீட்டில் ஒரு தடவை பூசை நடத்திவிட்டால் ஆண்டு தோறும் தொடர்வதை விரும்புவார்; நிறுத்திவிட்டால் மிகவும் சீறியெழுவார்; இந்தப் பொது விதிக்கு எத்தனையோ சான்றுகள் உண்டு.” என்று தெரிவித்தனர். உதகமண்டலத்திலுள்ள ஒரு பயங்கர நிகழ்ச்சியும் எடுத்துக்காட்டப்பட்டது. அங்கு ஒரு வீட்டை இந்தியரிடமிருந்து ஐரோ ப் பி ய ர் வா ங் கி , பின் ன ர் பூசையைத் தொட ர் ந் து ந ட த்தா ம ல் நிறுத்திவிட்டார். தொடர்ச்சியாக அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் எத்தனையோ பெருங் கேடுகள் நடந்தன. இறுதியில் பழைய பழக்கத்தை மீண்டும் தொடர்ந்தபின் கேடுகள் நின்றன. இதைக்கேட்டதும் அதன்படியே நானும் பூசை நிதிக்கு என் பங்கு கொடுத்தேன். பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் ஆடு வெட்டப்பட்டு போதிய சாராயத்துடன் முனிசாமியின் குறைதீரப் பூசையும் விருந்தும் படைத்தளிக்கப்பட்டன. எஞ்சிய உணவையும் சாராயத் தையும் வழிபட்டாளர் உண்டு பருகித் தீர்த்தனர். ‘முனிசாமிக்கு நல்ல குணமும் உண்டு; தன்னை வழிபடுபவர் மனமார இன்பமுறுவதைத் தான் அவர் விரும்புவார்’ என்றும் பூசைபோட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். 13. பாம்பு வணக்கம் இந்தியாவில் முதலில் தோன்றியதன்று. மூலத் தாயகமான எகிப்திலிருந்து வந்ததென்று ஒ த் து க் கொண்டா லும் கூட, ‘இப்பாம்பு வணக்கத்துக்கும் முனிசாமிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்ன தொடர்பு?’ என்ற வினா எழுகின்றது. இதற்கு விடையளிப்பது திராவிட எண்ணஓட்டத்தை அறிவதைப் பொறுத்தது. தென் இந்தியாவில் கல்வி அறிவைப் பொறுத்தது. தென் இந்தியாவில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பிக்கும் அனுபவமுடைய எவருக்கும் இது தெரியும். *(இவ்வகையில் திராவிட சிந்தனையில் தனிப் போக்கான சமூக இயல் விளக்கத்தை இயல் 5- இல் காண்க) திராவிட எண்ணஓட்டத்தின் முனைப்பான பண்பு ‘எந்த சிகழ்வானாலும் சரி நிகழ்வுகளிலிருந்து, பொதுவான கோட்பாட்டை கற்பனை செய்துவிடும் பண்பு’ ஆகும். ஒரு நிகழ்விலிருந்து அவசரமாக, அறை குறையாக ஒரு பொது விதியமைதி(general principle)க்குத் தாவிவிடு வார்கள்! அந்த பொது விதியிலிருந்து மேலும் பல கற்பனைகளையும் செய்துகொள்வார்கள். இத்தகைய மனப்போக்கு பொது இயல்பு என்பது வெளிப்படத்தெரியும். இதனால் ஏற்படும் கேடுகள்பல. முதலில் போதிய சான்று இன்றி அவசர அவசரமாகப் பொதுக் கோட்பாடுகளை எந்த உறுதியான ஆதாரமும் இன்றி உருவாக்கிக்கொள்வார்கள்; அப்படி மூடத்தனமாக பொதுவிதி அமைத்துவிட்டால் அதை எளிதில் கைவிட்டுவிட அவர்கள் இசையவே மாட்டார்கள். 14. நாக வணக்கம் பற்றி நமக்குக் கிட்டும் மிக முற்பட்ட சான்று களிலிருந்தே அது அன்றே நிலைபெற்றுவிட்டது என்றும், அரசியல் அதிகாரம் சார்ந்த வழிபாட்டு முறையாக, அல்லது தங்களையே நாகர்கள் எனப் பிறர் கருதி அஞ்சிடவிரும்பிய சிறுசிறு அரசர்கள்(petty kings) அரசியல் சார்வழிபாட்டு முறையாக அதைப் புகுத்தியிருக்கலாம். புதிய கலை, தொழில்கள் புதிய கோட்பாடுகளை கொண்டுவந்து, அவற்றின்மூலம் ஆற்றலும், ஆதிக்கமும் பெற்ற அயலார்கள் இவ்வழிபாட்டு முறையைப் புகுத்தியிருக்கலாம் என்பதை உணரலாம். அது மட்டுமல்ல இந்தியாவில் ஏற்கெனவே நல்லபாம்பு நிரம்பிய பயங்கர சூழல்நிலையில் , அரசியல் அதிகாரம் வாய்ந்தவர்களுக்கும் குருமார்களுக்கும் (Priests)ஆதாயம் தரும் நாக வழிபாடு சேர்ந்து கொண்டது. அஞ்சத்தகு நல்ல பாம்பு வணக்கத்தை ஏற்ற அந்த வேளையில், ‘அச்சந்தரும் பிறவற்றையும் வணங்குவது தக்கது’ என்ற பொதுக் கோட்பாடும் உருவானது. 15. (i) முன் சொன்னதன் மறுதலையாக, நன்மைதருவது, தரக்கூடியது எனக்கருதுவதையும் வணங்க வேண்டும் என்ற கருது கோளும் சேர்ந்தது; ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆயுதபூசைக்கு இதுவே காரணம். ஆயுதபூசை நாளில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் தன்தொழிற் கருவியை வணங்கு கிறான். கல்லூரி மாணவன் தன் பாடப் புத்தகங்கள், கல்லூரி ஆசிரியர் சொல்லும் குறிப்புத் தொகுப்பு, (lecture notes), தன் ஊற்றுப்பேனா இவற்றை வணங்குகிறான். குதிரை வண்டி கார் ஓட்டுபவன் தன் முதலாளி வண்டியை காரை வணங்குகிறான். தொழிற்சாலைப் பணியாட்களும், முதலாளி இசைவுடன் இயந்திரங்களுக்கு ஆடு பலியிட்டுப் பூசைபோடுகின்றனர். தொழிற்சாலை மேலாளர் ஒருவர் “தொழிற் சாலையையே ரத்தக்களரியும் அசிங்கமும் செய்துவிடு கிறார்கள்” என்றார் என்னிடம். (ii) மேற்குறிப்பிட்ட கொடூரமான பூசைகள் மட்டுமின்றி, அருவருப்பும் அச்சமும் தராத சிறு பூசனைகளும் நடக்கின்றன. என் மோட்டார் பைக்கில் உள்ள சிறு தெய்வத்துக்குச் மஞ்சள் நெய்ப்பூச்சும், ஒன்றிரண்டு ஊது பத்திகளும் போதியவை. நண்பரின் பொறிவண்டிக்குப் பழங்களும் விளக்குப் கில்பெர்ட் ஸ்லேட்டர் பூசையும் போதியவையாயிருந்தன.மேலும் மாலையில் ஒவ்வொரு சக்கரத்துக்கு முன்பும் கைவிளக்கு வைத்தனர். வண்டிஓட்டி என்னிடம் “அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கு இவ்வண்டியில் செல்பவர்களுக்குத் விபத்துகள் வாராமல் காப்பதற்கு இந்தப் பூசனை போதும்,” என்று கூறினான்! 16(i) இத்தகைய நகைப்பிற்கிடமான கருத்துக்களிலிருந்து திராவிட எண்ணஓட்டம் ஒரு பாரிய பெண்தெய்வக் கருத்தை உருவகம் செய்தது. தாராளமானது ஆனால் பயங்கரமானது; அளவிலாத ஆற்றலுடையது ஆனால் ஏன் என்று புரியாத வகையில் அழிக்கவும் வல்லது(at once lavish and terrible;fickle and incomprehensible and therefore female). அத் தெய்வமே (ஊர் அம்மன்) அம்மை நோய், காலரா, பஞ்சம் ஆகியகேடுகளைத் தரக் கூடியதாயினும், அதேசமயம் பயிர்ச்செழிப்பும் பயிர் விளைச்சலும் வளமை யான வாழ்வும் தரவல்லது. (ii) இந்த கிராம தெய்வத்துக்குப் பல இடங்களில் பல பெயர்கள் உண்டு. பெரும்பாலும் தெலுங்கு நாட்டில் கங்கம்மா என்றும், தமிழகத்தில் மாரியம்மன், மாரியாத்தாள் என்றும் அழைக்கப்படுகிறாள். (ஒயிட் ஹெட் எழுதிய, “தென் இந்தியாவின் சிற்றூர்த் தெய்வங்கள்” ) (iii) அவள் பண்புகள் காளியின் பண்புகளுடன் நூற்றுக்கு நூறு ஒத்தி ருப்பதால், இருவரையும் ஒரே தெய்வமென்றே எண்ணலாம். இருவருமே உருண்டு திரண்ட உறுப்புக்களும், மட்டுமீறி மிக ஒடுங்கிய இடை, கொலை ஆயுதங்கள் தாங்கிய மிகப்பல கைகள், இவற்றை உடையவளாய், தளராது ஆடிக் கொண்டே இருக்கும் இயல்பும் உடையது இப்பெண் தெய்வம். இந்தியாவில் இயற்கையன்னை நற்காலங்களில் இனிய வளமும், பிற காலங்களில் பேரழிவும் பெருஞ்சாவும் தருகிறாள் அல்லவா? அது போன்றதே இப்பெண் தெய்வமும். (iv) சில ஊர்களில் ஊர்த்தெய்வங்களுக்கு வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 12 ஆண்டுகளுக்கொருமுறை பூசையிடப் பெறுகிறது. சில இடங்களில் தொடர்ந்து மழைபெய்யாத காலங்களிலும், கொள்ளை நோய் வந்து அவள் கோபக்குறி காட்டும் சமயங்களிலும் மட்டுமே பூசை. இத்தெய்வம் இரத்த வெள்ளப் பலியில் மகிழ்கிறது. பெரும் எண்ணிக்கை யில் சேவல், ஆட்டுக்கடா, செம்மறி ஆகியவை பலியிடப்படுகின்றன. எருமைக்கடா பலிதான் இத்தெய்வம் மிக விரும்புவது. 17. தெலுங்கு நாட்டு மக்கள் உள்ளத்தில் கங்கம்மாவுக்கு ஈடான மதிப்பு வேறு எதற்கும் கிடையாது. ஆனால் அவர்கள் மனப்பாங்குமாறி இன்றும் பூசைமுறைகள் மாறாவிட்டாலும் பூசை செய்யும் அன்பர் மனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பகமான செய்திகள் உள்ளன. ஒரு வேளை பிரிட்டிஷ் ஆட்சியாளர் வந்து நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் காத்து, “கடவுள் இருப்பது பரமண்டலத்தில், எனினும் பூமண்டலத்திலும் அவர் அதிகாரம் நிலைநிற்கும்” என்ற நன்னம்பிக்கைக் கருத்தை ஊட்டியதால் இம்மாறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணலாம். இதன் பயனாகத் தெலுங்கு நாட்டு மக்கள் கங்கம்மாளை அஞ்சுவதை விடுத்து அன்பு செலுத்தத் தொடங்கியுள்ளனர்; தீமைகளைத் தரும் தெய்வமாகக் கருதாமல், ‘தடுத்தாண்டு மக்களைப் பாதுகாப்பவள்’ என்று பலர் கருதுகின்றனர். 18. அன்பாதரவும் பாதுகாப்பும் தரும் ஒரு தெய்வத்தை விரும்பும் இதே மனத்தேவையைத்தான் பழங்காலத்தொட்டுத் தமிழ் நாட்டில் ஐயனார் தெய்வம் நிறைவேற்றுகிறார். கங்கம்மாவும் அவள் தங்கையரும் ஊர்ப் பெண்தெய்வமா யிருப்பதுபோல, அவர் ஊர் ஆண் தெய்வமாவார். வழக்கமாக அவர் ரத்தப்பலி கோருவதில்லை. ஆயினும் அணிமையில் சென்னை B&C பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய போது, ‘தங்கள் குறைகள் அனைத்தும் தீர்ந்தாலல்லாமல் தாம் வேலைக்குப் போவதில்லை’ என்று ஐயனார் சான்றாக உறுதி கூறியிருந்தனர். ஆனால் சிறிது சாதகமான சமரசத்தின் மீது வேலைக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தொழிலாளிகள் தம் உறுதிமொழியை மீறிய தண்டமாக அவருக்கு ஒரு ஆட்டைப் பலிதந்தனர். 19(i)ஒவ்வோரிரவும் தீய ஆவிகளின் தொல்லையிலிருந்து ஊரைப் பாதுகாக்க ஐயனார் ஊரில் வலம்வருகிறார். எனவே வளமான ஊர்களில் மக்கள் அவர் தங்குவதற்கு சின்னஞ்சிறு கோயில் ஒன்று கட்டித் தருகிறார்கள். இவ்விடத்திலிருந்து கூடியமட்டும் தொலைபரப்புவரை சென்று சுற்றிப்பார்க்க வசதியாக, அக்கோயில்கள் உயர்ந்த மேடு அல்லது பொற்றையின் மீது அமைக்கப்பெறுகின்றன; வெளியிலுள்ள ஒரு நிலைமேடை மீது இரண்டு குதிரை உருவங்கள் உள்ளன. செங்கல்லும் நீறும் கொண்டு கட்டிச் சுண்ணாம்பு பூசி இக்குதிரைகள் வழக்கமாக “ஷயர்” (shire) பொலி குதிரையின் அளவாக உள்ளன. ஒவ்வொரு குதிரையின் பக்கத்திலும் குள்ளமான ஒரு குதிரைக்காரன் சிலை, ஐயனார் ஏறுவதற்கு வாய்ப்பாகக் குதிரையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறது. (கும்பகோணம் ஐயனார் தலைக்கோயிலில் ஒரு குதிரையும் ஒரு யானையும் உள்ளன. ஆனால் இப்படி கில்பெர்ட் ஸ்லேட்டர் நான் கண்ட இடம் இது ஒன்றே). (ii) இவ்வளவு வளமாக ஐயனாருக்கு வாய்ப்புச் செய்ய முடியாத ஊர் க ளி ல் மரத் தடியில் ஊர்வெளியில் அவருக்கு ஓர் உறைவிடம் தருகின்றனர்; அரைகுறை வேலைப்பாடுடைய பொள்ளலான (hollow terracotta) மண்குதிரையை வைத்து அவர் தம் வேலையைச் சமாளித்துக் கொள்வார் என்று நம்புகின்றனர். இத்தகைய இடங்களில் ஆண்டு தோறும் அவருக்குப் புதுக்குதிரைகள் செய்தளிக்கின்றனர். (இக் குதிரைகள் உடைந்து தகர்ந்து, சிலவற்றுக்கு வாலில்லை, சிலவற்றுக்குத் தலையில்லை; பலவற்றுக்கு நாலுகாலுமே இல்லை; குதிரைப்பொம்மைகளின் எண்ணிக்கை மட்டும் பெருகி விடுகிறது!) 20(i) மேற்கூறிய சமயமுறைகள் யாவும் திராவிட சமயக் கருத்துக்களின் வ ளர்ச்சி வரலா ற்றில் தொடக்கக்காலம் சார்ந்தவையே. (மிக முக்கியத்துவம் வாய்ந்த)“உயிர்கள் கருக் கொள்வது எப்படி” என்ற பிறப்புத் தத்துவம் பற்றிய மெய்ம்மை biological facts relating to paternity. கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலம் அது. இத்தத்துவத்தை நேரடியாகக் கண்டுணர்வது கடினம்; இதனை நாடிப்பெறும் முயற்சியிடையே எத்தனை, எத்தனை வகையான முடக்கற்பனைகளைக் கொண்டிருந்தனர் என்பதை“முற்காலப் பிறப்புத் தத்துவங்கள்”.Primitive paternity: என்ற நூலில் இ.எஸ். ஹார்ட்லண்டு கூறுகிறார். பண்டை உலகில் நாகரிகம் தோன்றிய இடங்களுள் ஒன்றில் இம்மெய்ம்மை கண்டுணரப்பட்டிருக்க வேண்டும்; பின்னர் உலகெங்கும் மிகவிரைவிலேயே பரவி இன்று மிகக் கீழான நிலைநாகரிக மக்களுக்கும் அது தெரிந்திருக்கிறது. ஆயினும் முதலில் அதை அறிந்திட உயர்ந்த அறிவாற்றல் தேவைப்பட்டிருக்கும். (ii) வீட்டில் பழக்கிய விலங்குகள் சினையாகிக் குட்டிபோடுவதைக் காணும் முதல்குறிப்புத் தந்தன என்று வைத்துக் கொண்டாலும் கூட, விலங்குகளைப் போலத்தான் மனித இனமும் என்று உணரப் பெருந் தயக்கம் ஏற்பட்டிருக்கும். உண்மையை முதன்முதல் கண்டுணர்ந்த மக்கள் அதற்கு முன்னர் வேட்டை நிலைக்குப் பக்கத் துணையாக சிலகாலம் வேளாண்மையைக் கைக்கொண்டு, பின் வேளாண்மையையே முக்கிய தனித் தொழிலாக்கிக் கொண்டவர் களாயிருக்க வேண்டும். மனிதஉடல் உழைப்புக்கு உ தவியாக அவ ர் க ள் எ ரு து களைப் ப ய ன் ப டு த் தி க் கி டைத் த மி கு தி வருவாயினால், ஒரு சிலராவது சிந்தனை செய்து பொழுதுபோக்கும் அளவுக்கு ஓய் வுள்ளவர்களாயிருந்திருக்க வேண்டும். (iii)தாமாகவே, பிறரிடமிருந்து அன்றி, இந்த மெய்ம்மையை மக்கள் கண்டு கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியா ஒன்று என்று தோன்று கிறது. இதற்கு முன்னரே இந்தியா மிக உயர்ந்த மூளைத்திறம் அமையப் பெற்றிருந்தது. இதனைக் கண்டுபிடித்தபின் அம்மெய்ம்மையின் வியத்தகு சிறப்பு வேறெந்த நாட்டையும் விட இந்தியாவில் மக்கள் உள்ளத்திலும் சமயக்கருத்துக்களிலும் ஆழ்ந்து பதியலாயிற்று. 21 (i) ஸ்பென்ஸர் & கில்லென்(Spencer&Gillen) கூறுகிறபடி, ஆஸ்திரேலியாவின் பழங்குடி tribeகளில் பலர் இன்னும் கருவாதலும் பிறப்பும் (ஒதுக்கிடங்களில் கரந்துரையும்) ஆவிகளின் மூலமே ஏற்படுகிறது பெண்களை, சிறப்பாக இளமையும் உடல்பொலிவும் உடைய பெண்களைக் கண்டால், அவ் ஆவிகள் வாய்ப்பு வரும்பொழுது அப்பெண்கள் உடலில் புகுந்து புதுஉயிர்களாக (மாந்தக் குழந்தைகளாக) உருவா கின்றனர் என்று கருதுகின்றனர். இந்திய மக்களின் மூளைத்திறன் காரணமாக, இங்கே எழுந்த ஊகங்கள் பலதிறப் பட்டவை. ஆயினும் இங்குள்ள சுயநலப் புரோகித வகுப்பினர் (priestly castes)ஆஸ்திரேலியப் புதர்மக்களிடையே உள்ள மூடக் கருத்தையே எடுத்துக் கொண்டு (போலியான ஒரு) தருக்க வாத logic கோட்பாட்டு முறையை உருவாக்கினர். (ii) பெண் உடலில் ஓர் ஆவி புகுவதன் மூலமே குழந்தை உருவாகிறது என்றால், அந்த ஆவி எங்கிருந்து வருகிறது? இறந்துவிட்ட ஏதேனும் ஒரு உடலிலிருந்துதானே வந்திருக்க வேண்டும்? இக் கருத்திலிருந்தே படிப்படியாக உயிர்களின் பிறப்பு இறப்புத் தொடர்ச்சிக் கொள்கை Idea of the Transmigration of souls வளர்ந்தது. மாந்தக் குழந்தை பிறப்புக்கு விலங்குகள், செடியினங்கள் காரணம் என்ற பழைய கொள்கை போய் விட்டபோதிலும், மறுபிறப்புக்கொள்கையின் transmigration வளர்ச்சியில் பழையதன் சாயல் இடம் பெற்று “எல்லா உயிர்வகைகளிடையேயும் ஒரேமாதிரியான தொடர் ஒற்றுமைக்” கருத்து நுழைந்தது. இத்துடன் தொடரும் பல பிறவிகளில் தாழ்ந்த நிலை உயிரினங்களிலிருந்து படிப்படியாக மிக உயர்படியிலுள்ள உயிரினங்களை நோக்கி ஓர் உயிர் முன்னேறுகிறது என்ற பிறவியுயர்வுக்கோட்பாடும் உருவானது. (iii) மறுபிறப்புக் கொள்கையுடன் வினைப்பயன் கொள்கையும் Doctrine of Karma சேர்ந்தது. இரண்டும் ஒரே முழுநிறை தத்துவ முறைமை ஆனது. இது இந்து சம யத்துக் கு ம ட்டுமன்றிப் புத்தச மண சமயங்களுக்கும் அடிப்படையானது. “வினைப்பயன் கோட்பாடு”(karma) என்பது ஒழுக்கத்துறை சார்ந்த ஒரு காரணகாரியக் (moral causation) கோட்பாடேயாகும். அதன்படி ஒவ்வொரு பிறப்பிலுமுள்ள ஒவ்வொரு செயலும் அதன் நீக்கமுடியாத பயனை விளைவிக்கிறது. நற்செயலிலிருந்து இன்பமும், தீச்செயலிலிருந்து துன்பமும் உண்டாகின்றன; அந்த இன்பம் துன்பம் இப்பிறப்பிலேயே விளையாவிட்டால், கட்டாயமாக அடுத்த பிறவிகளில் விளைகிறது. 22 (i) மறுபிறப்புக் கோட்பாடும் வினைப்பயன் கோட்பாடும் தோன்று வதற்குக் காரணம் மடத்தனமே (delusion)ஆயினும், அவற்றின் அபத்தம் காணப்பட்டபின்பும், மனித மூளைக்கு (human intellect)அவை முழு மனநிறைவு தந்ததால், அவை கைவிடப்படவில்லை. ஏனெனில் எந்த நீதி நேர்மை முறையைப் பற்றிய அறிவோ வந்ததும், அதைப் பிரபஞ்சம் முழுவதும் முழுநிறைவடிவில் புகுத்த வேண்டுமென்று மனித உள்ளம் அவாவுகிறது. மேலும் புராட்ட°டன்ட் கிறித்தவரின் சுவர்க்க- நரகக் கோட்பாட்டை விட “மறுபிறப்பு - வினைப் பயன் கோட்பாடு” மனித ஆவலை முழு அளவில் தீர்ப்பதாய் அமைந்துள்ளது. சுவர்க்கம், நரகம், இடைப்பட்ட Purgatory என்ற கத்தோலிக்கக் கிறித்தவரின் கோட்பாடு கூட அதற்கு ஈடாகாது. (ii) விவிலிய நூலில் யோபு வுக்கு துயரத்துடன் ஆறுதல் கூறவந்தவர் களுக்கு மட்டும் மறுபிறவிக் கோட்பாடு தெரிந்திருந்தால் பின்வருமாறு எளிமையாகச் சொல்லிவிட்டு ஒதுங்கியிருப்பார்கள்(யோபு Job ஐசோதிக்க கர்த்தர் அவனுக்குத் தாங்கொணாத இன்னல்களைத் தருகின்றார். இத் தூயவனுக்கு வந்த வாதைகளைக் கண்டு அனைவரும் வருந்துகின்றனர். இறுதியில் கர்த்தரே அவன் இன்னல்களைப் போக்குகிறார்.) “என் அருமை யோபு, நீ இப்பிறப்பில் நன்மதிப்புக்குரிய முன்மாதிரி ஒழுக்கம் உடையவன் தான். ஆனால் உன் முற்பிறவிகளில் நீ கொடுமையான தீவினைகளைச் செய்திருப்பாயே; அவற்றின் பயனை நுகருமுன் நீ இறந் திருப்பாய். அந்தப்பழந் தீவினைக்கான தண்டனையை இப்பிறப்பில் அனுபவிக்கிறாய். இப்பொழுது படும்பாடு எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவு விரைவாக உன் பழந்தீவினைப் பயன் ஒழிந்து விடும். இப்பிறப்பில் நீ செய்யும் நல்வினைகளுக்கான நற்பயனை அடுத்த பிறவியில் எய்தி மகிழ்வாய்,” 23. வினைப்பயன் (கர்மம்) கொள்கை மனிதன் தன் இன்னல்களைப் பொறுமை யுடன் தாங்கிக்கொள்ளப் பேருதவியாக இருப்பது உண்மையே. ஆனால், இக்கொள்கை காரணமாக இந்தியர் பிறர் துன்பங்களை ‘அவனவன் முற்பிறவிப்பாவங்களின் பயன்’ என்று எண்ணி வாளா இருப்பதைப் பிறநாட்டார் சரியெனக் கருதுவதில்லை. நடைமுறை அரசியலிலும் சமூகக் கொடுமைகளைக் கண்டு சினங்கொண்டு தீர்க்க முயலும் மனப்பான்மை உருவாவதை இது தடுக்கிறது; அம்மனப்பான்மை உருவாகவும் தடையாகிறது. “பிராமணன் தனிச்சிறப்பும் உரிமையும் உடையவனாகவும், பறையன் சண்டாளன் இழிநிலை அடிமை யாகவும் இருப்பதற்கு முன்வினையே காரணம். நல்வினைகள் செய்தவன் பிராமணனாகப் பிறக்கிறான். பறையனாகப் பிறப்பவன் முன் பிறவியில் விலங்காகப் பிறந்தும் நன்மை செய்தமையாலோ, அல்லது உயர் வருணத்தில் பிறந்து தீவினைசெய்ததன் தண்டனையாகவோ அப்பிறப்பை அடைகிறான். இப் பிறவியில் பறையன் நல்வினை செய்தால் உரியகாலத்தில் இன்னொரு பிராமணனா கலாம், இப்பிறப்பில் பிராமணன் தீயன செய்தால் அதற்குத் தண்டனையாகப் பின்னர் பறையனாகவும் பிறக்கலாம். இத்தகைய எண்ணவோட்டங்களை மறுபிறவிக் கொள்கை உருவாக்குகிறது. 24. வினைப்பயன் கோட்பாட்டின் இன்னொரு பலனாவது: விலங்கு கள் பறவைகளை இந்தியர் நடத்தும் முறை, பிரிட்டிஷ் (ஐரோப்பிய) முறைக்கு நேர் மாறானது. இந்துவுக்கு ஒருவிலங்கை, பறவையை விரைவாக வலி யின்றிக் கொல்வதும், கொலைக் குற்றத்துக்கு ஒப்பாகும். ஆனால் பசிபட்டினி, நோய் இவற்றால் ஓர் விலங்கு பறவை எவ்வளவு வலியும் துன்பமும் சித்திரவதையும் அடைந்து உயிர்விட்டாலும், அதை அப்படிச் சாகவிடுவதையே நல்ல செயல் என்று இந்தியர் கருதுகின்றனர். அதுமட்டு மன்று. “சித்திரவதை செய்வதுகூட விலங்குக்கு துயர் தருவதால் தீச்செயல்” என்று இந்தியர் கருதுவதில்லை; ‘சித்திரவதையைச் செய்பவர்கள், பார்த்திருப்பவர்களுடைய உணர்வை மரத்து மழுங்கச் செய்வதனால்தான் தீங்கு’ என்றும் இந்தியர் கருதுகின்றனர். தெருநாய்களை கொன்றழிக்கும் முறையை மேற்கொள்ள பம்பாய் நகரரட்சி கருதியபோது, கண்டித்துப் பொதுவேலை நிறுத்தமே நடந்தது. ஆனால் நேர்மாறாக, கோடைக்கானல் நகராட்சி வண்ணார் கழுதைகளைக் கொடுமைப்படுத்துவதை தடுக்கக் க ரு தி ய போது , வண்ணார்கள் வேலை நிறுத்தம் செய்து தடுத்து நிறுத்திவிட்டனர்! 25. மறுபிறவிக்கோட்பாட்டினால்தான் நோயும் ஆபத்தும் விளை விக்கும் எலி, சுண்டெலி, நோய்க்கிருமி எவற்றையும் இந்தியர் கொன் றொழிக்க இசைவதில்லை. ஆனால் குதிரை, வண்டிமாடு போன்றவற்றை வேறு எந்த நாகரிக நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியர் இங்கே கொடுமைப்படுத்துகின்றனர்! காரணம் என்ன? எலி ஒன்றை அதன் விதி முடியு முன் கொன்றால், அதன் ஆன்மா இந்தப் பிறவியில் வினைப் பயனை ஒழிக்க முடியாமல் போவதுடன் அடுத்த பிறவியில் உயர் பிறவியாக முடியாமல் எலியாகவே மீண்டும் பிறக்கவும் நேரிடுகிறது! உயிரின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றிலிருந்து அடுத்தபடிக்கு காலத் தாழ்வின்றிப் போவது தடுக்கப்படுகிறது. ஆனால் குதிரைகள், எருதுகளை எப்படிக் கொடுமைப்படுத்தினாலும், அவை கொடுமைகளே ஆகமாட்டா! அக்கொடுமை கள் யாவும் குதிரை எருதின் ஆன்மாவுக்கு நற்பயன் கணக்கில் ஏறி, அதன் உயிர் உயர்பிறவிக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும். 26(i) மறுபிறவிக் கருத்து இந்து , புத்த, சமண சமயங்கள் மூன்றிற்கும் பொதுவாயினும், சமணமே இதனை நூற்றுக்கு நூறு வலியுறுத்துவதாகும். சமணமும் புத்தமும் ஏறத்தாழ சமகாலத்தில் தோன்றியவை. ஆனால் இந்தியாவில் புத்தசமயம் அழிந்து போயிற்று. சமண சமயத்தவரோ 1911-இல் பன்னிரண்டரை இலட்சம் பேர் இந்தியாவில் இருந்தனர். சமணருள் பெரும் பாலோர் பெருஞ்செல்வரும் படித்தவர்களும் ஆகையால் அவர்கள் பிற இந்தியர்களை விடப் பொருளாதார அரசியல் அதிகாரம் வாய்ந்தவர்கள். (ii) அண்மையில் 1920களில் ஆஜ்மீர் பக்கத்தில் ஒரு சிறுத்தையை உயிருடன் பிடித்தபோது, சமணர்கள் கூடி, பணம் திரட்டி அதை விலைக்கு வாங்கி உயிரோடு காட்டில் விட்டுவிட்டனர்! சிறுத்தையின் உயிரைப் பாதுகாத்து புண்ணியம் அடைந்தனர். (iii) புத்தசமயப்பேரரசர் அசோகர் அவர்காலத்தில் மனிதருக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் ஏற்படுத்தியிருந்தார். அதேமாதிரி விலங்கு மருந்துவமனைகளை (பிஞ்சரப்போல்) சென்னை யிலும் தென்இந்தியாவின் மற்ற இடங்களிலும் சமணர்தம் செலவில் இன்றும் நடத்தி வருகின்றனர். அது மட்டுமா? நோய் வாய்ப் பட்ட பூச்சிகளுக்கு மருத்துவம் செய்யவும் சில ஜீவத்கானா மருத்துவமனைகளைச் சமணர் நடத்துகின்றனர். அவற்றைப் பற்றி எனக்கு முழுவிவரங்கள் தெரியாது. 27. சமண, புத்த, இந்து சமயங்கள் மூன்றுக்குமே அடிப்படைக் கோட் பாடுகள் பொதுவானவையாயினும் சமணமும் புத்தமும் ஆர்வத்தால் ஒரு படி மேற்சென்றுள்ளனர். புத்தரும் சமணரும் நல்வினையின் பலனைக் காட்டி ஊக்கி, மற்ற உயிரினங்களின் ஆன்மிக முன்னேற்றத்துக்கு உதவ முனை கின்றனர். இதைப் பர்மாவில் காணலாம். (1924.இல்- ஏன் 1935 வரை பர்மாவும் இந்தியாவின் ஒரு மாகாணம்தான்) அதன் புத்த குருமார் ஊர் தோறும் ஊரவர் வாழ்வை ஒழுங்கு படுத்துகின்றனர். அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பர்மா உச்ச உயர்நிலை அடையச்செய்துள்ளனர். பர்மியருக்கே தனிப் பண்பாயுள்ள நல்லமைதியும்(peculiar gentleness), அவர்கள் சீரான வாழ்க்கையும் புத்தகுருமார் கொடையே ஆகும். 28(i) ‘மனிதர் கருவுற்றுப் பிறத்தல்’ தெரியவந்த பின்னர் சிவன், விஷ்ணு ஆகிய புதிய தெய்வங்களை உருவாக்கினர். ஒரே தெய்வத்தின் இருவேறு வடிவங்களாகிய இவர்களைச் சில இடங்களில் சிவன் என்றும் சில இடங்களில் விஷ்ணு என்றும் அழைக்கிறார்கள் எனலாம். இந்தியர் அல்லாத பிறர் எண்ணத்தில் திருமால் பொதுவாகப் படைப்பு, காப்பு இவற்றையும், சிவன் அழிப்பையும் நடத்துபவர்கள்; இவர்களுடன் படைப்பவன் பிரமனும் சேர்ந்து மும்மூர்த்திகளாக ஆகிறார்கள். (ii) ஆனால் சிவன் அடிப்படையில் அழிவுக்கடவுள் அல்ல; பிறப்புக் கடவுளே (god of procreation). அவர்அடையாளமே பிறப்புக்குரிய ஆண் குறியின் வடிவமாகிய இலிங்கம் *(உயிரின் குறியீடு). கோயில்களில், கோயில்களுக்கு வெளியில், (கோயில்கள் இல்லாமலே) வெட்ட வளியில் கூட, இலிங்கங்களை கல்லில் நிறுவி வணங்குகின்றனர். தென் இந்தியாவின் முக்கிய சாதிகளுள் ஒன்றைச் சேர்ந்த லிங்காயதர் (Lingayats)தங்கள் கழுத்திலேயே சிறு இலிங்கங்களை அணிந்து கொள்கின்றனர். லிங்கம் பற்றிய இந்தியர் கருத்தை மதுரையில் சிவன் - மீனாட்சி கோவில் சிற்பம் ஒன்று காட்டும் பழங்கதை விளக்குகிறது. “நீண்ட நாளாகப் பிள்ளை வேண்டித் தவங்கிடந்த முதிய தாய் தந்தையர் இறுதியில் அவ்வரம் பெற்றனர். ஆனால், வரம் ஒரு மாதிரியாக அமைந்தது! தாய்தந்தையர் இறந்த பின்னரும் வாழும் தீயொழுக்கமுள்ள வீணனும் தாம் இற ந்தபின் பிள்ளையில்லாதவர் செ ல்லும் பழியுலகிலிருந்து அவர்களைக் காப்பதற்கு, அவர்கள் இறுதிக் கடனாற்றுபவனுமான வீணன் வேண்டுமா? அல்லது அழகிய , நல்லொழுக்க முடைய, ஆனால் தாய்தந்தையருக்கு முன்னரே, தன் இளமைப் பருவத்திலேயே இறந்துவிடும் புதல்வன் வேண்டுமா? என்று தெய்வம் கேட்டது. தாய்தந்தையர் பிந்தியவகைப் புதல்வனையே தேர்ந்தனர். நல்லொழுக்க முடைய அப்புதல்வன் சிவபெருமானைப் பூசனை செய்து, காலன் தன் உயிரை எடுக்க வந்தபோது, இலிங்கத்தை இறுதிப்பற்றிக் கொண்டதனால், யமன் அவனை அசைக்க முடியாது போயிற்று. தாய் தந்தையர் சாகும்வரை இளைஞன் அவர்கள் வாழ்வின் ஒளியாயிருந்தான்.” 29(a) சிவனைப்போலவே விஷ்ணுவும் தொடக்கத்தில் பிறப்புத் தெய்வந்தான் (god of procreation). அவர் குறியீடாகிய நாமம் கலவிச் சின்னம் (act of coition). அது ஆண் பக்தர்களின் நெற்றியில் வெண் சுண்ணம் செஞ்சுண்ணத்தால் வரையப்படுகிறது. சிவனைப் போலவே அழித்தலும் விஷ்ணுவின் துணைப்பண்பாகும். திருமால் நெறி யி ன ரி ன் முக்கிய திருநூலான பகவத்கீதை இதை நன்கு தெளிவுபடுத்துகிறது. b) கிருஷ்ணன் ஆகப் பிறந்த விஷ்ணு குருட்சேத்திரப் போரில் அருச்சுனனுக்குத் தேரோட்டியாகிறான். போரிலீடுபட்ட பாண்டவரும் கௌரவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளானாலும் உறவினர். உறவினர்களை அழிக்கும் போரில் இறங்க அருச்சுனன் தயங்கி, கண்ணனிடம் கேட்கிறான். “உறவினரைக் கொல்வது பாவம் அல்லவா? இவ்வழிவு பொது அமைதிக்கேடு,பெண்கள் ஒழுகக்கேடு, சாதிநெறிக் குழப்பம், சமயக் கடமைப் புறக்கணிப்பு இவற்றுக்கு வழிவகுப்பதல்லவா? அத்துடன் இறுதிக் கடனாற்ற வேண்டியவர்கள் சாவதால் முன்னோர் நரகத்துக்கு செல்லவும் வழிவகுப்பதாயிற்றே! இப்படுகொலையில் ஈடுபடுவதைவிட, எதிர்தரப்பார் கைப்பட்டு இறத்தலே சிறந்ததல்லவா?’ கண்ணனோ “உன் கடமை போர்செய்து வெற்றிபெறுவதே,” என்கிறான். அத்துடன் தனது விரிவான பகவத்கீதை விரிவுரையில் வைணவ தத்துவங் களையும் தன் இயல்பையும் விளக்குகிறான். “நான் இன்றுள்ளன யாவற்றையும் விழுங்கும் காலன். இனி வரப்போகும் யாவற்றுக்கும் மூலமும் நானே.” இங்ஙனம் கூறிவிட்டு, அருச்சுனனுக்கு கண்ணன் பின்வரும் விஸ்வ ரூபத்தைக் காட்டுகிறான்:- “பல வாய்கள், கண்கள்; தெய்விக அணிகலன்கள் பல. தெய்விகப் படைக் கலங்கள் தாங்கி, வியக்கத்தக்கவனாய் எல்லையற்றவனாய், திசைஅத்தனையிலும் திரும்பிய முகங்களுடையவனாய், வானில் ஆயிர ஞாயிறெழுந்தாற்போன்ற பேரொளியுடைய வனாய்” அதைக் கண்டு மலைப்பெய்து மிரண்ட அருச்சுனன் மொழிகளிடையே, அவன் பின்வருவதையும் கூறுகிறான்.“உன் பற்கள் காலத்தின் அழிவுக்கனல் (Time’s destroying flames) போன்றிருக் கின்றன. நம் படைகளின் தலை சி றந் த வீரர்களெல்லாம் உன் திறந்த வாய்க்குள் பாய, அவர்கள் தலைகள் நெரிந்து தவிடுபொடியாக அரைக்கப்படுகின்றன. தீயையே நாக்காய்ப்படைத்த நீ, எல்லாம் விழுங்குகிற நீ, மனித இனம் உட்பட யாவற்றையும் விழுங்குகிறாய்.” 30. திருமாலும் சிவனும் இருவேறு பெயர்களில் விளங்கும் ஒரே கடவுள்தான் எனினும் திருமால் வ ட இந்தியாவுக்கும் சிவன் தென்னிந்தியாவுக்கும் உரியவராகக்கூடும் (தென்னாடுடைய சிவனே போற்றி- திருவாசகம்). ஆனால், இருவரில் ஒருவரும் வேதத் தெய்வமல்ல. சைவப் பெருந்தலைவர் சங்கராச்சாரியும், வைணவப் பெருந்தலைவர் இராமானுஜாச் சாரியும் திராவிட இந்தியாவிற் பிறந்தவர்கள்தான். எனினும் சிவனும் விஷ்ணுவும் நூற்று க்கு நூறுதிராவிடக் கடவுள் ஆக இல்லாமலும் இருக்கலாம் . சிவன், திருமால் ஆகிய இரு தெய்வங்களும் இந்தியக் கடவுளரே, திராவிட மூளையின் படைப்புக்களே என்றாலும், அவர்கள் வேதகாலத்துக்குப் பின்னர் உருவாக்கப் பட்டவர்கள், ஓரளவு ஆரியர் நுழைந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் திராவிடர் உருவாக்கிய கடவுள்களாகவும் இருக்கலாம் என்று கருத இடமுண்டு. 31(i) முன்பத்தியிற் சொன்னதன் அடிப்படை என்ன? காளிக்கு எருமையுடன் தொடர்புண்டு; சிவனுக்கு எருதுடன் தொடர்புண்டு. மேலே குறித்தவாறு இந்தியக் காளையானது இந்தியாவுக்குப் புறம்பான காட்டு எருது வகையி லிருந்து உருவானது என்பது உறுதி. எனவே, அக்காளையை நாடோடி முல்லைநில மக்கள் யாரோ (ஆரியர்களாகவும் இருக்கலாம்.) கொணர்ந்தனர் என உன்னிக்கலாம். இந்திய சமயம் மாட்டிறைச்சி உண்பதைத் தடுக்கிறது, சிறப்பாகப் பசுக்கொலை கூடாது. இந்தியாவுக்குள் நுழைந்த புதியவர்கள் தங்கள் கால்நடைகளைக் காப்பதற்காக அவற்றை, சிறப்பாகப் பசுவைக் கொல்வதைக் கடும் குற்றமாக, பாவமாக ஆக்கியிருக்க வேண்டும். இத்தடை முழுப் பயன் தரும் வகையில், தாங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே இந்தியாவிவிருந்த திராவிடரும் கடைப் பிடிக்கச் செய்திருக்க வேண்டும். (ii) சி வ னும் வி ஷ்ணுவும் காளையுடன் தொட ர் புடை ய வ ர் க ள் . கண்ணனின் பெயர்களுள் ஒன்று இராசகோபாலன்(king cowherd) என்பது. ஆழ்ந்து பார்த்தால் வேதகாலத்துக்கு முன்பே திராவிடர்கள் எருமையைப் பழக்கி நெல்வயலை உழுததுடன் எருமையை வளப்பந்தரும் அன்னை (goddess of fertility) உடன் சேர்த்துப் போற்றினர். ஆயினும் அவர்கள் எ ரு i ம யி ன த் i த n ம ம் ப டு த் து ம் முறையே breeding மேற்கொள்ள வில்லை. எருமைக்கன்று உருவாவது பற்றியும் அறியார். பிற்காலத்தில் வந்த (எருமையைவிட மதிப்பு வாய்ந்த) காளையையும் பசுவையும் கண்டபின்னரே, எருமைகளும் மாடுகளும் ஒன்று போன்றவை என உணர்ந்திருப்பார்கள். (iii) ரிக்வேதம் இலிங்க பூசையைக் குறிப்பது கண்டிப்பதற்குத்தான். வேதகால த் து க் கு மு ன்பே வி ஷ்ணு, சி வ ன் இ வ ர் களைத் திராவிடர் வழிபட்டுவந்தனர் என்பதை இது காட்டுகிறது. எலியட்சுமித் கூறுவது போல், எகிப்தில் தாய்த்தெய்வத்தின் மூலவடிவம் ஒரு தெய்விகப் பசுவே. எகிப்தில் அது கி.