வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 15 சோவியத் உருசியா ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 15 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2006 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 24 + 176= 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 130/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச்சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறுகொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கிஉள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக் கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடு கிறோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த் தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுயுள்ளேன். பதிப்பாளர் நுழையுமுன்... சோவியத் ருஷ்யா லெனின் காலம் 1917- 24; டாலின் காலம் 1924 - 1953. டாலின் இறந்தது 04.03.1953 அன்று. அதுவரையுள்ள உருசிய வரலாற்றை அறிஞர் சாமிநாத சர்மா அருமையாகத் தந்துள்ளார். அதற்குப் பின் உள்ள வரலாற்றைச் சுருங்கக் காண்போம். 1953-1989 கால கட்டத்திலும் (அதற்கு முன்னர் 1917-1953 காலத்தில் இருந்தது போல) முழு ஆட்சி அதிகாரம் பொதுவுடைமைக் (கம்யூனிசுடு) கட்சியிடமே இருந்தது. 1924 - 53 கால அளவில் முழு அதிகாரமும் டாலின் கையிலேயே இருந்தது. 2. டாலினுக்குப் பிறகு உருசியத் தலைமை அதிகாரம் எவ்வாறு இருந்து வந்தது என்பதைக் காண்போம்: 1953 - 56 மாலெங்காவ் ( டாலின் காலத்தில் உருசிய மந்தண காவல்துறை NKVD தலைவராக இருந்த லாவ்ரெந்தி பெரியா 1953 சூன் மாதத்திலேயே கொல்லப்பட்டு விட்டார்.) 1956 - 64 நிகிதா குருசேவ் 1964 - 82 பிரஷ்னேவ் 1982 - 85 அந்திரபாவ்; செர்னென்கோ 1985 - 91 மிக்கேல்கோர்பசெவ் 1989 இறுதியிலேயே சோவியத் சோசியலிடு குடியரசுகள் ஒன்றியம் (Union of Soviet socialist Republics) தனித் தனி நாடுகளாக உடைந்துவிட்டது. பொதுவுடைமைக் (கம்யூனிடு) கட்சியின் தனி ஆட்சியும் முடிவுற்றது. எனினும் தனித் தனித் நாடுகளாக ஆகிவிட்ட உருசியா, (சைபீரியா உட்பட), உக்ரைன், பெலாரசு, ஜார்ஜியா, அர்மீனியா, அஜர்பெய்ஜான், உபெகிதான், துர்க்மெனிதான், கிர்கிதான், தாஜிகிதான் ஆகியவை தன்னரசு நாடுகளின் பொதுவம் ( Common Wealth of Independent States ) என்ற பெயரில் ஓரளவு ஒன்றுக்கொன்று உறவுடன் செயல்பட்டு வருகின்றன. சோ.சோ.கு. ஒன்றியம் உடைந்த பொழுது பிரிந்த எதோனியா, லத்வியா, லித்துவேனியா, மால்தாவியா ஆகியவை தனித்தனி விடுதலை நாடுகள் ஆகிவிட்டன. புதிய நாடுகளின் நிலப்படம் இறுதியில் தரப்படுகிறது. 3. 1956இல் பொதுவுடைமைக் கட்சியின் 25ஆவது ஆண்டு மாநாட்டில் டாலின் காலத்தில் நடந்த சர்வாதிகார முறைகேடுகளை குருசேவ் வெளிப்படையாக வெளியிட்டார். நாளடைவில் அவை பற்றிய மேலும் முழுமையான விவரங்கள் வெளிவந்தன. லெனின் காலத்தில் டாலினை விட லெனினுக்கு நெருக்கமாகவும் பொதுவுடைமைக் கட்சியில் முதன்மையாகவும் இருந்தவர்கள் பலருள் குறிப்பிடத் தக்கவர்கள் லியான் திராத்கி (1929இல் உருசியாவை விட்டுத் தப்பி ஓடியவர்; 1940 இல் மெக்சிகோவில் கொல்லப்பட்டவர்) இடதுசாரிகள் காமெனேவ், ஜினோவீவ், வலதுசாரிகள் ரைகாவ், புகாரின் முதலியவர்களாவர். லெனின் சாகும் பொழுது பொதுவுடைமைக் கட்சி டாலின் பொறுப்பில் இருந்தது. மேலும், அவ்வப்பொழுது விரகாகச் சிலரைச் சேர்த்துக்கொண்டு சிலரை எதிர்த்து வெற்றிகொள்ளும் திறமை டாலினுக்கு இருந்தது. (எ.கா. 1924-25 இல் காமெனேவ், ஜினோவீவ் இருவருடன் டாலின் சேர்ந்து கொண்டும், பின்னர் புகாரினுடன் சேர்ந்து கொண்டும் திரொத்கியை எதிர்த்தமை.) 1929-க்குள் தன் அதிகாரத்தை வலுவாக்கிக் கொண்டபின் டாலினை எதிர்ப்பார் எவரும் இலராயினர். மேற்குறித்த தலைவர்களும் வேறுபலரும் 1933-37 ஆம் ஆண்டுகளில் (பயங்கர ஆண்டுகள் Great Terror என்று அழைக்கப்பட்டவை) போலிக் குற்றச்சாட்டு கைது, சிறை, சித்திரவதை, மரண தண்டனை அல்லது சைபீரியா குலாக் (Gulag) கொடுஞ் சிறை ஆகியவற்றுக்கு ஆளாயினர். அவர்கள் மட்டுமல்ல அவர்கள் குடும்பங்களும். இவற்றுக்கு NKVD தலைவர்களாக இருந்து டாலினுக்கு உதவிய யாகொதா ( 1933 - 36),யெசாவ் (1936-39) ஆகியோரும் வேலை முடிந்ததும் காலியாக்கப்பட்டனர். யெசாவுக்கு அடுத்து வந்த NKVD தலைவர் பெரியா மட்டும் 1953 சூன் வரை நீடித்தார். தலைவர்கள் மட்டுமல்ல இராணுவ தளபதிகள் (துகாசெவகி, யாகிர் போன்றவர்கள்) பொதுவுடைமைக் கட்சியின் பல்வேறு மட்டத் தலைவர்களில் பாதிப்பேரும் காலியாயினர். (கவிஞர் சரோஜினி நாயுடுவின் ஹரிந்திரநாத் பொதுவுடைமையராக உருசியாவில் வாழ்ந்து பலியானவர்களில் ஒருவர்) இவ்விவரங்களெல்லாம் குருசேவ் 1956இல் அறிக்கையில் அல்லது அதற்குப் பின்னர் சோவியத் செய்தித் தாள்களில் புத்தகங்களில் வெளிவந்தவையே. 1928-33இல் உருசியாவில் உள்ள விளைநிலங்கள் கட்டாயமாகக் கூட்டுப் பண்ணை முறைக்குக் கொண்டு வரப்பட்டன. அப்பொழுதைய நடவடிக்கைகளாலும்,1932-33 இல் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இறந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடி என கருதப்படுகிறது. 1929 -53 ஆண்டுகளில் குலாக் சைபீரிய சிறைகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.80 கோடி; அங்கு இறந்தவர்கள் 30 இலட்சம் (ஆனி ஆப்பிள்பாம்:2003 Gulag a history; Doubleday books) டாலின், செசகு, போல்பாட் போன்றோர் கொடுமைகளை மட்டும் கருதி மார்க்சிய பொதுவுடைமைக் கொள்கைகளே தீங்கானவை என்று முடிவுக்கு வருவது பேதைமையாகும். 4. குருசேவ் காலத்திற்குப் பின்னர் உருசியாவில் பொதுவுடைமை ஆட்சியில் டாலின் காலத்து சர்வாதிகாரக் கொடுமைகள் படிப்படியாகக் குறைந்தன. தேவையின்றி ஆப்கானிசுதானத்தின் மீது 1979 இல் உருசியா படையெடுத்தது சோ.சோ.கு ஒன்றியத்திற்கு கேடாக முடிந்தது. 1917 லிருந்து எழுபது ஆண்டுகளுக்கு மேல் உருசியாவில் இருந்தனவும், 1960 களுக்குப் பின்னர் ஓரளவு நியாயமாகவும் பல கோடிப் பொது மக்கள் நலன் கருதிச் செயல்படுத்தப் பட்டனவும் ஆன கட்டுப்பாடுகள் 1989-க்குப் பின்னர் முன்யோசனையின்றி அதுவும் அமெரிக்க முதலாளித்துவ கும்பினிக் கொள்ளையரின் கைக்கூலிகளாகவும் எடுபிடிகளாகவும் செயல்பட்ட அரசியல் தலைவர்களாலும் அதிகாரிகளாலும் தளர்த்தப்பட்டு அமெரிக்க - ஐரோப்பிய தாராளமய-தனியார்மய- பன்னாட்டு (அதாவது வெள்ளை நாடுகளின் கும்பினியார்) மய கொள்கைகளைக் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தியதால் உருசியா வலுவிழந்தது. பலகோடி எளிய உருசியக் குடிமக்கள் இன்னலுக்குள்ளாயினர். இன்று புதின் தலைமையில் நிலைமை ஓரளவு சீர்பட்டு வருகிறது. இந்தியாவிலுள்ள பொது வுடைமையரும், யெல்ட்சினை முன்னோடியாகக் கொள்ளாது, புதினை முன்னோடியாகக் கொள்ள முன்வருவார்கள் என நம்பலாம்.இன்றைய உலக மயமாக்கக் கொள்ளையை É.M®.கிUZz ஐயரும் இது குலோபல் வில்லேஜ் கோட்பாடு அல்ல, குலோபல் பில்லேஜ் (கொள்ளை) கோட்பாடு என்று Report of peoples’ Commission on GATT (1996) விளக்கியுள்ளதை நினைவிற் கொள்ளாவிட்டால் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் பலகோடி ஏழை எளிய மக்கள் இன்னும் பத்து - இருபது ஆண்டுகளில் சீரழியப் போகிறார்கள். பொதுவாழ்வில் நாட்டங்கொண்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 5. இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் (U.S.A.)thœ¡if முறையின் முக்கிய கூறாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் எங்கு போனாலும் தன்னுடன் இரண்டு டன் மாழைப் பொருளை (அதாவது மகிழுந்தை) உடன் கொண்டு சென்று நாள்தோறும் பல லிட்டர் எரிபொருளைக் கரியாக்கி சுற்றுச்சூழல், மாந்தர் உடல்நலம், பூமியின் தட்பவெப்பநிலை ஆகியவற்றைப் பாழாக்கி உலகை நாசமாக்குதல் என்னும் பெருங்கேடு உலகெங்கும் பரவினால் விளையவிருக்கும் பேராபத்தை பிடல் காட்ரோ 9.4.2007 இந்து நாளிதழில் மாந்த இனப்படுகொலையை உலகமயமாக்கல் The Internationalisation of Genocide என்னும் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். பலகோடி மகிழுந்துகளுக்குத் தீனி போடுவதற்காக மக்காச்சோளம், சோயா போன்ற உணவுப் பொருள்களை உணவுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக உந்துவண்டி எரிபொருளாக்க வேண்டுமென்று மேலை வெள்ளை நாகரிகம் கருதுவது தாயைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு செய்து அதை தானம் செய்து மோட்சம் போகலாம் என்பது போன்றதேயாகும் என்பதை காட்ரோ கட்டுரையிலிருந்து உணரலாம். 6. உருசிய பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி உதவியுடன் 1960 இல் கியூபாவில் பதவிக்கு வந்தவர்தான் புரட்சித் தலைவர் பிடல் காத்ரோ. உருசியப் புரட்சி 1917இல் நிகழவில்லையென்றால் காத்ரோ எங்கே, அவர்போன்று இன்று தென்னமெரிக்காவில் உள்ள வேறு சிலர் எங்கே. குலோபல் பில்லேஜ் 1950 களிலேயே தொடங்கியிருக்கும்! 1947-1989 கால அளவில் இந்தியா வேறு சில நாடுகளைப் போல அமெரிக்க எடுபிடி நாடு ஆகாது இருந்ததற்கும் உருசிய நாட்டின் ஆதரவுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆக, உருசியாவின் வரலாற்றிலிருந்து குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் அதன் வரலாற்றிலிருந்து தக்க பாடங்களை மாந்த இனம் கற்றுக் கொள்வது உலகின் உயர்வுக்கு இன்றியமையாதது எனலாம். வாழ்க உருசியா; வாழ்க உருசியப் பெருநாட்டு மக்கள்; வாழ்க சர்மாவின் தொண்டு. பி. இராமநாதன் சோவியத் உருசியா சில செய்திகள்.........  இன்றைய உருசிய நாட்டின் வரலாற்றைப் படிக்குமுன் பண்டைய உருசியாவின் வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டும். உருசிய வரலாறு தொடங்கியதிலிருந்து கடைசி ஜார் மன்னன் இரண்டாவது நிக்கோலசு முடியாட்சி வீழ்ந்தது வரை சுருக்கமாகவும், தொடர்ச்சியாகவும் அறிய உதவும் வரலாற்று நூல். முடியரசு முடிந்து குடியரசு தொடங்கியது. சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ராஜ்யம் என்று பெயரிடப்பட்டது.  லாவியர் என்ற பிரிவினரான உருசியர்கள், ரூரிக் அரச பரம்ரை, ரோமனேவ் பரம்பரை, மகாபீட்டர், மகாபீட்டருக்குப் பின் காதரைன் பெண் அரசியாக வீற்றிருந்ததும், பிரஞ்சுப் புரட்சியின் தாக்கம் போன்ற விவரங்கலும் அடங்கிய நூல்.  1825இல் நடந்த திசம்பர் புரட்சி , நாரோத்னிக் (ஜனசக்தி) தனிக் கட்சி தோற்றம், இரத்த ஞாயிறும் ஜார் அரசனின் கொடுமையும், முடியரசு மறைவும், குடியரசின் தோற்றமும், சமதருமக் கட்சி உருவான வரலாறும் இந்நூலின் பதிவுகள்.  கொந்தளிக்கும் கடலில் சமதருமக் கப்பலைத் துணிச்சலாக மிதக்க விட்டவன் மாவீரன் லெனின். புதிய உலகை நோக்கி எத்தனையோ இடையூறுகளுக்கிடையில், புயற்காற்று களையும் சமாளித்துக் கொண்டு, சமதருமக் கப்பலை வேகமாகச் செலுத்திய லெனின் வீர வரலாறும், மார்க்சின் பெருமையும், அவன் தத்துவமும் பேசப்படும் நூல். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் செல்வி. வ. மலர் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், சு. கீதாநல்லதம்பி குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா, இல.தருமராசு, ரெ. விசயக்குமார் எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . முகவுரை இந்த நூலை நான் எழுதி முடித்த தினம், ருஷ்ய - ஜெர்மானிய யுத்தத்தின் ஐந்நூறாவது நாள். ஜெர்மனியின் பூரண படை பலத்தையும் தனியாக எதிர்த்து நிற்கிற ருஷ்யர்களின் வீரம், உலகத்தில் ஆண்களின் இருதயத்திலே ஈரம் இருக்கிற வரையில், பெண்களின் இசையிலே இனிமை இருக்கிற வரையில் போற்றப்படும். தவிர, ருஷ்ய மகாஜனங் களின் இந்த மகத்தான தியாகத்தின் பரிணாம மாக, உலகத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படப் போகிறதென்பது நிச்சயம். அந்த மாற்றம், ஒரு சிலர் அநுபவித்து வரும் சலுகைகளைப் பாதிப்பதாயிருப்பினும், அநேகருடைய உரிமைகளுக்கு அரணாக வும், அநேகருக்கு நல் வாழ்வை நல்குவதாகவும் இருக்கும். சமதர்ம சித்தாந்தமானது, உலகத்திற்குப் புதிதன்று. முற் காலத்து அறிஞர்கள் பலர் இதைப் பற்றி வெகு சூட்சுமமாக, ஆனால் நிரம்ப அழகாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரண மாக, கிரேக்க அறிஞனாகிய பிளேட்டோ, ஸாக்ரடீ வாயிலாக, ஒரு சமதர்ம ராஜ்யத்தை தாபித்திருக்கிறான். அவனுடைய குடியரசு என்ற நூலை நாம் வாசித்துப் பார்த்தோ மானால், கார்ல் மார்க், லெனின் முதலியோரைவிட அவன் தீவிரமாகச் சென்றிருக் கிறான் என்பது தெரியும். ஆகார் ஜாசி (Oscar Jaszi ) என்னும் அறிஞன்ஓரிடத்தில் கூறுகிறான் : பிளேட்டோ, தன் கற்பனையைக் கொண்டு சிருஷ்டி செய்திருக்கிற ராஜ்யத்திற்கும் ருஷ்ய சமதர்ம வாதிகளின் ராஜ்யத்திற்கும் பொதுவான அமிசங்கள் பல இருக்கின்றன. இரண்டும், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட வியா பாரத்தை வெறுக்கின்றன; தீமைகளுக்கெல்லாம் மூல காரணம் தனிச் சொத்துரிமை என்பதை அங்கீகரிக்கின்றன; அதிகச் செல்வம், அதிக வறுமை இரண்டும் கூடாவென்று கண்டிக் கின்றன; எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன; ராஜாங்கக் கல்வி முறைக்கான ஒரு சாதனமாகவே கலையை யும் இலக்கியத்தையும் கருதுகின்றன; ராஜ்யத்தின் க்ஷேமத்திற் காகவே விஞ்ஞான சாதிரம், உயர்ந்த மனோபவங்கள் முதலியன இருக்கவேண்டுமென்று கூறுகின்றன; சமுதாய க்ஷேமத்திற்கு, தனிப்பட்டவர்களுடைய நலன்கள் கீழ்ப்பட்டி ருக்க வேண்டுமென்ற கொள்கையுடையனவாயிருக்கின்றன. .இந்த மேற்கோள் எதை நிரூபிக்கிறது? சமதர்மத்தைப் பற்றிப் பொதுவாக ஏற்பட்டிருக்கிற அச்சத்திற்கு அதிவார மில்லை என்பதையும் , ஆனால் அந்தச் சமதர்மக் கொள்கைக்கு அழகான அதிவாரம் உண்டென் பதையுமே நிரூபிக்கின்றது. அச்சம் அறியாமையையும் அறியாமை வெறுப்பையும் முறையே உண்டு பண்ணுகின்றன. ருஷ்யாவைப்பற்றியும் அங்கு நடைபெறும் சோவியத் ஆட்சி முறையைப்பற்றியும் ஒருவித மாறுபாடான அபிப்பிராயம் பெரும்பாலோரிடத்தில் இருந்து வருவதற்குக் காரணம் இந்த வெறுப்புத்தான். இந்த நூலின் மூலமாக மேற்படி வெறுப்பு அகலவேண்டும் என்பது என் விருப்பம். ருஷ்யாவைப்பற்றி சுருக்கத்தில் ஒரு நூல் வெளியாக வேண்டுமென்பது முதல் உத்தேசம். பின்னர், இது பெரிய நூலாக விரிந்து விட்டது. ஆனாலும் எழுத வேண்டியதை யெல்லாம் எழுதி விட்டதாக எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால், ருஷ்யாவைப்பற்றித் தெரிய வேண்டியது அதிகம்; தெரிந்திருப்பது மிகக் குறைவு. அப்படியே, நான் இங்குச் சொல்லாமல் விட்டது அதிகம்; சொல்லியிருப்பது மிகக் குறைவு. என்றாலும், ருஷ்யாவைப் பற்றி விரிவான முறையில் நூல்கள் பல வெளியாவதற்கு இஃதொரு தூண்டுகோலா யிருக்குமானால், அதுவே நான் அடைகிற மகிழ்ச்சி. .இந்த நூலை நல்ல முறையில் வெளிக்கொணர்ந்த சக்தி காரியாலயத்தாருக்கு எனது மனப்பூர்வமான நன்றி. சென்னை, 30-12-1942 வெ. சாமிநாதன் பொருளடக்கம் எண் பக்கம் முகவுரை துணை நூல்கள் 1. சரித்திர வரலாறு 3 2. முடியரசின் மறைவு 16 3. குடியரசின் தோற்றம் 34 4. சமதர்மம் என்றால் என்ன? 51 5. சமதர்மக் கட்சி 60 6. சோவியத் அரசியல் அமைப்பு 80 7. பொருளாதாரத் திட்டம் 98 8. விவசாயம் - தொழில் 106 9. பெண்ணுரிமை 115 10. கல்வி - கலை 123 11. சுகாதாரம் - ஓய்வு 127 12. அந்நிய நாட்டுக் கொள்கை 134 13. புதிய நாகரிகம் 149 அநுபந்தம் 1 169 அநுபந்தம் 2 170 இந்த நூல் எழுதுவதற்குத் துணையாயிருந்த சில நூல்கள் 1. Soviet Communism - A New Civilisation - 2 volumes - Sidney and Beatrice Webb 2. The Russian Revolution - 2 volumes - W. H. Chamberlain 3. Soviet Russia - W. H. Chamberlain 4. The Challenge of Russia - Sherwood Eddy 5. Russia Today and Yesterday - E. J. Dillon 6. Russia - Sir Bernad Pares 7. New Minds, New Man ? - Thomas Woody 8. The Mind and Face of Bolshevism - Rene Fulop Miller 9. Stalin’s Russia and the Crisis of Socialism - Max Eastman 10. Ten Years in Soviet Moscow - Alexander Wicksteed 11. Life Under Soviets - Alexander Wicksteed 12. Dreiser Looks at Russia - Theodore Dreiser 13. U.S.S.R - Speaks for Itself - 4 volumes 14. U.S.S.R - The Strength of Our Ally 15. In Russia Now - Sir Walter Citrine 16. Russia Resists - Pat Sloan 17. Russia in Peace and War - Pat Sloan 18. Lenin’s Russia - Louis Fischer 19. The Russian Revolution - Nicholas Berdyaev 20. The History of the Russian Revolution - Leon Trotsky 21. Crucification of Liberty - Alexander Kerensky 22. A History of Russia - G. Vernadsky 23. Foreign Trade in the U.S.S.R - J. D.Yanson 24. The Soviet Theatre - P. A.Markov. 25. Lenin the Man - Klara Zetkin 26. Glimpses of World History - Jawaharlal Nehru 27. Soviet Sidelights - M. R.Masani 28. Who is not a Communist? 29. I will not Rest - Romain Rolland 30. Democracy and Socialism - Arthur Rosenberg 31. Political Philosophy from Plato to Bentham - Geiser and Jaszi 32. Belief and Action - Viscount Samuel Etc., Etc.. சோவியத் ருஷ்யா 1. சரித்திர வரலாறு உலகத்திலேயே மிகப் பெரிய நாடுகள் மூன்று. அவை இந்தியா, சீனா, ருஷ்யா. ஒன்று, சுதந்திரத்திற்காகக் கிளர்ச்சி செய்து கொண்டி ருக்கிறது. இன்னொன்று, உயிருக்காக மன்றாடிக் கொண்டி ருக்கிறது. மற்றொன்று, சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறது. ஒன்றில், அந்நியர் ஆட்சி நடை பெறுகிறது. வேறொன்றில், ஜனங்களுக்காக ஆட்சி நடை பெறுகிறது; பிறிதொன்றில், ஜனங்களுடைய ஆட்சி நடைபெறுகிறது. மூன்றும் - ருஷ்யாவில் ஒரு சிறிய பாகம். தவிர - ஆசியா கண்டத்திலேயே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கண்டம்; தனித் தனி உலகம். உலகத்தில் எத்தனை விதமான மதங்கள், ஜாதிகள், பாஷைகள், சீதோஷ்ணதிதிகள் முதலியன உண்டோ அத்தனை விதங்களையும் இந்த மூன்று நாடுகளிலும் பார்க்கலாம். இந்த மூன்று நாடுகளிலும் வற்றாத ஜீவநதிகள் ஓடுகின்றன; பொன் விளையக்கூடிய பூமி இருக்கிறது. ஆனால் ஜனங்கள் பஞ்சத்தில் அடிபட்டுச் சாவதில் என்னவோ குறைவில்லை. இந்த மூன்று பெரிய நாடுகளையும் ஒரு சிறிய தீவுநாடு இப்பொழுது, இந்த 1942-ஆம் வருஷத்தில் பய முறுத்திக் கொண்டிருக்கிறது! உலகத்தை ஆறு துண்டாகப்போடு; அதில் ஒரு துண்டு ருஷ்யா. உலகத்தின் ஜனங்களைப் பதின்மூன்று பிரிவினராகப் பிரி; அதில் ஒரு பிரிவினர் ருஷ்ய நாட்டவர். ருஷ்யாவின் விதீரணம் 88,19,791 சதுர மைல்; ஜனத்தொகை 19 1/4 கோடி. இங்கே 167 ஜாதி யினர் வசிக்கின்றனர்; 90 பாஷைகள் பேசப்படுகின்றன. நாகரிகத்தின் உச்சாணிக்கிளையில் ஏறிக் கொண்டிருக்கிற ஜனங்கள் முதல், கிழங்குகளைத் தின்றுகொண் டிருக்கும் காட்டு மிராண்டிகள் வரை, எல்லோரையும் இந்த நாட்டிலே காணலாம். வடக்கே வட மகா சமுத்திரம்; கிழக்கே பசிபிக் மகா சமுத்திரம்; தெற்கே சீனா, இந்தியா, ஈரான் முதலிய நாடுகள்; மேற்கே ஜெர்மனி. இவைகளின் மத்தியில் இருப்பது ருஷ்யா. இதன் எல்லைக்குள் பதினான்கு கடல்கள் அலைமோதுகின்றன; மூன்று மலைகள் உயர்ந்து நிற்கின்றன.; மூன்று ஆறுகள் நீண்டு ஓடுகின்றன. ருஷ்யாவின் வியாபாரப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பாகம் ஆற்று மார்க்கத்திலேயே நடைபெறுகிறது. 1918 -ஆம் வருஷத்தோடு ருஷ்யாவில் முடியாட்சி முடிந்தது. அதனோடு ருஷ்யா என்ற பெயரும் மறைந்தது. பின்னர், குடியரசு ஏற்பட்டது. ருஷ்யாவின் பெயரும் சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் என்று (1923ஆம் வருஷம்) மாறியது. நியாயமாக இப்பொழுது நாம் அழைக்க வேண்டிய பெயர் இதுதான். ஆனால், சுருக்கத்திற் காகவும் சௌகரியத்திற்காகவும் ருஷ்யா என்று அழைக்கிறோம். வடஅமெரிக்காவிலுள்ள ஐக்கிய மாகாணங்களைச் சேர்த்துப் பொதுவாக அமெரிக்கா என்று அழைப்பது போல. இந்த ஐக்கிய ராஜ்யத்தில் வசிக்கிற ஜனங்களில் பாதி பேர் ருஷ்யர்கள். மானிட சமுதாயத்தைப் பல பிரிவினராகப் பிரித்திருக் கிறார்களல்லவா அறிஞர்கள்? அவர்களில் லாவியர் என்ற ஒரு பிரிவினர் உண்டு. இந்த லாவியப் பிரிவைச் சேர்ந்தவர்களே ருஷ்யர்கள். இவர்கள் பேசுகிற பாஷைக்கு ருஷ்யப் பாஷை என்றே பெயர். இந்தப் பாஷையில் அநேகம் பிரிவுகள் இருந்தாலும், பொது வாக ருஷ்ய பாஷை என்று சொல்வதுதான் வழக்கம். இதுதான் அரசாங்க பாஷையாகவும் இருக்கிறது. பொதுவாக ருஷ்யர்கள் கட்டுமதான தேகமுடையவர்கள். அதே பிரகாரம் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள். எந்த விதமான கஷ்டத்தையும் சந்தோஷமாகச் சகித்துக் கொள்வார்கள். ஊண் உறக்கமில்லாமல் நான்கு நாட்கள் வழி நடக்க வேண்டுமா, மயக்க மருந்தில்லாமல் பெரிய ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டுமா, இவை எல்லாம் ருஷ்யர்களுக்குச் சுலபமான விஷயங்கள். தவிர, இவர்கள் எல்லோருடனும் கலந்து வாழ்வதிலேயே பிரிய முடையவர்கள். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதிலும், புதிய நண்பர்களோடு பழக வேண்டு மென்பதிலும் அதிக ஆசையுடையவர்கள். தாங்களே வலிய வந்து யாருடனும் பழகுவார்கள். ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி வைத்த பிறகு தான் பேச வேண்டுமென்ற சம்பிரதாயமெல்லாம் இவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. யாரைப் பற்றியும் குறைவாகப் பேச மாட்டார்கள். யாரையும் தாழ்வாகக் கருத மாட்டார்கள். தங்கள் மனதில் தோன்றிய அபிப்பிராயத்தை ஒளிமறை வின்றி, ஆனால் மரியாதையான பாஷையில் சொல்வார்கள். நன்றாக உழைப்பார்கள். அப்படியே நன்றாக ஓய்வும் எடுத்துக்கொள்வார்கள். கற்பனை உலகத்திலாகட்டும், காரிய உலகத்திலாகட்டும் தாராளமாகச் சஞ்சரிப்பார்கள். ஆனால் புராதனப்பெருமையிலே தங்கள் நிகழ்கால வாழ்வைத் துறந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் இவர் களுடைய சரித்திரம் புராதனப் பெருமை கொண்டதல்ல. ருஷ்யா என்ற ஒரு தனி ராஜ்யம் தாபிக்கப்பட்டதே கி. பி. 850 - ஆம் வருஷத்தில்தான். இதன் தாபகன் பூரிக் என்பவன். இவன் காலத்தி லிருந்தே, ருஷ்யாவைத் தொடந்தாற் போல் ஏதோ ஓர் அரச பரம்பரை ஆண்டு வந்திருக்கிறது. ஆனால், மாக்கோவையும் அதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையுந்தான். சுமார் 1500-ஆம் வருஷம் வரை. இந்த மாகோ அரச பரம்பரை, அந்நியர்கள் படை யெடுப்பினின்று தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே ஈடுபட்டி ருந்தது. இதற்குப் பிறகுதான், ருஷ்யாவுக்குச் சர்வதேச மேடையில் ஓர் அந்தது ஏற்பட ஆரம்பித்தது. ராஜ்யமும் வர வர விசாலமடைந்து வந்தது. 1505-ஆம் வருஷத்தில் எட்டு இலட்சம் சதுர மைல் விதீரண முடையாதாயிருந்த ருஷ்ய ஏகாதிபத்தியம், 1900ஆம் வருஷத்தில் எண்பத்தைந்து லட்சம் சதுரமைல் விதீரணமுடைய ஏகாதி பத்தியமாக வளர்ந்துவிட்டது. அதாவது ஒரு நாளைக்கு ஐம்பது சதுர மைல் விகிதம் வளர்ச்சி! உலகத்தில் வேறெந்த ஏகாதிபத்தியமும் இவ்வளவு வேகமாகத் தரை மார்க்கத்தில் வளர்ச்சி அடையவில்லை. இந்த வளர்ச்சியின் அர்த்தமென்ன? அநேக ஜாதியினர் அடக்கி ஒடுக்கப் பட்டார்கள். அவர்களுடைய பாஷை, கலை, நாகரிகம் முதலியன, இலை உதிர்ந்த மரம்போலாயின. ராஜ்யத்தின் வெளிப்புறம் பகட்டு; உட்புறம் அழுகல். பதினாறாவது நூற்றாண்டின் கடைசி பதினைந்து, இருபது வருஷ காலம் ருஷ்யா முழுவதும் ஒரே குழப்பம். அரசனில்லாத நாடாயிருந்தது. கொலை, கொள்ளை, தரித்திரம், நோய் முதலியன மலிவான சரக்குகளாயிருந்தன. அநேக ஏழை ஜனங்கள், வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். அப்பொழுது சில பெரியதனக்காரர்கள் ஒன்று சேர்ந்து மைக்கேல் ரோமனாவ் என்ற ஒரு சிறு பையனை 1613-ஆம் வருஷம் சிங்காதனத்தில் ஏற்றி வைத்தார்கள். சுமார் முந்நூறு வருஷ காலம் இந்த ரோமனாவ் பரம்பரை, ருஷ்ய சிங்காதனத்தை இடை விடாமல் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது. கடைசியில் 1917 - ஆம் வருஷம் ஏற்பட்ட புரட்சி வெள்ளத்திலே மூழ்கி விட்டது. அப்படி மூழ்கு வதற்கு நான்கு வருஷங்கள் முந்தித்தான் இரண்டாவது நிக்கோலா மன்னன், ரோமனாவ் அரசர்கள் சிங்காதனம் ஏறிய முந்நூறாவது வருஷத்தை ஆடம்பரமாகக் கொண்டாடினான். இந்தக் கொண் டாட்டம், விளக்கு அணைவதற்கு முன் தோன்றும் பிரகாசம் போலி ருந்தது. மைக்கேல் மன்னனைச் சிங்காதனத்தில் ஏற்றிவைத்த பெரிய தனக்காரர்கள், நாட்டில் அதிகமான செல்வாக்குப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். இவர்கள் இட்டது சட்டமாயிருந்தது. குழப்ப காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக நாட்டைவிட்டு வெளியே சென்றிருந்த ஏழை மக்களைக் கட்டாயப்படுத்தி நாட்டுக்குள் அழைத்து வந்தார்கள். அவர்களைக் கொண்டு தங்கள் நிலங்களைச் சாகுபடி செய்வித்தார்கள். இதனால் இவர்களெல்லோரும் நிலச்சுவான் தார்களாகவும், மற்ற ஜனங்கள் இவர்களுக்குத் தொண்டு செய்யும் அடிமைகளாகவும் ஆனார்கள். அதாவது, நிலத்தை உழுது பயிரிடு பவர்களுக்கு அந்த நிலத்தின் மீது உரிமையில்லாமற் போய்விட்டது. இதிலிருந்தே ருஷ்யாவில் ஆண்டான் - அடிமைப் போராட்டம் துவங்குகிறது. ரோமனாவ் பரம்பரையில், மைக்கேலுக்குப் பிறகு பட்டத் திற்கு வந்த முக்கியமான மன்னன் மகா பீட்டர்1 என்பவன். இவன் சுமார் ஏழு அடி உயரம் இருப்பான். அதற்குத் தகுந்த பருமன். ஓட்ட மாகத்தான் நடப்பான். பத்தாவது வயதிலே பட்டத்திற்கு வந்தான். நாற்பத்து மூன்று வருஷகாலம் (1682-1725) ஆண்டான். இந்த நாற்பத்து மூன்று வருஷ கால ஆட்சியும், ருஷ்ய சரித்திரத்தில் ஒரு புயல்காற்று மாதிரி இருந்தது. இவன் ருஷ்யாவைப் பலவந்தமாக ஐரோப் பாவுக்குள் பிடித்துத் தள்ளினான். என்று சொல்வார்கள். அதாவது, இவன் ஐரோப்பிய கலாசாரங்களையும், அரசியல் முறை களையும், பிறவற்றையும் அப்படியே ருஷ்யாவிற்குள் கொண்டு புகுத்தப் பார்த்தான். இங்கிலாந்து, பிரான், ஜெர்மனி முதலிய நாடுகள் இவனுக்கு முன்மாதிரிகளாக இருந்தன. ருஷ்ய ராணு வத்தைப் புதிய முறையில் சீர்திருத்தி அமைத்தான். சட்டசபை ஏற் படுத்தினான். தொழிற்சாலை களை தாபித்தான். சும்மா உட் கார்ந்து பெரியதனம் செய்து வந்த நிலச்சுவான்தார்களின் பிள்ளை களை அரசாங்க ஊழியத்தில் சேர்ந்து கொள்ளும்படி கட்டாயப் படுத்தினான். தாடி வைத்துக் கொள்வதும் நீண்ட அங்கிதரித்துக் கொள்வதும் அநாகரிகமென்று சொல்லி, அவைகளுக்குத் தடை உத்தரவு போட்டான். பார்ப்பதற்கு லட்சணமாயிருக்கவேண்டு மென்று சொல்லி, சிலருடைய பற்களைக்கூட பிடுங்கிவிட்டான். ருஷ்ய பாஷையில் எழுத்துக்களைச் சீர்ப்படுத்தினான். முதன் முதலாக ஒரு பத்திரிகையை ஆரம்பித்தான். அந்நிய நாடுகளிலிருந்து அநேக அறி ஞர்களை வரவழைத்துத் தனது சேவையில் அமர்த்திக் கொண்டான். அவர்களைக் கொண்டு அநேகநூல்களை எழுதச் செய்தான். தானும் சில நூல்கள் எழுதினான். தன் பெண்களையும் மற்ற உறவினர்களை யும் ஐரோப்பிய அரசிளங் குமரர்களுக்கு மணஞ் செய்து கொடுத்தான். மேற்குப் புறமாக இருந்த செயின்ட் பீட்டர்பர்க் என்ற ஊரைத் தனது தலைநகரமாக்கிக் கொண்டான். ஒரு குடியானவனைப் போலவே, தனது சொந்த வாழ்க்கையை எளிய முறையில் அமைத்துக் கொண்டான். இவ்வளவெல்லாம் செய்தும், இவன் தன் சுயேச்சாதி காரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கவே யில்லை; அதற்கு மாறாக, அதிகரித்துக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் வந்தான். இவன் காலத்தில் ஜனங்களுடைய வரிச்சுமை அதிகமாயிற்று; ராஜ்யமும் விதீரண மடைந்தது. மகா பீட்டருக்குப் பின்னால் பட்டத்திற்கு வந்தவர்கள் எல்லா வகையிலும் பலவீனர்களாயிருந்தார்கள். அரசர்களுடைய இந்தப் பலவீனத்தை நிலச்சுவான்தார்கள் தங்களுக்குச் சாதகமாக உப யோகித்துக் கொண்டார்கள். அரசாங்க சேவையில் தாங்கள் கட்டாயம் ஈடுபட வேண்டுமென்று மகாபீட்டர் செய்து வைத்துப் போயிருந்த சட்டத்தை ரத்து செய்து கொண்டார்கள். அதே சமயத்தில் தங்கள் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் விவசாயிகளின் மீது ஏற்கனவே தங்களுக்கிருந்த ஆதிக்கத்தை இன்னும் அதிகமாக வலுப்படுத்திக் கொண்டார்கள். ஏழை விவசாயிகளோ ஒன்றும் சொல்ல முடியாத ஊமைகளாய்ப் போய்விட்டார்கள். சில சமயங்களில் இவர்கள், தங்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்துகொள்ள முயன்றார்கள்; கலகமும் செய்தார்கள். ஆனால் நிலச்சுவான்தார்கள், அரசாங்கத்தின் துணைக்கொண்டு பீரங்கியைக் காட்டிப் பயமுறுத்தி இவர்களை மறுபடியும் பந்தத்திற்குள் திணித்து விட்டார்கள். எப்பொழுதுமே ஏகபோக உரிமையும் அதிகார சக்தியும் இரட்டைச் சகோதரர்களல்லவா? மகா பீட்டர் இறந்துபோன சுமார் ஐம்பத்தைந்து வருஷங் களுக்குப் பிறகு, இரண்டாவது காதரைன் என்ற ஒரு திரீ, அரச பீடத்தில் அமர்ந்தாள். இவள் மகா துணிச்சல்காரி; கொடுமை நிறைந்தவள்; ஆனால் திறமை சாலி. தன் புருஷனைக் கொலை செய்து விட்டுச் சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொண்டாள். அதிகார பதவியிலே அவ்வளவு மோகம்! இதற்காக இவள் தன் மானத்தைக் கூடப் பெரிதென மதிக்கவில்லை. மகா பீட்டர் ருஷ்யாவைப் பலவந்தமாக ஐரோப்பாவுக்குள் பிடித்துத் தள்ளினான் என்று சொன்னால், இவள், ஐரோப்பாவைப் பலவந்தமாக ருஷ்யாவுக்குள் திணித்தாள் என்று சொல்லவேண்டும். கி. பி. 18-வது நூற்றாண்டில் பிரெஞ்சு நாகரித்திற்கும் கலைகளுக்கும் மேனாடுமுழுவதிலும் ஒருவித செல்வாக்கு இருந்ததல்லவா? காதரைன் அந்தச் செல் வாக்குக்கு உட்பட்டாள். பிரெஞ்சு அறிஞர்களான வால்ட்டேர், மாண்டெகியு, டிடெராட் முதலியவர்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டாள். அவர்களுக்கும் தனக்கும் கடிதப்போக்குவரத்து உண்டென்று சொல்லி, அதிலே பெருமை கொண்டாள். தானும் அவர்களைப்போல் ஒரு மேதாவி என்று நினைத்து, அதன் பிரகாரமே நடித்தாள். பிரான்சில் என்னென்ன மாதிரியான அரசியல் முறைகள் அநுஷ்டிக்கப் படுகின்றனவோ அவைகளை யெல்லாம் அப்படியே ருஷ்யாவில் கொண்டு புகுத்தினாள். கல்வி முறையில் சில சீர்திருத்தங்களைச் செய்தாள். ஜனப்பிரதிநிதி சபையொன்றைக் கூட்டுவித்தாள். ஆனால், எல்லாம் நான்கு பேர் பார்த்து மெச்சுவதற்குத்தான்! உண்மையைச் சொல்லப்போனால், இவள் சமுதாயத்தின் மேல்படியிலிருந்தவர்களுக்குத்தான் அதிகமான சலுகைகள் காட்டினாளே தவிர, கீழ்ப்படியிலிருந்தவர்களை இன்னும் அதிகமாகவே நசுக்கி வந்தாள். இவள் காலத்தில், அதாவது 1789 ஆம் வருஷத்தில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சப்தங்கள் தொலைதூரத்திலிருந்த ருஷ்யாவிலும் கேட்க ஆரம்பித்தன. வால்ட்டேர், மாண்டெகியு முதலியோருடைய உபதேசங்களில் மனம் லயித்துப்போன பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகள், தங்கள் தாய்நாட்டை - ருஷ்யாவை - திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள்; யாருடைய உழைப்பினால் தங்களுடைய வயிறு நிரம்புகிறதோ அவர்கள் - அந்த விவசாய அடிமைகள் - எந்த ஆழத்திலே விழுந்து கிடக்கிறார்களென்று எட்டிப்பார்க்க ஆரம்பித்தார்கள். இளைஞர்கள் இந்த மாதிரி சாதாரண ஆசை கொண்டது கூட, காதரைனுக்குப் பிடிக்க வில்லை. வெறி பிடித்தவள் போலானாள். அடக்குமுறையைப் பிரயோ கித்தாள். அப்படியே தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டாள். 1789 - ஆம் வருஷத்திலிருந்து 1799 - ஆம் வருஷம் வரை, சுமார் பத்து வருஷ காலம் கொந்தளித்துக் கொண்டிருந்த பிரெஞ்சுப் புரட்சி, ஜனசக்தியைத் தூண்டிக் கொடுத்துவிட்டு, தான் அடங்கி விட்டது. இந்த ஜனசக்தியின் வளர்ப்புப் பிள்ளையாக நெப்போலியன் (1769 - 1821) தோன்றினான்; ஆனால் சர்வாதிகாரியாகவே ஆண்டான். இவன் 1812-ஆம் வருஷம் ருஷ்யா மீது படையெடுத்தான். முதலில் ருஷ்யர்கள் தோல்வியுற்றுப் பின்னடைந்து கொண்டு போனார்கள். நெப்போலியன் இவர்களைத் துரத்திக்கொண்டு மாக்கோ நகரத் திற்கு அருகாமையில் வந்தான். ருஷ்யர்கள், நகரத்திற்குத் தீ வைத்து விட்டுப் பின்னடைந் தார்கள். இனிப் பயனில்லை என்று கண்டு கொண்டான் நெப்போலியன். ஊருக்குத் திரும்பினான். அப்பொழுது நல்ல குளிர்காலம். இதனால் இவனுடைய சேனைக்கு அதிகமான கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்பட்டன. இவனுக்கும் முடிவு காலம் தொடங்கிவிட்டது. நெப்போலியனின் படையெடுப்புக்குப் பின்னர் ருஷ்யாவில் இளைஞர்களுடைய மனப்போக்கு, புரட்சிப் பாதையிலே திரும்பியது. ஆங்காங்கு ரகசியச் சங்கங்கள் முளைத்தன. இவைகளைத் தோற்று வித்தவர்களில் பெரும் பாலோர் ராணுவ சேவைக்காகவும் உயர்தரப் படிப்புக்காகவும் பிரான், ஜெர்மனி முதலிய நாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள்; அங்கு, ஜனங்கள் தன்மதிப்பு உணர்ச்சி பெற்று வருவதையும், அந்த உணர்ச்சியை வளர்க்கக் கூடிய தாபனங்கள் பல தோன்றி நன்றாக வேலை செய்து வருவதையும் நேரில் பார்த்த வர்கள். தவிர, உழைப்பிலே சிறிது கூடச் சலிப்புக் காட்டாதவர் களும், பொறுமையுடையவர்களும், புத்திசாலிகளுமான ருஷ்ய விவசாயிகள், தலை நிமிர முடியாதவர்களாய் ஒடுக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, இவர்கள் மனம் புழுங்கினார்கள். உலகத்தின ரால் கௌரவிக்கப்படக்கூடிய ஒரு தாபனத்தை எதிர்காலத்தில் ருஷ்யா அடைய வேண்டுமானால், அதற்கு இந்த விவசாயிகளின் வாழ்க்கை அந்ததை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார்கள். இதற்காக மேற்படி ரகசியச் சங்கங்களை தாபித்து வேலை செய்ய முயன்றார்கள். ஆனால், இவர்களுக்குள்ளே ஒழுங்கோ ஒற்றுமையோ இல்லை; ஒருவித வேலைத் திட்டமும் இல்லை. 1825 - ஆம் வருஷம் முதல் 1855 - ஆம் வருஷம் வரை, முதலாவது நிக்கோலா என்ற அரசன் ஆண்டான். இவனுடைய ஆட்சி, புரட்சியில் ஆரம்பித்து அடக்குமுறையில் வளர்ந்தது. 1825 - ஆம் வருஷம் டிசம்பர் மாதம், சில பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தேசத்திற்குப் புதியதோர் அரசியல் திட்டம் வேண்டு மென்று நிக்கோலாஸைக் கேட்டார்கள். கிடைத்த பதிலென்ன? பீரங்கிப் பிரயோகம்; தூக்குமேடை. இந்தச் சம்பவத்திற்குத் தான் டிசம்பர் புரட்சி என்று பெயர். இதில் கலந்து கொண்டவர்கள் டிசம் பரிட்டுகள்1 என்று அழைக்கப் பட்டார்கள். இந்த நிக்கோலா மன்னன் எப்பொழுதும் புரட்சிக் கனவையே கண்டுகொண்டிருந்தான். சங்கீதம், கணிதம் முதலியவை சம்பந்தமாக வெளியான நூல்களில்கூட ஏதோ ரகசியச் சூழ்ச்சிகள் இருப்பதாக இவன் மருண்டான். இவன் காலத்தில் வெளியான நூல் களைக் காட்டிலும், அந்த நூல்களைப் பரிசீலனை செய்வதற்கென்று இவன் நியமித்திருந்த கண்காணிப்பு அதிகாரிகள்தான் அதிகமா யிருந்தார்கள். நாட்டுக்கு நன்மை தரக்கூடிய அபிப்பிராயங்களை யாராவது எடுத்துச் சொன்னால் அவர்கள் தீவாந்தர தண்டனை யைச் சன்மானமாகப் பெற்றார்கள். சுருக்கமாகச் சொன்னால் இவன், ஜனங்களின் சிந்தனா சக்தியை மண்ணிலே புதைத்து விட்டான்; ருஷ்யாவின் வாயையும் கையையும் கட்டிப்போட்டான். இவ்வளவையும் இவன் செய்தான் என்றாலும் இவன் காலத்தி லேயே ருஷ்ய பாஷைக்கு ஒரு புதிய ஜீவகளை உண்டாயிற்று; ஜனங்களுடைய அரசியல் அறிவு அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. இஃது ஒரு சரித்திரப் புதிர். புஷ்கின், டர்கனேவ், கோகோல், லெர் மாண்டாவ், டோ டோவ்கி, அலெக்ஸாந்தர் ஹெர்ஸென், டால்டாய் முதலிய அறிவுச் சுடர்கள் இவன் காலத்தில்தான் பிரகாசித்தார்கள். இவர்களுடைய எழுத்துகளை ருஷ்யாவின் மத்திய வகுப்பு இளைஞர்கள் ஆவலோடு படித்தார்கள். இதன் பயனாகத் தங்கள் சமுதாயத்தின் சீர்கேடான நிலைமையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள். இந்தச் சிந்தனையானது, தேச நன்மைக்காக எல்லாவிதத்தியாகங்களையும் செய்யக் கூடிய ஓர் உணர்ச்சியையும் உறுதியையும் இவர்களுக்கு அளித்தது. இந்தக் காலத்திலிருந்து இவர்கள், சுயேச்சாதி காரத்திற்கு விரோதமான எண்ணங்களைத் தேசத்தில் வளர்த்து வந்தார்கள். நிக்கோலாஸீக்கு பிறகு பட்டத்திற்கு வந்த இரண்டாவது அலெக்ஸாந்தர் (1855-1881) 1861ஆம் வருஷத்தில் சில சீர்திருத்தங் களை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவந்தான். விவசாயிகள், நிலத் தோடு கட்டுப் பட்டு அடிமைகளாய்க் கிடக்கும் ஏற்பாட்டை ரத்து செய்தான். இதனால் விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் விடுதலையின் பயனை அவர்கள் அநுபவிக்க முடியவில்லை. ஏனென் றால், ஜீவனத்திற்குத் தேவையான நிலங்கள் அவர்களுக்கு இல்லை. எல்லாம் நிலச்சுவான் தார்கள் வசத்தில் அல்லவோ இருந்தன? இதனால் விவசாயிகளின் அதிருப்தி வளர்ந்ததே தவிர குறையவில்லை. மற்றும் நிலச்சுவான் தார்களுக்கும் இந்தச் சீர்திருத்தம் கசப்பாயிருந்தது. கசப்பாயில்லாமல் வேறெவ் விதமாக இருக்க முடியும்? விவசாயி களின் மீது தங்களுக்கு இருந்த ஆதிக்கம் போய்விட்டதல்லவா? இதனால் இவர்களும் அதிருப்தி அடைந்திருந்தார்கள். இதே சமயத்தில் மேலே சொன்ன படித்த மத்திய வகுப்பு இளைஞர்களிடையே புரட்சி எண்ணங்கள் வளர்ந்தும் உருவாகியும் வந்தன. இதுகாறும் ரகசியமாக வேலை செய்து வந்த இவர்கள் இப்பொழுது பகிரங்கமாக வெளியே வந்து வேலை செய்யத் துணிவு கொண்டார்கள். தங்களை ஒரு தனிக்கட்சியாக அமைத்துக் கொண்டார்கள். இதற்கு நாரோத்னிக்1 என்று பெயர் சூட்டினார் கள். அதாவது ஜனசக்தி என்று அர்த்தம். இந்த நாரோத்னிக்குகள் கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடையே புரட்சி விதைகளை விதைக்கத் தொடங்கினார்கள்; உற்சாகத்தோடு பிரசாரம் செய்தார்கள். ஆனால் இவர்களை முன்பின் அறியாத விவ சாயிகள், இவர்களுடைய வார்த்தைகளுக்குக் காது கொடுக்க வில்லை; அது மட்டுமின்றி இவர்கள் மீது அவநம்பிக்கையும் கொள்ளலானார்கள். தங்களுடைய அடிமைத் தளையை மறுபடியும் இறுக்கிப் பூட்டிவிட வந்த போலீ உளவாளிகள் என்று இவர்களைச் சந்தேகித்தார்கள்; போலீஸார் வசமே ஒப்படைத்தும் விட்டார்கள்! ஜனங்களோடு நெருங்கிப் பழகாமல் அவர்களுக்காக வேலை செய்யப் போகிறோமென்று புறப்படுகிறார்களே, அவர்கள் அநு பவிக்கிற பயன் இதுதான். விவசாயிகள், மண்ணிலே வாழ்கிறவர்கள். அவர்களின் முன்னிலையில் ஆகாசக் கோட்டை கட்டினால் அவர்கள் அதை இடித்துப் போடாமல் வேறென்ன செய்வார்கள்? விவசாயிகள், தங்களை, இப்படிக் காட்டிக் கொடுப்பார் களென்று இந்த இளைஞர்கள் எதிர்பார்க்கவே யில்லை. இவர் களுக்கு இது பெரிய அதிர்ச்சியா யிருந்தது. போலீஸாரின் கைக்கு அகப்பட்டுக் கொண்டவர்கள் போக எஞ்சியிருந்தவர்களிற் சிலர், அதாவது பொறுமையும் நிதானமு முடையவர்கள் ஒரு தனிக் கட்சி யினராகப் பிரிந்து, கிராமங் களிலே நிரந்தரமாகத் தங்கி அமைதியான சேவைகளில் ஈடுபட்டார்கள்; ஜனங்களுக்கு, அவர்களுடைய தேவை இன்ன தென்பதை உணர்த்தி வந்தார்கள். புரட்சி எண்ணங்கள் தாமாகவே வளர்ந்தன. பொறுமையும் நிதானமு மில்லாத வேறு சிலர், நகரங்கள் தோறும் சென்று பரவி, பலாத்காரச் செயல்கள் செய்யத் துணிந் தார்கள். இதற்காகத் தூக்குமேடையிலும் ஏறத் தயாரானார்கள். சிலர் ஏறியும் விட்டார்கள். இங்ஙனம் ஏறியவர்களுள் ஒருவன் லெனின் சகோதரன். லெனின், பிற்காலத்தில் புரட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்குத் தன் சகோதரனுடைய இந்தத் துணிச் சலான மரணந்தான் காரணமா யிருந்தது. கடைசியில் 1881 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முதல்தேதி இரண்டாவது அலெக்ஸாந்தர் மன்னன் கொலை செய்யப்பட்டு விட்டான். இதற்குப் பிறகு சுமார் இருபத்தைந்து வருஷகாலம் அர சாங்கத்தார் அநுஷ்டித்த அடக்குமுறை இருக்கிறதே அது மனிதத் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. இப்படித்தான் சுருக்கமாகச் சொல்லி முடிக்கவேண்டும். இந்த அடக்குமுறை உச்ச நிலையிலிருந்தபொழுது தான், ரோமனாவ் பரம்பரையின் கடைசி வாரிசான இரண்டாவது நிக்கோலா மன்னன் அரசு கட்டில் ஏறி னான். இதனால்தான் இவனுடைய சுமார் இருபத்தைந்து வருஷகால ஆட்சியும் (1894- 1917) ரத்தக்கறை படிந்ததாகவே இருந்தது போலும். ரத்தக்களரியின் மத்தியில் சிங்காதனம் ஏறிய இவன், அதே ரத்தக் களரியின் மத்தியிலேயே உயிரையும் போக்கடித்துக் கொண்டான். இது நிற்க மேலே சொன்ன அடக்குமுறை, தேசத்தில் எவ்வித அமைதியையும் அளிக்க வில்லை; அதிருப்தியையே வளர்த்தது. பொதுமக்கள் புரட்சிவாதிகளுக்கு முன்னைவிட, அதிகமான ஆதரவு காட்டலானார்கள். அடக்குமுறைக்குத் தப்பி அநேக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இவர்கள் அங்குச் சும்மா இருக்கவில்லை. தங்கள் தங்கள் இடத்திலிருந்து கொண்டே, ருஷ்யா வில் புரட்சித் தீயை வளர்த்து வந்தார்கள். வெளிநாடுகளில் துண்டுப் பிரசுரங் களையும் பத்திரிகைகளையும் அச்சடித்து, ருஷ்யாவில் பொது ஜனங் களிடையே, சிறப்பாகக் கிராம விவசாயிகளிடையே பரப்பி வந்தார்கள். இப்படி அரசாங்கத்தார் ஒரு புறத்தில் அடக்கு முறையை அநுஷ்டித்து வந்த போதிலும், மற்றொரு புறத்தில் மேற்போக்கான சில சீர்த்திருத்தங்களையும் அவ்வப்பொழுது மருந்து மாதிரி அளித்து வந்தார்கள். இதற்கு முக்கிய காரணமா யிருந்தவன் விட்டே என்பவன். இவன் 1892-ஆம் வருஷத்திலிருந்து 1903-ஆம் வருஷம் வரை அரசாங்கத் தின் பொக்கிஷமந்திரியா யிருந்தான். இவன் நீதி இலாகாவிலிருந்த ஊழல்களைக் களைந்தான் ; அரசாங்கத்தின் வரவு செலவு முறையைச் சீர்திருத்தினான்; நாணயமாற்று முறையைத் திருத்தியமைத்தான்; ஏற்கனவே பெயரளவில் இருந்த தலதாபனங்களை உயிர்ப்பித்து, கல்வி, சுகாதாரம் முதலிய பொதுநல விஷயங்களைக் கவனித்துக் கொள்ளும்படி அவைகளுக்கு அதிகாரம் அளித்தான். அமைதி யாகக் கிராமசேவை செய்து கொண்டிருந்த புரட்சிவாதிகள் இந்த தலதாபனங்களில் இடம் பெற்றார்கள்; ஜனங்களிடத்தில் நெருங்கிப் பழகுவதற்கும் அவர்களுடைய மனப்பான்மையைத் திருத்தியமைப்பதற்கும் இந்த தாபனங்களை உபயோகித்துக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் சீனாவில், ஐரோப்பிய வல்லரசுகள், வியா பார உரிமைகள், சலுகைகள் முதலியவற்றைப் பெறும் விஷயத்தில் போட்டி போட்டு வந்தன. இந்தப் போட்டியில் ருஷ்யா கலந்து கொண்டது. இப்படி மேற்கு வல்லரசுகள், தனக்கருகாமையிலுள்ள சீனாவில் வந்துபோட்டி யிடுவது, அப்பொழுதான் துளிர்த்துத் தலை யெடுத்துக் கொண்டிருந்த ஜப்பானுக்குச் சிறிதுகூடப் பிடிக்க வில்லை. இது சம்பந்தமாக ஜப்பானுக்கும் ருஷ்யாவிற்கும் அடிக்கடி சில்லரை மனதாபங்கள் நேரிட்டு வந்தன. இந்த மனதாபங்கள் குறையாமலிருக்க, பிரிட்டன், பிரான், ஜெர்மனி முதலிய மேனாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் அடிக்கடி தூபம் போட்டுக் கொண்டே வந்தார்கள். 1860 - ஆம் வருஷத்திலிருந்தே இந்த முதலாளி வர்க்கத்தினர், ருஷ்யாவின் முக்கியமான நகரங்களில் தொழிற்சாலை களை ஆரம்பித்து நடத்தி வந்தனர். ருஷ்ய அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு அளித்தது. இந்த ஆதரவின் நிழலில், ருஷ்யப் பணக்காரர் சிலரும், தங்கள் சொந்த முதலைப் போட்டுத் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். இந்தத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் எல்லா இடங் களிலும் பரவின. இவைகளின் மீது ஜனங்களுக்கு ஒரு மோகம் விழத் தலைப்பட்டது. எப்பொழுது யந்திரப் பொருள் களின்மீது மோகம் விழுந்ததோ அப்பொழுதே கிராமக் கைத்தொழில்கள் குன்ற வேண்டியது தானே. அப்படியே குன்றிப் போயின. இவைகளினால் உண்டான விளைவுகள் இரண்டு. ஒன்று, நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம்போய், தொழில் முதலாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. மற்றொன்று, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் கூட்டம் பெருகியதால், தொழிலாளர் இயக்கம் என்ற தனியானதோர் இயக்கம் தோன்றியது. இந்த முதலாளி இயக்கமும் தொழிலாளி இயக்கமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன. முன்னது அரசாங்கத்தின் துணைபெற்று வளர்ந்தது; பின்னது புரட்சிவாதிகளின் ஆதரவைப் பெற்று வளர்ந்தது. புரட்சிவாதிகள் இதுவரையில் கிராம விவசாயிகளின் மத்தியில் வேலை செய்து வந்தார்கள். இப்பொழுது நகரத் தொழி லாளர்களின் மத்தியிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், இதில் ஓர் அநுகூலம் இருந்தது. என்ன வென்றால், இந்தத் தொழிலாளர்கள், தொழிலுக்குப் புதியவர்கள். இதற்குமுன் கிராமங் களில் விவசாயிகளாக வேலை செய்துகொண்டி ருந்தவர்கள்தானே இப்பொழுது நகரத் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குத் தங்கள் தொழில் சம்பந்த மான நிறைகுறைகளோ, நன்மை தீமைகளோ சரிவரத் தெரியா தல்லவா? இதனால் எந்தவிதமான புதிய எண்ணத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய திறந்தமனப்பான்மையும் இவர்களிடத்தில் இருந்தது. இதனை ருஷ்யப் புரட்சிவாதிகள் மிகுந்த சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொண்டார்கள். எப்படி யென்றால், அப் பொழுது செல்வாக்குப் பெற்றிருந்த கார்ல்மார்க்ஸின் கொள்கை களைத் தொழிலாளர்களிடையில் புகுத்தினார்கள். அவர்களும் இந்தக் கொள்கை களை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தக் காலத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலும் பரவியிருந்த மார்க் கோஷ்டியினருக்குள் கருத்து வேற்றுமைகள் தோன்றத் தலைப்பட்டன. ஒரு சாரார், மார்க்ஸின் கொள்கைகளை இம்மியளவும் பிசகாது பின் பற்றி நடக்கவேண்டு மென்றும், இது விஷயத்தில் வேறெந்தக் கட்சி யுடனும் சமரஸம் செய்துகொள்ளக்கூடா தென்றும், இப்படி உறுதி யாக நடப்பதன் மூலந்தான் தொழிலாளர் புரட்சியை உண்டுபண்ண முடியுமென்றும் கூறினார்கள். மற்றொரு சாரார், இருக்கப்பட்ட சூழ்நிலையை அநுசரித்து, சமரஸம் செய்து கொள்ள வேண்டிய இடத்தில் சமரஸம் செய்தும், தனித்து இயங்க வேண்டிய சந்தர்ப்பத் தில் தனித்து இயங்கியும், இப்படிப் படிப்படியாகச் சென்றுதான் தொழிலாளர் புரட்சியை உண்டு பண்ண முடியுமென்று கருதி னார்கள். இந்தக் கருத்து வேற்றுமை, ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளிலும் தேசப்பிரஷ்டர்களாகச் சிதறிக்கிடந்த ருஷ்ய மார்க் வாதிகளிடையிலும் ஏற்பட்டது. இவர்களிற் பெரும்பாலோர் லெனினைப் பின்பற்றி நடந்தார்கள். லெனின் அப்பொழுது லண்டனில் வசித்து வந்தான். இவனுக்குச் சமரஸம் என்பது பிடிக் காது. ஒரு கட்சிக்கு எப்பொழுது சமரஸ மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறதோ அப்பொழுதே அந்தக் கட்சிக்குள் சந்தர்ப்பவாதிகள் புகுந்து கொண்டு, கட்சியின் பலத்தைக் குலைத்து விடுவரென்று இவன் உறுதியாக நம்பினான். இருக்கப்பட்ட சூழ்நிலையை அநுசரித்து படிப்படியாகப் புரட்சியை வளர்ப்பதென்பது அநுபவ சாத்திய மற்ற தென்று இவன் கருதினான். தன்னுடைய இந்தக் கொள்கைக்கு இணங்கி வருகிறவர்கள் எத்தனை பேர் என்பதைப் பற்றி இவன் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. பரிபூரணப் புரட்சியில் நம்பிக்கை யுள்ளவர்கள் யாரோ, அதற்காகத் தங்களுடைய சர்வத்தையும் - பொதுஜனங்களின் கைதட்டுதலையும் தலையாட்டுதலையுங்கூட - துறந்து விடத்தயாரா யிருக்கிறவர்கள் யாரோ அவர்கள் மட்டும் தனியாகப் பிரிந்து விடுதல் நல்ல தென்று இவன் சொல்லி வந்தான். புரட்சியின் தத்துவங்களையும், அதன் செயல் முறைகளையும் நன்கு தெரிந்து கொண்டுள்ள ஒரு நிபுணர் கோஷ்டி முதலில் தயாராக வேண்டும்; அப்படித் தயாரான கோஷ்டியினால்தான் ஒழுங்கான புரட்சியை நடத்த முடியும். புரட்சியில் அநுதாபம் இருக்கிற தென்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? லெனினுடைய இந்த நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தபோதிலும், பெரும் பான்மையோர் இவனுடைய அபிப்பிராயத்தையே அங்கீகரித்தனர்; இவனைப் பின்பற்றி நடக்கத் தீர்மானித்தனர். இந்தப் பெரும் பான்மை, சிறுபான்மை அபிப்பிராய பேதத்திலிருந்துதான் போல்ஷ் வெக், மென்ஷ்வெக் என்ற இரண்டு வார்த்தைகள் கிளம்பின. இவை இரண்டும் ருஷ்ய வார்த்தைகள். லெனினைப் பின்பற்றிய பெரும் பான்மையோர் போல்ஷ்வெக்கர் என்றும், இவனுடைய கருத்துக்கு மாறுபட்ட சிறுபான்மையோர் மென்ஷ்வெக்கர் என்றும் அழைக்கப் பட்டார்கள். இந்தப் பிளவு ஏற்பட்டது 1903-ஆம் வருஷம். ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் மனதாபங்கள் இருந்தன வென்று ஏற்கனவே சொல்லி யிருக்கிறோமல்லவா? இவை முற்றி 1904 - ஆம் வருஷ ஆரம்பத்தில் ருஷ்ய - ஜப்பானிய யுத்தமாக மூண்டது. தங்களுடைய தேசம், ஜப்பானுடன் யுத்தந் தொடுத்ததை ருஷ்யப் பொது ஜனங்கள் விரும்பவில்லை. தொடங்கிய காலத்திலிருந்து, நாட்டில் தரித்திரம் தாண்டவ மாடியது; ஜனங்கள் பஞ்சத்தினால் வாடினார்கள்; பிணியில் இறந்து போனார்கள். இவை தவிர, ஏற் கனவே ஜனங்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை முதலியன வெல்லாம் மறுக்கப் பட்டிருந்தன. இந்த உரிமைகள் சம்பந்தமாக யாரேனும் அற்பசொற்பமாக முணுமுணுத் தால்கூட அவர்கள் மீது அடக்கு முறை ஆயுதம் பலமாகப் பிரயோகிக்கப் பட்டது. இவ் வளவுக்கும் ஜனங்கள் பொறுமையை இழக்கவில்லை; அமைதியாகவே கிளர்ச்சி செய்துவந்தார்கள். அவர்கள் வெறொன்றும் கேட்கவில்லை; ஜீவா தாரமான உரிமைகள் என்று சொல்லப்படுகிற எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, நான்கு பேர் சேர்ந்து கூட்டமாகக் கூடு கிற உரிமை முதலியன தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும், தேசமக்களின் பிரதிநிதிச் சபையாக ஒரு சபை கூட்டப்பட வேண்டு மென்றும் கேட்டார்கள்; தங்களுடைய கோரிக்கை களைக் குறிப்பிட்டு ஒரு தேசீயத்திட்டம் தயாரித்து வெளியிட்டார்கள். இதற்குத் தேசத்தில் பரிபூரண ஆதரவு ஏற்பட்டது. இதற்கு மத்தியில், ருஷ்ய சரித்திரத்தையே கறைப்படுத்தக் கூடிய ஒரு சம்பவம் நடைபெற்றது. 1905 ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்திரண்டாந் தேதி ஞாயிற்றுக்கிழமை பீட்டர்பர்க் நகரத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பெண்டுபிள்ளை களையும் கூட்டிக்கொண்டு காபோன்1 என்ற ஒரு பாதிரியின் தலை மையில் ஜார் மன்னனுடைய குளிர்கால அரண்மனைக்கு ஊர்வல மாக அணிவகுத்துக் கொண்டு ஒழுங்காகச் சென்றார்கள். ஊர்வலத் திற்கு முன்னாடி நிக்கோலா மன்னனுடைய உருவப் படம் அரச விருதுகளுடன் சென்றது. இந்தக் கூட்டத்தைப் பார்த்தால், ஏழ்மையே உருவெடுத்து வந்தாற்போலிருந்தது. எதற்காக இந்த ஏழை ஜனங்கள் ஊர்வலமாகச் சென்றார்கள்? மேலே சொன்ன தேசீயத் திட்டத்தை அரசரின் சந்திதானத்தில் சமர்ப்பிப்பதற்காக; தங்களுடைய கஷ்டநிஷ்டூரங்களுக்கு ஏதேனும் பரிகாரம் தேடிக் கொடுக்கும்படி பிரார்த்திப்பதற்காக. தெய்வத் திருத்தந்தை யான ஜார், தங்களுடைய பரிதாப நிலையை நேரில் பாத்தால் நிச்சயம் மன மிரங்குவான் என்று கபடமற்ற இந்த ஜனங்கள் நம்பினார்கள். மெது வாக ஊர்வலம் அரசமாளிகையை அடைந்தது. அரசனும் தரிசனம் கொடுத்தான். ஜனங்கள் தங்கள் குறைகளை மரியாதையோடு தெரிவித்துக் கொண்டார்கள். வயிற்றுக்கு ஆகாரம் கிடைக்க வில்லை என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள். எங்கள் பிராத் தனைக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிட்டால் தங்கள் திருமாளிகை முன்னர் இறந்து போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்களுடைய நிர்க்கதியான நிலைமையைப் புலப்படுத் தினார்கள். கிடைத்த பதில் என்ன? அரசன் வாய் திறந்து ஓர் ஆறுதல் வார்த்தை சொல்வான் என்று ஏழைத் தொழிலாளர்கள் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவன் இவர்களைச் சுட்டுத் தள்ளும்படி கைநீட்டி உத்தரவு கொடுத்தான். அவ்வளவுதான். பீரங்கிகள் முழங்கின. ஆகாரமில்லாமல் காலியாயிருந்த ஏழை மக்களின் வயிற்றிலே குண்டுகள் பாய்ந்தன. வெள்ளைப் பனி படிந்திருந்த அரண்மனை முன்சதுக்கமெல்லாம் சிவப்பு ரத்தம் படிந்திருந்தது. நூற்றுக்கணக் கான பேர் யமபுரத்திற்குச் சென்றார்கள். உயிர் தப்பியவர் களைக் குதிரைப் படை வீரர்கள் சவுக்காலடித்து விரட்டினார்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை சிவப்பு ஞாயிறு என்றும் ரத்த ஞாயிறு என்றும் சரித்திரத்தில் பிரசித்தமும் அடைந்து விட்டது. 2. முடியரசின் மறைவு ரத்த ஞாயிறு சம்பவம் ருஷ்ய சமுதாயத்தின் அதிவாரத் தையே அசைத்துக் கொடுத்தது. ஆனால் அதே சமயத்தில் ருஷ்யா வில் கொடுங்கோலாதிக்கத்துக்கு முடிவு காலமும் ஆரம்பித்து விட்டது. ஜனங்கள் இப்படிக் கிளர்ச்சி செய்வதும் சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்பதும் அரசாங்கத்திற்குச் சிறிதுகூடப் பிடிக்க வில்லை. ஜப்பானுடன் தான் நடத்திவரும் யுத்தத்தை இவை தடை செய்கின்றன வென்று அது கருதியது. கோபங்கொண்டது. பயங் கரமான அடக்குமுறைகளைக் கையாண்டது. இவைகளைக் கண்டு ஜனங்கள் கொதித்தெழுந்தார்கள். இரண்டாவது நிக்கோலாஸின் நெருங்கிய உறவினனும் உயர்தர ராணுவ உத்தியோகத்தில் இருந்தவனு மான ஸெர்கிய கோமகன், (1905 - ஆம் வருஷம் பிப்ரவரி மாதம்) ஒரு நாள் பட்டப்பகலில் கொலைசெய்யப் பட்டான். இவனைக் கொலை செய்த இளைஞன் தப்பியோட முயற்சி செய்யவில்லை. போலீ அதிகாரிகள் இவனிடமிருந்து ஏதாவது வாக்குமூலம் வாங்கிவிட வேண்டும் மென்று எவ்வளவோ பிரயத்தனப் பட்டார்கள். முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மௌனஞ் சாதித்து விட்டான். தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைப் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டான். இந்தப்புன்சிரிப்பு, ருஷ்ய சுயேச்சாதிகாரக் கோட்டைக்கு நெருப்புப் பொறியாயிருந்தது. நாடெங்கணும் வேலை நிறுத்தங்கள் தொடங்கப்பட்டன. வேலை நிறுத்தத்தை ஒழுங்காக நடத்திச் செல்லும்பொருட்டு ஒவ்வொரு முக்கிய நகரத்திலிருந்த தொழிலாளர் களும் தங்களுக்குள் ஒவ்வொரு சிறிய சோவியத் தை அமைத்துக் கொண்டார்கள். (சோவியத் என்ற ருஷ்ய வார்த்தைக்கு, சபை அல்லது கவுன்சில் என்று அர்த்தம்). இந்தச் சோவியத்துகள், வேலைநிறுத்தத்தை மிகத் திறமையாகவும் கட்டுப்பாடாகவும் சுமார் எட்டு மாத காலம் நடத்தின. கடைசியில் ஜார் அரசாங்கம் தம்பித்துப் போய்விட்டது. அரசாங்க இலாகாக்கள் அவை களுக்குரிய கடமைகளைச் செய்ய முடியாமல் நிலை குலைந்தன. போக்குவரவு சாதனங்கள் இல்லை. வீதிகளிலே விளக்குகள் இல்லை. பத்திரிகைகள் வெளிவர முடியவில்லை. வைத்தியர்களுடைய தொழில் ஒன்று தவிர மற்றெல்லாவகைத் தொழில்களும் நின்று போய்விட்டன. போலீஸார்கூடத் தங்கள் சட்டத்தையும் அமைதியையும் பாது காக்கிற தொழிலைச் செய்ய முடியாதவர்களானார்கள். போதாக் குறைக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ருஷ்ய - ஜப்பானிய யுத்தம், ருஷ்யாவுக்குத் தோல்வியாக முடிந்தது. ஜார் அரசாங்கத்தின் திறமையின்மையும் நிருவாக ஊழலுமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று ருஷ்ய மகாஜனங்களுக்கு நன்றாகப்பட்டுவிட்டது. இதை அரசாங்கமும் உணர்ந்திருந்தது. எனவே, ஜனசக்திக்கு முன்னே தலை வணங்கியது. சட்டமியற்றும் உரிமையோடு கூடிய ஒரு ஜனப் பிரதிநிதி சபை அமைக்கப்படுமென்றும், இந்தச் சபையினால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு மந்திரிச் சபை அரசாங்கத்தை நடத்து மென்றும், ஜனங்களுடைய ஓட்டுரிமை விசாலிக்கப்படுமென்றும் ஜார் அரசன் ஓர் அறிக்கை வெளி யிட்டான். இந்த அறிக்கையை அநுசரித்து ஒரு மந்திரிச் சபையும் அமைந்தது. மேற்போக்கான இந்தச் சீர்திருத்தம் அநேக சந்தர்ப்பவாதி களின் ஆவேசத்தைத் தணித்து விட்டது. இவர்கள், அரசாங்கத்தின் பக்தர்களானார்கள். இவர் களுடைய தூண்டுதலின் பேரில், மாதக் கணக்காகத் தொடர்ந்து நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவடைந்தது. பழைய மாதிரி அரசாங்க இலாகாக்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் இந்தச் சீர்திருத்தம், புரட்சி வாதிகளுக்குத் திருப்தியை அளிக்கவில்லை. இவர்கள்மேலும் தொடர்ந்து வேலை நிறுத் தத்தை நடத்துவதற்கு முனைந்தார்கள். இவர்களுடைய நோக்கம் அரசியல் முன்னேற்றம். அதாவது, ஜார் அரசாங்கத்தினிடமிருந்து சர்வ அதிகாரங்களையும் பிடுங்கி ஜனங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது. ஆனால் நகரத் தொழிலாளர்களும் கிராம விவசாயிகளும் அரசியல் முன்னேற்றத்தை அவ்வளவு பிரதான மாகக் கருதவில்லை. அப்பொழுதிருந்த திதியில் தொழிலாளர் களுக்குத் தேவையாயிருந்தது உயர்ந்த கூலி; விவசாயிகளுக்குத் தேவையாயிருந்தது உழுது பயிரிடப் போதுமான நிலம். இதனால் புரட்சி வாதிகளுக்கும், பெரும்பாலோரான தொழிலாளர்கள் - விவசாயிகள் இவர்களுக்கும் மத்தியில் ஒரு பிளவு ஏற்படத்தொடங் கியது. இதனை அரசாங்கத்தார் விரிவு படுத்தினார்கள். பசி நோயால் பரிதவித்துக் கொண்டிருக்கும் பாமர ஜனங்களுக்கு, தாங்கள், ஏதோ அநுகூலங்கள் செய்யப்போவதாகச் சமிக்ஞை காட்டி அவர்களைப் புரட்சிவாதிகளுக்கு விரோதமாகத் தூண்டினார்கள். இதனால் சில்லரைக் கலகங்களும் குழப்பங்களும் ஆங்காங்கே ஏற்பட்டன. நாட்டிலே அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தார் அடக்கு முறையைக் கடுமையாகப் பிரயோகித்தனர். மேலே சொன்ன சோவியத்துகளைப் பலவந்த மாகக் கலைத்தனர். ஓரிரண்டு மாதங்களுக்குள் புரட்சி இயக்கத்தை அடக்கி ஒடுக்கிவிட்டனர். ருஷ்யா முழுவதிலும் கணக்கெடுத்துப் பார்த்தபோது, சுமார் பதினாலாயிரம் பேர் இந்த அடக்குமுறைக்குப் பலியாகியிருந்தனர். சிறிய ஜப்பானிடத்தில் தோல்வியடைந்ததற்குப் பிரதியாகத் தன் பிரஜைகளிடத்தில் பெரிய பழிதீர்த்துக் கொண்டு விட்டான் ஜார் அரசன்! புரட்சியை அடக்கி ஒடுக்கியாகிவிட்டது. இனி ஜார் அரசன் தன் இஷ்டப்படி அரசியல் விவகாரங்களை நடத்திக் கொண்டு போகலாம். ஆனால் அவன் அப்படிச் செய்ய இஷ்டப்படவில்லை. தனது சுயேச்சாதி காரக் கோலத்தை ஜனநாயகப் போர்வையினால் மறைத்துக்கொண்டு அரசியல் மேடையில் நடிப்பதென்று தீர்மானித்தான். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சமுதாயத்தின் மேல் படியிலிருந்த நிலச்சுவான்தார்கள், பெரிய வியாபாரிகள், தொழில் முதலாளிகள் முதலியோரைத் தன் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டுமென்பது. ஏனென்றால், தேசத்துமகா ஜனங்கள் அடக்குமுறைகளினாலும், வறுமை, பஞ்சம், பிணி முதலியவைகளினாலும் அதிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் கஷ்டத்தினால் அவர்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிகக் கோபம் ஏற்பட்டிருந்தது. அவர்கள் எந்தச் சமயத்திலும் அரசாங்கத் திற்கு விரோதமாகக் கிளம்பலாம். அப்பொழுது தனக்கு ஒரு சிலருடைய துணையாவது தேவையாயிருக்கு மல்லவா? இதற்காகப் பணக்காரர்களைத் திருப்திப்படுத்தி வைத்திருக்கவேண்டு மென்று ஜார் மன்னன் கருதினான். மற்றொன்று, மேற்கு வல்லரசுகளிடத்தில் நல்ல பெயரெடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. ஜார் ஆட்சி என்று சொன்னால், அடக்குமுறைக்கு அடையாளம் என்கிற மாதிரிதான் ஐரோப்பிய நாடுகளில் அபிப்பிராயம் இருந்தது. இந்த அபிப் பிராயத்தைப் போக்கி ஜனவிருப்பப்படியே தான் நடந்துகொள் வதாகக் காட்டிக் கொள்ளவேண்டு மென்று ஜார் அரசன் விரும்பி னான். எனவே, மேலே சொன்ன அறிக்கைப்படி ஜனப்பிரதிநிதி சபையைக் கூட்டுமாறு உத்திரவு செய்தான். ஜனப்பிரதிநிதி சபைக்கு ருஷ்யபாஷையில், டூமா1 என்று பெயர். இதைத்தான் ருஷ்யாவின் பார்லிமெண்ட் என்று சொல்வார்கள். டூமா என்றால் சிந்தனை செய்கிற இடம் என்று அர்த்தம்.2 டூமாவுக்குச் சம்பிரதாயமான தேர்தல்கள் நடைபெற்றன. சமுதாயத்தின் மத்திய வகுப்பைச் சேர்ந்தவர்கள் அபேட்சகர் களாக நின்று வெற்றி பெற்றனர். இவர்களிற் பெரும்பாலோர் மிதவாத மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களைக் கொண்ட டூமா முதன் முறையாக 1906-ஆம் வருஷம் மே மாதம் கூடியது. விவசாயிகளின் வறுமைப் பிணியைப் போக்கி அவர்களுடைய கோபத்தைத் தணிக்க வேண்டு மென்பதற்காக அங்கத்தினர்கள் சில சீர்திருத்தப் பிரேரணை களைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இவை ஜார் மன்னனுக்குப் பிடிக்கவில்லை. டூமாவைக் கலைத்து விட்டான். சுமார் இரண்டரை மாதத்தோடு முதல் டூமாவின் வாழ்வு முடிந்தது. 1907 - ஆம் வருஷ ஆரம்பத்தில் இரண்டாவது டூமாவுக்குத் தேர்தல்கள் நடைபெற்றன. புரட்சிவாதிகளும் அவர்களை ஆதரிக் கிற மற்றத் தீவிர வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறக்கூடாத தென் பதற்காக, போலீஸார் என்னென்ன உபத்திரவங்களைச் செய்ய வேண்டுமோ அவைகளை யெல்லாம் செய்தனர். தீவிரப்போக் குடைய அபேட்சகர் களைச் சிறையிலே பிடித்துத் தள்ளிவிடுவ தென் கிற சுலபமான முறையை அநுஷ்டித்தனர். இதனால் சாமான்யத் திறமையுடையவர் களும், கொஞ்சம் பயந்த சுபாவ முடையவர்களும் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதிநிதிகளாக வந்தனர். ஆனால் இவர் களுடைய போக்குக்கூட ஜார் மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சிசெய்த குற்றத்தை இவர்கள் மீது சுமத்தி, டூமாவைக் கலைத்து விட்டான். கடைசியில் விசாரித்துப் பார்க்கிறபோது, அரசாங்கத்தின் ரகசியப் போலீஸாரே ஒரு சதியா லோசனைக் குற்றத்தைச் சிருஷ்டித்து அதனை அங்கத்தினர்மீது சுமத்தினர் என்று வெளியாயிற்று. இந்த இரண்டாவது டூமாவின் வாழ்வு மூன்று மாதத்தோடு முடிந்தது. பார்த்தான் ஜார். வயது வந்த எல்லோருக்கும் ஓட்டுக் கொடுக்கும் உரிமை அளித்திருப்பதனால்தான், தீவிர வாதிகள் பிரதிநிதிகளாக வர முடிகிறதென்று கருதி ஓட்டுரிமையைக் குறைத்தான். சொந்தப் பண்ணைக்காரர்கள் முதலிய சமுதாயத்தின் மேல் அந்ததிலுள்ள வர்கள் மட்டுமே ஓட்டுக் கொடுக்கலாம் என்று சட்டத்தைத் திருத்தி யமைத்தான். இதனோடு தீவிரப்போக்குடைய பலரையும் சிறைக் கூடத்திற்கு அனுப்பினான். சுயமாகச் சிந்தனை செய்வ தென்பது அரசாங்கத்திற்கு விரோதமென்று கருதப்பட்டது. கொள்ளைக் கூட்டத்தினர் ஆங்காங்கு அக்கிரமச் செயல்கள் புரிந்து வந்தனர். தேசம் சோர்ந்து கிடந்தது. இந்தமாதிரியான நிலைமையில் மூன்றாவது டூமாவுக்குத் தேர்தல் நடைபெற்றது. அரசாங்கத்தை ஆதரிக்கும் மனப்பான்மையுள்ள பணக்காரர்களும், விவசாயம், தொழில்முதலியவைகளைப் பற்றின அந்ததுடையவர்களுமே பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர் களைக் கொண்ட இந்த மூன்றாவது டூமா 1907-ஆம் வருஷத்திலிருந்து 1912-ஆம் வருஷம்வரை, அதாவது சட்ட ரீதியாக அதற்கேற்பட்ட ஐந்து வருஷ ஆயுட்காலம் வரை, கௌரவமான முறையில் ஜார் அரசனின் தலை யீடின்றித் தன் விவகாரங்களை நடத்தி வந்தது. சிலர் பயந்திருந்தபடி இந்த மூன்றாவது டூமா அவ்வளவு பிற்போக்குடையதாயில்லை. இதன் அங்கத்தினர்கள், தங்களாலான வரையில் ஜனங்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டுமென்ற எண்ணமுடையவர்களாயிருந்தார்கள். ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் இலவசமாகப் போதிக்க ஏற்பாடு செய்தனர். ஜனங்களின் மத உரிமையும் கலாசார உரிமையும் கௌர விக்கப்படுமாறு ஏற்பாடுகள் செய்தனர். எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியவை சம்பந்தமாக இருந்த நிர்பந்தங்கள் தளர்த்தி விடப் பட்டன. அரசாங்கத்தின் பொக்கிஷ நிலைமை சீர்திருந்தி வந்தது. இதனால் அந்நியநாட்டு முதலாளிகள் முன்னைவிடத் தாராளமாக முதல் கொண்டு போட்டார்கள். புதிய தொழில்கள் தொடங்கப் பட்டன. இந்த ஐந்து வருஷ காலத்தில் ருஷ்யாவுக்கும் மற்ற நாடு களுக்கும் சுமுகமான தொடர்புஏற்பட்டது. ருஷ்ய - ஜப்பானிய யுத்தம் வரையில், ருஷ்யாவைப் பற்றி, பிரிட்டனுக்கு ஒருவித பயம் இருந்தது. மேற்படி யுத்தத்தில் ருஷ்யா தோல்வியுற்ற பிறகு அந்தப் பயம் போய்விட்டது. அதற்குப் பதில், ஜெர்மனியைப் பற்றிய பயம் பிரிட்டனுக்குப் பிடித்துக்கொண்டது. இதற்குத் தகுந்தாற்போல் ஜெர்மனியும் 20-ஆவது நூற்றாண்டுத் தொடக்கத்தி லிருந்து இரண்டாவது வில்லியம் கெய்ஸருடைய தலைமையின் கீழ், தனது ஆயுத பலத்தை அதிகரித்து வந்தது; ஐரோப்பாவின் மற்றச் சிற்றரசுகளையும் பேரரசுகளையும் திரண மாக மதித்து நடத்தி வந்தது. இதை மனதில் வைத்துக்கொண்டு, ஆம் ஜெர்மனிக்கு விரோதமாக, பிரான், பிரிட்டன், ருஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன.1 இதைப் பார்த்து ஜெர்மனி, ஆதிரியா, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டன.2 இந்த இரு சார்பினரும் ஒருவருக் கொருவர் விரோதமாக யுத்த முதீப்புகள் செய்து வந்தனர். வெகு சீக்கிரத்தில் மகாயுத்தம் ஒன்று ஏற்படப் போகிறதென்று விஷய மறிந்தவர்கள் சொல்லிக்கொண்டு வந்தார்கள். 1912 - ஆம் வருஷம் நான்காவது டூமாவுக்குத் தேர்தல் நடை பெற்றது. ஏறக்குறைய பழைய பிரதிநிதிகளே தெரிந் தெடுக்கப் பட்டார்கள். இந்த நான்காவது டூமா, தனது பூரா ஆயுட்காலமும், 1917 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் புரட்சி ஏற்படுகிற வரையில் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் இதன் ஆரம்ப காலத்திலிருந்தே ஜார் ஆட்சியின் அதிவாரம் ஆட்டங் கொடுக்கத் தொடங்கியது. இரண்டாவது நிக்கோலா ஒருவித அசட்டை மனப் பான்மையுடையவன்; அறிவுப் பிரகாசமில்லாதவன்; அறிஞர் களுடைய புத்திமதிகளைச் சரியானபடி பாராட்டத் தெரியாதவன். அரச லட்சணமான ஆண்மைத் தனத்தைத் தனது மனைவியினிடத்தில் ஒப்புவித்து விட்டு, தான் ஒரு கோலை மட்டும் கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அதனைச் செங்கோலாக இவன் கருதிவந்தா னென்றாலும், செங்கோ லோச்சும் காருண்ய அரசனாக நடித்துவந்தா னென்றாலும், இவனுடைய பிரஜைகள் கொடுங்கோலாட்சியின் கீழ்த்தான் வாழ்ந்து வந்தார்கள். இவன், தன் மனைவியினிடத்தில் அதிகமாகக் காதல் கொண்டிருந்தான். அதற்காக அவளிடத்தில் தன் இருதயத்தோடு அறிவையும் ஒப்புக் கொடுத்து விட்டான். இதனால் தனக்கும், முந்நூறு வருஷமாகத் தொடர்ந்துவந்த ரோமனாவ் வமிசத்திற்கும் அழிவு தேடிக்கொண்டான். ஆனால் இவனுக்கு இது தெரியவில்லை. ஓர் அறிஞன் எழுதுகிறான்: ஜார் அரசனும் அரசியும் அநேக முட்டாள்களாலும் அயோக்கியர் களாலும் சூழப்பட்டிருந்தார்கள். இவர்களுக்குச் சரியானபடி விஷயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய தைரியம் ஒருவருக்கும் இல்லை. கிரகோரி ராபுட்டீன்1 என்ற ஒரு பரம அயோக்கியன் இவர்களுக்கு நெருங்கிய சிநேகிதனாக ஏற் பட்டான். இந்த ராபுட்டீன் (ராபுட்டீன் என்ற வார்த்தைக்கு அழுக்குப் படிந்த நாய் என்று அர்த்தம்) ஓர் ஏழைக் குடியான வன். சிறு வயதில் விவசாயிகளின் குதிரைகளைத் திருடுவதில் வல்லவன். இதனால் அநேகம் தொந்திரவுகள் இவனுக்கு ஏற்பட்டன. எனவே பணம் சம்பாதிப்பதற்குச் சந்நியாசிக் கோலம் பூண்டான். இந்தியாவைப்போல் ருஷ்யாவிலும் பணம் சம்பாதிப்பதற்கு இது சுலபமான வழி. இவன் தன் மயிரை நீளமாக வளர்த்துக் கொண்டான். மயிர் நீள நீள இவன் புகழும் நீண்டு கொண்டே போய், கடைசியில் ஜார் மன்னனின் சந்நி தானத்தை அடைந்தது. அப்பொழுது ஜார்மன்னனின் குமாரனுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்தது. இதனை ராபுட்டீன் குணப்படுத்திவிட்டான். இது முதற்கொண்டு ஜார் தம்பதி களிடம் இவனுடைய செல்வாக்கு வளர்ந்து வந்தது. இவனுடைய விருப்பப்படியே அரசாங்க உயர்தர உத்தி யோக தர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இவன் சிற்றின்பத்திலே ஈடுபட்டும், அநேகம் பேரிடத்தில் லஞ்சம் வாங்கியும் மிகக் கேவலமான வாழ்க்கையை நடத்திவந்தான். இருந்தாலும் இவன் அநேக வருஷகாலம் ஜார் தம்பதிகளின் செல்வாக் கிலேயே இருந்தான். ராபுட்டீனை அரச தம்பதிகள் இவ்வளவு கௌரவமாக நடத்துவதும், அவன் சொற்படி அரச காரியங்களைச் செய்வதும் பொது ஜனங்களுக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. தவிர, இந்தக் காலத்தில் போலீ உளவாளி களின் உபத்திரவம் ஜனங்களிடத்தில் அதிகமாயிற்று. இதற்கு எதிர்ப்பாகப் புரட்சிவாதிகளும் சுறுசுறுப் பாக வேலை செய்தனர். போல்ஷ்வெக்கரின் கட்சி நாளுக்குநாள் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் பெருகிவந்தது. இந்தக் கட்சி யினர் ஆங்காங்கு தாபித்திருந்த காரிய சபைகளில் போலீ உள வாளிகள் அங்கத்தினராகச் சேர்ந்துகொண்டு, அந்தச் சபைகளின் அந்தரங்க வேலைகளையெல்லாம் தெரிந்து கொண்டனர். இதன் விளைவாக, உண்மைத் தொண்டர் பலர் தூக்கு மேடையில் ஏறினர். இந்த மாதிரி நடைபெற்ற துரோகச் செயல்கள், ஜனங்களின் ஆத்திரத் தைக் கிளப்பி விட்டன. எங்குப்பார்த்தாலும் புரட்சிப் பேச்சாகவே இருந்தது. கூடிய சீக்கிரத்தில் புரட்சி உண்டாகுமென்று அனை வரும் எதிர்பார்த்தார்கள். இப்படியிருக்கையில் 1914-ஆம் வருஷம் ஆகட் மாதம் ஐரோப்பாவில் மகாயுத்தம் மூண்டது. ஆதிரிய இளவரசனான ஆர்ச் - ட்யூக் பெர்டினாந்து, செர்வியாவில் கொலை செய்யப்பட்டது தான் இதற்குக் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். செர்வியாவுக்குப் பரிந்து கொண்டு ருஷ்யாவும், ஆதிரியாவுக்குப் பரிந்துகொண்டு ஜெர்மனியும் முறையே படை திரட்டின. பிரான்சும் பிரிட்டனும் ருஷ்யா பக்கம் சேர்ந்துகொண்டன. இந்த யுத்தத்திற்கு ஜெர்மனியைப்போல் ருஷ்யா அவ்வளவு தயாரா யிருந்த தென்று சொல்ல முடியாது. எப்படியோ ஐரோப்பாவிலுள்ள எல்லா முக்கிய நாடுகளும், விருப்பத்தினாலோ அல்லது நிர்பந்தத் தினாலோ இந்தக் கோரமான தீக்குழியில் இறங்கின. ருஷ்ய மகாஜனங்களுடைய கவனம் இந்த யுத்தத்திலே சென்றது. வெளிச் சக்தி ஏதேனுமொன்று ஒரு மனிதனைத் தாக்குகிறபோது அவனுக்குள்ளேயிருக்கும் வியாதிகள் அனைத்தும் மாயமாய் மறைந்து போவதை நாம் பார்த்திருக்கிறோம். அதைப்போல் ருஷ்யா, தன் முகத்தைப் போர்முகத்துக்குத் திருப்பிக் கொண்டதும், உள்ளே குமுறிக்கொண்டிருந்த போல்ஷ்வெக் இயக்கம் தானாக ஒடுங்கிவிட்டது. போல்ஷ்வெக்கர்களில் ஒரு சிலர், யுத்தம் கூடாதென்றும், இது முதலாளிகளின் யுத்தமென்றும், இந்த யுத்தத்தில் கலந்துகொள்வதனால் ஏழைத்தொழிலாளிகளுக்கோ விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் உண்டாகாதென்றும் கூறினார்கள். ஆனால் இவர் களுடைய நல்வார்த்தை களைக் காது கொடுத்துக் கேட்பவர் யாருமில்லை. ஜனங்கள், இவர்கள் மீது அருவருப்புக் காட்டவும் தொடங்கினார்கள். ருஷ்ய அரசாங்கம் யுத்தத்தில் இறங்குகிறபோது, தன்னுடைய சக்தியைச் சரியாக நிதானித்துக் கொள்ளவில்லை. ருஷ்யாவுக்கு விசால மான நிலப்பரப்பு இருந்ததைப்போல், அதிக எண்ணிக்கையுள்ள துருப்பு களும் இருந்தன வென்பது வாதவம். ஆனால் இந்தத் துருப்புகளுக்கு எவ்வளவு உற்சாகம் இருந்ததோ அவ்வளவு பயிற்சி இல்லை. போதிய ஆயுத பலமும் இவைகளுக்கு இல்லை. ராணுவ நிருவாகமோ மகா ஊழலாயிருந்தது. கேட்கவேண்டுமா? உயிர் சேதத்திற்கு? யுத்தந் தொடங்கின முதல் பத்து மாதத்தில் சுமார் முப்பது இலட்சம் பேர் போர் முனையில் இறந்து போனார்கள். திறமையான ராணுவ உத்தியோகதர்கள் பலர் உயிரிழந்தார்கள். போர்க் களத்தில் பிணங்கள் மலைமலையாகக் குவிந்து கிடந்தன வென்றும், இந்த பிணமலைகளை அப்புறப்படுத்திக் கொண்டு தான், தாங்கள், எதிரில் வரும் எதிரியின் புதுப்படைகளைக் குறிப் பார்த்துத் தாக்க வேண்டியிருந்த தென்றும் ஜெர்மன் சேனைத் தலைவர்கள் எழுதிவைத்துப் போயிருக்கிறார்கள். இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டாலும், யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் ருஷ்ய ஜனங்கள் மிகவும் உற்சாகம் காட்டி வந்தார்கள். போர்க்களத்தில் போர்புரியும் வீரர்களுக்குப் பலவித உதவிகள் செய்து வந்தார்கள். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதற்காக அரசாங்கத்தார் செய்திருந்த ஏற்பாடுகள் போதுமானவையாயில்லை. சரியான சிகிச்சை இல்லாமல் ஆயிரக்கணக்கான பேர் பிராணனை விட்டார்கள். இதனால் ஜனங்களே ஆங்காங்குத் தொண்டர் படைகளைத் திரட்டிப் போர்க்களத்திற்கு அனுப்பினார்கள். இந்தத் தொண்டர் படையினர் சுமார் ஒரு மாதகாலத்திற்குள் பத்து இலட்சம் பேருக்குச் சிகிச்சை செய்திருக்கிறார்களென்று சொன்னால், இதற்கு முன்னர் சரியான சிகிச்சை இல்லாமல் எத்தனைபேர் செத்துப் போயிருக்க வேண்டு மென்பதை நாம் ஊகித்துக் கொள்ளலா மல்லவா? ஆனால் துரதிருஷ்ட வசமாக, இந்தச் சிகிச்சைத் தொண்டர்படை செய்த அருமையான சேவையைப் பற்றிச் சில துர்மந்திரிகள் ஜார் மன்ன னிடத்தில் தாறு மாறாகச் சொல்லி வந்தனர். இந்தச் சிகிச்சைப் படையினர் அத்தனை பேரும் புரட்சிக்காரர்களென்றும், இவர்கள் ராணுவத்திற்குள் புரட்சியை உண்டு பண்ணி அதன் மூலமாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடப் பார்க்கிறார்களென்றும் ஜாரின் காதைக் கடித்தார்கள். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே? ஏற்கனவே ஜார் மன்னனும் அவனுடைய நெருங்கிய சகபாடிகளும் எங்கும் புரட்சியைக் கண்டு வந்தார்கள். இப்பொழுது யுத்த பீதியினால் மூளை வேறே குழம்பி யிருந்தது. கேட்க வேண்டுமா? சுயேச்சாதிகார சக்திக்குத் தன்னையே தான் அழித்துக் கொள்கிற சக்தி உண்டென்று சொல்வார்கள். தன்னுடைய கனவைத் தானே நனவாக்கிக் கொள்ளும் சக்தியும் அதற்குண்டென்பதை இரண்டா வது நிக்கோலா மன்னன் நிரூபித்துவிட்டான். சிகிச்சைப் படைக்கு யார் தலைவனாயிருந்தானோ அவனே - ஜார்ஜ் ல்வோவ் என்பவனே1 - ஜார் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட புரட்சி அரசாங் கத்தில் பிரதம மந்திரியானான்! 1915 - ஆம் வருஷம் ஆகட் மாதம் கடைசி வாரத்தில் டான் னென்பெர்க்2 என்ற இடத்தில் ருஷ்யர்களுக்கும் ஜெர்மானியர் களுக்கும் ஒரு கடுமையான யுத்தம் நடந்தது. இதில் ருஷ்யர்கள் படுதோல்வி யடைந்தார்கள். இதிலிருந்து ருஷ்யர்களுக்குத் தோல்வி மேல் தோல்வியே ஏற்பட்டுக் கொண்டு வந்தது. இதனால் ஜார் மன்னன் கவலைப்பட்டான். தன் பழைய மந்திரிகளை நீக்கிவிட்டுப் புதிய திறமையான மந்திரிகளை நியமித்து அவர்கள் மூலம் யுத்தத்தை வெற்றி கரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஆசைப் பட்டான். ஆனால் அவன் மனைவியும் ராபுட்டீன் என்ற மகா பாபியும் சேர்ந்து அவனுக்குத் துர்ப்போதனைகள் செய்தார்கள்; மந்திரிகள், தங்களுடைய கைப்பொம்மைகளாக இருக்கவேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதன் பிரகாரமே காரியங் களை நடத்தி வந்தார்கள்; அதனால் தேசத்திற்கு விரோதிகளாகி விட்டார்கள். ராபுட்டீனுடைய நடவடிக்கைகள், அவன் விஷயத்தில் ஜார் கொண்டிருந்த அபார நம்பிக்கை ஆகிய இவைகளைக் கண்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் வெறுப்படைந்தார்கள். இந்த வெறுப்பு, சதியாலோசனையாக மாறியது. 1916-ஆம் வருஷக்கடைசி யில் ராபுட்டீன், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். ஜனங்கள் விடுதலை மூச்சுவிட்டனர். ஆனால் இந்தக் கொலை, போலீ அதிகாரிகளின் அக்கிரமத்தை அதிக மாக்கியது. அடக்குமுறை வலுத்தது. இதனால் ஜனங்கள் கோபங்கொண்டார்கள். போதாக்குறைக்கு உணவுப் பஞ்சம் வேறே. எல்லாம் தனக்கென்று சொல்லி, ஜனங்களுடைய தேவைப் பொருள் களையெல்லாம் ராணுவம் விழுங்கிக்கொண்டு வந்தது. அப்படி விழுங்கினாலும் அந்த ராணுவம் திறமையாகப் போர்புரிந்து வெற்றிக் கொடி நாட்டிக்கொண்டு வருகிறதா? இல்லவே இல்லை. தங்களுடைய ராணுவத்தின் மீது ருஷ்ய மகாஜனங்கள் எவ்வளவுக் கெவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்களோ அவ்வளவுக் கவ்வளவு ஏமாந்து போனார்கள். இந்த ஏமாற்றம், அவர்களுடைய பசிப் பிணியை இன்னும் அதிகமாகத் தூண்டியது. ஜார் மன்னனின் மீது வெறுப்பு வேறே. போலீ உபத்திரவமோ சொல்லி முடியவில்லை. என்ன செய்வார்கள்? புரட்சிக்குக் கிளம்புவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது? புரட்சிக்குப் பிறகு என்ன செய்வதென்பது அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம். இப்பொழுது உடனே இருக்கப் பட்டதை அழிக்கவேண்டும். அவ்வளவு தான். இந்த மாதிரியான மன நிலைமைக்கு 1917 - ஆம் வருஷத் தொடக்கத்தில் ருஷ்ய மகாஜனங் கள் வந்துவிட்டார்கள். இந்த லட்சணத்தில் ஜார் மன்னன் போர் முகத்திற்குச் சென்று பிரதம சேனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டான். தன்னால், ஏதோ சாதித்துவிட முடியும் என்ற மூட நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இவனுடைய இந்தச் செய்கை, ராணுவத்திலிருந்த உயர்தர உத்தியோகதர்களுக்கு அதிருப்தியையும் ஆத்திரத்தையும் உண்டு பண்ணிவிட்டது. யுத்த நடவடிக்கைகளில் அசிரத்தை காட்டத் தொடங்கிவிட்டார்கள். இந்த அசிரத்தை சாதாரணத் துருப்பு களிடத்திலும் பரவியது. இப்படி முக்கிய நகரங்களிலும் போர் முனையிலும் பரவி யிருந்த அதிருப்தி ஏதேனும் ஒரு வழியில் வெளியாக வேண்டுமல்லவா? ருஷ்யப் பெண்மணிகள்தான் முதன் முதலில் அதிருப்தியை வெளிக் கொணரும் இந்தக் கைங்கரியத்தைச் செய்தார்கள். இது மகா ஆச்சரியமான விஷயம். ருஷ்யப் புரட்சியின் சிருஷ்டி கர்த்தர்கள் பெண்மக்களாயிருந் திருக்கிறார்களென்று நினைக்கிறபோது, நமக்கு மயிர்க்கூச் செறிகிறது. உலகத்திலே ஆண் அழிக்கிறான்; பெண் சிருஷ்டிக்கிறாள். உடலுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்முதல் எல்லையில்லா அழகு வரையில், எல்லாம் அவளுடைய சிருஷ்தான். 1917 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் எட்டாந்தேதி காலை பீட்ரோகிராட் நகரத்திலுள்ள நெசவுத்தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த திரீ தொழிலாளர்கள், தங்கள் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறி வீதிகள் தோறும் ஊர்வலம் வந்தார்கள். தங்களுக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை யென்பது இவர்கள் கூக்குரல். இவர்களோடு மற்ற ஆண் தொழிலா ளர்களும் சேர்ந்து கொண்டார்கள். புரட்சி ஆரம்பம்! இந்த வேலை நிறுத்தம் எல்லா முக்கிய நகரங்களிலும் உடனே பரவிவிட்டது. எங்கணும் குழப்பம்! எங்கணும் சுயேச்சாதிகாரம் வீழ்க என்ற முழக்கம்.! ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த அரசாங்கம் இந்த வேலை நிறுத்தங்களைக் கண்டு கலங்கி விட்டது; வேலை நிறுத்தக் காரர்களை அடக்கி ஒடுக்கும்படி துருப்புகளை ஏவியது. ஆனால் துருப்பினர் வேலை நிறுத்தக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள்! கேட்க வேண்டுமா ஜனங்களுக்கு உண்டான உற்சா கத்தை? அரசாங்கத்தின் உத்திரவுக் கிணங்கி, போலீஸார் மட்டும் சில இடங்களில் ஜனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஜனங்கள் ஆத்திரங்கொண்டு அவர்களைக் கல்லாலும் கழியாலும் தாக்கினார்கள். ஒழுங்கீனங்கள் அதிகமாயின. மார்ச்சு மாதம் எட்டாந்தேதியிலிருந்து பன்னிரண்டாந்தேதி வரையில் ஐந்து நாட் களும் எங்கும் ஒரே கலவரமாயிருந்தது. அரசாங்கம் என்பது எங்கே இருக்கிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற விவரங்கள் ஒன்றும் தெரியவில்லை. சரி, ஜார் அரசன் எங்கே? அவன் போர்முனைக் கருகில் எங் கேயோ ஒரு கிராமத்தில் தங்கி யிருந்தான். தான் தலைமை வகித்துப் போரை நடத்திக்கொண்டிருப்பதாக அவனுக்குள் எண்ணம். தலைநகரமாகிய பீட்ரோகிராட்டில் தொழிலாளர்களும் படை வீரர்களும் சேர்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார் களென்றும், அவர்களோடு மற்ற ஜனங்களும் சேர்ந்து கொண்டி ருக்கிறார்களென்றும் அவனுக்குச் செய்திகள் எட்டின. ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும் படியும், கலகக்காரர்களைச் சுட்டு வீழ்த்துமாறும் உத்திரவிட்டான். உத்திரவு செய்து விட்டான் சுலபமாக. ஆனால் அதை நிறைவேற்றுவது யார்? பீட்ரோகிராட் நகர சேனைத் தலைவன், தான் எடுத்துக் கொண்ட ராஜவிசுவாசப் பிரமாணத்திற்குப் பங்கம் உண்டாக்கக் கூடாதென்பதற்காக, மேற் படி ராணுவச் சட்ட உத்திரவைப் பிரகடனம் செய்தான். ஆனால், அது ஜனங்களுக்குத் தெரியும்படியாகத் தமுக்கடிப்பதோ, சுவர் களில் விளம்பரங்கள் ஒட்டுவதோ முதலிய ஒன்றையும் செய்ய முடிய வில்லை. ஏனென்றால் செய்வோர் யாருமில்லை. அரசாங்கம் அப்படித் துண்டு துணுக்குகளாகச் சிதறிப்போய் விட்டது. ஜாருக்கு இது விஷயம் எட்டிற்று. தானே நேரில் தலைநகரத்திற்கு வந்து ஒழுங்கை நிலைநாட்டத் தீர்மானித்தான். ரெயிலேறி வந்து கொண்டிருக்கை யில், ரெயில்வே தொழிலாளர்கள், இவனது வண்டி, மேற்கொண்டு செல்லாதபடி தடுத்து விட்டார்கள். பீட்ரோகிராட்டின் அருகி லிருந்த ஜார் அரசிக்கு இந்தத் தகவல் தெரிந்தது. அலறினாள். தன் கணவனுக்கு என்ன கதி நேர்ந்ததோ என்று கவலை கொண்டாள். உடனே ஜாருக்கு ஒரு தந்தி கொடுத்தாள். விலாசதாரரின் இருப் பிடம் தெரியவில்லை என்ற ஒரு பென்சில் குறிப்புடன், தந்திக் காரி யாலயத்திலிருந்து தந்தி திரும்பி வந்துவிட்டது! நிலைமை நிரம்ப மோசமாகி விட்டது. விமோசனம் என்ன? அவசரம் அவசரமாக டூமா கூடியது. சுயேச்சாதிகாரம் இதனோடு ஒழிய வேண்டும், அதற்கு அத்தாட்சியாக ஜார் அரசன் முடிதுறக்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேறின. போர்முனையிலிருந்த ராணுவத் தலைவர்களும், ஜார் மன்னன் முடி துறப்பதுதான் நல்லதென்று அபிப்பிராயம் தெரிவித்தார்கள். என்ன செய்வான் நிக்கோலா? தனக்குப் பின்னால் தன்னுடைய சகோ தரனான மைக்கேலை அரசனாக நியமித்து விட்டு, தான் முடிதுறந்து விட்டான். ஆனால் மைக்கேல் அரச பீடத்தில் அமரவேவில்லை; இரண்டாவது நிக்கோலா மன்னனோடு ரோமனாவ் அரச வமிசம் முற்றுப் பெற்றுவிட்டது. இந்தக் காலத்தில் தொழிலாளர் தாபனங்களான சோவி யத்துகள் விரிவடைந்தன; செல்வாக்கும் பெற்றன. இவற்றில் தொழிலாளர் பிரதி நிதிகளோடு போர்வீரர்களின் பிரதி நிதிகளும் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தச் சோவியத்துக்களில் தலை சிறந்து நின்றது பீட்ரோகிராட் சோவியத். இதற்கு காரணம் இதன் தாபகனான ட்ரோட்கி1 ஆதியி லிருந்தே இதனை ஒழுங்குப்படுத்தி வைத்துச் சென்றதுதான். புரட்சியின்போது இவன் அமெரிக்காவிலே அஞ்ஞாதவாசஞ் செய்து கொண்டிருந்தானாயினும், இவன் ஏற்படுத்தி விட்டுப்போன ஒழுங்கு, குலையாமலிருந்ததால், இந்த பீட்ரோகிராட் சோவியத் துக்கு எப்பொழுதுமே ஒரு செல்வாக்கு இருந்து வந்தது. இந்த பீட் ரோகிராட் சோவியத், டூமா எந்தக் கட்டடத்தில் கூடி வந்ததோ அதே கட்டடத்தின் ஒரு பாகத்தைப் புரட்சியின் ஆரம்பத்தில் கைப்பற்றி அதில் தன் காரியாலயத்தை தாபித்துக் கொண்டது. சரி: புரட்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஜார் அரசனும் முடிதுறந்துவிட்டான். இனி அரசாங்கம் நடக்க வேண்டுமே? நடத்துவது யார்? தாங்களே இதைச் செய்யலாம், செய்ய முடியும் என்று சோவியத் அங்கத்தினர்களுக்குப் படவேயில்லை. இஃது ஓர் ஆச்சரியமான விஷயம். டூமாதான் அரசாங்கத்தை நடத்த வேண்டு மென்று இவர்கள் முடிவு செய்து கொண்டார்கள். அப்படியே இவர்களுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற் காகப் பிரதிநிதிக் கூட்டமொன்று, டூமா அங்கத்தினர்கள் கூடியிருந்த இடத்திற்குச் சென்றது. ஒரு கூட்டம், அதிலும் தொழிலாளர் படைவீரர் இவர் களடங்கிய ஒரு கூட்டம், தங்களை நோக்கி வருவதைப் பார்த்து டூமா அங்கத்தினர்கள் மிகவும் பயந்துவிட்டார்கள். தங்களைக் கைது செய்வதற்காகவே .இந்தக் கூட்டம் வருகிறதென்று கருதி விட்டார்கள்! அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்துமாறு மேற்படி சோவியத்துப் பிரதிநிதிக் கூட்டத்தினர், டூமா அங்கத்தினர்களைக் கேட்டுக் கொண்டார்கள். டூமா அங்கத்தினர்களுக்கு இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மனமில்லை; ஆனால் மறுக்கவும் தைரியமில்லை. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார்கள். ஒரு சிறிய கமிட்டி நியமிக் கப்பட்டு அதனிடம் அரசாங்க நிருவாகம் ஒப்படைக்கப் பட்டது. இந்தக் கமிட்டிக்குத்தான் தற்காலிக அரசாங்கம்1 என்று பெயர். அரசியல் அகராதியிலே அர்த்த மில்லாத ஒரு பெயர் இது. ஒரே கட்டடத்தின் ஒரு பாகத்தில் தற்காலிக அரசாங்கம்; வேறோரு பாகத்தில், இந்தத் தற்காலிக அரசாங்கத்தை ஏற்படுத்தின சோவியத். இரண்டுக்கும் அடிக்கடி மனதாபங்கள் ஏற்பட்டன. சோவியத், நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு, தற்காலிக அரசாங்கத்தின் செயல்களில் அடிக்கடி தலையிட்டு வந்தது. இதற்கு முக்கிய காரண மென்ன வென்றால், தற்காலிக அரசாங்கத் தின் அங்கத்தினர் அனைவரும் மிதவாதிகள்; சோவியத்தைச் சேர்ந் தவர் அத்தனைபேரும் தீவிரவாதிகள். முரண்பாடுகள் ஏற்படாம லிருக்குமா? ஒரே காலத்தில் இரட்டை அரசாங்கங்கள் ஆட்சி செலுத்துவது போலிருந்தது. தற்காலிக அரசாங்கம் ஓர் உத்திரவு பிறப்பிக்கும்; சோவியத் அதை மறுத்து வேறோர் உத்திரவு விடும். இந்த நிலையில் ஒழுங்கு என்பது ராஜ்யத்தில் லவலேசமும் இல்லா மற் போய்விட்டது. சிறப்பாக போர் முனையில் ஒழுங்கீனங்கள் அதிகமாகத் தலைகாட்டத் தொடங்கின. இந்த சந்தர்ப்பத்தில் லெனின் வந்து சேர்ந்தான். இவன் அது காறும் விட்ஜர்லாந்தில் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருந்தான். ருஷ்யாவில் புரட்சி ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்ததும், இவன் உடனே தன்னுடைய தாய்நாட்டிற்கு, கர்ம க்ஷேத்திரத்திற்கு வர ஆவல் கொண்டான். எப்படி வருவது? ஜெர்மனி வழியாகத்தான் வர வேண்டும். எனவே, இவனுடைய சார்பாகச் சில நண்பர்கள் ஜெர்மன் அரசாங்கத்திடம் தூது சென்று, இவனை, ருஷ்யாவுக்குள் செல்ல அனுமதிக்கும்படி கோரினார்கள். ஜெர்மன் அரசாங்கம் இதற்குச் சம்மதித்தது. லெனின், ஐரோப்பிய யுத்தத்திற்குப் பரம விரோதியென்பது அதற்குத் தெரியும். இவன், ருஷ்யாவுக்குள் சென்றால் சும்மா இருக்க மாட்டானென்றும், யுத்த எதிர்ப்புப் பிர சாரம் செய்து, ருஷ்யாவின் போரிடுஞ் சக்தியை அடியோடு குன்றச் செய்வானென்றும், இதனால் கிழக்குப் போர் முனையில் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொள்வது சாத்தியமென்றும், அப் பொழுது, மேற்குப் போர் முனையில், அதாவது பிரான், பிரிட்டன் இவைகளுக்கு விரோதமாகத் தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தலாமென்றும் ஜெர்மன் அரசாங்கம் கருதியது. இவைகளை யெல்லாம் மனத்தில் கொண்டு, லெனினையும், அவனோடிருந்த சகாக்கள் சிலரையும், தக்க பந்தோபதுடன் ருஷ்ய எல்லையில் கொண்டுவிட்டது. 1917 - ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினாறாந் தேதி பீட்ரோகிராட் நகரம் வந்து சேர்ந்தான் லெனின், தன் சகாக்களுடன். சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து ட்ரோட்கியும் பீட்ரோகிராட் நகரத்தையடைந்தான். லெனினுடைய வருகையின் போது, பீட்ரோகிராட் சோவியத்தில், போல்ஷ்வெக்கர்கள், எண்ணிக்கையிலும், செல்வாக்கிலும் குறைந்த வர்களாகவே இருந்தார்கள். மென்ஷ்வெக்கர்களுடைய கைதான் ஓங்கியிருந்தது. லெனின், போல்ஷ்வெக் கட்சியின் தலைவனல்லவா? எனவே தன் கட்சியின் நலத்தை நாடி ஒரு திட்டம் வகுத்தான். என்ன திட்டம்? யாருடைய முயற்சியினால் புரட்சி வெற்றிகரமாக முடிந்ததோ அவர்களுடைய, அந்த தொழிலாளர்களுடைய ஆதரவை, போல்ஷ் வெக்கர்கள் முதலில் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்; பின்னர் அந்த ஆதரவையும் பலத்தையும் கொண்டு சோவியத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; அதன் பிறகு அரசாங்க அதிகாரம் தானாகத் தங்கள் கையில் வந்து சேரும். இப்படி ஒழுங்காகத் திட்டம் போட்டு வேலை செய்யக்கூடி யவர்கள், போல்ஷ்வெக் கட்சியில், லெனின் வருகைக்கு முன் ஒருவருமில்லை. தவிர, லெனின், ஒரு பிறவித்தலைவனாதலின், ருஷ்ய மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன், ஜனங்களின் தேவை இன்ன தென்பதை உணர்ந்து கொண்டான். ஜனங்கள் சமாதானம் வேண்டு மென்கிறார்கள்; ஆகாரம் வேண்டுமென்கிறார்கள்; நிலம் வேண்டு மென்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளிக்கப் படுவது என்ன? யுத்தம்; பட்டினி. அவர்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை. நிலச் சுவான்தார்கள் தங்களிஷ்டப்படி நிலத்தை அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஓரிடத்தில் கூறினான். தன்னுடைய கட்சி யினர், அதாவது போல்ஷ் வெக்கர்கள், இந்த மாதரியான விஷயங் களில் கவனஞ்செலுத்தாமல், மென்ஷ்வெக்கர்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டும், தற்காலிக அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கு இணங்கிக் கொண்டும் போவதை இவன் விரும்பவே இல்லை. இதற்காகத் தன் கட்சியினரைக் கண்டித்தான்; அவர்களைச் செயலுக்குத் தூண்டினான். லெனின் வந்த பிறகு, பீட்ரோகிராட் சோவியத்தில் போல்ஷ் வெக்கர்களின் கை வலுத்தது. இது, தற்காலிக அரசாங்கத்தைப் பாதிக்காம லிருக்குமா? போல்ஷ்வெக்கர்கள், மெதுமெதுவாக ஜனசாதகமான பிரேரணைகளை, உதாரணமாகத் தொழிலாளர் களுடைய வேலை நேரத்தை எட்டு மணியாக்குவது போன்றவை களைக் கொண்டு புகுத்தி அவற்றை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தார்கள். தற்காலிக அரசாங்கம் இவைகளுக்குக்கெல்லாம் இணங்கியே கொடுத்தது. ஆயினும், அதன் போக்கு, போல்ஷ் வெக்கர்களுக்குப் பிடிக்கவில்லை. மிதவாதிகளையும் பணக்காரர் களையும் கொண்ட கூட்டந்தானே தற்காலிக அரசாங்கம்? இவர் களுக்குள்ளே அடிக்கடி மனதாபங்கள் வேறே ஏற்பட்டு வந்தன. இவை காரணமாக, அரசாங்கம் அடிக்கடி கைமாறிக் கொண்டு வந்தது. ஒரு சமயம் மிதவாதிகளையும் சில தீவிரவாதிகளையும் கொண்ட ஒரு கூட்டு அரசாங்கம் ஏற்பட்டது. இதற்கு கெரென்கி1 என்பவன் தலைவனானான்; அதாவது பிரதம மந்திரி. இவன் சிறந்த நாவலன்; தொழிலாளர்களின் மத்தியில் இவனுக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. தன்னுடைய செல்வாக்குக்குப் போட்டியாக, போல்ஷ்வெக்கர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டு வருவதை இவன் விரும்பவில்லை. இது மனித சுபாவந்தானே? அதுவும் அரசியலிலே பிரவேசித்திருப்பவர்களுக்குக் கேட்க வேண்டுமா? பொறாமையும் போட்டியும் அரசியலோடு கலந்த பொருள்கள். கெரென்கி,. தனக்கிருக்கிற அதிகார பலத்தைக் துணையாகக் கொண்டு, போல்ஷ்வெக் கட்சியை ஒடுக்க முயன்றான். லெனின் உட்பட அந்த கட்சியின் முக்கியதர்கள் சிலரைக் கைது செய்யுமாறு உத்திரவிட்டான். பலர் கைதியாயினர். லெனின் உள்ளிட்ட சிலர் கைதியாகாமல் தலை மறைந்துவிட்டனர். கெரென்கிக்கு ஆத்திரம் அதிகரித்தது. இன்னும் சில அடக்கு முறைகளைக் கை யாண்டான். ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. போல்ஷ்வெக்கர் களுடைய செல்வாக்கு ஜனங்களிடத்தில் அதிக மாயிற்று. இதைக் கண்டு மனம் புழுங்கினான் கெரென்கி. தன் அதி கார பலத்தில் இன்னும் அதிகமான நம்பிக்கை வைக்கலானான். போல்ஷ் வெக்கர்களைத் திருப்தி செய்ய முடியாமற்போனாலும், பிரான்,. பிரிட்டன் முதலிய நேசக் கட்சியினரையாவது திருப்திப் படுத்திப் பார்ப்போம் என்கிற மாதிரி, போர் முனையில் யுத்த மு தீப்புகளை அதிகப்படுத்தினான். போரைத் தீவிரமாக நடத்தி ஜெர்மனியைத் தோற்கடித்துவிட்டால், அந்தச் செல்வாக்கைக் கொண்டு, போல்ஷ்வெக்கர்களின் செல்வாக்கை முறியடித்து விடலாம், ஜனங்களுடைய நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொண்டுவிடலாம் என்று என்னென்னவோ நினைத்து ஏதேதோ ஏற்பாடுகள் செய்தான். ஆனால், ராணுவத் தலைவர்கள் இவனுக்கு விரோதிகளாயிருந் தார்கள். கெரென்கியினுடைய இந்தப் புதிய யுத்த முயற்சிகள் அவர் களுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. ஆத்திரங் கொண் டார்கள். கோர்னிலோவ்1 என்ற சேனைத் தலைவன் தற்காலிக அரசாங்கமாவது, போல்ஷ்வெஸமாவது, கெரென்கியாம், லெனி னாம், எல்லாவற்றையும், எல்லாரையும் நசுக்கிப் போடுகிறேன் பார் என்று வீறு பேசிக்கொண்டு, ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் பீட்ரோகிராட் நகரத்தை நோக்கிப் படையெடுத்து வந்தான். ஆனால், தலை நகரத்திற்கருகே வருகையில் அவனுடைய துருப்புகள் மாய மாகக் கரைந்துவிட்டன. எங்கே போய்விட்டார்கள் அத்தனை பேரும்? போல்ஷ்வெக்கர்களோடு சேர்ந்து கொண்டுவிட்டார்கள்! கோர்னிலோவ் கண்முன்னே, கெரென்கியின் அதிகார நிழலிலே, கைகுலுக்கல்களும் கட்டித்தழுவுதல்களும் நடை பெற்றன! சுருக்கமாகச் சொல்கிறபோது, ஜார் ஆட்சி வீழ்ந்த பிறகு சுமார் எட்டுமாத காலம் வரை, ருஷ்யா முழுவதும் ஒரே கலவரமாயி ருந்தது. அரசியல் வாழ்க்கையிலாகட்டும். சமுதாய வாழ்க்கையிலா கட்டும் ஒழுங்கு என்பது தலைமுழுகிவிட்டது; அமைதி என்பது ஆரவாரத்திலே அடைக்கலம் புகுந்து கொண்டது. படைபலம், பணபலம், அதிகார பலம் முதலியன வெல்லாம், சமாதானம் தேவை என்கிற ஜனங்களின் ஆவலுக்குப் பலியாயின. இந்த ஆவலின் பிரதிநிதியாக நின்றான் ஒருவன். அவன் யார்? லெனின். லெனின் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஜனங் களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அவர்கள் முகத்திலே ஜீவகளை ரேகை விடுகிறது. புது உலகம், புது நாகரிகம், புது வாழ்வு என் றெல்லாம் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். லெனின் மீது அவ்வளவு நம்பிக்கை! இந்தக் காலத்தில், குழப்பங்களும் போட்டிகளும் நிறைந்த இந்த எட்டுமாத காலத்தில், லெனின், தனது லட்சியத்தை அடை வதற்கான பாதையை மிகக் கவனமாகச் செப்பனிட்டுக் கொண்டு வந்தான். இதில்தான் இவனுடைய திறமையும் பெருமையும் இருக்கின்றன. இந்த எட்டு மாத காலத்தில் சுமார் நான்கு மாத காலம் இவன் ஒளிந்திருந்து தன் கட்சியை வலுப்படுத்திக் கொண்டு வந்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தற்காலிக அரசாங்கமோ இந்த எட்டு மாத காலத்தில் படிப் படியாக க்ஷீணித்துக்கொண்டு வந்தது. கடைசியில் வெம்பிப்போய் கீழே விழும் தறுவாயிலுள்ள ஒரு பழம் மாதிரி ஆகிவிட்டது. இருந் தாலும் அது தன்னை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டுப் பிடிவாதமாகப் போராடி வந்தது. சமுதாயத்தின் மேல்படியிலிருந்த ஒரு சிலரும், அறிவை மட்டும் கொண்டு பிழைப்பு நடத்தும் மத்திய வகுப்பினர் சிலரும் இதற்குப் பக்க பலமாகயிருந்தார்கள். ஆனால் ஓர் அரசாங்கத்திற்கு இந்த பலம் மட்டும் இருந்தால் போதுமா? போதாது என்பதை, தீர்க்கதரிசியான லெனின் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். இதனாலேயே சமுதாயத்தின் கீழ்ப்படியில் பெரும்பான்மையோராயுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியோருடைய ஆதரவைத்திரட்டுவதிலேயே தன் முழுக் கவனத் தையும் செலுத்தி வந்தான். அந்த ஆதரவும் இவனுக்கு நிறையக் கிடைத்து வந்தது. அந்த ஆதரவைக் கொண்டு அரசாங்க அதிகாரத் தைக் கைபற்றிக் கொள்வதற்கு, தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் வந்தவுடன் அதற்கான ஏற்பாடு களையெல்லாம் ட்ரோட்கியைக் கொண்டு செய்வித்தான். 1917 - ஆம் வருஷம் நவம்பர் மாதம் ஏழாந் தேதி அகில ருஷ்ய சோவியத் காங்கிர பீட்ரோகிராடில் கூடுவதாக ஏற்பாடு செய்யப் பட்டது. அன்றைய தினமே அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று லெனின் திட்டம் போட்டிருந்தான். குறிப்பிட்ட படி காங்கிர கூடியது. 650 பிரதிநிதிகள் ஆஜராயிருந்தார்கள். இவர்களில் 390 பேர் போல்ஷ் வெக்கர்கள். எனவே, போல்ஷ் வெக்கர்களின் சார்பாகவே சோவியத் காங்கிர பேசுகிறது என்று லெனின் சுட்டிக்காட்டியது பொருத்த மாகவே இருந்தது. வந்திருந்த 650 பேரில் 505 பேர், சோவியத் கையிலேயே அரசாங்க நிருவாகம் இருக்கவேண்டுமென்று அபிப்பிராயமுடைய வராயிருந்தனர். தனக்கு வெற்றி நிச்சயம் என்பதை லெனின் திரப்படுத்திக் கொண்டான்.1 காங்கிர கூடியதும் வழக்கமான வாதப்பிரதி வாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இப்படி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறபோது, ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி போல்ஷ் வெக்கப் படை வீரர்கள், அரசாங்கக் காரியாலயத்தையும், தந்தி ஆபீ, தபாலாபீ, டெலிபோன்ஆபி, அரசாங்க பொக்கிஷ சாலை முதலிய முக்கிய தாபனங்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். இங்கெல்லாம் வேலை செய்து கொண் டிருந்த மந்திரிகள், முக்கியமான உத்தியோகதர்கள் முதலிய பலரையும் கைது செய்து பந்தோபதில் வைத்து விட்டார்கள். பிரதம மந்திரியான கெரென்கி மட்டும் பெண் வேஷம் தரித்துக் கொண்டு தப்பியோடிவிட்டான். தற்காலிக அரசாங்கம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த தகவல், வாதப் பிரதிவாதங் களில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சோவியத் காங்கிரசுக்கு எட்டியது. உடனே, இனி எல்லா அரசாங்க அதிகாரங்களும் சோவியத்து களினுடையவே என்ற தீர்மானம் நிறைவேறியது. தற்காலிக அரசாங்கம் போய், சோவியத் அரசாங்கம் தாபிதமாயிற்று. லெனினும், பகிரங்கமாகக் காங்கிரசில் வந்து கலந்து கொண்டான். காங்கிரசில் காரியங்கள் துரிதமாக நடைபெற்றன. மந்திரிச் சபை அமைந்தது. மொத்தம் பன்னிரண்டு மந்திரிகள். லெனின், மந்திரிச் சபையின் தலைவன்; ட்ரோட்கி, அந்நிய நாட்டு மந்திரி; .டாலின், சிறு பான்மைச் சமூகத்தினரின் நலன்களைக் கவனிக்கும் மந்திரி. இப்படி இலாகாக்கள் பிரிக்கப்பட்டு, தக்கவர்கள் கையில் ஒப்படைக்கப் பட்டன. மந்திரிச்சபை அமைந்த பிறகு, மகாநாட்டில் இரண்டு தீர் மானங்கள் நிறைவேறின. ஒன்று, ஜெர்மனியோடு நடைபெறும் யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் செய்துகொள்ள வேண்டுமென்பது. மற்றொன்று, விவசாய நிலங்களின் மீது நிலச்சுவான்தார்களுக்கு இருந்த உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, அவை, அந்த நிலங்கள், தேசீய சொத்தாகக் கருதப் படவேண்டுமென்பது. இந்தத் தீர்மானங் கள் நிறைவேறின பிறகு காங்கிர கலைந்துவிட்டது. 1917 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் நடைபெற்ற புரட்சியினால் சுயேச்சாதிகார ஆட்சி வீழ்ந்தது. எட்டு மாதங்கழித்து நவம்பர் மாதம் முதல் வாரம் நடைபெற்ற புரட்சியினால் ஜன ஆட்சி தாபிதமா யிற்று.1 ஒரே வருஷத்தில் இரண்டு புரட்சிகள்! ஒன்று அழிப்பதற்கு; மற்றொன்று ஆக்குவதற்கு. இரண்டிற்கும் சூத்திரதாரியாக இருந்தவன் லெனின். முந்திய புரட்சியை நாட்டுக்கு வெளியே இருந்து நடத்தி னான். பிந்திய புரட்சியை நாட்டுக்குள்ளிருந்தே நடத்தினான். இந்த இரண்டாவது புரட்சிக்குப் பிறகுதான், லெனின் பிறக்கிறபோதே ஒரு தலைவனாகப் பிறந்தான் என்ற உண்மையைப் பொதுவாக உலக மகா ஜனங்களும், சிறப்பாக ருஷ்ய மகாஜனங்களும் தெரிந்து கொண்டார்கள். 3. குடியரசின் தோற்றம் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொண்டுவிட்டான் லெனின். சுக்கானைப் பிடித்துக் கொண்டிருக்கிற மீகாமன் போல கம்பீரமாக நிற்கிறான். அரசாங்க அமைப்போ புதிய மாதிரி. ஜனங் களுடைய அரசாங்கம் ஜனங்களுக்காக அரசாங்கம். ஜனங்களுக்கே இது புதிது. இதனை ருஷ்ய சமுதாயமென்னும் சமுத்திரத்தில் இப் பொழுதுதான் முதன் முதலாக மிதக்க விட்டிருக்கிறான் லெனின். பார்க்கப்போனால், இஃதொரு பரிசோதனை. இதற்கு மகத்தான துணிச்சல் வேண்டும். ஆனால் ருஷ்ய மக்களின் அதிருஷ்டவசமாக, லெனின் ஒரு துணிச்சல்காரனாக மட்டுமில்லை; வீரனாகவும், தலைவனாகவும் இருந்தான். இவன் மேற்படி அரசாங்கக் கப்பலில் சுக்கானை எந்த நிமிஷத்தில் பிடித்தானோ அந்த நிமிஷத்திலிருந்தே இவனைச் சுற்றி எவ்வளவு கொந்தளிப்பு! எவ்வளவு கடுமையான புயற்காற்று! மேலே மேகங்கள் குமுறின. கீழே திமிங்கிலங்கள் இவன் காலைப்பற்றி இழுத்தன. ஆனால் அசையாத தம்பம்போல் இவன் உறுதியாக நின்றான்; எத்தனையோ பேருடைய சாபங்களுக்கும் கோபங்களுக்கும் ஆளானான். எதற்காக? ருஷ்ய சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக; உலக மகாஜனங்களின் எதிர்கால க்ஷேமத்திற்காக. அப்பொழுது லெனின், தன்னைச் சுற்றி எந்த மாதிரியான கட்சியைக் கண்டான்? ருஷ்ய ராணுவம் துண்டு துணுக்குகளாகச் சிதறுண்டு கிடந்தது. அது மறுபடியும் சக்திபெற்றுச் சண்டை போடும் என்று சொல்வதற் கில்லாமல் இருந்தது. ஆனால் ஜெர்மனி யோடு சண்டை மட்டும் நடந்து கொண்டிருந்தது. தேச முழுவதும் ஒரே கலவரம். போர் முனையிலிருந்து ஓடி வந்துவிட்டவர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் தங்கள் இஷ்டப்படி காரியங்கள் செய்துகொண்டு போனார்கள். சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு அடியோடு சீர்குலைந்து போயிருந்தது. உணவுப் பொருள்கள் அகப்படுவது அருமையாகி விட்டது. ஜனங்களோ பட்டினி கிடந் தனர். பழைய ஜார் ஆட்சி முறையின் பிரதிநிதிகள், புரட்சியை அடக்கிப்போடுவதற்குத் தயாராகக் காத்துக்கெண்டிருந்தனர். பழைய அரசாங்கத்தின் ஊழியர்கள், புதிய அரசாங்கத்துடன் ஒத் துழைக்க மறுத்து விட்டார்கள். பாங்கிக்காரர்கள் பணங் கொடுக்க மறுத்துவிட்டார்கள். தந்திக் குமாதாக்கள்கூட, தந்தி அனுப்ப முடியாதென்று சொன்னார்கள். எப்படிப்பட்ட மனோதிடங் கொண்டவனையும் பிரமிக்கச் செய்யக்கூடிய ஒரு கடினமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டதும் லெனின் செய்த முதல் காரியம் என்னவென்றால், ஜெர்மனியோடு சமாதானம் செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டது தான். அப்பொழுது போர்முகத்தில் சேனாதி பதியாக இருந்தவன் துக்கோனின்1 என்பவன். யுத்தத்தை நிறுத்தி ஜெர்மன் சேனைத் தலைவனுடன் சமாதானப் பேச்சுத் தொடங்குமாறு லெனின் அவனுக்கு டெலிபோன் மூலம் உத்தரவு கொடுத்தான். ஆனால் அவன் இதற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டான். உடனே, அவனை வேலையிலிருந்து விலக்கியிருப்பதாகவும், கிரிலென்கோ2 என்ற சேனைத் தலைவனைப் படைமுகத்திற்கு அனுப்பியிருப்பதாகவும், அவனிடத்தில் பொறுப்பை ஒப்புவித்து விடுமாறும், பீட்ரோ கிராட்டிலிருந்து கண்டிப்பான உத்தரவு சென்றது. கிரிலென்கோ யுத்த களத்திற்குச் சென்றான்; பதவியை ஒப்புக் கொண்டான் சோர்ந்தும், கோபமடைந்தும் இருந்த போர்வீரர்கள், யுத்த முனையிலேயே துக்கோனினை உயிரோடு கொளுத்தி விட்டார்கள். ருஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் சமரஸப்பேச்சுகள் தொடங்கின. ப்ரெட் - லிடோவ்க்3 என்ற ஊரில் இரண்டு நாட்டுப் பிரதிநிதி களும் கூடினார்கள். ருஷ்யர்களின் பலவீனமான நிலைமையை நன்கு தெரிந்து கொண்டிருந்த ஜெர்மனியர்கள், மிகக் கடுமையான நிபந் தனைகளை விதித்தார்கள். இந்த நிபந்தனைகளை ஒப்புக் கொள் வதைக்காட்டிலும், ருஷ்யாவென்று பெயர் சொல்லிக்கொண்டு தனியாக ஒரு தேசம் இல்லாமலிருப்பதே நல்லதென்கிற மாதிரியாக போல்ஷ்வெக்கர்களில் பெரும்பாலோர் அபிப்பிராயப்பட்டார்கள். ருஷ்யப் பிரதிநிதிக் கூட்டத்தின் தலைவனாயிருந்தவன் ட்ரோட்கி. இவன், தனது வாசாலகத்தையெல்லாம் உபயோகப்படுத்தி, ஜெர் மானியர்களைச் சிறிது இறங்கி வரும்படி செய்ய எவ்வளவோ முயன்றான். ஜெர்மனியால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளுக்குச் சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டுமென்று மன்றாடினான். பய னில்லை. இன்னும் சாதாரணமான பல கோரிக்கை களைக் கிளத் தினான். ஜெர்மானியர்கள் பிடிவாதமாயிருந்துவிட்டார்கள். எனவே, சமரஸப்பேச்சுகள் முறிந்தன. ஜெர்மானியர், மீண்டும் யுத்த கோஷம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய படை, பீட்ரோ கிராட் நகரத்தை நோக்கி வரத் தொடங்கியது. இந்த நிலைமையில் என்ன செய்வது? பார்த்தான் லெனின். ருஷ்யப் பொது ஜனங்கள், சமாதானத்தில் எவ்வளவு ஆவலுடையவர்களாயிருக்கிறார் களென்பது இவனுக்கு நன்றாகத் தெரியும். யுத்த களத்தில் போர் வீரர்கள் ஓர் அடிகூட முன் எடுத்து வைக்கத் தயாராயில்லை என்பதையும் இவன் தெரிந்து கொண்டிருந்தான். எனவே, ஜெர் மனியர்கள் கூறுகிற சமாதான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தான். இதனால் இவன் மீது, இவனுடைய கட்சியினராகிய போல்ஷ்வெக்கர்களுக்கு அதிக அதிருப்தி ஏற்பட்டது. இவர்களைச் சமாதானப்படுத்தி நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வது இவனுக்குப் பெரிய பிரயாசையாகிவிட்டது. முடிவாக, மேலே சொன்ன ப்ரெட் - லிடோவ்க் என்ற ஊரிலேயே 1918 - ஆம் வருஷம் மார்ச்சு மாதம் மூன்றாந் தேதி ஜெர்மானியப் பிரதிநிதிகளும் ருஷ்யப் பிரதிநிதிகளும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதற்கு ப்ரெட் - லிடோவ்க் ஒப்பந்தம் என்று பெயர். இதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்னவென்றால், ருஷ்யாவின் மேற்குப் பக்கத்தில் அதற்குச் சொந்தமாயிருந்த பெரும்பாலான பிரதேசம் ஜெர்மனியைப் போய்ச் சேர்ந்தது. போல்ஷ்வெக்கர்கள், தங்கள் அர சாங்கத் தலைமை தானத்தை பீட்ரோகிராட்டிலிருந்து மாக் கோவுக்கு மாற்றிக் கொண்டார்கள். அது முதற்கொண்டு, மாக் கோவே, ருஷ்யாவின் தலைநகரமாயிருந்து வருகிறது. இரண்டாவதாக, லெனின் நில விஷயத்தைப் பற்றிக் கவனிக்கத் தொடங்கினான். ஏற்கனவே சோவியத் காங்கிர, நிலச்சுவான்தார் களுடைய நிலங்களும், மற்றச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப் பட்டு கிராம சோவியத்துகளின் கையில் தேசீயசொத்தாக ஒப் படைக்கப்படு மென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதல்லவா? இந்தத் தீர்மானத்தை பல உத்திரவுகளின் மூலம் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவந்தான். இது சம்பந்தமாக இவன் குறை கூறப்படு கிறானாதலின், இதைப்பற்றிச் சிறிது விதரித்துக் கூறுவது நல்லது. தற்காலிக அரசாங்கத்தின் நிருவாக காலத்தில், அதனுடைய பலவீனத்தை உணர்ந்த நிலச்சுவான்தார்கள், போல்ஷ்வெக்கர்கள் அதிகார பதவியை ஏற்றுக்கொண்டால், எங்குத் தங்கள் நிலங் களைக் பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று அஞ்சி, ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தங்களுடைய நிலங்களைச் சிறுசிறு தளைகளாகப் பிரித்து, தங்களிடத்தில் ஏதோ ஒரு வகையில் கட்டுப்பட்டிருக் கிறவர்களுக்குச் சுவாதீனப்படுத்தி விட்டார்கள். தங்களுடைய சொத்துக்களில் சிலவற்றை அந்நியர்களுக்கு மாற்றிவிட்டார்கள். இப்படித் தற்காலிகமாகப் பிரித்தும் மாற்றியும் கொடுத்து, பின்னாடி தக்க சமயம் வருகிறபோது எல்லாவற்றையும் தங்களுக்கே திருப்பி மாற்றிக்கொண்டுவிடலாமென்பது இவர்கள் எண்ணம். விவசாயிகள் இதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொள்ளாம லிருப்பார் களா? அவர்கள் ஏழைகள்தான். ஆனால் முன்கூட்டி வரப் போவதை ஊகித்துக்கொண்டு விடும் சக்தி அவர்களுக்கு உண்டு. இந்த நில மாற்ற விவகாரங்களை நிறுத்தச் செய்யவேண்டுமென்று தற்காலிக அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். ஆனால் அஃது, அந்தத் தற்காலிக அரசாங்கம், எல்லோரையும் திருப்தி செய்ய முயன்று கடைசியில் எல்லோருடைய அதிருப்தியையும் சம்பாதித்துக் கொள்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருந்தது. பார்த்தார்கள் விவசாயிகள். அரசாங்கத்தை நம்புவதில் பிரயோஜன மில்லை என்று தெரிந்து கொண்டார்கள். தாங்களே, நிலச்சுவான் தார்களிடமிருந்து நிலங்களைப் பலாத்காரமாகச் சுவாதீனப்படுத்திக் கொண்டும், தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டும், வந்தார்கள். எதிர்த்து நின்ற நிலச்சுவான்தார்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர் களுடைய சுகபோக வாழ்க்கை தலங்கள் சூறையாடப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் ஏராளமான சொத்துக்களுக்கு நஷ்டம் உண்டாயிற்று. இந்தச் சொத்து நஷ்டம் சமுதாயப் பொது வுக்கு ஒரு கஷ்டமல்லவா? விவசாயிகள் இப்படி நிலங்களைப் பங்கு போட்டுக் கொள் கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, போர் முகத்திலிருந்த படை வீரர்கள், லட்சக்கணக்கில் கிராமங்களுக்குத் திரும்பி வந்து, இந்தப் பங்கு போட்டுக்கொள்ளும் வேலையில் ஈடுபட்டார்கள். ஏற்கனவே இவர்கள் விவசாயிகளாக இருந்தவர்கள்தானே? போர்முகத்திலும் இவர்களுக்கு சரியான உடையோ உணவோ கிடையாது. அதிகமாகச் சோர்வுற்றுக் கிடந்தார்கள். வயிற்றுப் பிழைப்புக்கு ஏதேனும் ஒரு வழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? எறும்புக் கூட்டங்கள் மாதிரி, கும்பல் கும்பலாகக் கிராமங்களுக்குள் நுழைந்தார்கள். எந்த அரசாங்கந் தான் இதனைத் தடுக்க முடியும்? அஃது எவ்வளவு வல்லமை பொருந்திய அரசாங்கமாகத்தான் இருக்கட்டுமே? விவசாயிகளின் ஆக்கிரமிப்புச் செயலைக் கண்டித்து விடுவதால் மட்டும் ஏதேனும் நன்மை உண்டாகுமா? இதனால்தான் லெனின், புத்திசாலித்தனமாக, தேசத்திலுள்ள நிலமனைத்தையும் ஜனங்களுடைய சொத்தாக்கிவிட்டான். ஜார் அரசனுக்கும், அவ னுடைய குடும்பத்தினருக்கும், மத தாபனங்களுக்கும் சொந்தமா யிருந்த எல்லாச் சொத்துக்களும் பங்கிடப்பெற்று விவசாயி களுக்கு விநியோகிக்கப் பெற்றன. இந்த விநியோக வேலையை யார் செய்வது? அந்தந்தக் கிராமக் கமிட்டிகளின் வசத்திலேயேவிட்டான். இந்தக் கமிட்டிகளோ அந்தக் கிராம விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டவை. விவசாய சம்பந்தமான பரிசோதனைகள் நடத்துவதற் காக மட்டும் முக்கியமான இடங்களில் சில நிலங்களை அரசாங்க மானது, தனக்கென்று வைத்துக் கொண்டது. ஆனால் இவைகளைக் கூட விவசாயிகள் சிறிது காலங்கழித்துத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டுவிட்டார்கள். நிலத்தேவை அவ்வளவு அதிகமா யிருந்தது. நிலச்சுவான்தார்களை அவர்களுடைய நிலத்திலிருந்து விவசாயிகள் அப்புறப்படுத்திவிட்டது போலவே, நகரத் தொழிற் சாலை களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், பல இடங்களில் தங்களுடைய முதலாளிகளைத் துரத்திவிட்டு, தாங் களே தொழிற்சாலை களை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். ஆக்கிரமித்துக் கொண்டு என்ன செய்வது? அவைகளை நடத்த வேண்டுமே? இதற்குப் பணமும், திறமையும், நிருவாக ஒழுங்கும் தேவையல்லவா? எல்லாம் பொது வுடைமை என்கிற உற்சாகத்திலே, தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை நடைபெற வொட்டாதபடி செய்து விட்டார்கள். இப்படி வேலையற்றுப்போன தொழிற் சாலைகளை என்ன செய்வது?ஆடம்பர வதுக்கள் எதுவும் வேண்டியதில்லையென்றாலும், வாழ்க்கைக்கு அவசியம் தேவையாயிருக்கிற துணிமணிகளாவது, ஜனங்களுக்கு, ஏதோ ஒன்றுக்குக் கால் விகித மேனும் கிடைக்கச் செய்ய வேண்டுமல்லவா? மேற்படி தொழிற்சாலைகளை மறுபடியும் முதலாளிகள் வசம் ஒப்பு வித்து, வேலை தொடங்கச் செய்ய, சோவியத் அரசாங்கத்திற்கு இஷ்டமில்லை. அப்படிச் செய்வது, முதலாளித்துவத்தின் ஆக்கத்திற்கு, தானே தூண்டுகோல் போட்டதாகுமல்லவா? இன்னும் சில இடங்களில், தேசத்தில் ஏற்பட்டிருக்கிற கலக்கத்தை ஆதாரமாகக்கொண்டு, பொதுவுடைமை இயக்கம் வளரக் கூடாதென்ற நோக்கமுடைய முதலாளிகளிற் சிலர், தங்கள் வசத்தி லிருந்த தொழிற் சாலைகள் சரியாக வேலை செய்ய வொட்டாத படி விஷமம் செய்து வந்தார்கள். இவற்றைத் தடுத்துத் தொழிற்சாலை களைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாயிருந்தது. எனவே, இந்தப் பல காரணங்களையும் உத்தேசித்து, எல்லாத் தொழிற்சாலைகளையும் அரசாங்கத்தாரே சுவாதீனப்படுத்திக்கொண்டுவிட்டார்கள். இதுதான் சமயமென்று லெனின், தேச முழுமைக்கும் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கொண்டு புகுத்தினான். அரசாங்கத்தின் அமைப்பையும் நோக்கத்தையும் தெளிவு படுத்திக்காட்டினான். 1918-ஆம் வருஷம் ஜீலை மாதம் பத்தாந்தேதி அவன் வெளியிட்ட அறிக்கையின் முதல் பாகம் வருமாறு: 1. தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் ஆகியோரு டைய பிரதிநிதிகள் அடங்கிய சோவியத்துகளைக் கொண்ட குடியரசு நாடாக ருஷ்யா இனி இருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது. எல்லா மத்திய, தல அதிகாரங்களும் இந்தச் சோவியத்து களின் கையிலேயே ஒப்படைக்கப்படுகின்றன. 2. சுதந்திரமாயுள்ள ஜாதியினர், அவர்கள் விருப்பப்படி ஒன்று சேரலா மென்கிற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசீயக் குடியரசு நாடுகளின் சமஷ்டியாக, ருஷ்யசோவியத் குடியரசு தாபிக்கப் படுகிறது. 