ஐம்பெருங் காப்பியங்கள் சீவகசிந்தாமணி – 1 3 உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இளங்கணி பதிப்பகம் சென்னை- 600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : ஐம்பெருங் காப்பியங்கள் - 3 சீவகசிந்தாமணி -1 உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : இ. இனியன் முதற்பதிப்பு : 2009 தாள் : 18.6கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 48 + 608 = 656 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 410/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 6. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும். பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும் நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர். தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம் பண்பாட்டுச் செழுமையை, நாகரிக மேன்மையை, கலையின் பெருமையை இசையின் தொன்iமயை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந் தமிழ்ச் செம்மொழிச் செல்வங்களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம். இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெரு மகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு. தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம். அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங்களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம். - பதிப்பாளர் சீவகசிந்தாமணி திருத்தக்கத்தேவரால் எழுதப்பட்ட நூல். விருத்தப்பாவில் முதல் முதலாக எழுந்த உயர் நூல். சமண சமயம் சார்ந்து இந்நூல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு இடைவெளிக்குள் வெளி வந்ததாகத் தெரிகிறது. கவிவேந்தர் கம்பர் போன்ற பெரும்புலவர் களுக்குச் சிந்தாமணி ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்தது. உச்சி மேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் எனும் பெருந்தமிழ்ச் சான்றோரால் உரைவளம் கண்டு பட்டை தீட்டப் பெற்று, வண்ணச் சுடரொளியாய்த் திகழும் நூல். சிந்தாமணி எனும் இப் பெருந்தமிழ்க் காப்பியத்திற்கு மறவுரை கண்டவர்உண்டு; காமவுரை கண்டவர்உண்டு; அறவுரை கண்டவர் உண்டு. செவிநுகர் கனிகள் “காதைகள் சொரியன செவிநுகர் கனிகள்” என்பது கம்பர் வழங்கிய தொடர்! காலமெல்லாம் செவி வாயாக நெஞ்சுகளனாகத் துய்க்கும் செவ்விலக்கியச் செழுங் காப்பியங்கள் ஐந்து! அவற்றுள் முழுமையாக வாய்த்தவை மூன்று; மற்றை இரண்டோ தமிழர் பேணிக் காவாப் பேதைமையால் ஒழிந்தவை! எனினும், உரையாசிரியர்களால் ஒரு சில ஒளிமணிகள் எய்தப் பெற்றவை. சிலப்பதிகாரம் உருவாகிய மண் சேரலம்! கண்ணகி கோயில் கொண்ட மண் சேரலம்! சிலப்பதிகாரம் இல்லையேல் சேரல மண்ணை இழந்தமைபோல் செங்குட்டுவன் ஆட்சியோ கண்ணகி கோட்டம் உருவாகிய மாட்சியோ உருத்தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கும். நெஞ்சையள்ளும் சிலம்பு நமக்கு வாய்த்தமையால் முத்தமிழ்க் காவியமாம் மூத்த தமிழ்க் காவியம் பெற்றோம்! அதனைத் தொடுத்த கதையாம் மேகலை என்னும் காவியமும் பெற்றோம்! நெட்ட நெடிய காலத்தின் பின்னர்ச் சீவக சிந்தாமணியாம் காவியம் உற்றோம்! முன்னவை இரண்டும் தமிழ்ண்ணின் கொடைவளமாகத் திகழ, இம் மூன்றாம் காவியம் மொழிபெயர்ப்புக் காவியமாகக் கிட்டியது; மற்றவை இரண்டும் வளையாபதி, குண்டலகேசி என்பவை. அவ்வக் காவிய நிலைகளை அவ்வந் நூல்களில் காண்க. மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தெரியாவகையில் பெருங் காப்பியப் பேறெல்லாம் ஒருங்கமைந்த பெருங்கதை எண்ணத்தக்கது; அரிய கலைக்கருவூலக் காப்பியமாம் அது, காப்பிய வகையில் எண்ணப்படாமல் நின்றது ஏன் எனப் புலப்படவில்லை! காப்பிய வகையுள் வைக்கத்தக்க அருங்கலப் பேழை அஃதாம்! ‘காப்பியம்’ என்பதுதான் என்ன? தண்டியலங்காரம் என்னும் அணிநூல் காப்பிய இலக்கணத்தைக் கைம்மேல் கனியாக வழங்குகிறது. அவ்விலக்கணத்தைக் கற்போர் சிலம்பு முதலாம் காப்பியங்களை முழுதுற ஆய்ந்து அமைந்த கட்டளை அஃது என்பதை அறிவர்: பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன் றேற் புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்என் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனர்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியில் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவு இகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” என்றும் “ கூறிய உறுப்பில் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர்” என்றும் பெருங்காப்பிய இலக்கணம் பேசுகிறது தண்டியலங்காரம் (8,9) அது காப்பிய இலக்கணம் என, “ அற முதல் நான்கினும் குறைபா டுடையது காப்பியம் என்று கருதப் படுமே” என்றும், அவைதாம், “ ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே” என்றும் கூறுகின்றது. (10,11) ஐம் பெருங்காப்பியங்கள் என எண்ணப்பட்டமை போல, ஐஞ்சிறு காப்பியங்கள் என எண்ணப்பட்டனவும் உள. “அறம் பொருள், இன்பம்” என்னும் முப்பொருள் முறையும், அகம் புறம் என்னும் இரு பொருள் முறையும் அகன்று, “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” எனவும், “அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும் எனவும் அயல்நெறி பற்றிக் கொண்ட வகையால், “அறமுதல் நான்கு உடையது” எனவும், “அறமுதல் நான்கினும் குறைபாடுடையது” எனவும் சுட்டப்பட்டன. முதற்காப்பியமாம் சிலம்பு, முத்தமிழ்க் காவியமாய், வரிப்பாடல் வைப்பகமாய் அமைந்தமை இளங்கோவடிகள்தெரிமாண் தமிழ்க் கலைவளம் காட்டுவதாம்! சாத்தனார் நூலோ, கதையால் தழுவப் பட்டதெனினும் காப்பியப் போக்காலும் யாப்பியல் வளத்தாலும் சிலம்பை நெருங்க முடியவில்லை! சமயச் செறிவும் தருக்கமும் அடிகளார் சால்புப் பார்வையோடு சாராமல் ஒருசார் ஒதுங்கி நிற்கிறது! சிந்தாமணி கலைமலி காப்பியமாகக் கமழ்ந்தாலும் வரிப்பாடல் களோ அவர் காலத்துக் கிளர்ந்து விட்ட வாரப்பாடல்களோ இல்லாமல் நடையிடவே செய்கின்றது! வளையாபதி வரிப்பாடல்களைக் கொண்டமையும் நடைநயம் மல்கி நின்றமையும் கிடைத்த பாடல்களாலும், “வாக்குத் தடையுற்ற ஒட்டக்கூத்தர் வளையாபதியாரை நினைந்தார்” என்னும் உரைக் குறிப்பாலும் புலப்படுகின்றது. குண்டலகேசியின் கதையோ நீலகேசி உரைவழியே அறியக் கிடந்ததாம். அக்கதை நாடகமாய், திரைப்படமாய், அகவலாய், புதுக் காப்பியமாய்ப் பின்னே வடிவெடுக்கத் தூண்டியது. அதன் கதைத் தலைவன் தானே தேடிக்கொணட் தீச்சொல்லின் தீயவிளைவாலேயே யாம்! அதனால், “சொற்பகை காட்டும் கேசி காதை” எனப் படுதலாயிற்று. ஐம்பெருங்காப்பியங்களுள் சிலம்பு பெற்றது அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையுமாம்! முற்றாக வாய்க்க வில்லை எனினும் வாய்த்த அளவில் அவ்வுரைகள் முடிமேல் கொள்ளத் தக்க கலைவளமும் நயமும் உடையவையாம்! சிந்தாமணி பெற்றபேறு நச்சினார்க்கினியர் உரைபெற்ற பெருமையதாம்! மணிமேகலையோ மூலத்தளவே முற்றக்கிடைத்த அமைவினது. உரையாசிரியர் திருக்கண் பார்வை ஏனோ படவில்லை! அதற்குக் குறிப்புரை - கதைச் சுருக்கம் ஆகியவை வரைந்தமை தென்கலைச் செல்வர் உ.வே.சாமிநாதையரையே சாரும். அன்றியும் இம்முப்பெருங் காப்பிய முதற்பதிப்புகளையும் அரும்பாடுபட்டுத் தமிழ உலகக் கொடையாக வழங்கிய பெருமையும் அவரையே சாரும்! முதலிரு பெருங்காப்பியங்களுக்கும் பழைய உரை, குறிப்புரை ஆயவற்றைத் தழுவிய நல்லுரை வழங்கிய பெருமையர் நாவலர் ந.மு.வே. அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களுமே ஆவர். வளையாபதி, குண்டலகேசிப் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்து குறிப்புரை வழங்கிய பெருமையர் பேரறிஞர்கள் இரா.இராகவ ஐயங்கார், மு.இராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமியார் ஆவர்! ஐம்பெருங்காப்பியம் என்பதன் அடையாளம் காட்டுவது போல வளையாபதியும் குண்டலகேசியும் குறிப்புரையோடும் பொழிப்புரை யோடும் வெளிவந்துள்ளன. கடலாக விரிந்து கிடக்கும் காப்பியங்களோடு, மணற்கேணி ஊற்றுப்போலவேனும் இணைத்துப் பார்க்க உதவுகின்றன பின்னிருகாப்பியங்கள். இவற்றைப் பற்றிய தனித் தனித் தகவுகளை ஆங்காங்குக் கண்டு மகிழ்க! ஐம்பெருங் காப்பியத் தொகுதிகள் இவை எனவும் எங்கள் முந்தையர் தந்த வளம் இவை எனவும் உவப்போடு தமிழ் உலகம் கொள்ள ஒருங்கே தருபவர் குவை குவையாய்த் தமிழ்க்கொடை தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்ப் போராளி கோ.இளவழகனார் ஆவர்! எல்லார்க்கும் ஒவ்வோர் இயற்கை! ஒவ்வோர் திறம்! அவற்றைத்தாம் பிறந்த மண்ணுக்கும் பேசும் மொழிக்கும் குiறவற வழங்கும் கொடையாளர் புகழ், அக்கொiடயோடு என்றும் குன்றாமணம் பரப்பும்! வாழிய நிலனே! வாழிய நிலனே! இரா.இளங்குமரன் சிந்தாமணிக் கதை “அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கு” என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தாம் இயற்றிய மனோன்மணீயத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். உலகெல்லாம் இன்பமுறவும், திசையெல்லாம் புகழ் பரவவும் திகழும் தமிழ் அம்மையை நல்லபல அணிகலங்களால் அழகு செய்த புலவர்கள் பலர், அவர்களுள் திருத்தக்க தேவர் என்பவரும் ஒருவர். இவர் தமிழ்த்தாயின் முடிமணியாக இலங்கும் சிந்தாமணி என்னும் நந்தாமணியை நல்கினார். சிந்தாமணிக் கதை சீவகன் என்னும் வேந்தர் பெருமகனைப் பற்றிக் கூறும் சுவை மிக்க கதையாகும். ஏமாங்கத இயல்பு: வானுற ஓங்கி வளமுற வளர்ந்த தென்னையின் முதிர்ந்த நெற்று, கமுக மரத்தின் மீது விழுந்து, அதில் கட்டியிருந்த தேனடையைக் கீறி, அதன்பின் பலாமரத்தில் விழுந்து, அதன் பழத்தை உடைத்து, பின் மாமரத்தின் மீது விழுந்து. மாங்கனிகளை உதிர்த்து, இறுதியாக வாழை மரத்தின் மீது மோதி, கனிந்த வாழைக் கனிகளை உதிர்க்கும்படியான வளமிக்க நாடு ஏமாங்கத நாடு ஆகும். இந் நாட்டின் தலைநகர் இராசமாபுரம். இதனைச் செம்மையுற ஆண்டுவந்த வேந்தன் சச்சந்தன் என்பான். மன்னனும் மனைவியும்: சச்சந்தன் மாபெரும் வீரன்; சிறந்த கொடையாளி; உயரிய கலைஞன்; எழுதிக் காட்ட இயலாத அழகன்; செங்கோன். இவனுக்கு வாய்த்த மனைவி விசயை என்பாள். அவள் நல்ல அழகி; அளவற்ற அன்பினள்; கணவனே உயிரெனக் கருதுபவள்; தன் கணவன் இன்பமாக வாழ்வதற்காகவே வாழ்ந்தவள். சுற்றியிருந்த சூழ்ச்சிக்காரன்: சச்சந்தன் விசயை மேல் வைத்திருந்த அன்பு மிக உயர்ந்த தாகும். அவ்வன்பு நாள் செல்லச் செல்ல மேலும் மேலும் வளர்ந்தது. அரசியலே தஞ்சமாக இருந்த சச்சந்தன் விசயை வந்தபின் அவள் அந்தப்புரமே தஞ்சமாகி விட்டான். அவளைப் பிரிந்து அரைநொடியும் இருக்க அவனால் முடியவில்லை. அதனால் அரசியல் காரியங்களைக் கவனிக்குமாறு தன் அமைச்சர்களில் ஒருவனான கட்டியங்காரனை நியமித்தான். கட்டியங்காரன் பெரும் வஞ்சகன். முன்பே சச்சந்தன் தனது அரசாட்சியைத் தனது கைக்குக் கொண்டு வந்துவிடப் பேராசைப்பட்டுக் கிடந்தவன்; தக்க சமயம் கிடைப்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தான். காலமும் இடமும் அறிந்து செய்தால் தானே காரியத்தை எளிதில் முடித்துக் கொள்ளலாம்! இதனைத் தெளிவாக அறிந்திருந்த கட்டியங்காரனுக்கு அரசனே வலுவில் அரசாட்சிப் பொறுப்பைத் தரும்போது விட்டுவிடுவhனா? ஏதோ சொல்லுக்காக, “மன்னவனே! நாடாளும் பொறுப்பு இந்த நாய்க்குத் தக்கதன்று” என்று கூறிக் கொண்டான். ஆனால் சச்சந்தனோ “என் ஆணையை ஏற்றருள்க” என்றான். கட்டியங்காரன் வேறு வழியில்லாதவன் போலாக, ஆட்சியை ஏற்றுக் கொண்டான். அமைச்சர் அறிவுரை: சச்சந்தன் கட்டியங்காரனிடம் அரசாட்சியை ஒப்படைத்தது நிமித்திகன், உருத்திரதத்தன் என்னும் அமைச்சர்களுக்குப் பிடிக்க வில்லை. இவ்விரு அமைச்சர்களும் நல்லதே எண்ணி நல்லதே செய்பவர்கள். அதனால், கெட்ட சிந்தையுடைய கட்டியங்காரன் காவலனைக் கெடுத்து விடுவான் என்று கருதினர்; ஒருநாள் அரசனைக் கண்டு பலவாறாய் எடுத்துக் கூறினர். ஆனால் அரசனோ அரசியின் அந்தப்புரத்தை விட்டுப் பிரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்ததாலும், கட்டியங்காரனை முழுக்க முழுக்க நம்பி விட்டதாலும் அமைச்சர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுத்துவிட்டான். மாறாக மனம் போன படியாகப் பேசிக் கோபமும் அடைந்தான். இதனால் அரசன்மேல் அமைச்சன் உருத்திரதத்தன் வெறுப்படைந்தான். அமைச்சனாக இருக்கும் தான், அரசனை நேர்மையான வழியில் செலுத்த முடியாத போது பதவியில் இருப்பதைப் பார்க்கிலும், அதனை விட்டு வெளியேறி விடுவதே முறைமையானது என எண்ணியவனாய் வேலையை விட்டு விட்டு வெளியேறிக் கொண்டான். வேந்தனும் ‘அரிய அமைச்சன் ஒருவன் நம்மை விட்டு அகன்று செல்கின்றானே’ என்று கவலைப்படவும் இல்லை! கனவுதானே! நனவாகுமா? கவலையற்ற அரசனும் அரசியும் இன்பமாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள், அரசி ‘அசோக மரம் ஒன்று சாய்ந்ததாகவும், சாய்ந்த மரத்திலிருந்து முளை ஒன்று தோன்றி வளர்ந்ததாகவும்” கனவு கண்டாள். தான் கண்ட கனவைப் பற்றி அரசனிடம் வினவினாள். அரசன் கனவு நூல் நன்கு கற்றறிந்தான். அதனால் அரசியைக் கலக்கம் அடையாமல் காக்க வேண்டி “முளை தோன்றியமை உனக்கு நல்லதோர் மைந்தன் பிறப்பான் என்பதைக் காட்டுகின்றது” என்றான். ஆனால் அசோக மரம் விழுந்தது தன் அறிவு பற்றியது என்று அரசன் அறிந்து கொண்டான் ஆயினும் அரசியினிடம் சொல்லவில்லை. ஆனால் அரசி அவ்வளவோடு விட்டுவிடவில்லை. வற்புறுத்திக் கேட்டு, வர இருப்பதை அறிந்து கொண்டாள். “அரசனுக்கு அழிவு வரும்” என்று கேள்விப்பட்டது முதலாக அவளுக்குக் கவலை மிகலாயிற்று. “தேவி! கனவை உண்மையென நம்பாதே!” என்று எடுத்துக் காட்டித் தேற்றினான் அரசன். மயக்கும் மயிற்பொறி: இது இவ்வாறாக நன்னாள் ஒன்றில் அரசி கருக் கொண்டாள். அரசனுக்குப் பெருத்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மாதங்கள் சில உருண்டன. ஆனால் மன்னவன் கனவு நிகழ்ச்சியை மறந்து விடவும் இல்லை. அதனால் கைத்திறமுடைய தச்சன் ஒருவனை அழைத்து, பறக்கவும் இறங்கவும் தக்கதான ‘விசை’யுடைய மயிற்பொறி ஒன்றை மறை முகமாகச் செய்யுமாறு ஆணையிட்டான். தச்சனும் ஏழு நாட்களுக்குள் உண்மை மயிலே என்று கண்டோர் எவரும் மயங்குமாறானதும், உள்ளே பொறிகள் உடையதுமான செயற்கை மயிலொன்றைச் செய்தான். வலப்பக்கத்துப் பொறியை அழுத்தினால் வானில் எழும்பும்! இடப்பக்கத்துப் பொறியை இயக்கும் விதத்தை மன்னவன் அறிந்துகொண்டு, மனைவி விசயையும் நன்கு அறிந்து கொள்ளுமாறு பயிற்சி அளித்தான். ஏமாங்கதம் என்னுடையதே: இஃதிவ்வாறாக ஆட்சிப் பொறுப்புடைய கட்டியங்காரன் அரசனை அழித்துவிட்டுத்தான் அவன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முனைந்தான். ஒருநாள் அரசவையைக் கூடச் செய்து தன் திட்டங் களை விரிவாக எடுத்துக் கூறினான். “அரசனை அழிப்பேன்; நாட்டைக் கைப்பற்றுவே; அரசனுக்குக் கேடு காலமும் எனக்கு நல்லகாலமும் இருப்பதனாலேதான் எனக்கு இத்தகைய அரிய திட்டமொன்று உண்டாகலாயிற்று” என்று கூறினான். இந்நிகழ்ச்சியை எதிர்பாராத அவையோர் அனைவரும் திகைத்தனர்; ஒவ்வொருவர் மார்பிலும் குத்தீட்டிக் கொண்டு பாய்ச்சியதுபோல் பதைபதைத்தனர்; சச்சந்த மன்னனை அழிக்கத் திட்டம் தீட்டும் கட்டியங்காரன் மேல் கடுகடுப்புற்றனர். அதனால் அங்கிருந்தோருள் ஒருவனும் மிக்க உரம் படைத்தவனும் நேர்மையாளனுமாகிய தருமதத்தன் என்னும் அமைச்சன் கட்டியங்காரனுக்குப் பல அரிய நீதிகளை எடுத்துரைத்தான். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யாதே” என்றான். “அரசர் பகை அழியாப் பகை” என்றான். “கடவுள் பகையைத் தேடிக் கொண்டவனும் தப்பிப் பிழைப்பான். ஆனால் காவலன் பகையைத் தேடிக் கொண்டவன் கட்டாயம் அழிந்தே போவான்! அரசன் சினத்திற்கு ஆளாகியவனே அன்றி, அவன் சுற்றமும் அழிந்து போவது உறுதி” என்று தெளிவுடன் கூறினான். ஆனால் கட்டியங்காரனோ கேட்பதாக இல்லை. தருமதத்தன் மேல் கோபம்கொண்டு கைகொட்டி எள்ளிநகையாடினான். “ஏமாங்கதம் என்னுடையதே; எதிர்ப்பேன் வேந்தனை” என்று படபடத்துப் புறப்படத் தொடங்கினான். பேயரசாட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்: போருக்குப் புறப்பட்ட கட்டியங்காரன் அரசியல் தந்திரங்கள் அளவறக் கற்றுத் தெளிந்தவன்; காரியத்தை முடித்துக் கொள்வதற்காக வஞ்சம் சூது முதலான எத்தகைய செயலைச் செய்வதற்கும் சிறிதும் பின் வாங்காதவன். அதனால் முதற்கண் அரசனுக்குத் துணையாக நிற்பவர் எவரெவர் எனக் கருதினானோ அவரவரை யெல்லாம் சிறை செய்தான். பேராசைக்காரர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்கினான். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள் அல்லவா! கட்டியங்காரன் அளித்த பொருளிலே மயங்கிய கைக்கூலியாளர்கள் அரண்மனையை முற்றுகையிட்டனர். “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பதுபோல் கட்டியங்காரன் கருத்துக்கு ஏற்ப நின்றனர் கயமையாளர். பொன்னே புறப்படு! காவலன் சச்சந்தன், கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்தான். கவலைப் பட்டுக் கொண்டு இருக்க அவனுக்கு அப்பொழுது நேரமில்லை. உடனே தனக்குரிய படைவீரர்களை ஏவி மதிலைக் காக்குமாறு கட்டளை இட்டனன். இறுதி மூச்சுவரை எதிர்த்துத் தாக்க முடிவு கொண்டான். ஆனாலும் எச்சரிக்கை தவறிவிடவில்லை. இக்கட்டான பொழுதாக இருந்தாலும் கூட, அரசியை விரைந்து சென்று கண்டான். “தேவி! இப்பொழுதே இவ்விடம் விட்டு நீ வெளியேற வேண்டும். அது உனக்காக அன்று; உன் வயிற்றிலே வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளைக்காக! என்னைப் பற்றிச் சிறிதும் நீ கவலை கொள்ளாதே! முன்னரே நீ பயிற்சி செய்திருக்கும் மயிற்பொறி இதோ பார்! இதில் ஏறிக்கொண்டு விரைவில் பொறியைச் செலுத்து! நீ கண்ட கனவு பலிக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றே எண்ணுகின்றேன்” என்றான். இதனைக் கேட்ட விசயை மயங்கி விழுந்துவிட்டாள். அவளை எடுத்து தக்கவாறு தேற்றி மயிற்பொறியில் ஏற்றி அனுப்பி வைத்தான். சிங்கத்தின் சிம்மாசனத்தே சிறுநரியின் கொலு: கட்டியங்காரனது கூலிப்படைகள் அந்தப்புரத்தையும் அரண்மனையையும் நன்கு வளைத்துக் கொண்டன. சச்சந்தனும் போர் புரிய எழுந்தான். இருபக்கத்தினரும் கடுமையாகப் போர் செய்தனர். எதிர்பாராத நிலையில் சச்சந்தன் போருக்குவர நேர்ந்ததாலும், படை பலம் கட்டியங்காரனிடம் இருந்ததாலும், மிகக் குறைந்த வீரர்களோடு தான் எதிர்க்க வேண்டியது ஏற்பட்டது. ஆனாலும் அயர்ந்து விட வில்லை சச்சந்தன். யானைக் கூட்டத்திடையே சிங்கம் செம்மாந்து பாய்வது போலப் பாய்ந்து திகில் அடையச் செய்தான். அம்புகளை மழைத் துளிகளைப் போலச் சிதறினான். அறப்போர் முறைமை யினின்றும் அணுவளவும் மாறுபடாது போரிட்டான். ஆனால் எதிரியோ வஞ்சகன்; சூழ்ச்சியில் கைதேர்ந்தவன். அதனால் அறமுறை தவறி அரசனைத் தாக்கினான். வேந்தனுக்குத் தளர்ச்சி ஏற்பட்டது. ஆம்! இருந்த ஊக்கமெல்லாம் ஓடி ஒழிந்துபோம் படியான பெருந் தாக்குதலுக்கு ஆளானான்! படைக் கூட்டம் எங்கே? தனியொருவன் எங்கே? அந்தோ! வேந்தன் வீரமரணம் அடைந்தான். நல்லோர் நடுங்க, அறம் அழிய, நயவஞ்சகன் கட்டியங்காரன் வென்றான்! சிங்கம் இருந்து செங்கோல் செலுத்திய பீடத்திலே சிறுநரி கொலுவிருக்கத் தொடங்கிற்று! இடுகாட்டிலோர் இளங்குழந்தை: அரசனது ஏவுதலால் அரசி மயிற்பொறி மீது ஏறி வான வழியே சென்றாளல்லவா! அவளது மனம் ஒருநிலையில் இல்லாததால் மயிற்பொறியை முடுக்கவும் உரம் அற்றுப் போய்விட்டாள். அதனால் பொறி பறக்கமாட்டாமல் கீழே விழுந்தது. விழுந்த இடமோ சுடுகாடு ஆகும். பொழுதோ நள்ளிருள் ஆகும். பேயும் அஞ்சும் பிணக் காட்டிலே பெருந்தேவி தனியே கிடந்து கவலைப் பட்டாள். மன்னவனை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகினாள்; கனவை நினைத்து நினைத்துக் கண்ணீர் சொரிந்தாள்; அந்தப்புரத்திலே இருந்து அடியவர் சூழ, அரசர் பாராட்ட வாழ்ந்த அவள், ஐயோ! சுடுகாட்டிலே விழுந்து நள்ளிருளிலே எவர் துணையுமின்றிப் பிள்ளை ஒன்றைப் பெற்றெடுத் தாள்! மத்தள ஒலி மிக, விளக்கு ஒளி ஓங்க, ஆடல் பாடல் திகழ, அரண்மனையிலே பிறக்க வேண்டிய குழந்தை நரி ஊளையிட, பிணஞ்சுடு தீ ஓங்க, பேய் ஆட, கூகை குழறச் சுடுகாட்டிலே பிறக்க நேர்ந்தமை குறித்து வருந்திக் கலங்கினாள். அந் நேரம் அவள் தோழியான சண்பகமாலையின் வடிவத்துடன் தெய்வம் ஒன்று முன் வந்தது. தன் தோழியென்று எண்ணிய விசயை சிறிது மகிழ்ச்சி யடைந்தாள். தெய்வம் விசயையை நோக்கி, “தாயே! வாழ்க! தாங்கள் பெற்றுள்ள பிள்ளை எளியன் அல்லன்; எதிர்காலத்தில் இவன் ஆணைப்படி உலகமே நடக்கும் என்பது உறுதி. கட்டியங்காரனும் இவனால் பட்டழிவதும் உண்மை! இப்பொழுது இம்மகனை எடுத்துச் செல்லுமாறு இங்கொருவன் வருவான். நாம் சற்று ஒதுக்கமாக மறைந்திருப்போம்” என்றது. அதன்பின் தெய்வம் சச்சந்தன் பெயர் பொறித்த முத்திர மோதிரமொன்றைக் குழந்தையின் விரலில் இட்டு வைத்துவிட்டு மறைந்து கொண்டது. அப்பொழுது சுடுகாட்டை நோக்கிக் கந்துக்கடன் என்னும் பெயருடையவன் ஒருவன் வந்தான். அவன் ஒரு வணிகன்; இராசமாபுரத்தைச் சேர்ந்தவன். அவன் யாருமின்றித் தனியே கிடக்கும் குழந்தையைக் கண்டு வியப்புற்றான்; பின் மகிழ்ச்சி மிகவுடையவனாய்க் குழந்தையை எடுத்தான். அவன் கையால் எடுக்கும் பொழுது குழந்தை தும்மிற்று. அந்நேரம், அருகில் மறைந்திருந்த தெய்வம் “சீவ” என்று வாழ்த்தியது. அதன்பின் கந்துக்கடன் குழந்தையின் கைவிரலில் இருந்த அரசனின் முத்திரை மோதிரத்தைக் கண்டு மற்றவர்களுக்கு அக்குழந்தையைப் பற்றி ஐயம் எதுவும் வராதிருக்குமாறு அதைக் கழற்றி வைத்துக் கொண்டான். குழந்தையைத் தன் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தான். அவன் மனைவி சுநந்தை, குழந்தையைக் கண்டு மகிழ்ச்சி யடைந்து, பின் உண்மையை உணர்ந்து தெய்வத்தின் கொடையே என்று வணங்கி. வாழ்த்தி, வளர்த்து வந்தாள். கந்துக் கடன் சுடுகாட்டிலே குழந்தை தும்மும் பொழுது கேட்ட ஒலியான ‘சீவ’ என்பதனை மறக்காத வனாய்க் குழந்தைக்குச் “சீவகன்” என்று பெயரிட்டுப் போற்றினான். வாழ்க சீவகன்! குழந்தையைக் கந்துக்கடன் எடுத்துச் சென்றவுடன் சண்பக மாலை வடிவத்திலிருந்த தெய்வம் விசயையை அழைத்துக் கொண்டு தண்டகாரணியம் என்னும் இடம் சேர்ந்தது. இத்தண்டகாரணியத்தில் பெண் துறவிகள் வாழும் திருமடம் ஒன்று இருந்தது. அம்மடத்துத துறவிகளிடம் விசயையைத் தெய்வம் அடைக்கலமாக ஒப்பித்து விட்டுச் சீவகன் நிலைமையை அறிந்து வருமாறு புறப்பட்டது. விசயை மடத்திலே தங்கித் துறவுகொண்டாள். “மகன் வாழ்க” என்று நோன்பு கொண்டாள். இளமையில் கல்! சுநந்தையும், கந்துக்கடனும், சீவகனைக் கண்ணிமைகளைப் போலக் காத்து வந்தனர். இவ்வாறு இருக்குங்கால் சுநந்தை ஒரு மைந்தனைப் பெற்றெடுத்தாள். அவன் பெயர் நந்தட்டன் என்பது. சீவகனும், நந்தட்டனும் ஒத்த இயல்பொடு வாழும் காலத்து, கந்துக் கடன் வீட்டிலே வேறு சில சிறுவர்களும் வளர்ந்து வந்தனர். அவர்கள் சச்சந்தனது உறவினர்களது குழந்தைகள் ஆவர். அரசன் சச்சந்தனது உற்றார் உறவினர்கள், கட்டியங்காரன் படுத்திவரும் தொல்லை களுக்குப் பயந்தே அச்சிறுவர்களைக் கந்துக்கடன் வளர்த்து வருமாறு ஒப்படைத்திருந்தனர். சிறுவர்களுள் இருவர், சச்சந்தனது காதலியர் பிள்ளைகளான நபுல விபுலர் ஆவர். அவர்களோடும், நந்தட்டனோடும் சீவகன் நன்கு வளர்ந்தான்; தக்க பருவத்தில் கற்பதற்குத் தொடங்கினான்; இயல் இசை முதலிய கலைப்பயிற்சியும், படைக்கலத் திறமும் விரைவில் கைவரப் பெற்றான். சிறுவர்கள் அனைவருள்ளும் சீவகன் தலைமையானவனாக விளங்கினான். ஆசிரியர் அச்சணந்தி சீவகனுக்கு வாய்த்த ஆசிரியர் அச்சணந்தி என்பவர் ஆவர். அவர் “யானைப்பசி” என்னும் தீராத பெருநோய்க்கு ஆளானவர். அவர் சீவகனைக் கண்டபோது, தம் நோய் நீங்கி விடவே களிப்பும் வியப்பும் ஒருங்கடைந்தார். அதனால் சீவகன் மேல் அளப்பரிய அன்புகொண்டார். அவ்வன்புடைமையாலே தான் அவனுக்கு ஆசிரியனாகவும் அமர்ந்து பல்கலைகளையும் பயிற்றுவித்தார். சீவகனது அறிவுத் திறத்தையும், நுண்ணிய ஆராய்வையும் கண்டு மகிழ்ச்சி யடைந்து அறநெறிகளை எடுத்தோதினார். அன்றியும் ஒருநாள் சீவகனைத் தனித்து அழைத்து வைத்துக் கொண்டு சச்சந்த வேந்தன் ஆட்சி செய்ததும், கட்டியங்காரன் சூழ்ச்சி செய்ததும், விசயை மயிற்பொறி மீது ஏறிச் சென்று சுடு காட்டில் விழுந்து, பிள்ளை ஒன்றைப் பெற்றெடுத்ததும், அப்பிள்ளை கந்துக்கடனால் வளர்க்கப் பெற்று வருவதும் ஆகிய நிகழ்ச்சிகளை விளக்கமாகக் கூறி, அப்பிள்ளை நீயே என்றும் தக்க முறையில் தெரிவித்தார். ஆசிரியர் வழியாக இவ்வுரையைக் கேட்ட சீவகன் சீற்ற மிகக் கொண்டான். தந்தையைக் கொன்ற கொடியவனாம் கட்டியங்காரனைக் கொன்று அழித்துவிட வேண்டுமென்று துடிதுடித்தான். ஆனால் அச்சணந்தி அவனைத் தடுத்து நிறுத்தி, “சீவக! காலம் அறிந்து கடமை புரிதலே தக்கார் செயல்! நீ ஓராண்டு காலம் உன்னை அரசன் மகன் என்று வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இரு! அதற்குப் பின்னர் உன் விருப்பம் போல் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொள்க!” என்றார். ஆசிரியர் ஆணையை மறுத்தற்கு அஞ்சிய சீவகன் அமைதியாக இருந்தான். அதன்பின் ஆசிரியர் சீவகனிடமும், கந்துக்கடனிடமும் அரிதில் விடைபெற்றுக் கொண்டு தவம் செய்யுமாறு புறப்பட்டார். சீவகன் சிந்தையனைத்தும் ஆசிரியர் உரை மீதே பதிந்து கிடந்தது. வேடரும் வேந்தனும்: இது இவ்வாறாக, அரசன் கட்டியங்காரனது பசுக்கள் மலை யொன்றில் மேய்ந்து கொண்டிருந்தன. அச்சமயம் அம் மலையிலே வாழ்ந்த வேட்டுவக் கூட்டத்தார் அப் பசுக்களை வளைத்துத் திரட்டிக் கவர்ந்து கொள்ளத் தொடங்கினர். ஆனால் பசுக்களை மேய்த்து வரச் சென்ற ஆயர்கள் வேடர்களை எதிர்த்துத் தாக்க முடியாதவர்களாய் நடுநடுங்கிக் கொண்டே, சிம்மாசனத்தில் செருக்குடன் இருந்த காவலன் கட்டியங்காரனிடம் உரைத்தனர். அதுகேட்ட கட்டியங்காரன் கடுங்கோபம் கொண்டு பெரும் படையுடன் தன் மக்களையும் மைத்துனன் மதனனையும் அனுப்பி வேடுவர்களை அழித்து, பசுக்களை மீட்டி வரச் சொன்னான். படை விரைந்து சென்று வேடுவர் கூட்டத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது; நெருக்கி மேலே செல்லத் தொடங்கியது; ஆனால் வேடுவர் வில்முனைக்கு முன் இப்படை சிறுபொழுது கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. படையில் பெரும்பான்மையினர் அழிவுற்றனர். அது கண்டு ஆற்றாதவர்கள் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர்; அதனால் பசுக்களை மீட்டி வராமலே “தலை தப்பித்தது” என்று எண்ணிப் புறங்காட்டி விட்டனர். வேடரை வெல்லேனேல் பேடி: இந் நிகழ்ச்சியை ஆயர்கள் அறிந்து அரசனுக்கு அறிவிக்க அவன் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அதனால் ஆயர்களின் தலைவன் நந்தகோன் என்பவன் “வேடர்களை வென்று பசுக்களைத் திருப்பிக் கொண்டு வருபவர்க்கு என் மகள் கோவிந்தையை மணம் செய்து கொடுப்பேன்” என்று ஊரார் அறியுமாறு முரசறைவித்தான். வேடர்களின் ஆற்றலை முன்பே அறிந்திருந்தபடியால், அவர்களை எதிர்க்குமாறு வீரர் எவரும் முன் வரவில்லை. இந் நிலைமையில் சீவகன் இச் செய்தியை அறிந்தான்; வேடர்களை எதிர்த்துத் தாக்கிப் பசுக்களை மீட்டுவர உறுதி கொண்டான். “பசுவை மீட்டி வந்து ஆயர்கள் துயர் துடையேனேல் யானோர் பேடியாவேன்” என்று வஞ்சினம் உரைத்துப் போருக்கு எழுந்தான். போருக்கு எழுந்த சீவகனுடன் தோழர்களும் தொடர்ந்தனர்; விரைந்து சென்று வேடர்களை மறித்துக் கொண்டு தாக்கினர். விற்பயிற்சி மிக்க வேடர்கள் அம்புகளைக் கணக்கின்றித் தூவினர்; ஆனாலும் சீவகனும் தோழர்களும் அயர்ந்து விடவில்லை; மிக மிக ஊக்கங் காட்டிக் கொண்டே முன்னேறினர். சீவகனுக்கு வேடர்களின் மேல் இரக்கம் தோன்றியது. “எனக்கு எவ்வகையிலும் பகைவராகா மலும், கேடு செய்யாமலும் இருக்கும் இவ் வேடுவர்களைக் கொல்லுவது முறைமையாகாது; வெருட்டி ஓடச் செய்வதே தக்கது” என்று முடிவு கட்டிக் கொண்டு அம்புகளை அளவின்றிச் சிதறினான். நண்பர்களும் அம்புகளை மழை போலப் பொழிந்தனர். வேடர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அன்றியும் பின் வாங்கியும் ஓடத் தொடங்கினர். எனவே சீவகனும் தோழர்களுமாகப் பசுக்களை மீட்டிக் கொண்டு நகரம் திரும்பினர். இது கண்ட நந்தகோன் மகிழ்ந்தான்! ஆயர்கள் வியந்தனர்! மக்கள் வாழ்த்தினர்! ஆனால் ‘சீவகன் என்னும் இளைஞன்’ தோழரொடும் சேர்ந்து பெற்ற வெற்றிமிக்க இந்நிகழ்ச்சியைக் கட்டியங்காரன் கேள்வியுற்றுப் பொறாமை கொண்டான்! தோற்று வந்த தன் படையையும், மக்களையும், மைத்துனனையும் நினைத்துப் பார்த்தால் பொறாமை யுண்டாகத்தானே செய்யும்! அவன்தான் இயல்பிலேயே சிறந்த பண்புடையவன்அல்லவா! இதற்குப் பின்னர் நந்தகோன் சீவகனைக் கண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான். தான் முன்பு கூறிய ‘வாக்குறுதி’ பற்றி எடுத்துரைத்து, மகள் கோவிந்தையை மணம் செய்து கொள்ளுமாறும் வேண்டினான். ஆனால் சீவகன் இவ்வுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. தன் நண்பன் பதுமுகனே திருமணம் செய்து கொள்ளத் தக்கவன் என்று எடுத்துக் கூறி நந்தகோனுடைய ஒப்புதலையும் பெற்றுப் பதுமுகனுக்குக் கோவிந்தையைத் திருமணம் செய்வித்தான். மணமக்கள் இருவரும் ஒத்த உள்ளத்துடன் இன்பமாக இல்லறம் நடத்தினர். நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி, வீரம் இவற்றில் நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருந்தனர். கடல்மேலே கப்பல் பார்! அந்நாளில் சீதத்தன் என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் இராசமாபுரத்தில் வாழ்ந்து வந்தான். அவன் பெருஞ்செல்வன்; பொருளின் சிறப்பை நன்றாக அறிந்தவன். அவனுக்கு, மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாயிற்று. அக்காலத்திலேயே வணிகர்கள் உள்நாடு வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்து வந்தனர். வெளிநாட்டு வணிகத்தாலேதான் பெரும் பொருள் ஈட்டினர். இதை நன்கறிந்த சீதத்தன் கப்பல் வழியாகக் கடல் கடந்து வெளிநாடு சென்றான். அவன் எதிர்பார்த்த அளவுக்கு எவ்விதத்திலும் குறையாத வாறு பொருள் திரட்டிக் கொண்டு பூத்தமுகத்துடன் திரும்பினான். கப்பல் நிறையப் பொன்னும் பொருளும் குவித்திருந்தான். தன் ஊரை நோக்கிக் கப்பலைச் செலுத்துமாறு ஏற்பாடு செய்தான். கப்பல் நடுக்கடலில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று கொடுங்காற்றுக் கிளம்பியது; இடிஇடித்து மழை பொழிந்தது; மின்னல் கண்ணைப் பறித்தது. கப்பலை ஓரடி தூரம்கூடச் செலுத்த முடிய வில்லை. கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கலங்கினர். “இடுக்கண் வரும்போது நடுக்கம் கொள்வது கூடாது. எத்தகைய இடையூறும் நமக்கு வராது” என்று தேறுதல் கூறிக் கொண்டிருந்தான். ஆனால் கப்பல் கடலுள் ஆழ்ந்து போகும் நிலைமையை அடைந்தது. சீதத்தன் கப்பலிலிருந்து கடலுள் குதித்தான். ஒடிந்து கிடந்த மரத்துண்டு ஒன்றைப் பற்றிக் கொண்டான். அலைமோதி மோதித் தள்ள ஒருவாறு உயிர்தப்பிக் கொண்டு கடற்கரை ஒன்றைக் கண்டான். தத்தன் முன் தரன்! கடற்கரைக்கு வந்து சேர்ந்த சீதத்தன் முன் தரன் என்னும் பெயருடைய ஒருவன் வந்தான். அவன் கலுழவேகன் என்னும் கந்தருவ வேந்தனது கையாள்ஆவான். சீதத்தனுக்கு ஏற்பட்ட நிலைமை அனைத்தையும் அறிவான். கந்தருவர்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு வான்வழியாகச் செல்லவும், நினைத்த காரியங்களை எத்தகைய இடையூறுமின்றி முடித்துக் கொள்ளவும் வல்லவர்கள். அதனால் தரன் சீதத்தனை நோக்கி, “அன்பா! அயராதே! நீ இழந்ததாகக் கருதும் பொருள்களையும், தோழர்களையும் உன்னிடம் சேர்ப்பிக் கிறேன்! என் பின்னே வா! என்றான். சீதத்தன் சிறிது தேறியவனாய்த் தரன்பின் சென்று அவன் தலைவனாகிய கலுழவேகனைக் கண்டான். கந்தருவக் கலுழவேகன்! கலுழவேகனுக்கு அழகும், அறிவும், கலையும் நிரம்பியவளான மகள் ஒருத்தி இருந்தாள். அவள் யாழ் மீட்டுவதிலும், இசை பாடுதலிலும் நிகரற்று விளங்கினாள். அவளின் ‘சாதகம்’ கணித்த சோதிடன் “தன்னை இசையினால் வெல்லும் வல்லமையுடையவனும், இராசமாபுரத்திவனுமாகிய ஒரு வீரனை மணம் செய்து கொண்டு இனிது வாழ்வாள் இவள்’ என்று கூறினான். அதற்காகவேதான் இராசமாபுரம் செல்லும் கப்பலில் இருந்த சீதத்தனுக்குக் கப்பல் கடலுள் மூழ்குவது போலாகத் தரண் காட்டினான்; சீதத்தனைக் கடலுள் விழச் செய்து கடற்கரைக்கு வந்து சேருமாறு செய்தான்; ‘கந்தருவர்கள் நினைத்த காரியத்தை முடித்துக் கொள்ள முடியும்’ என்பதை முன்னரே அறிந்தோம்! சீதத்தனைக் கண்ட கலவேகன் மிகக் களிப்படைந்தான்; உரிமை பாராட்டி விருந்து செய்தான்; காந்தருவதத்தை என்னும் பெயருடைய தன் மகளைப் பற்றிக் கூறி “யாழில் இவளை வெல்ல வல்லானுக்கு மணம் செய்து தருக! இனி இவளுக்குத் தாயும் நீயே! தந்தையும் நீயே! அனைத்தும் நீயே!” என்று கூறினான். பொன்னும் பொருளும் ஆடையும் அணியும் அளவிறந்து அள்ளிவைத்து, காந்தருவதத்தையின் தோழியான வீணாபதி என்பவளுடன் அனுப்பி வைத்தான். சீதத்தன் கடற்கரைக்கு வந்தான். அங்கே தன் கப்பல் எத்தகைய இன்னலும் இன்றி நின்று கொண்டு இருப்பதைக் கண்டு வியப்படைந்தான். அன்றியும், தன் அன்பு நண்பர்களும் யாதோர் குறைவுமின்றிக் களிப்போடு இருத்தலைக் கண்டு உவப்படைந்தான். சீதத்தனுக்கு இந்த நிகழ்ச்சி புரியாத ஒன்hறக இருந்தது. இந்த நிகழ்ச்சி புரியாத ஒன்றாக இருந்தது. தரன், தன் செயலினை விளக்கி கூறி இராசமாபுரத்திற்கு மகிழ்வொடு அனுப்பி வைத்தான். வீணைப் போர்: இராசமாபுரம் சேர்ந்த சீதத்தன் காவலன் கட்டியங் காரனைக் கண்டு காந்தருவதத்தையைப் பற்றிக் கூறினான். அதன்பின், அவன் ஒப்புதலுடன் அரங்கம் ஒன்று அழகுற அமைத்தான். “காந்தருவதத்தையை யாழில் வெல்லுவார் எவரோ அவர் அவளை மணம் செய்து கொள்ளலாம்” எனப் பறை யறைவித்தான். நல்லதொரு நாளில் யாழ் வல்லவர் அனைவரும் கூடினர். காந்தருவதத்தையின் அழகிலே மயங்கி ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு யாழ்ப் போர் புரிந்தனர். குறிப்பாக, அரச குமாரர்கள் கடுமையாகப் போரிட்டனர். வெவ்வேறு நாட்டு வேந்தர்களும் வந்திருந்தனர்; ஒருநாள் இருநாள் அன்றி, ஆறுநாட்களாக வீணைப் போட்டி நடந்தும் எவரும் காந்தருவதத்தையை வென்றுவிடவில்லை. சீதத்தனுக்கு இந்நிகழ்ச்சி பெருத்த கவலையை உண்டாக்கிற்று. கட்டியங்காரன் “தத்தையை யாழில் வெல்வார் தரணியில் இல்லை. ஆகலின் யாழ்ப் போரைத் கலைத்தோம்’ என்று கூறினான். கூட்டம் கலைந்தது. இந் நிகழ்ச்சிகளனைத்தையும் சீவகன் நன்கு அறிந்தான். அவனுக்குத் தத்தையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அப்பொழுது இல்லாதிருந்தாலும ‘கலைத் திறமையைக் காட்டுவதற்காகவேனும் போட்டியிட வேண்டும்’ என்று முடிவு செய்தான். இவ்வெண்ணத்தைத் தன் நண்பன் புத்திசேனன் வழியாக வளர்ப்புத் தந்தை கந்துக்கடனுக்குத் தெரிவிக்கச் செய்தான். கந்துக்கடன் சீவகன் கலைத்திறத்தை நன்றாக அறிவான். ஆதலால் இசைப்போர்க்கு அனுப்பி வைக்க விருப்பம் கொண்டான். ஆனால், இந் நேரத்தே அவனிடம் ஒருத்தி வந்து கட்டியங் காரன் சீவகன் மேல் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியை உரைத்துச் சென்றாள். கடுங்கோபங் கொண்டான் கந்துக்கடன். “படையமைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் வீணைப் போருக்குச் செல்க” என ஆணையிட்டான். ஆனால் சீவகனோ கட்டியங்காரனை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. உடைவாளை எடுத்துச் செருகிக் கொண்டு தோழர் சூழ யாழ்போருக்குப் புறப்பட்டான். வீணைத் தோல்வியிலே வேறொரு வெற்றி: யாழ்ப்போருக்கு வருவோர் இன்னும் உள்ளனர் என்று கேள்விப் பட்டபடியால், இசையரங்கிலே கட்டியங்காரன் முதல் காவலர் பலர் குழுமி யிருந்தனர். சீவகன் தோழரொடும் இசை அரங்கத்திற்கு வந்து சேர்ந்தான். காந்தருவதத்தை சீவகனைக் கண்டவுடன் தன்வயம் இழந்து விட்டாள். அவன் அழகிலே மயங்கி அடிமையாகி விட்டாள். தோழி வீணாபதி சீவகனிடம் யாழை எடுத்து நீட்டினாள். சீவகன் அதனைச் சோதித்த முறையிலேயே பலர் அயர்ந்து விட்டனர். யாழ் வாசிக்கத் தொடங்கியதும் விலங்குகளும் பறவைகளும் கூடிவிட்டன என்றால், மக்களைப் பற்றிக் கூறவோ வேண்டும்! தத்தையும் யாழ் எடுத்து மீட்டினாள். ஆனால் சீவகனது இசையை வெல்லத்தக்கதாக இல்லை. ஆம்! தோற்றாள். வீணைத் தோல்விதானே வேறொரு வெற்றிக்கு அடிப்படை! சீவகன் கழுத்தில் காந்தருவதத்தை மாலை யிட்டாள். பார்க்க வேண்டுமே கட்டியங்காரன் முகத்தை! சீவகன் மேல் முன்னரே சினங்கொண்டிருந்த அவன், வீணைப்போர் வெற்றியையும், வேந்தர் வெட்கமடையக் காந்தருவதத்தை மாலை சூட்டிய பேற்றினையும், மக்கள் பாராட்டுதலையும் கண்ட பின்னர் களிப்பா கொள்வான்? கண்களில் கனற் பொறி பறக்க இருக்கைவிட்டு எழுந்தான்! “மன்னர்களே! உங்களில் எவருக்கும் மானம் இல்லையா? மன்னன் மகளை வணிகன் மணம் செய்வதா? உங்கள் குலப் பெருமை என்னே! குடிப்பெருமை என்னே! ஆண்மையை நிலை நாட்டுங்கள்! இல்லையேல் அரசைத் துறந்து செல்லுங்கள். இப்பொழுது இவனை வாட்போரில் வெல்லுவான் எவனோ அவனே இவளை மாலை சூட்டக் காண்பீர்!” என்றான். சீவகன் தோழனான பதுமுகன், கட்டியங்காரன் பேச்சைத் தட்டிப் பேசி நியாயம் காட்டினான். ஆனால் மதிகெட்டுப் போய் நின்ற மன்னவ குமரர் சீவகனை வளைத்துக் கொண்டு போரிடத் தொடங்கினர். சீவகன் தன் தோழர்களுடன் சேர்ந்து நின்று தாக்கினான். மன்னர் படை ‘உப்புமலை’ கரைவது போலாகக் கரைந்து ஓடிற்று. சீவகன் தத்தையை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு இன்பமாக வாழ்ந்தான். வண்டுண்ணத் தூவிய சுண்ணம்: சீவகன் இன்பம் மிக்க இளவேனில் பருவத்தில் ஒரு சோலைக்குச் சென்றான். அச் சோலையில் குணமாலை, சுரமஞ்சரி என்னும் செல்வக் கன்னியர் இருவர் இருந்தனர். அவ்விருவருக்கும் அவர்கள் வைத் திருந்த மணப் பொடியான சுண்ணத்தில் எது சிறந்தது என்பது குறித்து வாக்குவாதம் ஒன்று நடந்தது. அதற்கோர் முடிவு காணுமாறு, சோலையிலிருந்த ஆண்களனைவரிடமும் சுண்ணத் தட்டுகளை இருவரும் அனுப்பி வைத்தனர். சுண்ணத்தை ஆராய்ந்த அனைவரும் ‘இரண்டுமே நன்மணம் உடையது’ என்றனர். ஆனால் சீவகன் ‘குணமாலையினுடைய சுண்ணமே சிறந்தது’ என்றான். இதைக் கேட்ட சுரமஞ்சரியின் தோழி கனகபதாகை என்பவள் “ஒருத்தி மேல் வைத்த அன்பால் தீயதும் நல்லதாகி விடும்” என்றாள். கோடை காலத்தில் இடிக்கப்பட்ட சுண்ணமே சிறந்தது என்றும், அதனை வண்டுகளும் உண்ணும் என்றும் கூறி இரண்டு சுண்ணத்தையும் காற்றில் தூவினான். குணமாலையின் சுண்ணத்தை வண்டு உண்டது. இதனைக் கண்ட தோழியர், இருவரிடமும் நிகழ்ந்த வற்றைக் கூறினர். சீவகன் மேல் குணமாலைக்கு அன்பும், சுரமஞ்சரிக்கு வெறுப்பும் உண்டாயிற்று. இந்த வெறுப்பின் காரணத்தால் சுரமஞ்சரி “எந்த ஆணையும் யான் பார்க்க மாட்டேன்” என்று வைராக்கியம் கொண்டாள். அன்றியும் “சீவகன் வலிய வந்து என் கால்களில் விழுந்து வணங்கச் செய்வேன்” என்று உறுதிமொழி கூறி விரதங் கொண்டு இருந்தாள். குணமாலைக்கு மணமாலை: சுரமஞ்சரியின் கோபம் குணமாலைக்குக் கவலை உண்டாக்கிற்று. அக்கவலையை மாற்றுவதற்காக ஆற்றில் நீராடி அருகதேவனை வணங்குவதற்காக வந்தாள். அங்கே சீவகனும் நீராட வந்தான். வரும்பொழுது, யானை ஒன்று மதங்கொண்டு குணமாலையைக் கொல்ல முனைந்தது. அதுகேட்டுக் குணமாலையின் தோழி மாலை என்பவள் கூக்குரல் இட்டாள். சீவகன் ஓடிச்சென்று யானையின் மதத்தை அடக்கிக் குணமாலையைக் காப்பாற்றினான். இதனால் அவளுக்குச் சீவகன் மேல் தணியாத அன்பு ஏற்பட்டு முதிர்வடைந்தது. சீவகனும் குணமாலையைப் பெரிதும் விரும்பினான். இவர்கள் விருப்பத்தை அறிந்த பெற்றோர் இவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து இன்புறுத்தினர். இன்பத்திலோர் துன்பம்: மதங்கொண்டு குணமாலையைக் கொல்லவந்த யானை கட்டியங்காரனுடையதாகும். அது சீவகனால் வெருட்டப்பட்டு ஓடியதால் உணவு கொள்ளாது கலங்கி நின்றது. அதனைக் கண்ட கட்டியங்காரன் யானைப்பாகனிடம் காரணம் கேட்டான். அவன் மதங்கொண்ட நிகழ்ச்சியைக் கூறாது, “இதற்குச் சீவகன் சீற்றம் ஊட்டினான்” என்று மட்டும் கூறினான். இதனால் சினம் கொண்ட கட்டியங்காரன் சீவகனை அழைத்து வருமாறு ஏவினான். அரசன் ஆணையைக் கேட்ட சீவகன் கோபம் மிக்குப் பொங்கி எழுந்ததைக் கண்ட கந்துக்கடன் “மன்னனோடு பகைப்பது கூடாது; அமைந்து நடப்பதே நலம்” என்று கூறினான். அதனால் அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு பொறுமையுடன் பின்னே சென்றான். சீவகனை மன்னித்துவிடுமாறு கந்துக்கடன் வேந்தனிடம் வேண்டினான். அதற்கு ஈடாகத் தன் பொருளனைத்தும் தரத்தயார் எனவும் கூறினான். ஆனால் கட்டியங்காரன் ஏற்றுக் கொள்ளவில்லை. கந்துக்கடன் கவலையுடன் வீட்டுக்குத் திரும்பினான். சீவகனுக்குத் தீங்கு நேரின் தன்னுயிரை விட்டுவிட உறுதி செய்து கொண்டான். பொய்க் கொலைப் புகழாளன்: சீவகனைக் கட்டியங்காரனது வீரர்கள் சுற்றிக் கொண்டனர். சீவகன் அம்புகளைத் தொடுத்தான். வீரர்கள் தப்பி ஓடிவிட்டாலும் கூட மதனன் சீவகன் கைக்கு விலங்கு இட்டான். மதனனைக் கொன்று சீவகனை மீட்டுமாறு நண்பர்கள் விரைந்தனர். ஆசிரியர் கூறிய நாள் இன்னும் வராமையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது தப்பிச் செல்லவே சீவகன் எண்ணினான். அதனால் தனக்கு நண்பனான சுதஞ்சணன் என்னும் தேவனை நினைத்தான். அவன் இடி மழையை உண்டாக்கி எவரும் அறியாதபடி தூக்கிக் கொண்டு தன்னூர்க்குச் சென்றான். சீவகனைப் பறிகொடுத்த மதனன் வருத்தமுற்று, வழியே போகும் ஒருவனை உருவம் தெரியாதவாறு வெட்டினான். “தப்பியோட முனைந்த சீவகனை வெட்டிக் கொன்றேன்” என்று கட்டியங்காரனிடம், பொய் கூறிப் பாராட்டுதலும் பெற்றான். செய்யாமல் செய்த உதவிக்கு... சுதஞ்சணன் முன்பு நாய் உருவில் இருந்தான். அவனுக்கு மந்திர உபதேசம் செய்து சீவகனே தேவன் ஆக்கினான். அந்த நன்றி கருதியே சீவகனுக்கு உற்ற சமயத்தெல்லாம் உதவுபவனாக ஆனான். சுதஞ்சணன் சீவகனைப் பல வழிகளிலும் உபசரித்துப் போற்றினான். சீவகனுக்கு மலை, ஆறு முதலான இயற்கை வனப்புகளைக் கண்டு வரவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் சுதஞ்சணனிடம் அவ்வாவல் பற்றிக் கூற, அவன் நல்ல பல இடங்களைச் சுட்டிகாட்டி, வழியும் துறையும் கூறி, தந்திரமும் மந்திரமும் சொல்லிவைத்து அனுப்பினான். பாம்பு தீண்டலுற்ற பதுமை: சீவகன் சுதஞ்சணன் சொற்படியே நாடு, நகர், மலை, ஆறு, குளம் ஆகிய பலவற்றைக் கடந்து சந்திராபம் என்னும் நகர் அடைந்தான். அந்நகரின் மன்னவன் தனபதி என்பவன் ஆவன். அவனுக்குப் பதுமை என்னும் மகளொருத்தி இருந்தாள். அவள் ஒருநாள் சோலையில் உலாவிக் கொண்டிருக்கும்போது அவளைப் பாம்பொன்று தீண்டி விட்டது; நச்சு மிக வேகமாகத் தலைக்கு ஏறியது. அதனைத் தணிக்க எவராலும் இயலவில்லை. நச்சுத் தீர்க்கும் மருத்துவர் அனைவரும் கைவிட்டனர். மகளுக்குண்டாய நஞ்சினைப் போக்குபவர்க்கு நாடு நகரெல்லாம் தந்துவிடுவதாக மன்னன் உறுதிகூறினான். ஆயினும் முன்வந்து தீர்க்க எவரும் வரவில்லை. சீவகன் தனது நகரில் இருப்பதையும் அவன் திறத்தையும் கேள்விப்பட்ட தனபதி ஆளனுப்பி அவனை அழைப்பித்தான். பாம்பு தீண்டியது பற்றிப் பேசினான்; தீர்க்குமாறு வேண்டினான். நஞ்சு தீர்த்தவன் மஞ்சன் ஆனான்: சீவகன் சுதஞ்சணன் ஓதிய மந்திரத்தை நன்கு நினைவில் கொண்டிருந்தான். அதனால் நஞ்சை உடனே போக்கக்கூடிய மந்திரத்தை ஓதினான். பதுமை நஞ்சு நீங்கப் பெற்று எழுந்தாள். அனைவரும் புகழ்ந்து பேசி, சீவகனுக்கு விருந்தும் விழாவும் செய்தனர். பதுமைக்குத் தன்னுயிர் தந்த சீவகன்மேல் காதல் ஏற்பட்டது. அதுபோலவே சீவகனுக்கும் பதுமை மீது காதல் ஏற்பட்டது. அதனால் மன்னரும் மக்களும் ஒருங்கு போற்ற இருவரும் மணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். சீவகன் பதுமையுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே தங்கி யிருந்தான். அதன்பின் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் புறப்பட்டான். பதுமை பெருங்கவலை கொண்டாள்! திசைதோறும் ஆட்களை அனுப்பிவைத்து மன்னவன் தேடினான். தன்னைத் தேடி வருவது கண்ட சீவகன் வேறொரு வடிவம் எடுத்துக் கொண்டபடியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனிடமே போய் “சீவகனைக் கண்டதுண்டோ?” என்று வினவினர். அவனோ, “இன்னும் ஒன்பது மாதங்கள் சென்ற பின்னர் வருவான்! அதற்குள் நீங்கள் எங்கு தேடினாலும் காண மாட்டீர்கள்” என்றான்; தொலைதூரம் நடந்து சென்றான். நாணமில்லா நங்கை: சீவகன் தந்த நாடு என்னும் நாட்டையடைந்து, அந்நாட்டின் தலைநகரான கேமமாபுரத்தைச் சேர்ந்தான். அந்நகரில் சுபத்திரன் என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கேமசரி என்று ஒரு மகள் இருந்தாள். அவள் மிக அழகி! எந்த ஆடவனைக் கண்டு நாணமடைகின்றாளோ அவனே அவளுக்கு மணமகன் ஆவான் என்னும் விதியினைப் பெற்றிருந்தாள். அதனால் சுபத்திரன் தன் ஊரிலுள்ளவர்களும், தன் ஊர்க்கு வருபவர்களுமான ஆடவர்களைத் தன் வீட்டுக்கு விருந்தினராக அழைத்துச் செல்வான். இவ்வாறு வருபவர்களில் எவனைக் கண்டேனும் நாணம் கொண்டுவிட மாட்டாளா? அவளுக்குத் திருமணம் நடத்திவைத்து மகிழ்ச்சியடைய மாட்டோமா? என்று ஏங்கிக் கிடந்தான். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் கூட எந்த ஒருவனைக் கண்டும் அவள் நாணம் கொள்ள வில்லை. ஊருக்குப் புதியவனாகிய சீவகன் ஓரிடத்தே நின்று கொண்டிருப்பதைச் சுபத்திரன் கண்டான். அவன் அழகை வியந்தான். “இவ்வழகனைக் கண்டேனும் கேமசரி நாணம் கொண்டு விட மாட்டாளா?” என்று எண்ணினான். அதனால் சீவகiன அன்பால் அழைத்துக் கொண்டு தன்னில்லம் சேர்ந்தhன். எவரையும் ஏறெடுத்துப் பார்த்து நாணம் கொள்ளுதலை அறியாத கேமசரி சீவகனைக் கண்டவுடன், அவன் அழகை அள்ளிப் பருகுவது போல் ஆவலுடன் நோக்கினாள். சீவகனும் ஆசைமிக நோக்கினான்; இருவர் கண்களும் மாறி மாறிப் பாய்ந்தன; கேமசரி நாணிக் கோணி நின்றாள்; தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள். இதைக் கண்டு மகிழ்வுற்ற சுபத்திரன் முன்னை விதிப்படியே இருவருக்கும் திருமணம் செய்வித்தான். சீவகனும் கேமசரியும் ஆடியும் பாடியும் இன்பமாகப் பொழுது போக்கினர். ஆனாலும் சீவகன் அவளுடன் மூன்று மாதங்கள் கூடத் தங்கியிருக்கவில்லை. பதுமையைப் பிரிந்து சென்றது போலவே கேமசரியையும் நள்ளிருளிலே எவரும் அறியாவகையில் பிரிந்து சென்றான். வில்லால் விழுந்தது மாம்பழம்! கேமசரியைப் பிரிந்தபின் சீவகன் பலப்பல இடங்களைக் கண்டு கண்டு மத்திம தேசத்தை அடைந்தான். அந்தத் தேசத்தின் வளநகர் ஏமமாபுரம் ஆகும். அவ்வூரைச் சேர்ந்தான் சீவகன்; அங்கிருந்த சோலையொன்றில் தங்கினான். அங்கு அவ்வூர் மன்னவன் மைந்தனான விசயன் என்பவன் வந்து தன் கையில் இருந்த வில்லால் மாங்கனி ஒன்றை அடித்து வீழ்த்தக் கருதினான்; அவனால், முயன்று பார்த்தும் கனியை வீழ்த்த முடியவில்லை. இதைக் கண்ட சீவகன் வில்லை வாங்கி, ஒரே குறிப்பால் அடித்துக் கனியை விழச் செய்தான். விசயனுக்குச் சீவகனது வில் திறமை மிகவும் பிடித்து விட்டது. அதனால் சீவகனை விருந்தாளியாக அழைத்துக் கொண்டு அரன்மனைக்குச் சென்றான். அரசனிடமும் அறிமுகப்படுத்தி வைத்தான். அரசனும் தன் தந்தையுமான திடமித்தனிடம், தனக்கும் தன் உடன் பிறந்தவர்களுக்கும் விற்பயிற்சி செய்வதற்குச் சீவகனை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். இதனால் திடமித்தன் சீவகனை வேண்டி, வில்லாசிரியனாக இருக்கச் செய்தான். அன்று முதல் அரசனது மைந்தர்கள் சீவகனிடம் விற்பயிற்சி பெறலாயினர். மாலையிலே மையல்! ஒருநாள் சீவகன் ஒரு சோலைக்குச் சென்றான். அதன் அழகிலே ஈடுபட்டு நின்றான். பின்னர் அழகிய மலர்களைப் பறித்து, கலைநயம் சிறக்க மாலையாகக் கட்டினான். அவன் கட்டிய மாலையின் அழகை ஒருத்தி கண்டாள். அவள் சீவகனை அடுத்துச் சென்று “ஐய, இம்மாலையை எம் தலைவி கனகமாலைக்குத் தருவாயாக” என்று வேண்டிக்கொண்டாள். சீவகனும் மறுப்பொன்றும் சொல்லாமல் மாலையைத் தரவே, அவள் கனகமாலையினிடம் தந்தாள். கனகமாலை என்பவள் அரசனது மகள்; விற்பயிற்சி பெற்ற விசயனின் உடன் பிறந்தவள்! அவள், தோழி தந்த மாலையின் அழகிலே தோய்ந்து உற்றுப் பார்த்தாள். பூ இதழிலே கடிதம் ஒன்று எழுதப்பட்டு இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அவளும் ஒரு மாலை பின்னி அதில் தன் அன்பைக் கொட்டிக் கடிதமாக எழுதித் தோழி வழியாக அனுப்பி வைத்தாள். கடிதத்தைக் கண்ட சீவகன் மாலையை வாங்க மறுத்து விட்டான். “அரண்மனை விருந்தாளி யாதலாலும், வில்லாசிரியனாக இருத்தலாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றான். ஆனால் தோழி “இம் மாலையை வாங்க நீ மறுத்தால் கனக மாலை இறந்து போவது உறுதி” என்று கூறினாள். பின்னும் மறுத்தற்கு அஞ்சியவனாய் மாலையை வாங்கிக் கொண்டான் சீவகன். மாலைக்கோர் மாலை! விற்பயிற்சியிலும், வேறுபல போர்ப் பயிற்சிகளிலும் சிறந்தோங்கினான் விசயன். அதனால் அரசன் மகிழ்ச்சியடைந்து விசயனையும், அவன் ஆசிரியனான சீவகனையும் பெரிதும் பாராட்டினான். அன்றியும் இத்தகைய வில்லாசிரியன் தன் நாட்டை விட்டுச் செல்ல விடாதிருக்க வேண்டும் என்று எண்ணியவனாய்த் தன் மகள் கனகமாலையை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது என்று முடிவு செய்தான். மன்னவன் விருப்பம் அதுவானால் மாற்றி அமைப்பவர் உண்டோ? திருமணம் மகிழ்ச்சியொடும் நடைபெற்றது. அண்ணனுக்கு ஏற்ற தம்பி: இது இவ்வாறாக, சீவகன் இருக்கும் இடம் முதலான செய்தி எதுவும் அறியாத நண்பர்கள் பலவாறாய் ஏங்கினர். அதனால் நந்தட்டன் காந்தருவதத்தையினிடம் சென்று, சீவகனைப் பற்றி விசாரித்தான். அவள் மந்திர வன்மையல் சீவகன் இருக்குமிடத்தை அறிந்து கூறவே நந்தட்டன் ஏமமாபுரத்தை அடைந்து, இராசமாபுரத்தி லுள்ள நிலைமைகளை எடுத்துரைத்தான். சீவகனை அழைத்துக் கொண்டு திரும்பாது நந்தட்டனும் ஏமமாபுரத்திலேயே தங்கி விட்டான். அதனால் இராசமாபுரத்தில் இருக்கும் தோழர்கள் மேலும் வருந்தியவர்களாய்க் காந்தருவதத்தையினிடம் விசாரித்துக் கொண்டு, அவள் தந்த கடிதம் ஒன்றையும் எடுத்துக் கொண்டு ஏமமாபுரம் நோக்கிப் புறப்பட்டனர். அம்மே! ஆற்றியிரு! அவர்கள், வரும் வழியில் துறவிகள் வாழும் மடம் ஒன்றைக் கண்டு அங்கு தங்கினர். அங்கிருந்த பெண்துறவி ஒருத்தி இவர்களை வரவேற்று, இன்சொல் கூறி உபசரித்தாள். இதனால் மகிழ்ந்த அவர்கள் அத் துறவியரிடம் அளவளாவிப் பேசுங்கால் தாங்கள் இராசமாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சீவகன் நண்பர்கள் என்றும் கூறினர். அதன்பின் அத்துறவியார் சீவகனைப் பற்றி விசாரிக்க, அவன் வரலாற்றையும், அவனுக்கு ஏற்பட்ட நிலையையும் எடுத்துக் கூறும்போது மயக்கமடைந்து விழுந்தாள். அவளை ஒருவாறு தேற்றி வைத்து “இவளே சீவகன் தாயான விசயை” என்பதை அறிந்து மகிழ்ச்சியும் வருத்தமும் கொண்டனர். அதன்பின், “அம்மா! சீவகனை அழைத்துக் கொண்டு இவ்விடத்திற்கு விரைவில் வருவோம்! அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றனர். கணையிலே கடிதம்: சென்றவர்கள் சீவகனைக் காண்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்தனர். “அரசனது பசுக்களைக் கவர்ந்தால் தடுக்குமாறு சீவகன் வருவான்; அப்பொழுது சந்தித்துக் கொள்ளலாம்” என்று எண்ணி அவ்வாறே செய்தனர். பசுக்கள் கவரப் பெற்றுச் செல்வதைக் கேள்வி யுற்ற ஏமமாபுர வேந்தன் சினம் கொண்டு மைந்தர்களையும் சீவகனையும் அழைத்து “பசுக்களைக் கவர்ந்த பழிகாரர்களை அழித்து மீட்டு வருக” என்று ஏவினான். வீரர்களுடன் சீவகன் வில்லுங் கையுமாய்த் தேரேறிப் போருக்குப் புறப்பட்டான். பசுக்களைத் திரட்டிச் செல்பவர்களைக் கண்டு வில்லில் அம்பைச் செலுத்தினான். அந் நேரம் அவன் காலடியில் கணையொன்று விழுந்தது. அக்கணையில் “சீவகனைக் காண வந்தோம்” என்னும் கடிதம் சேர்த்து வைக்கப் பெற்றிருப்பதைக் கண்டு, தன் வீரர்களை அம்பு செலுத்தாதிருக்குமாறு வேண்டிக்கொண்டான். வந்திருப்பவர்கள் தன் தோழர்களே என்றும், தன் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்குமாறே இச்செயலை மேற் கொண்டனர் என்றும் அறிந்து சீவகன் பெரிதும் மகிழ்ச்சி யடைந்தான். பின்னர் நண்பர்களைக் கட்டித் தழுவிக் கொண்டான். இராசமாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும், விசயையைக் கண்டு வந்தது பற்றியும் நண்பர்கள் சீவகனுக்கு உரைத்தனர். மேலும் தாமதிக்க முடியாது என்று கருதியவனாய் மன்னனிடம் விடை பெற்றுக் கொண்டு தன் தோழர்களுடன் சீவகன் புறப்பட்டான். ஐயன் அன்பே அன்பு: சீவகன் நேராகத் தன் தாய் விசயையைக் கண்டு அவள் திருவடிகளை வணங்கினான். அவள் சீவகனை அன்புடன் தழுவிக் கொண்டு, “ஐயனே! உன்னைச் சுடுகாட்டிலே விட்டுப் பிரிந்த கொடுமையையும் நினைக்காது என்னை வந்து பார்த்தாயே! இச்செயலை எவரே செய்வார்” என்று கண்ணீர் சொரிந்து நின்றாள். சீவகன் ஆறு நாட்கள் விசயையுடன் தங்கியிருந்தான். பின்பு இராசமா புரம் செல்ல நினைக்கும் பொழுது விசயை சீவகனிடம் “மைந்த! உன் மாமன் உன் பகைவர்களை வென்று அரியணை ஏறுவாயாக!” என்றாள். அவ்வாறே செய்வதாகச் சீவகன் ஒப்புக்கொண்டு, அதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்து உதவுமாறு அவளைத் தன் மாமன் நாடான விதைய நாடு செல்லுமாறு வேண்டிக்கொண்டான். விசயை விதைய நாட்டிற்குப் புறப்பட்டாள்.சீவகன் நண்பர்களுடன் இராசமாபுரம் நோக்கிப் புறப்பட்டான். வரும் வழியில் ஓர் அழகிய காவொன்றைக் கண்டு அங்கே தங்கினான். விற்பனையால் விளைந்த நற்பயன்: தோழர்கள் சோலையில் தங்கியிருந்தனர். சீவகன் நகரத்து வீதியில் சென்றான். செல்லுங்கால் அவன் முன் பந்து ஒன்று விழுந்தது. அதனை எடுத்துச் செல்லுமாறு ஒரு பெண்மணியும் வந்தாள். அவள் வழியே செல்லும் சீவகனைக் கண்டு, நாணத்தையும் விட்டு அழகிலே ஈடுபட்டு நின்றாள். சீவகனும் மேலே நடக்க முடியாதவனாய் ஒரு கடைக்கு முன்னே நின்றான். அவன் நின்ற கடை, பந்து எடுக்க வந்தவளான விமலை என்பவளின் தந்தை சாரதத்தன் என்பவனுடையதாகும். சீவகன் கடைக்கு முன்பு நின்றானோ இல்லையோ கடையிலிருந்த சரக்குகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன. அதனால் அவன் பெரிதும் மகிழ்ந்தவனாய்ச் சீவகனை நெருங்கி “அன்ப! நான் கூறுவதைக் கேட்பாயாக! இக் கடை எனக்குரிய தாகும். விமலை என்னும் மகளொருத்தி எனக்கு உள்ளாள். அவளுக்குச் சாதகம் கணித்த சோதிடனிடம் என் சரக்குகள் விலையாகாமைக்குரிய காரணம் கேட்டேன். அவன் உன் மகள் விமலைக்குரிய கணவன் உன் கடைக்கு முன் வந்து தங்குவான். அவன் தங்கியவுடன் விலையாகாதிருந்த பொருள்களனைத்தும் விலையாகி விடும் என்றான். அதனால் என் மகளுக்குரியவன் நீயே என்பதைத் தெளிவாக அறிந்தேன்! என்னுடன் வருக!” என்று தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விமலையைத் திருமணம் முடித்து வைத்தான். சீவகன் அவ்விடத்தே இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு நண்பர்கள் இருந்த சோலையை அடைந்தான். சீவகன் போகும் இடங்களிலெல்லாம் திருமணம் செய்து கொண்டு வருவதை அறிந்த நண்பர்கள் அவனைக் “காமன்” என்று பாராட்டிப் பேசினர். ஆனால் புத்திசேனன் மட்டும் பாராட்டாதவனாய் நின்று, “ஆடவர்களைக் காண்பதில்லை என்று விரதங் கொண்டு இருக்கும் சுரமஞ்சரியை நீ மணஞ் செய்து கொள்வாயானால் “காமன்” என்றல்ல, ‘காமதிலகன்’ என்று பாராட்டுவேன் என்றான். அவ்வாறே செய்து முடிப்பதாகச் சீவகன் உறுதி கூறினான். இதை நேரில் காண்பதற்கு, “புத்திசேன! நீ நாளைக்குக் காமகோட்டத்தில் தங்கியிரு! நான் நீ அறியுமாறு முடிவு செய்கின்றேன்” என்றான். புத்திசேனனும் சரியென ஒப்புதல் தெரிவித்தான். குமரியாட வந்த குடு குடு கிழவன்: இவ்வுரையாடலுக்குப் பின்பு, சீவகன் கிழமான வடிவத்துடன் சுரமஞ்சரி இருக்கும் இடத்தை அடைந்து மிகப் பசித்தவன் போல் உணவு கேட்டான். சுரமஞ்சரியின் தோழியர் ‘ஆடவர் எவரும் அங்கு வரக் கூடாது’ என்று வெளியே விரட்டி விட நினைத்தனர். ஆனால் தோழியருள் ஒருத்தி, “வயதாகி மெலிந்து தள்ளாடும் கிழவனை வெருட்ட வேண்டாம்; சுரமஞ்சரியினிடமே கூறி அவள் கருத்தின்படி செய்வோம்” என்று தடுத்து நிறுத்திச் சுரமஞ்சரியினிடம் கூறினாள். இது கேட்ட மஞ்சரி “அக்கிழவனை நானே காண்கின்றேன்” என்று கூறிக் கொண்டு கிழவனிடம் வந்தாள். “வந்த காரணம் யாது?” எனக் கிழவனை வினவினாள். அவனோ, “குமரியாட வந்தேன்; குமரியாடில் முதுமை தொலையும்” என்றான். ‘இவன் பித்துப் பிடித்தவன் போலும்’ என்று எண்ணினாள். ஆனாலும் பசித்த இக்கிழவனை ஆதரிப்பதே அறம் எனக் கருதி அவனை இருக்கச் செய்து நல்லுடை யளித்து, உணவும் சுவையொடு படைத்தாள். உண்டுகளித்த கிழவன் சுரமஞ் சரியும் தோழியரும் வியக்குமாறு பாட்டொன்று பாடினான்; யாழும் மீட்டினான். இப்பாடல் சீவகன் பாடும் பாட்டுப் போல்வதாகவே இருந்ததால் சுரமஞ்சரி நாணம் மிகக் கொண்டு பாடலைக் கேட்டாள். தோழியரும் கிழவன் பாடல் சீவகன் பாடல் போலவே இருப்பதாகக் கூறினர். அதனால் சீவகன்மேல் அன்பு கொண்டவளாய் “நாளை, காமன்கோட்டம் சென்று சீவகனை மணமகனாகத் தருக என வேண்டுவோம்” என்றுரைத்தாள் சுரமஞ்சரி. நங்காய்! உன்னை நாளை மணப்பேன்: மறுநாள் சுரமஞ்சரி சீவகனை அழைத்துக் கொண்டு சென்று காமன் கோட்டத்தின் ஒருபுறத்தில் வைத்து விட்டுத் தனியே சென்று “காமனே! நீ சீவகனைத் தரின் உனக்கு வில்லும் அம்பும், தேரும் ஊரும் தருவேன்’ என்றாள். சீவகனது வேண்டுகோளின்படி காமன் கோட்டத்தில் மறைந்திருந்த புத்திசேனன் இதனைக் கேட்டு, “சீவகனைப் பெற்று மகிழ்வாயாக” என்றான். இதனைக் காமன் வாக்காகவே கருதிக் கொண்ட சுரமஞ்சரி மகிழ்ச்சியுடன் கிழவனிடம் வந்தாள். அங்கே கிழவனைக் காணவில்லை. சீவகனே அழகிய உருவுடன் நின்றான். அவனைக் கண்டு சுரமஞ்சரி நாணம் மிகக் கொண்டாள். சீவகன் அளவிறந்த அன்புடையவனாகி “நங்காய்! உன்னை நான் நாளை மணம் செய்து கொள்வேன்; செல்க” என்று அனுப்பி வைத்தான். சுரமஞ்சரி இல்லம் சேர்ந்தாள். நடந்தவற்றை அவள் தாய் தந்தையர் கேட்டு மகிழ்ந்து மண ஏற்பாடு செய்தனர். தோழர் மகிழு மாறு திருமணமும் இனிது நிறைவேறியது. “காமதிலகன்” என்று புகழ்ந்தனர். அன்று ஒரு நாள் மட்டும் அவ்விடத்தே தங்கி, மறுநாள் கந்துக்கடனை கண்டான்; காந்தருவதத்தை, குணமாலை ஆகியவர் களையும் சந்தித்தான். அங்கே நெடுநாட்கள் தங்க முடியாதவனாய்ப் புறப்பட்டு விதைய நாட்டைச் சேர்ந்தான். கட்டியங்காரன் கடிதம்: விதையநாட்டின் வேந்தன் கோவிந்தன் என்பவன் ஆவன். அவன் சீவகனுக்குத் தாய்மாமன்; சீவகனைக் கண்டவுடன் மகிழ்ந்து மார்புறத் தழுவி வரவேற்று இன்புறுத்தி இருக்கச் செய்தான். அது சமயம் கட்டியங்காரன் கோவிந்தராசனைத் தன்னிடத்திற்கு வந்து செல்லுமாறு கடிதம் ஒன்று அனுப்பி வைத்திருந்தான். இச்சமயமே கட்டியங் காரனைப் பழி வாங்குவதற்குத் தக்க சமயம் என்று கருதிய கோவிந்தன் படைசூழப் புறப்பட்டு இராசமாபுரம் சேர்ந்து பூங்கா வொன்றில் தங்கினான். அவ்விடத்திற்குக் கட்டியங்காரனை வரவழைக்குமாறு கருதி, திரிபன்றி (சுழலும் பன்றி) இயந்திரம் ஒன்று செய்துவைத்து அதனை அம்பால் வீழ்த்துபவனுக்குத் தன் மகள் இலக்கணையை மணமுடித்துத் தருவதாகக் கூறினான். கட்டியங் காரனும், வேறு பல வேந்தர்களும், வேந்தர் குமரர்களும் திரிபன்றியை எய்வதற்குக் கூடினர். திரிபன்றியை எறியத் தீயவன் எரிந்தான்: பன்றி இயந்திரம் ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டே இருக்கும். அதனை எய்து வீழ்த்தவேண்டும். ஆதலால் வில்லில் வல்லவர் அனைவரும் முயன்றனர். கட்டியங்காரன் முதல் வேந்தர் அனைவரும் தோல்வி கண்டனர். வில் விழா பலநாட்களாய் நடைபெற்றும் முடிவுறாத நிலையில் இருக்க, சீவகன் வில்லெறிந்து பன்றியை வீழ்த்தினான். இவ்வமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு சீவகன் சிறப்பையும், அவன் வரலாற்றையும் அரசர் கூடிய அவையிலே கோவிந்தராசன் கூறினான். “சீவகனாகிய சிங்கம் கட்டியங்காரனாகிய களிற்றின் உயிரை மாய்க்கும்” என்று ஓர் இயக்கன் கூறினான். இதனைக் கேட்டுப் பொறுக்க முடியாதவனாய்ப் போருக்கு எழுந்தான் கட்டியங்காரன். அவனுக்கு அவன் மக்களும், வேறுபல சிற்றரசர்களும் துணைக்கு நின்றனர். என்றாலும் சீவகன் முன் அவர்களால் நிற்க முடியவில்லை. துணைக்கு வந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடினர். கட்டியங்காரன் மட்டும் நேரடியாக நின்று சீவகனை எதிர்த்தான். அவனது பேராசை நெஞ்சில் கூரம்பு ஒன்று தைத்து உருவியது. மண்ணாசைக் கட்டியங்காரன் மண்ணில் உருண்டான். இன்பம் இன்பம் இன்பமே! சீவகனுக்கு முடிசூட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது. சீவகன் மனைவியரும், விசயையும், நண்பர்களும் பெரிதும் மகிழ்ந்தனர். கட்டியங்காரனுக்கு உரிமையான அனைவருக்கும் தக்கவாறு பொன் பொருள் தந்து அவ்வவர் விரும்பும் இடங்களுக்குச் செல்லவிடுத்தான். நாடு நகரத்தவர் அனைவரும் பல ஆண்டுகள் வரி செலுத்த வேண்டாம் என உத்தரவிட்டான். தான் முன்பு மணம் செய்திருந்தவர் களைத் தன் அரண்மனைக்கு வருமாறு செய்தி யனுப்பினான். இலக்கணையைப் பலவகைச் சிறப்புக்களுடன் மணம் செய்து கொண்டான். அதன்பின் தன்னைக் காத்துவன் கந்துக்கடன், அவர்களின் மக்கள், நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் தக்க சிறப்புச் செய்து தன்னருகே வைத்துக் கொண்டான். தாயான விசயையின் கருத்துப்படி தான் பிறந்த சுடுகாட்டை அறச்சாலையாக்கி அங்கே குழந்தைகளுக்குப் பாலும் உணவும் கொடுக்க ஏற்பாடு செய்தான். மைந்த! மறக்காதே! இவ்வாறு நற்காரியங்கள் பல நடைபெற, ஒரு நாள் சீவகனை நோக்கி விசயை, “மைந்த! உன் தந்தை என்மீது வைத்த அன்பால் ஆட்சியை இழந்து அல்லலுற்றார். அத்தகைய தகாத அன்பில் நீயும் தலையிடுவது அறிவுடைமையாகாது” என்று கூறினாள். மேலும், நன்னெறி பல உரைத்தாள். சீவகன் அன்னை சொல்லை ஏற்று அளவான வாழ்வு வாழத் தொடங்கினான். அமைதியும், இன்பமும், செங்கோலும் அவன் வாழ்வில் பின்னின. இவ்வாறு ஆண்டுகள் பல கடந்தன. செல்வமே செல்வம்: ஒருநாள் சீவகன் சோலையொன்றில் இருந்தான். அங்கு ஆண்குரங்கொன்று பலாப்பழம் ஒன்றைப் பறித்துச் சுளையை எடுத்துத் தன் பெண்குரங்குக்கு ஊட்டிக்கொண்டிருந்தது. இது கண்ட காவலாளி குரங்குகளை வெருட்டியடித்துப் பழத்தைப் பிடுங்கியுண்டான். இதைச் சீவகன் கண்டான். அப்பொழுது பழைய நினைவுகள் பல அவனுக்கு மின்னலிடலாயின. கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரனாகவும், பழத்தைக் கவர்ந்து உண்ட காவலாளி தன்னை ஒப்பவனாகவும் எண்ணினான். அதனால் இன்பம் நிலையில்லாதது எனத் தெளிந்து துறவில் விருப்புடையவன் ஆனான். அவன் எண்ணத்தைக் கேட்டு மனைவியரும், அவர்கள் பெற்றெடுத்த மைந்தரும் வருந்தினர். எனினும் ஆட்சியை விரும்பாதவனாய்த் தன் மைந்தனான சச்சந்தனிடம் அதனை ஒப்படைத்தான். மனைவியரும் துறவி விருப்புடையவர் ஆக அவர்களை எல்லாம் விசயையுடன் அனுப்பி வைத்தான். சீவகன் சுதன்மர் என்னு கணநாதரால் முறைமையான துறவுநிலை பெற்றான். அதன்பின் விபுலமலையடைந்து அற உபதேசம் செய்து சேர்தற்கு அரியசித்த சேத்திரத்தில் பேரின்பநிலை யுற்றான். - இரா. இளங்குமரன் பதிப்பு வரலாறு சீவகசிந்தாமணி - முதற் புத்தகம் 1868 நாமகள் இலம்பகம் - நச்சினார்க்கினியம் இப்பதிப்பு திருத்தகு எச்.பவர் (Rev.H.Bower) வெளியீடாகும். இவ்வெளியீட்டுக்கு உதவியர் திருநெல்வேலித் தமிழ்ப் புலவர் இ.முத்தையா பிள்ளை, நச்சினார்க்கினியர் உரை. ஆங்கியலத்தில் எழுதிய முன்னுரை, குறிப்பு விளக்கம் ஆகியவற்றையுடைய பதிப்பு இது இதன் முன்னுரை 42 பக்கங்களாகும். ஒவ்வொரு பாட லிலும் சில ஆங்கியலக் குறிப்புகள் உள்ளன (எ-டு) “முந்நீர் Also three kinds of water, virz the spring, the rain and river water” இது முந்நீர்ப் பிறந்த என்னும் பாடலில் (5) அமைந்துள்ள குறிப்புரை. இணைப்பு Index எண்கள் - செய்யுள் எண்கள் அகம் - உள், இடம் Inside 40,281 அஃகுதல் - சுருங்குதல் to reduce 255 அகலம் - மார்பு brest 256 அகலல் - to remove 23 வெளவுதல் - அபகரித்தல் to usurp 38 இவ்வாறு எட்டுப் பக்க அளவில் உள்ளன. உரையில் காணும் அருஞ்சொல் அடைவுகள் - ஆங்கில இணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இதன் முன்னுரையில் ஒரு பகுதி இந்நூல் வந்த வரலாறு குறிக்கின்றது: “இருபதாண்டுகளுக்கு முன் திருத்தகு எச்.துறு (H.Drew) என்பவர் சீவகசிந்தாமணி முழுமையும் அச்சிட விரும்பி அறிக்iக ஒன்று வெளியிட்டார். அவரிடமும் என்னிடமும் தமிழ்ப் புலமைப் பணியாற்றிவந்த திரு. சாஸ்திரமையர் என்னும் சமணத் தமிழ்ப் புலவர் திருத்தகு எச்.குறு அவர்களின் கருத்தைத் தெரிவித்துச் சிந்தாமணியை அச்சிடுமாறு கூறினார். அதன்படி ஏட்டுச் சுவடியில் இருந்து முழுநூலையும் காகிதத்திலே படி. எடுக்கச் செய்து ஒப்பிட்டுத் திருத்தம் செய்யப்பட்டது. அதனைத் தாம் வெளியிடுவதாகச் சொல்லி அமெரிக்கன் சமயகுழுவைச்சார்ந்த திருத்தகு டாக்டர் எச்.எம் ஸ்கடர் விலைகொடுத்துப் பெற்றனர். பின்னர் உடல் நலமின்மையால் அமெரிக்காவுக்கு அதனை எடுத்துச் சென்று நூலக மொன்றிலே சேர்த்து விட்டதாகத் தெரிகிறது. முன்னமே என்னிடமுள்ள எட்டுச் சுவடியில இருந்து வேறு ஒரு படி காகிதத்தில் எழுதப் பெறலாயிற்று அதனைச் சரிபார்த்துத் திருத்தித் தந்த சமணப் புலவரும் இரண்டாண்டு களில் காலமானார். அவர் காலமானதற்குப்பின் திருநெல்வேலித் தமிழ்ப்புலவர் திரு.வி.முத்தையாபிள்ளியின் உதவிக்கொண்டு முதல் இலம்பகத்தைமட்டும் அச்சிட்டு வெளிப்படுத்தினேன் இதனை வாங்கி உதவினால் முழுநூலையும் அச்சிட்டு வெளிப்படுத்த ஊக்கமூட்டுவ தாகும்” சீவக சிந்தாமணி - முதற்பாகம் முதல் ஐந்து இலம்பகங்கள் 1883 இது புதுக்கோட்டை அரசவைப்புலவர் ப.முருகேசகவிராயர் உடன்பிறந்த ப.அரங்கசாமிபிள்ளை பல எட்டுச் சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து வெளியிட்ட பதிப்பு. இது சென்னை அட்ட லட்சுமி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இவர் ஊர் பனையஞ்சேர்: தந்தையார், பரசுராமபிள்ளை இப்பதிப்புக்குச் சென்னை, மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஈ.சினிவாசராகவாச்சாரியார், புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார், பல்கழக்கழகத் தமிழ்ப்புலவர் கோ.இராச கோபால பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாணவர் வேங்கடசுப்பு பிள்ளை ஆகியோர் சாற்று கவி வழங்கியுள்ளனர். “பதிப்பித்தான் பிரதிகளிற் கரலிகித வழுக்களைந்து பாவ லோருள் உதப்பித்தான் பேருவகை யஃதேபோற் கொல்லாத ஒழுக்கத் தோரைக் குதிப்பித்தான் தம்மதநூல் எம்மதத்தும் பரவவருங் கொள்கை யாலே மதிப்பித்தான் தனையுலகில் எழிலரங்க சாமிநல்லோன் வல்லோன் மாதோ” என்பது வேங்கட சுப்புபிள்ளை பாடியது. இப்பதிப்பில், பதுமையார் இலம்பகம் முடிய (பாடல் 1405) உள்ளது. சீவகசிந்தாமணி 1887 இது டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பாகும். சேலம் இராமசாமி முதலியாரின் தூண்டுதலால் சிந்தாமணி ஆராய்வதற்கு ஐயர் தொடங்கினார் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். “சிந்தாமணியின் முதற்பதிப்பு 1887 ஆம் வருஷ முடிவில் நிறைவேறியது. அப்பொழுது உண்டான மகிழ்ச்சிக்கு இiணயாக என் வாழ்க்கையில் இதுகாறும் வேறொன்றைக் கண்டிலேன்” என்று சாமிநாதையர் மகிழ்ந்துரைக்கும் அளவுக்கு நிறைவு தந்த பதிப்பு இச்சிந்தாமணி. பழந்தமிழ் நூல் பதிப்பு உலகில் ஐயர் இறங்கி வெளியிட்ட முதல் வெளியீடு இது. இப்பதிப்பே அவருடைய மற்றைப் பதிப்புகள் தொடர்ந்து வெளிவருதற்கு வழிவகுத்துத் தந்த மாண் பினதும் ஆகும். இதனை ஆராய்தற்குக் கொண்ட முயற்சியே தமிழ் இலக்கியப்பரப்பை யெல்லாம் உணர்த்தி, அவர்தம் பணியின் விரிவை எடுத்துரைத்தது. சிந்தாமணியை நெடுங்காலம் ஐயர் ஆராய்ந்தார். ஏடுகளை மிகுதியாகத் தொகுத்து ஒப்பிட்டுப் பார்த்துச் தெளிந்தார். சமண சமயப் புலமை. வடமொழிப் புலமை மிக்கவர்களை அணுகித் தெளிவு செய்தார் அதன் பின்னர்ச் செப்பமாகக் கைப்படி எழுதி எடுத்துக் கொண்டு கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு அச்சிடச் சென்றார். ‘ராயல்’ எட்டுப் பக்க அளவில் ஐந்நூறு பிரதிகள் அச்சிடுவதென்றும், ஒரு படிவத்திற்கு 3-50 ரூபா அச்சுக் கூலி என்றும் முடிவு செய்தார். சென்னையில் இருந்த தமிழறிஞர்களைக் கண்டு தாம் சிந்தாமணி வெளியிட வந்திருக்கும் கருத்தை உரைத்துக் கலந்துரையாடினார். அவர்களுள் ஒருவர், புரசபாக்கம் அட்டாவதானம் சபாபதி முதலியார் என்பவர். “என்ன ஐயா! சிந்தாமணியுரையாவது நீங்கள் பதிப்பிக்கிறதாவது? அஃது எளிய செயலா? இம்முயற்சியை நிறுத்திக்கொள்வது நல்லது” என்றார். சபாபதி முதலியார் அவர் மேலும்” நானும், என் ஆசிரியர் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரும் இதைப் பதிப்பிக்க எண்ணினோம். படிக்கவும் தொடங்கினோம். கடினம் என்று நிறத்திவிட்டோம். துறு என்னும் பாதிரியார் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு அதனை விளக்கி விளம்பரம் செய்தார். அதை நிறைவேற்ற அவரால் முடியவில்லை. போப் முயன்றார். அவராலும் முடியவில்லை ஆறுமுக நாவலர் பதிப்பிக்க எண்ணினார். திருச்சிற்றம்பலக் கோவையார் முதற்பதிப்பில் இனிவெளிவரும் நூல்கள் என்ற விளம்பரத்தில் சிந்தமணியின் பெயர் காணப்படுகிறது அவரும் பதிப்பிக்கவில்லை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் பதிப்பிக்க எண்ணினார். இது பெரிய தொல்லை எனக் கை விட்டனர். இப்படி யார் தொட்டாலும் நிறைவேறாத நூலைப் பதிப்பிக்கத் துணிந்தீர்களே” என்று பலப்பல கூறினார். ஐயர் உள்ளம் தமிழ் செய்த தவப்பயனால் அசையாமல் அயராமல் துணிந்து நின்றது. பதிப்பைத் தொடங்கினார் தொடர்ந்து நடத்தினார். சிந்தாமணிப் பதிப்பினால் ஐயர் உற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அவர்தம் முதன்முயற்சி அஃதாகலின் அதனை நோக்கவும், அதன் வெளியீட்டுச் செம்மையை நோக்கவும் அவர்பட்ட அரும்பாடுகள் வெள்ளிடைமலையென விளங்கும். “எழுத்தும் சொல்லும் மிகுந்ததும் குறைந்தும் பிறழ்ந்தும்திரிந்தும் பலவாறு வேறுபட்டுக் கிலமுற்றிருந்த இந்நூலுரைப் பழையபிரதிகள் பலவற்றையும் பல்கால் ஒப்பு நோக்கி இடையறாது பரிசோதனை செய்துவந்த பொழுது, கவிகளின் சுத்த வடிவத்தையும் உரையின் சுத்த வடிவத்தையும் கண்டுபிடித்தற்கும், உரையினும் விசேடவுரை இன்னது பொழிப்புரை இன்னது என்று பிரித்தறிதற்கும் மேற்கோள்களின் முதலிறுதிகளைத் தெரிந்து கோடற்கும் பொழிப்புரையை மூலத்தோடும் இயைத்துப் பார்த்தற்கும் பிழையைப் பிழையென்று நிச்சயித்துப் பரிகரித்தற்கும் பொருள் கோடற்கும் எடுத்துக் கொண்ட முயற்சியும் அடைந்த வருத்தமும் பல அப்படியடைந்தும் சில விடத்துள்ள இசைத் தமிழ் நாடகத் தமிழின் பாகுபாடுகளும் மற்றுஞ் சில பாகமும் நன்றக விளக்கவில்லை அதற்குச் காரணம் அவ்விசைத் தமிழ் நாடகத் தமிழ் நூல் முதலியவைகள் இக்காலத்துக் கிடையாமையே” என்று வரும் முன்னுரைப் பகுதியால் ஐயர் தம் முயற்சியருமையும் பெருமையும் விளங்கும். சிந்தாமணியை ஆராயத் தூண்டிய சேலம் இராமசாமி முதலியார். விரைந்து வெளியிடத் தூண்டிய சி.வை.தாமோதரம் பிள்ளை, சமண சமயக் கோட்பாடுகளை விளங்கவுரைத்த வீடூர் சந்திரநாத செட்டியார், பதிப்பு முறைக்கு வழிகாட்டிய தேரழுந்தூர் சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியார், ஒப்புநோக்கி உதவிய திருமானூர் கிருஷ்ணையர் ஏடுகள் பலவற்றைத் தந்தும் கருவித்தும் உதவிய திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் ஆகியவர்களை நினைவு கூர்ந்து பாராட்டுகிறார் சாமிநாதையர். இந்நூலை ஆராயும் புலமையாளர்க்கு ஒரு வேண்டுகோள் விடுகின்றார். அவ்வேண்டுகோள். வேண்டுகோள் அளவிலேயே நின்று விடுவதால் நாட்டுக்கும் ஏட்டுக்கும் பயன்வாய்ப்பதில்லை. வேண்டு கோளை அறிஞருலகம் ஏற்றுப் போற்றுவதைக் கடனாகக் கொண்டிருக்குமானால் தமிழ்நூல் பதிப்பு எவ்வளவோ சீர்மை பெற்றிருக்கக் கூடும். அம் முயற்சி இந்நாளிற்கூட அரும்பிற்றில்லை. “இப்பதிப்பில் காணப்படும் எழுத்துப்பிழை சொற்பிழை வாக்கியப் பிழை முதலியவற்றையும் அவற்றின் திருத்தங்களையும் தயைசெய்து விவேகிகள் தெரிவிப்பார்களாயின் அவர்கள் பேருதவி செய்ததாக எண்ணி எழுமையும் மறவேனாகி அவற்றைப் பின்பு அச்சிற் பதிப்பித்துப் பலர்க்கும் பயன்படும்படி செய்வேன். விளங்காத மேற்கோள் களுள் ஏதாவது இன்ன நூலில் இன்ன பாகத்துள்ளதென்று காணப்படின் அதனையும் தெரிவிக்குமாறு அவர்களை வேண்டுகிறேன்” என்பனவே அவ்வேண்டுதல். இனிய நண்பர்கள் சிலர் சில குறிப்புகளை நண்புமுறையில் கூறினரேயன்றித் தமிழுலகம் செவிசாய்த்துக் கேட்கவில்லை. ஆதலால் பின்னைப் பதிப்புகளில் அவ்வேண்டுதல்களை ஐயர் விடுத்தாரல்லர். ஆனால் தமிழறிஞர் என்று இருந்தவர் குறை கூறாமல் இருந்தனரா? ஒரே ‘போடாக’க் குறை கூறினர். பொறாமைக் காய்ச்சலால் பொறுமிப் பொறுமிக் குறை கூறினர். தாமும் செய்யாராய்ப் பிறரும் செய்யப் பொறாராய்க் குறை சொல்வார்க்கு மருத்துவம் செய்தற்கு எவரால் இயலும்? “சிறந்த நூலாகிய சிந்தாமணியைப் பதிப்பிக்கத் தக்க தகுதி சாமிநாதையர்க்கு இல்லை” என்பது ஒரு புரளி. சிந்தாமணி நச்சினார்க்கினியருடன் பதிப்பாகிக் கொண்டிருக்கிறது விரைவில் வெளிவரும்” என்பது வேறொரு ‘கட்டுக் கதை’. “சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதாகக் தெரிகிறது. அது நச்சினார்க்கினியர் உரையாக இருந்தால்தான் தமிழ் நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும், சாமிநாதையர் உரையாக இருந்தால் பயன் படாது” என்பது இந்து செய்தித்தாளில் ஒருவர் எழுதிய மறுப்புரை, சைவமடத்துக்கு வேண்டிய சாமி நாதையர் உமாபதி சிவாச்சாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி என்று சொல்லியிருக்கும் சைன நூலை அச்சிட்டது தவறு என்று மடத்திலேயே கண்டித்தனர். கண்டித்த அளவுடன் நில்லாமல் அந்நூல் பரவாமல் இருப்பதற்குத் தக்க முழுமுயற்சியும் செய்தல் வேண்டும் என்று சீரடியார்கள் தீர்மானமும் செய்தனர். இவ்வளவுக்கும் மேலேயும் சிந்தாமணிப் பதிப்புப் பற்றிய எதிர்ப்புத் தாவியது. பதிப்பில் இவை இவை பிழையெனச் சிலர் எழுதினர். எழுதினவற்றுள் உண்மையான பிழைகளும் உண்டு. திருத்தத் தக்கனவும் உண்டு ஆனால் பிழை கூறியவர்கள் நோக்கம் திருந்த வேண்டும் என்பதனைப் பார்க்கிலும், பதிப்பாசிரியர் வருந்த வேண்டும் என்பதே மிக்கிருந்தது. அவர்கள் வெளிப்படுத்திய துண்டு வெளியீடுகள் பெருநகரங்களிலெல்லாம் பரவின. சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியவர்கள் வீடுகளுக்கெல்லாம் தேடிச் சென்றன. சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணத்து வீதிகளில் எல்லாம் உலாக் கொண்டன பதிப்பு பணியில் ஈடுபடுவதா? பழிப்புரைக்குப் பதிலெழுதிப் பொழுதைக் கழிப்பதா? “ மலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன் அலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ் கலர்கண் டறியாக் கவினே ரக! எற் பலர்கண் டிகழும் படிவைத் ததெனே” என்பன போல இறைவனை வேண்டிக்கொண்டு மறுமொழி கூறாது அமைந்தார் பின்னே. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்னும் பெயரால் ஒரு வெளியீடுவந்தது. அதற்குப் பதிலெழுதியே ஆகவேண்டும் என்னும் எண்ணம் ஐயரை அலைத்தது. அவ்வாறே விடையும் எழுதினார். தம்பால் பேரன்புடைய சாதுசேசையர் என்பாரைக் கண்டு. சிந்தாமணி மறுப்புக்குத் தாம் எழுதிய மறுப்புரையைக் காட்டினார். சாதுசேசையர் அதை அப்படியே கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டார். “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்பட வேண்டாம். “நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக்கொள்ள கூடாது”----- இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரிகளின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள். நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகிவிடும். நல்ல காரியத்துக்கு நானூறு வியாக்கினங்கள் வருவது உலக வழக்கம் சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவ துண்டு. அவற்றைக் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்க வேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூசித்தால் பதிலெழுதுகிறதில்லை என்று வாக்குறுதி அளியுங்கள்” என்றார், மேலும் விளக்கிக் கூறினார் ஐயர், ‘மறுமொழி எழுதுவதில்லை’ என்று அன்று சாதுசேசையரிடம் உறுதி கூறினார். வாழ்வின் இறுதிவரை சிக்கெனக் கடைப்பிடித்தார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னே கண்டன நிகழ்ச்சிகளையும், தாம் எழுதிய பதிலையும், சாதுசேசையர் அறிவுரையையும் எண்ணிப் பார்க்கிறார் ஐயர். “தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்துமோதும் செவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோசிப்போமே என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு. நன்மையோ தீமையோ அறியேன். அதனால் என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன், இதற்கு மூல காரணம் சாது சேசையரென்பதை என்றும் மறவேன்” இவ்வளவு மறுப்புக்கும் கண்டனத்துக்கும் இடையே சிந்தாமணி தமிழ்க்கடல் என்னும் கண்டனத்துக்கும் இடையே சிந்தாமணி தமிழ்க் கடல் என்னும் பொ ருள்தரும் திராவிடரத்னாகரம்’ என்னும் அச்சுக் கூடத்தில் இருந்து வெளிப்பட்டுத் தன்னொளி பரப்பிக் கொண்டிருந்தது! என்றும் பரப்பிக்கொண்டும் இருக்கும். சிந்தாமணியின் முதற் பதிப்பு 1887 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிப்பட்டது. இரண்டாம்பதிப்பு 1907 ஆம் ஆண்டு திசம்பர் மாதமும், மூன்றாம் பதிப்பு 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமும், நான்காம் பதிப்பு 1942ஆம் ஆண்டு ஆக்டோர் மாதமும் வெளிப் போந்தன. ஒவ்வொரு பதிப்பும் புதுப்புது விளக்கங்களையும் வளர்ச்சியையும் பெற்றன. ஐயர் பதிப்பின் வளர்ச்சி முறையை இச்சிந்தாமணிக்கு அறிந்து கொள்ளின் மற்றை நூல் வெளியீடு களுக்கும் பொருந்துமாகலின் அதனைக் கருதுவாம். முதற்பதிப்புக்கு நச்சினார்கினியர் உரையுடன் கிடைத்த சுவடிகள் 19. மூலச்சுவடிகள் 4 ஆகச்சுவடிகள் 23 இவற்றை ஆய்ந்து முதற்பதிப்பு வெளிப்பட்டது. இரண்டாம் பதிப்புக்கு மேலும் ஆராய்ச்சிக்குக் கிடைத்த உரைச்சுவடிகள் 15. மூலச்சுவடிகள் 2 ஆகச்சுவடிகள் 17. மூன்றாம் பதிப்பு ஆய்வுக்குச் சில கையெழுத்துச் சுவடிகள் கிடைத்தன. எண்ணிக்கை இத்துணை எனக்குறிக்கப் பெறவில்லை. இவற்றால் ‘முதற்பதிப்புப் போன்றதே இரண்டாம் பதிப்பு’ என்று கூறுதற்கு இடமில்லாத திருத்தங்களைப் பெற்றுப் புதிய பதிப்புகள் வெளிவந்தன என்பது போதரும். ஏட்டுப் படிகளின் துணையால் ஏற்பட்ட திருத்தங்கள் ஒழியப் பட்டறிவால் ஏற்பட்ட நலங்கள் பலப்பலவாம். சீவகன் வரலாறு, ஒப்புமைப்பகுதி ஆகியவற்றைக் கொண்ட ‘சீவகசிந்தாமணி ஆராய்ச்சி விளக்கம்’ மூலத்திலும் உரையிலும் உள்ள கடினமான பகுதிகளின் பொருளைப் புலப்படுத்தும் ‘விசேடக் குறிப்பு’ அருஞ்சொற்கள் சீரிய தொடர்கள், செய்திகள், பழமொழிகள், சிறப்புப் பெயர்கள் முதலியவற்றைத் தெரிவிக்கும் ‘அரும்பத அகராதி என்பவை இரண்டாம் பதிப்பில் புதிதாக இணைக்கப்பெற்றன. இன்னும் கையெழுத்துப் படிகளில் மிகுதியாகக் காணப்பெற்ற செய்யுள்கள் உரிய இடங்களில் தனித்தனியே சேர்க்கப் பெற்றன. முதற் செய்யுள் முதல் முடிவுகாறும் ஒன்று முதல் தொடர் எண்கள் தரப்பெற்றன. இவையும் இரண்டாம் பதிப்பில் இடம் பெற்ற திருத்தங்களாம். முன்றாம் பதிப்பில் சிந்தாமணி ஆராய்ச்சி விளக்கம் என்ற பெயருரடன் 41 பக்கங்களில் வெளியான பகுதி ஒப்புமைப் பகுதிகள் என்ற பெயருடன் 113 பக்கம் கொண்டு வெளியிடப் பெற்றது. விசேடக் குறிப்பும், அரும்பதமுதலியவற்றின் அகராதியும் விரிந்தன, உரை யாசிரியர்கள். அவ்வவ்விடங்களில் இந்நூலில் இருந்து மேற்கோளாக எடுத்துக்காட்டியிருக்கும் பகுதியைப் புலப்படுத்தும் ‘பிரயோக விளக்கம்’ என்பது இம்மூன்றாம் பதிப்பில் புதிதாகக் சேர்க்கப்பெற்றது. ஒப்புமைப் பகுதி, விசேடக்குறிப்பு, பிரயோக விளக்கம் (மேற்கோளாட்சி) என்று தனித்தனியே அமைந்திருந்தவை படிப்பவர் களுக்கு வாய்ப்பாக அவ்வப்பக்கத்தில் அடிக்குறிப்பாகச் சேர்க்கப் பெற்றது. நான்காம் பதிப்பின் சிறப்பாகும் குறிப்புரை நச்சினார்க்கினியர் பதிப்பின் சிறப்பாகும் குறிப்புரை நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி எழுதி அவ்வப்பக்கத்தின் அடிக்குறிப்பாகச் சேர்க்கப் பெற்றது. இந்நான்காம் பதிப்பின் முத்தி இலம்பகம், அச்சாகிக் கொண்டிருக்கும் பொழுதிலேயே ஐயர் திருக்கழுக்குன்றத்தில் இயற்கை எய்தினார். சிந்தாமணியில் தொடங்கிய அவர் பதிப்புப்பணி. அந்நூற்பதிப்புப் பொழுதிலே நிறைந்ததமை அவர்க்கும் சிந்தாமணிக்கும் இருந்த தொடர்பை வெளிப்படுத்தும் இயற்கைக் குறிப்புப் போலும். சிந்தாமணி முதற் பதிப்புக்குக் கிடைத்த சுவடிகள்: 23 இரண்டாம் பதிப்புக் கிடைத்த சுவடிகள் 17 ஆகக் சுவடிகள் 40 இவற்றின் விளக்கம் வருமாறு: திருவாவடு துறை சுப்பிரமணிய தேசியர் சுவடி 1 திருசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை “ 2 திருசிரபுரம் தியாகராச செட்டியார் “ 1 யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை “ 2 மழலை மகாலிங்கையர் “ 1 அட்டாவதானம் சபாபதி முதலியர் “ 1 தி.க.சுப்பராய செட்டியார் “ 1 சின்னசாமி பிள்ளை “ 1 சேலம் இராமசாமி முதலியார் “ 3 உடையூர் சுப்பிரமணிய பிள்ளை “ 1 நெல்லை சாலி வாடீசுவர ஓதுவார் “ 1 நெல்லை ஈசுவரமூர்த்தி கவிராயர் “ 1 தூத்துக்குடி குமாரசாமிப்பிள்ளை “ 1 சிதம்பரம் தருமலிங்க செட்டியார் “ 1 தஞ்சை மருதமுத்து உபாத்தியாயர் “ 1 விருஷப தாசமுதலியார் “ 1 கூடலூர் விசயபால நயினார் “ 1 வீடுர் சந்திர நாத செட்டியார் “ 3 இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர் “ 1 கொழும்பு தி.குமாரசாசி செட்டியார் “ 1 தருமபுர ஆதினம் “ 2 அழகிய சிற்றம்பலக் கவிராயர் “ 2 செங்கோட்டை கவிராசபண்டாரத்தையா “ 1 கடைய நல்லூர் முத்து கிருஷ்ண உபாத்தியாயார் “ 1 சென்னை பச்சையப்ப உபாத்தியார் “ 1 வானமாமலை தாதர் கணக்கு, நான்கு நேரி “ 2 சேலம் அப்பா சாமிப்பிள்ளை “ 1 நெல்லை திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை “ 1 நெல்லை திருப்பாற் கடனாதன் கவிராயர் “ 1 வீடூர் அப்பாசாமி நயினார் “ 1 நெல்லை அம்பலவாண கவிராயர் “ 1 - இரா. இளங்குமரன் பொருளடக்கம் பதிப்புரை iii செவிநுகர் vii அணிந்துரை xii சீவகசிந்தாமணி - 1 சீவகன் சரித்திரச் சுருக்கம் 1 அபிதாநவிளக்கம் 26 இலம்பகவகராதி 33 நச்சினார்க்கினியருரை 35 1. நாமகளிலம்பகம் 51 2. கோவிந்தையாரிலம்பகம் 192 3. காந்தருவதத்தையாரிலம்பகம். 225 4. குணமாலையாரிலம்பகம். 361 5. பதுமையாரிலம்பகம் 474 6. கேமசரியாரிலம்பகம் 559 சீவகசிந்தாமணி-1 இக்காப்பியத்தலைவனாகிய சீவகன் சரித்திரச் சுருக்கம் (1. - நாமகளிலம்பகம்) இப்பரதகண்டத்தில் ஏமாங்கதநாட்டில் இராசமாபுரத்திற் குருகுலத்திலே உதித்துத் செங்கோல் செலுத்திய சச்சந்தனென்னு மரசன், தன்மாமனும் விதையதே யத்தரசனுமாகிய ஸ்ரீதத்தன் மகள் விசயையை மணந்து அவளது பேரழகுபற்றியெழுந்த வேட்கை மிகுதியால் அவளோடும் அநவரதஞ் சுகித்திருப்பக் கருதி. நிமித்திகன் முதலிய மந்திரிமார் கூறிய உறுதிமொழியைக் கொள்ளானாய்,கட்டியங் காரனென்னும் மந்திரியொருவனை யழைத்து, அவனைநோக்கி “நீ இந்நாட்டைக் காத்து வருதி” என விதித்து, அந்தப்புரம் புகுந்து, தானெண்ணியவண்ணஞ் சுகித் திருந்தான் அரசன் அப்படியிருக்கையில், விசயை கருப்பமுற்று, ஒரு நாளிரவில் மூன்று கனாக்கண்டு, அவற்றின்பயனை அரசனா லுணர்ந்து வருத்தமுற்று, அவன் தேற்றத் தேறியிருந்தனள். அப்பொழுது கட்டியங்காரன் அரசனைக்கொன்று இராச்சிய முழுமையுந் தானேயாளக்கருதி, அறிவுடையோர் சொற்கேளானாய், தன் மைத்துனனாகிய மதனனோடு யோ சித்து, பின்பு அரசனிருக்கும் அந்தப்புரத்தைச் சேனைகளோடும் வளைந்து கொண்டான். அதனை அரசன் வாயில்காப்பாளனா லறிந்து, மனங்கலங்கி புலம்பிய விசயையைத் தேற்றி, அவளை முன்னமே தான் செய்வித்த மயிற் பொறி மேலேற்றி, மகப்பேற் றைக் கருதி ஆகாயவழியே வேறிடஞ் செல்ல விடுத்துத் தான் புறம்போந்து, கட்டியங்காரனோடும், அவன் படைவீரரோடும் போர்செய்து, பின்பு அவனால் மாய்ந்தனன். அப்பாற் கட்டியங் காரன் வெற்றிமுரசறைவித்து எல்லாவற்றையுங் கவர்ந்து கொண்டனன். ஆகாயவழியே செல்லும் விசயை அம்முரசொலிகேட்டுக் கலங்கித் தான் ஊர்ந்துசெல்லும் மயிற்பொறியை முறுக்கி நடத்த மாட்டாது மூர்ச்சித்தமையால், அப்பொறி அப்பாற் செல்லமாட்டாமல் அந்நகரத்தைச் சார்ந்த ஓர்மயானத்திடையே மெல்ல வீழ்ந்தது. உடனே அவள் அவ்விடத்து சுபகாலத்தில் ஓராண்மகவைப் பெற்றுக் கவலை யொருவா றொழிந்து, அக்குழந்தைக்குப் பாலூட்டி, அரசனிறந்ததற் கிரங்கி, அப்பிள்ளை யை நோக்கி, “வேந்தே! அரசன் பலபல சிறப்புச் செய்யப் பிறக்கு நீ பாவியேன் காண இங்ஙனம் பிறப்பது தகுதியா? உலகுடையாய்! நீ கிடக்கின்ற இடம் பகைவனிட மாயிராநின்றது; நினது பாயல் சுடுகாடாயிராநின்றது; யானும் உசாவுதற்கு ஒரு துணையுமில்லாத் தமியேனா யிராநின்றேன்; நின்னைக் கொண்டு போகக் கருதில், இக்காலம் போகவொண் ணாத இருளாயிராநின்றது; மேல் நீவளருமாறும் அறியோனாயி ராநின்றேன்; சிந்தாமணியே! நீ ஒன்றுமுரையாமற் கிடவா நின்றாய்; எனதுவருத்தநீக்கப்பிறந்த நீ,. என்னிடத்துப் பிறந்த துன்பக்கடலை யான் நீந்துந் தெப்பமா காதபொழுது என்னைக் காப்பவர்யாவர்? உரைக்கின்றிலை” என்று கூறித் தனியேயிருந்து வருந்திப் புலம்பும்பொழுது, அம் மயானத்துள்ள தெய்வ மொன்று மனமிரங்கி, அவள் தோழி யாகிய சண்பகமாலை வடிவங்கொண்டு அவள் முன்னே வந்து துயரந்தீரும்படி அவளுக்கு இனிய வார்த்தைகள்கூறி. அவளிடத் திருந்த (சச்சந்தன் பெயரெழுதப் பட்டுள்ள) மோதிரத்தைக் குழந்தைக்குச் சேர்த்தி அக் குழந்தையை ஓர் படுக்கை மீது கிடத்தி, அவளை நோக்கி “இனி இப்பிள்ளையை எடுத்துக்கொண்டு போதற்கு ஒருவன் வருவான்; ஆதலால், யாம் ஒளித்திருத்தல் நலம்” என்று கூற, உடனே அவள் விலகிச்சென்று மறைந்து நோக்கிக் கொண்டு நின்றனள். அவள் அப்படி நிற்கையில், மரித்த தன் குழந்தையைப் புதைத் தற்கு அங்கே வந்த கந்துக்கடனென்னும் வணிகனொருவன்யாரு மின்றித் தனியேகிடந்த அக்குழந்தையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி யடைந்து அதின் கையிலிருந்து மோதிரத்தால் இராசபுத் திரனென்றறிந்து, பிறரறிந்து கொள்ளாதபடி அம்மோதிரத்தை மறைத்துக் கொண்டவனாய் அக்குழந்தையை அன்போடெடுப்ப, அது தும்மிற்று. அப்பொழுது தெய்வம் “சீவ” என்று வாழ்த்தியது. பின்பு கந்துக்கடன் அக்குழந்தையை எடுத்துக்கொண்டு விரைந்து சென்று இராசமாபுரத்துள்ள தன் வீட்டினுள்ளே புகுந்து தன் மனைவியாகிய சுநந்தையை நோக்கி, “நின்மகன் சாதலில்நின்றுந் தப்பினான்” என்று கூறிக் கொடுப்ப, அவள் தொழுதுவாங்கிப் பெருமகிழ்ச்சி யடைந்து வளர்த்து வருநாளில், முன்னந் தெய்வம் சீவவென்று வாழ்த்தினமைபற்றி, அறிவுடையோர் அப்பிள் ளைக்கு சீவகனென்று நாமகரணஞ் செய்தனர். பின்பு சுநந்தை நந்தட்டனென்னும் ஒருபுத்திரனைப் பெற்றாள். இது நிற்க. மயானத்திருந்து விசயை தோழியாகவந்த தெய்வத்தோடுந் தண்டகாரணியம் புகுந்து, தவவேடம்பூண்டு, மகனுக்கு ஆக்கம் உண்டாகுகவென்று நோற்றுக்கொண்டிருந்தாள். தெய்வம், “இராசமா புத்திற்சென்று நின்புதல்வன்செய்தியை அறிந்து வருவேன்” என்றுகூறி, விசயையிடத்து விடைபெற்றுப்போய்த் தானுறையும் புறங்காட்டைச் சேர்ந்திருந்தது. சீவகன் தோழர் களோடும், தம்பிமாராகிய நபுலவி புலவர்களோடும், நந்தட்ட னோடும் இனிதுவளர்ந்து உரிய பருவத்தில் வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்று, கந்துக்கடன்கட்டளைப்படி அச்சணந்தி யாசிரியரிடத்து வில்வித்தை முதலியவற்றை எளிதிலே பயின்று சிலகாலத்துட் சகல வித்தியாபாரங்கதனாயினான். ஆசிரியர், சீவகனது புத்தியின்றிறமும் கல்வி முதிர்ச்சியுங் கண்டு அளவில்லாத ஆச்சரியமும் மகிழ்ச்சியுமுடையராய், முன்பு அவனுக்குத் தருமோபதேசஞ்செய்து, பின்பு அவனைத் தனியிடத் திற்கு அழைத்துச்சென்று தாம் ஓராசனத்திருந்து அவனைநோக்கி “இந் நகரத்தரசனாயிருந்த சச்சந்தனென்பவன் பூர்ண கருப்பிணி யாகிய தன்மனைவி விசயையை மயிற்பொறிமேற் போக்கிப் பின்பு கட்டியங் காரனென்னும் மந்திரியாற் கொல்லப்பட்டான். அவ் விசயை மயான மடைந்து ஒரு பிள்ளையைப் பெற்றாள். அப் பிள்ளையைக் கந்துக் கடனெடுத்து வந்து தன் மனைவியாகிய சுநந்தைகையிற் கொடுப்ப,. அவள் அன்போடு வளர்த்துவருவாளா யினாள்” என்று ஓர்கதை முகத்தாலே, கண்ணன் கன்னனுக்கு பிறப்புணர்த்தியதுபோலக் கூற அதுகேட்ட சீவகன் “அப்பிள்ளை யாவன்” என்று வினாவ, ஆசிரியர் “நீ தான்” என்றவுடன், சீவன் பதைபதைத்து மூர்ச்சித்து, அவர்தேற்றத் தேறிக் கட்டியங்காரனைக் கொல்லுதற்குச் சந்நத்தனாயெழுந்தான். ஆசிரியர் அவனை நோக்கி., “மைந்தா! இது காலமன்று; இன்னும் ஒருவருடஞ் சென்றபின்னர், நீ எண்ணியது செய்க; இப்பொழுது உன்னை வெளிப்படுத்தாதொழிக; இதுயான் வேண்டுவது” என்று சொல்ல, சீவகன் ஆசிரியர்கட்டளையை மறுத்தற்கஞ்சி, “அப்படியே யாகுக” என்று உடன்பட்டான். பின்பு ஆசிரியர் தம்வரலாறு கூறுவாராய், அவனை நோக்கி “யான் முன்னம் வெள்ளிமலையிலுள்ள வாரணவாசி என்னும் நகரத் தரசன்; உலோகமாபாலனென்னும் பெயருடையேன், தவஞ்செய்தற் கெண்ணி, மகனுக்கு அரசளித்துத் தவடேம் புனைந்து நோன்புபுரிகை யுற் பூர்வசன்மபாவத்தால் எனக்கு யானைத்தீயென்னும் நோய் உண்டாகியது; அதனால், மிகவும் வருந்தி ஒருவாற்றானுந் தீரப்பெற்றி லேனாய் இங்குவந்து நின்னைக்கண்டவுடன் அந்நோய் தீரப்பெற் றேனாதலின், நின்பாற் பெருவிருப்புற்று, நினக்குக் கல்வியறி வுறுத்தற்கே ஈண்டிருந்தேன். என்னெண்ணம்முற்றியது. இனித் தவஞ் செய்வதற்குச் செல்ல எண்ணுகின்றேன்; விடைகொடு” என்ன, சீவகன் அவரைப் பிரிதற்குச் சிறிதுங் கருத்திலனாயினும் அவர் தவஞ்செய்யப் போதலை மறுத்தற்கஞ்சிச் சம்மதிப்ப, அவர் இருபத்து நான்காந் தீர்த்தங்கரராகிய ஸ்ரீவர்த்தமானசுவாமிகளுடைய சமவசரண மடைந்து நோன்பியற்றி முத்தியடைந்தனர். சீவகன் இராசமா புரத்தே யிருந்தனன். (2.-கோவிந்தையாரிலம்பகம்) சிலநாட்சென்றபின், ஒருநாள் அரசனது பசுக்கள் சமீபத்துள்ள ஒருமலையையடைந்து மேய்கையில், அம்மலையி லுள்ளவேடர் அவற்றைக் கவர்ந்துகொண்டுசெல்ல, அப்பசுக் களைப் புரக்குமிடையர் அவ்வேடர்களை யொன்றுஞ் செய்ய மாட்டாது மறுகிச் சுழன்று விரைந்தோடிச் சென்று கட்டியங் காரனிடத்து முறையிட்டார். உடனே அவன் அவ்வேடரை வென்று நிரைமீட்டுவரும்படி தன்புதல்வர் நூற்று வருக்கும் மதனனுக்குங் கட்டளையிட, அவர் படையுடனே சென்று, பொருது, அவ்வேட்டராற் றோல்வியுற்று மீண்டார். இடையர் மீட்டும் வந்து அச்செய்தியைக் கட்டியங்காரனுக் கறிவிப்ப, அவன் வாளாவிருந் தனன். அதனை, அவ்விடையர் தலைவனாகிய நந்தகோன்றெரிந்து வருத்தமடைந்து, “இந் நிரைமீட்டு வருமைந்தர்க்கு பேரழகுள்ள என்கன்னியாகிய கோவிந்தையைத் தருவேன்” என்று வீதிதோறும் முரசறைவித்தான். இதுகேட்டும் வேடருக்கஞ்சிப் பலரும் சும்மா விருந்தனர். அதனையுணர்ந்து சீவகன், சூளுரைத்துப் போர்க் கோலங் கொண்டு சென்று யுத்தஞ்செய்து அவ்வேடர் ஐம்பத்தா றாயிரவரும் தனக்கு ஒருவாற்றானும் பகைவரன்மையின் அவர் களைக் கொல்லாது அச்சுறுத்தி நிரைமீட்டுவந்து, நந்தகோன் வேண்டுகோளின் படி அவன்மகளைத் தான் அப்பொழுது மணஞ்செய்தல் தன்குலத் திற்குப் பொருந்தாதென்றெண்ணி, தன் தோழனாகிய பது முகனுக்கு அவளை மணஞ்செய்வித்தனன். (3. - காந்தருவதத்தையாரிலம்பகம்) அப்பால் வெள்ளிமலையிலுள்ள வித்தியாதரராசனாகிய கலுழவேகனென்பவன், தன்மகள் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தில் மணநிகழுமென்பதைச் சோதிடராலறிந்து, அங்ஙனஞ் செய்விக்கத் துணிந்து, அவ் விராசமாபுரத்து வணிகனாகிய ஸ்ரீதத்த னென்பான் ஒரு தீவிற்சென்று பெரும்பொருளீட்டி நகரையடைய வெண்ணிப் பரிசனங் களோடும் மரக்கலமூர்ந்து கடலிற் செல் வதைத் தெரிந்து, அவனை யழைத்து வரும்படி தன்னி டத்துள்ள தரனெனும் வித்தியாதர னொருவனை யனுப்பினான். அத்தரன் போந்து சனங்களுடன் கப்பல் முழுகியதுபோலே தன்வித்தை மகிமையால் ஸ்ரீதத்தனுக்குத் தோற்று விப்ப, ஸ்ரீதத்தன் அக்கப்பலி னின்றும் முறிந்துவிழுந்த ஒரு மரத் துண்டத்தைத்தழுவி மெல்ல மெல்லச்சென்று கரையையடைந்து வருந்தியிருந்தனன். அப்பொழுது, தான் ஆறுசெல்வான்போன்று அவனைச் சந்தித்துத் தேற்றி அவனை யழைத்துக் கொண்டு கலுழவேகனிடஞ் செல்ல, கலுழவேகன் ஸ்ரீதத்தனுக்கு நிரம்ப உபகாரங்கள் செய்து அளவளாவி யிருந்து, பின்னர் காந்தருவத்தையின் வரலாறுகளைக் கூறி அவளை வீணாபதியென்னுந் தோழியுடன் அவனிடமொப்பு வித்துப் பல பொருள்களுமுதவி, அவனை நோக்கி, “இசையில் அவளை வெல்வான் யாவனோ அவனுக்கு இவளை மணம்புரிவி” என்று சொல்லி விடுப்ப, ஸ்ரீதத்தன் அவளோடும் புறப்பட்டு விமானமூர்ந்து போந்து, பரிசனங் களுடன் முழுகிப்போனதாகத் தான் முன்னங்கருதிய கப்பலைத் தரன் காட்டக்கண்டு உவப்புற்று, அதிலுள்ள தனக்கினியவரனைவருந் தன்னைச்சூழ இராசமா புரஞ்சார்ந்து தன்மனையை யடைந்து தன்மனைவியாகிய பது மைக்கு நிகழ்ந்த வற்றைக்கூறிக் காந்தரு வத்தையைக் கன்னிமாடத் தேயிருத்தி, கட்டியங்காரனைக்கண்டு அவனுடம்பாடுபெற்று ஒருமண்டபஞ் செய்வித்து, “இக் காந்தரு வதத்தையை வீணையில் வெல்வோரே இவளை மணஞ்செய்தற் குரியர்” என்று பிரசித்தஞ் செய்தனன். அஃதுணர்ந்த பலதேயத்தாரும் அவ்விடத்தே வந்துகூடினார்கள். பின்பு ஸ்ரீதத்தன் காந்தருவதத்தையை யழைத்து வந்து, அம் மண்டபத்தேயிருத்தி, அவளை யாழ்வாசிக்கச் செய் தான். அதுகேட்ட பலரும் ஆச்சரியமுற்றனர். முதல் மூன்று வருணத்தாருள்ளே இசையில்வல்ல ஒவ்வொருவருந் தனித்தனியே வந்து பாடியும், யாழ்வாசித்தும் அவளை வெல்லும்வல்லமை யில்லாராய்த் தோல்வியுற்றனர். இப்படி ஆறுதினஞ் சென்றன. பின்பு இச்செய்தியுணர்ந்த சீவகன் தன்கல்வியைத் தோற்று விப்பான் ஆண்டுச் செல்லக்கருதி தன்றோழனாகிய புத்திசேனனாற் கந்துக்கடனுக்குத் தெரிவித்தான். கந்துக்கடன் அநங்கமாலையென்னும் பரத்தைநிமித்தம் சீவகனிடத்துக் கட்டியங்காரனுக்கு மிக்க சினமுண்டாயிருத்தலை நாகமாலை யென்பவளால் அப்பொழுது அறிந்துகொண்டமையால், “படை யமைத்து அவ்விடஞ்செல்க” என்று சொல்லி விடுப்ப, சீவகன் அப்படியேபோந்து, அம்மண்டபமடைந்து, தான் இசையில்வல்ல னாதலைப் பலர்க்கும் புலப்படுத்திக் காந்தரு வதத்தையை வென்றனன். உடனே அவள் அவனுக்கு மாலை யிட்டனள். அதுகண்டு அழுக்காறுற்ற கட்டியங்காரன் மனம்புழுங்கி, அங்குவந்திருக்கும் அரசர்களைநோக்கிப் பொறாமைவிளைத்தற் குரிய சிலவார்த்தைகள்கூறி, “அரசர்களே! இச் சீவகனை வென் றோரே இக் காந்தருவதத்தையை மணஞ்செய்தற்குரியர்” என்று கூற, அரசர் ஒருங்கு திரண்டுவந்து சீவகனோடு போர்செய்து தோல்வியுற்றனர். பின்பு சீவகன் காந்தருவதத்தையைத் தன்மனைக்கு அழைத்துச்சென்று சுபமுகூர்த்தத்திலே அவளை விதிப்படி மணம்புரிந்து அவளோடும் இன்புற்றிருந்தனன். (4. - குணமாலையாரிலம்பகம்) இப்படிச் சிலநாளாயபின், இளவேனிற்காலம்வந்தது. அப்பொழுது நகர்ப்புறச்சோலையில் விளையாடுதற்குச்சென்ற இராசமாபுரத்தினருட் சுரமஞ்சரியும் குணமாலையும் சுண்ணங் காரணமாகத் தம்முண் மாறுபட்டுத் தஞ்சுண்ணங்களுள் நல்லதை அறிஞரால் அறிந்துவரும் படி தந் தோழியரிருவரை யனுப்ப, அவர் அவ்வாறே அறிஞர்பலர்க்கும் அவற்றைக் காட்டினர். கண்ட அவர் “இவற்றைச் சீவகனுக்குக் காட்டுங்கள்” என்றனர். அம் மகளிர் அவன்மாட்டுச்சென்று அவற்றைக் காட்ட, அவன் குணமாலை சுண்ணத்தை நல்லதென்றான். அவர் மீண்டு சென்று, அச்செய்தி யைத் தந் தலைவியர்க்கறிவித்தனர். அதனைச் சுரமஞ்சரிகேட்டு அவலமுற்று, “எனது சுண்ணத்தையிகழ்ந்த சீவகன் பின்னர் வலிந்து வந்து என்னை விரும்பும்படி யான் நோற் பேன்” என்று குறிப்பாலுணர்த்திக் கன்னிமாடஞ் சென்று மற்றை யாடவ ரொருவ ரையுங் கருதாளாய்ச் சீவகனையே கருதி நோன்பியற்றி யிருந்தனள். அவள் அப்படியிருக்க, அப் புறநகர்ச்சோலையிலே பிராமணருடைய சோற்றுக் குவியலை நாயொன்று தீண்ட அதனை அப் பிராமணர் தடியால் மொத்தினர். அது பயந்து ஒருகுளத்தில் விழுந்து நீந்தி வருந்துந்தருணத்தில், அதனைச் சீவகன் கண்டு மிகவு மிரங்கிப் பஞ்சநமஸ்காரமென்னு மந்திரத்தை அதன் செவியில் உபதேசித்தான். உடனே அந்நாய் அவ்வுபசேத்தால் தன்னுடம்பை ஒழித்துத் தேவனாகி விண்ணிற் சென்றது. யாவருங்கண்டு வியப்புற்றனர். பின்பு அத்தேவன் சுதஞ்சணனென்னும் பெயருடையவனாய் மீண்டுவந்து சீவகனை வணங்கிநிற்ப, சீவகன் “நீ யார் ” என்ற னன். சுதஞ்சணன், “ஈங்குநின்றும் நின்னருளாற்சென்று இயக்கர் தலைவனாய்ச் சங்கவெண்மலையிற் சந்திரோதயமென்னு நகரில் இருப்பேனாயினேன்; எனக்குப் பெயர் சுதஞ்சண னென்பது; நினக்குப் பணி புரியுங் கருத்துடையேன்” என்று சொல்ல, சீவகன், “எனக்குப் பகைவராற் றுன்பம்வரும்பொழுது வந்து உதவிசெய்க; இப்பொழுது நின்னிடஞ் சென்றுறைக” என்று விடுப்ப, சுதஞ்சணன் விசும்பாறாகச் சென்று தன் னகரடைந்தான். அவன் சென்றபின்பு, சோலையிலிருந்தோர்யாவரும் தத்தம் ஊர்திகளிலேறி நகரிக்குச் செல்லுகையில், அசனிவேகமென்னும் பட்டத்துயானை செருக்குற்றுச் சங்கிலிபிணித்த கட்டுத்தறியை முறித்துப் பாகனுக்கடங்காமற் குணமாலைக்கெதிரே சென்று சினந்து நின்று அவளைக் கொல்லத்தொடங்கியது. அதனை சீவகன்கண்டு அந்த யானையின் செருக்கடக்கி, அதனை அப்பாற் செலுத்திக் குண மாலையைக் காத்தனன். முன்னரே சீவகன்மாட்டு விருப்புற்றிருந்த குணமாலை அவனை நேரிற் கண்டமையால் அவனிடத்தே அதிமோக முடையவளாய்த் தன்மனையை யடைந்து, தோழி முதலாயினார் நிரம்ப உபசரிக்கவும், உணவு முதலியவற்றிற் வேண்டாளாய்ச் சோர் வுற்று சீவகனிடந் தூது சென்று வந்த தன்கிள்ளையால், அவன் தன்னை விரும்பியது தெரிந்து ஒருவாறு துயரந்தீரப்பெற்றிருந்தனள். அதனை அவளுடைய நற்றாயாகிய விநயமாமாலையறிந்து, தன்கணவ னாகிய குபேரமித்திரனுக்குத் தெரிவித்தனள். அவன் சீவகனுக்குக் குணமாலையைக் கொடுத்தலின் மிக்க மகிழ்ச்சியுடையவனாய்த் தன் கருத்தைமொழிந்து சிலமுதியோரைக் கந்துக்கடனிடத்துத் தூது விடுத்தான். அம் முதியோர் அவனிடம் போய்ப்பேச, அவனுடம் பட்டபின் விவாகத்திற்குரியவை ஈட்டப்பட்டன. அதன்பின்பு, சீவகன் குணமாலையை மணம்புரிந்து அவளைப் பிரியாது மகிழ்ச்சி யுற்றிருந்தான். சீவகன் இப்படியிருக்கையில், முன்னர் அவனுக்குத் தோல்வி யுற்ற யானை நாணிக் கவளமுதலியன கொள்ளாமற் கோபத்தோடு நிற்றலைக் கட்டியங்காரனறிந்து, “இதற்கு காரணம் என்ன” என்று வினவினான். பாகன் சீவகனால் நிகழ்ந்ததைக் கூற, உடனே அவன் சினந்து, தன் மைத்துனனாகிய மதனனையும் சில வீரரையுநோக்கி, “நீவிர்சென்று சீவகனாகிய செட்டிமகனை விரைவிற் கொணர்க” என்று ஆஞ்ஞாபிக்க, அவர்கள் சென்று சீவகனிருக்குமிடத்தை வளைந்து கொண் டார்கள். அதனை உள்ளேயிருந்த சீவகனறிந்து கோபங் கொண்டு யுத்தசந்நத்தனாய்ப் புறம்போந்தும் “இன்னும் ஒருவருடம் வரை கட்டியங்காரனி டத்துக் கோபங்கொள்ளாதிருப்பேன்” என்று முன்னம் ஆசிரியராணைக்கிசையத் தான் கூறியதைநினைந்து கோபந் தணிந்து நின்றவளவிலே, கந்துக்கடனும் சுநந்தையும் வந்து, “மைந்த! அரசனுக்கு அடங்கியொழுகுதல் ஆண்மை” என்றனர். அதனாலும் சீவகன் தன்வீரத்தை வெளிப்படுத்\தானாய் மதனன் முதலியோர் சூழ்ந்துவரச்சொல்லும்பொழுது, இக்கொடுமை யைக் கண்ட ஊரவர்யாவரும் பதைப்புற்று வருந்திப் புலம்பி யழுதனர். இச்செய்தியைத் தோழருந் தம்பிமாருங் கேட்டுச் சினந்து மதனன் முதலியோரை வெல்லுதற் குரிய உபாயத்தை நாடிக் கொண்டு நின்றனர். காந்தருவத்தை கேட்டு, தன்கணவனைச் சிறைமீட்கக் கருதித் தன்தெய்வங்களைத் தியானிப்ப, உடனே அத்தெய்வங்கள் போந்து அவளைச் சூழ்ந்துகொண்டன. இவற்றைத் தெரிந்த சீவகன் “இனிச் செய்வதென்னை” என்று ஆலோசித்து, காந்தருவத்தை தன் சிறைத்துயர நீக்க முயன்றதற்கு நாணித் தன் உயிர்த்தோழனாகிய சுதஞ்சணனை நினைத்தான். நினைத்தவுடன் அச்சுதஞ்சணனுக்கு இடக்கண் ஆடியது; ஆடினவளவிலே, அவன் இதனால் எனக்குத் தீங்கு வருமோ வென்று நோக்காது முதலிலே சீவகனை நினைத்தான். நினைந்து அவனுற்ற துன்பத்தை தனது ஞானத்தாலறிந்து விரைந்து வந்து யுகமுடிவுவந்ததுபோலத் தோற்றும்படி அவ்விடத்துக் காற்றும் மழையும் மிக்குவரச் செய்து ஒருவருக்குந் தோற்றாமற் சீவகனை யெடுத்து மார்போடணைத்து ஏந்திச்சென்று தன்னகரமடைந்து, அவன் பெருமையையும் அவன் தனக்குச்செய்த பேருதவியையுந் தன்றேவி யர்க்கு விளங்கக்கூறி, அவனை மகிழ்வித்து, அவனோடும் அவ்விடத்தே யுறைந்தனன். இங்கே மதனன் சீவகனைக் காணாது திகைத்து, “கட்டியங் காரனிடத்து என்ன சொல்லுவோம்” என்றெண்ணி, ஆங்குள்ளா னொருவனை வாளாற்பிளந்து உருத்தெரியாமற் புரட்டிவிட்டுக் கட்டியங்காரனிடஞ்சென்று, “நின்கட்டளைப் படியே சீவகனைப் பிடித்துக் கொண்டுவருகையில், மழையுங் காற்றும் அதிகரித்தமை யால் ஈண்டுக் கொணர்தற்குத் தடையுற்று, அவ்விடத்தேயே யவனைக் கொன்றுவிட்டேன்” என்றான். கட்டியங்காரன் பெரிதும் வியப்புற்று, “சீவகனைக்கொல்லுதல் மிகவுமரிது; அவனைக் கொன்றநீ இவற்றைப் பெறுவாயாக” என்று மதனனுக்குப் பல சிறப்புக்களுஞ் செய்து அவனை மகிழ்வித்தான். (5. - பதுமையாரிலம்பகம்) அங்கே சுதஞ்சணன் பலதேயங்களையும் ஆங்காங்குள்ள மலைகள் ஆறுகள் முதலியவற்றையுங் காணுதற்குச் சீவகன் விருப் புற்றிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றின் வழி முதலிய வற்றைக் கூறி, பின்னர்க் காமனும் விரும்புங் கட்டழ கமைந்த சரீரத்தைக் கொடுப்பதும் விடமுதலியவற்றைக் கெடுப்பதும் வேண்டிய வுருவைத் தருவதுமாகிய மூன்று மந்திரங்களை அவனுக்குமொழிந்து, அவனையேந்திக் கொண்டு தன்மலையினின்றுமிறங்கிப் பூமியில் விடுப்ப, சீவகன் அவன் முன்னர்க் கூறிய வழியேபோய், மிருகங் களையும் பறவைகளையுங் கொன்று தின்று திரியுங் கொடிய வேடனொருவனைக்கண்டு, அவனை நல்வழிப்படுத்த நினைந்து, அவனுக்கு உறுதி மொழியுரைத்தனன். உரைத்து அப்பாற்சென்று காட்டுத்தீயால் வளைக்கப்பட்டு நின்ற யானைத்திரளின் வருத்தத்தை நீக்கினான்; நீக்கி அரணபாதமென்னும் அசலமடைந்து, ஆங்குள்ள அருகக்கடவு ளையும் சாரணரையும் வழிபட்டேத்தி, அப்பாற் பல்லவதேயத் துள்ள சந்திராபமென்னு நகரை நண்ணி, அந்நகரத் தரசனாகிய தனபதிமகன் உலோகபாலனோடு நட்புற்று, அவன் சகோதரியா கிய பதுமையென்பவள் சோலையிற் சென்று பூக்கொய்து விளையாடுகையிற் பாம்புகடித்தமையால் அவளுக்குண்டான விடவேகத்தைப்போக்கி, அவளை மணம்புரிந்து, அவளோடும் அவ்விடத்தே இரண்டுமாதந்தங்கி இன்புற்றிருந்து, பின்பு வேறிடஞ்செல்ல விருப்புற்று, ஒருநாளிரவினடுவில் ஒருவரோடுஞ் சொல்லாது வேற்றுருக்கொண்டு அந்நகரினின்றுநீங்கி, அப்புறஞ் செல்வானாயினான். பின்பு பதுமை சீவகன் தன்னை நீங்கியதுதெரிந்து துன்பக் கடலிலழுந்தி, அவனோடு கூடியிருக்கையில் இன்பம் விளைவித்த ஒவ்வொரு பொருளையுங்கண்டு பலவாறு புலம்புத் தன்றோழி மாருள் அறிவுடையாளொருத்திதேற்ற ஒருவாறு தேறியிருந்தனள். இஃதுணர்ந்த தனபதி மிகவுங்கவலையுற்றுச் சீவகனைநாடிக் கொணரும் வண்ணம் சிலரையனுப்ப, அவர் சீவகனைப் பலவிடத் துந்தேடி யலைந்து பின்பு கண்டு, “நின்னைப் போன்றானொரு குரிசிலைக் கண்டதுண்டாயிற்கூறுக” என்ன, சீவகன் அவரை நோக்கி, “அவனை ஒன்பதாந்திங்களிலே காண்பீர்; அதற்கு முன்னர்காணீர்; யான் கூறியது பொய்யுரையன்று; இச்செய்தியை நும்மரசனுக்குக் கூறுமின்” என்று விடுப்ப, அவர்போந்து அச்செய்தியைத் தனபதிக்குத் தெரிவித்தார். அவன் ஒருவாறு வருத்தமொழிந்திருந்தான். சீவகன் அப்பாற் சென்றான். (6. - சேமசரியாரிலம்பகம்) அப்படிச்சென்ற சீவகன் பலவிடங்களையுங்கடந்து சித்திர கூடமென்னுந் தவப்பள்ளியை சார்ந்து, அதிலிருந்த தாபதர்களோடும் அளவளாவிப் பின்னர்த் தக்க நாட்டிலுள்ள கேமமாபுரத்தையடைந்தான். முன்பு அந்நகரத்துவணிகனாகிய சுபத்திரனென்பவன் தனக்கு கேமசரியென்ற ஒருபுத்திரி பிறந்தபொழுது அவளுக்குச் சாதகங்கணித் தற்குப்போந்த கணிதரைநோக்கி, “இவளுக்கு கணவன்யாவன்”என்ன, அவர் “நின்மகளுக்குக் கணவனல்லாதார் ஆடவராகத் தோன்றா ராதலின், அவள் எவனைக்கண்டு நாணுகின்றாளோ அவனே அவளுக்கு கணவனாவான்” என்றனர். அதுகேட்டவணிகன் அது தொடங்கி நாடோறும் வருவோர்பல ரையுந் தன்மனைக்கழைத்துச்சென்று உபசரித்து விருந்தூட்டி ஒருவரையுங்கண்டு அவள் நாணாமைதெரிந்து “இவளுக்கு கணவனாவான் வருங்காலம் உளதோ” என்று கவலை யுற்றிருந் தான். அப்படியிருந்த சுபத்திரன் சீவகனைச் சந்தித்து அவன்வடி வழகு கண்டு மகிழ்ச்சியுற்று, அவனைத் தன்வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சென்றபொழுது கேமசரி சீவகனைக் கண்டு நாணமடைந்து பின்னர் மோகமுற்று வருந்தினாள். அதையறிந்த சுபத்திரன் சீவகனுக்கு அவளை மணம்புரிவிக்க, அவன் அவளோடும் அவ்விடத்தே இரண்டு திங்கள் தங்கியிருந்து பின்பு வேறிடஞ்செல்லக்கருதி, அவளிடத்துச் சொல்லாது பிரிந்து சென்று, எதிர்ப்பட்டானொருவனுக்குத் தருமோப தேசஞ் செய்து தன் அணிகலன்களை யவனுக்களித்து, அப்பாற் செல்வானாயி னான். கேமசரி சீவகனைக்காணாது திகைத்துப் பிரிவாற்றாது பலவாறு புலம்பித் தன் நற்றாயாகிய நிப்புதியென்பவள் தேற்ற, ஒருவாறு துயரந்தீர்ந்திருந்தனள். (7. - கனகமாலையாரிலம்பகம்) பின்பு சீவகன் சிலவிடங்களைக் கடந்துசென்று மத்திமதேயத் துள்ள ஏமமாபுரமென்னு நகரிக்குச் சமீபமாகிய ஒரு பூஞ்சோலை யையடைந்து, ஆங்குள்ள அழகான ஒரு பொய்கையைக் கண்டு, அதின்வளங்களைநோக்கிக் காந்தருவதத்தையும், குணமாலை யையுநினைந்து பலவாறு புலம்பி மிகுந்த வருத்தமடைந்து அப்பாற் செல்லாது அவ்விடத்தே யிருந்தான். அப்பொழுது அந்நகரத்தரச னாகிய தடமித்தன்புதல்வன் விசயனென்பவன் அச்சோலையை யடைந்து சீவகனைக் கண்டு, “இவன் இவ்விடத்தானல்லன்” என்றெண்ணி, தேயமுதலியவற்றை வினாவ, சீவகனும் தானின்னா னென்று புலப்படாவண்ணம் அவற்றைக்கூறி, அவ்விடத்துப் பலமுறை முயன்றும் அவ்விசயன் எய்துவீழ்த்தமாட்டாத மாங்கனி யொன்றைத் தான் ஓரம்பாலெய்து அவ்வம்புடன் அம்மாங்கனி தன்கையில் வரப்பெற்றுத் தான் வில்வித்தையில்வல்லனாதலை வெளிப் படுத்த, அதனை அவ்விசயனறிந்து மகிழ்ந்து சீவகனை உடன்கொண்டு சென்று தன்றந்தையாகிய தடமித்தனுக்கறி வித்தான். அவன் சீவகனைக்கண்டு உவப்புற்று, விசயன் முதலிய தன்புத்திரரைவர்ககும் வில்வித்தைமுதலியன கற்பிக்கும்படி அவனை நியோகிப்ப, அவன் அவற்றை அவர்களுக்குக் கற்பித்து வருகையில், அவர்கள் அவ்வித்தை களில் மிகவும் வல்லுநராயினர். அதனை அரசனறிந்து அளவில்லாத மகிழ்ச்சியுற்று, அவனைத் தன்னிடத்தே வைத்துக் கொள்ளக்கருதித் தன் புத்திரி கனகமாலையை அவனுக்கு மணம்புரிவிக்க, அவன் அவளோடுகூடி அவ்விடத்தே யிருந்தான். சீவகன் அங்ஙனமிருக்க, நந்தட்டன் சீவகன் இன்னவிடத்திலுள்ளா னென்பதை யறியானாய் நாடெங்குந்தேடியும் அவனைக் காணாது வருந்திக் காந்தருவதத்தையை வினவி, அவள் செய்த வித்தைம கிமையாற் சீவகன் ஏமமாபுரத்திற் கனகமாலை யோடிருத்தலை நேரிற்கண்டு மகிழ்ச்சியடைந்து அவளைவணங்கி, “அடியேன் சீவகனை யடையும்படி அருள்புரிவாய்” என்று வேண்ட, காந்தருவத்தை தன்வித்தைவிசேடத்தால் நந்தட்டனைச் சீவகனிருக்குமித்தை யடையச் செய்தாள். அப்படியடைந்த நந்தட்டனைச் சீவகன்கண்டு ஆநந்தமுற்றுத் தழுவி, எல்லாச் செய்திகளையும் வினவி, அவனை மகிழ்வித்து அவனோடும் அந்நகரத்திருந்தான். இச்செய்தியையறியாத தோழர்கள் கவலைமிக்குக் காந்தரு வத்தையையடைந்து, சீவகன் ஏமமாபுரத்தே இருத்தலையும், நந்தட்டன் அவனிடத்தடைந்ததையும் அவளாற் றெரிந்து கொண்டு தாமும் சீவனிடஞ் செல்லக்கருதி அவளுக்குத் தெரிவித்து விடைபெற்றுப் பலவீரர்களோடும் புறப்பட்டு, ஏமமாபுரஞ் செல்வாராய், விசயை தவஞ்செய்துகொண்டிருக்குந் தவப்பள்ளியை யடைந்தனர். அப்பொழுது விசயை அவர்களை நோக்கி, “நீங்கள் எங்குள்ளீர்? எங்குச் செல்கின்றீர்” என்று வினவ, தம் வரலாறு சொல்லுகையிற் சீவகன் வரலாறுஞ் சொல்லும்படி நேர அதனை கூறா நின்ற தேவதத்தன், “கட்டியங் காரன் கட்டளையால் மதனன் முதலியோர் சீவகனைக் கொல்லக் கொலைக்களங் குறுகலும் ஓர்தெய்வம் வந்து காத்தது” என்று சொல்லவெண்ணி, “சீவகனைக் கொல்ல” என்றவளவில், விசயை பதைபதைத்து மூர்ச்சித்துப் பின்பு எழுந்து சீவகன் வரலாறுகளை வெளிப்படச்சொல்லி கண்ணீர்விட்டுப் பிரலாபித்தழுகையில், தோழர் தம்முள் ஒருவரையொருவர் நோக்கி மகிழ்ந்து அவளைச் சீவகன் நற்றாயென்றும், சீவகனை இராசகுமாரனென்றும் விளங்க அறிந்தவர் களாய் சீவகன் இறவாதிருத்தலை அவளுக்குணர்த்த, விசயை “என்மீது வைத்த காதலாலே என்னிறை இறந்தபின்பு, யான் மிகுந்ததுன்ப மடைந்தேன்; இச்செய்தியை என் ஐயனுக்கு உணர்த்தி அவனை என்னிடத்து அழைத்துவாருங்கள்” என்று சொல்ல, தோழர் வணங்கி, “தாயே! ஒருமதிக்குள்ளே நும்பாற் சீவகனை அழைத்து வருவவேம்; நீவிர் கவலைப்படவேண்டாம்” என்று சொல்லி விடைபெற்று ஏமமா புரத்தைச் சார்ந்த ஒரு சோலையையடைந்து அங்கிருந்துக் கொண்டு அந்நகரத்தில் நந்தட்டனோடு சீவகனிருத்தலை ஒற்றராலறிந்து சீவகனைக் காணுமாறு எங்ஙனமென்று ஆலோசித்து யுத்தஞ்செய்ய வந்தவர் களைப் போலவே கோலங்கொண்டு அந்நகரைவளைந்து அரசன் பசுக்களை கவர்ந்தனர். அதனையறிந்து சினந்து அரசன் கட்டளையாற் பெரும் படை சூழத் தேர்மீதேறிப் போர்செய்தற்கு நந்தட்டனோடுவந்த சீவகனைக் கண்டு, பதுமுகன் “அடியேம் நின்றிருவடிநிழலிலே உறையவேண்டிச் சச்சந்தன்மகனாகிய நின்னைக் காணவந்தேம்” என்று எழுதியெய்த அம்புசென்று சீவகன் றேர்மீது மாறி வீழ்ந்தளவிலே, சீவகன் இக்கணையை இவ்வாறு வீழும்படி எய்தான் பதுமுகனேயென்றறிந்து போர்செய்யாதபடி தன்படை யை விலக்கிநிற்ப, தோழர்சென்று அவனை வணங்கிப் பேராநந்த முற்று அவனோடு நகரஞ்சென்று அரசனைப் பணிந்தனர். அரசன் “இவர்கள் யார்” என்று வினவ, சீவகன் “என் உயிர்த்தோழர்” என்றான். பின்பு சீவகன் தனியேயிருந்து தோழரை நோக்கி, “என்னி லைமையை எங்குணர்ந்தீர்” என்ன, அவர் “சச்சந்தன் தேவியாகிய விசயையைத் தண்டகாரணியத்துக்கண்டு தெரிந்து கொண் டோம்” என்றார். உடனே சீவகன் கண்ணீர்சொரிய, உரோமஞ் சிலிர்ப்ப, “மகாபாவியாகிய என்னைப் பெற்ற அடிகளும் உளரோ உளரோ” என்று பன்முறை வினவி, அவரிருக்கின்றதிசை எங்கே யெங்கேயென்று கேட்டு, அத்திசையைநோக்கி விரையவணங்கி இங்குச்செல்லுங் கருத் துடையவனாகி விடைபெறுதற் பொருட் டுத் தடமித்தன்பாற் சென்றான். உடனே அவனும் தோழராற் சீவகன்வரலாறனைத்துந் தெரிந்து கொண்டு மகிழ்ந்து விடைகொடுக்க, சீவகன் கனக மாலையை அவ்விடத்தேவைத்துவிட்டு எல்லாரோடும் புறப்பட்டு வழிக்கொண்டு சென்றான். (8. - விமலையாரிலம்பகம்) சென்ற சீவகன் தோழரோடுந் தண்டகாரணியமடைந்து தன்வரவு நோக்கிக் கொண்டிருந்த விசயமாதேவியைத் தரிசித்து வணங்கிப் பேராநந்தமுற்றான். விசயையும் சீவகனை எடுத்துத் தழுவிப் பெரிதும் பாராட்டி அன்புறுவாளாயினள். இங்ஙனம் ஆறுதினஞ்சென்றன. பின்பு விசயை தோழருட் சிலரை வேறேயழைத்துச் சில உபாயங்களைக் கூறிப் பின்பு சீவகனை நோக்கி, “நின்மாமனாகிய கோவிந்தனைக் கண்டு, அவனேவலாற் பகையை வெல்லக்கடவை” என்ன, சீவகன், “உமது கட்டளைப் படியே செய்வேன்”என்று கூறி, ஆங்கிருந்த சில தவமகளிரோடும் விசயையை முன்னதாகத் தன்மாமனகரிற் கனுப்பி விட்டுத் தான் குதிரையேறி எல்லாரோடும் ஏமாங்கத நாட்டைச்சார்ந்து இராசமாபுரத்தின் அருகேயுள்ள ஒரு சோலையிற்றங்கி உண்டு றங்கியபின், மற்றைநாட்காலையிற் றோழரை அவ்விடத்தே வைத்து விட்டுத் தான் மகளிர் விரும்புதற் குரிய ஒருவடிவங்கண்டு, அந் நகரத்து வீதியிற்சென்றான். அப்பொழுது, தான் விளையாடிய பந்தினுளொன்று எழும்பிச் சென்று சீவகன்முன்னேவீழ அதனை எடுத்தற்கு வந்த விமலை யென்பவள் சீவகனைக்கண்டு வேட்கையதிகாரிக்கப் பெற்று நெஞ்சங் கலங்கி நாணமகன்று வருந்துவாளாயினள். சீவகனும், அவள் பேரழகை நோக்கி அதிகமோகங்கொண்டு அப்பாற்செல்லமாட்டாது அவள் தந்தை யாகிய சாகரதத்தனு டைய கடையிலே வருந்தி யிருந்தான். சாகரதத்தன் தன்னிடத்துப் பலநாளாக விலையாகாதிருந்த சரக்கையெல்லாம் அப்பொழுது விற்று மிகவுமகிழ்ச்சியடைந்து சீவகனைச் சந்தித்து, அவனைநோக்கி, “நம்பனே! என் மனைவி யாகிய கமலை பெற்ற விமலைக்கு சாகதகஞ்செய்யவந்த சோதி டரைநோக்கி, ‘என் பண்டம் விலையாகாமைக்குக் காரணம்யாது’ என்று வினவினேன்; அச்சோதிடருள் ஒருவன், ‘நின்மகள் விமலைக்குரிய கணவன் நின்கடை யில்வந்து தங்குவான்; அப்பொழுது எல்லாம் விலையாகும்’ என்றான். அப்படியே நீவந்து தங்கியவுடன் எல்லாப்பண்டமும் விலையாயின. ஆதலால், நீயே விமலைகணவன்” என்றுகூறிச் சுபமுகூர்த்தத்திலே அவனுக்கு விமலையை மணஞ்செய்வித்தான். சீவகன் அவளோ டும் அவ்விடத்தே இரண்டுதினந் தங்கி மற்றை நாட் காலையில் எழுந்து சோலையிலுள்ள தோழரையடைந்தனன். (9. - சுரமஞ்சரியாரிலம்பகம்) அப்பொழுது தோழர், சீவகனது மணக்கோலங்கண்டு மகிழ்ந்து “நீ மணஞ்செய்த தையலின் பெயர் கூறுக” என்ன, சீவகன் “விமலை” என்றான். கேட்டதோழர் மிகவியப்புற்று “இவனே காமனென்று” கூறினர். அவர் அங்ஙனங்கூறச்கேட்ட புத்திசேனன் சீவகனை நோக்கி, “இவர்களைப் போல யானும் நின்னை வியப்பே னல்லேன்; இந்நகரத்தின் கண்ணே ஒரு மடந்தை சுரமஞ்சரியென் றுள்ளாள்; அவள், ஆடவர் தன் மனைக்கு அருகே செல்லினும் உயிரை விடுவே னெனக் கோபியாநிற்பள்; அவளை மயக்கமுறுத்தி இன்பநுகரின், நின்னைக் காமதிலகனென்பேன்” என்று சொல்ல, சீவகன் புத்திசேனனைநோக்கி “நீ கூறிய அவளைக்கொணர்ந்து நாளையே காமன்கோட்டத்தில் மகிழ்விப்பேன்; நீ காமன் படிவத்தைச் சார்ந்து மறைந்திரு” என்று சொல்லி, உடனே அவ்வி டம்விட்டுச் சுரமஞ்சரி யிடத்து மிகுந்த காதலுடையவனாய் ஒரு வயோதிகப் பிராமண வடிவங்கொண்டு தண்டூன்றி மிகவும் மெலிவைப் புலப்படுத்திக் கொண்டு கண்டோரிரங்க நடந்து சென்று, அவளது கன்னிமாடத்தின் வாயின்முன் போயினன். அப்பொழுது சீவகன் தன் முதுமையைக்கண்டு அச்சுறுத்தற் கஞ்சிய அவ் வாயில் காக்கு மகளிரைநோக்கி, “பசியால் மிக வருந்து கின்றேன்” என்றான். அம்மகளிர் விரைந்து சுரமஞ்சரியை யடைந்து “ஊதப்பறக்குந்தன்மையனாய் மிகுந்த பசியாளனாய் ஒரு விருத்தப் பிராமணன் நம் மனைவாயிலில் வந்து நிற்கின்றான்; அவனிடத்து யாஞ் செய்வதறிந்ததிலேம்; விரைந்து கூறுதி” என்ன, சுரமஞ்சரி “அம் மூப்புடையானைப்பார்ப்பின் விரதங் குன்றுவதன்று” என்றெண்ணி மாடத்தினின்று மிறங்கிவந்து, அம்முதியோனை நோக்கி, “நீர்வந்தது என்னகாரியத்தைக்கருதி” என்றுவினவினாள். அவன் “குமரியாட” என்றான். சுரமஞ்சரி கேட்டு நகைத்து “இவர் பித்தர் போலும்; இது நிற்க; இவர் பசியைத் தீர்ப்பது பேரறம்” என்றெண்ணி, அம் முதியோனைத் தன் மாடத்தே யழைத்துச் சென்று ஸ்நாநஞ் செய்வித்துப் பொற் கலத்தைப் பரப்பி அறுசுவையடிசிலூட்டி முகவாச மீந்து கட்டின் மீதுள்ள பஞ்சணையிலே படுக்கச்செய்ய, அம்முதியோன் சிறிது நேரம் உறங்குவான் போற்கிடந்து பின்னர் ஒரு கீதத்தைப் பாடினான். கேட்டமகளீர் விம்மிதமுற்றனர். சுரமஞ்சரி நாணி நகைத்துக் கேட்டுக்கொண்டு நின்றனள். அங்ஙனம்நின்ற சுரமஞ்சரி, “இப்பாட்டுச் சீவகன்பாட்டை ஒத்துளது” என்று தோழியர் வியந்து சொல்லக்கேட்டு, “நாளைச் சென்று காமனை வழிபட்டு ‘இப்பாட்டையுடைய சீவகனை விரை விற்றருக’ என்று வேண்டிக்கொள்வேன்” என்று கூறி, மற்றை நாளில் தன்னுயிர்த்தோழியுடனே அவ்வேதியனையும் அழைத்துச் கொண்டு சகடமூர்ந்து, ஆடவர்காணாமற் காமன்கோட்டத்தை யடைந்து, தான் பரவுகின்றது கேளாதபடி கூடவந்த அந்தணனை ஆங்குள்ள ஓரறையில் வைத்துவிட்டுச் சென்று காமனைவணங்கி, “பூமலிமார்பனே! எனக்குச் சீவகனை விரைவிற்றரின் மகரக் கொடியும், அம்பும், கருப்புச்சிலையும், தேரும், ஊருந் தருவேன்” என்று வேண்ட, ஒளித்திருந்த புத்திசேனன் “சீவகனை நீ பெற்றாய்; இனி விரைவிற் செல்” என்று சொல்ல, அதனை அவள் காமத் தெய்வம் வாய்விட்டுக் கூறியதாகவே யெண்ணிப் பின்னும் பரவி மீண்டுவந்து அறையிடத்தே உரிய வடிவுகொண்டு நின்ற சீவகனை நெஞ்சுதுணுக் கெனக்கண்டு நாணி நைந்துநிற்ப, சீவகன் மிக்க காதலுடையனாய்ச் சுரமஞ்சரியைத் தழுவி, “நின்னை நாளைமணஞ்செய்வேன்” என்று விடுப்ப, அவள் தன்மனையை யடைந்தனள். தோழர் இச்செய்தியைப் புத்திசேனனாற் றெரிந்துகொண்டு சீவகனைக் “காமத்திலகன்” என்று புகழ்ந்தனர். நிகழ்ந்த இச்செய்தியைச் சுரமஞ்சரிதாயாகிய சுமதியும் தந்தையாகிய குபேரதத்தனுங்கேட்டு மகிழ்ந்து சுற்றத்திற்கெல்லாமறிவித்துச் சீவகனுக்குச் சுரமஞ்சரியை மணஞ்செய்வித்தனர். சீவகன் அவளோடும் அன்று அவ்விடத்தே தங்கியிருந்து, மற்றை நாளெழுந்து தோழர்சூழத் தன்மனையை யடைந்து, தன் குதிரைமுதலியவற்றை நோக்கித் தன்னையேநினைந்து அழுது புலம்பியுருகிக்கொண்டிருக்கின்ற சுநந்தையையும் கந்துக் கடனை யுங்கண்டு வணங்கி, அவர்கள் வருத்தத்தைப் போக்கி, மற்றை யோரை மகிழ்வித்து, காந்தருவதத்தையைக் கண்டு, குணமாலை யைத் தேற்றி, மேல்முடியுங் காரியங்களைக் கந்துகடனுக்குக் கூறி, விடை பெற்று, குதிரைகொள்ளும்வாணிகன்போல வேடம்பூண்டு, தோழர்சூழ ஏமாங்கதநாட்டைக் கடந்து சென்றான். (10. - மண்மகளிலம்பகம்) அங்ஙனஞ்சென்றசீவகன் விதையநாட்டையடைந்து நகரத்தார் எதிர்கொண்டு விரும்பச்சென்று தன்மாமனாகிய கோவிந்தராசனை வணங்கினான். கோவிந்தராசன் மகிழ்ந்து விருந்து செய்வித்துச் சீவகனுக்கு மேல் நடத்தவேண்டுவனவற்றை யெண்ணித்தன்மகனாகிய ஸ்ரீதத்தனுக்குச் சுபகாலத்திலே அரசளித்து எல்லாரோடுமிருக்கையில், தன்னை இராசமா புரத்து வரும்படிவேண்டித் தன் கருத்தறிதற் பொருட்டு வணக்கமுடைய வன்போலே தனக்குக் கட்டியங்காரன னுப்பிய வஞ்சகவோலையை விரிசிகனென்பவன் படிப்பவறிந்து, “கட்டியங்காரனைக் கொல்லுதற்குரிய உபாயம் இதுபோல வேறொன்று மில்லை” என்று சீவகன் கூறக் கேட்டு, நால்வகைச் சேனையோடும் புறப்பட்டு இராசமாபுரத்தின் பக்கத்தே வந்து தங்கினான். அப்பொழுது கட்டியங்காரனுக்குத் துர்நிமித்தங்கள் நிகழ்ந்தன. அவைநிகழ்ந்தபின், கோவிந்தன் கட்டியங்காரனைக் கபடமாக வருவிக்கவெண்ணித் திரிபன்றியந்திரமொன்று செய்வித்து, “இவ்வியந்திரப்பன்றியை எய்து வீழ்த்தியவனே என் மகள் இலக்கணைக்கு கணவனாவான்” என்று பிரசித்தஞ் செய்தான். அதுதெரிந்த கட்டியங்காரனும், பலதேயத்தரசரும் அவ்விடத்தே வந்து கூடி அந்த யந்திரத்தைநோக்கி வியப்புற்றனர். பின்பு இலக்கணையை விரும்பிய அரசிளங்குமரர் தனித் தனியேவந்து வில்லைவளைத்து அம்புதொடுத்து அப்பன்றியை எய்துவீழ்த்த மாட்டாதவராய் மெலிவடைந்தனர். அப்பொழுது சீவகன் யானை மேற்கொண்டு வெளிப்பட, அவனை இறந்தா னென்று கருதியிருந்த கட்டியங்காரன் கண்டு துணுக்குற்றுப் புலியைக்கண்ட மான் போலே யஞ்சிக் கலக்க முற்றான். சீவகன் யானையினின்றுமிறங்கி அவ்வியந்திரத்திலுள்ள சக்கரத்தின் மேல் ஏறிநின்று வில்லை வளைத்து அம்புதொடுத்து அப் பன்றியை வீழ்த்தினான். அப்பொழுது கோவிந்தன் கட்டியங்காரனுக்கும் மற்றை யோருக்கும் சீவகனை இன்னானென்று விளங்கக் கூறினன். அதன் பின்பு ஆகாயத்திடத்தே ஓரியக்கன்றோன்றிச் “சீவகனாசிய சிங்கம் கட்டியங்காரனாகிய கரியினுயிரை விழுங்கும்” என்று கூறக்கேட்டுக் கட்டியங்காரன் மிகச்சினந்து சீவகனைநோக்கி, “நினக்கு ஒருபொழுதும் அஞ்சுவேனல்லேன்; எனது ஆற்றலை நின்றந்தையறிவன்; நீயறிவாய்; நின்னையும் என்னைக் கபடமாக வருவித்துக்கொல்லத் துணிந்த நின்மாமனையும் வெல்லும் விருப்புடையேன்; போர்செய்தற்கு எழுக” என்று சொல்லித் தன்மக்கள் நூற்றுவரோடும் மற்றை அரசர் களோடுங்கூடி யுத்தசந்நத்தனாக, சீவகனும் தோழரோடும் தம்பிமா ரோடும் மற்றை அரசரோடும் புறப்பட, அவ்விருதிறத்தார் சேனையும் எதிர்த்துநின்று போர்செய்தன. சீவகன்படைவீரராற் கட்டியங் காரன்படைவீரரிற் சிலர் மாய்வுற்றனர்; சிலர் தோற்றோடினர். பின்பு சீவகன் கட்டியங்காரன் புதல்வர் நூற்றுவரையும் பதுமவியூகம்வகுத்து அதனுள்ளேயிருந்த அவனையுங் கொன்று விளங்கினான். எல்லாரும் புகழ்ந்தனர். விசயைகேட்டு மகிழ்ந்தனள். (11. பூமகளிலம்பகம்) பின்பு சீவகன் இராசமாபுரமடைந்து மாளிகைபுகுந்து, தன்னைக் கண்டுநடுங்கிய கட்டியங்காரன் பரிசனங்களுக்கு அபயமளித்து, வேண்டும்பொருள்களும் விருத்தியுமுதவி, அவர் விருப்பின்படி உரிய விடங்களுக்குப் போகச்செய்து, பின்பு எல்லாவிடங்களையுங் கண்ணுற்று முத்திரைவைத்துக் காவலிட்டு, யுத்தவீரர்களை இளைப்பாறச்செய்து மகிழ்வித்து, வேத்தவை சார்ந்து சுபகாலத்திலே சிங்காசனத்தில் வீற்றிருந்து மணிமுடி சூடி, கட்டியங்காரனாற் றுன்பமுற்ற யாவரையும் இன்பமுறுவித்து, நீதிநெறியை நடாத்தி அரசியற்றுவானாயினான். (12. - இலக்கணையாரிலம்பகம்) பின்பு அவன் தன்னருகிலுள்ளாரை நோக்கிப் “பதுமை முதலிய தேவியரை அழைத்துவருவீர்” என்ன, அவர் உடனே ஆங்காங்குச் சென்று அவர்களை யழைத்துவந்தனர். வந்தமங்கை யர் சீவகனைத் தொழுதுவணங்கி, அவனால் அங்கீகரிக்கப்பட்டுப், பெருமகிழ்ச்சியோடிருந்தனர். அப்பாற் கோவிந்தராசன் இலக்கணையைச் சீவகனுக்கு மணஞ் செய்விக்கக் கருதிக் கணிதர்களால் விவாகமுகூர்த்தம் வரையறை செய்து முரசறைவித்து நகரையலங்கரிப்பித்து, குறித்த முகூர்த்தத்தில் விதிப்படி சீவகனுக்கு இலக்கணையை மணஞ் செய்வித்தான். பின்பு சீவகன் எல்லாருங்கண்டு மகிழும்படி நகர்வலமாகப் பவனிவந்து, ஆலயமடைந்து அருகக்கடவுளை வலஞ்செய்து ஏத்தித் தொழுது, அக்கடவுளுக்கு நூறு ஊர்கள் முதலியவற்றைச் சேர்ப்பித்துத் தன் மாளிகையடைந்து சிங்காசனத் திருந்து செங்கோல்செலுத்தி அரசுபுரிவானாயினான். அங்ஙனம் அரசுபுரிகின்ற சீவகன் தன்னை வருந்திவளர்த்த கந்துக்கடனுக்கு இதற்குமுன்னில்லாத அரசுரிமையையும் சுநந்தைக்கு தேவிபட்டத்தையுங் கொடுத்தான்; நந்தட்டனை இளவரசாக்கினான்; நபுலவிபுலர்க்குக் குறுநிலமன்னர் மகளிரை மணஞ்செய்வித்து நாடு களையும் நல்கினான்; தன்றோழர்க்கு அரசையும் ஏனாதிமோதிர முதலியவற்றையும் ஈந்தான்; தன்னி மித்தம் வருந்திய பிறர்க்கு அமைச்சரைக்கொண்டு நிதியையும், நாட்டையுங் கொடுப்பித்தான்; தன்னை வருந்திவளர்த்த செவிலித் தாயர்க்கு நாடோறும் ஆயிரம் பொன் இறை தண்டுதற்குரிய ஐந்துகிராமங்களைக் கொடுத்தான். மாமனாகிய கோவிந்தனுக்குக் கட்டியங்காரனுடைய பொருள்களை யெல்லாம் உதவினான்; தனக்குப் பேருதவிபுரிந்த சுதஞ்சணனுக்குக் கோயில் சமைப்பித்து, அவன்வடிவைப் பொன்னாலியற்றி, ஓரூரையும் நிலைபெறுத்தி, அவன் சரிதத்தை ஒருநாடகமாகச்செய்து நடத்தினான். இனிப் பெறாதார் யாரென்று சிந்தித்து, இளமைப்பருவத்தே தான் விளை யாடிக்கொண்டிருந்த ஓர் ஆலமரத்திற்கு அதற்கேற்ப மாலை யணிந்து பீடஞ்சேர்த்தி ஐந்தூரை அதற்கு இறையிலியாக விட்டான். இன்னும் இவ்வாறு செய்யவேண்டுவன வெல்லாஞ் செய்துமுடித்துத் தேவிமாரெண்மரோடுங் கூடி மகிழ்வுற்றுச் செங்கோல் செலுத்திக் கொண்டு வருநாளில், உலகஞ் செழிப் புற்றது; யாவரும் இன்புற்றனர்; எல்லாவுயிர்களும் மகிழ்வடைந் தன. (13. - முத்தியிலம்பகம்) அப்படிநிகழும்பொழுது, ஒருநாள் விசயை, தவப்பள்ளியி னின்றுந் தனக்குத் துணையாகப்போந்த தவமகளிர்க்குக் கைம்மாறில்லையே யென்றெண்ணி அருகக்கடவுளுக்குக் கோயில் சமைப்பித்துப் பூசைசெய்து, அப்பூசையின் பயனையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தனள்; முன்பு சண்பகமாலைபோல் வந்து தன்னிடரைதீர்த்துத் தன்னைத் தாபதப்பள்ளியிலே சேர்த்துப் பாதுகாத்த தெய்வத்திற்கு அது தங்கும் புறங்காட்டிலே கோயில் சமைப்பித்தாள்; தன்னை யெடுத்துப்போந்த மயிற்பொறியைத் தான் எப்பொழுதுங் காணும்படி தானுறையுமாடத்தே யெழுது வித்தாள்; சீவகன் பிறந்தவிடம் சுடுகாடாகக் கிடவாதபடி சாலை யாக்கி, அவ்விடத்து ஐந்நூற்றைந்து பிள்ளைகளுக்கு நாடோறும் பாலும் அன்னமும் உண்பிக்கும் படி செய்வித்தாள்; சுநந்தைக்கு உபசாரமொழிகூறி மேம்பாடுறு வித்தாள்; தன்னைவணங்கிய காந்தருவதத்தைமுதலிய எண்மரை யும் எடுத்துத்தழுவி, “உலகா ளுஞ்சிறுவரைப் பெறக்கடவீர்” என்று பணித்தாள். இங்ஙனம் தான் செய்யவேண்டியவற்றைச் செய்துமுடித்துப் பின்னர்ச் சீவகனையழைத்து அருகேயிருத்தி அவனுக்குத் தரு மோபதேசஞ்செய்து தான் துறக்கவெண்ணியதைத் தெரிவித்து உடம்பாடுபெற்றுச் சிவிகையேறிச் சுநந்தையோடும், துறக்க விரும்பிய மற்றை மகளிரோடுஞ் சமீபத்துள்ள ஒருதவப்பள்ளி யைச் சார்ந்து, ஆங்குத் தவஞ்செய்துகொண்டிருக்கும் பம்பை யென்பவளைத்தொழுது, “அடிகளே! எம்மையெல்லாம் பிறவிக் கடலினின்றுங் கரையேற்றுவீர்” என்று பிரார்த்தித்து, அவள் கூறிய அறமொழிகேட்டுத் தீக்ஷைபெற்று விதிப்படி துறந்து அவ்விடத்தே தவஞ்செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வாறிருக்க, பின்பு ஒருநாள் சீவகன் அத் தவப் பள்ளியைச் சார்ந்து, விசயை, சுகந்தை இருவரையுந் தரிசித்து வந்து, தேவிமாரெண்மரோடும் நீர்விளையாட்டுநிகழ்த்தி, இளவேனில் முதலிய ஒவ்வொருபருவத்திலும் அவர்களோடும் இன்புநுகர்ந்து செல்லாநிற்கையில், தேவியரெண்மரும் கருப்பமுற்றுத் தனித் தனியே ஒவ்வொரு புத்திரரைப்பெற்றார். காந்தருவத்தை, குண மாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை யென்னுந் தேவியர்புதல்வரெண்மருக்கும் முறையே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தbன்று பெயர் களிடப்பட்டன. அப்புதல்வர் வளர்வுற்று, ஐந்தாவது பிராயத்தில் வித்தியாரம் பஞ் செய்யப் பெற்று, முறையே கலைகள்கற்று, படைக் கலம் பயின்று, ஊர்திக ளூர்ந்து மேன்மையடைந்தார். அப்பொழுது சீவகனுக்கு நாற்பத் தைந்தாவது பிராயஞ்சென்றது. பின்னர்ஒருநாள் மல்லிகைமாலையென்பவள்வந்து சீவக னைவணங்கி, “அரசே! சோலை நிறையப்பூத்து அழகெய்தியது; அதனைக் கண்டருள்க” என்ன, சீவகன் தேவியர்சூழ அச் சோலை யையடைந்து எல்லாவளங்களையுந் தான்கண்டு தேவியர்க்குக் காட்டி ஒருபலாமரத்தின் நீழலையடைந்து ஒருபக்கத்திருந்தான். அப்பொழுது அவ்விடத்தே ஓராண்குரங்கு தன்னோடு பிணங்கிய தன்காதன்மந்தியை மகிழ்விக்கும் பொருட்டுப் பலாப்பழமொன் றையெடுத்துக் கீறிச் சுளைகளை அதற்குக்கொடாநிற்கையில், அச் சோலைகாப்பானாகிய ஒருவன்வந்து அக் கனியைக்கவர்ந்து அக்கடுவனையும் மந்தியையும் ஓட்டித் தான் உண்டு மகிழ்ந்தான். அதனை ஆங்கிருந்த சீவகன் கண்டு செல்வத்தில் மிகவுமருவருப் புற்று, “கைப்பழமிந்தமந்தி அரசையிழந்த கட்டியங்காரனை யொத்தது; இச் சிலதன், அக் கட்டியங்காரனைத் துரந்து அரசை யெய்திய என்னையொத்தனன். வலியான் கவர்ந்து நுகர்தற்குரிய இச்செல்வத்தால் அடையும் பயனென்னை” என்றெண்ணித் துறக்குஞ்சிந்தையனாய்த் தன்மாளிகையடைந்து ஸ்நாநஞ்செய்து அறுசுவையடிசிலுண்டு முகவாசங்கொண்டு தேவிமார் களோடுங் கோயிலைச்சார்ந்து அருகக்கடவுளைவணங்கித் துதித்து வலமாக வந்தான். வந்தவன் அவ்விடத்து அசோகமரத்தின்கீழே பளிக்குக்கன் மேலே சாரணரிருவர்நிற்பக்கண்டு, அவரைத் தரிசித்து வணங்கி வாழ்த்தி, அவரைநோக்கி, “அடிகளே! பிறப்பினையொழிக்கும் வழியறியாதேன் பலபிறப்புகளிலுஞ் செய்து கொண்ட தீவினை கெடும்படி தவஞ்செய்து ஞானத்தையுடையுமாறு அருளுமின்” என்று பிரார்த்திக்க, அவருள் இரத்தினப்பிரபையென்பவர், “அரச னே! கேட்பாய்” என்று, தவத்தாற் பெறுகின்ற மக்கள் யாக்கை யையும், அந்த யாக்கை நூறியாண்டும் நிலைபெற்று நில்லாது கருப்பமுதலாக அழிகின்ற அழிவையும், நரககதி விலங்குகதி மக்கட்கதி தேவகதியென்கின்ற நாற்கதித் துன்பத்தையும், துணியப்படும் பொருளையும், அப்பொருளைத் துணியுந் துணிவையும், சீலத்தையும், தானத்தையும், அச்சீலத்தாலுந் தானத்தாலும் பெறப்படும் பயனையும், வீட்டிலக்கணத்தையும் விளங்க விரித்துக்கூறினர். யாவற்றையும் சீவகன் விரும்பிக்கேட்டு, “சுவாமி! அடியேனுடைய முற்பிறப்பையும், அப் பிறப்பிற்செய்த பாவத்தையும் அருளிச்செய்க” என்ன, அவர் கூறுவாராயினர். “தாதகியென்பதொரு நாட்டிற் பூமிமாதிலகமென்னுநகரில் அரசன் பவணமாதேவனென்பான்; அவன் மனைவி சயமதி யென்பாள்; அவர்புத்திரன் அசோதரனென்பான். அவனுக்குத் தந்தைதாயர் இலக்கணமைந்த மகளிரை மணஞ் செய்விக்க, அவ்வசோதரன் அம்மனைவிகளோடும் இன்புற்றொழுகு நாட்களிலே, ஒருநாள் அவன் அம்மனைவியரோடும் நீர் விளையாடுதற்கு ஒரு தடாகத்தை அணுகியபொழுது, அவன் மனைவியர் ஆங்குள்ள தாமரைமலரில் ஒளித்திருக்கும் அன்னக்குஞ்சுகளைக் கண்டு “இவற்றைப் பிடிப்பித்துத் தருக” என்று அவனைவேண்ட, அசோதரன் தன்னருகேநின்ற ஏவலாள னொருவனைக்கொண்டு, அவற்றுளொன்றைப் பிடிப்பித்து அம்மாதர் களுக்குக் கொடுத்த னன். அவர்கள் அதற்குப் பாலூட்டித் தமதுமார் போடணைத்துப் பாதுகாத்து வந்தார். இதனை ஒருநாட் பவணமா தேவன் கண்டு, நடுநடுங்கி, அசோதரனால் விளைந்தமை தெரிந்து, சினந்து, அவனை வருவித்து, நேரேயிருத்திப் பலவறம்போதித்து, மைந்தனே! பறவைகளையும், மிருகங்களையுந் தங்கிளையினின்றும் பிரித்துக் காவல்செய்து வைத்தோர், மறுமையில் தாமுந் தங்கிளையி னின்றுநீங்கிப் பிறராற் காவல்செய்யப்படுவர்” என்று கூற, அசோ தரன்கேட்டு மிகவுமஞ்சி, அவ்வன்னப்பார்ப்பைத் தன்மனைவி யரிடத்தினின்றும் விடுவித்து, அன்று பிடித்த தடாகத்தே போக விட்டுத் தந்தையைப்பணிந்து, “அடியேன் துறந்து தவஞ்செய்வல்” என்ன, அரசன், “மைந்தனே! உலகைக்காத்துப் பின் துறவினை யடைதி என்று வற்புறுத்திக்கூற, அதனை அவன் மனங்கொள்ளானாய்த் தந்தையை யுடன்படுவித்து விடைபெற்றுத் துறவிற் சென்றான். அவ்வசோதரன் நீயே” என்றுகூறி மேற்செய்தி கூறுஞ் சாரணர், “அங்ஙனந் துறவிற் சென்றநீ தவஞ்செய்து மறுமையில் ஸகஸ்ராரமென்னுங் கற்பத்து இந்திரனாய் அரசுபுரிந்து இங்கே அவதரித்தாய்; அன்னப்பார்ப்பைக் கிளையினின்றும் பிரித்துச் சிறைவத்தமையால் நீயுங் கிளை யினின்றும் பிரிந்து சிறைகொள் ளப் பட்டாய்” என்று கூறக்கேட்டு அஞ்சிப் பதைபதைத்து துறக் குஞ்சிந்தையனாய்ச் சீவகன் அவரை வணங்கித் துதித்தான். அப்பொழுது அச் சாரணரிருவரும் எழுந்து விசும்பாறாகத் தாங் குறித்தவிடஞ் சென்றார். உடனே சீவகன் தேவிமாரோடுந் தன்மாளிகையடைந்து தன் கருத்தை யாவருமறியக்கூறி, நந்தட்டனையழைத்து “நீயிவ்வுல காள்வாய்; நான் துறப்பேன்” என்ன, அவன், “இவ்வற்ப வாழ்வை வேண்டேன்; நின்றிருவடியை வழிபட்டுவாழும் வாழ்வையன்றோ அடியேன் வேண்டுவது” என்றான். பின்பு தன்புதல்வன் சச்சந்தனை யழைத்து அவனுக்கு இராசதருமங்கள் பலவற்றையுங் கூறி மணி முடிசூட்டி அவனையரசாக்கி, தம்பிமார்புதல்வருக்கும், தோழர் புதல்வருக்கும் உரிய சிறப்புகளியற்றி, தான் துறத்தல் கேட்டுப் பிரிவாற்றாது “யாமும் நின்னோடு துறப்பேம்” என்று கூறிய தேவி மாரெண்மரையும் விசயைபாற் சேர்த்துத் துறப்பித்து, தன்பிரிவை யெண்ணித் தேயத்தாரும், நகரத்தாரும் மற்றையாரும் விம்மி விம்மிப் பிரலாபித்தழவுந் தான் ஒருவரையும் நோக்கானாய்த் தேவர்கள் தாங்கிச்செல்லுஞ் சிவிகையூர்ந்து சமவசரணமடைந்து ஸ்ரீவர்த்தமான சுவாமிகளைத் தரிசித்துச் சுதன்மரென்னுங் கணதரரால் விதிப்படியே துறந்து விபுலகிரியில் தவஞ்செய்து கருமக்ஷயம்பண்ணி யாவருக்குந் தருமோபதேசஞ்செய்து எல்லா வுலகத்திற்கும் உச்சியிலுள்ளதாகிய சித்தக்ஷேத்திரத்தையடைந்து வீடுபெற்றான். பின்பு அவன்மேனி அக்கினியிந்திரனாற் கருப்பூர விநாசம்போலே மறைந்தபின்பு, எல்லாவுலகத்தாருங்கூடிப் பஞ்ச கல்யாணத்துள் ஒன்றாகிய பரிநிர்வாணமென்னுங் கல்யாணத்தை விதிப்படி செய்தார்கள். தேவிமாரெண்மரும் தவஞ்செய்து மறுமையில் இந்திரராய் இன்புற்றனர். நந்தட்டனும், தோழருந் தவஞ்செய்து மறுமையிற் றேவராய்ச் சுவர்க்கம் பெற்றனர். சீவகன் சரித்திரச்சுருக்க முற்றிற்று. அபிதாநவிளக்கம் அச்சணந்தி - சீவகனாசிரியன் அசலகீர்த்தி - கனகமாலையின் சகோதரருளொருவன் அசலன் - புத்திசேனன்பிதா அசனிவேகம்-அரசன்பட்டத்துயானை அசோதரன் - சீவகனுடைய பூர்வசன்ம நாமதேயம் அநங்கமாலை - ஓர்நாடகப்பரத்தை அநங்கவிலாசினி-கனகமாலைதோழி அரணபாதம்-சினாலயமுள்ள ஓர்மலை அருஞ்சயன்-விசயைபாட்டன் அலங்காராமாலை-இலக்கணை தோழி ஆரியநந்தி-சீவகனாசிரியன் இராசாமாபுரம்-சீவகனகர் இலக்கணை-சீவகன் மனைவிகளொருத்தி உருத்திரதத்தன்-சச்சந்தன் மந்திரி உலோகமாபாலன்-சீவகனாசிரியன்; பதுமைசகோதரன் ஏமமாபுரம்-தடமித்தனகர் ஏமாங்கதம்-சீவகனாடு ஐஞ்ஞூற்றுவர்-கச்சந்தனது அகப்பரிவாரமகளிர்; இவர்கள் புதல்வரும் சீவகன் தோழருமாகிய வீரர். கட்டியங்காரன் - சச்சந்தன் மந்திரி, இவன் சச்சந்தனைக் கொன்று இராச்சியத்தைக் கவர்ந்துக் கொண்டவன். கதம்பன் - கனகமாலையின் சகோதரருளொருவன் கந்துக்கடன் - சீவகனை வளர்த்த வணிகன்; சீவகன் புதல்வருளொருவன் கமலை - விமலைதாய் கலுழவேகம் - காந்தருவத்தைபிதா, இவன் வெள்ளிமலையிலுள்ள வித்தியாதரராசன் கனகபதாகை - சுரமஞ்சரி தோழி கனகமாலை - சீவகன் மனைவிகளுளொருத்தி கனகமாலையின் சகோதரரைவர்:- 1. விசயன் 2. கதம்பன் 3. கனகன் 4. அசலகீர்த்தி 5. சேனன் கனகன் - கனகமாலையின் சகோதரரிலொருவன் காந்தருவதத்தை - சீவகன் மனைவிகளுளொருத்தி காமினி - ஆகாசகாமினியென்னும் ஓர் வித்தை குணமாலை - சீவகன் மனைவிகளுளொருத்தி குபேரதத்தன் - சுரமஞ்சரிபிதா குபேரமித்திரன் - குணமாலைதந்தை குருகுலம் - சீவகன் பிறந்தகுலம் குருதத்தை - ஸ்ரீதத்தன் (சீவகன் தோழன்) தாய் கூனி - சண்பகமாலை கேமசரி - சீவகன் மனைவிகளுளொருத்தி கேகமாபுரம் - சுபத்திரனூர் கோதாவரி - நந்தகோன் மனைவி கோவிந்தன் - விசயை சகோதரன்; நந்தகோன்; சீவகன் புத்திரருளொருவன் கோவிந்தை - நந்தகோன் புதல்வி, இவள் பதுமுகன் மனைவி சங்கவெண்மலை - சுதஞ்சணன்மலை சச்சந்தன் - சீவகன்பிதா; சீவகன்புதல்வருளொருவன் சண்பகமாலை - விசயை தோழியாகிய கூனி சந்திராபம் - தனபதிநகர் சந்திரோதயம் - சுதஞ்சணனகர் சயமதி - பவணமாதேவன் மனைவி சலநிதி - சீவகன்றோழர் ஐஞ்ஞூற்றுவருளொருவன் சாகரதத்தன் - விமலைபிதா சாகரன் - ஸ்ரீதத்தன் (சீவகன்றோழன்) பிதா சீதத்தன் - இராசமாபுரத்துள்ள ஓர் வணிகன், இவன் வெள்ளிமலையிலிருந்து காந்தருவதத்தையை அழைத்து வந்தவன்; சீவகன்றோழருளொருவன்; கோவிந்த மகாராசன் பிதா; கோவிந்த மகராசன் புத்திரன் சீவகன் - இக்காப்பியத்தலைவன் சீவகன் புத்திரரெண்மர் 1. சச்சந்தன் 2. சுதஞ்சணன் 3. தரணி 4. கந்துக்கடன் 5. விசயன் 6. தத்தன் 7. பரதன் 8. கோவிந்தன் இவ்வெண்மரும் முறையே காந்தருவதத்தை முதலிய எண்மரிடத்தும் பிறந்தோர் சீவகன் மனைவிகளெண்மர் 1. காந்தருவதத்தை 2. குணமாலை 3. பதுமை 4. கேமசரி 5. கனகமாலை 6. விமலை 7. சுரமஞ்சரி 8. இலக்கணை சீவகன் றோழரைஞ்ஞூற்றுநால்வர் சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் ஆகிய இந்நால்வரும், ஐஞ்ஞூற்றுவரும். (ஐஞ்ஞூற்றுவர் - அகப் பரிவார மகளிர் ஐஞ்ஞூற்றுவருடைய புத்திரர்) சுதஞ்சணன் - சீவகனுபதேசத்தால் நாய்ப்பிறப்பொழிந்து இயக்கவடிவம் பெற்றோன்; குணமாலை புதல்வன் சுதன்மர் - பதினொருகணதரரிலொருவர். இவர் சீவகன் சரித்திரத்தைச் சேணிக மகராசனுக்கு முதலிற் கூறியவர் சுநந்தை - சீவகனை வளர்த்த தாய் சுபத்திரன் - கேமசரி பிதா சுமதி - சுரமஞ்சரி தாய் சுரமஞ்சரி - சீவகன் மனைவிகளுளொருத்தி சுரமை - சுரமஞ்சரி சேணிமகராசன் - மகததேயத்தரசன் சேனன் - கனகமாலை சகோதரருளொருவன் தக்கநாடு - கேமமாபுரத்தையுடையயதேயம் தடமித்தன் - கனகமாலை பிதா தத்தன் - சீவகன் புத்திரருளொருவன் தரணி - சீவகன் புத்திரருளொருவன் தரன் - கலுழவேகனிடத்துள்ள ஓர்வித்தியாதரன், இவன் கப்பல் முழுகியதுபோல் ஒருமாயஞ்செய்து ஸ்ரீ தத்தனைக் கலுழவேகன்பால் அழைத்துச் சென்றவன் தருமதத்தன் - சச்சந்தன் மந்திரி தனபதி - பதுமைபிதா தனபாலன் - பதுமுகன் தந்தை தாதகி - பவணமாதேவன்றேயம் தாரணி - கலுழவேகன் மனைவி திலோத்தமை - பதுமைத்தாய்; புத்திசேனன்றாய் தெய்வம் - விசயைக்கு உதவிசெய்தற்குக் கூனியாகிய சண்பகமாலை வடிவுகொண்டுவந்த தெய்வம் தேசிகப்பாவை - ஓர் பரத்தை தேவதத்தன் - சீவகன்றோழர் நால்வருளொருவன் நந்நகோன் - பசுத்தலைவன் நந்தட்டன் - கந்துக்கடன் புதல்வன், இவனைச் சீவகன் தம்பியென்று கூறுவர் நபுலவிபுலர் - சீவகன் றம்பிமார், இவர் விசயையின் புதல்வரல்லர், காமக்கிழத்தியரிடத்துச் சச்சந்தனுக்குப் பிறந்தோர் நரபதிதேவன் - கேமமாபுரத்தரசன் நரதேவன் - தடமித்தன் நளினை - கனகமாலைத்தாய் நாகமாலை - சச்சந்தனது அகப்பரிவாரத்துள்ளாளொருத்தி நிப்புதி - கேமசரி தாய் நிமித்திகன் - சச்சன்மந்திரி நூற்றுவர் - கட்டியங்காரன் புத்திரர் பஞ்சநமஸ்காரம் - ஐந்து மந்திரம் பஞ்சவர் - சந்திர ஆதித்திய கிரக நக்ஷத்திர தாரகைககள், இவர்கள் ஜ்யோதிஷ்கரென்பர் பதுமுகன் - சீவகன்றோழர் நால்வரிளொருவன் பதுமை - ஸ்ரீ தத்தன் மனைவி, சீவகன் மனைவிகளுளொருத்தி பம்மை - ஓர் தவப்பெண் பரதன் - சீவகன் புதல்வரிலொருவன் பல்லவதேயம் - தனபதி நாடு பவணமாதேவன் - அசோதரன்பிதா பவித்திரை - பதுமுகன்றாய் பன்றிப்பொறி - இலக்கணையின் விவாகத்தின் பொருட்டுக் கோவிந்த மகாராசனால் இயற்றுவித்த வராகயந்திரம் பாணிமுகம் - உயிர்போமுகங்களிலொன்று பிரீதிமதி - தேவதத்தன்றாய் புத்திசேனன் - சீவகன்றோழர் நால்வருளொருவன் புதவி - கோவிந்தமகராசன் மனைவி பூமிமாதிலகம் - பவணமாதேவனகர் பூரணசேனன் - கட்டியங்காரன்படைத்தலைவன் மத்திமதேயம் - தடமித்தன் றேயம் மதனன் - கட்டியங்காரன் மைத்துனன் மதிதரன் - தனபதி மந்திரி மதிமுகம் - ஒருவித்தை மயிற்பொறி - விசயை ஊர்ந்துசென்ற ஒரு யந்திர மயில் மன்மதன் - மதனன் தம்பி மாலை - குணமாலைத் தோழி வசுந்தரி - தடமித்தன் கோயிலுள்ள ஓர் வேலைக்காரி வளையசுந்தரம் - தடமித்தன் பட்டத்து யானை வனகிரி - சினாலயமுள்ள ஓர்மலை வாரணவாசி - அச்சணந்தி ஆசிரியனகர் விசயதத்தன் - தேவதத்தன்றந்தை விசயன் - கனகமாலை சகோதருளொருவன்; சீவகன் புத்திரருளொருவன் விசயை - சீவகன் நற்றாய் விநயமாலை - குணமாலை தாய் விமலை - சீவகன் மனைவிகளுளொருத்தி விலாசி - இலக்கணை தோழி வீணாபதி - காந்தருவதத்தை தோழி வெள்ளிமலை - கலுழவேகன்மலை யவதத்தன் - ஸ்ரீதத்தன் பிதா இலம்பகவகராதி அவையடக்கம் இலக்கணையாரிலம்பகம் கடவுள்வாழ்த்து கனகமாலையாரிலம்பகம் காந்தருவதத்தையாரிலம்பகம் குணமாலையாரிலம்பகம் கேமசரியாரிலம்பகம் கோவிந்தையாரிலம்பகம் சுரமஞ்சரியாரிலம்பகம் நாமகளிலம்பகம் பதிகம் பதுமையாரிலம்பகம் பூமகளிலம்பகம் மண்மகளிலம்பகம் முத்தியிலம்பகம் விமலையாரிலம்பகம் “மூவா முதலா” என்னுங் கவியின் உரையில் எழுதப்பட் டுள்ள அளவியற்சந்தம் முதலியவற்றின் இலக்கணங்களாவன:- 1. தனித்தனியே நான்கெழுத்துச்சிறுமையும் இருபத்தா றெழுத்துப் பெருமையும் பெற்று, எழுத்துளவொத்து, குருவும் இலகுவும் ஒத்த அடிகளால் வருவன அளவியற்சந்தம். 2. குருவும் இலகுவும் ஒவ்வாதனவாய் மற்றவை ஒத்த அடிகளால் வருவன அளவழிச்சந்தம் 3. இருபத்தாறெழுத்து முதலாக எழுத்தளவொத்து, குருவும் இலகுவும் ஒத்த அடிகளால் வருவன அளவியற்றுண்டகம் 4. குருவும் இலகுவும் ஒவ்வாது மற்றவை ஒத்துவருவன அளவழித்தாண்டகம் 5. சந்தவடியும் தாண்டகவடியும் ஒத்து வழங்குவன சமசந்தத்தாண்டகம். 