மு. 4000 முதல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தெய்வீகக் காளையும் சம முக்கியத்துவம் அடைந்திருந்தது. எனவே ஆரியருக்கு முற்பட்ட காலத்திலேயே எகிப்தியத் தொடர்பு காரணமாக சிவன்- காளை இயைபு, பசுவின் புனிதம் பற்றிய கோட்பாடுகள் இந்தியாவில் நிலை பெற்றிருந்தது என்ற கொள்கைதான் (மேலே(ii)ல் சொன்ன கோட்பாட்டை விட) வலுவானதாகத் தோன்றுகிறது. 32(i) சிவன், திருமால் இவர்களைவிட பிரமன் மக்கள் செல்வாக்கில் மிகவும் குறைந்த தெய்வம். சிவனுடனும் திருமாலுடனும் பிரமன் திருமூர்த்தி வடிவில் இணைக்கப்பட்ட வகையிலும்,(பிற்கால இந்திய சமய தத்துவத்தின்படி, பரம் பொருளுக்குரிய (universal spirit) பெயர் ஆகிய பிரம்மா என்ற பெயரிலும்) அன்றி வேறெந்த வகையிலும் தென் இ ந் தியாவி ல் பி ர மனுக் கு ம தி ப் பு இ ல்லை பி ர மனுக் கு ரி ய ஒரே பெருங்கோயில் இராஜபுதனத்தில் ஆஜ்மீர் அருகிலுள்ள புஷ்கரத்தில் உள்ளது. ஆயினும் திருமால், சிவன் போலவே பிரமனும் வேதத்தெய்வம் அன்று. ‘பிரம்மா’ பிராமணசாதி ஆகையால் பிரமனும் வேதகாலத்துக்கு முற்பட்ட காலத்தவனே என்று கூறலாம். (ii) “ஞாயிறும் பாம்பும்” (The sun and the Serpem) என்ற நூலில் ஓல்டு ஹாம் இராஜபுத்திர அரசரில் சூரிய, சந்திர மரபு, இரண்டுமே நாகர் அல்லது திராவிடமரபுகளே என்று கருதுகிறார். எகிப்திலிருந்து தான் கீழ்த்திசைநோக்கி ஞாயிறு, பாம்பு வணக்கங்கள் விரிந்து பரந்துள்ளன என்று எலியட் ஸ்மித் சான்றுகளுடன்கூறுவதும் ஓல்டுஹாமின் இம்முடிவை ஆதரிக்கிறது . எனவே எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதிரவன் தெய்வமே பிரமன் என்று நாம் கருதலாம். 33(i) திருமாலும் சிவனும் விலங்குப் பலி கேட்பதில்லை. ஆனால், அவர் களைப்பற்றிய புராணக்கதைகளில் வருவது போல் கன்னிப்பெண் கேட்கின்றனர். பல வழிகளில், கொடுமையான வழிகளிலும், சிறு பெண்களைப் பிடித்து , இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக உருவாக்குகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் சமய முக்கியத்துவம் வாய்ந்திருந்தால், அங்கு மேகநோய்கள்(venereal disease) மிகுதி எனலாம். (ii) 1917-இல் கும்பகோண நகரின் மக்கள்தொகை விவரங்களைச் சரிபார்க்கும் பணியைச் சென்னை மாகாண அரசு எனக்குத் தந்தது. பல ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் மிகக் குறைந்து1000க்கு 30-ஐ ஒட்டி ஊசலாடிக் கொண்டிருந்தது. அரசு ஊழியர்கள் பிறப்புக்களிற் பலவற்றை ஒழுங்காகப் பதிவு செய்யவில்லை என அரசு ஐயுற்றது. ‘நகர மன்றம்’ அதனை மறுத்தது. மாவட்ட கலெக்டரும் ஆராய்ந்து, நகரவை முடிவு சரியென்றார். (iii) நான் கும்பகோணம் நகரமன்ற அலுவலாளர்களிடம், பிறப்பு விகிதம் குறைவாயிருப்பதற்குக் காரணம் கேட்டேன். அவர்கள் உடனே “இங்கே பன்னிரண்டு பெருங்கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வென்றிலும் தேவதாசிகள் இருக்கிறார்கள்” என்றனர். மருத்துவ விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் பாதிப்பேர் வெள்ளை, வெட்டை (gonorrhoea, Syphilis) முதலிய மேகநோய் கடுமையாக பீடித்தவர்கள். பலர் ஆயுர்வேத மருத்துவர்களிடம் வெளியே சிகிச்சைபெற்றுக்கொண்டவர்கள். பிராமண இளைஞர் ஒருவர் “இவ்வூர் பிராமண மாதரில் ஐந்தில் நான்குபேர் இந் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்று கூறினார். (iv) அம் மருத்துவமனைக்கு (வெளிநிலை நோயாளித் துறை உட்பட) பொறுப் பேற்று 30 ஆண்டு மருத்துவராயிருந்த ஒருவர் இந்தக் கருத்து சரியே என்றார். பிராமணர்களைவிட சௌராஷ்டிரரின் நிலை இன்னும் மோசமானது; ஏனென்றால் அவர்களிடையே ஆண்களும் பெண்களைப் போலவே ஒழுக்கங்கெட்டவர்கள்; அத்துடன் மற்றவர்கள் அளவுக்கு பால்வினை நோயைத் தடுக்கும் முறைகளையும் அவர்கள் அறியாதவர்கள்” என்று கூறினார். 34(i) பிற்காலச் சமயக்கருத்து வளர்ச்சிபற்றி நான் சுருக்கமாகத்தான் குறிப்பிட இயலும். ஞாயிறுக்கு வாழ்க்கைத் துணைவி வேண்டுமென்று கருதியவர்கள். சில இடங்களில் நிலவை(Moon goddess) துணைவி யாக்கினர். சிலர் நிலமகளைத் தேர்ந்தெடுத்தனர். பிரமன் துணைவி யாகிய சரஸ்வதியையும் (அறிவுத் தெய்வம் நான்முகனைப் போலவே வானில் உறைபவள்) திங்களோடு இணைத்தனர், படைப்புத் தெய்வத் துடன். பிறப்புத் தெய்வத்தை இணைப்பது இயல்பாகலின் விஷ்ணுவை லட்சுமியுடனும், சிவனைப் பார்வதியுடனும் இணைத்தனர். (ii) படைப்புப் பற்றிய சைவப் புராணக்கதை எளிமையும் தத்துவ ஆழமும் உடையது. சிவனும் பார்வதியும் செடியினங்கள் உயிரினங்களை உருவாக்கிட அரும்பாடுபட்டபொழுது அந்த வேலை எளிதில் இயலுவ தாக இல்லை சிவபிரான் சிந்தித்தார். அவரது வலத்தொடை இடத் தொடைகளிலிருந்து முறையே ஆண் காதல் தெய்வம் ஒன்றும், பெண் காதல் தெய்வம் ஒன்றும்(male and female Cupid) தோன்றி, ஆண் பெண்கள் உள்ளங்களில் பால் உணர்ச்சியைத் தூண்டினர். அதன்பின், படைப்பு வேலை எளிதாகவும் மும்முரமாகவும் நடந்தது. (iii) சிவபெருமானை அவருக்குரிய மனைவியுடன் இணைக் காமல், காளி, துர்க்கை என்ற பழம் பெண்தெய்வங்களுடன் இணைக்கும் போக்கும் இருந்து வருகிறது. மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் சிவனையும் மீனாட்சியையும் மணமுடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி நடக்கிறது. அவர்கள் இருவரும் ஒரே பெரிய கோவிலில் ஒருங்கு வாழ்கிறார்கள். ஒவ்வொரு இளவேனில் பருவத்திலும் அண்டைச் சிற்றூர் ஒன்றிலிருந்து மீனாட்சியின் அண்ணனை அவர் வீட்டிலிருந்து வர வழைத்து அவர் முன் திருமணம் நடத்த ஏற்பாடாகிறது; அவர் புறப்பட்டு வருகிறார். ஆனால் வைகையாற்றின் நீர்வற்றிய ஆற்றுப் படுகையை அவர் கடக்கும் நேரத்தில் ஆண்டுதோறும் அவர் கூட்டத்தவருள் ஒருவருடைய அமங்கலமான தும்மல் அவரைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடுகிறது. திருமணமும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. மீனாட்சி உண்மையில் திராவிடரின் பொது ஊர்த்தெய்வமாகிய ஊரம்மனின் உள்ளூர் வடிவமே. 35. அசோகர் புத்த சமயத்தைச் சிந்துகங்கைவெளி உட்பட ஏறத்தாழ இந்தியா முழுவதுமே அரசு சார்ந்த சமயமாக ஆக்கினார். சமண சமயமோ இன்னும் தெற்கே பரந்திருந்தது. சிவநெறி விஷ்ணு (திருமால்) நெறி இரண்டுமே புத்த சமண சமயங்களைத் தீவிரமான பிரசாரத்தினாலேயே வென்றன. இத்துடன் இன்னொரு பண்பும் அவர்கட்கு உதவிற்று. புத்த சமய தத்துவக் கருத்தான நாத்திக philosopic atheism கோட் பாட்டைவிட, பல புராணச் சூழல்களை உடைய ‘மனிதன் போன்றே நடந்துகொண்ட தெய்வங்களையே’ மாந்தர் பெரிதும் விரும்புவர். அத்துடன் புத்த சமயத்தின் எளிய வாழ்வையும் இளந்துறவையும் austerity and celibacy விரும்பாமல் பரம்பரையாய் புரோகிதம் செய்த பிராமண சாதியினரும் மனிதரைப்போலவே நடந்து கொண்ட anthropomorphic க டவுளையே மிக விரு ம் பினர் . எனவே அவ ர் க ள் பி ர சா ர த்தா ல் அத்தகையதெய்வங்களையே பெருமளவுக்குச் சாதாரணப் பொதுமக்களும் விரும்பலாயினர். 36. இந்தியாவின் நிலவியல் அமைப்பு வடக்கே இமயமலைச்சுவர் வட இந்தியாவில் தடைகளெவையுமில்லாத சமவெளி (இந்தியாவின் பிற பகுதிகளைவிடச் செழித்து மக்கள் தொகை மிக்கது அது) இவை காரணமாக வடஇந்தியாவில் பேரரசுகள் பல எழுந்தன. ஒரு பேரரசுக்கும் அடுத்த திற்கும் இடைப்பட்ட காலங்களில், சிற்றரசுகளும் தலைவர்களும் போரையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினர். போரிடுவதால் பிழைத்தவர் கள் தவிர ஏனைய சிந்தனையுள்ள மக்கள் அமைதியை நிலைநாட்டும் பேரரசையே விரும்பினர். 37. இதே மனப்பான்மையுடன் மதத்துறைச் சிந்தனையாளரும் சிறு சிறு தெய்வங்களை ஒன்றாக்கிட விழைந்தனர். இந்தியர் உள்ளம் அளவைத் (தருக்க) நூல் வழியே செல்வதாகையால் பொதுமை ஒருமை கோட்பாடுக்குச் சென்றது யார் உருவாக்கிய தெய்வமாயினும் சரி, ஆண் தெய்வமாயினும் பெண் தெய்வமாயினும் சரி அவையனைத்தும் ஒரே கடவுளின் படிவங்கள் தான் என்று இந்திய மெய்யியலறிஞர்கள் கூறினர். அது மட்டுமா, உயிர்களும் உயிரில்லாப் பொருள்களுங்கூட வெறும் மாயத் தோற்றமே; 82 இந்தியப் பண்பாட்டில் திராவிடக் ஸதமிழியக்] கூறுகள் அனைத்துக்கும் பின்னர் இருப்பது உருவங்கடந்த ஒரே அடிப்படைப் பொருள்(reality). அதுவே கடவுள் என்றும் சாற்றினர். 38. மந்திரவாதத்தின் ஆற்றல் பற்றிய நம்பிக்கை இன்றும் கொஞ்சமும் குறையவில்லை . தங்கம், வெள்ளி, மணிக்கற்கள் அணிந்தால் நற்பலன் வரும் என்று அனைவரும் நம்புகின்றனர். பாம்புக் கடியை மந்திரம் சொல்லி குணமாக்கலாம் என்று பட்டதாரிகள் கூட என்னிடம் பகர்ந்துள்ளனர். 39. நச்சுப்பொடியை (corrosive sublimate) மருந்தாகக் கொடுத்து ஒரு பெண்ணைச் சாகடித்தஆயுர்வேத மருத்துவர் ஒருவர் சென்னை நீதி மன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். ‘முப்பு’ விட்டு நச்சுத்தன்மையை முறித்துத்தான் கொடுத்தேன் என்றான் கொடுத்தவன். முப்பு என்றால் என்ன? என்பதை தெரிவதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி தமிழ் லெக்சிகன் தொகுக்கும் குழுத்தலைவர் மூலம், பண்டிதர்களைக் கேட்டு அறிந்தது. “முப்பு என்றால் மூன்று உப்பு. சரியான முறையில் (உரிய மந்திரங்களைச் சரியாக ஓதிச்)செய்த முப்புவை அப்படியே விழுங்குபவனுடைய உடலுக்குள் போனதும் முப்பு பொன்னாக மாறிவிடும். அவன் சாகவேமாட்டான். முப்புவுடன் நஞ்சு கலந்தாலும் நஞ்சின் கேட்டை முறித்து அதையே மருந்தாக்கிவிடும். இந்த மருத்துவர் முப்புவை சரியாகத் தயாரிக்கவில்லை” “இன்னொரு உயர்மதி ப்பு டைய மருந்தும் உண்டு . உரிய மந்திரங்கள், சடங்குகளுடன் அதைக் கொடுத்தால் செத்தவன் உயிர்பிழைப்பான். இந்த மருந்தை யாரும் செய்வதில்லை;காரணம், செய்யும் போழுது சிறு தவறு நேரினும், மந்திரங்களைச் சரியாக ஓதாவிட்டாலும்,பிணம் உயிருடன் எழுவதற்குப் பதிலாக மருத்துவன் தான் சாவான்.” 40. கவர்னர் மாளிகை அருகே சிந்தாதிரிப்பேட்டை கூவம் பாலத்தை 1920 இல் இடித்துக் கட்டியபோது, கட்டாயம் நரபலி கொடுப்பார்கள் என்ற வதந்தி எங்கும் பரவி விட்டது. ஜார்ஜ் டவுனில் தன் மகனைத் தூக்கிக் கொண்டு சென்ற ஒரு அரசுப் பணியாளனைக் கண்ட ஜனங்கள் நரபலிக் காகத்தான் சிறுவனை கடத்திக்கொண்டு செல்வதாக நம்பி அப்பணி யாளனை அடித்துக் கொன்றுவிட்டனர். 41. மனித வசியம் மூலம் பிறரை அழிக்கலாம், சீராக்கலாம் என்பது போன்ற contagious sympathetic magic நடவடிக்கைக் கோட்பாடுகள் எல்லாம் ஆழ்ந்து சிந்தித்துத்தான் உருவாக்கப்பட்டிருக்கும். இவை முதலில் எகிப்திலே தோன்றிப் பிறகு மெதுவாக உலகின் பிறப் பகுதிகளுக்குப் பரவியயிருக்க வேண்டும்; பல இடங்களிலும் தாமாகவே தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றே நான் எண்ணுகிறேன். 42. ஐரோப்பாவில் கழிபழங்காலத்தில் வாழ்ந்த ஆரிக்னேஷிய (Aurignacian) பண்பாட்டுக்கால மனிதனிடம் மந்திரவாத நம்பிக்கை இருந்ததற்குச் சான்றுகள் கிட்டியுள்ளன. அவ்வளவு தொன்மையிவேயே இம்மூடநம்பிக்கை எகிப்திலிருந்து பரவி விட்டதால் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மந்திர சூனியவாதம் திராவிடர், ஆரியர் இரு இனத்தாரிடமும் எகிப்திலிருந்து பரவியிருக்கவேண்டும். வே த ங் க ள் திராவிடரையே “மந்திர தந்திரக்காரர், செத்தவனை எழுப்பவல்லவர்” என்று குறிப்பிடு வ தா ல் , இ ன் று இந்தியா வெங்குமுள்ள மந்திர தந்திரங்கள் ஆரியர் உருவாக்கியவையன்று திராவிடர் உருவாக்கியவையேஎன்பதுதான்சரி.  5. திராவிடப் பண்பாட்டுக் கூறுகளின் பொருளாதார அடிப்படை (Economic basis) நெற்பயிரிடலே திராவிடப்பண்பாட்டின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவு. நெல்லுடன் பல்வகைச் சிறுதானியங்களும் விளைவிக்கப் பட்டன. எனினும் அவற்றை இரண்டாம் தரக் கூலங்களாகவே கருதினர். பிற கூலவகைகளைப் பயிரிடும் போதும் நெற்பயிருக்காக உருவாக்கிய கருவிகளையே அச்சிறுதானியங்களைப் பயிரிடவும் பயன்படுத்தினர். 2. துருக்கிஸ்தானம் பக்கம் எங்கோ ஓரிடத்திலிருந்து நெல்லைத் திராவிடர் கொணர்ந்தனர் என்று சிலர் கூறுவது தவறு. திராவிடரின் முதல் தாயகமல்ல துருக்கிஸ்தானம். இந்தியாவுக்குள் நுழையுமுன் திராவிடர்கள் வந்தவழியில் எங்காவது நெல் பயிரிட்டிருந்தால் அவ் விடத்திலேயே தங்கியிருப்பார்களேயொழிய, (எந்தத் தடயமும் விட்டு வைக்காமல்) மொத்தமாக அவ்விடத்தைவிட்டு வந்திருக்க மாட்டார்கள். பிற நாடோடிமக்கள் போலவே வேளாண்மையறியாதவர்களாகவே இருந்தனர் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். 3. இந்தியாவின் பல பகுதிகளில் காட்டரிசி தானாகவே என்றும் விளைவது. மேற்குக் கரையில் இன்றும் சில காட்டுவாசிகள் அதை உண்ணவும் செய்கின்றனர். ஆண்டுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நெல் வகை உண்டு என்பது பழமொழி. அவையனைத்தும் இந்தியக் கா ட் ட ரி சி யி லி ரு ந்தே தோ ன் றி ன எ ன் று க ரு து வ து தாவ ர வி ய லு க் கு இசைந்ததே. 4. எகிப்தியர் நெல்லைப் பயிரிடுவதற்கு முன்னரே வால்கோதுமை (barely), சாமை ஆகியவற்றைப் பயிரிட்டனர், எனக்கருதுகின்றனர். அக்கருத்து சரியாக இருக்கலாம். “கதிரவன் சேய்கள்” என்னும் நூலில் பெரி கூறுகிறபடி, இந்தியாவில் வேளாண்மை செய்யப்பட்ட பயிராகிய நெல் இந்நாட்டுக்குரியதாயிருந்தபோதிலும், தானியம் பயிரிடும் எண்ணம் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம். இரு நாடுகளுக்கு மிடையே கடல் வழித் தொடர்பு ஏற்படுவதற்கு முன்னதாகவே நெற்பயிர் செய்யும் முறை இங்கு வந்திருக்கலாம். 5. புளூர் கருதுவதுபோல் அது தரைவழியாக மிகத் தொல்பழ ங் காலத்திலேயே மெசெபொட்டேவி லி ரு ந் து வ ந் தி ரு க் க க்கூடும். இவ்விஷயத்தில் அறுதியிட்டு முடிவுகூறத் தகுந்த எத்தகைய நேரடிச் சான்றும் இல்லை. ஆயினும் ஒரு செய்தி; எகிப்திலிருந்து ஞாயிற்றுக்கல் (heliolithic) வணக்க நாகரிகத்தை மேற்கொண்டதாகக் கருதப்படும் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பண்புக் கூறுகள் பலவற்றிலும் நெருங்கிய ஒப்புமை உள்ளது. ஆயினும் “முண்டா” இனங்களிடமும் (வடகிழக்கு இந்தியாவில் அவர்களைப் போன்றவர்களிடமும்) காணப்படுவதை விட இப்பண்புகள் தென்இந்தியத் திராவிடர்களிடையே குறைவாகவே உள்ளன. வடகிழக்கிந்தியமக்கள் திபத்தோ-பர்மிய மொழிகளையோ (ஏன் திராவிட மொழிகளைக் கூடப்) பேசலாமாயினும், பண்பாட்டில் அவர்கள் ஒரான்(oraons) காசி, அங்காமி முதலிய பிற நாக மரபினரைப் போன்றே இருந்னர்; அவர்கள் இனமும் அதுவேயாகலாம். 6. எகிப்துடன் மிகவும் நேரடித் தொடர்பு கொண்ட பகுதி தென் இந்தியாவே என்பதை நோக்க, டப்ள்யூ எச். ஆர். ரிவர்ஸ் (வில்லியம் ரிட்ஜ்வேக்கு அர்ப்பணித்த கட்டுரைத்தொகுப்பு ஆகிய) ‘மக்களினத் தொடர்பு’ (The contact of peoples) என்ற நூலில் கூறும் பொதுவிதிக்கு இது ஒரு சான்று ஆகலாம். அப் பொது விதி “ஒரு மக்களினத்திடமிருந்து பிற இனம் எவற்றைக் கடன் பெறும் என்பது அவர்களிடையே உள்ள பண்பாட்டுத்தர வேற்றுமையைப் பொறுத்தது” என்பதே. 7. தமிழர், மலையாளிகள் இடையே ஞாயிற்றுக்கல் வழிபாட்டு மரபுத் தாக்குதல் மிகவும் குறைவாயிருப்பதற்குக் காரணம், ‘இயற்கை தரும் உணவைத் தேடியுண்பவர்கள் என்ற நிலையிலிருந்து தாமே உணவை உற்பத்தி செய்பவர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டதால், கற்றுக்கொள்வதற்கான செய்திகள் மிகக் குறைவு’ எனலாம். ஆகவே, அவர்கள் அயலாரிடமிருந்து வேறு கொசுறுப் பண்புகளை பின்பற்ற விரும்பவில்லை. வெள்ளையர் நாட்டு நாகரிகக்கூறுகளை மேற்கொள்வது நன்று என வெளிப்படையாகத் தெரியுமிடங்களில்கூட, இந்தியர் அவற்றை மேற்கொள்வதில்லை. காரணம் புதியவற்றை பின்பற்றுவதை விடப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த வழக்கத்தைவிட்டு விடுவதுதான் கடுமையானது. 8. நெற்பயிர் விளைவிக்கும் திறனைத் திராவிடர் தாமாகவே தெரிந்து கொண்டனர் என்று கருதினால் , வேளாண்மைத் தோற்றம் பற்றி கிராண்ட் ஆல ன் த ரு ம் பி ன் வ ரு ம் புதுமையான ஊகம் பொருத்தமாக உள்ளது: பிணங்களைப் புதைத்தபோது, செத்தவனுக்குப் பயன்படக்கூடும் என்று கருதிப் ப யி ர் விதை களு ம் அ ப் பிணங் க ளு டன் புதைக்கப்ப ட் ட ன . தொன்மை வேளாண்மைக்கும் நரபலிக்கும் உள்ள தொடர்பை இது விளக்குகிறது. 9. நெல்லை முதலில் நாற்றைப் பறித்து நடும்முறைதான் முதலில் தோன்றியிரு க்கும் , பின்னர்த் தோன்றியதே விதை விதைத்துப் பயிரிடுதல் என்று நான் நினைக்கிறேன். நாடோடி மக்கள் புதிய வேட்டை நிலங்களுக்குச் செல்கையில் சதுப்பு நிலத்தில் பிடுங்கிய காட்டு நெற்பயிரின் நாற்றை புதிய வேட்டைக்காடுகளுக்கருகில் நடுவதற்காக எடுத்துக்கொண்டு சென்றிருப்பர்; அல்லது அயலிடங்களில் நெற்பயிரைப் பிடுங்கிச்சேர்த்து தம் குடியிருப்புகளில் நட்டிருப்பர். புதுப்பயிருக்கு இடந்தரும் முறையில் களை அகற்றும் பொழுது ஒரு சில நெல் விதைகளும் தற்செயலாக விழுந்து முளைப்பதைக் கண்டு, நாற்றுப்பாவி நடும் எண்ணம் தோன்றியிருக்கலாம். 10. நெல் விளைப்பு எங்கு தோன்றியதாயினும் ஆகுக. நெற்பயிர் வேளாண்மையால் திராவிடர்கள் மீதும் அவர்கள் மூலம் இந்திய பண்பாட்டிலும் ஏற்பட்ட மாறுபாடுகள் பற்றிக் காணப்போகிறோம். 11. இந்தியாவின் பெரும் பகுதி அதுவும், இந்திய சமூக வளர்ச்சி மிகுதியாக நிகழ்ந்துள்ள பகுதியும் (புளுர் இப்பகுதியை பெருவிளைவு நிலங்கள் land of increment என்பர்.) நெல் விளைச்சல் பகுதிகள் தாம். கங்கை ஆற்றின் மேல்நிலப்படுகை, கங்கை, பிரமபுத்திரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, காவிரி ஆகியவற்றின் வாய்முக(டெல்டா)பகுதிகள், மலையாளக்கரைத் தாழ்நிலங்கள் ஆகிய வற்றில் மக்கள் பெருக்கமானது பொருளியார் “ முயற்சி பெருகினாலும் விளைச்சல் பெருகாமை விதி (law of diminishing returns)” விதிசெயல் படுவதற்கு முன்னால் ‘குறைந்த உழைப்பு, நிறைந்த விளைச்சல்’ நிலையே இருந்து வந்தது . இதேசமயம் கடும் வெப்பமும் ஈரமும் கலந்த காரணமாக வயல் பகுதி ஊர்களின் புழுக்கம் உடல் உழைப்பைக் கொடுமையானதாக ஆக்குகிறது , ஆயினும் அதே நேரத்தில் தொடர் சிந்தனை, ஆழ்ந்த ஆராய்ச்சி இவற்றுக்கு உகந்த அமைதிச் சூழ்நிலை நெல்விளை நிலங்களில் உள்ளது. உணவு உடைத்தேவைகள் அங்கெல்லாம் மிகக்குறைவே. 12. எனவே, வேளாண்மை வந்ததிலிருந்து, உடலுழைப்பு இன்றியே (சிலர்) வாழத்தக்க ஒரு வாய்ப்பும் ஆசையும் ஒருங்கே வளர்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, திருச்சி, தஞ்சை போன்ற மாவட்டங் களில் மட்ட நிலையான சிறிய பார்ப்பனக் குடும்பம் ஒன்று சாதாரண விளைவுடைய ஐந்து ஏக்கர் நிலவிளைச்சலைக் கொண்டு எந்த உழைப்பு மின்றி வாழ முடியும், வாழவும் செய்கிறது. உழவு போன்ற தொழிலை பள்ளர், பறையரே செய்வதால், நிலச் சொந்தக்காரர்களுக்கு எந்த வேலையுமில்லை. தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள அதிக வளமான நிலங்களில் ஒரு குடும்பம் எந்த உடலுழைப்பும் இல்லாமல் பிழைக்க மூன்று ஏக்கர் நிலம் போதும். 13. மேலும் இந்தியாவில் இயற்கை பேரச்சம் தருவதாயினும் அதே நேரத்தில் வளமையும் உடையது. இங்கே புயல், மழை, வெயில் ஒவ் வொன் று ம் வீ று ம் நிறைவு ம் செறி வு ம் உடையவை; நல்ல பயிர் விளைச்சலையும் தருவன. மேனாட்டினராகிய நம்மை முடக்கி , கடும் வலியுடனே நீண்டநாள் வாழ வைத்துக் கொல்லாமல் கொல்லும் சிறுநீர் சார்ந்த நோய்கள்(uric acid diseases)இந்தியாவில் இல்லை. ஆனால் ஓரிரு நாளில் ஒருசில மணியில் கொல்லும் நோய்வகைகளோ எண்ணற்றவை. அத்துடன் பருவ மழை பொய்க்கும் பேரிடரும் எவ்வாண்டும் நிகழலாம். மழை என்றும் பொய்க்காத மலையாளக்கரையில் , காலந்தவறிப்பெய்யும் மழை இன்னல் விளைவிக்கும். அல்லது வங்காளம் போன்ற இடங்களில் பேய்மழை பெய்து பெரு வெள்ள அழிவும் வரக்கூடும். 14. புவிவியல், புவிவியல்சார் பொருளியல்(geographic-economic conditions) இவைசார்ந்த மேற்சொன்னவற்றால் இந்திய மக்கள் சமுதாயத்தில் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன. (1) குருமார்வகுப்பு (priestly class) மந்திரம் சொல்லியும் தெய்வங்களின் கோபத்தைத் தணித்தும் இயற்கையை அடக்கியாள முடியும் என அனைவரும் நம்புவதால் அவர்கள் சமூகத்தில் உச்ச அளவு மதிப்பும் செல்வாக்கும் பெறுகின்றனர். அவ்வப்பொழுது ஆங்காங்கு நிகழும் போர்கள் காரணமாக, போர்த்துறைத் தலைவர்களின் முதன்மை காரணமாக தற்காலிகமாய் இந்நிலை சிறிது மாறக்கூடுமானாலும், உடனுக்குடன் அவ்வகுப்பார் ஆதிக்கம் மீண்டும் தலையெடுத்து விடும். (2) குருமார் வகுப்பு உரிமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி உடலுழைப்பை அறவே கைவிட்டு விடுகிறது. ஆனால் தன் ஓய்வு நேரத்தையும் ஆற்றலையும் சிந்தனைத்துறையில் ஈடுபடுவதற்கு ஓரளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. (3) உடலுழைப்பு இல்லை; மற்றொருபுறம் மற்ற நாடுகளைவிட, உணவு உடை போன்ற வ ற் றின் தேவை மி கக்குறை வு , இவை காரணமாக இ க் கு ருமார் பெற்றுள்ள சிந்தனையாற்றலைக் கொண்டு வேளாண்மைத் தொழில் முறைகள், கருவிகள் ஆகியவற்றை மேம்படுத்த கருதுவதேயில்லை! வேளாண்மையையும் தொழில்களையும் திறம்பட மேற்பார்வையிடக்கூட அவர்கள் முயல்வதில்லை. இக்குருமார் சிந்தனை முழுவதும் மனிதன் இயல்பு, உலக இயல்பு, பிரபஞ்சத்தின் மூலமுதற்காரணங்கள் ஆகியவற்றின் ஆய்விலேயே ஈடுபட்டது. குருமார் வகுப்பு இங்ஙனம் அறிவுசார் (intellectual class) வகுப்பாகவே வளர்ந்துள்ளது. இவ்வகுப்பார் எப்போதும் “அரைகுறைச் சான்றுகளின் மீது பாரிய கோட்பாட்டு மனக் கோட்டைகளைக் கட்டுவதிலெயே” ஈடுபடுகின்றனர். தாம் ஊகிக்கும் முடிவுகள் சரியா என்று சோதித்துப்பார்க்கக் கூட முயல்வதில்லை! (4) இவ்வகுப்பு கூடியமட்டும் குறைந்த உடலுழைப்பு, அல்லது ‘உடலுழைப்பே கூடாது’என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருப்பதால், உடலுழைப்புக் கீழ்நிலைச் சாதியினர் குறைந்த அளவு சிந்தித்தால் போதும், ஏ ன் சி ந்தி க்கவே வேண்டா ம் என் ற எண்ணவோட்டத்தை வளர்த்துள்ளது. 15. பெற்றோர் தொழிலையே பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற கோட்பாடும் சாதிமுறையும் (அதைப்பற்றிக் கீழே காண்க) மேற் சொன்ன நிலைமைகளை மேலும் கடுமையாகஆக்கிவருகின்றன. 16.(i). இப்பொழுது நாம் தென் இந்தியத் திராவிடர்களில் தாய் வழி மரபுச் சாதியினரையும் தந்தை வழி மரபுச் சாதியினரையும் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. (ii) மேற்குக்கரை மலையாளிகளிடையே பெண் வழி ச் சொத்து உடைமை முறையும். தாய் வழியே உறவுமுறையைக் கணிக்கும் முறையும், நாயர், பந்தர்(Bants), தீயர் முதலிய மிகப் பெரும்பாலான சாதியினரிடையேயும், ஓரளவு சிரியன் கிறிஸ் தவரிடையேயும் காணப்படுகின்றன. (iii). அப்பகுதியிலுள்ள மற்ற திராவிடச்சாதிகளிடையே பொதுவாக இந்துச்சட்ட மரபுரிமைமுறையே பின்பற்றப்படுவதுடன் உறவு முறையும் தாய்தந்தை இருவழியிலும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் தந்தை வழியாக உறவுமுறை கணிக்கப்படுவதே பெரும்பான்மை. மகன் தன் பெயருடன் தந்தை பெயரையே சேர்த்துக் கொள்கிறான். ஆயினும் எல்லாச்சாதித் திராவிடரும் தொடக்கத்தில் தாய்வழி மரபினராகவே இருந்தன ரென்று கருத இடந்தரும் வகையில் சில சிறப்புக்கூறுகளை அவர்களின் திருமண வழக்கங்களில் இன்றும் காணலாம். 16. தாய்வழி மரபுரிமைச் சாதிகளின் பழக்க வழக்கங்களுக்கு நாயர்களின் பழக்கவழக்கங்களையே சிறந்த மாதிரியாகக் கொள்ளலாம். அவற்றைச் சுருக்கமாகத் காண்போம். பிரிவினை இல்லாத கூட்டுக் கு டு ம் ப முறையே இ ங்கே நி ல வு கி ற து - த ரவா டு எ ன் று பெ ய ரி ல் . தரவாட்டின் சொத்து கூட்டுப் பொதுஉடைமை ஆகும். குடும்பத்தின் இல்லமும் நிலமும் நேரடியாக சென்னை, கொச்சி, திருவாங்கூர் அரசுக்கு வரி செலு த் து வதா க இ ரு க் கு ம் ; அ ல் ல து பெ ரு நி ல க் கிழாரான ந ம் பூ தி ரி பிராமணரிடமிருந்து குத்தகைக்கு (lease)பெற்றதாக இருக்கும். தரவாட்டின் ஆண்மக்கள் அனைவரும் தம் தாய்மாரிடமிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அவ்வுடைமைகளைத் துய்த்து ஆண்டுவருவாயில் பங்கு பெறும் உரிமையுடையவர் ஆவர். ஆனால் அவ்வுரிமையை அவர்கள் தங்கள் பிள்ளை களுக்கு விட்டுச்செல்லும் உரிமை இல்லை. தரவாட்டின் பெண் மக்களோ ஆண்மக்களைப் போல வருவாயில் பங்கு பெறுவதுடன் தமது பிள்ளைகளுக்கு அதே உரிமையை விட்டுச் செல்லவும் தகுதியுடையவர்கள் ஆவர். 17(i) தரவாட்டின் மிகமூத்த பெண்தான் அதன் பெயரளவு (titular) தலைவர். பொதுவாக அதன் மிகமூத்த ஆடவனே காரணவன் என்ற பெயருடன் சொத்துகளை நிர்வாகம் செய்கிறான். சிலசமயம் மூத்தவனுக்கு பதிலாக திறமைமிக்க அடுத்த இளையவன் காரணவனாகி விடுவதும் உண்டு. (ii) நாயர்சாதியில் ஒவ்வொரு தாயும் தன் மகள் பூப்படையும் முன்பே அவளுக்குச் சாதிமுறைப்படி ஒரு (பெயரளவுத் ceremonial) திருமணம் நடத்தியாக வேண்டும். இது சில மணிநேரத்தில் சிறு செலவில் சடங்காசாரங்கள் எவையுமின்றி நடப்பது. மணப்பெண்ணின் கழுத்தைச்சுற்றித் திருமணக்காப்பு (தாலி) அணிவது மட்டுமே சடங்கு, அவளுக்குத் தாலிகட்டுபவன் குடும்பத்துக்கு முன்பின் தொடர்பில்லாதவனாக, தெருவழி செல்பவனாக இருந்தாலும் சரி. ஒ ப் பு க் கு மணம கனா க இ ரு ந் து தாலி க ட் டி ய த ற்கா க அ வ னு க் கு ப் பெண்ணின்தாய் ஒரு ரூபாய் வெகுமதியாய் அளிக்கிறாள். தாலி கட்டியதன் காரணமாய் பெண்ணிடம் மண உரிமையோ, வேறு உறவோ கிடையாது. தாலி கட்டிவிட்டுப் போய் விடுகிறான்; பின்னர் அவன் அவளைப் பார்க்கும் வாய்ப்பு கூட நேராது. 18. அப்பெண் வளர்ச்சியடைந்த பின் தான் விரும்புபவனுடன் மணத் தொடர்பை வைத்துக்கொள்வாள். அதன் பெயர் ‘சம்பந்தம்’ அது பல ஆண்டு நீடிக்கும் திருமணமாகவுமிருக்கலாம். சில காலம், மாதம், நாள் கணவன்- மனைவி தொடர்பாகவும் இருக்கலாம். பெண் தான் விரும்பிய நேரத்தில் சம்பந்தக்காரனை நிறுத்திவிடலாம், புதியவனைக் கொள்ளலாம். ஆனால் அவள் ஒரு நேரத்தில் ஒருவனுடன் மட்டுமே சம்பந்த உறவு கொள்ளலாம். மணமகனுக்கு இத்தகைய கட்டுப்பாடு இல்லை. 19. மலையாள நாயர் பெண்கள் தமது தரவாட்டிலேயே வாழ்வர். அவர் களுடன் சம்பந்த உறகொண்டு புணர்பவர்கள் அங்கு வந்தே சந்திக் கின்றனர். பெண் ‘இனி வரவேண்டாம்’ என்று சொல்லியோ, வருபவன் தானாகவே அவளைப் புணர வருவதை நிறுத்திவிட்டாலோ அந்த சம்பந்தம் முடிந்துவிடும். இம் முறையின்படி பிள்ளைகள் தாயின் தரவாட்டு உறுப்பினர்களாகத்தான் ஆகமுடியும். அப்படியே ஆகின்றனர். தாயின் வயிற்றில் அவனை உருவாக்கிய தந்தைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. அவன் தரவாட்டுக்குரிய பிள்ளைகளை (அதாவது அக்காள், தங்கையினர் தமது “சம்பந்தங்கள்” மூலம் பெறும் குழந்தைகளை) பராமரிப்பதும் உடன் பிறந்த நங்கையரை பேணி வருவதும் தான் ஆடவன் பொறுப்பு. 20(i). ஆயினும் ஒரு நாயர் தரவாட்டிலிருந்து வெளியே சென்று, தன் முயற்சியினால் ஈட்டும் செல்வத்தை அவன் தரவாட்டின் சொத்தாக கருதாமல், அவன் தன் உடைமையாகக் கருதி விருப்பம் போல் பயன்படுத்தலாம். (ii) த ர வா ட் டு த் தலை வ ன் ( காரணவ ன் ) உடை ய நி ர்வாக ம் பொதுவாக முயற்சி குன்றியதாகவே இருக்கும். பல தலைமுறையாகச் செல்லும் தரவாட்டு உடைமையின் சொத்து மதிப்பு கூடவாய்ப்பில்லை; அதைக் கொண்டு வாழும் நபர்கள் தொகை வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் தரவாடு அனைவரையும் காக்கும் வலுவை இழக்கிறது அக் கட்டத்தில், தரவாட்டில் அதுவரை உண்பது, குடிப்பது, உறங்குவது, பெண்கள் சல்லாபம் ஆகியவற்றிலேயே பழகியவர்கள் வேலைக்குச் செல்ல நேருகிறது. (iii) சில தரவாடுகளில் உறுப்பினர் சிலர் (தரவாடு அழிவு நிலைக்கு வராத நிலையிலும்) இளைஞரின் முன்னேற்ற ஆசையால் உந்தப்பட்டு தொழில் தேடி வெளியே செல்கின்றனர். அப்படி இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்குச் சென்று வாழும்போது, அவர்கள் தங்கள் மனைவியரை தரவாடுகளிலிருந்து விடுவித்துத் தம்முடன் கொண்டு சென்றுவிடுகின்றனர். அவ்வாறு வெளியூர் வாழ்க்கை மேற்கொள்ளும் துணைவியர் கணவருக்குச் சொந்தமானவீட்டில் வாழ்கின்றனர். ‘கணவனோ மனைவியோ விரும்பினால் சம்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம்’ என்ற போதிலும், அப்படிச் செய்யாமல் இந்நேர்வுகளில் தந்தை தான் ஈட்டிய செல்வத்தைத் தன் பிள்ளைகளுக்கே விட்டுச் செல்கிறான். 21. தரவாடு முறையும் “மருமக்கள் தாயம்” என்று அழைக்கப்பெறுகிற அம்முறை சார்ந்த மரபுரிமைமுறையும், சொத்து பணத்தை பெகுக்குவதாக இல்லையாகையால் விரைவில் மறைய இருக்கிறது. பெண்பாலாருக்கு அது தரும் உயர்மதிப்பும் சுதந்திரமுமே அதன் சிறப்பு. ஒருக்கால் இச் சிறப்பு மட்டும் அழிந்துபோகாதவகையில் தரவாட்டு முறை தொடரவும் செய்யலாம். ஆனால் இந்த கேரள மற்றும் பிற மேற்குக்கரைத் தாய்வழிமரபுச் சாதிகளின், சமூக, மணமுறை அமைப்புகள் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தந்தை வழி முறைகளைப்போல மாறிவிடாமல் (பெண்களுக்கு அதிக உரிமைதரும் பர்மா மக்கள் சமூக முறைகளைப் போன்றும்) வளரக்கூடிய வாய்ப்புண்டு. 