3. மனிதனை மனிதன் சுரண்டுவதைத் தடுக்கும் பொருட்டும், சமுதாயத்தைத் தரவாரியாகப் பிரிவினை செய்வதை நிறுத்தும் பொருட்டும், சுரண்டுபவர்களைக் கண்டிப்பாக அடக்கிப்போட வேண்டுமென்பதற்காகவும், சமுதாயத்தை அபேதவாத முறையில் அமைக்கவேண்டு மென்பதற்காகவும், எல்லா நாடுகளிலும் அபேத வாதம் வெற்றி பெறவேண்டு மென்பதற்காகவும் கீழ்க்கண்டவாறு உத்தரவு செய்யப்படுகிறது:- (அ) நிலங்களின் மீது தனிப்பட்டவர்களுக்குள்ள சொந்த பாத்தியதை இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. எல்லா நிலங்களும், தேசீய சொத்தாகக் கருதப்பட்டு, உழைப்பாளிகளின் வசத்தில் ஒப்புவிக்கப்படும். இதற்கு முந்தி நிலத்துக்குச் சொந்தகாரர்களாயிருந்தவர் களுக்கு எவ்வித நஷ்ட ஈடும் கொடுக்கப்பட மாட்டாது. நியாயமான முறையில் எல்லோருக்கும் நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்படும். ஆனால் எல்லோருக்கும் நிலத்தை உபயோகப்படுத்திக் கொள்ள மட்டுமே பாத்தியதை உண்டு. (ஆ) காட்டுப் பிரதேசங்கள், பூமியின் கீழ் உள்ள சுரங்கப் பொருள்கள், தேசீய முக்கியத்துவம் பெற்ற நீர் வசதிகள், கால்நடைகள், அவற்றைச் சேர்ந்தவைகள், மாதிரி விவசாயப் பண்ணைகள்,விவசாய முயற்சிகள் முதலிய யாவும் தேசீய சொத்துக்களாகவே இனிக் கருதப்படும். (இ) தொழிற்சாலைகள், பொருள் விற்பனை தாபனங்கள், சுரங்கங்கள், ரெயில்வேக்கள் முதலிய உற்பத்தி சாதனங் களும், போக்குவரத்து சாதனங்களும், தொழிலாளர் - விவசாயிகளடங்கிய சோவியத் குடியரசின் கைக்குப் பரிபூரணமாக மாறுவதற்கு முன்னேற் பாடாகவும், சுரண்டுபவர்களைக் காட்டிலும் உழைப்பாளிகளின் அந்தது தான் மேலான தென்பதை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டும், தொழில் தாபனங்களினுடைய நிரு வாகம் இனி , தலைமைப் பொருளாதாரக் கவுன்சிலின் வசம் ஒப்படைக்கப்படும். சுமார் மூன்று வருஷ காலம், இந்தப் பொதுவுடைமைக் கொள்கையை, சோவியத் அரசாங்கம் கண்டிப்பான முறையில் அனுஷ்டித்து வந்தது. இதற்கு யுத்தகாலப் பொதுவுடைமை என்று பெயர். முக்கியமான இந்த விஷயங்களைக் கவனித்து விட்டு, பிறகு, லெனின் அரசாங்க யந்திரத்தைப் பழுது பார்க்கத் தொடங்கினான். முறுக்காணிகளும் திருகாணிகளும் நிறைய இருந்தன. இவைகளை யெல்லாம் நிர்த்தாட்சண்யமாக அப்புறப்படுத்தினான். உதாரண மாக, பழைய நிருவாகத்தின் கீழ் வேலை பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க உத்தியோகதர்கள் புதிய நிருவாகத்தின் கீழ் வேலை செய்வதற்கு முணு முணுத்தார்கள்; ஒத்துழையாமையை அனுசரித் தார்கள். இவர் களெல்லோரையும் கண்டிப்பாக உத்தியோகத் தினின்று விலக்கிவிட்டான். வேலையில்லாதவர்களுக்கு உணவு கிடையாது என்று எல்லோருக்கும் பொதுவாக ஒரு விதியை ஏற்படுத்தினான். பாங்கி முதலாளிகள், தங்களுடைய இரும்பு பெட்டகங்களைத் திறந்து பணத்தை எடுத்துப் புழக்கத்திற்குக் கொண்டு வர மறுத்தார்கள். அவற்றை வெடி மருந்து வைத்துத் திறந்து பணத்தைச் செலாவணிக்குக் கொண்டுவரச் செய்தான். இப்படிச் சில்லரையாக ஏற்பட்ட பல தடைகளைக் கொஞ்சங்கூட தயை காட்டாமல் விலக்கினான். ஜார் குடும்பத்தினர், யூரல் மலைக் கருகாமையில் எகாடெரின் பெர்க் என்ற ஊரில் பாதுகாவலுடன் வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களை மையமாக வைத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு சதியாலோசனை நடைபெற்றது. இதனால் அரசாங்கத்திற்கு ஆபத்துண்டாகும் போலிருந்தது. எனவே, ஜார் குடும்பத்தினர் இவ்வுலகத்தில் இல்லாத படி மறு உலகத்திற்கு (17-06-1918) அனுப்பப்பட்டுவிட்டார்கள். இங்ஙனமாக எழுந்த பல குட்டிக் கலகங்கள் கடுமையாக அடக்கப் பட்டன. ருஷ்யர்கள், ஜெர்மானியர்களுடன், ப்ரெட் - லிடோவ்கில் தனித்து ஒப்பந்தம் செய்து கொண்டது நேசக் கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. யுத்த நடுவில், ருஷ்யர்கள் தங்களைக் கைவிட்டதாக நினைத்தார்கள். தவிர, ருஷ்யாவில் பொதுவுடைமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோவியத் அரசாங்கம் ஏற்பட்டி ருப்பது, முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வல்லரசு களுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் நாடுகளில் புரட்சியும் பொது வுடைமைக் கொள்கையும் பரவி விடுமோ என்று அஞ்சினார்கள். எனவே, சோவியத் ஆட்சி முறை, ருஷ்யாவில் நிலைபெறுவதற்கு முன்னரே அதனை அழித்துவிடுவது தங்கள் கடமையென்று கருதி விட்டார்கள். இதற்காக, படை பலம், பணபலம் முதலியன யாவும் திரட்டப்பட்டன. ஐயோ, 1918-ஆம் வருஷம் பதினான்கு தேசங்கள், தங்கள் படை பலத்துடன் ருஷ்யாவை வளைத்துக் கொண்டன. ருஷ்யாவுக்குள் எந்தவிதமான உணவுப்பொருள்களும் செல்ல வொட்டாதடி தங்கள் கப்பற்படைகளைக் கொண்டு தடுத்தன. 1918 - ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்து 1920 - ஆம் வருஷம் முடிய சுமார் மூன்று வருஷ காலம் இந்த வல்லரசுகள் சோவியத் அரசாங் கத்தையும் ருஷ்ய மகாஜனங்களையும் படுத்தின பாடு சொல்லத் தரமன்று. பிரிட்டன் மட்டும் இந்தக் கைங்கரியத்துக்காக, சுமார் நூறு கோடி ரூபாய் செலவழித்தது. இந்த வல்லரசுகள், ஏற்கனவே ஜார் அரசங்கத்தின் கீழ் வேலை செய்துகொண்டிருந்து, இப்பொழுது சோவியத் அரசாங்கத்திற்கு விரோதமாகக் கலகக் கொடி தூக்கியிருக்கிற ராணுவத் தலைவர்கள் பலருக்கும் ஆயுதங்கள் உதவின; ஆட்களை அனுப்பின. எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால்! ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குத் தான்! இப்படி ஒன்று திரண்டெழுந்த ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்து நிற்பது, சோவியத் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை யாயிற்று. அப்படி எதிர்த்து நின்றிராவிட்டால், அன்றே மடிந்து போயிருக்க வேண்டியதுதான். எனவே, அது, சீர்குலைந்துபோயிருந்த தனது ராணுவத்தை முதலில் ஒழுங்குபடுத்தியது. இந்த வேலையை ட்ரோட்கி மிக அருமையாகச் செய்தான். இவனுடைய கண்டிப் பான நிருவாகத்தின் கீழ், சோவியத் ராணுவமானது, ஒழுங்கிலும், ஒழுக்கத்திலும், திறமையிலும் வெகுவாக முன்னேறியது. ராணுவத்தின் எண்ணிக்கையும் லட்சக் கணக்கில் பெருகியது. சோவியத் படைக்கு செம்படை என்றும், புரட்சி விரோதிகளின் படைக்கு வெண்படை யென்றும் பெயர். சோவியத் செம்படை, வெண்படைகளை எதிர்த்துப் பதினேழு போர்முகங்களில் ஒரே சமயத்தில் போராடியிருக்கிறது என்று சொன்னால், அஃதொன்றே, ட்ரோட்கியின் நிருவாகத் திறமைக்கு அத்தாட்சியல்லவா? இந்த இரண்டு படைகளுக்கும் மத்தியில் தேச மகாஜனங்கள் அகப்பட்டுக்கொண்டு திணறினார் கள். உயிரழிவும் பொருட் சேதமும் சொல்லி முடியாது. சுமார் எழுபது லட்சம் ஜனங்கள் அகால மரணமடைந்தார்கள். உக்ரேன் என்ற பிரதேசத்தின் நிருவாகம் மட்டும், இந்தச் சண்டை நடைபெற்ற மூன்று வருஷத்தில், செம்படைக்கும் வெண்படைக்குமாகப் பதினான்கு முறை கைமாறியது! இந்த நிலைமையில் சமுதாயமானது எப்படி ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்க முடியும்? உணவுப் பொருள்கள் உற்பத்தி யாவது குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் சரியாக நடைபெற வில்லை. 1913-ஆம் வருஷத்தில் ருஷ்யா முழுவதிலும் உற்பத்தியான விவசாயப் பொருள்கள் எவ்வளவோ அதில் மூன்றில் ஒரு பங்குதான் 1920-ஆம் வருஷத்தில் உற்பத்தியாயிற்று. வயிற்றுப் பசிக்குச் சாப் பாடு அகப்படாது; அடுப்பெரிக்கக்கரி அகப்படாது. அநேக சந்தர்ப் பங்களில், ஜனங்கள், சிறப்பாக பீட்ரோகிராட் நகரத்தில் வசித்துக் கொண்டிருந்தவர்கள், பசியையும் குளிரையும் தாங்க முடியாமல் மரணத்தின் வாயிற்படியை எட்டிப்பார்த்திருக்கிறார்கள். இறந்து தான் அமைதி பெறவேண்டுமென்ற ஒரு நிர்க்கதியான திதியில் ஜனங்கள் இருந்தார்கள். இந்த கால நிலையை ஓர் அறிஞன் வருணிக்கிறான் :- ஜனங்களுடைய நிலைமை மிக மோசமாயிருந்தது. உலகத்திலுள்ள எல்லா வல்லரசுகளினுடையவும் துவேஷமோ சொல்லி முடியாது. இந்தத் துவேஷம் காரணமாக இவை, கிளப்பி விட்டு ஆதரவும் தந்து வந்த போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்றன; கடுமையாகவும் நடைபெற்றன. இந்த நிலைமையில் சோவியத் அரசாங்கம், சாகாமல் உயிர் வைத்துக் கொண்டிருக் கத்தான் முடிந்தது. 1920 - ஆம் வருஷக் கடைசியில் தான் வல்லரசுகளின் தலையீடு நின்றது. அவைகளும் வருஷக்கணக்காகச் சண்டை போட்டுச் சண்டை போட்டு ஓய்ந்து போயிருந்தன. எனவே, வேறு வழியின்றி, தங்கள் துருப்புகளை ருஷ்யாவிலிருந்து வாப வாங்கிக் கொண்டு விட்டன. இந்தத் துருப்புகளோடு, சோவியத் அரசாங்கத்தின் கொள்கைகளை அங்கீகரிக்க முடியாத ருஷ்யர்களும், அந்நியர் களும், எல்லோரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். ருஷ்யா வில் ஏற்பட்ட கலகங்களைச் சாதகமாகக் கொண்டும், அந்நிய வல்லரசுகளின் தூண்டுதலின் பேரிலும், நூற்றாண்டுக் கணக்காக ருஷ்ய ஏகாதிபத்தியத்திற் குட்பட்டிருந்த லாட்வியா, லிதூனியா, எதோனியா முதலிய நாடுகள் சுதந்திரக் கொடி தூக்கின. சோவியத் அரசாங்கம் மிகுந்த ராஜதந்திரத்துடன் இவைகளின் சுதந்திரத்தை அங்கீகரித்து, இவைகளோடு சிநேக ஒப்பந்தமும் செய்து கொண்டது.1 கடைசியில், 1920-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தோடு எல்லாச் சச்சரவுகளும் ஒருவாறு தீர்ந்தன; அமைதி ஏற்பட்டது. ஆனால் சோவியத் அரசாங்கம் இந்த அமைதியிலே ஆறுதல் அடைந்துவிடவில்லை. யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத்தை முன்னைவிட அதிக தீவிரமாக அநுஷ்டிக்கத் தொடங்கியது. அதாவது, எல்லாத் தொழில்களும் தேசீய மயமாக்கப்பட்டன. தனிப்பட்ட வர்கள் லாபத்திற்காக வியாபாரம் செய்யக்கூடாதென்று தடுக்கப் பட்டார்கள். பொதுவுடைமை முறையில் விவசாயம் நடைபெற வேண்டுமென்று உத்திரவு பிறந்தது. ரெயில், தபால், தந்திக் கட்டணங்கள் முதலியன ரத்து செய்யப்பட்டன. நாணயச் செலாவணி என்பது இல்லாதொழிந்தது. இந்த மாதிரி புதுப்புது உத்திரவுகள் பிறந்து கொண்டிருந்தன. இவைகளினால் உண்டான பலன் என்ன? கிராமங்களிலுள்ள விவசாயிகள், தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து கொண்டார்கள். அதனால் நகர வாசிகளுக்குப் போதிய ஆகாரம் கிடைப்பது அரிதாயிற்று. கிராமங் களிலிருந்து உணவுப் பொருள்கள் சென்றால்தானே, நகரவாசிகள் சாப்பிட முடியும்? கிராம விவசாயிகள், விற்பனைக் கென்று உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய இஷ்டப்படவில்லை. விற்றால் பணங் கிடைக்கா தென்பதை, அவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். நாணயப் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டு விட்ட தல்லவா? பண்டமாற்றல் விவகாரந்தானே? நகரவாசிகளின் பண்டங் கள் கிராம வாசிகளுக்கு என்ன உபயோகம்? எனவே, நகரவாசிகள், தங்களிடத்திலேயுள்ள சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டு, கூட்டங் கூட்டமாகக் கிராமங்களுக்குச் சென்று அந்தச் சாமான் களை விவசாயிகளிடம் வலியக் கொடுத்து, தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை வாங்கிக்கொண்டு நகரங்களுக்குத் திரும்பு கிற நிலைமை ஏற்பட்டது. நகரங்களிலுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர் எல் லோருக்கும் ஒரே மாதிரியான கூலி விகிதம் என்ற முறை அமுலுக் குக் கொண்டுவரப்பட்டுவிட்டபடியால், பொருளுற்பத்தி குன்றி விட்டது. ஜனங்களுக்குத் தேவையான பொருள்கள் அகப்படாமை யினால், அநேக நகரங்கள் காலியாயின. பீட்ரோகிராட் நகரத்தில் மட்டும் ஜனத்தொகை மூன்றில் ஒன்றாகக் குறைந்துவிட்டது. அங்கிருந்த மர வீடுகள் உடைக்கப்பட்டு அடுப்பெரிக்க உபயோகிக்கப் பட்டன. வியாபாரம் என்பது இல்லாமலே போய்விட்டது. இத்தனை அவதைகளுக்கு மத்தியிலே, என்றுமில்லாத ஒரு பஞ்சம் தேச முழுவதிலும் ஏற்பட்டுவிட்டது. இதற்கு முன் ருஷ்யா வில் எத்தனையோ பஞ்சங்கள் உண்டாயிருக்கின்றன; ஜனங்கள் மாண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த 1921 ஆம் வருஷத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்போல் கடுமையான பஞ்சம் ஒரு பொழுதும் ஏற்பட்ட தில்லை. இதில் மொத்தம் 430 இலட்சம் பேர் இறந்து போனார்கள். வயிற்றுக்குத் தீவனம் அகப்படாமல், கால் நடைகள் வேறே லட்சக் கணக்கில் மாண்டு வந்தன. இனியும் லட்சியம் என்று சொல்லிக் கொண்டிருந்தால், ஜனங்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்களா? அரசாங்கத்திற்கு விரோதமாகக் குட்டிக் கலகங்கள் ஆங்காங்குக் கிளம்ப ஆரம்பித்தன. வயிற்றுக்குச் சாப்பாடு வேண்டுமென்ற கூக் குரல் வலுத்தது. போல்ஷ்வெக்கர்களின் பிடிவாதத்தினால் தான் இவ்வளவு தூரம் தேசம் சீர்கெட்டுப்போய்விட்டது என்ற எண்ணங் கூட ஜனங்களுக்கு உண்டாகத் தொடங்கியது. பார்த்தான் லெனின்; யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத் தைத் தற்காலிகமாக வாப வாங்கிக்கொண்டுவிட்டு, ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை1 அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தான். பழைய மாதிரி, நாணயச் செலவாணி முறை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள், தங்கள் விளை பொருள் களைப் பணத்திற்குக் கிரயம் செய்ய அநுமதிக்கப்பட்டார்கள். நிலவரி புதுப்பிக்கப்பட்டது. ரெயில், தபால், தந்திக் கட்டணங்கள் முன்மாதிரி விதிக்கப்பட்டன. தனிப்பட்டவர்கள் சொந்த முறையில் தொழில்கள் ஆரம்பிப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டார்கள். தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மார்க் கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்தப் புதிய பொருளாதாரத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததனால், லெனின் தனது பொதுவுடைமைக் கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டானென்று, முதலாளித்து வத்தின் மடியிலே வளர்ந்தவர்கள் கொக்கரிக்கத் தொடங்கினார்கள். ஆனால், இது சரியல்ல; உண்மையுமல்ல. லெனின் ஒரு சிறந்த ராஜ தந்திரி. இரண்டு அடி முன்செல்வதற்கு ஓர் அடி பின் வாங்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்தான், அப்படி செய்ய அவன் பின்வாங்கியதே கிடையாது. அது போன்றதொரு சந்தர்ப்பம்தான் இது. பொதுவுடைமை என்னும் கட்டடத்தின் மேல் மாடியில், தான் திரமாக இருந்து கொண்டு, கீழேயுள்ள சில சாளரங்களைச் சில்லரை வியாபாரிகளுக்குத் திறந்துவிட்டான். இதுதான் புதிய பொருளாதாரத் திட்டத்தின் ரகசியம். இதைப் பற்றிப் பின்னரும் விதரித்துக் கூறுவோம். சோவியத் அரசாங்கம், யுத்தகாலப் பொதுவுடைமைத் திட்டத்தை எப்பொழுது வாப வாங்கிக்கொண்டுவிட்டதோ அப்பொழுதே, அந்நிய நாட்டு முதலாளிகள் அதனுடன் சிநேகம் செய்யத் தொடங்கினார்கள். எந்த வல்லரசுகள் இதுகாறும் சோவியத் அரசாங்கத்தை அழித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தனவோ அந்த வல்லரசுகளே, இப்பொழுது சோவியத் அரசாங்கம் அழியவில்லை யென்பதை அறிந்து கொண்டன; அதற்கு நல்ல புத்தி ஏற்பட்டு மறுபடியும் முதலாளித்துவ வழிக்கே வந்துவிட்டதென்று சுய திருப்தி அடைந்தன; அதனோடு கைகுலுக்க விரும்பிய தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவு காட்டின. முதலாளிகளின் நோக்கமென்ன? லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பது. எப்படிச் சம்பாதித்தாலென்ன? எங்கே சம்பாதித் தாலென்ன? அதற்காக யாரோடும் சிநேகம் செய்து கொண்டாலென்ன? இங்கிலாந்துதான் - கொலைகாரர்களோடு கைகுலுக்க முடியாது என்று சொன்ன லாயிட் ஜார்ஜைப் பிரதம மந்திரியாகக் கொண்டிருந்த இங்கிலாந்துதான் - இதற்கு முதல் வழிகாட்டியது. 1921-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஆங்கிலோ- சோவியத் வியாபார ஒப்பந்தங்கள் ஒன்று ஏற்பட்டது. இதற்குப் பிறகு, எல்லா நாடுகளும் ருஷ்யாவோடு வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. அந்நிய நாட்டு முதலாளிகள் கூட்டங் கூட்டமாக ருஷ்யாவுக்குச் சென்றார்கள். வெறுங்கையுடனா? இல்லை. பணப்பையுடன். ஏன்? தொழில்கள் ஆரம்பிக்க; அரசாங்கத் திற்குக் கடன் கொடுக்க. இப்படித் தொழில்கள் ஆரம்பிப்பதும் அர சாங்கத்திற்குக் கடன் கொடுப்பதும் எதற்காக? லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவா? இல்லவே இல்லை. ருஷ்யாவை அபி விருத்தி செய்யவேண்டு மென்பதற்காக! ருஷ்யர்கள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக! எந்த நாட்டுக்குமே முதலாளிகள் இந்த மாதிரி நோக்கத்துடன்தான் சொல்கிறார்கள்! புதிய பொருளாதாரத் திட்டம் 1921 -ஆம் வருஷத்திலிருந்து 1928 - ஆம் வருஷம் வரை நடைமுறையில் இருந்தது. இந்த ஏழு வருஷ காலத்தில், சோவியத்தலைவர்கள்,தேசத்தை ஓர் உருப்படி யாக்கினார்கள்; உடைந்துபோய்க் கிலமாகிக்கிடந்த பொருளாதார வாழ்க்கையைச் சீர்படுத்தினார்கள்; புதிய ஒரு ஜாதியையே சிருஷ்டித்தார்கள். ருஷ்யமாதா, சமதர்மம் என்னும் குழந்தையைப் பெறுவதற்கு (1917-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை) ஒன்பது மாதம் வேதனைப்பட்டாள். பத்தாவது மாதம் பிரசவித்தாள். லெனின், பிரதமதாதியாக இருந்தான். முதல் மூன்று வருஷம் குழந்தை மிகவும் சிரமப்பட்டது. இருக்குமோ போய்விடுமோ என்ற சந்தேகங்கூடச் சிலருக்கு. ஆனால் லெனினும் அவனுடைய சகாக்களும் பல கஷ்டங்கள் பட்டு, குழந்தையைக் காப்பாற்றி விட்டார்கள். இனி அதனைப் போஷித்து வளர்க்கவேண்டும். இந்த வளர்ப்புத் தொண்டை, சோவியத்தலைவர்கள் மிக அருமையாகச் செய்தார்கள். இதற்காக இவர்கள் பட்ட பாடும், உழைத்த உழைப்பும் சொல்லித்தரமன்று. ஒரு ஜாதி முன்னுக்கு வர வேண்டுமானால், அதற்காக ஜாதியின் தலைவர்கள் எவ்வளவு தன்னல மறுப்புடை யவர்களாயிருக்க வேண்டியிருக்கிறது! எளிய வாழ்க்கை, அதாவது இயற்கை வாழ்க்கை என்பதை எப்படி எழுத்துப் பிசகாமல் அனுஷ் டிக்க வேண்டியிருக்கிறது! ஒரு தேசம் பொருளாதார விஷயத்தில் மற்றொரு தேசத்திற்கு அடிமைப்பட்டிராமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடு மானால், அது, தன்னுடைய சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொண்டு விட முடியும் என்பதை தீர்க்கதரிசியான லெனின் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். இதற்கேற்றாற் போலவே திட்டங்களைத் தயாரித்தான். முதலில் மின்சார உற்பத்திக்கு ஏற்பாடு செய்தான். அநேக நிபுணர்களைக் கொண்டு ஒரு திட்டம் வகுத்தான். நாடெங் கணும் மின்சார உற்பத்தி தாபனங்கள் ஏற்பட்டன. இப்படி ஏற்பட்டதன் பயனாக, கிராமங்களுக்கும் நகரங் களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டாயிற்று. தொழில்கள் அபிவிருத்தி யாயின. மின்சார உதவியினால், விவசாயிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் குறைவான உழைப்பில் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்தார்கள். இதனால் கிராமத்தில் வசிக்கும் விவசாயி களுக்குத் தேவையான செய்பொருள்களும், நகரத்தில் வசிக்கும் தொழிலாளர் களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் மலிவாகவும் நிறையவும் முறையே கிடைத்தன. ஜனங்களுக்கு ஒரு புதிய மனப்பான்மை ஏற்பட்டது. பழைய குருட்டு வழிகளை விடுத்து, புதிய வழிகளைக் கடைப் பிடித்தார்கள். தேசத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நடத் தினால் மட்டும் போதாது, தேசத்தின் பொருளாதார வாழ்வையும் தங்கள் சுவாதீனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொண்டால்தான் சமதர்ம லட்சியத்தைக் கைவிடாமல் காப்பாற்ற முடியும் என்பதை, சோவியத் தலைவர்கள் ஆரம்பத்தி லிருந்தே நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தகாலப் பொது வுடைமைத் திட்டத்தை லெனினும் அவனுடைய சகாக்களும் வாப வாங்கிக் கொண்டுவிட்டார் களென்று சொன்னால், தேசத் தின் உற்பத்திச் சாதனங்கள், பொருளுற்பத்தி, வியாபாரம் முதலிய அனைத்தையும் தனிப்பட்டவர்களுடைய சுவாதீனத் திற்குவிட்டு, அவர்களிஷ்டப்படி சுரண்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள் என்பது அர்த்தமல்ல. அப்படி அவர்கள் செய்யவே இல்லை. சில்லரைச் சாமன்களை உற்பத்தி செய்வது, சில்லரை வியாபாரம், இப்படிப் பட்ட சிறிய அமிசங்களைத்தான் தனிப்பட்டவர்களுடைய உரிமைக்கு விட்டனர். இப்படிச் செய்து, தேசத்தின் உற்பத்திச் சக்திக்குச் சிறிது உற்சாகம் கொடுக்க வேண்டுமென்பதே அவர்களின் நோக்கம். ஏனென்றால், லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஓர் ஆசை, சதா தூண்டிக் கொண்டிருக்குமல்லவா? ஆனால், இந்த ஆசையை வளரவிடாமல் பார்த்துக்கொண்டு வந்தார்கள். எப்படி? தேசத்தின் பெரிய தொழில்கள், மின்சார தாபனங்கள், அந்நிய நாட்டு வியா பாரம்,உள்நாட்டு வியாபாரம், போக்குவரவு சாதனங்கள் முதலிய வற்றில் ஒரு சிறிய விகிதாசாரம் தவிர, பெரும்பாகம் ஜனங்களின் பொதுச் சொத்தாகவே கருதப்பட்டது. அதாவது இவையனைத்தும் அரசாங்கத்தின் சுவாதீனத்தில் இருந்தன. இதனால், அரசாங்கமே, பொருளுற்பத்தி செய்கிற முதலாளியாகவும், அந்தப் பொருள்களை விநியோகிக்கிற வியாபாரியாகவும் இருந்தது. ஜனங் களுக்குத் தேவை யான பொருள்களை நல்ல முறையில் தயார் செய்து, குறைந்த விலைக்கு விற்க இவர்களால் முடிந்தது. ஏனென்றால், இவர் களுக்குத் தான் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லையே. லாபம் சம்பாதிப்பது என்று சொன்னால், அது ஒரு தனி மனிதனு டைய தேவையைப் பூர்த்தி செய்யும் சாதனமல்ல; அவனுடைய சுய நலத்தை வளர்க்கும் ஒரு தூண்டுகருவி. சோவியத் அரசாங்கம் ஜனங்களுடைய அரசாங்கம். அரசாங்கம் வேறே, ஜனங்கள் வேறே என்ற வேற்றுமை அங்கு இல்லை. ஜனங்களுடைய நன்மையைத் தவிர்த்து அரசாங்கத்தின் நன்மை என்று தனியாக ஒன்று இல்லை. இதனால், சுயநலத்திற்கு அங்கு இடமில்லை. லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியமும் அதற்கு இல்லை. ஜனங்களின் தேவை களைப் பூர்த்தி செய்வதிலேயே அது திருப்தியடைகிறது; அடைந்தது. இப்படி, ஜனங்களுக்குத் தேவையான சாமான்களை நல்ல முறையில் தயார்செய்து அடக்க விலைக்கு விற்பதற்கென்று அரசாங்கமானது, பல கூட்டுறவுப் பண்டசாலைகளை ஆங்காங்கு தாபித்தது. இந்தக் கூட்டுறவு தாபனங்கள் மொத்தமாகவும், சில்லரை யாகவும் வியாபாரம் செய்தன; நல்ல பொருள்களை மலிவாக விற்றன. ஜனங்கள் இவைகளை ஆதரித்தார்கள். இவைகளுக்கு எதிராகத் தனிப்பட்ட வியாபாரிகள் என்ன செய்ய முடியும்? எப்படி லாபம் சம்பாதித்துப் பணக்காரர்களாகமுடியும்? புதிய பொருளாதாரத் திட்டத்தின் ஆரம்பத்தில் சிறிது காலம் வரை, அதாவது ஜனங்களுடைய தேவை களைப் பூர்த்தி செய்கிற சக்தி தனக்கு ஏற்பட்டு விட்டது என்று அரசாங்கம் உணர்கிறவரை, இவர்கள் ஆதரிக்கப்பட்டார்கள். பிறகு இவர்களுக்கு அநேக நிர்பந்தங்கள் விதிக்கப்பட்டன. மெதுமெது வாக இவர்கள் ஒடுக்கப்பட்டு விட்டார்கள். இவர்கள் தான் பிற்காலத்தில் சோவியத் அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தவர்கள். அந்நியநாட்டு வியாபாரம் முழுவதையும் சோவியத் அரசாங்கம் தன்னுடைய சுவாதீனத்திலேயே வைத்துக் கொண்டிருந்தபடியால், அது, தேசத்தின் தொழில் அபிவிருத்திக்கும் விவசாய அபிவிருத்திக் கும் என்னென்ன தேவையோ அவைகளை மட்டுந்தான் அந்நிய நாடுகளி லிருந்து வரவழைத்துக் கொண்டது. இதனோடு, சொந்த நாட்டில் அகப்படாத - ஆனால், ஜனங்களுக்கு அவசியம் தேவையா யிருக்கிற சில பொருள்களையும் இறக்குமதி செய்ய அனுமதித்தது. ஆடம்பரப் பொருள்கள் யாவும் இறக்குமதி செய்யப்படுவதினின்று கண்டிப்பாக விலக்கப்பட்டன. தேச மக்கள் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதென்றும், இயற்கையான, நிதானமுள்ள வாழ்க்கை யையே நடத்தவேண்டுமென்றும், ஆரம்பத்திலிருந்தே சோவியத் அரசாங்கம் வேலை செய்து கொண்டுவந்தது. ஆடம்பரம், சமதர் மத்தை அழித்துவிடும்; வெளிப்பகட்டு,வீண் செலவு, அகம்பாவம் இவைகளை உண்டாக்கும்; இவைகளில்லாமல் செய்யவேண்டு மென்பது எங்கள் நோக்கம் என்று சோவியத் அதிகாரிகள் கூறி வந்தார்கள். இப்படி அந்நிய நாடுகளிலிருந்து வர வழைக்கப்பட்ட பொருள்களை அரசாங்கத்தார், சொற்ப லாபத்திற்கு, கூட்டுறவு தாபனங்கள் மூலம் ஜனங்களுக்கு விற்றார்கள். இதே பிரகாரம், தேசத்தில் உற்பத்தியாகிற பொருள்களில், ஜனங்களின் தேவைபோக மிகுதியானவற்றை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இதன் மூலம் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்தது. இந்த வருமானங்களைக் கொண்டு, தேசத்தின் தொழில் அபிவிருத்திக்கும் விவசாய அபி விருத்திக்கும் தேவையான யந்திரங்கள், கருவிகள் முதலிய வற்றை வாங்கினார்கள். பிரதி வருஷமும் தொழிற் சாலைகள் அதிகப் பட்டுக் கொண்டே வந்தன. விவசாய உற்பத்தியும் விருத்தியாகிக் கொண்டு வந்தது. இதே பிரகாரம் விவசாயிகளின் க்ஷேமத்தையும் அரசாங்கத்தார் கவனிக்கத் தொடங்கினார்கள். ருஷ்யாவில் விவசாயிகளை மூன்று தரத்தினராகப் பிரித்திருக்கிறார்கள். முதலாவது, பெரிய பண்ணைக் காரர்கள். இவர்களை குலாக்குகள்1 என்று அழைப்பார்கள். கிராமத்துப் பெரிய தனக்காரர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். கொஞ்சம் அதிகமான பூதிதியுடையவர்களெல்லாரும் இந்தத் தரத்தில் சேர்க்கப் பட்டனர். இரண்டாவது, மத்தியதரத்து விவ சாயிகள். இவர்கள் சொற்ப நிலபுலங்களை வைத்துக்கொண்டு சுயமாக ஜீவனம் செய்து கொண்டிருக்கிறவர்கள். மூன்றாவது, நிலத் திலே வேலை செய்கிறவர்கள். இவர்களுக்குச் சொந்தமாக நிலம் கிடையாது. மற்றவர்களுடைய நிலத்தைக் கூலிக்கு உழுது பயிரிடு கிறவர்கள். விவசாயிகளிலே இவர்கள்தான் பெரும்பான்மையோர். இவர்களைக் குலாக்குகள் கசக்கிப் பிழிந்து வந்தனர். இவர்களுக்குத் தேவையானபோது கடன் கொடுத்து, இவர்களைத் தங்கள் அடி மைகள் போல் நடத்தி வந்தனர். ஒருவர் உழைப்பிலே மற்றொருவர் வாழக்கூடாதென்ற கொள்கையுடைய சோவியத் அரசாங்கத்தார், இந்த மாதிரி அக்கிரமங்களையெல்லாம் சட்ட மூலமாக அகற்றி விட்டனர். ருஷ்யா எப்பொழுதுமே மதபக்தி நிறைந்த நாடு. தெய்வத் திருநாடு என்று தங்கள் நாட்டைப்பற்றிச் சொல்லிக் கொள்வதி லேயே ருஷ்யர்களுக்கு ஒரு பெருமை. ஜார் மன்னனை தெய்வத் திருத்தந்தை என்று தான் அழைப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு நாட்டிலே, புரோகிதர் களுடைய ஆதிக்கத்துக்குக் கேட்கவேண்டுமா? இவர்களுக்கு ஏராளமான சொத்து, சுதந்திரங்கள் இருந்தன. இவைகளையெல்லாம் சோவியத் அரசாங்கத்தார் பறிமுதல் செய்த தோடு, புரோகிதர்களுடைய ஆதிக்கத்தையும் குறைத்தனர். எதிர்ப்புக் காட்டியவர்கள் கடுமையாக அடக்கப்பட்டார்கள். மதம் காரண மாக ஒருவனுக்கு விசேஷ சலுகைகள் காட்டப்படக்கூடா தென்பது சோவியத் அரசாங்கத்தின் நோக்கம். கடவுள் நம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு, ஜனங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக் கூடாதென்பது அவர்கள் கவலை. ஜனங்கள் மதக் சடங்குகள் என்று சொல்லி ஏராளமான பணத்தைச் செலவழித்து வந்தார்கள். இப்படிச் செலவழித்து அவர்கள் மோட்சமார்க்கத்தில் செல்லவில்லை; வறுமைக்குழியில்தான் இறங்கினார்கள். இதனை அரசாங்கத்தார் தடுத்துவிட்டனர். அரசியல் வேறாகவும், மதம் வேறாகவும் பிரிக்கப் பட்டது. பள்ளிக் கூடங்களில் மதபோதனை நிறுத்தப்பட்டது. பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களாக நான்கு பேரைக் கூட்டு வைத்துக்கொண்டு யாராவது மதபோதனை செய்தால், அவர் களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவைப் போலவே ருஷ்யாவிலும் பல மாகாணங்கள் உண்டு. ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு தனிநாடு மாதிரி. 1917- ஆம் வருஷத்தில் போல்ஷ்வெக் கட்சியினர் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டபோது, பொதுவாக,. ருஷ்யா, குடியரசு முறையில் ஆளப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் இது சரிவர விளக்கப்படவில்லை. 1923-ஆம் வருஷம், ஒவ்வொரு மாகாணத்திற்கும் பூரணப் பொறுப்பாட்சி உரிமை அளிக்கப்பட்டு, எல்லா மாகாணங்களும் சேர்ந்த ஒரு சமஷ்டிக் குடியரசு ஏற்படுத்தப் பட்டது. இது முதற்கொண்டு தான் ருஷ்யாவுக்கு சோவியத் சமதர்மக்குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் என்ற பெயர் வந்தது. அதாவது, பல குடியரசு நாடுகளின் ஐக்கியந்தான் ருஷ்யா. இது தவிர ருஷ்யாவிலுள்ள பல ஜாதியினருடைய பாஷை, கலாசாரம், நாகரிகம் முதலியன பாதுகாக்கப் படுவதற்காகத் தனித்தனி தாபனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவைகளின் மூலமாக அவரவர்களுடைய பாஷை முதலியன வளர்ச்சி பெற்றன. எல்லோருக்கும் பொதுவான தேசம் என்ற உணர்ச்சியை நன்றாக வலியுறுத்தி விட்டு, மற்ற விஷயங்களில் அந்தந்த ஜாதியினருக்கும் பரிபூரண உரிமை அளித்துவிட்டனர் சோவியத் அரசாங்கத்தினர். பொதுவாக, இந்தப் புதிய பொருளாதாரத் திட்ட காலத்தில், ருஷ்யா, பொருளுற்பத்தி, விவசாய அபிவிருத்தி முதலிய விஷயங் களில் ஐரோப்பிய மகாயுத்தத்திற்கு முன்னிருந்த நிலைமையை அடைந்தது. ஜனங்களுடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கொடுங் கோலாட்சியினாலும், பொருளாதார அடிமைத்தனத்தி னாலும் சகஜமாக ஏற்படுகிற ஒரு சோர்வு அவர்களைவிட்டகன்றது. அவர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள்; புதிய வாழ்க்கை தொடங்கு வதற்குத் தயாரானார்கள். இவ்வளவுக்கும் காரணம் என்ன? சோவியத் தலைவர்களின் தன்னல மற்ற உழைப்பு; லட்சியத்திலே அவர்கள் கொண்ட உறுதியான நம்பிக்கை. ஆனால் துரதிருஷ்ட வசமாக, லெனின், இந்தப் புதிய பொருளா தாரத் திட்டத்தின் வளர்ச்சியையும் விளைவையும் பார்க்கக் கொடுத்து வைக்க வில்லை. எப்பொழுதுமே மகான்கள், தங்களு டைய காரியத்தின் பலனைப் பாராமாலும் அநுபவியாமலுமே போய்விடுகிறார்கள். லெனினும் அப்படித் தான். புதிய பொருளா தாரத் திட்டம் ஒரு வகையாக வேலை செய்யத் தொடங்கின காலத் திலிருந்தே, அவனுக்கு உடம்பு சரியில்லாமலிருந்தது. வரவர க்ஷீணதசை அடைந்து கொண்டு வந்தான். கடைசியில் 1924-ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தோராந் தேதி கடைசி தடவையாகக் கண்முடிக் கொண்டுவிட்டான். அன்று ருஷ்ய மகாஜனங்கள் அவனைத் தங்கள் கண்ணீரினால் கழுவினார்கள். ஏனென்றால், அவர்களுடைய கண்ணைத் திறந்து விட்ட மகான் அல்லவா அவன்? 4. சமதர்மம் என்றால் என்ன? சோவியத் ருஷ்யாவின் தலைமை தானம் மாகோ. மா கோவின் இருதய தானம் சிவப்புச் சதுக்கம். இந்தச் சதுக்கத்தின் மத்தியிலுள்ள உயர்ந்த கட்டிடத்தினுள் உயிரில்லாத ஓர் உருவம் வீற்றிருக்கிறது. அது யார்? ருஷ்ய மகாஜனங்களின் இருதய மூர்த்தி; உலகத்து ஏழை மக்களின் நம்பிக்கை புருஷன்; லெனின். அவன் இறந்து பதினெட்டு வருஷங்களா கின்றன. ஆனால் இறந்து போன போது எப்படி இருந்தானோ அப்படியே இப்பொழுதும் காட்சி யளித்துக் கொண்டிருக்கிறான்; எப்பொழுதும் காட்சியளித்துக் கொண்டி ருப்பான். கவிக்கும் சிரங்கள், குவிக்கும் கரங்கள், நீர் மல்கும் கண்கள், அசைக்கும் உதடுகள், இப்படித் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அந்த மகானின் உருவத்தைத் தரிசித்துக் கொண்டு போகிறார்கள்.ஏன்? வாழ்க்கையிலே புதிய ஒளி பெறுவதற்காக. கடவுள் பக்தி என்று சொல்லிக்கொண்டு, மூட நம்பிக்கையிலே ஆழ்ந்து கிடந்த ஜனங்களை, எவன், தன்னம்பிக்கை என்னும் கரைக்கு ஏற்றி விட்டானோ அவனை இப்பொழுது அதே ஜனங்கள் கடவுளாகக் கும்பிடுகிறார்கள்; தேவபுருஷன் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், எட்டாத கடவுளாக அல்ல; வழிகாட்டாத அவதார புருஷனாக அல்ல; லெனின் உயிரோடிருந்த போது, பிறருக்காவே வாழ்ந்தான். இறந்தபிறகும், அவனுடைய உடல் பிறருக்காகவே இருக்கிறது. இறந்த பிறகு, தேகத்தை மட்டும் பரிமள தைலத்திலிட்டுப் பாதுகாத்து வைப்பது என்கிற கௌரவம், இதுவரையில் எந்த மகானுக்கும் ஏற்பட்டதில்லை. மகா பட்டம் பெற்ற கிரேக்க அலெக் ஸாந்தர் என்ன, ருஷ்ய பீட்டர் என்ன, ப்ருஷ்ய ப்ரெடெரிக் என்ன, பிரெஞ்சு நெப்போலியன் எனன- யாருமே இப்படிப் போற்றப்பட வில்லை; ஆனால், பின்பற்றப்படவு மில்லை. கோல் பிடித்த அரசர்கள், வாளேந்திய வீரர்கள், அன்பையே அணிகலனாகப்பூண்ட அடியார்கள், அறிவுச் சிகரத்தின் மீது ஏறி நின்றவர்கள், மானிட ஜாதியின் இருதய ஆழத்தைக் குடைந்து பார்த்தவர்கள் முதலிய பலரையும் நாம் எங்கே பார்க்கிறோம்? mt®fŸ vGâ it¤J¥nghd üšfËny, mšyJ fhÉa¡fhu®fSila f‰gidÆny., அல்லது ஓவியக்காரர் களுடைய சித்திரங்களிலேதான். உயிருக்குப் பிறகு உடலைமட்டும் வைத்துக்கொண்டு யாரும் இதுவரையில் கௌரவம் பெறவில்லை, புராதன எகிப்திய மன்னர்களைத் தவிர்த்து. அவர்களில் யாருக்கும் ஏற்படாத ஒரு கௌரவம் லெனினுக்கு மட்டும ஏன் ஏற்பட்டது? காரணம். அவர்கள் சீர்திருத்தினார்கள்; லெனின் சிருஷ்டித்தான். சிருஷ்டிக்கிறவர்களுக்கு எப்பொழுதுமே பெருமை உண்டுதானே? ஒரு தலைமுறை காலத்திற்குள், ருஷ்யாவில் ஒரு புதிய சமுதாயம் அமைந்துவிட்டது; ஒரு புதிய நாகரிகம் தோன்றிவிட்டது. லெனின் வாழ்க! லெனினுடைய வாழ்க்கை, வற்றாத நதி; குறையாத சுரங்கம்; துருப்பிடியாத இரும்பு; அணையாத விளக்கு; அழியாத முத்திரை. அவன், மானிட சமுதாயமென்னும் கொந்தளிப்பு நிறைந்த சமுத்திரத் தில், சமதர்மக் கப்பலைத் துணிச்சலாக மிதக்கவிட்டான். அஃது அவனுக்கு பிறகு, புதிய உலகத்தை நோக்கி எத்தனையோ இடையூறு களையும், புயல்காற்றுகளையும் சமாளித்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. டாலின், அதனை உறுதியாகவும், ஜாக்கிரதையுடனும் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கிறான். லெனின், மாகோ சிவப்புச் சதுக்கத்தில் அதனைப் பார்த்த வண்ணம் ஓய்வெடுத்துக் கொண்டிருக் கிறான். சமதர்ம சித்தாந்தத்தின் சிருஷ்டி கர்த்தன் கார்ல் மார்க். (1818-1883)அவனுடைய வாழ்க்கை ஒரு துன்பக்கடல். ஆனால் அதிலிருந்து தான், மானிட ஜாதியின் இன்ப வாழ்க்கைக்கு ஏற்ற சாதனம் பிறந்தது. அவனுடைய காலத்தில் அவனுடைய சித்தாந்தம் பரிகசிக்கப் பட்டது. ஆனால், அவன் பிறந்த நூறாவது வருஷத்தில், அஃது ஒரு திட்டமாக அதிகார தானத்தில் ஏறி அமர்ந்து ஆட்சி புரியத் தொடங்கியது. பகற் கனவாகக் கருதப்பட்டது, நனவு முறையாக அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரப்பட்டது. கார்ல் மார்க்ஸின் தத்துவத்தை எவ்வளவுக் கெவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதனுடைய ஆழத்திலே நாம் அமிழ்ந்து போகிறோம். அதனுடைய தர்க்க நியாயத்தில் ஈடுபட்டு விடு கிறோம். ஒரு சிலருடைய இருதயம், அந்தத் தத்துவத்திற்கு இடங் கொடாமலிருக்கலாம். ஆனால், யாருடைய அறிவும் அதற்கு வணக்கஞ் செலுத்தாமலிருக்க முடியாது. ஏனென்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தைப்பற்றி அல்லது ஒரு சக்தியைப் பற்றி அவன் சொல்ல வில்லை; கற்பனை உலகத்திற்கு நம்மை அழைத்துக் கொண்டு போக வில்லை. இந்த உலகத்திலே மனிதனுடைய வாழ்க்கை, மனிதர் பலரைக் கொண்ட ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை, எப்படியிருக்க வேண்டும், எந்த மாதிரி இருந்தால் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா ஜனங்களுக்கும் க்ஷேமம் உண்டாகும் என்பவைகளைப் பற்றியே அவன் சொல்கிறான்; அமானுஷ்ய சக்திகள் என்று சொல்லிக்கொண்டு அவைகளைக் கண்டு மனிதன் அஞ்சிக் கொண்டிராமல் அவை களைத் தன் ஆதீனத்திற்குட் படுத்திக் கொள்ள முயலவேண்டியது மனிதன் கடமை என்று வற்புறுத்து கிறான். மனிதராய்ப் பிறந்த எல் லோருக்குமே, அவன் தத்துவம் பொதுவானது; பொருந்தியது. அவன் பேசுவதெல்லாம் உலகத்தை நோக்கி; சர்வ ஜனங்களின் சௌக்கியத்தைக் கருதி. பால், வகுப்பு,மதம், நிறம் முதலிய எந்த விதமான வேற்றுமைகளும் அவன் பார்வையில் படவேயில்லை. அவனுடைய தத்துவத்தை, சமதர்மம் என்ற பெயரிட்டு அழைப்பது தான் பொருந்தும். அபேதவாதம் என்றும் பொதுவுடைமை என்றும் அழைப்பது, அவனுடைய கோட்பாட்டின் அல்லது நோக்கத்தின் ஒவ்வோர் அமிசத்தை மட்டும் எடுத்துக்காட்டுவது போல இருக்கிறது. அபேதவாதம் என்று சொன்னால், அது நடைமுறையில் கொணர முடி யாத ஒரு தத்துவ அளவோடு நிற்பது போல் அர்த்தம் தொனிக்கிறது. மார்க்ஸின் தத்துவம், எதிர்மறைத் தத்துவமல்ல; உடன்பாட்டுத் தத்துவம், பொதுவுடைமை என்று சொல்கிறபோது, மனிதனுடைய அல்லது சமுதாயத்தினுடைய பொருளாதார வாழ்க்கையை மட்டும் குறிப்பது போல இருக்கிறது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்தம், மானிட வாழ்க்கையின் எல்லா அமிசங்களையும் ஐக்கியப் படுத்திக் காட்டுகிறது; எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்ற உண்மையை வலியுறுத்துகிறது. அது, மானிட வாழ்க்கை முழுவதையும் கவிந்து கொண்டிருப்பதால், அதனைச் சமதர்மம் என்று அழைத்தலே பொருந்தும். மானிட வாழ்க்கையின் அடிப்படையான நோக்கங்கள், நலன்கள் இவையனைத்திலும், மானிட வாழ்க்கையின் ஒவ்வொரு விகாசத்திலும், பரிபூர்ணமான மாறுதலை நாடி நிற்பது போல்ஷ் வெஸம் என்பது ஓர் அறிஞனுடைய வாக்கு.1 மார்க்ஸினுடைய சித்தாந்தத்தைப்பற்றி விரிவான வியாக் கியானம் செய்து கொண்டு போவது இங்கு நோக்கமல்ல. அவனுடைய வாழ்க்கை எப்படி ஒரு பெருந்துன்பக் கடலாயிருந்ததோ அப்படியே அவனுடைய சித்தாந்தமும் ஒரு விரிவான சமுத்திரம். மானிட சமுதாயத்தின் சரித்திரத்தை அவன் விஞ்ஞானக் கண் கொண்டு பார்க்கிறான். மனிதன் போராடிப் போராடித்தான், காட்டு மிராண்டி நிலையிலிருந்து இன்றைய சிக்கலான நாகரிக நிலைக்கு வந்திருக்கிறானே தவிர, புறச்சக்திகள், அதாவது மனிதனுடைய அறிவுக்கு எட்டாத சக்திகள் ஒன்று சேர்ந்து கொண்டு அவனை மேல் நிலைக்குக் கொண்டுவரவில்லை யென்பதை அவன் தர்க்கரீதி யாக நிரூபித்துக் காட்டுகிறான். மனிதன்தான் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கிறானே தவிர, சரித்திரம் மனிதனைச் சிருஷ்டிக்கவில்லை. அவனுடைய இந்தச் சரித்திரம், போராட்ட மயமாகவே இருந்து வந்திருக்கிறது. இயற்கை யோடு போராட்டம்; சகோதர மனிதனோடு போராட்டம்; இல்லா தவர்களுக்கும் உள்ளவர்களுக்கும் போராட்டம்; பழைய நம்பிக்கை களுக்கும் புதிய எண்ணங்களுக்கும் போராட்டம். எல்லாம் போராட் டம்; எப்பொழுதும் போராட்டம். இந்தப் போராட்டங்கள், அரசியல் புரட்சியென்றும், பொருளாதாரக் குழப்பம் என்றும், மதச் சண்டையென்றும் இப்படிப் பலவிதமாகப் பெயரெடுத்துக் கொண்டு சரித்திரத்தில் இடம் பெற்று விடுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு மத்தியிலேதான் மனிதன் வளர்ச்சியடைய வேண்டியிருக்கிறது; சமுதாயம் உருப்படியாக வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி? போராட்டங்கள் நடைபெற வேண்டியதன் அவசியம் என்ன? ஆதிகாலத்தில் மனிதன் தனக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு வந்தான். பிறகு ஜனத்தொகை பெருகப்பெருக, சமுதாயம் விரியவிரிய, அவனுடைய உற்பத்தி முறைகள் மாறின. தேவைக்கு மிஞ்சின பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது. உழைத்து உழைத்துப் பொருள்களை உற்பத்தி செய்வோர் பெரும் பாலோராகவும், அந்த உழைப்பை மேற்பார்வை செய்வோர், உழைப்பினின்று ஊதியம் பெறுவோர், அந்த உழைப்பாளிகளைப் பகைவரினின்று காப்பாற்றுவோர், அவர்களுடைய க்ஷேமத்திற் காகக் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்வோர்,தேசத்தின் அரசியலை நடத்துவோர் ஆகிய இவர்கள் சேர்ந்து சிறுபான்மை யோராகவும் பிரிந்தனர். அதாவது ஏழைகளென்றும் பணக்காரர் களென்றும் இரு பிரிவினராகப் பிரிந்தார்கள். இந்த இரு பிரிவினரும் அவரவருடைய உரிமைகளை தாபித்துக் கொள்வதற்காக நடத்திய போராட்டங்களின் தொகுப்புத்தான் சரித்திரம். பணக் காரர்கள், பழைய சம்பிரதாயங்கள், பழைய கொள்கைகள், பழைய சமுதாய அமைப்பு, இப்படி எல்லாம் பழமையாக, இருந்தது போலவே இருக்கவேண்டு மென்பதற்காகப் போராடுவார்கள். சமு தாயத்தில் ஏழைகளென்றும் பணக்காரர்களென்றும் வித்தியா சங்கள் இருக்கிற வரையில், இந்தப் போராட்டங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். மார்க்ஸீய பாஷையில் சொல்லப்படுகிற வர்க்கப் போராட்டம் என்பது இதுதான். இந்த வர்க்கப் போராட்டங்கள் இல்லாதிருக்க வேண்டுமானால், வர்க்கப் பிரிவினைகளே இல்லா திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயம் - வர்க்கப் பிரி வினைகள் இல்லாத ஒரு சமுதாயம், உலகப் பொதுவான ஒரு சமுதாயம் - அமையுமானால்தான், சர்வ ஜனங்களும் சுகப்பட முடியும். இப்படி வர்க்கப் பிரிவினைகள் இல்லாத ஒரு சமுதாயம் அமைய வேண்டுமானால் வர்க்கப் போராட்டங்களே இல்லா திருக்க வேண்டுமானால் பொருளுற்பத்தி முறையை மாற்றியமைக்க வேண்டும். அதாவது தேவைக்காகப் பொருளை உற்பத்திசெய்ய வேண்டுமே தவிர, லாபத்திற்காகப் பொருளை உற்பத்தி செய்யக் கூடாது. மற்றும், பொருளுற்பத்திக்குச் சாதனங்களாயுள்ளவை களை ஒரு சிலருடைய சுவாதீனத்திற்கு விடாமல், தேசத்தின் பொதுச் சொத்தாக்க வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களும் நிறைவேறு வதற்கேற்ற விதமாக அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த அரசியல் அமைப்பில், மனிதனுடைய சக்திகள் சமுதாய நலனுக் காகவே உபயோகிக்கப் பெறுகின்றன. தனக்கென வாழாப் பிறர்க் குரியாளனாய் இருப்பதுவே தனது கடமை யென்றும் ஒவ்வொரு வனும் கருதுகிறான். இந்த மாதிரியான பலதிறப் பட்ட அமிசங் களைக் கொண்ட மார்க்ஸின் சித்தாந்தத்திற்கு லெனினும், டாலினும் அநேக வியாக்கியானங்கள் செய்திருக்கிறர்கள்; அப்படி வியாக்கியானங்கள் செய்ததோடு நில்லாமல், அநுஷ்டானத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்த பிறகு தான், மார்க்ஸின் தத்துவத்திற்கு அறிஞர் உலகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதன் மீது ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. அதுவரையில், ஒரு சிலருக்கு அது பொற்கனவாக இருந்தது; இன்னுஞ் சிலருக்கு, எளிதிலே உடைந்து போகக்கூடிய மட்பாண்ட மாக இருந்தது. ஆனால் அஃது, இரண்டும் இல்லை. ஒரு ஆசிரியன் கூறுகிற மாதிரி, சமதர்மம் என்பது ஒரு பூதமுமல்ல; அல்லது நமக்கு எட்டாத ஒரு கடவுட் சக்தியு மல்ல. இப்படி இரண்டிலே ஒன்றாக நினைப்பதற்குக் காரணம் அறியாமை தான்; அச்சந்தான். பொருள் பலமில்லாதவர்கள் நினைக்கிறார்கள், சமதர்மம் - அபேதவாதம் - பொதுவுடமை என்று சொன்ன மாத்திரத்தில், தாங்கள், மாளிகை யிலே குடிபுகுந்து ஓயாமல் சாப்பிட்டுக் கொண்டு, ஒருவேலையும் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கலாமென்று. பணக்காரர்கள் பயப்படுகிறார்கள். சமதர்மம் அநுஷ்டானத்திற்கு வந்துவிட்டால், தங்களுடைய செல்வமெல்லாம் போய், கந்தை உடுத்து வீதிகளிலே பிச்சையெடுக்க வேண்டி வந்துவிடும் என்று. ஏழைகளைப் பணக் காரர்களாக்குவதும், பணக்காரர்களை ஏழைகளாக்குவதும் சமதர்ம மல்ல; அதன் நோக்கமுமில்லை. பணம் காரணமாக ஒருவனுக்கு விசேஷ சலுகைகளோ, உரிமைகளோ, தனியான நீதி முறைகளோ இருக்கக்கூடாது என்று தான் சமதர்மம் கூறுகிறது; பொருளா தாரம் காரணமாகச் சமுதாயத்தில் பிரிவினைகள் அல்லது ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாதென்று தான் வலியுறுத்துகிறது. சமதர்மம் என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடை, உணவு, இருப்பிடம் என்பது அர்த்தமில்லை. எல்லோரும் ஒரே உயர மாகவும், ஒரே பருமனாகவும் இருக்க முடியுமா? அப்படியே எல் லோரும் ஒரே மாதிரியான புத்திசாலிகளாகவோ அல்லது ஒரே மாதிரியான முட்டாள்களாகவோ அல்லது ஒரே மாதிரியான தேக பல முடையவர் களாகவோ இருக்க முடியுமா? யானைக்கும் பூனைக் கும் ஒரே அளவு ஆகாரத்தைப் பங்கிட்டுக் கொடுக்க முடியுமா? அப்படிச் செய்தால், யானை, போதிய ஆகாரம் இல்லாமல் செத்துப் போகும்; பூனை அதிக ஆகாரத்தினால் செத்துப்போகும். சமதர்மத் தில், இந்த மாதிரியான நியாயத்திற்கு இடமே கிடையாது; யானைக்குத் தேவையான அளவை யானைக்குக் கொடு, பூனைக்குத் தேவையான அளவைப் பூனைக்குக் கொடு என்று அது கூறுகிறது. ஒன்றை நினைத்துக் கொண்டு, மற்றொன்றை மறந்துவிடக்கூடாது என்ப தையே அது வலியுறுத்துகிறது. சமுதாயம் என்பது ஓர் உடல் மாதிரி. உடலிலுள்ள ஒவ்வொர் உறுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது. ஆனால், எல்லா உறுப்புகளையும் நாம் ஒரேவிதமாகக் கவனிக்கிறோம்; ஒரேவித மாகவே காப்பாற்றுகிறோம். இதில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது. ஓர் அவயவம் மட்டும் நன்றாக வளர்ச்சியடைய வேண்டுமென்று சொல்லி, அதற்காக மற்ற அவயவங்களை நாம் புறக்கணித்து விடு கிறோமா? இல்லை. அப்படிச் செய்தால், நம்முடைய உடல், உடலா யிராது; ஒரு மாமிசப் பிண்டமாகவே இருக்கும். உடல் என்பதற்கு என்ன லட்சணங்கள் உண்டோ அந்த லட்சணங்களோடு நமது உடல் இருக்கவேண்டுமானால், ஒவ்வொர் அங்கத்தையும் அதனதன் வேலையைச் செய்யுமாறு விட்டுவிட்டு, எல்லா அவயவங் களையும் ஒரே மாதிரியாகப் போஷித்துவர வேண்டும். இது தான் நியாயம். இந்த நியாயத்தையே சமுதாய விஷயத்திலும் அனுசரிக்க வேண்டும் என்று சமதர்மம் கூறுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை திடசாலி யாக இருக்கிறது; இன்னொன்று நோயாளியாக இருக்கிறது. திடசாலியான பிள்ளையை மட்டும் நாம் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, நோயான பிள்ளையைக் கழுகுகளுக்கு இரையாகக் காட்டிலே எறிந்துவிடுகிறோமா? இல்லையே. அது போலவே, சமுதாயம் என்கிற குடும்பத்திலுள்ள பிரஜைகளாகிற பிள்ளைகளின் விஷயத்திலும் அவரவருடைய தேவையை அனுசரித்து நடக்க வேண்டு மென்பதுவே சமதர்மத்தின் முழக்கம். ஒரு தேசத்திலுள்ள எல்லா ஜனங்களினுடைய வருமானத்தை யும் ஒன்றாகக்கூட்டி, ஜனங்களெல்லோருக்கும் சரிசமானமாக ஈவு போட்டுக் கொடுத்துவிடு என்று சமதர்மம் கூறுவதாகச் சிலர் கலங்குகிறார்கள். அப்படி இல்லவே இல்லை. ஒவ்வொருவருடைய தேவையையும் கவனி; தேவை போக மிச்சம் இருப்பதைச் சரியான வரி மூலம் ஒன்று சேர்த்து எல்லா ஜனங்களுடைய நன்மைக்காகவும் உபயோகி என்றே சமதர்மம் சொல்கிறது. இப்படி உபயோகிக்கிற விஷயத்தில் எவ்விதப் பாகுபாடும் கூடாது. ஓர் ஊரில் நல்ல பாதை கள் போட்டால், அவற்றில் இன்னார்தான் நடக்கலாம், இன்னார் நடக்கக்கூடாது, அல்லது மோட்டார் வண்டிகள் மட்டுந்தான் போகலாம், மாட்டு வண்டிகள் போகக்கூடாது என்கிற மாதிரியான வித்தியாசங்கள் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் உபயோகமாகிற நல்ல பாதைகள், நல்லகுழாய் நீர், நல்ல ஆபத்திரிகள், நல்ல பள்ளிக் கூடங்கள், இந்த மாதிரியான வசதிகளை, மேலே சொன்ன மிச்சப் பணத்திலிருந்து செய்து கொடுக்க வேண்டும். இதுவே சமதர்மத்தின் நீதி. சமதர்மத்தின் மூல தத்துவங்களில் ஒன்று என்னவென்றால், எல்லாப்பொருள்களுக்கும் மூலமாய் இருக்கப்பட்டவை எவையோ அவை யாவும், எல்லோருக்கும் பொதுவான சொத்தாயிருக்க வேண்டு மென்பது. உதாரணமாகச் சூரிய வெளிச்சத்தை எடுத்துக் கொள்வோம். இஃது எல்லோருக்கும் பொது. இந்தச் சூரிய வெளிச் சத்தால் காடுகள் உண்டாகின்றன. அவை யாருக்குச் சொந்தம்? தேசப் பொதுவுக்கே சொந்தம். நிலத்தின் மீது வளர்ந்த மரங்கள், பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னால் கீழே விழுந்து, மண்ணுக் குள்ளே புதைந்து போய், நிலக்கரியாகி விடுகின்றன. அந்த நிலக்கரி யாருக்குச் சொந்தம்? தேசத்திற்குத்தான். ஆறுகள், மலைகள், சுரங்கங்கள் முதலிய பொருளுற்பத்திக்கான மூலங்களும், ரெயில், கப்பல் போன்ற போக்குவரத்துகள், மின்சாரம், தொழிற் சாலைகள் முதலிய பொருளுற்பத்திக்கான சாதனங்களும் தேசப் பொதுவுக்கு, அதாவது தேசமக்களுக்குச் சொந்தமானவை; தனிப்பட்டவர் களுடைய லாபம் சம்பாதிப்பதற்கான கருவிகளல்ல. இரண்டாவது மூலதத்துவம் என்ன வென்றால், லாபம் சம்பாதிக்கிற முறை. முதலாளித்துவ நாடுகளில், பொருளை உற்பத்தி செய்து பணத்தைக் குவிப்பதற்குத் தூண்டு கோலாயிருப்பது எது? தனிப்பட்ட நபர்கள் லாபம் சம்பாதிப்பதற்குச் சந்தர்ப்பம் இருப்பது தான். இலாபம் சம்பாதிக்கிற இந்தத் தூண்டுதலானது, தொழில்கள் பெருகுவதற்கு உதவி செய்கிறது. முதலாளியும் தனக்கு அதிகமான லாபம் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறான். ஆனால் அவன், இப்படித் தனக்குக் கிடைக்கிற லாபத்தை, தேச நன்மைக்குச் செல விடுகிறானா? இல்லை. சுயநலத்துக் காகவே உபயோகப்படுத்து கிறான். தவிர, லாபம் சம்பாதிக்கிற இந்தத் தூண்டுதலின் விளைவாக, ஒரு புறம், மலிவான மார்க்கெட்டிலே சரக்குகளை வாங்கிக் கிராக்கியான மார்க்கெட்டிலே விற்றுப் பணத்தைக் குவிக்கிற ஒரு கூட்டத்தினர் உண்டாகின்றனர். இவர்கள் பொருள் உற் பத்திக்கு எவ்வித உதவியும் செய்யாமலேயே பணத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். மற்றொரு புறத்தில், சுரண்டுவதையே முக்கிய தொழி லாகக் கொண்ட ஒரு கூட்டத்தினர், வேலையாட்களைக் கூலி கொடுத்து அமர்த்தி அவர்களின் உழைப்பினின்று உற்பத்தியான பொருள்களை விற்று, தாங்கள் பணக்காரர்களாகிறார்கள். இந்த இரண்டு அமிசங் களையும், அதாவது ஒரு பொருளின் விலையை ஒரு நிர்ணயத்துக் குட்படுத்தாமல் ஏற்றியும் இறக்கியும் லாபம் தரத் தக்க விதமாக விற்பனை செய்தல், பிறருடைய உழைப்பின் பேரில் அதிகமான பணத்தைச் சேகரித்தல் என்ற இரண்டு அமிசங்களை யும், சமுதாயத்தின் பொருளாதார வாழ்வினின்று அப்புறப்படுத்தி விட வேண்டுமென்று சமதர்தம் கூறுகிறது. ஆக, சமதர்மத்தின் நோக்கம், முதலாவது, மனிதனோடு மனிதன் வைத்துக் கொண்டிருக்கிற பரபர சம்பந்தத்தின் நியாயம் என்பது நிரந்தமாக நிலவ வேண்டுமென்பது. அதாவது பரபர நன்மையை முன்னிட்டுத்தான் விவகாரங்கள் நடத்தப்பட வேண்டுமே, தவிர, ஒரு சிலருக்கு நன்மையா யிருப்பது, வேறு சிலருக்குத் தீமையாய் முடி வதாக இருக்கக்கூடாது. இரண்டாவது, பொருளாதார விஷயத்தில் பாகுபாடுகள் இல்லாத, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு ஜன சமுதாயத்தை அமைக்க வேண்டு மென்பது. வித்தியாசங்கள் இல்லாத இந்த ஜன சமுதாயத்தில், அவரவரும் தங்களுடைய திறமைக்குத் தகுந்தபடி உழைக்கவும், தேவைக்குத் தகுந்தபடி ஊதியம் பெறவும் சந்தர்ப்பம் உண்டு. இந்த இரண்டு நோக்கங் களும் எந்தச் சமுதாயத் தில் அனுஷ்டானத்தில் இருக்கின்றனவோ அந்தச் சமுதாயத்தில் தான், மனிதனுடைய வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது; எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கிறது. சமதர்மத்தின்படி, தேசமே எல்லாவற்றிற்கும் மூலகாரணமா யிருக்கிறது; எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானதாயிருக் கிறது. தேசத்திற்குத்தான் எல்லா உரிமைகளும் உண்டு. அப்படியே அந்தத் தேசத்திலுள்ள தனி மனிதர்களுக்கும் உரிமைகள் உண்டு; எல்லா உரிமைகளும் உண்டு; ஆனால் தேசத்திற்கு விரோதமான உரிமைகள் கிடையா. தனி மனிதனுடைய உரிமையா, தேசத்தி னுடைய உரிமையா என்கிற பிரச்னை எழுமானால், சமதர்மத்தின் படி தேசத்தின் உரிமைதான் முக்கிய இடம் பெறுகிறது. தேசம் ஒரு பெரிய யந்திரம்; தனி மனிதன் அந்த யந்திரத்திலிருக்கும் ஒரு சுள்ளாணி. யந்திரம் சுழல்கிற விதமாகத்தான் சுள்ளாணி சுழல முடியுமே தவிர, அது தனியாகச் சுழல முடியாது. அதுபோல் தனி மனிதன், சமுதாயத்திற்கு விரோதமாக நடக்க முடியாது; நடக்கக் கூடாது. இது சமதர்மத்தின் கண்டிப்பான உத்திரவு. சமதர்ம சித்தாந்தப்படி, ஒரு சமுதாயத்தின் அரசியல் அமைப் பானது, அந்தச் சமுதாயத்தின் பொருளாதார நிலைமையை அடிப் படையாகக் கொண்டிருக்கிறது. சமுதாயத்தின் முக்கிய ஜீவனோ பாயத் தொழிலாக விவசாயம் இருந்த காலத்தில், செல்வமானது, நிலச்சுவான்தார்களின் மேற்பார்வையில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இப்படி உற்பத்தி செய்யப்பட்ட செல்வதில் பெரும்பகுதி நிலச்சுவான்தார்களுக்கும், சிறு பகுதி விவசாயி களுக்கும் போய்ச் சேர்ந்தது. யாரிடத்தில் செல்வம் அதிகமாக யிருக்கிறதோ அவர்களிடத்தில் அரசியல் அதிகாரம் போயடைவது இயற்கை யல்லவா? எனவே, நாளாவட்டத்தில் பணம் படைத்த நிலச்சுவான்தார்களிடம் அரசியல் அதிகாரம் சென்றது. இதற்கே ப்யூடலிஸம்1 என்று பெயர். பின்னர் விஞ்ஞான அறிவு விருத் தியாக, அதன் பயனாகத் தொழில்கள் பெருக, தொழில் முதலாளி களிடத்தில் அரசியல் அதிகாரம் சென்றது. அதாவது நிலச்சுவான் தார்களின் ஆதிக்கம் போய், தொழில் முதலாளிகளின் ஆதிக்கம் ஏற்பட்டது. அதுதான் இப்பொழுது நடை முறையில் இருக்கிறது. இதற்கு முடிவு காலம் ஏற்படு மென்றும், இதற்குப் பிறகு, பொருளுற் பத்தி செய்கிறவர்கள் யாரோ அவர் களுடைய ஆதிக்கம் ஏற்படு மென்றும், மார்க் அறுதியிட்டுச் சொல்லி யிருக்கிறான். அதை ஒரு வாறு இப்பொழுது நாம் பார்த்து வருகிறோம். அரசியல் அமைப்பும் பொருளாதார வாழ்க்கையும் பிரிக்கமுடியாத ஒரு பின்னல் என்ற உண்மையை, சமர்தர்மம் மையமாகக்கொண்டிருக்கிறது. ஆகவே, சமதர்மம் என்பது, ஏற்றத் தாழ்வுகளில்லாத பொரு ளாதாரத் திட்டம்; எல்லோருக்கும் சம உரிமை வழங்குகிற அரசியல் அமைப்பு; மனிதனுடைய வளர்ச்சியின் முடிந்த நிலை; எல்லா வற்றிற்கும் மேலாக ஒரு புதிய நாகரிகம். உலகத்திலே தோன்றின நாகரிகங்கள் பலவும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவை; சமதர்ம நாகரிகமோ பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படிப் பொருளாதாரத்தை அடிப்படை யாகக் கொண்டிருந்தாலும், இது மானிட வாழ்க்கையின் எல்லா அமிசங் களுடனும் நெருங்கிய தொடர்பு உடையது. 5. சமதர்மக் கட்சி மார்க், சமதர்மத்தை உலகத்திற்குப் பொதுவான ஒரு தத்துவ மாக வகுத்துவிட்டுப்போனான். லெனின், அதனை, ருஷ்யாவில் நடை முறைத் திட்டமாகக் கொணர்ந்து, வெற்றிக்கான அறிகுறிகளைக் கண்டுவிட்டுக் கண்மூடி விட்டான். ஒரு திட்டத்தை அனுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கென்று ஒரு தொண்டர் கூட்டம் தேவை. இந்தத் தொண்டர் கூட்டந்தான் சமதர்மக் கட்சி. சமதர்மக் கட்சியில்லாவிட்டால், லெனின் வெற்றியடைந்திருக்க முடியாது. அப்படியே லெனின் இல்லாவிட்டால், சமதர்மக் கட்சியும் தோன்றியிருக்க முடியாது. மார்க்ஸின் சிந்தனை அரும்பு, இன்று ருஷ்ய மகாஜனங்களின் வாழ்க்கை மலராகப் பரிணமித்திருக்கிறதென்று சொன்னால், அதற்குக் காரணம் இந்தச் சமதர்மக் கட்சிதான். உலகத் தில் இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் தோன்றியிருக் கின்றன; எத்தனையோ மததாபனங்கள் கிளம்பியிருக்கின்றன; எத்தனையோ சமுதாயச் சீர்திருத்தச் சங்கங்கள் உற்பத்தியாகியிருக் கின்றன. ஆனால் சமதர்ம கட்சியைப் போல் எந்தக் கட்சியும், எந்த தாபனமும், எந்தச் சங்கமும் பயப்படக்கூடிய ஒரு புதிராக இருந்த தில்லை. ருஷ்யாவுக்கு புறம்பாயுள்ள பெரும்பாலோருக்கு, சமதர்மக் கட்சி என்று சொன்னால், அது நெருப்பையும் ரத்தத்தையும் கக்கக் கூடிய ஒரு இம்ஸைக் கூட்டம் என்கிற மாதிரியான ஒரு மருட்சி இருக்கிறது. இந்த மருட்சிக்கு ஆதாரமே யில்லை. சமதர்மக் கட்சி யென்பது ஒரு தொண்டர் படை; சந்நியாசக் கூட்டம்; கட்டுப் பாடான ஒரு கட்சி; பரநலத்திற் கென்றே வாழ்கிற ஒரு கோஷ்டி. சம தர்மக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாயுள்ள மாக் ஈட் மான் என்ற ஒரு மேனாட்டு அறிஞன் பின்வருமாறு கூறுகிறான் :- உலகத்திலுள்ள எத்தனையோ தாபனங்களைப் போன்றதன்று ருஷ்ய சமதர்மக் கட்சி. ஒரு தொழில் தாபனம், ஓர் ஆராய்ச்சிக் கழகம், ஒரு சகோதரச் சங்கம், ஒரு ராணுவம், ஓர் அரசியல் கட்சி ஆகிய இவை யாவும் ஒன்று சேர்ந்தால் எதுவோ அதுதான் சமதர்மக் கட்சி. பொருளாதார வாழ்க்கையில் பல திறப்பட்ட அந்ததுடையவர்களும் இந்தச் சமதர்மக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் கட்சியின் வேரானது. அரசியல் உணர்ச்சியே இல்லாதவர்களும் சமுதாயத்தின் கடைசி படி யிலே உள்ளவர்களுமான பாமர ஜனங்கள் வரை சென்றி ருக்கிறது. அப்படிச் சென்று பரவக்கூடிய மாதிரியாகவே .