6. சந்தவடிமிக்கும் தாண்டகவடி மிகாதும் வருவன சந்தத்தாண்டகம் 7. தாண்டகவடி மிக்கும் சந்தவடி மிகாதும் வருவன தாண்டகச்சந்தம் “ஈரிரண் டாதி யிருபத்தா றந்தமாச் சாரு மெழுத்தின சந்தமாஞ் - சீரொத்த மூவொன்ப தாதியாய் முற்றின தாண்டகமென் றோதினார் தொல்லோ ரெடுத்து” “சந்தமுந் தாண்டகதுந் தம்முளள வொத்தலகு வந்த முறைமை வழுவாத - முந்தும் அளவியலா மென்றுரைப்ப ரவ்வாறன் றாகில் அளவழியா மென்ப ரவர்” “சந்த சரணமுந் தாண்டகத்தின் பாதமும் வந்து மயங்கி வழுவிகந்த - செந்ததமிழ்கள் ஈண்டு வடநூற் புலவ ரியற்சந்தத் தாண்டக மென்றுரைப்பர் தாம்.” இவற்றின் விரிவெல்லாம் யாப்பருங்கலவிருத்தியுட் காண்க. “திங்கண்மும் மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோ னன்கினி தரச னாள்க நாடெலாம் விளைக மற்று மெங்குள வறத்தி னோரு மினிதூழி வாழ்க வெங்கள் புங்கவன் பயின்ற நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே.” சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியருரை கடவுள் வாழ்த்து 1. மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே. இத்தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமு மாதலானும், “முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி” (தொல் சிறப்பு) என்றதனால் அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும், பிறர்கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந்நூலிற் கூறிய விலக்கணமே இதற்கு இலக்கணமென்றுணர்க. அவ்விலக்கணங்களிற் செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பா நான்கென்றும், அவற்றை அறம்பொருளின் பத்தாற் கூறுகவென் றுங்கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டுந் தொடர்நிலைச் செய்யுட்கிலக்கணமென்று கூறுகின்றுழி “இழுமென் மொழி யான் விழுமியது நுவலினும்” (தொல். செய். 238) என்பதனால் “மெல்லென்ற சொல் லான் அறம்பொருளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப் பப் பழையதோர்கதை மேற் கொச்சகத்தாற் கூறின் அதுதோல்” என்று கூறினமையின், இச்செய்யுள் அங்ஙனங் கூறிய தோலாமென்றுணர்க. இச்செய்யுள் முன்னோர்கூறிய குறிப்பின்கண் வந்த செந் துறைப் பாடாண் பகுதியாம். இதனானே “யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது” (தொல். செய். 49) என்பதற்குத் தேவபாணியுங் காமமு மேயன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று. முந்து நூல்களிற் காப்பியமென்னும் வடமொழியால் தொடர் நிலை செய்யுட்கட்குப் பெயரின்மையும் இதற்குப் பின்புகூறிய நூல்கள் இதற்கு விதியுண்மையு முணர்க. இனி இத்தொடர்நிலைச்செய்யுளை இன்பமென்ப. அவர் இன மென்று காட்டிய உதாரணங்கடாம் அவர்சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது ஒழிந்தபாக்கட்கும் இனமாதற் கேற்ற லானும், துறையை விருத்தமாகவுந் தாழிசையை விருத்தமாகவும் ஓதுதற்கு அவை யேற்றமையானும், “மூவாமுதலா” என்னுங் கவி முதலியன தாழம்பட்டவோசையான் விருத்தமாயுஞ் சீர்வரையறை யானும் மிகத்துள்ளியவோசையானுந் துறையாயுங் கிடத்தலின், இவற்றை விருத்தக்கலித்துறையெனல் வேண்டும்; அதுகூறவே துறையும் விருத்தமுமெனப் பகுத்தோதிய இலக்கண நிரம்பாதா மாகலானும் இனமென்றல் பொருத்தமின்று. இச்செய்யுட்களின் ஓசைவேற்றுமையும் மிக்குங் குறைந்தும் வருவனவுங் கலிக்கேயேற்ற லிற் கொச்சக மென்றடங்கிற்று. “யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது” என்பதனால், இக்கவியும் மேற்கவியும் முன்னிலையன்றியுந் தேவர்ப்பராயின. இனி அளவியற்சந்தம், அளவழிச்சந்தம், அளவியற்றாண் டகம், அளவழித்தாண்டகம் சமசந்தத்தாண்டகம், சந்தத்தாண் டகம், தாண்டகச் சந்தமென அடக்குவார்க்கு அவற்றுள்ளுஞ் சிலவன்றி முழுது மடங்காமை யுணர்க. மூவா முதலா வென்பன மூத்த முதலியவென்னும் பெயரெச் சங்களின் எதிர்மறையடுக்கு. “எதிர்மறுத்து மொழியினும் பொரு ணிலை திரியா” (தொல். வினை 39) என்பதனால் உலகமென்னும் வினைமுதற் பொருளொடு முடிந்தன. “முதலா வேன தம்பெயர் முதலும்” (தொல். மொழி 33) என்பதனான் முதலுமென் பதோர்வினை உடம்பாட்டிற்குளதாம். ஆசிரியர் “கால முலகம்” (தொல். கிளவி. 58) என்றும் பிறாண்டுஞ் சூத்திரஞ் செய்த லின் அதுவடமொழியன்று. ஈண்டு உலகமென்றது உயிர்க்கிழவ னை; “உலகமுவப்ப” (முருகு.1) என்றது போல. ஒரு மூன்று மென்ற குற்றியலுகரம் மெய்யொடுங் கெட்டு, “முதலீ ரெண்ணினொற்று ரகர மாகு, முகரம் வருத லாவயினான” (தொல். குற்றி. 33) என்னும் விதியும்பெற்று, “அளந்தறி கிளவி” (தொல். குற்றி. 41) என்னுஞ் சூத்திரத்துத் “தோன்றுங் காலை” என்ற இலேசான் முடிந்தது. ஒரு மூன்று மேத்த எய்தியென்க. உம்மை “இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி வினைப்படு தொகுதியின்” (தொல். கிளவி. 33) வந்தது. உலக மென்னும்பெயர் மூன்றென்னும் பெயர்ப்பயனிலை கொண்டு அதுதான் ஏத்தவென்னும் வினைப் பயனிலை கொண்டது. வருத்தமாகிய குறிப்புணர்த்திய தாவென்னு முரிச்சொல் வினைக்கு முதனிலையாய்த் தாவாதவெனப் பெயரெச்ச மறையாய் இன்பமென்னும் பெயரொடு முடிந்தது. ஏத்தத்தாவாத வென்பது “வினையெஞ்சுகிளவியும் ஞாங்கர்க் கிளர்ந்த வல்லலெழுத்து மிகுமே” (தொல். உயிர்.2) என்பதனான் ஒற்றுமிக்கது. தாவாதவின்ப மென்பது உடம்படுமெய்யாயிற்று. இன்பமென்னும் பெயர் தலையாயது என்னுங் குறிப்புப்பெயர் கொண்டது. “அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்” (தொல். புள்ளி. 19) என்பதனான் மகரம் நகர மாயிற்று. தன்னினெய்தி யென்ற இன் காரகவேதுப் பொருட் கண்வந்த ஐந்தா முருபு. தன்னிலெய்தி யென்று பாடமாயின், மணியினதொளியும் மலரினது நாற்றமும்போலத் தன்னுள்ளே பெற்றென்க. எய்தியென் நின்ற செய்தெனெச்சங் காரணகாரியப் பொருட்டாய் நின்ற வென்னும் பெயரெச்சவினையொடு முடிந்து அது குண மென்னும் பொருட் பெயரொடுமுடிந்தது. ஓவா தென்னும் எதிர்மறையெச்சமும் நின்ற வென்பதனொடு முடியும். குணமாவன: தாவாதவின்பமென்பதனாற் பெற்ற அநந்த சுக மொழிந்த ஏழுகுணங்களும். அவை அநந்தஞானம், அநந்தவீரியம், அநந்ததரிசனம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயு வின்மை, அழியாவியல்பு என்பன. அத்து இரண்டாமுரு பின்கண்வந்த சாரியை. “அத்தேவற்றேயாயிரு மொழிமே, லொற்றுமெய் கெடுதறெற்றென்றற்றே” (தொல். புணரி. 31) என்பதனான் மகரங்கெட்டு “அத்தி னகர மகரமுனை யில்லை” (11.11.23) என்பதனான் அகரங்கெட்டு முடிந்தது. “குற்றிய லுகரமு மற்று” (11.11.3) என்பதனான் வருமொழியி லொகர மேறிற்று. ஒண்ணிதி - பண்புத்தொகை, ஒண்ணிதிச்செல்வன் – வீடாகிய விளங்கிய நிதியையுடையசெல்வன்; இகரவீற்று வேற்றுமைச் சொல்லாதலின் வல்லெழுத்துமிக்கது. செல்வனென்றார் அழியாத வின்பத்தை நுகர்தலின். என்பவென்னுமுற்றுச்சொல் சாதுக்களென்னும் பெயர் தொக்குநின்றதனொடுமுடியும்; தோன்றா வெழுவாயுமாம்தேவுந் தெய்வத்துகோர்பெயர்; நான்கனுருபு விரிக்க. ஆதியாகிய வென்க. சேவடி பண்பு மாத்திரையாய்க்குறைந்த சொல்லாதலின் மருவின் பாத்தியதாய் நின்றது. சேவடி சேர்து மென ஒற்றடாதுநின்றது, இரண்டாவதற்கோதியதிரிபில்லன பிறவால். சேர்தும்-பன்மைத்தன்மை. ஈண்டொருவரைக் கூறும் பன்மை. அன்று - அசை, ஏகாரம் - ஈற்றசை. (இதன்பொருள்) தேவர்களுக்காதியாகிய தேவனாவன் கெடாத இன்பந்தனக் கொப்பற்றதனை அந்தமுமாதியுமில்லாத மூன்றுலகு மேத்தத் தன்னாற்பெறுகையினாலே தன்னைவிட்டு நீங்காத குணங் களை யுடையனாகிய ஒண்ணிதிச்செல்வனென்பர் சாதுக்கள்; ஆதலின் யாமும் இவ்விலக்கியம் இனிதுமுடிதற் பொருட்டு அவன்திருவடிகளை வணங்குவேமென்றாரென்க. இது அருகசரணம், சித்தசரணம், சாதுசரணம், தன்மசரணமென்னு நான்கினுள் சித்தசரணம். இனித் தான் மூவாமுதலாக வேண்டியென்றும்; நாம் மூவா முதலாவேண்டியென்றும் வினையெச்சமாக்குவாருமுளர். அதற்கு எய்தி யென்பதனொடு முடிக்க. மேல்வருஞ்செய்யுட்கும் இவ்வாறுரைப்பின் உரைபெருகு மாதலின் இனி நல்லறிவுடையோர் உய்த்துணருமாறு சுருங்க வுரை க்கின்றோம். செம்பொன்னுங் கவியாற் குருக்கள் அருகனைவணங்குதலிற் றாம் சித்தனை வணங்கினார். குருக்கள் கூறுதலானும் அருகனை வணங்குதலானும் அதனை முன் வைக்கவெனின், அவர் இது நன்று இதனை முன்னேவைக்கவென்றலின் முன்னே வைத்தார். (1) 2. செம்பொன் வரைமேற் பசும்பொன் னெழுத் திட்ட தேபோ லம்பொற் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந் திருமூர்த்தி விண்ணோ ரம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம். இன் - ஐந்தாமுருபு உவமப்பொருள். எழுத்திட்டதென்றது ஒற்றுமைபடக் கிடந்ததற்கும், பிதிர்வென்றது சிறியவும் பெரியவுமாகிய வடுவிற்கும் உவமை. மேல் வெம்புமென எதிர்கால நோக் கிற்று. எல்லாரும் விரும்புஞ்சுடரென்று இளஞாயிறென்றலுமாம். இன் - உறழ்பொருவு. வைத்தவென வருவிக்க. (இ-ள்) ஆயிரத்தெட்டு மறுவை எழுத்திட்டாற்போலப் பிதிர்போல அணிந்து இளஞாயிற்றிலும் விளங்குமூர்த்தியுடைய தேவர்கண் முடிமேல் வைத்த அடியை யாமுஞ் சென்னியிலே வைப்பாமென்க. செம்மை பசுமை தொடைமுரண். ஈண்டு வண்ண வேறுபாடின்று. இது அருக சரணம். (2) 3. பன்மாண் குணங்கட் கினாய்ப்பகை நண்பொடி ல்லான் றொன்மாண் பமைந்த புனைநல்லற ந்துன்னி நின்ற சொன்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க நன்மாண்பு பெற்nற னிதுநாட்டுதன் மாண்பு பெற்றேன். சொல்-புகழ். குழு-ஆசிரிய உபாத்தியாயசாதுக்கள். (இ-ள்). உறவும் பகையிமில்லாத தான் கூறிய நற்குணங் கட்கிருப் பிடனாய்ப் பழையதாகிய மாட்சிமையமைந்த அறத் தையும், அதனைப் பொருந்திநின்ற குழுவினையுஞ் சரணாகச் சென்றுள சேர்ந்த நல்வினையுடை யேனாதலின், இக்கதையை உலகிலே நிலைபெறுத்து தற்கு நல்வினையுடையேனெனத் தெளிந்து கூறினாரென்க. இறைவன் அன்பிலனாயினும் அருஞ்சுரத்தின் மரம்போல் அடைந்தார்களித்தல் அவற்கியல்பு. இல்லாவென்று பாடமாயின் இல்லாவறமென்க. இனிக் குணங்கட்கிடனாய்ப் பகைநண்பில்லானெனிற் பிறர்க்குள்ளது இவற்கின்றென்றாகும்; “குணமென்னுங் குன்றேநின்றார்வெகுளி” என்றலின் இது சாதுசரணமுந் தன்மசரணமுங் கூறிற்று. (3) அவையடக்கம். 4. கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டா னற்பா லழியுந் நகைவெண்மதி போனி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். (இ-ள்) கல்லின் பகுதி யீன்ற மணியும் நிறைமதி போற் கலை கணிறைந்த சொல்லின் பகுதியீன்ற மறுவுங் கழுவா தொழிந்தால் நன்மை கெடும்; ஆதலிற் சான்றோர் தமதறிவாலே கழுவி அழகாக அமைத்துக்கொளற்பாலரா யிருந்தாரென்க. எனவே யான் அத்தன்மையனன்றென்பது சொல்லெச்சம், “சொல்லொடுங் குறிப்பொடுமுடிவு கொளியற்கை, புல்லிய கிளவி யெச்சமாகும்.”(தொல். செய். 206) என்றாராதலின். மறு வில்லா மதிக்கு மறுவடுத்தாற் போலக் கலைநிறைந்தசொற்கு அடுத்த மறுவாவது வழுவமைக் குஞ்சொல்; அதனைச் சங்கத்தார் ஆராய்ந்தமைகூறவே அவை யடக்க முணர்த்திற்று. மதிபோல் நிறைந்த மதியுமாம். (1) 5. முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கு முத்து மந்நீ ருவர்க்கும் மெனின்யாரவை நீக்க கிற்பா ரிந்நீர வென்சொற் பழுதாயினுங் கொள்ப வன்றே பொய்ந்நீர வல்லாப் பொருளால்விண் புகுது மென்பார். நிலத்தை படைத்தலுங் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழிலுமுடைமையின் முந்நீர் - ஆகுபெயர். இ-ள். பவளமுஞ் சங்கும் முத்துங் கடலிலே பிறந்தன; அவை பிறந்த அக்கடல் உவர்க்குமென்று கூறினும் அவற்றைக் கைவிடுவா ரில்லை. அதுபோல மெய்யாகிய புராணப்பொருளாலே வீடு பெறுவே மென்பார் எனது இவ்வாறுவர்க்குந் தன்மையை யுடைய சொல் தீதாயினும், அச்சொற்பொதிந்த பொருளாலே அச்சொல் லைக் கொள்வரெனத் துணிந்து கூறினாரென்க. (2) பதிகம் 6. மீனே றுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பிற் றானே றனையா னுளன்சீவக சாமி யென்பான் வானேற நீண்ட புகழான்சரி தம்மி தனைத் தேனூற நின்று தெருண்டாரவை செப்ப லுற்றேன். ஏறுயர்த்த-ஏற்றைமேம்படுத்தின. “கடல்வாழ்சுறவு மேறெ னப்படுமே” என்றார். சாமி-பாகதம். இ-ள். காமனைவென்ற பொற்பினையுடைய ஏறனையான் றான் ஒருவனுளன். அவன்யாரெனிற்சீவகசாமியென்பான் அவனது ஒழுக்கங் கேட்டோர் நெஞ்சிடத்தே நின்று இனிமைமிகும் படி தெளிந்தோர் அவையிலே இத்தொடர்நிலைச் செய்யுளைக் கூறலுற்றேனென்க. புகழானென்னும் பெயர் சொல்லுவான்குறிப்பான் அவனென்னுஞ் சுட்டுப் பெயர் மாத்திரையாயிற்று; “நாணி நின்றோள்” (அகநா. 16) என்றும், “அணங்கருங் கடவுளன்னோள்” (அகநா. 16) என்றும் அகத்திற் கூறினாற்போல. இது “பொருளொடு புணராச்சுட்டுப் பெயராயினும்” (தொல். கிளவி. 37) என்னுஞ் சூத்திரவிதி. மேல் இங்ஙனம் வருவன வற்றிற் கெல்லாமொக்கும். சீவகனை முற்கூறினார் கதைக்கு நாயக னாதலின். (1) 7. கோடாத செங்கோற் குளிர்வெண்குடைக் கோதை வெள்வே லோடாத தானை யுருமுக்குர லோடை யானை வாடாத வென்றி மிகுசச்சந்த னென்ப மன்னன் வீடாத கற்பி னவன்றேவி விசயை யென்பாள். செங்கோல்-பிறிதினியைபு நீக்கிய விசேடணமாயினுங் கோடாதவென்று அடையடுத்தலிற் கோலென்னுந் தன்மை யாயிற்று. வெண்குடை - இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம். உருமுக்குரல்போலுங் குரலையுடைய யானை. விடாத - விகாரம். இ-ள். செங்கோன் முதலியவற்றையுடைய மன்னன் குறையாதவென்றிமிகு சச்சந்தனென்பர்; அவன் தேவி விசயை யென்று பெயர் கூறப்படுவாளென்க. (2) 8. சேந்தொத் தலர்ந்த செழுந்தாமரை யன்ன வாட்கட் பூந்தொத் தலர்ந்த பசும்பொற்கொடி யன்ன பொற்பி னேந்தொத் திருந்த முலையின்னமிர் தன்ன சாயல் வேந்தற் கமுதாய் விளையாடுதற் கேதுவாமே. இ-ள். சிவந்து தம்மிலிணையொத்து அலர்ந்த தாமரையன்ன கண்ணினையும் பொற்பினையுந் தம்மிலொத்து அடிபரந்த ஏந்துமுலை யினையுமுடைய சாயலாள் வேந்தனுக்கு அமுதமாய்ப் புணர்ச்சிக்குக் காரணமாமென்க. அமிர்த கட்கினிதாகிய மென்மையுந் தன்னைநுகர்ந்தார் பிறிது நுகராமந் றடுக்குமென்மையு முடைமையின், அமிர்தன்ன மென்மை யென்றார். “சாயன் மென்மை” (தொல். உரி. 27) என்று பொதுப்படச் சூத்திரஞ்செய்தது ஐம்பொறியால் நுகருமென்மை யெல்லா மடங்குதற்கு. “மயிலன்னசாயல்,” (ஏலாதி 28) “சாயன் மார்பு” (கலி. 65) என ஒளிக்கும் ஊற்றிற்கும் வந்தன; பிறவுங் காண்க. சாயல்-ஆகு பெயர். மறுமை யிற்சென்று பெறும் அமுதமும் அவளெனக்கொண்டு மயங்கின மைதோன்றமீட்டும் அமுதாயென்றார். (3) 9. கல்லார் மணிப்பூ ணவன்காமங் கனைந்து கன்றிச் சொல்லாறு கேளா னனிசூழ்ச்சியுட் டோற்ற வாறும் புல்லார் புகலப் பொறிமஞ்ஞையிற் றேவிபோகிச் சொல்லா றிழுக்கிச் சுடுகாடவள் சேர்ந்த வாறும். நனி-விசேடித்தஉரிச்சொல். பொறி-இயந்திரம். சொல்லாறி ழுக்குதல்-வெற்றிமுரசுகேட்டுக்கலங்குதல். தேவி போகி இழுக்கிச் சேர்ந்தவாறு மெனமுடிவுழி அவளென வேண்டாமையின், அது தேவியைச் சுட்டாது, அங்ஙனம் அமுதாயவள் இங்ஙனமாயினா ளெனத் தேவரிரங்குதலின், முன்னிற்கவியை நோக்கித் தகுதிபற்றி வந்தது. இனிச் சாத்தியவள்வந்தா ளென்றாற்போலத் தேவியவ ளென வினைக்கொருங்கியன்ற தென்பாருமுளர்; அது வழக்கிற் கென்று மறுக்க. இ-ள். பூணவன் வேட்கைசெறிந்து அதிnல அடிப்பட்டு அமைச்சர் சொல் வழியைக் கேளானாய்ப் பகைவர் மனமகிழ எண்ணத்திலே மிகத்தோற்றபடியும் தேவிபோகி இழுக்கி அவள் சுடுகாட்டைச் சேர்ந்தபடியுமென்க. (4) 10. நாளுற்று நம்பி பிறந்தான்றிசை பத்து நந்தத் தோளுற்றொர் தெய்வந் துணையாய்த்துயர் தீர்த்த வாறுங் கோளுற்ற கோன்போல வன்கொண்டு வளர்த்த வாறும் வாளுற்ற கண்ணான் மகன்வாழ்கென நோற்ற வாறும். தோள்-கை, உற்று-உவமவாசகம்: “செப்புற்றகொங்கை” (திருச்சிற். 354) என்றார் பிறரும். “ஒழியாது” (தொல். தொகை. 15) என்னுமிலேசாற் கோனையென்னும் உருபு தொக்கது. அவனென்று கந்துக்கடனைச் சுட்டிற்று, கதையை உட்கொண்டு. அரசன் இறத்தற்கேதுவாகலின் ஈண்டும் வாளுற்ற கண்ணென்றார். வாழ்கென - வியங்கோள்விகாரம். நோன்பு - வேட்கையுள்ளது. இ-ள். நம்பி ஒன்பது திங்களும் நிறைந்து, திசைகளிற் பல்லுயிர் களும் வளர்தல் காரணமாகப் பிறந்தானாக; ஒருதெய்வம் கூனியது உருவாய்த்தன்கை தனக்குதவு மாறுபோலத் தேவிக்கு உதவித் துயரந் தீர்த்தபடியும், கொலையுண்ட சச்சந்தன் வளர்க்கு மாறுபோலக் கந்துக் கடனுட்கொண்டு வளர்த்தபடியும், கண்ணாள் நோற்றபடியுமென்க. (5) 11. நல்ல நாளுந்றென்றுமாம். நெஞ்சம் புணையாக் கலைமாக்கட னீந்தி யாங்கே வஞ்சம் மறவர்நிரை வள்ளல் விடுத்த வாறும் விஞ்சைக் கிறைவன் மகள்வீணையிற் றோற்ற வாறு நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்த வாறும். இ-ள். வள்ளல் தனது நெஞ்சு தெப்பமாகக்கலைகளாகிய கடலைக் கடந்து கரையேறி அப்பொழுதே மறவர்கொண்ட நிரை யைமீட்ட படியும், தத்தை யாழ்ப் பாடலிலே தோற்றபடியும், இருதலை யிமொத்தகாமத்தை நாகரைப்போல நுகர்ந்த படியுமென்க. கற்றபொழுதே பயன்கோட லருமையின் ஆங்கேயென்றார். மறவரைக்கொல்லாது உயிரைவழங்குதலின் வள்ள லென்றார். விஞ்சை-குணப்பண்பு பண்புடைப்பொருள்மேனின்ற ஆகுபெயர். ஒருமகளை வென்றானென்றால் இவன்தலைமைக் கிழிவென்று அவள்செய்தியாகக் கூறினார். நாகரோடுவமை ஓருடம்பாதலும் நீங்கல் வன்மையும் பற்றி. (6) 12. முந்நீர்ப் படுசங் கலறம்முர சார்ப்ப மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுட் டேங்கொள் சுண்ண மைந்நீர் நெடுங்கண் ணிருமங்கையர் தம்முண் மாறா யிந்நீர்ப் படியா மிவைதோற்றன மென்ற வாறும். அலற ஆர்ப்ப விளையாடும் விளையாட்டென்க. கடி-மிகுதி. தேங்கொள்சுண்ணம்-ஒளியுநாற்றமும் ஊறுமினிமை கொண்டசுண்ணம். தோற்றனம் “மோயின ளுயிர்த்த காலை” (அகநா. 5) என்றாற்போல வினையெச்சம் முற்றாய்த்திரிந்தது. இ-ள். மூதூரிற் புதுநீராலுண்டான விழவெடுத்தாடும் ஆட்டிலே இருவராகிய மங்கையர் சுண்ணத்தாலே மாறாய் இச்சுண்ணங்களைத் தோற்று இந்நீரிற்படியே மென்றபடியு மென்க. (7) 13. சுண்ணம் முடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி வண்ணந் நெடுங்கட் குணமாலையை வைது மாறிப் புண்மேற் புடையிற் புகைந்தாணுரு வியாது நோக்காள் கண்ணோக் குடைந்து கடிமாட மடைந்த வாறும். இ-ள். சுரமஞ்சரி சுண்ணந்தோற்றலாலே சோர்ந்து தோழி யாகிய குணமாலையைக்கண்ணுற்றுச் சீவகனை மழைவள்ள லென்றுவைது நெஞ்சழன்று அழகுகெட்டு ஆண்மக்கள் வடிவை ஓவியத்தும் நோக் காளாய்க் கன்னியாமாடத்தை அடைந்த படியுமென்க. மாறி வைதென மாறிற்று, “திங்களங்கதிர்” (சீவக. 898) “மாற்றமொன்று” (சீவக. 899) என்னுங் கவிகளை நோக்கி. (8) 14. பொன்றுஞ்சு மார்பன் புனலாட்டினுட் புன்க ணெய்தி நின்றெஞ்சு கின்ற ஞமலிக்கமிர் தீந்தவாறு மன்றைப் பகலே குணமாலையை யச்சு றுத்த வென்றிக் களிற்றை விரிதாரவன் வென்ற வாறும். அச்சம்-விகாரம். முன்புவெற்றியையுடையகளிறு. மார்பின் விசேடத்தால் உலகு புகழ்ந்த தார். இ-ள். திருத்தங்குமார்பன் புனலாட்டிலே உயிர்போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப்பார்த்துநின்று பஞ்சநமஸ்கார மாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும், அவன் அறஞ்செய்த அப்பகலே களிற்றை வென்றபடியுமென்க. (9) 15. தேனூறு தீஞ்சொற் குணமாலையைச் சேர்ந்த வாறுங் கோனூறு செய்வான் கருதிச்சிறை கொண்ட வாறும் வானா றிழிந்து மழைமின்னென வந்தொர் தேவ னூனா றொளிவே லுரவோற்கொண் டெழுந்த வாறும். வான்-வினையெச்சம். கருதியென்பது கருதவென நின்றது. “உரற்கால்யானை யொடித்துண்டு”(குறுந். 232) என்னுஞ் செய்தெனெச்சம் பிறவினை கொண்டாற்போல. சிறை-அன்னப் பார்ப்பைச் சிறைசெய்தது. ஓர்தேவன்-விகாரம். மழை-அவனூர்தி. ஆசிரியன் கூற்றை உட்கோடலின் உரவோன் அறிவுடையோனாயிற்று. இ-ள். உரவோன் தேனினதினிமை இடைவிடாத இனிய சொல்லையுடைய குணமாலையைச் சேர்ந்தபடியும், கட்டியங் காரன் கொல்லுதற்குக் கருத முற்பிறப்பிற் றீவினையாகிய சிறைவந்து அவனைக் கைக்கொண்டபடியும், ஒருதேவன் மழைமேலேறி மின் போல வான்வழியாக வந்திழிந்து அவனைக் கைக்கொண்டுபோனபடியு மென்க. அவனெனச்சுட்டுவருவித்து உரவோனைச் சுட்டாக்கலு மொன்று. (10) 16. தேங்காத மள்ளர் திரடோளிணை சிக்க யாத்த பூங்கச்சு நீக்கிப் புனைமான்கல நல்ல சேர்த்தி நீங்காத காத லுடையாய்நினைக் கென்று பின்னும் பாங்காய விஞ்சை பணித்தாங்கு விடுத்த வாறும். பூங்கச்சியாத்த கெடாதவீரர்; தோளிணையையுடைய வீரர். இவை இகழ்ச்சி கச்சு-சேலையின் மேற்கட்டினது. சிக்க-அகப்படக்கோல, திசைச் சொல். நீக்கி-அச்சிறையைநீக்கி. பின்னுமென்றது இடர்வரினென்றதன்றி இன்பமுறுங்காலும் நினைக்கவென்றது. இ-ள். மள்ளர் சீவகனைச் சிக்க, தேவன் அதனை நீக்கிக்கலத்தைச் சேர்த்தி என்றும் நீங்காத காதலையுடையாய் பின்னு நினைக்கவென்று தனக்குரிய விஞ்சைகளை அவனுக்கு நிறுத்தி அவ்விடத்து நின்று விடுத்தபடியுமென்க. இது முற்கூறியகவியற் சிறைப்பாவத்தைத் தொடர்பு படுத் தெடுத்து விரியக் கூறிப் பின் அவற்குச் செய்த சிறப்புகளுங் கூறிற்று. கட்டில்லாமை பின்னே யுணர்க. (11) 17. பைந்நாகப் பள்ளி மணிவண்ணனிற் பாயல் கொண்டு கைந்நாகந் துஞ்சுங் கமழ்காந்தளஞ் சாரல் போகி மைந்நாக வேலி மலிபல்லவ தேய நண்ணிக் கொய்ந்நாகச் சோலைக் கொடியந்நகர் புக்க வாறும். மை-மேகம். கொய்ந்நாகம்-புன்னை. மாநகரும்-பாடம். காந்தள் வடிவிற்கும் நிறத்திற்கு முவமம். இ-ள். நாகப்படுக்கையிலே மாயோன் துயிலுமாறுபோலக் காந்தளைப் படுக்கையாகக்கொண்டு யானை துயிலு மழகிய சாரலைப் போய்ப் பல்லவதேசத்தைநண்ணி அதின்நகரிலே புகுந்தபடியுமென்க.(12) 18. அத்தம் மனைய களிற்றந்நகர் மன்னன் மங்கை முத்தம் முரிஞ்சு முகிழ்மென்முலை மின்ன னாளைப் பைத்தங்கொர் நாகம் பனிமாமதி யென்று தீண்டச் சித்தங் குழையற் கெனத்தீர்த்தவட் சேர்ந்த வாறும். அத்தகிரியென்னும் வடமொழிச்சிதைவு விகாரமாயிற்று. “அத்த மென்னும் பொன்னஞ்சிலம்பு” (பாண்டிக்கோவை. 146) என்றார் பிறரும். அங்கெனக் கதையையுட்கொண்டு சுட்டினார். இ-ள். களிற்றையுடைய முற்கூறிய நகரின்மன்னன்மகள் முகத்தைப் பொழிலிடத்தே ஒரு நாகம் மதியென்றுட்கொண்டு படம் விரித்து, அது மறுச்சேர் மதியன்மையின், அவளைக் கையிலே தீண்டுதலாலே சித்தம்வருந்தின உலோக பாலனை வருந்தற்க வென்று கூறி, அச்சொற்கேற்பத்தீர்த்து அவளைச் சேர்ந்தபடியு மென்க. (13) 19. பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ நற்பூங் கழலானி ருதிங்கண யந்த வாறுங் கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான் வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும். இ-ள். கழலான் பூணாகியகிம்புரியைச்சுமந்த முலையாகிய கோடு ழாநிற்க, அதனை இரண்டுதிங்கள்விரும்பினபடியும், அவன் காரியத்தின் விரைவாலே மலையையூடறுத்து வழிக்கொண்ட படியு மென்க. உலகத்தின்பெருமையைக் கெடுத்தகனத் தமணித்தூணி யொத்ததோளான். (14) 20. தள்ளாத சும்மை மிகுதக்கந னாடு நண்ணி விள்ளா விழுச்சீர் வணிகன்மகள் வேற்க ணோக்க முள்ளாவி வாட்ட வுயிரொன்றொத் துறைந்த வாறுங் கள்ளாவி நாறுங் கமழ்கோதையிற் போய வாறும். விள்ளா-நீங்கா. உள்-மனம். ஆவி-மணம். இன்-நீக்கம். இ-ள். இன்ன ஒலியென நீக்கலாகா ஒலிமிகுகின்றதக்க நாட்டைப் பொருந்தி, அவ்விடத்துநகரில்வணிகன்மகள் நோக்கம் மனத்துணின்று உயிரைவருத்துதலால் இருவருயிரும் ஓருயிரை யொத்து உறைந்த படியும், அவளினின்றும் போனபடியுமென்க. (15) 21. இன்னீ ரமிர்தன் னவள்கண்ணிணை மாரி கற்பப் பொன்னூர் கழலான் பொழிமாமழைக் காடு போகி மின்னீர வெள்வே லவன்மத்திமட தேய மன்னன் கொன்னூர் கொடுவெஞ் சிலைகண்டெதிர் கொண்ட வாறும். கண்ணிணையுமென்னுஉம்மை விகாரத்தாற்றொக்கது. ஓடின பொன் கிடக்க நெகிழ்தலின் ஊருமென்றார். கண்ணுங்காடும் மழை பொழியப்போனான். காலம் காராயிற்று. மன்னீரவும் பாடம். சிலை - ஆகுபெயர். இ-ள். கழலான் அமிர்தன்னவள்கண் மாறாது நீர்சொரியப் பழகும்படி காட்டிடைப்போகையினாலே, மின்னின்றன்மையை யுடைய வேலனாகிய தடமித்தன் அச்சம்பரந்த சிலைத்தழும்பைக் கண்டு எதிர்கொண்டபடியு மென்க. 22. திண்டே ரரசர் திறற்சிங்கங்கள் வில்லும் வாளுங் கண்டாங் குவந்து கடிபெய்திவட் காத்து மென்று கொண்டார் குடங்கை யளவேயுள கண்ணி னாளைப் புண்டாங் கெரிவே லிளையோற்குப் புணர்த்த வாறும். கொண்டார்-ஏற்றார். பகைவர் புண்ணைத்தாங்குதற்குக் காரண மானவேல்-வினைத்தொகை; ஏதுப்பொருள் கருவிக்கண் அடங்கும்; “மற்றிந்நோய்தீருமருந்து” (கலித். 60) என்றாற்போல. அரசன்றிறலும் பாடம். இ-ள். அவன் அரசர்சிங்கங்களினுடைய விற்றொழிலையும் வாட்டொழிலையுங்கண்டு அப்பொழுதே உவந்து இவ்விடத்தே இவனைக் காவலிட்டுக் காப்பேமென்று உட்கொண்டு கண்ணினாளை இளையோற்குப் புணர்த்தபடியுமென்க. (17) 23. மதியங் கெடுத்த வயமீனெனத் தம்பி மாழாந் துதிதற் குரியாள் பணியாலுட னாயவாறு நிதியின் னெறியி னவன்றோழர் நிரந்த வாறும் பதியின் னகன்று பயந்தாளைப் பணிந்த வாறும். இ-ள். நந்தட்டன் திங்களைக்கெடுத்த உரோகினியென் னும்படி மயங்கி உலகுவிளங்கத்தோற்றினவனுக்குரிய தத்தை யேவலாலே அவனைக்கண்டபடியும், பொருள்தேட வேண்டு மென்னும் வழியாலே அவன்றோழர் அவனைத் தேடினபடியும், அவன் விசயையைக் கண்டபடியுமென்க. வயமீன்களbனத் தோழர்நிரந்தபடியு மென்றுமாம். பதியினின்று நீங்கிப் பிள்ளையைப்பெற்றாளெனவே விசயையாம். பதி-இராசமா புரமுமாம். (18) 24. கண்வா ளறுக்குங் கமழ்தாரவன் றாயொ டெண்ணி விண்வா ளறுக்கு நகர்வீதி புகுந்த வாறு மண்மேல் விளக்காய் வரத்திற்பிறந்தாளொர் கன்னிப் பெண்ணா ரமுதின் பெருவாரியுட் பட்ட வாறும். மாலையைக்கண்டகண் பிறிதிற்செல்லாமையின் வாளறுக்கு மென்றார். விண்-தேவருலகு. மண்ணுக்கு-உருபுமயக்கம். கன்னிப் பெண்ணாரமுதின் பெருவாரி-பலசொற்றொகை யாயினுங் கற்சுனைக்குவளையிதழ்போல இருசொற் றொகையாய் நின்றது. இ-ள். தாரவன் விசயையுடனேயெண்ணி இராசமாபுரத்திற் றெருவிலே புகுந்தபடியும், வரத்தோடே பிறந்தாளொரு கன்னிப் பெண்ணாகிய அமிர்தினது போகக்கடலிலே அகப்பட்டபடியு மென்க. (19) 25. துஞ்சா மணிப்பூட் சுரமஞ்சரி யென்னு நாமத் தஞ்சாயல் பூத்த வகிலார்துகி லாய்பெ hனல்கு லெஞ்சாத வின்பக் கொடிதாழ்த்ததும் பன்றி யெய்து நஞ்சூறு வேலான் பகைநாமறக் கொன்ற வாறும். துகிலையும் மேகலையையும் உடைத்தாகிய வல்குலை யுடைய கொடி; இன்பமாகியகொடி. பொன்-ஆகுபெயர். கொடி யென்றலானும் விரதத்தை நீக்குதலானுந் தாழ்த்ததென்றார். நாம்-அச்சம்; நாமமாயின் விகாரமாம். இ-ள். வேலான் ஒளிமாறாதமணிப்பூணினையும் நாமத்தி னையும் சாயலினையும் பூத்தகொடியை வளைத்தபடியும், பன்றியையெய்து பகையைக் கொன்றபடியுமென்க. (20) 26. புண்டோய்த் தெடுத்த பொருவேலெனச் சேந்து நீண்ட கண்போன்ற மாமன் மகள்கண்மணிப் பாவை யன்ன பெண்பா லமிர்தி னலம்பெற்றதும் பொற்பச் செங்கோ றண்பான் மதிதோய் குடைதன்னிழற் பாய வாறும். தன்மாமனுடையமகள்; அவன்கண்போன்றமகள்; அவன் தேவி யுடைய வேலெனச் சேந்துநீண்டகண்மணியிற்பாவையன்ன பெண். “உண்கண்மணிவாழ் பாவை” (நற். 184) என்றார் பிறரும். இ-ள். அவளிடத்து அமிர்தையொத்த இனியநலத்தைப் பெற்ற படியும் செங்கோல் பொலிவுபெறாநிற்பக் குடை நிழலைப் பரப்பினபடியு மென்க. வேல்படும்பொழுதே புண்™ம் உடனே நிகழ்தலிற் புண்டோய்த் தென்றார். தோய்-உவமவாசகம். குடை-எழுவாய். குடைத்தண்ணிழலும் பாடம். (21) 27. திறைமன்ன ருய்ப்பத் திருநிற்பச்செங் கோன டப்பக் குறைவின்றிக் கொற்ற முயரத்தெவ் வர்தேர் பணிய வுறைகின்ற காலத் தறங்கேட்டுரு முற்ற பாம்பி னறிவன் னடிக்கீ ழரசஞ்சித் துறந்த வாறும். குறைவின்றி-மத்திமதீபம். உய்ப்ப-செலுத்த நிற்ப-கெடாது நிற்ப. இ-ள். உய்ப்ப, நிற்ப, நடப்ப, உயரும்படிதேர்பணிய வீற்றிருக்கின்ற காலத்தே அறத்தைக்கேட்டு, உருமேற்றின் ஓசை கேட்ட பாம்பு போல அரசாட்சியை அஞ்சி, அறிவனடிக்கண்ணே துறந்தபடியுமென்க. இவன் துறவுகூறவே எல்லார்துறவுமுணர்த்திற்று. (22) 28. கோணைக் களிற்றுக் கொடித்தேரிவு ளிக்க டல்சூழ் வாண்மொய்த்த தானை யவன்றம்பியுந் தோழன் மாரும் பூண்மொய்த்த பொம்மன் முலையாரும் புலந்து றப்ப வீணைக் கிழவன் விருந்தார்க்கதி சென்ற வாறும். ஐ-அசை. இ-ள். மாறுபாட்டினையுடைய களிறு முதலியவற்றைச் சூழ்ந்த காலாளையுடையவனுடைய தம்பியும் தோழர்நால்வரும் தேவிய ரெண்மரும் இந்நிலத்தை விட்டுச் சுவர்க்கம் பெறத் தான் வீடுபெற்ற படியுமென்க. இவனையொழிந்தோர்க்கு வீடுபெறநல்வினையின்று. “தென்புல மருங்கின வீண்டு நிறைய” (மதுரைக் 202) என்றாற்போலப் புலம் - நிலமாம். “ஏசு பெண்ணொழித் திந்திரர்களாய்த் தூயஞானமாய்த் துறக்க மெய்தினார்” (சீவக. 3121) என்று தேவியரை முற்கூறி, “ஐவருந் - திருவின்றோற்றம்போற் றேவராயினார்” (சீவக. 3134) என்றுபிற்கூறு வாராதலான், முலையாருந் தம்பியுந் தோழன்மாரு மெனல் வேண்டு மாயினும், ஆண்பால் சிறப்புடைமையின் முற் கூறினார். பாட்டுக் காமத்தை விளைத்தலின் அதிற்பற்றற்று விரையவீடு பெற்றமை தோன்ற வீணைக்கிழவன் விருந்தார்கதி சென்றா னென்றார். (23) 29. தேன்வாயு மிழ்ந்த வமிர்துண்டவன் போன்று செல்வன் வான்வாய் வணக்கு நலத்தார்முலைப் போகம் வேண்டா னேனோரு மேத்த வவனெய்திய வின்ப வெள்ளா மீனோர்க் குரைப்பாம் பதிகத்துளி யன்ற வாறே. உமிழ்ந்தவமிர்து-”நிலம்பூத்தமரம்” (கலித். 27) போனின்றது. இ-ள். அழியாதசெல்வத்தை யுடையவன் தேனையுமிழ் தற்குக் காரணமாகிய அமிர்தத்தை யுண்டவனை யொத்து, வானிடத்து மகளிரை அழகால்வணக்கும் நலத்தாருடைய போகத்தை வேண்டானாய், எல்லாருமேத்த அவன் அவ்வீட்டிலே கேவல மடந்தையை நுகர்ந்த பேரின்பத்தையும் பதிகத்தில் நடந்த நெறியே இவ்வுலகிலுள்ளோர்க் குரைப்பா மென்றாரென்க. இன்பவெள்ளத்தையுமென்று உம்மையுமுருபும் விரித்துக் “கல்லார்மணி” (சீவக. 9) என்னுங்கவி முதலியவற்றின் உம்மை களுக்கும் இரண்டாவதுவிரித்து உரைப்பாமென்பத னொடு முடிக்க. முற்கூறிய வீட்டையுட்கொண்டுகூறி யதிற்பயனுங் கொண்டு கூறினார். (24) பதிகமுற்றிற்று. ஒன்றாவது 1. நாமகளிலம்பகம் நாட்டு வளம். நாவீற் றிருந்த புலமாமக ளோடு நன்பொற் பூவீற் றிருந்த திருமாமகள் புல்ல நாளும் பாவீற்றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக் கோவீற் றிருந்த குடிநாட்டணி கூற லுற்றேன். இ-ள். பாவிலே வீற்றிருந்த கலைகள் தட்டறநடந்த கேள்விக் கோ தன்னை நாமகளோடு திருமகள் வெறுப்பின்றி நாடோறும் புல்லும்படி தான் வீற்றிருத்தற்குக் காரணமான நாட்டழகைக் கூறுதலுற்றே னென்றாரென்க. கேள்விக்கோவெனவே, கல்வியுஞ் செல்வமும் பெற்றன வேனும், அவை நாடோறும் புதிதாக நிகழ்கின்றமைதோன்றப் பின்னும் புல்லவென்றார். இனி அவர்கள் நாட்டிலே புல்ல என்றுமாம். (1) 31. காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்து மேமாங் கதமென் றிசையாற்றிசை போய துண்டே. வீழவென்னும் எச்சம் காரணகாரியப்பொருட்கண் இறந்த காலமுணர்த்திற்று. ஒழிந்தஎச்சம் ஈண்டுச்செய்வதன் றொழின் மேற்று. பூமாண்ட தீந்தேன்றொடை-பொலிவு மாட்சிமைப் பட்டதேன்போல இனிய நீரையுடைய தாறு. “தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்” (மதுரைக் 400) என்றார் பிறரும். இனித் தேனுந் தாறுமென உம்மை விரித்தலுமாம். வருக்கை - ஆகுபெயர். இ-ள். பழம் விழுதலாலே கீறிப் போழ்ந்து சிதறிச் சிந்தும் ஏமாங்கத மென்றுபெயர்கூறப்பட்டு, இசையாலேதிசை யெல்லாம் போயதோர்நாடுண்டென்க. இனி வீழ அப்பழம் கீறிப் போழ்ந்து சிதறிச் சிந்துமெனச் செய்விப்பதன் தொழிலுமாம்; “விண்டு” (திருச்சிற். 24) என்பதுபோல. (2) வேறு. 32. இலங்க லாழியி னான்களிற் றீட்டம் போற் கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை பொலங்கொள் கொன்றையி னான்சடை போன்மின்னி விலங்கல் சேர்ந்துவிண் ணேறிவிட் டார்த்தவே. மறுகுகின்றதெண்டிரை - ஆகுபெயர். இ-ள். கணமழை சக்கரவர்த்திகளிற்றீட்டம்போலே திரையைப் பருகிச்சூன்முதிருமளவும் மலையைச்சேர்ந்து பின்பு விண்ணி லேயேறிச் சடைபோலமின்னி வாய்விட்டார்த்தனவென்க. (3) 33. தேனி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின் மேனிரைத்து விசும்புற வெள்ளி வெண் கோனி ரைத்தன போற்கொழுந் தாரைகள் வானி ரைத்து மணந்து சொரிந்தவே. இ-ள். வான் ஒன்றின்மேலொன்றாகாமல் நிரைத்துத் தம்மிற் கூடித் தேனின்றால் நிரைர்துயர்ந்த வரைத்தலையிலே வெள்ளி யாற் செய்த வெள்ளிய கோல்களை விசும்புற நிரைத்தாற்போலத் தாரை களை நிரைத்துச்சொரிந்தனவென்க. (4) 34. குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன் முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியி னிழியும் வெள்ளரு வித்திரள் யாவையுங் குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. இ-ள். வரைத்தலையினின்றிழியும் வெள்ளருவித்திரள்யாவையும், பிறைக்கோடுழுதலின் இறால் கிழிந்து வரைத்தலை யினின்றிழியுந் தேன்றிரள் யாவையுந் திரட்சியை யுடைய மாடங்களில் துகிற் கொடியை யொத்தனவென்க. முழவுபோல அதிர்தல் இரண்டிற்கு மேற்றுக. “வெண்டு கில்” (பரி. 10.80) என்றும் “கோபத் தன்ன தோயாப்பூந்துகில்” (முருக. 15) என்றுங்கூறலிற் றுகில் வெண்மை செம்மை இரண்டிற்கும் பொது. (5) 35. இலங்கு நீண்முடி றிந்திரன் மார்பின்மேல் விலங்கி வீழ்ந்தமுத் தாரமும் போன்றவை நலங்கொள் பொன்னொடு நன்மணி சிந்தலாற் கலன்பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே. விலங்கிவீழ்தல்-பிணைத்திட்டமாலைபோலேவீழ்தல். கவிழ்த்த-தொழிற் பெயர். சிந்துதல் - உள் நிறைதலிற் றெறித்தல். இ-ள். அவ்வருவிகடாமே விழுகின்றபொழுது இந்திரன் மார்பின் மேலே வீழ்ந்த முத்துவடத்தையுமொத்து, அவை பொன்னையு மணியையுஞ் சிந்துதலின் அவனாபரணப் பெட்டிதான் கவிழ்க்கப்பட்ட ஆபரணங்களையு மொத்தன வென்க. இது நீரிற்குவமை கூறிற்று. (6) 36. வள்ளற் கைத்தல மாந்தரின் மால்வரைக் கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை யுள்ள மில்லவர்க் கூர்தொறு முய்த்துராய் வெள்ள நாடும டுத்துவி ரைந்ததே. உய்த்து-உய்ப்ப. உராய்-பெயர்ந்து. இ-ள். வெள்ளமானது வண்மையையுடைய கையினைத் தம்மிடத்தே யுடைய நன்மக்களைப்போலே நிதித்திரளை மடிந்திருப் பார்க்கு ஊர்தொறுங் கொடுப்பதாக நாட்டிலே முகஞ்செய்து விரைந்ததென்க. (7) 37. மையல் யானையின் மும்மத மார்ந்துதே னைய பொன்னசும் பாடிய ளைந்துராய்ச் செய்ய சந்தனந் தீம்பழ மாதியா நைய வாரிந டந்தது நன்றரோ. இ-ள். அவ்வெள்ளம் மூன்றுமதமுமுள்ளேநிறைந்து தேனைப்பூசி வியப்பையுடைய பொன்னசும்பையளைந்து பெயர்ந்து, சந்தனம் பழமென்கின்றவை முதலாகப் பிறவற்றையும் இழ்ந்தேமென்று காடுவருந்தும்படிவாரிப் பெரிதாக நடந்த தென்க. உண்டுபூசி அளைந்து செருக்கி நாட்டைநோக்கி நடந்த தென்றார்; குறிப்பு. ஐய-உரிச்சொல்லீறு திரிந்தது. “நன்று பெரி தாகும்.” (தொல். 2545) (8) 38. வீடில் பட்டினம் வெளவிய வேந்தெனக் காடு கையரிக் கொண்டு கவர்ந்து போய் மோடு கொள்புனன் மூரிநெ டுங்கட னாடு முற்றிய தோவென நண்ணிற்றே. வீடு-விகாரம். இ-ள். புனலானது குடிநீங்குதலில்லாத பட்டினத்தைக் கொள்ளை கொண்ட வேந்தெனத் திரைகளாகியகைகளாலே காட்டையரித்தல் கொண்டு அப்பொருள்களை உள்ளடக்கிக் கொண்டு போய்க் கடல் நாட்டை வளைத்ததோவென்று மக்கள் வருந்தும்படி அந்நாட்டை நண்ணிற்றென்க. (9) வேறு. 39. திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமே னுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான் சரைவெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே. சரைவென்னும் பெயரினையுந் தடமாகிய விரும்பிய முலை யினையு முடைய புனலாகிய கன்னி. முலைபோற்சுரத்தலின் முலை யாம். கொள்கன்னி-வினைத்தொகை. கன்னியென்னும் விசேடிக்கப் படுஞ் சொல்லை நீர்விசேடித்து அஃறிணை யாக்குதலின் இழிந் ததென்றார். என்ப - அசை. இது புறனடையாற் கொள்க. இவ்விதி மேலுங்கொள்க. இ-ள். கடலாகிய தன்கணவன் நுகர்தற்கு முற்கூறிய பொருள்களை உள்ளடக்கிக் கொண்ட கன்னி அவனுக்குச் சூட்டுதற்குத் தன்தலைமேல் நுரையாகிய மாலையைக் கொண்டிழிந்ததென்க. (10) 40. பழங்கொடெங் கிலையெனப் பரந்து பாய்புனல் வழங்கமுன் னியற்றிய சுதைசெய் வாய்த்தலை தழங்குரற் பம்பையிற் சாற்றி நாடெலா முழங்குதீம் புனலக முரிய மொய்த்தவே. பழங்கொடெங்கு-காய்த்ததெங்கு. இலை-நெருக்கத்திற்கு. இலையெனப்பாய் புனல்பரந்துவழங்கும்படி நீர்வரத்தறிந்து முன்னே படுத்தவாய்த்தலை. தழங்குரல்-விகாரம். இ-ள். புனலாலே வாய்க்காலுட்கரை முரிதலின், நாட்டி லுள்ளா ரெல்லாரும் பறையினாலே சாற்றி வாய்த்தலையிலே மொய்த்தார் படலிடுதற்கென்க. (11) 41. வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத் தலைத்தலை யவர்கதந் தவிர்ப்பத் தாழ்ந்துபோய்க் குலத்தலை மகளிர்தங் கற்பிற் கோட்டகம் நிலைப்படா நிறைந்தன பிறவு மென்பவே. இ-ள். முன்பே வெலற்கருங்குஞ்சரம் பின்பு வேட்டம் பட்டால் அதனைப் பரிக்கோற்காரர் குத்திவிலக்குமாறுபோல வாய்த்தலையிடந் தொறு மிடந்தொறும் நாட்டிலுள்ளார் படலிட வாய்க்கால் தணிந்து போதலாலே மகளிர் கற்புப்போலே கோட்டகமும் பிறவு நிலைப்படா வாய் நிறைந்தனவென்க. குஞ்சரத்திற்குவாய்க்கால் உவமிக்கும்பொருள். கோட்ட கம்-பயிருடைத்தான நீர்நிலை. பிற-ஏரி முதலியன. (12) 42. கவ்வையுங் கடும்புன லொலியுங் காப்பவர் செவ்வனூ றாயிரஞ் சிலைக்கும் பம்பையு மெவ்வெலாத் திசைகளு மீண்டிக் காரொடு பௌவநின் றியம்புவ தொத்த வென்பவே. செவ்வன்-நேரே. இ-ள். படலிட்டதினின்றுங் குதித்து வழீஇய புனலொலியும், கரைகாப்பாருடையகவ்வையும் பறையொலியும், எல்லாம் எல்லாத் திசைகளினும் ஈண்டிக் காருங்கடலும் மாறாமன் முழங்குவதொத்த வென்க. (13) 43. மாமனு மருகனும் போலு மன்பின காமனுஞ் சாமனும் போலுங் காட்சிய பூமனு மரிசிப் புல்லார்ந்த மோட்டின தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே. இ-ள். தம் உழவுதொழிலிலேமிக்கனவாகிய எருமை முதலியன தாம் அன்பின காட்சிய பூ. மன்னும் அரிசிப்புல், என்கின்ற வற்றைத் தின்றவயிற்றினவாய்த் திரளமைந்து நின்றனவென்க. இதற்கோர்சொல் வருவிக்க. ஒன்றுக்கொன்று பிற்படில் வருந்து மென்று அன்புகூறினார். சாமன்-காமன்றம்பி. “ஆவயிற் குறிப்பே யாக்க மொடு வருமே” (தொல். எச்ச. 36) என்றதனான் ஆக்கம் வருவிக்க. 44. நெறிமருப் பெருமையி னொருத்த னீளினஞ் செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப் பொறிவரி வராலின மிரியப் புக்குடன் வெறிகமழ் கழனியு ளுழுநர் வெள்ளமே. சிலம்ப-முழங்க. பொறி-விளக்கம். இ-ள். அங்ஙனநின்ற அறல்பட்ட கொம்பினையுடைய எருமைச் சாதியிற் கடாவாகிய பெரியதிரள், எருத்தினம், என்கின்றவற்றைப்பூட்டி வராலிரிய அவற்றுடனே இழிந்து கழனியிலே உழுவார் வெள்ள மென்னுமெண்ணாயினா ரென்க. “ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்” (தொல். மரபு. 37) என்பதனால் ஒருத்தலென்றார். (15) 45. சேறமை செறுவினுட் செந்நெல் வான்முளை வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார் நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். இ-ள். அங்ஙனம் உழுவார் நிலமகளைத்தொழுது சேறு சமைந்த செய்யிலே முளையை விளைகவென்று வித்துவார், இந்நாற்றுச் செவ்வி யென்று பறித்து அதிலே நாட்கொண்டு வைப்பார், முன்னை நாளே எமக்கென்று கூறிவைத்த கடைசியர் திரளைக் கொண்டேகு வாராயினாரென்க. இத்துணைநிலத்திற்கு இத்துணைக் கடைசியரென்று கூறியவென்றுமாம். (16) 46. முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர் குலைத்துடன் பதித்தலிற் குதித்த வாட்கயல் புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபா னிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே. மற்று-வினைமாற்று. குறிஞ்சிநிலத்தே கவரி தன்கன்றை யூட்டு தலான் அதற்கு மிக்குச்சொரிந்த பான் மறைத்த நிலத்திடை யென்க. “கவரியுங் கராமு நிகரவற் றுள்ளே” (தொல். மரபு. 17) என்றதனாற் கன்றென்றார். இ-ள். அக்கடைசியர் முலைப்பரப்பிலே சேறுதெறிப்ப முடியைக் குலைத்து எல்லாருநடுதலின் வெருவி நடாதஇடத்தே குதித்த கயல் அவர் நெருங்குதலிந் பானிலத்திடத்தே பாய்ந்து அவை அதிலேகிடந்து பிறழுநீர அந்நிலமென்க. (17) 47. பாற்சுவை யறிந்தiவ பழனத் தாமரை மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினங் கோற்றொடி நுளைச்சியர் முத்தங் கோப்பவ ரேற்றிய மாலைத்தே னிரியப் பாய்ந்தவே. இ-ள். அக்கயல்கள் உண்டு பாற்சுவையை அறிந்து நீரன் மையிற் றாமரை மேலே செல்லப்பாய்தலின், அதற்கு வெருவி யெழுந்த வண்டினம் நுளைச்சியர் முத்தைக்கோப்பவர் சூடின மாலையில் தேனினங் கெடும்படி பாய்ந்தனவென்க. (18) தெரிந்தனவும் பாடம். 48. இரிந்ததேன் குவளையி னெற்றி தைவர முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையி னரும்புசேர்ந் தணிஞிமி றார்ப்ப வாய்பதம் விருந்தெதிர் கொண்மெனத் தழுவி வீழ்ந்தவே. இ-ள். முல்லையின் அரும்பு போதாய்அவிழ்ந்து தேனைச் சொரியப்படுங் குவளையினெற்றியிலே முன்பு இரிந்த தேனினஞ் சேர்தலாலே அதிலிருந்தஞிமிறுகள் முரிந்தார்ப்ப, அத்தேனினம் இவ்வழகிய உணவை நுமக்கு விருந்திடுகின்றேம்; இதனை ஏற்றுக் கொண்மினென்று கூறினாற்போல அவற்றைத்தைவர, அஞ்ஞிமிறுகள் அத்தேனினத்தைத் தழுவி அதிலே வீழ்ந்தன வென்க. கொண்மின்-விகாரம். இவற்றால் நிலமயக்கங்கூறினார். (19) 49. வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை யிளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலி னளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழி லுளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. இ-ள். நடுபவர்கம்பலையை கார் செய்யத்தொடங்கின மழைமுழக் கென்று உட்கொண்டு மயலாரவாரித்தலின், அக் கம்பலையை மழை யென்றலமருகின்றகுயிலினம் உண்மையென்று வருந்திப் பிரிந்த மகளிரைப்போலே பொழிலிலே குவிந்திருக்கு மென்க. மீண்டும் நடவுத்தொழின் முதலாகக் கூறுகின்றார். (20) 50. வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற் றிளைத்தவர் பருகிய தேற றேங்குழிக் களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத் திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. இ-ள். கடைசியர் கையாலே மதுiவார்த்தலிற் றொழிலிலே இடை விடாது பயின்றவருண்ட தேறன்மிக்குச்செறிந்த இடத்தே காமவின்பம் அறிந்த அன்னம் அதனையுண்டு காமவின்பநுகர்ந் தறியாத நாரையைப் புணர்தலின் அதனைக் கண்டு மயிற்பெடை தன்மயிலைத் தெருட்டுந் தன்மைத்தென்க. “திளையா வருமருவி” (திருச்சிற். 294) என்றார் பிறரும். பெடையென்றும் மயிலென்றும் பிரிக்க. நீர் கள்ளுண்டு இது போன் மயங்கன் மினென்று தெருட்டிற்று. இனி மயிலைக் கண்டாற் கள்ளின்களிப் புத் தீருமென்றலின் இதுதெருட்டிற் றென்றுமாம். (21) 51. கண்ணெனக் குவளையுங் கட்ட லோம்பினார் வண்ணவாண் முகமென மரையி னுள்புகார் பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர் தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே. குவளையும், உம்மை சிறப்பும்மை. ஓம்பினார்-வினையெச்ச முற்று. உள்புகார் - தொழிற்பெயர். இ-ள். காதன்மகளிர் முகமென்றுட்கொண்டு தாமரையாகிய களையின் அருகுசெல்லாதவர் அவர்கள் கண்ணென்றுட் கொண்டு சூடுதற்குப்பறிக்குங் குவளையையுங் களைபறித்தலைப் பரிகாரித்துப் பண்ணை எழுத்தின்வடிவு தோன்றிப் பாடினாராத லின் உழவர் தன்மை இப்படியிருந்ததென்க. தாமரையை “கடவு ளொண்பூ வடைத லோம்பி” (பெரும் பாண். 290) எனக் கூறுதலானும் அவர் பறியாராயிற்று. மரையினுள் ளென்னும் உம்மையில்சொல் எஞ்சுபொருட்கிளவியான செஞ் சொலன்மையுணர்க. கண்ணும் முகமுங் காதன்மையைத் தோற்று வித்தலின் அதற்கேற்கப் பாடினாரென்க. (22) 52. நித்திலப் பந்துட னீன்று பாதிரி யொத்தபூ வடற்றிய நாவி னாகினாற் றத்துர் நாரைமே லெறியத் தண்கடற் பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே. நித்திலப்பந்து-உவமைத்தொகையின்வந்த ஆகுபெயர், கந்தருவ வழக்கமென்றாற் போல. ஈன்று உடையவென்க. இ-ள். தத்துநீர் முத்துப்பந்து போலுஞ் சினையைச்சேர வீன்று தனது நாவிற்கொத்த பாதிரியினது பூவைக்கெடுத்த நாவினையுடைய நத்தையாலே நாரைமேலே எறிய அப்பறவை திரையென வெழுந்து ஆலுமென்க. இது வேண்டின வளவிலே நீர்பாய்கின்றமை கூறிற்று. 53. சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போன் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே. சூலுண்டென்று சொலற்கரிய. மெல்ல-ஒழுக. தேர்ந்த - மெய்ப்பொருளை ஆராய்ந்த. “தாறுபடுநெல்” என்றாற்போலக் காய்த்த வென்றார். இ-ள். நெல்லானவை கருத்தாங்கி ஈன்று குடிப்பிறவா தார்செல்வதே போற்றலையை நேரேநிறுத்திக் கல்விசேர்மாந் தரைப்போல மிகவும் வளைந்து விளைந்தனவென்க. (24) 54. மீன்கணி னளவும்வெற் றிடங்க ளின்மையாற் தேன்கணக் கரும்பியல் காடுஞ் செந்நெலின் வான்புகழ் களிறுமாய் கழனி யாக்கமு மூன்கணார்க் குரைப்பரி தொல்லென் சும்மைத்தே. இ-ள். மீனினது கண்ணளவும் பாழ்நில மின்மையான் மக்கட் குப் புகழ்தலரிதாய் வானிலுள்ளார் புகழ்கின்றகழனியிற் றேனிறா லினிது திரட்சியையுடைய கரும்புவளர்ந்த காடும் யானை நின்றான் மறையுஞ்செந்நெல்லினது முதிர்ச்சியும் ஒல்லென்கின்ற ஓசையை யுடைத்தாயிற்றென்க. முன் விளைவுகூறி இதனால் முற்றினபடி கூறினார். மீன்கண் மிகவும் உருட்சியுடைமையின் இடங்குறித்தலரிது. (25) 55. ஆய்பிழி விருத்துவண் டயிற்றி யுண்டுதேன் வாய்பொழி குவளைகள் சூடிமள்ளர்க டேய்பிறை யிரும்புதம் வலக்கை சேர்த்தினா ராய்செநெ லகன்றகா டரிகுற் றார்களே. இ-ள். உழவர்கள் பிழியை வண்டை யூட்டிப் பின்பு தாமு முண்டு குவளையைச்சூடிப் பிறைபோலும் அரிவாளைத் தங்கை யிலே எடுத்தார்; எடுத்துச் செந்நெற் காட்டை அரிய லுற்றாரென்க. குவளையை ஈண்டுக் களிப்பாற் பறித்துச் சூடினார். காடு பெருமை கூறிற்று. எறிகுற்றம் பாடம். விருத்துவண்டு “வல்லெழுத் திடைமிகும்” (தொல். குற்றி. 9) என்னாது “ஒற்று” என்ற மிகுதியான் இயல்பு கணத்துக் கண்ணும் மெல்லொற்றுத் திரிந்தது. (26) 56. வலியுடைக் ககைகளான் மலர்ந்த தாமரை மெலிவெய்தக் குவளைகள் வாடக் கம்பலம் பொலிவெய்தப் பூம்பொய்கை சிலம்பிப் பார்ப்பெழ மலைபட வரிந்துகூன் குயங்கை மாற்றினார். கம்பலம்-உரிச்சொற்றிரிவு. பொய்கை பார்ப்பபெழவென இடத்து நிகழ்பொருளின்றொழில் இடத்தின்மேனின்றது. பட-உவமஉருபு. இ-ள். அந்நெல்லை அரிதற்குத்தக்க வலியுடைக்கைகளாலே வருந்த வாடக்கம்பலம் பொலிவெய்துதலாற் பார்ப்புமுட்பட ஆரவாரித் தெழ அரிந்திட்டு வளைந்த அரிவாளை மாற்றினா ரென்க. முன் களைபறியாதவற்றை ஈண்டுக் களிப்பினாலரிந்தார். (27) 57. வாளையி னினந்தலை யிரிய வண்டலர் தாளுடைத் தாமரை கிழிய வண்சுமை கோளுடை யிளையவர் குழாங்கொண் டேகலிற் பாளைவாய் கமுகினம் பழங்கள் சிந்துமே. தலை - இடம். வண்டலர்- வண்டு துகைத்தலர்ந்த. பாளை வாய்ககமுக-மடற் கழுக. இ-ள். தொழிற்கோட்பாட்டையுடைய இளையவர்குழாம் இரியக் கிழியச் சூட்டைச் சுமந்து போதலின் அதுபட்டுக் கமுகினம் பழத்தைச் சிந்துமென்க. (28) 58. சோர்புயன் முகிறலை விலங்கித் தூநில மார்புகொண் டார்ந்தது நரல வன்சுளை யார்புறு பலாப்பழ மழிந்த நீள்களம் போரினான் மலிந்துடன் பொலிந்த நீரவே. புயல்-நீர். விலங்கி-விகாரம், விலங்வென்க. பழம்-களத்திற்கு அடை. நிலத்திற்குக் களம் சினையாம். இ-ள். முகிலைத் தலைசென்று தடுக்கும்படி நிலத்தின் மார்பை யெல்லாம் தமக்கு இடமாகக்கொண்டுநிற்கையினாலே அந்நிலம் பொறுக்கமாட்டேனென்று வாய்விடும்படி களங்க ளெல்லாம் போரான்மிக்குப்பொலிந்த நீரவென்க. இனி நிலத்திலே முகிலைவிலக்கிப் பழையகூடுகள் நிறைதல் கொள்கையாலே அங்ஙனம் அவைநிறைந்தநிலம் இப் பொழுது இடுகின்ற போரைப்பொறேனென்று வாய்விடும் படியென்றுமாம். ஆர்வு கொண்டனெவே கூடுகள் பெற்றாம். (29) 59. ஈடுசார் போரழித் தெருமைப் போத்தினான் மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச் சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே. இ-ள். பெருமைநிறைந்தபோரைத் தலையைத்தள்ளிப் போத்தினாற் பக்கத்தேயுற உரப்பி வைக்கோலைக்களைந்து தூற்றிக்குவித்தபொலிகள் குன்றமொத்தன வென்க. ஈடு-இடுதலுமாம். “பெற்ற மெருமை புலிமரை புல்வாய்-மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே.” (தொல். மரபு. 41) இனிக் கரும்பின் செய்தி கூறுகின்றார். (30) 60. கரும்புகண் ணுடைப்பவ ராலை தோறெலாம் விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய திருந்துசாறடுவுழிப் பிறந்த தீம்புகை பரந்துவிண் புகுதலிற் பரிதி சேந்ததே. இ-ள். கரும்பைச் சாறுகொள்வாருடைய ஆலைதோறும் அடைந்து வந்தரெல்லாம்பருகி மிக்கசாற்றைப் பாகுசெலுத்து மிடத்துப்பிறந்தபுகை விண்ணிலே பரந்துசேறலிற் பரிதிசிவந்த தென்க. எல்லாமென்ப திருதிணைக்கும் பொது. பருகுதலிற் றிருந் திற்று. இனிஇங்ஙனம் ஒருக்கினபண்டங்களைக் கொண்டுபோகின்றமை கூறுகின்றார். (31) 61. கிணைநிலைப் பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்படப் பணைநிலை யாய்செந்நெற் பகரும் பண்டியுங் பணைநிலைக் கரும்பினிற் கவரும் பண்டியு மணநிலை மலர்பெய்து மறுகும் பண்டியும். இது முதல் மூன்றுகவியு மொருதொடர். உழவர் கிணைப்பொருநரது மிடிதீரக்கொடுத்து மிக்க நெல்லை விற்றற்குக்காரணமான பண்டியும், கரும்பினின்றும் பாகு முதலியன கொண்டுபோம் பண்டியும், மலர்பெய்து போம் பண்டியு மென்க. பண்ணை-விகாரம். நிலை-நிலைபெறுதல். (32) 62. மல்லலந் தெங்கிள நீர்பெய் பண்டியு மெல்லிலைப் பண்டியுங் கமுகின் மேதகு பல்பழுக் காய்க்குலை பெய்த பண்டியு மொல்குதீம் பண்டம்பெய் தொழுகும் பண்டியும். இளநீர்பெய்த பண்டியும், வெற்றிலை பெய்த பண்டியும், பகுக்காய் பெய்த பண்டியும், குழையும் இனியபழம்பெய்து இடை விடாதுபோம் பண்டியுமென்க. மெல்லிலை-வினைத்தொகை. (33) 63. கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியு நெருங்குபு முதிரையி னிறைந்த பண்டியும் பெருங்கலிப் பண்டிகள் பிறவுஞ் செற்றுபு திருந்தியெத் திசைகளுஞ் செறிந்த வென்பவே. கடல்வளமான “ஓர்க்கோலை சங்க மொளிர்பவளம் வெண் முத்த - நீர்ப்படு முப்பினோ டைந்து” செற்றுபு என்னுமெச்சம் ஒலியை யிடையவென்னும் விரியொடு கூடும். நெருங்குபு-நிகழ் கால முணர்த்தும். உம்மை மாறுக. இ-ள். முற்கூறிய பண்டிகளும், வளத்தை நகர்க்குத் தருதற்கு முழுங்கும்பண்டியும், நெருங்கி முதிரையானிறைந்தபண்டியும், ஒழிந்த பண்டங்கள்செற்றி ஒலியையுடையபண்டிகளுந்திருந்தி எத்திசைகளுஞ் செறிந்தனவென்க. நகர்க்கரையும் பாடமாயிற்கரைதல் திசைச்சொல்லாய்க் கொண்டுபோமென்னும் பொருள்பயக்கும். (34) 64. கிளிவளர் பூமரு தணைந்து கேடிலா வளவயல் வைகலு மின்ன தென்பதேன் றுளியொடு மதுத்துளி யறாத சோலைசூ ழொளியமை யிருக்கையூ ருரைக்க நின்றவே. கேடு: “விட்டில் கிளிரால்வாய் வேற்றரசு கண்ணரசு, நட்டம் பெரும்பெயல்கா லெட்டு” என்ப; அசை; தேன் - வைத்தேன். மது - பூவின் மது. (இ-ள்) “மருதணியப்பட்டுக் கேடில்லாதவயல் நாடோறும் இத்தன்மைத்து; இனி யான் கூறுதற்குநின்றன குடியிருப்பையு டைய நாட்டிலூர்களென்க.” (35) வேறு. 65. சேவலன்னந் தாமரையின் றோடவிழ்ந்த செவ்விப்பூக் காவிற்கூடெ டுக்கிய கவ்விக்கொண் டிருந்தன தாவில்பொன் விளக்கமாத் தண்குயின் முழவமாத் தூவிமஞ்ஞை நன்மணம்புகுத் துந்தும்பிக் கொம்பரோ. எடுக்கிய - எடுத்தற்கு, தா-வலி தூவி-சூட்டு மணம்-பூவின் மணமுங் கலியாணமும். இ-ள். தும்பியையுடைய கொம்புகள், சேவலாகிய அன்னம் பூவைக்கவ்வியிருந்தன; அவ்வன்னம் விளக்காகக் குயில் முழவாக மயிலை மணத்தே புகுத்தி விடுமென்க. தாமரையானுங் குயிலோசையானும் இளவேனிலென்று கருதி மயில் பூம்பொதும்பரின்மறைதலிற் கொம்பு புகுத்து மென்றார். பேடுந் தோகைமயிலுஞ்சேர விருந்தன வென்றுணர்க. இனி மயில் அன்னம் விளக்காகக் குயின்முழவாகத் தும்பி யைக் கொம்பிடத்தேமணம்புகுத்துமென்றுமாம். கொம்பிலு லாவுமயில் விளக்காலுமுழவாலும் அக்கொம்பினின் றும்போந்தா டுதலின் அக்கொம்பிற்பூவின்மணத்தே தும்பியைப் புகுதவிட்ட தாயிற்று. மெல்லிய ஓசையன்மையிற் குயிலோசையென்றறியாது முழவாகக் கருதிற்று. இதற்கு இக்கருத்து நிகழ்தல் “ஆடமைக் குயின்ற” (82) என்னும் அகப்பாட்டிற் காண்க. (36) 66. கூடினார்க ணம்மலர்க் குவளையங் குழியிடை வாடுவள்ளை மேலெலாம் வாளையேறிப் பாய்வன பாடுசால் கயிற்றிற்பாய்ந்து பல்கலனொலிப் பப்போந் தாடுகூத்தி யாடல்போன்ற நாரைகாண்ப வொத்தவே. இ-ள். கண்போலுஞ் செவ்விமலரையுடைய குவளை யோடையில் நீர்தாழ்தலிற் சிறிதுவாடின வள்ளைமேலே செல்ல வாளைமீன் களெல்லாம் பாய்கின்றவை, கழாயினின்றும் இழிந்து பக்கத்தினமைந்த கயிற்றிலே குதித்துக் கலனொலிப்ப ஆடுங் கூத்தியது கூத்தை யொத்தன; கரையிலிருந்தநாரைகள் காண்பன போன்றனவென்க. குவளைக்குழியில் நாட்டினகழையும் அதிற்படர்ந்த கொடியும் அதிற்பாய்கின்ற மீனும், கழாயும் அதன்கீழிழிந்தாடுங் கயிறும் அக்கூத்தியும் போன்றன. வடிவுந் தொழிலும் உவமம். காண்ப -அகரஈற்றுப் பலவறிசொல்; தொழிற்பெயராய்நின்றது. (37) 67. காவியன்ன கண்ணினார் கயந்தலைக் குடைதலி னாவியன்ன பூந்துகி லணிந்தவல்குற் பல்கலை கோவையற்று திர்ந்தன கொள்ளுநீர ரின்மையின் வாவியாவும் பொன்னணிந்து வானம்பூத்த தொத்தவே. இ-ள். மகளிர் கயத்திடத்தே விளையாடுதலிற் பலகலைகள் வடமற்று உதிர்ந்தன; அவற்றை எடுப்பாரின்மையின் வாவிக ளெல்லாம் மேகலையையணிந்து, வானம் மினைப்பூத்த தன்மையை யொத்தன வென்க. பொன்-ஆகுபெயர். மேகலைக்குறுப்பானவை அற்று வீழ்ந் தன. கயந்தலை-விகாரம். (38) 68. பாசவ லிடிப்பவ ருலக்கைவாழைப் பல்பழ மாசினி வருக்கைமா தடிந்துதேங் கனியுதிர்த் தூசலாடு பைங்கமுகு தெங்கினொண் பழம்பரீஇ வாசத்தாழை சண்பகத்தின் வான்மலர்க ணக்குமே. இ-ள். உலக்கை வாழைப்பழத்தை உதிர்த்து ஆசினி முதலிய வற்றை முறித்து அவற்றின்பழங்களையும் உதிர்த்து பின்னுமசைகின்ற கழுகின் பழத்தையுந் தெங்கின் பழத்தையும் பரிந்து தாழை மலரையுஞ் சண்பகத்தின் மலரையு நக்குமென்க. எனவே ஏனையவும் பயன்றருமென நிலநன்மை கூறினார். இத்துணையுஞ் சேரலைகளும் அவற்றிற்கு அங்கமான வாவிகளுங் கூறினார். (39) 69. மன்றனா றிலஞ்சிமேய்ந்து மாமுலை சுரந்தபா னின்றதாரை யானில நனைப்பவேகி நீண்மனைக் கன்றருத் திமங்கையர் கலநிறை பொழிதர நின்றமேதி யாற்பொலிந்த நீரமாட மாலையே. இலஞ்சி-மடு; ஆகுபெயர். நிறை-சால்; “பீர்வாய் பரந்த நீரறு நிறைமுதல்” என்றார் பிறரும். மாலை-ஒழுங்கு. இ-ள். மடுவை மேய்தலாற் சுரந்தபால் நிலத்தை நனைக் கும்படி மாறாதுநின்ற தாரையாலே கன்றை நினைத்துபோய் அதனை அருத்தி மங்கையரெடுத்த கறவைக் கலமும் அதனினின் றும் பால் சொரியுஞ்சாலும் வழியும்படிநின்ற மேதியாலே பொலிந்த தன்மையை வென்க. (40) 70. வெள்ளிப்போழ் விலங்கவைத் தனையவாய் மணித்தலைக் கொள்பவளங் கோத்தனைய காலகுன்றிச் செங்கண வொள்ளகிற் புகைதிரண்ட தொக்குமா மணிப்புறாக் கிள்ளையோடு பாலுணுங் கேடில்பூவை பாடவே. மா-பெருமை. மணி-அழகு. இ-ள். அம்மாடத்திலே வெள்ளித்தகட்டை விலங்குதலாக வைத்தன்ன வாயினையுந் தலையினையும் அகிற்புகை திரண்ட தனை யொக்கு நிறத்தனையுமுடைய புறாக் காலவாய்க் கண்ண வாய்ப் பூவைபாடாநிற்கக் கிள்ளையோடே பாலுண்ணு மென்க. கொள்ளுதல் - அறுத்துக்கொள்ளுதல். நடுவு பலவரை யுண்மையிற் கோத்தவென்றார். ஒள்ளகில் அதற்கொளி. சிலர்பாடப் பிள்ளைகள்பாலுண்டாரென்பதுந் தோன்றிற்று. (41) 71. காடியுண்ட பூந்துகில் கழுமவூட்டும் பூம்புகை மாடமாலை மேனலார் மணிக்குழலின் மூழ்கலிற் கோடுயர்ந்த குன்றின்மேற் குழீஇயமஞ்ஞை தஞ்சிற காடுமஞ்சி னுள்விரித் திருந்தவண்ண மன்னரே. இ-ள். காடியுண்டதுகில் புகையிலே மயங்குதலாலே மாடவொழுங்கின் மேலிருக்கின்ற நல்லாருடைய குழலினூட்டும் புகையிலே, அக்குழன் மறைதலின் அவர்கள் மலைமேற்றிரண்ட மயில்கள் தஞ்சிறகை அவ்விடத்து உலாவு மஞ்சினுள்ளே விரித் திருந்த தன்மையை யொப்பாரென்க. காடி-கஞ்சி, சுட்டு வருவிக்க. அன்னதென்ற பாடத்திற்கு மூழ்குதல் வண்ணமென்னது அன்னதென்க. (42) 72. கண்ணுளார்நுங் காதல ரொழிககாம மீங்கென வுண்ணிலாய வேட்கையா லூடினாரை யாடவர் வண்ணமே கலைகளைப் பற்றவற் றுதிர்ந்தன வெண்ணில்பொன் சுடுநெருப் புக்கமுற்ற மொத்தவே. இ-ள். நும்மாற்காதலிக்கப்பட்ட மகளிர் நுங்கண்ணுள்ளார் ஈங்குக் காமத்தை யொழிகவென்றுகூறி உள்ளேநிலைபெற்ற விருப்பத்தாலே ஊடிப்போகின்றவரைக் கணவர்மேகலைகளைப் பிடிக்க, அவை அற்றுச்சிந்தினவைகிடந்தஇடம் மாற்றற்ற பொன் னைச் கூடுநெருப்புச் சிந்தின முற்றங்களையொத்தன வென்க. இமையாது நோக்கலின் இ.ங்ஙனம் ஊடினார். ஈங்குத் தன்மையையுணர்த்துதல் “செலவினும் வரவினும்” (தொல். கிளவி. 28) என்னுஞ் சூத்திரத்திற் கூறினாம். பொன்னுக்கு மணிக்குந் தழலுங் கரியு முவமை. (43) 73. கோட்டிளந் தகர்களுங் கொய்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலுந் தோணிக்கோழி யாதியா வேட்டவற் றினூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் காட்டியார்க்குங் கௌவையுங் கடியுங்கௌவை கௌவையே. இ-ள். செல்வச் செருக்கினையுடைய மாந்தர் அவற்றினது புண்ணைக்கருதாராய்ப் பின்னும்போரைவிரும்பித் தகர்களையுஞ் சூட்டுடைய தோணியில்வந்த கோழிமுதலாவுள்ள கோழி களையும் பூழ்முதலிய சேவல்களையுங் காட்டிக்கொளுத்தி ஆர்க்குங்கௌவையும் விலக்குங் கௌவையுமே அவ்விடத்திற் காரவாரமென்க. (44) 74. இறுநுசுப்பி னந்நலா ரேநதுவள்ளத் தேந்திய நறவங்கொப் புளித்தலி னாகுபுன்னை பூத்தன சிறகர்வண்டு செவ்வழி பாடமாடத் தூடெலா மிறைகொள் வானின் மீனெனவரம்பைமுலை யினிருந்தவே. “நாகுபுன்னை”வேற்றுமை தொகையாய் “ஒற்றிடையின் மிகாமொழியும்” (தொல். குற்றி. 7) என்னுஞ்சூத்திரத்தான் ஒற்றடாது நின்றது. “சொல்லியமரபின்” (தொல். மரபு. 26) என்னுஞ்சூத்திரத்திற் “சொல்லுங்காலை” என்றதனால் நாகு பெண்மையேயன்றி இளமையு முணர்த்திற்று; “நாகுமுதிர் நுணவம்” (சிறுபாண். 51) என்றார் பிறரும். இறை - தங்குதல். அரம்பை - ஆகுபெயர். இ-ள். நல்லார் மணிவட்டிலே எடுத்தநறவத்தைக் கொப்பு தளித்தலிற் புன்னைகள் மாடத்தூடெலாம் வண்டுபாடும்படி மீனெனப் பூத்தன; அவர் கொப்புளித்தலின் வாழைமுகை முலைபோலேஇருந்தன வென்க. (45) 75. விலக்கில்சாலை யாவர்க்கும் வெப்பின்முப் பழச்சுனைத் தலைத்தணீர் மலரணிந்து சந்தனஞ் செய்பந்தருங் கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி யைம்பொறி நிலத்தலைய துப்பெலா நிறைதுளும் புமூர்களே. நோயறுத்தற்குக் கடு நெல்லி தான்றி சூழவளர்ப்பார்கள். தலைய - இரண்டிடத்தும் வினைக்குறிப்பு. இ-ள். நாட்டிலூர்கள், யாவர்க்கும் விலக்குதலில்லாத அடிசிற் சாலை முதலியனவும், வெம்மையில்லாத சுனையிற் காலையி லெடுத்த தண்ணீரிலே பூவுமிட்டுச் சந்தனமுமிட்ட தண்ணீர்ப்பந்தரும், கூத்தாடுமிடமுமொழிய ஐம்பொறிநிலத் திடத்தனவாகிய நுகரும்பொருள்களெல்லாம் நிறைந்துததும்பு மென்க. (46) இவை அரசனறம். 76. அடிசில்வைக லாயிர மறப்புற முமாயிரங் கொடியனார்செய் கோலமும் வைகறோறு மாயிர மடிவில்கம்மி யர்களோடு மங்கலமு மாயிர மொடிவிலைவெ றாயிர மோம்புவாரி னோம்பவே. வேறாயிரமும் இல்லையும் விகாரம். அறப்புறம் என்பதற்கு ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று. ஒடிவு -தவிர்வு; “ஒடியா விழவு” (அகநா. 149) என்றார் பிறரும். இ-ள். அவ்வூர்களில் நாடோறுங்காணப்பட்ட வைகுதலை யுடைய அடிசிற்காலையும் ஆயிரம்; அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும் ஆயிரம்; மகளிர் கோலஞ் செய்யுமிடமும் ஆயிரம்; தொழிலின்மடியாத கம்மியருமாயிரம்; கலியாணமுமாயிரம்; வெவ்வேறாகிய ஆயிரம் பாதுகாப்பாராற் காத்தலிற் றவிர்த லில்லை யென்க. (47) 77. நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம் நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள்செய்வார்க்கு மஃதிடம் வெற்றவின்பம் விழைப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென் மற்றைநாடு வட்டமாக வைகுமற்ற நாடரோ. இ-ள். அவ்வேமாங்கதமென்னும்நாடு, வெற்றியையுடைய தனதின்பத்தை உலகை விரும்பப்பண்ணுதற்கு விண் மகிழ்ந்து வீழ்ந்த தென்னும்படி தன்னையொழிந்தநாடு தனக்குஎல்லையாக வைகும். அதுவீடுபெறத்தவஞ்செய்வார்க்கு இடம்; மறுமை கருதி இல்லறநடத்து வார்க்கும் இடம்; அது நற்பொருளைப் பயக்குங் கல்வியைக் கற்பார்க்கு இடம்; நிலையாதபொருளைத் தேடு வார்க்கு மிடமென்க. உம்மையிரண்டும் - இழிவுசிறப்பு. வெற்றம்-வெற்றி. “ஊரு ரைக்க நின்ற” என்ற கவிமுதலாக முடித்த வினைகளைச் சேர்த்து அவற்றை யுடைய நாடு வீண்வீழ்ந்தென வைகும்; அது இவை செய்வார்க் கிடமென்க. (48) நகர்வளம் வேறு 78. கண்வலைக் காமுக ரென்னு மாபடுத் தொண்ணிதித் தசைதழீஇ யுடலம் விட்டிடும் பெண்வலைப் படாதவர் பீடி னோங்கிய வண்ணலங் கடிநக ரமைதி செப்புவாம். இ-ள். கண்ணாகிய வலையாலே காமுகரென்னும் விலங்கை அகப்படுத்து நிதியாகிய தசையைக் கைக்கொண்டு உடலைக் கைவிடும் பெண்ணினுடைய சூழ்ச்சியில் அகப்படாத முனிவரு டைய தவப்பயன்போலே செல்வமோங்கிய இராசமாபுரத்தின் நிறைவு கூறுவாமென்க. (49) அம்-சாரியை. 79. விண்புகு வியன்சினை மெலியப் பூத்தன சண்பகத் தணிமலர் குமைந்து தாதுக வண்சிறைக் குயிலொடு மயில்கண் மாறுகூய்க் கண்சிறைப் படுநிழற் காவு சூழ்ந்தவே. இ-ள். குயில்கள் பூத்தனவாகியசண்பகத்தின் மலரைத் தாதுகக் குடைந்து மயிலோடே மாறாகக்கூவி, நோக்கினார்கண்கள் மீளாத நிழலையுடைய கா அந்நகரைச் சூழ்ந்தனவென்க. மெலிய-வளைய. கார்காலத்து மயிலின்களிப்பைத் தான் உட்கோடலின் மாறென்றார். மயிலொடென மாறுக. செய்தெ னெச்ச வடுக்க. “அம்முக்கிளவியும்” (தொல். வினை. 34) என்னுஞ் சூத்திரத்திற் பிறவினை கொள்ளுமென்றதனாற் பிறவினையாகிய உடைய வென்னுங் குறிப்பினைக் கொண்டது. இகரவீறு திரிந்தது. இனிமேலிற் கவிக்கும் பொருந்த மயிலை உவமத்தொகைக்கண் வந்த ஆகுபெய ரென்று மகளிராக்கி மகளிர் குயிலொடுமாறு கூவினாரென்று ரைப்பதும் பொருள். இனிச் சண்பகத்தின் தேன்றுளித்தலிற் காரென்று மயிலொடு மயிலும், வேனிலாதலிற் குயிலொடு குயிலுங் கூவிற்றென்றுமாம். சிறுபான்மை மயில் கூவிற்றென்றலு மரபு. (50) 80. கைபுனை சாந்தமுங் கடிசெய் மாலையு மெய்புனை சுண்ணமும் புகையு மேவிய நெய்யொடு குங்கும நிறைந்த நாணினாற் பொய்கைகள் பூம்படாம் போர்த்த போன்றவே. மேவியநெய்-பூசினபுழுகு. குங்குமம்-குங்குமமும். இவை குளிப்பாரணிந்தன. இ-ள். சாந்தமுதலியன நிறைந்த பொய்கைகள் நாணத்தாரே பொலிவினையுடைய படாம்போர்த்ததன்மையை யொத்தன வென்க. இனிப் பிறர்மாசுபட்டதென்னுநாணாலே பூவாகிய படாம் போர்த்ததுவுமாம். (51) 81.(1) கடிநலக் கரும்பொடு பாய்நெற் கற்றையின் பிடிநலந் தழீஇவரும் பெருங்கைக் குஞ்சர கடிநிலை யிருப்பெழு வமைந்த கன்மதிற் புடைநிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே. நாமகளிலம்பகம் 82(2). சலசல மும்மதஞ் சொரியத் தத்தமுட் கொலைமருப் பிரட்டைகள் குளிப்பப் பாய்ந்திரு மலைதிளப் பனவென நாக மான்றபோர் குலவிய நிலைக்களங் கோல மார்ந்தவே. இவையிரண்டுமொரு தொடர். இன்பிடி-கவளம். அடியிளகாதுநிற்றலையுடைய கணைய மமைந்தவாரி. சலசல-முழக்கம். தம்மிற்போர்செய்வன இரண்டு மலை யென்னும்படி யானைகள் ஓசைபட மும்மதஞ்சொரிதலாலே இரண்டு கொம்புந் தைத்துமறையப் போர்செய்தற்கு வளைந்த நிலைபெற்றகளம். இ-ள். சூழ்ந்த கன்மதிலின் உட்புடைநிலையிலே கரும்பு முதலியவற்றின் நலத்தை விரும்பிவருங் குஞ்சரநிற்றலையுடைய கூடங்களும் பொலிந்த; அக்குஞ்சரம்போர்செய்தற்குச் சமைந்த களங்களுங் கோலமார்ந்தனவென்க. (53) 83. முத்துடை வெண்மருப் பீர்ந்து மொய்கொளப் பத்தியிற் குயிற்றிய மருங்கிற் பல்வினைச் சித்திரக் கிம்புரி வைரஞ் சேர்த்துந ரொத்திய லிடங்களு மொழுங்கு நீண்டவே. பத்திமருங்கிலே பலவினைகளைக்குயிற்றிய நல்ல கிம்புரி. இன்-அசை. இ-ள். மருப்பையறுத்துக் கூர்மையிட்டு அது வலி கொள்ளும் படியிடுங் கிம்புரியிலே வைரமிடுவார் தம்மிற் பொருந்திநடக்குந் தெருவுகளு மொழுங்கு நீண்டன வென்க. இனிக் கிம்புரி வயிரம்காளகையுமாம்; ஆகுபெயர். (54) 84. ஓடுதேர்ச் சாரிகை யுகுபொற் பூமியு மாடக மாற்றுந்தார்ப் புரவி வட்டமுங் கேடக வாட்டொழி லிடமுங் கேடிலாக் கோடுவெஞ் சிலைத்தொழி லிடமுங் கூடின்றே. ஆடகத்தார்-வேற்றுமைத்தொகை. கோடுசிலை-வினைத் தொகை. இ-ள். தேரினது கதிவிசேடத்தாலே சிந்தும் பொன்னை யுடைய தேரேறுமிடமும், குதிரையேறுமிடமும், கேடகத்தோடு வாட்டொழில் செய்யுமிடமும், பயிற்றுதலிற் கெடுதலில்லாத விற்றொழில் செய்யுமிடமுங் கூடிற்றென்க. (55) 85. புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபி னிடைநகர்ப் புறம்பணை யியம்பு மோசையோர் கடலுடைந் ததுவெனக் கலந்தக் கடன் மடையடைத் தனையதம் மாக்க ளீட்டமே. இ-ள். புறப்படைவீட்டிற் றொழில் செய்வாரிடத்தை யான் ஒருவாற்றாற்கூறி இடைநகரினது தன்மைகூறத்தொடங்கினபின்பு, முற்கூறிய புடைநகர்ப்புறமாகிய மருதநிலத்தே சென்றொலிக்கு மிடைநகரினோசை கடலுடைந்த வோசையென்னும்படி அவ் விடத்தே பொருந்திற்று; அவ்வோசை பிறத்தற்குக் காரணமாகிய மாக்களீட்டம் அதன் உடைப்பை உலகு குவிந்தடைக்குந்தன் மையையொத்தது; ஆதலாலென்னாற் கூறுதலரிதென்றாரென்க. கடந்தென்றார், கூறுதலருமைபற்றி. புகுதல்-சொல்லப் புகுதல். அடைத்தனையது -காலமயக்கம். (56) 86. சிந்தூரப் பொடிகளுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சந்தன நீரொடு கலந்து தையலார் பந்தொடு சிவிறியிற் சிதறப் பார்மிசை யிந்திர வில்லெனக் கிடந்த வீதியே. இ-ள். தையலார் சிந்தூரப்பொடிகளையுஞ் சுண்ணத் தையுஞ் சந்தனத்தையும் பனிநீரோடேகலந்து மட்டத்துருத்தி யாலும் நெடுந் துருத்தியாலுஞ் சிதற; அவை பாரிலேகிடந்த இந்திரவில்லென வீதியிலேகிடந்தனவென்க. (57) 87. மாற்றரும் பசும்பொனின் மாடத் துச்சிமேற் றூத்திரண் மணிக்குட நிரைத்துத் தோன்றுவ பூத்தன வேங்கைமேற் பொலிந்து கார்நினைந் தேத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே. இ-ள். மாற்றற்ற பொன்மாடங்களினுச்சியிலே நீலமணிக்குடங்கள் நிரைத்துத் தோன்றுவன, பூத்தனவாகிய வேங்கையின்மேலே மேகத்தைநினைத்தலான் மேனோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள் பொலிந்திருந்தனவற்றை யொத்தனவென்க. “ஏக்க ழுத்தம்” என்றார் பிறரும். (58) 88. நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர வுடம்புவேர்த் தினமழை யுரறி நோக்கலி னடுங்குபு நல்வரை மாடத் துச்சியில் லடங்கிவீழ்ந் தருவியி னழுவ போன்றவே. இ-ள். கொடி மிக்குச்சென்று மதியின்றலையைத் தடவு தலின், நடுவுதிரியு மேகம் உடம்புபுழுங்கி வேர்த்து இடித்து நோக்கிப் பெய்தலி னுளதாயவருவியின் கணத்தால் நடுங்காநின்று மாடத்துச்சியிலே குவிந்துவீழ்ந்து அழுவனபோலே யிருந்தன வென்க. சிலர்கோபத்திற்கஞ்சிச் செருக்கடங்கி யழுததென்பது போதரும்.(59) 89. பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதக நற்சிறா ரூர்தலி னங்கை மார்விரீஇ யுற்றவர் கோழிமே லெறிந்த வொண்குழை மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே. விரீகி - விரீஇ ஆயிற்று. மற்று - அசை. இ-ள். நங்கைமார் நெல்லுப்பார்த்திருக்கின்றவர்கள் கோழி மேலெறிந்தகுழைசிறார் தேர்மிசைப்போதகத்தை யூர்தலின் அத்தேரைப் போதல்கொடாத செல்வ நிறைந்தன வென்க. (60) 90. மாலையம் பசும்பொனு மயங்கி வார்கணைக் கோலெயுங் குனிசிலை நுதலி னாரொடு வேலிய லாடவர் விரவி விண்ணவ ராலய மிதுவென வையஞ் செய்யுமே. கணை-அலகு. இ-ள். அவ்விடம் மாலையும் பூணும் மயங்கப்பட்டுச் சிலை போலு நுதலினாரோடே யாடவரும் கலக்கப்பட்டுத் தேவரிருப் பிட மிதுவென் றையந்தருமென்க. (60) 91. கற்சுண்ணஞ் செய்ததோண் மைந்தர் காதலா னற்சுண்ணப் பட்டுடை பற்ற நாணினாற் பொற்சுண்ணத் தால்விளக் கவிப்பப் பொங்கிய பொற்சுண்ணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே. கல்-உலம். சுண்ணப்பட்டு-சுண்ணமளைந்தபட்டு. சுண்ணத் தால்-உருபினும் பொருளினுமெய்தடுமாறி ஒன்றினிலைக் களத்தொன்று சென்றது, மகளிர்-தோன்றா எழுவாய். இ-ள். மைந்தர் மகளிர்புலந்துபோவுழித் தங்காதலால் அவரு டையப்பிடிக்க அதுநெகிழ்ந்த நாணாலே அவர் சுண்ணத்தைக் கொண்டு விளக்கையவிப்ப மிக்கெழுந்தசுண்ணம் புறம்பின்மருத நிலத்தேபரக்கும் பொற்பிற்றவ்விடமென்க. (62) காதலாரும் பாடம். 92. நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவ ருலக்கையா லுதிர்ந்தன தெங்கி னொண்பழ நிலத்தவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞைபோய்க் கலத்துயர் கூம்பின்மே லாடுங் கவ்வைத்தே. நலத்தகு-வியத்தகு வென்றாற்போல நின்றது. இ-ள். விரும்பத்தகுகின்ற சுண்ணத்தை நின்றிடிக்கு மகளிருலக் கையாற் கழன்றனவாகிய பழத்தைத் தெங்கு மடலிலேதாங்கி நிலத்தே சொரிதலின் வெரீஇய மயில்போய் அச்சநீங்கிக் கூம்பின் மேலாடுங் கௌவைத்து அவ்விடமென்க. நானம்-ஆகுபெயர்; அதிலே நனைத்திடித்தலின். புகாரினது ஆழத்தால் நகரளவுங்கலம் வந்தது. அரசன்விளையாடுதற்குச் சமைத்தனவுமாம். ( 63) 93. இட்டவெண் ணிலப்படா வகையி னீண்டிய முட்டிலா மூவறு பாடை மாக்களாற் புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய மட்டிலா வளநகர் வண்ண மின்னதே. மிலேச்சராதலின் ஐயறிவிற்குரீய மாக்களென்னும் பெயராற் கூறினார். இ-ள். போகட்டஎள்ளு நிலத்தில்வீழாததொரு கூற்றாலே திரண்ட குறைவற்ற பதினெட்டுப்பாடைமாக்களாலே பழுமரப் பொலிவிற்றாகிய நகரின்செய்தி எக்காலமும் யான் முற்கூறிய தன்மைத்தென்க. இதனானே நெருக்கமும் ஓசைவேறுபாடும் பயன்கோடலுங் கூறினார். “கடிநகரமைதிசெப்புவாம்” என்றதுமுதலாக நடுவுகூறிய வினைகளைப் “புடைநகர்த்தொழிலிடங்கடந்து” என்பனோடு முடித்து, அதுமுதல் இடைநகரிற் கூறிய வினைகளை “இன்னது” என்பதனோடு முடிக்க. (64) 94. தங்கொளி நித்திலத் தாமஞ் சூடிய வெங்களி யிளமுலை வேற்கண் மாதரார் பைங்கிளி முன்கைமேற் கொண்டு பார்ப்பெணுங் கொங்கொளிர் தாமரைக் கிடங்கு கூறுவாம். சூடியவென்றார் முலைமுடிசூடிற்று என்றாற்போல. வெம்மை - விருப்பம். மேல் தாமரைகூறுதலிற் பார்ப்பு - அன்னப் பார்ப்பு. இ-ள். மாதரார் கிளியை முன்கையிலேகொண்டு மாடங்களி லேநின்று பார்ப்பை அக்கிளிக்கு எண்ணிக்காட்டுதற்குக் காரணமாகிய கிடங்கினைக் கூறுவாமென்றாரென்க. (65) 95. கோட்சுறா வினத்தொடு முதலைக் குப்பைக ளாட்பெறா திரிதர வஞ்சிப் பாய்வன மோட்டிறாப் பனிக்கிடங் குழக்க மொய்த்தெழுந் தீட்டறாப் புள்ளின மிரற்று மென்பவே. இ-ள். சுறாவினத்தோடே முதலைத்திரள் கரையிலேவந்த ஆளை எதிர்ப்படப் பெறாவாய் உள்ளேதிரிதருதலான், அதற்கஞ்சி விசைத்துப் பாய்வனவாகிய இறாஉழக்குதலின் ஈட்டமறாத புள்ளினம் எழுந்தரற்று மென்க.. முன்னே கழியணைந்தமைபெறுதலிற் சுறவு கூறினார். கரையில்அஞ்சி ஆழத்திற்சென்றால் ஆளைக்கொல்லுதல் அவற்றிற்குத் தொழில். (66) 96. சிறையனப் பெடையினோ டூடிச் சேவல்போ யறுபத வண்டின மார்ப்பத் தாமரை யுறைவது குழுவினி னீங்கி யோகொடு கறையற முயல்வதோர் கடவு ளொத்ததே. இ-ள். அன்னப்பெடையினோடே சேவலூடிப்போய் வண்டின மெழுந்தார்ப்த் தாமரைப்பூவிலே குவிந்திருக்கின்றது, சுற்றத்தினின்று நீங்கித் கறையறத் தீயிடை நின்று யோகத்தோடு தவஞ்செய்வதோர் கடவுளையொத்ததென்க. கறை-மும்மலமும். யோகம் - திரிந்தது. எழுந்தவண்டு புகைக்கும், பூ நெருப்பிற்கு முவமம். (67) 97. அரும்பொனும் வெள்ளியு மணியு மல்லது கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை குரும்பைமென் முலையின்மேற் குலாய குங்குமம் விருந்துசெய் திடவெறி மேனி சேந்ததே. இ-ள். குளிப்பார்முலையிற்குங்குமம், தன்னைப் புதுமை செய்தலாலே பொற்குட முதலியனமுகத்தலல்லது மட்குட முகவாத துறை மேனிசிவந்ததென்க. பொன்முதலியகாரணப்பெயர் அவற்றானியன்ற காரியத் தின்மேனின்ற ஆகுபெயர். வெறி - மணம். (68) 98. பட்டவர் தப்பலிற் பரவை யேந்தல்கு லட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது மட்டுடை மணமகண் மலர்ந்த போதினாற் கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே. உருக்கி ஒளியையுடைய அரத்தம். மட்டு-காமபானம். கட்டு-கற்பித்தல். இ-ள். அகப்பட்டவரைக் கரையேறாமற்கோறலிற் பரத்தை யையொக்கும்; அதுவொழிய மலர்ந்தபூவினான் மணஞ்செய்த குலமகளையொக்கும்; காவலாற் கன்னியையொக்குமென்க. (69) 99. நிரைகதிர் நித்திலங் கோத்து வைத்தபோல் விரைகமழ் கழுகின்மேல் விரிந்த பாளையுங் குரைமதுக் குவளைகள் கிடங்கிற் பூத்தவு முரையினோ ரோசனை யுலவி நாறுமே. குரைமது - வினைத்தொகை. உரை-புகழ் புகழால் எங்கு முலாவி. இ-ள். நித்திலத்தைக்கோத்துவைத்தபோற் கரையிற் கழுகின் மேல் விரிந்த விரைகமழ்பாளையும், அகழிற்பூத்தகுவளையும் உலாவி ஒரோசனைநாறுமென்க. (70) 100. தாய்முலை தழுவிய குழவி போலவு மாமiலி தழுவிய மஞ்சு போலவு மாய்முகி றழீஇயசும் பறாத நெற்றிய சேயுயர் மதில்வகை செப்பு கின்றதே. இ-ள். நீர்சுமந்திளைத்த மேகத்தைத் தன்னிடத்தே அணைத் தலாலே, குழவியை அணைத்த தாயுடையமுலைபோலவும், மஞ்சைத் தன்னிடத்தே அணைத்த பெரியமலை போலவும், அசும்பறாததலையை யுடைய மதிலின்கூறுபாடு இனிக் கூறுகின்றதென்றாரென்க. (71) வேறு. 101. மாற்றவர் மறப்படை மலைந்து மதில்பற்றி னூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங் கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா. இதுமுதலாகக் “கரும்பொன்” அளவுமொரு தொடர். நூற்றுவலைக்கொல்லி - சதக்கினி; நூறுபேரை ஒருகாற் கொல்வதொருபொறி. நூக்கி - தள்ளி. எறிதல் - அடித்தல்; “சேரியம் பெண்டிர் நெஞ்சத் தெறிய” (நற். 171) என்றாற் போல. தோற்றமுறுபேய் - கட்புலனாகிய பேய். துற்றுதல் - விழுங்குதல். தொடர் - துவக்கு சங்கிலி. குந்தம் - விட்டேறு. கோண்மா - புலிமுதலியன . இவற் றிற்கு எண்ணும்மைவிரிக்க. (72) 102. விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள் கற்பொறிகள் பாவையன மாடமடு செந்தீக் கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய் கூகை நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே. விடுகுதிரை - பகைவர்மேலே விடுங்குதிரைப்பொறி. தொடர்வாள் - தானேதொடர்ந்துகொல்லும்வாள். கற்பொறி - இடங்கணி முதலியன. பாவையும் அன்னமும் மாடங்களும் அடப்படுந்தீயும். மாடம் - நாடகசாலை. கொல் - கொற்சாதி. காய்ந்த இரும்புடன் கொள்ளுதலிற் கொற்புனை செய்கொள்ளியென்றார். எழில் - இகழ்ச்சிக் குறிப்பு. தலைமகளைத் திருகிக் கொள்ளும்வலியுடனே நெருக்குமரமாவ தையவித்துலாம். இவற்றிற்கும் உம்மை விரிக்க. (73) 103. செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும் வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித் தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே. இ-ள். எவ்விடத்துந்திரிந்து செம்புருகினநீரை உமிழ்வனவும், பகைவர் வேதற்குக்காரணமான உருகுவட்டை உமிழ்வனவும், நெய்யை உமிழ்வனவுமாக யவனர் இயந்திரித்த பொறியும். உம்மை விரிக்க. ஆகி - ஆக. புலம் - அறிவு. (74) 104. கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங் குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல் பரந்தபசும் பொற்கொடிகள் பதாகையொடு கொழிக்குந் திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே. இரும்பான்இயன்ற பன்றி. நாகம் - விடவரவு. நூல் - அரி கயிறு. பதாகை - பெருங்கொடி இ-ள். பொற்கொடிகள் பதாகையொடு கொழிக்குந் திருந்து மதில், மாற்றவர் மறப்படை அகழைக்கடந்து தன்னைப்பற்றின் அத்தெவ்வர் தலைபனிக்கும்படி நூற்றுவரைக்கொல்லிமுதல் மரநிலையீறாக வுள்ளவையும், செம்புருகு களிமுதலியவற்றை யுமிழ்வனவாக யவனர் தாட்படுத்த பொறிகளும், பன்றிமுதல் நுண்ணூலீறாயுள்ளவையுந் திருந்திற்றென்க. மதில் இன்னதுமின்னதுந்திருந்திற்றெனச் சினைவினை முதலொடுமுடிந்தது. பற்றிற்பனிப்பவென்க; இத்தொடர் நிலையிற் சொற்களைத்துணித்துப் பலவிடத்தினுமெடுத்துக் கூட்டியது செய்யுளுறுப்பிருபத்தாறினு மாட்டென்னு முறுப்பாதலின். “அகன்று பொருள்கிடப்பினு மணுகிய நிலையினு, மியன்று பொருண் முடியத்தந்தனருரைத்தன், மாட்டென மொழிப பாட் டியல்வழக்கின்” (தொல். செய். 210) என்றும் “மாட்டுமெச்சமு நாட்டலின்றி யுடனிலை மொழியினுந் தொடர்நிலைபெறுமே” (தொல். செய். 211) என்றுந் தொல்காப்பி யனார் கூறினார். இதனால் நாடு முதலிய கவிகளின் மாட்டின்றி வந்தனவுங்கொள்க. இவ்விதி மேல் வருவனவற்றிற்குங் கொள்க. (75) 105. வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும் வயிரமணித் தாழ்கதவு வாயின்முக மாக வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடி கூந்தல் வயிரகிடங் காடைமதிற் கன்னியது கவினே. வரைகள் கண்விழிப்பனபோன்று கதவுடையவென வினைக்குறிப் பொடு முடிந்தது. மழையுகளும்வாயிலெனவே கோபுரமாம். ஞாயில்-எப்புழைக்குநடுவாயெய்து மறையுஞ்சூட்டு. கவினது எனமாறுக. அது இடப்பொருளுணர்த்திற்று. இ-ள். முலையினுங் கூந்தலினையும் ஆடையினையு முடைய மதிற்கன்னி கதவினையுடைய நாலுவாயிலும் நாலுமுக மாகக் கவினிடத்த தாயிற்றென்க. இனி ஆகவென்பதை எங்குங்கூட்டி மதில் இன்னது இன்னதாகக் கவினிடத்த தென்றுமாம். மதிலின்னதின்னதாகை யினாலே அம்மதிற் கன்னியதாயிருக்கமழகென்றுமாம். (76) 106. செம்பொன்மழை போன்றடிதொ றாயிரங்கள் சிந்திப் பைம்பொன்விளை தீவினிதி தடிந்துபலர்க் கார்த்தி யம்பொனிலத் தேகுகுடி யகநகர மதுதா னும்பருல கொப்பததன் றன்மைசிறி துரைப்பாம். இ-ள். இனிக் கூறாதுநின்றது பொன்விளைகின்ற தீவில் நிதியை வெட்டிப் பொன்மழைபோன்று அடிக்கடிசிந்திப் பலர்க்கும் பல ஆயிரங் களைக்கொடுத்து நிறை வித்ததினாலே மறுமையில் தேவருலகத்திலே செல்லுங்குடியையுடைய உண்ண கரம்; அதுதான் நுகர்ச்சியான் உம்பருலகொப்பதொன்றாயினும் அதன்றன்மை சிறிது கூறுவாமென்றா ரென்க. (77) வேறு 107. துப்புறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத்தூதி னொப்பவொன் றாதியாக வாயிரத்த தோரெட் டீறாச் செப்பித்தஞ் செம்பொ னல்கு னலம்வரை வின்றி விற்கு முப்பமை காமத் துப்பி னவரிட முரைத்து மன்றே. இ-ள். வேட்கையினைவிளைவிக்குந் தோழியராகிய தூதாலே செம்பொன் ஒன்றாதியாக ஆயிரத்தெண் கழஞ்சீறாக, வந்தவனுக்கு ஒப்ப விலை சொல்லித் தம்மல்குலை விற்கும் உவர்ப்பில்லாத காம நுகர்ச்சியையுடைய பரத்தையரிடத்தைக் கூறுவாமென்க. தொண்டை - வாய்க்கு அடை. நலம்வரைவின்றி - ஒருவரிடத்தும் அன்புநிலை பேறின்றி. “உப்புடைமுந்நீர்” (சீவக. 280) என்றார் உவர்ப்பிற்கு. உப்பு - இனிமையுமாம். இனி உவமத்தொகையாக்கி இதற்கு இஃதளவென்று உப்பிடுமாறுபோலக் கொடுக்கும் பொருளள வான அன்பென்றுமுரைப்ப. துப்பையொக்கும் தொண்டை போலுஞ் செவ்வாயென இரண்டுவமையுஞ் செவ்வாயை நோக்குதலின், அடுத்து வரலுவமையன்று. (78) 108. குங்கும மெழுகிச் சார்வுந் திண்ணையுங் குயிற்றி யுள்ளாற் றங்குமென் சாந்தத் தோடு தாமமுந் தாழ நாற்றி யெங்குநற் சுவர்க டோறு நாடக மெழுதி யொப்பப் பொங்குமென் மலர்பெய் சேக்கை பொலிந்துவிண் புகற்சி யுண்டே. இ-ள். அச்சேரிப்புறமெங்குஞ் சார்ந்திருக்குமிடத்தையுந் திண்ணையையும் பண்ணிக் குங்குமத்தாலே மெழுகி, உள்ளெலாம் மெழுகின சந்தனத்திலே மாலையையுந் தாழநற்றிச் சுவர்நடோ றுங் காமக்குறிப்புப்பட நாடகமெழுதிச் சேக்கைபொலிந்து விண்ணை விரும்பப்பண்ணுதலுடைத்தென்க. (79) 109. தூசுசூழ் பரவை யல்குல் சுமக்கலா தென்ன வீழ்த்த காசுசூழ் கோவை முத்தங் கதிர்முலை திமிர்ந்த சாந்தம் வாசநற் பொடிகண் மாலை வண்டுண வீழ்ந்த முற்ற மாசைப்பட் டரசு வைக வருங்கடி கமழு மன்றே. இ-ள். தூசுசூழல்சூழ்ந்தகோவை, இவ்வல்குல் நம்மைச் சுமக்க மாட்டாதென்று கருதினாற்போல வீழ்த்த காசு முத்தம் சாந்தம் சுண்ணம் மாலை என்கின்றவை வீழ்ந்த முற்றம் அரசு விரும்பித் தங்கும்படி கமழுமென்க. (80) 110. அஞ்சிலம் பொலியோ டல்குற் கலையொலி யணிந்த முன்கைப் பஞ்சிமெல் விரலிற் பாணி பண்ணொலி பவளச் செவ்வா யஞ்சிநேர்ந் துயிர்க்குந் தேன்சோர் குழலொலி முழவி னோசை துஞ்சலி லோசை தம்மாற் றுறக்கமு நிகர்க்க லாதே. முன்பு சேடியர்கையாற் செம்பஞ்சணிந்த விரல். செவ் வாயை முன்னும்பின்னுங்கூட்டுக. வாயுறுத்தற்கு அஞ்சி உற்றபின் தன்றொழின்முடித்தற்கு நேர்ந்தூதுங் குழல். இ-ள். சிலம்பொலியோடே கலையொலி யாழொலி பாட்டொலி குழலொலி முழவினொலியாகிய ஒழியாவொலி களாலே இச்சேரிக்குத் துறக்கமு மொவ்வாதென்க. (81) 111. தேனுலா மதுச்செய் கோதை தேம்புகை கமழ வூட்ட வானுலாஞ் சுடர்கண் மூடி மாநக ரிரவு செய்யப் பானிலாச் சொரிந்து நல்லா ரணிகலம் பகலைச் செய்ய வேனிலான் விழைந்த சேரி மேலுல கனைய தொன்றே. சுடரென்றது - ஞாயிற்றனதுசுடரையும் திங்களினது சுடரை யுமாக்கிப் பானிலாவைத் திங்களின் சுடரிற்கேற்றுக. இ-ள். கோதையைப்புகைத்தலால் அப்புகை வானுலாஞ் சுடர்களை மறைத்து நகரைப் பகலே இரவையுண்டாக்க, அவ் விரவை நல்லாரணி கலத்தின் மாணிக்கங்கெடுத்துப் பகற் பொழுதைச்செய்ய இயல்பான இரவிலும் பானிலாச்சொரிந்து வானுலாவுந் திங்களின்சுடர்களை அம்மணிகண் மறைத்துப் பகற்பொழுதைச்செய்ய அச்சேரி மேலுலகை யொப்பதொன்றே யாயிற்றென்க. ஏகாரம் - தேற்றம். இரவும்பகலுமின்மையிற் றுறக்கமொத் தது. இனிப்பால் - பகுதி, நிலா - ஒளியென்று முரைப்ப; “நிலாத் தலை திகழும் பைம்பூண்” (சீவக. 1950), “பணி நிலா வீசும் பைம்பொற் கொடி” (சீவக. 2531) என்றாற்போல. (82) 112. இட்டநூல் வழாமை யோடி யோசனை யெல்லை நீண்டு மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கண் மலிந்த சும்மைப் பட்டமும் பசும்பொற் பூணும் பரந்தொளி நிழற்றுந் தீந்தே னட்டுந்தா ரலங்கன் மார்ப ராவணங்கி ளக்க லுற்றேன். இ-ள். வலித்தநூற் செவ்வை தப்பாமற்கிடந்து நீண்டு வேயப் பட்டு நாற்சந்திகளிலே மிக்க ஒலியினையுடைய அங்காடித் தெருக்கூறுத லுற்றேனென்றாரென்க. தம் தரத்திற்கேற்பப்பெற்ற பட்டமும் பூணும் எங்கும் விளங்கு தற்குக் காரணமான வணிகர் முதலாயினார். (83) 113. மணிபுனை செம்பொற் கொட்டை வம்பணி முத்த மாலை கணிபுனை பவளத் திண்கால் கம்பலடுக் கிடுகி னூன்றி யணிநில மெழுகிச் சாந்தின கிற்புகைத் தம்பொற் போதிற் றிணிநில மணிந்து தேங்கொ ளையவி சிதறினாரே. கணி - நூல் போனவன். அவன்புனைந்தகால். திணிநிலம் - படுத்த நிலம். தேங்கொளையவி - தெய்வங்கள் இனிதாகக் கொண்ட ஐயவி. இ-ள். மணியழுத்தின பொன்னாற்செய்த கடைமணியை யுடையகச்சுத்தூக்கின பவளக்காம்பைக் கம்பலம்வேய்ந்த சட்டத்திலே கொளுத்தியூன்றி மெழுகிப் புகைத்து அணிந்து சிதறினாரென்க. (84) முத்தமாலைபுனைந்த கிடுகு. 114. பொன்சொரி கதவு தாழிற் றிந்துபொன் யவனப் பேழை மின்சொரி மணியு முத்தும் வயிரமுங் குவித்துப் பின்னு மன்பெரும் பவளக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை நன்பக லிரவு செய்யு நன்கலங் கூப்பினாரே. இ-ள். பொன் தானேசொரிதற்குக்காரணமான கதவைத் திறந்து பேழையிலிருந்த மணி முதலியவற்றைக்குவித்துப் பின்னரும் பவளத் திரள்களையுங்குறைப்பணிகளையும் நீலப்பூண் களையுங் குவித் தாரென்க. (85) நன்பகல் - கடும்பகல். 115. விழுக்கலஞ் சொரியச் சிந்தி வீழ்ந்தவை யெடுத்துக் கொள்ளா வொழுக்கின ரவர்கள் செல்வ முரைப்பரி தொழிக வேண்டா பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொ னாலு மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே. இ-ள். கலத்தைச்சொரிதலாற் சிதறிவீழ்ந்தவற்றைக் கொள் ளா ஒழுக்கினர்; அதுவேயன்றி அவர்க்கு நாடோறு நடுதற்குக் கமுகு முதலியன தேடவேண்டா; அது என்னையெனின், அவற்றைப் பொன்னாலு மணியாலு மியற்றினாராதலான். அவர்கள் செல்வ மென்னாலுரைத்தலரிது; இனி நீருங்கேட்க வேண்டுமென்னும் விருப்பத்தை யொழிவீராகவென்க. இனி உரைப்பரிது கேட்கவிரும்பவேண்டா ஒழிகவென்று மாம்.(86) 116. மூசுதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கு மோசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகாப் பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி மாசன மிடம்பெறாது வண்கடை மலிந்த தன்றே. இறாலின்மூசு தேன்போல மூச. உம்மை - சிறப்பு. ஓரோசையும் பாடம். பூசு சாந்து - நன்குமதித்த சாந்து. பூசி - பூச. இ-ள். மாசனம் போக்கிடம்பெறாமல் ஒருவர் பூசிற்றெழுவர் தம்மகலம் பூசும்படிமூச ஆங்குப்பிறந்தவோசையும் மொய் திரைபோல இயம்பி ஓசையென்றுணர்தலன்றி எழுத்தின் வடிவுணர் தலாகாதாய்க் கடையிலேமலிந்ததென்க. நhன்குசாதியும் அநுலோமப்பிரதிலோமருஞ் சங்கரசாதியும் பற்றி எழுவரென்றார். (87) 117. மெய்யணி செம்பொற் சுண்ண மேதகு நான நீரி னைதுட் படொழுகி யானை யழிமதங் கலந்து சேறாய்ச் செய்யணி கலன்கள் சிந்தி மாலையு மதுவு மல்கி வெய்தடி யிடுதற் காகா வீதிகள் விளம்ப லுற்றேன். அணிசுண்ணம் - உண்டசோறுபோனின்றது. மிச்சில் கவிழ்த் தல் மரபு. செய்யணிகலம் - அரிதிற்செய்தநலம். மாலையினுங் கலத்தினுந்தீண்டுதற்கு அடிநாணிற்று; தமது நலத்தான். இ-ள். அணிந்து மிக்க சுண்ணம் நாணத்தாலும் பனிநீராலும் இளகுதல்பட்டு வீதியிலொழுகலின் அதனோடு மதங்கலந்து மதுவு மல்கிச் சேறாய்ச் சிந்தி மல்கிவிரைய அடியிடுதற்காகாவீதிகள் கூறலுற்றேனென்க. இவை பீடிகைத்தெருவொழிந்தன. (88) வேறு. 118. முழவணி முதுநகர் முரசொடு வளைவிம விழவணி மகளிர்தம் விரைகம ழிளமுலை யிழையணி யொளியிள வெயில்செய விடுபுகை மழையென மறையின பொலிவின தொருபால். இ-ள். ஒருபால் முழவுநிரைத்த கோயில்களிலே முரசும்வளையும் விம்முதலால் அவ்விழவிற் கொப்பித்த மகளிருடைய முலை யினணிந்த இழையிலொளி இளவெயிலையுண்டாக்கும் படி இட்டபுகை மழையென ஞாயிற்றை மறைத்த பொலிவினை யுடைத்தாயிற்றென்க. (89) 119. குடையொடு குடைபல களிறொடு நெரிதர வுடைகட லொலியினொ டுறுபவர் பலிசெல முடியொடு முடியுற மிடைதலின் விடுசுடர் கொடியுடை மழைமினிற் குலவிய தொருபால். உடைகடலொலி - உடைகடலொலிபோலுமொலி. இ-ள். ஒருபால் அரசனைக்குடையுங்குடையுங் களிறுங் களிறும் பலநெருங்கிச் சேவித்தல் காரணமாகத் தேவருடைய பலிநடத்தலாலே, அதனைச் சேவிக்கும் அரசர்முடியு முடியு நெருங்குதலின் விடுசுட்ர் மழையின்மின்போற் குலவியதென்க. இது செல்வமுண்டாதற்குப் பலிநடக்குமென்றார். இனிப் பலி நடத்தலிற் குடை முதலியன நெரிதர முடிநெருங்கிற் றென்றுமாம். (90) 120. பூத்தலை வாரணப் போர்த்தொழி லிளையவர் நாத்தலை மடிவிளிக் கூத்தொடு குயிலக் காய்த்துறு தமனியத் துகளொடு கடிகமழ் பூத்துகள் கழுமிய பொலிவின தொருபால். பூ-தோன்றிப்பூ. காய்த்துறு-காய்த்துதலுற்ற. இ-ள். ஒருபால் கோழிப்போரின்வெற்றியைத் தமதாகவு டைய இளையவர் சீழ்க்கைக் கூத்தோடுநெருங்குதலான், அப்பொழுது சிந்தும் பொற்றுகளும் பூத்துகளு மயங்கின பொலிவினதென்க. (91) 121. மைந்தரொ டூடிய மகளிரை யிளையவ ரந்துகில் பற்றலிற் காசரிந் தணிகிளர் சுந்தர நிலமிசைச் சொரிதலின் மின்னணிந் திந்திர திருவிலி னெழிலின தொருபால். இ-ள். ஒருபால் கணவரோடூடிய மகளிரை அவர்துகில் பற்றலிற் காசு கோவையற்று நிலத்தே விசையோடே சிந்துதலின் ஒளியை யணிந்து வானவில்லி னெழிலினதென்க. (92) சுந்தரம் - நன்மை. 122. வளையறுத் தனையன வாலரி யமைபத மளவறு நறுநெயொ டடுகறி யமைதுவை விளைவமை தயிரொடு மிசைகுவிர் விரையுமி னுளவணி கலமெனு முரையின தொருபால். இ-ள். ஒருபால் வளையை நுண்ணிதாக அறுத்தாற் போன்றன வாகிய வாலிய அரிசியாலமைந்த சோற்றையும் நெய்யாலட்ட கறியையும் முற்றினதயிராலமைத்த துவையினையும் மிசைகு வீராக விரையுங்கோள்: உண்டாற் றருதற்கு அணிகலமுளவெனு முரையின தென்க. ஒடு - என்ணொடுவுமாம். வாலவிழும் பாடம். (93) 123. வரைநிறை யருவியின் மதமிசை சொரிவன புரைநிரை களிறொடு புனைமணி யியறேர் விரைநிரை யிவுளியொ டிளையவர் விரவுபு குரைநிரை குளிர்புனல் யாற்றின தொருபால். இ-ள். ஒருபால் மாலையொழுங்கி னருவியைத் தம்மேலே சொரிந்துகொள்வன போல மதத்தைமேலே சொரிவனவாகிய உயர்ச்சியையுடைய களிற்றோடுந் தேரிற் பூண்டாற் செலவு விரைந்த இவுளியோடும் இளையவர் விரவி நிரைத்த யாற்றின தென்க. அருவிபோல் வீழ்கின்ற மதமென்பாருமுளர். மிகையும் பாடம். (94) 124. வரிவளை யரவமு மணிமுழ வரவமு மரிவளர் கண்ணிய ரணிகல வரவமும் புரிவளர் குழலொடு பொலிமலி கவினிய திருவிழை கடிமனை திறவிதின் மொழிவாம். புரிவளர்குழல் - நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரண மாகிய “குழல் வழி யாழெழீஇத் தண்ணுமைப்பின்னர், முழவியம் பலா மந்திரிகை.” விருப்பமுமமாம். இ-ள். குழலொடு வளையரவமும் முழவரமும் கலவரமுங் கவினியமனைகளைச் செவ்விதாகக் கூறுவா மென்றாரென்க. இது அரசற்குரியவரிருப்பு. (95) வேறு. 125. பாவை யன்னவர் பந்து புடைத்தலிற் றூவிய ன்னம் வெரீஇத்துணை யென்றுபோய்க் கோவை நித்தில மாடக் குழாமிசை மேவி வெண்மதி தன்னொ டிருக்குமே. இ-ள். மகளிர் பந்தடித்தலின் அன்னம் அவ்வோசைக்கு வெருவி மதியை இனமென்றுகருதிக் கூடப்போய் மாடங்களின் மேலே அம்மதியோடே மேவியிருக்குமென்க. மதியியங்குந்தோறுந் தானுமியங்கிற்று. (96) 126. திருவ நீணகர்ச் செம்பொனி னீடிய வுருவ வொண்கொடி யூழி னுடங்குவ பரவை வெங்கதிர்ச் செல்வனபன் மயிர்ப் புரவி பொங்கழ லாற்றுவ போன்றவே பரவை -பரத்தல். இ-ள். அத்திருவையுடையமனைகளில் நீடியகொடி முறையா லசைவன; செல்வன்புரவியை அழலாற்றுவபோன்றன வென்க. (97) 127. இழைகொள் வெம்முலை யீர முலர்த்துவார் விழைய வூட்டிய மேதகு தீம்புகை குழைகொள் வாண்முகஞ் சூழ்குளி ரங்கதிர் மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே. இழை தான்விரும்பிக்கொண்ட வெவ்வியமுலையிலே கணவர் பூசிய சந்தனமுதலியவற்றின் ஈரத்தைப்புலர்த்துவார் - தொழிற்பெயர். இ-ள். கணவர்விழைய ஈரமுலர்த்துவாரூட்டிய புகை சூழ்முகம் மழையுட் குளிருங் கதிர்மதிபோலுமெனத் தோன்று மென்க. (98) 128. செம்பொற் கண்ணி சிறார்களைந் திட்டவு மம்பொன் மாலை யவிழ்ந்துடன் வீழ்ந்தவுந் தம்பொன் மேனி திமிர்ந்ததண் சாந்தமும் வம்புண் கோதையர் மாற்று மயலரோ. இ-ள். மகளிர் தம்மேனி திமிர்ந்த சாந்தமும் மயிர்குலைந்து சோர வீழ்ந்த மாலையுஞ் சிறார்களைந்த கண்ணியுஞ் சேடியர் மாற்றுந் துராலென்க. வண்டுகள் புதுமையையுண்ட பழமாலையைச்சூடுதலிற் சேடியராயிற்று. “கண்டுகை விட்ட மயல்” என்றார் பிறரும். (99) 129. வேரி யின்மெழுக் கார்ந்தமென் பூநிலத் தாரி யாகவஞ் சாந்தந் தளித்தபின் வாரி நித்திலம் வைப்பபொற் பூவொடு சேரி தோறிது செல்வத் தியற்கையே. அரி - ஐம்மை; விகாரம். ஆரி - அழகென்றுமாம்; ஆரியாக - மேலாக வென்றுமாம். மேலும் “தனித்த சுண்ணம்” (சீவக. 1330) என்ப. வேரி - இருவேரியுமாம். இ-ள். நாற்றமுந் தோற்றமும் இனியவற்றான் மெழுகிய மெழுக்கார்ந்தவேரியையுடைய பூநிலத்தே ஐதாகத்தொழில் படச் சாந்தைப்பூசினபின்பு பொற்பூவோடு நித்திலத்தையும் வைப் பார்கள்; ஆதலிற் சேரிதோறுஞ் செல்வத்தியற்கை இத்தன்மைத் தென்க. (100) 130. கருனை வாசமுங் காரிருங் கூந்தலா ரருமை சான்ற வகிற்புகை வாசமுஞ் செருமிச் சேர்ந்து கண்ணீர் வரத் தேம்பொழி லுரிமை கொண்டன வொண்புற வென்பவே. கூந்தலிலார்ந்த புகையென வினைத்தொகை; பெயருமாம். இ-ள். புறவுகள் பொரிக்கறியினது வாசப்புகையும் அகிலி னது வாசப்புகையும் செருமிக் கண்ணீர்வருதலாலே பொழிலைத் தாமிருத்தற்குரிய இடமாகக்கொண்டனவென்க. (101) 131. நறையு நானமு நாறு நறும்புகை விறகின் வெள்ளி யடுப்பினம் பொற்கல நிறைய வாக்கிய நெய்பயி லின்னமிர் துறையு மாந்தர் விருந்தொடு முண்பவே. நறை - நறைக்கொடி. நானம் - தூவியெரிக்கும்புழுகு. நிறைய - மடைநூல் விதியிற்குறையாமல். விருந்து பெறற்கருமையின் உம்மை - சிறப்பும்மை. இ-ள். வெள்ளியடுப்பிலே நறையுநானமுநாறும் நறும்புகை விறகாலாக்கின அமுதை மாந்தர் பொற்கலத்தே விருந்தோடு முன்பரென்க. (102) விறகு-சந்தன முதலியன. 132. பாளை மென்கமு கின்பழ மெல்லிலை நீள்வெண் மாடத்து நின்றுகொண்ட ந்நலா ராளி மொய்ம்பர்க் கொடுத்தணி சண்பக நாள்செய் மாலை நகைமுடிப் பெய்பவே. மணமெல்லிய பாளை. வெள்ளிலை பாடமாயிற் கொம் பிலே வெளுத்ததாம். நகை முடி - முத்தமாலையையுடைய முடி. இ-ள். நல்லார் மாடத்தேநின்று பாக்கையும் வெற்றிலையும் பறித்துக் கொண்டு மொய்ம்பர்க்குக்கொடுத்து அவரணிந்த சண்பக மாலையைவாங்கி நாட்கால மன்றாயினும் வேட்கை மிகுதியாற் றமதுமுடியிலே பெய்வரென்க. இனி நாட்காலத்தே செய்த சண்பகமாலை யணிந்த முடியி லே அக்காலத்திற்கு உரிய பூக்களைக் பெய்வரென்றுமாம். (103) 133. எழுது வாணெடுங் கண்ணிணை யந்நலார் மெழுகு குங்கும மார்பிடை வெம்முலை யுழுது கோதை யுஞ் சாந்து முவந்தவை முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே. மையெழுதுங்கண். குங்குமமெழுகும். திளைப்பன - கரணங் கள். இ-ள். அம்மகளிர் கணவர்மார்பிலே முலையாலே உழுது கோதையையுஞ் சாந்தையும் வித்தித் திளைப்பனவற்றிற் றாங்கள் உவந்தனவற்றை முழுதும் விளைப்பரென்க. (104) 134. குஞ்சி மேலனிச் சம்மலர் கூட்டுணு மஞ்சி லோதிய ரம்மலர்ச் சீறடி மஞ்சு தோய்மணி மாடத்து மல்குபூம் பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே. கூட்டுணும் - கவரும். இ-ள். ஓதியருடைய அனிச்சமலர்கூட்டுணுஞ் சீறடி ஆடவர் குஞ்சிமேலும் பனிக்கும்; பஞ்சிமேலும் பனிக்குமென்க. கோபத்தாலுங் கரணத்தாலு நடுங்கிற்றென ஊடலுங் கூடலு முணர்த்திற்று. “கொல்புனற் றளிரி னடுங்குவனணின்று” (பதிற். 52) என்றார் பிறரும். நகராதலின் ஊடற்குக்காரணங் கூறராயினார். “எஞ்சு பொருட்கிளவி செஞ்சொலாயிற் - பிற்படக்கிளவார் முற்படக்கிளத்தல்” (தொல். இடை. 36) என்பதானற்குஞ்சிமேலு மென்று உம்மை கொடாராயினார். (105) 135. தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற் காம மேநுகர் வார்தம காதலால் யாம மும்பக லும்மறி யாமையாற் பூமி மாநகர் பொன்னுல கொத்ததே. ஏகாரம் - தேற்றம். காமமே - ஏகாரம் பிரிநிலை. “யாமத்து மெல்லையும்” (கலித். 139) என்றார் பிறரும். பூமியின். பூமென் மாநகரும் பாடம். பூ - வடமொழி. இ-ள். சேக்கைமேனுகர்வார் தம் காதலால் இரவும்பகலு மறியாமையின் அந்நகர் பொன்னுலகத்தை ஒத்ததென்க. (106) 136. அரவு கான்றிட்ட வங்கதிர் மாமணி யுரவு நீர்முத்து முள்ளுறுத் துள்ளன விரவன் மாந்தர்க்கு மின்னவை யீவதோர் புரவு பூண்டனர் பொன்னகர் மாந்தரே. உரவுநீர் - உலாவுநீர். உம்மை - இழிவுசிறப்பு. இ-ள். மணியுமுத்தும் உள்ளுறுத்தின்னவை இரவன் மாந் தர்க்கும் உள்ளனவாதலாற் பொன்னகர்மாந்தரே புரவுபூண்டன ரென்க. இது இகழ்ச்சி. ஏகாரம் - எதிர்மறை. இனி இன்னவை இரவன் மாந்தர்க்குமுள்ளனவாயிருத்தலிற் பின் மாந்தரே புரவுபூண்டா ரென்றது - உயிர் உறுப்பு முதலியன கொடுத்தற்குத் துணிந்தாரி வரே யென்றுமாம். ஏகாரம் - தேற்றம். (107) 137. முல்லை யங்குழ லார்முலைச் செல்வமு மல்லன் மாநகர்ச் செல்வமும் வார்கழற் செல்வர் செல்வமுங் காணிய வென்பர்போ லெல்லி யும்மிமை யாரிமை யாததே. இ-ள். இமையார் இமையாதிருந்த இருப்பு, நீயிர்இம் மூன்று செல்வத்தையும் விடாமற்காண்டற்கு யாம் விழித்திருந்தேமென்று தங்கண்ணைநோக்கிக் கூறுவாரைப் போலே யிருந்ததென்க. மூன்றாவன போகமுஞ் செல்வமும் வீரமும். என்ப என்பது பாடமாயின் இமையார் நீயிரிவைகாண்டற்கு யாங்கள் இமையா திருந்ததென்று கண்ணிற்குக் கூறுவாரென்க. ஏகாரம் - ஈற்றசை. (108) 138. முழவுஞ் சங்கமு முன்றின் முழங்குவ விழவும் வேள்வும் விடுத்தலொன் றின்மையாற் புகழ லாம்படித் தன்றிது பொன்னக ரகழ்தன் மாக்கட லன்னதொர் சும்மைத்தே. வேள்வி - விசேடமான நாள்களில் நிகழ்வன. இது வேள் வென ஈறுதிரிந்தது. இ-ள். விழவினும் வேள்வியினுமொன்றைக் கைவிடுதலின் மையான் முழவுஞ் சங்குமுழங்குவன கடலன்னதோர் சும்மைத் தாதலான் இப்பொன்னகர் புகழலாம் படித்தன்றென்க. (109) 139. திங்கண் முக்குடை யான்றிரு மாநக ரெங்கு மெங்கு மிடந்தொறு முண்மையா லங்கண் மாநகர்க் காக்க மறாததோர் சங்க நீணிதி யாற்றழைக் கின்றதே. சங்கமென்னும் பேரெண்ணையுடைய தொன்றுபட்ட நிதியோடே. இ-ள். ஸ்ரீகோயில் தெருவிடமெங்கு மனையிடமெங்கு முண்டா கையினாலே மாநகர்க்கு இடந்தோறும் நிதியோடே அறாததோராக்கந் தழையாநின்ற தென்க. இனி மாநகருண்மையால் நகர்க்கு ஆக்கமறாது; அவ்வாக்கம் ஒருசங்கநிதியாலே தளிர்க்கின்றதென்று மாம். சங்கநிதி - அரசன். (110) வேறு. 140. தேன்றலைத் துவலை மாலை பைந்துகில் செம்பொன் பூத்து நான்றன வயிரமாலை நகுகதிர் முத்த மாலை கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கு மீன்றருள் சுரந்த செல்வத் திராசமா புரம தாமே. தேனைத்தலையிலே துவலையாகவுடைய மாலை முதலிய வற்றைப் பூத்துநான்றனவாகியவயிரமாலை முதலியவற்றைத் தோற்று வித்து, அமிர்தையேந்திநின்ற கற்பகச் சோலையென்றூரிற் கோர்பெயர் கூறிற்று; இதற்குமவை யுண்மையின். இ-ள். அங்ஙனங்கூறியஊர் யார்க்கும் அருளையீன்று செல்வத்தைச் சுரந்த கற்பகச்சோலை; அஃதிராசமாபுரமென்னும் பெயரையுiடத்தாமென்க. இனித் தான்சுரந்த அருளாலே யார்க்குமறுமையிற் கற்பகச் சோலையையீன்று அச்சோலையிற் செல்வத்தைத் தன்னிடத்தே யுடையது இராசமாபுரமென்க. என்றது; இதில் வாழ் வாரருளைக்கண்டு பிறர்க்கும் அருள்பிறந்து சுவர்க்கமெய்துவ ரென்ற வாறு. இத்துணையும் நகரின்சிறப்புக் கூறினார். (111) கோயிற்சிறப்பு வேறு 141. வேக யானை மீளிவேல் வெய்ய தானை யையகோன் மாக நீண்ம ணிம்முடி மாரி வண்கை மாசில்சீ கேக வாணை வெண்குடை யிந்ந கர்க்கு மன்னவ னாக நீர நன்னகர் நன்மை தன்னஞ் செப்புவாம். தானையென்றது ஒழிந்த மூன்றுபடையை. ஐய - வியக்கத் தக்க. தேவர்புகழுமுடியென்று குலநன்மை கூறினார். சீர் - மிக்க புகழ். ஏகவாணை - பொதுவற வாளுதல். இ-ள். யானை முதலியவற்றையுடைய மன்னனது கோயிலின் நன்மையைச் சிறிதுகூறுவாமென்றாரென்க. (112) 142. நீணி லம்வ குத்துநீர் நிரந்துவந் திழிதரச் சேணிலத் தியற்றிய சித்திரச் சுருங்கைசேர் கோணி லத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கி டங்கு பூணி லத்து வைத்ததோர் பொற்பினிற் பொலிந்ததே. இ-ள். நீர் நிரந்துவந்திழியும்படி நீணிலத்தை வெட்டிப் புறம்பில் அகழ்தொடங்கிப்படுத்த வழிசேர்ந்தகிடங்கு நிலமகளுக் குப் பூணிட்ட தோ ரழகுபோலப் பொலிந்த தென்க. சுற, புறனடையாற் கொள்க. சுருங்க - கரந்தகற்படை. (113) 143. இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின் மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமு மஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன் குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே. இ-ள். மதிலானது மாகத்தினடுவைப்பிளந்து நாகத்தின் எல்லையைக்காண ஏகுதலின் அதனை மஞ்சு முற்படப் போகாமற் றடுத்துப் பின்பு காலைக்கட்டிக்கொண்டு ஆகாயத்தேயுயர்ந்த நாகமும் நின்னை அஞ்சுமென்றலிற் றான் மேகபதத்தளவிலே நின்று தன்றலை யினீண்ட கொடிக்கையாலே நம்மைவந்து காண்க வென்று கூவிவிட்ட தன்மையையொத்தது அவையசைந்த தன்மையென்க. குஞ்சி - கொடிநாட்டுங்குழி; கழையுமாம். (114) 144. முத்த மாலை முப்புரி மூரி மாம ணிக்கத வொத்த நான்கு கோபுர மோங்கி நின்றொ ளிர்வன சத்தி நெற்றி சூட்டிய தாம நீண்ம ணிவணன் தத்தொ ளிம ணிம்முடித் தாமநால்வ போலுமே. இ-ள். மாமணிக்கதவையுடைய தம்மிலொத்த நீலமணிக் கோபுர நான்கிலும் நின்றொளிர்வனவாகிய சூலத்தினெற்றி யிற்சூட்டிய முப்புரியாகியமுத்தமாலை, தாமத்தையுடைய உலகளந்தமா யோன் முடியின் தாமநால்வனபோலுமென்க. போன்றவும் பாடம். முப்புரியாகிய முத்தமாலையை யுடைய கதவுமாம். தத்துதல் – வீசுதல் (115). 145. சங்கு விம்மு நித்திலஞ் சாந்தொ டேந்து பூண்முலைக் கொங்கு விம்மு கோதைதாழ் கூந்த லேந்து சாயலா ரிங்கி தக்களிப்பினா லெய்தியாடும் பூம்பொழில் செங்க ணிந்தி ரன்னகர்ச் செல்வ மென்ன தன்னதே. சங்கு விம்மு நித்திலம் - சங்கு சூண்முற்றி யீன்ற முத்து. செல்வம் - ஆகுபெயர். இ-ள் நித்திலத்தைச் சாந்துடனேந்திய முலையினையுங் கூந்தலினையுமுடைய சாயலார் காமக்குறிப் போடுகூடியகளிப் பாற்சென்றாடும்பொழில் இந்திரனகரிற்கற்பகச்சோலை என்ன தன்மைத்து அன்னதன்மைத்தென்க. (116) 146. வெள்ளி யானை மென்பிடி மின்னி லங்கு பைம்பொனாற் றுள்ளு மானொரு த்தலுஞ் செம்பொ னம்பொன் மான்பிணை யுள்ளு காம முள்சுட வேந்த னாங்கு றைவதோர் பள்ளி மாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே. இ-ள். வெள்ளியாற்செய்தகளிறும் பைம்பொனாற் செய்த பிடியுஞ் செம்பொனாற்செய்த ஒருத்தலும் அம்பொனாற் செய்த பிணையும் ஒன்றையொன்றுள்ளுங்காமம் வேந்தனுள்ளத்தை வேட்கைமிகுப்ப அச்சோலையில் அவனுறைவதோர் மண்டபத்திற் பள்ளிமாடம் நாகருலகையொக்குமென்க. இனி வெள்ளியாலேயானையும்பிடியுஞ் செய்தவென்று மாம். (117) 147. கோழ ரைம ணிமடற் கூற்த னெற்றி யேந்திய மாழை யந்தி ரள்கனி மாமணிம ரகதஞ் சூழ்குலைப்ப சுங்கமுகு சூலுபாளை வெண்பொனா லூழ்தி ரண்ம ணிக்கயி றூசலாட விட்டதே. இ-ள். பொன்னாற்செய்தபழத்தினையும் மரகதமணி யாற்செய்த குலையினையும் வெள்ளியாற்செய்தபாளை யினையும் ஏந்திய கொழுவிய அரையினையும் நீலமணியாற் செய்த மடலினையுமுடைய கூந்தற்கமுகினெற்றியில் ஊசலாட விட்ட கயிறு முத்துவடமென்க.(118) 148. மென்றி னைப்பி றங்கலு மிளிர்ந்து வீழ ருவியுங் குன்ற யன்ம ணிச்சுனைக் குவளை கண்விழி ப்பவு நின்றுநோக்கு மான்பிணை நீலயானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. காமர்காமபூமி - காமனுக்குவிருப்பஞ்செய்கின்றபூமி. “காமரை வென்றகண்ணோன்” போல. இ-ள். நீலயானைமன்னவன் தழும்பிய காமத்தாலே விரும்பிய பூமியிடத்துச் செய்குன்றிற், றினையையும், அதனின்றுங் குதித்து விழுகின்ற அருவியையும், மானும் பிணையும், அதனயலிற் சுனைக் குவளை காப்பார்கண்போல விழியாநிற்கவும், உண்பன வாக நின்றுநோக்குமென்க. பிறங்கல் - திரள். இவற்றைச் சித்திரமெனிற் கோயிற்கு அங்கமாகிய செய்குன்று கூறிற்றிலராவர். (119) 149. தீங்கு யின்ம ணந்துதேன் றுஞ்ச வண்டு பாண்செய வேங்கை நின்று பொன்னுகுக்கும் வெற்பு டுத்த சந்தன மோங்கு பிண்டி சண்பக மூழி நாறு நாகமு நீங்க நீங்கு மின்னுயிர் நினைப்பி னின்றி ளஃகுமே. ஊழ் - ஊழியெனத்திரிந்தது. முறைமைபட அலர்ந்து நாறும். இ-ள். குயிலாகிய காளங்கூடித் தேனாகிய யாழ்தங்க வண்டு பாட அவற்றிற்குப் பரிசிலாக வேங்கைபொன்னைச் சொரியு முற்கூறிய செய்குன்றைச் சந்தனமுதலியன சூழ்ந்தன. இக்குன் றையுங்காவையு நீங்க உயிர்நீங்கும்; நினைப்பின் உயிர்தளிர்க்கு மென்க. (120) 150. முத்தம் வாய்பு ரித்தன மொய்க திர்ப்ப சும்பொனாற் சித்திரத்தி யற்றிய செல்வ மல்கு பன்மணி பத்தியிற்கு யிற்றிவான் பதித்து வைத்த போல்வன வித்தி றத்த பந்தெறிந் திளைய ராடு பூமியே. இ-ள். இளையர்பந்தாடுபூமி, முத்து விளிம்பிலே அழுத்தப் பட்டன; பொன்னாலே பண்ணப்பட்டன; மணி பத்தியிற் குயிற்றப்பட்டு வானை இவ்வுலகிலேயிருத்தினாற் போல்வன வாகிய இத்திறத்தனவென்க.(121) 151. வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ராத்தலுங் கைத்த லத்தி னோட்டலுங் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலு மித்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே. இ-ள். பந்தைக் கையாற்றொடாதே காலாலே தட்டி யெடுத்தலும் காத்தலும் கையிலேகொள்ளலும் செல்ல வோட்டுத லும் கண்ணியை யுடையநெற்றியிலே தீட்டுதலும் ஒருகாலைக் கொருகாலுயரப் பத்தியாகப்புடைத்தலும் தாம் நிலையிலேநின்று அரவுபோலப் பரந்துலாவுதலுண்டாம்படி புடைத்தலுமாகிய இக்கூற்றவாகிய அப்பந்தினோடுண்டான வின்பம் முடிவில்லை யென்க. (122) 152. கூற்ற மன்ன கூர்நுதிக் குருதி வான்ம ருப்பிடைச் சீற்ற முற்ற மன்னர்தஞ் சென்னி பந்த டிப்பன வூற்றி ருந்த மும்மதத் தோடை யானை பீடுசால் காற்றி யற்பு ரவிதேர் கலந்து கௌவை மல்கின்றே. கூற்றம் - யானைக்குவமை. சீற்றமுற்ற - அரசன் வெகுண்ட. இருந்த - இடைவிடாத. இ-ள். மருப்பிடையே மன்னர்தலையைப் பந்தடிப்பனவாகிய யானை புரவிதேர் இவைகூடிஒலிமிக்கது அவ்விடமென்க. இவை அரசனேறுவனவாதலின் உண்ணிற்றலியல்பு. (123) 153. கவ்வை யங்க ருவிசூழ்ந்து கண்ப டுக்கு மாடமுந் தெவ்வர் தந்த நீணிதி சேர்ந்த செம்பொன் மாடமு மெவ்வ லங்கு ழலினார் மணிக்க லம்பெய் மாடமு மிவ்வ லந்த வல்லவு மிடங்க ளெல்லை யில்லையே. இ-ள். மனச்செருக்கால் ஆரவாரமுடைய வீரர்திரள் அரசனது பகையை மனத்தானோக்கி யாமந்தோறுங்காத்துத் துயில்கொள்ளு மாடமும், திறைகிடக்குமாடமும், கலமிட்டுவைக்கு மாடமுமாகிய இக்கூறப்பட்ட இடங்களும், கூறாதொழிந்த ஆயுதசாலை முதலிய இடங்களு முடிவில்லையென்க. கருவி-தொகுதி; ஈண்டு ஆகுபெயர். இனிப் பகைவர்க்குக் கவ்வையைச் செய்தலையுடைய ஆயுதங்கள் சூழ்ந்து நோக்கி னார்கண்ணைஅகப்படுக்கும் ஆயுதசாலையுமென்ப. (124) 154. பூத்த கோங்கும் வேங்கையுட் பொன்னி ணர்செய் கொன்றையுங் காய்த்து நின்று கண்டெறூஉங் காமர் வல்லி மாதரார் கூத்த றாத பள்ளியுங் கொற்ற மன்ன மங்கைய ரேத்தல் சான்ற கோயிலு மிடைப்ப டுத்தி யன்றவே. தமதுகண்ணானது இளையோர்மெய்யைவெவ்விதாக்கி அவர் நெஞ்சிலே நின்று சுடுமாதராரெனச் சினைவினை முதலோடுமுடிந்தது. இ-ள். மாதரார்நாடகசாலையும், காவன்மகளிர் அரசற்கு வெற்றி நிலைபெறும்படி ஏத்தும் ஸ்ரீ கோயிலும், கோங்கு முதலியவற்றை நடுவேயாக்கிப் பண்ணினவென்க. இதனால் இரண்டுந் தம்மில் இடைவிட்டிருக்குமென்றார். மேலே “வண்புகழ் மாலடிவந்தனை செய்தாள்” (சீவக. 220) என்ப. (125) 155. கந்து மாம ணித்திரள் கடைந்து செம்பொ னீள்சுவர் சந்து போழ்ந் தியற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா லிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி வந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. இ-ள். மாமணித்திரளைத் தூணாகக்கடையப்படுதலானும், பொற்சுவரிலே சந்தனத்தையறுத்துப் பண்ணி வைத்த நெடுங் கையை வெள்ளியாலே வேயப்படுதலானும், அண்ணல் கோயிலின் றன்மை, இந்திரனகர் இவ்வழி வந்திருந்த தன்மையேயாயிருந்த தென்க. (126) ஏகாரம் - தேற்றம். 156. ஆட லின்ன ரவ்வமு மங்கை கொட்டி நெஞ்சுணப் பாட லின்ன ரவ்வமும் பணைமு ழவ்வ ரவ்வமுங் கூடு கோலத் தீஞ்சுவைக் ககோல யாழ ரவ்வமும் வாட லில்ல வோசையால் வைகனாளும் வைகின்றே. கொட்டி - ஒக்கடித்து. ஒழிந்த கருவிகளோடு கூடுமழகையுஞ் சுவையையுமுடைய நரம்பையுடைய யாழ். இ-ள். கூத்தினரவமும் பாட்டினவமும் முழவினரவமும் யாழினரவமுமாகிய குறைதலில்லாத வோசையாலே அண்ண லுக்கு நாள்கடோறு நாள் கழியாநின்ற தென்க. இனி வைக வாயின், ஓசையோடுசெல்ல நாளுங்கழியா நின்றதென்க. கோயிலின்சிறப்புக் கூறினார். (127) சச்சந்தன் வரலாறு வேறு 157. நச்சு நாகத்தி னாரழற் சீற்றத்த னச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன் கச்சு லாமுலை யார்க்கணங் காகிய சச்ச ந்தன்னெனுந் தாமரைச் செங்கணான் இதுமுதல் “கோதை” அளவுமொரு தொடர். நச்சு - நாகத்திற்கடை. அன்னவன் - தொழிற்பெயர். (128) 158. வண்கை யாற்கலி மாற்றிவை வேலினாற் றிண்டி றற்றெவ்வர் தேர்த்தொகை மாற்றினா னுண் கலைக்கிட னாய்த்திரு மாமகள் கண்க ளுக்கிட னாங்கடி மார்பனே. நோக்கியகண்கள் வேறுசெல்லாத புதியமார்பன். (129) 159. கோதை நித்திலஞ் சூழ்குளிர் வெண்குடை யோத நீருல கொப்பநி ழற்றலாற் றாதை யேயவன் றாணிழற் றங்கிய காத லாற்களிக் கின்றதிவ் வையமே. கோதைநித்திலம் - உம்மைத்தொகை. ஒப்ப - எல்லார்க்கு மொப்ப. இ-ள். சச்சந்தனென்னுஞ்செங்கணான், அடைந்தார்க் கமிர்தன்னவன், அடையாதார்க்கு உயிர்போமளவுஞ் சென்று கோபமாறும் நஞ்சு போலுஞ் சீற்றத்தன், கடிமார்பன், கலைக் கிடனாகிக் கையாலே கலியைமாற்றி வேலாலே தேர்த்திரளை மாற்றினான்; மாற்றிக் குடையாலே ஒப்ப நிழற்றலால் உலகிற்குத் தாதையே யாதலின், அவன்றாணிழலிலே தங்கவேண்டி இவ் வுலகம் அவன்மேல்வைத்த காதலாலே களியா நின்ற தென்க. இனித் தாணிழற் றங்கியவையம் அவனுலகில்வைத்தகாத லாலே களிக்கின்றதென்றுமாம். இவற்றால் தெறலும் அளியும் அழகும் கொடையும் வீரமும் கல்வியும் முறைசெய்தலுங் கூறினார். (130) 160. தருமன் றண்ணளி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே யருமை யாலழ கிற்கணை யைந் துடைத் திரும கன்றிரு மாநிலம் மன்னனே. தருமன் - அறக்கடவுள். இதற்குவமையு முருபும்விரிக்க. இ-ள். அம்மன்னன் அமிர்தத்தையொத்தலும் உலகை நிழற்றலு மாகிய தண்ணளியாற் றருமன்; கலிமாற்றின ஈகையால் வருணன்; தேர்த்தொகைமாற்றுமிடத்தா லழற்சீற்றத்தனா யுயிரை மாற்றுதலிற் கூற்றம்; கலைக்கிடனாமருமையால் வாமன்; மகளிர்க்கு அணங்காகிய அழகாற் காமனென்றுவமை கூறுதற்குக் கொண்டுகூறினார் கூறியது கூறலன்றென்க. (131) 161. ஏனை மன்னர்த மின்னுயிர் செற்றவேற் றானை மன்னரிற் றானிமி லேறனான் றேனை மாரியன் னான்றிசை காவலன் வானந் தோய்புக ழான்மலி வெய்தினான். இ-ள். ஒழிந்த பகைவருயிரைச்செற்ற தம்மரபிலுள்ளாரிற் றான் செருக்கினால் ஏறணையான். மொழியாற் றேன்மாரியனை யனாகிய காவலன். சுவர்க்கத்தேசெறியும்புகழாலே மிகுதல் பெற்றானென்க. (132) தேனை: ஐ - அசை. 162. செல்வற் கின்னணஞ் சேறலிற் றீம்புனன் மல்ல னீர்விதை யத்தர சன்மக ளல்லி சேரணங் கிற்கணங் கன்னவள் வில்லி னீள்புரு வத்தெறி வேற்கணாள். (133) 163. உருவுஞ் சாயலு மொப்ப வுரைப்பதற் கரிய வாயினு மவ்வளைத் தோளிகட் பெருகு காரிகை பேசுவல் பெண்ணணங் கரிய தேவரு மேத்தரு நீர்மையாள். இவை யிரண்டு மொரு தொடர். புனலினது வளப்பம்பொருந்திய நீர்மையையுடைய விதையம்; தண்ணீரும் விளைவிக்குநீருமாம். திருவிற்கோர் திருவன் னவள் - இல்பொருள். இ-ள். செல்வற்கு இன்னணம் நல்வினைநடத்தலாலே இதற்கேற்ப விதையத்தரசன்மகள், இவ்வுலகிற்பெண்ணாலணங் குதற்கரிய தேவருமேத்தருநீர்மையை யுடையாளாயினாள்; அவவ்வேற்கண்ணா ளாகிய அணங்கன் னவளுடையவடிவும் மென்மையும் இத்தன்மைய வென்று உவமைகூறுவார்க் கரிய வானும், அவளிடத்துக் காரிகையைச் சிறிதுகூறுவேbன்றா ரென்க. அது மேற்கூறுகின்றார். (134) வேறு. 164. எண்ணெயு நானமு மிவைமூழ்கி யிருடிருக்கிட் டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோற் கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள் வண்ணப்போ தருசித்து மகிழ்வானாத் தகையவே. இருண்டு - இருளவென்க. குழல் - மயிர்மாத்திரையாய் ஐவகையையுமுணர்த்தலிற் பன்மை கூறினார். இ-ள். எண்ணெயுநானமுமென்கின்ற இவையிற்றிலே மூழ்கிக் குழன்ற கரிய குழல்கள், இருளைப்பிடித்து நீள முறுக்கிஅறல் படப் பிடித்து உறையிலேபொதிந்து அதனை வாங்கப்பட்ட வைபோல நோக்கினார்கண்ணிருளும்படி நெறிமல்கிச் சேடியர் போதைக்கொண்டு வழிபட்டாலும் வருந்துந் தன்மையவென்க. கண் - இடமாக்கிக் கொடியகுழலென்றுமாம். குழன்றும் பாடம். (135) 165. குழவிக்கோட் டிளம்பிறையுங் குளிர்மதியுங் கூடினபோ லழகுகொள் சிறுநுதலு மணிவட்ட பதிமுகமுந் தொழுதாற்கு வரங்கொடுக்குந் தொண்டைவாய் தூமுறுவ லொழுகுபொற் கொடிமூக்கு முருப்பசியை யுருக்குமே. குழவிப்பருவத்து ஒருகலையையுடைத்தாய்ப் பின்பு இளமைப் பருவத்தே நின்ற பிறை. இளமை - ஈண்டுக் குழவிப் பருவமொழிந்த தன்மேற்று. “இளமையுந் தருவதோ” (கலித். 15) என்றார் பிறரும். “மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப், பசுவெண் டிங்க டோன்றி யாங்குக், கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்” (குறுந். 129) என்றார்பிறரும். வட்டமதி முகம் - வட்டத்தையுடைய மதித்தமுகம்; அடையுமாம். தான் தொழப்பட்ட கணவனுக்கு வரங்கொடுக்கும். வளருகின்ற பொலிவினையுடையநீண்டமூக்கும். இ-ள். பிறைமதியுங் கூடினபோலழகுகொண்டநுதலும் முகமும் வாயும் முறுவலும் மூக்கும் உருப்பசியையுருக்குமென்க. உருக்குதல் - நுகர்தற்கு அவளும் ஆண்பாலாக விரும்புதல். (136) 166. வண்சிலையை வனப்பழித்து வார்ந்தொழுகி நிலம்பெறா நுண்கருமை கொண்டொசிந்து நுதலிவர்ந்து போந்துலாய்க் கண்கூடா கடைபுடைத்துக் கைவல்லா னெழுதியபோற் பண்பார்ந்த கொடும்புருவம் பழிச்சானாப் படியவே. இ-ள். எழுத்தொருமைப்படுதற்குத் துகிலிகைக்கோலை உதறித் கைவல்லானெழுதியவைபோற் றமக்குரியகுணநிறைந்த கொடிய புருவம், வனப்பழித்துத் தாஞ்செல்லுமளவுஞ் சென்று மேற்செல்லா வாய்க் கூரியகருமைகொண்டுவளைந்து நுதலிற்றாஞ் சேறற்குரிய வளவுஞ்சென்று போந்துபரந்து தம்மிற் கூடாவாதலிற் பழிச்சு தலமையாத தன்மைய வென்க. இகந்தொழுகவென்பதூஉம் பாடம். (137) 167. சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவாய் முனிவரையு மாலுறுப்ப மகிழ்செய்வ மாண்பினஞ்சு மமிர்தமுமே போல்குணத்த பொருகயற்கண் செவியுறப்போந் தகன்றனவே. இ-ள். சில அரியவாய்ச் சிவந்து மாயோனையும் பாற்கடலையு முகத்தே வைத்தாற் போன்ற தன்மையவாய் மாலுறுப்பனவாய் மகிழ்ச்சிசெய்வனவாய்த் துன்பத்தாலு மின்பத்தாலு நஞ்சுமமுதும் போலுங் குணத்தவாகியகண், செவியுறநீண்டு அதற்கேற்ப அகன்ற வென்க. கன்னியாதலின் மாலுறுப்பவென்றார். மகிழ்செய்வ - கணவனுக்குமகிழ்செய்வ. மாண்பிலாநஞ்சு. கயல்போற் பிறழுங் கண். கருமணியைப்பாலிற் பதித்தாற் பால்நிறங் கெடுமென் றுணர்க. (138) 168. மயிரெறி கத்திரிகை யனையவாய் வள்ளைவா டுயிர்செகுத்து முன்னொன்றிப் பின்பேரா துருவமைந்த செயிர்மகர குண்டலமுந் திளைப்பானா வார்காதும் வயிரவின் முகஞ்சூடி வண்ணம்வீற் றிருந்தனவே. இ-ள். கத்திரிகை யனையவாய் வாடு வள்ளையின் அழகைக் கெடுத்துப் பின் மறியாது முனனே பொருந்தி அழகமைந்த குண்டலமும் தோடும் அசைதலமையாத காதும் வயிரத்தி னொளியை இடத்தே சூடி வீற்றிருந்தனவென்க. வாட்டாயின், வாட்டின காதென்க. ‘காதும்’ என்ற உம்மை இறந்தது தழீஇயிற்று. (139) 169. ஈனாத விளங்கமுகின் மரகத மணிக்கண்ணும் ஆனாதே யிருள்பருகு மருமணி இடைந்ததூஉம் தானாகி யிருளொடோற் தாமரைப்பூச் சுமந்தன்ன கானார்ந்த திரள்கழுத்துக் கவின்முறைகொண் டிருந்ததே. கோட்புகாத கன்னிக்காக வரையிற்கும் நெய்ப்பிற்கும், மணி திரட்சிக்கும் நிறத்திற்கும் உவமம். உதயகிரியிற் சிந்தூi அருவி வீழ்ந்த சிந்தூராகத்திற் பதினாறு சதுரயுகம் சிவப்பேறின முழு மாணிக்கம் இருளைக் கெடுத்தலின், ‘இருள் பருகு மருமணி’ என்றார், இருளும் தாமரையும், மயிர்க்கும் முகத்திற்கும் உவமம். கான் - மணம். இ-ள். கமுகினது மரகதமணி போலும் கண்ணும் இருளைக் கெடுக்கும் மாணிக்கங் கடைந்ததுவும் தானாய்ச் சுமந்தன்ன கழுத்து அழகு குடி கொண்டிருநதது என்க. (140) 170. மணிமகரம் வாய்போழ்ந்து வாய்முத்தம் வடம்சூழ்ந்தலங் கணியரக்காற் செம்பஞ்சி யணையனைய வாடமைத் தோள் துணிகதித் வளைமுன்கைத் தொகுவிரல் செங்காந்தள் மணியரும்பு மலரங்கை குலிகமார் வனப்பினவே. பஞ்சணை நிறத்திற்கும் மென்மைக்கும் உவமம். அமை திரட்சிக்கும் நெய்ப்பிற்கும் உவமம் துணிதல் - தெளிதல். இ-ள். அமைத்தோள், மரகவாய் அங்காத்தலாலே ஆங்கு வாழும் முத்தஞ் சூழப்பட்டுச் செம்பஞ்சணையை அனைய. குவிந்த விரல்கள் காந்தளின் அழகையுடைய அருமபனைய அகங்கை தாமரை மலரனைய. இக்கைகள் குலிகமார்ந்த வனப்பினவென்க. போழ்ந்தவும், வான் முத்தமும் பாடம். (141) 171. தாமச்செப் பிணைமுகட்டுத் தண்கதிர் விடுநீல மாமணிதா மித்தனபோன் மனம்பருகு கருங்கண்ண ஏமுற வடிபரந் திளம்பிறை வடஞ்சூடி ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே. இ-ள். தாமத்தையுடையமுலையிரண்டுந் தந்தலையிலே நீலமணியையழுத்தினாற்போல நோக்கினார்மனத்தை யுள்ளடக் குங்கரியகண்ணவாய், கண்டார்மயக்கமுற அடிபரந்து, சூடி, தம் மேலுறையும் வீற்றுத்தெய்வமிருப்பிடமாக இருக்கப் பட்டுச் சுணங்குபரந்தனவென்க. தாமச்செப்பெனவேமுலையாம். இனிப் பூஞ்செப்பாக்கில் இக்கவி சினையிற் கூறுமுதலறிகிளவியாம். ஆமணங்கு - மேல் ஆகக்கடவ வருத்தமுமாம். (142) 172. அங்கைபோல் வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ் கங்கையின் சுழியலைக்குங் கண்கொளா நுடங்கிடையை யுண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லா முண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே. இ-ள். அகங்கைபோலும்வயிற்றை அழகுபெறுத்தின கொப்பூழ் சுழியைவருத்தும். கட்புலனாகாஇடையைத் தமர் பயிறலினுண்டென்று கருதுவர்; பிறர் அதனை நோக்கினா ரெல்லாமல் குலுமுலையு முண்மையினுண்டென்றும் கட் புலனாகாமையி னில் லையென்றும் ஐயுறுதலன்றி இரண்டி லொன்று துணிவார்க் கறிதலரிதென்க. கங்கை குலந்தூய்மைக்குக் கூறினார். (143) 173. மன்னாக விணைப்படமுந் தேர்த்தட்டு மதிமயக்கிப் பொன்னால வட்டமும்போற் கலையிமைக்கு மகலல்குல் கொன்னிளம் பரிதியுங் குறுமுயலின் குருதியும்போன் றின்னரத்தப் பட்டிசைச் திந்திரற்கும் புகழ்வரிதே மன்-பெருமை. இணைப்படம்-இரண்டுபுறமுமொத்தபடம். கலை-அடை. கொன்-விடியற்காலம்; “கொன்வரல்வாழ்க்கை” (புறநா. 379) போல. உம்மை - சிறப்பு. இ-ள். படமுந் தட்டும் ஆலவட்டமும்போலே வட்டமகன்ற வல்குல், பரிதியுங் குருதியும் போலே கட்கினிய பட்டுடுக்கப்பட்டு எல்லாரையு மதிமயக்குதலின் இந்திரற்கும் புகழ்தலரிதென்க. (144) 174. வேழவெண் டிரடடக்கை வெருட்டிமற் றிளங்கன்னி வாழைத்தண் டெனத்திரண்டு வாலரக்குண் செம்பஞ்சி தோழமைகொண் டெனமென்மை யுடையவாயொ ளிதிகழ்ந்து மாழைகொண் மணிமகரங் கௌவிவீற் றிருந்தனவே. வெருட்டி - பெயர். மற்று - வினைமாற்று. செம்பஞ்சி - பஞ்சி மாத்திரை. பொன் தன்னிடத்தே அடக்கினமணி. மகரம் - ஆகு பெயர். இ-ள். ஒழுக நோக்குதலான் அயிராவதத்தின்கையை வெருட்டப் பட்டகுறங்குகள், தண்டெனத்திரண்டு பஞ்சிதன்னுடனே தோழமை கொண்டுமென்மைபெற்றதெனத் தாம் மென்மையு டையவாய்த் திகழ்ந்து குறங்குசெறிகவ்வி மேலாயிருந்தன வென்க., திரண்ட பாடமாயிற் பெயராம். (145) 175. பக்கத்தாற் கவிழியவாய் மேல்பிறங்காப் பண்டிலா வொக்கநன் குணராமை பொருந்திய சந்தினவாய் நெக்குப்பின் கூடாது நிகரமைந்த முழந்தாளு மக்களுக் கில்லாத மாட்சியின் மலிந்தனவே. இ-ள். மேற்பக்கத்திலே கவிழ்ச்சியையுடையவாய்ப் பேராத வட்டமாம்படி உள்ளே பொருந்திய சந்தினவாய் நெகிழ்ந்து பின் போகாமல் ஒப்பற்றமுழந்தாளும் மாட்சியினான் மிக்கன வென்க. நன்மை இதற்கொப்ப வேறொன்றிலுணராதபடி பொருந்திய சந்து. (146) 176. ஆடுதசை பிறங்காது வற்றாது மயிரகன்று நீடாது குறுகாது நிகரமைந்த வளவினவாய்ச் சேடாவ நாழிகையிற் புடைதிரண்டு தேனெய்பெய் வாடாத காம்பேபோல் கணைக்காலின் வனப்பினவே. இ-ள். கணைக்கால், தசைபேராதுமாய் வற்றாதுமாய் மயிர் மிக்கு நீடாமற் குறுகாமலொப்பிலாத அளவினவாய் அம்பறாத் தூணிபோலே திரண்டு காம்புபோல் இனியவனப்பினவென்க. சேடு-பெருமை. தேவிநிறத்திற்கு உவமை பதுமராகமாயினும் மயிர்கள் அகன்றதனாற் காம்பு உவமையாயிற்று. இனிக்கணைக் காலின் வனப்பு இன்னவென்றுமாம். (147) 177. பசும்பொன்செய் கிண்கிணியும் பாடகமும் பாடலைப்ப நயந்தெரி பொற்சிலம்பு முத்தரிபெய் தகநக வியைந்தெழிலார் மணியாமை யிளம்பார்ப்பின் கூன்புறம்போ லசைந்துணர்வு மடிந்தொழியு மடியிணை புகழ்வார்க்கே. இ-ள். அரிபெய்யப்பட்டு, கிண்கிணியும்பாடகமும், தாங்கிக் கிடக்கின்ற இடத்தை வருத்துதலாலே சிலம்பு சிறிதேசிரிப்ப அழகார்ந்த யாமைப்பார்ப்பின்புறம் போலு மடியிணையைப் புகழஇயைந்து புகழ்வார்க்கு உணர்வு துளங்கிக் கெட்டுப் போமென்க. நயந்து - விரும்பி. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை” “தவழ்பவை தாமு மவற்றோரன்ன” (தொல். மரபு. 4,5) என்றார். (148) 178. அரக்கியல் செங்கழுநீ ரகவிதழ்போ லுகிர்சூடிப் பரப்பின்றி நுதியுயர்ந்து பழிப்பறத் திரண்டுநீண் டொருக்குற நெருங்கிப்பொன் னொளியாழி யகங்கௌவித் திருக்கவின்கொண் மெல்விரல்க டேனார்க்குந் தகையவே. இ-ள். திருவினது விரலினழகைக் கொண்டவிரல்கள், நுதி பரப்பின்றித் தோன்றித் திரண்டு நீண்டு சேரநெருங்கி மோதிரங் கௌவப்பட்டு அகவிதழ்போலும் உகிர்சூடிப் பூவென்று தேனார்க்குந் தகைமையவென்க. குலிகமூட்டின இதழ் - செம்பஞ்சு ஊட்டினதற்குவமம். (149) 179. என்பொடு நரம்பின்றி யிலவம்பூ வடரனுக்கி யின்புற வரம்புயர்ந் திருநில முறப்புல்லி யொன்பதின்சா ணடப்பினு மொருகாத மென்றஞ்சு மென்பஞ்சிச் சீறடியு மேதக்க விழைவினவே. இ-ள். என்நரம்புமின்றி இலவிதழைக் கெடுத்துக் கட்கினிய புறவெல்லை உயர்ந்து நிலத்தையுறப்புல்லி நடப்பினும் அஞ்சு மடியும் பெருமைதக்க விழைவின வென்க. ஏழடியென்றல் மரபாயிருக்க ஒருகாதமென்னும் யெழுத்து நோக்கி ஒன்பதின் சாணென்றாரேனும் அடியிடுமளவில் ஏழாம். (150) 180. இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக்கித் தவ்வுருவு நினைப்பென்னுந் துகிலிகையால் வருத்தித்துக் கவ்வியத னோக்கினாற் கண்விடுத்துக் காதனீர் செவ்விதிற் றெளித்தானாக் காமப்பூச் சிதறினான். இ-ள். கூறிய இவ்வுருவை ஒருப்பட்டிருந்து நெஞ்சென்னும் படத்திலே குறித்து அதனை நினைவென்னுங்கோலாலே உறுப்பு விளங்கவெழுதித் தான் கைக் கொண்ட தியானத்தாலே நயன மோக்கம் பண்ணி மாமன்மகளாதலின் அன்பென்னு நீரைச் சொரிந்து புணர்ச்சிவேட்கையாகிய அமையாத பூவைச் சிதறினா னென்க. இவன் எழுதி பிரதிட்டித்தான். இலக்கு குறித்துப் பார்த்தல். இருந்திலேகித்தென்பதும் பாடம். (151) 181. மெய்பெறா வெழுத்துயிர்க்கு மழலைவா யின்முறுவற் றையலா ணெடுந்தடங்கண் வலைப்பட்டுச் சச்சந்த னையுறா னணங்கெனவே யகத்தடக்கிக் செல்கின்றான் மொய்யறாக் களியானை முழங்கிக்தே னிமிர்தாரான். எழுத்து வடிவுபெற்றுத் தோற்றும் இளையவார்த்தை யையும் முறுவலையுமுடைய தையலாள். மழலை எக்காலத்திற் குங் கூறுப, மொய் - போர். இ-ள். அங்ஙனங்குறித்த தாரானாகிய சச்சந்தன் விசேடித்துத் தையலாள் கண்வலையிலே அகப்பட்டுக் கால் நிலந்தோய்தன் முதலியன கண்டு தெளிந்தும் அணங்கென்றேயுட் கொண்டு செல்லா நின்றானென்க. (152) வேறு. 182. வண்டின முகபடா மணிந்து வார்மத முண்டுகுத் திடுகளிற் றுழவன் றன்மகள் பெண்டிர்தம் பெருநலங் கடந்து பெற்றபேர் விண்டலர் கோதைக்கு விசயை யென்பவே. இ-ள். வண்டினமாகிய முகபடாத்தை யணிந்து மரத்தைக் தானுண்டு சிந்துங்களிற்றுழவன்றன் மகள் பெயர் விசயை யென்பர்; அக்கோதைக்கு அப்பெயர் பெண்டிர்நலங்கடந்து பெற்ற காரணப் பெயரென்க. பெயர் - பேரென மருவிற்று. (153) 183. அருமணி மரகதத் தங்க ணாறிய வெரிநிறப் பொன்னித ழேந்து தாமரைத் திருமக ளிவளெனத் திலக வெண்குடைப் பெருமகன் கோயிலுட் பேதை வைகுமே. இ-ள். இமவானில் மரகதப்பாறையிற் பதுமையென்னுங் கயத்திற் றோற்றிய பொற்றாமரையிற் றிருவென்ன விதையத் தரசன் கோயிலிலே பேதை வைகாநிற்கு மென்க. திலகம் - மேலாதல். திருவுவமும் - வடிவிற்கும் நல்வினை யுடை யோனிடத்து ஏகுந்துணையும் பொதுவாயிருத்தற்கும். (154) 184. கலம்புரி யகலல்குற் றாயர் தவ்வையர் சிலம்புரி திருந்தடி பரவச் செல்பவள் வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள் குலம்புரிந் தனையதோர் கொடியி னீர்மையாள். இ-ள். குலம் கொடியினீர்மை புரிந்தனையதோர் நீர்மையாள், மேகலை விரும்பின வல்குலையுடைய ஐகைத்தாயரும் அவர் மக்களாய்த் தனக்கு மூத்தவர்களும் அடி பரவச் bசல்பவள், வலம்பரி சலஞ்சலத்தை வளைத்த தன்மையையொத்தாளென்க. சிலம்புபுரி, விகாரம். (155) 185. இன்னகிற் கொழும்புகை யுயிர்க்கு மீர்ங்குழன் மென்மலர்க் கோதைதன் முலைகள் வீங்கலின் மின்னுருக் குறுமிடை மெலிய மெல்லவே கன்னிதன் றிருநலங் கனிந்த தென்பவே. மின்னுருக்குறுமிடை - மின்வடிவுகெடுத்தற்குக் காரண மான இடை. நடுக் குறுமென்றும் பாடம். இ-ள். குழலையுடைய கோதைதன்முலைகள் இடைமெலிய வீங்குதலாலே அவள் நலம் முதிர்ந்ததென்க. (156) 186. முந்துநாங் கூறிய மூரித் தானையக் கந்துகொல் கடாக்களி யானை மன்னவன் பைந்தொடிப் பாசிழைப் பரவை யேந்தல்கு றந்தைமாட் டிசைத்தனன் றனது மாற்றமே. இ-ள். தானையையும் யானையைமுடைய அச்சச்சந்தன், விசையையுடைய முந்து கூறிய தந்தைமாட்டே தனது மாற்றத்தை இசைப்பித்தானென்க. அவளைக் கொள்ளவேண்டு மென்னு மாற்றம். (157) 187. மருமகன் வலந்தது மங்கை யாக்கமு மருமதிச் சூழ்ச்சியி னமைச்ச ரெண்ணிய கருமமுங் கண்டவர் கலத்தற் பான்மையிற் பெருமகற் சேர்த்தினார் பிணைய னாளையே. ஆக்கம் - கிளவியாக்கம்போனின்றது. அவள் முதிர்ச்சியுமாம். கருமம் - கோவிந்தனுக்கு இவனுதவியாதல். இ-ள். தந்தையுந்தாயும், மருமகன் கூறியதனையும் மங்கை அவனிடத்து அன்பை அமைத்துக்கோடலையும் அமைச்சரெண் ணிய கருமத்தையும்பார்த்து, மைத்துனன்முறையானும் பிணை யனாளைப் பெருமகற்குச் சேர்த்தினாரென்க. “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” (தொல். களவு. 14) என்பதனா னொப்பும் பொருந்திணைப் பாற்படுங் கந்தருவ மாமாறும் பெரும்பொருளானுணர்க. (158) வேறு. 188. பொனங்கொடி யமிர்த னாளும் பொன்னெடுங் குன்ற னானு மனங்கனுக் கிலக்க மாகி யம்புகொண்ட ழுத்த விள்ளா ரினந்தமக் கெங்கு மில்லா ரியைந்தன ரென்ப முக்கட் சினந்திகழ் விடையி னானுஞ் செல்வியுஞ் சேர்ந்த தொத்தே. கொடியென்றார், குன்றுமறையப்படர்ந்த கேடுபிறப் பிறத்தலின், அழுத்த இலக்கமாய். காட்சியு நிலையு முயக்க முங்கூறி அவற்றிற்கு உவமை மேற்கூறுகின்றார். இ-ள். குன்றனானுங் கொடியாகிய அமிர்தனாளும் முன்பு இலக்காய் நின்று பின்பு அவர் விடையினானுஞ் செல்வியுஞ் சேர்ந்த தொத்து விள்ளாராய் ஓருடம்பாயினாரென்க. (159) 189. காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார் மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்ற லாதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்துந் தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார். காதல் - எல்லாப்பொருளையும் நுகர்தற்குச் செல்லும் வேட்கை. காமபூமி-தானப்பயனாற் பெறும் போகபூமி. உம்மை - சிறப்பு. ஆதரம் பெருகுமன்பாவது - புணர்வதன் முன்னும் பின்னும் ஒரு தன்மைத் தாய்ச் செயற்கையான் மிகுமன்பு. அன்னம் புணர்ச்சியான் மெய்யுருகு மென்மைக்கு உவமம். பலரும்”துணை புண ரன்னத் தின் றூவி” (கலித். 72; சிலப். 366) என்று புணர்ச்சியாற் றூவிக்கு மென்மை பிறக்கு மென்றார். “ஒத்தும்” என்பதனை முன்னும்பின்னுங்கூட்டுக. இவ்வெச்சத்தைத் தீதிலாரிற் றீதின்மையோடு முடிக்க. தீதிலாத் திளைப்பிற் பாடமாயின் ஆமானையொத்துந் தீதிலாமாதருங் களிறனானுமென்க. இ-ள். மாதருங் களிறனானும் மகிழ்ச்சியையுடைய முயக்கத் தான் மாசுணத்தையொத்தும், அன்பாலுளதாகிய மென்மையால் அன்னத்தையொத்தும், கண்முதலிய அவயவநுகர்ச்சியான் ஆமானை யொத்தும், தீதிலாதவர்கள் இப்புணர்ச்சிக்கு முன்னர்ப் போக பூமியிலுள்ளார் செல்வமே பெரிது மொத்தர்; இப்பொழுது காதலால் அவர்கள் தம்மையுமொத்தாரென்க. ஆமான் நக்குங்காற்பிறக்கும் இனிமையே ஈண்டுவமம், ஏகாரம் - தோற்றம் 190. தன்னமர்க் காலானுந் தையலு மணந்த போழ்திற் பொன்னனாளமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகி யிட்டான் மின்னவிர் பூணினானை வேற்கணார்க் கியற்றப்பட்ட மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி யிட்டாள். மகளிர்க்கு சமைத்த மது. வாங்கி -அவன் காட்டக்கண்டு பருகியிடுதல் - ஒருசொல். இ-ள். காதலானுந் தையலும் முற்கூறியாங்குப் புணர்ந்த பொழுதிலே அவன் பொன்னனாளை அமிர்தமாகப் பருகினான்; அவன் பருகின தன்மையைத் தானுங்கண்டு பூணினானை அவளும் மதுப் போலே பருகினாளென்க. இதனால் அதரபானமு மல்குற் பானமுங் கூறி மேலிவற்றிற் குவமை கூறுகின்றார். (161) 191. பவழவாய் பரவை யல்கு லென்றிவை பருகும் வேலான் கவழமார் களிறு போன்றான் காதலி கரும்பை யொத்தா டவழ்மதுக் கோதை மாதர் தாமரைப் பூவதாக வுமிழ்நகை வேலி னானு மொண்சிறை மணிவண் டொத்தான். இவையென்றது - கரும்பையுந் தாமரைப்பூவையும். கரும்புவமை நெருக்கி நீர் நுகர்தற்கு. பூவதாக - பூவினது தன்மை எக்காலமு முண்டாக. இது வேறுபாடின்மையின் வேறுபடவந்த உவமமாயிற்று; எனவே பதுமயோனியாம், வேலினானுமென்றது – களிறுபோல வன்மையுடையோனுமென்றவாறு, உம்மை - சிறப்பு. இ-ள். வாயுமல்குலு மிவையென் றுட்கொண்டு வேலான் பவளவாயைப் பருகிக் களிற்றையொத்தான்; அப்பொழுது அவள் கரும்பையொத்தாள். அவ்வேலானு மல்குலைப் பருகி மாதர் பூவாயிருக்க நுகர்வதோர் வண்டையொத்தானென்க. செவ்வி குலையாதிருக்க நுகர்வதோர் வண்டு - இல் பொருளு வமை. (162) 192. பளிக்கறைப் பவளப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயற் களிக்கயல் பொருவ போன்று கடைசிவந் தகன்ற கண்ணா ளொளிக்கவின் கொண்ட காமத் தூழுறு கனியை யொத்தா ளளித்தயில் கின்றவேந்த னஞ்சிறைப் பறவை யொத்தான். இ-ள். கண்ணாள் கனியையொத்தாள்; அவளுக்கு மேன் மேலும் விருப்பமுண்டாக்கி அயில்கின்ற வேந்தன் வாவலை யொத்தானென்க. பளிக்குப்பாறையை அடுத்த பவளப்பாவை இவளது தன்மை யெனத்திகழுஞ் சாயல் - ஈண்டு ஒளியதுமென்மை; இது செயற்கை நலம். இதற்கடுத்ததுகாட்டும் பளிங்கைப் பவளம் தன்றன்மையாக் கினாற்போல அடுத்தம களிர்தன்மையனா மரசனை இவளுந்தன் றன்மையேயாக்கிக் கொண்டாளெனக் கதைகருதிய நயமுணடு. பொருவபோன்று பொருதெனவிரிக்க, கொண்டகனி, அயிறல் - உண்டல் * “உண்டற் குரிய வல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலு மரபே” (தொல். பொருள். 19) தோணல முண்டு துறக்கப் பட்டோர்” (கலி. 33) என்றார் பிறரும். பழமும் வாவலும் வடுப்பட நுகர்தற்குவமை. (163) வேறு. 193. துறுமலர்ப் பிணையலுஞ் சூட்டுஞ் சுண்ணமு நறுமலர்க் கண்ணியு நாறு சாந்தமு மறுநிலத் தமிர்தமு மகிலு நாவியு பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். பிணையல் - மலர்நெருங்கு மார்பின்மாலை. சூட்டு - நெற்றிக் கட்டு, கண்ணி - முடிக்குமாலை. அமிர்தம் - அடிசிலும் பானமு முதலியன. இனி அறுநிலத்தமிர்தம் - அறுசுவையுமாம்; ஆறு காலத்திற்குரிய பானமுமாம். இ-ள். பெரியவர் புணர்ச்சியற்றபின் பிணையன் முதலியன தம்மைநுகரு மிந்திரியங்களைப் பிணைப்ப வைகினாரென்க. (164) 194. துடித்தலைக் கருங்குழற் கரும்புண் கோதை னடித்தலைச் சிலம்பினோ டரவ மேகலை வடித்தலைக் கண்மலர் வளர்த்த நோக்கமோ டடுத்துலப் பரிதவ ரூறி லின்பமே. துடி-ஏலம். வடித்தலைக்கண் - ஒப்பினால் வடுவகிரிடத்தே நிற்குங்கண். இ-ள். அவரின்பம், கோதைதன்கண்மலர் ஊடலையுங் கூடலையும் விளைவித்த நோக்கந்தானே அவளூடினகாலத்து அடி அவன்றலையிற்படுதலிற் பிறந்தசிலம்பினரவத்தோடும் கூடின காலத்துப்பிறந்த மேகலையரவத்தோடும் அடுத்து முடிதலரிதா யிருந்ததென்க. அவனும் பாடம். (165) 195. இழைவள ரிளமுலை யெழுது நுண்ணிடைத் தழைவளர் மதுமலர் தயங்கு பூஞ்சிகைக் குழைமுகக் கொடியொடு குருதி வேலினான் மழைமுகின் மாரியின் வைகு மென்பவே. பூண்விளங்குதற்குக் காரணமாய முலை. ஓவியமெழுதுவார் இதன்றன்மைகருதி எழுதுவதற்குக் காரணமான இடை, தழையிலே வளர்ந்த, சிகை - முடி. முலைமுதலியிவற்றையுடைய . கொடி - இல்பொருளுவமை. இ-ள். வேலினான் கொடியோடே மாரிக்காலத்துமழை முகிலேபோலே அருள் பொழிந்துதங்குமென்க. (166) 196. படுதிரைப் பவளவா யமுத மாந்தியுங் கொடிவளர் குவிமுலைத் தடத்துள் வைகியு மிடியினுங் கொடியினு மயங்கி யாவதுங் கடிமணக் கிழமையோர் கடலின் மிக்கதே. இ-ள். மிக்க மணக்கிழமை, அமுதத்தையுண்டும் வைகியும் மாவிடிபோலவும் நூழிற்கொடிபோலவும் உணர்வும் உடம்பு மெல்லாமயங்கிக் கடலின் மிக்கதென்க. (167) 197. கப்புரப் பசுந்திரை கதிர்செய் மாமணிச் செப்பொடு விலதிய ரேந்தத் தீவிய துப்புமிழ்ந் தலமருங் காமர் வல்லியு மொப்பரும் பாவைபோன் றுறையு மென்பவே. இ-ள். கருப்பூர முதலியவற்றையுடைய சுருளைச் சேடியர் செப்போடேந்த, அதனைநுகர்ந்து ஐம்பொறிக்குமினிய நுகர்ச்சி களைக்கணவனுக்குக் கொடுத்துப் புணர் தற்கலமரும்விசயையும் அவனுக்குக் கொல்லிப்பாவை போற்றங்குமென்க. கப்பரம் - பாகதம். உம்மை-சிறப்பு. வேறுகருத்துச் செல்லாமற்றன்னையே கருது வித்தலிற் பாவையென்றார். இதற்கு முன்பு உலகியன் மணங்கூறி, மேற் காமமிகுதியாற்கெடுகின்றமை கூறுகின்றார். (168) 198. மண்ணகங் காவலின் வழுக்கி மன்னவன் பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள் விண்ணக மிருள்கொள விளங்கு வெண்மதி யொண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே. இன் - நீக்கப்பொருட்டு. உரோகிணி - விகாரம். அவ்வு ரோகிணி காரணத்தின் இருடிசபித்து மதிதேய்ந்ததோர்கதை. இ-ள். மன்னவன் மண்ணகம் இருள்கொள்ளும்படி காவலிற்றப்பிப் பெண்களுக்கருங்கலமானவளுடனே சேர்ந்தகழி கண் ணோட்டம், மதி விண்ணகமிருள்கொள உரோகிணியோ டொளித்த தன்மையையொத்த தென்க. (169) வேறு. 199. குங்குமத் தோளி னானுங் கொழுங்கயற் கண்ணி னாளுந் தங்கிய காதல் வெள்ளந் தணப்பறப் பருகு நாளுட் டிங்கள்வெண் குடையி னாற்குத் திருவிழுக் குற்ற வண்ணம் பைங்கதிர் மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத் துரைத்து மன்றே. இ-ள். தோளினானும் கண்ணினாளும் வேட்கைப் பெருக்கத்தின் நீக்கமறப்பருகுநாளிலே, அவனுக்குச் செல்வம் மதிபோலொழுகக் குறைந்த தன்மையைத் தெரிந்து கூறிப் பின்பு சீவகன்சரித மெடுத்துரைக்கலுற்றாமென்றாரென்க. இதன்கருத்து: இச்செய்யுட்கு அங்கமாகியவருணனைகள் கூறி அதற்குரிய தலைவனை நாட்டுகின்றார். இத்துணையுமவன் தோன்றற்குக் காரணங்கூறி அதற்கு முற்பிறப்பில் அன்னப்பார்ப் பைப்பிரித்ததீவினைவந்து குரவரைப்பிரித்தலுங் கூறவேண்டுதலிற் றிருவிழுக்குற்றமை முற்கூறுகின்றாரென்றுணர்க. திருவிழுக்குறுத லாவது - கட்டியங்காரற்கு அரசளித்தலும் அமைச்சர்சொற் கேளாமையும். (170) 200. களிறனா னமைச்சர் தம்முட் கட்டியங் கார னென்பா னொளிறுவாட் டடக்கை யானுக் குயிரென வொழுகு நாளுட் பிளிறுவார் முரசிற் சாற்றிப் பெருஞ்சிறப் பியற்றி வேந்தன் வெளிறிலாக் கேள்வி யானை வேறுகொண் டிருந்து சொன்னான். இ-ள். களிறனான், அமைச்சரில் வெளிறிலாக் கேள்வியையுடைய நிமித்திகனைத் தனக்கு வேறாகக்கொண்டு கட்டியங்கார னென்கின்ற வனைத் தனக்குயிரெனக் கொண்டொழுகுநாளிலே, வேந்தன் அத்தடக்கையானுக்கு முடியுங்குடையுமொழிந்த சிறப்புக் களை யுண்டாக்கி அதனையுலகறிய முரசாற்சாற்றி இருந்து இக்காரியத்தைக் கூறினானென்க. மதச்செருக்காற் பாகன்றோட்டியை நீவுமாறுபோலக் காமக் களிப்பாற் றன் அமைச்சர்கூற்றைக் கடத்தனோக்கிக் களிறனானென்றர். நிமித்தின்கன்கருமமேகூறுதலுங் கட்டியங் காரன் அரசன் கருத்திற் கேற்பவொழுகுதலும் இரண்டற்குங் காரணம். ”கோதனான்” என்றும், “கரிமாலைநெஞ்சினான்” என்றும், “கல்லாமந்திரி” என்றும் மேற்கூறலிற் கட்டியங்காரனை வெளிறிலாக் கேள்வியா னெனலாகாது. இனி இகழ்ச்சிக்குறிப் பென்பாருமுளர். (171) 201. அசைவிலாப் புரவி வெள்ளத் தருஞ்சயன் குலத்துட் டோன்றி வசையிலாள் வரத்தின் வந்தாள் வரன்சுவை யமிர்த மன்னாள். விசையையைப் பிரித லாற்றேன் வேந்தனீ யாகிவைய மிசைபடக் காத்தல் வேண்டு மிலங்குபூண் மார்ப வென்றான். அருஞ்சயன் - தேவிபாட்டன். வசையிலான் - வினையெச்ச முற்று. வேண்டுமென்பது - உம்மீற்றான்வந்ததோரேவல் கண்ணிய வியங்கோள்; “வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்” (புறநா. 367) என்றார் பிறரும். இ-ள். பூண்மார்பனே, அமுதன்னாள், அருஞ்சயனது அசைவிலாக் குலத்துட்டோன்றி வசையின்றி முற்பவத்திலெனது வேண்டுகோளாலே வந்தாள், அவளைப் பிரிதலாற்றேன்; நீ இனி வேந்தனாய் உலகை இசையுண்டாகக் காப்பாயாக வென்றா னென்க. (172) 202. அண்ணறா னுரைப்பக் கேட்டே யடுகளிற் றெருத்தி னிட்ட வண்ணப்பூந் தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்குங் கண்ணகன் ஞாலங் காத்த லெனக்கெனக் கமழுங் கண்ணி மண்ணகம் வளருந் தோளான் மறுத்து நீமொழிய லென்றான். தவிசு - கழுத்துமெத்தை. மண்வளர்தற்குக்காரணமாகிய தோளான் - அரசன். மண்ணெழுவனையதோள் பாடமாயிற் பண்ணிய வெழுவாம். “ஆவுதிமண்ணி” (மதுரை. 492) என்றாற் போல, தோளாயும் பாடம். இ-ள். கட்டியங்காரன் தான்கருதியிருந்ததனை அரசன்றானே கூறக்கேட்டு உண்மகிழ்ந்து ஞாலங்காவல் எனக்குத் தலிசை ஞமலிமேலிட்ட தொக்குமென்று மறுப்பத் தோளான் என்காரிய மாக நீ மறுத்துமொழியலென்றானென்க. வேறோரூர்தி கூறாது ஞமலியைக் கூறினான், அவனயிராது கருதற்கு. (173) 203. எழுதரு பரிதி மார்ப னிற்றென விசைத்த லோடுந் தொழுதடி பணிந்து சொல்லுந் துன்னலர்த் தொலைத்த வேலோய் கழிபெருங் காத லாள்கட் கழிநலம் பெறுக வையம் பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்ப லென்றான். ஓடு - உடனிகழ்ச்சி. கழிபெரும் - ஒருபொருளிருசொற் பிரி வில்லாதது. இ-ள். அரசன் என்னிலை இற்றென இசைத்தவளவிலே கட்டியங்காரன் தொழுதுவணங்கிப் பகையென்றுகூறப்படும் பகைவரை யெல்லாங் கொன்ற வேலோய் நீ நலம்பெறுக யான் பழிபிறவாதபடி வையத்தைக்காக்கும் பெரியபாரத்தைப் பூண்பே னென்றானென்க. தன் நினைவை அவன் காரியம்போற் கூறினான். (174) 204. வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப வேகிக் கலந்தனன் சேனை காவல் கட்டியங் கார னென்ன வுலந்தரு தோளி னாய்நீ யொருவன்மேற் கொற்றம் வைப்பி னிலந்திரு நீங்கு மென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான். பொறித்தவெனப்பிறவினையாற் கூறினார், அயன்படைத்த னோக்கி. மத-விசேடித்த உரிச்சொல். உலம்வளர்க்குந் தோள். இ-ள். மதவலி உபசாரமாகக் கையாலேகாட்டிவிடுப்பக் கட்டியங் காரன்போய்ச் சேனையைக்காத்தலைக்கலந்தா னென்று கூறக்கேட்டு நிமித்திகனென்னுமமைச்சன் தோளினாய், ஒருவன் மேலுனது கொற்றம்வைப்பின் நிலமுந்திருவுநின்னை நீங்கும் இதனை நீயேயோரென்று நீதியாற்கூறினானென்க. (175) 205. எனக்குயி ரென்னப் பட்டா னென்னலாற் பிறரை யில்லான் முனைத்திற முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான் றனக்கியான் செய்வ செய்தேன் றான்செய்வ செய்க வொன்று மனக்கினா மொழிய வேண்டா வாழிய ரொழிக வென்றான். என்னலாற் பிறரையில்லான் - என்னையொழியப் பிறரை யில்லாதான், இன்மை உடைமைக்கு மறுதலை. முன்னே - சிறப்பிக்குமுன்னே, வென்றானெனவே கடத்துதற்குரியனென் றான். நன்மையுந் தீமையுங்கருதிச் செய்வவெனப் பன்மையாற் கூறினான். இ-ள். உயிரெனப்பட்டான் பிறரையில்லான் வென்றான்; அவன்றனக் குயான் செய்வனசெய்தேன் அவன்றான் எனக்குச் செய்வன செய்க; நீ சிறிதும் பொறாமை கூறவேண்டா; நீயும் நின்னிலையிலே வாழ்வாயாக; இனி இக்கூற்றினைத் தவிர்வாயாக வென்றானென்க. (176) 206. காவல குறிப்பன் றேனுங் கருமமீ தருளிக் கேண்மோ நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கலாற் றீங்கு வாரா பூவலர் கொடிய னார்கட் போகமே கழுமி மேலும் பாவமும் பழியு முற்றார் பற்பலர் கேளி தென்றான். நாவலர் - அமைச்சர். இது உலகியலாற் கூறினhன். கழுமி - மயங்கி. இ-ள். காவல, நாவலர்சொற்கொண்டார்க்குத் தீங்குவாரா; ஆதலாற் றிருவுள்ள மன்றேனும் அருளிக்கேண்மோ, ஒருவன் மேற் கொற்றம் வையாதிருக்கின்ற இது கருமமென்றான்; அதற்குடம் படாமையின் நின்னையொழியக் கழுமி முன்னும் இம்மையிற் பழியும் மறுமையிற்பாவமுற்றார் மிகப்பலர் இதனைக் கேளென்றா னென்க. மேற்கூறுவனவெல்லாம் போகத்தையே நோக்குதலின், இதுவென ஒருமையாற் கூறினான். (177) 207. பெரும் பெயர்ப்பிரம னென்னும் பீடினாற் பெரியநீரா னரும்பிய முலையி னாளுக் கணிமுக நான்கு தோன்ற விரும்பியாங் கவளை யெய்தான் விண்ணக மிழந்த தன்றித் திருந்தினாற் கின்று காறுஞ் சிறுசொல்லாய் நின்ற தன்றே. பெயர்-புகழ். ஏகாரம் - வினா. இ-ள். பிரமனென்னுந் தவத்தாற் பெரியநீரான் திலோத்தமை பொருட்டு நான்குமுகந் தோன்றும்படி விரும்பி அவ்விடத்து அவளைப் பெறானாய் விண்ணகமிழந்ததேயன்றிப் பின் தவத்தாற் பாவந்தீர்ந்த வற்கு இன்றளவும் புறஞ்சொல்லாய் நின்றதல்லவோ வென்றானென்க. முறைசெய்யாமையிற் றன்னிலையிழந்தான். தோற்றியும் பாடம். (178) 208. கைம்மலர்க் காந்தள் வேலிக் கணமலை யரையன் மங்கை மைம்மலர்க் கோதை பாகங்கொண்டதே மறுவ தாகக் கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணி யாற்குப் பெய்ம்மல ரலங்கன் மார்ப பெரும்பழி யாயிற் றன்றே. கைமலர் - கைபோலுமலர். மலைகளுக்கரசன். மைமலர்க் கோதை - நீலமலராற் செய்த கோதை, இறைவி; ஆகுபெயர். மாலை - அடையாளப்பூ. கண்ணி - சூடும்பூ; “கண்ணியுந்தாரு மெண்ணி னராண்டே” என்றார். இ-ள். இடப்பட்டமாலைமார்பனே, மலையரையன் மனைவி மேனை பெற்ற கோதையைப் பாகத்தேவைத்ததே மதுவையுடைய தொன்றாகக் கொன்றையாற் செய்த மாலையினையும் மதியாகிய கண்ணியினையுமுடைய அரனுக்குப் பழியாயிற்றல்லவோ வென் றாbனன்க. (179) 209. நீனிற வண்ண னன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன் பானிற வண்ண னோக்கிற் பழியுடைத் தென்று கண்டாய் வேனிறத் தானை வேந்தே விரிபுனற் றொழுனை யாற்றுட் கோனிற வளையி னார்க்குக் குருந்தவ னொசித்த தென்றான். வேனிறம் - வேலினது விளக்கம். கோல் - திரட்சி. இ-ள். வேந்தே, மாயோன் பலதுகிலைக்கவர்ந்து தம்மூ னாகிய பானிறவண்ணன் நோக்கிற் பழியுடைத்தென்று காண் தொழுனையாற்றிலே கோவியர்க்குக் குருந்தொசித்தது; இது இங்ஙனந் தீதென்றானென்க. (180) 210. காமமே கன்றி நின்ற கழுதைகண்ட ருளினாலே வாமனார் சென்று கூடிவருந்தினீ ரென்று வையத் தீமஞ்சேர் மாலை போல விழித்திடப் பட்டதன்றே நாமவேற் றடக்கை வேந்தே நாமிது தெரியி னென்றான். காமமே - தேற்றம், என்று - என்ன. ஈமம் - சுடுகாடு. இ-ள். வேந்தே, நாமிக்காமத்தைத் தெரியின், காமமேயடி பட்டு நின்ற ஆண் கழுதையைக்கண்டு அருளாலே புத்தனார் பெண்கழுதை யாய்ச்சென்றுகூடி இக்காமத்தாலே வருந்தினீரே யென்ன; அது வையத்திலே ஈமத்திலே விழுந்த மாலைபோல இழித்திடப் பட்ட தல்லவோவென்றானென்க. (181) 211. படுபழி மறைக்க லாமோ பஞ்சவ ரன்று பெற்ற வடுவுரை யாவர் பேர்ப்பார் வாய்ப்பறை யறைந்து தூற்றி யிடுவதே யன்றிப் பின்னு மிழுக்குடைத் தம்ம காம நடுவுநின் றுலக மோம்ப னல்லதே போலு மென்றான். இ-ள். கேட்பாயாக; காமத்தாற் பிறந்த பழியை மறைக் கலாமோ, பஞ்சவர் ஒருத்தியை மனைவியாக்கலிற்பெற்ற வடுவுரை யைப் போக்குவார்யார்? அது தூற்றியிடுதலேயன்றி மறுமையிலும் நரக முதலியவற்றைத் தரும்; ஆதலால் நடுவு நிலையிலே நின்று உலகமோம்புதலே நல்லதுபோலுமென்றா னென்க. (182) போலும் - ஒப்பில்போலி. 