22. மனைவி, பிள்ளைகள் என்ற கால்கட்டுகள் இல்லாமல் போர்ப் படைக்கு இளைஞர்களைப் பெரும் அளவில் திரட்டு வதற்காக கோழிக்கோடு சாமூதிரி போன்ற குறுநிலமன்னர் அரசியல் காரணங்களுக்காக தரவாட்டை உருவாக்கினார்கள் என மலையாளத்துக்கு 1498இல் வந்த ஐரோப்பியர் ஊகித்தனர். பெண் பூப்படையுமுன் நடைபெறும் தாலிகட்டுத் திருமணம், இப்புதுமரபுக்கு முற்பட்ட உண்மைத் திருமணத்தின் எச்சம் என்றனர் போர்த்துகீசியர். ஆயினும் தரவாடு, மருமக்கள் தாயம், சம்பந்தம் ஆகியவை நெடுங்காலமாக இருந்து வந்த பழக்கங்கள்தாம் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் பிறபகுதிகளில் நிலவிய இம்மரபினை ஒழித்து, தந்தை வழி மரபுமுறை வந்த பின்னும், சாதகமான சிறப்புச் சூழ் நிலைகளின் காரணமாக மலையாளக் கரையில் மட்டும் அழியாது நின்று மீந்திருக்க வாய்ப்புண்டு. அச்சிறப்புச் சூழ்நிலைகள் யாவை? 23 . உறவுமுறை தொடக்கத்தில் தாய் வழியாகத்தான் கணிக்கப்பட்டது என்று ஹார்ட்லண்ட் (1909.Primitive Paternity ) கூறுவதை நாம் ஏற்கலாம். வேளாண்மை பரவி சொத்துகள் பெருகும் வரை வாரிசுகளுக்கு வருபவை கைக்கருவிகளும் கலங்களுமே. எனவே ஆண்கள்ஆடவர் பயன்படுத்திய கருவி, கலங்களை (அவை அவர்களுடனே புதைக்கப் படாவிட்டால்) பிற ஆடவரும், பெண்களுக்குரியவற்றைப் பெண்களும் பெற்றிருப்பர். ஆண்களைப் பொறுத்தவரை இன்ன உறவினருக்குத்தான் சென்றிருக்கும் என்று உன்னிக்க முடியாது. பெண்டிரைப் பொறுத்தவரை இறந்தவளின் பொருள்கள் அவள் புதல்வியருக்கே சென்றிருக்கும். வேட்டை, மீன் பிடித்தல், காய்கனி கிழங்கு பொறுக்குதல், இவற்றுடன்(புதிய) துணைத்தொழிலாக வேளாண்மையை மேற்கொண்ட போது, அப்பணியைப் பெண்கள் தலையில் தான் கட்டியிருப்பர். 24. வேளாண் கருவிகளும், வளரும் பயிர்களும் பெண்கள் வசமே இருந்ததால், நில உடைமைச் (ownership of landz)சிந்தனை ஏற்பட்டதும் இயற்கையாகவே நிலமும் பெண்களிடம் விடப்பட்டு, தாயிடமிருந்து மகளுக்கு நிலம் சென்றிருக்கவேண்டும். வேட்டையே குழுவின் முக்கிய பிழைப்புத் தொழில் என்று இருந்த வரையிலும் இம்முறைக்கு எதிர்ப்பில்லை. ஆனால் ம க் க ள் தொகை பெரு கி இ ன க் கு ழுவி ன் tribe பிழைப்புக்கு வேளாண்மையே முக்கிய ஆதாரமானபின்னர் ஆண்களும், பெண் டிருடன் சேர்ந்து வயல்களில் வேலை செய்யத் தலைப்பட்டனர். இப்போது சமூகச் சரிசம நிலை கொஞ்சம் நிலை குலைந்தது. ஆயினும் எகிப்திலும் மெசபொட்டோமியாவிலும் இருந்தது போல, இம்முறை நீடித்து இருந்திருக்கலாம். ஆனால் நீடிக்கவிடாமல் ஏதோ ஒரு சமுதாய அதிர்ச்சியினால் மக்கள் அம்முறையை மாற்றக் கருதியிருக்கலாம். அவ்வதிர்ச்சி போர் ஆக இருந்திருக்கலாம். அல்லது வேட்டையிருந்து நேராக ஆடு மாடு மேய்க்கும் பணிக்குச் சென்றபின், ‘ஆண்கள் வழியிலேயே கருவிகள் உடைமைகள் இறங்கிய வாரிசுரிமை கொண்ட மக்களுடன்’ தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். இவையன்றி, மக்கட்தொகை மிகப்பல்கியதால் வேளாண்மைக்கு எளிதில் இடம் தராத கடும் பார்நிலப்பகுதிகளை திருத்திப் பண்படுத்த ஆண்களை ஏவியதால் சொத்துரிமை தந்தை- மகன் என்று வந்திருக்கலாம். 25. இவ்வாதங்கள் சரியென்றால், மலையாளக் கரையில் தாய்- மகள்matrilineal வாரிசுரிமை வளர்ந்தற்கான சிறப்புச் சூழல்களாக கொள்ளத்தக்கவை: (1) இங்கு பயிர் நிலங்கள் மீன்நிறைந்த கடலும் காயலும் ஒரு புறமும், வேட்டையாடக்கூடிய விலங்குகள் நிரம்பிய காடுகள் மறுபுறமும் கொண்டு அமைந்திருந்தன. (2) அண்மைக் காலம்வரை கேரளத்தைக் கடலும் மலையும் இயற்கை அரண்களாக அயலார் படையெடுப்புக்களிலிருந்து காத்து வந்தன. (3) வேளாண்மையில் கேரளத்தில் முக்கியம் பெற்ற தென்னையை நட்டால் போதும்; தானாகவே வளர்ந்து நூறாண்டுகளுக்குப் பயன்தரும். ஆண்டுதோறும் அது பத்துமாதங்களுக்கு நன்கு விளைந்த தேங்காய் தரும். மிகக் குறைந்த உழைப்பில் நிலத்திலிருந்து பிழைப்பு நடத்தலாம். 26.(a) மேற்கூறிய சூழ்நிலைகள் மட்டும் காரணமாயிருந்திருக்க முடியாது. மருமக்கள் தாயப் பழக்கம் நிலைத்ததத்குக் காரணம் நம்பூதிரி பிராமணருடைய சமூகமுறைகளுடன் அது இரண்டறப் பின்னிப் பிணைந்து நம்பூதிரிகளுக்கு வசதியானதாக அது இருந்ததே முக்கிய காரணம். (b) திராவிடரிடையேயும் குருமார் பணியும் Priestly function மந்திரவாத முறையும் பிறரைப்போல பெரும்பாலும் ஆடவரிடமே இருந்தன. இவ்விரண்டையும் தம் தொழில்களாகக் கொண்ட நம்பூதிரி பிராமணர் களிடமும் (பிறபகுதிப்பார்ப்பனர்களைப் போலவே) தந்தை வழியிலேயே வாரிசும் சொத்துடைமையும் இறங்கி வந்தன. கேரளத்துக்கு கிழக்கே (தமிழகத்தில் பிராமணர் ‘தந்தை வழி முறையையே’ பிற சாதி யினரிடையேயும் பரப்பினர்.) ஆனால் நம்பூதிரிகள் தம் சொத்து சுகங்களை வெகுவாகப் பெரு க் க எ ண்ணி அ த ற்கேற் ப ஒ ரு பு து முறையைக் கொணர்ந்தனர்; அதாவது மூத்தபுதல்வன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணைத் திருமணம் செய்யலாம்; இளைய புதல்வர் அனைவரும் நாயர் பெண் களுடன் சம்பந்த உறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளலாம். பார்ப்பனருடன் சம்பந்தம் நாயருடன் சம்பந்தத்தைவிட மதிப்புடையது, விரும்பத்தக்கது என நாயர் பெண்கள் கருதும் வகையில் நம்பூதிரிகள் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. தரவாட்டுப் பெண்கள் நம்பூதிரிகளுக்குப் பெறும் பிள்ளைகள் அவர்கள் தாய்மாரின் தரவாட்டைச் சேர்ந்த நாயர்களாகவே ஆகிறார்கள். (c) திருமணம் செய்யும் உரிமையுடைய நம்பூதிரி குடும்ப மூத்த பையன் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். இருந்த போதிலும் நம்பூதிரிப் பெண்களில் பலர் திருமணம் செய்ய இயல்வதேயில்லை. இக்கன்னிப் பெண்களைக் கண்டிப்பான காவற் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர். குறிப்பாக நம்பூதிரி ஆடவரிடமிருந்து. இயலும் வழியில் எல்லாம் நிலச் சொத்தைப் பெருக்குவதும், பெற்றதை எக்காரணங் கொண்டும் விட்டு விடாதிருப்பதும் நம்பூதிரிகளின் பண்பு. நம்பூதிரி சொத்தில் 1. குடும்பத்தின் நேரடி மேற்பார்வையில் பயிரிடும் இல்லப்பண்ணை ஒன்றும், 2. நாயர் தரவாடு தலைவர்களைக் குத்தகையாளர் (காணம்தார்) ஆக்கி 12 ஆண்டு ஒற்றிக்கு விட்ட மீதி நிலங்களும் உண்டு. (ஒற்றி 12 ஆண்டுடன் நிறுத்தப்பட்டால் காணம்தாருக்கு நிலத்தை மேம்படுத்தியதற்காக இழப்பீடு பெறும் உரிமை உண்டு.) வழக்கமாகக் காணம்தார் ஒற்றி நிலத்தில் பெரும்பகுதியை ஆண்டு வாரமாக அவர்களுக்கும் தாழ்ந்த கீழ்ச்சாதியினருக்கு விட்டு விடுவர். (d) நாயர்களின் மருமக்கள் தாயவழக்கப்படி நம்பூதிரிக் குடும்ப இளம் ஆண்கள் ‘சம்பந்தம் மூலம் நாயர் பெண்களுடன் புணர வசதிகள்’ தரப்படா விட்டால் நம்பூதிரிகள்“மகனுக்கே சொத்து”முறையை அமலாக்கி யிருக்கவே முடியாது. 27. மலையாளக்கரையில் தாய்வழி மரபு அழியாது எஞ்சியிருப்பதன் பயனாக, தென்இந்திய (பிரிட்டிஷ் சென்னை மாகாண) சமூக, அரசியல் வாழ்வில் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையிலுள்ள பெண்கள் கல்லூரி இரண்டிலும் பயில்பவர்கள் நாயர் பெண்களும் (மருமக்கட்தாய முறையை யே பின் பற்று ம்) சிரி யன் கி றித் துவ ப் பெண்களுமே. நன்கு படித்து உயர்பவர்களும் அவர்களே. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும் அவ்விரு ஜாதிப்பெண்கள் பெரும் எண்ணிக்கையில் ஆண்களையொப்ப நன்கு பயில்கின்றனர். 28(i). 1919 இல் அமுலுக்கு வந்த மாண்ட்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி பெண்களுக்கு வாக்குரிமை தரலாமா எள்ற வினா சென்னைசட்ட சபையில் எழுந்தபோது, சில மணிநேர விவாதத்தில் மூன்றில் ஒரு பங்கு பெரும் பான்மையுடன் “தரலாம்” என முடிவு செய்தனர் அப்படியே பம்பாய் மன்றமும் இரண்டு நாள் விவாதத்தின்பின், சிறிய பெரும்பான்மையுடன் முடிவு செய்தது. வங்காள மாகாண மன்றமும் பிற மாகாண மன்றங்களும் பெண்களுக்கு வாக்குரிமை தர மறுத்தன! அல்லது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே மறுத்து விட்டன! (ii). ‘பெண்களுக்கு மதி ப்பு ’ வ கை யில் வ டஇந் தியாவு க்கு ம் தென் இந்தியாவுக்கும் இடையேயுள்ள இப் பெரிய வேறுபாட்டுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று தெற்கே முகமதியமதத் தாக்கம் குறைவு. ஆயினும் மலையாளக்கரைப் பெண்களுக்கு இருக்கும் உயர்வும் மதிப்பும் சுதந்திரமும் தென் இந் தியப் பெண்களின் மதிப்பைப் பொது வாகவே உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகித்தன. 29. நாயர் சாதி இந்திய அரசியல் வாழ்வில் சர்சங்கரன் நாயர் வடிவில் ஒரு ஆற்றல்மிக்க சென்னை மாகாணசட்டமன்ற உறுப்பினரைத் தந்தது. டாக்டர்.டி.எம். நாயரின் வாழ்க்கைப்பணியானது சாதிச்சூழலின் தாக்கத்தை இன்னும் தெளிவாகக் காட்டுகிறது. ஃவரீர்-ஸ்மித் (Freer-Smith) தொழிற் சாலைக் குழுவில் பிற்போக்கு எண்ணப் பெரும்பான்மை உறுப்பினர்களை எதிர்த்து அவர் தந்தகுறிப்பு (dissenting minute)அவர் ஆற்றிய பெருந் தொண்டு. 1911-ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டம் பிற்போக்கான பெரும்பான்மையினர் கருத்தை ஏற்காமல் டி.எம். நாயருடைய சிறுபான்மைக் குறிப்பையே பின்பற்றியது. மேலும் 1911-ல் ஏற்கப்படாத அவர் யோசனைகள் சில 1922-ல் ஏற்கப்பட்டன. அவரே பார்ப்பனரல்லாதார் அரசியல் கட்சியை அமைத்தவர். அவர் இறந்தபின் நீதிக்கட்சி சென்னைச் சட்ட மன்ற (Legislative Council) முதல் தேர்தலில் வெற்றி கண்டது. பார்ப்பனரல்லாதார் பத்திரிகையாகிய, “ஜஸ்டிஸ்”(justice) அவர் தொடங்கியது. அதன் ஆசிரியரும் நாயர் சாதியினரான கருணாகரனே. 30(i). மலையாளக்கரை சிறந்த இயற்கை வளமுடையது. பல்வேறு வாழ்க்கைத் திறத்தினரில் யாவரும் தத்தம் வாழ்க்கைக்கு நாள்தோறும் போதுமான வருவாயைச் சில மணி நேர உழைப்பில் பெறலாம். ஆனால் இதே காரணத்தினால் உயர்ந்த சாதிக்கும் மிகத் தாழ்ந்த சாதிக்கும் இடையே பயங்கர வேறுபாடும் ஏற்பட்டது. வயது வந்தவர்களில் 9/10 மக்கள் உற்பத்திப்பெருக்கத் தொழில் எதிலும் ஈடுபடுவதில்லை. அந்த சுகவாசிகள் அனைவருக்கம் உழைத்து உணவளிக்கும் 1/10 மக்களுக்குக் கிட்டும் வாழ்க்கைத் தேவைக்கான வசதிகள் மிகமிகக் குறைவு. உழைப்புக்கு நன்றியாக அவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் தீண்டத்தகாதவர்களாக கொடுமைப்பட்டதுதான். (ii). ஆயினும் அவர்களும் பிற நாடுகளின் உழைக்கும் மக்களை விட மன நிறைவுடையவர்களாக இருப்பதாகவே கூறுகின்றனர். காரணம் தம் நிலைமை யி ல் ந ல் ல மாறுபாடு ஏ ற் ப டலாமென் ற ந ம் பிக்கையே அவர்களிடம் இல்லை. ஜனநாயகக் கருத்து இப்போது இத்தகையவர்கள் உள்ளத்திலும் எழுந்திருக்கிறது. பல பொது இடங்களிலும், மற்றச் சாதியினர் நடமாடும் சாலைகளிலும், தாமும் செல்லவும், கடைத்தெரு சென்று பொருள்கள் வாங்க விற்கவும் தமக்கு உரிமை வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இவர்கள் 1924க்குச் சில ஆண்டுகள் முன்னர் வரை அடிமையாகவே இருந்தனர். 31(i). கருநாடகப்பகுதியில் (தமிழகம்) மக்களின் வாழ்வுக்கு நெல்லும் பிற கூலங்களுமே ஆதாரம். இவற்றை விளைவிக்கக் கடும் உழைப்பு தேவை. தெக்காண பூமியில் உழைப்பு இன்னும் கடுமையாகத் தேவைப்படுகிறது. (ii). தமிழக ஆற்றுக் கழிமுக டெல்டா பகுதிகளில் உள்ள நெற்பயிர் வேளாண்மை திராவிட நாகரிக வளர்ச்சிக்கு எந்த அளவில் உதவியுள்ளது என்பதைக் காண சீனாவிலும் இங்கும் நெற்பயிர் செய்பவர்களிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்க்க வேண்டும். (iii). இரண்டு நாடுகளிலும் தந்தைமரபு வழியினதான பிரிவினையற்ற கூட்டுக் குடும்ப முறை(joint family)இருக்கிறது. ஆயினும் இந்தியாவில் சீனாவைவிட எளிதாக கூட்டுக் குடும்பம் உடைகிறது . இரண்டு நாடுகளிலுமே திருமணங்களை மிகச் சிறுவயதில் பெரும்பாலும் தாய் தந்தையரே நடத்து கின்றனர். மண வயது இந்தியாவில் இன்னும் குறைவு. இரு நாடுகளிலுமே சிறுமியான மணப்பெண் மாமியாரின் அடிமையாகி விடுகிறாள், (சீனாவில் இவ்வடிமைத்தனம் இன்னும் மிகுதி.) இரு நாடு களிலுமே நி லம் குடும்பத்தின் பொது உடைமையாகிறது. தனி நபர்கள் தம் வாழ்நாள் காலத்தொடர்பு மட்டுமே உடையவர்கள்; இறுதி விருப்பப்பத்திரம் எழுதி தம் சொத்தைப் பிரித்துத் தரும் உரிமை இல்லை. ஆயினும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தனிமனிதனுக்குத் தன் பங்கை வாங்க, விற்க ஒற்றி வைக்க உரிமை அளித்துள்ளது. இரு நாடுகளிலுமே தனி நபருக்கும் குடும்பத்துக்கும் வாங்க விற்க உள்ள உரிமைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. இருநாடுகளிலும் இவ் அரசுரிமைகள் தேய்வடைந்துள்ள போதிலும் இத்தேய்மானம் இங்கு சீனாவைவிடக் குறைவுதான். (iv). இந்தியா-சீனா இடையேயுள்ள வேறுபாடுகளுள் முதன்மை யானது தாய்தந்தைப் பற்றுக்கும், வழிபாட்டுக்கும் தலைசிறந்த நாடு சீனா என்பதாகும். இந்தியா செல்லங்கொடுத்துக் கெடுத்த பிள்ளைகள் நிறைந்த நாடு. 30-40 வயதுள்ள சீனன் ஒருவனை அவன் தாய் கசையாலடித்தாள்; அவன் அழுதான்; அழுதது அடிபொறுக்காமலல்ல; அடிகள் அவனுக்கு வலி தராமையை உணர்ந்து ‘ஐயோ தாயார் கை வலுவிழந்து வருகிறதே’ என்று அழுதானாம்! இக்கதையுடன் கோயமுத்தூர் மாவட்டச் சிற்றூர்க் கிழவி ஒருத்தி சார்ந்த உண்மை வரலாற்றை ஒத்துப்பாருங்கள்: கிழவி வலுவிழந்து விட்டாள். தன்னைப் பாதுகாக்கவும் தன் புதல்வன் செய்யும் செலவுக்கும் தன் உழைப்பின் பயன் சரிக்கட்டி வராது என்று உணருகிறாள். ‘என்னைக் கொன்றுவிடுவதன் மூலம் அச்சுமையைக் குறைத்துக் கொள்’ என்று மகனுக்குக் கூறினாள்;தன் பிணத்தின் மூலம் அவன் ஆதாயம் அடைய அவனுக்கு ஒரு திட்டமும் தந்தாள்.‘தன்பிணத்தை ஓர் குறிப்பிட்ட இடத்தில் போட்டு விட்டுப் பின்னர் அவ்வூரில் நம் குடும்பத்துக்கு எதிராளிக்கட்சியாக இருந்த ஒரு குடும்பத் தலைவன் மீது கொலை வழக்கு போட்டுவிடு”என்பதே கிழவி சொன்ன திட்டம்.(ஊர்க் கட்சிப் பிணக்கு பற்றிய இன்னொரு நிகழ்வை இவ்வியல் இறுதியிலுள்ள குறிப்பில் காண்க) 32(i). குழந்தைகளிடம் இந்தியர்களுக்குள்ள அதீதமான பற்றைக்காண ஒருவன் இந்தியாவுக்குத்தான் வரவேண்டுமென்றில்லை. கப்பல் கூலிகள் கப்பலிலுள்ள வெள்ளையர் குழந்தைகளை ஆர்வத்துடன் நோக்கும் பார்வை யிலிருந்தே உணரலாம். பேரரசர் அக்பர் கூறியதாக ஒரு கதை; “ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முழு இன்பந்துய்க்க நான்கு மனைவிகள் வேண்டும். உரையாடுவதற்கு ஒரு பாரசிக மனைவி, குழந்தைகளைக் காக்க ஒரு இந்து மனைவி; ஊழியம் செய்ய ஒரு மங்கோலிய மனைவி; பிற மனைவியர் செய்யும் தப்பிதங்களுக்காக அடிபட ஒரு துருக்கி தார்தார்(Tartar)மனைவியும் இருப்பது சிறப்பு”. (ii). திராவிட மொழிப் பாடல் ஒன்றில் குழந்தைப் பற்று அடிப்படைக் கவிதை உணர்ச்சியாயுள்ளது. கீழ்வரும் புறநானூற்றுத் தமிழ்ப் பாடலைக் காண்க படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.’ - பாண்டியன் அறிவுடை நம்பி, (புறம்: 188) 1‘அரிகொள் பொன்புனை கிண்கிணி தண்டையோ டணிந்த தருண மென்தளிர்ச் சீறடித் தளர்நடைச் சிறுவர் மருவ றாதசெவ் வாம்பல்வாய் மழலையார் அமுதம் பருகி லாச்செவி பாவையென் செவியெனப் படுமால்.’ - சிவப்பிரகாச சுவாமிகள்,(சீகாளத்திப்புராணம், கண்ணப்ப: 16) 33. மன்னன் சாலமன் வெளிப்படையாகக் கூறாமல் “பிரம்புக்கு ஓய்வு, பிள்ளைக்குத் தோய்வு” என்று நீதி கூறினான். இதைக் கேட்கும் தமிழர் அவள் ஞானத்தைக் குறைகூறிவிடுவர்! குழந்தைகளை இயக்க நல்லவழி, கதை கூறுவதே என்பர். பொது மக்களிடையே ஏராளமான கதைகள் புழங்கும் நாடாக இந்தியா இருப்பதற்கான காரணம் இதுவே. தமிழ்ப் பெண்ணை ‘ஆயா’ஆக அமர்த்திய ஒவ்வொரு பிரிட்டிஷ் தாய்க்கும் இது நன்கு தெரியும். சென்னைக்கு வந்த இரண்டொரு நாளுக்குள் நானும் கண்டேன். சென்னை மாகாணக் கல்லூரி மாணவன் ஒருவன் சென்னை நகரின் நடுவே ஓடும் கூவம் ஆற்றில் வளமாகப் பெருகும் பலவகைக் கொசுப்புழுக்குஞ்சுக் களிலிருந்து மலேரியா பரப்பும் அனாஃவிலிஸ் கொசுக் குஞ்சுகளைப் பிரித்தறிவது எவ்வாறு என்று எனக்கு விளக்கி வந்தவன், திடுமென ‘எனது மருமகப்பையனுக்குக் கதை கூறுவதாகச் சொல்லியிருக்கிறேன் நான் போயாக வேண்டும்’ என்று சொல்லி விட்டு உடனே சென்றுவிட்டான்! 34 (i). எட்மண்ட் டெமோலின்சுநூலும், லெப்ளேயைத் (Leplay) தொடர்ந்து அவர் புத்தகத்தை முடித்து வைத்தவர்களும் சீனாவைப்பற்றிக் குறிப்பிடுவதாது: கன்-சு, வீ-ஹோ பள்ளதாக்குகளில் Kan-su and Wei-Ho Valleys உள்ள சீனவேளாண்மைமுறை மிகு விளைச்சல் தருவது; ஆனால், மிகவும் கடும் உழைப்பு வாய்ந்தது. சீனர் இம்முறையை முதலில் சாமை (millet)முதலிய தானியவகைகளையும், பின் சமவெளிக்கு வந்தபின்னர் நெல்லையும் பயிரிட்டுப் பழகித் தேர்ச்சி அடைந்தனர். வெற்றிக்குக் காரணம் சிறந்த பாசன முறைதான். மிகச் சிறிய நிலப்பரப்பில் மிக அதிக தானியம் விளைவித்தாலன்றிப் போதிய உணவு கிட்டாது. (ii). இன்று வரை சீனக் குடியானவர் குடும்பங்கள் ஒவ்வொரு நெல் நாற்றையும் தனிக் கவனத்துடன் பேணுகிறார்கள். நாற்று நடும் சமயம் வரும்போது ஒவ்வொன்றின் வேரையும் தனித்தனியாக கிளறி, உரநீரில் தோய்த்து அதன்பின்னர் அதற்குரிய சிறு குழியில் நடுகின்றனர். கோதுமையையும் இதுபோலவே. இதனால் ஓர் ஏக்கர் நிலத்துக்குக் கிட்டும் விளைச்சல், ஐரோப்பியரைத் தலைகுனியச் செய்யும். இப் பெருவிளைச்சல்பெற எண்ணற்றகைகள் பாடுபட வேண்டியிருக்கிறது. சிறு குழந்தைகளின் மென்கைகளாயிருந் தாலும் போதும்; ஆனால், அக்கைகளை ஒழுங்குபடுத்தி வேலை செய்ய வைத்திட குழந்தைகளைக் கட்டுபாட்டுடன் discipline வளர்க்கின்றனர். தொட்டிலிலிருந்தே தாய் தந்தையர் நோக்கங்களை ஆர்வத்துடன் நிறைவேற்றுவதே தங்கள் வாழ்வின் நோக்கம் என்று அவர்கள் கருதும்படி பயிற்சியளிக்கப்படுகிறது. இந்நிலைக்குக் காரணமாக நாம் நிலவியல் geographical காரணம் சொல்லிப் பயனில்லை. சீனர்கள் உருவாக்கியுள்ள சமூகநிலையை உணரவேண்டும். 35. இந்தியமக்களின் சூழ்நிலை இத்தகைய கடுமையான நிலைமை களை ஏற்படுத்தவில்லை . இந் நெற்பயிர் விளைப்பில் கருத்தும் முயற்சியும் இங்கு குறைவு. நாற்று நடாமல் சில பகுதிகளில் விதையைத் தூவி விதைத்தும் பயிரிடுகின்றனர். நாற்று நடவும் கவனிப்பில்லாமலே நடக்கிறது; பெரும்பாலும் நடுபவர் பெண்டிரே. சென்னை அரசின் வேளாண்மைத்துறை ‘தனி நாற்று’நடும் முறையை புகுத்தி அது மெள்ளப் பரவி வருகிறது. ஆனால், அதை மேற்கொள்ளும் நிலக்கிழார்களும் கூலிப்பெண்களையே அமர்த்து கின்றனர். ஏழைக் குடும்பக் குழந்தைகள் தாய் தந்தையருக்கு தாமாகவே இவ்வகையில் உதவ முன்வருகின்றனர். ஆனால், இவ்உதவியானது சுற்றித் திரிந்து ஓடியாடுவது; ஆடுமாடுகளைப் பார்த்துக்கொண்டு விளையாடுவது; என்ற அளவில் முடிகிறது. இந்தியாவில் நாய்கள்கூட நன்கு பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஒரு சில வேட்டைநாய் ரகங்களைத் தவிர, தென் இந்தியர்கள் நாய் வளர்ப்பது குரைப்பதற்கு மட்டும்தான். 36. இங்ஙனம் இந்திய சீனநாகரிகங்கள் இரண்டிற்கும் பொருளாதார அடிப்படை நெற்பயிர் விளைவிப்பே, ஆயினும் சீன மக்களின் உழவர் குடும்பங்களின் கடுமையான பயிற்சியின் விளைவாக உளவியல் அடிப் படையில் உருவான தாய் தந்தையர் பற்று உள்ளது. இந்திய சமூகத்திலோ வென்றால், உடலுழைப்பாளர் மேல்சாதியினரிடம் அடக்க ஒடுக்கமாயிருக்கும் நிலையையும், தமது உடலழைப்பைப் பயன்படுத்திக் கொண்டே தமக்கும் (தம்மை அடிமைகளாகவே படைத்த) கடவுளருக்கும் இடையே தரகராகக் கருதப்படும் குருமாருக்கு priestly intermediaries அஞ்சி யடங்கிப் பணிவதையும் தான் காண்கிறோம். குறிப்பு ஊர்க்கட்சிப் பிணக்கு 37. “நேர்மைக்கு எதிராகப் பணம் வாங்கமறுத்துவிட்ட இந்திய வழக் கறிஞர் ஒருவர் தம்மிடம் வந்த வழக்கை ஏற்க மறுத்த நிகழ்ச்சியை நான் என் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன்,” என்று ஓய்வு பெற்றுள்ள ஒரு இந்தியப் பணி அதிகாரி(I.C.S) தம் அனுபவத்தை கூறுகிறார்: (i). “நான் அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் துணைகலெக்டர் (Deputy Collector) ஆகஇருந்தேன். அப்பகுதி ஊர்களில் பொதுவாக உள்ள ஒரு ஊரில் இருபிரிவினரிடையே(factions) பகை வெறி குமுறிக்கொண்டிருந்தது. ‘ஏ’ கட்சி இரவில் ஆரவாரமிக்க ஒரு கூட்டம் நடத்தி. ‘பி’ கட்சி கொடுமைகளை இனிப் பொறுத்திருக்க முடியாது, ஏதேனும் செய்து தான் ஆகவேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானித்து. ஆராய்ந்தபின் ‘பி’ கட்சியின் முக்கிய உறுப்பினர் இருவர் மீது பொய்யான கொலை வழக்குத் தொடுப்பதென முடிவு செய்தனர். (ii). குருசாமி என்ற ஓர் இளைஞன் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான். அவனுடைய கிழட்டுத் தந்தை எந்த வகையிலும் பயனற்றவராதலால், பொது நன்மைக்காக அவரை கொலை வ ழ க்கு க்கு வேண்டி ய கொலைப் பலியாக்குவது நலம் என்று இளைஞனிடம் கூற அவ்விளைஞனும் தன் தந்தையைக் கொன்று பிணத்தை (பொய் வழக்குக்காக) ஒப்படைக்க இசைந்தான். ஆனால், வீட்டுக்குச் சென்றபின் தன் முடிவை மாற்றிக்கொண்டான். (iii). அதன்பின் அதிக வெறியுடன் இரண்டாவது கூட்டம் கூடிற்று. குருசாமியை மிக வற்புறுத்த அவன் மறுத்துவிட்டான். ஆனால், அவனை விடத் துணிந்த மற்றொரு இளைஞன் இசைந்தான். அவனுக்கும் ஒரு கிழத்தந்தை இருந்தார். அன்றிரவு அக்கிழவனைக் கொன்று பிணம் ஏ’ - கும்பலைச் சேர்ந்த ஒருவன் வீட்டின் முன்னால் தெருவில் போடப்பட்டது. விடியற் காலம் ‘ஏ’-கும்பல்காரன் அதைக் கண்டு காவல் துறையினருக்கு அறிவித்தான். போலீஸ்காரர் புலனாராய அனுப்பப்பட்டார். (iv). ‘ஏ’ - கும்பலைச் சேர்ந்தவர் இருவர் தாங்கள் இரவு நெடுநேரம் விளக்கடியில் உட்கார்ந்து கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், தற்செயலாக வெளியே பார்த்த போது, ‘பி’ - கும்பலைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு பேர் அக்கொலையைச் செய்ததைத் தாங்கள் பார்த்ததாகக் கூறினார்கள். போலீஸ்காரர் கூரிய அறிவுடையர். அவவறையில் எரிந்த விளக்கு மிக மங்கலாக ஒளி தருவதாகையால் ‘அன்றிரவு இருட்டில் கொலை நடந்ததைக் காணக்கூடிய அளவுக்கு ஒளி இருந்திருக்க முடியாது. மிஞ்சினால் தெருவின் போனவன் கால் மட்டுமே தெரிந்திருக்கும்’ என்பதை உணர்ந்தார். (v). தாங்கள் எதிர்பார்த்தபடி பொய் வழக்கு வெற்றி பெறாது என்பதை ‘ஏ’ - கட்சியினர்கள் கண்டு கொண்டு, வழக்கைத் திறமையாக நடத்தி வெற்றிகாணத் தலைவர்கள் உதவி வேண்டுமென்று எண்ணினர். என் நண்பர் ஒருவரை அணுகினர். இளைஞராயினும் அவர் சிறந்த வக்கீல் எனப் பெயர் எடுத்துக் கொண்டிருந்தார். நிலைமையை விளக்கிப் பெருந்தொகையும் தருவதாகவும் கூறினர். ஆனால், அவர் அவ்வழக்கை ஏற்கமுடியாது என்று கூறியபோது, அவர்கள் நொந்து போயினர். (vi). அவரைவிட வயது சென்று அனுபவமிக்க ஒரு வழக்கறிஞரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர் சென்னைச் சட்ட மன்ற உறுப்பினர். தொழில் நேர்மை பற்றிக் கவலைப்படுபவர் அல்ல அவர். அவர் யோசனைப்படி ‘ஏ’ கும்பல்காரர்களுள் ஒருவர் சென்னைசென்று பெரும் ஒளி வீசும் புதுவிளக்கை வாங்கிவந்ததுடன், வந்து கொத்தனாரைக் கொண்டு பல கணியையே மாற்றியமைத்து கட்டிவிட்டனர், கொலை நடந்திருந்தால் அதன் வழியாகப் பார்க்கக் கூடியவகையில்! (vii). குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் மீதான வழக்கு விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டியவர்கள் பிரகாசமான புதிய விளக்கையும் கொண்டு வந்தனர்; (புதிய) பலகணியையும் குறிப்பிட்டனர். ஆனால், அந்த ஆங்கிலோஇந்தியப் போலீஸ்காரன் நுண்ணறிவும் விழிப்பும் உடையவன். முதன் முதலில் விசாரிக்கச் சென்ற போதே விளக்கு, பலகணி இவற்றின் பரிமாணம் உயர அளவு இவற்றை அளந்து போலீஸ் ரிக்கார்டில் எழுதியிருந்தான்! ஆகவே,வ ழக்கு கவிழ் ந்தது. குற் றஞ்சாட்டப் பட்டவரும் விடுவிக்கப் பட்டனர். பொய் வ ழ க்குத் தொடுத்ததற்காகக் குற்றஞ்சாட்டியவர்கள்மீதே வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நிலையில்நான் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டேன். மேற்கொண்டு நடந்தது எனக்குத்தெரியாது.ஆனால், நேர்மை காரணமாக இந்திய வழக்கறிஞர் ஒருவர் வழக்கை ஏற்க மறுத்ததற்கு எனக்குத் தெரிந்து கிட்டியுள்ள சான்று இதுஒன்றே.  6. திராவிட நாகரிகத்தின் சிறப்புக்கூறுகள் சா தி, தி ராவிட ர் உரு வாக் கியது என்பதை மேலே கண்டோம். அது, இந்தியா முழுவதும் இருந்தபோதிலும், அதனை மிக நன் றா க ஆய்ந்துகாண முடிவது தென்னாட்டில்தான். “தென் இந்தியச் சாதிகள் குலங்கள்”(Castes and Tribes of South India) 1909 என்ற தர்ஸ்டனின் சிறந்த நூலில் ஆய்வுக்கான ஆதாரங்கள் நல்லமுறையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அந்நூற் செய்திகளைப் படிப்பவர்களுக்கே சா தி முறைக்குக் காரணமாக பொதுவாகக் கூறப்படும் விளக்கங்கள் இரண்டனுள் எதுவும் தன்னளவில் போதுமானதன்று என்றும், இரண்டையும் சேர்த்துப்பார்த்தால்தான் விளக்கம் கிடைக்கும் என்றும் தெரியும். அதாவது சாதிமுறை உருவானதற்குத் தொழில் வேறுபாடு மட்டும் காரணமாகாது; அதுபோல இனவேறுபாடு மட்டுமே காரணம் என்றும் கூறமுடியாது; இரண்டுவகை வேறு பாடுகளும் சேர்ந்து உருவானதே இந்தியச் சாதிமுறை. 2. முற்கால நாகரிகங்களில் முற்றாகவும், இன்றைய நாகரிகங்களில் ஓரளவுக்கும் தொழில்கள் பரம்பரையாகத் தொடரும் போக்கைக் காண்கிறோம். டர்ஹாம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் மகன் பெரும்பாலும் அதே தொழிலாளனாகவே ஆகிவிடுகிறான். நார்போக் உழவன் மகன் உழவனா கிறான். பெரும்பாலும் டர்ஹாம் சுரங்கத் தொழிலாளியின் மகன் மற்றொரு நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளி மகளையும், நார்போக் வேளாண்மைத் தொழிலாளி மகன் மற்றொரு வேளாண்மைத் தொழிலாளி மகளையுமே மணந்துகொள்கிறான். இப்போக்கு விதிவிலக்கில்லாமல் கட்டுப்பாடாகக் கடைப்பிடிக்கப்பட்டால், அதாவது டர்ஹாம் சி றுவன் நிலக்கரித் தொழிலாளனாக மட்டுமே ஆகி, நிலக்கரித் தொழிலாளி மகளை மட்டுமே மணந்து கொள்ள முடியும் என்ற நிலைவந்தால் - நிலக்கரித் தொழிலாளர் சாதி! டர்ஹாமில் உருவாகிவிடும். இந்திய பொற் கொல்லன், கொத்தன் சாதிகள் போல. 3 (a) தொழிலுக்கு ஒரு சாதி என்பது தந்தை தொழிலை மகன் பின் பற்றியதால் எழுந்ததென்று கருத இடம்தருகிறது. ஆனால்,தொழிலுக்கு ஒரு சாதி என்பது இந்தியாவில் மட்டும் எப்படி ஏற்பட்டது எனக் கேட்கலாம். பின்வருமாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. (i). திராவிட நாகரிகத்தின் பெரும்பழமையும் படிப்படியான வளர்ச்சியும் கருதப்பட வேண்டும். தொழில் ஒவ்வொன்றும் சிலரின் வாழ்க்கைத் தொழிலான பின்னர்க் கூடிய மட்டும் அவர்கள் அதைத் தமக்கேயுரிய தனி உடைமையாக வைத்துத் தம் குடும்பங்களிலேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கலாம். (ii). இந்தியக் கோடைகாலச் சூடு உடலைத்தளரச் செய்து ஒருதொழிலை விட்டு வேறு தொழிலை நாடும் ஆர்வத்தைத் தடுக்கிறது. எனவே, ஐரோப்பா போன்ற மிகு வெப்பநாடுகளைவிட இந்தியாவில் பெருமளவுக்குத் தந்தை- மகன் என்றவாறு செல்லும் தொழில்கள் போக்கு மிகுதி. வீட்டு வேலைக்காரர்களிடம் இதைக் காணலாம். (iii). இந்திய வெப்பநிலை காரணமாக ஆண் பெண் இருவருமே சிறுவயதிலேயே முதிர்ச்சி அடைகின்றனர். ஆகவே உடல்தவிர உள்ள அளவில் முதிராவயதுடைய சிறுவர் சிறுமியர்கள் மணவாழ்வை மேற்கொள்ள இடமேற்படுகிறது; இந்திய இளைஞன் சிறுவனாக,தந்தை தொழிலில் இன்னும் முற்றிலும் தேர்ச்சிபெறாத பயிற்சித் தொழிலாளியாக இருக்கும் போதே, திருமணம் ஆகி தானே ஒரு தந்தையாகவும் ஆய்விடுகிறான். அவனுக்குரிய மணப்பெண்ணைத் தந்தையே தேர்ந்தெடுப்பதும் இயல்பாகி விடுகிறது; அதே தொழில் செய்பவர்களின் குடும்பங்களிலிருந்தே பெண்ணைத் தேடுவதுதானே இயல்பு. திருமணம் சார்ந்த சமயச் சடங்குகள் தொழில் சார்ந்த சமயச் சடங்குகள் இவையும் சாதிக் கட்டுப்பாட்டை வளர்க்கின்றன. தன் சாதிக்கு வெளியே மண உறவு கொள்வது தொல்லை விளைவிப்பதால், நாளடைவில் அது தடுக்கப்பட்டுவிடுகிறது. (b). சாதிமுறை மேற்கூறிய காரணங் களிலிருது தான் ஏற்ப ட்டிருக்க வேண்டு ம் என்பதைக் கீ ழ்வ ரும் செய்தி கள் வலியுறுத்துகின்றன: (1) தொழிற் பாகுபாடு, தொழில்முறைப் பயிற்சி, அந்தந்த தொழிலில் திறமை வளர்ச்சி ஆகியவற்றுக்காக ஏற்பட்டதாகவே பொதுவாகச் சாதிமுறையைக் கருதுகின்றனர். (2) தொழில்வகை மாறுபாடுகளின் காரணமாகப் புதிய சாதிகள் எழுகின்றன. (3) இந்தியாவில் அயலார் படையெடுப்புகள் மிகுதியாகத் தாக்காத தென்னிந்திய திராவிடப் பகுதிகளில்தான் சாதிமுறை மிகு வளர்ச்சி அடைந்துள்ளது. 4(i). ஆயினும் இன்றையச் சாதி முறை உருவானதற்கு வேறு சக்தி களும் காரணம் என்பது தெளிவு. இவை பெரும்பாலும் இன (race) வேறுபாடுகளே. திராவிட மக்கள் சமூக அமைப்பின் உறுப்பாக சாதி முறைக் கருத்தும் கோட்பாடு ம் பண்டு தொட்டு நிலைபெற் றிருந்ததால், பின்னாளில் ஏற்பட்ட தாக்கங்களையும் சாதிமுறை தன் வயப்படுத்தி சாதியே வென்றது. (ii). எடுத்துக்காட்டாக, தெலுங்கு (ஆந்திர) விஜயநகரப் பேரரசு போர் மூலம் தெற்குநோக்கி விரிவடைந்தபோது, தெலுங்கு ரெட்டி, தெலுங்கு நாயகன்சாதி சேர்ந்த பல குடும்பங்கள் தமிழகச் சிற்றூர்களில் குடியேறின. அங்கெல்லாம் சாதிமுறை முன்பே நிலைபெற்றிருந்திராவிட்டால், அவர் களுடைய வாரிசுகள் தமிழ் மக்களுடன் கலந்து மறைந்திருப்பர். தமிழ் நாட்டில் உள்ள சாதிமுறைகாரணமாக அவர்கள் தமிழர்களுடன் இணைந்திட முடியாததனாலேயே தங்கள் சாதிக்குள்ளேயே மண உறவு செய்து கொண்டதன் காரணமாக தனிச் சாதியாக (தெலுங்கு மொழிபேசிக் கொண்டும், தம்முடைய சற்றே சிவந்த நிறத்துடனும் உயரமான பளுவான உடலமைப்புடனும்) உள்ளனர். (iii). சா தி க்க ருத்தை மு க மதி ய ர் மு ற்றி லு ம் ஆத ரி ப்பதில் லை. கிறிஸ்தவத்தை விட முனைப்பாக அது தன் மதத்தவரிடையே தோழமையை வலியுறுத்துவது. ஆனால், ‘தென் இந்திய முஸ்லிம்கள்’ அங்குள்ள சாதிகளுள் ஒன்றாகவே உள்ளனர். ஏன் இந்தியக் கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் கூட தனித்தனி சாதி போன்றே கருதப்படுகின்றனர். 