இந்தக் கட்சி அமைப்பு இருக்கிறது. அந்நியர்கள் யாரும் கனவிலே கூடக் கருத முடியாதபடி அவ்வளவு சாமர்த்திய மாகவும் சூட்சுமமாகவும் லெனின் இந்தச் சமதர்மக் கட்சி என்னும் அரசியல்கருவியை உபயோகப்படுத்தி வந்தி ருக்கிறான். அவன் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட போது, கல்வியறிவில்லாத பாமர ஜனங்களின் பெயரால், தான் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருப்ப தாகக் கூறினான். அவன் அப்படிக் கூறியது முற்றிலும் பொருந்தும். அப்படிக் கைப்பற்றிக் கொண்ட அதிகாரத்தை, அவன் தன் ஒரு கையில் மட்டும் வைத்துக் கொண்டிருந்த போதிலும் உலகத்து எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து அவனைக் கீழே வீழ்த்த முடியவில்லை.1 இந்தச் சமதர்மக் கட்சியின் ஆரம்ப வரலாறு என்ன? பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மார்க்ஸீய மந்திரத்தை உச்சரித் துக்கொண்டு ஐரோப்பாவின் பல பாகங்களிலும் அநேகம் கட்சிகள் தோன்றின. இவற்றிலே ஒன்றாக ருஷ்யாவில் 1898 - ஆம் வருஷம் அபேதவாத ஜனநாயகக் கட்சி2 எல்லா பெயருடன் ஒரு கட்சி தாபிதமாயிற்று. ருஷ்யாவிலிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப் பட்ட புரட்சிவாதிகளிற் சிலரே. இதனை வெளி நாடுகளிலிருந்து கொண்டு நடத்தி வந்தனர். இவர்களில் லெனினும் ஒருவன். இவனுக்கு வாய் வேதாந்தம் பிடிக்காது. வாய்ப் பந்தல் வேய்ந்து அதன் கீழிருந்து கொண்டு புரட்சியை நடத்த முடியாதென்பது இவனுடைய திடமான நம்பிக்கை. புரட்சி என்று சொன்னால், பழமையை அழிப்பது மட்டுமல்ல; புதுமையைச் சிருஷ்டிப்பதுங் கூட. ருஷ்யாவில் சுயேச்சாதிகார ஆட்சி முறையைக் களைந்து விட்டு அதன் மீது புதியதோர் அரசியலை, புதியதொரு சமுதாயத்தை நிர்மாணம் செய்யவேண்டுமென்பதே இவனுடைய நோக்கம். அதாவது மார்க் கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதே இவன் கோரிக்கை. இதற்காக, அபேதவாத ஜனநாயகக் கட்சியை ஒரு கருவி யாக உபயோகப்படுத்தத் தீர்மானித்தான். இவன் இந்தக் கட்சியில் சேர்ந்தபோது, அவ்வளவு பிரபலதனாயிருக்கவில்லை. மார்க்ஸின் தத்துவத்தில் மோகங் கொண்டிருந்த பலரில் ஒருவனாகவே இருந்தான். பின்னரே, கட்சியில் சேர்ந்த சுமார் இரண்டு வருஷங்களுக்குப் பிறகே, இவனுடைய சக்தி, இவனுடைய தலைமையின் தகுதி, இவனுடைய புருஷத்துவம், கட்சியில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. ஒரு கட்சி யென்றிருந்தால், அதைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் ஒரே லட்சியமுடையவர்களாகவும், ஒரே மனப்பான்மையுடையவர் களாவும், ஒரே மாதிரியான கட்டுப்பாட்டுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், கட்சிக் கொள்கையிலே அநுதாபம் இருக்கிற தென்று சொல்லிக் கொண்டும், ஜனங்களுக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தங்களுக்கு இருக்கிற தென்பதைக் காட்டிக்கொள்வதற்காவும், கட்சியில் அங்கத்தின ராகச் சேர்ந்து கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அப்படிப் பட்டவர்களால் கட்சிக்கு என்ன நன்மை யுண்டாகும்? லெனினு டைய கருத்துப்படி, கட்சியென்பது, பெரும்பான்மை தானங் களைக் கைப்பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவியல்ல; ஜனங் களிடத்திலே செல்வாக்குப் பெறுவதற்கான ஒரு சாதனமல்ல; பொருள், பதவி, பட்டம் முதலியவற்றைச் சுலபமாக அடைவதற்கு அவ்வப்பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு பீடமுமல்ல. இந்த மாதிரியான எண்ணங்களை, லெனின். அடிக்கடி தன் கட்சிக் கூட்டங்களில் வலியுறுத்தி வந்தான். புரட்சி செய்கிறவர்கள் யார்? படித்த கூட்டமா? இல்லை. வாதப் பிரதிவாதங்களிலே மூழ்கியிருப்போரா? இல்லை. பின் யார்? பாமர ஜனங்கள். இவர்களைச் செயலுக்குத் தூண்டவும், ஒழுங்கான பாதையில் இவர்களை அழைத்துக் கொண்டு செல்லவும், புரட்சிக்குப் பிறகு இவர் களைக் கொண்டு சமுதாயத்தைப் புனர்நிர்மாணம் செய்யவும் ஒரு கோஷ்டி தேவை. இந்தக் கோஷ்டி, எண்ணிக்கையிலே பருத்திருக்க வேண்டு மென்பதில்லை; உறுதி நிரம்பியதாயிருக்க வேண்டும்; கார்ல் மார்க்ஸின் சமதர்மக் கொள்கைகயில் பரிபூரண நம்பிக்கையுடைய தாயிருக்க வேண்டும்; அப்படி நம்பிக்கை கொண் டிருப்பதோடு மட்டுமல்லாமல்,சமயம் நேர்கிறபோது அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் படைத்ததாகவும் இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால், பிரசாரத் திறமை, செயலாற்றும் திறமை, நிருவாகத் திறமை ஆகிய அனைத்து முடைய ஒரு நிபுணர் கூட்டம் தேவை. அபேதவாத ஜனநாயகக் கட்சி யை இப்படிப்பட்ட தொரு நிபுணர் கூட்டமாக உருவாக்க வேண்டுமென்று லெனின் சுமார் பதினைந்து வருஷகாலம் ஓயாது உழைத்தான்; சலியாது போராடினான். இவனுடைய இந்தக் கண்டிப் பான முறை, கட்சியைச் சேர்ந்த பலருக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும், சொல்லினால் சேவை செய்து திருப்தி யடைகிறவர்களுக்கு? இதனால், கட்சியில் பிரிவினை உண்டாயிற்று. அபேதவாத ஜனநாயாகக் கட்சியின் கீழ் போல்ஷ்வெக்கர் (பெரும்பாலோர்) என்றும் மென்ஷ்வெக்கர் (சிறுபாலோர்) என்றும் இரண்டு பிரிவினர் தோன்றினர். லெனினைத் தலைவனாகக் கொண்டவர்கள் போல்ஷ்வெக்கர்.1 1914 - ஆம் வருஷத்தில் தொடங்கின ஐரோப்பிய மகா யுத்தத்தின் போது, இந்த போல்ஷ்வெக்கர்களுக்கும், மற்றப் புரட்சிப் பிரிவினர் களுக்கும் கருத்து வேற்றுமைகள் வலுத்தன. இந்த மகா யுத்தம் ஏகாதி பத்திய சக்திகளுக்கிடையே நடைபெறுகிற யுத்த மென்றும், இதில் ஏழை ஜனங்கள் கலந்து கொள்ளவேண்டிய தில்லை யென்றும் அப்படிக் கலந்து கொள்வதனால் அவர்களுக்கு எவ்வித நன்மையும் உண்டாகாதென்றும் லெனின் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால், ருஷ்யாவிலுள்ள மற்றப் புரட்சி வாதிகள், தாய் நாட்டைக் காப்பாற்றுவதாகிய முகாந்திரத்தை வைத்துக் கொண்டு யுத்தத்தை ஆதரித்தார்கள்; யுத்தத்திற்கு உதவி செய்தார்கள். ஆனால், யுத்தம் தொடங்கின சிறிது காலத்திற்குப் பிறகு, ஜனங் களுக்கு யுத்தத்தின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இந்த வெறுப்பை லெனின் சாமர்த்தியமாக உபயோகித்துக் கொண்டு தன் கட்சியை வலுப்படுத்தினான். 1917 - ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தபோது, போல்ஷ்வெக்கட்சியில் முப்பதினாயிரம் பேர் அங்கத்தினராயிருந்தனர். அதாவது, இந்த முப்பதினாயிரம் பேரும், புரட்சியையே தொழிலாகக் கொண்டவர்கள்; லட்சியத்திற்காகத் தங்களுடைய சர்வத்தையும் துறந்து விட்டவர்கள். அப்பொழுது ஜார் அரசாங்கத்தின் அடக்கு முறையோ வருணிக்க முடியாத அவ்வளவு கொடூரமாயிருந்தது. இதற்கு மத்தியில் போல்ஷ் வெக் கட்சி, எண்ணிக்கையிலேகூட வளர்ந்து வந்தது என்று சொன்னால், லெனினுடைய செயலாற்றும் திறனை நாம் எப்படி வியந்த பாராட்டா மலிருக்க முடியும்? 1917-ஆம் வருஷம் மார்ச் மாதம் புரட்சி ஏற்பட்டு ஜார் ஆட்சி வீழ்ந்துவிட்ட பிறகு, தற்காலிக அரசாங்கம் என்ற பெயருடன் முதுகெலும்பில்லாத ஒரு கூட்டம் நிருவாக தானங்களைச் சுமார் எட்டு மாத காலம் பற்றிக் கொண்டிருந்ததல்லவா, அந்தக் காலத்தில் போல்ஷ்வெக் கட்சியின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாகப் பெருகியது; என்ன வேடிக்கை? லெனின், இந்தக் காலத்தில் ஒரு யந்திரம்போல் உழைத்தான். 1917 - ஆம் வருஷக் கடைசியில், போல்ஷ்வெக்கர்களின் பலத்தைக் கொண்டு லெனின், அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான்; குடியரசு முறையை ஏற்படுத்தினான். கட்சியின் பெயரையும் மாற்றி யமைத்தான். அபேதவாத ஜனநாயகக் கட்சி யாயிருந்தது ருஷ்ய சமதர்மக்கட்சி (போல்ஷ்வெக்) என்று மாறியது. 1923-ஆம் வருஷத் தொடக்கத்தில், குடியரசு முறையை சமஷ்டி அரசாக மாற்றி, அரசியலை ஒரு புதிய ஒழுங்குக்குக் கொண்டுவந்தபோது, அதை அனுசரித்தாற்போல் கட்சியின் பெயரையும் சிறிது திருத்தி யமைக்க வேண்டியதா யிருந்தது. ருஷ்ய சமதர்மக் கட்சி (போல்ஷ்வெக்) என்பது போய், (சோவியத் சம தர்மக் குடியரசு நாடுகளடங்கிய) ஐக்கிய ராஜ்யத்தின் சமதர்மக் கட்சி (போல்ஷ்வெக்)1 என்று ஆயிற்று. அதுவே இப்பொழுது, எவ்வித எதிர்ப்பு மில்லாத, வேறு பிரிவினைகளை அல்லது அபிப் பிராய பேதங்களைத் தன்னகத்தே கொண்டிராத சமதர்மக் கட்சியாக விளங்குகிறது. ருஷ்யாவில் சாதாரணமாக, கட்சியைச் சேர்ந்தவன், கட்சியைச் சேராதவன் என்றுதான் சொல்லுவார்கள். கட்சி என்றால், அது ஒரு கட்சிதான்; சமதர்மக் கட்சிதான். பொதுவாக இப்பொழுது இந்தச் சமதர்மக் கட்சியின் பெயராலேயே போல்ஷ்வெக்கர்கள் அழைக்கப்படுகிறார்கள். எனவே, போல்ஷ்வெக் கட்சி யென்றாலும் சமதர்மக் கட்சியென்றாலும் இப்பொழுது ஒன்றுதான். சமதர்மக் கட்சியில் இப்பொழுது சுமார் முப்பத்தைந்து இலட்சம் பேர் அங்கத்தினர்களாக யிருக்கிறார்கள்.1 1937-ஆம் வருஷம் ருஷ்யாவில் புதிய அரசியல் திட்டம் அனுஷ் டானத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அரசியல் திட்டத்தில் சமதர்மக் கட்சிக்கு ஒரு தாபனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்ட அங்கீகாரம் பெற்ற இந்தக் கட்சியின் செல்வாக்குதான், ருஷ்யாவின் அரசியல் வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை முதலிய எல்லாத் துறைகளிலும் படிந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்சிக்கும் அரசியல் நிருவாகத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. கட்சியில் அங்கத்தினர் களாகவோ, தலைவர்களாகவோ இருக் கிறார்கள், அரசாங்க அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், கட்சி வேறு; அரசாங்கம் வேறு.2 சமதர்மக் கட்சியின் அமைப்பு ஒரு கோபுரம் மாதிரி இருக்கிறது. விரிவான உரிமையின் மீது கூர்மையான கடமை வைக்கப்பட்டி ருக்கிறது. சமுதாயத்தின் எல்லாப் படியிலுள்ளவர்களும் எவ்வித சலுகையோ வித்தியாசமோ காட்டப்படாமல் இதில் அங்கத்தின ராகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேலிருக்கப்பட்ட ஒரு சிலருடைய அதிகாரத்திற்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கட்சியில், ஏதோ சந்தா செலுத்திவிட்டு அங்கத்தினராகச் சேர்ந்து விடலாம் என்பது முடியாது. கட்சியின் விதிகளை முதலில் தெரிந்து கொண்டு, அவற்றில் கூறப்பட்டுள்ள அநேக நிபந்தனைகள் படி தன்னால் நடக்க முடியுமா என்று பிரதியொரு நபரும் தன்னைத் தானே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், எடுத்த உடனே, ஒருவனை அல்லது ஒருத்தியை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்வதென்பது சமதர்மக் கட்சியில் கிடையாது. அநேக பரி சோதனை நிலைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இவற்றில் தேறிச் சென்ற பிறகுதான், அங்கத்தினர் என்ற கௌரவமான, ஆனால் மிகவும் பொறுப்புள்ள தானம் கிட்டும். கௌரவமான தானம் என்று ஏன் சொல்கிறோ மென்றால், இவர்கள் அங்கத்தினர்களாக எப்பொழுது அங்கீகரிக்கப்படுகிறார்களோ அப்பொழுதே இவர் களுக்குத் துறவு மனப்பான்மை இருக்கிறது என்பது விசதமாகி விடுகிறது. சேவை செய்வதற்கு இவர்கள் தகுதியுடையவர் களாகி விடு கிறார்கள். ஜனங்களுக்குத் தலைமை பூண்டு அவர்களை வழி நடத்திச் செல்வதற்கு இவர்களுக்கு யோக்கியதை இருக்கிற தென்பது அங்கீகரிக்கப் பட்டதாகிறது. சேவை செய்கிறவர்களுக்கு, தலைமை ஏற்றுக் காரியங்களை நடத்துகிறவர்களுக்கு, சமுதாயத்திலே எப் பொழுதும் கௌரவமான தானம் உண்டல்லவா? கட்சியிலே அங்கத்தினராகச் சேர விரும்புவோர், முதலாவது, மார்க்ஸின் சமதர்ம சித்தாந்தத்தை ஒப்புக் கொள்பவர்களா யிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அந்த மார்க்ஸின் சித்தாந்தத்திற்கு லெனினும், டாலினும் அவ்வப்பொழுது என்னென்ன வியாக் கியானங்கள் செய்திருக்கிறார்களோ அவையனைத்தையும் அங்கீகரிக் கிறவர் களாயிருக்க வேண்டும். இரண்டாவது, அவர்கள் எந்த உத்தியோகத்தி லிருந்தாலும், எந்தத் தொழில் செய்து கொண்டிருந் தாலும், அரசியல் விவகாரங்களில் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, அரசியல் விஷயங்களில் அக்கரை காட்டு வதென்பது அவர்களுடைய வாழ்க்கையோடு ஒட்டிய ஒரு சுபாவ மாக இருக்க வேண்டும். இந்தச் சுபாவம் செயலிலும் பரிணமிக்க வேண்டும். எப்படியென்றால், வயிற்றுப் பிழைப்புக்கான உத்தி யோகமோ, தொழிலோ செய்து முடிந்துவிட்ட பிறகு, தினந்தோறும் ஏதோ சில மணிநேரம் பொதுநலத் தொண்டு ஒன்றில் ஈடுபட்டு உழைக்கவேண்டும். மூன்றாவது, அவர்களுக்கு எந்தவிதமான மதப் பற்றும் இருக்கக்கூடாது. இவை, தவிர, தனிச் சொத்துரிமையில் ஆசை இருக்கக் கூடாது. சமுதாயத்தைப் பலதரத்தினராகப் பிரித்து வைத்து, எல்லாத் தரத்தினரையும் திருப்தி செய்து கொண்டுபோக வேண்டு மென்ற மனப் பான்மை இருக்கக் கூடாது. உழைக்காமலே அல்லது லேசாக உழைத்து அதிகமான சுகத்துடனே வாழ விரும்பு வோர், தங்களுக் கென்று சொந்தமாக அநேக சொத்து சுதந்திரங் களை வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டுமென்ற இச்சை யுடையவர்கள், புரோகிதர்கள், மடாதிபதிகள், நிலச்சுவான்தார்கள் தொழில் முதலாளிகள், லாபம் சம்பாதிப்பதற்காக வியாபாரம் செய் வோர் ஆகிய பலரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். கட்சியில் யாரும் நேரடியாக அங்கத்தினராகச் சேர்ந்து கொண்டுவிட முடியாது. ஏற்கனவே கட்சியில் அங்கத்தினராயுள்ள வர்களில் இரண்டு பேரோ, மூன்று பேரோ அல்லது ஐந்து பேரோ சேர்ந்து ஒருவனை அல்லது ஒருத்தியைச் சிபார்சு செய்யவேண்டும். இப்படிச் சிபார்சு செய்யப்படு கிறவர்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களா யிருக்கவேண்டும். சிபார்சு செய்கிறவர்கள், சிபார்சு செய்யப்படுகிறவர்களை நன்றாகத் தெரிந்து கொண்டிருக் கிறவர்களாகவும், அவர்களுடைய நன்னடத்தைக்குப் பொறுப்பாளி களாகவும் இருக்க வேண்டும். இப்படிச் சிபார்சு செய்யப்படு கிறவர்கள் முதலில் உமேதவாரிகளாகச்1 சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒரு வருஷ காலமோ, இரண்டு வருஷ காலமோ, அவரவர்களுடைய தொழில் அந்தத்துக்குத் தகுந்தபடி இந்த உமேதவாரிக் காலம் இருக்கும். உதாரணமாக, பொருளுற்பத்தி வேலையில் ஐந்து வருஷ காலம் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிற தொழிலாளி யொருவன், கட்சி யில் அங்கத்தினனாகச் சேருவதற்கு, ஐந்து வருஷ காலம் கட்சியில் அங்கத்தினராயுள்ள மூன்று பேருடைய சிபார்சு வேண்டும். இவன் ஒரு வருஷ காலந்தான் உமேதவாரியாக வைக்கப்படுவான். ஐந்து வருஷ காலத்திற்குக் குறைவாகப் பொருளுற்பத்தி வேலையில் ஈடு பட்டிருக்கிற தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், செம் படையிலே சேர்ந்திருக்கிற விவசாயிகள் - தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் இஞ்சி னீர்கள் முதலியோருக்கு ஐந்து பேருடைய சிபார்சும், இரண்டு வருஷ உமேதவாரிக் காலமும் வேண்டும். இப்படித் தொழில் அந்த துக்குத் தகுந்தபடி அங்கத்தினர்களுக்குப் பிரவேச நிபந்தனைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. உமேதவாரிகளாக இருக்கிறபோது இவர்கள் அபேட்சகர்கள்2 என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு வருஷ காலமோ இரண்டு வருஷ காலமோ அபேட்சகர்களாக இராமல் யாரும் கட்சியில் பொறுப்புள்ள அங்கத்தினராக முடியாது. இது விஷயத்தில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமென்ன? எந்த விதிக்கும் விலக்குக் கிடையாது தான். அபேட்சகர்கள், அங்கத்தினர்களுக்கு என்ன சந்தா விதிக்கப் பட்டிருக்கிறதோ அந்தச் சந்தாவைச் செலுத்த வேண்டும். அங்கத் தினர்களுடைய சந்தா அவரவர் களுடைய வருமானத்திற்குத் தகுந்த படி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, சுமார் நூறு ரூபாய் சம்பாதிக்கிறவர், மாதம் பன்னிரண்டு அணா சந்தா செலுத்த வேண்டும். முந்நூறு ரூபாய்க்கு மேற்பட்டுச் சம்பாதிக்கிறவர்கள், வருமானத்தில் நூற்றுக்கு மூன்று விகிதம் சந்தாவாக கொடுக்க வேண்டும். சந்தாத் தொகை தவிர, அபேட்சகராகச் சேருகிறபோது பிரவேசக் கட்டணமாக ஒரு சிறு தொகை கொடுக்கவேண்டும். அபேட்சகர்களாயிருக்கப்பட்டவர்கள், எல்லாக் கட்சிக் கூட்டங் களுக்கும் ஆஜராயிருக்கலாம். ஆனால், ஓட்டு மட்டும் கொடுக்கக் கூடாது. ஓர் அங்கத்தினர் வசம் என்னென்ன வேலைகள் ஒப்படைக்கப் படுகின்றனவோ அந்த வேலைகள் யாவற்றையும் அபேட்சகர்கள் வசம் ஒப்புவித்து அவர்கள் திறமையையும் தகுதியையும் பரி சோதனை செய்து பார்ப்பார்கள். மற்ற அங்கத்தினர்களும், இந்த அபேட்சகர்களுடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். கட்சியின் மேலதிகாரிகளுக்கு இவர்களைப் பற்றி அடிக்கடி அறிக்கைகள் சென்று கொண்டிருக்கும். உமேத வாரிக் காலமாகிய பரிசோதனைக் காலத்தை அபேட்சகர்கள், வெற்றிகரமாகக் கடத்தி விடுவார்களானால், உடனே அங்கத்தினர் களாகப் பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள். பரிசோதனையில் இவர்கள் திருப்திகரமாக நடந்து கொள்ளவில்லை யென்று கட்சி அதிகாரிகளுக்குப்படுமானால், உமேதவாரிக் காலத்தை நீடிக்கச் செய்கிறார்கள்; அல்லது கட்சியில் சேருவதற்குத் தகுதியில்லை யென்று சொல்லி விலக்கிவிடுகிறார்கள். கட்சியிலே சேர்ந்து விட்ட பிறகு அங்கத்தினர்கள் மூன்று வித மான நியமங்களுக்குக் கண்டிப்பாக உட்பட்டுத்தீர வேண்டும். இந்த நியமங்களைத் தங்களுடைய அன்றாட வாழ்கையில் அநுஷ்டானத் திற்குக் கொண்டுவந்தாக வேண்டும். இவையென்ன? 1. சமதர்ம தத்துவத்தைப் பற்றியோ அல்லது சோவியத் அரசாங்கத்தின் கொள்கைகளைப் பற்றியோ அவ்வப்பொழுது தலைவர்கள் என்ன வியாக்கியானம் செய்கிறார்களோ அல்லது என்ன முடிவை வெளியிடுகிறார்களோ அந்த வியாக்கி யானத்தை அல்லது அந்த முடிவை அங்கீகரித்து அதன்படியே நடக்கவேண்டும். இது விஷயத்தில் இம்மியளவுகூட பிறழக் கூடாது. இடதுசாரி அபிப்பிராய மென்றும் வலதுசாரி அபிப்பி ராயமென்றும் சொல்லிக்கொண்டு, கட்சியின் முடிவான அபிப்பிராயத்தோடு தங்களுடைய சொந்த அபிப்பிராயத்தை ஒட்டுப்போடக் கூடாது. பிரதியோர் அங்கத்தினரும், கட்சி யோடு மட்டும் ஒன்றுபட்டவரல்ல; கட்சியினுடைய அபிப் பிராயத்திலும் ஒன்றுபட்டவர். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கட்சியின் தலைமை தானம் முடிவான அபிப்பிராயம் தெரிவிக்க வில்லை யென்று வைத்துக் கொள்வோம். அப்படித் தெரிவிக்கப்படும் வரை, அந்த விஷயத்தைப் பற்றி அந்தரங்க மாகவோ பகிரங்கமாகவோ தர்க்கம் செய்யவோ, கண்டிக்கவோ, மாற்று அபிப்பிராயம் சொல்லவோ பிரதியோர் அங்கத்தின ருக்கும் பரிபூரண உரிமை உண்டு. ஆனால், முடிவான அபிப் பிராயம் வெளியாகிவிட்டபிறகு, அதற்குக் கட்டுப்பட்டே எல்லா அங்கத்தினர்களும் நடந்துகொள்ள வேண்டும்; எதிர்ப்போ, கண்டனமோ இருக்கவே கூடாது. அப்படிச் செய்தால், தண்டனை கிடைக்கும். கட்சியிலிருந்து விலக்கப்படலாம்; அல்லது சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படலாம்; அல்லது தேசப்பிரஷ்டம் செய்யப்படலாம். 2. கட்சியின் அதிகாரத்திற்குப் பிரதியோர் அங்கத் தினரும் கட்டாயம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைவர்கள், ஓர் அங்கத்தினரின் தகுதியைப் பார்த்து அவரிடத் தில் எந்த வேலையை ஒப்புவித்தாலும் அந்த வேலையை அந்த அங்கத்தினர் செய்தாக வேண்டும். தனக்குத்தகுதியில்லை யென்றோ அல்லது வேறு வேலை யிட்டால் அதைத் தான் சிறப்பாகச் செய்து காட்ட முடியுமென்றோ சொல்லக்கூடாது. தனக்கிட்ட வேலையைச் செய்வதற்காக அந்த அங்கத்தினர் எந்த இடத்திற்குப் போகவும், எந்த இடத்தில் வசிக்கவும், எந்தத் தொழிலைச் செய்யவும், எதற்கும் தயாராயிருக்க வேண்டும். உலகத்தில் சமதர்மம் பரவவேண்டுமென்ற ஒரே நோக்கந்தான் பிரதியோர் அங்கத்தினருக்கும் இருக்க வேண்டும். 3. கட்சி அங்கத்தினர்கள், சாதாரண -அதாவது ஆடம் பர அல்லது பரம தரித்திரம் இரண்டும் இல்லாத - இயற்கையான வாழ்க்கையை நடத்த வேண்டும். கட்சியிலே சேர்ந்து விட்டால், அவர்கள், உணவுக்கும் உடைக்கும் திண்டாடிக் கொண்டு சேவை செய்ய வேண்டுமென்பது அர்த்தமல்ல. அப்படியே, கட்சியில் சேர்ந்து விட்ட பிறகு, செலவுத் தொகை ஒன்று கிடைக்கிறதென்று,எந்த வேலையையும் செய்யாமல் சும்மா யிருக்கவும் முடியாது. வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைப் பிரதியோர் அங்கத்தினரும் பெறுவதற்கு உரிமையுடையவர் என்று கட்சித் தலைவர்கள் நிர்ணயப் படுத்தி யிருக்கிறார்கள். கட்சி அங்கத்தினர்கள், எந்தத் தொழிலைச் செய்து கொண்டி ருந்தபோதிலும், அந்தத் தொழிலிலிருந்து கிடைக்கிற வரு மானத்திலிருந்து, கட்சி அங்கத்தினர் என்ற ஹோதாவில் தாம் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொண்டு, மிகுதித் தொகையைக் கட்சி நிதிக்குச் சேர்த்துவிட வேண்டும். இப்படிச் சொல்வதனால், அங்கத்தினரா யுள்ளவர்கள், தங்கள் உத்தியோக அவசியத்திற்காக என்ன செலவழிக்க வேண்டுமோ அதைச் செலவழிக்கக் கூடாதென்பது அர்த்த மல்ல. உதாரணமாக, கட்சி அங்கத்தினர் ஒருவர், அரசாங்க உயர்தர உத்தியோகத ராயிருக்கிறாரென்று வைத்துக் கொள்வோம். அவர், உத்தியோகதர் என்ற தோரணையில் ரெயிலிலோ, கப்பலிலோ, ஆகாய விமானத்திலோ பிரயாணம் செய்வதற்கும், மோட்டார்கள் வைத்துக் கொள்வதற்கும், சௌகரியமான இடத்தில் வசிப்பதற்கும் உரிமையுடையவர். இந்தச் செலவுகள், அவருக்கு அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து அளிக்கப்பட்டு விடுகின்றன. அப்படியே, ஓர் அரசாங்கத்தினர், தமது நியாயமான வருமானத்தைக் காட்டிலும் அதிகமான ஒரு தொகையைக் கட்சி வேலைக்காகச் செலவழிக்கும்படி நேரிட்டு விட்டால், அந்தத் தொகை, கட்சி நிதியிலிருந்து கொடுக்கப் பட்டு விடுகிறது. இந்த மூன்று நியமங்களையும் தவிர, பொதுவாக எல்லாக் கட்சி அங்கத்தினர்களும், சொந்த விவகாரங்களிலா கட்டும், பொது விவகாரங் களிலாகட்டும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய பேச்சு, நடை, உடை, ஒரு காரியத்தைச் செய்கிற மாதிரி முதலியவை களைப் பார்த்தும், அவர் களுடைய தனித்துவம் விளங்க வேண்டும். அதாவது ஒழுங்கு முதல் ஒழுக்கம் வரையில், புறத்தூய்மை முதல் அகத்தூய்மை வரையில் எல்லா வற்றிலும் அவர்கள் மற்றவர்களுக்கு வழி காட்டிகளாயிருக்கவேண்டும். இன்னும் சாதாரண பாஷையில் சொல்வதானால், அவர்கள், உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் சமதர்மக் கட்சி அங்கத்தினர் களாயிருக்கவேண்டும். ஒரு தொழிற் சாலையில் அல்லது ஒரு காரியாலயத்தில், பலருக்கு மத்தியில் இரண்டு மூன்று சமதர்மக்கட்சி அங்கத்தினர்கள் இருந்தால், அந்த இரண்டு மூன்று பேரும் மற்றவர்களை அதிகமான வேலை செய் வதற்குத் தூண்டவேண்டும்; தாங்களும், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக வேலை செய்து காட்டவேண்டும். கணக்கெழுதுவது முதல், யந்திரம் சுற்றுவது வரை, மற்றவர்களுக்கு முன்மாதியா யிருக்க வேண்டும். இப்படி அதிகமான உழைப்பை மேற்கொண்ட போதிலும், வேறு விதங்களில் சிரமப்பட்டாலும், மற்றவர்களைவிட விசேஷமான சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது. இங்ஙனம் சமதர்மக் கட்சியில் ஒழுங்கான அங்கத்தினர் களைத் தவிர, அநுதாபிகள்1 என்ற ஒரு பிரிவினர் உண்டு. இவர்கள், கட்சி யினிடத்தில் விசுவாசமுடையவர்கள்; அதன் கொள்கையில் அநுதாப முடையவர்கள்; ஆனால், அந்தக் கொள்கையைப் பற்றி, பொதுவாக மார்க்ஸீயத்தைப் பற்றிப் பிறர்க்கு விளங்குமாறு சொல்லத் தெரியாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் ஒழுங்கான அங்கத்தினர்களாக முடியாது. அநுதாபிகள் கோஷ்டி2 என்று இவர்களைத் தனியாகப் பிரித்து, கட்சியின் பிரதம சபை3களோடு இணைத்துவிடுகிறார்கள். இவர்கள் மேற்படி பிரதம சபையின் கூட்டங்களுக்கு ஆஜராகலாம்; அங்கு நடைபெறும் எல்லா விஷயங் களிலும் கலந்து கொள்ளலாம்; ஆனால் ஓட்டு மட்டும் கொடுக்கக் கூடாது. கட்சியில் அங்கத்தினராகச் சேரும் விகிதாசாரத்தைக் கட்சித் தலைவர்கள் எப்பொழுதும் ஒரு நிதானத்திற்குள்ளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, கையினாலுழைத்துப் பிழைக் கிறவர்கள் யாரோ அவர்களுடைய விகிதாசாரம் எப்பொழுதும் கொஞ்சம் கூடுதலாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள். பொதுவாகவே, தொழிலாளர்கள், விவசாயிகள், செம்படையி லுள்ளவர்கள் ஆகிய இவர்களுடைய எண்ணிக்கைதான், சமதர்மக் கட்சியில் எப்பொழுதும் அதிகமாக இருந்துகொண்டு வருகிறது. கட்சியின் அமைப்பைப்பற்றிச் சிறிது கவனிப்போம். கட்சியின் அமைப்பானது ஒரு கோபுரம் மாதிரி இருக்கிறதென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்தக் கோபுரத்தின் அடிப்படையில் இருப்பது, பிரதம சபை. இந்தப் பிரதம சபையில் குறைந்தது மூன்று பேர் அங்கத்தினராயிருக்கவேண்டும். ஒரு தொழிற்சாலை, கல்லூரி, ஆபத்திரி, பத்திரிகாலயம், ரெயில், கப்பல் முதலிய எந்த தானத் திலும், எந்த இடத்திலும் கட்சி அங்கத்தினர்களாக மூன்று பேர் இருப்பார்களானால், அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு பிரதம சபை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று பேர் என்பது குறைந்த பட்ச எண்ணிக்கையே தவிர, இதற்கு மேல் எத்தனை பேர் வேண்டு மானாலும் ஒரு பிரதம சபையில் அங்கத்தினராயிருக்கலாம். ஒரு தொழிற்சாலையிலோ அல்லது வேறெந்த தாபனத்திலோ நூற்றுக் கணக்கான கட்சி அங்கத்தினர்கள் இருப்பார்களானால், கட்சியின் நிருவாக சௌரிகரியத்திற் காகவும் வேலை சௌகரியத்திற்காகவும், இலாகாவாரியாகப் பிரதம சபை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஒரே தாபனத்தில் பல பிரதம சபைகள் இருக்கும் பட்சத்தில், இவைகளின் வேலையை ஒருமுகப்படுத்தி, கொண்டு செலுத்தும் பொருட்டு, பொதுக்கமிட்டி ஒன்று ஏற்படுத்திக் கொள்வார்கள். இந்தப் பிரதம சபையின் வேலை என்ன? எந்த ஒரு தாபனத்தின் வேலையிலும் இந்தப் பிரதம சபை தலையிடாது. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையில் சமதர்மக் கட்சியின் பிரதம சபை இருக்கிற தென்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொழிற்சாலையை எப்படி நிருவாகம் செய்யவேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் இந்தப் பிரதம சபை அங்கத்தினர்கள் தலையிடமாட்டார்கள். மற்றத் தொழிலாளர்களுக்கு என்ன உரிமைகள், என்ன கடமைகள் உண்டோ அதே உரிமைகள், அதே கடமைகள்தான், கட்சி அங்கத்தினர்களுக் கும் உண்டு. ஆனால், கட்சி அங்கத்தினர்கள் என்ற ஹோதாவில் இவர்களுடைய பொறுப்பு அதிகம். இவர்கள், உழைப்பிலே சோர்வு காட்டுகிறவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்; தவறி நடந்தவர் களைச் சீர்திருத்த வேண்டும்; பொதுவாகச் சமதர்ம தத்துவத்தை எங்கும், எல்லாரிடத்திலும் புகுத்த வேண்டும். இவர்கள் நடந்து கொள்கிற மாதிரியைப் பார்த்து, மற்றவர்களும் சமதர்மக் கட்சியில் சேர வேண்டு மென்று ஆவல் கொள்ள வேண்டும். தொழிலாளர் சங்கங்கள், கூட்டுறவு தாபனங்கள் முதலிய எல்லாவற்றிலும் இவர் களுடைய செல்வாக்கு பரிணமித்திருக்கிறது. இவர்கள்தான், இந்தப் பிரதமசபைகள்தான், சமதர்மக் கட்சிக்கோபுரத்தின் அதி வாரம்; உயிர் நாடி. இந்த மாதிரியான பிரதம சபைகள் சுமார் 1,30,000க்கு மேற்பட்டு இருக்கின்றன. பிரதம சபைகளுக்கு மேல் ஜில்லா சபை; ஜில்லா சபைக்கு மேல் மாகாண சபை; மாகாணசபைக்கு மேல் மத்தியக் கமிட்டி. இப்படி வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இதே வரிசையில் ஜில்லா மகாநாடுகள், மாகாண மகா நாடுகள், அகில ஐக்கிய மகாநாடு முதலியன அவ்வப்பொழுது கூடுகின்றன. இவை களுக்கு, அவ் அவற்றின் கீழ்ப்படியிலுள்ள மகாநாடுகளினால் தெரிந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆஜராவார்கள். அதாவது, கிராம சபைகளினால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜில்லா மகா நாட்டுக்கும், ஜில்லா மகாநாடுகளினால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் மாகாண மகாநாட்டுக்கும் இப்படி முறையே ஆஜராவார்கள். இந்த மகாநாடுகள் வருஷத்துக்கொருமுறை கூடி, தங்கள் தங்கள் நிருவாகக் கமிட்டியைத் தெரிந்தெடுத்துக் கொள்கின்றன. இந்த நிரு வாகக் கமிட்டிகள்தான் மேலே சொன்ன ஜில்லா சபை முதலியன. இந்த மகாநாடுகளில் அரசாங்கத்தார் நிறைவேற்றின வேலைத் திட்டங்கள், இனிச் செய்யப் போகிற காரியங்கள் முதலிய யாவும் பரிசீலனை செய்யப் பெறும். ஆனால், வாதப் பிரதிவாதங்களுக்கு இங்கு அதிகமாக இடம் அளிக்கப்படுவதில்லை. கட்சியின் மேல் அமைப்பில் இருப்பது மத்தியக் கமிட்டி என்று சொன்னோமல்லவா? இதுதான் கட்சியின் நிருவாக சபை. இதில் சுமார் எழுபது அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இந்த நிருவாக சபை யானது, ஒரு தலைவர், ஒரு காரியதரிசி, மூன்று உதவிக்காரியதரிசிகள், இரண்டு காரியக் கமிட்டிகள் இவைகளின் மூலமாக எல்லா விவகாரங்களையும் நடத்திக் கொண்டு போகிறது. காரியக்கமிட்டி களில் ஒன்றுக்கு பாலிட் பீரோ1 என்று பெயர். மற்றொன்றுக்கு ஒர்க் பீரோ2 என்று பெயர். இந்த ஒவ்வொன்றிலும் ஒன்பது அல்லது பத்து பேர் அங்கத்தினர்கள். இந்த இரண்டு காரியக் கமிட்டிகளையும் தவிர கட்சி நிருவாகக் கமிஷன்3 என்றும், கணக்குப் பரி சோதனைக்கமிஷன்4 என்றும் இரண்டு கமிட்டிகள் இருக்கின்றன. இந்தக் கமிட்டிகளும், மேலே சொன்ன தலைவர், காரியதரிசி முதலிய உத்தியோகதர்களும், அகில சமதர்மக் கட்சிக் காங்கிர சினால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி நிருவாகக் கமிஷனும், கணக்குப் பரிசோதனைக் கமிஷனும், கட்சிக் காங்கிரசினால் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் எல்லா அங்கத்தினர்களாலும் சரியாக, அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனவா என்ப தையும், கட்சி விஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்களை விசாரித்துத் தகுதியில்லாதவர்களை விலக்குகிற வேலையையும் கவனித்துக் கொள்ளும். காரியக் கமிட்டிகளில் பாலிட் பீரோ என்பது தான் முக்கிய மானது. கட்சி உத்தியோகதர்கள், இந்த பாலிட் பீரோவைக் கலந்து கொண்டுதான் எல்லாக் காரியங்களையும் செய்வார்கள். அரசாங்கத்தின் உயர்தர உத்தியோகதர்களில் பெரும்பாலோர் இந்த பாலிட் பீரோவில் அங்கத்தினர்கள். பாலிட் பீரோ என்றால் அரசியல் கழகம் என்று அர்த்தம்.1 மத்தியக் கமிட்டியானது ஏறக்குறைய மாதத்திற் கொருமுறை கூடுகிறது. இந்த மாதாந்தக் கூட்டத்தில், ஒரு மாதத்தின் வேலைகள் பூராவும் விமரிசனம் செய்யப்படுவ தோடு, அடுத்த மாதத்து வேலைத் திட்டமும் தயாரிக்கப்படுகிறது. இவைகளுக்கெல்லாம் மூலகாரணமா யிருப்பது பாலிட் பீரோ. கட்சியின் உத்தியோகதர்களாகிய தலைவர், காரியதரிசி முதலியோர், இந்த மாதக் கூட்டங்களில், ஒளி மறைவின்றி எல்லா விஷயங்களையும் ஆஜர்படுத்தி, கமிட்டியின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பெறுவார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் டாலினைப்பற்றி ஒரு வார்த்தை. டாலினை ஒரு சர்வாதிகாரியாகவே, வெளியுலகம் சித்திரித்துக் காட்டுகிறது. உண்மையில் அது சரியில்லை. சமதர்மக் கட்சியின் காரியதரிசி அவன். இந்தப் பதவியை அவன் அநேக வருஷகாலமாகத் தொடர்ந்து வகித்து வருகிறான். இதற்குக் காரணம் கட்சிக்கு அவன் மீதுள்ள நம்பிக்கைதான். ருஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூண்ட பிறகு, அவன், காரியதரிசிப் பதவியோடுகூட, அரசாங்கத்தின் பிரதம மந்திரிப் பதவியையும் வகித்து வருகிறான். இந்தப் பிரதம மந்திரியினிடத்திலேயே, தற்காலிகமாக ராணுவநிருவாகமும் ஒப் படைக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்தை ஒழுங்காக நடத்தி வெற்றி காண வேண்டுமென்பதற்காகத்தான், இங்ஙனம் அதிகாரங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன. nrhÉa¤ UZahÉš xU Éá¤âu« (mjhtJ., ஒரு புதிர் மாதிரி காணப்படுவது) என்னவென்றால், சமதர்மக் கட்சிக்கும் அர சாங்க நிருவாகத்திற்கும் உள்ள தொடர்புதான். சோவியத் அரசியல் திட்டத்தில் சமதர்மக் கட்சிக்குப் பொதுவாக ஒரு தானம் கொடுக்கப் பட்டிருக்கிற தென்பது வாதவம். ஆனால், கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ, அந்த மத்தியக் கமிட்டியின் காரியக் கமிட்டியாகிய பாலிட் பீரோவுக்கோ அதில் இடமில்லை. இவை, அரசாங்க தாபனங் களுமில்லை. ஆனாலும், இவை, இந்த மத்தியக் கமிட்டியும் பாலிட் பீரோவும், அரசாங்க நிருவாகத்தைப் பற்றின விஷயங்களையே பெரும்பாலும் கவனிக்கின்றன. தேசத்தின் ஒழுங்கான நிருவாகமும், தேச மக்களினுடைய க்ஷேமமும் தங்களுடைய சொந்த விவகாரங்கள் மாதிரியாகவே, பாலிட் பீரோவில் அங்கத்தினர்கள் கருதுகிறார்கள். பாலிட்பீரோவின் என்ன மாதிரியான திட்டங்கள் வகுக்கப்படு கின்றனவோ, அவற்றையே அரசாங்கம் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறது. பாலிட் பீரோவும் மந்திரிச் சபையும் தனித்தனி தாபனங் களாயிருந்த போதிலும், ஒருவரே, இரண்டிலும் அங்கத்தினரா யிருப்ப தனாலும், தேசம் வேறே அரசாங்கம் வேறே என்ற வேற்றுமை இல்லையாதலினாலும், எல்லாக் காரியங்களும் மிக ஒழுங்காக நடைபெற முடிகிறது. அரசாங்கக் காரியாலயம் எப்படி பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதோ அப்படியே மத்தியக் கமிட்டியின் காரி யாலயமும் பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொர் இலாகா வும் ஒவ்வோர் அங்கத்தினருடைய நிருவாகத்தின் கீழ் வைக்கப்பட்டி ருக்கின்றது. சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சீர்திருத்தத்தின் படி, மேற்படி காரியாலயம், விவசாய இலாகா என்றும், தொழில் இலாகா என்றும், இப்படி ஒன்பது இலாகாக்களாகப் பிரிக்கப்பட் டிருக்கின்றது. இந்த ஒன்பது இலாகாக்களின் கீழ் உப இலாகாக்கள் வேறு உண்டு. உதாரணமாக, லெனினிஸத்தைப் பற்றிய பிரசார இலாகா என் கிற முக்கிய இலாகாவின் கீழ் (1) கட்சியைப்பற்றின பிரசாரம், கிளர்ச்சி; (2) பத்திரிகைகள், பிரசுரங்கள்; (3) பள்ளிக் கூடங்கள்; (4) புத்தக சாலைகள், விளையாட்டுச் சங்கங்கள்; (5) புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய்வது, கண்டு பிடிப்பது முதலிய யாவற்றையும் முறையே கவனிப்பதற்கென்று ஐந்து உப இலாகாக்கள் இருக்கின்றன. இதே மாதிரி, மாகாண, ஜில்லா, பிரதம சபைகளிலும் இலாகாக்கள் ஏற் படுத்தப்பட்டு, காரியங்களை ஒழுங்காகச் செய்து வருகிறார்கள். கட்சிக் காரியாலயமென்றால், அரசாங்கக் காரி யாலயம் மாதிரிதான். கட்சியின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காப்பாற்று வதற்காக, தகுதி யில்லாதவர்களை அவ்வப்பொழுது விலக்கிக் கொண்டு வருவதென்கிற முறையைத் தலைவர்கள் கண்டிப்பாக அனுஷ்டித்து வருகிறார்கள். இதற்காக, எவ்வித யதேச்சாதிகார முறையும் கையாளப்படுவது கிடையாது. தகுதியில்லாதவர்கள் என்று யார் சந்தேகிக்கப்படு கிறார்களோ அவர்கள் பகிரங்கமாகவே பரிசோதனை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ, யார் வேண்டுமானாலும் சாட்சி சொல்லலாம். தகுந்த ருஜு ஏற்பட்டாலன்றி யாரும் அனாவசியமாக விலக்கப்படுவது கிடையாது. (1) கட்சியின் கொள்கைகள், வேலைத்திட்டங்கள், அவ்வப் பொழுது நிறைவேற்றப் படுகிற தீர்மானங்கள் இவைகளைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ளா தவர்கள், இவைகளைப் பிறர்க்கு விளங்கு மாறு சொல்லாதவர்கள், சொல்லத் திறமை யில்லாதவர்கள்; (2) கட்சியின் மூலமாகத் தமக்குக் கிடைத்திருக்கிற அந்ததை, சொந்த நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்கிறவர்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள், ஊழலாகக் காரியஞ் செய்கிறவர்கள், அரசாங்கத் தினிடம் தப்பெண்ணம் உண்டாகும்படியாகப் பாமரஜனங் களிடத்தில் போதனை செய்கிறவர்கள் முதலியோர்; (3) கிராமங் களிலே தேசீய சொத்தாகக் கருதப்படுகிற நிலபுலங்களை, பிறருடைய அநியாயமான ஆக்கிரமிப்பினின்று காப்பாற்றாதவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள், கட்சி அங்கத்தினர் பதவியினின்றும் விலக்கப் படுகிறார்கள். கடுமையான குற்றவாளிகள் என்று கருதப்படு கிறவர் களைக் கட்சியினின்று அடியோடு அப்புறப்படுத்தி விடுவதும், லேசான குற்றஞ் செய்தவர்களை அநுதாபிகள் கோஷ்டிக்கு இறக்கி விடுவதும் சர்வ சாதாரண தண்டனைகள். கட்சிக்கு விரோதமாக, தேசத்திற்கு அல்லது அரசாங்கத்திற்கு விரோதமாகக் குற்றஞ் செய்கிறவர்கள், மற்றெல்லோரையும் போல் சட்டப்படி நடத்தப்படுகிறார்கள். கட்சியிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்களென்று சொன்னால், அவர்களுக்கு உத்தியோகம் போய்விட்டது, வாழ்க்கை போய் விட்டது என்பது அர்த்தமல்ல. கட்சியிலே அங்கத்தினராயிருக்கிற கௌரவம் போய்விட்டது. அவ்வளவு தான். அவர்களிடத்தில் பொறுப் பான வேலை ஏதும் ஒப்படைக்கப்பட மாட்டாது. சமுதாயத்தினர், அவர்களைக் கீழ்க் கண்ணோடுதான் பார்ப்பார்கள். பொதுவாக, மனிதத் தன்மையில்லாத வர்கள் என்று அவர்கள் கருதப்படுவார்கள். சமதர்மத்தை இளைஞர்களின் பசுமனத்தில் புகுத்த வேண்டு மென்ற நோக்கத்துடன் இளைஞர் இயக்கம் ஒன்று அற்புதமான முறையில் ருஷ்யாவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சமதர்மக் கட்சிக்கு அடுத்தப் படியாக இந்த இளைஞர் இயக்கந்தான் ருஷ்யாவிலேயே மிகவும் முக்கியமானது. இதனை மூன்று தரமாகப் பிரித்திருக் கிறார்கள். முதலாவது காம்ஸோமால்1 என்கிற பிரிவு. இதில் பதினான்கு வயதுக்கு மேல் இருபத்து மூன்று வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். இந்த இளைஞர் கட்சி 1922-ஆம் வருஷத்தில் தாபிக்கப் பட்டது. இரண்டாவது பயோனீர்கள்2 பத்து வயதுக்கு மேல் பதினாறு வயதுக்குட்பட்ட வர்கள் இதில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இது 1923ஆம் வருஷம் தாபிக்கப்பட்டது. இதில் சுமார் 20 லட்சம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். மூன்றாவது சிறிய அக்டோபரிட்டுகள்1 1917-ஆம் வருஷம் அக்டோபர் மாதம்2 நடைபெற்ற புரட்சியின் ஞாபகார்த்தமாக இந்தப் பெயர் இடப்பட்டிருக்கிறது. எட்டு வயதி லிருந்து பதினொரு வயதுவரையிலுள்ளவர் இதில் அங்கத்தினர்கள். இதுவும் 1923-ஆம் வருஷத்தி லிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இப்பொழுது சுமார் மூன்று இலட்சம் பேர் அங்கத்தினர்களா யிருக்கிறார்கள். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்குத் தகுந்த பயிற்சி யளிக்க வேண்டு மென்பதற்காகவே, காம்ஸோமால் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை ஏறக்குறைய சாரணச் சிறுவர் இயக்கத்திற்குச் சமானமாகச் சொல்லலாம். இதில் சேர்ந்துள்ள இளைஞர்கள் தங்களுடைய ஆசாரிய புருஷனாகிய லெனினுடைய பெயருக்குக் கௌரவம் உண்டாகக்கூடிய மாதிரி நடந்துகொள்ள வேண்டும். சலியாது உழைக்கிற, கண்ணியம் வாய்ந்த, துணிச்சலான போர் வீரர்களாகவும், எந்த நோக்கத்திற்காகப் புரட்சி செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தினிடத்தில் விசுவாசமுடை யவர்களாகவும், இளைஞர்களுக்கும் மற்ற எல்லாத் தொழிலாளர் களுக்கும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும். தங்கள் கட்சிக்கு, அதாவது காம்ஸோமாலுக்கு அங்கத்தினர்கள் சேர்ப்பதற்காகத் தினந்தோறும் வேலை செய்யவேண்டும். காம்ஸோமாலில் திறமையாக வேலை செய்கிறவர்கள் தான், சமதர்மக் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். காம்ஸோமால்கள், மார்க், ஏஞ்ஜெல், லெனின், டாலின் இவர்களுடைய போதனைகளை ஒழுங்காகப் படிக்க வேண்டும். சமதர்மக் கட்சி அங்கத்தினர்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிய வேண்டும். ஏதோ குறிப்பிட்ட ஒரு தொழிலைத் திறமையாகச் செய்வதற்குப் பயிற்சி பெற வேண்டும். தேசத்தின் விவசாயம், பொருளாதாரம் முதலியவற்றைப் பொது வுடைமைகளாக்க எல்லா வகையிலும் உழைக்க வேண்டும். ஒவ் வொரு காம்ஸோமாலும் தேகப் பயிற்சியில் திறமைசாலியாயிருக்க வேண்டும். எந்தச் சமயத்திலும் ஐக்கிய சோவியத் ராஜ்யத்தைக் காப் பாற்றும் பொருட்டு ஆயுத மெடுத்துப் போராடச் சித்தமாயிருக்க வேண்டும். ராணுவத்தில் எந்த ஒருதுறையிலாவது நன்றாக பயின்றி ருக்க வேண்டும். ஆகாயப்படை, கப்பற்படை இவற்றில் உற்சாகம் கொள்ள வேண்டும். தங்களுக்குக் கீழ் இருக்கப்பட்ட பயோனீர் களுக்கு உதவி செய்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவருவது ஒவ்வொரு காம்ஸோமாலினதும் இன்றியமையாத கடமையாகும். காம்ஸோமால்களுக்கென்று தனியாகப் பத்திரிகைகள், நூல்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன வெளியிடப்படுகின்றன. அடிக்கடி மகாநாடுகள் நடைபெறுகின்றன. சமதர்மக் கட்சியி லுள்ளது போலவே, இதிலும், தகுதியில்லாதவர்கள் கண்டிப்பாக விலக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. காம்ஸோமால்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்கள் பயோனீர்கள். இவர்களுடைய உள்ளத்தில் எப்பொழுது, மனிதத் தன்மை என்கிற அரும்பு உண்டாகிறதோ அப்பொழுது தான், அந்த வயதில்தான் அவர்களைப் பயோனீர்களாக்கி அவர்களுடைய சமுதாய உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டுமென்பது லெனின் கருத்து. இதற்காக, இந்தச் சிறுவர் இயக்கத்தைத் தொடங்கினான். வர்க்கப் பிரிவினையே இல்லாத சமுதாயம் என்கிற லட்சியம், இவர்களுடைய பசிய மனத்தில் பதிய வைக்கப்படுகிறது. அதற்கேற்ற விதமாகவே இவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். ஒவ்வொரு பயோனீரும் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர், உலகத்திலுள்ள எல்லாத் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆகியோருடைய நலனுக்காக உழைப்பதாகவும், லெனினுடைய போதனைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவ தாகவும், பயோனீர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற சட்டத்திட்டப்படி நடந்து கொள்வதாகவும் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு தான் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதற்குரிய சின்னங்களாகிய சிவப்பு நட்சத்திரம், சிவப்புக் கைகுட்டை ஆகிய இரண்டும் அளிக்கப்படுவார்கள். பயோனீர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் ஐந்து; அனுஷ்டிக்க வேண்டிய திட்டங்கள் ஐந்து. .ஐந்து சட்டங்களாவன: 1. பயோனீர், தொழிலாளர் சமுதாயம் என்கிற லட்சியத் திற்கும், லெனினுடைய போதனைகளுக்கும் விசுவாசமுடைய வனா யிருக்கிறான். 2. பயோனீர், சமதர்மக் கட்சி அங்கத்தினருடைய இளைய சகோதரன். 3. பயோனீர், தன்னைக் காட்டிலும் வயதில் சிறுவர் களை ஓர் அமைப்புக்குட்படுத்தி அவர்களுக்கு தான் ஒரு வழி காட்டியாயிருக்க வேண்டும். 4. பயோனீர், எல்லாப் பயோனீர்களுக்கும், உலகத்தி லுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் முதலியவர்களுடைய குழந்தை களுக்கும் தோழன். 5. பயோனீர், அறிவை விருத்தி செய்துகொள்வதில், முனைய வேண்டும். விஷய ஞானந்தான், தொழிலாளர் சமுதாயத்தை அமைப்பதற்காக நடத்தவேண்டிய போராட்டத் திற்குத் தேவையாயுள்ள சக்தி. ஐந்து திட்டங்களாவன : 1. பயோனீர், தன்னுடைய தேகத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய தேசசுகத்தையும் பாது காக்க வேண்டும். அவன் சகிப்புத்தன்மை யுடையவனாகவும், சந்தோஷமுடைய வனாகவும் இருக்கவேண்டும். தினந்தோறும் காலையில் எழுந்து காரியங்களை ஒழுங்காகத் தொடங்க வேண்டும். 2. பயோனீர், தன் காலத்தையும் மற்றவர்களுடைய காலத்தையும், வீணாக்காமல், சுருக்கமாகச் செலவழிக்க வேண்டும். அவன், தன் காரியங்களைக் காலா காலத்திலும் விரைவாகவும் செய்து முடிக்கவேண்டும். 3. பயோனீர், சுறுசுறுப்புள்ளவனாகவும் விடா முயற்சியுடைய வனாகவும் இருக்கவேண்டும். எந்த நிலைமையிலும் யார் கீழும் வேலை செய்து சமாளித்துக் கொள்ள அவன் நன்றாகத் தெரிந்துக்கொண்டிருக்க வேண்டும். 4. பயோனீர், மற்றவர்களுடைய சொத்துக்களைக் காப் பாற்றிக் கொடுக்கவேண்டும். தன்னுடைய துணிமணிகள், புதகங்கள், தொழிலுக்குரிய கருவிகள் முதலியவைகளின் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையுடனிருக்கவேண்டும். 5. பயோனீர், பேசுகிறபோது, பிரமாணமாக, சத்திய மாக என்று சொல்லிக் கொண்டு பேசக்கூடாது; புகை பிடிக்கக் கூடாது; மதுபானம் செய்யக்கூடாது. இதே பிரகாரந்தான், சிறிய அக்ட்டோபரிட்டுகளுடைய சட்ட திட்டங்களும், தாபன அமைப்பும் இருக்கின்றன. இவற்றில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல், எவ்விதத் தொழில் வேற்றுமை யும் பாராட்டப் படாமல் எல்லோரும் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படு கிறார்கள். இந்த இளைஞர் இயக்கத்தை நாம் பொதுப்படையாக நோக்கு கிறபோது, ஒருவன் அல்லது ஒருத்தி, சமுதாயத்திலே பயனுள்ள ஓர் அங்கத்தினராவதற்கு எப்படிப் பாலியத்திலிருந்தே ஒழுங்கான முறையில் பயிற்சி செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது நன்கு புலனாகும். சிறுவர்கள் அல்லது சிறுமிகள் இந்த இளைஞர் இயக்கங்களிலே சேர்ந்திருப்பதனால் அவர்களுடைய படிப்புக்கு ஏதேனும் இடை யூறு ஏற்பட்டு விடுகிறதோ என்று யாரும் சந்தேகிக்க வேண்டிய தில்லை; பயப்பட வேண்டியதில்லை. பாடமுறைகளையும், இந்த இளைஞர் அமைப்புக்களையும் ஒன்றுக் கொன்று தொடர்புடைய தாகவே ஏற்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக இளைஞர்கள், சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்கு, அவர்களால் இயன்ற வரை வேலை செய்யுமாறு தூண்டப்படுவதற்கே இந்த இளைஞர் இயக்கம் தாபிக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொது நன்மைக்கான எல்லாக் காரியங்களையும் விருப்பு வெறுப்பின்றிச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப் படுகிறார்கள். அவர்கள் சாக்கடை கழுவலாம்; தெருப்பெருக்கலாம்; பொது கட்டிடங்கள் கட்டுகிறபோது அவைகளுக்கு உதவி செய்யலாம்; கல்வி வாசனையில்லாதவர்களுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக் கலாம்; குடிப்பழக்கத்தை நிறுத்த வேலை செய்யலாம்; எதிர்பார்க் கிற அளவு பொருளுற்பத்தி செய்யாத தொழிற் சாலைகள் , விவசாய தாபனங்கள் முதலியவற்றில் புகுந்து அங்குள்ளவர் களுக்கு உதவி செய்யலாம்; கூட்டங்களில், ஊர்வலங்களில் அமைதியை நிலை நாட்டவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் உதவி செய்யலாம். இப்படிப் பலவகைத் தொண்டுகளிலே ஈடுபட்டு, பிறர்க்குச்சேவை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கையின் பயன் என்ற உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு விடுகிறார்கள் ருஷ்ய இளைஞர்கள். தேசம் வேறு, தனி மனிதன் வேறு, சமுதாயம் வேறு என்ற வேற்றுமை உணர்ச்சியே இவர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. இப்படிப் பட்டவர்கள்தான் பிற்காலத்தில் தேசத்தின் தலைவர்களாக வருகிறார்கள். இவர்களை, ஒவ்வொருவரும் ஒவ் வொரு தலைவராக இருக்கிற இந்த மகா ஜாதியை, எளிதிலே அடக்கி விட முடியுமா? அழித்துத்தான் விட முடியுமா? இனி, கோமிண்டர்ன்1 என்ற ஒரு தாபனத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிவிடுவோம். இது தான், சர்வதேச சமதர்மக் கட்சிகளின் தலைமை தாபனம். லெனின் முதலிய போல்ஷ்வெக் தலைவர்களின் நோக்கம், வர்க்கப் பிரிவினைகள் இல்லாத, உலக மனைத்திற்கும் பொதுவான ஒரு சமுதாயத்தை ஏற்படுத்திவிட வேண்டு மென்பது; இதற்காக உலகப் புரட்சி செய்ய வேண்டுமென்பது. இதனைப் படிப்படியாகச் செய்துகொண்டு போவதா அல்லது மொத்தமாகச் செய்து கொண்டுபோவதா என்பதைப் பற்றி சோவியத் தலைவர்களுக்குள் கருத்து வேற்றுமை இருக்கிறது. டாலினுக்கும் ட்ரோட்கிக்கும் ஏற்பட்ட பிணக்குக்கு இந்த கருத்து வேற்றுமை தான் அடிப்படையான காரணமாயிருந்திருக்கிறது. ஒரு நாட்டிலே மட்டும் புரட்சி செய்து வெற்றிபெறுவதில் பயனில்லை எல்லா நாடுகளிலும் சேர்ந்தாற்போல் புரட்சியை உண்டுபண்ணவேண்டும், அப்பொழுதுதான் வர்க்கப் பிரிவினைகள் இல்லாத சமுதாயத்தை அமைக்க முடியும் என்பது ட்ரோட்கியின் கொள்கை. முதலில் சொந்த நாட்டிலே புரட்சியை உண்டுபண்ணி அதில் வெற்றி பெற்ற பிறகு, படிப்படியாக மற்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டு மென்பது டாலின் சார்பாருடைய கொள்கை. ஆனாலும், இரு சார்பினருக் கும், உலகப்புரட்சி, உலக சமுதாயம் என்பதுதான் லட்சியம். இந்த லட்சியத்தின் பிரதிநிதி யாயிருப்பதுதான் கோமிண்டர்ன். உலகத்துப் பல நாடுகளிலுமுள்ள சமதர்மக் கட்சிகளுக்கு இதில் பிரதிநிதித்துவமுண்டு. இந்தப் பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேச சமதர்ம மகா நாடு, இரண்டு வருஷத்திற் கொருமுறையோ அல்லது நான்கு அல்லது ஏழு வருஷங் களுக்கு ஒரு முறையோ உலகநிலைமைக்கேற்றவாறு கூடுகிறது. இந்த மகாநாடுதான், கோமிண்டர்னின்தலைவர், காரியதரிசி முதலிய உத்தி யோகதர்களையும், அன்றாட அலுவல்களைக் கவனிக்க ஒரு நிரு வாகக் கமிட்டியையும் நியமிக்கிறது. இந்த கமிட்டியின் நடவடிக்கை களிலும், கமிட்டியின் காரியாலய நிருவாக விஷயத்திலும், சோவியத் அரசாங்கமும், ருஷ்யசமதர்மக் கட்சியின் மத்தியக் கமிட்டியும் அதிகமான பங்கெடுத்துக் கொள்கின்றன வென்றாலும், இவைகளுக் கென்று விசேஷமான சலுகைகளோ உரிமைகளோ கிடையாது. மற்ற நாட்டுப் பிரதிநிதிகளுக்கு என்ன உரிமைகள், சலுகைகள் உண்டோ அதே உரிமைகள் சலுகை கள்தான், ருஷ்யப் பிரதிநிதிகளுக்கும் உண்டு. ஆனாலும், கோமிண்டர்னின் தலைமைக் காரியாலயம் 1919-ஆம் வருஷத்திலிருந்து, அதாவது கோமிண்டர்ன் தாபிதமான காலத்தி லிருந்து மாக்கோவிலேயே இருந்து வருகிறது. கோமிண்டர்ன் என்பதுதான் தர்ட். இண்டர் நாஷனல் என்று சொல்லப்படுகிற மூன்றாவது சர்வதேச அமைப்பு. முதலாவது இண்ட்டர் நாஷனல் 1864ஆம் வருஷத்திலும் இரண்டாவது இண்டர் நாஷனல் 1989ஆம் வருஷத்திலும் தாபிக்கப்பட்டுக் கலைந்து போயின.1 6. சோவியத் அரசியல் அமைப்பு சமதர்மத்தைப் பிரசாரம் செய்வது, அதைப்பற்றிய அறிவை ஜனங்களுக்குப் புகட்டுவது, சமதர்மக் கட்சி; அதனை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்து நிருவாகம் செய்வது சோவியத் அரசாங்கம். இந்த அரசாங்க அமைப்பு, அரசியல் பண்டிதர்களுக்கு ஒரு சிக்கலான பிரச்னை. ஆனால், சோவியத் தலைவர்கள், இந்த சிக்கலை வெகு அழகாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள்; சிறுபான்மையோர் உரிமை, எல்லோருக்கும் ஓட்டுரிமை, ஜனப்பிரதிநிதித்துவம், ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பு முதலியவை சம்பந்தமாக எழக்கூடிய எல்லாச் சிக்கல்களையும் ஒழுங்குபடுத்தி, பொருளுற்பத்தி, பொருளுற்பத்திக்கான சாதனங்கள் ஆகியவற்றைத் தேசீய மயமாக்கி, சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தை அமைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். சோவியத் தலைவர்களிடத்தில் காணப்படு கிற ஒரு விசேஷ அமிசம் என்ன வென்றால், அவர்கள் எந்த ஒரு புதிய திட்டத்தையும், அல்லது எந்த ஒரு புதிய சீர்திருத்தத்தையும், லட்சியத்தின்மீது கொண்டுள்ள அபார மோகத்தினால், அவசரப்பட்டு அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து விடுவதில்லை; ஒரே மூச்சாகவும் கொண்டுவந்து விடுவதில்லை. ஜனங்களுடைய பரிபக்குவம், தேசத்தினுடைய திதி, தங்களுடைய நிருவாக சக்தி முதலியவற்றை யெல்லாம் கவனித்துக்கொண்டுதான் ஒரு திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகின்றனர். ஒரே சட்டம், அல்லது ஒரே திட்டம் எந்தக் காலத்திற்கும், எல்லாச் சந்தர்ப்பங் களுக்கும் பொருந்தாது என்ற உண்மையை அவர்கள் நன்றாக உணர்ந்து, அதன் பிரகாரம் புதிதாகச் சிருஷ்டிக்க வேண்டிய இடத்தில் மாற்றி யும் ஒழுங்காகவும் நிதானமாகவும் காரியங்களைச் செய்துகொண்டு போகின்றனர். ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.அதைக் கொண்டு சோவியத் தலைவர்களின் சந்தர்ப்ப மதியூகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். 1918 ஆம் வருஷ ஆரம்பத்தில், சோவியத்தலைவர்கள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு, கீழ்க்கண்டவர் களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்ற சட்டத்தின்மூலம் தடைசெய்து விட்டனர்:- (1) லாபம் சம்பாதிப்பதற்காகக் கூலிகளை அமர்த்தி வேலை வாங்குவோர்; (2) தங்களுடைய சொந்த உழைப்பினின்று பெறாத வருமான முடையவர்கள் - அதாவது வட்டித் தொழில் செய்து சம்பாதிப்போர், தொழிற் தாபனங்களை நடத்திச் சம்பாதிப் போர், பூதிதிகளினின்று சம்பாதிப்போர் முதலியவர்கள்; (3) வியா பாரிகள், வியாபார ஏஜெண்ட்டுகள்; (4) மதப்புரோகிதர்கள், மடாதி பதிகள்; (5) ஜார் ஆட்சிக் காலத்தில் போலீ இலாகாவிலும் ரகசியப் போலீ படையிலும் வேலை செய்தவர்கள், ஜார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதலியோர்; (6) சித்த சுவாதீனமில்லா தர்வகளென்று சட்ட மூலமாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், மற்றொருவருடைய பாதுகாப்பின்கீழ் இருக்கிறவர்கள் முதலாயினோர்; (7) நியாய தலங்களில் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்கள். 1937 - ஆம் வருஷம் புதியதோர் அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன்படி, கடைசியில் சொன்ன இரண்டு பிரிவினருக்குமட்டும், அதாவது (1) சித்த சுவாதீன மில்லாதவர் களென்று சட்ட மூலமாக அங்கீகரிக்கப் பட்டவர்கள் முதலாயி னோர்; (2) நியாயதலங்களில் கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்கள் ஆகிய இவர்களுக்கு மட்டும் ஓட்டுரிமை கிடையாதே தவிர, வயது வந்த மற்றெல்லாருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக்காரணம் என்ன? இருபது வருஷங்களுக்கு முன்னர், எந்தக் காரணங்களுக்காகச் சில பிரிவினருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டதோ அந்தக் காரணங்கள் இருபது வருஷங்களுக்குப் பின்னர் இல்லாமற் போய்விட்டன. அதனால் மறுக்கப்பட் டிருந்தவர்களுக்கு மறுபடியும் உரிமை வழங்கப்பட்டு விட்டது. அதாவது, போல்ஷ்வெக்கர்கள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, சமதர்மக் குழந்தையை வளர்க்க வேண்டியிருந்தது; அதற்காக, அதன் வளர்ச்சிக்கு இடையூறா யிருந்த சக்திகளையெல்லாம் அப்புறப்படுத்தி வைக்க வேண்டியது அவசிய மாயிருந்தது. இப்பொழுது குழந்தை நன்றாக வளர்ந்து யௌவன தசையை அடைந்துவிட்டது. இனி எந்தச் சக்தியும் அதற்கு இடை யூறு செய்ய முடியாது. இடையூறு செய்யக்கூடுமென்று கருதப் பட்ட சக்திகளும் இப்பொழுது சக்தியிழந்துவிட்டன. இனியும் அந்தச் சக்தி களைப் பொருட்படுத்தி அவற்றிற்குச் சட்ட புத்தகத்தில், இடங் கொடுத்துக் கொண்டிருப்பானேன்? ஆகவே, அவற்றை ரத்து செய்துவிட்டனர். எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை நிர்த்தாட்சண்யமாகச் செய்யவோ, பலருடைய நன்மைக்காக ஒரு சிலருடைய சலுகைகளைப் பறிமுதல் செய்யவோ, ஜனங்களுக்கு அதிகமான நன்மை யுண்டாகுமென்று தெரிந்தால் போட்ட திட்டத்தை மாற்றச் செய்யவோ சோவியத் தலைவர்கள் பின் வாங்குவது கிடையாது. இதற்காகப் போற்றுதல் ஏற்படு மானாலும் சரி, தூற்றுதல் ஏற்படுமானாலும் சரி அதை அவர்கள் லட்சியம் செய்வதே இல்லை. அவர்களுடைய நோக்கம் சமுதாய நலன். ஜனங்களுக்கு எதைச் செய்தால் சந்தோஷமா யிருக்கு மோ அதைச் செய்யாமல், எதைச் செய்தால் நன்மையா யிருக்குமோ அதையே அவர்கள் செய்கிறார்கள். சோவியத் ராஜ்யத்தில் இப்பொழுது அனுஷ்டானத்தில் இருந்து வருகிற 1937-ஆம் வருஷத்து அரசியல் திட்டம் பரிபூரண ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது; சிலர், தவறாக நினைக்கிறபடி சர்வாதிகாரத்தை மட்டும் சிகரமாக உடையதல்ல. மனிதனுடைய ஜீவாதாரமான உரிமைகளென்று, புனிதமான உரிமைகளென்று கருதப்படு கின்ற யாவும் இந்தச் சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் அரசியல் அமைப்பானது, சமதர்மக் கட்சி அமைப்பு மாதிரி, ஆறு அடுக்குகள் உள்ள ஒரு கோபுரம்; கிராமத்தில் ஆரம்பித்து தலை நகரத்தில் முடிகிறது. இந்த அமைப்பைப்பற்றிச் சுருக்கமாக இங்குக் கூறுவோம். சோவியத் என்ற வார்த்தைக்குச் சபை என்பது பொருள். முன்னர் இஃது எந்தவிதமான சபையையும் குறிப்பதாயிருந்தது. இப்பொழுது, தொழிலாளர்கள், போர் வீரர்கள், விவசாயிகள் ஆகிய இவர் களுடைய பிரதிநிதிகளடங்கிய ஒரு சபையையே குறிக்கிறது. இதில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், கடைக்காரர்கள், வேலையில்லா தவர்கள் முதலியோர் அங்கத்தினர்களாகச் சேர முடியாது. 1905 - ஆம் வருஷத்துப் புரட்சியின்போது இந்தச் சோவியத்துகள் இயற்கை யாகத் தோன்றி, ஒடுங்கி, மீண்டும் 1917 - ஆம் வருஷத்துப் புரட்சியின் போது தலை தூக்கின வென்பதைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக் கிறோமல்லவா? பீட்ரோகிராட் நகரத்திற்கு லெனின் வந்த பிறகு, இந்தச் சோவியத்துகளைப் பலப்படுத்தி, இவற்றின் ஏகோபித்த பலத்தைக்கொண்டு, 1917-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இவற்றை ஜனசக்தியின் பிரதிநிதிகளாக வலுப்படுத்தினான். இந்த ஜனசக்தியின் பலம் அவனுக்கு இருந்ததனால்தான் எந்தவிதமான எதிர்ப்பையும் அவனால் சாமாளிக்க முடிந்தது. புதிய சமுதாயத்தை அமைக்க முடிந்தது. 