212. ஆரறி விகழ்தல் செல்லா வாயிரஞ் செங்க ணானுங் கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் பேரறி வுடையை நீயும் பிணையனாட் கவலஞ் செய்யு மோரறி வுடையை யென்றா னுருத்திர தத்த னென்பான். ஆரறிவிகழ்தல் செல்லா - பெரிய அறிவைப் பிறராலிகழப் படாத, அவலம் - அரசன் கொலையுண்டல். இ-ள். அரசன் நிமித்திகன்கூற்றைக்கொள்ளாமைகண்டு,அருகிருந்த உருத்திரதத்தன் இந்திரனும் அமைச்சர் சொற் பொருளைக் குறிக் கொண்டுநடக்கும்; அவனைப் போல நீயுமறிவு டையையாயினும் இப்பொழுது இவன் சொல்லைக் கொள்ளா மையிற் பிணையனாட்கு அவலஞ் செய்யுமோரறிவு டையையா யினாயென்றானென்க. (183) 213. அளந்துதாங் கொண்டு காத்த வருந்தவ முடைய நீரார்க் களந்தன போக மெல்லா மவரவர்க் கற்றை நாளே யளந்தனவாழு நாளு மதுவெனக் குரைய லென்றான் விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுட ரிமைக்கும் பூணான். இ-ள். பூணான் வரைந்துகாத்த தவமுடையார்க்குக் கரு வாய்ப்பதி கின்ற பொழுதே போகமெல்லா மளந்தன; அவ ரவர்க்கு அப்பொழுதே வாழுநாளு மளந்தன; அது எனக்குரைய லென்றா னென்க. போகமுமென்னும் உம்மை கூறிற்றிலர், செஞ்சொலாய் முற்படக்கிளத்தலின். “நிலந்திருநீங்கும்” (சீவக. 204) என நிமித்திகன்கூறிய செல்வ நிலையா மையையும் உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையா மையையும் நிலையாமையென ஒருமையாக்கி, ‘அது’ வென்றொரு மையாற் கூறினான். உரையலென்றான் நிமித்திகனைநோக்கி, அவனுரியனா தலின். (184) 214. மூரிந்தேந் தாரி னாய்நீ முனியினு முறுதி நோக்கிப் பாரித்தேன் றரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டே வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக வின்பம் பூரித்தேந் திளைய கொங்கை புணர்கயான் போவ லென்றான். இ-ள். தாரினாய், நூல்வழக்கு இடித்துக்கூறல மைச் சர்க்கியல் பென்றமை கண்டு உறுதிநோக்கி இத்துணையு மியல்பாகக் கூறினேன்; இனி மாதர்கொங்கையை நினக்கு எப்பொழுதும் விருந்தாகக் கொண்டு புணர்க; நீ என்னை முனியினும்நின் தவறு காணாமற் றுறவிடத்தே போவேனென்றா னென்க. மூரி - பண்புமாத்திரமுணர்த்தாது பெயராதலின் வேற்றுமைத் தொகை. முனியினுமென்பது எதிர்காலமுணர்த்துமெச்சம்; உம்மை-ஐயம். இளையகொங்கையென்று இளமை நிலையாமை கூறினான். அரசன்போவென்னாமற் றானே போவேனென்றல் நீதியன்மை யிற்றுறவுட்கோளாயிற்று. இதனான் “வெளிறிலாக் கேள்வியான்” (சீவக. 200) என்றார். “களிறனான்” முதல் இத்துணையு மொருதொடர். (185) வேறு 215. இனமா மென்றுரைப் பினுமே தமெணான் முனமா கியபான் மைமுளைத் தெழலாற் புனமா மலர்வேய் நறும்பூங் குழலாண் மனமா நெறியோ டியமன் னவனே. இனமாம்-நினது வேட்கையும் தேவரதுமுற்கூறிய வேட்கைத் திரளிலே வைத்தெண்ணுவதோர்வேட்கையாம். குடிலாள் மனமாம் மன்னவன் குழலாண் மனக்கருத்தாய் நுகருமன்னவன்; நெறியோடிய மன்னவன் - அரசநீதிகெட்ட மன்னவன். இ-ள். குழலாள் மனமாம் மன்னவன் முற்பிறப்பிற் றீவினை முளைத்துத்தோன்றுதலாலே இது முற்கூறிய இனத்தேயா மென்று பின்னுங்கூறினுந் தனக்குவரும்ஏத மெண்ணானா யினானென்க. (186) 216. கலையார் துகிலேந் தல்குலுங் கதிர்சூழ் முலையார் தடமும் முனியா துபடிந் துலையாத் தருவின் னமிர்துண் டொளிசேர் மலையார் மணிமார் பன்மகிழ்ந் தனனே. விசயையது கெடாத இளமைச்செவ்வியை நுகர்ந்து. ஆர்தல் - ஒத்தல். இ-ள். மார்பன் அவளல்குலாகிய இன்பக்கடலினும் முலைத்தடத்தினும் வெறாதேபடிந்து உண்டு வேறுமனக்கவற் சியின்றி மகிழ்ந்தானென்க. (187) 217. விரிமா மணிமா லைவிளங் குமுடித் திருமா மணிசிந் துதிளைப் பினரா யெரிமா மணிமார் பனுமேந் திழையு மருமா மணிநா கரினா யினரே. இ-ள். மார்பனும் ஏந்திழையும் மார்பிற்கிடந்த விரிந்த மாமணி மாலையும் மணிபோலு மயிர்முடியிற்கிடந்த தெய்வவுத் தியுஞ் சிந்துந் திளைப்பினராய் நாகரைப்போல் ஒன்றாயினா ரென்க. (188) 218. நறவார்ந் ததொர்நா கிளந்தா மரைவா யுறவீழ்ந் ததொரொண் மணிபோன் றுரவோ னறவாக் கியவின் பமமர்ந் தவிருட் கறைவேற் கணினாள் கனவுற் றனளே. தேனிறைதலும் மிக்க இளமையுமாறாத தாமரையெனவே பதுமயோனியாம். உரவோனுற - பிள்ளையாரவதரிக்க. அறவு - தொழிற்பெயர். இ-ள். அங்ஙனம் நாகரைப்போலமர்ந்த இருட்கண்ணே தாமரை வாய்வீழ்ந்த தோர் முத்துப்போன்று உரவோனுற; அப்பொழுதே இன்பம் அறுதலையாக்கிய கனவைக் கறைவேற் கண்ணினாள் கண்டாளென்க. (189) வேறு 219. பஞ்சிய டிப்பவ ளத்துவர் வாயவ டுஞ்சுமி டைக்கன மூன்றவை தோன்றலி னஞ்சிந டுங்கின ளாயிழை யாயிடை வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. இ-ள். துவர்வாயினையுடையாள் துயிலிடைக்கண்டகனா மூன்று; அவைபின்பு மனத்தே தோன்றலின் அவளஞ்சி நடுங்கி னாள்; அக்காலத்தேவிடிந்ததென்க. எனவே கடிதிற்பயக்குமாறாயின. இவை பிற்பயக்குங் கனவா தலிற் பின்னும் நெஞ்சிற்றோன்றின. (190) 220. பண்கெழு மெல்விர லாற்பணைத் தோளிதன் கண்கழூஉச் செய்து கலைநலந் தாங்கி விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள். பண் - ஆகுபெயர்; யாழொடுபயின்ற விரலும் ஆகுபெயர். கழூஉச்செய்து “நல்லமருஉச்செய்து”(நாலடி.246) என்பதுபோல நின்றது. விண் - ஆகுபெயர். தீவினையை வெல்லும் அறவாழி. இ-ள். பணைத்தோளி கண்கழுவித் தாங்கி அக்கோயிலின் மாலடியை வணங்கினாளென்க. “தெய்வ மஞ்சல்” (தொல் மெய்ப்.24) என்னு மெய்ப்பாட்டி யற் சூத்திரம், தன் குலதெய்வத்தை வணங்குதற்கு விதியா மாறுணர்க. (191) 221. இம்பரி லாநறும் பூவொடு சாந்துகொண் டெம்பெரு மானடிக் கெய்துகென் றேத்தி வெம்பரி மானெடுந் தேர்மிகு தானையத் தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே. இ-ள். அவள் இவ்வுலகில் நிகரில்லாபூவையுஞ் சாந்தையுங் கொண்டு எம் பெருமானே நின்னடிக்கு இவைபொருந்து வனவாக வென்றேத்தித் தன்கணவனடியை வணங்கினாளென்க. (192) அ - உலகறிபொருண்மேற்று. 222. தானமர் காதலி தன்னொடு மாவலி வானவர் போன்மகிழ் வுற்றபின் வார்நறுந் தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக் கானமர் கோதைக னாமொழி கின்றாள். தேவர் நோக்கத்தால் நுகர்ந்தாற்போல இவனும் நோக்கத் தான் மகிழ்ச்சியுற்ற பின், கனவுமூன்றிற்குந் தேன் முதலிய மூன்றும் உவமம். பிண்டிவீழ்ந்ததென்னு மொழி இவள் கூறுதலின் இனி தாய்ப் பின் தீங்குவிளைத்தலிற் றேனுவமம்; “ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்கும்” (குறுந்.354)என்றார் பிறரும். “எண் - முத்தணிமாலை” (சீவக.223) என்ற சொல் குலந்தூய்மைகூறுதலிற் பாலுவமம். இவனாக்கத் திற்கு ஊறுமமிர்துஉவமம்; இவனாக்கம் அமுதுபோல் உயிர்களைக் காத்தலின். இ-ள். மாவலி தான்மேவின காதலிதன்னோடே மகிழ்வுற்ற பின்பு அவள் தேன் முதலியனவென்னும்படி கனாமொழியா நின்றாளென்க. (193) 223. கொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண் முத்தணி மாலைமு டிக்கிட னாக வொத்தன் றாள்விழி யேமுளை யோங்குபு வைத்தது போலவ ளர்ந்ததை யன்றே. முத்தணிமாலை - முத்தையொத்தமாலை; அணி - “மின்ன ணிநுண்ணிடை” (திருச்சிற்றம்.342) போலுவமவுருபு; என்றது வெள்ளிய மாலையை. இது குலத்தூய்மை கூறிற்று. “வெண்டாமரை மலர்த் தடங்கள் போலு, - நங்குடி”(சீவக.547) என்பர். மேலும். முத்தமாலை யெனின்மேல் “நறு மாலை”(சீவக.225) “எண்கோதைத் தொகை” (சீவக.2607)என்றல்பொருந்தாது. வளர்ந் ததை - வினைத்திரிசொல்; உரைத்ததைபோல. இ-ள். ஒருபிண்டி தானணிந்ததொத்துக்களொழுகக் கெட்டுப் பின்பு தானு நேராக வீழ்ந்தது; அதன்வழியிலே ஒருமுறை அதனையொத்து எட்டுமாலையை யுடையதொரு முடிக்கிருப்பி டனாக நட்டுவைத்தாற் போலே ஓங்காநின்று வளர்ந்த தென மொழிந்தாளென்க. மேலே “துளும்புநலத் தாரொடு” (சீவக.2889)என்றலின், முத்தணி மாலையைக் கனவிற்கண்டாள்; அதுகாரணம். இதனாற் சுற்றங் கெட்ட படியும் அரசன் கெட்டபடியுங் கூறினார். அது கதையிற் காண்க. (194) 224. வார்குழை வில்லிட மாமுடி தூக்குபு கார்கெழு குன்றனை யான்கன வின்னியல் பார்கெழு நூல்விதி யாற்பயன் றான்றெரிந் தேர்குழை யாமலெ டுத்துரைக் கின்றான். இ-ள். சலியாதவன் கனவின் இயல்பைக் கனாநூலின் விதியாலே பயனைத் தெரிந்துதான்பார்த்து முடிதுளக்கி அவற்றில் நல்லவற்றை யெடுத்து இவளழகுகெடாமற் கூறாநின்றானென்க. அது அசோகுமுறிந்ததுகூறாமல் மாலையையுமுடியையும் இரண்டு கனவாகப் பிரிந்தது. (195) 225. நன்முடி நின்மக னாநறு மாலைக ளன்னவ னாலம ரப்படுந் தேவியர் நன்முளை நின்மக னாக்கம தாமெனப் பின்னத னாற்பயன் பேசலன் விட்டான். இ-ள். அவன் அவட்கு முடிநின்மகனாம்; நறியபூமாலைகள் அந்நல்வினையுடையோனால் அமரப்படும் தேவிமார்; முளை நின்மகனாக்கமென மூன்றாக்கிக்கூறிப் பின்பு இற்றதனாலுள்ளபயனைப் பேசுலனாய் விட்டானென்க. “குருதிக் கோட்டுக் குஞ்சர நகரம்” (சீவக.2182) போல் முத்த மாலையை மாலையென்னும் பெயர் கருதி நறுமாலை யென்றலாகா மையுணர்க; மாலையென்னும்பெயர் பொதுவாதலின். (196) 226. இற்றத னாற்பய னென்னென வேந்திழை யுற்றதின் னேயிடை யூறெனக் கென்றலு மற்றுரை யாடல ளாய்மணி மாநிலத் தற்றதொர் கோதையிற் பொற்றொடி சோர்ந்தாள். உற்றதென இறந்தகாலத்தாற் கூறினான்; தெளிவுபற்றி, “இல்லை கனாமுந் துறாத வினை”(பழ.2) என்றலின். இன்னே - உதாசீனம் போனின்றது. இ-ள். இற்றதனாற்பயனென்னென்று தேவிகேட்ப, ஏந்திழாய், எனக்கு இங்ஙனே ஓரிடையூறு வந்தது காணென்ற வளவிலே பின்பு உரையாடலளாய் மணிநிலத்தேதங்கியதோர் கோதைபோலே வீழ்ந்தாளென்க. (197) 227. காவிக டந்தகண் ணீரொடு காரிகை யாவிந டந்தது போன்றணி மாழ்கப் பாவியெ னாவிவ ருத்துதி யோவெனத் தேவியை யாண்டகை சென்றுமெய் சார்ந்தான். இ-ள். காரிகை கண்ணீருடனே ஆவிபோனாற்போல அழகு கெடுதலாலே ஆண்டகைசென்று பாவி, என்னுடைய ஆவியை வருத்துகின்றாயோவெனக்கூறி அவளை மெய்யைச் சார்ந்தா னென்க. தேவியை மெய்யையென்ற இரண்டுருபும் “தெள்ளிது” (தொல். வேற்றுமை.5) என்றதனான்முடியும். (198) 228. தண்மலர் மார்புற வேதழீஇ னானவள் கண்மலர்த் தாள்கன வின்னியன் மெய்யெனும் பெண்மய மோபெரி தேமட லாட்கெனப் பண்ணுரை யாற்ப வித்துயர் தீர்த்தான். இ-ள். குளிர்ந்த அகன்ற மார்பிலேயுறத் தழியினான்; அதனால் அவள் விழித்தாள்; அப்பொழுது நினக்குக் கனவின்றன் மையை மெய்யெனக்கருதும் பெண்டன்மை பெரிதாயிருந்த தெனக்கூறிப் புனைந்துரையாற் பரவித் துயர்தீர்த்தா னென்க. (199) ஏகாரம் - ஈற்றசை. ஓ - வியப்பு. 229. காதலன் காதலி னாற்களி த்தாய்மலர்க் கோதையங் கொம்பனை யார்தங் குழாந்தொழத் தாதுகு தாமம ணிந்தகில் விம்மிய போதுகு மெல்லணைப் பூமகள் சேர்ந்தாள். இ-ள். பூமகள், காதலன் கொண்டாட்டத்தாலே களித்துச் சேடியர் தொழத்தாமஞ்சூழ்ந்து அகில் விம்மிய அணையிலே சேர்ந்தாளென்க. (200) 230. பண்கனி யப்பரு கிப்பய னாடகங் கண்கனி யக்கவர்ந் துண்டுசின் னாள்செல விண்கனி யக்கவின் வித்திய வேற்கணி மண்கனிப் பான்வள ரத்தளர் கின்றாள். விண் - ஆகுபெயர். வித்திய - பரப்பிய. குழவிப்பருவத்தாலும் அரசநீதியாலும் வீடுபேற்றாலும் மண்ணையுருக்குமவன். இ-ள். பண்ணைப்பழுக்கக்கேட்டும் நாடகங்களைக் கண்ணுருக முகந்து நுகர்ந்தும் இருவர்க்குமிங்ஙனஞ் சிலநாள் சென்றளவிலே, வேற்கண்ணி பிள்ளைவளர்தலாலே தளராநின்றாளென்க. (201) வேறு. 231. கரும்பhர் தோண் முத்தங் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண் பசலை பூத்த காமம், விரும்பார்முலைக் கண்க ரிந்து திங் கள் வெண் கதிர்கள்பெய் திருந்த பொற்செப் பேபோ, லரும்பால்பரந் து நுசுப்புங் கண் ணின் பு லனாயிற் றாய்ந்தவனிச்ச மாலை, பெரும்பார மாய்ப் பெரிது நைந்து நற்சூற் சலஞ்சலம் போனங்கைநலந் தொலைந்ததே. இ-ள். வயாவிற்கு நங்கையுடையதோள் மெலிந்து வாய் வெளுத்துக் கண்பசலைபூத்தன; பின்பு முதிர்கின்றவளவிற்குக் காமத்தை விரும்புதற்குக் காரணமான முலைக்கண்கருகிப் பால்பரந்து நுசுப்புங்கண்ணினது நுகர்ச்சிப் பொருளாயிற்று; பின்பு முதிர்ந்த வளவிற்கு அனிச்சமாலை பாரமாய்ச் சலஞ் சலம்போல்நைந்து நலந் தொலைந்ததென்க. (202) உம்மை - சிறப்பு வேறு. 232. தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளி லேபோற் றேம்புடை யலங்கன் மார்பிற் றிருமகன் றமிய னாக வோம்படை யொன்றுஞ் செப்பா டிருமக ளொளித்து நீங்க வாம்புடை தெரிந்து வேந்தற் கறிவெனு மமைச்சன் சொன்னான். வேழம்-வெள்ளிலுக்கு வருவதோர்நோய். “குருதிக்கோட்டுக் குஞ்சரநகரம்”(சீவக.2182) போல வேழத்திற்குக் கை அடை. தேம்புதலுடைய திருமகன்; தேம்புதல்-கெடுதல்; விகாரம். “புட்டேம்பப் புயன்மாறி”(பட்டினப்.4) என்றார் பிறரும். தமியனாக - அரசவுரிமையை நீங்க. ஓம்படை யொன்றுஞ் செப்பாள்- தான்சிறிதும்பரிகாரங்கூறாளாய். அவன் வஞ்சித்து அரசுவெளவுதலின் ஒளித்து நீங்கவென்றார். ஆம்புடை-பிள்ளையார் பிழைப்பதோர் கூறுபாடு. இ-ள். திருமகன் வெள்ளில்போலத் தமியனாகத் திருமகணீங் கப் பின்பு அவனுக்குத் தன்னறி வென்னு மமைச்சன் ஆம்புடை தெரிந்து கூறினாbனன்க. (203) 233. காதிவேன் மன்னர் தங்கள் கண்ணென வைக்கப் பட்ட நீதிமேற் சேற றேற்றாய் நெறியலா நெறியைச் சேர்ந்து கோதியல் காம மென்னு மதுவினுட் குளித்த ஞான்றே யோதிய பொறியற் றாயோ ரரும்பொறி புனைவி யென்றான். இ-ள். அவ்வறிவென்னுமமைச்சன், வேன்மன்னர் ஊனாகிய கண்ணைக் கண்ணென்பாருடனே காதித் தம்முடைய கண் ணென்று துணிந்து வைத்த நீதியிற் செல்லாயாய்த் தீநெறியைச்சேர்த்து காமமென்னுங் கள்ளிலேய ழுந்தின அன்றே நல்வினை யற்றாய்; ஆதலால் இனி ஓரெந்திரத்தைப் புனைவியென்றா னென்க. (204) வேறு. 234. அந்தரத் தார்மய னேயென வையுறுந் தந்திரத் தாற்றம நூல்கரை கண்டவன் வெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொ ரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். இ-ள். அரசன், தொழிலோடே நூலைக் கரைகண்ட வனாகிய கச்சனைக்கூலி எந்திரமான தோரூர்தியை இயற் றென்றா னென்க. தொழிலால் மயனேயெனத் துணிந்து வடிவால் ஐயமுறுந்தச்சன், இயற்றுமின் ஒருமைபன்மைமயக்கம். ஊர்தி - ஏறப்படுவது. (205) 235. பல்கிழி யும்பயி னுந்துகி னூலொடு நல்லரக் கும்மெழுகு ந்நலஞ் சான்றன வல்லன வும்மமைத் தாங்கெழு நாளினுட் செல்வதொர் மாமயில் செய்தன னன்றே. கிழி - சீலை. பயின் - பற்றுதற்குரியன. துகினூல் - வெள்ளிய நூல். இ-ள். நலஞ்சான்றனவாகிய கிழிமுதலியனவற்றையும் ஒழிந்தன வற்றையும் கூட்டி, அவன் கூறியபடியே செல்வதோர் மயிலை ஏழுநாளிலே செய்தானென்க. (206) 236. பீலிநன் மாமயி லும்பிறி தாக்கிய கோலநன் மாமயி லுங்கொடு சென்றவன் ஞாலமெ லாமுடை யானடி கைதொழு தாலுமிம் மஞ்ஞைய றிந்தரு ளென்றான். இ-ள். மயிலையும் பண்ணினமயிலையுங் கொண்டு சென்றவன் அரசனைவணங்கி இம்மயில்களில் ஆலுமஞ்ஞையை அறிந்தரு ளென்றானென்க. (207) பீலி - இரண்டற்கு மேற்றுக. 237. நன்னெறி நூனயந் தானன்று நன்றிது கொன்னெறி யிற்பெரி யாயிது கொள்கென மின்னெறி பல்கல மேதகப் பெய்ததொர் பொன்னறைத் தான்கொடுத் தான்புகழ் வெய்யோன். மின்னெறி - மின்னைக்கெடுக்கும். இ-ள். வெய்யோன் இம்மயில் நூலினுடைய நீதிதானாயிருந்தது; இது மிக நன்றெனக்கூறி தான் கொற் றொழிலிற்பெரியாய், இது கொள்கவென்று பொன் அறையைக் கொடுத்தானென்க. (208) இன்னூலின் நீதியென்றுமாம். 238. ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழி மாடமுங் காவும டுத்தொர் சின் னாள்செலப் பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந் தோடமு றுக்கியு ணர்ந்தவு ணர்ந்தாள். இ-ள். ஆடுதலியன்ற மயிலாகிய ஊர்தியைத் தேவிதான் பாட்டுப் போலே பையப்பைய மேன்மேற்றுரந்து மாடத்திலுங் காவிலுமடுத்துச் சின்னாள்சென்றவளவிலே ஒருநாள் அங்ஙனங் கற்பித்தவன் விசையுடனோடும்படி முறுக்கியுணர்த்த அவள் அதுவுமுணர்ந்தா ளென்க. (209) வேறு. 239. பண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்ய புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகை கண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே. இ-ள். கண்டவர் மருளும்படி பாவை விரலாலே பொறியை வலத்தேதிரிப்ப அது பொங்கிப் போழ்ந்து பறக்கும்; அவளதனை இடத்தேதிரிப்ப அது வீழ்ந்து காலைக் குவித்திருக்குமென்க. பகைவர்க்குப் புண்செல்லுதற்குக் காரணமான வேல், கால்பரப்பிற் பொறி கெடும். (210) வேறு. 240. காதி nவல்வல கட்டியங் காரனு நீதி யானிலங் கொண்டபி னீதிநூ லோதி னார்தமை வேறுகொண் டோதினான் கோது செய்குணக் கோதினுட் கோதனான். காதிவேல்வல - பொருதுவேலைவல்ல. உம்மை - இழிவு சிறப்பு. கோதுசெய்குணக்கோது - நூல்கள் பயனின்றாகக் கூறிய குணங்களிற் கோது; அஃதாவது செய்ந்நன்றிக்கேடு; உட்கோதனான் – அதிலே நிற்கின்ற பயனிலாதோன். இனிப் பயனின்மை செய்கின்ற குணத்துக் கோதின தீக்குணங்கட் குள்ளாகிய செய்ந்நன்றிக்கேடு தன்னை ஒப்பானென்றுமாம். இ-ள். கோதனானாகிய கட்டியங்காரனும், அரசன் கொடுப்ப நிலத்தை அடிப்படுத்தியபின்பு தருமநூலோதினா ரெல்லாரையுந் தனக்கு மாறாகக்கொண்டு ஒருமொழி கூறினா னென்க. (211) 241. மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வ மென்னை வந்திடங் கொண்டதி ராப்பகற் றுன்னி நின்றுசெ குத்திடு நீயெனு மென்னை யான்செய்வ கூறுமி னென்னவே. இ-ள். மன்னவன்பகையாயதோர் தெய்வம் என்னை இருப்பிட மாகக் கொண்டுவந்து அத்தெய்வம் இரவும் பகலு நெருங்கிநின்று நீ செகுத்திடு என்னாநிற்கும்; இதற்கு யான் செய்யத்தகுவன யாவை? அவற்றை நீர் கூறுவீராகவென்று கூறினானென்க. “என்ன” என்பதனை “உட்கினரா” என மேல்வருகின்றத னோடு முடிக்க. (212) 242. அருமை மாமணி நாகம ழுங்கவோ ரூருமு வீழ்ந்தென வுட்கின ராவவன் கருமங் காழ்த்தமை கண்டவர் தம்முளான் றரும தத்தனென் பானிது சாற்றினான். இ-ள். மணி அழுங்கும்படி நாகத்தின்மேலே இடிவீழ்ந்தாற் போலே அம்மொழியைக் கேட்டு அமைச்சர் உட்கினராக; அவர்களினுள்ளா னாகிய தருமதத்தனென்கின்றவன் கண்டு இதனைப் பலரறியக் கூறினானென்க. மணிஅரசனுக்கும், நாகம் அமைச்சர்க்கும், செகுத்தி டென்ற சொல் இடிக்குமுவமை. காழ்த்தமை - கொல்லத் துணிந்தமை. ஆயவனென்றபாடத்திற்கு அரசனாலாயவ னென்க. (213) 243. தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் குவளை யேயள வுள்ளகொ ழுங்கணா ளவளை யேயமிர் தாகவவ் வண்ணலு முவள கந்தன தாகவொ டுங்கினான். இ-ள். அவ்வண்ணலும் சீறடியையுடையகண்ணாளாகிய அவளையே அமுதாகக்கொண்டு அந்தப்புரமொன்றுமே தனக்குரித்தாக ஒழிந்தவற்றின் வேட்கையின்றிச் சுருங்கினானென் றானென்க. ஏகாரமிரண்டும் தேற்றம். உம்மை - சிறப்பு. உவளகம் - ஒருபக்கமுமாம். (214) 244. விண்ணி னோடமிர் தம்விலைச் செல்வது பெண்ணின் னின்பம் பெரிதெனத் தாழ்ந்தவ னெண்ண மின்றி யிறங்கியிவ் வையகந் தண்ணந் தாமரை யாளொடுந் தாழ்ந்ததே. இ-ள். விண்ணும் அமிர்தும் விலைபெறுவதொன்றா யிருக்கும் பெண்மை; அதிலு நினதரசினதின்பம் பெரிதுகா ணென்று காரியங் கூறுதலின் நின்னிற்றாழ்ந்த நிமித்திகன் செல்வம் வேண்டுதலின்றித் துறவிலே வீழ்தலாலே இவ்வையகந் திருமகளுடனேகூடி நின்னிடத்தே தங்கிற்று; இனி நினக்கு வேறோர் மனக்கவற்சியின் றென்றானென்க. நின்னின்பமென்றது அரசனைநோக்கி நிமித்திகன் கூறியது. பெண்ணினின்பமெனப்பெரிதாழ்ந்தவனென்பதும் பாடம். (215) 245. தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப் பின்னை வெளவிற் பிறழ்ந்திடும் பூமக ளன்ன வன்வழிச் செல்லினிம் மண்மிசைப் பின்னைத் தங்குலம் பேர்க்குந ரில்லையே. இ-ள். தன்னை ஆக்கியவேந்தனைப் பின்னைக் கொல் வனாயிற் றன்குலமுந்திருவும் மண்மிசையினின்றும் பிறழும்; அவன் வழியோ யொழுகிற் றன்குலத்தையுஞ் செல்வத்தையும் மண்மிசையினின்றும் பெயர்ப்பாரில்லையென்றானென்க. பூமகள் - திரு. இது உலகியலாற்கூறினான். தார்கெழுவேந் தனும் பாடம். (216) 246. திலக நீண்மடித் தேவரும் வேந்தரு முலக மாந்தர்க ளொப்பவென் றோதுப குலவு தார்மன்னர்க் கியானிது கூறுவன் பலவு மிக்கனர் தேவரிற் பார்த்திவர். இ-ள். முடிகளுக்கு மேலாய முடியையுடையதேவரில் அரசர் பலகுணங்களாலுமிக்கராயினும், உலகிலுள்ளார் தேவரும் வேந்தரு மொப்பரென்றுகூறுவர்; அவர் அறியார்; யான் மன்னர்க் குள்ளதோர் விசேடங்கூறுவேன்; அதனைக் கேளென்றானென்க. கூறலனென்று பாடமாயின் ஒப்புக்கூறேனென்றானென்க. இது முதல் “மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வம்”(சீவக.241)என்றதனைக் குறித்துக் கூறுகின்றான். (217) 247. அருளு மேலர சாக்குமன் காயுமேல் வெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வ மருளி மற்றவை வாழ்த்தினும் வையினு மருளி யாக்க லழித்தலங் காபவோ. மன்-மிகுதி. மருளி இ - பகுதிப்பொருள்விகுதி. மற்று-வினை மாற்று. “தாமினிநோயும்” என்றாற்போல உம்மைமாற்றுக. ஆக்கல் அழித்தல் - காலந்தோன்றாத வினைப்பெயர். ஆப - எதிர்காலத்திற் குரிய பகரத்தோடு அன்பொறாதுவந்த அகரவீற்றுப் பலவறி சொல். ஓகாரம் - எதிர்மறை. இ-ள். வேந்தெனுந்தெய்வம் அருளுமேல் அரசாக்கும்; காயுமேற் கட்டிடும். மற்று மயக்கத்தையுடைய அத்தெய்வங்கள் தம்மை யொருவன் வாழ்த்துவனாயின் அவனையருளியாக்கலும், தம்மை யொருவன் வைவனாயின் அவனை அருளாதழித்தலும் அவைகட்கு அப்பொழுதே ஆகாவேயென்றானென்க. (218) 248. உறங்கு மாயினுமன்னவன் றன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமா லிறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந் தறங்கள் வெளவ வதன்புறங் காக்கலார். இறங்கு கண்ணிமையார் - தெய்வத்தன்மைகுலையுந் தேவ ரென்றது. மேலே “எல்லை மூ வைந்து நாள்க ளுளவென விமைக்குங் கண்ணும்” (சீவக.2810) என்பராதலின், கண்ணிமையார் தேவர்க்கோர் பெயர். இ-ள். மன்னவன் உறங்குமாயினும், அவனொளி உலகைக் காவாநிற்கும்; தேவர் விழித்தேயிருந்துத் தம்மைநோக்கி உலகத் தார் செய்கின்ற அறங்களை அசுரர்வெளவ அதனைப்பரிகரிக்க மாட்டாரென்றானென்க. (219) 249. யாவ ராயினு நால்வரைப் பின்னிடிற் றேவ ரென்பது தேறுமிவ் வையகங் காவன் மன்னவர் காய்வன சிந்தியார் நாவி னும்முரை யார்நவை யஞ்சுவார். இ-ள். இழிந்தோராயினும் அவர் பின்னேநால்வரைத் திரியச் சொல்லுவராயின், அவரைப் பால்வரை தெய்வமென்னுந் தன்மையை வையகந்தேறுமாதலான், மன்னவர் களான்வரும் நவையை அஞ்சுவார், அவர் காய்வனவற்றை உவமை கூறுமிடத் துங் கூறார்; நினைப்பதுஞ்செய்யாரென்றா னென்க. (220) 250. தீண்டி னார்தமைத் தீச்சுடு மன்னர்தீ யீண்டு தங்கிளை யோடு மெரித்திடும் வேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான் மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே இ-ள். தீ தீண்டினாரையே சுடும்; அதுபோலன்றி மன்னரு டைய கோபம் தீங்குசெய்தவர்களைத் திரண்ட சுற்றத் தோடுஞ் சுடும்; அவரது அருள், அவரைவிரும்புவாருண்டாயின் அமுது போலுறுதிபயக்கும்; அவரதுசெற்றம் அவரை விரும்பா தார்க்கு நஞ்சுபோற் கரந்து நின்றுகொல்லும்; அங்ஙனமாதலால் நின்றெய் வம் என்றெய்வம் போல் மாண்டதன்றென்றானென்க. இதனாற் பகைவரையும் நட்டாரையும் தீநட்பையுங் கூறினான். (221) 251. வேலின் மன்னனை விண்ணகங் காட்டியிஞ் ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல் வாலி தன்றெனக் கூறினன் வாண்ஞமற் கோலை வைத்தன்ன வொண்டிற லாற்றலான். இ-ள். வாள்வலியாலே ஞமனுக்கு வல்லவனாயின் வந்து பார்க்க வென்று ஓலை வைத்தாற்போன்ற திறலைநடத்துத லுடைய தருமதத்தன், மன்னனை வேலினால் விண்ணேற்றி, இவ்வுலகை யாள்வதுஎனக்கு நன்றென்றியோல், அது நினக்கு நன்றன்றென்றா னென்க. இவன் முன்னின்று கூறிய அருமைநோக்கி ஆற்றலா னென்றார். (222) வேறு. 252. குழற்சிகைக் கோதை சூட்டிக் கொண்டவ னிருப்ப மற்றோர் நிழற்றிகழ் வேலி னானை நேடிய நெடுங்க ணாளும் பிழைப்பிலாட் புறந்தந் தானுங் குரவரைப் பேணல் செய்யா திழுக்கினா ரிவர்கள் கண்டா யிடும்பை நோய்க் கிரைக ளாவார். இ-ள். இடும்பைநோய்களுக்கிரைகளாவார் தன்கணவனையொழிய வேறொருவனைத் தேடியவளும், தன்னைத் தப்பாத மனைவியை மனத்தாற்கொள்ளாது விட்டவனும், குரவரைப் பேணுதல்செய்யாதே தப்பினாருமாகிய இவர்கள்கா ணென்றா னென்க. தரவு “செலவினும் வரவினும்” (தொல் கிளவி. 28)என்னும் பொதுச்சூத்திரத் தான்முடிக்க. குரவர் -அரசன், உவாத்தியாயன், தாய், தந்தை, தம் முன் என ஐவர். (223) 253. நட்பிடைக் குய்யம் வைத்தான் பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான் கட்டழற் காமத் தீயிற் கன்னியைக் கலக்கி னானு மட்டுயி ருடலந் தின்றா னமைச்சனா யரசு கொன்றான் குட்டநோய் நரகந் தன்னுட் குளிப்பவரி வர்கள் கண்டாய். இ-ள். நட்பிடத்துவஞ்சித்தவனும், பிறர்மனையாளைச் சேர்ந்தவனும், மிக்க அழல்போலுங் காமத்தீயினாற் கன்னியை அத்தன்மைகுலைத்து வரையாதவனும், உயிரை அட்டு உடலைத் தின்றவனும், கொன்றவனுமாகிய இவர்கள் காண் இம்மையிற்குட்ட நோயினும் மறுமையில் நரகத்தினு மழுந்துவ ரென்றானென்க. கலக்குதல் - கைக்கிளை வகையாகிய இரக்காதமென்னு மணத்திற்றப்பியதாம். (224) 254. பிறையது வளாத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாட் குறைபடு மதியந் தேயக் குறுமுய றேய்வ தேபோ லிறைவனாத் தன்னை யாக்கி யவன்வழி யொழுகி னென்று நிறைமதி யிருளைப் போழு நெடும்புகழ் விளைக்கு மென்றான். இ-ள். பிறைவளர அதுதானுமுடனேவளர்ந்து பெருத்துப் பின்பு குறை தலுண்டான மதிதேயமுயலுந்தேயுமாறுபோலத் தன்னை இறைவனாக ஆக்கினவன்வழியிலே அவனோடும் பெருகி அவனாடுந் தேய்ந்தொழுகுவனாயின், அவ்வொழுக்கம் இருளை யோட்டு மதிபோலப் பழியையோட்டும்; புகழை விளைக்கு மென்றானென்க. (225) 225. கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி யாணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான். இ-ள். அரசன் தானடத்துமுறைமையிற் பிறழ்வனாயின், இவ்வுலகு, கோள் நிற்குநிலைகுலைந்து இராநாழிகைகுறையப் பகற் பொழுதுகள் மிக்கு மாரியின்றாய் நிலம் விளைவு சுருங்கிப் பசி மிக்கு மகளிர்கற்பழிந்து அறச்சாலைகளுமின்றிக் கெடும்; அரசனா ணையேயென்றானென்க. கட்டியங்காரன் கொலைகுறித்ததுவும் அரசனிவற்கு அரசளித்ததுவு முட்கொண்டு இரண்டுகவியும் பொதுவாகக் கூறினான். எச்சங்கள் செயப்படுபொருளன. (226) 256. தார்ப்பொலிதரும தத்தன் றக்கவா றுரைப்பக் குன்றிற் கார்த்திகை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார் போர்த்ததன் னகல மெல்லாம் பொள்ளென வியர்த்துப் பொங்கி நீர்க்கடன் மகரப் பேழ்வாய் மதனன்மற் றிதனைச் சொன்னான். குன்றிலே கார்த்திகைவிளக்கிட்டன்னவாகக் குவளைத் தார் போர்த்த அகலம். மகரவாய்போலும் பெரியவாய். இ-ள். வாகைத்தாராற்பொலிந்த தருமதத்தன் அமைச் சர்க்கும் அரசர்க்குந் தக்கபடியைக் கூறினானாக; மதனன் தன் அகலமெல்லாங் கடுகவியர்த்துப் பொங்கி இதனைக் கூறினா னென்க. (227) (257) தோளினால் வலிய ராகித் தொக்கவர் தலைகள் பாற வாளினாற் பேசி னல்லால் வாயினாற் பேச றேற்றேன் காளமே கங்கள் சொல்லிக் கருனையாற் குழைக்குங் கைகள் வாளமர் நீந்தும் போழ்தின் வழுவழுத் தொழியு மென்றான். இ-ள். பகைவரது தலைசிதற வாளினால் வஞ்சின முடித்தலல்லது வாயினாற் பேசுதலையறியேன்; தாங்கள் காள மேகங்கள் போலிங்ஙனமுழங்கக் கூறுதலாலே, கருனையோடே சோற்றைத் திரட்டுங்கைகள் அமர்க்கடலை நீந்தும் போழ்து மிகவேர்த்து வழுவழுக்குமென்று கூறினானென்க. தேற்றேன் “தேற்றாய்பெருமநின்பொய்யே” என்றாற் போனின்றது. இக்கவி முன்னிலைப்புறமொழி. (228) 258. நுண்முத்த மேற்றி யாங்கு மெய்யெலாம் வியர்த்து நொய்தின் வண்முத்த நிரைகொ ணெற்றி வார்முரி புருவ மாக்கிக் கண்ணெரி தவழ வண்கை மணிநகு கடக மெற்றா வெண்ணகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். இ-ள். கட்டியங்காரன் மெய்யெலாமுத்தழுத்தி னாற் போலக் கடிதின்வியர்த்து அவ்வியர்புநிரைத்த நெற்றியிலே புருவமாக்கிக் கண் எரிதவழாநிற்கக் கடகத்தை உடைத்து வெடிசிரிப்பாக வெகுண்டுசிரித்து ஒரு வார்த்தை கூறினானென்க. நெடியபுருவம். (229) 259. என்னலாற் பிறர்கள் யாரே யின்னவை பொறுக்கு நீரா ருன்னலாற் பிறர்கள் யாரே யுற்றவற் குறாத சூழ்வார் மன்னன்போய்த் துறக்க மாண்டு வானவர்க் கிறைவ னாகப் பொன்னெ லாம்விளைந்து பூமி பொலியயான் காப்ப லென்றான். உற்றவன் - சச்சந்தன். உறாத - பொன்னுலகாளாமல் மண்ணு லகாளுதல். இனி உற்றவன் - கட்டியங்காரனுமாம், விளைந்த பூமியும் பாடம். இ-ள். நீ கூறிய கடியசொற்களைப்பொறுப்பார் என்னை யொழிய வேறுயார்? அதற்கியானே; தன்னைச் செறிந்தவற்கு உறாத காரியங் களைச்சூழ்வார் உன்னையொழிய வேறுயார்? அதற்குநீயே; இனி அமைக; வேந்தன் தேவர்க்கிறைவனாக யான் பூமியெல்லாம் விளைந்து பொன்பொலியக் காப்பேனென்றா னென்க. (230) 260. விளைக பொலிக வஃதே யுரைத்திலம் வெகுள வேண்டா களைக மெழுக மின்னே காவலற் கூற்றங் கொல்லும் வளைகய மடந்தை கொல்லுந் தான்செய்த பிழைப்புக் கொல்லு மளவறு நிதியங் கொல்லு மருள்கொல்லு மமைக வென்றான். இ-ள். நீ கூறியவாறே பூமியெல்லாம் விளைக; பொன்னும் பொலிக; நினது நினைவே கூறிற்றிலேம்; அவற்றிற்கு நீ வெகுள வேண்டா; இப்பொழுதே களைவேமாக எழுவேம்; இதற்குக் காரணம் யாதெனின், காவலனைக்கொல்லுங்கூற்றம் நிலமடந்தை யாய்க் கொல்லும்; பிழைப்பாய்க்கொல்லும்; நிதியாய்க்கொல்லும்; அருளாய்க் கொல்லும். ஆதலால் அவனுக்கு அக்கொலை அமைவதாக வென்றானென்க. இனி ‘அஃதேலுரைக்கிலம்’ பாடமாயின், நின்கருத்து அதுவாயின் வேறு கூறுகின்றிலேமென்க. இனிக் காவலனாகிய கூற்றமுங் கயமடந்தை முதலியனவுங் கட்டியங்காரனைக் கொல்லு மென்றுட்கொண்டு இனி வார்த்தையமைகவென்றா னென்பாரு முளர். “விளைகபொலிக” ஒருவழக்கென்பாருமுளர். (231) 261 . நிலத்தலைத் திருவ னாட னீப்பருங் காதல் கூர முலைத்தலைப் போக முழ்கி முகிழ்நிலா முடிகொள் சென்னி வெலற்கருந் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக் குலத்தொடுங் கோற லெண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். இ-ள். திருவனாளிடத்தே தனது காதல் கூருதலின் அவளது முலைப்போகத்தே யழுந்தித் தானையை நீத்த சென்னியையுடைய வேந்தனை வெறுமையைப்பார்த்துப் பிள்ளையுடனே கொல்லக் கருதி அதற்கு வேண்டுங்கடிய தொழில்களைக் கொடியவன் சூழ்ந்தானென்க. நிலத்தலைத்திரு - இல்பொருளுவமை. (232) 262. கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன்கீ ழேன்றநன் மாந்தர்க் கெல்லா மிருநிதி முகந்து நல்கி யூன்றிய நாட்டை யெல்லா மொருகுடை நீழல் செய்து தோன்றினான் குன்றத் துச்சிச் சுடர்பழி விளக்கிட் டன்றே. இ-ள். அரசன்சுற்றம் விலங்கிலே மூழ்கிச்சிறையிலே தாழத் தன் கீழ்மையையேற்ற மாந்தர்க்கெல்லாம் நிதியைநல்கி நாட்டை யெல்லாங் குடையானீழல்செய்து ஊன்றுதற்குக் குன்றத்தி லிட்ட விளக்குப் போலே பழியாகிய விளக்கையிட்டுத் தோன்றினா னென்க. கீழ்-இடமுமாம். நன்மாந்தர் - இகழ்ச்சி. ஊன்றிய - பெய ரெச்சமுமாம். (233) 263. பருமித்த களிறு மாவும் பரந்திய றேரும் பண்ணித் திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொ றெங்கு மீண்டி யெரிமொய்த்த வாளும் வில்லு மிலங்கிலை வேலு மேந்திச் செருமிக்க வேலி னான்றன் றிருநகர் வளைந்த தன்றே. இ-ள். சேனையானது களிறுமுதலியவற்றைப்பண்ணி, வாள் முதலிய வற்றையேந்தி, தெருவுதோறுமீண்டி, வேலினானது நகரை யெங்கும் வளைந்ததென்க. உண்ணிற்கு மூர்திகளும் உட்பட வளைந்து அந்தப்புரத்தி னுட்புகுதாது நின்றது கண்டு வாயிலோ னுணர்த்துகின்றமை மேற்கூறுகின்றார். (243) 264. நீணில மன்ன போற்றி நெடுமுடிக் குருசில் போற்றி பூணணி மார்ப போற்றி புண்ணிய வேந்தே போற்றி கோணினைக் குறித்து வந்தான் கட்டியங் கார னென்று சேணிலத் திறைஞ்சிச் சொன்னான் செய்யகோல் வெய்ய சொல்லான். போற்றி - பரிகாரம். பூணணிமார்ப - பகைவர் கவசமணி வதற்குக் காரணமான மார்ப; “அரும்பூணற வெறிந்தாங்கு” (சீவக.2265) என்பர் மேலும். “போற்றி” நான்குகூறியது நிலத்திற்கும் குலத்திற்கும் வீரத் திற்கும் தருமத்திற்கும். நின்னையொழிய இல்லையென்றிரங் கினான். இ-ள். வெய்யசொல்லைக்கூறுதலுடைய வாயிலோன் போற்றி யென்றுகூறி இறைஞ்சிக் கட்டியங்காரன் நின்னைக் கொலைகுறித்து வந்தானென்று கூறினானென்க. கோண் எனின் மாறுபாடாம். (235) 265. திண்ணிலைக் கதவ மெல்லாந் திருந்துதா ழுறுக்க வல்லே பண்ணுக பசும்பொற் றேரும் படுமதக் களிறு மாவுங் கண்ணகன் புரிசை காக்குங் காவல ரடைக வென்றான் விண்ணுரு மேறு போன்று வெடிபட முழங்குஞ் சொல்லான். வல்லேயென்றது எவ்விடத்துங் கூட்டுக. வெடிபட - வெடித் தலுண்டாக. இ-ள். சொல்லான் கதவமெல்லாந்தாழிடுக; தேர்முதலியவற்றைப் பண்ணுக; புரிசையிலே அதுகாக்குங்காவலர டைகவென்றா னென்க. இது இராசதத்தாற்கூறினான். (236) 226. புலிப்பொறிப் போர்வை நீக்கிப் பொன்னணிந் திலங்கு கின்ற வொலிக்கழன் மன்ன ருட்கு முருச்சுடர் வாளை நோக்கிக் கலிக்கிறை யாய நெஞ்சிற் கட்டியங் கார னம்மேல் வலித்தது காண்டு மென்று வாளெயி றிலங்க நக்கான். இ-ள். புலியினது வரியையுடையகவசத்தைத்தவிர்த்து மன்ன ரஞ்சும் வாளை நோக்கி வலித்ததுகாண்டுமென்று மிகச்சிரித் தானென்க. இது வீரத்தின்கண் எள்ளுதலாற் பிறந்தநகை. ஊர்தி களின்மை யிற் கவசநீக்கினானென்க. போர்வை - உறையுமென்ப. (237) 267. நங்கைநீ நடக்கல் வேண்டு நன்பொருட் கிரங்கல் வேண்டா கங்குனீ யன்று கண்ட கனவெலாம் விளைந்த தென்னக் கொங்கலர் கோதை மாழ்கிக் குழைமுகம் புடைத்து வீழ்ந்து செங்கயற் கண்ணி வெய்ய திருமகற் கவலஞ் செய்தாள். நன்பொருள் - பிள்ளை. வேண்டுமென்பது ஒருவியங்கோள்; “ஓஒதல் வேண்டும் என்றாற்போல, எல்லாமென்றான், பிள்ளையா ராக்கங்கருதியுயிர்நிற்றற்கு. தெளிவுபற்றி விளைந்த தென்று இறந்தகாலத்தாற் கூறினான். இ-ள். நங்காய், நீ இரங்குதல்வேண்டா; பிள்ளை காரணத் தாற் போவாயாக; அது என்னெனின் நீ அன்று கங்குலிற் கண்ட கனவெல்லாம் பயன்பட்டது காண் என்றுகூற, கயற்கண்ணி கோதை போல மாழ்கி வீழ்ந்து தன்பிள்ளைக்கு வருத்தஞ் செய்தாளென்க. (238) 268. மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண் டனைய தோளா னல்லலுற் றழுங்கி வீழ்ந்த வமிர்தமன் னாளை யெய்திப் புல்லிக்கொண்ட வல நீக்கிப் பொம்மல்வெம் முலையி னாட்குச் சொல்லுவா னிவைகள் சொன்னான் சூழ்கழற் காலி னானே. இ-ள். மற்றெழிலைவருத்தியெழுந்து நீண்டு மலைதிரண்ட னைய தோளானாகிய கழற்காலினான், அல்லலுற்றுக் கெட்டு வீழ்ந்த அமிர்த மன்னாளைச் சேர்ந்து தழுவி, அவலத்தை நீக்கி அவளுக்கு முன்பு அன்பிற்றலைப்பிரியாதன கூறுகின்றவன் இப்பொழுது அவ்வன்பிற்றலைப்பிரிந்தன கூறினானென்க. அமுதயின்றார்க்கு நாளுலந்தால் அது வேறுபாடு தோற்று விக்குமாறுபோல் இவற்கும் வேறுபாடுதோற்றுவித்தலின் அமுதன்னாளென்றார். (239) 269. சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தி னாகு மாதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய் நோதலும் பரிவு மெல்லா நுண்ணுணர் வின்மை யன்றே பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான். இ-ள். பேதாய், தோளி, சாதல்தானும் பிறத்தல்தானும் ஆதல் தானும் அழிதல்தானுமெல்லாம் தம்வினைகளின் பயத்தா னுண்டாம்; ஆண்டுச் சாதற்கும் அழிதற்கும் நோதலும், பிறத் தற்கும் ஆதற்குமின்புறுதலும், எல்லாம் அறிவின்மையன்றே, நீ இங்ஙன மாதலிற் பெரிதும் அறிவிலியாயிருந்தாய், அவ்வினையுறு தல் பொருட்கு இயல்புகாணென்றானென்க. (240) 270. தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடன் மணலு மாற்றா வெல்லைய வவற்று ளெல்லா மேதிலம் பிறந்து நீங்கிச் செல்லுமக் கதிக டம்முட் சேரலஞ் சேர்ந்து நின்ற இல்லினு ளிரண்டு நாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா. அவற்றுட்பிறந்துமெனமாறுக. இரண்டுநாள் - சிறிது நாளென்னும்பொருட்டு. இ-ள். நம்முடைய பழைய மானிடப்பிறப்பை எண்ணின் வெண்மணலும் உறையிடப்போதாத எல்லையுடைய; அப்பிறவியு ளெல்லாம் பிறந்தும் வேறுபட்டேம்; இனி இவ்வுடம்பைநீங்கிச் செல்லுங்கதியிலுஞ் சேரேம்; ஆதலின் இப்பொழுது சேர்ந்து நின்ற இரண்டுநாளை யுறவை உறவாகக் கருதி அதற்கிரங்க வேண்டா வென்றானென்க. (241) 271. வண்டுமொய்த் தரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்னூ லுண்டுவைத் தனைய நீயு முணர்விலா நீரை யாகி விண்டுகண் ணருவி சோர விம்முயிர்த் தினையை யாத லொண்டொடி தகுவ தன்றா லொழிகநின் கவலை யென்றான். இறைவனருளால் வண்டுமொய்த்தது. நூல் - ஆகுபெயர். அனைய - நெஞ்சறி பொருண்மேற்று. இ-ள். ஒண்டொடி, வாமனாற்சொல்லப்பட்ட நூற்பொருளை உணர்ந்துவைத்து அவ்வாறுணர்வுடைய நீயும் உணர்வில்லாத தன்மையையாய் எனதுமொழியை வேறுபட்டுக் கண்ணீர்வீழ விம்மியுயிர்த்து இத்தன்மையையாதல் தகாது; இவ்வருத்தத்தைத் தவிர்கவென்றானென்க. (242) 272. உரிமைமுன் போக்கி யல்லா லொளியுடை மன்னர் போகார் கருமமீ தெனக்கு மூர்தி யமைந்தது கவல வேண்டா புரிநரம் பிரங்குஞ் சொல்லாய் போவதே பொருண்மற் றென்றா னெரிமுயங் கிலங்கு வாட்கை யேற்றிளஞ் சிங்க மன்னான். இ-ள். வாளைப்பிடித்த கையினையுடைய ஏறாகிய சிங்கத்தை யொப்பான் நரம்பு இரங்குதற்குக் காரணமான சொல்லாய், மன்னர் உரிமையைமுன்னே போக்கியல்லது தாம்போகார்; ஆதலால் இப்போக்கு எனக்குங்கருமம்; உனக்குங் கருமம்; ஏறுதற்கு ஊர்தியுஞ் சமைந்தது, இனிக்கவல வேண்டா, போவதே கரும மென்றானென்க. பிள்ளையாற்கதிபெறுதலும் பகைவேறலுங் கருதி இருவர்க் குங் கருமமென்றான். கவற்சி - இருதலைக் கொள்ளியிடத் தெறும்புபோற் கணவனையும் புதல்வனையுநோக்கிக் கவலுதல். (243) 273. என்புநெக் குருகி யுள்ள மொழுகுபு சோர யாத்த வன்புமிக் கவலித் தாற்றா வாருயிர்க் கிழத்தி தன்னை யின்பமிக் குடைய சீர்த்தி யிறைவன தாணை கூறித் துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள். உருகி - உருக அநந்தசுக மிகுதலாலே சீர்த்தியையுடைய அருகன். அவனாணை: ஓம்நமோஅரஹந்தாணம் என்னு மொழி. துன்பமில் பறவை - தீதற்றபறவை. இ-ள். என்புருகும்படி உள்ளம் ஒழுகாநின்றுசோரப் பிணித்த அன்புமிகுதலால் ஆற்றாத உயிர்போலுங்கிழத்தியைப் பறவை யாகிய ஊர்தியைச் சேர்த்தினான்; அத்துணைவியுஞ் செயலற்று இறைவனது ஆணைகூறச் சேர்ந்தாளென்க. (244) வேறு. 274. நீரு டைக்கு வளையி னெடுங்க ணின்ற வெம்பனி வாரு டைம்மு லைமுகந் நனைப்ப மாதர் சென்றபின் சீரு டைக்கு ருசிலுஞ் சிவந்த ழன்றொர் தீத்திரள் பாரு டைப்ப னிக்கடல் சுடுவ தொத்து லம்பினான். உடைம்முலை, மகரவொற்றுவண்ணத்திற்கடுத்தது. பாரை அகத் தடக்கின கடலென்றது ஊழிக்காலத்துநீரை. தானுண்டாக் கின படையைத் தானழிக்கின்ற தன்மை பற்றி நெருப்பும் நீருமுவமை கூறினார். இ-ள். மாதர், நீரறாததோர்குவளைபோல வெய்யநீர் இடையறாது நின்றகண் வாருடைகின்ற முலைமுகத்தை நனைப்பப் போனபின்பு, குருசிலும்நெஞ்சழன்று கோபித்து மடங்கற்றீ கடலைச்சுடுவ தொத்து முழங்கினானென்க. (245) 275. முழைமு கத்தி டியரி வளைத்த வன்ன மள்ளரிற் குழைமு கப்பு ரிசையுட் குருசி றான கப்பட விழைமு கத்தெ றிபடை யிலங்கு வாட்க டலிடை மழைமு கத்த குஞ்சரம் வாரி யுள்வ ளைத்தவே. குழைமுக மகளிர்காக்கும் புரிசையெனவே அந்தப் புரமா யிற்று. “ஆடவர் குறுகா வருங்கடி வரைப்பின்” என்றார் பிறரும் இழை முகத் தெறிதல் - நூல்பிளக்கவெறிதல். மழை - மதம். இ-ள். முழையிடத்தே அரியைவளைத்தகுஞ்சரத்திரள் போல அந்தப் புரத்தே குருசிலகப்படும்படி வேலையும் வாளையுமுடைய மள்ளராகிய கடலினிடையிற் குஞ்சரங்கள் செண்டு வெளியிலே வளைத்தவென்க. அரியை யானைவளைத்தல் இல்பொருளுவமம். (246) 276. அயிலி னிற்பு னைந்தவா ளழன்று ருத்து ரீஇயுடன் பயில்க திர்ப்ப ருமணிப் பன்ம யிர்ச்செய் கேடகம் வெயிலெ னத்தி ரித்துவிண் வழுக்கி வந்து வீழ்ந்ததோர் கயில ணிக்க திர்நகைக் கடவு ளொத்து லம்பினான். வினையுலந்துவீழ்ந்ததோர்கடவுள் உவமையாயிற்று; இவனு மிங்ஙன நிற்றலின் கயில் - மூட்டுவாய். நகை - முத்துவடம். இ-ள். கூர்மையாற்புனைந்தவாளை, நெஞ்சழன்றுகோபித் துருவி அதனுடனே கேடகத்தையும் ஞாயிற்றைத்திரிக்கு மாறுபோலத் திரித்துக் கடவுளையொத்து முழங்கினானென்க. (247) 277. மாரி யிற்க டுங்கணை சொரிந்து மள்ள ரார்த்தபின் வீரி யக்குரு சிலும் விலக்கி வெங்க ணைமழை வாரி யுட்க டிந்துட னகற்ற மற்ற வன்படைப் பேரி யற்பெ ருங்களி றுபின்னி வந்த டைந்தவே. இ-ள். மள்ளர் கணையை மாரியிற்சொரிந்தார்த்தபின்பு, குருசிலும் அக்கணையைவிலக்கிச் செண்டுவெளியினின்று நாற்படை யையுஞ் சேரக்கெடுத்துப்போகப் பேரணியினின்ற பெருங்களிறு கள் செற்றி வந்துசேர்ந்தனவென்க. தம்பேர் உலகில் பெரிய இயலுதலையுடையகளிறு. (248) 278. சீற்ற மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்ச ரந்நுதற் கூற்ற ருங்கு ருதிவாள் கோடு றவ ழுத்தலி னூற்று டைநெ டுவரை யுருமு டன்றி டித்தென மாற்ற ரும்ம தக்களி றுமத்த கம்பி ளந்தவே. கூற்றரும் - சொல்லற்கரிய. ஊற்று - அசும்பு. இ-ள். சச்சந்தன், கொடுறத் தன்னைச்சேர்ந்த குஞ்சரங்களின் நுதலிலே வரைக்கண் உருமிடித்தென வாளையழுத்தலின், அக்களிறுகள் மத்தகம்பிளந்தனவென்க. (249) 279. வேன்மி டைந்த வேலியும் பிளந்து வெங்கண் வீரரை வான்ம யிர்ச்செய் கேடகத் திடித்து வாள்வ லையரிந் தூனு டைக்கு ருதியுள் ளுழக்கு புதி ரிதரத் தேன்மி டைந்த தாரினான் செங்க ளஞ்சி றந்ததே. வேலி - ஆகுபெயராதலிற் பிரித்தென்னாது பிளந் தென்றார் தன்னையொறுத்தவரைப் பரிசையாலிடித்து. வலையென்றார், தப்பாமற்சூழ்தலின். இ-ள். பிளந்து இடித்து அரிந்து திரிதலாற் றாரினான் களஞ் சிறந்ததென்க. இத்துணையு மிவன்வெற்றியாதலின், இவன்களமென்றார். (250) வேறு. 280. உப்புடைய முந்நீரு டன்றுகரை கொல்வ தொப்புடைய தானையு ளொருதனிய னாகி யிப்படிய றைமக னிருங்களிறு நூற வப்படையு ளண்ணலு மழன்றுகளி றுந்தி. நீடகமி ருந்தநிழ னேமிவல னேந்திக் கேடகம றுப்பநடு வற்றரவு சேர்ந்தாங் கோடுகதிர் வட்டமென வொய்யெனவு லம்பிக் காடுகவர் தீயின்மிகை சீறுபுவெ குண்டான். இவையிரண்டு மொருதொடர். தனக்குவேலியாகிய கரையைக் கடல் தானேகொல்லுகின்றாற் போலத்தமக்குக் காவலாகிய அரசனைப் படைதாமேகொல்லு கின்ற தென்றார். ஒருதனி - ஒப்பில்லாத தனி. நீடகமிருந்தநேமி – பகை யின்மையின் நெடுநாளுள்ளேயிருந்த சக்கரம். நடுவற்று – பாதி யில்லையாய். சீறுதல் - செற்றம். இ-ள். இறைவனாகியமகன் தானையுள் தனியனாய்நின்று முற்கூறியவாறே களிற்றைநூற அதற்கு அழன்று கட்டியங் காரனுங் களிற்றையுந்திச் சக்கரத்தையேந்தி அரவுசேர்தலால் நடுவற்று விசும்பிலேயோடுகின்றகதிர் வட்டமெனக் கேடகத்தையறுத்தலிற் சச்சந்தன் உலம்பி அவன் மிகையைச் சீறாநின்று தீப்போல வெகுண் டானென்க. (251-2) 282. நெய்ம்முக மணிந்துநிழ றங்கியழல் பொங்கி வைம்முக மணிந்தநுதி வாளழல வீசி மைம்முக மணிந்தமத யானைதவ நூறிக் கைம்முத றுணிந்துகளி றாழவது நோனான் 283. மாலைநுதி கொண்டுமழை மின்னென விமைக்கும் வேலைவல னேந்திவிரி தாமமழ கழியச் சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சுங் கோலவரை மார்பினுறு கூற்றென வெறிந்தான். இவையிரண்டு மொருதொடர். நுதி - நுனை. கருமையையுடைய முகத்தே பட்டமணிந்தமத யானை. தவ - மிக. முதல் - அடி. விரிதாமம் அழகழிய - இவன்சூடும் வாகைமாலை மேலழகுகெட்டுப்போக. மயிலின் றன்மையாரென்ற பன்மையாற் றேவியர்பலராயிற்று. முலைதுஞ்சுமார்பெனவேமுன் தனக்கு நிகராக எறிவாரின்மை தோன்றிற்று. “மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறநா.10) என்றார் பிறரும். வேல்வடிவுகொண்டுறுவதோர் கூற்றென. யானைவீழா நிற்க எறிந்தான். இ-ள். அங்ஙனம் வெகுண்டு வாளையோச்சி யானையை வெட்டு தலாலே அது கைதுணிந்து வீழாநிற்க, அதனைக் கட்டியங் காரன் பொறானாய் வேலையேந்தி அழகழிய அவன்மார்பிலே கூற்றென எறிந்தானென்க. (253-4) வேறு. 284. புண்ணிடங் கொண்ட வெஃகம் பறித்தலிற் பொன்ன னார்தங் கண்ணிடங் கொண்ட மார்பிற் றடாயின காது வெள்வேன் மண்ணிடங் கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம விண்ணி டமள்ளர் கொள் மிறைக்கொளி திருத்தி னானே. தடாயினவேல் - பெயரெச்சம். அம்ம - அசை. இ-ள். மார்பிலே தைத்துநின்றவேல் பறித்தலின் அம்மார்பிலே பொருது வளைந்த அதனைப் பட்டு வீழ்ந்தயானையின் மருப்பிடையிலே யிட்டு மள்ளர் விண்ணிடங் கொள்ளும்படி அவ்வளைவுக்குண்டாகிய விளக்கத்தைப் போக்கினானென்க. (255) 285. ஏந்தல்வே றிருத்த யானை யிரிந்தன வெரிபொற் கண்ணி நாந்தக வுழவர் நண்ணார் கூற்றென நடுங்கி மள்ளர் சாய்ந்தபின் றறுக ணான்மைக் கட்டியங் காரன் வேழங் காய்ந்தனன் கடுக வுந்திக் கப்பணஞ் சிதறி னானே. இ-ள். ஏந்தல் வேலைத்திருத்துதலாலே மள்ளர் நடுங்கிச் சாய்ந்தபின், யானை இரிந்தன; உழவரணுகார்; அதுகண்டு கட்டியங் காரன் அவர்களைக்காய்ந்தனனாய் வேழத்தைக் செலுத் திக் கப்பணத்தைச் சிதறினானென்க. நாந்தகம் - வாள். நண்ணார் - முற்று. கப்பணம் - இரும்பால் ஆனைநெருஞ்சிமுள்ளாகப் பண்ணியது. இதனான் இவன்வே றோர்யானையை ஏறினமையுணர்க. (256) 286. குன்றமார் பரிந்து வெள்வேற் குடுமிமா மஞ்ஞை யூர்ந்து நின்றமால் புருவம் போல நெரிமுரி புருவ மாக்கிக் கொன்றவன் வேழம் வீழ்ப்ப மற்றுமோர் களிற்றிற் பாய்ந்து நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முடி யிலக்க மானான். ஊர்தல் - ஈண்டுப் போதன்மேற்று; “வானூர்மதியம்” (நாலடி . 125) போல, மால் புருவம் நெரித்தாற்போல, நீண்முடி - ஆகுபெயர். இ-ள். வேலாலே குன்றினதுமார்பைப்பிளந்து மயில் போகப் பட்டுநின்ற முருகனைப் போலப் புருவமாக்கக் கட்டியங் காரனது வேழத்தை முன்பு திருத்தின வேலாலேகொன்று வீழ்ப்ப; அவன் மற்று மோர்களிற்றிற்பாய்தலாலே மள்ளர்க்கெல்லாம் சச்சந்தன் இலக்கா யினானென்க. (257) வேறு. 287. நஞ்சுபதி கொண்டவள நாகணையி னான்ற னெஞ்சுபதி கொண்டுபடை மூழ்கநிலம் வீசு மஞ்சுதவழ் குன்றனைய தோளொசிந்து மாத்தாட் குஞ்சரங்க ணூறிக்கொலை வாளொடித்து நின்றான். நாகணையினான் - சச்சந்தன். ஒசிந்து - ஒசிய. இ-ள். நாகணையினான்றன் நெஞ்சைப் பதியாகக்கொண்டு மள்ளர் படைகள் மூழ்காநிற்க; தானும் குஞ்சரங்களைத் தோளொ சியநூறி வாளையொடித்துநின்றானென்க. நிலத்திலுள்ளார்க்குக்கொடுக்குந்தோள் - ஆகுபெயர். இனி ‘மதிகொண்ட’ பாடமாயிற் றிருமாலுட்கொண்ட சக்கரமென்க. தோளசைந்தும் பாடம். (258) 288. ஆரமரு ளாண்டகையு மன்னவகை வீழும் வீரரெறி வெம்படைகள் வீழவிமை யானாய்ப் பேரமரு ளன்றுபெருந் தாதையொடும் பேராப் போரமரு ணின்றவிளை யோனிற்பொலி வுற்றான். வீழும் - விரும்பும். இ-ள். ஆண்டகையும் அமரிலே முற்கூறியவாறே விரும்பும் வீரரெறிகின்ற படைகள் வீழ இமையானாய், பாரதத்திற் புறங் கொடாமற் பொருகின்றபோரிலே கன்னனோடே மாறு பட்டுநின்ற அபிமன்னுவைப்போலே பொலிவுற்றானென்க. இனி ‘நீடும்’ பாடமாயின் நெடும்பொழுதாம். “நீடுநின்றனன்” என்றார்பிறரும். (259) 289. போழ்ந்துகதிர் நேமியொடு வேல்பொரு தழுந்தத் தாழ்ந்துதறு கண்ணிணைக டீயழல விழியா வீழ்ந்துநில மாமகடன் வெம்முலை ஞெமுங்க வாழ்ந்துபடு வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான். ஆழ்ந்து - மiறந்து. ஆண்டகைமை - குணப்பண்பு; “ஆண்டகைக் குரவிர்” (சீவக.393) போல. அவிதல் - குறைதல். “திரைபாடவிய” (அகநா.260) என்றாற்போல. பண்பியாக்கிப்பட்டானென்னிற் “பாலருவி” என்னுங்கவி வேண்டாவாம். இவன் பகைவர் முக நோக்கி வீழ்ந்த மையிற் பிள்ளையார் பின்பு பகைவென்றார். இ-ள். சக்கரத்தோடே வேலும்போழ்ந்து தம்மிற் பொருதழுந் துதலாலே மெய்வலிகுறைந்து தறுகண்மையையுடையகண்கள் அழல விழித்து முலைஞெமுங்க வீழ்ந்து சுடர்போல் ஆண்ட கைமை குறைந்தானென்க. (260) வேறு. 290. தோய்ந்த விசும்பென்னுந் தொன்னாட் டகந்தொழுது புலம்பெய்தி மைந்தர் மாழ்க, வேந்து முலையாரினைந் திரங்கக் கொடுங்கோ லிருள்பரப்பவேஎபாவ, மாய்ந்த குருகுலமா மாழ்க டலினுண் முளைத்தவறச் செங்கோலாய் கதிரினை, வேந்தர் பெருமானைக் சச்சந் தனைமந் திரிமாநா க முடன் விழுங்கிற் றன்றே. கடலாங்குருகுலம் - சிறப்புநிலைக்களமாக முதலொடு முதலே வந்த மெய்யுவமம். மந்திரிமாநாகம் - கிழக்கிடு பொருணி லைக்களமாக முதலொடு முதலே வந்த வினையுவமம். தொல்காப்பி யனார் சொல்லும்பொருளு முடனாராய்தலின் உருவகம் உவமை யென்றே கூறினார். செங்கோலையுடையகதிர் - இல்பொருளுவமம். உடன் விழுங்கிற்று - அரசவுரிமை யெல்லாம் கொண்டான். நாகத்திற்கேற்ப விழுங்கிற்றென்றார். இ-ள். மக்கள்செறிந்த விசும்பென்றுகூறும் ஏமாங்கதத்தே சான்றோர் மயங்க, கற்புடைமகளிரிரங்க, கொடுங்கோலாகிய இருள் பரப்ப, பெருமானைச் சச்சந்தனைக் கடல்போலுங் குருகுலத்தே முளைத்த கதிர்போல்வானை நாகம்போலுமந்திரி விழுங்கினா ஏஎபாவமென்க. ஏ - குறிப்புமொழி. இதனால் அவன் ஆண்டகைமை குறைந் ததற்கிரங்கினார். (261) 291. பாலருவித் திங்கடோய் முத்த மாலைப் பழிப்பினெடுங் குடைக்கீழ்ப் பாய்பரி மான்றேர்க், கோலருவி வெஞ்சிலை யான் கூர் வாளொடு மணிக் கேடக மு மறமு மாற்றி, வாலருவி வாமனடித் தாமரை மலர்சூடி மந்திர மென் சாந்து பூசி, வேலருவிக் கண்ணினார் மெய்காப் போம்ப வேந்தன்போய் விண்ணோர்க்கு விருந்தா யினானே. பாலருவி - பால்போலுங் கிரணம். தோய் - உவமவுருபு; புறனடையாற்கொள்க. வாலருவி - சுக்கிலத்தியானம். வேலருவி-வேலொழுங்கு. கண்ணினார் காவற்றொழிலை ஈண்டுப் பேணப் போய். இ-ள். குடைநிழற்கண்ணே தேர்மீதுநின்றுகோல் இடை யறாமல் வழங்குஞ் சிலையானாகிய வேந்தன், அவை உதவாமை யின் வாளுங் கேடகமு மறமுந் துணையாகப் பொருது, அவற்றைப் போக்கி வாமனுடைய அருவியையாடிச் சாந்தைப்பூசி மலரை யொத்த அடியைச்சூடிப் போய்த் தேவர்கள் வழிபடுதற்குப் புதிய னாயினா னென்க. உயிர்நீங்குகின்ற பொழுது தியானம்வந்து உதவுதலின் வீடு பெற்றானென்க. சுவர்க்கமுமாம். (262) 292. செந்தீக் கருந்துளைய தீங்குழல் யாழ்தேந்தே மென்னு மணி முழவமுந், தந்தாங் கிளையார்மெல் விரல்கடீண் டத்தாந்தா மென்றிரங்குந் தண்ணு மைகளு, மந்தீங் கிளவியாரைஞ் ஞாற்று வரவை துறை போ யாடல ஏம்பை யன்னா, ரெந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ வென் றினைந் திரங்கிப் பள்ளிபடுத் தார்களே. செந்தீயாற் கருந்துளையவானகுழல். தேந்தேம், தாந்தாம்-அநுகரணம். இளையார்-நிருத்தகீத வாச்சியத்திற்குரிய மகளிர். கிளவி யாரைஞ்ஞூற்றுவரென்றார், அகப்பரிவாரம் ஐஞ்ஞூற்று வரேயென்றற்கு. மேலும் நால்வரையொழிந்ததோழர் ஐஞ்ஞூற்று வரும் அகப்பரி வாரமென்றுணர்க. தமக்குரியதுறைகள் முற்றக்கற்று அவையிலே ஆடுதலுடைய அரம்பையன்னார். இ-ள். இளையார், குழல் முதலியவற்றை ஈமத்தே கொண்டு வந்து விரல்களால் வாசியாநிற்க, ஐஞ்ஞூற்றுவரும் அரம்பையன்னாரும் இரங்கிப் பள்ளிப்படுத்தாரென்க. “கோன்றமர் நிகளமூழ்கி” (சீவக.262)எனவே ஆடவரின்மை யுணர்க. 293. மடையவிழ்ந்த வெள்ளிலை வேலம்பு பாய மணிச்செப்ப கங்க டைகின்ற வேபோற், றொடையவிழ்ந்த மாலையு முத்துந் தோய்ந்த துணை முலையி னுள்ளரங்கி மூழ்கக் காமன், படையவிழ்ந்த கண் பனி நீர்பாய விம்மாப் பருமுத்த நாமழலைக் கிண்கி ணியினார், புடைய விழ்ந்த கூந்தல் புலவுத் தோயப், பொழி மழையுண் மின்னுப் போற் புலம்பினாரே. தொடை - முறுக்கு. தோய்ந்த - செறிந்த. காமன் படையவிழ்ந்த - காமனம்பு தோற்ற. முத்தமாகியநா. புலவு - குருதி; ஆகுபெயர். இ-ள். கிண்கிணியினார், மணிச்செப்பை உள்வாயைக் கடைகின்ற கருவிகள் அதனுள்ளே அழுந்துமாறுபோல, மூட்டுக் கழன்றவேலும் அம்பும் ஆண்டுப்பரந்துகிடக்கின்றவை முலை யினுள்ளேதைத்து அழுந்தும்படி புரண்டழுது, பின்பு, பெய்கின்ற மேகத்தினுள்ளே மின்தோன்றுமாறு போலக்கூந்தல் மெய்யைமறைத்து நிலத்தைத் தீண்ட, அதனுள்ளேயிருந்து அழுதாரென்க. விம்மிப் புலம்பினாரென்க. (264) 294. அரிமானோர் மெல்லணை மேன் மஞ்ஞை சூழக் கிடந்தாங்கு வேந்தன் கிடந்தா னைத்தான், கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான்கண்ணீர் கலுழ்ந்து குத்தபி, னெரிமாலையீ மத்திழுதார் குடமேனை நூறுமேற்பச் சொரிந்த லறியெம், பெரு மானே யெம்மை யொளித்தியோ வென்னாப் பெரிய கண்ணீர் சொரிந்த லறுவார். 295.2. கையார் வளைகள் புடைத் திரங்குவார்கதிர் முலைமேலாரம் பரிந்தலறுவார், நெய்யார் கருங்குழன் மேன்மாலை சிந்தி நிலத் திடு வார் நின்று திருவில் வீசு, மையார் கடிப்பிணையும் வார்குழை யுங்களைந் திடுவார் கையால் வயிற துக்குவா, ரையாவோ வென்றழு வார் வேந்தன் செய்த கொடுமை கொடிதென் பார்கோல் வளை யினார். 296.3 . பானாட் பிறைமருப்பிற் பைங்கண் வேழம் பகுவாயோர் பையணன்மா நாகம் வீழ்ப்பத், தேனார் மலர்ச்சோலைச் செவ்வரை யின்மேற் சிறுபிடிகள் போலத் துயருழந் துதா, மானா தடியேம் வந் தவ்வுல கினின் னடியடைது மென்றழுது போயி னாரெங், கோனார் பறிப்ப நலம் பூத்தவிக் கொடியினிப் பூவா பிறர்ப றிப்பவே. இவைமுன்றுமொருதொடர். கலுழ்ந்து-வழிபாட்டிற்படுதலின் மனந்தன்வழித்தன்றிக் கலங்கி, அழுதது-உவகைக்கலுழ்ச்சி; “விளிவில்கொள்கை” (தொல். மெய்ப்.5) என்ற தனான், இதுவும் அழுகைப்பாற்படும். மாலை-இயல்பு. ஈமம்-விறகு. ஏனை நூறு-சந்தன முதலியன. ஒளித்தியோ-நின்மெய்யு மெரிநுகர் கின்றதோ. கதிரையுடைய ஆரம். திருவில்லைநின்றுவீசுங்குழை. நீலக் கடிப்பிணை-குதம்பைபோல்வதோர்பணி. ஓ-இரக்கக்குறிப்பு. கொடிதென்றது-அரசற்குச்செய்யுநீர்க்கடன் மரபு செய்யாமை நோக்கி. வாயையும் பையையும் அணலையுமுடையதொரு நாகம். சிறு பிடிகள்எனவே அக்களிறு கூடுதற்குரிய குலத்திற்பிறந்த பிடிகளல்ல வென்பது பெற்றாம். இக்கொடியென்றார், தம்மைப் பிறர்போல. இவர்கள் அரசற்குக் காமமொழிந்த நுகர்ச்சி கொடுத்தற்குரிய மகளிர். இ-ள். மயில்சூழ்ந்துகிடப்ப ஓரரிமான், அணைமேற் கிடந்தாற் போலத் தேவியர்சூழ்ந்துகிடப்ப வேந்தன்கிடந்தவனைக் கரிந்த இயல்பினை யுடைய நெஞ்சினான்றான் கண்டான்; கண்டுகலுழ்ந்து தொழுதான்; தொழுது கண்ணீருகுத்தபின்பு, அவன் செற்றநீங்கினமை கண்டு, கோல்வளையினார், ஈமத்தே குடமும் ஏனையவும் அரசற்குப் பொருந்தச் சொரிந்து அலறி, பின்பு, ஒளித்தியோவென்று நீர்சொரிந்து அலறுவார், இரங்குவார், அலறுவார், இடுவார், களைந்திடுவார், அதுக்குவார், அழுவார், கொடிதென்பாராய்ச் செவ்விய வரைமேல் ஓர்நாகம் வேழத்தைவீழ்ப்ப அது காத்தற்குரிய பிடிகள் துயருழக்குமாறு தாம் துயருழந்து, எங்கோனார் நுகர அவர்க்குக் கொடுத்த நலங்கள் பிறர்க்குக் கொடேம்; இனி அவ்வுலகிலேசென்று அடியடைவே மென்று ஆனாதழுது போயினாரென்க. (265-267) 297. செங்கட் குறுநரியோர் சிங் க வேற்றைச் செகுத்தாங்க தனிடத்தைச் சேர்ந்தா லொப்ப, வெங்கட் களியானை வேல்வேந்தனை விறலெரியின் வாய்ப் பெய் தவன் பெ யர்ந்து போய்ப், பைங்கட் களிற்றின்மேற் றன்பெயரினாற் பறையறைந் தான் வேன்மாரி பெய்தா லொப்ப, வெங்க ணவருமி னைந்தி ரங் கினா ரிருண் மனத்தான் பூமகளை யெய்தினானே. இ-ள். நரி, நிகரில்லாத சிங்கவேற்றைச்செகுத்து அப்பொழு தே அதற்குரிய இடத்தைச் சேர்ந்தால் அச்சிங்கத்தின் றொழிலை நடத்தாது தன்றொழிலை நடத்துமாறு போல, இருண் மனத்தானாகிய விறலவன், வேந்தனை எரிவாய்ப் பெய்துபோய்ப் பூமகளை எய்தினான்; அதுவேயன்றித் தன்பெயராலே பறை சாற்றினான்; அதுகேட்டுவேன் மழைபெய்தால் அதற்கு இரங்கு மாறு போல எவ்விடத்தவருமிரங் கினாரென்க. அவன்கருத்தால் மகளிர்பெய்தலின் அவன்பெய்தா னென்றார். விறலவனென்க. இது இகழ்ச்சி. இணைந்து-கெட்டு. (268) சீவகன் உற்பத்தி. வேறு. 298. களிமுகச் சுரும்புண் கோதை கயிலெருத் தசைந்து சோi வளிமுகச் சுடரி னில்லா மனத்தொடு மயங்கி யிப்பாற் சுளிமுகக் களிற னான்றன் சொன்னய நெறியிற் போய கிளிமுகக் கிளவிக் குற்ற திற்றெனக் கிளக்க லுற்றேன். களிமுகம்-களிக்கின்றநெறி. கயில்-ஆகுபெயர். அசைந்து சோர-குலைந்துவீழ. சுளித்தல்-கோபித்தல். இ-ள். காற்றின்முன்னின்ற சுடர்போல ஒருவழிநில்லா மனத்தோடே எருத்தத்திலே கோதைசோர மயங்கிக் களிறனானது வார்த்தையின் பயனை உட்கொண்டு போன கிளிபோலுங் கிளவிக்கு இப்பாலுற்ற தீங்கு இத்தன்மைத்தென்று கூறுதலுற்றே னென்க. (269) 299. எஃகென விளங்கு வாட்க ணெறிகட லமிர்த மன்னா ளஃகிய மதுகை தன்னாலாய்மயி லூரு மாங்கண் வெஃகிய புகழி னான்றன் வென்றிவெம் முரச மார்ப்ப வெஃகெறி பிணையின் மாழ்கி யிறுமெய்கி மறந்து சோர்ந்தாள். எஃகென - கூர்மைதான் இதன்வடிவென; ஆய்மயில் – விசை குறைந்த மயில். எஃகெறி - எஃகாலெறிந்த. மாழ்கி-மனமயங்கி. இறுகி - மூர்ச்சித்து. இது கையாறாதலிற் பொறி இடந்திரித்த லாற்றாமை யுணர்க. இ-ள். அரசனுக்கு வாளின்றன்மையாகிய கண்ணையுடைய அமுதனாள், அவனைநீங்குதலாற் குறைந்த வலியாலே மயிலைச் செலுத்துகின்ற அவ்விசும்பிடத்தே புகழினானது கொடிய முரசார்ப்ப, அதுகேட்டு மாழ்கி மெய்மறந்து இறுகிக் சோர்ந்தா ளென்க. வேந்தாந் தன்மையை விரும்பிய புகழினான். (270) 300. மோடுடை நகரி னீங்கி முதுமரந் துவன்றி யுள்ளம் பீடுடை யவரு முட்கப் பிணம்பல பிறங்கி யெங்குங் காடுடை யளவை யெல்லாங் கழுகிருந் துறங்கு நீழற் பாடுடை மயிலந் தோகை பயப்பய வீழ்ந்த தன்றே. பீடுடையவரும் உள்ளமுட்க எங்கும் பிணம்பெருத்து. துவன்றிப் பிறங்கித் தானுடைய எல்லையெல்லாம் கழுகுறங்கு நிழலையுடைய காடென்க. பாடு - ஈண்டு இடப்பக்கம். உடைமயில் - உடைகின்ற மயிலென வினைத்தொகை. பொறிக்கு “ஓடமுறுக்கி”(சீவக.238) என்னும் வாசகம் முன்னர் உளதாகலின் அதற்கேற்ப உடைகின்ற தென்றார். கையாலிடந் திரித்தாற் கடிதின்வீழ்கின்றது ஈண்டுத் தானே இடந்திரிதலிற் பையப் பைய நிலத்திற்கு அண்ணிதாக வீழ்ந்ததென்றார். வீழ்ந்தது - நிகழ்காலத்திற்றோன்றிய இறப்பு. இ-ன். அங்ஙனம் மூர்ச்சிப்பதன்முன்பு வலத்திலே முறுக்கின விசை தானே கைவிட்டபின் இடத்தேபுரிகின்ற தோகை மயில் அந்நகரினின்றுநீங்கிக் சுடுகாட்டின் நேரே வீழ்ந்ததென்க. (271) 301. மஞ்சுசூழ் வதனை யொத்துப் பிணப்புகை மலிந்து பேயு மஞ்சுமம் மயானந் தன்னு ளகில்வயி றார்ந்த கோதை பஞ்சிமேல் வீழ்வ தேபோற் பல்பொறிக் குடுமி நெற்றிக் ருஞ்சிமா மஞ்ஞை வீழ்ந்து கால்குவித் திருந்த தன்றே. மேகம் - புகைநிறத்திற்குவமம். பேயும் உம்மை - சிறப்பு. அகில் - ஆகுபெயர். குஞ்சி - மயிர். இ-ள். அங்ஙனம்வீழ்ந்த அந்தமயில், புகைமலிந்து பேயு மஞ்சு மயானத்தே வீழ்கின்றபொழுது, மாலை பஞ்சின்மேல் வீழ்வது போல் மெல்லெனவீழ்ந்து காலைக் குவித்திருந்ததென்க. இருக்குமென்றும் பாடம். இம்மயிற்பொறியைக் கூனிய துருவாகியதெய்வம் மறைத்துக் கட்டியங்காரனும் கோவிந்தனுந் தேவியைத்தேடாமற்காத்ததென்றுகொள்க. அது பின்பு “கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர்பதிநல்கி”(சீவக.2603) எனச்சேரக் கூறியவாற்றானுமுணர்க. (273) 302. வார்தரு தடங்க ணீர்தன் வனமுலை நனைப்ப வேல்பெற் றூர்கட லனைய காட்டு ளச்சமொன் றானு முள்ளா ளேர்தரு மயிலஞ் சாய லிறைவனுக் கிரங்கி யேங்கிச் சோர்துகி றிருத்த றேற்றாடு ணைபிரி மகன்றி லொத்தாள். வார்தலைத்தருகின்ற. ஏல் - மனவெழுச்சி. தானிற்கின்ற நிலை யிற்கலக்கத்தாலே பேய்முதலியவற்றிற்குச் சிறிதும் அஞ்சாளாய், யாதுசெய்வலென்றிரங்கி, ஏங்கி அழுது. தேற்றாள் - தொழிற் பெயர். அன்புமிகுதியாற் கையாறுமுற்படுதலின் இறுகியெனக்கை யாறுகூறி, இரங்கியெனக் கவலைகூறி, ஏங்கியென அரற்றுக்கூறி, அச்சமுள்ளாளென அவலங்கூறினார். வருத்தந்தோன்றிநிற்றல்-அவலம், வாய்விட்டழுதல்-அரற்று. யாது செய்வலென்றல் -கவலை. மூர்ச்சித்தல் - கையாறு. இ-ள். மயிலஞ்சாயல், திருத்தல்தேற்றாதவள், காட்டிலே உணர்வுபெற்று இறைவனுக்கிரங்கிக் கண்ணீர் முலையை நனைப்ப ஏங்கி அச்சமுள்ளாளாய் மகன்றிலை யொத்தா ளென்க. (273) 303. உண்டென வுரையிற் கேட்பா ருயிருறு பாவ மெல்லாங் கண்டினித் தெளிக வென்று காட்டுவாள் போல வாகி விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள் வெண்டலை பயின்ற காட்டுள் விளங்கிழை தமியளானாள். இ-ள். விளங்கிழை, கோயிலிலே விண்ணவர்மகள்போல நல் வினையின்வண்ணமாய் நடந்தவள், இப்பொழுது, பல்லுயிர் களும் நுகரும் பாவமுண்டென்று நூலிலே கேட்பாரெல்லாம் இனி என்னைக்கண்டு தெளிவீராகவென்று உலகிற்குக் காட்டுவாள் போலத் தான் தீவினையின்வண்ணமாய்க் காட்டிலே தமியளானா ளென்க. மகப்பெறுங்காலத்திற்குத் துணையின்றி வருந்துதலிற் காட்டு வாள்போல வாகியென்றார். (274) 304. இருள்கெட விகலி யெங்கு மணிவிளக் கெரிய வேந்தி யருளுடை மனத்த வாகி யணங்கெலாம் வணங்கி நிற்பப் பொருகடற் பரிதி போலப் பொன்னனான் பிறந்த போழ்தே மருளுடை மாத ருற்ற மம்மர்நோய் மறைந்த தன்றே. இ-ள். பெறுதற்கரியோன், மணிவிளக்கு ஏந்தியெரிய அணங் குகள் வணங்கிநிற்பக் கடலிடத்துப் பரிதிபோலப் பிறந்தபொழுதே, மயக்கமுடைய மாதருற்ற வருத்த நோய் மறைந்ததென்க. இகலி - விளக்கோடிகலி. ஏந்தி - மிக்கு. இவன் வீடுபெறுவ னென்பது கருதித் தெய்வம் வணங்கிற்று.“கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு”(நாலடி.201) என்றார்பிறரும். முன் “வெஞ் சுடரினாண்டகையவிந்தான்”(சீவக.289) எனக்கூறி, அச்சுடர் குழவியாய்த் தோன்றினமை கூறினார். ஞாயிறு தோற்றத்தில் இருளைப் போக்கிப் பின் மதியத்தைக் கெடுக்குமாறு போல, இவனும் பிறந்த பொழுதே தேவியிருளைப்போக்கிப் பின்பு பகைவெல்லுமென்பது கருத்து. இக்கருத்தாற் “செய்யோன்செழும் பொற்சரம்”(சீவக.2322) என்றும் “மதிவீழ்வதுபோல வீழ்ந்தான்” என்றுங்கூறினார். (275) 305. பூங்கழற் குருசி றந்த புதல்வனைப் புகன்று நோக்கித் தேங்கம ழோதி திங்கள் வெண்கதிர் பொழிவ தேபோல் வீங்கிள முலைகள் விம்மித் திறந்துபால் பிலிற்ற வாற்றாள் வாங்குபு திலகஞ் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். புதல்வன்பொருட்டு இவளைப்போக்குதலிற் குருசி றந்த புதல்வ னைஎன்றார். முலைகள் திங்களின்கதிரைத் தாம்பொழிவது போலப் பால்சொரியும் பருவத்தளவும் பொறாளாய்ப் பாலை வலியவாங்கி யென்க. என்றது மகப்பயந்தோர்க்குப் பயந்த பொழுதே பால்சுரவாதாத லால். இ-ள். ஓதி, புதல்வனை நோக்கிப் பிலிற்றுந் துணையும் ஆற்றா ளாய் வாங்கித் திருந்தத்திலகமிட்டுத் திலகனைவைத்தாளென்க. (276) வேறு. 306. கறைபன் னீராண் டுடன்விடுமின் காமர் சாலை தளிநிறுமின் சிறைசெய் சிங்கம் போன்மடங்கிச் சேரா மன்னர் சினமழுங்க வுறையுங் கோட்ட முடன்சீமி னொண்பொற் குன்றந் தலைதிறந்திட் டிறைவன் சிறுவன் பிறந்தானென் றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின். 307. மாட மோங்கும் வளநகருள் வரம்பில் பண்டந் தலைதிறந்திட் டாடை செம்பொ னணிகலங்கள் யாவும் யாருங் கவர்ந்தெழுநாள் வீட லின்றிக் கொளப்பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக் கோடி மூன்றோ டரைச்செம்பொன் கோமா னல்கு மெனவறைமின். 308, அரும்பொற் பூணு மாரமு மிமைப்பக் கணிக ளகன்கோயி லொருங்கு கூடிக் சாதகஞ்செய் தோகை யரசர்க் குடன்போக்கிக் கருங்கைக் களிறுங் கம்பலமுங் காசுங் கவிகள் கொளவீசி விரும்பப் பிறப்பாய் வினைசெய்தேன் காண விஃதோஒ பிறக்குமா. 309. வெவ்வா யோரி முழவாக விளிந்தா ரீமம் விளக்காக வொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி னிழல்போ னுடங்கிப் பேயாட வெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட விவ்வா றாகிப் பிறப்பதோ விதுவோ மன்னர்க் கியல்வேந்தே. இவைநான்குமொருதொடர். கறை - கடமை. பாலக்கிரகாரிட்டம் பன்னீராண்டளவு முண்டா கையினாலே இதற்குச் சாந்தியாகப் பன்னீராண்டு கடமை கொள்ளா தொழிதல் அரசியல்பென்று பன்னீராண்டென்றாள். இனி அரசர்க்குப் பதினோராண்டிலே உபநயனம்பண்ணிப் பன்னீராண்டிலே இல்லறக் கிழமை பூண்டு அரசவுரிமை யெய்துதலியல்பாகலின், பன்னீராண்டும் உலகத்தார்க்குத் தானமாக விடுதல் இயல்பென்றலுமொன்று. உடன்-சேர சாலை - அறச்சாலை. தளி - கோயில், நிறுமின் - இவற்றைப் படைமின். மன்னர் சிறைசெய்சிங்கம்போன் மடங்கிச் சினமழுங்கும் படி உறையும். சீமின் - இடித்துத்தூய்மைசெய்மின். புதல்வற்பயந்தாற் சிறைவீடுசெய்தல் பிதிரருடைய தனிசு நீங்குதலாம். திறந்திட்டு - திறந்து போகட்டு. சிறுவன் பிறந்தானென்று மகிழ்ந்தேற்பார்க்கு. உய்த்து - கொண்டு சென்று. இது தானம். நகர் - கோயில். பண்டம்-நெல்லுமுதலியன. யாவும்-பிறவும். ஏழுபிறப்பினுமுள்ள தீவினை நீங்குதற்கு, ஏழுநாள் வீடலின்றிக் கொளப் பெறுவாரென்றாள். ஏழுபிறப்பாவன “மக்கள் விலங்கு பறவையூர்வன, நீருட் டிரிவன பருப்பதம் பாதவ, மெனவிவை யெழு பிறப்பாகு மென்ப” வீடல் - விகாரம். வீழ்ந்தீர்க்கு - உயர்ந்ததானத் தைப்பெற விரும்பினீர்க்கு. உடம்பிற்கு மூன்றரைக்கோடி மயிருள வாகலின் ஒருமயிர்க்கொரு பொன்னாக மூன்றரைக்கோடிபொன் நல்குமென்றாள். தலைதிறந்தபண்டங்களையும், ஆடை முதலியவற் றையும், பிறவற்றையும் கொள்ளைகொள்ளப் பெறுவாரை யாரும் விலக்குதல் வேண்டாவென்க. ஒருங்கு-சேர. செய்து-செய்ய. ஓகை-உவகை. கவிகள்-பெரு மங்கலம் பாடுவார். பிறப்பாய்-பிறக்கு நீ. இஃது-இத்தன்மைத்து. ஓ-இரக்கக்குறிப்பு. பிறக்குமா - பிறக்கும்படியென்னும் பொருட்டு. மாறு - மாவெனவிகாரமுமாம். வெவ்வாய்-கொடியவாய். பிறப்பார்க்கொவ்வாச்சுடுகாடு. மருங்கு-பக்கம். ஓரிமுழவாக ஈமம்விளக்காக அரங்கிலே பேயாட வென்க. இவ்வாறென்றது தந்தைவிரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய்வருந்தும்படி தீவினையுடைய தன்மையை. இ-ள். தேவி, புதல்வனை நோக்கிக் கோமானானவன் கணி கள் சாதகஞ்செய்ய ஓகைபோக்கி வீசிக் கறைவிடுமின், நிறுமின், சீமின், ஈமின், விலக்கல்வேண்டா என அறைமின், வீழ்ந்தீர்க்கு நல்குமென அறைமினென்றுவிரும்பப்பிறக்கு நீ ஓ ஓ தீவினை செய்தேன் காண்டற் காகப் பிறக்கும்படி இத்தன்மைத்தாயிருந்தது; வேந்தே, இவ்விரண்டினும் இவ்வாறாகிப் பிறப்பது மன்னர்க்கியல் போ? பேயாடக் கூகைபாராட்ட இதுவாகிப்பிறப்பது மன்னர்க் கியல்போ? கூறாயென்றாளென்க. ஓகாரமிரண்டும் வினா. என்றெனவுங் கூறாயென்றா ளெனவும் வருவிக்க. ஆகிஇரண்டிடத்திற்குங் கூட்டுக.(277. 280) 310. பற்றா மன்ன னகர்ப்புறமாற் பாயல் பிணஞ்சூழ் சுடுகாடா லுற்றா ரில்லாத் தமியேனா லொதுங்க லாகாத் தூங்கிருளான் மற்றிஞ் ஞால முடையாய்நீ வளரு மாறு மறியேனா லெற்றே யிதுகண் டேகாதே யிருத்தி யாலென் னின்னுயிரே. இ-ள். இஞ்ஞாலமுடையாய், நீ கிடக்கின்ற இடம் பகைவ னிடமாயிராநின்றது; நினதுபாயல் சுடுகாடாயிராநின்றது; யானும் உசாவுவதற்கு ஓர்துணையுமில்லாத் தமியேனாயிரா நின்றேன்; நின்னைக்கொண்டுபோகக் கருதிற் போகவொண்ணாத இருளாயிரா நின்றது; மேல் நீ வளருமாறு மறியேனா யிரானின் றேனென்று பிள்ளையை நோக்கிக்கூறி, இது இதுவுமறிந்ததே இச்செய்திகண்டும் போகாதேகொடியவுயிரே இராநின்றாய்; இதற்குக்காரணமென்னென்று கூறினாளென்க. (281) மற்று - வினைமாற்று. 311. பிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும் புறந்தந் தென்பாற் றுயர்க்கடலை நீந்தும் புணைமற் றாகாக்காற் சிறந்தா ருளரே லுரையாயாற் சிந்தா மணியே கிடத்தியான் மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. சொல் - ஆகுபெயர். வருந்துகு - வருந்துவேனெனத் தனித் தன்மை. இ-ள். சிந்தாமணியே, நீ ஒன்றுமுரையாமற்கிடவா நின்றாய்; இனி எனது வருத்தநீக்கப்பிறந்த நீயும் பேரறத்தை யுடைய அடிகளும் புறந்தந்து என்னிடத்துப் பிறந்த துயர்க்கடலை யானீந்தும் புணையாகாத பொழுது மற்றுநின்னினும் அவனினும் சிறந்தாருளரேல் உரைக்கின்றிலை; நுங்கோன் கூறிய காரியத்தைச் செய்தயான் வருந்தக்கடவேனோவென்று கூறினாளென்க. (282) 312. அந்தோ விசயை பட்டனகொண் டகங்கை புறங்கை யானாற்போற் கந்தார் களிற்றுத் தங்கோமான் கழிய மயிலோர் மயிலூர்ந்து வந்தாற் போலப் புறங்காட்டுள் வந்தா டமியே யெனமரங்கள் சிந்தித் திரங்கி யழுவனபோற் பனிசேர் கண்ணீர் சொரிந்தனவே. இ-ள். அகங்கைபோய்ப் புறங்கையான கடுமைபோல விசயை கோமான்படா நிற்கப்புறங்காட்டுள் வந்தவள் தனியேபட்ட தீங்குகளை உட்கொண்டு அந்தோவென்ன இரங்கி அழுவன போல மரங்கள் தமக்கடுத்த பனியாகிய கண்ணீரைச் சொரிந்தன வென்க. (283) 313. அடர்பொற் பைபூ ணரசழிய வரும்பொற் புதல்வற் பெற்றிருந்த விடர்கொ ணெஞ்சத் திறைவியு மிருங்கண் ஞாலத் திருள்பருகிச் சுடர்போய் மறையத் துளங்கொளிய குழவி மதிபெற் றகங்குளிர்ந்த படர்தீ ரந்தி யதுவொத்தாள் பணைசெய் கோட்டுப் படாமுலையாள். அடர் - தகடு. உம்மை - சிறப்பு. படர்தீர்ந்த அதுவென்க. அந்தி - சந்தியாதேவி. பணைசெய் - பிழைத்தலைத்செய்த. இ-ள். உலகிற் றீங்கினைநீக்கின அரசுபடப் புதல்வனைப் பெற்றிருந்த படாமுலையாளாகிய இறைவியும், சிறிது இடர்தீர்ந் தமையால், இருளைப்பருகிச் சுடர்மறையக் குழவியாகிய மதியைப் பெற்றுச் சிறிதுமனங்குளிர்ந்த அந்தி படர்தீர்ந்த அத்தன்மையை யொத்தாளென்க. (284) வேறு. 314. தேனமர் கோதை மாதர் திருமகன் றிறத்தை யோராள் யானெவன் செய்வ லென்றே யவலியா விருந்த போழ்திற் றானமர்ந் துழையி னீங்காச் சண்பக மாலை யென்னுங் கூனிய துருவங் கொண்டோர் தெய்வதங் குறுகிற் றன்றே. இ-ள். மாதர், திருமக னல்வினையை யோராளாய் யான் யாது செய்வலென்று வருந்தியிருந்த வளவிலே, ஒரு தெய்வந் தான் இவளிடத்துநின்று நீங்காத சண்பகமாலையென்னுங் கூனியது வடிவைக் கொண்டு அமர்ந்து குறுகிற்றென்க. இவன் அரசன்மகனாதலின் ஆண்டுறையும் தெய்வம் வந்தது. தெய்வதம் தைவதமென்னும் வடமொழிச்சிதைவு. (285) 315. விம்முறு விழும வெந்நோ யவணுறை தெய்வஞ் சேரக் கொம்மென வுயிர்த்து நெஞ்சிற் கொட்புறு கவலை நீங்க வெம்மனை தமியை யாகி யிவ்விட ருற்ற தெல்லாஞ் செம்மலர்த் திருவின் பாவா யான்செய்த பாவ மென்றாள். இ-ள். அவ்விடத்துறையுந் தெய்வமாகிய கூனிசேர, பொருக் கென உயிர்த்து நெஞ்சிற்கவலைநீங்குதலாலே அக்கூனி அன்னாய், பாவாய், நீ இவ்விடருற்றதெல்லாம் யான்செய்த தீவினையாலே, இனி வருத்தநீங்கென்றாளென்க. தேவியதுவிழுமத்தாலே நோயையுடையதாகிய தெய்வம். இன்-அசை. தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற்கூறினார். (286) 316. பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணிய னனைய நம்பி நாவினு ளுலக மெல்லா நடக்குமொன் றாது நின்ற கோவினை யடர்க்க வந்து கொண்டுபோ மொருவ னின்னே காவியங் கண்ணி னாயா மறைவது கரும மென்றாள். தோன்றல் - தலைமை. புண்ணியன் - முருகன். நா - ஆகுபெயர். இ-ள். அவள் கண்ணினாய், நம்பி வார்த்தையிலே உலக மெல்லா நடக்கும்; அங்ஙனநடத்தற்குப் பொருந்தாதுநின்ற கட்டியங்காரனைக் கொல்லும்படி இவனை ஒருவன் இப்பொழுதே வந்து கொண்டுபோம்; ஆதலால் யாமறைந்து நிற்பது கரும மென்றாளென்க. (287) 317.1. சின்மணி மழலை நாவிற் கிண்கிணி சிலம்பொ டேங்கப் பன்மணி விளக்கி னீழ னம்பியைப் பள்ளி சேர்த்தி மின்மணி மிளிரத் தேவி மெல்லவே யொதுங்கு கின்றா ணன்மணி யீன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவ தொத்தாள். 318.2. ஏதிலா ரிடர்பன் னூறு செய்யினுஞ் செய்த வெல்லாந் தீதில வாக வென்று திருமுலைப் பான்ம டுத்துக் காதலான் பெயர்சு மந்த கதிர்மணி யாழி சேர்த்திக் கோதைதாழ் குழலி னாளைக் கொண்டுபோய் மறைய நின்றாள். இவையிரண்டுமொருதொடர். (1) மணியாகிய நா. பன்மணி - உயிர்நீத்தவர் பூண்டமணி. நீழல் - விகாரம். நிழலிடம். (2) ஏதிலார் - அயலார். தீதிலவாக - நன்றாக; காப்பாக. அவள் முலையைப்பிடித்துக் கூனி கொடுத்தாள். ஆழி சேர்த்திற்கு, அறிந்துவளர்த்தற்கு, சேர்த்தவென்க. இ-ள். கூனி நம்பியைப் பள்ளியிலேசேர்த்தித் தீதிலவாக வென்று முலைப்பாலைமடுத்து ஆழிசேர்த்தினாளாக; தேவி, கிண் கிணி சிலம்போடேங்க மணிமிளிர ஒதுங்குகின்றவள், சலஞ்சலம் மணியையீன்று முந்நீரிலே புகுவதொத்தாள்; அங்ஙனம் போகின்ற அக்குழலினாளைக் கூனி கொண்டுபோய் மறையநின்றாளென்க. தெய்வம் ஒருபள்ளியைத் தேவியறியாதபடி நிருமித்த தென்றுணர்க. அது பின்பு ஆசிரியன் “பூந்தவிசினுச்சி”(சீவக.386) என்பதனானும் பெற்றாம். (288-289) 319. நல்வினை செய்தி லாதே னம்பிநீ தமியை யாகிக் கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ வென்று விம்மாப் புல்லிய கொம்பு தானோர் கருவிளை பூத்த தேபோ லொல்கியோர் கொம்பு பற்றி யொருகணா னோக்கி நின்றாள். இ-ள். அப்பொழுது அத்தேவி நின்னைப்பெறுதற்கு நல்வினை செய்து வளர்த்தற்கு நல்வினை செய்யாதேனுடைய நம்பி, நீ தனியை யாய்க் கொடியவிலங்குகள் சூழக் கிடத்தியோ வென்று அழுது, கொம்பைப்புல்லிய கருவிளைதான் ஒருபூவைப் பூத்ததுபோல ஓர்கொம்பைப்பற்றி ஒதுங்கி ஒருகண்ணாலே நோக்கிநின்றாளென்க. (290) வேறு. 320. நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர் கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக் காளக வுடையினன் கந்து நாமனும் வாளொடு கனையிருள் வந்து தோன்றினான். இ-ள். அவளங்ஙனநிற்க, மதி, நாளொடு நடக்கின்றது, அதனைத் தப்பி மின்னோடுசெல்கின்ற மேகத்துடனே வந்து வீழ்ந்தாற்போல, கந்துக்கடனும் கருமையை இடத்தேயுடைய உடையினனாய்க் கனையிருளிலே வாளொடுவந்து தோன்றினா னென்க. நடப்பது-தொழிற்பெயர். ஊர்கோள் - வினைத்தொகை; ஆகுபெயர். கோள் - பாம்புமாம். இதற்கு உம்மைவிரிக்க. நாமனும் உம்மை - சிறப்பு. (291) 321. வாள்கடைந் தழுத்திய கண்ணி னார்கடந் தோள்கடைந் தழுத்திய மார்பன் றூங்கிரு ணீள்சுடர் நிழன்மணி கிழிப்ப நோக்கினா னாள்கடிந் தணங்கிய வணங்கு காட்டுளே. அழுந்தியகண் - அழுத்தினாற்போலுங்கண். தோள்கடைதல் - புல்லுதல்விசேடம். அணங்குகள் ஆளைக்கடிந்து வருந்திய - காடென்றதற்கு அடை. இ-ள். கண்ணினார்தோளழுத்தியமார்பன், காட்டிலே செறிந்த இருளைச் சுடரையுடைய மணிகிழித்தலாலே பிள்ளையை நோக்கினா னென்க. (292) 322. அருப்பிள முலையவர்க் கநங்க னாகிய மரும்பிளம் பிறைநுதன் மதர்வை வெங்கதிர் பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை விருப்புள மிகுதியின் விரைவி னெய்தினான். அருப்பிளமுலை-அரும்புபோலுமுலை; விகாரம். மருப்பு-கோடு. மதர்வை-மயக்கம். பரப்புபு - கதிர் தனதுகிரணங்களைப் பரப்பாநின்று. கிடந்ததென - விகாரம். இ-ள். பிறைபோலு நுதலையுடைய முலையவர்க்கு அநங்கனா தற்கு இப்பொழுது உதயத்திளஞாயிறு கிடந்ததெனக் கிடந்த நம்பியை, அவன் விருப்பத்iதயுடைய மனச்செருக்காலே விரைவோடு சேர்ந் தானென்க. (293) 323. புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் வனைமலர்த் தாரினான் மறைத்து வண்கையாற் றுனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான் சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே. வனைதல் - கைசெய்தல். துனைகதிர் - இருளைநீக்குதற்கு விரை கின்றகதிர். எல்லாப் புலன்களுக்கும் விருப்பஞ்சேறலின் முகப்ப வென்றார். “மன்னெயின் முகவை” (புறநா.373) என்றார் பிறரும். தும்முதல் - நன்னிமித்தம், சீவ - வேண்டுகோளாகிய வியங்கோட் கண்வந்த வடசொல். இ-ள். தாரினான், மோதிரத்தைப் பிறரும் அறிவரென மறைத்துக் கையாலே இளஞாயிற்றை யெடுத்தாற்போல நம்பி யையெடுப்ப, அவன் தும்மினான்; அப்பொழுது அத்தெய்வஞ் சினையிலே மறைந்து நின்று சீவிப்பாயாக வென்று ஒருகுரல் வாழ்த்திற்றென்க. தேவி அச்சத்தாற் றன்னுள்ளே வாழ்த்துதலின் ஒருகுரலென் றார். (294) 324. என்பெழுந் துருகுபு சோர வீண்டிய வன்பெழுந் தரசனுக் கவலித் தையனை நுன்பழம் பகைதவ நூறு வாயென வின்பழக் கிளவியி னிறைஞ்சி யேத்தினாள். என்புக்குள்ளேயெழுந்து உடலுருகி அவசமாக வளர்ந்த அன்பு. அரசனுக்குப் புத்திரமுகங்காணு நல்வினையின்மை கண்டு வருந்தி. தவ-மிக கிளையற நூறுவாயென்பது கருத்து. இ-ள். அப்பொழுது தேவி, கந்துகள் பிள்ளையை யெடுத்தது கண்டு பழைய அன்புதோற்றி அவலித்து, பின்பு தெய்வத் தைவணங்கி, ஐயனைப்பகைதவநூறுவாயென வாழ்த்தினா ளென்க. நுன் - திசைச்சொல். (295) 325. ஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினா ரழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி விழுத்தகு மகனொடும் விரைவி னேகினான். ஒழுக்கத்திலே இயன்ற தவம். இ-ள். கந்துகன், அருந்தவத்தேநின்ற உடம்பைவிட்டவர் மேலான உடம்பைப்பெற்ற நிலைமையையொப்ப, தன்புதல்வன் காட்டிலேகிடப்ப, மணிபோலவிழுத்தக்க மகனைக்கொண்டு விரைவோடே ஏகினானென்க. அழிப்பரு மருந்தவமென்க. தவவுடம்பை இவன் புதல்வ னுக்கு உவமை கூறினார், அவனாலே சீவகனைப் பெறுதலின். (296) 326. மின்னடு கனையிரு ணீந்தி மேதகு பொன்னுடை வளநகர் பொலியப் புக்கபின் றன்னுடை மதிசுடத் தளருந் தையலுக் கின்னுடை யருண்மொழி யினிய செப்பினான். பொலிய - துன்பநீங்கி இன்பநிகழ. தன்னுடைமதி - பெண் மதி. இன்மொழி “புண்ணியற்பெறுதிர்”(சீவக.1130) என்றது. அருளுடை மொழி “பின்றையுநிகழ்வதுண்டு”(சீவக.1130) என்றது. எல்லார்க்கும் அருள்கிறத்தலிற் சிறைகோடலை அருளென்றார். இ-ள். அவன் இருளைநீந்தித் தன்மனையிலேபுக்கபின் தையலுக்கு முனிவன் கூறிய இரண்டுமொழியினும் இனிய மொழியைக் கூறினா னென்க. (297) 327(1) பொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய வருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய் திருந்திய நின்மகன் றீதி னீங்கினான் வருந்தனீ யெம்மனை வருக வென்னவே. 328(2) கள்ளலைத் திழிதருங் களிகொள் கோதைத னுள்ளலைத் தெழுதரு முவகை யூர்தர வள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை வெள்ளிலை வேலினான் விரகி னீட்டினான். இவையிரண்டுமொரு தொடர். (1) உலகிற்பொருந்திய புகழெல்லாங்கூடிய அருந்ததிக் கற்பை அகற்றிய கற்பினாய். ஆசு-குற்றம். திருந்திய - நல்வினை திருந்திய. வருத்தல் - அல்லீற்றுவியங்கோள். எம்மனை - எம்மில்லாளே. (2)தேன் இதழையலைத்து இழிதற்குக் காரணமானகளிப்பு. உள்ளலைத்து - தன்நெஞ்சிலேதரங்கித்து. “இதுமக வழியின் வாழேன்”(சீவக.1124) என்றவளுயிரையு மேற் பொருள்களையுங் கொடுத் தலின் வள்ளலென்றார். விரகு - தேவி சேர்த்தின திலகத்தை மாற்றி னது. இ-ள். கந்துகன், கற்பினாய், நின்மகன் சாதலினின்றுந் தப்பினா னெனச்செப்பினான்; செப்பி இனி வருந்தல்; எம்மில்லாளே, வருக வென, கோதை உவமைபரத்தால் வள்ளலை மிகவிரைந்தெய்த, வேலினான் நம்பியைவிரகால் நீட்டினானென்க. (298 . 299) 329 கரிமுக வலம்புரி துவைத்த தூரியம் விரிமுக விசும்புற வாய்விட் டார்த்தன வெரிமுக நிலத்தில மேந்திச் சேந்தபோற் கரிமுக முலையினார் காய்பொன் சிந்தினார். இ-ள். அப்பொழுது வலம்புரி இசைந்தன; நால்வகை வாச்சியங் களும் ஆர்த்தன; நித்திலமேந்துதலாற் கோபித்தனபோற் கரிந்த முகத்தை யுடைய முலையினார் எரிமுகத்தேகாய்ந்த பொன்னைக் கொள்ளை யூட்டினாரென்க. (300) 330. அழுகுரன் மயங்கிய வல்ல லாவணத் தெழுகிளை மகிழ்ந்தெம தரசு வேண்டினான் கழிபெருங் காதலான் கந்து நாமனென் றுழிதரு பெருநிதி யுவப்ப நல்கினான். அரசன் படுதலால் அழுகுரல். எழுகிளைமகிழ்ந்து - எழுபிறப் புங் கிளையைவிரும்பி; வளர்கின்றகிளையுமாம்.. உழிதரு – ஓரிடத்து நில்லாது திரியும். இ-ள். அதுகேட்டுக் கட்டியங்காரன், அரசனிருப்பிற்குத் தொடர்ந்த பீடிகைத்தெருவிலே இருந்துங் கந்துகன் எமது அரசாட்சியை விரும்பினானாதலான் மிகக் காதலையுடைய னென்று கொண்டு, அவனுவப்ப நிதியைநல்கினானென்க. (301) 331. திருமகற் பெற்றெனச் செம்பொற் குன்றெனப் பெருநல நிதிதலை திறந்து பீடுடை யிருநிலத் திரவலர்க் கார்த்தி யின்னணஞ் செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே. பெற்றெனவார்த்தி - எனவெனெச்சம் காரணகாரியப் பொருட்டு; மருந்துதின்றெனப் பிணிநீங்கிற்று என்றாற்போல. குன்றெனப்பெரிய. செருநிலம்பயப்புற - அரசன் போர்செய்த இந்நகர்தன்னிலே சீவகனும் போர்செய்து பிறந்தபயனுறவேண்டி. இ-ள். செல்வன். திருமகனைப்பெறுதலாலே கட்டியங்காரன் நல்கின பின்பு நிதியைப் பீடுடைய இரவலர்க்கு ஆர்த்தி, அம்மகன் போரிலே தன்பகையைவெல்ல வேண்டி மேலும் இங்ஙனங் கொடைக் கடன்பூண்டொழுகுமென்க. “அருளிலர்,கொடாமை வல்ல ராகுக”(புறநா.27) என்றார் பிறரும். ஆழியாற்குலனுணுர்தலின் அதற்குரியதொழிலே கருதினான் கந்துகனும். (302) வேறு. 332. நல்லுயிர் நீங்கலு நன்மாண் புடையதொர் புல்லுயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர் கல்லுயிர் காட்டிற் கரப்பக் கலங்கவிழ்த் தல்லலுற் றாளுற்ற தாற்ற வுரைப்பாம். நல்லுயிர் - சச்சந்தன். புல்லுயிர் - பிள்ளை. கரப்ப - செய்விப் பதன்றொழில். கவிழ்ந்த அல்லல் - இது காரணகாரியம், கருவிக் கணடங்கும்; உண்டஎச்சில்போல உற்ற தென்றிறந்தகாலத்தாற் கூறினார், கதையையுட்கொண்டு. இ-ள். தேவி, தனது நல்லுயிர்நீங்குதலாலே புல்லுயிருடனே நின்றவிடத்து, அதனைக் காட்டிலே விதிமறைத்தலாலே ஒருவன் மரக்கலங்கவிழ்த்தலால் அவனுற்ற வருத்தத்தைத் தான் காட்டி டத்தே உற்றவள், மேலுற்றதனை முடிவுபோக உரைப்பா மெனத் தேவர் கூறினாரென்க. (303) 333. பொறியறு பாவையிற் பொம்மென விம்மி வெறியுறு கோதை வெறுநில மெய்த விறுமுறை யெழுச்சியி னெய்துவ தெல்லா நெறிமையிற் கூற நினைவி னகன்றான். பொறி - எந்திரம். பொம்மென - கடுக. எய்துவதெல்லா மென்றார்; “ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி - பன்மைக் காகு மிடனுமா ருண்டே” (தொல்.எச்ச. 65) என்றதனால். நெறிமை: மை -பகுதிப் பொருள் விகுதி. இ-ள். கோதை விம்மிப் பாவைபோலே நிலனெய்துத லாலே, கூனி, அந்தத்திலும் ஆதியிலுமெய்துங் காரியத்தை யெல்லாம் நெடியாற, அவள் வருத்தத் தினனின்று நீங்கினா ளென்க. கனவால் ஆக்கமுளதென்று கருதிய தேவி மனங்கொள்ளும் படி கூனி தன் bதய்வத்தன்மையான் மேல்வருவனகூறலின், அதனையுட் கொண்டு நினைவினகன்றாளென்க. (304) 334. பெருமகற் காக்கம் பிறழ்வின்றிக் கேட்டே திருமக டானினிச் செய்வதை யெல்லா மொருமனத் தன்னா யுரையென லோடுந் தெருமரு தெய்வதஞ் செப்பிய தன்றே. ஏகாரம் - ஈற்றசை. செய்வதை - வினைத்திரிச்சொல். இருவர்க் கும் ஒருமனம். ஓடு - உடனிகழ்ச்சி, தெருமருதெய்வதம் - புதல்வன் அன்னப்பார்ப்பைப் பிரித்த தீவினையை உறுகின்றத ன்மையைத் தானோக்கி அதற்கு அவனை வேறோரிடத்து நீக்கித் தேவியைத் தனியேகொண்டு போகின்றதற்கு வருந்துகின்ற தெய்வம். செப்பி யது - கணவனையிழந்தார்க்கு நோன்பு கடனாதலின் அதற்கியை வதோர்கருமம் தேவிக்குக்கூறிற்று. இ-ள். மகனுக்கு ஆக்கம் பிறழ்வின்றாகக்கேட்டுத் தேவி தான், இனி யான் செய்யுங்காரியங்களெல்லாம் அன்னாய், உரையா யென்னுதலோடும், தெய்வம் துணிந்துசெப்பிற்றென்க. (305) அது மேற்கூறுகின்றார். 335. மணியறைந் தன்ன வரியற லைம்பாற் பணிவருங் கற்பிற் படைமலர்க் கண்ணாய் துணியிருட் போர்வையிற் றுன்னுபு போகி யணிமணற் பேர்யாற் றமரிகை சார்வாம். இ-ள். நீலமணியிலே அறலை யழுத்தியன்ன ஐம்பாலினை யும் உலகெல்லாம் நினதேவலிலே வருதற்குக்காரணமான கற்பினையு முடைய படைபோலுங் கண்ணாய், இருளாகிய போர்வையிலே மறைந்துபோய், அமரிகையென்னும்பேர்யாற்றில் அணி மணலிலே அயர்வுயிர்ப்பாம்; அதனைத் துணியென்றாளென்க. பகைநிலத்தை இருளிலே கழிவாமென்றாள். (306) 336.(1) அமரிகைக் கோசனை யைம்பது சென்றாற் குமரிக் கொடிமதிற் கோபுர மூதூர் தமரிய லோம்புந் தரணி திலக நமரது மற்றது நண்ணல மாகி. 337.(2) வண்டார் குவளைய வாவியும் பொய்கையும் கண்டார் மனங்கவர் காவுங் கஞலிய தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன் றுண்டாங் கதனு ளுறைகவ மென்றாள். இவையிரண்டுமொருதொடர். ஓசனை-வடசொற்சிதைவு. குமரிமதில். உலகிற்கெல்லாம் தமராமியல்பை நடத்தும். தேவி நோற்றற்குத் தாபதப்பள்ளி வேண்டு தலானும், அரசனையமரினீத்துப் புதல்வனைப் புறங் காட்டினீத்துத் தமரிடத்துச்சேறலாகாமையானும், கூனி நண்ணல மாகியென்றாள். வாவி - யாற்றிலோடை. பொய்கை - மானிடராக் காதநீர்நிலை. ஆங்கு - உவமஉருபு. இ-ள். அந்த அமரிகைக்கு ஐம்பது யோசனை பொனாற்றரணி திலகமென்னு மூதூர் நமரது, அதனைச்சேரேமாய், மற்றுவாவியும் பொய்கையும் காவு நெருங்கிய தண்டகாரணிய மென்கின்ற வனத்தே ஒருதாபதப்பள்ளியுண்டு; அதனிடத்தே அவருறை கின்றாற்போல உறைகுவமென்றாளென்க. (307-308) 338. பொருளுடை வாய்மொழி போற்றினள் கூற மருளுடை மாதர் மதித்தன ளாகி யருளுடை மாதவ ரத்திசை முன்னி யிருளிடை மின்னி னிலங்கிழை சென்றாள். இதுமுதல் “தடங்கொடாமரை” ஈறாக ஐந்துமொரு தொடர். மருளுடைமாதர் - மயக்கந்தீர்ந்தமாதர். கேளிரைக்கண்டால் மிகுந்துன்பமாதலிற் றமரிடைச்சேறலாகாதென்றும் நோற்ப லென்றும் யான்கருதியதனையே கூறினாளென்னாது அவளே கூறினாளாகக் கொண்டமை தோன்ற மதித்தனளாகியென்றார். புதல்வற் பயந்த புனிறு தீராது இராத்திரியிற்சேறலரிதென்று கருதித் தெய்வம் தன்றெய்வத் தன்மையாற் கொண்டுபோகின்ற விரைவு மின்னினென்றார். (309) வேறு. 339. உருவ மாமதி வாண்முகத் தோடிய விருவி லும்மெறி மாமக ரக்குழைத்ஞு திருவி லும்மிவை தேமொழி மாதரைப் பொருவி னீளதர் போக்குவ போன்றவே. முன்பு நிறைமதிபோலுமுகத்திலொளி; இப்பொழுது வருத்தத்தாற் கெட்டகரியவொளி; “இருங்கண்யானை” போல. பொருவில் - வெம்மையா லொப்பில்லாத. அதர்போக்குவ -வழிபோக்கவ விளக்கு; ஆகுபெயர். (310) வேறு. 340. சிலம்பிரங்கிப் போற்றிசைப்பத் திருவிற்கைபோய் மெய்காப்ப விலங்குபொற் கிண்கிணியுங் கலையுமேங்க வெறிவேற்கண் மலங்கமணி மலர்ந்த பவளக்கொம்பு முழுமெய்யுஞ் சிலம்பிவலந் ததுபோற்போர் வைபோர்த்துச் செல்லுற்றாள். வில்லென்னும்பெயர்பற்றி விற்படை பக்கத்தேகாப்ப வென்றார். கண்மலங்க - தனியே போதற்கஞ்சிச்சுழல; வலம்புரி சலஞ்சலம் வளைஇயதொத்தவளாதலின். மணியைப்பூத்ததோர் பவளக்கொம்பைச் சிலம்பிசூழ்ந்ததுபோல மெய்முழுதும் போர்வையாலே மறைத்து. (311) 341. பஞ்சியட ரனிச்சநெருஞ் சியீன்ற பழமாலென் றஞ்சுமல ரடிகளரங் கண்டன்ன வருங்காட்டுட் குஞ்சித்த சைந்தசைந்து ருதிகான்று வெய்துயிரா வஞ்சியிடை நுடங்கமயில் கைவீசி நடந்ததே. ஈன்றவென்றார், பழத்தின்செருக்கால். அரம்-வாளரம். குஞ்சித்து - குந்தி. வெய்துயிரா மயில். நடந்ததே - நடந்தன்மையே; ஏகாரம் - தேற்றம். பஞ்சியடரையும் அனிச்சத்தையும் நெருஞ்சிப் பழமென்று கருதிக் குஞ்சித்து அiச்தசைந்து குருதிகான்று அஞ்சு மலரடியென்க. கைவீசியென்று வருந்தாமைகூறினார். (312) வேறு. 342. தடங்கொ டாமரைத்தா துறை தேவியுங் குடங்கை போலுண் கட்கூனியுங் கூர்ம்பரற் கடங்க ளும்மலை யுங்கடந் தார்புன லிடங்கொள் யாற்றக மெய்தின ரென்பவே. புனலிடங்கொண்ட - நீரறாத. என்ப - அசை. இ-ள். கூனி மொழிகளை விரும்பினளாய்க்கூற, அதனை மாதர் மதித்தனளாய் மாதவரிருக்கின்ற அத்திசையைக்கருதிப் போர்வை போர்த்து அருங்காட்டிலே இடைநுடங்கக் கையைவீசி நடைக்கு வருந்தாததொரு மயில்நடந்ததன்மையே மலரடிகளாலே செல்லலுற்றாள்; அப்பொழுது இருவிலும் திருவிலும் மாதரை இரவிடை வழிபோக்கும்விளக்குப்போன்றன; அவ்விளக்கிலே கூனியொழிய வேறொருவரின்மையிற் கண் அலமருதலாற் சிலம்பிசைப்பத் திருவிற்காப்பக் கிண்கிணியுங்கலையும் ஏங்கக் கடங்களுமலையுங்கடந்து அந்த இலங்கிழை மின்போலச் சென்றாள்; இங்ஙனஞ்சென்ற தாதுறைதேவியும் அவளுக்கேற்பச் சென்றகூனியும் பின்னர் யாற்றிடைக்குறையைச் சேர்ந்தாரென்க. (313) 343. எல்லை யெய்திய வாயிரச் செங்கதிர் மல்லன் மாக்கடற் றோன்றலும் வைகிருட் டொல்லை நல்வினை முற்படத் தோன்றிய வல்லல் வெவ்வினை போல வகன்றதே. எய்திய எல்லை. மல்லல் - மணிமுதலியவளன். இ-ள். எய்தின அளவிலே, ஒருவர்க்கு நல்வினைவந்து தோன்ற, அதற்குமுன்னே தோன்றிநின்ற தீவினை அகலுமாறு போல, உலகம் பகற்பொழுதைப்பெற வேண்டிக்கதிர் கடலிற் றோன்றின அளவிலே இருளகன்றதென்க. (314) 344. நுணங்கு நுண்கொடி மின்னொர் மழைமிசை மணங்கொள் வார்பொழில் வந்துகி டந்ததொத் தணங்கு நுண்டுகின் மேலசைந் தாளரோ நிணங்கொள் வைந்நுதி வேனெடுங் கண்ணினாள். மிகவும் நுண்ணிய ஒழுங்குபட்டமின். அணங்கும் - இழை தெரியாதுவருந்தும். இ-ள். கண்ணினாள், அவ்வாற்றிடைக்குறையிற் பொழி லிலே வந்து, மஞ்சிலே ஒருமின்கிடந்த தன்மையை யொத்து, துகிலின்மேலே கிடந்தாளென்க. (315) 345. வைகிற் றெம்மனை வாழிய போழ்தெனக் கையி னானடி தைவரக் கண்மலர்ந் தைய வோவென் றெழுந்தன ளாய்மதி மொய்கொள் பூமி முளைப்பது போலவே. தெய்வம் கூனிவடிவாய்நிற்றலிற் றன்றொழிற்கேற்ப அடிதை வந்தது. ஈண்டு அரசனைக் கனவிற்கண்டு அது நனவாகாமையின் ஐயவென்றாள். ஓ-இரக்கக்குறிப்பு. ஆய்மதி-ஒளியற்றமதி. அதுவும் உதயத்தே தோன்றும். மெய்கொள் - அணுச்செறிந்த. இ-ள். அப்பொழுது கூனி, எம்மன்னாய், வாழ்வாயாக பொழுதுவை கிற்றென்று அடியைத்தடவ, கண்ணைவிழித்து ஐயவோ வென்று மதி பூதியிலே முளைத்ததுபோல எழுந்தா ளென்க. முகமெடுத்தற்குவமை. அன்னை, ஈண்டு முறைப்பெயரன் மையின் “அன்னையென்னை”(52) என்னும் பொருளியற் சூத்திரத் தாற்கொள்க. (316) 346. தூவி யஞ்சிறை யன்னமுந் தோகையு மேவி மென்புன மானின மாதியா நாவி நாறெழின் மேனியைக் கண்டுகண் டாவித் தாற்றுகி லாதழு திட்டவே. இ-ள். அதனைக்கண்டு மானினமுதலாக அன்னமுந் தோகையு மேவி எழின் மேனியைக்கண்டு கொட்டாவிகொண்டு ஆற்றாதழு திட்டனவே; தமக்கு இவை இயல்பாகக் காலையிற் செய்தன வல்லவென்க. ஏகாரம் - தோற்றம். (317) 347. கொம்மை வெம்முலைப் போதிற் கொடியனா ளும்மை நின்றதொ ரூழ்வினை யுண்மையா லிம்மை யிவ்விட ருற்றன ளெய்தினாள் செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. கொம்மை - பெருமை. செம்மை - செவ்வை. இ-ள். அனை வருந்தினபின், பால்சுரத்தற்கு வெவ்விதாகிய முலையினையுடைய திருவனாள், முற்பிறப்பிற்செய்த தீவினை யுள்ளதாதலால் இப்பிறப்பில் இவ்வருத்தமுற்றாள்; அது நீங்குதலாலே மாதவர் தவஞ்செய்கின்ற பள்ளியைச் சேர்ந்தா ளென்க. (318) (வேறு) 348. வாளுறை நெடுங்க ணாளை மாதவ மகளி ரெல்லாந் தோளுறப் புல்லு வார்போற் றொக்கெதிர் கொண்டுபுக்குத் தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று நாளுறத் திங்க ளூர நல்லணி நீக்கு கின்றார். வாளின்றன்மை முன் தங்கியகண்ணாளை. மாதவஞ் செய் வார்க்குப் புல்லலாகாமையிற் புல்லுவார்போலென்றார். வருத்தம் தேவிக்கின்றென்ப துணராது இக்காட்டில்வருவார்க்கு வருத்த முளதென்று தரங்கருதி யோம்பினார். மேல்தவத்திற் சேறற்கு நெறியாகிய நோன்பை உண்டாக்கலுற்று. கணவனை இழந்ததற்கும் புதல்வன் வாழ்தற்கும் பொருந்தியநோன்பு. நல்லநாள் வந்து பொருந்த. நாடோறும் திங்கள் ஒருகலை யேறாநிற்க. இ-ள். மகளிரெல்லாந் தொக்குக் கண்ணாளைப் புல்லு வாரைப் போலெதிர்கொண்டுபுக்கு ஓம்பி அவள் கருத்தறிந்து படுக்கலுற்று உற ஊர நீக்குகின்றாரென்க. தேவி நீக்குகின்றவற்றை அவர் மேலேற்றினார்; ஏவினாரைக் கருத்தாவாக, அரசரெடுத்த தேவகுலம்போல. (319) (வேறு) 349. திருந்து தகரச் செந்நெருப்பிற் றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகையிற் கழுமிக் கோதை கண்படுக்குந் திருந்து நானக் குழல்புலம்பத் தேனும் வண்டு மிசைபுலம்ப வரும்பொன் மாலை யலங்கலோ டாரம் புலம்ப வகற்றினாள். தகர விறகாலாக்கினநெருப்பிலே தேன்றோய்த்திட்ட அகிலினது இனிமைகொள்ள நாறும்புகையிலே மயங்கிக் கண்படுக்குங்கோதை. இ-ள். கோதைபும்ப, தேனினமும் வண்டினமும் தாதூதா மையின் இசைக்குப்புலம்ப, பொன்னரிமாலையும் நெற்றி மாலையுந் தலைக் கோலமாகிய முத்தும் புலம்ப, இவற்றைக் குழலினின்ற கற்றினா ளென்க. (320) 350. திங்க ளுகிரிற் சொலிப்பதுபோற் றிலகம் விரலிற் றானீக்கிப் பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தி னணிகலமும் வெங்கண் வேந்தற் கமிர்தாகி வேற்கட் பாவை பகையாய வங்கண் முலையி னணிமுத்து மரும்பொற் பூணு மகற்றினாள். சொலிப்பது-இடப்பது. சிதைப்பதும் பாடம். இன்பத்தால் அவனைக் கெடுத்தலிற் றனக்குப்பகையாயமுலை. இ-ள். பாவைதான், திலகத்ததை விரலாலேநீக்கி, குழையையும் குண்டலத்தையும் கழுத்தினணிகலங்களையும் முலையினணிந்த முகத்தையும் பூணையு நீக்கினாளென்க. (321) 351. பஞ்சி யனைய வேய்மென்றோட் பகுவாய் மகரங் கான்றிட்ட துஞ்சாக் கதிர்கொ டுணை முத்தந் தொழுதே னும்மை யெனத்துறந்து வஞ்சி வருத்து நுசுப்பினாள் வளைகை யுடைத்து மணிக்காந்த ளஞ்சச் சிவந்த மெல்விரல்சூ ழரும்பொ னாழிய கற்றினாள். அங்காந்த வாயினையுடைய மகரங்கான்ற மாறாத கதிரை யுடைய பலவடஞ்சேர்ந்தமுத்தம். அரசன் நீங்காமல் முயங்கு தற்குக் காரணமாய்த் தன்னைக்கெடுத்தலிற் றொழுதேனென்றாள். வளை கழற்றுதல் அரிதாதலிற் கையாலுடைத்தென்றார், மணி அழகு. இ-ள். நுசுப்பினாள், நும்மைத் தொழுதேனென்று தோளின் முத்தத்தைத் துறந்து, வளையை உடைத்து, பின்பு, விரலைச்சூழ்ந்த ஆழியைகற்றினாளென்க. (322) 352. பூப்பெய் செம்பொற் கோடிகமும் பொன்னா ரால வட்டமு மாக்கு மணிசெய் தேர்த்தட்டு மரவின் பையு மடுமல்குல் வீக்கி மின்னுங் கலையெல்லாம் வேந்தன் போகி யரம்பையரை நோக்கி நும்மை நோக்கானீர் நோவா தொழிமி னெனத் துறந்தாள். நோக்கி யென்றார், மெய்யுறுபுணர்ச்சியின்றி நோக்கால் நுகர்தலின், நும்மை நோக்கான் - நும்மாலுள்ள பயனை நோக்கான். இது இரண்டன்மருங்கின் நோக்கனோக்கமாதலின் ஏதுவாயிற்று. இ-ள். தேவி, வேந்தன்போய் அரம்பையரைநுகர்தலாலே நும்மை நோக்கானாதலால் நீர் என்னைவெறாதே நீங்குவீராக வென்றுசொல்லி, பூந்தட்டையும் ஆலவட்டத்தையுந் தேர்த் தட்டையும் பையையு மடுகின்ற வல்குலிலேவீக்கி இன்பத்தை யாக்குங் கலைகளெல்லா வற்றையுந்துறந்தாளென்க. (323) மணியாலே செய்தமைக்குந் தேருமாம். 353. பிடிக்கை போலுந் திரள்குறங்கி னணியு நீக்கிப் பிணையன்னா வடிக்கிண் கிணியு மஞ்சிலம்பும் விரன்மோதி ரத்தோ டகற்றியபின் கொடிப்பூத் துதிர்ந்த தோற்றம்போற் கொள்ளத் தோன்றி யணங்கலற வுடுத்தாள் கற்றோய் நுண்கலிங்க முரவோன் சிறுவனு யர்கெனவே. கொடிப்பூத்துதிர்ந்த - ஒற்றுமையாற் சினைவினை முதன் மேலேற்றினார். அலற-வருந்த, கல் - நற்செங்கல். உரவோன் - அறிவு டையோன். உயர்கவென்றார், நோன்பின்பயன் அதுவாகலின். இ-ள். பிணையன்னாள், குறங்கிற்செறிந்த அணியையும் நீக்கி, கிண்கிணியையுஞ் சிலம்பையுங் காலாழியுடனகற்றிய பின்பு, பூத்துதிர்ந்த தோற்றம்போற் றோன்றி, கூனிவருந்தச் சிறுவனுயர்க வென்று கலிங்கத்தை யுடுத்தாளென்க. உரவோன் சிறுவனென்றாள், பகையைவெல்லப்பிறந்தமை கருதி. (324) வேறு. 354. பாலுடை யமிர்தம் பைம்பொற் கலத்திடைப் பாவை யன்ன நூலடு நுசுப்பி னல்லா ரேந்தவு நேர்ந்து நோக்காச் சேலடு கண்ணி காந்தட் டிருமணித் துடுப்பு முன்கை வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள். அமிர்தம் - அடிசில். நேர்ந்தேந்தவும் - இவள் உணவொழிந் தாளென்று வலிய எடுக்கவும், உணவொழிந்தநுகர்ச்சியே நிகழ்ந் தமையின் நோக்காதவென்றார். முன்பு திருமணியை யுடையகை. அருளி - அருள. செய்ய - சிவந்த. இ-ள். உடுத்தபின், நுசுப்பினையுடைய பாவையன்ன நல்லார் நேர்ந்து கலத்தே அமிர்தத்தை யேந்தவும் நோக்காத கண்ணி, காந் தட்டுடுப்புப்போலுந் தன்கை தானே அடகை யருள அதனை நுகர்ந்து, இல்லுறைதெய்வமன்றி வனத்தேயுறைவதோர் செய்ய தெய்வமானா ளென்க. (325) 355. மெல்விரன் மெலியக் கொய்த குளநெல்லும் விளைந்த வாம்ப லல்லியு முணங்கு முன்றி லணில்விளித் திரிய வாமான் புல்லிய குழவித் திங்கட் பொழிகதிர்க் குப்பை போலு நல்லெழிற் கவரி யூட்ட நம்பியை நினைக்கு மன்றே. மெலியவென்றார், தவமகளிர்கொய்தலின். விளித்திரிய - கத்திக்கெட, குப்பை போலு மெழிலென்றார், சாமரத்தால். இ-ள். நெல்லும் அல்லியும் உணங்குமுன்றிலே அணில் இரியும் படி ஆமான்குழவியைப்புல்லியகவரிமா, அதற்கு முலையை யூட்டத் தேவி, நம்பி பிறர்முலையை உண்டு வளர்கின்ற படியை நினைக்கு மென்க. “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” (தொல்.மரபு.19) என்றதனுட் கொடையென்றதனான் ஆமான், குழவியுங்கொண்ட வாறுணர்க. (326) 356. பெண்மைநாண் வனப்புச் சாயல் பெருமட மாது பேசி னொண்மையி னொருங்கு கூடி யுருவுகொண் டனைய நங்கை நண்ணிய நுங்கட் கெல்லா மடைக்கல மென்று நாடுங் கண்ணிய குலனுந் தெய்வங் கரந்துரைத தெழுந்த தன்றே. பெண்மை - அமைதித்தன்மை. மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டதுவிடாமை. மாது - காதல்; உரிச்சொல் ஈறுதிரிந்தது. இவட்குள்ள அமைதித்தன்மை முதலியவற்றைக் கூற நினைத்தே மாயின், அவை தமக்கு விளக்கங் காரணமாகச் சேரக்கூடி ஒருவடிவு கொண்டாற்போலு நங்கை எல்லா நண்ணியநுட்கட்கு - நற்குண மெல்லாம் பொருந்திய நுமக்கு. இ-ள். அவ்வளவிலே தெய்வம், நங்கை நுங்கட்கு அடைக் கலம்; இவளைக் காத்தல்வேண்டுமென்றுகூறிப் பின்பு, நாட் டையுங் குலத்தையும் வேறுபெயர்படக் கூறிப் போதற் கொருப்பட்டதென்க. (327) வேறு. 357. உறுதி சூழ்ந்தவ ணோடலி னாயிடை மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ் சிறுவன் றன்மையைச் சேர்ந்தறிந் திவ்வழிக் குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள். ஆயிடை - இராசமாபுரத்திடை. சேடியை வம்மென்று உயர்த்துக் கூறினாள்; தான் நிற்கின்ற தவநிலைக்கேற்ப. இ-ள். அங்ஙனம் போதற்கொருப்பட்ட தெய்வத்தினெஞ்சம் இவ்விடத்து இவட்கு ஆம் உறுதிகளைச்சூழ்ந்து தானுறைகின்ற இடத்தே சேறலான் அதற்கேற்பத் தெய்வம் தன்றெய்வத் தன்மையாற் றேவிக்கும் அக்கருத்தேபிறப்பிக்கத் தேவியும் ஆயிடைச்சேர்ந்து சிறுவன்செய்தியை அறிந்து இவ்விடத்தே அணிந்தாக வம்மென்று அத்தெய்வத்தைப் போகவிட்டாளென்க. (328) 358. நெஞ்சி னொத்தினி யாளையென் னீர்மையால் வஞ்சித் தேனென வஞ்சியங் கொம்பனாள் பஞ்சி மெல்லடிப் பல்கல னார்ப்பச்சென் றிஞ்சி மாநகர்த் தன்னிட மெய்தினாள். நெஞ்சினொத்து-யான்கருதியதேதானுங்கருதி. வஞ்சித்தல் - அறிந்து வருகின்றேனென்றது. இ-ள். அப்பொழுது கொம்பனாள், இனியாளை எனது தெய்வத் தன்மையாலே வஞ்சித்தேனென்றுவருந்தி, கலனார்ப்பச் சென்று, இராசமாபுரத்திற் புறங்காட்டைச் சேர்ந்தாளென்க. (329) 359. தானுந் தன்னுணர் விற்றளர்ந் தாற்றவு மானி னோக்கிவ ரும்வழி நோக்கிநின் றானி யட்பல வாசையிற் செல்லுமே தேனி யம்புமொர் தேம்பொழிற் பள்ளியே. மானின் இன், சாரியை. இ-ள். மானோக்கிதானும், தெய்வமென்றறியாத பெண்ணுணர் வாலே மிகவுந் தளர்ந்து, பள்ளியிடத்தே, அவள்வரும் வழியை நோக்கிநின்று, பலஇரவும்பகலும் இன்றுவரு மின்றுவருமென்னும் ஆசையிலே நடவாநிற்குமென்க. (330) வேறு. 360. மட்டவிழ் கோதை வாளன வுண்கண் மயிலன்னாள் கட்டழ லெவ்வங் கைமிக நீக்கிக் களிகூர விட்டகல் வாற்றா வேட்கையி னோடும் பொழுதிப்பாற் பட்டதை யெல்லாம் பல்லவர் கேட்கப் பகர்குற்றேன். அழல்போலெவ்வம். அகல்வு - அகற்சி. இன் - சாரியை. பகர்கு - தன்மைச் சொல். இ-ள். சுநந்தை பிள்ளையையிழந்த துன்பத்தைச் சிறிதும் நில்லாதபடிபோக்கிக் களிப்புமிகுதலாலே ஒழிந்தோர்க்கும் பிள்ளையை விட்டுநீங்கமாட்டாத வேட்கைநடக்கின்ற இராப்பொழுதிற்குப் பின்பு பிள்ளையுற்ற காரியங்களையெல்லாம் பலருங் கேட்கும்படி கூறுவேனாகத் தொடங்கினே னென்றா ரென்க. என்றது தம்மாற் சரிதங்கூறுதலரிதாகலின். இனி வேட்கை யாற் கடுகக்கழியும் பொழுதென்றுமாம். (331) 361. கூற்றம் மஞ்சுங் கொன்னுனை யெஃகின் னிளையானு மாற்றம் மஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும் போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச் சீற்றத் துப்பிற் சீவக னென்றே பெயரிட்டார். கொன்னுனை - வினைத்தொகை. சொல்லப்புகிற் சொல்லும் அஞ்சுங்கற்பு. சீவகன், சீவித்தலையுடையனென்று தெய்வம் வாழ்த் தினமையின் அப்பெயரேயாயிற்று. இ-ள். இளையானும் மடவாளும் விரும்பிக்கொண்டுவந்த பார்ப்பார் சான்றோருள்ளிட்டோருங்கூடிச் சீற்றத்துப்பிற் புகழோனைச் சீவகனென்றே பெயரிட்டாரென்க. (332) 362. மேகம் மீன்ற மின்னனை யாடன் மிளிர்பைம்பூ ணாகம் மீன்ற வம்முலை யின்பா லமிர்தேந்தப் போகம் மீன்ற புண்ணிய னெய்த கணையோ போன் மாகம் மீன்ற மாமதி யன்னான் வளர்கின்றான். முலை-எழுவாய். போகமீன்ற - தான் சக்தியுஞ் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின. புண்ணிய னென்றார், திரிபுரத்தையழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையுங் காத்தலின். எய்தகணை - திருமால். கணைவளருமாறு போல வளர்கின்றா னெனவே, அவன் ஆய்ப்பாடியிலே நந்தகோன் மனையிலே மறைய வளர்ந்தது உவமையாம். இ-ள். மதியன்னான் மின்னனையாளது ஆகமீன்றமுலை இனியபாலமுகத்தையேந்தப் புண்ணியனெய்த கணை நந்தகோன் மகனாய் வளருமாறுபோலக் கந்துகன் மகனாய் வளர்கின்றா னென்க. மா ஈண்டு அழகு. மதி - பிறை. (333) 363. அம்பொற் கொம்பி னாயிழை யைவர் நலனோம்பப் பைம்பொற் பூமிப் பல்கதிர் முத்தார் சகடம்முஞ் செம்பொற் றேரும் வேழம் மூர்ந்து நிதிசிந்தி நம்பன் செல்லு நாளினு நாளு நலமிக்கே ஐவர் : ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய். நிதிசிந்தி, குழவிப்பருவத்துங் கொடையி யல்பு. நாளின் இன் - சாரியை. இ-ள். நம்பன், ஐவர் எல்லாநலத்தையும் பேணாநிற்க, அவ்விடத்தே சகடத்தையுந் தேரையும் வேழத்தையும் தன்கையாற் செலுத்திச் சிந்தி நாடோறுநாடோறு நலமிக்குச் செல்லுமென்க. (334) 364. பல்பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனிவானத் தெல்லார் கண்ணு மின்புற வூறும் மதிபோன்றுங் கொல்லுஞ் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகேத்தச் செல்லும் மன்னோ சீவகன் றெய்வப் பகைவென்றே. ஒழிந்தோரிற்சிறந்தமையிற் றாமரையுவமம். வானிடத்துத் தேவர்முதலாயினாரிடத்தும் இன்பமுறப்பரக்கின்ற மதியாவது அறிவு; அதுதான் ஒருவடிவுகொண்டாற்போன்றும். “குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்” (தொல்.மரபு.10) என்றதனுட் கூற்றென்றதனாற் புலி முதலியவற்றிற்குக் கூறிய இளமைப்பெயர் சிங்கத்திற்குங் கொண்டார். தெய்வப்பகை - வாலசிகிற்சையிற் கூறுகின்றதெய்வப் பகை. ஓ - அசை. இ-ள். சீவகன் பகையைமிகவும்வென்று உலகேத்தும்படி தாமரை முதலியன போன்று செல்லுமென்க. (335) 365. மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளம்மு மணியும் பெய்யும் மாரியி னேற்பார்க் கவைநல்கிக் கணிதம் மில்லாக் கற்பகங் கந்துக் கடனொத்தா னிணைவே லுண்க ணந்தையு மின்பக் கொடியொத்தாள். இ-ள். தமக்கு வேண்டும்பொருள்களை வேண்டாமல் ஏற்பார்க்கு அப்பொருள்களைப் பெய்கின்ற மாரிபோலே நல்கி ஓரளவிற்படாத கந்துகன், பின்பு, வேண்டியேற்பார்க்கு நல்கிக் கற்பகமொத்தான்; சுநந்தையும் அதன்மேற்படர்ந்த காமவல்லியை யொத்தாளென்க. கார்வேண்டாமைக்கொடுத்தலுங் கற்பகம் வேண்டக் கொடுத்தலு மியல்பு. நல்கி இல்லாவென்க. நந்தை - தலைக்குறை. இது சௌளத் திற்கு முன்புள்ளகருமங்களிலும் நாடோறுநடத்துங் கருமங்களிலுங் கொடைக்கடனமர்ந்தமை கூறினார். (336) 366. சாதிப் பைம்பொன் றன்னொளி வெளவித் தகைகுன்றா நீதிச் செல்வம் மேன்மே னீந்தி நிறைவெய்திப் போதிச் செல்வம் பூண்டவ ரேத்தும் பொலிவின்னா லாதிக் காலத் தந்தணன் காதன் மகனொத்தான். சாதிப்பைம் பொன்றன் னொளிவெளவி-இதனால் நிறம்பிறந்தமை கூறினார். நீதிச்செல்வம் - சௌளம். மேன்மேல் நிறைவெய்தி - முறையே நாமகளைப் புணரும்பருவநிறைந்து. அந்தணன்மகன் - ஸ்வாயம்புமனு; இயல்பான அறிவிற்குவமை. இனித் தீர்த்தங்கரில் ரிஷபஸ்வாதிதகன் பரதராசசக்கரவர்த்தி யென்றுமுரைப்ப. இ-ள். ஒளியைவெளவிச் செல்வநீந்தி நிறைவெய்துதலின் அறிவாகிய செல்வத்தைப்பூண்டவரேத்தும் பொலிவாலே அந்தணன் மகனொத்தானென்க. க்ஷத்திரியனுக்கு வைதிகம்வேண்டுதலிற் சௌளத்திற்கு முன்புள்ள கன்மமும் சௌளமுங் கூறினமையான் மேலும் உபநயன முதலியனவும் விரியக்கூறாராயினும் அவ்விடங்களிலே குறிப்பானுணர்க. (337) வேறு. 367. நனந்தலை யுலகின் மிக்க நன்னுதன் மகளிர் தங்கண் மனந்தளை பரிய நின்றமதலைமை யாடு கென்றே பொனங்கொடி யிறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக வனங்கனுக் கவலஞ் செய்யு மண்ணனற் றாயு ரைத்தாள். மிக்க மகளிராவார் - விறன்மடந்தையும் புகழ்மடந்தையும். தளை - குவிதல். மனத்தினின்ற தளை பரிய - இவனைப்பெறுமாறு நினைந்து வருந்துகின்ற மனத்தினின்ற வருந்த நீங்க. நின்றமையாடுக - முறையே நின்ற மையோலைபிடிக்க. இ-ள். அண்ணல் நற்றாய், கொடிபோல இறைஞ்சிநின்று, மகளிர் தளைபரியத் திருமகள் சிறிதுநாள் தனித்து வைக மதலை மையாடுகவென்றுரைத்தாளென்க. இது தன்றொழிலாதலிற் கூறினாள். தளைபரிய மையாடுக வென்றது, பலநூல்களைக்கற்கவே வெற்றியம் புகழுமுண்டா மென்று. செல்வச்செருக்கின்றி வழிபாட்டோடு கற்றலிற் றிருமகள் புலம்பவென்றார். (338) 368. முழவெனத் திரண்ட திண்டோண் மூரிவெஞ் சிலையி னானு மழலெனக் கனலும் வாட்க ணவ்வளைத் தோளி னாளும் மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன் மதலையை மயலஞ் சாயற் குழைமுக ஞான மென்னுங் குமரியைப் புணர்க்க லுற்றார். யாழைமருட்டு மழலைத்தீஞ்சொல். சாயற்குமரி. குழைமுகம்-பூணையுந்தோற்றுவித்தது. குழையப்பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னுங்குமரி. வேறு தன் கருத்தறிவாரின்றி இவனே தன்கருத்தறியத் தான் அழியாதிருத்தலிற் குமரியென்றார். இ-ள். கந்துகனும் சுநந்தையும் மதலையை ஞானமென்னுங் குமரியைப்புணர்க்கக் கருதினாரென்க. சhத்தனைநூலைக் கற்பிக்க லுற்றரென்றாற்போல. (339) 369. அரும்பொனு மணியு முத்துங் காணமுங் குறுணி யாகப் பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி னுச்சி யிருந்துபொன் னோலை செம்பொ னுசியா லெழுதிn யற்பத் திருந்துபொற் கண்ணி யாற்குச் செல்வியைச் சேர்த்தி னாரே. பரந்த - விகாரம். வைத்து - வைக்க. இ-ள். அவர்கள், பொன்முதலியன குறுணியென்கின்ற அளவாகப் பரந்த எல்லாப்பிரப்பரிசியையும்வைக்க; உவாத்தி முதலியோர் தவிசின் மேலேயிருந்து கண்ணியாற்குச் செல்வியை, மகளிரைச் சேர்த்து மாறன்றியே பொன்னோலையிலே அவள் பொருந்தும்படி எழுத்தாணி யாலெழுதிச் சேர்த்தினாரென்க.(340) 370. நாமக ணலத்தை யெல்லா நயந்துடன் பருகி நன்னூ லமுத லாய வெல்லாப் படைக்கலத் தொழிலு முற்றிக் காமனுங் கனிய வைத்த புலங்கரை கண்டு கண்ணார் பூமகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலக மொத்தான். சொல்லாற் கூறுவனவெல்லாம் அடங்குதற்கு எல்லா மென்றார். பருகியெனவே தன்குலத்திற்குரிய வேதமுமதிகரிக்க வேண்டுதலின் ஈண்டே உபநயனமுங்கூறினார். இது “சாமகீத மற்றுமொன்று சாமி நன்கு பாடினான்”(சீவக.2038) என்பதனானும் பிறவாற் றானுமுணர்க. ஏமுதலாயபடைக்கலத்தொழிலுமுற்றி, எல்லாத் தொழிலு முற்றி யென்க. புலம் - ஆகுபெயர். இ-ள். மார்பன், நாமகணலத்தையெல்லாம் தான்விரும்பிச் சேரக் கற்று, தானோதிய தனுவேதத்திற்கூறிய அம்பு முதலிய படைக்கலங் களின் றொழில்களையும்எல்லாத்தொழில்களையு முடித்து, காமனு மனமுருகும்படி அந்நூலிற்கூறிவைத்த பாட்டி னையுங்கரைகண்டு, மண்மகளுக்கு நெற்றியிலிட்ட திலகத்தை யொத்தானென்க. இசைகூறவே கூத்துமடங்கும். முன் நூல்களைக் கற்றதற் கேற்பத் தொழில்களைக்கற்றா னென்றார். (341) 371. மின்றெளித் தெழுதி யன்ன விளங்குநுண் ணுசுப்பி னல்லார் பொன்றொளித் தெழுதி யன்ன பூம்புறப் பசலை மூழ்கிக் குன்றொளித் தொழிய நின்ற குங்குமத் தோளி னாற்குக் கன்றொளித் தகல வைத்த கறவையிற் கனிந்துநின்றார். மின்னைநிலைபெறநிற்கத்தெளிவித்து அதனிடத்தே மகளிர் அவயங்களை எழுதியன்ன நல்லாரென்க. “தெளித்தசொற் - றேறியார்க்கு” (திருக்குறள். 1154) என்றாற்போல. இனி மின்னைக்கரைத் தெழுதியன்ன நல்லாருமாம். புறம் - தம்மெய்யிடம். ஒளித்தொழிய - ஒளித்துப் போக. கன்றைமறைத்து முலையுண்ணாத படிவைக்கப்பட்ட கறவை. இ-ள். தோளினாற்குத் தமது பூம்புறத்திற்றோன்றிய பொன்னைக் கரைத்தெழுதியன்ன பசலையிலே நல்லார்முழுகிக் கறவைபோல வேட்கைசெறிந்துநின்றாரென்க. (342) இதனாற் குலக்கன்னியரைக் கூறினார். 372. விலைபகர்ந் தல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் முலைமுகந் திளையர் மார்ப முரிவில ரெழுதி வாழுங் கலையிகந் தினிய சொல்லார் கங்குலும் பகலு மெல்லாஞ் சிலையிகந் துயர்ந்த திண்டோட் சீவகற் காற்றி யாற்றார். அல்குல்விற்குங்கண்-அல்குலைவிற்றற்குக் காரணமானகண்; களவுகுடிகொள்ளுங்கண். இவர் பரத்தை யரிற்கன்னியர். மார்பை முலையாலே முகந்து நீங்காதெழுதி வாழும் இனியசொல்லார் - போகநுகரும் பரத்தையர். சிலையிகந்து - சிலைக்கு கூறு கின்ற நிலையைக்கடந்து. இ-ள். சீவகற்குக் கண்ணார் சொல்லார் எல்லாரும் இரவும் பகலு மரற்றி யாற்றாராயினாரென்க. (343) இற்பரத்தையரும் சேரிப்பரத்தையருமாம். 373. வான்சுவை யமிர்த வெள்ளம் வந்திவட் டொக்க தென்னத் தான்சுவைக் கொண்ட தெல்லாந் தணப்பறக் கொடுத்த பின்றைத் தேன்சுவைத் தரற்றும் பைந்தார்ச் சீவக குமர னென்ற வூன்சுவைத் தொளிறும் வேலாற் குறுதியொன் றுரைக்கலுற்றான். கொண்டதெல்லாம் - ஒருமைபன்மை மயக்கம். இ-ள். சீவககுமரனென்றவேலாற்கு ஆசிரியன் தானுகர்ந்த கலைகளை யெல்லாம் தட்டறக்கொடுத்தபின்பு, வானிடத்த மிர்தக்கடல் வந்து நிறைந்ததென்னும்படி ஓர் உறுதி கூறலுற்றானென்க. தொக்கதென்னக் கொடுத்தபின்றையென்றுமாம். (344) 374. நூனெறி வகையி னோக்கி நுண்ணிதி னுழைந்து தீமைப் பானெறி பலவு நீக்கிப் பரிதியங் கடவு ளன்ன கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ நானெறி வகையி னின்ற நல்லுயிர்க் கமிர்த மென்றான். ஆகமங்கூறிய வழியினது கூறுபாட்டாலே நன்மை தீமையை ஆராய்ந்து, கூரிய பொருளிடத்தே நெஞ்சுசென்று. தீமைப்பா னெறி - துன்மார்க்கம். நிறத்தாலும் இருணீக்கத்தாலும் ஞாயிறு உவமை. கோன்-அருகன். குணம்-இரத்தினத்திரயம்; அவை யாவன: நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம். நானெறி - சதுர்கதி; அவையாவன: நரககதி, விலங்குகதி, மக்கட்கதி, தேவகதி. நல்லுயிர் - பவ்வியசீவன். இ-ள். அவன் நோக்கி நுழைந்து நீக்கிப் புணரின் நல் லுயிர்க்கு ஆக்கமென்றானென்க. (345) 375. அறிவினாற் பெரிய நீரா ரருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி யின்ப நிறைகட லகத்து நின்றார் பொறியெனும் பெயர வைவாய்ப் பொங்கழ லரவின் கண்ணே வெறிபுலங் கன்றி நின்றார் வேதனைக் கடலு ணின்றார். தீவினை கழிய நின்றநெறி - சன்மார்க்கம். இன்பநிறைகடல் - அநந்தசுகம். நிறைக்கடல் பாடமாயின் இன்பப்பெருக்கினை யுடைய கடலென்க. வேட்கையாகிய நஞ்சையுடைய உடம்பென் னும்பாம் பிடத்திற் பொறியென்னும் பெயரையுடையவாகிய ஐந்து வாயிடத்தே களிப்பைச்செய்கின்றவிடயங்களிலே அடிபட்டு நின்றார். இ-ள். பெரியநீரார் குறுகி இன்பக்கடலகத்தே நின்றார். கன்றி நின்றார் துன்பக்கடலிலே நின்றாரென்க. (346) 376. கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமு நோற்றவன் வலையை நீங்கி நுகர்ச்சியி லுலக நோக்கி யாற்றுறப் போத றோற்றா மளியமோஒ பெரிய மேகாண். கருவி - ஐயும் பித்தும் வளியுமாகிய வார்கள். வலை - ஆயுக் கன்மம். இதற்கு முன்பனுபவியாதவுலகம் - வீடு. ஓ ஓ பெரியம் - இகழ்ச்சி. இ-ள். கூற்றுவன் கொடியனாய்ச் சூழ்ந்து வலையை வீசி வைத்தான்; அதனை அறியத்தக்க நாமும் அறிந்து தவஞ்செய்து தப்பி உலகநோக்கி வழிப்படப்போதலைத் தெளிகிலேம்; பெரி யேங்காணென்க. (347) 377. பேரஞ ரிடும்பை யெல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கு மாரமிர் தரிதற் பெற்றா மதன்பயன் கோட றேற்றா மோருமைம் பொறியு மோம்பி யுளபகல் கழிந்த பின்றைக் கூரெரி கவரும் போழ்திற் கூடுமோ குறித்த வெல்லாம். இ-ள். இடும்பையெல்லாநீக்குதற்குக் காரணமான பிறப்பறுக்கு மக்கள்யாக்கையைத் தவப்பயனாற்பெற்றாம்; பெற்றுவைத்தும் அதன்பயனைக்கொள்ள அறிகின்றிலேம்; ஐம் பொறிகளையும் ஐம்புலன்களாலே பேணி உள்ளநாள்சென்றால் எரிகவரும்பொழுது நினைத்த அறமெல்லாம் செய்யக்கூடுமோ ஓர்ந்து பாருமென்க. (348) 378. தழங்குரன் முரசிற் சாற்றித் தத்துவந் தழுவல் வேண்டிச் செழுங்களி யாளர் முன்ன ரிருளறச் செப்பினாலு முழங்கழ னரகின் மூழ்கு முயற்சிய ராகி நின்ற கொழுங்களி யுணர்வி னாரைக் குணவதங் கொளுத்த லாமோ. தழங்குகுரல்-விகாரம். செழுங்களி - தரிசன மோகனீயப் பிரகிருதி ஏழும். குணவதம் - விரதம்; இது பகுதிப்பொருள்விகுதி. இ-ள். எல்லாரும் தந்துவந் தழுவல்வேண்டிக் களியாளர் முன்னே முரசிற்சாற்றிச் செப்பினாலும் அது கொள்ளாதபடி நரகின்மூழ்கும் பாவத்தினை முன்னே உடையராகிநின்ற உணர்வினாரைக் குணங் கொளுத்தலாமோவென்க. (349) 379. பவழவாய்ச் செறுவு தன்னு ணித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று பின்னாட் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காண் மேயுஞ் சீல வேலியுய்த் திடுமி னென்றான். பவழவாய் - கருத்தங்கும் பை. நித்திலம்போலுஞ்சுக்கிலம். இ-ள். உழவிர்காள், கேட்பீராயிற் பவழவாயாகியசெய்யிலே நித்திலத்தை வித்துதலாலே முளைதோன்றிக் கதிரையீன்று பின்னே தான் மூப்பை விளைக்கும் அப்பயிரை நோயைச்செய்யுந் தீவினை களாகிய விலங்குகள் மேயும்; அவை மேயாதபடி சீலமாகிய வேலியைக் கொண்டுசென்றிடுவீராக வென்றானென்க. (350) 380. சூழ்கதிர் மதிய மன்ன சுடர்மணிப் பூணி னானும் வீழ்தரு கதியி னீங்கி விளங்குபொன் னுலகத் துய்க்கு மூழ்வினை துரத்த லானு முணர்வுசென் றெறித்த லானு மாழ்கடற் புணையி னன்ன வறிவரன் சரண டைந்தான். சீவகனுக்கு மதியுவமை, கலைகணிறைதலால். உம்மை - சிறப்பும்மை. வீழ்தருகதி - நரகத்தே விழுதற்குக் காரணமான தீவழி. பொன்னெயில்வட்டத்திற்செலுத்து மூழ்வினை - சாதுசர ணாவதற்கு முன்செய்த நல்வினை. அத்தவத்தேபயின்றமையால் உணர்வு மீண்டும் அதன்மேற்சென்றுபரத்தலானும். இ-ள். அதுகேட்டுப் பூணினானும், ஊழ்வினை செலுத்து தலானும் உணர்வெறித்தலானும் கதியினீங்கிப் பிறவிக்கடலை நீந்துதற்குத் தெப்பமன்ன அறிவனைச் சரணாக அடைந்தா னென்க. (351) 381. காட்சிநன் னிலையின் ஞானக் கதிர்மணிக் கதவு சேர்த்திப் பூட்சிசா லொழுக்க மென்னும் வயிரத்தாழ் கொளுவிப் பொல்லா மாட்சியில் கதிக ளெல்லா மடைத்தபின் வரம்பி லின்பத் தாட்சி யிலுலக மேறத் திறந்தன னலர்ந்த தாரான். நிலைபேறுடைமையின் நிலை. பொருள்களைக் காத்தற்கு லாவுதலிற் கதவு. காட்சியையும் ஞானத்தையும்விட்டுநீங்காமற் றகைத்தலிற் றாழ். மாட்சியில்லாத பொல்லாத கதி. கதி-பிறவி; கெடுதலில்லா தீக்கதி; மாட்சிமையுமாம். ஆட்சியிலுகம்-இதற்கு முன்பு ஆளாதவுலகம் - வீடு. அலர்ந்த - புகழாற்பரந்த. இ-ள். தாரான், காட்சியாகிய நிலையிலே ஞானமாகிய கதவைச் சேர்த்தி ஒழுக்கமாகிய தாழைக்கொளுவிக் கதிகளெல் லாமடைத்தபின் வீட்டுலகத்தேசெல்ல வழி திறந்தானென்க.(352) 382. நல்லறத் திறைவ னாகி நால்வகைச் சரண மெய்தித் தொல்லறக் கிழமை பூண்ட தொடுகழற் காலி னாற்குப் புல்லற நெறிக்க ணின்று பொருள்வயிற் பிழைத்த வாறு மில்லறத் தியல்பு மெல்லா மிருளறக் கூறி யிட்டான். நால்வகைக்சரணம்: அருகசரணம், சித்தசரணம், சாது சரணம், தன்மசரணம். தொல்லறம் - தன்குலத்திற் கெல்லாமுரிய வறம். புல்லறநெறிக்கணின்றுபொருள் வயிற்பிழைத்தவாறும் - தீக்கதியினின்றோர்தாம்நடாத்துகின்ற புல்லிய இல்லறத்தி னெறியிலே நிற்றலால் வீடுபேற்றிற் றப்பியவாறும். இல்லறத் தியல்பும் - வீடுபேறு தப்பாதபடி இல்லறம் நடாத்துமியல்பும் எல்லாம் - ஒழிந்தனவும். இ-ள். சரணமெய்திப் பூண்ட காலினானுக்கு உலகம் பிழைத்த படியையும் நல்லோர்நடாத்து மறத்தியல்பையும் ஒழிந்த வற்றையும் மயக்கமறக் கூறினானென்க. (353) 383. எரிமுயங் கிலங்கு வைவே லிளையவர் குழாத்தி னீங்கித் திருமுயங் கலங்கன் மாற்பிற் சீவகற் கொண்டு வேறா விரிமலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலுந் தெரிமலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்ட லுற்றான். இளையவர் - தம்பிமாருந் தோழன்மாரும். கொண்டு - வேறாகக்கொண்டு. இ-ள். ஆசிரியன், குழாத்தினின்றுந் தானீங்கி சீவகனைத் தனியே கொண்டு போய், கண்ணிகட்டி விதானித்த போலுங் காவைச்சேர்த்து, அவனுக்குப் பிறப்பினைத் தெளிவிக்க லுற்றானென்க. (354) 384. பூவையுங் கிளியு மன்ன ரொற்றெனப் புணர்க்குஞ் சாதி யாவையு மின்மை யாராய்ந் தந்தளிர்ப் பிண்டி நீழற் பூவியற் றவிசி னுச்சிப் பொலிவினோ டிருந்த போழ்தி னேவியல் சிலையி னானை யிப்பொருள் கேண்மோ வென்றான். இ-ள். ஆசிரியன் பிண்டிநிழலிடத்திட்ட தவிசின்மேல் இருந்த வளவிலே பூவையுங்கிளியுமுதலாகக் கொண்டு வேறும் அரசர் ஒற்றாக விடுஞ்சாதிகளெல்லாம் இல்லாதபடியை ஆராய்ந்து சிலை யினானை இக்கதையைக் கேட்பாயாக வென்றா னென்க. (355) 385. வையக முடைய மன்னன் சச்சந்த னவற்குத் தேவி பைவிரி பசும்பொ னல்குற் பைந்தொடி விசயை யென்பாள் செய்கழல் மன்னன் றேர்ந்து தேவியைப் பொறியிற் போக்கி மையல்கொ ணெஞ்சிற் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். பொன்-மேகலை. தேர்ந்து-கனவிற்குப்பின்பு இவளைப் போகவிடு மாறுதேர்ந்து, மையல் - தன்னை ஆக்கினவனைக் கொல்லுதல். இ-ள். இவ்வையகமுடைய அரசன் சச்சந்தன்; அவனுக்குத் தேவி விசயை; அவன் தேர்ந்து அவளைப்போக்கி மந்திரியாலே கொல்லப்பட்டானென்க. (356) 386. புலம்பொடு தேவி போகிப் புகற்கருங் காடு நண்ணி வலம்புரி யுலகம் விற்கு மாமணி யீன்ற வண்ண மிலங்கிழை சிறுவன் றன்னைப் பயந்துபூந் தவிசி னுச்சி நலம்புரி நங்கை வைத்து நல்லறங் காக்க வென்றாள். வலம்புரி யுவமை கூறவே தேவி மறைந்தமையு முணர்த்தினார். இலங்கிழை - தேவி; இது சுட்டு. நலம்புரிநங்கை - அறத்தைவிரும்பிய கூனியாகியதெய்வம். வைத்து - வைக்க. அறம் - நோன்பு. இ-ள். தேவி, போய் நண்ணி, வலம்புரி மணியையீன் றாற்போலச் சிறுவனைப் பயக்கையினாலே, அவனைத்தெய்வம் தவிசின்மேலே வைக்க, அத்தேவி யான்மேற் செய்கின்ற அறம் நின்னைக்காக்க வென்றுட்கொண்டாளென்க. இத்தெய்வம் நம்பியைப்பள்ளிசேர்த்தினபொழுதே தேவி கருதியதனை ஆசிரியனுணர்ந்து ஈண்டுக்கூறினான். எனவே தேவி நோன்பிலேயிருந்தமை சீவகனுணர்ந்து அது கரும மென்றுட் கொண்டான். பின்பு “அடிகளுமுளரோ” (சீவக. 1884) என்றது இதற்குப்பின்பு தீங்கின்றி யிருந்தமை கருதி. (357) 387. வானத்தின் வழுக்கித் திங்கட் கொழுந்துமீன் குழாங்கள் சூழக் கானத்திற் கிடந்த தேபோற் கடலக முடைய நம்பி தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றி னானே யூனத்திற் றீர்ந்த சீர்த்தி யுத்தரட் டாதி யானே. கொழுந்தென்றார், நாடோறும்வளர்தலின்.. தானத்துமணி - சுடுகாட்டுமணி. ஊனம் - நாறுக்குள்ளதீங்கு. இ-ள். நம்பி, உத்தரட்டாதிநாட்பிறந்தவன், பிறை மீன்சூழக் கிடந்தது போலே மணியுந் தானு மாறுபடத்தோன்றினானென்க. (358) 388.1. அருந்தவன் முந்து கூற வலங்கல்வே னாய்கன் சென்று பொருந்துபு சிறுவற் கொண்டு பொலிவொடு புகன்று போகத் திருந்திய நம்பி யாரத் தும்மினன் றெய்வம் வாழ்த்திற் றரும்பொனாய் கொண்மோ வென்றா னலைகடல் விருப்பிற் கொண்டாள் 389. 2. கரியவன் கன்னற் கன்று பிறப்பினைத் தேற்றி யாங்கப் பெரியவன் யாவ னென்ன நீயெனப் பேச லோடுஞ் சொரிமலர்த் தாரும் பூணு மாரமுங் குழையுஞ் சோரத் திருமலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். இவையிரண்டுமொரு தொடர். முனிவன் நிகழும்பொருளெல்லாம் கந்துகற்குக்கூறலின் அது தப்பாதென்று கருதி, கொண்டு - கொள்ள. திருந்திய - தவத் திருந்திய. பொன்னாய் - திருவையுடையாய், கரியவன் - கண்ணன். பெரியவன் - அறிவுபெரியவன். பேசலோடும் - உடனிகழ்ச்சி. தேன் சொரிமலர். இ-ள். நாய்கன் அவ்வொளியோடிவழியேசென்று பொருந் தாநின்று சிறுவனையெடுக்க; அந்தநம்பி, நன்னி மித்தம் பெற்றேமென்று நாய்கன்மகிழ்ந்துபோம்படி நிறையத் தும்மினான்; அப்பொழுது தெய்வம்வாழ்த்திற்று; அம்மகிழ்ச்சியுடனே போய் அரும்பொன்னாய், கொள்ளென்றான்; அவளுங் கொண்டா ளென்று, ஓர் கதைமுகத்தாலே, கரியவன் கன்னனுக்குப் பிறப்பு ணர்த்தியாங்கு உணர்த்தினானாக; அதுகேட்ட சீவகன் நீகூறியவன்யாரென்றுகேட்ப, நீயெனக்கூறினானாக, தார் முதலியன சோரச் சிந்தக் கலங்கி மூர்ச்சித்து வீழ்ந்தா னென்க. என்றெனவும் உணர்த்தவெனவும் வருவிக்க. அன்புமிகுதி யான் மூர்ச்சைமுந்திற்று. (359-360) 390. கற்பகங் கலங்கி வீழ்ந்த வண்ணம்போற் காளை வீழச் சொற்பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி நற்பல குழீஇய தம்மா னவையறத் தேற்றத் தேறிக் கற்புனை திணிதிண் டோளான் கவலைநீர்க் கடலுட் பட்டான். இ-ள். காளை, கற்பகம்நிலை குலைந்து விழுந்ததன்மைபோல விழுதலாலே சொல்லைவிரகாற் கூறிய ஆசிரியன், அத்தோன் றலை விரையச்சேர்ந்து தழுவிச் சந்தனாதிக் கூட்டாற்செய்த குழம்பாற்றேற்ற, அத்தோளான்தெளிந்து கையாற்றைவிட்டுச் சோகக்கடலிலே விழுந்தானென்க. (361) 391. இனையைநீ யாய தெல்லா மெம்மனோர் செய்த பாவ நினையனீ நம்பி யென்று நெடுங்கணீர் துடைத்து நீவிப் புனையிழை மகளிர் போலப் புலம்பனின் பகைவ னின்றா னினைவெலா நீங்கு கென்ன நெடுந்தகை தேறி னானே. புலம்பல் - அழுதல்; தொழிற்பெயர். இ-ள். நம்பி, நீ இணையை யாயதெல்லாம் எம்போல்வார் செய்தபாவம்; இனி நின்பகைவன் நின்றானாதலின், மகளிர் போலப் புலம்பலை நீ நினையலென்று கண்ணீர்துடைத்துப் பின்பு உடம்பினைத் தடவி நினைவுநீங்குகவென்ன, அவன் தெளிந்தா னென்க. நீர்துடைத்தென்றது அரற்று. நினைவெலாமென்றது அவலம். அவலமுதலிய நான்குங்கூறினார். எம்மனோர் செய்த பாவம் நீங்குகை காரணமாக வென்றுமாம். (362) 392. மலைபக விடிக்குஞ் சிங்க மடங்கலின் முழங்கி மாநீ ரலை கடற் றிரையிற் சீறி யவனுயிர் பருக லுற்றுச் சிலையொடு பகழி யேந்திக் கூற்றெனச் சிவந்து தோன்று மிலையுடைக் கண்ணி யானை யின்னணம் விலக்கி னானே. இ-ள். அவனுயிரைப் பருகலுற்றுத் திரையின்முழங்கிக் சிங்கக் குட்டிபோலச் சீறி வில்லோடும்பகழியேந்திக் கூற்றெனத் தோன்றுங் கண்ணியானை விலக்கினானென்க. தந்தையைக்கொன்றவனைக் கொல்லாமை விலக்கலருமை யின், மேற்கூறுகின்ற கூற்றான் விலக்கினமைதோன்ற இன்னண மென்றார். (363) 393. வேண்டுவ னம்பி யானோர் விழுப்பொரு ளென்று சொல்ல வாண்டகைக் குரவிர் கொண்மின் யாதுநீர் கருதிற் றென்ன யாண்டுநே ரெல்லை யாக வவன்றிறத் தழற்சி யின்மை வேண்டுவ லென்று சொன்னான் வில்வலா னதனை நேர்ந்தான். வேண்டுவல் - அல்லீற்றுத் தன்மைச்சொல்; சந்தியால் னகரம் வந்தது. இர் ஈறு “கேளிர்வாழியோ” (குறுந்.280) எனநின்றாற்போல இயல்பாய் நின்றது. ஆண்டகைமைகூறிற்று: கொலையை விலக்கு வரோ வென்று அஞ்சிக் கற்பித்தமுகத்தான் அரசனென்று ணர்ந்தான். திறம் - குலம். வல்லான் - செய்யுளாய் மறையாகாது வழக்கா யுடன்பாடுணர்த்திற்கு. இது மேலுங்கொள்க. இ-ள். நம்பி, யான் ஓரிடும்பையையுடைய தோர்காரியத்தை வேண்டுவனென்றுகூற, குரவிர், நீர்கருதிற்று யாது? அதனைக் கொண்மினென, அவன்குலத்தளவில் ஓர்யாண்டிறுதியளவாக அழற்சியின்மை வேண்டுவலென்று விலக்கிச்சொன்னான்; வில்வல்லானும் நேர்வரியதனை நேர்ந்தானென்க. (364) என்று கூறவும் பாடம். 394. வெவ்வினை வெகுண்டு சாராவிழுநிதி யமிர்த மின்னீர் கவ்விய வெஃகி னின்ற கயக்கமி னிலைமை நோக்கி யவ்விய மகன்று பொங்கு மழல்படு வெகுளி நீக்கி யிவ்விய லொருவற் குற்ற திற்றெனக் கிளக்க லுற்றான். வினையைத் தான் வெகுளுதலாலே, அது சாரப்படாத அமிர்து - இரத்தினத்திரயம். கயக்கம் - கலக்கம். அவ்வியமகன்று – மனக்கோட்ட மின்றி. இவ்வியலொருவனென்று தன்னைப் பிறன் போற் கூறினான், தன்மேலன்பால் வருந்துவனென்று. இ-ள். ஆசிரியன், சீவகனுக்கெழுந்த வெய்தான கோபத்தைப் போக்கி, அவனுக்கு அமிர்தம் இரும்புண்டநீர்போலநின்ற நிலையை போக்கி, ஒருவற்கு வந்ததுன்பத்தை இற்றெனச் செப்பா நின்றானென்க. தான்மெய்யுணர்தலின் என்னைவிலக்கானென்று இக்கதை கூறுகின்றான். (365) 395.1. வானுறை வெள்ளி வெற்பின் வாரண வாசி மன்ன னூனுறை பரிதி வெள்வேலு லோகமா பால னென்பான் றேனுறை திருந்து கண்ணிச் சிறுவனுக் கரசு நாட்டிப் பானிறக் குருகி னாய்ந்து பண்ணவர் படிவங் கொண்டான். 396.1. வெஞ்சினங் குறைந்து நீங்க விழுத்தவந் தொடங்கி நோற்கும் வஞ்சமில் கொள்கை யாற்குப் பாவம்வந் தடைந்த தாகக் குஞ்சர முழங்கு தீயிற் கொள்கையின் மெலிந்திம் மூதூர் மஞ்சுதோய் குன்ற மன்ன மாடவீட் டகம்பு குந்தான். இவையிரண்டுமொருதொடர். 1. வெள்ளிமலையில் வாரணவாசியென்னுமூரின் மன்னன். பரிதி போற்பகையாகிய இருளைக்கெடுக்கும்வேல். மா-வியங் கோளசை யன்றி இசைநிறைத்து நின்றது; புறனடையால்வந்தது; “ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே”(புறநா.193) என்றாற்போல. அன்னம்போல் நல்லனகொண்டு. 2. கொள்கை - விரதம். இ-ள். மன்னனாகிய உலோகபாலனென்பான், புதல்வனுக்கு அரசைநிறுத்தி ஆய்ந்து தவவேடங்கொண்டான்; கொண்டு தவத்தைத் தொடங்கிச் சினம்போகநோற்குங் கொள்கையாற்குப் பாவம்வந்து சேர்ந்ததாக; யானைத்தீயாலே உணவிடத்தே வருந்தி இவ்வூரின் மாடத் திரளிடத்தே புகுந்தானென்க. (366-367) 397. உரைவிளை யாமை மைந்தன் கேட்கிய வுவந்து நோக்கி வரைவிளை யாடு மார்பன் யாரவன் வாழி யென்ன விரைவிளை யாடுந் தாரோ யானென விரும்பித் தீம்பாற் றிரைவிளை யமிர்த மன்ன கட்டுரை செல்க வென்றான். வரைதனக்கு நிகராகக்கருதி விளையாடும். விரைவிளை யாடும் - விரையுலாவும். இ-ள். மைந்தன், கதை முடிவதற்குமுன்னே கேட்டற்கு மகிழ்ந்து நோக்கி, நீ கூறிய மார்பன்யார்? அவன்றான் வாழ்வா னாக வெனக் கூற, அதுகேட்டுத் தாரோய், அவன்யானென்று ஆசிரியன்கூற, மேற்கேட்பதாக விரும்பி, அமுதன்ன புனைந்துரை முடிவுபோக நடப்பதாக வென்றானென்க. (368) 398. பூத்தின்று புகன்று சேதாப் புணர்முலை பொழிந்த தீம்பா னீத்தறச் செல்ல வேவித் தட்டவின் னமிர்த முண்பான் பாத்தரும் பசும்பொற் றாலம் பரப்பிய பைம்பொற் பூமி யேத்திருந் தவிசி னம்பி தோழரொ டேறி னானே. சேதா - பண்புத்தொகை. பால்பெருக்கறுதலாலே அந்நிலை யறிந்து அதிலிட்ட அரிசியைப் பால் செல்லவேவப்பண்ணிச் சமைத்த பாலடிசில். ஓடினபொன். இ-ள். கந்துகன், அமுதமுண்ணவேண்டித் தாலம்பரப்பிய பூமியிலே தவிசின் மேலே தோழரோடேறினானென்க. (369) 399. புடையிரு குழையு மின்னப் பூந்துகில் செறிந்த வல்கு னடையறி மகளி ரேந்த நல்லமிர் துண்ணும் போழ்தி னிடைகழி நின்ற வென்னை நோக்கிப்போந் தேறு கென்றான் கடல்கெழு பருதி யன்ன பொற்கலத் தெனக்குமிட்டார். நடை - சோறிடுமுறைமை. இ-ள். மகளிர், இருகுழையுமின்ன நிற்க அமுதமேந்த, தான் அதனை யுண்ணும்காலத்தே என்னைப்பார்த்து இங்ஙனே போந்தேறு வீராக வென்றான்; யானேறின வளவிலே, பொற்கலத் தே எனக்குமமுதமிட்டாரென்க. (370) 400. கைகவி நறுநெய் பெய்து கன்னலங் குடங்கள் கொட்டிப் பெய்பெயென் றுரைப்ப யானும் பெருங்கடல் வெள்ளிக் குன்றம் பெய்துதூர்க் கின்ற வண்ணம் விலாப்புடை பெரிதும் வீங்க வையன தருளி னால்யா னந்தணர் தொழிலே னானேன். விரைவின்கண் இருகாலடுக்குதல் இக்காலவழக்கு. இ-ள். இவற்குக் கை கவித்தற்குக் காரணமான நெய்யைப் பெய்து குடங்களையுமொன்றோ டொன்று சேர்த்திப் பெய் பெய் யென்று கந்துகன்கூற, அவர்சொரிதலின், யானும் வெள்ளி மலையைப் போகட்டுக் கடலைத்தூர்க்கின்றவண்ணம் விலாப் புடை வீங்க தூர்த்து உன்னருளாலே அறவோர்தொழிலனானே னென்க. (371) திருத்தியை யடைந்தேனென்றான். 401. சுரும்புடை யலங்கன் மாலைச் சுநந்தையுந் துணைவன் றானும் விரும்பின ரெதிர்கொண் டோம்ப வேழவெந் தீயி னீங்கி யிருந்தனெ னேம முந்நீ ரெறிசுற வுயர்த்த தோன்றற் கரும்புடைக் காளை யன்ன காளைநின் வலைப்பட் டென்றான். அலங்கன்மாலை - அசையுமாலை. சுறவுயர்ந்த - சுறவை மேம்படுத்தின. இ-ள். தலைமையையுடைய காமனையொத்தகாளாய், நின்வலைப்படுதலாலே, சுநந்தையுந் துணைவனும் விரும்பினராய் வழிபட்டுப்பேண, யானைத்தீயினின்று நீங்கியிருந்தேனென்றா னென்க. பின்னர்ப் பசிதோன்றாதிருத்தலின் நீங்கியென்றான். இவன் நோய்தீர்த்தநிலையை வலையென்றான். இதுவிளக்கிப்போகக் கருதலிற் பட்டென்றான். (372) 402. நிலம்பொறுக் கலாத செம்பொ னீணிதி நுந்தை யில்ல நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் றமர்கட் கெல்லா முலம்பொறுக் கலாத தோளை யாதலா லூடு புக்கேன் கலம்பொறுக் கலாத சாய லவருழை நின்னைக் கண்டேன். நிதி - திரள். தன் நலம் தான் பொறுக்க மாட்டாத. எல்லா மூர்த்தமும் இவனாதலின் நான்முக னென்றார். “ஆதிவேதம் பயந்தோய்நீ”(சீவக.1242) “மலரேந்து சேவடிய மாலென்ப” (சீவக.1610) என்ப மேலும். இ-ள். தோளாய், நிதியையுடைய நுந்தையில்லம் தமராயின துறந்தவர்க்கெல்லா மில்லமாதலான் உள்ளேசென்றேன்; மகளிரிடத்தே நின்னைக் கண்டேனென்றானென்க. (373) 403. ஐயனைக் கண்ணிற் காண யானைத்தீ யதகங் கண்ட பையண னாகம் போல வட்கயான் பெரிது முட்கித் தெய்வங்கொ லென்று தேர்வேற் கமிர்துலாய் நிமிர்ந்த தேபோன் மொய்குரன் முரச நாணுந் தழங்குரன் முழங்கக் கேட்டேன். நாகம் - ஆகுபெயர். இ-ள். நின்னைக் கண்ணாற்கண்டேனாக; யானைத்தீ, மருந்து கண்ட நஞ்சு போலக் கெடுதலாலே, யான் அஞ்சித் தெய்வமோ வென்றாராய்வேற்கு அமிர்து நிமிர்ந்ததே போலுலாவப்பட்டு முரசநாணும் வார்த்தை அவ்விடத்தே முழங்க, அதனைக் கேட்டே னென்றானென்க. ஐயநிற்கண்ணின்என்றும் பாடம். இவனிருக்கின்ற மனை யாதலின், .இவனைக் காண்பதற்குமுன்னே குறைந்து இவளைக் கண்டபின் பொன்றக்கெட்டது. (374) 404. கோட்டிளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவிற் போல மோட்டொளி முத்தஞ் சூழ்ந்து முருகுகொப் புளிக்குந் தாரோய் கேட்டளப் பரிய சொல்லுங் கிளரொளி வனப்பு நின்னைச் சேட்டிளஞ் சிங்க மன்னாய் சாதகஞ் செய்த வென்றான். திங்களை வளைத்திட்ட விற்போல முத்தைச்சூழ்ந்து தேன் கொப்புளிக்குந் தார். சேடு - பெருமை. இ-ள். தாரோய், சிங்கமன்னாய், அங்ஙனங்கேட்டள விடுதற் கரிய வார்த்தையும் வனப்பும் நின்னைப் பிறப்பை அறிவித்தன வென்றானென்க. (375) 405. கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே தாளிய றவங்க டாயாத் தந்தைநீ யாகி யென்னை வாளியங் குருவப் பூணோய் படைத்தனை வாழி யென்ன மீளியங் களிற னாயான் மெய்ந்நெறி நிற்ப லென்றான். கோளியங்கு - கொலைத்தொழிலிலே நடக்கின்ற. இ-ள். சீவகன், அதனைக்கேட்டு ஒளியியங்காநின்ற உருவ மாகிய பூணையுடையோய், முயற்சியாற் பிறந்த தவங்கள்தாயாக, நீ தந்தையாகி என்னைப்படைத்தனையென்ன; ஆசிரியன் களிறனாய், யான் தவநெறியிலே நிற்பேனென்றானென்க. நல்வினையால் இக்கலைகளைக்கற்றுத் தான் வேறோர் பிறப்பானமைகூறினான். (376) 406. மறுவற மனையி னீங்கி மாதவஞ் செய்வ லென்றாற் பிறவற மல்ல பேசார் பேரறி வுடைய நீரார் துறவறம் புணர்க வென்றே தோன்றறா டொழுது நின்றா னறவற மலர்ந்தகண்ணி நன்மணி வண்ண னன்னான். அறமல்லவாகியபிற - விலக்குஞ்சொற்கள். நறவற - நறு நாற்றந் தன்னிடத்தே தங்க. இ-ள். மணிவண்ணனன்னான், அறிவுடையோர் இல்லறத்தினின்று நீங்கி மறுவறத் தவஞ்செய்வலென்றாற் பிற பேசாரு லகத்தார்; ஆதலால், யானும் அதுவே கூறுவேன்; துறவறத்தைக் கூடுகவென்று தொழுதுநின்றானென்க. ஒருவன் துறப்பேனென்றால் அறிவுடையோர் விலக்கா ராதலின், இவனும் அதற்குடம்பட்டானெனத் தேவர் கூற்றுமாம். (377) 407. கைவரை யன்றி நில்லாக் கடுஞ்சின மடங்க லன்னான் றெவ்வரைச் செகுக்கு நீதி மனத்தகத் தெழுதிச் செம்பொற் பைவிரியல் குலாட்கும் படுகட னிதியின் வைகு மைவரை மார்பி னாற்கு மனமுறத் தேற்றி யிட்டான். கைவரையன்றிநில்லா - ஒழுக்கத்தின் எல்லைகடவாத. யானையைமாறுபட்டு நில்லாதவென்றுமாம். பைபோலவிரிந்த. கடல்போனிதி. இ-ள். மடங்கலன்னான், தன் பகைவரைக் கொல்லுமுறைமையை அவன்மனத்தே நிலை பெறுத்தி, சுநந்தைக்கும் கந்து கனுக்கும் சீவகன் கல்வியையும் தீக்கையையும் தன்துறவையும் மனங் கொள்ளும்படி தெளிவித்தானென்க. (378) 408. அழலுறு வெண்ணெய் போல வகங்குழைந் துருகி யாற்றாள் குழலுறு கிளவி சோர்ந்து குமரனைத் தமிய னாக நிழலுறு மதிய மன்னாய் நீத்தியோ வெனவு நில்லான் பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான். இ-ள். சுநந்தை, ஆற்றளாய்ச் சோர்ந்து, கலைகணிறைந் தவவே, குமரனைத் தமியனாம்படி நீத்தியோவென்றுகூறவும் நில்லானாய் வேந்தன் பழவினைகெடும்படி தவஞ்செய்வதற்குச் சென்றானென்க. இது நாமகளைக் கூடின இலம்பகமென்க. இலம்பகம் - வடசொல். (379) நாமகளிலம்பகமுற்றிற்று. இரண்டாவது கோவிந்தையாரிலம்பகம் 409. ஆர்வ வேரரிந் தச்ச ணந்திபோய் வீரன் றாணிழல் விளங்க நோற்றபின் மாரி மொக்குளின் மாய்ந்து விண்டொழச் சோர்வில் கொள்கையான் றோற்ற நீங்கினான். ஆர்வவேர் - ஆசையென்கிற பிறவிவேர் - அச்சணந்தி - ஆரிய நந்தி. வீரன்றாள் நிழல் - ஸ்ரீவர்த்தமானஸ்வாமிகள் சமவசர ணத்தே. மொக்குளின்மாய்தல் - வீடு பெறுங்கால் திருமேனி யுடனே மறைதல். இ-ள். அச்சணந்தி, இவ்விடத்துநின்றும்போய், தாணிழ லிலே விளங்கும்படி வேரையரிந்து நோற்றபின்பு, அக்கொள்கை யான், விண்டொழ மொக்குளின்மாய்ந்து, பிறவிநீங்கினானென்க. (1) 410. நம்ப னித்தலை நாக நன்னகர்ப் பைம்பொ னோடைசூழ் பரும யானையுஞ் செம்பொ னீள்கொடித் தேரும் வாசியும் வெம்ப வூர்ந்துலாம் வேனி லானினே. இ-ள். பிள்ளையார், இவ்வுலகில் நாகம்போலுமிராசமா புரத்தே யானைமுதலியவற்றைக் கண்டார்விரும்பவேறி, வேனிலான் போல மகளிர்க்கு வேட்கைவிளைத்து நடக்குமென்க. (2) வேறு. 411. கலையின தகலமுங் காட்சிக் கின்பமுஞ் சிலையின தகலமும் வீணைச் செல்வமு மலையினி னகலிய மார்ப னல்லதிவ் வுலகினி லிலையென வொருவ னாயினான். இதனால் சீவகற்குப் பதினையாண்டு சென்றபின் நல்வினை யாற்பிறக்கின்ற குணங்கள் கூறுகின்றார். கலையினதகலம் - கல்விகாரணமாகப் பிறப்பதொரு ஞானம். காட்சிக்கின்பம் - அப்பருவத்திலே பிறப்பதோர் அழகு. சிலையினதகலம் - படைக் கலம் பயின்றவாற்றால் அப்பருவத்துப் பிறக்கும் வீரம். வீணை - தாளத்தோடே கண்டத்திலுங் கருவியிலும்பிறக்கும் பாட்டு; இசைநாடகம் காமத்தை விளைத்தலின், அவற்றாற் பிறக்குங் காமத்தை வீணைச்செல்வமென்றார். இ-ள். ஞானமும் அழகும் வீரமும் காமமுமாகின்றான் சீவகன்; இவனல்லாது இவ்வுலகில் ஞானமுதலியன இல்லை யென்னும்படி தானொருவனேயாயினானென்க. அரர்க்குச்சிறந்தனஇந்நான்கென்றார். இனிக் கலையின தகலம் - நாமகள்; காட்சிக்கின்பம் – வீற்றுத் தெய்வம்; சிலையின தகலம்-வீரமகள்; வீணைச்செல்வம்-மாதங்கி. இவர்கள் தாம் இவனல்லது வேறியாங்களென் றில்லையென்னும் படியாயினா னென்றுமாம். (3) வேறு. 412. நாம வென்றிவே னகைகொண் மார்பனைக் காம னேயெனக் கன்னி மங்கையர் தாம ரைக்கணாற் பருகத் தாழ்ந்துலாங் கோம கன்றிறத் துற்ற கூறுவாம். நகை-முத்துவடம். இ-ள். அங்ஙனமொருவனாகிய மார்பனை மங்கையர் காமனே யென்று தாழ்ந்து கண்ணாற் பருகும்படி நடக்குமிவனி டத்துப் பிறந்த காரியங்களைக் கூறுவாமென்றாரென்க. (4) 413. சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலா முல்லை காரெனப் பூப்ப மொய்ந்நிரை புல்லு கன்றுளிப் பொழிந்து பால்படுங் கல்லென் சும்மையோர் கடலின் மிக்கதே. பின்பனிக்கு அழிகின்றமையிற் சிலவான அழகிய போதின் மேலே தேனினம் சாய்ந்துலாவு முல்லையென்று அடை கூறியது. இப்பொழுது காரெனப் பூக்கும்படி யாகவென்க. பால் படுஞ் சும்மை - பசுக்கறக்கிறவொலி. இ-ள். நிரை தான் புல்லுங் கன்றை நினைத்து, முல்லை காரெனப்பூப்பத் தானே பாலைப்பொழிதலாற் படுமொலி ஒருகடலினுமிக்கதென்க. (5) 414. மிக்க நாளினால் வேழ மும்மத முக்க தேனினோ டூறி வார்சுனை யொக்க வாய்நிறைந் தொழுகு குன்றின்மேன் மக்க ளீண்டினார் மடங்கன் மொய்ம்பினார். உக்கதேனுடனே மும்மதமூறுதலாலே சுனைகளெல்லாந் தம்மில் ஒக்க வாய் நிறைந்தொழுகுங்குன்று. இ-ள். இங்ஙனமொலி மிக்க நாளிலே குன்றின்மேல் மொய்ம் பினாராகிய வேடரெல்லாரும் வந்து தங்களிலே திரண்டாரென்க. (6) 415. மன்ன வன்னிரை வந்து கண்ணுறு மின்ன நாளினாற் கோடு நாமெனச் சொன்ன வாயுளே யொருவன் புட்குரன் முன்னங் கூறினான் முழுதுணர்வினான். இன்னநாள் - இளவேனிற்குரியநாள். இ-ள். அங்ஙனமீண்டினவர்கள், இத்தன்மைத்தாகிய நாளிலே நிரைவந்து சேரும்; அதனை நாம் கொள்ளுது மெனக் கூறிய அப்பொழுதே, புட்கூறிய குரலின் குறிப்பை, நிமித்த மெல்லாவற்றினும் அறிவுடையானொருவன் கூறினானென்க. (7) அது மேற்கூறுகின்றார். 416.1. அடைது நாநிரை யடைந்த காலையே குடையும் பிச்சமு மொழியக் கோன்படை யுடையும் பின்னரே யொருவன் றேரினா லுடைதுஞ் சுடுவிற்றே னுடைந்த தொப்பவே. 417.2. என்று கூறலு மேழை வேட்டுவீ ரொன்று தேரினா லொருவன் கூற்றமே யென்று கூறினு மொருவ னென்செயு மின்று கோடுநா மெழுகென் றேகினார். இவை யிரண்டு மொருதொடர். பிச்சம் - பீலியாற்கட்டுவன. சுடுவில்-சுடுவால்; சுடுதலென வினை மேனின்ற வினைப்பெயரன்றி வினைமாத்திரையுணர்த்தி நின்றுரு பேற்றது. தேனினம்போலக் கெடுதுமெனவே தமக்குப் பாடின்மை கூறினான். இ-ள். நாம் நிரையை யடிப்போம், அடித்த பொழுதே அரசன் படை வந்து பொருது குடையும் பிச்சமும் அவ்விடத்தேகிடக்கத் தான்கெடும்; அதுகேட்டபின்பு சுடுதலாற் றேனினங் கெட்டாற் போல ஒருவன் றேராற் கெடுவேமென்று நிமித்திகன் கூறினான்; அவன் கூறினவளவிலே அவனை வேட்டுவீரென இகழ்ந்து, ஒருவன் கூற்றமேயென்று உலகங்கூறினும், அவ்வொருவன் ஒரு தேரால் ஒன்றுஞ்செய்யமாட்டானாகலின், இன்றுகொள்ளக் கடவேம்; எழுந் திருப்பீராகவென்றுகூறி நிரைநிற்கிற இடநோக்கிப் போனாரென்க. (8-9) 418. வண்டு மூசறா நற மார்ந்தவர் தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ விண்டு தெய்வதம் வணங்கி வெல்கென மண்டி னார்நிரை மணந்த காலையே. மூசறா - விகாரம். தொண்டகப்பறை - ஆகோட்பறை. விண்டு - அரசனுடன் - பகைத்து. இ-ள். அங்ஙனமேகினவர், நறவமார்ந்து, பறை துடியோ டார்த்தெழ முருகனைவணங்கி, விண்டு, நிரைவந்துகூடின வளவிலே வெல்கவெனக்கூறி, மிக்குச் சென்றாரென்க. (10) 419.1. பூத்த கோங்குபொற் பொன்சு மந்துளா ராய்த்தி யர்நலக் காசெ றூணனான் கோத்த நித்திலக் கோதை மார்பினான் வாய்த்த வந்நிரை வள்ளுவன் சொனான். 420.2. பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலா லெள்ளன் மின்னிரை யின்று நீரென வெள்ளி வள்ளியின் விளங்கு தோணலார் முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார். இவையிரண்டுமொரு தொடர். சுமந்திருப்பாராகிய ஆய்த்தியர். கோதை-பூமாலை. நித்திலத்தை யுடைய மார்பினான்-நந்தகோன். வாய்த்த-தப்பாத. வெள்ளியாற்செய்த விளையினையுடைய தோள். இ-ள். ஆய்த்தியர் நலஞ்சேர்தற்கு ஆதீண்டுகுற்றியை யொப்பனாகிய நந்தகோனுடைய அந்நிரையிலே வாய்த்த நிமித்திகன், நிரைக்குள்ளேபுகுந்து காரிஅழித்ததாகலால் இன்று நீர் நிரையைக் காவலிகழாதொழிமினெனச் சொன்னான்; அது கேட்டுப் புதுமண வாளப்பிள்ளைகளும் மொய்ம்புடனே காத்தற்கேகினாரென்க. (11-12) 421. காய மீனெனக் கலந்து கானிரை மேய வெந்தொழில் வேட ரார்த்துடன் பாயு மாரிபோற் பகழி சிந்தினா ராயர் மத்தெறி தயிரி னாயினார். இ-ள். ஆகாயமு மீனுமென்னும்படி காட்டிலே கலந்து நிரை மேய்கிற அளவிலே வேடரார்த்துப் பரந்தமழைபோலப் பகழியை உடனே சிந்தினாராக, போரிற் காற்றாராய் ஆயர் மத்தாற் கடைந்த தயிர்போலச் சிதறினாரென்க . (13) 422. குழலு நவியமு மொழியக் கோவலர் கழலக் காடுபோய்க் கன்று தாம்பரித் துழலை பாய்ந்துலா முன்றிற் பள்ளியுண் மழலைத் தீஞ்சொலார் மறுக வாய்விட்டார். 423. மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ ரத்த லைவிடி னித்த லைவிடா ருய்த்த னரென வுடைத யிர்ப்புளி மொய்த்த தோணலார் முழுது மீண்டினார். இவையிரண்டுமொருதொடர். மற்று - அசை. இ-ள். அங்ஙனஞ்சிதறின கோவலர், குழலுங்கோடாலியு மங் கே கிடக்கக் காட்டைக்கழலப்போய், இடைச்சேரியில் மகளிர் நின்று சுழலும்படி, அவ்வேடர் கயிறு போல அத்தலையை நெகிழ விட்டாராயின் இத்தலையை நெகிழவிடாராதலால், இனி அந்நிரையைக் கொண்டே போயினாரென வாய்விட்டார், அதுகேட்டுத் தோள்முழுதுந் தயிர்ப்புள்ளி செறிந்தநல்லார் திரண்டாரென்க. உய்த்தனரென்றிறந்தகாலத்தாற் கூறினார், தெளிவுபற்றி.(14-15) வேறு. 424. வலைப்படு மானென மஞ்ஞையெ னத்தம் முலைப்படு முத்தொடு மொய்குழல் வேய்ந்த தலைப்படு தண்மலர் மாலைபி ணங்க வலைத்த வயிற்றன ராயழு திட்டார். இ-ள். அவர், முத்தோடே குழலிலேவேய்ந்த தலையின் மாலை பிணங்கும்படி மயிர்குலைய அலைத்தவயிற்றினராய், வலைப் படுமானென வலைப்படுமயிலெனவருந்தினாரென்க. (16) 425. எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குவிர் நும்மனை மார்களை நோவ வதுக்கி வெம்முனை வேட்டுவ ருய்த்தன ரோவெனத் தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். இ-ள். அவர், பின்பும் வேட்டுவர் நும்முடையதாய்மாரை நோம்படி அடித்துக் கொண்டுபோயினார்; இனி எம்முடைய தாய்மார், எங்ஙன முயிர்வாழ்வீரோவெனக்கூப்பிட்டுக் கன்றோடு புலம்புதலுற்றாரென்க. உவப்பின்கண் அஃறிணையை உயர்திணையாகக்கூறினார். (17) 426.1. பாறை படுதயிர் பாலொடு நெய்பொரு தாறு படப்பள்ளி யாகுல மாக மாறு படமலைந் தாய்ப்படை நெக்கது சேறு படுமலர் சிந்த விரைந்தே. 427.2. புறவணி பூவிரி புன்புலம் போகி நறவணி தாமரை நாட்டக நீந்திச் சுறவணி சூழ்கிடங் காரெயின் மூதூ ரிறையணி கேட்கவுய்த் திட்டனர் பூசல். இவையிரண்டும் ஒரு தொடர். ஆய்,- ‘வேடு’ போலச் சாதியையுணர்த்திற்று. சேறு-மது. (2) புறவு-முல்லைநிலம். இ-ள். கற்போற்றோய்ந்த தயிரும் பாலும் நெய்யுடனே கலந்து ஆறுண்டாம் படி பள்ளியிலே வருத்தநிகழாநிற்க, கெடாது நின்ற ஆய்ப்படை மாறுபாடுண்டாகப் பொருது கெட்டது; கெட்டபின்பு, அவர், மலர்சிந்தும்படி விரைந்து புன்புலத்தைப் போய் நாட்டகத்தை நீந்தி மூதூரில் இதையணித்தாகக்கேட்கும்படி நிரையையடித்த பூசலைக் கொண்டுபோய்ப்போகட்டாரென்க. இட்டனரென்றார், இப்பழியை அரசன்றலையிலே போகடுதலால்; உய்த்திட்டனர்: ஒருசொல்லுமாம். மூதூரெனவே இது கேட்டறியா தென்பதுகருத்து. இதனால் வாயிலோனுக் கிசைத்தமை கூறினார். (1819) வேறு. 428. கொடுமர வெயின ரீண்டிக் கோட்டிமி லேறு சூழ்ந்த படுமணி நிரையை வாரிப் பைந்துகி லருவி நெற்றி நெடுமலை யத்தஞ் சென்றா ரென்றுநெய் பொதிந்த பித்தை வடிமல ராயர் பூசல் வளநகர் பரப்பி னாரே. துகில்போலருவி. நெய்யைவார்த்த மயிரிலே மலரையுடைய ஆயர். இ-ள். மறவர் திரண்டு நிரையைச் சேரக் கைக்கொண்டு மலையில் அருஞ்சுரத்தேப்போயினாரென்று பூசலை நகரிலே பரப்பினாரென்க. “பல்லாக் கொண்டா ரொல்லா ரென்னும் - பூசல் கேட்டுக் கையது மாற்றி” (பன்னிரு படலம்) என்றும் “நிரைகோள் கேட்டுச்செய்தொழி லொழிய”(பு.வெ.23) என்றுந் துறைகூறுதலின், இவருங்கேட்டாரெல்லாஞ் சென்று மீட்பரெனக் கருதி நகர்க்குணத்தினார். (20) வேறு. 429. காசின் மாமணிச் சாமரை கன்னியர் வீச மாமக ரக்குழை வில்லிட வாச வான்கழு நீர்பிடித் தாங்கரி யாச னத்திருந் தானடன் மொய்ம்பினான். காசு-குற்றம். மொய்ம்பினான் இகழ்ச்சி. இ-ள். மொய்ம்பினான், கன்னியர்வீசுந்தோறும் குழைவில் விடக் கழுநீரைப்பிடித்து, சச்சந்தனிருந்தமண்டபத்தே அவனிருந்த சிங்காசனத்தேயிருந்தானென்க. (21) 430. கொண்ட வாளொடுங் கோலொடுங் கூப்புபு சண்ட மன்னனைத் தாடொழு தாயிடை யுண்டொர் பூசலென் றாற்குரை யாயெனக் கொண்ட னர்நிரை போற்றெனக் கூறினான். இ-ள். எடுத்த வாளொடும் பிரம்பொடுங் கையைக்குவித்துக் கொடிய வரசனைத் தாளைத்தொழுது அக்காட்டிலே ஒரு பூசலுண் டென்று கூறிய அசாரவாசிக்கு அதுயாது? கூறாயென்ற ரசன்கூற, அவனும் யான் கூறுகின்றதனைத் திருவுளம்பற்று; நிரையை அடித்துக் கொண்டாரென்று கூறினானென்க. (22) 431. செங்கட் புன்மயிர்த் தோறிரை செம்முக வெங்க ணோக்கிற்குப் பாயமி லேச்சனைச் செங்கட் டீவிழி யாத்தெழித் தான்கையு ளங்கட் போதுபி சைந்தடு கூற்றனான். இ-ள்.அடுகூற்றனான், அதனைக்கேட்டுப்பூவைப்பிசைந்து, கண் முதலியவற்றையுடைய மிலேச்சனைக் கண்ணாலே தீப்புறப்பட விழித்துக் கோபித்தானென்க. தான் அரசனன்மையிற் கோபம் எளியார்மேற்றாயிற்று. (23) வேறு. 432. கூற்றின் னிடிக்குங் கொலைவேலவன் கோவலர்வாய் மாற்றம் முணர்ந்து மறங்கூர்கடற் றானை நோக்கிக் காற்றின் விரைந்து தொறுமீட்கெனக் காவன் மன்ன னேற்றை யரிமா னிடிபோல வியம்பி னானே. “ஏறுமேற்றையும்” என்றலின் ஏற்றையும் பெயர். இ-ள். கூற்றுப்போற் கோபியாநின்ற வேலவனாகிய காவன் மன்னன், அக்கோபஞ் சிறிதுதணிந்து, கோவலரையழைத்து, அவர் கூறிய கூற்றிற் பொருளையுணர்ந்து தனது தானையைப் பார்த்து, காற்றினும்விரைந்துசென்று நிரையை மீட்பீராகவென்று அரிமானேறு மிடியும் போல வியம்பினானென்க. (24) வேறு 433. கார்விளை மேக மன்ன கவுளழி கடாத்த வேழம் போர்விளை யிவுளிளத் திண்டேர் புனைமயிர்ப் புரவி காலாள் வார்விளை முரசம் விம்ம வானுலாப் போந்த தேபோல் நீர்விளை சுரிசங் கார்ப்ப நிலநெளி பரந்த வன்றே. கார்காலத்துண்டான மேகமன்ன கவுண்மறைந்த கடாம். போருண்டாதற்குக் காரணமான குதிரை. வார்விளை - வாருண் hன. யானையும் பரிசையும் முழக்கமுமுண்மையின் மேகமுவமை. இ-ள். வேழமுந் தேரும் புரவியுங் காலாளும் முரசும்விம்மச் சங்க மார்ப்ப வானுலாப்போந்ததேபோல் நிலநெளியப் பரந்த வென்க. இனி வானுலாப்போந்ததேபோலுநீராவது கடல்; அதில் விளைந்த சங்குமாம். நெளிய-விகாரம். (25) 434. காலகம் புடைப்ப முந்நீர்க் கடல்கிளர்ந் தெழுந்த தொப்ப வேலக மிடைந் தானை வெஞ்சின வெயினர் தாக்க வால்வளை யலற வாய் விட் டிரலையுந் துடியு மார்ப்பப் பால்வளைந் திரவு செற்றுப் பகலொடு மலைவ தொத்தார். இ-ள். காற்று உள்ளேயடித்தலாலே கடலெழுந்ததே போலக் கிளர்ந்து வேன்மிடைந்தானையும் எயினரும் வளையலற இரலையுந் துடியும் வாய்விட்டார்ப்பத் தம்மிற்றாக்குதலாலே கோவித்து ஒரு பக்கத்திலே வந்து வளைந்து இரவும்பகலும் மலைவதொத்தாரென்க. மூன்றுநீர்மையையுடைய கடல்; அது முற்கூறினாம். ஒடு-எண்ணொடு. வேடர் அரசர்க்கெதிர்நிற்றலின் இரவும் பகலு முவமையாயின. வளை தானைக்கும், துத்தரிக்கொம்புந் துடியும் வேடர்க்கும் நிரனிறை. (26) 435. விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி மைந்தர் மற்பழுத் தகன்ற மார்பத் திடங்கொண்டு வைகச் செந்நாச் சொற்பழுத் தவர்க்கு மாண்மை சொல்லலாந் தன்மைத் தன்றிக் கொற்பழுத் தெரியும் வேலார் கொடுஞ்சிலை குழைவித் தாரே. பழுத்து-குழைந்து. வெய்ய-விரும்பின. மற்பழுத்து- மற்றொழி லிலே முற்றுப்பெற்று. செவ்விய நாவிலே சொல்லெல்லாங் கைவந்தவர்கள். கொற்றொழிலிலே யடிபட்டு. மைந்தரும் வேலா ரும் அரசன்படை. இ-ள். வேடர்க்கையில் வில் வளைந்து கான்றபகழி மைந்தர் மார்பத்தே தங்குதலாலே கவிகளுக்கும் ஆண்மைகூறலாந் தன்மைத் தன்றாக எரியும்வேலார் அவ்வேடர் வில்லைக் கொடுத்தாரென்க. இனி வேலார் தமது வில்லைவளைத்தார் அவ்வளவிலே வேடர் மைந்தரை வீட்டினாரென்றுமாம். (27) 436. வாட்படை யனுங்க வேடர் வண்சிலை வணங்க வாங்கிக் கோட்புலி யினத்தின் மொய்த்தார் கொதிநுனைப் பகழி தம்மால் வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்தமா கவிழ்ந்த திண்டேர் பாட்டரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவ தொத்தே. இ-ள். தம்மைக்கெடுத்த வாட்படைகெடும்படி வில்லை வளைத்துப் புலியினம்போலெதிர்சென்று மொய்த்தவர்கள், தம்பகழி யாலே வீரரானவர்களை வீட்டினார்; அவ்வளவிலே மாவீழ்ந்தன; தேர்கவிழ்ந்தன; வரை குனிவதனையொத்துப்பகடு வீழ்ந்தன வென்க. மொய்த்தார் - தொழிற்பெயர். பட்டு - விகாரம். (28) 437. வென்றிநாங் கோடு மின்னே வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி யொன்றியுள் வாங்கு கென்ன வொலிகட லுடைந்த தேபோற் பொன்றவழ் களிறு பாய்மா புனைமயிர்க் குஞ்சி பிச்ச மின்றவழ் கொடியொ டிட்டு முவேற்படை யுடைந்த வன்றே. வேற்படை - காலாள். குஞ்சி - சிற்றணுக்கள். இ-ள். படாதமைந்தர், வேடரை வெளியிலே புறப்படவிட்டு யாம் இப்பொழுதே வெற்றிகொள்ளுதுமென்று எல்லாரு மெண்ணி அப்படை யுடனே பொருந்தித் தள்ளிச் சிறிதுகுறைப் பீராகவென்று தம்படைக்குச் சொல்ல, களிறும் மாவும் வேற்படையும் குச்சத்தையும் பிச்சத்தையுங் கொடியுடனே போகட்டுக் கடலுடைந்ததுபோலுடைந்தவென்க. (29) 438. பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த முல்லையங் கண்ணி சிந்தக் கால்விசை முறுக்கி யாய ரொல்லென வொலிப்ப வோடிப் படையுடைந் திட்ட தென்ன வல்லலுற் றழுங்கி நெஞ்சிற் கட்டியங் கார னாழ்ந்தான். இ-ள். படைகெட்டவளவிலே ஆயர், கண்ணிசிந்தும்படி கால் விசை யுண்டாக முறுக்கி ஓடி ஒல்லெனவொலிப்பப் படையுடைந்த தென்று கூற, அதுகேட்டுக் கட்டியங்காரன் நெஞ்சிலே ஒருவருத்த முற்றிரங்கி அதிலே யழுந்தினானென்க. பல்லாற்கிழித்த நாரிலே பூ நெருங்கவைத்துக் கட்டப்பட்ட முல்லைக்கண்ணி என்றார்க்குப் பாடமாயின், என்றுவருந்தினார்க்குத் தானு மெதிரேவருந்தினானென்க. (30) 439. வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சோர் கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயற் றடங்கண் போலு மம்புகொண் டரசர் மீண்டா ராக்கொண்டு மறவர் போனார் செம்புகொண் டன்ன விஞ்சித் திருநகர்ச் செல்வ வென்றார். செம்பின்றன்மையைக்கொண்டாலொத்த மதில். உலகிற் கன்றி நகரிற்கரசனாகிய ஸ்ரீமானேயென்றார், வெகுண்டு. இ-ள். நிரைபோனபின்வந்த ஆயர், செல்வனே, மாலை யினது தேனொழுகுவதொரு கொம்பு, கச்சைத் தன்னிடத்தே கொண்டு அடிபரந்த காதலையுடைய முலையைத் தனக்குறுப் பாகக்கொண்டாற் போலு நல்லாருடைய கண்போலத் தப்பாத அம்பையே தாங்கொண்டு அரசர் மீண்டார்; மறவர் ஆவைக் கொண்டே போனாரென்றாரென்க. அரசர்-அவன்புதல்வரும் மதனனும். (31) 440. மன்னிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாட்கட் பொன்னிழை சுடரு மேனிப் பூங்கொடி யனைய பொற்பிற் கன்னியைத் தருது மென்று கடிமுர சியம்பக் கொட்டி நன்னகர் வீதி தோறு நந்தகோ னறைவித் தானே. இ-ள். அதுகேட்டு அரசன்வாளாவிருத்தலின் நந்நகோன், கண் முதலியவற்றையுடைய கன்னியை மைந்தர்நிரைமீட்டு வந்தவர் கொள்வாராக; யாமுந்தருவேமென நகர்வீதிதோறு மிக்கமுரசை முழங்கக்கொட்டிச் சாற்றுவித்தானென்க. மன்னிரை - பெரியநிரை. பூண்விளங்குதற்குக் காரணமான மேனி.இரண்டுகுலத்தோரும் தாழ்வுயர்வு கருதாதிருத்தற்கு, ‘கொள்க’ என்றும், ‘தருதும்’ என்றுங்கூறினான். படைநான்க மிகப்படைத்துப் பல்லுயிர்க்கும் அருள்புரிந்தோர் உண்மையானும், கன்னியை விரும்புவாருண்மையானும் கொட்டி அறைவித்தானென்க. (32) 441. வெதிர்ங்குதைச் சாபங் கான்ற வெந்நுனைப் பகழி மூழ்க வுதிர்ந்தது சேனை யீட்டங் கூற்றொடு பொருது கொள்ளுங் கருந்தடங் கண்ணி யன்றிக் காயமா றாக வேகு மரும்பெற லவளு மாகென் றாடவர் தொழுது விட்டார். மூங்கிலாற்செய்த குதையையுடைய வில். இ-ள். ஆடவர், சேனைத்திரள் வேடரதுசாபங்கான்ற பகழி மூழ்குதலாலே கெட்டதாதலால், இவளேயன்றி ஆகாயமே வழியாகச் செல்வாளொருபெறுதற்கரிய தெய்வமகளுமாக, அவ்வேடராகிய கூற்றோடு பொருதுகொள்ளுங் கொலைவல் லாரில்லையென்று தொழுதுவிட்டாரென்க. (33) இது சொல்லெச்சம். 442. கார்விரி மின்ன னார்மேற் காமுகர் நெஞ்சி னோடுந் தேர்பரி கடாவித் தேந்தார்ச் சீவக னருளிற் போகித் தார்பொலி புரவி வட்டந் தான்புகக் காட்டு கின்றாற் கூர்பரி வுற்ற தெல்லா மொருமக னுணர்த் தினானே. இ-ள். சீவகன், மின்னையொக்குமகளிர்மேலே காமுகர் நெஞ்சு ஓடுமாறு போல ஓடுந்தேரைச் செலவிலே கடாவிப் பின்பு, புரவியை வட்டத்தே செல்லக் காட்டுகின்றவனுக்கு, அவனரு ளாலே ஒருமகன் போய்வந்து ஊர் பரிவுற்றதெல்லா முணர்த்தினா னென்க. வட்டம்-வாளி. இனி ஒருமகன் தேர்பரி கடாவிப் போய் வந்தென்றுமாம். இதன்பின் “என்றவன்” “சேட்டிளம்” எனவி ரண்டுகவிகூறுவாருமுளர்; அவை பயிலவழங்கா. (34) என்றவ னுரைப்பக் கேட்டே யெரிமணிக் டகக் ககையா லொன்றிய தோழர் கைம்மே லெறிந்துநக் குணர்வின் மிக்கான் சென்றவற் கோகை யாகச் சிறப்பொடு செம்பொன் சிந்தி நன்றிதே போல்வ தில்லை நாந்தொறு மீட்டு மென்றான். சேட்டிளம் பருதி போலுந் திருமகிழ் மாலை மார்பன் கேட்டலுங் கனன்று வல்லே கிளரொளி நந்த திண்டேர் நீட்டமில் செய்கை தம்மாற் பண்ணென நினைந்து சொன்னான் றீட்டரும் பருதி யன்ன சீவக சாமி யன்றே. வேறு. 443. தன்பான் மனையா ளயலான்றலைக் கண்டு பின்னு மின்பா லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலா நன்பால் பசுவே துறந்தார்பெண்டிர் பாலர் பார்ப்பா ரென்பா ரையோம்பே னெனின்யானவ னாக னென்றான். தன் பகுதியாய்த்தங்கிய வீரமகளை ‘போலா’ என்பது, செய்யா வென்னும் எச்சப்பொருட்கண்வந்த உவமைச்சொல். நன்பால் - நல்லொழுக்கம்; “பலவயினானும்” (தொல்:கிளவி.51) என்றதனால், சிலவயின் தினை விராயென்னி உயர்திணையான் முடிந்தன. (இ-ள்) நல்லொழுக்கம், பசு, துறந்தார், பெண்டிர், பாலர் பார்ப்பாரென்பாரை ஓம்பேனெனின், யான் தன் வீரத்தை அயரலாரிடத்தே கண்டு பொறுத்தான் ஆண்மகனன்மையிற் பேடியை யொத்துப் பின்னும்பலடிழசிலுண்டற்கு மேற்கொள்கின்ற ஒழுக்கத்தையுடைய கட்டியங்காரனாவேனென்றானென்க. இஃது உட்கோள். இனி, ‘போலாம்’ என மகரவீறாக்கிப் பேடி போலாம் அவனாகவென்றுமாம். ‘போலா’ என்றது எச்சப் பொருளுணர்த்தினமையின் ஒப்பில் போலியாகாமை யுணர்க. (35) 444. போர்ப்பண் ணமைத்து நுகம்பூட்டிப் புரவி பண்ணித் தேர்ப்பண் ணமைத்துச் சிலைகோலிப் பகழியாய்ந்து கார்க்கொண் முமின்னி னிமிர்ந்தான்கலி மான்கு ளம்பிற் பார்க்கண் ணெழுந்த துகளாற் பகன் மாய்ந்த தன்றே. பண்ணமைத்தல்-சமைத்தல். இ-ள். புரவியைப்பண்ணிநுகத்தேபூட்டித் தேரைப்பண்ண மைத்துப் பின் தன்னைப் போருக்கீடாகப்பண்ணமைத்துக் கோலி ஆய்ந்து மின்போலத்தேரைச் செலுத்தினான்; அப்பொழுது குதிரைக்குரத்தாற் பாரிடத்தெழுந்த புழுதியாலேபகற் பொழுது கெட்டதென்க. கொண்மூ-விகாரம். (36) 445. இழுதொன்று வாட்க ணிளையாரிளை யார்க ணோக்கிற் பழுதின்றி மூழ்கும் பகழித்தொழில் வல்ல காளை முழுதொன்று திண்டேர் முகஞ்செய்தவன் றன்னொ டேற்கும் பொழுதன்று போது மெனப்புண்மொழிந் தான்மொ ழிந்தான். இ-ள். முன்பு நிமித்தங்கூறினவன் அத்தேரைக்கண்டு, தோன்றின அவன் மகளிர் காமுகரிடத்து நோக்குகின்ற நோக்குப் போலத் தப்பின்றாகத் தைக்கும் அம்பாற்செய்யுந் தொழிலை வல்ல காளை; தேரொன்றே திசைமுழுதும் முகஞ்செய்தற்குக் காரணமானவன் றன்னுடனே யாம் இப்பொழுது போரை எதிர் கொள்ளும் பருவமன்று; இப்பொழுது போகக்கடவேமென்று கூறினானென்க. (37) 446. மோட்டும் முதுநீர் முதலைக்கு வலிய துண்டேற் காட்டுண் ணமக்கு வலியாரையுங் காண்டு நாமென் றேட்டைப் பசியி னிரைகவ்விய நாக மேபோல் வேட்டந் நிரையை விடலின்றி விரைந்த தன்றே. இ-ள். அப்பொழுது வேட்டுவச்சாதி, பெரிய முதலைக்கு முது நீரிடத்து வலியதொன்றுண்டாயின் நமக்குக் காட்டிடத்து வலியாரையும்காண்டுமென்றுகூறி, இரைக்குஇடைந்தபசியால் இரையைக்கவ்வியநாகம்போல் அந்நிரையைக் கைவிடுதலின்றாய்ப் போரிற்கு விரைந்ததென்க. (38) வேறு. 447. கடற்படை யனுங்க வென்ற கானவ ரென்னுங் கூற்றத் திடைப்படா தோடிப் போமி னுய்யவென் றிரலை வாய்வைத் தெடுத்தனர் விளியுஞ் சங்கும் வீளையும் பறையுங் கோடுங் கடத்திடை முழங்கக் காருங் கடலுமொத் தெழுந்த வன்றே. இ-ள். அங்ஙனம்விரைந்தவர், அரசன்படைகெடும்படி வென்ற வேடரென்னுங் கூற்றத்திடையில் அகப்படாதே பிழைக்க ஓடிப்போங் களென்று வார்த்தை கூறித் துத்தரிக்கொம்பையூதிக் கொக்கரிப்பையுஞ் சீழ்ப்கையையுமெழுப்பினார். அதற்கெதிரே பிள்ளையாருடையசங்கும் பறையும் கொம்பும் காட்டிலே முழங்க இரண்டுபடையினொலியும் காரையுங் கடலையுமொத் தெழுந்த வென்க. “வில்லுடை வீளையர் கல்லிடு பெடுத்த” என்றார் பிறரும். (39) 448. கைவிசை முறுக்கி வீசுங் கொள்ளியுங் கறங்கு மேய்ப்பச் செய்கழற் குருசி றிண்டேர் விசையொடு திசைக ளெல்லா மையென வளைப்ப வீர ரார்த்தன ரவரு மார்த்தார் மொய்யமர் நாட்செய் தையன் முதல்விளை யாடி னானே. விசையுண்டாக முறுக்கி. ஐயென-விரைய. பின்புசெய்யு மொய்ய மருக்குமுதலேநாட்கொண்டு என்றது தான்செய்யுந் தொழில் நிகழ்த்துவதற்குமுன்பே அதனைத் தொடங்கிவைத்தலை. இது தம்மிற்றாம்படைவகுத்து விளையாடுந் தன்மைத்தென்று விளையாடினா னென்றார். தனக்கு அவர்நிகரன்மை யானும், அரசாட்சி யின்மையிற் பகையின்மையானும், தனதருளும் வீரமுமேம்படுத்து தற்குச் சென்றானாகலானும், அவரையஞ்சப் பண்ணி நிரைமீட்டா னென்பதே தேவர் கருத்து; அது மேற்காண்க. இ-ள். அவரெதிர்த்தலிற் குரிசில் தேர் கொள்ளி வட்டத் தையுங் காற்றாடியையுமொப்பவிசையோடே வளையா நிற்க, தன்வீரரார்த்தார்; அதுகேட்டு வேடருமார்த்தார்; அப்பொழுது ஐயன் நாட்செய்து விளையாடினானென்க. (40) 449. ஆழியா னூர்திப் புள்ளி னஞ்சிற கொலியி னாக மாழ்கிப்பை யவிந்த வண்ணம் வள்ளறேர் முழக்கி னானுஞ் சூழ்துகண் மயக்கத் தானும் புளிஞருள் சுருங்கிச் சேக்கைக் கோழிபோற் குறைந்து நெஞ்சி னறமென மறமும் விட்டார். இ-ள். திருமாலேறப்படுவதாகிய கருடனது சிறகொலியி னாலே பாம்புமயங்கிப் படமொடுங்கினாற்போல, வள்ளல் தேரொலியாலும் தம்மைச்சூழ்ந்த துகளின்மயக்கத்தாலும் வேடர், மனவெழுச்சிசுருங்கி, வலைப்பட்ட கோழிபோலே செயல்குறைந்து தமது நெஞ்சின் அறம்புகு தாமற் கைவிட்டாற் போல ஈண்டு மறத்தையுங்கைவிட்டாரென்க. அவருயிரைக்கொடுத்தலின் ‘வள்ள’லென்றார், பொராதே தேரொலியாலே அவரை அஞ்சுவித்து நிரைமீட்கின்றான். (41) 450. புள்ளொன்றே சொல்லு மென்றிப் புன்த்தலை வேடன் பொய்த்தான் வெள்ளந்தேர் வளைந்த நம்மை வென்றியீங் கரிது வெய்தா வுள்ளம்போற் போது நாமோ ரெடுப்பெடுத் துய்ய வென்னா வள்ளன்மே லப்பு மாரி யார்ப்பொடு சிதறி னாரே. இ-ள். அங்ஙனமறம்விட்டவேடர், ஆந்தை ஒருதேர்வரு மென்று சொல்லாநின்றதென்று நமக்குச்சொல்லி இந்தப் புன்றலைவேடன் நிமித்தத்தைத் தப்பினான்; நம்மைத் தேர் வெள்ளமாக வளைந்தன வாகலான் இவ்விடத்து நிரை கோடலரிது; இனி நாங்கடிதாக ஒரு காலுற்றுப்பொருது தள்ளி உய்யப் போம்படி ஒருவருள்ளம்போலே எல்லாருஞ் செல்லக் கடவே மென்றுகூறிச் சென்று, வள்ளன்மேலே அப்புமாரியைச் சிதறினா ரென்க. நீ நினைத்தாற்போலப் போவேமென்றுமாம். (42) 451. மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக் காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோன் மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கி னானே. இ-ள். மாரிதன்னைக் காற்று, கல்லென இரைத்தெழுந்து சிதற வடித்த தன்மைபோல, தன்மேனிரைத்தெழுந்த வேடருடைய அம்பாகியமழையை, கோமகன் தன்கைவில்லாற் றான்சொரிகின்ற கோலைஎதிரேநிரைத்து விலக்கினானென்க. மால்-பெருமை. வரையிற்றொடுத்தென்றார், காலமழை யென்றுணர்தற்கு. காற்றுத் தான்வேண்டியதிசையே மழையைப் போக்கு மாறுபோல, இவனம்பு தன்விசையால் அவரம்பை மீளவிட்ட தென்க. “நாமுறக் கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை” என்றார்பிறரும். இதனாற் கோமகனென்றார். (43) 452. கானவ ரிரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்த லோடு மாநிரை பெயர்ந்த வாய ரார்த்தனர ணிசெய் திண்டோ டானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய் மாரி போனின்ற வென்ப மற்றப் பொருவரு சிலையி னார்க்கே. இ-ள். தனது வில்வாய்க்கடுங்கணையை அங்ஙனந் தொடுத்த வுடனே நிரை மீண்டன; அதுகண்டு ஆயரார்த் தனர்; அதன்பின்பு, நிரையைவிட்டுக் குவிந்த கானவரிரியும் படியாகத் தனது திண்டோடானொன்று முடங்கிற்று; ஒன்று நிமிர்ந்தது. அப்பொழுது அவ்வேடர்க்கு அம்புகள் பெய்மாரி போலத் தாரையாய்நின்றவென்க. அங்ஙனந்தொடுத்த தொடைவிசேடங்கண்டு இனிப்பொர லரிதென்று குறைந்து நிரையைக் கைவிடுதலால், ‘தொடுத்தலோடு நிரை பெயர்ந்த’ வென்றார்.இது நிரைமீட்ட பின்பு, அவ்வேடர்திரள் குலைந்து போம்படியெய்த நிலைமை கூறிற்று. கொல்லாதிருத்தலின் மாரிபோலென்றார். (44) வேறு. 453. ஐந்நூறு நூறு தலையிட்டவா றாயி ரவர் மெய்ந்நூறு நூறு நுதிவெங்கணை தூவி வேடர் கைந்நூறு வில்லுங் கணையும்மறுத் தான்க ணத்தின் மைந்நூறு வேற்கண் மடவார்மனம் போல மாய்ந்தார். தலையிட்ட - முதலிலேயிட்ட வேடர் ஐம்பத்தாறாயிரவர். அவர்மெய்நூற்றைநூறவல்ல கணையை இப்பொழுது அங் ஙன நூறாதபடி சொரிந்து, தூவுதல் - மிகச் சொரிதல் மையாகிய நூறு - அஞ்சனம். இனி மையை அழித்தற்குக் காரணமான வேலென்றுமாம். நிலைநில்லாதுகெடுதலின் மனம் உவமை.மாய்தல் - மறைதல், “களிறுமாய்க்குங் கதிர்கழனி” (மதுரைக். 247) என்றாற் போல. தம் உயிர்க்கு ஊறுசெய்யாதெய்தமைகண்டு போகடுதலிற் றூவுதலான் அறுத்தானென்றார். தூவித் துணிந்தா னென்றுமாம். இ-ள். அங்ஙனம் பெய்மாரிபோனிற்கும்படி கணையைத் தூவி, வேடர்கையிற்பிறரை நூறுகின்ற வில்லையும் அம்பையும் அஞ்சிப்போகடப்பண்ணினான்; பின்பு, அவர் மடவார் மனம் போலே ஒருகணத்திற் காட்டிலே மறைந்தாரென்க. (45) 454. வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக் கோள்வாய் மதிய நெடியான்விடுத் தாங்கு மைந்தன் றோள்வாய் சிலையி னொலியாற்றொறு மீட்டு மீள்வா னாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான். கோள்-இராகு. சிலையினொலியால் - எய்கிறகாலத்து விசையிற் பிறந்த ஒலியாலே. இது “கோனிரைத்துமிழும்வில்லால்” என்றதனைக் கருதிக் கூறிற்று.நாடோறு நிறைந்தமதி, உலகறியச் கலைநிரம்பினமை தோற்றுவித்தலின் உவமையாம். மேல் அரசர் தேற்றவுந்தேறா மற்பொருதுபட்டாரேனும், அவர் கட்டியங்காரனைப் போற் பகையன்மையிற் சிறிதுபாவமுளதென்று, அது தீர்த்தற்குப் பொன்னாற் பண்ணவனுருவமாக்கி விழாச்செய்து களத்துப்பாவம் போக்கினா னென்று கூறிய தேவர், ஈண்டு வேடர் எம்முறை யானுங்க கொல்லத்தகாதவரா தலிற் கொலையின்றென்பது தோன்றக் களத்துப் பாவம் போக்கினா னென்று கூறாராயினா ரென்க. இ-ள். கோள்வாய்மதியத்தைத் திருமால்விடுத்தாற்போல, மைந்தன், அவ்வேடர்மேல் வாட்டழும்புமின்றாக அம்புத்தழும்பு மின்றாகச் சிலையினொலியால் நிரை மீட்டுமீள்வான், மதிபோவ தனையொத்தனென்க. (46) 455. ஆளற்ற மின்றி யலர்தாரவன் றோழ ரோடுங் கோளுற்ற கோவ னிரைமீட்டன னென்று கூற வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திற்ற தேபோ னாளுற்று லந்தான் வெகுண்டானக ரார்த்த தன்றே. தோழர்க்குப் போரின் றேனுங் கூடநின்ற நிலையாற் றோழ ரோடுமென்றார். கோளுற்ற - வேடராற்கொள்ளப்பட்ட - கோவன் - நந்தகோன்; அரசனுமாம். தான்றோற்ற தன்மேலிவன் வெற்றி நிலைநின்றது புண்ணிலே வேலாலெறியப்பட்டு அது முறிந்து நின்றாற் போன்றது. நிரைமீட்டற்கு வெகுண்டமையாற்றேவர் நாளுற்றுலந் தானென்றொரு பெயரிட்டார். சீவகனரசவுரிமை எய்துநாள் வந்துறு தலிற்றனக்கிழைத்த நாளுற்றுலந்தவன் என்றுமாம். இ-ள். தாரவன், தோழருடனே இரண்டுபடையிலும் ஓராளுக்குங் குற்றமின்றாக நிரைமீட்டானென்றுகூற; அதுகேட்டு நாளுற்றுலந்தான் இற்றதுபோல வெகுண்டான்; நகர் உவந்தார்த்த தென்க. (47) வேறு. 456. இரவிதோய் கொடிகொண் மாடத் திடுபுகை தவழக் சுண்ணம் விரவிப்பூந் தாம நாற்றி விரைதெளித் தாரந் தாங்கி யரவுயர் கொடியி னான்ற னகன்படை யனுங்க வென்ற புரவித்தேர்க் காளை யன்ன காளையைப் பொலிக வென்றார். இ-ள். சீவகன்செல்லுகின்றதெருவிலே கற்புடைமகளிர், மாடத்தே கண்ணத்தோடே கலந்து புகைதவழாநிற்கத் தாமத்தை நாலப்பண்ணி விரையையெங்குந்தெளித்து அதனையிங்ஙனங் கோடித்து, தாமும் மங்கலமாக ஆரத்தையணிந்து, துரியோதனன் படைகெடும்படிவென்ற அருச்சுனனையொத்த காளையைப் பொலிகவென்றாரென்க. வில்லும் தேரும் நிரைமீட்டலு முவமம். (48) 457. இன்னமு தனைய செவ்வா யிளங்கிளி மழலை யஞ்சொற் பொன்னவிர் சுணங்கு பூத்த பொங்கிள முலையி னார்த மின்னிவர் நுசுப்பு நோவ விடலையைக் காண வோடி யன்னமு மயிலும் போல வணிநகர் வீதி கொண்டார். இ-ள். செவ்வாயினையுஞ் சொல்லினையுமுடைய வளர் கின்ற இளையமுலையினார், விடலையைக்காண்பதாக நுசுப்பு நோவ ஓடி, அன்னமுமயிலு நின்றாற்போல நகரிற்றெருவைக் கைக் கொண்டு நின்றாரென்க. இது கற்புடைமகளிரொழிந்தோரைக் கூறிற்று. (49) 458. சில்லரிச் சிலம்பின் வள்வார்ச் சிறுபறை கறங்கச் செம்பொ னல்குற்றே ரணிந்து கொம்மை முலையெனும் புரவி பூட்டி நல்லெழி னெடுங்க ணம்பாப் புருவவில் லுருவக் கோலிச் செல்வப்போர்க் காமன் சேனை செம்மன்மே லெழுந்த தன்றே. இன்-அசை. முலையெனும் புரவியென்றார், புரவியின்பின் தேர் செல்லுமாறுபோல முலை சென்று வசீகரித்த பின்பல்குற் பயன் கோடலின். இ-ள். செல்வத்தேநின்று போர்செய்யுங் காமன்சேனை, சிலம்பாகிய பறைகறங்காநிற்கவல்குலாகிய தேரைச்சமைத்து, முலையாகியபுரவியைப்பூட்டி, கண் அம்பாகக் கொண்டு, புருவமாகிய வில்லைமுடியவளைத்து, தலைவன்மேலே மறுபடையாக எழுந்ததென்க. இதனால் அவர் வேட்கைசெலுத்தினமை கூறினார். (50) 459. நூல்பொர வரிய நுண்மை நுசுப்பினை யொசிய வீங்கிக் கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கக்சின் வீக்கிக் கோல்பொரச் சிவந்த கோல மணிவிரற் கோதை தாங்கி மேல்வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளி ரொத்தார். நூலெதிர்த்தற்கரிய. இன்னும் ஐயும் அiச்சொல். கோல் - நரம்பு. இ-ள். இடைதளரும்படிவீங்கி அடிபரந்து தளராதிருந்தமுலையைக் கச்சாற் கட்டி, விரலாற்கோதையைத்தாங்கி, சீவகன் வரவைக்கருதி, இமையாதேபார்த்து, மேனிலத்துநின்றவர் தெய்வமகளிரை யொத்தாரென்க. (51) 460. ஆகமு மிடையு மஃக வடிபரந் தெழுந்து வீங்கிப் போகமும் பொருளு மீன்ற புணர்முலைத் தடங்க டோன்றப் பாகமே மறைய நின்ற படைமலர்த் தடங்க ணல்லார் நாகம்விட் டெழுந்து போந்த நாகர் தம்மகளி ரொத்தார். அஃக-சுருங்கும்படி. பொருள் - சுணங்கு. புணர்முலை - நெருங்கினமுலை வேல்போலுங்கண். எழுந்து - உயர்ந்து. இ-ள். எழுந்து வீங்கி ஈன்ற முலைத்தடம், ஒருபாதியே தோன்ற ஒருபாதி மறைய, ஒருவர்பின்பொருவர்நின்றநல்லார், நாகருலகத்தை விட்டுப்போந்த நாகர்மகளிரை யொத்தாரென்க .(52) 461. வாளரந் துடைத்த வைவே லிரண்டுடன் மலைந்த வேபோ லாள்வாழக் கொழிய நீண்ட வணிமலர்த் தடங்க ணெல்லா நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போற் காளைதன் றேர்செல் வீதி கலந்துடன் றொக்க வன்றே. வாளரம், விசேடம். இ-ள். அராவினவேலிரண்டு தம்மின்மலைந்தனபோல் ஆள்வழக்க மற மலைந்துநீண்டகண்ணெல்லாம், கொடுமை செய்ய மாட்டாது தம்மிற்கலந்து, ஞாயிறுபோம்நெறியை நோக்கும் பூப்போல காளைதேர் செல்கின்ற வீதியிலே சேரநெருங்கின வென்க. (53) 462. வடகமுந் துகிலுந் தோடு மாலையு மணியு முத்துங் கடகமுங் குழையும் பூணுங் கதிரொளி கலந்து மூதூ ரிடவகை யெல்லை யெல்லா மின்னிரைத் திட்ட தேபோற் படவர வல்கு லாரைப் பயந்தன மாட மெல்லாம். வடகம்-அத்தவாளம், உடைவிசேடம், கதிரொளி-திங்களு ஞாயிறும்போலுமொளி. கலந்து-கலப்ப. வகை-குறுந்தெருவு. நிரைத் திட்டது - ஒருசொல். இ-ள். வடகமுதலியன ஒளி தம்மிற்கலக்கும்படி சிலமின்னை நிரைத்தாற் போல மூதூரிடத்தினது கூறுபாட்டினெல்லை யெல்லாவற்றினுமுள்ள மாடமெல்லாமல்குலாரைப் பெற்றன வென்க. இனி, மூதூரெல்லையெல்லாம் வடக முதலியனவொளி தம்மிற்கலக்கும்படி சில மின்னிரைத்தாற்போலவென்றுமாம். (54) 463. மாதுகு மயிலி னல்லார் மங்கல மரபு கூறிப் போதக நம்பி யென்பார் பூமியும் புணர்க வென்பார் தோதக மாக வெங்குஞ் சுண்ணமேற் சொரிந்து தண்ணென் றாதுகு பிணையல் வீசிச் சாந்துகொண் டெறிந்து நிற்பார். .இதுமுதல் “வட்டுடை” அளவுமொருதொடர். காதலொழுகுகின்ற மயிலிற்காட்டின் நல்லார்-பரத்தையர். போதக - போதுக; திருவேபுகுதகவென்றாற்போல. இவன் அரசனென்றறியாதிருந்தும் உலகங்காத்தற்குரியனென்று பூமியும்புணர்க வென்றார். தோதகமாக-வருத்தமாக. நல்லார் மங்கலங்கூறி நம்பி, போதுகவென்பாரும், புணர்கவென்பாரும், எவ்விடமுஞ்சொரிந்து வீசி எறிந்துநிற்பாரும். (55) 464. கொடையுளு மொருவன் கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப் படையுளு மொருவ னென்றுபயங்கெழு பனுவ னுண்ணூ னடையுளார் சொல்லிற் றெல்லா நம்பிசீ வகன்கட் கண்டாந் தொடையலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிற்பார். உம்மையிரண்டும் சிறப்பு. வாட்போரையுடையபோரென்று போரிற்கு விசேடம். பனுவல் - ஆராய்ச்சி. நடை - ஒழுக்கம். தொடையலங்கோதை - கட்டுதலையுடைய அழகியமாலை. கோதாய், நுண்ணூல்வல்லார் கூறிற்று, கொடையிலுமொருவன் கொடுப்பான்; படையிலுமொருவன்கடுப்பான்; இரண்டுமொரு வனிடத்தே நில்லா வென்றேயாயினும், அவ்விரண்டுஞ் சீவகனிடத்தே கண்டேமென்று தம்மிற் கூறி, அவனைத்தொழுதுநிற்பாரும். ஒன்றல்லவெல்லாம் பலவாதலின், இரண்டையும் எல்லா மென்றார். இவற்றிற்குக் கன்னனுமருச்சுனனுங்கொள்க. இனி நிலையாமையையுணர்ந்து கொடைக்குநிகரில்லாதவன் அதனாற் படைக்குநிகரிலனாவனென்று சொல்லிற்றுமாம். (56) 465. செம்மலைப் பயந்த நற்றாய் செய்தவ முடைய ளென்பா ரெம்மலைத் தவஞ்செய் தாள்கொ லெய்துவம் யாமு மென்பா ரம்முலை யமுத மன்னா ரகம்புலர்ந் தயர்ந்து நோக்கித் தம்முறு விழும வெந்நோய் தந்துணைக் குரைத்து நிற்பார். இவனைப்பயந்தமையாற் றவமுடையளென்பாரும்; இவனைப் பெறவிருக்கின்றவள் எம்மலையிலே நின்றுதவஞ் செய்தாள் யாமும் அதனைச் சேர்வேமென்பாரும். மவஞ்செய்தார் கொலென்றும் பாடம். அகம்புலர்ந்து-நெஞ்சுலர்ந்து. தம்முடைய மிக்க சீரிய காமநோயைத் தந்தோழியர்க்குக் கூறிநிற்பாரும். (57) 466. சினவுநர்க் கடந்த செல்வன் செம்மல ரகல நாளைக் கனவினி னருளி வந்து காட்டியாங் காண வென்பார் மனவிரி யல்கு லார்தம் மனத்தொடு மயங்கி யொன்றும் வினவுந ரின்றி நின்று வேண்டுவ கூறு வாரும். நாளையென்றார், இற்றைக்குக்காட்சியாலாற்றுதலின். காட்டி-இகரவீற்று வியங்கோள். செல்வனே, எம்மையருளி நாளைக் கனவிடத்தேவந்து நின் அகலத்தையாங்காணக் காட்டு வாயாயவென் பாரும். மனவு-மணி. தாங்கூறுவன ஒன்றுங் கேட்பாரின்றாகவுமயங்கி நின்று தாம் இவனிடத்துவிரும்பு நுகர்ச்சிகளைத் தம்மனத்தோடு கூறுவாகும். அல்குலார்-இரண்டிடத்துங்கூட்டுக. (58) 467. விண்ணகத் துளர்கொன் மற்றிவ் வென்றிவேற் குரிசி லொப்பார் மண்ணகத் திவர்க ளொவ்வார் மழகளிற னைய தோன்றல் பண்ணகத் துறையுஞ் சொல்லார் நன்னலம் பருக வேண்டி யண்ணலைத் தவத்திற் றந்தார் யார்கொலோ வளிய ரென்பார். மற்று-வினைமாற்று. தோன்றலை மண்ணிடத்து இம் மக்களொவ்வாராதலாற் பின்னை இக்குரிசிலை யொப்பார் விண்ணகத் துளரோ? அஃதறிகின்றிலேமென்பாரும்; இவ்வுலகின் மகளிர் ஈங்கில்லாததொருநலத்தைநுகரவேண்டி இவ்வண் ணலைத் தாஞ் செய்த தவத்தாற்றந்தவர் தேவரோ மக்களோ அவர்யாவராயினும் எல்லாராலுமளிக்கத் தக்காரென்பாரும். (59) 468. வட்டுடைப் பொலிந்த தானை வள்ளலைக் கண்ட போழ்தே பட்டுடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் லடியைச் சூழ வட்டரக் கனைய செவ்வா யணிநலங் கருகிக் காமக் கட்டழ லெறிப்ப நின்றார் கைவளை கழல நின்றார். வட்டுடை - முழந்தாளளவாக வீரருடுக்குமுடைவிசேடம். காசு - புறத்தின் மேகலை. அட்ட அரக்கு. இ-ள். மயிலினல்லார், அமுதமன்னார், அல்குலாராகிய இவர்கள் என்பாருமென்பாருமாய், வள்ளலைக்கண்டபொழுதே காமத்தீயெரிய வாய்கருகிநின்றவர்கள் பின்பு, மேகலைகழல வளைகழல நின்றாரென்க. (60) 469. வார்செலச் செல்ல விம்மும் வரிமுலை மகளிர்நோக்கி யேர்செலச் செல்ல வேத்தித் தொழுது தோடூக் கவிப்பாற் பார்செலச் செல்லச் சிந்திப் பைந்தொடி சொரிந்த நம்பன் றேர்செலச் செல்லும் வீதி பீர்செலச் செல்லு மன்றே. வார்செலச்செல்ல-கச்சுமேலேபோகப்போக. இப்பால் - பின்பு. நிலத்திலே செல்லும்படி செல்லும்படி சிதறிச் சொரிந்தன; தொடி பலவாதலிற்கூறினார். செல்லுமென்பது நிகழ்கால மேயுணர்த்தும். இ-ள். நம்பன்றேர்செல்லுதலாலே யிப்பாலுள்ளமகளிர், மறையு மளவுநோக்கிநின்று, அழகுபோகாநிற்கப் போகாநிற்க ஏத்தித்தொழுது தோளைநாற்ற, அத்தோள்கள் செருகிக் காத்தற்குரிய தொடிகளையுஞ் சொரிந்தன. பின்பு அவனதுதேர், செல்கின்றவீதியின் மகளிர்க்குப் பசப்புப்பரக்க தான்செல்லா நிற்குமென்க. “நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து தோட்பழி மறைக்கு முதவிப் போக்கில் பொலந்தொடி” (நற்.136) என்பர். முன் வளைகழல நின்றார்க்கு வருத்தமிகுதியாற் றொடியுங்கழன்றனவென்க. (61) 570. வாண்முகத் தலர்ந்த போலு மழைமலர்த் தடங்கண் கோட்டித் தோண்முதற் பசலை தீரத் தோன்றலைப் பருகு வார்போ னாண்முதற் பாசந்தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான் கோண்முகப் புலியொ டொப்பன் கொழுநிதிப் புரிசை புக்கான். ஒளியையுடையமுகத்தே பூத்தமலர்போலுங் குளிர்ந்தகண். புரிசை - தன்மனையைச்சூழ்ந்த மதில். இ-ள். அங்ஙனம்பசந்தவர் தந்தோளிற்பசலைதீரும்படி தோன்றலைப் பருகுவார்போலே கண்ணாலே வளைத்துப் பார்த்து நடுங்கினராய் நாணாகிய முதற்றளை தடுத்தலாலே செல்ல மாட்டாது நிற்ப, தான் நில்லானாய்க் கொல்லு முகத்தையுடைய புலி போல்வான் புரிசைக்குள்ளே புக்கானென்க. (62) 471. பொன்னுகம் புரவி பூட்டு விட்டுடன் பந்தி புக்க மன்னுக வென்றி யென்று மணிவள்ள நிறைய வாக்கி யின்மதுப் பலியும் பூவுஞ் சாந்தமும் விளக்கு மேந்தி மின்னுகு செம்பொற் கொட்டில் விளங்குதேர் புக்க தன்றே. ஏந்தி - ஏந்த. இ-ள். புரவி நுகம்பூட்டுதல்விட்டுப் பந்தியிலே புக்கான். பின்பு தேருக்கு மதுவை வட்டினிறையவார்த்து, அம்மதுவாகிய பலி முதலிய வற்றை வென்றிமன்னுகவென்றேந்த, அத்தேர் மகிழ்ந்து கொட்டிலிலே புக்கதென்க. (63) 472. இட்டவுத் தரிய மெல்லென் றிடைசுவல் வருத்த வொல்கி யட்டமங் கலமு மேந்திரி யாயிரத் தெண்ம ரீண்டிப் பட்டமுங் குழையு மின்னப் பல்கல னொலிப்பச் சூழ்ந்து மட்டவிழ் கோதை மார்பின் மைந்தனைக் கொண்டு புக்கார். ஒல்கி-எதிர்கொண்டு. இ-ள். ஆயிரத்தெண்மரீண்டி, எட்டு மங்கலத்தையுமேந்தி, மின்ன ஒலிப்ப உத்தரியமிடையையும் சுவலையும்வருத்த எதிர்கொண்டு, சூழ்ந்து, மைந்தனை உள்ளே கொண்டு புக்கார ரென்க. “சாமரை தீபந் தமனியப் பொற்குடங், காமர் கயலினிணை முதலாத்-தேமருவு, கண்ணாடி தோட்டி கதலிகை வெண்முரச, மெண்ணிய மங்கலங்க ளெட்டு.” (64) 473. தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக் காய்கதிர் மணிசெய் வெள்வேற் காளையைக் காவ லோம்பி யாய்கதி ருமிழும் பைம்பூ ணாயிரச் செங்க ணான்றன் சேயுய ருலக மெய்தி யன்னதோர் செல்வ முற்றார். பிள்ளை உயர்ச்சிமிகுதிக்குக் காரணமானதந்தை; “சான்றோனாக்குத றந்தைக்குக் கடனே” (புறநா.312) என்றார் பிறரும். காய்தல் - எறித்தல். இ-ள். தாயுந் தந்தையும் பிள்ளையையெதிர்கொண்டுபுக்கு, ஆலத்தி முதலியவற்றாலேபரிகரித்து, உலகைப் பெற்றாலொத்த தோர் செல்வத்தைத் தாமுற்றாரென்க. (65) 474. தகைமதி யெழிலை வாட்டுந் தாமரைப் பூவி னங்கட் புகைநுதி யழல வாட்கட் பொன்னனாள் புல்ல நீண்ட வகைமலி வரைசெய் மார்பின் வள்ளலைக் கண்டு வண்டார்த் தொகைமலி தொறுவை யாளுந் தோன்றன்மற் றின்ன கூறும். 475. கேட்டிது மறக்க நம்பி கேண்முதற் கேடு சூழ்ந்த நாட்டிறை விசயை யென்னு நாறுபூங் கொம்ப னாளை வேட்டிறைப் பார மெல்லாங் கட்டியங் காரன் றன்னைப் பூட்டிமற் றவன்ற னாலேபொறிமுத லடர்க்கப் பட்டான். இவையிரண்டுமொருதொடர். தான்மதிக்குத்கெடாதே மதியைத்தான் கெடுக்கும் பொற்றா மரையிற்றிருப் பொருந்தும்படி பெருத்த மார்பினையுடைய வள்ளலைக் கண்டு சிலமொழிகளைக் கூறாநிற்கும் நிரையை யாளும் வண்டாரை யுடைய நந்தகோனென்க. மற்று-வினைமாற்று. இன்ன - இத்தன்மையவாகிய மொழிகளை; இன்னகேளென மேலேகூட்டுக. பொறிமுதல்-இருவினையுஞ்செய்தற்குக் காரண மான வுயிர்; “தொழின்முத னிலையே” (தொல் வேற்றுமை.29) என்றார்போல நின்றது. இ-ள். வள்ளலைக்கண்டுகூறுந்தோன்றல், நம்பி, இதனைக் கேட்டு மறப்பாயாக; பின்னை இன்னகேட்பாயாக, அவ்விரண்டும் யாவை யெனின், கொம்பனாளைவிரும்பிப் பல்லுயிரைக் காக்கின்றபாரத்தை யெல்லாங் கட்டியங்காரனைப் பூட்டித் தனக்குமுன்னே நாட்டிற்குக்கேடு சூழ்ந்த இறை அவனாலே உயிரைப்போக்கப்பட்டானென்க. (66-67) 476. கோலிழுக் குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக் காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன் மால்வழி யுளதன் றாயின் வாழ்வினை முடிப்ப லென்றே யாலம்வித் தனைய தெண்ணி யழிவினு ளகன்று நின்றேன். காலோடி வீழ்ந்தேனாக வீழ்ந்தென்றது - கட்டியங்காரன் இவனரசனோடிறந்தானென்று தன் சுற்றத்தையழிப்பனென்று கருதி. இ-ள். அவனாலுயிரைப்போக்கப்பட்ட அன்றே வரையேறி வீழ்ந்து உயிரைப் போக்கலுற்றயான், மால்வழி ஆலம்வித்துப் போலத் தெறித்துப் போய் மறைந்து பின்றோன்றினதில்லையாயின் உயிரைப் போக்குவலென்றே எண்ணி, வருத்தத்தே மிக்குநின்றே னென்றானென்க. தேவிக்குப் பிள்ளையுண்மையறிதலிற் கூறினான். இது கேட்டு மறக்கவென்ற மொழி. (68) 477. குலத்தொடு முடிந்த கோன்றன் குடிவழி வாரா நின்றே னலத்தகு தொறுவி னுள்ளே னாமங்கோ விந்த னென்பே னிலக்கண மமைந்த கோதா வரியென விசையிற் போந்த நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள். குலம் தோன்றுதலருமைப்பற்றிப் பின்னுமுடிந்தவென்றான். தன்குலமெல்லாம் இப்பொழுது தானாய்நிற்றலின் வாரா நின்றோ னென்றான். நலத்துக்குத் தக்க. இ-ள். யான், கோன்குடிவழிவாராநின்றேன்; இடையிடத் தேன்; பெயர்கோவிந்தனென்றுகூறப்படுவேன்; கோதாவரி யென்றுகூறிப் புகழாலெங்கும்பரந்த இலக்கணமைந்த என் மனைவி பெற்றநங்கை கோவிந்தையென்று பெயர் கூறப்படுவா ளென்க. (69) 478. வம்புடை முலையி னாளென் மடம கண் மதர்வை நோக்க மம்படி யிருத்தி நெஞ்சத் தழுத்தியிட் டனைய தொப்பக் கொம்படு நுசுப்பி னாளைக் குறையிரந் துழந்து நின்ற நம்படை தம்மு ளெல்லா நகைமுக மழிந்து நின்றேன். இ-ள். முலையினாளாகிய என்மகணோக்கம் எல்லார்க்கும் அம்பைத் தோளடியிலேசெல்லவலித்து நெஞ்சிலே அழுத்திய தன்மையொத்தலாலே, அந்நுசுப்பினாளைப் பெறவேண்டு மென்று வருந்திநின்ற நம் ஆயரிடத்தெல்லாம் முகச்செவ்வியின்றி மறுத்து நின்றேனென்க. தான்மகட்கொடுத்தலின் நம்படை யென்றான். சீவகன் விரும்பிக்கோடற்கு மகளை இங்ஙனஞ் சிறப்பித்துக் கூறினான். (70) 479. பாடகஞ் சுமந்த செம்பொற் சிலம்படிப் பரவை யல்குற் சூடக மணிந்த முன்கைச் சுடர்மணிப் பூணி னாளை யாடகச் செம்பொற் பாவை யேழுடன் றருவ லைய வாடலில் வதுவை கூடி மணமக னாக வென்றான். இ-ள். ஐயனே, அடிமுதலியவற்றையுடைய கோவிந்தையைப் பாவையேழுடனேதருவேன். குறைவற்றமணம் பொருந்தி மண மகனாவாயாகவென்றானென்க. இது இன்னவாகியமொழியைக் கேளென்றது. என்றானென் பதனை, “அகன்று நின்றேன்” (சீவக.476)என்பதனோடுங் கூட்டுக. (71) வேறு. 480. வெண்ணெய்போன் றூறினியண் மேம்பால்போற் றீஞ்சொல்ல ளுண்ண வுருக்கிய வானெய்போன் மேனியள் வண்ண வனமுலை மாதர் மடநோக்கி கண்ணுங் கருவிளம் போதிரண்டே கண்டாய். இதுமுதல் “குலநினையல்” அளவுமொருதொடர். உண்டற்குமேவும்பால்; ஈற்றுமிசையுகர மெய்யொடுங் கெட்டது. உண்ண - தீய. உம்மை - சிறப்பும்மை. 481. சேதா நறுநெய்யுந் தீம்பால் சுமைத்தயிரும் பாதால மெல்லா நிறைத்திடுவன் பைந்தாரோய் போதார் புனைகோதை சூட்டுன் னடித்தியை யாதாவ தெல்லா மறிந்தருளி யென்றான். சுமைத்தயிர் - ஆடைத்தயிர். யாதாவது - இத்தால் வருந் தீங்கென்?. 482. குலநிலைய னம்பி கொழுங்கயற் கண் வள்ளி நலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருக னிலமகட்குக் கேள்வனு நீணிரைநப் பின்னை யிலவலர்வா யின்னமிர்த மெய்தி னான்றே. நப்பின்னை-அவள்பெயர். ந-சிறப்புப்பொருளுணர்த்துவ தோரிடைச் சொல், நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற் போல. நம்பின்னை - விகாரமுமாம். இ-ள். பைந்தாரோய், நம்பி, முலையினையுங் காதலினையு முடையமடனோக்கி வெண்ணெய் போற்குழைந்தினியள்; சொல்லள்; மேனியள். அவையின்றி அவள் கண்களும் பூவிரண் டேகாண்; அவளை வரைந்தால் யாது ஆவது? யாமறிய முருகன் வள்ளிநல நுகர்ந்தானன்றே, திருமால்பின்னையைப் புணர்ந்தா னன்றே, ஆதலாற் குலத்திற்றாழ்வுகருதாதொழிக; இனி யான் கூறினவெல்லாந் திருவுள்ளம்பற்றி நின்னடிச்சியைக் கோதை சூட்டுவாயாக; சூட்டு மிடத்துக் கலியாணஞ்செய்தற்குச் சிறியே னல்லேன்; நெய்யும் பாலும் தயிரும் பாதாளமெல்லாம் நிறைப்பே னென்றானென்க. மணமகனாகவென்றவிடத்து முகச்செவ்விகாணாமையிற் பின் இது கூறி உடம்படுத்தினான். (72-74) வேறு. 483. கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லான் முறிமிடை படலை மாலைப் பொன்னிழை மகளி ரொவ்வா தவரைமுன் புணர்தல் செல்லா ரின்னதான் முறைமை மாந்தர்க் கெனமனத் தெண்ணி னானே. இ-ள். நங்குலத்தோர், வகைமாலையினையும் இழையினை யுடைய மகளிரை வரையுமிடத்து, கன்னியரிற் குலத்தின் மிக்காருடைய அழியாத மார்பத்தை எதிர்ப்பட்டாராய் முயங்கினல்லது, தங்குலத்திற்கொவ்வாதாரை முற்படவரையார்; அதுவுமன்றித் தேவரை யொழிய மக்கட்கு முறைமை இத்தன்மை யாயிருந்த தெனக் கருதிப் பின்பு, தன்மனத்தே பதுமுகனுக்குக் கொடுப்பதாக வெண்ணினானென்க. (75) 484. கோட்டிளங் களிறு போல்வா னந்தகோன் முகத்தை நோக்கி மோட்டிள முலையி னாணின் மடமக ளெனக்கு மாமான் சூட்டொமு கண்ணி யன்றே யென்செய்வா னிவைகள் சொல்லி நீட்டித்தல் குணமோ வென்று நெஞ்சகங் குளிர்ப்பச் சொன்னான். சூட்டொடு கண்ணியன்றேயென்றது-இடுந்தன்மையன்றிச் சூட்டுந் தன்மையோடு கூடிய கண்ணியல்லவோவென்றும் நெற்றிச் சூட்டுங்கண்ணியுமல்லவோ வென்றுமிரண்டு பொருளுணர்த்தும்; உணர்த்தவே மார்பிற்கு மாலையிடுகவென்றும், தலைக்கு மாலை சூட்டுகவென்றும் பெரும்பான்மையும் வழக்குநடத்தலின், தலைமேல் வைக்கப்படும் கண்ணியென்றானாக நந்நகோன் கருதினானாம். நெற்றிச்சூட்டு ஆடவர்க்காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க் காந்தன்மையும்போல, தன்குலத்திற்காகாமையிற் சூட்டின்றமையும், பதுமுகன் குலத்திற்குச் சிறிதுபொருந்துதலிற் கண்ணியின்றன்மையு முடையளென்று சீவகன்கருதினானாம். கோபாலரிலும் வாணிகஞ் செய்வாருளராதலின். இ-ள். களிறுபோல்வான், நந்தகோன்முகத்தைப்பார்த்து, முலை யினாளாகிய நின்மகள் மாமான், எனக்குச் சூட்டொடு கண்ணியல்லவோ, இவைகள்சொல்லி நீட்டித்தல் செய்வானேன், இதுகுணமோவென்று, நெஞ்சிடங்களிரும்படி கூறினானென்க. இனி மாமன், எனக்குச் சூட்டொடு கண்ணியன்றே யென்றது: தனக்காகாமையிற்புலாலும், பமுமுகற்காதலிற் பூவுமாகக் கருதினா னென்றுமாம். இனி ஆமான்சூட்டுமாம். இனிமாவடசொல்லாக்கி ஆகாதென்றுமுரைப்பர். (76) 485. தேன்சொரி முல்லைக் கண்ணிச் செந்துவ ராடை யாயர் கோன்பெரி துவந்து போகிக் குடைதயிர் குழுமப் புக்கு மான்கறி கற்ற கூழை மௌவல்சூழ் மயிலைப் பந்தர்க் கான்சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக வென்றான். துவரூட்டினவாடை. தயிர்முழங்கப்புகுதல் நன்னிமித்தம். கறிகற்ற - கடித்தல் கற்ற. மௌவல் - மல்லிகைவிசேடம். மயிலை - இருவாட்சி. கடிவினை - சமாவர்த்தநம். இ-ள். முல்லைத்தாரானாகிய ஆயர்கோன் உவந்துபோய்ப் புக்கு பந்தரிலே கடிவினை முடிவதாகவென்றானென்க. (77) 486. கனிவளர் கிளவி காமர் சிறுநுதல் புருவங் காமன் குனிவளர் சிலையைக் கொன்ற குவளைக்கண் கயலைக் கொன்ற வினியுள ரல்ல ராய ரெனச்சிலம் பரற்றத் தந்து பனிவளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார். குனிவு-விகாரம். இ-ள். மாதர், கனிந்தமை தோற்றுகின்ற கிளவியையுடைய யாளுடையநுதலும் புருவமும் சிலையைக்கெடுத்தன; கண் கயலைக் கெடுத்தன. இப்பருவங்கண்டு ஆயர் உயிர்கொண்டிருப் பாரல்லரென்று சிலம்பொலியாநிற்கப் பாவையைத்தந்து, பரவி வைத்தாரென்க. (78) 487. நாழியு ளிழுது நாகான் கன்றுதின் றொழிந்த புற்றோய்த் தூழிதோ றாவுந் தோழும் போன்றுடன் மூக்க வென்று தாழிருங் குழலி னாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி மூழைநீர் சொரிந்து மொய்கொ ளாய்த்திய ராட்டி னாரே. இ-ள். ஆய்ச்சியர், குழலினாளைப் பசுவுந்தொழுவும் போலே ஊழிதோறும் நீயுமுன்கணவனுஞ் சேரமூப்பீராக வென்று வாழ்த்தி, நாழியுளிருந்த நெய்விழுதை நாகாகியபசுவின் கன்றுதின்றொழிந்த புல்லாலேதோய்த்து, அந்நெய்யைத் தலையிலே வார்த்து, மூழையாலே நீரைச்சொரிந்தாட் டினாரென்க. (79) 488. நெய்விலைப் பசும்பொற் றோடு நிழன்மணிக் குழையு நீவி மைவிரி குழலி னாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப் பெய்தனர் பிணையன் மாலை யோரிலைச் சாந்து பூசிச் செய்தனர் சிறுபுன் கோலந் தொறுத்தியர் திகைத்து நின்றார். இ-ள். கருமைவிரிந்தகுழலினாளை, நெய்விலையாலுண் டான பொற்றோட்டையுங்குழையைநீக்கி மங்கலமான கடிப்பி ணையையிட்டு மாலையையிட்டனராய் ஓரிலையி லிடுவித்து வந்தசந்தனத்தையும் பூசிக் கோலஞ்செய்தார்; அதுகண்டு ஆய்ச்சியர் திகைத்துநின்றாரென்க. (80) 489. ஏறங்கோண் முழங்க வாய ரெடுத்துக்கொண் டேகி மூதூர்ச் சாறெங்கு மயரப் புக்கு நந்நகோன் றன்கை யேந்தி வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான் பாறுகொள் பரிதி வைவேற் பதுமுக குமரற் கென்றே. இ-ள். ஆயர், ஏறுகோட்பறைமுழங்காநிற்க அவளை யெடுத்துக் கொண்டு மூதூரெங்குஞ் சாறயர ஏகிப் பின்பு கந்துகன் மனையிலே புகுதலின், நந்தகோன் தன் கையிலே கலசத்தையேந்தி நீரைச் சொரிந்தான்; வீரனும் பதுமுகனுக்கென்றுகூறி யேற்றா னென்க. வீறு-வேறொன்றிகில்லா அழகு.மணஞ்செய்தமை கூறினார். (81) 490. நலத்தகை யவட்கு நாகா னாயிரத் திரட்டி நன்பொ னிலக்கணப் பாவை யேழுங் கொடுத்தனன் போக விப்பா லரைத்தது காமன் சேனை யருநுனை யம்பு மூழ்க முலைக்குவட் டிடைப்பட் டாற்றான் முத்துக முயங்கி னானே. நலத்தகை-நன்மையையுடைய அழகு. காமன்சேனை-கண்ணும் முலையும். இ-ள். கோவிந்தைக்குப் பசு இரண்டாயிரமும், பொற்பாவை ஏழுங் கொடுத்தனனாய் நந்தகோன்போக, இவ்விடத்தே பதுமுகனைக் காமன்சேனை வருத்திற்று; அவ்வளவிலே அவனம்பு தைத்தலாலே ஆற்றானாய் முலைச்சிகரங்களுக்கு நடுவே முத்துகவீழ்ந்து முயங்கினானென்க. (82) வேறு. 491. கள்வாய் விரிந்த கழுநீர்பிணைந் தன்ன வாகி வெள்வேன் மிளிர்ந்த நெடுங்கண்விரை நாறு கோதை முள்வா யெயிற்றூற முதம்முனி யாது மாந்திக் கொள்ளாத வின்பக் கடற்பட்டனன் கோதை வேலான். கள்வாய்விரிந்த-தேன் வாயிலே பரந்த. இ-ள். வேலான், இன்பத்தைச்செய்தலின் அலர்கின்ற கழுநீரிரண்டு சேர்ந்தாற்போன்றதன்மைவாய்த் துன்பத்தைச் செய்தலின் வேல்போற் பிறழ்ந்த கண்ணினையுடைய மணந் தோற்றுகின்ற கோதையுடைய எயிற்றின்மாறாத அமுதத்தை வெறாமலுண்டு, கரைபுரண்ட இன்பக்கடலிலே அழுந்தினா னென்க. (83) 492. தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர் தாம்பாற் படுத்த வமிர்தோதட மாலை வேய்த்தோ ளாம்பாற் குடவர் மகளோவென் றரிவை நைய வோம்பா வொழுக்கத் துணர்வொன்றில னாயி னானே. திரை கடைகிறகாலத்துப் பிறந்தது. தாம்பால், ஆம்பால் இரண்டும், விகாரம். இனி ஆம்பால் - பெரும்பாலுமாம். இ-ள். இவள் தேவர் கடலைக்கடைந்து தம்மிடத்தே அகப்படுத்த அமுதமோ! அன்றி அழகியபாலையையுடைய இடையர்மகளோ! என்று நயப்புரைத்துப் பின்னும் பரிகரிக்க வொண்ணாத புணர்ச்சி யொழுக்கத்திலே மாலையினையுந் தோளினையுமுடைய அரிவை அவசமாகத் தானும் அறிவு மயங்கினானென்க. இவ்விலம்பகம் வீரமகளைச் சேர்ந்தமைகூறிற்று. (84) கோவிந்தையாரிலம்பகம் முற்றிற்று. மூன்றாவது காந்தருவதத்தையாரிலம்பகம். 493. இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச் சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன் பொங்குதிரை மீதுபொரு மால்களிறு போன்றோர் வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான். இவ்விடத்தே பிள்ளையாருஞ் சுற்றமுமிருந்து இனிதாக வாழா நிற்க; நாய்கன் பரிவுதீர்ந்து மட்டவிழ்கோதையோடே மனையிலே மகிழ்ந்து புக்கானெனக் கூட்டி, “கட்டழல்” என்னுங் கவியளவு மொருதொடராக்குக. இதற்குக் காரணமென்னை யோவெனின்; ஆசிரியன் “ஆண்டுநேரெல்லை” என்றுகூறிய பின்பு, சுதஞ்சணனும் “பன்னிருமதியின்” என்றும் “ஆறிருமதியின்” என்றுங் கூறினமையால், ஆசிரியன் முந்நூற்றறுபத்தைந்து நாளோர்யாண்டான சௌராமான பட்சம் பற்றிக் கூறினா னென்றும், தேவன் மதியினென்று மதியைக் கருதிக் கூறினமையிற் சாந்திரமான பட்சம்பற்றிக் கூறினானென்றும் முணர்க. அங்ஙனங் கூறுகின்ற பொழுது ஆசிரியன் மாசித்திங்களில் முதற்றேதியில் அபரபட்சத்துக் தசமியிலே கூறினானென்றும், தேவன் பங்குனித்திங்களில் நாலாந்தேதியில் அபரபட்சத்துச் சதுர்த்த சியிலே கூறினானென்றுங்கொள்க. எனவே ஆசிரியன் யாண் டென்றது முந்நூற்றறுபத்தைந்து நாளாதலானும், தேவன் பன்னிருமதியி னென்றது மாசித் திங்களிற்றோன்றிய பங்குனிப் பிறைமுதலாக மேல் வருகின்ற மாசியிற் பங்குனிப் பிறையளவும் பன்னிருமதியா மாதலானும், இருவரும் இரண்டுதிங்களிற் கூறினாரேனும் ஓரியாண் டென்பது பெற்றாம். சௌரமான பட்சத்தாலே ஐந்து நாளேறுகின்ற தாகலின், ஆசிரியன் கூறியது அம்மாசியில் உவாவின் முன்கழிந்த தசமியிலெனக்கொள்க. இது “நானக்கிடங்கு” என்னுங் கவியானு முணர்க. மாசித்திங்களில் ஆறாந்தேதி அமாவாசைமுதல் பங்குனித் திங்களில் ஐந்தாந் தேதிவரை சாந்திரமான பட்சத்தாற் பங்குனியா கையாலே மண்டபமெடுத்தலும் விவாகங்களுமுரியவாயின. இவ்விடத்தில் சௌரமானபட்சத்தான் மாசித்திங்கள் கொள்ளார்; சாந்திரமான பட்சஞ் சிறந்ததாகலின், இங்ஙனமிருவரும் ஆண்டுக் கூறு கின்ற நாளிடையில் நடந்த சரிதமாகிய நிரைமீட்டலும், தந்தையையுங் குணமாலையையும் வரைதலும் சிறைவிடுத்தலு நிகழ்ந்தன மாசியிலும் பங்குனியிலே சிறிதுநாளிலு மென்பதுணர் தற்கு மேலே “பங்குனிப்பருவஞ்செய்தான்” என்றார். மேலே தோழர் பிள்ளையார்க்குத் தந்தையதோலை கொடுத்ததிலே “ஐந்துமதி யெல்லையினை யாண்டுடை யனாகி” எனவே இவ்வோலை யெழுதுவதற்கு முன்னே ஏழுதிங்கள்சென்றனவென்றாராதலின் இராசமாபுரத்தே முப்பந்தைந்து நாளும், “இங்ஙன மிரண்டு திங்களேகலும்” என்றும் “கழிந்தனவிரண்டு திங்கள்” என்றுங் கூறுதலாற் பதுமையாரிடத்துங் கேமசரியாரிடத்தும் பங்குனி முதலாக நான்குதிங்களும், இவ்வோலையெழுது தற்கு முன்னே கனகமாலையாரிடத்து இரண்டு திங்களும், ஆக ஏழுதிங் களுஞ் சென்றனவென்று தேவர் திங்களைப்பகுத்துக் கூறுதலின், ஈண்டு ஸ்ரீதத்தனுக்கு “அணங்கனாரோ டறுமதி கழிந்த பின்றை” என்றல் பொருந்தாதென்பது பற்றி, முன் நிகழ்ந்தோர் கதை தேவர் கூறுகின்றாரென்று பொருளுரைத்தல் வேண்டிற்றென்று கொள்க. “சங்கதரு” முதலாக “மடவார்கள்கடனென்றெழுந்து போந்தான்” இறுதியொருதொடர். உடைநாய்கன் - வினைத்தொகை; சங்கமென்றும் இலக்கத் தை மேன்மேலே தருகிற பெரியபொருள் மிகவுங்கெட்டநாய்கன். “கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக் - குலத்திற் குன்றாச் செல்வர்” என்று இளங்கோவடிகளுங் கூறினமையின், பொருளு டையவன்றான் இருந்துபொருள்தேடுதலும் பொருளில்லாத வன்றான் கலத்திற்சென்று பொருள்தேடுதலும் வேண்டுதலின், இவனையும் “ஓர்வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்” என்றும், “ஊனமெனு மின்றியினி தோடு கவி தென்றான்” என்றும், ஒருவங்கமே யுளதாகத் தேவர்கூறினமை யாற் பொருளின்றித் தான் செல்கின்றானென்றுணர்க. பொருமால் களிறுபோன்று பொங்குதிரைமீதே ஒருவங்கத்தோடு போய்வந்து நிதிதரலுற்றா னென்க. 494. மின்னொழுகு சாயன்மிகு பூட்பதுமை கேள்வான் கொன்னொழு வேலியவ தத்தன்குளிர் தூங்குந் தன்வழி யகாளைசீ தத்தனவன் றன்போற் பொன்னொழுகு குன்றினுறை போர்ப்புலியொ டொப்பான். மின்னொழுகுசாயல்-ஒளிபரக்குஞ்சாயல்.சாயலினையும் பூணினையுமுடைய பதுமைகேள்வன். பதுமை - ஸ்ரீதத்தன் மனையாள். கொன்னொழுகுவேல்-அச்சம்பரக்கின்றவேல். குளிர்-திசைச்சொல்; குளிரு மென்னும் வினைச்சொல் குளிரெனத் தொழின்மேனின்றது; இருப்பென்றவாறு; செப்புப்போல. இப்பொழுது மனையிடத்திருப்புச்செறியும் யவதத்தன்வழியில் ஸ்ரீதத்தன். அ-அசைச்சொல். அவன்றன்போற்காளை-தந்தையை யொக்குங்காளை. பொன் அசும்பாகவொழுகுங் குன்றிலே தங்கும் புலியோடொப்பன். 495. இம்மியன நுண்பொருள் களீட்டிநிதி யாக்கிக் கம்மியரு மூர்வர்களி றோடைநுதல் சூட்டி யம்மிமிதந் தாழ்ந்துசுரை வீழ்ந்ததறஞ் சால்கென் றும்மைவினை நொந்துபுலந் தூடலுணர் வன்றே. இம்மி-மத்தங்காய்ப்புல்லரிசி; குறைந்ததோரெண்ணுமாம். பிறர் தொழில் செய்வாருஞ் சிறியபொருளைத்தேடிப்பெரிய பொருளாக்கி, அதனானே களிற்றினுதலிலே பட்டத்தைக்கட்டி, அதனையேறுவர். இதனால் நெடுங்காலமாகப் பொருள் தேடு மாறு கூறினான். ஆழ்தற் குரியஅம்மிமிதந்து மிதத்தற்குரியசுரை ஆழ்ந்து வீழ்ந்ததென்றது உயர்ந்தோர் வாழாதே தாழ்ந்தோர் வாழ்ந்ததனை. 496. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லை தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி னெள்ளினர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே. முயலுமுள்ளமுடையான். வருந்தாமலொருநாளே வெள்ள மென்னு மெண்ணையுடைய பெரும்பொருடிரளும். இதனால் ஒருநாளை முயற்சியிலும் வருமென்றான், முயற்சியின் பெருமை கூறுதலின். இனி நல்வினைவந்துதவுவதொருநாளிலே யென்று மாம். ஏக்கழுத்தம்-தலையெடுப்பு; “ஏ பெற்றாகும்”(தொல்.உரி.7) என்றார். 497. செய்பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிருமுண்ணு மையமிலை யின்பமற னோடவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே. செறுவார்-செறப்படுவார். மற்று-அசைநிலை. எவையு மென்றும் பாடம். 498. தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ னீங்கன்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான். வாவலுறையுமரம்-ஆல் - தான்கெட விழுது தாங்கினாற்போல. தீச்சொல் - இவன்பிறந்து இக்குலங்கெட்ட தென்னுஞ்சொல். நீங்கல் - தாங்காது போதல். இ-ள். ஸ்ரீதத்தன், காளை, புலியோடொப்பன், பதுமை கேள்வன், அவன் நிதியங்கெட்டநாய்கனாதலால், தான்போய்ப் பொருடரக் கருதினான்; அங்ஙனங்கருதிக் கம்மியருங் களிறேறு வராதலான் முயற்சியேநன்றென்று கருதாதே வாழாதார் வாழக் காண்டலின் முயற்சிவேண்டா, அறமேயமையுமென்றுகருதி முற்பிறப்பில் நல்வினைசெய்யப்பெற்றிலே மென்றுநொந்து அம்முயற்சியை வெறுத்துக் கலாய்த்திருத்தல் ஒருவர்க்கறிவன்று; அதுவேயுமின்றி உள்ளமுடையான் முயற்சியைச்செய்ய ஒரு நாளே நிதிதிரளும்; அந்நிதியாலே எல்லாத்துப்புரவுகளுமுளவாம்; அங்ஙனமெல்லாமாகின்ற முயற்சியை விட்டுப்புரைபட்ட உணர்வினவர்கள் வருவது இடைத்தங்காதென்னுஞ் சொல்லான் மடிந்திருப்பின், அவ்விருப்புப் பகைவர்க்கு ஒரு தலையெடுப்புப் பெற்றாற்போல இனிதாயிருக்கும்; அங்ஙனம் அவர் தலை யெடாதபடி எல்லாரும் பெற்றாற்போல இனிதா யிருக்கும்; அங்ஙனம் அவர் தலையெடாதபடி எல்லாரும் பொருளைத் தேடுக; தேடினாற் பகைவரைக்கொல்லும்படை அதனையொழிய இல்லை; தான் அவ்வரிடத்திருந்தேயும் பகைவரைக்கொல்லும், அதுவன்றித்தானுளவாக இன்பத்திற் கையமில்லையாதலின், அறத்தோடே முற்கூறிய வற்றை யுமுண்டாக்கு மெய்யாகியபொருளே நன்குமதிக்கும் பொருள்; ஒழிந்த பொருள் நன்கு மதிக்கும் பொருள வல்லவாதலின், இப்பொருளைக்கொண்டு தங்குலநைகிறவளவிலே ஆலமரத்தின் வீழ்போலத் தீச்சொற் பிறவாமைத் தங்குலத்தைத் தாங்கல் அதனுட் பிறந்தவருடைய கடனாகும்; தங்குலத்தைத்தாங்காது போதல் பேதையரது கடனாகுமாதலான், யானுமுயன்று பொருள்தேடி என்குலத்தைத் தாங்குவேனென்று கூறி எழுந்திருந்து பண்டசாலை யேறப் போந்தானென்க. இதையெல்லாம் தன் பொருட்குறைபாட்டாற் கூறினான். (1-6) 499. மோதுபடு பண்டமுனி யாதுபெரி தேற்றி மாதுபடு நோக்கினவர் வாட்கண்வடு வுற்ற தாதுபடு தார்கெழிய தங்குவரை மார்பன் கோதுபட லில்லகுறிக் கொண்டெழுந்து போந்தான். மாதுபடு-பெருமைபட்ட. வடுவுற்றவாட்கண்டங்குமார்பு-வடுவகிரை யொத்த கண் தங்குமார்பு; வரைபோலுமார்பு; தார்கெழியமார்பு. கண்ணொளிமழுங்குதற்குக் காரணமானதா ருமாம். இ-ள். மார்பன் பண்டத்தைப்பெரிதாகவேற்றிக் குற்றமற்ற நன்முகூர்த்தத்தையுங் கைக்கொண்டு பண்டசாலையினின்றுங் கடற்கரையேறப் போந்தானென்க. (7) 500. வானமுற நீண்டபுகழ் மாரிமழை வள்ள றானமென வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி நானமிக நாறுகமழ் குஞ்சியவ னேறி யூனமெனுமின்றியினி தோடுகவி தென்றான். இதனால் முன்பு பலகலங்களுந் தீங்குற்றனவென்பது பெற்றாம். மாரிமழை-மாரிகாலத்து மழை. கமழ் குஞ்சி - இயல்பான மணங் கமழ்குஞ்சி. இ-ள். குஞ்சியவனாகியவள்ளல் தானமென்றொரு பெயரைவிட்டு வேண்டுவார் வேண்டுவனகொடுத்து மரக்கலத் தேறித் தெய்வத்தை நோக்கி இக்கலம் தீங்கு சிறிதுமின்றி நன்றாக வோடுவதாக வென்றானென்க. (8) 501. ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன் றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க் கோடுபறை யார்ப்பக்பொழுந் தாட்பவளங் கொல்லா வோடுகளி றொப்பவினி தோடியதை யன்றே. இ-ள். கொடியணிந்தகூம்பிலே மூன்றுபாய் காற்றுமுகக் கும்படி குழையக் கட்டுதலாலே முந்நீர்ப்பிறந்த சங்கும்பறையும் முழங்கா நிற்கப் பவளக்கொடியை யறுத்து, ஓடுகின்றகளிறு போலக் கம்மகாரர் கொண்டாடும்படி நன்றாக வோடிற்றென்க. இதனாற் காற்றுமுகந்த பொழுது ஓடினவிசைகூறினார். (9) 502. திரைகடருஞ் சங்குகலந் தாக்கித்திரண் முத்தங் கரைகடலுட் காலக்கணை பின்னொழிய முந்நீர் வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவி னிரையிடறிப் பாய்திரிய வேகியதை மாதோ. முந்நீரை ஒருமலை நில்லாதே கிடந்து கிழித்ததென்னும் படி கிழித்து, இஃது இல்பொருளுவமை. இ-ள். அக்கலம் சங்குதன்னைத் தாக்குதலாலே அச்சங்கு ஒலிக்கிறகடலிலே முத்தைச்சொரிய அம்முந்நீரைக்கீறித் தீவினொ ழுங்கையிடறிக் குதித்துத் தன்மேலிருந்தெய்த அம்புபின்னே வீழக் கிழியப்போயிற்றென்க. இதனாற் கடுகின விசை கூறினார். (10) 503. மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பா ரன்னமொடுந் தோகைநடை சாயலமிர் தன்னார் துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க நன்மையுடை நன்பொன்விளை தீபமடைந் தஃதே. இ-ள். விளக்கத்தான் மின்னையும், நுடக்கத்தாற் கொடி யையும், மென்மையான் மலரையுமொப்பார்; நடையுஞ் சாயலு மன்னத்ததையு மயிலையுமொப்பார்; இத்தன்மையாரினிதாக விருக் கிற துப்புரவு களாலே மிக்கநன்மையுடைய தீவத்தை அக்கலஞ் சேர்ந்த தென்க. வேறு. 504. தீவினு ளிழிந்து தேந்தார்ச் செம்மலுந்திருமுத் தாரங் கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற் பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையி னார்த நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள். .இது முதல் “ஆடகம்” அளவுமொருதொடர். திருமகள்சேருமாரம்;“கழைபோய் விண்முத்தும்” (பாண்டிக் கோவை) என்றாற் போல. உம்மைத் தொகையுமாம்; முத்துவடமுமாம். சுமந்தென் றார், மிகுதிதோன்ற, உள்ளவள் உண்டானவன்; ஒருசொல். 505. புணர்ந்தவர் பிரித லாற்றாப் போகமீன் றளிக்குஞ் சாய லணங்கினுக் கணங்க னாரோ டறுமதி கழிந்த பின்றைக் கொணர்ந்தன பண்டம் விற்ற கொழுநிதிக் குப்பை யெல்லா முணர்ந்துதன் மதலை யேற்றி யொருப்படுத் தூர்க்கு மீள்வான். தெய்வங்களுக்குந் தாந்தெய்வமன்னார். எல்லாமுணர்ந் தென்றார், சரக்கின்பெருமையாலுணரவரிதாகலின். 506. அரசனைக் கண்டு கண்ணுற் றவர்களை விடுத்து நன்னா ளிரைவதி வியாழ வோரை யிருஞ்சிலை முறைப்ப வேறிக் கரைகட லழுவ நீந்திக் காற்றினுங் கடுகி யைஞ்ஞூ றுரையுடைக் காத மோடி யோசனை யெல்லை சார்ந்தே. ஏறி-ஏற. கரைகிறகடலழுவம் - கரையண்ணிதான கடற்பரப்பு. சார்ந்து சார. இனி இரண்டெச்சமும் திரியாமன் மரக்கலத்தின் றொழில் மக்கண்மேலேற்றுப; மரக்கலமோடினா னென்றாற் போல. 507. களித்தலை மயங்கி யிப்பா லிருத்தலுங் கலந்தோர் காற்றிற் றுளித்தலை முகில்க ளீண்டித் தூங்கிருண் மயங்கி மான்று விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கிக் கூற்று மொளிந்துலைந் தொழிய வெம்பி யுரறிநின் றிடிப்ப நாய்கள். முற்படக் கூற்றுமுலைந்தொளித்துப் போம்படிவெம்பி வெடித்தல் படமுழங்கிப் பின்னைச் சிறிதேமுழங்கிநின்றிடிப்ப. 508. எண்டிசை வளியு மீண்டி யெதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டுமே லெழுவ தொப்பக் குளிறிநின்ற திர்ந்து மேகந் தண்டுளி பளிக்குக் கோல்போற் றாரையாய்ச் சொரிந்து தெய்வங் கொண்டதோர் செற்றம் போலுங் குலுங்கன்மி னென்று கூறும். சொரிந்து - சொரிய. 509. இடுக்கண்வந் துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ் விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழு தியாவ ருய்ந்தார் வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே. எரிகின்ற விளக்குப்போல நடுங்கு நடுக்கம், கள் - அசை. 510. ஆடகச் செம்பொற் கிண்ணத் தேந்திய வலங்கற் றெண்ணீர் கூடகங் கொண்ட வாழ்நா ளுலந்ததேற் கொல்லும் பவ்வத் தூடகம் புக்கு முந்நீர ழுந்தினு முய்வர் நல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தி னென்றான். அலங்கற்றெண்ணீர் - துளங்குகிறதெண்ணீர். கூடகங் கொண்ட - உடம்புள்ளேகொண்ட. மகளிர்காலிற்பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவுமுண்டானாற் போலத் தோன்றிக் காலை விடாதே கிடந்தாற்போற் றோன்றி இவனைச் சூழ்ந்துகிடக்குமென்க. இனிப் பாடு - பக்கமாகி மகளிரி டத்துநெஞ்சுபோலே சூழ்ந்த வென்றுமாம். நல்லாருய்வரென்று மாம். இ-ள். செம்மலும் தீவினுள்ளே யிழிந்து ஆரங்கொடுத்து அரசனை அவன் குறிப்புடனேகண்டு அவன்றலையளித்துச்சுமந்து திருவை யொத்தமகளிரது பாட்டைக் கேட்டு அவர்களாடகத் தையும் விரும்பி, சிலநாட்கூடினவர்கள் பலநாளாகப் பிரிய வொண்ணாததொரு போகத்தை யுண்டாக்கிக்கொடுக்கும் அவ்வணங்கனாருடனே அங்ஙன மாறுதிங்கள்சென்றபின்பு நிதிக்குப்பை யெல்லாம் உணர்ந்து அதனை மரக்கலத்தையேற்றி அங்குள்ள காரியத்தை யொருப்படுத்தித் தன்னூர்க்குவர வேண்டி, மீண்டுமரசனைக்கண்டு தான்செறிந்தவர் களைப் போக்கி நன்னா ளாகிய இரேவதியிலே வியாழவோரையிலே தநு உதயமாக மரக்கலத்தையேற, அஃது அழுவத்தைக்கடந்து கடுகி ஐஞ்ஞா றென்ற வார்த்தையையுடைய காதத்தையோடித் தான் போன கரை ஓ ரோசனையெல்லையெனச் சேருதலாலே. தாம் களியிடத்தே பொருந்தியிருந்தவளவிலே இவ்விடத்திலே இருள் போன்றெங்கும் பரந்து ஒரு காற்றாலே முகில்களீண்ட எத்திசையுங்கலந்து கெடுப்பது போல மின்னியிடியாநிற்க; அதனைக்கண்டு சிலமொழி கூறும் நாய்கன்: எண்டிசை யிற்காற்றுமீண்டி ஒருகாற்றுக்கெதிரே ஒருகாற்றுக் கலந்து கடலைக்கொண்டு மேலேயெழுமூழியிறு தியையொவ்வாநிற்க மேகமும் நின்றதிர்ந்து துளியைச்சொரியும் படி நம்முடனே தெய்வங் கொண்டதொரு செற்றம்போலேயிருந்தது. இதற்கு நீங்களசை யாதொழிமி னென்றுகூறி, பின்னுங் கட்புல னாம் படி இடுக்கண் வந்துற்றபொழுது நடுக்கஞ் சிறிதுமின்றித் தாம் நகுவாராக; அங்ஙன நக்கபொழுது அவ்விடுக்கணையரியும் வாளாம்; அங்ஙனநகா திருந்தழுது பிழைத்தாரொருவருமில்லை; ஆதலாலழவேண்டா; வருந் தீங்கும் நன்றும் வந்தேசேரும்; அவை வந்துசேருமிடத்தும் பாடகம் போலச் சூழ்ந்த பழவினையினல் வினைப் பயத்தாலே வாழுநாளு லந்ததில்லையாயிற் கடலுக்கு நடு வேபுக்கு அந்நடுக்கடலிலே அழுந்தினும் பிழைப்பர்; தீவினைப்பயத் தாலே வாழுநாளுலந்ததாயின் உயிர்க்குக்காவலாகிய சிறிது தண் ணீருங் கட்புலனாகாமற் கொல்லுமாதலால் ஈண்டாண்மையை வடுப்படுத்திப் பெறுவ தென்னையென்றா னென்க. (12-18) 511. வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க் கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா நனைமலர்ப் பிண்டி நாத னலங்கிளர் பாத மூல நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான். இ-ள். தீவினையின் பயனாகிவந்த துன்பமாகிய பழைய நீரை யுடைய கடற்பரப்பைநீந்திக் கண்குழைந்து வருந்தல் வேண் டா; நீவிரெல்லாம் நாதன்பாதமூலத்தைநினைமின்; அச்சநீங்குமினென்றா னென்க. பாதமாகிய துன்பநீங்குதற்குக்காரணமாயதனை. கலம் படுதலும் அவர்வருத்தமுமாக விவற்குத்தோற்றியதன்றி அவர்க் கிவையின்மை “நாடக நாங்க ளுற்றது” (சீவக.582) என்றதனானும் பிறவாற்றானு முணர்க. (19) 512. பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக் குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி னுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார். இ-ள். பண்ணினகளிறனானும் மெல்லெனத்தலைசாய்த்து நிற்க; மதலை முழங்கிப்பொங்கித் தானினைத்தகூற்றிலே யோடிக் கூம்பு முறியப் பாய்ந்து நீர் நிறைந்து உருமிடித்த தன்மையை யொப்ப அழுந்தின பொழுதிலே அங்குள்ளவரெல்லாஞ்சேர மறைந்தாரென்க. (20) வேறு. 513. ஓம்பிப்ப டைத்த பொருளும்முறு காத லாரும் வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான் கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத் தேம்பெற்ற பைந்தார வனைத்திரை யுய்த்த தன்றே. இ-ள். பாவம்வராமற் பரிகரித்துத் தேடினபொருளையுங் காதலாரையுமுவர்த்தலுற்ற நீர்விழுங்காநிற்கக் கலங்காமனின்ற வன் துண்டந் தழுவிக்கிடந்தான்; அத்தாரவனைத் திரை கொழித் துக் கரையிலேசெலுத்திற்றென்க. (21) 514. நாவா யிழந்து நடுவாருமி லியாம நீந்திப் போவாய் தமியே பொருளைப்பொரு ளென்று கொண்டாய் வீவா யெனமுன் படையாய்படைத் தாய்வி னையென் பாவா யெனப்போய்ப் படுவெண்மணற் றிட்டை சேர்ந்தான். இ-ள். வினையே, முன் படைக்கிறபொழுதே பொருளைப் பொரு ளென்று கொண்டநீ வீவாயெனப்படையாயாய், நாவா யிழந்து ஆரு மில்லாத நடுஇயாமத்தேகடலை நீந்தித் தனியே போவாயெனப் படைத் தாய், நீ இனி எத்தைச்செய்யாயென்று கூறிப் போய்க் கொழிக்கின்ற மணற்றிட்டையிலே சேர்ந்தானென்க. எனவென்பதை இரண்டிடத்துங்கூட்டுக. (22) வேறு. 515. பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து வரிதரு வண்டொடு தேனின மார்க்குந் திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சேர்ந்தாங் கருவரை மார்ப னவலித் திருந்தான். இ-ள். மார்பன் ஞாழலும்புன்னயும்பூத்தலால் இசைiயைத்தருகின்ற வண்டுந் தேனுமார்க்கின்ற பொழிலிலே நேரே சென்றுசேர்ந்து வருந்தி யிருந்தானென்க. (23) அம்-அசை. 516. ஓடுந் திரைகளு தைப்ப வுருண்டுருண் டாடு மலவனை யன்ன மருள்செய நீடிய நெய்தலங் கான னெடுந்தகை வாடி யிருந்தான்வருகலநோக்கா. இ-ள். நெடுந்தகை நெய்தனிலத்திற் கானலிலே அலவனை அன்னம் அருளுதலாலே, அது தனக்கு நன்னிமித்தமாகக்கருதி நாம் போம்படி இவ்விடத்து வருங்கலமுளதோவென்று நோக்கி அதுகாணாமையின் வருந்தியிருந்தானென்க. அன்னங்கொல்லாதிருந்ததன்மை தான்பற்றுக்கோடாக வாழ் வாரைக் காலானு தைத்துத் தன்முன்னேதள்ளவும் போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லாநின்ற தென்றுநோக்கி அதற்கருளினாற் போலே யிருந்ததென்க. (24) 517. ஆளிய மொய்ம்ப னிருந்தவப் பூம்பொழிற் றாள்வலி யானொர் மகனைத் தலைப்பட்டுக் கேளிரெ னக்குற்ற கேண்மின் னீரெனத் தோள்வலி மிக்கான் றொடர்ந்துரைக் கின்றான். இ-ள். ஆளி மொய்ம்பனாகிய அத்தோள்வலிமிக்கான் தானிருந்த அப்பொழிலிலே முயற்சிவலியான் ஒருமகனைச் சென்று பொருந்திக் கேளிரே, எனக்குற்ற வருத்ததத்தை நீர் கேண்மினென்றிடைவிடாது கூறுகின்றானென்க. அதனை மொழிந்தானென்பதனோடு முடிக்க. தரன் வழிப் போவாரைப் போலே வந்தான். அ- அசை. (25) 518. கருங்கடற் போயிற்றுங் காற்றிற் கவிழ்ந்து திருந்திய தன்பொரு டீதுற்ற வாறு மரும்புணை சார்வா வவனுய்ந்த வாறு மிருந்தவற் கெல்லா மெடுத்து மொழிந்தான். இ-ள். பொருளின்மையி னதுதேடுதற்குக் கடலிற் போன செய்தியும், நல்வழியாற்றேடிய தன்பொருள் காற்றாற்கலங் கவிழ்தலாலே தீதுற்றபடியும், தெப்பஞ்சார்வாகத் தானுய்ந்த படியு மெல்லாந் தானிருந்து அத்தரனுக்கு உயர்த்துக் கூறினானென்க. (26) 519. மானு மரனு மிரங்க மதவலி தானுற்ற துன்பந் தரனுக் குரைத்தபின் றேனு மமிழ்ந் திளைத்தாங் கினியன வூனமில் கட்டுரைக் குள்ளங் குளிர்ந்தான். இ-ள். ஸ்ரீதத்தன் மானுமரனுமிரங்கும்படி தானுற்ற துன்பத் தை அங்ஙனந் தரனுக்குரைத்தபின்பு, அவன்யானிழந்ததற்கெல்லாம் நின்னைப் பெற்றேனேயென்று கூறியவுரைக்கு அத்தரன் உள்ளங் குளிர்ந்தானென்க. இவனாற்பெறுதல்கருதுதலின் ஊனமிலுரையாயிற்று. திளைத்தல் - அறாதொழுகுதல். ‘உரைத்தலி’ னென்றபாடத்திற்குத் தரன்கூறியதற்கு ஸ்ரீதத்தன் மகிழ்ந்தானென்க. 520. விஞ்சைகள் வல்லேன் விளிந்தநின் றோழரொ டெஞ்சிய வான்பொரு ளெல்லா மிமைப்பினுள் வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவ னெஞ்சிற் குழைந்து நினையன்மி னெறான். இ-ள். விஞ்சை பலவும்வல்லேனாதலாற் கெட்டநின்றோழ ருடனே நின்னை நீங்கிய நீதியாலுண்டானபொருளெல்லாம் ஒரு மாத்திரையில் வஞ்சனைசிறிதும் இன்றாகக் கெடுதியை நீக்கித் தருவேன். இனி நீயிர்கெட்டுநெஞ்சிற் பலகானினையா தொழிவீ ராக வென்றானென்க. (28) நினையன்மின் - ஒருவரைக்கூறும்பன்மை. 521. உரையகங் கொள்ள வுணத்தின னாகி வரையக மேற வலிமின மென்னா விரைசெலல் வெம்பரி மேழக மேற்றிக் குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தான். இ-ள். தருவேனென்றவுரையை மனங்கொள்ளும்படி மைந்தனை யுணர்த்தினனாய் இவ்வரையிடத்தே யேறும்படி துணிவீ ராகவென்று கூறித் தானிருமத்த பரிபோலுஞ் செலவினை யுடைய மேழகத்தை யேற்றித் தான்கொண்டு பறந்தானென்க. (29) அம்-அசை. 522. விசும்பிவர் மேகம் விரைவினர் போழ்ந்து பசும்புயற் றண்டுளி பக்க நனைப்ப நயந்தனர் போகி நறுமலர்ச் சோலை யசும்பிவர் சார லருவரை சார்ந்தார். இ-ள். பசும்புயற்றுளி பக்கத்தை நனைப்ப அதனைநயந்த னராய் அம்மேகத்தைப்பிளந்து விரைவினராய்ப்போய்ச் சோலை யினையுஞ் சாரலினையுமுடைய மலையைச் சேர்ந்தாரென்க. அசும்பு - நீர்ப்பொசிவு. (30) 523. கண்டா லினியன காண்டற் கரியன தண்டா மரையவ டாழுந் தகையன கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான். இ-ள். அவன் அம்மலையிலே உலகிற்காண்டற்கரியனவாய்க் கண்டாற் கட்கினியனவாய்த் திருவிரும்புந் தன்மையவாய்க் கோட்டி டையிலே அமிர்தொத்துத் தூங்குவனவாகிய கனியைக் கொண்டான்; கொண்டு உண்டான்; உண்டு உடம்பு குளிர்ந் தானென்க. (31) 524. மழைதவழ் சோலை மலைமிசை நீண்ட குழைதவழ் குங்குமங் கோழரை நாகந் தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி யிழைதவழ் மார்ப னினிதினு வந்தான். நான்கடியுந் தவழ்தல் - பரத்தல். இ-ள். இழையொளிபரத்தற்குக் காரணமான மார்பன் நீண்ட அம்மலை மிசையிற் குங்குமத்தையும் நாகத்தையுஞ் சந்தனச் சோலை யோடே நோக்கிக் கட்கினிமையினாலே மனமகிழ்ந் தானென்க. (32) 525. கோதை யருவிக் குளிர்வரை மேனின்று காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி னாத னுறைவதொர் நன்னக ருண்டாங்குப் போது மெழுகெனப் போயினர் சார்ந்தார். இ-ள். மாலைபோலுமருவியையுடைய அம்மலையிலே தரன் நின்று இம்மலையிலே காதங்கடந்தபின்பு நாதனுறைவதொரு கொடி மதினகருண்டு; ஆங்குப் போகக்கடவோம்; அதற்கெழுந் திருப்பாயாக வெனக்கூற; அவரும்போயினராய் அந்நகரைச் சேர்ந் தாரென்க. முன் வரையளவென்றிருந்தவனை, இது கூறியெழுகென் றான். நகர் - ஸ்ரீகோயிலென்று கருதினான். (33) வேறு. 526. மேகமே மிடைந்து தாழ விருள் கொண்ட வெள்ளிக் குன்றம் மாகத்து விளங்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றா னாகந்தான் கரிய தொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப் பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே. இ-ள். தாழ்வரையெல்லாம் மேகமே நெருங்கியிருத்தலாலே ஒன்றுபாதியிருட்சிகொண்டவெள்ளிமலை ஆகாயத்தே தோன்று கின்ற வழகை நாம்வகுத்துக்கூறத் தொடங்கினால் கரியதொரு நாகந்தான் கீழேநின்று அதுவருந்தும்படி முதற்கவ்விப் பின்பு ஒன்றுபாதியே விழுங்கப்பட்ட மதிபோன்றதென்றுகூறலாம் வேறரிதென்க. ஏகாரம்-தேற்றேகாரம். (34) 527. துளங்குபொன் னகரின் றன்மை சொல்லலாஞ் சிறிதோர் தேவன் விளங்குபொன் னுலகத் துள்ள துப்புர விடங்க ளெல்லா மளந்துகொண் டின்பம் பூரித் தணிநக ராக்கி மேலா லிளங்கதிர்ப் பரிதி சூட்டி யியற்றிய தென்ன லாமே. பருதி-வட்டம்; ஆகுபெயர்; என்றது: பொன்மதிலை “அத்தேர்ப் பரிதி சுமந்த யானை” என்றார் பிறரும். இ-ள். நகரின்றன்மை நமக்குச் சிறிது கூறலாம்; எங்ஙன மென்னின் ஒரு தேவன் அம்மதிபோலு மலைத்தலையிலே ஞாயிறு போலு மதிலைச்சூட்டி அதனுள்ளே நகராக்கி அந்நகரிடங்க ளெல்லாம் பொன்னுலகில் இன்பத்தையுடையநுகர் பொருள் களையாராய்ந்து கொண்டு நிறைத்து இங்ஙனஞ் செய்ததோர் நகரியென்று கூறலா மென்றாரென்க. (35) வேறு. 528. பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற் செங்க ணாயிரஞ் சேர்ந்தவன் பொன்னகர் கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற் றங்கு கின்றது போற்றகை சான்றதே. தாமரை மிக்கு ஆயிரம்பூவைப் பூத்தனபோலுங் கண்கள். இ-ள். அங்ஙனங்கூறலின் அந்நகர் இந்திரனமராபதி தெய்வ மகளிரோடே வந்து வெள்ளிமலைமேற் றங்குகின்றதன்மை போல அழமைந்ததென்க. 529. கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி மடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென் றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தம குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே. இ-ள். மதிலிற்கொடி மதியைத் தீண்டுகின்ற பொழுது இம்மதி மகளிர் முகத்தையொக்கும்; இதற்கு நாம் அருளவேண்டு மென்றுகருதி அவையெல்லாஞ் சேர அம்மதியின் மனங்குளிரும் படி தம்முடைய குடங்கைகளாலே நீ முகத்தையொப்பை நல்லை நல்லை யென்று அதன்புறத்தே தட்டுவனபோலே யிருந்தன வென்க. (37) 530. திருவ மேகலை தெள்ளரிக் கிண்கிணி பரவை யாழ்குழற் பண்ணமை மென்முழா வுருவம் யாருடை யரென் றொளிர்நக ரரவம் வாய்திறந் தார்ப்பது போன்றதே. திருவ: அ-அசை. இ-ள். மேகலை கிண்கிணி பேரியாழ் பண்ணையுடைய குழல் முழாவென்கின்ற இவற்றினரவமெங்ஙனமிருந்ததென்னின்,இவ்வுலகில் என்னிற்காட்டிலுருவுடையார் யாரென்று நகர்தான் வாய் விட்டார்க்குந் தன்மைபோலேயிருந்ததென்க. (38) 531. செம்பொன் மாடங்கள் சென்னி யழுத்திய வம்பொற் றிண்ணிலை யாய்மணித் தூவிகள் வெம்பு நீள்சுடர் வீழ்ந்து சுடுதலிற் மைபம்பொற் கொப்புள் பரந்தன போன்றவே. இ-ள். தந்தலையிலழுத்திய மணித்தூவிகளையுடைய மாடங் கள் ஞாயிறு தாழ்ந்து சுடுதலினாலே பொன்உருகிக் கொப்புள் பரந்தன போன்றனவென்க. பொன்னாற் றிண்ணிய நிலையுண்டாகக் கட்டினதூவி. (39) 532. உருளி மாமதி யோட்டொழித் தோங்கிய வெருளி மாடங்கண் மேற்றுயி லெய்தலின் மருளி மான்பிணை நோக்கினல் லார்முகத் தருளி னாலழ லாற்றுவ போன்றவே. இ-ள். மதியைச் செலவைத்தவிர்த்து மேலேயேயோங்கிய வெருட்சியையுடைய மாடங்களின் மேலே ஞாயிற்றின்றேர் பூண்ட மாக்கள் துயிலைப்பெறுதலாலே அவை நல்லார் முகத்திலருளால் தம்வெம்மையை ஆற்றுவனபோன்றவென்க. உருளிவெருளிஇ - பகுதிப்பொருள் விகுதி. சோதிட நூலாரிங் ஙனங்கூறுப. (40) 533. அசும்பு பொன்வரை யாய்மணிப் பூண்களும் பசும்பொன் மாலையும் பட்டுழிப் பட்டவை நயந்து கொள்பவ ரின்மையி னன்னகர் விசும்பு பூத்தது போன்றன வீதியே. இ-ள். பொன் இடையறாதொழுகுகின்ற வரையிற்பிறந்த மணியாற்செய்த பூண்களும் மாலையும் விழுந்த விடத்தேகிடக் கின்றவற்றை எடுப்பாரின்மையின், அந்நகர்வீதி ஆகாயம் மீனைப் பூத்த தன்மையையொத்தனவென்க. (41) 534. தேக்க ணின்னகி றேனொடு கூட்டமைத் தாக்கப் பட்ட வளவில் கொழும்புகை வீக்கி மாடந் திறந்திட மெல்லவே யூக்கி வாய்விட் டுயிர்ப்பன போன்றவே. இ-ள். நெய்யையிடத்தேயுடைய நாற்றமினிய அகிலையும் ஒழிந்தகூட்டை யுந் தேனோடேபிசைந்திட்டுண்டாக்கின புகையை மாடங்களிற்சாளரங்களை யடைத்து நிறைத்து அவற்றைத்திறக்க; அம்மாடம் புகையைப்பொறுக்கமாட்டாது வலிய வாயங்காந்து மெல்லெனக்காலுவன போன்றனவென்க. “கூட்டாவன:” நேர்கட்டி செந்தே னிரியாசங் கற்பூர - மார மகிலுறுப்போ ரைந்து. நிரியாசம்-பிசின். அது குங்குலிய முதலியன. (42) 535. தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற் கப்பத் திந்திரன் காமுறு மாமணிச் செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே. இ-ள். தானவர்தங்கியநகரின்விளக்கம் பின்னை எங்ஙன மிருந்தத தென்னில் இக்கப்பத்துக்குரிய இந்திரன்விரும்பிய பூண்தங்குமணிச் செப்பை வாய்திறந்தாற்போலுஞ் செம்மற் றென்க. (43) வேறு. 536. நன்னகர் நோக்கி நாய்க னாகங்கொல் புகுந்த தென்னப் பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழை கடங்கு மின்னவிர் செம்பொன் மாடத் திருவரு மிழிந்து புக்குப் பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். மழைதங்குமிருவரென்றது தரனையும் ஸ்ரீதத்தனையும் தரன்கதி யாற்றங்குதலும் ஸ்ரீதத்தன் கொடையாற்றங்குதலும். இனி வெள்ளி மலை மேகபதத்துக்கு மேலென்றாரேனு மேகமெங்கு முளதென்று மழைதங்கு மாடமென்றுமாம். இ-ள். நாய்கன் நகரைநோக்கி நாம்புகுந்து நாகமோவென்று கருதும்படி பொன்னகரிலேபுக்குப் பின்பு இருவருமிழிந்து தரனுடைய மனையிலே செல்லுதலாலே அத்தரன்விருந்திட்டுப் பின்பு அவனொரு மொழி கூறினானென்க. (44) 537. மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக் கேடில்சீர்க் கலுழ னாய கலுழவே கற்குத் தேவி தோடலர் கோதை தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள். 538. விண்ணகம் வணங்க வெண்கோட் டிளம்பிறை முளைத்த தேபோற் பண்ணகத் தினிய சொல்லாள் பாவையைப் பயந்த ஞான்றே யெண்ணிட மின்றி மன்ன ரிம்மலை யிறைகொண் டீண்டி யண்ணலங் களிற்றி னுச்சி யருங்கல வெறுக்கை யீந்தார். இவையிரண்டு மொருதொடர். இ-ள். மன்னர்நாகமாகத் தான் அவர்களுக்குக் கருடனாகிய கலுழவேகற்குத் தேவியாகியதாரணி, அணங்கினன்னாளுமாய், இனிய சொல்லாளுமாயிருக்கிறபாவையை விண்ணிடத்தே பிறை தோன்றினாற்போல எல்லாரும்வணங்கும்படி பெற்ற அற்றை நாளே எள்ளிட இடமின்றாக இம்மலையில் மன்னரெல்லா மீண்டித் தங்குதல் கொண்டு களிற்றினுச்சியிலே கலமாகியசெல் வத்தைக்கொடுத் தாரென்க. மாடியும்-உடம்புக்கீடு. அன்றே பேசினாரென்க. (45-46) 539. மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக வென்ன வந்தரத் தோடு கோளிற் சாதக மவனுஞ் செய்தா னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு வந்தடை பான்மை மண்மே லிராசமா புரத்த தென்றான். மந்திரம்-ஆகுபெயர். இ-ள். விச்சாதரலோகத்தின்கணரசன், கணி, கடுகச் சாதகஞ் செய்து வருகவென்றவனுக்கு அவனுங் கோளாலேயெண்ணிச் சாதகஞ் செய்தான்; அங்ஙனஞ்செய்தவன் தத்தைக்கு வந்து சேரு நல்வினைப் பயனெல்லாம் மண்மேலிராசமாபுரத்தே வந்துசேரு மென்று கூறினா னென்க. (47) 540. அவனுரை தெளிந்து வேந்த னாசையு ளரசர் நிற்பக் கவனங்கொள் புரவிக் கொட்பிற் காதலுங் கரந்து வைத்தான் அவனதே கருதிற் றாங்கோ லன்றுகொ லறிய லாகா திவணது மறிது மென்று கோயிலுக் கேகி னானே. இ-ள். அரசர் எமக்குத்தருமென்னுமாசையிலேநிற்ப; கணி தான் கூறியவுரையைத்தெளிந்து அங்கேகொடுக்குமென்று நிற்ப, வேந்தன் இடமும்வலமும் பாய்கின்ற கதிவிசேடத்தைக் கொண்ட குதிரையினது மனத்திற் சுழற்சிபோலே தன்காதலையுமிரண்டிடத் துக்குமேற்பக்கூறி மறைத்துவைத்தானாதலால், அவன்கருதிய காரியம் அக்கணி கூறியதேயாயிருக்கின்றதோ, அன்றி அரசர் கருதி யதேயோ, இரண்டு மிதற்குமுன்னறியமுடியா, இனி நீ வந்த படியாலே இப்பொழுது அவன்கருதியதும் விளங்க வறியக் கடவேமென்றுகூறிப் பின்பு ஸ்ரீதத்தனையுங் கொண்டு கோயிலுக் கேகினானென்க. அதுவும்-விகாரம். அரசனதுகருத்துத் தெள்ளிதினுணரலா காமையின் இவற்கு ஈண்டுமுண்மைகூறாது காரியமுடிந்து போகின்ற பொழுது கூறினான். (48) 541. பால்பரந் தன்னபட்டார்பூவணை பசும்பொற் கட்டிற் கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின். “பால்” “என்வரவு” இரண்டுமொருதொடர். பாலாவிபரந்தன்னபட்டு. கச்சாற்கட்டி அடிபரந்து தளராதிருந்த முலையினையுடைய.. வேல் கொலையிலே பரந்தாற் போலுங் கண்ணார். மதியின்கதிர்களைச் சொரிந்த போலுங் கவரி. (49) 542. என்வர விசைக்க வென்ன வாயிலோ னிசைப்ப வேகி மன்னர்த முடிகள் வேய்ந்த வயிரம்போழ்ந் துழுது சேந்த பொன்னவிர் கழல்கொள் பாதம் பொழிமழைத் தடக்கை கூப்ப வின்னுரை முகமன் கூறித் தானத்திலி ருக்க வென்றான். என்வரவு-ஸ்ரீ தத்தனைக்கொண்டுவந்த வரவு. பிளந்து உழுதலாலே சிவந்த. இ-ள். அங்ஙனமேகினதரன் கண்ணார்கவரிவீசக் கட்டிலிற் பூவணையிலே மன்னவனிருந்தவளவிலே, என்வர விசைக்க வென்ன, வாயிலோனுமிசைப்ப., ஸ்ரீதத்தன் போய்ப் பாதத்தை வணங்க, மன்னவனுபசாரங்கூறி அரசரிருத்தற்குரிய இடத்தே யிருக்க வென்றானென்க. (50) 543. முதிர்பெயன் மூரி வான முழங்கிவாய் விட்ட தொப்ப வதிர்குரன் முரச நாண வமிர்து பெய் மாரி யேய்ப்பக் கதிர் விரி பூணி னாற்குத் தந்தைதாய் தாரங் காதன் மதுரமா மக்கள் சுற்றம் வினவிமற் றிதுவுஞ் சொன்னான். வான் சத்தத் திற்கும், முரசு முழக்கத்திற்கும், மாரி கேட்டற் கினிமைக்கு முவமை. இ-ள். அங்ஙனங்கூறியவரசன் ஒப்ப நாண ஏய்ப்ப அவனு டையதந்தை முதலியவர்களைவினவிப் பின்பு அந்த ஸ்ரீ தத்தனுக் கிதுவுங்கூறினானென்க. அது மேற்கூறுகின்றார். (51) 544. இன்றைய தன்று கேண்மை யெமர்நும ரெழுவர் காறு நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பி னூழா லன்றியு மறனு மொன்றே யரசன்யான் வணிக னீயே யென்றிரண் டில்லை கண்டா யிதுநின தில்ல மென்றான். வச்சிரயாப்பு-வச்சிரத்தாற் றலையிலிட்ட எழுத்து. “வச்சிரநுதியினிட்ட-வெழுத்தனான்” என்ப மேலும். இ-ள். கேண்மை இன்றுளதாயதன்று; வச்சிரயாப்பினீங்காத விதியினாலே எமரெழுவர் நுமரெழுவரளவு மேழுகிழமையும் போல ஏற்றிழிவின்றி நின்றது அக்கேண்மை; அன்றியுஞ் சமயமு மொன்றயாதலின், யானரசன் நீவணிகனென்று இரண்டுசாதியில் லைகாண், இது நின்மனைகாணென்றானென்க. கிழமை-உரிமையுமாம். (52) 545. மந்திர மன்னன் சொன்னீர் மாரியால் வற்றி நின்ற சந்தனந் தளிர்த்த தேபோற் சீதத்தன் றளிர்த்து நோக்கி யெந்தைக்குத் தந்தை சொன்னா னின்னண மென்று கேட்ப முந்தைதான் கேட்ட வாறே முழுதெடுத் தியம்பு கின்றான். 546. வெள்ளிவே தண்டத் தங்கண் வீவிறென் சேடிப் பாலிற் கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப் புள்ளணி கிடங்கின் விச்சா லோகமா நகரிற் போகா வெள்ளிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். 547. சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலு நங்குடித் தெய்வங் கண்டீர் நமரங்கா ளறிமி னென்னக் கொங்குடை முல்லைப் பைம்போ திருவடங் கிடந்த மார்ப விங்கடி பிழைப்ப தன்றா லெங்குல மென்று சொன்னான். இவை மூன்றுமொரு தொடர். தடங்களிலே உடைந்ததன்மையவாகிய மலரும் சங்கும் போலு நங்குடி. இது தூய்மைக்குவமை; இனிச் சங்கு சுட்டாலு நிறங்கெடாதது போலக் கெட்டாலுங் தன்றன்மை கெடாத குடியுமாம்; “நத்தம்போற் கேடும்” என்ப. அரசமுல்லையுங் காவன் முல்லையுங்கருதி இருவட மென்றது. இ-ள். மாரியின்மையின் வற்றிநின்றசந்தனம் அதுபெற்றுத் தளிர்த்தாற்போல மன்னனதுசொன்னீராலே ஸ்ரீதத்தன்றளிர்த்து மன்னனைநோக்கி, யான்கேட்டிருப்ப என்னுடைய தந்தைக்கு அவன்றன்னுடைய தந்தை தான் முன்புகேட்டிருந்த படியே இன்னண மென்று முழுதெடுத்தியம்புகின்றவன், நமரங்காள், வேதண்டமலையில் தென்சேடிக்கூற்றிற் காந்தாரநாட்டில் விச்சாதரலோக மாநகரியி னின்று நீங்காத கலுழவேகன்வேந்தன், அவன் நங்குடித்தெய்வங்காணும்; அதனையறிந்திருப்பீராக வென்றுசொன்னானாதலால், மார்பனே! எங்குலம் இவ்விடத்து உன்னடியைப் பிழைப்ப தன்றாயிலுருந்த தென்று சொன்னா னென்க. மன்னனைநோக்கிப் பிழைப்பதன்றாலெங்குல மென்று சொன்னா னெனக்கூட்டுக. தந்தை இயம்புகின்றவன் நமரங்காளறிமினெனச் சொன்னா னென்றது, மந்திரமென்னுங் கவியிற் சொன்னா னென்றதனை. தந்iத-பாட்டன். (53-55) 548. பெருந்தகைக் குருசி றோழன் பெருவிலைக் கடக முன்கை திருந்துபு வணங்கப் பற்றிச் சென்றுதன் னுரிமை காட்டப் பொருந்துபு பொற்ப வோம்பிப் பொன்னிழை சுடர நின்ற கருங்கண்ணி திறத்து வேறாக் கட்டுரை பயிற்று கின்றான். 549. எரிமணிப் பளிக்கு மாடத் தெழுந்ததோர் காம வல்லி யருமணிக் கொடிகொன் மின்கொ லமரர்கோ னெழுதி வைத்த வொருமணி குயின்ற பாவை யொன்றுகொ லென்று நாய்கன் றிருமணிக் கொடியை யோரான் றெருமர மன்னன் சொன்னான். இவையிரண்டுமொருதொடர். திருந்துபு-மனந்திருந்தாநின்று. ஓம்பி-ஓம்ப. திறம்-குலம். பயிற்று கின்றான்-எதிர்காலமுணர்த்திய நிகழ்காலம். வல்லியாகிய மணிக் கொடி. இந்திரன்தன்மனத்தே எழுதிவைத்த ஒப்பில்லாத மணியென்று மணிக்குவிசேடங்கூறுக. மணியைப் பூத்த கொடி - தத்தை. இ-ள். அதுகேட்டுக் குரிசில் தோழன்றொழாநிற்க, அவன் முன்கையையைப் பிடித்துச்சென்று தன்னுரிமையைக் காட்டினானாக, அவளும் மனம்பொருந்தாநின்றுபசரியா நிற்ப, நாய்கன் அவ்விடத்து நின்ற மணிக்கொடியை அச்சநிகழ்ந்த மையான் மகளென்றோரானாய்க் கொடியோ மின்னோ மணியாற் செய்தபாவையோவென்றுசுழலாநிற்க, அவனுக்கு மன்னன் அக்கருங்கண்ணியைத் தன்குலமன்றி ஸ்ரீதத்தன் குலமாகவே மேற்றொட்டுங் கூறுதலைப்பயிற்றுகின்றவன்ஒருகாரியஞ் சொன்னானென்க. அது “நின்மகளிவள்,” “ஆணையிராமின்” என்றவற்றாற் கொள்க. (56-57) 550.1. தூசுலாய்க் கிடந்த வல்குற் றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் வாசவான் குழலின் மின்போல் வருமுலைச் சாந்து நக்கி யூசல்பாய்ந் தாடிக் காதிற் குண்டல மிலங்க நின்றாள் காசில்யாழ்க் கணங்கொ டெய்வக் காந்தர்வ தத்தை யென்பாள். 551.1. விளங்கினா ளுலக மெல்லாம் வீணையின் வனப்பி னாலே யளந்துணர் வரிய நங்கைக் கருமணி முகிழ்த்த வேபோ லிளங்கதிர் முலையு மாகத் திடங்கொண்டு பரந்த மின்னிற் றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா துருவரு வென்ன வுண்டே. 552.3. நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி யின்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான் றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். இவை மூன்றுமொருதொடர் 1. உலாய்-சூழ்ந்து. நாணாலிறைஞ்சிநிற்றலிற் குண்டலஞ் சாந்தைத்தீண்டிப்போக்குவரவுடைத்தாயசைந்திலங்கநின்றாள்.யாழ்விச்சைத்தொகுதி கொண்டதெய்வம்-மாதங்கி. 2. குணங்க ளளந்துணர்வரிய. 3. போகி - போகவெனவியங்கோளுமாம். யாவன் மூன்றுவருணத்திலும் யாவன்; “இறைவராதி மூவகைக் குலத்து ளார்க்கும்” என்றார்.மேலும். தன்னிலிழிந்தவணி கரையுங் கூட்டி னான், அக்குலத்திற் றான்செய்த நல்வினையி னிலைமையை யெய்து வித்தலின். உரியளெனவே கொடைப் பொருட்டாம். அடிமைப் பணி-விகாரமாம். இ-ள். அல்குன்முதலியவற்றையுடையதோர் மின்போல நாணி நின்றவள் தெய்வமாகியகாந்தருவதத்தையென்னும் பெயரை யுடையாள்; அவடான் வீணையாலும் வனப்பினாலு முலக மெல்லாம் விளங்கினாள்; அவட்கு அதுவுமின்றி முலையுமணி முகிழ்த்த போற் றோன்றிப் பின்பு ஆகத்தேபரந்தன; முன்பு மின்போற்றுளங்கு நுசுப்பும் இப்பொழுது உண்டு இல்லையென்ன ஐயநிகழ உண்டாயிற்று; இத்தன்மையுடைய நின்மகளாகிய விவளை நீயே நின்பதியேறக் கொண்டுபோய் இசையாற் பொருது வெல்வான் யாவனாயினுமாக, அங்ஙனம் வென்றவனுக்குக் கொடுப்பாயென்று கூறினானாக; நாய்கனும் அடிமைப் பணி செய்வேனென்றான்; அதனைத் தாரணி கேட்டு இவ்விழிவு இவளுக்கேதக்கதென்று வெறுத்துக்கூறினாளென்க. (58-60) 553.1. முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றுந் தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற் பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். 554.2. நூற்படு புலவன் சொன்ன நுண்பொரு ணுழைந்தி யானும் வேற்கடற் றானை வேந்தர் வீழ்ந்திரந் தாலு நேரேன் சேற்கடை மதர்வை நோக்கிற் சில்லரித் தடங்க ணங்கை பாற்படு காலம் வந்தாற் பான்மையார் விலக்கு கிற்பார். இவையிரண்டுமொருதொடர். வேற்றானை. சேலின்கடைபோன்ற கடையினையும் நோக்கி னையும் அரியினையுமுடையகண். இ-ள். அதுகேட்டு மன்னன் இனிமைதோன்றினகிளவியார் வெறுத் தற்கரிய இப்போகபூமியிற் போகத்தைக் குறையாமற் பெற்றுவைத்தும் தனித்துவாழ்கின்ற தொழிலதனிற்காட்டில் அவர்க்கிறந்துபடும் வருத்தம்வேறில்லை; அவர் தங்கணவன் குறங்கிலே துஞ்சப்பெறின், அவ்வின்பம் தேவரின்பத்தின் பகுதி யையுடைத்து; அதனை அறிந்து வைத்து நங்கை இந்நாளளவுஞ் சாந்துயரெய்திநிற்கவும் ஒருவன் பகுதியிலே படுங்காலம் வாராமை யினாலே யானுஞ் சோதிடநூலிலே யுளனாகிய கணிகூறிய பொருளிலே சென்று மன்னரிரந்தாலு நேரேனா யினேன்; ஈண்டு அவள் ஒருவன்பாற் படுங்காலம்வந்தால் அவ்விதி யாவரானும் விலக்கலரிதாதலின், அதற்குநேர்ந்தே னென்று சொன்னானென்க. வாராமையினென்றும், ஆதலினதற்கு நேர்ந்தேனென்றும் வருவித்துரைக்க. (61-62) 555 படைப்பருங் கற்பி னாடன் பாவையைப் பரிவு நீக்கிக் கொடைக்குரிப் பால வெல்லாங் கொடுத்தபின் கூற்று முட்கும் விடைப்பருந் தானை வேந்தன் வேண்டுப வெறுப்ப நல்கித் தொடுத்தலர் கோதை வீணா பதிக்கிது சொல்லி னானே. கணவன்கருத்தே தன்கருத்தாகலிற் பிறர்படைத்தற்கரிய கற்பாயிற்று. உரிப்பால-வினைத்தொகை. வேறுபடுத்தற்கரிய தானை. இ-ள். அதுகேட்டதாரணி தத்தையைத் தம்மைநீக்குதலாற் பிறந்த பரிவை நீக்கித் தான்கொடுத்தற் குரியனவெல்லாங் கொடுத்தபின்பு, வேந்தனும் அவள்வேண்டுவனவெல்லா மிகக் கொடுத்து வீணாபதி யென்னும் பேடிக்கு இதனைக் கூறினானென்க. அது மேற்கூறுகின்றார். (63) 556. உடம்பினொ டுயிரிற் பின்னி யொருவயி னீங்கல் செல்லா நெடுங்கணுந் தோளும் போலு நேரிழை யரிவை நீநின் றடங்கணி தனிமை நீங்கத் தந்தையுந் தாயு மாக வடங்கல ரட்ட வேலா னாணையி ராமி னென்றான். உதவியாற் கண்™ந்தோளும்போலு மரிவாய். ஆக-வியங் கோள்; எச்சமாக்கி ஒருமைபன்மை மயக்கமுமென்ப. இ-ள். உடம்பினோடுயிர் பின்னுமாறுபோற்பின்னி ஒன்றாய் ஓரிடத்துமிவளை நீங்காத அரிவாய், நின் தடங்கண்ணி எம்மைப் பிரிந்ததனிமை போம்படி இவளுக்குத் தந்தையுந் தாயுமாவாயாக; அங்ஙனமாய்ப் பின் இருவீருநம்முடைய ஆணையைவிட்டு ஸ்ரீதத்தனது ஆணையையுடையீராவீராக வென்றானென்க. (64) 557. அருமணி வயிரம் வேய்ந்த வருங்கலப் பேழை யைஞ்ஞூ றெரிமணி செம்பொ னார்ந்த விராயிரம் யவனப் பேழை திருமணிப் பூணி னாற்குச் சினந்தலை மழுங்க லின்றிக் குருமணி முடியிற் றேய்த்த தரன்றமர் கொள்க வென்றான். பூணினாற்குப் பகைவர்மேற்செற்றம் தலைகெடுதலின் றாகலின் அவர்முடியின் மணியை அவனடியிலே தேய்ப்பித்த தரன். இ-ள். மன்னன் அருங்கலம்வைத்தற்குச் சமைத்த மணியாகிய வயிரம்வேய்ந்தபெட்டி ஐஞ்ஞூறும், மணியும்பொன்னுமார்ந்த யவனதேசத்திற் பெட்டி இரண்டாயிரமும், தரனுடைய சுற்றமும் நீ கொள்வாயாக வென்றானென்க. (65) 558. பல்வினைப் பவளப் பாய்காற் பருமணி யிழிகை வம்பார் நல்லகில் விம்மு கட்டிற் றவிசொடு நிலைக்கண் ணாடி மெல்லிய தூப மூட்டி மேதகு நானச் செப்போ டல்லவுங் கொள்க வென்றா னணங்குடை நிணங்கொள் வேலான். இ-ள். வேலான் பரந்தகாலினையும் கைச்சுரிகையினையுமுடைய கச்சார்ந்த கட்டிலும் தவிசும் கண்ணாடியும் இந்தளமும் செப்பும் ஒழிந்தனவும் நீகொள்கவென்றானென்க. ஒடு-எண்ணொடு. (66) 559. விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன் றுளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோல் கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி அளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான். இ-ள். இனிமைகொண்ட நல்யாழாயிரம், விளக்கை யழலைச் சேர்த்தினாற்போலுநிறத்தவாய்த் தெரியாமற்போர்த்த போர்வையினை யுந் தேனசைவற வொழுகினாற் போன்ற சிம்பறத் திரண்ட நரம்பு தன்னிடத்தேகொள்ளத்தக்க வார்க்கட்டினையுமு டையவாய்க் கோணிரைத் தனைய எண்ணாட்டிங்களைப்போல அமைகவென்றா னென்க. கோள்நிரைத்ததிங்கள் பத்தரிற்றோலைச் சூழ முடுக்கின ஆணிக்குவமம். “விளக்கழலுருவின் விசியுறு பச்சை - யுருக்கி யன்ன பொருத்துறு போர்வை - கொடித்திரி வன்ன தொண்டுபடு திவலிற் - கடிப்பகை யனைத்துங் கேள்விப் போகாது - குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் - றுளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி - எண்ணாட்டிங்கள் வடிவிற் றாகி” என்றார் பிறரும். (67) 560. அரக்கெறி குவளை வாட்க ணவ்வளைத் தோளி னாளைப் பரப்பமை காதற் றாயர் பற்பல்காற் புல்லிக் கொண்டு திருப்புறக் கொடுத்த செம்பொற் றாமரை போன்று கோயில் புரிக்குழன் மடந்தை போகப் புலம்பொடு மடிந்த தன்றே. “தொடர லிறுதி தம்முற் றாம்வரின், லகரம் றகரவொற் றாகலு முரித்தே” என்பதனாற் பற்பல்காலென்றார். கொண்டு - கொள்ள. இ-ள். தமரைப்பிரிதற்கு அழுதுசிவத்தலின் இங்குலிக மூட்டின குவளைபோலுங் கண்ணையுடைய தத்தையைத் தாயர் பற்பல் காற்றழுவிக் கொள்ள அம்மடந்தை போகையினாலே கோயில் திருமகளைப்போகவிட்ட தாமரைபோன்று புலம்பொடு மடிந்ததென்க. “ஒழியாது” என்றதனால் இரண்டாவதுவிரித்துத் தாரணி யையும் அல்லாத தாயரையும் புல்லிக்கொண்டு போக வென்று மாம். (68) 561. காம்புபொன் செய்த பிச்சங் கதிர்மணிக் குடையோ டேந்தித் தாம்பலர் கவரி வீசக் கிண்கிணி ததும்ப நாகப் பாம்புபைத் தனைய வல்குற் பல்கலை மிழற்ற வேகி யாம்பனா றமுதச் செவ்வா யரசனைத் தொழுது நின்றாள். இ-ள். ஆம்பல்போல மணக்கின்ற செவ்வாயினையுடையாள் பலர்தாம் பிச்சத்தையுங் குடையையுமேந்தக் கவரிவீசத் ததும்ப மிழற்றத் தாயரிடத்துநின்றும்போந்து அரசனைக் கண்ட பொழுதே கையாற்றொழுது நின்றாளென்க. ஏந்தி-ஏந்த. பலர்தாங் கவரியைவீச வென்றுமாம். நாறுதல்-தோற்றுதலுமாம். (69) 562. அடிக்கல மரற்ற வேகி யரும்பெறற் றந்தை பாத முடிக்கலஞ் சொரியச் சென்னி யிறைஞ்சலு முரிந்து மின்னுக் கொடிப்பல நுடங்கி யாங்குத் தோழியர் குழாத்து நிற்ப வடுத்தனன் புல்லி வேந்த னாற்றுகி லாது சொன்னான். மின்னுக்கொடியெனப் பொருட்பெயர்க்கும் உகரமும் வல்லெழுத்தும் பெறுதல் இலேசாற்கொள்க. புல்லி-புல்ல. இ-ள். தத்தை அங்ஙனநதொழுதுநின்ற இடத்தினின்றும் சிலம்பு முதலியன வொலிப்பச்சென்று தந்தைபாதத்தே சென்னி யான் முரிந்து வணங்கின அளவிலே, அவனாற்றுகிலாதே பல்காற் புல்ல, அவள்போய் மின்னுக்கொடி பலவுநுடங்கியாங்கு நுடங்குந் தோழியர் திரளிடத்தேநிற்க; வேந்தனொருமொழி கூறினா னென்க. (70) 563. வலம்புரி யீன்ற முத்த மண்மிசை யவர்கட் கல்லால் வலம்புரி பயத்தை யெய்தா தனையரே மகளி ரென்ன நலம்புரிந் தனைய காதற் றேவிதன் னவையை நீங்கக் குலம்பிரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. குலம்வடிவுகொண்டனைய அதிபதி. இ-ள். நலம் வடிவுகொண்டனைய தேவி தனது வருத்தத்தை நீங்கும்படி வலம் புரியீன்றமுத்தம்மண்மிசையவர்கட்குப் பயன் கொடுப்பதன்றி அதனால்வலம்புரிபயனையெய்தாது; மகளிருந் தாயருக்கு அத்தன்மையரே யென்றுகூறினானென்க. (71) 564. இன்சுவை யாழொ டன்ன மிளங்கிளி மழலை மஞ்ஞை பொன்புனை யூக மந்தி பொறிமயிர்ப் புறவம் பொன்னார் மென்புன மருளி னோக்கின் மானின மாதி யாகத் தன்புறஞ் சூழப் போகித் தளிரியல் விமானம் புக்காள். உம்மைவிரிக்க. மழலையிங்கிளி. வளர்த்தலிற் பூணணிந்த கருங்குரங்கு மந்தி - பெண்பெயர்; “குரங்கு முசுவு மூகமு மந்தி.” (தொல்.மரபு.67) என்றார். புறவம்-சித்திரப் புறா. மருண்ட இனியநோக்கு. இ-ள். தளிரியல் மானினமுதலாக எண்ணியவெல்லாம் தன் பக்கத்தே சூழ்ந்து செல்லப்போய் விமானத்தைச் சேர்ந்தா ளென்க. (72) வேறு. 565. வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவன் னொருமக ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள். இ-ள். வெற்றியையுடைய வேலினையும் முடியினையு முடைய கொற்றவன் மகள் இடைவிடாதபடையாகிய சுற்றத் தோடே போயினாளென்க. அதனெல்லை மேற் கூறுகின்றார். (73) 566. கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம் விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே. இ-ள். கண்ணருகே மதமுடையன வாகியயானை ஆயிரம்; தேரினுடையஎண் இரண்டாயிரமென்க. (74) 567. விற்படை விலக்குவ, பொற்புடைப் புரவியு முற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே. இ-ள். அம்பைத் தன்விசையாலே விலக்குவனாவாகிய பக்கரை யுடைய குதிரையும் முற்கூறியயானையி னான்மடங்கு நற்பக்கத்தன வென்க. (75) 568. பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையரு மாறிரட்டி யாயியர், கூறுதற் கரியரே. பாற்றினஞ்சூழ்ந்த வேல். வீறு-தம்வீரம்பிறர்க்கின்மை. இ-ள். பருதிபோற்பகைவரைக் கெடுக்கும் வேலையுடைய இளையரும் பன்னீராயிரம்பெயர்; அவர்தம் பகைவர் வஞ்சினஞ் கூறுதற்கரியரென்க. (76) 569. மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலி னாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே. மாகம்-திக்கு; மஞ்சுமாம். அதிர்ந்து - அதிர. இ-ள். விசும்பிலே மேகமழைபெய்தற்கிடித்தலின் அதனைத் தன்பகை யானையாகக்கருதி யானைகள்போகாது நின்றதிர்த லாலே அவர்க்குப்போகலாவதோருபாய மில்லையாயிற்றென்க. (77) 570. வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலின் மஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகத்தவே. இ-ள். குஞ்சரம் அங்ஙனம் வெகுளியோடே முழங்குதலால் அது கேட்டு மேகமஞ்சிக் கருக்கலங்கி நீரையுகுத்தன போன்றன வென்க. இடித்தமேகம் பின்பு பெய்தது. (78) 571. வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே. புயல்-ஆகுபெயர். கலந்து-கலக்க. இ-ள். கடல்நடுவு கரைக்குப்புறம்பே விழும்படி மும் மதங் களோடே புயலுகுத்தநீருங் கடலிடத்தே கலத்ததாலே மேகத் தாலு நாகத்தாலுந் தகைவின்றி விமானம் படையுடனே மரக்கல மிருக்கின்றவிடத்தே விரைந்துசென்றதென்க. (79) 572. மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த் தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம். இ-ள். கடலிடத்தே கலங்கவிழ்த்து வருத்தமுற்றுக்கெட்ட ஸ்ரீதத்தன்பெற்ற இலாபம் இனிக் கூறுவாமென்க. (80) 573. பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தன நீனிற நிழன்மணி, தானிறைத் தகமெலாம். “பானிற” முதல் “பீழை” அளவுமொருதொடர். வெள்ளிமலையில்நிறமிகுத்தனவென்றது, நீலமொழிந்த மணி களை. நீலநிறத்தையுடைய ஒளிமணி. 574. வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுக விஞ்ஞையம் பெருமகன், வஞ்சமென் றுணத்தினான். வஞ்சமில் மனத்தினான் - ஸ்ரீதத்தன். புகன்று உக உவந்து உவகையொழுக. பெருமகன் - தரன். 575. நங்கைதன் னலத்தினான், மங்குல்வெள்ளி மால்வரை யெங்குமன்ன ரீண்டினார், சங்குவிம்மு தானையார். மங்குல்-மேகம். மால்வரையில் மன்னர் தானையார் எவ்விடத்துமீண்டினார் 576. ஈரலங்க லேந்துவ, லாரலங்கன் மார்பினான் கார்கலந்த கைக்கணி, சீர்கலந்து செப்பினான். ஈரும்வேல். மார்பினான் - அரசன். 577. மாதர்வாழ்வு மண்ணதே, யாதலா லலங்கலந் தாதவிழ்ந்த மார்பநின், காதலன் கடலுளான். அவிழ்தற்குக்காரணமான மார்பு. ‘அழைப்பி’யென்பது சொல்லெச்சம். 578. என்றுகூற வென்னையே, துன்றுகாதற் றோழனைச் சென்றுநீ கொணர்கென, வன்றுவந்த வண்ணமே. அழைப்பியென்றென முன்னேகூட்டுக. 579. துன்பமுற்ற வர்க்கலா, லின்பமில்லை யாதலி னன்பமற்றி யானுனைத், துன்பத்தாற் றுடக்கினேன். துடக்கினேன் - பிணித்தேன். 580. பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கட லாழ்வித்திட்ட வம்பியைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான். பீழை - துன்பம். ஸ்ரீதத்தனுக்கு ஆழ்வித்தானாகப் பண்ணின. சுட்டி - இதுகலம். இவர் தோழரென்று சுட்டி. இ-ள். விஞ்சையம்பெருமகன்நங்கைநலத்தாலே மன்னரீண்டினார், அதுகண்டு மார்பினானுடைய கணி மாதர்வாழ்வு மண்ணிடத்தே யாதலால் அவளைக்கொண்டு போதற்கு மார்பனே, நின்றோழன் கடலிடத்தான், அவனை அழைப்பியென்று சீர் கலந்து செப்பினான்; அதுகேட்டு மன்னன் நீ சென்று என்காதற் றோழனைக் கொணர்கவென என்னையேநோக்கிக்கூற; யான் அன்றுவந்தசெய்தி ஒருவஞ்சனை காணென்று கூறி, அவ்வஞ்ச னையை, அன்பனே, துன்பமுற்றார்க் கல்லது இன்பமில்லை யென்று உலகுகூறலின், யான் நின்னை யொழிந்தோர்க் கின்பஞ் செய்து நின்னையொருவனையுந் துன்பத்தாற் பிணித்தே னென்று ணர்த்தினான்; உணர்த்தி யான் அங்ஙனம் பீழை செய்து நின்நட்பைப்பெற்றேன்; இனி நீ வாழ்வாயாகவென்று முகமன்கூறி மறைத்த அம்பினகமெல்லாம் நிறமிகுத்தனவற்றையு மணிகளையு நிறைத்து, வஞ்சமின்மனத்தினான் அகம்புகன்றுருகும் படி, அவ்வம்பியையுந் தோழரையுங்காட்டினானென்க. எனவே இலாபமேகூறினான். காரியங்கடைப்படுதலின் ஈண்டு உண்மை கூறினான். “வெற்றிவேல்” முதல் இத்துணையுங் குறளடி நான்காய்வந்த கொச்சகவொருபோகு; “நெய்யோடுதீ யொக்கச், செய்யானைச் சேர்வார்க்குப், பொய்யாத வுள்ளமே, மெய்யாதல் வேண்டும்.” என்றாற்போல யாப்பின் வேறுபட்டன. (81-82) வேறு. 581. தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக் கோன்றரு துன்ப மற்றென் குலத்தொடு முடிக வென்றான் கான்றுவில் வயிரம் வீசுங் கனமணிக் குழையி னானே. தேனைச்சொரிவதோர்மாரி. ஊன்சொரிவதோர்குருதி. இ-ள் வயிரம் ஒளியைக் கான்றுபரப்புங் குழையினானாகிய வேலான்றனது இனியமொழியாலே குளிர்ந்து, கலுழவேகன்றந்த இத்தன்மையவான துன்பம் என்குலமுள்ள அளவுநடப்பதாக வென்று உவந்து கூறினானென்க. (89) 582. தோடலர் தெரிய லன்றன் றோழரைக் கண்டு காத லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப் பாடிரும் பௌவ முந்நீர் பட்டது பகர்த லோடு நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார். இ-ள். ஸ்ரீதத்தன் தோழரைக்கண்டு காதல் நெஞ்சிலே விரிந் தெழுந்து மிகுதலாலே தார்குழையத்தழுவி முந்நீர்ப் பௌவத்திலே தானுற்றதெல்லாங் கூறியவளவிலே, நாங்கள் கண்டது நாடகம்; இதுகண்டிலேமென்று கைதட்டிச் சிரித்தா ரென்க. இவர்க்கிங்ஙன நிருமித்தான். (90) 583. கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம் பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ மட்டவிழ் கோதை யோடு மண்கணை முழவ மூதூர்க் கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான். இ-ள். முகையவிழ்ந்த தாரானாகிய நாய்கன் அழலாற் கதுவிய புண்ணிலே அருவியுமாரமும் பட்டதுபோன்று பரிவுதீர்ந்து, தனக்கினிய வரெல்லாருந் தன்னைச் சூழ மகிழ்ந்து தத்தையோடே இராசமாபுரத்திற் றன்மனையிலே புக்கானென்க. கதிய-விகாரம் . (91) 584. பெருமனை குறுக லோடும் பிறையென விலங்கித் தோன்றுந் திருநுதன் மனைவி செம்பொற் கொடியென விறைஞ்சி நிற்ப வருமுலை பொதிர்ப்ப வரங்கி வண்டின மிரியப் புல்லிக் கதிர்நகை முறுவன் மாதர் கண்ணுறு கவலை தீர்த்தான். இ-ள். தன்மனைவியிருக்கின்ற இடத்தைச்சேர்ந்தவளவிலே அவளிறைஞ்சி நிற்ப; தன்மேல் வண்டினங்கெடும்படி அவளை யணிந்து முலை புடைக்கொள்ளும்படி தழுவி, எயிற்றினையும் மகிழ்ச்சியையு முடைய அம்மாதரிடத்து நின்ற வருத்தத்தைத் தீர்த்தானென்க. (92) 585. சந்திர காந்த மென்றுந் தண்மணி நிலத்தி னங்கண் வெந்தெரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்திக் கந்தெரி மணியிற் செய்த கன்னியா மாட மெய்திப் பைந்தொடிப் பாவை யொன்றும் பரிவிலள் வைகி னாளே. இ-ள். பாவை, சந்திரகாந்தமென்னு மணியாற்செய்த நிலத்தி டத்தே ஓட வைத்து விளங்குகின்ற பொன்னாற் சுவரமைத்து மணி யாற்கந்து நாட்டிப் பளிக்குக் கையலகோடே பவளத்தைப் பூட்டா கப் பரப்பி வெள்ளியாலே வேய்ந்துசெய்த கன்னியாமாடத்தைச் சேர்ந்து சிறிதும் வருத்தமின்றி வைகினாளென்க. (93) 586. பாசிழை பரவை யல்குற் பசுங்கதிர்க் கலாபம் வீங்கக் காசுகண் பரிய வைகிக் கடன்றலை கழிந்த பின்னாத் தூசணி பரவை யல்குற் றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை மாசறு வரவுந் தந்தை வலித்தது மறியச் சொன்னான். இ-ள். பதுமையதல்குற் கலாபம்விம்முதலால் அதின்மணி களற்று விழும்படி புணர்ந்து, அவளிடத்து நிகழ்த்து முறைமை யெல்லாம் அவ்விடத்தேகழிந்தபின்பு, தத்தையது குற்றமற்ற வரவையும் அவடந்தை யாழ்வென்றானுக்குக் கொடுக்கவென்று துணிந்ததனையும் அவளறியக் கூறினானென்க. (94) 587. வண்டுன மலர்ந்த கோதை வாயொருப் பட்டு நேரத் தெண்கட லமிர்தம் பெய்த செப்பெனச் செறிந்து வீங்கிப் பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையி னாளைக் கண்டவர் மருள நாளைக் கடிவினை முடித்து மென்றான். இ-ள். அது கேட்டபதுமை நெஞ்சாலே துணிந்துடன்படுத லாலே ஸ்ரீதத்தனும் நாளை முலையினாளைக் கடிவினைமுடிப்பே மென்றா னென்க. செறிந்து-நெருங்கி. மகளிருமுட்படநுகர்தற்கு ஆண்மையை விரும்பி மயங்குதற்குக் காரணமான முலை.கட்டியங்காரனுடன் படவே கடிவினைமுடிதலின், அவனை நாளையுடன்படுவிப்பேனெனத் துணிந்து கூறினான் . (95) 588. மால்வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியிற் றந்த பால்வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்குக் கால்பொரு கழலி னானுங் காவலற் கண்டு சொன்னான் வேல்பொரு தானை யானும் வேண்டுவ விதியி னேர்ந்தான். இ-ள். ஸ்ரீதத்தனும் நூல்வல்லவர் தமதறிவாலே வரையின் வயிற்றைப் பிளந்துதந்த, பாலாலே நன்மையராய்ந்து கொண்ட மணியும் பொன்னும் பலபல கொண்டுபுக்கு அரசனைக்கண்டு தன் குறையைக்கூறினான்; அரசன் அவன்விரும்பினவற்றை விதியாலே உடன்பட்டானென்க. குறை-மண்டபஞ்சமைத்தலும் மூன்றுவருணத்தாரும் வரச் சாற்றுதலு முதலியன. சுயம்வரத்திற்கு அரசர் உடன்படவே வேண்டுதலின் விதியினென்றார். (96) வேறு 589. மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப் பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான் மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான். மையல்-செல்வச்செருக்கு. இ-ள். பாய்கையினா லலர்ந்தாரானாகிய நாய்கன் மன்னன் மகிழ்ந்தவளவிலே மிக்கஒளியோடேபோய் மனையைச்சேர்ந்து இத்தொழிலைக்கடிதாகச்செய்கவென்று கூறினானென்க. அது மேற்கூறுகின்றார். (97) 590. நானக்கிடங் காடைநகர் நாகத்திடை நன்பொன் வானக்கிடு மாட்சியதொர் மண்டபஞ்செய் கென்ன மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசய பக்கங் காணத்திடை வேங்கையெழக் கண்ணினர்க ளன்றே. இ-ள். நானக்கிடங்கை ஆடையாகவுடைய நகராகிய சுவர்க்கத் தினடுவே பொன்னையுடைய வானைச்சிரித்திடும் அழகினையுடைய தோர் மண்டபத்தைச்செய்கவென்று கூறினா னாக; கனிகள் வெள்ளிக் கிழமையுந் திருதியையும்பெற்ற உத்தரட் டாதிநாள் சிங்கமுதையமாக முகூர்த்தங்குறித்தாரென்க. நானம்-புழுகு; குளித்தலிற்புழுகுடைத்தாயிறு. வானைத் தீண்டு மென்றுமாம். பூரட்டாதியின் நாலாங்காலும் உத்தரட்டாதி யும் இரேவதியு மீனராசியாதலால் உத்தரட்டாதி நடுநாளாதலின் மீனத்திடை நாளென்றார். திருதியை, அட்டமி, திரயோதசி என்ப வற்றிற் றிருதியை சிறத்தலிற் சயபக்கமென்றார். மேடத்தின்முற்கூறு மேடராசியின்கூறு; இரண்டாங்கூறு சிங்கராசியின்கூறு; மூன்றாங்கூறுதனுராசியின் கூறு; ஆதலால் மேடத்தினடுக் கூற் றைச் சிங்கத்தின்உதையமாகவிதித்தார். இது கூறிற்று, சிங்கத்தே பிருகஸ்பதியாதலின். வெள்ளிமுதல் வியாழமீறாகக் கிழமையே ழாயவாறும், உத்திரட்டாதிமுதல் உரோகிணியீறாக நாள் ஆறாயவாறுங்கூடுமாறென்னையெனின், இத்திங்களிற் சதயமுதல் ஆயிலியத்தளவுஞ் சந்திரன் வர்த்தித்து வருதலின் வியாழக் கிழமைக்கு உரோகினிகூடிற்று. இதனானே மேல் “ஒண்ணிறவு ரோணியூர்ந்தவொளிமதி யொண்பொனாட்சி” என்று வியாழக் கிழமையினுஞ் சிறிது நாழிகை உரோகினியாகக்கூறினார். (98) 591. நட்புப்பகை யுட்கினொடு நன்பொன்விளை கழனி பட்டினொடு பஞ்சுதுகில் பைம்பொனொடு காண மட்டசுவை வல்சியினொ டியாதுமொழி யாம லெட்டிப்பதி னாயிரவ ருற்றுமுயல் கின்றார். பொன்இட்டால்விளையுமென்று அக்கழனியின்சிறப்பு கூறிற்று; பொன்உண்டாதற்குக்காரணமானகழனியுமாம். பஞ்சு-படாம். ஒடு - எண்ணொடு. காணம்-பழங்காசு. வல்சி-பகற்சோறு. உருபுவிரிக்க. இ-ள் பதினாயிரம்பெயர் கழனிமுதலியவற்றையும் ஏனைய வற்றையும் ஒழியாமலறுதியிட்டுத் தம்மிற்கூடியும் மாறு பட்டும் இவனுக்கஞ்சுத லுடனே கடிதின்முடிக்குங்கருத்தினராய் முயலாநின்றா ரென்க. (99) 592. வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக் கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங் கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற் கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார். இ-ள். அவர்களை தேறலையுநறவையும் வாய்விடுதலோடே பருகித் தொழில்செய்தற்கென்று கண்ட குந்தாலிகளாலே ஆழம்பட வெட்டிப்பின்பு அவ்விடத்தே எண்டிசையும் பொருந் தும்படி தலமிசைத் துயர்த்தி அதன்மேலே இஃதுயரத்திற்கள வென்றறிந்து காமுறுவன வாகிய பொன்னாலே நிலத்தைப் புனைந்தாரென்க. வாய்விடுதல்-வஞ்சினம்; ஆரவாரமுமாம். ஒடு-உட னிகழ்ச்சி. (100) 593. பொன்செய்குடங் கோத்தனைய வெருத்திற்பொலி பொற்றூண் மின்செய்பசும் பொன்னிலத்து வீறுபெற நாட்டி மன்பவள மேனவின்று பளிக்கலகு பரப்பி நன்செய்வெளி வேய்ந்துசுவர் தமனியத்தி னமைத்தார். மன்-பெருமை. நவின்று-நவில வெள்ளி-விகாரம். இ-ள் அப்பொன்னிலத்தே தங்கழுத்திற்குடதாடியாலே பொற்குடத்தைக் கோத்தாலொத்ததூணைப் பெருமைபெற நாட்டி, மேலே பவளமாகிய உத்தரமுதலியன பயில அவற்றின் மேலே பளிக்குக் கையலகாலே கைபரப்பி, வெள்ளியாலே வேய்ந்து, சுவரைப் பொன்னானமைத்தாரென்க. குடதாடி-தூணுக்கும் உத்தரத்துக்குநடுவே வைக்கப்பட்டது. (101) 594. பாவையவ ளிருக்குமிடம் பளிக்குச்சுவ ரியற்றிக் கோவைகுளிர் முத்தினியல் கோதையொடு கொழும்பொன் மாலையொடு மாலைதலை மணந்துவர நாற்றி யாலையமி தோவியர்கட் கென்னவணி யமைத்தார். இ-ள். பாவையாகிய அவளிருக்குமிடத்தைப் பளிங்காலே சுவர் செய்து முத்தினியல்கோவையோடே பூமாலையும் பொன் மாலை யுடனே மாணிக்கமாலைமுதலியவனவுந் தம்மிற் றலையொத்துவர நாலப்பண்ணி, இவ்விடம் சித்திரகாரர்கட் கிருப்பிடமென்னும்படி சித்திரத்தையெழுதினாரென்க. இவை சித்திரத்தின்மாலை. ஓவியங்கட்கும் பாடம். (102) 595. ஆயிதழ பொன்னலங்கல் காலசைப்ப வொல்கி வாயருகு வந்தொசிந்தும் மறியமழை மின்போற் சேயவர்க்குந் தோன்றியதொர் திலகமெனுந் தகைத்தாய்ப் பாயதிரை முத்தமணற் பரந்துபயின் றுளதே. இ-ள். அழகியஇழழையுடைய பொன்னாற்செய்த தூக்கு மாலைகள் காற்றசைத்தலாலே ஒதுங்கி விளிம்பருகே வந்து சாய்ந்து மீளுதலாலே மின்போற்றோன்றப் பட்ட மண்டபந்தான் மண்டபங் களுக்குத் திலகமென்னுந் தகைமைத்தாய் முத்தமாகிய மணல் எங்குநெருங்கிப் பரந்துள தென்க. இதனாற் பிறவும்கூறினார். (103) 596. காமர்களி றும்பிடியுங்கன்றுங்கலை மானுந் தாமரைய வாவிகளும் புள்ளுந்ததகை நலத்தி னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி யாமொரையங் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே. கலையுமானும். இயக்கிநிலையெழுதி-அதிதெய்வமாக இயக்கிய நிலையையுமெழுதி. இயக்கநிலை பாடமாயின் இசை இயக்க முநிலையுமாகவெழுதி யென்க. எழுதி - எழுத. இ-ள். பாவையோடே களிறு முதலியவற்றைப் பளிக்குச் சுவரிலேயேயெழுத அச்சுவரின்பாடத்தால் வந்துகாண்பார்க்கு அகமிது புறமிதுவெனத் தெரியாததோரையநிகழாநின்றதென்க. (104) 597. உழந்தவரு நோக்கிமகிழ் தூங்கவொளி வாய்ந்து விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கு மடையா முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண் டெழுந்துகொடி யாடுமிதவ் வெழினகரி னியல்பே. இ-ள். பலநாள் இதிலேபழகின சித்திரகாரரும்பார்த்து வியந்து மகிழ்ச்சிசெறியும்படி ஒருவிளக்கம்வாய்ந்து, இதிலெழுதின பறவைக்கும் விலங்குக்கும் பகையாகிய பறவைகளும் விலங்குகளும் இவை நம்மை விழுங்குமென்றஞ்சி அடையாவாக, உலகினிற்றனக்கு நிகரில்லையென்னும்படி கொடியாடாநிற்கும் அம்மண்டபத்தினியல்பு இத்தன்மைத்தென்க. (105) 598. ஒடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தே மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கு நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கு நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும். இ-ள். அந்தமாடமாகிய அது முகிலைக்கிழித்துப் பிறையைத் தலையிலே வைத்தலாலே அரனையொக்கும்; முகநான்காகிய அதனானே எங்குநாடுதலாலே அயனையொக்கும்; மேலெல் லையைத் தேடி நிமிர்ந்ததன்மையாலே அரியையுமொக்குமென்க. நாடி-நாசியென்பாருமுளர். இன்-அசை. (106) 599. கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங் கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும் வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுத முண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே. இ-ள். அது காமுறலிற் காமனையொக்கும்; உலகங்கொண் டேடத்தலிற் சச்சந்தனையுமொக்கும்; அதுவன்றி மாதராகிய அமுதத்தையுண்டவர்கள் எத்தன்மையர் அத்தன்மைய தொன் றென்க. நீங்கலாகாமை கூறினார். (107) வேறு 600 முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு பகற்கதிர் பரப்பிற் றாகி பஞ்சவர் விமான முட்டிப் புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே. இ-ள். மதிபோன்ற நிறைமணிகளையுடைய முகிற்றலை மாடத் திட்ட புகை தவழ்ந்துசென்று வானத்து மேகத்தையூடுருவி நீண்டு பகலைச்செய்கின்ற கதிரிடத்தே பரத்தலையுடைத்தாய் சோதிட்கரது விமானத்தை முட்டி அமரர் கற்பத்திலும்புக்கு அயாவுயிர்த்ததென்க. கற்பம்-இருத்தற்குக் கற்பித்த விடம். (108) வேறு 601. அரைசன தருளினொ டகன்மனை யவனெய்தி யுரைசெலல் வகையினொ டுலகமு மறிவுற முரசதி ரிமிழிசை முதுநக ரறைகென விரைசெல லிளையரை வியவரின் விடவே. 602. விடுகணை விசையொடு வெருவரு தகையவர் படுபணைய வருறை பதியது குறுகி நெடுமதி யகடுற நிழறவழ் கொடியுயர் கடிநக ரிடிமுர சறைமின மெனவே. 603. மங்கல வணியினர் மலர்கதிர் மதியன புங்கவ னறநெறி பொலிவொடு மலிகென வங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் கோடணை யறைவாம். வேறு 604. வான்றரு வளத்த தாகி வையகம் பிணியிற் றீர்க தேன்றரு கிளவி யாருங் கற்பினிற் றிரித லின்றி யூன்றுக வூழி தோறு முலகினுண் மாந்த ரெல்லா மீன்றவர் வயத்த ராகி யில்லறம் புணர்க நாளும். 605. தவம்புரிந் தடக்கி நோற்குந் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப் பவம்பரி கெமக்கு மென்று பணிந்தவ ருவப்ப வீமி னவம்புரிந் துடம்பு நீங்கா தருந்தவ முயன்மின் யாருஞ் சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளுங் கேண்மின். 606. அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியி னொந்து விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சேர்ந்த வெம்முலைப் பரவை யல்குன் மிடைமணிக் கலாபம் வேய்த்தோட் செம்மலர்த் திருவின் சாயற் றேமொழி தத்தை யென்பாள். 607. மற்றவ டந்தை நாய்கன் வண்கைச்சீ தத்த னென்பான் கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருளி தாகு முற்றவ முடைய ளாகி மூரிநூற் கலைக ளெல்லாங் கற்றவள் கணங்கொ ணல்யா ழனங்கனைக் கனிக்கு நீராள். 608. தீந்தொடை மகர வீணைத் தெள்விளி யெடுப்பித் தேற்றிப் பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக் கீந்திடு மிறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும் வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை யென்றான். 609. மண்ணக மடந்தை யாக மார்புற முயங்கி நின்ற வண்ணலை யாதி யாக வருங்கடி நகரை வாழ்த்தி விண்ணக முழக்கி னேய்ப்ப வீதிதோ றெருக்கி யெங்குங் கண்ணொளிர் கடிப்பி னோச்சிக் கடிமுர சறைந்த காலை. இவையொன்பதுமொருதொடர். 1. உரை செலல் வகை- முற் கூறிச்சாற்றும் முறைமை; புகழுமாம்; கண்நடுங்குலால் இமிழ்கின்ற ஓசையையுடையமுரசு. வியவர் - ஏவல்செய்வார்; வியங்கோள் போல. என்றது – முரசறை விப்பாரை. 2. தகையவர் - அவ்வியவர். பதியாகிய அதனை. அம் - அசை. 3. மங்கலவணி - வெள்ளணி. எவ்வுயிர்க்குந் தண்ணளி செய்த லின்மதியுவமை. நகை - முத்து. மணியுநகையும், முலை வளர்கின்றதத்தை. 4. கற்பினின், இன் - அசை. 5. தவத்திலேமிக்கு ஐம்புலனுமடங்கிநோற்குந் தத்துவவுணர் வினோரை எதிர்ப்பட்டு எமக்கும் பிறப்பறுகவென்று வணங்கி ஓம்பி அவருவப்பனவற்றை ஈமின். யாவருமுடம்பு அவமே புரிந்து நீங்காமல் அவ்வுடம்பால் நன்மைபுரிந்த வீட்டைச் சேரும்படி அருந்தவத்தை முயன்மின். 6. அனிச்சப்போதை அழகியமலர்களின் அல்லியோடே அணி யின் நொந்து வருந்து நுசுப்புநோம்படி வீற்றிருந்து வீற்றுத் தெய்வஞ்சேர்ந்த முலைமுதலியவற்றையுடைய தேமொழி - பெயர் தத்தை. 7. மற்று - வினைமாற்று. கலுழவேகன் குலத்தோடே போந்தான். இசை நூலிற் கூறியகலைகள். யாழாலே காமனையு முருக்குநீராள். 8. தொடை - நரம்பு. பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங் கோட்டி யாழ் என்னும் நான்கினும் பத்தொன்பது நரம்புகட்டின மகரயாழ் இவள்வாசிக்கின்ற தென்பதுதோன்ற மகரவீணை யென்றார். “ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே - நின்ற பதினாறும் பின்னேழுங், குன்றாத - நால்வகை யாழுக்கு நன்னறம்பு சொன் முறையே - மேல்வகைய நூலோர் விதி.” முறையே - 21 -19 - 16 - எ- என்க. விளி - ஓசை. எடுப்பி - எழுப்பி. அரசர் அந்த ணர் வணிகரென்னு மூவகைக்குலத் துளாரிலுமென்க; உருபு மயக்கம். இவள்தான் அரசகுலமாதலின் முற் கூறினார். 9. தன்மார்பிலேயுற. எருக்கி - தாக்கி. எங்கும் - எவ் விடத்தும். இ-ள். அங்ஙனமண்டபஞ்சமைததவளவிலே ஸ்ரீதத்தன் அவ்விடத் தரசனுக்கு அறிவித்து அவனருளோடே தன்மனையைச் சேர்ந்து உலகமுமறிவும்படி இந்நகரிலே உரைநடத்தலின் கூறுபாட்டோடே முரசை அறைவார்களாகவெனக்கூறித் தன்னிளையரை வியவரிடத் தேவிட; அவ்வியவருங் கணைபோலும் விசையுடன் சென்று முரசறைவாருறைபதியதனைக் குறுகி முரசறைமினெனக்கூற; அது கேட்டு அவருங் குழலவளுடைய யாழ்வாசினையை அறைவாமெனக் கூறி அணியினராய்ப் புங்க வனறநெறி வளர்ச்சியோடே மிகுக; ஊழிதோறும் .இவ்வையகம் மழை தருவளத்தையுடைத்தாய்ப் பிணியினின்று நீங்குக; கிளவி யாரும் கற்பினிற்றிரியாது நிலைபெறுக; மாந்தரெல்லாம் இருமுதுகுரவர் சொற்கேட்டு நாளும் இல்லறம் புணர்கவென உலகைவாழ்த்திப் பின்பு, கட்டியங்காரன் முதலாக நகரையும் வாழ்த்தி, நீங்கள் தானஞ்செய்மின்; தவஞ்செய்மின்; யான் செப்புகின்ற இக்காரியத்தையுங்கேண்மின்; தேமொழி தத்தை யென்பான்; அவள் தந்தையாகிய நாய்கன் ஸ்ரீதத்தன் என்பான்; கலத்தின் வந்தான்; ஆதலால் அவன் கூறிய காரியமிதுவாகும்; அஃதி யாதெனின் கற்றவள் நீராள் விளங்கிழை அவள்தாதையாகிய கலுழவேகன் மூவகைக்குலத்து ளாரிலும் மகரயாழினது விளியை யெடுப்பி மிகுத்து எல்லார்க்குந் தெளிவித்து அவ்வரிவையிற் காட்டில் அறிவுடையநம்பிக்கு அவளைக் கொடுமென்று கூறினானென்று வீதிதோறுங் கடிப்பினோச்சித் தாக்கி எங்கும் முழக்கினேய்ப்ப முரசறைந்தபொழுதிலேயென்க. (109-117) 610. வணக்கருந் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த நிணக்கொழுங் குருதி வாட்கை நிலம்புடை பெயர்க்கு மாற்ற லணைப்பருங் களிகொள் வேழத் தத்தின புரத்து வேந்தன் கணைக்கவி னழித்த வுண்கட் கன்னியைக் கருதி வந்தான். நிணத்தையுடையகுருதி. இ-ள். மன்னருடைய வேழத்தினது மத்தகத்தைப்பிளந்து தப்பாத வாளையுடய கையினையும், மெய்வலியினையுமுடைய அத்தின புரத்தினரசன் கன்னியைக் கொள்ளக்கருதி வந்தானென்க. (118) 611. சிதைப்பருஞ் சீற்றத் துப்பிற் செய்கழ னரல வீக்கி மதக்களி றடர்த்துக் குன்ற மணிவட்டி னுருட்டு மாற்றற் கதக்களி யொளிறு வைவேற் காம்பிலிக் காவன் மன்னன் பதைப்பரும் பரும யானைப் பாலமா குமரன் வந்தான். கதக்களியாற் பகைக்கஞ்சிப் பதைத்தோடுதலரியயானை. பாலமா, மா - ஈண்டு வியங்கோளன்றி இசை நிறைத்தது. இ-ள். பகைவராற் சிதைத்தற்கரியதுப்பாலே வீரக்கழலைக் கட்டிக் களிற்றையடர்த்துக் குன்றைவட்டுப் போலுருட்டு மெய்வலியினையும், வேலினையும், யானையினையுமுடைய காம்பிலி நாட்டுக்கு மன்னனாகிய பாலகுமரன்வந்தானென்க. (119) 612. இலைபொர வெழுதி யன்ன வெரிமணிக் கடக முன்கைச் சிலைபொரத் திரண்ட திண்டோட் சில்லரிச் சிலம்பி னார்த முலைபொர வுடைந்த தண்டார் மொய்ம்மதுத் துளிப்ப வந்தான் மலைபொர வரிய மார்பின் வாரண வாசி மன்னன். இ-ள். இட்ட இலைத்தொழில் திருந்த நெருங்க எழுதினாற் போன்ற முன்கையினையும், தோளினையும், மலையொத்தற்கரிய மார்பினையுமுடையமன்னன் முலை பொருதலாலலர்ந்த தாரின்மதுத் துளிப்பவந்தானென்க. (120) 613. கதிர்முடி மன்னர் சூழ்ந்து கைதொழு திறைஞ்சி மாலைத் திருமுடி வயிர வில்லாற் சேவடி திளைப்ப வேத்தி யருமுடி யணிந்த கொற்றத் தவந்தியன் முரச மார்ப்ப வொருபிடி நுசுப்பி னாளை யுள்ளுபு வந்து விட்டான். ஏத்தி - ஏத்த. இ-ள். மன்னர் சூழ்ந்து கையாற்றொழுது தமது முடியின் வயிரத்தினதொளியாலே அவன்சேவடி ஒளிஇடையறாதிருக் கும்படி இறைஞ்சியேத்த, முடியணிந்த அவந்தியன் ஆர்ப்ப ஒருபிடியினடங்கு நுசுப்பினாளைக் கொள்ளக்கருதி வந்து விட்டானென்க. (121) 614. வெள்ளணி யணிந்த ஞான்றே வேந்தர்தம் முடியிற் கொண்ட கள்ளணி மாலை மோந்து கனைகழ லிலங்கு நோன்றாட் புள்ளணி கொடியி னானிற் போர்பல தொலைத்த வாற்ற லள்ளிலை யணிந்த வைவே லயோத்திய ரிறையும் வந்தான். வெள்ளணி - பிறந்த நாளிலொப்பனை. அள்ளுதல் - செறிதல். இ-ள். ஒப்பனையையணிந்தவன்றே மாலையைமோந்து கழலிலங்கு காலினையுங் கருடக்கொடியோனைப்போலப் பல போரைத்தொலைத்த ஆற்றலையும் வேலினையுமுடைய அயோத் தியர்க்கிறையும் வந்தானென்க. (122) 615. நீணிதி வணிக ரீறா நிலமிசை யவர்க ளெல்லாம் வீணையிற் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்க் கோணமு மறுகு மெல்லாங் குச்சென நிரைத்தம் மாந்தர் மாண்மது நசையின் மொய்த்த மதுகர வீட்ட மொத்தார். இ-ள். கடிமுரசறைந்த காலையிலே வணிகரீறாக நிலை மிசையவர்களாகிய விவர்களும் ஒழிந்த அரசரும் அந்தணரு மெல்லாரும் வீணையிற் பொருதுவெல்ல வேண்டி விரைவினராய் நெருங்கி மூதூரிற் குறுந்தெருவிலும் நெடுந்தெருவிலும் பாவாற்றி யென நிரைத்தலாலே, அம்மாந்தர் மதுநசையான் மொய்த்த தேனீயின் திரட்சியை யொத்தாரென்க. மதுகரம்வருந்தத் தேனை ஒருவன் கொண்டுபோமாறு போல் இவர் வருந்தச் சீவகன் கொண்டு போதல் கருதிற்று. (123) 616. உருக்கமைந் தெரியுஞ் செம்பொ னோரைவில் லகல மாகத் திருக்குழன் மடந்தை செல்லத் திருநிலந் திருத்திப் பின்னர் விரைத்தகு நான நீரால் வெண்ணிறப் பொடியை மாற்றிப் பரப்பினர் படுவண் டார்ப்பப் பன்மலர் பக்க மெல்லாம். 617. விலைவரம் பறித லில்லா வெண்டுகி லடுத்து வீதி யலர்தலை யனிச்சத் தம்போ தைதம்முழ வகல மாகப் பலபடப் பரப்பிப் பாவை மெல்லடிப் பரிவு தீர நிலவரைத் தன்ன னாரை நிதியினால் வறுமை செய்தான். இவையிரண்டு மொருதொடர். இ-ள். மடந்தைசெல்லும்படி வீதியிற் றிருநிலத்தை ஓட்ட மைந்தெரியும் பொன்னாலே ஓரைந்து விற்கிடையகலமாக எங்குந் திருத்திப் பின்பு நீரற்றத்திற்குத் தக்க புழுகாலும் பனி நீராலும் எழுந்தபொடியைமாற்றிப்பக்கமெல்லாம் வண்டார்க் கும்படி மலரைப்பரப்பினார்; அங்ஙனம்பரப்பிப் பாவையதடியிற் பரிவுதீரும்படி அப்பொன்னிலத்தே வெண்டுகிலைப் பலபட அடுத்து அதன்மேலே அனிச்சப்பூவை ஐம்முழவகலமாகப் பரப்பு தலாலே, நிலத்தெல்லையிற் றன்னையொப்பாரை நிதியாலே மிடியராக்கினானென்க. (124-125) அடுத்து - சேர்த்து. 618. மண்டல நிறைந்த மாசின் மதிப்புடை வியாழம் போன்றோர் குண்டல மிலங்க நின்ற கொடியினைக் குறுகித் தோழி விண்டலர் போதை விம்மும் விரைக்குழ றொழுது நீவிப் பண்டியன் மணங்க ளெல்லாம் பரிவறப் பணிந்து சொன்னாள். இ-ள். வட்ட நிறைந்த மறுவில்லாத மதியின்பக்கத்துநின்ற வியாழம்போன்று முகத்தருகே ஒரு குண்டலமிலங்கும்படிநின்ற கொடியினை வீணாபதி தொழுதுகுறுகி விரைக் குழலைக் கோதி அவட்குநாணால் வரும்பரிவறப் பண்டு உலகிலியலு மணங்களை யெல்லாந் தாழ்ந்து கூறினாளென்க. (126) விரைக்குழல் - விகாரம். 619. எரிமணி நெற்றி வேய்ந்த விளம்பிறை யிதுகொ லென்னப் புரிமணி சுமந்த பொற்பூண் பொறுக்கலா நுசுப்பிற் பாவை திருமணி வீணைக் குன்றத் திழிந்ததீம் பாலை நீத்தத் தருமுடி யரச ராழ்வர ம்மனை யறிவ லென்றாள். புரி - முத்துவடம். பாலையாவன - செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கொடிப்பாலை, மேற் செம் பாலை, விளரிப்பாலை எனவேழும். அம்மனைத்தாய்; “அன்னை யென்னை யென்றலு முளவே, தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந், தோன்றா மரபின வென்மனார் புலவர்.” என்பது விதி. இ-ள். வீணாபதி இது மணியை இரண்டுதலையினு மழுத்திய தோர் பிறையோவென்ன முத்துவடங்கள் இரண்டு தலையினு மணியைச்சுமந்த பூணைப்பொறுக்கலாத நுசுப்பிற் பாவாய், அம்மனாய், நினது மகரயாழாகிய மலையினின்றுங் குதித்த பாலை யென்கின்ற பண்ணாகிய நீர்ப்பெருக்கத்திலே அரசரழுந்துவர்; அதனை யானறிவே னென்றாளென்க. இதனால் வருவது கூறினாள். (127) 620. மண்ணிட மலிய வெங்கு மாந்தரும் வந்து தொக்கா ரொண்ணிற வுரோணி யூர்ந்த வொளிமதி யொண்பொ னாட்சித் தெண்ணிற விசும்பி னின்ற தெளிமதி முகத்து நங்கை கண்ணிய வீணை வாட்போர்க் கலாமின்று காண்டு மென்றே. 621. பசுங்கதிர்க் கடவுள் யோகம் பழிப்பற நுனித்து வல்லான் விசும்பிவர் கடவு ளொப்பான் விருச்சிக னறிந்து கூற வசும்புதே னலங்க லைம்பா லரிவையோ டாய்ந்து நாய்கன் விசும்புபோன் மாந்த ரார விழுநிதி சிதறி னானே. இவையிரண்டுமொருதொடர். 1. ஈண்டி - பாடமாயிற் றம்மிற் றிரண்டென்க. கண்ணிய - உலக மதித்த, 2. விருச்சிகன் - கணி; காரணப்பெயர். அசும்புதேன் - இடையறாதொழுகுந்தேன். இ-ள். சந்திராபரணமென்னுநூலிற் கூர்ந்துவல்லான் பிருகஸ்பதியையொப்பானாகிய விருச்சிகன்றான் அறிந்து, மாந் தரும் வந்து மண்ணகநிறைய எங்குந் தொக்காராதலின், உரோகி ணியூர்ந்த மதியையுடைய வியாழக்கிழமையிலே நங்கையது வீணையாகிய வாட்போரின் மாறுபாட்டைக் காண்பேமென்று ஸ்ரீதத்தனுக்குக்கூற; அவனும் பதுமையுடனே இது நடத்து முறை மையை ஆராய்ந்து விழுநிதியை மாந்தராரும்படி மழைபோலச் சிதறினானென்க. (128-129) 622. வாசநெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்பப் பூசிவெள் ளிலோத்தி ரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின் காசறு குவளைக் காம ரகவிதழ் பயில மட்டித் தாசறத் திமிர்ந்து மாத ரணிநலந் திகழ்வித் தாரே. இ-ள். மாதர் மெய்யிலே வண்டுமூச விரல்சிவப்ப நெய்யைப்பூசி, வெள்ளி லோத்திரத்தினது பூவுலர்தலை யரைத்த குழம்பாலே குற்ற மறத்திமிர்ந்து நலத்தை விளக்கினாரென்க. குவளையினது உள்ளிதழின் தடிப்பதெனப்பூசித்திமிர்ந்தென்க. (130) 623. கங்கையின் களிற்றி னுச்சிக் கதிர்மணிக் குடத்திற் றந்த மங்கல வாச நன்னீர் மணிநிறங் கழீஇய தொப்ப நங்கையை நயப்ப வெல்லாம் விரையொடு துவருஞ் சேர்த்தி யங்கர வல்கு லாளை யாட்டினா ரரம்பை யன்னார். இ-ள். அரம்பையன்னார் மணியையொப்பமிட்ட தன்மை யொப்ப, நங்கையை நயக்கப்படுவனவாகிய ஓமாலிகைக ளெல்லாவற்றையும் வினரயையுந் துவரையுஞ் சேர்த்திப் பின்பு, அவளைக் களிற்றினுச்சியிலே குடத்தாற்றந்த மங்கலமாகிய கங்கையினீராலே யாட்டினாரென்க. ஓமாலிகைகளாவன- “இலவங்கம் பச்சிலைகச் சோலமிரு வேரி மலையிரு வேரி வகுளம் சுரபுன்னை, ஏலந்தத்கோல மதா வரிசிசாதிக் காய் நாகணமஞ்சட்டி நறும்பிசின் குக்குலுமாஞ்சி கண்டில் வெண்ணெய்தீம்பூ நன்னாரிஅடவிக்கச் சோலமரத்தை சரளம் புழுகாரியக்கொட்டங்கொட்டந்தகர மதிமதுர முத்தக்காசாய்ந்தவிலா மிச்சஞ் சயிலேக நாகப்பூச் சண்பக மொட்டென்று முழுதுணர்ந்தோ ரோதிய முப்பத்திரண்டே விதிவகை யோமாலிகை.” நயப்ப - பெயர். விரை: “சந்தனமகிலொடு கருப்பூரங் கத்தூரி - குங்கும மென்றை யைந்தும் விரையே,”துவர்: “நாற் பான் மரமா நாவ றிரிபலை வன்கருங் காலி பத்துந் துவரே.” என விவை. (131) 624. வெண்ணிற மழையின் மின்போல் வெண்டுகிற் கலாபம் வீக்கிக் கண்ணிற முலையுந் தோளுஞ் சந்தனத் தேய்வை கோட்டித் தெண்ணிறச் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சேர்த்திப் பண்ணிறச் சுரும்பு சூழும்ப னிமுல்லைச் சூட்டும் வேய்ந்தார். இ-ள். வெண்மேகத்தினுட்கிடந்த மின்னுப்போற் றுகிலுக் குள்ளே கலாபத்தை வீக்கி, கண்ணையுநிறத்தையுமுடைய முலை யினுந் தோளினுஞ் சந்தனக்குழம்பைப் பூசி, சிலம்பையுங் கிண் கிணியையும் பாதத்தேசேர்த்தி, பண்ணையுநிறத்தையுமுடைய சுரும்புசூழுமுல்லைச் சூட்டைக் கற்பிக்குத் தலையிலே சூட்டினா ரென்க. (132) 625. எரிமணிச் சுண்ண மின்னு மிருஞ்சிலை முத்தஞ் சேர்த்தித் திருமணி முலையி னெற்றிச் சிறுபுறஞ் செறியத் தீட்டிப் புரிமணி யாகத் தைதா விரனுதி கொண்டு பூசி விரிமணி வியப்ப மேனி யொளிவிட்டு விளங்கிற் றன்றே. புரி - வடம். பூசி - பூச. இ-ள். அவர் வானவிற்போலுமுத்துவடத்தை முத்தலையிலே சேர்த்தி, மணிச்சுண்ணத்தை முதுகிலேசெறியத்தீட்டி, அதனை ஆகத்தே விரனுதியைக்கொண்டு ஐதாகப்பூச மேனிதான் மணிவியக்கும்படி விளங்கிற்றென்க. (133) 626. அருங்கயம் விசும்பிற் பார்க்கு மணிச்சிறு சிரலை யஞ்சி யிருங்கயந் துறந்து திங்க ளிடங்கொண்டு கிடந்த நீல நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் கருங்கய லல்ல கண்ணே யெனக்கரி போக்கி னாரே. இ-ள். நீண்டுலாய்ப் பிறழ்கின்ற விவை ஆழ்ந்தகயத்தை விசும் பிலே நின்று பார்த்துத் தன்னையெடுக்குஞ் சிச்சிலிக்கஞ்சி அதனைத் துறந்து நீலமணியாகிய நெருங்கிய விற்காப்பத் திங்களை இடங்கொண்டுகிடந்த கயலல்ல கண்ணேயென்று பிறர்கருதும் படி மையையெழுதினாரென்க. சான்றுபோலவுந்தோன்ற. கிடந்தென்றும் பாடம்.( 134) 627. பொருந்துபொற் றூண்க ணான்கிற் பொலிந்துநூற் புலவர் செந்நா வருந்தியும் புகழ்த லாகா மரகத மணிசெய் கூடத் திருந்திளை யார்கள் கோல மிந்திர னிருமித் தாற்போற் றிருந்தத்செய் ததற்பி னங்கை திருவிற்கோர் திலக மொத்தாள். இ-ள். தூணான்காற்பொலிந்து நூற்புலவர்புகழ்தலாகாத மணியாற் செய்த ஒப்பித்தற்குப் பொருந்துங்கூடத்தே ஒப்பிக்கு மகளிரிருந்து கோலத்தை இந்திரன் நிருமித்தாற்போற்செய்தபின் நங்கை திருமகட் கிட்டதொரு திலகத்தையொத்தாளென்க. (135) 628. மண்கனை முழவம் விம்ம வரிவளை துவைப்ப வள்வார்க் கண்களைந் திடியின் வெம்பிக் கடலென முரச மார்ப்ப விண்கனிந் துருகு நீர்மை வெள்வளைத் தோளி போந்தாள் பண்கனிந் துருகு நல்யாழ்ப் படைபொரு துடைக் கலுற்றே. மண் - மார்ச்சனை. பண்முற்றுப்பெறுதலிற் கேட்டோர் நெஞ்சுருகு தற்குக் காரணமான யாழ். இ-ள். தேவர் நெஞ்சுநெகிழ்ந்துருகுந் தன்மையையுடைய வளைத் தோளி யாழையுடைய மூன்றுவருணத்துப் படையையுங்கெடுத்தலுற்று முழவுவிம்ம வளையொலிப்ப வள்வார்முரசங் கண்ணொலித்து இடியின்வெம்பிக் கடலெனவார்ப்பப் போந்தா ளென்க. (136) 629. பரந்தொளி யுமிழும் பைம்பொற் கண்ணடி பதாகை தோட்டி விரிந்திருண் மேயுஞ் செம்பொன் விளக்கு வெண் முரசு கும்பஞ் சுரந்தவெண் மதியைச் சூன்று கதிர்கொண்டு தொகுத்த போலும் பொருந்துபொற் கதிர்பெய் கற்றை புணர்கயல் போந்த வன்றே. கண்ணடி - விகாரம். ஒளிபரந்து இருளைக்கெடுக்கும் விளக்கு. அமுதைச்சுரந்த மதியைக்சூன்று கிரணங்களை வாங்கிக் கொண்டு சேர்த்தபோலுங் கற்றை; பொற்காம்பாற் கதிரைப் பெய்கின்ற கற்றை, புணர்கயல் - இரட்டைக்கயல். இ-ள். கண்ணாடிமுதலிய அட்டமங்கலங்களாகிய இவை முன்னே போந்தனவென்க. (137) 630. வென்றவ னகலம் பூட்ட விளங் கொளி மணிசெய் செப்பி னின்றெரி பசும்பொன் மாலை போந்ததுநெறியிற்பின்ன ரொன்றிய மணிசெய் நல்யாழ் போந்தன வுருவ மாலை தின்றுதே னிசைகள் பாடத் திருநகர் சுடர வன்றே. தின்று - உள்ளடக்கி, யாழினதுருவை மாலை மறைத்துக் கிடத்தலின் அம்மாலையிற் றேன்பாட. தேன் மாலையைத்தின் றென்று மிகுதியாற்கூறுவாருமுளர். இ-ள். உலகுநடக்குநெறியாலே வென்றவனகலத்தேபூட்டு தற்குச் செப்பிலே பொன்மாலைபோந்தது; அதன்பின்னே பாட விளங்கயாழ் போந்தனவென்க. தின்று தேன்றிசைகள்பாடவென்றும் பாடம். (138) வேறு 631. ஆரந் துயல்வர வந்துகில் சோர்தர வீரம் படக்கையை மெய்வழி வீசித் தேரை நடப்பன போற்குறள் சிந்தினொ டோரு நடந்தன வொண்டொடி முன்னே. இ-ள். குறள் சிந்துடனே ஆரமசையத் துகில்நெகிழாநிற்க வீரமுண்டாக விலாப்புடைக்குள்ளே கையைவீசித் தேரைகள் நடக்கு மவைபோல ஒண்டொடி முன்னேநடந்தனவென்க. (139) 632. வட்டச் சூரையர் வார்முலைக் கச்சினர் பட்டு வீக்கிய வல்குலர் பல்கணை விட்ட தூணியர் வில்லினர் வாளின ரொட்டி யாயிரத் தோரெண்மர் முன்னினார். இ-ள். வட்டமான பனிச்சையர் வாராற்கட்டினகச்சினர் சேலை கட்டினவல்குலர் தூணியர், வில்லினர், வாளினராய், வஞ்சினங்கூறி ஆயிரத்தெண்மர் முற்படச் சென்றாரென்க. (140) 633. வம்பு வீக்கி வருமுலை யுட்கரந் தம்பி னொய்யவ ராணுடைத் தானையர் பைம்பொற் கேடகம் வாளொடு பற்றுபு செம்பொற் பாவையைச் சேவித்து முன்னினார். இ-ள். ஓடுங்கால் அம்பினுங்கடியவர் வருமுலையுட்கரந்து கச்சு வீக்கி ஆணுடையாக வுடுத்ததானையராய்க் கேடகத்தையும் வாளையும் பிடித்துப் பாவையைச்சேவித்து முற்படச்சென்றா ரென்க. இங்ஙனஞ்சேவித்தல் மகளிர்க்கியல்பு. (141) 634. ஆணை யாணை யகலுமி னீரென வேணுக் கோலின் மிடைந்தவ ரொற்றலி னாணை யின்றெம தேயென் றணிநகர் காணுங் காதலிற் கண்ணெருக் குற்றவே. 635. கண்ணி னோடு பிறந்தது காரிகை வண்ணங் காண்டற்கன் றோவென்று வைதவர் விண்ணு மண்ணும் விருந்துசெய் தாலொப்ப வெண்ணி னெண்ணிட மின்றி நெருங்கினார். இவை யிரண்டுமொருதொடர். இ-ள். காவற்குரியவர்கள் மிடைந்தவரை முற்படவைது அவர் நீங்காமையின் ஆணையோ அகன்மினெனக்கூறி ஒற்று தலால், அவர் விண்ணில்விச்சாதரரும் மண்ணிலுள்ளாரும் எள்ளிடவிடமின்றி நெருங்கினார்; காரிகை வண்ணங் காண்டற்கன்றோ, ஆதலான், விசாரித்துபபார்க்கில் யாமுங் கண்ணினோடு பிறந்தது வண்ணங் காண்டற்காயிருக்குமெனக் கூறிப், பின்னும் எங்கட்கு நீர் விருந்து செய்தாற்போல இன்று எம்முடைய ஆணையே ஆணையாக்கொண்மி னெனவுங் கூறி நகரிலுள்ளார் காதலாற் காணுங் கண்கள் நெருக்குற்ற வென்க. (142-143) வேணுக்கோல் - மூங்கிற்பிளிச்சு. சிலசொல்வருவிக்க. வேறு. 636. இனஞ்சே ராவாகி யிளையா ருயிரின்மே லெண்ணங் கொள்வான் புனஞ்சேர் கொடிமுல்லை பூம்பவளத் துள்புக்குப் பூத்த போலும் வனஞ்சேர் துவர்ச்செவ்வாய் வாளெயிறுங் கண்மலரும் வனைய லாகாக் கனஞ்சேர் கதிர்முலையுங் கண்டார்கள் வீட்டுலகங் காணார் போலும். 637. மீன்சேர் குழாமனைய மேகலையும் வெம்முலையுங் கூற்றங் கூற்ற முன்சே ருயிருய்யக் கொண்டோடிப் போமின்க ளுரைத்தே மென்று கான்சேர் கமழ்கோதை காறொடர்ந்து கைவிடா தரற்று கின்ற தேன்சேர் திருவடிமேற் கிண்கிணிபொன் னாவதற்கே தக்க வென்பார். 638. கள்வாய்ப் பெயப்பட்ட மாலைக் கருங்குழல்கள் கண்டார் நைய வுள்வாய்ப் பெயப்பட்ட வொண்மதுச்செப் போரிணை மெல்லாக மீன்ற புள்வாய் மணிமழலைப் பொற்சிலம்பி னிக்கொடியை யீன்றான் போலுங் கொள்வா னுலகுக்கோர் கூற்றீன்றா ளம்மவோ கொடிய வாறே. வேறு 639. செய்ய தாமரை மேற்றிரு வேகொலோ வெய்ய நோக்கின்விச் சாதரி யேகொலோ மையில் வானவர் தம்மக ளேகொலென் றைய முற்றலர் தார்மன்னர் கூறினார். இவை நான்குமொருதொடர். 1. முல்லை இளையாருயிரிடத்தறிவைக்கொள்ள வேண்டித் தம்மினத்தைச்சேராவாய்ப் பவளத்துள்ளே புக்குப் பூத்தபோலுஞ் செவ்வாயையும் எயிற்றையுங் கண் மலரையும் பண்ண முடியாத முலையையுங் காணாதவர்கள் போலேயிருந்தது முன்பு வீட்டு லகத்தைக் கண்டவர்களென்பாரும். இவையிற்றைக்கண்டவர்கள் பின்னை இவையே காண்பார்களென்று கூறினாரென்றுமாம். செவ்வாய் - பெயர் மாத்திரை. 2. முலையும் உம்மை - சிறப்பு. கூற்றங்கூற்றம் - விரைவு. ஊன் சேருயிர் - மானிடயாக்கை. ‘பூவென்று தேனினஞ்சேருமடி. ஆவதற்கே ஏகாரம் - எதிர்மறை. கோதைபோல்வாளிடத்தே கட்டுப்பட்டு, முலையும் கூற்றங் கூற்றம்; நுமதுயிர் ஊன்சேருயிராதலின் அதனைப் பிழைக்கக் கொண்டோடிப்போங்கள், எம் மேற்றாழ்வறவுரைத் மென்று மாறாதரற்றுகின்ற திருவடிமேற் கிண்கிணியுமல்குலின் மேகலை யும் பொன்னாவதற்கோ தக்க; இவளிடத்தே தங்குதற்குத் தக்கனவல்ல வோவென்பாரும். 3. மாலைக்கருங்குழலும் பாடம். பன்மை - ஐம்பாற்பகுதி. விருப்பமாகிய மதுவைநெஞ்சுகளிலே பெயப்பட்டசெப்பாவது முலை; மதுப்பெய்தசெப்புமாம். மணியாகியநாவால் அன்னத்தின் வாய்போல மழலைவார்த்தை கூறுஞ்சிலம்பு கொள்வான் - உயிரைக் கொள்ளுதற்கு. கேட்பீராக ஆகமீன்றசெப்பிணையையுங் கள்வாய் மாலை வேயப்பட்ட குழல்களையுங் கண்டார்வருந்தும்படி இக்கொடியை யீன்றவள்போலேயிருந்தது முன்பு உலகத்திற்குக் கூற்றுவனையீன்றவள்; ஓ ஒருத்தி கொடியபடி என்னென்பாருமென்க. பெண்ணு மாணுமிவ்வாறு பேதுதலின் ஓவென்றார். 4. கொல் - ஐயம். ஓகாரம் - அசை. வெய்ய - கொடிய. இ-ள். மன்னர் என்பாரும் என்பாரும் என்பாருமாய்ப் பின்னுந் திருவோ விச்சாதரியோ மகளோவென்றையுற்றுக் கூறினாரென்க. (144. 147) 640. வீணை வென்றிவள் வெம்முலைப் பூந்தட மாணை தோய்வதல் லாற்பிறன் வெல்லுமேற் கோணைப் போரிற் குளிக்குவ மன்றெனின் மாண நற்றவஞ் செய்குவ மென்மரும். இ-ள். இவள் முலைத்தடத்தை யாழைவென்று தோய் வதன்றி ஒருவன் வலிதிற்கொள்ளக் கருதின் ஆணையே போரிற் குளிக்குவம்; இவடான்வெல்லின் இவளைப் பெறுதற்கு நல்வினை யுண்டாம்படி தவஞ்செய்குவமென்பாருமென்க. (148) ஆணை - வஞ்சினம். 641. குலிகச் செப்பெனக் கொம்மை வரிமுலை நலியு மெம்மையென் பார்நல்ல கண்களால் வலிய வாங்கியெய் தாளெம்மை வாழ்கலே மெலிய வாவி விடுக்குமற் றென்மரும். மெலிய - விகாரம். இ-ள். முலைஎம்மைவருத்தும்; இனி வாழ்கலேமென்பாரும்; நிரம்பவலித்துக் கண்ணாகிய அம்பாலே எம்மை எய்தாள், அதனாற் றேய்ந்த ஆவிபோமென்பாருமென்க. (149) 642. ஊட்டி யன்ன வுருக்கரக் காரடி நீட்டி மென்மலர் மேல்வந்து நின்னலங் காட்டி யெம்மைக் கொன் றாயெனக் கைதொழு தோட்டை நெஞ்சின ராயுழல் வார்களும். இ-ள். இயல்பானசிவப்பால்அரக்கூட்டியன்ன நிறத்தோடு பொருந்திய அடி நீட்டப்பொறாததனை நீட்டி வந்து நலத்தைக் காட்டி வருத்தினாயென்றுகூறித் தொழுது அறை போய நெஞ்சின ராய் வருந்துவார்களுமென்க. (150) வேறு. 643. திங்கண் மதிமுகத்த சேலும் பவளமுஞ் சிலையு முத்துங் கொங்குண் குழலாண்மெல் லாகத்த கோங்கரும்புங் கொழிப்பில் பொன்னு மங்கை குழியா வரக்கீத்த செந்தளிர்நெய் தோய்த்த போலு மங்கை மலரடியுந் தாமரையே யாமறியே மணங்கே யென்பார். பிறையையுடையதொருமதி - இல்பொருளுவமை; திங்கள் மதித்த முகமுமாம். ‘முகத்த’ ‘ஆகத்த’ வென் பன அவ்வவ்வுறுப்புக்களை யுணர்த்தும். இ-ள். குழலாளது முகத்திடத்தனவாகியகண்ணும் புருவமும் வாயும் எயிறும், சேல் முதலியவற்றையொக்கும்; ஆகத்திடத் தன வாகிய முலையுஞ் சுணங்கும், அரும்பையும் ஓட்டற்ற பொன்னையு மொக்கும்; அகங்கை குழியாவாய்த் தளிர் நெய் தோய்த்தவற் றையொக்கும்; மங்கையடியுந் தாமரைமலரையொக்கும்; இவை வருத்தும் வருத்தமொன்றுமே இத்தன்மைத் தென்று யாம் அறியாதிருக்கின்றே மென்பாருமென்க. இவற்றில்நம்மைவருத்துகின்றது இதுவென்று யாமறியே மென்றுமாம். அணங்கே யென்னுமேகாரம் தேற்றம். (151) 644. பொன்மகரம் வாய்போழ்ந்த முத்தநூ றோள்யாப்பிற் பொலிந்த வாறு மின்மகரங் கூத்தாடி வில்லிட் டிருங்குழைக் கீழில விளங்கு மாறு மன்மகர வெல்கொடியான் மால்கொள்ளக் கால்கொண்ட முலையி னாளை யென்னரம்பை யென்னவா றென்பாரி மைக்குங்க ணிவையோ வென்பார். மகரம் தன்வாயங்காத்தலிற் றோன்றியமுத்து. மகரம்அசைதலால் ஒளியை வீசிவிளங்குகிறபடியும். மன் - பெருமை. இ-ள். முலையினாளை அரம்பையென்னாதபடி மாறுபட்டு இம்முத்துவடம் தோட்கட்டிற்பொலிந்தவாறும், இக்குழை காதில் இலங்குமாறு மென்னென்பாரும், கண்ணிமைக்கு மென்பார்க்கு இம்மானிடமகளிர்கண்களோ இக்கண்களென்பாருமென்க. ஓகாரம் எதிர்மறை. இப்பூண்கள் கந்தருவர் செய்தன வாதலின், இவள் தெய்வமன்றென்று தெளிவித்தவென்றும், கண் இமையா நிற்கவும் மானிடரில் விசேடமுண்டென்றுங் கூறினார். இது “வண்டே யிழையே வள்ளி பூவே” என்னுஞ்சூத்திரவிதி.(152) 645. கோள்வயிர நீளருவிக் குன்றிவர்ந்த செஞ்சுடர்போற் கொலைவேன் மன்னர் நீள்வயிர வெண்மருப்பி னீலக் களிற்றின்மே னிரைத்தார் பொங்கத் தோள்வயிரந் தோன்றத் தொழுவார ழுதுநைவார் தொக்கோர் கோடி வாள்வயிரம் விற்குமடநோக்கி யார்கொலோ பெறுவா ரென்பார். கோட்பாட்டையுடையவயிரம். நீள்வயிரம் - ஆகுபெயராற் கொள்க. நிரைத்தார் - வாகைத்தார், யாழ்வென்று சூடுதலின். பொங்க - மிகுத்துக்காட்ட, தோள்வயிரந்தோன்ற - தோள்வலி உலகெங்கும்பரக்க. இவளைப்பெறவே எல்லாவாற்றானுந் தோள் வலியுண்டாமென்றார். அது “திருமகளிவளைச் சேர்ந்தான்” என்னுங் கவியானுமுணர்க. தொழுவார்க்கிவர்ந்த செஞ்சுட ரென்க. அழுதுநைவாரென்றது அவலம். “இளிவே யிழவே”(தொல்.மெய்ப்.5) என்னுஞ்சூத்திரத்தில், அசைவாவது பழையதன்மை கெட்டு வேறொருவாறாய் வருந்துதலாதலின், இவருமத்தன்மையெய்தி அவல முற்றாரென்க. இது தம் அசைவிற் றோன்றிய அவலம். கோடி - அநேகர். வாள் தனது செற்றத்தைக் கைவிடுதற்குக் காரணமான நோக்கி ஒருவனென்று துணியலாகாமையிற் பன்மையாற் கூறினார். இ-ள். மன்னர் குன்றிலே தொழுவார்க்கிவர்ந்தசுடர் போலே இருந்து அழுது நைவாராய்த் தொக்கு ஓர் கோடியாயிருந் தவர்களிலிம்மடநோக்கியைத் தார்பொங்கத் தோள்வயிரந் தோன்றப் பெறவிருக்கின்ற நல்வினையுடையார் யாரென்பாரு மென்க. (153) 646. பைம்பொ னிமிர்கொடி பாவை வனப்பென்னுந் தளிரை யீன்று செம்பொன் மலர்ந்திளையார்கண்ணென்னுஞ் சீர்மணி வண்டுழலச் சில்லென் றம்பொற் சிலம்பரற்ற வன்னம்போன் மெல்லவே யொதுங்கி யம்பூஞ் செம்பொற் புரிசை யடைந்தாள்செந் தாமரைமேற் றிருவொ டொப்பாள். வனப்பென்னுந்தளிரையீன்று பொன்னைப்பூத்துக் கண் ணென்னும் வண்டுழலும் படி பொன்னாய்வளர்ந்ததோர் கொடியென் றொருபெயர். ஒடு - எண்ணொடு. இ-ள். அலர்தார்மன்னர் அங்ஙனங்கூறிப் பின்பு, அவரும் ஒழிந்தோரும் என்மரும் உழல்வார்களும் என்பாருமாகாநிற்ப; கொடியையும் பாவையையுந் திருவையுமொப்பாள் சிலம்பரற்ற அன்னம்போல நடந்துசென்று புரிசையைச் சேர்ந்தாளென்க. (154) 647. பட்டியன்ற கண்டத் திரைவளைத்துப் பன்மலர்நன் மாலை நாற்றி விட்டகலாச் சாந்தினிலமெழுகி மென்மலர்கள் சிதறித் தூம மிட்டிளைய ரேத்த விமையார் மடமகள்போ லிருந்து நல்யாழ் தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரு மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே நாற்றம் விட்டகலாத. தூமம் - ஆகுபெயர். இ-ள். பல்வண்ணத்திரையைவளைத்து நாற்றி மெழுகிச் சிதறி அகிலைப்புகைத்து இளையரேத்தாநிற்க; இமையார் மடமகள்போலே இருந்து யாழையெடுத்துப்பண்ணையெழும்பி நரம்பைத்தெறிந்தாள்; அப்பொழுது கின்னரருஞ் சோர்ந்தா ரென்க. யாழ்மண்டபத்தேயிருந்து அவைப்பரிசாரமாகப் பாடு கின்றமை கூறுகின்றார். கண்டத்திரை - கண்டமாகியதிரை. (155) வேறு. 648. புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண் டன்புகொண் மடப்பெடை யலம்வந்தாங் ககல்வதனை யென்புருகு குரலழைஇ யிருஞ்சிறகர் குலைத்துகுத்துத் தன்பெடையைக் குயிறழுவத் தலைவந்த திளவேனில். இ-ள். தாதிலே தன்புறம்புதைதலாலே பெடை அதனைக் கண்டு கிளியென்றலம்வந்து அவ்விடத்துநின்றும் போகின்ற வதனைத் தன்குரலாலே யழைத்துச் சிறகையசைத்துத் தாதை உதிர்த்துக் குயில் பெடையைத் தழுவும்படி இளவேளில் அவ்விடத்தேவந்ததென்க. (156) 649. தண்காஞ்சித் தாதாடித் தன்னிறங் கரந்ததனைக் கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல நுண்டூவி யிளஞ்சேவ னோக்கோடு விளிபயிற்றித் தன்சிறகாற் பெடைதழுவத் தலைவந்த திளவேனில். இ-ள். தாதையளைந்து தன்னிறங்கரந்த சேவலைக்கண்டு அமையாத பெடைகிளியெனக் கருதிக் கைவிட்டுநீங்குதலாலே சேவல் இங்கிதமான நோக்கோடே அழைத்தலைப் பல்கானி கழ்த்திப்பெடையைச் சிறகாற்றழுவும்படி இளவேனிலவ்விடத்தே வந்ததென்க. (157) 650. குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி யுறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில். இ-ள். சேவல் தாதையாடுதலாலே பெடை கிளியென்று அப்பொழுதேவெறுத்து வேட்கை நீங்கிப் போகின்றதனைப் போக்கைத் தவிர்த்து உளர்ந்து தேற்றித்தலையால் வணங்கும்படி வேனில் அவ்விடத்தேவந்ததென்க. பங்குனியிலும் சிறிதுவேனில் தோன்றுதலின் இது கூறினார். வேட்கைவிளைகின்ற பருவத்தாளாதலின் இது கூறினாள். இம்மூன்றும் ஒருபொருண்மேல் மூன்றடுக்கித் தாழம்பட்ட ஓசைபெற்று வந்த கொச்சகவொருபோகு. ஒருபோகென்பது பண்புத்தொகைப்புறத் தன் மொழி. இது “தரவின்றாகி” (தொல். செய். 149)என்னுஞ் சூத்திரவிதி. இசை நூலோர் முகநிலைமுரிவென்பனவற்றில் நிலையென்ப இதனை. (158) வேறு. 651. தளையவிழ் கோதை பாடித் தானமர்ந் திருப்பத் தோழி விளைமதுக் கண்ணி வீணா பதியெனும் பேடி வேற்க ணிளையவள் பாட வீர ரெழால்வகை தொடங்க லன்றேல் வளையவ ளெழாலின் மைந்தர் பாடுக வல்லை யென்றாள். இ-ள். கோதை அவைப்பரிசாரத்தைப்பாடி யாழ்வாசித் தற்குச் சமைந்திரா நிற்க; அவடோழியாகிய வீணாபதியென் னும்பேடி இளையவள்பாட வீரரெல்லாருமதற்கேற்ப யாழின் கூறுபாட்டை யெல்லாம் வாசிக்கத் தொடங்குக; அதற்கியையீ ராயின், வளையவளது யாழ்வாசினைபோலே மைந்தர் விரையப் பாடுவீராகவென்றாளென்க. தொடங்கல் - அல்லீற்றுவியங்கோள். “இற்றெனக் கிளத்தல்” (தொல்.கிளவி.19) போல. இதற்கு உத்தரங்கூறலாற்றாது அவளுடனே நகையாடு கின்றார். (159) வேறு. 652. வேயே திரண்மென்றோள் வில்லே கொடும்புருவம் வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தா ரேயே யிவளொருத்தி பேடியோ வென்றா ரெரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வென்றார். இ-ள். தோள்வேயே; புருவம் வில்லே; வாய் பவளமே; மேனி தளிரே; இவை இத்தன்மையவாகவும் முலைகண்டிலேம்; இவட்கு முலைசுமத்தல் நோயோவென்றையுற்று வினாயினார்க்கு அருகிருந்த வரும் முலைகாணாமையால் என்னே என்னே இவளொருத்தி பேடியோவென்றையுற்றர்; அதுகேட்டுக் சிலர் தந்தையுடன் வந்தாளென்று யாங் கேட்டிருந்தபேடி இவளோ வென்றாரென்க. (160) 653. பலிகொண்டு பேராத பாச மிவள்கண் ணொலிகொண்டு யிருண்ணுங் கூற்றமென் றெல்லே கலிகொண்டு தேவர் முலைகரந்து வைத்தா ரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சேர்ந்தா ளிலங்குபொற் கிண்கிணியா ணக்கெழினி சேர்த்தாள். கொண்டு - கொள்ள. ஒலி - தழைத்தல். “ஒலிதெங்கு” (பதிற். 13) போல. எல்லே-வெளியே. கலி-ஆரவாரம். இ-ள். அவள் அதுகேட்டுப் பூணினீர், பிரமனார் படைக்கின்ற பொழுதே இவள்கண் உயிர்ப்பலிகொள்ளுதலாலே தன்கொலைத் தொழிலின் மீளாத காலபாசம்; இவடான் எல்லே சென்று உயிரை யுண்ணுங்கூற்றமென்றுகருதி எனக்கு முலையை மறைத்துவைத்தா ரென்றுகூறிப்போய்த் திரையைச் சேர்ந்தாள்; அக்கலியையுட்கொண்டு தத்தையும் நக்கு இருந்தவிடத்தி னின்றும் வந்து திரையைச் சேர்ந்தாளென்க. “கடாமுங் குருதிதயுங் கால்வீழ்ந்த பச்சைப், படாமும் புலித் தோலுஞ் சாத்தும் பரமனிடாமுண்ட நெற்றியானெஞ் ஞான்ங் கங்கை, விடமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந் தோன், மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை, யையுறு நெஞ்சில்லையாகாத தொன்றில்லை” “என நான்கடிச்செய்யுள் முடியவும் ஈற்றடி யிரண்டு மிக்கு வேறுபடவந்த கொச்சகமென்று கூறி, ஒழிந்தனவும் பிறவேறு பாட்டான் வருவனவும் வந்துழிக் காண்க” (தொல்.செய்.149 பேரா) என்றமையின் இக்கவியிரண்டும் ஒரோவோரடிமிக்கு வேறுபட வந்த கொச்சகவொருபோகாம். (161) வேறு. 654. நுண்டுகி லகலல்கு னொசித்த வெம்முலை யுண்டிவ ணுசுப்பென வுரைப்பி னல்லது கண்டறி கிலாவிடைக் காம வல்லியாழ் கொண்டவர் குழாத்திடைக் கொடியி னொல்கினாள். இ-ள். அல்குலுமுலையு மிவட்கு இடையுண்டெனக் கூறுமது வொழிந்து கட்புலனாகாத இடையையுடைய தத்தை யாழையெடுத்துத் தோழியர்குழாத்திடையே கொடியைப்போல ஒதுங்கி னானென்க. இதனால் திரையருகினின்றும் யாழ்வாசிக்கின்றவிடத்து ஏறப்போ கின்றா ளென்றார். நொசித்தமுலை - நோக்கினார் நெஞ்சைவருத்தின முலை. (162) 655. பளிக்கொளி மணிச்சுவ ரெழினி பையவே கிளிச்சொலி னினியவர் நீக்கக் கிண்கிணி யொளிக்குமின் றாடவ ருயிர்க ளென்னநொந் தளித்தவை யிரங்கச்சென்ற ணையி னேறினாள். இ-ள். அவள், கிளிச்சொல்லிற்காட்டில் இனியசொல்லை யுடையார் பளிங்காகிய ஒளிமணியாற்செய்த சுவரை மறைய வீழ்த்த திரையைப் பையவே நீக்காநிற்க, கிண்கிணி இன்று ஆடவருயி ரெல்லாம் போமென்றுநொந்து அருள்பண்ணி அவை யிரங்க நடந்து சென்று அணையிலே யேறினாளென்க. (163) 656. உறைகழித் திலங்குவா ளுடற்றுங் கண்ணினாள் மறையொளி மணிச்சுவ ரிடையிட் டித்தலை யிறைவளை யhழ்தழீஇ யிருப்ப வத்தலைக் கறைகெழு வேலினார் கண்ணி தீந்தவே. இ-ள். கண்ணினாள் தன்னைமறைத்தற்குச் சமைத்த பளிக்குச் சுவரை நடுவேயிட்டு வளைந்தயாழைக் கையாலேதழீஇ உள்ளே யிருப்ப; அவளைக்கண்டு புறத்திருந்த வேலினார்கண்ணி காமத்தீ யாற்றீந்தனவென்க. பளிங்கிற்கு இரண்டுபுறத்தோருந் தோன்றுவர். இறை - ஆகு பெயர். “பதுமம் வீரஞ் சிங்கம் பிரமரம் - பாத விலக்கண மஞ்சானு மண்டிதம் - விதியுறு பங்கோற் பவஞ்சுக மண்டிலம் - மேலோர் விரும்பு மெய்யா சனமே;” இவ்வொன்பதினும் இவள் பதுமாசனத் தேயிருந்தாள்; “நேரிருந்து காலடிகண் மாற்றிக் குதிமேலாப் - பாரிருத்தல் பத்மாசனம்.” “ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி -நன்பா லமைந்த விருக்கையள்” (சிலப். 8:25-26) என்றார் பிறரும். (164) 657. சிலைத்தொழிற் சிறுநுத றெய்வப் பாவைபோற் கலைத்தொழில் படவெழீஇப் பாடி னாள்கனிந் திலைப்பொழில் குரங்கின வீன்ற தூண்டளிர் நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே. ஏறிட்டவிற்போலு நுதல். தெய்வத்தாற்செய்த கொல்லிப் பாவை; “பூதம்புணர்த்த புதிதியல் பாவை” (நற். 192.9) என்றார் பிறரும். கலைத்தொழிலாவன: “பண்ணல் பரிவட்டணை யாராய்த றை வரல்-கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்-நண்ணிய குறும் போக்கு” (சிலப்.7: 1.57) என்றவெட்டும். பண்ணல்-பாடநினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந் தன்மைமாத்திரை யறிந்து வீக்குதல். பரிவட்டணை - அவ்வீக்கினநரம்பை அகவிரலா லும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப்பார்த்தல். ஆராய்தல் -ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது. அநுசுருதி யேற்றுதல், தைவரல். ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல், செலவு. பாட நினைத்த வண்ணத்திற்சந்தத்தைவிடுதல், விளை யாட்டு*. வண்ணத் திற் செய்தபாடமெல்லாம் இன்பமாகப் பாடுதல்*, கையூழ். குடகச் செலவுந் துள்ளற் செலவும் பாடுதல், குறும்போக்கு. இ-ள். சிறுநுதல் பாவைபோலிருந்து யாழைவாசித்து அதற்கேற்பப் பாடினாளாக; பொழில் உருகிவளைந்தன; தூண்தளிரை யீன்றன; கின்னரமிதுனங்கள் மெய்ம்மறந்து வீழ்ந்தனவென்க. (165) (வேறு) 658. கருங்கொடிப் புருவ மேறா கயனெடுங் கண்ணு மாடா வருங்கடி மடறும் விம்மா தணிமணி யெயிறுந் தோன்றா விருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார். கொடி-ஒழுங்கு. கடி-விளக்கம். இ-ள். அரசர்முதலாயினார் புருவம்ஏறா; கண்ணும் ஆடா; மிடறும் வீங்காது; எயிறுந் தோன்றா; ஆதலான் இவள்வாய் திறந்துபாடினாளோ! அன்றி யாழ்தான் தனக்குரிய நரம்போடே சாரீரவீணைக்குரிய நாவாலும்பாடிற்றோவென்று வருந்தினா ரென்க. இது பதினொருவகையிலும் உள்ளாளப்பாட்டுப் பாடுங்கால் இடை பிங்கலையை இயக்கமறுத்து மூலாதாரமுதல் பிரமரந்திர மளவு மியக்கமாக்கி நடுவுதொழில் வரப்பாடுதலென்றறிக: “உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத் - தள்ளாத தூக்கெடுத்த றான்படுத்தன் - மெள்ளக் - கருதி நலிதல்கம் பித்தல் குடில - மொருபதின்மே லொன்றென் றுரை.” “கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா - பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - வெண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந் தருவ - ருள்ளாளப் பாட லுணர்.” (இசைமரபு) ( 166) வேறு. 659. இசைத்திறத் தநங்கனே யனைய நீரினார் வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே. இ-ள். முன் மெய்ம்மறந்து வீழ்ந்தபுள்ளெல்லாம் காமனையொத்த நீராராகிய வசையிலாதோர் யாழைவாசித்து உச்சத்தே பாடுதலின், அதற்குவெருவி அவரைச் சிரிப்பனபோல விசும்பைச் சேர்ந்தனவென்க. (167) அசிப்ப-வடசொற்றிரிபு. 660. மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக் கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம் போதரப் பாடினாள் புகுந்த போயின தாதலர் தாரினார் தாங்கள் பாடவே. இ-ள். மாதர் யாழைவாசித்தலாலே வந்த அறிவையுடைய கின்னரம் மைந்தர் யாழ்வாசினையாலே மீண்டுபோயின; அவை உள்ளேவந்து புகுதும்படி கண்டத்தாற் பாடினாள்; அப்பொழுது புகுந்தன; தாரினார் தாம் கண்டத்தாற் பாட மீண்டும் அவை போயினவென்க. (168) 661. சுரும்பெழுந் திருந்துணுந் தொங்கல் வார்குழ லரும்பெற லவட்கிசை யரசர் தோற்றபி னரம்புறு தெள்விளி நவின்ற நான்மறை வரம்பெறு நெறியவர் மலைதன் மேயினார். எழுந்திருந் துண்ணும்: “நறுந்தா தூதும், தும்பிகையாடு வட்டிற்றோன்றும்” (அகம்:108. 16-17) என்றார்பிறரும். வரம் - வேண்டுவகோடல். இ-ள். குழலையுடைய பெறுதற்கரியவட்கு அரசர் இசையைத் தோற்றபின்பு நரம்போடுசேர்ந்த பாட்டிலே பயின்ற அந்தணர் வாசித்தலைப் பொருந்தினாரென்க. ‘சுரும்பெறிந் திருந்தென்றும்’ பாடம். (169) வேறு 662. திருமலர்க் கமலத் தங்கட் டேனின முரல்வ தொப்ப விரிமலர்க் கோதை பாட வெழால்வகை வீரர் தோற்றா ரெரிமலர்ப் பவளச் செவ்வா யின்னரம் புளர மைந்தர் புரிநரம் பிசைகொள் பாட லுடைந்தனர் பொன்னனனாட்கே. இ-ள். கோதை தாமரைப்பூவிலே தேனினம் பாடுந் தன்மையை யொப்பக் கண்டத்தாற்பாட அந்தணர் அதற்கேற்ப யாழைவாசித் தலைத் தோற்றார்; முருக்கிதழ் போலுஞ் செவ்வாயினை யுடையாள் நரம்பைத் தடவ மைந்தர் அந்நரம்பினிசையைக் கொண்ட கண்டப்பாடலை அவட்குத் தோற்றாரென்க. “அந்த ணாளர்க் கரசு வரைவின்றே.” (தொல்.மரபு. 82) என்றதனால் ‘வீர’ரென்றார். (170) 663. வாலரக் கெறிந்த காந்தண் மணியரும் பனைய வாகிக் கோல்பொரச் சிவந்த கோலக் குவிவிரன் மடந்தை வீணை நூல்பொரப்பு குந்த நுண்ணூல் வணிகருந் தொலைந்து மாதோ கால்பொரக் கரிந்த காமர் பங்கயப் பழன மொத்தார். இ-ள். நரம்பைத் தடவுதலாலே அரத்தமூட்டின அரும்பைய னையவாகிச் சிவந்த விரலையுடைய மடந்தைக்கு யாழை இசை நூலோடே வாசிக்கத்தொடங்கிய பூணு நூலை யுடைய வணிகருந் தோற்றுக் கரிந்த தாமரைப் பழனத்தை யொத்தாரென்க. (171) 664. தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளை வெல்வான் வானுயர் மதுகை வாட்டும் வார்சிலை காம னாகு மூனுயர் நுதிகொள் வேலீ ரொழிகவீங் கில்லை யென்றான் கானுயர லங்கன் மாலைக் கட்டியங் கார னன்றே. தேனினமிக்க வார்சிலை. இ-ள். கட்டியங்காரன் இவளைத் தசைமிக்க முனை கொண்ட வேலினீர், இவளை மகரயாழின் இனிமையை வெல்வான் வானி லுள்ளாரது அறிவைக்கெடுக்குங் காமனாயிருக்கும்; இவ்வுலகினில் லையல்லவோ, ஆதலின் இவ்வியாழ் வாசினை இனி ஒழிவதாக இல்வென்றானென்க. (172) 665. மறுமுயற் கிவர்ந்த வேக மாசுண மடையப் பட்ட நிறைமதி போன்று மன்ன ரொளிகுறைந் துருகி நைய வறுபகல் கழிந்த பின்றை யந்நகர்க் காதி நாய்கன் சிறுவனோர் சிங்க வேற்றை சீவக சாமி யென்பான். 666. தம்புயுந் தோழன் மாருந் தானும்ம ற்றெண்ணிச் சூழ்ந்து வெம்பிய வீணைப் போருட் செல்குவம் யாமு மின்னே தும்பறப் புத்தி சேன சொல்லிது குரவற் கென்னக் கந்துகற் கவனுஞ் சொன்னான வனிது விளம்பி னாளே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். முயலைக்காத்தற்பொருட்டாகத் தன்னிடத்தே மறுப்பரந்த நிறைமதி தன்னை அடையப்பட்ட மாசுணத்தினது வேகத்தாலே ஒளி குறையு மாறுபோன்று மன்னர் ஒளிகுறைந்து நையாநிற்க ஆறுநாள் சென்றபின்பு, நாய்கன்சிறுவன் ஏற்றை சீவக சாமியென்பான் அவன் தானுந் தம்பியுந் தோழன் மாருமாக விருந்து அரசர் முதலாயினார் சூழ்ந்து மாறுபட்டயாழ் ப்போரிலே இத்தி ரள்குலைவதற்குமுன்னே யாமுஞ் செல்வேமென்றெண்ணி இக் காரியத்தைப் புத்திசேனனே, நீசென்று கன்னியிடத்து வேட்கை யாற்செல்கின்றானல்லன்; கல்வி தோற்றுவித்தற்குச் செல்கின்றா னென்று கொள்ளும்படி குரவற்குக் கூறென்றுகூறக் கந்துகனுக்குப் புத்திசேனனுங் கூறினானாக, கந்துகன் இவ்வார்த்தையைக் கூறினானென்க. அதுமேற் கூறுகின்றார். ஆறுநாள் ஒருமரபு. தும்பற - சிம்பற. (173-174) “ஐயன்” முதல் “இன்னன்” என்னுமளவுமொருதொடர். 667. ஐயனுக் கமைந்த நீரா ரறுபத்து நால்வ ரம்பொன் வையகத் தமிர்த மன்னார் வாக்கமை பாவை யொப்பா ரெய்திய விளமை மிக்கா ரியைந்தன ரென்று பின்னுங் கையமை சிலையி னாற்குக் கந்துக னிதுவுங் கூறும். 668. மறைவல்லாற் குரைக்கும் போழ்திற் கோயிலு ணின்று மாலைப் பிறைவெல்லு நுதலி னாளோர் பெண்கொடி வந்து கூந்த லுறைசெல நீக்கிப் பைந்தா ளொண்மணிக் குவளை நீட்ட நறைவெல்லு நாக மாலை நோக்கொடு பூக்கொண் டானே. இவையிரண்டுமொருதொடர். அறுபத்துநால்வரென்றது கலைகளை. வாக்கு-திருத்தம். சிலை யினான்-சீவகன். இதுவுங்கூறும்-உலகம் இவன் மிகுதிப் பாடுகூறும். உம்மை-சிறப்பு. மிகுதியாவது உலகமேத்துதலானுங் கல்லேந்தி நீக்குதலானு நிரைமீட்டலானு முளதாய மிகுதி. இதற்குக் கட்டியங் காரன் பொறாததே குறையென்றான். இது மேலே “விலங்கல்” (சீவக. 689)என்னுங் கவிமுதலியவற்றாற்காண்க. நுதலி னாளாகிய பெண் கொடி. மாலையென்றதற்கேற்ப நறைகூறினார். நோக்கு- நோக்க னோக்கம். இ-ள். இன்பத்தால் அமுதன்னாராய் நீங்கலாகாமையிற் கொல்லியம் பாவையன்னாராய் மூப்பிலாதாராயமைந்தநீரார் அறுபத்து நால்வரையனுக்கு முன்பேயியைந்தாராதலால் யாழ் வாசிக்கச் சேறற்குக் குறையில்லையென்றுவிளம்பினான்; விளம்பிப் பின்னுங் கந்துகன் சிலையினானுக்கு ஆண்டுச்சேறற்கு உலகங் கூறு மிகுதியாற் சிறிது குறையுண்டென்று மறைவல்லாற்குக் கூறுகின்ற காலத்தே கோயிலினின்றும் ஒரு பெண்கொடிவந்து கூந்தலாகிய உறையை அகலநீக்கித் தாளினையுடைய மணிபோலுங் குவளை யை நீட்ட அதனை மயிரிலே வைத்த பூவென்றிகழாதே இவளை வர விட்ட நாகமாலை குறிப்பாலே ஒருகாரிய முண்டென்று கருதிப் பூவைக்கைக் கொண்டானென்க.(175. 6) என்றென்பதைரண்டிடத்துங் கூட்டுக. 669. நல்லவ ணோக்க நாய்கன் றேர்ந்துபூங் குவளைப் போதி னல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதல் சொல்லுமென் றாய்ந்து கொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி வல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக் கின்றான். 670. நம்பனை நகரி னீக்கிச் சேமத்தால் வைக்க தீயுட் செம்பொன்போற் பெரிதுஞ் சேந்து செகுத்திட லுற்று நின்றான் வெம்பினான் காரி யுண்டிக் கடவுளிற் கனன்று வேந்த னிம்பரின் றெனக்குச் சொன்னா னிதுபட்ட தடிக ளென்றாள். 671. ஓலையை யவட்கு நீட்டி யொண்மணிக் குழையு முத்து மாலையும் படுசொ லொற்றி வம்மென மறைய நல்கி வேலைநெய் பெய்த திங்கள் விரவிய பெயரி னாற்கு மேலைநாட் பட்ட தொன்று விளம்புவல் கேளி தென்றான். இவைமூன்றுமொருதொடர். இ-ள். அப்பூவைவாங்கினநாய்கன் நாகமாலை குறிப்பை விசாரித்துப் பின்பு குவளைப்போதினது தாள்தானே தனதல்லியுட் கிடந்த ஓலையைச் சுற்றிவாசித்தற்குச் கலாகையாதலைச் சொல்லா நின்றதென் றாராய்ந்துகொண்டு துகிலிகைக் கணக்காலெழுதின எழுத்தைப்பார்த்துத் தாளாகியசலாகையிலே வரி ஏற்றிழிவு படாதபடி சுற்றி ஓலையைவாசிக்கின்றவன், வேந்தன் தீயுட்பொன் போல வெம்பினான்; அங்ஙனம் வெம்பி நஞ்சையுண்ட கடவுள் போல எரிந்து இன்று இப்பொழுதெனக்குச் சொல்லுவதுஞ் செய்தானாதலாற் செகுத்திடலுற்றேநின்றான். இனி நம்பனை நகரி னின்றும் போக்கி ஒருசேமத்திடத்தே வைக்கவென்று வாசித்தா னென்க. வாசிக்கின்றான் - பெயர். சேமத்தால் - உருபுமயக்கம். காரி - நஞ்சு. இக்கவியில் “இதுபட்டதடிகளென்றாள்” என்னுமிடத்து “அடி களென்றாள்” என்பதனை மேலைநாட்பட்டதொன்று விளம்புவலடி களென்றாளென அதனோடு கூட்டி, ஓலைகொண்டு வந்தவள் வார்த்தையாக்குக. “கேளிதென்றான்” என்பதனை அது கேட்ட கந்துகன் திங்கள் விரவியபெயரினாற்கு இவள் கூறுகின்ற விதனை நீ கேளென்றானென்க. “இன்னன்” (சீவக.693) என்னுங்கவியிற் சூழ்ச்சி தன்னுளானென்பதன்பின்னே இதுபட்டதென்றாளென்று ஓலைகொண்டு வந்தவள் கந்துகன் சிறைப்புறமாகப் புத்திசேனனுக் குச்செய்தி கூறினாளாக்கி முடித்து “ஓலையை” என்னுங்கவியின் “மறையநல்கி” என்பதளவாக அதன்பின்னே கூட்டிப் “படைய மைத்தெழுமின்” என்பதனை அதன் பின்னேகூட்டுக. “என்றாள்” இரண்டிடத்துங் கூட்டுக. இங்ஙனங்கூறாது “இதுபட்டதடிகள்” என்று கந்துகனுக்கவள் கூற அவன்புத்திசேனனுக்குக் கூறினா னென்று கூறிற் புதல்வன் செய்தியைத் தந்தைகூறு முறையாற் கூறாது இடக்கர் முதலிய கூற்றாற் கூறினானாகத் தேவர் கூறாரென் றுணர்க. வேலைபோல நெய்யை யோமத் பண்ணிய. திங்கள் - மதி; மதியெனவே புத்தி சேனனாம். “தீத்தீண்டு கையார்” (திணைமாலை. நூற். 5) என்றது வேங் கையையுணர்த்தினாற்போல. (177.9) 672. கடியரங் கணிந்து மூதூர்க் கடல்கிளர்ந் தனைய தொப்ப நடையறி புலவ ரீண்டி நாடக நயந்து காண்பான் குடையுடை யவனொ டெண்ணிச் சீவகற் கொணர்மி னென்னத் தொடையல் சூழ்வேலி னானுந் தோழருங் காணச் சென்றார். கடி-விளக்கம்; விளக்கமாவது ஏழுகோலகலத்தினையும், எண் கோல் நீளத்தினையும், ஒருகோல் குறட்டுயரத்தினையும், வாய் தலிரண்டினையு முடைத்தாதல். அணிந்து-பார்ப்பனப்பூத முதலிய நால்வகைப்பூதங்களையும் ஒழிந்தவற்றையுமியற்றி. “கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் - காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை - வழுவில் பூத நான்கு முறைப்பட - வெழுதின ரியாற்ற லியல் புணர்ந்தோரே.” (சிலப். 3:106-7) நடையறி புலவராவார். இயலாசிரியனும், யாழாசிரியனும், இசையாசிரியனும், குழலோனும், தண்ணுமை முதல்வனு முதலாயினார். ஈண்டு இவர்தன்மை யுரைப்பிற் பெருகும். “கூத்தின் வகையுங் குறைவற நோக்கி - னேத்து வகையா னிருவகைப் படுமே” “அவைதாம் - சாந்திக் கூத்தே விநோதக் கூத்தென் - றாய்ந்துற வகுத்தன னகத்தியன்றானே,” “சாந்திக் கூத்தே தலைவ னின்ப - மேந்திநின் றாடிய வீரிரு நடமவை-சொக்க மெய்யே யவிநய நாடக - மென்றிப் பாற்படு மென்மனார் புலவர்.” சொக்கமாவது - சுத்த நிருத்தம்; அது நூற்றெட்டுக் கரணமு டைத்து. மெய்கூத்தாவது - தேசி, வடுகு, சிங்களம்; இவை மெய்த்தொழிற் கூத்தாதலிற் காரணப்பெயர்; சாத்து விகம், இரா சதம், தாமதமென்னு மகச்சுவைபற்றியாடுதலின் அகமார்க்க மெனப்படும்: “அகத்தெழு சுவையா னகமெனப் படுமே. ”(சயந்தம்) அவிநயமாவது-கதைதழுவாதே பாட்டுக்களின் பொருடோன்றக் கைகாட்டி யவிநயிப்பது. நாடகமாவது-கதைதழுவிவருங்கூத்து. ஈண்டுக் காண்கின்ற அது நாடகம்.இ-ள். மூதூரில் நடையறிபுலவர் கடல்கிளர் ந்தனையதொப்ப ஈண்டி நாடகங் காண்டற்கு அரங்கையணிந்து அரசனோடெண் ணுதலாலே சீவகற்கொணர்மினென்ன வேலினானுந் தோழருங் காணச்சென்றாரென்று ஓலைகொண்டுவந்தவள் புத்தசேன னுக்குச்செய்திகூறுகின்றாளென்க. இதுமுதல் ஓலைகொண்டுவந்தவள் கூற்று. “செலவினும்” (தோல். கிளவி.28) என்னும் பொதுவிதியாற் சென்றாரென்றாள். (180) 673. நிலமறிந் தணிக வையன் சீவக னெறியி னென்ன நலநுதற் பட்டங் கட்டி நகைமுடிக் கோதை சூட்டி யலர்முலைக் குருதிச் சாந்து மாரமும் பூணுஞ் சேர்த்திக் குலவிய குருதிப் பட்டிற் கலைநலங் கொளுத்தி யிட்டான். இ-ள். நடையறிபுலவர் ஐயனாகியசீவகன், நூனெறியால் அணிவாயாகவெனக்கூற; அவனுங் கட்டிச் சூட்டிச் சேர்த்திச் செம்பட்டோடே கலையினலத்தைப் பொருத்தியிட்டானென்க. வளர்கின்ற முலையெனவே பன்னிரண்டாமாண்டாயிற்று. “வட்டணையுந் தூசியுமண்டலமும் பண்ணமைய - வெட்டுட னீரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய - கீதக் குறிப்பு மலங்கார முங்கிளரச் - சோதித் தரங்கேறச் சூழ்.” (பரதசேனாப தீயம்) குருதிச் சார்ந்து - குங்குமச்சாந்து. (181) 674. திருவிலே சொரிந்து மின்னுங் குண்டலஞ் செம்பொ னோலை யுருவுகொண் மதிய மன்ன வொளிமுகஞ் சுடர வாக்கிப் பரியகஞ் சிலம்பு செம்பொற் கிண்கிணி பாதஞ் சேர்த்தி யரிவையை யரம்பை நாண வணிந்தன நங்க னன்னான். இ-ள். அனங்கனன்னான் குண்டலத்தையுமோலையு நிறைமதி போலுமுகம் விளங்கும்படி யாக்கி, காற்சரி முதலிய வற்றைப் பாதத்தே சேர்த்தி, அரம்பை நாண அரிவையை யணிந்தானென்க. ஆக்குதல் - சமைத்தல். இவளைத்தீண்டவும் வேட்கை நிகழாமை யின், அனங்கன்னானென்றார். “சிலைவல்லான் போலுஞ் செறிவினான்”(கலித்.143.34)என்றார் பிறரும். அவன் தீண்டுதலிற் றனக்கு வேட்கைநிகழவும் அவற்கு வேட்கை நிகழாமை கண்டு இவளும் இனிக்கூத்தினால் இவனைப்பிணிப்பே மென்றுட்கொண்டு ஆடு கின்றாளாம். ஈண்டு இவட்கு வேட்கையின்றேல் “ஆடவர் மனங்கள்” (சீவக.683) என்னுங்கவியிற் றோழியை விட்டாளென்றல் பொருந் தாதாம்; இதனானே இவள் நடிக்கின்ற நாடகம் ஒருவன்மேலே ஒருத்தி வேட்கையுற்றதோர் கதையேயாம். (182) 675. தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக் காற்சொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாண் முகஞ்செய் கோலந் துளக்கினாண் மனத்தை யெல்லாம். மார்ச்சனைமுதலியவு முளதாய் “இடக்கணி ளியாய் வலக் கண்குரலாய்-நடப்பது தோலியற் கருவியாகும்” என்ற ஓசையு முடைத்தாய், கஞ்சத்தாற் செய்த தென்பது தோன்றப் பொலிதல் கூறினார். “கருங்காலி செங்காலி வேம்புபலாக் கஞ்ச - நெருங்கிய சீர்க்குரா மண்ணாம் - பொருந்தவே - யூனமிலவா யுயர் நிலத்தற் றோன்றிலா மானின்விழி மடவாய் வைப்பு.” துளைபயில்குழல்-துளையிடத்தே வாச்சியமும் யாழ்ப்பாடலுங் கண்டப்பாடலும் பயிலப்பட்ட முதல் வங்கியமும் வழிவங்கியமும். “ஓங்கியமூங்கி லுயர்சந்து வெண்கலமுமே - பாங்குடைச்செங் காலி கருங்காலி-பூங்குழலாய்-கண்ணனுவந்த கழைக்கிவைக ளாமென்றார்-பண்ணமைந்த நூலுணர்ந்தோர் மற்று.” ஏங்க-இவைமூன்றுங் கூடியிசைப்ப. இவை ஆமந்திரிகையாம். “குழல்வழி யாழெழீ இத் தண்ணுமைப் பின்னர் - முழவியம்ப லாமந்திரிகை.” போந்து - வலக்கால்முன் மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து. கைத்தலங் காட்டுதல்-கமலவர்த்தனை. மேற்படவெருவிநோக்கி - தெய் வத்தை நோக்குதலின் மேலேயெழவெருவிப்பார்த்து. தானை-கரந்து வரலெழினி. “வழுவில் கேள்வி நன்னூ லுணர்ந்தோர் - எழினி தானே மூன்றென மொழிப.” “அவைதாம்-ஒருமுக வெழி னியும் பொருமுக வெழினியுங்-கரந்துவரலெழினியுமென மூவகையே;” இராசதானியிலும், அரங்கிலும், கோலமறைத்து வருமிடத்திலு மிட்டதிரைகள். முகஞ்செய் கோலம் - கூத்திற்கு முக மாகிய தோற்றம். இ-ள். முழவுமுதலியன வேங்கக் கொம்புபோலப் போந்து விட்டிட்டுக் காட்டி நோக்கி ஒல்கிக் கோலத்தே தோற்றினாள்; அப்பொழுதே பார்ப்பவர் மனத்தையெல்லாந் துளக்கினாளென்க. (183) 676. தெண்மட்டுத் துவலை மாலை தேனொடு துளிப்பத் திங்க ளுண்ணட்ட குவளை போலு முருவக்கண் வெருவி யாட விண்விட்டுக் கடவுள் வீழ நுடங்கின புருவ நெஞ்சம் பண்விட்ட திருந்து காணும் பன்மணிக் கழலி னார்க்கே. ஆடுகின்றவிசையாலே மாலை மதுத்துவலையைத் தேனி னத்ததோடே துளிப்ப. திங்களோடே நட்புப்பண்ணின குவளை. இ-ள். துளிப்பக் கண் நடிப்பிற்கேற்பப்பிறழ்ந்தாட அதற் கேற்பப் புருவமசைந்தன; அப்பொழுது இருந்து காண்பார்க்கு நெஞ்சு நிலைகுலைந்ததென்க. (184) 677. செங்கதிர்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி சிலம்பக் கோதை பொங்கப்பொன் னோலை வட்டம் பொழிந்துமின் னுகுப்பப் போர்த்த குங்குமச் சாந்து வேய்ந்து குண்டலந் திருவில் வீச வங்கதி ரார மின்ன வரிவைகூத் தாடு கின்றாள். இ-ள் அரிவை சிலம்புமுதலியன சிலம்பக் கோதை விசையா லெழுந்துநிற்ப ஓலை மின்னை வட்டமாகச் சொரிந்து சிந்தக் குண்டலம் மேனியை மறைத்த சாந்தைத் தீண்டிவீச ஆரம்மின்ன ஆடாநின்றாளென்க. 678. மருங்குலு மொன்று தாய்க்கு மொருமக ளாத லோர்ந்து மிரும்பினா லியன்ற நெஞ்சத் திவர்களோ விருந்து காண்க வரங்கின்மே லிவளைத் தந்த தாய்கொலோ கயத்தி யன்றேற் சுரும்புசூழ் கண்ணி சூட்டி யவர் கொலோ கயவர் சொல்லீர். இ-ள். இடையுமொன்றே வேறு சேமவிடையுமில்லை; இது முரிந்தாற் றாய்க்குமொருபிள்ளையுமே வேறில்லை, அதனையறிந்தும் அருளின்றாக இரும்பாற் செய்த நெஞ்சினையுடைய இக்கொடி யோரிருந்து காண்க; இவரிது முடிவுபோகக் காண்டலறிந்தும் அரங்கின் மேல் இவளை விட்ட தாய் கொடியளோ? அன்றாயிற் கண்ணி சூட்டியவர் கொடியரோ? இருவரினுங் கொடியவரைக் கூறிக் காணீரென்பாருமென்க. இவர்களோ, ஓ - இரக்கக்குறிப்பு. (186) வேறு 679. அகிலார் புகையலாற் சாந்தணியாள் பூச்சாரச் செல்லாள் செல்லிற் பகலே பகைவளர்த்த பாவை சிறுநுசுப்பொன் றுண்டே பாவ மிகலேந் திளமுலைமேற் சாந்தெழுதி முத்தணிந்து பூவுஞ் சூட்ட முகிலேந்து மின்மருங்குன் மொய்குழற்றா யிதுகண்டு முளளே பாவம். உண்டே, ஏகாரம்-எதிர்மறை. ஒருபாவமிருந்தபடி. இ-ள். இவள் அகிற்புகையணிதலன்றிச் சந்தனமுமணியாள்; பூவின் அருகுஞ்செல்லாள்; bன்றாளாயின் அதனைத்தாங்குதற்கு முலையாகிய பகையை வெளியாகச் சுமந்துவளர்த்த நுசுப்பென்ப தொன்று பாவைக்கில்லை; இத்தன்மையறிந்தும் இவடாயானவள் இடையுடனே மாறுபடுதலைமேற்கொண்ட முலைமேலே எழுதி அணிந்து சூட்ட இதனைக்கண்டும் உயிருடனேயிருந்தாள்; என்னே! ஈதொருபாவ மிருந்தபடி, என்னென்பாருமென்க. (187) 680. தேந்தா மஞ்செம்ப வளத்தாமஞ் செம்பொனெரி தாமமின்னுத் திரடா மங்க டாந்தா மெனத்தாழ்ந்த பொன்மேக லைத்தாமவரங்கின்மேற் றாதார் முல்லைப் பூந்தா மக்கொம்பா டக்கண்டா ரெல்லாம்புனமயிலேயன் னமேபொன் னங்கொ யாந்தா மரைமகளே யல்லளாயி னமரர்மக ளென்பாரு மாயி னாரே. பூமாலைதாம், பவளத்தாமந்தாம், பொற்றமந்தாம், மணித் தாமந்தாமென்று கண்டார் கூறும்படி அவ்விடத்தே பொருந்திய மேகலையையுடைய தாமமென்று தோரிய மடந்தையர்க்கு வெளிப் படையாக்கி அவர்களையுடைய அரங்கின்மேலே கொம்பு போல்வான் ஆடவென்க. தோரியமடந்தையர் - ஒத்துப்பாடுவார். இ-ள். மயிலேயாம், அன்னமேயாம், பொன்னங் கொம்பே யாம், திருமகளேயாம் அல்லளாகிற் றேவர்மகளேயா மென்பாரு மென்க. என்பாருமென்பதனை முன்னும்பின்னுங் கூட்டுக. ஆயினா ரென்பதனை “நெய் பருகி” (சீவக.682) என்னுங்கவியிற் பின்னேகூட்டுக. முல்லை கற்பிக்குக் சூட்டிற்று. “தானுடை முல்லையெல்லாம்” (சீவக.686) என்பமேலும். இனி இவையே மாலையென்று கண்டார் வியக்கும்படி பூமாலைமுதலியதாழ்ந்த தாமவரங்கின்மேலே மேகலையையு முல்லைத் தாமத்தையுமுடைய கொம்பு போல் வாளாடவென்றுமாம். (188) 681.` கொழயார் குளிர்முத்தஞ் சூட்டி வைத்தார் கொல்வானே குங்குமச்சே றாட்டி னார்க, ளடிசார்ந்து வாழ்வா ரையம் முலைகடா மே யழித்திடு மேற்றாமே ய ழித்தி டுகவென், றொடியா தமாத்திரை யாலுண்டே நுசுப்பிருந்து காண்பாரு முளரே செங்க, ணெடியான் மகன்நிலையு மம்பும் வைத்த நிழன்மதியோ வாண்முகமோ நோக்கிக் காணீர். இ-ள். நம்மைக்கொல்லுவதற்கே சூட்டுவதுஞ்செய்தார் ஆட்டு வதுஞ் செய்தாராதலாற் கொடியராயிருந்தார்; என்றுந் தங்காற் கீழ்வாழ்வார் சிலரை உலகந் தாமே யழிக்குமாயின் அம்முலை களுந்தாமே நம்மையழிக்கவமையுமென்று கருதித் தான்முறியாத மாத்திரையாலே இடையுமுண்டென்னு மளவாயி ருந்தது, இப்பாதகத்தைகண்டு வைத்தும் இருந்து காண்பாரு முளராயிருந் தாரென்பாரும், காமனதுவில்லுமம்பும் வைத்த தொருமதியோ! முகமோ! நோக்கிக் காணீரென்பாருமென்க. (189) 682. நெய்பருகி நீண்ட விருட்கற்றை போலுங் குழற்கற்றை கண்டுநிறைக லங்குவார், மைபருகி நீண்டு மதர்த்தவுண் கண் வளேறுபெற்று நைவார் மாநா கத்தின், பைபருகு மல்குலி லயம் பற்றிப் பதன மைத்த பாவை நிருத்த நோக்கி, மெய்யுருகிக் கண்ணுருகி நெஞ்சுருகிக் காம வெயில்வெண் ணெய்ப்பா வைபோன் மெலிகின் றாரே. கற்றை-பாரம். கண்ணாகிய வாளேறு. படத்தின் றன்மையைக் கைக்கொள்ளுமல்குல். கூத்திற் றாளவறுதியைத் தொடங்கிக் காலமைத்தகூத்து. கண்ணுருகுதல் - நீர்வார்தல். மெலிதல் - உடம்புநுணுகுதல். வேறு. 683. ஆடவர் மனங்க ளென்னும் மரத்தின்மே லனங்க மாலை யாடினாண் முறுவ லென்னுந் தோழியை யையன் காண வோடரி நெடுங்க ணென்னு மோலையை யெழுதி விட்டாள் வாடிய வாறு நோயு முரைத்துவார் கொடிய னாளே. கொடியனாள் -சுட்டு. இ-ள். அனங்கமாலை மனமென்னு மரங்கின்மேலேயாடி னாள்; ஆடியவள் தன் மேனிவாடியவாறும் நோயுமுரைத்துக் கண் ணென்னு மோலையை யெழுதி அதனை முறுவலென்னுந் தோழி கையிலே கொடுத்துச் சீவகனைக் காணப்போக விட்டாளென்க. தன் கூத்தினால் அவற்கு வேட்கை நிகழ்ந்ததோ வென்றறி தற்கு நோக்குகின்றவள் தான்குறித்தன கொள்வானாக நோக்கின மையை உருவகமாகக் கூறினார். அதனை அவன் கொள்ளமை கண்டு நாடகமகளாதலிற் றன்னெஞ்சுவருந்தாதபடி அதனைத் தேற்று கின்றாளாக மேலிற்கவிகூறுகின்றார். மாதவி “ மாலை வாரா ராயினு மாயிழை காலை காண்குவம்” என்றாற்போல. (191) 684. வளமல ரணியப் பெற்றேன் வால்வளை திருத்தப் பெற்றேன் களனெனக் கரையு மல்குல் கையினாற் றீண்டப் பெற்றே னிளமுலை சுமந்து பெற்ற வருத்தமு மின்று தீர்ந்தே னுளமெலி மகளி ரெய்து மின்பமு மின்று பெற்றேன். 685. என்றவ ளரசன் றன்னை நோக்கல ளிவன்க ணார்வஞ் சென்றமை குறிப்பிற் றேறிக் கூத்தெலா மிறந்த பின்றை நின்றது மனத்திற் செற்ற நீங்கித்தன் கோயில் புக்கான் மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண் டொலிகொ டாரான். இவையிரண்டுமொருதொடர். நகைமுடிக்கோதைசூட்டுதலின் மலரணியப் பெற்றே னென்றாள். வளைதிருத்தல் ஈண்டுக் கூறவே ஆண்டணிதல் பெற்றாம். மேகலைக்குக் களனென்னு மோசையியல்பு. பட்டிற் கலை நலங்கொளுத்துதலின் அல் குறீண்டப்பெற்றேனென்றாள். குருதிச்சாந்துமுதலியன சேர்த்துதலின் முலைசுமந்து பெற்ற வருந்தமுந் தீர்ந்தேனென்றாள். பரியகமுதலியன பாதத்தே சேர்த்துதலிற் றான்விரும்பி ஊடற்காலத்திற் காறீண்டி ஊடறீர்த் தற்குரியமகளிர் பெறுமின்பமும் பெற்றேனென்றாள். இ-ள். தன்னை அவன் விரும்பாமையுணர்தலிற் றான் இவை யெல்லாம் இவன் நிகழ்த்தப்பெற்றேன்; இனி யான் பெறாத தேதென்றுட்கொண்டு தன்மனத்தைத்தேற்றிப் பின்பும் அவள் அரசன்றன்னைநோக்காளாயினாள்; ஆதலாற் டியங்காரன் கூத்தெல்லா முடிந்தபின்னை இவனிடத்து அவட்கு ஆர்வ நிகழ்ந்த மையை அவடன்குறிப்பாற்றெளிந்து அம்மடந்தையை வலிதிற் கொண்டுநீங்கித் தன்கோயிலிலே புக்கான்; புக்கபின் அவன் மனத்தே இவனைக் கொல்லவேண்டுஞ் செற்ற நின்ற தென்க.(192.3) 686. தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போது புல்லி யூனுடை யுருவக் காக்கை யிதழுகக் குடைந்திட் டாங்குக் கானுடை மாலை தன்னைக்கட்டியங் காரன் சூழ்ந்து தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட் டானே. முகைவிரிந்து தேனொழுகும். ஊனுடைந்தவுருவம் - வினைத் தொகை; ஊனையுடைக்குமுருவமுமாம். மாலைக்கேற்பக் கான் கூறினார். சீவகனையே கூடுவனென்றலின், முல்லை - கற்பு. முல்லைக்கேற்பத் தாது கூறினார். இ-ள். அங்ஙனஞ் செற்றநிகழாநிற்கக் கட்டியங்காரன் மாலையைப் போகாமற் றடுத்துப் பிணத்திலிருக்குங்காக்கை போதைப்புல்லிக் குடைந்தாற்போலத் தானுடைய முல்லை யெல்லாம் பறித்தானென்க. இதனாற் புணருநெறியறியாமைகூறினார். (194) 687. கலையினிற் கன்னி நீக்கித் தாமரைக் கண்க டம்மான் முலையினி லெழுதிச் செவ்வாய் பயந்ததேன் பருகி மூழ்குஞ் சிலைவலாய் புல்லு நம்பி சீவக சாமி யோவென் றலைகடற் புலம்பி னோவா தரற்றுமா லணங்கி னன்னாள். சிலைவலாயெனவே இத்துன்ப நீக்குதற்குரியயென்றாள். உருவு வெறிப்படுதலிற் புல்லென்றாள். ஓ - இரக்கக் குறிப்பு. இ-ள். அவன் அங்ஙனம்புணர்ந்தவளவிலே அணங் கினன்னாள் மேகலையிடத்து அழிவின்மைநீக்கிக் கண்ணால் முலையிலேயெழுதிப் பருகி இங்ஙனம் முறைமையறிந்து மூழ்குஞ் சிலைவலாய், நம்பி, சாமி, நீ வந்து புல்லுவாயாகவென்று கடலொலி போல அரற்றா நிற்குமென்க. (195) 688. பிறனல மரற்றக் கேட்டும் பீடினாற் கனிந்த காம நறுமல ரணிந்த மாலை நாற்றக் கோர் நான்கு காத முறநடந் தறித லில்லா னொண்டொடிக் குருகிப் பின்னுந் திறனல தமர்க்குச் செப்புந் தீயுமிழ்ந் திலங்கும் வேலான். இ-ள். வேலான் பீடினாற்கனிந்த காமமாகிய நறுமலராலே பண்ணின பெண்ணாகிய மாலையினது நாற்றத்திற்கு ஒருநாற் காத வழியளவும் அணுகவந்தறியாதவன் ஒண்டொடி தன்னருகே யிருந்து வேறொருவனன்மையை அங்ஙனங்கூறக்கேட்டும் பின் னும் அவட்குருகித் தன் அமைச்சர்க்கு நெறியல்லாமொழிகளைக் கூறாநிற்கு மென்க. அவைமேற்கூறுகின்றார். (196) வேறு. 689. விலங்க லன்ன வேக வேழ நான்கு வெல்லு மாற்றலன் கரங்க லந்தி லங்கு மார்பிற் கந்து கன்ம கன்னென நலங்க லந்து ரைக்கு மாலிந் நன்ன கர்க்கு மன்னனோ வுலங்க லந்த தோளி னீரு ரைமி னீவி ரென்னவே. இ.-ள். தோளினீர், கந்துகன்மகன் ஆற்றலனென்று உலக மெல்லாங்கூடி அவனலத்தைக் கூறா நிற்கும். இந்நகர்க்கு இவனோ பெருமான், நீங்கள் கூறுவீராகவென்னா நிற்கவென்க. (197) கோபத்தாலிங்ஙனங் கூறினான். மார்பின்மகன். 690. மட்ட விழ்ந்த தாரி னானிம் மாந கர்க்கு ளாயிரர் தொட்டெ டுக்க லாவு லம்மொர் தோளி னேந்தி யாடினா னொட்டி நாக மோரி ரண்டெ டுக்க லாத கல்லினை விட்ட லர்ந்த போது போல வேந்த லேந்தி நீக்கினான். தொட்டு - தீண்டி. ஒட்டி - வஞ்சினங்கூறி. இ-ள். தாரினான் உலமேந்தியாடினான்; பின் அந்தவேந்தல் யானையாலெடுத்த லாற்றாத ஓரிரண்டு கல்லினையும் இரண்டு கையிலும் போதுபோலேந்தி நீக்கினானென்க. (198) 691. வெஞ்சி லையின் வேடர் வெள்ள மப்பு மாரி தூவலி னெஞ்ச லின்றி நம்ப டையி ருமு றையு டைந்தபின் மஞ்சு சூழ்க ணைம்ம ழைபொ ழிந்து மாநி ரைபெயர்த் தஞ்சி லோதி யார்பு னைந்த செஞ்சொன் மாலை சூடினான். இ-ள். வேடர் சிலையாலே வெள்ளமாம்படி அப்புமாரியை ஒழிவின்றாகத்தூவலின் நம்படை இருகாலுடைந்தபின், மஞ்சுசூழ்மழை போலக் கணையைப்பொழிந்து நிரையைப் பெயர்த் துப் புகழ் மாலையைச் சூட்டினானென்க. (199) 692. தீம்ப யறி யன்ற சோறு செப்பி னாயி ரம்மிடா நீங்க லாந றுநெய் வெள்ளங் கன்ன லாயி ரங்குட மேந்து வித்து நாமி சைய வந்து தந்து நீக்கினா னாங்கு நாம்ப சித்த சைந்த காலை யன்ற வண்ணலே. இ-ள். சொல்லின் அவ்வண்ணல் அன்று அவ்விடத்தே நாம் பசித்திளைத்தபொழுதிலே பருப்புச்சோறாயிரமிடாவும் நீங்கலாத நறுநெய்வெள்ளமுங் கன்னலும் ஆயிரமாயிரங் குடம் ஏந்துவித்து வந்து நாமுண்ணும்படிதந்து பசியைப்போக்கினானென்க. 693. இன்ன னென்ன வின்பு றானி ழந்த னன்ன ரசென வென்னை வெளவும் வாயிறா னென்னுஞ் சூழ்ச்சி தன்னுளா னன்ன தால ரிறப வறிந்து கூத்தி கூறினா ளின்ன தாற்ப டையமைத் தெழுமி னென்றி யம்பினான். இ-ள். அவன்வலியனுமாய் நமக்குதவியுஞ் செய்தா னென்றவர் கூற; அதற்கு மகிழானாய் இவர் கருத்தாலும் அவன் வலியாலும் இனி அரசுமிழந்தேனல்லனோ வென்றுட்கொண்டு இவனைக் கொல்லும் வழிதானெங்ஙனேயென்னுஞ் சூழ்ச்சி தன்னிடத்தே நின்றானென்க. அன்னதால் - அவன்கருத்தப்படியாயிருத்தலை; ஆதல் - விகாரம். இன்னது - இக்காரியமித் தன்மைத்தாயிருந்தது. என்றது, தோற்றவர் களுங் கட்டியங்காரனும் பகைப்பார்போலே யிருந்த தென்றவாறு. அவன் விளம்பியதியாதென்னின், ஐயனுக்கு முன்பே அறு பத்துநால்வரியைந்தாராதலிற் றாழ்வில்லையென்று விளம்பி னான்; விளம்பிப் பின்னும் கந்துகன் அச்சிலையினானுக்கு ஆண்டுச் சேறற்குச் சிறிதுதாழ்வுண்டென்று மறைவல்லாற்கு உரைக்கும்பொழுதிலே பெண் கொடிவந்து குவளை நீட்ட அதனைக் கொண்டான்; கொண்டு வாசிக்கின்றவன் சேமத்தே வைக்கவென்று வாசித்தான்; வாசித்து ஓலைகொண்டு வந்த வளைப்பார்க்க அவள் மேலைநாட்பட்டதொன்று விளம்புவலடிகளென்றாள்; அதுகேட்ட கந்துகன் திங்கள் விரவிய பெயரினாற்கு இவள் கூறுகின்ற இதனை நீகேளென்றான்; அப் பொழுது புத்திசேனன் கேட்டிருப்பத் தான் கண்ட செய்தி கூறுகின்றாள்; சீவகற்கொணர்மினென்னவேலினானுந் தோழருங் காணச்சென்றார்; அப்பொழுது அவருஞ்சீவகனணிகவென்ன; அவனுங் கொளுத்தி யிட்டான்; கொளுத்தி அரிவையை யணிந் தான்; அணிந்தபின்பு அவள் காண்பார் மனத்தையெல்லாம் முற்படத்துளக்கினாள். துளக்கினபின்பு அவர் நெஞ்சம் பண்விட்டது அங்ஙனம்பண்விடும்படி கூத்தாடா நின்றாள் அங்ஙனந் தாமவரங்கின்மேலே கொம்பாடக் கண்டாரெல்லாம் கயவர் சொல்லீரென்பாரும் பாவமென்பாரும் அமரர்மகளே யென் பாரும், காண்பாருமுளரே யென்பாரும், நோக்கிக்காணீ ரென்பாரும், நிறைகலங்குவாரும், நைவாரும், மெலிகின்றாரு மாயினார்; அங்ஙனமாம்படி அனங்கமாலை அவர்மனமென்னு மரங்கின்மேலே ஆடினாள்; ஆடிஓலையை ஐயன்காண விட்டாள்; விட்டும் அவனுக்கு விருப்பங் காணாமையின் இவைபெற்றேன் யான் பெறாத தேதென்றுட் கொண்டு தன்மனத்தைத் தேற்றி அரசனை நோக்காளாயினாள்; ஆதலாற் றாரான் வலிதிற் கொண்டு தன்மனத்தேத்தேற்றி அரசனை நோக்காளாயினாள்; ஆதலாற் றாரான் வலிதிற்கொண்டு நீங்கிக் கோயில்புக்கான்; புக்கபின்னு மனத்தேசெற்றநின்றது. அதுநிற்க மாலையைச் சூழ்ந்து பறித்திட் டான்; அங்ஙனம் பறித்தவளவிலே அவள் ஓவாதரற்றும்; அங்ங னம் பிறனலமரற்றக்கேட்டும் உருகித் தமர்க்குத் திறனல செப்பா நிற்கும்; அங்ஙனஞ் செப்புகின்றவன் உரைமின் நீவிரென்னாநிற்க; அவரும் ஆடினான், நீக்கினான், சூடினான், நீக்கினானா தலானின்னனென்ன, அதற்கின்புறானாய் என்னர சுமிழந்தேனென் றுட்கொண்டு இவனைக் கொல்லுமாறெங்ஙனே யென்னுஞ் சூழ்ச்சிதன்னிடத்தே நின்றான்; இதுபட்ட தென்றாள்; அதனை யுணர்ந்துகந்துகனும் ஓலையை நீட்டி அவட்கு மாலைக் காலத் திலும் அங்குப்பிறந்த சொல்லை ஒற்றிவாவெனக்கூறிக் குழை முதலியனவற்றை மறையநல்கி அவளைப்போக்கிப் புத்தி சேனனை நோக்கி அவன் கருத்தன்ன தாதலை ஐயமறவறிந்து நாகமாலை கூறினாள்; அது யான் ஓலைவாசகத்தே விளங்கினேன்; இனிக் காரிய மின்னனதாயிருந்ததாதலாற் படையமைத்துப் போவீராக வென்றியம்பினா னென்க. செய்திகூறுகின்றாள் இதுபட்டதென்றா ளென்க. (201) வேறு. 694. தாதைதா னுரைத்த வெல்லாந் தன்னுயிர்த் தோழன் கூறக் கோதைமுத் தணிந்த மார்பன் கூரெயி றிலங்க நக்காங் கேதமொன் றில்லை சேறு மென்றலு மிலங்கு வாட்கைப் போதுலாங் கண்ணி மைந்தர் போர்ப்புலிக் குழாத்திற் சூழ்ந்தார். இ-ள். மார்பன், கந்துகன்கூறியகாரியங்களையுஞ் சேடி கூறிய வற்றையுந் தோழன் கூறக்கேட்டு, நக்கு அவ்விடத்து நமக்கு வருவ தோர் தீங்கு சிறிதுமில்லை சேறு மென்ற வளவிலே, தோழர் அதற்குடன்பட்டுப் புலித்திரள்போலச் சூழ்ந்தாரென்க. சேடிகூற்றிற்கு நக்கான்; கந்துகன்கூற்றிற்கு ஏதமின் றென்றான். உலாம் - அலமரும். (202) 695. கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரி குளித்த காமன் மண்மிசைத் தோன்றி யன்ன வகைநல முடைய காளை தெண்மணி யார மார்பன் றிருநுதன் மகளிர் நெஞ்சத் துண்ணிறை பருகும் வண்டா ருருவமை திருவின் மிக்கான். 696. கருநெறி பயின்ற குஞ்சிக் காரகில் கமழ வூட்டி வரிநிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாளார் திருநிற முகத்திற் கேற்பச் செம்பொனோ ரோலை சேர்த்தி யெரிநிறக் குழையோர் காதிற் கிருளறச் சுடர வைத்தான். 697. தென்வரைப் பொதியிற் றந்த சந்தனத் தேய்வை தேங்கொண் மன்வரை யகலத் தப்பி வலம்புரி யாரந் தாங்கி மின்விரித் தனைய தொத்து விலைவரம் பறிய லாகா வின்னுரைக் கலிங்க மேற்ப மருங்குலுக் கெழுதி வைத்தான். 698. இரும்பறக் கழுவி யெஃகி னிருளற வடிக்கப் பட்ட வரும்பெறற் சுரிகை யம்பூங் கச்சிடைக் கோத்து வாங்கிப் பெருந்தகைக் குரிசில் கொண்டு பெருவலஞ் சுடர வீக்கித் திருந்திழை மகளிர் வெஃகுந் தேவிளங் குமர னொத்தான். இவை நான்குமொருதொடர். 1. திருவின்மிக்கான் - பெயருமாம். 2. வலம் - இடம். வண்டினதுபாட்டின் நிறத்தையுடைய மாலையைக்குஞ்சியிடத்தே வண்ணம்பெறச்சூட்டி. 3. தெற்கிடத்துவரைகளுக்கு எல்லையாகிய பொதியில்; வரைப்பொதியில் இருபெயரொட்டாகாது. மன் - பெருமை. மின்னை அகலவிரித்ததன்மையையொத்து. நுரைபோலுங் கலிங்கம். 4. கழுவி - வட்டாகவுருக்கி. அதனாலே இருளறப் பண்ணப்பட்ட சுரிகையைக்கையாற் பிடித்துக் கச்சை இடையிலே கோத்துவாங்கி வெற்றிவிளங்க வீக்கியென்க. “சுரிகை நுழைந்த சற்றுவீங்கு செறிவுடை” என்றார்பிறரும். தேவாகிய குமரன். இ-ள். கடவுள்சீறுதலின் எரியிலே மூழ்கிய காமன் மீண்டுந் தோன்றினாலொத்த அவயவஅழகையுடைய காளை, தாரினையும் ஆரத்தினையுமுடைய மார்பன், குரிசில், அவன் குஞ்சியிலே புகையை யூட்டி மாலையைமிலைச்சி முகத்திற்கேற்ப ஓரோலையை ஒரு காதிற்குச் சேர்த்தி ஒருகுழையை யொருகாதிற்கிட்டான்; இட்டுக் குழம்பை அகலத்தேயப்பித் தாங்கிக் கலிங்கத்தை எழுதினாற்போல வுடுத்தான்; உடுத்துச் சுரிகையை வீக்கி மகளிர் நெஞ்சினிறையை வாங்குதற்குக் காரணமான செயற்கை யழகுபொருந்தின இச்செல்வத் தான் மிக்கான்; அப்பொழுது முருகனை யொத்தானென்க. (203. 6) 699. வரைவிழித் திமைப்ப தொக்கும் வாளொளி யார மார்பின் விரைவழித் திளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி நுரைகிழித் தனைய நொய்ம்மை நுண்டுகின் மருங்குல் சேர்த்தி யுரைகிழித் துணரு மொப்பி னோவியப் பாவை யொத்தார். இ-ள். இளையரெல்லாம் மார்பிலே விரையைப்பூசிக் கலங்களை யணிந்து துகிலையுடுத்து வாக்காற்புகழ்தலரிதாய் மனத்தாலுணரு மொப்பாற் பாவையை யொத்தாரென்க. இமைத்துவிழிப்பதென்றார், அசைவின்கட் பாடஞ் செய்தலின். பாவை-இருபாற்கும் பொதுவாதல் “கைபுனை பாவையெல்லாங் கதிர் முலையாக்கினான்”(சீவக.907) என்றதனானுங் கொள்க. (207) 700. அரக்குநீ ரெறியப் பட்ட வஞ்சனக் குன்ற மன்ன திருக்கிள ரோடை சூழ்ந்த செம்புகர் நெற்றித் தாகி யுருக்கியூ னுண்னும் வேகத் துறுபுலி யனைய நாக மருக்கனோர் குன்றஞ் சேர்ந்தாங் கண்ணறா னேறி னானே. ஊனை யுருக்கி. இ-ள். செம்புகர் நெற்றித்தாதலின், அரக்குநீரெறியப்பட்ட குன்ற மன்ன நாகத்தை, அருக்கன் ஒருமலையைச் சேர்ந்தாற் போலப் புலியன்ன அண்ணாறானேறினானென்க. (208) 701. விடுகணை விசையின் வெய்ய விளங்கொளி யிவுளித் திண்டோ கடுநடைக் கவரி நெற்றிக் காலியற் புரவி காய்ந்து வடிநுனை யொளிறு மாலை வாட்படை மறவர் சூழ அடுதிரைச் சங்க மார்ப்ப வணிநகர் முன்னி னானே. காய்ந்து வடித்த நுனையொளிறுகின்ற வாளாகிய படை. கரையை யடுகின்ற திரை. மங்கலத்திற்குச் சங்குகூறினார். இ-ள். தேர்முதலியன சூழ ஆர்ப்பச் சென்று யாழ் மண்டபத்தை யணுகினானென்க. (209) 702. தோற்றனண் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று நிற்பார் நோற்றன ணங்கை மைந்த னிளநல னுகர்தற் கென்பார் கோற்றொடி மகளிர் செம்பொற் கோதையுங் குழையு மின்ன வேற்றன சொல்லி நிற்பா ரெங்கணு மாயி னாரே. இ-ள் மகளிர்கோதையுங்குழையுமின்னாநிற்க, மடந்தை தோன்றலுக்கு யாழைத்தோற்றாளென்பார்; நங்கை மைந்தனலனுகர் தற்கு நோற்றாளென்பார்; தம் மனத்துக்கேற்றனசொல்லி நிற்பாராயினா ரெவ்விடத்துமென்க. இவன்கல்வி யுணர்தலிற் றெளிவுபற்றித் தோற்றன ளென்று இறப்பாற் கூறினார். (210) வேறு. 703. சுறாநி றக்கொ டுங்குழை சுழன்றெ ருத்த லைதர வறாம லர்த்தெ ரியலா னழன்று நோக்கி யையெனப் பொறாம னப்பொ லிவெனு மணிக்கை மத்தி கையினா லறாவி வந்து தோன்றினா னனங்க னன்ன வண்ணலே. மனம்பொலிவு-விகாரம். இ-ள். செற்றமறாதகட்டியங்காரன் தனது மகரக்குழை யசைந்து கழுத்திலே விழும்படி எரிந்துபார்த்து வியவாநிற்க, அவனது பொறாத மனத்தை அண்ணல் தனதுபொலிவென்கின்ற மத்திகையாலே அடித்து வந்து தோன்றினானென்க. எனவே பொலிவு அவன்மனத்தைக் கேடுசெய்ததென்க. மத்திகையென்றலின், கையிலிருக்குமென்று அடைகூறினார். (211) 704. குனிகொள் பாக வெண்மதிக் கூரி ரும்பு தானுறீஇப் பனிகொண் மால்வ ரையெனப் படும தக்க ளிறிரீஇ யினிதி ழிந்தி ளையரேத் தவின்ன கிற்கொ ழும்புகை முனிய வுண்ட குஞ்சியான் முரண்கொண் மாட முன்னினான். குனி-விகாரம். பனி-கடாத்திற்குவமம். முனிய - வெறுக்க. இ-ள். குஞ்சியான் வளைவுகொண்ட வெண் மதிப் பாகம் போலுந் தோட்டியை யழுத்திக் களிற்றையிருத்தி இளையரினிதாக வேத்த இழிந்து யாழான் மாறுபாடுகொண்ட மாடத்தே சேர்ந்தானென்க. (212) 705. புதிதி னிட்ட பூந்தவிசி னுச்சி மேன டந்தவட் புதிதி னிட்ட மெல்லணைப் பொலிந்த வண்ணம் போகுயர் மதிய மேறி வெஞ்சுடர் வெம்மை நீங்க மன்னிய வுதய மென்னு மால்வரை யுவந்தி ருந்த தொத்ததே. இன்-அசை. போகுயர் மதி - உயர்ந்தமதி. மலையு மதியமுஞ் சுடரும், மண்டபத்திற்கும் அணைக்குஞ் சீவகனுக்குமுவமம். இ-ள். அவ்விடத்துப்புதிதாகவிட்ட தவிசின்மேலே நடந்து சென்று புதிதாக விட்ட வட்ட அணைமேற்பொலிவு பெற்றிருந்த தன்மை வெஞ் சுடர் மதியத்தையேறித் தன்னிடத்து மன்னிய வெம்மைநீங்கும்படி உதயவரையிலே உவந்திருந்ததன்மையை யொத்ததென்க. (213) 706. முருகு விம்மு கோதையார் மொய்ய லங்கல் வண்டுபோற் பருகு வானி வணலம் பாரித் திட்ட விந்நக ருருகு மைங்க ணையொழித் துருவி னைய காமனார் கருதி வந்த தென்றுதங் கண்கள் கொண்டு நோக்கினார். இ-ள் உருவினால் வியப்பையுடையகாமனார் இவணலம் பரந்த இந்த நகர்க்கண்ணே இவணலத்தை அலங்கலை வண்டு பருகுமாறு போலப் பருகுவான் கருதி ஐங்கணையையொழித்து வந்த தொரு தன்மையென்றுநினைத்துக் கோதையார் தங் கண்களைக் கொண்டு அவனை நோக்கினாரென்க. ஐங்கணை இரண்டு: “அந்த ணரவிந்த மாம்பூ வசோகப்பூப்-பைந்தளிர் முல்லை பனிநீல-மைந்துமே-வீரவேன் மைந்தரையும் வேனெடுங்கண் மாதரையு - மாரவேளெய்யு மலர்.”(தக்க.71. மேற்) இவை திரவிய பாணம். இங்கிதம், மதனம், வசீகரணம், மோகனம், சந்தாபம்; இவை பாவபாணம். (214) 707. முனைத்தி றத்து மிக்கசீர் முனைவர் தம்மு னைவனார் வனப்பு மிக்க வர்களின் வனப்பு மிக்கி னியனா நினைத்தி ருந்தி யற்றிய நிருமி தம கனிவன் கனைத்து வண்டு ளர்ந்ததார்க் காரளை சீவ கன்னரோ. இதுமுதல் “இளைய” அளவுமொருதொடர். தவக்கூற்றின்மிக்க இருடிகடம்முனைவனாவான் - அயன். இவனென்பதனை மார்போடுகூட்டுக. உளர்ந்த - சிதறின. (215) 708. பொன்னை விட்ட சாயலாள் புணர்மு லைத்த டத்தினான் மின்னை விட்டி லங்குபூண் விரைசெய் மார்ப மோலையா வென்னை பட்ட வாறரோ வெழுதி நங்கை யாட்கொள்வான் மன்னும் வந்து பட்டனன் மணிசெய் வீணை வாரியே. திருவைக்கடந்த. மன்னும் - மிகவும்; தப்பாமலென்றவாறு. வாரி-அகப்படுத்துமிடம். ‘என்றெ’ன வருவிக்க. (216) 709. இனைய கூறி மற்றவ டோழி மாரு மின்புற வனைய லாம்ப டித்தலா வடிவிற் கெல்லை யாகிய கனைவண் டோதி கைதொழுங் கடவுள் கண்ணிற் கண்டவ ரெனைய தெனைய தெய்தினா ரனைய தனைய தாயினார். தோழிமாரும், உம்மை-சிறப்பு. எழுதலாந்தன்மையுடைத் தல்லாத. ஓதி-தத்தை. கடவுள் - காமன். இ-ள். அயன், தான்படைத்தவனப்புமிக்கவரெல்லாரினும் வனப்புமிக்குக்கட்கினியனாக ஒருவனை யான்படைக்க வேண்டு மென்று நெடுநாணினைத்திருந்து நிருமிதத்தாலியற்றி மகன் இச்சீவகன்; இவன் விரைசெய்மார்ப மோலையாகக் கொண்டு சாய லாளாகிய நங்கைதன் முலைத்தடத்தினாலே யெழுதி அடிமை கொள்ளும்படி வீணைவாரியிலே வந்து தப்பா மலகப்பட்டான்; ஈதொரு நல்வினையுண்டாயவாறெங்ஙன மிருந்த தென்று இத்தன்மையவான மொழிகளைக்கூறி அவடோழி மாருமின்புறாநிற்க, ஒழிந்தோருங் காமனைக் கண்ணாற்கண்டவர் எவ்வளவெவ்வளவாகிய இன்பத்தை யுற்றார் அவ்வளவவ்வள வாகிய வின்பத்தின் வடிவு தாமாயினா ரென்க. ஒருவனைப் படைக்கவேண்டுமென்றெனவும், கொண் டெனவும், ஈதொருநல்வினையெனவும், ஒழிந்தோருமெனவும் வருவிக்க. (217) வேறு. 710. குட்டநீர்க் குவளை யெல்லாங் கூடிமுன் னிற்ற லாற்றாக் கட்டழ குடைய கண்ணா ணிறையெனுஞ் சிறையைக் கைபோ யிட்டநாண் வேலி யுந்திக் கடலென வெழுந்த வேட்கை விட்டெரி கொளுவ நின்றா ளெரியுறு மெழுகி னின்றாள். 711. நலத்தைமத் தாக நாட்டி நல்வலி யிளமை வாராக் குலப்பிறப் பென்னுங் கையாற் கோலப்பா சங்கொ ளுத்திக் கலக்கியின் காமம் பொங்கக் கடைந்திடு கின்ற காளை யிலைப்பொலி யலங்கன் மார்ப மியைவதென் றாகுங் கொல்லோ. 712. தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தே னாங்கணாற் பருகி யிட்டு நலனுணப் பட்ட நம்பி பூங்குழல் மகளிர் முன்னர்ப் புலம்பனீ நெஞ்சே யென்றாள் வீங்கிய காமம் வென்றார் விளைத்தவின் பத்தோ டொப்பாள். 713. கண்ணெனும் வலையி னுள்ளான் கையகப் பட்டி ருந்தான் பெண்ணெனு முழலை பாயும் பெருவனப் புடைய நம்பி யெண்ணின்மற் றியாவ னாங்கொ லென்னிதற் படுத்த வேந்த லொண்ணிற வுருவச் செந்தீ யுருவுகொண் டனைய வேலான். 714. யாவனே யானு மாக வருநிறைக் கதவ நீக்கிக் காவலென் னெஞ்ச மென்னுங் கன்னிமா டம்பு குந்து நோவவென் னுள்ளம் யாத்தாய் நின்னையு மாலை யாலே தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக வென்றாள். 715. கழித்தவே லேறு பெற்ற கடத்திடைப் பிணையின் மாழ்கி விழித்துவெய் துயிர்த்து மெல்ல நடுங்கித்தன் றோழி கூந்த லிழுக்கிவண் டிரியச் சேர்ந்தோர் கொடிப்புல்லுங் கொடியிற் புல்லி யெழிற்றகை மார்பற் கின்யா ழிதுவுய்த்துக் கொடுமோ வென்றாள். இவையாறுமொருதொடர். 1. குட்டம்-ஆழம். கடலெனத்தரங்கித்தெழுந்த வேட்கை யாகிய எரிகொழுந்துபட்டெரியநின்றாள். இது கைம்மிகலென்று மெய்ப்பாடு. 2. தனதுவடிவழகை மத்தாக நாட்டி வலியுமிளமையும் அம்மனத்தினதிரண்டு தலையிலும் பூட்டும் வாராகக்கொண்டு ஒப்பனையழகாகிய கடைகயிற்றை அம்மத்திலேபூட்டித் தாய் குலனுந் தந்தைகுலனுமென்கின்ற கைகளாலே காமமென் கின்ற கடலைப் பொங்கும்படி கலக்கிக் கடைந்திடுகின்ற காளையது மார்பமியையும் நல்வினை எந்நாளிலே யுண்டாவதென்றையமுற்று மற்றைநாளில் விடியற்காலத்தே இயையுமென்பதனைத் தனது ஞானத்தாலுணர்ந் தாளென்க. என்றாகுமென்பது விரை வென்னுமெய்ப்பாடு. 3. கரும்பெருத்திற்றூங்கிளென்றெளிமை கூறினாள். இதற்குமுன்பு ஒருமகளிரும் இவனைநுகராதிருந்தமையுணர்ந்து ஈயின்றியிருந்த தீந்தேனென்றாள்; எனவே பிரமசரியங்கூறினார். நாங் கண்ணாலே நலத்தை உள்ளடக்கி நுகரப்பட்டநம்பி. புலம்பலென்பது-சிதைவு பிறர்க்கின்மையென்னு மெய்ப்பாடு. இன்பம்-சுவர்க்கத்தின்பம். 4. ஞானக்கண்ணென்கின்ற வலையைவீசிக்குலமுதலிய வெல்லா நோக்கும்படி அவ்வலையினுள்ளேயிருந்தான். “இரு கணும்புதைத் துவைக்கும்”(சீவக.1578) என்றாற்போல. அஞ்ஞானத்தாலெல் லாமுணர் தலிற் கையகப்ட்டிருந்தா னென்றாள். தன்மேல் வேட்கை செல்லாமையிற் பெண்ணெனுமுழலைபாயுமென்றாள்; யாழ்வென்ற பின்னல்லது அவற்குவேட்கைநிகழாமை மேலே காண்க. யாவனாங் கொல் - தேவனோ மகனோ. இதுஐய மென்னுமெய்ப்பாடு. “சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப - விழிந்துழி யிழிபே சுட்டலான”(தொல்.கலவு.3) என்பதனாற் றலைவிக்கையநிகழாதேனும் ஈண்டுக் களவன்மை யானுந் தனது ஞானத்தால் ஐயந்தீர்தல் வன்மையானு மைய நிகழ்ந்தது. மக்களாற் றன்னை வருத்த லாகாமை முன்னே காண்டலின், என்னை யிவ்வருத்தத்திலே அகப்படுத்தின ஏந்த லென்றாள். உருவச்செந்தீ, உருவம்-அடை. தீவேலின் வடிவைக் கொண்டாற் போலும் வேலான். 5. தேவனாயினுமாக, மகனாயினுமாக. இது ஆராய்ச்சி யென்னு மெய்ப்பாடு. காவலாகிய நிறைக்கதவைத்திறந்து. யாத்தாய் - எதிர்பெய்து பரிதலென்னுமெய்ப்பாடு. மாலை-எனதியல்பாலே; மேன் மாலையாற் பிணித்தலுந்தோன்ற. தேவரிற் செறியயாப்பன்-தேவரைப் போலே இமையநாட்டமாக நோக்கும்படி செறியப் பிணிப்பேன். 6. உறைகழித்தவேலேற்றை மருமத்தே தப்பாமற்பெற்ற கடத்திடைப்பிணையென்றார், பரிகாரமின்மையான். மாழ்கி விழித்து உயிர்த்தென்பன இடுக்கண்என்னும் மெய்ப்பாடு. நடுங்கி-நடுக்க மெய்ப்பாடு. மெல்லவழுக்கி யென்பது பாடமாயின் அவ்விடத்து நீங்கி யென்க. தன்தோழி கூந்தலில் வண்டுகெடும்படி அவளைச் சேர்ந்து. இது கையாறென்னு மெய்ப்பாடு. எழிற்கைமார்பனுக்கு இனியயாழ் இந்தயாழாயினும் அவன் கல்வியறிதற்குப் பலயாழை யுஞ் செலுத்திப் பின்பு இந்தயாழைக் கொடுப்hயாக வென்றா ளென்க. இ-ள். மிக்க அழகுடைய கண்ணாள், இன்பத்தோ டொப்பாள், அவள் வேலான்வனப்புடையநம்பி, யென்னிதிற் படுத்தவேந்தல், இவன் ஆராய்ந்தால் யாவனாங் கொலெனவை யுற்று யாவனேயாயினுமாக நமதுஞானக் கண்ணிடத்தான்; அதனால் யானோக்கின விடத்துக் கையகப்பட்டேயிருந்தான்; அங்ஙனமிருந்து கடைந்திடுகின்ற காளையது மார்பு இயைவ தென்றாவதுகொல்லோவென்றையுற்று நோக்கிஅக்காலஞ் சிறிது நீட்டித்தலின் அதற்காற்றாது சிறையைக் கைபோய் நாண்வேலி யைப்பாய்ந்து காமத்தீயெரியநின்றாள்; அப்பொழுது எரியுறு மெகுகினின்றாள்; அங்ஙனநின்றுமாழ்கி விழித்துஉயிர்த்துநடுங்கி - மெல்லத் தோழிமேலேவீழ்ந்து அவளைப்புல்லி அங்ஙனங்கை யாறுற்ற விடத்துத் தன்மனத்து நின்ற தலைவனைநோக்கி நீக்கி மாடம் புகுந்து யானோம்படி என்னுள்ளத்தைப் பிணித்தாய் நின்னையும் பிணிப்பேன் சிறிதுபொழுது கழிக்கவென்றாள்; என்றபின்பு தன்னெஞ்சினை நோக்கி நெஞ்சே, நலனுண்ணப்பட்ட நம்பி ஈயின்றி யிருந்ததீந்தேனாதலான் மகளிர்முன்னே புலம்பா தொழிக வென்றாற்றுவித்துத் தேற்றிப் பின்பு தோழியைநோக்கி இனியயாழிது வுய்த்துக் கொடுமோவென்றாளென்க. (218.23) வேறு. 716. தடங்க ணாள்ப ணியிணாற் றானவ் வீணை யொன்றினை நெடுங்க ணாளெ ழினியை நீக்கி யுய்த்து நீட்டினாள் மடங்க லன்ன மொய்ம்பினான் வருக வென்று கொண்டுதன் கிடந்த ஞானத் தெல்லையைக் கிளக்கலுற்று நோக்கினான். வேறு. 717. சுரந்து வானஞ் சூன்முதிர்ந்து மெய்ந்நொந் தீன்ற துளியேபோற் பரந்தகேள்வித் துறைபோய பைந்தார் மார்பன் பசும்பொன்யாழ் நரம்பு தேனார்த் தெனத்தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை யிருந்த முலையா ணின்றாளை நோக்கி யிசையி னிதுசொன்னான். 718. நீர்நின் றிளகிற் றிதுவேண்டா நீரின் வந்த திதுபோக வார்நின் றிளகு முலையினாய் வாட்புண் ணுற்ற திதுநடக்க வோரு முருமே றிதுவுண்ட தொழிக வொண்பொ னுகுகொடியே சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விதுவென்றான். 719. கல்சேர் பூண்கொள் கதிர்முலையாய் காமத் தீயால் வெந்தவர்போற் கொல்லை யுழவர் சுடப்பட்டுக் குரங்கி வெந்த திதுகளிறு புல்ல முரிந்த தெனப்போக்கித் தூம மார்ந்த துகிலுறையு ணல்யாழ் நீட்ட வதுகொண்டு நங்கை நலத்த திதுவென்றான். இவைநான்குமொருதொடர். 1. நெடுங்கண்ணாள்தானென்க. அவ்வீணை-தத்தை முற்கூறிய வீணை. எழினி - உறை. வானம் சூன்முற்றி மெய்ந்நொந்து சுரந்தீன்றபெருமழை எத்துறையுஞ்சென்று பயன்பட்டாற்போலப் பரந்ததூற் கேள்விக ளெல்லாம் முற்றக்கற்றுப் பயன்படுமார்பன். எழாது உள்ளடங்கிய முலை. பொல்லாமை இதுவென்றானென்க. பொல்லாங்கு பல வற்றையுஞ் சாதியொருமையான், இதுவென்றான். நரம்பினி சையாற் பிறந்தபொல்லாமையாவன: “செம்பகை யார்ப்புக் கூட மதிர்வு.” “செம்பகை யென்பது பண்ணோடுளரா-வின்பமி லோசை யென்மனார் புலவர்.” “ஆர்ப்பெனப் படுவ தளவிற் திசைக் கும்.” “கூட மென்பது குறியுற விளங்கின் - வாய்வதின் வாராது மழுங்கியிசைப் பதுவே.” “அமிர்வெனப் படுவ திழுமென லின்றிச் - சிதறியுரைக்குந ருச்சரிப் பிசையே.” இவை மரக்குற்றத் தாற்பிறக்கும். “நீரிலே நிற்றலழுகுதல் வேத னிலமயக்குப் - பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற் படல்கோ-ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல் - சேரினேர் பண்க ணிறமயக் கம்படுஞ் சிற்றிடையே.”(இம் மேற்கோள்கள்.சிலப்.8.29.30.அடியார்) 3. இளகிற்று - மெல்கிற்று. கட்டஆதாரமின்மையின் வாரிள குறு முலை. புண்ணுறுதல் - வெட்டுப்பட்டு நிற்றல். கணிகை சிறுவன் போலென்றது, நிலமயங்கின விடத்தே நிற்றல்லின். வேண்டா, போக, நடக்க, ஒழிகவென்றன இகழ்ச்சி. 4. கல்சேர் முலையாய் - இகழ்ச்சி. குரங்கி - தாழ்ந்து. இதுவென் பதிரண்டற்குங் கூட்டுக. நங்கைநலத்து-நங்கை குலமுதலிய நலத்தைத் தானுமுடைத்து. அந்நலமாவன: “சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு - நல்ல குமிழுந்தணக்குடனே - மெல்லியலா-யுத்தம மான மரங்க ளிவையென்றார் - வித்தகயா ழோர் விதி.” “தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கு-முளதா யொருங்கூனமின்றி - யளவு- முதிரா திளகாது மூன்றாங்கூ றாய - வதுவாகில் வீணாதண் டாம்.” “கோடே பத்த ராணி நரம்பே - மாடக மெனவரும் வகையின தாகும்.” “பதுமங்கழல்குடந் தாடியொ டுள்ளிபண் பூண்டுநின்ற - விதியமர் தண்டு குடையே குடுமி மெய்க் கோட்டுறுப்பு - மதியமர் போதிகை புட்டின் முகஞ்சுவடா மன்னெருத்தம் - விதியமர் பத்தர்க் குறுப்பென் றுரைத்தனர் மின்னிடையே” என விவையும் பிறவும். இ-ள். தத்தையதேவலாலே அவ்வீணாபதிதான் அவ்வெ ழினியை யுடைய வீணையொன்றினையும் நீக்கிவைத்து ஒழிந்த வீணைகளைச் செலுத்திக்கொடுத்தாள்; அப்பொழுது மொய்ம் பினானும் இங்ஙனே வருகவென்றுகூறி அவற்றைக் கைக்கொண்டு தனது பரந்துகிடந்த ஞானத்தினளவை அறிவிக்கலுற்று நோக்கினான்; நோக்கி அம்மார்பன் அவற்றின் நரம்பைத் தேனார்த் தெனத்தெறித்து அவற்றினிசையாலே அவள் வீணைகளின் பொல்லாமையிதுவென்று வீணாபதி நின்றவளை நோக்கிச் சொன்னான்; எங்ஙனமெனின் முலையினாய், இந்தமரம் மெல்கிற்றாதலின் இவ்வியாழ்வேண்டா; இந்தமரம் அழுகின தாதலால் இவ்வியாழ்போக; இந்தமரம் புண்ணுற்றதாதலால் இவ்வியாழ் நடப்பதாக; இந்தமரம் உருமேறுண்டதாதலால் இவ்வியாழொழிவதாக; இந்த மரம் சிறப்பின்றாதலால் இவ்வியாழொழிவதாகவென்று சொன்னான்; அங்ஙனங்கூறிப் பின்னுங் கதிர்முலையாய், இம்மரம் வெந்தது; இம்மரம் முரிந்ததென்று ஒழிந்த யாழ்களையும் போக்கு தலால் நல்லயாழை நீட்ட, அதனைவாங்கிக்கொண்டு நங்கைநலத்ததிது வென்றா னென்க. (224.7) வேறு. 720. இருநில மடந்தை யீன்ற திருவிசும் பென்னுங் கைத்தாய் திருநல மின்னுப் பொன்ஞான்முகின்முலை மாரித் தீம்பா லொருநலங் கவினி யூட்ட வுண்டு நோய் நான்கு நீங்கி யருநலங்க வினி வாள்வா யரிந்திது வந்த தென்றான். ஈன்றது-பெயர். இ - ள். மண் மகளீனப்பட்டமரம் விசும்பென்னுஞ் செவிலித் தாய் அழகியகலத்தையுடைய மின்னாகிய பொன்னாணினையு டைய முகிலாகியமுனையின் மாரியாகிய இனியபாலை முழு வலன்போடே ஊட்ட உண்டு நோய்நீங்கி வளர்ந்து வானின்வாயா லரிந்துவந்தது இவ்வியாழென்றானென்க. சினைவினைமுதலொடு முடிந்தது. நற்றாயன்பு செவிலிக்குப் பிறந்து வளர்ந்தமை தோன்ற ஒருகலமென்றார். நான்காவன: வெயிலுங் காற்றுருநிழலுமிகுதல். (228) 721. தீந்தொடை நரம்பின் றீமை சிறிதலாப் பொழுது மோதிப் பூந்தொடை யரிவை காணப் புரிநெகிழ்ந் துரோமங் காட்டத் தேங்கம ழோதி தோற்றாள் செல்வனுக் கென்ன மைந்தன் வாங்குபு நபுலன் கையுள் வார்புரி நரம்பு கொண்டான். இ - ள். மைந்தன் நரம்பின்றீமையை நெடும்பொழுதெல்லா மாராய்ந்து கூறி அதற்கேற்ப அரிவைகாணு மபடிமுறுக்கை யுடைத்து அதிற்கிடந்தமயிரைக் காட்டுதலின், அவையுள்ளோர் ஓதி இனிச் செல்வனுக்குத் தோற்றாளென்னாநிற்க; அவன் நபுலன் கையினரம்பை வாங்கிக்கொண்டானென்க. தனக்குச் சேமமாகவந்தவற்றில் நரம்பையே வாங்கினான்; யாழ்நன்றாதலின். கந்துகன் படையமைத்தெழுமினென்றதனால் நந்தட்டனும் பதுமுகன்முதலாயினாரும் போர்க்கோலத்தோடும் புறத்துநின்றாரென்பதுதோன்ற நபுலன் கையில் நரம்பிருந்த தென்றார். அது மேற் “பண்ணியல் யானைமேலான் பதுமுகன்” (சீவக.747) என்பதனானுணர்க. “கொடும்புரி மயிர் தும்பு முறுக்கிவை நான்கு - நடுங்கா மரபிற் பகையென மொழிப” என்றார். (229) 722. பணிவரும் பைம்பொற் பத்தார் பல்வினைப் பவள வாணி மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தே னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ் கணிபுகழ் காளை கொண்டு கடலகம் வளைக்க லுற்றான். பணிவரும்-வாசித்தற்றொழிலிலேவரும். வயிரமாடகம் - நால்விர வளவான பாலிகைடி வாய் நரம்பை வலித்தல் மெலித்தல் செய்யுங் கருவி. “இடக்கை நால்விரன் மாடகந்தழீஇ” (சிலப்.8:28) என்றார் பிறரும். பொன்முதலியன அழகிற்கிட்டன. இ - ள். நூல்போனவன் புகழ்ப்படுங்காளை பத்தர் முதலிய வற்றையுடையயாழைக்கொண்டு உலகினை வளைவித்தலுற்றா னென்க. (230) 723. குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் விரல்கவர்ந் தெடுத்த கீத மிடறெனத் தெரித றேற்றார் கரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன மாவும் புள்ளு முருகின மரமுங் கல்லு மோர்த்தெழீஇப் பாடு கின்றான். இ - ள். குஞ்சியான் செம்பாலையைப் பண்ணித் தன் விரலாலே கவர்ந்தெடுத்த பாட்டைக் கண்டமென்றுகருதிக் கருவி யென்று தெளிதலையறியாராய்த் தேவருமக்களுந் நம்மில் வாசி யின்றி வீழ்ந்தார்; கின்னரமும் அசுணமுஞ் சோர்ந்தன; மரமுங் கல்லு முருகின; அங்ஙனம் வாசித்தநிலையைக்குறித்து அதற்கேற்ப ஆளாபஞ் செய்து பாடாநின்றானென்க. “ஆழீயு மாரும் போற் கீறி யதனருகே - யூறி யொரோ வொன் றுடன்கீறி-வாழி-யெருதாதி கீழ்த்திசைகொண் டீராறு மெண்ணிக் - கருதாய் நிலக்கயிற்றைக் கண்டு.”(சினேந்திர.காண்ட ஆருடச்சக்கரம்.1) இப்பாலைத் திரிவிலே பத் தொன்பது நரம்மையுடைய மகரயாழ் குரல் குரலாமாறுகாண்க. (231) வேறு. 724. கன்னி நாகங் கலங்க மலங்கி மின்னு மிரங்கு மழையென் கோயான் மின்னு மழையின் மெலியு மரிவை பொன்னாண் பொருத முலையென் கோயான். 725. கருவி வானங் கான்ற புயலி னருவி யாற்று மலையென் கோயா னருவி யாற்று மலைகண் டழுங்கு மருவார் சாயன் மனமென் கோயான். 726. வான மீனி னரும்பி மலர்ந்து கானம் பூத்த காரென் கோயான் கானம் பூத்த கார்கண் டழுங்குந் தேனார் கோதை பரிந்தென் கோயான். இவைமூன்றுமொருதொடர். இம்மூன்றுகவியுங் கூதிர்ப்பருவங் குறித்துப் பிரியக்கருதிய தலைவற்குத் தோழி அதற்குமுன்னிகழ்கின்ற காரின்றன்மையு அதுதலைவியைவருத்துந் தன்மையும் யான்கூறவேண்டுமோ நீயேயறிதியன்றோவெனக்கூறிச் செலவழுங்குவித்தனவாக்குக. இனவேனி னிகழ்ச்சிக்கண்ணே கார்கூறவேண்டிற்று; யாழ்வென்ற பின்னல்லதுதன்மனத்தில் வேட்மைதோன்றாதாதலின். அதனைக் கூறவே வேட்கைதோன்றிற்றாகப் புலப்படுமென்பது கருதி. 1. இ - ள். யான் புயலால் கன்னியாகியபாம்பு மலங்கிக் கலங்கும் படி மழைமின்னாநிற்கும் இரங்காநிற்குமென்கோ; யான் முலை யினையுடைய அரிவை அம்மழையான் மெலியுமென்கோ வென்க. 2. இ - ள். யான் புயலால் அருவியற்று மலையென்கோ; யான் அதனைக் கண்டு மருவுதல் நிறைந்த சாயல் மனமழுங்கு மென்கோ வென்க. 3. இ - ள். யான் காரினாலே கானம்பூத்தனவென்கோ; யான் அதனைக் கண்டு கோதைபோல்வான் பரிந்தழுங்குமென்கோ வென்க. இத்தாழிசைக்கொச்சகவொருபோகுகன் கந்தருவமார்க்கத் தான் இடைமடக்கின. இது மேல்வருவனவற்ற்றிற்க்கும் மொக்கும். (232-4) வேறு 727. அண்ணலியாழ் நரம்பை யாய்ந்து மணிவிர றவழ்ந்த வாறும் பண்ணிய விலயம் பற்றிப் பாடிய வனப்பு நோக்கி விண்ணவர் விணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார் மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரு மனத்துள் வைத்தார். இ - ள். தலைவனதுவிரல்நரம்பையாய்ந்து வாசித்த படியும். அதிற்றான் பண்ணிய செலவைக்குறிக்கொண்டு மிடற்றாற் பாடிய வனப்பையுமுட்கொண்டு கின்னரர் வீணையைக் கைவிட் டார்; வீஞ்சையர் செஞ்சுருகி மெய்சோர்ந்தார்; மக்கள் தாமறியா தது கேட்டமயக்கத்தாலே அறிவுகெட்டார்; இருடிகளும் இதுவும் பேரின்பமாயிருந்ததென்றுட்கொண்டா ரென்க. இதனான் முன்புயாழ்வாசித்த தன்மையையும். அதற் கேற்பப் பாடின தன்மையையுங் கேட்டோர் வியந்தபடி கூறினார். (235) 728. வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை சூழ்மணிக் கோட்டு வீணைச் சுகிர்புரிநரம்புநம்பி யூழ்மணி மிடறு மொன்றாய்ப் பணிசெய்த வாறு நோக்கித் தாழ்மணித் தாம மார்பிற் கின்னரர் சாம்பி னாரே இ - ள். மதுவைவிரும்பிய வள்டு குதித்து மிதித்தலால் அலர்ந்த மாலையினையுங் கோட்டிiயுமுடைய வீணையிற் சீவிமுறுக்கின நரம்பும் நம்பிமிடறுமொன்றாய் ஏவல்செய்தபடி யையுட்கொண்டு கின்னரர் மேனிவாடிiனாரென்க. இதனாற் கருவியுங்கண்டமும் உடனிகழ்த்தினமையைக் கேட்டோர் வியந்தபடி கூறினார். (236) 729. விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த மண்ணவர் மகிழ வான்கட் பறவைமெய்ம் மறந்து சோர வண்ணறா னனங்க னாணப் பாடினா னரச ரெல்லாம் பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயி னாரே. இ - ள். அண்ணறான். வியப்ப ஏத்த மகிழச் சோரகாணப் பாடினான்; அது கேட்ட அரசரெல்லாம் எழுதும்படிசமைத்து எழுதப்பட்ட பாவைபோலாயினாரென்க. இதனாற் கருவியை நீக்கி மிடற்றாற் பாடக் கேட்டோர் வியந்த படி கூறினார் வேறு. 730. பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந் திருந்துதார்ச் சீவகற்கே சேர்ந்தனவென் றெண்ணி விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் றோற்பா னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள். 731. கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடுங் காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப மாத ரெருத்த மிடங்கோட்டி மாமதுர கீதங் கிடையிலாள் பாடத் தொடங்கினாள். இவையிரண்டுமொருதொடர். 1. பருந்து பறக்குமிடத்து முறையேயுயர்ந்து அந்நிலத்தின் கண் நின்றாய்ந்து பின்னும் அம்முறையே மேன்மேலுயர்கின்றார் போலப் பாடவேண்டுதலின், அஃது உவமையாயிற்று. “சிச்சிலி பூனை குடமுழக்கஞ்செம்மைத்தா - முச்சிமலை நீர்விழுக்கா டொண்பருந்து - பச்சைநிற - வேயினிலை வீழ்ச்சியுடன் வெங்கா னிழற்பறவை - யேயுங்கா வோசை யியல்பு”(திருவால. திருவிளை. 54.9) என்றார். விருந்தாகச் சேர்ந்தனவென்றான், இதற்குமுன்பு பிறரிடத்தில்லாது இவனி டத்தேகாண்டலின். வீணையென்றது யாழையும்பாட் டையும், மயில் காரினைக்கருதியிருந்தாற்போல இவளும் புணருநாளினைக் கருதியிருத்தலின், மயில்போலென்றார். இளமயில், இளமை - குணம். 2. உட்கும் நாணும் ஒருங்குவருதலின், நுதல்லியர்ப்ப வென்றார். அது தன்னை அவனோக்கியவழிப் பிறந்த மெய்ப்பாடு; அது ”புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. காதலையுடைய எருத்தம். கிடை - ஒப்பு. இ - ள். மயில்போலிருந்தான், கண்ணான், அவள்தான் யாழையும் பாட்டையும் யான்றோற்றற்குப்பருந்தும் அதனிழ லும்போற் பாட்டும் யாழ்வாசினையுஞ்சீவகற்கே விருந்தாகச் சேர்த்தனவென்றுகருதி யாழைப்பண்ணி வாசித்து மதுரகீதத்தில் அவனையொத்திலளாய்க் கோதைதாழ இவங்க வியர்ப்பக் கோட்டி அம்மதுர கீதத்தைப் பாடத்தொடங்கினாளென்க. யானென்றாம், அம்மதுரகீதமென்றும்வருவிக்க. (238 . 9) வேறு 732. இலையா ரெரிமணிப்பூ ணேந்து முலையுஞ் சிலையார் திருநுதலுஞ் செம்பசலை மூழ்க மலையா ரிலங்கருவி வாள்போல மின்னுங் கலையார் தீஞ்சொல்லினாய் காணார்கொல் கேள்வர். 733. பிறையார் திருநுதலும் பேரமருண் கண்ணும் பொறையார் வளமுலையும் பூம்பசலை மூழ்க நிறைவா ளிலங்கருவி நீள்வரைமேல் மின்னும் நிறைவேலுண் கண்ணினாய் காணார்கொல் கேள்வர். 734. அரும்பேர் வனமுலையு மாடமைமென் றோளுங் திருந்தேர் பிறைநுதலுஞ் செம்பசலை முழ்க பெருங்கார் மணியருவி நீள்வரைமேன் மின்னும் கரும்பார்தீஞ் சொல்லினாய் காணார்கொல் கேள்வர். இவைமூன்று மொருதொடர். இம்மூன்றுதாழிசைக்கொச்சகமும் இளவேனில் வருகின் றமைகண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்குரைத் தனவாகக் கூறினாள், வேட்கையுஞ் சிறிதுபுலப்பட்டுநிற்றலின். 1. இ - ள். இசைக்கலைநிறைந்தசொல்லினாய், நுதலும் பசலையிலே மூழ்கும்படிஒளிநிறைந்த வாள்போலிலங்குமருவி மலைமேலேமின்னும்; இதனைக்கேள்வர் காணாரோவென்க. 2. இ - ள். கண்ணினாய்நுதன்முதலியன பசலையிலே மூழ்கும் படி ஒளி நிறைந்த வாள்போவிலங்குமருவி மலைமேலே மின்னும்; இதனைக் கேள்வர் காணாரோவென்க. 3. இ - ள். சொல்வினாய். முலைமுதலியன பசலையிலே முழ்கும்படி முத்து வடம்போலுமருவி மலைமேலேமின்னும்;இதனைக் கேள்வர் காணாரோவென்க. அருவிதெளிந்ததெனவே காலம்வேனிலாயிற்று.(240. 42) வேறு 735. பண்ணொன்று பாட லதுவொன்று பல்வளைக்கை மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேனடவா விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி பெண்ணின்றி மாத ரிசைதோற் றிருந்தனளே. அதுவொன்றென்றது அவன்பாடினபாட்டையும் யாழையும், மண்ணுதல் - பண்ணுதல்; “ஆவுதிமண்ணி” (மதுரைக்.494) என்றார் பிறரும். விரலுமென்ற உம்மை எச்சவும்மையாதலிற் பாட்டுமென்று கொள்க. விண்ணென்றது முற்கூறிய உள்ளாளத்திற்குரிய மூலாதாரந் தொடங்கிப் பிரமரந்திரத்தளவுநின்றவெளியை. நடுநடுங்கியென்றது கம்பிதப்பாட்டை; “எடுத்தல் பாட் டுச்சமா மெண்படுத்தன் மந்தந் -தடு த்து நலிதல் சமமாம் - தொடுத்தியன்ற - தள்ளாத கம்பிதந் தாணடுக்க னற்குடில - முள் வாங்கிப்பாட லுணர்.” எனவே உள்ளாளத்திலே கம்பி தங்கலத்தவிற் குறையா யிற்று. இ - ள். அங்ஙனம் பாடத் தொடங்கினவள் பாடின பாட்டும் அதற்கேற்றயாழும் ஒருதிறமாயிருந்தன; அவன் பாடினபாட்டும் யாழும் வேறோர்திறமாயிருந்தன. பின்பு உடனிகழ்ச்சியில் யாழைப் பண்ணி வாசித்தலைப்பொருந்தும் பல்வளைக்கையின் விரலும் அதற் கேற்கும்பாட்டுக்களும் நரம்புடன்நடவாவாயின; பின்பு கருவி யொழிந்த பாட்டும் விண்ணிலே நின்றியங்கி அக்காலத்தே கம்பித்தலைச் சேர்த லாலே வாதிற்கெடுத்த கீதத்திற் சிறிதுகுறைந்து மாதர் இசை தோற்றாளென்க. “சிலைத்தொழில்” “கருங்கொடி” (சீவக.657.8) என்னுங் கவிகளாத் றெய்வத்தன்மையான பாட்டுடையளென்று கூறிவைத்து ஈண்டுக் கற்றடிப் படுத்தாரைக் கூறுமாறுபோல “விருந்தாகயாழ்பண்ணி” (சீவக.730) என்றதற்கு யாழ் பண்ணுமுறைமையன்றி யென்றும், “பண் ணொன்றுபாடலதுவொன்று” என்றதற்கு யாழுமிடறும் வேறு பட்டதென்றும்., “விண்ணின்றியங்கி” என்றதற்கு அந்தரவோசை யென்றுங்கூறுதல் தேவர்கருத்தன்மையுணர்க. (243) 736. மையார் நெடுங்கண்ணாண் மாமணியாழ் தானுடைந்து நையா நடுநடுங்கா நனிநாண மீதூராப் பொய்யாதோர் குன்றெடுப்பான் போன்மெலிந்து பொன்மாலை பெய்பூங் கழலாற்குப் பெண்ணாரசி யேந்தினளே. நைந்துநடுங்குதல் - இழவென்னுமெய்ப்பாடு, வெற்றியை யிழத்தலின். நாணுள்ளம் பிறர்க்குவெளிப்படநிகழ்தலின், நாணென்னு மெய்ப்பாடு, தோல்விதோன்ற மாலையிடுதலின் மேல் இளிவர வென்னுமெய்ப்பாடு. இ - ள். கண்ணாளாகியபெண்ணரசிதான் அங்ஙனம் யாழ் தோற்றலின் நமக்குத் தோல்வியுளதாயிற்றென்றுநைந்து நிலை தளர்ந்து அவையிற்செல்ல வேண்டுதலின் நாணமீதுர் தலான் மெய்யாகவே ஒருகுன்றையெடுப்பாள்போலே குறைந்து பொன் மாலையைக் கழலாற்கேந்தினாளென்க. 737. மெல்லென் சிலம்பாற்ற மேகலைகண் மின்னுமிழ நல்ல பெடையன்ன நாண வடியொதுங்கி யொல்லென் னுயர்தவமே செய்யமி னுலகத்தீ ரெல்லீரு மென்பாள்போ லேந்தன்மேல் வீழ்த்தனளே. இ - ள். அங்ஙனமேந்தினவள் அரற்ற உமிழ நாண அடியானடந்து சென்று உலகினுள்ளீரெல்லீரும் ஒல்லென்னு மோசை படப்புகழ்கின்ற உயர்தவமே செய்மினென்று கூறுவாளைப் போல ஏந்தல்கழுத்திலே அதனைவீழ்த்தாளென்க. குன்றென்றதற்கேற்ப வீழ்ந்தனளென்றார். இங்கன மெய்து தற்குத் தவஞ்செய்யுங்கருத்து எல்லார்க்கும் இவன் பிறப்பித்தலின், என்பாள் போலென்றார். ஒல்லெனவெளியாகவென்றுமாம். (245) வேறு 738. நாகத்துப் படங்கொ ளல்கு னலங்கிளர் செம்பொன் மாலை மேகத்துப் பிறந்தோர் மின்னு மணிவிரை வீழ்ந்த தேபோ லாகத்துப் பூட்டிமைந்த னடிதொழு திறைஞ்சி நின்றான் போகத்து நெறியைக் காட்டும்பூமகள் புணர்ந்த தொப்பாள். இ - ள். போகத்தின்வழியைக்காட்டுந்திருவந்துகூடிய நன்மை யையொப்பாள் அல்குலவள் ஒருமின் மேகத்தே பிறந்து மணிவரை யிலேவீழ்ந்ததுபோலே பொன்மாலையைக் கணவனாகத்தேயூட்டி அவளைத்தொழுது நின்றாளென்க. மாலை அவனதுமுடி கூடாத கருநெறிபயின்ற குஞ்சி எருத்தத் தலைந்துகிடந்ததன் மேலே முதல்வீழ்ந்து பின்பு கழுத் திலே விழுந்தமைதோன்ற மேகமுவமை கூறினார். வீழ்வது பாட மாயிற் காலமயக்கம். (246) 739. செம்மல ரடியு நோக்கித் திருமணி யல்கு னோக்கி வெம்முலைத் தடமு நோக்கி விரிமதி முகமு நோக்கி விம்மிதப் பட்டு மாதோ விழுங்குவான் போல வாகி மைம்மலர்த் தடங்க ணங்கை மரைமலர்த் தேவி யென்றான். இ - ள். அங்ஙனநின்றமையான் விம்மிதப்பட்டு விழுங்கு வான் போலேயாய்ப் பின்பு குறித்துநோக்கி ஐயநீக்குதற்குரிய கருவி களாகிய அடிமுதலியவற்றைக்கண்டு ஐயநீங்கியும் நுகர்தற்குரிய மாதரைத் திருவென்றே கருதினானென்க. அவை நிலந்தீண்டியும், ஆடைமாசேறியும், மாலைவாடியும், கண்ணிமைத்தும் ஐயம்நீக்கும், விம்மிதம்-வியப்பு; அஃதாவது பிறர்கட்டோன்றிய புதுமையாற்பிறந்த மருட்கை யென்னு மெய்ப் பாடு. இது, தனக்கே பான்மையாயினமையின் தன்கண்மறைந்து நின்ற வேட்மை புலப் பட்டுமனத்தினையுங் கண்ணினையும் அடிதொட்டு முடிகாறுஞ் செலுத்தினமை கூறிற்று. இவன் இங்ஙனங் கருதி வீணையொழிந்த யர்தலாகிய கையாறுற்றிருந்தமை மேலே “தார்பொலி மார்பனோர்த்து” என்றதனானுணர்க. (247) 740. கோதையுந் தோடு மின்னக் குண்டலந் திருவில் வீச மாதரம் பாவை காணி மழைமினி னொசிந்து நிற்பக் காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை யேதமொன் றின்றிப் பூம்பட் டெந்திர வெழினி வீழ்த்தார். தோட்டினொளி கோதையிலே யெறிப்பநிற்றலிற் கோதை யுந் தோடுமின்னவென்றார். இ - ள். பாவை அவையிலேநிற்றலினாணி மின்ன வீச நில நோக்கிமின்போனுடங்கிநிற்க; தோழியர் அவட்கு நாணத்தால் வரும் இறந்துபாடின்றாகச்சூழவீழ்வதொருத்திரையை வீழ்த்தா ரென்க. கண்ணினானை - உருபுமயக்கம். (248) 741. வெள்ளிமலை வேற்க ணாளச் சீவகன் வீணா வென்றான் ஒள்ளிய னென்று மாந்த ருவார்க்கடன் மெலிய வார்ப்பக் கள்ளராற் புலியை வேறு காணிய காவன் மன்னன் உள்ளகம் புழுங்கி மாதோ வுரைத்தனன் மன்னர்க் கெல்லாம் இ - ள். சீவகன் தந்தையை யாழும்பாட்டும்வென்றான் நல்லனென்றுமாந்தரார்ப்ப அதுபொறாதே கட்டியங்காரன் மனம்புழுங்கி அரசரைக் கொண்டு சீவகனைப்போர் காண வேண்டி அரசர்க்கெல்லாஞ் சில தீமொழிகளைக் கூறினானென்க. அது மேற்கூறுகின்றார். ஓள்ளியன் - திசைச்சொல். (249) 742. வடதிசைக் குன்ற மன்ன வான்குல மாக செய்தீர் விடுகதிர்ப் பரிதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர் வடுவுரை யென்று மாயும் வாளம ரஞ்சி னீரேன் முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமி னென்றான். இ - ள். வணிகன்மகளை யரசன்கோடலன்றி அரசன் மகளை வணிகனுக்குநீங்கள் கொடுக்கின்றமையான், மேருப்போல் நிலை குலையாத நுங்குலத்திற்கெல்லாம் வடுவுண்டாக்கிக் கொண்டீர்; இதுவுமன்றி இவன்முன்னர் நுமதொளியுங் குறைந்தீர்; இவ்வடு வுரை ஒருகாலத்தும் மாயாது. இதனை மாய்விக்கும்வாட்போரை யஞ்சினீ ராயின், அளிக்கத்தக்கீர், அரசைவிட்டுப்போய் முனிகளாய்க் காட்டிலே சென்மினென்றா னென்க. கலுழவேகனும் அரசனாதலான் இவரைநோக்கி நுங்குல மென்றான். (250) 743. முல்லைப்பூம் பந்து தன்னை மும்மதக் களிற்று வேலிக் கொல்லைப்பூங் குன்றஞ் செய்தீர் குங்குமக் குழங்கன் மாலை மல்லுப்பூத் தகன்ற மார்பீர் புகழெனும் போர்வை போர்த்துச் செல்வப்பூ மகளு நாளை யவனுழைச் செல்லு மென்றான். இ - ள். அதுவேயன்றிப் பின்னும் மார்பினையுடையீர், கையாற் பிசைந்துபோகடுவதொரு முல்லைப்பந்தைக் களிற்றை வேலியாக வுடைய கொல்லையிற் குன்றாக்கினீர், இனி நும்மு டைய நிலமகளும் புகழாகிய போர்வையைப்போர்த்து நாளை அவனிடத்தே செல்லு மென்றானென்க. நீர் போரிற்கஞ்சிக் கலுழவேகன் மகளைக்கொடுக்கின்ற மையின். யானினைத்ததளவாய் என் கீழ்வாழ்கின்றவனை எனக்கு நிலை குலைத்த லரிதாக்கினீரென்றா னென்க. (251) 744. திருமக ளிவனைச் சேர்ந்தான் றெண்டிரை யாடை வேவி யிருநில மகட்குஞ் செம்பொ னேமிக்கு மிறைவ னாகுஞ் செருநிலத் திவனை வென்றீர் திருவினுக் குரியி ரென்றான் கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங் கார னன்றே. இ - ள். கொடியமனத்தினையும் நஞ்சாகிய கடுஞ்சொல் வினையு முடைய கட்டியங்காரன், இவனிலக்கணமிருந்தபடியாற் றிருமகளாகியவிவளைச் சேர்ந்தவனொருவன் தெண்டிரை வேலியை ஆடையாகவுடைய நிலமகட்குஞ்சக்கரவாளத்திற்கும் இறைவனா மாதலாற் போரிடத்து இவனைவென்று இவளைப் பெற்றீர், இப்பெருஞ் செல்வத்தை நுகர்தற்குரியீராவீரென்றா னென்க. (252) 745. அனிச்சப்பூங் கோதை சூட்டி னம்மனை யோவென் றஞ்சிப் பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை யொருத்திநாம் பலரென் றெண்ணித் துனித்துநீர் துளங்கல் வேண்டா தூமணிச் சிவிறி நீர்தூய்த் தனிக்கய்த் துழக்கி வென்றீர் தையலைச் சார்மி னென்றான் இ - ள். இவனைவென்றாலும்பாவையொருத்தி நாம் பலராத வால் இவளைப்பெறுதற்குப் பின்னும் நம்மிற் போர் செய்ய வேண்டுமென்றுகருதி வெறுத்து மனந்துளங்கல் வேண்டா, நும துயிர் போகாதபடிகயத்திலே நீரைத்தூவித் தனித்தனியே பொருது வென்றவர்கள் அவனைச் சேரக்கடவீரென்றானென்க. துணியலாகாமையிற் பன்மையாற்கூறினான். அம்மனை யோ - அம்மையோ. (253) 746. வெந்திற லாளன் கூற வேகமோ டுரறி மன்னர் பந்தணி விரலி னாடன் படாமுலைப் போகம் வேண்டிக் கந்தெனத் திரண்ட திண்டோட் கந்துகன் சிறுவன் காயு மைந்தலை யரவின் சீற்றத் தாரழல் குளிக்க லுற்றார். இ - ள். அங்ஙனங் கட்டியங்காரன்கூற, அதுகேட்டு மன்னர் தத்தையதுமுலைப் போகத்தைவிரும்பிக் கோபத்தோடே முழங்கிக் கந்துகன்பிள்ளையாகிய ஐந்தலைநாகத்தினது கோபத்தினை யுடையநஞ்சிலே அழுந்துதலுற்றாரென்க. தானும் நந்தட்டனுமொருதலையும், பதுமுகனொழிந்த தோழர் மூவரும் மூன்று தலையும், நபுலனும் விபுலனு மொரு தலையுமாகப் படைவகுத்தொழுதலின், ஐந்தலையாவென்றார். அது “சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க..”(சீவக . 766) என்பதனா னுணர்க. (254) 747. பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவைத் தானை கண்ணிய துணர்ந்து கல்லாக் கட்டியங் கார னெஞ்சி னெண்ணிய தெண்ணி மன்ன ரிகன்மலைத் தெழுந்த போழ்திற் றண்ணிய சிறிய வெய்ய தழற்சொலாற் சாற்று கின்றான். இ - ள். பண்ணிலே பயின்ற யானைமேலானாகிய பது மூகன் அரசர்தானை போர்குறித்தமையுமறிந்துகட்டியங்காரன் கள்ளராற் புலியை வேறுகாண எண்ணியதனையுமெண்ணி, அரசர், இகலிலே மாறு பட்டெழுந்தவளவிலே தண்ணிய சிறிய வெய்யவாகிய சொற்களாலும் தழல்போலுஞ் சொல்லாலுஞ் சாற்றா நின்றானென்க. அவை சாம பேத தான தண்டம், பேதம்-மென்மை யானும் வன்மையானுமனத்தினைப்பேதித்தல், அது பொய்யு மெய்யுங் கூறிப் பேதித்தலிற் சிறியவென்றார். தானம் பகைவர் மன மகிழக்கொடுத்தல்; அஃதுஅவர்விரும்பப்படுதலின் வெய்யவென விருப்பத்தாற்கூறினார்; “நின்வெய்யனாயின்”(கலித்.(107) என்றாற் போல, தண்டம்-பின்பு அவரா காமலழித்தேவிடுதல்; அது தழல்போலி ருத்தலிற் றழலென்றார் (255) 748. இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் வேறு மென்னி னிசைவதொன் றன்று கண்டீ ரிதனையா னிரந்து சொன்னேன் வசையுடைத் தரசர்க் கெல்லாம் வழிமுறை வந்த வாறே திசைமுகம் படர்க வல்லே தீத்தொட்டாற் கடுவ தன்றே. இ - ள். இவட்கிசையாற்றோற்றநாம், “இசைக்குவணங்கும் யானையால் வெல்லுதுமென்றுகருதிற் பொருந்துவ தொன்றன்று; அதுவும் வசையுடைத்துக்கண்டீர்; அதுவேயுமன்றித் தீண்டினாற் சுடு வதன்றே தீயென்பது; இப்பிறர்மனைநயக்கின்ற தீவினையாகிய தீ நீனைப்பினுஞ்சுடுவதொன்றுகண்டீர்; ஆதலால் இங்ஙனம் பழியும் பாவமுமாய் நீரேயறிதற்குரிய இக்காரியத்தினை நுமக்கு மாறாகிய யான் இரந்துகொண்டு நுங்கட்கெல்லாங் கூறினேன்; இனி அடைவே வந்தவழியே திக்கிடங்களிலே கடுகப் போவீராக வென்றானென்க விலங்கினதறிவும் நுமக்கின்றென்றான், யானை நாதத்திற் றோற்றுதலின், அதற்கு வணங்குதலியல்பு. (256) 749. தோளினான் மிடைந்து புல்லுந் தொண்டைவா யமிர்தம் வேட்டோர் வாளினான் மலைந்து கொள்ளின் வாழ்கநுங் கலையு மாதோ கோளுலாஞ் சிங்க மன்னான் கொடியினை யெய்தப் பெற்றீர் தாளினா னொய்யீ ராகித் தரணிதா விடுமி னென்றான். இ - ள். இன்பத்தைவேட்டோர் தோளாற் புல்லிப்பெறு கின்ற வமிர்தத்தை நீர் வாளாற்பொருது வலிதிற்கொள்ளின் நுங்கலை நூறும் புகுவதாக; அதுவுமன்றிச் சிங்கமன்னான் ஒருமகளைப் புணர நுமதுநல் வினையாற் றாணியைப் புணரப் பெற்றுநின்றீர். இனி முடியாத முயற்சியான் நொய்யீராகி அதனாற்பிறக்கின்ற வருத்தத்தைக் கைவிடு வீராகவென்றானென்க. தா-ஈண்டுவருத்தம். இவை இரண்டுகவியுஞ்சாமம். வலிந்து கொள்கின்ற இராக்கதம் * “முன்னைய மூன்றுங்கைக்கினைக் குறிப்பே” என்பதனான் ஒருதலைக்காமமாகிய கைக்கிளையாய் அது புணர்ச்சிச் குச்சிறப்பின்மை யுணந்தி லீராதலின், நீர்கற்ற இயலுங் கெடுக வென்றான் (257) 750 நாறுமும் மதத்தி னாலே நாகத்தை யிரிக்கு நாக மாறிய கினத்த தன்றி யதிங்கத்தின் கவளங் கொண்டால் வேறுநீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்க லாகா தூறித்தே னொழுகுங் கோதை நம்பிக்கு மன்ன ளென்றான். இ - ள். தன்மதத்தாலே ஒழிந்தநாகங்களைக் கெடுப்ப தொரு நாகம் மிக்க சினத்தையுடைத்தாய் அதிமதுரத்தின் குளகைக் கை யிலே கொண்டால் அக்குளகை யாவர்க்கும் விடுவித்தலரிது; கோதை நம்பிக்கும் அக்குளகின் றன்மையாள்; இதனைத் தனித்து ஆராய்ந்து காணீரென்றானென்க. குளகுபோன் மதத்தைவிளைப்பவள் இவளுமாதலான், விடுத்தலரி தென்றான். (258) 751. இளவள நாகு புல்லி யினத்திடை யேறு நின்றா லுளவளங் கருதி யூக்க லுழப்பெரு துடைய தாமே தளவள முகைகொள் பல்லாட் சீவகன் றழுவி நின்றாற் கொளவுளைந் தெழுவ தல்லாற் கூடுத னுங்கட் காமோ. இ - ள். அழகையுடைய இளநாகைப்புல்லித் தன்னினத்திலே ஏறுநின்றால் அதற்குள்ள அழகைத் தாநுகரக்கருதி முயறலை உழுமெருது உடையதாமோ, அது போலத் தத்தையைச் சீவகன் நழுவி நின்றாற் கோடற்கு வருந்திப்போவதல்லது நுங்கட்குக் கூடுதல் கூடுமோவென்றானென்க. ஏறுபோல் எருநுநுகரா மையின்,அதனோடசரை யுவ மித்தான். (259) 752. எழுந்துவிண் படருஞ் சிங்கம் பெட்டைமே லிவர்ந்து நின்றால் மழுங்கமேற் சென்று பாய்தன் மறப்புலி தனக்கு மாமோ கொழுங்கயற் கண்ணி னாளைச் சீவக குமரன் சூழ்ந்தா லழுங்கச்சென் றணைதல் பேய்கா ளநங்கற்கு மாவ துண்டோ. இ - ள். பேய்காள், சிங்கம் பெட்டைமேலே மேவிநின்றால் மேற் சென்று அதுகெடும்படிபாய்தல் புலிக்குங்கூடாதாகலின் நீர்கருது கின்றதும் மத்தன்மைதது; இனி அதுவுமன்றித் தத்தையைச் சீவ கன்றழுவிநின்றாற் காமனுக்கும் அவ்விடத்தாவ தொருகாரிய மில்லை யென்றானென்க. இதனால் உழப்பெருதென்றதற்கு வெறுத்தமைக்கண்டு உயர்த்துக் கூறியும்விடுவித்தலரிதென்றான். *”ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை-பெட்டை யென்னும் பெயர்க்கொடைக்குரிய.” (தொல். மரபு.52) என்பதனுள், ‘கொடை’என்றதனாற் சிங்கத்துக்கும் பெட்டை கொண்டவாறு காண்க. தண்டித்துவிடுக்க வேண்டுதலிற்பேகாள் என்றான். (260) 753. மந்திரிப் புடைய நாகம் வாய்வழி கடாத்த தாகி யுத்தமப் பிடிக்க ணின்றா லுடற்றுதல் களபக்காமே பத்தினிப் பாவை நம்பி சீவகன் பால ளானா லத்திறங் கருதி யூக்க லரசிர்கா ணுங்கட் காமோ. இ - ள். அரசிர்காள், செற்றத்தையுடைய நாகம் மதத்ததாய்ப் பிடிக்கணின்றால் அதனைக் கெடுத்தல் யானைக்கன்றிற்குக் கூடுமோ. அதுபோலப்பாவை சீவகன் பாலளானால் அவளைப் பெறுந்திறத்தை நீர்கருதிமுயறல் நுமக்குக்கூடுமோ வென்றா னென்க. அரசராதலின் இவளைப்பெறுதற்குரியீராயினுங் கலை களானும் ஆண்மைமுதலியவற்றானுங் குறைபாடுடைமையிற் பெறவரி தென்றான். (261) 754. தூமத்தாற் கெழீஇய கோதை தோட்டுணை பிரித்தல் விண்மேற் றாமத்தாற் கெழீஇய மார்ப னிந்திரன் றனக்கு மாகா தேமுற்றீ ரின்னுங் கேண்மி னிரதியைப் புணர்து மென்று காமத்தாற் கெழுமி னார்க்குக் காமனிற் பிரிக்க லாமே. இ - ள். மயக்கமுற்றீர், கோதையது தோட்டுணையாகிய சீவகனைப்பிரித்தல் இந்திரனுக்குங்கூடாது; இங்ஙனம் இவனைப் பிரித்தலேயன்றி இன்னமுங்கேண்மின், இரதியைக் கூடுவே மென்று வேட்கையாற்பொருந்தினார்க்கு அவனைக் காமனிடத்து நின்றும் பிரித்தல்கூடுமோவென்றானென்க. தெய்வத்தாலும் பிரித்தலரிதென்றுகூறிப் பின் இவடன் னைப் பிரித்தலுமரிதென்றான். இவையைந்து கவியும் பேதம். (262) 755. எம்மைநீர் வெல்லப் பெற்றீர் வென்றபி னிருந்த வேந்த னும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால் வெம்மைசெய் துலக மெல்லா மாண்டிட வினைக்கு நீதி யம்மமற் றதனை யோரீ ரவன்கருத் தன்ன தென்றான். இ - ள். நீர் எம்மை ஒருவாற்றான் வெல்லப் பெற்றீராகப் பாரும்; அங்ஙனம் வென்றபின்பு கட்டியங்காரன் நும்மையும் பகைப்பித்து நும்மிலே நீர் பொருதுபட்டால் நும்மூலகெல்லாந் தானாளுதற் கோர் முறைமை யுண்டாக்காநிற்கும்; அதனை என்னை யொழிய வேறே ஆராய்ந்துபாரீர். இவன்கருத்து முன்பு மத்தன்மைத்து; காணுங் களென்றா னென்க. அம்ம - அசை. அரசருலகினைக் கட்டியங்காரன் கொள்ளாமல் அவரேபெறும்படி கூறினமையாற்இக்கவிதானம். (263) 756. சொற்றிற லன்றி மன்னீர் தொக்குநீர் காண்மி னெங்கள் விற்றிற லென்று வில்வாய் வெங்கணை தொடுத்து வாங்கிக் கற்றிரள் கழிந்து மண்ணுட் கரந்தது குளிப்ப வெய்திட் டிற்றெமர் கல்வி யென்றா னிடியுரு மேற்றொ டொப்பான். இ - ள். உருமேற்றோடொப்பான், மன்னீர், எங்கள் சொல் வன்மையன்றி வில்வன்மையுந்திரண்டு நீர் காண்பீராக வென்றுகூறி வில்வாயிலே கணையைத்தொடுத்து நிரம்ப வாங்கு தலாலே தன்னுள்ளே கரந்த அவ்வம்பு கற்றிரளைக்கழிந்து மண்ணுட்குளிப்ப வெய்து எமர்கள்கல்வியெல்லாம் இத்தன்மைத் தென்றானென்க. (264) 757. ஆழியங் கழனி தன்னு ளம்பொடு கணையம் வித்திச் சூழ்குடர்ப் பிணங்கண் மல்க விளைத்தபின் றெழுதிப் பல்பேய்க் கூழ்படு குருதி நெய்யி னிறைச்சிச்சோ றூட்டி வென்றி வீழ்தர வேட்டு நின்றா ரெய்துப வெகுளல் லேண்டா. இ - ள். சக்கரயூகமாக வகுத்த படையாகிய விளைநிலத்தே அம்பையுந் தண்டாயுத்தையும் விதையாகவிதைத்துப் பிண மாகிய நெல்லை விளைவித்தபின்பு குருதியாகியநெய்யுடனே இறைச்சி யாகிய ஊழ்படுசோற்றைப் பல்பேய்க்கூட்டி விசயமகள் விரும்பும்படி களம்வேட்டுநின்றவர்கள் இவனை பெறுகின் றார்கள்; ஒருபயனின்றி வெகுளல்வேண்டாவென்றா னென்க. இவையிரண்டுந் தண்டம். (265) 758. போர்ப்பறை முழங்கி யெங்கும் பொருவளி புடைக்கப் பட்ட கார்க்கடல் போன்று சேனை கலக்கமோ டுரறி யார்ப்பத் தார்ப்பொலிமார்ப னோர்த்து தன்கையில் வீணை நீக்கி வார்ப்பொலி முலையி னாட்கு வாய்திறந் திதனைச் சொன்னான். இ - ள். காற்றடித்த கடல்போல் எங்கும் பறைமுழங்கிச் சேனையார்ப்பஅதனை மார்பனோர்ந்து நீக்கித் தந்தைக்கு இதனை வாய்விட்டுக்கூறினானென்க. கலக்கம் - முன்னின்ற நிலைகுலைதல். உரறி-முழங்கி. கையாறு ற்றிருந்தவன் ஆரவாரமுண்டென்று செவிகொடுத்து ணர்ந்தான். வீரத்தாற் காமங்கெட்டதென்று இரண்டன் சிறப்புங் கூறினார். (266) வேறு. 759. தேய்ந்து நுண்ணிடை நைந்துகச் செப்பினைக் காய்ந்த வெம்முலை யாய்நின கண்கள்போ லாய்ந்த வம்பினுக் காரிரை யாகிய வேந்தர் வேண்டிநின் றார்விம்ம னீயென்றான். இ-ள். இடை குறைந்துகெடும்படி செப்பினைக் கெடுத்த முலை யாய், நின்னுடைய கண்கள்போற் றப்பாதென்றாய்ந்த அம்பிற்கு இரையாவதற்கு வேந்தர் விரும்பிநின்றார்; நீ வருந்தாதொழிக வென்றானென்க. (267) 760. அண்ணல் கூறலு மம்மனை யோவெனாத் துண்ணெ னெஞ்சின ளாய்த்துடித் தாயிழை கண்ணி னீர்முலை பாயக் கலங்கினாள் வண்ண மாக்கவின் சொல்லொடு மாய்ந்ததே. இ - ள். தலைவன் அதனைக்கூறினானாக, ஆயிழை அம்மை யோவென்னாத் துணுக்கென்றநெஞ்சினளாய் மெய்ந்நடுங்கி அழுது கலங்கினாள்; அப்பொழுது அவளது கவின், அவன் கூறியகூற்றுடனே பொன்றக்கெட்டதென்க. (268) 761. மேவி கம்பிக்கு வெம்பகை யாக்கிய பாவி யேனுயிர் பாழுடல் பற்றுவிட் டாவி யோநட வாயென் றழுதுதன் காவி வாட்கண் கலங்க வதுக்கினாள். இ-ள். உறவாயிருந்து நம்பிக்குக் கடியபகையை விளைவித்த பாவியேனது உயிரே, நீ பாழுடலைக்கைவிட்டுப் போகின்றிலை; இங்ஙனம்போகாதநீயும் ஓராவியோவென்றழுது தன்கண்கலங்க அடித்துக்கொண்டாளென்க. பாவியேனது பாழுடலும் பாடம். (269) 762. பாழி நம்படை மேலதிப் பாரெலா நூழி லாட்டி நுடக்கிக் குடித்திடும் வாழி நங்கைகண் டாயென்று வாட்கணீர் தோழி தூத்துகிற் றேகையி னீக்கினான். இ-ள். தோழிநங்காய், வலியையுடைய நம்படை மேலே நின்றது;இஃது இவர்களையேயன்றி இப்பாரிலுள்ளோரெல் லோரையுங் கொன்றுகுவித்து ஒன்றாகக் கரைத்துக் குடித்து விடுங்காணென்று கூறிக் கண்ணீரை முன்றானையாலே துடைத்தாளென்க. (270) 763. எங்கள் பெண்மையு மீர்மலர்த் தார்மன்னர் தங்க ளாண்மையுஞ் சால்வது காண்டுமென் றிங்கு வார்முர லுங்கலை யேந்தல்கு னங்கை வாட்படை நங்கையைச் சூழ்ந்ததே. தங்குகின்றநீண்ட கலை. இ - ள். நங்கைவாட்படை எங்கள் பெண்டன்மையிலும் மன்னரா ண்டன்மையிலும் அமைவதொன்று காணக்கடவே மென்றுகூறி நங்கையைச் சூழ்ந்ததென்க. (271) வேறு. 764. கூன்களுங் குறளு மஞ்சிக் குடர்வெந்து கொழும்பொற் பேழை தான்கொளப் பாய வோடிச் சாந்துக்கோய் புகிய செல்வ தேன்கொள்பூ மாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப வான்பளிங் குருவத் தூணே மறைபவு மாய வன்றே. இ - ள். படையெழுச்சிகண்டு கூன்களுங் குறளுமஞ்சி வெந்து பொற்பெட்டிதான் றங்களை உள்ளடக்கிக் கொள்வதாகக் கருதி அதனுள்ளே பாய்கைக்குஞ் சாந்திருந்த பரணிகளிலே புகுகைக்கும் ஓடிச்செல்வனவும், சூடித் திரண்டுநிற்பனவும், உருவத்தை யுடைய பளிக்குத்தூணிலே மறைவனவுமாயினவென்க. (272) 765. இங்கித நிலைமை நோக்கி முறுவலித் தெரிபொன் மார்பன் நங்கையைக் காக்கும் வண்ண நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச் சிங்கந்தான் கடிய தாங்கோர் செழுஞ்சிங்க முழக்கிற் சீறிப் பொங்கிமேற் செல்வ தேபோற் பொலங்கழ னரலச் சென்றான். இங்கிதம் - குறிப்பின்றன்மை; அவைபடையெழுச்சியும் அதற்கிவை யஞ்சினமையும். இங்கிதனிலைமையும் பாடம். செழுமை - கொழுப்பு. இ - ள். பொன்மார்பன் நிலைமைநோக்கி முறுவலித்து நங்கையைப் பதுமுகன்காப்பானாகத் தான்கருதி அதனை யவளுக்கு நகாநின்றுகூறிக் கடியதோர்சிங்கந்தான் அவ்விடத்திற் சிங்கங்களின் முழக்காலே சீறிக் கோபித்து அவற்றின் மேற் செல்வதுபோலே கழல்நரலப் பதுமுகனிற்கின்றவிடத்தே சென்றானென்க. (273) 766. பதுமுக குமரன் மற்றிப் பாவையைக் காவ லோம்பி மதுமுக மாலை நெற்றி மதகளி றுந்தி நிற்ப நுதிமுக வாளும் வில்லு நுண்ணிலை வேலு மேந்திச் சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க வென்றான். இ - ள். பதுமுகன் வேறாக இப்பாவையைக் காத்தலைப் பேணிக் களிற்றைமண்டபத்தின் வாயிலளவுஞ்செலுத்தி அதிலே நிற்க; நம்முடைய சுற்றத்தார் வாள் முதலியவற்றையேந்தி நஞ்சே னையை நான்குகையாக அவர்வகுத்தவிடத்தே நிறுத்துக வென்றா னென்க. பதுமுகனையொழிந்த தோழர்மூவரு மூன்றுகையும், நபுலவிபுலரொருகையுமாக நான்கை. (274) 767. வட்டுடை மருங்குல் சேர்த்தி வாளிரு புடையும் வீக்கித் தட்டுடை பொலிந்த திண்டேர் தனஞ்சயன் போல வேறிக் கட்டளைப் புரவி சூழ்ந்து கால்புடை காப்ப வேலி பட்டுயிர் பருகுங் கூற்றங் கோளெழுத் தனைய தொத்தான். இ - ள். அவரையங்ஙனமேவித் தான் சேர்த்தி வீக்கித் தேரை யேறிப் பண்ணினையுடைய புரவியைப் பக்கத்தேசூழ்ந்து கால் காப்பச் சிலரையேவிக் கூற்றங்கொல்லுகைக்கெழுந்த தன்மையை யொத் தானென்க. (275) வாள் - உடைவாள். 768. புள்ளிரைப் பன்ன பொற்றார்ப் புரவித்தே ரிரவி போலா வுள்ளுருத் தெழுந்து பொங்கி யுடல்சினங் கடவ நோக்கி முள்ளெயி றிலங்க நக்கு முடிக்குழா மன்னர் கேட்பக் கள்ளவி ழலங்கன் மார்பன் கார்மழை முழக்கிற் சொன்னான். புள்ளிரைப்பன்ன - பறவையினொலியை யொத்த. இ - ள். அம்மார்பன் தேரிலே இரவிகோலேயிருந்து சினம் வெவ்விதாய்மனத்தே தோற்றிமிக்குஉடம்பினைச் செலுத்தா நிற்க மன்னரைநோக்கி மிகநக்கு அவர் கேட்ப மழைமுழக்கம் போலே கூறினானென்க. (276) 769. முருகுலா முல்லை மாலை மூப்பிலா முலையி னார்நும்மருகுலாம் புலவி நோக்கத் தமிர்தமின் றுகுப்ப கொல்லோ கருதலாம் படிய தன்றிக் கலதியம் பிவையுங் காய்ந்த பொருதுலாம் புகழை வேட்டிவ் வெஃகமும் புகைந்த தென்றான். இ - ள். போர்செய்தலானுண்டாம் புகழைவிரும்பி நினைக் கலாம்படியதன்றாகக் கேட்டினைச்செய்தலுடைய அம்பாகிய விலையுங் காய்ந்தன; இவ்வெஃகமும் புகைந்தன; ஆதலான் முலை யினார் நீர் யாழ்வாசிக்கப்போந்தீரென்பதனால் நும்மிடத்தே பிறந்த புலவிநோக்த்தாற் பின்பு தாம்பெறுகின்ற புணர்ச்சி யின்பத்தைப் பாழேயுகுப்பர்கொல்லோவென்றா னென்க. அமிர்தமென்றுகுப்பவென்றும் பாடம். (277) 770. வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தா லூணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத் தேணிகந் திலேசு நோக்கி யிருமுதல் கெடாமை கொள்வர் சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார். இ - ள். ஊணைக்கைவிட்டுத் திரட்டப்பட்ட முதலோடே ஊதியத் திற்கு மொருகேடுவந்தால் அவ்விரண்டினும் ஊதிய மாகிய நடப்பின் மேலே நெஞ்சத்துநடக்கின்ற திண்மையைக் கை விட்டு இரண்டையுமிழப்பதின் முதல்பெறுகையும் ஊதிய மென்றுபார்த்துப் பெரியமுதல்கெடாதபடி அதனைக் கொள்வர் நின்குலத்தோர்; நீயும் அது செய்யாது போர்குறித்தொழுதலின் நினக்குரிய வாணிகமொன்று மறியாய்;நீயும் அதுசெய்யாது போர் குறித்தெழுதலின் நினக்குரிய வாணிகமொன்றுமறியாய்; இனிநின் செறிதொடியாகியவூதியத்தைக் கைவிட்டு நின்னுடம்பாகிய முதலைக்கொண்டு பிழைக்கப்போ லென்றா ரென்க. தேற்றாய் - “தேற்றாய்பெரும பொய்யே”(புறநா.59) என்றது போனின்றது. இலேசு - சிறுமையாகிய ஊதியம். (278) 771. தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்தவ ருடைமை கோட லெம்முடை யவர்கள் வாழ்க்கை யெமக்குமஃ தொக்கு மன்றே யம்முடி யரசிர்க் கெல்லா மென்கைர யிம்பு தந்து நும்முடைத் திருவுந் தேசு நோக்குமின் கொள்வ லென்றான். இ - ள். அதுகேட்டுத் தம்முடைய பண்டத்தைப் பிறர்க்குக் கொடுத்து அவர்களுடைமைகளை வாங்கிக்கோடல் எங்குலத் தோர் வாழ்வாதலின் அஃதெமக்குமொக்குமல்லாவோ, இனி யான் நுங்கட் கெல்லாம் என்கையிலம்பைத்தந்து நும்முடைய வீரஸ்ரீ யையும் புகழையும் இப்பொழுதே கொள்வேன்; வல்லீராயின் அவற்றைக் காப்பீராகவென்றாbனன்க. (279) 772. மட்டுலாந் தாரி னாய்நின் வனப்பினோ டிளமை கல்வி கெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மகளிர் கோங்க மொட்டுலா முலைகள் பாய்ந்த வகலத்துச் சரங்கண் மூழ்கப் பட்டுலாய்க் கிடக்க லுற்றா யென்சொலாய் யாவி யென்றார். இ - ள். தாரினாய், சிலம்புமுதலியவற்றையுடைய மகளிரது கோங்கரும்புதோற்றுப்போமுலைகள் உலாய்ப்பாய்ந்த அகலத்தே சரங்களுலாய்ப்பாய்கையினாலே பட்டு நின்வனப்பு முதலியன கெட்டுக் கீழ்க்கிடக்கலுற்ற பாவி, நீ எதுசொல்லா யென்றா ரென்க. இஃது அரசர்கூற்று (280) 773. எரிசுடர்ப் பருதி முன்ன ரிருளென வுடைந்து நீங்கப் பொருபடை மன்னர் நுங்கள் புறக்கொடை கண்டு மற்றிம் முருகுடைக் கழலி னாடன்முகிழ்முலை கலப்ப லன்றே லிருசுடர் வழங்கும் வையத் தென்பெயர் கெடுக வென்றான். இ - ள். பருதிமுன்னர் இருள்கெடுமாறுபோல நீர் எனது தோற்றங் கண்டுபோகநுமதுபுறங்கண்டு பின்பு குழலினாளை முலையைக் கலப்பேன்; அதுசெய்திலேனாயின் என்புகழ் ஞாயிறுந் திங்களும் வழங்குகின்ற உலகெங்குநடவாது கெடுவதாக வென்றா னென்க. இது சீவகன்வஞ்சினம். இது முன் இளமை முதலியவற்றை அவ்வரசர்கொன்று கூறலின், அக்கொலைபொருளாகப்பிறந்த வெகுளி யென்னுமெய்ப்பாடு. இது “நகுதக்கனரே” (72)என்னும் புறப் பாட்டினுட் கண்டுகொள்க. (281) வேறு. 774. ஆண்மர வாணிலத் தப்பு வேல்செய்முட் காண்வரு காட்டினக் களிற்று நீள்வரை நீணில வேந்தெனும் வேழப் பேரினம் பூண்முலைப் பிடிக்கவாய்ப் போர்செய் குற்றவே. இ - ள். ஆளாகியமரத்தையுடைய வாளாகிய நிலத்தே அம்பு வேலாற் செய்த விடுமுள்ளையுடைய எல்லாருங் காண்டலுடைய காட்டில் இனக்களிறாகிய வரை மேலே வேந்தராகிய வேழத் திரள் தத்தையென்கின்றபிடிக்கவாவிப் போர் செய்தலுற்றன வென்க. (282) பூண்முலை - வெளிப்படை. 775. தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர் தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மத மாழ்கடற் சுற்றமா வழன்று சீவக வேழுயர் போதக மினத்தொ டேற்றதே. இ - ள். இசையேழினாலுமுயர்ந்த சீவகனாகியயானை,கை நந்தட்டனாக மருப்பு நபுலவிபுலராகத் தோழர்நால்வருந் தாளாக மும்மதந் தேருங் குதிரையுங் காலாளுமாக அரசராகிய ஆனைத் திரளுடனே போர்செய்யத்தொடங்கிற்றென்க. தன்னையானையாக உருவகங்கூறலிற் கடற்சுற்றும் அதனை யொழிந்தமூன்றுபடையுமாம். யானைக்கு உத்தம இலக்கணம் எழுமுழவுயரம். இவன் வீணைவென்ற மையின், ஏழுயர் போதக மென்றார் . (283) 776. குடையுடை வேந்தெனுங் குழாங்கொ ணாகமுங் கொடியெனும் பிடியுடைக் குமர வேழமும் வெடிபடு போர்த்தொழில் காண விஞ்சைய ரிடியுடை யினமழை நெற்றி யேறினார். இ - ன் வேந்தராகியயானைகளுந் தத்தைதயாகிய பிடியை யுடைய சீவககுமரனாகிய யானையுந் தம்மிற் பகைத்தலுண்டா கிய போர்த்தொழிலைக்காண்டற்கு விஞ்சையர் மழை நெற்றிலேயே றினாரென்க. வெடி - முழக்கமுமாம். (284) 777. கரைபொரு கடலொடு கார்க ணுற்றென முரசொடு வரிவளை முழங்கி யார்த்தன வரசரு மமர்மலைந் தரணம் வீசினார் குரைகடற் றானைபோர்க் கோலஞ் செய்தவே. இ - ள். கடலொலியோடே வான்முழக்கஞ் சேர்ந்த தென்னும் படி முரசும்வளையும் முழங்கி ஆர்த்தன; அப்பொழுது அரசரும் போரை யேறிட்டுக்கொண்டு கவசத்தை யணிந்தார்; அவர் தானையும் போர்க்கோலங்கொண்டனவென்க. (285) 778. தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுளிட் டேய்கணைப் படுமழை சிதறி யெங்கணு மொய்யமர் மலைந்தனர் முருகு விம்முதார்ச் செய்கழற் சீவகன் வாழ்க வென்னவே. இ - ள். சீவகன்றோழருஞ் சீவகன்வாழ்கவென்று கூறாநிற்கத் தெய்வத்தை வணங்கிப் பாடுகுறித்துப் பொற்றகடு தம்வாயுளிட்டு எவ்விடமும் பெய்கின்றமழை போலக் கணையைச் சிதறுவதாகப் போரை மேற்கொண்டாரென்க. சிதறி-சிதறவென்க. (286) 779. கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாரிதூ யிலங்கின வாட்குழா மிவுளி யேற்றன விலங்கின தேர்த்தொகை வேழங் காய்ந்தன சிலம்பின வியமரந் தெழித்த சங்கமே. இ - ள். அரசர்பெரும்படை கணையைப் பெய்மாரிபோலத் தூவியிதனோடு கலந்தது; அப்பொழுது இரண்டுபடையில் வாட் குழாமும் இலங்கின; குதிரையும் ஒன்றையொன்றேற்றன; தேரும் ஒன்றையொன்றுதடுத்தன; வேழமும் ஒன்றை யொன்று காய்ந்தன ,இயமரமும் இயம்பின; சங்கும் ஒலித்தனவென்க. இதனால் இரண்டுபடையுங்கலந்தபடி கூறினார். (287) 780. சுற்றணி கொடுஞ்சிலை மேகந் தூவிய முற்றணி பிறையெயிற் றம்பு மூழ்கலி னற்றுவீழ் குழைமுக மலர்ந்த தாமரை மற்றவை சொரிவதோர் மாரி யொத்தவே. இ - ள். சிலையாகியமேகந்தூவிய நிரம்பவலித்தல் பொருந் தின அம்புமூழ்குதலால் அற்றுவீழ்கின்ற முகமாகியவை மலர்ந்த தாமரைப்பூவைச் சொரிவதோர்மாரியையொத்தனவென்க. (288) மற்று - அசை 781. மறப்படை பசித்தன வயிறின் றார்கெனக் குறைத்தனர் குஞ்சரங் கூந்தன் மாத்துணித் திறக்கின ரோடுதேர் மைந்த ரின்னுயிர் துறக்கம்போய்ப் புகுகெனத் துணிய நூறினார். இ - ள். மறப்படை முன்பு வயிறுபசித்தன, அவை இன்று வயிறு நிறைகவென்றுகூறிக் குஞ்சரத்தைக்குறைத்தார்; மாவைத் துணிந்துத் தேரையிறக்கினார்; இன்னுயிர்போய்த்துறக்கம் புகுகெனத் துணிய வீசினாரென்க. (289) வேறு. 782. ஆற்றுவீர் வம்மி னெம்மோ டாண்மைமேம் படீஇய வென்பா ரேற்றவர் மார்பத் தல்லா விரும்புமேல் விடாது நிற்பார் கூற்றம்போற் கொடிய யானைக் கோடுழு தகன்ற மார்பங் கீற்றுப்பட் டழகி தாகக் கிடக்கெனக் கொடுத்து நிற்பார். 783. கழித்துவா ளமலை யாடிக் காட்டுவார் கண்கள் செந்தீ விழித்துமேற் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார் தெழித்துத்தேர்க் கயிறு வாளா வரிந்திட்டுப் புரவி போக்கிப் பழிப்பில கொணர்ந்து பூட்டு பாகநீ யென்று நிற்பார். 784. ஐங்கதிக் கலினப் பாய்மாச் சிறிதுபோர் களையீ தென்பார் வெங்கதிர் வேலிற் கட்டி வேந்தெதிர் கொண்டு நிற்பார் நங்கைகல் யாண நன்றே நமக்கென நக்கு நிற்பார் சிங்கமும் புவியும் போன்றார் சீவகன் றோழன் மாரே. 785. ஒருங்கவன் பிறந்த ஞான்றே பிறந்தவ ருதயத் துச்சி யிரும்பினாற் பின்னி ளியன்ன வெறுழ்வலி முழவுத் தோளார் விரும்புவார் வேழ வேற்போர் நூற்றுவர் நூறுக் கோடிக் கிருந்தனம் வருக வென்பா ரின்னண மாயினாரே. இவை நான்குமொருதொடர். 1. எம்முடனே நுமதாண்மை மேம்படுத்துதற்குப் போரிற் காற்றுவீர் வாருங்களென்பார்; எதிர்ந்தவர்மார்பிலல்லாது எதிரா தார்மார்பில் இரும்பினைக் கைவிடாது நிற்பார்; யானைக் கோடுழுது கீற்றுப்பட்டுக் கிடக்கவென்று மார்பை யானைகுத்தக் கொடுத்து நிற்பாரென்க. 2. உறையைக்கத்துவாட்கூத்தாடிக்காட்டுவார். செந்தீ விழித்து-நெருப்புப்புறப்படவிழித்து. யாகனைக் கோபித்துக் கயிற்றையறுத்துப் போக்கிப் பாகனே, நீ நல்லபுரவிகளைக் கொணர்ந்து பூட்டென்றுநிற்பார். 3. ஐங்கதி: “விக்கிதம் வற்கிதம்வெல்லு முபகண்ட - மத்திமஞ் சாரியோடைந்து. “கலினம் - கடிவாளம், பாய்மாப்போர் சிறிது இதனைக் களை. வேந்தரை இவனெனக்கு இவனெ னக்கென்று வேலா சுட்டிஎதிர்கொண்டுநிற்பார். நன்றென்றது, பூசல்பெற்றவுவகையால். 4. உதயத்துச்சியை யிரும்பினாற்கட்டினாலொத்ததோள். எறுழ் வலி-மிக்கவலி. வேழத்தோடே வேலாவே பொருதலை விரும்புவார். நூற்றுக்கோடிபடைக்குப் போர்செய்யவிருந்தேம். (இ.ள்)சீவகன்றோழன்மார், அவன் பிறந்த அன்றே கூடப்பிறந்தவர் தோளார், விரும்புவார், வருகவென்பார், அவர்கடாம் இப்போரில் இன்னணமாயினார்; அஃது எங்ஙனேயென்னில் என்பார், விடாதுநிற்பார், கொடுத்துநிற்பார், காட்டுவார். விலக்கிநிற்பார், பூட்டென்றுநிற்பார், களையென்பார், எதிர்கொண்டுநிற்பார், நக்குநிற்பாராய்ச் சிங்கத்தையும் புவியையு மொத்தாரென்க. இவை நான்குகையிலுநின்ற படைத்தலைவரல்லாத தோழர் பொருதபடி கூறின. (290-93) 786. கூட்டுற முறுக்கி விட்ட குயமகன் றிகிரி போல வாட்டிறற் றேவ தத்தன் கலினமா மாலை வெள்வே லீட்டம்போழ்ந் தியானை நெற்றி யிருங்குளம் பழுத்தி மன்னர் சூட்டொடு கண்ணி சூளா மணிசிந்தித் திரியு மன்றே. இக்கவிமுதல்நான்குகவியாற் படைத்தலைவராய்நின்ற தோழர்மூவரும் நபுலவிபுலரும் பொருதபடி கூறுகின்றார். கூட்டு - மட்டிரள். உற - அதுவந்து சேருதலாலே. மூறுக்கி விட்ட. திரிந்துவிட்ட “பசுமட் குரூஉத்திரள்” என்றார்பிறரும். இனி உசவுறவென்றுமாம்; அது கரியுமெண்ணெயும். சூட்டு - போர்ப்பூ. சூளாமணி - முடியின்மணி. இ - ள். தேவதத்தனது மா போழ்ந்து அழுத்திச் சிந்தித் திகிரி போற்றிரியுமென்க. (294) 787. பாய்ந்தது கலின மாவோ பறவையோ வென்ன வுட்கி வேந்தர்தம் வயிறு வேவ நபுலமா விபுல ரென்பார் காய்ந்துதம் புரவிக் காமர் குளம்பினாற் களிற்றி னோடை தேய்ந்துகச் சேர்த்தி மாலைத் திருமுடித் திலகங் கொண்டார் மா - முற்கூறியவாறேகொள்க. இ - ள். நபுலவிபுலரென்று கூறுகின்றவர்கள் தம்புரவியினது குளம்பாலே பட்டம்தேய்ந்துதுகும்படி களிற்றினுதலிலே மாவோ பறவையோ பாய்ந்ததென்ன அப்புரவியைச்சேர்த்தி, அவற்றின் மேலி விருந்தவேந்தர் உட்கி வயிறுவேம்படி அவர் முடியிற் சூட்டு மணிகளை வாங்கிக்கொண்டாரென்க. (295) 788. காயத்தின் குழம்பு தீட்டிக் காரிரும் பெரிய மேகந் தோயுமுள் ளிலவின் கூன்காய் சினைதொறு முதிர்வ வேபோன் மாயங்கொள் மறவர் மாலைப் பைந்தலை யுதிர்ந்த செங்கட் சேயனான் றிருவின் பேரான் செழுஞ்சிலைப் பகழி யாலே. இ - ள். இரும்பிலே பெருங்காயத்தினதுகுழம்பைப்பூசி அதனாலே இலவினை வெட்ட அதன்காய் உதிர்வனபோலே முருகனையொப்பான் ஸ்ரீதத்தன்வில்லிற்றோன்றிய பகழியாலே மறவருடைய செவ்விமாலைத்லைகளுதிர்ந்தன; இது மாயமோ வென்க. (296) 789. நீனிறப் பௌவ மேய்ந்து குன்முற்றி நீல மேகம் வானிற விகம்பி னின்ற மாரியின் மறைவ லாளன் போளிறப் புத்தி சேனன் பொன்னணி பகழி சிந்தி வேனிற மன்னர்சேனை கூற்றிற்கு விருந்து செய்தான் பொன்னிறம் - போனிறமெனவிகாரம். போர்நிறம் பாடமாயிற் போரொளியாம். நிறவேலையுடையமன்னர். இ - ள். பௌவத்தைமேய்ந்து சூன்முற்றுதலாலே நீலமேகம் விசும்பிலே மாறாதுநின்ற காலமழைபோலே அந்தணனா கியபுத்தி சேனன் பகழியைச்சிந்திச் சேனையைக் கூற்றிற்கு விருந் தாக்கினானென்க. (297) வேறு. 790. வீரவே லுடம்பெலாஞ் சூழ வெம்புலால் சோருஞ் செங் குருதியுண் மைந்தர் தோன்றுவா ரோருமே லொண்மணிச் சூட்டு வைக்கிய வாரமே யமைந்ததேர்க் குழிசி யாயினார். இ - ள். புலாலையுடைத்தாய்ச் சோருங்குருதி விட்டு சொரியாது உள்ளே நிற்கின்றமைந்தர் வேல் உடம்பெலாஞ்சூழத் தோன்றுவார், சூட்டு மேல்வைத்தற்குப் பல வாருந்தைத்து நிறைந்த தேர்க்குறடா யினாரென்க. (298) ஓரும் - அசை 791. பொன்னனாள் புணர்முலைப் போகம் வேண்டிய மன்னரோ டிளையவர் மறலி வாளம ரின்னண மித்தலை மயங்க வத்தலைக் கொன்னவில் வேலினா னிலைமை கூறுவாம். இ - ள். தத்தையது முலைப்போகத்தை விரும்பிய மன்ன ரோடே தோழர்மாறுபடுதலாலேவாட்போர் இப்படி இவ்விடத் தேமயங்காநிற்க, ஈண்டுவாராது ஆண்டு நின்றவேலினான் றன்மையினிக்கூறுவாமென்க. (299) 792. தம்பியைச் சீவக னோக்கிச் சாமரை வெம்பரி மான்செவி வீர மந்திர மிம்பர்நம் மிடர்கெட விரண்டும் வல்லையாய் நம்பிநீ மொழிகென நயந்து கூறினான். சாமரையினையுஞ் செலவினையுமுடைய மான். இரண்டும் - பறப்பிக்குமதுவும், வேண்டுமிடத்தே நிறுத்துவிக்குமதுவும். இ - ள். சீவகன் நந்தட்டனைநோக்கி இவ்விடத்தில் நமதிடர் கெடும்படி வீரமந்திரமிரண்டையும் நீகற்று மானினது செவியிலே மொழிவாயாகவென்றுசொல்லி அவற்றைஅவனுக்கு விரும்பிக் கூறினானென்க. (300) வேறு. 793. மந்திரங் கேட்டு நான்கும் வானெட்டிப் புகுவ வேபோ வந்தரத் திவர்ந்த வாழிக் கானிலம் விட்ட மாலைச் சுந்தரச் சுண்ண மேனி மகளிர்தங் கண்ணு ளிட்ட மைந்தரு மிரும்பு மொவ்வா வான்புலங் காவல் கொண்டார். மந்திரம் - காண்டமந்திரம், வான்புலம்- உண்மையறிவு. அதுவே யெல்லாவெற்றியுந்தருவதென்று உட்கொண்டு. காவல் - கலசம். இ - ள். அம்மந்திரத்தை நந்தட்டன்கூறக்கேட்டு நான்கு புரவியும் அந்தரத்தே பாய்ந்தன; வட்டத்தையுடைய உருள் நிலத்தைவிட்டன; அழகான் மகளிர்தங்கண்ணில் வைத்துக் கொண்டிருக்கின்ற சீவகனும் நந்தட்டனும் வான்புலத்தை யிரும்பு மொவ்வாத காவலாகக் கைக்கொண்டாரென்க. (301) 794. வடிகயி றாய்ந்து முட்கோல் வலக்கையாற் றாங்கி வென்றி முடிகெனப் புரவி முள்ளா லுறுத்தினான் மொழித றேற்றேன் கடுகிய வண்ண மாவின் றாரொலி காமர் பொற்றேர் படையது செவியுங் கண்ணும் பற்றிநின் றிட்ட வன்றே. இ - ள். குதிரையைத் தொழிவிலேபயிற்றும் வாய்க்கயிற்றை யாய்ந்து தாற்றுக்கோலையெடுத்துநமக்கு வெற்றியுண்டா வதாக வென்று புரவியை அம்முள்ளாலேயுறுத்திச் செலுத்தினான்; அவை கடுகியதன்மையைச் சொல்லுதலறியேன்; மாவின்றாரொலி படையினதுசெவியிலுந் தேர் அதன்கண்ணிலும் விடாதே நின்றவென்க. (302) 795. அண்ணறேர் பறவை யென்பா ரருவமே யுருவ மென்பார் மண்ணதே வான தென்பார் மனத்ததே முகத்த தென்பார் கண்ணதே செவிய தென்பார் கலங்கநூல் கழிய நோக்கிப் பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றி னானே. என்பாரை யெங்குங்கூட்டுக. அருவமென்றது, எங்குங் கலத்தலின். இ - ள். தலைவன்றேரைச் சிலர் இப்படிக் கூறுவார் இப்படிக் கூறுவாராய்க்கலங்காநிற்க; நூலைக் கூர்க்கப்பார்த்து அதிற் பண்ணின வீதியைத்தொடங்கி மண்டலமென்கின்ற கதியைப் பயிற்றினானென்க. (303) 796. அகில்கொண்ட கொள்ளி வட்ட மாருயிர் மேயு நேமி முகில்கொண்ட மின்னுத் தோற்ப முறுகிய விசையிற் றாகி மிகல்கொண்ட விகலைத் தானே விழுங்கிய சிறகர்த் தோற்றிப் பகல்கொண்டு பறக்குந் தேராற் காளைதன் பைம்பொற் றேரே. இ - ள். காளைதன்றேர் அகில் தன்னிடத்தேகொண்ட கொள்ளி வட்டமுங் கால சக்கரமும் மின்னுந் தோற்கும்படி கடுகியவிசை யிற்றாகி மாறுபாடுகொண்ட போரினைத் தானேவிழுங்குதற்கு ஒருசிறகு தோற்றிப் பகலைக் கொண்டு பறப்பதொரு தேராயிருந்ததென்க. அகில்கூறிற்று, நெய்யா லொளிமிகுத்தலின். வீதிக்குமின்னும், ஒழிந்தன, வட்டத்திற்குமுவமை. (304) 797. காலற்ற லயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்ச மேலற்ற கவசம் வீழ்ந்த சாமரை யற்ற வின்ஞாண் மாலுற்ற மன்னர் தங்கண் மனங்கையற் றொழிந்த வள்ளல் கோலொற்றக் குனிந்த வாறே சிலைகுனிந் தொழிந்த தன்றே. வள்ளலென்றார், கடுகக்கொல்லாதே யவரை யஞ்சுவித் தலின். இ - ள். வள்ளல் கோறொடுத்தற்கு வில் ஒருகால்வளைந்தபடியே முழுக்க வளைந்தேநின்றது; அப்பொழுது மாலைவெண் குடைகள் காம்பற்றன்; பிச்சம் கவிழ்ந்தன; கவசம் அற்றன; சாமரை வீழ்ந்தன; வில் நாணற்றன; இவைகண்டு மன்னர்மனம் செயலற் றுக் குறைந்தனவென்க. (305) 798. நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னாடன் வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மி னென்னா வங்களி யரசர்க் கெல்லா மோரொன்று மிரண்டு மாகச் செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றூட்டி னானே. இ - ள். இவை பகழியன்று; உங்களை யாழ்வென்ற தத்தையது கண்காணுங்கள், நீங்கள்விருந்தாய்வந்து இவற்றை யெதிர் கொண்மிமென்றுகூறி அரசர்க்கெல்லாம் ஒன்று மிரண்டுமாகப் பகழியை விழுக்காடிட்டுத் தரங்களிலே யழுத்தினானென்க. விருந்தென்றதற்கு ஏற்ப ஊட்டியென்றார். இதனால் மனங் குறைந்தும் போகாது நின்றவர்க்கு அவள்கண்ணைப் பெறுமாறு இங்ஙனமல்ல தில்லையென்றுகூறி அவரை நோவித்தபடி கூறினார். (306) 799. நன்மன வேந்தர் தங்க ணகைமணி மார்ப நக்கிப் புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசங் கீறி யின்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னாலுந் துன்னன்மி னென்ப வேபோற் சுடுசரம் பரந்த வன்றே. இ-ள். நன்மனவேந்தர்தம்நகையாகிய பிறர்மனைநயத்தலை இனிக்கொள்ளு முடம்பிலுந் துன்னன்மினென்பனபோலச் சுடு சரங்கள் இப்புன்மனவேந்தருடைய கவசத்தைக்கீறி மணிமார்பைத் தீண்டி இன்னுயிரைக்கவர்ந்து பரந்தனவென்க. குடிப்பிறந்து பழிநாணுவார்க்கு நகையென்றார். தீமை - பிறர்மனைநயத்தல். இதனால் நொந்தும்போகாதவர்களிலே சிலருயிரைப்போக்கின்மை கூறினார். (307) 800. மீநெறி தூண்டில் போன்றே வெஞ்சிலை நாண்க ளற்ற தேனெறி குன்ற மொத்த திண்கச்சை துணிந்த வேழ மானெறி காட்டுந் திண்டேர் கயிறற்று மறிய வேந்த ரூனெறி யாழி யேந்தி யொய்யென வுலம்பி யார்த்தார். இ - ள். அவரேறினதேர்கள் கயிறற்றுமறியாநிற்க; அவரே றினவேழங்கள் கச்சை துணிந்தவை குன்றமொத்தன; அவர்கையில் நாணற்றசிலைகள் தூண்டில்போன்றன; இவைகண்டும் வேந்தர் பகைவர்மேலெறியும் ஆழியையேந்தி விரையமுழங்கியார்த் தாரென்க. ஊன் - ஆகுபெயர். இதனாற்படாதுநின்ற அவரை யஞ்சுவிக்க அவர் பின்னும் போர்குறித்தெழுந்தமை கூறினார். (308) 801. ஆர்ப்பெதிர் மாரி பெய்யு மணிநெடுங் குன்றம் போலப் போர்க்கெதிர்ந் தவருமார்த்தா ரார்த்தலும் பூண்ட வல்விற் கார்க்கெதிர் மேகம் போலக் கணைமழை கான்ற திப்பா லீர்த்தது குருதி வெள்ள மிறைச்சிக்குன் றாக்கி னானே. இ - ள். மாரிபெய்யுங்குன்று எதிரொலியெழுமாறுபோல அரசராரவாரத்திற்கெதிரே சீவகன்படையிலுள்ளாரு மார்த்தார், அங்ஙனம் இரண்டுமார்த்தவளவிலே சீவகனது கொலைத் தொழிலைப்பூண்ட வில்மேகத்தின்மழைபோல் அம்பைக் கான் றது; அதனாற்பிறந்தகுருதிவெள்ளம் முன்பு அற்றுவீழ்ந்தவற்றைக் களத் திற்கும் புறம்பேயிழுத்தது, முடிவில் அவரை யிறைச்சிக்குன் றாக்கி வீட்டானென்க. இதனால் அவர்படை பட்டபடி கூறினார். (309) 802. மன்னர்கள் வெகுண்டு விட்ட மறப்படை யழுவ மாரி கொன்னுனை யெஃகி னீக்கிக் குனிந்துவிற் பகழி கான்ற மின்னவி ரிலங்கு மொன்வாள் விழித்துயிர் விழுங்க வின்ன தன்மையாற் றானை நீந்தித் தான்விளை யாடு கின்றான். இ - ள். அங்ஙனமார்த்தவரசர்விட்டபடையாகிய பெரு மழையை இமையாதே வீழித்துப்பார்த்து அம்பினெருக்கத்தாலே நீக்கி வில் குனிந்துகான்றபகழி வாள் இவையிரண்டுந் தானையினு யிரை விழுங்கும்படி தான் இம்முறையானே படைக்கடலை நீந்தி விளையாடாநின்றானென்க. (310) 803. வேழலெண் கோட்டு மெல்கோ றின்றுகூன் குருதி வாளா வாழநா வழித்து நெய்த்தோர் கொப்புளித் தழிந்த மாவின் சூழ்குடர்க் கண்ணி சூடி நிணத்துகி லுடுத்து வெள்ளென் பூழ்பெற வணிந்து சூற்பே யாடக்கண் டுவந்து நக்கான். மெல்கோல் - வினைத்தொகை. இ - ள். அங்ஙனம் விளையாடுகின்றவன், சூற்பேய்கள் கோ டாகிய கோலாலே பற்சீவி வளைந்தவாளாகியநாவழியாலே நாவழித்துக் குருதியாகிய நீரைக்கொப்புளித்துக் குடராகிய கண்ணியைக்சூடி நிணமாகியதுகிலையுடுத்து என்பாகியபூணை முறை பெறவணிந்து ஆடக்கண்டு நக்கானென்க. (311) 804. வெளிற்றுடற் குருதி வெள்ள நிலையிது வென்ப வேபோற் களிற்றுகிர்ப் பிறழ்பற் பேய்கள் கைகளை யுச்சிக் கூப்பி யளித்தவை பாடி யாடக் குறுநரி நக்கு வேழம் விளித்தன கழுகும் பாறும் விலாவிற்றுக் கிடந்த வன்றே. இ - ள். அவன் நக்கவளவிலே களிற்றுகிர்போலு முறை குலைந்தபற்களையுடைய பேய்கள் அளிக்கத்தக்கவைபாடி யுதிரம் நீங்கின பிணத்தையுடைய குருதிப்பெருக்கையிது நிலை யென்று காட்டுவன போலே கைகளைத் தந்தலைமேலே கூப்பி யாட, வேழங் களைத்தின்ற நரிகள் கூப்பிட்டவை அதனைக் கண்டு நக்குக் கூப்பிட்டாற்போன்றன; அதனைத்தின்று செருக்கிக் கிடந்த கழுகும் பாறும் அதற்குச்சிரித்து விலா முறிந்துகிடந்தன போன்றன வென்க. (312) 805. கடல்விளை யமிர்தங் கண்ட பொழுதினெய் கனிந்த தீஞ்சோற் றடிசிலஞ் சுவைமிக் காங்கு மண்ணலங் குமரனென்னா ருடலின்மேற் றிரியுந் திண்டேர் காண்டலு மைந்தர் நெஞ்சத் திடல்பிளந் திட்ட வெஃகஞ் சுமந்தமர்த் திறத்தின் மிக்கார் இ - ள். உப்பினைக்கண்ட காலத்தில் அடிசில் ஒழிந்த சுவைகள் மிக்காற்போலப் பகைவருடலின்மேலே திரிகின்ற குமரன்றேரைக் கண்டவளவிலே தோழர் பகைவரது நெஞ்சாகிய திடலைப் பிளந்துபோகட்டவேலையெடுத்துப் போர்த்திறத்தே மிக்கா ரென்க. மிக்காங்கும், உம்மை - இசைநிறை. இதனால் சீவகனைக் கண்டபின் றோழர்களிப்புமிக்கமை கூறினார். (313) 806. கடாந்திறந் திட்டு வானிற் களகள முழங்கும் வேழம் படாந்திறந் தூழித் தீயிற் பதுமுகன் காட்டி யிட்டான் றடாம்பிறை மருப்புத் திண்கை யபரகாத் திரங்க டம்மாற் கொடாம்பிற குமரிப் போருட் பிறர்க்கெனக் கொன்ற தன்றே. வரகாத்திரமென்பதனைத்தலையென்றும், அவரகாத்திர மென்ப தனைக் காலென்றும் வடநூலார் கூறுவராதலிற், றேவர் அதனைச் சிதைத்து அபரகாத்திரமென்றார்; ஐரா வதம்- ஐராபத மென்றாற்போல. எனவே அவரபாத்திரமென்றது கால்களை. இனிப்பின்கால் முன்காலென்பாருமுளர். பிற-இடைச்சொல். இ - ள். பதுமுகன் வான்போலக் கடாந்திறந்திட்டுக் களகள வென்னுமோசைபடமூழங்குகின்ற வேழத்தை ஊழித்தீப் போலக் கொண்டுவந்து காட்டினான்; அது வளைந்த பிறைபோலு மருப்புக் கை கால்களென்கின்றவற்றாலே தத்தைகாரணத்தாற் பிறந்தபோரிற் பிறர்க்குக் கொலைத்தொழிலைக் கொடே மென்றுகொன்றதென்க. குமரிப் போர்-கன்னிப்போருமாம். இக்கவிமுதற் றத்தை யைக்காத்து நின்ற பதுமுகன் பகைவர் தலைசாய்ந்தமைகண்டு பொரு கின்றமை கூறினார். (314) 807. மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலிற் சீறா முருக்கித்தேர் தடக்கை தன்னான் முழக்கிப்பாய் மாக்கள் காலி நெரித்திடாக் கண்ணுட் டீயாற் சுட்டுநீ றாக்கி நெய்த்தோ ரொருக்கிப்பேய் பாடி யாட வுறுசிலை யுடன்று கொண்டான். இ - ள். அஃது எங்ஙனங்கொன்றதென்னின்மருப்பாலே வேழத்தை வீழ்த்து, வாலினான் மன்னரைச்சீறி, கையினாற்றேரை முறித்து, காலான் மாவைநெரித்து, கண்ணிற்கோபத்தீயான் நெய்த்தோரை நீறாக்கிக்கொன்றது; அதன்கொலையோடே யவனுங் கொல்லக்கருதிப் பேய்பாடியாடும்படி சிலையை வாங்கிக்கொண்டானென்க. (315) வேறு. 808. கொண்டான் பகழி தொடுத்தான்சிலை கால்கு னிந்த தொண்டேர் மிசையு முருவக்களிற் றுச்சி மேலும் வண்டார்ப் புரவி நிறத்தும்மற மன்னர் மேலுங் கண்டான் சொரிந்தான் கணைமாரி கலந்த தன்றே. 809. பைம்பொற் புளகப் பருமக்களி யானை யீட்டஞ் செம்பொன் னெடுந்தேர்த் தொகைமாக்கடற் றானை வெள்ள நம்பன் சிலைவாய் நடக்குங்கணை மிச்சி லல்லா வம்பொன் மணிப்பூ ணரசும்மிலை யென்று நக்கான். இவையிரண்டுமொருதொடர். 1. கணைமாரி - “மன்னர்கள்வெகுண்டு” (சீவக.802) என்னுங் கவியிற் கூறியகணைமாரி. 2. புளகம் - யானையின் பருமத்திற்றைத்த கண்ணாடி மாக்கடல் - புரவிக்கடல். இ - ள். வில்லைக்கொண்டவன் அம்மைத்தொடுத்தான்; அப்பொழுது அது கால் வளைந்துகான்ற அவ்வம்பை மிசை யிலும், உச்சிமேலும், நிறத்தும், மேலுமழுந்துவதாகச் சொரிந்தான்; அங்ஙனம் சொரிந்தவன் முன்பொருகின்ற சீவகன் வேறொரு முகத்தேநின்றெய் கின்ற கணைமாரி இதனோடு கலந்ததனைக் கண்டான்; கண்டு இம்மாரியால் யானையீட்டந் தேர்த்தாகை கடல்வெள்ள மென் கின்றவையும் அரசும் நம்பன்கணைமிச்சி லல்லால் இல்லையாயிருந்த வென்று வியந்து யாம் இனி யெங்ஙனம்பொருவேமென்று கருதி நக்கானென்க. இனி நான்குபடையிலுந் தான்சொரிந்தான்; சொரிந்த பின்பு அவன் கணைமாரி முன்பே கலந்ததனைக்கண்டானென்றுமாம். இதற்கு முன்பே அம்பாற்குறைந்த படைமேற்றைத்தஅம்பினைக் கையு™ர்ந்த தென்க. (316. 7) வேறு. 810. ஒருவனே சிலையு மொன்றே யுடையதோர் களிற்றின் மேலா னருவரை மார்பிற் சென்ற தறிந்தில னெஃக மின்னும் பொருவரோ மன்ன ரென்றான் பொருசிலை மடக்கி யிட்டார் வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார். இ - ள். இங்ஙன நக்க பதுமுகன் றான் றுணையுமிலன், தனக் குச்சேமவில்லுமில்லை, ஒருகளிற்றின்மேலான், இவன் றான் பகைவ ரெறிந்தவேல் மார்பிற்றைத்தது மறிந்திலன்; பின்னுமேற் சென்று மன்னர்பொருவரோவென்றிகழ்ந்தான்; இவன் நொந்தா னென்று போர்செய்ய வாள்வாங்கிக் கொண்ட மன்னரெல்லாம் இது கேட்டு மேல்வருகின்றயானையை மீட்டார்; அதுகண்டு சீவகனும்தோழருமினி இவரையெய்ய வேண்டுவதில்லையென்று தங்கையில் வில்லை மடக்கியிட்டா ரென்க. இன்னும் - எல்லாருங் கணைமிச்சிலாய பின்னும். (318) 811. செங்கண்மா றெழிக்கப் பட்ட வலம்புரித் துருவங் கொண்ட சங்குவாய் வைத்து நம்பன் றெழித்தலுந் தறுக ணாளி பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பி னாற்போற் றங்குதார் மன்ன ரெல்லாந் தளர்ந்துகண் சாம்பி னாரே. இ - ள். கண்ணன் பாரதப்போரிலே முழக்கினவலம்புரியின் ஒப்பைக் கொண்டசங்கை வாய்வைத்து நம்பன் முழக்கினானாக; அதுகேட்டுயாளி முழக்கினாலே வேழத்திரள் வருத்தினாற்போல மன்னர் குறைந்து கண்ணொளி மழுங்கினாரென்க. அவரஞ்சினமை கண்டு சங்கு வாய்வைத்தான் துருவம் - ஒப்பு. (319) 812. அருவரை நாகஞ் சுற்றி யாழியான் கடைய வன்று கருவரை குடையப் பட்ட கடலெனக் கலங்கி வேந்தர் திருவரை மார்பன் றிண்டேர் மஞ்ஞையே முருகன் றானென் றெருவரோ டொருவர் கூடா வண்ணமே யுடைய லுற்றார். கருமை - பெருமை. இ - ள். ஆழியான் மந்தரத்திலே பாம்பைச்சுற்றிக்கடை தலாலே அம்மலை கலக்கின கடலென்னும்படி வேந்தர்கலங்கி, மார்பன்றேர் மயிலேயென்றும், அவன்றான் முருகனேயென்றுங் கருதி, ஒருவரோ டொருவர் கூடாததன்மையாலே கெடுதன் மிக்கா ரென்க. அவன் பலகைகளாற் படைவழங்கினாற் போலவிவனும் படைவழங்குதலாலும் வடிவாலு முருகனே. (320) 813. முளிமரக் காடு மேய்ந்த முழங்கழல் போன்று மைந்தன் றெளிநலக் குமரர் கூற்றிற் றெழித்தனர் பகழி சிந்தி யொளிநல வுப்புக் குன்ற மூர்புனற் குடைந்த தேபோற் களிநல மன்னர் தங்கள் கடற்படை யுடைந்த தன்றே. இ - ள். காட்டைமேய்ந்தவழல்போலப்போரிற் றெளிந்து நின்ற நலத்தையுடையமைந்தனுங் குமரரும் மன்னர் கெடுகின்றமை கண்டு கூற்றுப்போல ஆர்த்தார்; அது கேட்டு அவர்படையுங் கையிலம்பையும் போகட்டு உப்புமலை ஓடுநீர்க்குடைந்தாற்போல் வுடைந்ததென்க. (321) 814. உறுபடை மன்னர் தம்மை யுடற்றியொன் றானு மின்றிச் சிறுபடை யவர்கள் வென்று செகுப்பவோ வென்ன வெண்டா செறியெயிற் றாளி வேழப் பேரினஞ் செகுத்த தன்றே யுறுபுலி யொன்று தானே கலையின முடற்றிற் றன்றே. இ - ள். சிறுபடையாளர் மிக்கபடையினையுடைய வரசரை வருத்தித் தமக்கு ஓரேதமுமின்றி வென்றுபோக்குபவோ வென்று உலகத்தீர்! கருதவேண்டா; விலங்கேயாயினும் யாளி வேழத் திரளைக் கெடுத்தன்றே! புலியொன்றுதானே கலைத் திரளைக் கெடுத்ததன்றே! இவற்றைக்கண்டு தெளிவீராக வென்றாரென்க. பின்னிலிரண்டியும் எடுத்துக்காட்டுவமை. இதுவுமேலிற் கவியும் உலகந்தேறுதற்குத் தேவர் கூறினார். (322) 815. நல்லவை புரியு மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா தல்லவை புரியு மாந்தர்க் கத்திர மொன்றும் வாயா வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலா மில்லையே வென்றி தீமை யிடங்கொண்ட மனத்தி னார்க்கே. இருவர்க்கும் வெற்றிதோல்வியுளவாயகாரணங் கூறினார். அல்லவைபுரியுமாந்தர்க்கு நல்லவைபுரியுமாந்தர்-தமக்குத் தீங்கு செய்யவிரும்புவார்க்கு நன்மைசெய்ய விரும்புவார். என்றது; தந்தையை வலிதிற்கோடற்குஒருப்பட்டவர்க்குப் பதுமுகன் உறுதி கூறியதனை; அது “எம்மைநீர் வெல்லப் பெற்றீர்” (சீவக . 755) என்னுங் கவி. குணத்தின்மிக்காரென்று நல்லவை புரிவார்க்கு வேறோர் பெயர் கூறினார்; அதுசுட்டு. தீமைபிறர்மனைநயத்தல். இ - ள். ஒருவரையொருவர் வெல்லுந்தன்மையைக் கேட்கி கின்றீராயின், அல்லவைபுரிவார்க்கு நல்லவைபுரிவார் கையில் வாள் தப்பிவீழா, அவர்க்கு அதுவுமிகை; வெற்றிலையை விடினும் அதுதான் வேலாய் விழும். தீமையிடங் கொண்ட மனத்தினார்க்கு அத்திரம்பெறினுஞ் சிறிதும் பயன்கொடா; ஆதலால் அத்தீயோர்க்கு ஒருகாலும் வென்றியேயில்லை யேன்றாரென்க. இனி வேறும் பொருடருமேனும் அதற்கியைபின்று. (323) 816. குழையுடை முகத்தி னாள்கட் கோணைப்போர் செய்த மன்னர் மழையிடை மின்னி னெய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர் முழையிடைச் சிங்க மன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார் விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. இ - ள். தத்தைகாரணமாக மாறுபாட்டையுடைய போரைச் செய்த மன்னர் மின்போலப் புக்கவிடமறியாமற் கடுகப்போனார்; மேகத்தினின்ற விச்சாதரர் சிங்கமன்னான் அமரை யேத்தி யார்த்தார்; மூதூர் இவனைக் காண்டல் விருப்பத்தோடே மிக்கதென்க. முழை - இல்லறம் பூண்டதற்குக் கூறிற்று. (324) 817. பார்மிசை யுலக மேத்தும் படுகளங் கண்டு பற்றார் போர்முகக் களிற்று வெண்கோ டுழுதசெஞ் சால்கொண் மார்பிற் சீர்முகத் தோழர் சூழச் சீவகன் றிருவின் சாயல் வார்முக முலையி னாளை மனைவயிற் கொண்டு புக்கான். இ - ள். . சீவகன், யானைக்கோடுழுத சாலைக்கொண்ட மார் பிற்றோழர் சூழ்ந்து செல்லப் பாரில் உய்ர்ந்தோரேத்துங் களத்தைக் கண்டு வேள்விமுடித்துத் தத்தையைத் தன்மனையிலே கொண்டு புக்கானென்க. (325) 818. நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப்பத்தற் கிடத்தப் பட்டார் புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார் மைக்கிழிந் தொழுகுங் கண்ணீர் மாநிலத் துகுக்கப் பட்டார் கைக்கிழி கொடுக்கப் பட்டார் கலம்பல நல்கப் பட்டார். இ - ள். நெய்வைக்கப்பட்டாரும், கிடத்தப்பட்டாரும், எஃகம் புக்குழி நாடியிரும்பாலறுத்துவாங்கப்பட்டாரும் சீவகனாற் கலம் பல நல்கப்பட்டார்; சுற்றமழும்படி பட்டா ரெல்லாருங் கைக்கிழி கொடுக்கப் பட்டாரென்க. (326) 819. முதுமரப் பொந்து போல முழுமெயும் புண்க ளுற்றார்க் கிதுமருந் தென்ன நல்லா ரிழுதுசேர் கவளம் வைத்துப் பதுமுகன் பரவை மார்பி னெய்க்கிழி பயிலச் சேர்த்தி நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நோக்கி னானே. வைத்து - வைப்ப. நல்லா னிழுதும் பாடம், இ - ள். மரப்பொந்துபோலப் புண்ணுற்றார்க்கு மருத்துவர் இதுமருந்தென்று கவளம் வையாநிற்க, தான் பதுமுகன் மார்பிலே கிழியைச்சேர்த்திக் காற்றுப்படாதபடியுள்ளே சீலையடைசின எலிமயிர்ப் படத்தாற்செய்த சட்டையிலே புகுகவென்று கூறிப்பரி கரித்தானென்க. (327) 820. பார்கழு பைம்பொன் றன்னாற் பண்ணவ னுருவ மாக்கி யூர்கெழு விழவு செய்தாங் குறுபொரு ளுவப்ப நல்கித் தார்கெழு மின்னு வீசித் தனிவடந் திளைக்கு மார்பன் போர்கெழு களத்துப் பாவம் புலம்பொடு போக்கி னானே. இ - ள். வடம் மின்னுவீசித் திளைக்குந் தார்கெழுமார்பன் பாரிற் பிறந்தபொன்னாலுருவமாக்கிச் செய்து தானமும் பண்ணிப் பாவத்தையும் புலம்பையும் போக்கினானென்க. செற்றவர்ச்செகுத்தல் அறமேயாயினும், இவர் ஆதியாய பகையன்மையிற் பாவமென்றார். புலம்பு - என்ன காரியத்தைச் செய்தேமென்னும் வெறுப்பு. (328) 821. செய்தவப் பாவ மெல்லாந் தீர்த்திடுந் தீர்த்தன் பாத மெய்திய சேடங்கூவித் திறைஞ்சுபு தொழுது வாழ்த்தி மையறு மணியிற் செய்த வலம்புரி யதனீர் கொண்டான் வையக மளிக்க நீண்ட வலம்புரித் தடக்கை யானே. பலபிறப்பிற்செய்தபாவத்தைத் தீர்க்குந்தீர்த்தன். கூவு வித்து-விகாரம். வலம் புரி கையிற்கிடத்தல் உத்தமவிலக்கணம். இ- ள். தடக்கையான் தீர்த்தன்பாதமேய்திய சேடத்தையும் வலம்புரியதனிற்றீர்த்தநீரையுங் கூவுவித்துத்தொழுதுதுதித்து அவற்றைக் கொண்டானென்க. (329) வேறு. 822. கருமணி யழுத்திய காமர் செங்கதிர்த் திருமணிச் செப்பெனச் செறிந்த வெம்முலை யருமணி யலம்வரு மம்பொற் கொம்பனாள் பெருமணக் கிழமையாம் பேசு கின்றதே. இ - ள். நீலமணியையழுத்தின மாணிக்கச்செப்பெனச் செறிந்த, மணியலமளிரு முலையுடைய கொம்பனாடத்துச் சீவகற்கு முற்பட்டமணமாகின்றவுரிமை, இனிக்கூறுகின்ற தென்றா ரென்க. பெருமணமாங்கிழமையென்று மாறுக. மேல்மணமாதற்குக் காரணமாகின்ற வுரிமையென்றது சமாவர்த்தனத்தை. (330) 823. நான்குநூ றாயிரங் குடத்து நல்லன வான்றயிர் பானெயோ டழகி தாநிறைத் தூன்றிகழ் வேலினான் வேள்விக் கூர்மருள் கோன்றெர்றுக் காவலன் கொண்டு முன்னினான். இதுமுதல் சமாவர்த்தநம் நடவாநிற்கப்பச்சை புகுந்தபடி கூறுகின்றார். இ - ள். இடையனாகியதொறுக்காவலன் வேலினானது ஊர் மருள் வேள்விக்குக்குடத்திலே தயிரும் பாலும் நெய்யுநிறைத்துக் கொண்டு முன்னினானென்க. இனி இழந்தே மென்றூரார் மருளுஞ் சச்சந்தன் தொறுக் காவலனுமாம். (331) 824. வளைநிற வார்செநெ லரிசிப் பண்டியோ டளவறு சருக்கரைப் பண்டி யார்ந்தன பிளவியல் பயறுபெய் பண்டி யுப்புநீர் விளைவமை பண்டியின் வெறுத்த தாங்கொர்பால். நீர்விளைவமை யுப்பு இ - ள். சங்குநிறத்தையுடையஅரிசிப்பண்டியும், சருக்கரைப் பண்டியுநிறைந்தன; பருப்புப்பெய்தபண்டியும் உப்பமைந்த பண்டியோடே செறிந்தது; அம்மனையிலொரு பக்கமெல்லா மென்க. (332) 825. சினைதுணர் முழவன பலவின் றீங்கனி கனைத்து வண்டுழல்வன வாழை மாங்கனி யெனைத்துள கிழங்குகாய் குருகொ டேந்திய னத்தினாற் றகைத்திடம் பெறாது தானொர்பால். இ - ள். பலவின்சினையிற் கொத்தினையுடைய முழவன்ன கனியுஞ்செறிந்து வண்டுழல்வனவாகிய வாழைக்கனியுங் மாங் கனியுங் கிழங்குங் காயுங் குருகும் எவ்வளவுள அவ்வளவெல்லா மேந்திய சனங்களாலேநெருங்கி யொருபக்கந்தான் இடம் பெறா தென்க. (333) 826. மரகத மணிப்பசுங் காய்கொள் வான்குலை கவர்பழுக் காய்க்குலை கனியக் காவுறீஇ யிவர்தரு மெல்லிலைக் காவு மேந்திய வுவரியாய்ச் சொரிந்திடம் பெறாது தானொர்பால். இ - ள். பசுங்காய்க்குலையும் பழுக்காய்க்குலையையும் பரத்தலைத்தரும் வெற்றிலைப்படலிகையையும் முற்றக்காவி வந்து சொரிதலாலே வெள்ளமாய் ஒருபக்கந்தான் இடம் பெறாதென்க. ஏந்திய - வேண்டியவும்பாடம். (334) 827. சண்பகந் தமநகந் தமால மல்லிகை தண்கழு நீரொடு குவளை தாமரை வண்டின மிசைகொள வாசப் பூச்சுமை கொண்டவர் குழாம்பொலி வுற்ற தாங்கொர்பால். இ - ள். சண்பகமுந் தமநகக்கொழுந்தும்பச்சிலையும் மல்லிகை யுங் கழுநீருங் குவளையுந் தாமரையுமாகிய வாசப் பூச்சுமையை வண்டினம் மேலேமொய்க்கக் கொண்டவர்திரள் அவ்விடத்தொருபக்கம் பொலிவுற்றதென்க. (335) 828. ஆர்கெழு குறடுசூட் டாழி போன்றவன் சீர்கெழு வளமனை திளைத்து மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த வல்லதூஉம் பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே. அச்சுக்கோக்குங் குறடு மாளிகைக்கும், நடுவுபோக்குமார் தெருவுகளுக்கும், விளிம்பிற்சூட்டு மதிலுக்குமுவமை. இ - ள். அவனுடைய வுருளைபோன்று சீர்கெழுமின வள மனையிலே மாசனநெருங்கி யொலியாற்கடலெனக்கலந்தன; அஃதொழிந்தும்அம்மாசனம் பயன்கொள்ளு முறைமையாற் பழுமரத்திற் பறவையுமொத்தவென்க. மனையைச்சூழப் பச்சைநிரைத்தலின், ஆழிபோன்றென்னு மாம். (336) 829. கையுறை யெழுதினர் கைந்நொந் தேடறுத் தையென விருப்பமற் றன்ன தாதலான் வையக மருங்கினின் வாழ்நர் மற்றிவன் செய்தவ நமக்கிசை கென்னச் சென்றதே. 830. வாலரி கழுவிய வண்ணச் செம்புனல் காலிய லிவுளியுங் களிறு மாழ்ந்தவட் கோலநீர்க் குவளையு மரையும் பூத்துவண் டாலிவண்குருகுபாய்தடங்களானவே. 831. உடுப்பன துகில்களு முரைக்கு நானமுந் தொடுத்தன மாலையுங் குழையுஞ் சாந்தமுங் கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல்கல மடுத்துவிண் பூத்ததோ ரழகின் மிக்கதே. 832. கலங்கழு மரவமுங் கருனை யாக்குவார் சிலம்பொலி யரவமு மிச்சில் சீப்பவ ரிலங்குபொற் கிணிகிணி யிரங்கு மோசையு முலம்புமா லுவர்க்கட லொலியின் மிக்கவே. இவைநான்குமொருதொடர். 1. மற்று - அசை. மற்றிவன்செய்தவம்-வேறாகவிவன் செய்கின்ற சமாவர்த்தனம்; விரதங்கோடலிற் ‘றவ’மென்றார். 2. வாலரி, வாலசி இரண்டுபாடமும் விகாரம். ஆழ்ந்து - ஆழ. 3. உடுப்பன, தொடுத்தனவென்பனவற்றிற்கு ஆகியவென விரிக்க. அடுத்து - நெருங்கி. 4. உலம்பு -கடற்குஅடை. இ - ள். வந்தபச்சையெழுதி முதலிட்டவர்கள் கைநொந்து பட்டோலைகளைக்கிழித்து ஐயெனவிளைப்பாறியிருப்பார்கள்; பச்சை அங்ஙன மிகுதலின், அதற்கேற்பச் சோறுசமைத்தற்கு அரிசிகழுவிய கழுநீர் இவுளியுங் களிறுமழுந்தும்படி குவளையும் தாமரையும் பூத்து வண்டொலிக்கப்பட்டுக் குருகுபாயுந் தடங் களாயின; அங்ஙனஞ்சோறு மிகச்சமைத்தபின்பு கருனையாக் குவார் சிலம்பொலியினரவமும் உண்டற்குக் கலங் கழுவுகின்ற வரவமும் எச்சில் சீப்பார்கிண்கிணி யிரங்குமோசையுங் கடலொலி யினுமிக்கன; இங்ஙனமுண்டபின்பு துகிலு நானமு மாலையுங் குழையுஞ் சந்தனமும் அடுத்துக்கொடுப்பார் வாங்குவார் வீழ்த்த கலம் விண் மீனைப்பூத்த தோரழகினு மிக்கது; இங்ஙனம்நிகழாநிற்க இவன்செய்கின்ற சமாவர்த்தனம் உலகில் வாழ்வாரெல்லாம் நக்குகும் இது கூடுவதாகவென்று கருதும்படி நடந்ததென்க. (337-40) வேறு. 833. மூழிவாய் முல்லை மாலை முருகுலாங் குழலி னாளு மூழிவாய்த் தீயொ டோக்கு மொளிறுவாட் டக்கை யானு மாழிவாய் விரலிற் காம னம்பொடு சிலைகை யேந்தத் தாழிவாய்க் குவளை வாட்கட் டையலார் பரவச் சார்ந்தார். மூழி வாய் - பூவிடுபெட்டி, ஆழி - மோதிரம்; விரற் சரடுமாம். இ - ள். குழலினாளாந் தடக்கையானுங்காமன் அம்போடு சிலையைக் கைவிரலாலேந்தாநிற்கத் தையலார்பரவாநிற்க ஓராசனத்தே சேரவிருந்தாரென்க. (341) 834. இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதந் துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந்து வேட்ப மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் வீர னேற்றான் முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்தெழ முருக னன்னான். இ - ள். முருகனன்னான் இன்னியமாராநிற்க முன்னா நின்று, துன்னினர் பலாசாற்செய்த துடுப்பின் நெய்யை மிக்கெழுகின்ற தீவளரும்படி வேதமந்திரத்தாற் றான்சொரிந்து ஓமம் பண்ணா நிற்க, வெள்ளிமுளைத்த வளவிலே ஸ்ரீதத்தன் நீரைச்சொரிந்தான்; அப்பொழுது இவனும் அதனை யேற்றா னென்க. துன்னினர் - தனக்குச்செறிந்தவந்தணர். மின்னியல் - ஒளி விடுகின்ற. அரசர்க்கும்வணிகர்க்கும் மந்திரத்திலுந் தந்திரத் திலுஞ் சிறிதுவேறுபாடுளதேனுந் தான் இரண்டு குலத்திற் குமுரிய சடங்கு நிகழ்த்துதற்குரியனாதலிற் பிறர்க்குத் தெரியாமற்றன் குலத்திற் கேற்றசடங்கு தானேநிகழ்த்தினா னென்பதூஉம், பிறர்க்குத் தெரியு மவற்றிற்குப் பிராயச்சித்தத்தைக் கருதினானென்பதூஉந்தோன்ற முன்னுபு என்றார். முன்னுதல் - கருதுதல். (342) 835. இட்டவுத் தரிய மின்னு மெரிமணிப் பருமுத் தார மட்டவிழ் கோதை வெய்ய வருமுலை தாங்க லாற்றா நெட்டிருங் குழலி னாட னேர்வளை முன்கை பற்றிக் கட்டழல் வலங்கொண் டாய்பொற் கட்டிறா னேறி னானே. நெட்டிருங்குழல் - நெடு பண்புதொகு மொழியாதலிற் புணர்க்கப்படாதாயிற்று. நேர்வளை - ஒத்தவளை. இ - ள். உத்தரீயமுதலியவற்றைச் சுமத்தலாற்றாத தத்தையது முன்கையைத் தான்பற்றி யழலைவலங்கொண்டு கட்டிலி லே யேறினானென்க. (343) 836. மந்திரத் தரசன் காதன் மாதரம் பாவை தன்னைக் கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்றோ ரந்தர விசும்பிற் றேவர்க் கதிபதி யாய கோமா னிந்திரன் றனக்கு மாகா தென்பது நடந்த தன்றே. அந்தரவிசும்பில் - விசும்பாகிய வந்தரத்தில்; நடுவாகிய விசும்புமாம். இ - ள். கலுழவேகன்மகளைக் கந்துகன்மகன் வேட்ட மணவினையைக்கூறின் இந்திரனுக்குங் கூடாததென்று கூறுகின்ற கூற்று நடந்ததென்க. (344) 837. அடிமனை பவள மாக வரும்பொனா லலகு சேர்த்தி முடிமணி யழுத்திச் செய்த மூரிக்காழ் நெற்றி மூழ்கக் கடிமலர் மாலை நாற்றிக் கம்பல விதானங் கோலி யிடுபுகை மஞ்சிற் சூழ மணவரை யியற்றி னாரே. இ - ள். சுற்றுச்சுவர் பவளப்பலகையானிறைத்துத் தலையிலே மணியழுத்திப் பண்ணின தூணைநாட்டி தன்மேலே பொன்னாற் செய்தகையலகைச்சேர்த்தி அத்தூணினெற்றி மறையும்படி படா மாகிய மேற்கட்டியைக்கட்டி மாலைய நாற்றிப்புகை மஞ்சுபோலே சூழ மணவறையை யியற்றினா ரென்க. (345) 838. ஐந்துமூன் றடுத்த செல்வத் தமளிமூன் றியற்றிப் பூம்பட் டெந்திர வெழினி வாங்கி யின்முக வாசச் செப்புஞ் சந்தனச் சாந்தச் செப்புந் தண்மலர் மாலை பெய்த விந்திர நீலச் செப்பு மிளையவ ரேந்தி னாரே. ஐந்தாயவொன்று மும்மூன்றாகப்படுத்த. ஐந்தாவன: “சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண - முறுதூவி சேக்கையோ ரைந்து.” இருவருந்துயில் கோடற்கிரண்டும் போகநுகர்தற் கொன்றும் வேண்டுதலின், அமளிமூன்றாயின. இனியமுகவாச மாவன “தக்கோலந் தீம்பூத் தகைசாலிலவங்கங் - கற்பூரஞ் சாதியோ டைந்து.” இவற்றோடு சருக்கரையுந் தேனுங்கூட்டுப. இது முதற் கவுட்கொண்டு பின்பு பாகுகவுட் கொள்ளவேண்டுதலின், வாசச்செப்பென்றபெயர் சிறப்பினாற் பெற்றபெயர். இ - ள். இளையவர் இயற்றி மசகாரியைவளைத்துச் செப்புக் களை யேந்தினாரென்க. (346) 839. கடைந்துபெய் மணிக்கைச் செம்பொற் காசறு தட்டிற் சூழ்ந்து மிடைந்துபெய் மணிக்கட் பீலி மின்னுசாந் தாற்றி பொன்னா ரடைந்துவீ சால வட்ட மரிவைய ரேந்தி யாற்றத் தடங்கண்கள் குவளை பூப்பத் தையலோ டாடு மன்றே. 840. பஞ்சுசூழ் பரவை யல்குற் பசுங்கதிர்க் கலாபம் வீங்கச் செந்தளிர்க் கோதை சோரக் கிண்கிணி சிலம்போ டேங்க மைந்தருட் காம னன்னான் மகளிருட் டிருவ னாளை யந்தரத் தமரர் பெற்ற வமிர்தெனப் பருகி னானே. 841. இளமுலை மணிக்கண் சேப்ப வெழுதுவிற் புருவ மேறக் கிளைநரம் பனைய தீஞ்சொற் பவளவாய் திகழத் தேன்சோர் வளமலர்க் கோதை தன்னை வாய்விடான் குழையப் புல்லி யளமர லிலாத வின்பக் கடலகத் தழுந்தி னானே. இவைமூன்றுமொருதொடர். 1. கடைந்திட்ட மணிக்கையினையுஞ் செம் பொற்றட்டினை யுந்தன்னைச் சூழ்ந்துமிடையப் பெய்த பீலியையுமுடைய சாந்தாற்றி - சிற்றாலவட்டம். ஆடும்- புணரும். 2. பஞ்சு - ஆகுபெயர். வீங்க - இன்ப மிகுதியால் உடம் புபூரித்தலிற் கலாபமிறுக. மகளிரிடத்துக் கண்டார்விரும்பப்படுந் தன்மையைப் போல்வாளை; *திருவளர் தாமரை” போல. பருகுதல்-ஈண்டதரபானமுமல்குற் பானமும். 3.எழுதினா லொத்தவிற்போன்றபுருவம். தேன்சோர் கோதை யென்று காமச்செவ்விகூறினார். அளமரல் - அலமரல். இ - ள். அங்ஙனம்இளையவரேந்திய துப்புரவுகளை நுகர்ந்து, காமனன்னான், திருவன்னாளை இளமுலைமணிக்கண் சிவப்பக் குழையப்புல்லி, அக்கோதைதன்னைக் கிளையென்னுநரம்பு போலுஞ் சொல்லையுடைய பவளவாய் திகழ வல்குலிற் கலாபம் வீங்க, அவ்விரண்டினையும்வாய்விடானாய் அமிர்தெனப் பருகினான்; அங்ஙனம்பருகி,அத்தையலோடே கோதை சோர ஏங்கப் புருவ மேறக் கண்கள் குவளைபூப்பஆடும்; அங்ஙன மாடுதலிற் பிறந்த வியர் நீங்கும்படி சாந்தாற்றியையும் பொன்னா ரால வட்டத்தையும் அரிவையரேந்தித் தம்மை யடைந்தாற்றும்படி இன்பக்கடலகத்தே யழுந்தினானென்க. புணர்ச்சியிறுதிக்கண் அவசத்தான் முலையிடைத் துயிலுந் துயிலை இன்பக்கடலென்றார். இனிக் கரண விசேடமாக்கிச் செவ்வனே பொருளுரைப்பாருமுளர்; அது பொருந்துமேனு முணர்க. (347-49) 842. இன்னண மொழுகு நாளு ளிளமரக் காவு காண்பான் பொன்னணி மார்பன் சென்று புகுதலு மொருவன் றோன்றித் துன்னியோ ரோலை நீட்டித் தொழுதனன் பெயர்ந்து நிற்ப மன்னிய குருசில் கொண்டு மரபினா னோக்கு கின்றான். இ - ள். இவ்வாறு நடக்கின்றநாளிலே திருத்தங்கியமார்பன் பொழிலைக்காணவேண்டிச் சென்றுபுகுந்தானாக, அவன் அதனை வாங்கிக்கொண்டு வழிபாட்டோடே வாசியா நின்றா னென்க. (350) வேறு. 843. உருமுக்கதிர் வேற்கலுழ னோலையுல கென்னும் பருமைக்குருப் பளிங்கிற்புகழ்ப் பஞ்சிமுழு தடுத்த திருமிக்குடைச் செல்வன்றிறற் சாமிநனி காண்க வருமையற னின்பம்பொரு ளாகெனவி டுத்தேன். உருமுப்போன்றவேல். உலகென்னும்பளிங்கிலே புகழாகிய பஞ்சியோரிடமு மொழியாமற்பரந்த இச்செல்வத்தினை முற் பிறப் பிற் றவமிகுதியாலே யுடையனாகிய செல்வன். இ - ள். கலுழனோலைசெல்வனாகியசாமிகாண்பானாக, இதுவர விட்டேன்; அறமு மின்பமும் பொருளுந் தனக்கின்னும் மிகவுண்டாக வேண்டுமென்று கருதியென்க. தேவனாதலிற்கூறினான். விடுத்தேன் - விகாரம். (351) 844. தத்தையொடு வீணைமனர் தாம்பொருது தோற்ப மொய்த்தகலை நம்பிமுகிழ் முலையையிசை வெல்ல வைத்தகதிர் வேலின்வலி யார்க்குரிய ளென்னச் சித்தங்கரிந் தாங்குக்கொடி யான்செரு விளைத்தான். இ - ள். மன்னர்தாந் தத்தையோடே வீணையாற்பொருது தோற்கத் தான் அவளையிசையாலே வெல்லக் கட்டியங்காரன். அது பொறாதே சித்தங்கரிந்து வேலாற் போர்செய்துவென்றார்க்கு இவளுரியளெனச்சொல்லி யவ்விடத்தே யொரு போரை விளைத்தானென்க. வையெனக் குறிப்புணரநின்ற வுரிச்சொல் வைத்தவென வினை மேற் றன் மெய்தடுமாறிற்று. முண்முனைபோலக் கூர்த்த வேலென்க. (352) 845. தேன்முழங்கு தார்க்குருரிசில் செம்பொனெடுந் தேர்மேல் வான்முழங்கு வெஞ்சிலையின் வாளிமழை தூவி யூன்முழங்கு வெங்குருதி வேழமுடன் மூழ்க வேன்முழங்கு தானைவிளை யாடியதுங் கேட்டேன். இ - ள். அவன் விளைத்தபொழுதிலே குருசில் தேர்மேலே நின்று சிலையாகிய மேகத்தாலே யம்பாகியமழையைத் தூவுத லாலே யுடம்பிற் றோன்றிய குருதியாகிய வெள்ளத்திலே வேழங்கள் சேர அழுந்தும்படிதானையோடேநின்று விளையாடிய துவுந் தரன்கூறக் கேட்டேனென்க. தூவி - தூவ. சிலையென்வாளியும் பாடம். (353) 846. வந்துதரன் கூறியவிவ் வாய்மொழியு மன்றி முந்துவரன் மொழிந்தபொருண் முற்றும்வகை நாடிப் பந்துபுடை பாணியெனப் பாயுங்கலி மான்றே ரெந்தைதிற முன்னமுணர்ந் தின்னணம் விடுத்தேன். வாய்மொழியென்றார், நிமித்திகன் கூறக்கேட்டிருந்த காரியம் இப்பொழுது முற்றினசெய்தியைத்தரன்கூறுதலின். வரன் - அச்சணந்தியடிகள். இ - ள். எந்தைதிறத்தில் அத்தரன்கூறியமொழியும், அன்றி வரன் மொழிந்தகாரியமும், முடியுங்கூறுபாட்டையும் முன்பே குறிப்பாலே நாடியுணர்ந்து இனி யாஞ்சேறல்கருமமன்றென்று கருதிதத்தையை ஸ்ரீதத்தனுடனே வரவிட்டேனென்க. கலுழவேகன் வந்தாற் சீவகசரிதை யொன்றுமின்றாம். (354) 847. எள்ளுநர்கள் சாயவென தோளிரண்டு நோக்கி வெள்ளிமலை முழுதுங்கொடி யெடுத்ததிக லேத்திக் கள்செய்மலர் மார்பனுறு காப்பிகழ்த லின்றி யுள்ளுபொரு ளெம்முணர்த்தி யன்றியுள வேண்டா. இ - ள். என்னுடைய தோளிரண்டையுநோக்கி யிகழ்ந்தி ருக்கும்பகைவர் சாயும்படி தான் பொருதபோரையேத்தி மலை முழுதுங்கொடியெடுத்தாதலாற்றனது வெற்றியுந் தோல்வியு மெனவேயாதலின், இனி மலர்மார்பன் மிக்க காவலை யிகழ் தலின்றித் தானினைத்திருக்கின்ற காரியங்களும் எம்மையறி வித்தல் லது மேனினைக்கவும் வேண்டாவென்க. (355) 848. ஆம்பொருள்க ளாகுமது யார்க்குமழிக் கொண்ணாப் போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணந் தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்றுதர லின்றே வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. அதுவென்றொருமையாற்சுட்டினார், அழிக்க வொண்ணாத் தன்மையைக்கூறலின். ஆம்பொருள்களாகும் போம் பொருள்கள் போகும்; அவையிரண்டும் யார்க்கு மழித்தலா காத்தன்மை யிரு வினையின்கூறாகியவியல்பு. அவ்வன மாதலிற் றானுங் கட்டியங் காரனாக்கத்திற்குஞ் சச்சந்தனழிவிற்கும் வருந்தாதொழிகவென்க. தேம்புனலை நீர்க்கடலுஞ் சென்று தரலின்று – உப்புநீரை யுடையகடலும் உலகத்தேவந்து இனிய நீரைத்தருதல் ஒருகாலத்து மில்லை. என்றது: தீயகுணத்தையுடை யோர்பிறர்க்கு இனிமை செய்யவறியா ரென்றவாறு. எனவே கட்டியங்காரன் எக்காலமு நமக்குத் தீங்குசெய்வனென்றும், இக்குணத்தாலவனுக்குக் கேடு விளையு மென்றுங் கூறினான். *”யார்கண்ணு மிகந்துசெய் திசை கெட்டா னிறுதி போல் - வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலின்”(கலி.10) என்றார் பிறரும். வீங்குபுனல்யாறுமழை வேண்டி யறியாது - மேகம் யாற் றுக்கு மிக்கநீரைக் கொடுக்க விரும்பியறியாது; என்றது: உவர்த்த நீரை நன்நீராக்கி யாற்றிற்குக் கொடுப்பே னென்னுங்கருத்தின்மை மேகத்திற்கியல்பென்றவாறு. எனவே நற்குணமுடையோர் எக்காலத்தும் பிறர்க்கினிமைசெய்வாராதலிற்றான் எக்காலத்தும் பிறர்க்கு இனியவைசெய்கவென்றானாம். இ - ள். அழிக்கொண்ணாது அது பொறியின் வகை வண்ணம்; அதுவேயுமன்றிக் கடலுந் தரலின்று; மழையும் வேண்டியறியாதென்று வாசித்தானென்க. இனி “எள்ளுநர்கள்” (சீவக.847)என்னுங்கவியளவும் ஓலைப் பாசுர மாக்கி, அதுகேட்ட சீவகன் கூறுகின்றானாக்குவாருமுளர். இதற்கு இகலேத்திக் கொடியெடுத்ததென்று அவன்வியந் ததற்குத் தான் வென்றானாகக்கூறாது ஆக்கமுங்கேடும் பொறியின் வகை யென்றானாக்குக; ஆக்கத்திற்கு மழிவிற்கும் ஆற்றிலே யுவமைகொள்க; கடல்வேண்டாதிருக்கப் புனல் தானேபோனது போம்பொருட்கும், யாறு மேகத்தை வேண்டாதிருக்கப் புனறா னேநிறைகை ஆம்பொருட்கு முவமை. சென்றுதரல் - போய்க் bகாண்டுவருதல். (356) 849. மன்பெரிய மாமனடி மகிழ்ந்துதிசை வணங்கி யன்பினக லாதவனை விடுத்தலர்ந்த கோதைக் கின்பநிலத் தியன்றபொரு ளிவையிவைநுங் கோமான் றந்தவெனச் சொல்லிநனி சாமிகொடுத் தானே. இ - ள். சாமி மிகப்பெரியமாமனடியைத் திசைநோக்கி வணங்கி அன்பினால் நீங்காதுநின்றதானைப்போகவிட்டுத் தந்தைக்கு நுங்கோ மான்றந்த இன்பநிலத்திற்கு நனியியன்ற பொருள் இவையிவை யெனச்சொல்லிக் கொடுத்தானென்க. இன்பநிலம் - அனுபவிக்குந் துறைகள். அடிவீழ்ந்தும் பாடம். (357) 850. குங்குமமுஞ் சந்தனமுங் கூட்டியிடு கொடியா வெங்கணிள முலையின்மிசை யெழுதிவிளை யாட்டிக் கொங்குண்மலர்க் கோதையொடு குரிசில்செலும் வழிநா ளங்கணகர்ப் பட்டபொரு ளாகியது மொழிவாம். இ - ள் குருசில் கோதையுடையமுலைமேலே யெழுது கொடி யாகவெழுதி, அவளோடேவிளையாடிச் செல்லும் பின்னாட் களிலே நகரியிற்பிறந்த நீர்விளையாட்டும், பிள்ளையாரிடத்தாகிய தன்மையு மினிக் கூறுவேமென்றாரென்க. என்றது - அதுகாரணத்தாற் பிள்ளையாரிடத்துப் பிறந்த செய்தி களை, பொருளாகியதென்பது ஒருசொல்லுமாம். (358) காந்தருவதத்தையாரிலம்பக முற்றிற்று. நான்காவது குணமாலையாரிலம்பகம். 851. காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி யாசற நடக்கு நாளு ளைங்கணைக் கிழவன் வைகிப் பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவஞ் செய்தான். அயனமென்னாது அயணமெனப் பாகதத்தாற்கூறினார், செய்யுட் சொல்லென்று. வைகி - வைக. கூதிர்தொடங்கிப் பாடி வீட்டிலிருந்து இளவேனிற்கண் இன்பநுகர்தற்கு மீள்வராதலிற் பாசறைப்பிரிவுதீர்க்கு மென்றார். இ - ள். வெய்யோன், வடதிசைச்செலவைக்கருதி யிருடிகள் சிந்தைபோல மாசற்றவிசிம்பிலே குற்றமற நடக்குநாள்களிற் பின்பனிநீங்கும் பங்குனித்திங்களிலே காமன்றங்கும்படி யிள வேனி லைப்பிறப்பித்தானென்க. “தலைவந்ததிளவேனில்” (சீவக.648)என முன் நிகழ்கின்ற தாகக் கூறியகாலத்தே யீண்டு நீர் விளையாட்டு நிகழ்கின்ற தென்பார் அக்காலத்தைச்சிறப்பித்துக்கூறுகின்றார். (1) 852. தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர் கொம்பி னாடவர் போல வண்டு மடைந்தன வளியிற் கொல்கி யூடிய மகளிர் போல வொசிந்தன வூட றீர்க்குஞ் சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறந் தழீஇய தும்பி. இ-ள். பூவையணிந்த மகளிரையொத்த கொம்பு; அவரிடத்து ஆடவரடையுமாறுபோல அக்கொம்புகளிலே வண்டுகளு மடைந்தன; அவ்வாடவரிடத் தொல்கியூடிய மகளிரைப் போலே அவ்வண்டின் கனத்திற்கு அக்கொம்புகள் ஒருபக்கத்தே தாழ்ந்தன; அவர்சிறு புறத்தைத்தழுவி ஊடலைத் தீர்த்து எதிர்முகமாக்கும் பெரியோரைப் போலத்தும்பிகள் சென்று அங்ஙனமுயர்ந்த சிறுபுறத்தைத்தழுவி ஒக்கநிறுத்தின வென்க. சிறுபுறம் - உயர்ந்தபக்கம். “சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய” (தொல்.கற்பு.13)என்றலின், அறிவிற்பெரியோரைச் சேடரென்றார். அளியிற்கு -பிறர்க்கும் இவ்வாறருளுளதா மென்று புலவிநுணுக்கத் திலூடிற்றுமாம். வேறு. 853. நான மண்ணிய நன்மை மங்கையர் மேனி போன்றினி தாய்விரை நாறிய கானங் காழகி லேகமழ் கண்ணிய வேனி லாற்கு விருந்தெதிர் கொண்டதே. இ - ள். அங்ஙனம்பூத்தலின் மணஞ்செய்த மகளிர் மேனி போல் இனிதாய்விரை நாறியகானம் அக்காமனுக்கு விருந் திடுதலை மேற்கொண்டதென்க. (3) 854. கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட் டும்பி வண்டொடு தூவழி யாழ்செய வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந் தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே. இ - ள். கொம்பிலே குயில்கூவஎல்லாருங் குடைந்து விளையாடும்வாவியிலே தும்பியும்வண்டுந் தூவழியென்கின்ற பண்ணை யுடைய யாழைக்காட்ட எரிகின்ற காமத்தை விரும்பு தற்குக் காரணமான வேனில்வருதலாலே நகரி மேலாகிய துறக்கத் தின்றன்மையை யொத்ததென்க. கூய் - கூவ. (4) 855. நாக நாண்மலர் நாறுக டிநக ரேக வின்பத்தி ராசபுரத் தவர் மாக நந்தும ணங்கமழ் யாற்றயற் போக மேவினர் பூமரக் காவினே. இ-ள். இணையிலாவின்பத்தையுடைய நகராகிய இராசமா புரத்தார் யாற்றயலின்மாகநந்திய மணங்கமழ்பூமரக்காவிற் போகத்தை மனத்தாலேபொருந்தினாரென்க. பொழிலுள் நுகர்ச்சியை முன்புகருதிப் பின்பு நீர் விளையாடக் கருதுகின்றமைகூறுகின்றார். (5) 856. முழவங் கண்டுயி லாதமு துநகர் விழவு நீர்விளை யாட்டுவி ருப்பினாற் றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக் கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே. இ - ள். இல்வாழ்க்கையாலுண்டான குற்றமற்ற கேவல மடந்தையையுடையகிழவனது பொன்னெயில்வட்டம்போன் முதியநகர் நீர்விழவாகிய விளையாட்டில் விருப்பாலே போகலுற்ற தென்க. இனி மூதெயிலுக்குத் திருநாளுக்குப் போவாரைப் போல வென்றுமாம். (6) 857. வள்ள நீரர மங்கைய ரங்கையா லுள்ளங் கூரத்தி மிர்ந்துகுத் திட்டசாந் தள்ள லாயடி யானையி ழுக்கின வெள்ள நீர்வளை வெள்ளமு ரன்றவே. இ - ள். அரமங்கையரைப்போல்வார் தமதுமனங் களிப்பு மிகும்படி அங்கையாலே திமிர்ந்து உகுத்தசாந்து பனிநீர் சேறாய் யானை யடியிழுக்கின;கடலிற் பிறந்த சங்குகளும் வெள்ள மென்னு மெண்ணாக முழங்கினவென்க. (7) 858. நீந்து நித்தில வூர்தி நிழன்மருப் பேந்து கஞ்சிகை வைய மிளவெயிற் போந்து காய்பொற் சிவிகைநற் போதகங் கூந்தன் மாலைக் குமரிப் பிடிக்குழாம். 859. ஏறு வாரொலி யேற்றுமி னோவெனக் கூறு வாரொலி தோடுகு லைந்துவீழ்ந் தாறி னார்ப்பொலி யஞ்சிலம் பின்னொலி மாறு கொண்டதொர் மாக்கட லொத்தவே. இவையிரண்டுமொருதொடர். கடத்தற்கருமையின், நீந்துமென்றார். இ - ள். மாந்தர்நெருக்கத்தைக் கடந்து போகின்ற முத்தின் பந்தர், மருப்பாற் செய்தஉருவுதிரையையுடைய கொல்லா வண்டி, ஒளிபுறப்பட்டு இளவெயிலைக் கெடுக்கும் பொற் சிவிகை, போதகம், பிடித்திரளென்கின்றவிவற்றைத் தாமே யேறு வாரொலி, கூடப் போகின்ற திரள்குலைந்துஅவர்களைக் கூடுதற்குவிரும்பிநின்று ஏறவிடுமினென்று கூறுவாரொலி, ஆர்ப் பொலி, சிலம்பொலி, இவ்வோசைநெறியாலே கடலோடு மாறுகொண்டதோர் கடலொத்த வென்க .(8 - 9) 860. பொன்செய் வேய்த்தலைப் பூமரு மண்டல மின்செய் வெண்குடை பிச்ச மிடைந்தொளி யென்செய் கோவென் றிரிந்த திழைநிலா மன்செய் மாணகர் வட்டவிட் டிட்டதே. இ- ள். பொன்னாற்செய்த காம்பிடத்தில்வட்டக்குடை, வெண் குடை, பீலிக்குடை, இவைநெருங்குதலின், ஞாயிற்றினொளி இனி யானென்செய்வேனென்று கெட்டது; அப்பொழுது பூண்களினொளி நகரெல்லையளவும் வட்டமாக விட்டெறித்த தென்க. மன் - பெருமை. (10) 861. திருந்து சாமரை வீசுவ தெண்கடன் முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள் விரிந்து வானின் விதானித்த தொத்ததே. இ - ள். அகிற்புகை முறுக்கின மாலைகளை யொவ்வா நிற்கச் சாமரைவீசுவனமுரிந்ததிரையையொத்தன; அப்பொழுது தூவின பூந்துகள் பரந்து வானிலேயொருமேற்கட்டி கட்டின தன்மையை யொத்ததென்க. (11) 862. சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரண் மாலை யூர்திகள் வைய மிவற்றிடைச் சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன நீல மேகநிரைத்தன போன்றவே. இ-ள்.சோலைமறைத்த மலையினின்றுந் தூங்குமருவித் திரள் போலு முத்த மாலையையுடைய பீலிவேய்ந்த வூர்திகள் கொல்லா வண்டி இவற்றிற்குநடுவே பாகன் பயிற்றின நிலைக் கஞ்சி யானைகள் செல்வன மேகநிரைத்தன போன்றவென்க. (12) 863. வழங்கு வங்கக்க லிங்கக் கடகமு மழுங்கு மாந்தர்க் கணிகலப் பேழையுந் தழங்கு வெம்மதுத் தண்டுந் தலைத்தலைக் குழங்கன் மாலையுங் கொண்டு விரைந்தவே. 864. வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும் பூசு சுண்ணமு முண்ணு மடிசிலுங் காசில் போகக் கலப்பையுங் கொண்டவண் மாசின் மாசனம் வாயின் மடுத்தவே. இவையிரண்டுமொருதொடர். மரக்கலத்தில்வந்த கலிங்கமுங் கலமுமென்க. இ-ள். மாசனம், பிறர்க்குக் கொடுக்கும் புடைவைப் பெட்டி களையும், அணிகலங்கெடுத்தலையுடையார்க்குக் கொடுத்தற்கு அணிகலப் பெட்டிகளையும், மதுப்பெய்து முழங்குகின்ற மூங்கிற் குழாய்களையும், மாலையையும் இடந்தோறும் இடந்தோறும் கொண்டு, எண்ணெய் முதலியவற்றையும், போகத்திற்குரிய யாழ் முதலியவற்றையும்மிட்ட பெட்டிகளையும் கொண்டு, விரைந்து அந்நகரின் வாயிலிலே நெருங்கின வென்க. 865. பாட லோசையும் பண்ணொலி யோசையும் ஆட லோசையும் ஆர்ப்பொலி யோசையும் ஓடை யானை யுரற்றொலி யோசையும் ஊடு போயுயர் வானுல குற்றவே. இ - ள். அப்பொழுது, பாடுதலாறபிறந்தவோசையும், யாழ் வாசித்தலாற் பிறந்தவோசையும், ஆடுதலாற் பிறந்த இயங்களி னோசையும், ஆரவாரமொலிக்கின்றவோசையும், யானை பிளிறு கின்ற முழக்கினாற்பிறந்தவோசையுந் தம்மிற்கலந்து போய்வானு லகைச்சேர்ந்தவென்க. (15) 866. பூக்க ணீர்விளை யாடிய பொன்னுல கோக்க நீள்விசும் பூடறுத் தொற்யென வீக்க மாநகர் வீழ்ந்தது nபான்றவண் மாக்கண் மாக்கடல் வெள்ள மடுத்ததே. இ - ள். பொன்னுலகு பூக்களையுடைய நீரிலே விளையாட வேண்டி விசும்பையூடறுத்துவந்து நிலத்திலே விரையவீழ்ந்த தன்மை போலே மாக்களாகியபெரியகடல்மாநகரில் வாயிலைக் கடந்து செல் கின்றஅவ்விடத்தில் வெள்ளத்தை நோக்கிமுகஞ் செய்ததென்க. (16) 867. மின்னு வாட்டடங் கண்ணியர் வெம்முலை துன்னு வாட்டந் தணித்தலிற் றூநிறத் தன்ன வாட்டத் தணிமலர்ப் பூம்பொழி லென்ன வாட்டமு மின்றிச்சென் றெய்தினார். மின்போலுமிடையை மின்னென்றார். வாட்டமும், உம்மை - இசைநிறை. என்னவெய்தினாரென்க. இனி என்னவாட்ட முமெனக் கூட்டிக் கண்ணியர் தம்முலை நெருங்கு தலிற் நமக்குப் பிறந்த வாட்டத் தினைத் தாம் பொறுத்தலின் மேல் ஒருவாட்டமுமின்றி அன்னவிளையாட் டையுடையதொரு பொழிலிலே யெய்தினா ரென்றுமாம். இ - ள். வெம்முலைநெருங்குதலாற் றமக்கு வருகின்ற வருத்தத் தினை வாட்டடங்கண்ணியருடைய மின்போலுமிடை பொறுத் தலின், அவர் ஊர்திகளினின்றுமிழிந்து வாட்டமின்றி நடந்து சென்று இஃதுஅன்னங்களின் விளையாட்டினை யுடையதொரு பொழிலென்றுகூறும்படி அப்பொழிலைச் சேர்ந்தாரென்க. (17) 868. அள்ளு டைக்குவ ளைக்கய நீடிய கள்ளு டைக்கழு நீர்ப்புனற் பட்டமும் புள்ளு டைக்கனி யிற்பொலி சோலையு முள்ளு டைப்பொலி விற்றொரு பாலெலாம். அள்ளிக்கொள்ளுந் தன்மையையுடைய கயம். நீடிய புனற் பட்டம் - நீரறாத ஓடை. கனியாற் பொலிந்த புள்ளுடைச்சோலை. இஃது ஆற்றங்கரை. இ - ள் அப்பொழிலில் ஒருபாலெல்லாம் கயத்தையும் பட்டத்தையுஞ் சோலையையுமுள்ளே யுடைத்தான பொலிவிற் றென்க. (18) 869. செம்பு றக்கனி வாழையுந் தேன்சொரி கொம்பு றப்பழுத் திட்டன கோழரை வம்பு றக்கனி மாத்தொடு வார்சுளைப் பைம்பு றப்பல விற்றொரு பாலெலாம். இ - ள். ஒருபாலெல்லாம் சிவந்தபுறத்தையுடைத்தாய்க் கனிகின்ற வாழையினையும், கொழுவிய அரையினையுடைத்தாய்ப் புதுமையுறக் கனிகின்ற மாவினையும், கொம்புறப்பழுத்துத் தேன்சொரி சுளையை யிட்டனவாகிய பைம்புறப் பலவினையு முடைத்தென்க. (19) 870. கள்ள வானர முங்கன்னி யூகமுந் துள்ளு மானொடு வேழத் தொகுதியும் வெள்ளை யன்னமுந் தோகையும் வேய்ந்தவ ணுள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே. இ - ள். அப்பொழிலிடம், வானரத்தையுங் கருங்குரங்கை யும் மானையும் வேழத்திரளையும் அன்னத்தையும் மயிலையுமணிந்து, துணையைநினைப்பாரை நெஞ்சைவிரும்பப்பண்ணு மேன்க. (20) 871. கோக்க ணங்கொதித் தேந்திய வேலென நோக்க ணங்கனை யார்நுகர் வேய்தலிற் றாக்க ணங்குறை யுந்தடந் தாமரைப் பூக்க ணம்பொழிற் பட்டது போன்றதே. இ - ள். அங்ஙனம் புகற்றுதலின், வேலென நோக்குகின்ற நோக்கினையுடையஅணங்கனையார் கணவரிடத்து நுகர்ச்சி யால் அவயவங்கள்செவ்விபெறுதலின், அவருறைவிடம் எல்லா ரிடத்தினுஞ்சென்றுசேருந் திருத்தங்குந் தாமரைப்பூக்கணம் ஓடையை யொழிய ஒருபொழிலிலேயுண்டான தன்மையை யொத்ததென்க. முகமுதலியன தாமரைக்குவமை. நோக்கால் அணங்கனை யாருமாம். (21) 872. கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவக மூறித் தேன்றுளித் தொண்மது வார்மண நாறி நாண்மலர் வெண்மணற் றாய்நிழ றேறித் தெண்கயம் புக்கது போன்றதே. இ - ள் முற்கூறிய காவினுள்ளாகியவிடம் வைத்ததேனூறித் துளித்துப் பூவினின்றும் வார்கின்ற மதுமணநாறி மணல்தாய் நிழல்தெளிந்து இக்குளிர்ச்சியாலே கயத்திலேபுக்கிருந்தாற் போன்றிருந்ததென்க. (22) 873. காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம் பூவை யுங்கிளி யும்மிழற் றப்புகுந் தாவி யந்துகி லாரமர்ந் தார்களே. இ - ள். பாலாவிபோலுந் துகிலையுடைய குணமாலையும், சுரமஞ்சரியும், அந்த வுள்ளாகிய காவிலே திரையைவளைத்து அதினுள்ளே மிழற்றப்புகுந்துஅரமங்கையர் போன்று மேவி யிருந்தாரென்க. (23) 874. பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவண் மௌவலங்குழ லாள்சுர மஞ்சரி கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோ டெவ்வந் தீர்ந்திருந் தாளிது கூறினாள். 875. தூமஞ் சூடிய தூத்துகி லேந்தல்குற் றாமஞ் சூடிய வேற்றடங் கண்ணினாள் நாமஞ் சூடிய நன்னுத னீட்டினாள் காமஞ் சூடிய கண்ணொளிர் சுண்ணமே. இவையிரண்டுமொருதொடர். 1.எவ்வந்தீர்ந்திருந்தாள்-முன்பு ஒரு வெறுப்புமின்றியிருந்தவன். 2. அல்லிவினையுடைய கண்ணினாள் - குணமாலை. இ - ள். அங்ஙனமிருந்தகாலத்தே குணமாலைபெயரைச் சுமந்த மாலையென்னுஞ்சேடி எல்லாரும் விரும்புந்தன்மையை மேற்கொண்ட சுண்ணத்தை நீட்டினாள்; அதுகண்டு கொடி போல்பவள் குழலாள்சுரமஞ்சரி அவள் குணமாலையுடனே இவ் வார்த்தையைக் கூறினாளென்க. அதுமேற்கூறுகின்றார். (24-25) 876. சுண்ண மென்பதொர் பேர்கொடு சோர்குழல் வண்ண மாலை நுசுப்பு வருத்துவா னெண்ணி வந்தன கூறிவை யோவென நண்ணி மாலையை நக்கன ளென்பவே. இ - ள். குழலினையும்நுசுப்பினையுமுடைய மாலாய் ! இவை சுண்ணமென்பதொரு பெயரையேறிட்டுக் கொண்டு நின்னை வருத்துவான்கருதி வந்தனவோவென்றணுகி அவளைத் தான் நக்காள்; நக்குச் சொல்லின் என்னுடையசுண்ணங்களைச் சொல்லாயெனச் சொன்னாளென்க. (26) 877. பைம்பொ னீளுல கன்றியிப் பார்மிசை யிம்ப ரென்சுண்ண மேய்ப்ப வுளவெனிற் செம்பொற் பாவையன் னாய்செப்பு நீயெனக் கொம்ப னாளுங் கொதித்திது கூறினாள். இ - ள். அதுகேட்டகுணமாலை பாவையன்னாய், தேவருல கினன்றி இவ்வுலகில் இவ்விடத்துஎன் சுண்ணத்தையொப்பன வேறு சிலசுண்ணமுளவென்றறிவோர் கூறின், நீயும் இப்பொழுது நின் சுண்ணத்தையும் இதற்கொக்குமேன்று கூறுவாயாக வென்று கூற, அதுபொறாதே சுரமஞ்சரியுங் கொதித்து இதனைக் கூறினா ளென்க. அது மேற்கூறுகின்றார். (27) 878. சுண்ணந் தோற்றனந் தீம்புன லாடல மெண்ணில் கோடிபொன் னீதும்வென் றாற்கென வண்ண வார்குழ லேழையர் தம்முளே கண்ணற் றார்கமழ் சுண்ணத்தி னென்பவே. தோற்றனம் - வினையெச்சமுற்று. இ - ள் சுண்ணந்தோற்றுப் புனலாடவுங் கடவேமல்லேம்; மாற்றற்ற பொன்கோடியென்னு மிலக்கத்தை அருகனுக்குக் கொடுக்கக்கடவேமென்று கூறினாள்; அங்ஙனங்கூறவே ஏழை யரிருவருஞ் சுண்ணங்காரணத்தால் நட்புக்குலைந்தாரென்க. (28) வேறு. 879. மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழற் கொல்லியல் வேனெடுங் கண்ணியர் கூடிச் வொல்லிசை மேம்படு சுண்ண வுறழ்ச்சியுள் வெல்வது சூதென வேண்டி விடுத்தார். கொல்-கொற்றொழில். இ-ள். மாலையினையுங் குழலினையுமுடைய இருவருங் கூடிச் சுண்ணத்தினது மாறுபாட்டிலே வெல்லுமது நமக்குச் சொல் லும் புகழ்மேம்படும் வெற்றியென்று அவ்வெற்றியை விரும்பி அவற்றைக்காட்டுதற்குப் போகவிட்டாரென்க. (29) 880. இட்டிடை யாரிரு மங்கைய ரேந்துபொற் றட்டிடை யந்துகின் மூடிய தன்பினர் நெட்டிடை நீந்துபு சென்றனர் தாமரை மொட்டன மென்முலை மொய்குழ லாரே. இட்டிடையார்- குணமாலையும், சுரமஞ்சரியும். இருமங் கையர் - கனகபதாகையும், மாலையும். மொய்குழலார் - சேடியர். இ - ள். இட்டிடையாருடைய மொய்குழலார் சுண்ணத் தினைத் தட்டிலேயிட்டுத் துகிலான்முடிக்கொண்டு செல்ல, அதன்பின்னே இருமங்கையரும் இவைகாட்டுதற்குக் கூடச் சென்றாரென்க. (30) வேறு. 881. சீர்தங்கு செம்பொற் கொடிமல்லிகை மாலை சேர்ந்த வார்தங்கு பைம்பொற் கழன்மைந்தர்கைக் காட்ட மைந்த ரேர்தங்கு சுண்ண மிவற்றின்னலம் வேண்டின் வெம்போர்க் கார்தங்கு வண்கைக் கழற்சீவகற் காண்மி னென்றார். சீர்தங்கு - அடை. செம்பொற்கொடி - கனகபதாகை. மாலை யென்னும் பெயர்க்கேற்ற மல்லிகையடைகூறினார். இ - ள். கொடியுமாலையுஞ்சேர்ந்து மைந்தர்கையிலே அவற்றைக்காட்டஅவர் கூறுவார்: இவ்விரண்டும் நல்ல சுண்ணம், இவற்றின் நன்மை அறியவிரும்பிற் போரினையுங் கையினையுங் கழலினையுமுடைய சீவகனைக் காண்பீராக வென்றாரென்க. (31) 882. வாண்மின்னு வண்கை வடிநூற்கடற் கேள்வி மைந்தர் தாண்மின்னு வீங்கு கழலான்றனைச் சூழ மற்றப் பூண்மின்னு மார்பன் பொலிந்தாங்கிருந் தான்வி சும்பிற் கோண்மின்னு மீன்சூழ் குளிர்மாமதித் தோற்ற மொத்தே. வாள்மின்னுதற்குக் காரணமான கை. மைந்தர் - தோழரும் நபுலவிபுலரும் வீங்குகழல் - விகாரம். கழலான் - நந்தட்டன். அப்பூண்மின்னு மார்பனென்றதுமுன்னிற்கவியில் அவர் கூறிய சீவகனை. இ-ள். அப்பூண்மின்னுமார்பன் அவர்செல்கின்றபொழுது, மைந்தர் கழலான் இவர்கள் தன்னைச்சூழஅப்பொழிலிடத்தே பொலிவுபெற்று விசும்லிலே கோண்மீனும் மின்னுமீனுங் சூழப் பட்ட மதித்தோற்ற மொத்திருந்தானென்க. ஞாயிறுபோல்வானைக் கலைதோற்றுவிப்ப இருத்த தலின், ஈண்டு மதியை உவமைகூறினார். “பன்மீனடுவட் பான்மதி போல - வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகி” (சிறுபான்.219.20) என்றார் பிறரும். இராகு கேதுக்களையொழிந்த ஏழுகோளுஞ் சூழப்பட்ட தொருமதி இல்பொருளுமை. தோழர் நால்வருந் தம்பிமார்மூவருங் கோண் மீனுக்குவமை. இனி ஞாயிறுந்திங்களுந் தனக்குவமை யாதலின், ஒழிந்தவேழுகோளுமாம். மின்னுமீனுக்கு ஒழிந்த தோழருவமை. இனிக் கழலானாகிய மார்பனென் பாருமூளர். (32) வேறு. 883. காளை சீவகன் கட்டியங் காரனைத் தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல் வாளை வவ்விய கண்ணியர் வாழ்கழற் றாளை யேத்துபு தங்குறை செப்பினார். 884. சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக் கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங் கண்ணிற் கண்டிவை நல்லக ருங்குழல் வண்ண மாலையி னீரெனக் கூறினான். இவையிண்டுமொருதொடர். 1. செய்ந்நன்றியறிந்து கைம்மாறுசெய்யக்கருதலும், பகைவர் செய்த தீங்குகுறித்து அவர்க்குத் தீங்குசெய்யக்கருதுதலும் அரசநீதி யென்பது தோன்றத் தோளையீர்ந்திடவே துணிவுற்றவா ளென்றார். “ ஆதி யாயவ ரும்பகை நாட்டுதல்” (சீவக. 1920) என்றார்மேலும். 2. இவை நல்லவென்றது, குணமாலைசுண்ணத்தை. அவர்க்கு இரண்டும் நன்றென்றார்போலிருந்தது. பலவுங்கூடவிடித்தலின், இவையெனப்பன்மையாற் கூறினான். இ - ள். கண்ணியர்அவன்றாளை ஏத்தாநின்று அண்ணலே, இச்சுண்ணங்களைச்சூழ்ந்தறிந்து இவற்றில் நல்லனவற்றை எங்கட்குக்கூறென்று தங்குறை செப்பினார்; அங்ஙனம் அடியேங் குறையிதுவென்று அவர்கூறினவளவிலே கண்ணாலே பார்த்து மாலையினீர், இவை நல்லனவெனக் கூறினானென்க. (33.4) 885. மற்றிம் மாநகர் மாந்தர்க ளியாவரு முற்று நாறியுங் கண்டு முணர்ந்திவை பொற்ற சுண்ண மெனப்புகழ்ந் தார்நம்பி கற்ற தும்மவர் தங்களொ டேகொலோ. 886. ஐய னேயறி யும்மென வந்தனம் பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ நொய்திற் றேர்ந்துரை நூற்கட லென்றுதங் கையி னாற்றெழு தார்கமழ் கோதையார். இவையிரண்டுமொருதொடர். இ - ள். கோதையார் நின்னையொழிய மக்களெல்லாருந் தீண்டியும் மோந்தும் நோக்கியுமாராய்ந்து வேறுபாடுகூறாது இவை நல்லசுண்ணமென்று புகழ்ந்துவிட்டார்; நீகற்றதும் அவர்தங் களுடனன்றே, ஆதலின் நூற்கடலே, இவற்றின் வேறுபாடு சீவகனேயறியுமென்று பிறர்கூறக்கேட்டுவந்தேம், அவர்கூறிய வார்த்தை மெய்யாம்படி நின்னறிவைக் கூரிதாக்கி ஆராய்ந்து கடிதாகவுரையென்றுதொழுதாரென்க. நாறியெனவே மொந்துணர்ந்ததாம் (35-36) 887. நல்ல சுண்ண மிவையிவற் றிற்சிறி தல்ல சுண்ண மதற்கென்னை யென்றிரேற் புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ண மல்ல சீதஞ்செய் காலத்தி னாயவே. இ - ள். இவை நல்லசுண்ணம், இச்சுண்ணம் இவற்றிற் சிறிதுநல்லவல்ல; அதற்குக் காரணமெங்ஙனேயென்று கேட்பீ ராயின், பொற்புடைச்சுண்ணமானவை கோடையிலிடித்தவை, நல்ல வல்லாதவை மாரியிலிடித்தவையென்றானென்க. (37) 888. வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந் தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா மோரும் வையத்தி யற்கையன் றோவென வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள். நும்மிலே இதனை ஓர்ந்துபாருமென முன்னிலைப் பன்மை யாக்கினார்; ‘ஓரும்’ என்னும் முற்றுச் சொல், “பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை” (தொல்.வினை-30) என்ற சூத்திரத்தில் விளக்கின நிகழ்கால உம்மறன்றி எதிர்கால முணர்த்தும் முன்னிலைப் பண்மையாக்கலின், இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. இ - ள். கனகபதாகை, ஒருவர்மேல் அன்புற்றகாலத்து அவர் செய்யுந்தீங்குகளும் நல்லனவாம்; அன்பின்றியிருந்த காலத்து ஒவர் செய்யுநன்மைகளுந்தீயவாம்; இஃது உலகத்தியல்பன்றோ, இதனை நும்மிலே ஓர்ந்துபாருமென்றுகூறிப்பின்னும் ஒருமொழிவிளம்பினா ளென்க. (38) 889. உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னல் வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக் கள்சேய் கோதையி னாய்கரி போக்கினாற் றெள்ளி நெஞ்சிற் றெளிகெனச் செப்பினாள். இ. - ள். வள்ளலே, என்னெஞ்சு நீகூறிய தீங்குகளைக் கைக் கொள்ளும்படி யறிவித்தபின்னரல்லது. போகப்பெறாய்; நின்னை யான்றடுத்தேனென்று அவள் கூறினாள்; அதுகேட்டு அவனுங் கோதையினாய், சான்றாலுணர்த்தினால் நெஞ்சாலே ஆராய்ந்து தெளிகவென்று கூறினானென்க. போக்குதல் “நூலாற்போக்கினான்” என்றாற்போல் உணர்த்தன் மேற்று. (39) 890. கண்ணின் மாந்தருங் கண்ணிமை யார்களு மெண்ணி னின்சொ லிகந்தறி வாரிலை நண்ணு தீஞ்சொ னவின்றபுள் ளாதியா அண்ண னீக்கினஃ தொட்டுவல் யானென்றாள். இ - ள். அண்ணலே, எண்ணின், நின்சொல்லை மக்களினுந் தேவரினுங்கடந்தறிவாரில்லை, ஆதலின், அவர்களையொழியத் தம்மினத்தில் ஒன்றையொன்றழைத்த சொல்லையறிந்துஅதிலே பயின்ற பறவைமுதலாக இதனைத் தீதென்றுநீக்குமாயின், அதனைப் பொருந்துவேனென்றாளென்க.. (40) 891. காவில் லாழ்பவர் நால்வ ருளர்கரி போவர் பொன்னை யாயெனக் கைதொழு தேவ லெம்பெரு மாசொன்ன வாறென்றாள் கோவை நித்தில மென்முலைக் கொம்பனாள். நால்வரென்று உயர்திணையாற்கூறுதல் “ஒருவரைக் கூறும்” (தொல். கிளவி.27)என்னுஞ்சூத்திரத்து ஒன்றெனமுடித்தலாற் கொள்க. இ-ள் அங்ஙனமுடன்படுதலிற் சீவகனும் பொன்னனையாய், காவிலேவாழ்வன நான்குசாதியுள,அவை நடுவாயுணர்த்து மெனக்கூற, கொம்பனாள் எம்பெருமானருளிச் செய்தபடியா மித்தன்மை ஆமென்றாளென்க. “ஏவன்முரணும்” என்றாற்போல. (41) 892. மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன் றெங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் வண்டு காண்மகிழ் தேனினங் காண்மது வுண்டு தேக்கிடு மொண்மிஞிற் றீட்டங்காள். 893. சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமு மாலை யென்னு மடமயில் சுண்ணமுஞ் சால நல்லன தம்முளு மிக்கன கோல மாகக்கொண் டுண்மி னெனச்சொன்னான். இவையிரண்டுமொருதொடர். கண்ணுமனமும்போன்று சேர்ந்து எங்குங் கடிதாகவோடித் தட்டித் திரியுஞ் சுரும்புகாள் மிஞிறுகாளென்க. மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின் அதனை முற்கூறினார். கண்சென்றுழிச் செல்கின்ற மனத்தோடே உவமித்தலின் இதுநிரனிறை; இவை எல்லா மணத்திலுஞ்செல்லும். மருவுண்டு மகிழ்கின்ற வண்டுகாள் மதுவுண்டு தேக்கிடு கின்றதேன் காளென்க; இவை நல்ல மணத்தேசெல்லும். சுரும்புமுதலியன கூறும் பாஷையைச் சீகவகனுணர்ந்திருத்தலின், அதனாலவற்றை யழைத் தானென்று கொள்க; விக்கிரமாதித்தன் எறும்பின்பாஷையறிந்தானெற்று கதைகூறுகின்றமையின். “தாதுண்டும்பிபோது முரன்றாங்கு” (மதுரைக்.655) என்றும், “இரங்கிசை ஞிமிறொடு தம்பிதாதூத”(கலித்.33) என்றுங்கூறுதலிற் றும்பியதுகிளையாம் இந்நான்குமேன்க. “நண்டுந் தும்பியு நான்கறி வினவே - பிறவுமுளவேயக் கிளைப் பிறப்பே” (தொல்.மர.31) என்று தும்பிக்குச் செவியின்றெனவே இவற்றிற்குஞ் செவியின்றாமாதலாலே வருத்தமிகுதியான் இவற்றை நோக்கி வாளாகூறியதன்றி வேறன்று; இவைவந்துகரிபோதலில; கேள்வி யில்லனவருதலென்னை? என்பதுகடா அதற்குவிடை ஆசிரியர் நண்டுந் தும்பியுமென்று தும்பியைப்பின்வைத்தது மேல் வருஞ்சூத்திரத் தின் “மாவு மாக்களு மையறிவென்ப” (தொல்.மர.32)என்ற ஐயறிவு இதற்கு மேறுதற்கென்றுணர்க; இதனை வாராததனால் வந்தது முடித்தலென்னுந் தந்திரவுத்தியாற் கொள்கவென்று ஆண்டு உரைகூறிப்போந்தாம்; அதுவே யாசிரியர்கருத்தென்பது தசான்றோருணர்ந்தன்றே * “ பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த - தாதுண் பறவை பேதுற லஞ்சி - மணிநா வார்த்தமாண்வினைத் தேரன்” என்று அப்பொரு டோன்றக்கூறியதென்றுணர்க. இக்கருத்தான் இவருஞ் செவியுணர் வுண்டென்று கூறினார். இ-ள். அவர்அங்னங்கூறுமளவிற் சுரும்புகாள், மிஞிறீட்டங் காள், வண்டுகாள், தேன்காள்,நீர்வம்மினெனவிளித்து வந்த பின்னர் அவற்றை நோக்கிச் சுரமஞ்சரிசுண்ணமுங் குண மாலை சுண்ணமும் மிகவு நல்லனவாயினும் இவற்றில் நல்லனவற்றை நன்றாகக் கொண்டுண் மினென்று கூறினானென்க. இங்ஙனம் கூறாது தான் கற்ற விஞ்சையின் ஆணையாற் கேள்வி யுணர்வு பிறப்பித்தானெனின், அவை கரிபோதாலாகாவாம்; “எண்ணினின்சொ லிகந்தறிவாரிலை” (சீவக.890) என்ற லின், வெறாதிருத்தற்கு இருவரையும் மயிலென்றான். (42-43) 894. வண்ண வார்சிலை வள்ளல்கொண் டாயிடை விண்ணிற் றூவியிட் டான்வந்து வீழ்ந்தன சுண்ண மங்கை சுரமைய மாலைய வண்ண வண்டொடு தேன்கவர்ந்து ண்டவே. இ - ள். அங்ஙனங்கூறியவள்ளல் இரண்டனையுமிரண்டு கையிலுங் கொண்டு ஆகாசத்தேதூவினானாக, அப்பொழுது அவற்றின் மேற்சென்றசுரும்புமிஞிறும் இவை தீயவென்றுண் ணாதுபோதலின், சுரமை சுண்ணம் நிலத்தே வீழ்ந்தன. மாலை சுண்ணத்தை அவற்றின் மேற்சென்ற வண்டுந்தேனும் விரும்பியுண் டனவென்க. தூவியிட்டான் - ஒருசொல். சுரும்புமிஞிறு மொருகுணத் தாவாதலிற் சேர்ந்து ஒருகையைநோக்கின. மற்றையன ஒருகுணத் தவாதலிற் சேர்ந்துமற்றைக்கையைநோக்கின. உண்ணாமல் வந்த வற்றிற்கு வையாமல் இவையுண்டலிற் கடிதுண்டனவென்பது தோன்றக் கவர்ந்தென்றார். 895. தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம் வைத்த போன்முறு வற்றுவர் வாயினீ ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க் குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொனான். பவளத்தே உறைவன சிலநித்திலத்தைக்கொண்டுவந்து வைத்தாற் போலும் வாயினீரென்க. வேட்கைநிகழாதவிடத்து மகளிராயினாரைச் சிறப்பித்துக்கூறல் இயல்பென்பதுதோன்ற இருவரையுஞ் சிறப்பித்துக் கூறினான். தானோக்கிய நோக்கந் தானே யான் கூறிய நடுவுநிலைமை நுமக்குப் பொருந்திற்றோ வென்றுகூறும்படியாக அவர்களைப் பார்த்தானென்க. இ - ள். அங்ஙனமவையுண்டபின்பு அவன்நோக்கி வாயினீர், நங்கைமார்க்குயான் றேற்றினமுறைமையை மனங்கொள்ளும் படி கூறுவீரென்றானென்க. (45) 896. நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக் கோல மாக வெழுதிய போற்குலாய் ஞானலம் விற்கும் புருவத்து நங்கைகண் போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள். இ-ள். நீலமணியைக் கரைத்து நிறங்கொளுத்தி எழுதினாற் போல வளைந்து உலகைத் தமக்கு விலையாக விற்கும் புருவத்தினையுடைய சரமஞ்சரி கண்போல் தப்பாத வேலவனே, நீ தேற்றின முறைமையை யான் உடம்பிட்டுப் புகழ்ந்தேனென்றாளென்க. இஃது இவற்கு வேட்கை நிகழ்வது கருத்தாகக் கூறினாள்; அது மேல் “ என் மனத்தினுள்ளன”(சீவக. 2006) என்பதனானுணர்க. (46) வேறு. 897. சோலையஞ் சுரும்பிற் சுண்ணந் தேற்றிய தோன்ற றன்னை வேலையம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி மாலைக்கு வென்றி கூற மழையிடிப் புண்டோர் நாக மாலையத் தழுங்கி யாங்கு மஞ்சரி யவல முற்றாள். சுரும்புண்ணாதுபோகவே அதன்றீங்குவெளிப்படலின், அதனாற் றேற்றியவென்றார். இது வெதிரேகம். மிஞிற்றிற் சுரும்பு சிறத்தலின், அதனைக்கூறினார். முன்னும் அது நோக்கியன்றே கண்சென்றுழிச் செல்கின்ற மனத்தோடே அதனையுவமித்தது. முன்னர் வண்டுந்தேனு முண்டவென்றது அந்நுவயம். இ - ள். சுரும்பாற் றேற்றிய தோன்றலை வேலோவென்றையப் படுத்தினகண்ணார் தொழுதனராய் விரைந்துபோய்க் குண மாலைக்குவென்றிகூற, அதுகேட்டுச்சுரமஞ்சரி ஒருநாகமிடிப் புண்டு தானுறை கின்றவிடத்தே வருந்துகின்றார் போல வருத்த முற்றா ளென்க. ஆலயமென்றதுகன்னியாமாடத்திற்கு. (47) வேறு. 898. திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட பங்க யப்படு வொத்துளை பாவாய் நங்கை யென்னெடுரை யாய்நனி யொல்லே யிங்க ணென்றடி வீழ்ந்திரந் திட்டாள். இ-ள். திங்களின்கதிருழக்கப்பட்டதாமரைமடுவையொத்து இவ்விடத்தே மிகவும்வருந்துகின்றபாவாய், நங்காய், கடுக என்னுடனே முன்புபோலே நகையாடி யுரையாயென்றிரந் தாள் குணமாலையென்க. ஒத்துளை - ஒத்தாயென்றுமாம். (48) 899. மாற்ற மொன்றுரை யாண்மழை வள்ளலென் னேற்ற சுண்ணத்தை யேற்பில வென்றசொற் றேற்று வந்தென் சிலம்படி கைதொழ நோற்ப னேற்றனை நீயென வேகினாள். இ - ள். நின்மேல்விருப்பினால் எனதுநல்லசுண்ணத்தைத் தீதென்ற வாசியறியாதான் இனிஎன்னையும் விரும்பித்தானே வந்து அக்காலத்துச் சொல்லுஞ்சொல்லுட்படத் தோற்றுச் சொல்லி என்னடியைத் தொழும்படிநோற்பேன்; அவன் நின்னை விரும்பு தற்கு நீ முன்னேநோற்றாயென்று தன்குறிப்புக் கூறும்படி குணமாலையை நோக்கி அவளுரையாயென்றதற்குத் தானுரை யாளா யேகினாளென்க. இஃது உட்கோள். “பெருமையு முரனு மாடூஉ மேன” (தொல். களவு.7) என்பதனாற்றன் வேட்கைமறைத்தான். “தீண்டிலேனாயினுய்யேன்- சீறடி பரவ வந்தே னருளெனத் தொழுது சேர்ந்து”(சீவக.2062) எனமேற் கூறலின், ஈண்டுச் சொற்றோற்றடி தொழவென்று கருதினா ளென்றார். இக்கருத்து அங்ஙனமுடிக்கின்ற ஊழால் இவட்கு நிகழ்ந்தது. (49) 900. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக் கன்னி மாட மடையக் கடிமலர்க் கன்னி நீலக்கட் கன்னிநற் றாய்க்கவள் கன்னிக் குற்றது கன்னியர் கூறினார். இ - ள் அங்ஙனமேகிய புதிய நீலமலர்போலுங் கண்ணினை யுடைய கன்னி, கன்னியர் சூழச் சென்றுஅழிவில்லாத நகரிற் கன்னி மாடத்தைச் சேர்ந்தாளாக, அவள் நற்றாயாகிய சுமதி நீராடாது வருதற்குக் காரணங்கேட்டவட்கு அக்கன்னிக்குப் பிறந்த வருத்தத் தைச் சூழ்ந்துநின்ற அக்கன்னியர்கூறினாரென்க. அவள்நற்றாய்க்கென்க. (50) 901. கண்கள் கொண்ட கலப்பின வாயினும் பெண்கள் கொண்ட விடாபிற செற்றமென் றொண்க ணாளவ டாயவ டந்தைக்குப் பண்கொ டேமொழி யாற்பயக் கூறினாள். 902. விண்ணிற் றிங்கள் ளிவலக்குதன் மேயினா ரெண்ண நும்மக ளெண்ணமற் றியாதெனிற் கண்ணி னாடவர்க் காணினுங் கேட்பினு முண்ண லேனினி யென்றுரை யாடினாள். 903. இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபா டின்றெனா விக்கொர் கூற்ற மெனநையா நின்று நீலக்க ணித்திலஞ் சிந்தினாள். இவைமூன்றுமொருதொடர். 1. பெண்கள் - சாதிப்பன்மையுணர்த்திற்று. 2. மற்று - அசை. 3. தொன்றுவேறுபாடு - ஊழினால்வந்தவேறுபாடு. இ - ள். ஒண்கணாளாகிய அவளுடையதாய், கண்கள் ஒன்றன்குறிப்பினை ஒன்று தப்பாமற் கொண்ட கலப்பின வாயினும் வேறாகப் பெண்கள் தம்மனத்திற் கொண்ட செற்றங்களை விடாவென்று தானுட்கொண்டு அவடந்தை. குபேரதத்தனுக்கு நும்ம களெண்ணம்விண்ணிலே திரியுந் திங்களைத் திரியாமல் விலக்குதலை மேவினாரெண்ணமாயிருந்தது; அஃது யாதெ னின், ஆடவரைக் கண்ணாற்காணினும் அவர் பெயரைச் செவியாற்கேட்பினும் உண்ணேனென்று வஞ்சினங்கூறினா ளாதலால். இன்றுநீர்விளை யாட்டிலே ஏந்திழை சுண்ணத்தாற் றோற்றிய தொன்றுவேறுபாடு இன்று என்னாவிக்குக் கூற்றமென்று நையாநின்று தேமொழியாலே மனங்கொள்ள வறிவித்தாள்; அங்ஙனமறிவித்து அழுதாளென்க. (51-53) வேறு. 904. பட்டதெ னங்கைக் கென்னப் பாசிழைப் பசும்பொ னல்குன் மட்டவிழ் கோதை சுண்ண மாலையோ டிகலித் தோற்றாள் கட்டவிழ் கண்ணி நம்பி சீவகன் றிறத்திற் காய்ந்தா ளட்டுந்தே னலங்கன் மார்ப வதுபட்ட தறிமோ வென்றாள். இ - ள். அதுகேட்டு நங்கைக்குஇங்ஙனம்வருத்துதற்குப் பிறந்தது என்னென்று குபேரதத்தன் கேட்பச் சுமதிகூறுவாள்: அலங்கன் மார்பனே, சுரமஞ்சரி குணமாலையுடனே இகலிச் சுண்ணந் தோற்றாள்; தோற்றவடான் அதனைத்தேற்றின நம்பி சீவகன்றி றத்தாலே ஆடவரைக் காய்ந்தாள்; பிறந்தகாரியமது, அதனையறி வாயhகவென்றா ளென்க. (54) வேறு. 905. பள்ளிகொள் களிறு போலப் பரிவுவிட் டுயிர்த்தென் பாவை யுள்ளிய பொருண்மற் றஃதே லோபெரி துவப்பக் கேட்டேன் வள்ளிதழ்க் கோதை மற்று நகரொடுங் கடியு மேனும் வெள்ளநீ ணிதியி னின்னே வேண்டிய விளைப்ப லென்றான். மற்று - வினைமாற்று. ஓ - மகிழ்ச்சிக்குறிப்பு. இ - ள். அதுகேட்டவன் துயில்கொள்ளும்யானைபோல வருத்தந் தோன்றவுயிர்த்தனனாய் என்பாவை நினைத்த காரியம் வேறொன்றன்றி அத்தன்மையாயின் மிகப்பெரிதும் மனமகிழக் கேட்டேன்; அக்கோதை தெருவினன்றி நகரினுமுட்பட ஆளைக் கடியுமேனும் வெள்ளமென்னு மெண்ணையுடைய நிதியாலே அவள் விரும்பியவற்றை இப்பொழுதே முடிப்பேனென்றானென்க. (55) 906. இன்னதோர் காலத் தின்னா னொருமக ளின்ன தொன்றிற் கின்னதோ ரிடத்தி னெல்லை யாட்கடிந் தொழுகி னாள்போ லின்னதோர் நகரி னென்றாங் கென்பெயர் நிற்க வேண்டு மின்னதோ ராரந் தம்மோ வென்றுகொண் டேகி னானே. இதனால் அதுவேயன்றிப் புகழுநிறுத்துவேனென் கின்றான். போல் - ஒப்பில் போலி. * “ ஆங்கவுரையசை” “ஒப்பில் போலியு மப்பொருட்டாகும்” (தொல்.இடை29,30) என்றதனால் உரையசையின் பொருளு ணர்த்துமாயிற்று. ஆங்கென்றது அரசனிடத்தை. இ - ள். இத்தன்மைத்தானதொருகாலத்தே ஒருவணிக னுடைய ஒப்பில்லாத மகள் இத்தன்மைத்தான நகரிலேயென்று என்புகழ் நிற்கவேண்டும்; விலையில்லாததோராரத்தைத் தருவாயாக வென்று கூறி அதனை வாங்கிக்கொண்டு ஆங்கேகினா னென்க. “ நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்”(மதுரைக்.731) என்றார் பிறரும். 907. வையக மூன்றும் விற்கு மாமணி யார மேந்திச் செய்கழன் மன்னற் குய்த்துத் தன்குறை செப்ப லோடு மையென மன்ன னேவ வாள்வழக் கற்ற தென்ப கைபுனை பாவை யெல்லாங் கதிர்முலையாக்கி னானே. இ -ள். ஆரமேந்திக் கொண்டுசென்று மன்னனுக்குக் கொடுத்துத் தன்காரியத்தைச்சொன்னானாக, அவன் அதுகுறை யில்லை யென்று கூறுதலிற் றெருவில் ஆள்வழங்குதலற்றது; அப்பொழுது அம்மாடத்தில் ஆண்பாவைகளெல்லாமழித்துப் பெண்பாவை யாக்கினானென்க. (57) வேறு. 908. சென்று காலங் குறுகினுஞ் சீவகன் பொன்றுஞ் சாகம் பொருந்திற் பொருந்துக வன்றி யென்னிறை யாரழிப் பாரெனா வொன்று சிந்தைய ளாகியொ டுங்கினாள். இ -ள். வாழ்நாள் தன்னெல்லையைச் சென்று குறுகிற்றா யினும் என்னைக் கூடுமாயிற் சீவகனதுதிருத்தங்கு மார்பங் கூடுவதாக, அவனையொழிய என்னிறையை யழிப்பாரில்லை யென்று ஒரு மனத்தையுடையளாயிருந்தாளென்க. (58) 909. இன்பக் காரண மாம்விளை யாட்டினுட் டுன்பக் காரண மாய்த்துறப் பித்திடு மென்ப தேநினைத் தீர்மலர் மாலைத் னன்பி னாலவ லித்தழு திட்டாள். உள்ளென்றது இருவர்மனமும் ஒன்றாய் நடக்கின்ற கடு நட்பினை. இ - ள். குணமாலை, இன்பத்துக்குக்காரணமாங் கடுநட்புத் தானே பகைக்குங்காரணமாய் ஒருவிளையாட்டினால் நட்பினைத் துறப்பிக்கு மென்கின்ற பழவார்த்தையையே நினைத்து வருந்திய ழுதாளென்க. அது கடுநட்புப்பகைகாட்டுமென்னுபழமொழி. இனி விளை யாட்டினுள் அவ்விளையாட்டுத்தானே துன்பக்காரணமாய் இன்பத்தைத் துறப்பிக்குமென்ற பழமொழியுமாம். அது ‘விளை யாட்டே சலமா’ மென்னும் பழமொழி. (59) 910. தண்ணந் தீம்புன லாடிய தண்மலர் வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக் கெண்ணி யாயிர மேந்துபொற் றாமரை வண்ண மாமல ரேற்றிவ ணங்கினாள். எண்ணி-இந்நட்பினைப்பிரித்த தீவினைநீங்கும்வழி யிதுவென் றெண்ணி இ - ள். அங்ஙனம்வருத்தினவள் புனலாட்டுவேண்டி எண்ணிப் பிண்டியினானடிக்கு ஆயிரம்பொற்றாமரையையும் ஒழிந்தமலரினையு மேற்றி வணங்கினாளென்க. புனலாடப்போகின்றவள் இப்பிரிவிற்கும் பிராயச்சித்தம் பண்ணினாள். (60) 911. ஆசை மாக்களொ டந்தணர் கொண்கென மாசை மாக்கடன் மன்னவ னாடலின் மீசை நீள்விசும் பிற்றலைச் சென்றதோ ரோசை யாற்சன மொண்ணிதி யுண்டதே. மாசை - பொன்.ஆடுதல் - பிறத்தல். மிசை - மீசையென விகாரம். “உண்டற் குறிய வல்லாப் பொருளை-யுண்டன போலக் கூறலு மரபே” (தொல்.பொருளி.19)என்றதனால் உண்டதென்றார்; “குணனுண பட்டோர்”( கலித்.23) என்றார்போல. இ - ள். மாக்களோடு அந்தணருங் கொள்வாராகவென்று மன்னவன் பெரியதொரு கடனாகப் பொன்னிலே பிறத்தலின், அச்சனம் விசும்பிடத்திலே சென்றதோ ரோசையோடே அந்நிதியத்தைக் கைக்கொண்டதென்க. இனிப் பொன்னாகிய பெரியகடலை யாளுதலினென் றுமாம். ஆளுதல் - தானமிடுதல். (61) 912. மகர வெல்கொடி மைந்தனை வாட்டிய சிகரச் செவ்வரைத் தீநிறப் பொன்னெயி னிகரி னேமித னீணகர்க் காகென நகர நாலிரு கோடிந யந்ததே. இ -ள். நகரிலுள்ளார் காமனை வாட்டிய நேமிஸ்வாமிக ளுடைய பொன்மதிலை யுடைத்தாகிய செவ்வரைபோலும் ஸ்ரீகோயிலுக்கு ஆவதாகவென்றுசொல்லி எட்டுக்கோடி பொன்னை நீராடுதானமாகக் கொடுத்தாரென்க. இனிக்காமனை வாட்டிய பொன்னெயிலையுடைய நேமீசு வரருமாம். அளித்ததும் பாடம். (62) வேறு. 913. உவாமுத லிரவலர்க் குடைமை யுய்த்தவர் கவான்முதற் கூப்பிய கனக மாழையாற் றவாவினை யடைகரை தயங்கு சிந்தைநீ ரவாவெனு முடைகட லடைக்கப் பட்டதே. இ - ள். இரவலர்க்குப் பொன்னையொழிய யானை முதலிய வுடைமைகளை முற்படக்கொடுத்தவர்கள் பின்பும் அவ்விரவலர் காலடியிலே குவித்த பொற்கட்டியாலே அவருடைய கெடாத தீவினையாலுண்டாகியசிந்தாகுலமென்னு நீராலே அடை கரையுடைந்த ஆசையென்னுங்கடல் அடைக்கப் பட்ட தென்க.(63) வேறு 914. சீரர வச்சிலம் பேந்துமென் சீறடி யாரர வக்கழ லாடவ ரோடும் போரர வக்களம் போன்றுபொன் னார்புனல் நீரர வம்விளைத் தார்நிக ரில்லார். உவமவுருபு வினையெச்சமும் பெயரெச்சமுமாயே நிற்றலின், போன்று போலவெனத்திரிந்தது. புனலென்றது யாற்றினை; ஆகுபெயர். இ - ள். பொன்னிறைந்தயாறு களத்தையொக்கும்படி நிகரில் லாராகிய சிலம்பேந்தின சீறடியையுடையார்அரவக் கழலாடவரோடுங் கூட நீரரவத்தை விளைத்தா ரென்க. (64) 915 கார்விளை யாடிய மின்னனை யார்கதிர் வார்விளை யாடிய மென்முலை மைந்தர் தார்விளை யாட்டொடு தங்குபு பொங்கிய நீர்விளை யாட்டணி நின்றதை யன்றே. இ - ள். மைந்தர் தாரோடே, காரிலேநுடங்கிய மின்னை யொப்பாருடைய கச்சளாவிய முலை விளையாட்டு நிலை பெறா நின்று மிக்க நீர்விளையாட்டினழகு இடைவிடாது நின்றதென்க. (65) வேறு. 916. விடாக்களி வண்டுண விரிந்த கோதையர் படாக்களி யிளமுலை பாய விண்டதார்க் கடாக்களிற் றெறுழ்வலிக் காளை சீவக னடாக்களி யவர்தொழில் காண வேகினான். காளை - நந்தட்டன். இ - ள். களிவண்டுவிடாதேயுண்ணும்படி யீவரிந்த கோதை யருடைய படாமுலைபாய்தலால் விண்ட தாரையுடைய சீவகன் ஒழுக்கக்கேடு பண்ணாத களிப்பையுடையவர் விளை யாடுந் தொழிலைக் காணும்படியாகக் காளை அவ்விடத்தினின்றும் போனா னென்க. என்றது: சுண்ணந்தேறுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன்நீர்விளையாட்டின் வினோதங்காணப்போதற்குத் தானுந் தனக்குக்கூடுமவாகளுமாக வேறுபோயினானென்றவாறு. இவன் போகவே வினோதத்திற்குக்கூடும் புத்திசேனனும் ஒழிந் தோருஞ் சீவகனைக் கூடினாராம். இக்கவியை “ இவை யின் னனவும் பிறவும்” (சீவக.933)என்னுங்கவியோடே முடிக்க. (66) வேறு. 917. ஒன்றே யுயிரை யுடையீ ரொருவிப் போமி னிவள்க ணன்றே கூற்ற மாகி யருளா தாவி போழ்வ தென்றே கலையுஞ் சிலம்பு மிரங்க வினவண் டார்ப்பப் பொன்றேய் கொடியின் னடந்து புனல்சேர் பவளைக் காண்மின். இது முதல் அங்ஙனம் வேறுபோயினார் தம்மிற் கூறு கின்றனவாம். இ - ன். இவள் கண்ணல்லவோ கூற்றமாகி உயிரைப் போக்கு கின்றதாதலாற் சேமவுயிரின்றி ஒருயிரையுடையீர், நீங்கிப்போமி னென்றே கலையுஞ்சிலம்புமிரங்க வண்டார்ப்பக் காமவல்லிபோல நடந்துசென்று புனலைச்சேர்பவளைக் காண்மினென்க. (67) 918. அழல்செய் தடத்துண் மலர்ந்த வலங்கன் மாலை யதனை நிழ்ல்செய் நீர்கொண் டீர்ப்ப நெடுங்கண் ணிணையி னோக்கிக் குழையும் பூணு நாணுங் கொழுந னுவப்ப வணிகென் றிழைகொள் புனலுக் கீயு மிளையோ ணிலைமை காண்மின். கொழுநன்- வருணன். இ - ள். அழலையுடைய தடத்திலே மலர்ந்த அசைகின்ற பொன்னரிமாலையைத் தெளிந்தநீர்தானேகொண்டுபோக அதனை நோக்கி நின்கொழுநன்நின்னை விரும்பும்படி பூண்பாயாக வென்று குழைமுதலியவற்றையும்புனலுக்குக்கொடுக்கும் இளையோள் தன்மையைக் காண்மினென்க. (68) 919. கோல நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப் பீலி மஞ்ஞை நோக்கிப் பேடை மயிலென் றெண்ணி யாலிச் சென்று புல்லி யன்iம கண்டு நாணிச் சோலை நோக்கி நடக்குந் தோகை வண்ணங் காண்மின். இ - ள். மகளிர் பீலிமஞ்ஞையினாடலைக்கண்டு தங்கூந் தலை உலரும்படி பரப்பியிருப்ப, அதன்பெடை அவரைத் தன்றோகை மயிலென்று கருதிச்சென்றுபுல்லி அல்லாமைகண்டு நாணி நடவா நிற்கும்; இங்ஙனமயங்கும்படியிருந்த தோகைபோல் வாள் வடிவைக் காண்மினென்க. இது புல்லவிருத்தலிற் றோகையென்றார். இனிநாணவெனத் திரித்து, மகளிர் கூந்தலைப்பரப்பி யிருப்பப்பேடைமயில் அவர்களை நோக்கித் தன்பீலிமஞ்ஞையென்றெண்ணிப் புல்லி அல்லாமைதனைக் கண்டுநாண, அதுகண்டு தன்பெடை தன்ன யறிந்து புணரும்படி சோலையைநோக்கிப்போகின்ற தோகையின் வண்ணத்தைக் காண்மினென்றுமாம். (69) 920. மின்னொப் புடைய பைம்பூ ணீருள் வீழக் காணா ளன்னப் பெடையே தொழுதே னன்னை கொடியள் கண்டா யென்னை யடிமை வேண்டி னாடித் தாவென் றிறைஞ்சிப் பொன்னங் கொம்பி னின்றாள் பொலிவின் வண்ணங் காண்மின். இது தோழிவார்த்தை. அன்னப்பெடையென்றது தலை வியை. அன்னை-தோழிதாய். என்று - என்ன. இ - ள். பூண்வீழக்காணாளாய்ப் பெடையே, தொழுதேன் தாய்கொடியளாதலான், என்னையடிமையாக வேண்டின் நீநாடித் தாவென்றுஅவள்கூற, அதற்குநாணி இறைஞ்சி நின்றாள்; அவ் வண்ணத்தைக்காண்மினென்க. நீரசைதலிற் கண்டிலள். (70) 921. தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரி முலையாத் தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தி னூட்டிக் காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலு ணீங்கிப் பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சி காண்மி னினிதே. காமக்குழவி - காமத்தையுடைய இளமைச்செவ்வி; அது காமமாகிய பிள்ளையைவளர்ப்ப அவன்வாயிலாகச் சென்றா னென்றாற் போலவு நின்றது. இ - ள். கோதைபோல்வாள் தொடுத்த நரம்பு முலையாக, அவற்றிற்றோற்றிய கீதம்பாலாகச் சுரந்தூட்டிக் காமக்குழவியை வளர்ப்ப, அதுகேட்டுக் கணவன்புனலினின்றுநீங்கிப் புணர்ச்சி வேட்iகயாற்பொழிற்குப் போகின்றான் விருப்பம் இனிது காண்மினென்க. இதனால்முன்னே குளித்தேறிக் கூட்டத்தினைக் குறித்து யாழ்வாசித்தமை கூறினார். (71) 922. கடலம் பவளம் மணையிற் கனபொற் கயிற்றிற் காய்பொன் மடலங் கமுகி னூசன் மடந்தை யாட நுடங்கி நடலைந் நடுவின் மகளிர் நூக்கப் பரிந்த காசு விடலில் விசும்பின் மின்போன் மின்னி வீழ்வ காண்மின். இ - ள். கனத்த பவளப்பலகையிற்கோத்த பொற்கயிற்றாற் கமுகிலிட்டவூசலை மடந்தைநுடங்கியாடும்படி பொய்யான இடையினையுடைய மகளிர்நூக்க; அவர் கைதீண்டியற்றகாசு விசும்பினின்றும் விடுதலின்றி வீழ்கின்ற மின்போல மின்னி வீழ்கின்றவற்றைக் காண்மினென்க. (72) 923. நான நீரிற் கலந்து நலங்கொள் பூம்பட் டொளிப்ப மேனி தோன்ற விளங்கி வெளிப்பட் டதற்கு நாணி மான மகளிர் போல மணிமே கலைகள் பேசாத் தானந் தழுவிக் கிடப்பச் செல்வோ டன்மை காண்மின். இ - ள். பூம்பட்டு நானத்தையுடைய குளிக்கின்ற நீராலே நனைந்துஉடம்பிலே யொடுங்குதலிற் றோன்ற விளக்கித் தன்மேனி வெளிப்பட்டதற்கு நாணி மானத்தையுடைய மகளிரைப்போல மேகலைகள் பேசாதே யல்குலைத் தழுவிக் கிடப்பப்போகின்றவள் தன்மையைக் காண்மினென்க. நனைதலிற்பேசாதபடி பட்டழுந்திற்று. (73) 924. தீம்பாற் பசியி னிருந்த செவ்வாய்ச் சிறுபைங் கிளித னோம்பு தாய்நீர் குடைய வொழிக்கும் வண்ண நாடிப் பாம்பா லென்ன வெருவிப் பைம்பொற் றோடு கழலக் காம்போர் தோளி நடுங்கிக் கரைசேர் பவளைக் காண்மின். இ - ள். பசியாற் பாலுண்டற்கிருந்தகிளி தன்னைப் பரிகரிக் கின்ற தாய் தன்பசியையறியாது நீர்குடைதலதாலே, அவளைத் தவிர்க்குந்தன்மையிதுவென்றுநாடிப் பாம்பென்ன, அக்காம் போர்தோளி அதற்கு வெருவி நடுங்கித் தோடுகழல வந்துகரை சேர்பவளைக் காண்மினென்க. (74) 925. துணையி றோகை மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோன் மணியார் வளைசேர் முன்கைவலனுமிடனும் போக்கி யிணையி றோழி மார்க ளிறுமா லிடையென் றிரங்க வணியார் கோதை பூம்பந் தாடு மவளைக் காண்மின். இ - ள். பெடையில்லாத பீலிமயில் சுற்றிப்பறக்கின்ற ஈயலைப் பிடித்தற்குஅவற்றின் மேற்செல்லுங்கூறுபாடுபோலத் தோழி மாரிரங்கும்படிகோதை கையிற்பந்தை இடத்திலும் வலத்திலும் போக்கி அவற்றின்மேற்சென்றாடும் அவளைக் காண்மினென்க.(75) 926. திருவின் சாய லொருத்தி சேர்ந்த கோலங் காண்பான் குருதித் துகிலின் னுறையைக் கொழும்பொன் விரலி னீக்கி யரவ முற்றும் விழுங்கி யுமிழும் பொழுதின் மதிபோன் றுருவத் தெண்க ணாடி காண்மின் றோன்றும் வகையே. இ - ள். திருப்போலுஞ்சாயலையுடையா ளொருத்தி தான் கொண்ட கோலத்தினைக் காணவேண்டிக் கண்ணாடிக்கிட்ட செம் பட்டுறையை விரலாலே நீக்காநிற்க, அக்கண்ணாடி செம் பாம்பு முழுதும்விழுங்கிக் காலுங்காலத்து மதியையொத்துத் தோன்றும் வகையைக் காண்மினென்க. (76) பொன் - ஆழி. நீக்கி - நீக்க. 927. பலகை செம்பொ னாகப் பளிக்கு நாயாப் பரப்பி யலவ னாடும் வகைபோ லரும்பொற் கவறங் குருளக் குலவும் பவழ வுழக்கிற் கோதை புரளப் பாடி யிலவம் போதேர் செவ்வா யிளையோர் பொருவார்க் காண்மின். பாடி-தாயங்கூறி; போகட்டென்றுமாம்; அது மலை நாட்டார் வழக்கு. உழக்கு-பிடித்துப்போகடாமற் கவறிட்டு உருட்டுமுழக்கு. இ - ள். இளையோர் பொன்னாலேபலகையாகப் பளிங்காலே நாயாகச் செய்தவற்றைப்பரப்பிப் பாடிக் கோதையசையும் படி அலவனாடும் வகைபோலே உருண்ட கவறு தன்னிடத்தே யுருளும் படியாகப்பண்ணின பவளவுழக்காலே பொருவாரைக் காண்மினென்க. (77) 928. தீம்பா லடிசி லமிர்தஞ் செம்பொன் வண்ணப் புழுக்க லாம்பா லக்கா ரடலை யண்ப னீரூ றமிர்தந் தாம்பா லவரை நாடித் தந்தூட் டயர்வார் சொரிய வோம்பா நறுநெய் வெள்ள மொழுகும் வண்ணங் காண்மின். அமிர்தம் - இவையொழிந்தசோறு. வண்ணப்புழுக்கல் - பருப்புச்சோறு. ஆம்சால் - இவற்றிற்கெல்லாங் கூடுதற்குரியபால். அக்காரடலை - அக்காரத்தினையடப்பட்டது; அக்காரம் - சருக்கரை. அடிப்பல் நீரூறமிர்தம் - புளிங்கறி. இ - ள். ஊட்டயர்வார்தாம் உண்ணும்பகுதியிலுள்ளோரை நாடித் தந்து அவர்களுக்குப் பாலடிசின் முதலியவற்றைச் சொரிதலின் அவற்றையுண்டற்கு வார்த்தநெய்வெள்ள மாயொ ழுகுந் தன்மையைக் காண்மினென்க. அக்காரையாக அடப்பட்டதுமாம். (78) 929. அள்ளற் சேற்று ளலவ னடைந்தாங் கனைய மெய்யிற் கள்செய் கடலு ளிளமைக் கூம்பிற் கடிசெய் மாலைத் துள்ளு தூமக் கயிற்றிற் பாய்செய் துயரி நிதிய முள்ளு காற்றா வுழலுங் காமக் கலனுங் காண்மின். கள்செய்கடல்-கள்ளுண்டார் தன்மையைச் செய்கின்ற நீர் விளையாடுகின்றதிரள். கடல் - ஆகுபெயர். “அடாக்களியவர்” (சீவக.916) என்றார் முன்னும். கலம் - பரத்தை. இ - ள். இளமையாகிய கூம்பிற்கட்டின மாலையாகிய கயிற்றோடுசேர்ந்த தூமமாகியபாயைவிரித்து அதனையுயர்த்து நிதியமே நினைக்கப்படுகின்றகாற்றாகக் கொண்டு கள் செய் கடலிலே மெய்யுடனேயோடுங் காமக்கலத்தையுங் காண்மி னென்க. (79) 930. தாய்தன் கையின் மெல்லத் தண்ணென் குறங்கி னெறிய வாய்பொன் னமளித் துஞ்சு மணியார் குழவி போலத் தோயுந் திரைக ளலைப்பத் தோடார் கமலப் பள்ளி மேய வகையிற் றுஞ்சும் வெள்ளை யன்னங் காண்மின் இ - ள். தாய் தன்கையினாலேகுறங்கிலே மெல்லத்தட்ட அவ்வசைவால் அமளியிலேதுயிலுங் குழவியைப்போலச் செறியுந் திரைகள்வந்தசைப்பக் கமலப்பள்ளியிலே மனம் பொருந்தின வகையிலேதுயிலுமன்னத்தைக் காண்மினென்க. காரன்னமுண்மையின், வெள்ளையன்னம் இனஞ் சுட்டின பண்பு. (80) 931. நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் கோலச் சுடர்விட் டுமிழக் குமரி யன்னங் குறுகிச் சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன வாலிச் சுடர்கள் கௌவி யழுங்கும் வண்ணங் காண்மின். இ - ள். நீலத்துகிலிற்கிடந்தமணிகள் சுடரைமிக்ககாலு தலின் அறியாத வன்னம் தாமரைப்பூவென்றுகருதி ஆலிச்சென்று குறுகி அதன்சுடர்களைக்கவ்வி அவையகப்படாமையினால் வருந்துந் தன்மையைக் காண்மினென்க. துகிலுக்கு இலையுவமை. (81) 932. வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிக ளொடிக்கச் சுடர்விட் டுமிழ வுழையம் பிணையொன் றணுகிக் கொடிப்புல் லென்று கறிப்பானாவிற் குலவி வளைப்பத் தொடிக்கட் பூவைநோக்கி நகுமா றெளிதோ காண்மின். இ - ள். மகளிர் வைத்த மரகதமணிகள் கையாலொடிக்கலாம் படி சுடரை விட்டுக்காலுதலின் உழைமான்பிணையானதொன்று அதனை அறுகம்புல்லென்றுகருதி அணுகிக் கறித்தற்குத் தான் கழுத்தை வளைத்து நாவாலே வளையாநிற்க, அதனைத் தொடி போல் வட்டமான கண்ணையடைய பூவை நோக்கி நகுமாறு எளிதாயிருந்ததனைக் காண்மினென்க. (82) ஓ - வியப்பு. 933. இவையின் னனவும் பிறவு மெரிபொன் னார மார்பன் கவிஞர் மதியி னகன்று காட்சிக் கினிய விழவிற் சுவையின்மிகுதி யுடைய சோர்வில் பொருளொன் றதுதா னவையின் னகல நோக்கி நயந்த வண்ண மொழிவாம். மதியின், இன் - நீக்கம். சோர்வில்பொருள் - பஞ்ச நமஸ்காரம். ஒன்று- ஒருசீவன். நவையினகல - நாயுடம் பின் நீங்க. நோக்கி - நோக்க. இ - ள். அங்ஙனம் வெவ்வேறு போயினாரெல்லாருங் காண்மி னென்று கூறும் படி இத்தன்மையவான இவையும் பிறவும் கவிகளாற் புகழவரியவாய்க் காண்டற்கினிய நீர்விழவிலே ஆரமார் பன் ஒன்று நவையினகலும்படி சோர்வில் கொருளால் நோக்க, அதுதான் அப்பொருளால் விரும்பின தன்மையைக் கூறுவாமென் றாரென்க. (83) வேறு. 934. அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை வந்தொரு நாய்கது விற்றது கண்டவ ருய்ந்தினிப் போதி யெனக்கனன்றோடினர் சிந்தையி னின்றொளிர் தீயனநீரார் 935. கல்லொடு வன்றடி கையினர் காற்றினும் வல்விரைந் தோடிவ ளைத்தன ராகிக் கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும் வல்வினையார் வலைப் பட்டதை யன்றே. 936. வேள்வியி னுண்டிவி லக்கிய நீவிர்க ளாளெனக் கென்றத றைவது மோரார் தாளிற மூர்க்கர துக்கலிற்ற ண்டுறை நீள்கயம் பாய்ந்தது நீந்துத லோடும். இவைமூன்றுமொறுதொடர். ஓடினர் - ஓடி. அக்கினிசித்தரென்று கூறுவாராதலிற் றம்முடையசிந்தையிலே விடாதுநின்று விளங்குகின்ற தீப் போன்ற நீரரெனக் கொடுமைகூறினார் பட்டதை, ஐ - பகுதிப்பொருள்விகுதி. ஆளென்றுகதறுகின்றவோசை இப்பிறப்பில் என்னுண் டியை விலக்கின நீங்கள் மறுபிறப்பில் எனக்காளாவீரென்றாற் போன்றிருக்கச் சாற்றா நிற்கின்ற தன்மையையு மோராராய், விலக்கினார் விலக்குண்டவர்க்குஅடிமையாய்ப் பிறப்பரென்பது ணராராதலின். இ - ள். தீயனநீராராகிய அந்தணர்க்காக்கிய சோற்றுத் திரளை ஒருநாய்வந்துகவ்விற்று; அவரதுகண்டு இனிப் பிழைத் துப்போவை யென்றுகூறி ஓடியெடுத்த கல்லையுந்தடியையுங் கையிலேயிடைய ராய்க்கனன்று காற்றினுங் கடுக விரைந் தோடி அதுநீள்கயத்தே பாய்ந்துநீந்தினவளவிலே வளைத்தனராகி அம்மூர்க்கர் அறைவது மோராராய்த் தாளிறவடித்தலின், அது வல்வினையார் வலையிலே அகப்பட்டே விட்டது; அதனைப் பின்னருங் கொன்றிடுகூற்றிற் காட்டிற் கொல்லுந்தன்மையை மேவினாரென்க. (84-86) வேறு. 937. மட்குட மல்லன மதியின் வெள்ளிய கட்குடக் கன்னிய ரிருவ ரோடுடன் றுட்கென யாவரு நடுங்கத் தூய்மையி லுட்குடைக் களிமக னொருவன் றோன்றினான். மட்குடமல்லனவாகியகட்குடம்; கள்ளின் கடுமை பொறுத் தற்கு வெள்ளியாற் சமைத்தகுடம். இ - ள். களிமகனொருவன் கட்குடஞ்சுமந்த கன்னியராகிய மனைவி யரிருவருடனே யாவருந்துணுக்கெனத் தோன்றினானென்க. 938. தோன்றிய புண்செய்வே லவற்குத் தூமது வான்றிகழ் கொடியனார் வெள்ளி வட்டகை யூன்றிவாய் மடுப்பவோர் முழையுட் டீங்கதிர் கான்றிடு கதிர்மதி யிரண்டு போன்றவே இ - ள். அங்கனந்தோன்றிய அவற்கு மின்னுக்கொடி போலு மனைவியரிருவரும் வெள்ளிவட்டகையை வாயிலே யழுத்தித் தூமதுவைக்கொடுப்ப, அத்தன்மை ஒருமூழையிலே கதிரைச்சொரி கின்ற மதியிரண்டை யொத்தனவென்க. இஃது இல்பொருளுவமை. (88) வேறு. 939. அழலம் பூநற வார்ந்தழ லூர்தரச் சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன் கழலன் காழகம் வீக்கிய கச்சையன் மழலைச் சொற்களின் வைதிவை கூறினான். இ - ன் தீம்பூவாலாக்கின நறவை அங்ஙனமருந்துதலாலே வெம்மைபரக்கும்படி சுழலுங்கண்ணினனாய் மாலையினனாய்க் கழலனாய் வீக்கின கருங்கச்சையனாய் மழலைச்சொற்களாலே வைது மேல்இவ்வார்தையைக்கூறினானென்க. (89) 940. புடைத்தென் னாயினைப் பொன்றுவித் தீருயிர் கடுக்கப் போர்த்தனிர் தம்மின் கலாய்க்குறிற் றடக்கை மீளிமை தாங்குமி னன்றெனி னுடைப்பென் கட்குட மென்றுரை யாடினான். இ - ள். என்னாயையடித்து உயிரைப்போக்கினீர் அவ்வுயிரை மீட்டனிராய்த்தருவீராக, அதுசெய்யாது கலாய்க்க நினைக்கின், என்கையில்வலியைத்தாங்குவீராக, அவ்விரண்டு மல்லவாயின், கட்குட தையுடைப்பேனென்றுகூறினானென்க. கட்குடமுடைத்தல் - சங்கேதம். கடுக, கலாய்க்க - விகாரம். (90) வேறு. 941. நல்வினை யொன்று மிலாதவ னான்மறை வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே செல்சுடர் வேல்வல சீவக சாமிசென் றல்லல கற்றிய ருந்துயர் தீர்த்தான். இ-ள். நல்வினையொன்றுஞ்செய்தறியாதவன் அந்தணரை வருத்தலின் அதுகண்டு கீர்த்தியால்எங்குஞ்செல்கின்ற வேலை வல்லசீவகன் வல்லேசென்று அக்களிமகன் நாயிழந்தவல்லலை முதற்போக்கிப் பின்பு அந்தணர்படுகின்றதுயரை நீக்கினானென்க. (91) 942. மீண்டவ ரேகுத லம்விடை யன்னவ னீண்டிய தோழரொடெய்தின னாகி மாண்ட வெயிற்றெகி னம்மற மில்லது காண்டலுங் கட்கினி யான்கலுழ்ந் திட்டான். இ - ள். அவ்விருதிறத்தோரும் மீண்டுபோனவளவிலே கட்கினி யானாகிய விடையன்னவன் தோழருடனேயணுகினனாய் நாய் நெஞ்சின் மறமில்லாததனைக் கண்டவளவிலே அருளான் அழுதானென்க. அருளான், இவனை விடையென்றார். இவன் வினோத மொழிந்து நிற்றலிற்றோழர்வந்து திரண்டமை தோன்ற ஈண்டிய வென்றார். எனவே தம்பியர்வந்தமையும் பெறுதும். (92) 943. நாயுடம் பிட்டிவ ணந்திய பேரொளிக் காய்கதிர் மண்டலம் போன்றொளி கால்வதோர் சேயுடம் பெய்துவை செல்கதி மந்திர நீயுடம் பட்டு நினைமதியென்றான். நந்திய - வளர்ந்த. இ - ள். யான்கூறுகின்றமந்திரத்தை நீயொருப்பட்டு நினை வாயாக; நினைத்தால் இவ்விடத்தே நாயுடம்மைப்போகட்டுச் செல் கதியிற் றிங்கள்போலொளிகால்வதோர் பெரியவுடம்பைப் பெறுவை யென்றானென்க. (93) 944. என்றலுந் தன்செவி யோத்திரு கண்களுஞ் சென்றுகு நீரொடு செம்மலை நோக்கி யொன்றுபு வால்குழைத் துள்ளுவப் பெய்தலுங் குன்றனை யான்பதங் கூற வலித்தான். இ - ள். என்றுகூறினவளவிலே தன்செவியாலே கேட்டு விசாரித்து இருகண்ணாலும் வடிந்துவீழ்கின்றநீருடனே தலை வனைநோக்கி மனமொருப்பட்டு அதுதோன்ற வால்குழைத்து மகிழ்ந்தவளவிலே, சலியாதவன் இது காலமென்றறிந்து மந்திரத்தைக் கூறத்துணிந்தானென்க. (94) வேறு. 945. நற்செய்கை யொன்று மில்லார் நாளுலக் கின்ற போழ்தின் முற்செய்த வினையி னீங்கி நல்வினை விளைக்கும் வித்து மற்செய்த வீங்கு தோளான் மந்திர மைந்து மாதோ தற்செய்கை தளிர்ப்பத் தாழ்ந்தாங் கதன்செவிச் செப்பு கின்றான். 946. உறுதிமுன் செய்த தின்றி யொழுகினே னென்று நெஞ்சின் மறுகனீ பற்றொ டார்வம் விட்டிடு மாண வச்சத் திறுகனீ யிறைவன் சொன்ன வைம்பத வமிர்த முண்டாற் பெறுதிநற் கதியை யென்று பெருநவை யகற்றி னானே. 947. மனத்திடைச் செறும்பு நீக்கி மறவலை யாகி யைந்து நினைத்திடு நின்க ணின்ற நீனிற வினையி னீங்கி யெனைப்பக றோறும் விள்ளா வின்பமே பயக்கு மென்றாற் கனைப்பத வமிர்த நெஞ்சி னயின்றுவிட் டகன்ற தன்றே. இவைமூன்றுமொருதொடர். 1. நீங்கி - நீங்க. 2. மறுகள் - சுழலாதேகொள். பற்று - உள்ளதன்மேற்று. ஆர்வம் - பெறக்கடவதன்மேற்று. விட்டிடு - ஒருசொல். இறுகல் - நிலைபெறாதேகொள். 3. செறும்பு - செற்றம். நீனிறவினை -கரியபாவவினை. இ - ள். அங்ஙனந்துணிந்ததோளான் இம்மையில் நற் செய்கை யொன்றுமிலாதார் வாழ்நாள்கழிகின்றகாலத்து ஈண்டு அவர் செய்த தீவினையினின்றுநீங்க முற்செய்த நல்வினையை விளைக்கும் வித்தாகியமந்திரமைந்தையும் அவ்விடத்தே தாழ்ந்து அதன் செவியிலே செப்புகின்றவன் அம்மந்திரத்தின் செய்கை தழைக்கும் படியாக அதனை நின்மனத்திடைச்செறும்பு முதல் நீக்கிப் பின்பு இதற்குமுன்செய்த உறுதியின்றியே யொழுகினே னென்றுமறுகல்; பற்றையும் ஆர்வத்தையும்விடு; இறுகலென்று பெருநவைய கற்றி னான். அங்ஙனமகற்றி இறைவன்சொன்ன அமுதத்தையுண்டால் நின்கணின்ற நீனிறவினையினீங்கி நற்கதியைப் பெறுதி, அக்கதி தான் உள்ளநாளெல்லாம் நீங்காதவின் பத்தையே தருமாதலான் மறவலையாகி இவ்வைந்தினையும் நினைத்திடென்று உபதேசித்தாற்கு அதுவும் ஐந்துபதமாகிய அமிர்தத்தை நெஞ்சாலேயுண்டு இவ்வுடம்மை விட்டுப் போயிற் றென்க.(95 - 97) வேறு. 948. பாடு பாணி முகமெனும் பான்மையி னோடி யாங்கொ ருயர்வரை யுச்சிமேற் கூடிக் கோலங் குயிற்றிப் படங்களைந் தாடு கூத்தரி னையெனத் தோன்றினான். பரமாகமத்திற்கூறப்பட்ட உயிர்போமுகங்களிற் பாணிமுக மென்னுங் கதியாலேபோகை. பாணி - கை; கைம்முகமாவது சுட்டு விரலும் பெருவிரலுநீங்கினவிடம்.அதுபோல முதல் நேரேயோடி பின் விலங்கியோடுதலாம். வெள்ளிமலையாதலின், உயர்வரை யென்றார். இ - ள். ஓடிவரையுச்சிமேலேபொருந்திக் கூத்தரைப்போலே கோலமெல்லாங்குயிற்றப்பட்டு வியக்கத்தோன்றினானென்க. (98) 949. ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க் கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல் வேயி னன்னமென் றோளியர் தோன்றியங் காயி னார்பரி யாளம டைந்ததே. ஞாயில் - ஆகுபெயர். இ - ள். பொன்னகரிற் கோயிலுள்ளளவரைப்பெல்லாம் மென்றோளியர்தோன்றித் தேவியராயினார்; அவ்விடத்தே ஒழிந்த பரிவாரமுஞ்சேர்ந்ததென்க. (99) பரியாளம் - பாகதம். 950. மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற் றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத் தடைந்த சாய லரம்பையர் தம்முழை மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான். இ - ள். சிங்கவேற்றையொப்பான் அல்குலையும் முலை யையும் முதத்தையுஞ் சேர்ந்த சாயலையுமுடைய அரம்பையரிடத் தே மகிழ்ச்சியைப்பொருத்தினானென்க. (100) வேறு. 951. கற்றவைம் பதங்க ணீராக் கருவினை கழுவப் பட்டு மற்றவன் றேவ னாகி வானிடு சிலையிற் றோன்றி யிற்றத னுடம்பு மின்னா விடரொழித் தினிய னாகி யுற்றவ னிலையு மெல்லா மோதியி னுணர்ந்து கண்டான். நூல்கள் இந்திரவில் இன்னவாறுதோன்றுமென்று அது தோன்றுமுறைமை கூறாவாகலின், அங்ஙனந் தோன்றுகின்ற தேவர்க்கு அஃதுவமையாயிள்று. இக்கருத்தானன்றே “வானிடு வில்லின் வரவறியா” (நாலடி.கடவுள்)என்றார்பிறரும். ஓதி - அவதிஞானம். இற்றவவ்வுடம்பும், உற்றவனிலைமையும் பாடம். இ - ள். அவன்றான்கற்றபஞ்சநமஸ்காரமு நீராகத் தீவினை கழுவப்பட்டுச் சிலை போலத்தோன்றித்தேவனாகிப் போகட்ட வுடம்மையும், இடரைக்கெடுத்துத் தனக்கினியனாய்த் தன்னைச் சேர்ந்த சீவகனிலையையுமெல்லாம் ஓதியாற் கண்டுணர்ந்தா னென்க. (101) வேறு. 952. இரும்பி னீர்மை கெடுத்தெரி தன்னிறத் தரும்பொ னாக்கிய வாருயிர்த் தோழனை விரும்பி விண்ணிறுத் தொய்யெனத் தோன்றினான் சுரும்புண் கண்ணிச் சுதஞ்சண னென்பவே. இ - ள். அங்ஙனமுணர்ந்தவன் இழிந்தநிலையைக் கெடுத்து உயர்ந்தநிலையாக்கியதோழனைக் காட்சியைவிரும்பி விண்ணைக் கடந்து முன்னேவந்து கடுகத்தோன்றினான்; அவன் பெயர் சுதஞ்சணனென்றுகூறுவரென்றாரென்க. விண்ணறுத்தும், சுதஞ்சனனும் பாடம். (102) வேறு. 953. ஓசனை நறும்புகை கமழ வொண்ணிலா வீசிய கதிர்பரந் திமைக்கு மேனியன் மாசறு மணிமுடி மிடைந்த மாலையன் பூசுறு பருதியிற் பொலிந்து தோன்றினான். நறும்புகை ஓர் ஓசனை கமழாநிற்க இமைக்குமேனி; நிலாவை வீசியமதிபோலே விளங்குமேனியன் - சுதஞ்சணன். அவனுடைய முடிவந்துசேர்ந்த இயல்பினையுடையான் - சீவகன். என்றது இவனாசாரியனாதலிற் கண்டபொழுதே முடிதுளக்கினான். மேல் “எந்தை” (சீவக.955)என்றும், “அண்ணலேந்தி” (சீவக.1158) என்றும், “காய்கதிர் சுமந்து”(சீவக.1168) என்றும், “உரிமைதன்னால் - ஆட்டி”(சீவக.1169) என்றும், “எரிபொனீண் முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே” (சீவக.2366) என்றும், “தாளாரவேத்தி” (சீவக.3037) என்றும், “களிப்புற்றான்”(சீவக.3085) என்றுங் கூறுதலின், இதுவே கருத்தாம். பூசுறுபரிதியின் - கைசெய்த பரிதிபோல. விளக்கத்தானும், மதியைத் தோற்றுவித்தலானும், பருதி யுவமை. இனி மேனியனாய் மாலை யனாய்ப் பருதியிடத்தே தோன்றினானென்பாருமுளர். இ - ள். மேனியனது முடிமிடைந்தசீவகன் அப்பொழுது பருதிபோலத் தோன்றினானென்க. (103) வேறு 954. குன்றெனத் திரண்ட தோளான் குறுகலுங் குமர னோக்கி நின்றவ னெடுங்க ணொன்று மிமைப்பில நிழலில் யாக்கை யன்றியுங் கண்ணி வாடா தமரனே யென்று தேறி நன்றவன் வரவு கேட்பா னம்பிநீ யாரை யென்றான். இ - ள். சுதஞ்சணனங்ஙனங் குறுகின வளவிலே சீவக னோக்கி முன்னின்றவனுடைய யாக்கைநிழலில் யாக்கையாயிருந் தது; அன்றியுங் கண்ணுஞ் சிறிதும் இமைத்தலில்லை; கண்ணி யும் வாடாதென்று தேவனாதலைத்தேறி, அவன்வரவுநன்றாகக் கேட்க வேண்டி; நம்பி, நீயாரென்றானென்க. யாரை, ஐ - அசை. ‘அமரனே யாதறேறியும்’ பாடம். (104) 955. குங்குமக் குவட்டின் வீங்கிக் கோலம்வீற் றிருந்த தோளா யிங்குநின் னருளிற் போகியியக்கரு ளிறைவ னாகிச் சங்கவெண் மலையின் மற்றுச் சந்திரோ தயத்தினுச்சி யங்கியா னுறைவ லெந்தை யறிகமற் றென்று சொன்னான். இன் - உவமப்பொருள். சங்கவெண்மலை - மலையின்பெயர். மற்று இரண்டும் அசை. இ - ள் தோளாய், எந்தாய், யான் நின்னருளால் இங்கு நின்றும்போய் அங்கே இயக்கருளிறைவனாகி மலையினுச்சியிற் சந்திரோதயமென்னு நகரிலே யிருப்பேன். அந்நிலைமை அறிவாயாகவென்று தேவன் கூறினானென்க. (105) 956. என்றவ னுரைப்பக் கேட்டே யிமயமு நிகர்க்க லாற்றாப் பொன்றரு மாரி வண்கைப் புரவலன் புகன்று நோக்கி வென்றவ ருலகம் பெற்ற வேந்துடை யின்ப மெல்லா மின்றெனக் கெதிர்ந்த தென்றா னெரியுமிழ்ந் திலங்கும் வேலான். இ - ள். என்று அவன் கூறக்கேட்டு, இமயமுமொக்க மாட்டாதபெரியபொன்னை மாரிபோல எல்லார்க்குங் கொடுக்கும் வண்கையையுடைய புரவலனாகியவேலான் விரும்பிப் பார்த்து, சித்திக்ஷேத்திரத்தைப் பெற்ற சித்திரபரமேஷ்டி களுடைய இன்பமெல்லாம் இன்று எனக்குவந்த தென்றானென்க. (106) 957. சூடுறு கழலி னாற்குச் சுதஞ்சண னிதனைச் சொன்னான் பாடல்வண் டரற்றும் பிண்டிப் பகவன திறைமை போல மூடியிவ் வுலக மெல்லா நின்னடித் தருவ லின்னே யாடியுட் பாவை போனீ யணங்கிய தணங்க வென்றான். இ - ள் பகைவர்சூடுதலுறுங் கழலினாற்குச் சுதஞ்சணன் இதனைச்சொன்னான்; அது யாதெனிற் பகவன திறைமைத் தன்மை இவ்வுலகெல்லாம் அகப்படுத்தினாற்போல நினதிறைமைத் தன்மை யாலே உலகெல்லாமகப்படுத்தி அதிற் பல்லுயிருங் கண்ணாடியிற் பாவைபோல நீவருந்திய தொழிலுக்கு வருந்தும் படியாக நின்னடியிடத்தே தருவேனென்று சொன்னானென்க. உள் -இடம். “மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே” (புறநா.20) என்றார் பிறரும். (107) 958. வாளொடு வயவரீண்டி வாரணத் தொழுவின் முற்றி மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின்னினைப் பதல்லா னாளொடு பக்க நைந்து வீழினும் வீழ்த லில்லாக் கோளுடைக் கிழமை யொப்பாய் குறைவிலன் பிறவி னென்றான். இ - ள் நாளொடு பக்கங்களுங்கெட்டுவீழினும் வீழுந் தன்மை யில்லாத கோள்களினுடைய உரிமையோடொத்த உரிமையை யுடையாய், வயவரீண்டி யானைத்தொழுவோடே யென்னை வளைத்த மீளிமைசெய்தாராயின், யான் விரும்பிய நண்பனே, நின்னை நினைப்பதல்லது பிறவாற்றான் ஒன்றுங் குறைவிலே னென்றானென்க. அருமைநோக்கிச் ‘செய்யி’னென்றான். அங்ஙனம் மேல் வருகின்ற ஊழ் இக்கருத்தினைப் பிறப்பித்து நின்றது. முற்றி யெனவே சிறைகோடலன்றிக் கட்டுதலின்மையுணர்க. (108) 959. இன்னிழ லிவரும் பூணா னிருவிசும் பிவர்த லுற்றுப் பொன்னெழு வனைய தோளாற் புல்லிக்கொண் டினிய கூறி நின்னிழல் போல நீங்கேனிடர்வரி னினைக்க வென்று மின்னெழூஉப் பறப்ப தொத்து விசும்பிவர்ந் தமரன் சென்றான். இ - ள். சுதஞ்சணன் விசும்பிலேபோகக்கருதிச் சீவகனைப் புல்லிக்கொண்டு யான் நின்னிழல்போல நின்னை நீங்கேன் நினக்கு ஓரிடர்வந்ததாகில் என்னை நினைப்பாயாகவென்று பின்னும் இனியசொற்களைக்கூறி மின் மாயாது பறக்கு நிலை போலே அவன் விசும்பிலே உயர்ந்து பறந்துபோனானென்க. (109) 960. சொல்லிய நன்மை யில்லாச் சுணங்கனிவ் வுடம்பு நீங்கி யெல்லொளித் தேவ னாகிப் பிறக்குமோ வென்ன வேண்டா கொல்லுலை யகத்திட் டூதிக் கூரிரும் பிரதங் குத்த வெல்லையில் செம்பொ னாகி யெரிநிறம் பெற்ற தன்றே. கூர்ப்பு - மிகுதி; என்றது, பொன்னாதற்கு வேண்டுஞ் செய்கை களை முன்னையுடைய இரும்பென்றவாறு. இ - ள். தானமுதலிய நன்மைகள் இம்மையிற்செய்யாத சுணங்கன் இவ்வுடம்பை நீங்கி இதற்குமுன்னர் நல்வினை வந்துதவி ஒருவனுபதேசித்த மந்திரத்தாற் றேவனாய்ப் பிறக்குமோவென்று உலகத்தார் கருதவேண்டா; உலையிலே யிட்டூதி உருகினமுகத்து இரதத்தைக்குத்த, அது மாற்றற்ற பொன்னாய் விளங்குநிறதைப் பெற்றதல்லவோ, இதுவும் அத்தன்மைத்தென்று கருதுகவென்றா னென்க. இதுவும் அத்தன்மைத்தென்று கூட்டி விரித்தலின், இது சொல்லெச்சம். முன் “பெருநவை யகற்றினான்” (சீவக.946) என்றது உருகுகின்ற முகத்திற்குவமை. (110) வேறு. 961. எரிமாலை வேனுதியி னிறக்கிக் காம னடுகணையாற் றிருமாலை வெம்முலைமேற் றிளைக்குந் தேவர் திருவுறுக வருமாலை யெண்வினையு மகற்றி யின்பக் கடலாக்கித் தருமாலை யல்லதியான் றலையிற் றாழ்ந்து பணிவேனோ. இ - ள். எரியொழுங்குபோலும் வேலின்முனைகளான் இரணியன் இராவணன் முதலாயினாரைக்கொன்று பின் காம னுக்குத் தோற்று அவனெய்தகணையாலே முலைமேற்றிளைக்குந் தேவர்களெல்லாம் ஸ்ரீமான்களாக; நீக்குதற்கரிய எண்வினை களையுநீக்கி வீட்டின்பத்தை யுண்டாக்கித்தரும் அருகனை யல்லது யான் தலையாற்றாழ்ந்து வணங்குவேனோவென்றா னென்க. எண்வினையாவனவற்றை, “எண்மர்கவிழ்ந்தனர்” (சீவக. 3076) எனத் துறவிற்கூறுவர் விரிய. (111) 962. ஒன்றாய வூக்கவேர் பூட்டி யாக்கைச் செறுவுழுது நன்றாய நல்விரதச் செந்நெல் வித்தி யொழுக்கநீர் குன்றாமற் றாங்கொடுத்தைம் பொறியின் வேலி காத்தோம்பின் வென்றார்தம் வீட்டின்பம் விளைக்கும் விண்ணோ ருலகீன்றே. வென்றார் - சித்தபரமேஷ்டிகள். இ - ள். பகிராத முயற்சியாகிய ஏரைப்பூட்டி, உடம்பாகிய செய்யைத் தவத்தாலே வருந்துவித்து, விரதமாகிய செந்நெல்லை விதைத்து, சாரித்திரமாகிய நீரை வற்றாமற்பாய்த்தி, ஐம்பொறி யாகிய வேலியைப் புலனாகிய பசுக்கள் பிரியாதபடி காத்துப் பரிகரிப்பின், அந்நிலை முதற் சுவர்க்கத்தினைத்தந்து, பின் வீட்டினை விளைக்கு மென்றானென்க. வென்றார்-சித்தபரகுமேஷ்கைள் இன்- சாரியை. “சொல்லிய” (சீவக.960) முதலிய மூன்றுகவியுஞ் சீவகன் தோழரை நோக்கிக் கூறியவை. (112) வேறு 963. இத்தலை யிவர்க ளேக விமயநட் டரவு சுற்றி யத்தலை யலற முந்நீர் கடைந்தவ ராவ மொப்ப மைத்தலை நெடுக ணாரு மைந்தரு மறலி யாட மொய்த்திள வன்ன மார்க்கு மோட்டிரும் பொய்கை புக்கார். இனிப் பொய்கைகளில் விளையாடுதல்கூறுகின்றார். மந்தரத்தின்றொழிலை இமயத்துக்கேற்றினார், அது மலை யரையனாதலின். “இமயவில்வாங்கிய”(கலித்.38)என்றார்பிறரும். அத்தலை - அக்காலத்து. இ - ள். சீவகனுந் தோழரும் இவ்விடத்துநின்றும் போகா நிற்க, நகரின்மகளிருமைந்தரும் அக்காலத்தே இமயத்தைநட்டுப் பாம்பைச் சுற்றி முந்நீரலறக்கடைந்த ஆரவாரத்தையொப்ப மாறுபட்டாடுதற்குப் பொய்கையிலேபுக்காரென்க. (113) 964. கலந்தெழு திரைநுண் ணாடைக் கடிக்கய மடந்தை காம ரிலங்குபொற் கலாபத் தல்கு லிருகரைப் பரப்பு மாக வலர்ந்ததண் கமலத் தம்போ தணிதக்க முகத்திற் கேற்ப நலங்கெழு குவளை வாட்க ணன்னுத னலத்தை யுண்டார். .இ - ள். இருகரைப்பரப்புமல்குலாஅதிலேகலந்தெமுகின்ற திரை யாகிய நுண்ணிய ஆடையினையுங் கமலப்போதாகிய முகத்திற்கேற்ப அழகுதக்க குவளையாகிய வாட்கண்ணினையு முடைய கயமடந்தை யாகிய நன்னுதனலத்தை நுகர்ந்தாரென்க. ஏற்பவென்னுமெச்சந் தக்கவென்னும் வினைக்குறிப்புக் கொண்டது. (114) 965. தண்ணுமை முழவ மொந்தை தகுணிச்சம் பிறவு மோசை யெண்ணிய விரலோ டங்கை புறங்கையி னிசைய வாக்கித் திண்ணிதிற் றெறித்து மோவார் கொட்டியுங் குடைந்து மாடி யொண்ணுதன் மகளிர் தம்மோ டுயர்மிசை யவர்க ளொத்தார். இ - ள். ஆடவர் ஓவாராய்த் தண்ணுமை முதலியவற்றி னோசைகளையும் பிறவுமெண்ணிய வாச்சியங்களினோசை களை யும் விரலினாலும் அகங்கையினாலும் புறங்கையினாலுந் தெறித் துங் கொட்டியுங் குடைந்தும் இசையும்படி நீரிலே பிறப்பித்து மகளிர் தம்மோடாடித் தேவரையொத்தாரென்க. (115) 966. சிவிறியின் மாறு தூயுங் குங்கும மெறிந்துந் தேங்கொ ளுவறுநீ ருழக்கி யோட்டி யுடைபுறங் கண்டு நக்குத் தவறெனத் தாமம் பூட்டித் தருதிறை கொண்டு மின்பத் திவறினார் காம வெள்ளத் தேத்தருந் தன்மை யாரே. சிவிறி - நெடுந்துருத்தி. தருதிறை - இடக்கர். இ-ள். ஏத்தருந்தன்மையார் உவறுநீரிலே தூவியும் எறிந்தும் உழக்கி ஓட்டி முதுகுகண்டுநக்கு அஞ்சினாயென்றுபூட்டித் திறை கொண்டும், காமவெள்ளத்தின்பத்தே மிக்காரென்க. (116) 967. சாந்தக நிறைந்த தோணி தண்மலர் மாலைத் தோணி பூந்துகி லார்ந்த தோணி புனைகலம் பெய்த தோணி கூந்தன்மா மகளிர் மைந்தர் கொண்டுகொண் டெறிய வோடித் தாந்திரைக் கலங்கள் போலத் தாக்குபு திரியு மன்றே. இ - ள். சாந்துமுதலியவற்றை மகளிருமைந்தருங்கொண்டு ஒடியெறிகையினாலே, அவற்றையுடைய தோணிகடாங் கடலிற் கலங்கள்போலே தம்மிற்றாக்கித் திரியுமென்க. (117) 968. கலிவளர் களிறு கைந்நீர் சொரிவபோன் முத்த மாலை பொலிவொடு திவண்டு பொங்கிப் பூஞ்சிகை யலமந் தாடக் குலிகநீர் நிறைந்த பந்திற் கொம்பனா ரோச்ச மைந்தர் மெலிவுகண் டுவந்து மாதோ விருப்பொடு மறலி னாரே. பொங்கி - பொங்க. இ - ள். கொம்பன்னார் களிறு கையாலே நீரைச் சொரிவன போலே முத்தமாலைபொங்கப் பின்னினமயிரசைய மட்டத் துருத்தியினீரையோச்சுதலின் ஆடவர்வருத்தங்கண்டு உவந்து பின்னும் விருப்புடன்மாறுபட்டாரென்க. (118) 969. வண்ணவொண் சுண்ணப் பட்டு மாலையுஞ் சாந்து மேந்தி யெண்ணருந் திறத்து மைந்த ரெதிரெதி ரெறிய வோடி விண்ணிடை நுடங்கு மின்னு மீன்களும் பொருவ போல மண்ணிடை யமரர் கொண்ட மன்றலொத் திறந்த தன்றே. ஓடி - இளைத்து. இ- ள். விண்ணிலே மின்னும் மீன்களும் தம்மிற்பொருவ போலே மைந்தர் மகளிரெதிரேயெதிரே சுண்ண முதலியவற் றையேந்தி யெறிய, அவ்விருதிறத்தோரு மிளைத்தபின்னர் அமரர் மண்ணிடைக் கொண்டமணத்தையொத்து மணநிகழ்ந்து நீர் விளையாட்டுக் கழிந்ததென்க. (119) வேறு. 970. உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு மரைத்த சாந்தமு நானமு மாலையு நுரைத்து நேன்சிறை வண்டோடு தேனின் மிரைத்து நீர்கொழித் தின்பமி றந்ததே. இ - ள். நீர் சுண்ணமுதலியன நுரைத்து வண்டுந்தேனு மிரைத்துக் கொழித்து இனிமைமிக்கதென்க. எச்சங்கள் செயப்படுபொருளன. வேறு. 971. கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி முத்தணிந் தாவி யூட்டி முகிழ்முலை கச்சின் வீக்கிப் பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே. கத்திகை - குருக்கத்தி. தாங்கி - தாங்க. இ - ள். குருக்கத்திக்கண்ணியணிந்த நெற்றியையுடைய முருகனையொத்த இளையரெல்லாங் கலன்களைத்தாங்கப் பெண்கொடி களெல்லாம் ஊட்டி அணிந்து வீக்கிச் சூழ்ந்து பொலிந்தனவென்க. (121) 972. திருந்துபொற் றேருஞ் செம்பொற் சிவிகையு மிடைந்து தெற்றிக் கருங்கயக் களிறு மாவுங் காலியற் பிடியு மீண்டி நெருங்குபு மள்ளர் தொக்கு நெடுவரை தொடுத்த வெள்ளங் கருங்கடற் கிவர்ந்த வண்ணங் கடிநகர்க் கெழுந்த வன்றே. இ - ள். அவர்களேறுதலின் நெருங்காநின்று மள்ளர் செறிய வரையினின்றும் இடையறாதுவீழ்கின்றவெள்ளங் கடற்குப் போனாற் போலே தேருஞ் சிவிகையும் பிணங்கிச் செறிந்து பெரியகளிறும் பிடியும் மாவுமீண்டி நகர்க்குப் போயினவென்க.(122) வேறு. 973. கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென வுடல்சின வுருமென வூழித் தீயெனத் தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றிய தடலருங் கடாக்களிற் றசனி வேகமே. இ - ள். அவ்வளவிலே கடாக்களிறாகிய அசனிவேகங் காலிற்சங்கிலிபிணித்த மரத்தையுங் கம்பத்தையும் அடியிலே முறித்து முழக்காற்கடலெனக் கடுமையாற் காற்றெனக் கொடுமையாற் கூற்றெனக் கோபத்தாலிடியெனச் சேரக்கோறலின் ஊழித்தீ யெனத் தோன்றிற்றென்க. (123) வேறு. 974. பொருதிழி யருவி போன்று பொழிதரு கடாத்த தாகிக் குருதிகொண் மருப்பிற் றாகிக் குஞ்சரஞ் சிதைந்த தென்னக் கருதிய திசைக ளெல்லாங் கண்மிசைக் கரந்த மாந்தர் பருதியின் முன்னர்த் தோன்றா மறைந்தபன் மீன்க ளொத்தார். இ - ள். அக்குஞ்சரம் கடாத்ததாய் மருப்பிற்றாய்த் தன்றன் மைகெட்டதென்றாராக; அதன் கண்கருதிய திசைமிசை யெல்லாந் தோன்றாமற்கரந்தமக்கள் ஞாயிற்றின்முன்றோன்றா வாய் மறைத் மீன்களையொத்தாரென்க. மிசை - இடம். இது போகாமல் நின்றநிலையிலே மறைந் ததற்குவமை. (124) 975. கருந்தடங் கண்ணி தன்மேற் காமுக ருள்ளம் போல விருங்களி றெய்த வோடக் சிவிகைவிட் டிளைய ரேக. வரும்பெற லவட்குத் தோழி யாடவ ரில்லை யோவென் றொருங்குகை யுச்சிக் கூப்பிக் களிற்றெதி ரிறைஞ்சி நின்றாள். 976. என்னைக்கொன் றிவள்க ணோடு மெல்லையி னொருவன் னோன்றி யின்னுயி ரிவளைக் காக்கு மன்றெனி லென்கண் மாய்ந்தாற் பின்னைத்தா னாவ தாக வென்றெண்ணிப் பினைகொ ணோக்கி மின்னுப்போ னுடங்கி நின்றாள் வீததை பொற்கொம் பொப்பாள். இவையிரண்டுமொருதொடர். இ - ள். அங்ஙனம் மறைதலையறியாத குணமாலை, தன் மேலே காமுகர்நெஞ்சோடுமாறுபோலக் களிறணுகச்சென்ற தாக, இளையர்சிவிகையை விட்டுப்போக, அப்பொழுதுஅந்தப் பிணை கொணோக்கியாகிய பொற்கொம்பொப்பாள் அஞ்சி மின்போலே நடுங்கிநின்றாள்; அதுகண்டு அவட்குத்தோழியாகிய மாலை என்னைக் கொன்று இவளிடத்தே ஓடுமெல்லையில் ஒருவீரன் றோன்றி இவளை உயிரைக்காக்கும்; காத்திலனாயின் யானிறந் தாற் பின்னை ஆவதாகவென்று தன்னெஞ்சிலேநினைத்து இரண்டு கையினையுந் தலைமேலே வைத்து இவ்விடத்தில் ஆண் மக்களில்லையோவென்று கூப்பிட்டுக் களிறு எதிரே சென்றணு கின வளவிலே அஞ்சிக் கவிழ்ந்துநின்றாளென்க. மேல் அங்ஙனம்வருகின்றவூழ் இவளுக்கு அக்கருத்தினைப் பிறப்பித்தது. ஒருவனென்றது உட்கோளாதலிற் பின்னாடவ ரென்றாள். இக்கருத்தானன்றே மேலும் * “நெடுங்கணாற்கவர்ந்த கள்வி-யஞ்சனத் துவலையாடி நடுங்கினாள்”(சீவக.1024)என்றும், “நாட்டமுநடுக்கமும்” (சீவக.1003) என்றுங் கூறுகின்றதென்க. (125-26) 977. மணியிரு தலையுஞ் சேர்த்தி வான்பொனி னியன்ற நாணா லணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து தணிவருந் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப் பணிவருங்குருசில் செல்வான் பாவைய திடரைக் கண்டான். இ - ள். பிறராற் றாழ்வித்தலரிய குருசில், இரண்டு தலையினும் மணியழுத்திப் பொன்னாற்செய்த கயிற்றாலே குழலை யேறக்கட்டி அலங்கலை யதன்மேலே சூழ்ந்து அன்புகுறைதலரிய தோழர்சூழ வீசச் செல்கின்றவன் குணமாலையது வருத்தத்தைக் கண்டா னென்க. கட்டியிட்டு-ஒருசொல். ‘குழலையேறக்கட்டியும்’ பாடம். (127) 978. பெண்ணுயி ரவல நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாத லெண்ணின னெண்ணி நொய்தா வினமலர் மாலை சுற்றா வண்ணப்பொற் கடக மேற்றா வார்கச்சிற் றானை வீக்கா வண்ணலங் களிற்றை வையா வார்த்துமே லோடி னானே. இ - ள். பெருந்தகை பெண்ணுயிர் சாதலைநோக்கி இவ் விடரை நீக்காதுபோய் வாழ்கின்றவாழ்விற்காட்டிற் சாதல் அவல மில்லையென்றெண்ணினான். எண்ணிக் கடிதாகச் சுற்றி வீக்கி அதனை வைது ஆர்த்து அதன்மேலே ஓடினானென்க. “வேழ நான்கு வெல்லு மாற்றலன்” (சீவக.687)ஆதலின் இக்களிறு அடர்க்கவெளிதாயினும் அடர்த்தாற் கட்டியங்காரற்கும் நமக்கும் இன்னும் வேறுபாடு பிறக்கு மென்றறிந்தவன் பின்னும் இதனைக் கண்டு போதலின் அவ்வேறுபாடு நன்றென்றெண்ணினானென்க. (128) 979. குண்டலங் குமரன் கொண்டு குன்றின்மேல் வீழு மின்போ லொண்டிறற் களிற்றி னெற்றி யெறிந்துதோ டொலித்து வீழ மண்டல முத்துந் தாரு மாலையு குழலும் பொங்க விண்டலர் கண்ணி சிந்த மின்னிற்சென் றெய்தி னானே. இ - ள். அங்ஙனமோடின குமரன் தான் செல்வதற்கு முன்னே களிறு இறைஞ்சாதபடி காதிற்குண்டலத்தை வாங்கிக் கொண்டு தோடு ஒலித்து வீழும்படி மலைமேலே வீழும்மின் போலே அதன் மத்தகத்தே எறிந்து வட்டமான முத்துவடமும் தாரும் நெற்றிமாலையும் குழலும் பொங்கக் கண்ணி சிந்த மின்போற் சென்றெய்தினான் என்க. எறிந்த விசையில் தானே வீழ்ந்ததென்க. (129) 980. படம்விரி நாகம் செற்றுப் பாய்த கலுழன் போல மடவர லவளைச் செற்று மதகளி றிறைஞ்சும் போழ்திற் குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத் துடல்சினங் கடவக் குப்புற் றுருமென உரறி யார்த்தான். இ - ள். அங்ஙனமெய்தினவன் விரிகின்றபடத்தையுடைய நாகத்தைச் செற்றுப் பாய்கின்ற கருடனைப்போலே முன்புநின்ற மாலையென்னுஞ்சேடியைச்செறுத்துக் களிறிறைஞ்சுகின்ற வளவிலே அத்தகிரிநெற்றியிலே பாய்ந்தசிங்கத்தையொத்து அவ்வேழத்தினுடல் சினத்தைச்செலுத்தும்படி அதன்மத்த கத்தினடுவே குதித்து இடியென முழங்கியார்த்தானென்க. (130) குடவரை - புகருக்குவமை. 981. கூற்றென முழங்கிக் கையாற் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து காற்றென வுரறி நாகங் கடாம்பெய்து கனலிற் சீறி யாற்றலங் குமரன் றன்மே லடுகளி றோட வஞ்சான் கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுயப் போமி னென்றான். இ - ள். அவன் அங்ஙனமுழங்கி நாகத்தைக் கோட்டி டையிலே கையாலே கூற்றெனப்புடைத்தலின அக்களிறு காய்ந் தது முழங்கி மதஞ்சொரிந்து சீறி அக்குமரன் மேலே காற்றென வோட அஞ்சானாய்க் குணமாலையைப் பிழைக்கக் கொண்டு போமினென்றானென்க. சேடிமேலுங் குணமாலைமேலுஞ் செல்கின்றதென்று அஞ்சினவன் தன்னைநோக்கினமையின் அஞ்சானாயினான். தலைமைபற்றிக் குணமாலையைக் கொண்டு போமினென்றான். (131) 982. மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே பதியமை பருதி தன்மேற் படம்விரித் தோடி யாங்குப் பொதியவிழ் கோதை தன்மேற் பொருகளி றகன்று பொற்றார்க் கதியமை தோளி னானைக் கையகப் படுத்த தன்றே. .இ - ள். மதியைக் கையகப்படுத்தற்கு விரும்பிய கரும்பாம்பு போகின்றஞாயிற்றின்மேலே விரைந்தோடினாற்போலக் குண மாலைமேற்சென்ற பொருகளிறு அவளைக்கைவிட்டுச் சீவகனைக் கைக்குள்ளே யகப்படுத்திற்றென்க. பதி அமை பரதி - இருப்புத்தவிர்ந்தபரிதி; “அமைந்த தினிநின் றொழில்”(கலி.82) என்றதுபோல. ‘கதியமை தேரினா னையும்’ பாடம். (132) 983. கையகப் படுத்த லோடுங் கார்மழை மின்னி னொய்தா மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீ ழையென வடங்கி வல்லா னாடிய மணிவட் டேய்ப்பச் செய்கழற் குருசி லாங்கே கரந்துசே ணகற்றி னானே. இ - ள். அங்ஙனங் கையாலகப்படுத்திக்கொண்டவளவிலே அது போர்தொடங்காநிற்கக் குரிசில் மழைமின்னினுங் கடுக வுடம்பு புரிந்து மருப்பிடையிலே புகுந்து காற்கீழே வட்டுப்போல வடங்கித் தான்கரந்துபோய்க் களிற்றை அப்பொழுதேசேணிலே யகற்றினானென்க. வல்லான் - பாய்ச்சுக்காட்டுவான். தானகலுதலின், அதனை யகற்றினானாயினான். (133) வேறு. 984. மல்ல னீர்மணி வண்ணனைப் பண்டொர்நாட் கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச் செல்வன் போன்றனன் சீவகன் றெய்வம்போற் பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே. இ - ள். இக்குஞ்சரம் இவன்மேற்செல்லுகின்றபொழுது முன்னொருநாளிலே கண்ணனைக் கொல்லவோடிய குஞ்சரத்தை யொத்தது; அப்பொழுது அச்சீவகனும் அக்கண்ணனையொத்தான். பின்னர் அக்களிறாகிய தெய்வத்தைக் கண்ணன் பொல்லாது விட அது பெயர்ந்து தன்னிலையிலே போயினாற் போல இவனுங் கொல்லாது விடுதலின், இவ்வேழமும் பெயர்ந்து தன்னிலையிலே போயிற்றென்க. பகையன்மையின் இவ்விலங்கிற்கு முயிரளித்தான். கண்ணன் தனக்குப்பகையாதலிற் கொன்றான். ஈ•ண்டு அதனைக் கொல்லாது விட்டானாயின் அதுபோலுமெனப்பிற்கூறியது இல்பொருளுமை. கண்ணனைக்கொல்லத் தெய்வம் யானையாய் வருதலிற் ‘றெய்வம்’ மென்றார். வேறு. 985. ஒருகை யிருமருப்பு மும்மதத்த வோங்கெழிற்குன் றனைய வேழந் திருகு கனைகழற்காற் சீவகன்வென் றிளையாட்கு டைந்து தேனார் முருகு கமழலங்கன் முத்திலங்கு மார்பினனைஞ் ஞூற்று நால்வ ரருகு கழல்பரவத் தனியேபோ யுய்யான மடைந்தா னன்றே. இ - ள். கைமுதலியவற்றையுடைய குன்றனையவேழத்தைச் சீவகன்வென்று குணமாலைக்கறிவுமுதலியன தோற்றலின், பொழிலிலே சேர்ந்தானென்க. தந்தை யறியலாகாதென்று பொழிலைச்சேர்ந்தான். (135) வேறு. 986. மணிசெய் கந்துபோன் மருள வீங்கிய தணிபொற் றோளினான் செல்ல னீக்கிய வணிபொற் கொம்பினை யழுங்க லென்றுதன் றணிவில் காதலார் தாங்கொ டேகினார். இ - ள். கந்துபோல்வீங்கிய தோளி னானாலே வருத்த நீக்கப்பட்ட குணமாலையைக் குறைவில் லாத காதலையுடையார் தாம் அழுங்கலென்று கொண்டே கினாரென்க. கந்தென்றுமருளும்படி இவள்வேட்கை வருத்தத்தை யானைக்கு வருந்தினாளாக உட்கொண்டாராய் அழுங்கலென்றார். (136) 987. முழங்கு தெண்டிரை மூரி நீணிதி வழங்க நீண்டகை வணிகர்க் கேறனான் விழுங்கு காதலாள் வேற்கட் பாவைதாய் குழைந்த கோதையைக் கண்டு கூறினாள். பாவையுடையதாய் - வினயமாமாலையென்னும் பெயரை யுணத்திற்று, பாவை பெயர் குணமாலையாதலின். வருத்தந் தோன்றக் குழைந்தகோதையென்றார். இ - ள். கடல்போலநிதியைவழங்குதலின் நீண்டகை யையுடைய குபேரமித்திரன் விழுங்குமாறுபோன்ற காதலை யுடைய வினயமாமாலை தன்மகளைக்கண்டு ஒரு மொழி கூறினாளென்க. (137) 988. நெய்பெய் நீளெரி நெற்றி மூழ்கிய கைசெய் மாலைபோற் கரிந்து பொன்னிற நைய வந்ததென் னங்கைக் கின்றென வுய்தல் வேட்கையா லுரைத்த லோம்பினார். இ - ள். எரியினெற்றியிலே அழுத்திய மாலைபோலப் பொன்னிறங்கரிந்து நையும்படி நங்கைக்கு இன்றுவந்த வருத்த மென் னென்று கூறினாள்; அதுகேட்ட தோழிமாரும் அவளிறந்து படாதிருக்கவேண்டுதலின், யானை கொல்லப்புகுந்த தென்றுரைத் தலை யோம்பினாரென்க. (138) 989. முருகு விண்டுலா முல்லைக் கத்திகைப் பருகி வண்டுலாம் பல்கு ழலினாள் வருக வென்றுதாய் வாட்க ணீர்துடைத் துருகு நுண்ணிடை யொசியப் புல்லினாள். இ - ள். அவர் கூறாமையின் அதனையறியாததாய் முல்லைத் தொடையலர்ந்து பரக்கின்ற முருகைப்பருகி வண்டுலாங் குழலி னாளை வருகவென்று கண்ணீரைத்துடைத்து இடை வருந்தப் புல்லினாளென்க. (139) 990. கடம்பு சூடிய கன்னி மாலை போற் றொடர்ந்து கைவிடாத் தோழி மாரொடுங் குடங்கை யுண்கணாள் கொண்ட பண்ணையு ளடைந்த துன்பமென் றறிவி னாடினாள். இருவருங் கன்னியராதலிற் கன்னிமாலையென்றார். ‘கண்ணி மாலை’பாடமாயிற் கட்டினாற்போலுமாலையாம். இ - ள். கடம்பு பூத்த மாலைபோலே தொடர்ப்பட்டுக் கை விடாத தோழிமாருடனே உண்கண்ணாள்கொண்ட விளை யாட்டின் மிகுதியான் வந்த வருத்தமேயென்று தன்னறிவாலே நாடி னாளென்க. (140) 991. கம்மப் பல்கலங் களைந்துகண்டேறூஉம் விம்மப் பல்கல நொய்ய மெய்யணிந் தம்மென் மாலையு மடைச்சிக் குங்குமங் கொம்மை மட்டித்தார் கொடிய னாளையே. இ - ள். தாய்அங்ஙனமிருந்த வளவிலே கோலஞ்செய்கின் றவர்கள் கொடியனாளை அரிய தொழில்களையுடைய பேரணி கலங்களை வாங்கிக் கண்ணையொளிகெடுக்கு நொய்ய கலங் களை மெய்யிலே விம்மவணிந்து கழுநீர்மாலையையுஞ் சேர்த்திக் குங்குமத்தையும் முலையிலே பூசினாரென்க. உடம்புநுணுகுகின்றமையுணர்ந்து நொய்யவற்றை விம்ம வணிந்தார். புறத்தே கோலஞ்செய்ய அகத்தே சிதைவு பிறத்தலின், இதுபுறஞ் செயச்சிதைதலென்னுமெய்ப்பாடு. (141) 992. அம்பொன் வள்ளத்து ளமிர்த மேந்துமெங் கொம்பி னவ்வையைக் கொணர்மின் சென்றெனப் பைம்பொ னல்குலைப் பயிரும் பைங்கிளி செம்பொற் கொம்பினெம் பாவைசெல் கென்றாள். வஞ்சிக்கொம்பின் றன்மையை யுடையதாய் - குணமாலை. பைம்பொனல்குலை-நின்னை; என்றது குணமாலையை. இ - ள். வினயமாமாலை பொற்கொம்பின்றன்மையுடைய எம்பாவாய், எனக்கு வள்ளத்தே பாலையேந்தும் எம் அவ்வையைச் சென்றுகொணர்மினென்று கூறி நின்னைப் பைங்கிளியழையா நிற்கும்; இனி அதுவருந்தாதபடி ஆண்டுச் செல்லென்று கூறினா ளென்க. (142) வேறு. 993. நிறத்தெ றிந்துப றித்தநி ணங்கொள்வேற் றிறத்தை வெளவிய சேயரிக் கண்ணினாள். பிறப்பு ணர்ந்தவர் போற்றமர் பேச்செலாம் வெறுத்தி யாவையு மேவல ளாயினாள். இ - ள். கண்ணினாள் பிறப்புத்தீதென்றறிந்து பற்றற்றாரைப் போலே தமர்பேச்சையெல்லாங்கையிட்டு உணவு முதலியவற் றையும் பொருந்தாளாயினாளென்க. சிறிதுபொழுதுநின்று பறித்தவேல்.‘வெறுத்’ தென்னுந் துணையும் புலம்பித் தோன்றலென்னு மெய்ப்பாடு, செய்தகோலந் துணையொடு கழியப்பெறாதே யழிந்து சுற்றத்திடையுந் தனியேதோற்றுதலின். மேவலளெனவே இன்பத்தை வெறுத்தலும், பசியட நிற்றலும் மெய்ப்பாடு. 994. குமரி மாநகர்க் கோதையங் கொம்பனாள் தமரி னீங்கிய செவ்வியுட் டாமரை யமரர் மேவரத் தோன்றிய வண்ணல்போற் குமர னாக்கிய காதலிற் கூறினாள். இ - ள். கொம்பனாள் கன்னிமாடத்தே சுற்றத்தைத் தானிங் கியகாலத்தே தேவர்வேண்டத் தாமரை யிற்றோன்றிய முருகனைப் போலுங் குமரனுண்டாக்கிய காதலாலே சிலசொற்கூறினா ளென்க. (144) 995. கலத்தற் காலங்கல் லூரிநற் கொட்டிலா முலைத்த டத்திடைமொய்யெருக் குப்பையா விலக்க மென்னுயி ராவெய்து கற்குமா லலைக்கும் வெஞ்சர மைந்துடை யானரோ. இ - ள். கொடிய சரமைந்தும் ஐந்தாக எய்யவெடுத்த காமன் என்னைப்பெறுதலின் எனதுமுலைத்தடத்திடை எருக்குப்பை யாக, எனதுயிர் இலக்காகவெய்து என்னையலையாநிறிகும்; ஆதலால் கல்லூரியையுடைய விற்பயிற்றுந்தானத்தே தான் விற்றொழிலைத் தொடங்குகின்றகாலமாகநினைத்துக் கற்கின்ற தொழிலை நடத்தா நின்றானென்க. கற்பார் எருவிலும் இலக்கிலுமெய்து கற்பராதலின். இது மடந்தப வுரைத்தலென்னுமெய்ப்பாடு, அறிவுமடநீங்கிக் காமப் பொருட்கண்ணே யறிவுதோன்றிநிற்றலின். (145) 996. பூமி யும்பொறை யாற்றருந் தன்மையால் வேமெ னெஞ்சமும் வேள்விமு ளரிபோற் றாம மார்பனைச் சீவக சாமியைக் காம னைக்கடி தேதம்மின் றேவிர்காள். இ - ள். என்னெஞ்சமும் வேள்வியிலிட்ட தாமரைப்பூப் போலே பூமியுமுட்படப் பொறையைச் செலுத்துதற்கரியதொரு தன்மையாலே வேவாநிற்கும்; ஆதலான் மார்பனைச் சாமியைக் காமனைத் தேவிர்காள், கடிதாகவழைத்துத் தருமினென்றா ளென்க. வேமென்னுந்துணையுங் காதல் மைம்மிகல், காமங் கையிகந்த வழிநிகழுமாதலின். “உள்ளி னுள்ளம் வேமே” (குறுந்.102) என்பது உதாரணம். தம்மினென்பது தூதுமுனி வின்மைப்பாற்படும். *”கானலுங் கழறாது”(அகநா.170) என்னும் பாட்டு உதாரணம். அறனளித்துரைத்தலுமாம். (146) 997. கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடும் மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன் செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ லுய்ய லாவதோர் வாயிலுண் டாங்கொலோ. 998. கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற் புண்ணும் போன்றுபு லம்புமென் னெஞ்சரோ வெண்ணில் காமமெ ரிப்பினு மேற்செலாப் பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே. 999. சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளிதன் வேலை மாக்கடல் வேட்கைமிக் கூர்தர னோலை தாழ்பெண்ணை மாமட லூர்தலைக் காலை வேற்றடங் கண்ணி கருதினாள். இவைமூன்றுமொருதொடர். 1. பிறர்க்குக் கூறலகாமற் குறைகளெல்லாஞ் செறிதல் கொண்டசிந்தையான் மூங்கையாயினேனென்றாள். இது சிதைவு பிறர்க்கின்மை, புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தலின். சிறியார் - அறிவிலாதார். வாயில் - கூட்டுவார். 2. கண்ணும்வாளற்ற-அவனுருவு வெளிப்படுதலின் அதனையே நோக்கி வேறொரு போருளினை நோக்காமையிற் காண்டற்றொழி லின்றாதலின் வாளற்றவென்றாள். இஃது எதிர்பெய்துபரிதல். வளை சோருதல் - உடம்புநனிசுருங்கல். நெஞ்சும் புண்போன்று புலம்பும். இதுமுதற் கலக்கம், கூறத்தகாதனகூறலின். அதுதலைவிக் காயின், “பிறங்கிரு முந்நீர் வறுமண லாகப்-புறங்காலிற் போக விறைப் பேன்”(கலித்.144) என்றார்போல்வனவும், தலைவற்காயின், மடவேறுதன் முதலிய கூறலுமாம். மேற்செலா-நடக்கமாட்டாத. 3. சோலைவேய் - பசுமைக்கு. ஊர்தலை - உலகத்தில் ஆடவர் மடலூருந்தன்மையை. இ - ள். வளைத்தோளி கண்ணி, தன்வேட்கை கடனீர் போல மிக்குப்பரத்தலிற்றவஞ்செய்யாதாரைப்போல மூங்கையு மாயி னேன்; கண்ணும்வாளற்ற; வளையுஞ்சோரும்; நெஞ்சும் புலம்பும்; இங்ஙனம் எல்லையில்லாத காமம் முழுக்கநின்று சுட்டாலும் பெண்ணைமாமடலூர்தலை மேற்செல்லாத பேதைச்சாதியிற் காட்டிற் கொடுமைமிக்கது பெண்ணல்ல தில்லையாயிருந்த தென்றுகூறி இக்காலத்தே பிழைக்கலாவ தொரு வாயிலுண்டா மோவென்று கருதினாளென்க. ஈண்டுக் கூறியது புலனெறி வழக்கமல்லாத காந்தருவமாய் அசுரத்தின்பாற்படுங் கைக்கிளையாதலின், மெய்ப்பாட்டுப் பொருள்களை முறையிற்கூறாது மயங்கக் கூறினாரென்று கொள்க. (147-149) 1000. உய்யு மாறுரை யுன்னைய லாலிலேன் செய்ய வாய்க்கிளி யேசிறந் தாயென நைய னங்கையிந் நாட்டகத் துண்டெனிற் றைய லாய்சம ழாதுரை யென்றதே. தாய்தந்தையிலுங் சிறந்தாயென்றாள், அவர்க்குக் கூற லாகா தவை கூறுதலின். இ - ள். அங்ஙனங்கருதினவள் அருகிருந்த கிளியைக்கண்டு கிளியே, சிறந்தாய், உன்னையொழிய வேறொரு வாயிலை யானு டையேனல்லேன்; இனி யானுய்யும் படிவாயிலை யுரையாயென் றாளாக, அக்கிளியும் நங்காய், நீ நையாதேகொள்ளென முற்கூறிப் பின்னுந் தையலாய், அவன் இந்நாட்டிலேயுண்டாயின் வருந்தாதே யுரைப் பாயாக வென்றதென்க. (150) 1001. தெளிக யம்மலர் மேலுறை தேவியி னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே. கயம் - பதுமையென்னுங் கயம். இ - ள். தேவியிற்காட்டில் ஒளியுஞ்சாயலும் வேறொப்பி லாத வள் காமத்தாலே செயலறவெய்தித் தன்வருத்ததை வெளியாகக் கூறித் தன்பிள்ளையைத்தூதாகப் போகவிட்டளென்க. (151) 1002. பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனாள் நாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட வீணை வித்தகற் காணிய விண்படர்ந் தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே. தானேந்திய பூணுடனே விருப்பஞ்செய்கின்றமுலை. இ - ள். நேயத்தையுடைய பைங்கிளி பொன்னனாளது நாணுங்குலனும் நன்மைகுறையும்படி அவள்வேட்கையறிவித் தற்கு யாழ்வென்றுகொண்ட தத்தையை விரும்பினவனைக் காண வேண்டி விண்ணிலே சென்று அவனிருக்கின்றவிடத்தே பறந்த தென்க. (152) வேறு. 1003. கூட்டினான் மணிபல தெளித்துக் கொண்டவன் றீட்டினான் கிழிமிசைத் திலக வாணுதல் வேட்டமால் களிற்றிடை வெருவி நின்றதோர் நாட்டமு நடுக்கமு நங்கை வண்ணமே. இ - ள். பலமணிகளையுங் கரைத்துக்கொண்டு பலதிறத்து வண்ணங்களையுங் கூட்டினான்; அங்ஙனங்கூட்டினவன் கிழி மேலே குணமாலை யானையின்முன்னர் அஞ்சிநின்ற நடுக்கத் தையுந் தன்னைநோக்கினையும் அவடன்செயலாகவே தீட்டி னானென்க. இக்கருத்தானன்றே “ நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி - நடுங்கினாள்” (சீவக.1024) என்கின்றான். (153) 1004. நெகிழ்ந்துசோர் பூந்துகி னோக்கி நோக்கியே மகிழ்ந்துவீழ் மணிக்குழன் மாலை காறொடு முகிழ்ந்துவீங் கிளமுலை முத்தந் தைவரும் புகழ்ந்துதன் றோள்களிற் புல்லு மெல்லவே. இ - ள். அங்ஙனமெழுதினவன் நெகிழ்ந்துவீழ்கின்ற துகி லொன்றையுந் திருத்தலாகாதென்று மனத்தாற்குறித்து அதனைப் பார்த்துநின்றே மகிழ்ந்து குழன் முதலியவற்றைத் திருத்தத் தொடும்; முகிழ்ந்துவீங்கிளமுலையின்முத்தத்தையுஞ் செவ்விதாக இடத் தொடும்; புகழ்ந்து தன் றோள்களின்மேலே மெல்லப்புல்லுமென்க. நோக்கி - இது நோக்கனோக்கம். நோக்கியே-இது பொறியா னோக்குநோக்கம். வெருவிநின்ற நடுக்கமெழுதலிற் குலைந்தனவற்றை மயக்த் தாற் றிருத்தத்தேடினென்க. மாலை-அவள் பெயருமாம். மணிக் குரன்மாலையும் பாடம். (154) 1005. படைமலர் நெடுங்கணாள் பரவையேந்தல்குன் மிடைமணி மேகலை நோற்ற வெந்தொழிற் புடைதிரள் வனமுலைப் பூணு நோற்றன வடிமலர்த் தாமரைச் சிலம்பு நோற்றவே. இ - ள். படையுமலரும்போன்ற கண்ணாளுடைய வல்குலிலே மிடைந்த மேகலை நோற்றன; கொடிய தொழிலை யுடைய முலையிற் பூண்களுநோற்றன; அடித்தாமரையிற் சிலம்புகளுநோற்றன; யானே நோலாதேனென்றானென்க. இதுகுறிப்பெச்சம். அடிமலர் - ஒருசொல். (155) 1006. மின்னணங் குறுமிடை மேவர் சாயலுக் கின்னண மிறைமகன் புலம்ப யாவதுந் தன்னணங் குறுமொழித் தத்தை தத்தையை மன்னணங் குறலொடு மகிழ்ந்து கண்டதே. இ - ள். இறைமகன் குணமாலைக்கு இன்னணம் புலம்பக் கண்டு அவன் அங்ஙனம் மிக வருத்தத்தையுறுதலினாலே முடிந்ததென்று மகிழ்ந்து தன்னுடைய குணமாலையது வருத்த முற்ற மொழியை அறிவிக்கலுற்ற கிளி அதற்கிடையீடாகக் காந்தருவதத்தை வருகின்றநிலையைக்கண்டதென்க. மேவரு - விகாரம். யாவதுமென்றது - அறிவுமுதலிய குணங்களை. மன் - மிகுதி. எல்லாவழியானும் பெறுதற்குரியவன் வருந்துதலின், ‘இறைமகன்புலம்ப’வென்றார். (156) 1007. ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேற் சூடிய கலைப்புறஞ் சூழ்ந்த பூந்துகி லோடிய வெரிவளைத் துருவ வெண்புகை கூடிமற் றதன்புறங் குலாய கொள்கைத்தே. இ-ள். பாம்பென வகன்றவல்குன்மேற் சூடின மேகலையைப் புறத்தேசூழ்ந்த துகில் விளையவோடின உருவத்தையுடைய எரியை வெண்புகை கூடிவளைத்த அதின் புறத்தே நிலைபெற்ற தன்மைத் தென்க. பாம்பு - அல்குற்கே யுவமையாதலின் அடுத்துவரலு வமையன்று; “அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே” (தொல். உவம.36) என்றார். மற்று - அசை. “மாண்குலாங் குணத்தினால்” (சீவக.2233) என்றார் பின்னும். (157) 1008. கொன்வளர் குவிமுலைக் கோட்டிற் றாழ்ந்தன மின்வளர் திரள்வடம் விளங்கு பைங்கதி ரின்வள ரிளம்பிறை யெழுதப் பட்டன பொன்வளர் செப்பின்மேற் பொலிந்த போன்றவே. பொன்- பெருமை. இ - ள். முலைக்கோட்டிலே திரள்வடங்கள் கிடந்தன, எழுதப்பட்டனவாகிய பொன்வளர்ந்த செப்பின்மேலே கதிரை யுடைய இனிமை வளர்ந்த பிறை பொலிந்தன போன்ற வென்க.(158) 1009. குண்டல மொருபுடை குலாவி வில்லிட விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய மண்டல நிறைந்ததோர் மதிய மன்னதே யொண்டொடி திருமுகத் துருவ மாட்சியே. இ-ள். ஒண்டொடிமுகத்தினுருவத்தினழகு ஒரு புடையிலே குண்டலம் வில்லிட, ஒருபுடையிலே தோடு ஒளியைவீச வட்ட நிறைந்ததொரு மதியமுண்டாயின்அதனையொக்குமென்க. (159) 1010. பூணிற முலையவள் பொருவில் பூநுதன் மாணிறக் கருங்குழன் மருங்கிற் போக்கிய நாணிற நகுகதிர்ப் பட்ட நல்லொளி வாணிற மின்னிருள் வளைத்த தொத்ததே. இ-ள். பூணையும் நிறத்தையுமுடைய முலையினை யுடையாளதுகுழலின்பக்கத்தின் நாடோறும் நிறமிகுகின்ற பிறைபோலுநுதலிலே கட்டிய நல்லொளிப் பட்டமானது பிறை யைச்சேர்ந்தவிருளை மின்வளைத்ததன்மையை யொத்த தென்க. (160) 1011. கடிகமழ் பூஞ்சிகைக் காமர் மல்லிகை வடிவுடை மாலைகா றொடர்ந்து வாய்ந்தது நடுவொசிந் தொல்கிய நாறு மாமலர்க் கொடியின்மேற் குயில்குனிந் திருந்த தொத்ததே. இ - ள். மல்லிகைமாலை தன்னிடத்தே கட்டப்பட்டுப் பூமுடி வாய்ந்தது, நடுவுவளைந்துநுடங்கிய பூங்கொடியின் மேலே குயில்வளைந்திருந்த தன்மையை யொத்ததென்க. (161) 1012. சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனின மலங்கலுண் டியாழ்செயு மம்பொற் பூங்கொடி நலம்பட நன்னடை கற்ற தொக்குமிவ் விலங்கரித் தடங்கணா ளியாவ ளாங்கொலோ. இ - ள். இவள் நடை, தேனினமுண்டுபாடும் பொற்பூங் கொடி சிலம்பும் மேகலையுமொலிப்ப நடைகற்ற தன்மையை யொக்கும்; இவள் யார்கொலென்றையுற்றதுகிளியென்க. இஃது இல்பொருளுவமை. (162) 1013. யாவளே யாயினு மாக மற்றிவண் மேவிய பொருளொடு மீண்ட பின்னலா லேவலாற் சேர்கலே னென்று பைங்கிளி பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே. இ - ள். பைங்கிளி இவள் யாவளாயினுமாக; இதனாற் பெற்றதென், இவடான்மேவியகாரியத்தை முடித்து மீண்ட பின்னல்லது யான் குணமாலையதேவலாற் சேரக்கட வேனல்லே னென்று சண்பகத்தைப்பொருத்திற்றென்க. (163) ஏ வல்லவனென்றுமாம் (163) 1014. மதுக்களி நெடுங்கணாள் வான்பொற் கிண்கிணி யொதுக்கிடை மிழற்றச்சென் றெய்தி யூன்கவர் கதக்களி வேலினாற் கண்டு காமநீர்ப் புதுத்தளி ரனையவள் புலந்து நோக்கினாள். இ - ள். மதுவினதுகளிப்பைத் தன்னிடத்தேயுடையதத்தை கிண்கிணி நடையிடத்தே யொலிப்பச் சென்றணுகி ஊனைக் கவரும் வேலினானைக்கண்டு காமத்தாற் புலக்கையினாலே புதுநீரிற் றளிரையொக்க நடுங்கினவள் பின்பு படத்தைக் குறித்துப் பார்த்தா ளென்க. “கொல்புனற் றளிரி னடுங்குவன ணின்றே” (பதிற் . 25) என்றார்போல. இனிக் காமநீரால் வளர்ந்த தளிருமாம். (164) 1015. இதுவென வுருவென வியக்கி யென்றலும் புதிதிது பூந்துகில் குழல்கள் சோர்தலான் மதுவிரி கோதையம் மாலை நின்மன மதுமுறை யியக்கலி னியக்கி யாகுமே. 1016. முளைத்தெழு மதியமுத் ரும்பி யாங்கென விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெஞ்சிலை வளைத்தன புருவமு முரிந்த வல்லையே கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே. இவையிரண்டுமொருதொடர். 1. இயக்கி தெய்வமாதலின் இதுவென்றார். 2. எனவென் பதனைப்பிரித்து முன்னே கூட்டுக. கிளைக்கழுநீர் - அலர்ந்த பூவிற்குக் கிளையாகியகழுநீர். இ - ள். இவ்வுருவென்னவுருவென்று தத்தைகேட்ப, அவன் இயக்கி யென்ற வளவிலே, துகிலுங்குழலுஞ்சோர எழுதலின், இது புதியதோரியக்கி, நீபொய்கூறினாயுமல்லை; அக்குண மாலை நின்மனமாகிய வதனை முறையே ஆற்றாமை மிகும்படி இயக்குதலின் இயக்கியாமென்றாளாக, மதியம் முத்தை யரும்பியாங்கு வல்லே திருமுகம் வியர்ப்பை விளைத்தது; புருவமுமேறி வளைந்தன; கண்ணும் நீர்க்கீழரும்பினது(முருகு.29) சிவப்பினுஞ் சிவந்தனவென்க. (165-6) 1017. பாவைநீ புலயி னீடல் பாவியேற் காவியொன் றிரண்டுடம் பல்ல தூற்றுநீர்க் கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே மேவிப்பூங் கங்கையுள் விழைந்த வன்னமே. இ-ள். அதுகண்டு பாவாய், இருவர்க்குமுடம்பி ரண்டல்லது பாவியேற்குநின்னுயிரே என்னுயிராயிருக்கும்; இது நந்தன்மை; இனிக் கங்கையிலேமேவி அதனை விரும்பிய வன்னம் மண லூற்று நீரிலே அணுகச்செல்லாதே, அதனை நீயறிதியாதலிற் புலவியினீட லென்றானென்க. கூவலிற்செல்லாதெனவே கங்கையைநிகர்க்கும் யாற்றிலே செல்லுமென்பதாயிற்று; எனவே குணமாலைமரபுங்கூறி அவளை வரைதலும் முறைமையென்று கூறினானாம். (167) 1018. பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுலா ணேர்முகப் பாவையை நோக்கி நெய்சொரி கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே யார்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. இ - ள். வேறொருபெண்டிரைப் பெயர்சொல்லவும் பொறாதே சீறுகின்றவள் அங்ஙனங்கூறிய சொற்பொருளு ணர்ந்து, குண மாலையை யெதிர்முகமாகநோக்கி அவள்வடிவின் மிகுதி கண்டமை யாற் கணவனிடத்தே சாயலுக்கு அழல்போல் வதொரு புலவி மிக்கதென்க. நேரமர்ப்பாவையை நோக்கி பாடமாயிற் றனக்குமாறாகிய பாவையை நேரேநோக்கியென்க. (168) 1019. புலந்தவள் கொடியென நடுங்கிப் பொன்னரிச் சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னிமே லலங்கல்வா யடிமல ரணிந்து குண்டல மிலங்கப்போந் தினமலர்ச் சிதறி யேகினாள். இ - ள். அங்ஙனம்புலந்தவள் கோபத்தாலே கொடியைப் போலே நடுங்கி அவன்றலைமேற்கிடந்த மாலையிடத்தே சிம்பும் மேகலையு மிழற்றும்படி தன்னடித் தாமரையைச் சூட்டி அவ்விடத் தினின்றும் பெயர்ந்து பின்பு மலரைச்சிதறித் தன்மனையிலே யேகினாளென்க. (169) 1020. துனிப்புறு கிளவியாற் றுணைவி யேகலு மினிப்பிறர்க் கிடமிலை யழுவ லீங்கெனாக் கனிப்புறு சொல்லளைஇப் பறந்து காளைதன் பனிக்கதிர்ப் பகைமலர்ப் பாதஞ் சேர்ந்ததே. இ - ள். அவன்கூறிய வெறுப்புற்ற வார்த்தையோடே தத்தை போயினாளாக, கிளி இவளூட நீங்காதுபோதலின் இவ்விடத்துப் பிறர்க்கிடமில்லை.; இனியிவ்விடத்தினின்று மெழுந்திருப்பே னென்று இனிமையுற்றசொல்லைத் தன்னிலே கூறிப்பறந்து சென்று காளை தன்னுடைய மதியாகிய பகையை யுடைய தாமரை போலும் பாதத்தை வணங்கிற்றென்க. (170) 1021. வாழ்கநின் கழலடி மைந்த வென்னவே தோழியர் சுவாகதம் போது கீங்கெனச் சூழ்மணி மோதிரஞ் சுடர்ந்து வில்லிட யாழறி வித்தக னங்கை நீட்டினான். இ - ள். கிளிஅங்ஙனம்வணங்கி மைந்தனே, நின்னடிவாழ் வதாகவென்ன, வித்தகன் எந்தோழியர்நல்வரவே, இவ்விடத்தே போதுகவென்றுகூறி மோதிரமொளிவீசும்படி கையை நீட்டினா னென்க. அடிவாழ்கவென்றன்முறைமை. குணமாலையையுஞ் சுரமஞ் சரியையுங் குறித்துத் தோழியரென்றான். ‘ஆ’வென்று பாடமோதி வியந்து தோழி சுகமேவந்ததேயென்றுமாம். (171) 1022. பொன்னியல் குரும்பையிற் பொலிந்த வெம்முலைக் கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி முன்னனமே வந்தென முறுவ னோக்கமோ டென்னைகொல் வாவென வினிய செப்பினான். இ - ள். கன்னியர்வார்த்தையுடனே கிளிவந்ததென்று உட்கொண்டு மகிழ்ச்சி கொண்டநோக்குடனே என்குறிப்பே நின்வரவுயாதனைக் கருதியோ வென்று இனியகூறினானென்க. என்முன்னமேயென்றான், பின்பும் “ஆற்றாதே னாற்ற - விடுந்த சிறுகிளி” (சீவக.1041) என்கின்றமையின். வந்ததென -விகாரம். (172) 1023. மையலங் களிற்றெடு பொருத வண்புக ழையனைச் செவ்விகண் டறிந்து வம்மெனப் பையர வல்குலெம் பாவை தூதொடு கையிலங் கெஃகினாய் காண வந்ததே. இ- ள். அதுகேட்டு எஃகினாய் எம்பாவை களிற்றொடு பொருதவை யனைக் கண்டு அவன்செவ்வியறிந்து வாவெனக் கூறிய hர்த்தையுடனே யான்வந்தது நின் செவ்விகாண்டற் கென்ற தென்க. செவ்வியறிதல்- வேட்கையுண்டில்லை யென்றறிதல். (173) வேறு 1024. வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக நெஞ்சமு நிற நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி யஞ்சனத் துவலை யாடி நடுங்கினா ணிலைமை யென்னை பைஞ்சிறைத் தத்தை யென்னப் பசுங்கிளிமொரியுமன்றே. இ - ள். தத்தாய், கொடிய வேழமென்னுநோயுண்ட விளாம் பழம்போலே வெறுவியேமாம்படி நெஞ்சையு நிறையையும் பிறரறி யாமற் கண்ணினாற் கவர்ந்த கள்வி நடுங்கினாள்; அவளது தன்மை எங்ஙனேயென்று அவன்கேட்க அக்கிளிஅவடன்மையைக் கூறுமென்க. வேழம்-தேரைபோயிற்றென்றாற்போல்வதொரு நோயென்க. இனி யானை யுண்டது வெறுவிதாமென்று முரைப்ப. ஈண்டு நாட்டமுநடுக்கமும் வருத்தினமை கூறினான். (174) வேறு. 1025. பூவணை யழனின்மேற் சேக்கும் பொன்செய்தூண் பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா லாவியா வழலென வுயிர்க்கு மையென மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே. 1026. பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாண் மணிக்கழங் காடலண் மாமை தான்விளர்த் தணித்தகை யாழினோ டமுதம் விட்டொரீஇத் துணைப்பெரு மலர்க்கணிற் றுயிலு நீங்கினாள். 1027. திருந்துவேற் சீவக சாமி யோவெனுஞ் கருங்கடல் வெள்வளை கழல்ப வோவெனும் வருந்தினேன் மார்புறப் புல்லு வந்தெனும் பொருந்துபூங் கொம்பன பொருவின் சாயலே. இவை மூன்று மொருதொடர். 1.‘அழலெழவம் ’-பாடம் 3. உயிரைக் காத்த வருத்தம் இன்று உடம்பைக் காத்தற்கரியதோ வென்று கருதி, ‘வளைகழல்பவோ’ என்றாள். இ - ள். பாவைதான், பிறரைத்தாழ்விக்கத்தக்க கோலத் தையும் பந்தையும் பாராளாய் ஆடாளாய் விளர்த்து யாழையு முணவையும் விட்டுநீங்கி உறக்கத்தையுங் கைவிட்டாள்; இத்தன் மையேயன்றி உயிருநீங்குமோவென்றுகருதிப் பூம்படுக்கையாகிய நெருப்பிலே கிடந்துபார்க்கும்; அதினும் உயிர்நீங்காமையிற்றூ ணைப் பற்றுக் கோடாகப் பொருந்திநின்றும் பார்க்கும்; வருத்தக் குறிப்புத்தோன்ற ஐயெனக்கூறிப்போய்ப் பல்காலாவித்து நெட்டு யிர்ப்புக்கொள்ளாநிற்கும்; பின்பு அதுவுமன்றி நிலமிசை மெல்ல விருக்கும்; அங்ஙனமிருந்து பிறர்க்குவமை கூறுதற்கினிய சாய லையுடையாள் சீவகசாமி, வளை கழல வமையுமோவென்னும்; நின்னுருவம் வெளிப்பட்டதனைப் பல்காலுஞ் சென்றுபுல்லி அது தன்னெதிர்புல்லாமையின் யான் புல்லி வருந்தினேன், இனி நீதான் வந்து மார்புறும்படி புல்லென்னும்; அதுகாணாமையின் ஓவென்று வருந்துமென்க. (175-7) 1028. கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்குமஃ தின்னதென் றுரையலர் நாணி னாதலான் மன்னும்யா னுணரலேன் மாத ருற்றநோய் துன்னிநீ யறிதியோ தோன்ற லென்றதே. இ - ள். அங்ஙனம் பகர்ந்த கிளிதான் கன்னியர் தாமுற்ற காம நோயை நாணாலே கண்ணனார்க்கும் இத்தன்மைத் தென்று உரை யாராதலின், அவளுமெனக்குரையாள்; இனி யான் மக்களினன் மையின் மாதருற்றநோயைத் துன்னிமிகவுமறியேன்; தோன்றலே, நீ அஃதறிதியோ? கூறென்றதென்க. (178) வேறு. 1029. புள்ளின் வாயுரை கேட்டலும் பொன்செய்வே லெள்ளி நீண்டகண் ணாடிறத் தின்னுரை யுள்ளி னாருழைக் கண்டதெத் தானரோ வள்ளன் மாத்தடிந் தானன்ன மாண்பினான். இ - ள். குணமாலைதிறத்தில் இனியவுரைகளைக் கிளியின் வாயில் வார்த்தையாலே கேட்டவளவிலே, வள்ளல் முருகனை யொத்த மாண்பினான் பெறுதற்கரிதாக நினைத்தார் சிலரைத் தன்னிடத்தே வரக்கண்டதன்மையை யொத்தா னென்க. (179) 1030. சொன்ம ருந்துதந் தாய்சொல்லு நின்மனத் தென்ன மர்ந்தது ரைத்துக்கொ ணீயென வின்னி மிர்ந்தநின் வீங்கெழிற் றோளவட் கின்ம ருந்திவை வேண்டுவ லென்றதே. இ - ள். குணமாலைசொல்லுஞ் சொல்லாகியமருந்தினை யானாற்றும்படி தந்தநீநின்மனத்திற்குப்பொருந்தியதியாது? அதனை யுரைத்துக் கொளென்றானாக, கிளிநின்னைப்போல வார்த்தை யாலாற்றாள் அவட்கு நின்றோளே இனியமருந்து, இவை யான் பரிசிலாக வேண்டுவேனென்றதென்க. (180) 1031. பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூ நெற்குன் றாம்பதி நேரினுந் தன்னையான் கற்குன் றேந்திய தோளிணைக் கண்ணுறீஇச் பொற்குன் றாபுணர் கேன்சொல்லு போவென்றான். இ - ள். அதுகேட்டவன் அவள்சுற்றத்தார் பொருளையு மூரையுந் தரவேண்டுமென்னினும் யான் அவற்றைச்கொடுத்துத் தோளிணையைச் சேர்த்தித் தன்னைப்புணர்வேன்; இச்சொற் சலியாது, சென்றுசொல், நீபோவென்றானென்க. கற்குன்றேந்திய தோள், “கொடுஞ் சிலையான்”(சீவக.1041) எனத் தன்னைவியத்தல் குற்றமெனின், “ கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி - கிழவோன் வினைவயி னுரிய வென்ப” (தொல்.கற்பு.40) என்பதன் கருத்தாற் குற்றமன்று. வினையாவது செயப்படுபொருள். பொருளு மூருங் கொடுத்துப் புல்லுவேனென்னுங் கடைப்பிடியாகிய செயப்படு பொருளும் ஆள்வினைக்குச்சிறப்புடைமையின், யானேபுணர்வே னென்னுமாள்வினைக் கருத்தாற்றன்னைப் புகழ்ந்துரைக்கவே, அதுபற்றுக்கோடாக ஆற்றுவாளென்பது பயனாம். இது கைக்கிளை யாதலின், முன்னிலையன்றியும்புகழ்ந்தான். புறத்திணையில் “தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்”(தொல்.புறத்.5) தலை வற்குரித்து. (181) 1032. சேலை வென்றகண் ணாட்வை செப்பரி தோலை யொன்றெழு திப்பணி நீயென மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குர லோலை யோடுகொண்ட டோங்கிப் பறந்ததே. இ - ள். அதுகேட்டகிளி கண்ணாள்வருத்தந் தீரும்படி அவட்கு இவை யெல்லாங் கூறுதலரிது; அதுவுமன்றி நின்வருத்தம் உண்மையென்றுணரும்படி திருமுகத்தையுந் திருவாழியையுந் தந்தருளென்றுகூற; அவனும் பிறரயிராமற்றினைக்கதிரில் வைத்த ஓலையோடே ஆழியையுங் கொடுப்ப, அக்கிளி அவற்றைக் கொண்டு உயர்ந்து பறந்ததென்க. ஒன்றென்றது ஆழியை; மேல் “நாம மோதிரந்தொட்டு” (சீவக.1040) என்பர். (182) 1033. திருந்து கோதைச் சிகழிகைச் சீறடி மருந்தின் சாயன் மணங்கமழ் மேனியாள் பொருந்து பூம்பொய்கைப் போர்வையைப் போர்த்துடன் கருங்கட் பாவை கவின்பெற வைகினாள். மருந்து - அமுது; இதற்கு அமிர்தன்ன சாயலுக்குரைத் ததுரைக்க. இ - ள். கோதை முதலியவற்றையுடைய தத்தை அங்ஙன மேகி னவள் பொய்கை வடிவாக எழுதின படாத்தை மெய்ம் முழுதுமறையப் போர்த்துக் கோபத்தாலே விழித்துக் கிடந்தா ளென்க. பொய்கைபோலுங் கண்ணீர்ப்போர்வையுமாம். (183) 1034. மறங்கொள் வெங்கதிர் வேலவன் வார்கழல் கறங்க வேகித்தன் காதலி யூடலை யுறைந்த வொண்மலர்ச் சென்னியி னீக்கினா னிறைந்த தின்ப நெடுங்கணிக் கென்பவே. இ - ள். கிளிபோனபின் வருத்தந்தீர்ந்து வேலவன் தத்தையது மலையேறப்போய் அவளூடலை மலருறைந்த தன்றலையினாலே வணங்கி நீக்கினான்; அப்பொழுது அவளுக்கு இன்பநிறைந்த தென்க. (184) வேறு. 1035. தன்றுணைவி கோட்டியினி னீங்கித் தனயிடம்பார்த் தின்றுணைவற் சேர்வானி ருந்ததுகொல் போந்ததுகொல் சென்றது கொல் சேர்ந்ததுகொல் செவ்வி யறிந்துருகு மென்றுணைவி மாற்றமிஃ தென்றது கொல்பாவம். அக்கிளி செல்கின்றபொழுது குணமாலை கருதினதன்மை கூறுகின்றார். இ - ள். கிளி சென்றதோ, சென்று இன்றுணைவனைத் தன்றுணைவியுந்தானுமிருக்கின்ற இருப்பினின்றுநீங்கித் தனி யான விடத்தைப்பார்த்துச்சேரக்கருதியிருந்ததோ, அக்கோட்டி யைப் பொறாதே போந்ததோ, பொறுத்துப்போய்ச் சேர்ந்ததோ, சேர்ந்து இது காலமென்றறிந்து நினக்குத் துணைவியாகின்ற குணமாலை வார்த்தையிஃது, அவடான்காமத்தீயானுருகும், இதற்கு நீசெய்யக் கருதுகின்றதென்னெனக் கூறிற்றோ, என்னே இஃதொரு பாவமிருந்தபடி என்னென்று கருதினாளென்க. என்பிள்ளையும் யானும்பட்டது என்னென்றாள். (185) வேறு 1036. செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான் தந்தாரேற் றந்தாரென் னின்னுயிர்தாந் தாராரேல் அந்தோ குணமாலைக் காதகா தென்றுலகம் நொந்தாங்க ழமுயன்று நோற்றானு மெய்துவனே. இ - ள். கிளியார்போனவருக்குஅவர்தாம் இனியதொரு வாத்தையைத் தான சொன்னாராயிற் கிளியார்க்கு முகமன் கூறினாரன்று; என்னுயிரைத்தந்தார்; அவர் அந்தோ ! அங்ஙனங் கூறாராயின் அவ்விடத்துயான் சுரமஞ்சரியைப்போலே முயன்று தவஞ்செய்தாயினும் பின்பெய்துவேனோ, ஆ! குண மாலைக்கு இவ்விறந்துபாடு தகாதென்று, உலகநொந்தழும்படி இறந்து பாம்டை யெய்துவேனன்ளோவென்று கருதினாதளென்க. செந்தார் - கழுத்திலிட்டவரை. கிளியார், ஒன்றென முடித்தலாற்கொள்க. எய்துவனே, ஏகாரம்-எதிர்மறை. அந்தோ, ஆ இவையிரக்கக்குறிப்பு. (186) 1037. சென்றார் வரைய கருமஞ் செருவேலான் பொன்றாங் கணியகலம் புல்லப் பொருந்துமேற் குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணன்மே லன்றாங் கணியிழையா ளாழி யிழைத்தாளே. இ - ள். அங்ஙனங்கருதின வணியிழையாள் காரியத் தின்முடிவு காரியங்கொள்ளப் போனாரறிவினளவாயிருக்கும்.; என்கிளிபேதை யென்பது யானறிவேனன்றோ, இனி அதன்வரவு பார்த்திராதே கூடலிழைத்துப்பார்ப்பேனென்று கருதி, வேலான கலம் என்னைத் தழுவக்கூடுமாயிற் குன்றாதே கூடுவாயாக வென்றுகூறி முத்தாகிய மணலிலே அதனைப் போகவிட்ட வன்றே யப்பொழுதே கூடலுக்கு வட்டத்தை யிழைத்தாளென்க. (187) 1038. பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற் கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார் மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா ளாகும்யான் சேர்வ லெனச்சென் றடைந்ததே. இ - ள். அங்ஙனமிழைத்தவள் அவ்வாழியுட்கீறுகின்ற கீற்றிலே ஒருகீற்றிற் பாதியைக்கீறி இதுகூடாதாயிற் கிளிநல் வரவாய் வந்ததேனும் அதுகேளாதே எனக்குயிர் போகாநிற்குமே யென்றுகருதி அதனைவிட்டுக் கிளியின் வரவைநினைத்திருந்தா ளாகப் பைங்கிளியடைந்ததென்க. அடைந்தபடி மாகமேநோக்கி அவ்விடந்திருந்தாள்யார்? இங்ஙன மிருப்பார் வேறின்மையிற் குணமாலையேயாகும்; இனி யான்சேர்வேனென்றணுகிற்று. தான்போனபின்புள்ள வேறுபாட் டாலையுற்று வருத்தமிகுதிகண்டு தெளிந்தது. (188) 1039. கண்டா ணெடிதுயிர்த்தாள் கைதொழுதாள் கையகத்தே கொண்டா டினைக்குரறான் சூடினா டாழ்குழன்மே னுண்டார்ப் பசுங்கிளியை நோவ வகட்டொடுக்கி வண்டாரான் செவ்விவாய்க் கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள். இ - ள். அணுகினவக்கிளியைக்கண்டாள்; கண்டு இஃது என்கூறு கின்றதோவென்று உயிர்த்தாள்; உயிர்த்துத்தினைக் கதிரைக்கண்டு அதிலேயோலையுண்டொன்று கருதித் தொழு தாள்; தொழுது முற்கொடுத்தவாழியினைக் கையினுள்ளே மறையக்கொண்டாள்; கொண்டு அது பிற்கொடுத்த திருமுகத் தைத் தலைமேலேசூடினாள்; சூடி அக்கிளியை நோம்படி வயிற்றிலே யணைத்துக்கொண்டாள்; கொண்டு தாரான் வருத்தத்தை அதுகூறக்கேட்டாள்; கேட்டு உடம்பு குளிர்ந்தா ளென்க. வயிற்றிலே யணைத்தலியல்பு. (189) 1040. தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டிற் காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித் தாம்பான் மணிநாம மோதிரந்தொட் டையென்னத் தேம்பா வெழுத்தோலை செவ்வனே நோக்கினாள். இ - ள். பெருந்தோளிதான் அவனோடே ஆம்பகுதியினை யுடைய சீவகனென்னும்பெயரைப்பொறித்த மோதிரத்தை யிட்டுப் பறவையைப் பாலமிர்தூட்டிக் கூட்டிலேதுயில் கொள்ளு வித்து அவன்றனெழுத்தை யுடைய வோலையை விரைய எதிர்முகமாக நோக்கி வாசித்தாளென்க. தேம்பாமைக்குக் காரணமாகிய வோலை. (190) 1041. கொடுஞ்சிலையா னோலை குணமாலை காண்க வடுந்துயர முள்சுடவெந் தாற்றாதே னாற்ற விடுந்தசிறு கிளியால் விம்மனோய் தீர்ந்தே னெடுங்கணா டானு நினைவகல்வா ளாக. இதற்குப் ‘பொற்குன்றெ’ன்னுங்(சீவக.1031) கவியிலே கூறினாம். இன்னாரோலை இன்னார் காண்கவென்றல் முறைமை. விடுத்த-விகாரம். இ - ள். சீவகனோலையைக் குணமாலைகாண்பாளாக, காம நோய்சுடுதலாலே வெந்து ஆற்றாதயான் ஆற்றும்படி தான்வர விட்டகிளியாலே மிக்கவருத்தந்தீர்ந்தேன்; நெடுங்கணாளாகிய தானும் வருத்தமிகா தொழிவாளாகவென்க. (191) 1042. ஈட்டஞ்சா னீணிதியு மீர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ் மோட்டு வளஞ்சுரக்கு மூரு முழுதீந்து வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோட் பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே. இ - ள். அறத்தான் ஈட்டமமைந்த பெரும்பொருட்டி ரளையும், பெருவளத்தைக் கொடுக்குமூரினையுங் குரவர்கருதின படியே கொடுத்து, சிலைநுதலாளைத் தோளைப் புல்லா தொழியேனென்க. இரண்டாமுருபிங்ஙனம்வருதல் “தெள்ளிது” (தொல். வேற்று.ம.6) என்பதனாற் கொள்க. அரிய பொருள்களை வேட்டார்க்கு அவைபெற்றாற் போலினிய தோள். (192) 1043. குங்குமஞ்சேர் வெம்முலைமேற் கொய்தார் வடுப்பொறிப்பச் செங்கயற்கண் வெம்பனியாற் சிந்தை யெரியவித்து மங்கைமகிழ வுறையேனேல் வாளமருட் பங்கப்பட் டார்மேற் படைநினைந்தே னாகென்றான். 1044. நூல்புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சேர் நுண்வரிகள் பான்மடுத்துத் தீந்தேன் பருகுவாள் போனோக்கிச் சேல்படுத்த கண்ணீர் சுமந்தளைஇ மெய்ம்மகிழ்ந்து மால்படுத்தான் மார்பின் மணந்தாளே போன்மகிழ்ந்தாள். இவையிரண்டுமொருதொடர். 1. ‘வெம்பனி’யென்றான், புணர்ந்தாலன்றி முயக்கத்தள வால் உண்ணிறைவெப்ப முழுதுந் தீராதென்று. பங்கப்படுதல் - இமைத்தல்துணுக்கிடுதல் முதலியன. ஆகென்றான் - தொழிற் பெயர். 2. சேல்படுத்த - சேலைத்தோற்பித்த. இ - ள். என்மாலை தன்முலைமேலே வடுவாயழுந்தும்படி யான்முயங்குதலிற் பிறந்த உலகைக்கண்ணீராலே சிறிதுதணிந்த காமத்தீயை யவித்துத் தான்என்னன் புடைமைக்கு மகிழும்படி உறைந்திலேனாயிற் போரில் அஞ்சினார்மேலே படைவிட நினைந்தேனாகக்கடவேனென்றெழுதினவனுடைய நூலெற் றினாற்போலச் செவ்விதாய்க்கிடந்த உறுப்புக்கள்சேர்ந்த வரி களைப் பாலிலே தேனைவார்த்துப் பருகுவாள் போலே இனிமை யுற்று வாசித்து உவகை யளைஇக் கண்ணீர்சுமந்து உடம்பு குளிர்ந்து மயக்கத்தையுண்டாக்கினவன் மார்பிலே கூடினாள் போலே இனிமையுற்றளென்க. (193-4) 1045. பாலவியும் பூவும் புகையும் படுசாந்துங் காலவியாப் பொன்விளக்குந் தந்தும்மைக் கைதொழுவேன் கோலவியா லெஞ்சிலையான் சொற்குன்றா னாகெனவே நூலவையார் போனீங்க ணோக்குமினே யென்றாள். காற்றாலவியாவிளக்கு - மணிவிளக்கு; வெளிப்படை. அம்பு இடைவிடாமலெய்கின்றவில். நீங்களென்ற எழுத்துக்களை; அவற்றின்றன்மையும்வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலின்விளங்கக் கூறிற் றிலரேனுஞ் சமய நூல்களிற் கூறுதலின், அவ்வெழுத்துக்கள் தெய்வமென்றே கொள்க. இ - ள். சிலையான் நும்மை நீங்காது ஒற்றுமைப்படக் கூறிய சொற்குன்றானாயினும் நீங்கள் தரும நூலோதினார்களை நோக்குமாறு போல அச்சொல் இடையூறின்றி, ஆகவென்றே கருதி நோக்குமின்; நும்மை யானும் பாலவி முதலியவற்றைத் தந்து கைதொழுவே னென்றாள் என்க . (195) வேறு. 1046. மெவ்வலங் குழலி னாளை மதியுடம் படுக்க லுற்றுச் செவ்வியுட் செவிலி சொல்லுஞ் சிலையிவர் நுதலி னாய்நின் னவ்வைக்கு மூத்த மாம னொருமகற் கின்றுன் றாதை நவ்வியம் பிணைகொ ணோக்கி நகைமுக விருந்து செய்தான். 1047. பண்டியாற் பண்டி செம்பொன் பல்வளை பரிய மாகக் கொண்டுவந் தடிமை செய்வான் குறையுறு கின்ற தன்றிக் கண்டவர் கடக்க லாற்றுக் கிழிமிசை யுருவு தீட்டி வண்டிமிர் கோதை நின்னை வழிபடு நாளு மென்றாள். இவையிரண்டுமொருதொடர். இ - ன். அவ்வளவிலே குணமாலையை மதியையறிவுறலுற்று அதற்கேற்ப வார்த்தைசொல்லுஞ்செவிலி, சிலைபோல் விளங்கு நுதலினாய், நோக்கி, நின்றாய்க்கு மூத்த தமையன் நினக்கு மாமனா னவனுடைய ஒப்பிலாத மகனுக்கு இன்று உன்றாதை நகை முகமாகிய விருந்தையிட்டான்; அவ்வுடன்பாட்டாலே வளை யையுடைய கோதாய், நின்மைத்துனன் நினக்குமுலைவிலையாக வண்டியாலே ஒருவண்டிப்பொன் கொண்டுவந்து நினக்கு ஏவல் செய்தற்கு இன்று குறையுற்று நிற்கின்றதேயன்றிக் கடக்க லாற்றா நின்னுருவைக் கிழிமிசைத்தீட்டி நின்னை வழிபடுஞ் செய்யு மென்றாளென்க.விருந்து செய்தானென்பது குறைக்குடன் பட்டானென்பதாம். (196-7) 1048. மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர்நிதிக் கிழவன் காளை யுத்தம னுனது நாம மல்லதொன் றுரைத்த றேற்றா னித்திறத் திவன்க ணின்னை யெண்ணினா ரென்ன லோடுந் தத்தையங் கிளவி கையாற் செவிமுத லடைச்சிச் சொன்னாள். இ - ள். என்று பின்னும் நின்னைக்கோடற்குரியன், அழகின் மிக்கான், பொருளுடையவன், இளையன், நற்குணமுடையன், நின்பெயரல்லது வேறொருபெயரைக் கூறவறியான், இக்கூறுபாட் டையுடையவனிடத்தே நின்னைக் கொடுக்கவெண்ணினா ரென்ற வளவிலே குணமாலை கையாலே செவியைப் புதைத்து ஒருவார்த்தை கூறினாளென்க. (198) 1049. மணிமதக் களிறு வென்றான் வருத்தச்சொற் கூலி யாக வணிமதக் களிற னானுக் கடிப்பணி செய்வ தல்லாற் றுணிவதென் சுடுசொல் வாளாற் செவிமுத லீர லென்றாள் பணிவரும் பவளப் பாவை பரிவுகொண் டனைய தொப்பாள். இ - ள். பவளப்பாவை வருத்தங்கொண்ட தன்மையை யொப் பாள், கட்டுமணியையுடைய களிற்றைவென்றவன் “கொண்டுய் யப்போமின்”(சீவக.981) என்றசொல்லிற்குக் கூலியாக அவற்குத் தாழ்ந்து ஏவல்செய்வதன்றி வேறுகொடுக்கத் துணிதற்குக் காரணமென்? இங்ஙனஞ் சுடுசொல்லாகிய வாளாலே செவியிடத்தை யீராதே கொள்ளென்றாளென்க. ‘அடிச்செருப் பாவ தல்லா’லென்றும் பாடம். (199) 1050. கந்துகப் புடையிற் பொங்குங் கலினமா வல்லன் காளைக் கெந்தையும் யாயு நேரா ராய்விடி னிறத்த லொன்றோ சிந்தனை பிறிதொன் றாகிக் செய்தவ முயற லொன்றோ வந்ததா னாளை யென்றாள் வடுவெனக் கிடந்த கண்ணாள். கந்துகப்புடையில் - பந்தினதுபுடைத்தல்போல. ஆகி - ஆக. குரவர்நினைவுவேறாய்ப்போகத் தான் இவனைப்பெறுதற்குத் தவஞ் செய்தல். இ - ள். பின்னும் வடுப்போலுங்கண்ணாள் காளைக்கு எந்தையும் யாயும் நேராராயின் இறந்துபடுதலொன்று, தவமுயற லென்று, இவ்விரண்டினுளொன்று நாளை நமக்கு வந்துற்றதென் றழுதாதளென்க. (200) 1051. தேனெய்போன் றினிய சொல்லாள் சிறுமுதுக் குறைமை கேட்டே யூனைநைந் துருகிக் கைத்தா யுண்ணிறை யுவகை பொங்க வானெய்பாற் கிவர்ந்த தொத்த தழேற்கவென் பாவை யென்று தானையாற் றடங்க ணீரைத் துடைத்துமெய் தழுவிக் கொண்டாள். இ - ள். செவிலி குணமாலையதுசிறுமையிலே பேரறிவுடை மையைக் கேட்டு யூனைந்துருகி உலகைபொங்குகையினாலே நின்கருத்துப் பசுநெய் பாற்கு விரும்பிய தன்மையை யொத்தது. இனிப் பாவாய்! அழேற்கவென்று தானையாலே கண்ணீரைத் துடைத்துத் தழுவிக்கொண்டாளென்க. ஊனை; ஐ - அசை. பாற்வர்ந்ததும் பாடம். (201) 1052. துகண்மனத் தின்றி நோற்ற தொல்வினைப் பயத்தி னன்றே தகணிலாக் கேள்வி யான்கட் டங்கிய தென்று பின்னு மகண்மனங் குளிர்ப்பக் கூறி மறுவலும் புல்லிக் கொண்டாங் ககன்மனைத் தாய்க்குச் சொன்னா ளவளுந்தன் கேட்குச் சொன்னாள். இ - ள். மனத்திலழுக்கின்றாய்நோற்ற நல்வினைப்பயத் தானன்றே தட்டற்ற கேள்வியானிடத்தே நின்மனந் தங்கிய தென்று குளிரச்சொல்லி இருகாலாவதும் புல்லிக்கொண்டு அவ்விடத் தில் நற்றாய்க்கு அறத்தொடுநின்றாள்; அவளுந் தன்கணவனுக்கு அறத்தொடுநின்றாளென்க. (202) 1053. வினையமா மாலை கேள்வன் குபேரமித் திரற்குச் சொல்ல வனையதே பட்ட தென்றா லையனே நங்கைக் கொத்தன் வனையவே பட்ட போலு மணிமருண் முலையி னாளைப் புனையவே பட்ட பொற்றார்ப் புண்ணியற் கீது மென்றான். வியைமாமாலை - நற்றாய்பெயர். அனையதே - அப் படியே; பெரியதொருகாரியமே; ஏகாரம் - வினா. என்றால் ஒருவார்த்தைப் பாடு. இ - ள். நற்றாய் தன்கேள்வனாகிய குபேரத்திரற்குக்கூற, அவனும் அவள் மனத்திற்பட்டது அனையதே? என்றாற் குண மாலைக்கொத்தான் சீவகனே, அவளை அவனுக்குக் கொடுப்பே மென்றானென்க. (203) வேறு. 1054. கற்றார் மற்றுங் கட்டுரை வல்லார் கவியென்னு நற்றேர் மேலார் நால்வரை விட்டாற் கவர்சென்றார் சுற்றார் வல்விற் சூடுறு செம்பொற் கழனாய்கன் பொற்றார் மார்பீர் போதுமி னென்றாங் கெதிர்கொண்டான். இம்மூன்றுகலையும் வல்லார் நால்வர். என்னும் - என்று உலகங்கூறும். நான்கனுருபு அதற்குடம்படுதற்பாற்படும். இ - ள். குபேரமித்திரன் இவர்களைத் தேர்மேலராகப் போக விட்டாற்கு அவரும்போனார்; அப்பொழுது கந்துகன் மார்பீர்! இங்ஙனம் போதுகவென்று வாயிலிலேசென்று எதிர்கொண்டா னென்க. (204) 1055. சீந்தா நின்ற தீமுக வெலான் மணிச்செப்பி னீந்தான் கொண்டா ரின்முக வாச மெரிசெம்பொன் காந்தா நின்ற கற்பக மன்னீர் வரப்பெற்றேன் சேர்ந்தே னின்றே வீடென நாய்கற் கவர்சொன்னார். 1056. யாமக ளீது நீர்மகட் கொண்மி னெனயாருந் தாமக ணேரா ராயினுந் தண்ணென் னவரைமார்பிற் பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக் கியாமக ணேர்ந்தே மின்றென நாய்கற் கவர்சொன்னார். இவையிரண்டுமொருதொடர். 1. சீந்தாநின்ற - கோபியாநின்ற. வேலான்-கந்துகண். விகார மாக்கிச் சிந்தாநின்றவென்றுமாம். நாய்கற்கு - கந்துகற்கு. அவர் - வந்த நால்வரும். தம்மகள் - விகாரம். நாய்கற்கு-உமக்கு. அவர் - குபேர மித்திரர். இ - ள். வேலான் வெற்றிலையைச் செப்பிலே யீந்தான்; அவரும் அதனைக்கொண்டார்; கொண்டபின்பு கற்பகமன்னீர், நீர்வரப் பெற்றேனாதலின், இன்றே வீட்டைப் பெற்றேனென்று கந்துகன் முகமன்கூற, அதுகேட்டவவர் யாமகளைத் தருவே மென்றும், நீர்மகளைக்கொண்மினென்றும், வாய்விட்டுக்கூறி யாவருந் தம்மகளைக் கொடுக்க நேராராயினும், இன்று புதிதாகச் சீவகற்கு யாம் மகட்கொடை நேர்ந்தேமென்று உமக்குக் குபேர மித்திரர் கூறினாரென்று கந்துகற்குக் கூறினாரென்க. அவர்கூறினபடியைத் தேவர்கூறினார்.(205-6) 1057. சுற்றார் வல்லிற் சூடுறு செம்பொற் கழாற்குச் குற்றேல் செய்துங் காளையும் யானுங் கொடியாளை மற்சேர் தோளான் றன்மரு மானுக் கருள்செய்யப் பெற்றே னென்னப் பேசினன் வாசங் கமழ்தாரான் இ - ள். அதுகேட்ட கந்துகன் குபேரமித்திரன் குணமாலை யைச் சீவகற்குக் கொடுக்கப்பெற்றேனாதலின், அவனுக்குச் சீவக னும் யானுங் குற்றேவல் செய்யக்கடவேமென்று தாழ்ந்து கூறினானென்க. குற்றேவல்-விகாரம் அவன் றானே மகட்கொடை நேர்தலானுங் கொள்வார் தாழவே வேண்டுதலானு மிங்ஙனங்கூறினான். (207) 1058. விடைசூ ழேற்றின் வெல்புக ழன்றன் மிகுதாதை கடல்சூழ் வையங் கைப்படுத் தான்போன் றிதுகூறச் குடர்சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும்மப் படர்சூழ் நெஞ்சிற் பாவைதன் பண்பு மவர்சொன்னார். ‘விடைசூ’ழென்றது தோழரைக்கருதி. இ - ள். ஏற்றினையொத்த சீவகன்றந்தை உலகைக் கைக் கொண்டான் போல மகிழ்ந்து தாழ்ந்துகூறுதலின், வந்தவர்கள் இவன் அக்களிற்றை வென்றபடியும் அதனாற் பாவைகொண்ட குணத்தினையும் விளங்கக்கூறினாரென்க. பண்பு - நேராராயின் இறந்துபடுதல், தவஞ்செய்தலென்றது. (208) 1059. மறையார் வேள்வி மந்திரச் செந்தீக் கொடியேபோற் குறையாக் கற்பிற் சீவகன் றாயுங் கொலைவேற்கட் பொறையொன் றாற்றாப் போதணி பொற்கொம் பனையாளை நறையார் கோதை நன்றென வின்புற் றெதிகொண்டாள். வேதவேள்வியிற்றீ; மந்திரங்கூறுந்தீ. கொடி-ஒழுங்கு. ஆற்றா-ஈண்டுவினையெச்சம். இல்லறமென்கின்ற பொறை யொன்று மேநடத்தியணிந்தகொம்பு - இல்பொருளுவமை. கொம் பனையள் - வினையமாமாலை. நறையார்கோதை - குணமாலை. இ - ள். செந்தீக்கொடியேபோலுஞ்சுநந்தையும் யான் கருதிய விதனைத் தான் முற்படமூடித்ததன்மை நன்றென்றுகூறிக் கொம்பனையாளையின்புற்றுப் பின்பு கொலைவேற்கண்ணறை யார்கோதையை விரும்பினாளென்க. (209) 1060. பொற்கச் சார்த்த பூணணி பொம்மன் முலையாளை யற்கச் செய்த யாப்பின ராகி யவண்வந்தார் பொற்பக் கூறிப் போகுது மென்றார்க் கெழுகென்றார் வற்க மிட்ட வண்பரி மாவின வர்சென்றார் இ - ள். அவண்வந்தார் குணமாலையைச் சீவகனிடத்தே யடையும்படி கண்ணின யாப்பினராய்ப் பின்புமணஞ் செய்யும் பொழுதையும் பொலிவுபெறும்படிகூறிப் போவேமென்றார்க்கு அவர்களும் போகவென்றார்; அவரும் பண்முற்றுப் பெற்ற மாவின் மேலே சென்றாரென்க. முகூர்த்தந் தப்பாமன்முடித்தற்குக் கடிதிற்சென்றார். (210) வேறு. 1061. மடந்தை திறத்தி னியையம்மகட் கூறி வந்தார் விடந்தைத் தவேலாற் குரைத்தார்க்கவன் மெய்ம்ம கிழ்ந்தா னுடங்குங் கொடிப்போல் பவணுபுர மார்ப்ப வந்து தடங்கண் ணவடா யதுகேட்டலுந் தக்க தென்றாள். தைத்த - உள்ளேகிடக்கிற. நுடங்குகின்ற கொடிப் போல்பவள் - சுநந்தை. அது - தன்னைக்கூறியமொழி. இ - ள். குணமாலைதிறத்தாலே அவர்களியையும்படி மகளைக் கொடுப்பதாகப்பேசிவந்தவர்கள் குபேரமித்திரற்குக் குற்றேவல் செய்து மென்றதனையுரைத்தார்க்கு அவன் மகிழ்ந்தான். நூபுரமார்ப்பவந்து கொடிப்போல்பவள் கூறியமொழியைக் குணமாலைதாய்கேட்டலும் அவளுக்கு அது தக்க தென்றா ளென்க. (211) 1062. திருவிற் கமைந்தான் றிசைபத்து மறிந்த தொல்சீ ருருவிற் கமைந்தாற் கமைந்தாளென யாரு மொட்டப் பெருகுங் கணியிற் கணிபேசிய பேதி னாளாற் பருகற் கமைந்த வமிர்தின்படர் தீர்க்க லுற்றார். இ - ள். குணமாலைக்குச் சீவனமைந்தான்; சீவகனுக்குக் குணமாலையமைந்தாளென்று எல்லாருமிசையும்படி பெருகு நூலையுடைய கணிகூறிய மயக்கமில்லாத நாளிலே குணமாலை யது வருத்தத்தைத் தீர்க்கலுற்றாரென்க. (212) 1063. கரைகொன் றிரங்குங் க்டலிற்கலி கொண்டு கல்லென் முரசங் கறங்க முழவிம்மவெண் சங்க மார்ப்பப் பிரசங் கலங்கிற் றெனமாந்தர் பிணங்க வேட்டான் விரைசென் றடைந்த குழலாளையவ் வேனிலானே. அவ்வேனிலான்-நுதல்விழிக்கழியாத காமன். இ - ள். அவ்வேனிலான் கடல்போல ஆரவாரங்கொண்டு இயங்களெல்லாமியம்ப மாந்தர் தேனினங் கலங்கிற்றென நெருங்கக் குழலாளை வேட்டானென்க. (213) 1064. மழைமொக்கு ளன்ன வருமென்முலை மாதர்நல்லா ரிழைமுற் றணிந்தா ரெழுநூற்றுவர் கோடி செம்பொன் கழைமுற்று தீந்தேன் கரும்பார்வய லைந்து மூதூர் குழைமுற்று காதின் மணிக்கொம்பொடு நாய்க னீந்தான். தீந்தேன் முற்றின கரும்பின் கழை; கழை - கோல்; * “தீங்கட் கரும்பின் கழைவாங்கும்”(கலித்.40) என்ப. இ - ள். குழைசூழ்ந்த காதினையுடைய கொம்பை நீர் வார்த்துக் கொடுக்கின்ற பொழுதே இணைய மகளிரெழு நூற்று வரையும் முற்றுமிழையணிந்தாரெழுநூற்றுவரையுங் கோடி செம்பொன் னையும் ஐந்தூரையுங் கொடுத்தானென்க. (214) வேறு. 1065. பண்ணார் கிளவிப்பவ ழம்புரை செவ்வாய்க் கண்ணார் கதிர்மென்முலைக் காம்படு மேன்றோள் விண்ணோ ருலகின்னொடு மிந்நிலத் தில்லாப் பெண்ணா ரமிர்தேயவன் பெற்ற வமிர்தே. இ - ள். அவன்பெற்றவமிர்து தேவருலகத்தினும் இந்நிலுவு லகத்தினுமில்லாததொரு கிளவிமுதலியவற்றையுடைய பெண் டன்மையார்ந்த அமிர்தேயென்க. (215) 1066. தேதா வெனவண்டோடு தேன்வரி செய்யப் போதார் குழலாள்புணர் மென்முலை பாயத் தாதார் கமழ்தார்மது விண்டு துளிப்ப வீதா மவரெய்திய வின்ப மதே. தேதா - ஆளத்தி. வரி - பாட்டு. அவர்-தேவர். இ - ள். தேன் வரிசெய்ய அவன்றார் மதுத்துளிக்கும்படி குழலாள் முலைபாய்ந்தேய்திய இந்தவின்பம் அவரெய்தின வின்பமென்க. (216) முந்நீர்ப் பவளத்துறை நித்தில முத்த மந்நீ ரமிர் தீன்று கொடுப்ப வமர்ந்தான் மைந்நீர் நெடுங்கண்புரு வங்கண் மலங்கப் பொன்னா ரரிக்கிண்கிணி பூச லிடவே. இ - ள். கடலிற்பிறந்த பவளத்தேயுறைகின்ற நித்திலம் போலுமெயிறு அக்கடலிற்பிறந்தவமிர்தத்தைத் தானீன்று கொடுப்பக் கண்கள் புருவங்களிவை பிறழக்கிண்கிணி யொலிப்பப் புணர்ச்சியைப் பொருந்தினானென்க. அயின்றான் பாடமாயிற் பானமும் புணர்ச்சியு முடனிகழ்ச் சியாம். (217) 1067. கம்பார் களியானை கலக்க மலங்கி யம்பே ரரிவரணெடுங் கண்புதைத் தஞ்சிக் கொம்பே குழைவாயெனக் கேகுழைந் திட்டாய் வம்பே யிதுவையகத் தார்வழக் கறே. கம்பமார் - விகாரம். இ - ள். கொம்பே! யானை கலக்குதலிற்கலங்கிக் கண்ணைப் புதைத்து அஞ்சிக் குழைகின்ற நீ பொதுநோக்கத்தான் இவனிறந்து படுவனென்றருணோக்கினைத் தந்தாயாதலின் எனக்கேவருந்தினாய், இங்ஙனஞ்செய்தல் உலகத்தார் வழக்கன்று; புதிய தொருவழக்கென்று நயப்புக்கூறினானென்க. தாம்வளைவார் பிறர்க்கூற்றங் கோலாகாரென்பதுலக வழக்கு. நீ செய்தது அதுவன்று. “நீலநெடுங்கணாற் கவர்ந்த கள்வி” என்பது பொதுநோக்கு. (218) பூவார் புனலாட்டினுட் பூநறுஞ் சுண்ணம் பாவாய் பணைத்தோட்சுர மஞ்சரி தொற்றாள் காவா தவள்கண்ணறச் சொல்லிய வெஞ்சொ லேவோ வமிர்தோவெனக் கின்றிது சொல்லாய். இ - ள். பணைத்தோட்சுரமஞ்சரி புனலாட்டில் நறுஞ் சுண்ணந் தோற்றவள் வார்த்தைபரிகரியாது அவள் வாளாதே கண்ணறச் சொல்லிய வெவ்வியசொல் இன்று எனக்குத் துன்ப மாயிற்றோ? இன்பமாயிற்றோ? நீயிதனைக்கூறாய், இன்பமே யாயிற்றன்றோ வென்றானென்க. காவாதவார்த்தை “கூறிவையோ”(சீவக.876) என்ற வார்த்தை. அவள்சொல்லியசொல் இன்பமாற்றென்றான், “சுண்ணந் தோற்றனந்தீம்புனலாடலம்”(சீவக.878) என்றவள் கூறவே வென்றவர் புனலாடவேண்டுதலின் இவள்புனலாட்டயர்ந்து வருகின்ற நேரத்துத் தான்களிற்றிடையுதவி எதிர்ப்பட்டதனால் இவ்வின்பம் பெறுதலின். தான் “கண்ணிற் கண்டிவை நல்ல” (சீவக.884) என்றும், “ சால நல்லன”(சீவக.893) என்றும், “உய்த்துரைமின்”(சீவக.895) என்றுங் கூறுதலின், வாய்காவாது கூறிற்றென்றல் பொருந்தாது. ‘ஓவாவமிர்தும் பாடம். (219) 1070. நற்றோ ளவள்சுண்ண நலஞ்சொ லுவா னுற்றீர் மறந்தீர்மனத் துள்ளுறை கின்றாள் செற்றா லரிதாற்சென்மின் போமின்றீண்டா தெற்றே யறியாதவொ ரேழையே னோயான். 1071. தூமங் கமழ்பூந்துகில் சோர வசையாத் தாமம் பரிந்தாடுதண் சாந்தந் திமிர்ந்திட டேமன் சிலைவாணுத லேற நெருக்காக் காமன் கணையேர்கண் சிவந்து புலந்தாள். இவை யிரண்டுமொருதொடர். ‘சென்மி’னெனத் தீண்டலிற், ‘றீண்டாதேபோமி’ னென்றாள். ‘பi™த்தோ’ ளென்றதனாலும், ‘தோற்றா’ ளென்றதனாலும் ஊடு கின்றாள். இ - ள். நும்முடைய நற்றோளவளதுசுண்ணத்தையே நலஞ் சொல்லக்கருதினீர், எனதுநல்வினையாலே அதனை மறந்தீர், அவள் நும்மனத்தே யுறைகின்றாதலாற்கோபித்தாற் கோபம் தீர்த்தலரிது; இனி இவ்விடத்தினின்றுஞ் சென்மின், என்னே! யான் நுமக்குவருகின்ற ஏதத்திற்கு வருந்தாத ஏழையேனோ?, இனி என்னையருளித் தீண்டாதே போமினென்று துகிலையிறுகவுடுத்துப் பரிந்து தமதிமிர்ந்து ஏவினையுடைய காமன் சிலை போலும்புருவத்தை நுதலிலேயேற நெருக்கிக் கண்சிவந்து புலந்தாளென்க. (220-21) 1072. மின்னே ரிடையாளடி வீழ்ந்து மிரந்துஞ் சொன்னீ ரவளற்பழ லுட்சொரிந் தாற்ற இந்நீ ரனகண்புடை விட்டகன் றின்ப மன்னார்ந்து மதர்ப்பொடு நோக்கினண் மாதோ. இ - ள். அவன் அதுகண்டு குணமாலையடியிலே வீழ்ந்தும் இரந்துகொண்டுஞ் சொல்லாகியநீரைஅவளன்பாலுண்டாகிய தீயிலே சொரிந்து அவித்தானாக, இன்பம் மனத்தே மிகநிறைதலின், வருத்தத்தைக் கைவிட்டகன்று கண்களின்மதர்ப்போடே புடையிலே நோக்கினாளென்க. கடைக்கணித்துப் பார்த்தாளென்க. (222) 1073. இன்னீ ரெரிமாமணிப் பூண்டகிடந் தீன்ற மின்னா ரிளமென்முலை வேய்மருண் மென்றோட் பொன்னார் கொடியேபுக ழிற்புகழ் ஞாலம் நின்வா ணெடுங்கண்விலை யாகு நிகர்த்தே. நிகர்த்தே, ஏகாரம்-எதிர்மறை. இ -ள். பூணுண்டாக்கின ஒளியசைகின்ற முலையினையுந் தோளினையுமுடைய கொடியே! யான் புகழ நினைக்கின், ஞாலம் நின் கண்ணிற்கு நிகர்த்து விலையாகுமே? ஆகாது; ஆதலாற் புகழ்தலரிதெ றாbனன்க. (223) 1074. தோளாற் றழுவித்துவர்த் தொண்டயஞ் செவ்வாய் மீளா மணிமேகலை மின்னின் மிளிர வாளார் மணிப்பூணவன் மாதரம் பாவைதன்னை நாளாற் பெற்றநல்லமிர் தென்ன நயந்தான். இ - ள். பூணவன் பாவைதன்னைத் தோளாலே தழுவி மேகலை மின்போற்பிறழாநிற்க அவள்செவ்வாயை நாட் காலத்லே பெற்ற மீளாவமிர்தென்னப் பருகினானென்க. மீளாவமிர்து - கருடன் வாங்கிக் கொண்டுவாராவமிர்து. நயத்தல் - பருகுதன்மேற்று. (224) வேறு. 1075. சித்திர மணிக்குழை திளைக்கும் வாண்முகத் தொத்தோளிர் பவளவா யோவக் கைவினைத் தத்தரி நெடுங்கணா டன்னொ டாடுநாள் வித்தகற் குற்றது விளம்பு கின்றதே. இ - ள். குழைதிளைக்குமுகத்தினையும் பவளத்தை யொத்து விளங்குகின்ற வாயினையுஞ் சித்திரம்போன்ற ஒப்பனையுமுடைய குணமாலைதன்னுடனே இங்ஙனம் புணருகின்ற நாளிலே, வித்தகனுக் குற்றதொரு தீவினையினைக் கூறுகின்றதென்க. ‘ஓகை வீணையவும்’ பாடம். (225) வேறு. 1076. அரும்பெறற் குருசிற் கஞ்ஞான் றோடிய நாக நாணிக் கரும்பெறி கடிகை யோடு நெய்ம்மலி கவளங் கொள்ளா திரும்புசெய் குழவித் திங்கண் மருப்பிடைத் தடக்கை நாற்றிச் சுரும்பொடு வண்டு பாடச் சுளிவொடு நின்ற தன்றே. இ - ள். நீர்விளையாட்டினன்று குரசிலுக்குத்தோற்ற யானை நாணிக் கரும்பங்கடிகையுங் கவளமுங்கொள்ளாதாய்க் கிம்புரியிட்ட இளையதிங்கள் போலுமருப்பிடையிலே கையை நாற்றி மதஞ் செறித்தலின், உண்ணப்பெறாதே சுரும்பும்வண்டும் பாடக் கோபத் தோடே நின்றதென்க. (226) 1077. பகைபுறங் கொடுத்த வேந்திற் பரிவொடு பகடு நிற்பத் தகைநிறக் குழைக டாழ்ந்து சாந்தின்வாய் நக்கி மின்னப் புகைநிறத் துகிலிற் பொன்னாண் டுயல்வரப் போந்து வேந்தன் மிகைநிறக் களிற்றை நோக்கி வேழமென் னுற்ற தென்றான். இ - ள். பகடு பகைக்குமுதுகிட்டவேந்தபோலே பரிவொடு நிற்றலின், அது கேட்டு வேந்தன்போந்து குழைகள் சாந்திடத்தே தீண்டிமின்னத் துகிலிலேபொன்னாணசையக் குனிந்து களிற்றை நோக்கி யானையுற்றவருத்தமென்னென்று பாகனைவினாயினானென்க. (227) 1078. கொற்றவன் குறிப்பு நோக்கிக் குஞ்சரப் பாகன் கூறு மிற்றென வுரைத்த றேற்றே னிறைவநின் னருளி னாங்கொல் செற்றமிக் குடைமை யாற்கொல் சீவக னின்ன நாளான் மற்றிதற் குடற்சி செய்ய மதமிது செறித்த தென்றான். குறிப்புநோக்கியென்றார், சீவகனைக் குறைகூறலாகா தென்று கருதினவன் அரசன்கோபநோக்கிப் பேணிக்கூறுதலின். இ - ள். அரசன்குறிப்பைநோக்கிக் கூறுகின்ற யானைப்பாகன் இறைவனே ! நின்னுடன்பாட்டினாலேயோ, இதனோடே அவ்விடத்துச் செற்றமுடைமையினாலேயோ, சீவகன் நீர்விளை யாட்டினன்று இதற்குக் கோபத்தைமிக்குச்செய்ய இதுமதஞ் செறித்தது; இதுதான் யானும் விளங்கவுணர்தலைத் தெளியே னென்றானென்க. மற்று-வினைமாற்று; பெண்ணுயிரைப்பிழைப்பித்தது இதற்குடற்சி யாதலின். (227) 1079. ஈண்டழற் குட்டம் போல வெரியெழத் திருகி நோக்கிக் கோண்டரு குறும்பர் வெம்போர்க் கோக்குழாம் வென்ற துள்ளி மாண்டதில் செய்கை சூழந்த வாணிகன் மகனை வல்லே யாண்டிறங் களைவெ னோடிப் பற்றுபு தம்மி னென்றான். இ - ள். அதுகேட்டவரசன் தீத்திரள்போலக் கோபித்து மதனனை நோக்கி; வேடருடனே போர்செய்து வென்றதனையுங் காந்தருவதத்தை யாழ்வாசினையிலே வந்துகூடின இராசாக்களை வென்றதனையு நினைத்து என்னுடனும் போர்த்தொழிலைக் கருதின செட்டிமகனை இப்பொழுதே அவனாண்மைக் கூற்றைப் போக்குவேன்; ஓடிக் கைக்கொண்டு தாருமென்றானென்க. அரசனேவல்செய்யவேண்டுதலின், பற்றுபுதம்மினென்று கூறவே அவர்கட்டினாரென்றல் பொருந்தாமையுணர்க. (229) 1080. கன்றிய வெகுளி வேந்தன் கால்வலி யிளையர் காய்ந்து கொன்றுயிர் கொணர வோடுங்கொழுங்குடர்க் கண்ணி மாலை யொன்றிய வுதிரச் செச்சை யொண்ணின மீக்கொ டானைத் தென்றிசைக் கிறைவன் றூதிற் செம்மலைச் சென்று சேர்ந்தார். இ - ள். கொன்றுயிர்கொணரவோடுகின்ற குடராகிய கண்ணியையும் மாலையையும் உதிரச்சட்டையையும் நிணமாகிய மேலேயுடுத்தபுடைவையினையுமுடைய யமன்றூதர்போலே வேந்தனிளையர் காய்ந்து சென்று செம்மலைச்சேர்ந்தாரென்க. அவன்மனையைச் சூழ்ந்தார். (230) 1081. சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதந் தீற்றி விண்புக நாறு சாந்தின் விழுமுலைக் காம வல்லி கொண்டெழுந் துருவு காட்டி முகத்திடைக் குளித்துத் தோண்மேல் வண்டளி ரீன்று சுட்டி வாணுதல் பூப்ப வைத்தான். இ - ள். சண்பகமாலையைச்சூட்டிச் சந்தனத்தையுங் கருப் பூரத்தையும்வேதித்து நாறுகின்றகுழம்பாலே முலையை அடி யாகத்தொடங்கி யெழுந்து காமவல்லிதனது வடிவைக் காட்டித் தோண் மேலே தளிரையீன்று முகத்திடையிலே மறைந்து போய் நுதலிலே சுட்டியாகப் பூக்கும்படி வைத்தானென்க. (231) 1082. பண்ணடி வீழுந் தீஞ்சொற் பாவைநின் வனப்பிற் கெல்லாங் கண்ணடி கருங்க ணென்னு மம்பறாத் தூணி தன்னாற் புண்ணுடை மார்பத் தோவா தெய்தியா லெங்குப் பெற்றாய் பெண்ணுடைப் பேதை யென்றோர் நாண்முற்றும் பிதற்றி னானே. கண்ணாடி-விகாரம். இ - ள். வனப்பிற்கெல்லாங் கண்ணாடியாகிய பாவாய்! நின் கண்ணென்னும் அம்பறாத்தூணியில் நோக்கங்களாகிய அம்பி னாலே பழையபுண்ணையுடைய நெஞ்சிடத்தே மாறாமலெய்யா நின்றாய், பேதாய்! இங்ஙனம் அம்பு மாறாத தொருதூணியை எவ் விடத்தே பெற்றாயென்று ஒருநாண் முழுதும் பிதற்றினானென்க. எல்லார்க்கும் அழகு இத்தன்மைத்தென்றுணர்த்துதலிற் கண்ணாடியுவமையாயிற்று. மார்பத்துழையென்று. அத்திற்கு உழையை விரிப்பவே இடப்பொருளுணர்த்தி அதற்குச் சேர்ந்த நெஞ்சினையுணர்த்தும்; “அரசனுழையிருந்தான்” போல. பிதற்றி னானென்றது அவசத்தால். (232) 1083. திங்கள்சேர் முடியி னானும் செல்வியும் போன்று செம்பொ னிங்குவார் கழலி னானுங் கோதையு மிருந்த போழ்திற் சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழத்திற் சூழ்ந்தா ரங்கது கண்ட தாதி யையனுக் கின்ன தென்றாள். இ - ள்.உருத்திரனுமுமையும்போலே கழலினானுங் கோதை யும் ஒன்றாயிருந்த வளவிலே சிங்கவேற்றை யிகழ்ந்து சூழ்ந்த நரிக் குழாம்போலே அவர்கள் மனையைச் சூழ்ந்தார்; அதுகண்டசேடி சீவகனுக்கு இங்ஙனஞ் சூழ்ந்தாரென்றாளென்க. (233) 1084. என்றவ ளுரைப்பக் கேட்டே யிடிபட முழுங்கிச் செந்தீ நின்றெரி வதனை யொத்து நீண்முழைச் சிங்க வேறு தன்றுணைப் பெட்டை யோடு தான்புறப் பட்ட தொத்தான் குன்றிரண் டிருந்த போலுங் குங்குமக் குவவுத் தோளான். இ-ள். தோளான் என்றவள்கூறக்கேட்டுத் தீ வெடித்தலுண் டாகமுழங்கி எரியுந்தன்மையையொத்த மனைவியோடே மணவரையினின்றும் புறப்பட்டவன் சிங்கவேறு தன்றுணை யாகிய பெட்டையோடே முழையினின்றும் புறப்பட்ட தன்மையை யொத்தானென்க. பெட்டையென்றதற்கு “எழுந்துவிண் படரும்” (சீவக.752) என்னுங் கவி யிலேகூறினாம். இவ்விரண்டுகவியிலுஞ் சீவகற்குச் சிங்கவேறு வமையும், பகைவர்க்கு நரியுவமையுமாகக் கூறினமையின், அவராற் கட்டலாகாமையுணர்க. (234) 1085. பொன்னரி மாலை தாழப் போதணி கூந்த லேந்திப் பன்னரு மாலை யாற்குப் பட்டதை யெவன்கொ லென்னாப் பின்னரு மாலை யோராள் பெருநடுக் குற்று நின்றாண் மன்னரு மாலை நாக மழையிடிப் புண்ட தொத்தாள். இ - ள். குணமாலை இவன்வலியை யோராளாய் ஆராய்தற்கரிய இயல்பினையுடையாற்குப்பிறந்த துன்பம் யாதுதானென்னா யானைமுன்னர்நின்ற நடுக்கமேயன்றிப் பின்னருங் கூந்தலை மாலை தாழவேந்திப் பெரியநடுக்கமுற்றுநின்றவள் மக்கட்டிரளில் நிலை பெறுதற்கரிய இயல்பினையுடைய நாகம் இடிப்புண்டு மக்கட்டிரளிலே நின்றதன்மையை யொத்தாளென்க (235) 1086. கடுகிய விளையர் நோக்குங் கண்ணிய பொருளு மெண்ணி யடுசிலை யழல வேந்தி யாருயிர் பருகற் கொத்த விடுகணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தார் தொடுகழ னரல வீக்கிச் சொல்லுமின் வந்த தென்றான் இ-ள். அரசனேவுதலிற் கடுகி வந்த இளையர் குறிப்பினை யும், அவ்வரசன் யானையைக்கண்டு ஆண்திறங்களையக் கருதிய காரியத்தையுந் தானெண்ணித் தானையை யினி இறுகாதென் னும்படி விசித்துக் கழலைவீக்கி சிலையையேந்திக் கணையைத் தெரிந்து வந்தகாரியஞ் சொல்லுமினென்றானென்க. (236) 1087. அடிநிழற் றருக வென்றெம் மாணைவேந் தருளிச் செய்தான் வடிமலர்த் தாரி னாய்நீ வருகென வானி னுச்சி யிடியுரு மேற்றிற் சீறி யிருநிலஞ் சுடுதற் கொத்த கடிமதின் மூன்று மெய்த கடவுளிற் கனன்று சொன்னான். 1088. வாளிழுக் குற்ற கண்ணாள் வருமுலை நயந்து வேந்தன் கோளிழுக் குற்ற பின்றைக் கோத்தொழி னடாத்து கின்றா னாளிழுக் குற்று வீழ்வ தின்றுகொ னந்த திண்டேர் தோளிழுக் குற்ற மொய்ம்ப பண்ணெனச் சொல்லி னானே. இவையிரண்டுமொருதொடர். 1. இளையர் தம்மரசனைக்கூறலின், அடிநிழ லென்றார். வடிமலர்த்தாரினாயெனப் புகழ்ந்து பின்னர் வருகவென இரந்து கூறினமையானும் அவர் கட்டவந்தவரன்மையுணர்க. 2.“இந் நகர்க்குமன்னனோ”(சீவக.689) என முற்கூறியதனை ஈண்டுங்கூறினா னென்க. பிறர் தோளிழுக்குறுதற்குக் காரண மாகிய மொய்ம்ப வென்று மாம். இனி ஒருதொட ராக்காதே விசயை முலையைவிரும்பி வேந்தன்பட்ட பின்பு கோத்தொழிலை நடாத்துகின்றகட்டியங்காரன் நாளிழுக்குற்று வீழ்வதின்றோவென்று கண்டார்கூறும்படி இவன் சொன்ன னென்றுமாம். இ-ள். “சச்சந்தன் கொலையுண்டபின்பு என்னையொழிய அநங்கமாலை முலையையும் விரும்பி அரசர்தொழிலையு நடாத்து கின்ற சீவகன்வாழ்நாள் மாளுகின்றதின்று போலேயிருந்தது; அவனைக் கைக்கொண்டுவருக” என்று எம்வேந்தருளிச் செய்தான்; தாரினாய்! நீயவனடி நிழலேறப்போதுகவென்று அவராணை யிட்டுக்கூற, அது கேட்டு இடிக்கின்ற வுருமேறு போல முழங்கி நிலத்தைப் பறந்துதிரிந்து சுடுதற்குப் பொருந்தின முப்புரத்தையு மெய்த கடவுளைப்போலே கோபித்து ஒருவார்த்தை சொன்னான். அதுயாதெனின், நந்தனே! மொய்ம்பனே! இனிக் கட்டியங்காரன் தோளிழுக்குற்ற; நீபோய்த் தேரைப்பண்ணென்று சொன்னா னென்க. (237-8) 1089. வேந்தொடு மாறு கோடல் விளிகுற்றார் தொழில தாகுங் காய்ந்திடு வெகுளி நீக்கிக் கைகட்டி யிவனை யுய்த்தா லாய்ந்தடு மழற்சி நீங்கு மதுபொரு ளென்று நல்ல சாந்துடை மார்பன் றாதை தன்மனத் திழைக்கின் றானே. இ-ள். நந்தட்டன்போனபின்பு கந்துகன் இவன்படைக் கோலத்தைக்கண்டு அரசனுடனே மாறுபடுதல் கெடுதலுற்றார் தொழிலாம்; யாம் அது செய்யாது இவன் வெகுளியைநீக்கிக் கையைப் போர்த் தொழில் செய்யாதபடி விலக்கி இவனை இவர் களோடே போகவிட்டால் இவன் செய்தவற்றை நன்றாயாரய்ந்து இவனை வருத்தும் வெகுளியைத் தானீங்கும்; அதுவே காரிய மென்று தன்மனத்தே சூழாநின்றானென்க. கைகட்டுதலைப் ‘பாம்பை வாயைக்கட்டிற்’ றென்றாற் போலக் கொள்க. துறவின்கண்ணே சீவகன் அறங்கேட்ட பின்னர்த் “தொல்லை யெம்பிறவியுந் தொகுத்த பாவமும் வல்லையே பணிமின மடிகள்” (சீவக.2849) என்று சாரணரைக் கேட்க, அவரும் பாவங்கூறுகின்றவர் “தாமரைத்- தடமுறை வீர்க்கிவை தடங்க ளல்லவே - வடமுலை யெனநடாய் வருடிப் பாலமு-துடனுறீஇ யோம்பினார்” (சீவக.2863)என்று முலைலேமயேணைத்துக் கொண்டு வளர்த்தார்களென்று கூறி, பவணமாதேவன் தன்மகள் அசோதரனைநோக்கிக் கூறுகின் றானகத் தாங்கூறுகின்ற காலத்தும் “கிளைப்பிரி வருஞ்சிறை யிரண்டுங் கேட்டியேல்” (சீவக.2867) என்றும், “பூவைகிளி தோகைபுண ரன்ன மொடு பன்மா - யாவையவை தங்கிளையி னீங்கியழ வாங்கிக் - காவல்செய்து வைத்தவர்க டங்கிளையி னீங்கிப் - போவர்”(சீவக.2875) என்றுங் காவல்செய்து வைத்தாரென்றுங் கூறினமையானும், “மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறை வைத்ததனாற் - பொன்னார மார்ப சிறைப் பட்டனை போலும்”(சீவக.2890) என்று தாங்கூறினமையானும், சாரணர் பாவங் கூறுகின்றவிடத்து அன்னப்பார்ப்பைக் கட்டினாரென்று கூறாமையின், ஈண்டுக் கட்டுண்ணவேண்டும்பாவம் ஆண்டின் மையுணர்க. பிறருமிச்சமயத்தார் “சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா” (நாலடி.110) என்றதனானுமுணர்க. அன்றியும், தசகுமாரசரிதத்துள் அன்னப்பார்ப்பை நூலிட்டுக் காலைக்கட்டின பாவத்தாற் பின்புவெள்ளி விலங்குகாலிற் கிடந்ததென்று ஆசாரியதண்டி கூறிய வாற்றானுமுணர்க. அன்றியும், அரசன் கைக்கொண்டுவரச் சொன்னவனை அவரும் அவன்கூறியவாறே கைக்கொண்டு போயினாரென்னவே வேண்டு தலானும், அவர் அவனை “வடிமலர்த்தாரினாய் நீவருகென” (சீவக.1087) புகழ்ந்திரந்து கொண்டமையானும், “சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்” (சீவக.1083) என்றும், “அடுபுலிகண்ட மான்போ லாறல வாயினார்”(சீவக.1137)என்றும், “மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற்புடைத்து”(சீவக.1154) என்னுங் கவியில்” என்னையிக் கிருமி கொன்று” என்றுங் கூறியிருந்தலானும், “நூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த” (சீவக.1111) என்றதற்குத் தோளையன்றி விரலைக் கட்டினா ரென்றுங் கூறவேண்டுதலானும், ஆசிரியன் கூற்றும் குரவர் கூற்றும் மனத்தைப் போர்செய்யாமற் பிணித்தலின், இளையர் காவல் செய்து கொண்டுபோயினாரென்றலே தேவர்க்குக் கருத்தென்று ணர்க. “ஊன்பிறங் கொளிறும்வேலா னோர்த்துத்த னுவாத்தி சொல்லாற் றான்புறங் கட்டப்பட்டு”(சீவக.1091) என்றும், “ஈன்றதாய் தந்தை வேண்ட விவ்விட ருற்ற தென்றாற் - றோன்றலுக் காண்மை குன்றா தென்றசொல் லிமிழிற் பூட்டி” (சீவக.1091)என்றுந் தேவர் மனத்தை யிறுகப்பிணித்தமைதோன்றக் கட்டியென்றும் பூட்டியென்றுஞ் செய்யுள்செய்தமைபற்றி, கந்தியாரும் இடையிடையே பாடி யிட்ட செய்யுட்களினும் அப்பொருடரக் கட்டியென்றுசெய்யுள் செய்தாரென்றுணர்க. அன்றியுஞ் சிறைசெய்த லென்னுஞ் சொற்குக் காவலிடுதலேபொருளா மென்று தேவர்தாமே காவல் செய்து வைத்தவர்க ளென்று கூறியவாற்றானும், கட்டலென் னுஞ்சொற்கு மனத்தை யிறுகப் பிணித்தலென்று தாமே பொருள் கூறியவாற்றானு முணர்க. (239) 1090. ஊன்பிறங் கொளிறும் வேலா னோர்த்துத்த னுவாத்தி சொல்லாற் றான்புறங் கட்டப் பட்டுத் தன்சினந் தணிந்து நிற்பத் தேன்பிறங் கலங்கன் மாலைச் சுநந்தையுந் துணைவன் றானுங் கோன்புறங் காப்பச் சேறல் குணமெனக் கூறி னாரே. புறந்தான் - புறப்பொருளாகிய வீரந்தான். இ-ள். அங்ஙனங்கோபித்தவேலான் தான் ஆசாரியனுக்கு நேர்ந்த நிலைமையையோர்ந்து அவன் சொல்லாலே வீரந்தான் பிணிப் புண்ணப்பட்டுத் தன்சினமாறி நின்றவளவிலே அவற்கு அங்ஙன மிழைக்கின்றகந்துகனுஞ் சுநந்தையும் அரசன் காப்ப வொழுகுதல் நமக்குச் குணமாவதென்று கூறினாரென்க. முன்னர் அகப்பொருளேநிகழ்த்தினவன் பகைவரைக் கண்டு புறப்பொருணிகழ்த்தக் கருதியதனை ஆசிரியன் கூற்றுவிலக்கிற் றென்றார். அச்சொல் அரியதொன்றனை விலக்கிற்று. (240) 1091. ஈன்றதாய் தந்தை வேண்ட விவ்விட ருற்ற தென்றாற் றோன்றலுக் காண்மை குன்றா தென்றசொல் லிமிழிற் பூட்டி மூன்றனைத் துலக மெல்லா முட்டினு முருக்கு மாற்றல் வான்றரு மாரி வண்கை மதவலி பிணிக்கப் பட்டான். இ-ள். மூன்றாகியவுலகமனைத்தும் வந்துமுட்டினும் அவற்றை யெல்லாங் கெடுக்குமாற்றலையும் வண்கையினையு முடைய மதவலி, இவ்விடருற்றது பெற்றதாயுந் தந்தையும் வேண்டிக் கொள்ளவாயிருந்ததென்று உலகங்கூறினால் நினைக்காண்மை குன்றாதென்று அவர் கூறிய சொல்லாலே கயிறுபோலேபூட்டிப் பிணிக்கப்பட்டானென்க. இன்-உவமப்பொரு. அச்சொல் கயிற்றாற் பிணித்தாற் போல மனத்தைப் பிணித் தது. ஈண்டு இவர் கட்டிற்றிலரெனவே இளையரான் மேற்கட்ட லாகாமையுமுணர்க. (241) வேறு. 1092. குழலுடைச் சிகழிகைக் குமரன் றோளினைக் கழலுடை யிளையவர் கச்சின் வீக்கலி னழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தென விழவுடை முதுநகர் விலாவிக் கின்றதே. இ-ள். குழற்சியையுடைத்தாகிய முடியினையுடைய குமரன் றோளிணைகளைக் குரவர் அங்ஙனங் கச்சிட்டுக்கட்டினாற் போலப் போர்த்தொழில் செய்யாதபடி விலக்கினார்களாக, வந்த விளை யவர் ஞாயிற்றை அரவுசேர்ந்ததென்னச்சேர்தலின், நகரமழா நின்றதென்க. இன் - பொரு பாம்பு ஞாயிற்றை ஒளிகுறையும்படி மறைத் தாற்போல இவரும் இவனொளிகுறையும்படி சிறையாகக் கைக் கொண்டாரென்க. மனத்தையிறுகப் பிணிக்கவே தோளைப் போர்த்தொழிலை விலக்கிற்றாம். (242) வேறு. 1093. தோளார் முத்துந் தொன்முலைக் கோட்டுத் துயன்முத்தும் வாளா ருண்கண் வந்திழி முத்தும் மிவைசிந்தக் காளாய் நம்பி சீவக சாமி யெனநற்றாய் மீளாத் துன்ப நீள்கடன் மின்னின் மிசைவீழ்ந்தாள். தொன்மையைத் தோளின்முத்தோடும் முலையின் முத் தொடுங் கூட்டுக. மீளா-மீண்டு. துன்பமாகிய கடலென்றார், அழு கின்ற மக்கட்டொகுதியை. இ-ள். சுநந்தை காரியத்தின்மேற்சென்ற கருத்துமீண்டு அன்பு தோற்றுதலிற் காளாய்! நம்பி! சீவகசாமியெனக்கூறிப் பழைய முத்துக்களுங் கண்ணாகிய கடலிற் படுகின்ற புதிய முத்துக்களு மாகியவிசைசிந்தக் கடலின்மேலே மின்போல வீழ்ந்தாளென்க. (243) 1094. பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம் போலா மல்குற் பொற்றொடி பூங்கட் குணமாலை யேலா தேலா தெம்பெரு மானுக் கிஃதென்னா நூலோர் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுவொத்தாள். இ-ள். துகிலையேந்தி நாகத்தினது படம்போலே வளருமல் குலையுடைய பொற்றொடியாகிய குணமாலை என்னுயிரைத் தந்த நுமக்கு அதனால் இத்தீங்குவருதல் ஏலாதேலாதென்றுகூறி மாலை எரியிடத்தே வீழ்ந்ததனை யொத்தாளென்க. நுங்குதல் - விழுங்குதல். (244) வேறு. 1095. எரிதவழ் குன்றத் துச்சி யிரும்பொறிக் கலாப மஞ்ஞை யிரிவன போன்று மாடத் தில்லுறை தெய்வ மன்னார் பரிவுறு மனத்தி னோடிப் பட்டதை யுணர்ந்து பொற்றா ரரியுறழ் மொய்ம்ப வோவென் றாகுலப் பூசல் செய்தார். இ-ள். மஞ்ஞை நெருப்புப்பரக்கின்ற மலையிற் கெட்டொடு வனவற்றையொத்துத் தெய்வமன்னார் வருத்தமுற்றமனத்தாலே மாடத்தேயோடி உணர்ந்து மொய்ம்பனே! ஓவென்று வருத்தத்தை யுடைய ஆரவாரத்தைச்செய்தாரென்க. (245) 1096. கங்கையின் கழியிற் பட்ட காமரு பிணையின் மாழ்கி யங்கவர்க் குற்ற துள்ளி யவலநீ ரழுந்து கின்ற குங்குமக் கொடியோ டேந்திக் கோலம்வீற் றிருந்த கொம்மைப் பொங்கிள முலையி னார்க்குப் புரவல னிதனைச் சொன்னான். இ-ள். புரவலன் அவ்விடத்துச் சுநந்தை முதலாயினார்க் குற்ற துயரத்தை நினைத்துப் பிணையின்மாழ்கி யவல நீரிலேயழுந்து கின்ற முலையினார்க்கு இதனைக்கூறினானென்க. முலையினார் - புறத்துமகளிர். வந்தவிளையரைக் கொல்லாது விடுதலிற் புரவலனென்றார். (246) 1097. கட்டுயி லனந்தர் போலக் கதிகளுட் டோன்று மாறும் விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறு முட்பட வுணர்ந்த யானே யுள்குழைந் துருகல் செல்லே னெட்பக வனைத்து மார்வ மேதமே யிரங்கல் வேண்டா. 1098. நன்மணி யிழந்த நாகர் நல்லிளம் படியர் போல வின்மணி யிழந்து சாம்பி யிருநில மிவர்க ளெய்த மின்னணி மதியங் கோள்வாய் விசும்பிடை நடப்ப தேபோற் கன்மணி யுமிழும் பூணான் கடைபல கடந்து சென்றான். இவையிரண்டுமொருதொடர். படியர் - படிவத்தையுடையார். இ-ள். பூணான் மணியையிழந்த நாகர்மகளிரைப்போலே சுற்றத்தார் சீவகனையிழந்து கெட்டு நிலத்தைச்சேர, அதுகண்டு கண்ணுறக்கமும் உணர்ச்சியும்போலே உயிர்போம்படியும் பிறக்கும் படியும் வீடுபெறும்படியுநெஞ்சிலேயுறும்படி உணர்ந்த யான் உருகுதலிற்செல்லேன்; எள்ளில் ஓர் பாதியளவும் பொருள் கண்மேலே வேட்கைநிகழ்தல் ஒருவர்க்கு ஏதமேசெய்யுமாதலின், அவ்வார்வத்தான் இரங்கல்வேண்டாவெனக்கூறிக் கடைபல கடந்து விசும்பிடையிற் கோள்களிடத்தேயுறையும் ஒளியணிந்த மதியம் அதனைக் கைவிட்டு நிலத்தே நடப்பது போலப் போந்தா னென்க. கோள் - பரிவேடிப்புமாம். வந்தவர்கள்சூழ நடுவே போவதற் குவமை. ‘பிடியரும்’ பாடம். வேறு. 1099. வெந்த னம்ம னம்மென வெள்ளை நோக்கின் முள்ளெயிற் றந்து வர்ப்ப வளவா யம்ம ழலை யின்சொலார் பந்து பாவை பைங்கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள் நொந்து வைத்து நூபுரம் மொலிப்ப வோடி நோக்கினார். வெள்ளைநோக்கு - உள்ளேயொன்று கொள்ளாதநோக்கு. முற்றில் - சிறுசுளகு. இ-ள். நோக்கு முதலியவற்றை யுடைய பேதையர் தம்மைக் கண்டார் இவர் கண்மனம் வெந்தனவென்று கூறும்படி நொந்து பந்து முதலியவற்றைச் சிற்றிலிலே வைத்து ஓடி நோக்கினா ரென்க. (249) 1100. மல்லி கைம்ம லிந்த மாலை சோர வார்ந்த குண்டலம் வில்லி லங்க மின்னுக் கோட்ட வீணை விட்டு வெய்துரா யொல்லெனச் சிலம்ப ரற்ற வீதி மல்க வோடினார் சில்சு ணங்கி ளம்முலைச் செழும லர்த்த டங்கணார். இ-ள்.முலையினையுடைய மலர்த்தடங்கண்ணார் மாலை சோரக் குண்டலம் ஒளியைவீசக் கோட்டவாகிய யாழைக்கை விட்டுப் பரந்து சிலம்பரற்ற வீதிநிறையும்படி யோடினா ரென்க.(250) 1101. நெய்த்த லைக்க ருங்குழ னிழன்றெ ருத்த லைத்தர முத்த லைத்தி ளம்முலை முகஞ்சி வந்த லமரக் கைத்தலங் கடுத்த டித்த பந்து நீக்கி வந்தவண் மைத்தலை நெடுந்த டங்கண் மங்கை யர்ம யங்கினார். நெய் - புழுகு, சிவந்திது-சிவக்க, கடுத்து - கடுக்க. இ-ள். மங்கையர் குழல்ஒளியைவீசிக் கழுத்திலேயலைய முலைமுகஞ்சிவக்க முத்தலைத்தசையக் கைகடுக்க விசையோடே யடித்த பந்தைநீக்கி அவ்விடத்தே வந்து மயங்கினாரென்க. (251) 1102. கோதை கொண்ட பூஞ்சிகை கொம்மை கொண்ட வெம்முலை மாது கொண்ட சாயலம் மடந்தை யர்ம னங்கசிந் தோத முத்து குப்பபோ லுண்கண் வெம்ப னியுகுத் தியாது செய்க மையவென் றன்பு மிக்க ரற்றினார். இ-ள். முடிமுதலியவற்றையுடைய மடந்தையர் மனமுருகிக் கடலின்முத்துச்சிந்துவனபோலே கண்ணீரையுகுத்து, ஐயனே! யாங்கள் யாதுசெய்வேமென்று அவற்கு அன்புற்று அழுதாரென்க. (252) 1103. செம்பொ னோலை வீழவுஞ் செய்க லங்கள் சிந்தவு மம்பொன் மாலை யோடசைந் தவிழ்ந்து கூந்தல் சோரவு நம்ப னுற்ற தென்னெனா நாட கம்ம டந்தையர் வெம்பி வீதி யோடினார் மின்னி னன்ன நுண்மையார். இ-ள். மின்னினையொத்த நுண்மையாராகி நாடக மடந்தையர், நம்பனுற்ற தென்னெனா வெம்பி வீழவுஞ் சிந்தவுங் கூந்தல் மாலையோடே அவிழ்ந்து அசைந்து சோரவும் வீதியிலே யோடினா ரென்க. 1104. பூவ லர்ந்த தாரினான் பொற்பு வாடு மாயிடிற் போவு டம்பு வாழுயிர் பொன்று நீயு மின்றெனா வீக லந்த மஞ்ஞைபோல் வேனெ டுங்க ணீர்மல்க வாகு லத்த ரிவைய ரவ்வ யிற துக்கினார். இ-ள். கேடுகலந்தமயில்போலே ஆகுலத்தையுடைய அரிவையர் கண்ணீர் மல்காநிற்கத் தாரினான் பொற்புக் கெடு மாயின், வாழுயிரே! நீபோவாயாக; உடம்பே! நீயுமின்று பொன்று வர்யாகவென்றுகூறி வயிற்றிலே யடித்துக்கொண்டாரென்க.(254) 1105. தேன்ம லிந்த கோதைமா லைசெய் கலம்மு குத்துராய்க் கான்ம லிந்த காமவல் லியென் னவன்ன ராயரோ பான்ம லிந்த வெம்முலைப் பைந்து கில ரிவையர் நூன்ம லிந்த நுண்ணுசுப் புநோ வந்து நோக்கினார். இ-ள். பானிறைந்தமுலையினையுந் துகிலினையுமுடைய வரிவையர் கோதை நெற்றிமாலை கலம் இவற்றைச்சிந்திப் பரந்து காற்றுமிக்க காமவல்லிபோலே அசைந்துநூல் பெருத்த தென்றற்குக் காரணமான நுசுப்புநோம்படி வந்து நோக்கினா ரென்க. (255) 1106. மாத ரார்கள் கற்பினுக் குடைந்த மாம ணிக்கலைத் தீதி லார நூற்பெய்வார் சிதர்ந்து போகச் சிந்துவார் போது லாம லங்கலான் முன்போந் துபூந்தெ ரிவைய ராத காதெ னக்கலங் கியவ் வயிற துக்கினார். இ-ள். முத்துககோக்கக்கற்ற கல்விக்குத்தோற்ற மாதரார்கள் கையில் ஆரங்களைவாங்கிக் கோப்பாராகிய தெரிவையர் அவற் றைச் சிதறிப்போம்படி சிந்துவாராய் அலங்கலான்முன்னே போந்து, ஆ! உனக்கு இதுதகாதெனக்கூறிக் கலங்கி வயிற்றிலே யடித்துக் கொண்டாரென்க. (256) 1107. வட்டி கைம ணிப்ப லகை வண்ணநுண் டுகிலிகை யிட்டி டைநு டங்கநொந் திரிய லுற்ற மஞ்ஞையிற் கட்டழலுயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன்னுக மட்ட விழ்ந்த கோதை யார்கள் வந்து வாயில் பற்றினார். இ-ள். நொந்துகெடுதலுற்றமயில்போலே கோதையார் கள்கரைத்த வண்ணத்தையும் எழுதுகோலினையும் வட்டிகைப் பலகையிலே போகட்டுஅழல்போன்ற நெட்டுயிர்ப்பாலேவெந்து கண்ணி தீயப் பூண்கள் சிந்தாநிற்க இடைநுடங்கவந்து வாயிலைப் பிடித்தாரென்க. இது கற்புடைமகளிரைக்கூறிற்று. (257) வேறு. 1108. வினையது விளைவு காண்மி னென்றுகை விதிர்த்து நிற்பா ரினையனாய்த் தெளியத் சென்றா லிடிக்குங்கொ லிவனை யென்பார் புனைநல மழகு கல்வி பொன்றுமா லின்றொ டென்பார் வனைகலத் திகிரி போல மறுகுமெம் மனங்க ளென்பார். இ-ள். தீவினையினதுவிளைவைக் காண்மினென்று கை நடுங்கி நிற்பார்; தன் வீரர் கையிலே இவனகப் பட்டுப்போந் தன்மை யனாய்த் தன்மனந்தெளியச்சென்றால் இவனைக் கொல்லுமோ வென்பார்; கொல்லுமாயின், இவனோடே செயற்கையழகும் இயற்கையழகுங் கல்வியுங்கெடுமென்பார்; எம்மனந் திகிரிபோலே மறுகுமென்பாரென்க. (258) 1109. நோற்றிலர் மகளி ரென்பார் நோங்கண்டீர் தோள்க ளென்பார் கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடு முடியு மென்பா ரேற்றதொன் றந்து தந்தை செய்தவிக் கொடுமை யென்பா ராற்றலள் சுநந்தை யென்பா ராதகா தறனே யென்பார். இ-ள். இவனைப்பெற்றுவைத்தும் நெடுங்காலநுகர்தற்கு மனைவியரிருவரும் நோற்றிலரென்பார்; யாமுளமாகவும் எம்மாலுள்ள பயன்கொள்ளாது இவன் இங்ஙனஞ் சிறைவாய்ப் போவதோ செயலென்று தோள்களுந் தம்மிலே நோங்காணுங்க ளென்பார்; கூற்றத்தைத் தட்டியழைத்துத் தன்குலத்தோடுங் கெடு மென்பார்; தந்தை காட்டிக்கொடுத்தது ஏற்றதொன்றன் றென்பார்; சுநந்தை ஆற்றாளென்பார்; அறக்கடவுளே! ஆ! இது தகா தென்பாரென்க. (259) 1110. தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார் காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார் பாக்கியம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார் நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொணா கரிக னென்பார். இ-ள். ஆராய்ந்து பாருங்கள், காளை சிறிதுநெருங்கிச்சீறிற் கொண்டுபோகின்ற இம்மதனன் உளனோவென்பார்; இவன் இன்னுங் காவலனாகி வையமெல்லாங் காக்குமென்பார்; நல் வினையே யிவனுக்குப்பெரிதுகாண், இதுவும், ஒருதீவினைப் பயன்காணென்பார்; கூர்மைகொண்ட பல்கலைவல்லோன் நோக்கின் நாணுமாகலின், நோக்கன்மினென்பாரென்க. பெரிதும், உம்மை-இசைநிறை. நோக்குமின் பாடமாயின், மறைபொருளாதலின் நோக்குமினென்றார்; விகாரம். (260) 1111. பூவரம் பாய கோதைப் பொன்னனார் புலவி நீக்கி நூபுரந் திருத்திச் சேந்த நுதிவிர னொந்த வென்பார் யாவரும் புகழு மைய னழகுகெட் டொழியு மாயிற் கோபுர மாட மூதூர் கூற்றுண விளிக வென்பார். பூவரம்பாய - பூக்களுக்கெல்லையான. செம்பஞ்சுபட்டு விரல் சிவந்தன. இ-ள். விரல், வீரத்திற்குங் காமத்திற்குங் கொடை முதலிய வற்றிற்குந் தோற்றியயாம் ஈண்டு இவன்வீரஞ்செய்யாமையின், வீரத்திற்குதவியாயிற்றிலேமென்று நொந்தனவென்பார். ஐயனழகு கெட்டேவிடுமாயின், மூதூர் விளிகவென்பாரென்க. (261) 1112. கருஞ்சிலை மறவர் கொண்ட கணநிரை விடுக்க வல்ல விருஞ்சிலை பயின்ற திண்டோட் கிதுதகா தென்று குன்றிற் கருங்கட றுளுப்பிட் டாங்குக் கல்லெனக் கலங்கிக் காம ரருங்கடி யரண மூதூ ராகுல மயங்கிற் றன்றே. இ-ள்.என்பார் என்பாராய்க் கொடியவில்லையுடைய மறவர் கொண்ட நிரையை விடுவிக்கவல்ல தோளுக்கு இவர் கைக்கொண்டு போகின்ற இதனைக் கண்டு பொறுத்துப்போதல் தகாதெனக் கூறதலாலே மூதூர் மலையாலே கடலைக் கலக்கினாற் போலே கலங்கி யாகுலமயங்கிற்றென்க. நிரைமீட்டதோளென்றார், ஆண்டுக் கொல்லாமை வென்றாற் போல ஈண்டுங் கொல்லாமல் வெல்ல வல்லவ னென்பது கருதி. (262) 1113. இங்ஙன மிவர்க ளேக வெரியகம் விளைக்கப் பட்ட வெங்கணை விடலை தாதை வியனக ரவல மெய்தி யங்கவ ருகுத்த கண்ணீ ரடித்துக ளவிப்ப நோக்கிப் பொங்கம ருழக்கும் வேலான் புலம்புகொண் டழேற்க வென்றான். 1114. மின்னினான் மலையை யீர்ந்து வேறிரு கூறு செய்வான் றுன்னினான் றுளங்கி னல்லாற் றுளங்கலம் மலையிற் குண்டே யன்னதே துணிந்த நீதி யருநவை நமனு மாற்றா னென்னைநேர் நின்று வாழ்த லிருநிலத் தாவ துண்டே. 1115. வளைகடல் வலையிற் சூழ்ந்து மால்வi ரவேலி கோலி யுளைபரி படுக்க லுற்றான் படுப்பினும் படுக்க மற்றென் கிளையழ வென்னை வாள்வாய்க் கீண்டிட லுற்று நின்றான் றளையவிழ் கண்ணி சிந்தத் தன்றலை நிலத்த தன்றே. இவைமூன்றுமொருதொடர். 1. எரியையுள்ளேவிளைந்த வெங்கணை. தாதையினகர் - கந்துகன்வீடு; எனவே குணமாலைவாயிலினின்றும் போந்தான். 2. என்னை, ஐ - இடைச்சொல். 3. உளை-கழுத்தின்மயிர். கடலாகிய வலையாற்சூழ்ந்து மலை யாகிய வேலியைக் கோலி அரியைப் படுக்கலுற்றனொருவன் அகப் படுப்பினும் அகப்படுக்க; அவற்றானும் என்னை யகப்படுத்தலரிது; அதுவுமிவற்கில்லை. இதனாலுஞ் சிறைசெய்தானென்று உணர்க. இ-ள். இப்படியே இவர்கள் போகாநிற்கக் கந்துகன் மனை யிலுள்ளார் வருத்தமுற்று அவ்விடத்து அவருகுத்தகண்ணீர் போகின்றவரடியிற்றுகளை யவித்தலாலே, வேலான் அவர்களை நோக்கி, என்கிளையழும்படி என்னை வாளாற்கொல்லுதலுற்று முடியாததற்குமுயன்று நின்றான்றலையன்றே சிலநாள்சென்றாற் கண்ணிசிந்த நிலத்திடத் தேவீழ்வதென்றுட்கொண்டு, மலையை மின்னினாலேயறுத்து இருகூறாகவேறு செய்தற்குப் பொருந் தினவன் றானிலைகுலைதலன்றி அம்மலைக்கு நிலைகுலைத லில்லை; அவன் றுணிந்தநீதியுமன்னதே; நமனும் என்முன்னே பகைத்துநின்று உயிர்வாழ்தலாற்றானhதலின், நிலத்திலுள்ளார் என்முன்னே நின்று உயிர்வாழ்தலுளதாந்தன்மையில்லை. அரியைப்படுப்பினும்படுக்க; யான்அத்தன்மையேனுமல்லேன்; ஆதலான், நீங்கள் புலம்புகொண்டு அழாதொழிமினென்றா னென்க. சிலநாள் சென்றால் - ஓராண்டுசென்றால். (263-65) 1116. நீரகம் பொதிந்த மேக நீனிற நெடுநல் யானைப் போர்முகத் தழலும் வாட்கைப் பொன்னெடுங் குன்ற மன்னா னார்கலி யாணர் மூதூ ரழுதுபின் செல்லச் செல்வான் சீருறு சிலம்பி நூலாற் சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான். இ-ள். கரியமேகம்போன்ற நீலநிறத்தையுடைய களிற்றையும் வாட்கையினையுமுடைய குன்றமன்னான் அவர்களை அழேற்க வென்றுகூறி, ஊரிலுள்ளாரழுது பின்னேபோக வீரர்க்கு நடுவே போகின்றவன் சிலந்திவாய்நீராலுண்டான நூலால் அகப்படுத்திக் கொண்ட சிங்கத்தை யொத்தானென்க. நூல் வீரர்க்குவமை. “புதன்மறைந்து - வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று” (திருக்கு.274)என்றாற்போலக் கொள்க. (266) 1117. மனனர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னிப் பொன்மழை பொழியி னந்து மன்றெனிற் புகைந்து பொங்கித் துன்னினார் தம்மை யெல்லாஞ் கூட்டிடு மென்று செம்பொன் பன்னிரு கோடி யுய்த்துக் கந்துகன் பணிந்து சொன்னான். இ-ள். இவர்களிங்ஙனம் போகாநிற்கக் கந்துகன், அரசர் வெகுளியாகிய தீ, மணியாகியமுகில் பழங்காசென்கின்ற மின்னை மின்னிப் பொன்னாகியமழையைப் பெய்யின் விளியும்; அம்முகில் அங்ஙனம்பெய்யாதாயிற் பொங்கித் தன்னைநெருங்கினாரெல்லா ரையுஞ் சுடுமென்றுகருதிப் பன்னிருகோடிபசும் பொன்னைக் குவித்துத் தாழ்ந்து கூறினானென்க. இப்பொழுது வீரத்தைச் சிறிது தாழக்கூறினானென்க.(267) 1118. மன்னவ வருளிக் கேண்மோ மடந்தையோர் கொடியை மூதூர் நின்மதக் களிறு கொல்ல நினக்கது வடுவென் றெண்ணி யென்மக னதனை நீக்கி யின்னுயி ரவளைக் காத்தா னின்னதே குற்ற மாயிற் குணமினி யாது வேந்தே. இ-ள். அரசனே! அருள்பண்ணிக்கேட்பாயாக; மடந்தை யாகிய கொடி போல்வாளைப் பெண்கொலைபிறந்தறியா விவ்வூ ரிலே நின் களிறு கொல்லாநிற்க, நினக்கு அதுவடுவாமென் றெண்ணி நின்கீழ்வாழ்கின்ற வென்மகன் அக்கொலையை நீக்கி அவளை யுயிரைக்காத்தான்; இவ்வடுநீக்கியதே குற்றமாய் முடியு மாயின், வேந்தே! இனி நன்மையென்கின்றது யாது? கூறுவா யாகவென்றா னென்க. (268) 1119. நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்க லாண்மக்கட் கடனென் றெண்ணி யறிவின்மை துணிந்த குற்றம் பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப பொறுமதி யென்று பின்னு நீண்மைக்க ணின்று வந்த நிதியெலாந் தருவ லென்றான். 1120. வாழிய ரிறைவ தேற்றான் மாநிரை பெயர்த்த காளை பிழைதான் பொறுக்க வென்னப் பிறங்கிண ரலங்கன் மாலை சூழ்கதி ராரம் வீழ்நூல் பரிந்தற நிமிர்ந்து திண்டோ ளூழ்பிணைந் துருமிற் சீறி யுடல்சினங் கடவச் சொன்னான். இவையிரண்டுமொருதொடர். 1. ஆண்மக்களென்றது அரசரை, உயிரைக்காத்தலும் அழித் தலுமவர் தொழிலாதலின். 2. பிழை - விகாரம். வீழ்ந்தமாலை கட்டின நூல்பரிந்து முத்தாரமு மறவென்க. கையோடு கைமாறித் தோளிலேறக் கட்டி. பெயர்த்தமாநிரை யென்றெண்ணியென முன்னே கூட்டுக. அது நமக்கு அறமுமாய் அரசுக்கு வடுவுநீக்கிற்று; அத்தன்மைத்திது வென்றெண்ணி. இ-ள். தான் முற்கூறியதற்கு முகமாகாமைகண்டு, மார்பனே! மகளிர்நடுக்கத்தை நீக்குதல் ஆண்மக்கள்கடனென்று தேற்றா னாய்த் தான்பெயர்த்த மாநிரையென்றெண்ணி அறிவின்மையி னாலே உயிரைக்காக்கத்துணிந்தகுற்றத்தைப் பொறுப்பாயென் றான்; என்று பின்னுஞ் செவ்விபெறாமையின், எனக்குத் தொன்று தொட்டு வந்தபொருளெல்லாந்தருவேன்; இறைவனே! காளையது பிழையை எனக்காகப் பொறுப்பாயாக வென்றானாக; நிரைமீட்ட தென்றதனாற் கோபமிக்குப் பரிந்து அறநிமிர்ந்து தோள்பிணைந்து சீறி உடல்சினங் கடவாநிற்க ஒருவார்த்தை கூறினானென்க. (269-70) 1121. ஆய்களிற் றசனி வேக மதன்மருப் பூசி யாகச் சீவக னகன்ற மார்ப மோலையாத் திசைகள் கேட்பக் காய்பவன் கள்வ ரென்ன வெழுதுவித் திடுவ லின்னே நீபரி வொழிந்து போய்நின் னகம்புகு நினைய லென்றான். இ-ள். சீவகன்யான் காயப்படுபவனாதலின், இவன்வென்ற அரசரும் வெள்ளி மலையுங்கேட்கும்படி கள்வரைக் கொல்லு மாறு போலே அவனால்வருந்திய அசனி வேகமாகிய அதன் மருப்பு எழுத்தாணியாக அவன்கன்மார்பமே ஓலையாக எழுதுவிப்பேன்; நீவருத்தமொழிந்துபோய் நின்னகத்தேசெல்; இதனை நினையாதேகொள்ளென்று கூறினானென்க. கொல்லுதலை எழுதுவிப்பேனென்றான், இதனாற் றனக்குப் புகழ்நெடுங்கால நிற்குமென்றுகருதி. (271) 1122. நஞ்சனா னுரைப்பக் கேட்டே நாய்கனு நடுங்கி யுள்ளம் வெஞ்சின வேழ முண்ட விளங்கனி போன்று நீங்கி யெஞ்சினான் போல நின்றா னேத்தருந் தவத்தின் மிக்க வஞ்சமில் கொள்கை யான்சொ லமிர்தினால் வற்புற் றானே. இ-ள். கட்டியங்காரனங்ஙனங்கூறக்கேட்டுக் கந்துகன் உள்ள நடுங்கிக் கனிபோன்று வெறுவிதாக அறிவுமுதலியனநீங்கி இறந்தான்போலநின்றான்; நின்றவன் இருடி முன்கூறிய சொல் லாகிய அமுதாலே யாற்றினானென்க. (272) 1123. மின்னிலங் கெஃகி னானைப் பெறுகலான் றந்தை மீண்டு தன்னிலங் குறுக லோடுந் தாயழு தரற்று கின்றா ளெந்நிலை யையற் கென்ன யாவதுங் கவல வேண்டா பொன்னலங் கொடிய னாயோர் பொருளுரை கேளி தென்றான். இ-ள். கந்துகன் சீவகனை அரசனிடத்துப்பெறானாய் மீண்டு தன்மனையை யணுகினவளவிலே, தாய்அரற்றுகின்றவள் ஐயற்கு நிலையேதென்றுகேட்க, நலத்தையுடைய பொற்கொடி யன்னாய்! நீ சிறிதும்வருந்தவேண்டா, ஈதொருகாரியத்தையுடைய வார்த்தை யைக் கேளென்றானென்க. பழையநிலையிலேயோ சிறையிலேயோவென்றாள். (273) 1124. மதுமiட திறந்து தீந்தேன் வார்தரு கோதை நீமுன் செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தை யாகி யிதுமக வழியின் வாழே னிறப்பல்யா னென்று மாங்கட் கதுமெனக் கடவு டோன்றிக் கடைமுகங் குறுக வந்தான். இ-ள். இனிய தேனினத்துக்கு மடைதிறந்து மதுவொழுகு கின்ற கோதை போல்வாய்! நீ முன்சாபிள்ளைபலவும்பெற்றுச் சிந்தனைமிக்க மனத்தினையுடையையாயிருந்து, இந்த மகவழியு மாயின், யானுயிர் வாழேன்; இறந்துபடுவேனென்றவளவிலே, ஒருகடவுள் கடுகத் தோன்றித் தலைவாயிலைக் குறுகவந்தா னென்க. (274) 1125. கறவைகாண் கன்றின் வெஃகிக் கண்டடி பணிந்து காமர் நறவயா வுயிர்க்கு மாலை நாற்றிய விடத்து ளேற்றி யறவியாற் காறு மூன்று மைந்தநா லமிர்த மேந்தப் பறவைதா துண்ட வண்ணம் பட்டினிப் பரிவு தீர்ந்தான். அறவியாற்கு - அறத்திலேநிற்கன்றவற்கு. ஆறுமூன்று மமைந்த வமிர்து - ஒன்பது வகையுமமைந்த வமிர்து, ஒன்பது வகை- நவபுண்ணியக்கிரமம். நாலமிர்தாவன உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. இ-ள். அவனைக் கறவையைக் காண்கின்ற கன்றுபோலே விரும்பிக்கண்டு பணிந்து மாலைநாற்றியவிடத்தே வைத்து அவற்கு அமிர்தத்தை யேந்தினேமாக, வண்டுதாதுண்டாற் போலேயுண்டு பட்டினியாலுள்ள வருத்தத்தைத் தீர்ந்தானென்க. (275) 1126. ஆய்மணிப் பவளத் திண்ணை யரும்பெறற் காகத் தங்கட் டூய்மணி வாச நன்னீர் துளங்குபொற் கலத்து ளேற்று வேய்மணித் தோளி நிற்ப விழுத்தவ னியம முற்றி வாய்மணி முறுவ றோன்ற வந்தனை விதியிற் செய்தேன். முற்றி -முற்ற. இ-ள். மணியழுத்தின பவளத்திண்ணையிலிருந்து கரகத்து நீரை நிலத்தில் வீழாமற் கலத்திலே யேற்று நீநிற்க அவன் நியமங் களை முற்றினானாக, யான் குறைகூறுதற்கு முத்துப்போலு முறுவறோன்றும் படி நiகத்து வணங்குமுறையாலே வணங்கினே னென்றானென்க. (276) 1127. ஆறெலாங் கடலுள் வைகு மருந்தவத் திறைவ னூலுள் வேறெலாப் பொருளும் வைகும் விழுத்தவ வறிதி நீயே யூறிலா வுணர்வி னோக்கி யுரைமதி யெவன்கொன் மக்கட் பேறிலா ளல்லள் பெற்ற வுயிர்சென்று பிறக்கு மென்றேன். இ-ள். வணங்கி விழுத்தவனே! இவள் மக்கட்பேறில்லாதாளல்லன்; பெற்ற மக்களுயிர் மற்றோரிடத்தே சென்றுபிறக்கும்; இனிப்பிள்ளை யெத்தன்மைத்து; அதன்றன்மையை, ஆறெலாங் கடலுள்வைகுமாறு போலே இறைவனூலிலே வேறு வேறுபட்ட எல்லாப் பொருளும் வைகும்; அப்பொருளெல்லாம் நீயேயறி தியாதலிற் கணிதநிலையுந் தெரியாமலில்லை; நின்னுணர்வாலே பார்த்து உரைப்பாயாகவென்றே னென்றானென்க. மக்களைப் பின்னுங்கூட்டுக. இறக்குமென்னமாட்டாது கூறினான். (277) 1128. வம்பவிழ் கோதை தந்த வான்றுவர்க் காயை வீழ்த்தோர் செம்பழுக் காயை வாங்கித் திருநிலத் தெடுத்துக் கொண்டாங் கம்பழ நீண்ட வாட்க ணலமரு மணிசெ யம்பூங் கொம்படு நுசுப்பி னாய்க்குத் தந்தனென் பேணிக் கொண்டாய். வீழ்த்து - வீழ்ப்ப. இ-ள். அங்ஙனங்கூறியகாலத்தே, கோதாய்! யான்றந்ததுவர்க் காயை நீவீழ்ப்ப, அவனை வழிபட்ட நிலத்தே கிடந்ததொரு பழுக் காயை வளைந்து எடுத்து நுசுப்பினாய்க்குத் தந்தேன்; நீயதனைப் பின்பு பேணிக்கொண்டாயென்க. (278) 1129. பெற்றவந் நிமித்தத் தானும் பிறந்தசொல் வகையி னாலு மற்றமின் மணியை யங்கைக் கொண்டவர் கண்டு காட்டக் கற்பகங் காம வல்லி யனையநீர் கேண்மி னென்று முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியு மன்றே. ஒன்றுநீர் கவலல் வேண்டா வுலகெலா மாளுஞ் சீர்த்திப் பொன்றிக ழுருவி னானோர் புண்ணியற் பெறுதி ரென்ன நின்றநீ யுவந்து நீங்க நிகழ்பொரு ளெனக்குச் செப்பிப் பின்றையு நிகழ்வ துண்டு பேசுவல் கேளி தென்றான். இவையிரண்டுமொருதொடர். 1. நிமித்தம்-வர்க்காயைவீழ்ப்பப்பழுக்காயைக்கொடுத்தது. பிறந்த சொல்வகையாவது இறக்குமென்னாது சென்று பிறக்கு மென்றதனாற் போமதுவும் பிறக்குமதுவுஞ் சொல்லியது.கொண்டவர் முனிவர னென்றது பன்மை யொருமை மயக்கம். 2. பெறுதிரென்றது சுநந்தைக்குப் பிள்ளைபெறுவையென்றாற் போலிருந்தது. அவர்கூறியது வளர்க்கப்பெறுவீரென்று. இ-ள்.இறைவனை அங்கையிலேகொண்டிருக்கின்றவன் நிமித்தத் தாலுஞ் சொல்லாலுந் தாங்கண்டு நமக்கறிவிக்கவேண்டி நீர்கேண்மி னென்று காரியமுற்றுப்பெற்று இனிய சொல்லாலே மொழியும் அம்முனிகளுக்குவரனானவன், நீர் சிறிதும் வருந்த வேண்டா; உலகமெல்லாம் ஆள்வானொரு புண்ணியனைப் பெறுவீரென்றுகூற, அதுகேட்டு நீஉவந்து போனாயாக, பிறப்புத் தொடங்கி அவற்குத் துறவளவுநிகழுநன்றாய பொருள்களை எனக்குக்கூறிப் பின்புநிகழ்வதோர்துன்ப முண்டு, அத்துன்பத்தைக் கூறுகின்றேன் கேளென்றானென்க. (279-80) 1131. நிலவுறழ் பூணி னானை நெடுநக ரிரங்கக் கையாத் தலபல செய்து கொல்வா னருளிலான் கொண்ட போழ்திற் குலவிய புகழி னானைக் கொண்டுபோ மியக்க னஞ்சல் சிலபகல் கழிந்து காண்டி சிந்தியீ தென்று சொன்னான். இ-ள். நீங்கள்அலபலசெய்து பூணினானைக் கையைத் தொழில் செய்யாதபடி பண்ணுதலாலே, அருளிலான் அவனைக் கொல்லக்கருதி நகரிரங்கும்படி கைக் கொண்ட காலத்தே அவனை ஓரியக்கன் கொண்டுபோம்; போனால் எட்டுத்திங்கள் சென்றாற் காண்பை; இவ்வார்த்தையை அக்காலத்தே சிந்தியென்று சொன்னானாதலின், நீயும் அஞ்சாதே கொள்ளென்றானென்க. (281) 1132. வசையற நிறைந்த கற்பின் மாலையு மாமி தானுந் தசையற வுருகி வெந்து தம்முயிர் நீங்கு மாங்க ணொசிதவன் சொற்க ளென்னு நோன்புணை தழுவி நெஞ்சிற் கசிவெனுங் கடலை நீந்திக் கரையெனுங் காலை கண்டார். இ-ள். குணமாலையுஞ் சுநந்தையுமுருகி வெந்து உயிர்நீங்குகின்ற வளவிலே அதுகேட்டு நுண்ணிய தவத்தையுடையவன் வார்த்தை யென்னு நோன்புணையைத் தழுவி வருத்தமென்கின்ற கடலைநீந்தி எட்டுத்திங்களென்கின்ற காலையாகிய கரையைக் கண்டாரென்க. (282) 1133. திருக்குழன் மகளிர் நையச் சீவக சாமி திண்டோள் வரிக்கச்சிற் பிணிக்கப் பட்டான் மன்னனா லென்னக் கேட்டே தருக்குடை வேழம் வாளார் ஞாட்பினுட் டகைமை சான்ற மருப்புட னிழந்த தொத்தார் மன்னுயிர்த் தோழன் மாரே. இ-ள். மன்னவன் கைக்கொண்டுவரச்சொல்லுதலால் சீவகன் தன்றோளை இருமுதுகுரவராலே கச்சிட்டுக்கட்டினாற் போலத் தொழில் செய்யாதபடி பண்ணப்பட்டானென்று சிலர்கூறக் கேட்டு அவன்றோழர் யானை போரிலே மருப்பைச் சேரவிழந்த தன்மையை யொத்தாரென்க. (283) 1134. நட்டவற் குற்ற கேட்டே பதுமுக னக்கு மற்றோர் குட்டியைத் தின்ன லாமே கோட்புலி புறத் தாகக் கட்டியங் கார னென்னுங் கழுதைநம் புலியைப் பாய வொட்டியிஃ துணர லாமே யுரைவல்லை யறிக வென்றான். இ-ள். தானட்புப்பண்ணின சீவகனுக்குப் பிறந்த துன்பத்தைக் கேட்டுப் பதுமுகன் நக்குப் புலி புறத்ததாக அதன் குட்டியை வேறொன்றினாற் றின்னலாமோ, அதுபோல யாமுளேமாக அவனாலென்செய்யலாம்; அதுவேயுமன்றிக் கட்டியங்கார னென்னுங் கழுதை நம்புலியைப்பாய்தற்கு யாமும் பொருந்தி இவ்வார்த்தையை மெய்யென்றுணர்தலாகாதென்று திரளை நோக்கிக்கூறிப் பின்பு ஒற்றுப்போகின்றவனை நோக்கி ஆண்டுப் பிறக்கின்ற வார்த்தையைக் கடுக வறிவாயாக வென்றானென்க. மற்று - வினைமாற்று. தான்பாதுகாத்தற்றொழிலுடை மையிற் குட்டியென்றான். அது “மடங்கலாற்றற் பதுமுகன் காக்க வென்ன” (சீவக.1896) என்பதனானுமுணர்க. இனிப் புலியென்றது சுதஞ்ச ணனைக் கருதியென்றுமுரைப்ப. (284) 1135. சிலையொடு செல்வ னின்றாற் றேவரும் வணக்க லாற்றார் முலையுடைத் தாயொ டெண்ணித் தந்தையிக் கொடுமை செய்தான் கலைவல்லீ ரின்னுங் கேண்மி னின்னதென் றுரைக்கு மாங்கண் விரைவொடு சென்ற வொற்றாள் விளைந்தவா பேசு கின்றான். இ-ள். அவன்போனபின்பு, பதுமுகன்கலைவல்லீர்! ஆண்டுப் பிறந்தசெய்தியித்தன்மைத்து; யாதெனிற் சீவகன் சிலையோடு நின்றாற் றேவரும் அவனைத் தாழ்லித்தலாற்றாராதலின், அவனைத்தாழ் வித்தலரிது; இக்கொடுமை செய்தான் நற்றாயோ டெண்ணித்தந்தையே, இன்னமுமொற்றன் வந்தாலுங் கேண்மி னென்று உரைக் கின்ற வளவிலே ஓடிவந்த வொற்றன் செய்தி சொல்லாநின்றானென்க. (285) 1136. இட்டிவேல் குந்தங் கூர்வா ளிருஞ்சிலை யிருப்புச் சுற்றார் நெட்டிலைச் சூலம் வெய்ய முனைத்தண்டு நெருங்க வேந்தி யெட்டெலாத் திசையு மீண்டி யெழாயிரத் திரட்டி மள்ளர் கட்டழற் கதிரை யூர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார். ஈட்டி - விகாரம். இருப்புச்சுற்று - பூண். முனைத்தண்டு - முனையினை யுடைய தண்டாயுதம். இ-ள். பதினாலாயிரமள்ளர் ஈட்டிமுதலியனவற்றை நெருங்க வேந்தி எட்டாகிய எல்லாத்திசைகளினுமீண்டிக் கதிரைப் பரிவேடிப்பு வளைத்தாற்போல வளைத்துக்கொண்டாரென்க. (286) 1137. பிடியொடு நின்ற வேழம் பெருவளைப் புண்ட வண்ணம் வடிமலர்க் கோதை யோடும் வளைத்தலின் மைந்தன் சீறி விடுகணை சிலையொ டேந்தி வெருவரத் தோன்ற லோடு மடுபுலி கண்ட மான்போ லாறல வாயி னாரே. இ-ள். பிடியோடு நின்ற பெருவேழம் வளைப்புண்டாற் போலே குணமாலையோடே கூட மனையிடத்தே வளைத்தலாலே மைந்தன் சீறிக் கணையைச் சிலையுடனேயேந்தித் தோன்றின வளவிலே அம்மள்ளர் புலியைக்கண்ட மான்போலே வழியல்லா வழிகளிலே போனாரென்க. (287) 1138. சூழ்கழன் மள்ளர் பாறச் சூழ்ச்சியிற் றந்தை புல்லி வீழ்தரு கண்ண டம்மோய் விளங்குதோள் பிணிப்ப மற்றென் றோழரை வடுச்செய் திட்டே னென்றுதான் றுளங்கி நின்றா னூழ்திரைப் பாம்பு சேர்ந்த வெhளிமிகு பருதி யொத்தான். 1139. ஒற்றன்வந் துரைப்பக் கேட்டே யொத்ததோ வென்சொ லென்னாச் சுற்றினார் முகத்தை நோக்கிச் சூழிமால் யானை யன்னா னுற்றவிவ் விடரைத் தீர்க்கு முபாயநீ ருரைமி னென்றான் பொற்றிரட் குன்றம் போலப் பொலிவு கொண் டிருந்த தோளான். இவையிரண்டுமொருதொடர். 1. வருத்தத்தாற்கழன்று நீர் வீழ்கின்றகண்ணாளாகிய தம்மோய் -தாய்; சுநந்தை. புல்லி -அணுகி. ஊழித்திரைப்பரிதி. இனி மொய்விளங்கு தோள் பாட மாயின், தம்மென்பது ஒருமைப் பன்மை மயக்கமாம். திரைப் பரப்புச் சேர்ந்தவும் பாடம். 2. சூழி - முகபடாம். தோளான் -பதுமுகன். இ-ள். மள்ளர் அங்ஙனங்கெட்டார்களாக, இதுகாரியமன் றென்று கருதித்தந்தைதாயிவர்கள் புல்லி விளங்குதோளைச் சூழ்ச்சியாலே போர்த்தொழில் செய்யாதபடிசெய்ய, அவன் இவர்கள் வேண்டிக் கோடலின், எனக்கு வடுவில்லை; என்றோழர்க்கு வடுவுண்டாக்கினே னென்று கலங்கி நின்றான்; அப்பொழுது மள்ளர் சென்று கைக் கொள்ளுதலாற் பாம்பு மறைந்த பருதியையொத்தானென்று ஒற்றன் வந்துகூறக்கேட்டு என்சொல் ஒத்ததோவென்றுகூறிப் பதுமுகன் தன்னைச்சூழ்ந்த நின்றவர் கண்முகத்தைநோக்கிச் சீவகனுக்குற்ற இவ்விடரைத் தீர்க்கு முபாயத்தை நீங்கள் உரைமினென்றானென்க. (288-9) 1140. நிறைத்திங்க ளொளியோ டொப்பான் புத்திசே னினைந்து சொல்லு மறைத்திங்க ணகரை வல்லே சுடுதுநாஞ் சுடுத லோடு மிறைக்குற்றேல் செய்த லின்றி யெரியின்வாய்ச் சனங்க ணீங்கச் சிறைக்குற்ற நீங்கிச் செற்றாற் செகுத்துக்கொண் டெழுது மென்றான். இ-ள். நிறைந்த திங்களொளியோடொப்பானாகிய புத்தி சேனன் நினைந்து சொல்லும்; நாம் இப்பொழுதே மறைந்து ஊரைச் சுடுவேம்; சுட்டவளவிலே சனங்கள் இறைக்குக் குற்றேவல் செய்தலின்றி எரியை யவித்தற்கு நீங்கினார்களாக மதனனைக்கொன்று சீவகனுக்குச் சிறையாகிய குற்றத்தைநீக்கிக் கொண்டுபோவே மென்றானென்க. (290) இவன் அந்தணனாதலின் முற்கூறினான். 1141. காலத்தீ நகரை மேயக் கடியரண் கடிந்த வம்பிற் சாலத்தீச் சவரர் கோலஞ் செய்துநம் மறவ ரீண்டிக் கோலத்தீ வேலி னானைக் கோயிலுள் வளைப்ப விப்பா லாலைத்தீ யிடங்க டோறு மாகுலஞ் செய்து மென்றான். இக்கவி முதல் பதுமுகன் கூற்று. இ-ள். நீ கூறியவாறே விரைஊதுத்தீப்போலுந்தீயால் ஊர்முழுதுஞ் சுடாதே முப்புரத்தைக்கடந்த அம்புபோலே அம்பு போலே சிலவிடங் களை விட்டுச்சுடநம்மறவரீண்டித் தீயவேடர் கோலத்தைச்செய்து கட்டியங்காரனைக் கோயிலே வளைத்துக் கொள்ள இப்பகுதியிலே ஆலையிற்பாகடுந் தீயையுடைய நாடெங்கும் அழிக்கக்கடவோ மென்றானென்க. “உய்யவல் லாரொரு மூவரைக் காவல்கொண் - டெய்யவல் லானுக்கே யுந்தீபற”(திருவா.திருவந்தி.4) என்றாற்போல. (291) 1142. சிறைப்புறங் காத்துச் செல்லு மதனைத் தெருவின் வீழப் பிறைத்தலை யம்பிற் சென்னி பெருநிலத் திடுவ லிட்டான் மறுக்குற்று மள்ளர் நீங்க மைந்தனைக் கொண்டு போகி யறைத்தொழி லார்க்குஞ் செல்லா வருமிளை புகுமி னென்றான். இ-ள். அங்ஙனஞ்செய்தால் யான் அம்பாலே சிறையைப் பாதுகாத்துத் தெருவிலேசெல்லுமதனைத் தலையை நிலத்தே வீழவிடுவேன்; இட்டால் மறுகுதலுற்று மள்ளர்நீங்கினவளவிலே சீவகனைக்கொண்டுபோய்க் கீழறுக்குந்தொழிலுடைய அமைச் சர்க்கும் நினைக்கவொண்ணாத காவற்காட்டிலே செல்லுமினென் றானென்க. (292) 1143. மாற்றவர் மலைப்பி னாங்கே வாட்கடாக் கொண்டு நொய்தா வேற்றுலக கேற்றி நும்பின் வரைதர்வே னுலகிற் கெல்லா மாற்றிய நட்பு வல்லே வலிப்புறீஇ யிடுமி னென்றான் கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத்திற் கூற்ற மொப்பான். கூற்றங்கள்பலவுந்திரண்டகூறுபாட்டிலே விசேடித்துக் கூற்றத்தை யொப்பான்; “முத்தூற்றக்கூற்றம்”(புறநா.24 உரை) என்றாற்போல. தோழரிற் பதுமுகனுக்கு விசேடமுண்டேன்றார். இனிக் கூற்றத்தில் உவமைகூறுமிடத்துப் பலகூற்றங்களாலே பண்ணினதொரு கூற்ற மொப்பானென்றுமாம். இ-ள். கூற்றமொப்பான் அங்ஙனஞ்செய்தாற் பகைவர் மலைந்ததுண்டாயின் வாளாதேகடாவிட்டு வல்லே விண்ணுல கேற்றி நும்பின்னேகடுகவருவேன்; நீங்கள் நடத்தியநட்பை உலகெல்லாம் நிலைபெறுத்தி யிடுமினென்றானென்க. (293) 1144. காலனைச் சூழ்ந்த நோய்போன புலமா விபுலர் சூழ வேலினை யேந்தி நந்தன் வெருவரத் தோன்ற லோடு மாலைதன் றாதை தானு மக்களும் வந்து கூடிப் பாலவர் பிறரு மீண்டிப் பாய்புலி யினத்திற் சூழ்ந்தார். இ-ள். காலன் ஏவினவிடத்தேசேறற்கு அவனைச் சூழ்ந்து நோய்போல மாயின்மேலே நபுலவிபுலர் சூழ்ந்துவர நந்தட்டன் றோன்றி னவளவிலே அவனுடனே குபேரமித்திரனும் அவன் மக்களுந் தம்பகுதியினுள்ளாரொழிந்தவரும் ஈண்டிவந்து தோழரு டனேகூடி எல்லோரும் புலியினம்போலே பதுமுகனைக் சூழ்ந்தா ரென்க. நபுலவிபுலர் - கபிலபரணர் போலக் கொள்க. (294) 1145. மட்டுவா யவிழ்ந்த தண்டார்த் தாமரை நாமன் சொன்ன கட்டமை நீதி தன்மேற் காப்பமைந் திவர்க ணிற்பப் பட்டுலாய்க் கிடந்த செம்பொற் கலையணி பரவை யல்கு லிட்டிடைப் பவளச் செவ்வாய்த் தத்தையு மிதனைக் கேட்டாள். இ-ள். பதுமுகன் கூறிய வகுப்பமைந்தமுறையிலே இவர்கள் காவலமைந்து நிற்ப, அல்குன் முதலியவற்றையுடைய தத்தையும் இச்செய்தியைக் கேட்டாளென்க. (295) 1146. மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகிலை வாங்கிக் கணைபுரை கண்ணி யேற்ப வுடுத்தபின் செம்பொற் செப்பிற் பிணையலு நறிய சேர்த்திப் பெருவிலை யாரந் தாங்கித் துணைவனுக் குற்ற துன்பஞ் சொல்லிய தொடங்கினாளே. இ-ள். அதுகேட்டகண்ணி தியானத்துக்கேற்ப வெண்டு கிலை யுடுத்த பின்பு நறிமாலைகளையுமணிந்து முத்தாரத்தை யுந்தாங்கிக் கணவனுக்குற்ற வருத்தத்தைத் தீர்த்தற்குத் தியானத் தைத் தொடங்கினாளென்க. (296) 1147. பொன்னணி மணிசெ யோடை நீரின்வெண் சாந்து பூசித் தன்னுடை விஞ்சை யெல்லாந் தளிரிய லோத லோடு மின்னடு வாளும் வேலுங் கல்லொடு தீயுங் காற்று மன்னுட னேந்தித் தெய்வ மாதரைச் சூழ்ந்த வன்றே. இ-ள். அங்ஙனந்தொடங்கிய தளிரியல் மடலிலிருந்த சாந்தைப் பன்னீருடனேபூசித் தன்னுடைய மந்திரங்களெல்லா வற்றையு மோதினவளவிலே இவள்வழி பாட்டிற்கு விரும்பி வருந்தெய்வங்கள் வாள் வேல் முதலியவற்றை மிகுதியுடனே ஏந்தி வந்து அவளைச்சூழ்ந்தவென்க. இதனாலும், பின் “விண்ணோர்களைவாழ்த்தி”(சீவக.1160) என்ற தனானும் ஈண்டு விஞ்சையர் வாராமையுமுணர்க. சாந்து பூத்த - தன்னிடைவிஞ்சையும் பாடம். (279) வேறு. 1148. ஆரமின் னும்பணை வெம்முலை யாடமைத் தோளினாள் வீரனுற் றதுயர் மின்னென நீக்கிய மெல்லவே நேரமன் னும்வரு கென்றுநின் றாணினைந் தாளரோ பாருண்மன் னும்பழி பண்பனுக் கின்றுவி ளைந்ததே. இ-ள். முலையினையுடைய தோளினாள், தன்கணவனுக் குற்றதுயரை மின்போற் கடிதுமறையும் படி நீக்குதற்கு இவ்வாயிலிலே மிகவுமணுகவருவார்களாக வென்றுநின்றவள், பண்பனுக்கு இன்றுவிளைந்ததொரு பாரிலே மன்னுகின்ற பழியை மெல்லவே நினைந்தாளென்க. அது மேற்கூறுகின்றார். (298) 1149. மன்னன்செய் தசிறை மாகட லுட்குளித் தாழ்வுழித் தன்னையெய் திச்சிறை மீட்டன டன்மனை யாளெனி னென்னையா வதிவ னாற்றலுங் கல்வியு மென்றுடன் கொன்னும்வை யங்கொழிக் கும்பழிக் கென்செய்கோ தெய்வமே. சிறையெனவே கட்டில்லாமையுணர்க. என்னை, ஐ -அசை. ஆவது - ஒருமைப்பன்மை மயக்கம். கொன்னும் - பெரிதும். இ-ள். அரசன்செய்த சிறையிலே தான் முழுகியழுந்துகின்ற வளவிலே தன்மனையாள் தன்னைச்சேர்ந்து சிறையை நீக்கினா ளென்றால் இவனாற்றலுங் கல்வியும் என்னாகக்கடவனவென்று கூறி உலகமெடுத்துக் சொல்லும் பழிக்குத் தெய்வமே யான் என்செய்வே னென்று நினைந்தாளென்க. (299) 1150. செல்வனுற் றசிறைசெய் யவ ணீக்குமென் றாற்பழி யில்லையா யின்னவள் யானெனும் வேற்றுமை யில்லையே சொல்லின்வெள் ளிம்மலை தோடவிழ் தாமரைப் பொன்மல ரெல்லையா கும்பொதுப் பெண்ணவள் யான்குல மங்கையே. 1151. ஆவதா கப்புக ழும்பழி யும்மெழு நாளவை தேவர்மாட் டும்முள மக்களு ளில்வழித் தேர்கலே னோமெனெஞ் சம்மென நோக்கிநின் றாள்சிறைப் பட்டதன் காவற்கன் றிற்புனிற் றாவன கார்மயிற் சாயலே. இவையிரண்டுமொருதொடர். 1. திருப்பார்க்கத் தீங்கெலாநீங்குமென்று உலகங்கூறுதலிற் றானும் அதனாற்கூறுகின்றாள். ஏகாரம் - தேற்றேகாரம். 2. காவற் கன்று - தன்காவலையுடையகன்று. இ-ள். செல்வனுற்றசிறையைத் திருமகணீக்குமென்று கூறிய வதனாற் பழியில்லையாய் முடியுமாயின், அவளென்றும் யானென்றும் வேறுபாடில்லையே, வேறுபாடு சொல்லின், எனக் கெல்லை வெள்ளிமலையாகும்; அவளுக்கெல்லை தாமரைப் பொன் மலராகும். அவள் பொதுமகள்; யான் குலமங்கை. அதனா லும் பழியில்லையாம். அதுவுமன்றி ஈண்டுப் புகழும்பழியுமா னதாக; அவை தோன்றுநாட் டேவர் பக்கலுந்தோன்றும்; மக்களில் அவையில்லாதவிடங் கண் டறியேன்; இவையெல்லாம் நினைக்குங்காலமுமன்று; என் னெஞ்சமுநோமெனக்கூறி மயிற் சாயல் ஒருசிறைப்பட்ட தன்கன்றிடத்துப் புனிற்றாநோக்குத லொத்த நோக்கினை நோக்கி நின்றாளென்க. ஆவிடுவிக்க நோக்கி நின்றாற்போலே நின்றாள். இது பயனுவமம். (300-1) வேறு. 1152. மாநகர் சுடுத லொன்றோ மதனனை யழித்த லொன்றோ வானிக ரில்லா மைந்தர் கருதிய ததுவு நிற்க வேய்நிக ரில்ல தோளி விஞ்சையால் விடுத்துக் கொள்ளப் போயுயிர் வாழ்தல் வேண்டே னெனப்பொருள் சிந்திக் கின்றான். 1153. கச்சற நிமிர்ந்து மாந்தர் கடாவிடு களிறு போல வுச்சியு மருங்கும் பற்றிப் பிளந்துயிர் பருகிக் கோண்மா வச்சுற வழன்று சீறி யாட்டினம் புக்க தொப்பக் குச்சென நிரைத்த யானைக் குழாமிரித் திடுவ லென்றான். இவையிரண்டுமொருதொடர். இ-ள். வானுநிகரில்லாமைந்தர்கருதியது: ஒன்று மாநகரைச் சுடுதல்; ஒன்று மதனனைக் கொல்லுதலாயிருக்கும். அதுவுந்தாழ் வில்லை; தத்தை தன்விஞ்சையால் என்னை விடுவித்துக் கொள்ள யான் பிழைத்துப்போய்ப் பின்பு உயிர்வாழ்தலை வேண்டே னென்று கருதிக் காரியத்தை நினைக்கின்றவன், தன்வயிற்றிற் கட்டின கச்சறும் படிநிமிர்ந்து மாந்தரை உச்சியையுமருங்கையும் பற்றிப்பிளந்து உயிரைக்கடாவிடு களிறுபோலே மதனனைக் கொன்று புலிசீறி ஆட்டினத்தே புக்கதொப்பப் பாவாற்றி யென் னும்படி நெருங்கவளைத்த யானைத்திரளையுங் கெடுத்திடுவே னென்று கருதினானென்க. ஆசிரியற்கு நேர்ந்ததற்குத் தாழ்வாகாதென்று இத் திரளைக் கொல்லக்கருதினான். ஆய்நிகரும் பாடம். (302-3) 1154. மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்துத் திண்டேர் பொன்னிலங் கிவுளித் தேராற் புடைத்துவெங் குருதி பொங்க வின்னுயி ரவனை யுண்ணு மெல்லைநாள் வந்த தில்லை யென்னையிக் கிருமி கொன்றென் றோழனை நினைப்ப லென்றான். இ-ள்.அங்ஙனங் கருதினவன் பின்பு குருதிபொங்கும்படிவேழத்தை வேழத்தாலே புடைத்துத் திண்டேரைப் பொன்னிலங்கு இவுளித் தேராலே புடைத்து நம்பகைவனுயிரையுண்ணு நாளெல் லை வந்த தில்லை; இக்கிருமிகளைக்கொன்று பெறும் பயன்யாது? என்றோழனை நினைப்பேனென்று நினைத்தானென்க. மக்களாகிய கருத்தின்மையிற் கிருமியென்றான். (304) 1155. தோழனுந் தேவி மார்தங் குழாத்துளான் றுளும்பு முந்நீ ரேழ்தரு பரிதி தன்மே லிளம்பிறை கிடந்த தேபோற் றாழ்தகை யார மார்பிற் சீவகன் குணங்க டம்மை யாழெழீஇப் பாடக் கேட்டோ ரரம்பை யைச்சேர்ந் திருந்தான். எழுதருமிளங்கதிர்மேலே இளம்பிறைகிடந்தாற்போலத் தங்கின முத்தாரமார் பினையுடைய சீவகன். இ-ள். சுதஞ்சணனுந் தேவிமார்திரளிலே யிருக்கின்றவன் ஓரரம்பையைச் சேர்ந்து சீவகன் குணங்களைப் பாடக் கேட்டிருந்தா னென்க. (305) வேறு. 1156. வயிரம்வேய்ந் தமணி நீண்முடி வாலொளி வானவன் செயிரிற்றீர்ந் தசெழுந் தாமரைக் கண்ணிட னாடலு முயிரனா னைநினைந் தானுற்ற தோதியி னோக்கினான் மயிலனார்க் குப்படி வைத்தவன் மால்விசும் பேறினான். இ-ள். வயிரமணிவேய்ந்தமுடியினையும், வெள்ளை நிறத்தினையு முடைய தேவனது குற்றத்தை நீங்கினகண் இடனாடின வளவிலே, இதனாலெனக்குத்தீங்குவருமோ வென்றுநோக்காதே முதற் சீவகனை நினைந்தான்; நினைந்து அவனுற்றதுன்பத்தை யறிந்தான்; அறிந்து தேவிமார்க்குத் தன்னுருவை நிருமித்து வைத்துத் தன்னூர்தியாகிய மேகத்திலே யேறினானென்க. ஓதி - அவதிஞானம். ஓலக்கங்குலையாமற் படிவம் வைத்தா னென்க. படிவம் விகாரம். (306) 1157. இடியுமின் னும்முழக் கும்மிவற் றானுல கந்நிறைந் தொடியுமூ ழியிவ ணின்றுறு கால்வரை கீழ்ந்தென நடலைநோக் கிக்கதிர் நாணுவ தொப்பம றைந்தபின் கடலையேந் திநிலத் திட்டென மாரிக லந்ததே. நிறைந்து - நிறைய. கீழ்ந்து - கீழ. இ-ள். அவ்வூர்தி உறுகால் வரையைப்பிளக்க இடியும் மின்னும் முழக்கு மென்கின்றவற்றாலே தானிறைதலின், இந்நட லையைநோக்கி நம்மையொழிய ஊழி நிகழ்ந்ததென்று நாணுந் தன்மையையொப்பக் கதிர்மறைந்தபின்பு உலகமுடியும் ஊழி யின்று இப்பொழுதென்னும்படி கடலையெடுத்து நிலத்தே போகட்டாற்போலே பின்பு மழை கலந்ததென்க. (307) 1158. விண்ணும்மண் ணும்மறி யாதுவி லங்கொடு மாந்தர்தங் கண்ணும்வா யும்மிழந் தாங்கடல் கொண்டது காண்கெனப் பெண்ணுமா ணும்மிரங் கப்பெரு மான்மகன் சாமியை யண்ணலேந் தியக லம்புல்லிக் கொண்டெழுந் தேகினான். இழந்து -இழப்ப. ஆங்கடல் - மேல் ஊழிக்காலத்து வரும் கடல். பெருமான் -சச்சந்தன். விலங்குகள் மேயாமையின், வாயிழந்தன. “மாமேயன்மறப்ப” (நெடுநல்.9) என்றார் பிறரும். இ-ள். அம்மழையாலே விலங்கும்மக்களும் விண்ணு மண்ணு மறியாதே கண்ணும்வாயுமிழக்கும்படி ஆங்கடல்கொண்டதனைக் காண்பீராகவெனக்கூறிப் பெண்ணுமாணுமிரங்கச் சுதஞ்சணன் வந்து சாமியையெடுத்து மார்பிலே தழுவிக்கொண்டு மேனோக் கிப் போனானென்க. (308) 1159. குன்றுண்டோங் குதிர டோளவற் கொண்டெழுந் தேகலு நன்றுண்டா கவென நன்னுதல் வாழ்த்தினள் வாழ்த்தலு மொன்றுண்டா யிற்றவ ளுள்ளழி நோயுறு காளையை யென்றுண்டாங் கொல்லினிக் கட்படு நாளெனுஞ் சிந்தையே. இ-ள். சீவகனை அவன் கொண்டுபோகின்றவளவிலே, தத்தை நன்றுண்டாகவென்று வாழ்த்தினாள்; வாழ்த்தின வளவிலே, அவளுக்கு இவனைக்காணுங்காலம் எந்நாளிலேயுண் டாங்கொலென்னும் நினைவாகிய உள்ளழிநோயொன்றுண் டாயிற்றென்க. உண்டு - உவமவாசகம். நாளென்றது காலத்தையுணர்த்தும். (309) 1160. சந்தமா லைத்தொகை தாழ்ந்துசாந் தங்கமழ் பூமியுள் வந்தவிண் ணோர்களை வாழ்த்தியேத் திம்மலர் மாலைதூ யெந்தைமார் களெழு கென்னவே கவிடுத் தாள்குரல் சிந்தைசெய் யுஞ்சிற கர்கிளி தோற்குமந் தீஞ்சொலாள். சந்தம்-நிறம். தான்வழிப்பட்டதெய்வங்கள் செய்துமுடிக்கின்ற காரியம் பிறரான்முடிதலின், அவரைப் போகவென்றாள். குரலென்னு நரம்பு தான் இத்தன்மை பெற வேண்டுமென்று கருதுஞ் சொல்லாள். இ-ள். தான்வழிபட்டபூமியிலே அவ்வழிப்பாட்டிற்குவந்த தெய்வங் களை மாலையைத்தூவி வாழ்த்தித் தோத்திரங்களைக் கூறி, எந்தைமார்கள்! போவீராகவென்று போகவிட்டாளென்க. (310) வேறு. 1161. மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதன னென்பான் கொலைத்தொகை வேலி னானைக் கொல்லிய கொண்டு போந்தா னலத்தகை யவனைக் காணா னஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச் சிலைத்தொழிற் றடக்கை மன்னற் கிற்றெனச் செப்பு கின்றான். 1162. மன்னனாற் சீறப் பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தா மென்னினிச் சொல்லிச் சேறு மென் செய்தும் யாங்க ளெல்லா மின்னது பட்ட தென்றா லெரிவிளக் குறுக்கு நம்மைத் துன்னுபு சூழ்ந்து தோன்றச் சொல்லுமின் செய்வ தென்றான். இவையிரண்டுbமாருதொடர். இ-ள். மன்னன்மைத்துனனாகிய மதனனென்பான், சீவகனை அரசன் கொல்லுகைக்குத் தான் கைக்கொண்டு போந்தவன், அவனைக் காணானாய் அஞ்சி நோக்கி மன்னற்கு இத்தன்மைத் தென்று கூறு கின்றவன், அரசனாற் சீறப்பட்ட சீவகனை அவன் கொல்லும்படி கைக் கொண்டு போந்தநாஞ் சென்று யாங்கள்பட்ட துன்பமெல்லாம் இத்தன்மைத்தென்று கூறின், நம்மை நடை விளக்கெரிக்கும்; இனி யென் சொல்லிச் செல்வேம்; மேலென் செய்யக் கடவேம்; செய்யுங் காரியத்தை எல்லாரு நெஞ்சிலே விசாரித்துத் தோன்றிச் சொல்லுங்க ளென்றானென்க. (311-2) 1163. வாழ்வதோ ருபாய நாடி மதியுடம் பட்டு வல்லே சூழ்வினை யாள ராங்க ணொருவனைத் தொடர்ந்து பற்றிப் போழ்படப் பிளந்து வாளிற் புரட்டியிட் டரியக் கண்டே ஆழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற் றன்றே. இ-ள். சூழ்வினையாளர் தாம் உயிர்வாழ்வதோரு பாயத்தை நாடி மதியொருப்பட்டு அவ்விடத்தே ஒருவனைத் தொடர்ந்து பற்றி வகிர்படப்பிளந்து வடிவுதெரியாதபடி புரட்டியிட்டுவைத்து வாளாலரிய அதனைக்கண்டு தாழ்ந்துபடு மரக்கலத்தின் மாந்தரைப்போல நகரழுங் கிற்றென்க. (313) 1164. காய்சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை மாசனம் பெரிது மொய்த்து மழையினோ டிருளுங் காற்றும் பேசிற்றான் பெரிதுந் தோன்றப் பிழைத்துய்யப் போத லஞ்சி வாசங்கொ டாரி னானை மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம். மொய்த்து- மொய்ப்ப. இ-ள். அவரங்ஙனஞ்செய்து அரசனிடத்தேசென்று, வேந் தே! யாங்கள் செய்திக்கூறிற் சீவகன்சுற்றம் பெரிதுமொய்த்த விளவிலே, மழையோடே இருளுங்காற்றும் மிகத்தோன்று தலாலே எங்களைத் தப்பி அவனுய்யப்போதற்கஞ்சி நீ யானைக் கிடும்படி கொணராதே அவன்மார்பைப் பிளந்து தள்ளிப் போகட்டேமென்றாரென்க. (314) 1165. அருள்வலி யாண்மை கல்வி யழகறி விளமை யூக்கந் திருமலி யீகை போகந் திண்புகழ் நண்பு சுற்ற மொருவரிவ் வுலகில் யாரே சீவக னொக்கு நீரார் பெரிதரி திவனைக் கொன்றாய் பெறுகெனச் சிறப்புச் செய்தான். வலி - மெய்வலி. ஆண்மை - ஆளுந்தன்மை. அறிவு - இயல்பானவறிவு. திருமலியீகை - செல்வமிகுகின்றகொடை. போகம் - எல்லாவற்றினும் நுகரவல்லனாதல். யாரே, ஏகாரம் எதிர்மறை. இ-ள். அருண்முதலியவற்றிக்குச் சீவகனையொக்குநீரார் ஒருவரு மில்லை; இவ்வுலகின்கண்ணே இவனைக்கொல்லுதல் மிகவுமரிது; இத்தன்மையானைக்கொன்றநீ இவற்றைப் பெறு வாயாகவென்று மதனனுக்குச் சிறப்புச்செய்தானென்க. (315) குணமாலையாரிலம்பக முற்றிற்று. ஐந்தாவது பதுமையாரிலம்பகம் 1166. வீட்டருஞ் சிறையிற் றேவன் விடுத்துயக் கொள்ளப் பட்ட கோட்டமில் குணத்தி னான்போ யென்செய்கின் றான்கொ லென்னிற் கூட்டரக் கெறிந்த பஞ்சிற் கூடிய பளிங்கிற் றோன்றுந் தீட்டரும் படிவ மன்னான் றிறங்கிளந் துரைத்து மன்றே. வீட்டருஞ்சிறை - எல்லாவழியானும் போக்குதலரியசிறை. இந்நிலையினும் ஆசிரியனுக்கு நேர்ந்தமொழிதப்பாமையிற் கோட்டமில் குணமென்றார். கூட்டரக்கெறிந்தபஞ்சு - செவ்வரக் கூட்டின பஞ்சு; பளிங்கைக்கூடியபஞ்சாலே அப்பளிங்கிடத்தேதோன்றும் படிவத்தையொப்பான் - சீவகன். இ-ள். தன்னையுய்யக்கொண்ட குணத்தினானைச் சிறையி னின்றும் விடுவித்துக் கொண்டுபோய்த் தேவன் என்செய்கின்றா னோ வென்று கேட்பீராயின், அவன் செய்கின்ற நிலைமை தன்னை முற்படக்கிளந்து பின்னர்ப் படிவமன்னான்றிறத்தை யுரைக்கக் கடவேமென்று தேவர் கூறினாரென்க. “வண்டளிர்” (சீவக.1225) என்னுங்கவியளவும் தேவன் செய்தி கூறினார். (1) 1167. விலங்கிவில் லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்ட போழ்தும் அலம்கலந் தாரி னான்வந் தருஞ்சிறை விடுத்த போழ்தும் புலம்பலு மகிழ்வு நெஞ்சிற் பொலிதலு மின்றிப் பொன்னார்ந் துலங்கலந் துயர்ந்த தோளா னூழ்வினை யென்றுவிட்டான். விழுச்சிறை - அன்னத்தைச் சிறைசெய்தலிற் சீரியசிறை. இ-ள். தோளான் கட்டியங்காரன் சிறையிலகப்பட்ட பொழுதுந் தேவன் விடுவித்தபொழுதும் புலம்பலும் மகிழ்வும் நெஞ் சிற்றேன்றுதலின்றி இரண்டையும் ஊழ்வினையென்றே கருதி விட்டானென்க. பொலிதலும், உம்மை - சிறப்பு. சிறைப்பட்டகாலத்தும் இவன் கொண்டு போன காலத்தும் அவன் மனமிருந்தபடி கூறினார். இதனானே சாரணரும் “சிறைப்பட்டனைபோலும்” (சீவக.2890) என்றார். (2) 1168. வானர முகள நாக மலர்துதைந் தொழுக வஞ்சித் தேனிரைத் தெழுந்து திங்க ளிறாலெனச் சென்று மொய்க்குங் கானம ரருவிக் குன்றிற் காய்கதிர் சுமந்தோர் திங்கண் மேனிமிர்ந் தேறி யாங்குத் தேவன்வெற் பேறி னானே. நாகமலர் தம்மிலேநெருங்கித்தேனொழுகும்படி வானரம் பாய்தலின், அவ்விடத்திருந்த தேனினமஞ்சிப்போய்த் திங்களை இறாலென்றுகருதி மொய்க்கும்வெற்பு சந்திரோதயம். இ-ள். திங்கள் இளஞாயிற்றைச்சுமந்து ஒரு வெள்ளிக் குன்றிலே யேறினாற்போலே தேவன் சீவகனைக் கொண்டு தன் வெற்பிலே யேறினானென்க. (3) 1169. திங்களைத் தெளிந்திட் டன்ன பாற்கடற் றிரைசெய் தெண்ணீர் வெங்கள்விட் டலர்ந்த கண்ணி விண்ணவ னுரிமை தன்னான் மங்கல வகையி னாட்டி மணியணி கலங்கள் சேர்த்திப் பங்கய நெடுங்க ணானைப் பவித்திர குமர னென்றான். நீரென்றமையிற் றிரை கூறினார். இ-ள். விண்ணவன் தாமரைக்கண்ணானைத் தெண்ணீ ராலே உரிமையோடே கூட நின்றாட்டி மங்கல வகையின் மணிக்கலங் களையுஞ் சேர்த்திச் சுத்தகுமரனென்று கூறினாரென்க. சிறைப்பாவம் நீங்கினமைபற்றிப் ‘பவித்திர குமர’ னென்றான். (4) 1170. பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும் பின்னிய முத்த மாலைப் பிணையறாழ் குடையி னீழற் கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழைவில் வீச வின்னிசைச் கூத்து நோக்கி யிருந்தனன் றிலக மன்னான். பொற்காம்பு செறிந்ததொருதிங்கள்- இல்பொருளுவமை. இ-ள். திலகமொத்தவன் சல்லியுந் தூக்குமாகவிட்ட முத்த மாலையையுடைய திங்கள்போலுங் குடைநிழலிலே கவரிவீச அதனெதிரே குழை யொளியைவீச இசையோடுகூடிய கூத்தைத் தான் பார்த்து இருத்தற்குத்தக்க இருப்பிலே யிருந்தானென்க. (5) 1171. இருமலர்க் குவளை யுண்க ணிமைப்பிலாப் பயத்தைப் பெற்ற வரிமலர்த் தாரி னான்ற னழகுகண் டளிய வென்னாத் திருமலர்க் கோதை யைம்பாற் றேவியர் தொடர்பு கேட்ப வெரிமணிப் பூணி னானு மின்னண மியம்பி னானே. இருமை - கருமை. இ-ள். தேவியர், எங்கண்கள் அளிக்கத்தக்க தாரினான்றன் அழகைக்கண்டு அமையாதிருந்த பயனை இன்றுபெற்றனவென்று முகமன்கூறி, இவனுடன் நட்பு எங்ஙனமுண்டாயிற்றென்று தேவனைக் கேட்ப, அவனும் இப்படி கூறினானென்க. ஞமலியாகியபிறப்பை மறையாமற்கூறலின், ‘இன்னண’ மென்றார். (6) வேறு. 1172. பிணிக்குலத் தகவயிற் பிறந்த நோய்கெடுத் தணித்தகை யுடம்பெனக் கருளி நோக்கினான் கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன் மணிக்கலத் தகத்தமிர் தனைய மாண்பினான். பிணிக்குலம் - நோய்த்திரள்; எனவே விலங்காயிற்று. அந்நோய்க்கெல்லாம் அகமென்றது நாயை. “எரிநீர வேநரக மந்நரகத் துன்பத் - தொருநீர வேவிலங்கு தானுடைய துன்பம்”(சீவக.2777) என்பர் மேலும். அணித்தகை - அழகைத் தகைக்கின்ற. கணிப்பு - அளவு. மணிக்கலத்தமிர்தென்றார், வடிவிற்குத்தக்க கலங்காத குணமுண்டாதலின். இ-ள். அமிர்தனைய மாண்பினான், விலங்குகளில் நாயாகிய பிறவியிடத்தே பிறந்த நோயைக்கெடுத்து இவ்வுடம் பினையெனக் கருளி இங்ஙனம் பார்த்தான், இக்காளை காணுங்களென்றா னென்க. (7) 1173. கடற்சுற வுயரிய காளை யன்னவ னடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாங் கொடுக்குவ மெனத்தெய்வ மகளிர் கூறினார். இ-ள். காமனையொத்தவன் பகையைக் கெடுத்து அவற்கு நிலமாகிய மடத்தகையவளைக் கலியாணஞ்செய்து கொடுக்குவ மென்று தெய்வமகளிர் கூறினாரென்க. ஒடு - உருபுமயக்கம். உம்மை - அசை. நிலமகளொடு திருமகளு மாம். (8) 1174. செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக் கிருநில மியைவதற் கெண்ணல் வேண்டுமோ திருநிலக் கிழமையுந் தேவர் தேயமுந் தருநிலத் தெமக்கெனிற் றருகுந் தன்மையீர். இ-ள். போர்நிலத்தே யானே அவனுயிரைப்போக்குவேன். எனக்கு நிலங் கூடுகின்ற இவ்வெளிய காரியத்திற்குப் போக பூமியையுந் தேவர்தேயத்தையும் எமக்கு நிலத்தே தாருமென்றால் அங்ஙனந் தரவல்ல தன்மையீர்! எண்ணல்வேண்டுமோவெனச் சீவகன் கூறினா னென்க. தரும், தருகும் இரண்டும்விகாரம். தருமிடத்து எமக்கே யுரித்தாகவென்றுமாம். (9) 1175. மண்மிசைக் கிடந்தன மலையுங் கானமு நண்ணுதற் கரியன நாடும் பொய்கையுங் கண்மனங் குளிர்ப்பன வாறுங் காண்பதற் கெண்ணமொன் றுளதெனக் கிலங்கு பூணினாய். 1176. ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீனனார் வேற்றுநா டதன்சுவை விடுத்தன் மேயினார் போற்றுநீ போவல்யா னென்று கூறினாற் காற்றின தமைதியங் கறியக் கூறினான். இவையிரண்டுமொருதொடர். 1. அரியனவாகிய குளிர்ப்பனவாகியவென்க. 2. அது - நுகர்ச்சி. சுவையதனையென்றுமாம். இவன் கூட வாராதபடி போற்றென்றான். இ-ள். பூணினாய்! நிலத்திடத்தே மலைமுதலியன வெல்லாங் கிடந்தன; அவற்றைச் சென்றுகாண்டற்கு எனக்கு ஓரெண்ண முண்டு; அவைகாணாதே கூவலில் உறையுமீன்போலே தாம்பிறந்த ஊரிலே திரிந்தேவிடுகின்றவர்கள் வேற்றுநாட்டு நுகர்ச்சியினு டைய இன்பத்தைக் கைவிடுதலைப் பொருந்தினாராதலின், யான் அவற்றைக்காண்டற்குப்போவேன். நீ இவ்விடத்தே பேணிக் கொண்டிருவென்று கூறினவனுக்கு வழியினதுசெய்தியை அவ்விடத்தே தெரியும்படி கூறினானென்க. (10-11) வேறு. 1177. இம்மலைக் கிரண்டு காத மிறந்தபி னிருண்டு தோன்று மம்மலை யரண பாத மென்பதன் றான்வாய்த் தோன்றுந் தம்வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல் வெம்மையி னகன்று போந்து விழைவறத் துறந்துவிட்டார். இ-ள். இம்மலைக்கு இருகாதமிறந்தபின் இருண்டு தோன்றும் மலையை அரணபாதமென்று பெயர் கூறுவர்; அதன் றாள்வரையிலே வந்திருந்து தோன்றுகின்ற இரு வினையையுங் கழுவுகின்றாராகிய சாரணர் வீட்டைவிரும்பு தலிற் றரணி காவலைத் துறந்துபோந்து பின் பற்றறத் துறந்துவிட்டவர்களென்க. அரணபாதம் - ஸ்ரீ கோயிலுள்ள மலை. (12) 1178. சிந்தையிற் பருதி யன்னார் சேவடி யிறைஞ்ச லோடும் வெந்திற லியக்கி தோன்றி விருந்தெதிர் கொண்டு பேணித் தந்தவ ளமிர்த மூட்ட வுண்டவட் பிரிந்த காலைச் சந்துடைச் சாரல் சேறி தரணிமேற் றிலக மன்னாய். இ-ள். தரணிக்குத்திலகமன்னாய்! மலங்களைக்கெடுக்கின்ற சிந்தையாலே இருளகற்றும் பருதிபோல்வாரடியை இறைஞ்சின வளவிலே, இயக்கிதோன்றி எதிர் கொண்டு அமிர்தத்தைத் தந்து பேணி விருந்தூட்ட உண்டு, அவளைப் பிரிந்தகாலத்தே அவ்வரணபாதத்தின் சாரலிலே செல்வாயாக வென்க. அமிர்தம் - நுகரப்படுவன. (13) வேறு. 1179. அங்குநின் றகன்றபி னையைங் காவதம் வெங்களி விடுமத வேழப் போரினந் தங்கிய காடது தனிச்செல் வாரிலை கங்கையின் கரையது கடலிற் றோன்றுமே. இ-ள். அங்குநின்றும்போனபின்பு இருபத்தைங்காதவழி வேழத் திரடங்கிய கடல்போற்றோன்றுங்காடு கங்கையின் கரையிடத்தது; அதனைத் தனியே போவாரில்லையென்க. இங்கேயானைகூறிற்று, அவனறஞ் செய்தனோக்கி. “பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான்” (சீவக.1237)என்ப. (14) 1180. புனலெரி தவழ்ந்தெனப் பூத்த தாமரை வனமது வாளென வாளை பாய்வன மனமகிழ் பெருந்தடம் வலத்திட் டேகுதி யினமலர்த் தாரினா யிரண்டு காதமே. இ-ள். தாரினாய்! தாமரையையுடைய வாளைபாய் வனவாகிய தடங்களை வலத்திட்டு அவ்வியானை திரியும் வனத்தே இருகாதமேகு வாயாக வென்க. (15) 1181. காந்திய மணியொடு வயிரம் பொன்கலந் தேந்தனின் றோளென விரண்டு குன்றுபோய்ப் பூந்துகின் மகளிரிற் பொலிந்து போர்த்ததோர் பேந்தரு பேய்வனம் பெரிய காண்டியே. ஏந்தல் - தொழிற்பெயர். பெரிய அச்சந்தரும்பேய். இ-ள். அங்ஙனம் இருகாதம்போய் மணிமுதலியவற்றைக் கலந்து ஏந்துதலையுடைய நின்றோளென்னும்படி வளர்ந்த இரண்டு குன்றைக்கடந்து, பேய்கள் மகளிரைப் போலே பொலிவு பெற்று மனத்தை மறைத்ததொரு காட்டைக் காண்பையென்க.(16) 1182. இளவெயின் மணிவரை யெறித்திட் டன்னதோ ரளவரு குங்குமத் தகன்ற மார்பினாய் களவினி னணிநலங் கவர்ந்த கள்வவென் றுளர்மணிக் கொம்பனா ருருகி நைபவே. உளர்தல் - அசைதல். இ-ள். வெயில் வரையிலே யெறித்த தன்மையைப் போல்வ தோர் மார்பினோய்! நின்னை அவர்கள் கண்டு கள்வனே யென்றுகூறி உருகி நைவார்களென்க. (17) 1183. பழங்குழைந் தனையதோர் மெலிவிற் பையென முழங்கழல் வேட்கையின் முறுகி யூர்தரத் தழும்பத மிதுவெனச் சார்ந்து புல்லலும் பிழிந்துயி ருண்டிடும் பேய்க ளாபவே. இ-ள். வேட்கையினாலே, நெகிழ்ந்த பழங்குழைந்தனைய தோர் மேனிமெலிவோடே மிக்கணுகுதலின், முயங்குங் காலையிது வென்று புல்லினவளவிலே பேய்களாவர்; அவரைப் புல்லற்க வென்க. (18) வேறு. 1184. கண்டபோய் நகரி னீங்கிக் காவதங் கடந்து தோன்றும் வெண்டலைப் புணரி வீசிக் கிடந்தபொற் றீவிற் றாகிக் கொண்டுலப் பரிய செந்நெல் கொடிக்கரும் புடுத்த வேலி நுண்டுகி னுழைந்த வல்குற் பவளமொத் தினிய தொன்றே. இ-ள். கண்ட பேய்நகரினின்றும்போய்க் காதங்கடந்த வளவிலே இனியதொரு நாடு தோன்றுமென்க. கடந்து - கடப்ப. தீவிற்றாகி - தீவின்றன்மைத்தாய். ஒழுங்கினை யுடைய கரும்புசூழ்ந்த வேலியிடத்து அறுத்துத் தொலைத்தற்கரிய செந்நெல் அல்குலிற் றுகிலுக்குள்ளே நுழைந்து கிடந்த பவள மேகலையையுமொத்து, திரைசூழ்ந்து கிடந்ததொரு பொற்றீவினையுமொத்துத் தோன்றுமென்க. (19) 1185. படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேய மென்னுந் தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாட் டிடைநெறி யசைவு தீர விருந்தவ ணேக லுற்றாற் கடநெறி கடத்தற் கின்னாக் கல்லத ரத்த முண்டே. இ-ள். பல்லவதேயமென்னு நாட்டிடை நகரியிலே வழிவருத்தந் தீர இருதிங்களிருந்து அவ்விடத்தினின்றும் போதலுற்ற காலத்துக் காட்டுவழி கடந்துபோதற்குப் பொல்லாததொரு கல்வழியுண்டு; அதன்றன்மையைக் கேளென்க. இதனாற் பதுமையைக்கோடலுங் கூறினான். (20) வேறு. 1186. நுதிகொண் டனவெம் பரனுண் ணிலைவேல் பதிகொண் டுபரந் தனபோன் றுளவால் விதிகண் டவரல் லதுமீ துசெலார் வதிகொண் டதொர்வெவ் வழல்வாய் சொலின்வேம். 1187. குழவிப் பிடிகுஞ் சரமாழ் குமெனத் தழுவிச் சுடுவெவ் வழறாங் குவன கெழுவிப் பெடையைக் கிளர்சே வறழீஇத் தொழுதிச் சிறகிற் றுயராற் றுவன. 1188. கலையின் பிணைகன் றிடுமென் றுகசிந் திலையின் னிழலவ் வயினின் மையினா னிலையின் னிழறா னதுநின் றுகொடுத் துலையும் வெயினின் றுருகும் முரவோய். 1189. கடநா கமதங் கலந்துக் கநிலத் துடைநா ணெனமின் னெனவொண் மணியம் படநா கமழன் றுபதைத் துவரும் மடனா மயலார் மனம்வைப் பதுவே. இவைநான்குமொருதொடர். 1. வதி - வழி. விதியைப் புறங்கண்ட தபோதனர் மேலே யெழப் பறந்து போவதல்லது வேறுபோகாரென்றுமாம். 3. இன்பிணை - இனியபிணை. 4. மதங்கள்கலந்த நிலத்தென்றும் பாடம். இ-ள். உரவோய்! அந்தவழியில் வேல்பதிதல்கொண்டு பரந்தனவற்றையொத்து நுதிகொண்டனவாகிய பரலுளவா யிருக்கும்; அதுதன்னிடத்திற்கொண்டதொரு வெம்மையைச் சொல்லின் வாய்தான் வேம்; ஆயினுஞ் சிறிது கூறுவேன். குஞ்சரங் குழவியையுடைய பிடி மயங்குமென்றுகருதி அழலைத் தாங்கு வனவும், சேவல் பெடையைப் பொருந்தித் தழுவித் தந்திரட்சியை யுடைய சிறகாற் காத்துத் துயராற்றுவனவுமாய் வெயிலிலேநின்று உலையாநிற்கும். கலை பிணை நிழலின்மையின் உருகுமென்று கசிந்துஅக்கலை தானின்று தன்னிலையிற் பிறந்தநிழலை அதற்குக் கொடுத்துத் தானுருகாநிற்கும்; படநாகம்ஈரமாக நினைத்து யானையின்மதம் வெம்மை மிகுதி யாலே நீரல்லாத நீருடனே கலந்து கோசத்தாலே யுக்க நிலத்தில் வந்துவீழ்ந்து அதன் வெம்மை பொறாதே முறுக்குவிட்ட கயிறென மின்னெனப் பதைத்துப் போகாநிற்கும். இந்த வழியைப்போய் இறக்கக்கடவையென்று விதியாலே விதித்து விடப்பட்டவர்களல்லது மேற்போகாரா தலான், அவ்விடத்திற்குப் புதியரானவர் போகவென்று கருதுதல் அறியாமையாம். நீயும் அவ்வழியின் மனம்வையாதே கொள் ளென்க. (21-24) 1190. நெறியிற் றவர்வார் தமநெஞ் சுருகிப் பொறியிற் றளர்வார் புரிவார் சடையா ரறிமற் றவர்தா பதரவ் வழியார் கறைமுற் றியகா மருவே லவனே. இ-ள். வேலவனே! சிலதாபதர் சன்மார்க்கநெறியைத் தப்பியிருப் பாருமாய்த் தந்நெஞ்சுருகி இந்திரியங்களிற் றளர் வருமாய்ச் சடையாருமாய் அவ்விடத்தேயிருப்பார்; அவர்களைக் கண்டுஅவர் தன்மையை யறிந்துபோவென்க. (25) 1191. குலைவா ழைபழுத் தகொழும் பழனு நிலைமாத் தனதே முறுதீங் கனியும் பலவீன் றனவள் ளுடைமுன் னமிர்து மலையாற் றயல்யா வுமடுத் துளவே. 1192. வளர்பைம் பொனும்வா ளொளிநீண் மணியு மொளிர்கின் றனவோ சனைநீ ணிலமுந் தளர்வொன் றிலர்தா பதர்தாம் விழையுங் குளிர்கொண் டதொர்சித் திரகூ டமதே. இவையிரண்டுமொருதொடர். 1. குலைவாழை - பெயர். அள்ளுடை -செறிதலையுடைய. யாவும் - மரம் ஏனையவும். 2. வாளொளி - பெரியவொளி. நிலமும், உம்மை முற்றும்மை. இ-ள். மலைக்கும் யாற்றிற்கும் அயலே வாழைபழுத்த பழமும், மாவிடத்தனவாகிய நிலைமையானகனிகளும், பல வீன்றனவாகிய தேமுறுபழமும், ஏனையவும் நெருங்கியுளவாதலாற் றாபதர்தாம் உணவிற்றளர்வொன்றிலராய் விழையும் ஒளிர்கின்றனவாகிய பொன்னுமணியுநீண்ட ஓரோசனையெல்லையாகிய நிலமுங் குளிர்ச்சி கொள்ளப்பட்டது; அம்மலைதான் சித்திரகூட மென்னும் பெயரையுடைத்தென்க. தாம்விளையுமென்பதூஉம் பாடம். (26-27) 1193. முழவின் னிசைமூ ரிமுழங் கருவி கழையின் றுணிசந் தொடுகல் லெனவீர்த் திழியும் வயிரத் தொடினம் மணிகொண் டழியும் புனலஞ் சனமா நதியே. இ-ள். கழையின்றுணியைச் சந்தோடேயீர்த்து வயிரத் தோடே மணியையுங்கொண்டு அச்சித்திர கூடத்தினின்றும் இழியுமருவியம் புனல் மிகப்பெருகும்யாறு அஞ்சனமாநதி யென்றும் பெயரையுடைத் தென்க. அழியும் - பெருகும். (28) 1194. இதுபள் ளியிடம் பனிமால் வரைதா னதுதெள் ளறல்யா றுவைதே மரமாக் கதிதள் ளியிரா துகடைப் பிடிநீ மதிதள் ளியிடும் வழைசூழ் பொழிலே. அவ்விடத்தேயிருந்து இது பள்ளியென்று ஓரிடத்தைக் காட்டிக்கூறி அதுமுதலாக முன்கூறியவற்றைக் கூறிவிட்டுச் சுட்டிக் காட்டினான். உவையென்றது ஒழிந்தவிரண்டு பக்கத்தையும். இ-ள். இஃது அந்தப்பள்ளி; இதற்கிடப்பக்கம் அந்தமலை தான்; வலப்பக்கம் அந்தயாறு; முன்னும்பின்னுந் தேமாமரமும் வழைசூழ்பொழிலும். இவ்விடம்இன்பத்தாலறிவைக் கெடுக்கும்; நீ போக்கைத் தவிர்ந்திராதே காரியத்தைக் கடைபிடித்துப் போவென்றா னென்க. (29) வேறு. 1195. வருந்து நீர்மையம் மாதவர் பள்ளியுட் குருந்த மேறிய கூரரும் பார்முல்லை பொருந்து கேள்வரைப் புல்லிய பொன்னனார் மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே. அணிமருங்கு - ஒப்பித்தவடிவு. மாக்கவின் -மிக்கவழகு. இ-ள். பயனின்றித் தவத்தான் வருந்துந்தன்மையை யுடைய அத்தாபதர் பள்ளியிற் குருந்தத்தையேறிய அரும்பார்ந்தமுல்லை தம்மனம்பொருந்திய கணவரைத் தழுவிய மகளிர்வடிவுபோலே மிக்கவழகினைக்கொண்டதென்க. இது நின்னைக் கடைபிடித்துப் போகவிடுமென்பது கருத்து. (30) 1196. குரவ நீடிய கொன்றையங் கானின் வாய் வரகு வாளிற் றொலைச்சுநர் பாடலி நரவ வண்டொடு தேனினம் யாழ்செயும் பரவை மாநிலம் பன்னிரு காதமே. இ-ள். அம்மலையை விட்டிழிந்தாற் கொன்றைக்காட்டி டத்திற் பரப்பையுடைய விளைநிலம் பன்னிருகாத வழியாயிருக்கு மென்க. வரகை அரிவாளாலறுப்பார் பாடுதலின், அம்மிடற்றுப் பாடலுக்கேற்ப வண்டுந்தேனும் யாழைக் காட்டுநிலமென்க. (31) 1197. ஆங்க வெல்லை யிகந்தடு தேறலும் பூங்கட் பொற்குட முந்நிறைத் தீண்டிய வோங்கு கம்பலத் தின்னிசை சூழ்வயற் றாங்கு சீர்த்தக்க நாட்டணி காண்டியே. இ-ள். அந்த கடத்தினெல்லையைக் கடந்துபோய்ப் பின்பு தக்க நாட்டினழகைக் காண்பாயென்க. அடுநறவும் பூவாலாக்கின மதுவும் பொற்குடங்களிலே நிறைத் தலாலே அதனையுண்டு பாடுகின்ற இன்னிசையீண்டிய கம்பலத்தைச் சூழ்ந்த வயலினையுஞ் சீரினையுமுடைய நாடென்க. “ஏங்கியமிடறு” (சிலப்.3.51)என்றார். கம்பலை - உரிச்சொல்; ஈறுதிரிந்தது. (32) வேறு. 1198. பாளைவாய் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்முதிர் தொடையல் கீறி வாளைவா யுறைப்ப நக்கிவராலொடு மறலு மென்ப காளைநீ கடந்து செல்லுங் காமரு கவின்கொ ணாடே. இ-ள். காளாய்! நீ காட்டைக் கடந்துசெல்லுமந்நாடு கமுகி னெற்றியிலுண்டாகிய பழம் விண்டு உதிர்தலின், இறால் கிழிந்து அதிற்றேன் தம்வாயிலே துளிப்ப அதனை வாளை வராலோடே கூட நக்கித் தம்மின் மாறுபடாநிற்குமென்க. நெய் - தேன். என்ப - ஆசை. (33) வேறு 1199. அங்கதன் றனதிடங் கடந்து போம்வழிப் பொங்குபூஞ் சண்பகப் போது போர்த்துரா யங்கநாட் டரிவையர் கூந்த னாறித்தே னெங்குமொய்த் திழிவதோர் யாறு தோன்றுமே. இ-ள். அவ்விடத்தில் அந்தநாட்டினுடைய இடத்தைக் கடந்து போங்காலத்து ஓர்யாறு அங்குத் தோன்றுமென்க. போதுபோர்த்துப் பரந்து அந்நாட்டின்மகளிர் கூந்தல் போலே நாறித் தேன் மொய்க்கப்பட்டிழிவதோர் யாறென்க. கடந்தெனவே கேமசரியைக் கொள்கின்றதுங் கூறினானாம். (34) 1200. மின்னுடை யமணிபல வரன்றி மேதகு தன்னுடை நலம்பகிர்ந் துலக மூட்டலிற் பொன்னுடைக் கலையல்குற் கணிகைப் பூம்புனன் மன்னுடை வேலினாய் வல்லை நீந்தினால். 1201. யானைவெண் மருப்பினா லியற்றி யாவது மானமாக் கவரிவெண் மயிரின் வேந்தன தேனெயூன் கிழங்குகாய் பழங்கள் செற்றிய கானவர் குரம்பைசூழ் காடு தோன்றுமே. இவையிரண்டுமொருதொடர். யாவதும் - எல்லாம். தேன்முதலியன செற்றியகுரம்பை. இ-ள். அரசர்கெடுதற்குக் காரணமாகிய வேலினாய்! மணிகளை யரித்துத் தன்னுடையநலத்தைக் கூறுபடுத்தி யுலகத்தை யூட்டலிற் கணிகையாகிய புனலை விரையநீந்தினால், யானைக் கொம்பாலே கால் வளைமுதலியவெல்லாமியற்றி மானமாவாகிய கவரியின் மயிராலே வேய்ந்தனவாகிய குரம்பைகள் சூழ்ந்த காடு தோன்றுமென்க. (35-6) 1202. கடுந்துடிக் குரலொடு கடையுங் கட்குர னெடுங்கைமான் குரன்மணி யருவி நீள்குர லடும்புலிக் குரலொடு மயங்கி யஞ்சிய விடும்பைமான் குரல்விளி யெங்கு மிக்கவே. இ-ள். அக்காடெங்கும் மிக்கவாகிய ஓசை: துடிக்குரலும், கள் அரிக்குங் குரலும், யானையின் குரலும், அருவிவீழ்குரலும், புலிக் குரலாலாஞ்சி மயங்கிய மான்குரலும், சீழ்க்கையு மென்க. (37) 1203. பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக் கன்னிய மகளிரிற் காண்டற் கரியன நன்மணி புரித்தன வாவி நான்குள கன்னவி றோளினாய் காட்டு வாயவே. அ - அசை. பூரித்தன - விகாரம். காட்டிடத்தனவாகிய வாவி. இ-ள். தோளினாய்! சக்கரவர்த்தியுடைய கன்னியராகிய மகளிரைப் போலே காண்டற்கரியனவாகிய வாவிகள் நான்குள; அவற்றின் வேறுபாடு கேளென்க. (38) 1204. அருங்கலச் சேயித ழார்ந்த வாவியொன் றிரும்பெரி பொன்செயு மிரத நீரதொன் றொருங்குநோய் தீர்ப்ப தொன் றமிர்த மல்லதொன் றரும்பவிழ் குவளைநீர் வாவி யாகுமே. இ-ள். அந்த வாவிகளிற் பொற்றாமரைநிறைந்ததொன்று; இரதமாகிய நீரதொன்று; எல்லாநோயையுந்தீர்ப்பதொன்று; அமிர்த மொன்று. ஆதலிற் குவளை நீர்வாவியல்லது நமக்கு நுகர்தற்காக தென்க. ஏகாரம் - எதிர்மறை. இனி நோய்தீர்ப்பதாகிய அமிர்த மொன்று, அல்லதொன்று என்றது நஞ்சினை; நீர்வாவி யமிர்த மல்லாததொன்றென்றது நச்சுப்பொய்கை யென்றவாறு. (39) 1205. கையடு சிலையினர் காட்டுள் வாழ்பவர் பையுடை யாக்கையர் பாவ மூர்த்திய ரையெனத் தோன்றுவர் தோன்றி யாளழித் துய்வகை யரிதென வுடலங் கொள்பவே. இ-ள். அவற்றைக்காத்துக் காட்டுள்வாழ்வார், சிலையின ராய்த் தோற்கையணிந்தயாக்கையராய் விரையத்தோன்றுவர்; அங்ஙனந் தோன்றி அவற்றைக் கோடற்குக்சென்ற பாவமூர்த்தி யரைப் பிழைத்தலரிதெனக்கூறி ஆளழித்து உடலைக் கொள்வ ரென்க. பையுள் - விகாரம். (40) 1206. அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண் மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியை யெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற் றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே. இ-ள். நின்னிடத்து மகளிர் கண் மொய்க்குமாறுபோல மாந்தர்கள் அவ்விடத்தை மொய்க்கும்வாவியை இடத்திட்டு அவற்றைக்கொள்ள வேண்டுமென்னு நினைவு சிறிதுமின்றியே போனால் அச்சிலையவர் இவன் நல்வினையுடையனென்று துணுக்கென மொய்த்துக் தொழுது காண்பரென்க. இதனால் அவற்றிற்கிடமேபோவென்றான். (41) 1207. பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித் தோடலர் கோதைமின் றுளும்பு மேகலை யாடிய கூத்தித னசைந்த சாயல்போன் றூடுபோக் கினியதங் கோரைங் காதமே. இ-ள். அவ்விடத்து வண்டு யாழ்செய்யும் ஓரைங்காதமுங் கிண்கிணி முதலியவற்றையுடைய கூத்திசாயல்போலே ஊடு போக்கினியதொன்றாய் அகப்பட்டார் நீங்குதலரிதாயிருக்கு மென்க. (42) 1208. கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப் போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடை மாதரார் மனமெனக் கிடந்த செந்நெறி தாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே. இ-ள். அவ்விடத்தே மாலைவீழ்ந்ததென்னும்படி முல்லை யோடே கத்திகைப் போது மறைக்கப்பட்டு ஒழிந்த இனமலர்கள் தேனைப் பொழியப்பட்டுக் கற்புடை மகளிர் மனமெனக்கிடந்த செவ்வியநெறி நிலத்தினன்றித் தாதின்மேலே நடந்ததொரு தன்மைத்தென்க. (43) 1209. மணியியற் பாலிகை யனைய மாச்சுனை யணிமணி நீண்மல ரணிந்த தாயிடை யிணைமலர்ப் படலிகை போலு மீர்ம்பொழில் கணையுமிழ் சிலையினாய் கண்டு சேறியே. இ-ள். சிலையினாய்! பாலிகையொத்தசுனை மலராலணியப் பட்டது; அதனையும், பூந்தட்டுப்போலும் பொழிலையும், கண்ணாலேகண்டு அவ்வழியைச் செல்வாயாகவென்க. இடை - வழி. ஒன்றையு நுகராதேகொள்ளென்றான். (44) 1210. இலைப்பொலி பூண்முலை யெரிபொன் மேகலைக் குலத்தலை மகளிர்தங் கற்பிற் றிண்ணிய அலைத்துவீ ழருவிக ளார்க்குஞ் சோலைசூழ் வலத்தது வனகிரி மதியிற் றோன்றுமே. அருவிகளார்க்கும் வனகிரி. இ-ள். முலையினையும் மேகலையினையுமுடைய மகளிர் கற்புப் போற் றிண்ணிய வனகிரி நினக்கு வலத்தது; அருவியாலுங் குளிர்ச்சி யாலு மதிபோற்றோன்றுமென்க. (45) 1211. கரியவன் றிருமுடி கவிழ்த்த சேவடிப் பெரியவன் றிருமொழி பிறழ்த லின்றியே மரியவ ருறைதலின் மதன கீதமே திரிதரப் பிறந்ததோர் சிலம்பிற் றென்பவே. இ-ள். அஃது இந்திரன் றலையைச்சாய்த்த சேவடியினை யுடைய பெரியவனருளிச்செய்த ஆகமத்தைத் தப்புதலின்றி அதிலே மருவின் இருடிகளுறைதலிற் காமனது கீதமொன்றுமே அவ்விடத்தினீங்க இயல்பானுள்ள ஓசைகளெல்லாம் பிறந்த தொரு பக்கமலையை யுடையதென்க. (46) 1212. ஏற்றரு மணிவரை யிறந்து போனபின் மாற்றரு மணநெறி மகளிர் நெஞ்சமே போற்பல கவர்களும் பட்ட தாயிடை யாற்றசால் செந்நெறி யறியக் கூறுவாம். மாற்றருநெஞ்சம் - வசப்படுத்த வொண்ணாத நெஞ்சம். கவர்ப்பு - பலவாதல்; விகாரம். இ-ள். ஏறுமிடமரிய இவ்வரையைக் கடந்துபோயபின்பு புணர்ச்சி நெறியை யுடைய பரத்தையரது நெஞ்சம்போல வழி பலகவர்ப்புக் களுமுண்டாயிற்றாதலின், அவ்வழியிடத்துச் செல்லுதலமைந்த செந்நெறியை யறியக்கூறுவேம்; அது கேளென்க. (47) 1213. சுரும்புசூழ் குவளையோர் சுனையுண் டச்சுனை மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டவண் விரும்பிவண் டிமிர்வதோர் வேங்கை வேங்கையின் மருங்கிலோர் செந்நெறி வகுக்கப் பட்டதே. இ-ள். ஒரு சுனையுண்டு; அச்சுனைமருங்கிலே ஒருசிலா வட்டமுண்டு; அதன் அருகே ஒரு வேங்கையுண்டு, அங்வேங் கையின் க்கத்தே ஒரு செவ்வியவழியுண்டு, அது யான்கூறப்பட்ட வழியென்க. வேறு 1214. கைம்மலர்த் தனைய காந்தட் கடிமலர் நாறு கான மொய்ம்மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்பநீ முழுது நீந்தி வைம்மலர்த் திலங்கு வெள்வேன் மத்திம தேய மாளுங் கொய்ம்மலர்த் தாரி னானைக் கண்ணுறு குணம தென்றான். இ-ள். மொய்ம்பனே! இவ்வடையாளங்களைக் குறிக் கொண்டு கானத்தை முழுதுங்கடந்து போய்க் கூர்மைமிக்கு விளங்கும் வேலை யுடைய மத்திமதேயத்தையாளுமரசனை எதிர்ப்படுதி; அது நினக்கு ஊழான் இயல்பாகவுள்ள தொன் றென்று வழி சொன்னானென்க. குணம் - பண்பு. (49) 1215. மண்ணகங் காவன் மன்னன் மாதரம் பாவை மாசி லொண்ணுதன் மகளைத் தந்தீங் குறைகென வொழுகு நாளுள் வெண்மதி யிழந்த மீன்போற் புல்லென வெய்தி நின்ற வண்ணனின் றோழ ரெல்லா மவ்வழி யடைவ ரென்றான். இ-ள். மண்காவலனாகிய வேந்தன் பாவையாகிய தன் மகளை நினக்குத் தந்து இவ்விடத்தேயுறைகவென்றுகூற, நீயும் அங்ஙனநடக்கு நாளிலே வருந்திநின்ற நந்தட்டனும் நின்றோழரும் எல்லாம் அவ்விடத்தேவந்து நின்னைச் சேர்வரென்றானென்க. (50) வேறு 1216. நெட்டிடை நெறிகளு நிகரில் கானமு முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமு நட்புடை யிடங்களு நாடும் பொய்கையு முட்பட வுரைத்தன னுறுதி நோக்கினான். இ-ள். தூரிய இடத்தையுடைவழிகளும், கானமும், போக்கில் லாத அரு வழிகளும், குன்றமும், உறவுகொள்ளுமிடங்களும், நாடும் பொய்கைகளும் முன்னேதோன்றக்கூறினானாய்ப் பின்பு அவனுக்கு மந்திரங்களைக் கூற நினைந்தானென்க. (51) 1217. செல்கதி மந்திரஞ் செவியிற் செப்பிய மல்லலங் குமரனை வாழ நாட்டவே வல்லவன் மந்திர மூன்றுங் கொள்கெனச் சொல்லின னவற்றது தொழிலுந் தோன்றவே. இ-ள். நற்கதியிற்சேரு மந்திரத்தைத் தனக்குச்செப்பிய குமரனை வாழநாட்டவே வல்லவன் அவன் கருத்தன்மையின், அதனைத் தவிர்த்து இம்மந்திரமூன்றையுங் குறிக்கொளென்று அவற்றினுடைய தந்திரமுந் தோன்றக் கூறினானென்க. (52) 1218. கடுந்தொடைக் கவர்கணைக் காமன் காமுறப் படுங்குர றருமிது பாம்பு மல்லவுங் கடுந்திற னோய்களுங் கெடுக்கும் வேண்டிய வுடம்பிது தருமென வுணரக் கூறினான். இ-ள். இது காமன்விரும்பப்படுஞ் சரீரத்தைத்தரும்; இது பாம்பின்விடத்தையும், ஒழிந்தமண்டலி முதலியவற்றின் விடங் களையும், கடுந்திறல்களையும், நோய்களையுங் கெடுக்கும்; இது வேண்டிய உடம்பைத்தருமென்று அவற்றின் வேறு பாடறியக் கூறினானென்க. காற்று நெருப்பு நீர் முதலியவற்றைக் கடுந்திறலென்றான். (53) வேறு 1219 . கந்தடு களிறு கொல்லுங் கருவரை யுழுவை யன்னான் மந்திர மன்று மோதி வானவிற் புரையும் பைந்தா ரிந்திரன் றன்னை நோக்கி யியக்கியர் குழாத்தை நோக்கிச் சிந்தையிற் செல்வ லென்றான் றேவனுஞ் செலவு நேர்ந்தான். இ-ள். புலியன்னான் மந்திரமூன்றையும்படித்துச் சுதஞ்சண னையும் பார்த்து அவன்றேவியர்திரளையும் பார்த்து மனம் போலே வருந்தாமற்கடிது செல்வேனென்றான்; தேவனும் அவன் போக்கை உடன்பட்டானென்க. றூரகமனமுங் கலைகளினொன்றாதலின், அதுவல்ல னென்பதும் இதனாற் பெற்றாம். செல்வமிகுதியான் இந்திர னென்றார். (54) 1220. மனைப்பெருங் கிழத்தி மாசின் மலைமக டன்னை யான்சென் றெனைத்தொரு மதியி னாங்கொ லெய்துவ தென்று நெஞ்சி னினைத்தலுந் தோழன் நக்கு நிழலுமிழ்ந் திலங்கு செம்பொற் பனைத்திரண் டனைய தோளாய் பன்னிரு மதியி னென்றான். வெள்ளிமலையிற் றோன்றிவந்த மனைப்பெருங்கிழத்தி தன்னை, மாசிலாத மகடன்னை. இ-ள். தத்தையையுங் குணமாலையையும் எவ்வளவிற்றா மொருதிங்களிலே யான்சென்று கூடுந் தன்மையுண்டாமென்று நினைத்த வளவிலே, அதனையறிந்து தோழன் நக்கு, தோளாய்! நீ யெய்துவது பன்னிரண்டாமதியிலே யென்று கூறினானென்க. கொல் - அசை. இன் ஏழனுருபாதல் புறனடையாற்கொள்க. சீவகன் பன்னிருமதிக்குள்ளே இராசமாபுரத்தே சென்று குண மாலையை யெய்தினானேனும் மனக்கவற்சியின்றி நிலைபெற விருந் தெய்தாமையின், அதனைத்தேவன் கூறானாயினான். இனித் தத்தையையே நினைந்தானென்னிற் குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடறீர்த்துப் புணராமையின், அவனையே நினைந்தானென்க. (55) 1221. ஆறிரு மதியி னெய்தி யரட்டனை யடர்த்து மற்றுன் வீறுயர் முடியுஞ் சூடி விழுநிலக் கிழமை பூண்டு சாறயர்ந் திறைவற் பேணிச் சார்பறுத் துய்தி யென்று கூறினன் கதிர்கள் பொங்குங் குளிர்மணி முடியினானே. அரட்டன் - குறும்பன். இ-ள். முடியினான் பின்னும் பன்னிரண்டாந்திங்களிலே இராசமா புரத்தைச் சேர்ந்து கட்டியங்காரனையுங்கொன்று உனக்குத் தொன்று பட்டுவந்த முடியையுஞ் சூடி நிலத்திற்குமுரிமை பூண்டு விழாக் கொண்டாடி இறைவனைவழிபட்டுப் பிறப்பறுத்து வீடுபெறுவையென்று கூறினhனென்க. இது தேவியர் முன்னாதலின், வெளியானகாரியங்கள் கூறினான். (56) 1222. சொற்றிறற் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி விற்றிறற் குரிசிற் கெல்லாம் வேறுவே றுரைப்பக் கேட்டே சுற்றிய தோழி மாரை விடுத்தனன் றொழுது நின்றான் கற்பக மரமுஞ் செம்பொன் மாரியுங் கடிந்த கையான். இ-ள். சொல்வலியையுடைய சுதஞ்சணன் மறைபொருளல் லாதவற்றை வேறாகநாடி அங்ஙனஞ்சுருங்கக்கூறிப் பின்பு குருசிலுக்கு மறைபொருளாகிய சூழ்ச்சி மிக்கனவெல்லாம் வேறாகக்கொண்டிருந்து கூறக்கேட்டு அவன் பின்பு சுதஞ்சண னைத் தொழுது சூழ்ந்துநின்ற தோழிமாரைவிடுத்து நின்றா னென்க. ஆசாரியனாதலிற் றொழுதானென்க. இனிப் போக் கொருப் படுதலின், வழிபடு தெய்வத்தைத் தொழுதானென்றலு மாம். (57) வேறு 1223. சேட்டிளஞ் செழுங்கயல் காப்பச் செய்துவிற் பூட்டிமேல் வைத்தன புருவப் பூமக டீட்டிருந் திருநுதற் றிலக மேயென மோட்டிருங் கதிர்திரை முளைத்த தென்பவே. இ-ள். அங்ஙனநின்றானாகக் கயல்களைக்காக்கப்பண்ணி வில்லைப் பூட்டி மேல் வைத்தாற்போலும் புருவத்தினையுங் கண்ணினையுமுடைய நிலமகள் நுதலிலிட்ட திலகமென்னும்படி ஞாயிறு கடலிலே முளைத்ததென்க. (58) 1224. அழல்பொதிந்த நீளெஃகி னலர்தார் மார்பற் கிம்மலைமேற் கழல்பொதிந்த சேவடியாற் கடக்க லாகா தெனவெண்டிணக் குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தி னீங்கிக் கொண்டேந்தி நிழல்பொதிந்த நீண்முடியா னினைப்பிற் போகி நிலத்திழிந்தான். இ-ள். நீண்முடியான் அலர்தார்மார்பற்கு இவ்வடியால் இம்மலை மேற்போக முடியாதென்று கருதிக் குழாத்தினின்று நீங்கி ஏந்திக்கொண்டு நினைவுபோலே போய் நிலத்தே யிழிந்தானென்க. (59) 1225. வண்டளிர்ச் சந்தனமும் வழையு மாவும் வான்றீண்டி விண்டொழுகு தீங்கனிகள் பலவு மார்ந்த வியன்சோலை மண்கருதும் வேலானை மறித்துங் காண்க வெனப்புல்லிக் கொண்டெழுந்தான் வானவனுங் குருசி றானே செலவயர்ந்தான். இ-ள். அங்ஙனமிழிந்து சந்தனமுதலிய வானைத்தீண்டப் பட்டு விரிந்து தேனொழுகுங் கனிகள் பலவு நிறைந்த சோலையிலே வேலானைப் பின்புங் காண்பேனாகவென்று கூறிப் புல்லிக் கொண்டு தேவன் போனான்; குருசில் தானே போதலைச் செய்தா னென்க. முடிசூட்டுதற்கும், வீடுபெற்றபடிகாண்டற்கும் வருதல் குறித்து மறிந்துமென்றான். ஈண்டு “மண்கருதும்” என்றது குறித்து, மேல் “மண்கொண்டவேலான்”(சீவக.2353) என்பர். இதற்குமுன் தனியே போகாமையிற் றேவர் நொந்து கூறினார். (60) 1226. வாளுழலை பாய்ந்திளைய வளநா கிட்டி னமென்னுந் தாளொழியப் போரேறு தனியே போந்த தெனவெண்ணி நீளருவிக் கண்ணீர்வீழ்த் தலறி வண்ணங் கரிந்துருகிக் கோளுழுவை யன்னாற்குக் குன்ற முநின்ற ழுதனவே. வாள் - ஆகுபெயர். இளையவளநாகு - தத்தையுங் குண மாலையும். இனம் - தோழர்; இவற்குக் கால்போறலிற் காலென்றார். ஏறென்னும்பெயர் வரையினுட் கோள். புலிக்குத் தன்காடும் பிற காடுமொக்குமென்று புலியென்றார். இ-ள். போரேறு தோழரென்கின்றகால் அவ்விடத்தே நிற்கவும் வாட்படையாகிய உழலையைப் பாய்ந்து நாகுகளைக்கை விட்டுத் தனியே போந்ததென்றுகருதி அருவியாகிய கண்ணீரை வீழ்த்துக் கூப்பிட்டு மனக்கவற்சியான் மேனிகருகி அசும்புவீழ் தலினுள்ளுருகிப் புலியை யன்னாற்கு மலைகளு நின்றழுதனவென்க. (61) தேவர் தங்குறிப்பை மலைமேலேற்றினார். 1227. மிக்கார்தங் கேட்டின்கண் மேன்மை யில்லாச் சிறியார்போ னக்காங்கே யெயிறுடைந்த நறவ முல்லை நாள்வேங்கை தக்கார்போற் கைம்மறித்த காந்த ளந்தோ தகாதெனவே தொக்கார்போற் பன்மாவு மயிலுந் தோன்றித் துளங்கினவே. இ-ள். பெரியோர்தங்கேட்டிடத்து அறிவில்லாத கீழ்மக்கள் நகுமாறுபோலே முல்லை வேங்கைக்கண்ணே நின்று, நக்கு அப்பொழுதே எயிற்றின்றன்மை கெட்டன; அது கண்டு நன்மக்களைப் போலே காந்தாள், அந்தோ! இது தகாதென்று கைகவித்து விலக்கின; அவ்வளவிலே சுற்றத்தாரைப்போலே மாவுமயில்களுந் தோன்றி நடுங்கினவென்க. (62) 1228. கொல்லை யகடணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை முல்லை முறுவலித்துநகுதிர்போலுமினிநும்மைப் பல்லை யுகுத்திடுவ மென்று பைம்போ தலர்சிந்தித் தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்து துகைத்தனவே. இ-ள். தும்பி, முல்லைகாள்! நீங்கள் கொல்லையினடுவை யணைந்து வேங்கையாகிய அரசனைச் சேர்த்து தமியாரை நும்முள்ளே சிறிதேநகைத்துப் பின்பு பிறரறியச் சிரியா நின்றீர் போலேயிருந்தீர். இங்ஙனநகுநும்மைப் பல்லை யுகுத்திடுவே மென்று போதினுமலரினுமுள்ள தேனைச்சிந்தித் தாங்கருதித் துகைத்தனவென்க. போது - அலர்கின்றமுகை. இயல்பாகக் கருகின வேனும் இவ்வருத்தத்திற்குக் கருகியென்றார். ‘தும்பியார்ந்’தென்றும் பாடம். (63) 1229. தோடேந்து பூங்கோதை வேண்டேங் கூந்த றொடேலெம்மிற் பீடேந் தரிவையரிற் பெயர்கென் றூடு மடவார்போற் கோடேந்து குஞ்சரங்க டெருட்டக் கூடா பிடிநிற்குங் காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலிற் கழலானே. இ-ள். நீதருகின்ற கோதையை யாங்கள்வேண்டேம்; ஆதலிற் கூந்தலைத் தீண்டாதேகொள்; வழிமாறினாய்; இஃதெம்முடைய வில்லம்; நீ செல்லும் பரத்தைய ரில்லேறப்போவா யாகவென்று ஊடுமடவாரைப்போலே களிறுகளூடறீர்க்க, ஊடறீராதே பிடிகள் நிற்குஞ்சாரலைக் காலாலே கழலான் போனானென்க. இதற்குமுன் காலால் வழிநடவாமையிற் றேவர் கூறினார். (64) வேறு 1230. காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பா னாழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே. இ-ள். ஓர்வேட்டுவன் கருமையூட்டப்பட்டதோர் இருட்டுணியையு மொப்பான்; பறித்தலான் மார்பு உள்ளே யொடுங்கியுள்ளான்; கரடி யொப்பான்; வெற்றிலை என்றுங் கண்டறியாதவன்; மேழகம்போலும் குரலினனாய் எதிர்ப்பட்டா னென்க. வாண்மயிரும், ஏழகமுமொருவகைப்பாடம். (65) 1231. கொடிமுதிர் கழங்கு தீந்தேன் கொழுந்த நறவொ டேந்திப் பிடிமுதிர் முலையி னாடன் றழைத்துகிற் பெண்ணி னோடுந் தொடுமரைத் தோலன் வில்லன் மரவுரி யுடையன் றோன்ற வடிநுனை வேலி னான்கண் டெம்மலை யுறைவ தென்றான். இ-ள். அவன், கொடிமுதிர்ந்த கிழங்கு முதலியவற்றைக் கள்ளுடனேயேந்தி, முதிர்ந்தமுலையினாளாகிய பிடிபோலுந்தன் பெண்ணுடனே, செருப்பினனாய் வில்லினனாய் உடையினனாய் அணுகத் தோன்றினானாக, வேலினான்கண்டு இருப்பது எம் மலையினென்று கேட்டானென்க. (66) 1232. மாலைவெள் ளருவி சூடி மற்றிதா தோன்று கின்ற சோலைசூழ் வரையி னெற்றிச் சூழ்கிளி சுமக்க லாற்றா மாலையந் தினைகள் காய்க்கும் வண்புன மதற்குத் தென்மேன் மூலையங் குவட்டுள் வாழுங் குறவருட் டலைவ னென்றான். மற்று - அசை.. இதா - திசைச்சொல். இ-ள். அருவிசூடி இதாதோன்றுகின்ற மலைத்தலையிலே ஒழுங்குபட்ட தினைகள் கிளியெடுக்கவெண்ணாதவாகக் காய்ப்ப தொருபுனம்; அதற்குத் தென்மேலை மூலையிற் குவட்டில் வாழ் வாரில் வைத்து யான்தலைவனென்றானென்க. (67) 1233. ஊழினீ ருண்ப தென்னென் றுரைத்தலு முவந்து நோக்கி மோழலம் பன்றி யோடு முளவுமாக் காதி யட்ட போழ்நிணப் புழுக்க றேனெய் பொழிந்துகப் பெய்து மாந்தித் தோழயாம் பெரிது முண்டுந் தொண்டிக்க ளிதனை யென்றான். இ-ள். முறையால் நீர் உண்பதென்னென்றுகேட்டபின், உவந்து பார்த்துத் தோழ! ஆண்பன்றியோடே எய்ப்பன்றியையுங் கொன்று சமைத்த புழுக்கலைத் தேனை மிகவார்த்துத் தின்று பின்பு நெல்லா லாக்கின கள்ளாகிய விதனையும் உண்பே மென்றா னென்க. (68) 1234. ஊனொடு தேனுங் கள்ளு முண்டுயிர் கொன்ற பாவத் தீனராய்ப் பிறந்த திங்ங னினியிவை யொழிமி னென்னக் கானில்வாழ் குறவன் சொல்லுங் கள்ளொடூன் றேன்கை விட்டா லேனையெம் முடம்பு வாட்ட லெவன்பிழைத் துங்கொ லென்றான். இ-ள். முற்பருவத்தில் ஊன்முதலியவற்றையுண்டு உயிரையுங் கொன்ற பாவத்தாலே இவ்விடத்து எயினராய்ப்பிறந்தது; இனியி வற்றைக் கைவிடுமினென்றுகூற, கானக்குறவன் பலருநன் றென்று கூறுங் கள்முதலியவற்றைக் கைவிட்டால் யாங்கள் எங்ஙனம் பிழைப்போம்; எம்முடம்பை நீவாட்டவேண்டா, ஒழிந்தவுடம்புகளை வாட்டுவாயாகவென்று சொன்னானென்க. (69) 1235. ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தி லுறைத னன்றோ வூன்றினா துடம்பு வாட்டித் தேவரா யுறை தனன்றோ வூன்றியிவ் விரண்டி னுள்ளு முறுதிநீ யுரைத்தி டென்ன வூன்றினா தொழிந்து புத்தே ளாவதே யுறுதி யென்றான். இ-ள். ஊனைச்சுவைத்து வீக்கி நரகத்திலுறைதல் நன்றோ? ஊனைத்தின்னாதே வாட்டித்தேவராயுறைதல்நன்றோ? கடைப் பிடித்து இவ்விரண்டனுள்ளும் நல்லது நீ கூறென்ன, ஊனைத் தவிர்ந்து தேவனாதலே யுறுதியென்றானென்க. (70) 1236. உறுதிநீ யுணர்ந்து சொன்னா யுயர்கதிச் சேறி யேடா குறுகினா யின்ப வெள்ளங் கிழங்குணக் காட்டு ளின்றே யிறைவனூற் காட்சி கொல்லா வொழுக்கொடூன் றுறத்தல் கண்டா யிறுதிக்க ணின்பந் தூங்கு மிருங்கனி யிவைகொ ளென்றான். இ-ள். நீஉறுதியுணர்ந்து கூறினாயாதலின், ஏடா! இனி உயர் கதியிலேபோவை; இறைவனூலிற் காணப்படுவன கொல்லா விரதத் தோடே ஊன்றுறத்தலுங்காண்; ஆதலிற்காட்டிற் கிழங்கை யுண்ணவே இன்றே இன்பவெள்ளத்தைச் சேர்ந்தாய்; இவ்வொ ழுக்கம் நினக்கு இறுதிக்கட்பேரின்பஞ்செறியுங் கனியாயிருக்கும்; குறிக்கொளென்றா னென்க. (71) 1237. என்றலுந் தேனு மூனும் பிழியலு மிறுக நீக்கிச் சென்றடி தொழுது செல்கென் றேம்பெய்நீள் குன்ற மென்று குன்றுறை குறவன் போகக் கூரெரி வளைக்கப் பட்ட பஞ்சவர் போல நின்ற பகட்டினப் பரிவு தீர்த்தான். இ-ள். என்று கூறினவளவிலே, வேடன் தேன் முதலிய வற்றைக்கைவிட்டுக் குறுகக்சென்று வணங்கி, என்குன்றமே செல்வே னென்றுகூறி அவன் போனானாக; அரக்குமாளிகை யிலே நெருப்பாலே சூழப்பட்ட தருமன் முதலாயினாரைப் போலே காட்டுத்தீயால் வளைக்கப்பட்டுநின்ற யானைத்திரளின் வருத்தத் தை மழையைப் பெய்வித்து நீக்கினானென்க. தேவன்மலைக்கும், அரணபாதத்திற்குநடுவே, இவ்விரண்டற முஞ்செய்தான். (72) வேறு 1238. இலங்கொளி மரகத மிடறி யின்மணி கலந்துபொன் னசும்புகான் றொழுகி மானினஞ் சிலம்புபாய் வருடையொ டுகளுஞ் சென்னிநீள் விலங்கல்சென் றெய்தினான் விலங்கன் மார்பினான். இ-ள். மணிகலந்து அசும்புகாலுதலாற் சிலம்பிலே பரந் தொழுகப் பட்டு, மானினம் மரகதத்தையிடறி வருடையோடு களுஞ் சென்னியை யுடைய அரணபாதத்தை விலங்கல் போலு மார்பினான் எய்தினா னென்க. (73) 1239. அந்தர வகடுதொட் டணவு நீள்புகழ் வெந்தெரி பசும்பொனின் விழையும் வெல்லொளி மந்திர வாய்மொழி மறுவின் மாதவ ரிந்திரர் தொழுமடி யினிதி னெய்தினான். இ-ள். விசும்பினடுவைத்தீண்டி மேனோக்கிச்செல்வதோர் பொன்னி னொளியை வெல்லும் ஒளியினையும் மந்திரத்தை விழையும் வாய்மொழியினையும், நீள்புகழினையுமுடைய மாதவ ரடியை வருந்தாமற் சேர்ந்தானென்க. இதனால் தாள்வரையில் இருடிகளை முதலில் வணங்கினா னென்றார். (74) வேறு 1240. முனிவரு முயன்று வான்கண் மூப்பிகந் திரிய வின்பக் கனிகவர் கணனு மேத்தக் காதிகண் ணரிந்த காசி றனிமுதிர் கடவுள் கோயி றான்வலங் கொண்டு செல்வான் குனிதிரை முறைத்த வெய்யோன் குன்றுசூழ் வதனை யொத்தான். இ-ள். முனிவரும், வானிடத்துத்தமக்குவருகின்ற மூப்புக் கைவிட்டுக்கெடும்படியாக அவ்விடத்து இன்பக்கனியை நுகருந் தேவரும், முயன்றேத்தக் காதிகண்ணரிந்த கடவுள்கோயிலை வலங் கொண்டு செல்கின்றவன் இளஞாயிறு மேருவைச்சூழ்ந்த தன்மையை யொத்தானென்க. காதிகண்ணரிந்த - உபாதிகளைத் தன்னிடத்துநில்லாதபடி வேரறுத்த. (75) 1241. தண்கயக் குற்ற போதுந் தாழ்சினை யிளிந்த வீயும் வண்கொடிக் கொய்த பூவும் வார்ந்துமட் டுயிர்ப்ப வேந்தித் திண்புக ழறிவன் பாதந் திருந்துகைத் தலத்தி னேற்றிப் பண்புகொள் குணங்கொள் கீதம் பாணியிற் பாடு கின்றான். இ-ள். கயத்திற்பறித்தபோதையுங் கொம்பிலிணுங்கின வீயையுங் கொடியிற் கொய்தபூவையும் மதுவுயிராநிற்கவேந்திக் கைத்தலத்தாலே பாதத்தேயேற்றி இயல்புகொண்ட குணங்களைத் தன்னிடத்தேகொண்ட பாட்டைத் தாளத்தோடே பாடாநின்றா னென்க. (76) வேறு. 1242. ஆதி வேதம் பயந்தோய்நீ யலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ நீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீ நாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன் பாத கமலந் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே. கொலைமுதலியனவில்லாதவேதம். நீதிநெறி - சன் மார்க்கம். காட்சி -ஞானம். இ-ள். இவையெல்லாஞ்செய்தாய் நீயாதலின், நின்னடியைத் தொழுவேமுடைய பிறவிக்கடலகத்துப் பற்றாகிய தொடர்ச்சி நீங்கும்படி திருவுள்ளம்பற்றாயென்றானென்க. (77) 1243. இன்னாப் பிறவி யிகந்தோய்நீ யிணையி லின்ப முடையோய்நீ மன்னா வுலக மறுத்தோய்நீ வரம்பில் காட்சிக் கிறையோய்நீ பொன்னா ரிஞ்சிப் புகழ்வேந்தே பொறியின் வேட்கைக் கடலழுந்தி யொன்னா வினையி னுழல்வேங்க ளுயப்போம் வண்ண முரையாயே. இன்பம் - அநந்தசுகம். மன்னாவுலகம் - சுவர்க்கம். மறுத்தல் - அதிற்போகத்தைத்தவிர்த்தல். இ-ள். பொன்னெயில்வட்டத்தில் வேந்தே! இத்தன்மையையாகியநீ ஐம்பொறியாலே வேட்கைக்கடலிலேயழுந்திப் பொருந்தாத தீவினை யாலே வருந்துவேம் உய்யப்போந்தன்மையை அருளிச்செய்யாயென்றா னென்க. (78) 1244. உலக மூன்று முடையோய்நீ யொண்பொ னிஞ்சி யெயிலோய்நீ திலக மாய திறலோய்நீ தேவ ரேத்தப் படுவோய்நீ யலகை யில்லாக் குணக்கடலோ யாரு மறியப் படாயாதி கொலையி லாழி வலனுயர்த்த குளிர்முக் குடையி னிழலோய்நீ. திறல் - அநந்தவீரியம். இ-ள். இவற்றையுடையையாகிய நிழலோய்! அறவாழியை வலனுயர்த்தஎன்னிறந்தகுணக்கடலே! நீ எல்லாருமறியப்படுவா யாகவென்றானென்க. படாய் - செய்யாயென்னுஞ்சொல் செய்யென்கிளவி யாய்நின்றது. இத்தேவபாணிக் கொச்சகவொருபோகு மூன்றாலும் இறைவனைப்பாடினான். (79) வேறு. 1245. அடியுலக மேத்தி யலர்மாரி தூவ முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று கடிமதிலுங் கட்டழித்த காவலனீ யன்றே. இ-ள்.அடியை யுலகமேத்திப் பூமழைபெய்ய முடிந்த வுலகத்தின்மூர்த்தியையுறும்படி முத்தியையடைந்தவன் யார் தான்? அங்ஙனமடைந்தோன் காமம் வெகுளி மயக்கமென்கின்ற மூன்றுமதிலையுங் காவலழித்த நீயேயன்றே யென்றானென்க. (80) 1246. முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றிற் றரணிமேற் றந்தளித்த தத்துவன்றான் யாரே தரணிமேற் றந்தளித்தான் றண்மதிபோ னேமி யரணுலகிற் காய வறிவரனீ யன்றே. இ-ள்.மூன்றுமதிலையுமழித்து அங்கபூர்வமாதியென்கின்ற மூன்றாகமத்தாலும் உலகமூன்றின்றன்மையையுந் தரணிமேலே தந்து வெளிப்படக்கூறின தத்துவன் யார்தான்? அங்ஙனங் கூறினவன் மதிபோலும் அறவாழியையுடைய உலகிற்கு அரணாய அறிவுக்கு வரனாயுள்ள நீயேயன்றே யென்றானென்க. (81) 1247. தீரா வினைதீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து வாராக் கதியுரைத்த வாமன்றான் யாரே வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த காரார்பூம் பிண்டிக் கடவுணீ யன்றே. இ-ள்.தீவினைiயைப்போக்கி ஆகமத்தையருளிச்செய்து மேல்வருதலில்லாத வீட்டினையுரைத்த வாமன்யார் தான்? அங்ஙனமுரைத்தவாமன் நீயேயன்றேயென்றானென்க. இவை மூன்றாலும் சாரணரைப்பாடினான். பாமுற் கூறியவே; கந்தருவமார்க்கத்தால் இடைமடக்கின. (82) வேறு. 1248. அம்மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர் பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின் செம்மல்போய்ப் பல்லவ தேய நண்ணினான். சினகரம் - ஜி னக்ரும்ஹ. இ-ள்.அவ்வரணபாதத்தில்ஸ்ரீ கோயிலை வணங்கி அவ்வி டத்திற் சாரணருடைய அடியைப்புகழ்ந்தபின்பாக, இயக்கி விருந்துசெய்த பின்பு,தலைவன் சாரலைப்போய்ப் பல்லவ தேயத்தை நண்ணினா னென்க. (83) 1249. அரியலார்ந் தமர்த்தலி னனந்தர் நோக்குடைக் கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர் வரிவரால் பிறழ்வயற் குவளை கட்பவ ரிருவரை வினாய்நகர் நெறியின் முன்னினான். இ-ள்.மதுவையுண்டுபொருதலின், மயங்கியநோக்குடைய கொடிய வாய் நெடியகண்ணையுடைய கடைசிமங்கையர் குவளையைக் களைபறிப்பாரிருவரை வழி கேட்டு அந்த நெறியாலே நகரையணு கினானென்க. இருவரும் ஒக்கக்கூறுதலின், அவ்வழியே போனான். (84) 1250. அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப் பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக் கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே. மகன்றில் -ஒருபுள். பாம்புரி - கீழே புறப்படப் படுத்தது. இ-ள். அங்ஙனம் முன்னினபொழுது அன்னமும் மகன்றிலு மணியப்பட்டுக் கிடங்குசூழ்ந்த பாம்புரியையுடையமூதெயில் கடலை உடையாகவுடுத்த நிலமகள் பூணணிந்திருந்த தன்மைத் தெனப் பொலிந்து தோன்றாநிற்குமென்க. (85) 1251. அகிறரு கொழும்புகை மாடத் தாய்பொனின் முகிறலை விலங்கிய மொய்கொ ணீள்கொடிப் பகறலை விலங்குசந் திராபம் பான்மையி னிகறலை விலங்குவேற் காளை யெய்தினான். பொன்னின்கொடி; முகில் அவ்விடத்தினின்றும் விலங்கு தற்குக் காரணமான கொடி. இ-ள். அகிலுண்டாக்கின புகையையுடைய மாடத்திற் கொடி பகலையிடத்தே சென்றுவிலங்குஞ் சந்திராபமென்னு நகரைக் காளை பான்மையினெய்தினானென்க. முகிறலை விலங்கிய மாடத்திற்கொடியுமாம். (86) 1252. மலரணி மணிக்குட மண்ணு நீரொடு பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினா னலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நக ருலகளந் தானென வுள்புக் கானரோ. அலர்கதிர் - எழுகின்றஞாயிறு. கரும்பினை -கரியபிள்ளை. இவன் வடக்கு நோக்கிச்செல்கின்றபொழுது மேற்கிருந்தகொடி ஞாயிற்றின் மேற்செல்லவே கொடி வலமhம். இ-ள். கொடிவலம்பெற்று உலகளந்தானென்னும்படி நகரினுள் புக்கவன் தன்னைப் பின்பு அரசன்பரிவாரத்தார் பலரும் மணிக்குடத்தின் மண்ணுநீராலேயாட்டிப் பரவும்படி புக்கா னென்க. அது “மழகளிற் றெருத்திற் றந்த மணிக்குட மண்ணு நீரா - லழகனை மண்ணுப் பெய்தாங்கு”(சீவக.1345) என்பதனானுணர்க. இந்நிமித் தத்தின்பயன் அது. இனி நாட்டிற்கும் ஊரிற்குநிமித்த மென்று வைத்து இரண்டுநிமித்தமென்பாருமுளர். (87) வேறு. 1253. சந்தனக் காவுசூழ்ந்து சண்பக மலர்ந்த சோலை வந்துவீழ் மாலை நாற்றி மணியரங் ணிந்து வானத் திந்திர குமரன் போல விறைமக னிருந்து காண வந்தர மகளி ரன்னார் நாடக மியற்று கின்றார். இ-ள். அவன் சென்றவளவிலே மகளிரன்னார் பலருங் கூடிக் காவைச்சூழ்ந்து சண்பகமலர்ந்த சோலையில் அரங்கை நிலத்தே வந்து வீழும் மாலையைநாற்றி யணிந்து குமரன்போலே இறை மகனிருந்துகாண நாடகத்தை நடத்தாநின்றாரென்க. (88) 1254. குழலெடுத் தியாத்து மட்டார் கோதையிற் பொலிந்து மின்னு மழலவிர் செம்பொற் பட்டங் குண்டல மாரந் தாங்கி நிழலவி ரல்குற் காசு சிலம்பொடு சிலம்ப நீடோ ளழகிகூத் தாடு கின்றா ளரங்கின்மே லரம்பை யன்னாள். இ-ள். அரம்பையையொப்பாளாகிய அழகி குழலை யெடுத்துக்கட்டி மாலையாலே பொலிவுபெற்றுப் பின்பு பட்ட முதலியவற்றைத்தாங்கிக் காசு சிலம்போடே சிலம்ப அரங்கின் மேலே கூத்தாடாநின்றாளென்க. “வாடிய வண்டளி ரன்ன மேனி -யாடியன் மகளி ரமைதி கூறி - னெறியினீங்கிய நெடிய ரல்லோர் - குறியிற் குறைந்த குறிய ரல்லோர் - பாற்பட லில்லாப் பருமை யில்லோர்” என்னுஞ் சூத்திரத்திற் கூறிய நிலைகளுடனே ஆசிரியனிட்டவழகு கிடத்த லின், அழகியென்றார். (89) 1255. தண்ணுமை முதுவம் வீணை குழலொடு குயிலத் தண்பூங் கண்ணொடு புருவங் கைகால் கலையல்கு னுசுப்புக் காம ரொண்ணுதல் கொண்ட வாடற் றொட்டிமை யுருவ நோக்கி வெண்ணெய்தீ யுற்ற வண்ண மாடவர் மெலிகின்றாரே. இ-ள். அங்ஙனமாடுகின்ற ஒண்ணுதலையுடையாள் தண்ணுமை முதலியன வாசியாநிற்கக் கண்முதலியவற்றாற் கொண்ட கூத்தின தொற்றுமை வடிவைநோக்கி ஆடவர் வெண்ணெய் தீயுற்றாற்போல மெலியாநின்றாரென்க. (90) 1256. பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றுங் கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற வோடரி நெடுங்க ணம்பா லுளங்கிழிந் துருவ வெய்யா ஈடமை பசும்பொற் சாந்த மிலயமா வாடு கின்றாள். இ-ள். அவள் பின்னும் பாட்டோடே பொருந்திய கூத்தும் வாச்சியமுமாகிய இம்மூன்றுங் கூடிப் பொருந்திநின்று மெல்கிக் கலந்து இனிமைமிகக் கண்ணாலெய்து இடுதலமைந்த சாந்த மழிய ஆடாநின்றாளென்க. சாந்தம், அவள்பெயராக்கி அதற்கேற்பவுமுரைப்ப. (91) 1257. வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப் பூண்முலை பிறழப் பொற்றோ டிடவயி னிலங்க வொல்கி மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள் காண்வரு குவளைக் கண்ணாற் காளைமே னோக்கி னாளே. இ-ள். மாணிழை, பட்டமின்னக் குழைவீசப் பூண் முலையிலேபிறழத் தோடு நுடங்க ஒல்கிக் கையாலே வட்டணை போக்குகின்றவள் கண்ணாலே காளைமேலே பார்த்தாளென்க. கைவட்டணையாவன: அபவேட்டிதம், உபவேட்டிதம், வியாவர்த்திதம், பரிவர்த்திதம். இவை பிறைக்கையாம். “தற்சனி முதலாப் பிடித்த லகம்வரி - னத்தொழிலாரு மபவேட் டிதமே” “தற்சனி முதலா விடுத்தல் புறம் வர -வுய்த்த லாகு முப வேட்டி தமே.” “கனிட்ட முதலாப் பிடித்த லகம்வர - விடுத்த லாகும் வியா வர்த்திதமே.” “கனிட்ட முதலா விடுத்தல் புறம்வரப்படுத்த லாகும் பரிவர்த் திதமே.” “ஆன்ற பைவேட் டிதமுப வேட்டிதந் - தோன்றும் வியாவர்த் திதத்தோடு - மூன்றும் - பரிவர்த் திதமு மெனப்பகர்ந்தா ரித்தை - யுரிமைப் பிiறக்கையா லூர். (92) 1258. நோக்கினா ணெடுங்க ணென்னுங் குடங்கையா னொண்டு கொண்டு வாக்கமை யுருவின் மிக்கான் வனப்பினைப் பருக விப்பா லாக்கிய விலய நீங்கிற் றணங்கனா ணெடுங்கண் பில்கி வீக்குவார் முலையி னெற்றி வெண்முத்தஞ் சொரிந்த வன்றே. இ-ள். பார்த்தவள் கண்ணென்னுங் குடங்கையாலே முகந்து கொண்டு கவிகளாற் புகழ்தலாகா வடிவின் மிக்கானழகைப் பருகுதலாலே, இவ்விடத்துக் கண்முதலியவற்றாலாக்கிய தாள வறுதிகள் நீங்கின. பின்பு இமையாமைநோக்கி நின்றதனாற் கரிந்து அவள்கண்கள் சிறுதுவலையைவீசி முலைத்தலையிலே நீரைச் சொரிந்தனவென்க. இது பெருமைபற்றிய மருட்கையென்னுமெய்ப்பாடு; கண்கரிந்து நீர்வீழ்தலின், அழுகையென்னு மெய்ப்பாடாகாது. (93) 1259. செருக்கய னெடுங்க ணாளத் திருமகன் காண்ட லஞ்சி நெருக்கித்தன் முலையின் மின்னு நிழன்மணி வடத்தை மாதர் பொருக்குநூல் பரிந்து சிந்தாப் பூவெலாங் கரிந்து வாடத் தரிக்கிலாள் காமச் செந்தீத் தலைக்கொளச் சாம்பி னாளே. பொருக்கு - பொருவுக்கு; நிலக்குப்போல. அந்நூலெனச் சுட்டுக. இ-ள். பொருகின்ற கயல்போலுங் கண்ணாள் தன் கண்ணீரை உலோகபாலன் காண்டற்கஞ்சி அதற்கொப்புக்கு முத்துவடத்தைத் தன் முலையினாலே நெருங்கி அந்நூலை யறுத்துச்சிந்தி அம்மாதர் பூவெல்லாம் வாடும்படி காமத்தீத் தலைகொள்ளுதலாலே தரிக்கிலாளாய்க் கெட்டாளென்க. (94) 1260. கன்னிமை கனிந்து முற்றிக் காமுறக் கமழுங் காமத் தின்னறுங் கனியைத் துய்ப்பா னேந்தலே பிறர்க ளில்லை பொன்னினா லுடையுங் கற்பென் றுரைத்தவர் பொய்யைச் சொன்னா ரின்னிசை யிவற்க லாலென் னெஞ்சிட மில்லை யென்றாள். இ-ள். இவற்கல்லது என்னெஞ்சு இடமில்லையாயிருந்தது, ஆதலிற் கன்னித்தன்மையோடே முற்றிக்கனிந்து கமழுங் காமமாகிய பழத்தை நுகர்வானிவனே, வேறிதற்குரியாரில்லை, இத்தன்மை கூறாதே பரத்தையர்க்குக் கற்புப் பொருளான் உடையுமென்று கூறினவர் பொய் கூறினாரென்று கருதினா ளென்க. (95) 1261. கருஞ்சிறைப் பறவை யூர்திக் காமரு காளை தான்கொ லிருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொ லரும்பெறற் குமர னென்றாங் கறிவயர் வுற்று நின்றா டிருந்திழை யணங்கு மென்றோட் டேசிகப் பாசை யன்னாள். இ-ள். தேசிகப்பாவை அத்தன்மையானவள், குமரன்மயிலூர்தியை யுடைய முருகனோ? கறவையுயர்த்த விளக்கத்தை யுடைய காமன்றானோ? என்றுஅறிவுவருத்தமுற்று நின்றாளென்க. தேசிகப்பாவை - அவள் பெயர் - அத்தன்மையாளென்றது - அவள்கல்விமுதலியவற்றைச் கூட்டிற்று. பாவையொப்பாள்பாடமாயின், உவமைகூறியது இவட்குப் பெயரன்மையுணர்க. (96) 1262. போதெனக் கிடந்த வாட்கண் புடைபெயர்ந் திமைத்தல் செல்லா தியாதிவள் கண்ட தென்றாங் கரசனு மமர்ந்து நோக்கி மீதுவண் டரற்றுங் கண்ணி விடலையைத் தானுங் கண்டான் காதலிற் களித்த துள்ளங் காளையைக் கொணர்மி னென்றான். இ-ள். இவள்கண் புடைபெயர்ந்திமைக்கின்றதில்லை;கண்டவுருவம் யாதென்று அவ்விடத்தே அரசனும் பொருந்திப் பார்த்துத் தானும் அவ்விடலையைக்கண்டான்; அப்பொழுதே அவன்மேல் விருப்பத்தாலே நெஞ்சுகளித்தது; அதனாலே காளையை இங்ஙனங் கொண்டு வாருங்களென்றானென்க. (97) வேறு. 1263. கைவளர் கரும்புடைக் கடவு ளாமெனி னெய்கணை சிலையினோ டிவன்க ணில்லையான் மெய்வகை யியக்கருள் வேந்த னாகுமென் றையமுற் றெவர்களு மமர்ந்து நோக்கினார். கை - ஒழுக்கம். இ-ள். இல்வாழ்க்கைவளர்தற்குக் காரணமான கரும்பை யுடைய காமனாமென்றுகருதிற் கணையும்வில்லு மிவனிடத்தின் மையின், இவன் அவனல்லன்; வடிவின்வகையைப் பார்த்தால் இயக்கருள் வேந்தனா மென்று ஐயப்பட்டு எல்லோரும் அப்பொழுது பொருந்திப் பார்த்தாரென்க. (98) வேறு. 1264. மந்திர மறந்து வீழ்ந்து மாநிலத் தியங்கு கின்ற வந்தர குமர னென்றாங் கியாவரு மமர்ந்து நோக்கி யிந்திர திருவற் குய்த்தார்க் கிறைவனு மெதிர்கொண் டோம்பி மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழ னென்றான். இளவரசாதலின், இறைவனென்றார். அந்தரகுமரன் - தேவரினொருசாதி. இ-ள். அங்ஙனமையமுற்றுப் பின்னும், மந்திரத்தை மறத்த லாலே மாநிலத்தேவீழ்ந்து இயங்குகின்ற குமரனென்று யாவரும் அவ்விடத்தே பொருந்திப்பார்த்து இந்திரன்றிருப் போன்ற திருவையடையவன்கண்ணே செலுத்தினார்க்கு அவனுமெதிர் கொண்டு பேணி அவனை மகிழ்வனவற்றைக் கூறி, நீயெனக்கு விளையாடு முறைமையையுடைய தோழனென்றா னென்க. (99) 1265. போதவீழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானுங் காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தி னூதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயந் தாங்கிப் போதுகண் டனைய வாட்கட் புருவத்தாற் கலக்கு கின்றாள். வண்டுடுத்தமாலை - வண்டுசூழ்ந்த தேசிகப்பாவை. இ-ள். உலோகபாலனுஞ் சீவகனுங் காதலாலிருவரு மொருவராகி இருந்த வளவிலே, அவள் இனிப் பெற்றேமென்று உணர்ச்சிபெற்று, நீங்கின இலயத்தைத் தப்பாமற்றாங்கி, கண்ணாலும் புருவத்தாலும் கலக்காநின்றாளென்க. (100) 1266. தேனுகுக் கின்ற கண்ணித் திருமக ளாட விப்பா லூனுகுக் கின்ற வைவே லொருமக னுருமிற் றோன்றி வானுகுக் கின்ற மீன்போன் மணிபரந் திமைக்கு மார்பிற் கானுகுக் கின்ற பைந்தார்க் காவலற் றொழுது சொன்னான். இதுமுதலாகப் “பதுமை” (சீவக. 1273) என்னுங்கவியளவு மொருதொடர். உருமிற்சொன்னானென்க; பாம்புகடித்ததென்றலின், உருமு உவமையாயிற்று. 1267. கொய்தகைப் பொதியிற் சோலைக் குழவிய முல்லை மௌவல் செய்யசந் திமயச் சாரற் கருப்புரக் கன்று தீம்பூக் கைதரு மணியிற் றெண்ணீர் மதுக்கலந் தூட்டி மாலை பெய்தொளி மறைந்து நங்கை பிறையென வளர்க்கின் றாளே. குழவிய, அ - அசை. கன்றென்பதனை எல்லாவற்றிற்கு மேற்றுக. “பிள்ளை குழவி கன்றே போத்தெனக் - கொள்ளவு மமையு மோரறி வுயிர்க்கே”(தொல்.மரபு.24) இரண்டு மலையினும் இவனாணை யறிவித் தற்குக் கூறினார். பிறை - சந்திரன். 1268. பவழங்கொள் கோடு நாட்டிப் பைம்பொனால் வேலி கோலித் தவழ்கதிர் முத்தம் பாய்த்தித் தன்கையாற் றீண்டி நன்னாட் புகழ்கொடி நங்கை தன்பேர் பொறித்ததோர் கன்னி முல்லை யகழ்கடற் றானை வேந்தே யணியெயி றீன்ற தன்றே. 1269. வம்பலர் கோதை சிந்த மயிலென வொருத்தி யோடிக் கொம்பலர் நங்கை பூத்தாள் பொலிகெனக் குனிந்த விற்கீ ழம்பலர் கண்ணி யார நிதியறைந் தோகை போக்கிக் கம்பலம் போர்த்த போலுங் கடிமலர்க் காவு புக்காள். 1270. நறவிரி சோலை யாடி நாண்மலர்க் குரவம் பாவை நிறையப்பூத் தணிந்து வண்டுந் தேன்களு நிழன்று பாட விறைவளைத் தோளி மற்றென் றோழியீ தென்று சேர்ந்து பெறலரும் பாவை கொள்வாள் பெரியதோ ணீட்டி னாளே. அணிந்து - அணிய. நிழன்று - நிழல்செய்து; “ஏரோர்க்கு நிழன்ற கோலினை” (சிறுபாண்.233)என்றார் பிறரும். 1271. நங்கைதன் முகத்தை நோக்கி நகைமதி யிதுவென் றெண்ணி யங்குறை யரவு தீண்டி யவ்வையோ வென்று போகக் கொங்கலர்க் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்பேர் செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சேர்ந்தாள். நகைமதியெனவே மறுவின்மையுணர்த்திற்று. குறையரவு - வினைத்தொகை; காலநீட்டித்தாற் பாம்புகுறைந்து ஒரு கோழிப் பறவை நீளம் பறந்து செல்லுமென்று கூறி, அதனைக் குக்குட சர்ப்பமென்ப, அது “அரிகுரற்கோழி நாமத்தரவவட்கடித்ததாக”(சீவக.1755) என்றதனானு முணர்க. தடுத்ததனைவெட்டுதல் பாம்பிற்கியல் பாதலின், முகத்தை நோக்கினபாம்பு அணுகினகையிலே தீண்டிற் றென்றுணர்க. நங்கையடிகள் - பதுமை தாய். ஏர் - ஒக்கும். 1272. அடிகளுக் கிறைஞ்சி யைய னடிகளைத் தொழுது நங்கை யடிகளைப் புல்லி யாரத் தழுவிக்கொண் டவ்வை மாரைக் கொடியனா யென்னை நாளு நினையெனத் தழுவிக் கொண்டு மிடைமின்னி னிலத்தைச் சேர்ந்தாள் வேந்தமற் றருளு கென்றான். அடிகளுக்கு- உருபுமயக்கம். இங்ஙனந் தானிகழ்த்தப் பெறாமையிற் றனக்காக நிகழ்த்தென்றாளாயிற்று. 1273. பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்றலும் பையு ளெய்திக் கொதிநுனை வேலி னாயிங் கிருக்கெனக் குருசி லேகிக் கதுமெனச் சென்று நோக்கிக் காய்சினங் கடிதற் கொத்த மதிமிகுத் தவல நீக்கு மந்திரம் பலவுஞ் செய்தான். ஏகி - ஏக. இ-ள். இங்ஙனந்தேசிகப்பாவையாடாநிற்க, இப்பால் வேலினை யுடைய ஒருமகன்றோன்றி மார்பினையுந் தாரினையு முடைய உலோகபாலனைத்தொழுது பதுமையைப் பாம்பு தீண்டிற் றென்று உருமிற்சொன்னான்; சொன்னவளவிலே உலோகபாலன் வருத்த முற்றுச் சீவகனைநோக்கி, வேலினாய்! நீ இவ்விடத்தே யிருக்க வென்றுகூறி, அவ்விடத்தினின்றும் போகா நிற்கின்ற வளவிலே, பாம்பு கடித்தவாறு என்னையென்று வினாவினாற்கு வேந்தே! நங்கை பொதியிற்சோலையிற் குழவியாகிய முல்லையி னையும் மௌவலினையுஞ் சந்தனத்தையும் இமயச்சாரற் கருப்பூரத்தையுந் தீம்பூவையுஞ் சந்திரகாந்தக் கல்லினின்றுந் தோற்றின நீரைத் தேனைக்கலந்தூட்டி மாலையை மூட்டாகப் பெய்து வெயிலை மறைத்துப் பிறையெனவளர்க் கின்றவள், அவற்றிலேவிசேடித்துப் பவளத்தைக் கொள்கொம்பாக நாட்டிப் பொன்னாலே வேலிகோலி முத்தைமணலாகப்பரப்பித் தன் கையாலே தீண்டி நல்லநாளிலே திலோத்தமைதன் பெயரிட்டு வளர்த்ததொரு கன்னியாகிய முல்லை எயிறுபோலே அரும்பிற்று; அதனைக் கண்டு ஒருத்தி கோதை சிந்த வோடிக் கொம்பே! நங்கை யலர்பூத்தாள்; பொலிகவென்றாளாக, அம்பைத் தோற்று விக்கின்றகண்ணி, நிதியை எல்லாருமாரும்படி சாற்றிக்கொடுத்து, இவ்வுவகையைப் பலர்க்குஞ்சொல்லப்போகவிட்டுக் காவிலே சென்றாள்; அவள் சென்று சோலையிலேவிளையாடிக் குரவம் பாவையை வண்டுந் தேன்களுநிழன்றுபாடும்படி நிறையப் பூத்தணிய, அதனைக் கண்டு இஃது என்றோழியென்றுசேர்ந்து அதனைக் கொய்தற்குக் தோளை நீட்டினாள். நீட்டினவளவிலே அழகிய குறைந்தவரவம் அவள்முகத்தைப்பார்த்து நாந்தீண்டுதற் குரிய மறுச்சேர்மதியன்றி இது நகையினையுடையதோர் மதியாயிருந்தது; நாந்தீண்டத்தகாதென்றெண்ணி அந்தக்கையிலே தீண்டுதலாலே அம்மேயோவென்னமீண்டாளாக, அவடோழி கோதாய்! திலோத்தமையார் வந்தாரோவென்று வினவிச்சென்று அவளைச் சேர்ந்தாள்; சேர்ந்தவளைநோக்கிக் கொடியனாய்! தனபதியைவணங்கி யுலோகபாலனடிகளைத்தொழுது திலோத் தமையாரைப்புல்லி ஒழிந்ததாய்மாரைத்தழுவிக் கொண்டு நாளு மென்னை நினை யெனக்கூறி மின்னைமிடைந்ததோர் மின்போற்ற ழுவிக் கொண்டு பின்பு நிலத்தேவீழ்ந்தாள்; வேந்தனே! இதனைத் திருவுள்ளம்பற்றென்று சொன்னான்; அதுகேட்டுக் கடுகச்சென்று பார்த்து விடத்தின்வேகத்தைப் போக்குதற்குப் பொருந்தின மந்திரத்தைத் தன்மதியாலே மிகுத்துக்கூறி இவ்வவலத்தைத் தீர்த்தற்குரிய பலமருந்துகளையுஞ் செய்தானென்க. இங்ஙனம்மாட்டுறுப்பாகக்கூறாது செவ்வனேகூறிற் பாம்பு கடித்தமை கடுகக் கூறிற்றாகாமையுணர்க. (101-8) 1274. வள்ளறான் வல்ல வெல்லா மாட்டினன் மற்று மாங்க ணுள்ளவ ரொன்ற லாத செயச்செய வூறு கேளா தள்ளிலைப் பூணி னாளுக் காவியுண் டில்லை யென்ன வெள்ளெயிற் றரவு கான்ற வேகமிக் கட்ட தன்றே. ஊறு - விடத்திற்கு இடையூறாய மந்திரமும் மருந்தும். இ-ள். உலோகபாலன் றான்வல்ல விஞ்சைகளெல்லா வற்றையுஞ் செலுத்தினான்; வேறும் அவ்விடத்துள்ளா ரெல்லாரும் பலவூறு களையுஞ் செய்யச்செய்ய, அவற்றைக் கேளாதே அவளுக்குஉயிர் உண்டு இல்லையென்னும்படி அரவுகான்ற நஞ்சுமிக்கதென்க. (109) 1275. பைங்கதிர் மதிய மென்றுப கையடு வெகுளி நாக நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மி னாடும் வங்கமா நிதியு நல்கி மகட்டரு மணிசெய் மான்றே ரெங்களுக் கிறைவ னென்றாங் கிடிமுர செருக்கி னானே. இ-ள். மறுச்சேர்மதியாகிய பகையையடுநின்ற வெகுளியை யுடையநாகம், இது நாந்தீண்டுமதன்றி மறுவில்லாததொரு மதியா யிருந்ததென்றெண்ணுதலாலே, நங்கையைக் கையிலே கடித்தது; இவ்விடத்துத் தீர்த்தவர்கட்குத் தனபதிநாட்டையு நிதியையுந்தந்து மகளையுந்தருமாதலின், இதனைத் தீர்த்து நீர் இவற்றைக் கொண்மினென்று உலோகபாலன் முரசறை வித்தா னென்க. (110) 1276. மண்டலி மற்றி தென்பா ரிராசமா நாக மென்பார் கொண்டது நாக மென்பார் குறைவளி பித்தொ டையிற் பிண்டித்துப் பெருகிற் றென்பார் பெருநவை யறுக்கும் விஞ்சை யெண்டவப் பலவுஞ் செய்தா மென்றுகே ளாதி தென்பார். 1277. சிரையைந்தும் விடுது மென்பார் தீற்றுதுஞ் சிருங்கி யென்பார் குரைபுன லிடுது மென்பார் கொந்தழ லுறுத்து மென்பா ரிரையென வருந்தக் கவ்வி யென்புறக் கடித்த தென்பா ருரையன்மி னுதிர நீங்கிற் றுய்யல ணங்கை யென்பார். இவையிரண்டுமொருதொடர். மற்று - வினைமாற்று. இது கீதமண்டலியென்பார்; இது கருவழலையென்பார்; கடித்தது நாகமென்பார்; வளியும் பித்தும் ஐயிற் காட்டிற் றிரண்டுபெருகின; இனி யுயிர்மீளாதென்பார், ‘இவ்விஞ்சை பெரியநவையறுக்குமென்றுகருதி எண்ணிறக்கப் பலவுஞ் செய்தேம்; அவற்றை இது கேட்டதில்லையென்பாரென்க என்று ஏற்றுக் கொண்டென்றுமாம். இராசமாமந்தமும் பாடம். சிரையைந்து - கையிரண்டுங் காலிரண்டும் நெற்றியுமா கவைந்து. தீற்றுதல் - பூசுதல். சிருங்கி - ஒரு மருந்து; சுக்குமாம். சிங்கி, பாடமாயிற் கற்கடகசிங்கியென்க. புனலிலிடுகின்றது உயிருண்மை யறிதற்கும், நஞ்சுநீங்குதற்கும். அழலுறுத்தல் - உயிருண்மை யறிதற்கு. இ-ள். தீர்க்கவந்தவர்கள் என்பார் என்பாராயினாரென்க. (111-2) 1278. கையொடு கண்டங் கோப்பார் கனைசுட ருறுப்பின் வைப்பார் தெய்வதம் பரவி யெல்லாத் திசைதொறுந் தொழுது நிற்பா ருய்வகை யின்றி யின்னே யுலகுடன் கவிழு மென்பார் மையலங் கோயின் மாக்கண் மடைதிறந் திட்ட தொத்தார். இ-ள். கைகையுங்கண்டத்தையுமுழலைகோப்பார், மருமங்களிலே விளக்கையெரிப்பார், தொழுதுநிற்பார், இது காரணத் தான் அரசனிறந்து படின் உலகு இன்னே கவிழுமென்பாராய், மாக்கள் ஆரவாரத்தாலே, மடைதிறந்த தன்மையை யொத்தா ரென்க. மக்கட்குரியமனனின்றி அறிவுகெட்டமையின், ஐயறிவு டையாரென்று மாக்களென்றார். (113) 1279. வெந்தெரி செம்பொற் பூவும் விளங்குபொன் னூலும் பெற்றார் மந்திர மறையும் வல்லா ரெழாயிரர் மறுவில் வாய்மை யந்தரத் தறுவை வைப்பாரந்தண ரங்கை கொட்டிப் பைந்தொடிப் பாவை யின்னே பரிவொழிந் தெழுக வென்பார். இ-ள். பொன்னாலேபூவுநூலும்பெற்றார், மந்திரமும் முறையும் வல்லார், மறுவில்லாத மந்திரத்தாலே விசும்பிலே புடைவையை நிறுத்துவாராகிய அந்தணர் ஏழாயிரம் பேர் கையைத்தட்டி பாவை இப்பொழுதே வருத்தந்தீர்ந்து எழுவாளாக வென்பா ரென்க. (114) 1280. பாம்பெழப் பாம்பு கொண்டாற் பகவற்கு மரிது தீர்த்த றேம்பிழி கோதைக் கின்று பிறந்தநா டெளிமி னென்று காம்பழி பிச்ச மாகக் கணியெடுத் துரைப்பக் கல்லென் றூம்பழி குளத்திற் கண்ணீர் துகணிலத் திழிந்த தன்றே. இ-ள். பாம்பு உதிக்கின்றவளவிலே பாம்புதீண்டினால் இறைவற்குந் தீர்த்தலரிது; ஈண்டுக்கோதைக்குப் பாம்பெழப் பாம்பு கொண்டதின்று; பாம்பு தீண்டுகின்ற காலத்துப் பிறந்த நாளுமின்று; உதயாரூடக்கவிப்புக்களிற்கவிப்பாகத் தெளியுங் களென்று கணி நூலையெடுத்துக் கூறக்கேட்டுக் கையாறுநீங்கி யழுதாரென்க. பாம்பு - இராகு. இன்றென்பது மறைப்பொருளுணர்த்திய வினைக்குறிப்பு. காம்பழிபிச்சம் - கவிப்பிற்கு வெளிப்படை. ஞாயிற்றின் விமானம் பீலியாற்செய்யப்படும்பிச்சமென்றார். எனவே ஞாயிறு நடுவே கவிப்பாக நின்றதென்றவாறாயிற்று. இதனாற்பயன்: அக்காலத்திற் றெய்வம் மாயோனாதலின், அவன் கருடனுடனே உலகைப் பார்க்கின்றமையின், அக்கருடன் பார்வையால் நஞ்சு நீங்குதலாம். (115) 1281. நங்கைக்கின் றிறத்த லில்லை நரபதி நீயுங் கேண்மோ கொங்கலர் கோங்கி னெற்றிக் குவிமுகிழ் முகட்டி னங்கட் டங்குதே னரவ யாழிற் றானிருந் தரந்தை பாடு மிங்குநம் மிடரைத் தீர்ப்பா னிளையவ னுளன்மற் றென்றான். யாழ் - மிதுனராசி. மற்று -அசை. இ-ள். மிதுனராசியிலே தேனரவந்தங்குங் கொங்கலர் கோங்கி னெற்றியின் அரும்பின்றலையிடத்தே ஆந்தைதானிருந்து பாடும்; இதனை நரபதி! நீயுங் கேட்பாயாக; இதனாலே நம்மிடரைத் தீர்ப்பானோரிளையவனிங்குளன்; இன்று நங்கைக்கு இறத்தலில்லை யென்றானென்க. (116) 1282. பன்மணிக் கடகஞ் சிந்தப் பருப்புடைப் பவளத் தூண்மேன் மன்னவன் சிறுவன் வண்கை புடைத்துமா ழாந்து சொன்னா னின்னுமொன் றுண்டு சூழ்ச்சி யென்னொடங் கிருந்த நம்பி தன்னைக்கூய்க் கொணர்மி னென்றான் றரவந்தாங் கவனுங் கண்டான் இ-ள். தனபதிதன்மகன் உலாகபாலன், கடகஞ்சிந்தும்படி தூண் மேலே கையைப்புடைத்து மயங்கி ஒருவார்த்தை கூறினான்: இன்னு மொருசூழ்ச்சியுண்டு; என்னோடங்கிருந்த இளையவனை அழைத்துக் கொண்டு வாருமினென்று கூறினான்; அவர்களுங் கொண்டுவர, அவ்விடத்தேவந்து அவனும் இந்நிலையைக் கண்டானென்க. (117) 1283. பறவைமா நாகம் வீழ்ந்து பலவுடன் பதைப்ப போன்றுஞ் சிறகுறப் பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றுங் கறவைகன் றிழந்த போன்றுங் கிடந்தழு கின்ற கண்ணா ரிறைவளை யவரை நோக்கி யென்கொடி துற்ற தென்றான். பறவைமாநாகம் - குக்குடசர்ப்பம்; ஈண்டுப் பெண் பாலாகிய கூனுங்குறளு முவமப்பொருள். மயில் தோழியர்க்கும், கறவை செவிலியர்க்குமுவமை. இ-ள். அங்ஙனங்கண்டவன் நாகங்கள் பதைப்பன போன்றும், மயில்கள் மயங்கிக்கிடந்தன போன்றும், கறவை கன்றிழந்தன போன்றுமழுகின்ற கண்ணாராகிய வளையவரை நோக்கி, என்னே! இவருற்றது கொடிதாயிருந்ததென்றானென்க. (118) 1284. ஊறுகொள் சிங்கம் போல வுயக்கமோ டிருந்த நம்பி கூறினான் கொற்ற வேந்தன் கொழுநிதி நிலத்து மற்றுன் வீறுயர் புகழை வித்திக் கேண்மையை விளைத்தி யின்னே நாறுபூங் கொம்ப னாளை நோக்கென நம்பி சொன்னான். இ-ள். அதுகேட்டு வருத்தத்தோடிருந்த உலோகபாலன் சீவகனைப் பார்த்து, நீ வேந்தனாகிய நிலத்தே புகழைவித்தி உறவை விளைக்க வல்லையாதலின், கொம்பனாளை இன்னே நோக்கெனக் கூறினான்; அது கேட்ட சீவகனும் ஒருவார்த்தை சொன்னா னென்க. விளைத்தி - படுத்தலோசையாக்குக. (119) 1285. புற்றிடை வெகுளி நாகம் போக்கறக் கொண்ட தேனு மற்றிடை யூறு செய்வான் வானவர் வலித்த தேனும் பொற்றொடிக் கிறத்த லில்லை புலம்புகொண் டழேற்க வென்றான் கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான். இ-ள். விஞ்சையையுடைய அந்தச்சீவகன் நாகம் மிட்சியில் லையாம்படி கடித்ததாயினும், வேறிடையூறு செய்தற்குத் தேவர் சூழ்ந்த நிலையாயினும், இவட்கு இறந்து பாடில்லை; நீயழாதேகொள்ளென்று கூறினானென்க. காமனன்னானென்றது இவற்கோர்பெயர். (120) 1286. பொழிந்துநஞ் சுகுத்த லச்ச மிரைபெரு வெகுளி போகங் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென வெட்டி னாகும் பிழிந்துயி ருண்ணுந் தட்ட தமட்டமாம் பிளிற்றி னும்ப ரொழிந்தெயி றூனஞ் செய்யுங் கோளென மற்றுஞ் சொன்னான். உகுத்தல் - தன்னாற்பொறுத்தலருமையின், ஒன்றினைக் கௌவி நஞ்சைக் கான்றுகுத்தல். இரை - இரையென்றுகருதுதல். போகம் -இழைதல். கழிந்துமீதாடல் - மனக்களிகூர்ந்து நின்றாடுதல். பிழைப்பு - பிறர் தனக்குச்செய்த பிழையைக் கருதுதல். இவை யெட்டு மதன் குணம். தட்டம் ; இது மேல்வாய்ப்பல். அதட்டம் - ; இது கீழ்வாய்ப்பல். பிளிற்றல் - பிலிற்றல். உம்பர் - மேல். கொள்ளு தல் - கோளெனவிகாரம். இ-ள். உகுத்தல்முதலிய எட்டுக்காரணத்தாலே கடித்தலு ளதாம்; அங்ஙனங் கடித்தால் எயிறுகளுக்கு மேலாந் தட்டம் அதட்டமென்கின்ற எயிறுகளிலுண்டான நஞ்சைக் கடித்த வாயிலேகாலுமாயிற் பிழிந்துயிருண்ணும்; அவற்றையொழிந்த எயிறுகளிலுண்டான நஞ்சைக் கடித்தலாயிலேகாலுமாயின் வருத்தஞ்செய்யுமென்று கூறிப் பின்னும் அதனிலக்கணங்களிலே சிலகூறினானென்க. காலமொழிந்தவேழும் அகாலமாம். (121) 1287. அந்தண னாறு மான்பா லவியினை யலர்ந்த காலை நந்தியா வட்ட நாறு நகைமுடி யரச னாயிற் றந்தியா முரைப்பி ற்றாழைத் தடமலர் வணிக னாறும் பந்தியாப் பழுப்பு நாறிற் சூத்திரன் பால தென்றான். இ-ள். சித்தராரூடமென்னு நூலினைக் கொண்டுவந்து கூறின், ஆன்பாலவியினைநாறுமாயின், அஃது அந்தணன் பாலதாம்; அலர்ந்த காலத்தினந்தியா வட்டத்தை நாறுமாயின், அஃது அரசன் பாலதாம்; தாழைமலர் நாறுமாயின், அது வணிகன் பாலதாம்; மற்றொன்றுங் கூடாத அரிதாரநாறுமாயின், அது சூத்திரன் பாலதாமென்று கூறினா னென்க. (122) 1288. கன்னியைக் கடித்த நாகங் கன்னியே கன்னி நோக்க மன்னதே யரசர் சாதி மூன்றெயி றழுந்தி யாழ்ந்த கொன்னுமா நாகங் கொண்டாற் கொப்புளாம் விரலிற் றேய்த்தால் மன்னிய தெண்மட் டாயின் மண்டலிப் பால தென்றான். இ-ள். கடித்தவாயை விரலாற்றேய்த்தால், அது மாநாகங் கொண்ட தாயிற் கொப்புள் கொள்ளும்; தெண்மட்டுப்போல் நீர்பாயுமாயின், மண்டலிப்பகுதியாம்; இது கொப்புள்கோடலின், இவளைக்கடித்த பாம்பு கன்னியே, சாதி அரசர்சாதியே, தைத்தழுந்தினபல் யமதூதியொழிந்த காளி, காளாத்திரி, யமனென்னுமூன்றுமே, உதயமுங் கன்னியே, ஆதலின், இஃது அன்னதேயென்றானென்க. குக்குடசர்ப்பமாதலின், அதற்குக் கேடில்லையென்று கருதிக் கன்னியே யென்றான். அன்னதேயென்றது தான் முன்னிறத்த வில்லை யென்றதனை. (123) 1289. குன்றிரண் டனைய தோளான் கொழுமலர்க் குவளைப் போதங் கொன்றிரண் டுருவ மோதி யுறக்கிடை மயில னாடன் சென்றிருண் டமைந்த கோலச் சிகழிகை யழுத்திச் செல்வ னின்றிரண் டுருவ மோதி நேர்முக நோக்கி னானே. மலர் - முதற்கு அடை. ஒன்றுமிரண்டுமென உம்மைத் தொகை. உரு-உருவமென ஈறுதிரிந்தது. உறக்கத்திடத்து மயில். முகம் - தியானம். இவன்ஐந்துருவோதினமையின், இவன் கூறியமந்திரம் பஞ்சநமஸ்காரமாம். இ-ள். தோளான் குவளைப்போதை அங்கே மூன்றுரு வோதித் தான்சென்று மயிலனாள்தன் முடியிலேயழுத்தி, அவன் பெயர்ந்து நின்று பின்னுமிரண்டுருவோதி முகத்தை நேரே நோக்கினானென்க. (124) 1290. நெடுந்தகை நின்று நோக்க நீள்கடற் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிரு ளுடைந்த தேபோ லுடம்பிடை நஞ்சு நீங்கிற் றொண்டொடி யுருவ மார்ந்து குடங்கையி னெடிய கண்ணாற் குமரன்மே னோக்கி னாளே. இ-ள். அந்நெடுந்தகை நின்று தியானித்து நோக்குதலின், கனலியெதிர்க்க இருளுடைந்தாற்போலே உடம்பிலே நஞ்சு நீங்கிற்று; அது நீங்கினபின்பு அவள் வடிவை அவன் கண்ணால் நுகராநிற்க, அவ்வொண்டொடி தன்கண்களோலே குமரன் மேலே நோக்கினா ளென்க. ஆர்ந்து - ஆர. (125) 1291. நோக்கினா ணிறையு நாணு மாமையுங் கவினு நொய்திற் போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன்னிறப் பசலை மூழ்கிற றாக்கிள நங்க னப்புத் தூணியை யமரு ளானா தோக்கிய முருகன் வைவே லோரிரண் டனைய கண்ணாள். முருகன் அமருளமையாது ஓக்கிய ஒருவேல் இரண்டா னாலனையகண்; “அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச் - செங்கடை மழைக்க ணிரண்டா யீத்தது”(சீலப்.2:51-2) என்றார் பிறரும். இ-ள். அங்ஙனம்பார்த்தகண்ணாள் நிறைமுதலியவற்றை யும் வளையையும் முன்பு நொய்திற்போக்கினாள்; போக்கின பின்பு, பசலையைப் போர்த்துக்கொண்டாள்; அப்பொழுது தன்னுள்ளே அம்பெலாமுழுகின; முழுகினபின்பு அவ்வடிவாலே காமற்கு ஓர் அப்புத்தூணியை யுண்டாக்கினாளென்க. (126) வேறு. 1292. ஆட்சி யைம்பொறி யாள னுடம்பெனும் பூட்சி நீள்கொடிப் புற்றி னகத்துறை வாட்க ணோக்கெனும் வையெயிற் றாரழல் வேட்கை நாகத்தின் மீட்டுங் கொளப்பட்டாள். வாட்கண் - உவமத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை; இது பதுமைக்கு ஒருபெயர். இ-ள். தாம் ஏவல்கொள்ளுந் தொழிலையுடைய ஐம்பொறி யை ஆளுதலையுடையானது உடம்பென்னும் புற்றிடத்தேயுறைகின்ற வேட்கையாகியநாகத்தினது நோக்கென்னும் எயிற்றி னஞ்சாலே, வாட்கண்ணினையுடையாள் மீட்டுங் கொள்ளப் பட்டாளென்க. மேற்கோளாகிய கொடிவளரப்பட்டபுற்றென்க. “நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் -கூட்டியுரைக்குங் குறிப்புரை யாகும்” (தொல்.களவு.5) என்றதனால் இருவருமெதிர்நோக்கிய விடத்துக் கூட்டுங் குறிப்புரைநிகழ்த்தும் இயற்கைப் புணர்ச்சி நிகழாமையின், அவட்கு நிகழ்ந்த முன்னிற்கவியிற்கூறிய வருத்தத்திற்கு இவன் வேட்கை நோக்கமே காரணமென்றறறிவிக்க இக்கவியிற்கூறினார். இந் நோக்கமின்றேல் இவட்கு இது நிகழாதென்க. “பெருமையு முரனு மாடூஉ மேன”(தொல்.களவு.7) என்பதனான் இவற்கு வருத்தம் புலப் படாதாயிற்று. (127) 1293. மாழ்கி வெய்துயிர்த் தாண்டமட வாளெனத் தோழி மார்களுந் தாயருந் தொக்குடன் சூழி யானையன் னாய்தொடி னஞ்சறும் வாழி யென்றனர் வம்பலர் கோதையார். இ-ள். கோதையாராகிய தோழியருஞ்செவிலியரும், மடவாண் மயங்கியுயிர்த்தாள். இனி இது வேட்கையென்றே கருதிச் சேரத்திரண்டு யானையன்னாய்! வாழ்வாயாக; நீதீண்டித் தீர்ப்பை யாயின், நஞ்சறுமென்றாரென்க. அன்னான், “தொழிலிற் கூறு மானெ னிறுதி” (தொல். விளி.16) யின்கூறாய் ஆயேற்றது. (128) 1294. கண்ணிற் காணினுங் கட்டுரை கேட்பினு நண்ணித் தீண்டினு நல்லுயிர் நிற்குமென் றெண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாந் தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான். இ-ள். அதுகேட்டுக் காதலித்தோரைக்காணினுங் கேட்பினும் தீண்டினும், நல்லுயிர்நிற்கும்; அது நமக்குமொக்கு மென்றெண்ணிச் சாந்தம்பூசினாற்போலே குளிரும்படி ஏந்திழை தன்னை உடம்பெல்லாந் தைவந்தானென்க. (129) 1295. மற்று மாதர்தன் வாட்டடங் கண்களா லுற்ற நோக்கமு றாததோர் நோக்கினிற் சுற்றி வள்ளலைச் சோர்வின்றி யாத்திட்டா ளற்ற மில்லமிர் தாகிய வஞ்சொலாள். இ-ள். அமிர்தமாகிய அஞ்சொலாள், தன் கண்களாலே தான்அவற்கன்புற்ற நோக்கத்தைப் பிறர் அயிராததொரு நோக் காலே வள்ளலைச்சுற்றித் தப்பாமற்கட்டினாளென்க. மாதர் - காதல். அற்றமிலமிர்து - ஒருவன் கைப்படாவமிர்து. (130) வேறு. 1296. விஞ்சையர் வீர னென்பார் விண்ணவர் குமர னென்பா ரெஞ்சிய வுயிரை மீட்டா னிவனலா லில்லை யென்பார் மஞ்சுசூ ழிஞ்சி மூதூர் மாமுடிக் குரிசி னாளை நஞ்சுசூழ் வேலி னாற்கே நங்கையைக் கொடுக்கு மென்பார். போனவுயிரை மீட்டான் இவனல்லது வேறொருவனில்லை; இவ்வூரையுடைய தனபதிநாளை யிவற்கே நங்கையைக் கொடுக்கு மென்பாரென்க. 1297. விளங்கொளி விசும்பின் வெண்கோட் டிளம்பிறை சூழ்ந்த மின்போ வளங்கெழு வடத்தைச் சூழ்ந்து வான்பொனாண் டிளைப்பச் சேந்தல்விளங்கதிர் முலைக டம்மா லிவனைமார் பெழுதி வைகிற் றுளங்குபெண் பிறப்புந் தோழி யினிதெனச் சொல்லி நிற்பார். விசும்பிலே இளையபிறையைச் சூழ்ந்தமின்போலே முத்து வடத்தைச் சூழ்ந்து பொன்னாணசைதலாலே சிவந்த இளைய முலைகளாலே இவனைமார்பையெழுதி வைகப்பெறின், நிலை நில்லாத பெண்பிறப்பும் நன்றென்று சொல்லி நிற்பாரென்க. இவனைமார்பெழுதியென்றார், கொடிதென்றதனால். 1298. அருந்தவஞ் செய்து வந்த வாயிழை மகளிர் யார்கொல் பெருந்தகை மார்பிற் றுஞ்சிப் பெண்மையாற் பிணிக்கு நீரார் கருங்கணின் யாமுங் கண்டாங் காமனை யென்று சொல்லித் திருந்தொளி முறுவற் செவ்வாய்த் தீஞ்சொலார் மயங்கினாரே. இவைமூன்றுமொருதொடர். இ-ள். தீஞ்சொலார் என்பார், என்பார், சொல்லி நிற்பாராய், யாமுங் காமனைக்கண்ணாலே கண்டேம்; இங்ஙனமன்றி இவன் மார்பிலே தங்கிப் பிணிக்குநீராராய் அருந்தவஞ் செய்துவந்த மகளிர் யார்கொலென்று சொல்லி மயங்கினா ரென்க. (131-3) 1299. பன்மலர்ப் படலைக் கண்ணிக் குமரனைப் பாவை நல்லார் மன்னவன் பணியின் வாழ்த்தி வாசநெய் பூசி நன்னீர் துன்னின ராட்டிச் செம்பொற் செப்பினுட் டுகிலுஞ் சாந்து மின்னறும் புகையும் பூவுங் கலத்தொடு மேந்தி னாரே. இ-ள். தனபதியேவலாலே, நல்லார் குமரனைத் துன்னினராய் நெய்பூசி நன்னீராலாட்டி வாழ்த்தித் துகின்முதலியவற்றை யேந்தினா ரென்க. (134) 1300. ஏந்திய வேற்பத் தாங்கி யெரிமணிக் கொட்டை நெற்றி வாய்ந்த பொன் குயிற்றிச் செய்த மரவடி யூர்ந்து போகி யாய்ந்தநன் மாலை வேய்ந்த வரும்பெறற் கூடஞ் சேர்ந்தான் பூந்தொடி மகளிர் போற்றிப் பொற்கலம் பரப்பி னாரே. இ-ள். அவர்களேந்தியவற்றைப் பொருந்தமெய்ப்படுத்து மணிக் கொட்டையை நெற்றியிலேயழுத்திப் பொன்னாற்செய்த மரவடியைத் தொட்டுப்போய்க் கூடத்தைச்சேர்ந்தான்; அப்பொ ழுது மகளிர் கலத்தைப் பரப்பினாரென்க. (135) 1301. கன்னியர் கரக நீராற் றாமரை கழிஇய தொப்பப் பொன்னடி கழீஇய பின்றைப் புரிந்து வாய் நன்கு பூசி யின்மலர்ந் தவிசி னுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான் மின்விரிந் திலங்கும் பைம்பூண் வேற்கணார் வேனி லானே. இ-ள். கன்னியர் நீராலே பொன்னடியைக் கழுவினபின்பு, வேனிலான் விரும்பி வாய்பூசித் தவிசின்மேலிருந்து அடிசிலை முற்பட இனியவற்றோடே யுண்டானென்க. “நீராடிக் கால்கழுவி வாய்பூசி”(19) என்றும், “கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப”(25) என்றும், ஆசாரக் கோவை யிற்கூறினார். (136) 1302. வாசநற் பொடியு நீருங் காட்டிடக் கொண்டு வாய்ப்பப் பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற் காசறத் துடைத்த பின்றைக் கைவிர லுறுப்புத் தீட்டித் தூசினா லங்கை நீவி யிருந்தனன் றோற்ற மிக்கான். இ-ள். மிக்கவன் பொடியையுநீரையும் அவர்கள் காட்டு தலின், அவற்றைக் கைக்கொண்டு பூசுந்தொழிலைமுடித்து அங்கை யிற் கொண்டநீரை முக்காற்குடித்து வாயை முக்காற்றுடைத்து விரலைக் கண்முதலியவுறுப்புக்களிலே தீண்டுவித்துத் துடைத் திருந்தானென்க. தூசு -ஒலியல். “முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப் - பொத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்”(ஆசாரக்.27) என்றார் பிறரும். (137) 1303. சீர்கொளச் செய்த செம்பொ னடைப்பையுட் பாகு செல்ல வார்கழற் குரிசில் கொண்டு கவுளடுத் திருந்த வாங்கட் போர்கொள்வேன் மன்ன னெல்லாக் கலைகளும் புகன்று கேட்டு நீர்கொண்மாக் கடல னாற்கு நிகரில்லை நிலத்தி னென்றான். இ-ள் பொன்னாற்செய்த அடைப்பையிற் பாக்கும் வெற் றிலையுஞ்செல்ல, குரிசில் அதனை வாங்கிக் கொண்டு தின் றிருந்தவளவிலே, தனபதி, இவன் கலைகளையெல்லாம் விரும்பிக் கேட்டு, இவற்கு நிலத்தில் நிகரில்லையென்றானென்க. (138) வேறு. 1304. பரிதி பட்டது பன்மணி நீள்விளக் கெரிய விட்டன ரின்னிய மார்த்தன வரிய பொங்கணை யம்மெ னமளிமேற் குரிசி லேறினன் கூர்ந்தது சிந்தையே. இ-ள். அவ்வளவிலே ஞாயிறுபட்டது; மணியும் விளக்கும் எரியும்படியிட்டனர்; பல்லியங்களுமார்த்தன; தனித்தார்க்குப் பொறுத் தற்கரிய படுக்கைமேலே குரிசிலேறினான்; அப்பொழுது வருத்தமிக்கதென்க. (139) 1305. பூங்க ணவ்வயி னோக்கம் பொறாதபோல் வீங்கி வெம்மைகொண் டேந்தின வெம்முலை யீங்கி லென்னென விட்டிடை நைந்தது பாங்கி லாரிற் பரந்துள தல்குலே. இ-ள். அவள்கண்கள் அவ்விடத்து யானோக்கின நோக்கத் தைப்பொறாதே நிலநோக்கி என்னை வருத்தினாற்போலே, முலை களும் வீங்கிக் கொடுமைகொண்டு ஏந்திவருத்தின; இவ்விடத்திற் பொறாமையென்னேயென்று இடைநைந்தது; பிறரிடுக்கண்கண்டு மகிழ்வாரைப்போலே அல்குல் பரந்ததென்க. பரந்துள்ளது-ஒருசொல். இனிக் கண்கள் தமக்கு முற்பட்டு வருத்தியதற்குப் பொறாதனபோலே பின்பு முலைகளும் வருத்தின வென்றுமாம். (140) 1306. முருகு வார்குழ லாண்முகிழ் மென்முலை பெருகு நீர்மையிற் பேதுற வெய்திநின் றுருகு நுண்ணிடை யோவியப் பாவைத னருகு நோக்கமெ னாவி யலைக்குமே. இ-ள். குழலாள் ஓவியப்பாவை, அவள் முலைகளும், அவை பெருகுந்தன்மை யாலேவருந்துமிடையும், குறிக்கொண்டு நோக் காதநோக்கமும் வருந்துமளவன்றி என்னாவியைக் கெடுக்குமள வாக்காநின்றனவென்க. (141) 1307. புகைய வாவிய பூந்துகி லேந்தல்குல் வகைய வாமணி மேகலை வார்மது முகைய வாவிய மொய்குழல் பாவியேன் பகைய வாய்ப்படர் நோய்பயக் கின்றவே. இ-ள். முகைவிரும்பின மொய்குழலையுடையாளது ஏந்து அல்குலிற் பூந்துகிலும் மேகலையும், பாவியேற்குப் பகையாந் தன்மை யுடையவாய், நோயைப் பயவாநின்றனவென்க. அல்குலைமறைத்தலின், அவை பகையாயின. (142) 1308. போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ மாது லாமொழி யோமட நோக்கமோ யாது நானறி யேனணங் கன்னவள் காத லாற்கடை கின்றது காமமே. சிலை - காமன்வில். இ-ள். அணங்கன்னவளுடைய நுதலோ, கண்ணோ, நோக்க மோ, மொழியோ, காதலாலே காமத்தை மிகப்பண்ணு கின்றது இவற்றில் இன்னதென்று யான் சிறிதும் அறிகினிறிலே னென்றா னென்க. இதனால் உறுப்புக்களெல்லாம் ஒக்கவருத்தினவென்றான். மொழியோவென்றதனான், மொழியுங்கேட்டானென்பது பெற் றாம். அன்றி “அடிகளுக்கிறைஞ்சி”(சீவக.1272) என்னுங் கவியிற்கூற்றைத் தானும் பின்பு கேட்டலின், மொழியோவென்றா னென்றலு மொன்றது. (143) 1309. அண்ண லவ்வழி யாழ்துயர் நோயுற வண்ண மாமலர்க் கோதையு மவ்வழி வெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்ததொத் துண்ணை யாவுரு காவுள ளாயினாள். இதுமுதலாகப் “பூமென்சேக்கை” (சீவக.1315) அளவு மொருதொடர். அழுந்துதலுறுகின்ற வருத்தநோய் உறாநிற்க. 1310. பெயன்ம ழைப்பிற ழுங்கொடி மின்னிடைக் கயன்ம ணிக்கணி னல்லவர் கைதொழப் பயனி ழைத்தமென் பள்ளியுட் பைந்தொடி மயனி ழைத்தவம் பாவையின் வைகினாள். ஒழுங்குபட்டமின்போன்ற இடையினையும் கண்ணினையு முடைய நல்லவர்கை தொழ. துணையுடையோர்க்குப் பயனுண் டாகப் பண்ணின பள்ளி. 1311. வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ நிணந்தெ னெஞ்சநி றைகொண்ட கள்வனை யணங்கு காளறி யேனுரை யீர்களே. எல்லாரும் மனங்குழைதற்குக் காரணமான சிலை. பூமிசைத் தோன்றிய முருகன்; குறிஞ்சிநிலத்திற்குத் தெய்வமாகிய முருகன். நிணந்து-பிணித்து. பெரும்பான்மையுந் தெய்வத்தன்மையுடை மையின், மகனோவென்றிலள். உரையீர்களே, ஏகாரம் - வினா. 1312. கடைகந் தன்னதன் காமரு வீங்குதோ ளடையப் பபுல்லினன் போன்றணி வெம்முலை யுடைய வாகத் துறுதுயர் மீட்டவ னிடைய தாகுமெ னாருமி லாவியே. ஆகத்தணிந்த வெம்முலையுற்ற பசப்புடையும்படி தன் றோளாலே புல்லினன்போன்று தடவி மீட்டவனென்க. இடை - இடம். போகாமனிறுத்துவார் ஒருவருமில்லாத வுயிர். 1313. இறுதி யில்லமிர் தெய்துந ரீண்டியன் றறிவி னாடிய வம்மலை மத்தமா நெறியி னின்றுக டைந்திடப் பட்டநீர் மறுகு மாக்கடல் போன்றதென் னெஞ்சமே. சாதலில்லாமைக்குக் காரணமான அமிர்தத்தை யெய்துந் தேவர்கள் திரண்டு தம்மறிவாலே யதனையாராயவேண்டி அன்று மந்தரமத்தாகநின்று நெறியிற்கடைந்திடப்பட்ட நீர்மறுகுங் கடலென்க. 1314. நகைவெண் டிங்களு நார்மட லன்றிலுந் தகைவெள் ளேற்றணற் றாழ்மணி யோசையும் பகைகொண் மாலையும் பையுள்செய் யாம்பலும் புகையில் பொங்கழல் போற்சுடு கின்றவே. நாரையுடையமடல். கழுத்திலேதங்கிய மணி. ஆம்பல்-ஆம்பற் பண்ணையுடைய குழல். புகையில்லாவழல் - இல் பொருளுவமை. 1315. பூமென் சேக்கையு ணாற்றிய பூந்திரட் டாமம்வாட்டுந் தகையவு யிர்ப்பளைஇக் காமர் பேதைதன் கண்டரு காமநோ யாமத் தொல்லையொர் யாண்டொத் திறந்ததே. பூந்தாமம்; திரளையுடைய தாமத்தைவாட்டுந் தகைய வாகிய நெட்டுயிர்ப்புக்கலந்து. யாமம் - இரவு. இ-ள். அண்ணல் அங்ஙனநோயுறாநிற்க, கோதையும் நல்லவர் கைதொழச் சென்று அவ்வழிப் பள்ளியிலே தெய்வத் தச்சனியற்றிய பைந்தொடிப்பாவை போலே வைகினாள்; அங்ஙனம் வைகினவளவிலே, திங்கண்முதலியன அழல்போற்சுடா நின்றன; அதனால், எனது நெஞ்சங் கடல்போல மறுகாநின்றது; இங்ஙன மறுகும்படி யென்னெஞ்சை நிணந்து நிறையைக் கொண்டகள் வனை, யான் காமனோ முருகனோ வென்றையமுற்று இன்ன னென்றறிகின்றிலேன்; இல்லுறை தெய்வங்காள்! நீங்களுமுரை யீர்களோ? உரைத்திலிரா யினும், என் ஆருமிலாவி, துயர் மீட்டவன் இன்னுமருளுவ னோவென்று அவனிடத்தேயாகா நின்றதென்று தெய்வத்தை நோக்கிக் கூறி, உயிர்ப்பளைஇ வெண்ணெயை நெருப்பின்மேலேவைத்த தன்மை யையொத்து நெஞ்சுருகிப் பின்னும், அவனவ்விடத்தேயாதலின், இறந்து படாளாயினாள்; அங்ஙனமிருந்த பேதைக்குத் தன்கண்தந்த நோயாலே இராப்பொழுதினெல்லை ஓர் யாண்டையொத்துக் கழிந்ததென்க. (144-50) 1316. மாதி யாழ்மழ லைம்மொழி மாதரா டாதி யவவ்வையுந் தன்னமர் தோழியும் போது வேய்குழற் பொன்னவிர் சாயலுக் கியாது நாஞ்செயற் பாலதென் றெண்ணினார். 1317. அழுது நுண்ணிடை நையவ லர்முலை முழுதுங் குங்கும முத்தொட ணிந்தபின் றொழுது கோதையுங் கண்ணியுஞ் சூட்டினா ரெழுது கொம்பனை யாரிளை யாளையே. 1318. வேந்து காயினும் வெள்வளை யாயமோ டேந்து பூம்பொழி லெய்தியங் காடுத லாய்ந்த தென்றுகொண் டம்மயில் போற்குழீஇப் போந்த தாயம் பொழிலும் பொலிந்தததே. இவைமூன்றுமொருதொடர். காதலையுடைய யாழ்போலு மொழியினையுடைய பதுமை. நுண்ணிடை-பதுமை. இளையாளென்றது அவளென்னுஞ் சுட்டு. கொம்பனையார்-செவிலியுந்தோழியும். நெருநற் பாம்புதீண்டினபொழிலிலே போகவிட்டதென்று தனபதி கோபிக்கினும். ஆய்ந்தது - ஆராயப்பட்ட காரியம். இ-ள். அவ்விரா அங்ஙனநீங்கிற்றாக, நுண்ணிடையினை யுடையாள் அழுது நையாநிற்க, அம்மாதராள் தாதியாகிய தாயுந் தோழியும்இவள்வருத்தத்திற்கு யாஞ்செய்யத்தகுங் காரியம் யாதென்றெண்ணினார்; எண்ணி அவனையெதிர்ப்பட்ட இடத்தைக் காண்டலும் அவனைக்கண்டாற்போறலின், வேந்து காயினும் இவள் பொழிலிலே சென்று அவ்விடத்தே விளை யாடுதலே காரிய மென்றுட்கொண்டு, கொம்பனையார் அவ் விளையாளை முலை முழுதுங் குங்குமத்தையும் முத்தையுமணிந்த பின்பு கோதையையுங் கண்ணியையுஞ்சூட்டினார்; சூட்டி அப்பொழிலிலே போவென்றுகூற, ஆயமும் மயில் போற்றிரண்டு வந்து தொழுது கூடப்போந்தது; பொழிலும் அப்பொழுது பொலிவு பெற்ற தென்க. அழுதென்றதற்குப் பாம்புகடித்தவிடத்தே போகவிடா நின்றேமென்றழுதாரென்றுமுரைப்ப. (151-3) 1319. அலங்க றான்றொடுப் பாரலர் பூக்கொய்வார் சிலம்பு சென்றெதிர் கூவுநர் செய்சுனை கலங்கப் பாய்ந்துட னாடுநர் காதலி னிலங்கு பாவையி ருமணஞ் சேர்த்துவார். 1320. தூசுலாநெடுங் தோகையி னல்லவ ரூச லாடுந ரொண்கழங் காடுநர் பாச மாகிய பந்துகொண் டாடுந ராகி யெத்திசை யும்மமர்ந் தார்களே. இவையிரண்டுமொருதொடர். பாவைகளை வாழ்க்கைப்படுத்துவார். தூசிலே யசைகின்ற கொய்சகத்தையுடையஆயத்தார். பாசம்-அன்பு. இ-ள். அவ்வாயத்தார் தொடுப்பார், கொய்வார், கூவுவார், ஆடுவார், சேர்த்துவார், ஊசன்முதலியனவாடுவாராகி எத்திசை களிலும்போய் அமர்ந்தாரென்க. (154-5) 1321. முருகு விம்மிய மொய்குழ லேழைத னுருகு நோக்கமு ளங்கிழித் துள்சுட வரிவை யாடிய காவகங் காணிய வெரிகொள் வேலவ னேகின னென்பவே. இ-ள். வேலவன், பதுமை தனதுநினைவுமிக்கு வருந்திப் பார்த்தபார்வை நெஞ்சைச்சுடுதலின், அவளையெதிர்ப்பட்ட இடத்தைக் காண்டலும் அவளைக்கண்டாற்போறலின், அவளா டிய காவிடத்தைக் காண்டற்கு ஏகினானென்க. (156) 1322. மயிலி னாடலு மந்தியி னூடலுங் குயிலின் பாடலுங் கூடிம லிந்தவண் வெயிலி னீங்கிய வெண்மணற் றண்ணிழல் பயிலு மாதவிப் பந்தரொன் றெய்தினான். இ-ள். அங்ஙனமேகினவன், அவ்விடத்து மயிலினாடன் முதலியன கூடிமிக்கு வெயிலினின்றுநீங்கிய வெண் மணற்றண் ணிழல் பயிலும் மாதவிப்பந்தரொன்றைச் சேர்ந்தானென்க. மாதவி-குருக்கத்தி. 157) 1323. காது சேர்ந்தக டிப்பிணை கையது தாது மல்கிய தண்கழு நீர்மல ரோத நித்தில வட்டமொர் பொன்செய்நாண் கோதை வெம்முலை மேற்கொண்ட கோலமே. இ-ள். கோதையது காதைச்சேர்ந்தன கடிப்பிணை; அவள் கையது கழுநீர் மலர்; அவள் முலையிடத்தன முத்துவடமும் பொன்னாணும்; இஃது அவள்மேற்கொண்டஒப்பனையென்க. இதனால் அவளொப்பனையைத் தேவர்வியந்து கூறினார். காமநோயினால் நொய்தாக வொப்பித்தார். (158) 1324. விண்பு தைப்பன வெண்மலர் வேய்ந்துளாற் கண்பு தைப்பன காரிரும் பூம்பொழில் சண்ப கத்தணி கோதைநின் றாடனி நண்ப னைநினை யாநறு மேனியே. 1325. கறந்த பாலினுட் காசி றிருமணி நிறங்கி ளர்ந்துதன் னீர்மைகெட் டாங்கவண் மறைந்த மாதவி மாமைநி ழற்றலிற் சிறந்த செல்வனுஞ் சிந்தையி னோக்கினான். இ - ள். பாலினுள்ளே நீலமணி நிறங்கிளர அது தன்னீர்மை கெட்டாற்போல, அவள் மறைந்து நின்று மதாதவிப் பூவின் மேலே மாமை நிறம் ஒளிவிடுதலிற் சீவகனும் விசாரத்தோடே பார்த் தானென்க. கிளர்ந்து - கிளர. மாதவி - ஆகுபெயர். இல்வொளி யாதென்று கருதினான். (160). 1326. வரையின் மங்கைகொல் வாங்கிருந் தூங்குநீர்த் திரையின் செல்விகொ றேமலர்ப் பாவைகொல் உரையின் சாய லியக்கிகொல் யார்கொலிவ் விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே. வளைந்தநீர் - பெரிய அசைகின்ற நீர். இ - ள். இவ்வளைத்தோளி வரையரமகளோ! நீரரமகளோ! திருமகளோ! இயக்கியோ! யார்தானென்று ஐயமுற்றான் என்க. பதுமை முன்பு கண்டவளாயினும் வேட்கை மிகுதியான் ஐயம் நிகழ்ந்தது. (161) 1327. மாலை வாடின வாட்கணி மைத்தன காலும் பூமியைத் தோய்ந்தன காரிகைப் பாலின் றீஞ்சொற் புதுமையிந் நின்றவள் சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே, இ - ள். வாடின, இமைத்தன், தோய்ந்தன; ஆதலால், இவ்விடத்தின் நின்றவள் வளைத்தோளியாகிய அழகினையுடைய பதுமை என்று தெரிந்து தேறினான் என்க. (162) 1328. தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலிற் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் பூவர் சோலை புகுவலென் றெண்ணினாள் தீந்தொடை - யாழ். மேவருதமிழ் - நாடக வழக்கும், உலகியல் வழக்கும் பொருந்துதல் வரும் அகப்பொருளில் மெய்ப்பொருளென்றது. முதற் கந்தருவமன்றிச் சுட்டியொருவர் பெயர் கொள்ளப்பட்டு ஐந்து நிலம் பெற்ற கந்தருவமாகிய உலகியல் வழக்கான இயற்கைப் புணர்ச்சியை பூவர் - அர் பகுதிப் பொருள் விகுதி. இ - ள். அங்ஙனந் தேறினவன். யாழையுடைய கந்தருவர் பண்ணிய இனிய மணம் தமிழிற்பொருள்; அதுவும் நமக்காம் ஆதலிற் கொம்பனாள் நிற்கின்ற பூவையுடைய சோலையிலே யானுஞ் சென்று இயற்கைப் புணர்ச்சி புணர்வேன் என்று எண்ணினான் என்க. 1329. அல்லி சேரணங் கன்னவட் காயிடைப் புல்லி நின்றமெய்ந் நாண்புறப் பட்டது கல்செய் தோளவன் காமரு பேருணர் வெல்லை நீங்கிற் றியைந்தன ரென்பவே. இ - ள். அவன் அங்ஙனம் எண்ணிச் சென்றபொழுது, அணங்கன்னவட்கு நாணம் நீங்கிற்று; தோளவனுணர்வு அவ னெல்லையைக் கடந்தது; அப்பொழுது இருவரும் கூடினாரென்க. 1330. களித்த கண்ணினை காம்பென வீங்குதோள் தெளிர்த்த வெள்வளை சேர்ந்தது மாமையும் தளித்த சுண்ணஞ் சிதைந்தன குங்குமம் அளித்த பூம்பட் டணிந்து திகழ்ந்ததே. இ - ள். அப்பொழுது, கண்ணினை களித்தன; தோளில் வளைகளும் ஒலித்தன; போன மாமை நிறமும் வந்து சேர்ந்தது; பூசின சுண்ணமும் குங்குமம் அழிந்தன; இவனால் அருள் பண்ணப்பட்ட பட்டும் அணியப்பட்டு விளங்கிற்றென்க. இவள் புணர்ச்சியைக் கைவிட்டுப் பட்டணிந்தாளாதலின் ‘திகழ்ந்தது’ என்றார். 1331. பொன்றுஞ் சாகத்துப் பூங்கண்கள் போழ்ந்த புண் இன்றிப் பூண்கொ ளிளமுலைச் சாந்தலால் அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே என்று மாத ரெழினல மேத்தினான். இ - ள். நீ தங்கிய மார்பிலே நினது கண்களாகிய வேல் முன்பே பட்டு உருவிக்கிடந்த பழம்புண்களை இன்று இந்த முலையிற் சாந்தல்லது மாறுபட்டு தீர்ப்பன வேறொன்றும் இல்லையென்று கூறி ஏத்தினான் என்க. இவையிரண்டும் நயப்பு. பொன்னென்றது பதுமையை. ஆகம் - நெஞ்சு. இனித் தலைவி முன்னாதலிற் பொன்னுஞ் சாகமென்று தன்னைப் புகழ்த்தலுமாம். (167) 1333. கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து வண்ண மாலை நடுச்சிகையுள் வளைஇச் செண்ண வஞ்சிலம் பேறு துகளவிந்த் தண்ண லின்புறுத் தாற்றலி னாற்றினான். இ-ள். சண்பகத்தினது கோதையையொத்த நறுமேனியை யுடையாள், அக்கோலத்தோடே நண்பனைநினைத்துப் பொழி லிலே தனியே நின்றாளென்க. விண்ணை மறைப்பனவாகிய பொழில்; மலராலே வேயப் பட்டு உள்ளிடங் கண்ணைமறைப்பனவாகிய பொழில். அஃது அவன்சேர்ந்த மாதவிப்பொழில். அணி-உவமவுருபு. (159) வேறு. 1334. திங்க ளும்மறு வும்மெனச் சேர்ந்தது நங்க ளன்பென நாட்டி வலிப்புறீஇ யிங்கொ ளித்திடு வேனும ரெய்தினார் கொங்கொ ளிக்குழ லாயெனக் கூறினான். இவையிரண்டுமொருதொடர். 1. நுண்ணிய தொழிலையுடைய சிலம்பினேறின பூந்தாதை யுந் துடைத்து. 2. நங்கள், கள்-அசை. நாட்டி-பிரிவென்ப தொன்றுண் டென்று நிலைபெறுத்தி. வலிப்புறீஇ-பிரிந்தும் பிரிவிலே மென்று தெளியும் படி நெஞ்சைவற்புறுத்தி. இ-ள். அண்ணல் வேய்ந்து, மாலையைக் கொண்டைக்கு நடுவே வளையமாக வைத்துக் குழலைக்கைசெய்து, துகளவித்து, இன்புறுத்தி, நம்மன்பு திங்களுமறுவுமென்னும்படி சேர்ந்ததென்று கூறி நாட்டி, வலிப்புறீஇ ஆற்றுவித்தலின், ஆற்றினாள்; அங்ஙனம் ஆற்றினபின்பு குழலாய்! நுமரெய்தினார்; அவர்காணாதபடி இங்கேயொளிப்பேனென்று கூறினானென்க. உடன்றேய்ந்து உடன்வளர்தலின், மறுவுவமை. (168-9) 1335. மழையி டைக்குளித் திட்டதோர் வாண்மினிற் றழையி டைக்குளித் தான்றகை வேலினா னிழையி டைக்குளித் தேந்திய வெம்முலை வழையி டைக்குளித் தார்வந்து தோன்றினார். இ-ள். மழையிடத்தே மறைந்தமின் போற் கடிதாக வேலி னான் தழையிடத்தேமறைந்தான்; அப்பொழுது பூணிடத்தே மறைந்தேந்தின முலையினையுடைய மறைந்தவாயத்தார் வந்து தோன்றினாரென்க. (170) 1336. மின்னொர் பூம்பொழின் மேதகச் செல்வதொத் தன்ன நாணவ சைந்துசி லம்படி மென்மெ லம்மலர் மேன்மிதித் தேகினாள் நன்ன லம்மவற் கேவைத்த நங்கையே. இ-ள். அன்பொன்றுமே அவனுக்கு உதவியாகவைத்த நங்கை தான் ஏகினாளென்க. முற்பிறப்பே தொடங்கி அன்புவைத்தவளென்றுமாம். ஒருபொழிலிலே மின்பெருமைதகச் செல்லுந்தன்மையை யொத்து அடியாலேமிதித்து, அசைந்து, அன்னநாண வேகினாளென்க. (171) 1337. திங்கள் சூழ்ந்தபன் மீனெனச் சென்றெய்தி நங்கை தவ்வையுந்தோழியு நண்ணினா ரங்க வாயம டிப்பணி செய்தபின் றங்கள் காதலி னாற்றகை பாடினார். இ-ள். திங்களைச்சூழ்ந்த மீனென்னும்படி சென்றெய்தி அவ்விடத்தே ஆயம் ஏவல்செய்தபின்பு அவள்செவிலியுந் தோழி யுஞ் சென்றணுகினார். இங்ஙனம் எல்லாருஞ்சேர்ந்து அவளை நலம் பாராட்டினாரென்க. தவ்வை - செவிலிக்கு மூத்தவள். பாம்பு தீண்டின பொழிலாத லிற் காவலாக வந்தாரென்க. (172) 1338. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் விழைவ சேர்த்துபு மெல்லென வேகினார் முழையுண் மூரிமு ழங்கரி யேறினான் பழைய நண்பனைப் பண்புளி யெய்தினான். இ-ள். அவர்கள் தழை முதலியனவற்றில் அவள் விரும்புவன வற்றைச்சேர்த்தி அவளைக் கொண்டுபோனார்; போனபின்பு சீவகனும் அவள்குணங்களைநினைத்து அந்நினைவோடே உலோகபாலனைச் சென்றெய்தினானென்க. பண்பு - கூட்டத்திற்பெற்ற குணங்கள். (173) வேறு. 1339. பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானு மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானு நேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயி னாமவற் கழகி தாக நங்கையைக் கொடுத்து மென்றான். இ-ள். அவர்கள் அங்ஙனமிருக்கின்றவளவிலே, தனபதி மதிதரனை நோக்கி, பதுமையையுயிரைத்தந்த வெற்றியையுடைய னாதலானும், உலகை யாளுதற்குப்பொருந்தின உத்தமவிலக் கணத்தையுடையனாத லானும், காமனையொத்த நெடுந்தகை யுடன்படுவனாயின், நமக்கு நன்றாக நாம் பதுமையை அவனுக்குக் கொடுக்கக்கடவேமென்று கூறினானென்க. (174) 1340. மதிதர னென்னு மாசின் மந்திரி சொல்லக் கேட்டே யுதிதர வுணர்வல் யானு மொப்பினு முருவி னானும் விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக் கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கரும மென்றான். ஒப்பு : “பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ - டுருவு நிறுத்த காம வாயினிறையே யருளே யுணர்வொடு திருவென - முறையுறக் கிளந்த வொப்பினது வகையே” (தொல். மெய்ப்.25) என்பன. உரு-உட்கு. அது விடந் தீர்த்தார்க்குக் கொடுப்பேமென்ற மொழி பிறழாமற் காக்க வேண்டுமென்னுமச்சம். இ-ள். தனபதி அங்ஙனங்கூறக்கேட்டு, மதிதரனென்னு மமைச்சன் ஒப்பானும், உருவானும் பதுமையை வேலினாற்குக் கொடுப்பதே கருமம்; இது யானும் முன்பே நினையாநிற்பேன்; இதுதான் விதிதரவந்ததொன்றே யென்றானென்க. (175) 1341. உள்விரித் திதனை யெல்லா முரைக்கென மொழிந்து விட்டான் றெள்ளிதிற் றெரியச் சென்றாங் குரைத்தலுங் குமரன் றேறி வெள்ளிலை யணிந்த வேலான் வேண்டிய தாக வென்றா னள்ளிலை வேல்கொண் மன்னற் கமைச்சனஃ தமைந்த தென்றான். இ-ள். அதுகேட்டதனபதி மதிதரனைநோக்கி இக்காரியத்தை யெல்லாம் உள் விரித்து அவனுக்குத் தெள்ளிதினுரைப்பாயாக வென்று கூறிவிட்டான்; அவனுஞ்சென்று அப்படியே தெரிய வுரைத்தவளவிலே, சீவகனும் தேறித் தனபதிவிரும்பிய காரியம் அங்ஙனமாகவென்றான்; அதுகேட்டவமைச்சனுந் தனபதிக்கு அக்காரியமப்படியே முடிந்த தென்றானென்க. (176) 1342. பொன்றிய வுயிரை மீட்டான் பூஞ்சிகைப் போது வேய்ந்தா னன்றியு மாமெய் தீண்டி யளித்தன னழகின் மிக்கா னொன்றிய மகளிர் தாமே யுற்றவர்க் குரிய ரென்னா வென்றிகொள் வேலி னாற்கே பான்மையும் விளைந்த தன்றே. 1343. கோப்பெருந் தேவி கொற்றக் கோமக னிவைக ணாடி யாப்புடைத் தையற் கின்றே நங்கையை யமைக்க வென்னத் தூப்புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி யெங்கும் பூப்புரிந் தணிந்து கோயில் புதுவது புனைந்த தன்றே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். தனபதியுந் திலோத்தமையும் உலோகபாலனுந் தம்மிற் கூடி, அழகின் மிக்கான்; உயிரைமீட்டானாதலான், நாடும் நிதியு நல்கி மகட்டருமென்றவை தாமே வந்தொன்றிய; அன்றியும் போது வேய்ந்தானாதலானுந் தீண்டினானாதலானும் “உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்” (திருக்கோவை. 225.பேரா.உரை) என்று கூறிய பான்மையும் வேலினாற்கே விளைந்ததல்லவோவென்று இவைகளை நாடி. பதுமையை யவனுக்கு இப்பொழுதே கொடுத்தலுடைத்து; நீர் மணத்திற்கு வேண்டுவன வமைக்க வென்று உழையரை நோக்கிக்கூறினாராக; முத்தமாலையைச் சல்லியுந்தூக்குமாக நாற்றி எங்கும் பூவை விரும்பியணிந்து ஒரு கோயில் புதிதாகப் புனையப் பட்டதென்க. (177.8) 1344. கணிபுனைந் துரைத்த நாளாற் கண்ணிய கோயி றன்னுண் மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி யணியுடைக் கமல மன்ன வங்கைசேர் முன்கை தன்மேற் றுணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார். இ-ள். கணிகூறியநாளிலே, நன்றென்றுகருதிய கோயிலிலே, நல்லார் மங்கலமரபுகூறி முன்கையிடத்தே இருவர்க்குங் காப்பைக் கட்ட, மகளிர் தொழுது சுற்றிப் புறப்படாமற் காத்தாரென்க. கட்டி - கட்ட. (179) 1345. மழகளிற் றெருத்திற் றந்த மணிக்குட மண்ணு நீரா லழகனை மண்ணுப் பெய்தாங் கருங்கடிக் கொத்த கோலங் தொழுதகத் தோன்றச் செய்தார் தூமணிப் பாவை யன்னார் விழுமணிக் கொடிய னாளும் விண்ணவர் மடந்தை யொத்தாள். இ-ள். மணிப்பாவையன்னவர் அழகினைக் களிற்றினெருத் திற்றந்த ராலே குளிப்பாட்டி அவ்விடத்தே கலியாணத்திற் கொத்த ஒப்பனையை நன்குமதிக்கும்படி தோன்ற ஒப்பித்தார்; அவ் வொப்பனையாலே கொடியனாளுந் தேவர்மகளை யொத்தா ளென்க. (180) வேறு. 1346. கயற்க ணாளையுங் காமனன் னானையு மியற்றி னார்மண மேத்தருந் தன்மையார் மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய வியற்கை யன்புடை யாரியைந் தார்களே. இ-ள். தனபதிமுதலாயினார் பதுமையையுஞ் சீவகனையும் மணத்தைமுடித்தார்; முடித்தபின்பு அவர் தம்மிற் கூடினா ரென்க. கந்தருவர்மணம்போலே முன்பேமன்னிய இயற்கைப் புணர்ச்சியாலுள்ளவன்மையுடையா ரென்க. கூடியபடி மேற் கூறுகின்றார். (181) 1347. வாளும் வேலு மலைந்தரி யார்ந்தகண் ணாளும் வார்கழன் மைந்தனு மாயிடைத் தோளுந் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி நாளு நாகர் நுகர்ச்சி நலத்தரோ. இ-ள். கண்ணாளும் மைந்தனும் அவ்விடத்தே, தோளுந் தோளும், தாளுந்தாளும் பிணைதலின், ஒருவடிவைப்பெற்று, நாகர் நாடோறு நுகர்கின்ற நுகர்ச்சியின்பத்தை யுடையராயினா ரென்க. (182) 1348. தணிக்குந் தாமலை யாணலந் தன்னையும் பிணிக்கும் பீடினி யென்செயும் பேதைதன் மணிக்கண் வெம்முலை தாம்பொர வாயவிழ்ந் தணிக்கந் தன்னவன் றாரங் குடைந்ததே. 1349. பரிந்த மாலை பறைந்தன குங்குமங் கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியு ளரிந்த மேகலை யார்த்தன வஞ்சிலம் பிரிந்த வண்டிளை யார்விளை யாடவே. இவையிரண்டுமொருதொடர். எல்லாரழகையுந்தோற்பிக்குந் திருவினழகைப் பிணிக்கும் பீடு இருவர்க்கும்பொது வாயவிழ்தல் - அரும்புவாயவிழ்தலும், அவ்விடத்தினின்றுநிலைகுலைதலுமாம்; தார் - மாலையுந் தூசி யுமாம்; சிலேடையால். கரிந்த - கலவியாற்கரிந்தன. கலத்தல் - முயக்கம். இ-ள். அங்ஙனங் கலந்தமகிழ்ச்சியாலே யிளையார் விளை யாடாநிற்க, பேதை தன்முலையாகிய யானை போர்செய்த லின்,நிலை குலையாதவன் தார்நெகிழ்ந்து அவ்விடத்தேயுடைந் தது; அப்பொழுது அவன்மார்பிலே முத்தமாலைகளற்றன: குங்கும மழிந்தன; தலையிற் கண்ணிகரிந்தன. அவைபொறாது பின்பு அவன் போர்செய்தலான், மேகலைகளற்றன; சிலம்புகளாற்றாதார்த்தன; வண்டுகளிரிந்தன; இனித்திருமகளைப் பிணிக்குமிவர் பீடு மேலென்செய்யும்; அவை நம்மாற்கூறுதற்கரியவென்றாரென்க. (183-4) 1350. கொழுமெ னின்னகிற் கூட்டுறு மென்புகை கழுமு சேக்கையுட் காலையு மாலையுந் தழுவு காதற ணப்பிலர் செல்பவே யெழுமை யும்மியைந் தெய்திய வன்பினார். இ-ள். எழுபிறப்பும் பொருந்திப்பெற்ற அன்பினார், தழுவுகா தலாலே நெய்த்த அகிற்புகைதிரண்டசேக்கையிலே, காலையு மாலையு முட்பட நீக்கமில்லாராய், அங்ஙன நடத்துவரென்க. மென்புகை - மெல்லியபுகை. கூட்டு - கட்டி முதலியன. (185) 1351. நாறி யுஞ்சுவைத் துந்நரம் பின்னிசை கூறி யுங்குளிர் நாடக நோக்கியு மூறின் வெம்முலை யாலுழப் பட்டுமவ் வேற னான்வைகும் வைகலு மென்பவே. இ-ள். அங்ஙனங் காலையுமாலையுந் தீண்டுதற்கினிய முலை யாலுழப்பட்டடிருக்கவும், அவ்வேறனான் பின்னும் வேட்கை விளைத் தற்காகத் தன்மேனியிலே நறியனநாறப்பட்டும், நாவிற் கினியன நுகர்ந்தும், இசையைக்கொண்டாடியும், நாடகங்களை நோக்கியும் நாடோறுந் தங்குமென்க. (186) வேறு. 1352. விரிகதிர் விளங்கு பன்மீன் கதிரொடு மிடைந்து திங்கட் டெரிகதிர் திரட்டி வல்லான் றெரிந்துகோத் தணிந்த போலுஞ் சொரிகதிர் முத்த மின்னுந் துணைமுலைத் தடத்தில் வீழ்ந்தான் புரிகதிர்ப் பொன்செய் மாலைப் புகைநுதிப் புலவு வேலான். மிடைந்து-மிடைய. அணிந்த-பெயர். புரிகதிர் - மிக்ககதிர். கதிர்விளங்கு மீன்களின்கதிரோடே மிடையும்படி திங்களின் கதிரைத் திரட்டி வல்லவன் கோத்தணிந்தனவற்றை யொக்குங் கதிரையுடைய முத்தமின்னு முலையென்க. இ-ள். வேலான், அங்ஙனந் துப்புரவுகளெல்லா நுகர்ந்த பின்னும் முலைத்தடத்தே வீழ்ந்தேவிட்டானென்க. (187) வேறு. 1353. எழின்மாலை யென்னுயிரை யான்கண்டே னித்துணை யேமுலையிற் றாகிக் குழன்மாலைக் கொம்பாகிக் கூரெயிறு நாப்போழ்த லஞ்சி யஞ்சி யுழன்மாலைத் தீங்கிளவி யொன்றிரண்டு தான்மிழற்று மொருநாட் காறு நிழன்மாலை வேனாண நீண்டகண்ணே நெய்தோய்ந்த தளிரே மேனி. இ-ள். யாவருங்காணாதவுயிரை யான்கண்டேன்; அதன்றன் மைகூறுமளவில் இவ்வளவே கூறலாவது: முலையினையுடைத் தாய், நீண்டகண்ணினையுந் தளிரையொக்குமேனியையுங் குழலையு மாலையையு முடையதோர் கொம்பாய், கூரெயிறு போழ்தற்கு அஞ்சி யஞ்சி யழலுமியல்பையுடைய தனது நாத்தான் ஒருநாளளவும் ஒன்றிரண்டு கிளவியை மிழற்றுமென்க. எழின்மாலையென்னுயிர் - அழகையியல்பாகவுடைய வென்னுயிர். சினைவினையோடு முடிந்தது. இது நயப்பு. (188) 1354. மாநீர் மணிமுகிலின் மின்னுக் கொடிநுசுப்பின் மயிலஞ் சாய லேநீ ரிருபுருவ மேறி யிடைமுரிந்து நுடங்கப் புல்லித் தூநீர் மலர்மார்பன் றொன்னலந் தான்பருகித் துளும்புந் தேறற் றேனீர் மலர்மாலை தேன்றுளித்து மட்டுயிர்ப்பச் சூட்டி னானே. இன்-ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க. ஏநீரிரு புருவம் - மேற் றன்னைப் புணர்ச்சியிலே ஏவுகின்ற புருவம். மட்டுத் தெற் லெனமாறிக் காமபானத்தின் றெளிவென்க. தேனினத்தையுடைய நீர்ப்பூவாற்செய்த மாலை. உயிர்த்தல் - சுமைபோக்குதல். இ-ள் முகிலிடத்து மின்போலு நுசுப்பினையுடைய சாயல், துளும்புமட்டுத்தேறலைப்பருகுதலாலே தூயநீர்மையையுடைய மலர்ந்தமார்பன்றான் அவடொன்னலத்தைப் புருவமேறி நுடங் கும்படி புல்லி, பின்னும் மாலையைத் தேன்றுளித்துயிர்க்கும்படி சூட்டினா னென்க. வேறு. 1355. தேனடைந் திருந்த கண்ணித் தெண்மட்டுத் துவலை மாலை யூனடைந் திருந்த வேற்க ணொண்டொடி யுருவ வீணை தானடைந் திருந்த காவிற் பாடினா டனிமை தீர்வான் கூனடைந் திருந்த திங்கட் குளிர்முத்த முலையி னாளே. இ-ள். கண்ணியையும் மாலையையுங் கண்ணினையுந் தொடியையுமுடைய தேசிகப்பாவை, தான் பொருந்தியிருநத் பொழிலிலே தனிமைதீர்தற்கு வீணையைப் பாடினாளென்க. தேன் - தேனினம். கூன் - வளைவு. (190) 1356. வார்தளிர் ததைந்து போது மல்கிவண் டுறங்குங் காவிற் சீர்கெழு குருசில் புக்கான் றேசிகப் பாவை யென்னுங் கார்கெழு மின்னு வென்ற நுடங்கிடைக் கமழ்தண் கோதை யேர்கெழு மயில னாளை யிடைவயி னெதிர்ப்பட் டானே. இ-ள். குரிசில் காவிலே புக்கான்; புக்கவன் தேசிகப் பாவை யென்றுபெயர் கூறுமிடையினையுங் கோதையுனையு முடைய பரத்தையை அவ்விடத்தே கண்டானென்க. (191) 1357. சிலம்பெனும் வண்டு பாட மேகலைத் தேன்க ளார்ப்ப நலங்கவின் போது பூத்த பூங்கொடி நடுங்கி நாணக் கலந்தனன் காம மாலை கலையின தியல்பிற் சூட்டப் புலம்பு போய்ச் சாய லென்னும் புதுத்தளி ரீன்ற தன்றே. இ-ள். அவயவவழகுஞ் சமுதாயசோபையுமாகிய பூவைப் பூத்த பூங்கொடி நாணும்படி சென்றுசேர்ந்தான்; சேர்ந்தவன் காமமாகிய மாலையைக் கந்தருவமணங் கூறிய நூலினியல்பாலே, பாட ஆர்ப்பச் சேர்த்தினானென்க; அக்கொடி தனிமைநீங்கித் தளிரையீன்றதென்க. (192) 1358. சாந்திடைக் குளித்த வெங்கட் பணைமுலைத் தாம மாலைப் பூந்தொடி யரிவை பொய்கைப் பூமக ளனைய பொற்பின் வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை யிவர்க ணாளு மாய்ந்தடி பரவ வைகு மரிவையர்க் கநங்க னன்னான். தாமம் - ஒழுங்கு. முலையினையும் மாலையினையும் பூமகளனைய பொற்பினையுமுடைய வரிவை - பதுமை. வேந்து - தனபதி. அடுகின்றவேற்கண்ணையுடைய விளங்கிழை - திலோத் தமை.. இ-ள். அநங்கனன்னான் வேந்து, விளங்கிழையென்ற இவர் கள் நாளுமாய்ந்து தன்னைப்பரவுதலாலே தான் அரிவையடி யிலே தங்காநிற்குமென்க. பதுமையையும், பரத்தையையும் ஒக்கக் கூறலாகாமை யுணர்க. (193) 1359. இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலா னங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்முலைப் போகநீக்கி யெங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேக லுற்றான் றங்கிய பொறியி னாக்கந் தனக்கொர்தே ராக நின்றான். இ-ள். இங்ஙனம் இரண்டு திங்கள் சென்றவளவிலே, வேலான் தங்கிய நல்வினையினாக்கந் தேராகநின்றவன், அங்ஙனமு ழுவலான் வந்த அன்பினையுடையவள் முலைப் போகத்தைநீக்கி இருளிடையே கலுற்றான்; அதற்கு உள்ளம் எங்ஙனமெழுந்த தென்க. கொண்டுபோதலின், நல்வினை தேராயிற்று. பிரிவிற்குத் தேவர் வருந்தினார். (194) 1360. தயங்கிணர்க் கோதை தன்மேற் றண்ணென வைத்த மென்றோள் வயங்கிணர் மலிந்த தாரான் வருந்துறா வகையி னீக்கி நயங்கிள ருடம்பு நீங்கி நல்லுயிர் போவ தேபோ லியங்கிடை யறுத்த கங்கு லிருளிடை யேகி னானே. வகை-அவளை யவசமாக்குதல். நல்லுயிர்-ஆன்மா; அது கனவிடைப்போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண்வரு மாறுபோல, இவனும் பலரையுநுகர்ந்து பின்பு கூடுவனென் றுணர்க. இனி உடம்பு நல்லுயிரை நீங்கினாற்போலென்று முரைப்ப. இ-ள். தாராண், தன்மேலே பதுமைவைத்தகையை அவள் வருந்தாபடிநீக்கிக் கங்குலிலே நல்லுயிர்போந்தன்மைபோலே இயக்கத்தை நடுவறுத்த இருளிடத்தே யேகினானென்க. (195) வேறு 1361. நீனி றக்குழ னேர்வளைத் தோளியைத் தானு றக்கிடை நீத்தலுந் தன்பினே வேனி றக்கண்வி ழித்தன ளென்பவே பானி றத்துகிற் பையர வல்குலாள். இ-ள். பதுமையைச் சீவகன் உறக்கத்திடத்தே பிரிந்தானாக, தான்பிரிந்த பின்னே அவள் கண் விழித்தாளென்க. (196) 1362. ஆக்கை யுள்ளுறை யாவிகெ டுத்தவண் யாக்கை நாடி யயவர்து போலவுஞ் சேக்கை நாடித்தன் சேவலைக் காணிய பூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ. யாக்கைநாடி-பிணித்தலைத்தேடி. இ-ள். அங்ஙனம்விழித்தவள் முயங்குதலைத்தேடி காணாமையின், உடம்பு தான் தன்னுள்ளே உறைகின்ற உயிரைக் கெடுத்து வருந்துவதொன்றுண்டாயின், அதனைப்போலவும் வருந்தி, அவனிருப்பிடங்களைத் தேடுகின்றபொழுது தன்சேவலைக் காண வேண்டிச் சேக்கையிnலதேடி அங்குக் காணாமையின், அது தங்கும்பூக்களைத் தேடுமன்னத்தையும் ஒத்தாளென்க. (197) 1363. புல்லும் போழ்தினும் பூணுறி னோமென மல்லற் காளையை வைதுமி ழற்றுவா யில்லி னீக்கமு ரைத்திலை நீயெனச் செல்வப் பைங்கிளை தன்னையுஞ் சீறினாள். இ-ள். நீ எனக்கன்புடையாரைப்போலே, என்னை யவன் விரும்பிப் புல்லுகின்ற காலத்தே நும்முயக்கமிறுகில் இவட்கு நோமெனக் காளையைவைது எனது மென்மையின் வளப்பத்தைக் கூறிப்போதுகின்றாய், இல்லினின்றும் அவனீங்குகின்ற நீக்கத்தை எனக்குரைத்திலையென்று தன் கிளிதன்னையுஞ் சீறினாளென்க. பூணழுத்திலென்றுமாம். (198) 1364. ஓவி யக்கொடி யொப்பருந் தன்மையெம் பாவை பேதுறப் பாயலி னீங்கிநீ போவ தோர்பொரு ளென்றிலை நீயெனப் பூவை யோடும்பு லம்பிமி ழற்றினாள். இ-ள். எம்பாவை பேதுறும்படி நீ பாயலினின்று நீங்கிப் போவது காரியமோவென்று கூறிற்றிலையென்று ஒப்பருந்தன்மை யையுடைய ஓவியக்கொடி பூவையோடு வருந்திக் கூறினாளென்க. பாவையென்றது - பட்டாங்குகூறுதற்கண்வந்தது; “அம்பலம் போற் - கோலத்தினாள் பொருட்டாக”(திருச்சிற்.27) என்றாற் போல. பாயலினின்று மென்பதோரிடைச் சொல் ஐந்தாவதற்கு விரிக்க. (199) 1365. தன்னொப் பாரையில் லானைத்த லைச்சென்றெம் பொன்னொப் பாளொடும் போகெனப் போகடாய் துன்னித் தந்திலை நீயெனத் தூச்சிறை யன்னப் பேடையொ டாற்றக்க ழறினாள். போகவிடாய்-விகாரம். இ-ள். நீ அவனிடத்தேசென்று எம்பொன்னொப்பா ளொடுங் கூடப்போவாயாக வென்று கூறி ஒப்பிலானைப் போகவிடாயாய் என்னிடத்தே கொண்டுவந்திலையென்று அன்னப்பேடையோடே மிகக் கழறினாளென்க. (200) 1366. மையில் வாணெடுங் கண்வள ராதன மெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீ யையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில் கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள். இ-ள். துயிலாதனவாகிய கண்களை மெய்யெங்குமுடை யாய்; நீயுண்மைகாண்பை; ஐயன்சென்றவிடத்தைக் கூறென்று மயிலைக் கயற்கண்ணாள் கையாற்றொழுதாளென்க. கண் - பீலிக்கண். கண்ணென்பதற்கேற்ப வாளென அடை கூறினார். தனக்குத்தோற்றுத் துயிலாத கண்களுடைமையின், அவனைக் காட்டுமென்று தொழுதாள். (201) 1367. வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள் விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவ ணளித்த காதலொ டாடுமென் னாருயி ரொளித்த தெங்கென வெண்சுடர் நண்ணினாள். பிள்ளைகளுக்கு விளக்கங்காவலாகவிடுதலின், எங்களை வளர்த்த மனக்கோட்ட மின்மையுடையயென்றாள். வாலியை - தூயை. இ-ள். விளக்கே! நல்லபொருள்களைக் கண்ணிற்குக் காட்டு வாய், நீதான் செம்மையை, வாலியையாதலான், நடந்துதிரியு மென்னுயிர் எவ்விடத்தே யொளித்தது; அதனை யெனக்கு விளக்காயென்று விளக்கைச் சேர்ந்தாளென்க. (202) 1368. பருகிப் பாயிரு ணிற்பின றாதெனக் கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலா மெரிய நின்றுந டுங்குகின் றாயெனக் குரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள். விளக்காமையின், அதனை இழித்துக்கூறுகின்றாள். உரைக் கிற்றி - இகழ்ச்சி. இ-ள். அவாவின்மிகுதியால் அறாதென்றுபாராதே இருளைப்பருகி, அவ்விருள் வயிற்றிலேநிற்பின் அறாதென்று கருதி, அதனை முகங்கருகிக்கான்று பின்னுந் தங்கிற்றுளதேல் அதுவருத்துமோ வென்று நின்னுடம்பெல்லாமெரியாநிற்க நடுங்குகின்றநீ எனக்குரியதோர் காரியத்தை யுரைப்பையென்று வெறுத்தாளென்க. (203) 1369. கோடி நுண்டுகி லுங்குழை யுந்நினக் காடு சாந்தமு மல்லவு நல்குவேன் மாட மேநெடி யாய்மழை தோய்ந்துளாய் நாடி நண்பனை நண்ணுக நன்றரோ. மாடத்திற் கொடிகளிலே கோடியும், அவைநாட்டுதற்குப் பண்ணுந் துளைகளும், சுதையுமென்க. கோடிப்புடவையும், மகரக் குழையும், சந்தனமும்போல் ஒரு பொருள் தோன்றிற்று. இ-ள். மாடமே! எப்பொருள்களையுங்காணவல்லாய், ஈரமுடையாய், நினக்கு இவற்றைத்தருவேன்; நண்பனை நாடி நணுகுவாயாக; அது நினக்கு நன்றென்றாளென்க. அவனும் பலதருவனென்றாள். (204) 1370. ஆட கக்கொழும் பொன்வரை மார்பனைக் கூடப் புல்லிவை யாக்குற்ற முண்டெனா நீடெ ரித்திர ணீன்மணித் தூணொடு சூட கத்திர டோளணி வாட்டினாள். இ-ள். பொன்வரைபோலுமார்பனைக் கூடும்படி தழுவி வையாதகுற்றம் நுமக்குண்டென்றுகூறி எரித்திரள்போலு மணித் தூணோடேயெற்றிச் சூடகத்தையுந் தோளணியையும் போக்கினா ளென்க. (205) 1371. கொலைகொள் வேலவன் கூடல னேகினா னிலைகொள் பூணுமக் கென்செயு மீங்கெனா மலைகொள் சந்தனம் வாய்மெழுக் கிட்டதன் முலைகொள் பேரணி முற்றிழை சிந்தினாள். இ-ள். முற்றிழை, வேலவன் கூடலனாயேகினான்; இப் பூண் இவ்விடத்து நுமக்கு என்னபயனைத்தருமென்றுகூறித் தன்முலை கொண்ட பேரணிகளைச் சிந்தினாளென்க. (206) 1372. அருங்க லக்கொடி யன்னவ னேகினா னிருந்திவ் வாகத் தெவன்செய்விர் நீரெனா மருங்கு னோவ வளர்ந்த வனமுலைக் கருங்கண் சேந்து கலங்க வதுக்கினாள். இ-ள். நுமக்கு அருங்கலத்தையும், எழுதுகொடியையு மொத்து நீங்காதவனேகினான்; இனி நீர் இவ்வாகத்தேயிருந்து என்ன காரியத்தைச்செய்வீரென்று அழகிய முலையிற் கரியகண் சிவந்துகலங்கும்படி அடித்துக்கொண்டாளென்க. அருங்கலக்கொடி அதுக்கினாளென்றுமாம். அதற்கு அன்னவன் சுட்டாம். (207) 1373. மஞ்ச சூழ்வரை மார்பனைக் காணிய துஞ்ச லோம்புமி னென்னவுந் துஞ்சினீ ரஞ்ச னத்தொடு மையணி மின்னென நெஞ்சி னீணெடுங் கண்மலர் சீறினாள். இ-ள். வரைமார்பனை நீர் எப்பொழுதுங் காண்டற்குத் துயிலாதே கொள்ளுமென்று யான்கூறவுந் துயின்றீர்; இனி யஞ்சனத்தையும் மையையும் அணிமினணிமினென்று கண்ணை நெஞ்சாலே சீறினாளென்க. அணிமின் - குறிப்பு. பின்னும் அவைகாட்டவேண்டுதலின், அவைகேளாமற் சீறினாள். (208) 1374. அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர் விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோ வருத்த முற்றன ளென்றுகொன் மேகலை குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே. விருத்தி - சீவிதம். இ-ள். மாதர் அழுதுசிவந்த கண்மலரினஞ்சனத்தையும் மையையும்விலக்குதலாலே நமக்கும் ஏதம்வரு மென்று வெருவியோ, இவடான் வருந்தினாளென்றோ, மேகலை அசைந்து ஆரவாரியாதே ஓசையடங்கியதென்க. குலுங்கல்-அசைதல். மெய்யசையாமல் அவசமானபடி கூறினார். (209) வேறு 1375. துனிவா யினதுன் னுபுசெய் தறியேன் றனியே னொருபெண் ணுயிரென் னொடுதா னினியா னிஙனே யுளனே யுரையீர் பனியார் மலர்மேற் படுவண் டினமே. இ-ள். மெல்லியவண்டினமே! யான் நும்மைப்போற் றனித் தறியேன்; அவனைப்பொருந்திநின்று அவற்கு வெறுப்பானவை செய்தறியேன், ஆதலிற் றான் என் னோடினியவன்; ஆதலான், உரைத்தீரென்று நும்மைவெறான்; நீட்டித்துரைப்பிற் போகின்ற வுயிர்தானும் ஒருபெண்ணுயிர், இது கண்டிருத்தல் பாதகம்; இது போவதற்கு முன்பே, இவ்விடங்களிலேயுளனோ? ஊனாயினான், அவ்விடத்தை யுரையீரென்றாளென்க. உளனே, ஏகாரம் - வினா. (210) 1376. நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும் வரையே புனலே வழையே தழையே விரையார் பொழிலே விரிவெண் ணிலவே யுரையீ ருயிர்கா வலனுள் வழியே. அருவிநிரையையுடைய மாற்றுள்ள பொன்விளங்கும் வரை - செய்குன்று. இ-ள். வரை முதலியவற்றை விளித்து உயிர்காவலனிருக் கின்ற விடத்தை உரையீரென்றா ளென்க. (211) 1377. எரிபொன் னுலகின் னுறைவீ ரிதனைத் தெரிவீர் தெரிவில் சிறுமா னிடரிற் பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர். இ-ள். அமரீர்! நீர் பொன்னுலகிலேயிருப்பீராதலின், அவன்போன வழியைத் தெரிந்திருப்பீர்; அங்ஙனந் தெரிந்தி ருப்பவுந் தெரிவில்லாத மானிடரைப்போலே அருளிலிராயிரா நின்றீர்; எனக்கு நோய்மிகாநின்றது; அதனால் உயிர்காத்தல் இனியரிது; இதனைக் காக்கும்ப அவனை யருளீரென்றாளென்க. (212) 1378. புணர்வின் னினிய புலவிப் பொழுதுங் கணவன் னகலின் னுயிர்கை யகற லுணர்வீ ரமரர் மகளீ ரருளிக் கொணர்வீர் கொடியே னுயிரைக் கொணர்வீர். இ-ள். அமரர்மகளீர்! கொடியேனுயிரைத் தருவீராக; அதுதருமா றெங்ஙனே யென்னின், புணர்ச்சியிற்காட்டிலினிய புலவிக்காலத்துங் கணவனீங்கில் உயிர்நீங்குதலையறி வீராதலின், அருளி அவனைக் கொண்டுவாருங்களென்றா ளென்க. (213) 1379. நகைமா மணிமா லைநடைக் கொடிநின் வகைமா மணிமே கலையா யினதே லகையா தெனதா விதழைக் குமெனத் தகைபா டவலாய் தளர்கோ தளர்கோ. இது முதல்எதிhபெய்துபரிதல். இ-ள் மாலையினையுடைய நடந்துதிரியுங்கொடியே! எனதாவி நின்மேகலையாயிற்றாடியின், தாழாதே தளிர்க்கு மென்று நலத்தைப்பாராட்டவல்லவனே! தளர்கோதளர்கோ வென்றாளென்க. ஓகாரம் - எதிர்மறை. இறந்துபடுவேனென்பது கருத்து. தளர்கு - தன்வினையுரைக்குந் தன்மைச்சொல். வல்லாய்-பொய்யுரைக்க வல்லாய். (214) 1380. புனைதார் பொரநொந் துபொதிர்ந் தவென வினையா ரெரிபூண் முலைகண் குளிர வுனகண் மலரா லுழுதோம் பவலாய் நினையா துநெடுந் தகைநீத் தனையே. இ-ள். மாலைபட்டழுந்த அதுபொறாதே நொந்து வீங்கின வென்று கூறி, முலைதமதுகண்குளிரும்படி உன்னுடைய கண் மலராலேயுழுது பொய்யை மெய்யாகப் பரிகரிக்கவல்லவனே! நெடுந்தகாய்! இதனை மெய்யென்றுகருதினவள் யாம்பிரிந்தால் ஆற்றாளென்று நினையாதே நீத்தாய்; இனி ஆற்றும்வகை கூறென்றாளென்க. வகுத்த தூசிப்படைபொருதலின், நொந்து புடைக் கொண்டன வென்றுகருதிக் கண்குளிர ஒம்பவல்லாயென்றும் ஒருபொருள் தோன்றிற்று. (215) 1381. அருடோ வழிநின் றறனே மொழிவாய் பொருடேர் புலனெய் தியபூங் கழலா யிருடேர் வழிநின் றினைவேற் கருளா யுருடே ருயர்கொற் றவன்மைத் துனனே. கொற்றவனும், மைத்துனனுமென உம்மைத்தொகை. ஏகாரம் - ஈற்றசை. இ-ள். கழலாய்! தனபதியும், உலோகபாலனும் நின்னுடன ருளிருக்கும் படியை ஆராயுமிடத்து, அவர்கள் தத்துவத்தை யாராயு மறிவைப் பெறவேண்டிநின்று அவர்க்கு அறனேமொழி கின்றநீ இருள்செறிந்தவிடத்தேநின்று வருந்துகின்றவெனக்கு அருளுகின்றிலை; ஆதலான், நினக்கு முற்படச் சொல்லுத லெளிதாய்ச் சொல்லிய வண்ணஞ்செய்தல் அரிதாயிருந்த தென்றாளென்க. (216) 1382. மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோ வுகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ விகவா விடரென் வயினீத் திடநீ தகவா தகவல் லதுசெய் தனையே. “உகப்பே யுயர்தல்” (தொல்.உரி.8) நீத்திட - பெருக்கிட. இ-ள். இடர்தான் பிறரிடத்துச்செல்லாதே என்னிடத்தே மிகுத் திடுதற்குயான் அறிவின்மையின் மிகவுமாயதோர் வன்மை செய்தேனோ? அன்றி நின்னுள்ளந்தான் ஒருகா லன்புமிக்குப் பின்பு உவர்த்ததோ? கூறுவாயாகவென்றாள். அவ்வெளிப்பட்ட வுருவங் கூறாதுநிற்றலின், அதனைநோக்கி, நீ தகவல்லாதது செய்து நின்றாய்; இனித்தகும்படி வந்து முயங்குவாயாக வென்றாளென்க. விடந்தீர்ந்து உயிரைத்தந்தவன் முன்னின்று முயக்கந்தராது இறந்துபடுவித்தலைத் தகவல்லதென்றாள். தகவா - பெயருமாம். (217) 1383. குளிர்துன் னியபொன் னிலமே குதலாற் றளரன் னநடை யவடாங் கலளா யொளிர்பொன் னரிமா லையொசிந் திஙனே மிளிர்மின் னெனமின் னிலமெய் தினளே. இ-ள். பொன்னரிமாலை, அவ்வுருவம் வந்துமுயங்காது நிற்றலிற் றன்மேனியிற் காமத்தீயாறிக் குளிர்ச்சிநெருங்கவேண்டி முயங்குதற்குப் பொன்னிலத்தே அவடான்சேறலின், அப்பொழுது அவசத்தாலே தளர்ந்தவண்ணம் போலுநடையைத் தாங்க மாட்டாளாய் ஒசிந்து இந்நிலத்தே பிறழுமின்னென நிலத்தே வீழ்ந்தாளென்க. பொன்னரிமாலை - பெயர். மீநிலமும் பாடம். (218) 1384. தழுமா வலிமைந் தவெனத் தளரா வெழு மே ழடியூக் கிநடந் துசெலா விழுமீ நிலமெய் திமிளிர்ந் துருகா வழுமா லவலித் தவணங் கிழையே. அங்ஙனம்வீழவுந் தழுவாமையின், மாவலிமைந்தவென் றாள். ஏழடிசெல்வது ஒருமரபு. இ-ள். அவ்வணங்கிழை, அவலித்துப் பின்னும் முயங்கு தற்குத் தளராவெழும்; எழுந்து ஏழடியளவு நடந்துசெல்லா, மாவலி மைந்தனே! என்றுகூறித் தழுவும்; ஆண்டு அவ்வுருவம் பற்றுக் கோடாகாமையின், வீழும்; வீழ்ந்து நிலத்தையெய்திப் புரண்டு உருகியழுமென்க. மீநிலம் - மேலாநிலம். (219) வேறு 1385. கரப்புநீர்க் கங்கை யங்கட் கடிமலர்க் கமலப் பள்ளித் திருத்தகு திரைக டாக்கச் சேப்புழிச் சேவ னீங்கப் பரற்றலை முரம்பிற் சின்னீர் வறுஞ்சுனைப் பற்று விட்ட வரத்தவாய்ப் பவளச் செந்தாட் பெடையன்ன மழுவ தொத்தாள். இ-ள். தான்சேவலைக்கூடுதலாலே முன்பு தானிருந்த பாலை நிலத்திற்சுனையிற் பற்றைவிட்ட பெடையன்னம், கங்கை யின் அழகிய கள்ளையுடைய கமலப்பள்ளியிலே திரைகளலைத் துத்துயிற்றச் சேவலொடுதுயில்கின்றவளவிலே, அதுநீங்குதலால் அச்சுனையில் இருந்தழுவதுண்டாயின், அதனையொத்தா ளென்க. கங்கைக்குநடுவிற் பாதாளகங்கை; சடையிற் கரத்தலுமாம். அவனைக்கூடியபின்பு தந்தையில்லங் கங்கையாய், அவனீங் குதலால் அச்சுனையின்றன்மைத்தாயிற்று. அன்னஞ் சுனை யிற்றங் குதல் - இல்பொருளுவமை. (220) 1386. மெழுகினாற் புனைந்த பாவை வெய்துறுத் தாங்கு மோவா தழுதுநைந் துருகுகின்ற வாயிடைத் தோழி துன்னிக் கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க் கிளைநரம் பனைய சொல்லாள் கழிபெருங் கவலை நீங்கக் காரண நீர சொன்னாள். இ-ள். அங்ஙனம் ஓவாதழுது மெழுகாற்செய்தபாவையைத் தீயுறுத் தாற் போல நைந்துருகுகின்ற அக்காலத்தே, கெழீ இயினாளாகிய தோழி துன்னி, நரம்பனையசொல்லாள் கவலைநீங்கி யிருக்கும்படி, காரணமான தன்மையையுடையவற்றைக் கூறினா ளென்க. ஆங்கும், உம்மை-இசைநிறை. காமமும், இருவினை நிலையாமையு முதலியவற்றைக் காரண நீரவென்றார். பிரி வுணர்த்தி ஆற்றுவித்துப் பிரியாமையின், இங்ஙனமாற்று விக்கின்றாள். (221) 1387. தெள்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகி யள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனு முள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற் கள்ளற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள். இ-ள். கோதாய்! உலகிற் காதலித்தோர் காதலிருக்கு படி கேள்; நுகருந்தன்மையுறும்படி பழுத்தகாமங் கடலிற்காட்டின் மிக்கு ஆடவர்நெஞ்சை யிறுகப்பிணித்த தேனுந் தோன்றாதிருக்க வேண்டினால் உருகினபொன்னிலுற்ற நீர்ப்புள்ளிபோலத் தோற்றாதாமென்றாளென்க. அற்று - அத்தன்மைத்து. (222) 1388. ஓடரி யொழுகி நீண்ட வொளிமலர் நெடுங்க ணாரைக் கூடரி யுழுவை போல முயக்கிடைக் குழையப் புல்லி யாடவ ரழுந்தி வீழ்ந்தும் பிரிவிடை யழுங்கல் செல்லார் பீடழிந் துருகும் பெண்ணிற் பேதைய ரில்லை யென்றாள். இ-ள். அத்தன்மைத்தாகிய காமத்தையுடைய ஆடவர் கண்ணாரை முயக்கிடத்தே வருந்தும்படிபுல்லி அழுந்திவீழ்ந்தும் பிரிவிடத்து அரியுமுழுவையும்போலே வருந்தார்; அத்தன்மை யின்றியே பிரிவிடத்துவருந்தும் பெண்ணிற்காட்டிற் பேதையார் உலகத்து இல்லைகாணென்றாளென்க. இப்பேதைமை விளைக்கின்றமை மேற்கூறுகின்றாள். கூடுதல் - பெடையோடு கூடுதல். (223) 1389. பேதைமை யென்னும் வித்திற் பிறந்துபின் வினைக ளென்னும் வேதனை மரங்க ணாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலுங் களிப்பு மென்னுங் கவடுவிட் டவலம் பூத்து மாதுய ரிடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். இ-ள். அறியாமையென்கின்ற வித்தினிடமாகத் தீவினை யென்னும் வேதனை மரங்கள் பிறந்து, தோற்றி, ஆசையென்கின்ற வேரை வீழவிட்டு, தான்முற்றி, பெறாததன்மேற் செல்லுங் காதலும் பெற்றதன்மேற் சொல்லுங் களிப்புமென்னுங் கவடுகளை விட்டு, அவலத்தைப்பூத்து, கவலையைக்காய்த்து, மரணத்தைத் தருகின்ற கையாற்றினை இவ்வுடம்புநுகரும்படி பகுத்துத்தந்து, பின்னும் அங்ஙனங்காய்த்தற்கு அம்மரந்தான் நிற்குமென்றா ளென்க. பழுத்தல் - உடம்புபோதல். தீவினைநிற்றலின், நிற்கு மென்றது. ஏகாரம் - தேற்றம். (224) 1390. தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச் சிறுதிரைப் போர்வை போர்த்து மீன்சென்ற நெறியும் போல விழித்திமைப் பவர்க்குத் தோன்றா மான்சென்ற நோக்கின் மாதே மாய்ந்துபோ மக்கள் யாக்கை யூன்சென்று தேயச் சிந்தித் துகுவதோ தகுவ தென்றாள். விழித்திமைப்பவர் - மக்கள். ஓகாரம் - எதிர்மறை. இ-ள். மாதே! மக்கள்யாக்கை, தேனினஞ்சென்றவழியும் மீன்போன வழியும் போலப் போனவழியு மக்கட்குத்தோன்றாவாய் மாய்ந்துபோம்; அங்ஙனம் போவதனை வேதனையாற் றேய வருத்திக் கெடுவது நமக்குத் தகாதென்றாளென்க. (225) 1391. பிரிந்தவற் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள் சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடுகடல் வெள்ள மாற்றா முரிந்தநம் பிறவி மேனாண் முற்றிழை யின்னு நோக்காய் பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு கண்டாய். 1392. அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்க னென்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி யின்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள். இவையிரண்டுமொரு தொடர். இ-ள். முற்றிழாய்! இன்னும் யான் கூறுகின்றதனை நெஞ்சாலேநோக்காய்; மேனாளிற்கெட்ட நம்பிறவிகளிலே இப்பொழுது பிரிந்தவனேகணவனாக, அவற்கேயழுத கண்ணீர் கள் சொரிந்தன வற்றைக் குவித்துப்பார்த்தாற் கடலினீர் உறையிடவு மாற்றாது; அங்ஙனங் கழிந்த நாளேயன்றிப் பாவாய்! இது மேலும் அழுதற்குத் தொடங்கினபடி காண்; ஆதலின், அங்ஙனமழுதலு மெளிது; நம்முடம்பின் உயிர்போகும் படியிறத்தலுமெளிது; தங்காதலர் சேர்ந்து பிரிந்தனனாற்பிறந்த துன்பத்தாலே வருத்தப் பட்டமகளிர் அங்ஙனம்வருத்தின அவ் வருத்தத்தைப்பொறுத்து இது நமக்கின்ப மென்று கருதியிருத்தலே இவ்வுலகில் அரியகாரியம்; இதனை நீயுநிகழ்த்த வேண்டாவோ வென்றா ளென்க. கள்-அசை. போலும்- ஒப்பில்போலி. (226-7) 1393. மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங் கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற் கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார் செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார். 1394. இளமையின் மூப்புஞ் செல்வத் திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற் கிளைநரிற்பிரிவுநோயில்காலத்துநோயுநோக்கி விளைமதுக்கமழுங்கோதைவேலினும்வெய்யகண்ணாய் களைதுய ரவலம் வேண்டா கண்ணிமைப் பளவு மென்றாள். இவையிரண்டுமொருதொடர். மயற்கை - துரால். கயற்கணினளவும் - கயல்போலுங் கண்ணிற்றோன்றும் ஒரு மாத்திரையளவும். இ-ள். அங்ஙனமாற்றவேண்டுதலிற் பலபிறப்பிலும் பிறந்து வந்து இம்மக்கள் யோனியிற் பிறத்தலும் மயற்கை; அப்பிறவிக்குப் பிரிவுஞ்சாதலும் இமைப்பளவும் இடையீடுபடாத தொன்றா தலான், ஒருமாத்திரையுங் கவற்சிகொள்ளார்; இயற்கையே யென்றுகொள்வார். அன்றி உள்ளேகவற்சி கொண்டார், பற்றுள் ளத்தாலுளதாம் பிறவியாகிய நச்சுக்கடலிலே யழுந்தாநின்றார்; ஆதலாற் கண்ணாய்! நீ இளமையிலே மூப்புவருமென்றும், செல் வத்தே மிடிவருமென்றும், புணர்ச்சிகாலத்தே பிரிவுவருமென்றும், நோயில்காலத்தே நோய்வருமென்று நோக்கி, உயிருடன்றங்கு மளவுந் துயரைக் களைவாயாக; இவ்வவலம் வேண்டாவென்றா ளென்க. (228-9) 1395. முத்திலங் காகந் தோய்ந்த மொய்ம்மலர்த் தாரி னானங் கைத்தலத் தகன்ற பந்திற் கைப்படுங் கவல வேண்டா பொத்திலத் துறையு மாந்தை புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே நித்தில முறுவ லுண்டா னீங்கினா னல்லன் கண்டாய். 1396. வடிமலர்க் காவி னன்று வண்டளிர்ப் பிண்டி நீழன் முடிபொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கிக் கடியதோர் கௌவை செய்யுங் கட்டெயிற் றரவி னென்றேன் கொடியனாய் பிழைப்புக் கூறேன் குழையலென் றெடுத்துக் கொண்டாள். இவையிரண்டுமொருதொடர். இ-ள். பொன்னே! யான்நெடுநாள் எங்ஙனமாற்று வேனென்று கவலவேண்டா; நித்திலமுறுவலுண்டான் நம்மைத் துறந்தானல்லன்; காரியத்தால் நீங்கினான்; அதற்குக் காரணமென் னெனின், பொந்தாகிய இல்லிலேயுறையும் ஆந்தை பேடுஞ் சேவலுங்கூடியிருந்து அவன்வரவைக்கூறாநிற்கும். அதனால் அவன் நங்கையிலகன்ற பந்து நங்கையிலே வருமாறுபோலே அகப்படுவன்; முற்றிழாய்! யான் ஒரு காலத்தும் பிழைப்புக்கூறேன்; அது நீயே யறிவாய்; அன்று காவிலே பிண்டிநிழலிலே அப்பறவை முடியுங்காரியத்தைக்கூறுதலின், நின்னை நோக்கி, இஃது அரவி னாலே கௌவைசெய்யுமென்று கூறினேனா தலால். கொடிய னாய்! இதனையுநீதெளிந்து இனிக்குழையாதே கொள்ளென்று கூறி, அவளையெடுத்துக் கொண்டாளென்க. (230-31) 1397. அலங்கலுங் குழலுந் தோழி யங்கையி னடைச்சி யம்பூம் பொலங்கலக் கொடிய னாடன் கண்பொழி கலுழி யொற்றிக் கலந்தகி னாறு மல்குற் கவான்மிசைக் கொண்டி ருந்தாள் புலர்ந்தது பொழுது நல்லா ணெஞ்சமும் புலர்ந்த தன்றே. இ-ள். அங்ஙனமெடுத்த தோழி, கையாலே கொடியன்னாள் அலங்கலையுங் குழலையுங் சொருகிக் கண்ணீரையுந் துடைத்து அல்குலையுடையகுறங்கின்மேலே கொண்டிருந்தாள்; அப்பொழுது இரவும் விடிந்தது; அவள் நெஞ்சுந் தெளிந்ததென்க. (232) 1398. பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக் கண்கனிந்; தினியகாமச் செவ்வியுட் காளை நீங்கத் தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந் தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார். இ-ள். பண்முற்றுப்பெற்று இனியபாட்டையுடைய ஒலிக்கின்ற நரம்பு பாடற்கண்ணே நெகிழ்ந்தாற்போலே மெய்யிடங் குழைந்து இனிய காமச்செவ்வியிலே சேயிழையைக் காளை நீங்கினானாதலின், அவள்தாயரெல்லாரும் பனிமுருக்கின தாமரைக்காடுபோலே முகங்கருகினாரென்க. (233) 1399. சில்லரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித் திருவி னற்றாய் முல்லையங் குழலி னாய்நின் முலைமுதற் கொழுநன் மேனாட் சொல்லியு மறிவ துண்டோ வெனக்குழைந் துருகி நைந்து மெல்லியல் கங்குற் சொல்லிற் றிற்றென மிழற்று கின்றாள். வேறு 1400. வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுர நினைத்து நீங்குத லாண்டகட னீங்கினாற் கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன் மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான். 1401. விரைசெய் தாமரை மேல்விளை யாடிய வரைச வன்னம மர்ந்துள வாயினு நிரைசெய் நீலநி னைப்பில வென்றனன் வரைசெய் கோலம ணங்கமழ் மார்பினான். இவைமூன்றுமொருதொடர். இ-ள். பதுமையுடையநற்றாய், சூழலினாய்! நின்முலைக்கு முதல்வனாகியகணவன் முன்னாட் பிரிவுதோன்றச் சொல்லியு மறி வதுண்டோவென்று வினாவ; அவள் நெகிழ்ந்துருகிக்கெட்டு, கங்குலில் அவன்கூறியது இத்தன்மைத்தென்று கூறுகின்றவள், தம் மனைவியைநினைந்து வருந்தியும் பின்னும் போர்த்தொழிதற்கும் பொருட்கும் வெஞ்சுரத்துப்போதல் ஆண்மக்கள் தொழில்; அவர் அங்ஙனநீங்கினால் மனைவியர் தந்தொழில் இறந்துபடாதே மனையிடத்திலிருத்தலென்று கூறினான்; அங்ஙனங் கூறி வரைபோலுமார்பினான், தாமரை மேல் விளையாடியவன்னம் ஆண்டு நீலம்பயின்றுளவாயினும் அந்நீலத்தை நினையா வென்றுங் கூறினானென்றாளென்க. நீலம் - பரத்தை. எனவே குலமகளிரையே இனிநுகர்வே னென்றான். அரசவன்னம் - அரசவாழ்க்கைபோல அக்குச் சாரியை கொடுத்துச் செய்கைசெய்து, “அம்மரபொழுகும்” (தொல். குற்றியலுகர.12) என்றமிகை யான்முடிக்க. (234-6) 1402. பொன்வி ளைத்த புணர்முலை யாள்சொல வின்ன ளிக்குரல் கேட்ட வசுணமா வன்ன ளாய்மகிழ் வெய்துவித் தாளரோ மின்வ ளைத்தன மேகலை யல்குலாள். பொன் - பசப்பு. அசுணமா - இசையறிவதோர்விலங்கு. “அசுணங் கொல்பவர் கைபோனன்றும்” (நற்.304) என்றார். இ-ள். திலோத்தமை, பதுமையங்ஙனங்கூறக்கேட்டு இனிய அளிக்கத்தக்க குரல்நரம்பைக்கேட்ட அசுணமாப்போலே தான்மகிழ்ச்சி யுற்று அவளை மகிழ்ச்சியெய்துவித்தாளென்க. அது மேற்கூறுகின்றார். (237) 1403. ன்னந் தானவன் றாமரைப் போதுநீ நின்னை நீங்கின னீங்கலன் காதலா னின்ன தாலவன் கூறிற்றெ னச்சொனாண் மன்ன னாருயிர் மாபெருந் தேவியே. இ-ள். தனபதியதுயிராகியதேவி, அவன்கூற்று இத்தன்மைத் தாயிருந்ததது; எங்ஙனேயென்னின், அன்னமவன்; தாமரைப்பூநீ; நின்னைக்காரியமிருந்தபடியால் இப்பொழுது நீங்கினான்; காதலிருந்தபடியால் முழுக்கநீங்கானென மகிழ்வெய்தக் கூறினா ளென்க. இவளிறந்துபடுவளென்று நீலங் கூறிற்றிலள். நின்னினீங் கின னென்றும் பாடம். (238) வேறு 1404. சொரிபனி முருக்க நைந்து சுடர்முகம் பெற்ற போதே பரிவுறு நலத்த வன்றே பங்கய மன்ன தேபோல் வரிவளைத் தோளி கேள்வன் வருமென வலித்த சொல்லாற் றிருநலம் பிறந்து சொன்னா டேனினு மினிய சொல்லாள். இ-ள். பங்கயம், பனிகெடுத்தலிற்கெட்டு, ஞாயிறுதோன்று நிலைமையைப் பெற்றபொழுதே அன்புறுநலத்தையுமையவன்றே, அதுபோலச் சொல்லாளாகிய வளைத்தோளி, தன்கேள்வன் வருமெனத் தாய்கூறியகூற்றாலே நலம்பிறந்து, தன்னுள்ளே ஒருமொழி கூறினாளென்க. (239) 1405. நஞ்சினை யமத மென்று நக்கினு மமுத மாகா தஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனு மஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றே வஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள். அவன்கூடியபின்பு நீங்குந்தன்மையைத் தானுடைமையிற் றன்னை நஞ்சென்றாள்; நீக்கமிலின்பந் தருதலிற் பிறரை அமுத மென்றாள். அட்டதென்றது பாம்பு பல்லுயிரையும் வருத்துந் தன்மையை மயில் கொன்று அஞ்சுவித்ததனை; “செய்ந் நன்றி கொன்ற மகற்கு” (குறல்.110) என்றாற்போல. இ-ள். அவன் தனக்குக் கட்கினிமைமாத்திரையால் நஞ்சை அமுதமென்று உட்கொண்டு நுகர்ந்தானாயினும், அந்நஞ்சு நஞ்சேயாய் விடும்; அதுவுமன்றி மயில் அரவைத் தனக்குள்ளே யாக்கிக்கொண்டு தன்னையேநோக்கும்படி அஞ்சுவித்ததாயினும், கருடனைப்போலச் சேணிடையினு நினைப்பித்து அஞ்சுவிக்க வல்லமாட்சி சிறிது மதற்கில்லை; மஞ்சனுக்கு நஞ்சும்மயிலும் போலு நீர்மையையுடைய யான், அமுதமுங் கருடனும் போலு மகளிரைப்போலே வருந்துவ தென்னென்றாளென்க. இதனாற் றன்வீறின்மையையும். பிரிவின்கண் வருத்துந் தன்மையின்மையையுங் கூறினாள். (240) வேறு 1406. பொய்கையுட் கமலத் தங்கட் புள்ளெனு முரச மார்ப்ப வெய்யவன் கதிர்க ளென்னும் விளங்கொளித் தடக்கை நீட்டி மையிருட் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம் பையவே பரந்து நோக்கிப் பனிவரை நெற்றி சேர்ந்தான். இ-ள். அவ்வளவிலே, வெய்யோன், பையவே பரந்து மண்ணக மடந்தைகோலத்தை மனத்தாலேநோக்கிக் கமலத்திலே வண்டுக ளென்னும் பள்ளியெழுச்சி முரசம் ஆரவாரியாநிற்பத் தன்கதிர்க ளென்னுங் கையைநீட்டி அம்மண்மடந்தைய திருளாகிய போர்வையை நீக்கி உதயகிரியினெற்றியிலே சேர்ந்தானென்க. (241) 1407. செவ்வழி யாழி னூறுந் தீஞ்சொலாட் குற்ற தெல்லா மவ்வழி யரசற் குய்த்தார்க் கரசனு மவல மெய்தி யெவ்வழி யானு நாடி யிமைப்பின தெல்லை யுள்ளே யிவ்வழித் தம்மி னென்றா னிவுளித் தேர்த் தானை யானே. இ-ள். மகரயாழைப்போல் இனிமையூறுஞ் சொல்லாளாகிய பதுமைக்குப் பிறந்த வருத்தமெல்லாந் தானையானாகிய தனபதிக்கறி வித்தார்க்கு அவனும் வருந்தி, எவ்விடத்தேயாயினும் அவனைத் தேடி ஒருகணத்தெல்லைக்குள்ளே இவ்விடத்தே தாருங்க ளென்றானென்க. (242) வேறு 1408. மின்னுளே பிறந்ததோர் மின்னின் மேதகத் தன்னுளே பிறந்ததோர் வடிவு தாங்குபு முன்னினான் வடதிசை முகஞ்செய் தென்பவே பொன்னுளே பிறந்தபொன் னனைய பொற்பினான். இ-ள். பொற்பினான், தன்னைத்தேடி வந்தா ரறியாதபடி, மின் மேகமாக அதற்குள்ளேபிறந்த மின்போலே தன்னிடத்திலே தோற்றின தொரு புதுவடிவைத் தான்றாங்கி வடதிசையை நோக்கிப் போகக் கருதினானென்க. கடுமைக்கும், வடிவிற்கும் மின் உவமை. இஃது இல் பொருளு வமை. இதனாற்றூரகமனங் கூறினார். பொன்னிலே பிறந்த பொன் - ஓடவைத்தபொன். (243) 1409. வீக்கினான் பைங்கழ னரல வெண்டுகி லாக்கினா னிருதுணி யணிந்த பல்கல னீக்கினா னொருமகற் கருளி நீணெறி யூக்கினா னுவவுறுமதியி னொண்மையான். இ-ள். மதிபோனிறைந்த கலைகளையுடையான் முன்பு ஒலிக்கும் படி கழலைக் கட்டினவன், இப்பொழுது கடிதிற் போவதற்கு நொய்தாகத் துகிலை இருதுணியாக்கினான்; ஆக்கிப் பூண்களை எதிர்ந்தானொரு வற்கு அருளிக்கொடுத்தான்; கொடுத்து நெறியைப்போதற்கு முயன்றா னென்க. (244) வேறு 1410. வேந்தனால் விடுக்கப் பட்டார் விடலையைக் கண்டு சொன்னா ரேந்தலே பெரிது மொக்கு மிளமையும் வடிவு மிஃதே போந்ததும் போய கங்குல் போம்வழிக் கண்ட துண்டேல் யாந்தலைப் படுது மைய னறியினீங் குரைக்க வென்றார். இ-ள். அரசனாற்போக விடப்பட்டவர்கள் சீவகனைக் கண்டு ஒரு வார்த்தை கூறினார்: இளமையும் வடிவும் இத்தன்மைத்தே யாதலான், நின்னையே யவன்பெரிது மொக்கும்; போந்ததும் போனவிரவிலே, போகின்றவிடத்து யாங்களவனைக் கண்ட துண்டாகில் அப்பொழுதே சென்று தலைப்படுவேம்; அதுபெற்றி லேமாதலின், ஐயன் இவ்விடத்தே அவனைக் கண்டறியின் உரைப் பாயாக வென்றாரென்க. (245) 1411. நெய்கனிந் திருண்ட வைம்பா னெடுங்கணாள் காத லானை யையிரு திங்க ளெல்லை யகப்படக் காண்பி ரிப்பாற் பொய்யுரை யன்று காணீர் போமினம் போகி நங்கண் மையலங் களிற்று வேந்தன் மைந்தனுக் குரைமி னென்றான். அவர் கூறாதொழியவும், மேல் தான்கூறுகின்றமொழி உண்மை யென்று அவருணர்ந்து போதற்கும் சோதிடத்தால் அறிந்து கூறுவாரைப்போலே, நெடுங்கணாள் காதலானை என்றான். இ-ள். காதலானை ஒன்பதாந்திங்களிலே காண்பீர்; இப்பாற் காணீர்; யான் கூறியது பொய்யுரையன்று; இனிப்போ மின்; போய் நுங்கள் வேந்தனுக்கும் மைந்தனுக்கும் உரைப்பீராக வென்றா னென்க. யான்கூறிய நாளுக்குள்ளே காண்பீரென்க. அம் - அசை. ஐயிருதிங்களெல்லையகப்படவென்றது - பத்தாகிய எல்லைக் குள்ளே ஒருதிங்கள் குறையவென்றது. எனவே ஒன்பதாந் திங்களா யிற்று. பதுமையாரிலம்பக முற்றிற்று. ஆறாவது கேமசரியாரிலம்பகம் 1412. வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற் றேனும் வழங்கும் பைந்தார் விசயை சிறுவன் றேங்கொ ணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாய கானம் வழங்கன் மேவிக்காலின் னேகி னானே. தேனும், உம்மை - இசைநின்ற. இ-ள். கையினையும் மார் பினையுந் தாரினையுமுடைய சிறுவன், பதுமைவருந்தக் கானத்தே போதலைப் பொருந்தி, ஊர்திகளின்றிக் காலாலேகினா னென்க. அரிஞ்சயன்குலத்தில் விசயை சிறுவன் இங்ஙனம் போவதேயென்றிரங்கி, ‘விசயை சிறுவ’ னென்னறார். (1) 1413. சிலைகொ ணாணிற் றீராத்திருந்து கற்பின் னவர்தம் மிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்க முலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி மூழ்கும் மொய்ம்பன் மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான். நாணிற்றீராக்கற்பு - நாண் தான் கெடுமளவும் ஒருவாக்கிற் புரிந்த முறுக்குடையாமையின், அதுபோலுந் தீராக்கற்பு. வருத்தம் - புணர்ச்சியாலுண்டான அவசம். இ-ள். கற்பினவர்தம் இன்பவருத்தநீங்க முலை தம்மிடத்தே கொண்ட கண்களைத் தன்கண்ணினாலெழுதி மூழ்குமொய்ம்பன் கானத்தைப்பொருந்தி வெறுப்பற்றுப் போகாநின்றா னென்க. (2) 1414. கனிகொள் வாழைக் காட்டுட் கருமை மெழுகி யவைபோன் றினிய வல்லா முகத்த முசுவுங் குரங்கு மிரியத் துனிவு தீர நோக்கித் தோன்றல் செல்லு முன்னாற் பனிவெண் டிரைசூழ் கடல்போற் பழுவந் தோன்றிற் றவணே. கரிய மையை மெழுகிவைத்தவைபோலு முகத்தவாகிய முசு. முன்னால், ஆல் - அசை. பழுவம் - முன்கூறிய கல்லதரத்தம். இ-ள். வாழைக்காட்டின் முசுவுங்குரங்குந் தன்னைக்கண்டு இரிதலின், அவை துனிவுதீரும்படி அருளிப்பார்த்துத் தலைவன் போம் அவ்விடத்தின்முன்னே கடல் போலே ஒருகாடு தோன்றிற் றென்க. (3) 1415. பருகு வாரிற் புல்லிப் பயங்கண் மாறத் துறக்கும் முருகு விம்மு குழலார் போல மொய்கொ டும்பி யுருவப் பூங்கொம் பொசியப் புல்லித் தீந்தேன் பருகி யருகு வாய்விட் டார்ப்ப வண்ணன் மெல்லச் சென்றான். இ-ள். நீரைப் பருகுவாரைப்போலே புல்லிக் கைப்பொருளறு தலாலே அவரைத்துறக்கும் பரத்தையரைப்போலே, தும்பி தேனுள்ள காலத்துக் கொம்பொசியப்புல்லி அதனைப் பருகி அதுவறிதாக அக்கொம்பைவிட்டுத் தூற்றுவனபோல ஆர்ப்ப, அதனைக்கண்டு தலைவன் சென்றானென்க. அப்பழுவத்திற்போகாதே சித்திரகூடத்தைநோக்கிப் போனானென்க. (4) 1416. செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி னெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக் கொடல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற் செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான். இ-ள். திருமிக்கார்மனம்போலே மேனோக்கி, செல்வமில்லா தார் நெஞ்சு போலே பகலே இருளையுடைத்தாய், பூந்தாது இனிதுபோலே ஒழுகி, பாம்புபோலேதலைகரந்து, கீழ்மக்கள் நட்புப்போலே செல்லக் செல்லக் குறையும் வழிபொருந்திய மலையைச் சேர்ந்தானென்க. “யானைக்கயிற்றுப்புறத் தன்ன” (அகநா.128) என்றும், “எடுத்துநிறுத் தன்ன” (மலைபடு 16) என்றுங்கூறுதலின், வழியை யோங்கியென்றார். இனிது போலெனவே துன்பமே யுணர்த் திற்று. “மண்பக வீழ்ந்த கிழங்கழ் கழியைச் சண்பக நிறைத்த தாதுசேர் பொங்கர், பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக், கையறு, துன்பங் காட்டினுங் காட்டும்” (சிலப். 10:68-71) என்றார் பிறரும்’. மாவின்மயங்கியென்றுபாடமோதிப் புலி முதலியவற்றான் மயங்கி யென்றுமுரைப்ப. (5) 1417. சுiனகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியா வனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கி யினைவ போலும்வரையின் னருவி யினிதி னாடி நனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான். இ-ள். தன்னைச்சூழ்ந்த குவளை கண்களாக விழி.த்து மைந்தனுருவத்தைநோக்கி அவற்கிரங்கி யழுவனபோலும் அருவியை யுடையவரையிற் சுனைகளிலே யாடி நனையைத் தம்மிடத்தேகொண்ட போதாலே திருவடிகளை மறைத்து நாதனைப் பாடாநின்றானென்க. (6) வேறு 1418. செய்தா னிருவினையின் பயத்தைச் சேருஞ் சென்றென்றி யெய்தா னதன்பயத்தைப் பிறனே துய்த்த லியல்பென்றி கொய்தாமந் தாழ்ந்தொசிந்த குளிர்பூம் பிண்டிக் கோமானே யிஃதேநின்சொ லியல்பென்றா லடியே னின்னைத் தொழுதேனே. இ-ள். இருவினையையுஞ் செய்தவொருவன் அவ்வினையின் பயனை அனுபவிக்கு மென்று கூறாநின்றாய்: ஆன்மா வொன்றாதலின், அவனனுபவிப்பனென்றாய்; பிறப்பு வேற்றுமை யாற் செய்தவனாய் நின்று எய்தான், பிறனுமாய்த் துய்ப்பனென் றாய். கோமானே! நின்வார்த்தை இரண்டுபட்டிருத்தலின், நினக்கஞ்சித் தொழுதேனென்றா னென்க. (7) 1419. உண்டே தனதியல்பி னுணருங் காலை யுயிரென்றி யுண்டாய வவ்வுயிரேபிறிதி னில்லை யெனவுரைத்தி வண்டார்த்து நாற்காதம் வண்ண மாலை சுமந்தொசிந்து கொண்டேந்து பூம்பிண்டிக் கோமா னின்னைத் தொழுதேனே. இ-ள். உணருங்காலத்து உயிர் தனதியல்பால் உண்டே யென்று கூறாநின்றாய், உண்டாய அந்தவுயிர்தானே பிறிதொன்றி னியல்பான் இல்லையெனவுரையாநின்றாய், ஆதலிற் கோமானே! நின்னைத் தொழுதேனென்றானென்க. ஒருபொருளிலே யுண்டுமில்லையுங்கூறினார். உயிர் ஒருவ னிடத்துண்டு, தூணிலில்லை. தூணிலில்லாமையும் இவ்வுயிர்க் கேற்றுக. இதனால் உயிர்தனக்கே உண்டு மில்லை யுந் தங்கின. இத்தன்மை வேறுபாட்டால் அங்கில்லை. (8) 1420. காதலா லெண்வினையுங் கழிப வென்றி யக்காத லாதலா லெண்வினையுங் கழியா வென்று மறைதியாற் போதுலாய்த் தேன்றுளித்துப் பொழிந்து வண்டு திவண்டுலாங் கோதைதாழ் பூம்பிண்டிக் கோமா னின்னைத் தொழுதேனே. இ-ள். இறைவன்மேலே வைத்த காதலாலே எண்வினையுங் கழிவனவென்று கூறாநின்றாய், அக்காதல் மற்றொரு பாவகாரியங் களிலே வைத்தால், எண்வினையுநீங்காவென்றுஞ் சாற்றாநின்றாய், ஆதலாற் கோமானே! நின்னைத்தொழுனேனென்றானென்க. இவை இருபுறவாழ்த்து. துறவிலே “எண்மர்கவிழ்ந்தனர்” (சீவக.3076) என்பதனாலுணர்க. இவை தேவபாணித் தாழிசைச் கொச்சக வொருபோகு. (9) வேறு 1421. இனிதி னிங்ஙன மேத்திவ லங்கொண்டு முனிவர் சித்திர கூடமு னாதெனத் தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர் பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ. இ-ள். இங்ஙனம் மிடற்றினினிமையோடே யேத்தி வலஞ் செய்துவிட்டு முனிவருடைய சித்திரகூடம் முன்னிடத்ததென்று தேவன்கூறுதலின், அதனை இப்பொழுது குறித்துத் தனியே போகாநின்று அப்பள்ளியைக் கண்டானென்க. சித்திரகூடம் - பள்ளியின்பெயர். தனித்து - விகாரம்; இன்னும், அரோவும் அசை. (10) 1422. புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை நெல்லு நீர்வினள கேழலுந் தோரையு மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான். போகுயர்நீள்கழைநெல் - வளர்ந்தமூங்கிலரிசி; ஆகுபெயர். நீராலேவிளைந்த கேழல் - குளநெல். தோரை - ஒருநெல். இ-ள். ஊனைநுகராதே. புல் முதலியவற்றையும், அவை யல்ல வாகிய பழம் காய் கிழங்குமுதலாக நல்லவற்றையுமே நுகர்வார் தவப்பள்ளியை நண்ணினானென்க. (11) 1423. அரிய கொள்கைய ராரழ லைந்தினுள் மருவி வீடுவளைக்குறு மாட்சியர் விரிய வேதம்வி ளம்பிய நாவினர் தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார். 1424. வள்ளி யின்னமுர் தும்வரை வாழையின் றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின் வெள்ள மாரிய னாய்விருந் தார்கென வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார். இவையிரண்டுமொருதொடர். அரியகொள்கையாவன: நாலிரு வழக்கிற் றாபத பக்கம்; “நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி.” (பு.வெ.168) என்பனவும், நின்றன வுமாம். இ-ள் கொள்கையராய்ப் பஞ்சாக்கினிக்கு நடுவே மருவி மாட்சியை யுடையராய் நாவினராய்க் காமவேட்கையை யுடைய சிந்தையோடே பொருந்தினவர், வள்ளிக்கிழங்கையுங் கனியை யுங் கொடுதத பின்பு, பலர்க்கும் பயன்படுகின்றவனே! இனி யுண்பா யாகவென்று கூறி நெஞ்சழகை யுடையவர்கள் உவந்து பேணினா ரென்க. (12-3) 1425. பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன் வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்விய னாங்கு நாமும ளக்குவ மென்றுதம் மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார். பாங்கு-நல்லவிடம். “பாங்கர்ப்பல்லி” (அகநா.9) என்ப. இ-ள். அங்ஙனம்பேணினபின்பு மாதவர் இவன்மதிபோலே எல்லாக்கலையு நிறைந்தகல்வியன், தத்துவத்தின்கேள்வியன், அப்படியான் அவ்விடத்து நாமும் இவனையறியக்கடவே மென்று தங்கட்டுரை ஒன்றிரண்டைக் கூறினாரென்க. (14) 1426. ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான் சையம் பூண்டுச முத்திர நீந்துவா னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு மெய்தி னhர்களு முய்றுபவென் றோதினான். இ-ள். அவர்கூறுகின்றவளவிலே சீவகனுங்கூறுகின்றவன், கல்லைக்கழுத்திலேகட்டிக் கடலை நீந்துகின்றவன் பிழைப்பனாயிற் காமநுகர்ச்சியோடே இவ்விடத்து விரதங்களை யெய் தினவர்களும் பிழைப்பரென்று நூல்களையெடுத்தோதினா னென்க. அவர் மனைவியரோடே துறத்தலிற் றொடர்ப் பாடென்றான். (15) 1427. வீடு வேண்டிவி ழுச்சடை நீட்டன்மெய்ம் மூடு கூறையின் மூடுதல் வெண்டலை யோடு கோடலு டுத்தவென் றின்னவை பீடி லாப்பிற விக்குவித் தென்பவே. இ-ள். அங்ஙனமோதினவன் வீடுபெறவிரும்பிச் சடையைக் கட்டுதல், சீவரம்போர்த்தல், கபாலமேந்துதல், வேதாந்தியாத லென்று கூறிய இத்தன்மையன பிறவிக்குவித்தென்று தத்துவ முணர்ந்தோர் கூறுவரென்றுமேரிதினனென்க. (16) 1428. ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி தூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங் காமன் றாதைநெறி யின்கட் காளைநீ தீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான். இ-ள் யாங்கள் நிற்கின்றவழி நல்வழி; இஃதொழிந்தன நீ கூறிய வாறே தூய்மையில்லாதவழி; அது யாமுந்தெளிந்திருப்பேம்; திருமால்கூறிய இவ்வழியிடத்திற்றீங்குண்டாயிற் காளாய்! நீ சொல் லென்று அவர் கூற, அவனுஞ்சொன்னானென்க. (17) வேறு 1429. தூங்குறிக் கிடந்து காயும் பழங்களுந் துய்ப்பநில்லா பாங்கலா வினைக ளென்றார் பகவனாரெங்கட் கென்னி னோங்குநீண் மரத்திற் றூங்கு மொண்சிறை யொடுங்கல் வாவல் பாங்கரிற் பழங்க டுய்ப்பப் பழவினை பரியுமன்றே. 1430. அல்லியும் புல்லு முண்டாங் காரழ லைந்தி னின்று சொல்லிய வகையி னோற்பத் துணியும்வெவ் வினைக ளென்னிற் கல்லுண்டு கடிய வெம்புங் கானுறை புறவ மெல்லாம் புல்லிய வினையை வென்று புறக்கொடை காணுமன்றே. 1431. நீட்டிய சiடய மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற் காட்டிடைக் கரடி போகிக்கய மூழ்கிக் காட்டி னின்று வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான். இவைமூன்றுமொருதொடர். இ-ள். எங்களுக்குப் பகவனார் உறியிலேகிடந்து இவற்றை நுகரத் தீவினைகள நில்லாவென்று கூறினாரென்று கூறுவீராயின்; மரத்திற் பக்கத்தே தூங்கும்வாவல் பழங்களை நுகர அதற்கும் இருவினை கழியுமல்லவோ. அதுவுமன்றி, இவற்றையுண்டு அழலி டையிலே நின்று பகவனார்கூறிய வகையிலே நோற் வெவ் வினைகள் அறுமென்னின்; கல்லையுண்டு வெம்புங் கடிய கானிலே உறைகின்றபுறவுகளெல்லாம் இருவினையை வென்று முதுகுகாணு மல்லவோ. அதுவுமன்றி, சடையமாய் மூழ்கிச் சேர்ந்து வாட்டிய வுடம்பாலே யாங்கள் மேலானகதியை விளைவிப்போமென்னின்; காட்டிற் கரடிஅக் காட்டினின்றும்போய்க் கயத்திலே மூழ்கி வீட்டினைப்பெற வேண்டும்; ஆதலால் நும்பயனில்லாத வுரையைத் தவிர்வீராகவென்றா னென்க. (18-20) 1432. கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கி யிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாக முலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின் மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே. 1433. வெண்ணிறத் துகிலி னங்கண் வீழ்ந்துமா சாகி நின்ற வொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமே பண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங் கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே. 1434. நுண்டுகில் வேத லஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கிக் கொண்டுபோய் மறைய வைத்தாற் கொந்தழல் சுடாது மாமே கண்டத்தி னாவி யார்தங் கடிமனை துறந்து காட்டுட் பண்டைச்செய் தொழிலிற் பாவம் பறைக்குற்றாற் பறைக்க லாமே. 1435. நோய்முதிர் குரங்கு போல நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா காய்முதிர் கனியி னூழ்த்து வீழுமிவ் வியாக்கை யின்னே வேய்முதிர் வனத்தின் வென்றா னுருவொடு விளங்க நோற்றுப் போய்முதிர் துறக்கத் தின்பம் பருகுதல் புரிமி னென்றான். இவைநான்குமொருதொடர். கண்iணயுடைய நிறத்தமுலை சுடாதும், உம்மை-இசை நிறை. கண்டத்திலே புழுகையு டையார். இனிக்கண்டத்தினாவியா ரென்பதற்குக் கட்டிமுதலிய உறுப்பாற்புகைத்த அகிற்புகையையுடை யாரென்று முரைப்ப. “பேருறுப் பாகிய கண்டப்புகை” என்றார் வளையாபதியிலும். இ-ள். சேக்கையினின்று நீங்கிக் குரம்பையிலே நிலஞ் சேக்கையாகக் கிளவியார்தம் ஆகத்தைத்தோய இருவினை கெடு மாயின், குறவர்க்கும் அந்தப் பெரிய வினைகளுங்கெடுமல்லவோ. அதுவு மன்றி, வெண்டுகிலிலே வீழ்ந்து மாசாகிநின்ற உதிரத்தை உதிரத்தாலே போக்கவொண்ணாது. அதுபோலக் கிளவியார்தம் பற்றினாலே பிறந்தபாவத்தை அவர்கூட்டத்தாலே போக்க வொண்ணாது. அதுவுமன்றி, துகில் வேதற்கஞ்சிப் பின்னும் நெருப்பை உள்ளேபொதிந்து வைத்தால் அதுசுடுமல்லவோ. அதுபோல நாவியார் தம் மனையைத்துறந்து அகல அவரை நெஞ்சாலேநோக்கிக்காட்டிலே கொண்டுபோய்வைத்து, முன்பு செய்த தொழிலிற் பிறந்த பாவத்தைப் போக்கலுற்றாற் போக்க வெண்ணாது. ஆதலால் நீர் குரங்குபோலே காம நுகர்ச்சியை நோக்கல் வேண்டா; இவ்வியாக்கை கனியினூழ்த்துவீழும்; அதற்கு முன்னே இவ்வனத்தே காமனை வென்றான் வேடத்தோடே நின்று நோற்றுப் போய்ச் சுவர்க்கத்தின்பத்தை நுகர்தலை விரும்பு மினென்றானென்க. (21-4) ஏகாரமெல்லாம் எதிர்மறை. 1436. மெய்வகை தெரிதன் ஞானம் விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சியைம் பொறியும் வாட்டி யுய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்க மூன்று மிவ்வகை நிறைந்த போழ்தே யிருவினை கழியு மென்றான். இ-ள். ஞானமாவது உண்மையறிதல்; காட்சியாவது அங்ஙன மறிந்தபொருள்களைப் பொய்யின்றாகத்தெளிதல்; ஒழுக்கமாவது ஐம்பொறிகளையும் ஐம்புலன்களிற் செல்லாமற் கெடுத்து உயிரைக் கெடாதே அவ்வுயிருய்யும்வகை யொழுகுதல். இம்மூன்றும் இப்படி நிறைந்தபொழுதே இருவினையுங் கெடுமென்றானென்க. (25) 1437. குன்றனா னுரைப்பக் கேட்டே பாகத்தார் குடும்ப நீக்கி யின்றுகண் விடுக்கப் பட்டேம் யாமென வெழுந்து போகி வென்றவ ன்பாதஞ் சேர்ந்து வீட்டுநன் னெறியைப் பெற்றார் சென்றது பருதி வட்டஞ் செம்மலு மசைவு தீர்ந்தான். இ-ள். சலிப்பில்லாதவன் கூறக்கேட்டு நல்வினை வந் தடையும் பருவத்தினையுடையார் தம்மiனைவியரைத் துறந்து, யாம் இன்று நின்னாலே அறிவுண்டாக்கப்ட்டடேமென்று கூறிப்போய் இறைவன்வழியைச் சேர்ந்து வீட்டுக்குச்செல்லும் நல்லவழியைப் பெற்றார்; அவ்வளவிலே ஞாயிறு பட்டது; தலைவனும் இளைப்புத் தீர்ந்தானென்க. வட்டமென்றது - நாடோறும் வட்டமாய்வருதலை. (26) வேறு 1438. அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையே வசையி னீங்கியி னார்வழி காட்டலிற் றிசையு யாறுந் தெரிந்துகொண் டேகினான் மிசையு மில்லதொர் மெய்ப்பொறி யாக்கையான். நீங்கியினார், இன் - அசை. இ-ள். உடம்பிற்குக்கூறுகின்ற இலக்கணத்தையுடைத் தாய்த் தேவருலகினுமில்லாததோர் யாக்கையான், அங்ஙன மிளைப்பாறிப் பொழுதுவிடிந்தவளவிலே குற்றத்தினின்று நீங்கி னார் வழிகாட்டலிற் றிசையையும் யற்றையுந் தெளிந்துகொண்டு போனானென்க. (27) வேறு 1439. படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத் தடம்பல தழீஇயது தக்க நாடது வடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன் றிடம்பெரி தினித தனெல்லை யெய்தினான். இ-ள். புனைந்தெழுதிய படத்தின்வடிவுபோல பங்கயத்தடந் தழுவப்பட்டது; தன்னிடம் மகளிர்மாமைபோலே நுகர்வார்க்குப் பெரிது மினியது; அதுதான் தக்கநாடென்னும் பெயரையுடையது. அதனெல்லையைச் சேர்ந்தானென்க. (28) 1440. தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும் பூங்குழன் மடந்தையர் புனைந்தசாந்தமு மாங்கெலாமகிற்புகையளாயவாசமுந் தாங்கலாற்றக்கநாடாயதென்பவே. இ-ள். இனிய கயத்தின்மலர் வாய்விட்ட நாற்றத்தையும், சந்தனத்தையும், அகிற்புகை கலந்தநாற்றத்தையும், அவ்விட மெல்லாந் தரித்தலிற் றக்கநாடென்னும் பெயர்த்தாயிற்றென்க. இவற்றைத் தங்குதலிற் றக்கநாடு. (29) 1441. சண்பக நறுமலர் மாலை நாறுசாந் தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை யுண்பத மியாவர்க்கு மூன மில்லது வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே. 1442. கரும்பணி வளவயற் காமர் தாமரை வரம்பணைந் ததனுதற்கிடந்த வார்செநெ லரங்கணி நாடக மகளி ராய்நுதற் சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே. இவையிரண்டுமொருதொடர். இ-ள். அந்நாட்டு வயலிற் றாமரை சாய்ந்து வரம்பைச்சேர, அதனுதலிலே கிடந்த செந்நெல், மகளிர் நுதலிற் றலைக் கோலத்தை யொத்தது; அங்ஙனஞ்சிறந்த நாட்டது புகழின் வண்ணம் எக்காலமும் இத்தன்மைதென்க. சண்பகமாலைமுதலியன யாவர்க்குங்குறைவின் மையிற் பிறந்தபுகழென்க. அணைந்து-அணைய. சுரும்பு சூழ்தாமரை யென்க; சுரும்பு - மயிர்க்குவமை. (30-31) 1443. வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமே ணண்டுகி ருற்றென நடுங்கி நாணினால் விண்டொளித் தூண்டுறந் தொடுங்கும் வீழ்புனல் கொண்டபூங் கிடங்கணி நகரங் கூறுவாம். இ-ள். ஒருகன்னி, தன்மேலே உகிருற்றென நாணத்தாலே நடுங்கி அவ்விடத்தைக்கைவிட்டுப்போய் ஒளித்து ஊனைத் துறந்து ஒடுங்கு மாறுபோலே, வளைந்ததுறையில்! வாளை தன் மேலே நண்டு கிருற் றென நடுங்கியொடுங்கும் ஆழ்ந்தபுனலைத் தன்னிடத்தேகொண்ட கிடங்குசூழ்ந்தநகரம் இனி கூறுவாமென்றா ரென்க. (32) 1444. அகழ்கிட ங்கந்துகி லார்ந்த பாம்புரி புகழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே. இ-ள். மதிலாகியசெல்விக்கு அகழ்ந்த அழகியகிடங்கு துகில்; பாம்புரி மேகலை; ஞாயில் முலை; கோபுரந் திங்களை யொத்தமுகம்; நெடுங்கொடி சிகழிகையென்க. (33) 1445. நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர் தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையா லீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர் சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே. இ-ள். அந்தப்பொன்னிஞ்சி மந்தரமென்று பேர்நாட்டிய வரையாலே கடலைக்கடைந்து அமிர்தத்தையூட்டினும் அந் நகiர விட்டுப்போய் உறைவாரின்மையின், இந்நகர் நகர்களுக்குத் தலையென்று சூட்டுவைத் தாலொத்ததென்க. இனி அகரம் பண்டறிசுட்டாக்கி அம்மணிவரையை நாட்டி யென்றும், உறைநரின்மையின் நிதிதங்குமென்றுமாம். (34) 1446. எறிசுறா விளையவ ரேந்து பூங்கொடி மறிதிரை வரைபுரை மாட மாக்கலம் பெறலருந் திருவனா ரமிர்தம் பேரொலி யறைகடல் வளநக ராய தென்பவே. இ-ள். பேரொலிவளநகர், வீரர் சுறவாக, கொடி மறிதிரை யாக, மாடம் மரக்கலமாக, மகளிர் அமுதாக அறைகடலாயிற் றென்க. இத்தொடர் வேறுபடவந்த உவமவிசேடமாம். (35) வேறு 1447. மதியக டுரிஞ்சுஞ் சென்னி மாடநீண் மறுகு தோறும் பொதியவிழ் மாலை வீழ்ந்து பொன்செய்நன் கலன்கள் சிந்தி நிதியறை திறந்து நோக்கி யன்னதோர் நீர்மை யெய்திப் புதியவர்க் கியங்கலாகாப் பொற்பொடு பொலிந்த தன்றே. இ-ள். அந்நகரிற் றெருவெங்கும் மாலைவீழ்ந்து பேரணி கலங் கள் சிந்துதலாலே, நிதியறையைத் திறந்துபார்த்தாலொத்ததோர் தன்மைபெற்று, அச்சஞ்செய்தலிற் புதியவர்க்கு இயங்கலாகாத அழகோடே பொலிந்ததென்க. (36) வேறு 1448. கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப் பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த் தாமநீ ணெடுங்குடைத் தரணி காவல னாமம்வே னரபதி தேவ னென்பவே. இ-ள். உலகிற்குத் திலகமிட்டாலொத்த கேமமாபுர மென்னும் பெயரையுடைய பொன்னகரில், இசையையுங் குடை யையுமுடைய அரசன்பெயர் நரபதி தேவனென்று கூறுவாரென்க. (37) 1449. அந்நகர்க் கரசனே யனைய வாண்டகை மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன் கைந்நிகர மைந்தவேற் கமழுங் கண்ணியன் மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான். வேறு 1450. வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் சோர்புய றொலைத்த வண்கைச் சுபத்திரன் மனைவி பெற்ற சீர்நலங் கடந்த கேம சரியெனத் திசைக ளெல்லாம் பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக் காகி நின்றாள். இவையிரண்டு மொருதொடர். இ-ள். அந்நகரிக்கு அரசனையொத்த வாண்டகை வடி வொப்பில்லாதவன், வேகத்தையுடைய வாணிகன், கைக்கு ஒப்பமைந்த வேலினையுந் தாரினையுமுடையான், மகளிர்மயக்க அவ்வின்பத்தே தங்குவான், வில்லைப் பயிற்றுதலாற் பெருத்துத் திரண்ட தோளான், சுபத்திரன். அவன்மனைவி நிப்புதிபெற்ற கேமசரி, திசையெல்லாந்தன் பெயரையும் அழகையுமெழுதின தொரு பெண்மையுடைய விளக்கென வாகி நின்றாளென்க. ஆகியெனவே நுகரும் பருவத்தாளென்றார். (38-39) 1451. மாசிலாள் பிறந்த ஞான்றே மதிவலான் விதியி னெண்ணிக் காசிலாள் கண்ட போழ்தே கதுமென நாணப் பட்டான் றூசுலா மல்கு லாட்குத் துணைவனாம் புணர்மி னென்று பேசினா னன்று கொண்டு பெருவிருந் தோம்பு கின்றான். இ-ள். அம்மாசிலாள் பிறந்தபொழுதே, கணி நூலாலே யெண்ணி, இவள் கண்டபொழுதே நாணப்பட்டவன் இவட்குக் கணவனாம்; அவற்குக்கொடுங்களென்று கூறினன்; அன்று தொடங்கிச் சுபத்திரனும் இவள் அவனைக்காண்டற்கு ஆடவர்க்கு விருந்திடுதலைப் பேணா நின்றானென்க. தன்கணவரல்லாதார் இவட்குஆடவராய்த் தோன்றா ரென்பது தோன்றப் பலரையும் நோக்குகின்றவளை மாசிலா ளென்றும், காசிலாளென்றும் பெயர் கூறினார். (40) 1452. தாழ்தரு பைம்பொன் மாலைத் தடமலர்த் தாம மாலை வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே பொருந்தி நோக்கு மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே. தாமம் - ஒழுங்கு. இ-ள். அவன் விருந்தோம்புமிடத்தே, ஒருபிடியிலடங்கு நுசுப்பினா ளாகிய தோளி, பொன்மாலை பூமாலை விரும்பு மணிமாலை யென்கின்ற இவற்றிடையே தூணைச்சார்ந்து, மின்போலேநின்று, தனக்குத் தொன்றுபட்டுவருகின்ற காதலா னை, அவர்களினுளனோ வென்று நோக்குமென்க. (41) 1453. சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு மாயிரத் தெட்டு நேர்ந்த வாரமிர் தடிசி லூட்டி யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே. ஊட்டி - ஊட்ட இ-ள். சுபத்திரன் கணி கூறியவகையாலே கேமசரிக்குக் கணவனாகிய திருமகன் தோன்றுதற்பொருட்டு நாடோறும் அமுது போலுமடிசிலை விருந்திற்கு ஊட்டாநிற்க, அவட்குப் பன்னிரண்டாகிய எல்லையை யுடைய யாண்டுகள் கழிந்தன வென்க. “என்திறத் தவலங் கொள்ளல்” (புறநா.253) என்றாற்போல. (42) 1454. முருக்கிதழ் குலிக மூட்டி வைத்தன முறுவற் செவ்வாய்த் திருக்கவி னிறைந்த வெங்கட் பணைமுலைத் தேம்பெய் கோதை புரிக்குழற் பொன்செய் பைம்பூட் புனையிழை கோல நோக்கித் தரிக்கலா துருகி நையுந் தடமலர்க் கோதை நற்றாய். இ-ள். முறுவன் முதலியவற்றையுடைய திருவினது கவினிறைந்த புனையிழை கோலமுதிர்ச்சியை அவள்தாய்நோக்கி உருகி நையாநிற்கு மென்க. (43) 1455. மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில் பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைக வேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்ற தாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கினானே. மருட்டுநோக்கு - நோக்கினாரை மருட்டுநோக்கு. இ-ள். மதிமுகத்திலே மானைவருத்து நோக்கினையுடைய வாகிய கண்ணினையுடைய கேமசரி தனித்துவைகுதலின், ஏவுண்ட மான்பிணைபோலே நோக்கி வருந்தின தாய்பட்ட வருத்தத்தை யெல்லாஞ் சுபத்திரன் நீக்கினானென்க. (44) 1456. போதுவாய் திறந்த போதே பூம்பொறி வண்டு சேர்ந்தாங் கூதுமே மகளிர்க் கொத்த போகமு மன்ன தொன்றே யாதுநீ கவல வேண்டா வாரழ குடைய நம்பி காதலான்ற வத்தின் மிக்கான் கண்ணுறு நாளை யென்றான். ஊதுமே, ஏகாரம் - வினா. ஒன்றே, ஏகாரம் - தேற்றம். இ-ள். பூநெகிழ்ந்தபோதே வண்டுநுகருமல்லவோ? அத்தன்மைய தொன்றே மகளிர்க்குப் பொருந்தின நுகர்ச்சியும்; ஆதலின், நம்பி, இவள்காதலிக்கப் படுவான், இவளை நுகர்தற்குத்தவஞ் செய்தவன் நாளைத் தானேவந்தெதிர்ப்படும்; இனி நீ சிறிதும் வருந்த வேண்டாவென்று ஆற்றுவித்தானென்க. (45) வேறு 1457. பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள் பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர் துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே. இ-ள். அவ்வளவிலே குருசில், இருளைப் பின்னிவிட்டா லன்ன குழலையுங்கண்ணினையுமுடைய காமவல்லிபோல் ஒளிவிட்டு விளங்குவதோர் நலத்தினளாகிய பேதையூரைச் சேர்ந்தானென்க. (46) 1458. மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற் சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ் செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோ பல்கதிர் மணியொளி பரந்த பூணினான். இ-ள். பூணினாகிய மாலை முதலியவற்றையுடைய மடந்தை தந்தையும், அங்ஙனந் துன்னின சீவகனை எதிர்ப்பட்டா னென்க. (47) 1459. தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுட ரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண் மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழ னன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா. இ-ள். அவ்வளவிலே, தென்றிசையிலே முளைத்ததொரு ஞாயிறு நிலத்தே நடந்து வடதிசையிலே வருந்தன்மையை யொத்து, மார்பினான், வடக்குநோக்கி வந்து மந்திரத்தியானஞ் செய்து, அவ்விடத்தே ஓரால் நிழலிலே மகிழ்ந்திருந்தானென்க. சீவகன் வேற்றுநாட்டின் சுவைகளை அறிந்து நுகரவேண்டு மென்றாதற்குத் தேவனும் இவற்கு ஊழ்வகையான் உறவுகொண்டு நுகர்ச்சியை யெய்துமிடங்களை நாடி ஆண்டுச்சேறற்கு வழிகூறலின், வடதிசையிற் போதல் உளதாயிற்றென்றுணர்க. விசயமாதேவியாரைக் கண்டாற்பின்பு இராசமாபுரத்தை நோக்குவனென்றுணர்க. (48) 1460. குடைகவித் தனையது கோல மாமுடி யடியிணை யாமையின் வடிவு கொண்டன புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே. 1461. குறங்கணி மயிரொடு கோல மார்ந்தன பிறங்கிய வுறுப்பின் மேற்பெரிய நோக்கின கறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகு மறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே. 1462. வரையகன் மார்பிடை வரையு மூன்றுள புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத் தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற் றுருவுகொ டக்கையின் வடிவு கொண்டவே. 1463. இலங்குபொன் னிருவரை யனைய வேந்தலுக் கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்னதாய் வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடு நலங்கிளர் நாபியு மினிது நாறுமே. 1464. தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூற் கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரைய கடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிர லடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே. 1465. வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவாய் ஆர்ந்தபூ வங்கையு மடியுந் தாமரை தேர்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத் தீர்ந்தனன் சொல்லளைஇத் தேர்கொண் டேறினான். இவையாறு மொருதொடர். “ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்-செம்பொறி வாங்கிய மொய்ம்பு” (104-6) என்றார் முருகாற்றுப் படையிலும். தோரை-மூங்கிலரிசி; வரிக்குவமை. இ-ள்.அங்ஙனமெதிர்ப்பட்ட சுபத்திரன், பொன்னாகிய பெரிய மலையையொத்த தலைவனுக்கு முடியும்உச்சி சிறிதுயர்ந்து முறைமைப்படத் தாழ்ந்து சுற்றொத்தலிற் குடைப்புறத்தை யொக்கும்; கண் தாமரையையொக்கும்; முகத்திற்குப் பொருந்தின மூக்கும் வயிரத்தோட்டியையொக்கும்; சிறுகி வளைந்திருத்தலின் வாயின் வடிவும் புலியின்வாயை யொக்கும்; எயிறணிந்த அவ்வாய் தான் வார்ந்து நிறத்தாற் பவளத்தை யொக்கும்; குற்றமற்ற பொன்னை யொக்குநாவுஞ் சருச்சரையை யுடைத்தாயிருக்கும்; தோட்கட்டுங் குடமுழாவையொக்கும்; ஒழுகநோக்குதலிற் தோள்களும் ஐராவதத்தின் கையையொக்கும்; அகங்கையும் ஆர்ந்த தாமரைப் பூவையொக்கும்; தடித்து இறைதிரண்டு தோரையவாய் வெண்சிறுகடுகும் நுழை யாதபடி நெருங்கின கைவிரலுந் தம்மளவிற்கேற்ற சூற்கெடிற்றை யொக்கும்; வரை போலுமார்பிலே உத்தமவிலக்கணமாகிய மூன்று வரையுமுள; விலாவும் வில்லுப்போல் வளைந்த பொற் பினையுடைய; நாவியும் விளங்குகின்ற இதழையுடைய தாமரைக் கொட்டையை யொத்தாய் வலத்தே சுழிந்து பொருந்துதல்வரக் குழிந்த வாய்ப் போடே நன்றாகத் தோன்றும்; குறங்குந் தாமணிந்த மயிரோடே கோலமார்ந்தனவாகிய ஒழிந்த பெருத்த உறுப்புக்களிற் காட்டிற் பெரியவழகையுடைய; புறவடியிரண்டும் ஆமையின் வடிவைக் கொண்டன; உள்ளடியுந் தாமைரையை யொக்கும். ஆதலான், இவன்றிருமாலாமென்று தன்னிலே யாராய்ந்தான். அங்ஙன மாராய்ந்து சொல்லின் அளைஇ அவனன்றென்று ஐயந்தீர்ந்தன னாய்த் தேரிலே கொண்டேறினா னென்க. (49-54) 1466. தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக் கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப் பேரிசை வினையிற் சூட்டிப் பெண்கொடிக் காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே. இ-ள். இவர்கள் தேரையேறினராய்ச்செல்லாநிற்க, மனை யிடத்தே பெண் கொடியாகிய காரிகை, அரும்பை வலிய வலர்த்திக் ககட்டின கழுநீர் மாலையை வீணையிலேசூட்டி வாசித்துக் கடவுளைப் பாடாநிற்குமென்க. (55) வேறு 1467. வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித். தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத் தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே. ஓதவண்ணன்-கடல்வண்ணன்-நேமிஸ்வாமிகள். இ-ள். கடல்வண்ணனைத் தேங்கோதம்கோலத் தேன்றதுவும் பூம்பிண்டியிடத்தே முக்குடையின்கீழிருக்கின்ற தேவர் பெருமானை மலரைத்துhவித் துதியாதார் வீட்டைச் சேரா ரென்றாளென்க. (56) 1468. அடல்வண்ண வைம்பொறியு மட்டுயர்ந்தோர் கோமான் கடல்வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான் காசின் றுணர்ந்தான் கமல மலரடியை மாசின்றிப் பாடாதார் வானுலக நண்ணாரே. இ-ள். உயிர்க்கிழவனை வருத்துதலியல்பாகவுடைய ஐம் பொறியையும்வென்ற இருடிகள் தலைவன், கடல்வண்ணன், உணர்ந்தான், அவனது திருவடியை நெஞ்சிலழுக்கின்றித் துதியா தார் வீட்டைச்சேராரென்றாளென்க. 1469. பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை நாத்தழும்ப வேத்தரதார் வீட்டுலக நண்ணரே வீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்ப ஓட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே. பூத்தொழியா-பூத்துமாறாத. இ-ள். கடல்வண்ணனை நாத்தழும்பும்படிஏத்தாதார் வீட்டைச் சேரார்; அங்ஙனம் வீடுபெறாதார் பின்பு வினையாகிய கள்வர் வழிபறித்தலாலே எண்குணனும் அவர் கைக்கொள்ளப் பட்டு வருந்திநெட்டுயிர்ப்புக்கொண்டு ஓடிவரென்றாளென்க. ஏகாரம் ஈற்றசை. ஓடிடுப-விகாரம் எண்குணம்-அநந்த ஞானாதி குணங்கள். இவனைவணங்கா தார்க்கு நுகரப் பெறாமையாலுளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி நுகர்ச்சி யெய்திப் பற்றற்று வீடுபெறுதல்கூடாதா யிருந்ததென்பது கருத்து, முன்பு வணங்கமையின், இவ்வருத்த முற்றேமென்றாள். தனிப்பத்தி இவை படர்க்கையாதலிற் பொருள்பேறுபட்டு முற்கூறியவை போன்ற கொச்சகம். வேறு 1470. முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும் பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட் டொத்தரம்மை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர் வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள். இ-ள். நிப்புதி, மூன்றுலகும் பாடப்படுவானாகிய கடல் போலும் மணிவண்ணன்றாளைக் கேமசரிபாடக்கேட்டு மகிழ்ந்து அவள்கருத்துந் தன்கருத்து மொத்தலின், தான் ஒரு வித்த கனை இப்பொழுதே இவள் பெறவேண்டுமென்று இறைவனைப் பராயினாளென்க. (59) வேறு 1471. நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப் புலம்பறப் பொலிவொடு புக்க காலையே யிலங்குபூங் கொடியன வெழை நோக்கமு முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே. மண்டின்னக்கிடந்தநிதி. இ-ள். அறத்தாற்றேடின பொருளையுடைய அவன் அம்மனையிலே அவர்கள் வருத்தந்தீரும்படி சென்று புக்கவளவிலே., கேமசரிநோக்கமும் பிள்ளையார்நோக்கமும் ஒப்பநோக்கின வென்க. (60) வேறு 1472. கண்னுறக் காளையைக் காண்டலுங் கைவளை மண்னுhறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு முண்ணிறை நாணூமு டைந்தன வேட்கையு மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள். இ-ள். காளையை அங்ஙனமெதிர்ப்படக்கண்டாளாக, நாற்றின கையில் வளைகள் காலடியிடத்தே மண்ணுறச் செறிந்து வீழ்ந்தன; மாமையும் நிறையும் நாணுங்கெட்டன; வேட்கையையுந் தீப்போல் விளைவித்துக்கொண்டாள்; அத்தீயாலே தான் உருக்குண்டாளென்க. (61) 1473. வாக்கணங் கார்மணி விணைவல் லாற்கவள் நோக்கனங் காய்மன நோய்செய நொந்தவன் வீக்கணங்கார் முலை வேய்நெடுந் தோளியொர் தாக்கணங் கோமக ளோவெனத் தாழ்ந்தான். இ-ள். திருத்தத்தையுடைய தெய்வத்தன்மை நிறைந்த அழகிய யாழைவல்லவனுக்கு அவள் நோக்கம் வருத்தமாய் மனத்தை நோய் செய்தலாலே யவனொந்து கச்சுக்கட்டின வருத்தநிறைந்த முலை யினை யுந் தோளினையுமுடைய கேமசரியைத் திருவோ மகளோ வென்றையுற்றுக் குறைந்தானென்க. (62) 1474. நல்வளத் தாமரை நாணிய வாண்முகக் கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச் சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன் மல்வளர் மார்பனை வந்து வளைந்தார். கொற்றொழிலே கிடந்தவேல். இ-ள்.nசார்குழலையும் முகத்தையுமுடைய வேற் கண்ணி னாள் இவனைக்கண்டு வருந்தினாளென்று அவள்தோழிமார் இச்சொல்லைப் பரப்பினார்; அதுகேட்டு எல்லாரும்வந்து சீவக னைச் சூழ்ந்தாரென்க. (63) 1475. நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங் கினத்திடை யேறனை யானெழி னோக்கிப் புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி வனப்பினை யேகண்டு வாட்கண கன்றாள். நிப்புதி-நிஸ்ப்ருதி. இ-ள். நிப்புதி அவ்விடத்தே வந்து கேமசரியழகோடே ஏறனை யானெழிலையும் ஒக்குமோவென்றுநோக்கிப் பின்பு நம்பியது அழகு மிகுதியாலே அதனையே பார்த்து உடம்பெல்லாங் கண்ணானாளென்க. வாட்கண்ணினையுடையாள் மீண்டுபோனாளென்று மாம். (64) 1476. வள்ளலை வாசநெய் பூசிம ணிக்குடத் தெள்ளற னுர்சொரிந் தாட்டினர் தேம்புகை யுள்ளுற வுண்டக லிங்கமு டுத்தபின் கள்ளவிழ் கண்ணிக லத்தொட ணிந்தார். இ-ள். வள்ளலை நெய்யைப்பூசி நீரைச்சொரிந்தாட்டினார்; பின்பு அவன்றான் கலிங்கத்தை யுடுத்தான்; உடுத்த பின்பு, அவர் கண்ணியையுங் கலத்தையுமணிந்தாரென்க. (65) 1477. மங்கல வெள்ளைவ ழித்துமுத் தீர்த்தபின் கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தி யங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர் செங்கயற் கண்ணியர் சீரின யின்றான். இ-ள். கோதையர் உண்கின்றவிடத்தைச் சந்தனத்தாலே மெழுகி முத்தாலே கோலமிட்டபின்பு, தன்னைக்கொண்டு புகுந்து பொற் கலத்திலே அடிசிலேந்தினார்; தானும் அவர் புகழ்ச்சி யுடனே யுண்டானென்க . (66) வேறு 1478. பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற் சித்திரத் தவினுட் செல்வன் சீர்பெற நித்தில மணியுறழ் கரக நீரினா லத்துறை விடுத்தனன லர்ந்த தாரினன். இ-ள். தாரினானாகியசெல்வன் அங்ஙனமுண்டபின்பு பொன்னாற் பத்தியோடு செய்த திண்ணையிடத்தே தவிசின் மேலே யுறைந்து கரகத்தின் நித்திலமணிபோலு நீராலே பூசுதற் குரிய தொழில்களை யெல்லாம் முடித்துவிட்டானென்க. (67) 1479. இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர் பளிங்குபோழ்ந் தருகு பொன் பதித்த பத்தியின் விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத் தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே. இ-ள்.ஒருமுழுப்பளிங்கை யறுத்து அதன்பக்கத்தே பத்தியாகப் பொன்னிடப்பட்டனவற்றிலே இணுங்கினகாயுந் திரையுஞ்சென்றன. திரை-வெற்றிலை. இன்-அசை. இவை உபகரித் தெடுத்துக் காட்டப் பட்டன. யவனத்திற்றச்சர் பொன்னாற்செய்து விளிம்பு முத்தழுத்திய கைவினையையுடைய அடைப்பையிலே பாக்கும் வெற்றிலையு முகவாசமீண்டிச்சென்றன. இவை தின்றற்குச் சென்றன. இனி ஒன்றாக வுரைப்பாருமுளர். (68) 1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத் தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ் வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம் வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே. தேசு-தேசிகமெனத்திரிந்தது. இ-ள்.குண்டலமசைந்து ஒளியைக் குறுக்கிட்டுக்காலும்படி வெற்றிலையைச் சுருட்டிக் கறித்து அதிற்குறையாலே பல்லினை ஒளியுண்டாகத்துடைத்து அதனையுமிழ்ந்தபின்பு வெற்றிலை யைத் தின்றானென்க. (69) 1481. க. பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல் வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகி லுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன் கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே. “பண்ணுலாம்” என்பதுமுதல் “கலைத்தொகை” (சீவக 1489) ஈறாக ஒன்பதுமொருதொடர். இ-ள். பண்ணொத்த கிளவிதன்னுடைய வல்குலும் மேகலை யுந் துகிலுமாகிய இவை, பாவியேன் கண்ணையும் மனத்தையுந் தமக்கிருப்பிடமாக் கொண்டு விட்டனவென்க. துகிலுக்குள்ளே நிலைபெற்று ஒளியுமிழ்வனவாகிய மேகலை. (70) 1482. கடிகமழ் குழலினாற் கட்டி மெய்யெலா நடுவொசி நோன்சிலைப் புருவத் தாற்புடைத் தடுமலர் நெடுங்கணா லாவி போழ்ந்திடாக் கொடியவ ளிளமுலை கொல்லுங் கொல்லுமே. இ-ள். சிலையாகிய புருவத்தாலேயடித்து மலரையடுங் கண்ணாகிய வாளாலே உயிரைப்போக்காதகொடியவள், முலை யாகிய யானை என்னுயிரைக் கொல்லுங்கொல்லுமென்க. முலைதான் வருத்தலுடைமையிற் றானும்வினை முதலாம். கட்டி-கட்டவென்க. (71) 1483. கடியன கச்சினாற் கட்டப் பட்டன கொடியன குங்குமங் கொட்டப் பட்டன வடிநிலம் பரந்துமுத் தணிந்த வெம்முலை யிடைநிலஞ் செகுப்பன வென்னை யென்செயா. இ-ள். இயல்பாக மணமுடையவாய்க் கச்சினாற்கட்டப்பட்டனவாய் எழுது கொடியையுடையனவாய்க் குங்குமமிடப்பட்டன வாய் அடிபரந்து முத்தணிந்த முலை, தம்மைச்சுமந்திருக்கின்ற இடையைக்கெடுப்பன; என்னைப்பெற்றால் எல்லாஞ்செய்யுமல்ல வோவென்க. உலகிற் றொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவ ரென்றும், மனங்கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப்படுவ ரென்றும் ஒருபொருடோன்றிற்று. (72) 1484. கரியவுள் வெறியன கட்டப் பட்டன பிரிவொடு பிறத்திடப் பட்டப் பூங்குழல் தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன பெரியகண் போலவும் பேது செய்யுமே. இ-ள். கரியனவாய் உள்ளே மணத்தையுடையனவாய்க் கட்டி முடிக்கப் பட்டனவாய்க் கடைகுழைதலுடனே எருத்தத்தே கிடத்தப் பட்டகுழல், செய்யனவாய் நீண்டனவாகிய கண்வருத்துமாறு போலவும் வருத்தாநிற்கும் ஆராய்ந்துபார்த்தால் எல்லாஞ்செய்ய வல்லனவென்க. கொடியனவாய் உள்ளே கள்ளின்மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்பொழுதுந் திருகுதலுடனே தம் மிடத்தினின்றுங்கீழ்ப்போந்துகிடக்கும்படி. புறத்திடப்பட்டன வாயென்றும் ஒருபொருடோன்றிற்று. உள்வெறுவியனவுமாம். (73) 1485. காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந் துhதினாற்று ணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க் கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணேக் கோதர முதமு முலகும் விற்குமே. இ-ள்.வாட்கண்ணினையிடையாள் தன்வேட்கையெல்லாந் தன்கண்ணுள்ளேகிடத்திஅக்கண்ணென்கின்ற துhதாலே தான்று ணிந்தபொருளை எனக்கறிவித்துச் சுற்றத்தார்க்கு அவ்வேட்கை தோன்றாதபடி மனத்தநோக்கம் அமுதத்தையு தன்னுள்ளேயென் பதூஉம் பாடம். (74) வேறு 1486. முகுகொடா முத்தஞ் சூட்டி மீளிமை தீர்த்து மின்னு நகுகொடா மணி கணல்ல தெளித்துக்கொண் டெழுதி நன்பொன் முகபடாம் வைப்ப வாட்செற் றழன்றுகண் கரிந்த முல்லைத் தொகுகடாங் கோதை வெய்ய துணைமணி முலைக டாமே.. மீளிமை கொங்கையின்வலி. பன்னீராண்டுஞ்சென்று முலைமுதிர்தலிற் கண்கருகின வென்றார். இ-ள். முல்லைப்பூவினது திரண்ட தேன்பரக்குங்கோதை யுடைய முலைகள்தாம், ஒழிந்தவற்றிற்குக்கொடாத மிகுகின்ற மீளிமையைத் தீர்த்து முத்தஞ்சூட்டிமின்னும் றம்மையிகழாத நல்லமணிகளைக் கரைத்துக்கொண்டெழுதி நல்ல பொற்கச்சாகிய முகபடாத்தையும் வைப்ப, இவ்விடையீட்டாலே வெளியேநின்று கொல்லமாட்டாதே உள்ளேநின்று ஆளைச்செறுத்துநோக்கி நெஞ்சழன்று கண்கருகின வென்க. 1487. தேன்கறி கற்ற கூழைச் செண்பக மாலை வேற்க ணுhன்கறி கற்ற காலலெண்மணித் தடக்கை வைவேல் கூன்பிறை நுதலோர் கூற்றங் குவிமுலை நமன்கைப் பாசம் யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட்டி ருக்கின் றேனே. கறிகற்ற-மேயக்கற்ற, வேற்கண்-கண்ணென்னுமாத்திரை. “கருங் கண்ணன்” (திருக்குறள் 53) போல. பிணியால் உடம்பை வாட்டலின், ஊனை மேயக்கற்றவென்றார். இ-ள். சண்பகமாலைதன்கண் காலன்கையில்வேல் நுதல் நிகரில்லாத அவன்றான்; முலை அவன்கையிற்பாசம்; இங்ஙன மாகவும் யான் உயிர்வாழ்தற்கு ஆசைப்பட்டிரா நின்றேனா தலிதன், யான்பிறனேயென்க. ஏகாரம்-தேற்றம். மக்களிலல்லேனேன்பது. காலன்-கூற்றம். கூற்றம், நமனென்பன சுட்டுப்பெயர். இனிக் காலன்-கூற்றத்திற்கு ஏவல் செய்யுமவனுமாம். (76) வேறு 1488. திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே. “மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே” (தொல். புள்ளி.17) என்னும் பொதுவிதியாற்குளந்தாது குளத்தாது போல்வனவற்றை முடித்த தன்மையின்; அவை குளங்கரை, குளக்கரைபோல உறழும் வழக்கினவல்லவென்பதறிவிதற்குச் “செல்வழியறிதல் வழக்கத் தான” என்று கூறினமையிற் சண்பகங் கோடென முடித்ததூஉம் பொது விதியன்றிச் சிறப்பன்றாதலாற்றேவர் அவ்வாறு கற்பகந் தெரிய லென்னாமை யுணர்க. இ-ள்.கற்பகத்திற் றெரிதலையுடைய மாலையார்ந்ததோர் உருவிற்கு விளக்க மாம் பூங்கொடி, திருவிற்கும், முருகற்கும், அநங்கனுக்கும், எனக்கும், இறைவற்கும் பகைத்தியாயிரா நின்றாள் ஒருத்தி வடிவிருக்கும்படி யென்னென்க. அழகையும், வேலையும், வில்லையும், அறிவையும், பிறையையும் வாங்குதலிற் பகையென்றான். ‘திருவிற்கோ’ ரென்பது தூஉம் பாடம். இனிப் பூங்கொடியொருத்தி திருவிற்கும், முருகற்கு/ அநங்கனுக்கும், இறைவற்கும் வடிவே பகைத்தியாயிரா நின்றாள்; எனக்கும் அவ்வாறன்றி உயிர்க்கே பகைத்தியாயிரா நினறா ளென்றுமாம். (77) 1489. கலைத்தொகை நலம்பல கடந்த காளைதா நலத்தகை யவணல நினைப்ப நாய்கனு மலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவ நிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான் அரசன் செறிந்திருத்தலின், அவனுக்கும்பரிவாரத்திற்கும் மணத்தையறிவித்தான். இ-ள். காளைதான், “களங்கொண்டிட்டவே” வென்பது முதலிய வற்றையெல்லாங்கூறித் தன்மேல் அன்பின்றகைமையை யுடைய வள் நலத்தைநினைக்க, சுபத்திரனும் அறிவித்தானென்க. கேமசரிவருத்தம் “கன்ணுற” “நல்வள” (சீவக 1472, 1474) என்பனவற்றிற் கூறினார் (78) 1490. இடியுமி ழெறிதிரை முழுக்கிற் பல்லியங் கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக் கடிமண மியற்றினார் கடவுணாளினால் வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே. இ-ள். நகரிலே, இடியுமிழ்ந்த முழக்குப்போலவுந் திரை முழக்குப்போலவும் பல்லியந்திரண்டார்த் தெழாநிற்க, நல்ல நாளிலே கோதையை மைந்தனுக்கு வாழ்க்கைப்படுத்தினா ரென்க. 1491. மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான் கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை யணிக்கிட னாகிய வரிவை தன்னொடும் பிணித்திடை விடாவதவன் பெற்றவின்பமே. வடிவிற்குக் கூறிய நூல்வல்லவற்கும் புகழ இடங்கொடாத நலம். பிணித்து பிணிக்க. இ-ள். தோளினானலத்தை அரிவையது காரிகை தன்னோடும் அவரங்ஙனம் பிணித்தலின் அவன்பெற்றவின்பம் இடைவிடாதா யிற் றென்க. (80) 1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம்முலை யேந்திய மணிவரை யிரக்க நீர்த்தரங் காய்ந்தவன் றோளிணை நாககாகவைத் தீந்ததக் கடலவற் கமுத மென்பவே. இ-ள். துகில் பொருதிரையாக, பெமையையுடைய ஏந்திய முலை வரையாக, தனதருள் நீரின் அசைவாக, வலிய தோளிரண்டும் பாம்பாகவைத்து அவன்கடைதலின், அக்காமக் கடல் அவற்கு அமுதத் தைக் கொடுத்ததென்க. (81) 1493. சந்தனச் சேற்றிடைத் தாம வார்குழற் பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின் மைந்தன தார்குழைந் துடைய வாய்திறந் தஞ்விலம் பணியல்குற் கலையொ டார்த்தவே. இ-ள். மந்தனுடையதார் அவன்றன் மார்பிற் சேற்றிடையிலே யுடையும்படி பைந்தொடிமுலை குளிப்ப்பாய்தலின், வாய்விட்டுச் சிலம்புங்கலையும் ஆர்த்தனவென்க. அவள் முயங்கினபின்பு புணர்ச்சித்தொழிலை நிகழ்த்தினாளவ ளென்க. யானை பாய்தலின், தூசி சேற்றிலே யுடைந்த தென்றும், அதற்குச் சிலரார்த்தாரென்றும் ஓருபொருள் தோன்றிற்று. (82) வேறு 1494. கோதையுங் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கன் மாலைப் போதுகப் பொருது நாணு பொருகடன் முத்து மூழ்கக் காதலுங் களிப்பு மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார் சாதலும் பிறப்பு மில்லாத் தன்iபெற்றவர்க ளொத்தார். இ-ள். அவன்றொழில்களைக்கண்டு அவளுந் தன்கோதை யுங் குழலும்பொங்க, முலையின்மாலையிற் போதுசிந்த, பூணும் முத்தும் ஒன்றிலேயொன்று மூழ்கப்புணர்ச்சித்தொழிலை நிகழ்த்தலின், இருவருங் காதலுங் களிப்புமிக்கு விள்ளாராய்த் தேவரை யொத் தாரென்க. (83) 1495. புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளு நனைமலர்க் காவு மந்தண் வாவியு நல்ல வாடிச் சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி வினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார். இ-ள். ஊழினால் அன்புமிக்கராகிய தாரினானுங் கொம்ப னாளுங் காவினும் வாவியினும் ஆடிக் குற்றுக்கட்டி இங்ஙனம் நல் வினையின்பயத்தைநுகர்ந்து செல்லாநிற்பரென்க. (84) 1496. பொழிந்துகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்லக் கழிந்தன விரண்டு திங்கள் காளையு மற்றோர் நாளாற் பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி தன்னோ டழிந்துவீ ழருவிக் குன்றி லாய்மலர்க் காவு புக்கான். இ-ள். நிறைந்து புறந்தோன்றுகின்ற காதலைப் பூண்டு இங்ஙன முயக்கத்தைக் கைவிடாது ஓழுகாநிற்க, இரண்டு திங்கள்சென்றன; அவ்வளவிலே,மற்றைத்திங்களில் ஒருநாளிலே, காளையும் வடித்துக்கொண்டாற்போலும் பெண்மையினை யுடைய தோளி தன்னோடே காவிலே சென்றுபுக்கானென்க. (85) 1497. காஞ்சனக் கமுகு காய்பொற் கனிக்குலை வாழை சூழ்ந்து பூஞ்சினை நாகந் தீம்பூ மரக்கருப் பூரச் சோலை மாஞ்சினை மயில்க ளாடச் சண்பக மலர்கள் சிந்துந் தீஞ்சுனை யருவிக் குன்றஞ் சீர்பெற வேறினானே. இ-ள்.பொன்போலுங் குலைக்கமுகும், பொன்போலுங் கனியை யுடைய வாழையுஞ் சூழப்பட்டுத் தன்னிடத்தே நாகத்தையுந் தீம்பூமரத்தையுமுடைய கருப்பூரச்சோலையில் மாஞ்சினையிலே மயில்களாடச் சண்பகமலர் சிந்தும் இனிய சுனையையுடைய குன்றத்தை யேறினானென்க . (86) 1498. தினைவிளைசாரற்செவ்வாய்ச்சிறுகிளிமாதரோப்பப் புனைவளைத்தோளிசொல்லைக்கிளியெனக்கிள்ளைபோகா நனைவிளைகோதைநாணிப்பொன்னரிமாலையோச்சக் கனை கழற்குருசினண்ணிக்கவர்கிளியோப்பினானே. இ-ள்.அம்மலையிற் றினைவிளைந்தபுனத்திற் கிளியை மாதரோட்ட, அக்கிளியவள்சொல்லைத் தன்னினத்தின் சொல் லென்று கருதிப்போகாவாக, அவள் அதற்கு நாணிப் பொன்னரி மாலையை யோச்சினளாக, பின்னும்போகாமைகண்டு அவள் கருத்துமுடித்தற்குக் குருசில், அக்கிளியை யணுகி யோட்டின னென்க. இவன் நீங்கல் வன்மைகண்டு புலவிகூர்ந்ததனைத் தீர்த்தபடி மேற்கூறுகின்றார் (87) 1499. கொந்தழல் வேற்க ணாலென் னாவிகூட் டுண்ட கொம்பே செந்தழை யலங்க லேந்திச் சீறடி பரவ வந்தே னுய்ந்தினிப் பணிசெய் வேனோ வுடம்பொழித் தேகு வேனோ பைந்தழை யல்குற் பாவாய் பணியெனப் பரவி னானே. இ-ள். எரிகின்ற அழலையுடைய வேற்கண்ணாலே என்னு யிரைத் திறை கொண்டகொம்பே! தழையையும் மாலையையு மேந்தி நின்னடியைப் பரவவந்தேன், பாவாய்! இனி உயிருடனிருந்து நின்னே வல்செய்யக்கடவேனோ? இறந்துபடக் கடவேனோ? இரண்டிலொன்றை அருளிச்செய்யென்று பரவினானென்க. (88) 1500. வீணையுங் குழலும் பாலு மமுதமுங் கரும்புந் தேனும் பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொ வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்ல ரென்னாப் பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே. பாணியாழ்-பாட்டையுடைய யாழுமென்க. இவன் இறந்த படுவேனோவென்றதற்குக் குறுமுறுவல் கொண்டுஒருமொழி கொடுப்பவே ஊடறீர்ந்ததாலின் அச்சொல்லை மழலைத் தீஞ்சொ லென்று மகிழ்ந்தான். அம்மொழி கூறலாகமையிற் கூறிற்றிலர். இ-ள். வீணைமுதலியவற்றைவென்ற சொல்லினையுடைய வாணிகமகளிர்தாம் முதல்கெட ஊதியஞ்செய்யாரேயென்று வியந்து புல்லிப் பருகினானென்க. (89) முதல்-தன்னுயிர். ஊதியம்-ஊடல். 1501. திங்களங்குழவிசெவ்வானிடைக்கிடந்திமைப்பதேபோற். குங்குமமார்பிற்பூண்டகுளிர்கதிராரமின்ன மங்கையோ டிருந்த போழ்ந்தோர் மவண்டு துண்டு சொன்னான் கங்குனீங்கலுற்றுககாமரணிந்தாரான். இ-ள். தாரான் பிறை செக்கர்வானிலே கிடந்து விளங்குவது போலே தனது குங்குமமார்பிலே தங்கிய ஆரம்விளங்கும்படி நீங்கி மங்கையுடனிருந்தவளவிலே, வந்ததொருவண்டைக்கண்டு, இரவு பிரியக்கருதி ஒருவார்தைதகூறினானென்க. (90) 1502. மணிவண்டிம் மாதர் கேhதை மதுவுண வந்த போழ்தங் கிணைவண்டங் கிறந்து பாடின்றிருக்குமே யிரங்க லின்றாய்த் துணைவண்டு துஞ்சி னீயுந் துஞ்சுவை யென்று நின்கட் பணிகொண்ட தின்மை யாற்றான் பரிவொடு மிருக்கு மன்றே. மணிவண்டு-அண்மைவிளி. இருக்குமே, ஏகாரம்-வினா. இ-ள். வண்டே! நீ மதுவுண்ண வந்தபொழுது, நின்பெடை அவ்விடத்தே இறந்துபாடுமின்றாய் வருத்தமுமின்றா யிருக்குமோ? இங்ஙனேயன்றோ: தானிறந்துபடி துணைவண்டாகிய நீயும் இறந்துபடுவையென்றுட்கொண்டு இறந்து படாதே உன்னிடத்தே உரியதொருதொழிலை அடியிலே தன்னிடத்துக் கொள்ளா மையால் அன்புடனே ஆற்றியிருக்கு மல்லவோவெனச் சொன்னா னென்க. பணியென்றது-மகளிரிருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடி வருதல் ஆடவர்க்குப் பணியாதலை. (91) 1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி யிப்பால் விழைவுதீர் கிழவ னாகி விழுக்கதி ருலந்து வீழ மழலைவண் டுழல நக்க மல்லிகை யலங்கல் சூட்டிக் குழல்புரை கிளவி யோடுங் கொழும்புகை யமளி சேர்ந்தான். இ-ள். வெய்யோன், முன்புகுழவியாய்ப்பிறந்து பின்பு குமர னாய்வெம்மைமிக் மீளும்பகுதியிற் கிழவனாய்க் கதிருலந்து படுதலின், சீவகன் வண்டுழலும்டியலர்ந்தஅலங்கலைச்சூட்டிக் கிளவியோடே அமளியைச் சேர்ந்தானென்க. உம்மை-இசைநிறை. (92) 1504. திருத்துயில் பெற்ற மார்பன் றிருந்துதா ருழக்க வின்ப வருத்தமுற் றசைந்த கோதை வாளொளித் தடங்க ணீலம் பொருத்தலும் பொன்ன னாளைப் புறக்கணித் தெழுந்து போகிப் பருச்சுடர்ப் பவள நோன்றாழ்ப் பன்மணிக் கதவு சேர்ந்தான். இ-ள். அம்மார்பன் மாலையுழக்குதலாலே இன்பத்தாற் பிறந்த வருத்தத்தையுற்று இளைத்தகோதை தன்கண்ணாகிய நீலத்தைக் குவித்தவளவிலே, அவன் அவளைத்திரியப்பார்த்து எழுந்திருந்துபோய்ப் பவளத்தாழையுடைய மணிக்கதவைச் சேர்ந்தானென்க. துயிறல்-தங்குதல். (93) 1505. அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றி மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட் கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப் பல்கதிர்ப் பருதி போலப் பாயிரு ளேகி னானே. இ-ள். மடங்கலன்னான், திருவையொப்பாள் திறக்கின்ற வோசை கேட்டறியாதபடி முதற்பட நிலையோடே கதவைத் தள்ளி மெல்லத் திறந்து பின்பு முடியத்திறந்து நீந்திப்பருதிபோலே இருளிலே போனானென்க. (94) 1506. தாளுடைத் தடங்கொள செவ்வித் தாமரைப் போது போலும் வாளுடை முகத்தி னாடன் வருமுலைத் தடத்தின் வைகி நாளினும் பெருகு கின்ற நகைமதி யனைய காதற் கேள்வனைக் கனவிற் காணாள் கிளர்மணிப் பூணி னளே. இ-ள். அவன் அங்ஙனம் போகின்றவளவிலே, பூணினா ளாகிய தாமரைப்போதுபோலுமுகத்தினாள், தன்முலைத்தடத் தே தங்கி நாடோறும் வளருகின்ற பிறையையொத்த காதலை யுடைய கணவன் றன்னைக் கனவிலே காணாளாயினாளென்க. கனாக்காண்கின்றள் அவள்போகக்கண்டாளென்க. (95) 1507. அரந்தினப் பிறந்த பைம்பொ னரும்பிய முலையி னானைக் கரந்தவன் கங்கு னீங்கக் கதிர்வளை யணங்கு மென்றோள் வரந்தரு தெய்வ ன்னாள் வைகிரு ளனந்த றேறிப் பரந்தெலாத் திசையு நோக்கிப்பையவே பரிவு கொண்டாள். இ-ள். முலையினாளையொளித்து அவன் அங்ஙனம் போகா நிற்க, அவள் கனவாலேவிழித்து அனந்தறீந்து விடியகாலத் திருளிலே எல்லாத்திசையும் பரந்து பார்த்து முறைமைப் பட வருத்தங் கொண்டாளென்க. அராவுதலாற் பிறந்த பொடியாகியிபொன் - சுணங்கு. வளை வருந்துந்தோள். கணவற்கு நினைத்தனகொடுத்தலின்,வரந்தருதெய்வம். (96) 1508. திருமணி குயின்ற செம்பொற் றிருந்துபூங் கொம்ப னாடன் கருமணிப் பாவை யன்னான் கரந்துழிக் காண்டல் செல்லா ளெரிமணி விளக்க மாடத் திருளறு காறு மோடி யருமணி யிழந்தோர் நாக மலமரு கின்ற தொத்தாள். இ-ள். மணியாற்செய்த கொம்பனாள், தன்கண்ணிற் கருமணியிற் பாவையொப்பான் மறைந்தவிடத்தைக்காணாளாய், மணிவிளக்கத்தை யுடைய மாடத்தில் விளக்கொளியுள்ள வளவுந்தேடி, நாகந் தன்கண்ணாகிய மணியையிழந்து வருந்துவதனை யொத்தாளென்க. வேறு 1509. யாண்டை யாயைய வஞ்சினெ னாருயி ரீண்டு டம்பொழித் தேகவ லிக்குமா னீண்ட தோளவ னேநிறை யானிலேன் றீண்டு வந்தெனத் தேனின்மி ழற்றினாள். ஒளிக்கக் கண்டு கொளென்று முன்பும் விளையாடுவாராதலின், இப்பொழுதும்அதுவாகநினைந்து யாண்டையாயென்றும், அஞ்சி னேனறுங் கூறினாள். நீண்ட தோள்-உத்தமவிலக்கணம் இ-ள். ஐயனே! நீயெவ்விடத்தே நிற்கின்றாய்; யானஞ்சி னேன்; இனிநீ தானே வாவென வாராதிருத்தலின், தோளவனே! உயிர் இப்பொழுது உடம்பினைக் கைவிட்டுப்போகத் துணியா நின்றது; ஆதலின், நிறையழிந்தேன்; இனித்தீண்டுவந்தேன மிதுற்றினாளென்க. தீண்டுவந்தென்றாள், ‘கடேண் சீதையை யென்றாற்’ போல. 1510. கனிகொள் காமங்க லந்துயி ரொன்றலி னினியர் மங்கைய ரென்பது கூறுவாய் பனிகொண் மாமதி போற்பசப் பூரயான் றனிய ளாவது தக்கது வோசொலாய். இ-ள். மங்கையர், அன்புகனிதல்கொண்ட வேட்கை தம்மிற் பொருந்தி உயிர் ஒன்றுபடுமிடத் இனியராயிருப்பர்; அத்தன்மை யில்லாதவிடத்து இனியரல்லரென்பது முன்புகூறுகின்றநீ யாம் இங்ஙனம் ஒன்றியொழுகுகின்றநாளிலே பனிமூடியமதிபோற் பசக்கும் படியான்றனிப்பது நினக்குத் தக்கதோ? கூறாயென்றா ளென்க. (99) 1511. கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற் சுழலுங் கண்களுஞ் சூடுறு கொன்னெ வழலு மேனியு மாற்றலெ னையவோ நிழலி னீப்பருங் காதலு நீத்தியேh. இ-ள். ஐயனே! போகின்றதொரு நெஞ்சோடே வளையும் போகா நின்றது; கண்களும் பாராநின்றன; மேனியும் உருகுகின்ற பொன்னென அழலாநின்றது; ஆதலின், ஆற்றலேன்; யானிங்ஙன மாகவும், நீ நிழல்போல நீத்தற்கரிய காதலையுகைவிடுதியோ வென்றாளென்க. ஐயவோ, ஓ-இரக்கக்குறிப்பு நீத்தியோ-ஓகாரம்-வினா. (100) 1512. திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான் புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ இ-ள். மல்லிகைமாலையை யான் விரும்பிச்சூடினும், இடை முரியுமென்றறியாத பேதாய்! நினது நுண்ணிடை வருந்தா நிற்குமே யென்றுகூறும் பொய்யை வல்லாய்! யான் கருதி நையக் கா™தலும் வல்லையோ? என்றாளென்க. (101) ஓகாரம்-வினா. 1513. தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை கண்டு தேவர்க னிபவென் றேத்துவாய் வண்டு கூறிய வண்ணம றிந்திலேன் விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய். இ-ள். வாயினையும் முலையினையுமுடைய இவளைப் படைத்தபொழுது,அயனார்தாங் கண்டு, உலகைப்படைத்த நாமே அதனையழிப்பதோருருவையும் படைத்தோமேயென்று வருந்துவ ரென்று முன்னிலைப்புறமொழிகூறிப் புகழாநின்றவனே! தாரினாய்! நீ வண்டைக்கூறிய தன்மையை யானறிந்திலேன்; அறியின், இங்ஙனம் விடேனென்றாளென்க. தேவரென்றது ஒருவரைக் கூறும் பன்மை. “மண்மேற் - றேவரென் றேயிறு மாந்து” (திருவா. திருச்சத 4) என்றார் பிறகும். இனி இவள் வாயையும் முலையையுங்கண்டு தெய்வமகளிர் வருந்துவ ரென்றுமாம். (102) வேறு 1514. முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற் றலைவைத் துநிலத் தடிதை வருவாய் சிலைவித் தகனே தெருளே னருளா யுலைவித் தனையென் னுயிர்கா வலனே. முலைவைத்ததடம் - யாம் பிறந்த விட முஞ் சிறிது கிடக்க வேண்டுமென்று முலைதான் அருள்பண்ணிவைத்த தடம். இது கொண்டு கூறிற்று; “எஞ்சுற்ற மென்றிரங்கா தாகமெல்லாங்வர்ந்திருந்து” (சீவக 2502) என்பமேலும், இருவரும்முன்பு உறாதிருத்தலின் மையின், உறிலெனவே முன்பு ஊடறீர்த்துக் கூட நினைக்கி லென்பது பெற்றாம். நின்வளைவெல்லாம் வருத்தமாயிற்றென்பது தோன்றச் சிலைவித்தகனேயென்றாள், எவனென்னும் வினா என்னென நின்றது. இ-ள். சிலைவித்தகனே! உயிர்காவலனே! நீ கூறிய தடத்தி டையிலே ஊடறீர்த்துக் கூட நினைக்கிற் றலையை நிலத்தே வைத்து அடியைத் தடவுகின்றநீ இப்பொழுது, சலிப்பித்தாய்; இதற்குக் காரணந் தெளிகின்றிலேன்; இதற்குக் காரணமென்? அருளிச் செய்யாயென்றாளென்க. வைத்தநிலம் பாடமாயின், காலைவாங்கினால் அந் நிலத்தில் அடியைத்தைவருவாயென்க. (103) 1515. கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையின் னிடனெத் துணையத் துணையும் மெழுதி யுடனொத் துறைவா னுழைவா ரலனேன் மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே. இ-ள். வடமணிந்தமுலையினாலே தன்மார்பிடமெவ்வள வுண்டு அவ்வளவும் யானெழுத, என்னுடனேயொத்துறை கின்றவன் இனி என்னிடத்தேவாரானாயின், என்னுயிர்வாழு நிலைமை முற்பட்ட அறியாமையையொக்கு மென்றாளென்க. எழுதி - எழுத. அது: வண்டைக்கூறியதனைத் தானறியாதிருந்தது. ஒத்துளது - ஒரு சொல். முலையெங்குந் தொய்யிலெழுதி யுறைவானென் றுமாம். (104) 1516. பெறுமன் பினளென் பதுபே சினலா லறுமன் பினளென் றறிவா ரிலையா லிறுமென் பொடினைந் துநைவேற் கருளி நறுமென் கமழ்தா ரவனே நணுகாய். கமழ்தார் - பெயர்மாத்திரை. இ-ள். நறிய தாரவனே! நீ நிகழ்த்தின நிலைமைகண்டு, என் சுற்றத்தார் இவள் நாடோறும் பெறுமன்பினளென்பது பேசி னன்றித் தேயுமன்பினளென்று கூறுவாரில்லை; உருகுமென்போடு நைவேற்கு இன்னுமருளி நணுகாயென்றாளென்க. (105) 1517. நுனசீ றடிநோ வநடந் துசெலே லெனதா வியகத் துறைவா யெனுநீ புனைதா ரவனே பொயுரைத் தனையால் வினையே னொழியத் தனியே கினையே. இ-ள். தாரவனே! இப்பொழுது தீவினையையுடைய யானிருப்ப நீதனியே யேகினாயாதலின், முன்பு எனதாவியகயுத்தே றைவாய்! நின்னுடைய சீறடி நோவ நடந்துதிரியாதே கொள்ளென்று கூறுநீ பொய்யை யுரைத்தாயென்றாளென்க. (106) 1518. பருமுத் துறையும் பணைவெம் முலைநின் றிருமுத் தகலந் திளையா தமையா வெரிமொய்த் தனலும் மிகல் வேலெரிபுண் மருமத் தனலும் வகைசெய் தனையே. அவன் முத்துவடந் தங்கும் பெருத்த விரும்பியமுலையென்று, அவற்றைப் பின் பிரிதல் வன்மையின், அவன் கருத்து வேறாக ஈண்டுக்கூறினாள்: முத்து -கண்ணீர், பணை பிழைத்தல், வெம்மை - காமத்தீயாலேவெவ்விதாதல்; கண்ணீர்தங்கும் யான்பிழைக்கும் வெவ்விய முலையென்று. இ-ள். நீ கூறுகின்றபொழுதே பின்பு இவையுளவாமெனக் கருதிக் கூறிய முலைகள், தம்முன்னே நின்று நின்னகலம் முயக்கத்தைக் கொடாதேநிற்றலின், அதனை முயங்காமையா லாற்றுகின்றன வில்லை; ஆதலின், நீமருமத்திடத்து முன்பே தீப்பட்ட தொரு புண்ணிலே காய்ந்தவேல் நின்றெரியுந் தன்மையைச் செய்தா யென்றாளென்க. முன்னர் முயங்கிப் பிரிந்தபிரிவு புண்ணிற்கும், இப் பொழுது முன்னின்றுமயக்கங் கொடாதநிலை வேலிற்குமுவமை. இத் துணையும் எதிர்பெய்துபரிதல். ”உடம்பு முயிரும் வாடியக் கண்ணு” (தொல். பொருளி.9) என்னுஞ் சூத்திரவிதியான், முலையை யிங்ஙனங் கூறினாள். (107) 1519. புனமா மயிலே பொழிலே புனலே வனமார் வழையே வரையே திரையே யினமா மணிசூ ழெரிபூ ணவனைத் துனயான் பெறுகோ தொழுதே னுரையீர். இ-ள்.மயின்முதலியவற்றைவிளித்து நும்மைத்தொழுதேன்; இனி யான் பூணவனை இன்னுஞ் சேரப்பெறுவேனோ? பெறுவே னாயின், அவனிருக்கின்றவிடத்தைக் கூறீரென்றாளென்க. (108) 1520. கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய் நடுநா ளிரவின் னவைதான் மிகுமா னெடுவெண் ணிலவின் னிமிர்தேர் பரியா தடுமால் வழிநின் றறனே யருளாய். நிலவின் நிமிற் தேர்-நிலவினையுடைய மதி; அது வட்டத் தாற் றேருருள் போறலிற் றேரென்றாள். இ-ள். கணையிலுங்கொடி தாய் இரவுசெய்கின்ற வருத்தந் தான் மிகாநின்றது; மதி பிரிந்திருத்தற்கு இரங்காதே தானுமடா நின்றது; இவ்வளவுக்கு என்கூற்றிலே நின்று, அறக்கடவுளே! அருளாயென்றா ளென்க. (109) 1521. கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந் தயலே னறியா மையுரைத் ததெலா மியலா ததுவோ வினியேற் கினியீ ருயலா வதுகண் மலர்கா ளுரையீர். கிடந்து - கிடக்க. அவசமாக்கித் தன்னைக் கூடாமையின், அயலே னென்றாள். உரைத்ததனைப் பொன்றுரைத்த தென்றாற் போல அவன் செய்த தொழிலென்று கொள்க. அது சொல்லிற் றெல்லாமென்றாற் போலவுநின்றது. இனியீர் - இகழ்ச்சிக் குறிப்பு. இ-ள். அவன் இக்கண்கள் கயலாயிருந்தனவென்று நும்மைப் புகழ்தலின், அதற்கு நீரன்புற்றுக் கிடக்க, அயலேனாகிய யானறியாமல் நுமக்குக்கூறியதெல்லாம் பிரிவையோ? கண்ணிற் சிறந்த உறுப்பில்லையென்று நும்மிடத்து இனியேனாகிய வெனக்கு இனியீராயிருந்தீர்; நும்மை அவன் புலால் நாறுகின்ற கயலென்றுபுகழப் போக்குடன்பட்டீர்; யான் கண்மலர்கா ளெனப்புகழாநின்றேன்; இனி உய்யலாம்வழி யுரையீரென்றா ளென்க. (110) 1522. நெறிநீர் வளையு நிழனித் திலமும் பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும் வெறிதா ரவனெவ் வழியே கினனீ ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள். நெறித்தநீர் - கடல். இ-ள். அவனினைவையமர்ந்த தோளிணைகாள்! பொறித் தாற் போலுந்தன்மையவாக வளையையு முத்தையுமணிந்து கரும் பையுமெழுதி உம்மைப்புகழும் மணத்தையுடைய தாரவன் எவ்விடத்தே போயினான்; முயக்கக்தை நெகிழ்ந்து போகவிட்ட நீர் அவன் போனவிடமறிவீர்; நும்மை இன்னும் யான்புகழ்தற்கு அவ்விடத்தைக் கூறீரென்றாளென்க. (111) 1523. இழுதார் சுடர்வே லிளையா னகலத் துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத் தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென் றழுதா டடமாக வணங் கிழையே. ஓரிடத்தும் பற்றின்றி யிருத்தலின், விடை. முறித்தற் காகாமையின், வயிரத்தொழுவென்றாள். இ-ள். அணங்கிழை, முலைகாள்! இளையானகலத்தே சேரத் சின்னாளுழுதநீர் அவ்வுழவின்பயனை முற்றப்பெற்றுவிடுமளவும் போகாதபடி அவனைத் தொழுவாய்ப் பிணித்திலீர்; நுமக்கும் அஃதரிதாயிற்று; இனி யான்செய்வதென்னென்று தடமாக அழு தாளென்க. (112) 1524. தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர் வகைவா டிவருந் தியழு வதுகண் டகையே லமர்தோ ழியழே லவரோ பகையா பவரென் றனள்பான் மொழியே. இ-ள். பான்மொழி, தானழுத கண்ணீரிலே தோற்றின தன் அழகு கெட்ட நிழல் வாடி வருந்தி அழுவதனைக்கண்டு, எனக்கு அன்பமர்ந்த தோழி! நீ வருந்தாதே கொள், அழுவதுஞ் செய்யாதே கொள், முடிவில் அவர் நமக்குப் பகையாவரோவென்று ஆற்றுவித்தாளென்க. ஓகாரம் - எதிர்மறை. இனிப் பளிங்கிற்றோற்றிய நிழலுமாம். (113) 1525. வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப் பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய் நெறிநா டியபோ யினணீ டினள்கண் டெறிவால் வளைகொண் டுவரும் மினியே. பொறிமாலை - விதியையியல்பாகவுடையாள்; பெயர். இ-ள். தன் தலையின்மாலைகள்வீழ்ந்து கண்ணீரையுடைய நிலமறை தலின், பொறிமாலை, அந்நிழலாகிய தோழியைக் காணாளாய் அவள் அவன்போனவழியைத் தேடுதற்குப் போனாள்; நீட்டிப்பதுஞ்செய்தாள்; இனி யவனைக்கண்டு வளையைக் கொண்டு வருவளென்றாளென்க. எனவே அவனைத் தான் கொண்டுவருமென்றாளாம். (114) 1526. மடமா மயிலே குயிலே மழலை கடைமா ணவமே நலமார் கிளியே யுடனா டுமெனை யனையென் றுருகாத் தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே. நலமார் மழலைக்கிளி. இ-ள். யாழ்போலு மழலைமொழியை யுடையாள், மயில்முதலிய வற்றை விளித்து, என்னுடனே விளையாடும் என் ஐயனை யென்றவளவிலே உருகி, அவற்றிக்குக் கூறுகின்ற காரியத்தை மறந்தாளென்க. ஐயனையென்னும்இரண்டாமுருபிற்குத் தேடுமினென்னும் வினைவருவிக்க. (115) வேறு 1527. மல்லுறை யலங்கன் மார்பன் பிரிவெனு மெரியுள் வீழ்ந்து கல்லுறை நாகு வேய்த்தோட் கதிர்மணி முறுவற் செவ்வாய் வில்லுறை புருவ மாதர் வெந்தனள் கிடப்ப மின்றோ யில்லுறை தெய்வ நோக்கி யிரங்கிநின் றுரைக்கு மன்றே. 1528. புண்ணவாம் புலவு வாட்கைப் பொலன்கழற் புனைந்த பைந்தார்க் கண்ணவாம் வனப்பி னானைக் காமனே கண்ட போழ்தும் பண்ணவாம் பவளச் செவ்வாய்ப் படாமுலைப் பரவை யல்குற் பெண்ணவா நிற்கு மென்றாற் பிணையனாட் குய்த லுண்டோ. 1529. கடத்திடைக் கவளந் தேனெய் கனியைத் தோய்த்தினிய துற்றத் தடக்கையாற் கொடுத்துப் புல்லுந் தவழ்மதக் களிறு நீங்கின் மடப்பிடிக் குய்த லுண்டோ வாலடிக் குஞ்சி சூட்டுங் கொடைக்கையான் பிரிந்த பின்றைக் கோதையாட் குய்த லுண்டோ. இவைமூன்றுமொருதொடர். காமனே, ஏகாரம்-பிரிநிலை. புண்ணையவாவும் வாள். பெண்ணவாயும் பாடம். இ-ள். மலையிடத்தேநின்ற இளைய வேய்போலுந் தோண் முதலியவற்றையுடைய மாதர் கணவன்பிரிவாகிய ஏரிக்குள்ளே வீழ்ந்து வெந்தனளாய்க் கிடந்த வளவிலே, அவளை நோக்கி வருந்தி நின்று கூறுமில்லுறைதெய்வம், கை முதலியவற்றையுடைய கண்ணவாவும்வனப்பினானைக் காமனேயுட்படக் கண்ட பொழுதும் அவற்கு வாய் முதலியவற்றையுடைய பெண்டன் மையை யெய்துவ தோராசை நெஞ்சிலேநிற்குமென்றால் இவட்குப் பிழைத்தலுண்டோ, தேனெய்யைக் கனியைத் தோய்த்தலாலே யினியவாகிய கவளத்தைத் துற்றும்படி கையாலேகொடுத்துப் புல்லுங் களிறு நீங்கப் பிடிக்குக் கடத் திடை உய்யுந்தன்மையுண் டாமோ, அதுபோல ஊடறீர்த்துப் புணருங் கொடைக்கையான் பிரிந்தபின்பு கோதையவட்குப் பிழைக்குந் தன்மையுண்டாமோ வென்றுகூறிற்றென்க. (116-18) 1530. முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலைத் தெய்வஞ்சேர உயங்குவா ளுணர்ந்து கேள்வற் கூனமும் பிரிவு மஞ்சி யியங்குவா னின்ற வாவி தாங்கின ளென்ப போலும் வயங்குபொன் னீன்ற நீல மாமணி முலையி னாளே. ஊனம் - பழி. பிரிவு-இறந்துபாடு. பொன் - பசப்பு. இ-ள். தெய்வம், நினதிறந்துபாடு நின்கேள்வற்கு ஊனமும் பரிவுமாமென்று கூறுவனபோலும் முயங்கினான் கூறிய வண் டாய்ச்சேர்தலின், முலையினாள், வருந்துகின்றவன், அதனைக் கண்டு உணர்ந்து அஞ்சிப் போதற்கு ஒருபட்டுநின்றவாவியைப் போகாமற் றாங்கினாளென்க. அவன் “துணைவண்டு துஞ்சி னீயுந் துஞ்சுவை” (சீவக 1502) என்றதனை நினைந்து ஆற்றினாள். தன் றெய்வத்தன்மையால் அதனைத் தெய்வம்நினைப்பித்தது. (119) 1531. வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டு காணீர் துஞ்சுவேன் றுயரந் தீரத் தொழுதகு தெய்வ மாவீர் மஞ்சுதோய் நெம்பொன் மாடத் தென்மனை தன்னு ளென்றான் பஞ்சிமேன் மிதிக்கும் போது பனிக்குஞ்சீ றடியி னாளே. துணைவண்டையும் நெஞ்சாலேகருதி, வண்டுகாளென் றாள். இ-ள். சீறடியினாள்; காமன்சொன்ன வண்டுகாள்! நீங்கள் இறந்து படுவேனது துயரந்தீரும்படி என்மனைதன்னுட் டெய்வ மாவீராக வென்றாளென்க. நும்மால் இறந்துபாடுநீங்கினேன்; இனி இரங்காத நும்மைக்கண்டு இரக்கமுந் தீரும்படி இல்லுறை தெய்வமாயிருப்பீ ரென்றாள்; “இருக்குமே யிரங்க லின்றாய்” (சீவக 1502) என்றானாதலின். இது தெய்வத்தன்மையாற் கூறுவித்தது தெய்வம். (120) 1532. நொந்தெடுக் கலாது வீங்கும் வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர் பந்தெடுக் கலாத நங்கை பால்கடை வெண்ணெய்ப் பாவை வெந்துடன் வெயிலுற் றாங்கு மெலிந்துக விளங்கும் வெள்ளி வந்துவா னிட்ட சுட்டி வனப்பொடு முளைத்த தன்றே. வீங்குமுலையை யெடுக்கமாட்டாது நொந்து தேய்ந்து வருந்து நுசுப்பாலே பந்தெடுக்கலாத நங்கையென்று அவளியல்பு கூறினார். வருந்துமென வருவிக்க.இனிநுசுப்புப்போற் றேய்ந் தென்றுமாம். இ-ள். நங்கை, ஈண்டு வெண்ணெய்ப்பாவை வெயிலுற்று உடனே வெந்தாற் போலே யுருகாநிற்க, வானுக்கிட்ட சுட்டி போல வெள்ளிவந்து முளைத்ததென்க. (121) இறந்துபாடுநீங்கி வருந்தினாள். 1533. எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப் புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலே யரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித் திருவிரி கோதை நாற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள். ஈண்டி-ஈண்ட. இ-ள். எரியைச்சேர்ந்த தளிர்போலே மயங்கித் தன்மிடற்றை நரம்போசையினின்றுநீக்கி வருத்தமுற் றழுதலாலே, அவ்வோசை அகத்திலுள்ளார்க்கு இசைப்ப, அவர்திரண்டவளவிலே அவணற் றாயாகிய நிப்புதி யணுகி ஒருமொழி கூறினாளென்க. (122) 1534. விழுத்தினைப் பிறந்து வெய்ய வேட்கை வேரரிந்து மெய்ந்நின் றிழுக்கமொன் றானு மின்றி யெய்திய தவத்தின் வந்து வழுக்குத லின்றி விண்ணோன் வச்சிர நுதியி னிட்ட வெழுத்தனான் றந்த வின்ப மின்னுநீ பெறுதி யென்றாள். அயன் வச்சிரத்தாலிட்டவெழுந்துப்போலே தப்பாதவன். விண்ணோன் வச்சிரநுதியா னிட்ட, வெழுத்தனான்- இ-ள். உயர்ந்தகுடியிலேபிறந்து உண்மையிலேநின்று சன்மார்க்க நெறியிற்றப்பொன்று மின்றி வேட்கையாகிய பிறவி யின்வேரையரிந்து நாம் முன்செய்த தவத்தினாலே யெழுத்தன் னான்வந்து தந்த வின்பத்தை வழுக்குதலின்றி இன்னும் நீயே பெறுவையென்றாளென்க. (123) 1535. பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசி னிறங்கின வீழு மேலா யோங்கிய வெண்ணில் யோனிப் பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே யென்ன நோக்கிக் கறங்கிசை வண்டு பாடுங் கோதைநீ கவல லென்றாள். இ-ள். கோதாய்! மேலாய்வளர்ந்தன தாழ்ந்துவிழும்; பிறந்தவ ரெல்லாருஞ் சாவர்; செத்தாரெல்லாரும்பிறப்பர்; இன்னுங்கூறின், மிக்கவனப்புக்களெல்லாம் ஒருநாற்கெடும்; அங்ஙனங்கெட்டாலும் பிரிந்தவர்களெல்லாரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவாலதேகொள்ளென்றாளென்க. பிறங்கினகள்யாவுமெனவும், பிரிந்தவர் புணர்வரெனவு மாறுக. (124) 1536. எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றாற் பிரிவின்கட் பிறந்த துன்பம் பெருங்கட லனைய தொன்றா லுருகிநைந் துடம்பு நீங்கி னிம்மையோ டும்மை யின்றி யிருதலைப் பயனு மெய்தா ரென்றுயாங் கேட்டு மன்றே. இ-ள். காமத்திடத்துப் புணர்ச்சியாற் பெறுமின்பம் நீர்த் துளியை யொத்திருக்கும்; பிரிவாற் பிறந்ததுன்பம் பெரிய கடலை யொப்ப தொன்றாயிருக்கும்; ஆதலின், இப்பிரிவாலே பெறுதற் கரிய மக்கள்யாக்கை நீங்குமாயின், இம்மையினும் மறுமையினுஞ் செய்துகொள்ளுநன்மையின்றி, இரண்டிடத்துப் பெறும்பயனை யும் பெறாரென்று உணர்ந்தார்கூறக் கேட்டிருப்போமல்லவோ? ஆதலின், இது தகாதுகாணென்றா ளென்க. (125) 1537. மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள். இ-ள். இனியசொல்லாய்! மக்களிளமை மிகவும் நீர்மொக்கு ளையொக்கும்; அவரின்பம் மின்னொத்துத் தோன்றிமாயும்; அவர் செல்வம் வெயிலைக்கண்டபனி போல் நீங்கும்; ஆதலிற் றீவினை யினாக்கம் அப்படிவலிதாயிருக்கும்; இதற்கு வருந்திப் பெறுவதென்னை யென்று ஆற்றுவித்தாளென்க. இசையொலிக்கும்யாழின் இளியென்னுநரம்பு. (126) 1538. பஞ்சிறை கொண்ட பைம்பொற் கலைபுறஞ் சூழ்ந்து வைத்து நஞ்சிறை கொண்ட நாகப் படம்பழித் தகன்ற வல்குல் வெஞ்சிறைப் பள்ளி யாக விழுமுலைத் தடத்து வைகத் தஞ்சிறைப் படுக்க லாதார் தம்பரி வொழிக வென்றாள். பஞ்சு- ஆகுபெயர். இ-ள். நஞ்சுகுடி கொண்ட பாம்பினது படத்தைப் பழித்து அகன்ற துகில் தங்கின பைம்பொற்கலையையுடைய வல்குலாலே புறத்தே காவலிட்டுவைத்து முலைத்தடந்தான் ஒருசிறைக் கோட்ட மாக அம்முலைத்தடத்தே தங்கும்படி தம்பாலே யகப்படுத்த மாட்டாத மகளிர் தம்முடைய வருத்தத்தைத் தவிர்வாராக வென்றாளென்க. இது கேமசரி தன்னிலேகூறியாற்றினாள். தாய்கூற்று மென்பர். (127) 1539. வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப் பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம் பேசினோர் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா டூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள். இ-ள். மணிப்பாவையன்னாள் வாசமுடைய தாரான் வண்டினுக்குக் கூறிய வார்த்தையாகிய பிணிப்பாலே அன்புமிக்குண் டாக்கப்பட்ட உயிரொன்றையு முடையவள் அவ்வுயிரொழிய உடம்பு முழுவதும் நாஞ்சொல்லிற் பிசைந்துபோகட்டதொரு கட்டுதலையுடைய மாலையையொத்தாளென்க. அல்லதெல்லாம் மாலையையொத்தாளெனச் சினை வினை முதலொடு முடிந்தது. எல்லாமென்றது ஒருபொருளின் பல விடங் குறித்துநிற்றல் “பல்வழி நுதலிய” (தொல்.பெயர்.32) என்றதனாற் கொள்க. (128) 1540. பையர விழுங்கப் பட்ட பசுங்கதிர் மதிய மொத்து மெய்யெரி துயரின் மூழ்க விதிர்விதிர்த் துருகி நையு மையிருங் குழலி னாடன் மைந்தனை வலையிற் சூழ்ந்து கையரிக் கொண்டுங் காணாள் காளையுங் காலிற் சென்றான். காலின் காற்றுப்போலேயென்றுமாம். அரா- விகாரம். இ-ள். பாம்புதீண்டின மதியையொத்துப் பசந்து மெய் எரியுந் துயரத்திலே மூழ்கும்படி நடுங்கி நெஞ்சுருகி நையுங் குழலினாள், தன் கணவனை வலைபோலே கையரிக்கொண்டு தேடியுங் கண்டிலன்; அவனுங் காலாலேநடந்துபோனானென்க. (129) 1541. காழகச் சேற்றுட் டீம்பால் கதிர்மணிக் குடத்தி னேந்தி வீழ்தரச் சொரிவ தேபோல் விளங்கொளித் திங்கட் புத்தேள் சூழிருட் டொழுதி மூழ்கத் தீங்கதிர் சொரிந்து நல்லார் மாழைகொண் முகத்திற் றோன்றி வளைகடன் முளைத்த தன்றே. இ-ள். பாலைப் பளிக்குக்குடத்தேயெடுத்துக் கருஞ்சேற்றிலே வீழும்படி சொரியுந்தன்மைபோலே திங்களாகியதெய்வந் தன்கதிரை யிருளிலே குளிக்கும்படி சொரிந்து மகளிருடைய பசத்தல்கொண்ட முகம்போலே தோன்றி முளைத்ததென்க. மாழை - பொன், விடியற்காலத்தெழுந்த நிலவு இருளைக் கெடுத்தலாற்றாமையின், இங்ஙனங் கூறினார். (130) 1542. ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு வீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றை மாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்க ணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான். இ-ள். ஏறானாற்குக் கைவிளக்கெடுத்தாற்போல வழி யிருளைக் கைவிடும்படி மதி தோன்றுதலாலே போய பின்பு, நிகரில்லாத ஞாயிற்றினது வட்டங் கடலிலே முளைத்த வளவிலே, தலைவன் வழிப்போவானொருவனுக்கு அணிகலன்களைக் கொடுக்கலுற்றா னென்க. (131) வேறு 1543. எவ்வூரி ரெப்பதிக்குப் போந்தீர்நும் மனைவியர்தா மெனைவர்மக்க ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற் றெனைவர் நீருரைமி னென்றாற் கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென் மனைவியரு நால்வர் மக்க ளொவ்வாதார் தாமில்லை யொப்பா னொருவனென வுரைத்தான் சான்றோன். இ-ள். எவ்வூரிலேயிருப்பீர், எவ்வூர்க்குவந்தீர், நும்மனைவி யர்எத்துணைவர், பிள்ளைகள் ஒழுக்கமுடையாரெத்துணைவர், ஒழுக்க மில்லாதார் எத்துணைவரென்று வினாயினவனுக்கு, இப்பொழுது இவ்வுடம்பினிடத்தேன், இவ்வுடம்பெடுத்தற்குப் போந்தேன், எனது மனைவியரும் நால்வர், மக்கள்ஒவ்வாதாரில்லை, ஒப்பானொருவனுள னென்று உணர்வுடையான் கூறினானென்க. (132) 1544. ஒப்பா னெருமகனே நால்வ ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல் யாருலகி னியா ரென்ன மிக்கா னுரைப்பதுவு மிக்கதே போலுமால் வினவிக் கேட்பேன் றக்காய் குறித்ததுரை யென்றான் றானுரைப்பக் கேட்கின் றானே. இ-ள். ஒப்பானாகிய அவ்வொருமகன் றானே நான்கு தாய்மாரது ஒருவயிற்றிலே பிறந்தானென்று அங்ஙனங் கூறினானாக, இவனைப்போல் உலகில் இனியார்யாவரென்றுகூறி அறிவில்லாத வன்றான் நக்கான்; நக்குப் பின்னும் அறிவுமிக்கவன் கூறிய வார்த்தையும் மிக்கதுபோலேயிராநின்றது; யான் கடாவிக்கேட்பே னென்று கருதி, தக்காய்! நீ நினைத்ததனைக் கூறென்றான்; அவனு ரைப்பத் தான் கேளாநின்றானென்க. (133) 1545. நற்றானஞ் சீல நடுங்காத் தவமறிவர் சிறப்பிந் நான்கும் மற்றாங்குச் சொன்ன மனைவியரிந் நால்வரவர் வயிற்றுட் டோன்றி யுற்றா னெருமகனே மேற்கதிக்குக் கொண்டுபோ முரவோன் றன்னைப் பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார் பிறர்மக்கள் பிறரே கண்டீர். இ-ள். தானஞ் சீலந் தவம் இறைவர்பூசனையென்று சொல்லிய இந்நான்கும் முன்கூறிய மனைவியர்; இந்நால்வர் வயிற்றினும் பிறந்து பயன்றருவானாகிய நல்வினையென்கின்ற மகனே மேற்கதிக்குக் கொண்டுபோமுரவோன்; அவனைப் பெற்றாரே மகப்பெற்றார்; அல்லாதார் மகப்பெற்றாரல்லர்; பெற்றமகவும் அவர் மகவல்ல கண்டீ ரென்றானென்க. (134) 1546. படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து கண்டவர்மெய் பனிப்ப நோற்றிட் டுடனாக வைம்பொறியும் வென்றார்க் குவந்தீத றான மாகுந் திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டு முயிர்க்குழா மீண்டி நிற்றற் கிடனாகு மூனுமிவை துறத்தலே சீலமென் றுரைத்தார் மிக்கார். இ-ள். படநாகந் தோலுரித்தாற்போலே அகமும்புறமுந் தூயவாகத் துறந்து நோற்றுத் தம்வயத்தனவாக ஐம்பொறியை யும் வென்றார்க்கு உவந்துகொடுத்தல் தானமாம்; தேன் முதலியவற் றைத் திடனாகத்துறத்தல் சீலமாமென்று மிக்கவர் கூறினாரென்றா னென்க. நாகந் தோலுரிக்கும்பொழுது நஞ்சுங் காலும். (135) 1547. ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட் டொழுக்கங் காத்த றாவாத் தவமென்றார் தண்மதிபோன் முக்குடைக்கீழ்த் தாதை பாதம் பூவே புகைசாந்தஞ் சுண்ணம் விளக்கி வற்றாற் புனைத னாளும் ஏவா விவைபிறவும் பூசனையென் றீண்டியநூல் கரைகண் டாரே. ஏவா- சொல்லி. இ-ள். அறமீண்டிய ஆகமத்தைக்கரைகண்ட இருடிகள் தாதை பாதத்தே நாடோறும் பூ முதலியவற்றாற்புனைதலையும், இவை யொழிந்த பிறவற்றாற்புனைதலையும் பூசனையென்றேவி, இரண்டு வாவிலும் அட்டமியிலும் பட்டினிவிட்டு ஓவாது ஒழுக்கங்காத்தலைக் கெடாத தவமென்றாரென்க. (136) 1548. இந்நால்வர் துணைவியராக் காதன் மகனிவனா வுடையார் போகிப் பொன்னார மார்பிற் புரந்த ரராய்ப்பூமி முழுது மாண்டு மன்னாகி முக்குடைக்கீழ் வாமன் சிறப்பியற்றி வரம்பி லின்பம் பின்னா விளைவித்துப் பிறவா வுலகெய்தல் பேச லாமே. இ-ள். இந்நால்வருந் துணைவியராக மகனாவுடையார் சுவர்க்கத்தே போய்இந்திரராய்அப்விடத்தையாண்டு பின்பு சக்கரவர்த்தி யாய்ப் பூமிமுழுவதையுமாண்டு வாமனுக்குப் பூசனைகளை நடத்திஅருகந்தாவத்தையைவிளைவித்துப் பின்பு வீடு பெறுதல் உண்மையென்றே கூறலாமென்றானென்க. (137) 1549. மட்டார்பூம் பிண்டி வளங்கெழு முக்குடைக் கீழ் மாலே கண்டீர் முட்டாத வின்பப்புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி பாத மெட்டானும் பத்தானு மில்லாதார்க் கிவ்வுலகிலின்ப மேபோல் ஏட்டாவே கண்டீர் வினையவனைத் தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே. பாதம் அடி. இ-ள்.இன்பக்கதிக்குச் செல்லும் கதவைத் திறக்குந் தாளாகிய பாதத்தையுடைய மூர்த்தி முக்குடைக்கீழ் மாலே காண்; அவனைத் தேறினார்க்கு, பொருள் பத்தெட்டுக்கூட இல்லாதார்க்கு இவ்வுலகத்தின் பங் கூடாத வாறுபோல நல் வினைகூடா; இத்தன்மையை யுணர்ந் தீரல்ல வோ வென்றானென்க. ஆனும், உம்மும் அசைகள். உணர்ந்தீர்-ஒருவரைக் கூறும் பன்மை. (138) 1550. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து வைப்பீரே யல்லிர் போலுங் கூற்றங்கொண் டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி னாற்றுணாக் கொள்ளீ ரழகாலா லறிவொன்று மிலிரே போலும். ஏகாரம்,போலும்: அசைகள். இன்-ஏழனுருபாதல் புறனடை யாற்கொள்க. இ-ள். அயலாரில்லாத சுற்றத்தாரூர்க்கே போயினும் அவருடனே வெகுண்டு ஆண்டுச் செல்லாதீர்போலப் பொதி சோறு கைக் கொள்ளாமற் புறத்து ஓரடியிட்டிடீர்; இத்தன்மையீர்! கூற்றம் நும்மைக்கட்டிக்கொண்டோட நுமரில்லாதவூர்க்குத் தனியேபோம் பொழுது உண்ணுமூணுக்குப் பொதிசோறு இப்பொழுதே தேடிக் கொள்கின்றிலீர்; ஆதலின், அழகன்றி அறிவொன்று முடையீரல்லிர்போலே யிருந்தீரென்றானென்க. (139) 1551. அளைவது காம மடுநறவு நெய்யொழுகு மூனும் பின்னா விளைவது தீவினையே கண்டீ ரிவைமூன்றும் விடுமி னென்றாற் றளையவிழ் கோனதயார் தாமஞ்சேர் வெம்முலை போல் வீங்கிக் கண்சேந் துளையவுறுதி யுரைப்பானர யோஒபாவ முணரா ரேகாண். இ-ள். அருந்துவதாகிய காமத்தாலுங் கள்ளாலும் ஊனாலும் பின்புவிளைவது தீவினையேகாணுங்கள், இவை மூன்றையுங் கைவிடுங்களென்று பிறர்க்குக் கூறினால், இங்ஙனந் தாம்வருந்தக் காரியங்கூறுவாரை முலைபோற்பொருமிக் கோபித்து உணரார்காண், ஓ! இஃதொருபாவமிருந்தபடி யென்னென்றானென்க. (140) 1552 .இழுதன்னவெண்ணிணத்தசெந்தடிக்கேயேட்டைப்பட்டிருப்பிற்போர்த்த பழதெண்ணும்வன்மனத்தாரோட்டைமரச்செவியர்கேளார்பால்போன் ரொழுகியமுதூறுநல்லறத்தையோர்கிலாரூன்செய்கோட்டக் கழுகுண்ணவள்ளூரமேசுமந்துபுள்ளிற்கேபுறஞ்செய்கிறார். ஓட்டையென்றார், உட்கொள்ளாமையின். ஊன்செய் கோட்ட-ஊனாற்செய்தவிடம்பு. வள்ளூரம்-ஊன். இ-ள். நிணத்தவாகியதசையைப்பெறவேண்டு மென்றே யிளைத்து அவ்வள்ளூ ரமேசுமந்து கோட்டக்குப்புறஞ் செய்கின் றார், ஓர்கிலராய்க் கழுகுண்ணும்படி அக்கழுகிற்கே புறஞ்செய்கின்றார்; இதனை யிங்ஙனம் பழுதெண்ணும் இரும்பாற் போர்த்தவன் மனத்தார் ஒட்டைமரச்செவியராய்அறத்தைக் கேளாரென்றா னென்க. 1553. கையாற் பொதித்துணையே காட்டக் கயற்கண்ணா ளதனைக் காட்டா ளையா விளாம்பழமே யென்கின்றீ ராங்கதற்குப் பருவ மன்றென் செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக் கட்டுரையாற் குறித்த வெல்லாம் பொய்யே பொருளுரையா முன்னே கொடுத்துண்டல் புரிமின் கண்டீர். இ-ள். மொழியின்றிக் கையாலே பொருட்டிரளினளவைக் காட்டி னானாக, கண்ணாளாகிய மனைவி அதனைக் காட்டாளாய் அவற்குச் சிறந்தாள்போலே ஐயனே! விளாம்பழமே வேண்டுமென்னனா நின்றீர்; அது தருவதற்கு விக்குள்வந்தடுத்தலிற் பருவ மன்று; என்செய்வே னென்றுகூறி, ஆங்கவன்மற்றுக் காட்டியவெல்லாவற்றிற்கும் அவள் கட்டுரையாலே பொய்யே பொருள் கூறுவதற்குமுன்னே பிறர்க்குக் கொடுத்துண்டலை விரும்புவீராக வென்றானென்க. (142) பன்மை-சாதிப்பன்மை. வேறு 1554. பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன் முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார் துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங் கனியநின் றாடுவர் கடையில் காலமே. இ-ள். மதியைமுனிகின்ற முகத்தியருடைய அம்மதியின் கதிரை உள்ளடக்குவதோராம்பல்போலு முறுவலையுடைய வாயை நச்சினார், முடிவில்லாத காலமெல்லாந் தீக்கதிகளிலே தோன்றி வெவ்வெறியாக்கைகொண்டு முற்றத்திரிவ ரென்றா னென்க. (143) 1555. நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர் பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற் குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார் தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே. இ-ள் ஒளிமிக்க பெரிய மதியின்கதிருக்குத் தாமரை யஞ்சு மாறுபோலே கிளவியார் கோலத்திற்கஞ்சினார் பலருந் தொழும் படி மிக்குத்தேவராய்ச் சுவர்க்கத்தையாளுவ ரென்றா னென்க. (144) வேறு 1556. இன்னவா றுறுதி கூறி யெரிமணி வயிர மார்ந்த பொன்னவிர் கலங்க ளெல்லாம் பொலிவொடு புகன்று நீட்டிச் சென்மினீ ரென்று கூற வலங்கொண்டு தொழுது சென்றான் வின்மரீஇ நீண்ட தோளான் வெயிற்கட நீந்த லுற்றான். இ-ள். அங்ஙனம் அணிகலமருளலுற்றவன், இங்ஙனம் அவனுக்கு உறுதியைக்கூறிக் கலன்களை விரும்பிக்கொடுத்துநீர் போமென்றுகூற, அவனும்வலங்கொண்டு தொழுதுபோயினான்; போயின பின்பு, தோளான் கடத்தைப்போகலுற்றானென்க. (145) கேமசரியாரிலம்பக முற்றிற்று