5. தென்னிந்தியச் சாதிகள் குலங்கள் பற்றிய தர்ஸ்டன் நூலின் தலைப்பே சிந்தனையைத் தூண்டுவது. அவர் கூறும் தனித்தனிச் சாதிகளில் அடங்கியவை கொல்லன், இடையன் போன்ற தனித்தொழில் சாதிகள்; இனஅளவில் வேறுபட்ட தோடர், கன்னடிகரிடமிருந்து மிக நீண்டநாள் தொடர் பற்றுப் போய் உண்மையிலேயே தனிச் சாதியாக மாறி விட்ட நீலகிரி படகர் ஆகியவர்கள்; தனிச்சாதியினரா, தனிக்குலத்தினரா என்று கூறவியலாத பல பிரிவினர்; தொழில் முறை இன முறை இரண்டின் அடிப்படையி லும் சௌராஷ்டிர பிராமணர் (இவர்கள் தொடக்கத்தில் குஜராத்திலிருந்து வந்து குடியேறிய பட்டு நெசவாளர் ஆவர். அவர்கள் முசுலிம் படையெடுப்பினால் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கி நாளடைவில் தெற்கே தமிழகம் வந்து தங்கிவிட்டவர்கள் ஆவர்.) 6. ஆரியர் படையெடுப்பே சாதி முறைமைக்கு மூலகாரணம் எனச் சிலர் கூறுவது தவறு. எனினும் அப்படையெடுப்பு இரண்டு செயற் பாடுகளுக்கு வலிமை சேர்த்து சாதியை வலுவாக்க உதவியிருக்கலாம் அவையாவன: (1) சாதி உயர்வு தாழ்வை அவரவர் தோலின் நிறத்தின் அ டி ப் படை யி ல் உ ரு வா க் கு வ து ( 2 ) ச முதாய த் தி ல் ஆதி க் க ம் பெற்று விட்டவர்கள் மேல் சாதியாகவும் பெறாதவர்கள் கீழ்ச்சாதியாகவும் நிர்ண யித்தல். இவவிருவகைச் செயல்பாடுகளும் கறாராக நடந்துவந்தன எனக்கூற இயலாது. வேறொரு சாதியை விடத் தமது சாதியே உயர்ந்தது என்று சாதித்து வரும் சாதிகளும் உள்ளன. இவ்வகை நிகழ்வுகள் சிலவே. எடுத்துக்காட்டாக, திருவாங்கூர்த் இராச்சியத்தின் தொழில் துறை இயக்குநர் தெரிவித்த செய்தி வருமாறு: பெரும் மரத்தடிகளைத் துண்டு போடுபவர் தச்சரை விடக் கூடவும், தச்சர்கள் மரப்பேழை செய்பவர்களைவிட அதிகமாகவும் கூலி பெற்றுவந்தனர். என்றாலும் வாளறுப்பவர்கள் தமக்குத் தச்சுவேலைப் பயிற்சியளித்துத் தச்சராக்கும்படி கோரினர்; தச்சரும் மரப்பேழை செய்பவர்களாகத் தமக்குப் பயிற்சியளிக்கும்படி கோரினர். (புதிதாகக் கோரும் பணிக்குச் சம்பளம் குறைவானாலும், சாதி அந்தஸ்தில் உயர்ந்தவராக விரும்பினர். 7. ஒன்றோடொன்று திருமணம் செய்துகொள்ளாத சாதியினரிடையே நாளடைவில் ‘உடன் உண்ணக்கூடாது’ என்ற தடையும் இயல்பாக உருவாகி யிருக்கும். மேனாட்டினரை விட இந்தியரிடையே உணவுப்பந்தி ஆசாரம் மிகுந்தது; பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகிய சடங்குகளுடன் சேர்ந்தது. உணவுப்பந்தியில் தீண்டாமையும் சில இடங்களில் தொழில் காரணமாக ஏற்பட்டதே. பசுவின் தெய்வத்தன்மைக் கோட்பாடு காரணமாக, மாட்டுத் தோலுரித்தல், தோல்தொழில் ஆகியவை ஓரளவு பாவமான செயலாகக் கருதப்படுகின்றன. சண்டாளர், சக்கிலியர் தீண்டப்படாதவரானதற்கு இதுவே காரணம். 8. நெற்பயிர் விளைவிக்கும் வேளாண்தொழிலிலேயே பெரும் எண்ணிக்கையில் ஈடுபட்டிருக்கும் பெருவகுப்பினராகிய பறையர், பள்ளர், செறுமர் ஆகியோரையும் தீண்டத்தகாதவர் ஆக்கியதற்கான காரணத்தைக் காண்பது எளிதன்று. ஆனால், எந்தெந்தப் பகுதிகளில் கடும் உழைப்பை முழுமையாகவோ பெருமளவுக்குத் தாழ்ந்த சாதியின் மீது சுமத்தி, அத்தகைய அவ்வுழைப்புசெய்யாமலே “உயர்ந்த” சாதியினர் சுகவாசியாக வாழ உந்தப்பட்டனரோ அங்குதான் வேளாண் தொழிலாளர் தீண்டத் தகாத வர்களாய் இருப்பதைக் காணலாம். ஒரு குழுவினர் மீது தீண்டாமையைப் புகுத்தி விட்டால் நாளடைவில் அவர்கள் மனநிலையும் ஒடுங்கி விடுகிறது. தீண்டாதசாதி ஆக்கப்பட்ட பறையன் ஆட்டிறைச்சி உண்ண, கள்குடிக்கத் தயங்குவதில்லை; உயர்சாதியாளர் தமக்குரியது எனக் கருதும் செயல்களைப் புறக்கணிப்பதும் இயல்பே. 9. பிராமண சாதியினரின் தோற்றம் பற்றித் திட்டவட்டமாகக் ஏற்கக்கூடிய விளக்கம் உருவாகும் என்று கூற இயலாது. ஓரளவு பொருத்தமான சில கருத்துக்கள் வருமாறு; எலியட் சுமித் கருத்து “புதிய (ஞாயிற்றுக்கல்) நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் பின்னர் திராவிடராக உருவான பண்டைப் பழங்குடி மக்களுடன் மணஉறவுகொண்டு (குருதிக் கலப்பு) உருவானவர் திராவிடர்”. என்பது. அதைத் திருத்தி “எகிப்திலிருந்து அந்நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் திராவிடர்களுடன் மணஉறவு கொண்டு குருதிக் கலப்புற்றனர். அதன் பயனாக எழுந்த இனமே பிராமண சாதி” என நான் சொல்லும் திருத்திய வடிவத்தைத் தானும் ஏற்பதாக எனக்கு எலியட் ஸ்மித் எழுதியுள்ளார். எனது திருத்திய கோட்பாடு பின் வருவனவற்றோடு இசைகிறது:- (1) பொதுமக்களிடமிருந்து வேறுபட்ட வேறொரு பரம்பரையில் வந்தவர்கள் எனத் தம்மைப் பிராமணர் கருதுகின்றனர், இப்படி அவர்கள் தென்னிந்தியாவில் கூறும் பொழுது தங்கள் மரபு வேறு, திராவிடர் மரபுவேறு என்கின்றனர். கொஞ்சம் கூடப் பகுத்தறிவின்றி ஐரோப்பிய ஆய்வாளர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்! ஆனால், இது உண்மைக்குமாறானது. தென்னிந்திய பிராமணர் பெருமளவுக்கு முகத்தோற்றம், நிறம், படிப்பறிவு ஆகியவற்றில் பிற சாதியினரிடமிருந்து மாறுபட்டிருப்பதினாலேயே இதைப் பலரும் ஏற்கின்ற நிலை உள்ளது. எலியட் சுமித் (மற்றும் அவர் கருத்தே கொண்ட ஆய்வாளர்களின்) நூல்கள் வெளிவ ருமுன்னர் பி ரா மணர் தம து ம ர பில் இரு ந்த தாக ப் பீ ற் றிக் கொ ள்ளும் (திராவிடமல்லாத) வேறு மரபானது இந்தோ ஆரிய மரபு என யோசனையின்றி அபத்தமாகக் கருதப்பட்டது. (2) “The children of the sea” நூலில் பெரி விளக்கியுள்ளபடி ஞாயிற்றுக்கல் Hellolithic வழிபாட்டு நாகரிகத்தைக் கொண்டு சென்று பரவியவர்கள் (இந்தோனேசியா போன்ற) பல இடங்களிலும் தாமே தெய்வம் அல்லது தெய்வங்களுக்குப் பிறந்தவர்கள் என்று கதைத்துக் கொண்டு ஆளும் அதிகார வகுப்புகளாகத் தங்களை ஆக்கிக் கொண்டு ள்ளனர். ஒவ்வொரு பிராமணனும் தெய்வ மே என்பதுதான் பிராமணியக் கோட்பாடுமாகும். (3) அந்த நாகரிகத்தை இங்கு கொண்டு வந்தவர்கள் ஞாயிறு வழிபாட்டுடன் பாம்பு வழிபாட்டையும் இணைத்துக் கொண்டனர். பார்ப்பன வகுப்புக்களிலேயே மிகப் பழமைப் பற்றுடைய, மிகப் போற்றப்படுபவர்களான நம்பூதிரிகளின் ஆசாரங்களில் ஒன்று நாயர் (சூத்திர)நாயர் குடும்ப இல்லங்களிலுள்ள நாகதெய்வங்களுக்குப் பூசனைசெய்வதும் ஒன்று என்பதைக் கண்டோம். பிரமன் ஞாயிற்றுத்தெய்வமானால், (பிராம்மண)ஜாதி முழுவதுமே ஞாயிற்று வணக்கத்துடன் மிக நெருங்கியது தானே. (4) ஞாயி ற் று க் க ல் Hellolithic வ ழிபா ட் டு நா க ரி க த்தை எ கி ப் தி லி ரு ந் து கொணர்ந்தவர்கள், நூல் நூற்பு, நெசவு, வேளாண்மை ஆகியவற்றையும் தம்முடன் இங்கு கொண்டு வந்தனர். இந்தக் கலைகளை அவர்கள் கொண்டு சென்று புகுந்த நாடு களிலெல்லாம் “கதிரவன் சேய்” தெய்வ மரபை Children of the Sun நிறுவியதுடன் அம் ம ரபினரின் முன்னோர் வேளாண்மை, பாசனம் இவற்றை உருவாக்கியவர்களாகவே கருதப்பட்டனர்.ஆனால் இந்தியாவில் அப்படி நுழைந்த வீரர் வேளாண்மையை தொடங்கியதற்கான எந்தத் தடையமும் இல்லை. எகிப்துடன் (கடல்வழியாக)த் தொடர்பு ஏற்படுவதன் முன்பே திராவிடர்கள் நெற்பயிர் வேளாண்மையை விளைவைத் தொடங்கிவிட்டனர் என்று நாம் மேலே கண்டுள்ளோம். அதுவே சரியானது. 10(i). நூற்பு நெசவுக்கலை ஏற்கெனவே திராவிடரிடம் இருந்தும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் புதுவரவாளர்களிடமிருந்து கற்றிருந்தால் அந்த நூற்பு- நெசவு “தெய்வத் தன்மையுடைய வந்தேறிகள்- உள்ளூர்ப் பெண்கள் கலப்பால் தோன்றிய ‘தேய்விகப்’ பிரிவினருடன்” தொடர்பு படுத்தப்படுவதும் இயல்புதானே. பிராமணனைத் தனித்துக்காட்டும் வேறுபாட்டுச் சின்னம் அவன் (ஆடைகளுக்கு உள்ளாக அணியும்) பூணூல்தான். எனவே இந்திய மக்களுக்கு நூற்பு, நெசவைக் கற்பித்து அதனால் அ வ ர் க ள் நன் றி க் கு ம் போற்று தலுக்கும் உரியவரான வந்தேறிகள் மரபில் வழிவந்தவர் என்ற கருத்திலேயே பிராமணர் உயர்வுக்கோட்பாடு தோன்றியிருப்பதற்குத் தெளிவான அறிகுறியாகும். (ii). ஆனால், எகிப்திலிருந்து (கடல்வழியாக) இந்தியாவுக்கு வந்தது நூற்பு நெசவு பற்றிய பொதுவான கோட்பாடே, அன்றி குறிப்பாகப் பருத்தி நூற்பு, பருத்தி நெசவு அல்ல. அக்கலைகளுக்கு இந்தியாவே முதல் தாயகம் ஆகும். தெலுங்கு நாட்டில் (ஒருவேளை பிற சில பகுதிகளிலும்) பிராமணர், பூணூலைப் பருத்தி (இலவ) மரத்தின் பஞ்சிலிருந்தே செய்ய வேண்டும் என்ற மரபு இன்றும் உள்ளது. பருத்திச் செடியின் பஞ்சைப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் இலவமரப் பஞ்சு பயன்பட்டிருக்கலாம், தற்போது மெத்தைகளிலும் இலவம்பஞ்சு பொதிந்த மார்புச் சட்டை களிலும் (life saving vest) பயன்படுவது தவிற பிறவற்றுக்கெல்லாம் பருத்தியே பயன்படுவதைக் க hண்கி n ற h ம் . (ஹெரடோட்டஸ் முதலியோர் எழுதிய பண்டைக் குறிப்புகள் யாவுமே இந்தியப்பருத்தி மரத்தில் விளைந்ததாகவே கூறுகின்றன, இன்றும் பருத்தி என்பதற்கான ஜெர்மன் மொழிச்சொல் (Baumwool) மரக்கம்பளி தான்). 11. இந்தியப் பட்டுத்தொழில் இங்கேயே உருவானதா அல்லது சீனா பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது பற்றி எதையும் கூறுவதற்கில்லை. சணல் தொழில் இந்தியாவுக்கே உரியது என்பதில் மட்டும் ஐயமில்லை. இன்றும் சணல் இந்தியாவுக்கு வெளியே எ ங் கு ம் இ ல் i ல ; வங்காள மக்கள் எப்போதுப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பதும் தெரியவில்லை. மலையாளக் கரையிலுள்ள கயிறு பின்னும் தொழிலும் இதுபோன்றதே. ஆனால், அது இன்னும் பழமைமிக்கது. 12. நெசவு சார்ந்த தொழில்கள் இந்தியாவில் கழிபழங் காலத்திலிருந்தே வழங்கிவந்தன. சிறப்பாகப் பருத்தித் துணியில் சாயம் போடுவதும் இணைந்து பெருக்கமுற்றதின் காரணமாக பல்வேறு சிறப்புத் தொழிலாளர் வகைகளும் பெருகின. சாதிமுறை தொழிலடிப்படையில் அமைந்ததால் (சாயம் போடுவோர் போன்று) தனிச் சாதிகள் உருவாக உதவியிருக்கலாம். 13. மக்களிடையே புதுப்புது (ஆடம்பரத்) தேவைகளைப் பெருக்கியதால் செ ல் வ ம் , ஆதி க் க மோகங்கள் பெருகின, பணக்கார வகுப்புக்களும் அதிகாரம் செலுத்தும் வகுப்புக்களும் பெருகி வளர்ந்தன . அரசு உருவானது. அரசு தலைநகரங்களும் ஏற்பட்டு நகரங்களை மையமாகக் கொண்டு நூற்றல்நெசவு, சாயத்தொழில், பருத்தித்துணி வாணிகம் முதலிய பெருகின. இப்பெருக்கத்தின் காரணமாக நேர்த்தியான, வேலைப்பாடுமிக்க, விலை யேறிய, கலைநயமான துணிகள் தேவைப்பட்டன; உச்சகட்டமாக உருவானது வியப்புக்குரிய ‘டாக்கா’ மஸ்லின் ஆகும். அதன் புகழ் ஐரோப்பிய ‘தேவதைக் கதைகளில்’ கூட ஏறியுள்ளது. 14(i). நெசவுத் தொழில் போலவே தொழில்நுட்ப வளர்ச்சி, உலோகத் தொழில், கல்சிற்பத் தொழில் முதலியவையும் வளர்ச்சியடைந்தன. முற்கால எகிப்தியக் கடலோடிகள் அவர்களோடு இணைந்து செயல்பட்ட மினோவ, பினிஷியக், கடலோடிகள் நீள்பயணமேல்லாம் ‘உயிரைக்காப்பனவும் நீட்டிப் பனவும் ஆன பண்புடைய பொருள்களைத் தேடியே’ என்பது மெய்யானால் அவர்கள் தேடிய அதிசயப் பொருள்கள் இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும். மன்னார்குடா முத்துக்கள், சங்குகள், மேல் தொடர் மலையிலிருந்து ஆற்று நீருடன் கரைந்து வந்து படிந்த பொன்துகள்கள் போன்றவையே அவை. (ii). போலிச் சங்குகள் செய்ய முதலில் தங்கத்தைப் பயன்படுத்திய தனாலேயே முதன்முதலாக தங்கம் மதிப்புப்பெற்றது என்பர் எலியட் சுமித். இதை பெரி ஆதரித்தாலும், நான் ஏற்கவில்லை.தொடுவதன் மூலம் மந்திர ஆற்றலை உய்க்கலாம் என்ற மூட நம்பிக்கை ஏற்பட்டவுடனே, தங்கம் எந்த n வ தி யி ய ல் மூ ல த் து ட னு ம் க ல க்கா த (chemical inertness)தன்மை உடையது ஆகையால் மந்திரம் மூலமாகச் செய்யும் கேட்டைத் தடுக்கும் பொருளாக தங்கத்தைக் கருதியிருக்க வேண்டும். (இக்கோட்பாடு இன்றும் இந்தியாவில் பரவலாக உள்ளது). 15(i). பல வெளிநாடுகளில் உலோகத் தொழிலாளர் செம்பு, வெண் கலத்தைப் பயன்படுத்தினாலும், இரும்பு அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இந்திய இரும்புத் தாது மூலத்தை (ore) பயன்படுத்தியிருக்கலாம். ஏனெனில் இந்தியாவின் பல பகுதிகளின் ‘உயர்ந்த அளவு இரும்புடைய’ இரும்புத்தாது தரைக்குமேலேயே காணப்படுகிறது. ஹைதராபாத் பகுதியில் குகைகளில் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர்ச்செய்த இரும்புக் கருவிகள் கிட்டின. இரும்பின் பயனீடும் கல்கட்டடமும் வேதகாலத்துக்கு முன்பே திராவிடமொழி பேசுநருக்குத் தெரிந்திருக்க வேண்டும். (ii). எலியட்சுமித் கூறுகிறபடி செம்பு உளியே எகிப்தின் கற்கட்டட, சிற்பக் கலையைத் தோற்றுவித்தது. அதுபோல இரும் புக் கருவியே இந்தியாவின் கல்கட்டுமானம், சிற்பத்தைத் தோற்றுவித்தது எனலாம்; இரும்பினால் கூரான கருவிகள் ஆக்கப்பட்டன; போர்த் தொழில், சாதிகள் தோன்றின; வன்முறையில் தம்மிடம் தோற்போரின் உழைப்பையும் உடைமையையும் கவரும் கொள்ளை rapacious அரசுகளும் இந்தியாவில் ஏற்பட்டன. 16(i). தங்கம், வெள்ளி , முத்து, வைரம் மணிக்கற்கள் இவற்றின் பயன்பாடும் துணி நெசவுத்தொழிலைப் போலவே சமூக அமைப்புகளில் பெரும் மாறுதல்களை உண்டுபண்ணின. இவற்றின் தாக்கம் துணித்தொழிலை விடக் கடுமையாகவே இருந்திருக்கும். (ii). மணிக்கற்கள் அணிவது மன்னவன் கடமைகளுள் ஒன்று என்று மனுநீதி சாஸ்திரம் கூறுகிறது. தொட்ட அளவில் பரவும் மந்திர ஆற்றல் (contagious magic) கொள்கைப்படி இக்கற்களின் உயிர்ப் பண்பு மன்னனிடம் பரவுகிறது. மன்னன் ‘அரசியலின் வாழ்வின் முழுமுதல் மந்திரச் சின்ன மாதலால்,’ அது அவன் மூலம் அரசியலின் குடிமக்கள் அனைவருக்கும் செல்கிறது. மன்னன் கடமைகளுள் இன்னொன்று மணிக் கற்குவைகளைப் பெருக்குவது. உயிரைக்காக்கவேண்டுமென்றால் தரலாம் விற்கலாம் என்றாலும் மணிக்கற்களை விற்கக் கூடாது என்ற கொள்கைக்கும் இக் கருத்தே அடிப்படை. (iii). தனி நபர்களும் கூட பொன், வெள்ளி, உயர் மணிக் கற்களாலான பூணணிகள் வாங்கிச் சேர்ப்பதே அறிவுடைய, சிறந்த முதலீடு எனக் கருதுகின்றனர். பயன்கள் மந்திரவகை நன்மை, சமூக மதிப்பு ஆகியவை மட்டுமல்ல; எந்த நேரத்திலும் அவற்றைவிற்றுப் பணம் பெறவும்கூடும். பொதுவாகச் வணிகப் பொருள்களின் தேவையளவு இந்தியாவில் ஏறுக்கு மாறாக உள்ளது; பெரும்பாலான பொதுமக்கள் உயிர்வாழத்தேவையான உணவு முதலிய பொருட்களில் பற்றாக்குறை; ஆனால் மிகச் சிலரான மேட்டுக்குடியினரின் டாம்பீகத் தேவைக்கான பொருள்கள் தாராளமாகக் கிடைக்கும்! நடுத்தரவகுப்பு மக்கள் தொகை வளர்ந்தது அணிமைக் காலத்திலிருந்தே; எனினும் அவர்கள் தேவை உற்பத்தியை ஓரளவுக்குப் பெருக்கிவருகிறது.  7. இந்திய நாகரிகத்துக்கு திராவிட மொழி பேசுநரின் பங்களிப்பு இன்றைய (1924) நிலை திராவிடர் விழுக்காடு எவ்வளவு? முன் இயல்களில், ‘திராவிடர் கள்(திராவிடமொழி பேசுநர்) யார்? போன்ற வரலாறு சார்ந்த பொருண் மைகளை விரிவாக விவாதித்துள்ளோம். திராவிட மொழிபெசுநர் எதிர்காலம் பற்றி- அதாவது வருங்கால இந்திய வரலாற்றிலும் உலகவரலாற்றிலும் தென்னிந்திய திராவிடமொழி பெசுநர் பங்களிப்பது எவ்வகையில் அமையும்? என்பது பற்றிப் பார்ப்போம். 2. மேற்சொன்ன வினாவிற்கு விடையளிக்கு முன்னர் இன்றைய நிலையைப்பார்ப்போம். இன்று நாம் காணும் முரண்பாடு திர hவிடப் பகுதியில் தான் இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த நாகரிகம் இன்றும் நின்று நிலவுகிறது. அதே நேரத்தில் பல் துறை வளர்ச்சியில் முன்னணியில் உள்ள பகுதியும் தென்னிந்தியாதான் என்பது வியப்புக்குரியது. இந்தியாவின் பிற பகுதிகள் இன்றும் இடைக்கால நூற்றாண்டுகளில் (கி.பி. 700-1500) ஐரோப்பிய நாடுகள் இருந்த நிலையையே, அல்லது சிலுவைப் போர்கள்(கி.பி. 1000-1200)நடந்த காலத்து பாலஸ்தீன நாடு இருந்த நிலையையே ஒத்தனவாக உள்ளன. 3. மதுரையில் மீனாட்சியம்மன், சிவன் கோயில்களில் நாம் காண்பவை எகிப்திலுள்ள ஐசிஸ்,ஆஸிரிஸ் Iris, Osiris. அல்லது பாபிலோன் தெய்வம் மார்துக் இவற்றைக் காண்பது போன்ற உணர்வையே தரும். சென்னை வேளாண்மைத் துறைசார்ந்த கால் நடைமருத்துவர் ஒருவர் எகிப்திய அபிஸ்ஹயீளை கடவுளுக்கு ஈடான கோயில் நந்தியைப் பார்த்தபொழுது அது ஜெர்ஸிக்காளை போன்று இருந்தது என்றார். 4 . எ கி ப் தி ன் மி க ப் பழை ய இ ல க் கி ய த் திலேயே ம றைந் து வந்தனவாகக் குறித்த பண்புகளை இன்றும் நாம் கேரள நாயர் சாதியினரிடம் காணலாம். ஆனால், அதே நாயர் சாதி இளைஞர் ஒருவர் இந்தியத் தொழிலாளர் பிரச்சினைபற்றி ராயல் ஆசியவியல் கழகத்தில் நவீனக் கட்டுரை படிப்பதையும் காணலாம். வாணிகத் துறையில் சென்னை பிற்பட்டிருக்கிறது; எனினும் இந்தியாவுக்கும் மேலைவேள்ளையர் நாடுகளுக்கு மிடையேயுள்ள அறிவுசார் கலந்துரையாடல் மூலமான தாக்கத்தில் சென்னையும் கல்கத்தா, பம்பாய் அளவுக்கு முக்கியமானதே. இ ந் தி ய ச ம ய த த் து வ ங் களை மேனாட்டவர்க்கு இயையப் புதிய விளக்கத்துடன் தரும் பணி அடையாற்றுக் கரையில்தான் நடந்தது (தியோசாபிகல் சங்கம்). சென்னையின் முன்னாள் பள்ளியாசிரியர் (சீனிவாச சாஸ்திரி) இன்று இலண்டனிலும் ஜெனிவாவிலும் இந்திய அரசின் பேராளராக இருக்கிறார். 5 (i) இந்திய அரசியலில் கவர்ச்சியான ஆற்றல்மிக்க தலைவர் களான திலகர், காந்தி, சி.ஆர். தாஸ் ஆகியவர்கள் இந்தியாவின் பிறபகுதி களைச் சார்ந்தவர் களானாலும், ஜனநாயகமுறை அரசியலைச் சென்னை மாகாணச்சட்டமன்றத்தில் திறம்பட வழி நடத்துவதில் தமிழ்ப் பிராமணரே தலைமைவகிக்கின்றனர். (ii) இந்திய தொழிலாளர் சட்ட உருவாக்கத்தில் இந்தியர் அனைவரிலும் முதலிடம் வகிப்பவர் ஒரு நாயரே(டி.எம்.நாயர்) தற்காலத் தொழிற்சங்க இயக்கம் தோன்றியது பம்பாயிலோ, கல்கத்தாவிலோ அல்ல, சென்னையில் தான். இந்தியத் தொழிற்சங்களுக்கு முன்மாதிரியாய் உள்ளது சென்னையி லுள்ள அலுமினியத் தொழிலாளர் சங்கம்தான். ( i i i) கூட்டுறவு இயக்கம் சென்னையி ல் தா ன் தொடங்கிய து . திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கம், மயிலாப்பூர் சாஸ்வத நிதி ஆகிய இரண்டும் தான், வாணிகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மேனாட்டுக் கூட்டுறவு முறையை நன்கு செயல்படுத்திவரும் இரண்டு அமைப்புகள் ஆகும். இந்திய அரசு கூட்டுறவு முறையை தொடங்கு வதற்கு முன்பிருந்தே இவை தோன்றி (குறிப்பிடத்தக்க அரசு உதவி எதுவும் இல்லாமலேயே) வளர்ந்தவை இவை. 6 (அ) உறுதியாகக் கூறஇயலாவிட்டாலும் நகரமக்கள் தொகையில் பெரும் விழுக்காட்டினர் கிரிக்கட் வளைகோற்பந்து (ஹாக்கி), டென்னிஸ், கால் பந்து இவற்றை விளையாடுவதில் கல்கத்தா, மும்பாயைவிடச் சென்னையே முதலிடம் வகித்து வருகிறது எனலாம். (ஆ) பிரிட்டிஷ் கேளிக்கைகள் பற்றிய தமிழர் மனப் பான்மைக்கு கும்பகோணம் கல்லூரி முன்னாள் தலைவர் ஒருவரைப் பற்றி அவருடைய பழைய மாணவன் சொன்ன செய்தி பொருந்தும்: “அவர் எங்களுக்கு கால்பந்து ஆடக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியபோது. நாங்கள் ‘உதைக்கக் கற்றுக்கொடுக்கிறீர்களே; நாங்கள் என்ன கழுதைகளா?’ என்று முதலில் சிணுங்கினோம். ஆனால் இப்போது நாங்கள் அதற்காக அவரிடம் நன்றிபாராட்டுகிறோம்”. 7. முன் இயல்களில் குறித்தவாறு பெண்களின் சமுதாயநிலை, படிப்புச் செயல்பாடுகள் ஆகியவை சார்ந்த யாவற்றிலும் பர்மாவை அடுத்து இந்தியாவின் எப்பகுதியையும்விட முன்னணியில் நிற்பது திராவிட இந்தியப் பகுதிதான். 8. திராவிடப் பண்பாட்டின் இந்த வளர் நிலைக்கு ஒரு முக்கிய காரணம், பிரிட்டிஷ் தொடர்பானது மற்ற பகுதிகளைவிடத் (தமிழ் நாடு உள்ளிட்ட) தென்னாட்டுடன் நெடுநாளாக இருந்து வருவதுதான். அத்துடன் மகாராட்டிரர்கள், மைசூரைச் சார்ந்த ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகிய வர்கள் தாக்குதல்கள், கொள்ளைகளிலிருந்து தமிழக மக்களை பிரிட்டிஷ் ஆட்சிதான் அரணாக இருந்து காத்தது.மற்றொரு காரணம். மூன்றாவதாக கிறித்துவ சமயத்தாக்கம் வடஇந்தியாவைவிடத் தென் இந்தியாவில் அதிகம். இயேசுவின் அப்போஸ்தலர்களுள் ஒருவராகிய புனித தாமஸ் இந்தியாவில் அம்மதத்தை முதலில் நிறுவினார் என்ற தொல்கதையும் tradition உள்ளது. அக் கதை உண்மையோ அல்லவோ, கிருத்துவ மதம் இங்கு பரவிய காலத்தை அக்கதை சரியாகச் சுட்டுவதாகலாம். “சிரியன் கிறித்தவர்” முக்கிய மையம் திருவாங்கூர், கொச்சி மற்றும் இப்பகுதிகளை அடுத்த சென்னை மாகாணப் பகுதியும்தான். தென்னாட்டின் இந்நிலைக்கு மிக மிகமுக்கியமான காரணம் திராவிட மொழிகளைப் பேசும் மக்களிடையே ஆங்கிலமொழி மிகப் பேரளவில் பரவியுள்ளமைதான். 9 (i) ஆங்கிலம் எந்த அளவுக்குத் தென்னிந்திய மொழியாகவே ஆகியுள்ளது என்பது வியக்கத்தக்கது. சென்னையில் எனக்கு ஏற்பட்ட முதல் அனுபவங்களுள் ஒன்று, காசியில் புதிதாக உருவாக்கிய இந்துப் பல்கலைக் கழகச் சார்பில் வடக்கேயிருந்து வந்த பேச்சாளர்கள் பேசிய பொதுக் கூட்டமாகும். பேச்சுக்கள் முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தன. பெரிய மக்கள் திரள் கூர்ந்து கேட்டது. என் கடைசி அனுபவங்களுள் ஒன்று சென்னையில் திருவல்லிக்கேணி கூட்டுறவுச் சங்கத்தின் அரையாண்டுக் கூட்டம்தான். கூட்டம் தோடங்கியபின் சென்ற நான் ஒருவன்தான் ஐரோப்பியன். ஆயினும் நடவடிக்கைகள் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தன. (ii) சென்னை நகர மொத்த மக்கள் தொகை ஐந்து லட்சம் தான் (1924). ஆனால், அங்கு ஆங்கில நாளிதழ்கள் ஆறு நடைபெறுகின்றன. மெயில், எக்ஸ்பிரஸ், இந்து, நியூ இந்தியா, ஜஸ்டிஸ், ஸ்வராஜ்யா; ஆனால் பிறமொழிகளில் தமிழில் ஒன்றும் தெலுங்கில் ஒன்றுமே. உலகின் வேறு எந்தப் பகுதியில் உள்ள நகரத்திலாவது அப்பகுதியல்லாத அயலார் மொழி ஒன்றில், ஆறு நாளிதழ்கள் அச்சிட்டு வெளிவருவதைப் பார்க்க முடியுமா? அ தா வ து ஒ ரு பகு தி மக் க ள் த ங் களுக் கு ஆர் வமூ ட்டு ம் செய்திகளை தம் சொந்தத்தாய் மொழியை விட்டுவிட்டு அயலார் மொழி இதழில் படிக்க விரும்புவதை உலகிம் வேறு எங்கும் காண இயலாது! (iii) தன்னாட்சியியக்கம் (அன்னி பெசண்டின்Home rule) உச்சநிலை யிலிருக்கும்போது நியூ இந்தியா பத்திரிகை (ஐரோப்பியர் நான்கு பேரே உள்ள) கும்பகோணம் நகரில், ஒரு பொதுக்கூட்டத்தின் நடவடிக்கைகள் முழுவதுமே ஆங்கிலத்தில் இன்றி தமிழிலேயே இருந்ததை வியப்புக்குரிய செய்தியாகக் குறிப்பிட்டிருந்தது! பேசுபவர்கள், கேட்பவர்கள் அனைவருமே ஆங்கிலத்திலேயே பேசி எழுதிப் பழகிவிட்டவர்கள் என்பதால் தமிழில் கூட்டத்தை நடத்தியது நாட்டுப் பற்றுக்கு ஒரு அறிகுறி என்று கொள்ளப் பட்டது. 10. பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழி வளர்ச்சி அரசின் முனைப்பால் வந்ததன்று. கல்வித் துறைக்குச் செலவிடப் போதிய பணம் அரசிடம் இல்லை. சென்னை மாகாணப் பொது மக்களின் ஆங்கிலமோகமே காரணம். தவிர, திருவாங்கூர், கொச்சி இராச்சியங்களிலும் இதேநிலைதான். கொச்சி இராச்சியமோ எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. 11. உயர்தரக் (கல்லூரிக்) கல்வி அந்தந்தப்பகுதித் தாய்மொழி வாயிலாக அல்லாம ல் , ஆங் கி ல ம் ஆகி ய அந் நி ய ர் மொழியில் நடை பெறுகிறது என்ற ஒரு பெருங்குறைபாடு இருந்து வருகிறது. ஆனால், இன்றைய நிலையில் இதனால் மிகக் குறைந்த அளவு பாதிக்கப்படுவது திராவிடப் பகுதியே. கல்லூரிக் கல்வி தொடங்குமுன்னர் பிற மாகாண மாணவன் கல்லூரிப் பாடங்களை ஆங்கிலத்தில் பயிலத் தன்னைத் தகுதிப்படுத்து வதற்காக செலவிடும் ஓர் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக மாணவனுக்கு மிச்சம். எனினும் தற்காலப் பொதுக்கல்வி, அறிவியல் கல்விகளின் ஆற்றல் மிக்க பயிற்று மொழிகளாக உருவாகும் வாய்ப்பு வங்காளி, இந்தி, உருது மொழிகளுக்குத் தான் அதிகம் திராவிடமொழி களுக்குக் குறைவு என்பதே நிலை. வட இந்தியர் தம் தாய் மொழிகளுள் ஒன்றை (இந்தி,வங்காளி) இருபது -முப்பதுகோடி மக்களின் இலக்கிய, அறிவியல் மொழியாக ஆக்கிவிட இயலும். ஆனால், தென் இந்தியாவில் பொதுமக்கள் மொழியும் படிப்பு, கல்வியக மொழியும் ஒன்றே என்ற நிலை ஏற்படும் காலம் அந்தத் திராவிட மொழிகள் மறைந்த பின்னர்த்தான் (அதாவது அவற்றுக்குப் பதிலாக அனைத்துத் துறை களிலும் ஆங்கிலம்) என்ற நிலையில்தான் நிகழுமோ என்னவோ! 12. நான் நினைப்பது வருமாறு; இப்படி நாட்டுமொழிகள் ஒழிந்து ஆங்கிலம் அவ்விடத்தைப் பிடிப்பது சரியா? அப்படித்தான் நிகழ்ந்து விடுமா? என்பதைச் சென்னை மாகாணத்தில் தமிழ் முதலிய மொழி பேசுநர்தான் முடிவு செய்ய வேண்டும். இம்மொழிகள் நின்று தழைத்திட வேண்டுமாயின் வேறு முயற்சிகள் வேண்டும். சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் (council) நான் “ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவையெல்லாம் ஒரு பொது வரிவத்தை(லிபி) ஏற்றுச் செயல்படலாமா என்பதை ஆய்வு செய்யக் குழு ஒன்றை அமைக்கலாம்” என்று தீர்மானம் கொணர்ந்தேன். திராவிடமொழிகள் பிழைத்து வாழத் தம் வலிமையை ஒன்று திரட்டி முயலவேண்டுமென்று சொன்னேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை பேசுவோர் மொத்தம் ஆறுகோடி பேர் (1924ல்). இவர்கள் சேர்ந்து உயிர்ப்புள்ள திராவிட இ ல க் கி ய த்தை உருவாக்கிப் பேணலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி எழுத்துமுறை இருப்பதனால் இன்று தமிழ், தெலுங்கு லிபி நூலை 1.80கோடி தமிழர், 2.10கோடி தெலுங்கர் மட்டுமே படிக்க இயலும். நான்கு மொழிகளும் மிக அணுக்கமான தொடர் புடையவை. இவற்றுக்குப் பொது லிபி உருவாக்கினால் எடுத்துக்காட்டாக தமிழ் நூலை அதிக சிரமமின்றி தெலுங்கர் கன்னடியர், மலையாளிகள் படிக்க இயலும். 13. மேலும் பொது வரி வடிவ லிபியில் நூல்களை அச்சிட்டால், நான்கு மொழி இலக்கியங்களும் யாதொரு கடும் முயற்சியும் இன்றிப் பெருமளவுக்கு வளர இயலும். அத்துடன் இப்போதைய கடின லிபியை மாற்றி எளிய பொது லிபியை உருவாக்கினால் வாசிக்க எழுத அச்சகம், கைஅச்சுப்பொறி, தட்டச்சு முதலியவைகளின் செயல்பாடுகளை மாகாணமுழுவதும் அனைவருக்கும் எளிதானதாகவும் மாற்றலாம். ஆனால் என் தீர்மானத்தைச் சென்னை மாகாண சட்டமன்றம் (Legislative Council) ஏற்காமல் தோற்கடித்தது; காரணம் பழமைப் பற்று எனலாம். அந்தந்த மொழியின் லிபி அம்மொழியுடன் இன்றியமையாத் தொடர்புடையது, புனிதமானது என்றும் கருதியிருக்கலாம். தாய்மொழிகளின் இடத்தில் ஆங்கிலம் வரட்டுமே நல்லதுதானே(!)என்றும் சிலர் நினைத்திருக்கலாம். என்னுடைய இந்த அ னு ப வ ம் போலவே அண்மையில் ஆந்திர நாட்டில் தெலுங்கு இலக்கிய நடையை நடப்புத் தெலுங்குப் பேச்சு நடைபோல் மாற்றிடப் பெரு முயற்சிகள் செய்த போதிலும் அவற்றைத் தெலுங்குப் பண்டிதர்களில் பெரும்பாலோர் கடுமையாக எதிர்த்தனர். இத்தகைய போக்கு அந்தந்த மொழியை நிலைபெறச் செய்யாமல் மக்கள் வழக்கிவிருந்து துரத்தி (மியூசியம் மொழியாக்கி) விடலாம். 14. ஒரு சமூகத்தின் உணர்வு நிலைகளுக்கும் (native genius) அவர்களுடைய சொந்தத் தாய் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பர் சிலர். கருத்தை வெளியிடும் கருவியாக அயல்மொழியைக் கொள்ளும் பொழுது குழந்தைகள் மூளை வளர்ச்சியின் ஒரு கூற்றின் குறைபாடு எற்படலாமென அவர்கள் கருது கிறார்கள். ஒரு நாடு சமூகத்திற்கும் பிறவற்றுக்கும் இடையேயுள்ள அடிப்படை மனநிலை, உள்ளுணர்வு, மரபுகள் ஆகியவற்றை மிகைப்படுத்துவது இந்த எண்ண ஓட்டம் நேர்மாறான நிலை தான் சரி என்பதை வரலாறு காட்டும். 15. தாந்தே(Dante) காலத்து பிளாரன்ஸ் நகரமக்கள் டஸ்கனி பகுதியில் தங்கள் முன்னோர்கி.மு.300வரைப் பரவலாகபேசிய எத்ரஸ்கன் மொ ழியை அழிய hது வைத்திருந்து தாந்தேயும் எத்ரஸ்கன் மோழியில் காவியம் எழுதியிருந்தால் அது மிகு சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் கருதவில்லை. முன்னர் ஜுலியஸ்சீசர் படையெடுப்பில் பண்டைய பிரான்சு நாட்டிலிருந்த பெல்கே, கல்லீ, அக்குவிட்டனி (Belgae,Galli,Aquitani) படைகள் தோற்று அம் மொழிகள் அழிந்திராவிட்டால், இன்றைய பிரஞ்சு மக்களின் நாகரிகம் இன்னும் உயர்வுற்றிருக்கும் என்று கூற இயலாது. 16. திராவிடமொழிகள் அனைத்திலும் எக்கருத்தையும் நுட்பமாகத் தெரிவிக்கவல்ல சிறந்த மொழி தமிழே! ஆயினும் தமிழ்ப்பட்டதாரிகள் அவ்வகையில் ஆங்கிலத்தையும் தமிழுக்கொத்த கருவியாகக் கருதுவதாகவே தோன்றுகிறது . இது சரியானால், ஆங்கிலத்தில் நேரடியாக எழுதிய (அல்லது மொழி பெயர்க்கப்பட்ட) முழு உலகின் அனைத்துக் கருத்துக்களும் இலக்கியமும் தமிழருக்கு எளிதாக ஆங் கிலம் வழி யாகவே பயன்படும் என்ற சிறந்த சாதகநிலை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, மொத்தத்தில் தங்கள் குழந்தைகள் இளமையிலிருந்தே ஆங்கிலத்தைக் கற்று அதில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்கும் இன்றைய(1924) தென் இந்திய மக்கள் கருத்து சரியாகவே எனக்குப்படுகிறது. 17. திறமான ஆராய்ச்சிக்கு இந்தமொழி உதவுமா அல்லது அந்தமொழி உதவுமா என்பது விவாதத்துக்குரிய செய்தி. பாராளுமன்றக் கு டியா ட்சி சிறந்ததா, அயலார்க்குக் கட்டுப்பட்ட சிப்பந்திகள் (bureaucrats) ஆட்சி சிறந்ததா என்பதும் அவ்வாறே. (ஆனால், இரத்தசோகை (anaemia) மேம்பட்ட சி ந்தனை க்கு ம், தி றம்பட்ட செயலுக்கும் உதவுமா என்பதோ, அலைக்கழிக்கும் பிற நோய்கள் நாட்டுக்கு நன்மை பயக்குமா என்பதோ விவாதத்துக்குரிய செய்தி ஆகாது!) எனவேதான் பெருமுழக்கத்துடன்1924ஐ ஒட்டி அறிவித்த செய்திகளாகிய வேல்ஸ் இளவரசர் வருகை, இந்திய அரசிய லமைப்புச் சீர்திருத்தம், மலையாளமாப்பிளா கலவரம், கிலாபத் கிளர்ச்சி, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றைவிட, ராக்பெல்லர் நிறுவனத்தினர் சென்னைக்கு வந்ததும் கொக்கிப்புழு நோய்க்கெதிரான முயற்சி களைத் தொடங்கி வைத்ததும் அதிக முக்கியமான நிகழ்ச்சிகள் என்பது என் கருத்து. 18. சென்னைமாகாணப் பகுதிகள் பலவற்றில் கொக்கிப்புழு நோயால் அல்லலுறுபவர் விழுக்காடு 100க்கு 65 முதல் 98 வரை ஆகும். இதுபோன்ற பிற நோய்களும் உள்ளன. மலேரியா போன்று அவை நோயாளியை விரைந்து கொன்று விடுவதில்லை; anaemia பொதுவான நரம்புத்தளர்ச்சி, மனக் கிளர்ச்சியின்மை ஆகியவற்றை உண்டாக்கி, பாதிக்கப்பட்டவரின் செயல் பாட்டையே கெடுத்துவிடுகிறது. இதனாலன்றோ ஐரோப்பியர் கிருஸ்தவ சமயம் மக்களுக்கு ஊட்டும் நம்பிக்கை நிரந்தர மோட்ச வாழ்வாயிருக்க, இந்தியாவில் அது செயலற்ற நிலை (நிர்வாணம்) ஆக உள்ளது! இந்தியரின் சோர்வுக்கோட்பாடு pessimism மருத்துவரால் இன்ன நோய் என்று கூறமுடியாத நிலையில், உடலுக்குள் நின்றழிக்கிற நரம்புத் தளர்ச்சி யூட்டும் பலவகை நோய் நலிவுகளாலும் ஏற்படுவது. ராக்பெல்லர் நிலையம் கொக்கிப்புழுநோய்த் தடுப்பைக் தேர்ந்தெடுத்தது அது பெருங்கேடு விளைப்பது என்பதனால் மட்டும் அன்று; அதை எதிர்க்கும் முயற்சி வேறு பல நல்லவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதனாலாகும். கொக்கிப்புழு குணப்பட்ட பின்னும் அது (மிக எளிதில்) மீண்டும் தொற்றிவிடாதபடி காக்க மேற்கொள்ளும் துப்புரவுப் பழக்கங்கள், அந்நோயை மட்டு மின்றிப், பிற நோய்களையும் தடுக்கும் என்பதும் ஒரு பெரிய நன்மை. 19. திராவிடரின் மனித ப்பண்பாற்றலை மதிப்பிடுபவர்கள் தாம் காணும் திராவிடரில் மிகப் பெரும்பாலோர் அன்னாருக்குத் தெரியாமலே பலநோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனைக் உணர வேண்டும்; அவர்கள் நோய்களில் பல அணிமைக்காலம் வரை சிறிதும் உணரப்படாதவை. (ஆனால் உணரப்பட்டபின் மிக எளிதில் தடுக்கக் கூடியவை). மேலும் திராவிடர் நாட்டுப்பற்றும் இப்புதிய செய்திகளால் விரிவடையும். (குறுகிய மனப்பான்மை யின்றி) உதவி எங்கிருந்து வந்தாலும் வரவேற்கும் மனநிலையும் ஏற்படும்- எடுத்துக்காட்டாக அமெரிக்க மருத்துவர்(வேலூர்) செல்வி ஐடா ஸ்கடர் இலங்கை செல்வி வீரசிங்கா ஆகியோர் தொண்டு வரவேற்கப்படுகிறது. 20. தளர்வூட்டும் இந்நோய்களுக்கு எதிரான செயல்பாடுகளால் இந்தியரின் சராசரி அறிவாற்றல் பன்மடங்கு வளருமென்பது உறுதி. அன்றாட வாழ்வே பிரச்னை என்ற இன்றைய நிலைமாறினால், 30 கோடி இந்தியர் திரண்டு உலகின் வல்லமை வாய்ந்த (புதிய வரவு) வல்லரசு ஆக உருப்பெற்று விடுவர். 21. அவ்வாறு உருப்பெற இந்தியாவுக்கு மேல்நாடுகளின் உதவி தேவை. முதலில் இந்தியர் இன்றைய வெறும் ஆழ்ந்த அடிப்படையற்ற கற்பனைகளைக் கைவிட்டு, எந்த விஷயமாயினும் அதன் இன்றைய நிலைமை, அதன் சாதக பாதகங்களைப் பற்றித் தீரயோசித்தல், மாற்றம் தேவையெனத் தோன்றினால் அம்மாற்றத்தை முதற்கண் சிறு அளவில் செயல் படுத்திப்பார்த்துப் பின்னர் முடிவு செய்தல், என்னும் மேலை விஞ்ஞான முறையாகிய Observation And Experimentation ஐ இந்தியர் பின்பற்றியாக வேண்டும். இதில் வழிகாட்டியாயிருப்பவர் இன்று சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆவர். மேலும் பலர் அவர் போல் உருவாகிவருகிறார்கள். 22. இன்று இந்தியரைப் பாதிக்கும் ரத்தசோகை யயேநஅயை போன்ற நோய்களால் வரும். உடல் நலக்குறைவும், வெறும் கற்பனை மட்டும் சார்ந்த சிந்தனையும் விரைவில் நீங்கவேண்டும்; நீங்கிய பின்னர் முன்பு ஐரோப்பியர் காட்டுமிராண்டி களாகவிருந்த காலத்தில் (கி.பி.1000வரை) இந்தியா உயர் நாகரிக நாடாயிருந்ததற்குக் காரணமான பண்புகள் மீண்டும் செயல்படும். சிறிதளவு உணவு, உடை; கடுங்குளிர் இல்லாததால் உறையுள் வகையில் அதிகச் செலவு இங்கு இன்மை, முதலியவை அடங்கியவை சூழலில் இந்திய மாணவர்கள் நுண்ணிய தத்துவங்களுக்குப் பண்டே பெயர்பெற்ற “எளிய வாழ்வு, உயரிய சிந்தனை” வல்லவர்கள் ஆகையால் வருங்காலத்தில் மிகச் சிறந்த ஜனநாயக மரபுடைய சிறந்த நாகரிகத்தை உருவாக்கவல்லவர்கள். 23. ஐரோப்பிய, அமெரிக்க நாட்டுமக்களின் வெறும் உலோகாயதப் அடிப்படை(too materialistic) வாழ்வுமுறை நாகரிகத்தை என்றும் இந்தியர்கள் மதித்தது இல்லை. பணம், படைபலம் அடிப்படையில் செயல்படும் மேலை நாட்டவர் உலகநாடு களிடையே, உலகமக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டத் தவறிவிட்டனர். ஒரு நாட்டிற்குள்ளேயே பல வகுப்புகளிடையே, தனி நபர்களிடையே ஒற்றுமையை, அமைதியைக் காண முடியவில்லை. (ஐரோப்பிய-அமெரிக்க) நாட்டவரிட மிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ளவேண்டுவது எவ்வளவோ அதே அவ்வளவு இந்தியரிமும் மேலை நாட்டார் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கும் (the west has as much to learn from India as to teach) கிழக்கில் இருந்து மேற்கு கற்பதாயினும் சரி, மேற்கிவிருந்து கிழக்கு கற்பதாயினும் சரி ஆங்கிலத்தில் பேராற்றல் பெற்ற திராவிடமொழி பேசுநரின் பங்கு அதில் பெரியதாக, சிறந்ததாக இருக்கும்.  குறிப்பு ‘ஆரியம்’ என்ற சொல்லும் ‘இந்தோ ஜெர்மானிய’க் குடும்ப மொழிகளும் (2014) இன்றைய மொழியியல் “இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம்” என்பறே “இந்தோ -ஜெர்மானியக் குடும்பத்தைச் சுட்டுகிறது. 24. “ஆரியர்” என்ற சொல் இந்தியாவிற்குள் நுழைந்து வேத சம்ஸ்கிருத மொழியைப் புகுத்தியவர்களை மட்டுமன்றி, இந்தோ ஜெர்மானிய குடும்பத்தின் பல்வேறு மொழிகளை முதல்முதலில் பேசியவர்களையும், (வேறு சிலரால் இதற்கும் முற்பட்டு அவ்வினத்தின் எல்லா மொழிகளுக்கும் மூலமான தொல் இந்தோ ஜெர்மானிய Proto Indo-Germanic பேசியவர் களையும்) குறிக்க வழங்குகிறது. இப்பயன்பாடு தவறானதென்று எனக்குத் தோற்றுகிறது. அப்படிக்குறிப்பது உடல் வலுவினாலோ, இனப்பெருக் கத்தாலோ, பல்வேறு இடங்களுக்கும் பரவிச் சென்று பிற இனங்களை வென்றும் தம் இந்தோ ஜெர்மானிய மொழிகளை எங்கும் கொண்டு சென்று பரப்பிய ஆரிய இனம் என்ற ஒரு திட்டவட்டமான இனம் இருந்ததாக! தவறாக எண்ண இடம் தருகிறது. ஆனால் இதை ஒரு உன்னிப்பாக மட்டும் கைக் கொண்டு, “ஆரியர் நடு நிலக்கடலினத்தவரா? நார்டிக், அல்பைன், அர்மீனிய இனத்தவரா?” என்று கேட்கும் பொழுதுதான் இன முறையில் race எ வ ரையும் ஆரிய ர் என்று இனம் காணமுடிய தென்பது தெரிகிறது. 25. அடுத்து நான் கூறவிருக்கும் புதுக்கருத்தை முன்னர் எவராவது கூறியுள்ளனரா அல்லவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தோற்றுவது இதுதான் தொல் இந்தோ ஜெர்மானிய மொழி உண்மையில் மெஸெபொட்டேமியா விலிருந்து கருங்கடல் வழியாக, பால்டிக் கடற்கரை வரை நீண்டு கிடந்த வணிகநெறிக்குரிய பொது மொழி என்பதே என் கருத்து. “அம்பர்” (amber) கொண்டு சென்று விற்ற இவ்வணிகரே வட ஐரோப்பாவுக்கு இரும்பை உருக்கி வார்க்கும் கலை போன்றவற்றைக் கொண்டு சென்றவர் ஆவர். எனவே தான் மூல இந்தோ ஜெர்மானிய மொழிக்கு மிகவும் அணுக்கமுடைய இருமொழிகளாக ஒன்றுக் கொன்று நெடுந் தொலைவிலுள்ள லிதுவேனியமும் சமஸ்க்ருதமும் காணப் படுகின்றன. ஆரிய மூலத்தாயகம் இதுவா, அதுவா என்ற குழப்பமும் தீர்கிறது. மிகுந்த திரிபியல் inflected மொழியாகிய பண்டை இந்தோ ஜெர்மானிய மொழிக்கு தாயான மொழி முல்லைநில நாடோடிக் கும்பலின் மொழியாயிருந் திருக்க முடியாது; பண்பட்ட நாகரிக இனத்தின் மொழியாகவே இருந்திருக்க வேண்டுமென்பதற்கான சான்றுகள் பல உள்ளன. இக்கருத்து சரியானால், பிரிட்டானியக் கப்பல்கள் செல்லும் துறைமுகங்களின் வழியாக உலகெங்கும் கடல்வழியாக ஆங்கிலம் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில் பரவியுள்ளமை இது போன்றதே ஆகும். 26. இதுபற்றிப் பேராசிரியர் புளூர் குறிப்பதாவது:- “செமித்துக் மொழி என்பது அராபியப் பாலைவனத்துக்கு வடக்கே பிறைபோல வளைந்து கிடக்கும் செழிப்பு வாய்ந்த நாடோடி வணிகப்பாதையில்(fertile crescent) பலமொழி மோதுதலால் உருவான ஒரு மொழியோ என்று நான் அடிக்கடி எண்ணியதுண்டு. அங்ஙனமாயின் அது பாலைவனத்தில் வழங்கிய பல மொழிகளுடனும் பாலையைச் சூழ்ந்த மொழிகளுடனும் மொழியியல் சார் கொள்வினை கொடுப்பினை செய்திருக்கவேண்டும். ஆகவேதான் மூல இந்தோ ஜெர்மானிய மொழியும் இதுபோல இந்துகுஷ் மலைக்கும் நீப்பர் ஆற்றுக்கும் இடைnயயுள்ள வணிகக்குழுக்கள் நாடோடிகள் வழங்கியதில் உராய்வுற்றுக் கடுமைக் கூறுகள் நீங்கி எல்லோரும் கற்க எளிதாகிப் பரவியது என நான் எண்ணுகிறேன். 27. உலக வாணிகத்தின் பயனாக இன்று ஆங்கிலம் அயல் மொழிச் சொற்களை எளிதில் ஏற்பதால் மக்கள் அதை வரவேற்கின்றனர். ஜெர்மன் மொழி இம்முறையில் பரவாதது மட்டுமல்ல. ஜெர்மானியிலிருந்து சென்ற ஜெர்மன் வணிகரே அதைக் கைவிட்டுள்ளனர்; பிரெஞ்சு மொழியோவெனில் பிரெஞ்சுப் பேரரசுக்கு வெளியே வேளாண் மக்களிடையே மட்டுமே நிலவுகிறது. அத்துடன் கார்ப்பேதிய - ரஷ்யப் பகுதிகளிலுள்ள அல்பைன் இனமக்கள் இந்தோ ஜெர்மானிய மொழியைப் பயின்று, சமவெளிகளில் நீண்டமண்டையோடும் குறுகிய உதடுகளும் உடைய குதிரைவாணர்களுக்கே தனிச் சிறப்பொலியான ‘க்,ச்வ’(q or chw) – அல்லது ‘கk’ என்ற அடித் தொண்டை ஒலியைத் (தமக்கேற்ப மாற்றியமைத்து) ஸ்லாவ் மொழி பேசநர் (அகன்ற மண்டையோடும் நீண்ட உதடும் உடைய மக்களுக்குரிய முறையில்) ‘ப’ P- என்ற ஒலி ஆக்கினரென்றும் (Peake அவர்களைப் போல நானும் கருதுகிறேன் 28. தற்கால ஐரோப்பிய நாடோடி இனமாகிய ‘ஜிப்ஸி’களிடையேயுள்ள வட்டாரவழக்கு வேறுபாடுகள் பற்றி டாக்டர் சாம்ப்ஸன் கருத்துக்களும் இது போன்றவையே. இக்குறிப்பு முழுவதிலுமே இனக்குழு ஆய்வின் racial Research அடிப்படையிலேயே சில கருத்துகளை முன்வைத்துள்ளேன். (29. கில்பர்ட் சிலெட்டர் இந்நூலை எழுதியது சிந்து நாகரிக எச்சங் களைப் புதிதாக அகழத் தொடங்கிய காலத்தை அடுத்ததாகும். ஆனால் அந்நாகரிகத்தைப்பற்றிய ஆழ்ந்த முழுமையான ஆய்வுக்கட்டுரையை 1925 இல்தான் Illustrated London News இதழில் ஜர். ஜான் மார்ஷல் வெளி யிட்டார். சிலேட்டர் இந்நூலை எழுதிமுடித்தது 1923இல்; அச்சிட்டு வெளிவந்தது 1924.இல். 1925 க்குப் பின்னர் இதன் திருத்திய பதிப்பை வெளியிட வாய்ப்புக் கிடைத்திருந்தால் சிலேட்டர் சிந்து நாகரிக அகழ்வாய்வுக் கண்டு பிடிப்புகளின் அடிப்படையில் தனது வாதங்கள் பலவற்றுக்கு மேலும் வலுவூட்டியிருப்பார்.  கில்பர்ட் சிலேட்டர் நூலுக்குப் பின் இணைப்பு இந்திய நாகரிக உருவாக்கத்தில் திராவிட மொழி பேசுநர் பங்கு: மறுபார்வை தேவை ஆந்த்ரி. எப். ஜோபெர்கு (1990) (The Dravidian Contribution to the development of Indian Civilisation: a call for reassessment) by Andree F. Sjoberg) (இவ்வாய்வுரையின் முதல் நிலை வடிவம் 31. 5. 1986 அன்று சாந்தா பே Santa fe இல் நாகரிகங்களின் ஒப்பீட்டாய்வுக்கான பன்னாட்டு மன்றம்” நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்டது. பின்னர் 1990 இல்Comparative Civilization Review (23: பக் 40-47) இல் இறுதி வடிவம் வெளிவந்தது. 1. இந்திய நாகரிக வளர்ச்சியில் (இந்து மதவளர்ச்சி உட்பட) திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் பங்கு பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. இப்பொருள் மிக விரிந்தது; எனவே திராவிடர் பங்கு பற்றிய சான்றுகள் பலவற்றை முன்வைத்து அவைகளுக்கும் முக்கியம் அளித்து, வருங்காலத் திலாவது இத்துறை ஆய்வுகள் மேம்பட வேண்டும் என்பதே நோக்கம். இந்திய நாகரிகத்தில் திராவிடர் பங்கு பற்றிய பல கூறுகளில் இன்று நிலவும் கருத்துகளை மறு ஆய்வு செய்து முழுமையானதாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. 2. பல்வேறு ஆய்வுப்புலங்களிலிருந்தும் (சமுதாய மொழியியல் Sociolinguistics தரவுகள் சில உட்பட) பல வகைச் செய்திகளையும் ஒரு சேரக்கருதி, அத்துறைகளில் திராவிடர் பங்கு எந்தெந்த அளவுக்கு இருந்தது என்பது சுருக்கமாக விளக்கப்படும். (தனிப்புத்தகம் எழுதினால்தான் முழுமையாக விளக்க இயலும் எனச் சொல்லக்கூடிய முக்கியமான சிலவற்றை இக்கட்டுரையில் எடுத்துக் கொள்ளவில்லை) 3. இம் மீள்பார்வைக்கட்டுரைக்குத் தேவை என்ன? தம்முடைய சமூக ஆற்றலைப் பரவலாகத் தெரிவிக்க இயலாத சிறுபான்மையினரான திராவிட மக்களைப் பற்றி இந்திய நாகரிக ஆய்வாளர்கள் ப ல ர் (இந்தியர்களும், குறிப்பாக பெரும்பாலான மேனாட்டாரும்) எழுதியுள்ளவை திராவிடர்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவுக்குத் தவறாகவே கூறுகின்றன. பழங்கால இந்தியவரலாறே, வென்றவர் (ஆரிய மொழிபேசுநர்) பார்வையில் அவர்கள் தந்த செய்திகள் அடிப்படையில் -பிறவகை மொழி பேசுநராகிய வீழ்த்தப் பட்டோர் பார்வையில் அல்ல- எழுதப்பட்டது. அண்மைக்காலம் வரையில் இந்தப் பார்வைக்கு வலுவூட்டிய மேலை அறிஞர் சிலர் தத்தம் பற்று காரணமாக (சிலர் இந்திய வரலாற்றில் ஆரியப்பார்வையே சரியானது! எனத் கருதுபவர்கள்) இத்தவறான பார்வைக்கே வலுவூட்டி வந்தனர்! குறிப்பாக இந்திய நாகரிகமே ஆரிய மொழிபேசுநர் உருவாக்கியது, வளர்த்தது என்பது அவர்கள் கருத்து. 4. ஆரியச் சார்பான இப்பார்வையை இன்னும் சிலரிடம் காணலாம். 1980ல் கூட (பெர்க்லி, Karma and Rebirth in Classical Indian tradition கலிபோர்னியா பல்கலைக்கழகம்) நூலில் பலரும் போற்றும் வென்டி தோனிகர் ஓ ‘பிளாஹேர்தி அம்மையார் “பண்டைக்கால இந்தியர்கள் அடிப்படையில் இந்தோ-ஐரோப்பிய மொழிபேசிய தலை சிறந்த குழுவினர் தாமே! (the ancient Indians, after all, were Indo Europeans par excellence)” என்று போகிறபோக்கில் in a passing remark கூறியுள்ளார். பண்டை இந்தியர் (எண்ணிக்கையிவோ, முக்கியத்துவத்திலேயோ) அடிப்படையில் இந்தோ- ஐரோப்பியமொழி பேசுநர்தாம் எ ன் று கூ று வ து அ ப த் த ம் . இ ந் தி ய வரலாற்றில் ஆரியமொழியினரல்லாதார், குறிப்பாகத் திராவிட மொழியினர், முக்கியத்துவம் இன்னும் சரிவர வெளிக் கொணரப்படவில்லை என்ற எனது வாதத்துக்கு இது ஒரு சான்று. 5. கடந்த ஐம்பது-அறுபது ஆண்டுகளாக, இத்துறையில் சரியான மாற்றுப் பார்வை தேவை என்பதை இந்தியவியலாளர் Indologists சிலர் உணர்ந்து தெரிவித்துள்ளனர். 1970லிருந்து இப்புலத்தில் நிலவும் தவறான பார்வைகளைத் திருத்த என்னால் இயன்ற அளவு முனைந்து வருகிறேன். இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகளின் முக்கியமான இடத்தைப் பற்றிய எனது வாதங்களை 1960, 1970களில் இந்தியவியலில் தலைமையிடம் வகித்த சிலர் தவறு, மேம்போக்கானது எனக் கூறி ஒதுக்கி வந்தனர். இன்று (1990 கட்டுரை) நான் கூறுவதையும் அவர்கள் குறைகூறத்தான் செய்வார்கள், ஆயினும் இந்திய நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அத்தகையோரில் சிலரிடமும் பரவி வருகிறது. 6. இந்திய நாகரிகத்தை உருவாக்கி வளர்த்ததில், திராவிட மொழி பேசுநரின் முக்கியமான பங்கை நிறுவிட எழுதப்படுவது தான் இந்த ஆய்வுரை: அதற்கு அடிப்படையாகப் பின்வருவன போன்ற சில அடிப்படைத் தரவுகளை முதலில் குறிப்பிடவேண்டும்: 1) திராவிட மொழி பேசுநரின் வரலாற்று--பண்பாட்டு முதன்மை பற்றி இன்று மேலை நாட்டறிஞரும் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளமை. 2) இத்துறை சார்ந்த சான்றுகளை நுட்பமாகக் கண்டுபிடித்து உண்மையாக உணர்வதில் உள்ள சில சங்கடங்கள். 3) “திராவிடமொழி பேசுநர்” என்னும் பொழுது அவர்கள் யார் என்பதை முதலில் தெளிவாக நிறுவுவது இன்றியமையாதது. இந்திய நாகரிகத்தில், குறிப்பாக இந்து மதத்தில் திராவிடத் தன்மையே மேலோங்கியுள்ளது என்பதற்கான வாதங்களைக் கூறுவதற்கு முன்னர் மேற்சொன்ன மூன்று பொருண்மைகளை முதலில் பார்ப்போம். திராவிட மொழி பேசுநரின் வரலாறு-பண்பாட்டு முதன்மை பற்றி மேலை நாட்டறிஞரும் படிப்படியாக உணரத் தொடங்கி யுள்ளமை: 7.(i) இந்திய நாகரிகத்தில் இந்துமதத்துக்கும் ஆரிய மொழி பேசுநரல்லாதோர், குறிப்பாக திராவிட மொழி பேசுநர், பங்கை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஆய்வு நூல்கள் பொதுவாக அறவே ஒதுக்கிவிட்டன. ஒரு விதிவிலக்கு ஹெய்ன்ரிச் சிம்மர் Zimmer 1951 ல் வெளியிட்ட நூலாகும். (1940 களின் தொடக்கத்தில் அவர் செய்த ஆய்வுப் பொழிவுகளின் அடிப்பபடையில் எழுதப்பட்டது; அந்நூலில் அவர் தம்முடைய முந்தைய கருத்துகளை மாற்றிக்கொண்டுள்ளார்) இத்துறையில் அது காறும் முன்னிலையில் இருந்த அறிஞர்களை மறுத்து, சிம்மர் இந்திய தத்துவ மரபுகளில் முதன்மையானது ஆரியமல்லாத (திராவிட) மரபுதான் என்னும் முடிவை அந்நூலில் ஏற்றுள்ளார். இவ்வகையில் அது மிக முக்கியமான ஆய்வு நூல்; ஆயினும் அவர் முடிவையும் அதற்கடிப்படையான ஆதாரங்களையும் பிற்றை அறிஞர் கண்டு கொள்வதில்லை! (ii) ரெனோ Louis Renou 1953இல் வெளியிட்ட Religions of ancient Indiaநூல், வேத கால நாகரிகத்தைப் பாராட்டுகிறது என்றாலும், பிறகால இந்துமதத்தில் ஆரியமல்லாதவையே முக்கியமானவை என்பதற்கான பல சான்றுகளை ரெனோ தந்துள்ளார். ஆனால் இந்நூல் இக்கருத்தை நயமாக, வலுவாகக் கூறாமல் ஆரியமல்லாத விஷயங்களைத் தெளிவாக வலியுறுத்தாமல் விட்டுவிட்டது. “திராவிட மொழி பேசுநரைப்” பற்றி அவர் குறிப்பாகச் சுட்டுவதே ஒன்றிரண்டு தடவைதான்). (iii) ஆர்தர் லெவ்லின் பஷாம் Arthur Llewelyn Basham 1954இல் வெளியிட்ட “வியத்தகு இந்தியா The wonder that was India” நூலும் திராவிடரை ஒரிரு இடங்களில் சுட்டுகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியச் செய்திகள் சிலவற்றையும் பயன்படுத்தியுள்ளார் எனினும் திராவிடர் பங்கைக் குறைத்து மதிப்பிடுவதோடு, அவர்கள் நாகரிகத்தையும் குறைவான தாகக் கூறுகிறார். (iv) எல்டர் (ஜோசப் W. எல்டர்) பதிப்பாசிரியராக இருந்து 1970 ல் வெளியிட்ட Lectures in Indian Civilization பரவலாக பாடப் புத்தகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியம், தென்இந்தியப் பக்தி இயக்கம், தென் இந்தியத் திருமண முறைகள் இவை பற்றிய நூற்பகுதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தப் பெரிய புத்தகத்தில் இந்துமதம், இந்திய நாகரிகம் ஆகியவற்றில் திராவிடரின் முக்கியப் பங்கைத் தெரிவிக்கும் செய்திகள் எவையும் இல. (v) ஹாப்கின்ஸ் Thomas J. Hopkins 1971 ல் வெளியிட்ட The Hindu Religious Tradition பரவலாகப் பாடபுத்தகமாகப் பயன் படுத்தப்படுகிறது. ‘பிராமணிய’ இந்து மதத்தில் பொதுமக்கள் மதத்தின் தாக்கம் காரணமாகஆரியமல்லாத கூறுகள் ஏறியதைத் தெரிவித்த போதும் இந்நூல் ‘திராவிடர்’ ஐ வெளிப்படையாகச் சுட்டி அவர்கள் பங்களிப்பை நன்கு விளக்கத் தவறிவிட்டது. பொதுமக்கள் தாக்கத்தால் வேதகாலத்துக்குப்பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கு வெறுமனே “புது பிராமணியம் the new Brahmanism என்று அடைமொழி சூட்டுவதோடு நின்று விடுகிறார்.(பக். 63) 8. அண்மையில் மேற்சொன்ன வாலாயப் பார்வையில் சில மாற்றங்கள் தெரிகின்றன. 1979 ல் மாதவ் தேஷ்பாண்டே & பீடர் எட்வின் ஹாக் பதிப்பித்த Aryan and non Aryan in India தொகுப்பு நூலில் “தென் ஆசியாவில் ஆரியமும் ஆரியமல்லாததும்” என்ற தனது கட்டுரையில் பஷாம் தனது முந்தைய 1954 நூலில் திராவிடர் பற்றி எடுத்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளார்; 1979 நூல் கட்டுரையில் “இந்திய நாகரிக வளர்ச்சியில் திராவிடமொழி பேசுநருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு” என்பதை ஏற்றுள்ளார். 9. பிரிட்ஜட் & ரேமாண்ட்-ஆல்சின் இணையர் (தமது முந்தைய 1968 The birth of Indian civilization நூலில் எடுத்த நிலையிலிருந்து முன்னேறி 1982 ல் எழுதிய The rise of civilization in India and Pakistan நூலை “இந்திய நாகரிக உருவாக்கம், வளர்ச்சியில் திராவிடருக்கு முக்கிய பங்கு உண்டு” என்ற அடிப்படையிலேயே எழுதியுள்ளனர். 1983 ல் ஸ்டால் Fritz stall எழுதிய Agni, the Vedic Ritual of the fire altar (2 மண்டலம்) புத்தகத்தில் ஆரியரல்லாதாரிடமிருந்து வேதச்சடங்குகள் சிலவற்றை ஆரியர் மேற்கொண்டனர் என்பதை விளக்குகிறார். 10. (i) முன் பத்திகளில் சொன்னவாறு அண்மைக் காலத்தில் மேலை அறிஞர்கள் சிலர் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பை ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் பரோ, எமனோ, கைப்பர் முன் வைத்த யாரும் மறுக்கொணாத மொழியியல் சான்றுகள்தாம். இந்தியாவில் (சிறு எண்ணிக்கையில், கி. மு. 1500 ஐ ஒட்டி) ஆரியர் நுழைந்த பொழுதும், அதையடுத்து ரிக்வேதம் முதலிய வேதங்களும் உபநிஷத்துகளும் உருவாக்கப்பட்டபொழுதும் கண்டிப்பாக அப்பகுதியில் திராவிட மொழி பேசுநர் இருந்திருக்க வேண்டும் என்பதை அம்மூவரின் மொழியியல் ஆய்வுகள் திட்டவட்டமாக நிறுவின. (ii). திராவிட மொழிபேசுநரின் முக்கியப் பங்களிப்பை பஷாம், ஆல்சின் போன்றவர்கள் இவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எவ்வாறு ஏற்பட்டது. அந்தப் பங்களிப்பை உறுதி செய்த தமிழறிஞர்கள், குறிப்பாக ஹார்ட்George Lucerne Hart III , சுவெலபில் Kamil Vaclav Zvelebil ஆகிய இருவர் ஆய்வு முடிவுகளே காரணம்--குறிப்பாக பின்வரும் நூல்களைக் காண்க:- ஹார்ட்(1973) Women and the sacred in ancient Tamil nadu (Journal of Asian Studies 32: 233-250) (1975) The Poems of ancient Tamil : their milieu and their Sanskrit counterparts (பெர்கலி கலிபோர்னியா) (1980) கட்டுரை: “The theory of reincarnation among the Tamils ” ஒ. பிளாக் ஹெர்தி பதிப்பித்த ‘Karma’ புத்தகத்தில் பக் 116-133. (iii) இவர்கள் எல்லாம் தமிழ், தமிழரைப் பற்றியே ஆழ்ந்தகன்று நுண்ணிய ஆய்வு செய்தவர்கள்; பொதுவான “திராவிட மொழிபேசுநர் தாக்கம்” என்ற நிலையில் அவர்கள் ஆங்காங்கு சிலவற்றைக் குறிப் பிட்டுள்ளனராயினும் திட்டவட்டமான கருத்துகளைக் கூறுவதில்லை. இந்திய நாகரிகத்திற்கும், குறிப்பாக இந்து மதத்துக்கும், திராவிட மொழி பேசுநரின் இன்றியமையாத பங்களிப்பை (Critical role) ஏறத்தாழ என்னைப் போன்றே திட்டவட்டமாக வலியுறுத்துபவர் மாந்தவியல் துறைப் பேரறிஞரான ஸ்டீபன் ஏ. டைலர் ஆவார். தனது(1973) India: an Anthropological Perspective புத்தகத்தில் (பக்- 68) டைலர் திட்டவட்டமாகப் பின்வருமாறு கூறுவதைக் காண்க. “ஆரிய மொழிபேசுநரின் அசலான (மூல) மதக்கோட்பாடுகளை (orthodoxy)அவற்றுக்கெதிரான மாறுபட்ட கோட்பாடுகள் (Heterodoxy) அழித்துவிட்டன எனினும் orthodoxy அழிந்த அதேநேரத்தில், ஆரியமொழி பேசுநரின் ஆதிக்கமும் (பின்னர் எக்காலத்திலும் மீண்டு எழவொண்ணாத படி)சுக்கு நூறாகிவிட்டது. ஆரியமொழிபேசுநர் பண்பாட்டுக் கூறுகள் சிற்சில, அவ்வழிவுக்குப்பின்னரும் நிலவினவெனினும் திராவிடமயமாக்கப் பட்ட Dravidianized வடிவத்தில்தான் அவை நிலவின. பண்பாட்டின் ஒவ்வொரு உட்கூறிலும் பண்டைத் திராவிட வடிவங்கள் புத்துயிர் பெற்று, ஆரிய மொழிபேசுநர் கோட்பாடுகளையும் மரபுகளையும் அறவே மாற்றிவிட்டன; ஆரியக் கடவுளர் திராவிடக்கடவுளர் போலவே மாறினர்;வீடு தோறும் ஹோமம் வளர்க்கும் family altar சடங்கு நைந்து, திராவிடக் கோயில் வழிபாடே ஓங்கியது; சடங்குகள் வலுவிழந்து பக்திக் கோட்பாடு உருவாயிற்று; தொழிலடிப்படைப் பிரிவுகள் மாறிச் சாதி வேறு பாடுகள் உருவாயின; இனக்குழுக்கள் tribes சிலபல சேர்ந்து “இனக்குழுக் கூட்டமைப்புகள் -வலுவான கட்டமைப்போ நிரந்தரமோ இல்லாதவை - loosely knit tribal confederacies” ஆண்டநிலை மாறி, ஆதிகாரத்தை மையப்படுத்திய பேரரசுகள் centralized empires உருவாயின. புதிதாக உருவாகிய இந்து மதம் the Hindu synthesis ஆனது ‘வாலாய orthodox கோட்பாடு x முரணான புதுக் கோட்பாடுகள் heterodoxy’ இவற்றின் மோதலால் ஏற்பட்டது அல்ல. இந்தியாவில் (கி. மு. 5000 லிருந்தே) இடைவிடாது வாழ்ந்து வந்த aboriginal சிந்து நாகரிகமதத்தின் புத்துயிர்ப்பே resurgent இந்து மதமாகும். இந்த மாற்றம் நடந்த காலத்தில் முரடர்களும், நாகரிகமற்றவர்களுமான ஆரிய மொழி பேசுநர் படிப்படியாக நாகரிகமடைந்து நாளடைவில் (பெருந்தொகை யினராகிய) இந்நாட்டுத் திராவிட மொழி பேசுநரிடன் கலந்து விட்டனர். பிராமணப் புரோகிதர்கள் இல்லம்தோறும் ஹோமம் வளர்த்தல் முதலிய சடங்குகளை அக்கறையுடன் பாதுகாத்து வந்தனராயினும், ஆரியமொழி பேசுநர் இந்தியாவிற்குள் வரும்பொழுது உடன் கொண்டுவந்த பண்பாட்டுக் கூறுகள் ஒரு சிலவே; சிறு சிறு கதைகள், உருவகங்கள் யடடநபடிசல வடிவில் (திராவிட மொழி பேசுநர், ஆரி ய மொழி பேசுநர் இ ரு ம ர புகளும் கலந்த ) பெரும் பெரும் தொகுப்புகளாக உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்கள், syncretist compendia ஆக நிலவுகின்றன. மொத்தத்தில் இந்தியப்பண்பாட்டுக்கு ஆரியமொழிபேசுநர் பங்களிப்பு மிகக்குறைவு (On the whole, Aryan contribution to Indian culture is insignificant) இந்தியப் பண்பாட்டின் அடிப்படைகள் ஆரியமொழிபேசுநர் வருவதற்கு முன்னர் கி.மு. 3000 ஐ ஒட்டியே திட்டவட்டமாக உருவாகியிருந்தன; எனவே தான், இந்திய நாகரிகத்தின் மூலவடிவம் அழியாமல் உயிரூட்டத்துடன் இருந்து (ஆரிய மொழிபேசுநர் தாக்கம் செயல்பட்ட கி.மு. 1500-1000 காலகட்டத்தையும் தாண்டி) பின்னர் ஏறத்தாழ தன்னுடைய (முந்தைய திராவிடத் தன்மைகளைக் கைவிடாமல்) மூலவடிவத்தில் புத்துயிர்ப்பு எய்தி இன்றுவரை நிலவுகிறது. தரவுகளும் ஆய்வு செய்யும் வழிமுறைகளும்: சில குறிப்புகள் 11. தொன்மைக்கால வரலாற்று வளர்ச்சிப் படிநிலைகளைப் பற்றி ஆய்வு செய்வதில் உள்ள சிக்கல்களில் ஒன்று “நம்பகமான ஆதாரச்செய்திகள்” மிகக் குறைவு என்பதே. இந்தியாவைப் பொறுத்தவரை இதைவிடப் பெரிய சிக்கல் தொடக்ககாலப் பதிவுகளைப் (records) பெரும்பாலும் (சில நூறு ஆண்டுகளில்அழியக்கூடிய) பனையோலை முதவியவற்றில் எழுதுவதே இந்தியாவின் பாரம்பரிய வழக்கமாயிருந்ததுதான். 12. பிற சிக்கல்களும் உள. அண்மைக்காலம் வரைத் தொல்லியல் அகழ்வாய்வு மிகக்குறைவு. (இக்குறைவை ஈடுசெய்வதற்கு உதவுவதற் கான) “ஆரிய மொழிகளின் மீதான திராவிட மொழித்தாக்கம்” பற்றிய முக்கியமான மொழியியல் சான்றுகளை அத்துறையறிஞர்கள் 1940 க்குப் பின்னரே வெளியிட்டுவருகின்றனர். 13. இன்னொரு முட்டுக்கட்டை, இந்தியவியலாய்வில் ஈடுபடும் அறிஞர்கள் பலரும், ஒரே ஒரு உட்புலத்தில் மட்டுமே தமது முழுக் கவனத்தையும் (கடிவாளம் போட்ட குதிரை போல) செலுத்திவிடுவது தான் overspecialization. மேலை நாட்டறிஞர்கள் முன்னர், பெரும் பாலும் சமஸ்கிருத ஆய்வில் ஈடுபட்டனர்: சிலர் ஆரிய, சமஸ்கிருதச் சார்பாகவும் இருந்தனர். மாறாகச் சிலர் திராவிட மொழியியல், பண்பாடு இவற்றை ஆய்வதில் கவனம் செலுத்தினர்; அண்மையில் தமிழ்ப் பண்பாட்டு ஆய்விலும் மேலையறிஞர் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். பலவகையினரான இவர்களுள் மிகச் சிலரே விரிந்தபார்வையுடன், வரலாற்றை வெளிக்கொணர உதவக்கூடிய சிறுசிறு தரவுகளை இணைத்து இந்தியக் கண்ணோட்டத்தில் பொருத்தி நயமான விளக்கங்களைத் தர வல்லவர்கள் ஆவர். இந்திய நாகரிகத்தையே நயமான கட்டமைப்புடைய ஒன்றாக gestalt Perspective எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தின் அனைத்துப்பகுதிகள் சார்ந்த பலவகைமொழியியல், பண்பாட்டுத்(தொல்லியல் எச்சங்கள் காட்டும் பழம் பண்பாடு உட்பட) தரவுகளையும் பொருத்திப்பார்க்க வேண்டும்; மேலும் யூரேசியா(ஆசியா-ஐரோப்பா) வில் கடந்த சுமார் 10000ஆண்டுகளாக நிகழ்ந்தனவாகத் தெரியவருவனவற்றோடு பொருந்து கிறதா என்றும் பார்க்கவேண்டும். 14. ஆய்வுமுறை எப்படி இருக்கவேண்டும்? எமில் தர்கெய்ம் Emile Durkheim (1951: Suicide: a study in Sociology)கூறுவது போல் ஆதாரமற்ற, போலி, அவசரக் கருதுகோள்களை ஒவ்வொன்றாக நம் சிந்தனையிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு (reasoning through elimination) பொருத்தமான முடிவுக்கு வரவேண்டும். பல்வேறு பண்பாட்டுக் கூறுகளின் தொகுப்புக்கு நாம் சூட்டியுள்ள பெயராகிய “இந்து மதத்தை” உருவாக்குவதில் திராவிடமொழி பேசுநருககுத்தான் பெரும பங்கு இருந்திருக்கவேண்டும், என்ற முடிவுக்கு நான் வந்தது இத்தகைய elimi Nation முறைப்படிதான். இந்துமதத்தின் முதன்மைக்கூறுகள் பண்டு இந்தோஐரோப்பிய மொழிபேசுநர் அனைவரும், மையஆசிய ஸ்தெப்பி பகுதியில், உடன் வசித்துவந்த (கி.மு. 7000-4000) காலத்தில் இருந்தவை யாகக் கருதும் முதன்மையான பண்பாட்டுக்கூறுகள் எவற்றையும் ஒத்ததாக இல்லை. அதுமட்டுமல்ல அந்த (இந்து மத முதன்மைக்) கூறுகள் திராவிடப் பண்பாடு ஆக உள்ளனவே தவிர வேறு எந்த ஆரியமல்லாத பண்பாட்டைப் போன்றும் இல்லை. திராவிடர்கள் யார்? 15. இன்று இந்தோ-ஆரிய மொழிபேசுபவர்கள் பண்டைக் காலத்தில் கண்டிப்பாக “ஆரியப்” பண்பாடு, இனம் இவை சார்ந்தவர்களாக இருந் திருக்கவேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர்; இது தவறு. அவர்களின் முன்னோர், பழங்காலத்தில் ஆரியமல்லாத மொழிகளைக்- குறிப்பாக திராவிட மொழிகளைப் பேசியவர்களாகத்தான் இருந் திருக்க வேண்டும் என்பது நிறுவப்பட்டுள்ளது. 16. இந்தோ-ஆரிய மொழிபேசுநர் (ஏற்கெனவே இந்தியாவில் சில ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வந்தவர்களான (திராவிட மொழிபேசிய) மக்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இந்தியாவில் நுழைந் திருக்க வேண்டும். பல சிறுசிறு கும்பல்களாக, நீண்ட கால அளவில் வந்திருக்கவேண்டும். எளிய பண்பாட்டு நிலையிலிருந்த அரை- நாடோடி semi- nomadic நிலையினர் ஆயினும் சில தொழில்நுட்ப நிலைகளில் இங்குள்ளவர்களைவிட வல்லவர்களாக இருந்திருக்க வேண்டும். அதாவது அவர்களிடம் குதிரைகள், ரதங்கள், திறன் வாய்ந்த ஆயுதங்கள் இருந்திருக்க வேண்டும். எனவே இந்தியத் துணைக்கண்ட வடமேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை வென்று கீழ்ப்படுத்தியிருக்க வேண்டும். சிந்து நாகரிக நகரங்களின் அழிவில் அவர்களுக்கும் பங்கு இருந்திருக்கலாம். ஆயினும், வடமேற்கு இந்தியாவில் அன்று வாழ்ந்த மக்கள் அடைந்திருந்த நாகரிக அளவுக்கு, அவர்கள் நாகரிகம் அடையவில்லை. நகரவாழ்வு, எழுத்தறிவு, இவ்விரண்டையும் சார்ந்து ஏற்படும் சமூக அமைப்புகள், போன்றவை அவர்களிடம் இல்லை. 17. ஆரிய மொழிபேசுநர் வடமேற்கு இந்தியப் பகுதியில் நுழைந்த பொழுது, அங்கு வசித்து வந்த மக்கள் யார்? இதற்குப் பதிலளிக்கத் தேவையான தொல்லியல், வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவு.சில காலத்துக்கு முன்னர் வரை (1940 வரை) அங்கு அப்பொழுது வசித்தவர்கள் முண்டா இனத்தவர்கள் எனச் சிலர் கருதினர். வேதங்களில் ஏறியுள்ள முண்டா மொழி ச்சொற்க ள் மிகச்சிலவே. எனவே வேதங்களை இயற்றி யவர்கள் மீது முண்டாஇனத் தாக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. மாறாக, வேதங்களுள் மிகப் பழையதான ரிக்வேதத்திலேயே சுமார் 20 திராவிடச் சொற்கள் ஏறியிருப்பதை பரோ ஆய்வு செய்து தெரிவித்தார். (கீழே விவரிப்பதுபோல) எமெனோ, கைப்பர் Kuiper இருவரும் ஆரிய வேதங்களின் மொழியமைப்பு, இலக்கணம் இரண்டிலும் திராவிட மொழியின்(தமிழின்) தாக்கத்தைக் கண்டறிந்து நிறுவியுள்ளனர். திராவிடத் தாக்கத்தை வேதங்களாகிய நான்கு சம்ஹிதைகளில் தொடங்கி, ஆரண்யகம், உபநிஷதம் என்றவாறு வேதகாலத்துக்குப் பிந்தைய சமஸ்கிருத இலக்கியங்களிலும் காண்கிறோம். 18. முண்டா மொழிகளைப் பேசுநர் பேரும்பாலும் சிறு எண்ணிக்கையில் வாழ்ந்தவர்கள்; எழுத்தறிவற்ற தனித்தனிக் குழுவினர்; மிகக் குறைந்த பண்பாட்டுத் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கக் கூடியவர்கள். (கைப்பர் 1967 Indo Iranian Journal 10:82-102 கட்டுரையில் கூறுவது போல வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே முண்டா மொழிகள் திராவிட மொழியியல் கூறுகளை ஏற்றுப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன) மாறாக இந்தியாவில் இருந்த ஆரிய மல்லாத மொழி பேசுநர்களுள் பண்டை க் கால த்திலிருந்தே தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலும் பலத்துடனும் வாழ்ந்து வந்தவர்கள் திராவிடமொழி பேசுநர்தாம். வேத காலத்திலேயே திராவிடர் சிலர் பிராமணர்களாகத் ஏற்கப்பட்டு விட்டனர். இதனைப் பின்வரும் அறிஞர்கள் கருத்துகளிலிருந்து உணரலாம். (i) கே. மீனாட்சி (1985) “சமஸ்கிருதச் செம்மொழியின் தோற்றம்” IJDL 14: 209-223 “வேத மந்திரங்களில் பல ஆரியரல்லாதார் செய்தவை” மேலும் பார்க்கத்தக்கது: குஞ்சுண்ணிராஜா(1939) “ரிக் வேதத்தை எழுதி யவர்கள்” (கே.வி. ரங்கசாமி ஐயங்கார் பாராட்டுமலர்) (ii) F.B.J கைப்பர்(1967) மேற்சொன்ன Indo Iranian Journal கட்டுரை பக் 87: வேதப்பாடல்களை எழுதிய ரிஷிகள் பெயர்களுள் பல, ஆரியமல்லாதவையாக இருப்பது இந்தியாவில், ஆரியர் வருவதற்கு முன்னே வசித்து வந்த திராவிடமொழி பேசுநரும், ஆரியர்களோடு சேர்ந்து ரிஷிகளாகிவிட்டனர் என்பதை நிறுவுகிறது. (iii) ஏ. எல். பஷாம் 1979 கட்டுரை(ப.5):வேதகாலத்துக்குப் பின்னர் (கி.மு. 1000க்குப் பின்னர்) தவம், சடங்குகளைச் செய்து வந்த திராவிட மொழி பேசுநரும் ஆரியராக ஏற்கப்பட்டனர். (iv) சுநீதி குமார் சட்டர்ஜி (1965: “திராவிட மொழிகள் பற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழக உரை” பக் 55-57:வேதங் க ளை முறைப்படுத்திய வேதவியாசரும் ஆரியரல்லாதவரே; பல ரிஷிகளின் பரம்பரையும் ஆரியமல்லாததே. 19.(i) தமிழ்ச்சங்க இலக்கியங்கள்(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம்) ஆகியவை, தமிழ்மக்கள் கி.மு. 300க்கு முன்னரே (அதாவது அசோகன் காலத்துக்கு முன்னரே) வடநாட்டு ஆரியர் அவர்களிடம் தொடர்பு கொள்வதற்கு முன்னரே, சிறந்த நாகரிகம் உடையவராயிருந்தனர் என்பதை நிறுவுகின்றன. பாணினியின் அஷ்டாத்யாயி இலக்கணத்துக்கு வார்த்திகம் எழுதிய (கி.மு. 400) காத்யாயனர் சோழ, சேர, பாணடிய மன் ன ன ர்களைக் கு றி ப் பி டு கிறா ர் ; அசோகன் கல்வெட்டுகளும் அவர்களைக் குறிப்பிடு கின்றன. தமிழகத்தில் அன்றே பெருநகரங்களும் தலைநகரங்களும் வளர்ச்சி யடைந்த சமுதாயமும் இருந்தன. (Periplus of the Erythrean sea (செங்கடல்-இன்றைய அரபிக்கடல்) பயணநூல்” (கி.பி. 1 நூ); தாலமியின் Geography (கி.பி. 2 ம் நூ) சங்கஇலக்கியங்கள், சிலப்பதிகாரம்(கி.பி. 3 ம்நூ) போன்றவை அக்கால த் தமிழகத்தின் செழிப்பான துறைமுகங்களையும் (அப்பொழுது ரோம் ஆட்சியின் கீழ் இருந்த) எகிப்துடன் நடந்த வணிகத் தையும் குறிப்பிடு கின்றன. கி.பி. 1க்குச் சிலகாலம் முற்பட்டதான சங்க இலக்கியம் தனிச்சிறப்பு வாய்ந்தது. (unique). உண்மையான சிறந்த நாகரிகம் என்று கருதக்கூடிய நகர நாகரிகம் அன்று தமிழகத்தில் இருந்தது. ஒரேகுறை: கி.மு. 200ஐ ஒட்டி ஆசிரியர் (அசோக மௌரியர்) இடமிருந்து எழுத்து வடிவத்தைத் தமிழர் கற்றுக்கொள்ளும் வரைத் தமிழுக்கான வரிவடிவம் (லிபி) இருந்ததற்குச் சான்று இல்லை; எனினும் ஆரியர் தொடர்புக்கு முன்னரே தமிழர் தமது மொழிக்கு விபியை உருவாக்கச் சில முயற்சிகள் செய்திருக்கலாம். ((ii) கடைசி இரண்டு வாக்கியங்களை ஜோபெர்கு எழுதியது 1990 இல் ஆகும். இப்பொழுது அவைசரியல்ல: டாக்டர் கே.வி. ரமேஷ் எழுதி ICHR தென்மண்டலம், பெங்களுர் 2006 இல் வெளியிட்டுள்ள Indian Insciptions a study in comparison and contrast நூலில், தெளிவாக தமிழி (தமிழ் பிராமி) கண்டிப்பாக அசோகனுக்கு முந்தியது;அதனைச் சற்றே மாற்றி, வட இந்தியர் தமது அசோகன் கல்வெட்டு விபியை உ ருவாக்கிக் கொண்டனர் என்பதை நிறுவி விட்டார். காண்க பி.இராமநாதன் (2012) “தொல்தமிழியச் சிந்து நாகரிகம்” பக் 168-169. பழநி அருகே பொருந்தல் ஊரில் கிட்டிய பொறிப்புகள் இரண்டின் காலத்தை கே. ராஜன் அறிவியல் ஆய்வுப்படி கி.மு. 490/450 என 2011 இறுதியிவேயே உறுதியாக்கியுள்ளார்(The Hindu 15.10. 2011) ஆதிச்ச நல்லூர் (2005 கண்டுபிடிப்பு) பானை ஓட்டின் காலமும் கி.மு. 700 ஆகும். ஆகத் தமிழுக்கு கி.மு 800 ஐ ஒட்டியே ஒரு தனி விபி (வரிவடிவம் Script) இருந்திருக்கும் என்பது உறுதி. சிந்து நாகரிக லிபி திராவிட மொழி லிபி ஆகையால் தமிழி (தமிழ் பிராமி) லிபியும் சிந்துலிபியிலிருந்தே உருவாகி யிருக்கலாம் என்றார் ஹீராஸ் (New Review1936). 20. (i) மேற்கண்ட பல்வேறு மொழியியல், பண்பாடு இவைசார்ந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, ஹான்ஸ் ஹென்ரிச் ஹாக் (1975“Substratum influence on Rig Vedic Sanskrit “in Linguistics 5:76-125) இந்தோ ஆரிய மொழிபேசுநர்ஆரியமல்லாதவற்றின் தாக்கத்தைப் பெற்றது பெரும்பாலும் முண்டா மொழிகளைப் பேசி வந்தவர்களிடமிருந்து தான்” என்று எப்படிக் கருதுகிறார் எனத் தெரியவில்லை. (ஹாக் Hock தனது 1986 Principles of Historical Linguistics நூலில் இக்கருத்தைச் சற்றே மாற்றிக்கொண்டு, “இந்தோ- ஆரிய வேத, சடஸ்கிருத மொழியின் மீதான திராவிடத் தாக்கம் முண்டா தாக்கத்தை விட அதிகமாக இருந்திருக்கலாம்” என்கிறார்) முண்டா மொழிகள் அத்தகைய முதன்மை வாய்ந்தவையாக இருந்தால், திராவிட மொழிகள் ஏன் முண்டா சொற்கள் ஒரு சிலவற்றை மட்டுமே கடன்பெற்றுள்ளன? இதனை ஹாக் போன்றவர்கள் கண்டுகொள்ளவதில்லை) இந்தோ-ஆரிய மொழியமைப்பு இலக்கண அமைப்பின் மீதும் பெருந்தாக்கம் விளைவித்தவை திராவிட மொழிகளே என்பதை எனது The impact of Dravidian on Indo-Aryan - an over view (1992) கட்டுரையில் காண்க (அக்கட்டுரை எட்கார் சி. போலோம் & வெர்நர் விண்டர் பதிப்பித்த (பெர்லின் Mouton de Gruyter 1992 வெளியீடு) Reconstructing languages and Cultures புத்தகம் பக் 507- 529 ல் காண்க. (ii) திராவிட மொழிபெசுநர் பெரும் எண்ணிக்கையில் நிலையாகப் பெரிய குடியிருப்புகளில் வசித்து வந்தனர்; உண்மையான பெருநாகரிக நிலையை எட்டும் நிலையில் அவர்களுள் சிலர் இருந்தனர். முண்டா பேசுநரோ சிறு குழுக்களாக ஆங்காங்கே வாழ்ந்தனர்; எழுத்தறிவும் இலர். (“நகர, பட்டண என்னும் நகரத்தை குறிக்கும் இரு சமஸ்கிருதச் சொற்களுமே திராவிடரிடமிருந்து கடன்பெற்றவை” என்பார் பிராங்க்ளின் சி. சௌத் வொர்த் தமது 1979 “Lexical evidence for early contacts between Indo-Aryan and Dravidian கட்டுரையில் (தேஷ்பாண்டே& ஹாக் 1979 புத்தகம் Aryan and non-Aryan in India பக்கம் 191-233) (iii) இந்தோ-ஆரிய மொழிபேசுநரைப் பொறுத்தவரையில், வட இந்தியாவில் அன்றிலிருந்து இடைவிடாது நிகழ்ந்த பண்பாட்டு, மொழியியல் மாற்றங்கள்; மற்றும் அவர்கள் இன அடையாளமாற்றங்கள் (modification in racial make-up) இவற்றிலிருந்து அவர்கள் இந்தியாவுக்குள் வந்த கி.மு. 1500 காலத்திலிருந்தே பெருமளவுக்கு ஏற்கெனவே வசித்து வந்த ஆரியருக்கு முந்திய மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் என்ப து வெள்ளிடை மலையாம். அந்த முந்தை ய மக் களுள் பெரும்பாலோரும் முக்கியமானவரும் அக்காலத்தில் இந்தியா முழுவதும் வசித்து வந்த திராவிட மொழிபேசுநர் தாம்; நமக்குத் தெரிந்து வேறு மக்கள் யாரும் இல்லை. 21. (i) இப்பொழுது திராவிட மொழி பேசுநருடைய தோற்றம், தன்மை, ஆகியவற்றைப்பற்றி அதாவது மொழி, பண்பாடு இன(racial) பின் புலங்களைப் பற்றிப் பார்ப்போம். 1971இல் நான் பதிப்பித்த Symposium on Dravidian Civilization(Austin & New York:Jenkins)நூலில் நான் “Who are the Dravidians? The state of the knowledge என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதன் பின்னர் வந்த செய்திகளையும் சேர்த்து அதனை விரிவாக்கி இதுவரை (1990) வேறுயாரும் எழுதியதாகத் தெரியவில்லை. (ii) சில துறைகளில் மேலும் பல செய்திகள் வந்து என் கருது கோளை வலுவாக்கியுள் ளன. திராவிட மொழிபேசுநரின் மாந்த இன வியலைப் பொருத்தவரையில் தொல் -ஆஸ்திரேலியப் பழங்குடியின ரின் சாயல் குறிப்பிடத்தக்கதாக இருப்பினும்(தென் ஐரோப்பிய நாடுகளிலும் மையக் கிழக்கு நாடுகளிலும் காணப்படும்)நண்ணிலக்கரை, காகசஸ் இன (Mediterraean, Caucasoid இனத்தின் (சற்றே கருமையான வகை) இனக்கலப்பும் கொண்டவர் என்று அந்த 1971 கட்டுரையில் கூறியிருந்தேன். (iii) இன்றைய ஈரானில் (சுமேரியாவுக்கு கிழக்கே) பழங் காலத்தில் பேசப்பட்டு வந்த எலாம் Elam மொழியுடன் திராவிட மொழி தொடர்புடையது. எனினும் (வட ஆசியப்பகுதியிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் இன்றும் பேசப்பட்டு வரும்) உரால் மொழிகள், மைய-கிழக்கு ஆசியப்பகுதிகளில் வழங்கும் அல்தாய்க் (பின்னிஷ் முதலிய) மொழிகள் இவையும் திராவிடத்தோடு தொடர்புடையவை என்பது இன்று நிறுவப் பட்டுள்ளது. 1856 லேயே கால்டுவெல் இதைக் கண்டு தெரிவித்திருந்த போதிலும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இது பெரும்பாலும் கண்டு கொள்ளப்பட வில்லை; ஒரு சிலரே இது பற்றிய அதிகவிவரங்களைச் சேர்த்தனர்;கடந்த பத்து இருபது ஆண்டுகளாக இக்கோட்பாட்டுக்கு அறிஞர் சிலர் மிகவும் வலுவூட்டியுள்ளனர். 1968 ல் டைலர் (Language இதழ் 44. 798-812 ல் “Dravidian and Uralian”: the lexical evidence கட்டுரையில்) திராவிட - உரால் வேர்ச்சொல் ஒப்புமைகள் பலவற்றைச் சுட்டியுள்ளார். (iv) எல்லி ஜோஹனா புதாஸ்- மார்லோ அம்மையார் தனது 1974 முனைவர் ஆய்வேட்டில் அனைவரும் ஏற்கக்கூடிய வியத்தகு வேர்ச்சொல் ஒப்புமை திராவிட -உரால் மொழிக்குடும்பங்களிடையே இருப்பதை நிறுவும் வலுவான செய்திகளைக் தற்துள்ளார். அவர் தாய்மொழி பின்னிஷ்; திராவிட மொழிகளைப் பயின்றவர். பின்னிஷ் மொழியிலுள்ள “உரால் மொழிகளின் சொற்பிறப்பியல் அகரமுதலி” யை நுட்பமாகப் பயன்படுத்தி பரோ-எமனோ திராவிட சொற்பிறப்பியல் அகராதி (1961,1968) தரும் திராவிட வேர்ச் சொற்களோடு ஒப்புமையை நிறுவியுள்ளார். டைலர் 1968ல் எழுதி வைத்துள்ள கைப்பிரதியில் மார்லோ முடிவுகளை ஆதரிக்கிறார்; கழிபழங்காலத்தில் மைய இந்தியாவிலிருந்து மைய ஆசியாவரை ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்பாடுகளைக் கொண்ட மக்கள் சங்கிலித் தொடர்போல வாழ்ந்து வந்தனர் என்றும் கருதுகிறார். உரால் மொழிகள் வழங்கும் பகுதிகளுக்கும் திராவிட இந்தியாவுக்கும் நெடுந்தோலைவு இருப்பதை இதற்கு ஆட்சேபனையாகக் கூறுவது வலுவற்றதாகும். (பின்லாந்து நாட்டறிஞர் ஹானு பானு அகஸ்தி ஹகோலா தனது 2009/2011 exical Affinities between Tamil and Finnish நூலில் வேர்ச்சொல் அடிப்படையில் மிக நெருங்கிய தமிழ் பின்னிஷ் சொற்கள் Tamil Finnish cognate candidates (754+371ஐ தந்துள்ளார்.) 22. திராவிட மொழிபேசுநர் தோற்றம் பற்றி, வேறு புதிர்களும் உள்ளன. டைலர்(1986 கைப்பிரதி) திராவிட- உரால் அல்தாய்க் உறவுச் சொற்கள் இடையிலுள்ள ஒற்றுமையைச் சுட்டுகிறார். திராவிட உறவுமுறைக்கும் ஆஸ்திரேவிய கரையரா மயசயசைய பழங்குடிமக்கள் உறவுமுறைக்கும் நெருங்கிய உறவுள்ளது (இது பற்றிய விரிவான செய்திகளை டிராட்மன்(1981) திராவிடர் உறவுமுறை Dravidian kinship நூல்; பி. இராமநாதன் 1991 “தமிழ்ப் பொழில்” கட்டுரை “திராவிடர் உறவு முறை” இவற்றில் காண்க.) 23. இவை மட்டுமல்ல தொல்லியல் சான்றுகளும் பிறவும் “தொல்பழங் காலத்தில் தென்னிந்தியா- இந்தியா-மைய கிழக்கு நாடுகள்- தென் கிழக்கு ஐரோப்பா” என்றவாறு பண்பாட்டுப் பொதுமைச் சூழல் நிலவியதை நிறுவுகின்றன. ஜான் ஹார்டு John Hard தனது1987 The twilight of the goddess:an ancient religious revolution கட்டுரையில் Comparative Civilizations Review 16:57-91) பழங்காலத்தில் இப்பகுதியில் பரவலாக “தாய்த்தெய்வம்-மகன் /அவள் துணைவன்- காளை-மலை” என்ற அடிப்படையில் அமைந்த இறைவழிபாட்டு முறைகள் வழங்கியதைச் சுட்டுகிறார். தாய்த் தெய்வம், பெண் தெய்வங்களாகிய “அம்மன்கள்” ஆகியோர் பால் ஆழ்ந்த பக்தி; பசு, காளை புனிதத் தன்மை; பாம்பு வழிபாடு ஆகிய ஆரியமல்லாத வழிபாட்டுக் கூறுகள் தாம் இன்றும் இந்தியாவில் தலை சிறந்து வழங்குகிள்றன. 24. அ. மேற்கண்ட இனவியல், பண்பாடு, மொழியியல் சார் தரவுகள் “திராவிட மொழிபேசுநர்” தோற்றம் குறித்துப் பின்வருமாறு பல திசைகளைக் காட்டுகின்றன. (i) மொழியியல் மைய/வடக்கு ஆசியப்பகுதி (திராவிட-உரால்/ அல்தாய்க் உறவு) மையகிழக்கு அதற்கு முன்னர் வட ஆசியா? (திராவிடஎலா ம் உறவு) (ii) பண்பாடு (இந்தோ ஆரியமொழி பேசுநர் சிறு எண்ணிக்கையில் கி.மு. 1500ஐ ஒட்டி இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர்) தென் ஆசியப்பகுதியிலோ அல்லது அண்டைப்பகுதிகளிலும் சேர்ந்தோ வழங்கிய பல பண்பாட்டு மரபுகளின் கூறுகளும் ஒருங்கிணைந்து (amalgam of Patterns )திராவிடர் பண்பாடு உருவாகியிருக்கலாம். (iii) இன்று திராவிட மொழிபேசுநரிடையே பல இனக்குழு உட்பிரிவுகளையும் காண்கிறோம் (a mixture of racial sub-types) எனினும் நண்ணிலக்கரை காகசஸ் மாந்த இனக்கூறுகள் Mediterranean caucasoid Component தாம் முதன்மையாக உள்ளன. ஆ. இன்றைய “திராவிடப் பண்பாடு” உருவாவதில் பங்கேற்ற பல உட்குழுக்களைப் பற்றி நமக்கு எந்தக் காலத்திலும் தெரியவரப்போவதில்லை. எனினும் ஆல்சின் இணையர் தமது1982 The rise of civilization in India and Pakistan புத்தகத்தில் இந்தியாவில் வரலாற்றுக் காலத்துக்கு முன்வழங்கிய (Prehistoric)) பண்பாடுகளை திராவிட மொழி பேசுநரின் பண்பாட்டோடு இணைக்கின்றனர். வருங்காலத் தொல்லியல் ஆய்வுக்கண்டு பிடிப்புகள் இதில் மேலும தெளிவு தர வாய்ப்பு உண்டு. எனினும், அடுத்து நாம்‘இந்திய நாகரிகத்தையும் இந்து மதத்தையும் உருவாக்கி வளர்த்ததில் திராவிடர் பங்கு’ பற்றி ஆய்வு செய்யும் பொழுது அவர்கள் தோற்றம் குறித்த (மேலே கண்ட) பவ விஷயங்களையும் மனதிற் கொண்டாக வேண்டும். இந்துமதத்தில் திராவிட மொழி பேசுநரின் தாக்கம் 25. இந்து மதத்தில் திராவிடர் பங்களிப்பு பற்றி மதிப்பிடுகையில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து நிகழ்ந்துள்ள பலவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. என் வாதங்கள் பொதுவாக எத்தகைய முடிவை ஆதரிப்பவை என்பதையே இங்கு விளக்கமுடியும். வாலாயமாக இந்தியவியலாளர் Indologists கருதுவனவற்றிலிருந்து எனது கருத்துக்கள் ஒரளவு மாறுபடுவதைக் காணலாம். மேல்மட்டத் தொல்வரவு The Great Tradition 26.சமூகவியல்துறைகள் சார் பன்னாட்டுக்கலைக்களஞ்சியம் International Encyclopaedia of Social Sciences (1968) மடலம் 13: 350- 353 இல் சார்லஸ் லெஸ்லி தனது கட்டுரையில் ராபர்ட் ரெட்பீல்ட் Robert Redfield நாகரிக வகைகளைப் புரிந்து கொள்ள “உருவாக்கிய Great Tra- dition மேல்மட்டத் தொல்வரவு / Little Tradition கீழ் மட்டத் தொல்வரவு ” கோட்பாட்டை ரெட்பீல்டு எப்படி வகுத்துக் கொண்டார் என்பது பற்றிக் கூறுவது வருமாறு: நாகரிகங்களைப் புரிந்துகொள்ள பண்பாடு சார் கோட் பாட்டு விளக்கச் சொற்களை மேல்மட்டத் தொல்வரவு, கீழ்மட்டத் தொல்வரவு (இரண்டும் எப்பொழுதும் இணைந்து செயல்படுபவையும் ஒன்றை ஒன்று பாதிப்பவையும் Coexisting and interdependent ஆகிய இரண்டு Idea Systems இரண்டு கருத்துலகங்களாகப் Idea Systems பார்க்க வேண்டும் என்பர் ரெட்பீல்டு. முன்னதில், ஆழ்ந்து சிந்திக்கும் அறிவுஜீவிகளின் Critical and Reflective elite படைப்புகளாகிய அறிவியல், தத்துவம், நுண்கலைகள் அடங்கும்; பின்னதில் பொது ஜனங்களின் (Common people) நாட்டுப் புறக்கலை, புராணங்கள், மதங்கள் போன்றவை அடங்கும். 27. (i) இக்கட்டுரையில் பொதுவான இந்துமதத்தில் (Mainstream Hinduism) மேல்மட்டத் தொல்வரவு (இனி “மே-தொ”) பற்றியே அதிகம் விவாதிக்கப்படும். (ii) இந்தியாவில் மே. தொ வைஆரியத் தொல்வரவு என்று கருதிவிடக்கூடாது. குளோதி ஊடடிவாநல தனது 1978 The many faces of Murugan நூலில் ஆரிய/ வட நாட்டுத் தொல்வரவை மே.தொ போலவே கருதியுள்ளார். நான் அப்படியல்ல. (வேத காலச் செய்திகளைக் கூறும் பொழுது தவிர பிற இடங்களில்) நான் மே.தொ. எனபொதுவாகக் குறிப்பிடுவனவற்றில் ஆரியக் கூறுகளை விட ஆரியமல்லாத கூறுகளே அதிகமாக இருக்கும். எல்மூர் W.T.Elmore 1913 இல் வெளியிட்ட தன் Dravidian gods in modern Hinduism நூலில் இப்பொழுது மே.தோ என நாம் அழைப்பதை ‘பிராமணிய’ எனச் சுட்டினார். சில இடங்களில் மே.தோ இந்து மதம் என்று சொன்னதோடு ‘இந்து’ ‘திராவிடம்’ இவை இரண்டும் வேறுபட்டவை என்றும் எல்மூர் வறினார். உண்மையில் அவர் இந்தியாவில் உள்ள ‘மே.தொ’ வையும் கீழ்மட்டத் தொல்வரவையுமே அவ்வாறு குறித்துள்ளார். (iii) “மே. தோ” வைப் பற்றிப் பேசும் பொழுது வேதகால முற்பகுதி: வேதகாலப்பிற்பகுதி; வேத காலத்துககுப் பிந்தைய காலம் (Post Vedic வே.பி.க) என்று தனித் தனியாகப் பார்க்கவேண்டும். இத்துறை வல்லுநர்கள் சிலர் வேத கால முற்பகுதியை இந்துமதத்தோடு தொடர்பு படுத்தாமல் “வேத மதம்” என்ற சொல்லைப் பயன்படுத்துவர்; இது சரியல்ல. இந்து மதத்தின் பிற்காலத் தன்மைகள் பலவற்றுக்கான அடிப்படை இம்முற்பகுதியிலும் உள்ளது. வேத காலப் பிற்பகுதி, வேதகாலத்துக்குப் பிந்தைய காலம் பற்றிக் கீழே கூறும் பொழுது விளக்க இருப்பது போல, ஸ்ருதி (மாந்தருக்கு வெளிப்படுத்திய புனிதச் செய்தி revealed scripture) க்கும் ஸ்ம்ருதிக்கும் (பொதுமக்களுக்காகக் உருவாக்கியது) வேறுபாடு உண்டு. வேதகாலப் பிற்பகுதியிலேயே ஸ்ம்ருதிகள் உருவாகத் தொடங்கின; ஆனால் வே. பி. காலத்தில் தான் அவை முக்கியத்துவம் பெற்றன. வேதகால முற்பகுதி The Early Vedic Period 28.(i) மிகுபழமைவாய்ந்த வேத சம்ஹிதைகளின் காலத்தை நான் வே தகால முற் பகு தி எனச் சுட்டுகிறேன். பிற்றை மூன்று சம்ஹிதை களிலிருந்து முதல் சம்ஹிதையாகிய ரிக் வேதம் சற்று வேறுபட்டது; அதில் ஆரிய மொழி பேசுநர் (இந்தோ-ஐரோப்பிய நெருக்கம்) பற்றிய செய்தி களை அதிகமாக ரிக் வேதத்தில் காணலாம். பின் மூன்று சம்ஹிதைகளில் குறிப்பாக அதர்வ வேதத்தில் ஆரியமல்லாத கூறுகள் வெளிப்படையாகத் தெரியும். அதர்வ வேதத்தில் (பிற்றை) உபநிஷத்துகளின் கருத்துகளைக் கூறும் இடங்களும் சில உண்டு. (வேத காலப்பிற்பகுதி என்பது வேதசம்ஹிதைகளின் மீதான ஆரண்யகம், பிராமணம், உபநிஷதம் ஆகிய வியாக்யானங்கள் உருவான காலமாகும்) (ii) இவ்வேதங்களே இந்திய இலக்கியங்களில் மிகப் பழயவை ஆகும். அவை இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் “இந்தோ-இரானியன்” பிரிவின் இரண்டு கிளைகளில் ஒன்றான பழைய இந்தோ-ஆரியத்தில் அல்லது சம்ஸ்கிருதத்தில் உள்ளன. சமஸ்கிருதமொழியின் நெருங்கிய உறவு மொழிகள் இந்தியாவுக்கு வெளியில் (மேற்றிசையில்) உள்ளன. பழைய சமஸ்கிருதத்தைப் பேசியவர்களும் தங்களை ஆரியர் என்று அழைத்துக் கொண்டவர்களும் இனம், பண்பாடு அடிப்படையில் racially and cultur Ally மைய கிழக்கு, ஐரோப்பிய நாட்டு மக்களோடு, குறிப்பாகப் பண்டை இரானிய மக்களோடு தொடர்புடையவர்கள். (iii) மிகப் பழமை வாய்ந்த ரிக் வேதம் சுமார் கி.மு. 1500க்குச் சற்று பின்னர் இயற்றப்பட்டதாகத் தெரிவதால், அக்கால கட்டத்தில் தான் அதை இயற்றியவர்கள் வடமேற்கு இந்தியா/ சிந்து நதிபாயும் பஞ்சாப் பகுதிக்கு வந்தனர் என்று நெடுநாளாகக் கருதப்பட்டுவந்தது. இப்பொழுது இக் கருத்தை மறுத்து பரோ, கைப்பர் போன்றோர் “இந்தோ- இரானியன் பொது மொழியிலிருந்து ரிக் வேதமொழியாகிய மிகப்பழைய இந்தோ ஆரியமொழி மொழியியற் கூறகள் பலவற்றில் மாறுபட்டு உள்ளது” என்று நிறுவியுள்ளனர்; எனவே வடமேற்கு இந்தியாவிற்குள் ஆரிய மொழி பேசுநர் நுழைந்த காலம் மிகப் பழைய வேதப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் இவற்றுக்கிடையே நீண்ட கால இடைவெளி இருந்திருக்கவேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். (iv) ஆனால் சுநீதி குமார் சட்டர்ஜி 1951 இல் பாரதிய வித்யாபவன் வெளியிட்ட The Vedic Age நூலிலும் 1959 Tamil Culture (8: 267- 324) கட்டுரையிலும் ஆரியமொழி பேசுநருக்கும் ஆரியமல்லாத மொழி பேசுநருக்கும் ஆரியர் இந்தியாவுக்குள் நுழையுமுன்னர் கிழக்கு இரான் பகுதி போன்றவிடங்களிலேயே இன, பண்பாட்டுக் கலப்பு racial and cultural fusion ஏற்பட்டிருக்கலாம் என்பர், (விஷயத்தை மேலும் சிக்கலாகும்படியாக!). வால்டர் பேர்சர்வீஸ் & பிராங்க்ளின் சவுத்வார்த் தமது 1986 Linguistic Archaeology and the Indus Valley Culture நூலில் ‘வேதங்களை எழுதிய இந்தோ-ஆரிய மொழி பேசுநர் வருவதற்குச் சில நூறு ஆண்டுகள் முன்னரே அவர்களுக்கும் முந்தையவர்களான அம்மொழி பேசும் குழுக்கள் சில வடமேற்கு இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்’ என்பர். 29. எதுவாயினும் சரி, வேதங்கள் விவரிக்கும் முக்கியமான மதக்கூறுகள் பெருமளவுக்கு இந்தோ- ஐரோப்பியப் பண்பாட்டுக்கு நெருங்கி யவையாக உள்ளமையால் அவ் வேதப்பண்பாட்டை ‘ரிக்வேத ஆரியப் பண்பாடு’ என்றே பெயரிட்டு அழைக்கலாம். அடுத்து வரும் பத்திகளில் தொடக்க கால வேதமதக் கூறுகளில் முக்கியமானவை சுருங்கக் கூறப்படும். (அவற்றுள் பல பின்னர் மறைந்து விட்டன அல்லது மாறிவிட்டன, எனினும் ஏனையவை தொடர்ந்து நிலைத்தன). 30. இந்தோ ஆரிய மொழி பேசுநரின் முக்கிய மதச்சடங்கு பலி கொடுப்பதே (sacrifice). அவரவர் இல்லத்தில் இல்லத்தலைவன் செய்து வந்த இல்ல வழிபாடுகளும் (domestic cults) முக்கியமானவை. அவற்றின் எச்சங்கள் இன்றும் தொடர்கின்றன.ஆனால் ரிக்வேதம் நுணுக்கமான சடங் காசாரங்களுடன் ‘ஒவ்வொரு காரியத்துக்கும் ஒருவர்’ என்ற முறையில் அமைந்த பூசகர் குழுவினர் செய்வித்த யக்ஞங்களில் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் பலிகொடுத்ததையே முகாமையாக விவரிக்கிறது. யக்ஞத்தின் நோக்கம் தேவர்களைத் திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து நன்மைகளை வரமாகக் கோருவது. யக்ஞத்துக்குத் தேவர்களை ஈர்த்து வரம் கொடுக்கச் செய்வதற்கான சடங்குகளும் மந்திரங்களும் பூசகர்களுக்கு மட்டுமே தெரியும். 31. இயற்கை ஆற்றல்களின் உருவகங்களும் அவ்வாற்றல்களைக் கட்டுப் படுத்துபவர்களுமே ஆரிய தெய்வங்கள் ஆவர். அவர்களுள் மேல்தட்டில் இருந்தவர்கள் ‘வானுலகத்தில்’ வாழ்வதாகக் கருதப்பட்டவர் களாகிய வானம், ஞாயிறு, மழை, மேகம், வளி(காற்று) இவற்றின் உருவ கங்கள். இரானியர், கிரேக்கர், ரோமர், ஜெருமானியப் பிரிவினருள் சிலர் ஆகிய பிற இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரும் இதே போன்ற கடவுள்களை வழி பட்டு வந்தனர். ஒரு கடவுள் வருணன்(பின்னர் அஹரமஜ்தா என அழைக்கப் பட்ட இரானிய தெய்வத்தின் மறுவடிவம்) பிரபஞ்ச ஒழுங்கைக் கட்டுப்படுத்தி யவன்; நேர்மையையும் ஒழுக்கத்தையும், வழிபாட்டு முறைகளையும் (ரிதம் rta) நிலைநாட்டுபவன். பிற்கால “தர்ம dharma கோட்பாடுகள் இந்த தொன்மை வேதக் கால ரிதத்திலிருந்து தோன்றியன எனப்பல அறிஞர் கருதுகின்றனர். `32. ரிக்வேதத்தில் தொட்ங்கிப் பிற்றை வேதங்களில் விரைவாக நிகழ்ந்த ஒரு மாற்றம் வருணனுக்கும் (ரிக் வேதத் தேவர்களின் தலைவனான) இந்திரனுக்கும் முக்கியத்துவம் குறைந்ததாகும்; பூமியிலேயே காணும் தேவர்கள் முக்கியத்துவம் அதிகரித்தது. முக்கியமான தீயின் தெய்வம் அக்நி, தேவகுரு பிருகஸ்பதி,யக்ஞங்களில் படைக்கப்பட்ட தலைசிறந்த சோமா (போதை தரும் சோமாச்சாறு) இவற்றின் உருவகங்களாகிய தேவர்கள் முதன்மை பெற்றனர். இவற்றில் அக்நி வழிபாட்டின் ஒரு தேய்மானமடைந்த கூறு ஆரியமல்லாத (பெரும் பாலும் திராவிடருக்குரிய) பூசையில் இன்றும் உள்ளது. வேதகாலத்தில் உருவான பிறப்பு, உபநயனம், திருமணம், போன்ற முதன்மையான வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்த சடங்குகளை இன்றும் இந்தியாவில் உரிய வேத மந்திரங்கள் ஓதிக் கொண்டாடுகிறார்கள். 33. ரேனோ Renou (1953 : Religions of ancient India) ஆரியரின் மதக் கோட்பாடானது தமது பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்பிட அவர்கள் உருவாக்கியது என்பர். (அந்த ஆரியமதக் கோட்பாட்டை பிற்றை இந்து மதத்திலிருந்து பிரித்து வேதமதம் Vedism என்று சுட்டுவார்) வேதமதத்தில் தொல்வரவு, கடன் பெற்றவை இரண்டுமே இல்லையென்றும் பஞ்சாப் பகுதியை ஒட்டி அவர்கள் தனிமையாக (in seclusion) வாழ்ந்த பொழுது உருவாக்கிக் கொண்டதே அது என்பர். சிந்து நாகரிக வீழ்ச்சிக் காலத்தில் அப்பகுதியில் அரியமொழி பேசுநர் சிறு குழுக்களாகவாவது அ ங் கு இருந்திருக்கவேண்டும்; அக்குழுக்கள் மீது அந்நாகரிகத் தாக்கம் இல்லாமல் இருந்திருக்காது: எனவே ரெனொ கருத்து சரியாகத் தோன்றவில்லை(சிந்து நாகரிகம் தலைசிறந்தது; அந்நாகரிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் எழுத்துச் சான்றுகள் (ஓரிரு சொல், சொற்றொடர் மட்டுமே கொண்ட) சில ஆயிரம் முத்திரைகள் மட்டுமே; அவையும் அனைவரும் ஏற்கும் வகையில் இன்னும் வாசிக்கப்படவில்லை. ஆய்வறிஞர் பலரும் சிந்து முத்திரை எழுத்து திராவிட(தமிழிய) மொழியின் தொடக்க நிலை வடிவில் இருந்திருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். பஞ்சாபுக்குத் தெற்கில் சிந்து தீரத்தை ஒட்டிய பலூச்சித்தானத்தில் இன்றும் திராவிட மொழி யாகிய பிராஹுய் பேசும் மக்கள் உள்ளனர். 34. 1945, 1946, 1947- 48 ஆண்டுகளில் Transactions of the Philological Society, B.S.O. A.S லண்டன் ஆகிய ஆய்விதழ்களில் பரோ தமது நுண்ணிய ஆய்வின் மூலம் வேதங்களில் உள்ள ஏறத்தாழ 500 சம்ஸ்கிருதச் சொற்கள்,வடமேற்கு இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகளிலிருந்து கடன் பெற்றவை - ரிக் வேதத்திவேயே ஏறியுள்ள சுமார் 20 சொற்கள் உட்பட என்பதைத் தெரிவித்தார். 1955 ல் பரோ எழுதிய The Sanskrit Language நூல் பரோ, எமெனோவின் Dravidian Etymological Dictionary (II 1984) ; எமெனோ 1956 இல் Language (32:3-16), இதழ்; 1974 இல் IJDL (3:93-134 கட்டுரை) கைப்பர் (Indo - Iranian Jour Nal 10 : 82-102) கட்டுரை முதலியவற்றில் அவ்வறிஞர்கள் அத்தகைய திராவிட மொழிச்சொற்கள் மேலும் பலவற்றைக் கண்டறிந்து குறிப் பிட்டுள்ளதுடன் திராவிட மொழிகளின் அடிப்படை இலக்கண, சொல் லமைப்புக் கூறுகளையும் பழைய இந்தோ ஆரியத்தில் (வேத மொழி உட்பட) கண்டறிந்து கூறியுள்ளனர். (பிற்றை இந்தோ- ஆரிய மொழிகளில் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளின் தாக்கம் மிகத் தெளிவாக உள்ளது என்பதை சுமித்ர மங்கேஷ் காத்ரே (1964 : Prakrit language and their contribution to Indian Culture) நூல் போன்றவற்றில் காண்க.) மேலும் பழைய இந்தோ - ஆரிய (வேத) மொழியிலேயே பல்லொலி னநவேயடக்கு இணையாக வளை நா retroflex ஒலியன்கள் (Phonemes) (த்-ட், ந்- ண், ல்-ள்) புதிதாக ஏறியுள்ளமை திராவிடத் தாக்கத்தால் என்பதை பரோஎமெனோ நிறுவியுள்ளனர்; குறைந்தபட்சம் ட், ண் முதவிய வளைநாஒலி கொண்ட திராவிடச் சொற்கள் வேதமொழியில் ஏறிப் புழங்கத் தொடங் கிய பின்னர், அவ்b வாலியன்களைப் புதிதாகத் தம் வண்ணமாலையில் ஆரியர் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும். எமனொ (1962 : Proceedings of Americal Philosophical Society 106: 430-442) கட்டுரையில் வடஇந்தியாவில் அன்று வாழ்ந்த திராவிட மொழிபேசுநர் வேத மொழியைப் பயின்று பயன் படுத்திய பொழுது தம் பழக்க தோஷத்தால் திராவிட (வளை நாஒலி) ஒலியன்களைப் புகுத்தியும் இருக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறார். சௌத்வொர்த் ஐதுனுடு 3:1, 1974 கட்டுரையில் கூறுவது போல வடஇந்தியாவில் அப்பழங்காலத்திலேயே பெரு மளவுக்கு ஆரியமல்லாத மொழி பேசுநரும் ஆரிய மொழி பேசுநரும் கலப்படைந்திருக்கவேண்டும். 3 4 . மே ற்கண்ட தி லி ரு ந் து வேதகால ஆரி ய ர் “தனிமையாக” வாழ்ந்தனர் என ரெனொ உன்னித்தற்கு ஆதாரமில்லை என்பது தெளிவாகும், இன்னும் சிலர் எ.கா. Doris Srinivasan 1983 “Vedic Rudra - Siva” JAOS13:543-556) “ஆரிய/ வேதமொழி (திராவிட தாக்கமின்றி) இந்தோ- ஐரோப்பிய மொழியாகவே இருந்தது” என கூறுவது சரியல்ல என்பதைக் காட்டவே முன் பத்தியில் கண்ட செய்திகளைத் தந்துள்ளேன். பிற்றை வேதகாலம் The Later Vedic Period 3 5 வேதகால மு ற் ப கு தி க் கு ப் பி ன் ன ர் , பி ற் ப கு தி யி ல் ப ல விஷயங்கள் தொடர்ந்தனவெனில், முக்கியமான சில கைவிடவும்பட்டன. “வேதகாலம்” என்று பொதுவாக குறிப்பிடுபவர்கள் பலர் இம் மாற்றங்களைச் சுட்டாமல் விட்டு விடுகின்றனர். பிறபகுதிக்கான இலக்கிய ஆதாரங்கள் ஸ்ருதிதான். ஆனால் அந்த ஸ்ருதியில் முக்கியமான உபநிஷதங்கள் வேத சம்ஹிதைகளிலிருந்து பெரிதும் மாறுபாடானவையாக உள்ளன. சம்ஹிதைகள் பெரும்பாலும் சடங்குகளை விவரிப்பவை. உபநிஷத்துகள் தத்துவக் கருத்துகளைக் கூறுபவை, அவை பல புதிய தத்துவங் களைக் கூறுகின்றன. (பிற்றை/ இக்கால இந்துமதத்தின் அடிப் படையாக உள்ள சில உட்பட) மேல் மட்டத் தொல் வரவை Great Tradition உபநிஷத் கால கட்டத்தில் உருவாக்கியதில் ஆரிய மல்லாதவர்கள் குறிப்பாக திராவிட மொழி பேசுநர் முக்கிய பங்கு வகித்ததனால்தான் இம்மாபெரும் மாற்றம் நிகழ்ந்தது என்பது என் கருத்து. வேத காலத்திலிருந்தே இம்மாற்றம் (பண்பாடு, மொழியியல், இனம் ஆகிய துறைகளில் ஆரியர்- ஆரியமல்லாத மொழி பேசுநர் கலப்பு தொடங்கி யிருக்கவேண்டும். மாதவ் ஆ. தேஷ்பாண்டே கட்டுரை “Genesis of Rg Vedic retroflexion: A historical and sociolinguistic Investigation (1979 தேஷ்பாண்டே-ஹாக் புத்தகம் : Aryan and Non-Aryan in India 235-315) போன்றவை இதை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளன) 36. சமூக- மொழியியல் Sociolinguistic செய்திகள் சிலவற்றை இங்கு முதலில் குறிப்பிடவேண்டும். ஒருதத்துவத்திற்கு , பண்பாட்டுக் கூறுக்கு சம்ஸ்கிருதப் பெயர் இருநத அளவிலேயே அது ஆரியருடையது என்று இந்தியவியலாளர் பொதுவாக (தவறாக) எண்ணிவிடுகின்றனர். எ.கா. “சம்ஸார” என்பது சம்ஸ்கிருதச் சொல்தான்; ஆனால் அது சுட்டும் பொருள்- மறுபிறவி, வாழ்வுச்சக்கரம் wheel of existence ஆரியரிடைத் தோன்றியது மல்ல; இந்தியாவுக்கு வந்த ஆரியமொழி பேசுநர் கொணர்ந்த இந்தோ - ஐரோப்பிய மதம் சார்ந்ததுமல்ல. பண்டு இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநரிடை(கி.மு. 1000 க்கு முன்னர்) வழங் கிய மதக் கொள்கைகளாக ஆய்வறிஞர்கள் உன்னித்து முடிவு செய்துள்ள reconstructed கொள்கைகளில் இந்திய மத தத்துவங்களில் - இந்து , புத்தம், ஜைனம் அடிப்படையான கோட்பாடுகளில் முக்கியமானவை எதுவும் இல்லவே இல்லை. எனினும் வேபிள்கள் மட்டும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன! இவ்வாறு “ஆரியக் கருத்து” என்று அபத்தமாக்க கருதுவதனால் தான் இந்து மத தத்து வ ங்களை உ ரு வாக்கிய ஆரி யமல்லா தாரின், முக்கியமாக திராவிட மொழி பேசுநரின் மாபெரும பங்கை இருட்டடிப்புச் செய்யும் நிலை உள்ளது. 37. இந்தியப் பண்பாட்டில் ஆரியமல்லாத கூறுகள் பலவற்றுக்கும் சம்ஸ்கிருத லேபிள்கள் பரவலாக வழங்கும் நிலை எவ்வாறு ஏற்பட்டது? ஆரியமொழி பேசுநர் இங்கு (சிறு எண்ணிக்கையில்) வந்த காலத்திலிருந்த ஆரியமல்லாத தன்மைகள் பலவற்றைத் தாங்களும் கைக்கொள்ளலாயினர். சட்டர்ஜி (1959) கூறுவது போல மொழி, மதம், தத்துவம் இவற்றில் மட்டுமல்ல,உணவு, குடிவகை, உடை, இல்ல அமைப்பு (அறைகலன் கள் உட்பட) கணக்கிடும் முறை போன்றவற்றிலும் இது நிகழ்ந்தது. அவ்வாறு புதிய வற்றைக் கைக்கொள்ளும் பொழுது பலவற்றை சம்ஸ்கிருதப் பெயரில் (லேபிலில்) ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக மத-தத்துவக் கொள்கைகளை அவர்கள் ஏற்றுத் தமதாக்கிய பொழுது இது தவறாது நிகழ்ந்ததற்குக் காரணம் வேத சம்ஹிதை மொழியாகிய சம்ஸ்கிருதம் தான்ரிஷிகள் மொழி, புனித மொழி எனக் கருதப்பட்டதுதான். அனைவரும் மதித்து வந்த புனிதமான சாத்திரங்களின் மொழியிலேயே இப்புதுவரவு மத, தத்துவக் கருத்துகளுக்கும் பெயரிட்டழைத்தமையானது அவற்றை மொத்த சமுதாயத்தில் அனைவரும் மததத்துவ விவாதத் துறையில் பரப்பவும் பயன்படுத்தவும் வகை செய்தது. 38. (i) பிற்றை வேத காலத்தின் முக்கியமான சில தத்துவக் கோட்பாடு களைக் காண்போம். உபநிஷத்துகளில்தான் இவை முதன்முதலில் தோன்றின (சம்ஹிதைகளில் வழங்கிய சில பழஞ்சொற்களுக்கு அவற்றின் மூல அர்த்தத்தை ஒதுக்கிவிட்டு உபநிஷத் கால கருத்துக்கு ஏற்ற புதிய அர்த்தத்தை வலிந்து ஏற்றிக் கொண்டனர்) தோன்றிச் சிலபல காலம் கழிந்தபின்னர்த்தான் முறையான தத்துவக் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டன. புதியவற்றில் மிக முக்கியமானவை ஆரியமல்லாதார் உருவாக்கியவை (குறைந்த பட்சம் ஆரியமல்லாதார், குறிப்பாக திராவிட மொழி பேசுநரிடம் காலகாலமாக இருந்தவற்றை ஆரியர் ஏற்றுக் கொண்டவை) என்பதை அடுத்துக் காண்போம். (ii) “தொடக்க கால இந்தோ-ஐரோப்பியப் பண்பாடு” என அறிஞர் மீ ட்டமைத் து ள் ள தி ல் (re const ruc ted) இ ப் புதி ய த த் து வ ங் களைப் போன்றவை. எவையேனும் உளவா? என்று பார்ப்பது முக்கியம். ‘இல்லை’ என்று மேலே36 ஆம் பத்தியில் கண்டோம். இந்தியாவுக்கு வந்த இந்தோஆரிய மொழி பேசுநர் தமக்குள்ளாகவே- வெளியார் தாக்கம் இன்றி - புதிய கோட்பாடுகளைச் சுயசிந்தனைபடி உருவாக்கிக் கொண்டிருக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர்! எனக்கு இது சரியாகத் தோறைவில்லை. வேதமொழியி லேயே ஆரியமல்லாத மக்கள் மொழி மக்களின் தாக்கம் இருந்ததைக் கண்டோம்; பெரும் எண்ணிக்கையினரான ஆரியமல்லாத மக்களிடையே சிறுசிறுகுழுக்களாகவே ஆரியமொழி பேசுநர் அன்று வாழ்ந்திருக்கவேண்டும். மொத்தத்தில் பல்வேறு காலங்களில், நாடுகளில் நிகழ்ந்தது பற்றிய வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் “புதிய கோட்பாடுகளைத் தாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்” என்ற வாதம் நிற்கக் கூடியதல்ல. 39. பிற்றை வேதகாலத்தில் தோன்றி, வேதங்களுக்குப் பிந்தைய காலத்தில் Post-Vedic இந்து தத்துவங்களில் அடிப்படைகளில் முதன்மை யானவை கர்மம், சம்சாரம், மோட்சம், பிரம்மன்(‘ஆத்மன்’ உடன்) 40. பல உபநிடதங்கள் கர்மத்தை புதிய கோட்பாடாகவே சுட்டுகின்றன. அந்தக் கால கட்டத்தில்தான் சாதி அடிப்படையிலான தொல்லிந்திய சமூக அமைப்பு உருவாகத் தொடங்கியிருந்தது. அப்பொழுதிருந்தே கர்மம், சம்சாரம்(மறுபிறவி, மீண்டும் பிறத்தல்) நிர்வாணம் (தான் Personal Self என்பதன் அழிவு) மோட்சம் (பிறவியிலிருந்து விடுதலை) அகியவையும், சாதி முறையும், கூட்டாக உருவாக்கித் தொல்லிந்தியப் பண்பாட்டின் மையக் கோட்பாடுகளாக அமைந்தன. 41. கர்மம், முதலிய தத்துவக் கோட்பாடுகளை என்ன என்று திட்டவட்டமாக வரையறுத்து கூறுவது கடினம்தான். அண்மைக்கால மாநாடு ஒன்றில் கர்மம் பற்றிய பல ஆய்வுரைகளை விவாதித்த பின்னர் “கர்மம், மறுபிறவி இவற்றைக் கறாராக வரையறுக்க முயல்வது வீண்வேலை என்றும், இவை என்ன என்று தெரிந்து கொண்டு மேலும் நுணுக்கமாக ஆய்வதற்கு தேவையான அளவுக்கு இவற்றின் அடிப்படைகள் என்னவென்பதை இத்துறை ஆய்வாளர்கள் உணர்ந்துள்ளனர்” என ஓ பிளாஹெர்தி தனது 1980 நூல் முன்னுரையில் கூறியுள்ளார். பொதுவாகவே (கிருத்தவ மதத்தில் Trinity பிதா, சுதன், பரிசுத்த ஆவி பற்றித் தீராத வேறுபாடு உள்ளது போல்) பருப்பொருள் சாராத(abstract) மத, தத்துவக் கொள்கைகள் குறித்து எங்கும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். இந்துமதம் போன்ற முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுக் கோட்பாடு பற்றிய கருத்துகளை மேலை (ஐரோப்பிய-அமெரிக்க) பண்பாட்டுச் சொல்லாடல் (meaningful western idiom வழி தெளிவாக விளக்குவது கடினம்தான். 42. மேலே சொன்னவற்றை மறந்துவிடாமல் இப்பொழுது நாம் கர்மம் முதலியவை பற்றிப் பார்ப்போம். கர்மத்தின் சொற்பொருள் “செயல்/ செய்கை” என்பது. உபநிஷத்துகள் ஒவ்வொரு செயலின் ஒழுக்கம்/நேர்மை அடிப்படையில் எச்செயலையும் மதிப்பிடுகின்றன. உபநிஷத் காலத்துக்குப் பின்னர் ‘செயலால் ஏற்படும்(நாம் காண இயலாத) ஆற்றலை energy’ அது குறிக்கலாயிற்று. இவ்வாற்றல்(உடனடியாகவோ நாளடைவிலேயோ) செய்தவனைப் பாதிக்கிறது- அவன் செய்த வினையின் பயனை அவனே அனுபவிக்கும் நிலை ஏற்படாவிட்டால் அதனை மறுபிற வியில் துய்க்க நேருகிறது. தண்டேகர் 1971 ‘Hinduism’ பற்றிய கட்டுரையில் கூறுவது. ‘தனது அடிப்படை அஞ்ஞானம் காரணமாக தொன்று தொட்டு (since eternity சம்சார)இருந்து வரும் முடிவிலாத பிறவிச் சுழலில் மனிதன் அகப்பட்டு உழல்கிறான். முடிவில்லாத (காரண-காரிய) கர்மச் சங்கிலியில் பிணிக்கப் பட்டுள்ள மனிதன் ஒரு பிறவியில் தான் செய்யும் செயல்களுக்கான பயனை பின்பிறவிகளில் துய்த்தாக வேண்டும். அவ்வாறு துய்ப்பதற் கேற்றதாகவே அடுத்த பிறவிகளின் தன்மையும் சூழல்களும் அமைகின்றன. பிறவித்தளை யிலிருந்து இறுதியாக விடுபட ஒரே வழி இந்து மத தத்துவப்படி மோட்சம் தான். மோட்சம் என்பது முழுமுதல் இறையுடன் சேர்ந்துவிடுதல் attaining identity with the one absolute தான். பிற்றை வேத உபநிஷத்துகள் எல்லாம் அனைவரின் இறுதியான நோக்கு மோட்சம் அடைவதே என்று சாற்றுகின்றன. 43. பல ஆய்வாளர் இக்கருத்துகள் ஆரியமொழி பேசுநர் கொண் டிருந்தவை என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இவை போன்ற கோட்பாடுகள் முந்தைய இந்தோ- ஐரோப்பிய/ இந்தோ இரானிய மதங்களில் இல்லை. குறிப்பாக கர்மம், சம்சாரமும் எப்படி மோட்சம், தர்மம் இவற்றோடு காரண காரியத் தொடர்புடையன என்பது பற்றியோ அம்மதங் களில் எதுவுமே இல்லை.(தர்மம் என்பது இயற்கையும் சமூகமும் என்றும் நியதிப்படி நின்று நிலவுவதற்கான அடிப்படையான தத்துவக் கொள்கை.) தொடக்க கால வேத யக்ஜச் சடங்குகளையும் ‘கர்மக்’ கொள்கையையும் சிலர் தொடர்பு படுத்த முயன்றுள்ளனர். (எ.கா. ஜேம்ஸ் ஓ. பூன் Boon 1983: Karma, an anthropological enquiry புத்தகத்தில் ஒரு கட்டுரை; ஒ பிளா ஹெர்தி 1980 பதிப்பித்த புத்தகத்தில் அவரே (பக். 37 இல்) எழுதிய “வேத, புராணங்களில் கர்மமும் மறுபிறவியும் கட்டுரை ஆனால் “கர்மம்-சம்சாரம்- மோட்சம் ” என்று பிணைப்புண்ட ஒ ட்டு மொத்த தத்து வம் ஆரியமல்லாதது என்பதற்கு அசைக்கமுடியாத சான்றுகள் உள்ளன. 43. (i) “பிரமன்” பற்றிப் பார்ப்போம். ரிக்வேதத்தில் சேர்ந்து உள்ள மிகப் பிற்காலத்திய ரிக் ஒன்று (Hymn of creation) படைப்புக்கு ஒரே மூல காரணமாக ஒரு தெய்வீக ஆற்றல் impersonal divine force இருந்திருக்கலாமோ என்ற ஐயுறுகிறது. அவ்வாற்றலை அது It அந்த ஒன்று என்று சுட்டுகிறது. பிற்கால வேதாந்தத்துவத்தில் அது ‘பிரமன்’ ஆகத் தோன்றி முற்றிலும் மாறுபட்ட சிந்தனைக் கட்டுக் கோப்பின் பகுதியாக அடங்கி விடுகிறது part of a very different matrix; முந்தைய இந்தோ ஐரோப்பிய மதத்துக்கு அறவே மாறுபட்டதாக வேதசம்ஹிதையில் (ரிக் முதலிய 4வேதங்கள்) பிரமன் Brahman(புனிதவாசகம், sacred utterance (அல்லது அதன் மூலம் உற்பத்தியாகும் சக்தி or the power generated therby). வேதகாலம் முடிந்த பின்னர்தான் ‘பிரமன்’ என்பது மேற்சொன்ன ரிக்கில் வரும் ‘அது’ வைச் சுட்டுவதாகக் கற்பித்துக் கொண்டார்கள்! (ii) ரிக் வேதம் சுட்டும் ‘அது’பருப் பொருள் அல்லாத, மாந்தனுக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆற்றலைப் பற்றியது: ரிக் வேதத்தின் ஏனைய ரிக்குகளிலிருந்து அறவே மாறுபட்டது. ஏனையவை எல்லாம் பற்பல தெய்வங்களை(பெரும் பாலும் ஆண் தெய்வங்கள்) வழுத்துபவை; இயற்கையில் காணும் தீ முதலியவற்றை உருவகப்படுத்தியவையே அத்தெய்வங்கள். பல நூறு ஆண்டுகளாக ஆரியம், ஆரியமல்லாத பண்பாட்டினர் நெருங்கிப் பழகிய பின்னர் உருவாகிய புதுக் கருத்தை அந்த ரிக் தெரிவித்தது. 44. உபநிஷத் காலத்தில் ‘பிரமன்’ ‘ஆத்மன்’ இரண்டும் இணைக்கப் பட்டன. வேதங்களில் (சம்ஹிதை) ஆத்மன் என்பது சாகும் பொழுது உடலைவிட்டு நீங்கும் ஆவியைக் (life - breath) குறித்தது. மனித உயிர் மட்டும் வானுலகத்துக்குச் heaven சென்றதாகக் கருதினர். நாளடைவில் மனித உயிர் வானுலகம் செல்லும் என்ற எண்ணம் மாறி “ஆத்மன்”- உம் “பிரமன்” உம் இறுதியாக ஒன்றே என்ற எண்ணம் வந்தது. அதுவே தத் த்வம் அஸி) That (Brahman) thou (the human soul )(தமிழில் ‘அது நீ தான்’ (நீயாய் இருக்கிறாய் என்று நீட்டத் தேவையில்லை) சாஹ்னர் Zaehner (1966) Hinduism பக்கம் (viii)கூறுவது போல் “உபநிஷத்துகளின் அடிப்படைக் கொள்கை ‘பிரமனும் ஆத்மனும் ஒன்றே’: அதாவது பிரபஞ்சம் நிலைப்பதற்குக் காரணமானதும் என்றும் மாறாததுமான உள்ளீடு change- Less essence எதுவோ அதுவே மனிதனுக்குள்ளும் உறையும் மாறாத உள்ளீடு ஆகும். 45. ரெனோ 1953 “பிரமன்’ உடைய முற்கால அர்த்தத்துடன் தொடர் புடையதே பிற்கால “பிரமன்” உடன் தொடர்புடையது; முதற்கட்டத்தில் அச் சொல் உயிரிகளிடம் மறைவாய் இருந்த உயிராற்றலை குறித்தது போல அடுத்தகட்டத்திலும் அதையே குறித்தது” என்பர். நாளடைவில் அச்சொல்லின் பொருண்மை மாறிவிட்டதை அரை குறையாகவே ரெனோவின் வாதம் விளக்குகிறது. (மேலே 33ம் பத்தியிற் சொன்னது போல வேதக் கோட்பாடு களுக்கு மாறான உபநிஷத் கோட்பாடுகளை ஆரிய மொழி பேசுநர் சுயமாகவே உருவாக்கிக் கொண்டிருக்கலாம் என்ற ரெனோ கருத்து சரியல்ல) ஆரியமல்லாத சிந்தனைகளின் தாக்கத்தால்தான் உபநிஷத்துகள் உருவாயின என்பது அவருக்குப் புரியவில்லை. 46. ‘பிரமன்’ மற்றும் பிற்கால வேதாந்த தத்துவத்தில் வரும் ‘ஆத்மன்’ இரண்டும் செயல்படும் பண்பாட்டுக் கட்டமைப்பில் மாயை என்னும் முக்கியமான கோட்பாடும் அடங்கும். வேதப்பாடல்களில் ‘மாயை’ தந்திரம்/ ஏமாற்று என்ற பொருளுடன் தான் வந்தது. நாள டைவில் நாம் புலன்களால் காணும் பிரபஞ்சமே அடிப்படையில் மாயையே (கற்பிதமே) என்ற அடிப்படையில் ‘மாயை’ பிரபஞ்சத்தைச் சுட்டுவதாயிற்று. ‘பிரமன்’, ‘ஆத்மன்’ ஆகியவற்றைப்போல ‘மாயை’ யும் வேதப்பாடல்களில் எளிய பொருளில் வந்தது மாறி உயர் நுணுக்கமான சிந்தனை உருவாக்கத்தைக் குறிப்பிடலாயிற்று. இந்திய மண்ணில் இவ்வாறு வியத்தகு முறையில் உருவான (இந்து) மததத்துவத்துக்கு ஆதாரமாக அமையக்கூடியது ஒன்றும் இந்தோ-ஐரோப்பிய இந்தோ இரானிய மதக்கோட் பாடுகளில் இல்லை. இந்து மதத் தோற்றத்தில் ஆரியமல்லாதார் பங்கை ஏற்றுக்கொள்ள இந்தியவியலாளர் பலருக்கு மனம் இல்லை; ஆனால் ஏற்காமலிருப்பது அபத்தம் highly unrealistic. ஆரியமல்லாதார் பங்கு என்பதில் பெரும்பங்கு வகித்தவர் எண்ணிக்கையிலும் பண்பாட் டுயர்விலும் ஓங்கியிருந்தவர் திராவிட மொழி பேசுநர் என்பதை நினைவிற்கொள்க. 47. உபநஷத் காலக் கருத்தியலில் (பெரும்பாலும் ஆரியமல்லாதார் தாக்கத்தால் உருவான) யோகம், சமாதி, தபஸ், அகிம்சை இவைபற்றிப் பார்ப்போம். (i) யோகமானது மனத்தையும் சிந்தனையையும் ஆன்ம வளர்ச்சிக் காகக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்துவதாகும். யோகமும் துறவு மனப் போக்கும் ascetic tradition இந்தியாவில் மிகு தொன்மை வாய்ந்தவை. ரிக்வேதகாலத்துக்கு குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநிலை அடைந்திருந்தது சிந்து நாகரிகம். அந்நாகரிக எச்சங்களில் மொகெஞ் சோதாரோவில் கிடைத்த தாயத்து/ முத்திரை ஒன்றில் யோகிகளுக்குரிய ஆசனத்தில் ஒருவர் இருக்கிறார். வேதகாலத்துக்குப் பின் புகழ்பெற்ற மக்கட் பெருக்கக் (fertility) கடவுள் ஆன சிவனை இந்த யோக ஆசனத்தில் தான் அடிக்கடி அமைப்பர். அவன்தான் மாபெரும் யோகி(ஆனால் ஏனைய கடவுளரையும் அப்படிக் காட்டக் கூடாதென்று இல்லை) (ii) யோகத்தில் மனதை ஒரு நிலைப்படுத்துவதின் உச்சகட்டம் தான் சமாதி (Concentration). (ii) தபஸ் என்பது யோகப்பயிற்சி செய்பவர்களும் துறவோரும் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளையும் உடல் மனக் கட்டுப் பாடுகளுக்கும் வழங்கும் பெயர். (iv) இப்பண்பாட்டுச் சூழலில் அகிம்சையும் ஒரு கூறு ஆகும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள் முதவியவை இவற்றுக்கு எந்த இன்னலும் செய்யக்கூடாது என்பது அகிம்சை. (v) வேத காலத்துக்குப் பின்னர்தான் துறவு sceticism பெருவளர்ச்சி அடைந்தது. ஆரியமொழி பேசுநர் பண்பாட்டில் உருவானதன்று துறவு. (vi) மேற்சொன்னவை பற்றியெல்லாம் உபநிஷத் காலத்தில் தான் முதலில் கூறப்படுகிறது என்பதிலிருந்தே (பிற சான்றுகளுடன் சேர்ந்து) இந்திய மேல்மட்டத் தொல்வரவில் Great Tradition அக்கால கட்டத்தில் தான் பெருமளவில் ஆரியமல்லாத மிகமுக்கியமான மத தத்துவக் கோட்பாடுகள் சேர்க்கப்பட்டன என்பதை உணரலாம். முன்னிருந்தவை யும் இப்படிச் சேர்த்தவையும் கலந்துதான் இன்று நாம் இந்த மதம் என்று அழைக்கும் மதம் உருவானது. வேதங்களுக்குப் பிற்பட்ட காலம் Post Vedic Period 48. இக் காலகட்டத்தில் தான் இந்தியாவின் பெரும் தத்துவங்கள் உருவாயின. மேற்கண்ட உபநிஷத் கோட்பாடுகளும் பிறவும் நாளடைவில் கட்டுக்கோப்பாக இணைக்கப்பட்டு தனித்தனி தத்துவ மரபுகள் உருவாக்கப் பபட்டன. முக்கியமானவை சங்கரரும் இராமானுசரும் இறுதி வடிவம் தந்த மரபுகள். வேறுபல மரவுகளும் உருவாயின. வேதங்களிலிருந்து சில கொள்கைகளையும் வேதமல்லாத மரபுகளிலிருந்து சிலவற்றையும் சேர்த்து சில மரபுகள் உருவாயின. புருஷ, பிரக்ருதி இவற்றை வலியுறுத்தும் சாங்கியம், யோகம் இரண்டும் இப்படி உருவானவை. 49. நிலைப்படுத்த கோட்பாடுகளுடன் பிற்காலத்தில் வளர்ச்சி யடைந்த செம்மைப்படுத்தப்பட்ட இந்து மத classical Hinduism தத்துவங்களை நான் இங்கு விவாதிக்கப்போவதில்லை. இக்கட்டுரையின் நோக்கத்துக்கு அது தேவையில்லை. எனினும் பிற்காலத்தில் பொது மக்கள் பயிலும் புனித நூல்கள் popular scriptures மூலம் வலுப்பெற்ற முக்கியமான கோட்பாடுகள் அவற்றோடு பிணைந்து உருவான நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமாகச் சில கூறுவேன். குறிப்பாக பொதுமக்களிடம் பிரபலமாக வழங்கும் ஸ்ம்ருதிகள் (இதிகாசங்கள் பகவத்கீதை உட்பட; புராணங்கள்) குறிப்பிடுவனவற்றை; (வேதங்களும் அவை சார்ந்த ஆரண்யக, பிராமண உபநிஷங்கள் முதலியவையும் ஸ்ருதி ஆகும்.) ஸ்ருதி முழுமையும் மேல்மட்டத் தொல்மரபு; பொதுமக்கள் புனித நூல்களும் அவ்வாறே (ஆனால் கீழ் மட்டத் தொல் மரபு மூலம் முதலில் நுழைந்து பின்னர் மேல்மட்டத் தொல் மரபாக மாறிவிட்டவை பலவாகும்.) 50. (i) வேதமதத்துக்கு எதிரானவையும் வேதகாலம் முடிந்த பின்னர் உருவானவை யும் ஆன ஜைனம், புத்தம் ஆகியவற்றைப் பற்றி இந்நிலையில் குறிப்பிட்டாக வேண்டும். இரண்டுமே உபநிஷத்துகளின் கோட்பாடுகள் பலவற்றைச் சேர்த்துக் கொண்டன. ஆனால் அவற்றுக்கு சற்று வேறுபாடான வியாக்யானங்களைத் தந்தன. எனினும் அவையிரண்டுமே பிராமணப் பூசாரிகளை ஏற்கவில்லையாகையாலும் “வேதங்களே இறுதிப் பிரமாணம்” என்பதையும் மறுத்தனவாகையாலும் அவை மரபை மீறியவை Unorthodox என அழைக்கப்பட்டன. இரண்டுமே ஆரியமல்லாத (குறிப்பாகத் திராவிட) மரபுகளையும் தம் மதங்களில் சேர்த்துக் கொண்டு போற்றின. (ii) ஜிம்மர் (1951: 218-19) கூறுவது “இந்தியாவுக்குள் புதிதாக நுழைநத வேத-ஆரிய கருத்தோட்ட தத்துவம், ஆன்மீக உணர்வு ஒருபால், இவற்றிடையே ஏற்பட்டதாக்கம், உரசல் காரணமாக இந்திய தத்துவ வரவாற்றில் பெருமளவுக்கு, பல கால கட்டங்களில் கருத்து மோதல்கள் series of interactions பல ஏற்பட்டு வந்துள்ளன. ஆரியக்கருத்தோட்டத்தை முக்கியமாக பிராமணர் ஆதரித்துவந்தனர், திராவிடக் கருத்தோட்டத்தை தொல் இந்தியர்களான கருநிற, ஆரியமல்லாத மக்களைச் சார்ந்த, அரசர்களும் சிற்றரசர்களும் ஆதரித்தனர். வேறெந்த இந்திய சித்தாந்தத்தையும் விட ஜைனமே திராவிட மொழிபேசுநர் மதக் கோட்பாடுகளை அதிகத் தூய்மையோடு காத்துப்பேணி வந்துள்ளது. சாங்கியம், யோகம், தொடக்க கால புத்தமதம், உபநிஷத்து தத்துவங்களின் பெரும் பாலானவை(ஏன் வேதாந்தப் பிரிவுகளில் “அத்வைதம் Non-dualism” என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் தனிப்பிரிவுகள் Pessimistic Dualism கூட) இவையனைத்துக்குமே அடிச் சட்டமாக அமைந்தது “இவ்வுலக வாழ்வு துயரமானது” என்ற அடிப்படையில் அமைந்த த்வைதக் கொள்கை. Pessimistic dualism ஆகிய திராவிடசித்தாந்தக் கொள்கையை எளிதானதாக, டாம்பீகமில்லாததான, வெட்டொன்று துண்டிரண்டு Clean- Cut வடிவில் நேரடியாகப் பின்பற்றிப் போற்றி வருவது ஜைனம்தான் (iii) மேலும் ஒரு படிசென்று ஜிம்மர் “பின் காலத்தில் பண்டைய இந்திய தத்துவத்தின் 6 மரபுகள் என்று சுட்டியவற்றை” உருவாக்கிய கருத் தோட்டங்களுக்கு அடிநாதமாகிய விளங்கிய மனநிலை பற்றிய விவாதம் analysis of the psyche that prevailed in the six systems of classical Indian philosophy ஆனது. அந்த 6 மரபுகள் தனித்தனியாக உருப் பெரு முன்னரே ஜைனர் நூல்களில் விளக்கப்பட்டுள்ளது என்றும் அக்கருத்துகள்தாம் பின்னர் சாங்கியம், யோகம் மூலமாக விரிவாக விளக்கப்பட்டன என்றும் கூறுகிறார். இவை யெல்லாம் முதலில் ஆரியமல்லாதவர் சிந்தனையில் உதித்தவையே என்பர் ஜிம்மர். (iv) இடைக்காலத்தில் Medieval period இந்தியாவில் உருவான தந்திர Tantra கோட்பாடுகள் முதலில் (குறிப்பாக) சாங்கியக் கருத்துக ளாக இருந்தவைகளே என்றும் மேற்சொன்ன உளவியல் கொள்கைகளை அவை மேலும் நயமாக்கின என்றும் கூறுவர் ஜிம்மர். இவையெல்லாம் இந்தியா மட்டுமல்ல, திபெத், சீனா, சப்பான், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பொதுமக்கள் நிலையிலும் புத்த சமய அறிஞர் நிலையிலும் காணும் புத்தமதக் கோட்பாடுகள் மீதெல்லாம் தாக்கம் விளைவித்தன என்பர் ஜிம்மர். 51. சாங்கியர் தத்துவத்தில் அடிப்படை ஆற்றல்கள் இரண்டு two ultimate Absolutes : (i) புருஷ (பொதுமக்கள் நிலையில் சிவன்); இது ஆண் தத்துவம்; ஆன்மாவின் உருவகம்; (ii) பிரகிருதி (சக்தி) பெண் தத்துவம்: Matter இன் உருவகம். அத்வைத வேதாந்தத்தில் பிரமன் - மாயா என்ற பாகுபாட்டுடன் இது ஒருபுடை ஒப்புமை உடையது (ஆயினும் அதில் பிரமன் தான் மெய்யானது; மாயை வெறும் பிரமையே.) 58(i) இப்போழுது இந்துத்தெய்வம் சிவன், பெரும் பெண் தெய்வம் சக்தி இவர்களை “மேல்மட்டத் தொல் வரவின்” பொது மக்கள் நிலை எவ்வாறு வழிபடுகிறது என்று பார்ப்போம். சிவன் தோற்றம் பற்றி அண்மைக் கால ஆய்வாளர் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளனர். வேத காலத்திற்குப் பின்னர் திராவிட இந்தியாவின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் தெய்வமாகிய சிவன் ஆரியமல்லாதவர்களிடம் தோன்றியவன் (தென்னாடுடைய சிவனே போற்றி) இந்தோ- ஐரோப்பிய இந்தோ இரானிய மதங்களில் சிவனின் முன் வடிவங்கள் கூட இல்லை. பிற்காலச் சிவனின் தன்மைகள் சிலவற்றைக் கொண்டிருந்த வேதகால ருத்ரன் ஆனவன் சிவன் தன்மைகள் பலவற்றைக் கொண்டிருந்தான்; ‘ஆரிய- ஆரியமல்லாத சிந்தனைக் கலவையே அவன்’ என்பர் பெரும்பாலான ஆய்வாளர். (ii) ஆனால் 1983 JAOS “வேதத் தெய்வம் ருத்ர-சிவா” கட்டுரையில் டோரிஸ் சீனிவாசன் இக்கருத்தை ஏற்பதில்லை. ஸ்டெல்லா கிராம்ரிஷ் (கலை வரலாற்றாய்வாளர்) உடைய 1981 நூல்கள் Manifestations of Shiva; The presence of Siva உம் சிவனை ஆரியத் தெய்வமாகக் கருதுகின்றனர் ஆரியமல்லாத(திராவிட) தன்மையே சிவனிடம் அதிகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளாமல்)தன் கருதுகோளை ஆதாரமற்ற உன்னிப்புகள் சிலவற்றின் அடிப்படையில் டோரிஸ் உருவாக்கியுள்ளார். “ஒன்று ருத்ரனை வேதம் சுட்டுவதால் அவன் ஆரியக் கடவுளே ; பிற்றை வேதப்பகுதிகள் ருத்ரனும் சிவனும் ஒன்று எனச் சொல்வது அதை உறுதிசெய்கிறது. எனவே சிவன் வேத தெய்வம், ஆரியதெய்வம்,” என்பார் டோரிஸ். அவை அவ்வாறு சொல்லி விடுவதால் மட்டும் அவன் ஆரியக்கடவுள் ஆகிவிடமாட்டான்! ஏற்கெனவே விளக்கியபடி பிற்றை வேத காலத்தில் தொடர்ந்து ஆரியமல்லாத கருத்துகள் பல நுழைந்து பழைய நிலைமைகளை மாற்றிவிட்டன. தொடக்ககாலத்தில் சிறுதெய்வங்களுள் ஒன்றாக இருந்த ருத்ரன் ஸ்வதேஸ்வதார உபநிஷத்தில் முக்கியத்துவம் பெற்றதற்கு காரணமே படிப்படியாக அவனும் மாபெரும் திராவிடத் தெய்வமாகிய சிவனும் ஒன்று என்ற கருத்து உருவாக்கப்பட்டது தான் என்பதை டோரிஸ் உணர மறுக்கிறார். ரெனோவைப்போல இவரும் (உண்மை நிலைக்கு மாறாக) வேத மதம் வேறெந்தத் தாக்கமும் இன்றி சுயமாகவே (cultural vacuam) வளர்ந்து விட்டது என்று எண்ணிக்கொள்கிறார்! (ரிக் வேத தொடக்ககாலத்திலேயே நிகழ்ந்த திராவிடப் பண்பாட்டுத் தாக்கங்களை மொழியியலாய்வு மெய்ப் பித்துள்ளதை இவர் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடுகிறார்) வேதம் சொல்வதெல்லாம் ஆரியம் என்று கொள்ள இத்தகைய (தவறான) சிந்தனை இடம் தருகிறது. (ஆரியப்பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் வேதம் கூறுகிறது என்பதும் சரியல்ல) ஆரியமல்லாத பண்பாட்டுக் கூறுகளைப் பெருமளவுக்கு ஏற்றுக்கொண்டு (‘ஆரி யம்’ என்ற லேபிள் இருந்தாலும்) வேதகாலப் பண்பாடு அதனுடைய பிற்றைப் பாதியில் தன் மூல இயல்பை இழந்து விட்டது என்பதை டோரிஸ் உணர்ந்திலர். 53. மாபெரும் பெண் தெய்வத்துக்கு வழங்கும் பெயராகிய சக்தியைப் பற்றியும் அவள் வடிவங்களையும் பற்றிப் பார்ப்போம். சிவனும் சக்தியும் பிரிக்கமுடியாதபடி இணைந்தவர்கள் ஆகையால் சக்தி ஆரியமல்லாத தெய்வம் என்பதற்கு மறுபேச்சில்லை. (டோரிஸ் 1983) சக்தியின் இணை சிவனை வேத தெய்வம்; ஆகவே ஆரிய தெய்வம் என்று காட்டமுயலும் போது இதனை மறந்துவிடுகிறார். மேல்மட்டத் தொல்வரவின்படி (Great Tradition) சிவனும் சக்தியும் கணவனும் மனைவியர். சாங்கிய தத்துவத்திலும் அதன் அடிப்படையில் அமைந்த தந்திர வழிபாட்டிலும் சிவனும் சக்தியும் எதிர் துருவங்கள்; ஆனால் ஒன்றில்லாவிட்டால் மற்றதில்லை என்ற அளவுக்குப் பிணைந்துள்ளவர்கள் (closely connected as polar, and complementary) 54. ‘சக்தி’ யின் அர்த்தம் ‘ஆற்றல் (power, energy)’ ஆகும். புதியதை உருவாக்கும் ஆற்றல் (creative power) பிரபஞ்சத்தின் ஆற்றல் சமஸ்கிருதத்தில் அது பெண்பாற்சொல்;பெண் தெய்வம் ஆக உருக் கொடுத்து அச்சொல்லின் தன்மையைப் பருவுலகிலும் காட்டுகின்றனர் மேல் மட்டத் தொல்வரவில் விஷ்ணு, சிவன் இவர்களை வழிபடுபவர் களைஅடுத்து மிக அதிகமானவர்கள் வழிபடுவது சக்தியைத்தான். விஷ்ணு/சிவனை வழிபடுபவர்களிடையே கூட “இந்த ஆண் தெய்வங்கள் செயல் திறன் அற்ற மரக்கட்டைத்தன்மையுடையவர்கள்; பருவுலகில் சுயமாகச் செயலாற்ற இயலாதவர்கள் -தத்தம் மனைவியரின் ஆற்றலைப் (dynamic energy) பெற்றால் ஒழிய” என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மாந்தர் களிடம் சக்தி உள்ளது- ஆனால் ஆணைவிடப் பெண்ணிடம் அதிகமாக, என்று கருதப்படுகிறது. சக்தி பற்றி இந்துமதத்தில் பரவலாகப் பேசப்படினும் அச்சிந்தனை உச்ச கட்டத்துக்கு வளர்ந்தது தமிழ் நாட்டில்தான்; 2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச்சங்க இலக்கியத்திலேயே இது வலியு றுத்தப்படுகிறது; எனவே சக்தி பற்றிய கோட்பாடுகள் திராவிட மொழிபேசுநர் உருவாக்கியவையே என்றுதான் தாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது (வட இந்தியாவில் இதிகாச, புராண காலத்தில் கற்புள்ள பெண்ணின் ஆற்றலை ‘சக்தி’ என்று அழைக்கும் மரபு தொடங்கி வளர லாயிற்று) 55. ரிதா கிராஸ் Rita Gross (1978JAOS 46: 269-291-) “பெண் தெய்வத்தின் முக்கியத்துவத்தை நிறுவ உதவும் இந்துப் பெண்சிறு தெய்வங் களைப் பற்றிய செய்திகள்” கட்டுரையில்) தற்கால இந்து மதத்தில் சிறு பேய்த்தெய்வத்திலிருந்து மாபெரும் தெய்வம் அடங்கலாக ஒவ்வொன் றுக்கும் இணையான பெண் தெய்வம் உள்ளதை விளக்குகிறார். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் அவரவருக்குரிய முழுத்தன்மையை அப்படியே கொண்டுள்ள பெண் இணைத் தெய்வமூர்த்தங்கள் (icons) உள்ளன. மும்மூர்த்திகளையுமே சில இடங்களில் பெண்வடிவில் காட்டுவர். வேதத் தொல்வரவின் பிற்றை வளர்ச்சியில் பழைய வேத ஆண் தெய்வங்களுக்கு இணையாகப் பெண் தெய்வங்கள் ஒட்டவைக்கப்பட்டனர். இந்திய நாட்டிலேயே உருவான, குறிப்பாக திராவிட மொழி பேசுநர் உருவாக்கிய உள் நாட்டுக் கடவுட் சிந்தனையின் தாக்கத்தையே இது நிலைநாட்டு கிறது; பிற்றை வேதக்காலத்திலிருந்தே இது தொடங்கிவிட்டது எனலாம். 56. (மேலே விரிவாக நிறுவிய மெய்ம்மைகளுக்கு மாறாக) இந்திய வியலாளரின் பொதுவான பார்வையானது “இந்து மதத்தின் முக்கியமானவை யெல்லாம் (பெண் தெய்வமுதன்மை உட்பட) வேதங்களில்தான் அதாவது ஆரிய மொழி பேசுநரிடமே முதலில் தோன்றியது” எனச் சாதிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு சுகுமார் சென் ஆவார்! அவர் தனது 1983 The great Goddess in Indic Tradition புத்தகத்தில் “மாபெரும் பெண்தெய்வம்” இந்தியர் மதத்தில் உருவானதைக் கூறும்போழுது புராண காலத்துக்கு முன்னர் அத்தகைய மாபெரும் பெண்தெய்வம் தெளிவாக உருவாகவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும அதே நேரத்தில் (ஆதாரமேதும் இல்லாமலே) “பிற்காலத்தில் இந்தியாவில் மாபெரும் பெண்தெய்வ உருவாக்கச் சிந்தனை அத்தெய்வவடிவங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான அடிப்படைகளைத் தந்தவை முந்தை/ பிற்றை வேத நூல்கள் குறிப்பிடும் சிலபல பெண் தெய்வங்களே” என்ற துணிந்து கூறிவிடுகிறார். 57. (i) இன்றைய இந்து மதத்தில் பெண் தெய்வ வழிபாடு ஓங்கியுள்ளது திராவிடமொழி பேசுநர் வாழும் தென்னிந்தியாவிலும் (திராவிடப் பண்பாட்டு அடித்தளம் உள்ள) வங்காளம் போன்ற சில பகுதிகளிலும் ஆகும். பெண் பெரும் தெய்வ வழிபாட்டை பூதாகாரமாக வளர்த்தது மகாயான புத்தமதம் குறிப்பாக அதன் தாந்திரிக உட்பிரிவுகள். இந்து மதத்திலும் இதன் தாக்கம் ஏற்பட்டது. இது அதிகமாக நிகழ்ந்தது வங்காளத்திலும் வட கிழக்கு இந்தியப் பகுதிகள் சிலவற்றிலும் மேலும் அதிகமாக (வங்காளம் போன்ற பகுதிகளின் தாக்கம் காரணமாக) திபேத் நாட்டிலும் ஆகும். தென் னிந்தியாவில் ஆந்திரத்தில் சில மகாயானப் பிரிவுகள் ‘புத்தரின் தாயார்’ போன்ற பெண் தெய்வங்கள் அடிப்படையில் இத்தகைய பெண்தெய்வ வழிபாட்டை முதன்மைப் படுத்தின(டயானா மேரி பால் 1980 Buddhist feminine Ideal) இந்துமத தாய்த் தெய்வ வழிபாட்டுத் தாக்கம் ஜைன மதத்திலும் ஏற்பட்டது. (ii) ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு வருமுன்னர்ச் சில ஆயிரம் ஆண்டுகள் நிலைபெற்றிருந்த சிந்து நாகரிகத்தில் தாய்த் தெய்வ, பெண் தெய்வ வழிபாட்டுக கூறுகளைக் காணமுடிகிறது. சிந்து நாகரிகத் தொல்லியல் அகழ்வாய்வுகளில் ஆண் சின்னமான லிங்கங்களும், லிங்கத்தின் பெண் இணையான யோனியைக் குறிக்கும் கல்வடிவங்களும் (ringstones) கிடைத்துள்ளன. சிந்து நாகரிகக் காலம் சார்ந்த அல்லது அதற்கு முந்தைய மைய கிழக்குக் தொல்நாகரிகங்களிலும் நண்ணிலக்கரைத் தொடக்க நிலை (Preclassical) நாகரிகங்களிலும் வழங்கிய மதங்களிலும் வழிபாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பெண் தெய்வவழிபாடும் (i) சந்ததியைப் பெருக்கும் தாய்த்தெய்வ ஆற்றலாகவும் (ii) காம உணர்வை ஊக்குவிக்கும்/ அதன் மூலம் அழிவுக்கு வழிவகுக்கும் ஆற்றலாகவும், நடைபெற்று வந்தது. திராவிட மொழி பேசுநரின் முன்னோர் அவ்விடங்களிலிருந்தோ அதையொட்டிய பகுதிகளிலிருந்தோ (ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு நுழைவதற்கு 2000- 1000 ஆண்டுகட்கு முன்னரே) இந்தியாவுக்கு வரும்பொழுது பெண்தெய்வ வழிபாட்டை உடன் கொண்டுவந்திருக்கலாம். (57A முன்பத்தியின் கடைசி வாக்கியத்தில் சொன்ன ஜோபர்கு கருத்து பற்றிச்சில கூறவேண்டியுள்ளது: 1990இல் இந்தியாவில் திராவிட (தமிழிய) மொழிகளின் தொன்மைபற்றி ஒருசில அறிஞர்களின் கருத்து அப்படி இருந்தது. இன்று அப்படி அல்ல. இன்று Human Palaeontology, Human Genetics and DNA studies; Nostratic and mother Tongue studies ஆகிய புலங்களின் திட்டவட்டமான முடிவு பின் வருவதே; தற்கால மாந்த இனம் (AMH) ஆப்பிரிக்காவை விட்டு இ.மு(இன்றைக்கு முன்னர்) 70000-50000 கால அளவில் வெளியேறி அன்றையத் தென் னிந்தியக் கரையோரக் கண்டத்திட்டு Continental Shelf) வழியாக ஆஸ்திரேலியா வரைச் சென்று பரவிய காலகட்டத்திலேயே தமிழிய மொழி(முந்து தமிழ்) தொல்தமிழ் Pre Tamil / Proto Tamil (அல்லது முந்து திராவிடம் தொல் திராவிடம்) என்றும் கூறலாம்) பேசுநர் தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் குடியேறிவிட்டனர். இந்தியாவில் தமிழ் மொழி பேசுநரின் தொன்மை இ.மு. 10000க்கும் பல பத்தாயிரம் ஆண்டுகள் முற்பட்டதாகலாம். இக்கட்டுரையைத் தமிழாக்கியோன் இந்த கில்பர்ட் ஸ்லேட்டர்1924நூற் செய்திகள் சிலபற்றிய இன்றைய(2014) நிலையை விளக்கிமேலே எழுதியுள்ள விரிவான முன்னுரை updating Forward யைப் பார்க்க.) 58. இந்தோ ஐரோப்பிய மொழிபேசுநர் மதத்தில் தாய்த்தெய்வ வழிபாட்டுக்கு மிகச் சிறிதளவு மதிப்பே இருந்தது. பண்டைய கி.மு. 1500- கி.மு. 500 கால கிரீக் நாட்டுப் பழந்தெய்வங்களில் முக்கியமான பெண் தெய்வங்கள் உள்ளனவே என்றால் அவையெல்லாம் அவர்கள் கிரீஸ் பகுதிக்கு வந்து குடியேறுமுன்னர் பல்லாயிரம் ஆண்டுகள் அப்பகுதியில் வாழ்ந்த தொன்மை நண்ணிலக் கரை நாகரிகங்கள், மற்றும் இந்தோ ஐரோப்பியருக்கு முந்தைய சில நாகரிகங்கள் இவற்றிடமிருந்து கடனாகப் பெற்றவைதாம். கிம்புடாஸ் Gimbutas(1952) The Goddesses and Gods of old Europe. London, Thames & Hudson) 59. இந்தியாவில் பெண்கள் மாபெரும் சக்தி படைத்தவர்கள் என்ற கருதப்படுவதை மேலே கண்டோம். பெண்கள் சார்ந்த வேறு பல பண்பாட்டுக் கூறுகளும் ஆரியமல்லாததாகவே தோன்றுகின்றன.தனது கட்டுரையில் ஹார்ட் Journal of Asian studies 32:233- 250 பெண்கள் சார்ந்த சில இந்துப் பழக்கங்களை பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களில் காணலாம் என்கிறார். வட இந்தியாவில் இன்று உள்ளது போல் அன்றி வேதகாலத்தில் அங்கு மகளிர் கற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிறார். வேதகாலத்துக்குப் பின்னர்இந்நிலை மாறியதற்கு “கற்புடை மகளிரின் புனித சக்தி குறித்த பழந்தமிழ் ஐதீகம் வடஇந்தியாவில் பரவியது காரணமாயிருக்கலாம்” என்கிறார். இத்தகைய கற்புசார் நிலைப்பாடுகள் வேத கால ஆரியப் பண்பாட்டில் இல்லவே இல்லை. 60. வேத காலத்துக்குப் பின்னர்த்தான் விதவை மறுமணத்தடை, விதவைகள் வாழ்க்கை முறையில் கட்டுப்பாடுகள், கணவன் பெயரை மனைவி சொல்லத்தடை taboo போன்றவை வடஇந்தியாவில் புதிய பழக்கங்களாகப் பரவின. தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பார்த்தால் மிகப்பழங் காலத்திலேயே இவை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. வட இந்திய ஸ்கந்தபுராணம் விதவைகள் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கூறிய தலைமொட்டை, உண்டியைச் சுருக்குதல், கட்டிலில்துயிலாமை, இறந்த கணவனுக்குத் தவறாமல் ஆண்டு தோறும் பிண்டம் அர்ப்பணித்தல் ஆகியவற்றை அப்புராணத்துக்கு 600 ஆண்டுகளுக்கும் முன்னரே பழந்தமிழ்ச்சங்க இலக்கியம் குறித்துள்ளது. விதவையைக் கணவன் பிணத்துடன் கொளுத்திக் கொல்வதும்(சதி) ஆரியமல்லாத பழக்கமாக இருக்கலாம். சங்க இலக்கியப் பாடல்களில் தான் சதி, விதவைகளின் துறவு வாழ்க்கை முறை, இவை விதிக்கப்பட்டதற்கான காரணம் சொல்லப்படுகிறது என்பார் ஹார்ட்(காரணம் விதவைப் பெண்ணிடம் தெய்வீக சக்தி உள்ளது; அவளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்த சக்தி அவளையும் பிறரையும் அழித்துவிடும் என்ற அச்சம்). கி.மு.300லிருந்தே திராவிடக் கூறுகள் ஆரியப்பண்பாட்டில் ஏறத்தொடங்கிவிட்டன என்பர் ஹார்ட். அந்த காலகட்டத்தில்தான் சம்ஸ்கிருதத்திலும் அந்நாள் இந்தோ- ஆரியப் பேச்சுமொழிகளான ஆபப்ரம்சங்களிலும் திராவிட(தமிழிய) மொழிச் சொற்கள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்ததுடன், தமிழருடைய (மற்றும் தக்காணத்தில் அன்று திராவிடமொழியாளர் அரசாண்ட பகுதிவாழ் திராவிட ருடைய) செய்யுள் கோட்பாடுகளும், வாய்மொழி இலக்கியக் கூறுகளும் சம்ஸ்கிருத ஆபப்ரம்ச இலக்கியங்களில் நுழைந்திருக்க வேண்டும் என்பர் ஹார்ட். 61. அண்மைக்காலம் வரை தென் இந்தியாவில் கேரளப்பகுதியில் திராவிட நாயர் சாதியினரிடம் தாய்வழி உறவுமுறை செயல்பட்டு வந்தது. தாய்வழி உறவினருக்கே திராவிடர் உறவுமுறை முதன்மை தந்தது, தருகிறது. எனவே பழங்காலத்தில் திராவிடர் தாய்வழிஉறவு முறையை பின்பற்றினர் எனலாம் (தாமஸ் டிராட்மன்1981Dravidian Kinship) திராவிடர் தாய்த்தெய் வழிபாட்டுக்கே முதன்மை தந்தவர்கள், தருபவர்கள். பெண்களிடம் சக்தி உள்ளது என்ற கோட்பாடும் அவர்களிடமே வலுவாக உள்ளது. இவற்றை யெல்லாம் ஒருசேரக்கருதிட வேண்டும். 61.(i) வேதகாலத்திற்குப் பிந்தைய இந்துமதத்தில் புகுந்தவற்றை யெல்லாம் இதிகாசங்கள்(பகவத்கீதை உட்பட), புராணங்கள், யோக சூத்திரங்கள் (மிகப்பிற்காலத்தில் தந்திரங்கள், நாட்டுமொழிகளில் பக்தி இலக்கியம் ஆகியவையும்) இவற்றின் மூலம் இலக்கியத்திலும் ஏறி விட்டன என்பதை மேலே கண்டோம். சில இந்தோ-ஐரோப்பியக் (ஆரியமொழி பேசுநர்) கூறுகள் இவ்விலக்கியங்களிலும் உள்ளன (குறிப்பாக ஆரியத் தலைவனின் இலட்சிய உருவமாகக் காட்டப்படும் இராமன்) எனினும் இந்தோஐரோப்பியமல்லாத உள்ளடக்கம் தான் இவற்றில் பெரிதாக உள்ளது. (ii) தண்டேகர்(1971: 48-49) முதலில் ஆரியருக்கு முந்திய “மக்கட் பேறு- வளமை fertility” கடவுளாக இருந்த விஷ்ணுவை வேதமியற்றிய ரிஷிகள் ஆரியக் கடவுளாக்கிவிட்டனர் என்கிறார். விஷ்ணுவின் அவதாரமான கருமை நிறக் கிருஷ்ணன் ஆரியமல்லாத முக்கியக்கூறுகளுடன் உருவாக்கப் பட்டவன். விஷ்ணுவின் ஏனைய அவதாரங்களில் பல விலங்கு, பாதி விலங்கு- பாதி மாந்தன் ஆக உள்ளன; பிற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுநர் புராணக்கதைகளில் இப்படி இல்லை. கிரேக்க இதிகாசங்களில் இருக்கின்றனவென்றால் அவர்கள் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பெருமளவு ஆரியமல்லாத கிரேக்கத்துக்கு முந்தைய நாகரிகங்களிட மிருந்து பெற்றுக் கொண்டது தான் காரணம். (iii) யோகிகளின் தலைவன் சிவன் ஏறத் தாழ முற்றிலும திராவிட மொழி பேசுநரின் தெய்வமே, அவன் மனைவி சக்தியும் அவள் மேற் கொள்ளும் பல வடிவங்களும் தோற்றங்களும் அனைத்துமே திராவிடம் தான். தமிழரின் மிக முக்கியமான போர்க் கடவுள் முருகன், இந்தியாவெங்கும் இன்றும் மிகப்பிரபலமாக வழங்கும் யானைத்தலைக் கடவுள் கணேசன் இருவருமே திராவிடத் தெய்வங்களே. (iv) இந்து மதத்தில் காண்பனவும் இந்தோஐரோப்பியர் மதங்களில் ஒப்புமைகள் இல்லாதனவும் ஆன பலவற்றுள் அடங்குவன:- சில விலங்குகள் (குறிப்பாக பாம்பு) வழிபாடு; ஒரளவுக்கு குரங்கு வழிபாடு; அரசமரம் போன்ற பலமரங்கள், துளசிச் செடி; போன்றவற்றை வழிபடுதல் முதலியவையும் இவையெல்லாம் இந்தியாவெங்கும் பரவியுள்ள வெனினும் இன்றும் திராவிடர் அடர்ந்து வாழும் தென்னிந்தியாவிலேதான் மிக முக்கியமான வையாக யாண்டும் பரவியுள்ளன. 63. இந்து மத வழிபாட்டில் முக்கிய பங்கேற்கும் பின்வருவன வெல்லாம் ஆரியமல்லாதவையே; கோயில்கள், புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை; கோயில் வழிபாடு; கோயில் வழிபாட்டோடு இணைந்த நாட்டியம், தேவதாசிகள் பங்கேற்பு போன்றவை; தெய்வங்களின் உருவாரங்களுக்கு Images முதன்மை; உயிர்ப் பலிக்கு மாற்றாக தெய்வத்துக்குப் படைக்கப்படும் பழம், பூ, மஞ்சள், குங்குமம், சாம்பிராணி (எனினும் சடங்குகளில் சம்ஸ்கிருதச் சொற்களே பயன்படுத்துகின்றனர்;) அத்துடன் தீயும் (அக்னியின் அடங்கிய வடிவமாக) இடம் பெறுகிறது. இவை ஆரியத்தாக்கத்தின் எச்சங்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்து மதச் சடங்காசாரங்கள் ஏறத்தாழ முழுமையுமே ஆரியமல்லாதவை; பெருமளவுக்கு திராவிடமொழி பேசுநர் பண்பாட்டிலிருந்து பெற்றவைதாம். 64. வேதகாலத்துக்குப் பிந்தைய இந்து மதம் பற்றிய இப்பகுதியை முடிக்குமுன்னர் (இந்து மத ஆய்வாளருள் பெரும்பாலோர் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடுவனவான) திராவிடக்கூறுகளான பக்தி, ஜாதி ,வீரவிளையாட்டு மூன்றைப்பற்றிச் சில கூறுவேன். இந்திய நாகரிகத்தின் திராவிடமொழி பேசுநரின் முதன்மையான பங்களிப்பை வலியுறுத்தி நான் மேலே கூறிய வற்றுக்கு இவையும் வலிமை சேர்ப்பவை. 65.(i) பக்தி என்பது ஒருவர் (அல்லது ஒரு குடும்பம், குழு, சாதி முதலியன) விஷ்ணு, சிவன் சில பகுதிகளில் சக்தி போன்ற கடவுளரின் ஒரு குறிப் பிட்ட வடிவத் தை(அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள மூர்த்தத்தை)ஆழமான ஈடுபாட்டுடன் தனது முழுமுதற் கடவுளாக வழிபடுவதாகும். அத்தகைய பக்தியை முறையாகச் செலுத்தினால் துறக்கம்(மோட்சம்) எய்திவிடலாம் என்பது திடமான நம்விக்கை. (ii) கி.மு. 3-2 நூற்றாண்டுகளிலேயே பக்திசார் வழிபாடு என்ற புதுவகைச் சமயம் வட இந்தியாவில் தொடங்கி விட்டதாகக் கருது கிறார்கள். ஆனால் அதன் இறுதி வடிவத்தில் வட இந்தியா தென் னிந்தியா இரண்டின் தாக்கமும் உள்ளது. மையக்கிழக்கு நாடுகளிலிருந்து படையெடுத்து வந்தவர்களிடமிருந்து பெற்ற சில கருததுகளும் இருக்கலாம் என்கின்றனர். இன்று நாம் காணும் பக்தியில் தென்னிந்திய (திராவிட மொழிபேசுநர்) பங்களிப்பே மிக முக்கியமானது என்பதைப் பலர் உணர வில்லை. Zaehner (1966:134) பக்தி இயக்கம் தமிழரிடையே தான் தோன்றிப் பின்னர் வடக்கே பரவியது என்பதை உணர்ந்து கூறுவது வருமாறு. அதுவரை“சந்நியாசிகளின் நெறியான துறவு, தன்னை மறத்தல் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த ரகசிய மந்திர வழிமுறை mystical technique” போன்று இருந்த இந்துமதத்தில் “தன்னைக் கடவுளின் கருணைக்கு ஒப்படைத்துவிட்டு கடவுளின் மேல் ஆழ்ந்த பற்றைக் கொண்டாலே போதும்; வீடு பேறடையலாம் என்ற மாற்றத்தைக் கொணர்ந்தது பகவத்கீதை தான். ஆயினும் பக்தி இயக்கத்தை உந்து சக்தியாக இந்து மதத்துக்கு தந்தது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு தான். கி.பி. 900 லிருந்து இந்து மதத்தின் உயிர்த் தத்துவக்கோட்பாடுகளுக்கு பக்திதான் வழி முறையாக உள்ளது. (பஷாம் 1954 The wonder that was India வையும் காண்க) (iii) பக்தன் (devotee) உடைய ஆழ்மன அனுபவங்களை mystical Experiences அளவை முறைப்படி சிந்தித்துப் பார்த்து, உருவாக்கப்பட்ட சைவ சித்தாந்தம் என்னும் மிக விரிந்த நுட்பமான தத்துவமும் தெளிவாக முற்றிலுமாக திராவிடர் உருவாக்கியதே (ஸ்டீபன் நெய்ல் 1974 : Bhakti Hindu and Christian : CLS) 66. அடுத்து ஜாதி வர்ணங்கள் (classes/orders) ஆரியர்கள் உருவாக்கியமைதாம் என்பதில் ஐயமில்லை. ஆனால் ‘பரம்பரையான ஜாதிகளும் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொழிலும்’ என்னும் பாகுபாடு ஆரியத்தைவிட திராவிடத்தைத் தான் அதிகம் சார்ந்ததாக உள்ளது. பண்டை இந்திய சமூகத்தின் ஏட்டுச்சுரைக்காய்க் கோட்பாடான நால்வகைப் பெரும் பிரிவுகளான வர்ணம் இருந்தபோதிலும் ஆரியமல்லாதாரிடம் உருவாகிய ஜாதிதான் அன்றாடச் செயல்பாட்டின் மையக் கூறாக உடிசந அமைந்தது. ஜாதியே பிற்றை இந்து மதத்தில் கோலோச்சியதாகும். (ii) முதலில் ஆரியர்களிடம் வழங்கிய மூன்று வர்ணங்களோடு நான்காவதாக சூத்திரர்களைச் சேர்த்த பின்னர் முந்தை வேத காலத்தில் இருந்த சமுதாய வேறுபாடுகள் கடுமையாயின. சூத்திரர் கீழ்நிலையினர் menials பிற்றை வேத காலத்தில் திராவிட மொழி பேசுநர்களுள் மிகப் பெரும்பாலோரும், ஆரியமல்லாத வேறு சிலரும் சூத்திரர்களில் அடக்கப்பட்டனர். ஆரிய மொழிபேசுநர் இந்தியாவுக்கு வருமுன்னர் இங்கிருந்த ஆரியமல்லாத மக்கள் சிலரிடம், குறிப்பாக அக்காலத்தில் திராவிடமோழி பேசுபவர்களாக வடநாட்டில் இருந்தவர் களிடைய (அவர்கள் பண்பாட்டில் ஆரியத்தாக்கம் ஏற்படு முன்னரே) ஜாதிமுறை போன்ற ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதற்கு வலுவான சான்றுகள் உண்டு. பிற்காலத்தில் ‘வர்ணக்’ கோட்பாடுகளும் மாற்றப்பட்டு வர்ணம், ஜாதி இரண்டும் ஊடும் பாவுமாகக் கலந்து பிற்காலத்தின் மிக விரிவான, எண்ணிறந்த படிநிலைகளும், தர நிர்ணயங்களும் அடங்கிய ஜாதி முறை நிலை பெற்றது. (iii) ஹார்ட் தனது 1975 The poems of Ancient Tamils: their milieu and their Sanskrit counter parts நூலில் சங்ககாலத் தமிழ் மக்களிடையே கூட சில மக்கட் பிரிவினரிடையே அந்தஸ்து வேறுபாடு இருந்ததற்கான சான்றுகளைத் தந்துள்ளார். சாதியோடு பிணைந்த புனிதம் - தீட்டு Purity – Pollution கோட்பாடு திராவிடருடையது தான். பொதுவாகப் பார்த்தால் இன்றைய இந்தியாவில் பல்வேறு சாதி களிடையே மிகக் கடுமையான சாதிஅடிப்படையிலமைந்த வேறுபாடு களை இன்றும் நிலைபெறவைத் துளளவர்கள் திராவிட மொழி பேசுநர் தாம். 67.(i) இந்தியாவில் படைக் கருவிப்பயிற்சி martial arts பற்றிச் சில கூற வேண்டும். (போரிடும் கலையைச் சுட்டும் martial arts என்று நினைத்துவிடாதீர்!) இது படைக்கருவியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதைப் பயிற்றும் கலை; தொன்று தொட்டு ஆன்மீகக் கட்டுப்பாடு, மருத்துவ ஆற்றல்கள் இவற்றோடும் தொடர்புடையது ஆகும். இது ஆசியக் கண்டத்தில் உருவானது. இந்தியாவிலோ, சீனாவிலோ, அல்லது 2000 ஆண்டுகட்கு முன்னரே அவ்விரு நாடுகளையும் இணைத்த கடல், நிலவழிப் போக்குவரத்துப் பாட்டைப் பகுதிகளிலோ உருவாகியிருக்க வேண்டும். (ii) வட இந்தியாவில் படைக் கருவிப் பயிற்சி இருந்தது பற்றி இந்திய இதிகாசங்களும் அக்நி புராணமும் கூறுகின்றன. பிற பயிற்சிகளுடன் வில்வித்தையும் கற்றுத்தரப்பட்டது; குருவைப் பணிந்தனர்; கருவிகளை வணங்கினர்; ஏனைப் பிறவும் பயின்றனர்; மருத்துவம் (வழிபாட்டு முறைகள் - லிங்க வழிபாடு போன்ற தாந்திரிக வணக்கம்) யோக அடிப்படையில் மனதை ஒரு நிலைப் படுத்துதல் ஆழ்நிலைத்தியானம் செய்தல் முதலியன. இவை யனைத்துமே அடிப்படையில் ஆரிய மல்லாதவை. இன்று படைக்கருவிப்பயிற்சி வடஇந்தியாவில் (வடகிழக்கு மூலையில்) மணிப்பூர், வங்காளம், ராஜஸ்தான் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. ஆனால் திராவிட மொழிப்பகுதி களில் பல சிற்றூர்களில் கூட உள்ளது; அந்தப்பகுதி சமூகசமயப் பின்புலத்துடன் இணைந்து. (iii) கேரளத்தில் வட, மையப் பகுதிகளில் ஆங்காங்கு பல குழுக்கள் களரிகளை (gymnasium, பயிற்சிக் கூடம்) நடத்துகின்றன. பெரும்பாலும் காவல் தெய்வமான பகவதி (சிவன்+சக்தி இணைந்தது) கோயிலுடன் சார்ந்து இது நடக்கிறது. களரிப்பயட்டு என்னும் இப்பயிற்சியை இளைஞர்களும் (சில இளம் பெண்களும்) பெறுகின்றனர். இவற்றுக்கு முற்பட்ட அடிதடா atitata (தமிழகத்திலும் காண்பது) பயிற்சி போன்றவற்றை களரிப் பயிற்சி பின்பற்று கிறது எனலாம், (ஆயுர் வேத, சித்த, மருத்துவம்) மர்ம அடி (அங்கு அடித்தால், குத்தினால், அழுத்தினால்,- சாவு, மயக்கம், நோய் வரும் என்ற நிலை) போன்றவை கைவந்த குழுக்களிடம் உடற்பயிற்சி ஆன்மீகப் பயிற்சியும் பெறுகிறார்கள். பிலிப் Zarrilli எழுதிய கைப்பிரதிநூல் (Three bodies of practice in a traditional South Indian Martial art); Howard Reid & Michael Croucher 1983:, The fighting arts; M.S.A. Rao, 1957: Social chang in Malabar.. கேரளத்தில் களரிப் பயட்டு உடன் சேர்ந்து கதகளி போன்ற நடன வகைகளும் உருவாகியுள்ளன. கீழ் மட்டத்தொல் வரவு கூhந டுவைவடந கூசயனவைiடிn 68. இது பற்றி விரிவாகக் விளக்கிட இக்கட்டுரையில் இடமில்லை. மேல்மட்டத் தொல்வரவு (மே-தொ)ஆனது. கீழ் மட்டத் தொல் வரவு (கீ. தொ) இடமிருந்தும், முன்னது பின்னதிடமிருந்தும பலவற்றை எற்றுக் கொண் டுள்ளது. (குருப் 1977) Aryan and Dravidian elements in Malabar folklore ஹென்றி ஒயிட்ஹெட் 1921 .(II The village gods of South India. இவற்றிடையே காலகாலமாக நடந்துள்ள நடந்துவரும் பரிமாற்றங்களைக் கண்டு விவரிப்பது முடியாத காரியம்; நூல்களும் ஆவணங்களும் மே.தொ வைப்பற்றி நிறையத் தெரிவித்தாலும் கீ.தொ பற்றிச் சிறுசிறு தகவல்களையே தருகின்றன. ஆயினும் கடந்த 50-60 ஆண்டுகளில் கள ஆய்வில் பற்றிய செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவரமான புத்தகங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பொதுவாக இவ்விரண்டுக்குமிடையே நடந்திருக்கக் கூடிய பரிமாற்றம் பரிணாமங்கள் சிலவற்றைப் பார்ப்போம். 69. எல்லா இடங்களிலும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக கீ.தொ. உள்ளது. அந்தந்த ஊர், மாவட்டம், பகுதி, மாநிலம் இவற்றில் உள்ள சிற்சில மாற்றங்களுடன் பொது நிலையில் தென்னிந்திய (திராவிட) கீ.தொ. விற்கும் வட இந்திய (ஆரிய) கீ.தொ விற்கும் இடையிலுள்ள வேறுபாடுகளைக் குறிப்பிடலாம் (வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் பொதுவாக ஆரியப் பண்பாட்டில் சேர்ந்தவையாக பொதுவாகக் கருதினாலும் அடிப்படையில் அவை பல தன்மைகளில் ஆரியமல்லாதவையே. இப் பகுதிகளில் கீ.தொ மட்டுமன்றி மே.தொ.வில் கூட இதுதான் நிலைமை- பொதுவாக மே.தொ நிலைமையில் இத்தகைய பெருநிலப்பகுதிகளிடையே (regions) வேறுபாடு குறைவு என்றாலும் 70(i) கீ.தொ வின் முக்கியமான அம்சங்கள் எவை? மிக முக்கிய மானவை எராளமான பெண்தெய்வங்கள்- பெரியம்மை, கழிச்சல்(காலரா) நோய் அம்மன்கள் உட்பட (லாரன்ஸ் A.Babb 1975.; The divine hierar- chy; popular Hinduism in Central India; ஒய்ட் ஹெட் 1921 புத்தகம், குருப் 1977 போன்றவை) ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமதேவதை உண்டு. பரிவார ஆண்,பெண் தெய்வங்கள் உட்பட மே.தொ வில் ஆண் தெய்வங்களுக்கு கீழ் நிலையிலேயே பெண்தெய்வங்கள்; கீ. தொவில் பெண்தெய்வங்களுக்குக் கீழ் நிலையில்தான் ஆண்தெய்வங்கள் மத்திய இந்தியப் பிரதேசங்களில் Babb கூறுவது கிராமம் என்றால் கண்டிப்பாக ஊர்த்தெய்வக் கோயில் அல்லது மூர்த்தம் இருந்தாக வேண்டும். மே.தொவில் உள்ள பெருந்தெய்வங்கள் எட்ட நிற்பவை; கீ.தொவில்அன்றாட மக்கள் வாழ்வின் அங்கமாக அவை உள்ளன. (ii) தென்னிந்தியக் கிராமங்களில் மாடு, ஆடு சார்சடங்குகள், விலங்கு, கோழி பலி இவை பரவலாக உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் விவரிக்கும் ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு) இன்றும் மதுரையைச் சூழ்ந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. (iii) திராவிடப் பகுதிகளிலும வங்காளத்திலும் மே.தொ; கீ.தொ இரண்டிலும் பாம்பு வணக்கம் உள்ளது எ.கா Deborah LNeff 1987 Eth nology 26: 63-71) கட்டுரை கேரளத்தில் “பாம்பின் துள்ளல்” பற்றியது. இந்துக் கலைகளில் நாகங்கள் பெண்ணாகக் காட்டப்படுகின்றன. நாக தெய்வங்கள் செல்வம், மகப்பேறு, நோய்நீக்கம் இவற்றைக் தரும் என நம்புகின்றனர். தென்னிந்தியாவில் பாரம்பரியமாகச் சில இடங்களில் தோட்டங்களில் பாம்புகள்குடியேறி வாழவிட்டு, உணவும் அளிக்கின்றனர். 71. கீழ்மட்டத் தொல்வரவு (கீ.தொ) குறிப்பாக திராவிட மொழி பேசும் இந்தியப் பகுதிகளில் மிகு தொன்மை வாய்ந்தவையான பெண் தெய்வ வணக்கம், மாடு, ஆடு சார் சடங்குகள், பாம்பு வணக்கம் போன்றவை இன்றும் உயிர்த் துடிப்புடன் நிலவி வருவதைக் கண்டோம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் (Pre classical) நண்ணிலக் கரை, மத்திய கிழக்கு நாடுகளில் இவை யெல்லாம் மிகப் பிரபலமாக நடைபெற்று வந்ததைக் கருதுக. மேற்சொன்னதுபோல அப்பகுதிகளிலிருந்து அந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் திராவிடர்களின் முன்னோர் இந்தியாவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது (கடைசி வாக்கியத்தில் ஜோபர்கு கூறும் கருத்து தவறு என்பதும் கி.மு. 10000க்கு முந்திய திராவிட (தமிழிய) மொழிப் பரவலில் Dravidian Ascent இல்தான் இவர்களும் இவர்களும் பண்பாடும் வடக்கு வடமேற்காக பரவின என்பதை மேலுள்ள மொழிபெயர்த்தோன் குறிப்பில் காண்க. நுண்மாணுழை மிக்க Henry Heras (1954) Studies in proto- Indo Mediterranean culture நூலில் அன்றே இதை விரிவாக நிறவியுள்ளார். 1990க்குப் பிந்திய Human Palaeontology, Human Genitics, Nostratic studies முதவியவையும் இதை உறுதிப்படுத்திவிட்டன.) 72. சில பல பகுதிகளில் ஆங்காங்கு யக்ட்சன் யக்ட்சி, அப்சரஸ் போன் ற சி றுதெய் வ ங் க ளி ன் வண க் க மு ம் கீ . தொ வி ல் உ ள் ள து யக்ட்சியும், அப்சரஸ் உம் விலங்கு, மரம்,ஆறு, போன்றவற்றில் வசிக்கும் பெண் தெய்வங்கள் Mitchell (1977. The Hindu Temple) கூறுவது போல, “இந்தியாவில் இன்றுள்ள மிகப்பழைய புனித சிற்பங்கள் (மைய இந்தியப் பகுதியில் உள்ளவை கி.மு.300-200 சார்ந்தவை) எவையும் இந்துமதப் பிரதான(ஆண்/ பெண்) கடவுளைச் சித்தரிப்பவை அல்ல; இத்தகைய உள்ளுர்/ வட்டார சிறு தெய்வங்களையே சித்தரிக் கின்றன. முடிப்புரை 73. (i) இந்திய நாகரிகத் தோற்றம், வளர்ச்சி பற்றிய உண்மை களைத் தெரிந்து கொள்வதற்கெதிரான பெருந்தடை பெரும்பாலான மேலைநாட்டு இந்தியவியலாளரின் ஆரியச் சார்பான நிலையே. ஐரோப்பியப் பண்பாட்டுத் தொல்வரவே சிறந்தது; இந்தியப் பண்பாட்டின் “ஆரியக்” கூறுகளும் அத்தொல்வரவின் விரிவாக்கமே” என மேலை ஆய்வாளர் தவறாகக் கருதியதே இதற்குக் காரணம். அடுத்த கோளாறு இந்திய வியலாளர் பலரும் வ ட இந் தியாவில் பண்டு நிலவிய வே த வேதகாலத்துக்குப் பிந்திய பண்பாடுகள் ஆரிய மொழிபேசுநர் படைப்பே என அபத்தமாகக் கருதியதே ஆகும். (ii) 1975 இல் “Bernard Lewis, Edmund Leites, Margaret Chase பதிப்பித்த As others see us : Mutual Perceptions, Eastand West நூலில் சேஸ் கூறுவது போல “ஐரோப்பியர் (குறிப்பாக ஆங்கிலேயர்) பிராமணியப் புனிதநூல்கள், பிறபடைப்புகள் அகியவற்றை மட்டுமே ஆதார மாகக் கொண்டு இந்தியப் பண்பாட்டை தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய் வு செய்ததால்தான் 18-19 நூற்றாண்டு ஆய்வு முடிவுகள் “பிராமணியமே அனைத்துக்கும் மூலம்” என்ற தவறான கோட்பாட்டை- அதற்கு முன்னர் இல்லாத கோட்பாடு அது- ஆதரித்தன Eric R.Wolf1982 “Europe and the people without history ” நூலில் தெரிவிப்பது போல “வரலாற்றில் மறைக்கப்பட்டவர்களாக” திராவிட மொழி பேசுநர் போன்றவர்களைக் கருதி (இந்திய நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பு போன்ற விஷயங்களில்) முழுமையான, நேர்மையான மறு ஆய்வு reevaluation மேற்கொண்டாக வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்கிறேன். 74. அண்மைக் காலத்தில் திராவிடர்கள், அவர்கள் பண்பாடு இவை குறித்து பஷாம் முதலியவர்கள் மறு மதிப்பீடு செய்யத் தொடங்கி யுள்ளதை இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். இவ்விஷயத்தில் டைலர் கருத்துக்கு மிக நெருங்கியவையே என்னுடையவை. ஆயினும் சிலவிஷயங்களை (டைலரும் பிறரும் கடைப்பிடிக்காத) புதிய கண் ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளேன். தென் ஆசியாவுக்கும் (இந்தியத் துணைக்கண்டத்துக்கும்) அப்பால் விரிந்த ஆழ்ந்த வரலாற்று ஒப்பியல் நோக்கில் இந்தியப் பண்பாட்டைக் காண வேண்டும். “இந்தியாவில் ஆரியப் பண்பாட்டுக் கூறுகள்” எனச் சுட்டப்படும் பலவற்றுக்கும் இணையானவை இந்தோ ஐரோப்பிய முதன் மொழியிலிருந்து பிரிந்த ஏனைய இ. ஐ. மொழி பேசுநர் குடியேறி வாழ்ந்த/ வாழும் (இந்தியா ஒழிந்த பிற) நாடுகளில் காணப்படவில்லையே ஏன்? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எல்லாம் ஒன்றால் ஆரியமொழி பேசுநர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே இங்கு நிலவியவையாக இருக்க வேண்டும்; அன்றால் இந்தியாவிற்கு ஆரியர் வந்த பின்னர் அவர்களுக்கும் ஏற்கெனவே இங்கிருந்தவர்களுக்கும் இடையில் பண்பாட்டுக்கலப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதே சரியான விடையாக இருக்கும். 75. தென் ஆசியாவுக்கு வந்த ஆரியமொழி பேசுநர் மீது யாருடைய தாக்கம் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்பதையும் ஆய்வு செய் துள்ளேன். சான்றுகளுக்கு ஒத்துவராதனவான விளக்கங்களைக் கைவிட்டு விட்டு (நமக்குக் கிட்டியுள்ள ஆழமான மொழியியல் சான்றுகள் மற்றும் ஓரளவுக்கு பண்பாடு தொல்லியல் சார் சான்றுகள் இவற்றின் அடிப்படையில்) வேதகால முற்பகுதிக் கட்டத்திலிருந்தே இ.ஐ.மொழி பேசுநராகிய புது வரவினர் மீது திராவிட மொழி பேசுநர் தாக்கம் தான் முதன் மையானதாக இருந்திருக்கும் என்ற வாதத்தை முன் வைத்துள்ளேன். இந்திய வரலாற்று ஆய்வாளர் பெரும்பாலோர் பண்பாடு, தொல்லியல், மாந்த மரபியல் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி மொழியியல் சான்று களைக் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்; ஆனால் இந்தோ ஆரிய மொழி யினரும் திராவிட மொழி பேசுநரும் வட இந்தியாவிலேயே பெருமளவுக்குக் கலந்துவிட்ட தொல்பழங்கால கட்டத்தில் நடந்ததை நமக்கு விளக்கிட மொழியியல் சான்றுகள்தான் மிக முக்கியமானவை. 76. இந்திய, மேலை ஆய்வாளர்கள் பொதுவாக “பண்பாட்டில் விஞ்சியிருந்த ஆரியமொழி பேசுநர் அன்று இந்தியாவில் வாழ்ந்த தொல் குடியினர் மீது தம் பண்பாட்டைப் புகுத்தினர் இந்தியாவில் ஆரியர் பண்பாட்டை முதன்மையானதாக நிறுவினர்” என்று உன்னிக்கின்றனர்; அடிப்படைத் தரவுகளோ இவ்வுன்னிப்பு தவறு என்பதைக் காட்டுகின்றன. இந்தியா விற்குள் புகுவதற்கு முன்னரே ஏனை இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் குழுக்களிடமிருந்து நீங்கி இவர்கள் நெடுந்தொலைவு வந்து விட்டனர். இந்தியத் துணைக் கண்டமாகிய வரம்புக்குள்(ஏற்கெனவே இங்கிருந்த தொன்மக்கள் தொடர்பு தவிர வேறு எவர் தொடர்புமின்றி) இங்கே நிலையாகக் குடியேறிய ஆரியமொழி பேசுநர் இங்கிருந்த மக்களுடன் (பெருமளவுக்கும் முக்கியமாகவும் திராவிட மொழி பேசுநருடன்) மொழி, பண்பாடு, இனக்கலப்பு போன்றவற்றில் ஆழமாக இரண்டறக் கலந்து விட்டனர். ஆரியக் கூறுகள் சில தொடர்ந்தன- குறிப்பாக புனித நூல்களை எழுதுவது, பரப்புவது ஆகியவற்றுக்கு முக்கியமானதாக சம்ஸ்கிருதத்தையே பின் பற்றியது போன்றவற்றில். மொழி, பண்பாடு, மக்கள் உடலமைப்பு (Physical type) இவற்றில் வேறுபாடே தெரியாத ஒருமைப்பாட்டை syncretis மிகப்பெரும் அளவில் நாம் இந்தியாவில் காண்கிறோம் 77. மேலே தந்துள்ளவையான ‘இந்திய நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ பற்றிய முழுமையான வரலாற்றுச் சான்றுகள், இந்தியவியலாளர் வாலாயமாக அந்நாகரிகத்தில் திராவிட மொழி பேசுநர் பங்களிப்பைச் சரிவரக் கண்டுகொள்ளாமல் குறைத்து மதிப்பிடுவதை நிறுவுகின்றன. அத்தகைய வேறு நாட்டு நிலப்பகுதிகளில் வேறு காலப்பகுதிகளில் வேறு சிலர் பங்களிப்பு சார்ந்து நிகழ்ந்து போலவே திராவிடர் பங்களிப்பு ஒதுக்கப்பட்டது, அல்லது திரித்துக் காட்டப்பட்டது. என் கருத்துகள் சரியானால் உலகின் மிகப்பெரிய நாகரிகங்களில் ஒன்றின் தோற்றம் வளர்ச்சி பற்றி விரிவான மறு ஆய்வு தேவை என்பது விளங்கும். 