1918-ஆம் வருஷம், இந்தச் சோவியத்துகளை அதிவார மாகக் கொண்டு ஓர் அரசியல் அமைப்பு தாபிக்கப்பட்டது. இதுவே, பின்னர் 1923-ஆம் வருஷம் ருஷ்ய சமஷ்டி அரசியல் அமைப்பாக மாறியது. பின்னர் 193 -ஆம் வருஷம், இந்த அரசியல் அமைப்பு, புதிய முறையில் சீர்திருத்தப்பட்டு அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்த அரசியல் அமைப்பின் அடிப்படையிலுள்ள கிராம சோவியத்தைப்பற்றி முதலில் கவனிப்போம். இஃது, ஏறக்குறைய நமது கிராமப் பஞ்சாயத்து மாதிரி; ஆனால் அதைவிட அதிகமான பொறுப்பும் கடமையும் உடையது. இது, மூன்று வருஷத்திற்கொரு முறை தெரிந்தெடுக்கப்படுகிறது. சித்த சுவாதீனமில்லாதவர்கள், குற்றஞ் செய்து தண்டனை அடைந்தவர்கள் ஆகிய இவர்களைத் தவிர்த்து, கிராம எல்லைக்குள் வசிக்கிற, பதினெட்டு வயதுக்கு மேற் பட்ட, ஆண் பெண் எல்லாரும் இதற்குப் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுக்கிற உரிமையுடை யவர்கள். அதாவது இவர்களெல்லோரும் வாக்காளர்கள். இவர்கள் அடிக்கடி கூடி, கிராமப் பொதுவான விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்வார்கள். இதற்கே கிராமக் காங்கிர என்று பெயர். இப்படிக் கூட்டங்கூடிப் பேசுவது தவிர, இவர்கள் மூன்று வருஷத்திற்கு ஒரு முறை கிராம சோவியத்துக்குப் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கிற முக்கியமான கடமையையும் செய்யவேண்டும். நூறுபேருக்கு ஒருவர் விகிதம் பிரதிநிதிகள் தெரிந் தெடுக்கப்படுவார்கள். ஆனால் ஒரு சோவியத்தில் குறைந்த பட்சம் மூன்று பிரதிநிதிகளாவது இருக்கவேண்டும். எனவே, ஒரு கிராமத் தினுடைய ஜனத்தொகையைப் பொறுத்திருக்கிறது, அந்தக் கிராம சோவியத்தின் பிரதிநிதிகளுடைய எண்ணிக்கை. ருஷ்ய கிராமாந் தரங்களில், இந்தத் தேர்தல் கூட்டம் மிகவும் ருசிகரமாயிருக்கும். ஜனங்கள், இதில் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். தேர்தலை நடத்துவதற்கென்று ஒரு தலைவரும், அவருக்கு உதவி செய்யக் கிராமத்துப் பெரியதனக்காரர்களாகப் பத்து பேரும் தெரிந் தெடுக்கப்படுவார்கள். இவர்களுடைய தலைமையில் தேர்தல் கூட்டம் தொடங்கும். கூட்டத்திற்கு மொத்த ஓட்டர்களில் நூற்றுக்கு நாற்பது பேர் விகிதம் ஆஜராகி யிருக்கிறார்களா என்று பார்ப் பார்கள். அந்த விகிதாசாரம் இருந்தால்தான் தேர்தல் நடை பெறும். இல்லாவிட்டால் கூட்டமே தள்ளி வைக்கப்பட்டுவிடும். பிறகு, சோவியத்தில் எத்தனை தானங்கள் உண்டோ அத்தனை தானங்களுக்கும் பெயர்கள் ஒன்றன் பின்னொன்றாய்ப் பிரேரிக் கப்படும். சிலர் நிராகரிக்கப்படலாம்; சிலர் அங்கீகரிக்கப்படலாம். இப்படி மணிக் கணக்கில் நடைபெற்று, கடைசியில் எல்லாப்பிரிதி நிதிகளும் தெரிந்தெடுக்கப்படுவார்கள். இவர்களடங்கியதுதான் கிராம சோவியத். இந்த மாதிரியான கிராம சோவியத்துகள் ருஷ்யாவில் சுமார் எழுபதினாயிரம் இருக்கின்றன. இந்த எழுபதினாயிரம் சோவியத்துகளில் சுமார் இருபது லட்சம் பிரதிநிதிகள் இருக் கிறார்கள். கிராம சோவியத்தின் கடமை விரிவானது. கிராம நிருவாகத் தைக் கவனிப்பதோ டல்லாமல், இது தனக்கு மேற்பட்ட ஜில்லா, மாகாண, தேச விவகாரங்களிலும் சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டு மென்று சோவியத் அரசாங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஒரு கிராம சோவியத்தானது தனது நிருவாக எல்லைக்குள், அரசாங்கத்தின் எல்லாச் சட்ட திட்டங்களும் சரியானபடி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனவா என்பதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்; நீதி தலங்கள் ஏற்படுத்தி எல்லோருக்கும் நியாயம் கிடைக்குமாறு தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எல்லா ஜனங்களும் பங்கெடுத்துக் கொள்ளு மாறு செய்யவேண்டும். கிராமத்திலுள்ள தொழில் தாபனங்கள், கூட்டுப் பண்ணைகள், கல்விச்சாலைகள், கூட்டுறவுப் பண்டக சாலைகள் முதலியவற்றைத் திறம்பட நடத்த வேண்டும்; சுகாதார வசதிகளைக் கவனிக்கவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஜனன மரணக் கணக்குப் பதிவு செய்வதுமுதல், விளக்கேற்றுவது, ரோட்டுப் போடுவது வரை எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும். ஒரு கிராம சோவியத் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டுமென்பதாகச் சுமார் 92 கடமைகள் வரிசைக் கிரமமாக வலியுறுத்தப்பட்டிருக் கின்றன. இந்த ஜாபிதாவைப் பார்க்கிற போது, யாருமே பிரமித்துப் போகக்கூடும்.இந்தக் கடமைகள் யாவும் அப்படியே நிறைவேற்றப் படுகின்றனவா என்று கேட்பதில் பிரயோஜனமில்லை. நிறைவேற்றவும் படலாம்; நிறைவேற்றப் படாமலுமிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், இவைகளை யெல்லாம் செய்வதற்கு உரிமை அளிக்கப்பட் டிருக்கிறதே அதுதான் முக்கியம். இந்த உரிமையை எவ்வளவு தாராளமாக உபயோகிக்கலாமோ அவ்வளவு தாராளமாக உப யோகிக்குமாறு பிரதியொரு கிராம சபையும் அடிக்கடி தூண்டப் பட்டு வருகிறது. இதன் மூலமாக, ருஷ்ய மகா ஜனங்கள் அரசியல் உணர்ச்சி பெறுவதோடு, தங்களுடைய கடமையையும் உணர்ந்து வருகிறார்கள். இதனால் தான் உரிமையினுடைய புனிதத்தன்மை அவர்களுக்கு நன்றாக புலப்பட்டிருக்கிறது. கிராம சோவியத்துக்கு, தலைவர், காரியதரிசி, நிருவாகக் கமிட்டி முதலிய எல்லாச் சம்பிரதாயங்களும் உண்டு. இந்த உத்தியோக தர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால், எல்லோருக்கும் நிருவாக அனுபவம் ஏற்பட வேண்டுமல்லவா? இந்த உத்தியோகதர் களுக்குச் சம்பளம் உண்டு. இவர்கள் வேறெந்த தாபனங் களிலேனும் வேலை செய்து கொண்டிருந்தால்,அந்த தாபனங் களிலிருந்து, கிராம நிருவாகத்தை ஏற்று நடத்திக்கொண்டிருக்கிற காலம் வரையில் இவர்களுக்கு ரஜா கிடைக்கிறது; அதே சம்பளமும் கிடைக்கிறது. அப்படி யில்லாதவர் களுக்குக் கிராம சோவியத்தி லிருந்து கமிட்டியார் நிர்ணயிக்கிறபடி ஒரு தொகை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இவர்கள் - இந்தக் கிராம அதிகாரிகள் - தங் களுக்குக் கிடைத்திருக்கிற இந்தப் பதவியை, அதிகாரம் செலுத்து வதற்கான ஒரு கருவியாக உபயோகியாமல், தொண்டு செய்வதற் கேற்ற ஒரு சந்தர்ப்பமாக உபயோகிக்கிறார்கள். கிராம சோவியத்துக்கு அடுத்தபடியாக உள்ளது நகர சோவியத். இது நகர முனிஸிபாலிடி மாதிரி. இதனுடைய தேர்தல் முறை சிறிது சிக்கலானது. ஒரு பெரிய நகரத்தில் அநேகம் தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்கிறார்கள். இவர்களுக்கு எப்படிப் பிரதி நிதித்துவம் அளிப்பது? சோவியத் தலைவர்கள் என்ன செய் திருக்கிறார் களென்றால், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும், அதிலே வேலைசெய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இத்தனை பிரதிநிதிகள் என்று நிர்ணயித்திருக் கிறார்கள். இது தவிர, தொழிற்சாலைகளில் வேலை செய்கிற தொழிலாளர் அல்லாத மற்ற வர்களுக்கு, ஒரு தெருவுக்கு அல்லது ஒரு பேட்டைக்கு இத்தனை பிரதிநிதிகள் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு, அந்தத் தெருமுனை அல்லது சதுக்கத்தில் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலானது, கிராம சோவியத் தேர்தல் மாதிரி, ஒரு முறை நடந்து முடிந்து போகாது; வடிக்கட்டி வடிக்கட்டிப் பிரதிநிதிகளைத் தெரிந் தெடுக்கிற முறை யில் தேர்தல்கள் நடைபெறும். இதற்காக அநேகம் தேர்தல் கூட்டங்கள் நடைபெறவேண்டியிருக்கும். இந்தத் தேர்தல்கள் மூன்று வருஷத்துக்கொருமுறை நடைபெறுகின்றன. பெரிய நகரங்களா யிருந்தால், ஜனத் தொகைக்குத் தகுந்தபடி நகர சோவியத்தில் ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் அங்கத்தினராயிருப்பார்கள். இந்த ஆயிரக் கணக்கான பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்ய முடியாதல்லவா? இதற்காக நிருவாகசபை அடிக்கடிகூடிப் பொது வாக எல்லா நிருவாக விஷயங்களையும் பரிசீலனை செய்கிறது. ஆனால், நகரசபையின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்கென்று ஒரு காரியக்கமிட்டி உண்டு. இதில் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அங்கத்தினர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வோர் இலாகாவின் நிருவாகப் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். இவர்களுக்கு ஆலோசனை சொல்லவும், வேறுவிதமான உதவிகளைச் செய்யவும், மேற்படி நிருவாகக் கமிட்டியானது, பல உப கமிட்டிகளாகப் பிரிந்து கொண்டு, ஒவ்வொர் இலாகாவுக்கும் ஒவ்வொர் உபகமிட்டி வீதம் வேலை செய்யும். நகரசபையின் அன்றாட வேலைகளில் பழகுவதற் கென்று தொண்டர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதன் மூலமாக, நகரப் பிரஜைகளுக்கு நிருவாகப் பயிற்சி உண்டாகிறது. பெரிய நகரங்களை மொத்தமாக நிருவாகம் செய்யமுடியா தென்பதற்காக, அதனைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு நகரசபை விகிதம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். இதற்குப் பகுதி சோவியத் (ரேயன் ஸோவியத்)1என்று பெயர். ரேயன் என்றால் பேட்டை அல்லது பகுதி என்று அர்த்தம். இதுவும் மேற்படி நகர சோவியத் முறையிலேயே நிருவாகம் செய்யப்படுகிறது. நகர சோவியத்துக்கு அடுத்தபடியாக உள்ளது ஜில்லா சோவியத். இதனை க்ராய் அல்லது ஓப்ளாட்2 என்று அழைப் பார்கள். இது நமது ஜில்லா போர்ட் மாதிரி. பிரதியொரு ஜில்லா வின் தலைநகரத்திலும் அந்த ஜில்லாவின் எல்லைக்குள்ளிருக்கிற சோவியத்துகளினாலும் தெரிந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜில்லா சோவியத் காங்கிர, வருஷத்துக் கொருமுறை கூடுகிறது. இந்தக் காங்கிரசானது ஜில்லா நிருவாகத்திற்காகத் தலைவர், காரியதரிசி, நிருவாக சபை முதலிய உத்தியோகதர்களைத் தெரிந்தெடுக்கிறது. இந்த ஜில்லா சோவியத்துகள் பூரணப் பொறுப் பாட்சி பெற்றவை. தனிப்பட்ட ஒரு ஜாதியார் குறிப்பிட்ட ஒரு ஜில்லா வில் வசிக்கிறார்களென்று சொன்னால், அது பூரணப் பொறுப் பாட்சியுடைய ஒரு தனி மாகாணமாகக் கருதப்பட்டு அதன் பிரகாரமே நடத்தப்பட்டு வருகிறது. ஜில்லா சோவியத்துக்கு மேற்பட்டது மாகாண சோவியத். இவற்றில் சில, பூரணப் பொறுப்பாட்சி பெற்ற பல சிறிய மாகாணங் களைத் தன்னகத்தே கொண்ட சமஷ்டிக் குடியரசு அல்லது மாகாணங்கள் நாடுகளாக இருக்கின்றன. சோவியத் ருஷ்யாவில் இப் பொழுது (1942-ஆம் வருஷத்தில்) பதினாறு குடியரசு நாடுகள் இருக் கின்றன. இவற்றின் சமஷ்டிதான் அதாவது ஐக்கியந்தான் சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் மேற்படி பதினாறு குடியரசு நாடுகளும், பூரணப்பொறுப் பாட்சி பெற்ற பல குடியரசு நாடுகளாக அல்லது சிறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன. உள்ளுக்குள் சுழன்றோடுகிற பல சக்கரங்களைக் கொண்ட ஒரு யந்திரம் மாதிரியுள்ளது சோவியத் அரசியல் அமைப்பு. உதாரண மாக, பதினாறு குடியரசு நாடுகளில் ஒன்றும், மிகப் பெரியதுமான ருஷ்யக்குடியரசு நாட்டில் பதினான்கு குட்டி மாகாணங்கள் ஐக்கியப் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாகாணங்கள், சிலவற்றில், சுயாட்சி யுடைய ஜில்லாக்கள் சமஷ்டியாகச் சேர்க்கப் பட்டிருக்கின்றன. கோபுரம் மாதிரியுள்ள இந்த அரசியல் அமைப்பில், ஒவ்வொரு வரிசையும் , தனக்குக் கீழ் இருக்கப்பட்ட வரிசைகளின் மீது ஆதிக்கஞ் செலுத்த உரிமை பெற்றிருக்கிறது; தனக்கு மேற்பட்ட வரிசைகளின் ஆதீனத்திற்கு அடங்கி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறது. பூரணப் பொறுப்பாட்சி பெற்ற இந்தப் பதினாறு குடியரசு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி காங்கிரகள் உண்டு. அதாவது நமது மாகாண மகாநாடுகள் மாதிரி. இந்த குடியரசு நாடு களின் காங்கிரசுகளுக்கு, ஜில்லா சோவியத், நகர சோவியத், கிராம சோவியத் இவைகளின் மூலமாகப் பிரதிநிதிகள் தெரிந்திருக்கப் படுகிறார்கள். இந்தப் பிரதிநிதிகள் சில வருஷங்களுக்கு ஒரு முறை கூடி, மாகாண நிருவாகத்திற்காக ஒரு நிருவாக சபையைத் தெரிந் தெடுக்கிறார்கள். இந்த நிருவாக சபையில், அந்தந்த மாகாணத்தின் விதீரணத்திற்குத் தகுந்தபடி சுமார் நூறு பேர் முதல் நானூறு பேர் வரையில் அங்கத்தினர்களாயிருக்கிறார்கள். இந்த நிருவாக சபை தான் மாகாணச் சட்டசபை. இது, வருஷத்தில் மூன்று முறையோ நான்கு முறையோ, அந்தந்த மாகாண நிலைமையை அனு சரித்துக் கூடி, சட்ட சம்பந்தமானவையும் நிருவாக சம்பந்தமான வையுமான எல்லா விவகாரங்களையும் கவனிக்கிறது. இந்த நிருவாக சபையினால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு காரியக் கமிட்டி, மாகாண அரசியலை நடத்துகிறது. இதுவே மாகாண மந்திரிச் சபை. இந்த மந்திரிச் சபையானது, அந்தந்த மாகாணத்தின் விதீரணத்தையும் மற்றத் தேவைகளையும் அனுசரித்துச் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். மேலே சொன்ன பதினாறு குடியரசு நாடுகளுக்கும் மேற்பட்டது சமஷ்டி அரசாங்கம். இஃது, அகில ருஷ்ய சோவியத் காங்கிரசினால் தெரிந்தெடுக்கப்படுவது. மூன்று அல்லது நான்கு வருஷத்திற் கொரு முறை கூடுகிற இந்தக் காங்கிரசுக்கு, விசாலமான சோவியத் ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும், ஜனத்தொகையில் சுமார் ஐம்பதினாயிரம் பேருக்கு ஒரு பிரதிநிதி விகிதம் தெரிந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வருகிறார்கள். ஒவ்வொரு காங்கிரசுக்கும் பிரதி நிதிகள் எண்ணிக்கை வித்தியாசப்படுகிறது. இதற்குக் காரணம் ஜனத் தொகையின் சுருக்கப் பெருக்கம். தனித்தனி பாஷைகளைப் பேசுகிற, விதம்விதமான கலாசாரங்களையுடைய, ஒருவரை யொருவர் முன்பின் பார்த்தறியாத, ஆண்பெண் என்ற வித்தியாசமோ, சமதர்மக் கட்சியைச் சேர்ந்தவர் சேராதவர் என்ற வித்தியாசமோ இல்லாத ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் ஒரு இடத்தில் ஒரே மகாநாட்டில் ஒரே நோக்கத்திற்காகக் கூடி, விவகாரங்களை ஒழுங்காக நடத்துகிற காட்சி மிகவும் அற்புத மானது. இதில் வாதப்பிரதிவாதங்களும், அபிப்பிராய வேற்றுமைகளும் வராமலிருப்பதில்லை. ஆனால், எல்லாம் சுமுகமாகவே தீர்க்கப்பட்டு விடுகின்றன. இந்த அகில - ருஷ்யக் காங்கிரசின் முக்கியமான வேலை, நிரு வாகக் கமிட்டியைத் தெரிந்தெடுப்பது. அடுத்த காங்கிர கூடுகிற வரையில் இந்த நிருவாகக் கமிட்டிதான் இருக்கும். இதுவே சமஷ்டி சட்டசபை; இஃது இரண்டு பிரிவினையுடையது. மேல்சபை கீழ் சபை என்கிற மாதிரி. ஆனால் மேலந்தது கீழந்தது என்பது கிடையாது. ஒன்று, சோவியத்து களின் பிரதிநிதிச் சபை; மற்றொன்று, ஜாதீயப் பிரதிநிதிச் சபை, அதாவது, ருஷ்யாவில் விதவிதமான பாஷை, கலாசார பரம்பரை முதலியவற்றை யுடைய பல ஜாதியினர் இருக்கின்றனரல்லவா, அந்த ஜாதியினருக்குத் தனி பிரதிநிதித்துவம் தேவை யென்பதற்காக இந்த ஜாதீய சபை நிர்மாணிக்கப்பட்டிருக் கிறது. சோவியத் சபையில் சுமார் மூன்று லட்சம் பேருக்கு ஒரு பிரதி நிதி விகிதம் தெரிந்தெடுக்கப்பட்ட சுமார் 570 பிரதிநிதிகளும், ஜாதீய சபையில் 575 பிரதிநிதிகளும் இருக்கிறார்கள், இந்த இரண்டு சபைகளும் வருஷத்திற்கு மூன்று அல்லது நான்கு முறைகூடி, சமஷ்டி அரசாங்கத்தின் எல்லாச் சட்ட நிருவாக விவகாரங்களையும் கவனிக்கின்றன. இந்த இரண்டு சபைகளும் சேர்ந்து, அரசாங்க நிருவாகத்தை நடத்துவதற்காக ஒரு மந்திரிச் சபையையும், இந்த மந்திரிச் சபை யோடு ஒத்துழைக்க சில கமிட்டிகளையும் நியமனம் செய்கின்றன. சோவியத் அரசியல் அமைப்பிலேயே இந்த மந்திரிச் சபைதான் நாயகமாயிருப்பது; அதிகார ஊற்றுப்போலிருப்பது. வாசகர்களுக்கு நன்றாகத் தெரியும் பொருட்டு இதனை நாம் மந்திரி சபை என்று அழைக்கிறோமே தவிர, ருஷ்யாவில் இதற்கு இந்தப் பெயரில்லை. ருஷ்ய அரசாங்கத்தின் தலைவர்கள் தங்களை மந்திரிமார்கள் என்று அழைத்துக்கொள்வதோ, அதிகாரிகளென்று கருதிக் கொள்வதோ கிடையாது. ஜனங்களுடைய காரியத்தை நடத்துகிறவர்கள்1 என்று தான் தங்களை அடக்கமாக அழைத்துக்கொள்கிறார்கள் ஜனங் களுடைய காரியத்தை நடத்துகிறவர் களின் சபை2 என்பதே மந்திரிச் சபையின் பெயர். இப்பொழுது முப்பத்திரண்டு மந்திரிகள் இருக் கிறார்கள் இவர்கள்தான் சமஷ்டி அரசாங்கத்தின் அதிகாரிகள். இந்த மந்திரிச் சபை தவிர, தொழில் திட்டக்கமிட்டி, போக்குவரத்துக் களைக் கவனிக்கிற கமிட்டி முதலிய பல கமிட்டிகள் இருக்கின்றன. (1) அந்நிய நாட்டு விவகாரங்கள் (அதாவது சண்டை செய்வது, சமாதானம் செய்து கொள்வது ஒப்பந்தம் செய்து கொள்வது, எல்லையை மாற்றியமைப்பது, அந்நிய நாட்டு தானீகர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்துவது முதலியன) (2) ராணுவம் (3) போக்குவரத்துகள், தபால், தந்தி, ரேடியோ முதலியவை (4) நாணயச் செலாவணி, அரசாங்கப் பண லேவாதேவி விவகாரங்கள் (5) பிரஜா உரிமை (6) நிலம், நீர், சுரங்கம் முதலிய தேசீய சொத்துக்களைப் பராமரித்தல் (7) அந்நிய நாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் (8) பொருளுற்பத்தி, பொருள் விநியோகம் இவைகளைப்பற்றின நிருவாகம் முதலியவை, சமஷ்டி அரசாங்கத்தின் அதிகாரங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி, சமஷ்டி மந்திரிச் சபைக்கும், சமதர்மக் கட்சியின் நிருவாக சபைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உதாராணமாக, அரசாங்கத்தின் எல்லா உத்திரவுகளும், சட்ட திட்டங் களும் சரியானபடி அனுஷ்டிக்கப்படுகின்றனவாவென்பதைக் கவனிப் பதற்காக, சமதர்மக் கட்சியின் நிருவாக சபையானது தனி யாக ஓர் இலாகாவை ஏற்படுத்தி, ருஷ்யாவின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் பரிசோதகர்களை அடிக்கடி அனுப்புகிறது; ஆங்காங்கு நியமனமும் செய்திருக்கிறது. சமதர்மத்தின் வளர்ச்சியிலே, அரசாங்க மும் கட்சியும் எப்படி ஒரே மாதிரி கருத்துடையனவாயிருக்கின்றன என்பதையே இது புலப்படுத்துகிறது. இந்தச் சமஷ்டி அரசாங்கத்தின் மந்திரிச் சபையானது ஏறக் குறைய தினந்தோறும் கூடுகிறது. ஒழுங்கு முறையென்று சொல்லிக் கொண்டு, எந்த ஒரு காரியத்தையும் இங்கே தாமதப்படுத்துவது கிடையாது. மற்றும், மந்திரிச் சபையானது இன்னது செய்யப் போகிறது, இன்னது செய்ய உத்தேசித்திருக்கிறது என்பன போன்ற ஹேஷ்யங்களுக்கும், அநாவசிய மான வதந்திகளுக்கும் அரசாங்கத் தார் இடங்கொடுப்பதில்லை. இதற்குப் பதிலாக அரசாங்கத்தின் ஒவ் வோர் இலாகாவும், அந்தந்த இலாகாவில் என்னென்ன வேலைகள் நடைபெறு கின்றன, இனி நடைபெறப் போகின்றன என்பதைக் குறிப்பிட்டு, வாரத்திற்கொருமுறை அல்லது மாதத்திற்கு கொரு முறை அறிக்கைகள் வெளியிடுகின்றன. இந்த அறிக்கைகள், பத்திரிக் கைகளில் பிரசுரிக்கப்படுகின்றன.; எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கு மாறு செய்யப்படுகின்றன. பொதுஜனங்களின் நம்பிக்கை தான், அரசாங்கத்தின் மூலபலம் என்பதை, சோவியத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சமஷ்டி அரசாங்க இலாகாக்களில் முக்கியமானதொன்று ராணுவ இலாகா. இதற்குப் பாதுகாப்பு இலாகா என்றபெயரே தவிர, யுத்த இலாகா என்பது அல்ல. இஃதொன்றைக் கொண்டே சோவியத் அரசாங்கத்தின் அந்நிய நாட்டுக் கொள்கை சமாதானத்தை அடிப் படையாகக் கொண்ட தென்பது நன்கு புலனாகும். செம்படை யென்று அழைக்கப்படுகிற சோவியத் ராணுவம், மற்ற நாட்டு ராணுவங்களைப் போன்றதன்று. அது ஜனங்களுடைய ராணுவம். ஜனங்களுடைய பாதுகாப்புக்காக அஃதிருக் கிறதே தவிர, ஜனங் களுக்கு மேலே இருந்துகொண்டு ஜனங்களைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதற்காக அல்ல. யுத்தப் பயிற்சிக்காக மட்டுமல்ல, ஜனங்களுடைய கல்விப் பயிற்சிக்காகவும் செம்படை இருக்கிறது. ராணுவத்திலுள்ளவர்கள், தங்களை ஒரு தனி ஜாதியினராக, சாதாரண சமுதாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களைக் காட்டிலும் மேலான ஜாதியினராகக் கருதிக் கொண்டுவிடும்படியான சந்தர்ப்பமோ பயிற்சியோ அளிக்கப்படுவதில்லை. ஒரு விவசாயி அல்லது ஒரு தொழி லாளி அல்லது வைத்தியன் ஆகிய இவர்களைக் காட்டிலும், ஒரு ராணுவ உத்தியோகதன் எந்த விதத்திலும் மேலானவனில்லையென்று ஒவ்வொரு சமதர்ம வாதியும் சித்தாந்தப்படுத்திக் காட்டுவான். ருஷ்யாவில், வயது வந்த எல்லோரும் கட்டாயமாக ராணுவப் பயிற்சி பெற வேண்டுமென்ற விதி அனுஷ்டானத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், விவசாயிகளும் தொழிலாளர்களுமே ராணுவத்தில் பெரும் பாலோராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுப் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். தரைப் படையினர் இரண்டு வருஷ காலமும், ஆகாயப்படையினர் மூன்று வருஷகாலமும், கப்பற் படையினர் ஐந்து வருஷ காலமும் முறையே பயிற்சி பெற வேண்டும். இங்ஙனம் பயிற்சி பெற்றவர்களில் ஒரு சிறு எண்ணிக்கையினரை மட்டும் ஒழுங்கான ராணுவத்தில் சேர்த்துக் கொண்டு விடுகின்றனர். மற்றவர்கள், வீடு திரும்பி அவரவர்களுடைய தொழில்களில் ஈடுபட்டு விடுகின்றனர். வருஷந்தோறும் இந்த மாதிரி ராணுவப் பயிற்சி பெற்றுவிட்டுச் சுமார் ஐந்து லட்சம் பேர் வீடு திரும்பு கின்றனர். இவர்கள் ஒழுங்கான கல்விப் பயிற்சியும் ராணுவப் பயிற்சி யும் பெற்றவர்களாதலினால், எந்தத் தொழிலில் பிரவேசித்தாலும் அதில் ஒழுங்கையும் திறமையையும் நிலைநாட்டுகின்றனர். ருஷ்யா வில், கிராமங்கள், நகரங்கள் முதலியன வெல்லாம் சேர்த்துச் சுமார் ஆறு லட்சம் இருக்கின்றன. இவைகளினுள்ளிருக்கும் எல்லா தாபனங்களிலும் இந்த ராணுவப் பயிற்சியாளர்கள் புகுந்து, உன்ன தமான ஒரு பதவியை வெகு சுலபமாக அடைந்து விடுகின்றனர். கிராம சோவியத்துகளில் பலவற்றிற்கு இவர்கள் தான் தலைவர்கள். கூட்டுறவுப் பண்டகசாலைகளா, கூட்டுறவுப் பண்ணைகளா, எல்லா வற்றிலும் அநேகமாக இவர்கள்தான் அதிகாரிகள். மகாநாடுகளுக்கு விஷயந் தெரிந்தவர்களைப் பிரதிநிதிகளாகப் பொறுக்கி யெடுத்து அனுப்ப வேண்டுமென்பதற்காக இவர்களே தெரிந்தெடுக்கப்படு கிறார்கள். இதனால் வருஷந்தோறும் லட்சக்கணக்கில் ராணுவப் பயிற்சி பெற்று வீடு திரும்புகிறவர்கள், யுத்த காலத்தில் சிறந்த போர்வீரர்கள்; சமாதான காலத்தில் நல்ல பிரசாரகர்கள் - திறமையான நிருவாகிகள்.இவர்கள் மேலே சொன்ன பிரகாரம் இரண்டு வருஷமோ மூன்று வருஷமோ பயிற்சி பெற்றுவிட்டபிறகு, இவர்களுக்கும் ராணுவத் திற்கும் தொடர்புவிட்டுப் போகிறதென்பது அர்த்தமில்லை. பிரதி வருஷமும் சில நாட்கள் ராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதான் இவர்களுக்கு நவீன யுத்த முறைகள் யாவும் தெரியும்; இவர்களுடைய பயிற்சியும் துருப்பிடியாமலிருக்கும். இவர்களில் யார் எந்தத் தொழிலில் ஈடு பட்டிருந்த போதிலும், அரசாங்கம் தனக்குத் தேவையென்று தோன்றினால், அவர்களை ராணுவ சேவைக்கு அழைத்துக் கொள்ளலாம். அப்படி ராணுவத்திலே சேர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறபோது, தொழிலாளர்கள் சங்கத்திலோ, வேறெந்த தாபனத்திலோ அங்கத்தினரா யிருந்திருந்தால், அந்தப் பதவியை ராஜீநாமாச் செய்துவிட வேண்டும். ஆனால், சோவியத் அரசாங் கத்தின் உரிமையுள்ள பிரஜைகள் என்ற முறையில், தேர்தல்களில், தங்களுக் கிஷ்டமான பிரதிநிதிகளுக்கு ஓட்டுப்போடலாம் ; பத்திரிகைகளுக்கு நிருபர்களா யிருக்கலாம்; தாங்களே கூட்டுறவுப் பண்டகசாலைகளை ஏற்படுத்தி அவற்றை நிருவாகம் செய்யலாம். சுருக்கமாகச் சொல்கிற போது, ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், திறமையான போர் வீரர்களா யிருப்பதோடு, செல்வாக்குள்ள பிரஜைகளாகவும் இருக்கிறார்கள். உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் சிறந்த ராஜதந்திரி களாகவோ அரசியல் வாதிகளாகவோ இருக்கிறவர்களில் பெரும் பாலோர் வக்கீல்களே. இவர்கள் அதிகமான வருமானத்தையுடையவர் களாகவும் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் இருக் கிறார்கள். ஆனால் சோவியத் ருஷ்யாவில் வக்கீல்களுக்கு அதிக வருமானமோ செல்வாக்கோ கிடையாது. சோவியத் தலைவர்கள், வக்கீல் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், நீதி வழங்குகிற முறையை அவர்கள் சிக்கலாக வைக்கவில்லை. தவிர, ருஷ்யாவில் பணச் செல்வாக்கைக் கொண்டு நீதியை வாங்கிட முடி யாது. மற்றும், நீதி வழங்குகிறவர்களுக்கும் நீதி கோருகிறவர்களுக் கும் நேரான தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் அங்கே வக்கீல்கள் இருக்கிறார்கள்; வக்கீல் தொழிலும் நடக்கிறது; ஆனால் புதிய முறையில். எப்படியென்றால், அரசாங்கத் தார், வக்கீல்களுக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டப் பரீட்சையில் தேறினவர்கள், அல்லது ஏறகனவே நீதி இலாகாவில் இரண்டு வருஷகாலம் உத்தியோகம் பார்த்தவர்கள் முதலியோர் இந்தச் சங்கத்தில் அங்கத்தினராகப் பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள். சட்ட சம்பந்தமாக இவர்கள் யாருக்கும் ஆலோசனை சொல்லக் கடமைப்பட்டவர்கள். இன்னின்ன மாதிரி யான வழக்குகளுக்கு ஆஜரானால் இவ்வளவு இவ்வளவு கட்டணம் என்று ஒரு திட்டம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்தத் திட்டப் படியே இவர்கள் கட்சிக்காரர்களிடமிருந்து கட்டணமும் வசூலிக்க வேண்டும். ஆனால் கட்சிக்காரர்கள் ஏழைகளாகவோ, நோயாளி களாகவோ, வயதான பென்ஷனர்களாகவோ இருந்தால் அவர் களிடத்திலிருந்து எவ்விதக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. பொது வாக, கட்சிக்காரர்களுடைய பொருளாதார நிலைமைக்குத் தக்க வாறு கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், இப்படி வசூலிக்கிற கட்டணத்தை மேற்படி சங்க நிதியில் சேர்ப்பித்துவிட வேண்டும். இதற்குப் பிரதியாக ஒவ்வொரு வக்கீலுக்கும் அவரவருடைய திறமைக்கும் வேலைக்கும் தகுந்தபடி மாதந்தோறும் ஒரு தொகை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயமென்னவென்றால், மேற்படி வக்கீல் சங்கத்திலே அங்கத்தின ராகப் பதிவு செய்து கொள்ளாத யாரும், வக்கீல் தொழிலை நடத்த முடியாது; நடத்தக்கூடாது. வக்கீல்களில் பெரும்பாலோர் வைத்தியர் களைப் போலவும், நூலாசிரியர் களைப் போலவும் சமதர்மக் கட்சியில் சேராமல் ஒதுங்கியே இருக்கிறார்கள். அப்படி யிருந்தால் தான் தங்கள் கடமையைத் தாங்கள் நிஷ்பட்ச பாதமாகச் செய்ய முடி யும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இதை அரசாங்கமும் ஆதரிக்கிறது. ருஷ்யாவில், எந்த அரசியல் பண்டிதரையும் பிரமிக்கச் செய்யக் கூடிய சிறுபான்மைச் சமுகத்தினரைப் பற்றிய பிரச்னை. ஆனால், சோவியத் தலைவர்கள் இதனை மிகச் சாமர்த்தியமாகத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் டாலின். இவன் ஜார்ஜியர்கள் என் ற சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன்; எல்லா ஜாதியாருடைய கஷ்ட நிஷ்டூரங்களையும் நன் றாக அறிந்தவன். இதனாலேயே லெனின், இந்தச் சிக்கலான பிரச்னையைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை இவனிடம் ஒப்பு வித்தான். இவனும் இதனைச் சாமர்த்திய மாகத் தீர்த்துவைத்திருக் கிறான். இதற்கு இவன் நான்கு வருஷகால உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஜார் ஆட்சிக் காலத்தில் ருஷ்யாவில் வசிக்கும் பலவகைப் பட்ட ஜாதியினருடைய நிலைமை மகாமோசமாயிருந்தது. உரிமை மறுப்பு, வறுமை வாழ்க்கையும், அறியாமைப் போராட்டமும் இவர் களுடைய கூடப்பிறந்த சகோதரர்களாயிருந்தன. வருஷந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் இறந்துபோவது அப்பொழுது சர்வ சாதாரண சம்பவம். ருஷ்யா, பல ஜாதியாரைக்கொண்ட ஒரு சிறைக் கூடம் என்று லெனின் சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. 1917ஆம் வருஷம் நவம்பர் மாதம் புரட்சி ஏற்பட்டு போல்ஷ் வெக்கர்கள் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. ருஷ்யாவில் வசிக்கும் எல்லா ஜாதியாருடைய உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப் படும் என்று 1917-ஆம் நவம்பர் மாதம் பதினைந்தாந்தேதியிட்டு ஓர் அறிக்கை வெளியிடப் பெற்றது. இதன்படி, ருஷ்யாவிலுள்ள சகல ஜாதியாருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உண்டு என்று அங்கீகரிக்கப்பட்டது. அவரவர்களுக்கும் சுயநிர்ணய உரிமை அளித்து, இஷ்டப்பட்டால் தனியான ஒரு நாட்டினராகப் பிரிந்து தனியான ஓர் அரசாங்கம் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறப் பட்டது. இவர்கள் இஷ்டப்பட்டால் சமஷ்டியில் சேரலாம்; இல்லா விட்டால் ஒதுங்கி யிருக்கலாம். ஜாதி காரணமாகவோ மதம் காரணமாகவோ யாருக்கும் எந்தவிதமான விசேஷ உரிமையோ சலுகையோ கிடையாது. ஒவ்வொரு ஜாதியாருடைய கலை, தொழில், சம்பிரதாயம், நாகரிகபரம்பரை முதலியன வளர்ச்சி பெறு வதற்கு எல்லா வசதிகளும் சந்தர்ப்பங்களும் அளிக்கப்பட்டன. எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும் உழைத்துப் பிழைக்கிறவர்கள் என்ற முறையில் எல்லோரும் ஓரினம் என்ற உணர்ச்சியைப் பொது ஜனங்களுக்கு வலியுறுத்திக் காட்டு வதிலே சோவியத்தலைவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர்; இந்த உணர்ச்சியைக் கொண்டுதான், ஆரம்பத்தில் ஏற்பட்ட வெளிநாடு களின் எதிர்ப்பு, உள்நாட்டுக் குழப்பம் முதலிய இடையூறுகளை யெல்லாம் சமாளித்தனர்; பின்னர் இந்த உணர்ச்சியை வளர்த்தும் வந்தனர். ஜாதிப் போராட்டம், மதப்போராட்டம் முதலியவற்றிற் கெல்லாம் அடிப்படையான காரணம் பொருளாதாரத்திலேயுள்ள ஏற்றத்தாழ்வுகள்தான். இந்த ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, அரசியலில் எல்லோருக்கும் சம உரிமை அளித்து விட்டார்கள். ஜாதிப் போராட் டங்களும் நின்றுவிட்டன. அவரவருடைய கலைகள், நாகரிகங்கள் முதலியன வளர்ச்சியடையத்தொடங்கின. 1937ஆம் வருஷத்து அரசியல் திட்டத்தின் 123வது பிரிவில் இந்த ஜாதீய சமஉரிமை பின்வருமாறு அழகாக வற்புறுத்தப்பட்டி ருக்கிறது: சோவியத் ருஷ்யாவிலுள்ள எல்லாக் குடிமக்களும், அவர்கள் எந்த ஜாதியினராக அல்லது எந்தச் சமூகத்தினராக இருந்த போதிலும், பொருளாதரம்,ராஜ்ய விவகாரம், கலாசாரம், சமுதாயம், அரசியல் முதலிய எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் சம உரிமை உண்டு. இதை யாரும் மாற்ற முடியாது. ஜாதி காரணமாக அல்லது சமூகங் காரணமாக எந்த ஒரு பிரஜைக்கேனும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ உரிமைகள் மறுக்கப்பட்டாலும், அல்லது விசேஷ சலுகைகள் வழங்கப்பட்டாலும், அல்லது ஒரு ஜாதிக்கும் மற்றொரு ஜாதிக் கும் பிரிவினையோ துவேஷமோ வெறுப்போ உண்டுபண்ணக் கூடிய விதமாக வாதம் செய்தாலும், இவை யாவும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். அந்தந்தப் பிரதேசத்தில் வசிக்கிற ஜாதியர் அல்லது சமூகத் தாருடைய மனப்பான்மைக்கும், நாகரிகத்திற்கும் ஏற்றாற்போல் தனித்தனியான அரசியல் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ருஷ்ய சமஷ்டியில் இணங்கிச் செல்லக்கூடிய மாதிரி யாகவே இவை இருக்கின்றன. சமஷ்டியிலிருந்து பிரிந்துசெல்லவும் இவைகளுக்கு உரிமை உண்டு. ஆனால், இவை பிரிந்து செல்வதில்லை. பொதுவாக, எல்லோருக்கும், ராஜாங்க பாஷையாக இருக்கிற ருஷ்ய பாஷை தெரிந்திருக்க வேண்டு மென்பதிருந்தாலும், அந்தந்த ஜாதி யாருடைய பாஷைகள், கலைகள் முதலியன யாவும் போற்றி வளர்க்கப்படுகின்றன. இந்த ஜாதீய உரிமைகளுக்குப் பழுது நேரிடா வண்ணம் பாதுகாப் பதற்காகவே, ஜாதீயப் பிரதிநிதித்துவமுடைய ஜாதீய சபை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஜாதீய உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருவதன் விளைவு என்னவென்றால், மிகவும் பிற்போக்கடைந்திருந்த ஜாதியார், வெளியார் பார்த்துப் பிரமித்துப் போகக்கூடிய மாதிரி முற்போக்கு அடைந்திருக்கின்றனர். இவர்களுடைய பிரதேசங்கள், செழுமை யுற்று, அநேகம் உலோகப் பொருள்களை உபயோகத்திற்குக் கொணர்கின்றன. எங்குப் பார்த்தாலும் தானியங்களை உதிர்க்கும் நிலங்கள்; பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்; அறியாமையைத் துரத்திவிட்ட ஆண்கள்; அடிமை மனப்பான் மையை ஒழித்த பெண்கள். ருஷ்யாவிலே இஃதொரு புதுமை! சம தர்மத்திற்கு ஒரு பெருமை! ஓர் இருபது வருஷகாலத்திற்குள் இந்த ஆச்சரியகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக காஜக்தான் என்ற பிரதேசத்தில் முன்னர் ஒரு பையன் பள்ளிக் கூடத்திற்குப் போய் கொண்டிருந்தான் என்று சொன்னால், இப்பொழுது 58 பிள்ளைகள் போகிறார்கள். இப்படியே, அர்மீனியா வில் ஒருவருக்கு 68 பேராகவும், கிர்க்கிஜியாவில் 172 பேராகவும் பள்ளிக்கூடங் களுக்குப் போகிற பிள்ளைகள் அதிகமாயிருக்கிறார் கள். உக்ரேன் பிரதேசத்தில் முன்னர் 15 சர்வகலாசாலைகள் இருந்தன; இப்பொழுது 139 இருக்கின்றன. முன்னர் அநேக பாஷைகள் பேச்சு வழக்கில் மட்டும் இருந்தன; எழுத்துக்களில்லை. இவைகளுக்கெல்லாம் இப்பொழுது எழுத்துக்கள் சிருஷ்டிக்கப்பட்டு நூல்களும் வெளி யாகியிருக்கின்றன. வாழ்க்கையிலே ஒரு சுதந்திரம் ஏற்பட்டு விட்ட படியால், ஜனங்களுடைய சிருஷ்டி சக்தி அதிகரித்துக் கொண்டு வருகிறது. புதிய புதிய கவிஞர்களும், புதிய புதிய ஆசிரியர்களும் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயப் பண்ணைகளுக்குப் போட்டியாக இலக்கியப் பண்ணைகள் செழுமை யடைந்து வருகின்றன. இப்படி ஒவ்வொரு ஜாதியாருக்கும், அவரவருடைய பாஷை, கலை, நாகரிகம் முதலியவற்றைப் போற்றி வளர்க்கும் விஷயத்தில் பரிபூரண உரிமை அளித்துவிட்டு, அதே சமயத்தில் எல்லோரையும் ஒரே மாதிரியான அரசியலில் ஐக்கியப்பட்டிருக்கும்படிச் செய்து விட்டதன் மூலமாக, சோவியத் அரசாங்கத்தார், சிறுபான்மைச் சமூகத்தினரைப் பற்றிய சிக்கலான பிரச்சினையைச் சுலபமாகத் தீர்த்துவிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; திரமானதோர் ஐக்கிய ராஜ்யத்தையும் தாபித்திருக் கின்றனர். ருஷ்யாவிலே ருஷ்யர்கள் தான் அதிகம். எல்லோரையுமே, சிறு பான்மைச் சமூகத்தினர் அத்தனைப்பேரையுமே, ருஷ்ய நாகரிகத்தை அனுசரிக்கும்படி செய்து, தேச முழுவதையும் ருஷ்யமயமாக்கியிருக் கலாம். ஆனால், சோவியத்தலைவர்கள் அப்படிச் செய்யவில்லை. ராஜ்யத்தின் பெயரோடு ருஷ்யா என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை. அப்படிச் சேர்ப்பதனால் ருஷ்யர் களுக்கு ஒரு முக்கியத்துவமோ முதன்மையோ கொடுத்த மாதிரியாகு மென்று கருதி, சோவியத் ஐக்கிய ராஜ்யம் என்றே அழைக்கத் தொடங்கினார்கள். இந்த ராஜ்யத்தில், ஜாதி, மத, சமூக வேற்றுமை களின்றி எல்லோர்க்கும் ஒரே மாதிரியான உரிமை, கடமை, சந்தர்ப்பம் முதலியன வெல்லாம் உண்டு. உண்டு என்று சொன்னால், ஏட்டளவோடு மட்டுமல்ல; நடைமுறையிலும் கூட, உலகத்திலே வேறெந்த நாட்டிலும், இந்தமாதிரியான சமஉரிமை அனுபவம் கிடையாது. வடமகா சமுத்திரத்திலிருந்து தெற்கே கருங்கடல் வரையில் விசாலித்திருக்கும் சோவியத் ஐக்கிய ராஜ்யத்தில்தான், நிறபேதம், பாஷை வித்தியாசம், பழக்க வழக்க வேற்றுமை முதலிய எதனையும் பாராட்டாமல் யாரும் யாருடனும் தாராளமாகக் கலந்து பழகலாம்; ஒரே மாதிரி உரிமையோடு ரெயில் முதலியவற்றில் பிர யாணம் செய்யலாம்; ஹோட்டலில் சாப்பிடலாம்; பள்ளிக் கூடங் களிலாகட்டும், நாடகக்கொட்டைகைகளிலா கட்டும், யாரும் யார் பக்கத்திலும் உட்காரலாம்; பரபரக் காதல் இருக்குமானால், யாரும் யாரையும் விவாகம் செய்து கொள்ளலாம்; திறமைக்குத் தகுந்தபடி யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். வரி செலுத்துவது முதல் தேவலாயத்தில் தொழுவதுவரை எல்லோருக்கும் ஒரே விதமான உரிமை உண்டு. உத்தியோக நியமன விஷயத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது அங்குக் கிடையாது. உலகத்திலே வேறெந்த நாட்டில், இந்த மாதிரி சமத்துவ உரிமை அளிக்கப்பட்டிருக்கிற தென்று சோவியத் தலைவர்கள் பெருமையோடு மற்ற நாட்டினரைப் பார்த்துக் கேட்பார்களானால், அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? சோவியத் அரசியல் அமைப்பானது, பரிபூர்ண ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதென்று ஏற்கனவே கூறியுள்ளோம். வயது வந்த, அதாவது பதினெட்டு வயதான யாருக்கும் அங்கு ஓட்டுரிமை உண்டு. இவ்வளவு ஆதி மதிப்புடையவர்கள்தான், இத்தனையாவது வகுப்பு வரை படித்தவர்கள்தான், இவ்வளவு தொகை வரி செலுத்துகிறவர்கள்தான் ஓட்டுக் கொடுக்கலாம் என்கிற மாதிரியான நிர்ப்பந்தங்கள் ஒன்றுமே கிடையாது. தவிர, ஒவ்வொருவரும் நேர்முகமாக ஓட்டுக் கொடுத்து, தங்களுக்கு இஷ்டப்பட்டவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கலாம். இப்படி ஓட்டுக் கொடுத்துவிட்டதன் மூலமாகத் தங்களுடைய கடமையைச் செய்துவிட்டதாகவோ, உரிமையைச் செலுத்திவிட்ட தாகவோ எந்த ஒரு பிரஜையும் திருப்தியடைந்துவிட முடியாது. அரசாங்கத்திற்குப் பிரஜைகள் செய்யவேண்டிய கடமைகளும், பிரஜை களுக்கு அரசாங் கத்தார் செய்ய வேண்டிய கடமைகளும் முறையே சட்ட பூர்வமாக நிர்ணயிக்கப் பட்டிருக் கின்றன. வரி செலுத்துகிற கடமையை ஒழுங் காகச் செய்து கொண்டுவருகிற ஒரு பிரஜை, அரசாங்கத்தினிட மிருந்து சில உரிமைகளையும் எதிர்பார்க்கலாமல்லவா? இந்த உரிமைகளும் கடமைகளும் சட்டத்தில் இடம் பெற்று புனிதத் தன்மை அடைந் திருக்கின்றன. இவற்றின் சாரத்தைக் கீழே தருகிறோம். 1. சோவியத் ராஜ்யத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனப்போக்கின்படி வேலைசெய்ய உரிமையுண்டு. தேச திடமுள்ள எல்லோருக்கும் வேலை அமர்த்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. ஆனால், எந்த ஒரு தனி நபரும், மற்றவர்களை வேலைக் கமர்த்தி அதன் மூலமாகச் சம்பாதிக்கக் கூடாது. 2. வேலை செய்கிற ஒவ்வொருவருக்கும் ஓய்வு பெற உரிமை உண்டு. இதற்காக, காரியாலங்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றில் இததனை மணிநேரந்தான் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும், இவ்வளவு காலம் சம்பளத்துடன் ரஜா பெறவேண்டும் என்று சட்டபூர்வமாக நிர்ணயிப்பதும், அப்படி ரஜா பெற்றுக்கொண்ட காலத்தை உபயோகமான முறையில் செலவழிப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதும் அரசாங்கத் தின் கடமைகள். 3. மூப்பினாலோ, நோய் காரணமாகவோ, தேகபல மின்மையாலோ வேலை செய்யமுடியாதவர்களாகி விடுகிற வர்கள், அரசாங்கத்தின் பாதுகாப்பை எதிர்பார்க்க உரிமையுடை யவர்கள். இதற்காக ஆபத்திரிகள், ஆரோக்கிய தலங்கள் முதலியவைகள் ஏற்படுத்துவதும், நோயாகிவிட்ட காலத்தில் ஜீவனத்திற்குப் போதுமான அளவு திரவிய சகாயம் செய்வதும், புஷ்டி தரும்படியான ஆகாரவகைகள் ஜனங்களுக்குப் போது மான அளவு கிடைக்கும்படி செய்வதும், வயோதிகர்களுக்கு உபகாரச் சம்பளம் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமைகளாகும். 4. ஒவ்வொருவருக்கும் கல்வியறிவு பெறுவதற்கு உரிமை உண்டு. இதற்காகக் கல்விச்சாலைகளை ஏற்படுத்து வதும், கல்விச்சாலை களுக்குச் சென்று படிக்க முடியாதவர் களுக்கு வேறு விதமான கல்வி வசதிகள் செய்து கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமைகள். 5. ஆண்களைப்போலவே பெண்களுக்கும் அரசியல், பொருளாதாரம், சமுதாய வாழ்வு முதலிய எல்லாத் துறை களிலும் ஒரேவிதமான உரிமைகள் உண்டு. தாய்மைக் கடமையை நிறைவேற்றுவதற்கான சௌகரியங்களைப் பெண்களுக்குச் செய்து கொடுத்தல், சிசுபோஷண சாலைகள் ஏற்படுத்துதல் முதலியவற்றைச் செய்வது அரசாங்கத்தின் கடமைகள். 6. ஜாதி, நிற, மத, சமூக வேற்றுமைகளில்லாமல் எல்லாப் பிரஜை களுக்கும் ஒரேவிதமான உரிமை உண்டு. மேற்படி ஜாதி, நிற, மத, சமூக வேற்றுமைகளை வளர்க்கக்கூடிய மாதிரி யாகவோ, ஒரு சாராருக்கும் மற்றொரு சாராருக்கும் துவேஷம் உண்டு பண்ணக் கூடிய மாதிரியாகவோ செய்யப்படுகிற எந்த முயற்சியையும் அடக்குவது அரசாங்கத்தின் கடமை. 7. தங்களுக்கிஷ்டப்பட்ட மதத்தை அனுசரிப்பதற்கோ அல்லது எந்த மதத்தையும் அனுசரியாமலிருப்பதற்கோ ஒவ் வொருவருக்கும் உரிமையுண்டு. இதற்காக, மதத்தினின்று அரசியலைப் பிரித்து விடுவதும், பள்ளிக்கூடங்களில் மத போதனைகள் இல்லாமற் செய்துவிடுவதும் அரசாங்கத்தின் கடமைகளாகும். 8. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடுகிற உரிமை, ஊர்வலமாகச் சேர்ந்து செல்கிற உரிமை ஆகிய உரிமைகள் எல்லாருக்கும் உண்டு. இதற்காக, பொது மண்டபங்களை நிர்மாணித்துக்கொடுப்பதும், பத்திரிகைகள், புத்தகங்கள் முதலியவற்றை வெளியிடுவதற்குத் தேவையான அனுகூலங் களைச் செய்து கொடுப்பதும், மேற்படி உரிமைகளை அனுபவிப் பதற்கு இன்னும் என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து கொடுப்பதும் அரசாங்கத்தின் கடமைகளாகும். 9. தங்களுடைய அபிப்பிராயங்களை ஒரு முகப்படுத்தி வெளியிடுவதற்கும், அரசியல் சம்பந்தமான கடமைகளை நிறை வேற்றுவதற்கும் அனுகூலமாகச் சங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள எல்லா ஜனங்களுக்கும் உரிமையுண்டு. இதற்காகத் தொழிற் சங்கங்கள், இலக்கிய சபைகள், விஞ்ஞானக் கழகங்கள் முதலிய வற்றை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை. சமதர்மத்தை வளர்ப்பதற்காக, சமதர்மக்கட்சி யொன்றை ஆதரிப்பது அரசாங்கத்தின் கடமை. 10. கோர்ட்டு உத்தரவில்லாமல் யாரும் கைது செய்யக் கூடாது. 11. பிரஜைகளின் வாசதலங்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாப்பதும் அவர்களுடைய கடிதப் போக்குவரத்து கள் ரகசியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வதும் அரசாங்கத்தின் கடமைகள். 12. ஒரு குடும்பத்தைப் போஷித்துக் காப்பாற்றி வருகிறவர் இறந்து விட்டால், அந்தக் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்வது அரசாங்கத்தின் கடமை. 13. சமுதாய சொத்துக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜை யினுடைய கடமை. 14. தாய்நாட்டைப் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையி னுடைய புனிதமான கடமை. அப்படியே, தேசத் துரோகிகள், தேசத்தின் ராணுவ பலத்தைப் பற்றி இகழ்ச்சியாகப் பேசுகிற வர்கள், சத்துருக்களுக்கு உளவு சொல்கிறவர்கள் முதலியவர் களைக் கடுமையாகத் தண்டிப்பது அரசாங்கத்தின் கடமை. 7. பொருளாதார திட்டம் சோவியத் ஆட்சியில் காணப்படுகிற விசேஷ அமிசம் என்ன வென்றால், தேசத்தின் பொருளாதார வாழ்க்கையை ஒரு திட்டத் திற்குட்படுத்தி ஒழுங்காக வளர்த்து வருவதுதான். அதாவது பொருள்களை உற்பத்தி செய்வது, அவைகளை விநியோகிப்பது, ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குவது முதலிய எல்லா விவகாரங்களையும் இன்னின்ன மாதிரிதான் செய்யவேண்டு மென்று திட்டம் போட்டுக் கொண்டு அதன் பிரகாரம் நடத்திக் கொண்டு வருதலையே இது குறிக்கிறது. இப்படித்திட்டம் போட்டுக் கொண்டு வேலை செய்வதன் நோக்க மென்னவென்றால், ஜனங்களுடைய தேவைகளைச் சுலபமாகவும் மலிவாகவும் பூர்த்தி செய்விக்க வேண்டு மென்பதுதான். முதலாளித்துவத்தை அடிப்படை யாகக்கொண்ட நாடுகளில் ஜனங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்லிக்கொண்டு, ஒரு சிலர் கொழுத்த பணக்காரர் களாகிறார்கள். சோவியத் பொருளாதாரத் திட்டமுறையானது இதைத் தடுக்கிறது. சென்ற பதினைந்து வருஷகாலமாக, உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் பொருளாதார மந்தம், வியாபார நெருக்கடி, வேலை யில்லாத் திண்டாட்டம் முதலிய சொற்றொடர்களை அடிக்கடி கேட்டு வருகிறோம். சமுதாயத்தின் பலதரத்தினரும் இந்த நெருக்கடி களினால் அவதிப் பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தும் வருகிறோம். அரசியல் பண்டிதர்கள், பொருளாதார நிபுணர்கள் முதலியோர் இவற்றிற்குப் பரிகாரம் காணமுடியாமல் திகைக்கிறார்கள். ஒரு பிரதேசத்தில் நெல் ஏராளமாக உற்பத்தியாகிறது. அதே பிரதேசத் தின் மற்றொரு மூலையில் ஜனங்கள் சாப்பாட்டுக்கில்லாமல் திண்டாடுகிறார்கள். அழையாத விருந்தினர்களாக அவ்வப் பொழுது வந்து கொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, பஞ்சம் முதலியவை களைச் சமாளிக்க முடியாமலும், அந்தக் காலங்களில் வயிற்றுக் கில்லாமலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் மடிந்து போவதை நாம் கவனித்துக்கொண்டுதான் வருகிறோம். இவற்றிலிருந்து விமோசனம் பெறுவதற்கு வழி தெரியவில்லை. கடைசியில் கர்மம், தலைவிதி என்ற சொற்களில் தஞ்சம் புகுந்து ஆறுதலடைகிறோம். ருஷ்யாவில் இந்த மாதிரியான அவதைகளுக்கெல்லாம் பரிகாரம் கண்டுபிடித் திருக் கிறார்கள். அதுதான் பொருளாதரத் திட்டம். சோவியத் அரசியல் சட்டத்தில், இந்தப் பொருளாதாரத் திட்டம், அதாவது தேசத்தின் பொருளாதார வாழ்க்கையை ஒரு திட்டப்படி வளர்த்து வர வேண்டுமென்பது, நிரந்தரமான இடம் பெற்றிருக்கிறது. மேற்படி அரசியல் சட்டத்தின் பதினோராவது பிரிவு பின்வருமாறு கூறுகிறது.: தேசத்தின் செல்வத்தைப் பெருக்கவேண்டும், தொழிலாளர் களுக்கு அதிகமான சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையைப் பண்பட்ட நிலைக்கு உயர்த்தவேண்டும், தேசத்தின் சுதந்திரத்தை வலுப்படுத்தி அதன் தற்காப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யவேண்டும், ஆகிய இந்த மாதிரியான நோக்கங்களை அடைவதற்காகத் தேசீயப்பொருளா தாரத் திட்டம் வகுக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின் அநுஷ் டானத்தை யொட்டியே சோவியத் ஐக்கிய ராஜ்யத்தின் பொருளா தார வாழ்க்கை நிர்ணயிக்கப் படுகிறது.. 1917-ஆம் வருஷம் போல்ஷ்வெக்கர்கள் அரசாங்க நிருவாகத் தைக் கைப்பற்றிக்கொண்டபோது, தேசத்தின் பொருளாதார நிலைமை மிகவும் கேவலமாயிருந்தது. தொழிற்சாலைகள் சீரழிந்து கிடந்தன. அவற்றிலிருந்து உற்பத்தியாகிற பொருள்கள் ஒன்றுக்கு கால்வாசியாக குறைந்துவிட்டன. உணவுப் பஞ்சம் வந்து இலட்சக் கணக்கான பேரைப் பலி வாங்கிக்கொண்டது. இந்த நிலைமையி லிருந்து சமாளிக்க வேண்டுமானால், ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அதன் பிரகாரம் பொருளுற்பத்தி, பொருள் விநியோகம் முதலிய வற்றைச் செய்து வரவேண்டு மென்று லெனினும் அவனுடைய சகாக்களும் தீர்மானித் தார்கள். அப்படிப் போடுகிற திட்டம் வெற்றி கரமாக நடைபெறுவதற்கு, தேசத்தின் நிலபுலங்கள், பொருளுற்பத்திச் சாதனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் முதலிய அனைத்தையும் பொதுவுடைமைகளாக்குவது அவசியமாயிருந்தது. அப்படியே ஆக்கினார்கள். முதலில் தேசத்தை மின்சார மயமாக்க வேண்டு மென்று திட்டம் போட்டு ஆங்காங்கு மின்சார உற்பத்தி நிலையங்கள் நிறுவினார்கள். இவற்றின் துணைகொண்டு, தொழிற்சாலைகள் தாபித்து பொருளுற்பத்தியை விருத்திசெய்து, யுத்தத்திற்கு முன்னிருந்த அளவுக்குக் கொண்டுவந்தார்கள். இதற்குச் சுமார் ஏழு வருஷகாலம் பிடித்தது. இந்தக் காலத்தைத்தான் பொருளா தாரத் திட்ட காலம் என்று சொல்வது. இதற்குப் பிறகு, ஐந்து வருஷத்திற் கொரு திட்டம் வகுத்துக்கொண்டு அதன்படி பொருளுற்பத்தியை அதிகரிக்கச் செய்து ஜனங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்கள். 1928 ஆம் வருஷத்திலிருந்து, 1932 -ஆம் வருஷம் வரை முதல் ஐந்து வருஷத் திட்டம்; 1933 -ஆம் வருஷம் முதல் 1937-ஆம் வருஷம் வரை இரண்டாவது ஐந்து வருஷத் திட்டம்; 1938 -ஆம் வருஷத்திலிருந்து மூன்றாவது ஐந்து வருஷத் திட்டம். இது தீவிரமாக நிறைவேற்றப்பட்டு வந்துகொண்டிருக்கிற தருணத் திலேயே துரதிருஷ்ட வசமாக ருஷ்யா- ஜெர்மானிய யுத்தம் ஏற்பட்டு விட்டது. இங்ஙனம் திட்டங்கள் போட்டு வேலை செய்வது ஆச்சரிய மில்லை. எந்தெந்தக் காலத்தில் எது எது தேவை, எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்ய முடியும் என்பவைகளை அநுசரித்தும், தேசத்தின் பாதுகாப்பு, ஜனங் களுடைய சக்தி, கையிலிருக்கப்பட்ட சாதனங் கள், எதிர்பார்க்கிற சாதனங்கள் முதலியவைகளை அநுசரித்தும் இந்தத் திட்டங்கள் வகுக்கப் படுகின்றனவே அதுதான் ஆச்சரியம். உதாரணமாக, முதல் ஐந்து வருஷத் திட்டத்தின்போது, ஜனங் களுடைய அன்றாட உபயோகத்திற்கான சாமான்கள் உற்பத்தி செய்வதை ஓர் அளவுக்கு உட்படுத்திக்கொண்டு, நிலக்கரி உற்பத்தி, பூமியிலிருந்து எண்ணெய் உற்பத்தி முதலியவைகளை அதிகரிக்கச் செய்வதிலேயே சோவியத் தலைவர்கள் அதிக கவனம் செலுத்து கிறார்கள். இந்தப் பொருளுற்பத்தி விஷயத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா விவகாரங்களிலுமே சோவியத் தலைவர்கள் இடம், பொருள், ஏவல்களை அநுசரித்து, நிதானமாகச் சென்றிருக்கிறார்கள்; படிப் படியாக ஒன்றை முடித்துக்கொண்டு மற்றொன்றிற்குச் சென்றிருக் கிறார்கள். ஒரே காலத்தில் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட வேண்டுமென்ற பேராசையும் அவர்கள் கொள்ளவில்லை; அல்லது ஒரு தேசத்தினுடைய வாழ்விலே ஒரு தலைமுறைக் காலம் எவ்வளவு சொற்ப காலம் என்று சொல்லிக்கொண்டு நத்தை மாதிரி மெது மெதுவாக ஊர்ந்து செல்லவுமில்லை; சமுதாய நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எந்த ஒரு விவகாரத்தையும் நடத்தி வந்திருக்கிறார்கள். இந்தப் பொருளாதாரத் திட்டங்கள் எப்படி வகுக்கப்படுகின்றன என்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். சோவியத் அரசாங்கம் மந்திரிச் சபை இருக்கிறதல்லவா, அதனைச் சேர்ந்தாற் போலவே, பொருளா தாரத் திட்டக் கமிஷன்1 என்ற தனியான ஒரு சபை இருக்கிறது. இது, மந்திரி களால் நிருவகிக்கப்படுகிற மற்ற இலாகாக்களைப் போன்ற ஒன்று அல்ல. மந்திரிகளில் ஒருவர் அல்லது இருவர் இதில் அங்கத் தினரே தவிர, மற்ற விஷயங்களில் இது தனிப்பட்டது. இது நிபுணர்களடங்கிய ஒரு கழகம். விஞ்ஞான சாதிரிகள் பொருளா தார நிபுணர்கள், தொழில் அறிஞர்கள் வியாபாரத் துறையிலே புலமை வாய்ந்தவர்கள் முதலிய சுமார் 160 பேர் இதில் அங்கத்தினர்கள். சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இதில் வேலை செய் கிறார்கள். இந்தக் கமிஷனுக்கு, அரசாங்க இலாகாக்கள், தொழிற் சாலைகள், கல்விக் கழகங்கள், ரெயில், தபால், தந்தி முதலிய போக்குவரத்து இலாகாக்கள் ஆகிய யாவும், தாங்கள் சென்ற வருஷத்தில் இவ்வளவு வேலை செய்ய முடிந்தது, இந்த வருஷத்தில் இவ்வளவு வேலையைச் செய்ய முடியும் என்று உத்தேசமாக ஒரு திட்டம் போட்டு அனுப்பவேண்டும். இப்படி வருஷ வாரி அனுப்பு வதோடு, மாதவாரியாகவும், மூன்று மாதவாரியாகவும், ஆறுமாத வாரியாகவும் திட்டங்கள் போட்டு அனுப்பவேண்டும். இந்த மாதவாரி, வருஷவாரிப் புள்ளிகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அடுத்த ஐந்து வருஷத்திற்கு எவ்வளவு செய்ய முடியும் என்பதையும் தெரிவிக்கவேண்டும். இந்தப்புள்ளி விவரங்களை யெல்லாம் மேற்படி கமிஷன் ஒன்று திரட்டி, மொத்தமாகப் பரி சீலனை செய்து பார்க்கிறது; எந்தெந்தப் பொருள்கள் அதிகம் தேவையாயிருக்கின்றன, எவை எவற்றின் உற்பத்தி குறைவாயிருக் கிறது, இந்தக் குறைவை நிறைவு படுத்த என்ன செய்யவேண்டும் என்பவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, தேசப் பொதுவுக்கு மொத்தமாக ஒரு திட்டத்தைத் தயாரிக்கிறது. இதில் விசேஷ மென்ன வென்றால், ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்கிற உற்சா கத்திலே, அதனைச் சார்ந்துள்ள மற்ற அமிசங்களைக் கவனியாமல் விட்டு விடுவதில்லை. அப்படியே ஒரு தேவைக்காக மற்றொரு தேவையைப் புறக்கணித்து விடுவதில்லை. உதாரணமாக, பிரதாப வருஷத்தில் ஈயக்கலப்புள்ள பொருள்கள் தேவையா யிருக்கின்றன, எனவே ஈயத்தை அதிகமாக உற்பத்தி செய்யவேண்டுமென்று திட்டம் போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஈயத்தை மட்டும் உற்பத்தி செய்துவிட்டால் போதுமா? அதனோடு என் னென்ன பொருள்கள் சேர்ந்தால், அஃது உபயோகப்படுமோ அந்தப் பொருள்களையும் விகிதாசாரப்படி உற்பத்தி செய்யவேண்டு மென்று திட்டம் போடுகிறார்கள். அடுத்த வருஷத்தில் பள்ளிக் கூடத்தில் படிக்கிற பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யவேண்டு மென்று திட்டம் போட்டால், அதற்கு அநுசரணை யாக, அதிகமான பிள்ளைகளுக்கு வேண்டிய கட்டிட வசதிகள், வைத்திய உதவிகள், புதகங்கள், ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள் இவ்வளவும் தேவையில்லையா? இந்த மாதிரி ஒன்றை யொன்று தொட்டுக் கொண்டிருக்கிற எல்லா அமிசங்களையும் இணைத்துப் பார்த்தே, மேற்படி கமிஷன், பொருளாதார திட்டத்தைத் தயாரிக்கிறது. இப்படித் தயாரித்து, உடனே அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று உத்திரவிட்டு விடுவதில்லை. சம்பந்தப் பட்ட தொழிற்சாலைகள், கல்வி தாபனங்கள் முதலிய அனைத்திற் கும் மேற்படி திட்டத்தை அனுப்பி, அதன்படி வேலை செய்ய முடியுமா என்று அபிப்பிராயம் கேட்கிறது. அவை, அதாவது அந்தத் தொழிற் சாலைகள் முதலியன, மேற்படி திட்டத்தில் இவ்வளவு முடியும், இவ்வளவு முடியாது, அல்லது, அதிகமாகச் செய்ய முடியும் என்று தங்களுடைய அபிப்பிராயங்களுடன் மேற் படி, திட்டத்தைத் திருப்பி அனுப்புகின்றன. இவற்றை யெல்லாம் திரட்டி வைத்துக் கொண்டு பொருளாதார திட்டக் கமிஷன் புனரா லோசனை செய்து, கடைசியாக ஒரு திட்டத்தைத் தயாரித்து, அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரச் செய்கிறது. இப்படிச் செய்வதன் நோக்க மென்னவென்றால், தேவையானதை மட்டும் கவனித்துக் கொண்டு போகமால், சாத்தியமானதையும் கவனித்துக் கொண்டு போகவேண்டுமென்பதுதான். மற்றும், இந்தத் திட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் விஷயத்தில் விஞ்ஞானத்தின் துணையைப் பெரிதும் நாடு கிறார்கள் சோவியத் தலைவர்கள். உலகத்திலேயே, சோவியத் ராஜ்யத் தில்தான், விஞ்ஞான சாதிரத்திற்கு அதற்குறிய மதிப்புக் கொடுக்கப் படுகிறதென்று சொல்லவேண்டும். அங்கு, ஜனங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், சர்வஜனங்களுடைய சந் தோஷத்தை அதிகரிக்கச் செய்வதற்காகவும் விஞ்ஞானம் உப யோகிக்கப்படுகிறது; ஆனால் மற்ற நாடுகளில், ஒரு சிலருடைய லாபத்திற்காவும், சுக சௌகரியத் திற்காகவுமே உபயோகிக்கப்படு கிறது. மற்றும் விஞ்ஞானமானது மனிதனுடைய வளர்ச்சிக்காகவே தவிர, அவனுடைய அழிவுக்காக அல்ல என்ற உண்மையை, சோவியத் தலைவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதனால் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமோ அவ்வளவும் செய்துகொடுத்து, அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ஜனங்களுடைய நன்மைக்குப் பயன்படுத்துகிறார்கள். மற்றும், இந்த ஆராய்ச்சிகளெல்லாம் சிதறிப்போய்ப் பயனற்றுப் போகாமலிருக்க, எல்லா ஆராய்ச்சிக் கழகங்களையும் ஒரு மத்திய தாபனத்தோடு இணைத்து, அதன் மூலமாக வரும் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும், பொருளாதாரத் திட்டத்திற்கு உபயோகப் படுத்து கிறார்கள். விஞ்ஞான ஆராய்ச்சிக்கென்று இப்பொழுது ருஷ்யாவில் 902 கழகங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் எண்பதினாயிரம் பேர் ஆராய்ச்சி நடத்துகிறார்கள். இந்தக் கழகங்களினால் ஜனங்கள் அடைந்து வரும் சாதகங்கள் அதிகம். தவிர, ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றவர்களை, அரசாங்கத்தாரும் பொது ஜனங்களும் பெரிதும் கௌரவிக்கிறார்கள்; அவர்களுடைய சுகவாழ்க்கைக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்கிறார்கள். இந்த விஞ்ஞான சாதிரிகள் ஆராய்ச்சி செய்யாத துறைகள் இல்லை. குறைந்த செலவில் அதிகமான நேரத்திற்கு எப்படி விளக்கு எரிக் கலாம் என்பதுமுதல், பிரதியொரு மனிதனிடத்திலும் அடங்கிக் கிடக்கும் மேலான தன்மைகளை மேலுக்குக் கொணர்ந்து அவற்றை ஒருமுகப்படுத்தி எப்படி ஜன சமுதாயத்திற்குப் பயன்படுத்தலாம் என்பதுவரை, வடதுருவத்தைக் கண்டுபிடித்து அதில் சோவியத் வெற்றிக்கொடியை நாட்டுவது முதல், கோதுமையை ஒரு தடவை விதைத்துவிட்டு அதிலிருந்து நிரந்தரமாகச் சாகுபடி செய்து கொண்டிருப்பதற்கு வழியென்ன என்பதுவரை, எல்லாம் இவர் களுடைய ஆராய்ச்சியில் அடங்குகின்றன. எவ்வளவு நுணுக்கமான விஷயமா யிருந்தாலும் அதனைக் கூர்மையான ஆராய்ச்சிக் குட் படுத்தி அதிலிருந்து எவ்வளவு அதிகமான நன்மையைப் பெறலாம் என்பதுதான் ஒவ்வோர் ஆராய்ச்சியாளருடைய நோக்கமாய் இருந்துவருகிறது. இப்படிப் பெறுகிற ஒவ்வொரு நன்மையும் சொந்த நலனுக்காக உபயோகப்படுத்தப்படாமல் சமுதாய நலனுக் காக உபயோகப்படுத்தப்பெறுகிறது. இதனால் ஒவ்வொரு விஞ்ஞானியும், சமுதாயத்திலிருந்து ஒதுங்கி நிற்கிற துறவியாக இல்லாமல், சமுதாயத்தின் தொண்டனாயிருக் கிறான். இவன், மேற்படி பொருளாதாரத் திட்டம் ஒழுங்காக நிறைவேறுவதற்கு எல்லா வகையிலும் துணையாக நிற்கிறான். இப்படித் திட்டம் போட்டுக்கொண்டு தேசத்தின் பொருளா தார வாழ்க்கையை ஒழுங்காக வளர்த்து வருவதன் பரிணாமம் என்ன வென்றால், சோவியத் ராஜ்யத்தில் சென்ற பத்துவருஷகாலமாக வேலை யில்லாத் திண்டாட்டம் என்ற கூக்குரல் எழவில்லை; உணவு அகப்படாமையினால் ஜனங்கள் மரித்துவிட்டார்கள் என்பது கிடையாது; பாங்கிகள் முறிந்துவிட்டன, அதனால் ஜனங்கள் தரித்திரர் களாகி விட்டார்கள் அல்லது பணப்புழக்கம் மந்தமாகி விட்டது என்பவை யெல்லாம் அர்த்தமில்லாத பேச்சுகளாகிவிட்டன. தவிர, இந்த பொருளாதாரத் திட்டம் அநுஷ்டானத்திற்கு வந்த பிறகு, சோவியத் ராஜ்யத்தின் பொருளுற்பத்தி சக்தியானது ஒன்றுக்கு ஒன்பது அல்லது பத்து மடங்கு விகிதம் பெருகியிருக்கிறது. உலகத் திலுள்ள எல்லா நாடுகளின் பொருளுற்பத்தியோடும், சோவியத்தின் பொருளுற்பத்தியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங் கும். உதாரணமாக, 1913 - ஆம் வருஷத்திலிருந்து 1941 - ஆம் வருஷம் வரை சுமார் பதினெட்டு வருஷ காலத்தில், உலகத்தில் கோதுமை உற்பத்தி 100க்கு 26 சதவிகிதம் அதிகப்பட்டிருக்கிறது. ஆனால் அதே காலத்தில், சோவியத் ருஷ்யாவில் 100க்கு 114 சதவிகிதம் அதிகமாகி யிருக்கிறது. இங்ஙனமே, பருத்தி உற்பத்தி உலகத்தில் 100க்கு 30 சத விகிதமே அதிகப்பட்டிருக்க, சோவியத் ருஷ்யாவில் 100க்கு 242 சத விகிதம் அதிகப்பட்டிருக்கிறது. இப்படி பொருளுற்பத்தியை அதிகப் படுத்திக்கொண்டு செல்வதிலே மட்டும் சோவியத் தலைவர்கள் திருப்தியடைந்து விடுகிறார்களில்லை. அதிகமாக உற்பத்தியாகும் பொருள்கள், எல்லா ஜனங்களுக்கும் எளிய முறையில் கிடைக்கு மாறு செய்கிறார்கள். இதனால், இதுகாறும் சில பொருள்களின் தேவையை உணராமலே வாழ்க்கையை நடத்திவந்தவர்கள், இப் பொழுது அந்தப் பொருள்களின் தேவையை உணர ஆரம்பித்திருக் கிறார்கள். பொருள்கள் அதிமாகக் கிடைக்குமானால், தேவையும் அதிகரிக்கிற தல்லவா? இந்த அதிக தேவை பூர்த்தியடைகிறதனால், அவர்களுடைய வாழ்க்கை அந்தது உயர்கிறது. உயர்ந்த வாழ்க்கை அந்தது என்று சொன்னால், ஆடம்பர வாழ்க்கை என்று அர்த்த மல்ல; பண்பட்ட வாழ்க்கையென்றுதான் அர்த்தம். சிறப்பாக, சோவியத் ருஷ்யாவில் இதுதான் அர்த்தம். அங்கு பொருளாதார பரிபாஷையில் வாழ்க்கை அந்தது என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஓரிரண்டு உதாரணங்களை எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிருக்குமென்று கருதுகிறோம். 