முதுமொழிக் களஞ்சியம் 4 நெ முதல் - ம வரை ஸந்குஊயிகீகுரூபுஹங்நிகுது செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் முனைவர் பி. தமிழகன் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 4 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 224= 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முதுமொழிக் களஞ்சியம் 4 நெ முதல் - ம வரை நூற் குறிப்பு நூற்பெயர் : முதுமொழிக் களஞ்சியம் - 3 தொகுப்பாசிரியன்மார் : இரா. இளங்குமரனார் பி. தமிழகன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 முன்னுரை கட்டொழுங்குடையது பாட்டு. அக்கட்டொழுங்கு, கற்று வல்லார்க்கே கைவரும் சிறப்பினது. ஆனால், கல்லார் வாயிலும் கட்டொழுங்கமைந்த மொழித்திறம் உண்டு என்பதைக் காட்டு வன பழமொழி, விடுகதை, புதிர், தாலாட்டு, ஒப்பாரி, நாட்டுப் பாட்டு முதலியவை. அவர்கள் சொல வடை என வழங்குவது புலவர்க்குச் சிலேடை யாயிற்று. அவர்கள் புதிர் என்பது பழநாள் பிசி யாக உள்ளது. பழமொழி யோ முன்னாள் முதுமொழி யாம். மக்கள் வழக்கில் இருந்து கிளர்ந்த மொழி, என்றும் மக்கள் வழக்காக இருக்க வேண்டும். மக்கள் வழக்கில் இருந்து அகலு மாயின், வழக்கிழந்து ஒழிந்தும் போகும். ஆதலால், தொல்காப்பியர் மக்கள் வழக்கைப் பெரிதும் போற்றினார். யாப்புக் கட்டுப்போல் அமையாமல் நீக்குப் போக்குடன் அவற்றைக் கொள்ளவும் புலமையரை ஏவினார். அடிவரையறை இல்லாதவை எனவும், அவை ஆறுவகைய எனவும் சுட்டினார் அவர். எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப என்றும், அவைதாம், நூலின் ஆன, உரையின் ஆன, நொடியொடு புணர்ந்த பிசியின் ஆன, ஏது நுதலிய முதுமொழி ஆன, மறைமொழி கிளந்த மந்திரத்து ஆன, கூற்றிடை வைத்த குறிப்பின் ஆன (தொல்.செய்யுளியல் 164, 165) என்றும் கூறுவன அவை. முன்னை முதுமொழியே, பின்னைப் பழமொழியாய்ப் பெயர் கொண்டது. முதுகுன்றம், பழமலையாய் மாறியதுடன் விருத்தாசல மாகவும் வேற்றுமொழியில் வழங்கப்படுவது ஒரு சான்று. முதுமொழியின் இலக்கணம் நுண்மையும் சுருக்கமும் ஒளிஉடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப (தொல். செய்யுளியல்:177) என்பது. இந்நூற்பாவிற்குப் பொருள், நுண்மை விளங்கவும், சுருக்கம் விளங்கவும், ஒளியுடைமை விளங்கவும், மென்மை விளங்கவும் என்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக், கருதின. பொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழி என்று சொல்வர் என்றவாறு என்றார் இளம்பூரணர். கூரிதாய்ச் சுருங்கி விழுமிதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி யென்ப புலவர் என்றவாறு என்றார் பேராசிரியர். இம்முதுமொழிக்குப் பழமொழிப் பாடல் ஒன்றனைப் பேராசிரியர் எடுத்துக் காட்டினார். அப்பாடலில் கன்றுமேயக் கழுதை காதை அறுத்தல் என்னும் பழமொழி இடம் பெற்றுள்ளது. முன்றுறையரையனார், பழமொழி நானூறு என்னும் அறநூல் இயற்றினார். அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகியது. நானூறு பழமொழிகளைத் தேர்ந்து அவற்றின் வழியாக அறவுரை கூறுவதாக அமைந்தது. அந்நூல் வெண்பா யாப்பினது. அரையனார், மக்கள் வழக்கில் இருந்து பழமொழிகளை எடுத்துக் கொண்டார் எனினும், அவர் உரைநடை வகையால் பயன்படுத்தினார் அல்லர். கட்டொழுங்கு மிக்க வெண்பா யாப்பிற்குத் தகவே பயன் படுத்துதல் அவர்க்குக் கட்டாயம் ஆயிற்று. மக்கள் வழக்கு, புல மக்கள் வழக்காக மாற்றமுற்றது. எனினும், பழமொழி இருவகை வழக்குகளுக்கும் ஏற்பப் பெரிதும் அமைந்தன. தமிழ் வரலாற்றில் பழமொழித் தொகுப்பாளர் ஒருவரை முற்படுத்த வேண்டும் எனின் முந்து நிற்பார் முன்றுறையரையரே ஆவர். அவர் ஆர்வமும் தொகுப்பும் அந்நாளொடு நோக்க அருமை யுடையனவாம். தனித் தனிச் சூழலில் எழுந்த பழமொழிகளை, ஓர் ஒழுங்குற்ற துறைப் பகுப்பொடு அமைத்தல் அரிது. தனித்தனிப் பாடல் போல் அமைந்து நின்ற அவற்றைத் திருமணம், செல்வ கேசவராய முதலியார் என்பார் பெரிதும் உழைத்து, கல்வி முதலாக வீட்டு நெறி ஈறாக 34 பகுதிகளாகப் பகுத்தார். கடவுள் வணக்கமும் தற்சிறப்புப் பாயிரமும் அத் தொகுதி கொண்டே அமைத்தார். ஆனால், எடுத்துக் கொண்ட பகுதி ஒவ்வொன்றுக்கும் இவ்வளவே பாடல் என வரம்பிட வாய்ப்புக் கிட்டிற்றில்லை. கல்விக்குப் பத்துப் பாடல், கல்லார்க்கு ஆறு பாடல், அவை யறிதலுக்கு ஒன்பது பாடல் - என்பது போல் அமைத்தார். அவ்வமைப்பும் வாய்த்திராக்கால், நமக்குப் பொருள் தொடர்பு கிட்டியிராதாம். அணியெல்லாம் ஆடையின் பின் இருதலைக் கொள்ளி என்பார் இறைத்தோறும் ஊறும் கிணறு உமிக்குற்றுக் கைவருந்து மாறு ஒருவர் பொறை இருவர்நட்பு கல்தேயும் தேயாது சொல் கற்றலில் கேட்டலே நன்று குலவிச்சை கல்லாமல் பாகம்படும் தனிமரம் காடாதல் இல் திங்களை நாய் குரைத்தற்று நாய்காணிற் கற்காணா வாறு நிறைகுடம் நீர்தளும்பல் இல் பாம்பறியும் பாம்பின கால் மகனறிவு தந்தையறிவு முதலிலார்க்கு ஊதியம் இல்லை. இவை பழமொழி நானூறில் இடம் பெற்றவை. கூடிய அளவிலும் எளிதில் புலப்பாடு உடையவை இவை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பதிலுள்ள எளிமையும் விளக்கமும் ஓட்டமும் நாய்காணிற் கற்காணா வாறு என்பதில் காணமுடிய வில்லை. ஆனால், இப்பழமொழியைப் பயன்படுத்தியுள்ள முறை பழமொழி அளவில் நின்று விடுவது இல்லையே! மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு என அறஞ்செய்தற்குப் பயன்படுத்துகிறார் அரையனார். நரை திரை மூப்பு என்பவை வருமுன்னே பல்வேறாம் நற்செயல் களைச் செய்துவிடல் வேண்டும்; அவ்வாறு செய்யாதவர் பின்னே படுக்கை ஒடுக்கமாகிக் கிடக்கும் நிலையில் செய்தற்கு இயலார்; இத்தகையரைக் காணின் நாயைக் கண்ட போது கல்லைக் காணாதது போல் என்னும் பழமொழி விளக்கமாம் என்பது பொருளாம். நானூறு பழமொழியைத் தொகுத்தது அருமை என்றால், அப்பழமொழி வழியே சொல்லும் அறத்தைக் கண்டு அமைவாய் உரைக்க எத்தகைய முயற்சியும் கூர்மையும் வேண்டி யிருந் திருக்கும் என்பதை உணர்த்துவதற்கே இதனைக் கூறிய தென்க. இதன் பயன், பழமொழி வெளிப்பட விளங்கினாலும் அப்பழமொழியின் உள்ளீட்டுப் பொருளை உணர்ந்து பயன் கொள்ளல் வேண்டும் என்பது தெளிவாதற்கே சுட்டியதாம். மேலும் இதன்கண் மெய்யியல் கொள்கை உள்ளமை திருமந்திர மரத்தை மறைத்தது மாமதயானை என்பதன் வழியே அறியலாம். பழமொழியின் முன்னைப் பெயர் முதுமொழி என அறிந்தோம். திருக்குறளை முதுமொழி என வழங்கும் வழக்கம் உண்டு. தொல்காப்பியர் சொல்லிய நுண்மை, சுருக்கம், ஒளியுடைமை, மென்மை முதலியவற்றையுடைய தாய்க் கருதிய பொருளைத் தெளிவொடு கூறுவதாய் அமைந்தது கொண்டு, அப்பெயரைத் திருக்குறளுக்கு இட்டனர். இதன் சான்றாக விளங்கும் நூல், முதுமொழி மேல் வைப்பு என்பது. இது வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியது. சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுமொழி வெண்பா என்பனவும் திருக்குறளை முதுமொழி என்று கூறுவனவே. இவற்றை இயற்றியவர்கள் முறையே சிவஞான முனிவரும், சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளும் ஆவர். அப்பரடிகள் திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார். அப்பழமொழிகளையும் எவர்மீதோ சாற்றாமல் தம்மீதே சாற்றுகின்றார். கொய்யுலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயிலாலும் ஆரூரானைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பப் காய்கவர்ந்த கள்வனேனே என்று முதற்பாடலில் கூறும் அவர், முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே (2) அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே (3) பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே (4) ஏதன்போர்க் காதனாய் அகப்பட் டேனே (5) இருட்டறையில் மலடுகறந் தெய்த்த வாறே (6) விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே (7) பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே (8) தவமிருக்க அவம்செய்து தருக்கி னேனே (9) கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே (10) என்கிறார். இவை, ஒரு பொருள் பற்றிய பழமொழிகளா? உவமைகளா? கட்டுமிக்க யாப்பில் கூட இவ்வாறு பழமொழி களை வைக்க முடியுமா? முடிந்ததா? இல்லையா? அப்பரடிகள் கொண்ட முதற்பழமொழியாகிய, கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே என்பது, இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்பதைப் பழமொழியாக்கி வைக்கும் சான்று அல்லவோ! படிக்காசுப் புலவரின் தண்டலையார் சதகம், முத்தப்பச் செட்டியாரின் செயங்கொண்டார் வழக்கம் என்பனவும் பழமொழி விளக்கமாக அமைந்த நூல்களே. இதோ வரும் உரைநடையைப் படியுங்கள் ஒரு கிராமத்தில் பத்தேர்ச் சமுசாரி ஒருவன் தீர்வைப் பணம் கட்ட வழியில்லாமல், தன் காணி பூமி முதலாகிய ஆதிகளை யெல்லாம் தோற்று, உடுக்க வதிரமும் இல்லாமல், பரதேசம் போய் விடலாம் என்று நினைத் திருக்கையில், பனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறித் துவைத்தது போல பழமுதல் பாக்கிக்காகச் சர்க்கார் சேவகர் வருகிற செய்தியறிந்து அவர்களுக்கு என்ன உத்தரம் சொல்கிறதென்று ஏக்கமுற்று, சட்டி சுட்டது கைவிட்டது என்பது போல, அதுவே வியாஜமாகப் பெண்சாதிபிள்ளை முதலான குடும்பத்தை எல்லாம் துறந்து, கோவணாண்டியாய் வெளிப்பட்டு வருகையில், நடு வழியில் வேறொரு சேவகனைக் கண்டு, காலைச் சுற்றின பாம்பு கடியாமல் போகாது என்பதாக, இந்தச் சனியன் இங்கும் தொடர்ந்து வந்ததே! ïÅ v¥go? என்று நடுநடுங்கி, ஜைன கோயில் ஒன்றில் போய் ஒளிந்தவன், அந்தக் கோயிலில் நிர்வாணமாயிருந்த ஆள்மட்டமான ஜைன விக்கிரகத்தைப் பார்த்துத் தன்னைப் போலப் பயிரிட்டுக் கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு, ஐயோ! நான் பத்தேர் வைத்துக் கெட்டுக் கோவணத் தோடாவது தப்பி வந்தேன், அப்பா, நீ எத்தனை ஏர் வைத்துக் கெட்டாயோ? cd¡F ïªj¡ nfhtzK« ïšyhkš nghŒ É£lnj! என்று அதைக் கட்டிக் கொண்டு அழுதான் இது விநோத ரச மஞ்சரி என்னும் நூலில் பயனில் உழவு என்னும் கட்டுரையின் ஒரு சிறு பகுதி. இதில் வரும் பழமொழி நகைச்சுவை ஆகியவை படிப்பாரை மேலும் மேலும் படிக்கத் தூண்டுதல் உறுதி. இதனை எழுதியவர் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் என்பார். கி. பி. 1876இல் முதல் பதிப்பு வெளிவந்தது. இந்நூல் முதற்பதிப்பில் 16 கட்டுரைகளையும் பின்வந்த பதிப்புகளில் 20 கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இவ்வொரு நூலில் மட்டும் ஏறத்தாழ முந்நூறு பழமொழிகள் இடம் பெற்றன என்றால் இந்நூலே பழமொழிக் களஞ்சியம் தானே! இடையே சிலச்சில பழமொழி நூல்கள் வரினும் பெருந்திரட்டாகக் கி.பி. 1912 இல் ஒன்று வெளிப்பட்டது. அது அனவரத விநாயகம் பிள்ளை என்பாரால் பரிசோதிக்கப் பட்டு, மதரா ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப் பட்டது. 12, 270 என்னும் எண்ணிக்கையுடையது. அதன் விலை ரூபா. 2. மொழிஞாயிறு பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றிய போது, பழமொழி பதின்மூவாயிரம் என்னும் பெயரிய தொகை செய்து அச்சகத்துக்கும் சென்று பின் அச்சிடப் படாமலும், மூலப்படி மீள வராமலும் ஒழிந்தது என்பது அவர் கடிதங்களால் அறியப்படும் செய்தி.. அந்நாளில் திருவரங்க நீலாம்பிகையார் பழமொழித் தொகுப்பு ஒன்று செய்து வந்தார் என்பதும் பாவாணர் கடித வழியாய் அறிய வாய்க்கின்றது. அது தொகையும் ஆகவில்லை; அச்சுக்குச் செல்லவும் இல்லை. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகவும், துறை வாரியாகவும் பழமொழித் தொகைகள் வெளிப்பட்டன. கலைமகள் ஆசிரியர் கி.வா. சகநாதனார் அவர்களால் நான்கு தொகுதிகள் வெளிப்பட்டன. இருபதாயிரம் பழமொழிகளைத் தாண்டிய எண்ணிக்கையுடையன அவை. பொதுவுடைமைத் தோழர் தொண்டில் தூயர் சீவானந்தம் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கிய நாளில் பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, சாமி பாட்டு, கும்மிப்பாட்டு, புனைகதை என்பவற்றையெல்லாம் தொகுக்கவேண்டும் என்று பேராவல் கொண்டார். நாட்டில் வட்டாரம் தோறும் வழங்கும் பழமொழிகளை யெல்லாம் ஒருங்கே திரட்டுதல் அரிது. நூல்களில் காணக் கிடைப்பனவாகிய எல்லாவற்றையும் திரட்டுதலும் அரிது. பழமொழித் தொகுதிகளில் இடம் பெற்றாலும் மரபுத் தொடர், வழக்கு மொழி, அறநூல் தொடர், விடுகதை, உவமை எனவும் உள்ளன. அவற்றை விலக்கின் ஒரு பெரும் பகுதி அகன்று விடும். இனிச் சாதிமை சார்ந்ததும் வெறுக்க வைப்பதுமாம் பழமொழிகளும் உள. அவற்றை அறவே நீக்கல் வேண்டும். அதனால், அந்நாள் மக்கள் வாழ்வியல் எண்ணப் போக்கு என்பவை அறியவாயா நிலையும் உண்டாம். 1. எவ்வாற்றானும் எவரும் வெறுத்தற்கு இடமிலாப் பழமொழி களைத் தொகுத்தல் 2. வேற்றுச் சொல் கலவாமல் தொகுத்தல் 3. கூடிய அளவும் கொச்சை வழு நீக்கித் தொகுத்தல் என மூன்று வரம்புகளைக் கொண்டு தொகுத்தால், முற்றிலும் மக்கள் வழக்கில் இருந்து தடம் மாறிப் புலமையர் வழக்காகிவிடல் உறுதி! ஆதலால் மொழிக்கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த, முயன்று தொகுத்த பழமொழித் தொகை இது. இதில் உள்ள பழமொழி எண்ணிக்கை ஏறத்தாழ இருபதாயிரம். பழமொழி அல்லது முதுமொழி என்பதன் இலக்கணம் தொல்காப்பியத்திலேயே உண்டு என்னும் போது, அதுவும் அவருக்கு முந்தை இலக்கண நூல்களிலேயே இடம் பெற்றிருந்தன என்னும் போது, பழமொழி உருவாக்கம் ஏற்படுமளவு மொழிவளம் துறையறிவு பண்பாடு முதலியவை ஏற்பட்டிருக்க வேண்டும் என்னும் போது, அவை தோன்றிய காலத்தை வரம்பிடுவது அவ்வளவு எளியது அன்றாம். மொழிப் பழமையொடு, பழமொழிப் பழமையும் ஒப்புடையதாம் என்பதே சாலும்! வாங்கும் போது உள்ள குணம் கொடுக்கும் போது இல்லை என்னும் மக்கள் மொழி, கலித்தொகையில் இடம் பெறுகிறது. உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத்தியற்கை யஃதின்றும் புதுவ தன்றே! கலி - 22 என்பது அது. உலகத் தொழில்களில் தலையாயது உழவே. குறிப்பாகத் தமிழகத்தின் உழவுச் சிறப்பு வள்ளுவத்தில் ஓரதிகாரம் கொண்டது. வாழ்வார் என்றால் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றது. உழவின் வழிப்பட்டதே. உலகம் என்பதைச், சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் என்றது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி என்றும் குறித்தது. கம்பரால் ஏர் எழுபது என்னும் நூலும், திருக்கை வழக்கம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. இவ்வாறு பாடு புகழ் பெற்ற உழவு வழிப்பட்ட பழமொழிகள் மிகப் பலவாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் அல்லாமல் பிறர்க்கு உதவி வாழ்வதாம் பண்பாட்டுப் பெருமையும் பெற்றது. ஆதலால், இவை தனியாய்வுக்கு உரிய வளம் உடையவை. இனி, மருத்துவம் தமிழகத்தில் சிறந்தோங்கியமை சித்த மருத்துவம் என்னும் சிறப்பால் புலப்படும். திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறநூற் பெயர்களே மருத்துவஞ்சார் தலைப்பின எனின், அம் மருத்துவ வழிப்பட்ட பழமொழிகளும் பெருக்க மிக்கவையேயாம். தனித்துறையாய் எடுத்து ஆயத் தக்க பெருமை யுடையது அது. இவ்வாறு பல்வேறு ஆய்வுப் பொருள்களின் வைப்பகமாக இருப்பது பழமொழித் தொகுப்பு என்பது வெளிப்படை. பழமொழி வழியாகச் சொல்லப்படும் அறநெறிகள் எண்ணற்றவை. பல்வேறு மெய்ப்பாட்டு - சுவை - விளக்கமாக அமைந்தவையும் மிக்கவை. அறிவியல், பொருளியல், இன்பியல், வழிபாடு எனப் பகுத்தாய்வு மேற்கொள்ளவும் இடம் தருவன பழமொழிகள். சில பழமொழிகள் மக்கள் வழக்கில் பெருக இருந்தாலும் பழமொழித் திரட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் நூலாசிரியர் களால் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவற்றை இத் தொகுப்பில் இடம் பெறச் செய்யவில்லை. கூடிய அளவும் இடக்கரடக்கு என்னும் அவையல் கிளவியும் இனத்துக்குப் பழிப்பாவனவும் இடம் பெறாமல் செய்யினும், பழமொழியின் உயிர்ப்பு நீங்கிப் போகுமென அவை விலக்கப்பட்டில. அவை தகவாம் வகையில் கொள்ளப்பட்டுள. கூடிய அளவிலும் கொச்சையும் வழுவும் அகற்றிச் செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன. மக்கள் உணர்வை மதித்துப் போற்றுதலால் முழுதுறு செவ்வடிவோ, அறவே அயன்மொழிச் சொல் நீக்கமோ கொண்டதாக இத்தொகை அமைந்திலது என்பதைச் சுட்டுதல் முறைமையாம். வெவ்வேறு வட்டாரங்களில் ஒரு பழமொழி வழங்குங் கால் சில மாற்று வடிவங்களையும் சில வேறு சொற்களையும் கொண்டிருத்தற்கு இடமுண்டு. அவை அடைப்புக்குள் உள்ளன. சில பழமொழிகள் முடிபு இன்றி இருக்கும். அவற்றின் முடிபு அடைப்புக் குறியுள் இடம் பெறும். குறுவட்டாரம் பெருவட்டாரம் தமிழகம் எனப் பரவலாக வழங்கும் பழமொழிகள் எல்லாமும் அமைந்த திரட்டு இஃது ஆதலால், வட்டாரப் பெயர் சுட்டிக் காட்டல் அரிதாயிற்று. இம்முயற்சியில் ஈடுபடுவார் பலராய், வட்டாரம் வட்டாரமாய் அவற்றைத் தொகுத்து வகைப்படுத்தினால் தமிழ் வளம் மேலும் பெருக வாய்க்கும். அதனால், வழக்கும் செய்யுளும் என்னும் மொழி உயிர் நாடிகள் இரண்டும் ஒருங்கே சிறக்க வாய்ப்பும் உண்டாம். பாவாணர் தொகுத்த பழமொழி பதின்மூவாயிரம் நமக்கு வாய்க்கவில்லை என்றாலும், அவர் பயன்படுத்திய பழமொழி கள் பெரிதும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றைத் தம் விருப்பாகச் செய்து இத்தொகையில் பயன்படுத்திக் கொள்ள உதவியவர் வெங்காலூர் தனித்தமிழன்பர் சி.பூ. மணி அவர்கள். பின்னர்ப் பாவாணர் தொகுத்த பழமொழியென்று சேலம் திரு.வெங்கரைமணியன் அவர்கள் வழியே ஒன்று கிடைத்தது. அதில் பாவாணர் கையெழுத்து எவ்விடத்தும் இல்லை. எனினும் இத்தொகுப்பில் சேராத சில பழமொழிகள் கிடைத்தன. அவற்றை இணைத்து அப்பயனும் வாய்க்கச் செய்தோம். மேலும், நெடிய காலமாக எம்மால் தொகுக்கப்பட்டுக் குறிப்பேட்டில் தங்கிக் கிடந்தவை, நினைவில் பதிவாகியவை ஆகியவையும் இத்தொகையில் இடம் பெற்றுள்ளன. முனைவர் தமிழகனார் கடின உழைப்பெடுத்துத் தொகுத்த தொகுப்பும், அவர் பேராசிரியப் பணியாற்றும் நாவலர் ந.மு.வே. திருவருள் கல்லூரி மாணவ மாணவியர் தொகுத்த தொகுப்பும் இதன்கண் இடம் பெற்றுள. பழமொழி, வட்டார வழக்கு என்பவை கிட்டுமென எண்ணி நூற்றுகணக்கான பக்கங்களைத் திருப்பியும் ஒன்று தானும் கிட்டாத கதை நூல்களும் உண்டு. சுவை சுவையான பழமொழிகளைத் திரட்டுப் பாகாகத் தந்த சிறுகதை நூல்களும் உண்டு. தேடி வைத்ததைத் தொகுத்தும், புதுவதாகத் தேடித் தொகுத்தும் நம் முந்தையர் வைத்துச் சென்ற வைப்புநிதி யென விளங்கும் இப்பழமொழியை ஆர்வத்தால் அச்சிட்டுத் தமிழ் உலகுக்கு வழங்க முந்து நின்றவர் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனரும் தமிழ்ப் போராளியாய்த் தோன்றித் தமிழ்க் காவலராகத் திகழ்பவருமாகிய திரு.கோ.இளவழகனார் அவர்கள் தேடித் தொகுத்த இத்தொகையினும் பாரிய பல் தொகுதி எனினும் துணிவுடன் வெளியிடும் அளப்பரிய ஆர்வத் தொண்டர் அவர். அவர்க்கு நெஞ்சார்ந்த அன்பும் பாராட்டும்! இதன் மெய்ப்பினைப் பல்கால் பார்த்து அயராமல் திருத்திய ஆர்வத் தொண்டர் முனைவர் தமிழகனார் இத்தகு பல திறப்பணிகளைச் செய்தலில் தழும்பேறியவர். அவர் தொண்டு வாழ்வதாக. இன்ப அன்புடன் இரா.இளங்குமரன் பதிப்புரை முதுமொழிக் களஞ்சியம் எனும் பெயரில் தமிழ்மண் அறக்கட்டளையின் முத்திரைப் பதிப்புகளாக ஐந்து தொகுதிகள் வெளிவருகின்றன. மொத்தம் 19336 பழமொழிகள் உள்ளன. மொழிக் கேடு இன்றிப் பொதுமக்கள் வழக்கொடும் பொருந்த முயன்று தொகுத்த முதுமொழித் தொகை இது, கொச்சையும் வழுவும் அகற்றி செம்மை வடிவில் தரப்பட்டுள்ளன என முன்னுரைப் பகுதியில் அய்யா இளங்குமரனார் குறித்துள்ளார். இக்குறிப்புகளைக் கொண்டு இத்தொகுதிகளின் அருமைப்பெருமைகள் புலப்படும். இதுவரையிலும் பழமொழிகள் எனும் தலைப்பில் வெளிவந்தனவற்றுக்கும் இவற்றுக்கும் உள்ள சிறப்புகளைக் களஞ்சியத்தின் முன்னுரையிலும், பின்னட்டைச் செய்திலும் காண்க. முந்தையர் தொகுத்து வைத்த வைப்பு நிதியைத் தமிழ் உலகு பயன் கொள்வதற்கு தமிழ்மண் அறக்கட்டளை தம் கடனைச் செய்துள்ளது. இக்களஞ்சியங்களை செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், முனைவர் பி.தமிழகன் ஆகிய பெருந்தமிழறிஞர்கள் பல்லாற்றானும் உழைத்துத் தொகுத்துத் தந்துள்ளனர். இதனைப் பிழையற்ற செம்பதிப்பாக தமிழ்கூறும் உலகிற்குத் தந்துள்ளோம். இப்பெரு மக்களின் தன்னலம் கருதாத் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறேன். பழந்தமிழ் மக்களின் கருவூலத்தை உங்களுக்குத் தந்துள்ளோம். வாங்கிப் பயன் கொள்வீர். இச்செந்தமிழ்க் களஞ்சியங்கள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய அரங்க. குமரேசன், வே.தனசேகரன் , மு.ந. இராமசுப்ரமணிய ராசா, இல.தருமராசு, ரெ.விசயக்குமார், முனைவர் கி.செயக்குமார், திருமதி கீதா நல்லதம்பி, அரு.அபிராமி, புலவர் மு.இராசவேலு மற்றும் மேலட்டை அழகுற வருவதற்கு துணை யிருந்த செல்வி வ.மலர் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். பதிப்பாளர் நெ நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா? நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக? நெஞ்சு அறிதுன்பம் வஞ்சனை செய்யும். நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ? நெஞ்சு அறியாத பொய் இல்லை. நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச இலக்கணம் தெரிந்து பயன் என்ன? நெஞ்சு மிக்கது வாய் சோரும். நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை. 12640 நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம். நெடுங் கடல் ஓடியும் நிலையே கல்வி. நெடுங் காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி. நெடுங் கிணறும் வாயாலே தூரும். நெடும் பகலுக்கும் அத்தமனம் உண்டு. நெடும் மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம். நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக் குட்டி ஒரு பிள்ளையா? நெட்டை கட்டை (கூடுதல் குறைதல்) இருந்தாலும் சரியென்று போதல் வேண்டும். நெட்டைக் குயவனுக்கும், நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை. நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே. 12650 நெட்டையை நம்பினாலும் குட்டையை நம்பாதே. நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும். (கருக்கி) நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன். நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி. (நெசவாளிக்கு) நெய்கிறவன் குண்டி அம்மணம். நெய்க்குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல. நெய்க்குடம் உடைந்ததால் நாய்க்கு விருந்து. நெய்க்குடம் உடைந்தது நாய்க்கு வேட்டை. நெய்க்குத் தொன்னை ஆதரவு; தொன்னைக்கு நொய் ஆதரவு. (ஆதாரமா?) நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு. 12660 நெய் முந்திரியோ? திரி முந்திரியோ? நெய்யால் நெருப்பவிப்பது போல. நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு? நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல. நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல. நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா? நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா? நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார். நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும். நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தான். (மட்டுந்தானே?) 12670 நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும். நெருப்பிலும் பொல்லாச் செருப்பு. நெருப்பிலும் பொல்லாது கருப்பின் வாதை. (கருப்பு - பஞ்சம்) நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாட மாட்டான். நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு இல்லாமல் புகையாது. (புகையுமா) நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது. நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகுமா? நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது. 12680 நெருப்புக்கு ஈரம் உண்டா? நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை. நெருப்புக்குத் தெரியுமா தன்னாள் வேற்றாள்? நெருப்புக்கு நீர் பகை. நெருப்புக்கும் நீர்க்கும் இரக்கம் கிடையாது. நெருப்பு சிறிது என்று முன்றானையில் முடியலாமா? நெருப்பு சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல. நெருப்புத் துண்டை முந்தானையில் முடிந்து கொண்டது போல. நெருப்பு நின்ற காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது. நெருப்பு நெருப்பா தின்றாலும் கருப்பு கருப்பாத்தான் பேளனும் 12690 நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான். நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா? (பதுமை) நெருப்பும் சரி பகையும் சரி. நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும். நெருப்பை ஈ மொய்க்குமா? நெருப்பைக் கண்டு மிதித்ததாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும். நெருப்பைக் குளிப்பாட்டின நிறம். நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறமாகும். நெருப்பைச் செல் அரிக்குமா? நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் சுவாலை கீழ் நோக்குமா? 12700 நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது. நெருப்பைப் புழுப் பற்றுமா? நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான். நெருப்பை மடியில் முடிகிறதா? நெல் அல்லாதது எல்லாம் புல். நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண். நெல் ஏறக் குடி ஏற. நெல் குறுணி; எலி முக்குறுணி. நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசின மாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினது மாதிரி இருக்கும். நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும். (உதவும்) 12710 நெல்லுக்கு உமியுண்டு; நீருக்கு நுரையுண்டு; இதழ் பூவிற்கும் உண்டு. நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும். நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறாள். (உறவு இல்லை என்பது குறிப்பு) நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா? நெல்லுக்கு நேரே புல். நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். நெல்லுக்குக்குள்ளே அரிசி இருக்கிறது ஒருவருக்கும் சொல்லாதே என்றானாம். நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது. நெல்லு சிந்தினால் அள்ளலாம்; சொல்லு சிந்தினால் அள்ள முடியாது. நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும். 12720 நெல்லுப் பயிரும் நேருள்ள பார்ப்பானும் நீரின் மேல். நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக் கூடுமா? நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ணக் கூடாது. (முடியாது) நெல்லை அல்வா; கடம்பூர் போளி; மணியாச்சி முறுக்கு; சாத்தூர் வெள்ளரி. நெல்லை அள்ளலாம்; சொல்லை அள்ள முடியாது. நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல. நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா? நெல்லை விற்று உமியா வாங்குவது? நெல்லோடு பதரும் உண்டு. நெல் விளைந்த பூமியும் அறியாய்; நிலா எறிந்த முற்றமும் அறியாய். 12730 நெல் விரைக்கு, சனிக் குறுக்கும் செவ்வாய்க் குறுக்கும் ஆகாது. (விரைக்கு - விதைக்க) நெல் வேர் இடப் புல் வேர் அறும். நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண். நெற்பயிர் விளை. நெற்பயிர் அழிக்கும் நாவாய்ப் பூச்சி. நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே. நெற்றிச் சுருக்கமும் புத்திச் சுருக்கமும் ஒன்று. நெற்றிக்குப் புருவம் தூரமா?  நே நேசம் உள்ளவர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல. 12740 நேத்திர மணியே சூத்திர அணியே. நேயமே நிற்கும். நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது. நேரா நோன்பு சீராகாது. நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது. நேரு சிவப்பு; நெல்லுப்பானை சுத்து. நேருத்திரம் செமைப் பழி. நேரே போனால் எதிரும் புதிரும். நேரே போனால் நேசம் போகும். நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வசமாகார். 12750 நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு. நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம். நேற்று இருந்தவர் இன்று இல்லை. நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம். நேற்று இருந்தால் இன்றைக்கும் இருப்பாரா? நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான். நேற்று வந்தாளாம் குடி; இன்று விழுந்ததாம் இடி. நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம். நேற்றைக் கிழவி இன்றைக் குமரியா? நேற்றைச் சோறு இன்றைக்குக் காடி. 12760 நேற்றைப் போலவா இன்றும் இருக்கும்.  நை நைடதம் புலவர்க்கு ஔடதம். நைபவர் எனினும் நொய்ய உரையேல். நையக் கற்கினும் தொய்ய நன்குரை. (நொய்ய) நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது. நைவினை நணுகேல்.  நொ நொச்சி இலைத் தலையணை நோய் நொடிக்குத் தடுப்பணை. நொடிப் போதும் வீணிடேல். நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல. நொண்டி ஆடு வந்துதான் படல் சாத்த வேண்டும். 12770 நொண்டி ஆனை நொடியில் அழிக்கும். நொண்டிக் குதிரைக்குச் சருக்கினது சாக்கு. நொண்டிக் குதிரை வண்டிக்கு ஆகாது. நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் குறும்பு. (கிறுக்கு) நொண்டிக்குக் குச்சோட்டாமா? நொண்டிக்கு நூறு கிறுக்கு. நொண்டிக்கு நூற்றெட்டுக் கால். நொண்டிக்கு நூற்றெட்டு குறும்பு. (நூற்றியெட்டு) நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன். நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம். நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம். 12780 நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை. நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற்கெல்லாம் படைப்பானேன்? நொண்டுகிற மாடு பொதி சுமக்காது. நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி. நொந்ததை உண்டால் நோய் உண்டாகும். நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா? நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா? நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர். நொந்து நூல் அழிந்து போகிறது. நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார். 12790 நொய் அரிசி கொதி பொறுக்குமா? (தாங்காது) நொய் அரிசி பொரி பொரிக்காது. நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார். நொள்ளைக் கண்ணுக்கு மை இடுகிறதா? நொள்ளைக் கண்ணுக்கு நோப்பாளம். நொள்ளைக் கண்ணு நரி விழுந்து லோகம் மூன்றும் சென்ற கதை. நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்து என்ன? நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல. நொறுக்குத் தீனி நோயைப் பெருக்கி. நொறுங்கத் தின்றால் நூறு வயசு. 12800 நொறுங்கத் தின்று நோயை அகற்று. நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயது. நொறுங்கரிசி கொதி தாங்காது. நொறுங்குண்டவனைப் புறங் கொண்டு உரையாய்.  நோ நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார். நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு என்றானாம். நோகாமல் வாழ நினைப்பவனுக்கு வேகாத சோறு கூட வயிற்றுக்குத் கிடைக்காது. நோக்கத்துக்கு ஒதுங்கு. நோக்க நோக்கான் நோக்காமுன் நோக்குவான். நோக்கு நோக்கென்று பிள்ளை பெற்றாளாம்; அவள் நோணி புறப்பட்டுச் செத்துப்போனாளாம். 12810 நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம். நோயற்று வாழ்வதே வாழ்வு. நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல. நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம். நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல. நோயாளி வருத்தம் நோயாளிக்குத் தெரியும். நோயாளி விதியாளி; யானால் பரிகாரி பேதாளி ஆவான். (போராளி) நோயைக் கட்ட வேண்டுமானால் வாயைக் கட்ட வேண்டும். 12820 நோய் கொண்டார் பேய் கொண்டார். நோயோ? பேயோ? நோய்க்கு இடம் கொடேல். நோய்க்கு இடம் கொடுத்தால் பேய்க்கு இடம் கொடுத்த மாதிரிதான். நோய்க்கும் பார்; பேய்க்கும் பார். நோய் ஒரு பக்கம் சூடு ஒரு பக்கமா? நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு. நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்க மாட்டார். நோய் நொடி போக்க வேம்பு. நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது. 12830 நோய்ப்புலி ஆகினும் மாட்டுக்கு வல்லது. நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது வேம்பு. (இரும்பு) நோலா நோன்பு சீராகாது. நோலாமையினால் மேலானது போம். நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல. நோவு ஒன்று இருக்க மருந்து ஒன்று கொடுத்தது போல. நோவாமல் நோன்பு கும்பிட்டான்; சாகாமல் சாமி கும்பிடுகிறான். நோவு காடு ஏறிப் போயிற்று. நோன்பு என்பது கொன்று தின்னாமை.  நௌ நௌவித் தொழில் செய். 12840 நௌவியாய்த் திரியேல். (நௌவி - ஆடு) நௌவியில் தானே கல்வியறிவைக் கல். (தெய்வறிவைக்) நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல; நற்குணம் ஒன்றே அழகு.  ப பகட்டிக்குப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி. பகட்டிக்குப் பாம்பு கடித்ததாம்; பார்க்கப் போனவளுக்குத் தேள் கடித்ததாம். பகடிக்குப் பத்துப்பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசு கொடார். பகடிக்குப் பத்துக் காசு; திருப்பாட்டுக்கு ஒரு காசு. பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுதானும் பேசாதே. (அந்தியில், அதுவும்) பகலில் பசுவுந் தெரியவில்லை, இரவில் எருமை தெரியுமா? பகலில் தோட்டக்காரன் இரவில் பிச்சைக்காரன். 12850 பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா? பகலில் பசுமாடு தெரியாதவனுக்கா இரவில் எருமை மாடு தெரியப் போகிறது? பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித் துண்டுக்கு அஞ்சும். பகலை இருள் விழுங்குமா? பகற் கனாப் போல பகிர்ந்து தின்றால் பசியாறும் பகுத்தறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே. பகுத்தறிவில்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். பகைக்கும் பட்சத்திற்கும் பார்க்கக் கண்ணில்லை. பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை. 12860 பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள். பகைத்தால் உறவு இல்லை பகைப்புழு அழிக்கப் பக்குவம் தேடு. பகைப்புழு ஒழிக்கப் பயிரை மாற்று. பகையாளி குடியை உறவாடிக் கெடு (கெடுக்க வேண்டும்) பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல. பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழிபோடச் சொன்னது போல. பகையாளியின் ஆயுதம் பக்கவாட்டில் பாயும். பகையும் உறவும் பணம் பக்குவம். பகைவரின் நெஞ்சமும் பாம்பின் போக்கும். 12870 பகைவர் உறவு புகை எழு நெருப்பு. பகைவர் உறவு நீறுபூத்த நெருப்பு. (சாம்பல்) பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை. பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே. பகைவன் வாளும் பகைபோற் கேளும் (கொடியவை) பக்கச் சொல் பதினாயிரம். பக்கத்து இலைக்குப் பாயசம் போடு என்ற மாதிரி. பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று, அடுத்த வீட்டுக்காரி குழவிக் கல்லை எடுத்து இடித்துக் கொண்டாளாம். பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம். பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான். 12880 பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். பக்தி இல்லாப் பூசை போல பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா? பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம்; நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு. பக்தி உண்டானால் முக்தி உண்டாம். பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது கச்சைக் கருவாட்டைக் கக்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம் பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன். பக்தி படபட, பானை சட்டி லொட லொட. பக்தியோட பாகற்காய் சட்டியோட தீய்கிறது. (பத்தியோட) பங்கறை சாவானுக்குப் பல் அழகைப் பார். 12890 பங்கன் இருக்குமிடத்தைத் தேடி கங்கை வந்தது போல. (பங்கன் - நொண்டி) பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம். (பங்களா, ஏறி கொண்டதாம்) பங்காளிக்குப் பல்லிலே விடம். பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது. பங்காளித் துரோகம் விட்டுப் போகாது. பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும். (கொள்ள வேண்டும்) பங்காளியோ? பகையாளியோ? பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு. பங்கித் தின்றால் பசியாறும். (பங்கி - பகிர்ந்து) பங்கில்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா? 12900 பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம். பங்கு இடுபவன் பந்தானால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன? பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் (சிறக்கிறதும்) இல்லை. பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல. பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல. பங்குனி மழை பத்துக்கும் நட்டம். பங்குனி மழை பதம் கொடுக்கும். பங்குனி மழை பலவிதத்திலும் சேதம். பங்குனி மழை பெய்தால் பலனெல்லாம் சேதம். பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம். 12910 பங்குனி மாதத்தில் மழை பெய்தால் பசுவிற்கும் நீர் இருக்காது பங்குனி மாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி. பங்குனி மாதம் பதர் கொள். பங்குனி மாதம் பந்தலைத் தேடு. பசங்கள் கட்டம் பத்து வருடம். பசி அரைஞாண் கயிற்றை அறுக்கிறதாம். பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம். (கருப்பு - பஞ்சம்) பசி இல்லாதவனுக்கு ருசி இல்லை. பசி உள்ளவன் ருசி அறியான். (உடையவன்) பசி உள்ள ஆட்டுக்குட்டி மலை மேட்டிலும் புல் தேடும்; பசி இல்லா ஆட்டுக்குட்டி புல் மேலே படுத்துக்குமாம். 12920 பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்? பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வேறுபாடு இல்லையா? (சேடையா?) பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் ஒன்றா? (ஒன்றாயிடு வார்களா?) பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப்பயிர் இட்டாற் போல. பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் சேர்ந்த மாதிரி. பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம். பசிக்குத் தின்கிறவன் பலவான்; ருசிக்குத் தின்கிறவன் உதவான். பசிக்குப் பழையதாவது போடுகிறாயா? பக்கத்து ஊரில் பண்ணினாற்போல் பண்ணட்டுமா? பசிக்குப் பனம்பழம் தின்றால் பித்தம் பட்டதைப் படட்டும். (பட்டபாடு படலாம்) பசிக்குப் பனம்பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும். 12930 பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும். பசிக்கு முன் பத்தும் பறக்கும். பசிக்குப் பலாப்பழம் தின்றால் பித்தம் பலவாக்கில் படும். பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம். பசி தீர்ந்ததானால் பாட்டு இன்பமாம். பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்தது போல. பசித்த செட்டி பாக்கு தின்றானாம். பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார். பசித்தவனுக்குப் பால்சோறு இட்டாற் போல. (அன்னம், அமிர்தம்) பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாத தும் இல்லை. 12940 பசித்தவன் பயற்றை விதை; இளைத்தவன் எள்ளை விதை. பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தாற் போல. பசித்தவன் பழங்கதையைப் பார்த்தானாம். பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா? (வையாதே) பசித்தவன் விசுவாசத்தை நம்பலாகாது. பசித்தவன் வீட்டில் பச்சை நாவி சேராது. பசித்தார் பொழுதும் போம்; பாலுடன் அன்னம் புசித்தார் பொழுதும் போம். பசித்தால் ருசி அறியாது. பசித்து உண்டால் பழங்கஞ்சியும் பாயசம். பசித்துப் புசி. 12950 பசித்துப் புசித்தால் ருசித்துச் சாப்பிடலாம். பசித்துப் புசி; வியர்த்துக் குளி. பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல. பசித்தோர் முகம் பார். பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம். பசி போகத் தின்னவனும் இல்லை; அழுக்கு போகக் குளித்த வனும் இல்லை. பசியாதபோது புசியாதே. பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்றானாம். பசியாமல் வரம் தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார். பசியால் வருந்துகிறவனுக்குப் பணமலை இருந்தும் பயன் இல்லை. 12960 பசியா வரம் படைத்த தேவர் போல. பசியா வயிறு ருசியா வயிறு. பசியிலும் ஏழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை. பசியில் ஏழை இல்லை; பார்ப்பாரில் ஏழை இல்லை. பசியின் கட்டம் புளிச்ச ஏப்பக்காரன் அறிவானா? பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா? பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது. பசி வந்த பின்னால் நெல்லை விதைக்கிறது பசி வந்தால் பக்தி பறக்கும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம். 12970 பசி வேளைக்குப பனம்பழமும் படாத பாடுபடும். பசி வேளைக்குப் பனம் பழம் போல வை. பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது. பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான். பசு ஏறு வாலும் எருது கூழை வாலும் (உதவாது) பசு கறக்கும் முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும். பசு கறுப்பானால் பாலும் கறுப்பா? (கறுப்பென்று) பசு கிழமானால் பால் சுவை போகுமா? பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா? பசு குசுவினாற் போல. 12980 பசு சாதும் பார்ப்பான் சாதும் உண்டா? பசு தின்னாவிடில் பார்ப்பானுக்கு. பசுத்தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது. பசுத்தோல் போர்த்திய புலி. பசுந்தாள் உரமே பக்குவ உரமாம். பசுப்போல் இருந்து புலி போலப் பாய்கிறாய். பசு மரத்தில் ஆணி பதிந்த மாதிரி. பசு மரத்தில் தைத்த ஆணி போல. (அறைந்த) பசு மாடு நொண்டியானால் பாலும் நொண்டியா? பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா? 12990 பசுமை இல்லாத ஓலை கலகலக்கும். பசும் உரத்திலும் பழம் புழுதி மேல். பசும்புல் தேய நடவாத பாக்கியவான். பசும்புல் நுனிப் பனித்துளி போல. பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக் கூடாது. பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை. (நம்பாதே) பசு விழுந்தது புலிக்கு ஆதாயம். பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவ தல்லாமல் நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைத் தாண்டுவது கூடாது. பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது. பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம். 13000 பசுவுக்குப் பிரசவ வேதனை, காளைக்குக் காம வேதனை. பசுவுக்கும் பார்ப்பானுக்கும் இளக்காரம் காட்டக் கூடாது. பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற் போல. பசுவும் புலியும் ஒரு துறையில் தண்ணீர் குடித்தாற்போல. பசுவும் புலியும் பரிந்து ஒருதுறையில் நீர் உண்கிறது. பசுவை அடித்துப் புலிக்குத் தானம் கொடுக்கிறதா? பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா? பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்தது போல. பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய். பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா? 13010 பசையைக் கண்டால் ஓட்டடி மகளே. (பச்சையைக்) பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா? பச்சை கண்ட பக்கம் பட்டி காக்கிறது போல. பச்சைக் கிளியா இருந்தாலும் பறக்க முடியாத கிளியா இருக்கிற மாதிரி. பச்சை கொடுத்தால் பாவந் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும். பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு. பச்சை நெல்லுக்குப் பறையனிடத்தில் சேவிக்கலாம். பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது. பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல. பச்சை பாதி; புழுங்கல் பாதி. 13020 பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாம் துக்கத்துக்கு வந்தானாம் (வந்தாற் போல) பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா? பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை? பச்சை மரம் படப் பார்ப்பான். பச்சை மீனைப் பட்டிலே பொதித்துவை. பச்சையாயிருந்தால் பிச்சை இடக்கூடாது. பச்சோந்திக்கு மயில் கண்ணைத் தானே கொடுப்பது போல். பச்சோலைக்கு இல்லை ஒலி. பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல. பஞ்சத்துக்கு ஆண்டியா? பரம்பரைக்கு ஆண்டியா? 13030 பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை. பஞ்சத்துக்கு மழை பனிபோல. பஞ்சத்துக்கு வேடம் போட்ட பரதேசி. பஞ்ச பாண்டவர் என்றால் தெரியாதா? கட்டில் காலைப் போல் மூன்று என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினான். பஞ்சம் இல்லாத காலத்தில் பசி பறக்கும். பஞ்சம் என்பதற்காகப் பிள்ளையை விற்க முடியுமா? பஞ்சம் தீரும்போது கொல்லும்; வெள்ளம் ஏறும்போது கொல்லும். பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது. பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது. பஞ்சம் போம்; பழி நிற்கும். 13040 பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே. பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது. பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா? பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம். பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். பஞ்சாங்கம் போனால் அமாவாசையும் போய்விடுமா? பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது போகுமா?) பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன. பஞ்சு கயிறானாலும் பாரம் தாங்கும். பஞ்சு நெருப்புக்கு நண்பனானாற் போல. 13050 பஞ்சு பொதியிற் பட்ட அம்பு போல பஞ்சு பொதியை வெட்டின கத்தி போல பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ? பஞ்சை நாரி பணியாரம் சுட்டதும், வீங்கிநாரி விசாரப்பட்டதும். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்த மாதிரி. படகு கரையை எட்டிவிட்டாலும் துடுப்பை எறிந்து விடக் கூடாது. படலி வளர்ந்து கள்ளு குடிக்கிறதா? படல் முள்ளு கொள்ளும்; குடல் கள்ளு கொள்ளும். படப் பசக்காரியைப் பாம்பு கடித்ததாம்; பார்க்கப் போன வளைத் தேள் கடித்ததாம். படி ஆள்வார் நீதி தப்பின் குடிஆர் இருப்பார் குவலயத்தில்? 13060 படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும். படிக்காதவனுக்கு ஓர் இடத்தில் நாற்றம்; படித்தவனுக்கு மூன்று இடத்தில் நாற்றம். படிக்கிறதுதிருவாசகம் இடிக்கிறது சிவன் கோயில். (சிவபுராணம்) படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில். (திருவாய்மொழி) படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாய்ப்போம். படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை. படிக்குப் படி நமசிவாயம். படிக்குப் பாதி தேறாதா? படிக்குப் போட்டால் பிடிக்கு வரும். படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை; பாப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை. 13070 படிதாண்டி நுழைந்த பின்னர் பத்தினி வீடா? பாவி வீடா என்று யோசிக்கிறதிலே என்ன இருக்கு? படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல. படித்தவன் எல்லாம் அறிவாளியும் அல்ல; படிக்காதவன் எல்லாம் முட்டாளும் அல்ல. படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கொடுத்தான். படித்தவன் பாவம் பண்ணினால் ஐயோ என்று போவான். படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர். படித்தவன் புத்தி பானைக்குள்ளே. படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன். படிப்படியாக ஏறி நடப்பதனாலேயே பணம் கிடைத்து விடுமா? படிப்பிருந்தால் படைத்தவன் தலை எழுத்தை மாற்றிடலாம். 13080 படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை. படிப்பேற வில்லையா பள்ளிக் கூடத்தை மாற்று. படியிட்டு வடிவதுண்டோ? படியில்லாமல் அளக்கிறது; முறமில்லாமல் கொழிக்கிறது. படி விதைக்குப் பிடி விதை மேல். படி விரைக்குப் பிடி விரை மூத்தது. படு களத்தில் ஒப்பாரியா? படுகளத்தில் ஒப்பாரி எதற்கு? படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான். படுக்க இடம் கொடுத்தால் படுக்கையையே கேட்டானாம். 13090 படுக்கப் படுக்கப் பாயும் பகை. படுக்கப் பாய் இல்லாவிட்டாலும் இடக்கிற்குப் பஞ்சமில்லை. படுக்கப் பாயும் கொடான்; நிற்க நிழலும் கொடான். படுக்கை சுகம் மெத்தை அறியாது. படுதீப்பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம். படுத்தால் பசி பாயோடே போய் விடும். படுத்திருக்கும் கல்லு ஏகாலிக்கு; நிற்கிற கல்லு பார்ப்பானுக்கு. படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்தூரம் போவான். படுத்துவார் படுத்தும்போது கடுத்துவாவும் கடித்ததாம். (கடுத்துவா -ஓர்எறும்பு.) படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும். 13100 படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா? படைக்கலம் அணிந்தாலும் பன்றி பன்றிதான். படைக்களத்திலே ஒப்பாரி இடுகிறதா? படைக்காமல் படைத்தானாம்; காடுமேடு எல்லாம் இழுத்து அடித்தானாம். படைக்கும் ஒருவன்; கொடைக்கும் ஒருவன். படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ். படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா? படைக்குப் போகாதவர் நல்லவீரர். படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி. படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரியாகுமா? 13110 படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ். படைத்தவனுக்கு இல்லாத பாகற்காயை நெய்யுள்ளவன் பொரித்துத் தின்கிறான். படை மிகுந்தால் அரண் இல்லை. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும். படை முகத்தில் ஒப்பாரியா? படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன். பட் சத்துக்குக் கண் இல்லை. பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது. (பட்சி) பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் அவர் சித்தம். பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி. 13120 பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். பட்ட குணம் சுட்டாலும் போகாது. பட்டடை வாய்த்தால் பணி வாய்க்கும். (பட்டறை) பட்டணத்தாள் பெற்ற குட்டி பணம் பறிக்க வல்ல குட்டி (பட்டணத்தான்) பட்டணத்துக்காசு பாலாறு தாண்டாது. பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம். பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக்காட்டுப் பெண் ருக்குமணி. பட்டணத்து வாசலைப் படலாலே மூடுகிறதா? (பட்டாலேமூடியிருக்கிறதா?) பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா? 13130 பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி. பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் இருக்கப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க. பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும். பட்டதெல்லாம் பாழ்; நட்டதெல்லாம் சாவி. பட்டதைச் சுருட்டடா கம்பளியப்பா. பட்டத்து ஆனை பல்லக்குப்பின் வருமா? (கிடையாமல்) பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம். பட்டப் பகலிலே கெட்டுப் போகிறவளுக்குத் தடுப்பு ஏன்? kறைப்பு ஏன்? பட்டப் பகலிலே பசுமாடு தெரியாதவனுக்கு அமாவாசை இருட்டிலே எருமைமாடு தெரியுமா? பட்டப் பகலிலே போகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா? 13140 பட்டப் பகலில் குட்டிச்சுவரில் முட்டிக் கொள்வதா? பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம். பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா? பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல. (பழுத டைந்தாற்) பட்ட மரத்தில் பகல் குருடு போகிறது. பட்ட மரமும் பாலாய் உருகும். பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது. பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பது உண்டா? பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே. பட்ட பாடும் கெட்ட கேடும். 13150 பட்டம் அறிந்து பயிர் செய்; பருவம் அறிந்து கல்யாணம் செய். பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பது உண்டா? பட்டம் தப்பினால் நட்டம். பட்டம் தேடி ப் பயிர்வகை விதை. பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும். பட்டவர்க்கு உண்டு பலன். பட்டவர்க்குப் பதவி உண்டு. பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள். பட்டவளுக்குப் பதவி; படாதவளுக்கு நரகம். பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு. (பட்டவர்க்குப்) 13160 பட்டவனுக்குத் தெரியும் படையிற் கலக்கம். பட்டவனுக்குத் தெரியும் வறுமைத் துன்பம். பட்டறி கெட்டறி பத்தெட்டு இறுத்தறி. பட்டறை போட்ட பிறகு குறிபோடுவது போல. பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில். பட்டா ஒருவர் பேரில்; அநுபவம் ஒருவருக்கு. பட்டா ஒருவர் மேல்; பயிர்ச்செலவு ஒருவர் மேல். பட்டால் அறிவான் சண்டாளன்; மழை பெய்தால் அறிவான் வேளாளன். (வெள்ளாளன்) பட்டால்தான் தெரியும் வருத்தம்; பார்த்தால் தெரியாது. பட்டால் தெரியும் முட்டாளுக்கு; சுட்டால் தெரியும் நண்டுக்கு. 13170 பட்டால் தெரியும் பஞ்சம்; படாமல் தெரியும் வஞ்சம். பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு; கெட்டால் தெரியும் செட்டிக்கு. (கோமுட்டிக்கு) பட்டால் பகல்கறி; படாவிட்டால் இராக்கறி. (குறி) பட்டால் பாழ் போகுமா? பட்டாளத்தில் சாகாதவன் பட்டியில் செத்தானாம். பட்டி என்று பேர் எடுத்தும் பட்ட கடன் அடையவில்லை. பட்டிக் காட்டானுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம். பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல(முறைத்தது.) பட்டிக் காட்டான் ஆனையைக் கண்டது போல. பட்டிக் காட்டான் நாய்க்கு அஞ்சான்; பட்டணத்தான் பேய்க்கு அஞ்சான். 13180 பட்டிக் காட்டுப் பெருமாளுக்குக் கொட்டைத் தண்டே கருடகம்பம். பட்டி குரைத்தால் படி திறக்குமோ? பட்டி கூட்ட ஆனை போதும். (கூட) பட்டி நாய்க்குப் பட்டது சரி. பட்டி நாய் தொட்டி சேராது. பட்டி மாட்டுக்குக் கட்டை கட்டினது போல. பட்டி மாட்டுக்குச் சூடு போட்டது போல. பட்டியிலே ஆடு இருந்தால் பெட்டியிலே பணமிருப்பது போல. பட்டினம் பெற்ற கலம். பட்டினத்துக்கு வீடும் பட்டிக்குக் காடும். 13190 பட்டினி இருக்கும் நாய்க்குத் தின்னப் பகல் ஏது? இரவு ஏது? பட்டினிக்குப் பழகியவன் பல்லைக் காட்டுவானா? பட்டினிக்குப் பழகியவன் பாராட்டுக்கா மசிவான்? பட்டினியே சிறந்த மருந்து. பட்டினியே போட்டுச் சாகடித்து. பாடைக்கு அலங்காரம் செய்கிறான். பட்டு என்றாலும் பஞ்சு என்று சொல்ல வேண்டும்; பால் என்றாலும் கூழ் என்று சொல்ல வேண்டும். பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும். பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழமுடிய வில்லையாம், கற்றாழை நாற்றம். பட்டுக் கிடக்கிற பாட்டை அறியாமல் பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு அழுதானாம். பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள் முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை. 13200 பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது. பட்டுக்கு அழுவார் பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டதில்லை. பட்டுக் குலைந்தால் பொட்டு. பட்டுக் கோட்டைக்கு வழிஎது என்றால் கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றானாம். (பத்துபணம்) பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுகின்றாய். (எட்டணா என்பது போல) பட்டு நூல்காரன் சூது பரமசிவனுக்கும் தெரியாது. பட்டு நூல்காரன் சூதைப் பரமசிவனாலும் அறியமுடியாது. பட்டுப்பாய் கீழ் ஆயிற்று; பங்கு கேட்டான் மேலானான். பட்டுப் புடவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலைந்தாற் போல. (அலையலாயிற்று.) பட்டுப் புடவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டு திரிவது போல. 13210 பட்டுப் புடவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா? பட்டுப் புடவையில் ஊசி தட்டுருவிப் பாய்ந்தாற் போல. பட்டு மட்கினாலும் பெட்டியிலே. பட்டு மட்கினால் பெட்டியிலே; பழங்கந்தை மட்கினால் குப்பையிலே. பட்டு மடித்தால் பெட்டியிலே; பவிசு குறைந்தால் முகத்திலே. பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா? பட்டும் கொடுத்து முக்காலி செய்தாளாம். பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும்; காற்காசுக் கந்தை ஓடி உலாவும் (பட்டாடை - ஒரு காசு) (பட்டாவளி) பட்டும் பாழ்; நட்டும் சாவி. பட்டேன் ஒருகோடி; பாடுபட்டேன் முக்கோடி. 13220 பட்டைக் கட்டிக்கிட்டுப் பகட்டோட போனாலும் பள்ளச்சி பள்ளச்சி தான். பட்டைக்குத் தக்க பழங்கயிறு. பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ? பண ஆசை தீமைக்கு வேர். பணக் கள்ளி பாயில் படாள். பணக்கார அவுசாரி பந்தியிலே; ஏழை அவுசாரி சந்தியிலே. பணக்காரர்களுக்குக் கவலை அதிகம்; பிச்சைக்காரர்களுக்குப் பசி அதிகம். பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை. பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உண்டை. பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே. 13230 பணக்காரனுக்குப் பெண்டாட்டி செத்தால் கூழை மாடு செத்தாற்போல. பணக்காரனுடன் பந்தயம் போடலாமா? பணக்காரனும் தூங்க மாட்டான்; பைத்தியக்காரனும் தூங்க மாட்டான். பணக்காரன் பின்னும் பத்துப்பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர் (சுற்றிப்) பணக்காரன் பின்னே பத்துப்பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர். பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது. பணத்தால் பணியாரத்தைத் தான் வாங்க முடியும்; பசியை வாங்க முடியாது. பணத்துக்கு ஒரு அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல. (பாழுக்குஎய்கிறதா?) பணத்துக்குத் தக்கவாறுதான் நோய் ஏற்படும். பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. 13240 பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி. பணத்தைக் கண்டால் பிணமும் வாயைத் திறக்கும். பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக் குள்ளே இருந்து தின்ன வேண்டுமா? பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டனாம். பணத்தைக் கொடுத்துப் பழந்தொளி வாங்கு. பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா? பணந்தான் குலம்; பசிதான் கறி. பணமும் பத்தாயிருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாயிருக்க வேண்டும். (பிள்ளையும்) பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் சுவை இல்லை. பணம் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பத்துசனம் இருக்க வேண்டும். 13250 பணம் இருந்தால் இரும்பும் மிதக்கும். பணம் இருந்தால் தாயையும் தகப்பனையும் தவிர சகலத் தையும் வாங்கலாம். பணம் இருந்தால் தாய் தகப்பன் தவிர எதையும் வாங்கலாம். பணம் இருந்தால் பத்தும் வந்து சேரும். பணம் இருந்தால் பாட்சா; இல்லாவிட்டால் பக்கிரி. (பாதுசா) பணம் இருந்தால் பெட்டியிலே; பவிசு இருந்தால் முகத்திலே. பணம் இருந்தால் மனம் இராது; மனம் இருந்தால் பணம் இராது. பணம் இருந்து விட்டால் பிணத்தைக் கூட நடக்க வைக்கலாம். பணம் இல்லாதவன் பிணம். பணம் இல்லாதவன் வாழ்க்கை பாய்மரம் இல்லாத கப்பல் போல. 13260 பணம் இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. பணம் உண்டானால் படையையும் வெல்வான். பணம் உண்டானால் மணம் உண்டு. (மனம்) பணம் உள்ளவனுக்கே மணமுண்டு. பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும். (கை தூக்கும், எழுந்திருக்கும்) பணம் என்றால் பேயும் வாய்திறக்கும். பணம் என்றால் பேயும் பறக்கிறது. (பறக்கிறான்.) பணம் என்ன செய்யும்? பத்தும் செய்யும். (பத்து விதம், பத்துவகை) பணம் என்ன பாசாணம்;குணம் ஒன்றே போதும். பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள். 13270 பணம் கண்ட வேசி பாயில்படாள். gz« FzkhF«; gá f¿ahF«.(FykhF«) பணம் கொடுத்தாவது பண்ணாட்டுக்கு ஆள்வைத்துக்கொள். பணம் சேரச்சேர ஆசை; பிள்ளை பிறக்கப் பிறக்க ஆசை. பணம் சேர்ந்தாலும் பருத்தி சேராது. பணம் செல்லாவிட்டால் அரிசிக்காரிக்கு என்ன? பணம் தொட்டால் தீர்ந்தது; கருப்பட்டி உடைந்தால் தீர்ந்தது. பணம் நிறைய இருப்பதனாலே மனம் நிறைவாகி விடாது. பணம் பகையாச்சு; சோறு உறவாச்சு. பணம் பசியைப் போக்காது. 13280 பணம் பணத் தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும். பணம் பத்துவிதம் செய்யும். பணம் பந்தியிலே குணம் குப்பையிலே. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே. பணம் பாதாளம் மட்டும் பாயும். பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் பார்த்துப் பெண்ணைக் கொள். பணம் பெரிதா? குணம் பெரிதா? பணம் பெரிதோ? பழமை பெரிதோ? பணம் பெற்ற கொத்துமல்லி பானையிலே இருக்குதாம்; சாவட்டக் கொத்துமல்லி மேவட்டம் போடுதாம். பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது. 13290 பணம் போனாலும் குணம் போகாது. பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும். பணிந்து வணங்குபவன் துணிந்து முன்னேறுவான். பணியாரம் சுடுகிறது என்று எட்டிக் குதித்ததாம்; எரிகிற அடுப்புக்கு எப்படியிருக்கும்? பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்தலை எண்ணச் சொன்னார்களா? பணியும் என்றும் பெருமை. பணிவற்ற மனைவி பகைக்குச் சமம். பண்டம் ஓரிடம் பழி ஓரிடத்திலே. (பத்திடம்) பண்டம் ஓரிடத்திலே பழி ஓரிடத்திலே. பண்டக் காரன் வரவில்லை என்றால் பண்டம் பட்டியிலா கிடக்கும்? 13300 பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை. பண்டாரம் என்றால் இலைபோடும் ஆளா? பண்டாரம் கூழுக்கு அழும்போது லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை. பண்டாரம் கூழுக்கு முன்றானையா? பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும். பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத் துக்கு அழுததாம். பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது. பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர் தம் கேட்டதாம். பண்டிகை எல்லாம் திண்டிக்குத் தான். பண்டிதனும் நரியும் பகவானுக்குச் சமம். 13310 பண்டைபட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள். பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும். பண்ணாடி படியிலே பார்த்தால் ஆள் நடையிலே பார்த்துக் கொள்வான். பண்ணாடி படியில் ஏய்த்தால் ஆள்காரன் நடையில் ஏய்ப்பான். பண்ணாடிக்கு மாடுபோன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும். பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேண்டும். பண்ணிய பாவத்தைப் பட்டுத்தான் தொலைக்க வேண்டும் பண்ணின பாவம் சொன்னாற் போகும். பண்ணைக்காரன் படியைக் குறைத்தால் பண்ணையாள் நடையைக் குறைப்பான். 13320 பண்ணைக்காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம். பண்ணைக்காரன் பெண்டிர் பணியக் கிடந்து செத்தாள்; பரிகாரி பெண்டிர் புழுத்துச் செத்தாள். பண்ணைக் கிடாவுக்கு மண்ணே மருந்தாகும். பண்ணை பூத்த கொல்லை பாழ். (பண்ணை - ஒருவகைப் பூண்டு) பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை. பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும். பண்ணையை விட்டுப் போன பிறகு செவலை மாடு பத்திரம் என்பது போல. பண்பு இல்லாத மனைவியைவிடப் பேய் நல்லது. (பண்பும் அன்பும்) பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல். பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா? 13330 பதக்குப் போட்டால் முக்குறுணி என்றானாம். பதத்துக்கு ஒரு பருக்கை. பதம் கெட்ட கழுதையைப் பல்லக்கில் ஏற்றினால், அது இடம் கண்ட மூலையெல்லாம் இறக்கு இறக்கு என்று சொல்லுமாம். பதம் கெட்ட நாயைப்பல்லக்கில் வைத்தால் கண்ட இட மெல்லாம் இறக்கு இறக்கு என்னுமாம். பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும். பதறாத காரியம் சிதறாது. பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும். பதறிய காரியம் சிதறிக் கெடும். பதறின காரியம் பாழ். பதனம் பத்துக்கு எளிது. 13340 பதனம் பத்துக் கழஞ்சு. பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு (பட்டுக்கிடப்பாளே.) பதிவிரதையானால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம். பதிவிரதைக்கு¥பர்த்தாtதெய்வம். பதிவிரதையைக் கெடுக்கப்பதினைந்Jபொன். பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது. பதினாறு பல்லில் ஒருபல் நச்சுப் பல் இருக்கும். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும். பதினாறு வயதுவரை மகள், அதற்கு மேல் தோழி. பதின்காதம் போனாலும் பாவம் தன்னோட. 13350 பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு mடையாளம்.(gJ§F»w தெல்லாம்) பத்தாமிடத்தில் பாம்பாடாதிருக்க வேண்டும். பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். பத்தாம் பேறு பாடையில வைக்கும். பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான். பத்தி இல்லாத புத்தி அசேதனம். பத்தி உள்ளவனுக்குப் பட்டுக் குடை அண்டம் புறப்பட்டுப் போச்சுதா? பத்தி கொள்பவன் முத்தி உள்ளவன். பத்தி படபட பானைசட்டி லொலொட. (பத்தினி) பத்தியத்திற்குப் பழவரிசி கேட்டால், கருமாந்திரத்துக்குக் காலரிசி கொண்டு வந்தானாம். 13360 பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான். பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? பத்தியம் பத்துநாள்; இளம்பிள்ளை இரண்டு மாதம். பத்திய முறிவுக்குப் பாகற்காய். பத்திரிகை படியாதவன் பாதி மனிதன். பத்திலே பசலை; இருபதிலே இரும்பு (இடும்பு) பத்திலே விழுந்த பாம்பும் சாகாது. (பத்தில்) பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான். பத்தில் பார்வை; இருபதில் எழுச்சி; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம். பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம். 13370 பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது. பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே. பத்தினி படாபடா என்றாளாம்; பானைசட்டி லொடாலொடா என்றனவாம். பத்தினிப் பெண்ணானால் பரத்தை வீதியில் குடியிருந் தாலும் கெடமாட்டாள். பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும். பத்தினியைப் பஞ்சகத்தில் வைத்துக் கொள். (பஞ்சணையில்) பத்தினி வாக்குக்குப் பழுது வராது. பத்தினி வாக்குப் பலிக்கும். பத்தினி வாக்கு பழுதாகுமா? பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே தீரும். (விடும்) 13380 பத்து அடி (தூரம்) பிள்ளை; எட்டு அடி (தூரம்) வாழை. பத்து அரிசியும் வேகவில்லை; பாவி என் பிராணனும் போகவில்லை. பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி. பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம். பத்து இறுத்த பின்பு பாரச்சந்தேகம் தீர்ந்தது. பத்து இறுத்தாலும் பாரச் சந்தேகம் தீராது. பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான்; ஓர் ஏர்க்காரன் ஓட்டிக் கெட்டான். பத்து ஏர் வைத்துப் படை மரமும் தோற்றேன். (படி முறமும்) எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்? (உழவன் சமண படிவத்தைப் பார்த்துக் கேட்டது) பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ். பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல். 13390 பத்துக் களை, நூறு தண்ணீர் வாழை. பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும். பத்துக்குட்டி அடித்தாலும் சட்டிக் கறி ஆகாது. பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன். பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம். (குப்பம்) பத்துக்குப் பின் பயிர். பத்துக்கு மிஞ்சின பதிவிரதை ஏது? பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும். பத்துக்கு மேலே பத்தினி இல்லை. பத்துப் பணம் கொடுத்தவன் பார்த்துக் கொண்டிருந்தானாம். கொட்டைப் பாக்குக் கொடுத்தவன் கூட்டிக் கொண்டு போனானாம். 13400 பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது. பத்துப் பணம் கொடுத்தாவது பந்தலுக்கேற்ற மாப்பிள்ளை யைப் பார். பத்துப் பணம் வேண்டும்; இல்லாவிட்டால் பத்துச் சனம் வேண்டும். பத்துப் பிள்ளைத் தாய்க்கு ஒரு பிள்ளைத் தாய் மருத்துவம் சொன்னாளாம். பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம். பத்துப் பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னாளாம். பத்துப் பேருக்குப் பல்குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை. பத்துப் பேரை ஆளத் தெரியாதவன் பாராளப் போனானாம். பத்துப் பேரைக் கொன்றவன் பரிகாரி. (வேரைக்) பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேண்டும். 13410 பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது. பத்துப் பேர்களுக்குச் செய்த உபாகரமும் பாடைக்குச் செய்கிற அலங்காரமும் ஒன்று. பத்துப் பேர் கூடினால் பத்து விதமான கருத்துகள் கிடைக்கும். பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் குழந்தையின் கையை ஒடித்தார்களாம். பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிற திலும், நாலுபேர் மெச்ச நடிக்கிறதிலும் மிடா மிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம். பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம். பத்து மிளகிருந்தால் பகையாளி வீட்டிலும் உண்ணலாம். பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான். பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது. 13420 பத்து வயதிலே பாலனைப் பெறு. பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை. பத்து வருடம் கெட்டவன் பருத்திவிதை; எட்டுவருடம் கெட்டவன் எள் விதை. பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக் கூடாது. பத்து விரலாலே பாடுபட்டால் ஐந்து விரலாலே அள்ளிச் சாப்பிடலாம். (வேலை செய்தால்) பத்து வீட்டுக்காரர் பகையானாலும் பக்கத்து வீட்டுக்காரர் உறவாக இருக்கவேண்டும். பத்தோட பதினொன்று அத்தோட இது ஒன்று. பந்தக் காலை கட்டினவன் எல்லாம் பண்ணாடியாய்ப் போய்விட்டான். பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும். பந்தம் சொன்னால் படைக்கு ஆகார். 13430 பந்தயப் பந்து பழமுறத்தில் விழுந்தது. பந்தலுக்கு இல்லாத வாழைக்காய் பரப்பிக் கொண்டு ஆடுதாம். பந்தல் பரக்கப் போட்டான் சந்திரநாதன்; வந்தி நெருங்க வைத்தான் பத்திரபாகு. பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கு கிறதாம். பந்திக்கு முந்திக் கொள்; படைக்குப் பிந்திக் கொள். பந்திக்கு முந்து; படைக்குப் பிந்து. பந்திக்கு முந்த வேண்டும்; படைக்குப் பிந்த வேண்டும். பந்திக்கு வேண்டாம் என்றால் இலை பீற்றல் என்றானாம். பந்தி போடும் போது பார்த்துப் பரிமாறனும்; இருக்கிறதை எல்லாம் எடுத்து வைத்தால் இலைதான் மிஞ்சும். பந்தியிலே உட்காராதே என்றால் இலை பொத்தல் என்றானாம். 13440 பந்தியிலே வேண்டாம் வேண்டாம் என்றால் இலை பொத்தல், இலைபொத்தல் என்கிறான். பந்தியில் வஞ்சனை பாவியும் செய்யான். பப்புக்கு உப்புக் கேட்டால், உப்புக்குப் பப்புக் கேட்கிறான். பப்பு மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் பப்பு. பம்பரங் கழிக்குப் பாம்பு கடித்ததாம்; பார்க்கப் போனவங் களுக்குத் தேள் கடித்ததாம். பம்பரம் மூலையில் கிடந்தால் பயன் என்ன? பம்பை பாலூற்றும்; கோரை குடியைக் கெடுக்கும்; சுருட்டை சோறு போடும். பம்மல் தூற்றலும் பருவ மழைக்கு அடையாளம். பயணக்காரன் பைத்தியக்காரன். பயந்த மனுசி பரிமாற வந்தாளாம்; பந்தலில் இருந்தவர்கள் எல்லாம் எடுத்தார்கள் ஓட்டம். 13450 பயந்தவன் உறவு பல்லுக்குச்சியும் உதவாது. பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். பயந்தவன் மேலே பத்தும் உரசும். பயந்து பயந்து நூறுநாள் வாழ்வதைவிடப் பாயும் புலியாய் ஒருநாள் வாழ்வது மேல். பயம் உள்ளவரை செயம் இல்லை. பயல் சாண் உயரம்; பழையது முழ உயரம். பயறளவு நெருப்புப் பொறியும் ஆகாயம் அளாவிய வைக் கோல் போரைக் கொளுத்தும். பயறுக்குப் பஞ்ச பூமி. பயற்றங்கூழுக்குப் பங்கிழந்தவன் கதை போல. பயற்றம் பருப்பு பத்தியத்துக்கு. 13460 பயித்தியக்காரன் கிழித்ததும் கோவணத்துக்கு ஆச்சுது. பயித்தியத்துக்கும் பாலகனுக்கும் பலம் அதிகம். பயித்தியத்துக்கு வைத்தியம் பகவான்தான் செய்ய வேண்டும். பயித்தியமோ பண்டாரமோ என்றால் இப்போதுதான் தொடரு கிறது என்றான். பயித்தியம் தெளிகிறது உலக்கை எடுத்துவா காதுகுத்த. பயித்தியம் தெளிந்து போச்சு, உலக்கை கொண்டுவா, கோவணம் கட்டிக் கொள்கிறேன் என்றானாம். பயித்தியம் பரிகாசம் வேண்டும் ஒன்று அதிகாரம் வேண்டும். பயித்தியம் பிடித்துப் பாயைப் பறண்டுகிறது. பயிரை இட்டுப் பாவத்தைத் தொலை. பயிரைக் கண்டு பதறாதே; குத்தாரியைக் கண்டு குதிக்காதே. 13470 பயிரைக் கொடுத்துப் பழந்தொளி வாங்கு. (பழம்புழுதி) பயிரை வளர்ப்பான் உயிரை வளர்ப்பான். பயிர்கள் தோறும் பகைப்புழு மாறும். பயிர் கிளைத்தால் ஆச்சு; களை கிளைத்தால் போச்சு. பயிர் செழிக்கப் பார் செழிக்கும். பயிர் பலிக்கும் பாக்கியவானுக்கு; பெண்டு பலிக்கும் புண்ணியவானுக்கு. பயிர் பார்க்காமல் கெட்டது; கடன் கேட்காமல் கெட்டது. பயிர் வகை பொறுத்துப் புழுதிப் படுத்து. பயிர் வளர வாட்டமும் வேண்டும்; வடிக்கவும் வேண்டும். 13480 பரக்கப் பரக்க அலைந்தாலும் இருக்கிறதுதான் இருக்கும். பரக்கப் பரக்கப் பாடுபட்டும் படுக்கப் பாய் இல்லை. பரக்கப் பரக்கப் பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லை; ஓடி ஓடிச்சம்பாதித்தாலும் உடுக்கத் துணியில்லை. பரணி அடுப்புப் பாழ் போகாது. பரணிக்கோர் செயங்கொண்டார். பரணி பேய்ந்தால் தரணி ஆளலாம். பரணி மழை தரணியெல்லாம் பொலி. பரணியான் பாரவன். பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான். பரதம் எப்படி பக்தர்கள்அப்படி. 13490 பரதவர் சேரியில் பரிமளப் பொருள் விற்றது போல. பரதேசிக்குச் சுடுசோறு பஞ்சமா? பரதேசியின் நாய்க்குப் பிறந்த ஊர் நினைவு வந்தது போல பரதேசிக்குப் பட்டுத் துணி ஆசை எதற்கு? பரத்தைக்குக் கொடுக்கும் பணத்தைக் குடிப்பெண் வாங்கிக் குலம் கெடுவாளா? பரபோகம் தேடி இகபோகம் நாடி வாழ்க்கை பெறவேண்டும். பரப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான். பரம்பரை ஆண்டியா? பஞ்சத்துக்கு ஆண்டியா? (ஆண்டியோ?) பரப்பன் பயிரிழந்தான்; இரப்பன் பெண்டிழந்தான். பரிக்கு இடும் கடிவாளத்தை நரிக்கு இடுகிறது. 13500 பரிகாசப் பட்டவனைப் பாம்பு கடித்தாற் போல. பரிகாரி உறவு தெருவாசல் மட்டும். பரிகாரி கடை கொள்ளப் போன கதை. பரிகாரி தலைமாட்டிலிருந்து அழுந்தன்மை போல. பரிசத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கன்னியைக் கொண்டது போல. பரிசத்துக்குப் பால்மாறி இழிகன்னியைக் கொண்டானாம். (பால்மாறி - கஞ்சன்) பரிசம் போட்டால் பாதி பெண்டாட்டி. பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றிலர். பரிந்த இடம் பாழ். பரிந்து இட்ட சோறு பாம்பாய்ப் பிடுங்குகிறது. 13510 பரிந்து இடாத சோறும் சொரிந்து தேய்க்காத எண்ணெயும் பாழ். பரிமாறுகிறவன் தன்னவனானால் தலைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன? பரிவு இல்லாத பெண்டாட்டிக்குப் பேய் நன்று. பரிவு இல்லாப் போசனத்தில் பட்டினி நன்று. பிரியம் இல்லாப் பெண்டிரிற் பேய் நன்று. பருத்த உடலுக்குப் பப்பாளிக்காய். பருத்த வயிற்றுக்கு மெலிந்த மூளைதான் அமையும். பருத்தவன் சிறுப்பதற்குள் சிறுத்தவள் செத்துப் போவாள். பருத்திக் கடையிலே நாய்க்கு என்ன வேலை? (பணி என்ன?) பருத்திக் காட்டுக்குப் பழைய சேலை ஆகாது; நொச்சுவாய னுக்குப் பெண்டாட்டிஆகாது. பருத்திக் காடு உழும் முன்னே பொம்மனுக்கு ஏழு முழம்; திம்மனுக்கு ஏழு முழம். 13520 பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம் என்கிறான். பருத்திக்குப் பத்து உழவு. பருத்திக்குப் பாடு பன்னிரண்டு. பருத்திக் கொட்டை, பழம் புளி (பயனற்றவை) பருத்திச் செடி புடவையாய்க் காய்த்தது போல. பருத்திச் செடியும் பாலும் உள்ளவனுக்குப் பஞ்சம் இல்லை. gருத்திgட்டgடெல்லாம்gடுகிறது. பருத்தி புடவையாய்க் காய்த்தது போல. பருத்தி புடவையாய்க் காய்த்தால் எடுத்து உடுத்தல் அரிதா? பருத்தி பொதிக்கு ஒரு நெருப்புப் பொறி போல. 13530 பருத்தி விதைக்கும்போதே அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றானாம். பருத்தி வெடிக்கிற வரைக்கும் தான் மவுசு; பாவை மறைக்கிற வரைக்கும் தான் புதுசு. பருந்தின் கழுத்தில் பவளத்தைக் கட்டினால் கருடன் Mகுமா? பருந்து எடுத்துப் போகுதென்று பார்க்க வந்தானையா? இந்தக் குரங்கு எடுத்துப் போடுதே கோவிந்தா? பருப்பிலே நெய் விட்டது போல. பருப்பிலே விழுந்த பாச்சை போல. பருப்பு இல்லாத கலியாணமா? பருப்புக் கேட்கும் பச்சரிச் சோறு; செருப்புக் கேட்கும் சித்திரை மாதத்து வெயில். பருப்புச் சோற்றுக்குப் பதின்காதம் வழி போவான். பருப்பும் பச்சரிசியும். 13540 பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது. பருமரத்தைச் சேர்ந்தால் பல்லியும் பொன்நிறம் ஆகும். பருவத்தில் பெற்ற சேயும் புரட்டாசி பாதிச் சம்பா நடுகையும். பருவத்தில் பன்றிக் குட்டியும் பத்துப் பணம் பெறும். பருவத்திலே பன்றியும் பத்துப்பணம் பெறும். பருவத்தே பயிர் செய். பருவத்தைப் பாழாக்கிப் பாகத்தைத் தூளாக்கினவன். பருவத்தோடு ஒத்து வாழ். பருவம் தப்பினால் பனங்கிழங்கும் நாராகும். பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும். 13550 பல உமி தின்றால் ஓர் அவல் தட்டாதா? பல கரும்பிலும் ஒரு கை வெட்டு. பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல. பல தீட்டுக்கு ஒரு முழக்கு. பல துளிப் பெருவெள்ளம். பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு. பலத்தவனுக்கு மருந்து சொன்னால் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும். பலந்தேடப் போய்ப் பழிவந்து நேர்ந்தது போல. பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காதே. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். (நாளை) 13560 பலநாள் வெயில் சூட்டை ஒருநாள் பெருமழை தணிக்கும். பலபாவம் தீர ஒரு புண்ணியமாகிலும் பண்ண வேண்டும். பலபிச்சை ஆறாய்ப் பெருகும். பல பீற்றல் உடையான் ஒருபீற்றல் அடையான். பல பொய்யைச் சொல்லி ஒரு கலியாணம் செய். பலபேர் ஒற்றுமை கொண்டால் கடலினையும் இறைத்து விடலாம். பலபேர் கண்பட்ட பாம்பு அடிபடாது. பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான். பலமரம் கண்டவன் ஒரு மரமும் ஏறப் போவதில்லை. பல முயற்சி செய்யினும் பகவான்மேல் சிந்தை வை. 13570 பலம் தேயப்போய்ப் பழிவந்து சேர்ந்தது போல. பலர் கண் பட்டால் பாம்பும் சாகும். பலர் கண்ணில் அகப்பட்ட பாம்பு அடிப்படாது. பலர் கருத்தைக் கேட்டால் பாழாம். பலவாய்க்கால் ஆறாய்ப் பெருகும். பலவீட்டு உறவினன் பட்டினி. (உறவுமுறை) பலவீட்டுப் பிச்சை ஒரு வீட்டுச் சோறு. பலவும் தின்றால் ஓர்அவல் தட்டாதா? பலனை விரும்பினால் பாடுபட வேண்டும். பலன் இல்லாப் பல நாளிலும் அறம் செய்த ஒருநாள் பெரிது. 13580 பலன் தேடப் போய்ப் பழிவந்து நேர்ந்ததுபோல. பலா உத்தமம்; மா மத்திமம்; பாதிரி அதமம். பலாப்பழத்துக்கு ஈயைப் பிடித்துவிட வேண்டுமா? பலாப்பழத்துக்கு ஈயைப் பிடித்தாவிட வேண்டும்? பலாப்பழத்துக்குக் களாப்பழம் மேலாகுமா? பல் ஆடப் பசியாறும். பல் இழந்தான் சொல் இழந்தான். பல் உள்ளவற்றுக்குப் பரிகாசம்; நாக்கு உள்ளவற்றுக்கு நகையாண்டி. பல்லக்கில் போகும் நாயானாலும் எச்சில் இலையைக் கண்டால் விடுமா? பல்லக்கு ஏற ஆசை உண்டு; உந்தி ஏறத்தான் சக்தி இல்லை. 13590 பல்லக்கு ஏற எல்லாரும் ஆசைப்பட்டால் பல்லக்கு சுமப்பது யார்? பல்லக்கு ஏற யோகம் உண்டு; உந்தி ஏறச் சக்தி இல்லை. (பலம்) (உன்னி) பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல்லுடை படுவதும் சொல்லாலே. பல்லற்றுப் போனால் சொல்லற்றுப் போகும். பல்லாவுள் உய்த்துவிடினும் குழக்கன்று, வல்லதாம் தாய் நாடிக்கோடல். பல்லாலே போட்ட முடிச்சை நாக்காலே அவிழ்க்க முடியுமா? பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை. பல்லுக்கு எட்டாத பாக்கும் பக்கத்துக்கு எட்டாத ஆம்புடை யானும் வீண். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பெரிது; படுக்கைக்குச் சிறிது. 13600 பல்லுப் பிடுங்கின பாம்பு போல. பல்லுப் பெருத்தால் ளொள்ளும் பெருக்கும். பல்லுப்போன கிழவனும் பணமிருந்தால் பெண்ணைப் பார்ப்பான். பல்லுப் போன கிழவி நெல்லைக் கொறித்தாளாம். பல்லுப் போன கிழவியும் பணமிருந்தால் பையனைப் பார்ப்பாள். பல்லுப் போனால் சொல்லுப் போகும். (போச்சு) பல்லுப் போனாலும் ளொள்ளுப் போகாது. பல்லு விழுந்த புடையனுக்குக் கிருதா? பல்லுள்ள தெல்லாம் பரிகாசம் பண்ணுமே; நாக்குள்ள தெல்லாம் நையாண்டி பண்ணுமே. பல்லைக் காட்டிப் பரிதவிக்கிறது. (பரக்க விழிக்காதே) 13610 பல்லைக் காட்டிச் சிரிக்காதே. பல்லைக் காத்தால் சொல்லைக் காக்கும். பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் தெரியும் நாற்றம். பல்லைத் தட்டித் தொட்டிலிலே போடு. பல்லைப் பல்லை இளித்தால் பறையனும் மதிக்கமாட்டான். பல்லைப் பல்லைக் காட்டினால் பறையனும் சீந்த மாட்டான். பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா? பல்லைப் பிடுங்கிவிட்டால் பாம்பு பழுதைக்குச் சமம்தான். பல்லைப் பிடுங்கினால் மந்திரம் பலிக்காது. பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இருபுறமும் தீவட்டியாம். (பாட்டிக்கு, பாக்கட்டிக்கு) 13620 gHf¥ gHf¥ ghY« òË¡F«., பழகப் பழகப் பாலும் புளிக்கும்; பன்னிரண்டு ஆண்டானால் தேனும் புளிக்கும். பழகப் பழகப் பழமையாய் விடும். பழகிய பகையும் பிரிவு இன்னாது. பழகினதானாலும் பாம்பு. பழகின மானும் செய்யாது செய்யிற் கொல்லும். பழகினவர்களுக்குத்தான் ஊமையான பேச்சு விளங்கும். பழக்கம் கொடியது, பாறையிலும் கோழி கீறும். பழக்கம் பெரியது காண் கோழி பாறையினும் கிழிக்கும். பழக்கமேனும் சரசம் இன்றி இரவிக்கையில் கைபோடக் கூடாது. 13630 பழங்கணக்கு பருத்தி விதைக்கும் ஆகாது. பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே. பழங்கால் தூர்க்க வேண்டாம்; புதுக்கால் வெட்ட வேண்டாம். பழங்கால் தூர்த்துப் புதுக்கால் வெட்டாதே. பழங்கூழ் குடித்தவனுக்குப் பாலும் சோறும் கிடைத்தாற் போல. பழத்திலே பழம் மிளகாய்ப் பழம். பழத்துக்குத் தெரியும். வௌவாலுக்குத் தெரியும். பழத்தைக் குறித்து மரத்தைக் காப்பதுபோல பழந்தேங்காயிலேதான் எண்ணெய். பழமும் தின்று கொட்டையும் போட்டவன். 13640 பழமை இல்லாமல் புதுமை இல்லை. பழமில்லாமல் விதை இல்லை. பழமை பாராட்ட வேண்டும். பழமையின் உயிரே புதுமை. பழமொழி அனைத்தும் வாய்மை மொழிகளே. பழமொழிகள் எல்லாம் நன்னடத்தையைத் தூண்டுமா? பழமொழி பொய் என்றால் பழையதும் சுடும். பழமொழி பொய்த்தால் பழைய சோறும் சுடும். பழமொழியில் உமியில்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது அதுவும் நழுவி வாயில் விழுந்தது. பழம் பகை நட்பாதல் இல். 13650 பழம் பழுத்தால் கொம்பில் தங்காது. பழம் பழுத்தால் வௌவாலை வரவேற்றுக் கூப்பிடுகிறதா? பழம் புண்ணாளி பாதி வைத்தியன். பழம் வேண்டாத குரங்கும் உண்டா? பழி ஒரு பக்கத்தில் பண்டம் ஒரு பக்கத்தில் பழி ஒரு பக்கம்; பாவம் ஒரு பக்கம். பழி ஓரிடம்; பாவம் ஓரிடம். (பாரம்) பழியோரிடம் பளகோரிடம். பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா? பழிக்கு அஞ்சு; பாவத்திற்கு அஞ்சு. பழிக்கு ஆளானோர் பலர்; பழியை ஏற்றுக் கொள்வோர் சிலர். 13660 பழிக்கு ஆனோர் சிலர்; பழிபடுவோர் சிலர். பழிக்குப் பழி. பழித்தார் தலையில் பாடு வரும். பழிப்பன பகரேல். பழிப்பான கல்வி பாவத்தின் ஊற்று. பழுது செய்ததை அறிக்கை இடில் பாதி நிவர்த்தி. பழுதை என்று கிடக்கப்படவும் இல்லை; பாம்பு என்று நினைக்கப்படவும் இல்லை. பழுதை என்று மிதிக்கவும் முடியாது; பாம்பு என்று தாண்டவும் முடியாது. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்து ஓலை சிரித்ததாம். பழுத்த ஓலைக்கு அனுபவம் அதிகம் என்று குருத் தோலைக்குத் தெரிய நியாயமில்லைதான். பழுத்த ஓலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம். 13670 பழுத்த சரக்கு கொழுத்த பணம். பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா? பழுத்த பழம் மரத்தடியிலேதான் விழும் பழுத்த பழம் வௌவாலை அழைக்குமாம். (அழைக்குமா?) பழுத்த மட்டையைப் பார்த்துப் பச்ச மட்டை சிரித்ததாம். பழுத்த மட்டை முன்னால் விழுந்தால் குருத்துமட்டை பின்னால் விழும். பழுத்த மரத்துக்குப் பறவைகள் ஆயிரம். பழுத்த மரத்துக்கே கல்லெறி, கம்பெறி. பழுத்த மரமே கல்லெறிப்படும்; பட்ட மரம் படாது. பழைய கறுப்பன் கறுப்பனே; பழைய மண்கிண்ணி கிண்ணியே. 13680 பழைய கள் புதிய மொந்தை. பழைய குருடி கதவைத் திறடி. பழையது சாப்பிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னால் சுடுசோற்றைத் தின்று விட்டுச் சுற்றி சுற்றி வருகிறான். பழையது போடு உனக்குப் பசியா வரம் தருகிறேன். பழையது மிகுந்த இடமே காணியாட்சி. பழைய நினைப்படா பேராண்டி. பழைய பகையை எண்ணிப் படி முள்ளுக் கிளையாதே. பழைய பெருச்சாளி. (பழம்) பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பரையே கப்பரை. பழைய மொந்தை புதிய கள்ளு. 13690 பழைய வழக்கமும் பால்; பண்டிதன் (வைத்தியன்) சொன்னதும் பால். பழையனூர் நீலி பரிதவித்து அழுததுபோல. பளியரிடம் புனுகு விற்றது போல. பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா? பள்ளத்தில் இருந்தால் பெண்சாதி; மேட்டில் இருந்தால் அக்காள். பள்ளத்தில் இறங்கினால் பெண்டாட்டி; மேட்டில் ஏறினால் தாயார்.(தாயா?) பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான். (கொள்வான்) பள்ளம் இறைத்தனுக்குப் பங்கு. பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும். பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழிபோம். 13700 பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விளைகிறது. (விதைகிறது) பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும். பள்ளி ஒளித்திராள்; பார்ப்பான் குளித்திரான். (ஒளித்திரான்) பள்ளி கையில் பணம் இருந்தால் பாதிராத்திரியில் பாடுவான். பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது. பள்ளிக் குப்பத்து அம்பட்ட வாத்தியாரா? பள்ளிக் குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார். பள்ளிக்குப் பத்து மனை. (மணை) பள்ளிக்குப் பல்லு; பார்ப்பானுக்கு முழுக்கு. பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி. 13710 பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும். பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான். (குறைத்து வைத்தார்) பள்ளிக்கூடம் நிலைத்தால் அல்லவோ பிள்ளைகளைக் கார்வார் செய்யலாம்? பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம். பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி. gள்ளிbகாழுத்தால்gயில்jங்கkட்டான்;eண்டுbகாழுத்தால்tளையில்jங்காது. பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி. பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான். பள்ளி பாக்குத் தின்றால் பத்துவிரலும் சுண்ணாம்பு. (வெற்றிலை போட்டால்) பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா? 13720 பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது? பள்ளிப் புந்தி பறையன் பானையிலே. பள்ளி மச்சான் கதை போல. பள்ளி முத்தினால் படையாச்சி. பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் பிள்ளை வரும். பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி. பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்க வேண்டும். பள்ளி வாழ்வு பத்து வருசம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருசம். பறக்கா வெட்டிக்குப் பாம்பு கடித்ததாம்; பார்க்க வந்த பேர்க்குத் தேள் கொட்டிற்றாம். பறக்கிற இலையிலே கல்லை எடுத்து வைக்கிறது. 13730 பறக்கிற குருவிக்கும் பரதேசிக்கும் நிரந்தர இடம் கிடையாது. பறக்கிற குருவி சிறகிலே இரை கொண்டு போமா? பறக்கிற பறவைக்கு இருக்கிற கொம்பு நிலை வரமா? பறக்கிற பறவைக்குச் சிறகு ஒடிந்தாற் போல. பறக்கிற பறவைக்கு ஏது தூரம்? பறக்கிற பறவைக்குத் தூரம் பெரிதா? பறக்கிற பறவைக்குப் போகும் இடமெல்லாம் சொந்த ஊர்தான். பறக்கிற காகத்துக்கு இருக்கும் கொம்பு தெரியாதா? பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்பு தெரியாது; பரதே சிக்குத் தங்கும் இடம் தெரியாது. பறக்கையில் தெரியாதா காக்கையின் முடுக்கு? 13740 பறங்கிக்காய் அழுகலைப் பசுவுக்குப் போடு; பசுவுந் தின்னா விட்டால் பார்ப்பானுக்குக் கொடு. பறங்கிக் காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்தது போல. பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்? பறங்கி நல்லவன்; பிரம்பு பொல்லாதது. பறந்தால் இறக்கை வலிக்கும்கிற கிளிக்குக் கூண்டுதான் சொர்க்கம். பறந்து பறந்து பாடுபட்டாலும் பகலுக்குச் சோறு இல்லை. பறந்துபோகிற எச்சிற்கல்லை மேல் கல்லைத் தூக்கி வைத்தாற் போல. (எச்சில் இலை.) பறந்து போகிற காகமும் பார்த்து நின்று பறந்து போகும். பறப்பான் பயிர் இழந்தான்; அறக்காஞ்சி பெண்டு இழந்தான். (அறக்காஞ்சி - கஞ்சன்) பறவை பசித்தாலும் எட்டிக்கனியைத் தின்னாது. 13750 பறிகொடுத்த காட்டில் பயம் இல்லை. பறிகொடுத்ததும் அல்லாமல் பைத்தியக்காரப் பட்டமும் வந்தது. பறித்த காட்டுக்குப் பயமில்லை. பறிநிறைந்தால் கரை ஏறுவேன். பறைக்குடி நாய் குரைத்தால் பள்ளக்குடி நாயும் குரைக்கும். பறை கொழுத்தால் அறையிலே இருக்காது; நண்டு கொழுத் தால் வளையிலே இருக்காது. பறைச்சி முலை அழகு; பார்ப்பாத்தி தொடை அழகு; கோமுட்டிச்சி குறி அழகு. பறைச்சேரி அழிந்தால் அக்கிரகாரம். பறைச்சேரி நாய்குரைத்தால் பள்ளச்சேரி நாயும் குரைக்கும். பறைச்சேரி மேளம் fலியாணத்துக்கும் bகாட்டும்; fல்லெடுப்புக்கும் bகாட்டும். 13760 பறைச்சேரியில் முளைத்த வில்வமரம் போல. பறைத் தெருவிலே துளசி முளைத்தாற் போல (வில்வம்) பறைத் தெருவில் பிச்சை எடுத்தாவது இனத்தெருவில் காய்ச்சிக்குடி. பறைப்பாட்டுக்கும் பறைப்பேச்சுக்கும் சுரைப்பூவிற்கும் மணம் இல்லை. பறைப் பிள்ளையைப் பள்ளியில் வைத்தாலும் அனே என்கிற புத்தி போகாது. பறைப்புத்தி அரைப்புத்தி. பறைப்பேச்சோ? அரைப்பேச்சோ? பறையரிலே சிவத்தவனையும், பார்ப்பானிலே கருத் தவனையும் நம்பக் கூடாது. பறையனுக்குக் கலியாணமாம்; பாதி ராத்திரியிலே வாண வேடிக்கையாம். பறையனுக்குப் பட்டால் தெரியும்; நண்டுக்குச் சுட்டால் தெரியும். 13770 பறையனுக்கு வரிசை வந்தால் பாதி ராத்திரியிலேயே குடை பிடிப்பான். பறையனுக்கு வள்ளுவன் பாதிச் சைவன். பறையனை நம்பு; பார்ப்பானை நம்பாதே. பறையனைப் போல் பாடுபட்டுப் பார்ப்பானைப் போல் சாப்பிட வேண்டும். பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு என்ன? பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான். பறையன் பயிரிட்டுப் பழங்கலம் ஏறுவதில்லை. பறையன் பாக்குத் தின்பதும் பறைச்சி மஞ்சள் குளிப்பதும் அறுப்பும் பறிப்பும் மட்டும் (அறிப்பும்) பறையன் பொங்கல் இட்டால் பகவானுக்கு ஏறாதோ? (ஏலாதோ?) பறையன் பொங்கலிட்டாலும் பரமன் ஏற்றுக் கொள்வான். 13780 பறையன் வளர்த்த கோழியும் பார்ப்பான் வளர்த்த வாழையும் உருப்படா. பறையன் வீட்டில் பால்சோறு ஆக்கி என்ன? நெய்ச்சோறு ஆக்கி என்ன? பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப்பேச்சுப் போகுமா? பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சில் ஐயே என்னும். பறைவேலை அரை வேலை. பனங்காட்டில் இருந்து கொண்டு பால் குடித்தாலும் கள் என்பார்கள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? (அஞ்சாது) பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும். பனங்கிழங்கு முற்றினால் நாராகும். பனம் பழத்தில் நுங்கு நோண்டாமல் பதித்து வைத்தால் கிழங்காவது கிடைக்கும். 13790 பனிக் கண்ணோ மழைக் கண்ணோ! பனிக்கண் அடைத்தால் மழைக்கண் திறக்கும். (திறந்தால்) பனிக்காலம் போயிற்று; இனிக் காலனுக்கும் பயம் இல்லை. பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல். (வரகு, உளுந்து) பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை. பனி பெய்தால் வயல் விளையுமா? பனி பெய்து கடல் நிறையுமா? பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா? பனிப் பெருக்கிலே கப்பல் ஓடுமா? பனியால் குளம் நிறைதல் இல். 13800 பனியில் மருந்தடித்தால் பருத்துவரும் நெல்லு. பனியை நம்பி ஏர்பூட்டினது போல. பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சந்தேகம். பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம். பனை இருந்தாலும் ஆயிரம் வருடம்; இறந்தாலும் ஆயிரம் வருடம். பனை ஏறியும் பாளை தொடாது இறங்கினாற் போல. (பாளை) பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல. (கடா) பனை ஏறி விழுந்தவனைப் பாம்பு கடித்ததுபோல. பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது? பனை ஓலையில் நாய் மோண்டது போல. 13810 பனைக்குப் பத்தடி. பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ? பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம். பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல. (பொம்பளை மூத்திரம்) பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித் தான் என்பார்கள். (பனைமரத்து அடியில்) பனைமரத்து நிழலும் சரி; பரதேசி உறவும் சரி. பனை மரத்துக்கு நிழலும் இல்லை; பறையனுக்கு முறையும் இல்லை. பனை மரத்து நிழல்; பாம்பாட்டி வித்தை; தெலுங்கன் உறவு; தேவடியாள் சிநேகம் நாலும் பகை. பனை மரம் ஏறுகிறவனை எதுவரையில் தாங்கலாம்? பனையடியில் உட்கார்ந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். 13820 பனையிலிருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்ததாம். பனை விதை பெரிதாக இருந்தும் நிழல் கொடுக்க மாட்டாது. பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல. பனை வைத்தவன் பார்த்துச் சாவான்; தென்னை வைத்தவன் தின்று சாவான். (தின்னுப்புட்டுச்) பன்றிக் குட்டி ஆனை ஆகுமா? பன்றிக் குட்டிக்கு ஒரு சந்தி ஏது? பன்றிக் குட்டிக்குச் சோமவாரமா? பன்றிக் குட்டியும் பருவத்தில் பத்துப் பணம் பெறும். பன்றிக்குத் தவிடு வைக்கப் போனாலும் உர் என்கிறது; கழுத்து அறுக்கப் போனாலும் உர் என்கிறது. பன்றிக்குத் தவிடு வைப்பதும் தெரியாது; கழுத்து அறுப்பதும் தெரியாது. 13830 பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி. பன்றிக்குப் பின்போன பசுக்கன்றும் பீ தின்னும். (கன்றும்) பன்றிக்கும் பருவத்தில் அழகிடும். பன்றி பட்டால் அவனோட; காட்டானை பட்டால் பங்கு. பன்றி பல குட்டி போட்டும் பலன் என்ன? பன்றி பல ஈன்று என்ன? ஆனைக் குட்டி ஒன்று போதாதா? பன்றி புல் தின்றதனால் பயன் உண்டா? பன்றியைக் கட்டி வைத்துப் பலகாரம் போட்டாலும் காலையில் அவிழ்த்து விட்டால் மந்தைக்குத் தான்போகும். பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வீ தின்னும். (கூடிய, பீ) பன்றி வேட்டையில் பகல் கால் முறிந்த நாய்க்கு இரவு கரிப்பானையைக் கண்டால் பயம். 13840 பன்னி உரைத்திடிலோ பாரதமாகும். பன்னிப் பழங்கதை பேசாதே. பன்னீர் வாசனை பன்றிக்குத் தெரியுமா?  பா பாகல் மிதியுண்டும் பாகத்துக்கு உகந்தது. பாகல் விதைக்கச் சுரை முளைக்குமா? பாகற்காய் என்றால் பத்தியம் முறிந்து போகுமா? பாகற்காய்க்காகப் பங்கை ஏற்ற கதை போல. பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று சொன்னாளாம். பாகற்காய் விற்ற கூடை பணக்கூடை. பாகற்கொட்டை புதைக்கச் சுரைக்கொட்டை முளைக்குமா? 13850 பாகை சொந்தம் மற்ற தெல்லாம் இரவல். பாக்கத்தான் பேர் பெற்றான்; மாங்காட்டான் நீர்பெற்றான். (பாக்கம், மாங்காடு - ஊர்கள்) பாக்கியவதி என்று பறந்து ஓடி வந்தவன் கோத்திரத்தைக் கேட்டுக் குதித்து ஓடிப் போனான். பாக்கியவான் பிள்ளை முகத்தில் தெரியும். பாக்குக் கடிக்குமுன் பத்துமுறை மழை பெய்யும். பாக்குக் கொடுத்தால் பந்தலிலே என்ன அலுவல்? பாக்குத் தோப்பானால் மடியில் கட்டலாமா? பாக்கை மடியில் கட்டலாம்; தோப்பை மடியில் கட்ட முடியுமா? பாசத்தில் மிஞ்சியது ஆசாபாசம்; அதனிலும் மிஞ்சியது இரத்த பாசம். பாசமற வற்றிப் பசையறத் தேய்க்கிறது. 13860 பாசம் அற்றவன் பரதேசி. பாடகக் காரியிடம் பாரதம் சொன்னால் பாடகத்தைப் பார்ப்பாளா? பாரதத்தைக் கேட்பாளா? பாடகக்காரி வாழ்ந்தால் பத்தெட்டுச் சனம் பிழைக்கும். பாடத்தெரியாத பாகவதருக்குப் பக்க வாத்தியம் போதாதாம். பாடப்பாட இராகம்; காரக்கார (உ)ரோகம். பாடப்பாட இராகம்; படுக்கப் படுக்க (உ) ரோகம். பாடப்பாட இராகம்; மூட மூட (உ)ரோகம். பாடம் ஏறினும் ஏடது கைவிடேல். பாடல் இல்லாத தாசிபோல. பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டும் ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும். 13870 பாடிப் பாடிக் குற்றினாலும் பதக்குக் குறுணி ஆகுமா? பாடிப்பாடிக் குற்றினாலும் பதரில் அரிசி வராது (இல்லை) பாடிப்பாடிக் குற்றினாலும் பதரிலிருந்து அரிசி கிடைக்குமா? பாடிப் பாடிக் குற்றினாலும் பதர் அரிசி ஆகுமா? பாடு அறிந்து பாடுபட்டால் பாழும் காடும் நெல் விளையும். பாடு இல்லாமல் பயன் இல்லை. (பலன்) பாடு இல்லை; பலனும் இல்லை. (பாடும்) பாடு என்றால் பாணனும் பாடான். பாடுபடாமல் போனால் பலன் இல்லாமற் போகும். பாடுபட்ட அம்மாளுக்குப் பழைய சேலை; கூர்கெட்ட அம்மாளுக்குக் குறியோடு சேலை. 13880 பாடுபட்டால் கூலி தப்பாது; பிள்ளை பெற்றால் காணி தப்பாது. பாடுபட்ட நாய்க்குக் கேடு வந்ததைப் போல. பாடுபட்டவன் பட்டத்துக்கு இருப்பான். பாடுபட்டால் அல்லது பலன் இல்லை. பாடுபட்டால் பலன் உண்டு. பாடு பாடு என்றால் பறையனும் பாடமாட்டான்; தானாகப் பாடினால் தலைதெறிக்கப் பாடுவான். பாடும் புலவர் கையில் பட்டோலை போல. பாடு பேசும் போது பயறு நெறிக்காதே. (பாடு - பெருமை) (பயறு நெறித்தல் - இடைமறித்தல்) பாடை ஏறியும் ஏடு கைவிடேல் (ஏடது) பாடைக்குப் பிணம் பற்றாமல் போயிற்று. 13890 பாடைக்குச் செய்கிற அலங்காரமும் பண்ணையாளுக்குச் செய்கிற உபகாரமும் ஒன்று. பாடையிலே பார்க்க வேண்டுமென்றால் சாகையிலே வா. பாடையில் போகிற பிணத்தைப் பார்ப்பார் பஞ்சம்; அழுவார் கொஞ்சம். பாடையைச் சிங்காரிப்பதும் பண்ணையத்து ஆளுக்கு உதவுவதும் ஒன்று. பாட்டாளிக்குப் பத்து வள்ளம்; இளித்த வாயனுக்கு இருபது வள்ளம். பாட்டி கெட்டிக்காரி; பதக்குப் போட்டு முக்குறுணி என்பாள். பாட்டிக்குப் பல்லுத்தான் போனது சொல்லுப் போகவில்லை. பாட்டி சமைத்த மயிரில் கீரையும் இருந்தது. பாட்டி நூற்கிற நூலுக்கும் பேரன் கட்டுகிற அரைஞாண் கயிறுக்கும் சரி. (பேராண்டி) பாட்டி மஞ்சள் குளித்த கதை 13900 பாட்டுக்கு அழுவார்; பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாரதத்தைக் கண்டது இல்லை. பாட்டுப் பலிக்கும் பாக்கியவானுக்கு. பாட்டுப் பலித்தால் கிழவியும் பாடுவாள். (வாய்த்தால்) பாட்டுப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது. பாட்டுப் போன வெட்ட வெளியிலே வீட்டைக் கட்டுவானேன். பாண் சேரியில் பல்லைக் காட்டாதே. பாண் சேரியில் பாட்டுப் பாடுகிறதா? பாண்டியரில் இருவர்; ஆண்டியில் இருவர். (அதிவீரராம பாண்டியன், வரதுங்க பாண்டியன், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர். பாண்டைக் கருவாடே பானைத் தண்ணி செலவாச்சே. பாதகர் பழக்கம் பாம்பொடு பழக்கம் போல. 13910 பாதிக்காய் கறிக்கும்; பாதிக்காய் விதைக்குமா? (சுரைக்காய் கறிக்கும்) பாதிக் கிணறு தாண்டினாற் போல. பாதிப் பாக்கைக் கப்லில் போட்டுப் பங்குக்கு நின்றானாம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு. பாத்திரம் பொங்குகிறதற்குள்ளே ஆத்திரம் பொங்கக் கூடாது. பாப்பாத்தியம்மா மாடு வந்தது, கட்டினால் கட்டு, கட்டாட்டிப் போ. பாப்புக்கு மூப்பு இல்லை. பா பாதி; பண் பாதி. பாமணி ஆற்றிலே பல்லை விளக்கு; முல்லை ஆற்றிலே முகம் கழுவு. 13920 பாம்பறியும் பாம்பின் கால். பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு; கள்ளனுக்குக் களவாலே சாவு (பாம்பிலே, களவிலே) பாம்பாட்டி பாம்பிலே; கள்ளன் களவிலே. பாம்பாட்டி பாம்போடே. பாம்பிலும் பாம்புக்குட்டி விசம் அதிகம்; வீரியமும் அதிகம். பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பாம்பின் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்த கதை. பாம்பின் குட்டி பாம்பு; அதன் குட்டி நட்டுவக்காலி. பாம்பின் வாய்த் தேரை போல் ஆவதா? பாம்பு அடித்த கம்பு பறையனுக்கு. 13930 பாம்பு அடித்த தோசம் பொங்கலிட்டாலும் போகாது. பாம்பு ஆனாலும் பழகினது தேவலை. பாம்பு இரையை நினைத்தால் தேரை விதியை நினைக்கிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்பு என்றால் படையும் நடுங்கும்; குரங்கு என்றால் குழந்தைகள் கூடும். பாம்பு என்று அடிக்கவும் முடியவில்லை; பழுதை என்று மிதிக்கவும் முடியவில்லை. பாம்பு என்று தாண்டுதற்கும் இல்லை; பழுதை என்று மிதிப்பதற்கும் இல்லை. பாம்பு கடிக்கத் தேளுக்குப் பார்க்கிறதா? பாம்பு கிடக்குது புற்றுக்குள்ளே; பயம் கிடக்குது நெஞ்சுக் குள்ளே. பாம்புக்குப் பகை கருடன். 13940 பாம்புக்குப் பல்லில் விடம்; பார்ப்பானுக்கு உடம்பெல்லாம் விடம். பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்தாலும் படுவிடத்தைக் கொடுக்கும். பாம்புக்குட்டிக்கு விடம் பாலாடை வைத்துப் புகட்ட வேண்டுமா? பாம்புக் குட்டியைக் கண்ட இடத்தில் தலையை நசுக்கு. பாம்புக்குத் தச்சன் கறையான். பாம்புக்குத் தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டுகிறது. பாம்புக்குப் பல்லிலும் தேளுக்கு வாலிலும் விடம். பாம்புக்குப் பல்லிலே; துட்டனுக்கு உடம்பெல்லாம் விடம். பாம்புக்குப் பல்லில் விசம்; பங்காளிக்கு உடம்பிலே விசம். பாம்புக்குப் பாம்பு விடம் உண்டா? 13950 பாம்புக்குப் பால் வார்த்தாலும் கொத்தத்தான் செய்யும். பாம்புக்குப் பால்வார்த்தால் வார்த்தவனையே கடிக்கும். பாம்புக்குப் பால்வார்த்து வளர்த்தாலும் அதன் விடம் நீங்காது; வேம்புக்குத் தேன் வார்த்தாலும் வேப்பிலைக் கசப்பு மாறாது. பாம்புக்கு மருந்து கேட்கத் தேளுக்கு மந்திரித்தது போல. பாம்புக்கு மூப்பில்லை. (மூப்பேது) பாம்புக்கு மூப்பில்லை; பறையனுக்கு அம்பலமில்லை. பாம்புக்கு ராசா மூங்கில் தடி. பாம்புக்கு விடம் பல்லிலே; பரத்தைக்கு விடம் உடம்பெங்கும். பாம்புக்கு விடம் பல்லில்; பார்ப்பானுக்கு விடம் நாக்கில். பாம்புக்கோ தன்பசியைப் பற்றி நினைப்பு; தவளைக்கோ தன் விதியைப் பற்றி நினைப்பு. 13960 பாம்பு தன் பசியை நினைக்கும்; தேரை தன் விதியை நினைக்கும். பாம்பு தின்கிற ஊரிலே போனால் பாதிமுறி நமக்கு என்று இருக்க வேண்டும். (நடுத்துண்டு) பாம்பு தின்கிற வீட்டுக்குப் போனால் பருந்துண்டம் நம்மது என்று எடுக்க வேண்டும். பாம்பு பகையாம்; அதன் தோல் மட்டும் உறவாம். பாம்பு பகையும் தோல் உறவுமா? பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும். பாம்பு படம் விரித்து ஆடியதென்று நாங்கூழ்ப் பூச்சியும் தலைதூக்கி ஆடியதாம். பாம்புப் பிடாரனுக்குப் பாம்பாலே சாவு. பாம்பும் சாக வேண்டும்; கோலும் முறியக் கூடாது. பாம்பும் சாகக் கூடாது; தடியும் முறியக் கூடாது. 13970 பாம்பும் தப்பாமல் கொம்பும் முறியாமல் முடியுமா? பாம்பும் நோவாமல் பாம்பு அடித்த கோலும் நோவாமல் இருக்க வேண்டும். பாம்பும் போயிற்று; பாம்படித்தகோலும் போயிற்று. பாம்பை அடித்தால் பால் வார்த்துப் புதைக்க வேண்டும். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பைத் தின்று பாழ் மூலையில் இருக்கையில் வீம்புக் காய் என்னை வெளியில் இழுக்கிறீரா? பாம்பை நம்பினாலும் பார்ப்பானை நம்பாதே. பாம்பைப் பழுதை என்று மிதிக்கும் பருவம். பாம்பைப் பிடித்துப் பல்லைப் பார்ப்பதா? பாம்பை முட்டையிலே புலியைக் குட்டியிலே கொல்ல வேண்டும். 13980 பாம்போடு குடியிருப்பது போல. பாம்போடு பழகலாம்; பாதகக்காரனோடு பழகலாமா? (பழகாதே) பாம்போடு பழகேல். பாயாத கருங்காட்டிற்குப் பருத்தி விதைத்தால் பலன் தரும். பாயிரங் கூறிப் படை தொடுத்தால் என் செய்ய? பாயிருக்கிற அளவு கால் நீட்ட வேண்டும். பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னது போல. பாய்க்குத் தகுந்தபடி காலை நீட்டு. பாய்ச்சலும் வேண்டும்; காய்ச்சலும் வேண்டும். பாய்ச்சி அறுத்தால் பதக்கு நெல் கூடக் காணும். 13990 பாய்மரம் இல்லாத கப்பல் கரை சேராது. பாய்மரம் சேர்ந்த காகம் போல் (ஆனேன்) பாரதம் பாட்டு அறாது; இராமாயணம் பொருள் அறாது. பார புத்தியுள்ள பறவை பதரால் பிடிபட்டது. பாராத உடைமை பாழ். (காரியம்) பாராதே கெட்டது பயிர்; ஏறாதே கெட்டது குதிரை; கேளாதே கெட்டது கடன். பாராவும் வேண்டாம்; பள்ளயமும் வேண்டாம். பாரியாள் ரூபவதி; பர்த்தாவுக்கு நாற்றம். பாரின் ஆழம் வேரின் ஆழம். பாரைக்கு ஊடாடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு ஊடாடி விடும். (பாருக்கு) 14000 பார்க்கக் கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா? பார்க்க வந்தவர்க்குப் பல்வழி; தூக்க வந்தவர்க்குத் தோள் வழி. பார்க்காத உடைமை பாழ். பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ். பார்க்காமல் கெட்டது பயிர்; கேட்காமல் கெட்டது கடன். பார்க்கிற கண்ணிலும் கேட்கிற செவி இன்பம். பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாதது. பார்க்கிறவர்களுக்குப் பைத்தியக்காரி; மற்றவர்களுக்கு எல்லாம் வைத்தியக்காரி. பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவாயிற்று. பார்த்ததைக் கேட்பான் பார்ப்பான். 14010 பார்த்தவர்க்கு இன்பம்; படுபவர்க்குத் துன்பம். பார்த்தால் அத்திப்பழம் பிட்டுப்பார்த்தால் வெறுங்குப்பை. பார்த்தால் கிழவனடி; பத்தரை மாற்றுத் தங்கமடி. பார்த்தால் தெரியும் பாச பிடித்த நாரியை. பார்த்தால் தெரியுமா வருத்தம்? பட்டால்தான் தெரியும். பார்த்தால் தெரியுமா? பட்டால்தான் தெரியுமா வருத்தம்? பார்த்தால் பசப்பு; கடித்தால் கசப்பு. பார்த்தால் பசிதீரும் பாஞ்சாலி தன் அழகை. பார்த்தால் பசுப்போல; பாய்ந்தால் புலி போல. பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி. 14020 பார்த்தால் பண்டம்; பார்க்கா விட்டால் தண்டம். பார்த்தால் பைத்தியக்காரன்; பத்துப் பேரை அடிப்பான். பார்த்தால் மாடு; பார்க்காவிட்டால் சும்மாடு. பார்த்தாலும் பார்த்தேன் பார்ப்பானைப் போல் பார்த்ததில்லை. பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான். பார்த்திருந்தவன் பச்சை குத்தினான்; கேட்டிருந்தவன் வறுத்துக் குத்தினான். பார்த்திருந்தும் பாழும் கிணற்றில் விழுகிறதா? பார்த்துக் கெட்டது புன்செய்; பார்க்காமல் கெட்டது நன்செய். பார்த்துத் தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரம் நிற்கும். பார்த்துப் பார்த்துக் கண்ணும் பூத்துப் போச்சு. 14030 பார்ப்பவருக்கு இன்பம்; படுபவருக்குத் துன்பம். பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது; பார்த்துக் கொள்; பிடித்துக் கட்டிக் கொள். பார்ப்பாத்தி உப்புக் கண்டம் கடித்த கதை. பார்ப்பாத்தி உப்புக் கண்டம் பறி கொடுத்தது போல. பார்ப்பாரைப் பார்த்துக் கழுதை பரதேசம் போனதாம். பார்ப்பாரப் பையன் நண்டு பிடிப்பது போல. (பிள்ளை) பார்ப்பாரிடத்தில் வாயளவிலும் பேசக்கூடாது. பார்ப்பார் சேவகமும் வெள்ளைக் குதிரைச் சேவகமும் ஆகா. பார்ப்பானில் ஏழையையும் பசுவில் மோழையையும் நம்பக் கூடாது. பார்ப்பானில் ஏழையும் இல்லை; பறையனில் பணக்காரனும் இல்லை. 14440 பார்ப்பானில் கறுப்பும் பறையனில் வெளுப்பும் நம்ப முடியாது. பார்ப்பானுக்கு இடம் கொடாதே; பறையனுக்கு அம்பலம் கொடாதே. பார்ப்பானுக்கு இடம் விடாதே. பார்ப்பானுக்குச் செய்யும் உதவியும் வீண்; பாடைக்குச் செய்யும் ஒப்பனையும் வீண். பார்ப்பானுக்குப் பல்லில் விடம். பார்ப்பானுக்குப் பறப்பு; கோயிலுக்குச் சிறப்பு. பார்ப்பானுக்குப் பிறப்பு; கோயிலிலேயும் சிறப்பு. பார்ப்பானுக்குப் புத்தி பிடரியிலே. பார்ப்பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை. பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பார் இல்லாமல் கீழ்ச் சாதி ஆனான். 14450 பார்ப்பானுக்கு வாய் போடக் கூடாது; ஆண்டிக்கு அதுவும் சொல்லக் கூடாது. பார்ப்பானுக்கு வாய் போக்காதே; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே. பார்ப்பானுக்கு வாய் போக்காதே; தாதனுக்குத் தலை அசைக்காதே; ஆண்டிக்கு அதுதானும் செய்யாதே. பார்ப்பானுக்கு வாய் போக்கு; ஆண்டிக்கு அதுதானும் சொல்லாதே. பார்ப்பானை நம்பினாலும் பசுவை நம்பாதே. பார்ப்பானையும் பனங்காயையும் பதம்பார்த்துத் தட்ட வேண்டும். பார்ப்பானோ! ஏய்ப்பானோ! பார்ப்பான் ஏழையும் பசு ஏழையும் உண்டோ? பார்ப்பான் கருப்பும் பறையன் சிவப்பும் ஆகாது. பார்ப்பான் குளித்தால் (பசியை) பொறுக்க மாட்டான்; பறையன் பல் தேய்த்தால் (பசியை) பொறுக்க மாட்டான். 14460 பார்ப்பான் குளித்து இரான்; பள்ளி விளக்கி இராள். பார்ப்பான் சம்பாதித்தது பிண்டத்துக்கு; துலுக்கன் சம்பாதித்தது துண்டத்துக்கு; கவுண்டன் சம்பாதித்தது தண்டத்துக்கு. பார்ப்பான் சோறு பசிக்கு உதவாது. பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ, கொழ கொழ. பார்ப்பான் நட்பும் பனைமரத்து நிழலும் ஒருவருக்கும் பயன்படாது. பார்ப்பான் படி அரிசி உண்பான். பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை (கேட்பது). பார்ப்பான் பயிரிழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான். பார்ப்பான் பருப்பிலே கெட்டான்; துலுக்கன் துணியிலே கெட்டான். பார்ப்பான் முறையீடு பசுப் பாய்ச்சலோடு சரி. 14470 பார்ப்பான் வீட்டு வாழையும் குடியானவன் வீட்டுக் கோழியும் உருப்படா. பாலகருக்குப் பலம் அழுகை; மச்சத்துப் பலம் உதகம். பாலகருக்கு அழுகை பலம் ; மீனுக்குத் தண்ணீர் பலம். பாலாவுடையான் விருந்துக்கு அஞ்சான். பாலான நெஞ்செல்லாம் பகையாக்கினான். பாலி நிறைய சாலி விளையும். (பாலி - வாய்க்கால்) பாலுக்கு உண்டான பவிசும் இல்லை; பல்லக்குக்கு உண்டான மவுசும் இல்லை. பாலுக்குக் காவல் பூனையா? பாலுக்குச் சருக்கரை இல்லை என்போர்க்கும் கூழுக்கு உப்பு இல்லை என்போர்க்கும் விசாரம் ஒன்றே. பாலுக்குச் சீனி இல்லை என்பார் கோடி; கூழுக்கு உப்பு இல்லை என்பார் கோடி. 14480 பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன். பாலுக்கு மிஞ்சின சுவையும் இல்லை; பல்லக்குக்கு மிஞ்சின சொகுசும் இல்லை. (பவிசும்) பாலுக்கு வந்த பூனை மோரைக் குடிக்கலாமா? பாலும் ஆயிற்று; மருந்தும் ஆயிற்று. பாலும் சோறுமாய்த் தின்கிற பாளைக்காரன் மோட்டு வளையை எண்ணுகிறது போல. பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி; வேலும் வாளும் அடலுக்கு உறுதி. (அடல் - வெற்றி) பாலும் பதக்கு; மோரும் பதக்கே? பாலும் பருத்தியும் பத்து நாள். பாலும் வெள்ளை மோரும் வெள்ளை. பாலை அருந்தினாலும் காலத்தோடு அருந்த வேண்டும். 14490 பாலை ஊட்டுவார்கள்; பாக்கியத்தை ஊட்டுவார்களா? பாலை ஒரு கண்ணிலும் சீழை ஒரு கண்ணிலும் பார்ப்பது. பாலைக் குடிக்க வந்த பூனை மோரைக் குடிக்குமா? பாலைக் குடிக்கிற பூனைக்கு அடிக்க வருவது தெரியுமா? பாலைக் குடிக்கிற பூனை பானையையும் கொண்டு போமா? பாலைக் குடிக்கும் பூனை பசிக்காக மோரைக் குடிக்காது. பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம் வரும்; கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம் வரும். பாலைக் கொடுக்கலாம்; பாக்கியத்தைக் கொடுக்க முடியுமா? பாலைச் சுருக்கி மோரைப் பெருக்கிக் குடி. பாலைப் பார்க்காவிட்டாலும் பால் பானையைப் பார்க்க வேண்டும். 14500 பாலைப் பார்க்கிறதா? பானையைப் பார்க்கிறதா? பாலைப் பார்த்துப் பசுவைக் கொள்; தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள். பாலை விரும்பாத பூனையும் உண்டோ? பாலோடாயினும் காலமறிந்து உண். பாலோடு கலந்த நீரும் பாலாகும். பால் இருக்கிறது; பாக்கியம் இருக்கிறது; பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை. பால் உண்ட மேனி பற்றி எரிகிறது; நெய் உண்ட மேனி நெருப்பாய் எரிகிறது. பால் உள்ள மாட்டுக் கன்றே கன்று; பணம் உள்ள வீட்டுப் பெண்ணே பெண். பால் உள்ளான் விருந்துக்கு அஞ்சான். பால் கற என்றால் உதட்டிலே புண் என்கிறான். 14510 பால் காசு பாலோடு; தண்ணீர் காசு தண்ணீரோடு. பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் விலைப்பால் வாங்கி னானாம்; அதையும் பூனை குடித்ததாம். பால் கெட்டால் கெட்டதுதான். பால் கொடுத்தவளுக்குப் பாதகம் நினைக்காதே. பால் சட்டி படுக்கைக்குப் போகலாம்; பணியாரச் சட்டிப் புழக்கடைக்குத்தான் போக வேண்டும். பால் சுண்டினாலும் சுவை சுண்டுமா? பால் சுவை கன்றிலே தெரியும்; பாக்கியவான் பிள்ளை முகத்திலே தெரியும். பால் சோற்றுக்குப் பருப்புக் கறியா? பால் தொட்டுப் பால் கறக்க வேண்டும். பால் நக்காத பூனையும் பரிதானம் வாங்காத பார்ப்பனனும் உண்டோ? 14520 பால் பாக்கியம் இல்லாதவன் பணப் பால் கொண்டு வைத் தாலும் இராது. பால் புளிக்குமா? பழமொழி புளிக்குமா?(தவறுமா?) பால் புளித்தாலும் பழமொழி தவறாது. பாšபொங்கினாšபாšசட்டியிலே. பால் வார்த்த சோற்றுக்குத்தான்பழத்தை¥போடுகிறது. பாšவார்த்தவர்களுக்கு¥பfநினைக்க¡கூடாது. பால் வெள்ளமாகப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும். பால் வேண்டாத பூனையும் பழம் வேண்டாத குரங்கும் உண்டா? பாவத்திற்கு இடம் கொடாதவன் பாவத்தை வெற்றிக் கொள்வான். பாவத்திற்கு உழுத மாட்டைப் பல்லைப்பிடித்துப் பதம் பார்த்தானாம். 14530 பாவத்துக்குப் பிள்ளை பெற்றால் பாரி என்ன செய்கிறது? பாவம் உள்ள இடத்திலே பழி போம். பாவம் என்று பழந்துணி கொடுத்தால் முக்கத்தில் போய் முழம் போட்டு அளந்தாளாம். பாவம் என்று பழம் புடவையைக் கொடுத்தால் பின்னாடி போய் முழம் போட்டுப் பார்த்தாளாம். பாவம் ஒரு பக்கம்; பழி ஒரு பக்கம். (பழி இன்னொரு பக்கம்) பாவம் ஒன்று பார்த்தால் பழியொன்று வந்து சேரும். பாவலர் அருமை நாவலர் அறிவார். பாவி கொடுமை பாலும் புளிக்கிறது. பாவிக்கு நூறு வயது. பாவி பாக்கியம் பதக்கு விளையும். 14540 பாவி போன இடம் எல்லாம் பாதாளம். பாவி பாவம் பதராய் விளைந்தது. பாவியார் போன இடமெல்லாம் பள்ளமும் திட்டியும். பாவியே பார்த்துவிட்டுப் போ; புண்ணியவதியே போய்விட்டுவா பாவை பாடிய வாயால் கோவை பாடு. பாவையையும் பதார்த்தத்தையும் பார்த்துப் பொறுக்க வேண்டும். பாழடைந்த வீட்டிலெல்லாம் பேய் இருக்கும். பாழாய்ப் போகிறதைப் பசுவின் வாயிலே கொடுத்தானாம். பாழாய்ப் போகிறதைப் பசுவிடம் போடு; நாறிப் போகிறதை நாயிடம் போடு. பாழாய்ப் போனது பசி வயிற்றில். 14550 பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு. பாழுங் கிணற்றில் இடி விழுந்தால் யாருக்குக் கவலை? பாழூர்க்கு நரி இராசா. பாழூரில் பயிக்கம் புக்காற் போல. (பயிக்கம் - பிச்சை) பாளையத்து வண்ணான் வேளை பார்த்து வந்தான். பாறாங்கல்லே பறக்கிறபோது எச்சில் இலை பறக்கிறதைப் பற்றி எவன் கவலைப் படுவான். பாறை முறிக்க வேல மரம். பாறையில் அடித்த மர முளை. பாறையிலும் கோழி கிண்டும். பாற்கடலைக் குடிக்கப் பார்த்திடும் பூனை. 14560 பானை இருந்தால் கள் இறக்கலாம். பானை ஒட்டினாலும் ஒட்டும்; மாமியார் ஒட்டாள். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் (பருக்கை) பானைப் பாலுக்கு ஒரு சொட்டு விசம். பானை பண்ணுகிறவன் கையில் பானை உடையாது. பானை பிடித்தவள் பாக்கியசாலி; ஏர் பிடித்தவன் என் செய்வான்? பானையாய்ப் பண்ணினாலும் சரி; தோண்டியாய்ப் பண்ணி னாலும் சரி, பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக் குறுணி தெய்வம் கூத்தாடும். பானையில் அரிசி இருந்தால் பார்ப்பான் கண் உறங்கான். பானையில் இருந்தால் அகப்பையில் வரும். (உண்டானால் 14570 பானையில் இருந்தால் பார்ப்பான் கண் அடையான். பானையோடு தின்று பறையனோடு போகிறார்களா? பானை வாயை மூடலாம்; பட்டணத்து வாயை மூடலாமா? பானை விற்ற லாபமும் யானை விற்ற லாபமும் ஒன்றாக இருக்குமா?  பி பிசினி தன்னைப் பசனிப்பது வீண். (பிசினாரி) பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை. பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும். பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அதைப் பிடுங்குமாம் அனுமார். பிச்சை எடுப்பது பெருமாள்; அதைப் பிடுங்கித் தின்பது அனுமார். பிச்சை எடுப்பதிலும் பிகுவா? (பிகுவலி) 14580 பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு. பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செல்பவனுக்குக் கூத்தியார் பெருமை. பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு? பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம். (இரண்டு) பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா? பிச்சைக் காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம். பிச்சைக் காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையில் பேண்டானாம். பிச்சைக் காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம். (செம்பைப்) (சோளி - பை). பிச்சைக் காரன் சோற்றிலே சனீசுவரன் புகுந்தானாம். பிச்சைக்காரன் தன் கந்தையை மெச்சிக் கொண்டாற்போல. 14590 பிச்சைக் காரன் வாந்தி எடுத்தது போல. பிச்சைக்கு அஞ்சிக் குடி போனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம். பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன? பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை. பிச்சைக் குடி பெரிய குடி. பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல. பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது. பிச்சைக்கு என்று வந்துவிட்ட ஆண்டி பிச்சை வேண்டாம் என்பானா? பிச்சைக்குப் பிச்சையும் கெட்டு அரைக்காசு நாமும் கெட்டது. பிச்சைக்குப் போனாலும் முகப் பாக்கியம் வேண்டும். 14600 பிச்சைக்கு வந்த ஆண்டி, இல்லை என்றால் போவானா? பிச்சைக்கு வந்தவளைப் பெண்டாள அழைத்தது போல. பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு அழைத்தது போல பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளையா? (மாப்பிள்ளை) பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா? பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறா? (குழந்தை) பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா? பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான். பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை. பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா? 14610 பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இச்லை; ஏச்சும் இல்லை. பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல. பிச்சை புகினும் கற்கை நன்றே. பிச்சை போட்டுக் கெட்டவனும் இல்லை; பொய் பேசி வாழ்ந்தவனும் இல்லை. பிச்சையிட்டது போதும் நாயைப் பிடித்துக் கட்டும். பிச்சையிட்டுக் கெட்டாள் (கெட்டவனும்) இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவளும் இல்லை. பிச்சையிட்டுக் கெட்டவனும் உண்டா? பிச்சை எடுத்தும் பகைவன் குடியைக் கெடு. பிஞ்சிலே பழுத்ததும் ஐந்தில் பழுத்ததும் உருப்படாது. பிஞ்சிலே பழுக்கிற பேர் வழி. 14620 பிஞ்சிலே பழுத்தவன் அஞ்சிலே கருகிடுவான். பிஞ்சிலே முற்றிய பீர்க்கங்காய். பிஞ்சு வற்றினால் புளி ஆகாது. பிடரியில் ஆட்டைப் போட்டுக் கொண்டு இடையன் தேடினானாம். பிடரியைப் பிடித்துத் தள்ள பெண்ணுடைய சிற்றப்ப னென்று நுழைந்தானாம். பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா? பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம். பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டது போல. பிடாரியைப் பெண்டு வைத்துக் கெண்டவன் பேயன். பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது. (ஓச்சன் - பூசாரி) 14630 பிடி இல்லாமல் குடை இருந்து என்ன பயன்? பிடிக்காத மருமகள் ருசிக்காமல்தான் சமைப்பாள். பிடிக்கு ஏழுகாய் இருந்தால் செடிக்குப் படி எள்ளு. பிடிகீரை தினமும் உண்டால் பிணி பலவும் தீரும். பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும். பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின. பிடித்த கொம்பையும் விட்டு, மிதித்த கொம்பையும் விட்டானாம். பிடித்த கொம்பை விடாதே. பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது. பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம். 14640 பிடித்த முயலுக்கு மூன்றே கால். பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டா? பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டாவாள். பிடித்தால் கற்றை; விட்டால் கூளம். (சுமை) பிடித்தாலும் பிடித்தான், புளியங் கொம்பைப் பிடித்தான். (பிடித்தாய்) பிடித்தால் புளியங் கொம்பாகப் பிடிக்க வேண்டும். (பெரிய கொம்பாக) பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும். பிடித்தால் பானை; விட்டால் ஓடு. பிடித்து ஒரு பிடியும் கிழித்து ஒரு கிழியும் கொடுத்ததுண்டா? பிடித்துச் சாப்பிடுவதைக் கரைத்துச் சாப்பிடலாம். 14650 பிடித்துத் தின்கிறதைக் கரைத்துக் குடிக்கலாம். (தின்கிறதை) பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழித்து எறிந்தால் சாணி. (சாணி மொத்தை) பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா? (கோட்டை கோட்டையாய்) பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல். பிடியில் அழகு புகுந்தால் பெண் அழகி ஆவாள். (பிடி - அழகு) பிடி வாதம் குடி நாசம். பிடி வாதம் தீர மிடிவாதம் வேண்டுமாம். பிடி வாதமும் எதிர்வாதமும் பெண்களுக்கு ஆகாது. பிடி வாதத்திற்கு எதிர்வாதம் இல்லை. பிடி விதை விளையும்; மடி விதை தீயும். பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும். 14660 பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம். பிட்டுத் தின்று விக்கினாற் போல. பிணத்துக்கு அழுகிறாயா? குணத்தக்கு அழுகிறாயா? பிணத்தை மூடி மணத்தைச் செய். பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது. பிணம் தின்னிக் கழுகு. பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால் மாடு என்ன? பிணம் தூக்க வந்துவிட்டுக் கால் மாடு என்ன? தலைமாடு என்ன? பிணம் நாற யார் சும்மா இருப்பார்? பிணம் பிடுங்கித் தின்கிறவன் வீட்டில் புத்தரிசி யாசகத் துக்குப் போனானாம். 14670 பிணம் போன இடத்துக்குத் துக்கமும் போகிறது. பிணியாளியாய் இருந்தாலும் கடனாளியாய் இராதே. பிணி ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம். பிணை பட்டாயோ? துணை பட்டாயோ? பிணைப் பட்டால் குரு; துணைப் பட்டால் சா. பிணைப் பட்டுத் துணை போகாதே. பிணைப் பட்டுக் கொள்ளாதே; பெரும் பாவத்தை அடைவாய். பிணையில் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்ட முடியுமா? (இட்ட) பிண்டத்துக்கு இல்லாவிட்டாலும் தண்டத்துக்கு அகப்படும். பிண்டத்துக்குக் கிடைக்காது; தண்டத்துக்கு அகப்படும். (கிடையாது) 14680 பிண்டத்துக்கு ஒத்தது அண்டத்துக்கும். பிண்டம் பெருங்காயம்; அன்னம் கத்தூரி. பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கில் பேளுவேன். பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா? பித்தத்துக்குப் பகை இஞ்சி. பித்தம் தெளியவும் மருந்து உண்டு. பித்தம் பத்து விதம். பித்தளையைத் துலக்கினாலும் பொன் குணம் வருமா? பித்தளை நாற்றம் அறியாது. பித்தளை மணியற்றவளுக்குப் பொன்மணி என்று பெயர். 14690 பித்தளையைத் துலக்கிப் பொன்னாக்கிட முடியுமா? பித்தனுக்குத் தன்குணம் நூலினும் செவ்வை. பித்தனுக்குப் புத்தி சொன்னால் கேட்பானா? பித்துப் பிடித்தாற் போலப் பிடித்ததைப் பிடிக்கிறது. பிய்த்து விட்டாலும் போயிற்று; பிடுங்கி விட்டாலும் போயிற்று. பிய்ந்த சீலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா. பிய்ப்பானேன்? தைப்பானேன்? (கடிப்பானேன்?) பிரம தேவன் நினைத்தால் ஆயுசுக்குப் பஞ்சமா? பிராணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி. பிராமணனுக்கு இடம் கொடாதே. 14700 பிரியந் தாங்கமாட்டாமல் புருசனை அப்பா என்று சொன்னாற் போல. பிரியமில்லாப் பெண்டிற் பேய் நன்று. பிலுக்குகிறாள் பிலுக்கிறாள் பித்தளைக் காசுக்கு. பிழுக்கை வாரியும் பால் கொள்வர். பிழைக்கிற பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டாம். பிழைக்கிற பிள்ளையானால் உள்ளுரிலே பிழைக்காதா? பிழைக்கிற பிள்ளைக்குப் புழக்கடையிலும் மருந்து இருக்கும். பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா? பிழைக்கிற பிள்ளை இறைக் கழிச்சல் கழியுமா? (இந்தக்) பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா? 14710 பிழைத்த வீட்டில் ஒரு குன்றிமணித் தங்கமாவது வேண்டாமா? பிழைத்தால் பொறாமை; பொறுக்கித் தின்றால் கொண்டாட்டம். பிழைத்தால் பெண்; பிழைக்கவில்லை யென்றால் மண். பிழைத்த வீடு கெட்டால் பொரி ஓட்டுக் கூட உதவாது. பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம். பிழைப்பற்ற நாவிதன் பொண்டாட்டித் தலையைச் சிரைத்தானாம். (அம்பட்டன்) பிள்ளை அருமை பெற்றவளுக்குத் தெரியும். பிள்ளை அருமை மலடி அறிவாளா? பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி. பிள்ளை இல்லாச் சோறு புழு. 14720 பிள்ளை இல்லாத சொத்துக்குத்தான் வாரிசுதாரர்கள் எத்தனை பேர்? பிள்ளை இல்லாத சொத்துப் பாழ் போகிறதா? பிள்ளை இல்லாதவன் சொத்துக்குக் கொள்ளைக்காரர் பத்துப் பேர். பிள்ளை இல்லாத வீடு சுடுகாடு. பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்? பிள்ளை இல்லாதவள் சாணிச் சட்டியை மோந்து பார்த்தாற் போல. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளிக் குதிச்சானாம். (விளையாடினானாம்.) பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதைவிடபிச்rஎடுத்து¥பிழைக்கலாம். பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை. பிள்ளை என்றால் பேயும் இரங்கும். 14730 பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட நல்லோரும் பெருகுவாரே. பிள்ளைகள் கல்யாணம் கொள்ளை கிடைக்காதா? பிள்ளைக்காபுழுக்கைக்கhஇட§கொடுக்க¥போகாது? பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் பாடுக்கு அழுகிறான். (பணி செய்வோன்) பணிச்சவன் - பிணம் தூக்கி. பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுதால் பிச்சைக்காரன் பெண்டுக்கு அழுதானாம். பிள்ளைக்காரி குசு விட்டால் பிள்ளைமேல் சாக்கு. பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம். பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீன் சமைத்துக் கொடு. பிள்ளைக்குப் பிள்ளைதான் பெற முடியாது; மலத்துக்கு மலம் Éடிக்கKடியாதா?(Éo¡f - பேள) பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான். 14740 பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே. பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார். பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராணசங்கடம். பிள்ளைக்குறை பெருங்குறை பிள்ளைச் Óர்bகாள்ளக்»டைக்குமா? பிள்ளை செத்ததில் குற்றமில்லை; சொல்லியழ முடியவில்லை. பிள்ளைத் தாய்ச்சிக்குத்தானே பண்டுதம் தெரியும். பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா? பிள்ளைதான் உயர்த்தி; மலம்கூடவா உயர்த்தி? பிள்ளைத் திறத்தைப் பேளவிட்டுப் பார். 14750 பிள்ளை தேவலை; ஆனால் பொழுது போனால் கண் தெரியாது. பிள்ளை நல்லதுதான் பொழுது போனால் கண் தெரியாது. பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை. பிள்ளை பதினாறு பெறுவாளென்று எழுதியிருந்தாலும், புருசன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்? பிள்ளை பாசத்தை விட புருசன் பாசம் பெரிது. பிள்ளை பாசம் பெற்றோரை விடாது. பிள்ளை பிறக்குமுன் பேரிடுகிறதா? (பேரிடுகிறது) பிள்ளை பிறக்கும் பூமி பிறக்காது. பிள்ளை பிறந்த ஊருக்குப் புடவை வேணுமா? பிள்ளை பிறந்தல்லவோ பேரிட வேண்டும். 14760 பிள்ளை பிறப்பதற்குள் பேரு வைக்கிற கதையா? பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம். பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை. பிள்ளை பெறுகிறவளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாளாம் மலடி. பிள்ளை பெற்ற பிறகன்றோ பெயர் இட வேண்டும். பிள்ளை பெற்ற வயிறோ? நெல் எடுத்த குழியோ? பிள்ளை பெற்ற வயிறு மண்ணெடுத்த கிணறு. பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு ஆவதென்ன? பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்ட மாதிரி. பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்க மில்லை. 14770 பிள்ளை பெற்றபின்தான் பேரிட வேண்டும். பிள்ளை பெற்றாயோ பிறப்பை எடுத்தாயோ? பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை. பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார். பிள்ளை பெற்றும் பிச்சையெடுத்தும் கெட்ட பேரில்லை. பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் ஆமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும். பிள்ளை மடியில் பேண்டுவிட்டால் தொடையை அறுக்கிறதா? பிள்ளையாண்டான் கெட்டிக்காரன் பொழுதுபோனால் கண் தெரியாது. பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல. பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம். 14780 பிள்ளையாரைச் சாக்கிட்டும் பூதம் விழுங்கிற்றாம். பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல. பிள்ளையாரைப் பிடித்த சனி அரச மரத்தையும் பிடித்து ஆட்டியதாம். பிள்ளையார் கோயிலில் கள்ளன் இருக்கிறான்; சொன்னாலும் கோள் போலிருக்கும். பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காய் முடிந்தது. பிள்ளையில்லாத் தாசனுக்குக் கண்ணைச் சுற்றி நாமம். பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது. பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா? பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர்விட்டால் பெருங்கதி யுண்டு. 14790 பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை. பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா. பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும்; முருங்கையை ஒடித்து வளர்க்க வேண்டும். பிள்ளையை ஆசிரியரும் பெண்ணை மாமியாரும் கண்டிக்க வேண்டும். பிள்ளையைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்குகிறது. பிள்ளையைப் பெற்றால் கண்ணீர்; தென்னையைப் பெற்றால் இளநீர். பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறதா? பிள்ளையை விட்டுத் திருடுவது போல. பிள்ளை வரம் கேட்கப் போன இடத்திலே புருசனைப் பறி கொடுத்தாளாம். பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா? 14800 பிள்ளையை வளர்க்கிறதை விடத் தென்னையை வளர்க்கலாம். பிறக்கப் பிறக்கத் தம்பி; பெருக்கப் பெருக்கத் தாயாதி. பிறக்கப் போகிற பிள்ளைக்குப் புழக்கடையில் மருந்து. பிறக்காத பிள்ளைக்கு நிறக்காத பொட்டு வைத்தாளாம். பிறக்கிற பொழுதே முடமானால் பேய்க்குப் படைத்தால் தீருமா? பிறக்கு விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் திரும்ப வருமா? பிறக்கு - முதுகு) பிறக்கும் நேரத்தையும் இறக்கும் நேரத்தையும் சரியாகக் கணிக்கமுடியாது. பிறக்கும் போது தம்பி; பெருத்தால் தாயாதி. பிறக்கும் போது பிறந்த குணம் போகப் போக மாறும். பிறக்கும் போதும் இறக்கும் போதும் கூட இருப்பது ஒன்று மில்லை 14810 பிறக்கும் போது யார் என்ன கொண்டு வந்தார்? பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப்பிள்ளை. பிறத்தியாருக்கு வாத்தியார். பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு. பிறந்த இடத்து வண்மையை உடன் பிறந்தானிடத்தில் சொல்கிறதா? பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம். பிறந்த ஊருக்குப் புடவை வேண்டுமா? பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண். பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொன்னது போல். பிறந்தகத்துக்குப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம். 14820 பிறந்தகத்துக்குத் துக்கம் கொல்லையிலே. பிறந்ததெல்லாம் பிள்ளையா? பிறந்த பிள்ளை பிடிசோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்களாம். பிறந்தவன் இறப்பது உறுதி. பிறந்தவன் பேச்சு கறந்த பால் போல; புருசன் பேச்சு மடிப் பாலு போல. பிறந்த வீட்டுப் பெருமையை உடன்பிறந்தவனிடம் சொல்லிக் காட்டுவதா? பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும். பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும். பிறந்தன்னைக்கு வந்தது பொங்கலிட்டாப் போகுமா? பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி. 14830 பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேண்டும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேண்டும். பிறப்பால் சிறப்பில்லை. பிறப்பும் ஒன்றே; இறப்பும் ஒன்றே. பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல. பிறப்பு உரிமை வேறு; சிறப்பு உரிமை வேறு. பிறரை மதிக்கத் தெரிந்தவனைத்தான் பிறர் மதிப்பர். பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண். பிறர்க்கு இறுங்கு இடிக்க வல்லார் தமக்கு அவல் இடிக்க மாட்டாரோ? பிறர் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறதா? பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான். (பறி கொடுப்பான்) 14840 பிறவாத பிள்ளைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம். பிறவிக் குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது. பிறவிக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது. பிறவிக் குணம் பொங்கல் இட்டாலும் போகாது. பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. பிறவிக் குருடனுக்குக் காது நன்றாகக் கேட்கும் பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா? பிறவிக்குருடனுக்குப் பெயர் கண்ணாயிரமாம். பிறவிக் குருடனிரடு பலத்த முடிச்சாயிருக்கும். பிறவிக் குருடனை இராசவிழி விழிக்கச் சொன்னால் விழிப்பானா? 14850 பிறவிக் குருடன் கண் பெற்று இழந்தாற் போல. பிறவிச் செவிடனுக்குப் பேசத் திறம் உண்டா? பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு. பிறவியோடு பிறந்த புழுக்கைக் குணம் ஒருபோதும் போகாது. பிறன் மனை புகாமை அறம் எனத்தகும். பிறையைப் பாம்பு தொட்டுத் தரையில் விழுவது போல. பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல். பின் இன்னா பேதையார் நட்பு. பின் புத்திக்காரன் பிராமணன். பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை. 14860 பின்னால் காரி வந்தாலும் கொண்டைக்காரி ஆவாளா? பின்னால் இருந்து உண்டு குடைகிறான். பின்னால் இருந்து கூண்டு முடைகிறான். பின்னால் வரும் துன்பத்தை எண்ணி முன்னாலேயே மனம் புழுங்குவானேன்? பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம். பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம். பின்னே போனால் உதைக்கும்; முன்னே போனால் முட்டும். (ஆனால், எறியும்) பின்னே யானால் எறியும்; முன்னே யானால் முட்டும். பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.  பீ பீக்கு முந்தின குசுப்போல. 14870 பீச்சண்டை பெருஞ்சண்டை. பீடம் தெரியாமல் சாமி ஆடலாமா? பீடு படைத்தவன் கோடியில் ஒருவன். பீடை பிடித்தாலும் விடாது; துறத்தினாலும் போகாது. பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை. பீ தின்கிறதிலேயும் ஒய்யாரமா? பீ தின்கிறதுபோல் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்லுகிறது. பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடிகிற மட்டும் பேளச் சொல்லி அடித்தானாம். பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா? பீ தின்ன வந்த நாய் சூத்தைக் கடிக்கப் போகிறதா? 14880 பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாகக் கழுவிப் போட வேண்டும். பீ தின்னுகிற நாய்க்கு பேர் முத்துமாலை. பீ தின்னும் வாயைத் துடைத்தது போல. பீ மிதித்த காலுக்குப் பீலி மெட்டி வேண்டுமா? பேனரித்த காதுக்குப்பெரிய கொப்பு வேண்டுமா? பீயிலே கல்லெறிந்தால் மேலேதான் தெறிக்கும். பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான். பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா? பீயும் சோறும் பிசைந்து தின்கிறான். பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும். பீயைப் பெரிதாய் எண்ணி ஈமொய்க்காமல் வேடு கட்டுவானேன். 14890 பீரம் பேணில் பாரம் தாங்கும். பீர்க்குப் பூத்தது விளக்கை ஏற்று. பீலா பூத்த சோறு பெரிய பறங்கியாப் பேளும் பேளும். பீலி காலாழி இன்றியும் கலியாணமா? பீலித் தண்ணீர் வாய்க்காலுக்குச் சாருமா? பீறின புடைவை பெருநாள் இராது. (வராது) பீறின புடைவையும் பொய் சொன்ன வாயும் நிற்குமா? பீற்றல் பட்டைக்கு அறுதல் கொடி. பீற்றல் முறமும் எழுதாத ஓலையும்.  பு புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி. 14900 புகழ்ந்தாரைப் போற்றி வாழ். புகழ் பசியைப் போக்குமா? புகை இருந்தால் நெருப்பு இருக்கும். புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது. புகைச் சரக்கு வகைக்கு ஆகாது. புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம். புகை நுழையாத இடத்திலேயும் அவன் நுழைவான். புகைந்த வீட்டைச் சுற்றுகிறது. புகைபோட்டுப் பழுக்க வைத்த பழம் தோல்தான் நிறம் மாறும்; துவர்ப்பு மாறாது. புகையிலைக்குப் புழுதிக் கொல்லை. 14910 புகையிலை விரித்தாற் போச்சு; பொம்பளை சிரித்தால் போச்சு. புகையிலையைப் பிரிக்காதே; பெண்பிள்ளை பேச்சைக் கேட்காதே. புகை வீட்டைச் சுற்றும்; பகை வாழ்க்கையைச் சுற்றும். புங்க நிழலும் புது மண்ணும் போல். புங்கப் புகழே தங்க நிழலே. புங்க மர நிழலும் தொடுப் போட வீடும் ஒண்ணு. புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும். புஞ்சையில் ஒரு தரம்; நஞ்சையில் இருதரம் பார்க்க வேண்டும். புஞ்சையானாலும் பலம் சேர. புஞ்சையில் புதிது; நஞ்சையில் பழையது. 14920 புஞ்சை விளைந்தால் பஞ்சம் தீரும். புடம் போட்டால் பொன்வேறு களிம்பு வேறு. புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர். புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால், கோணிப்பையைக் கட்டிக்கொண்டு குறுக்கே வந்தாளாம். புடவைக்காரி போனால் பாவாடைக்காரி வருகிறாள். புடைவையை வழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும். புட்டத்திலே சிரங்கும் எதிர்வீட்டுக்கடனும் ஆகாது. புட்டி விதைக்கு பிடிவிதை மேல். புட்டி விதையில் பிடிவிதை மூத்தது. புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம். 14930 புட்டு தின்கிறதைக் கரைத்துக் குடிப்போமே. புட்பம் என்றும் சொல்லலாம்; புபம் என்றும் சொல்லலாம்; ஐயா சொன்ன மாதிரியும் சொல்லலாம். புண்ணியத்துக்குக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தானாம். புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல. புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம். (பின்னாலே) புண்ணியம் இருந்து பெண்டு வாய்க்க வேண்டும்; பாக்கியம் இருந்து பசு வாய்க்க வேண்டும். புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண். புண்ணியம் ஒருவன் பங்கல்ல. புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம். புண்ணியவானுக்குப் பெண்டு வாய்க்கும்; பாக்கியவானுக்குப் பண்டம் வாய்க்கும். 14940 புண்ணிலே கோல் இட்டாற் போல. புண்ணிலே புளி பட்டதுபோல புண்ணின் மேல் பூச்சியும் கடித்தது. ò©Q¡nfh kUªJ¡nfh åu«.(år«) புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும். புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்? புண்பட்ட மனத்தைப் புகையை விட்டு ஆற்று. புதன் கோடி தினம் கோடி. புதன் சனி முழுகு. புதிதுபுதிதாய்ப் பண்ணையம் வைத்ததால் மசிரு மசிரா விளைந்ததாம். 14950 புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிக்குப் புலிகளைக் கண்டால் பயம் தெரியாது. புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான். புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான். புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும். புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும். (புதுத் துடைப்பம்) புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேட வேண்டும். புதிய வண்ணான் கடைசிக்கு வெளுத்தானாம். புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான். புதியாரை நம்பி பழையாரைக் கைவிடலாமா? புதுக்குடத்தில் வார்த்த தண்ணீர் போல. 14960 புதுக்கோட்டைக் கருப்பண்ணனுக்கு பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார். புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவக்கோட்டைத் தேவடியாளைப் பார். புதுக்கோடி கிடைத்தாலும் பொன்கோடி கிடைக்காது. புதுசுல வண்ணான் சுருக்கா வெளுத்தான். புதுச் செருப்பு கடிக்கும்னு பயந்தவனுக்குப் பழைய செருப்பு தடுக்கிப் பல்லுபோன கதையாயிடுச்சு. புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே. புதுப்பணக்காரனிடம் கடன் வாங்கினால் மூச்சுக்கு முந்நூறு தடவை திருப்பிக் கேட்பான். புதுப் பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை? புதுப் பானைக்கு ஈ சேராது. புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும். 14970 புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல. புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா? புதுப் பெண் மோடு தூக்கும். (மேடு) புதுமாடு புல்லுப் பெறும். புதுமைக்கு வண்ணான் பறைதட்டி வெளுப்பான்; பழகப்பழகப் பழந்துணியும் கொடான். புது வண்ணான் கோணியும் வெளுப்பான். புது வட்டியைக் கண்டால் எட்டுவட்டித் தண்ணீர் குடிப்பான். புது வளைன்னு சந்தோசப்பட்டுப் பூனைவாய்க்குள்ளே புகுந்ததாம் சுண்டெலி. புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம். புது விளக்குமாறு நாலு நாளைக்குப் பரக்கு பரக்குணுதாம் கூட்டும். 14980 புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல. புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக் கொண்டு போயிற்று. புதை சேற்றுக்கு நடுவில் நின்றுகொண்டு குடிப்பான், பொதி சுமக்க ஆசைப்பட்ட கதையா? புதையல் தேடிப் போய் புதைமணலில் சிக்கிய கதை. புத்தி அற்றான் பலன் அற்றான். புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார். புத்தி உரம். புத்தி உள்ளவர் பொறுப்பார். புத்தி உறப் புகழ். புத்தி எத்தனை? கத்தி எத்தனை? 14990 புத்தி கட்டை பெயர் முத்துமாணிக்கம். புத்தி கெட்ட புதுப்பாளையம்; போக்கிரி பாண்டமங்கலம்; மூணும் கெட்ட மோகனூர். புத்தி கெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது. புத்திமான் பலவான் ஆவான். புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை. புத்தியற்றவர்கள் பத்தியாய்ச் செய்வதும் விபரீதம். புத்தியற்றவர்கள் குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வார்கள். புயலுக்குப் பின் அமைதி. புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை. 15000 புரட்டாசி காய்ந்து பிறக்க வேண்டும். புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும். புரட்டாசி நடுகை திரட்சியான நடுகை. புரட்டாசி பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும். புரட்டாசிப் பதினைந்தில் நடவே நடாதே. புரட்டாசிப் பாதியில் சம்பா நடு. புரட்டாசிப் புரண்டுருண்டு போகும். புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும். புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும். புரட்டாசி பெரு மழை. 15010 புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம். புரட்டாசி மாதத்தில் பேர் எள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை. புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா? புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும். புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது. புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும். (உணவு) புரட்டாசி வெயிலில் பொன் உருகும். புரட்டாசி வெயில் பொன்னுருகக் காயும்; மண்ணுருகப் பேயும். புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்றானாம். புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள். 15020 புரளன் கரை ஏற மாட்டான். புருசனுக்கு ஏற்ற மாராப்பு. புருசனைப் பார்க்கும் போது தாலி எங்கே என்று தேடினாளாம். புருசனை வைத்துக்கொண்டு அவிசாரி போனது போல. புருசன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தாளாம். புருசன் அடித்தது பெரிதல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம். புருசன் இல்லாதவளுக்கு மானம் இல்லை; வீடு இல்லாத வனுக்கு ஈனம் இல்லை. புருசன் இல்லாத வீடும்; அரசன் இல்லாத நாடும் பாழ். புருசன் இல்லாமல் பிள்ளை பெறலாமா? புருசன் செத்த பிறகுதான் பெண்டாட்டிக்குப் புத்தி வந்தது. 15030 புருசன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம். புருசன் பொண்டாட்டியை அடிச்சானாம்; கேட்டுக்கிட்டு இருந்தவன் நானுக்கிட்டுச் செத்தானாம். புருசன் மேல் உள்ள ஆத்திரத்தைப் பிள்ளை மேல் காட்டினாளாம். புருசன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பைமேடு ஏறி சண்டை போடுவாளாம். புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ? புருவத்துக்கு மை இட்டால் கண்ணுக்கு அழகு. புருவம் நரைத்தால் பருவம் நரைத்தது. புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ். புலவருக்கு வெண்பா புலி. புலவனுக்கு அரசமுடி தக்காது; நாய்க்கு பூமுடி தக்குமா? 15040 புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும். (அடித்ததோ?) புலி அடித்தது பாதி; கிலி அடித்தது பாதி. புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்? புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா? புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது. புலி இளைத்தால் எலி கூப்பிடும். புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும். புலிக்காட்டிலே புகுந்த மான் போல. (குகையிலே) புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான். புலிக்கு அரிய உணவைப் பூனை பூசிக்குமோ? 15050 புலிக்குட்டிக்குப் பாய்ச்சல் கற்றுக் கொடுக்க வேண்டுமா? புலிக்குத் தன்காடும் இல்லை; பிறகாடும் இல்லை. புலிக்குத் தன்காடு வேற்றுக்காடு உண்டா? (கிடையாது) புலிக்குப் பயந்தவர்கள் என்மேல் படுத்துக்கொள்ளுங்கள். புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? (பூனையாய்ப் போகுமா?) புலிக்குப் பிறந்து நகம் இல்லாமல் போகுமா? புலிக்குப் பிறந்துவிட்டு நகம் இல்லை என்று போகலாமா? புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை. புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும், பூனை குத்தின சுளிக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? 15060 புலி செவி திருகிய மத களிறு. புலி நகம் படாவிட்டாலும் அதன் குத்தினாலும் விசம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா? (தின்னாது) புலி பதுங்கி இருப்பது பாய்வதற்குத் தான். புலி பதுங்கி பாயும். புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். புலி பிடித்ததோ? கிலி பிடித்ததோ? புலிப்பால் குடித்துவிட்டால் புலியின் பலம் வந்துவிடுமா? புலிப்பாலைக் கொண்டு வந்தான் எலிப்பாலுக்கு அலைந்தானாம். புலி மேல் வீச எடுத்த கத்தியைப் பூனை மேல் வீசுகிறதா? 15070 புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா? புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற் போல. புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று. (புத்தூருக்கு) புலியூரை விட்டு எலியூருக்குப் போக எலியூரும் புலியூர் ஆனது. புலியைப் பார்த்துப் பூனை சூடிட்டது போல. (நரி) புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது போல. புலியைப் பூனை வெல்லக் கூடுமா? புலியை விடக் கிலி பெரிது. புலைப் பொருள் தங்கா வெளி. புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா? 15080 புலையனுக்கு வாக்கு சுத்தியும் ஆணையும் இல்லை. புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும். புலையும் கொலையும் களவும் தவிர். புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே. òš mw cGjhš bešyw Éisí«.(ešyw) புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது. (மேய்ந்து) புல் கயிற்றால் களிறு பிணிக்க முயல்வதா? புல்லானாலும் புருசன்; கல்லானாலும் கணவன். (புல் என்றாலும், கல் என்றாலும்) புல்லானை செய்து கொல்லையில் வைத்தாற் போல. புல்லு கண்ட பக்கம் மேய்கிறது; பட்டி கண்ட பக்கம் அடையிறது. 15090 புல் நீண்டதாக இருந்தாலும் நிழல் தருமா? புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான். புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை. புல்லும் பூமியும் கல்லும் காவிரியும் உள்ளமட்டும். புல்லுக்காட்டிலே மேய்கிற பொலிகாளை பொழுதுக்கும் உழுகிற உழவு மாட்டை ஒரு போதும் புரிந்துக் கொள்ளாது. புல்லு விற்கிற கடையிலே பூவிற்கிறது. புல்லைத் தின்னும் மாடு போலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா? புவியரசர் போற்றும் கவியரசர் கம்பர். புழுக்கு புழுக்கு என்று பாடுபட்டாலும் புழுக்கைக்கு ஒரு கொழுகட்டையாம். புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது. 15100 புழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குச் சட்டி பதம் அறியுமா? புழுக்கை கலம் கழுவி உண்ணாது. புழுக்கைக்குப் புத்தி பிடரியிலே. புழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா? புழுக்கைக்குப் மேல் சன்னதம் வந்தால் பூ இட்டுக் கும்பிட வேண்டும். (சன்னதம் - தெய்வம்) புழுக்கை சுகம் அறியுமா? புழுக்கைச்சிக் கழுத்திலே பொட்டு மணி ஏறினதும் தூக்கக் கலக்கத்திலே தொட்டுத் தொட்டுப் பார்த்தாளாம். புழுக்கை வெட்கம் அறியுமா? புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுகட்டை. புழுதி உண்டானால் பழுதில்லை. 15110 புழுதி உலர்ந்தால் உழுமுதல் காணாது. புழுத்த சரக்கு கொழுத்த பணம். புழுத்த மாட்டைக் காக்கை கொத்துவதுபோல. புழுதியில் வேர்கள் சடுதியில் இறங்கும். புழுவைத் தின்று புள்ளினம் உதவும். புழைக்கடை மருந்து கவைக்கு உதவாது. (சுவைக்கு) புழைக்கடை மருந்து பலன் இருக்காது. புளி ஆயிரம் பொந்து ஆயிரம். (புரை) புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு? புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும் ஒன்றாயிடுவார்களா? 15120 புளி காய்த்தால் பொங்கும்; மா காய்த்தால் மங்கும். புளி பொங்கி மா மங்கினால் நல்லது. புளி காய்க்குப் புளி புகுத்தினாயோ? புளிச்சேப்பக்காரனும் பசியேப்பக்காரனும் ஒன்னாயிட மாட்டாங்க. புளியங்காய் என்றால் பத்தியம் முறிந்துபோமா? புளியங் காய்க்குப் புளிப்புப் புகுதவிட்டால் வருமா? புளியங்காய்க்குப் புளிப்புப் பூர விடுகிறதா? புளியங்கொட்டைக்குச் சனிமூலையா? புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி. புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா? 15130 புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான். புளிய மரம் ஏறியவன் பழம் தின்னாமல் இறங்குவானா? புளிய மரத்து நிழலில் பயிரும் வண்ணான் மயிரும். (வளராது) புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம். புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது. புளிய மரத்தைப் பிடிச்ச பிசாசு புங்க மரத்தையும் சேர்த்துப் பிடிச்சுதாம். புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது. புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா? புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும். புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா? 15140 புள்ளிக் கணக்கு பள்ளிக்கு உதவாது. புள்ளிப்பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற் போல. புள்ளும் புறாவும் அந்தி அடைந்தால் இரை தின்னா. புறக்கடை கீரை என்றால் மருந்துக்கு ஆகாதா? புறக்கடை வேம்பு மருந்துக்கு உதவாது. புறக்குற்றம் அறியப் பிடரியிலே கண். புறணியாலும் பொருள் சேகரம் நலம். புறமடையில் பொலியைத் தூவி அடைக்கப் பார்த்தானாம். புறமுதுகுக் காட்டி ஓடாதே. புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா? 15150 புற்றிலே ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான். புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும். புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல. புற்று அடிமண் மருந்தும் ஆகும். புற்று கண்டு கிணறு வெட்டு. புற்றுமண் போட்டால் பூமி பலன் தரும். புன் குடிலாயினும் தன் குடில் வேண்டும். புன் சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போயிற்றாம். புன் செய்யில் புதிது; நன் செய்யில் பழையது.  பூ பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ? (தவித்ததாம்) 15160 பூ உள்ள மங்கையாம்; பொற்கொடியாம்; போன இடம் எல்லாம் செருப்படியாம். (வைத்த) பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா? (தேவையா?) பூக்காத பெண்ணும் பூக்காத மரமும் மண்ணுக்குப் பாரம். பூ கிடந்த இடம் மணக்கும்; பொன்கிடந்த இடம் மின்னும். பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே? பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா? பூசணிக்காய் அழுகினது போல. பூசணிக்காய் எடுத்தவனைத் தோளில் காணலாம். பூசணிக்காய்த் திருடியவனை அவன் தோளைப் பார்த்தால் புரியும். 15170 பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார். பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போன்ற இடத்துக்குக் காவல் போட்டானாம். பூசணிக்காய் போனது பற்றிக் கவலைப்படாதவன் கடுகு காணோம் என்று கவலைப்பட்டானாம். பூசப் பழையது பூனைக்கும் ஆகாது. பூசப் பூசப் பொன்னிறம்; தின்னத் தின்ன தன்னிறம். பூசலிட்ட வீடு நாசம். பூசாரி ஆலய மணியை அடித்தால், ஆனை தெருமணியைத் தானே அடிக்கும். பூசாரித் தனமும் வேண்டாம்; பொங்கல் சோறும் வேண்டாம். பூசாரிப் பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை. பூசாரி புளுகன் என்றால் ஆசாரி அண்டப் புளுகன். 15180 பூசாரிப் புளுகும், புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுகுக்கு ஆகாது. பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம். பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை. பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம். பூசை வேளையில் கரடியை விட்டு ஓட்டினாற் போல. (பண்ணச்சே, முகத்திலே) பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல. பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை. பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும். பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே. பூச்சி பூச்சி என்னும் கிளி; பூனை வந்தால் கீச்சு கீச்சு என்னுமாம். 15190 பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறது இல்லை. பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு. பூட்டிக் கழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி. பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார். பூட்டும் திறப்பும் போல. பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா? பூணாதார் பூண்டால் பூணும் விழுந்து அழும். (பூண் - அணி) பூண்டிப் பொத்தறை ஏண்டி கத்தறாய்? (பொத்தறை - வ.ஆ.மாவட்டத்து ஊர்) பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள். பூண்டுக்கு அஞ்சாத பூதம் இல்லை. 15200 பூண்டு செய்யும் உதவி பெற்றோரும் செய்யார். பூத உடம்பு போனால் புகழ் உடம்பு. பூத்தது என்றால் காய்த்தது என்பது போல. பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம். பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிப்பட்டுச் செத்தது. பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்கு வார்கள். பூத்த மரத்துக்குத் தான் வண்டு; காய்த்த மரத்துக்குத் தான் கல்லடி. பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி. பூ மலர்ந்தால் வண்டு தானே வரும். பூ மலர்ந்து கெட்டது; வாய் விரிந்து கெட்டது. 15210 பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல. பூமி திருத்தி உண். பூமியைப் போலப் பொறுமை வேண்டும். பூரணந் தன்னில் புலையனும் உழான். பூராடக்காரனோடு போராட முடியாது. (போராடி) பூராடக்காரி ஊசாட ஊசாட பொருள் தொலையும். பூராடத்தன் அப்பன் ஊராடான். பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆடாது. (ஆகாது) பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது. பூராடந் தன்னில் புலையனும் உழான். 15220 பூராயமாய் வேலை கற்றுக்கொள்ள வேண்டும். பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம். பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா? பூலோக முதலியார் பட்டம் புகுந்து பார்த்தால் பொட்டல். பூவரசம் பட்டை பிள்ளைப் பேறு எட்ட. பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்? பூவாலழகியாம், பொற்கொடியாம், போகிற இடமெல்லாம் செருப்படியாம். பூ விரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது. பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது. பூ விற்கும் கடையில் புல் விற்பது போல. 15230 பூ விற்ற கடையில் புல் விற்கவும், புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே. பூ விற்ற கடையில் புல் விற்கலாமா? பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா? பூ விற்ற காசு மணக்காது; புலால் விற்ற காசு நாறாது. பூ விற்றவனைப் பொன் விற்கப் பண்ணுவான். பூவுக்கு உண்டு புதுமணம். (பூவுக்கும்) பூவும் மணமும் போல. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்; பாலோடு சேர்ந்த நீரும் பாலாகும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். பூவோடு நாரு சேர்ந்தால் நாரும் பலம் பத்து போகும். 15240 பூனை இருக்கிற காட்டிலேயே எலி சம்பந்தம் பண்ணுகிறது. பூனை இல்லா வீட்டில் எலி சன்னதம் கொண்டதாம். பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்குமாம். பூனை உடல் முழுதும் சூடிட்டுக் கொண்டாலும் புலியாகி விடாது. பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது. பூனை எச்சில் புலையனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும். பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா? (தொழுவத்தில்) பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தது போல. பூனை கண்ணை மூடினால் பூலோகம் எல்லாம் இருட்டு என்று எண்ணிக் கொள்ளுமாம். பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போகுமா? (அதமித்து) 15250 பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்? பூனை குட்டி போட்டாற் போலத் தூக்கிக் கொண்டு அலைகிறான். பூனை குண்டு சட்டியில் தலையை இட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சு என்று நினைக்குமாம். பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா? பூனை கொன்ற பாவம் உன்னோட; வெல்லம் தின்ற பாவம் என்னோடே. பூனைக்கு இல்லை தானமும் தவமும். பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர். பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம். பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு. பூனைக்குக் கெட்ட காலம் வந்தால் எலியும் பெண்டுக்கு அழைக்குமாம். 15260 பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம். பூனைக்குக் கொண்டாட்டம் வந்தால் பீற்றல்பாய்க்குக் கேடு. பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா? பூனைக்குத் தன் குட்டி பொன்குட்டி. பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம். பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள். பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா? பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம். பூனைக்கு யார் மணி கட்டுவது? பூனைக்கு வைத்தியம் பார்த்து யானையைச் சாகடிப்பதா? 15270 பூனை சிரித்ததும் எலி பெண்டுக்கு அழைத்ததும். (பெண்டாள) பூனை செய்கிறது துடுக்கு, அதை அடித்தால் பாவம். பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை. பூனை பிராமண போசனம் பண்ணுகிறதென்று பூணூல் போட்டுக் கொண்டதாம். பூனை பிராமண போசனம் பண்ணும் போதும் பூணூல் போட்டுக் கொள்ளுமாம் எலி. (போட்டுக் கொள்ளுமா எலி?) பூனை புறக்கடை; நாய் நடுவீடு. பூனை போல் அடங்கினான் புலிபோல் பாய்ந்தான். பூனை போல் இருந்து புலி போல் பாயும். பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது. பூனை போல் ஒடுங்கி புலி போல் பாய்ந்தான். 15280 பூனை போன்ற புருசனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல. பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம். பூனைமுன் கிளி போல் புலம்பித் தவிக்கிறது. பூனையிடம் கொடுக்கும் மீன் சமையலுக்குச் சென்று சேராது. பூனையின் அதிட்டம் உறி அறுந்து விழுந்தது. பூனையானது தன்னைத் தழுவத் தெரியாத சக்தியற்ற குட்டியைத் தன் வாயில் கவ்விச் செல்வது போல. பூனையேறுகின்ற தென்று யானை ஏறினால் பானை பானையாக இருக்குமா? பூனையைக் கண்டு புலம்பிற்றாம் கிளிகள். பூனையைக் கண்டு புலி அஞ்சுமா? பூனையைக் கருவாட்டுக்குக் காவல் வைத்தால் உறிக்கு மூடி வேண்டாம் என்று சொல்லுமாம். 15290 பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்ப்பதா? (வைத்துக்) பூனையை மடியில் கட்டிக் கொண்டு வெளிச் சகுனம் பார்த்தானாம். பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி. பூனையை வளர்த்தால் பொல்லா வழி காட்டும். பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல. பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது. பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?  பெ பெட்டி பீற்றல் வாய்க்கட்டு திறம். பெட்டி பீற்றாலாயினும் மட்டைக்கட்டுத் திறமாயிருக்க வேண்டும். 15300 பெட்டி பாம்பு ஒட்டி அடங்கினாற் போல. பெட்டி பாம்பாய் அடங்கினான். பெட்டைக்கு எட்டாத ஆம்புடையானும் பல்லுக்கு எட்டாத பாக்கும். (பயனில்லை) பெட்டைக் குதிரைக்கு இரட்டைக் கொம்பு முளைத்தன என்றாளாம். பெட்டைக் கோழி கூவி பொழுது விடியப் போவதில்லை. பெட்டைக் கோழி கூவியா பொழுது விடிகிறது? (விடியப்போகுது?) பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா? பெண் அரம்பை கூத்துக்குப் போய்ப் பேய்க் கூத்து ஆச்சுதே. பெண் அழகெல்லாம் பெட்டியிலே. பெண் ஆசை ஒரு பக்கம்; மண் ஆசை ஒரு பக்கம். 15310 பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது. பெண் இருக்கிற அழகுக்குப் பூசினாளாம் வண்டி மசியை; தான் இருக்கிற அழகுக்குப் பூசிக் கொண்டாளாம் வேப்பெண்ணெய். பெண் இல்லாத வீடு tளிïல்லாத»ணறுkதிரி. பெண் இன்றிப் பெருமையும் இல்லை; கண் இன்றிக் காட்சியும் இல்லை. பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்ணென்று பிறந்த போதே புருசன் பிறந்திருப்பான். பெண் கண்ட பணம் பூனை கண்ட பால் போல. பெண்கள் இருப்பிடம் பெரிய சண்டைக்கு இடம். பெண்கள் சோற்றுக்குத் தண்டமில்லை. (பெண்டுகள்) பெண்கள் நிறைந்த இடம் சண்டைகள் நிறைந்த இடம். 15320 பெண்களின் வாயைவிட அவர்கள் கண்களே மிகுதியாகப் பேசும். பெண்களுக்கு அன்பு பெருவாழ்வு அளிக்கும். பெண்கிளை பெருங்கிளை. பெண்குடி பெருங்குடி. பெண் குலத்துக்குப் பெருமை பெற்ற குழந்தைகளை வளர்க்கும் அருமை. (பெண்) பெண் குழந்தை, வீட்டில் இருப்பதைக் கொண்டு செல்லும்; ஆண் குழந்தை வீட்டிற்குக் கொண்டு வரும். பெண் குழந்தையின் பெருமை அடுத்த ஆண் குழந்தை பிறக்கும் வரை. பெண் கொடுத்த மாமியோ? கண் கொடுத்த சாமியோ? பெண் சம்பாதித்தால் பழங்கலம் ஏறும். பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல. 15330 பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை. பெண்சாதி கால்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு. (பெண்டாட்டி) பெண்சாதி கால்விலங்கு; பிள்ளை ஒரு சுள்ளாணி. பெண்சாதி சொந்தம் போக்குவரத்துப் புறம்பே. (புறம்பா?) பெண்சாதி பேச்சைக் கேட்பவ‹பேய்போyஅலைவான். பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும் பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும். பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றிப் பெற்ற தாயின் தலையிலே புல்லுக்கட்டை வைத்து அடிக்கிற காலம். (பெண்டாட்டியை) பெண்சாதியைத் தாய்வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு. பெண் சிரித்தால் போயிற்று; ஆண் அழுதால் போயிற்று. பெண் சிரித்தால் போயிற்று; புகையிலை விரிந்தால் போயிற்று. 15340 பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது. பெண்டாட்டி இல்லாதவன் கழுதையோடு போனான். (போவான்) பெண்டாட்டி கால்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு bபண்டாட்டிக்குMற்றkட்டாதவன்rட்டிப்gனையைcடைத்தானாம். பெண்டாட்டிக் காரன் பெண்டாட்டியை அடித்தானாம்; திண்ணையிலே இருந்தவன் தேம்பித் தேம்பி அழுதானாம். பெண்டாட்டி குதிர்போல; அகமுடையான் கதிர்போல. பெண்டாட்டி கொண்டதும் போதும், திண்டாட்டம் பட்டதும் போதும். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை. பெண்டாட்டி செத்துப் பெரிய மகள் தாலி அறுத்த மாதிரி. பெண்டாட்டி மெய்க்கப் புழைக்கடை வெட்டியது போல. (மெய்க்க - புகழ) 15350 பெண்டாட்டியிடம் கோபித்துக்கொண்டு பரதேசி ஆனானாம். பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ? பெண்டாட்டியை அடிக்கடி பிறந்தகத்துக்கு அனுப்பாதே. பெண்டாட்டியைக் குதிரை மேலே ஏற்றி, பெற்ற தாய் தலையிலே புல்லுக்கட்டை வைத்து அடிச்சானாம். பெண்டாட்டியைச் சாகக் கொடுத்தவன் போல முக்காடு போட்டிருக்கான். பெண்டாட்டியைத் தாய்வீட்டில் விட்டவனும் பூவைக் குரங்கு கையில் கொடுத்தவனும் போல. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல். பெண்டு இரண்டு கொண்டால் பெரு நெருப்புச் சாமளவும். பெண்டு இல்லாதவன் பிணத்தைக் கட்டி அழுத கதை. பெண்டுகளாலே பெருமாள் குடி கெட்டது. 15360 பெண்டுகளுக்குப் பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பு இல்லை. பெண்டுகள் அம்பலம் பொழுது விடிந்தால் கூத்து. பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்த இடம். பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையாம். பெண்டுகள் இருப்பிடம் சண்டை மடம். பெண்டுகள் கூட சண்டைக்கு வருவார்கள். பெண்டுகள் கூடிய இடத்தில் சண்டைக்குக் கேட்க வேண்டுமா? பெண்டுகள் கூத்து பேய்க் கூத்து. பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில் தான். பெண்டுகள் சமர்த்துச் சமையற்கட்டிலும் படுக்கைக் கட்டிலிலும் தான். (அறையிலும்) 15370 பெண்டு கொண்டதும் போதும்; பிண்டு விழுந்ததும் போதும். பெண்டுக்கு எதிரி பிறந்தகத்துப் பேச்சு. பெண்டு சூத்திற்குப் பிரிமணையாய் இருக்கிறான். பெண்டு மிரண்டால் வீடு கொள்ளாது. பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. பெண்ணரம்பைக் கூத்துப் போய்ப் பேய்க் கூத்து ஆயிற்றே. பெண்ணழகெல்லாம் பெட்டியிலே; காவல் தானே பாவைக்கு அழகு. பெண்ணாய்ப் பிறப்பதிலும் மண்ணாய்ப் பிறக்கலாம். பெண்ணிடம் அகப்பட்ட பணமும் ஆணிடம் அகப்பட்ட குழந்தையும் உருப்படா. பெண்ணில்லாமல் பிள்ளையுண்டா? 15380 பெண்ணின் ஆயுதம் கண்ணீர்த்துளி. பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன். (குணம், வாய்) பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும். பெண்ணின் சக்தி வாய்ந்த போர்க்கருவி அவள் நாக்குதான். பெண்ணின் சாமர்த்தியம் கட்டிலிலும் அடுக்களையிலும் தான் தெரியும். பெண்ணின் திண்மையைப் பொன்னில் பார்; ஆணின் மேன்மையைப் பெண்ணில் தேர். பெண்ணின் வாழ்வு கணவனின் அன்பே. பெண்ணுக்கு இரங்காதவர் உண்டா? பெண்ணுக்கு உண்டோ பிசுக்கு? (பெண்ணுக்கும்) பெண்ணுக்குக் குணம் தான் சீதனம். 15390 பெண்ணுக்குச் சீதனம் குணம் தான். பெண்ணுக்குத் தெய்வம் கணவன்; கணவனுக்குத் தெய்வம் அவன் செய்யும் தொழில். பெண்ணுக்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் தெரிந்த அம்பலம். பெண்ணுக்குத் தோற்பும் தேய்ப்பும் உண்டோ? பெண்ணுக்குப் புருசன் இனிமேலா பிறக்கப் போகிறான்? பெண்ணுக்குப் புருசன் முன்பே பிறந்திருப்பான். பெண்ணுக்குப் பெண்தான் சீதனம். பெண்ணுக்குப் பொன்னிட்டுப் பார்; சுவருக்கு மண்ணிட்டுப் பார். பெண்ணுக்குப் போட்டுப்பாரு; மண்ணுக்குப் பூசிப் பாரு. (தீட்டிப்) பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின் வாங்கலாமா? 15400 பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும். பெண்ணுக்கு முன் பூட்டிக்கொள்; மாட்டுப் பெண்ணுக்கு முன் சாப்பிட்டுக் கொள். பெண்ணுக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே. பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா? பெண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர் உண்டா? பெண்ணை அடித்து வளர்க்க வேண்டும்; முருங்கை மரத்தை ஒடித்து வளர்க்க வேண்டும். பெண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்; பிள்ளை பெறச் செய்யலாமா? பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள்; பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா? பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும். பெண்ணைக் கொடுத்த மாமன்; கண்ணைக் கொடுத்த கடவுள். 15410 பெண்ணைக் கொடுத்த மாமியார் கண்ணைக் கொடுத்த தெய்வம். பெண்ணைக் கொடுத்தாயோ? கண்ணைக் கொடுத்தாயோ? பெண்ணைக் கொடுத்தவனோ? கண்ணைக் கொடுத்தவனோ?(கொடுத்தவளோ?) பெண்ணைக் கொண்டு பையன் பேயானான்; பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள். பெண்ணைத் திருத்தும் பொன். பெண்ணைப் படைத்தாயோ? பேயைப் படைத்தாயோ? பெண்ணைப் பழித்தாலும் மண்ணைப் பழிக்காதே. பெண்ணைப் பற்றிப் பீயைத் தின்னு. பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்றதாய் வேண்டும். (வேண்டாமா?) பெண்ணைப் பெற்றுப் பீத் தின்ன வேண்டும். 15420 பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான். பெண்ணைப் பெற்றுக் கெட்டுப் போகாதே. பெண்ணைப் போற்றி வளர்க்க வேண்டும்; ஆணை அடக்கி வளர்க்க வேண்டும். பெண்ணை மஞ்சத்தில் வை; ஆணை நெஞ்சத்தில் வை. பெண்ணையும் கொடுத்து முக்காலியும் சுமந்தாற் போல. பெண்ணையும் வேண்டிப் பிள்ளையையும் வேண்டுகிறதா? பெண்ணை விட்டுப் பிரியலாம்; கண்ணை விட்டுப் பிரியலாமா? பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு. பெண்ணை வெறுத்தல் பேரின்பம். பெண்ணென்றால் பேயும் இரங்கும். 15430 பெண்ணென்று பிறந்த போதே புருசனும் பிறந்திருப்பான். பெண்ணோ? போத்தோ? பெண் சிலசமயம் பேயாவது உண்டு; பேயும் சிலசமயம் பெண்ணாவது உண்டு. பெண் தந்த மாமியாரே கண் தந்த தெய்வமாக. பெண் திருமணத்துக்கு முன்னால் அழுவாள்; ஆண் திருமணத்துக்குப் பின்னால் அழுவான். பெண்படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ? பெண் படையோ? அம்பலமோ? பெண் பாவம் பொல்லாதது. பெண் பிறந்ததற்கு மண் பிறக்கலாம். பெண் பிறந்த வீடும் புடல் காய்த்த பந்தலும். 15440 பெண் பிறந்த வீடோ? புடைவை காய்ந்த பந்தலோ? பெண் பிறப்பதற்குள் பூட்டிக் கொள்; மருமகள் வருவதற்குள் சாப்பிட்டுக்குள். (மாட்டுப்பெண்) பெண் புத்தி கேட்கிறவன் பேயன். (பேய்) பெண் புத்தி பின்புத்தி. பெண் புத்தி பின்புத்தி; ஆண் புத்தி அவசரப் புத்தி. பெண் புத்தி பீத்தின்ன போம். பெண் மகிழப் பிறந்தகம் வாழ. பெண் மூப்பான வீடு பேரழிந்து போம். பெண் மூலம் நிர்மூலம். பெண் வளர்த்தியோ, பீர் வளர்த்தியோ? (புடலங்காய்) 15450 பெண் வளர்த்தி பீர்க்கங்கொடி. பெண் வளர்வதும் பீர்க்கங்காய் வளர்வதும் யார்கண்டது? பெண் வாய்க்கும் புண்ணியவானுக்கு; பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு. பெய்த மழைக்கும் சரி; காய்ந்த வெயிலுக்கும் சரி. பெய்த மழையும் காய்ந்த வெயிலும் சரி. பெய்தால் பெய்யும் புரட்டாசி; பெய்யாவிட்டால் பெய்யும் ஐப்பசி. பெய்தும் கெடுத்தது; காய்ந்தும் கெடுத்தது. பெய்து விளைகிறது மலையாளச் சீமை; பாய்ந்து விளைகிறது தஞ்சாவூர்ச் சீமை; காய்ந்து விளைகிறது இராமநாதபுரம் சீமை. பெரிதாகப் பெரிதாகப் பேயும் குரங்காகும். பெரிது ஆனால் பேயும் குரங்கு ஆகும். 15460 பெரிய இடமென்று பிச்சை கேட்கப் போனாளாம்; கரியை வழித்து முகத்திலே தேய்த்தாளாம். பெரிய தனம் கொடுத்தால் சீதனம் விற்கலாமா? பெரிய தேர் ஆனாலும் அச்சாணி இல்லாமல் ஓடாது. பெரிய பணக்காரன்னு பிச்சைக்குப் போனானாம்; கரியை அரைச்சுக் கன்னத்திலே பூசினானாம். பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளியும் சாகாது. (மல்லியும்) பெரிய மனிதன் என்று பிச்சைக்குப் போனால் கரியை அரைத்து முகத்தில் தடவினான். பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி. பெரிய வீட்டுக் கல்யாணம்; பூனைக்குட்டிக்குச் சோறு இல்லையாம். பெரிய வீடென்று பிச்சைக்குப் போனேன், கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள். பெரியாரைத் துணைக் கொள். 15470 பெரியார் பெருந்தலை பேய்த்தலைக்கு நாய்த்தலை. பெரியார் வரவு பெருமாள் வரவு. பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர். பெரியோரைக் கண்டு எழாதவன் பிணம். பெரியோர் உள்ளம் பேதிக்கலாகாது. பெரியோர் உள்ளம் பேதித்தால் எப்பொருளும் பேதிக்கும். பெரியோர் தின்றால் பலகாரம்; சிறியோர் தின்றால் நொறுவு. (நொறுங்கு தீனி) பெரியோர் முன் எதிர்த்துப் பேசில் வெள்ளத்துக்கு முன் மரம்போல் வீழ்வார்கள். பெரியோர் முன் தாழ்ந்து பேசில் நாணலைப் போல் நிமிர்ந்து கொள்வார்கள். பெரியோர் வாயில் பொய் நில்லாது. 15480 பெருக்கப் பெருக்கப் பேயும் குரங்கு ஆனதாம். பெருக்கு ஆற்றில் நீச்சு அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும். பெருங்கயிறு முடி அழுந்தாது. பெருங்காயச் சட்டி வாசனை போகாது. பெருங்காயம் இட்ட பானை வாசம் போகாது. பெருங்காயம் இருந்த குடுக்கை வாசனை போகாது. (போகுமா?) பெருங்காயம் இருந்த பானை. (பாண்டம் போல) பெருங்காயம் இல்லாத சமையலும் பெரியவர்கள் இல்லாத குடித்தனமும் பாழ். பெருங்குலத்தில் பிறந்தவன் புத்தி அற்றால் கரும்புப் பூப்போல் இருப்பான். பெருங்கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு. 15490 பெருதலை வண்டு கத்தினால் பேய்மழை பெய்யும். பெருத்த உடம்புக்குக் குருத்துப் பால். பெருத்த மரங்களை வைத்தவன் உருக்கமாய்த் தண்ணீர் வார்ப்பான். பெருந்தலைக் காக்கை பீத்தின்னப் போயிற்றாம்; இறக்கை யெல்லாம் பீயாயிற்றாம். பெரு நெருப்பில் புழு மேயுமா?(மேவுமா?) பெரு நெருப்புக்கு ஈரமில்லை. (ஈரம் உண்டோ?) பெரு மரத்தைச் சுற்றிய கொடியும் சாகாது. பெரு மழை விழுந்தால் குளிராது. பெருமாளைச் சேர்ந்தவர்க்குப் பிறப்பு இல்லை; பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை. பெருமாளைச் சேர்ந்தோர்க்குப் பிறப்பில்லை. (பிறவியில்லை) 15500 பெருமாள் இருக்கிற வரையில் கருடன் உண்டு. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் உண்டு. (உள்ள பெருமாள் இருந்தால் அல்லவோ திருநாள் நடக்கப் போகிறது? பெருமாள் என்கிற பெயரை மாற்றப் பெரிய பெருமாள் ஆச்சுது. பெருமாள் செல்லும் வழியில் புல்லாய் முளைத்தாலும் போதும். பெருமாள் நினைத்தால் வாழ்வு குறைவா? பிரமா நினைத்தால் ஆயுசு குறைவா? பெருமாள் புண்ணியத்தில் பொரிமாவு கிடைத்ததாம். பெருமாள் புளித்தண்ணீருக்கு அழுகிறார். அனுமார் தயிர்ச் nசாறுnகட்கிறார்.(jânahjd«) பெருமீனுக்குச் சிறுமீன் இரை. பெருமாள் முகத்துக்குப் பேயும் பணியும். 15510 பெருமை ஒருமுறம், புடைத்து எடுத்தால் ஒன்றுமில்லை. பெருமைக்காரன் பின்னால் போனாலும் bசருப்புக்காரன்ãன்னால்nபாகக்Tடாது. பெருமை கண்டவர் சிறுமை கண்டால் அல்லது தேறார். பெருமை கொத்தமல்லி அரைக்கப் பத்தலை; அரைச்ச கொத்தமல்லி திங்கப் பத்தலை. பெருமைக்கு ஆசைப்பட்டுப் பிள்ளையாரைக் கும்பிட்டானாம். பெருமைக்கு ஆட்டை அடித்துப் பிள்ளையின் கையில் காதைச் சுட்டுக் கொடுத்தான். பெருமைக்குக் கட்டுச்சோறு கட்டி புழைக்கடையில் அவிழ்த்தானாம். பெருமைக்கு நெல்லுச்சோறு; பிசைந்து பார்த்தால் வரகுச் சோறு. பெருமைக்குப் புல்லு போட்டா எருமைக்கு வயிறு நிறையுமா? பெருமைக்குப் பன்றி வளர்க்கிறது போல. 15520 பெருமை சொன்னால் கறவைக்குப் புல் ஆகுமா? பெருமைதான் அருமையைக் குலைக்கும். பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக் கலம். பெரும்பேன் பிடித்தவளுக்கும் பெருங்கடன் வாங்கிய வளுக்கும் கவலை இல்லை. பெரும்புளுகன் பேராசைக்காரனை வென்றுவிடுவான். பெருமையான தரித்திர வீரன். பெருமையும் சிறுமையும் வாயால் வரும். பெருமையும் சிறுமையும் தான்தர வரும். பெரு ரூபத்தை உடையவர் எல்லாம் பெரும்பயனாய் இருக்க மாட்டார். பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு நாள் இட்டுக் கொண்டானாம் 15530 பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு வளையல் இட்டுக் கொண்டாளாம். பெரு வயிறு கொண்டவனுக்குக் காறி உமிழ்ந்தது ஆதாயம். பெருவாரிக் கழிச்சலிலே தப்பிப் பிழைத்தவன் நாட்டாண்மைக்காரன். பெரு வெள்ளம் பாயும் கடலிலே பீவாய்க்காலும் பாயும். பெறப் பெறப் பிள்ளை ஆசை. பெற்ற தாயார் பட்டினி கிடக்கப் பிள்ளை பிராமணப் போசனம் பண்ணினானாம். பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்? பெற்ற தாயிடத்திலா கற்ற வித்தை காட்டுகிறது? பெற்ற தாயுடன் போகிறவனுக்குப் பந்தம் ஏது? பெற்ற தாயைப் பெண்டுக்கு இழுக்கிறதா? (அழைப்பான்) 15540 பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாத குயிலைப் போல. பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன். (செத்த பிறகு) பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போசனம் செய்கிறானாம். பெற்ற தாய் மூதேவி; புகுந்த மனைவி சீதேவி. பெற்ற தாய் மூதேவியா? புகுந்தவள் சீதேவியா? பெற்ற தாய் மூதேவியாம்; புகுந்த மனைவி சீதேவியாம். பெற்றது எல்லாம் பிள்ளையா? இட்டது எல்லாம் பயிரா? பெற்றது எல்லாம் பிள்ளையாகுமா? நட்டது எல்லாம் மரம் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளையாகுமா? பூத்தது எல்லாம் காய் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளையோ? நட்டது எல்லாம் பயிரோ? 15550 பெற்றது எல்லாம் பிள்ளையோ? வனைந்தது எல்லாம் குசக்கலமோ? பெற்றது பிறந்தது பிற்காலத்தில் உதவும். பெற்றது வயிற்றுப் பிள்ளை; கொண்டது கயிற்றுப் பிள்ளை. பெற்ற பிள்ளை உதவுவதற்கு முன் வைத்த பிள்ளை உதவும். பெற்ற பிள்ளை சோறு போடாவிட்டாலும் வைத்தபிள்ளை சோறு போடும். பெற்ற பிள்ளை தொடையில் பேண்டால் என்ன செய்யலாம்? பெற்ற பிள்ளை பின்னுக்கு உதவும்; கற்ற வித்தை காலத்துக்கும் உதவும். பெற்ற பிள்ளையும் சரி; செத்த நாயும் சரி. பெற்ற பிள்ளையை விட பேரப்பிள்ளை பெரிதா? பெற்ற பிள்ளையை விட பேரப்பிள்ளை பாசம் அதிகம். 15560 பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு. பெற்றல்லவோ பெயரிட வேண்டும். பெற்ற வயிற்றில் பிரண்டையை வைத்துத்தான் கட்ட வேண்டும். பெற்ற வயிற்றுக்குப் பிரண்டையை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். பெற்றவர்க்குப் பிறப்பில்லை; பிச்சைச் சோற்றுக்குப் பேச்சில்லை. பெற்றவளுக்குத்தான் பிள்ளை; இடுக்கினவளுக்குத் தழும்பு. பெற்றவளுக்குத் தெரியாதா பெயர் இட? பெற்றவளுக்குத் தெரியும் பிரசவ வேதனை. பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளை அருமை. (பெற்ற வருக்கு, பெற்றவனுக்கு) பெற்றவள் அறிவாள் பிள்ளை வருத்தம். 15570 பெற்றவள் வயிற்றை பார்ப்பாள்; பெண்டாட்டி மடியைப் பார்ப்பாள். (பெண்சாதி) பெற்றவன் அறிவான் பிள்ளை அருமை. பெற்றாரை நினையாத தறுதலை. பெற்றார் அகடழிந்தால் பிறரும் அகடழிப்பர். பெற்றாலும் பிள்ளை நாயகம்; நட்டாலும் தில்லை நாயகம். பெற்றாள் ஒருத்தி; பெருமை கொண்டாள் மற்றொருத்தி. பெற்றுப் பிழைத்தாயோ? செத்துப் பிழைத்தாயோ? பெற்றுப் புதைக்கிறதும் பெருமைதான்; அறுத்துக் குறிக்கிறதும் அருமைதான். பெற்றுப் பேர் இடாவிட்டாலும் இட்டுப்பேர் இடு. பெற்று வைத்த பிள்ளையும் கொடுத்து வைத்த பணமும் எங்கேயும் போகா. 15580 பெற்றெடுக்கிறதற்கு முன் பூரி எடுக்கிறதா? பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும். பெற்றோர் அன்பும் பிள்ளைக் கொல்லும்.  பே பேசத் தலைப்பட்டால் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்கிறதா? பேசத் தெரிந்தவன் படிப்பும் வீரம் இல்லாதவன் வாளும் பயன் இல்லை. பேசப் பேச எந்த மொழியும் வரும். பேசப் பிறந்தாயோ? சாகப் பிறந்தாயோ? பேசப் போகிறாயோ? சாகப் போகிறாயோ? பேசாத வீடும் பெருக்காத வீடும். பேசாது இருந்தால் பிழை ஒன்றும் இல்லை. 15590 பேசா மடந்தை பேசும் தெய்வம். பேசின வாயும் பீறின கந்தையும் நில்லா. பேசினால் அவலம்; பேசாக்கால் ஊமை. (பேசில்) பேசினால் வாயாடி; பேசாதிருந்தால் ஊமைப்பயல். பேசுவதென்பது பெண்களின் பழக்கம். பேசுகிறது அரிவரதம்; நோண்டுகிறதுகிட்டிக்கிழங்கு. (இட்டிக்) பேசுகிற வாயும், கிழிந்த துணியும் தைத்தாலும் நிற்காது பேச்சில் இராவணன்; சாப்பாட்டில் கும்பகர்ணன். பேச்சுக் கற்ற நாய் வேட்டைக்கு உதவாது. (ஆகாது) பேச்சுக்கு இராவணன்; பிண்டத்துக்குக் கும்பகர்ணன். (பின்பு) 15600 பேச்சுக்குப் பேச்சுச் சிங்காரமா? (சிங்காரந்தான்) பேச்சுக் கொடுத்துப் பேச்சு வாங்குகிறதா? பேச்சுப் பராக்கில் சோற்றைக் குழைத்தார்கள். பேச்சுப் பல்லக்கு; தம்பி கால் நடை. பேச்சுப் பேசும் போதே பீச்சிப் புடைவையில் கட்டிக் கொள்கிறதா? (கொள்கிறாள்) பேச்சுப் பேச்சு என்னும் கிளி பெரும் பூனை வந்தக்கால் கீச்சு கீச்சு என்னுமாம். பேச்சுப் பேச்சு என்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சு கீச்சு என்னும் கிளி. பேச்சைக் கொடுத்த தெய்வம் பெலத்தைக் கொடுக்கவில்லை. பேச்சைக் கொடுத்து ஏச்சை வாங்குகிறது. (வாங்கிக் கொள்கிறாள்) பேச்சைக் கொடுத்து பேச்சு வாங்கு. 15610 பேச்சை விற்றுக் காய்ச்சிக் குடிக்கிறான். பேடி கையில் ஆயுதம் பிரகாசிக்குமா? பேடி கையில் தேவரம்பை கிடைத்ததும் பிரயோசனப் படாததைப் போல. பேடி கையில் அரம்பை அகப்பட்டது போல. பேடி கையில் ஆயுதம் இருந்தது போல. பேடி கையில் ஆயுதம் இருந்து என்ன பயன்? பேடி கையில் வாள் போல. பேடிக் கில்லை படைக்கலம். பேண்டால் செக்கில் பேளுவேன்; இல்லாவிட்டால் அடைச்சுக் கிட்டுக் கிடப்பேன். பேண்டால் செக்கில் பேளுவேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன். 15620 பேதம் அற்றவர் நீதம் உற்றவர். பேதைகள் வெள்ளத்தில் நின்றும் தாகத்துக்கு அலைவார்கள். பேதைக்கில்லை ஊதியம். பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம். பேதையானாலும் தாய்; நீரானாலும் மோர். பேத்திக்கு இட்டாலும் கூத்திக்கு இடாதே. பேயால் முடியாத காரியத்தைப் பெண் சாதித்து விடுவாள். பேயானாலும் தாய்; நீரானாலும் மோர். பேயின் வாயில் பெற்றுப் பேறு. 15630 பேயும் அறியும் பெண்சாதி பிள்ளையை. பேயும் சிலது ஞாயம் பகரும். பேயும் பிடித்ததாம் நாயும் குரைத்ததாம். பேயும் பெருமழை புரட்டாசி மாத்தையிலே. பேயும் வளர்க்கும் பின் ஆறுமாதம். பேயை நம்பினாலும் பெண்ணை நம்பொண்ணாது. (நம்பலாகாது) பேயைப் பேய் அடிக்குமா? பேயோடாயினும் பிரிவு இன்னாது. பேயோடு பழகினாலும் பிரிவது அரிது. பேய் அடிக்கப் பிள்ளை பிழைக்குமா? 15640 பேய் ஆசை பிடித்தாலும் நாய் ஆசை ஆகாது. பேய் ஆனாலும் தாய் வார்த்தை தட்டலாமா? பேய் இல்லாத் தலை ஆடாது; பேன் இல்லாத் தலை கடிக்காது. பேய்க்காய் பேரிக்காய் ஆகப் போகிறதில்லை; புல்லு முள்ளாகப் போகிறதில்லை. பேய்க்குக் கள் வார்த்தாற் போல. பேய்க்கும் பார்; நோய்க்கும் பார். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் பிடுங்குபட்டுத்தான் சாக வேண்டும். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரத்தில் ஏற வேண்டும் பேய்க்கும் ஒரு தாய் இருக்கவே செய்வாள். பேய்க்கூத்தும் ஆமணக்கும் ஆள் போனால் ஆள் தெரியாது. 15650 பேய் கொண்டாலும் கொள்ளலாம்; பெண் கொள்ளல் ஆகாது. பேய் சிரித்தாலும் ஆபத்து; அழுதாலும் ஆபத்து. பேய்ச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகுமா? பேய்ந்தும் கெட்டது; காய்ந்தும் கெட்டது. (ஓய்ந்தும்) பேய் பயமுறுத்திச் சாதித்து விடுவதை விடப் பெண் அழுது சாதித்து விடுவாள். பேய் பிடிக்கவும் பிள்ளை பிழைக்குமா? பேய் பிடித்த பெண்ணும் நாய் பிடித்த பிடியும் ஒன்று. பேய் பிடித்தாலும் பிடிக்கலாம் பெண் பித்துப் பிடிக்கக் கூடாது. பேய் பிள்ளை பெற்றதும் பிடுங்க நூல் நூற்றதும். 15660 பேய்ப் பிள்ளையானாலும் தாய் தள்ளுவாளா? பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது. பேராசைக்காரனுக்குத் தீராத நட்டம். பேராசைக்காரனுக்குப் பெரும் புளுகன் தானாபதி. பேராசைக்காரனைப் பெரும் புளுகால் வெல்ல வேண்டும். பேராசை தரித்திரம் தீராத உபத்திரவம். பேராசை பெருங்கேடு. (நட்டம்) பேராசை பேரிழப்பு. பேரிளமை கடந்தபின் பிள்ளை பெற்றெடுத்தாற் போல. பேரின்பம் வேண்டுமேல் சிற்றின்பம் ஒழிக்க வேண்டும். 15670 பேருக்கு நாட்டாமை, ஊருக்கு ஒன்றுமில்லை. பேரூர் குடியிருப்பும் சிற்றூர் வேளாண்மையும். பேரைச் சொன்னால் அழுத பிள்ளையும் வாய் மூடும். பேர் இல்லா சந்நிதி பாழ்; பிள்ளை இல்லாத செல்வம் பாழ். பேர் எல்லாம் பொம்மன், திம்மன்; பெண்களோ நாயும் பேயும். பேர் என்னவோ பெரிய பேர், தாகத்துக்குத் தண்ணீர் இல்லை. பேர் கங்கா பவானி; குடிக்கத் தண்ணீர் கிடையாது. பேர் சந்திரவதனாள்; முகத்தில் அழகு கிடையாது. பேர் செல்லப் பிள்ளை. நாமம் அற்றுப் போயிற்று. (சொல்லப் பிள்ளை) பேர்த்து அடி வைக்கச் சீவன் இல்லை; பேர் தாண்டவராயன். 15680 பேர் தாண்டவராயன்; பேர்த்து வைக்கச் சீவன் இல்லை. பேர் பெரிய பேர்; குடிக்கப் போனால் நீர் கிடையாது. பேர் பெற்றான் செம்பரம்பாக்கத்தான்; நீர் பெற்றான் மாம்பாக்கத்தான். பேர் பொன்னம்மாள், கழுத்தில் கருகுமணி இல்லை. பேர் பொன்னத்தாள், கழுத்தில் கருகுமணிக்கு வழி இல்லை. பேர் போனாலும் பிள்ளைப் பட்டம் போகவில்லை. பேர் முத்துமாலை; கட்டக் கரிமணிக்கு வழி இல்லை. பேளச் சொன்னது யார்? வாரச் சொன்னது ஆர்? பேளப் போன இடத்தில் பேரை மறந்து விட்டதாம். பேளப் போன இடத்தில் விளங்காய் அகப்பட்டது போல. 15690 பேளுகிற கிழவியும் எழுந்திராள். பேன் இராத தலை கடிக்குமா? பேய் இராத தலை ஆடுமா? பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும் பிய்க்கும் குரங்கு.  பை பை எடுத்தவன் எல்லாம் வைத்தியனா? பைக்குள் இருந்தால் கைக்குள் வரும். பைசாசைப் பணியேல் (பைசாசத்தைப்) பைசா கேடு, படபடப்பு மேடு. பைசாவுக்குப் பத்துப் பெண் கொசுறு குத்து. பைத்தியக் காரன் கையில் மாணிக்கம் போல. பைத்தியக் காரன் கிழித்தது கோவணத்துக்கும் ஆகாது. (ஆயிற்று) 15700 பைத்தியத்தைச் சுற்றிப் பத்துப் பேர். பைத்தியம் தெளிகிறது, உலக்கை எடுத்து வா காது குத்த. பைத்தியம் பரிகாசம் வேண்டும்; ஒன்று அதிகாரம் வேண்டும். பைத்தியம் பிடித்த நாய் சாராயம் குடித்தது போல. பைத்தியம் பிடித்த நாயில் பெண் நாயானால் என்ன? ஆண் நாயானால் என்ன? பைத்தியம் பிடித்தவன் வைத்தியம் பார்க்கப் புறப்பட்டது போல. பைத்தியமோ பண்டாரமோ என்றால், இப்போதுதான் தொடர்கிறது என்றான். பைத்துப் பைத்து நூற்றுப்பத்து; படையாச்சிக்குப் பத்து தள்ளுபடி. பைந்தமிழ்ப் புலவோர் பாட்டுக்கு ஏற்றவன். பையச் சென்றால் வையம் தாங்கும். 15710 பையச் சொன்னால் இரகசியம்; பலக்கச் சொன்னால் தண்டோரோ! பையத் தின்றால் பனையையும் தின்னலாம். பையப் பணிந்தவன் பட்டணத்தைச் சுற்றான். பையப் பையப் பாயும் தண்ணீர், கல்லும் கசியப் பாயும். பைய மிதித்தது வேடன் அடி; பதறி மிதித்தது பன்றி அடி. பைய மென்றால் பனையையும் மெல்லலாம். பையலோடு இணங்கின் எய்திடும் கேடு. பையனுக்கு என்ன வரும்? எனக்கு மாசம் இரண்டு சின்னப் பணம் வரும். பையனுக்குப் பெண் மேல் ஆசை; பெண்ணுக்கோ பொன் மேல் ஆசை. பையன் பரப்புக்கும் பாப்பா இழுப்புக்கும் சரியாய்ப் போச்சு. 15720 பையா, பருத்தி விதைக்கட்டும் பொறு என்றான்; அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றான். பையைக் கட்டு அவிழ்த்தவன் கை இட்டுப் பார்ப்பான்.  பொ பொக்கத்த வாய்க்குப் பொரிமா வுருண்டை. (பொரி உருண்டை) பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா. பொக்கை வாயன் எத்துப் பல்லனைப் பார்த்துச் சிரித்தானாம். பொக்கை வாயன் மெச்சினானாம் பொரிமாவை. பொக்கை வாயனுக்குச் சீடை சுட்டுக் கொடுத்தாற் போல. பொக்கை வாயாலே போச்சுதாம் பொரிமா. பொக்கை வாயில் போச்சுப் பொரிமா என்றானாம். 15730 பொங்கத்தான் ஆள் கிடைக்காது; திங்கவா ஆள் கிடைக்காது? பொங்கலும் போச்சு, போகியும் போச்சு, பொண்ணை அனுப்படா பேயாண்டி. (பேய்த்தாயோழி) பொங்கல் சாற்றின ஊருக்கு எருமைக் கன்று தேடிப் போனானாம். பொங்கல் பானை எடுக்கப் போனவளுக்குத் தங்கப் பானை கிடைத்ததாம். பொங்கல் வந்தால் தெரியும், பிறந்த இடத்துப் பெருமை. பொங்க வரமாட்டேன்; திங்க வருவேன். (தின்ன) பொங்கியும் பால் புறம் போகவில்லை. பொங்கின பால் பொய்ப் பால். பொங்குகிற பதநீருக்குப் பதம் போட்டது போல. பொங்குகிற பாலுக்கு நீர் தெளித்தது போல. 15740 பொங்கு சனி செல்வத்தைப் பொங்கச் செய்யும். பொங்கு சனி போய் மங்கு சனி வந்தது; மங்கு சனி போய் கொங்கு சனி வந்தது. பொங்கு சனி போய் மங்கு சனி வந்திருக்கிறது. பொங்கும் காலத்தே புளி நயக்கும்; மங்கும் காலத்தே மாங்காய் நயக்கும். பொங்கும் காலம் புளி; மங்கும் காலம் மாங்காய். பொடிச் சூட்டுக்கு ஆற்ற மாட்டாமல் நெருப்பில் குதித்தானாம். பொடி மீன் எல்லாம் பெருமீனுக்கு இரை. பொடி மீன் என்றாலும் பெருமீனுக்கு இரையாகி விடத்தான் நேரிடும். பொட்டக் கண்ணுல பூவிழுந்ததாம். பொட்டி முறித்த பயலுக்குச் சட்டையும் தலைப்பாகையும் பார். 15750 பொட்டைக் கண்ணு குதிரைக்கு இரட்டை பந்தம் தீவட்டி. பொட்டைக் கண்ணு தூங்குனா என்ன? முழுச்சிருந்தா என்ன? பொட்டைக் கண்ணு முழிச்சிருந்தா என்ன? மூடியிருந்தா என்ன? பொட்டைக் குதிரைக்கு இரட்டைத் தீவட்டியாம். பொட்டைச்சி படித்துச் சட்டிதானே சுரண்ட வேணும்? பொட்டைச்சியை முன் தள்ளிப் பொரி உருண்டை உண்ட வாய் இது என்பான். பொட்டை நாய்க்குத் தட்டுக் கூடை மறைப்பு. பொட்டையன் பெண்டாட்டியைத் தட்டுகிற மாதிரி. பொண்ணு சிரித்தால் போச்சு; புகையிலை விரிந்தால் போச்சு. பொண்ணும் பூவும் இருந்தால் நாலு பேர் வரத்தான் செய்வார்கள். 15760 பொண்ணு வீட்டுக்குப் பூ கொண்டு கிட்டுப் போவான், மாப்பிள்ளை வீட்டுக்கு மாலை கொண்டுகிட்டுப் போவான். பொதிகாளை பொட்டலுக்குள்ள நுழஞ்ச மாதிரி. பொதிக்கு அளக்கிறதுக்கு முன்னே சத்தத்துக்கு அளக்கிறதா? பொதி பொதியாய்ப் பூசணிக்காய் போகிறது; கடுகு போகிற இடத்தை ஆய்கிறான். பொதி பொதியாய் விதைத்தால் கோட்டை கோட்டையாய் விளையும். பொதியில் போவது தெரியாது; பொக்கணத்தில் போவது தான் பெரிதாகத் தெரியும். பொதியை வைத்துவிட்டுப் பிச்சைக்குப் போனான்; அதையும் வைத்து விட்டுச் செத்துக் கிடந்தான். பொதுவிலே அகமுடையான் புழுத்துச் செத்தானாம். (மாமியார்) (செத்தாளாம்) பொதி வைக்கிறவனுக்கு முன்னே சத்தத்திற்கு அளக்கிறதா? பொதுக் கம்பைப் பெருச்சாளி தின்றதுபோல. 15770 பொது மாடு புழுத்துச் செத்தது. பொத்தான் பொதுவிலே கொடுத்துச் செத்தான். பொத்தி வளர்த்த பிள்ளைதான் பொழைப்பைக் கெடுக்கும். பொத்தைப் பலாப் பழத்தைக் கீறிவிட்டான் சந்தையிலே. பொந்து ஆயிரம்; புளியாயிரம். பொந்தைச் சுரைக்காய் போல. பொம்பளை சிரித்தால் போச்சு; புகையிலை விரிந்தால் போச்சு. பொம்பளைப் பேச்சு அம்பலம் ஏறுமா? பொம்மை கோபுரத்தைத் தாங்குமா? பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும். 15780 பொய் கிடந்து புலம்புகிறது; மெய் கிடந்து விழிக்கிறது. பொய் ஒழுக்கத்தார்க்கே பொருள் சேரும். பொய் சொல்லி வாழ்ந்தவரும் உளர்; மெய் சொல்லித் தாழ்ந்தவரும் உளர். பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. பொய் சொல்லி வாழ்வதும் உண்டு; மெய் சொல்லிக் கெடுவதும் உண்டு. பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது. பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது. (புகா) பொய் சொன்ன வாயோ? பொரி தின்ற வாயோ? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். (பொய்யைச்) பொய் நின்று மெய்யே வெல்லும். 15790 பொய் பிறந்தது புலவர் வாயிலே. பொய் பூரணச் சந்திரன்; மெய் மூன்றாம் பிறை. பொய் பூரணம், மெய் இறை. பொய் முன்னே மெய் நிற்குமா? பொய் மெய்யை வெல்லுமா? பொய்யருக்குப் பொய் சொன்னால் வெற்றியாம். பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது. பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே பொய்யும் ஒரு பக்கம்; பொறாமையும் ஒரு பக்கம். (பொருளாசையும்) பொய்யும் மெய்யும் நீளத் தகும். (தெரியும்) 15800 பொய்யும் மெய்யும் போக்கிலே வெளிப்படும். பொரித்துக் கொட்டினாலும் அசைத்துக் கொட்டாதே. பொரிமாவை மெச்சினாளாம் பொக்கை வாய்ச்சி. (பொக்கை வாயன்) பொருந்திய ஒழுக்கம் திருந்திய செல்வம். பொருளும் கொடுத்து விட்டுப் பழியும் தேடுவதா? பொருளும் போகமும் கூடவரா; புண்ணியமே கூட வரும். பொருள் ஆசையும் மனசாட்சியும் பொருந்துமா? பொருள் இல்லார்க்கு அருளும் இல்லை. பொருள் இல்லார்க்குப் பூலோகம் இல்லை. பொருள்தனைப் போற்றி வாழ். 15810 பொருள் போற்றாமல் கெடும்; கல்வி நினைக்காமல் கெடும். ஓவியம் பழகாமல் கெடும். பொருள் போன வழியே துக்கம் போகும். பொருளைப் போட்ட இடத்தில் தேடு. பொல்லாக் குணத்துக்குப் பூமியில் மருந்து இல்லை. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர். பொல்லாத காலத்துக்குப் புடலையும் பாம்பாகும். (புடலங்காயும்) பொல்லாத காலத்துக்குப் புழுவும் பாம்பாயிற்று. பொல்லாத காலத்துக்குப் பொழலும் பாம்பாகும். (பொழல் - பெண்குறி) பொல்லாத காலம் சொல்லாமல் வந்தது. (சொல்லாது) பொல்லாத காலம் சொல்லாமல் வரும் புரட்டாசியிலே. 15820 பொல்லாத குணத்துக்கு மருந்துண்டா? பொல்லாத குணத்துக்கு நல்ல மருந்துண்டா? பொல்லா மனம் புத்தி கேளாது. பொல்லாதவர்கள் சங்காத்தம் உப்புமணலில் வீழ்ந்த நீர் போல. பொல்லாதவர்கள் சினப்பட்டால் கல்லின் பிளவு போல ராசியாக மாட்டார்கள். பொல்லாத வேளைக்குப் புழுவும் சாரைப் பாம்பு. பொல்லாப் பிள்ளை இல்லாப் பிள்ளைக்குச் சரி. பொல்லாப்புப் புறக்கடையில்; வாழ்வு வாசலில். பொல்லாப் பெண்ணுக்கு எல்லாம் துக்கிரி. பொழுதாலம் குடிக்கு வேறுபோக வேண்டுமா? 15830 பொழுது கால் மின்னினால் பொழுதுக்குள் மழை. பொழுதுபட்ட இடம் விடுதி விட்ட இடம். பொழுது விடிந்தது; பாவம் தொலைந்தது. பொழுது விடியுந்தனையும் மழை பெய்தாலும் கோட்டாங் கிளிஞ்சல் முளையாது. பொழுது விடியுந்தனையும் இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டை. பொறாதவன் கையில் புண். பொறியைத் தட்டடா புத்தி கெட்ட ஆசாரி. பொறி வென்றவனே அறிவின் குருவாம். பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு. பொறுக்கித் தின்னும் நாய்க்கு முறுக்கும் திருப்பும் அதிகம். 15840 பொறுக்கியிலும் பொறுக்கி பொன்னம்பலப் பொறுக்கி. பொறுக்கி பொறுக்கப் போச்சாம்; பூனை குறுக்கே போச்சாம். பொறுக்கு விதையால் அடுக்கடுக்காய் மணி பிடிக்கும். பொறுதி என்பது கடலினும் பெரிது. பொறுத்தல் கசப்பாய் இருந்தாலும் பொறுக்கப் பொறுக்கத் தித்திப்பு. பொறுத்தார் பூமி ஆள்வார்; பொங்கினார் காடு ஆள்வார். பொறுத்தான் பொறுத்தான் என்று போகிறவன் குட்டுகிறதா? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தானாம்; வெட்கம் இன்றிக் கேட்டானாம். பொறுப்பில்லாக் குடித்தனமும் பருப்பில்லாக் கலியாணமும் சப்புன்னுதான் இருக்கும். பொறுமைக்குப் பூமிதேவி. 15850 பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. பொறுமை கடலினும் பெரிது. பொறுமை தன்னையும் எதிரியையும் காக்கும். பொறுமை தொடக்கத்தில் கசப்பாக இருந்தாலும் போகப் போக இனிக்கும். பொறுமைதான் வெற்றிக்கு முதற்படி. பொறுமை புகழ் தரும். பொறுமை புண்ணியத்துக்கு வேர்; பொருளாசை பாவத்துக்கு வேர். பொறுமை பூமி ஆளும். பொறுமை பெருமைக்கு அழகு. பொறுமையில் சிறந்தவள் பூமாதேவி. 15860 பொறும் பொறுங்கிற கன்றிலே போடுகிறதைப் பொறாது பொறாதுங்கிற மண்ணிலே போடு. பொற்கலம் ஒலிக்காது; வெண்கலம் ஒலிக்கும். பொற்காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டது போல. பொற்குடத்திற்குப் பொட்டிட்டுப் பார்க்க வேண்டுமா? பொற்குடத்திற்குப் பொட்டென்ன? மை என்ன? பொற்குடம் உடைந்தால் பொன்னாகும்; மட்குடம் உடைந்தால் என்னாகும்? பொற்குருவி போன இடம் போதனுக்கும் தெரியாது. பொற்கொல்லன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் பொன். பொற் பூ மணக்குமா?(வாசிக்குமா?) பொற் பூவின் வாசனையும் முருக்கும் பூவின் வாசனையும் சரி. 15870 பொன் அகப்பட்டால் பொன்முடியத் துணி அகப்படாதா? பொன் அகப்பட்டால் புதன் அகப்படாது. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. பொன் இடப் பொன் இடப் பெண்அழகு; மண்இட மண்இட மாடம் அழகு. பொன் இடப் பொன் இடப் பெண் சிறக்கும்; மண்இட மண்இட மாடம் சிறக்கும். பொன் இரவல் உண்டு; பூவை ïரவல்cண்டா? பொன் உருகக் காயும்; மண் உருகப் பெய்யும் புண்ணியப் புரட்டாசி. (மணவாளர்) bபான்cருகக்fய்ந்துkண்cருகப்nபயnவணும். பொன் உள்ள இடம் மின்னும்; பூ உள்ள இடம் மணக்கும். பொன் ஊசி என்றால் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா? 15880 பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும். (கொட்டாவி விடும்) பொன் ஒன்று பணிகள் பல. பொன் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா? பொன் கலம் ஆகிலும் மண் சுவர் வேண்டும். பொன் களங்கப்பட்டால் புடம் போடலாம்; பெண் களங்கப் பட்டால் என்ன செய்வது? (செய்யலாம்?) பொன் கருத்தால் மாற்றுக் குறையுமா? பொன் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் சிக்கின மாதிரி. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. பொன் குடத்திற்குப் பூமாலை சுற்ற வேண்டுமா? பொன் குடத்திற்குப் பொட்டிட வேண்டுமா? 15890 பொன் குடம் உடைந்தால் பொன்; மண்குடம் உடைந்தால் மண். பொன் செருப்பானாலும் காலுக்குத் தான் போடவேண்டும். பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்? பொன்மலர் நாற்றம் பெற்றது போல. பொன்முடி அல்லது சடைமுடி வேண்டும். பொன் முடிந்த துணிக்கும் புத்திரனுக்கும் தீட்டு இல்லை. பொன் விலங்கானாலும் விலங்குதானே? பொன் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்? தேவைப்படும்) பொன்னம்பலத்துக்கும் புவனகிரி பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு. பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடைக்காது? 15900 பொன்னாங்கண்ணிக்குப் புளி இட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும். பொன்னாங்கண்ணிக்குப் புளி இட்டு ஆக்கினால் உண்ணாத வரும் ஒரு சட்டி உண்பார். பொன்னாங்கண்ணிக்குப் புளி இட்டு ஆக்கினால் உண்ணாக்கு எல்லாம் தித்திக்கும். (உப்பு) பொன்னாங்கண்ணிக்குப் புளி குத்தி ஆக்கினால் அண்ணா மலையாரும் தொண்ணாந்து நிற்பார். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளிபோட்டுக் கடைந்தால் அண்ணாமலை சாமி தொண்ணாந்து நிற்குமாம். பொன்னாங்கண்ணிக் கீரையில் புளியூற்றிக் கடைந்தால் பொன்னாயி புருசன் திண்ணையைவிட்டுத் தன்னாyவருவான். பொன்னாசை, மண்ணாசையை விடப் பெண்ணாசையால்அழிந்தவர்கள்தா‹அதிக«பேர். பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும். பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும். பொன்னால் பயன் பொன்படைத்தோர்க்கு உண்டு. 15910 பொன்னாலே கத்தி என்றால் வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா? பொன்னாலே பொரித்துத் தங்கத்தாலே தாளிக்கிறாளாம். பொன்னான மகளானாலும் மண்ணான மாமியார் வேண்டும். பொன்னி பூ முடிப்பதற்குள் பூங்காடே விளங்காடு ஆச்சாம். பொன்னின் உண்மையை நெருப்பில் பார். பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போச்சுதாம்; வரகுச் செருக்கு வழகு பட்டதாம். (வரகு) பொன்னின் குடத்திற்குப் பொட்டு வேண்டுமா? பொன்னின் குடத்திற்குப் பொட்டிட்டுப் பார்க்க வேண்டுமா? பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும். மண்ணின் குடம் உடைந்தால் என் ஆகும்? பொன்னின் குணம் போமா? பூவின் மணம் போமா? 15920 பொன்னுக்குப் பொடியாய்ப் போயிற்று. பொன்னும் தெரியாது; பொன் முடிந்த துணியும் தெரியாது. பொன்னும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும். பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா? பொன்னையும் புடம் போட்டுப் பார்க்க வேண்டும். பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக் கூடு. பொன்னையும் புடவையையும் அகற்றிவிட்டால் பெண்ணுக்கு ஒரு மகத்துவமும் இல்லை. பொன்னை விற்றுத் தின்னு; மண்ணை வைத்துத் தின்னு. பொன்னை வைக்கிற இடத்தில் பூவையாவது வைக்க வேண்டும். (கோயிலில்)  போ போகப் போகத் தெரியும் புதுக்கணக்கன் வாழ்வு. 15930 போகப் போகத் தெரியும் பொய்யும் மெய்யும். போகமும் உடன் உண்டு பொன்னையும் கைக் கொள்ளும் மாதர். போகமும் புவனமும் பொருந்தும் இடம் எங்கும் தேகம் கரணம் திரியும். போகாத இடந்தனிலே போக வேண்டாம். போகாத இடத்தில் போனால் வராத சொட்டு வரும். போகாத ஊருக்கு வழி ஏன்? போகாத ஊருக்கு வழி சொன்ன மாதிரி. போகிற பிசாசு கல்லைத் தூக்கிப் போட்டுப் போயிற்றாம். போகிற போது பொறி தட்டினது போல. போகிறவன் எப்பொழுதும் போவான். 15940 போகிறவன் பொன்னைத் தின்றால் இருக்கிறவன் இரும்பைத் தின்பானா? போகிறேன் போகிறேன் என்று பொரியரிசியை மாள வைத்தானாம். போகும் போது தெரியும் தண்டவாளமும் வண்டவாளமும். போகும் போது புளிய மரத்தடியில் போ; வரும்போது வேப்ப மரத்தடியில் வா. போகும் போது வசந்தன்; வரும்போது அசந்தன். போக்கணம் கெட்ட முயல் பொந்திலே நுழைந்தாற் போல. (போக்கிடம் அற்ற) போக்கணம் கெட்டவன் ராஜாவிலும் பெரியவன். போக்கற்ற நாய்க்குப் போனதெல்லாம் வழி. போக்கற்ற மத்தளம் கொட்டினதாம்; பூண்டித் தெய்வம் வந்து ஆடினதாம். போக்கற்ற மனிதனுக்குப் போனதெல்லாம் வழி. 15950 போக்கற்றவனுக்கு போலீசு வேலை; வாக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போக்கற்ற வாய்க்குப் பொறியும் கல்லும். போக்கற்றால் புலி ஆள்மேலே பாயும். போக்கற்றான் நீக்கற்றான்; பொழுது விடிந்ததும் கந்தை அற்றான். போக்கிடம் இல்லாத முயல் பொந்துல நுழைந்தது போல். போக்கிடம் கெட்ட மூளிக்கு மூக்கின் மேலே கோபம். போக்கிடம் கெட்டவன் ஊருக்குப் பெரியவன். போக்கு நீக்கு இல்லாமல் புத்திக்குச் சரிப்பட்டபடி பேசுகிறது. போக்கும் இல்லை; புகலும் இல்லை; முறுக்கிப் பிடிக்க மீசை உண்டு. போக்கிரிக்கு ஏற்ற சாக்கிரி. 15960 போக்கிரிக்கு ஏற்றது போலீசு வேலை. போக்கிரிக்குப் போக்கிரி வேண்டும். போக்கிரிக்கு முதல் தாம்பூலம். போக்கிரித்தனத்திற்கு முதல் தாம்பூலம் கொடுக்க வேண்டும். போக்கிரிப் பயலைக் கண்டதும் சிறுக்கி தக்குபுக்குனு நடந்தாளாம். போசனம் கொஞ்சமானாலும் ஆசனம் பெரிது. போசனம் சிறுசா இருந்தாலும் ஆசனம் பெரிசா இருக்கணும் (போசனம் - உண்பொருள்; ஆசனம் - பாத்திரம்) போசனம் சிறுத்தாலும் ஆசனம் பெருக்க வேண்டும்(சிறுக்கலாகாது.) போச்சுதடி உறவு புளியம்பழ ஓடு போல. போஞ்ச கொள்ளி புறத்தே. 15970 போடுகாலில் தேடிப் போடு. போடு தோப்புக்கரணம் என்றால் எண்ணிக்கொள் என்றானாம். போட்ட இடத்தில் தானே தேட வேண்டும். போட்ட இடத்தில் தேட வேண்டும். போடப் போடத் தீனி; காவக் காவச் சுமை. போட்ட கோட்டைத் தாண்டமாட்டாள். போட்டால் நெல்; போடாவிட்டால் புல். போட்டதை எடுக்க இருக்கிறதைப் போட்டாளாம். போதகருக்கே சோதனை மிஞ்சும். போதனை பெரிதோ? சாதனை பெரிதோ?(பெரிதா?) 15980 போதகர் சொல்லைத் தட்டாதே; பாதகர் இல்லைத் தட்டாதே. போதாத காலத்துக்குப் பழுதையும் பாம்பு ஆகும். போதாத காலத்துக்குப் புக்ககத்து அத்தை வந்தாளாம். போதாதகாலத்துக்கு¥புடலங்காயு«பாம்பாகும். (பாம்பாய்ப் பிடுங்கும்) போதுக்கும் பாட்டுக்கும் சரி. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. போதும் என்ற மனமே பொன் விளையும் பூமியாம். போதைக்குப் பாதைதான் படுக்கை. போதைக்குப் பாதை தெரியாது. nபாத்திப்gடுத்தாலும்tந்தாதான்öக்கம். 15990 nபாம்பழிvல்லாம்mமணன்jலையோடே. போய் வந்தும் பொன்னம்பலம்; திரும்பி வந்தும் திருவம்பலம். (போயும்) போயொரு கோபத்தால் கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோசம் வந்தாலும் அப்பால் எழுந்திருக்கலாமா? போராடிய வீடு நீறாடிப் போகும். போரிலும் கொள்ளிவைத்து மாரிலும் அடித்துக் கொள்கிறதா? போரில் ஊசி தேடின சம்பந்தம். போரில் குதிரை நடவாவிடின் வீரர் பறப்பார். போருக்கு அஞ்சுவார் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள். போரைக் கட்டி வைத்துப் போட்டும் பிச்சைக்குப் போவானேன்? போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டால் கட்டுமா? 16000 போர் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா? போர் இட்ட வீடு பொடிபட்டு வேகும். போர் இட்ட வீடு பொரி இடும். போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைத்தல். போர் சுட்டுப் பொரி பொறுக்கினாற் போல. போர்த்துக் கொண்டவர்களைக் காக்கும் போக்கணம் கெட்ட குளிர். போர்த் தொழில் புரியேல். போர் பிடுங்குகிறவன் சாகிறவனை மிரட்டிய கதை. போர் பிடுங்குகிறவன் பூரக்களம் சாகிறவனை மருட்டு கிறானாம். (பிடுங்குகிறவள்) போர் மறைவில் நெல்லைத் தின்பது. 16010 போர் மிதிக்கிற மாடு வைக்கோல் தின்னாதா?(தின்னாமலிருக்குமா?) போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம்; அதைப் பொழுது விடியுமட்டும் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம். போலை நாரி வாடி; காடி மேல் ஏறடி. (போலி) போலை பொறுக்கப் போச்சாம்; பூனை குறுக்கே போச்சாம். போலீசு கையில் சிக்கின மோட்டாரும், செக்குக்காரன் கையில் சிக்கிய மாடும். போவதும் வருவதும் மோட்டார் வண்டி; பொங்கித் தின்பது புது மண்சட்டி. போன அன்றைக்குப் போய் புதன் அன்றைக்கு வா. போன இடத்தில் புல்லும் முளைக்காது. போன இடம் புல் முளைத்துப் nபாயிற்று. போன கண்ணையும் கொடுக்குமாம் பொன்னாங்கண்ணி. 16020 போனகம் என்பது தான் உழந்து உண்டல். போன சனியனைத் தாம்பாலம் வைத்து அழைப்பதா? போன சனியன் போச்சென்றிருந்தால், அது பொந்துக்குள் இரந்து பொசுக்குன்னு கிளம்பிற்றாம். போன சனியன் போச்சென்று இருந்தானாம்; அது பொச்சுக் குள்ளிலிருந்து கீச்சுக் கீச்சுன்னச்சாம். (பொந்துக்குள்ளி ருந்து, மயிருக்குள்ளிருந்து) போன சுரத்தைப் புளியிட்டு அழைப்பதா? போனதினம் போகப் புதன் அன்றைக்கு வந்தான். போனது என்ன ஆனாலும் புத்திக் கொள்முதல். போனது போச்சு; பொழுது விடிந்தது. போனது போல வந்தானாம் புது மாப்பிள்ளை. போனதை எண்ணி ஏங்குகிறவன் புத்தி அற்றவன். 16030 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன். போனபடியே திரும்பி வந்தான் புது மாப்பிள்ளை. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே. போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்ந்த கூலி கொடுப்பாரும் இல்லை. போன மாட்டைத் தேடுவாரும் இல்லை; வந்த மாட்டைக் கட்டுவாரும் இல்லை. போன முயல் பெரிய முயல். போனவன் உடைமை இருந்தவனது. போனவன் போனான் இருந்தவன் வாழ்ந்தான். போனால் போன இடம் வந்தால் வந்த இடம். போனால் வராது; பொழுது போனால் நிற்காது. 16040 போனால் வராது பொழுதும் உயிரும்.  பௌ பௌவத்து எழில் கொள். பௌவப் பெருமை தெய்வச் செயலே. பௌவம் உற்றது ஆக்கை; செவ்வை அற்றது வாழ்க்கை. (ஆக்கை)  ம மகத்தில் பிள்ளை சகத்தில் இல்லை. மகத்தில் மங்கை பூரத்தில் புருடன். மகத்துப் பிள்ளை சகத்திலே கிடையாது. மகத்துப் பிள்ளை சகத்தை ஆளும். மகத்துப் பெண் வசத்திலே கிடையாது. மகத்துப் பெண் சகத்துக்கு அதிசயம். 16050 மகத்துப் பெண் முகத்துக்கு ஆகாது. மகதேவர் ஆடு இடித்துப் பேயும் ஆடுகிறது. மகப்பிறப்பு பார்க்கப் போகும் தாய்மார்கள் மகவு வந்தாலும் பார்க்கணும், மலம் வந்தாலும் பார்க்கணும். மகம் மன்னன் ஆவான். மகமேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறமாம். மகம் விட்டோடினால் குடி விட்டோடும். மகராசனுக்கு இடம் விடக் கூடாது, ஏழைக்கு ஆசை சொல்லக் கூடாது. மகராசனுக்கு வாழ்க்கைப்பட்டு மஞ்சளுக்குத் தரித்திரமா? மகளுக்கு எட்டோடு எட்டு எண்ணெய்; மருமகளுக்குத் தீவிளிக்குத் தீவிளி எண்ணெய். (வெள்ளியோடு வெள்ளி) மகளுக்குக் குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கிறது. 16060 மகளுக்குப் புத்தி சொல்லித் தாய் அவிசாரி போனாளாம். மகள் செத்தாள் தாய் திக்கற்றாள். மகள் செத்தாள் பிணம்; மகன் செத்தாள் சவம். மகள் பிள்ளையை இடுக்கியும் மகன் பிள்ளையை நடத்தியும். மகள் வாழ்கிற வாழ்வுக்கு மாசம் மூன்றுகட்டு விளக்குமாறு. (எட்டுக்கட்டு, பத்துக்கட்டு) மகன் அறிவு தந்தை அறிவு மகன் இல்லாத வீடு பாழ்; மரம் இல்லாத தோட்டம் பாழ். மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் கொட்டம் அடங்கினாற் போதும். (கர்வம்) (கொழுப்பு) மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலியறுக்க வேண்டும். மகன் பட்ட கடனை அப்பன்தான் தீர்க்கணும். 16070 மகாமகம் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருவிசை. மகான் மகிமை மண்டுவுக்குத் தெரியுமா? மகாப் பெரியவர் மண்டையிலே புழுத்தவர். (பழுத்தவர்) மகாராசனோடு சொக்கட்டான் போடலாமோ? மகாராசன் கலியாணத்தில் நீராகாரம் நெய்பட்டபாடு. மகாராசன் பெண்சாதி மர்மக்காரி; யாருடன் சென்றாலும் திறமைக்காரி. மகாராசன் பெண்சாதி மர்மக்காரி; மாநிலத்தில் இல்லாத திறமைக்காரி. மகாராசன் மண்ணைத் தின்றால் மருந்துக்குத் தின்றான் என்பார்கள், பிச்சைக்காரன் மண்ணைத் தின்றால் வயிற்றுக்கு இல்லாமல் தின்றான் என்பார்கள். மகாலட்சுமி பரதேசம் போனது போல. மகிமைக்கார மாப்பிள்ளை வந்திருக்கிறான் தோப்பிலே. 16080 மகிமைச் சுந்தரி கதவை ஒஞ்சரி. மகிமைப் பட்டவனுக்கு மரணம்; மாட்டுக்காரப் பையனுக்குச் சரணம். மகிமையிலே ஒருபெண் குவளையிலே வாழ்கிறாள்; அதிலும் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள். மக்கட் பிறப்பு மகிமைப் பிறப்பு. மக்கட் பேறும் மழை பெய்கிறதும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது. மக்கள் உண்டாகில் மச்சான் அன்பு உண்டாகும். மக்கள் களவும் வரகு பதரும் சரி. மக்கள் சோறு தின்றால் மகிமை குறையும். மக்கள் பெருமை மலடி அறிவாளோ? மக்கள் பேற்றில் பெரும் பேறு இல்லை. 16090 மக்கள் பொன்னாக இருந்தாலும் மாப்பொன் குறையாமல் இருக்குமா? மக்கள் வயிறும் காயக் கூடாது; பானை அரிசியும் குறையக் கூடாது. மக்கள் வருவதற்குள் தின்றுபார்; மருமக்கள் வருவதற்குள் போட்டுப் பார். மக்காவுக்குப் போய்க் கொக்குக்குப் பிடித்தது போல. மக்காவுக்குப் போய் நொண்டி சாயபுகாலிலே விழுந்தானாம். மங்கம்மா காலத்துப் பேச்சு; எங்கம்மா காலத்தில் போச்சு. மங்கம்மா சாலை மரம் நிறைந்த சோலை. (மலைமேலே) மங்கலம் முந்தியா? மண் முந்தியா? (மங்கலம், மண்கலம்) மங்கலமும் திருநாள்; மகள் வீடும் கலியாணம்; அங்கேதான் போவானா? இங்கேதான் வருவானா? மங்குகிற காலத்துக்கு மாங்காய்; பொங்குகிற காலத்துக்குப் புளியங்காய். 16100 மங்கும் காலத்தில் மாப்பூக்கும்; பொங்கும் காலத்தில் புளி பூக்கும். மங்கும் காலம் மாங்காய்; பொங்கும் காலம் புளியங்காய். (மா, புளி) மங்கை இருக்கிறாள் மடைப்பள்ளியில்; மண்டை உருள்கிறது வையகமெல்லாம். மங்கை சுகத்தைத் தவிர மற்ற சுகம் வேறில்லை. மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள்; கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்? மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள்? திங்கள் ஒரு பொழுது, செவ்வாய் பகல் அறுதி. மங்கை மாரி வந்தார் தங்க மழை பெய்தது. மங்கையர் கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும். மங்கையரில் மீனாட்சி; மாப்பிள்ளைகளில் சொக்கலிங்கம். மசக்கையில் மண்ணாங் கட்டியையும் தின்பார். 16110 மசநாய் சாவது எப்போது? ஊர் சுத்தம் ஆவது எப்போது? மசைமசையாக வந்தால் மசையனும் பண்ணாடியாவான். மச்சத்தின் குஞ்சுக்கு இப்படியென்றால் மாதாவுக்கு எப்படியோ? மச்சம் விற்ற காசு மன்னனுக்கு ஆகாதோ? மச்சாண்டாருக்கு மணியம்; பண்ணாடி குறுக்கே மறுக்கே. மச்சானைப் பார்க்க உறவும் இல்லை; மயிரைப் பார்க்கக் கறுப்பும் இல்லை. மச்சான் அடித்தது உறைக்கவில்லை; மதனி சிரித்தது உறைத்ததாம். மச்சான் இல்லாத வீடும் கறிவேப்பிலை இல்லாத குழம்பும் மணக்காது. மச்சான் உறவு அக்காள் உள்ள மட்டும்தான். மச்சான் உறவு மலை மீதும் உண்டு. 16120 மச்சான் செத்தால் மயிராச்சு; கம்பளி நமக்காச்சு. மச்சான் தயவு இருந்தால் மலையேறிப் போரிடலாம். மச்சான் பால் குடிக்கத்தான், மாடு சினை பட்டதுங்கற கதையா? மச்சான் மச்சான் கிச்சுக்கிச்சு; கொட்டை இரண்டும் பிச்சுக்கிச்சு. மச்சினன் உண்டானால் மலை ஏறிப்பிழைக்கலாம். மச்சினன் தயவு உண்டானால் மலை மீதும் ஏறலாம். மச்சு ஏற்றி ஏணி களைவு. மச்சு வீட்டில் குச்சு வீடு போல. மச்சை அழித்தால் குச்சுக்கும் ஆகாது. (இடித்தால்) மஞ்சள் பூசின முகத்தைப் பார்ப்பாரா? மயிர்முளைத்த முகத்தைப் பார்ப்பாரா? 16130 மஞ்சள் வைப்பது மதவை நிலத்தில். மஞ்சனமும் மலரும் வேண்டாம் நெஞ்சகம் தந்தால் போதும். மஞ்சு கறுத்தால் மண்ணச்சநல்லூருக்கு வேட்டை. மடக்கேள்விக்கு மாறுத்தரம் இல்லை. மடக்கொடி இல்லாத மனை பாழ். மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி. மட நாய்க்குத் தடியடி மிச்சம். மடப்பெருமையே தவிர நீராகாரத்துக்கு வழி இல்லை. மடம் பிடுங்கிக் கொண்டு நந்தவனத்துக்கு வழி எங்கே என்றானாம். மடம் புகுந்த நாய் தடியடிக்குத் தப்பாது. 16140 மடம் விட்டவனுக்கு நந்தவனத்தின் மேல் ஆசை ஏன்? மடிச்சீலையும் குறையாமல் மக்கள் முகமும் வாடாமல். மடிப்பணம் போய் வழிச்சண்டையை இழுத்ததாம். மடிப்பழத்தை விட்டுத் துறட்டு பழத்துக்கு நின்றானாம். மடிப்பிச்சை மங்கலியப் பிச்சை. மடிப்பிள்ளைக் காரிக்கு மல்லிகைப் பூ ஆகுமா! மடிமாங்காய் போட்டுத் தலை வெட்டலாமா? (மடியிலே) மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம். (பயமிருக்கும்) மடியிலே கனம் இருந்தால் தானே வழியிலே பயம்? மடியிலே கனம் இல்லையேல் வழியில் பயமில்லை. (கனம் இல்லை) 16150 மடியிலே பூனைக்குட்டியைக் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிறது போல. மடியில் குழந்தையைக் கிடத்தி ஊர் முழுதும் தேடினாளாம். மடியில் இருக்கிற அவல் கொடாதவர் மச்சில் ஏறிக் கொடுப்பார்களா? மடியில் இருந்த பணம் போய் வழியில் இருந்த சண்டையை வலுவில் இழுத்ததாம். மடியில் கொட்டினால் எடுக்கலாம்; வாயால் கொட்டினால் எடுக்க முடியாது. மடியில் நெருப்பைக் கட்டிக் கொள்வார்களா? மடியை அறுத்துப் பால் குடித்தது போல. மடியைப் பார்த்துப் பசுவை வாங்கு; மாரைப் பார்த்துப் பெண்ணை வாங்கு. மடியைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறதா? (கேட்டாளாம்) மடியைப் பிடித்து மாங்காய் போட்டு முடியைப் பிடித்துப் பணம் வாங்கு. 16160 மடி விதை முந்துமுன்னே பிடி விதை முந்தும். மடி விரைக்குப் பிடி விரை முந்தி. மடி விரை காய்ந்தது, பிடி விரை விளைந்தது. மடை ஏறப் பாய்ச்சினால் தடை ஏற விளையும். மடையனுக்கு மறுமொழி இல்லை. மட்டப் பழுத்தால் மரத்தில் இருக்கலாம்; நையப் பழுத்தால் பிய்யிலதான் விழணும். மட்டம் பார்த்து ஒட்டத் தட்ட வேண்டும். மட்டற்ற சேனை கிட்டே இருந்தாலும், கட்டக் கயிறு அட்டகாசமாய் வருவான். மட்டான போசனம் மனத்துக்கு மகிழ்ச்சி. மட்டி எருக்கிலை மடல் மடலாய்ப் பூத்தாலும் மருக் கொழுந்து வாசனை வருமா? 16170 மட்டியும் முட்டாளும் பட்டாளத்துக்குத் தான் சரி. மட்டிப் பயலுக்குத் துட்டக் குருக்கள். (துருக்கன்) மட்டு இல்லாமல் கொடுத்தாலும் திட்டுக் கேட்கலாகாது. மட்டு இல்லாமல் கொடுத்தாலும் திட்டிக் கொடுத்தல் தகாது. மட்டு மரியாதை பார்த்தால் சட்டம் சும்மா இருக்குமா? மட்டை இடம்; குட்டி வலம். மட்டைக் கரியையும் மடப்பள்ளியரையும் நம்பப்படாது. மட்டைக்கு ஏற்ற குட்டை. மட்டைக்கு ஏற்ற கொட்டாப்புளி. மணக்க மணக்கச் சாப்பிட்டாலும் கிழக்கு வெளுக்க மலம்தான். 16180 மணமாலை அருமை மட்டிக் குரங்கு அறியுமோ? மணமும் பிணமும் போகிற வீதியிலே நின்று போகிறது. மணம் இல்லாத மலரும் மனைவி இல்லாத வீடும் பாழ். மணலிடம் காட்டுக்கிழங்கு என்றால் மேலாகாவா கிடக்கும்? மணலின் மேல் விழுந்த மழைத்துளி உடனே மறையும். மணலை அளவிட்டாலும் மனதை அளவிட முடியாது. மணலைக் கயிறாய்த் திரிப்பான்; வானத்தை வில்லா வளைப்பான். மணல் உழுது வாழ்ந்தவனும் இல்லை; மண் உழுது கெட்டவனும் இல்லை. மணல் சோற்றில் கல் ஆய்ந்தாற் போல. மணி அடித்தால் சோறு; மயிர் களைந்தால் மொட்டை.மணி ஓட்டையாக இருந்தாலும் ஓசை எழத்தான் செய்யும். 16190 மணியக்காரனுக்கு அரை நாழிகை வேலை; தணியக் காரனுக்குத் தண்டால் அடி. மணியம் பார்த்த ஊரில் கூலிக்கு அறுப்பதா? மணியாம் பருக்கை போட மகிழ்ந்த கடனைப் போல. மணையில் பெண்ணை மாற்றி வைக்கிறது; திண்ணையில் பெண்ணைத் திருப்பி வைக்கிறது. மண் அடுப்பே தவிரப் பொன் அடுப்பு இல்லை. மண் ஆயினும் மனை ஆயினும் காப்பாற்றினவர்களுக்கு உண்டு. மண் இட மண் இட வீட்டுக்கு அழகு; பொன் இடப் பொன் இடப் பெண்ணுக்கு அழகு. மண்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம். மண் காசுக்குச் சாம்பல் கொழுக்கட்டை. மண் குதிரை ஆற்றில் இறங்குமா? 16200 மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? மண் சோறு புண் படுத்தும். மண் சோற்றிலே கல் ஆராய்ந்த மாதிரி. மண்ட காலுக்கு மிஞ்சியில்லை; மயிர்த்தலைக்குக் கொப் பில்லை. மண்டி குடித்தால் குண்டி பெருக்கும். மண்ணால் வீடு கட்டினால் நிற்குமா? மண்ணுக்குப் புளி; மனைக்கு வேம்பு. k©il cŸstiuÆš rË nghfhJ.(c©L) மண்டைக்கு ஏற்ற கொண்டை; திண்டுக்கு ஏற்ற மெத்தை. மண்டைக்குத் தக்க கொண்டை; வாய்க்குத் தக்க பேச்சு. 16210 மண்டையில் எழுதி மயிரால் மறைத்தது போல. மண்டையில் துணியைக் கட்டிக் கொண்டு சண்டைக்கு மார் தட்டுகிறது. மண்ணறியா வேரில்லை; மனதறியாப் பொய்யில்லை. மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம். மண்ணாங்கட்டியின் குரல் மலைக்குக் கேட்குமா? மண்ணில் இருந்து வழக்கு ஓரம் சொல்லாதே. மண்ணிலே போட்டது எங்கும் போகாது. மண்ணிலே முளைத்த பூண்டு மண்ணுக்கு இரையாம். மண்ணின் மேல் நின்று பெண்ணைப் பழிக்காதே. மண்ணின் மேல் நின்று பெண் ஓரம் சொல்லாதே. 16220 மண்ணுக்கேற்ற மகசூலும் பெண்ணுக்கேற்ற புருசனும். மண்ணுக்குத் தீட்டிப் பார்; பெண்ணுக்குப் பூட்டிப் பார். (பூசிப்) மண்ணுக்குள் இருப்பது மகிமை; அதை எண்ணிப் பார்ப்பது கடுமை. மண்ணைக் கவ்வுகிற பயில்வானுக்கு மசாலாக் கறிவேறேயா? மண்ணைக் கீறி மண்ணிலே படுத்திருக்கிறார்கள். (படுக்கிறார்கள்) மண்ணைத் திருத்திப் பொன்னைப் பெருக்கு. மண்ணைத் தின்றாலும் மறையத் தின்னு. மண்ணை நம்பினோரும் மன்னனை நம்பினோரும் வீண் போகார். மண்ணை நோண்டுகிற புழு மரத்தைச் சாய்க்கும். மண்ணைப் பழித்தாலும் பெண்ணைப் பழிக்காதே. 16230 மண்ணை வைத்துத் தின்; பொன்னை விற்றுத் தின். மண் தள்ள முடியாதவன் சேறு மிதிக்கப் போனது போல. மண் தின்ற பிள்ளை மண்ணுக்கே இரை. மண் பறித்து உண்ணேல் மண் பானை பொங்கல் மணக்குதாம்; மாணிக்கத் தொந்திக்குப் பசிக்குதாம். மண் பிள்ளையாய் இருந்தாலும் தன் பிள்ளையாய் இருக்க வேண்டும். மண் பூனையானாலும் எலி பிடித்தால் சரி. மண் பூனை எலியைப் பிடிக்குமா? மண் மண்ணோடே; விண் விண்ணோடே. மண் மாமியார் பண்ணினதும் மறைந்தாளாம் கிழவி. 16240 மண் மாரி பெய்தால் மணல் வாரி விளையும். மண் வாயும் இல்லை; மரவாயும் இல்லை. மண் விற்ற காசும் பெண் விற்ற காசும் மண். மண் வெட்டி கூதல் அறியுமா? மண் வெட்டிக் காம்புக்கு மரத்தைச் செதுக்கினால் அரிவாள் பிடிக்காவது ஆகாதா? மண் வேலையோ! புண் வேலையோ! மதகு அடி சாவியானாலும் மலை அடி சாவி ஆகாது. மதகு அடி நன்செயும் மலை அடிப் புன்செயும். மதகு அடி பாழானாலும் மலை அடி பாழாகாது. மதம் எடுத்தவள் மத்தியானத்துல போனாளாம்; கொழுப்பு எடுத்தவள் கோழி கூப்பிடப் போனாளாம். 16250 மதம் பிடித்த யானைக்கு மாவுத்தனைத் தெரியுமா? மதம் விரதம் கேட்குது, மத்தியான்னம் பழையது கேட்குது. மதயானை ஏறியும் திட்டி வாசல் நுழைந்தது போல. மதயானை போனது மார்க்கம். மதயானை கண்பட்ட மாவுத்தனும், மாற்றாந்தாய் கண்பட்ட குழவியும். மதயானையை அடக்கக் கோணி ஊசியைத் தேடினானாம். மதயானையை அடக்குவார் உண்டா? மதலைக்கு இல்லை கீதமும் அறிவும். மதனிக்கு வெள்ளைச் சாதமா? மதி இருக்க விதி இழுக்கும். 16260 மதி இல்லாத விண் ஆனேன்; மருந்து இல்லாத புண் ஆனேன். மதி கெட்ட வேளாளன் சோற்றை இழந்தான். மதி பாதி மருந்து பாதி. மதியாதார் தலைவாசல் மிதியாதே. (மிதிக்க வேண்டாம்) மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடி பெறும். மதியானை மதியான் மதியான் ஆவானா? மதியும் உமது விதியும் உமது. மதியை விதி மறைக்கும். மதியை வெல்ல வேதனாலும் முடியாது. மதில் இடிந்தால் கட்டலாம்; மனது இடிந்தால் கட்டலாமா? 16270 மதில்மேல் பூனை எந்தப்பக்கமும் குதிக்குமாம். மதில்மேல் பூனை எந்தப்பக்கம் குதிக்கும் என்று யாருக்குத் தெரியும்? மதினிக்கும் வெள்ளைச் சாதமா? மது உள்ளே போனால் மதி வெளியே போகும். மதுரைக்குத் தெற்கே மரியாதை இல்லை. மதுரைக்கு வழி வாயிலிருக்கிறது. மதுரை பாராதவன் மாபாவி; திரும்பிப் பாராதவன் தீம்பாவி. மதுரையில் அடிபட்ட சூரனுக்கு மானாமதுரையில் மீசை துடித்ததாம். மதுரையில் அடிபட்டு மானாமதுரையில் விழுந்தானாம். மதுரையில் பூசணிக்காய் மாட்டுவிலை. 16280 மதுரையில் மூட்டை தூக்கச் செங்கல்பட்டில் சும்மாடா? மதுரையைப் பார்த்தவனும் கழுதை; மதுரையைப் பார்க்காத வனும் கழுதை. மதுவும் மாதரும் தீமையின் அடிப்படை. மத்தளமாகப் பிறந்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அடிக்குத் தப்ப முடியாது. மத்தளம் பொத்தல் என்று சிற்றெறும்புத் தோலால் மூடினாளாம். மத்தியானச் சோற்றுக்கு வழியில்லாதவன் மந்திரி மாட்டை விலை கேட்டானாம். மத்தியானம் செத்தால் வாய்க்கரிசி இல்லை; இரவு செத்தால் விளக்கெண்ணெய் இல்லை. மந்தாரப் போது பெண்களுக்குக் கேடு. மந்தாரப் போது மதி கெட்ட பையன்களுக்குக் கேடு. மந்தாரப் போது மதிகெட்டுப் போகும்; மதிகெட்ட பெண்ணுக்கு அடிவாங்கி வைக்கும். 16290 மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும். மந்திரங்கால் மதிமுக்கால். மந்திரத்தால் மாங்காய் காய்க்குமா? மந்திரத்தால் மாங்காய் விழுமா? (விழாது) மந்திரம் இல்லாக் குருக்களுக்கு மணியே துணை. மந்திரம் இல்லான் பூசை அந்திபடும் அளவும். மந்திரம் பாதி தந்திரம் பாதி. மந்திரி இல்லாத யோசனையும் ஆயுதம் இல்லாத சேனையும் கெடும். மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல். மந்திரிக்கும் உண்டு மதிகேடு. 16300 மந்திரி வீட்டிலே முந்திரி பூத்தது; வாய்க் கெட்டினது கைக்கு எட்டவில்லை. மந்திரியின் மதியளவு நாடு முன்னேறும். மந்தையிலும் பால், வீட்டிலும் தயிரா? மந்தைவெளி நாய்க்குச் சந்தையில் என்ன வேலை? மப்புக்காரன் தப்புக் கொட்டுவானா? மப்புக்காரன் போலத் தப்புத் திப்பாய்ப் பேசுகிறது. மயானத்தில் வீட்டைக் கட்டிப் பேய்க்கு அஞ்சலாமா? மயான வைராக்கியமும் பிரசவ வைராக்கியமும். (நில்லாது) மயிர் இருந்தால்தான் வாரி முடிக்கலாம். மயிர் உள்ள சீமாட்டி அள்ளிமுடிகிறாள்; இல்லாதவள் ஒட்டு மயிர் வைத்துக் கொள்கிறாள். 16310 மயிர் உள்ள மகராசி வாரி முடிகிறாள். மயிர் உள்ள சீமாட்டி எப்படி முடிந்தாலும் அழகுதான். மயிர் உள்ள பெண் எப்படியும் கொண்டை போடுவாள். மயிர் உள்ள பெண் இடக்கையாலும் போடுவாள்; வலக்கை யாலும் போடுவாள். மயிர் உள்ள சீமாட்டி எப்படி முடிந்தால் என்ன? மயிர் ஊடாடாத நட்பும் பொருள் ஊடாடக் கெடும். மயிர்க் கம்பளி இடையன் தலைமேலே. மயிர் சிக்கினால் உயிர் வைக்குமா கவரிமான்? மயிர் சுட்டா கரியாகுமா? உமி சுட்டுக் கரியாகுமா? மயிர் சுட்டுக் கரியாகுமா? 16320 மயிர் விலகினால் மலையும் விலகும். மயிரைக் கொண்டு மாங்காய் எறிந்தால் மாங்காய் விழட்டும்; அல்லது மயிர் விழட்டும். மயிரைக் கட்டி மலையை இழுத்தால் வந்தால் மலை; போனால் மயிர். மயிரைப் போலக் கருப்பு இல்லை; மைத்துனனைப் போல உறவு இல்லை. மயிலாடுதுறையில் பெண் எடுக்காதே; மன்னார்குடியில் பெண் கொடுக்காதே. மயிலாப்பூர் ஏரி உடைந்து கொண்டு போகிறது என்றால், வருகிற குழுவுக்கு ஆகட்டும் என்றாற்போல. மயிலே! மயிலே! இறகு கொடு என்றால் கொடுக்குமா? இழுத்து வைத்துப் பிடுங்கினால் கொடுக்கும். மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? மயில் கண்ணிக்கு மசக்கை வந்தால், மாப்பிள்ளைக்கு அவத்தை. மரக்கட்டையைச் சார்ந்த புல் கலப்பைக்கு அஞ்சாது. 16330 மரக்கால் உருண்ட பஞ்சம்; மன்னவனைத் தோற்ற பஞ்சம். மரக்கோணல் வாய்ச்சியால் நிமிரும். மரணத்திலும் கெட்ட மார்க்கத்திற்குப் பயப்படு. மரணத்துக்கு நாலு பக்கமும் வழி. மரணத்துக்கு நாள் நட்சத்திரம் இல்லை. மரணத்துக்கு வழி மட்டு இல்லை. மரணத்தை வெல்ல மருந்து சாப்பிடுவது உண்டா? மரணம் வரும்வரை எல்லாம் வாழ்க்கைதான். மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல. மரத்தில் இருந்து விழுந்தவன் மேல் தேர் ஓடினது போல. 16340 மரத்திலே இருக்கிற மாம்பழத்தைக் காட்டிலும், மடியிலே இருக்கிற கோவைப்பழம் மேல். மரத்தின் கீழ் ஆகா மரம். மரத்தின் பழம் மரத்து அண்டை விழும். மரத்துக் கிளைக்குள் குரங்கைத் தாங்காத கொம்புண்டோ? மரத்துப் பழம் மரத்தடியிலே விழும். மரத்தை இலை காக்கும்; மானத்தைப் பணம் காக்கும். (சீலை) மரத்தை நட்டவன் தண்ணீர் விட மாட்டானா? மரத்தை வாய்ச்சி இட்டுப்பார்; மனிதனைப் பேச்சு இட்டுப்பார். மரத்தை வெட்டி மரத்தின் மேலே சாய்க்கிறது போல. மரத்தை வெட்டினால் வாளாகும்; பிணத்தை வெட்டினால் என்னாகும்? 16350 மரத்தை வைத்துக்கொண்டு பழத்தைக் கோர வேண்டும். மரநாயிலே புனுகு வழிக்கலாமா? (புழுகு) மர நிழலில் மரம் வளராது. மரமரப்புக் காரனுக்கு மூன்று இடத்தில் மலம். மரம் இல்லாத ஊருக்குக் கொட்டைச் செடி மரம். மரம் இல்லாத தேசத்தில் ஆமணக்குச் செடிதான் அரசமரம். மரம் ஏறிக் கனி பறித்தவனும், மலையேறித் தேனெடுத்தவனும். (பயனடைவர்) மரம் ஏறிக் கைவிட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டார்கள். மரம் ஏறி மாங்காய் பறிக்கிறதைவிட குதிச்சே கொய்யா பறிக்கிறது சுலபம் தானே? மரம் ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்குகிறது? 16360 மரம் குறைக்கும் ஈர்வாள் மயிர்களைய மாட்டாது. மரம் சுட்டால் கரியாம்; மயிர் சுட்டால் கரியாமா? மரம் சுட்டுக் கரியாகவில்லை; இனி, மயிர் சுட்டா கரியாகப் போகிறது? மரம் சுட்டுக் கரியாகவேணுமேயல்லாமல் மயிர் சுட்டுக் கரியாகுமா? மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும். மரம் நட்டவன் தண்ணீர் விடுவான். மரம் நட்டவனுக்குத் தண்ணீர் வார்க்கக் கடன். மரம் நல்லதுதான், முசுடு கெட்டது. மரம் பழுத்தால் வௌவாலை அழைக்க வேண்டியதில்லை. மரம் போக்கிக் கூலி கொள்பவர் இல்லை. (மரம் - ஓடம்) 16370 மரம் மழுங்கினால் மத்துக்கு ஆகும்; மனிதன் மழுங்கினால் ஏதுக்கு ஆவான்? மரம் முற்றினால் சேகு; மனிதன் முற்றினால் குரங்கு. (சேகு - வைரம்) மரமேறிய அணிலுக்காக மரத்தடிநாய் காத்திருப்பது போல. மரமேறும் ஓணான் அதுபோடும் குட்டியும் மரமேலும். மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும், மண் தோண்டுகிறவனுக்கு இடமும் கொடுக்கும். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். மரம் வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்றத் தெரியாதா? மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான். மரியாதை இல்லாதவன் மகிமை அற்றான். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு. 16380 மருண்டவன் கண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய். மருத்துமாவுக்குச் சயிக்கினை; மடங்காக் குதிரைக்குச் சவுக்கடி. (செய்க்கினை) மருத்துவம் பார்க்கப் போனால் வந்ததைத் தாங்க வேண்டும். மருத்துவர்க்கு நோயை மறைக்கலாமா? மருதோன்றி மயிர் வளர்க்கும். மருந்துகால் மதிமுக்கால். மருந்து சாப்பிட்டு மாமரத்தடியிலும் போகக் கூடாது; விடத்தைச் சாப்பிட்டு வேப்பமரத்தடியிலும் போகலாம். மருந்து தின்றால் பிழைப்பாய் என்றால், மயிர்தான் தின்ன மாட்டேன் என்கிறான். மருந்தும் விருந்தும் மூன்று நாள். (வேளை) மருந்துன்னு முழங்க முடியாம, விசமுன்னு துப்பவும் முடியாம மாட்டிக் கிட்டு முழுச்சானாம் மண்ணாங்கட்டி. 16390 மருந்தே ஆயினும் விருந்தோடு உண். மருந்தோட சக்தியை விட மனோ சக்தி அதிகம். மருந்தைத் தின்று மாமரத்தின் நிழலில் போகாதே. மருமகளும் மாமியாராவாள். மருமகளே மருமகளே கோழிக் கறிக்குப் பதம் பாரடி! மாமியாரே மாமியாரே, அது கொக்கோ என்று கொத்து வருகிறது. மருமகள் சோறு தின்றவரும் வாசற்படியில் தூங்கியவரும் ஒன்று. மருமகள் வந்தால் மாமியாருக்குக் கேடு, எருமை வந்தால் எருதுக்குக் கேடு. மருமகனுக்கு என்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம். (ஆக்கிய சோற்றை) (வைத்த நெய்யை) மருமகனுக்குப் போடுகிற சோறும்; மணற்காட்டிற்குப் போடுகிற எருவும் ஒன்றுதான். மரைக்காயருக்கும் உண்டு மாட்டுப் புத்தி. 16400 மலச்சிக்கல் போனால் பலசிக்கல் போகும். மலடி அறிவாளா பிள்ளையின் அருமை? மலடிக்குத் தெரியுமா மகப்பேறு வருத்தம். (பிரசவ வேதனை) மலடிக்குத் தெரியுமா பிள்ளை பெற்ற அருமை? மலடிக்குத் தெரியுமா பிள்ளையின் வருத்தம்? மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா? மலப்பஞ்சம் நாய்க்கு உண்டா? மலம் தின்ன வந்த நாய் மாணியைக் கடித்ததாம். மலம் போனால் பலம் போயிற்று. மலராத பூவுக்கு மணம் ஏது? 16410 மலரைக் கசக்கி முகந்தால் மணம் தெரியுமா? மலரைக் கசக்கி மோந்து பார்க்கலாமா? மலரோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். மலர்த்தேனை வண்டு அல்லாமல் மண்டூகம் குடிக்குமா? மலிந்த சரக்கு கடைத்தெருவுக்கு வரும். மலிந்தது கொள்ளா வணிகரும் பதரே. மலிந்த பண்டம் கொள்ளாத வணிகன் பதர். மலிந்த பண்டம் கடையிலே வரும். மலிந்தால் தெருவில் வரும். மலைஅத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கற்பூரம். (சாம்பிராணி) 16420 மலை அத்தனை சாமிக்குத் தினை அத்தனை மலர் சாத்தினாலும் போதும். (போடுகிறார்களா?) மலை அத்தனை பாவத்திலே கடுகு அத்தனை புண்ணியம். மலை அளவு பணம் இருந்தாலும் செலவழிய நேரமா ஆகும்? மலை இடிந்து விழுந்தாலும் மாப்பொன்னுக்குச் சேதம் இல்லை. மலை இலக்கானால் குருடனும் அம்பெய்வான். மலை இற்று மயிரில் தொங்குகிறதா? மலை உச்சியில் கல் ஏற்றுதல் அரிது; மலையிலிருந்து கல்லைத் தள்ளுவது எளிது. மலை எவ்வளவு? உளி எவ்வளவு? மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும். மலை ஏறிப் போனாலும் மாமன் மச்சான் துணை வேண்டும். 16430 மலை ஏறி மேய்ந்தாலும் ஆட்டுக்குட்டி கோனான் குட்டி தானே? மலை ஏறி மேய்ந்தாலும் மணிமாடு என் மாடுங்கற கதையா. மலை ஏறினாலும் மைத்துனனைக் கைவிடாதே. மலை கலங்கினாலும் மனங்கலங்கப் போகாது. மலை கல்லி எலி பிடிக்கிறது. மலை கருத்தால் மழை வரும். மலைகள் பல கூடினாலும் மாமேரு ஆமோ? மலை குலைந்தாலும் நிலை குலையல் ஆகாது. மலைக்காரன் பூமிக்கு மடுவுளதான் தண்ணியாம். மலைக்காரன் பெண்டாட்டிக்கு மனசு வைத்தவன் எல்லாம் புருசனாம். 16440 மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். (வித்தியாசம்) மலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் சரியா? மலைக்கு மண்கட்டி ஆதரவா? மலைச்சாரல் மழையும் மங்கையின் மனசும் திடீரென்று மாறும். மலை சுட்டு கரியாகுமா? மயிர் சுட்டு கரி ஆகுமா? மலைத்தவருக்குப் பலன் கிடைக்குமா? மலைத்தேன் முடவனுக்குக் கிட்டுமா? (வருமா?) மலை நெல்லிக்காய்க்கும் கடல் உப்புக்கும் உறவு செய்தவர் யார்? மலை பெரிதானலும் சிற்றுளியால் தகரும். மலை போலப் பிராமணன் போகிறானாம், (மாய்ந்தானாம்) பின் குடுமிக்கு அழுகிறாளாம். 16450 மலை போல் இருக்கிற தேரும் சிறு சுள்ளாணியால் நிலை பெறும். மலை போல் வந்தது பனிபோல் நீங்கிற்று. மலை போன்ற சாமிக்கு மலை போலப் படைக்க முடியுமா? மலைப் புளுகு கலப் புளுகாய் இருக்கிறது. மலை மல்லிகைக்கு எதிர் பூத்ததாம் ஊமத்தை. மலை மீது இருப்பவரைப் பன்றி எப்படிப் பாயும்? (பாய் வதுண்டோ?) மலைமேல் இருப்பவரைப் பன்றி பாய்வதுண்டா? மலை முழுங்கி மகாதேவனுக்கு, கதவு ஒரு அப்பளம். மலை மேல் இருக்கிறவனைப் புலி பாயுமா? மலை மேல் மாடு மேய்ந்தாலும் மாட்டுக்காரன் பெயர்தான் சொல்லும். 16460 மலையடி கெட்டாலும் மதகடி கெடாது. மலையடி புன்செய்; மதகடி நன்செய். மலையத்தனை உழைப்பிருந்தாலும் கடுகத்தனை அதிஷ்டம் தேவை. மலையத்தனை பாரம் சுமக்கலாம்; கடுகத்தனை புலால் சுமக்க முடியாது. மலையாளம், பெய்து விளைகிற சீமை; தஞ்சாவூர், பாய்ந்து விளைகிற சீமை. மலையிலிருந்து கல்லைத் தள்ளுவது எளிது. மலையில் விளைந்த மூலிகையானாலும் உரலில்தான் மசிய வேண்டும். (விளைந்தாலும்) மலையில் விளைந்த தானியமானலும் உலையில்தானே வேக வேண்டும். மலையில் விளைந்தால் மாகாளி, நாட்டில் விளைந்தால் நன்னாரி. மலையின் உயரம் மலைக்குத் தெரியுமா? 16470 மலையின் வாயில் பொழுதும் நுளையன் வாயில் சோறும். மலையும் மலையும் சேர்ந்தாலும் தலையும் தலையும் சேரக்கூடாது. மலையும் மலையும் முட்டிக் கொள்ளும் போது மண்ணாங் கட்டி எந்த மூலை? மலையெல்லாம் சுற்றிவிட்டு மணவறையைச் சுற்ற முடியாதது போல. மலையே மண்ணாங்கட்டியாகிறபோது, மண்ணாங்கட்டி எப்படியாகும்? மலையே விழுந்தால் மண்ணாங்கட்டியா தாங்கப் போகிறது? மலையே விழுந்தாலும் தலையே தாங்க வேண்டும். மலையேறிப் போனாலும் மைத்துனனோடு போகணும். மலையேறிப் போனாலும் மச்சான் உறவு தேவை. மலையை அண்டி இரு, அல்லது ஆற்றை அண்டி இரு. (நம்பி) 16480 மலையை என் தலைமேல் தூக்கி வைத்தால் நான் எடுத்துக் கொண்டு போகிறேன். மலையைக் கட்டி இழுத்தால் வந்தால் மலை; வராவிட்டால் மயிர். (போனால்) மலையைக் கல்லி எலியைப் பிடிக்கிறதா? (நோண்டி, தோண்டி) மலையைச் சுற்றி அடித்தவனைச் செடியைச் சுற்றி அடியேனா? மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா? (போதும்) மலையைத் தூக்கித் தோளில் வை சுமக்கிறேன் என்றானாம். மலையைப் பார்த்து நாய் குரைத்தால் மலைக்குக் கேடா? நாய்க்குக் கேடா? (வலிக்குமா? சேதமா?) மலையைப் பிடுங்கும் மாகாளியம்மைக்குக் கரடு ஒரு சுண்டைக்காய். மலையை மயிர்முனையால் துளைக்கலாமா? மலையை மலை தாங்கும்; மண்ணாங்கட்டி தாங்குமா? 16490 மலையை விழுங்கும் மாரியாத்தாளுக்கு உரல் சுண்டைக்காய். மலையோடு மண்ணாங்கட்டி மோத முடியுமா? மலை வளமே மண்வளம்; நீர்வளமே நிலவளம். மலை வாயிலே பொழுதும் மறவன் வாயிலே சோறும். (மலையாளத்தார்) மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கியா? (மாணிக்கத்தாளுக்கு, மாதாவுக்கு) மலை விழுங்கிச் சுண்டெலி பெற்றது போல. மலை விழுங்கும் மகாதேவனுக்குக் கதவு அப்பளம். மலை விழுங்குவதற்கு மண்ணாங்கட்டி பச்சடியா? மலை விழுந்தால் மண்ணாங்கட்டி தாங்குமா? மல்ல பொதியை மெல்ல இறக்க வேண்டும். (மல்ல - பெரிய) 16500 மல்லாக்கப் படுத்துக் கொண்டு மார்பில் உமிழ்ந்து கொண்டாற் போல. மல்லாக்கப் படுத்துக்கிட்டு மார்மேலே துப்பிக்கிட்டமாதிரி. மல்லாண்டைக்கு ராசி வள்ளம் அளந்தால் மண்ணாங் கட்டிக்குமா அளக்கமுடியும்? மல்லாந்த தோசம் வயிற்றில் அடைத்தது. மல்லாந்து துப்பினால் மார்மேலே விழும். (உமிழ்ந்தால்) மல்லாந்து படுத்து எச்சிலைத் துப்பினால் மார்மேலே தானே விழும். மல்லாந்து படுத்துக் கொண்டா அல்லாவைத் தொழுகிறது? மல்லிகை மார்பட்டால் மழலைக்கும் பாலேது? மல்லுக்கட்டிப் பிடுங்கியும் கொடாதவனா வலுவில் அழைத்துக் கொடுக்கப் போகிறான். மல்லுக் கட்டுக்காரனுக்கு மாகாணிப் பங்கு. 16510 மல்லுக்கு ஒரு மாகாணிப் பங்கு. மல்லுக்கு மாப்பங்காகிலும் வைத்துக் கொள்ள வேண்டும். மழுங்கனுக்குப் பெண்ணைக் கொடு. மழுங்கனுக்குப் பெண்ணைக்கொடு; ரோசனுக்குக் கடனைக் கொடு. மழுங்கன் பிழைத்தான்; ரோசன் கெட்டான். மழுங்கலுக்கு வட்டியிலே போடு; சவுங்கலுக்குச் சட்டியிலே போடு. மழை இல்லாததற்குக் குளிர் அதிகம்; வரிசை இல்லாததற்கு வாய் அதிகம். மழைக்கால இருட்டானாலும் மந்தி கொம்பு இழந்து பாயுமா? மழைக்கால இருட்டானாலும் வாய்க்குக் கை தெரியாதா? மழைக்கால இருட்டிலும் மறுமாதரைத் தொடர்கிறதா? 16520 மழைக்கால இருளேனும் மந்தி கிளைபாய்தல் பிழைக்காது. மழைக்கால இருட்டானாலும் கொம்பு தவறிக் கொக்குப் பாயுமா? மழைக்காலத்தில் பதின்கலத்திலும் கோடைக்காலத்தில் ஒரு குடம் நீர். மழைக்கு ஒதுங்க வந்த பிடாரி மனைக்கு வழக்குப் பேசினாளாம். மழைக்குக் குடை உண்டு; இடிக்குக் குடை உண்டா? மழைக்குக் குடையா? இடிக்குக் குடையா? மழைக்குத் தண்ணீர் மொண்டு வார்ப்பவர் யார்? மழைக்குப் படல் கட்டிச் சாத்தலாமா? (சாத்தியமா?) மழைக்கும் இடிக்கும் படல் கட்ட முடியுமா? மழைக்கு ஒதுங்கி வந்த பிடாரி மனைக்கு சடுத்தம் போட்டதாம். 16530 மழைக்கோ படல் இடிக்கோ படல்? மழை பெய்கிறதும் பிள்ளை பெறுகிறதும் மகாதேவருக்கும் தெரியாது. (பேறும்) மழை பெய்தால் அடி மறக்காது. மழை பெய்தால் தெரியும் வரப்பீ நாற்றம். மழை பெய்து குளம் நிறையுமா? பனி பெய்து நிறையுமா? மழை பெய்து நிறையாதது மொண்டு வார்த்தா நிறையும்? மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும்? மழை பெய்தும் கெட்டது; பெய்யாமலும் கெட்டது. மழை பெய்து விளைய வேணுமே தவிர பனிபெய்து விளையப் போகிறது இல்லை. மழை பெய்யக் குளம் நிறையும். 16540 மழை பெய்யும் வழுக்கலும் வரும். மழை பேய்ந்தும் கெடுத்தது; காய்ந்தும் கெடுத்தது. மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவனுக்கே தெரியாது. மழைப் பேறும் மகப்பேறும் யாருக்குத் தெரியும்? மழை பேய்ந்த இடத்திலே; மாடு மேய்ந்த இடத்திலே. மழை முகம் காணாத பயிரும், தாய்முகம் காணாத பிள்ளையும். (வாட்டமுறும்) மழையிலே போட்டாலும் நனைகிறதில்லை; வெயிலிலே போட்டாலும் காய்கிறதில்லை. மழையிலும் நனைய மாட்டான்; வெயிலிலும் காயமாட்டான். மழையும் பிள்ளைப்பேறும் மகாதேவருக்கும் தெரியாது. மழை வறண்டால் மணக்கத்தை விதை. 16550 மழைவாய்க் கருக்கல் ஆனாலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு தாண்டாது. மழை விட்டும் தூவானம் விடவில்லை. மழை விழுந்தால் தாங்கலாம்; வானம் விழுந்தால் தாங்கலாமா? மறத்தி தாலியும் பள்ளித் தாலியும் வற்றாத் தாலி. மறந்த உடைமை மக்களுக்கு ஆகாது. மறந்த சடங்கை மகத்தில் விடு. மறந்த திதியை மகத்தில் கொடு. மறந்தவனுக்கு மால்வாய் காணி. (மால்வாய், கல்லக்குடி அருகில் உள்ளதோர் ஊர்) மறந்து செத்தேன், உயிர் வா என்றால் வருமா? (பிராணன்) மறவன் உறவும் பனைநிழலும் சரி. 16560 மறுசோறு போட்டுக் கொள்ளாதவன் மாட்டுப் பிறப்பு. மறைத்த பண்டம் மக்களுக்கு உதவாது. மறைந்து நின்று ஆடினாலும் மத்தள சத்தம் வெளியே கேட்டுத்தானே ஆகும். மன உறுதி இருந்தால் மலையையும் சாய்க்கலாம். மனக் கவலை பலக்குறைவு. மனங்கொண்டது மாளிகை. மனத் துயர் பொறுக்கலாம்; மக்கள் துயர் பொறுக்காது. மனக்காவல் பெரிதா? மன்னன் காவல் பெரிதா? மனக் குரங்கு எப்படிவேண்டுமானாலும் தாவும். மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம். (உண்டா, இல்லை) 16570 மனசு ஒத்துக் கிட்டாலும் மண்டை ஒத்துக்காது. மனசில் இருக்கும் இரகசியம் மதிகேடனுக்கு வாயிலே. (மனதில்) மனதில் ஒன்றும் வாக்கிலே ஒன்றும். மனதில் உள்ளது வாயில் வரும். மனதில் மாசு இருக்கும் பொழுது மகான் ஆக முடியுமா? மனதிற்கு இசைந்தவன் மாளிகைக்கு ஏற்றவன். மனது அறியாப் பொய் உண்டா? மனது மதிலைத் தாண்டுகிறது. கால் வாசற்படியைத் தாண்டவில்லை. மனது சுத்தமானால் மந்திரம் எதற்கு? மனதே மனதுக்குப் பந்து; மனனே மனசுக்குச் சத்துரு. 16580 மனதே ராஜா; மதியே மந்திரி. மனத்திற்கு மனதே சாட்சி; மற்றதற்குத் தெய்வமே சாட்சி. மனத்துக்கு மனமே உறவு; மனமே பகை. மனது அறியாப் பொய் உண்டா? மனத்துயர் அற்றோன்; தினச் செபம் உற்றோன். மன நோய்க்கு மருந்து இல்லை. மனபலம் உடல் பலம். மனப்பால் குடித்து மாண்டவர் அநேகம். மனப்பேயே ஒழிய மற்றைப் பேய் இல்லை. மனப் பொருத்தம் இருந்தால் மற்றப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? (பார்க்கத்தேவை இல்லை) 16590 மனப் பொருத்தம் இல்லாமல் மற்றப் பொருத்தம் ஏன்? மனமது செவ்வையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். மனமயக்கம் சர்வ மயக்கம். மன முரண்டிற்கு மருந்து உண்டா? மனவீதி உண்டானால் இட வீதி உண்டு. மனம் இருந்தால் மலையும் சாயும். மனம் இருந்தால் வழி உண்டு. (மார்க்கம்) மனம் இருந்தால் மாரியம்மா; இல்லாவிட்டால் காளியம்மா. kd« c©lhdhš tÊ c©L.(ïl«) மனம் காவலா? மதில் காவலா? 16600 மனம் கொண்டது மாங்கல்யம். மனம் கொண்டது மாளிகை. மனம் கொண்டால் வேம்பு கரும்பாகும். மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை. மனம் போல வாழ்வு. மனம் போன போக்குக்கு வழிஇல்லை. மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம். மனம் வெளுக்க மருந்து இல்லை. மனிதத் தன்மை இல்லாதவன் மனிதப் பதர். மனிதர் காணும் பொழுது மௌனம்; காணாத பொழுது ருத்திராட்சப் பூனை. 16610 மனிதரில் சிவப்பு அழகு; நாயில் கருப்பு அழகு. மனிதனால் ஆகாதது ஒரு மயிராலும் ஆகாது. மனிதனால் ஆகாதது மயிரால் ஆகுமா? மனிதனை மனிதன் அறிவான்; மடநாயைத் தடிக்கம்பு அறியும். மனிதன் ஆரம்பமாவது பெண்ணாலே; அடங்கி ஒடுங்குவதும் பெண்ணாலே. மனிதன் உண்டு களிப்பான்; மாடு கண்டு களிக்கும். மனிதன் கையிலே மனிதன் அகப்பட்டால் குரங்கு. மனிதன் சுற்றிக் கெட்டான்; நாய் கத்திக் கெட்டது. மனிதன் சுற்றிக் கெட்டான்; நாய் நக்கிக் கெட்டது. மனிதன் தின்று கழிப்பான்; மாடு கண்டு கழிக்கும். 16620 மனிதன் மட்கினால் மண்; ஆனை மட்கினால் பொன். மனைக்கு விளக்கம் மடவார். மனைக்கு வேம்பு; மன்றுக்குப் புளி. (ஏற்றது) மனைக்கொடி இல்லா மனை பாழ். மனையாள் வாசல் மட்டும்; மகன் சுடுகாடு மட்டும். மனைவியில்லாத புருசன் அரைமனுசன். மனைவி இறந்தால் மணம்; மகள் இருந்தால் பிணம். மனைவி உள்ளவன் விருந்துக்கு அஞ்சான். மன் உயிரைத் தன் உயிர் போல் நினை. மன்னர்க்கு அழகு செங்கோல் முறைமை 16630 மன்னர்க்குத் தோள் கொடாதே. மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும். மன்னவர்கள் ஆண்டதெல்லாம் மந்திரிகள் ஆண்மை. மன்னவன் எப்படி? மன்னுயிர் அப்படி! மன்னன் இல்லாத நாடும் மந்திரி இல்லாத அரசும். மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி. மன்னன் சொல்லுக்கு மறுசொல் உண்டோ? மன்னன் மகளானாலும் கட்டியவனுக்குப் பெண்டாட்டி தானே! மன்னார்குடி மதில் அழகு; திருவாரூர் தேர் அழகு; திருவிடை மருதூர் தெருவழகு. (மனையழகு) மன்னுயிரையும் தன்னுயிர் போல் நினை. (எண்ண வேண்டும்) 