1913 -ஆம் வருஷம் ஜார் ஆட்சி நிலவியிருந்த காலத்தில் ருஷ்யாவில் 170 இலட்சம் ஜதை பூட்கள் தயார் செய்யப்பட்டன. 1931-ஆம் வருஷம், அதாவது முதல் ஐந்து வருஷத் திட்டத்தின் மத்திய காலத்தில் 768 இலட்சம் ஜதை பூட்கள் தயாராயின. ஆயினும், ஜனங்களுடைய பூட் தேவை அதிகரித்துக் கொண்டுதான் வந்தது. 1913 -ஆம் வருஷம் ருஷ்யாவில் 94,000 டன் சோப்பு செய்யப்பட்டது. 1931-ஆம் வருஷம் 1,89,000 டன் சோப்பு தயாரிக்கப்பட்டு ஜனங் களுக்கு விநியோகிக்கப்பட்டது. இருந்தாலும், ஜனங்கள் சோப்பு போதவில்லை யென்றுதான் சொல்லிக்கொண்டு வந்தார்கள். இஃது எதைக் காட்டுகிறது? ஜனங்களுடைய வாழ்க்கையில் ஒரு வித பண்பாடு ஏற்பட்டுக் கொண்டு வருகிறதென்பதையே காட்டுகிறது. சோவியத் தலைவர்கள், முதல் ஐந்து வருஷத்திட்ட காலத்தில், சில பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்தினார்களே தவிர, அவற்றில் ஒரு பகுதியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டார்களென்றும், இதனால் ஜனங்கள் தங்களுடைய தேவைகள் சரியாகப் பூர்த்தியடை யாமல் கஷ்டப்பட்டார்களென்றும் சிலர் இங்கே ஆட்சேபம் சொல்லலாம். உண்மை. ஆனால், அப்பொழுது ஒரு பொருளைக் கொடுத்து மற்றொருபொருளை வாங்குவது, சோவியத் ராஜ்யத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமா யிருந்தது. எது இல்லையோ அதைப் பூர்த்தி செய்து கொள்வதிலும், எது இருக்கிறதோ அல்லது எதை நாம் சுலபமாகத் தயார்செய்து கொள்ள முடியுமோ அதை, அதாவது அதன் உபயோகத்தைத் தற் காலிகமாகக் குறைத்துக் கொள்வதிலும் சோவியத் தலைவர்கள் அந்தக் காலத்தில் அதிக புத்திசாலித் தனத்துடன் நடந்து கொண்டார் களென்பதுதான் நடுநிலைமையுள்ள பொருளாதார நிபுணர்களின் அபிப்பிராயம். பொதுவாக நாம் பார்க்கிற போது, சோவியத் தலைவர்கள் காலத்திற்கேற்ற முறையை அநுஷ்டித்து வருகிறார்கள்; சந்தர்ப்பத்திற் கேற்றவாறு நடந்து வந்திருக்கிறார்கள். குறைந்த காலத்தில் அதிகமான நன்மையை அடைவதற்கு அதிகமான கஷ்டங் களை ஏற்றுக்கொள்ள, அவர்கள் எப்பொழுதுமே பின்வாங்கிய தில்லை; ஜனங்களையும் அப்படியே பக்குவப்படுத்தி வந்தார்கள். இனி, இந்தப் பொருளாதாரத் திட்டங்களின் கீழ், சோவியத் ராஜ்யமானது, எந்தெந்தத் துறையில் எப்படி எப்படி வளர்ந்திருக் கிறது என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம். 8. விவசாயம் - தொழில் ருஷ்யா ஒரு விவசாய நாடு. இதனால்தான் ருஷ்யர்கள் பூமியைப் போல் பொறுமையும் நிதானமும் உறுதியுமுடையவர் களாயிருக் கிறார்கள். பொன்னையும் பெண்ணையும்கூட அவர்கள் துறந்துவிடத் தயார். ஆனால், மண்ணை மட்டும் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருப் பார்கள். ஆண்டையினுடைய சாட்டையடி, தேகத்திலிருந்து வழிகிற வியர்வை, கூரையில்லாக் குடிசை, வயிற்றுக் கில்லாமல் குழந்தைகள் போடுகிற சப்தம் ஆகிய எல்லாவற்றையும், மண்ணைப் பார்த்து மறந்து விடுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை மகா துக்ககரமானது. இந்த துக்கத்தின் மீதுதான் ருஷ்ய நிலச்சுவான் தார்கள், சுக வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தார்கள். போல்ஷ் வெக்கர்கள் அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், இவர்களுடைய சுகத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. இதனால்தான் 1920 - 21ஆம் வருஷங்களில், அந்நிய முதலாளித்துவ வல்லரசு களோடு சேர்ந்துகொண்டு, போல்ஷ்வெக்கர் களை எதிர்த்தார்கள் இந்த நிலப் பிரபுக்கள். ஒரு காலத்தில் இந்த நிலச்சுவான்தார்கள், ஏழை விவசாயி களைப்படுத்தின பாட்டை நாம் நினைத்துப் பார்த்தோமானால் கூட, உடல் நடுங்கும். விவசாயிகளை உயிருள்ள மனிதர்களாகக் கூட இவர்கள் கருதவில்லை; வாயில்லாப் பிராணிகளாகவே கருதி வந்தார்கள்; அப்படியே நடத்தியும் வந்தார்கள். சிறப்பாக மகா பீட்டர் மன்னனுக்குப் பிறகு, இவர்கள் புரிந்த அட்டூழியங்களுக்கு கணக்கு வழக்கே யில்லை. ஆடு மாடுகளைப் போல் விவசாயிகளை, மொத்தம் மொத்தமாகவோ தனித்தனியாகவோ ஏலம் போட்டார்கள்; கிரயஞ் செய்தார்கள். பாவம், விவசாயிகள், புருஷன் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், மக்கள் ஒரு பக்கம் இப்படியாகப் பிரிந்து போனார்கள். விளையாட்டுப் பெயர்வழி களான சில நிலச்சுவான்தார்களுக்கு , வேட்டை நாய் ஒன்று வாங்க வேண்டுமென்று ஆசை தோன்றும்; உடனே தங்கள் கைவசமிருக்கும் சில விவசாய அடிமைகளை விற் பார்கள்; ஒரு நாயை வாங்குவார்கள். தங்களுக்கு அதிக ஆட்கள் தேவையா யிருந்தால் தங்களிடமுள்ள சப்பைக் குதிரை யொன்றை விற்பார்கள்; சில அடிமைகளை வாங்குவார்கள்; சில சமயங்களில், அடிமைகளைப் பந்தயமாக வைத்துச் சூதாடுவார்கள். அடிமைகளில் யாரேனும் துணிச்சலாக எதிர்ப்புக் காட்டுவார்களானால், அவர் களை மனிதசஞ்சார மில்லாத தொலை தூரத்திற்கு அனுப்பிவிடு வார்கள்; அல்லது சித்திரவதை செய்வார்கள். இந்த மாதிரியான இம்சைகளிலிருந்து அவர்களை விடுவித்ததற்கு முக்கிய காரண புருஷனாயிருந்தவன் லெனின். இதனால் அவனை ஒரு தெய்வம் போல் விவசாயிகள் கொண்டாடி வருவதில் என்ன ஆச்சரிய மிருக்கிறது? 1918 -ஆம் வருஷத்திற்கு முன்னர், அதாவது ஜார் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுடைய நிலைமை எப்படி இருந்தது? கிராமங்கள் எவ்வாறு இருந்தன? ஒருவன் வருணிக்கிறான்:- இந்த கிராமப் பிரதேசங்களில் நான் பார்க்கிற அறியாமையையும் பிற்போக்கையும் போல் வேறெங்கும் கண்டதில்லை. கிராமப் பிள்ளைகள், பள்ளிக் கூடத்தில் சென்று படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், குறைந்த பட்சம் எட்டு மைல் தூரமாவது செல்ல வேண்டும். பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் கிடையாது. கடவுள் கூட இந்தக் கிராமங்களைக் கைவிட்டுவிட்டார் போலும். தங்கள் பெயரை எழுதத் தெரிந்தவர்களைக் கண்டு பிடிப்பது இங்கே மிகக் கஷ்டம். பெரும்பாலான கிராமங்கள் அழுக்குப் படிந்தும் பாழடைந் தும் கிடந்தன; வறுமை அங்குத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. விவசாயிகளில் 100க்கு 65 பேர் ஏழைகள்; குலாக்குகள் என்று சொல்லப்பட்ட நிலச்சுவான்தார்களுடைய நிலத்தில் உழைத்து வயிறு பிழைக்கிறவர்கள். மற்றவர்கள், ஏதோ அற்ப சொற்பமாக நிலம் வைத்துக்கொண்டிருந்தால், அவற்றைச் சரியானபடி உழுது பயிரிட, தேவையான விவசாயக் கருவிகள் இல்லாதவர்கள். அதற்காக, குலாக்குகளிடமிருந்து கடன் வாங்குவார்கள்; முடிந்தமட்டில் சாகு படி செய்வார்கள். சாகுபடியானதும், குலாக்குகள் வந்து, தாங்கள் கொடுத் திருந்த பணத்திற்கு வட்டியும் முதலுமாகக் கணக்குப் பண்ணி அதற்கீடாக மகசூலை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். மறுபடியும் கடன் வாங்க வேண்டியதுதான்; உழைக்க வேண்டியது தான்; அறுவடையை ஒப்புக் கொடுக்க வேண்டியது தான். இந்தத் தீய சூழலிலேயே அநேக விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள். கலப்பட மில்லாத ஒரு ரொட்டித் துண்டைச் சுவைப்பது, இவர்களுக்கு ஒரு பெரிய விருந்தாயிருந்தது. வயிற்றுக் கில்லாமல் கிராமங்களில் இருந்து கொண்டு என்ன செய்வது? இதனால் எங்கே கூலி வேலை கிடைக் கிறதோ அங்கே விவசாயிகள், கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துச் செல்வது தினசரிக் காட்சியாயிருந்தது. கிராமங்கள் சீரழிந்து -கொண்டு வந்ததில் என்ன ஆச்சரியம்? ருஷ்யாவில் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் எவ்வாறு வலுத் திருந்த தென்பதைப் பின்வரும் புள்ளி விவரத்தினால் நன்கு தெரிந்து கொள்ளலாம். சாகுபடிக்கு லாயக்கான 16,70,00,000 ஏகரா நிலங்கள் 28,000 நிலச்சுவான்தார்கள் வசத்திலும், 1,00,00,000 மத்தியதர விவசாயக் குடும்பத்தினர் வசத்தில் 19,70, 00, 000 ஏகரா நிலங்களும் முறையே இருந்தன. அதாவது சராசரி ஒரு நிலச்சுவான்தாருக்கு 5,964 ஏகரா நிலமும், ஒரு மத்தியதர விவசாயக்குடும்பத்திற்கு 20 ஏகரா நிலமும் முறையே இருந்தன. இது தவிர, விதீரணமாகவும் செழுமை யாகவுமுள்ள பூப்பிரதேசங்கள் அரச குடும்பத்தி னருக்கும் மாடாதிபதிகளுக்கும் சொந்தமாயிருந்தன. ருஷ்யாவினுடைய மொத்த ஜனத்தொகையில் 100க்கு 13பேர்தான் நிலச்சுவான் தார்கள். ஆனால், தானிய வியாபாரத்தில் 100க்கு 72 பாகம் இவர்கள் வசத்திலேயே இருந்தது. 1917 - ஆம் வருஷத்திற்குப் பிறகு, இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. விவசாயிகளுக்கு நல்வாழ்வு பிறந்தது. சோவியத் அரசாங்கத்தார், நிலங்களையெல்லாம் தேசீய சொத்தாக்கின விவரங் களைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். அரசாங்கத்தார் விவசாயி களுக்கு எல்லாவகையிலும் உதவிசெய்து வந்தனர். யந்திரங்கள், விவசாயக்கருவிகள், விதைகள் முதலியவைகளை உதவி, அதிக உற்பத்திக்கு வழி காட்டிக் கொடுத்தனர். சிறிய சிறிய தளைகளில் பயிர் செய்வதனால் அதிகமான பயன் கிட்டாது என்பதை நிரூபித்துக் காட்டி, ஆங்காங்குக் கூட்டுப் பண்ணைகளை ஏற்படுத்தி இவற்றில் விவசாயி களைச் சேருமாறு தூண்டினர். விவசாயிகளும், இந்தக் கூட்டுப் பண்ணை களினால் உண்டாகிற அநுகூலத்தை நன்கு தெரிந்து, இவற்றைப்போற்றி வளர்த்தார்கள். சுலபமான முறையில் குறுகிய காலத்தில் நிலத்தை உழுவது, விதை விதைப்பது, அறுவடை செய்வது முதலியவற்றிற்காக, புதிய புதிய யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளின் உபயோகத் திற்குக் கொண்டு வரப்பட்டன. விஞ்ஞான சாதிரத்தின் துணையினால் சாகுபடியின் விகிதம் அதிகரிக்கப் பட்டது. உதாரணமாக, 1917 ஆம் வருஷத்தில், 8,00,00,000 டன் நிறை யுள்ள தானியங்கள் உற்பத்தியாயின. ஆனால் 1937 ஆம் வருஷத்தில் 12, 02, 90,000 டன் நிறையுள்ள தானியங்கள் உற்பத்தியாகி யிருக்கின்றன. கூட்டுப்பண்ணை முறைகளினால் உண்டாகிற அநுகூலங் களை அறிந்த விவசாயிகள், தனித்தனியாக உழுது பயிரிட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, கூட்டுறவு முறையில் சாகுபடி செய்யத் தொடங்கினார்கள். இதனால் இந்தக் கூட்டுப் பண்ணைகளின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் அதிகமாகிக் கொண்டு வந்தது. இதனைக் கீழ்க்கண்ட புள்ளி விவரத்தினால் அறியலாம்: விவரம் 1929 1930 1934 1938 கூட்டுப் பண்ணை களின் எண்ணிக்கை 57,000 85,400 2, 33,300 2,43,300 மேற்படி கூட்டுப் பண்ணைகளில் சேர்ந் 10,00,00 60,00,000 1,57,00,000 1,88,00,000 திருக்கிற விவசாயக் குடும்பங்கள் 1929-ஆம் வருஷத்தில் 100 - க்கு 4 குடும்பத்தினர் தான் கூட்டுப் பண்ணையில் சேர்ந்திருந்தனர். 1938-ஆம் வருஷத்தில் 100க்கு 93 1/2 குடும்பத்தினர் சேர்ந்திருக்கின்றனர். 1929-ஆம் வருஷம், மொத்த நிலத்தில் 100-க்கு 5 விகிதந்தான் கூட்டுப் பண்ணைகளாயிருந்தன. 1938-ஆம் வருஷத்தில் 100க்கு 99 விகிதம் கூட்டு பண்ணைகளில் சேர்ந்திருக்கின்றன. கூட்டுப்பண்ணைகள் என்றால் என்ன? ஒரு கிராமத்தில் பத்துக் குடித்தனங்கள் இருக்கிறார்களென்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருக்கும் சராசரி இரண்டு ஏகரா நிலம் இருக்கிறது. இந்த இரண்டு ஏகரா நிலத்தை ஒவ்வொரு குடித்தனக்காரரும் தனித்தனி யாகப் பயிரிட்டுச் சாகுபடி செய்யாமல், பத்துக் குடித்தனக்காரர் களும் ஒன்று சேர்ந்து, இருபது ஏகரா நிலத்தையும் மொத்தமாகப் பயிரிட்டுச் சாகுபடி செய்வதற்குத்தான் கூட்டுப்பண்ணை என்று பெயர். இப்படிக் கூட்டு முறையில் எல்லோரும் சேர்ந்து உழுது பயிரிடலாமாயினும், அவரவருக்கென்று தனியாகச் சொத்து சுதந்திரங்கள் உண்டு. அதாவது பொதுநலத்தையும், தனி மனிதனு டைய நலத்தையும் ஐக்கியப்படுத்தியே இந்தக் கூட்டுப்பண்ணை முறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கென தனியான விதிகள், அநுஷ்டான முறைகள் முதலியன உண்டு. எப்படியென்றால், நிலங்கள், அந்த நிலத்திலிருந்து பொருள்களை உற்பத்திச் செய்வதற்கு சாதகமா யுள்ள கால்நடைகள், விவசாயக் கருவிகள், யந்திரங்கள் முதலியன வும், கால்நடைகளைக் கட்டிவைப்பதற்கான தொழுவங்கள், தானியக் களஞ்சியங்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகள் முதலியனவும் பொதுவுடைமைப் பொருள்கள். அந்தந்தக் குடும்பத்தினர் வசிக்கும் வீடு, அவர்கள் சொந்த உபயோகத் திற்குத் தேவையான கால்நடைகள், சாமான்கள் முதலியன தனிச் சொத்துக்கள். அதாவது அவரவருடைய சொந்த சொத்துக்கள். இவை தவிர, ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்கள் சொந்தத் தேவைக்கான காய்கறிகள், பழவகைகள், முதலியன வற்றை விளைவித்துக் கொள்ள நிலங்கள் வைத்துக் கொள்ளலாம். இந்த முறையினால் அவரவருடைய சொந்த உரிமைகள் பாதுகாக்கப் படுவதோடு சமுதாய நலனும் வளர்க்கப்படுகிறது. கூட்டுபண்ணை முறையினால் கிராமங்கள் செழித்தோங்கி வருகின்றன. அரசாங்கத்தார், இந்தக் கூட்டுறவுப் பண்ணைகளுக்கு வேண்டிய யந்திரவகைகள், விவசாயக் கருவிகள் முதலியவற்றைச் சொற்ப விலைக்கு விற்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விவசாய நிபுணர்களை நியமித்து, இந்தப் பண்ணைகளுக்கு வேண்டிய ஆலோசனை களைச் சொல்லுமாறு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரியான முறைகளினால் கிராம விவசாயிகளின் வாழ்க்கை, பண்பாடடைந்து கொண்டு வருகிறது. ஒவ்வொரு கூட்டுப்பண்ணை யிலும் இப்பொழுது, ஆபத்திரி, பள்ளிக்கூடம், ரேடியோ, பொதுமண்டபம், விளையாட்டு மைதானம், நாடகசாலை, தபால் தந்தி வசதிகள் ஆகிய எல்லாம் இருக்கின்றன. இப்பொழுதுள்ள ருஷ்ய கிராமத்துச் சிறுவர்களிடம் சென்று, அவர்களுடைய தகப்பனார், பாட்டனார் முதலியோர், குழாய் நீர், மின்சார விளக்குகள், மின்சார சிகிச்சை, ரேடியோ, மோட்டார் முதலியன இல்லாமல் வாழ்ந் தார்கள் என்று சொன்னால் ஆச்சரியமே படுவார்கள்; அவர்களால் எப்படி வாழமுடிந்தது என்று கேட்பார்கள். அதாவது, தற்போதைய தலைமுறையினருடைய வாழ்க்கை, அவர்களுடைய பழமையி னின்று அவர்களை அடியோடு பிரித்துவிடக் கூடிய மாதிரியாக அமைந்திருக்கிறது. தற்போதைய கிராமங்கள் சிலவற்றின் நிலைமையை அந்தந்தக் கிராமவாசிகளின் வாக்கு மூலத்தைக்கொண்டே வருணித்துக் காட்ட விரும்புகிறோம்: இட்டோம்லியா என்பது ஒரு புராதனக் கிராமம். இது மிகவும் பிற்போக்கடைந்திருந்தது. எந்த விதத்திலும் இது உருப்படி யாகாதென்று எல்லோரும் நினைத்தார்கள். இப்பொழுது இங்கே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. இதில் 450 பிள்ளைகள் படிக்கிறார்கள். கிராமப் பொது மண்டபம் ஒன்று கட்டியிருக்கிறோம். இதில் 800 பேர் உட்காருவதற்கு இடவசதிகள் இருக்கின்றன. ஓர் ஆபத்திரி உண்டு. தவிர, பிரசவ ஆபத்திரி வேறே இருக்கிறது. கால்நடைகளுக்கென்று சிகிச்சைச் சாலைகள் அமைத்திருக்கிறோம். விவசாய விஷயங் களில் ஆராய்ச்சி நடத்துவதற்காக, மாதிரிப் பண்ணை யொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். எங்கள் கிராமத்தில் ரேடியோ, டெலிபோன், மோட்டார் முதலிய வசதிகள் எல்லாம் இருக்கின்றன.  டாரோயே கிட்டோவோ என்பது ஒரு கிராமம். இதில் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தக்கூடாதென்று பாதிரி தடுத்து விட்டிருந்தார் ஒரு காலத்தில். பள்ளிக்கூடம் ஏற்பட்டால் தமது செல்வாக்குப் போய்விடுமென்று அவருக்குப் பயம்! இப் பொழுது இந்தக் கிராமத்தில் ஓர் ஆரம்ப பள்ளிக்கூடமும், ஒரு மத்தியதரப் பள்ளிக்கூடமும் இருக்கின்றன. கிராமத்தில், எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரைக்கூட இப்பொழுது பார்க்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் பத்திரிகை வர வழைக்கிறார்கள். ரேடி யோவும், சிறிய ஒரு புத்தகசாலையும் இல்லாத வீட்டை இப் பொழுது பார்ப்பது மிகவும் அரிது. சுருக்கமாகச் சொல்லப்போனால், அறியாமை, நோய், வறுமை, கோழைத்தனம் முதலியவற்றின் மத்தியில் உழன்று கொண்டிருந்த கிராமவாசிகள் இப்பொழுது அறிவுப் பிரகாச முடையவர்களாய், அரோகதிடகாத்திரர்களாய், வாழ்க்கையின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் திறமையுடையவர்களாய், நாமிருக்கும் நாடு நமது என்ற வீர உணர்ச்சியுடையவர்களாய், பூரண உரிமைபெற்ற பிரஜைகளாய் , கடமையை உணர்ந்த சமுதாய அங்கத்தினர்களாய், சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேற்படி கூட்டுப்பண்ணைகளைத் தவிர, அரசாங்கத்தாரே, சில மாதிரிப் பண்ணைகள் வைத்து நடத்துகிறார்கள். விவசாயத் தொழிலைச் சாதிர ரீதியாக ஆராய்ச்சி செய்து, அந்த ஆராய்ச்சியை அநுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிறபோது என்னென்ன சாதகங் கள் உண்டு என்பதை விவசாயிகளுக்குப் பிரத்தியட்சமாக எடுத்துக் காட்டுவதற் காகவே, அரசாங்கத்தார் இந்த மாதிரிப் பண்ணைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். யந்திரத்தின் உதவியைக்கொண்டு பெரு வாரியான முறையில் இங்கே விவசாயஞ்செய்து அதிகமான கண்டு முதலை ஜனங்களுக்குக் கொண்டு வந்து காட்டுகிறார்கள். இந்த வகையான மாதிரிப்பண்ணைகள் இப்பொழுது ருஷ்யாவில் சுமார் நாலாயிரத்துக்கு அதிகமாக இருக்கின்றன. ஏறக்குறைய 16,80,00,000 ஏகராக்கள், இந்தமாதிரிப் பண்ணைகளில், உணவுப் பொருள் களைத் தவிர, தொழிலுற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் களையும் விளைவிக்கிறார்கள். தவிர, கால்நடைகளைப் பக்குவமான முறையில் வளர்த்து விற்பனை செய்கிறார்கள். இவைகளின் மூலமாக அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால், இவைகளுக் காக அதிகமான பணத்தையும் செலவழிக்கிறார்கள். ஒவ்வொரு மாதிரிப் பண்ணையும் ஒவ்வோர் ஊர்மாதிரி அமைக்கப்பட்டிருக் கிறது. இங்குள்ளவர்களுக்கு எல்லா வசதிகளையும் அரசாங்கத்தார் செய்து கொடுத்திருக்கிறார்கள். சோவியத் ருஷ்யாவில் சென்ற பதினைந்து வருஷகாலமாக யந்திரத் தொழிலானது அதிக முன்னேற்றத்தையடைந்திருக்கிறது. ஜார் காலத்து ருஷ்யாவில் உற்பத்தியான உணவுப் பொருள்களிற் பெரும்பாகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும், அதற்குப் பதிலாக பணக்காரர்களுக்கு உபயோகப்படக்கூடிய செய் பொருள்கள், ஆடம்பர வதுக்கள் முதலியன இறக்குமதி செய்யப் பட்டும் வந்தன. ருஷ்யாவிலேயே இருந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலன, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் முதலிய அந்நிய முதலாளிகளின் ஆதீனத்தில் இருந்தன. இப்பொழுது இவை இருந்த இடம் தெரியாமலே போய்விட்டன. எங்குப் பார்த்தாலும் புதிய தொழிற்சாலைகள் நவீனமுறையில் ஏற்பட்டிருக்கின்றன. ஜார் காலத்து ருஷ்யாவில், விவசாய யந்திரங்கள், மோட்டார் வகைகள், ஆகாயவிமானங்கள், யுத்ததளவாடங்கள், ரசாயனப் பொருள்கள் முதலியவைகள் உற்பத்தி செய்யப்படுவது கிடையாது. இப்பொழுது இவையெல்லாம் சிறந்த முறையில் ஏராளமாக உற்பத்தி செய்யப்படு கின்றன. நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலை களிலிருந்து, 1914-ஆம் வருஷ யுத்தத்திற்கு முன்னர் எவ்வளவு பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தனவோ அதைவிட ஏழு மடங்கு அதிகமான பொருள்கள் 1937-ஆம் வருஷத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. இப்படி பிரதி வருஷமும் பிரதியொரு பொருளுற் பத்தியும் அதிகமாகிக் கொண்டுவருகிறது. உதாரணமாக, 1913 - ஆம் வருஷம், ருஷ்யாவின் எல்லாப் பஞ்சாலைகளிலிருந்தும்,2,41,00,00,000 கஜம் நூல் உற்பத்தியாயிற்று. ஆனால் 1938-ஆம் வருஷம் இந்த நூலுற் பத்தி 3,78,70,00,000 கஜத்திற்கு அதிகப்பட்டது. இந்த பஞ்சாலை களில் மட்டும் இப்பொழுது 5,83,200 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 100க்கு 67 பேர் தீரிகள். இன்னோர் உதாரணம் : ஜார் காலத்து ருஷ்யா (1913 - ஆம் வருஷத்தில்) 28 சட்டைகளைத் தயார் செய்தது என்று சொன்னால், சோவியத் ருஷ்யா (1937ஆம் வருஷத்தில்) 3,158 சட்டைகளைத் தயாரித்திருக்கிறது. இந்த மாதிரியான புள்ளி விவரங் களிலிருந்து, முந்திய ருஷ்யாவைக் காட்டிலும் இன்றைய ருஷ்யாவில், யந்திரத் தொழிலுற்பத்தி எவ்வளவு துரிதமாக முன்னேறி வருகிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். இங்ஙனம் பொருளுற்பத்தி அதிகரித்திருப்பதற்குச் சமதையாக, இந்தத் தொழிற் சாலைகளில் வேலை செய்யும் தொழி லாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இதுதான், ருஷ்யப் பொருளாதார அமைப்பின் முக்கிய விசேஷம். ஏனென்றால், நவீன சாதனங்களைத் துணையாக கொண்டு, குறைந்த ஆட்களை வைத்து அதிகமான பொருளுற்பத்தி செய்வதென்ற முறையை, சோவியத் தலைவர்கள் அநுஷ்டிக்கவில்லை. அதற்குப் பதிலாக, நவீன சாதனங் களைத் துணையாகக்கொண்டு, அதிகமான ஆட் களை வைத்துக் குறைந்த காலத்தில் அதிகமான பொருளுற்பத்தி செய்வதென்ற முறையை அநுஷ்டிக்கின்றனர். இதனால், முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இல்லாமற் போகிறது. இரண்டாவது, தொழிலாளர் களுடைய வேலை நேரம் குறைகிறது.1 மூன்றாவது, வேலைநேரம் குறைவதால் தொழிலாளர்களுக்கு அதிக மான ஓய்வு கிடைக்கிறது. நான்காவது, இந்த ஓய்வு நேரத்தைத் தொழிலாளர்கள் உபயோககரமான வழியில் செலவழிக்கின்றனர். அரசாங்கத்தார் இதற்குத் துணை செய்கின்றனர். இதனால் சமுதாய யந்திரம் சரளமாக ஓடுவதற்கு ஏதுவுண்டாகிறது. 1933-ஆம் வருஷம், யந்திரவகைகளை உற்பத்தி செய்கிற பெரிய தொழிற் சாலைகளில் மொத்தம் 2,20,00,000 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக் கிறார்கள். 1938-ஆம் வருஷம், இவர்களுடைய எண்ணிக்கை 2,80,00,000-க்குப் பெருகியது. இங்ஙனமே ஜனங்களுடைய அன்றாட உபயோகத்திற்கான சாமான்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளில் 1913 - ஆம் வருஷம் 7,94, 900 பேர் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். 1937-ஆம் வருஷக் கடைசியில் இவர்களுடைய எண்ணிக்கை 18,87,000 பேராகப் பெருகியது. இன் னொரு முக்கியமான விஷயத்தையும் இங்குக் கவனிக்க வேண்டும். அதாவது, தொழிலாளர்களுடைய வேலை நேரம் குறைந்தாலும், அவர்களுடைய உற்பத்தி சக்தியும், கூலி விகிதமும் அதிகப்பட் டிருக்கின்றன. உதாரணமாக, 1913-ஆம் வருஷத்தில் சுமார் 2,540 ரூபாய் பெறுமானமுள்ள சாமான்களை உற்பத்தி செய்த ஒரு தொழிலாளி 1937-ஆம் வருஷத்தில் சுமார் 6,060 ரூபாய் பெறுமான முள்ள சாமான்களை உற்பத்தி செய்கிறான். அவனுடைய தினசரி வேலை நேரமோ பதினோரு மணியிலிருந்து ஏழு மணியாகக் குறைந் திருக்கிறது. இதே பிரகாரம் அவனுடைய வருமானமும் பிரதி வருஷமும் அதிகரித்துக்கொண்டு வந்திருக்கிறது. 1933-ஆம் வருஷத்தில் எடுத்த கணக்குப்படி ஒரு தொழிலாளியினுடைய வருமானம் 945 ரூபாயாக இருந்தது. 1938 - ஆம் வருஷத்தில் எடுத்த கணக்குப்படி அதே தொழிலாளியினுடைய வருமானம் 2,156 ரூபாயாக அதிகப்பட்டிருக்கிறது. இப்படித் தொழிலாளர்களுடைய வருமான விகிதம் அதிகரித்திருப்பதால், அவர்கள், தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளைச் சிரமப்படாமல் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இஃது எப்படித் தெரிகிறதென்று கேட்டால், ஒன்று, அன்றாட உபயோகத்திற்கான சாமான்களின் விற்பனை அதிகரித்து வரு வதைக் கொண்டு; மற்றொன்று பள்ளிக்கூடத்திற்குச் சென்று படிக்கும் பிள்ளைகளின் தொகை அதிகரித்து வருவதைக் கொண்டு. வயிற்றுப் பசிக்கும் அறிவுப் பசிக்கும் எப்பொழுது ஆகாரம் கிடைத்து விடு கிறதோ அப்பொழுது மனிதன், வாழ்க்கையின் மேல் படிகளில் ஏறிச் செல்லத் தொடங்குகிறான். 1933-ஆம் வருஷத்தில், கூட்டுறவு தாபனங்களின் மூலமாக 38,30,57,50,000 ரூபாய் மதிப்புள்ள சில்லரைச் சாமான்கள் விற்பனையாயின. 1938-ஆம் வருஷத்தில் இந்த விற்பனைத் தொகையானது 1,01,85,84,37,500 ரூபாய்க்கு அதிகரித் திருக்கிறது. மற்றும், ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் 1933-ஆம் வருஷத் தில் 2,13,00,000 ஆக இருந்தவை 1938-ஆம் வருஷத்தில் 2,94,00,000 ஆக அதிகரித்திருக்கின்றன. தொழில் அபிவிருத்திக்கு முக்கிய துணையாயிருப்பது போக்கு வரத்துச் சாதனங்கள். இவற்றையும் விருத்தி செய்திருக் கிறார்கள் சோவியத் தலைவர்கள். 1913 -ஆம் வருஷம் 36,000 மைல் நீளமே இருந்த ரெயில்பாதையானது 1938-ஆம் வருஷம் 54,000 மைல் நீளத்திற்கு அதிகரித்திருக்கிறது. இதற்குத் தகுந்தாற்போல் சாமான்களின் போக்குவரத்தும் அதிகப்பட்டிருக்கின்றன. இஞ்சின்கள், ரெயில்வண்டிகள், தண்ட வாளங்கள் முதலிய யாவும் இப்பொழுது ருஷ்யத் தொழிற் சாலை களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஆற்று மார்க்கத்துப் போக்குவரத்தும் ருஷ்யாவில் அதிகம். இந்த ஆற்று மார்க்கத்தின் நீளம் 1913-ஆம் வருஷம் 47,000 மைல்கள். 1938-ஆம் வருஷம் இது 83,000 மைல்களுக்கு நீண்டிருக்கிறது. இன்றும் பல நீர்ப் பெருக்குகளைப் போக்குவரத்துக்குரியனவாகச் செய்ய, சோவியத் தலைவர்கள் திட்டங்கள் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ருஷ்யா, விதீரணமுள்ள ஒரு தேசமாகையால் ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குச் செல்வதென்றால் முன்னெல்லாம் நாட்கள் கணக்காக ஆகும். இப்பொழுது ஆகாய விமானங்கள் ருஷ்யாவின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் செல்கின்றன. மொத்தம் 7,100 மைல் நீளத்திற்கு ஆகாயவிமானப் போக்குவரத்துகள் இருக்கின்றன. இதனால் நாட்கணக்கில் நடைபெற்ற பிரயாணம் இப்பொழுது மணிக்கணக்கில் முடிந்துவிடுகிறது. 9. பெண்ணுரிமை தேசத்தின் செல்வத்தை அதிகரித்து அதன் மூலமாக ஜனங் களுடைய பொருளாதார அந்ததை உயர்த்தி விடுவதோடு மட்டும் சோவியத் தலைவர்கள் திருப்தியடையவில்லை. அப்படித் திருப்தி யடைந்துவிடுவதும் அவர்கள் நோக்கமன்று. அவர்களுடைய நோக்கம் ஏற்றத்தாழ்வுகளில்லாத ஒரு சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்பது. அந்த மாதிரியான ஒரு சமுதாயம் அமைய வேண்டுமானால் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று இருக்கலாமா? கடமையைச் செய்வதிலேயோ, உரிமையை அநுப விப்பதிலேயோ ஆணுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களையும் அளித்து விட்டு, பெண்ணுக்கு அந்தச் சந்தர்ப்பங்களை அளிக்க மறுக்கலாமா? தேக அமைப்பிலே ஏற்பட்டிருக்கிற ஒரு வித்தியாசத்தைத் தவிர, அந்த வித்தியாசமான அமைப்பின் காரணமாக நிறைவேற்ற வேண்டிய வித்தியாசமான சில கடமைகளைத்தவிர, மற்றெல்லா வகையிலும் ஆணும் பெண்ணும் ஒன்று தானே? ஒரே மாதிரியான உரிமைகளை அநுபவிப்பதற்கும் ஒரே மாதிரியான கடமைகளைச் செய்வதற்கும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் தானே? மானிட ஜாதி யென்று சொன்னா லும், சமுதாயம் என்று சொன்னாலும், குடும்பம் என்று சொன்னா லும் ஆணும் பெண்ணும் சேர்ந்த ஓர் அமைப்பைத் தானே குறிக் கிறது? இந்த மாதிரியான கருத்துகளை வைத்துக் கொண்டு, சோவியத் தலைவர்கள் பெண் சமுதாயத்தை புனர் நிர்மாணம் செய்யத் தொடங்கினார்கள். அப்படி புனர் நிர்மாணம் செய்வதற்கு முன்னர், அவர்களை அடிமைத் தளையினின்று விடுதலை செய்வித்தார்கள். இதற்காக, மதக் கட்டுப்பாடுகள், மூடநம்பிக்கைகள், பரம்பரைப் பழக்க வழக்கங்கள் முதலியவற்றோடு அவர்கள் போராட வேண்டி யிருந்தது. போராடினார்கள். வெளிப்பகைகளோடு போராடி வெற்றி பெற்றவர்கள், உட்பகைகளை வைத்து கொண்டு சும்மா இருப்பார் களா? போராடிக் கடைசியில் வெற்றி பெற்றார்கள்; பெண் சமு தாயத்திற்குப் புதிய வாழ்வை அமைத்துக் கொடுத்தார்கள். இது காறும் மற்ற நாடுகளிலே கனவுகூடக்காண முடியாதபடி, ருஷ்யா வில் பெண்களின் சீர்திருத்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்று ஒரு பெண்மணி கூறுகிறாள். ஜார்காலத்து ருஷ்யாவில், பெண்கள் ஆடு மாடுகளைப் போல் ஜங்கம சொத்துக்களாகக் கருதப்பட்டார்கள். அநேகம் பிரதேசங் களில் பெண்கள், விக்கிரயஞ் செய்யப்பட்டார்கள். கணவனை இழந்த மனைவி, அந்தக் கணவனுடைய சொத்துக்கள் யாருக்குப் போய்ச் சேருமோ அவரிடத்தில் அந்தச் சொத்துக்களோடு போய்ச் சேர வேண்டியவளானாள். அப்படி அந்தச் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டவர், அவைகளை அந்த விதவையோடு சேர்த்து யாருக்கேனும் நல்ல விலைக்கு விற்று விடலாம். சிவில் சட்டப்படி புருஷனுடைய சொல்லுக்கு எல்லா வகையிலும் கீழ்ப்பட்டு நடக்க வேண்டியது மனைவியின் கடமை. எந்த விதத்திலும் அவனுடைய அதிகாரத்தைப் புறக்கணிக்கக் கூடாது புருஷனுடைய உத்திர வில்லாமல், மனைவி, கூலிக்கோ சம்பளத்திற்கோ எந்த விதமான வேலையும் ஒப்புக் கொள்ளக் கூடாது. ஆபத்திரியில் நர்ஸாகவோ, பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகவோ, வேறெந்த உத்தியோகத் திலோ வேலை செய்து கொண்டிருக்கிற ஒரு திரீ, விவாகம் செய்து கொண்டுவிட்டால், அந்த உத்தியோகத்தினின்று விலக்கப்பட்டு விடுவாள். விவாகமான திரீகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற் குப் பிரயாணஞ் செய்ய வேண்டுமானால், இவர்களுக்கென்று தனியாக பாபோர்ட் கிடையாது ; புருஷனுடைய பாபோட்டில் தான் இவர்கள் பிரயானஞ் செய்ய முடியும். அப்படிப் புருஷ னுடைய அநுமதியில்லாமல் எந்த திரீயேனும் பிரயாணஞ் செய்து விட்டால், போலீசாரால் கைது செய்யப் பட்டுத் திருப்பி அழைத்து வரப்படலாம். வளர்த்த தந்தையோ, கட்டின புருஷனோ எவ்வளவு கொடியவர்களாயிருந்தாலும் அவர்களிடமிருந்து திரீகளுக்கு விமோசனமே கிடையாது. இவையெல்லா வற்றிற்கும் மேலாக, பெரும்பாலான பெண்களுக்கு எழுத்து வாசனை என்பதே தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையிலிருந்து திரீகளை மேலுக்குக் கொண்டு 77வருவது, சோவியத் தலைவர்களின் முதற்கடமையா யிருந்தது. இதனால் இவர்கள் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டதும், ஆண்களும் பெண்களும் எல்லா வகையிலும் சமமானவர்களே என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எல்லா உத்திரவுகளையும் பிறப்பித்தார்கள்; எல்லாச் சட்டங்களையும் இயற்றினார்கள். இவற்றின் விளைவாக, ஆண்களைப் போலவே, பெண்களும் – விவாகமானவர் களானாலும் சரி, விவாக மாகாதவர் களானாலும் சரி - சட்டசபை முதலிய வற்றிற்கு ஓட்டுக் கொடுத்தார் கள்; அபேட்சகர்களாக நின்று வெற்றி பெற்றார்கள்; தொழிலாளர் சங்கங்களென்ன, கூட்டுறவு தாபனங்களென்ன இவை யனைத் திலும் அங்கத்தினர் களானார்கள். திறமைக்குத் தகுந்தபடி இவர் களுக்கு உத்தியோகம் கிடைத்தது. கூலியோ சம்பளமோ எல்லாம் ஒரே மாதிரி. விவாகஞ் செய்து கொள்வதற்கு முன்னரும், கொண்ட தற்குப் பின்னரும், இவர்களுடைய சம்பாத்தியம் இவர்களுடைய சுவாதீனத் திலேயே இருந்தது. விவாகரத்து செய்து கொள்ளும் விஷயத்தில், ஆண்களுக்கு என்ன உரிமைகளும் கடமைகளும் இருந்தனவோ அதே உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் ஏற்பட்டன. சட்டத்தின் முன்னர் ஆணும் பெண்ணும் சரிசமான மாகவே கருதப்பட்டார்கள். 1937-ஆம் வருஷத்து அரசியல் சட்டத்தில் பெண்களின் உரிமைகள் பின்வருமாறு விளக்கப் பட்டிருக்கின்றன. சோவியத் ராஜ்யத்தில், பொருளாதாரம், ராஜ்ய விவகாரம், கலாசாரம், சமுதாயம், அரசியல் முதலிய எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. - 122 ஆவது பிரிவு. சட்டசபை முதலிய பொது தாபனங்களுக்கு, ஆண்கள் என்னென்ன நிபந்தனைகளின் மீது ஓட்டுக் கொடுக் கிறார்களோ அல்லது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படு கிறார்களோ அதே நிபந்தனைகளின் மீது ஓட்டுக் கொடுக்கவும் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்கப்படவும் பெண்கள் உரிமை உடையவர்கள். - 137ஆவது பிரிவு. இங்ஙனம் உரிமைகள் வழங்கியிருப்பதோடு மட்டு மல்லாமல், இவற்றை உபயோகப்படுத்துவதற்கு வேண்டிய எல்லாச் சந்தர்ப்பங் களையும் அளித்திருக்கிறார்கள். வாழ்க்கையின் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் திரீகள் பிரவேசித்து வெற்றிகர மாகக் காரியங்கள் செய்து வருவதை இப்பொழுது பார்க்கலாம். சோவியத்துக் களின் பிரதிநிதிச்சபை, ஜாதீய சபை ஆகிய இவ் விரண்டிலும் மொத்தம் 1,143 அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இவர் களில் 189 பேர் திரீகள். ருஷ்யக் குடியரசு மாகாணத்தின் பொக்கிஷ மந்திரி ஒரு திரீ. சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட திரீ இஞ்சினீர்கள் முக்கியமான தொழில் முயற்சி களில் ஈடுபட்டிருக் கிறார்கள். 1,32,000 டாக்டர்கள்; 1,800 டேஷன் மாடர்கள்; 15,00,000 மோட்டார் டிரைவர்கள்; 12,500 விஞ்ஞான சாதிரிகள் - இவர்களெல்லாரும் திரீகள்தான். ஒரு கணக்குப்படி, 1928 - ஆம் வருஷத்தில் 30,00,000 திரீகள், உபயோககரமான தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள். 1937-ஆம் வருஷத்தில் இந்த எண்ணிக்கை யானது 90,00,000ஆக அதிகப்பட்டது. இப்படி ஆகாய விமானங்கள் ஓட்டுவது முதல் நிலத்திலே உழுது பயிரிடுவது வரை எல்லா வேலை களிலும் திரீகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். திரீகளுக்கு ஒரே மாதிரியான வேலை செய்யவும், ஒரே மாதிரியான கூலி பெறவும் சந்தர்ப்பம் அளித்துவிட்டதோடு சோவியத் அரசாங்கத்தினர் சும்மா இருக்கவில்லை. அவர்கள் தங்கள் வேலையை எவ்வித இடையூறுகளுமில்லாமல் செய்வதற்கு என் னென்ன அநுகூலங்களைச் செய்து தரவேண்டுமோ அவை யனைத்தையும் செய்து கொடுத்திருக் கிறார்கள். இதுதான் விசேஷம். உதாரணமாக, தொழிற்சாலைகள் முதலியவற்றில் வேலை செய்து கொண்டிருக்கிற தாய்மார்கள் வேலை நேரத்தில் தங்கள் குழந்தை களைப் பற்றிக் கவலைப்படாமலிருக்கும் பொருட்டு, அவர்கள் வேலை செய்யும் தாபனங்களிலேயே, குழந்தைப் பாதுகாப்பு தலங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது ஒரு தாயார், வேலைக்கு வருமுன்னர், தன்னுடைய குழந்தையை இந்தப் பாதுகாப்பு தலத் தில் விட்டுவிட்டு வரலாம். அந்தக் குழந்தை, தாய்ப்பாலில் வளர்கிற குழந்தையாயிருந்தால், மூன்றரை மணி நேரத்திற்கொருமுறை, தாயாருக்கு அரைமணிநேரம் ரஜா கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவள், குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டு வரலாம். பால் குடியாத குழந்தைகளாயிருந்தால் அவற்றைக் கவனித்துக் கொள்வதற்கென்று தாதிமார் முதலியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விளையாடுகிற குழந்தைகளுக்கு விளையாட்டு தலங்கள் வேறே ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன. இந்த மாதிரியான குழந்தைப் பாதுகாப்பு தலங்களில் சுமார் ஒரு கோடி குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்கின்றன. மற்றும், தாய்மார்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறபோது களைத்துப்போவார்களல்லவா? இந்தக் களைப்பில் எப்படி சமையல் செய்து சாப்பிட முடியும்? இதற்காக உணவுச் சாலைகள் பல ஆங்காங்கு தாபிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் சொற்ப விலை கொடுத்து, தேவையான உணவை வாங்கிக்கொள்ளலாம். நன்றாகப் பக்குவம் செய்யப்பட்டு உடனே சாப்பிடக்கூடிய மாதிரியே இவை விற்கப்படு கின்றன. இந்த மாதிரி யான உணவுச் சாலைகள் சுமார் 30,000-க்கு மேல் இருக்கின்றன. பெண்களின் தேக அமைப்பை உத்தேசித்து, அவர்களுக்குச் சில வேலைகள் கொடுக்கப்படுவதில்லை. கர்ப்ப திரீகள், பிரச வித்துக் கைக்குழந்தையோடிருக்கிற தாய்மார்கள் முதலியோர் இரவு நேரங்களில் வேலை செய்யக் கூடாதென்று கட்டாயமாகத் தடுக்கப் பட்டிருக்கிறார்கள். வருஷத்தில் சம்பளத்தோடு இரண்டு வார ரஜா பெற ஒவ்வொரு திரீ தொழிலாளிக்கும் உரிமை உண்டு. இது தவிர, பிரசவ ரஜா என்று சொல்லி, பிரசவத்திற்கு முந்தி சுமார் ஆறு வாரமும் பிரசவத்திற்குப் பின்னர் சுமார் ஆறு வாரமும் முழுச் சம்பளத்துடன் ரஜா கொடுக்கப்படுகிறார்கள். பொதுவாகவே சோவியத் ராஜ்யத்தில் கர்ப்ப திரீகளை அதிக சிரத்தையுடன் கவனிக்கிறார்கள். இதைப்பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம். ஏனென்றால், புதிய தொரு சந்ததியைச் சிருஷ்டிப்பதில் சோவியத் தலைவர்கள் எவ்வளவு நுணுக்கமாகக் கவனஞ் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை இதனின்று நன்கு தெரிந்துக்கொள்ளலாம். ஒரு திரீ கர்ப்பந் தரித்தவுடனே அவளுடைய போஷணையை அரசாங்கத்தார் ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். தாய்மை என்னும் புனிதமான கடமையை, அவள் ராஜ்யத்தின் க்ஷேமத்தை உத்தேசித்தே நிறைவேற்றுகிறாள். அதனால் அவள் அடைகிற தேகசிரமத்தை வேறு யாரும் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும், அது சம்பந்தமான மனோ வேதனையை அநுபவியாமல் இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மற்றவர்கள் செய்து கொடுக்க முடியுமல்லவா? அதாவது கர்ப்பமாயிருக்கிற காலத்தில், சரியான ஆகாரவகைகளை உட்கொள்வதற்கோ, வேறு சௌகரியங்களைச் செய்துகொள்வதற்கோ பணமில்லையே யென்றோ அல்லது வேறுவிதமான உதவிகளைப் பெற முடிய வில்லையே யென்றோ எந்த ஒரு திரீயும் கவலைப்படக் கூடாது. இப்படிக் கவலைப்படுவது, வயிற்றிலே இருக்கிற சிசுவுக்குக் கெடுதல். இதனை உணர்ந்து, சோவியத் அரசாங்கத்தார், ஒரு கர்ப்ப திரீக்கு வேண்டிய எல்லாச் சௌகரியங் களையும் செய்து கொடுக்கிறார்கள். சமுதாய நன்மைக்காக அவள் பிரஜைகளை உற்பத்தி செய்து கொடுக் கிறாள். அந்தக் கடமையை அவள் ஒழுங்காகச் செய்து வருவதற்காக அவளைக் காப்பாற்ற வேண்டியது தனது பொறுப்பு என்பதை, சோவியத் அரசாங்கம் நன்றாக உணர்ந்திருக் கிறது. அதாவது சோவியத் ராஜ்யத்தின் ஒவ்வொரு வருங்காலத்துப் பிரஜையும், தாயின் கர்ப்பத்திலிருக்கிற காலத்திலிருந்தே, அரசாங்கத்தின் உதவி பெற்று வளர்ச்சியடைகிற தென்பது பெறப்படுகிறது. சமதர்மத்தின் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று தாய்மையைப் போற்றி வளர்ப்பது. கார்ல் மார்க், 1864 - ஆம் வருஷத்தில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சமதர்ம மகாநாட்டில் இதைப்பற்றி விதரித்துச் சொல்லியிருக்கிறான். இதனைச் சோவியத் அரசாங்கம் இப்படியே பின்பற்றி நடக்கிறது. சோவியத் ருஷ்யாவில் வருஷந்தோறும் ஏறக் குறைய 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதற்காக ஏற்படு கிற செலவுகளனைத்தையும் அரசாங்கமே செய்கிறது; தனிப்பட்ட வர்களுடைய தர்ம கைங்கரியத்திற்கு இதனை விடவில்லை. ருஷ்யாவில் பிரசவ ஆபத்திரிகளைத் தவிர, கர்ப்ப திரீ களைப் பரிசோதனை செய்து அவர்களுக்கு வேண்டிய ஆலோசனை களைச் சொல்வதற்கும், உதவிகளைச் செய்வதற்கும் தனியான தாபனங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட தொரு தாபனத் திற்குச் சென்று எந்த ஒரு கர்ப்ப திரீயும் தன் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். உடனே அவளை, அங்குள்ள திரீ வைத்தியர்கள் பரிசோதனை செய்து ஒரு சீட்டு கொடுக்கிறார்கள். இந்தச் சீட்டைக் காட்டினால், டிராம், ரெயில் முதலிய போக்கு வரத்துச் சாதனங்களிலும் மற்றும் பொது தலங்களிலும் முந்தின இடம், அதாவது சௌகரியமான இடம் கொடுப்பார்கள். சாமான் வாங்கக் கடைக்குச் சென்றால், அதிக நேரம் காக்கவைக்காமல் சீக்கிரமாகச் சாமான் கொடுத்தனுப்பி விடுவார்கள். சாதாரணமாக எல்லோருக்கும் கிடைக்கிற அளவைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமான அளவுக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கும். தொழில் செய்கிற இடங்களில் லேசான வேலையை கொடுப்பார்கள். தவிர, பிரசவத்திற்கு முந்திச் சுமார் ஆறுவார காலம் முழுச் சம்பளத்துடன் ரஜா கொடுப்பார்கள். இவை தவிர, மேற்படி கர்ப்ப பரிசோதனை தலங்களைச் சேர்ந்தாற்போல், சட்ட சம்பந்தமான ஆலோசனை கள் சொல்வதற்கென்று தனியான ஓர் இலாகா இருக்கிறது. இங்கு எந்த ஒரு கர்ப்ப திரீயும் சென்று, தான் கர்ப்பம் தரித்த விஷயமாகத் தன்னிடத்தில் எந்த ஒரு புருஷனாவது தவறுதலாக நடந்துகொண்டி ருந்தாலும் சரி, அல்லது தான் கர்ப்பமா யிருக்கிற காரணத்திற்காகத் தன்னுடைய நியாயமான உரிமைகளை, தான் தொழில் செய்கிற இடத்து அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தாலும் சரி, அல்லது தனக்கோ தன்னுடைய குழந்தைகளுக்கோ யாரேனும் தீங்கிழைத் திருந்தாலும் சரி எல்லாவற்றிற்கும் பரிகாரந் தேடிக்கொள்ள ஆலோசனைகள் கேட்கலாம். பின்னர், பிரசவ காலத்தின்போது ஆபத்திரிகளில் திரீகளுக்கு எல்லாவிதமான சௌகரியங்களும் செய்து கொடுக்கப்படுகின்றன. மாகோவிலுள்ள ஆபத்திரியைத் தவிர, உலகத்திலே வேறெந்தப் பிரசவ ஆபத்திரியிலாவது, ஒவ்வொரு திரீயினுடைய படுக் கைக்குப் பக்கத்திலும், காதோடு கேட்கிற ரேடியோ வசதியும், தன்னுடைய குடும்பத்தினருடன் நினைத்தபோது பேசுவதற்கான டெலிபோன் வசதியும் இலவசமாகச் செய்து கொடுக்கப் பட்டிருக் கின்றனவா? என்று சோவியத் நாகரிகத்தைப் பாராட்டி எழுதியிருக் கிற சிட்னி வெப் தம்பதிகள் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள்.1 பிரசவித்த பிறகு, குழந்தையின் துணிமணிகளுக்கென்று ஒரு தொகையும் (சுமார் 28 ரூபாய்) குழந்தையின் ஆகார வகைக்காக முதல் ஒரு வருஷத்திற்கு மாதவாரியாக ஒரு தொகை(மாதம் சுமார் ஆறு ரூபாய் விகிதம்) பிரதி யொரு திரீக்கும் அளிக்கப்படுகின்றன. இந்த உதவிகள் யாவும், அதாவது கர்ப்ப பரிசோதனை தலத்தில் பெயரைப் பதிவு செய்து கொள்வதிலிருந்து, பிரசவித்த பிறகு ஒரு வருஷம் வரை குழந்தைக்கு ஆகாரம், துணிமணிகள் முதலியன அளிப்பது வரை எல்லாம் இலவசமாகவே செய்யப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கத் தக்கது. இவை தவிர, ஒரு தாயாருக்கு ஆறு குழந்தைகளுக்கு மேல் இருக்குமானால் அல்லது இனி பிறக்கு மானால், அப்படி இருக்கிற அல்லது பிறக்கிற அதிகப்படியான ஒவ்வொரு குழந்தைக்கும், வருஷத்திற்கு 1,250 ரூபாய் வீதம் குழந்தை யின் ஐந்தாவது வயதுவரை இனாம் கொடுக்கப்படுகிறது. பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமானால், அதிகப்படியான ஒவ் வொரு குழந்தைக்கும் முதல் வருஷத்திற்கு 3,125 ரூபாயும், அடுத்த நான்கு வருஷ மொன்றுக்கு 1,875 ரூபாய் விகிதம் இனாம் கொடுக்கப் படுகிறது. 1936 ஆம் வருஷம் ஜுன் மாதக் கடைசியிலிருந்து 1941 - ஆம் வருஷம் ஜுன் மாதக் கடைசிவரை ஐந்து வருஷ காலத்தில் இந்த மாதிரி இனாம் தொகையாகச் சுமார் 1,25,00,00,000 ரூபாய் அரசாங்க பொக்கிஷத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தினுடைய பரிணாமம் தேசம். தேசத்தினுடைய நல் வாழ்வுக்கு அடிப்படையாயுள்ளது குடும்பத்தினுடைய நல்வாழ்வு. எனவே, இந்தக் குடும்பத்திலுள்ள தம்பதிகள் ஒத்த நலனும் ஒத்த பண்பும் உடையவர்களாய், சம அந்ததும் சம உரிமையும் உடையவர் களாய் இருத்தல் வேண்டும். இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் சோவியத் அரசாங்கத்தார் செய்திருக்கின்றனர்; குடும்ப வாழ்க் கைக்கு ஒரு கௌரவம் கொடுத்திருக்கின்றனர். இதனால் விவாக ரத்துகள் குறைந்து கொண்டும், ஜனனவிகிதம் அதிகரித்துக் கொண்டும் வருகின்றன. உதாரணமாக, மாகோ நகரத்தில் மட்டும் 1936-ஆம் வருஷத்தில் 16,182 விவகாரத்துகள் பதிவு செய்யப்பட்டன. 1937-ஆம் வருஷம் இது 8,961க்குக் குறைந்துவிட்டது. இதற்கெதிராக அதே மாகோ நகரத்தில் 1936- ஆம் வருஷம் 71,073 குழந்தைகள் பிறந்தன. 1937-ஆம் வருஷத்தில் இந்த எண்ணிக்கையானது 1,35,848க்கு அதிகப் பட்டிருக்கிறது. சோவியத் ருஷ்யாவில் குடும்ப வாழ்க்கை திரப்பட்டுக் கொண்டும் புனிதமடைந்து கொண்டும் வருகின்றது. ஒரே மாதிரி யான மனப்பான்மையும் அந்ததுமுடைய இளைஞர்கள் விவாகம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை நடத்துமாறு தூண்டப் படுகிறார்கள். விவாகம் என்பது, மதத்தோடு ஒட்டிய ஒரு சடங் கன்று. மனமொத்த இரண்டு பேர், குடும்ப வாழ்க்கையை நடத்து வதற்காக, தாங்களே இஷ்டப்பட்டுச் செய்துகொள்கிற ஓர் ஒப் பந்தம். இந்த ஒப்பந்தத்திற்குப் பங்கம் ஏற்படாமல் நடந்து கொள்வது தம்பதிகளின் கடமை. இப்படிப்பட்ட கருத்துக்கள்தான் இன்றைய ருஷ்யாவில் நிலவுகின்றன. ஆனால் சட்டத்தின் முன்னர், ஒப்பந்தப் படி விவாகம் செய்து கொள்கிற தம்பதி களும், ஒப்பந்தமில்லாமல், புருஷனும் மனைவியுமாக வாழ்கின்றவர் களும் ஒரே மாதிரிதான். யாருக்கும் எவ்வித விசேஷ சலுகையும் கிடையாது. அப்படியே, ஒப் பந்தப்படி விவாகம் செய்து கொள்ளாத புருஷனுக்கும் மனைவிக்கு மாகப் பிறந்த குழந்தைகள் என்பது கிடையாது. ஒரு தாய் வயிற்றி லிருந்து குழந்தை பிறந்துவிட்டால், அது யார் மூலமாகப் பிறந்தது, எப்படி பிறந்தது என்பதைப்பற்றிக் கேள்வியே இல்லை. பிறந்த குழந்தையைப் பராமரிப்பது அரசாங்கத்தின் கடமை. தம்பதிகளின் பரபர சம்மதத்தின் பேரிலாவது அல்லது தம்பதிகளில் யாரொருவருடைய விருப்பத்தின் பேரிலாவது விவாகம் ரத்து செய்யப்பட்டு விடலாம். இந்த விவாக ரத்தைப் பதிவு செய்துகொள்கிற அரசாங்க அதிகாரிகள், குழந்தைகளின் போஷ ணைக்குப் புருஷனோ மனைவியோ யார் எவ்வளவு தொகை கொடுத்து வரவேண்டும் மென்பதையும், குழந்தைகள் யாரிடத்தில் வசித்துவர வேண்டு மென்பதையும் நிர்ணயிப்பார்கள். தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தாலோ அல்லது பெற்றோர்களின் நோய், பிறக்கிற குழந்தைக்குத் தொற்றும் என்று தெரிந்தாலோ அல்லாமல், கர்ப்பத்தைச் சிதைவு செய்வது சோவியத் ராஜ்யத்தில், தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படுகிறது. பெண்களின் கல்வி முன்னேற்றம் ருஷ்யாவில் வெகு துரிதமாக நடைபெறுகிறது. 1917-ஆம் வருஷத்திற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் அத்தனை பேரும் கல்வி ஞானம் உடையவர் களாகவும், சுய முயற்சி யினால் பிழைப்பு நடத்தக்கூடியவர் களாகவும் இருக்கிறார்கள். உயர்தரக் கல்வி பயிலும் மாணாக்கர்களில் 100-க்கு 43 பேர் பெண் களே. இங்ஙனம் சிறுமிகளுக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதோடு, வயது வந்த திரீகளுக்கும் கல்வி பயிலுவிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன. ருஷ்யாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் ஞான விளக்கை ஏற்றி வைத்திருக் கிறார்கள் சோவியத் தலைவர்கள். காம்ஸோமால் இயக்கத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளும், ராணுவப் பயிற்சி பெற்று விட்டுக் கிராமங்களுக்குத் திரும்பி வருகின்ற இளைஞர்களும், வயது வந்த தாய்மார்களுக்கும் இலவசமாகக் கல்வி யறிவைப் புகட்டுகிறார்கள். அறியாமையிலும் மூடநம்பிக்கை களிலும் ஆழ்ந்து கிடந்த தாய்மார்கள் இப்பொழுது கண் திறந்த உலகத்தைப் பார்க்கிறார்கள்; சமுதாய வாழ்வில் தங்களுக்குரிய நியாயமான பங்கை அநுபவித்து வருகிறார்கள். 10. கல்வி - கலை கல்வியறிவு இல்லாமற் போனால் அரசியல் அறிவு உண்டா காது. அதற்குப் பதிலாக வதந்திகள், சில்லரைப் பேச்சுகள், துவேஷங்கள் முதலியனவே உண்டாகும் என்று லெனின் கூறினான். ஜனங்கள் தங் களுடைய பிரஜா உரிமைகளை அநுபவிக்க வேண்டுமானால், அவர்கள் முதலில் கல்வி ஞானம் பெறவேண்டும். இந்த ஞானப்பாலைப் புகட்டுவது தங்களுடைய முதற் கடமையென்பதை, சோவியத் தலைவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தார்கள். இவர்கள் 1918-ஆம் வருஷம் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட காலத்தில், ருஷ்ய மகாஜனங்களில் 100-க்கு 73 பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர் களாயிருந்தார்கள். இருபது வருஷங்களுக்குப் பிறகு இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. கீழ்க்கண்ட புள்ளி விவரங் களிலிருந்து இதனை நன்கு தெரிந்துகொள்ளலாம்: விவரம் 1913ஆம் 1940-ஆம் வருஷத்தில் வருஷத்தில் 1. பள்ளிக்கூடங்களில் படிக்கிற பிள்ளைகள் 78 லட்சம் 350 லட்சம் 2. கலாசாலைகளில் படிக்கிற பிள்ளைகள் 1,12,000 7 லட்சம் 3. தொழிற் பள்ளிக்கூடங்களில் படிக்கிற 35,800 9,51,900 பிள்ளைகள் 4. சர்வ கலாசாலைகளின் எண்ணிக்கை 71 716 இங்ஙனம் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கிறவர்கள் தவிர, கல்வியறிவு இல்லாமலே பல தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிற வயது முதிர்ந்தவர்களுக்கும் படிப்புச் சொல்லிக் கொடுக்க, அரசாங்கத்தார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இப்பொழுது சுமார் 4 கோடி பேர் இந்த மாதிரி கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். சோவியத் பிரஜைகள், அரசாங்கத்தினிடமிருந்து கல்வி வசதி களைப் பெற உரிமையுடையவர்கள். சோவியத் அரசியல் சட்டத்தின் 121 -ஆவது பிரிவின் மூலமாக இந்த உரிமை ஊர்ஜிதம் செய்யப்பட்டி ருக்கிறது. இந்த விதியின்படி, ஆரம்பக்கல்வியைக் கட்டாயப்படுத்தி இலவசமாகப் புகட்டுவதும், உயர்தரக் கல்வியை இலவசமாக அளிப்பதும் தொழிற் சாலைகள், விவசாயப் பண்ணைகள் முதலிய வற்றில் வேலை செய் கிறவர்களுக்கு இலவசமாகத் தொழிற் கல்வி, விவசாய ஞானம் ஆகிய அவரவருக்குத் தேவையான முறையில் போதனை ஏற்பாடுகள் செய்து கொடுப்பதும் அரசாங்கத்தின் அவசியமான கடமைகள். இந்தக் கடமை களை அநுசரித்து அரசாங் கத்தார் பிரதி வருஷமும், கல்வி இலாகாவின் செலவை அதிகப் படுத்திக் கொண்டுவருகின்றனர்; புதிய பள்ளிக் கூடங்களையும், ஆராய்ச்சிக் கழகங்களையும் தாபித்து வருகின்றனர். ருஷ்யக் கல்வி முறையின் விசேஷ அமிசம் என்னவென்றால், தாய்மொழி மூலம் பாடங்களைப் போதித்தலேயாம். ஜார் அரசாங் கத்தினர் எல்லாவற்றையும் ருஷ்ய மயமாக்க வேண்டுமென்று பார்த்தார்கள். இப்பொழுது சோவியத் ஆட்சி முறையில் அவரவரு டைய தாய்ப் பாஷையிலேயே அவரவருக்கும் கல்வி புகட்ட வேண்டு மென்பது கட்டாய விதியாக அநுஷ்டிக்கபடுகிறது. ருஷ்யாவிலே பல பாஷை பேசுவோர் உண்டல்லவா? இப்படிப் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த அநேக பாஷைகளுக்கு எழுத்துக்கள் கண்டு பிடித்து அவற்றில் புதகங்களை எழுதச் சொல்லி வெளியிட்டார்கள். இந்த மாதிரி சுமார் 35 பாஷைகளுக்கு எழுத்துக்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் முறையே நூல்கள் அச்சாயின. ருஷ்யாவில் மொத்தம் 90 விதமான பாஷைகளில் நூல்கள் வெளியா கின்றன. 80 விதமான பாஷைகளில் பிள்ளைகளுக்குப் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இவை தவிர, புத்தகசாலைகளென்ன, பத்திரிகை களென்ன, பொருட் காட்சிகளென்ன இவையெல்லாம் ஒன்றுக்குப் பன்மடங்காகப் பெருகி, ஜனங்களுடைய அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்கின்றன. எத்தனை? 1914-ஆம் 1933-ஆம் 1938-ஆம் 1940-ஆம் வருஷத்தில் வருஷத்தில் வருஷத்தில் வருஷத்தில் 1. புதக சாலைகள் 12,600 40,300 70,300 - 2.புதகசாலைகளில் உள்ளபுதகங்கள்... - 860 லட்சம் 1260லட்சம் - 3.பத்திரிகைகள்... 859 - 8,550 - 4. பத்திரிகைகளின் பிரதிகள்... 27 லட்சம் - 375 லட்சம் - 5. வெளியான நூல்கள் 867 லட்சம் - - 7010 லட்சம் 6. பொருட்காட்சி சாலைகள்... 180 - - 761 சமுதாயத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பெரிதும் துணை செய்கிறார்களல்லவா? இதனால் இவர்களுக்கு இப்பொழுது ஒரு கௌரவமான தானம் ஏற்பட்டிருக்கிறது. முன்போல் இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த உபாத்திமைத் தொழிலை நடத்துவதில்லை. இவர்களுடைய சம்பள விகிதம் அதிகரித்திருக்கிறது; வேலை நேரம் குறைந்திருக்கிறது. சமுதாயத்தில் இவர்களுடைய செல்வாக்கு மிக அதிகம். 1911ஆம் வருஷம் ருஷ்யா முழுமைக்கும் மொத்தம் 92,400 Mசிரியர்களேïUந்தார்கள்;இ¥bபாழுதுசுமhர்பத்Jஇல£சம்ஆசிÇயர்கள்இரு¡»றார்கள்.சோÉa¤JfË‹ பிரதிநிதிச்சபையில் 19Mசிரியர்கள் mங்கத்தினராயிருக்கிறார்கள்.FHªijfË‹ பராமரிப்பு விஷயத்தில் சோவியத் அரசாங் கத்தார் அதிக கவனஞ்செலுத்தி வருகின்றனர் என்பதைப்பற்றி ஏற்கனவே கூறியுள்ளோம். குழந்தைகளுக்குச் சிறு பருவத்தி லிருந்தே விளையாட்டின் மூலமாகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கான கிண்டர் கார்டன் பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கில் தாபிக்கப் பட்டிருக்கின்றன. `1936 - ஆம் வருஷம் எடுத்த ஒரு புள்ளி விவரப்படி இந்தப் பள்ளிக்கூடங்களில் 10,56,800 குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தன. இவைதவிர, குழந்தைகளுக்கென்று விளையாட்டு மைதானங்கள், பாதுகாப்பு தலங்கள், ஆபத்திரிகள் முதலிய பலவும் தனியாக நிறுவப்பட்டிருக்கின்றன. சமதர்ம சமுதாயத்தைச் சேர்ந்தே ஒவ்வொரு பிரஜையும், அக்கிரமங்களைச் சகித்துக்கொண்டிருக்கிற கோழையல்ல; அவை களை எதிர்த்துப் போராடுகிற வீரன்; கர்மயோகி; வர்க்கப் பிரிவினைகள் இல்லாத சமுதாயத்தில் நம்பிக்கையுடையவன்; உழைப்புக்குப் பெருமை தருகிறவன்; பரலோக வாழ்க்கையை மறந்து இகலோக வாழ்க்கையில் முழுக் கவனத்தையும் செலுத்துகிறவன்; ஜாதி, சமூக, நிறவேற்றுமைகளைப் பாராட்டாதவன்; உலகனைத்தையும் ஒரு தொகுப்பாக நோக்குகிறவன்; திடமான தேகத்திலேதான் உறுதியான மனம் இருக்கமுடியும் என்பதை அநுஷ்டானத்தில் கொண்டு வரு கிறவன்; பால் வேற்றுமை பாராட்டாமல் ஆணையும் பெண்ணை யும் சரிசமானமாக நோக்குகிறவன்; ஒழுக்கத்திற்கும் உயிருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு வைக்கிறவன். இந்த மாதிரியான தன்மைகளை வளர்க்கக்கூடிய மாதிரி சோவியத் கல்விமுறை அமைக்கப்பட்டி ருக்கிறது. பிரதியொரு குழந்தையும் சுயமாகச் சிந்திக்குமாறு செய்யப்படுகிறது. தாய் மொழியின் மீதும் தாய்நாட்டின் மீதும் ஒரு பற்றுதல் உண்டாகுமாறு பாடமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதற்காகச் சரித்திரம், பூகோளம் ஆகிய இரண்டின் மீதும் பிள்ளைகள் அதிக கவனஞ் செலுத்துமாறு தூண்டப் படுகிறார்கள். சுருக்கமாகச் சொல்கிறபோது, சோவியத் கல்வி முறையின் நோக்கம் உண்மையான கலையை வளர்ப்பது, புதிய சமுதாயத்தை அமைப்பது புதிய மனிதனைச் சிருஷ்டிப்பது ஆகிய இவையேயாம். ஜனங்களுடைய அறிவு வளர்ச்சிக்கு, சினிமா, நாடகம், ரேடியோ முதலியவை இன்றியமையாத சாதனங்களென்பது சோவியத் அரசாங்கத்தாரின் கொள்கை. சினிமா படங்கள் எடுக்கிற விஷயத்தி லாகட்டும், நாடகங்கள் நடிக்கிற விஷயத்திலாகட்டும், அரசாங்கத்தாரும் பொதுஜனங்களும் ஒரே விதமான சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஜனங்களுடைய கீழான எண்ணங்களைத் தூண்டிவிடக் கூடிய சினிமாக்களுக்கோ நாடகங்களுக்கோ அங்கு இடமில்லை. சரித்திர சம்பந்தமான படங்களுக்கும் நாடகங் களுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணமாக லெனின், டாலின் போன்ற தலைவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்கள், 1917 - ஆம் வருஷத்து அக்டோபர் புரட்சி, மகா பீட்டருடைய வரலாறு, ருஷ்ய - ஜப்பானியயுத்தம் இப்படிப் போன்ற படங்களுக்கும் நாடகங்களுக்குமே ஜனங்கள் அதிக உற்சாகம் காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் இவை ஜனங் களுடைய வாழ்க்கையோடு ஒன்றிய சம்பவங்களா யிருப்பதுதான். தவிர, மேற்படி தொழில்களில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு அரசாங் கத்தார் எல்லாவித ஆதரவுகளையும் அளித்து வருகின்றனர். இன் னொரு விஷயம் என்ன வென்றால், ருஷ்யாவில், சினிமா வளர்ச்சிக் காக நாடகம் பலியிடப்பட்டு விடவில்லை. பொருளாதாரம், அரசியல் முதலியவற்றில் சம அந்தது, சம உரிமை வழங்கப்பட்டி ருப்பது போல் சினிமாவுக்கும் நாடகத்திற்கும் சம அந்ததும் சம உரிமையும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டும் கை கோத்துக் கொண்டே முன்னேற்றமடைந்து வருகின்றன. 11. சுகாதாரம் - ஓய்வு சோவியத் ராஜ்யத்தின் பிரஜைகள், வயோதிக காலத் திலும், நோயாகி விட்ட தருணத்திலும், வேலை செய்யும் சக்தியை இழந்துவிட்ட பொழுதும் அரசாங்கத்தின் பாதுகாப்புக் குரியவர்கள். - சோவியத் அரசியல் சட்டம் 120 -ஆவது பிரிவு. உலகத்திலுள்ள எல்லா நாடுகளையும் போலவே சோவியத் ருஷ்யாவிலும் ஆபத்திரிகள் இருக்கின்றன; வைத்தியர்கள் இருக் கிறார்கள்; தனிப்பட்டவர்களால் நடத்தப்பெறும் ஔஷத சாலைகள் இருக்கின்றன. ஆனால் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. என்ன வென்றால், மற்றநாடுகளில், சிகிச்சைக்கு வருகிற அந்தந்த மனிதர் களுடைய நோய்கள் தீர்க்கப்படுகின்றன. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளாகவே மேற்படி ஆபத்திரிகள் முதலியன இருக்கின்றன. ஆனால் சோவியத் நாட்டில் அரோகதிடகாத்திர முள்ள ஒரு சமுதாயத்தை நிர்மாணம் செய்யவேண்டுமென்னும் நோக்கத்துடன் மேற்படி சிகிச்சைசாலைகள் முதலியன இருக்கின்றன. சமதர்ம வார்படத்திலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட பிரதியொரு பிரஜையும் நோயற்ற வாழ்வை நடத்தவேண்டு மென்பது சோவியத் தலைவர்களின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றத்திற்குக் கொண்டு வருவதற்கு முன்னர் அவர்கள் மகத்தான தடங்கல்களைக் கடக்க வேண்டியிருந்தது. ஜார் அரசாங்கமானது, சுகாதாரமற்ற சூழலிலே இருந்த ஒரு பரம்பரையை, சோவியத் ஆதிக்கத்தினிடம் ஒப்புவித்துவிட்டது. கிராமங்களிலும் நகரங்களிலும் வசித்துக் கொண்டிருந்த ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமை மகா மோசமா யிருந்தது. பொதுஜன சேவை செய்வதாக யாரேனும் முன்வந்தால், அவர்களைப் போலீசார் பயமுறுத்தி அடக்கி வந்தனர். சிறிதுகூட கருணையின்றி, தொழிலாளர்களும் விவசாயிகளும் சுரண்டப்பட்டு வந்தார்கள். அறியாமை காரணமாகவும், சுகாதார வசதிகளின்மை யாலும் ஜனங்கள் பலவித நோய்களுக்கு ஆளானார்கள். வருஷந் தோறும் இலட்சக்கணக்கான மக்கள் இறந்துபோனார்கள். 1914- ஆம் வருஷ யுத்தத்திற்கு முந்தின பத்து வருஷ காலத்தில், சராசரி ஆயிரத்துக்கு முப்பது பேர் விகிதம் வியாதிகளினால் அவதிப்பட்டு இறந்து போனார்கள். யுத்தம் வந்தது. ஜனங்களுடைய உடல் நலம், வைத்திய வசதிகள் எல்லாம் குன்றிப் போய்விட்டன. இப்படிப் பட்ட ஒரு நிலைமையில், தேசத்தின் சுகாதாரத்தைச் சீர்படுத்த வேண்டிய பொறுப்பு, சோவியத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. இதற்காக விரிவான தொரு திட்டம் வகுத்தனர். இந்தத் திட்டப்படி, பிரதியொரு சோவியத் பிரஜையும், தாயின் கர்ப்பத்தில் சிசுவாகத் தோன்றுகிறது முதல், சமாதியில் அடக்கமாகிறது வரை ஆயுள் முழுவதும் அரசாங்கத்தினிடமிருந்து வைத்திய உதவிகளையும் சுகா தார வசதிகளையும் இலவசமாகப் பெற உரிமையுடையவனா கிறான். தர்ம கைங்கரியமாகவோ அல்லது ஜனங்களின் மீதுள்ள கருணையினாலோ அரசாங்கத்தார் இந்த வைத்திய உதவிகளைச் செய்யவில்லை; சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆளப்படுவோருக்கு ஆள்வோர் செய்து கொடுக்க வேண்டிய இன்றியமையாத கடமையாகக் கருதியே இவைகளைச் செய்கின்றனர். தவிர, மொத்த ஜனசமுதாயத்தின் சுகாதார நிலைமையை உயர்த்து வதையே தங்களுடைய நோக்கமாகக் கொண்டனர்; தனிப்பட்டவர் களுடைய நோயைத் தீர்த்துவிட்டுச் சும்மாயிருப்பதை யல்ல. பொது வாக, எந்த ஒரு சோவியத் பிரஜையும், தன்னுடைய நோய்க்குச் சரியான பரிகாரம் கொடுக்கப்படவில்லையென்றோ, சுகாதார மில்லாத ஒரு சூழலின் மத்தியில், தான் வாழ வேண்டியிருக்கிறதே யென்றோ ஏங்கிக் கொண்டு தன் வாழ்நாளை வீணாகக் கழித்து விடக்கூடாது. அவனுடைய வாழ்நாள் உபயோககரமான வழியில் செலவழிவதற்கு அவனுடைய தேகமோ மனமோ இடங்கொடுக்க வில்லையென்று சொன்னால், அதற்குக்காரணம் அரசாங்கந்தான். அவனுடைய தேகத்தையும் மனத்தையும் சீர்திருந்திய நிலையில் வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்படிச் செய்யா விட்டால் அஃது, அதன் குற்றம். நோய்க்குச் சிகிச்சை செய்வது மட்டுமல்ல, நோய் வராமல் தடுப்பதும் அரசாங்கத்தின் கடமை. இந்தமாதிரி யான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே சோவியத் ருஷ்யாவில் வைத்திய - சுகாதார வசதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோவியத் ராஜ்யத்தில் வைத்திய - சுகாதார சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களும், அதாவது ஆபத்திரிகள், பரிசோதனை தலங்கள், வைத்திய சம்பந்தமான ஆராய்ச்சிக் கழகங்கள், சுகாதார நிலையங்கள், முதலியனயாவும் அரசாங்கத்தின் வசத்திலேயே இருக் கின்றன. வைத்தியர்கள், நர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருந்துகள் தயாரிப்போர், வைத்திய சாதிரத்தைப் போதிக்கிறவர்கள், சுகா தார அதிகாரிகள் முதலிய அனைவரும் அரசாங்கத்தின் ஊழியர்கள். மேற்படி தாபனங்களுக்கும் இந்த ஊழியர்களுக்கும் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்தே பணம் செலவழிக்கப்படுகிறது. ஜனங்களுடைய குடியிருப்பு வசதி, குடிநீர், உணவுவகை முதலிய அனைத்தையும் கவனிக்கவேண்டியது இந்த ஊழியர்களின் பொறுப்பு. நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், விவசாய பண்ணைகள் முதலிய எல்லா இடங்களிலும் இந்த ஊழியர்கள் பரவியிருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய நிருவாக எல்லைக் குள்ளிருக்கிற குழந்தை களையும், வாலிபர்களையும் வருஷத்திற்கொரு முறை பரிசோதனை செய்கிறார்கள்; குறைநிறைகளைக் கவனித்து வேண்டுவன செய்கிறார்கள். மனிதன், வளர்கிற காலத்தில்தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுமென்பது அரசாங்கத்தின் கருத்து. தொழி லாளர் சம்பந்தமாக அவர்கள் செய்திருக்கிற சட்டங்களைக் கொண்டு இதனைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக பதினான்கு வயதுக் குட்பட்ட சிறுவர்களை எந்த ஒரு தொழிலிலும் அமர்த்தக்கூடாது. 14 வயதுக்குமேல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நான்கு மணி நேர வேலையும், 16 வயதுக்குமேல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆறு மணி நேர வேலையுமே கொடுக்கப்படவேண்டும். இவர்கள், ஒரு தொழிலில் சேர்வதற்கு முன்னர் அந்தத் தொழிலைச் செய்யத் தகுதி யுடையவர்களா வென்று வைத்தியர்களால் பரிசோதனை செய்யப் படுகிறார்கள். இந்த மாதிரி கண்டிப்பான முறைகளை அநுஷ்டித்து, இளைஞர் உலகத்தை, வருங்கால சந்ததியை வளர்த்து வருகிறார்கள் சோவியத் அரசாங்கத்தார். நோய்வாய்ப் பட்டிருந்தவர்களோ, அல்லது தேகத்தினாலும் மூளையினாலும் அதிகமாக உழைத்துக் களைத்துப் போயிருக் கிறவர் களோ அமைதியாக இருந்து ஓய்வு பெறுவதற்கான ஆரோக்கிய தலங்கள் பல, ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன. இங்குச் சென்று வசிக்க யாருக்கும் உரிமை உண்டு. தொழிலாளர்கள், விவசாயிகள், நோயாளிகள், வயோதிகர்கள் முதலியோர் இங்கு ரெயில் மார்க்கமாகவோ கப்பல் மார்க்கமாகவோ செல்வதற்கும், இங்கு சென்று வசிப்பதற்கும் இலவச வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் வைத்திய உதவிகள், சுகாதார வசதிகள் முதலியன ஏற்படுத்திக் கொடுத்திருப்பதன் பயன் என்ன? ஜனங்கள், சிறப்பாகத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலியோர், சத்தான உணவை ஒன்றுக்கு இரண்டு மடங்கு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்; புதிய புதிய முறையில் கண்டிபிடிக்கப்பட்ட, பக்குவம் செய்யப்பட்ட ஆகாரவகைகளையும் சாப்பிடுகிறார்கள். காற்றோட்டமுள்ள, துர்நாற்ற மில்லாத இடங்களில், நவீன நாகரிக வசதிகளுடன் வசிக்கிறார்கள். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறது. 1917 - ஆம் வருஷத்திற்கு முன்னர் குடிநீர் வசதிகளுள்ள நகரங்கள் 222; சாக்கடை வசதிகளுள்ள நகரங்கள் 33. 1938-ஆம் வருஷத்தில் குடிநீர் வசதிகளுள்ள நகரங்கள் 384; சாக்கடை வசதிகளுள்ள நகரங்கள் 112. ஒவ்வொரு நகரத்திற்கும் அல்லது பெரிய கிராமத்திற்கும் திருஷ்டி பரிகாரம் மாதிரி சில நாடுகளில் சேரிகள் இருக்கின்றனவே அந்த மாதிரியான சேரிகள் ருஷ்யாவில் கிடையாது. ஒதுக்கப்பட்டவர்கள் இருந்தாலல்லவோ ஒதுக்கப்பட்ட பிரதேசங்கள் இருக்கப் போகின்றன? குழந்தை மரணம் குறைந்திருக்கிறது. முந்தியதை விட இப்பொழுது குழந்தைகளின் மார்பு அகலம் ஓர் அங்குலம் அதிகப்பட்டிருக்கிறது. சராசரி 1 1/4 அங்குலம் விகிதம் உயரத்தில் வளர்ந்திருக்கிறார்கள். தேக நிறையும் சராசரி 11 1/2 பவுண்ட் விகிதம் கூடியிருக்கிறது. க்ஷயரோகம், 100 - க்கு 83 விகிதம் குறைந்திருக்கிறது. முன்னர், பெரிய நகரங்களில் மேற்படி க்ஷயரோகத்தினால் நூறு பேர் இறந்து கொண் டிருந்தார்களானால், இப்பொழுது ஐம்பது பேர்தான் இறந்து போகிறார்கள். ஜார் காலத்துக் கிராமங்களில், ஒரு டாக்டரைப் பார்ப்பது தேவதூதனைப் பார்ப்பது மாதிரி; ஆபத்திரியென்பது குதிரைக் கொம்பு. இப்பொழுது மூலை முடுக்குகளிலுள்ள எந்தக் கிராமத் திலும் வைத்திய வசதிகள் கிடைக்கின்றன. நவீன முறையில் சிகிச்சை கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. போக்கு வரத்து வசதிகள்கூட இல்லாமலிருந்த அஸெர்பைஜான் என்ற ஒரு பிரதேசத்தில் 291 டாக்டர்களும், தாஜிகிதான் என்ற பிரதேசத்தில் 13 டாக்டர்களும் முன்னர் இருந்தார்கள். இப்பொழுது அஸெர்பை ஜானில் 2,480 டாக்டர்களும் தாஜிகிதானில் 372 டாக்டர்களும் இருக்கிறார்கள். இங்ஙனம் ஆங்காங்கு ஆபத்திரிகளும், ஔஷதாலயங் களும், சுகாதார நிலையங்களும் திரமாக ஏற்படுத்தப்பட்டிருப்ப தோடு, ஊர்தோறும் சதா சுற்றுபிராயணம் செய்துகொண்டிருக்கிற ஆபத்திரிகள், ஔஷதாலயங்கள் முதலியன இருக்கின்றன. இவை களோடு டாக்டர்கள், நர்கள் முதலியோர் செல்கிறார்கள். திடீ ரென்று தோன்றிப் பரவுகிற மலேரியா, காலரா, பிளேக், அம்மை முதலிய தொத்து நோய்களைச் சமாளிக்கவும், எதிர்பாராத ஆபத்துக் கள் எந்த இடத்திலேனும் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கவும் இந்தப் பிரயாண ஆபத்திரிகள் இருக்கின்றன. இந்த பிரயாண ஆபத்திரி கோஷ்டி, எந்த ஊரில் நோய் பரவியிருக்கிறதோ அந்த ஊருக்கு வந்து, நோயாளிகளுக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்கிறது; சுகாதாரப் பிரசங்கங்கள் செய்கிறது; துர்நாற்றம், அழுக்கு முதலியன எங்கிருந்து வருகின்றன, எப்படிப் பரவுகின்றன என்பதைக் கண்டு பிடித்து அவற்றைப் போக்குகின்றது; நீண்டகாலச் சிகிச்சை பெற வேண்டியவர்களை, பெரிய ஆபத்திரிகளுக்கு அனுப்புகிறது; உடனே கவனிக்கவேண்டிய கேசு களாயிருந்தால், நோயாளிகளை ஆபத்திரிக்கு அனுப்புவதற்கும், தேவையான மருந்துகளைத் தருவிப்பதற்கும் ஆகாய விமானங்களை உபயோகிக்கிறது. இந்தப் பிரயாணம் ஆபத்திரிகளைக் கிராமவாசிகள் வரப்பிரசாதம் மாதிரி கொண்டாடுகிறார்கள். பொதுவாகவே, ஜனங்கள் முன் மாதிரி நோய்களினால் கஷ்டப்படுவதில்லை. அப்படி ஏதேனும் வியாதி வந்தால், அதற்கு உடனே பரிகாரம் கிடைத்து விடுகிறது. 1913-ஆம் வருஷம், ருஷ்யா முழுமைக்கும் 19,785 டாக்டர்களே இருந்தார்கள்; 1937-ஆம் வருஷத்தில் 1,32,000 டாக்டர்கள் இருக்கிறார்கள். ஜனங்களுடைய சுகாதாரத்திற்காக அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து 1913-ஆம் வருஷம் ஒரு ரூபாய் விகிதம் செலவழிக்கப்பட்டது என்று சொன்னால் 1937-ஆம் வருஷம் 75 ரூபாய் விகிதம் செலவழிக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான ஆரோக்கிய தலங்கள் இப்பொழுது ருஷ்யாவில் கிளம்பியிருக்கின்றன. 1937-ஆம் வருஷத்தில் மட்டும் இவற்றில் சுமார் ஐந்து இலட்சம் பேர் ஓய்வுச் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். சோவியத் ருஷ்யாவில் மொத்தம் 72 வைத்யக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் சுமார் ஒரு இலட்சம் பேருக்குமேல் பயிற்சி பெறுகிறார்கள். இலவசமாக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு அரசாங்கத்தார் உபகாரச் சம்பளம் வேறே கொடுக்கிறார்கள். இந்த வைத்தியக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்கிறபோதே, யாராருக்கு எந் தெந்தத் துறையில் மன ஈடுபாடு இருக்கிறதோ, அதாவது எந்தத் துறையில் பிரவேசித்தால் அவர்கள் பிரகாசிக்க முடியுமோ அந்தத் துறையிலேயே அவர்களுக்கு விசேஷப் பயிற்சி கொடுத்துச் சிறப்பிக் கிறார்கள். இவர்கள் தங்களுடைய துறையில் நிபுணர்களாகி, மேலும் தங்கள் தொழில் அறிவை அபிவிருத்தி செய்து கொள் கிறார்கள். மற்றும், ருஷ்யாவில் வைத்தியத்திற்கும் விஞ்ஞானத் திற்கும் நெருங்கிய தொடர்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வியாதியின் கூறுபாடுகளையும் நன்றாக ஆராய்ச்சி செய்து அவற்றிற்கு எளிய முறையில் பரிகாரம் என்ன வென்பதைக் கண்டுபிடிப்பதில் அநேக அறிஞர்கள் முனைந்திருக்கிறார்கள். மருந்துகள் தயாரிப்பது, அவற்றைப் பிரயோகம் செய்வது முதலிய அனைத்தையும் ஓர் ஆராய்ச்சிக்குட்படுத்தி ஒழுங்கானமுறையில் செய்து வருகிறார்கள். பொதுவான நோக்கம் எந்த ஓர் ஆராய்ச்சியும், ஜனங்களுக்கு அதிக மான நன்மையைத் தரவேண்டுமென்பது தான். “இளமைக்குச் சந்தர்ப்ப வாயில்கள் எங்கும் திறந்து விடப்பட் டிருக்கின்றன.; முதுமை எங்கும் கௌரவிக்கப் படுகிறது என்பது ஒரு ருஷ்யப்பாட்டின் சாரம். இள மனம் படைத்தவர்களும் தேகதிட முடையவர்களும் எப்படி அதிகமாக உழைக்கக் கடமைப்பட்டவர் களோ, அப்படியே வயோதிகர்கள் பரிபூரணமாக ஓய்வு எடுத்துக் கொள்ள உரிமையுடையவர்கள். இது, சோவியத் ராஜ்யத்தின் சட்ட ரீதியான நீதி. 60 வயதான ஆண்களும் 55 வயதான பெண்களும் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற உரிமையுடையவர்கள். ஆனால் ஆண்கள் 25 வருஷமும் பெண்கள் 20 வருஷமும் குறைந்த பட்சம் உழைத்திருக்க வேண்டும். உழைத்துக் கொண்டிருக்கிற காலத்தில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விட்டாலும் சரி, அல்லது மேற்கொண்டு வேலை செய்வதற்குத் தகுதியற்றுப் போய் விட்டாலும் சரி, மேலே சொன்ன 25 அல்லது 20 வருஷ உழைப்பு காலம் முடியாவிட்டாலும், 60 அல்லது 55 வயது ஆகாவிட்டாலும் உபகாரச் சம்பளம் உண்டு. கடினமான தொழில்களிலே, அதாவது சுரங்கங்களிலே இறங்கி வேலை செய்தல், காடு மேடுகளில் ஆராய்ச்சி நிமித்தம் சுற்றுதல் முதலிய வேலைகளிலே ஈடுபட்டிருக்ககிறவர்கள், தாங்கள் பெற்று வந்த சம்பளத்தில் 100க்கு 60விகிதமும், யந்திரங்கள் முதலிய பெரிய சாமான்களை உற்பத்திசெய்கிற தொழிற்சாலை களில் வேலை செய்கிற வர்கள் 100க்கு 55 விகிதமும், ஆசிரியத் தொழில், வைத்தியத்தொழில் உள்பட்ட மற்றத்தொழில்களில் ஈடுபட்டிருக் கிறவர்கள் 100க்கு 50 விகிதமும் உபகாரச் சம்பளம் அளிக்கப்படு கிறார்கள். விஞ்ஞான ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறவர் களுக்கு மட்டும் விசேஷ உபகாரச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இப்படி அனைவருக்கும் உபகாரச் சம்பளம் கொடுத்து விடு வதோடு மட்டும் அரசாங்கம் திருப்தியடைந்து விடுவதில்லை. இவர்கள் நோயாகி விட்டால், இலவசச் சிகிச்சை பெறுவதற்கான தலங்கள்தேக திடமற்றுப் போனவர்கள் தங்குவதற்கென்று தனி விடுதிகள் முதலியன ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பல் விழுந்து போனவர்களுக்கு பல் கட்டப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு ரண சிகிச்சை செய்யப்படுகிறது. உட்கார்ந்தபடியே ஏதேனும் தொழில்கள் செய்து பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. எல்லாம் இலவசந்தான். முன்னர், பணக் காரப் பிரபுக்கள் வசித்துக் கொண்டிருந்த மாளிகைகள் இப்பொழுது வயோதிகர்களின் விடுதிகளாக மாறியிருக்கின்றன. இந்த விடுதி களில், சுகமாக, ஆனால் பயன்படக்கூடிய மாதிரி, பொழுது போக்கு வதற்கான எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகைகளை வரவழைத்து விநியோகிப்பது முதல் நாடகங்கள் நடித்துக்காட்டுவது வரை, இங்கு எல்லாவிதப் பொழுதுபோக்கு களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கிராமத்திலே வசிக்கிற விவசாயி கூட உபகாரச் சம்பளமும் ஓய்வும் பெற உரிமையுடையவன். அந்தந்தக் கிராம சோவியத்தின் பொது நிதியிலிருந்து அல்லது கூட்டுறவு தாபனத்தின் பொது நிதியிலிருந்து ஒரு சிறு தொகை, அந்தந்தக் கிராமத்து வயோதிகர் களுக்கு உபகாரச் சம்பளமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பொது நிதியிலிருந்து ஆரோக்கிய தலங்கள் முதலியன அநேக கிராமங் களில் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றில் சென்று விவசாயிகள் ஓய்வு பெறுகிறார்கள்; பொழுது போக்குகிறார்கள். இவைகளுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. இவைதவிர, பொது ஜனங்களுக்கு உபயோகப்படக்கூடிய அநேக பார்க்குகளை சோவியத் அரசாங்கத்தார் பல இடங்களில் அமைத்திருக் கின்றனர். ஜனங்கள் பிரயோஜனகர மான முறையில் பொழுது போக்குவதற்காகவே இவை ஏற்பட்டிருக்கின்றன. கலா ஞானத்தையும் ஓய்வையும் அளிக்கின்ற பார்க்குகள் என்றே இவை களுக்கு பெயர்.1 இவை பெரிய பூந்தோட்டங்கள். இங்கு விளை யாட்டுப் போட்டிகள் என்ன, நாடகங்களென்ன, சினிமாக்களென்ன, பிரசங்கங்களென்ன எல்லாம் நடைபெறும். சூரிய நானத்திற்கும் தண்ணீர் நானத்திற்கும் இங்கு ஏற்பாடுகள் இருக்கின்றன. இந்த மாதிரியான பார்க்குகள் இப்பொழுது சுமார் 600க்கு மேல் இருக் கின்றன. இவற்றிலே சிறந்தது மாகோவிலுள்ள கோர்க்கி பார்க். பிரபல ருஷ்ய ஆசிரியனான மாக்ஸிம் கோர்க்கி2யின் பெயரால் இது நிறுவப்பட்டிருக்கிறது. சுமார் நாலரை மைல் நீளமுள்ள இந்தப் பார்க்கில் தினந்தோறும் எழுபதினாயிரம் பேருக்கு மேல் வந்து ஓய்வு பெறுகிறார்கள்; இங்கு நடக்கிற காட்சிகளை அநுபவிக்கிறார்கள். இந்தப் பார்க்கைப் பார்ப்பதற்கென்றே வெளியூர்களி லிருந்து ஆயிரக் கணக்கான பேர் விடுமுறை நாட்களில் வந்து போகிறார்கள். நான் இறந்து போய் மறுபடியும் பூலோகத்தில் பிறக்கும் படி நேரிடுமாயின், மாகோ பர்க்கிலேயே பிறக்க விரும்புகிறேன் என்னு ஆங்கில அறிஞனாகிய எச்.ஜி.வெல் கூறியிருக்கிறான். இதனால் இந்தப் பார்க்கின் மகிமையை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். பொதுவாக, ருஷ்ய மகா ஜனங்கள், தங்களுடைய ஓய்வுப் பொழுதை, கலைச் சூழலின் மத்தியில் கழிக்கிறார்கள் என்பதற்கு, இந்தப் பார்க்குகள் சிறந்த அத்தாட்சி களாயிருக்கின்றன. 12. அந்நிய நாட்டுக் கொள்கை சோவியத் அரசாங்கத்தார், ஆரம்ப காலத்திலிருந்தே, உள் நாட்டு விவகாரங்களில் ஜனங்களுடைய மூட நம்பிக்கைகளையும், வெளி நாட்டு விவகாரங்களில் அந்நிய வல்லரசுகளின் அவநம்பிக்கை களையும் சமாளித்துக் கொண்டு போகவேண்டியவர்களானார்கள். இது விஷயத்தில் இவர்கள் மலை போன்ற உறுதியும் மண் போன்ற பொறுமையும் காட்டினார்கள். ஏற்கனவே இருந்த அரசியல் கட்டிடத்தை ஆங்காங்குப் பழுது பார்த்து அழகான வர்ணம்பூசி அப்படியே அமைத்திருப்பார் களானால், அல்லது பழைய அதி வாரத்தின் மீது புதிய கட்டிடத்தைக் கட்டியிருப்பார்களானால், இவர்களுக்கு எதிர்ப்பே ஏற்பட்டிராது. ஆனால், இவர்கள் அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு, பொருளாதார அந்தது முதலிய எல்லாவற்றையும் அடியோடு பெயர்த்தெறிந்துவிட்டு, புதிய அமைப்பு, புதிய ஒழுங்கு, புதிய அந்தது முதலியவற்றை ஏற் படுத்தத் தொடங்கினார்கள். பழமையிலே வாழ்ந்துகொண்டி ருந்தவர்களுக்கு மற்றவர்களுடைய அடிமைத்தனத்திலே தங்களுடைய சுதந்திரத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு வெறுப்பு ஏற் படாமலிருக்குமா? அவர்கள் எதிர்ப்புத்தான் காட்டா மலிருப்பார் களா? சோவியத் ஆட்சி நிலைபெற்று ஏறக்குறைய ஒருதலைமுறை யாகியிருக்கிற இப்பொழுது கூட, சமதர்மம் என்பது வெறும் ஏட்டுத் தத்துவமல்ல, அநுபவத்தில் கொண்டுவரப் பட்டிருக்கிற வாழ்க்கை முறை என்ற உண்மையை உலக அறிஞர்கள் அங்கீகரித்திருக்கிற இப்பொழுதுகூட, அநேக நாட்டு பத்திரிகைகள், சோவியத் தலைவர் களை ராட்சதர்களாகவும், சமதர்மமானது தனி மனிதனிடத்திலே யுள்ள இச்சா சக்தி, கிரியா சக்தி முதலியவற்றை அழித்து விடுவதாக வும் சித்தரித்துக்காட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றன. அப்படி யானால் ஆரம்பத்தில் சோவியத் அரசாங்கத்திற்கு, அந்நிய வல்லரசு களிடமிருந்து ஏற்பட்ட எதிர்ப்பு எவ்வளவு சக்தி பொருந்தியதாய் இருந்திருக்கவேண்டுமென்பதை இந்தத் தலைமுறையினர் சுலபமாக ஊகித்துக் கொள்ள முடியுமல்லவா? 1914-ஆம் வருஷ யுத்தத்தின்போது, நேசக்கட்சியினருக்கு மேற்குப்போர் முனையில் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்ட காலத்தில், ருஷ்யர்கள், கிழக்குப் பக்கத்தில் இரண்டாவது போர் முனையை உண்டுபண்ணி, ஜெர்மானியர்களின் தாக்குதலைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். லட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்தார்கள். நேசக்கட்சியினருக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது; மீண்டும் தங்கள் படைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் கிடைத்தது. ஆனால், இதே நேசக் கட்சி யினர், யுத்தம் முடிந்த சில மாதங் களுக்குள், ருஷ்யாவை அழித்து விடுவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டனர்! இதற்குக் காரணம், ப்ரெட்-லிடோவ்கில், ஜெர்மானியர் களுடன் ருஷ்யர்கள் தனித்து ஒப்பந்தம் செய்து, நேசக் கட்சியினரைக் கைவிட்டதுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில், ருஷ்யாவில் சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை தாபிக்கப்படுவதை, எந்த மேற்கு வல்லரசும் விரும்பவில்லை. முதலாளித்துவத்தை அடிப் படையாகக் கொண்ட இந்த வல்லரசுகள், மேற்படி சமதர்ம ஆட்சி முறை நன்றாக வேரூன்றிக் கொள்வதற்கு முன்னர் அதனை அடியோடு அழித்துவிடத் தீர்மானித்து, அப்படியே செய்து காட்டின. ஆனால், சோவியத் அரசாங்கம் இந்த ஒருமுகமான எதிர்ப்பைச் சமாளித்து, தன்னை ஊர்ஜிதம் செய்துக்கொண்டுவிட்டது. எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலைமையிலே, நேச தேசங்கள் பின்னர் வெறுப்பைக் காட்டத் தொடங்கின; ருஷ்யாவை அலட்சியப்படுத்தியும் வந்தன. வார்சேல் சமாதான மகா நாட்டிற்குப் பிறகு, வீரர்கள் வசிப்பதற்குத் தகுதியுடையதாக இந்த உலகத்தை ஆக்கிவிடுவதாகச் சொல்லிக் கொண்டு எத்தனையோ மகாநாடுகள் கூட்டப்பட்டன அல்லவா, அந்த மகாநாடுகளில் ருஷ்யாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. சர்வதேச சங்கத்தைப் பொறுத்த மட்டில், ருஷ்யா ஒரு தீண்டப் படாத நாடாகக் கருதப்பட்டது. ஜெர்மனியும், இப்படியே. இதனால், ஒதுக்கப்பட்ட இந்த இரண்டு நாடுகளும் 1922-ஆம் வருஷம் ராபெல்லோ ஒப்பந்தத்தின்1 மூலமாக ஒன்று சேர்ந்துகொண்டன. 1933-ஆம் வருஷம் ஜெர்மனியில் ஹிட்லர், அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது வரையில், இந்தச் சிநேகம் நீடித்து வந்தது. ராணுவ சம்பந்தமான ஆலோசனைகளையும், தொழில் அபிவிருத் திக்குத் தேவையான பொருள்களையும் பரபரம் இரண்டு நாடு களும் பரிமாறிக் கொண்டன. இப்படி ஜெர்மனியும் ருஷ்யாவும் சேர்ந்து கொண்டது மேற்கு வல்லரசுகளுக்கு ஆச்சரியமாயிருந்தது; பிடிக்கவில்லை. இதனால், ருஷ்யாவை மட்டந்தட்டி ஜெர்மனியைத் தூக்கிவிட ஆரம்பித்தன. ருஷ்யா சம்பந்தப்பட்ட எந்த ஒரு சிறு சம்பவத்தையும் மிகைப் படுத்தியோ அல்லது திரித்தோ பிரசாரம் செய்வதும், ஜெர்மனி விஷயத்தில் அநுதாபங் காட்டுவதும், சர்வ சாதாரணமாக நடை பெற்றன. இங்கிலாந்தில் தொழிற்கட்சி அரசாங்கம் ஏற்பட்ட பொழுது, அது, ருஷ்யாவுடன் நட்புக் கொள்ள முயன்றது. ஆனால், முதலாளிக்கூட்டம், அந்த அரசாங்கத்தையே கவிழ்த்துவிட்டது. லண்டனிலிருந்த ருஷ்ய தானீகருடைய காரியாலயம் பரிசோதனை செய்யப்பட்டது. இங்ஙனமே, இன்னும் சில நாடுகளில் ருஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகள் அவமரியாதை யாக நடத்தப்பட்டார்கள். ஆனால் ருஷ்யா இவைகளையெல்லாம் பொருட்படுத்தவில்லை. புதிய பொருளாதார திட்டத்தின் கீழ், தனது உள்நாட்டு விவகாரங் களில் மும்முரமாகக் கவனஞ் செலுத்திக்கொண்டு வந்தது. அதே சமயத்தில், எந்த நாட்டுடனும் விரோதம் கூடாதென்ற ஒரே கொள்கையுடன் தன்னால் முடிந்தவரையில் எந்தெந்த நாட்டுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமோ அந்தந்த நாட்டுடனும் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டு வந்தது. 1924 -ஆம் வருஷத்திலிருந்து 1932-ஆம் வருஷம் வரையில், ஐரோப்பாவிலுள்ள எல்லாச் சிறிய பெரிய நாடுகளும் ஜினீவாவில் தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கக் கோவிலைத் தொழுத வண்ண மாயிருந்தன. ஐரோப்பிய ராஜதந்திரிகள் இந்தச் சர்வதேச சங்கக் கோயிலை வெகு பிரயாசைப்பட்டுக் கட்டினார்கள் என்பது வாதவம். ஆனால், இதில் சமாதான தேவையைப் பிரதிஷ்டை செய்ய மறந்து விட்டார்கள். இவர்களுடைய வாய், சமாதான மந்திரத்தை முணு முணுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இவர்களுடைய பார்வை, மற்றவர் களுடைய சட்டைப் பையில் என்ன இருக்கிற தென்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது. இவர்ளுடைய கைகளோ, தற்காப்பு என்று சொல்லிக் கொண்டு சுருங்கிய காலத்தில் அதிகமான பேரைக் கொல்வதற்கான நவீன ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டு வந்தன. இந்த எட்டு அல்லது பத்து வருஷ காலத்தைச் சமாதான காலம் என்று சொல்வார்கள்; உண்மையில் இது யுத்தத் தயாரிப்புக் காலம். ருஷ்யா இந்தக் காலத்தில் எல்லா நாடுகளுடனும் சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டு வந்தது என்று சொன்னோ மல்லவா? அப்படிச் செய்து கொள்வது அதற்கு அவசியமாயிருந்தது. ஏனென்றால், அத னுடைய தொழில் முயற்சிகளுக்கு மேனாடுகள் பலவற்றின் உதவியும் தேவையாயிருந்தது. இதற்காக இத்தாலி, பிரான், பெல்ஜியம், துருக்கி, போலந்து, ருமேனியா முதலிய எல்லா நாடுகளுடனும் சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்தக் காலத்தில் லிட்வி னோவ்1 என்பவன் ரஷ்யாவின் அந்நிய நாட்டு மந்திரியாக இருந்தான். இவன் நாடுநாடாகப் பிராயாணஞ் செய்து, ருஷ்யாவின் நல் லெண்ணத்தை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு நாட்டுடனும் சிநேக ஒப்பந்தங்கள் நிறைவேற்றிக் கொண்டு வந்தான். உலகத்தில் யுத்தம் ஏற்படாதிருக்க வேண்டுமானால், எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் ஆயுத பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டு மென்ற நோக்கத்தோடு கூட்டப்பட்ட மகாநாட்டில், ருஷ்யா தீவிரமாகக் கலந்து கொண்டது. எல்லா நாட்டு தானீகர்களும் மாகோவில் தங்கள் காரியாலங் களை ஏற்படுத்திக்கொண்டு, ருஷ்யாவின் வளர்ச்சியைத் திகைப் போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனாக்கிரமிப்பு ஒப்பந்தங்க ளென்றும், சமாதான ஒப்பந்தங்களென்றும் பேர் கொண்ட பல காகிதச் சுருள்கள், ஒவ்வொரு தேசத்தின் அந்நிய நாட்டிலாகா காரி யாலயத்தின் அலமாரிகளிலும் அலங்கார பொருள்களாகக் காட்சி யளித்தன. ருஷ்யா, இப்படிப் பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டு சமாதானமாக வாழ வேண்டு மென்பதில் சிரத்தை காட்டி வந்ததேயானாலும், ஆசிய கண்டத்து நாடுகளின் விஷயத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தது. ஏனென்றால், ருஷ்யாவில் பெரும்பகுதி ஆசியா கண்டத்தைச் சேர்ந்ததுதானே? 1920-ஆம் வருஷத்திலிருந்தே, இந்த விசேஷ கவனம் இருந்து கொண்டு வந்திருக்கிறது. மேற்படி வருஷத்தில் துருக்கிக்கும் கிரீஸீக்கும் யுத்தம் மூண்டபொழுது, ருஷ்யா, துருக்கிக்குப் பலவகை யிலும் உதவி செய்தது. கமால் அத்தாதுர்க் வெற்றியடைந்ததற்கு ருஷ்ய உதவி ஒரு முக்கிய காரணமாயிருந்தது. 1920- ஆம் வருஷத்தி லிருந்து 1927-ஆம் வருஷத்திற் கிடையில், ஆப்கானிதானம், ஈரான், ஜப்பான், சீனா முதலிய ஆசிய நாடுகள் பலவற்றுடன் ருஷ்யா, சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டு தன் செல்வாக்கை வளர்த்து வந்தது. 1933-ஆம் வருஷம் ஜெர்மனியில் ஹிட்லர் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, ஐரோப்பிய அரசியலில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. ஏற்கனவே, 1931-ஆம் வருஷம் ஜப்பான், மஞ்சூரியாவில் பிரவேசித்து அதனை ஆக்கிரமித்துக் கொண்டதை, சர்வதேச சங்கமோ வேறெந்த வல்லரசோ தடுக்க முடியவில்லையென்ற காரணத்தினால், ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் ஒருவிதத் திகைப்பு ஏற்பட்டிருந்தது. மற்றும் 1930-31ஆம் வருஷத்து உலகப்பொருளாதார மந்தம், முதலாளித்துவ நாடுகளின் மனதில் ஒருவித ஏக்கத்தை உண்டுபண்ணி யிருந்தது. இந்தத் திகைப்பு, ஏக்கம் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் ஹிட்லர் பதவிக்கு வந்தான் என்பதை ருஷ்யா தெரிந்து கொள்ளா மலில்லை. ஹிட்லர் பதவி ஏற்றுக்கொண்டு தனது நாடு பெருக்குகிற யோசனையைச் சிறிது சிறிதாக வெளியிடத் தொடங்கிய பிறகு, ருஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டிருந்த சிநேகிதத்தில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. இரண்டு நாடுகளும் பொருள்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததற்குப் பதிலாக, இப்பொழுது அவ நம்பிக்கையைப் பரபரம் பரிமாறிக் கொண்டன. ஹிட்லரும், வார்சேல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த ஷரத்துக்களை மீறி, தனது ராணுவ பலத்தைப் பெருக்கிக்கொண்டு வந்தான். இதைக் கண்டு மேற்கு வல்லரசுகள் சிறிது யோசிக்க ஆரம்பித்தன. ஆக, ஜெர்மனியின் மீது எல்லா வல்லரசுகளும் அவநம்பிக்கை கொண்டன. புதிய எதிரி தோன்றியிருக்கிறபோது, பழைய பகைமை மறந்து போகுமல்லவா? ருஷ்யாவும் மேற்கு வல்லரசுகளும் தோளோடு தோள் தழுவிக் கொண்டன. தீண்டாததாகக் கருதப்பட்டு வந்த ருஷ்யா, இப்பொழுது (1934) சர்வதேச சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இப்படி ருஷ்யாவைச் சேர்த்துக்கொண்டதற்கு, அதன் மீது மேற்கு வல்லரசு களுக்குத் திடீரென்று ஏற்பட்ட நம்பிக்கை காரணமல்ல; அப்படி மனப் பூர்வமான நம்பிக்கை ஏற்படவில்லை; ஹிட்லரின் கையை ஓங்க விடக்கூடாதென்பதுதான் காரணம். ருஷ்யாவும் சர்வதேச சங்கத்தில் சேர்ந்து, வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கவில்லை. .அக்கிரமம் செய்தவர்கள் யாராயிருந் தாலும், அவர்கள் மீது கண்டிப்பான நட வடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூறி வந்தது. கேட்பார் யார்? இத்தாலி, அபிசீனியாவில் அக்கிரமமாகப் பிரவே சித்ததையும், பெயினில் ஏற்பட்ட நியாமான அரசாங்கத்தைக் கவிழ்க்கச் செய்யப்பட்ட குழப்பத்தையும் மேற்கு வல்லரசுகள் தடுக்க வில்லை; வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. ருஷ்யாவுக்கு இவை யெல்லாம் பிடிக்கவில்லை. சர்வதேச சங்கத்தையோ, மேற்கு வல்லரசு களையோ நம்பி, தான் நிம்மதியாக வாழ முடியாததென்பதை நன்கு தெரிந்துகொண்டது. எனவே, தற்காப்பு முறைகளை அநுஷ்டிக்க ஆரம்பித்தது. இங்ஙனம் ருஷ்யா, மேற்கு வல்லரசுகளோடு சேர்ந்து கொண்டதற்கு விரோதமாகவும், உலகத்தில் போல்ஷ் வெஸத்தைப் பரவவிடக் கூடாதென்பதைக் காரணமாக வைத்துக் கொண்டும் ஜெர்மனியும், ஜப்பானும், இத்தாலியும் சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. (1936-1937) இதற்கு கோமிண்டர்னுக்கு விரோத மான ஒப்பந்தம்1 என்று பெயர். நிலைமை எப்படியிருந்ததென்றால், ஒரு புறத்தில் பிரான்சும் பிரிட்டனும், மற்றொரு புறத்தில் ருஷ்யா வுமாகச் சேர்ந்து ஜெர்மனியைச் சூழ்ந்து கொண்டன. ஜெர்மனியும் ஜப்பானும் ருஷ்யாவை வளைத்துக் கொண்டன. ருஷ்யாவும் அமெரிக்காவும் ஜப்பானைச் சுற்றிக்கொண்டன. இப்படி ஒவ்வொரு தேசமும் மற்றத் தேசங்களினால் சூழப்பட்டுவிட்டதாக மருண்டு கிடந்தன. இந்த மருட்சியின் முடிவென்ன? கோர யுத்தம். அதுதான் சென்ற நான்கு வருஷ காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. ஜெர்மனி, ஜப்பான், இத்தலி ஆகிய மூன்று நாடுகளும் தனக்கு விரோதமாக ஒன்று சேர்ந்திருப்பதைக் கண்டு ருஷ்யா சிறிது கவலை கொண்டது. அப்படி ஒன்றுபட்டதோடல்லாமல், அவை மூலமாக உலகத்தில் பாசிஸ சக்திகள் வலுத்தும் வந்தன; போல்ஷ்வெஸத்திற்கு அற்ப சொற்பமாக இருந்த செல்வாக்கும் மங்கிக்கொண்டு வந்தது. மேற்கு வல்லரசுகளோ, இந்தப் பாசிஸசக்திகளோடு சமரஸம் செய்து கொள்வதில் முனைந்து நின்றனவே தவிர அவைகளை எதிர்த்துப் போராட மனங்கொள்ளவில்லை, 1938-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஜெர்மனி, ஆதிரியாவை விழுங்கிவிட்டது. இஃது, அடுத்த உலகயுத்தத்திற்கு முன்னெச்சரிக்கையாயிருந்தது. ஆனால், பிரான்சும் பிரிட்டனும் சும்மா இருந்துவிட்டன. ஆதிரியா விழுங்கப்பட்ட உடனே, இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கிற, சமாதானத்தைக் கோருகிற எல்லா நாடுகளும் சேர்ந்த ஒரு மகாநாடு கூட்டவேண்டு மென்று ருஷ்யா கூறியது. ஆனால், பிரிட்டன், இஃது அநுபவ சாத்தியமற்ற பிரச்னை என்று நிராகரித்துவிட்டது. ஜெக்கோ லோவேகியாவின் மீது ஹிட்லர் படையெடுத்த போதும் (1938), பிரிட்டனும் பிரான்சும் சும்மா இருந்துவிட்டன. ஜெக்கநாட்டின் ஒரு பகுதியை, அதன் சம்பந்தமில்லாமலே ஜெர்மனிக்குக் கொடுத்து விட, ம்யூனிக் நகரத்தில் கூட்டப்பட்ட மகாநாட்டுக்கு ருஷ்யா அழைக்கப்பட வில்லை. பிரிட்டன், பிரான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நான்கு நாடுகள் மட்டும் சேர்ந்து ஜெக்கோலோவேகி யாவைத் துண்டுபோட்டுவிட்டன. இப்படித் துண்டுபோட்ட அடுத்த வருஷத்திலேயே (1939), ஜெக்கோலோவேகியா முழுவதையும் ஜெர்மனிக்குள் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டான் ஹிட்லர். இதற்குப் பிறகு, ருஷ்யா, தான் முன்னர் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டதைக்கூடப் பொருட்படுத்தாமல், சமாதானம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொரு மகாநாடு கூட்டி, இனியும் இந்த ஆக்கிரமிப்பு முறைகள் ஏற்படா வண்ணம் தடுக்கவேண்டு மென்று கேட்டது. இதற்குப் பிரிட்டனும் பிரான்சும் மறுத்து விட்டன. மேற்கு வல்லரசுகளும் ருஷ்யாவும் ஒன்றுபட்டு ஒரு காரியத்தைச் செய்யாது என்பதை நன்கு தெரிந்து கொண்டுவிட்ட ஹிட்லர், போலந்தின் மீது படையெடுக்கத் துணிந்தான். அப்பொழுதுதான் மேற்கு வல்லரசு களுக்கு விழிப்பு ஏற்பட்டது; போலந்தின் சுதந்திரத்தைக் காப்பாற்று வதற்காக, ருஷ்யாவின் நட்பை நாடின. பால்டிக் நாடுகள், போலந்து, ருமேனியா ஆகியவற்றின் மீது ஜெர்மனி தாக்கா வண்ணம் இவைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும், இதற்காக, பிரிட்டன், பிரான், ருஷ்யா ஆகிய மூன்று வல்லரசு களும் சேர்ந்தாற்போல் மேற்படி நாடுகளுக்கு உறுதிமொழி கொடுக்க வேண்டுமென்றும் ருஷ்யா கேட்டது. இதற்கு பிரிட்டனோ, பிரான்ஸோ சரியான பதில் அளிக்கவில்லை. இது ருஷ்யாவை உறுத்தியது. இதே சமயத்தில், ஹிட்லர் ருஷ்யாவுடன் சமரஸப் பேச்சுகள் தொடங்கினான்; கூடவே போலந்தின் மீது விரோதமான பிரசாரத்தை பலமாகக் கிளப்பிவிட்டான். இதற்கு முன்னர், ருஷ்யா வுக்கு விரோதமாகத் தன்னோடு சேர்ந்துக்கொள்ளும்படி போலந்தை ஹிட்லர் வற்புறுத்திக் கொண்டிருந்தான். அது, ஜெர்மனி யுடனும் சேராமல் ருஷ்யாவுடனும் சேராமல் தயங்கிக் கொண்டிருந்தது; மேற்கு வல்லரசுகளின் உறுதிமொழிகளில் நம்பிக்கை வைத்திருந்தது. எப்பொழுது தன் பக்கம் சேர்ந்துகொள்ள வில்லையோ அப்பொழுதே அதனை, அந்த போலந்தை, அழித்துவிடுவதென்று தீர்மானித்து, ருஷ்யாவுடன் சமரஸம் பேசினான் ஹிட்லர். இவனுடைய கருத்தெல்லாம், போலந்தின் மீது தான் படையெடுத்தால், ருஷ்யா நடுநிலைமை வகிக்க வேண்டுமென்பதுதான். மேற்கு வல்லரசுகளோ, ருஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிற விஷயத்தில் பரிபூரண சிரத்தை காட்டவில்லை. ருஷ்யாவுக்கும், ஜெர்மனியை அடியோடு விரோதித்துக்கொள்ள விருப்பமில்லை. ஏனென்றால், ஏற்கனவே ஒப்பந்தத்தினால் கட்டுப்பட்டுள்ள ஜெர்மனியும் ஜப்பானும் ஒன்று சேர்ந்து ஒரே சமயத்தில் தன்னை இரண்டு பக்கத்திலும் தாக்கு மானால், அதனைச் சமாளிப்பது கடினமென்பதை ருஷ்யா நன்கு தெரிந்து கொண்டிருந்தது. இதனால்தான், ஜெர்மனியையும் ஜப்பானையும் ஒரே சமயத்தில் விரோதித்துக் கொள்ளக் கூடா தென்ற கொள்கையை ருஷ்யா நீண்டகாலமாக அநுசரித்துக் கொண்டு வருகிறது. கடைசியில், மேற்கு வல்லரசுகளின் திகைப்புக்கு மத்தியில் 1939-ஆம் வருஷம் ஆகட் மாதம் 23-ஆம் தேதி ஜெர் மனிக்கும் ருஷ்யாவுக்கும் ஓர் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் ஏற் பட்டது. இதன் ஷரத்துக்கள் வருமாறு: ஜெர்மனிக்கும், சோவியத் சமதர்மக் குடியரசு ஐக்கிய நாட்டுக்கும் ஏற்கனவேயுள்ள சமாதான நிலைமையை வலுப் படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன், 1926-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஜெர்மனிக்கும் ருஷ்யா வுக்கும் ஏற்பட்ட சமரஸ ஒப்பந்தத்தை1 அடிப்படையாகக் கொண்டு, ஜெர்மன் ரீச்2சும் சோவியத் சமதர்மக் குடியரசு ஐக்கிய நாடும் கீழ்கண்ட ஒப்பந்தத்திற்கு வந்திருக்கின்றன:- 1. ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட உபய கட்சியினரும், எந்தப் பலாத்காரச் செயல்களினின்றும், எந்த ஆக்கிரமிப்புச் செயல்களினின்றும், பரபரம் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதினின்றும், தனிப்பட்டோ சேர்ந்தோ மற்ற அரசு களைத் தாக்குவதினின்றும் தங்களைத் தகைந்து கொள்கிறார்கள். 2. உபய கட்சியினருள் எவரேனும் ஒரு கட்சியினர், வேறொரு மூன்றாவது வல்லரசின் யுத்தச் செயலுக்கு இலக்கா வாரானால், மற்றொரு கட்சியினர், அந்த மூன்றாவது வல்லரசுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யக்கூடாது. 3. உபய கட்சியினருடைய அரசாங்கங்களும், இரு தரப்பினருடைய நலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடிக் கடி கலந்தாலோசிக்கும் படியான கூட்டுறவை வைத்துக் கொள்ள வேண்டும். 4. உபய கட்சியினரில் எவரெனும் ஒரு கட்சியினருக்கு விரோதமாக மற்ற வல்லரசுகள் ஒரு குழுவாகச் சேர்ந்து கொள்ளுமானால், அந்தக் குழுவுடன் (கூட்டத்துடன்) உபய கட்சியினரும் சேரக்கூடாது. 5. உபய கட்சியினருக்குள்ளும் எந்த விஷயத்தைப் பற்றியேனும் தகராறோ, அபிப்பிராய வேற்றுமையோ ஏற் பட்டால், இரண்டு கட்சியினரும், அந்தத் தகராறுகளையும் அபிப்பிராய வேற்றுமைகளையும் ஒருவருக்கொருவர் கலந்து பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்; அல்லது மத்தியதக் கமிட்டிகள் வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். 6. இந்த ஒப்பந்தம் பத்து வருஷ காலத்திற்குச் செல்லுபடியான தாயிருக்கும். இந்தக் காலவரையறை முடி வதற்கு ஒரு வருஷம் முன்னர், உபய கட்சியினருள் எவரேனும் ஒரு கட்சியினர் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டு மென்று நோட்டீ கொடுத்தாலொழிய, இந்த ஒப்பந்தம் இந்த பத்து வருஷத்திற்குப் பின்னர் தொடந்தாற் போல் ஐந்து வருஷம் அமுலில் இருக்கும். 7. இந்த ஒப்பந்தம் கூடிய சீக்கிரத்தில் ஊர்ஜிதம் செய்யப்படும். இந்த ஊர்ஜிதப் பத்திரம் பெர்லினில் உபய கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளப்பெறும். ஒப்பந்தம் கையெழுத் தான உடனே அமுலுக்கு வரும். எதற்காக இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை அப்படியே இங்குக் கொடுத்திருக்கிறோமென்று சொன்னால், இந்த ஒப்பந்தத் திற்கு அடிப்படையில் மன ஒற்றுமை என்பது லவலேசமும் இல்லை யென்பதைத் தெளிவுபடுத்துவதற்குத் தான். இந்த ஒப்பந்தத்தின் மீது படிந்திருந்த மை உலர்வதற்கு முன்னரேயே ஐரோப்பா வெங்கணும் யுத்த நெருப்பு மூண்டுவிட்டது. பெர்லினில் ஒப்பந்தத்தை ஊர்ஜிதப் படுத்து வதற்காக சோவியத் பிரதிநிதிகளும் ஜெர்மன் பிரதிநிதிகளும் கூடிக் கையெழுத்துப் போடுவதற்குள்ளாகவே, ஜெர்மன் படைகள், எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் (1-09-1939) போலந்தின் மீது படை யெடுத்துவிட்டன. போலந்தினுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, பிரிட்டனும் பிரான்சும் சேர்ந்து, ஜெர்மனி மீது யுத்தம் தொடுத்திருப்பதாக, இரண்டு நாள் கழித்து அறிக்கை வெளியிட்டன. ஆனால், போலந்துக்கு, பிரிட்ட னிடமிருந்தோ பிரான்சினிடமிருந்தோ எவ்வித விசேஷ உதவியும் கிடைக்கவில்லை. ஜெர்மனியின் சேனாபலத் திற்கு முன்னர், போலந்து எப்படித் தனித்துப் போரிட முடியும்? சுமார் பதினைந்து நாட் களுக்குள் போலந்து வீழ்ந்துவிட்டது. போலந்தில், ஜெர்மனி முன் னேறிக் கிழக்குப் பக்கமாக வருவதைக் கண்ட ருஷ்யா, தற்காப்பை முன்னிட்டு, போலந்தின் கிழக்குப் பிரதேசத்தைத் தன் சுவாதீனத்திற்கு உட்படுத்திக்கொண்டுவிட்டது. ஏனென்றால், மேற்கு வல்லரசு களாகிய பிரிட்டனும், பிரான்சும் தன் மீது போர் தொடுத்துவிட்டன அல்லவா? அதனைச் சமாளிக்க வேண்டுமே? இதற்காக ருஷ்யா வுடன் சமரஸ முறையில் சேர்ந்துக் கொண்டு, போலந்தில் ஓர் எல்லை வகுத்துக் கொண்டது. போலந்தின் கிழக்குப் பாகத்தை தன் சுவாதீனத்திற்குட்படுத்திக் கொண்டதோடு ருஷ்யா திருப்தியடையவில்லை. தன்னுடைய பாது காப்புக்கு அது போதாதென்று கருதியது. பால்டிக் கடலிலுள்ள துறைமுகப் பிரதேசங்களில் தன்னுடைய கடற்படை, ஆகாயப்படை முதலியவை களை தாபித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, பால்டிக் நாடுகளாகிய லாட்வியா, லிதூனியா, எதோனியா ஆகிய மூன்றுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டு, தன்னுடைய கடற் படை தலங்களை அந்தத் துறைமுகப் பிரதேசங்களில் தாபித்துக் கொண்டது. (அக்டோபர் 1939.) முதலில் இப்படிச் செய்து, பின்னர் (ஜீன் 1940) அந்த மூன்று சிறிய நாடுகளையும் சோவியத் ராஜ்யத் திலேயே ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டது.1 இவை, 1914-ஆம் வருஷ யுத்தத்திற்கு முன்னர் ருஷ்ய ஏகாதி பத்தியத்தைச் சேர்ந்தவை யாகவே இருந்தன. வார்சேல் சமாதான ஒப்பந்தத்தைத் தயாரித்த ராஜதந்திரிகள், ருஷ்யாவுக்கு எந்தவிதமான கடல் தொடர்பும் இருக்கக் கூடாதென்று சொல்லி, இந்த மூன்று சிறிய பிரதேசங்களையும் சுதந்திர நாடுகளாகச் சிருஷ்டித்துக் குறுக்கே வைத்து, ருஷ்யாவின் மீது தங்களுக்கிருந்த வன்மபுத்தியைக் காட்டிக் கொண்டனர். இந்த மூன்று சிறிய பிரதேசங்களும் சுமார் பதினெட்டு வருஷகாலம் சுதந்திர மூச்சை விட்டுக் கொண்டிருந்து விட்டு, மறுபடியும் தங்களுடைய பழைய ருஷ்யா எஜமானனிடத்திலேயே அடைக்கலம் புகுந்து விட்டது. இந்த மூன்று பிரதேசங்களையும் ஐக்கியப்படுத்திக் கொண்ட தோடு ருஷ்யா திருப்தியடையவில்லை. அதனுடைய கடல் தொடர்புக்கு பின்லாந்து இன்னொரு முட்டுக் கட்டையாக இருந்தது. அங்குத் தனக்குச் சில கடற்படை தலங்கள் இருக்கவேண்டுமென்று தீர்மானித்து, அவை களுக்கு இடங்கொடுக்குமாறு பின்லாந்தைக் கேட்டது. அஃது இணங்க வில்லை; மறுத்துவிட்டது. பின்லாந்து, ஏற்கனவே ருஷ்யாவின் வசத்திலிருந்த நாடுதான். 1917-18 ஆம் வருஷம் ருஷ்யாவில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டிருந்ததை ஆதாரமாகக் கொண்டு, ஜெர்மனியின் தூண்டுத லினாலும் உதவியினாலும் சுதந்திரக் கொடியை தூக்கியது. அப்பொழுது, அதன் விஷயத்தில் ருஷ்யா தலையிடாமல் அதன் சுதந்திரத்தை அங்கீகரித்துக் கொண்டு விட்டது. இப்பொழுது தன்னுடைய வேண்டு கோளை மறுத்து விடவே, அதன் மீது (30-11-1939) யுத்தம் தொடுத்தது. பின்லாந்து தைரியமாக எதிர்த்து நின்றது. தன் விஷயத்தில் நியாயம் செய்து கொடுக்க வேண்டுமென்று சர்வதேச சங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டது. ஆனால், பின்லாந்து சர்வதேச சங்கத்தில் ஓர் அங்கத் தினரில்லை யென்று மேற்படி சங்க நிருவாகிகள் தெரிவித்துக் கொண்டார்கள்! ஜெர்மனியின் உதவியும் அதற்குக் கிடைக்க வில்லை. ஏனென்றால் ருஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் அனாக் கிரமிப்பு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிற தல்லவா? அதை மீறி ருஷ்யாவுக்கு விரோதமாக எப்படி ஜெர்மனி உதவி செய்ய முடியும்? சிறிது காலம் தனித்து நின்று வீரமாகப் போராடியது. முடியவில்லை. கடைசியில் சரணாகதியடைந்துவிட்டது. ருஷ்யா, இந்தச் சந்தர்ப்பத்தில் சிறிது பெருந்தன்மையாகவே நடந்து கொண்டது. விரும்பியிருந்தால் அது, பின்லாந்தின் சுதந்திரத்தை அடியோடு அழித்து சோவியத் ஐக்கிய ராஜ்யத்தோடு அதனைச் சேர்த்துக் கொண்டிருக்கலாம். அப்படிச் செய்யாமல், பின்லாந்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. (மார்ச்சு 1940) அது மட்டுமல்ல. சிறிது காலங் கழித்து, பின்லாந்து, மேற்படி சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை ஒழுங்காக அனு சரித்து வந்ததைப் பாராட்டுவதற் கறிகுறியாக, வட மகா சமுத்திரத்தி லிருந்த எந்த பெட்ஸாமோ துறைமுகத்தைச் சிறிது காலத்திற்கு முந்திப் பின்லாந்தின் ஆதீனத்திலிருந்து பறித்துக்கொண்டு விட்டதோ அந்த பெட்ஸாமோ துறைமுகத்தை மீண்டும் பின்லாந்தின் ஆதீனத்திற்கே விட்டுவிட்டது. இங்ஙனம் ருஷ்யா தற்காப்பு முறைகளை அநுஷ்டிப்பதிலே தன் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கையில், ஹிட்லர், ஐரோப்பாவின் மேற்குப் பாகத்திலுள்ள நாடுகளின் மீது படையெடுத்தான். டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம் முதலிய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கி வைக்கப்பட்ட பொம்மைச் சாமான்கள் மாதிரி விழுந்துவிட்டன. பிரிட்டனுடைய பிரதம கூட்டாளியாக இருந்த பிரான்சும் சரணடைந்து விட்டது. இந்தச் சமயத்தில், கொள்ளைப் பொருளில் பங்கு பெறத் திடீரென்று தோன்றியவன்போல் இத்தலி, ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டது. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாகம் ஹிட்லருடைய சுவாதீனத்திற்கு வந்து விட்டது. சுவாதீனத்திற்கு வந்துவிட்டதென்று சொன்னால் என்ன அர்த்தம்? இவற்றின் பொருளாதார சக்தியனைத்தும் திரண்டு, ஜெர்மனியின் ராணுவ பலத்திற்குத் துணையாகப் போய்ச் சேர்ந்தது என்பதுதான். ருஷ்யா, இவைகளையெல்லாம் மௌனமாகக் கவனித்துக் கொண்டு வந்தது. அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு ஜெர்மனிக்கு விரோதமாக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்கு அநுசரணையாக இரண்டு நாடுகளுக்கும் ஏற்படவேண்டிய சாமான் பரிவர்த்தனைகள் முதலியன ஒன்றும் நடைபெறவில்லை. போலந்து, லாட்வியா, லிதூனியா, எதோனியா, பின்லாந்து முதலியவை களின் விஷயத்தில் ருஷ்யா நடந்து கொண்டதைப்பற்றி ஜெர்மனிக்குப் பொறாமை. மேற்கு ஐரோப்பா வில் ஜெர்மனி முன்னேறி வருவதைப் பார்த்து ருஷ்யாவுக்குச் சந்தேகம். இந்தப் பொறாமை, சந்தேகம் இவைகளுக்கு மத்தியில் முஸோலினி குளிர் காயத் தீர்மானித்து, கிரீ மீது படையெடுத்தான். இவனுக்குத் துணைசெய்ய, ஹிட்லர் ஹங்கேரியின் மீதும் ருமேனியா மீதும் தன் பார்வையைச் செலுத்தினான். அவையிரண்டும் அவனுக்கு வணங்கிவிட்டன; அச்சு நாடுகளாகிவிட்டன. இங்ஙனம் அச்சு வல்லரசுகளின் முக்கியக் கூட்டாளி களாகிய ஜெர்மனியும் இத்தலியும் கிழக்குப் புறமாகவும் தென்கிழக்குப் புற மாகவும் தன்னைச் சமீபித்து வருவதைப் பார்த்த ருஷ்யா, முன்னெச் சரிக்கையாக, அதாவது, ருமேனியா, ஜெர்மனியோடு சேர்ந்து கொள்வதற்கு முன்னதாக, ருமேனியாவின் கிழக்குப் பாகமாகிய பெஸரேபியா பிரதேசத்தைத் தன் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்டது. (ஜீலை 1940) இது ஹிட்லர்க்கு மன வருத்தத்தை உண்டு பண்ணியது. ஹங்கேரியும் ருமேனியாவும் அவனுக்கு அடங்கின நாடுகளாகிவிட்டபடியால், அவைகளின் மூலமாக ஏராளமான ஜெர்மன் துருப்புகளைக் கருங்கடலோரமாகக் கொண்டு வந்து நிறுத்திவைத்தான். ஐரோப்பாவின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட உக்ரேனுக்கு ஆபத்து நெருங்கிகொண்டு வந்தது. இதை ருஷ்யா தெரிந்து கொள்ளாமலில்லை. கருங்கடலோரமாகத் தன் துருப்புகளை நிறுத்தி வைத்ததோடு ஹிட்லர் சும்மா இருக்கவில்லை. முஸோலினி, கிரீ மீது படை யெடுத்திருந்தா னல்லவா? அதைச் சுலபமாக வெற்றிகொள்ள முடிய வில்லை. கிரேக்கர்கள் காட்டிய வீரம் வியக்கத் தக்கதாயிருந்தது, முஸோலினி திணறிக் கொண்டிருந்தான். இவனைச் சிக்கலின்று விடுதலை செய்ய வேண்டியது ஹிட்லரின் கடமையாயிருந்தது. கிரீ மீது ஜெர்மானியப் படைகளை எப்படி அனுப்புவது? யூகோலேவியா வழியாகவும் பல்கேரியா வழியாகவுமே அனுப்பவேண்டும். அதற்காக இந்த நாடுகளை அச்சுறுத்தியும், இவற்றில் உள்நாட்டுக் குழப்பங்களைக் கிளப்பிவிட்டும் அச்சுக் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டான். இந்த நாடுகளின் மூலமாக ஜெர்மனியப் படைகள் கிரீஸின் மீது சென்று தாக்கின. கிரீ தோல்வியடைந்தது. இவை யாவற்றிற்கும் ருஷ்யா மௌனம் சாதித்தது. எந்தெந்த நாடு ஜெர்மனியால் பயமுறுத்தப்பட்டு வந்ததோ அந்தந்த நாட்டுக்கு அவ்வப்பொழுது எச்சரிக்கை மட்டும் செய்து கொண்டிருந்தது. ருஷ்யாவுக்கு விரோதமாக ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டி ருந்தன அல்லவா? 1940 - ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்திற்குப் புதியதொரு மெருகு கொடுக்கப்பட்டது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களிலும் புதியதோர் ஒழுங்கை தாபிப்பதற்காக ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென்று இந்த மூன்று நாடுகளும் தீர்மானித்துக்கொண்டன. இந்த புதிய ஒழுங்கு தாபனத்தில் சேருமாறு ருஷ்யாவைத் தூண்டியது ஜெர்மனி. ஆனால், அயல்நாட்டு விவகாரங்களில் எப் பொழுதுமே தலையிடுவதை விரும்பாத ருஷ்யா இதற்கு இணங்க மறுத்துவிட்டது. இதனால் ருஷ்ய - ஜெர்மனிய அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தின் மத்தியில் பிளவுவிட ஆரம்பித்தது. ஏதோ இஷ்டமிருக் கிறபோது, அல்லது தேவையா யிருக்கிறபோது ஒருவருக்கொருவர் சாமான்களைப் பரிமாறிக் கொள்வது என்கிற அளவோடு மேற்படி அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் நின்றுவிட்டது. இந்தச் சாமான் பரிவர்த்தனையிலும் எதிர்பார்த்த அளவு இரண்டு நாடுகளும் நன்மையடையவில்லை. இதனால் மனக்கசப்பு ஏற்பட்டது. ஒன்றை யொன்று சந்தேகிக்கத் தலைப்பட்டன. ருஷ்யா மீது ஜெர்மனி எந்த நிமிஷத்திலும் படையெடுக்கலாமென்று பிரிட்டன், அமெரிக்கா முதலிய நாடுகளில் பேசப்பட்டது. இவைகளின் விருப்பம் எப்படி யிருந்ததோ அப்படியேதான் பேச்சும் எழுந்தது. இந்த சமயம், ருஷ்ய அரசாங்க அமைப்பில் ஒரு முக்கியமான மாறுதல் ஏற்பட்டது. ருஷ்யாவின் சர்வாதிகாரி என்று அழைக்கப் படுகிற டாலின் சில வருஷங்களாக அரசாங்க மந்திரிச் சபையில் எந்தப் பதவியும் ஏற்றுக் கொள்ளாமல் சமதர்மக் கட்சியின் பொதுக் காரியதரிசியாக மட்டும் இருந்தான். ஏற்கனவே நாம் கூறியுள்ளப் படி, சமதர்மக் கட்சியின் மூலமாகவே எல்லா அரசாங்க விவகாரங் களும் நடைபெற்று வந்தன. மோலோடோவ் என்பவன் பெயர ளவுக்குப் பிரதம மந்திரியாயிருந்தான். சர்வதேச நிலைமை சிக்கலாகிக் கொண்டு வருவதைக் கண்ட டாலின், 1941-ஆம் வருஷம் மே மாதம் ஆறாந்தேதி, பிரதம மந்திரிப் பதவியைத் தானே ஏற்றுக் கொண்டான். மோலோடோவை உதவிப் பிரதம மந்திரியாகவும் அந்நிய நாட்டு மந்திரியாகவும் வைத்துக் கொண்டான். தேசத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிற போது, தேசீய விவகாரங்கள் துரிதமாகவும் ஒருமுகப்பட்டும் நடைபெறுவதற்காகவே இந்தப் பதவி மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் ஹிட்லர், இந்தப் பதவி மாற்றங்களைப் பார்த்துக் தனக்கு விரோதமாக ருஷ்யா யுத்த முதீப்புகள் செய்துகொண்டிருக்கிறது என்று நினைத்துவிட்டான். டாலின், பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக்கொண்ட அடுத்த மாதத்திலேயே, 1941-ஆம் வருஷம் ஜீன் மாதம் 22-ஆம் தேதி, ஜெர்மனி ருஷ்யாவின் மீது யுத்தம் தொடுத்துவிட்டது. வடக்கே பால்டிக் கடலிலிருந்து தெற்கே கருங்கடல் வரை சுமார் 1800 மைல் நீளத்திற்கு ஜெர் மானியப் படைகள், அணிவகுத்துக் கொண்டு ருஷ்ய எல்லைக்குள் பிரவேசித்தன. மானிட ஜாதியின் சரித்திரத்திலேயே இதைப்போன்ற மகா யுத்தம் இதற்கு முன்னர் நடைபெற்றதில்லை யென்பது அறிஞர் களுடைய அபிப்பிராயம். ஆனால் சோவியத் தலைவர்கள் இப்படிப்பட்ட மகா யுத்தம் ஒன்று நடைபெறப் போகிறதென்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்தார்கள். ஜெர்மனிக்கும் ருஷ்யாவுக்கும் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தே, அதாவது 1939-ஆம் வருஷம் ஆகட் மாதத்திலிருந்தே, இவர்கள், யுத்த சம்பந்தமான ஏற்பாடு களை ஒழுங்காகச் செய்துகொண்டு வந்தார்கள். அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில், ராணுவச் செலவு பிரதிவருஷம் அதிகரித்துக்கொண்டு வந்தது. 1935 - ஆம் வருஷம் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி, உலகத்திலுள்ள மற்ற நாடுகளைக் காட்டிலும் ருஷ்யாவுக்குதான் அதிகமான தரைப்படை, ஆகாயப்படை, டாங்கிப்படை முதலியன இருக்கின்றன என்று சொல்லப்பட்டது. அப்பொழுது - 1935-ஆம் வருஷத்தில் ருஷ்யாவின் ராணுவச்செலவு சுமார் 5,00,00,00,000 ரூபாயாக இருந்தது. இது 1939-ஆம் வருஷத்தில் ஐந்து மடங்காகவும், 1940 - ஆம் வருஷத்தில் ஏழு மடங்காகவும், 1941-ஆம் வருஷத்தில் ஏறக்குறைய ஒன்பது மடங்காகவும் முறையே அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. யுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், ருஷ்யா எவ்வளவு தயாரிப்பில் இருந்துவந்த தென்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தவிர, ருஷ்யாவின் ராணுவ சாதனங்கள் யாவும் நவீன முறையில் தயார் செய்யப்பட்டவை. மற்றும், ருஷ்யப் போர் வீரர்கள், பிறருடைய அதிகாரத்திற்கு அஞ்சியோ, ஏவுத லினால் தூண்டப்பட்டோ, யுத்தம் புரிகிறவர்களல்லர். அவர்கள், தங்களுக்காக, தங்களுடைய வாழ்க்கைக்காகப் போர் புரிகிறார்கள்; பிறருக்காகவோ, பிறர் நலம் பெறுவதற்காகவோ போர் புரிகிறார் களில்லை. இதனால்தான் சென்ற ஒன்றரை வருஷகாலமாக எந்த விதமான வெளி யுதவியுமின்றி, தனித்து நின்று ஜெர்மனியோடு போர் புரிந்து வருகிறார்கள். இந்த யுத்தத்தில் ருஷ்யா சில பிரதேசங் களை இழந்துவிட்டதென்பது வாதவம். ஆனால், ருஷ்யர்கள் இதற்காகச் சலிப்படையவில்லை; சலிப்படையவும் மாட்டார்கள். ருஷ்யா, தனது அந்நிய நாட்டு விவகாரங்களில் எப்பொழுதுமே சமாதானத்தை லட்சியமாகக் கொண்டு நடந்து வந்திருக்கிறது; தற்காப்பு முறையை அநுஷ்டித்து வந்திருக்கிறது. எதிர்த்துப் போராடுகிற மாதிரி, அது தன் யுத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவில்லை. பிறரால் தாக்கப்பட்டால் அதனைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய மாதிரியாகவே அதனுடைய யுத்த ஏற்பாடுகளும் ராணுவ நிருவாகமும் இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அதற்கு நாடுபிடிக்கிற ஆசை இல்லாதுதான். இதனை 1935-ஆம் வருஷம், அப்பொழுது அந்நிய நாட்டு மந்திரியா யிருந்த விட்வினோவ் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறான். சோவியத் அரசாங்கத்தின் அந்நிய நாட்டுக் கொள்கை மூன்று அமிசங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, சோவியத் அரசாங்கத்திற்கு மற்றவர்களுடைய பூமியோ, சொத்துச் சுதந்திரங்களோ தேவையில்லை. இதனால் எந்த நாட்டுடனும் யுத்தம் செய்வது அதன் நோக்கமில்லை. இரண்டாவது, நவீன ஏகாதிபத்திய நிலைமையில், எந்த யுத்தமும் உலக முழுவதிலும் பரவி எல்லா ஜனங் களுடைய அழிவையும் உண்டு பண்ணுவதாயிருக்கும், ஏனென்றால், தற்போதைய நிலைமையில், யுத்தத்தை ஒரு நாட்டுக்குள்ளே வரை யறுத்துக்கொள்ள முடியாது. எந்த ஒரு நாடும் அஃது எவ்வளவு முயன்றாலும், நடுநிலைமை வகிப்பதாகச் சொல்லிக் கொண்டு ஒதுங்கியிருக்க முடியாது. மூன்றாவது, எந்த ஒரு யுத்தத்தினாலும், பெரும்பான்மையோ ராயுள்ள பாமர ஜனங்களுக்குத் தான் அதிக மான துன்பமும் துயரமும் உண்டாகும். இதனால், உழைப்பாளி களான ஏழைமக்களின் அரசாங்கமாயிருக்கிற சோவியத் ராஜ்யம், யுத்தத்தை எதிர்க்கிறது; வெறுக்கிறது. சோவியத் அரசாங்கம் சமாதானத்தையே முக்கிய நோக்க மாகக் கொண்டிருக்கிற தென்பதற்கு மற்றோர் அத்தாட்சி என்ன வென்றால், பிறநாடுகளுக்கு விரோதமான எந்த ஒரு கட்சிக்கோ அல்லது இயக்கத்திற்கோ அது தனது நாட்டில் இடங்கொடுப்ப தில்லை. சோவியத் அரசாங்கத்தின் அரசியல் அந்ததை 1934-ஆம் வருஷம் அமெரிக்கா அங்கீகரித்துக் கொண்டபோது, அமெரிக்கா வுக்கு விரோதமான எந்த ஒரு தாபனத்திற்கும் அல்லது கட்சிக்கும் அல்லது இயக்கத்திற்கும் தனது நாட்டெல்லைக்குள் இடங்கொடுப் பதில்லை யென்று சோவியத் அரசாங்கம் உறுதி கொடுத்ததை, இங்கு ஓர் உதாரணமாக எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இப்படி அந்நிய நாடுகளுக்கு விரோதமான இயக்கத்திற்கோ தாபனத் திற்கோ இடங்கொடுப்பதில்லையாயினும், அந்நிய நாடுகளிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்ட தனி மனிதர்களுக்குத் தஞ்சம் கொடுப்பதில், சோவியத் அரசாங்கம் சிறிதுகூடப் பின் வாங்கவில்லை. அதனைத் தனது முக்கிய கடமையாகவும் கொண்டி ருக்கிறது. அதன் அரசியல் சட்டத்தின் 129-ஆவது பிரிவில் இந்தக் கடமை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுடைய நன்மைக்காகப் போராடியதற் காகவோ, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததற்காகவோ, சுய தேச விடுதலைக்காகப் போராடியதற்காகவோ துன்புறுத்தப்படுகிற எந்த அந்நிய நாட்டுப் பிரஜைக்கும் சோவியத்ராஜ்யத்தில் அடைக்கலம் புக உரிமையுண்டு. இங்ஙனம் அடைக்கலம் புகுந்தவர்கள் தனியாகவோ ஒன்று சேர்ந்தோ தங்களுடைய நாட்டுக்கு விரோதமாக எந்த ஒரு காரி யத்தையும் செய்யக் கூடாதே தவிர, மற்றப்படி எல்லா வழிகளிலும் பூரண சுதந்திரத்தை அநுபவித்துக் கொண்டிருக்கலாம். அந்நிய நாட்டுப் பிரஜைகளுக்கு இந்தமாதிரியான உரிமையளித்திருப்பது, சோவியத் அரசாங்கத்தின் மனத்தூய்மையையும் பெருந்தன்மையை யும் காட்டுகிறது. தவிர, மற்ற நாடுகளுடன் சமாதானமாக வாழவேண்டு மென் பதற்காக அஃது எத்தனையோ அவமானங்களைச் சகித்துக்கொண் டிருந்திருக்கிறது. அதனுடைய பிரஜைகள் வெளிநாடுகளில் அகாரண மாகக் கொலை செய்யப்பட்ட காலத்தில் கூட, அது நிதானம் தவறாமல் காரியங்களை நடத்திவந்திருக்கிறது. சர்வதேச சங்கத்தில் அதன் அபிப்பிராயங்களுக்கு மதிப்புக் கொடுக்கப்படாம லிருந்தகாலத்திலும், ம்யூனிக் ஒப்பந்த காலத்தில் அது புறக்கணிக்கப் பட்டபோதும், இன்னும் அதன் சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படக் கூடிய சம்பவங்கள் பல நடைபெற்ற சந்தர்ப்பங்களிலும் அது பொறுமையை இழக்கவில்லை. இவற்றிற்கெல்லாம் காரணம், சமா தானத்தில் அதற்கேற்பட்டிருந்த உறுதியான நம்பிக்கைதான். 13. புதிய நாகரிகம் இன்பம், துன்பம் என்னும் இரண்டு நிலைகளிலும் கண்களி லிருந்து நீர் வடிவது சகஜம். சிருஷ்டியின் போதும் அழிவின்போதும் வேதனை உண்டாவது இயல்பு. சாம்ராஜ்யங்கள் தோன்றுகிற போதும் மறைகிற போதும் புரட்சி ஏற்படுவது சரித்திர உண்மை. ருஷ்யா, இந்தச் சரித்திர உண்மைக்குப் புறம்பாகவில்லை. அங்கே முடிதரித்த மன்னர் பரம்பரை. பிடிசாம்பலாய்ப் போன காலத்திலும், அந்தச் சாம்பலிலிருந்து புதிய ஜனசக்தி - சமதர்ம ராஜ்யம்- உதய மான காலத்திலும் புரட்சி உண்டாயிற்று. ஆம்; புரட்சிக்கு எதிர்ப் புரட்சி கூட உண்டாயிற்று. ஆனால், இந்த ஓர் அமிசத்தில் மட்டுந்தான் ருஷ்யப் புரட்சி, சரித்திர உண்மைக்குப் புறம்பாக வில்லையே தவிர, மற்ற எல்லா அமிசங்களிலும், இதர புரட்சிகளினின்று வேறுபட்டதாகவே இருந்தது. எப்படி? உலகத்தில் இதுகாறும் ஒவ்வொரு காரணத்திற்காக ஒவ்வொரு புரட்சி நடைபெற்று வந்திருக்கிறது. முடிதரித்த மன்னர்கள் குடி தழுவி ஆளவேண்டுமென்பதற்காகப் புரட்சி; மதம் என்னும் மேட்டிலே குவிந்து கிடக்கும் குப்பைகளைச் சுட்டெரிக்க வேண்டு மென்பதற்காகப் புரட்சி; உண்கிற சோறு எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக புரட்சி; இப்படி ஒவ்வொரு காரணத்திற்காக ஒவ்வொரு புரட்சி. ஆனால் ருஷ்யப் புரட்சி பல காரணங்களை அடிப் படையாகக் கொணடது. அரசியல், பொருளாதாரம், சமுதாயம், மதம் முதலிய எல்லாத் துறைகளையும் ஒரே சமயத்தில் மாற்றிய மைக்கவேண்டு மென்பதற்காக அது தோன்றியது; அழிவு வேலை யையும் ஆக்க வேலையையும் ஒரே சமயத்தில் செய்து முடித்தது. இதனாலேயே ருஷ்ய மகாஜனங்கள் அதிகமான வேதனையடைய வேண்டியிருந்தது. தவிர, மற்றப் புரட்சிகளினால் ஜனங்கள் அனுபவித்த துன்பங்கள் பல; அடைந்த ஆறுதல்கள் சில; பெற்ற பலனோ ஒன்றுமில்லை. சில நாடுகளில் ஜனங்கள், ஒன்றைக் கோரிப் புரட்சி செய்தார்கள்; ஆனால் வேறொன்று அவர்களுக்குக் கிட்டியது. சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்று முழக்கம் செய்து அதிகார சக்தியை அப்புறப் படுத்தப் பார்த்தார்கள்; ஆனால் அந்த அதிகார சக்தியே அவர்களை ஆட்கொண்டு விட்டது. இன்னும் சில நாடுகளில், ஜனசக்திக்கு ஆடம்பரமான பூசை நடைபெற்றது. பூசை முடியுந் தருணத்தில் அதிகார சக்தியே ஜனநாயக வேஷந் தரித்துக்கொண்டு பூசாரி களுக்குக் காட்சியளித்தது. அவர்களும் அதைக் கண்டு திருப்தி யடைந்துவிட்டார்கள். வேறு சில நாடுகளில், அவர்கள் - புரட்சி செய்தார்கள் - அரசாங்க அதிகாரத்தை நிலச்சுவான் தார்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றார்கள்; ஆனால் கடைசியில், தொழில் முதலாளிகளின் வசத்தில் ஒப்புக் கொடுத்து விட்டார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் புரட்சியின் போது ரத்த ஆறு பாய்ச்சினவர்கள் பெரும்பாலோரான பாமர ஜனங்கள் ; அதிலிருந்து சட்டஞ் செய்யும் உரிமை, சுரண்டும் உரிமை, உழைப் பின்றி ஊதியம் பெறும் உரிமை முதலிய உரிமைப் பயிர்களைச் சாகுபடி செய்துகொண்டவர்கள் சிறுபாலோரான அறிஞர்கள். ஆனால், ருஷ்ய புரட்சி எந்த நோக்கத்திற்காக நடைபெற்றதோ அந்த நோக்கத்தையடைந்தது. ஜனங்களே ஜனங்களுக் காகப் புரட்சி செய்ததும் அதில் வெற்றி கண்டதும் இங்கு தான்; இந்த ருஷ்யாவில் தான். பதினெட்டாவது நூற்றாண்டின் பிற்பாகத்திலும் பத் தொன்பதாவது நூற்றாண்டின் முற்பாகத்திலும் ஐரோப்பாவில் அநேகம் புரட்சிகள் நடைபெற்றன. பிரான்சிலே புரட்சி; ஜெர்மனி யிலே புரட்சி; இத்தலியிலே புரட்சி; இங்கிலாந்திலே கூட புரட்சி! ஆனால் இந்தப் புரட்சிகளில் ஒன்றாவது ஜனசமுதாயத்தின் அடிப் படையாகத் தொடவே யில்லை. மேலெழுந்தவாரியாகத் தெரிந்துக் கொண்டிருந்த ஓரிரண்டு படிகளை மட்டும் சிறிது அசைத்துக் கொடுத்துவிட்டு உடனே அடங்கிப் போயின. சமுதாயத்தின் மேல் படியிலிருந்த புத்திசாலிகளான சில சந்தர்ப்ப வாதிகள், சமுதாயத்தின் கீழ்ப் படியிலிருந்தவர்களை, அதாவது பாமர மக்களைக் கை தூக்கி விட போகிறோம் என்று சொல்லிக் கொண்டு புரட்சி செய்தார்கள். ஒரு சிலர்,அந்த பாமர மக்களின் மீது கருணை காட்டினார்கள் ; அதற்காகக் கஷ்டமும் நஷ்டமும் பட்டார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் அந்தப் பாமர மக்களைத் தங்கள் கைப்பிடிக்குள் இறுக்கிக் பிடித்து வைத்துக் கொள்வதிலேயே முனைந்து நின்றார்கள். அப்படித் தங்கள் கைப்பிடியிலிருந்து அந்தப் பாமர ஜனங்கள் வெளியேறப் பார்ப்பார்களானால், அவர்களை அடக்குவதற்காக, தாங்கள் இதுகாறும் யாருக்கு விரோதமாகப் புரட்சி செய்து கொண்டிருந்தார்களோ அந்த அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டார்கள். ஐரோப்பியப் புரட்சிகளின் பெரும்பாகம் இந்த மாதிரியான துரோகப் படலங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால் ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சி இப்படியில்லை. சமுதாயத் தின் கீழ்ப்படியிலிருந்தவர்களே தங்களை இதுவரையில் நசுக்கிக் கொண்டு வந்திருந்த சக்திகளுக்கு விரோதமாகப் புரட்சி செய்தார்கள்; அந்தச் சக்திகளை அடக்கியும் விட்டார்கள். மற்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள், சமுதாயத்தின் மீது படிந்திருந்த அழுக்குகளை மட்டும் அப்புறப்படுத்தின. ஆனால் ருஷ்யப் புரட்சியினால், புதிய சமுதாயம் அமைந்தது; புதிய மனிதர்கள் சிருஷ்டி யானார்கள்; புதிய நாகரிகம் உதயமாயிற்று. சமதர்மம் என்று சொன்னால், அது வெறும் தத்துவம், அடைய முடியாத லட்சியம், பகற்கனவு என்றெல்லாம் ஏகபோக உரிமைக் காரர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள். ருஷ்யப் புரட்சி இதைப் பொய்ப்படுத்தி விட்டது. சமதர்மத்தை நடைமுறையில் கொண்டுவரக் கூடுமென்பதை அது நிரூபித்துக்காட்டியது. உண்மையான ஒரு சமுதாயம், உயிர்ச் சக்தியோடு இயங்கிக் கொண்டிருக்க வேண்டு மானால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களும் நல்வாழ்வு நடத்த வேண்டுமானால், அது சம தர்மத்தையே கையாள வேண்டும். அரசாங்க நிருவாக மாகட்டும், அன்றாட வாழ்க்கையா கட்டும் எல்லாம் சமதர்மத்தைச் சுற்றியே வரவேண்டும். இப்படிப் பட்ட ஒரு நிலைமையை ருஷ்யப் புரட்சி அனுஷ்டான சாத்திய மாக்கியது. இத்தகைய காரணங்களினாலே ருஷ்யப் புரட்சி, மானிட ஜாதியின் சரித்திரத்தில் அழியாத ஒரு முத்திரையை இட்டிருக்கிற தென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இங்ஙனம், பல வகையிலும் விசேஷத் தன்மை வாய்ந்த ருஷ்யப் புரட்சியினின்று உதித்த சமதர்ம நாகரிகம் அல்லது சோவியத் நாகரிகம், மற்ற நாகரிகங்களைப் போலல்லாமல் தனித்தன்மை வாய்ந்ததென்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ? இஃதொரு புதிய நாகரிகம். இதனால்தான் பழமையிலே தோய்ந்திருக்கிறவர்களுக்கு ஒரு புதிர் மாதிரி இருக்கிறது. மற்ற நாகரிகங்களில் மனம் லயித்துப் போனவர்களுக்கு இந்த சோவியத் நாகரிகத்தைப் புரிந்து கொள்வது கூட கடினமான விஷயம். இப்படித்தான் ஐரோப்பிய அறிஞர்கள் அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். சாதாரணமாக இப்பொழுது நாம் ஹிந்து நாகரிகமென்றும், இலாமிய நாகரிக மென்றும், கிறிதுவ நாகரிகமென்றும் அந்தந்த மதத்தின் பெயரால் நாகரிகத்தை அழைக்கிறோம். ஏனென்றால் இந்த நாகரிகங்கள் மதத்தை அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவை. இப்பொழுது, இந்த மாதிரி சொல்வதுகூட, அதாவது ஹிந்து நாகரிகமென்றும், இலாமிய நாகரிகமென்றும் சொல்வது கூட, பழைய சம்பிரதாய மாகி விட்டது. பொதுவாக, மேனாட்டு நாகரிக மென்றும், கீழ்நாட்டு நாகரிகமென்றுந்தான் இப்பொழுது உலகத்தில் நிலவுகின்ற நாகரி கங்களை இரண்டு கூறாக்கிச் சொல்கிறோம். உலக மார்க்கத்தில் சித்திகள் பெறுவது மேனாட்டு நாகரிகம்; பாரமார்த்திகத்தில் பண்பாடு பெறுவது கீழ்நாட்டு நாகரிகம். இந்த மாதிரி தொகுப்பான ஒரு கருத்துத்தான் அறிஞர்களிடையில் உலவுகிறது. சோவியத் நாகரிகமோ, இந்த இரண்டு நாகரிகங்களின் சேர்க்கையிலிருந்து பிறந்த ஒரு புதிய சிருஷ்டி. இது, மற்ற நாகரிகங்களிலே காணப் பெறும் தீய அமிசங்களைப் புறக்கணித்து விட்டு, அவற்றினுள் உள்ள நல்ல அமிசங்களை மட்டும் தன்னகத்தே தாங்கிக் கொண்டி ருக்கிறது; விஞ்ஞான சாதிரத்தின் வளர்ச்சியையும் பெரும் பாலான ஜனங்களுடைய நன்மையையும் அனுசரித்துச் சில புதிய அமிசங்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த நாகரிகத்தின் விசேஷம். பழைமையை அடியோடு வெறுக்கவு மில்லை; புதுமையைக் கண்மூடித்தனமாக வரவேற்கவு மில்லை. எந்த ஒரு தீவிரத்திற்கும் செல்லாமல் நடுவான ஒரு பாதையில் மக்களைச் செலுத்துகிறது. விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு மனிதனை யந்திரமாக்கி விடவுமில்லை; அப்படியே, மனிதனுடைய அறிவுக்கு எட்டாத சக்திகள் பல இருக்கின்றன என்று நம்பி அவற்றினிடம் தஞ்சம் புகுந்துகொண்டு, மனிதனை, அழுக்குகள் நிறைந்த ஒரு தண்ணீர்த் தேக்கமாக்கி விடவுமில்லை; மனிதனை மனிதனாகவே வளர்க்கிறது. மேனாட்டு நாகரிகத்தின் செல்வப் பிள்ளையாக வளர்கிறவன், இயற்கையைத் தன் அடிமையாக்கி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு, உலகத்திலுள்ள மனிதர்களை அடிமைப் படுத்தப் பார்க் கிறான். கீழ்நாட்டு நாகரிகத்தின் மைந்தன், இயற்கைக்கு அடிமைப் பட்டு மற்ற மக்களுக்கும் அடிமையாகிவிடுகிறான். ஆனால், சோவியத் நாகரிகத்தின் மடியிலே வளர்ந்த மகன் இயற்கையோடு தோழமைபூண்டு அதனுடைய அந்தரங்கத்தில் தன் அறிவைச் செலுத்தி அதனையும் பிரகாசிக்கச் செய்கிறான்; தானும் வளர் கிறான். பொதுவாக அவன் கொடிய மிருகமாவதுமில்லை; சாது வான சுவராவதுமில்லை; மனமும் அறிவும் கலந்த மனிதனாகவே ஆகிறான். மற்ற நாகரிகங்கள் எவை எவற்றிற்கு அதிகமான உயர்வு கொடுத்துப் பாராட்டி வருகின்றனவோ அவை அவற்றை சோவியத் நாகரிகம் இழிவாகவும் குற்றமாகவும் கருதுகிறது. மேனாட்டு நாகரிகக் கோயிலில் மேலான அந்தது பெற்றிருந்த சக்திகள் பல, சோவியத் நாகரிகத்தின் கீழ் கீழான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, முதலாளித்துவ நாகரிகத்தின் கீழ், மாளிகை களில் வசிக்கிறவர் களுக்குத் தான் அதிக மதிப்பு; சமதர்ம நாகரிகத் தின் கீழ், உழைப்பாளிகளுக்குத்தான் அதிக மதிப்பு. முந்திய நாகரி கத்தின் படி, வட்டிக்கு கடன் கொடுத்துப் பணம் சம்பாதிப்பது, பிறர்க்கு உபகாரம் செய்து சம்பாதிக்கிற மாதிரி; பிந்திய நாகரி கத்தின்படி, வட்டித்தொழில் செய்து பணம் சம்பாதிப்பது ஒரு குற்றம். இத்தகைய காரணங்களினால்தான், மேனாட்டார் பலரும், சமதர்ம நாகரிகத்தை, சோவியத் ஆட்சி முறையை, ஒரு கோணிய பார்வையோடு பார்க்கிறார்கள். சமதர்ம நாகரிகத்தின் விசேஷ அமிசங்கள் அல்லது புதிய அமிசங்கள் என்னென்ன என்பதையும், அவை, ருஷ்யாவில் எந்த மாதிரியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன என்பதையும் இங்குச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறோம். 1. ருஷ்யாவில் நடைபெறுகிற ஒவ்வொரு காரியமும் சமுதாய நன்மைக்குத்தான்; பொது ஜனங்களுடைய உபயோ கத்திற்குத்தான்; ஒரு சிலருடைய சுகத்திற்காக அல்ல. கல்வி, கலை, இசை, ஓவியம், காவியம் ஆகிய எல்லாம் சமுதாய புருஷனைப் போற்றுகின்றனவாகவும் அவனுடைய க்ஷேமத்தைக் காப்பாற்றுகின்றனவாகவும் இருக்கின்றன.1 2. மானிட சமுதாயம் புதிய பிறப்பெடுத்து ஜீவகளை யோடு இயங்கவேண்டுமானால், ஆத்மா ஆத்மா என்று சொல்லிக் கொண்டு அதனுடைய வளர்ச்சியை மட்டும் நாடிக் கொண் டிருந்தால் போதாது; தனி மனிதர்கள் பலர் ஒரு சமுதாயமாகச் சேர்ந்து, விஞ்ஞானத்தின் துணை யினால் புறச்சக்திகளை யெல்லாம் ஒன்று திரட்டி எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி உபயோகத்திற்குக் கொண்டு வருவதன் மூலமாகத் தான் மானிட சமுதாயம் முன்னேற முடியும் என்பதை, சோவியத் தலைவர்கள் அனுஷ்டானத்தில் காட்டியிருக்கிறார்கள். 3. மனித சுபாவத்தைச் சட்டத்தின் மூலம், அல்லது சட்டத்தின் துணைகொண்டு மாற்ற முடியும் என்பதை, சோவியத் ஆட்சி நிரூபித்திருக்கிறது. 4. மேனாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுகிற சமுதாய அமைப்பில், பொருளுற்பத்திக்கு முக்கிய தூண்டுகோலா யிருப்பது, லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை பிரதி யொரு மனிதனுக்கும் இருப்பதுதான். இந்த ஆசையை நிறை வேற்றிக் கொள்வதற்கு அங்கே சந்தர்ப்பங்கள் அளிக்கப் படுகின்றன. குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறவர்கள் சாமர்த்திய சாலிகள் என்றும் வியாபாரத் திறமையுடையவர்கள் என்றும் பாராட்டப்படுகிறார்கள். ஆனால் சோவியத் ருஷ்யாவில் இப்படிப் பட்டவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள். மற்றவர்களைக் கூலிக்கமர்த்தி அவர்களுடைய உழைப் பினின்று ஊதியம் பெறுகிறவர்களை, மேனாட்டு நாகரிகம் கௌரவிக்கிறது; சன்மானிக்கிறது. ஆனால் சோவியத் நாகரிகம் இவர்களைச் சுரண்டுகிற குற்றத்திற்கு உட்படுத்தித் தண்டிக்கிறது. 5. சோவியத் ருஷ்யாவில் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு அதன் படியே பொருளுற்பத்தி செய்கிறார்கள். தனிப் பட்ட முதலாளிகள், தங்களுக்கு இஷ்டப்பட்டது எதுவோ அல்லது லாபம் தரக்கூடியது எதுவோ அந்தமாதிரியான பொருள்களை உற்பத்திசெய்வதற்கு அங்கே இடம் கிடையாது. இதனால் பெரும்பாலோர் இல்லாமைக் குறையினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்க, ஒரு சிலர் மட்டும் தங்களுடைய ஆசை யைப் பூர்த்தி செய்து கொள்வதற்குச் சந்தர்ப்பமே இல்லாமற் போய் விடுகிறது. 6. சமுதாயத்திற்கு நன்மை தரக்கூடிய ஏதோ ஒரு வேலையை, திடகாத்திரமுள்ள ஒவ்வொருவரும் அவரவரு டைய திறமைக்குத் தகுந்தபடி செய்ய வேண்டுமென்பது, சோவியத் ராஜ்யத்தில் கட்டாய விதி. பணம் படைத்தவர் களென்றோ, புத்திசாலிகளென்றோ, பெரிய பதவியில் இருக் கிறோமென்றோ சொல்லிக்கொண்டு, யாரும் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கக்கூடாது. ஓய்வு எடுத்துக்கொள்ள எல்லோருக்கும் எப்படி உரிமை உண்டோ அப்படியே வேலை செய்வது எல்லோருடைய கடமையாகும். இந்த உரிமையை அனுபவிக்கிற விஷயத்தில், கடமையைச் செய்கிற விஷயத்தில், ஜாதி, சமய, பால்,வகுப்பு, நிற வேற்றுமை ஒன்றுமே கிடை யாது. சுரண்டு கிறவர்களுக்கும் இல்லை; சுரண்டப் படுகிறவர் களுக்கும் இல்லை. பிச்சை எடுப்போரும் இல்லை; சிகரங் களோடு கூடிய மாளிகைகளும் இல்லை; கூரையில்லாக் குடிசைகளும் இல்லை. எல்லோருக்கும் ஒரே அந்ததுதான்; ஒரே மாதிரியான உரிமைகள்தான். இதைத்தான் வர்க்கப் பிரிவினைகள் இல்லாத சமுதாயம் என்று சொல்வது. இதுவே சோவியத் நாகரிகத்தின் லட்சியம். 7. ஜன விருப்பத்தின்படி ஆட்சி நடைபெறவேண்டும் என்பது மற்ற நாடுகளில் ஒரு சம்பிரதாயமாகவே அனுஷ்டிக்கப் படுகிறது. ஓட்டுரிமைக்குச் சில நிர்ப்பந்தங்கள் விதிக்கப்பட் டிருக்கின்றன. ஆனால் ருஷ்யாவில் இந்த ஓட்டுரிமை என்பது வெறும் சம்பிரதாயமாக மட்டும் இல்லை; சட்ட புத்தகத்தின் அலங்காரப் பொருளாக மட்டும் இல்லை. வயது வந்த எல்லோரும் எவ்வித அந்ததுவித்தியாசமோ பொருளாதார வித்தியாசமோ இல்லாமல் ஓட்டுக் கொடுக்கவும், தேர்தலில் நேர்முக மாகக் கலந்துகொள்ளவும் உரிமை உடையவர்கள். ஒரு நாகரிகத்தின் விசேஷமாக இதை ஏன் எடுத்துக் காட்டு கிறோமென்றால், சோவியத் ருஷ்யாவில் ஓட்டர்களின் கடமை ஓட்டுக் கொடுப்பதோடு முடிந்து விடவில்லை என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்குத்தான். இந்த ஓட்டர்கள், யாராரைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுத்தார்களோ அவர்கள், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்கிறார்களா என்று அடிக்கடி கூட்டம் போட்டுப் பரிசீலனை செய்கிறார்கள்; பிரதிநிதிகளுக்கு யோசனை சொல்கிறார்கள். ஓட்டர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், பிரதிநிதிகளின் மூலமாக ஜனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு, நேர்முகமான தொடர்பு இருப்பது சோவியத் ருஷ்யா ஒன்றிலேதான். 8. அரசியல் பரிபாஷையில் கட்சி அரசாங்கம் என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, கொள்கையில் வித்தியாச முடைய பல அரசியல் கட்சிகள் தேசத்திலே இருக்கின்றன என்பவையும், இந்தக் கட்சிகளிலே பெரும்பான்மையான ஒரு கட்சி, அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு நடத்துகிறது என்பதையும் இது குறிக்கிறது. ஆனால், ருஷ்யாவில் ஒரே கட்சிதான் உண்டு; வேறு கட்சிகளுக்கு இடமே கிடையாது. இந்த ஒரு கட்சி - சமதர்மக்கட்சி - சூத்திரதாரிபோல் இருந்து அரசாங்கத்தை நடத்துகிறது. ஆனால் அரசாங்கம் வேறே; கட்சி வேறே. இந்தக் கட்சி, ஜனங்களுடைய ஆரவாரத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிற கட்சியல்ல; ஜனங்களோடு ஒன்றுபட்ட, ஜனங்களுக்கு வழிகாட்டுகிற கட்சி. இந்தக் கட்சியினர் அரசியலைப் பொழுது போக்காகக் கொள்பவர்கள் அல்லர்; தினசரி வாழ்க்கையோடு ஒட்டியதுதான் அரசியல் என்பதை நிரூபித்துக் காட்டுகிறவர்கள். 9. விஞ்ஞானத்திற்கு சோவியத் அரசாங்கம் கொடுத் திருக்கிற முக்கியத்துவமும் மதிப்பும் மாதிரி வேறெந்த நாகரிக அரசாங்கமும் கொடுக்கவில்லை. பொதுவாக, முதலாளித்துவ நாடுகளில் லாபம் சம்பாதிப்பதற்கு இடையூறாயில்லாத வரையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அதிகமான ஆதரவு காட்டப்படு கிறது. அப்படி இடையூறு ஏற்ப்படுமென்று தெரிந்தால், அந்த ஆராய்ச்சி அலட்சியம் செய்யப்படுகிறது; அதிகார பலத்தின் துணைகொண்டு மறைமுகமாக எதிர்க்கவும் படுகிறது. சோவியத் ருஷ்யாவிலோ பொதுஜனங்களுக்கு எது தேவை, எதனால் அதிகமான சாதகம் உண்டாகும் என்ற பொது நோக்கத்தைக் கொண்டுதான் விஞ்ஞான ஆராய்ச்சி நடை பெறுகிறது. இதற்காக, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. விஞ்ஞானத்தின் புதுமைகளைக் காண்பதிலே எல்லா ஜனங்களும் ஒரே மாதிரி யான உற்சாகங்காட்டுகிறார்கள். 10. விஞ்ஞான ஆராய்ச்சிக்கு எட்டாத ஒரு சக்தி- அந்தச் சக்தியை அமானுஷ்ய சக்தியென்று சொன்னாலும் சரி, கடவுள் என்று அழைத்தாலும் சரி- இருக்கிறதென்று சொல்லப் படுவதை, சோவியத் தலைவர்கள் நிராகரிக்கிறார்கள். உலகத்தில், சிறப்பாகக் கிறிதுவ ஐரோப்பாவில், ருஷ்யாவைப் பற்றி ஒரு தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருப் பதற்கு இஃதொரு முக்கிய காரணமாயிருக்கிறது. ஆனால், சோவியத் தலைவர் களுடைய நோக்கம் என்ன வென்றால், மதம் என்னும் கலசத்தை அணிந்துகொண்டு, மனிதனை மனிதன் சுரண்டுவதும், மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும் கூடாது என்பது தான். கடவுள்மீது நம்பிக்கையைப் போட்டுவிட்டு, மனிதர்கள் தன்னம்பிக்கை இழந்து கிடப்பதை, சோவியத் தலைவர்கள் விரும்பவில்லை. மனிதனுடைய அறிவைக் கொண்டு செய்ய வேண்டிய காரியங்களுக்கு, மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு காணாத கடவுளைக் கைகொட்டி அழைப்பானேன்? பாவத்தைச் செய்துவிட்டு, பாவ மன்னிப்புக் கேட்பதைக் காட்டிலும், பாவமே செய்யாதிருந்து விட்டால் நல்லதல்லவா? இந்த மாதிரி யாகத்தான் சோவியத் தலைவர்கள் கேட்கிறார்கள். பொது வாகச் சொல்லப் போனால், முதலாளித்துவ நாடுகளில் எப்படி நாதிகத்திற்குச் செல்வாக் கில்லையோ அப்படியே, சோவியத் ருஷ்யாவில் ஆதிகத் திற்குச் செல்வாக்கில்லை. இதற்காக, தனிப்பட்டவர்களுடைய மதஉரிமை களில் அரசாங்கம் தலை யிடுகிறதென்பது இல்லை. மதம் என்பது அவரவருடைய சொந்த விஷயம். அதைக் கொண்டு அரசியலிலோ சமுதாயத்திலோ செல்வாக்குப் பெறக் கூடாது, உரிமையைக் கோரக் கூடாது என்பதுதான் சோவியத் தலைவர்களின் கருத்து. அந்தந்த மதத்தினருக்கும் உரித்தான தொழுகை தலங்கள் எங்கும் இருக்கின்றன. யாரும் தங்கள் வீட்டுக்குள் தங்கள் பிள்ளை களுக்கு மத உண்மைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால், பள்ளிக்கூடங்களில் மத போதனை கிடையாது. பாதிரிமார்கள், எல்லோரையும் போல் உழைத்துப் பிழைக்க வேண்டியவர்களே தவிர, வேறு எவ்வித விசேஷ சலுகைகளை யும் எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் பகிரங்கமாக மதப் பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவ தில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், சோவியத் அரசாங் கத்தார், மத உரிமை அளித்திருப்பதோடு, மதத்தினின்று விலகவும் உரிமை அளித்திருக்கின்றனர். 11. சோவியத் நாகரிகத்தின் கீழ் வளர்கிற பிரதியொரு பிரஜையும் புதிய மனப்பான்மை கொண்டவனாகி விடுகிறான்; அதவாது புதிய மனிதனாகிறான். இப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதுவே தங்கள் நோக்கம் என்பதை, சோவியத் தலைவர்கள் அடிக்கடி வெளிப்படுத்தி யிருக்கிறார்கள். இந்த புதிய மனிதனுடைய புதிய மனப் பான்மை என்ன? எந்த ஒரு மனிதனும், தான் எந்தச் சமுதாயத் தில் பிறக்கிறானோ அந்தச் சமுதாயத் தினுடைய உதவியையும் ஆதரவையும் பெற்றே வளர்கிறான். அந்த விஷயத்தில் அவன் சமுதாயத்திற்குக் கடன் பட்டவனாகிறான். இந்தக் கடனை அவன் நன்றாக வளர்ச்சியடைந்த பிறகு, சமுதாயத்திற்குத் திருப்பிக்கொடுக்க வேண்டியவனாகிறான். எப்படி? சமுதாயத் திற்குச் சேவை செய்வதன் மூலமாக. சமுதாயத் தொண்டனாக இருந்து எவனொருவன் தன் சக்திக்குத்தகுந்தபடி இந்தச் சேவையைச் செய்யவில்லையோ அல்லது செய்ய மறுக்கிறானோ, அவன் திருடன்; கடனைத் தீர்க்காத குற்றவாளி. அவன் ஒரு திருடனைப் போலவே. குற்றவாளியைப் போலவே நடத்தப்பட வேண்டும். சமுதாயத்திலே அவனுக்கு அந்ததோ மதிப்போ கிடையாது. அப்படி அவன் அந்ததோ மதிப்போ பெறவேண்டு மானால், சக்திக்குத் தகுந்தபடி, திறமைக்கேற்ற வண்ணம் உழைக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மனப்பான்மை, பிரதியொரு பிரஜைக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான், தாயின் கர்ப்பத்திலிருந்தே, குழந்தைப் பாதுகாப்புப் பொறுப்பை அரசாங்கத்தார் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.1 12. மற்ற நாகரிக அரசாங்கங்கள், பொருளைச் சம்பாதிப் பதிலும், சம்பாதித்த பொருளை ஜனங்களுடைய விருப்பு வெறுப்பையோ, நன்மை தீமையையோ அதிகமாகக் கவனி யாமல் செலவழிப்பதிலுமே முனைந்திருக்கின்றன. ஆனால், சோவியத் அரசாங்கம் பொருளை உற்பத்தி செய்து அதனைச் சரியான முறையில் எல்லா ஜனங்களுக்கும் ஒரே மாதிரியான நன்மை உண்டாகக் கூடிய மாதிரி வினியோகிப்பதில் அதிக மாகக் கவனம் செலுத்துகிறது.2 13. மனிதனுடைய சுபாவம் எப்படிப்பட்ட தென்றால், எப்பொழுதுமே உயர்ந்த விஷயங்களில் நம்பிக்கை கொள்ளும் தன்மையது. ஆனால், அப்படி உயர்ந்த விஷயங்கள் ஒன்றும் இல்லாத காலத்தில், பயனற்ற விஷயங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. எனவே, சிறந்ததொரு சூழ்நிலை யிலிருந்து அவன் சிறந்த பாடங்கள் கற்றுக்கொள்வதற்குப் போதிய சாதனங்களும் சந்தர்ப்பங்களும் அளிக்கப்படு வானாகில், பிரதியொரு மனிதனும் நிச்சயமாக வளர்ச்சி யடையக்கூடும். இப்படிப்பட்ட சாதனங்களும் சந்தர்ப்பங்களும் இல்லாத காலத்தில்தான், அவன் மனித நிலையிலிருந்து மிருக நிலைக்கு இறங்கி விடுகிறான். முதலாளித்துவத்தை அடிப்படை யாகக் கொண்ட நாடுகளில், சிறந்த சூழ் நிலையோ, சாதனமோ, சந்தர்ப்பமோ எல்லா மனிதர்களுக்கும் கிடைப்பதில்லை. இதனால் பெரும் பாலோர், போலி வாழ்க்கையில் பிரியமுடையவர் களாகவும், கீழான சந்தோஷத்தை அனுபவிக்கிறவர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால்,சோவியத் நாகரிகத்தின் கீழ், பிரதியொரு மனிதனும் சிறந்ததொரு சூழ் நிலையிலேயே வசிக்குமாறு செய்யப்படுகிறான். போலி வாழ்க்கையை நடத்து வதற்கு அவனுக்குச் சந்தர்ப்பமே கிடையாது. உதாரணமாக, தேவையான பொருள்களை காட்டிலும் அதிகமான பொருள் களை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அங்கு அதிக மதிப்புக் கிடையாது; அவைகளைக் கொண்டு மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பாராட்டப்படுவது கிடையாது. சிறந்த பொருள்களை அனுபவிக்க வேண்டுமானால், அதற்காக நிறையப் பணம் செலவழிக்க வேண்டும் என்ற கருத்துக்கு அங்கு இடமே இல்லை. வாழ்க்கை இன்பம் என்பதனை சோவியத் பிரஜைகள் பார்க்கிற பார்வையே வேறானது; முதலாளித்துவ நாட்டினரால் எளிதில் பாராட்ட முடியாதது; ஏன், சுலபமாகப் புரிந்து கொள்ளவும் முடியாதது. 14. இன்றைய நாகரிகங்கள், லட்சியத்தை மறந்து விட்டுச் சாதனங்களின் மீது ஆதிக்கம் கொண்டிருக்கின்றன. இதனால்தான், எது நித்தியம், எது அநித்தியம், எது தேவை, எது தேவையில்லாதது என்பவை களின் விஷயத்தில் பாகு படுத்திக்கொள்ளத் தெரியாமல், சுய அழிவைத் தேடிக் கொள் கின்றன. சோவியத் நாகரிகமோ லட்சியத்தையும், சாதனங் களையும் ஐக்கியப்படுத்திக்கொண்டு செல்கிறது. லட்சியந்தான் என்ன? எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்பது. எல்லோரும் என்று சொல்கிற போது சுய ஜாதியாரை மட்டும், சுய நாட்டாரை மட்டும், சோவியத்தலைவர்கள் கருத்தில் கொள்வதேயில்லை. உலக மக்களை ஒரு தொகுப்பாகவே, ஒரு குடும்பமாகவே, அவர்கள் நேசிக்கிறார்கள். சேர வாரும் செகத்தீரே! என்பதுதான் அவர்களுடைய சங்கநாதம். 15. முதலாளித்துவ நாகரிகங்கள், ஒற்றுமையிலிருந்து வேற்றுமையைக் காண்கின்றன. அதாவது ஒரே பாஷை, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் இவைகளையுடைய சமுதாயத்தினரை, பல்வேறு அங்கத்தின ராகவும், பல்வேறு வகுப்பினராகவும் வேற்றுமைப்படுத்திப் பார்க்கின்றன; அந்த வேற்றுமைகளையே ஆதாரமாகக் கொண்டு சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்து கின்றன. சோவியத் நாகரிகமோ, வேற்றுமையில் ஒற்றுமை யைக் காண்கிறது. பல்வேறு பாஷையினர், பல்வேறு மதத்தினர், பல்வேறு நாகரிக பரம்பரையினர் முதலியவர்களை, ஒரே சமு தாயத்தினராக்கியிருக்கிறது; உரிமை, கடமை என்கிற விஷயங் களில், ஒரே தரத்தினராக்கி யிருக்கிறது. ஆனால், அதே சமயத்தில் அந்தந்த பாஷை, மதம், நாகரிகம் முதலியவற்றின் தனிமையை அங்கீகரித் திருக்கிறது; அவற்றின் வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. சோவியத் ஆட்சி முறை, சர்வதிகார முறையைத் தழுவியதா யிருக்கிற தென்று சொல்லப்படுவதை பற்றி சில வார்த்தைகள். ருஷ்யாவில் யாருக்கும் எந்தவிதமான அப்பிராயம் கொள்ளவும், கொண்ட அபிப்பிராயத்தைச் சொல்லவும் பரிபூர்ண உரிமை உண்டு. இங்ஙனம் சொல்லப்படுகிற அபிப்பிராயங்களை, அரசாங் கத்தார் புறக்கணிப்ப தில்லை; அவைகளுக்கு உரிய மதிப்புக் கொடுக்கிறார்கள். உதாரணமாக, 1937-ஆம் வருஷம் ஒரு புதிய அரசியல் திட்டம் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்பட்ட தல்லவா? இந்தத் திட்டத்தின் நகலொன்றை முதன் முதலாகச் சமதர்மக் கட்சியினரும், சோவியத் அரசாங்கத்தின் முக்கியதர்கள் சிலரும் சேர்ந்து தயாரித்து, பொது ஜன அபிப்பிராயத்திற்கு வெளி யிட்டார்கள். எல்லோரும் இதனை நன்றாகப் படித்து ஒவ்வொரு பிரிவையும் அலசிப் பார்த்து அபிப்பிராயம் சொல்லவேண்டு மென்பதற் காக, சுமார் ஆறு கோடிப்பிரதிகள் அச்சிடப் பெற்று விநியோகிக்கப் பெற்றன. இங்ஙனம் தனிப்பிரதிகளாக வழங்கப் பட்டது தவிர, சுமார் 370 இலட்சம் சந்தாதார்களையுடைய ஆயிரம் பத்திரிகைகளில் இந்த அரசியல் திட்டம் முழுவதும் வெளியிடப் பட்டது. பின்னர் இதைப்பற்றி ஒவ்வொரு தொழில் தாபனத் திலும், ஒவ்வொரு கூட்டுப் பண்ணையிலும், நான்கு பேர் கூடுகிற ஒவ்வொரு இடத்திலும் வாதங்கள் நடைபெற்றன. இந்தத் திட்டத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, அரசியல் பண்டிதர்கள் வகுப்பு நடத் தினார்கள். இந்தமாதிரியாக, மொத்தம் 5,27,000 கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களுக்கு ஏறக்குறைய 365 இலட்சம் பேர் ஆஜராயிருந்தார்கள். இப்படி ஆஜராயிருந்த ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அபிப்பிராயங்களையும் திருத்தப் பிரேரணைகளையும் எழுத்து மூலமாகத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருப்பதாக நினைத்து, அப்டியே செய்தார்கள். மொத்தம் இந்த திட்டத்திற்கு 1,34,000 திருத்தப் பிரேரணைகள் அரசாங்கத்திற்குக் கிடைத்தன. இந்தத் திருத்தப் பிரேரணைகள் அனைத்தையும் அரசாங்கத்தார் பொறுமையாகப் பரிசீலனை செய்து, கொள்ள வேண்டியனவற்றைக் கொண்டும் தள்ள வேண்டிய வற்றைத் தள்ளியும், இறுதியாக மேற்படி திட்டத்தை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தனர். இங்ஙனமே ஐந்து வருஷத் திட்டங்கள் தயாரிக் கப்படுவதற்கு முந்தி, திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவருடைய அபிப்பிராயமும் கேட்கப்படுகிறது. அந்த அபிப்பிராயங்களைக் கொண்டுதான், மேற்படி திட்டங்கள் எந்தெந்த வகையில் சீர்திருத்தி யமைக்கப்பட வேண்டுமோ அந்தந்த வகையில் சீர்திருத்தி அமைக்கப்பட்டு, பின்னரே நடை முறையில் கொணரப்படுகின்றன. இவை தவிர, எந்த தாபனத்தில் என்ன விதமான குற்றங் குறைகள் இருந்தாலும், அவை உடனே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன; பத்திரிகைகளில் பகிரங்கமாகப் பிரசுரிக்கப் படுகின்றன. இதற்காக யாரும் சங்கோஜப்படுவதோ வருத்தப் படுவதோ கிடையாது. அவரவரும் தங்களுடைய குறைகளை உணர்ந்து சீர்திருத்திக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, அரசாங்கத்தார் இந்த மாதிரியான பரிசீலனை முறைகளுக்கு ஆதரவு காட்டுகிறார்கள். யாராவது சமதர்மக் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அதற்கு நேர் விரோதமாக நடந்தாலும் சரி, அல்லது தங்களுடைய நியாயமான கடமையைச் செய்யாததன் காரணமாக அவர்களுடைய தொழில் தாபனத்தில் முட்டுப்பாடு ஏற்பட்டாலும் சரி, இவை யெல்லாம் பத்திரிகை களில் பகிரங்கமாக வெளி வந்து விடுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள், உடனே தங்களைச் சீர்திருத்திக்கொள்கிறார்கள். ஹிட்லரையும் முஸோலினியையும் எந்த அர்த்தத்தில் சர்வாதி காரிகள் என்று அழைக்கிறார்களோ அந்த அர்த்தத்தில், டாலினை ஒரு சர்வாதிகாரியென்று அழைக்க முடியாது. அவன் தன் இஷ்டப் படிக்கு எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அதற்கு சோவியத் அரசியல் சட்டத்தில் இடமேயில்லை. பொது ஜன அபிப் பிராயத்தைத் தழுவியும், அரசாங்கத்திலுள்ள தன் சகபாடிகளின் ஆலோசனையை அநுசரித்தும், அவன் காரியங்களைச் செய்கிறான். அதாவது மற்றவர்களுடைய விருப்பத்தை நடைமுறையில் கொணர் வதற்கு, அவன் ஒரு கருவியாக இருக்கிறான். அவ்வளவுதான். vÄš y£É¡ v‹w xU ãugy MáÇa‹, xUrka« ÞlhÈid¥ gh®¤J, “nrhÉa¤ uh{a¤âš murh§f¡ fhÇa§fŸ Rna¢ rhâfhu KiwÆnyna eilbgW»‹wd v‹gJ c©ik jhdh” v‹W nf£lj‰F, ÞlhÈ‹ T¿a gâš ï§F¡ F¿¥ ãl¤j¡fJ.: அப்படியில்லை. தனிப்பட்ட நபர்கள் எந்த ஒரு தீர்மானத்திற்கும் வர முடியாது. அப்படி அவர்கள் செய்கிற தீர்மானங்கள் ஒருதலைச்சார்பினவாகவே இருக்கின்றன. யாருடைய அபிப்பிராயங்களுக்கு நாங்கள் மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அப்படிப்பட்டவர்கள் எங்களுடைய ஒவ்வொரு தாபனத்திலும் இருக்கிறார்கள். எங்களுடைய சமதர்மக் கட்சியின் நிருவாகக் கமிட்டியில் மொத்தம் சுமார் எழுபது அங்கத்தினர்கள் இருக் கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லுநர். இதனால் எங்களுடைய கட்சியின் அறிவெல்லாம் இந்த நிருவாகக் கமிட்டி யினிடத்தில் ஏகோபித்துத் தங்கியிருக்கிற தென்று சொல்ல வேண்டும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நன்றாகப் பரிசீலனை செய்து பார்த்த பிறகுதான், அஃது அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் படுகிறது இவைகளையெல்லாம் தெரிந்துகொண்டிருக்கிறவர்கள், ருஷ்யாவில் சர்வாதிகார ஆட்சி முறை நடைபெறுகிறதென்று எப்படித் துணிந்து கூறுவார்கள்? ஆனால், இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது ருஷ்யாவில் எந்த ஒரு திட்டமோ சட்டமோ அமுலுக்கு வந்துவிட்ட பிறகு, அதைப் பற்றி விரோத மான அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கோ, விரோதமான காரியங் களைச் செய்வதற்கோ யாருக்கும் உரிமையில்லை. அதைப்பற்றி ஜனங் களிடத்தில் ஒருவிதத் தோல்வி மனப்பான்மையை யாரும் உண்டுபண்ணக் கூடாது. வெற்றிகரமாக ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால், மத்தியில் முணுமுணுப்புகள், உட் பூசல்கள், கருத்து வேற்றுமைகள் முதலியன ஒன்றுமே இருக்கக் கூடாதென்பது சோவியத் தலைவர்களின் உறுதியான அபிப்பிராயம். சோவியத் ராஜ்யத்தில், சம்மட்டியடிக்கிறவனுக்கும், மின்சார யந்திரத்தை இயக்குகிறவனுக்கும், பத்திரிகாசிரியனுக்கும், எல் லோருக்கும் ஒரே மாதிரியான கூலி விகிதம் என்றும், இதனால் மனிதனுடைய செயலாற்றுந் திறனுக்குச் சந்தர்ப்பமே இல்லாமற் போய் விடுகிறதென்றும், சில இடங்களில் பிரசாரம் செய்யப்படு கிறது. இது முற்றிலும் தவறு. அவரவருடைய உழைப்புக்கும் திறமைக்கும் தகுந்த வாறு தான், கூலி விகிதமோ சம்பள விகிதமோ நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. பிறக்கிறபோது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான உரிமையோடு பிறந்தார்களாதலினால், எல் லோருக்கும் ஒரே மாதிரியான ஊதியமே கிடைக்கவேண்டுமென்பது மார்க்ஸின் கோட்பாட்டுக்கே விரோதம். ஸ்டாலின் இதனை ஓரிடத்தில் பின்வருமாறு விளக்கப்படுத்திச் சொல்கிறான்.: சமுதாயத்தைச் சேர்ந்த எல்லா அங்கத்தினர்களுடைய தேவைகளையும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையையும் ஒரே மட்டத்திற்கு உட்படுத்திவிடுவதுதான் அபேதவாதம் என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான அபிப் பிராயத்திற்கும், மார்க்ஸீயம், லெனினிஸம் என்று சொல்லப் படுகிற சித்தாந்தங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. சமத்துவம் என்று சொன்னால், எல்லோருடைய சொந்தத் தேவைகளையும் சொந்த வாழ்க்கையையும் ஒரே மாதிரியாக்கி விடுவதல்ல; சமுதாயத்தில் வருக்கப் பிரிவினைகள் என்று சொல்லப் படுகிற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமற் செய்துவிடுதல் என்பதே அர்த்தம். அதாவது (அ) சுரண்டப்படுவதினின்று எல்லா உழைப்பாளிகளையும் ஒரே மாதிரியாக விடுதலை செய்வித்தல். (ஆ) பொருளுற்பத்திக்கான சாதனங் களை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உபயோகப் படக்கூடிய வண்ணம் தேசீய சொத்தாக்கிவிடுதல்; (இ) திறமைக்கு தகுந்தபடி உழைப்பது என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடமையாயிருத்தல்; அப்படியே உழைப்புக்குத் தகுந்த கூலி பெறுவதென்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமையா யிருத்தல்- (இதுவே அபேதவாத சமுதாயம்); (ஈ) திறமைக்குத் தகுந்தப்படி உழைத்து தேவைக்குத் தகுந்தபடி கூலி பெறும் விஷயத்தில், எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமை இருத்தல். (இதுவே சமதர்ம சமுதாயம்). சமுதாயமானது அபேத வாத நிலையிலிருக்கிறபொழுதாகட்டும், சமதர்ம நிலையிலிருக்கிற பொழுதாகட்டும், ஜனங்களுடைய திறமைகளும் தேவைகளும், தன்மையிலோ எண்ணிக்கை யிலோ ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்கிற அடிப்படையான தத்துவத்திலிருந்துதான், மார்க்ஸீயம் தொடங்கு கிறது. எனவே, ருஷ்யாவில் கூலி வித்தியாசம், சம்பள வித்தியாசம் முதலிய எல்லாம் உண்டு. உழைப்புக்கும் திறமைக்கும் தகுந்தபடியே அங்கு ஒவ்வொருவரும் சம்பாதிக்கிறார்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட மேற்கோளில், அபேதவாத சமுதாயம் என்றும் சமதர்ம சமுதாயம் என்றும் இரண்டுவித சமுதாய அமைப்புகள் கூறப்பட்டிருக்கின்றன அல்லவா? அதாவது அபேத வாதம் என்பது சோஷலிஸம். சமதர்மம் என்பது கம்யூனிஸம். இந்த சோஷலிஸத் திற்கும் கம்யூனிஸத்திற்கும் உள்ள வித்தியாசத் தைத் தெளிவுபடத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. உழைப்புக்குத் தக்கபடி ஊதியம் பெறுவது கம்யூனிஸம். இரண்டிலும் உழைப்பு ஒன்றுதான். ஆனால், முன்னதில் உழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது; பின்னதில் தேவை முக்கியத்துவம் பெறுகிறது. கம்யூனிஸம் என்பது மேல்படி; சோஷலிஸம் என்பது கீழ்ப்படி. டாலினுடைய அபிப் பிராயத்தில் ருஷ்யாவில் இப்பொழுது சோஷலிஸமே நிலவுகிறது. அதாவது உழைப்புக்கும் திறமைக்கும் தகுந்தபடிதான் அங்கு ஊதியம் கிடைக்கிறது. தேவைக்குத் தகுந்தபடி சம்பாதித்துக் கொண்டு திருப்தியடைவது என்ற நிலை இன்னும் அங்கு வரவில்லை சோவியத் ராஜ்யத்தில் தனிச் சொத்துரிமை கிடையாது. என்று சொல்வது சரியில்லை. அங்கே யாரும் தங்களுடைய உழைப்பைக் கொண்டு சம்பாதித்து ஆதி பாதிகள் சேர்க்கலாம்; நில புலங்கள் வாங்கலாம். இந்த உரிமை, சட்டபூர்வமாக அங்கீ கரிக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்து சம்பாதிக்கிற பணம், அந்தப் பணத்தி லிருந்து பிடிக்கிற மிச்சம், வசிக்கிற வீடு, வேளாண்மைக்கு வேண்டியிருக்கிற கருவிகள், குடும்பச் சமான்கள், சொந்த உபயோகத்திற்காகவும் சௌகரியத் திற்காகவும் தேவையா யிருக்கிற பொருள்கள், இந்தச் சொத்துகளை அநுபவிக்கிற விஷயத்தில் வாரிசு பாத்தியம் முதலியவை சம்பந்தமான உரிமைகள் - அதாவது தனிச் சொத்துரிமை - சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. - 10 -ஆவது பிரிவு. இந்தத் தனிச் சொத்துரிமையைக் கொண்டு யாரும் யாரையும் சுரண்டவோ அடிமைப்படுத்தி வேலை வாங்கவோ கூடாது; யாரும் இந்தப் பாத்தியதையைக் கொண்டு சமுதாயத்திற்கு விரோதமாக நடந்து கொள்ளக்கூடாது. இந்தக் கண்டிப்பான நிபந்தனைகளுடன், தனிச் சொத்துரிமையானது சோவியத் ருஷ்யாவில் பரிபூரணமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சோவியத் ராஜ்யத்தில், சட்டத்திற்கு அஞ்சி ஒரு காரியத்தைச் செய்வது என்பது கிடையாது. ஒழுங்காக நடந்து கொள்வதும், ஒழுங்காக வாழ்வதும், அவரவர்களுடைய சுபாவத்திலேயே அமைந்திருக்கின்றன. பிறர் மீது வைத்த கருணையினாலோ அல்லது நான்கு பேருடைய வற்புறுத்தலுக்காகவோ, அங்கு யாரும் தொண்டு செய்வதில்லை. சேவை என்பது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டி வளர்கிற ஒரு பண்பு; ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய இன்றியமை யாத கடமை. ஒரு நாளைக்கு ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்கிற வாசகம், அங்கு ஏட்டளவோடு நிற்கவில்லை. நித்தியக் கடன் களில் ஒன்றாகவே அது நிலைத்து நிற்கிறது. தவிர, பிரதியொரு சோவியத் பிரஜையும் சமுதாயத் திற்காகவே தான் வாழ்வதாக நினைக்கிறான். தான் உண்பது, உடுப்பது, உழைப்பது முதலியன, சமுதாயத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் அல்லது அதற்கு எவ்வளவு தூரம் நன்மை உண்டாக்கும் என்பதை அடிக்கடி யோசிக்கிறான். எப்படிப் பிரதியொரு தாயும், பிள்ளைகளைப் பெறுவது சமுதாய நலனுக்காக என்று கருதுகிறாளோ அதைப் போலவே பிரதியோர் ஆண்மகனும், சுத்தமான வாழ்க்கையை நடத்துவதும், தினசரி விவகாரங்களில் நாணயமாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வதும் சமுதாய நலனுக்காக என்று கருதுகிறான். தனி மனிதர் களுடைய நடவடிக்கைகளைக் கொண்டு தானே ஒரு சமுதாயம் மதிப்பிடப்படுகிறது? உதாரணமாக, மாகோ நகரத்தில் இருக்கும் பூமிக்குக் கீழோடும் ரெயில் பாதை (இதற்கு மெட்ரோ என்று பெயர்) எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதை நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், பெரிதும் ஆச்சரியப்பட்டு போவோம். இந்த மெட்ரோவைப் பற்றி ஒவ்வொரு ருஷ்யனும் பெருமையோடு பேசுவான். ஏனென்றால், பிரதியொரு ருஷ்யனுடைய உழைப்பும் இதில் கலந்திருக்கிறது. அவரவரும் தங்கள் காரியாலங் களில் உழைத்துவிட்டு, சாயந்திர வேளைகளில் தினசரி இரண்டு மணி நேரமோ மூன்று மணி நேரமோ இந்த மெட்ரோ கட்டப்படும் இடத்திற்கு வந்து உழைப்பார்கள். இதற்குக் கூலியோ சன்மானமோ கிடையாது. இந்த மெட்ரோவைக் கட்டிமுடித்தால், போக்கு வரத்துக்குச் சௌகரியமாகயிருக்கும்; பொதுவாக ருஷ்யாவுக்கு, சிறப்பாக மாகோ நகரத்திற்கு, இஃதொரு புதுமை; பெருமை. இந்தப் புதிய, பெருமையுள்ள தொண்டில் நாம் ஈடுபட்டுப் பெருமை யடைய வேண்டும். இந்த மாதிரியான எண்ணத் தோடுதான், மாகோ வாசிகள் இந்த மெட்ரோவைக் கட்டும் வேலையிலே ஈடு பட்டார்கள். பொதுவாக, ருஷ்யாவில் சுதேசிய உணர்ச்சி நன்றாக வேரூன்றி யிருக்கிறது. இதோ பார்த்தீர்களா, எங்கள் ருஷ்யாவில் செய்த மோட்டார்; எங்கள் லெனின்கிராட் நகரத்தில் நெய்யப்பட்ட துணி என்று ஒருவித சந்தோஷத்தோடு, தற்பெருமையோடு எல்லோரும் சொல்லிக் காட்டுவார்கள். இப்பொழுது நாங்கள் ஆகாய விமானங்களை வெளிநாடு களிலிருந்து வரவழைப்பதில்லையே; எல்லாவற்றையும் இப்பொழுது எங்கள் நாட்டிலேயே தயார் செய்து கொள்கிறோம் என்று ருஷ்யர்கள் எவ்வளவு திருப்தியோடு சொல்லிக் கொள்கிறார்கள்! சோவியத் ருஷ்யாவில் காணப்படுகிற ஒரு முக்கியமான விசேஷம் என்னவென்றால், ஜனங்களுக்கும் அரசாங்க அதிகாரி களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புதான். மந்திரி மார்கள், ஜனங்களுடைய காரியங் களைச் செய்கிறவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வதற்கு இயைந்தாற் போலவே நடந்து கொள் கிறார்கள். காட்சிக் கெளியராய், கடுஞ் சொல் அல்லராய், மக்களின் குறைகளை நேரில் விசாரித் தறிந்து வேண்டுவன செய்வது தங்கள் கடமையென்று அவர்கள் கருதுகிறார்கள். தற்போதைய சோவியத் அரசாங்கத்தின் தலைவனான காலினின், ஜனங்களோடு எப்படி நெருங்கிப் பழகுகிறான் என்பதைப்பற்றி, ஒருவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :- சோவியத் ஆட்சி முறையின் விசேஷ அமிசம் என்ன வென்றால், அரசாங்கத்தை ஜனங்களுக்குச் சமீபத்தில் கொண்டு வைப்பதுதான். காலினின் எல்லா விவகாரங் களையும் தானே நேரில் கவனிக்க வேண்டு மென்று வற்புறுத்துகிறான். அவன் ஒரு விவசாயியாக இருந்தவன். இதனால், ஜனங்களை, தானே கண்டு பேசுவதில் திருப்தியடைகிறான். விசாலமான சோவியத் ராஜ்யத்திலுள்ள ஒவ்வொருவனும், தனக்கு ஏதாவது குறையி ருந்தால், காலினினை நேரில் போய்ப் பார்த்தால் போதும், பரிகாரம் கிடைத்துவிடும் என்று கருதுகிறான். சுருக்கமாகச் சொல்லப்போனால், ருஷ்யாவில், அரசாங்கம் ஜனங்களை நாடி வருகிறது; ஜனங்கள் அரசாங்கத்தை நாடிச் செல்வ தில்லை. சோவியத் தலைவர்கள் இங்ஙனம் காட்சிக்கெளியராய் இருப்ப தோடல்லாமல், எளிய வாழ்க்கையை, அதாவது ஆடம்பர மற்ற சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்; அப்படி நடத்து வதிலே சந்தோஷமும் பெருமையும் அடைகிறார்கள். ஓர் அமெரிக்க ஆசிரியன் கூறுவதைக் கேளுங்கள்:- ராஜ்யத்தின் தலைவர்களாயிருக்கிறவர்கள் ஏழை களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இறந்து போகிறபோது, எந்த விதமான ஆதியையும் வைத்து விட்டுப் போகமுடியாது. அவர்கள் நாணயதர்கள்; உலக சுகங்களை அநுபவிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள். * * * தலைவர்களில் பெரும்பாலோர் இரண்டு அல்லது மூன்று அறைகளுள்ள சிறிய வீட்டில்தான் வசிக்கிறார்கள். எந்த உத்தியோகதருக்கும் சுமார் இருநூற்றைம்பது ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடையாது. சாதாரணமாக, எல்லாத் தலைவர்களும் சொந்த சௌகரியத் திற்காக ஒரே ஒரு வேலையாளை மட்டும் வைத்துக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுடைய மனைவிமார்கள், தங்களுடைய கணவன் மாருடைய அதிகார பதவியைச் சாதகமாகக் கொண்டு, வீட்டிலேயே சோம்பேறித் தனமாக உட்கார்ந்திருக்க முடியாது. எல்லோரையும் போல் இவர்களும் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டு வேலை செய்யவேண்டும். இதில் எவ்விதச் சலுகையும் கிடையாது. சோவியத் தலைவர்கள் பொதுவாக எதிலும் ஒரு தீவிரத்தை விரும்புவதில்லை; அநுஷ்டிப்பதுமில்லை. அப்படியே, ஆபத்து வந்த பிறகு சமாளிப்பதைக் காட்டிலும் அது வராமலிருக்க என்ன வழி யென்பதை யோசித்து அதற்கான தடுப்பு முறைகளைக் கையாள் கிறார்கள். கடுமையான துறவு அல்லது கேவலமான சிற்றின்பம், அஜீர்ணம் அல்லது பட்டினி, மூர்க்கத்தனம் அல்லது கோழைத் தனம் ஆகிய இப்படிப்பட்ட நேர்மாறான தீவிர நிலைமைகள் உண்டா காதவாறு பொது விவகாரங்களை நடத்தி வருகிறார்கள். வியாதிக்கு மருந்து சாப்பிடுவதைக் காட்டிலும் வியாதி வராமலிருக்குமாறு நடந்துகொள்ளுதல் நல்லது; கர்ப்பத்தடை முறையைக் காட்டிலும் புலனடக்கம் சிறந்தது. இப்படிப்பட்ட கோட்பாடுகளையே, சமுதாய வாழ்வில் கொண்டு புகுத்தியிருக்கிறார்கள். ஆக, சோவியத் தலை வர்கள், தங்களுடைய அதிகார பதவிகளை, சிறந்த முறையில் சேவை செய்வதற்கான ஒரு பீடமாகவே கொண்டிருக் கிறார்கள் என்பது மறக்க முடியாத உண்மை. சோவியத் ருஷ்யாவில் காணமுடியாத அமிசங்கள் பல: (1) விபசார வழக்குகள், விவாகரத்துக்கள் முதலியவைகளைப் பற்றின பத்திரிகைச் செய்திகள் ; (2) போலி மருந்துகள், சிற்றின்பக் கருவிகள், நூல்கள் முதலியவைகளைப் பற்றின விளம்பரங்கள்; (3) கலப்பட முள்ள சரக்குகளின் விற்பனை; (4) வியாபாரத்தில் பேரம்; (5) வியா பாரச் செழிப்பு அல்லது வியாபார மந்தம்; (6) குதிரைப் பந்தயம், போட்டிப் பந்தயம் முதலிய ஆசையை வளர்க்கும் தூண்டு கோல்கள்; (7) தரகர்கள், வேலை யில்லாதவர்கள், சோம்பேறிப் பணக்காரர்கள், திக்கற்ற பரதேசிகள் முதலியோரின் கோஷ்டிகள் ஆகிய இவைகளை ருஷ்யாவில் பார்க்க முடியாது. பொதுஜன சேவை செய்கிறவர்களை மேன்மேலும் உற்சாகப் படுத்தும் பொருட்டு, கௌரவப் பட்டங்கள் வழங்குவதை எல்லா நாட்டினரும் தொன்றுதொட்டு அநுசரித்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை, சோவியத் அரசாங்கத்தாரும் பின்பற்றி வருகின்றனர்; சமுதாயத் தொண்டர்களைப் பலவிதமாக கௌரவப்படுத்தியும் ஊக்கியும் வருகின்றனர். இந்தக் கௌரவப்பட்டங்களில் முக்கிய மானவை மூன்று: (1) ஆர்டர் ஆப் லெனின், (Order of Lenin) (2) தி ரெட் பான்னர் ஆப் டாயில், (The Red Banner of Toil ) (3) ஆர்டர் ஆப் தி ரெட் டார் (Order of the Red Star ). இந்தக் கௌரவப் பட்டங்கள் பெற்றவர்கள், உபகாரச் சம்பளமாக ஒரு சிறு தொகையை வருஷந்தோறும் பெறுவதற்கும், சில இடங்களுக்கு இலவசமாகப் பிரயாணம் செய்வதற்கும், இவை போன்ற வேறு சில சௌகரியங் களைப் பெறுவதற்கும் உரியவர்கள். சோவியத் ஆட்சி முறை ஏற்பட்டு இருபத்தைந்து வருஷங்கள் ஆகின்றன. இந்த இருபத்தைந்தாவது வருஷக் கொண்டாட்டத்தை, ருஷ்ய மகாஜனங்கள் உற்சாகத்தோடு கொண்டாடவில்லை; ஆனால், உறுதியோடு கொண்டாடுகிறார்கள். ஏன்? அவர்களுடைய புனிதமான வாழ்க்கையை, சுதந்திர வாழ்க்கையை, பலாத்கார சக்திகள் தாக்குகின்றன. அந்தச் சக்திகளை அவர்கள் எதிர்த்து நிற் கிறார்கள். தங்கள் சுதந்திர வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள, அவர்கள், எவ்வளவு தியாகங்களைச் செய்து கொண்டிருக் கிறார்கள்! மிரோல் சிஸெல்யாடின் (Mirol Syselyatin) என்ற ஒரு கிழவன். 62 வயது ஆகிறது. இரும்பு வேலை செய்து கொண்டிருக் கிறான். அவனுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு மாப்பிள்ளைகள், பதினேழு பேரப்பிள்ளைகள். அத்தனை பேரையும் போர்க்களத் திற்கு அனுப்பிவிட்டான்! அவன், தன்னுடைய பட்டரையில் இரண்டு பேருடைய வேலையைச் செய்துகொண்டிருக்கிறான்! இந்த மாதிரி எத்தனை பேர் தியாக மூர்த்திகளாகியிருக்கிறார்கள்! எத்தனை பேருடைய செந்நீர் வீர சொர்க்கத்தை வளப்படுத்தி யிருக்கிறது! ஆனால், ருஷ்யத் தாய்மார்கள் கண்ணீர் விடவேயில்லை. ஏனென்றால், தங்களுடைய வயிறு புலிக்குகை அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். அது, வீரத்தின் விளைநிலம்; தேசத்தின் மானத்தைக் காப்பாற்றும் கோயில். யுத்தகளத்தில் அணிவகுத்து நிற்கும் ருஷ்யப் போர் வீரர்கள் தங்கள் கைக்குத் துப்பாக்கி தூக்கும் சக்தி இருக்கிற வரையில், கால்களுக்கு நடக்கும் சக்தி இருக்கிற வரையில், தேகத்திற்கு மூச்சு விடும் சக்தி இருக்கிறவரையில் போரிடுவதாகப் பிரதிக்ஞை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் செங்கொடியின் நிழல் காக்கிறது; லெனினுடைய ஆத்மா ஆசீர்வதிக்கிறது. அப்படியிருக்க, அவர்களுக்கு தோல்வி ஏற்படுமா? நீதியே! நீ கூறு! அநுபந்தம் 1 ருஷ்ய சமஷ்டியில் சேர்ந்துள்ள குடியரசு நாடுகளின் விவரம் சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யத்தில், சம அந்ததும் சம உரிமையும், பூரணப் பொறுப்பாட்சியும் பெற்ற தனித்தனியான பதினாறு குடியரசு நாடுகள் சமஷ்டியாகச் சேர்ந்திருக் கின்றன. ஏறக்குறைய இந்த ஒவ்வொரு குடியரசு நாட்டிலும், மேற் சொன்ன விதமாகச் சம அந்ததும் சம உரிமையும் பூரணப் பொறுப் பாட்சியுமுடைய அநேக சிறிய பிரதேசங்கள் அல்லது ஜில்லாக்கள் சமஷ்டியாக இணைந்திருக்கின்றன. ருஷ்ய அரசியல் அமைப்பு, பொதுவாக, ஒன்றுக்குள் ஒன்று பின்னிக்கொண்டிருக்கிற சங்கிலி இணைப்பு மாதிரி இருக்கிறதென்று சொல்லலாம். சமஷ்டியாகச் சேர்ந்திருக்கிற பதினாறு மாகாணங்கள் வருமாறு:- 1. ருஷ்யா (இதுதான் இருப்பதற்குள்ளே பெரிய நாடு) 2. உக்ரேன் 3. பைலோருஷ்யா 4. ஜார்ஜியா 5. அர்மீனியா 6. அஸெர்பைஜான் 7. உபெக்தான் 8. தாஜிக்தான் 9. தூர்க்கோமேனியா 10. கிர்கிதான் 11. காஜக்தான் 12. மோல்டேவியா1 13. கரேலியா - பின்லாந்து 14. எதோனியா 15. லிதூனியா 16. லாட்வியா அநுபந்தம் 2- சோவியத் அரசியல் அமைப்பு சோவியத் சமதர்மக் குடியரசு நாடுகளின் ஐக்கிய ராஜ்யம் UNION OF SOVIET Socialist republic வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்கள் தலைவர்கள் வரிசை திரட்டு 1 1. மகாத்மா காந்தி திரட்டு 2 2. பண்டித மோதிலால் நேரு 3. லோகமான்ய பாலகங்காதர திலகர் 4. காந்தி யார் 5. காந்தியும் ஜவஹரும் 6. காந்தியும் விவேகானந்தரும் திரட்டு 3 7. நான் கண்ட நால்வர் 8. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி திரட்டு 4 9. ஐசக் நியூட்டன் 10. எடிசன் 11.. சர்.சி.வி. இராமன் 12. ஜெகதீ சந்திரபோ 13. பிரபுல்ல சந்திர ரே 14. டார்வின் திரட்டு 5 15. மாஜினி 16. மாஜினியின் மனிதன் கடமை 17. மாஜினியின் மணிமொழிகள் திரட்டு 6 18. உரூசோ 19. உரூசோவின் சமுதாய ஒப்பந்தம் திரட்டு 7 20.ï£y® 21. முசோலினி திரட்டு 8 22. கார்ல் மார்க் 23. சன்யாட்சன் திரட்டு 9 24. அபிசீனிய சக்ரவர்த்தி 25. கமால் அத்தாத் துர்க் 26. சமுதாய சிற்பிகள் கடித வரிசை திரட்டு 10 27. மகனே உனக்கு 28. அவள் பிரிவு 29. பிளேட்டோவின் கடிதங்கள் 30. வரலாறு கண்ட கடிதங்கள் 31. பாரதமாதாவின் கடிதங்கள் நாடக வரிசை திரட்டு 11 32. பாணபுரத்து வீரன் 33. அபிமன்யு 34. மனோதருமம் 35. உத்தியோகம் 36. உலகம் பலவிதம் சுதந்திரம் வரிசை திரட்டு 12 37. மானிட ஜாதியின் சுதந்திரம் 38. சுதந்திர முழக்கம் 39. சுதந்திரத்தின் தேவைகள் யாவை? நாட்டு வரிசை திரட்டு 13 40. பெயின் குழப்பம் 41. நமது ஆர்யாவர்த்தம் 42. ஆசிய உலக சமாதானம் திரட்டு 14 43. ஜெக்கோலோவாகியா 44. பாலதீனம் திரட்டு 15 45. சோவியத் ருஷ்யா திரட்டு 16 46. பர்மா வழி நடைப்பயணம் 47. பிரிக்கப்பட்ட பர்மா திரட்டு 17 48. புதிய சீனா திரட்டு 18 49. ருஷ்யாவின் வரலாறு திரட்டு 19 50. சீனாவின் வரலாறு திரட்டு 20 51. கிரீ வாழ்ந்த வரலாறு அரசியல் வரலாறு திரட்டு 21 52. 1919 (அ) பஞ்சாப் படுகொலை திரட்டு 22 53. பெடரல் இந்தியா 54. சமதான இந்தியா 55. இந்தியாவின் தேவை 56. பார்லிமெண்ட் 57. நமது தேசிய கொடி திரட்டு 23 58. பிளேட்டோவின் அரசியல் திரட்டு 24 59. அரசியல் வரலாறு 60. ஐக்கிய தேசதாபனம் 61. அரசாங்கத்தின் பிறப்பு 62. பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும் 63. அரசியல் கட்சிகள் திரட்டு 25 64. ராஜதந்திர- யுத்த களப் பிரசங்கங்கள் திரட்டு 26 65. புராதன இந்தியாவில் அரசியல் பொது திரட்டு 27 66. கௌரிமணி 67. தலை தீபாவளி 68. Essentials of Gandhism கட்டுரை இலக்கியம் (வாழ்வியல் நூல்கள்) திரட்டு 28 69. நமது பிற்போக்கு 70. எப்படி வாழ வேண்டும் 71. நாடும் மொழியும் 72. சுதந்திரமும் சீர்திருத்தமும் திரட்டு 29 73. நகைத்தல் நல்லது 74. பெண்மையிலேதான் வாழ்வு 75. மனிதன் யார்? 76. இக்கரையும் அக்கரையும் திரட்டு 30 77. கட்டுரைக் களஞ்சியம் 78. உலகக் கண்ணாடி 79. நாடாண்ட நங்கையர் திரட்டு 31 80. வெ.சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு * * * * *