வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 13 ஸ்பெயின் குழப்பம் நமது ஆர்யா வர்த்தம் (புராதன காலம்) ஆசிய உலக சமாதானம் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 13 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+184=200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 185/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய ‘தேச பக்தன்’ நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் ‘நவசக்தி’ கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் ‘சுயராஜ்யா’ நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான ‘பாரதி’யில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது ‘குமரி மலர்’ மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகை யல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்ச மாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். ‘காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளி வந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜிஎழுதினார். ‘கூhந நுளளநவேயைடள டிக ழுயனோளைஅ’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய ‘லெட்சுமிகாந்தன்’, ‘உத்தியோகம்’, ‘பாணபுரத்து வீரன்’, ‘அபிமன்யு’ ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக ‘வளவன் பதிப்பகம்’ மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. ‘ ஞானாலயா’ பி. கிருஷ்ணமூர்த் டோரதி கிருஷ்ணமூர்த்தி சர்மாவின் பொன்னுரைகள்....... மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே. பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும். உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே; உயர்வு உன்னைத் தேடி வரும். பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ். மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர். தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு. உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட. ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை. கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு. ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு. எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே; உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள். நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது. விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். சில செய்திகள்...... ஸ்பெயின் குழப்பம் 1936இல் போர்க் கோலத்துடன் ‘ஸ்பெயின்’ நாட்டை முன்னிருத்தி அந்த நாட்டின் வாழ்வையும், தாழ்வையும் ஏற்றத்தையும், இறக்கத்தையம் சித்தரிக்கும் நூல். தமிழ்மக்கள் அரசியல் தெளிவு பெற எழுதப்பட்ட நூல். பாசிசம், நாசிசம், சர்வாதிகாரம் குறித்த கொடுங் கொள்கைகள் (மக்கள் நலன் பேணா கொள்கைகள்) ஸ்பெயின் குழப்பத்தின் துன்பச் சுவடுகள். ஸ்பெயின் நாட்டு வரலாற்றையும், சமூக அமைப்பையும் விளக்கி சர்வாதிகார சக்திக்கும், மக்களாட்சிக்கும் இடையில் நிகழ்ந்த போராட்டத்தை உள்ளடக்கியது தான் ஸ்பெயின் குழப்பம். நமது ஆர்யவர்த்தம் புராதன காலம், வேதகாலம், இதிகாச காலம், பௌத்த காலம், மௌரியர் ஆட்சிகாலம், குப்த மன்னர் காலம் எனும் 6 தலைப்புகளை உள்ளடக்கி தேசிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நூல். ஆசியாவும் உலக சமாதானமும் உலகில் நிலையான ஒற்றுமை ஏற்படுவதற்குகான பல காரணங்களை உள்ளடக்கி அந்த நிலையான ஒற்றுமை ஏற்படுவதற்கு ஆசியாதான் வழிகாட்ட வேண்டும்,, அதற்காகத் தகுதி ஆசியாவிற்குத்தான் உண்டு எனும் உணர்வை தம் நூலின் வாயிலாக ஆசியா கண்டத்தை வழிநடத்திச் செல்லும் தலைவர்களுக்கு வலியுறுத்தி எழுதப்பட்ட நூல். நுழையுமுன்... ஸ்பெயின் குழப்பம் ஸ்பெயின் நாட்டு மக்கள் தொகை இன்று 4 கோடி. பரப்பளவு 1.95 சதுர மைல். சிறிய நாடாயினும் உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாடு அது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் தென் அமெரிக்காவும் (பிரேசில் தவிர) அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு (ருளுஹ) தெற்கில் உள்ள வடஅமெரிக்கா பகுதியும் ஆட்சியின் கீழ் வந்தன. எனவே வடதென் அமெரிக்க நாடுகளில் உள்ள ஸ்பானிய மொழிபேசுவோர் உட்பட இன்று உலகில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை 33 கோடி. (சீனமொழி பேசும் 108 கோடி பேருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளோர் ஸ்பானிஷ் மொழி பேசுநரே.) 2. ஸ்பெயினில் முதலில் குடியேறியவர்கள் ஐபீரியர்கள், பாஸ்குகள், கெல்டுகள் ஆகிய இனக் குழுவினர் ஆவர். பாஸ்குகள் மொழியான யூஸ்கரா திராவிட மொழி எனவே கருதப்படுகிறது. எனவேதான் பாஸ்கு பகுதியி லிருந்து வந்த ஹீராஸ் பாதிரியார் (சிந்துவெளி நாகரிகமும் மொழியும் லிபியும் திராவிடருடையவை என நிறுவியவர் .தம்மை ஸ்பெயின் நாட்டு திராவிடன் என்று அண்ணாமலைப் பல்கலைக்கழக உரையில் அறிவித்தது மன்றி நாவலர் இரா.நெடுஞ்செழியனுடைய சங்க இலக்கியப் புத்தக முதல் தாளில் , “ஐ , வாந ரனேநசளபைநேன யஅ ய னுசயஎனையைn கசடிஅ ளுயீயin. ழ.ழநசயள ளுது; 143-1942) என்று எழுதிக் கையொப்பமும் இட்டார். (மன்றம் பொங்கல் மலர்; மலர் 4 இதழ் 18; 14.1.1956) 3. வரலாற்றுக் காலத்தில் ஸ்பெயின் நாட்டை ஒன்றன்பின் ஒன்றாக ஆண்டவர்கள் வருமாறு: கி.பி.711 வரை: கார்தேஜ்; ரோம்; விசி காத் இனத்தவர் கி.பி.8-11 நூற்றாண்டுகள்: முகம்மதியர் கி.பி.1200-1492: தனித்தனிகிறித்துவ நாடுகள் 1492-1808 : ஸ்பானியப் பேரரசு 1808-1833: அமெரிக்க காலனிகள் சுதந்தரம் பெற்றன 1873-1874: முதல் குடியரசு 1931-1939: இரண்டாம் குடியரசு 1936-1939: இரண்டாம் குடியரசை எதிர்த்து பிராங்கோ தலைமையில் வலது சாரிகள் உள்நாட்டுப் போர். இதனைப்பற்றித்தான் “ஸ்பெயின் குழப்பம்” நூலில் சர்மா எழுதியுள்ளார். அக்காலக்கட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பல-சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், ரீப்பளிகன்கள், அனார்க்கிஸ்டுகள் ஆகியோர் கையில் ஸ்பானிய மக்களாட்சி அரசு இருந்தது. அவர்களிடம் ஒற்றுமை இல்லை. மேலும் பிராங்கோவுக்கு நாசி இட்லரும் பாசிச முசோலினியும் உதவி செய்தனர். கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் உருசியாவிடம் உதவி பெற்றபோதிலும் உள்நாட்டுப் போரில் ஏனைய இடது சாரிகளை ஒடுக்க முனைந்தனர். இங்கிலாந்து, பிரான்சு நாடுகள் பிராங்கோ படையை எதிர்க்க ஸ்பானிய மக்களாட்சி அரசுக்கு உதவியிருக்கலாம்; ஆனால் கோழைத்தனமாக மறுத்துவிட்டனர் உதவ. (அப்பாவி ஸ்பானிஷ் மக்கள் அரசை நாசிச பாசிசத் தாக்குதலிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தும் பிரான்சும் அப்பொழுதே உதவியிருந்தால் இட்லர் முசோலினி அரசுகள் போக்கு மாறியிருக்கலாம்.) 1939-1975: சர்வாதிகாரி பிராங்கோ ஆட்சி 1975 முதல் 1980 : ஸ்பெயினில் மீண்டும் குடியரசு ஆட்சி. பாஸ்கு பகுதிக்கும் கடலாலினியாவுக்கும் ஓரளவு சுய ஆட்சி. (ஹரவடிnடிஅல) 4. 1936-1939ல் நடந்த ஸ்பானிய உள்நாட்டுப் போரில் 10 இலட்சம் ஸ்பானிய மக்கள் அநியாயமாக இறந்தனர். அவலமான இப்போரைப் பற்றிய அருமையான நூல் ஹ்யூ தாமஸ் (ழரபா கூhடிஅயள) (1963) எழுதிய கூhந ளுயீயniளா ஊiஎடை றுயச என்பதாகும். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகள் (இட்லர், முசோலினியைப் பகைக்க அஞ்சி) ஸ்பானிய மக்களாட்சிக்குக் கைகொடுக்காத போதிலும், அந்நாடுகளின் ஆர்வலர் பலர் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஸ்பானிய அரசுப்படைகளுக்கு உதவியாக அந்நாட்டுக்குச் சென்று போரிட்டனர்; சிலரும் உயிரும் விட்டனர். அன்னார் சிலர் எழுதிய நூல்கள் இன்றும் படித்தால் பயன்பெறத்தக்கவை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ழடிஅயபந வடி உயவயடடிnயை (1938) ஆர்தர் கோஸ்லர் எழுதிய ளுயீயniளா வநளவயஅநவே (1939) ஆகியவை அவற்றில் அடங்கும். எர்னஸ்ஹெமிங்வே எழுதிய குடிச றுhடிஅ வாந க்ஷநடட கூடிடடள என்பது இப்போரைப்பற்றிய சிறந்த புதினமாகும். நமது ஆர்யாவர்த்தம் (புராதன காலம்) இந்திய நாகரிகத்தில் ஆரிய, சமஸ்கிருதச் சார்பான வற்றை மிகைப்படுத்தியும் தமிழ (திராவிட) சார்பான பெரும்பாலான வற்றைப் பற்றிச் சரியானபடி விளக்காமலும் இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. எனினும் சர்மாவின் நோக்கம் இந்தியர் ஒற்றுமையும், முன்னேற்றமுமேயாகும். இந்திய வரலாற்றில் தமிழ், தமிழரின் முக்கியமான பங்கைப் பற்றி இன்றைய ஆய்வின்படி உள்ள செய்திகளை அறிய பி.டி.சீனிவாச ஐயங்கார் (1929) நூல் தமிழர் வரலாற்றின் 2007 மொழி பெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளர் தந்துள்ள 70பக்க ஆய்வு முன்னுரையைக் காண்க. ஆசியாவும் உலக சமாதானமும் இந்நூல் 1950-ஐ ஒட்டிய நிலைமையை உணர்த்துகிறது. 1989இல் உருசியப் பேரரசு உடைந்து அமெரிக்காவே உலகின் தனிவல்லரசாக உள்ள காலம் ருniயீடிடயச றடிசடன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் வல்லாண்மையை இந்தியா சீனா உட்பட உலகெங்கும் நிலைப்படுத்திக் கொள்ள 1991இல் உருவாக்கியுள்ள சர்வ வல்லமையுள்ள ஆயுதம். உலக மயமாக்கல் ஆகும். இது படடியெட எடைடயபந (உலகமயமாக்கல்) அல்ல. படடியெட யீடைடயபந (உலகமயக் கொள்ளை) என்பார் வி.ஆர். கிருஷ்ண ஐயர். உலக சமாதானம் மட்டுமல்ல உலகின் எதிர்காலமே இப்பொழுது இந்தியாவிடமும் இல்லை; சீனாவிடமும் இல்லை. மேலை நாடுகள் கையிலே உள்ளது. இதுபற்றிச் சுருக்கமாக அறிந்துகொள்ள வெய்ன் எல்வுட் றுயலநே நுடறடிடின (2001) எழுதிய கூhந சூடி சூடிளேநளேந பரனைந வடி படடியெடணையவiடிn(சூநற ஐவேநசயேவiடியேடளைவ ஞரடெiஉயவiடிளே; டீஒகடிசன) என்னும் நூலைப் படித்துப் பார்க்கலாம். பி.இராமநாதன் பதிப்புரை சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழி நடையாகவும், உத்தியாகவும் கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டு அறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்க விடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்பு களை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டு மென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடுகிறோம். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், “ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த் தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். சர்மாவின் நூல்கள் பலவும் வரலாறு சார்ந்தவை. அவை வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவை பற்றி இன்றைய வரலாற்றறிஞர் பார்வை என்ன என்பதை விளக்கும் முன்னுரை படிப்பார் களுக்குப் பயன்பதருவதாகும். இந்நூலுக்கும் ஏனைய இது போன்ற வரலாற்று நூல்களுக்கும் அறிஞர் பி.இராமநாதன் அவர்கள் நுழையுமுன் என்ற தலைப்பில் எழுதித் தந்துள்ளார். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவி யாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப் பட்டுயுள்ளேன். பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ‘ஞானாலயா’ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ——— நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் செல்வி. வ. மலர் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், சு. கீதாநல்லதம்பி ‘குட்வில்’ செல்வி, கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா, இல.தருமராசு, ரெ. விசயக்குமார் ——— எதிர்மம் (சூநபயவiஎந) பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் எ பதிப்புரை iஒ ஸ்பெயின் குழப்பம் I வாழ்வும் தாழ்வும் 5 II ஏற்றமும் இறக்கமும் 10 III முடியரசின் ஆட்டம் 16 IV குடியரசுத் தோற்றம் 26 V எதிர்ப்பில் ஒடுக்கம் 30 VI அடக்கினால் அடங்குமா? 34 VII ஒற்றுமையின் உதயம் 39 VIII ஜூலை குழப்பம் 46 IX வல்லரசுகளின் கவலை 57 X சர்வாதிகாரமா? ஜன ஆதிக்கமா ? 62 அநுபந்தம் ஸ்பெயின் குழப்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரலாறு 68 முக்கிய சம்பவங்கள் 72 பொதுக் குறிப்புகள் 73 நமது ஆர்யா வர்த்தம் புராதன காலம் 79 ஆசியாவும் உலக சமாதானமும் வாசகர்களுக்கு 96 1. ஆசியாவின் பழமை 99 2. ஆசியாவின் தகுதி 108 3. ஐரோப்பாவும் ஆசியாவும் 126 4. சமாதான முயற்சிகள் 132 5. சமாதானத்திற்கு வழி 148 அநுபந்தம் ஆசிய நாடுகளைப் பற்றிய விவரங்கள் 168 ஆசியாவின் பொருளுற்பத்தி விவரங்கள் 170 ஸ்பெயின் குழப்பம் I வாழ்வும் தாழ்வும் 1492- ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் மூன்றாந்தேதி வெள்ளிக் கிழமை. அன்று காலை நேரத்தில் பாலாஸ்1 துறைமுகத்தில் மூன்று கப்பல்கள் வரிசையாக நிற்கின்றன. அவற்றின் மீது ஸ்பெயின் தேசத்துக் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. கப்பலிலுள்ளவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக அங்கு மிங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நடுவேயுள்ள கப்பலில் ஒருவன் கம்பீர மாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரே பிடிவாதம். அவன் கண்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவனைப்பார்த்துக் கரையிலே யுள்ளவர்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவனும், தொப்பியைக் கழற்றி வைத்துக்கொண்டு, தலைகுனிந்து வணக்கஞ் செலுத்துகிறான். கப்பல்களும் நகரத் தொடங்கிவிட்டன. அந்தக் கம்பீர புருஷன் யார்? அவன்தான் கொலம்பஸ்.2 எங்கே போகி றான்? புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க. அப்பொழுது ஸ்பெயின் தேசத்து அரசு கட்டிலில் அமர்ந்திருந்த இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள் கொலம்பஸுக்கு எல்லாவிதமான ஆதரவு களையும் கொடுத்து அனுப்பினார்கள். அவன், ஸ்பெயினுக்குப் பலபிரதேசங்களைச் சேர்த்துக் கொடுத்ததோடுகூட, தானும் அழியாத புகழைச் சம்பாதித்துக்கொண்டான். கொலம்பஸ் புறப்பட்ட வெள்ளிக்கிழமை, ஸ்பெயின் தேச சரித்திரத்திலே குறிப்பிடத்தக்க நாள். அன்று முதல், ஸ்பெயினின் நல்வாழ்வு உச்சநிலைக்கு ஏறத்தொடங்கியது. சுமார் இருநூறு வருஷகாலம் வரையில் ராஜ்ய விஸ்தீரணம், குடிவளம், இலக்கிய வளர்ச்சி முதலிய அனைத்திலும் ஸ்பெயின் முன்னணியில் நின்றது. 1936 ஆம் வருஷம் ஜூலை மாதம் பதினேழாந்தேதி, அதே வெள்ளிக் கிழமைதான்! ஆனால் அன்று ஸ்பெயின் தேசம் எவ்வளவு கோரமான காட்சி யளித்தது! ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொருவரும் கையில் ஆயுதந்தாங்கிப் போர்க்கோலத்துடன் நின் றார்கள். வீதிகளில் தலைகள் உருண்டன! பிணங்கள் குவிந்தன! ரத்தம் பெருக்கெடுத்தோடியது! ஆ! என்ன வீழ்ச்சி! 450 வருஷங்களுக்கு முன்னர், இந்த நாடு இருந்த சீரென்ன? இருபதாம் நூற்றாண்டின் முற்பாகத்தில் இதற்கு இத்தகைய கதி ஏற்படு மென்று இஸபெல்லா- பெர்டினாந்து தம்பதிகள் கனவிலேனும் கருவி யிருப்பார்களா? வாழ்வு ஒரு காலம்! தாழ்வு ஒரு காலம்! ஸ்பெயின் எங்கே யிருக்கிறது? ஐரோப்பாவின் தென் மேற்கு மூலையில். இதன் மூன்று பக்கங்களிலும் சமுத்திரம். வடக்கே பிரான்ஸ் தேசம். இந்தத் தீபகற்பத்தின் மேற்குப் பக்கந்தான் போர்த்துகல் என்ற தனி நாடு போர்த்துகலும் ஸ்பெயினும் சேர்ந்த இந்தத் தீபகற்பத்திற்கு ‘இபேரியன் தீபகற்பம்’1 என்று பெயர். ஸ்பெயினுக்குச் சொந்தமாக, மத்திய தரைக் கடலில் சில சிறிய தீவுகள் உண்டு. இவற்றிற்கு ‘பெலாரிக் தீவுகள்’2 என்று பெயர். அப்படியே, ஆப்ரிக்காவுக்கு வடமேற்கே அத்லாந்திக் மகா சமுத்திரத்தில் சில தீவுகள் இதற்குச் சொந்தம். இவற்றிற்கு ‘கானரி தீவுகள்’3 என்று பெயர். இவையனைத்தையும் சேர்த்து ஸ்பெயின் ராஜ்யத்தின் மொத்த விஸ்தீரணம் 196,607 சதுரமைல். மொத்த ஜனத் தொகை 24,583,096. அதாவது விஸ்தீரணத்தில் சென்னை மாகாணத்தை விடப் பெரியது. ஆனால் ஜனத் தொகையில் ஏறக்குறைய பாதிதான். இந்த ஸ்பெயின் தேசத்தை மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னர் பொனீஷியர்கள் என்பவர்கள் கைப்பற்றி, இதன் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்தார்கள். இவர்களுக்குப் பிறகு, ரோமர்கள் இந்த நாட்டைப்பிடித்து ‘தெய்விகத் தன்மை பொருந்திய ரோம ஏகாதிபத்திய’த்தோடு சேர்த்துக் கொண்டார்கள். இவர்களுக்குப் பின்னர் விஸிகோதியர்களின்4 விஜயம். இவர்களும் சுமார் 300 வருஷம் வரை தான் இந்த நாட்டைத் தங்கள் சுவாதீனத் தில் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் கி.பி. எட்டாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலே, மூர்கள் என்று அழைக்கப்பெறுகிற அராபியர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து இதனைத் தங்கள் கைவசப் படுத்திக் கொண்டுவிட்டார்கள். இதனால் விஸிகோதியர்கள், ஸ்பெயினின் வடபாகத்திலுள்ள மலைப்பிரதேசங்களில் போய்த் தஞ்சம் புகுந்தார்கள். இவர்கள் கிறிஸ்தவர்கள். மூர்களோ இஸ்லாம் மதத்தைப் பரப்ப முயன்றவர்கள். மூர்கள், ஸ்பெயினின் தெற்குப் பிரதேசங்களை ஒரு கட்டுப் பாட்டுக் குட்படுத்தி, சுமார் 700 வருஷகாலம் திறமையாக ஆண்டு வந்தார்கள். ஜனங் களுடைய நன்மையை நாடிப் பல காரியங்களைச் செய்தார்கள். இப்பொழுது கூட, ஸ்பெயின் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும் ஒருவன், அங்குள்ள கட்டிடங்கள், ஜனங்களின் பழக்க வழக்கங்கள் முதலியவற்றில் மூர்களின் ராஜ்யபார அடையாளம் கலந்து கிடப்பதைப் பார்க்கலாம். மூர்கள், ஸ்பெயினில் சுமார் 700 வருஷம் ஆட்சிபுரிந்து வந்த போதிலும் நிம்மதியான வாழ்க்கையை நடத்தவேயில்லை. வட பாகத்தி லிருந்த விஸிகோதியர்களுக்கும் இவர்களுக்கும் எப்பொழுதும் போராட்டந் தான். கடைசியில், கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டில், இவர்கள், ஸ்பெயினி லிருந்து அடியோடு விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள் இதற்குக் காரணமா யிருந்தவர்கள் இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள். இவர்கள் தான், கொலம்பஸுக்கு ஆதரவு அளித்து, புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க அனுப்பியவர்கள். இவர் கள்தான், தனித்தனியாகப் பிரிந்திருந்த நாட்டரசர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டுவித்து, மூர்களை எதிர்த்து நின்று போராடி வெற்றி கொண்டவர்கள். ஐரோப்பிய அரசியல் அந்தஸ்திலே ஸ்பெயினுக்கு ஒரு கௌரவ ஸ்தானத்தைச் சம்பாதித்துக் கொடுத்த பெருமையும் இவர் களுடையதுதான். ஆனால் இந்தப் பெருமையிலே, புகழிலே ரத்தக் கறைகள் நிறைந்திருந்தன. வேறு பல மாசுகளும் படிந்திருந்தன. இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள் காலத்திலிருந்து, அதாவது பதினைந்தாவது நூற்றாண்டின் கடைசி பாகத்திலிருந்து பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயினுடன் சேர்க்கப் பட்டனவென்பது உண்மைதான். ஸ்பெயினின் ஏகாதிபத்தியக் கட்டிடம் வளர்ந்தது என்பது நிஜந்தான். ஆனால் எத்தனை நாகரிகங்களினுடைய அழிவின்மீது? இதற்காக எத்தனை உயிர்கள் யமதர்மராஜனுக்குக் காணிக்கை செலுத்தப்பட்டன தெரியுமா? மெக்ஸிகோ என்ற நாட்டைக் கண்டுபிடித்து அதனை ஸ்பெயி னுடன் சேர்த்த கோர்டெஸ்1 என்பான் கூறுகிறான்:- “தங்கத்தையும் உயர்ந்த உலோகப் பொருள்களையுமே நான் தேடிக் கொண்டிருந்தேன். இதன் காரணமாக ஏற்பட்ட சுதேசிகளின் அழிவைப் பற்றியோ, அந்த நாட்டு நாகரிகத்தின் சீர்குலைவைப் பற்றியோ நான் கவலை கொள்ளவில்லை.” இவன் மெக்ஸிகோவைக் கைப்பற்றுவதற்காக, சுமார் ஒரு லட்சம் மெக்ஸிகர்களை அழித்துவிட்டான். இப்படித்தான் வேறு பல ஸ்பானியரும் கப்பல்களில் ஏறிக் கடல் கடந்து சென்று, ‘புதிய உலக’த்தின் புதிய தேசங்கள் பலவற்றைக் கண்டு பிடித்து ஸ்பெயி னுக்குச் சேர்த்துக் கொடுத்தார்கள். அது மட்டுமா? இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகள், ஸ்பெயினின் கட்டுப்பாடு உடையாமலிருக்கவும் அதன் அரசியல் அந்தஸ்தை உயர்த்தவும் மதத்தின் துணையை நாடினார்கள். இவர்கள் காலத்திலும் இவர்களுக்குப் பின்னரும் மதத்தின் பெயரால், அந்தோ! எவ்வளவு அக்கிரமங்கள்? எத்தனை உயிர்களின் பலி? கி.பி. பதினைந்து, பதினாறு, பதினேழாவது நூற்றாண்டுகளில் ஐரோப்பா முழுவதிலும் மத அட்டூழியங்கள் பல நடைபெற்றபோதிலும், ஸ்பெயின் தேசத் தில்தான் இவை தலை விரித்தாடின. கத்தோலிக்க கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளை அங்கீகரி யாதவர்கள் எல்லாரும் ‘வேதப் புரட்டர்கள்’ என்று சொல்லிப் பலவிதஹிம்சை களுக்குட்படுத்தப் பெற்றார்கள். ஆங்காங்கு விசாரணை சபைகள் ஏற்படுத்தப் பெற்றன. இந்த மத விசாரணை சபைகள் சுமார் 300 வருஷகாலம்-பதினெட்டாவது நூற்றாண்டு வரை-ஸ்பெயினின் பலபாகங்களிலும் நிலை பெற்று கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றின! இந்த 300 வருஷகாலத்தில் சுமார் மூன்றரை லட்சம் பேர் சொல்ல முடியாத கஷ்டங்களை அநுபவித் தார்கள். சுமார் முப்பத்திரண்டாயிரம் பேர் உயிரோடேயே கொளுத்தப் பட்டிருக்கிறார்கள்! எல்லாம் மதத்தின் பெயரால்!! இஸபெல்லா-பெர்டினாந்து தம்பதிகளின் தலைமுறையார் சுமார் 200 வருஷகாலம் ஆண்டு கொண்டிருந்தனர். கி.பி. 1700 ஆம் வருஷம் ஆண்டு வந்த அரசன் சந்ததியில்லாமல் இறந்துவிட்டான். இவனுக்குப் பின்னால் பட்டத்துக்கு யார் வருவதென்பதைப் பற்றி ஒரு போராட்டம் நடைபெற்றது. கடைசியில் போர்பன்1 வமிசத் தினர் சிங்காதனத்தில் அமர்ந்தார்கள். இந்தப் பரம்பரைதான்1931 ஆம் வருஷம் வரை ஸ்பெயினில் ஆண்டு வந்தது. கி.பி. 1800 ஆம் வருஷம் நெபோலியன் ஸ்பெயின் மீது கண்ணோட்டம் செலுத்தினான். தன் சகோதரனை ஸ்பெயின் சிங்கா தனத்தில் அமர்த்த ஆசை கொண்டான். உடனே ஸ்பெயின் மீது யுத்தந்தான். இந்த யுத்த காலத்தில் ஸ்பானியர் காட்டிய வீரம், ஸ்பெயின் தேச சரித்திரத்திலே மிகச் சிறப்பான ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது. நெபோலியன் படையெடுப்புக்குப் பிறகு ஸ்பெயினின் கட்டுப் பாடு குலைந்துவிட்டது. ஜனங்கள் தங்கள் உண்மை நிலையை அறியத் தொடங்கினார்கள். அரசனுக்காக போர் புரிந்தார் களா னாலும் முடியரசில் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அக்காலத்தி லிருந்தே ஜனங்கள் மனத்தில் குடியரசு எண்ணம் தோன்ற ஆரம் பித்தது. எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டு முழுவதிலும், ஸ்பெயினில் அரசனுக்கும் குடிகளுக்கும் போராட்டம், முதலாளி தொழிலாளி சச்சரவு முதலியன பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றி ருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லையல்லவா? தவிர, இந்த நூற்றாண்டின் மத்தியிலேயே பொதுவுடமைக் கொள்கைகள் ஸ்பெயினில் பரவ ஆரம்பித்தன. அரச பரம்பரையினர் அமர்ந்திருந்த ஆசனமோ அடிக்கடி ஆட்டங்கொடுத்து வந்தது. அதில் அமர்ந்திருந்தவர்களோ பலஹீனர்களாயிருந்தார்கள். தங்கள் உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதே இவர்களில் பலருக்குக் கஷ்டமாயிருந்தது. இத்தகைய சிங்காதனத்திற்குரியவனாகவே 13வது அல் பான்ஸோ மன்னன் கி.பி. 1886 ஆம் வருஷம் பிறந்தான். இவன் பிறப்பதற்கு ஆறு மாதங் களுக்கு முன்னேரே இவன் தகப்பன் இறந்து விட்டபடியால் அரசுரிமை யுடனேயே இவன் பிறந்துவிட்டான். அதனால்தான் தனது வாழ்க்கையின் இடைக்காலத்திலேயே இவன் அந்த உரிமையை இழந்து விட்டான் போலும்! இவன் காலத்திலே ஸ்பெயினில் ஏற்பட்ட குழப்பங்கள் பல. இவன் கையாண்ட அடக்கு முறைகளும் பல. இவன் விக்டோரியா மகாராணியின் பெண் வயிற்றுப் பேத்தியாகிய ஈனா1 என்பவளை 1906 ஆம் வருஷம் விவாகஞ் செய்து கொண்டான். விவாக தினத்தன்றே இவன் உயிருக்கு உலை வைக்கப் பெற்றது. தெய்வாதீனமாகத் தப்பித்துக் கொண்டான். இதற்குப் பிறகு, இவனைக் கொலைசெய்ய நடைபெற்ற முயற்சிகள் பல. ஆனால் எல்லாவற்றினின்றுமே இவன் தப்பித்துக் கொண்டான். கடைசியில் இவன் 1931 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ஸ்பெயினை விட்டு வெளியேறிவிட்டான். இதனுடன் ஸ்பெயினில் முடியரசு மறைந்துவிட்டது. குடியரசு உதயமாயிற்று. ஆனால் இதனை அவ்வப்பொழுது மறைத்து வரும் மேகங்கள் தானெத்தனை? II ஏற்றமும் இறக்கமும் ஸ்பெயினிலே ஏற்றத்தாழ்வுகள் நிரம்ப உண்டு. இயற்கையிலே யாகட்டும், செயற்கையிலே யாகட்டும் இந்த வித்தியாசங்கள் பல படக் காணப்படுகின்றன. இதனாலேயோ என்னவோ, ஐரோப்பிய வல்லரசுகளின் ஆலோசனை மேடையில் இதற்கு ஒரு முக்கிய ஸ்தானம் கொடுக்கப் படவில்லை. ‘ஸ்பெயின் தேசம் ஐரோப்பாவிலே இருந்தாலும் ஐரோப்பாவினுடையதாக இல்லை’ என்று ஓர் ஆசிரியன், ஸ்பெயினின் நிலைமையை மிக அழகாகச் சுருக்கிக் கூறுகிறான். உயர்ந்த மலைத் தொடர்களுக்குப் பக்கத்திலே ஆழ்ந்த பள்ளத்தாக்குகள். செழுமையும் பசுமையும் நிறைந்த பூப்பிரதேசங்களின் அருகாமையின் வரண்டுபோன கட்டாந்தரைகள். ஜனநெருக்கம் ஒரு மாகாணத்தில்; அதற்குப் பக்கத்து மாகாணத்தில் ஜன நட மாட்டமே இராது. ஜனங்களிடத்திலேயும் இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பல துறை களிலும் காண்கிறோம். ஏராளமான பூஸ்திதி படைத்த நிலச்சுவான் தார்களுக்குப் பக்கத்தில், நிலமே என்று ஏங்கி நிற்கும் லட்சக்கணக் கான ஜனங்கள் வாழ் கிறார்கள். ராஜபோகத்திலே வாழும் பெரிய மடாதிபதிகளின் முன்னே, கிராமப் பாதிரிமார்கள் பிச்சைக்காரக் கோலத்துடன் காட்சி தருகிறார்கள். கொழுத்த சம்பளம் வாங்கும் ராணுவத் தலைவர்களுக்குக் கீழே, வயிற்று ஜீவனத்திற்குக் கூட பற்றாத சம்பளம் வாங்கும் போர்வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் அறிவுத் துறையிலே கூட இந்த ஏற்றத்தாழ்வுதான். உலகம் புகழும் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், விஞ்ஞான சாஸ்திரிகள் முதலியோர் ஸ்பெயினிலே இருக்கிறார்கள். ஆனால் நூற்றுக்குச் சுமார் 45 பேர் எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்கள். நிருவாக சௌகரியத்திற்காக, ஸ்பெயினை ஐம்பது மாகாணங் களாக (ஜில்லாக்கள் போல)ப் பிரித்திருக்கிறார்கள். ஆனால் இயற்கை யிலேயே, இந்த நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ் வொரு பகுதி யினரும், தனித்தனி நாட்டினர் போலவே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்கள் பேசும் பாஷையும் வெவ்வேறு. பழக்க வழக்கங்களில் கூட மாறுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக வடக்கேயுள்ள காடலான் மாகாணத் தவன் பேசும் பாஷையை, ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டி லுள்ளவர்கள் தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே கலீஷியா மாகாணத்தான், பாஸ்க் மாகாணத்தானை ஒரே மனப்பான்மை யுடன் சந்தித்துப் பேசமாட்டான். எப்படி இந்தியாவில் வசிப்பவர் அனைவரும் இந்தியர்கள் என்ற பரந்த எண்ணமில்லாமல், சென்னை மாகாணத்தான் என்றும், பஞ்சாப் மாகாணத்தான் என்றும், தமிழன் என்றும், தெலுங்கன் என்றும் மாகாணவாரியாகவும், பாஷைவாரி யாகவும் பிரித்துச் சிலர் பேசு கிறார்களோ அப்படியேதான், ஸ்பானி யர்களுடைய பழக்கமும். இதனாலேயே ஸ்பெயினை, ‘நாடுகள் பல அடங்கிய நாடு’ என்று சரித்திரக் காரர்கள் அழைக்கிறார்கள். வடக்கேயுள்ள காடலான் மாகாணம், பாஸ்க் மாகாணம், கலீஷியா மாகாணம் ஆகியவை, தங்களுடைய சுயேச்சைக்காக எப்பொழுதும் போராடி வந்திருக்கின்றன. இவற்றில் காடலான் மாகாணந்தான் செழிப்புள்ளது; கைத்தொழில்களில் அபிவிருத்தி யடைந்திருக்கிறது. இந்த மாகாணத் தலைவர்கள், தங்களை ஸ்பானியர்கள் என்று சொல்லிக் கொள்வதைவிட காடலோனியர்கள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கிறார்கள். இந்த மாகாணத்தின் தலைநகராகிய பாரிஸிலோனா, மாட்ரிட்டைப் போலவே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காடலான் மாகாணத் தவர்கள், தங்களுடைய சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். கடைசியில் இவர்களுடைய மாகாண சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மாகாணத்திற்கென்று தனி பார்லி மெண்டு உண்டு. சட்டங்களை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வரும் அதிகாரங்கள் முதலியனவும் இதற்குக் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இனி, இந்த ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி நாம் சிறிது விவரமாகத் தெரிந்துகொண்டால்தான், 1936 ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள முடியும். ஸ்பெயின், இந்தியாவைப் போலவே ஒரு விவசாயநாடு. ஜனங் களிற் பெரும் பகுதியினர், விவசாயத்தின் மூலமாகவே தங்களுடைய ஜீவனத்தை நடத்துகிறார்கள். ஜனத்தொகையில், நூற்றில் 56 பேருக்கு விவசாயமே ஜீவனம்.1 ஸ்பெயினில், நிலச்சுவான்தார்களுடைய ஆதிக்கம் பல தலை முறை களாக இருந்து வந்திருக்கின்றமையால், ஒரு சிலரிடத்தில் பெரும்பகுதி நிலங்ளும், பெரும்பாலோரித்தில் சிறுபகுதி நிலங்களும் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஸ்பெயினில் மொத்தம் 50 மாகாணங் களல்லவா? இவற்றில் 27 மாகாணங்களில், ஜனத்தொகையில் நூற்றுக்கு இரண்டு பேர்தான் நிலச்சுவான்தார்கள். ஆனால் இவர்களிடத்தில் நூற்றுக்கு 67 விகிதம் நிலங்கள் இருக்கின்றன. இதற்கு நேர்மாறாக, நூற்றுக்கு 76 பேரிடத்தில் நூற்றுக்கு 4¾ விகிதமே நிலங்கள் இருக்கின்றன. அநேக மாகாணங்களில், அந்தந்த மாகாணத்தின் பாதிபாகம், ஒரு சில நிலச்சுவான்தார்களுடைய சுவாதீனத்தில் இருக்கின்றது. இன்னொரு புள்ளி விவரத்தைக் கவனிப்போம். ஸ்பெயினில் மொத்தம் 8 லட்சம் விவசாய குடும்பங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரு லட்சம் குடும்பங் கள்தான், அவைகளுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வரு மானத்தினால் ஜீவனம் செய்கின்றன. மற்ற 7 லட்சம் குடும்பங்களில் பாதி குடும்பங்கள், தங்களுக்கு விவசாயத்தின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் போதாமல் வேறுவேலை களைச் செய்ய வேண்டியி ருக்கின்றது. மற்றப்பாதி குடும்பங்களோ, நிலமே இல்லாமல், மற்ற விவசாயிகளிடத்தில் கூலிவேலை செய்து பிழைக்கின்றன. நிலச்சுவான்தார்கள், தங்களிடமுள்ள பூஸ்திதியில் ஒரு பாகத்தை, விவசாயத்திற்கே விடாமல், தாங்கள் வேட்டை யாடுவதற்கென்று, வேறுபல களியாட்டங்களுக்குரிய இடங்களாகவும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால், ஏராளமான பூப்பிர தேசங்கள் இருந்தபோதிலும், அவை பயன் படுத்தப் படாமலே கிடக்கின்றன. விவசாயத்திற்கு லாயக்கான மொத்த நிலவிஸ் தீரணத்தில் நூற்றுக்கு 40 பாகத்தில் தான், விவசாய உற்பத்தி செய்யப் படுகிறது. இதனால் என்ன தெரிகிறதென்றால், ஸ்பெயினில் அதிக மான நிலங்கள் இருக்கின்றன. அவைகளில் பொருள்களை உற்பத்தி செய்ய ஏராளமான ஜனங்களும் இருக்கிறார்கள். ஆனால் ஜனங்களுக்குத் தகுந்தபடி நிலங்களோ, நிலங்களுக்குத் தகுந்தபடி ஜனங்களோ ஈவு செய்யப்படவில்லை. இதனால் உழைத்துப் பிழைக்கத் தயாராயிருப்பவர்கள், நிலத்தை வைத்துக் கொண்டு அவற்றைப் பலருக்கும் பயன்படுத்தாத நிலச்சுவான்தார்களிடத்தில் அதிருப்தி கொள்ளலானார்கள். இந்த அதிருப்தியை அடக்க நிலச்சுவான் தார்கள் அரசாங்கத்தின் துணையை நாடியதில் என்ன ஆச்சரியம்? ஸ்பெயினைப்பற்றி ஒரு பத்திரிகாசிரியன் வருணிக்கும்போது, ‘நாடில்லாத ஜனங்களைக்கொண்டது; ஜனங்களில்லாத நாடு இது’ என்று கூறினான். இஃது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது? ஸ்பெயினில் கைத்தொழில்கள் அதிகம் இல்லை. காடலோனியா மாகாணத்தில்தான் நெசவுத்தொழில் முதலியன சிறிது நடைபெறு கின்றன. மற்ற மாகாணங்களில் நடைபெறும் கைத்தொழில்களில் பெரும்பாலான, அந்நியநாட்டாருடைய வசத்தில் இருக்கின்றன. எனவே முதலாளிகள் தங்கள் லாபத்தைக் கருதுவதும், தொழி லாளர்கள் தேசீய நன்மையை நாடுவதும் இயற்கைதானே. விளைவு என்ன? வேலை நிறுத்தம்! துப்பாக்கிப் பிரயோகம்! தொழிலாளர் அதிருப்தி! எந்தத் தனி மனிதனையும் விட பல முள்ளது; எல்லாப் பணக் காரர் களையும் விட ஆடம்பர முள்ளது; அரசாங்கத்தைவிட அதிக அதிகார முடையது; ராணுவத்தைக் காட்டிலும் அதிகமாக வியா பித்துள்ளது. ஸ்பெயனில் இத்தகைய அதிசயம் ஒன்றைக் காணலாம். அஃது எது? அதுதான் பாதிரிமார்களின் ஆதிக்கம். ஸ்பெயினில் கந்தோலிக்க மதத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகம். மொத்த ஜனத்தொகையில் 35 ஆயிரம் பேர்தான் கத்தோலிக்கரல்லாதார். கிறிஸ்தவ மதத்தைப் பலாத்காரமாக வேரூன்றிச் செய்த பெருமை ஸ்பெயினைச் சேர்ந்ததல்லவா! கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவன் இத்தலியில் இருக்கிறார். அந்த நாட்டிலே கூட, இருபதினாயிரம் பேருக்கு ஒரு பாதிரி விகிதந்தான் இருக்கிறார். ஆனால் ஸ்பெயினில், தொள்ளாயிரம் பேருக்கு ஒரு பாதிரி. மொத்தம் ஸ்பெயினில் 106,734 பாதிரிகள் இருக் கிறார்கள். இத்தனை பேர் அதிகமாயிருப்பது கூட ஆச்சரியமில்லை. இவர்கள் ஒரு கட்டுப்பாடாக இருந்து, தேசத்தின் தலைவிதியை எழுதும் எழுத்தாளர் களாகவும் இருக்கிறார்கள். இவர்கள், ஜனங்களுடைய ஆன்மாவுக்கு மட்டு மல்ல, அவர் களுடைய உடலுக்குக்கூட காப்பாளர்களாக அமைந்து விட்டார்கள். இவர்கள் மதபோதகர்களாக மட்டுமில்லை. பள்ளிக்கூட ஆசிரியர் களாகவும், கைத்தொழில் முதலாளிகளாகவும், வட்டித்தொழில் செய் வோராகவும் இருக்கிறார்கள். தேசத்தின் மொத்த செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதிரிமடங்களை சேர்ந்தனவாயிருக் கின்றன. இந்தச் சொத்துக் களைப் பராமரிப்பதற்காக இவர்கள் எப்பொழுதும் முடியரசின் முக்கியத் தூண் களாக இருக்க வேண்டி யிருந்தது. ஸ்பானியர்கள், பொதுவாகவே மதபக்தியுடையவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்தப் பக்தி, குருட்டு நம்பிக்கை களாகவே பரவியிருந்தது. ஸ்பெயின் தேசத்தில் ஒரு வழக்கம். அதாவது ஒருவன் இறந்துவிட்ட பிறகு, அவனுடைய ஆன்மா சாந்தி அடை வதற்கு, பாதிரி மார்களைக் கொண்டு பிரார்த்தனை செய்யச் சொல்வ துண்டு. ஒவ்வொரு பிரார்த்தனைக்கும், இவ்வளவு கட்டணம் என்று ஏற்பாடு செய்து இறந்து போகிறவர்களே, தங்களுடைய சொத்தில் ஒரு பாகத்தை உயில் எழுதி வைத்து விடுவார்கள். இதனால் இறந்து போனவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக ஆக, பாதிரி மடங்களின் சொத்துக்களும் பெருகிக் கொண்டு வந்தன. மனிதர்கள் இறக்கிறார்கள். ஆனால் மடங்கள் இறப்பதில்லை யல்லவா? மற்றும், குடும்பங்களில் ஏதேனும் மதச்சடங்குகள் நடை பெற்றால், அப்பொழுது பாதிரிமார்கள் வந்து கூடுவார்கள். ஒவ் வொருவரும் தங்களுக்குரிய கட்டணத்தை வசூலிக்க முனைந்து நிற்பார்கள். ஆனால் மாதாகோவில்களில் நடைபெறும் தெய்வப் பிரார்த்தனைகளின்போது, பெயருக்காக ஓரிரண்டு பாதிரிமார்கள் இருப்பார்களே தவிர, அதிகமான பேர் காணப்பட மாட்டார்கள். ஸ்பெயினில் 1931 ஆம் வருஷம் வரை, அரசாங்கமும் மதமும் ஒன்றுபடப் பிணைக்கப் பட்டிருந்தபடியால், பாதிரிமார்களுக்குச் சட்ட பூர்வமாகவே சில சலுகைகள் காட்டப்பட்டிருந்தன. இத்தகைய காரணங்களினால், மத பக்தி நிறைந்த ஸ்பானியர்கள், பாதிரிமார்களின் மீது துவேஷங்கொள்ள ஆரம்பித்தார்கள். பாதிரிமார்களோ, தங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள எல்லா முறைகளையும் கையாண்டார்கள். இதற்காக அரசியலில் தலையிட்டார்கள். புதிய அரசியல் கட்சிகளை வகுத்துக் கொண்டார்கள். பாதிரி மடங்களுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் அதிகமான ஆதிக்கம் கொண்டிருப்பது ராணுவம். மற்ற ஐரோப்பிய நாடுகளி லுள்ள ராணுவங்களை விட, ஸ்பெயின் தேசத்து ராணுவம் பலவிதங் களிலும் தனித்துவம் வாய்ந்தது. எப்படியென்றால், ஸ்பானிஷ் ராணுவம் எந்த அந்நிய நாட்டு யுத்தத்திலும் வெற்றிபெற்றதே கிடையாது திறமையற்ற இந்த ராணுவத்திற்கு, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து செலவழிக்கப்பெறும் பணமோ ஏராளம். பொதுஜனங்களுடைய அபிலாஷைகளுக்கு இஃது எப்பொழுதுமே விரோதியாயிருந்து வந்திருக்கிறது. இருபதாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே ஸ்பெயின் ராணுவத்திற்கு அதிகமான வேலை இல்லை. ஏனென்றால், அதற்கு முன்னரே, அமெரிக்காவுடன் யுத்தம் செய்து தனது குடியேற்ற நாடுகளை ஸ்பெயின் இழந்து விட்டது. எஞ்சி நின்றது மொராக்கோ பிரதேசம் ஒன்று தான். ஆனாலும், ராணுவத்தின் பலம் குறைக்கப் படவே யில்லை. எனவே, இது (ராணுவம்) தனது கவனத்தை உள்நாட்டில் செலுத்தத் தொடங்கியது. 1898 ஆம் வருஷத்திலிருந்து ஸ்பெயினில் தொழிலாளர் இயக்கம், குடியரசு எண்ணம் முதலியன வலுத்துந்தன. இவற்றினால் பாதிக்கப்பட்ட முடியரசினர், கைத்தொழில் முதலாளிகள், நிலச் சுவான்தார்கள், பாதிரிகள் முதலியோர் தங்களுடைய உரிமை களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ராணுவத்தின் துணையை நாடினார்கள். ராணுவ வர்க்கமும், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு, மேற்கூறியவர்களுக்கு உதவி செய்ய வேண்டியதாயிருந்தது. இவர்கள் அனைவரும் எப்பொழுதும் ஒரு கட்டப்பாடாகவே இருந்தார்கள். ஒருவருடைய ஆபத்திலே மற்றவர்கள் கைகொடுத்தார்கள். இந்தப் பரஸ்பர உதவியிலும் சுயநலந்தான். ஆம்; முதலாளித்துவமும் சுயநலமும் நெருங்கிய தொடர்புடையன வல்லவா? இந்தக் கூட்டத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்தே, ‘பாசிஸ்டுகள்’ என்று பொதுவாக அழைத்தார்கள் அரசியல்வாதிகள். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், ஸ்பெயினுடைய தேசீய வாழ்வின் எல்லாத் துறைகளிலும், பல வருஷங்களாகப் படர்ந்திருக்கின்றன. இவற்றைச் சமன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த கிளர்ச்சிகள் பல. இவற்றை அடக்க முற்பட்ட முயற்சிகளும் பல. இந்தக் கிளர்ச்சிக்கும் முயற்சிக்கும் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தி ருக்கிற போராட்டத்தின் ஒரு பகுதி வெளித் தோற்றந்தான் 1936 ஆம் வருஷ ஜூலை மாதத்துக் குழப்பம். III முடியரசின் ஆட்டம் 13-வது அல்பான்ஸோ மன்னன், தனது தகப்பனாருடைய மரணத்தின் நிழலிலே பிறந்தான். ஏற்கெனவே ஆட்டங் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிங்காதனத்தில் இவன் 1902ஆம் வருஷம் அமர்ந் தான். அதற்கு முன்னரே, ஸ்பெயினுக்குச் சொந்தமாயிருந்த குடியேற்ற நாடுகள் பலவும் சுதந்திரக் கொடியை நாட்டிவிட்டனவல்லவா? இருபதாவது நூற்றாண்டு பிறந்தது. ஐரோப்பிய வல்லரசு களுக்கு, நாடு பெருக்க வேண்டுமென்ற ஆசையும் அதிகமாயிற்று. இந்த வல்லரசுகளின் கூட்டத்தில், அமெரிக்கா ஐக்கிய மாகாணமும் சேர்ந்து கொண்டு, ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த பிலிப்பைன் தீவுகள் முதலியவற்றைக் கைப் பற்றிக் கொண்டது. ஸ்பெயினின் ஏகாதிபத்தியக் கட்டிடம் இங்ஙனம் சரிந்து விழுந்து விட்டதற்கு முடியரசும், அதனைத் தாங்கி நின்ற முதலாளி வர்க்கமுமே காரணம் என்று பொது ஜனங்கள் நினைத்துவிட்டார்கள். அமெரிக்காவுடன் போராடித் தோல்வியடைந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த ஸ்பானியத் துருப்புகள், மனக் கொதிப்புடனிருந்தார்கள். இந்தக் கொதிப்பிலே, இந்த அதிருப்தியிலே ஒரு புதிய உணர்ச்சி உண்டா யிற்று. இந்த உணர்ச்சி, முடியரசுக்கு எதிர்ப்பாக வளர்ந்தது. இளைஞர் இயக்கங்கள் பல தோன்றின. சுதந்திர வேகம் நிரம்பிய பல இலக்கியங்கள் உண்டாயின. குடியேற்ற நாடுகள் பல தனித்துச் சென்றுவிட்டமையால், கைத் தொழில் முதலாளிகள், பெரிய வியாபாரிகள் முதலியோர், பண வருவாய்க்கு உள் நாட்டிலேயே புதிய வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். புதிய கைத்தொழிற்சாலைகள் பல ஸ்தாபிக்கப் பட்டன. குடியேற்ற நாடுகளிலே போட்டிருந்த பணத்தை யெல்லாம் திருப்பிக் கொணர்ந்து, இந்த ஸ்தாபனங் களிலே போட்டார்கள் முதலாளிகள். இந்தக் கைத்தொழிற் ஸ்தாபனங்களின் சுறு சுறுப்பைக் கண்டு, அந்நிய நாட்டு முதலாளிகளிற் சிலரும், ஸ்பெயினில் வந்து தொழில் நடத்த ஆரம்பித்தார்கள். இங்ஙனம் தொழிற் ஸ்தாபனங் கள் வளர்ந்து கொண்டு வந்தமையால், இந்த வளர்ச்சிக்குக் காரணமாயிருந்த தொழிலாளர்களுடைய செல்வாக்கும் அதிகமாயிற்று. இவர்கள் முடியரசுக்கு விரோதமாகத் தோன்றிய இயக்கங்களில் கலந்து கொண்டார்கள். முதலாளிகள், பாதிரிமார், ராணுவ வீரர் முதலியோர், முடியரசைத் தாங்கி நிற்போராயினார். மத்திய வகுப்பார், நகரத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர், கிராம விவசாயிகள் முதலியோர் குடியரசுக்கு அடிகோலுவோராயினார். முடியரசு விளக்கு அணையாமலிருக்கும் வண்ணம் அதற்கு வெளிச்சங் கொடுத்துக் கொண்டிருந்தது முதலாளி வர்க்கம். இந்த இரவல் வெளிச்சத்தைக் கொண்டு முடியரசு எத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்? 1909 ஆம் வருஷம் தொழிலாளர் இயக்கம் வலுத்து நின்றது. முடியரசுக்கு விரோதமாகத் தோன்றிய கிளர்ச்சிகளில் தொழிலாளர் கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த வருஷம் பார்ஸிலோனாவில்,1 மிகப் பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் ஒன்று நடைபெற்றது. இது மேலுக்குத் தொழிலாளர் வேலை நிறுத்தமாகச் சொல்லப்பட்ட போதிலும், உண்மையில் முடியரசுக்கு விரோதமான புரட்சிக்காரர்களுடைய கிளர்ச்சி யாகவே இருந்தது. பார்ஸிலோனாவில் ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தம், ஸ்பெயின் முழுவதும் பரவியது. உண்மையில் தொழிலாளர்களுக்கும் நிரம்ப அதிருப்தி இருந்தது. தேசத்தின் பொருளாதார நிலை அவ்வளவு சீர் கேடாயிருந்தது. இத னோடு, முடியரசுக்கு விரோதமான உணர்ச்சியும் கலந்து கொண்டது. கேட்க வேண்டுமா? மூன்று நாட்கள், அரசாங்கத் துருப்புகளுக்கும் தொழிலாளர் களுக்கும் வீதிகளில் கை கலந்த சண்டை. அரசாங்கத் தார் தேசமெங்கும் ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தனர். வேலை நிறுத்தம் முடிவடைந்தது. அடக்கு முறையும் தற் காலிகமாகப் பலித்தது. ஆனாலும் பிரதி வருஷமும் வேலை நிறுத்தங்கள் அதிகமாகிக் கொண்டு வந்தன. பாமர ஜனங்களின் பொருளாதார நிலை சீர் கெட்டிருக் கிறபோது, அஃது எவ்விதமாக வேனும் வெளித்தோன்றத் தானே வேண்டும். 1914 ஆம் வரும் ஐரோப்பிய யுத்தம் தொடங்கியது. ஸ்பெயின் இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் எல்லாக்கட்சி யினருக்கும் யுத்தச் சாமான்களைத் தயார்ப்படுத்தி விற்பனைசெய்ய இதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே தொழிற்சாலைகளின் யந்திரங்கள் சுறுசுறுப்பாக ஓடின. முதலாளிகள் அதிக லாபங் கண்டார்கள். அதிக லபாபத்திற்குத் தகுந்த மாதிரி தங்களுடைய கூலி விகிதமும் உயர்த்தப் படவேண்டுமென்று தொழிலாளர்கள் கேட்டார்கள். முதலாளிகள் எளிதில் சம்மதிக்கிறார்களா? பிணக்கு தான். போராட்டந்தான். ஆனால் இந்த யுத்தச் செழிப்பின் வேகம் நீடித்து நிற்க வில்லை. 1916 ஆம் வருஷம், ஸ்பெயினில் உணவுப் பொருள்களின் விலை ஏறி விட்டது. இதனால் ஏழை மக்களின் பாடு மிகவும் கஷ்டமாகிவிட்டது. உணவுப் பொருள்களின் விலையைக் குறைக்க அரசாங்கத்தார் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தொழிலாளர்கள் கேட்டார்கள். ‘செவிடன் காதிலே ஊதின சங்கு’தான். 1916 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி, ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசாங்கத்தார் சிறிது பணிந்து கொடுத்தனர். ஆனால், இந்தப் பணிவு, தொழிலாளர்களுக்கு நிரந்தரமான நன்மையைத் தரவில்லை. தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்து குறைந்த பட்சம் இத்தன்மையதாகத்தான் இருக்க வேண்டுமென்று சட்ட பூர்வமாக நிர்ணயித்து விடுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக, 1917ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 27ஆம் தேதியிலிருந்து பெரிய தொரு வேலை நிறுத்தம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முடி யரசுக்கு விரோதமான எண்ணங்கள் பகிரங்க மாக வெளியிடப் பெற்றன. ஏகாதிபத்தியத்தைக் காலத்திற்கேற்ற முறையில் திருத்திய மைத்தால் தான். அஃது இன்னும் சிறிது காலம் உயிரோடு இருக்க முடியும் என்று கருதிய ஏகாதிபத்தியவாதிகள் கூட, அரசாங்கத்தைக் குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு புறம் தொழிலாளர் கிளர்ச்சி! மற்றொரு பக்கம் குடியரசு உணர்ச்சி! வேறொரு சார்பில் உலக வல்லரசுகள் வளர்ந்து வரும் காட்சி இவை களினிடையே, ஸ்பெயின் தேசத்து முடியரசின் பிற் போக்கான தன்மை நன்றாகப் பிரகாசித்தது. இந்தக் காலத்தில், 1917ஆம் வருஷத்தில், ஸ்பெயின் தேசம் இருந்த நிலைமையை வருணித்து, அல்பான்ஸோ மன்னனுக்கு, அவனுடைய நண்பனும் பிரபல பத்திரிகாசிரியனுமான லியா போல்டோ ரோமியோ1 என்பான் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறான்:- “தற்கால ராணுவத்திற்குத் தேவையான அமிசங்கள் எதுவும் ஸ்பெயின் ராணுவத்தினிடம் இல்லை. கப்பற் படையோ, துறை முகங்களிலே நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கும் கலகக்கட்சியாக இருக்கிறது. நீதியென்பது, நீதிபதி களின் விருப்பத்திற்கிணங்க, நீதி மண்டபங்களில் கூடும் சில அன்பர் களின் கூட்டமாகவே இருக்கிறது. பாதிரிமார் களிலிருந்து பீரங்கிகளையும், பீரங்கிகளிலிருந்து பாதிரிமார் களையும் உற்பத்தி செய்யக் கூடிய திறன்வாய்ந்த பெரிய மனிதர்களுடைய தயவினால் அபிஷேகம் செய்யப்பட் டிருக்கும் ஒரு சிலர் நிருவகிக்கிற ஸ்தாபனமாகவே கிறிஸ் தவமடங்கள் இருக்கின்றன. அதிகாரவர்க்கமோ, அதிகாரத் தைத் துஷ்பிரயோகம் செய்வதின் உற்பத்தி ஸ்தானமாயி ருக்கிறது. பார்லிமெண்டோ, காலத்தை வீணாக்குவதற்குத் தகுந்த இடமாயிருக்கிறது.” 1918 ஆம் வருஷம் பிறந்தது முடியரசு அதிகமாக ஆடத் தொடங்கியது. இந்த வருஷத்திலிருந்து 1923 ஆம் வருஷத்திற்குள், ஐந்து வருஷ காலத்தில், மொத்தம் பன்னிரண்டு மந்திரிச் சபைகள் மாறியிருக்கின்றன வென்ப தொன்றைக் கொண்டே, அரச முடியின் நிலையற்ற தன்மை நன்கு புலனாகும். இப்படி மாறிமாறி அமைந்த ஒரு மந்திரிச் சபையாவது, வளர்ந்து கொண்டுவந்த தொழிலாளர் களின் மனக்கசப்பையோ, குடியரசுக்குச் சாதகமாக நடந்துவந்த கிளர்ச்சியையோ சிறிது கூட அடக்க முடியவில்லை. இந்தக் காலத்திலேதான் இத்தலியிலிருந்து ‘பாசிஸம்’ என்ற கூக்குரல் கேட்க ஆரம்பித்தது. இந்த வார்த்தை ஸ்பானியர்களுக்குப் புதிதாக இருந்த போதிலும், இஃது அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. இத்தலியில், பெயருக்கு அரசன் இருந்த போதிலும், எல்லாக் காரியங் களையும் முஸோலினியே சர்வாதிகாரியாக இருந்து நடத்துகிற விவரங்கள் ஸ்பெயினுக்கு எட்டின. பார்த்தான் அல்பான்ஸோ மன்னன். தானும் ஒரு சர்வாதிகாரியை நியமித்து அவனிடத்திலே எல்லாப் பொறுப்புக்களையும் ஒப்படைத்து விட்டுத் தனது மணி முடியைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்தான். அல்பான்ஸோ மன்னனின் பொறுப்பு, ஜனங்களின் ஆத்திரம், இவை களுக்கிடையே பிரிமோ-டி-ரிவேரா1 1923 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி சர்வாதிகாரியானான். ‘தாய்நாடு, முடியரசு, கிறிஸ்தவ மதம்’ இவை மூன்றுமே இவன் கொண்ட கொள்கைகள். இவன் பதவி ஏற்றுக் கொண்ட காலத்தில் சட்டத் திற்கு மதிப்பே கிடையாது. பலாத்காரச் செயல்கள் பல நிகழ்ந்தன. அரசாங்கப் பொக்கிஷம் காலியாயிருந்தது. அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறதாவென்ற கேள்வியை ஜனங்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் பணக்காரர்கள், நிலச்சுவான் தார்கள், பாதிரிமார்கள், முடியரசைத் தாங்கிய உத்தியோகஸ்தர்கள், ராணுவத் தலைவர்கள் முதலியோர், ரிவேரா சர்வாதிகாரியானதைக் கேட்டு, ‘நிம்மதி என்று சொல்லிப் பெருமூச்சுவிட்டார்கள்.’ ரிவேரா, தனது முதல் மந்திரிச் சபையை, ராணுவத் தலைவர் களைக் கொண்டே நிரப்பினான். ராணுவத் தலைவர்கள், அரசியலில் தலையிட்டு, எங்குக் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்களோ வென்று கருதியே, ரிவேரா, அவர்களைக் கொண்டே மந்திரிச் சபையை அமைத்து, அவர்கள் மீது பொறுப்பைச் சுமத்திவிட்டான். பிறகு, 1925ஆம் வருஷத்தில்தான், போர்த் தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் சேர்த்து மந்திரிச் சபை அமைத்தான். இதன் பிறகு, அபேதவாதிகளையும் மந்திரிச் சபையில் சேர்த்துக் கொண்டான். இவர்கள் அனைவருடைய துணை கொண்டு, பொதுவுடமைக்கட்சியை நசுக்கினான். ரிவேரா, சர்வாதிகாரியா வந்த பிறகு, இத்தலியுடன் சிநேக உடன்படிக்கை செய்து கொண்டான். அப்பொழுதிருந்தே, முஸோலினி, பல அறிஞர்களை ஸ்பெயினுக்கு அனுப்பி, பாசிஸத்தின் மேன்மை களை வலியுறுத்திக் பிரசாரஞ் செய்வித்தான். இதற்கு, ரிவேராவின் பூரண ஆதரவும் இருந்தது. அந்தக் காலத்திலேயே முஸோலினிக்கு எதியோப்பியாவின் மீது கண்ணிருந்ததா, மத்திய தரைக்கடலில் செல்வாக்குத் தேடிக்கொள்ள வேண்டு மென்ற எண்ணம் அப் பொழுதே உண்டாயிற்றா என்பவைகளை இப்பொழுது நிர்ண யித்துக் கூற முடியாது. ரிவேராவின் சர்வாதிகார ஆட்சி ஆறு வருஷங்களுக்கு மேல் நீடித்து நிலைக்க முடியவில்லை. இதற்குக் காரணங்களென்ன? இத்தலியிலும் ஜெர்மனியிலும் இந்தச் சர்வாதிகார ஆட்சி நிலை பெற்றிருக்க, ஸ்பெயினில் மட்டும் ஏன் முடியாமற் போகவேண்டும்? முதலாவது, முஸோலினிக்குக் கறுப்புச் சட்டைப் படையினரும், ஹிட்லருக்குப் பழுப்புச் சட்டைப் படையினரும் பக்கபலமாக இருந்தனர். ரிவேரா, இத்தகைய ஸ்தாபனம் ஒன்றையும் அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தனக்குத் துணையாயிருக்க ‘தேசீயக் கட்சி’யென்ற பெயருடன் ஒரு கட்சியை அமைத்துக் கொள்ளப் பார்த்தான். பயனடையவில்லை. தவிர, தனி உரிமை வேண்டி நின்ற காடலோனியர்களை இவன் விரோதித்துக் கொண்டான். காடலோனிய பாஷையை எங்கும் உபயோகிக்கக் கூடாதென்று தடுத்துவிட்டான். அபேதவாதிகளும், பொதுவுடமைக் கட்சியினரும் சேர்ந்து, ரிவேராவின் சர்வாதிகாரத்திற்கு விரோதமாகப் பல கிளர்ச்சிகள் செய்தார்கள். அவற்றை இவன் நிர்த்தாட்சண்யமாக அடக்கிப் போடவில்லை. தாட்சண்யம் பார்க்கிற ஒருவன், வெற்றியுள்ள சர்வாதிகாரியாக இருக்க முடியுமா? மற்றும் இவன் ராணுவத்திற்குச் சில சலுகைகள் காட்டி அதன் தயவைச் சம்பாதித்துக் கொள்ளப் பார்த்தான். அது நேர்மாறான பலனை அளித்தது. ராணுவத்தின் பீரங்கிப் படையினர் இவனுக்கு விரோதமாகக் கிளம்பிவிட்டனர். 1928ஆம் வருஷத்திய உலகப் பொருளாதார மந்தம் ஸ்பெ யினையும் தாக்கியது. நாணயத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. ஜனங் களுடைய அதிருப்தி அதிகமாயது. ரிவேராவின் பலஹீனத்தையும் ஜனங்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். யாராருக்கு இவன் சலுகைகள் காட்டி வந்தானோ அவர்கள் எல்லாரும், அதாவது ராணுவத் தலைவர்களும் பாதிரிமார்களும் இவனுக்கு விரோத மானார்கள். இவர்களை அடக்கியாளப் போதிய திறமை ரிவே ராவுக்கு இல்லை. இதனால், ஜனங்கள் இவனிடத்தில் முதலில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். பொதுவாகவே, ஸ்பானியர்கள் அடிக்கடி மாற்றங்களை விரும்பும் சுபாவமுடையவர்கள். அவர்களுக்கு ஏதேனும் புதுமைகள் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். ரிவேரா, இந்தச் சுபாவத்தை அறிந்து நடந்தானில்லை. 1928ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி ஒரு புதிய அரசியல் திட்டம் வகுத்து அதனை ஜனங்கள் முன்னிலைப்படுத்தித் தேர்தல் நடத்த வேண்டுமென்றும், இதன் மூலமாக ஜனங்களுடைய அதிருப்தியைச் சிறிதளவேனும் குறைக்கலாமென்றும் ரிவேரா, அல்பான்ஸோ மன்னனுக்கு ஆலோசனை கூறினான். ஆனால் அரசன் இதற்கு இணங்கவில்லை. இந்த நிலையில் ரிவேரா என்ன செய்திருக்கவேண்டும்? ‘தங்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேனோ?’ வென்று அரசனை யல்லவோ கேட்க வேண்டும்? அதனை விடுத்து தரைப் படை, கப்பற் படை முதலிய ராணுவ உத்தியோகஸ்தர்களுடைய நம்பிக்கையை நாடினான். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அனுப்பினான். இதனை அரசனுக்குத் தெரிவிக்கவுமில்லை. ராணுவத் தலைவர்களோ, இவனுடைய வேண்டுகோளுக்கு மௌனஞ் சாதித்துவிட்டனர். இதை இவன் எதிர்பார்க்கவேயில்லை. இது காரண மாக அரசனுக்கும் ரிவேராவுக்கும் பெரிய மனஸ்தாபம் ஏற்பட்டது. கடைசியில் 1930 ஆம் வருஷம் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ரிவேரா, தனது சர்வாதிகாரப் பதவியினின்று விலகிக் கொண்டான்.1 இவனுக்குப் பிறகு, பெரெங்குயர்2 என்பவனையும் அஸ்நர்3 என்பவனையும், முறையே சர்வாதிகாரிகளாக நியமித்து, தனது அரச பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அல்பான்ஸோ முயன்றான். இதற் காக, ஒன்றுபட முடியாத அரசியல் கட்சிகளைக்கூட ஒன்று படுத்தித் தனக்குப் பக்கபலமாக இருக்கச் செய்தான். ஆனால், தேசத்திலே முடியரசுக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டுவந்தது. சட்ட ரீதியான அரசாங்கத்தை ஏற்படுத்தாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான் அரசன். விசேஷ உத்திரவுகள் மட்டும் பிறந்து கொண்டிருந்தன. அரசனுடைய விசேஷ உத்திரவுகளைக் கொண்டு எவ்வளவு கால அரசாங்க யந்திரத்தை நகர்த்திக் கொண்டிருக்க முடியும்? தேசத்தின் பல பாகங்களிலும் வேலை நிறுத்தங்கள்! குழப்பங்கள்! ஜனங்கள், பசிப்பிணியாலும், வரிச் சுமையாலும் முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள். ‘வீழ்க அரசன்’ என்ற ஆரவாரம் தேசமெங்கும் எதிரொலி செய்தது. முடியரசின் கௌரவம் கீழ் நோக்கிப் போய்க் கொண்டி ருந்தது. எந்த நிமிஷத்திலேனும் அது, மீட்க முடியாத பாதாளத்தில் விழுந்துவிடக்கூடும் என்பதை அல்பான்ஸோ அரசன் உணர்ந்து விட்டான். ஆனால் பதவி மோகம் யாரை விட்டது? குடியரசுக் கட்சித் தலைவர்கள், இதுதான் சமயமென்று எண்ணித் தங்களுக்குள்ளிருந்த அபிப்பிராய பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒற்றுமையுடன் முடியரசைத் தாக்கத் தீர்மானித் தார்கள். ஸான் ஸெபாஸ்டியன் என்ற ஊரில் 1930ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி, இவர்கள் ஒரு சிறு கூட்டம் கூடினார்கள். இதற்கு, ஜமொரா,1 லெர்ரு,2 மவ்ரா3 முதலியோர் வந்திருந்தார்கள். குடியரசுத் திட்டத்தை வகுத்தார்கள். இதற்கு முதற்படியாக, நாடெங்கும் வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்வ தென்றும், இதற்காகவும் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள் வதற்கும் ராணுவத்தின் துணையை நாடுவதென்றும் தீர்மானித்தார்கள். ஆனால் இவர்களுக்குள்ளேயே பரஸ்பர அவநம்பிக்கை இருந்தது. ஒரே சமயத்தில் தேசத்தில் புரட்சியை உண்டு பண்ணுவதென்று இவர்கள் திட்டம் போட்டிருந்தார்கள். ஆனால் பரஸ்பர அவநம்பிக்கை காரணமாக 1930ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி, ஜாகா என்ற ஊரில், தளபதி கலான்4 என்பவன் புரட்சிக்குக் கிளம்பிவிட்டான். மற்றவர்கள் தயாராக வில்லை. எனவே, கலான் புரட்சி விபரீதமான தோல்வியில் முடிந்தது. இவன், மரண தண்டனை விதிக்கப்பட்டான். இன்னும் பலர் பீரங்கி வாயில் வைத்துச் சுடப் பட்டார்கள். இச்சமயத்தில், அரசாங்கத்தின் பிரதம மந்திரியாயிருந்த அஸ்நர் என்பவனிடத்தில் அவ நம்பிக்கை கொண்டு 1931ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அல்பான்ஸோ மன்னன், குவெர்ரா5 என்பவனை அழைப்பித்து, அரசாங்கத்தை நடத்துமாறு கூறினான். ஆனால் இவன் மறுத்து விட்டான். இந்த குவெர்ரா 1929 ஆம் வருஷம் ரிவேராவுக்கு விரோதமாகக் கலகஞ் செய்தவன். இதற்காகப் பத்து மாதம் சிறைவாசத்தையும் அநுபவித்தவன். ஆனால் ஆபத்திலே இன்னாருடைய துணையைத்தான் நாடுவதென்கிற நியதிகூடப் போய்விடுகிறதல்லவா? 1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஸ்பெயின் முழுவதும் ஸ்தல ஸ்தாபன தேர்தல்கள் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தத் தேர்தலின் மூலமாகவே, தங்கள் அரசியல் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று ஜனங்கள் தீர்மானித் தார்கள். குடியரசா முடியரசாவென்பது தான் இப்பொழுது நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம். குடியரசுக்கட்சியினர் பலத்த பிரசாரஞ் செய்தனர். ‘நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஓட்டும் முடியரசின் இதயத்திலே பாயும் ஓர் அம்பு’ என்றெல்லாம் கூறினர். தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 5,446,000 வாக்காளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் குடியரசுக்குச் சாதகமாக ஓட் கொடுத்தார்கள். குடியரசுக் கட்சியினர், 972 ஸ்தானங்களைப் பெற்றார்கள். முடியரசுக் கட்சியினருக்கோ 595 ஸ்தானங்கள்தான் கிடைத்தன. ஒரே நாளிலே, ஜனங்களின் மனப்பான்மை எப்படி மாறிவிட்டது! அரசன் வேறு, தேசம் வேறு என்று கருதி விட்டார்கள்! இனி என்ன செய்வது? பலாத்காரத்தின் துணை கொண்டு தான், சிங்காதனத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டு மென்று, அல்பான்ஸோவுக்குச் சிலர் ஆலோசனை கூறினர். அது லேசான காரியமா? தேசமுழுவதையு மன்றோ விரோதப் படுத்திக் கொள்ள வேண்டும்? இரண்டு நாட்கள் தியங்கி நின்றான் அரசன்! 1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி மாலை 6.30 மணி. அல்பான்ஸோ மன்னன், தனது மந்திரிமார்களுடன், இனிச் செய்யவேண்டுவ தென்ன வென்பதைப்பற்றி ஆலோசித்துக் கொண் டிருக்கிறான். அவன் முகத்திலே அரச களையே இல்லை. அவன் அகன்ற நெற்றியிலே கவலைக் குறிகள் அன்று காலையில் தான் குடி யரசுக் கட்சித் தலைவர்களிற் சிலர், அவனிடம் வந்து, ‘மாலைக்குள் நாட்டைவிட்டு வெளியே போய்விடுங்கள்’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஜனங்களுடைய ஆத்திரம் அவ்வளவு அதிகமா யிருந்தது! என்ன செய்வான் அல்பான்ஸோ? அரசன், மந்திரிகளுடன் ஆலோசனையிலிருக்கின்றான் என்பதைக் குடியரசுக்கட்சித் தலைவர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள். அரசன், முடிதுறக்கப் போகிறானென்றும் ஊகித் தார்கள். உடனே அன்று மாலை ஏழரை மணிக்கு (14-4-31) குடியரசு அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதாகப் பகிரங்கப்படுத்தி விட்டார்கள். அன்று இரவு ஒன்பது மணி. வரிசையாகச் சில மோட்டார் வண்டிகள் மாட்ரிட் நகர எல்லையைத் தாண்டி வேகமாகச் சென்றன. இவையொன்றில், போர்பன் வமிசத்துக் கடைசி நட்சத்திரம், ஒளி மழுங்கி முகம் வாடி உட்கார்ந்து கொண்டிருந்தது. அல்பான்ஸோ அரசன் நாட்டைவிட்டுச் சென்று விட்டான்! மறுநாள் அரச குடும்பத்தினர், மாட்ரிட் நகரம் விட்டுச் சென்றனர். அரண்மனை காலியாகிவிட்டது. அல்பான்ஸோ நாட்டை விட்டுச் சென்றானே தவிர, தனது அரசுரிமையை மட்டும் துறக்கவேயில்லை. ஏப்ரல் 17ஆம் தேதி, இவன் வெளியிட்ட அறிக்கையில் பின் வரும் வாக்கியங்கள் குறிப் பிடத்தக்கன:- “நான் எல்லா ஸ்பானியர்களுக்கும் அரசன். நானும் ஒரு ஸ்பானியன். எனது உரிமைகளில் ஒன்றைக்கூட நான் துறக்க வில்லை. அந்த உரிமைகள் என்னுடையனவல்ல என்னால் ஒரு நாள், கணக்குத் தீர்க்கப்படவேண்டிய சேம நிதி.” அரசன் ஊரை விட்டு வெளியேறி விட்டான் என்று கேட்ட மாட்ரிட் நகரவாசிகளுக்குள் எவ்வளவு குதூகலம்! குடியரசு பிறந்து விட்டதென்று என்ன சந்தோஷம்! அன்றிரவு முழுவதும் ஜனங்கள் ஆடினார்கள்! பாடினார்கள்! குடியரசுக்கு அடையாளமாயமைந்த ஊதா நிறக்கொடிகள் எங்கும் பறந்தன! போலீஸ் அதிகாரிகள் முதலிய அரசாங்க உத்தியேகஸ்தர்கள் கூட, ஊதா நிற நாடாவைத் தங்கள் மேற்சட்டையிலே சேர்த்துக்கட்டிக் கொண்டார்கள். ஊதா நிற‘டை’. ஊதா நிற ‘காலர்’ எல்லாம் ஊதா நிறந்தான். ஐம்பத்தாறு வருஷ முடியாட்சிக்குப்பிறகு இப்பொழுதுதான் ஜனங்கள் சுதந்திர மூச்சு விட்டார்கள். ஆனால் இந்த மூச்சு வேகத்திலே ஒரு பூச்சிகூட சாகவில்லை. IV குடியரசுத் தோற்றம் அல்பான்ஸோ மன்னன், நாட்டைவிட்டு வெளியேறிய தினத் தன்றே, குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. இந்தக் குடியரசு மந்திரிச்சபையில் அபேதவாதக் கட்சியினர், குடியரசுக்கட்சியினர் முதலிய பலரும் சேர்ந்தார்கள். இவர்கள், அரசாங்க நிருவாகத்தை உடனே ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஜமொரா, குடியரசின் தற்காலிக பிரசிடெண்ட் ஆனான். லெர்ரு வெளிநாட்டு மந்திரி; மவுரா உள்நாட்டு மந்திரி; அஜனா யுத்த மந்திரி; கபல்லெரோ தொழில் மந்திரி. இப்படியாகப் பலரும் சேர்ந்த மந்திரிச் சபை அமைந்து விட்டது. ஆனால் ஒரு சிலர், இந்த அரசாங்கத்திற்குள்ளே இருந்து கொண்டு இதனை அரிக்கத் தீர்மானித்து விட்டனர். இவர்கள், குடியரசு ஸ்தாபிக்கப் படுவதை மனப்பூர்வமாக விரும்பவில்லை. ஆனால் தங்கள் வெறுப்பை வெளியில் காட்டிக் கொள்ளவும் முற் படவில்லை. எனவே, இவர்கள், குடியரசுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து அதில் பொறுப்புள்ள பதவிகளையும் ஏற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவரும் ‘பாசிஸ்டுகள்.’ இத்தகையவர் களில் எமிலியோ மோலா1 என்பவனும் ஒருவன். இவன் ரகசிய போலீஸ் இலாகா தலைவனாயிருந்தான். குடியரசு ஸ்தாபிதமாகி விட்டது. எனவே, இதனை எதிர்த்து நிற்பதில் பயனில்லை என்று தெரிந்த பணக்காரர்கள், நிலச்சுவான் தாரர்கள், ராணுவத் தலைவர்கள், பாதிரிமார்கள் முதலியோர் குடி யரசை அங்கீகாரம் செய்ய முற்பட்டனர். இந்தக்குடியரசு தற்காலிக மாகத்தானே ஏற்பட்டது. இதனைச் சட்ட பூர்வமாக ஸ்திரப்படுத்திவிட வேண்டாமா? எனவே புதிய அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி 1931 ஆம் வருஷம் ஜூன் மாதம் புதிய தேர்தல் களும் நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் அபேதவாதக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பெரும் பான்மையோராக வெற்றி பெற்றனர். கோர்டெஸ் என்று அழைக் கப்பெறும் ஸ்பெயின் பார்லிமெண்டும் கூடியது. புதிய குடியரசுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இது 1931ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பத்தாந்தேதி அமுலுக்கு வந்தது. இந்தக் குடியரசு,‘எல்லாப் பிரிவுத் தொழிலாளர்களினுடைய ஜனநாயக் குடியரசு’ என்றே கூறப்பட்டது. இதன் கீழ், மதமும் அர சாங்கமும் வேறு வேறாயின. தேசீய முன்னேற்றத்திற்கு, யுத்தத்தை ஒரு சாதனமாக உபயோகிக்கக் கூடாதென்று சொல்லப்பட்டது. சட்டத்தின் கீழ், எல்லோரும் சமமாகவே கருதப்பட்டனர். குடி யரசுக்கு விரோதமாயுள்ள மத ஸ்தாபனங்கள் கலைக்கப்பட்டன. அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து மத ஸ்தாபனங்களுக்குக் கொடுக்கப் பெற்று வந்த தொகைகள் நிறுத்தப்பட்டன. மத அநுஷ்டானங் களிலே இருந்த கட்டுப்பாடு நீக்ககப்பட்டது. பிரஜா உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டங்கள் கூட்டுவிக்க உரிமை முதலியன பலவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ‘தேசத்தின் செல்வமனைத்தும், அந்தச் செல்வத்திற்கு யார் சொந்தக் காரரா யிருந்தபோதிலும் சரி, தேசீயப் பொருளாதார நன்மை களுக்குட்பட்டது தான்’ என்று குடியரசுச் சட்டம் கூறியது. இங்ஙனமே, தொழிலாளர்களுக்கு நலம் பல பயக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. விவாக சம்பந்தமானது, அரசாங் கத்தின் விசேஷப் பாதுகாப்புக்குட்படுத்தப்பெற்றது. குழந்தை களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குக் கல்வி போதிப்பதும், பெற் றோர்களின் கடமையென்று சட்ட ரீதியாக வற்புறுத்தப்பட்டது. ஏற்கனவே யிருந்த ‘போர்டெஸ்’ என்கிற ஸ்பெயின் பார்லி மெண்டு திருத்தி யமைக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் நான்கு வருஷம். 23 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் இந்தப் பார்லிமெண்டுக்கு அபேட்சகர் களைத் தெரிந்தெடுத் தனுப்பும் உரிமையுண்டு. குடியரசுக்குத் தலைவன் ‘பிரசிடெண்ட்.’ இவனுடைய உத்தியோக காலம் ஆறு வருஷம். பார்லிமெண்டு அங்கத்தினர்களும், வேறு சில ஜனப் பிரதிநிதிகளும் சேர்ந்து இந்த ‘பிரசிடெண்டை’த் தெரிந்தெடுப்பார்கள். அரசாங்க நிருவாகத்தை, பிரதம மந்திரியும், அவனால் தெரிந்தெடுக்கப்பெற்ற மந்திரிச் சபையும் சேர்ந்து நடத்தும். ஏற்கெனவே, தற்காலிய ‘பிரசிடெண்டா’கத் தெரிந்தெடுக்கப் பட்ட ஜமொரா என்பவனே, சட்ட ரீதியாக அமைந்த குடியரசின் ‘பிரசிடெண்டாக’த் தெரிந்தெடுக்கப்பட்டான். இது நடந்தது 10-12-31 இல். இந்த ஜமொரா என்பவன், 1923ஆம் வருஷம் வரை முடி யரசை ஆதரித்துக்கொண்டு வந்தவன். ரிவேரா சர்வாதிகாரியாக வந்த பிறகு, இவனுக்குக் குடியரசு மோகம் உண்டாயிற்று. இவன் பெரிய சொத்துக்காரன். ஆடம்பரப் பிரியன். குடியரசுத் தலைவன் என்ற ஹோதாவில் இவனுடைய வருஷ சம்பளம் இருபது லட்சம் பெஸேடா1 இவன், குடியரசுச் சட்டத்தில் கண்ட திட்டங்களை நடைமுறையில் கொணரவில்லை யென்பதில் என்ன ஆச்சரியம்? “ஜமொரா ‘பிரசிடெண்டாக’ இருக்கிறவரையில், ஸ்பெயினில் நடக்கிற சம்பவங்களைக் கண்டு நாம் பயப்படவேண்டியதில்லை” யென்று ரோமாபுரி போப்பும், ஸ்பெயின் தேசத்துப் பாதிரிமார் களுக்குத் தைரியம் கூறும்படியான நிலைமை ஏற்பட்டதென்றால், நாம் அதிகம் கூற வேண்டிய தில்லை யல்லவா? இந்தக் குடியரசு, பொதுவுடமைக் கட்சியினருக்குப் பிடிக்க வில்லை. பொதுவுடமைக் கட்சியானது, தனித்ததொரு கட்சியாக ஸ்பெயினில் அமைந்தது 1921ஆம் வருஷத்தில். அது முதல் 1931 ஆம் வருஷம் வரை, இது பலவிதமான கஷ்டங்களை அநுபவித்தது. ரிவேரா, சர்வாதிகாரியாக இருந்த போது, இதனைச் சட்ட விரோத மான ஸ்தாபனமென்று சொல்லி அடக்கி விட்டானல்லவா? அது தவிர, இந்தக் கட்சிக்குள்ளேயும் பலவிதமான பிணக்குகள் இருந்தன. 1931 ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட பிறகு, அதனோடு கலந்தே போராட வேண்டுமென்று தீர்மானித்தனர் இந்தக் கட்சியினர். அவ் வருஷம் நடைபெற்ற பார்லிமெண்டு தேர்தலில், தங்களுடைய கட்சி அபேட்சகர்களை நிறுத்தினார்கள். அது முதல் இந்தக் கட்சி வலுத்து வரத் தொடங்கியது குடியரசு ஏற்படுவதற்கு முன்னர், இந்தக் கட்சியில் ஆயிரம் அங்கத்தினர்களே இருந்தார்கள். குடியரசு ஏற் பட்ட சிறிது காலத்திற்குள் இந்த அங்கத்தினர் தொகை முப்பதினா யிரமாக உயர்ந்தது. இந்தப் பொதுவுடமைக் கட்சியினர், பார்லி மெண்டுக்குள்ளிருந்து கொண்டே குடியரசை எதிர்த்துக் கொண்டு வந்தனர். குடியரசு ஏற்பட்டுவிட்டபடியால், தங்களுக்குப் பூரண விடுதலை கிடைத்துவிட்டதாகத் தொழிலாளர்கள் நினைத்து விட்டார்கள்.2 முடியரசின் கீழ் இவர்கள் பலவிதமாக அடக்கப் பட்டிருந்தபடியால், குடியரசு ஏற்பட்ட வுடனே இவர்கள் சட்டம், ஒழுங்கு என்பவைகளை மறக்கலானார்கள். இதனால் பல இடங் களில் வேலை நிறுத்தங்கள் உண்டாயின. இவற்றைக் குடியரசு அர சாங்கத்தினர், உறுதியாக அடக்கவில்லை. 1931 ஆம் வருஷத்தில் 710; 1932 இல் 830; 1933 இல் 1499. இப்படி வருஷந்தோறும் வேலை நிறுத்தங்கள் அதிகப்பட்டுக் கொண்டே போயின. குடியரசு அரசாங்கத்தினர், எதிர்க் கட்சியினரை நிர்த்தாட் சண்யமாக அடக்கிப் போடாமல் அதற்குப் பதிலாக அவர்களுக்கு எல்லாவித சலுகை களையும் காட்டினர். சலுகைகள் காட்டி, அவற்றின் மூலமாக முதலாளி களையும், தொழிலாளிகளையும் திருப்தி செய் விக்கலாம் என்று நினைத் தார்கள். இது நடக்கிற காரியமா? புதிய சட்டங்களை நிறைவேற்றச் சட்ட புத்தகத்தில் ஏற்றி வைத்தார்களே தவிர, அவற்றை விரைவில் நடை முறையில் கொணரத் துணிந் தார்களில்லை. அரசாங்க அமைப்பின் மேல்தளத்திலே மட்டுந்தான் சில மாறுதல்கள் நிகழ்ந்தனவேயன்றி, அடிப்படையில் எவ்வித சீர்த் திருத்தமும் செய்யப்படவில்லை விவசாயிகளின் நிலைமை பழைய மாதிரியேதான் இருந்தது. ராணுவத்தைக் குறைத்ததாகச் சொன்னார்கள். ஆனால் ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு, முழுச் சம்பளமும் பென்ஷனாகக் கொடுத்து விலக்கினார்கள். இப்படி விலகியவர்கள், குடியரசைத் தகர்ப்பதற்குரிய சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். V எதிர்ப்பில் ஒடுக்கம் முடியரசு விழுந்துவிட்டது வாஸ்தவந்தான். ஆனால் அதற்குப் பின்னர் வந்த குடியரசோ மிகப் பலஹீனமுள்ளதாக இருந்தது. இதனால் பொது வுடமைக்காரர்கள் இந்த அரசாங்கத்தில் நம்பிக் கையை இழந்துவிட்டார்கள். முதலாளிகள், பாதிரிமார், விலக்கப் பட்ட ராணுவத் தலைவர்கள் முதலியோர், இதனை வீழ்த்திவிட ஒன்று சேர்ந்தார்கள். இப்படி இரண்டுக்கு மிடையே அகப்பட்டுத் தத்தளித்தது குடியரசு அரசாங்கம். பாசிஸ்ட் கொள்கைகளை ஆதரித்து ஆங்காங்குப் பல சங்கங்கள் தோன்றின. இவற்றில் சில, ஜெர்மனியில் தோன்றிய நாஜி கட்சி ஸ்தாபனங் களை முன் மாதிரிகளாகக் கொண்டு தோன்றின. இன்னும் சில, இத்தாலிய ஸ்தாபனங்களைப் பின்பற்றி எழுந்தன. இவை களுக்கு ஜெர்மானியிலிருந்தும், இத்தலியிலிருந்தும் பொரு ளுதவி கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. ஸ்பெயினிலிருந்த பணக்காரர் சிலரும் இவைகளுக்கு உதவி செய்தார்கள். ஸ்பெயினின் தேசீய வாழ்வுடன் பல வருஷகாலமாகப் பின்னிக்கிடக்கும் ஏற்றத் தாழ்வுகள், இந்த பாசிஸ்ட் கொள்கை வலுப்படுவதற்கு உறுதுணை யாயிருந்தனவென்று பொதுவாகக் கூறலாம். இந்த ஸ்தாபனங்களைத் தோற்றுவிப்பதில் முக்கிய பங் கெடுத்துக் கொண்டவர்கள் கில் ரோப்ளெஸும்1 சர்வாதிகாரி ரிவேரா மகனான ஜோஸே ரிவேரா2வுமாவார்கள். இவர்கள் நிலச் சுவான்தார்கள், பாதிரிமார்கள் முதலியவர்களை, தனித்தனிக் கட்சி யினராகச் சேர்த்தார்கள். குடியரசுச் சட்டங்களினால், பரம்பரை யாக அநுபவித்துக்கொண்டு வந்த உரிமைகள் யாவும் பறிக்கப் படுகின்றன வென்று பயமுறுத்திப் பிரசாரம் செய்தார்கள். இக் காலத்தில் ஆயுத பலத்தையும் இவர்கள் சேகரித்துக் கொண்டார்கள். இவர்களில் ஜோஸே ரிவேரா, ‘ஜெர்மன் சூறாவளிப்படை’ மாதிரி ஒரு ஸ்தாபனம் அமைத்தான். இது, பின்னர் அதிகமான செல் வாக்குப் பெற வில்லை. கில் ரோப்ளெஸ் தான், பாசிஸ்ட் கட்சியில் அதிகமான செல்வாக்குப் பெற்றுக்கொண்டு வந்தான். இவன் மதம் வேறு, அரசாங்கம் வேறாகப் பிரிக்கக் கூடாதென்று பாதிரிமார்களைத் தூண்டிவிட்டான். நிலச் சீர்திருத்தங்களைச் செய்யவொட்டாதபடி நிலச்சுவான்தார்களைக் கிளப்பி விட்டான். இவன் திரை மறை விலிருந்து வேலை செய்வதில் மகா நிபுணன். இப்படி சுமார் இரண்டரை வருஷகாலம், குடியரசு பல பேருடைய எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்றது. இந்த இரண்டரை வருஷ காலமும் இது பலஹீனமான ஓர் அரசாங்கமாகவே இருந்து வந்தது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலியோர் குடி யரசினரால் அதிகமான நன்மையைச் செய்ய முடியவில்லையே யென்று அதிருப்தி கொண்டார்கள். நிலச்சுவான்தார்கள், பாதிரிமார்கள் முதலியோர், குடியரசினர் முற்போக்கான சட்டங்களை நிறை வேற்றித் தங்கள் உரிமைகளைப் பாழ்படுத்துகின்றனரே யென்று கோபங் கொண்டனர். பொதுஜனங்கள், குடியரசின் வேலையைத் துரிதப்படுத்த முயன்றனர். பாசிஸ்டுகள் என்ற முதலாளி வர்க்கத் தினர் ஸ்பெயினைப் பின்னுக்கிழுக்கப் பார்த்தனர். பாசிஸ்டுகள் 1932 ஆம் வருஷத்திலேயே கலகஞ் செய்யத் தொடங்கிவிட்டனர். 1932ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பத்தாந் தேதி, தளபதி ஸான்ஜுர்ஜோ1 என்பவன், செவில்லே என்ற ஊரைப் பிடித்துக்கொண்டு, அண்டலூஸ்யா மாகாணத்திற்கு, தான் கவர்னர் என்று விளம்பரப் படுத்திக்கொண்டான். ஆனால் செவில்லே யிலிருந்த தொழிலாளர்கள், இவனுடைய நோக்கம் நிறைவேற இடங் கொடுக்கவில்லை. கடைசியில் இவன் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டடான். ஆனால் பிரசிடெண்ட் ஜமொரா இவனுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தான். பாசிஸ்ட் மனப்பான்மை கொண்ட ராணுவத் தலைவர்களைப் பொறுப்புள்ள பதவிகளில் நியமித்துத் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அவர் களுக்குச் சந்தர்ப்பம் கொடுதத்தது, குடியரசு அரசாங்கத்தினர் செய்த பெரிய தவறாகும் என்று அப்பொழுதே பலர் கூற முற்பட்டனர். உதாரணமாக, ஸான்ஜுர்ஜோ, குடியரசுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தான். மொராக்கோவின் கமிஷனராக நியமிக்கப்பட்டான். பிறகு அண்டலூஸ்யா மாகாணத் தின் கமிஷனராக நியமனம் பெற்றான். இங்கிருந்தே இவன் கலகத்துக்குக் கிளம்பினான். இவன் கமிஷனராயிருந்த காலத்தில், தனது அதிகார பலத்தினால் பொதுவுடமைக் கட்சியினரையும், அபேதவாதிகளையும் பல வழியாகத் துன்புறுத்தினான். தற்காலிகக் குடியரசு அரசாங்கம் ஏற்பட்ட போது, லெர்ரு என்பவன் அந்நிய நாட்டு மந்திரியாக நியமனம் பெற்றானல்லவா? இவன், குடியரசினர் விபரீதமான சீர்திருத்தங்கள் ஒன்றையும் செய்து விடாதபடி தடுக்கவே மந்திரிச் சபையில் புகுந்துகொண்டான். நிரந்தரக் குடியரசு ஏற்பட்ட பிறகு அப்பதவியிலிருந்து விலக்கப் பட்டான். பின்னர் இவன், கில் ரோப்ளெஸோடு சேர்ந்துகொண்டு, அரசாங்கத் திட்டங்கள் நடைமுறையில் கொணர முடியாதபடி திகைந்து வந்தான். பார்லிமெண்டில் அரசாங்கத்தார் ஒரு மசோதா கொண்டு வந்தால், அதனைத் தள்ளிப் போடுமாறு செய்வது முதலிய பல அரசியல் சூழ்ச்சிகளினால், ரோப்ளெஸும் லெர்ருவும் சேர்ந்து, குடியரசு அரசாங்கத்தின் நன்னோக்கங்களைச் சிதைத்து வந்தனர். இவர்களுடைய இத்தகைய சூழ்ச்சிகளினாலே, குடியரசு அரசாங்கத்தின் முதல் மந்திரிச் சபையானது, 1933ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது. பார்லிமெண்ட் தேர்தல்கள் நடைபெற்றன. குடியரசு அரசாங் கத்தை நடத்திக்கொண்டு வந்த குடியரசுக் கட்சியினரும், அபேத வாதக் கட்சியினரும் பெருந் தோல்வியடைந்தனர் ரோப்ளெஸ் கட்சியினரும் லெர்ரு கட்சியினரும் வெற்றியடைந்தனர். பாசிஸத் திற்கு வெற்றி! லெர்ரு, மந்திரிச் சபையை யமைத்தான். ரோப்ளெஸ், மந்திரிச் சபையில் ஸ்தானம் ஏற்றுக் கொள்ளவில்லை. லெர்ரு அரசாங்க மானது, ரோப்ளெஸின் தூண்டுதலின் பேரில், 1931ஆம் வருஷம் முதல் 1933 ஆம் வருஷம் வரை குடியரசுக் கட்சியினர் அமுலுக்குக் கொண்டுவந்திருந்த திட்டங்களையெல்லாம் பயனற்றனவாகச் செய்து விட்டது. பழைய மாதிரியே, அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து பாதிரிமார்களுக்குப் பணம் அளிக்கப்பட்டது. பாதிரிமார்களின் ஆதிக்கத்தில் நடைபெற்று வந்த பள்ளிக்கூடங்கள் முன்போல் திறக்கப்பட்டு நடைபெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. நாடு கடத்தப் பட்டவர்கள் மீது விதிக்கப்பட்ட தடையுத்திரவுகள் ரத்து செய்யப் பட்டன. காடலோனியா மாகாணத்திற்குப் பொறுப்பாட்சி கொடுக்கப் பட்டிருந்ததல்லவா? அதனை லெர்ரு குறைக்கப் பார்த்தான். ஆனால் காடலோனியர்கள், 1934 ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஒரு தேர்தல் நடத்தி, தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொண்டனர். இதனிடையே லெர்ருவுக்கும் ரோப்ளெஸுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. குடியரசின் பிரசிடெண்டும், லெர்ருவின் திட்டங்கள் சிலவற்றிற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை. கடைசியில், லெர்ரு மந்திரிச்சபை, 1934 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது. ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிகார்டோ சாம்பர்1 என்பவன், மந்திரிச் சபையை அமைத்தான். ரோப்ளெஸ், இந்த மந்திரிச் சபைக்கு ஆதரவு கொடுத்ததோடு, பாசிஸ்ட் இயக்கத்தையும் பலத்த பிரசாரத்தின் மூலம் ஸ்திரப்படுத்திக்கொள்ள முயன்றான். இதனால் தொழிலாளர்களும், மற்றப் பொதுவுடமைக் கட்சியினர் முதலாயி னோரும் எதிர்ப்புக் காட்டத் தொடங்கினர். நாட்டிலேயோ பொரு ளாதார நிலை மிகவும் மோசமாயிருந்தது. கிராம விவசாயிகளும் நகரத் தொழிலாளர்களும், பலவிதமான அதிருப்திகளுக்குள்ளா யினார். கடைசியில் 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் தேதி சாம்பர் மந்திரிச்சபை வீழ்ந்து விட்டது. ரோப்ளெஸெ இதற்குக் காரணமாயிருந்தவன்! ரோப்ளெஸ் மறுபடியும் லெர்ருவைக்கொண்டு மந்திரிச் சபையை அமைக்கச் செய்தான். இருவரும் சேர்ந்து, இத்தலியிலும் ஜர்மனியிலும் இருக்கிற சர்வாதிகார முறையை ஸ்பெயினிலும் ஏற்படுத்தத் தீர்மானித்தனர். இது, குடியரசுக் கட்சியினர், தொழி லாளர் கட்சியினர் முதலியோருக்குத் தெரிந்தது. எனவே, பாசிஸ்ட் ஆட்சி முறையை எவ்வகையிலும் எதிர்த்து நிற்பதென்று உறுதி கொண்டார்கள். VI அடக்கினால் அடங்குமா? 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம், ஸ்பானியருடைய நினைவிலே எக்காலத்திலும் இருக்கும். அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, ஸ்பெயின் தேசத்துத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர் களும் வேலை நிறுத்தம் செய்து, லெர்ரு-ரோப்ளெஸ் மந்திரிச் சபையின் மீது தங்களுக்குள்ள அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்ள அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்ள வேண்டுமென்று தொழிலாளர் கட்சியினர் அறிக்கை வெளி யிட்டனர். அப்படியே, பல இடங்களிலும் வேலை நிறுத்தங்கள் செய்யப் பட்டன. ஆனால் வேலை நிறுத்தம் செய்தவர்கள் நிர்ணயமான திட்ட மொன்றையும் வகுத்துக்கொள்ளவில்லை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக வேலை நிறுத்தஞ் செய்தவர்கள் நடந்துகொண்டார்கள். சில இடங்களில், பாசிஸ்ட் கட்சியினர் இவர்களை அடக்கிவிட்டார்கள். இன்னும் சில இடங்களில், அதிகார ஸ்தாபனங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள் தொழிலாளர்கள். பாசிஸ்ட் கட்சியினருக்கும் தொழிலாளர்களுக்கும் பல இடங்களில் கைகலந்த சண்டை நடந்தது. தொழிலாளர்கள், எந்தெந்த பிரதேசங்களில் அதிகார ஸ்தாபனங்களைக் கைப்பற்றிக் கொண்டார் களோ அந்தந்த இடங்களில் மிக ஒழுங்காகவே நடந்துகொண்டார் கள். இந்தச் சமயங்களில் இவர்கள் காட்டிய ஒழுங்கு, தீரம், பொறுமை முதலியவற்றைப் பலரும் பாராட்டினர். பொதுஜன அமைதிக்கு எவ்வித பங்கமும் இவர்களால் விளையவில்லை. அதற்கு மாறாக இவர்கள் கைப்பற்றிக்கொண்ட பொதுஜன ஸ்தாபனங்களை மிகத் திறமையாக நடத்திக் காட்டினார்கள். பிற்காலத்தில் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டால் எப்படி நடத்துவதென்பதற்கு, இந்த எழுச்சியே ஒரு பாடமாயமைந்தது. அது மட்டுமல்ல. தொழிலாளர்கள், இதற்கு முன்னர் எவ்வித ராணுவப் பயிற்சியும் பெறாதவர்களாயிருந்தும், ஸ்பெயினின் நல் வாழ்வின் மீது கொண்ட ஆவலினால் செய்த எண்ணரிய தியாகங் களும் இந்த எழுச்சியின் போதுதான் வெளிப்பட்டன. சிறப்பாக அஸ்டூரியா மாகாணத்தில், இவர்கள் தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சமயம், அஸ்டூரியா மகாணத்தின் தலைநகரமாகிய ஒவீடோவில், பாசிஸ்ட் படை யினருக்கும் தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற போராட்டத்தின் பயனாக, பல தொழிலாளர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை செய்து கொண்டு, உடனே சண்டைக்குப் புறப்பட்டு விடுவார்கள். டாக்டர்கள் சிறிது தாமதப் படுத்தினாலும் இவர் களுக்குக் கோபம் வரும். இங்கு ஒரு சிறிய உதாரணம். காயமடைந்த ஒரு தொழிலாளிக்கு, டாக்டர் சிகிச்சை செய்து கொண்டிருக் கிறான். தயை செய்து சீக்கிரமாக எனக்குச் சிகிச்சை செய்யுங்கள். நான் திரும்பிச் செல்ல வேண்டும். நாங்கள் ‘சாண்டா கிளாரா பாரக்ஸைக்’ கைப் பற்றிக் கொள்ள வேண்டும். அங்கு ‘பாசிஸ்டுகள் நிறைந்திருக் கிறார்கள்’ என்றான் காயமடைந்த தொழிலாளி வீரன். ‘இல்லை; இன்னும் சில நாட்கள் நீ படுக்கையிலிருக்க வேண்டும்’ என்றான் டாக்டர். ஆனால் அந்த வீரன் படுத்திருக்க மறுத்துவிட்டான். சிகிச்சை செய்து கொள்ளாமலே, சண்டைக்குப் புறப்பட்டான். மறு நாள், அந்தோ! அவன் பாதையிலே இறந்து கிடந்தான்! தேசத்திற்காக என்ன தியாகம்! வறுமைக்கும் தியாகத்திற்கும் நெருங்கிய உறவு என்பதை, ஸ்பெயின் தேசத்து ஏழைத் தொழி லாளர்கள், இந்த எழுச்சியினால் நன்கு காட்டி விட்டார்கள். ஆனால் லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்தார் இந்த அக்டோபர் மாத எழுச்சியைப் பலாத்காரத்தினால் அடக்கிவிட்டனர். பலாத் காரம் என்றால் லேசான பலாத்காரமா? ஒவீடோ என்ற ஊரை, ஆகாய விமானங்களைக் கொண்டும், யந்திர பீரங்கிகளைக் கொண்டும் தாக்கினார்கள். மற்றும், மொராக்கோ துருப்புகளைக் கொண்டும், தொழிலாளரை அடக்கினார்கள். இங்ஙனம் பல இடங்களிலும் தோன்றிய தொழிலாளர் எழுச்சியை அரசாங் கத்தினர் அடக்கினரே யாயினும் ஒவீடோவில் இவர்கள் நடத்திய திருவிளை யாடல்கள் சகிக்க முடியாதனவாயிருந்தன. ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் யந்திர பீரங்கிகள் முன்னர் துண்டு துண்டானார்கள். இங்ஙனம் இறந்து போனவர்களை வரிசையாக அடுக்கி, ஒரே சமயத்தில் தீக்கிரையாக்கினார்கள். சுதந்திரம் பெற வேண்டுமானால் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது! தொழிலாளர் எழுச்சியைப் பலாத்காரத்தினால் அடக்கி விட்ட பிறகு, லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்தார் அடக்கு முறைக்கு ஆரம்பித்தனர். சொல்ல வேண்டுமா? வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம், அதிகார பலத்தோடு சேர்ந்து விட்ட தேயானால் அடக்குமுறைக்கு ஒரு வரம்பு முண்டோ? சுமார் அறுபதினாயிரம் பேருக்கு அதிகமானவர் கைதியாயினர். இவர்களில் முப்பதினாயிரம் பேருக்கு மேல் சிறைவாசத் தண்டனை விதிக்கப் பட்டனர். ஸ்பெயின் சிறைச்சாலைகள் நிரம்பிவிட்டன. ராணுவச் சட்டம் அமுலுக்குக்கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், சுமார் ஐந்து மாதகாலம் ஆர்ப்பாட்டம் செய்தது. இந்த ஐந்து மாத காலத்தில், ஐயோ, ஜனங்கள் என்னென்ன விதமான துன்பங்களை அநுபவித்தார்கள்! எவ்வளவு ஹிம்சைகளைத் தேசத் துக்காகச் சகித்துக் கொண்டார்கள்! ராணுவச் சட்டம் அமுலுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள், அரசாங்கத்திற்கு விரோதமானவர் களென்று சுமார் ஏழாயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள்! புரட்சிக்குக் கிளம்பின தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர் முதலாயி னோருடைய உணர்ச்சிகளை அடக்கி அவர்களுடைய மனத்திலே ஒரு பயத்தை உண்டு பண்ணிவிட வேண்டுமென்ற நோக்கத்துடன், கைதியான வர்கள் நீண்ட காலச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். தொழிலாளர் சங்கங்கள் முதலியன சட்ட விரோதமென்று சொல்லி நசுக்கப் பட்டன. அக்டோபர் புரட்சி யிலே கலந்து கொண்டவர்கள் என்று எவர்கள் மீதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் உடனே சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். இந்த அடக்கு முறை, சிறப்பாக அஸ்டூரியா மாகாணத்தில்தான் அதிக மும்முரமாக இருந்தது. ஏனென்றால் இந்த மாகாணத்தவர்கள் தான், வேலை நிறுத்தத்தில் அதிகமான பங்கெடுத்துக் கொண்ட தோடு அரசாங்கத்தையும் எதிர்த்து நின்றனர். இந்த மாகாணத்தில் கைதி செய்யப்பட்டவர்கள், சிறைச் சாலையிலே எவ்வளவு கஷ்டங்களை அநுபவித்தார்கள்? ஒவீடோ சிறையி லிருந்தவர்களில் 564 பேர் சேர்ந்து ஒரு மகஜர் தயாரித்து அரசாங்க வக்கீலுக்கு அனுப்பினார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:- “நவீன மத விசாரணை சபைகள் நிறுவப்பட்டி ருக்கின்றன. பீஜங்களைப் பிசைதல்; ஜனனேந்திரியங்களையும் மற்ற அவயவங்களையும் சுட்டு எரித்தல்; சாவணத்தைக் கொண்டு கைகளையும் கால் கட்டை விரல்களையும் நசுக்குதல்; சுத்தியைக் கொண்டு கைக் கணுக்களிலும் கால் கணுக்களிலும் அடித்தல்; பல் குத்திகளை நகங்களினிடை செலுத்துதல்; கொதிக்கக் கொதிக்க வெந்நீரை மேலே ஊற்றுதல்; ‘இதுதான் உங்களுடைய சவக்குழி’ என்று சொல்லி கைதிகளையே குழி தோண்டச் செய்தல்; தாய் அல்லது சகோதரி அல்லது மனைவி இவர்களை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் கைதிகளை அடித்தல். இத்தகைய துன்பங்களையெல்லாம் நாங்கள் அநுபவித்துக் கொண்டி ருக்கிறோம்.” காடலான் மாகாண சுதந்திரத்திற்காகப் போராடின லூயிஸ் கொம்பனிஸ்1 முதலிய பலர், முப்பது வருஷச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு ஓடிப் போய் விட்டார்கள். லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம், ஒரு பக்கம் அடக்கு முறையை அநுஷ்டித்தது. மற்றொரு பக்கம் குடியரசு அரசாங்கத் தினரின் சீர்திருத்த முறைகளை நடை முறையில் வராதபடி தகைந்து விட்டது. மற்றும் முதலாளித்துவத்தை ஆதரிக்கிற எல்லாக் கட்சி யினரையும் ஒன்று படுத்தி, இந்தச் செல்வாக்கை, அரசாங்க ஸ்தாபனங்கள் அனைத்திலும் பிரயோகிக்கத் தொடங்கியது. இந்த அக்டோபர் புரட்சி காரணமாக, சிறைவாசத்திற் குள்ளானவர்கள் சுமார் எண்பதினாயிரம் பேர்; இறந்து போனவர் சுமார் ஐயாயிரம் பேர்; காயமடைந்தவர் சுமார் பதினாயிரம் பேர். இந்த அடக்கு முறைகளினால் சில நன்மைகளும் உண்டாகா மலில்லை. சிறையிலே துன்பம் அநுபவித்துக் கொண்டிருந்த அபேத வாதிகள், பொதுவுடமைக் கட்சியினர், புரட்சியிலே நம்பிக்கை கொண்டவர்கள் முதலிய பலதிறப்பட்டவரும் ஒன்று சேர்ந்தார்கள். தங்களுக்குள்ளிருந்த சில்லரை வேற்றுமைகளையெல்லாம் மறந்தனர். புரட்சியில் ஏன் தோல்வியுற்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவும், அதனின்று பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், சிறைச் சாலைகள் பள்ளிக்கூடங்கள் போல் அமைந்தன. சிறைச் சாலைகளில் ‘ஒற்றுமைக் கமிட்டிகள்’ தோன்றின. இந்தக் கமிட்டிகள் மூலமாகவே, கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குறைந்த காலத் தண்டனையை அநுபவித்துவிட்டு சிறைகளி லிருந்து வெளி வந்தவர்கள் சும்மாயிருக்கவில்லை. சோர்ந்து விடவு மில்லை. அரசாங்கத்தினால் நசுக்கப்பட்ட தொழிலாளர் ஸ்தாபனங் களைப் புதுப்பிக்கத் தொடங்கினார்கள். எனவே 1935ஆம் வருஷம் மே மாதத்திலிருந்து, தொழிலாளர் ஸ்தாபனங்கள் முக்கிய நகரங் களில் மறுடியும் தலை காட்ட ஆரம்பித்தன. லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம் அநுஷ்டித்து வந்த அடக்கு முறைகள் அரசாங்க அங்கத்தினர்களுக்கே பிடிக்கவில்லை. தவிர, சபைக்குள்ளேயே பலவித அபிப்பிராய பேதங்கள் அடிக்கடி தோன்றலாயின. இதனால் மந்திரிச் சபைகள் மாறி மாறி யமைந்தன. 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தி லிருந்து, 1935ஆம் வருஷம் கடைசி வரை, ஐந்து முறை, மந்திரிச் சபைகள் மாறின. ஆனால் ரோப் ளெஸ் மட்டும், யுத்த மந்திரி என்ற பெயரை வைத்துக் கொண்டு யுத்த சன்னத்தங்கள் பல செய்து கொண்டு வந்தான். இப்படி மந்திரிச் சபைகள் மாறி மாறித் தோன்றினமையால், ஜனங்கள் பாடு திண்டாட்டமாகிவிட்டது. தேசத்தின் பொருளாதாரம், எவ்வளவு கெட வேண்டுமோ அவ்வளவு தூரம் கெட்டுவிட்டது. மாறி மாறியமைந்த மந்திரிச் சபைகளும், முதலாளித்துவத்தின் சார்பு பற்றி நின்றமையால், தேச ஜனங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கல்வி, சுகாதராம், விவசாயம் முதலியவற்றிற்காக, அரசாங்க பொக்கிஷத்திலிருந்து அதிகமான பணம் செலவழிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, பாதிரிமார்களுக்கும், முதலாளிகளின் வியாபார திட்டங்களுக்கும் அதிக பணம் செலவழிக்கப் பட்டது. தொழி லாளர்கள், விவசாயிகள் முதலியோருடைய வருமானம் குறைந்தது. தேசத்தின் ஏற்றுமதி வியாபாரம் சுருங்கியது. வேலை யில்லாதோர் தொகை பெருகியது. 1933ஆம் வருஷத்தில் சுமார் ஐந்தரை லட்சம் பேர் வேலையில்லாமலிருந்தார்கள். ஆனால் 1935ஆம் வருஷத்தில், இவர்களுடைய தொகை சுமார் பதினைந்து லட்சமாகப் பெருகியது. சிறைச்சாலைகளிலே தோன்றின ‘ஒற்றுமைக் கமிட்டி’கள் தேசத்தின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டன. இவற்றில் மத்திய வகுப்பினரும் சேர்ந்தனர். எனவே, முதலாளித்துவத்தை ஆதரிக் கிறவர்கள் ஒரு கட்சியினராகவும், மற்ற அனைவரும் வேறொரு கட்சியினராகவும் பிரிந்தார்கள். இந்த நிலையிலே 1935ஆம் வருஷம் கழிந்தது. ரோப்ளெஸ், அரசாங்க நிருவாகப் பொறுப்பு அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு, சர்வாதிகாரியாக வந்துவிட வேண்டு மென்று முயன்றான். இதற்கு, குடியரசின் ‘பிரசிடெண்ட்’ ஜமொரா இடங்கொடுக்கவில்லை. இதனால் அபிப்பிராய பேதங்கள் பல ஏற்பட்டன. 1936ஆம் வருஷம் ஜனவரி மாதம் 7ஆம் தேதியன்றும், மார்ச்சு மாதம் முதல் தேதியன்றும் பார்லிமெண்டு தேர்தல்கள் நடைபெற நிச்சயிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் ஒரே ஒரு பிரச்னைதான் முன்னணியில் நின்றது. குடியரசா? பாசிஸமா? VII ஒற்றுமையின் உதயம் 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் எழுந்த புரட்சியினால் பொதுவாக ஸ்பானியர்களும், சிறப்பாகத் தொழிலாளர்களும் அதிகமான துன்பத்தை அநுபவித்தார்களே யாயினும், அதன் மூலமாக, அடுத்த போராட்டத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அதற்காக ஓர் ஆயுதத்தையும் தேடிக்கொண்டார்கள். அதுதான் ஒற்றுமை. முதலாளித்துவத்திற்கு விரோதமாயுள்ள எல்லாக் கட்சி யினரும் ஒன்றுபட வேண்டுமென்று 1930ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே முயற்சி செய்யப்பட்டது. இது, 1934ஆம் வருஷம் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு வலுவடைந்தது. 1936ஆம் வருஷம் பிப்ரவரி தேர்தலுக்கு முன்னர், இந்த ஒற்றுமை உருவாகியது. இதற்கே ‘பொதுஜன முன்னணி’1 என்று பெயர். பாசிஸம் என்ற முதலாளித்துவத்திற்கு விரோதமாயுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய வகுப்பார் முதலிய அனை வரும் இந்தப் ‘பொதுஜன முன்னணி’யில் சேர்ந்தனர். இதில் சம்பந்தப் பட்ட ஸ்தாபனங்கள், தங்களுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் அனைத்தும், பாசிஸத்திற்கு விரோதி என்ற முறையில் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். பொதுவாக ஜனங் களுடைய, சிறப்பாக ஏழை ஜனங்களுடைய வாழ்க்கை அந்தஸ்து உயரவேண்டும் என்பதே இந்த ஒற்றுமை ஸ்தாபனத்தின் நோக்கம்.2 பிப்ரவரி தேர்தலுக்கு முன்னர், இந்தப் ‘பொதுஜன முன்னணி’ உருவாகியது என்று சொன்னோமல்லவா? 1936ஆம் வருஷம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி, ஸ்பெயினிலுள்ள பொதுவுடமைக் கட்சி, அபேதவாதக் கட்சி, குடியரசுக் கட்சி, தொழிலாளர் கட்சி முதலிய பல கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கு ‘பொதுஜன முன்னணி ஒப்பந்தம்’ என்று பெயர். இந்த ஒப்பந்தத்தில் எட்டு பிரிவுகள் அடங்கியிருந்தன. இவற்றைச் சுருக்க மாகத் தெரிந்து கொள்வோம். 1. அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட வர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பெறுவார்கள். வேலை நிறுத்தங்களில் கலந்து கொண்டதற்காக அரசாங்க உத்தியோகங் களினின்று விலக்கப் பட்டவர்கள், மீண்டும் அந்த ஸ்தானங்களில் அமர்த்தப்படுவார்கள். 2. குடியரசுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற பிரஜா உரிமைகள் பாதுகாக்கப்படுகிற முறையில், நியாயஸ்தலங்கள், பார்லிமெண்டு, மற்ற ஸ்தாபனங்கள் ஆகியவை திருத்தியமைக்கப் படும். காரணங் காட்டாமல் கைது செய்யப்பெறுகிற வழக்கம் இனி இராது. சிறைச்சாலை நிருவாகம் ஒழுங்கான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பெறும். போலீஸாரும், மற்ற ராணுவ உத்தி யோகஸ்தர்களும் செய்த அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்கப்படும். 3. நிலவரி, குத்தகைத் தொகை முதலியவைகளைக் குறைத்தும், வேறு வகைகளிலும் விவசாயிகளுக்குச் சாதகம் செய்யப்பெறும். 4. சில்லரைக் கைத்தொழில்கள், வியாபாரங்கள் முதலிய வற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கப்பெறும். 5. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பெறும். 6. தேசத்தின் பொக்கிஷ நிலைமை சீர்திருத்தியமைக்கப் பெறும். 7. தொழிலாளர் நன்மைகளுக்குரிய சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பெறும். மற்றும், தனிப்பட்டவர் களுடைய நிருவாகத்திலிருக்கும் தரும சொத்துக்களை ஒன்று சேர்த்து தேசத்தின் பொது நன்மைக் குபயோகமாகுமாறு செய்யப் பெறும். 8. தேசத்தின் கல்வி முறை சீர் திருத்தியமைக்கப்பெறும். கடைசியாக, ஸ்பெயின் தேசத்து வெளிநாட்டுக் கொள்கை யானது, சர்வதேச சங்கத்தின் கொள்கைகளையும் முறைகளையும் தழுவியதாகவே இருக்கும். தொழிற் கட்சியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு, இந்த எட்டு திட்டங்களும் மிகச் சாதாரணமாகவும் மிதவாதத் தன்மையுடையன வாகவும் தோன்றிய போதிலும், ஒற்றுமையை முன்னிட்டும், தேச நன்மையைக் கருதியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எல்லாக் கட்சியினரையும் சேர்த்து, இனி, முன்னணிக் கட்சியினர் என்றே அழைப்போம். மேற்படி ஒப்பந்தத்தை வாக்காளர்கள் முன்னிலையில் கிளத்தி, இந்த முன்னணிக் கட்சியினர், பிப்ரவரி தேர்தலுக்குப் பல அபேட் சகர்களை நிறுத்தினார்கள். தீவிரமான பிரசாரம் செய்தார்கள். 1936ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பார்லிமெண்டில் மொத்தம் 437 ஸ்தாபனங்கள். இவற்றில் முன்னணிக் கட்சியினருக்கு 268 ஸ்தானங்கள் கிடைத்து விட்டன. எதிர்க் கட்சியினராகிய பாசிஸ்டுகளுக்கு 205 ஸ்தானங்கள்தான் கிடைத்தன இதை, பாசிஸ்ட் கட்சியினர் எதிர்பார்க்கவேயில்லை. ஸ்பெயின் ஜனங்கள், குடியரசா பாசிஸமா என்ற கேள்விக்குப் பதில் கூறிவிட்டார்கள். தேர்தலைப்பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டதும் ஜனங்கள், தலைகால் தெரியாமல் சந்தோஷம் கொண்டாட ஆரம் பித்தார்கள். இதனால், சில இடங்களில் வரம்பு கடந்த செயல்களும் நிகழ்ந்துவிட்டன. 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் புரட்சியில் கலந்து கொண்டதன் காரணமாக லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத் தினரால் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களை, ஜனங்கள் பலவந்த மாக விடுதலை செய்வித்தார்கள். இவைகளை எல்லாம் கண்ட அரசாங்கத்தினர், தாமே முப்பதினாயிரம் கைதிகளை விடுதலை செய்துவிட்டனர். தவிர, முன்னர் வேலையினின்று விலக்கியவர் களை யெல்லாம் மீண்டும் அந்தந்த உத்தியோகங்களில் நியமித்தார்கள். ஆனால் மன வெறுப்புடன்தான்! பார்லிமெண்ட் தேர்தலில் வெற்றி கண்டதோடு ஜனங்கள் திருப்தி யடையவில்லை. குடியரசின் பிரசிடெண்டாயிருந்த ஜமொ ராவையும் விலக்கிவிடத் தீர்மானித்தார்கள். ஏனென்றால் இவன், லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கத்து அடக்குமுறைகளுக்கெல்லாம் துணைக் கருவியாயிருந் தானல்லவா? முன்னணிக் கட்சியினர், இவனிடத்திலே அதிக ஆத்திரங் கொண்டிருந்தார்கள். கடைசியில், 1936ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஏழாந்தேதி பார்லி மெண்டில், இந்தப் பிரச்னைவாதத்திற்கு வந்தபோழ்து, ஜமொராவை, பிரசி டெண்ட் பதவியிலிருந்து விலக்குவதென்று 238 பேரும், கூடா தென்று 5 பேரும் வாக்குக் கொடுத்தார்கள். ஜமொரா, பிரசிடெண்ட் ஸ்தானத்தினின்று இறக்கப்பட்டு விட்டான். பின்னர், மே மாதம் பத்தாந்தேதி நடைபெற்ற தேர்தலில் மான்யுவல் அஜனா1 பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். இவன் ஸ்பெயின் குடியரசின் இரண்டாவது பிரசிடெண்ட். முன்னணிக் கட்சியினர் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டனர். காஸரஸ் குவிரோகா1 என்பவன் பிரதம மந்திரியானான். தேர்தலில் தங்களுக்குக் கிடைத்த வெற்றியைச் சிதறவிடக் கூடா தென்று, முன்னணிக் கட்சியினர் முன்னைவிட அதிகமாக ஒற்றுமைப் படலாயினர். இந்த முன்னணிக் கட்சியினருக்கு எதிராயிருந்த மற்ற பாசிஸ்ட் கட்சியினரோ, தாங்கள் அடைந்த தோல்வியை எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்று, கங்கணங் கட்டிக்கொண்டார்கள். முதலாளிகள் பலரும் ஒன்று சேர்ந்துகொண்டு, தேசத்தின் பணப் புழக்கத்தில் ஒருவித சிக்கலை உண்டு பண்ணினார்கள். பணத்தை யெல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். பாங்கிகளில் போட்டு வைத்திருந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். வியாபாரத்தில் மந்தம் உண்டாகுமாறு செய்தார்கள். நிலச்சுவான் தார்கள், தங்கள் சுவாதீனத்திலிருந்த நிலங்களையெல்லாம் உழுது சாகுபடி செய்யாமல் கரம்பாகப் போட்டுவிடத் தீர்மானித்தார்கள். ஏன் இப்படி என்று இவர்களை யாராவது கேட்டால், விவசாயி களின் கூலி விகிதம் அதிகமாகிவிட்டதென்றும், சாகுபடியில் தங் களுக்குப் பங்கு வேண்டு மென்று விவசாயிகள் கிளர்ச்சி செய்கிறார் களென்றும் காரணங்கள் கூறினார்கள். இப்படி முதலாளி வர்க்கத்தினர், ஒருபுறம் செய்து கொண் டிருக்க, ரோப்ளெஸ் முதலிய பாசிஸ்ட் கட்சியினர், அஜனா அரசாங் கத்தைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். தேசத்தில் ‘அமைதியும் ஒழுங்கும்’ நிலை பெறாவிட்டால், பொருளாதார வாழ்வில் ஒரு நிம்மதி காண முடியாதென்று கூறினார்கள். ரகசிய முறையில் தங்க ளுடைய ஆயுத பலத்தையும் பெருக்கிக் கொண்டு வந்தார்கள். செல்வமும், அதன் மூலமாக ஏற்பட்ட செல்வாக்கும் இவர்களிடத் திலே இருந்ததல்லவா? பயமுறுத்திக் கொண்டு வந்ததோடு இவர்கள் நிற்கவில்லை. பின்னாடி ஏற்படப்போகிற பெரிய சண்டைக்கு வேறு பல வகைகளிலும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இக்கட்சியைச் சேர்ந்த ராணுவ உத்தியோகஸ்தர் பலர், மொராக் கோவுக்குச் சென்றார்கள். ரோப்ளெஸோ அடிக்கடி பிரான்ஸுக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ‘உல்லாசப் பிரயாணம்’ என்று இதற்குச் சமாதானம் சொல்லப்பட்டது. முன்னணிக் கட்சிக்குட்பட்ட தொழிலாளர் முதலியோர், தற்காப்பு நிமித்தம், தனித்தனித் தொண்டர் படைகளை நிறுவினார்கள். பொதுஜன அமைதியைக் காப்பதற்காக, அரசாங்கப் படைகளுடன் ஒத்துழைப்பதே இந்தத் தொண்டர் படைகளை ஏற்படுத்தியதன் நோக்கம். இந்தத் தொண்டர் படைகளில், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலிய ஏழை மக்களும், மத்திய வகுப்பினரும் அதிகமாகச் சேர்ந்தார்கள். 1936ஆம் வருஷத்துப் பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு, சுமார் நான்கு மாத காலம் ஆங்காங்குச் சில்லரைக் குழப்பங்களும், பலாத்காரச் செயல்களும், கொலைகளும் நடைபெற்றுக்கொண்டு வந்தன. முன்னணிக் கட்சியினரைப் பாசிஸ்டுகள் கொலை செய்வதும், பின்னவர் முன்னவரைக் கொலை செய்வதும் சாதாரண சம்பவங் களாகிவிட்டன. இதனிடையே 1936ஆம் வருஷம் ஜூன் மாதம் ஒரு பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் ஏற்பட்டது. இதில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால், அரசாங்கத்தார் இதனை ஒருவாறு சமரஸப்படுத்திவிட்டனர். இந்த வேலை நிறுத்தத்தைத் தூண்டிவிட்டவர்கள் பாசிஸ்ட் கட்சியினரே என்று பின்னால் சொல்லப்பட்டது. ஆனால் பாசிஸ்டுகளோ, தேசத்திலே ஏற்பட்டுள்ள நெருக் கடிக்கு, முன்னணிக் கட்சியினரும், தற்போதைய அரசாங்கமே காரணமென்று பல புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டினார்கள். 1936ஆம் வருஷம் ஜூன் மாதம் பதினேழாந்தேதி, பார்லிமெண்டில் ரோப்ளெஸ் பேசியபோது, (முன்னணிக் கட்சியினரால்) 251 மாதா கோவில்கள் எரிக்கப்பட்டன வென்றும் 269 பேர் கொலை செய்யப் பட்டிருக்கிறார்களென்றும், 1500 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக் கிறதென்றும், பத்து பத்திரிகாலயங்களில் சேதம் உண்டுபண்ணப் பட்டிருக்கின்றதென்றும், 340 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றி ருக்கின்றன வென்று கூச்சலிட்டான். இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னணிக் கட்சியினரும், அவர் களுடைய பத்திரிகைகளும் பதில் கூறின. பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள், பயமுறுத்தப்பட்ட வர்கள் இத்தனை பேர் என்று புள்ளி விவரங்களோடு இவர்களும் எடுத்துக் காட்டினார்கள். மாதா கோயில்களைத் தாக்கியதும் எரித்ததும் உண்மைதான். ஆனால் கோயில்கள் மீதோ, கத்தோலிக் கர் மீதோ கொண்ட துவேஷத்தினாலன்று. பாசிஸ்டுகள், இந்த மாதா கோயில்களைத் தங்களுடைய ஆயுத சாலைகளாக உபயோகப் படுத்திக் கொண்டார்கள். இந்த மாதா கோயில்களே, பாசிஸ்டு களின் சூழ்ச்சி ஸ்தாபனங்களாயிருந்தன. இதனாலேயே மாதா கோயில்கள் எரிக்கப்பட்டன. இப்படியெல்லாம் முன்னணிக் கட்சி யினர் சமாதானம் கூறினார்கள். ஒரு தேசத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கட்சியினர், மற்றொரு கட்சியினரைப் பற்றிக் குறை கூறுவதும், குற்றஞ்சாட்டுவதும் சகஜமே. 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 12ஆம் தேதி. அன்று மாட்ரிட் நகரம் நரகக் காட்சியை அளித்தது. முன்னணிக் கட்சியைச் சேர்ந்த தளபதி காஸ்டில்லோ1 என்பவன் கொலை செய்யப் பட்டான். யாரால்? தெரியாது. ஆனால், அவன் கொலை செய்யப் பட்ட ஆறுமணி நேரங் கழித்து, பாசிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவனான கால்வோ ஸோடெலோ2 என்பவன் கொலை செய்யப் பட்டுவிட்டான். இநத ஸோடெலோவின் உத்திரவின் பேரிலேயே, மேற்படி காஸ்டில்லோ கொலை செய்யப்பட்டான் என்று, அன்று மாட்ரிட்டில் வதந்தி உலவியது. ஸோடெலோவின் பிரேத ஊர்வலத்தை, பாசிஸ்டுகள் மிக ஆடம்பரமாக நடத்தினார்கள். அப்பொழுதே, இவர்கள் கலகஞ் செய்யத் தொடங்கினார்கள். அரசாங்கத்தைத் தாக்கி எழுதிவந்த இரண்டு பாசிஸ்ட் கட்சிப் பத்திரிகைகள் மீது தடையுத்திரவு பிறப் பிக்கப்பட்டது. முன்னணிக் கட்சியில் சேர்ந்திருந்த எல்லாக் கட்சியினரும் ஜுலை மாதம் 13ஆம் தேதி ஒன்றுகூடி, எவ்வகை யாலும் தாங்கள் ஒற்றுமைப்பட்டிருப்பதென்றும், தற்போதைய அரசாங்கத்திற்கு எல்லாவிதமான ஆதரவுகளையும் கொடுப்ப தென்றும் பிரமாணம் செய்து கொண்டார்கள். பிறகு மூன்று நாட்கள் மாட்ரிட் நகரம் ஒரே அமைதியா யிருந்தது. ஆனால் இந்த அமைதியிலே ஒருவித பயங்கரம் காணப் பட்டது. புயற்காற்றுக்கு முன்னே உண்டாகிற அமைதிதானே! VIII ஜூலை குழப்பம் 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் பதினேழாந் தேதி பயங்கர அமைதி குலைந்தது. குழப்பம் ஆரம்பித்து விட்டது. இந்த நாளில் கலகத்திற்குக் கிளம்புவதென்று பாசிஸ்டுகள், ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்கள். இந்தக் கலகத்தைக் கண்டு ஸ்பானிஷ் பொதுஜனங்கள் ஆச்சரியப்படவில்லை. ஆனால் இதன் பயங்கரத் தன்மையையும், கலகக்காரர்கள் செய்து வைத் திருந்த முன்னேற்பாடுகளையும் பொது ஜனங்களோ அரசாங்கத் தாரோ பூரணமாகத் தெரிந்து கொள்ளவுமில்லை. 1932ஆம் வருஷம் செவில்லே என்ற ஊரில், தளபதி ஸான்ஜுர்ஜோ, கலகத்திற்குக் கிளம்பினானல்லவா, அதைப்போலவேதான், இந்தப் பதினேழாந் தேதிக் குழப்பத்தையும் ஒரு சிலர் தூண்டிவிட்டிருக்கின்றனர் என்று அரசாங்கத்தார் முதலில் கருதினார்கள். இதனை எளிதில் அடக்கி விடலாமென்று பொய் நம்பிக்கையும் கொண்டுவிட்டார்கள். ஒரே நாளில் தேசத்தின் பல பாகங்களிலும் கலகத்திற்குக் கிளம்பி, ஆங்காங்குள்ள முக்கிய ஸ்தாபனங்களைக் கைப்பற்று வதென்று பாசிஸ்டுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணுவத்தில் பெரும் பகுதி இந்தப் பாசிஸ்டுகள் பக்கம் சேர்ந்து விட்டது. இதில் ஆச்சரிய மொன்றுமில்லை. ஸ்பெயின் தேசத்து ராணுவம் எப் பொழுதுமே பாசிஸம் என்கிற முதலாளித்துவத்தை ஆதரித்து வந் திருக்கிறதல்லவா? மற்றும், கலகத் தலைவர்களில் பெரும் பான்மையோர், ஏற்கெனவே ராணுவத்தில் உயர்தர உத்தியோகங்கள் வகித்தவர். தேசத்திலுள்ள முக்கியமான பாதைகள், ஆங்காங்குள்ள முக்கிய ஸ்தானங்கள், அரசாங்கத்தின் ராணுவ பலம் முதலியவை களைப் பற்றிய எல்லா விவரங்களும் இவர்களுக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. ஆனால் இந்தக் கலகத் தலைவர்களிடத்தில் ஒரு குறை இருந்தது. அதாவது இவர்கள் ராணுவத்தில் சேவை செய்து கொண்டிருந்த போது, யதேச்சாதிகாரிகளாகவே காரியங்கள் நடத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் நெருக்கடியான சமயங் களில் கூட ஒற்றுமைப்பட்டுக் காரியங் களை நடத்த முடியாத மனப் பான்மை யுடையவர்களா யிருந்தார்கள். எனவே, கலகம் ஆரம்பித்தபோழ்து, ஒரே மாதிரியான திட்டத்திற்குட்பட்டு, ஒரே சமயத்தில் கலகத்திற்குக் கிளம்ப முடியாதவர்களானார்கள். ஒவ் வோரிடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இவர்களின் புரட்சி ஏற்பாடு கள் இருந்தன. இதனால், முதலில் சிறிது அயர்ந்தாற் போலிருந்து விட்ட அரசாங்கத்தார், எச்சரிக்கையுடனிருக்கவும், தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பாசிஸ்டுகள், தங்கள் ராணுவ பலத்தை, எட்டு முக்கிய களகர்த்தர்களின் கீழ் பிரித்து வைத்திருந்தார்கள்.1 இவர்களில், பிராங்கோ என்பவன்தான், கலகப் படைகளின் சேனாதிபதியாக இருந்தான். பாசிஸ்டுகள், கலகத்திற்குப் பின்வருமாறு திட்டம் போட்டி ருந்தார்கள்:- பிராங்கோ, கானரி தீவுகளிலிருந்து வந்து மொராக்கோ பிர தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து, மொராக்கோ துருப்புகளுடன் வடக்கே யுள்ள செவில்லேயை யடைவது; கோடெட், பலாரிக் தீவுகளி லிருந்து வந்து பார்ஸிலோனாவில் ஏற்கெனவேயுள்ள பாடெட்டுடன் வந்து கலந்துகொள்வது; மோலா, வடக்கே பர்கோஸ் நகரத்திலிருந்து தெற்கு நோக்கி வருவது: கபன்னெலலாஸ், வடகிழக்கிலிருந்து தென் மேற்காகப் புறப்பட்டு வருவது; ஸான்ஜூர்ஜோ, மேற்கிலிருந்து கிழக்கே நோக்கி வருவது; இங்ஙனம் நாலா பக்கங்களிலிருந்தும் படை திரட்டி வந்து ஸ்பெயினின் மத்திய பாகத்திலேயுள்ளதும் அரசாங்கத்தின் தலைமை ஸ்தானமாயிருப்பது மான மாட்ரிட் நகரத்தைத் தாக்குவது. இதே தினத்தில் மாட்ரிட்டிலும் பார்ஸிலோனாவிலும் அங்குள்ள சிறு படைத் தலைவர்களைக் கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணுவது. இதுவே கலகக்காரர்களின் திட்டம். இந்தத் திட்டப்படி 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 17ஆம் தேதி, பிராங்கோ, க்யூடா துறைமுகத்திலிருந்து ரேடியோ மூலம், அரசாங்கத்தை எதிர்த்துக் கலகம் கிளம்பிவிட்டதென்றும், தேசத்தார் அனைவரும் இந்தப் புரட்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் ஒரு செய்தி விடுத்தான். பின்னர், க்யூடா துறைமுகத்திலிருந்து மொராக்கோ துருப்புகளை ஸ்பெயினுக்கு அனுப்புவிக்க கப்பற்படையின் துணையை நாடினான். ஆனால் கப்பற்படையினர் இதற்கு இணங்க மறுத்துவிட்டனர். ஆரம்பத்திலேயே, பாசிஸ்டுகளுக்கு இது முட்டுக்கட்டையாகப் போய்விட்டது. மற்றும், ஸ்பெயின் அரசாங்கத்து ஆகாய விமானப் படையும், பாசிஸ்டு களுக்கு ஏற்பட்டது. அதாவது ஸான்ஜூர்ஜோ, மேற்கிலிருந்து மாட்ரிட்டை நோக்கி வரவேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததல்லவா? இவன் வரும்போது, வழியில் ஆகாய விமானத்திலிருந்து விழுந்து இறந்துவிட்டான். இவனையே, அஜனாவுக்குப் பதில், குடியரசின் பிரசிடெண்டாக நியமிக்க பாசிஸ்டுகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படி இவர்கள் செய்த ஏற்பாடுகள் சில, ஆரம்பத்தில் சரிவர நிறைவேறவில்லை யானாலும், மனமுடையாமல் படை திரட்டி வந்தார்கள். கலகம் தொடங்கிவிட்டதென்று பிராங்கோ அறிவித்த அதே தினத்தில் (17-7-36) வேறு பல இடங்களிலும், பாசிஸ்டுகள் கலகக் கொடி தூக்கி விட்டார்கள். லானோ என்பவன், செவில்லேயைக் கைப்பற்றிக் கொண்டான். மோலா முதலியோர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் மாட்ரிட் நகரத்தையும், பார்ஸிலோனா நகரத்தையும் கலகக்காரர்கள் எளிதில் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லை. இங்கு அரசாங்கக் கட்சியினர் பலமாக எதிர்த்து நின்றனர். இந்தக் கட்சியில் சேர்ந்திருந்தவர்கள் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் முதலி யவர்களே. இவர்களுக்கு யுத்த அநுபவம் அதிகமாக இல்லை. ஆனால் இவர்கள் உள்ளத்தில் தேசபக்தி கொழுந்துவிட்டெரிந்து கொண்டி ருந்தது. அரசாங்கத் தார் இவர்களுக்கு, அரசாங்க ஆயுதசாலையி லிருந்த ஆயுதங்களை வழங்கினர். மற்றும் தொழிற்சாலைகளில் பழுது பார்ப்பதற்காகக் கொடுக்கப் பட்டிருந்த ஆயுதங்களை யெல்லாம் இவர்கள் வசம் ஒப்புவிக்கச் செய்தார்கள். இங்ஙனம் ஆண்கள் மட்டும் யுத்த சன்னத்தராகவில்லை. பெண்களும் யுத்த கோலம் பூண்டார்கள். இவர்கள், ஆண்களை யுத்தகளத்திற்கு அனுப்பி விட்டு, அவர்களுக்குப் பதிலாக நகரங்களிலும் கிராமங்களிலும் அமைதி குலையாமல் பாதுகாத்து வரலாயினர். இன்னும் பல மாதர்கள், ஆண்களோடு சேர்ந்து கொண்டு பாசிஸ்ட் படைகளை எதிர்த்துப் போராட முன் வந்தனர். ஐரோப்பிய சரித்திரத்திலேயே இது புதிய விஷயம் என்று சொல்லவேண்டும். எந்த யுத்தத்தின்போதும், இங்ஙனம் ஆயிரக்கணக்கான பெண்கள், படைக்கலந் தாங்கிப் போர் புரிந்ததாகத் தெரியவில்லை. அதிலும், ஸ்பானியப் பெண்கள், ஆண் களைப்போலவே உடையணிந்து, படை தாங்கி, முகத்திலே சிறிது கூட அச்சத்தைக் காட்டிக் கொள்ளாமல் புன் சிரிப்புடன் போர் முகத்திற்கு நடந்துசெல்லத் துணிந்தது, சரித்திரத்தில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமாகும். இங்ஙனமே, தேசத்தின் பல பாகங்களிலும் தொழிலாளர்கள் முதலியோர், தனித்தனிப் படைகளாகத் திரண்டு பாசிஸ்டுகளை எதிர்க்கலானார்கள். பாசிஸ்டுகள், யுத்த முறையில், பழகின வீரர்களை அதிகமாக உடையவர்களா யிருந்தார்கள். ஆனால் பொதுஜன நல்லெண்ணம் இவர்கள் பால் இல்லை. இதனால் இவர்கள் தங்கள் படைபலத்தைக் கொண்டு சில பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டபோதிலும் அங்கு ஜனங்களின் ஆதரவு இல்லாமலே இருந்து வந்திருக்கிறது. மற்றும், பாசிஸ்டுகள் முதலில் நினைத்தபடி எந்த ஊரையும் சுலபமாகக் கைப்பற்றிக் கொண்டுவிட முடிய வில்லை. ஏனென்றால், ஜனங்கள் நவீன ராணுவப் பயிற்சி பெற்றிரா விட்டாலும், சத்துருக் களுக்கு எளிதில் விட்டுக் கொடுக்கவில்லை. தவிர, பாசிஸ்டுகளிடத்தில் ஜனங்களுக்கு மற்றொரு விதத்திலும் துவேஷம் வளர்ந்து வரலாயிற்று. பரம்பரையாகவே, மொராக்கோ வாசிகளான மூர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் விரோதம். 1920ஆம் வருஷத்திலிருந்து 1926ஆம் வருஷம் வரையில் ஸ்பானியர்களுக்கும் மூர்களுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக, ஸ்பெயின் அரசாங்கப் பொக்கிஷத்திலிருந்து ஏராளமான பணம் செலவழிக்கப் பட்டது. இந்த மொராக்கோ யுத்தத்தின் காரணமாக, பொருள் நஷ்டம் மட்டும் உண்டாகவில்லை. ஆள் நஷ்டமும் ஏராளமாக உண்டாயிற்று. இந்த யுத்தத்தில் அதிகமாகப் பங்கெடுத்துக் கொண்டவன் பிராங்கோ. இவன் மூர்களைச் சிறிதுகூடக் கருணை யின்றி நடத்தினான். ஆனால் இதே பிராங்கோ, மூர்களின் துவேஷத்தைப் பாசிஸ்ட் கட்சிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தீர் மானித்தான். தனது நாட்டினரை அடக்க மொராக்கோ துருப்பு களை உபயோகப்படுத்தலாயினான். இது ஸ்பானியர்களுக்கு அதிக மான வெறுப்பை உண்டுபண்ணியது. பாசிஸ்டுகளுக்கு மற்றொரு பக்க பலமாயிருந்தது அந்நியக் கூலிப்படைகள். பல தேசத்துக் கீழ்மக்கள் நிரம்பியது இந்தப் படை. இந்தப் படையைச் சேர்ந்தவர்களை, சாதாரண ஜனங்களோடு கூடப் பழக விடுவ தில்லை. இழிவான, கொடுமையான காரியங்களைச் செய்வதற்குத்தான் இந்தப் படையை ஏவுவது வழக்கம். இத்தகைய படையை ஸ்பானிஷ் அரசாங்கத்தார் பல வருஷங்களாக மொராக் கோவில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்தப் படையினரை யும் பிராங்கோ, ஸ்பானியர்களுக்கு விரோதமாக உபயோகப் படுத்தி வரலாயினான். இதுவும், பாசிஸ்டுகளுக்கு விரோதமான உணர்ச் சியை ஜனங்களிடையே உண்டு பண்ணியது. தவிர 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் அன்டூரியா மாகாணத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது, மிகக்கடுமையாக நடந்து கொண்டவன் பிராங்கோ. ‘ஈவு இரக்க மில்லாதவன்’ என்றுதான் அம்மாகாண வாசிகள் இவனை அழைப் பார்கள். அத்தகைய இவன், பாசிஸ்ட் படைகளின் பிரதம தலைவனா யிருந்தபடியால் ஜனங்களுக்கு இன்னும் அதிகமான ஆத்திரம் உண்டாயிற்று. கலகம் ஆரம்பித்த ஒரு மாத காலத்திற்குள், தேசத்தின் ஒரு பாதிபாகம் பாசிஸ்டுகள் கையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இஃது ஒரு விதத்தில் உண்மையே. ஆனால், கலகக்காரர்கள் வசத்தில் சிக்கிக் கொண்ட பிரதேசங்கள் ஜனப் பழக்கம் அதிகமான இல்லாதவை. அரசாங்கத்தார் வசமிருந்த பிர தேசங்கள் செழிப்புள்ளவை; ஜனநெருக்கமுள்ளவை. முக்கியமான துறைமுகங்கள், போக்கு வரவுக்கு லாயக்கான இடங்கள் முதலியன இந்தப் பிரதேசங்களிலேயே இருக்கின்றன. யுத்தம் வலுக்க வலுக்க, ஸ்பானியப் பொது ஜனங்களின் ஒற்றுமையும் வளர்ந்து வந்தது. பொதுவுடமைக் கட்சி, அபேதவாதக் கட்சி முதலிய பல கட்சிகளிலிருந்துவந்த சில்லரை வேற்றுமைகள் யாவும் மறைந்து போயின. தேசத்தின் சக்திகளனைத்தையும் ஒரு முகப்படுத்தி, பாசிஸத்திற்கு விரோதமாக நிற்க வைப்பதுதான், எல்லாக் கட்சிகளின் லட்சிமா யமைந்துவிட்டது. இந்தப் போராட்டம், குடியரசுக்கும் பாசிஸத்திற்கும் நடக்கிற போராட்ட மென்று, தற்போதைய ஸ்பானிஷ் முன்னணி அரசாங் கத்தார் கூறுகின்றனர். ஆனால் பாசிஸ்ட் கட்சியினரோ, தற்போதைய அரசாங்கத்தார் தங்களுடைய அதிகாரபலத்தின் மூலம், தேசத்தில் பொதுவுடமை இயக்கத்தைப் பரப்பி வருகிறார்களென்றும், இதனின்று ஸ்பெயினைக் காப்பாற்றுவதற்காகவே தாங்கள் படை தூக்கி யிருப்பதாகவும் பறைசாற்றிவருகிறார்கள். இதற்காதார மாக, இவர்கள் ருஷ்யாவின் உதவி இந்தக்குடியரசு அரசாங்கத்திற்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசாங்கத்தாரோ, பாசிஸ்டுகளுக்கு, ஜெர்மனியும் இத்தலியும் உதவி செய்கின்றனவென்று கூறுகின்றனர். ஜூலை மாதம் 17ஆம் தேதி குழப்பம் ஆரம்பித்த தல்லவா? ஆரம்பித்த மூன்று நாட்களுக்குள், மூன்று முறை குடியரசு அர சாங்கத்தின் மந்திரிச்சபை மாற்றியமைக்கப்பட்டது. குழப்பம் ஆரம்பிக்கிற காலத்தில், காஸரஸ் குவிரோகா பிரதம மந்திரியாயி ருந்தான். குழப்பம் வலுக்க இவன் ராஜீநாமா செய்துவிட்டான். பின்னர், பாரியோஸ்1 என்பவன் பிரதம மந்திரி யானான். இவன் எட்டு மணி நேரந்தான் உத்தியோகம் பார்த்தான். பின்னர் இவனும் ராஜீநாமா செய்யவே, கிரால் பெரீரா2 என்பவன் பிரதம மந்திரி யானான். இவன் 1936ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் குழப்பத்தில் சம்பந்தப் பட்ட இரண்டு கட்சிகளைப் பற்றியும் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டான்:- “ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், பாதிரிமார்கள், பாசிஸ்டுகள் ஆகியோர் ஒன்று சேர்ந்து, ஜனங்களால் தெரிந் தெடுக்கப்பட்ட நியாயமான குடியரசு அரசாங்கத்திற்கு விரோதமாகக் கலகம் செய்யக் கிளம்பியிருப்பதினாலேயே, ஸ்பெயினில் தற்போதைய நெருக்கடியான நிலைமை ஏற்பட் ளடிருக்கிறது.” இந்த கிரால் மந்திரிச்சபையானது, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி ராஜீநாமா செய்துவிட்டது. அன்று லார்கோ கபல்லெரோ1 என்பவனுடைய தலைமையில் புதிய மந்திரிச் சபை அமைந்தது. இந்த கபல்லெரோ என்பவன் ஸ்பெயின் தேசத்து அபேதவாதக் கட்சியின் தெய்வமாகப் போற்றப்படுகிறவன். இவன் கீழ் அமைந்த மந்திரிச்சபையானது, முன்னணிக் கட்சியின் உண்மை யான பிரதிநிதித்துவம் வாய்ந்த மந்திரிச்சபையென்று கூறலாம். ஏனென்றால், இந்த மந்திரிச்சபையிலுள்ள பெரும்பான்மையோர் மத்திய வகுப்பினர். இன்னும் சிலர் பொதுவுடமைக் கட்சியினர். 1936ஆம் வருஷம் பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு அமைந்த மந்திரிச் சபைகள், முன்னணிக் கட்சியின் பிரதிநிதிச் சபைகளாயிருந்தன. கபல் லெரோவின் கீழ் அமைந்த மந்திரிச் சபையோ முன்னணி மந்திரிச் சபையென்றே கூறும்படியாயிருக்கிறது. இந்த முன்னணி மந்திரிச் சபையின் அமைப்பு வருமாறு:- லார்கோ கபல்லெரோ - பிரதம மந்திரியும் யுத்த மந்திரியும். (அபேதவாதக் கட்சி). டெல் வாயோ - அந்நிய நாட்டு மந்திரி. (அபேதவாதக் கட்சி). இரண்டலேஷ்யோ ப்ரீடோ - ஆகாயப்படை கப்பற்படை மந்திரி. (அபேதவாதக் கட்சி). ஜூவான் நெக்ரின் - பொக்கிஷ மந்திரி. (அபேதவாதக் கட்சி). அனஸ்டேஷ்யோக்ரேஷியா - வியாபாரக் கைத்தொழில் மந்திரி. (அபேதவாதக் கட்சி). ஏஞ்சல் காலர்ஸா - உள்நாட்டு மந்திரி. (அபேதவாதக் கட்சி). விஸிண்டே உரிபே - விவசாய மந்திரி. (அபேதவாதக் கட்சி). ஜேஸஸ் ஹெர்னாண்டஸ் - கல்வி மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி). மரியானோ ப்யூனஸ் - நீதி மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி). பெர்னார்டோ ரியோஸ் - போக்கு வரவு மந்திரி. (குடியரசு ஐக்கியக் கட்சி). ஜூலியோ ஜஸ்ட் - மராமத்திலாகா மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி). ஜோஸே பெரீரா - பொது மந்திரி. (குடியரசுத் தீவிரக் கட்சி). குடியரசின் தலைவனாக முன்போலவே மான்யுவல் அஜனா யிருந்தான். இந்த மந்திரிச்சபையார், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டதும், தங்கள் கொள்கைகளை வரையறுத்துப் பின்வரும் அறிக்கை யொன்றை வெளியிட்டனர்:- “ஆயுத பலம் பொருந்திய கலகக்காரர்களினின்று ஸ்பெயின் தேசத்து ஜனநாயகக் குடியரசைக் காப்பாற்றும் பொருட்டுப் பல முகப்புகளிலும் போர் புரிந்து கொண்டி ருக்கும் அரசியல் சக்திகளின் நேர்முகமான பிரதி நிதியாக இந்த மந்திரிச்சபை அமைந்திருக்கிறது. விசாலமான பிரதி நிதித்துவம் வாய்ந்த ஒரு மந்திரிச்சபை தற்போது இருக்க வேண்டுவது அவசியமென்று குடியரசுத் தலைவர் மான்யுவல் அஜனா கருதுகிறார். இப்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ள மந்திரிகள், எந்தெந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருக் கிறார்களோ, அந்தந்தக் கட்சியினரும் இந்த ஏற்பாட்டை உடனே அங்கீகரித்துக் கொண்டார்கள். இதனால் தற் போதைய அரசாங்கத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் அடங்கியிருக்கின்றன. ஜனங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஒன்று படுத்திச் செயல் முறையில் திருப்பித் தேச நன்மைக்கு உப யோகப்படுத்துவதன் மூலம், கலகத்தை அடக்கி வெற்றி காணவேண்டுமென்ற உறுதியான நோக்கத்துடன் மந்திரிச் சபையின் வேலைத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற அரசியல் நோக்கங்களைக் காட்டிலும், இந்த லட்சியத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கலகத்தை அடக்குவதைத் தவிர வேறு எண்ணமே தற்போது இருக்க முடியாதல்லவா? ஸ்பெயினுக்கு எவ்வித ஏகாதிபத்திய எண்ணங்களும் இல்லை. எனவே, சமாதான நோக்கத்தையே அரசாங்கம் வலியுறுத்துகிறது. மந்திரிச் சபையின் ஏகமனதான அபிப் பிராயமும் இதுவாகும். தேச நன்மைக்கும் இஃது உகந்ததாகும். ஏனெனில் உலக சமாதானத்தில்தானே நாம் வாழமுடியும்? எல்லா நாடுகளிடத்திலும் ஸ்பெயின் நேசப் பான்மை கொண்டிருக்கிறதென்பதை இச்சமயம் அரசாங்கம் வற் புறுத்துகிறது. மற்ற நாடுகளிடம் ஸ்பெயின் எப்படி மரியாதை செலுத்துகிறதோ, அதேமாதிரி, ஸ்பெயினுக்கும் மற்ற நாடு களிலிருந்து மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது. என்ன விபரீதங்கள் நேர்ந்த போதிலும், ஸ்பெயின் தேசத்திற்குரிய பிரதேசங்களை கலகக்காரர்கள் வெற்றியடை வதனால் உண்டாகும் ஆபத்தினின்று காப்பாற்ற அரசாங்கம் உறுதியாகத் தீர்மானித்திருக்கிறது. குடியரசின் நியாயத்தன்மையைக் காப்பாற்ற, தரைப் படை, கப்பற் படை, ஆகாயப்படை முதலியனவும், பொது ஜனப்படையும் செய்து வரும் முயற்சிகளுக்காக அப்படையைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனம் அளிக்கிறது. அந்த வீரர்களின் தியாகத்திற்குப் பாத்திரமாயிருக்கும் வண்ணம் அரசாங்கம் நடந்து கொள்ளும். தேசீய முன்னேற்றத்தில் அந்த வீரர்கள் கொண்டுள்ள நியாய மான ஆவலை அரசாங்கம் எப்பொழுதும் பாதுகாத்து நிற்கும்.” எனவே, இந்த முன்னணி அரசாங்கத்தின் முக்கிய நோக்க மெல்லாம், பிற்போக்கான எண்ணங்களுக்கும், உரிமைகளுக்கும் பிரதிநிதியாகத் தோன்றிப் போராடும் பாசிஸத்தைத் தோற்கடிப்பது தான். ஆனால் இந்த ஓர் அமிசத்தோடு கபல்லெரோ அரசாங்கம் திருப்தியடைந்துவிடவில்லை. பாசிஸத்தைத் தோல்வியுறச் செய்வ தென்பது அழிவு வேலைதானே. அதனைத் தொடர்ந்தாற்போல் ஆக்கவேலைகளும் நடைபெற்றால்தானே குடியரசு நிலைபெறும். இதனைக் கபல்லெரோ அரசாங்கம் உணராமலில்லை. இதற்கான திட்டங்களையும் இது வகுத்திருக்கிறது. இவ்விஷயமாக அரசாங்கம் கொண்டுள்ள கொள்கைகளை ஒரு பிரபல ஸ்பானிஷ் பத்திரிகை பின் வருமாறு எடுத்துக் கூறுகிறது:- “நாம் ஜனநாயகக் குடியரசுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி போராடவேண்டுமென்பது ஜனங்களின் அபிப்பிராயமுமாகும். இது முற்றிலும் உண்மை நாம் போராடுகிறோம். ஸ்பெயின் தேசத்து ஜனங்கள் அனைவரும் போராடுகிறார்கள். எதற்கு? ஜனநாயகக் குடியரசுக்காக. குடியரசு என்பது வெறும் வார்த்தை என்று நாம் கருதுகிறோமில்லை. ஜனங்களும் அங்ஙனம் கருதுகிறார்களில்லை. சமூக வாழ்விலும் பொருளாதார நிலையிலும் ஜனங்கள் திருப்தியடைகிற விதமாகவே, இந்தக் குடியரசு உணர்ச்சியை நாம் பார்க்கிறோம். இதனைப் பொதுஜனங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டி ருக்கிறார்கள். அரசாங்கப் படைகளால் வெற்றிகொள்ளப் பெற்ற பிரதேசங்களில், சமூக, பொருளாதார சீர்திருத் தங்களை அமுலுக்குக் கொண்டு வருவதுதான், வெற்றி கொண்டதன் அடையாளமாகும். இந்த வேலையை அரசாங்கமே செய்ய வேண்டும். ஜனநாயகக் குடியரசு என்றால் என்ன? நிலச்சுவான் தார்கள், பணக்காரர்கள் முதலியோரிடமிருக்கும் நிலங்களை விவசாயி களுக்குப் பகிர்ந்து கொடுப்பது; விவசாயிகளுக்குப் பண வசதிகள் செய்து கொடுப்பது; வரிக்குறைவு; கடன்களை ரத்து செய்தல்; சமூக வாழ்வுக்குரிய சீர்திருத்தங்களை நடை முறையில் கொணர்தல்; தொழிலாளர்களின் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்துதல்; சில்லரை வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல்; பிற்போக்கான கட்சிகளைச் சட்ட ரீதியாகக் கலைத்து விடுதல் முதலியனவாம்.” குடியரசு அரசாங்கத்தினர், கலகம் தொடங்கிய சில மாதங் களுக்குள் அரசாங்கத் தலைமை ஸ்தானத்தை, மாட்ரிட்டிலிருந்து, வாலென்ஷியாவுக்கு மாற்றிக் கொண்டார்கள். இது, ஸ்பெயினின் கிழக்குப் பக்கத்திலுள்ள ஒரு துறைமுகம். இப்படி மாற்றிக் கொண்டது, அரசாங்கத்தின் பலஹீனத்தையே காட்டுகிறதென்று பாசிஸ்டுகள் கூறுகிறார்கள். போக்கு வரவு சௌகரியத்தை உத் தேசித்தும், கிழக்குப் பக்கத்து மாகாணங்களில் அதிகமான பொது ஜன ஆதரவு இருப்பதை முன்னிட்டும் வாலென்ஷியாவுக்குத் தங்கள் தலைமை ஸ்தானத்தை மாற்றிக் கொண்டதாக அரசாங்கத்தார் சொல்கிறார்கள். பாசிஸ்டுகள் படை திரட்டிப் போர் புரிவதோடு நிற்கவில்லை. இவர்கள் கலகம் தொடங்கிய ஆறாவது நாளன்றே-அதாவது 24-7-1936லேயே - யுத்த நெருக்கடியான காலங்களில் சாதாரணமாக ஏற் படுத்தப் பெறும் ராணுவ அரசாங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். எந்தெந்த பிரதேசங்களை இவர்கள் கைப்பற்றுகிறார்களோ, அந்தந்தப் பிரதேசங்களில் இவர்கள் இந்த ராணுவ அரசாங்க முறையையே அமுலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். எனவே, கலகத்தின் விளைவாக ஸ்பெயினில் இரண்டு விதமான அரசாங் கங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் ஆச்சரியமான ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள அன்பர்கள் ஆசைப்படலாம். இதற்கு முன்னிருந்த அரசாங்கங் களையெல்லாம் ஆட்டிப் புடைத்து வந்த ரோப்ளெஸ் என்பவன், கலகம் தொடங்கிய மறுவாரம், போர்த்துகலுக்கு ஓடிப் போய் விட்டான். இவனுடன் ஸ்பெயின் தேசத்து மிகப் பெரிய பணக்காரனென்று சொல்லப்படுகிற ஜூவான் மார்ச்1 என்பவனும் சென்று விட்டான். ரோப்ளெஸுக்கு எப்பொழுதுமே பணக்காரர் களுடைய ஆதரவு உண்டு. கலகம் ஆரம்பித்த பிறகு, ரோப்ளெஸும், ஜூவான் மார்ச்சும் வெளி நாட்டிலிருந்துகொண்டு, பாசிஸ்டு களுக்குப் பண உதவி செய்து கொண்டு வருவதாகச் சொல்லப் படுகிறது. IX வல்லரசுகளின் கவலை ஸ்பெயினில் கலகம் தொடங்கியது முதல், அஃது ஒரு சாதாரண உள்நாட்டுக் குழப்பம் என்று எந்த ஐரோப்பிய வல்லரசும் கருதவில்லை. சில நாடுகளில் அவ்வப்பொழுது ஏற்படும் கட்சிச் சண்டைகள் மாதிரி ஆரம்பித்து அப்படியே அடக்கிவிடும் என்று எந்த ராஜ தந்திரியும் நினைக்கவில்லை. இதனை, உலகப் பிரச்னை யாகவே எல்லாரும் கருதி வந்திருக்கிறார்கள். இதற்குக் காரண மென்ன? மத்தியதரைக் கடலின் மேற்குப் பாதுகாவலன் போல் ஸ்பெயின் தேசம் அமைந்திருக்கிறது. அத்லாந்திக் மகா சமுத்திரத்தையும் மத்திய தரைக் கடலையும் ஒன்று சேர்த்து வைப்பது ஜிப்ரால்டர் ஜல சந்தி, இந்த ஜல சந்திக்கு வடக்கிலும் தெற்கிலுமுள்ள பிர தேசங்கள் ஸ்பெயினைச் சேர்ந்தவை. கீழ் நாடுகளுடனும் ஆப்ரிக்கா கண்டத்துடனும் எந்த ஐரோப்பிய வல்லரசேனும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு மத்திய தரைக் கடலில் ஓரளவு ஆதிக்கம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்காக, ஸ்பெயின் தேசத்திலே யார் அதிகமான செல் வாக்கைப் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் மத்திய தரைக்கடலிலே மட்டுமல்ல, ஐரோப்பா கண்டத்திலேயே செல்வாக்குடன் இருக்க முடியும்? அதாவது, ஸ்பெயின் தேசம் எவ்வளவுக் கெவ்வளவு பல ஹீனமாயிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு ஐரோப்பிய வல்லரசு களுக்கு நல்லது. இதனாலேயே, ஸ்பெயின் தேசத்துக் கலகம், ஐரோப்பிய வல்லரசுகளின் கவனத்தைப் பெரிதும் இழுத்திருக்கிறது. மத்திய தரைக் கடலில் செல்வாக்குச் சம்பாதித்துக் கொள்ளும் விஷயத்தில், கிரேட் பிரிட்டனே, மிகவும் முன் யோசனையுடன் நடந்து கொண்டிருக்கிறதென்று சொல்ல வேண்டும். சுமார் 230 வருஷங்களுக்கு முன்னரேயே, அதாவது 1704ஆம் வருஷத்திலேயே, ஜிப்ரால்டரை கிரேட் பிரிட்டன் ஆக்ரமித்துக் கொண்டது. இப்படி ஆக்ரமித்துக் கொண்டதற்கு, வழக்கமாகச் சொல்லப்படும் காரணங்கள் கூட இல்லை. ஏனென்றால் அங்கே எவ்விதமான ஜனங்களும் வசிக்கவில்லை அவர்களை நாகரிகப்படுத்து வதற்கு. குரங்குகள்தான் அந்தப் பாறாங்கல்லிலே வசித்துக் கொண்டிருந்தன. அப்படியிருந்தும், அந்த ஜிப்ரால்டரைக் கைப்பற்றிக் கொள் வானேன்? இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகச் செல்ல இது முக்கியமான பாதை. இந்த ஜிப்ரால்டர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகவே மொராக் கோவின் வடக்கேயுள்ள க்யூடா துறைமுகமும் மத்திய தரைக்கடலிலேயுள்ள பெலாரிக் தீவுகளும். இவை யிரண்டும் ஸ்பெயின் ஆதிக்கத்திலிருக்கின்றன. பிரிட்டிஷார் ஜிப்ரால்டரை எப்படி சுவாதீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரோ, அப்படியே க்யூடாவையும் பெலாரிக் தீவுகளையும் தத்தம் சுவா தீனத்தில் வைத்துக் கொள்ள முடியுமாவென்று ஜெர்மெனியும் இத்தலியும் முயற்சி செய்கின்றன. ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லருக்கும், இத்தலியின் சர்வாதிகாரியான முஸோலினிக்கும் நாடு பெருக்கும் ஆசை இருக்கிற தென்பது வெளிப்படை. வார்சேல் ஒப்பந்தந்தான் இந்த ஆசைக்குக் காரணம் என்பதைப் பற்றி நாம் ஏன் இங்கு விஸ்தரித்துக் கொண்டுபோக வேண்டும்? முஸோலினியின் ஏகாதிபத்திய ஆசை, எதியோப்பியாவை ஆக்ரமித்துக் கொண்டதன் மூலமாக வெளியாகி விட்டது. ஆனால் இந்த ஆசை இதனோடு நிற்கும் என்பது என்ன நிச்சயம்? மற்றும், எதியோப்பியா, எரீட்ரா, இத்தாலிய சோமாலி லாந்து முதலியவைகளுக்குச் செல்லும் வழியில் பெலாரிக் தீவுகளும், க்யூடா துறைமுகமும் இருக்கின்றன. இந்த இரண்டு பிரதேசங் களில் ஏதேனும் ஒன்றைக் கைப்பற்றிக் கொண்டால், பிரிட்டிஷார் இந் தியாவுக்குச் செல்லும் பாதை பாதிக்கப்படும். அப்பொழுது, மத்திய தரைக் கடலின் ஆதிக்கத்தில் ஓரளவு பங்கு பெறலாம் என்பது முஸோலினியின் கருத்து. ஸ்பெயினிலுள்ள பாசிஸ்ட் கட்சியினருக்கு இத்தலி உதவி செய்வதற்கு இதுவே காரணம். ரிவேரா, ஸ்பெயினில் சர்வாதிகாரியாக இருந்த காலத்திலேயே, முஸோலினி, பாசிஸக் கொள்கையைப் பரப்பச் செய்தது எவ் வளவோ முன் யோசனையுடன் தான். இது சம்பந்தமாக பிராங் கோவுக்கும் முஸோலினிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, பிராங்கோ, இந்த ஸ்பெயின் குழப்பத் தில் வெற்றி பெற்று, நிரந்தரமான ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்து வானாகில், அப்பொழுது, ஸ்பெயின் தேசத்துக் கைத்தொழில்களின் அபிவிருத்திக்காக, இத்தலி, ஒரு பெருந்தொகை கடன் கொடுக்க வேண்டியது; ஸ்பெயின் தேசத்திலுள்ள ரெயில்வே பாதைகளைப் பொறுப்பாக வைத்துக் கொண்டு இந்தக் கடன் தொகையைக் கொடுக்க வேண்டியது; இரண்டு அரசாங்கங்களும் பின்னர் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியது; வேறு விதமான தடைகள் குறுக்கிடாவிட்டால், க்யூடா துறைமுகத்தை யும், பெலாரிக் தீவுகளில் ஒன்றையும் இத்தலிக்கும் கொடுத்துவிட வேண்டியது; அப்படி கொடுக்க முடியாவிட்டால், அவ்விரண்டு இடங்களிலும் கப்பல் படைகளை வைத்துக்கொள்ள இத்தலிக்கு அநுமதி கொடுக்கவேண்டியது. இந்த ஒப்பந்தம் இருப்பதனாலேயே, பிராங்கோவுக்கும், மற்ற பாசிஸ்ட் தளபதிகளுக்கும், இத்தலியி லிருந்து ஏராளமான உதவிகள் கிடைக்கின்றன வென்று சொல்லப் படுகிறது. ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், ஆப்ரிக்கா கண்டத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த குடியேற்ற நாடுகளை மீண்டும் பெறுவதற்கு, கானரி தீவுகளிலோ, பெலாரிக் தீவுகளிலோ ஒரு பகுதி கிடைத்தால், அதையே வியாஜ மாக வைத்துக்கொண்டு மற்றக் குடியேற்ற நாடுகளையும் திருப்பிக் கேட்கலாமல்லவா? இதற்காக, ஸ்பெயினில் பாசிஸ்டுகளின் ஆதிக்கம் நிலைபெற வேண்டுவது அவசியம். இதனாலேயே ஸ்பானிஷ் பாசிஸ்டு களுக்கு ஜெர்மனி ஆதரவு கொடுக்கிறது. மற்றொரு காரணமுமுண்டு. அதாவது, பிரான்சுக்கும் ஜெர் மனிக்கும் பரம்பரைப் பகைமையல்லவா? இப்பொழுது, பிரான் சிலே அபேதவாத அரசாங்கம் நடைபெறுகிறது. இந்த அரசாங்கத் தார், சோவியத் ருஷ்யாவுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டிருக் கின்றனர். இது ஜெர்மனிக்குப் பிடிக்க வில்லை யென்பது உலகறிந்த விஷயம். இதனால், ஸ்பெயினிலே பாசிஸ்ட் ஆட்சியை நிலைக்கச் செய்தால் பிரான்ஸை ஒரு பந்தோபஸ் திற்குட் படுத்தினது போலாகு மல்லவா. ஸ்பெயினில், நாஜி கட்சி ஸ்தாபனங்கள் பல வருஷங்களாக இருந்து வருவதாகவும், இதற்காதாரமான பல தஸ்தவேஜுகள் கிடைத்திருக்கின்றன வென்றும் சொல்லப்படுகின்றன. மற்றும் ஸ்பெயினிலேயுள்ள அந்நிய நாட்டார்களில், ஜெர்மானியர்கள்தான் மிக அதிகமாயிருக்கிறார்கள். இவர்கள் குடியேறுவதையும், நாஜீயத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வதையும் கில் ரோப்ளெஸ் ஆதரித்து வந்தான். ஜெர்மனியிலிருந்து ஏராளமான யுத்த தளவாடங்கள், கலக ஆரம்பத்திலிருந்து ஸ்பெயினுக்குள் வந்து இறங்கிக் கொண்டு வந்தன. இங்ஙனமே, ஜெர்மானியர்கள் பலர், ஸ்பானிஷ் பாசிஸ்ட் படையில் சேர்ந்து போர் புரிகிறார்கள். இஃது இப்படியிருக்க, ஸ்பெயினின் முன்னணி அரசாங்கத் திற்கு, ருஷ்யாவின் உதவி அதிகமாகக் கிடைக்கிறதென்று பாசிஸ்டு கள் கூறுகிறார்கள். இப்பொழுது, ஸ்பெயினில் குடியரசின் சார்பாக, அபேதவாதக் கட்சியினரும் பொதுவுடமைக் கட்சியினரும் நடத்தி வரும் போராட்டமானது, ஸ்பெயினை மட்டும் பொறுத்த ஓர் உள் நாட்டுக் குழப்பமாகாதென்றும், முதலாளித்துவத்திற்கும் பொது வுடமைக்கும் நடைபெறுகிற உலகப் போராட்டமாகவே இதனைக் கொள்ள வேண்டுமென்றும், எனவே, தற்போதைய ஸ்பெயின் அர சாங்கத்தை, தான் ஆதரியாவிட்டால் அது பின்னாடி, தன்னையே பாதிக்கு மென்றும் ருஷ்யா கருதுவதாக தெரிகிறது. “ஸ்பெயின் தேசத்துக் குடியரசைக் காப்பாற்றி அதன் மூலமாக உலக சமாதானத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்படியில்லாமல், இந்தக் குடியரசை அழிக்க விட்டு விட்டோமானால், கடுமையான உலக யுத்தம் ஏற்படுவது நிச்சயம்” என்று ஒரு ருஷ்ய அறிஞன் கூறுகிறான். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கை, எவ்வித உறுதிப் பாடுடைய தாகவும் இல்லை. ‘மதில்மேல் பூனை’யின் நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கிறதென்று கூறலாம். மத்திய தரைக் கடலின் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் பாதை பாதிக்கப்படா மலிருக்க வேண்டுமென்பதுதான் இதன் ஒரு நோக்கம். மற்றபடி ஸ்பெயினில், யார் வெற்றி கொண்டாலும் அல்லது தோல்வியடைந் தாலும் அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் ஸ்பெயினில் யார் வெற்றியடைகிறார்களோ, அவர்கள், தங்கள் நோக்கத்திற்கு இணங்கினவர்களா யிருந்தால் போதும். தற்போதைய அபேதவாத அரசாங்கம் நிலைத்துவிட்டால், அதனையும் இது மனப்பூர்வமாக விரும்பாது. அதற்கு மாறாக பாசிஸ்டுகள் வெற்றி கொண்டால், மத்திய தரைக் கடலில், தான் அநுபவித்து வரும் உரிமைகள் பாதிக்கப்படலாமோவென்ற சந்தேகமும் பிரிட்டனுக்கு இருக்கிறது. அல்பான்ஸோ மன்னன், ஸ்பெயின் சிங்காதனத்தில் இருந்த வரையில் அவன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கைகளினால் ஆட்டி வைக்கப்பெற்ற ஒரு பொம்மையாகவே இருந்து வந்திருக்கிறான். அவன் சென்று, குடியரசு ஏற்பட்டது முதற்கொண்டே, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகளின் உள்ளத்தில் ஒருவித சஞ்சலம் ஏற்பட்டிருக் கிறதென்று சொல்லவேண்டும். இந்த மாதிரியான சங்கடமான நிலைமைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவே, ஸ்பெயின் குழப்பத்தில் எந்த நாடும் தலையிடக்கூடாதென்று பிரான்ஸ் கொண்டு வந்த ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம் உடனே ஏற்றுக் கொண்டது. இனி, இந்தத் ‘தலையிடாத திட்டம்’ என்னவென்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். ஸ்பெயினில் கலகம் தொடங்கிய தினத் தன்றே பிரான்சின் நிலைமை தர்ம சங்கடமாகிவிட்டது. ஸ்பெயினி லுள்ள அபேதவாத அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்தால், அதனையே காரணமாக எடுத்துக்காட்டி, ஜெர்மனியும் இத்தலியும் ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு அதிகமான உதவிகளைச் செய்யத் தொடங்கிவிடும். அதனைப் பார்த்து, ருஷ்யா, ஸ்பானிஷ் அபேத வாதிகளுக்குத் துணைவனாக முன்வரும். இது பிறகு பெரிய யுத்தமாகவன்றோ முடியும்? இவற்றையெல்லாம் உத்தேசித்தும், இத்தலியும், ஜெர்மனியும் ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு உதவி செய்யா மலிருக்க ராஜ தந்திர முறையில் தடுப்பதற்கும், ஸ்பெயின் குழப்பத்தில் எந்த நாடுமே தலையிடக் கூடாதென்றும், அப்படி தலை யிடாமலி ருந்தால்தான் அதனை ஓர் உள்நாட்டுக் குழப்பமாக அடக்கிவிடலா மென்றும் சொல்லி, பிரான்ஸ் ஒரு திட்டத்தை வெளியிட்டது. 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 17ஆம் தேதி, ஸ்பெயினில் குழப்பம் தொடங்கியதல்லவா? அது தொடங்கிய இரண்டாவது வாரத்தில், அதாவது 1936ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி மேற்படி திட்டத்தை பிரான்ஸ் வெளியிட்டு, மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைக் கேட்டது. பிரிட்டன் உடனே ஆதரவு அளித்தது. இப்படியே, ஜெர்மனி, இத்தலி முதலிய இருபத்தாறு நாடுகள் அங்கீ காரம் கொடுத்தன. காகித அளவில் எல்லாத் திட்டங்களையும் அங்கீகரித்துவிடலாம். ஆனால் செயல் முறையில்? இந்தத் திட்டத்தைக் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்த்துகல், ருஷ்யா ஆகிய ஐந்து நாடுகளும் ஏற்றுக்கொள்வதாயிருந்தால் தானும் உடன்படு வதாக இத்தலி கூறியது ஜெர்மனியின் பதிலும் இதே தொனியில் தான் அமைந்திருந்தது. ஆனால் இந்த இரண்டு நாடுகளும், ஸ்பானிஷ் பாசிஸ்டுகளுக்கு யுத்த சாமான்களை அனுப்பிக் கொண்டு தானிருந்தன! இருபத்தாறு நாடுகளின் ஆசிபெற்ற இந்தத் தலையிடாத திட்டத்தைப்பற்றி ஆலோசிக்க, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி லண்டனில் சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மகாநாடு கூடியது. ஒரு விஷயத்தை எவ்வளவு தூரம் மழுப்பி வைக்கலாமோ அல்லது செயலில் கொணராமல் தள்ளிப்போட லாமோ அவ்வளவுக்கும் இந்த மகாநாடுகள் உதவிக் கருவிகளா யிருக்கின்றன! இந்த மகாநாட்டுக்குப் போர்த்துகல்1 தேசத்துப் பிரதி நிதி வரவேயில்லை. ஸ்பெயினின் உள்நாட்டுக் குழப்பத்தில் மற்ற நாடுகள் தலையிடாமலிருக்க என்னென்ன முறைகளைக் கை யாளலாம் என்பதைப்பற்றித் திட்டம் வகுக்க ஒரு சிறு கமிட்டியை நியமித்துவிட்டு, இந்த மகாநாடு கலைந்துவிட்டது. இந்தக் கமிட்டி, பல தடவைகள் கூடிக்கூடிக் கலைந்தது. கடைசியில், ஸ்பெயினுக்கு எந்த நாடும், எந்த விதமான ஆள்பலத்தையோ ஆயுத பலத்தையோ உதவக் கூடா தென்றும், இந்தத் தடைத் திட்டமானது சரியானபடி நடைமுறையில் கொணரப்படுவதற்காக, ஸ்பெயினைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் ஒருவிதப் பாதுகாவல் ஏற்படுத்த வேண்டு மென்றும் ஒரு தீர்மானத்தை இந்தக் கமிட்டி நிறைவேற்றியது. இந்தத் திட்டம் 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப் படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. கலகம் தொடங்கி எட்டு மாதங்கள் கழித்து, அதில் மற்ற நாடுகள் தலையிடாதிருப்பதற்குரிய வழிகள் என்னவென்பதைப் பற்றித் திட்டம் போடப்பட்டது! அதுவும் திட்டந்தான்! சமாதான வாத்தியம், எவ்வளவு ஈனஸ்வரத்துடன், அபஸ்வரத்துடன் கூட வாசிக்கப்படுகிறது! X சர்வாதிகாரமா? ஜன ஆதிக்கமா? தற்போது உலகத்திலே இரண்டு விதமான சக்திகள் மோதிக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம், பாசிஸம் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிற சர்வாதிகார சக்தி ஒரு புறத்தில் தனது ஆயுத பலம், பொருள் வலிமை என்பனவற்றைத் துணையாகக் கொண்டு வீறிட்டு நிற்கிறது. அதற்கு எதிரில் நூற்றாண்டுகள் கணக்கில், தனது உரிமைக்காகப் போராடிப் போராடி வீழ்ந்தும் எழுந்தும் வந்திருக் கின்ற ஜன ஆதிக்க சக்தி, உண்மை, உழைப்பு, தியாகம் இவற்றைப் பக்கபலமாகக் கொண்டு மார் தட்டி நிற்கிறது. இந்த இரண்டு சக்தி களின் பகிரங்கமான மோதுதல்தான் 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் ஸ்பெயினில் தோன்றிய குழப்பம். இந்தக் குழப்பத்தில் எந்தச் சக்தி வெற்றி பெற்றாலும், அஃது உலகத்தையே பாதிக்கும் என்பது நிச்சயம். இதனாலேயே, ஏகாதி பத்திய சக்தி களெல்லாம் ஒன்றுதிரண்டு, தளபதி பிராங்கோவின் கலகத்திற்கு ஆசியளிக் கின்றன. அப்படியே, ஜன ஆதிக்க சக்தி களெல்லாம் கபல்லெரோவின் குடியரசு அரசாங்கத்திற்கு அநுதாபங் காட்டுகின்றன.1 ஸ்பெயினில் தற்போது நிருவாகத்தை நடத்திவரும் முன்னணி அரசாங்கமானது, ஏதோ ஒரு சில கட்சிகளின் பிணைப்பு என்றோ, அல்லது தற்காலிகமாக இவை ஒன்று கூடியிருக்கின்றனவென்றோ எவரும் கருதி விடுவதற்கில்லை. தவிர, ஜன சமூகத்தின் தாழ்ந்த படியில் உள்ளவர்கள் மட்டுந்தான் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு காட்டு கிறார்கள் என்பதற்கு மில்லை. ஜன சமூகத்தின் மேற்படியிலுள்ள வர்கள் என்று கருதப்படுகிற பணக்காரர்கள், பேரறிஞர்கள் முதலிய பலரும், போராட்டம் தீவிரமாகப் பரவப் பரவ அரசாங்கத்திற்கு அதிகமான ஆதரவு காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் முன்னணி அரசாங்கம், இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறு மானால், அது தேசத்தின் பூரணப் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாகவேஇருக்கும்.1 தவிர, அரசாங்கத்தின் சார்பில், தேசத்தின் ஜீவசக்திகளெல்லாம் திரண்டு, ஆண், பெண் என்ற வேற்றுமையின்றிப் போர் புரிகின்றன. பெண்கள், படைதாங்கிப் போர்புரிவதோடு மட்டும் நிற்க வில்லை. சிலர், தேசப் பாதுகாப்புக்கான காரியங்களைச் செய் கிறார்கள். இன்னும் சிலர், தாதிமார்களாக இருந்து காயமடைந் தவர்களுக்கு உபசாரஞ் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஆண்களுக்கு உற்சாக மூட்டும் பொருட்டுப் பிரசங்கங்கள் செய்தும், பாட்டுக்கள் பாடியும், உணவு அளித்தும் தொண்டு செய்கிறார்கள். சிறப்பாக, டோலொரெஸ் இபரெர்ரி1 என்ற நாரீமணி, ஆங்காங்குச் சென்று தனது பேச்சுத் திறமையினால், ஜனங்களை ஊக்கப்படுத்திவரும் காட்சியை எங்ஙனம் குறிப்பிடாமலிருக்க முடியும்? பாசிஸ்டுகளுக்கு இத்தகைய பொதுஜன ஆதரவு இருப்பதாகத் தெரிய வில்லை. ஒரு கால் அவர்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால், அது; பொதுஜன துவேஷத்தின் மத்தியில் நீடித்து வாழ முடியுமா வென்பது கேள்வி. அப்படி பாசிஸ்டுகள் வெற்றி பெற்றால் எந்த விதமான ஆட்சியைப் புகுத்துவார்கள் என்பது அநேகருடைய கேள்வியாயிருக்கிறது. மீண்டும் அவர்கள் முடியரசை நிலைக்கச் செய்வார்களா? அல்லது, ரோப்ளெஸும் லெர்ருவும் ஒரு சமயம் கருதியபடி சர்வாதிகார ஆட்சியைப் புகுத்துவார்களா? இதைப்பற்றி ஒன்றும் இப்பொழுது சொல்வதற்கில்லை. ஆனால், மாஜி ஸ்பெயின் மன்னனாகிய அல்பான்ஸோ, பாசிஸ்டுகள் அடைந்து வரும் வெற்றி களில் அதிக சந்தோஷங் காட்டுகிறான். 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில், இவன் பிராங்கோவின் வெற்றிகளைப் பாராட்டி ஒரு செய்தியும் அனுப்பியிருக்கிறான். இவன், என்ன விதமான கனவு கண்டு கொண்டிருக்கிறானோ? 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், கபல் லெரோ அரசாங்கத்தார், கட்டாய ராணுவச் சேவக முறையை அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இதன் மூலமாக, தேசத்தி லுள்ள வயது வந்த எல்லாரும் படை முகத்துக்குச் செல்லும் காட்சியைக் கவிகளே வருணிக்கவேண்டும். இந்தக் குழப்பத்திலே ஜனங்கள்படும் அவஸ்தை சொல்லி முடியாது. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் நேர்ந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடு வதில் ஸ்பானியர்கள் காட்டும் உணர்ச்சி போற்றத்தக்கது. அது மட்டுமல்ல. இந்தத் துன்பத்திலே அவர்கள் இன்பத்தையும் காண்கிறார்கள். கலகம் ஆரம்பித்து எட்டு மாதங் களுக்குள் சுமார் இரண்டு லட்சம் பேர் இறந்திருக் கிறார்கள். ஆனாலும் ஜனங்கள் சிறிது கூட மனத்தளர்ச்சியடையவில்லை. ‘மரண தேவதையிடத்தில் எங்கள் ஆயுதங்களை ஒப்புவிப்போமே தவிர, சத்துருக்கள் வசம் சிக்கவிடமாட்டோம்’ என்ற ஒரே உறுதிதான் இவர் களிடத்தில் காணப்படுகின்றது. 1937ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மத்தியில், பாசிஸ்டுகள் வசம் மலாகா என்ற துறைமுகம் சிக்கிக்கொண்டது. இந்த ஊரி லிருந்து ஆயிரக்கணக்கான ஜனங்கள், சத்துருக்கள் வசம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதென்று ஓடி னார்கள். இந்தக் காட்சியை, கபல்லெரோ அரசாங்க மந்திரியொரு வன் பின் வருமாறு வருணிக்கிறான்:- “மலாகாவிலிருந்த ஜனங்கள், கலகக்காரர்களுடைய கையில் அகப் பட்டுக் கொள்ளக்கூடாதென்று தப்பி ஓடி னார்களே, அஃது ஒரு ஜன சமுத்திரம் திரண்டு செல்வதைப் போலவே இருந்தது. எதிர்பாராத இந்த ஆபத்து ஐரோப்பிய சரித்திரத்தில், எந்தச் சமூகத்தாருக்கும் ஏற்பட்டதில்லை. இந்த ஜனங்கள் மீது ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகள் விழுந்தன. யந்திர பீரங்கிகள் நெருப்பை வாரி இறைத்தன. பாதைகளெல்லாம் பிணங்கள் தான். குழந்தைகுட்டிகளுடன் சென்றவர்கள் நடக்க முடியாத நிலையில், குழந்தைகளின் கழுத்தை முறித்துக் கீழே போட்டு விட்டுப் போனார்கள். பாசிஸ்டுகள் கையில் தங்கள் குழந்தைகள் அகப்படக்கூடா தென்பது இவர் களுடைய நோக்கம். அப்படி குழந்தைகளைக் கொன்றுவிட்டபிறகு தாங்களும் தங்கள் தலைமீது பாறாங் கற்களை வேகமாகப் போட்டுக் கொண்டு இறந்தார்கள். அல்லது மோட்டார் லாரிகளின் சக்கரத்தின் கீழ் அகப் பட்டுக் கொண்டு மாண்டார்கள். இந்த ஜனத்திரளில் பல குழந்தைகள் காலில் மிதி பட்டு இறந்தன. நடக்கச் சக்தியற்ற வயோதிகர்கள், ஸ்திரீகள் முதலியோர் ஊர்ந்து சென்றார்கள். அப்படிச் சென்ற விடமெல்லாம் ரத்தக்கறை. இவர்களுக் கெல்லாம் குடிக்கத் தண்ணீரேது? சாப்பிட ஆகாரம் ஏது? படுக்க இடமேது? ஸ்பெயினிலே இப்பொழுது நாம் என்ன காண்கிறோம்? வீடுகள் எரிகின்றன. ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகள் பொழிகின்றன. தாய்மார்கள், குழந்தைகளை மடியிலே வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கும் போது, அப்படியே துடிக்கத் துடிக்க உயிர் விடுகிறார்கள். புருஷன், துப்பாக்கி முனையிலே இறந்துபட, அவன் மனைவி வீரா வேசங் கொண்டு பழிதீர்க்கச் செல்கிறாள். நிரபராதி களான வயோதிகர்கள், கர்ப்ப ஸ்திரீகள் முதலியோர் நிர்த் தாட் சண்யமாக, ஈவு இரக்கமின்றி பீரங்கிகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள். ஸ்பெயின் குழப்பமானது உலக யுத்தம் என்ற தீயை மூட்டி விட்டு அதிலே தானும் ஐக்கியப்பட்டுவிடுமா? உலகத்திலே இனி சர்வாதிகாரமா, அல்லது ஜன ஆதிக்கமா என்ற பிரச்னை ஸ்பெயினில் தீர்க்கப்படுமா? இத்தகைய கேள்விகளை, உலக ராஜதந்திரிகள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயினே! உன்னுடைய பதில் என்ன? ஸ்பெயின் குழப்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வரலாறு டுயசபடி ஊயbடைடநசடி - லார்கோ கபல்லெரோ: இவனே, 1936ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி ஏற்பட்ட முன்னணி அரசாங்கத்தின் தலைவன். இவன், ஸ்பானிஷ் அபேதவாதக் கட்சியின் சிறந்த தலைவனாகவு மிருக்கிறான். ஐரோப்பிய அபேத வாத இயக்கத்தில் லெனின் எப்படி ஒரு காலத்தில் முக்கிய ஸ்தானத்தை வகித்தானோ அதே ஸ்தானத்தை இப்பொழுது கபல்லெரோ வகிக்கிறான் என்று சொல்ல வேண்டும். இவன் 1869ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஓர் ஏழைக் குடியானவன் குடும்பத்தில் பிறந்தவன். இளமையில் இவன் கல்வி கற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையில் இல்லை. ஏழு வயது முதற் கொண்டே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான். ஆரம்பத்தில் கடற்படையில் கூலியாளாக அமர்ந்தும், பின்னர் சுண்ணாம்பு பூசும் தொழிலில் ஈடுபட்டும் பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு வந்தான். இருபது வயதுக்குப் பிறகுதான் இவன் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டான். இவன் அபேதவாதக் கட்சியில் சேர்ந்து பல பொறுப்பான பதவி களை வகித்தான். 1917ஆம் வருஷம் இவன், அரசாங்கத்தினரால் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதிக்கப் பெற்றான். பின்னர் விடுதலையடைந்து, 1931ஆம் வருஷ குடியரசு அரசாங்கத் தில் தொழில் மந்திரியாக நியமனம் பெற்றான். 1934ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஏற்பட்ட புரட்சிக்கு இவன் தூண்டுகோலா யிருந்தானென்று சொல்லி, லெர்ரு-ரோப்ளெஸ் அரசாங்கம், இவனைக் கைது செய்து விசாரணையின்றிப் பதின்மூன்று மாத காலம் சிறையில் வைத்திருந்தது. இவன் மனைவியையும் இழந்து விட்டான். இவனை ‘ஸ்பானிஷ் லெனின்’ என்று அனைவரும் அழைப்பர். இவன் பேச்சுக்களும் லெனின் பேச்சுக்களைப் போலவே உணர்ச்சி யற்று, வெறும் உண்மையை மட்டும் எவ்விதச் சொல் லடுக்கும் இன்றிக் கூறுவதாக இருக்கும். உருவத்தில்கூட, லெனினும் இவனும் ஏறக்குறைய ஒரு மாதிரியாகவே இருப்பார்கள். இவனுக்கு, ஸ்பெயினில் சென்ற விடமெல்லாம் சிறப்பு உண்டு. ஹடஎயசநண ஏயலடி - அல்வரேஸ் வயோ: அபேதவாதக் கட்சியில் தீவிரமானவன். ஸ்பெயினிலுள்ள சிறந்த அறிஞர்களுள் ஒருவன். பத்திரிகா நிபுணன். பெரிய ராஜ தந்திரி. குடியரசு அரசாங்கத்தின் கீழ், மெக்ஸிகோவுக்கு ஸ்பெயின் ஸ்தானீகனாகச் சென்றிருந்தான். ஐனேநடநஉiடி ஞசநைவடி - இண்டெலேஷ்யோ ப்ரீடோ : மிகப் பெரிய உருவினன். உருவத்திற்குத் தகுந்த குரல். குரலுக்கேற்ற நாவன்மை. கட்சிச் சண்டையில் கெட்டிக்காரன். எதிர்க் கட்சியினர் எப் பொழுதுமே இவனைக் கண்டு பயப்படுவதுண்டு. ழநசயேனேநண - ஹெர்னாண்டெஸ் : பொதுவுடமைக் கட்சியில் தீவிரவாதி. ஆனால் நிதான புத்தியுடையவன். முன்னணிக் கட்சி அரசாங்கத்தில் கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டான். அப்பொழுது இவனுக்கு வயது 28. இள வயதிலே பொறுப்புள்ள பதவியை வகித்த அறிஞர் குழுவைச் சேர்ந்தவன். ழுடை சுடிடெநள - கில் ரோப்ளெஸ் : 27-11-1898இல் ஸாலமங்கா என்ற ஊரில் ஒரு கல்லூரி ஆசிரியனின் மகனாகப் பிறந்தவன். சட்டக் கல்லூரியில் பயின்று, சட்ட போதகாசிரியனாகவும் உத்தி யோகம் பார்த்தான். 1923ஆம் வருஷம் இவன் இந்த உத்தியோகத்தை விடுத்து அரசியலில் புகுந்தான். பத்திரிகாசிரியனாக வேலை பார்த்தான். நிலச்சுவான்தார்கள், பாதிரிமார்கள் ஆகிய இவர் களுடைய கட்சியை ஆதரித்தான். அவர்களுக்காக பார்லிமெண்டில் போராடினான். இவன், குடியரசாங்கத்திற்கு விரோதமாகவே எப்பொழுதும் நடந்து கொண்டு வந்தான். பணக்காரர்களுடைய ஆதரவு இவனுக்கு மிகவும் அதிகம். 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் கலகம் தொடங்கியதும் இவன் போர்த்துகலுக்குச் சென்று விட்டான். ஹடநதயனேசடி டுநசசடிரஒ - அலெஜாந்த்ரோ லெர்ரு : இவன் 1864ஆம் வருஷம் பிறந்தவன். பிற்போக்கான கொள்கைகளை யுடையவன். குடியரசு அரசாங்கத்தை வாழவிடக் கூடாதென்ற நோக்கத்துடன், 1931ஆம் வருஷம் ஏற்பட்ட தற்காலிக்கக் குடியரசு அரசாங்கத்தில் அந்நிய நாட்டு மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்டான். 1933ஆம் வருஷத்திலிருந்து 1936ஆம் வருஷத்திற்குள் நான்கு முறை பிரதம மந்திரிப் பதவியை வகித்திருக்கிறான். 1934ஆம் வருஷத்திலிருந்து 1936ஆம் வருஷம் வரை ஸ்பெயினில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெல்லாம் இவனும் ரோப்ளெஸும் பொறுப் பாளிகளாவார்கள். குசயnஉளைஉடி குசயnஉடி - பிரான்சிஸ்கோ பிராங்கோ: இவன் பாசிஸ்ட் படைகளின் பிரதம சேனாதிபதி. இவனுக்கு இது போழ்து 46 வயதுதான் ஆகிறது. 32வது வயதிலேயே ராணுவத்தில் இவனுக்கு ஒரு படைத் தலைவன் பதவி கொடுக்கப்பட்டது. மொராக்கோவி லுள்ள அந்நியப் படைகளின் தலைவனாக இவன் 1921ஆம் வருஷத் திலிருந்து 1926ஆம் வருஷம் வரை உத்தியோகம் பார்த்தான். 1934ஆம் வருஷம், அஸ்டூரியா மாகாணத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போழ்து அவர்களை மன மிரக்கமின்றி அடக் கினான். 1936ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முன்னணி அரசாங்கத் தினர் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு இவன், கானரி தீவுகளின் நிருவாகஸ்தனாக அனுப்பப் பெற்றான். அங்கிருந்துதான் இவன் கலகத்திற்குக் கிளம்பியது. நுஅடைiடி ஆடிடய - எமிலியோ மோலா: இவன் ஸ்பானிஷ் தொழிலாளர்களின் துவேஷத்தைப் பெற்றுள்ளவர்களில் ஒருவன். 1931ஆம் வருஷம் குடியரசு அரசாங்கம் ஏற்பட்டபோது அதற்குள் புகுந்து அரித்தவர் களுள் சிறந்தவன். இவன் போலீஸ் படைத் தலை வனாக இருந்து வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நிர்த்தாட் சண்யமாக நடத்தியிருக்கிறான். ணுரநiயீடி னந டுடயnடி - குவிபோ டி லானோ: குடியரசுக்கு முடியரசினால் அளிக்கப்பட்ட ஒரு நன்கொடை என்று இவனைச் சொல்லலாம். ஆனால் இவன் ஒரு காலத்தில், முடியரசுக்கு விரோதமாகக் கலகம் செய்தவன். இவன் பின்னர், போர்த்துகலுக்கு அனுப்பப்பட்டான். பிராங்கோவின் முயற்சியால் இவன் மீண்டும் வரவழைக்கப்பட்டு, செவில்லேயிலிருந்த பாசிஸ்ட் படைத் தலைவனாக நியமனம் பெற்றான். னுடிஅiபேடி க்ஷயவநவ - டாமிங்கோ பாடெட்: 1934ஆம் வருஷம் காடலோனியாவில் எழுந்த கலகத்தை அடக்கியவன். கலகத்திற்குக் காரணமாயிருந்த லூயி கொம்பனிஸ் என்பவனை முப்பது வருஷ சிறைவாசத்திற்கு அனுப்பிய பெருமை இவனுடையதே. துடிளந ளுயதேரசதடி - ஜோஸே ஸான்ஜுர்ஜோ: பாசிஸ்ட் படைத் தலைவன். 1932ஆம் வருஷம் புரட்சிக்குக் கிளம்பித் தோல்வி யடைந்தவன். இவன் 1936ஆம் வருஷம் ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆகாய விமானத்தி லிருந்து விழுந்து இறந்த போது இவனுக்கு வயது 65. இவன் நிரம்ப அநுபவ முடையவன் என்றும், பாசிஸ்ட் கட்சி வெற்றியடைந்தால் ஸ்பெயின் அரசாங்கத்தின் தலைவனாக நிய மிக்கப்படலாமென்றும் சொல்லப்பட்டு வந்தது. துடிளந சுiஎநசய - ஜோஸே ரிவேரா: இவன் ப்ரிமோ டி ரிவேரா வின் மகன். ஜெர்மனியில் ‘சூறாவளிப் படை’ ஏற்படுத்தப்பெற்ற மாதிரி, ஸ்பானிஷ் படை (ளுயீயniளா ஞாயடயnஒ) யொன்றை ஏற்படுத் தினான். இவன் 1934ஆம் வருஷம் ஹிட்லரைக் கண்டு பேசியதாகவும் சொல்லப்படுகிறது. ஷ்யஅடிசய - ஜமொரா: அல்பான்ஸோ மன்னன், 1931ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, தனது அரசுரிமையை விடுத்துச் சென்ற பிறகு, ஸ்பெயினில் ஏற்பட்ட தற்காலிகக் குடியரசு அர சாங்கத்தின் தலைவனாயிருந்தவன். பிறகு சட்டபூர்வமாக ஸ்திரப்படுத்தப்பட்ட குடியரசின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். இந்தப் பதவியை 10-12-1931 முதல் 6-4-1936 வரையில் வகித்தான். பிறகு, இவன் பார்லிமெண்டின் பெரும் பான்மையான வாக்குகளால் விலக்கப்பட்டான். (பக்கம் 55) இவன் அரசியலில் பிற்போக்கான கொள்கை கொண்டவன். இவன் வெளிக்குக் குடியரசு வேஷம் போட்டுக் கொண்டிருந்தானாயினும் உண்மையில் அதன் முற்போக்குக்குத் தடையாயிருந்தவன். ஹணயயே - அஜனா: குடியரசுக் கட்சியில் தீவிரவாதி. 1931ஆம் வருஷம் அக்டோபர் மாதத்திலிருந்து 1933ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் வரையிலும், 19-2-36 முதல் 10-5-36 வரையிலும் குடியரசு அரசாங்கத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன். 10-5-36இல் குடியரசின் இரண்டாவது தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். ஹணயேச - அஸ்நர்: சிறந்த கப்பற்படைத் தலைவன். அல் பான்ஸோ மன்னனின் கீழ் 18-2-31 முதல் 13-4-31 வரை பிரதம மந்திரியாயிருந்தான். க்ஷநசநபேரநச - பெரெங்குயர்: முடியரசைத் தாங்கி நின்ற ஒரு சேனா வீரன். 30-1-30 முதல் 18-2-31 வரை முடியரசாங்கத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன். ஊயடஎடி ளுடிவநடடி - கால்வோ ஸோடெலோ : பாசிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவன். ரிவேராவின் சர்வாதிகார அரசாங்கத்தில் பொக்கிஷ மந்திரியாயிருந்தவன். 13-7-36இல் கொலை செய்யப் பட்டான். இதுவே, 1936ஆம் வருஷம் ஜூலை 17ஆம் தேதி ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணமாயிருந்தது. ணுரசைடிபய - குவிரோகா.: குடியரசுக் கட்சியில் தீவிரவாதி. கலீஷியா மாகாணத்தில் நிரம்பச் செல்வாக்குடையவன். 13-5-36 முதல் 18-7-36 வரை உள்நாட்டு மந்திரியாயிருந்தான். முக்கிய சம்பவங்கள் 1898 ஸ்பெயின், குடியேற்ற நாடுகளை இழந்தது. 1909 பார்ஸிலோனாவில் குழப்பம் ஏற்பட்டது. 1923 பிரிமோ டி ரிவேரா, ஸ்பெயினின் சர்வாதிகாரியானது. 1930 பிரிமோ டி ரிவேரா சர்வாதிகாரப் பதவியினின்று விலகியது. 1931 குடியரசு ஸ்தாபிதம். அல்பான்ஸோ அரசன் ஸ்பெயினை விட்டுச் சென்றது. ஜமொரா, குடியரசுத் தலைவனானது. 1932 காடலோனியாவுக்கு மாகாண சுதந்திரம் ஓரளவு அளிக்கப் பட்டது. 1933 பாசிஸ்டுகளின் பிரசாரம். லெர்ரு பிரதம மந்திரியானது. 1934 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். அடக்குமுறை ஆர்ப்பாட்டம். 1935 லெர்ரு-ரோப்ளெஸ் கூட்டுறவின் ஆதிக்கம். 1936 பார்லிமெண்ட் தேர்தல். பொதுஜன முன்னணிக் கட்சியின் வெற்றி. ஜமொரா, குடியரசுத் தலைமைப் பதவியினின்று இறக்கப்பட்டது. அஜனா குடியரசுத் தலைவனானது. கால்வோ ஸோடெலோவின் கொலை. ஜூலை மாதம் 17ஆம் தேதி பாசிஸ்டுகளின் குழப்பம். 1937 ஸ்பெயின் குழப்பத்தில் வல்லரசுகள் தலையிடக் கூடா தென்று போட்ட திட்டம் ஓரளவு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. குடியரசு அரசாங்கத்தார் கட்டாய ராணுவச் சேவகத்தை அமுலுக்குக் கொண்டுவந்தது. பொதுக் குறிப்புகள் பழக்க வழக்கங்கள்: ஸ்பெயின் பல சமூகத்தவர்கள் அடங்கிய ஒரு நாடாக இருப்ப தனால், ஸ்பானியர்களின் பொதுவான பழக்க வழக்கங்கள் இன்னவை யென்று நிர்ணயித்துக் கூறிவிடுவதற்கில்லை. ஆனால் பொதுவாக, இவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைப் பொருட் படுத்தாமல் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்குத் தங்கள் பழமையிலே ஒரு பெருமையும், எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கையும் உண்டு. குரூரமான விளையாட்டுகளில் நிரம்பப் பிரியமுடையவர்கள். காளை மாடுகளைக் கொழுமையாக வளர்த்து அவற்றோடு சண்டையிடுவது இவர்களுடைய முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. இத்தகைய மாட்டுச் சண்டைகள், திருவிழாக்கள் போல் நடைபெறும். ஆயிரக்கணக்கான ஜனங்கள் வேடிக்கை பார்க்கக் கூடுவார்கள். எப்படி சிலர் குதிரைகளைக் கருத்துடன் வளர்க்கிறார் களோ அப்படியே, ஸ்பெயினில் காளை மாடுகளை வளர்ப்பார்கள். இதற்காகப் பணக்காரர்கள் ஆயிரக்கணக்கான பணத்தைச் செல வழிப்பார்கள். காளை மாடுகளைப் போலவே குதிரைகளையும் வளர்ப்பார்கள். இந்தமாதிரியான விளையாட்டுகளுக்காக, வருஷத்தில் சுமார் மூவாயிரம் பிராணிகள் பலியாகின்றன. ஆனால் சென்ற சில வருஷங்களாக, இந்த ரத்தவெறி பிடித்த விளையாட்டுகள் புறக் கணிக்கப்பட்டு வருகின்றன. ஸ்பானியர்கள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவார்கள். எதிலும் மிதத்தன்மை யுடையவர்கள். ஆகாரத்தில் அதிகமான வெள்ளைப் பூண்டைச் சேர்த்துக்கொள்வார்கள். ஆகாரம் முதலிய வற்றில் மிதமாக இருந்தாலும், ஸ்பானியர்கள் பொதுவாக தேக பலமும் மனோ உறுதியும் கொண்டவர்கள். எதனையும் எளிதில் விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். ஆனால் அடிக்கடி மாறுதல் களை விரும்புவார்கள். அரசியல், இலக்கியம், சமூக வாழ்க்கை முதலிய ஏதேனுமொன்றில் அடிக்கடி இவர்கள் மாற்றங்களைக் காணவே ஆசை கொள்வார்கள். ஆண்களும் பெண்களும் நிரம்பப் பொறுமையுடையவர்கள். குடி தண்ணீர் அகப்படாத கிராமங்களில் பெண்கள் தலைமேல் பெரிய மண் ஜாடிகளை வைத்துக் கொண்டு மைல் கணக்கான தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருவார்கள். இங்ஙனமே ஆண்களும் ஜீவனோபாயத்திற்காக மைல் கணக்காக நடந்து செல்லப் பின் வாங்கமாட்டார்கள். முக்கிய நகரங்கள்: மாட்ரிட் - ஜனத்தொகை சுமார் 10 லட்சம் பார்ஸிலோனா - ஜனத்தொகை சுமார் 11 லட்சம் வாலென்ஷியா - ஜனத்தொகை சுமார் 3ஙூ லட்சம் செவில்லே - ஜனத்தொகை சுமார் 2ஙூ லட்சம் மலாகா - ஜனத்தொகை சுமார் 2 லட்சம் ஸர்கோஸா - ஜனத்தொகை சுமார் 1ஙு லட்சம் மூர்ஷியா - ஜனத்தொகை சுமார் 1¾ லட்சம் பில்போ - ஜனத்தொகை சுமார் 2 லட்சம் ஐம்பதினாயிரம் பேருக்கு அதிகமான ஜனத் தொகையுடைய நகரங்கள் மொத்தம் 18 உண்டு. தேசீயக்கொடி: சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய மூவர்ணங் களும் வரிசையாகக் கிழக்கு மேற்கில் தீட்டப்பெற்றிருக்கும். குடியேற்ற நாடுகள்: ஆப்ரிக்கா கண்டத்தின் சமுத்திரக்கரை யோரமாக வுள்ள சில சிறிய தீவுகள் ஸ்பெயினுக்குச் சொந்தம். இவையனைத்தையும் சேர்த்த மொத்த விஸ்தீரணம் 82,400 சதுர மைல். மொத்த ஜனத் தொகை 275,000. இவற்றுள் முக்கியமானது, ஆப்ரிக்காவின் வடக்கேயுள்ள பொராக்கோ. இங்கே ஸ்பானியர் களும், பிரெஞ்சுக்காரரும் சேர்ந்து ஆதிக்கம் செலுத்து கிறார்கள். மொராக்கோ வாசிகள், ஸ்பெயினுக்கு விரோதமாகப் படைதூக்கி 1920ஆம் வருஷம் முதல் 1926ஆம் வருஷம் வரை போர் புரிந்தார்கள். இவர் களின் தலைவனான அப்துல் கரீம், கடைசியில் பிரெஞ்சுக் காரருடைய ஆயுதபலத்திற்கு முன்னர் சரணடைந்து விட்டான். இதன் பிறகு, ஒரு பாகத்தில் ஸ்பானியரும், மற்றொரு பாகத்தில் பிரெஞ்சுக்காரரும், பெயரளவில் ஒரு சுல்தானை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்து கிறார்கள். நாணயம்: பெஸேடா, ஸெண்டிஸ்மோ முதலியன நாணய வகைகள். நூறு ஸெண்டிஸ்மோக்கள் கொண்டது ஒரு பெஸேடா. பெயர்கள்: ஸெனோர் - ளுநnடிச- ஸ்ரீமான் என்பதுபோல. கோர்டெஸ் - ஊடிசவநள - ஊடிரசவள என்பதன் திரிபு. ஸ்பெயின் பார்லிமெண்டுக்குப் பெயர். கட்சிகள்: அபேதவாதக்கட்சி - ளுடிஉயைடளைவ ஞயசவல குடியரசுக்கட்சி - சுநயீரடெiஉயn ஞயசவல பொதுவுடமைக்கட்சி - ஊடிஅஅரnளைவ ஞயசவல இந்தக் கட்சிகளிலேயே தீவிர வாதிகளென்றும் மிதவாதி களென்றும் பல பிரிவினர், தனித்தனிக் கிளைக் கட்சிகளாக வகுத்துக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் தனித்தனிக் கட்சிகள் வகுத்துக் கொண்டி ருக்கின்றனர். தீவிர நோக்குடைய எல்லாக் கட்சிகளும் சேர்ந்ததே ‘முன்னணிக் கட்சி’ - ஞநடியீடந’ள குசடிவே. இவை தவிர கன்ஸர்வேடிவ் கட்சி, ஜனநாயகக் கட்சி, தேசீயக் கட்சி முதலியன இருக்கின்றன. இவை முதலாளிகள், பாதிரிமார்கள், நிலச்சுவான்தார்கள் முதலியோருடைய கொள்கைகளை ஆதரிக்குங் கட்சிகள். நமது ஆர்யா வர்த்தம் புராதன காலம் ஆர்ய புத்திரா! நிமிர்ந்து பார். ஏன் சோர்ந்து கிடக்கிறாய்? அமோகமான செல்வம் கொழித்த உனது நாடு, இப்பொழுது ரத்தப் பசையற்று எலும்புந்தோலுமாகக் கிடக்கிறதே யென்று சிந்திக் கின்றாயா? உன் தாயார் விடுகின்ற கண்ணீரும், உன் சகோதர சகோதரிகள் போடுகிற கூச்சலும் உன் மனதைத் துளைக்கின்றனவா? வாஸ்தவம்; எங்கு நோக்கினும் ஒரே போராட்டந்தான். அரசியல், மதம், பொருளாதாரம் முதலிய எந்த இலாகாவிலும் முரண்பட்ட சக்திகள் பல மோதிக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள்; பிறிதொரு பக்கம் மதத்தின் பெயரால் மண்டைகள் உடைபடுகின்றன; இன்னொரு பால் ஜமீன்தார்கள், சுதேச மன்னர்கள், பெரிய தொழில்களை வைத்து நடத்தும் முதலாளிகள் முதலியோர் போர்க் கோலம் பூண்டு நிற்கின்றார்கள். அந்தப் பக்கம் பார், வேலையில்லாத படித்த வகுப்பினரின் பட்டாளத்தை. அவர்களுடைய முகத்தில் ஏதேனும் ஜீவ களை இருக்கிறதா? படித்தவர்கள் கதி இப்படி யென்றால், படியாதவர்கள் என்று கருதப்படுகிற கிராம ஜனங்கள் எந்நிலையிலிருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்? ஆகாயத்தை ஒரு முறை பார்க்கிறார்கள்; உடனே பூமியை நோக்குகிறார்கள்; மறுக்ஷணம் கூரை யில்லாத தங்கள் வீட்டின் மீதும் திருஷ்டி படுகிறது. இங்ஙனம் பார்த்துப் பார்த்து, அவர்களையு மறியாமல் அவர்களுடைய வாயிலிருந்து ‘கடவுளே! எங்களை ஏன் பிறப்பித்தாய்?’ என்ற வார்த்தைகள் வெளிவருகின்றன. இவைகளைப்பார்த்து உன் மனம் கலங்கியிருக்கிறதா? கலங் காதே. எத்தனை நாட்களுக்கு இந்த அவதிக் கோலம் என்று ஏங்கு கிறாயா? ஏங்காதே. இவையெல்லாம் பிரபஞ்ச இதிகாசத் திரையிலே ஒரு க்ஷணத் திற்குள் வந்து போகிற சில்லரைக் காட்சிகள்; பிரசவத் திற்கு முன் ஒரு தாய் அடைகிற வேதனைகள்; சோறு பதமாவதற்கு முன் உண்டாகிற கொதிகள். நவபாரதம் பிறக்கப் போகிறது. அதற் காகத் தான் இத்தனை அவஸ்தைகள்! அந்த நவ பாரதத்தை எதிர்பார்த்து, உனது நிகழ்காலக் கவலை களை மறந்துவிடு. அப்பொழுதுதான் இன்னும் நீண்ட நாளைக்கு நீ வாழ முடியும். அந்த நவ பாரத விஜயத்திற்காக உன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டாமா? இப்பொழுது முதலே நீ ஒத்திகை நடத்திப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதோ பார், காந்தியையும் ஜவஹரையும். அவர்களை எத்தனை முறை ஸ்புடம் போட்டுப் பார்த்துவிட்டார்கள்! ஆனாலும் அவர்கள் முகத்திலே என்ன புன் சிரிப்பு! ஏன்? நவ பாரதத்தின் வருகையிலே அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை! மகனே! உலகத்தில் வாழாதே. உலகத்திற்காக வாழ். இது தான் நாகரிகம். நாகரிகம் என்ற சொல்லுக்கு என்னென்னவோ வியாக் கியானங் களெல்லாம் சொல்லுகிறார்களே அவையெல்லாம் பச்சைத் தண்ணீருக்குப் பாலைவனத்திலே அலைகிற மாதிரி. இந்த இரண்டு வாக்கியங்களிலேதான் நாகரிக விளக்கு எரிகிறது. உனது மூதா தையர்கள் இந்த விளக்கைத் தான் ஏற்றினார்கள். இந்த விளக்கு வெளிச்சத்தில் உலகத்தை வாழ வைத்தார்கள். அப்படியானால் உடனே இந்த விளக்கை ஏற்று, நவபாரத தரிசனம் உனக்கு நிச்சயம் கிடைக்கும். கொஞ்சம் திரும்பு. உன்னைப் பழைய இதிகாச உத்தியான வனத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அப்பொழுதுதான் நவீன இதிகாச உத்தியானவனம் எப்படி அமைய வேண்டுமென்பதும், இப்பொழுது எந்த விதமான கட்டாந் தரையிலிருக்கிறோம் என்பதும் உனக்கு நன்றாகத்தெரியும். ஆரம்பத்தில், உனது தாய் நாட்டைப்பற்றி, அதன் புரா தனத்தைப்பற்றி அந்நியர்கள் புகுத்தியுள்ள கருத்துக்களைத் தூர எறிந்துவிடு. சிறிது சிந்தித்துப் பார்த்தாயானால் அவர்களுடைய நன்மைக்குத்தான் இப்படிச் செய்திருக் கிறார்கள் என்பது தெளி வாகும். ஆகையால் அவைகளைப் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். ஆர்யமாதா - பாரததேவி - எத்தனை வயதுடையவள் என்று எந்தச் சரித்திரக்காரனும் இன்னும் துணிந்து கூறவில்லை. எண்ணரிய பிராயத்தினளான அவளுடைய வாழ்க்கையில் எத்தனையோ ஜாதியார் வந்து போயிருக்கின்றனர். படையெடுப்புகளும் போர்களும் எத்தனையோ? சில சமயங்களில் அவளுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற் பட்டிருந்திருக்கிறது. இன்னும் சில சமயங்களில் அவள் நரம்புகள் முறுக்கேறியிருந்திருக்கின்றன. ஒற்றுமைப் பட்ட சாம் ராஜ்யத்தை யும், பரஸ்பர போராட்டங்களிலேயே காலங்கழித்து வந்த பல சிறுசிறு ராஜ்யங்களையும் அவள் மாறி மாறிப் பார்த்திருக்கிறாள். ஆனால் அவள் எப்பொழுதும் ஆர்ய மாதாவாகவே இருந்திருக் கிறாள். கால வேற்றுமையினால் அவள் சீலங் குன்றவில்லை; அவள் ஆத்மா அழியவில்லை. அவள் உதரத்திலிருந்து கோடானு கோடி மக்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் அவள் மீது அவ்வப்பொழுது படிந்த மாசுகளைத் துடைத்திருக்கிறார்கள்; அவள் திருவடியில் புகழ் விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள். ஆனால் யாருமே அவளுடைய வயதை நிர்ணயித்துக் கூறும் துணிச்சலான காரியத்தில் இறங்கவில்லை. அவள் என்று பிறந்தாளென்று எந்தச் சரித்திரக்காரனாலும் ஊகிக்க முடியாது. அவளுடைய இறுதி நாள் எப்பொழுது என்று கூறுகிற தைரியம் எந்தத் தீர்க்கதரிசிக்கும் உண்டாகாது. இந்தத் திருஷ்டியிலேயே பாரதவர்ஷத்து இதி காசத்தை நாம் படிக்க வேண்டும். பிரபஞ்ச இதிகாச மேடையில் இன்று நேற்றுத் தோன்றி, மனிதனாக நடிக்கிற விஷயத்தில் இன்னும் கற்றுக் குட்டிகளாகவே இருக்கிற, நாகரிக வேஷப் பொருத்தங்கூட இன்னும் சரியாக அமையாத ஐரோப்பியர்கள், தங்களுடைய குறுகிய பார்வையையும், பக்குவமடையாத தங்கள் மனத்தையும் நிறுவைகளாக வைத்துக் கொண்டு நமது தாய் நாட்டுச் சரித்திரத்தை நிறுத்துப் பார்க்கிறார்கள். என்ன மூடத்தனம்! கிறிஸ்து பிறப்பதற்கு 1200 வருஷங்களுக்கு முன்னர் ருக்வேதம் பாடப் பெற்றது என்று ஒருவன் கூறுகிறான். இல்லை; இல்லை; கிறிஸ்து பிறப்பதற்கு 1800 வருஷங்களுக்கு முந்தியே மஹாபாரதத்து தர்ம புருஷனாகிய யுதிஷ்டிர மஹாராஜன், ராஜசூய யாகம் நடத்தினான்; அதற்கு முந்தி - எத்தனையோ நூற்றாண்டு களுக்கு முன்னர் - ருக்வேதம் பாடப்பட்டிருக்க வேண்டும்; குறைந்தது இன்றைக்கு 5000 வருஷங்களாவது இருக்கும் என்று அதனை மறுத்துக் கூறுகிறான் வேறொருவன், இப்படிப் பலதிறப்பட்ட அபிப்பிராயங் களைச் சொல்கிறார்களே தவிர ஒரு வராவது இன்ன காலத்தில் இன்னது நடந்திருக்கும் என்று திட்ட மாகக் கூறவில்லை. அப்படிக் கூறவும் இவர்களால் முடியாது. பாரத தேசத்தின் அதிர்ஷ்டவசமாக, பஞ்சாப் மாகாணத்தில், சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட மோஹன்ஜோ - தாரோ, ஹரப்பா ஞாபகச் சின்னங்கள், நமது நாட்டின் புராதனத்தை, கிறிஸ்து பிறப்பதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் இழுத்துக் கொண்டு போகின்றன. இதை மறுத்துக்கூற யாருக்கும் துணிவேற் படவில்லை. பாரதத்தின் புராதனத்திற்கு ஓர் எல்லை கட்டுகிற ஐரோப்பிய மேதாவிகளின் வாயும் கொஞ்சம் அடங்கி யிருக்கிறது. இதைப்பற்றிப் பின்னர் விரிவாகத் தெரிந்து கொள்வோம். ஆர்யர்கள், மத்திய ஆசியாவிலிருந்து கி.மு.2000 வருஷங் களுக்கு முன்னர் பாரத தேசத்திற்குள் பிரவேசித்தார்களென்றும், அதற்குமுன் திராவிடர்கள் இங்கு வசித்தார்களென்றும், இவர் களுக்கு முன்னால் கொலேரியர்கள் வசித்திருக்க வேண்டுமென்றும், இவர்கள் ஒருவரை யொருவர் விரட்டியடித்து விட்டுத் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்களென்றும் என்னென்னவோ கூறுகிறார்கள். உலகத்திலே மத்திய ஆசியாவும், மங்கோலியா வுந்தான் மானிடர்களை உற்பத்தி செய்கிற ஸ்தலங்களா? நாகரிக வித்து முளைப்பதற்கு இங்கே தான் நல்ல மண் இருக்கிறதா? ஆர்யர்கள் பிரவேசிப்பதற்கு முன்னர், பாரதவர்ஷம் இருள் மூடிய காடாக இருந்ததா? எத்தனை வருஷ காலம் அப்படியிருந்தது? இந்த இருள் மூடிய காட்டில் மனித சஞ்சாரம் ஏற்பட்டது எப்பொழுது? இவை களுக்கெல்லாம் ஒரு காலத்தை நிர்ணயித்துக் கூற நமக்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? காலஞ் சென்ற லோகமான்ய பால கங்காதர திலகர், ஆர்யர்கள் வடதுருவத்திலிருந்து வந்தார்களென்றும், காலக்கிரமத்தில் இவர்கள் பாரததேசத்தில் வந்தபோது நல்ல நாகரிக முடையவர்களாயிருந்தார் களென்றும் கூறுகிறார். இதற்குத் தக்க ஆதாரங்களை இவர் எடுத்துக் காட்டுகிறார். ஒரு சில ஐரோப்பியர்கள், வடமேற்குக் கணவாய்களின் வழியாகவே ஆர்யர்கள் இங்கே பிரவேசித்திருக்க வேண்டும் என்கிறார்கள். வேறு சிலர் ஹிமாசலத்தின் நேர் வடக்கி லிருந்து இறங்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். இங்ஙனம் பல திறப்பட்ட அபிப்பிராயங்களைக் கூறுகிற எல்லா வித்துவான் களும் ருக் வேதத்தையே ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்! பாவம், இந்த ருக்வேதம் இவர்களிடத்திலே அகப்பட்டுக் கொண்டுதிணறுகிறது. இன்னுஞ் சிலர், திராவிடர்கள் ஆதியில் வட கிழக்கு மூலையி லிருந்து வரவில்லை யென்றும், கிழக்குச் சமுத்திரத்தின் வழியாக வந்தனரென்றும், முதன்முதல் இவர்கள் வந்திறங்கிய ஊர் தாம்லுக் என்றும், இதனாலேயே இவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப் பட்டனர் என்றும் சொல்கின்றனர். இன்னும் ஒரு சிலர், தெற்குச் சமுத்திரம் வழியாக ஒரு ஜாதியார் தெற்கே குடியேறினார் களென்றும் இவர்களே பிற்காலத்தில் நாகரிகமுள்ள திராவிடர் களானார்களென்றும் சாதிக்கிறார்கள். இந்த வாதங்களிலே நாம் பிரவேசித்து விட்டோமானால் கால் சறுக்கி விழுந்து விழுந்து எழுந் திருக்க வேண்டியது தான். மத்திய ஆசியாவில் வசித்துக் கொண்டிருந்த ஹிட்டேடிஸ் என்ற ஒரு வகை ஜாதியினரின் மன்னனுக்கும், பார்த்தியா தேசத்திலே வசித்த மிட்டானி ஜாதி மன்னன் ஒருவனுக்கும் கி.மு. 1400ம் வருஷத் தில் ஓர் உடன்படிக்கை நடைபெற்றிருக்கிறது. அதில் ஹிந்துக்களின் இயற்கைத் தெய்வங்களாகிய மித்திரன், வருணன், இந்திரன் முதலிய பெயர்கள் வருகின்றன. இதனால் இந்தக் காலத்திற்கு முன் குறைந்தது இன்றைக்கு 3500 வருஷங்களுக்கு முன் ஆர்யர்களுடைய நாகரிகமும் மதமும் மத்திய ஆசியாவுக்கு வடக்கே பரவியிருந்திருக்கிறதென்பது நன்கு புலப்படுகிறது. அப்படியானால் கி.மு. 2000 வருஷத்தில் அதிக நாகரிகமில்லாத நிலையில் பாரத வர்ஷத்துக்குள் பிரவேசித்த ஆர்யர்கள், சுமார் ஐந்நூறு அறுநூறு வருஷங்களுக்குள் நாகரிக முதிர்ச்சி பெற்று இந்நாட்டிலே நன்றாக வேரூன்றிக் கொண்டு, பிறகு வெளி நாடுகளிலும் தங்கள் நாகரிகத்தைப் பரப்பக் கூடிய உன்னத ஸ்திதிக்கு வந்து விட்டார்களா? இன்னும் கி.மு. 3000 வருஷங்களுக்கு முன்னரிருந்தே பாபி லோனியாவுக்கும் பாரத நாட்டுக்கும் வியாபாரப் போக்குவரத்து இருந்திருக்கிறது. கி.மு. 2000 வருஷங்களுக்கு முன்னர், எகிப்து தேசத்தில் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது இறந்துபோன அரசர்களுடைய உருவங்களை, நமது நாட்டிலிருந்து தயாரித் தனுப்பப்பெற்ற மெல்லிய மஸ்லின் துணிகளினாலேயே அலங்கரித்துக் கல்லறைகளில் அடக்கம் செய்துவந்தார்கள். ஐரோப்பிய வித்வான் களுடைய குறுகிய திருஷ்டியில் பார்த்தோமானால், இவை யெல்லாம் ஆர்யர்கள் பாரத வர்ஷத்திற்குள் பிரவேசித்ததற்கு முன்ன ரன்றோ நடைபெற்றிருக்க வேண்டும். இது சாத்தியமா? ஐரோப்பிய சரித்திராசிரியர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக் கெல்லாம் மத்தியமாக, கிறிஸ்து பிறந்த வருஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அதற்கு முன்னரேயே - ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னரேயே - பாரத வாசிகள், பூமியின் விஸ்தீரணத் தையும், சமுத்திரங் களின் இயல்பையும், சூர்ய சந்திராதி கிரகங்களின் சலனங்களையும் கணக்கிட்டு வைத்திருக்கிறார்களென்பதை மறந்தே விடுகிறார்கள். அப்படி இவர்கள் ஆராய்ச்சியில் கண்ட முடிவுகளை யும் கிறிஸ்து பிறந்த பிந்திய காலத்திற்கு இழுத்துக் கொள்கிறார்கள்; அதற்கு முன்னர் நம்மவர்கள் நாகரிகர்களாயிருந்தார்கள் என்று ஒப்புக்கொள்ள மனங்கொள் கிறார் களில்லை. ஆகையால், நம்பீ! இந்த விஷயங்களில் ஐரோப்பிய வித்வான் களின் அடிச் சுவடுகளைப் பின் பற்றாதே. இன்னொரு முக்கியமான விஷயத்தை நீ மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது மாத்ரு பூமிக்கு ‘இந்தியா’வென்று பெயரிட்டது அந்நியர்கள்; நாமல்ல. சிந்து என்ற நதியின் பெயரி லிருந்து இந்தியா வென்ற பெயர் வந்தது. இன்றைக்குச் சுமார் 2500 வருஷங்களுக்கு முன்னிருந்துதான் இந்தப் பெயர் வழக்கிலே வந் திருக்கிறது. பாரசீகர்கள் ஒரு காலத்தில் தங்கள் நாட்டெல்லையை விஸ்தரித்துக் கொண்டு வந்த காலத்தில், சிந்து நதியின் மேற்குப் பிரதேசம் வரை வந்தார்கள். இதனைத் தங்கள் பாரசீக ஏகாதி பத்தியத்தோடு சேர்த்துக் கொண்டார்கள். டேரியஸ் (கி.மு. 522-486) என்ற பாரசீக மன்னன் காலத்தில் சாசனமொன்றில், சிந்து நதியின் மேற்குப் பக்கத்திலுள்ள பிரதேசம் மட்டும் இந்தியா வென்று அழைக்கப்பட்டிருக்கிறது. அலெக்ஸாந்தருடைய படை யெடுப்புக்குப் பின்னரே, பாரத தேசம் முழுவதையும் இந்தியா என்று அழைக்கிற சம்பிரதாயம் மேனாட்டிலே ஏற்பட்டது. ஹெரோ டோடஸ், தேசி யாஸ், டாலமி, மெகாஸ்தனேஸ் முதலிய கிரேக்க ஆசிரியர்கள், இந்தியா என்ற பெயரை மேனாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற தொண் டிலே அதிகமாக ஈடுபட்டவர்கள். புராதனக் கிரந்தங்களில் நமது ஜன்ம பூமியை, பாரதவர்ஷம், ஜம்புத்வீபம், ப்ரஹ்மாவர்த்தம், ஆர்யா வர்த்தம் என்ற பல பெயர் களால் அழைத்திருக்கின்றனர். இந்தியா வென்ற பெயரில் விட, இந்தப் பெயர்களில் என்ன கம்பீரம் ஒலிக்கிறது? எவ்வளவு அர்த்த புஷ்டி இருக்கிறது? ஆனால் வழக்க தோஷத்தினால் நாம் இந்தியா வென்றே அழைத்து வருகிறோம். பாரத தேச வாசிகளுக்குச் சரித்திர ஞானமே கிடையாதென்றும், சரித்திர லட்சணத்திற்குட்பட்ட நூல்களெதுவும் இல்லையென்றும் சில ஐரோப்பிய வித்வான்கள் துணிச்சலாகக் கூறுகிறார்கள். ஓர் அரசன் பிறந்த தேதியையும், இறந்த தேதியையும் குறிப்பிட்டு விட்டால் அது சரித்திர மாகிவிடும் என்று இந்த ஐரோப்பிய பண்டிதர்கள் நினைக்கிறார்கள். என்ன குறுகிய திருஷ்டி! ஒரு ஜாதியின் உன்னதி, அவனதி, அந்தந்தக் காலத்தில் தோன்றிய மகான் களின் மகத்வ பூர்ண செயல்கள், அவர்கள் தங்கள் சந்ததி யாருக்கு வைத்து விட்டுப் போயிருக்கும் அழியாத பொக்கிஷங்கள் இவைகளை யெல்லாம் பற்றிக் கூறுவன சரித்திரங்களாகாவோ? மனிதனுடைய அத்யாத்மிக வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து, அவனை பவ சாகரத்திலிருந்து கடத்திச் செல்வது இந்த இதிகாச ஞானமன்றோ? எந்த தேசத்தில் மஹான்கள் அவதரிக்க வில்லையோ, அவர்களுடைய உத்கிருஷ்டமான கைங்கர்யங்கள் மானிட ஜாதியை ஒருபடி முன்னேற்றுவிக்கவில்லையோ, அந்த தேசம் சரித்திரப் பிரசித்தியுடையதாகாது. அதற்குச் சரித்திரமும் இராது. ஆனால் நமது நாட்டிற்கோ, நாட்டிலோ சரித்திரம் இல்லை யென்றால் பரிகசிக்கத்தக்க விஷயமல்லவா? இந்தியர்களுக்குச் சரித்திர ஞானமில்லையென்பன போன்ற விதண்டாவாதங்களைக் கிளப்புவதற்குக் காரணம், ஆள்கிற ஜாதியார் என்கிற மமதா புத்தி தான். ஆளப்படுகிற ஜாதியாருக்கு ஒரு மகத்துவத்தையும் புராதனப் பெருமையையும் கொடுத்து விட்டால், ஆள்கிற ஜாதியாருக்கு என்ன கௌரவம் இருக்கிறது? தவிர, இந்திய சரித்திரத்தைப் பற்றி இதுவரை எழுதி யுள்ளவர்கள் பெரும்பாலோர் ஐரோப்பியர்கள்; அல்லது அவர்களிட மிருந்து அடிமைப் புத்தியை அப்படியே இரவல் வாங்கிக் கொண்ட இந்திய மேதாவிகள். இவர்களுடைய திருவாக்கு களிலிருந்து பாரத ஜாதியின் ஸப்யதையைப்பற்றின கோஷம் வெளி வருமானால் அஃது ஆள்கிற ஜாதியாருக்கு எவ்வளவு கேவலம்! ஐரோப்பிய வித்வான்களுடைய இந்தக் குறுகிய திருஷ்டி யிலேயே பார்ப்போம் பாரத ஜாதிக்குச் சரித்திரம் இல்லையா வென்று? நமது நாட்டில் முற்காலத்தில் ஒருவன் பூரண பாண்டித்யம் பெற்றவன் என்று பெயரெடுக்க வேண்டுமானால் அவனுக்கு இதி காச ஞானமும் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது. இதிகாசம் என்ற வடமொழிச் சொல்லுக்கு சரித்திரம் என்பது விரிந்த பொருள். இப்பொழுது நாம் ஒரு கலையை சாஸ்திரீய முறையில் ஆராய்ச்சி (ளுஉநைவேகைiஉ சுநளநயசஉh) செய்வதாகச் சொல்கிறோமே, அதே முறையில் முற்காலத்திலும் இதிகாச ஆராய்ச்சி நடை பெற்று வந்திருக்கிறது. சாந்தோக்ய உப நிஷதத்திலே சனத் குமாரருக்கும் நாரத மஹரிஷிக்கும் வாதம் நடைபெறுவதாக இருக்கிற பாகத்தில் பின்கண்ட வாக்கியங்கள் காணப்படுகின்றன:- ஹே பகவன்! நான் ருக், யஜுர், ஸாம, அதர்வ, இதிகாச, புராண, வேதார்த்த பிரதிபாதகக் கிரந்தங்களையும், பித்ரு வித்தை, ராசி, தெய்வ, நிதி, வாகோவாக்ய, ஏகாயன வித்தைகளையும், தேவ வித்தை, ப்ரஹ்மவித்தை,பூதவித்தை,நக்ஷத்ரவித்தை, ஸர்ப்ப, தேவ, ஜனவித்தைகள் முதலியவைகளையும் அத்யயனம் செய்திருக்கிறேன்.1 இங்ஙனம் க்ருஹ்ய, ஸுத்ரம், பாரதம் முதலிய நூல்களிலிருந்தும், இதிகாச அத்யயனம் நமது நாட்டில் பூர்வ காலத்திலிருந்து இருந் திருக்கிற தென்பது நன்கு தெரிகிறது. விஷ்ணு புராணத்தை நாம் சிறிது ஆராய்ந்து பார்த்தோமானால், அநேக அரச வம்சாவளிகள் இத்தனை இத்தனை வருஷங்கள் ஆண்டனவென்று நன்றாகத் தெரிகிறது. நந்த வமிசத்தின் அழிவும், இதன் மீது மௌர்ய வம்ச ஸ்தாபனமும், அசோக மகா ராஜன் சக்ர வர்த்தியாக இருந்து ஆண்டதும் இதுபோன்ற பல வரலாறுகளும் இதில் கூறப்பட்டிருக்கின்றன. இன்னும் பாரத தேசத்தின் விஸ்தீரணங் களின் வருணனையும் இதில் காணப்படு கின்றது. இப்படியே கந்த புராணத்திலும், பாகவதத்திலும் சரித்திர நுணுக்கங்கள் பல நமக்குக் கிடைக்கின்றன. ராமாயணமும் மஹா பாரதமும் நமக்குப் பெரிய சரித்திரப் பொக்கிஷங்களல்லவா? காளி தாஸனுடைய ‘மேகஸந் தேசம்’ என்ற நூலைப்படித்தால் இந்தியாவில் என்னென்ன மலைகள், ஆறுகள் நகரங்கள் முதலியன இருந்தன வென்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த வடமொழிப் புலவன், தான் வரைந்த ரகுவம்சம் என்ற காவியத்தைச் சரித்திர ஆதாரங்கள் இல்லாமலா எழுதினான்? பத்துப் பாட்டினுள் ஒன்றான பட்டினப் பாலையொன்று மட்டுமே, முற்காலத்துத் தமிழ் நாட்டின் பொருளா தாரச் செழிப்பை நமக்கு நன்கு அறிவுறுத்த வில்லையா? ‘முன்னாளிடையே இந்நாடாண்ட, காவலர் பல்லோர் பாவலர் பல்லோர், மாசரிதத்தை யாசற விளக்கும்’ சங்க நூல்கள் அத்துணையும் சரிதங்களல்லவா? இவை போகட்டும். சுமார் 900 வருஷங்களுக்கு முன்னிருந்தவ னென்று ஊகிக்கப்படுகிற கல்ஹணன் என்னும் ஒரு காஷ்மீர தேசத் துக்கவி ‘ராஜதரங்கிணி’ என்ற ஒரு சரித்திர நூலை இயற்றியிருக் கிறான். இவன் கற்பனை மட்டும் நிறைந்த ஒரு கவியல்ல; உள்ளதை ஒளியாமல் சொல்லும் ஒரு சரித்திரக்காரன். இவன் காஷ்மீர தேசத்து மன்னர் பரம்பரையினரைப்பற்றித் தேதிவாரியாக அழகிய பாஷை யில் ஒரு காவியம் எழுதியிருக்கிறான். இவன், தனக்கு முன்னாலிருந்த பல சரித்திர நூல்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த ‘ராஜ தரங்கிணி’யை எழுதியிருப்பதாகக் கூறுகிறான். ‘அரச பாரம்பர்யத்தைப் பற்றி இதற்கு முன்னால் பண்டிதர் களால் எழுதப்பட்ட பதினோரு இதிகாசங்களை நான் பரிசீலனை செய்து பார்த்தேன். அதனோடு நீலமஹரிஷியால் எழுதப்பெற்ற புராணத்தையும் பார்த்தேன். பிரதிஷ்டா சாஸனங்களையும், வஸ்து சாஸனங்களையும், பிரசஸ்தி பட்டங்களையும், சாஸ்திரங்களையும் நான் ஆராய்ந்து பார்த்தேன்.’1 இவை கல்ஹணனுடைய வார்த்தைகள். இதனால் கல்ஹண னுடைய காலத்திலேயே சாஸனங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு சரித்திரங்கள் எழுதுவது பண்டிதர்களுக்கு வழக்கம் என்பது நன்கு தெரிகிறது. சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் நமது நாட்டில், ஜனங்களுடைய அன்றாட வாழ்க்கையில்கூட அரசன் எவ்வளவு அக்கரை செலுத்தி வந்தான் என்பதை அசோக மகா ராஜன் நமக்குப் பொக்கிஷம் போல் வைத்துப் போயிருக்கிற சாஸனங் களிலிருந்து நன்கு தெரிந்து கொள் கிறோமில்லையா? இதே மாதிரி தென்னிந்தியாவிலுள்ள எந்தக் கோயிலுக்குள் நாம் சென்று பார்த் தாலும், அங்கு நமது சரித்திர ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்ளக் கூடிய அமிசங்கள் பலவற்றைக் காண்கிறோம். அரசனுடைய மெய்க் கீர்த்தியைச் சொல்வது என்கிற முறையில், தமிழரசர்கள் எந்தெந்த நாடுகளை வெற்றி கொண்டார்கள் என்பது நமக்கு அறிவுறுத்தப் படுகிறது. சமுதாய நன்மைக்காகச் செல்வர்கள் தங்கள் பணத்தை எப்படி உபயோகமான வழியில் செலவழித்தார்கள் என்பதும் நமக்கு இந்தச் சாஸனங்களினால் நன்கு தெரிகின்றன. ஆனால் மகனே, நீ கேட்கலாம், நமது முன்னோர்களின் காலத்தில் இவ்வளவு ஏராளமான சரித்திர ஆதாரங்கள் இருந் திருக்குமானால், இப்பொழுது ஏன் பாரததேசத்தின் சரித்திரத்தைத் தொடர்ச்சியாகத் தெரிந்து கொள்ளக் கூடிய மாதிரி ஒரு நூல் கூட நமது கைக்கு அகப்பட வில்லையென்று? இதைப் பற்றி எழுதுவதற்கு முன்னர், பாரத ஜாதி விடுகிற கண்ணீரிலே நமது எழுதுகோலை அலம்பிக் கொண்டு விடுதல் நல்லது. அவ்வளவு வருந்தத்தக்க விஷயம் இது. பாரத நாட்டின் மீது எத்தனையோ பேர் படையெடுத்தார்கள். அநேக ஜாதியாருடைய உதைகளையும் அடிகளையும் தாங்கிக் கொண்டு கூட அவர் களுக்குத் தஞ்சம் கொடுத்திருக்கிறாள் கருணா மூர்த்தியான நமது அன்னை. நினேவா தேசத்து ஸெமிராமிஸ் என்ற ஒரு மன்னன் கி.மு.2034ம் வருஷத்தில் - அதாவது இற்றைக்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னர் - இந்தியாவின் மீது படை யெடுத்து வந்து காஷ்மீரத்து ஜம்மு பிரதேசத்தை ஆக்ரமித்துக் கொண்டானென்றும் அப்பொழுது அவனை ஓர் இந்திய அரசன் விரட்டியடித்தானென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. இந்தக் காலத்தி லிருந்து - நாலாயிர வருஷகாலமாக - நமது நாட்டின் மீது கண் வைத்து வந்திருக்கிறார்கள் அந்நியர்கள்! இவர்கள் திரும்பிச் செல் கிறபோது பொன்னையும் பொருளையும் கொண்டு போனதோடு திருப்தியடையவில்லை. இந்தியாவின் கலைஞானத்தையும் எடுத்துச் சென்று தத்தம் நாகரிகத்திலே புகுத்திக் கொண்டார்கள். இன்னும் சிலர், பாரத ஜாதியைப் பணிய வைக்க வேண்டுமென்ற ஆவலினால் நம்முடைய ஞான பொக்கிஷங்களை - ஏட்டுச் சுவடிகளை - தீயிட்டுக் கொளுத்திப் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர், இங் கிருந்து புராதனச் சின்னங்கள் பலவற்றையும் ஏராளமான கையெ ழுத்துப் பிரதிகளையும் எடுத்துச் சென்று தங்கள் நாட்டுப் பொருட் காட்சி சாலைகளிலே வைத்து ‘ஒரு நாட்டை அடிமை கொண்டதன் பயனாக எங்களுக்குக் கிடைத்த வெற்றிச் சின்னங்கள் இவை; பார்மினோ’வென்று உலகத்தாருக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள். அலெக்ஸாந்தர் மன்னன் இந்தியாவினின்று திரும்பிச் சென்ற போது, அநேக வித்வான்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போனான். இந்தப் பண்டிதர்களுடன் அநேக புராதன நூல்கள் சென்றனவென்பதில் என்ன சந்தேகம்? பேஹியான், ஹ்யூன் த்ஸாங் என்கிற சீன யாத்ரிகர்கள், இந்தியாவிலே சில வருஷ காலம் தங்கி விட்டுத் திரும்பிச் சென்றபோது, அநேக ஒட்டகங்களின் மீதும் கோவேறு கழுதைகளின் மீதும் நூற்றுக் கணக்கான ஓலைச் சுவடி களை ஏற்றிச் சென்றார்கள். பிற்காலத்தில் முகம்மதியர்களுடைய ஆக்ரமண காலத்தில், அநேக தேவாலயங்களிலிருந்த புத்தகால யங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கஜினி முகம்மது பதினேழு முறையும், முகம்மது கோரி ஒன்பது முறையும் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னர் இன்னும் பலர் வந்து போயினர். இந்தக் காலங்களில் இடிந்த கோயில்கள் எத்தனை? எரிந்த நூற் சுவடிகள் எத்தனை? யமனிடத்தில் அடைக்கலம் புகுந்து கொண்ட மக்கள் தான் எத்துணை பேர்? ஐரோப்பியர் பிரவேசித்த பிறகு, இந்தியாவினின்று அநேக கையெழுத்துப் பிரதிகள் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த நாட்டுப் புத்தக சாலையில் வைக்கப்பட்டி ருக்கின்றன. இப்பொழுதும், லண்டன், பாரிஸ், பெர்லின், நியுயார்க் முதலிய மேனாட்டுத் தலைநகரங்களிலுள்ள பொருட்காட்சி சாலை களில் புராதன இந்தியாவைப் பரிபூர்ணமாகப் பார்க்கலாம். ஆனால் இந்தியாவில், இந்தியாவைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடிய சாதனங்கள் ஒன்றுமே இல்லை. மகா துக்ககரமான விஷயம். நாம் வடமொழியிலோ, தென்மொழியிலோ பெற்றிருக்கிற பாண்டித்ய மானது அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், அல்லது நமது நாட்டுப் புராதனச் சின்னங்களை ஆராய்ந்து பார்க்கிற திறமை நமக்குண்டு என்பதை நிரூபித்துக் கொள்ளவேண்டுமானால் மேனாட்டுக்குச் சென்று ஐரோப்பிய பண்டிதர்களுடைய யோக்கியதா பத்திரம் பெற வேண்டியிருக்கிறது! இத்தகைய முட்டுக் கட்டைகள் பல நமக்கு ஏற்பட்டிருந்த போதிலும், பூர்வ காலத்து விஷயங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதிலும், நிகழ் கால சம்பவங்களைக் குறித்துக் கொள்வதிலும் நாம் அதிக சிரத்தை காட்டி வந்திருக்கிறோம். முற்காலத்து அரசர்கள் இதனை ஒரு முக்கிய கடமை யாகக் கருதி, காரியாநுஷ்டானத்தில் காட்டியிருக்கிறார்கள். சந்திரகுப்தன், அசோகன் முதலிய மௌர்ய மன்னர்களுடைய காலத்தில், ராஜ்யத்திலே நிகழ்கின்ற பல சம்பவங் களையும் சேகரிப்பதற்கென்று, தனியான அரசாங்க உத்தியோகஸ் தர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு “பதிவேதகர்கள்’ என்று பெயர். இவர்கள் அதிசூட்சும புத்தியுடையவர்களாகவும் நம்பிக்கையுடையவர்களாகவும் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இருந்தது. தமிழ் மன்னர்களுடைய காலத்தில் அரசாங்க தஸ்தவேஜு களையெல்லாம் சேகரித்து பத்திரப்படுத்தி வைப்பதற்கென்று தனி இலாகா ஒன்றிருந்தது. இதற்குப் பிரதம அதிகாரி ஒருவனும் இருந் திருக்கிறான். இவனுக்கு ‘ஓலை நாயகன்’ என்று பெயர். இதனையே நாம் இப்பொழுது ‘ரெகார்ட் ஆபிஸ்’ (சுநஉடிசன டிககiஉந) என்றும் ‘ரெகார்ட் கீப்பர்’ (சுநஉடிசன மநநயீநச) என்றும் கூறுகிறோம். சுமார் 1300 வருஷங் களுக்கு முன் இந்தியாவில் சுற்றுப் பிரயாணஞ் செய்த ஹ்யூன்த்ஸாங் என்ற சீன யாத்திரிகன், தனது யாத்திரைக் குறிப்பின் ஓரிடத்தில் பின் வருமாறு கூறுகிறான்:- ‘அவ்வப்பொழுது நடைபெறுகிற சம்பவங்களைக் குறித்து தஸ்தாவேஜு ரூபமாக வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வோர் உத்தியோகஸ்தன் இருக்கிறான். இந்த தஸ்தாவேஜுக்கு ‘நீலோ - பிச்சா (நீலபித - நீல பத்திரம்) என்று பெயர். நாட்டிலே நடைபெறுகிற நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும், துக்ககரமான சம்பவங்களும், சந்தோஷ கரமான செய்திகளும் இந்தத் தஸ்தாவேஜுகளில் குறிப்பிடப்படுகின்றன.’ இப்பொழுது அரசாங்கத்து ஒவ்வோர் இலாகாவும் அந்தந்த வருஷத்திலே நடைபெறுகிற சம்பவங்களைத் திரட்டி ‘ப்ளூ புக்ஸ்’ (க்ஷடரந க்ஷடிடிமள) - நீல புத்தகங்கள்) என்று வெளியிடுவதை நாம் நேரில் பார்க்கிறோம். வீர மகனே! பூர்வபீடிகையாக ஏன் இவ்வளவு விஸ்தரித்துச் சொல்கிறேனென்றால், ஆளப்படுகிற ஜாதியிலே பிறந்திருக்கிற ஒரு தோஷத்தினால் உன் உள்ளத்திலே படிந்திருக்கிற மாசுகளை முதலில் போக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான். அது விஷயத்தில் நீ சில விஷயங்களை முக்கியமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். வரிசையாகச் சொல்கிறேன் கேள். 1. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தினள் நந்தாய். பாரத தேசத்தின் புராதனத்தை அளந்து கூற யாருக்கும் திறமை கிடையாது. நம்முடைய குறுகிய பார்வை எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரம் பார்த்துக் கொண்டு, அதற்குப் பின்னர் ஒரு திரையைப் போட்டுவிடு. திரைக்குப் பின்னால் இன்னது இருந்தது, இன்னது நடந்திருக்க வேண்டுமென்று குயுக்திகள் பண்ணாதே. ‘தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர் களும் - இவள் என்று பிறந்தவளென்றுணராத இயல்பினள்’ என்ற பாரதி யாரின் வாக்கு சத்திய வாக்கு. 2. மத்திய ஆசியாவிலிருந்து ஆர்யர்கள் வந்தார்களென்றோ, வேறு திசையிலிருந்து திராவிடர்கள் தோன்றினார்களென்றோ சொல்லி, இரு ஜாதியினர்க்கும் பரம்பரைப் பகைமை யுண் டென்பது போல எடுத்துக் காட்டுகிற அந்நியர்களின் மயக்க வார்த்தைகளுக்கு ஈடுபட்டு, பாரத ஜாதிக்கு ஒரு கோடரிக் காம்புபோல் ஆகிவிடாதே. நமது நாட்டிலேதான் நாம் பிறந் தோம். நமது நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறோம். இன்று நேற்றல்ல; நூறாயிரக்கணக்கான வருஷங்களாக. வேறெங் கிருந்தும் நாம் வந்து குதித்து விடவில்லை. நமது நாட்டிற்குப் புண்ணிய பூமியென்றும் கர்மnக்ஷத்திரம் என்றும் பெய ருண்டு. ஏன் தெரியுமா உனக்கு? மற்றவர்களை வீழ்த்தி விட்டு நாம் வாழ வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எப்பொழுதும் இருந்த தில்லை. ‘சேரவாரும் செகத்தீரே’ என்று தான் நாம் சங்கநாதம் செய்தோமே தவிர, ‘சேரவாரும் பாரதரே’ என்று காதோடு காதாகப் பேசிக் கொள்ள வில்லை.நமது புராதனக் கிரந்தங்கள் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக் கொண்டு பார். உலகக் கண்ணாடியிலேதான் நமது வாழ்க்கை சித்திரிக்கப் பட்டிருக்கிறதே தவிர, நமது தேசம், நமது ஜாதி, நமது மதம் என்று நைந்து போகக்கூடிய கந்தல்களிலே நமது வாழ்க்கை எழுதப்படவில்லை. இப்படி உலகத்தோடு வாழ்ந்து, உலகத்தை உத்தாரணம் செய்வதுதான் நமது தர்மமா யிருந்திருக்கிறது. ஆனால் பிற்காலத்தில் இந்தத் தர்மத்தை, வரவுக்கு மிஞ்சி செலவு செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதனால் தான், செகத்தாரைத் கைதூக்கி அழைத்தது போய், செகத்தார் முன்னிலையில் கையேந்தி நிற்கிறோம். இப்படி உலக திருஷ்டி யிலே பார்த்த நாம், பிற ஜாதியாரை அடக்கி யாண்டிருப் போமா? விரட்டியடித்திருப்போமா? அதற்கு மாறாக,’ பலனை எதிர் பாராமலே பிறர்க்கு உபகாரஞ்செய்’ என்கிற உயரிய நிஷ்காம்ய கர்ம தத்துவத்தை உபதேசித்ததோடு மட்டுமன்றி, அநுஷ்டானத்திலும் கொண்டுவந்து காட்டினோமல்லவா? விலங்கு நிலையிலிருக்கப் பட்டவர்களை மனிதர்களாக் கியதும், மனிதர்களைத் தேவர்களாக்கியதும் இந்த நாட் டிலேதான். பிறமொழிகளில் இன்னும் சரியாக மொழி பெயர்க்க முடியாத சத்யம், தர்மம், அஹிம்சை, ஒழுக்கம், அருள் முதலிய சொற்கள் தோன்றியது நமது நாட்டிலேதான். இவை ஏட்டிலே காணக்கூடிய எழுத்துக்களாயில்லை; வாழ்க் கையிலே நிகழ்கிற சம்பவங்களாயிருந்தன. 3. நம்மவர்களுக்குச் சரித்திர ஞானம் இல்லையென்று யாராவது சொன்னால் அதை நம்பாதே. நமக்கு அந்த ஞானமில்லா விட்டால் இவ்வளவு காலம் உயிர்வாழ்ந்திருக்க மாட்டோம். சால்டியா, அஸ்ஸிரியா, பாபிலோனியா முதலிய புராதன நாகரிக நாடுகளைப்போல் மண்ணிலே புதைந்து போயி ருப்போம். இதிகாசம், விருத்தாந்தம், வரலாறு என்ற மொழி களுக்கு என்ன அர்த்தம்? சரித்திர ஞானம் இல்லாவிட்டால் இந்த மொழிகள் தோன்றியிருக்குமா? 4. இந்தியாவில் பல சிற்றரசர்கள் தனித்தனியாக ராஜ்யங்களை வகுத்துக் கொண்டு தனித்தனியாக ஒருவர்க்கொருவர் சம்பந்த மில்லாமல் வாழ்ந்து கொண்டு வந்தார்களென்றும், பிரிட்டி ஷாருடைய வருகைக்குப் பின்னர்தான், இந்தியா அனைத்தும் ஓர் அரசாங்க அமைப்புக்குட்பட்ட தென்றும் உன் மூளை யிலே திணிக்கப்பட்டிருக்கிற சரக்குகளையெல்லாம் எங்கே யாவது கடலிலே கொண்டுபோய்க் கொட்டிவிடு. இந்தப் பல்லவிக்குச் சரியாக நமது மேதாவிகளிற் சிலரும் தாளம் போடுகிறார்கள். தெய்வ சங்கல்பத்தினால் தான் இந்தியா, இங்கிலாந்தோடு இணைக்கப்பட்டதாம். ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதற்கு அநுமதியளிக்கிற தெய்வத்தை நமது மூதாதையர்கள் கும்பிடவில்லையே. விண்ணவரையும் மண்ணவரையும் ஒன்று சேர்த்து வாழவைக்கிற ஒரு தெய்வத்தை யல்லவோ நாம் வணங்கி வந்தோம். எங்கும் பரந்து யாவருக்கும் எவ்வித பேதா பேதமுமின்றித் தண்ணளி சுரக்கிற ஒரு பரம்பொருளையன்றோ நாம் போற்றி வரு கிறோம். பிரிட்டிஷாருடைய விஜயத்துக்கு முன்னால், உலகத்திலே யுள்ள எல்லாத் தீமைகளும் நமது நாட்டிலே குடி கொண்டிருந்த தாகவும், இவர்கள் வந்து இவைகளைத் துரத்தி, ராஜ்யத்தைச் சுபிட்ச நிலைக்குக் கொண்டுவந்தார்க ளென்றும் நமது வருங்கால சந்ததிகளின் கறை படாத உள்ளத்திலே புகுத்தப்படுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இந்தியாவில் பல மதங்கள் அநுஷ்டிக்கப்பட்டன வென்பதும் பல அரசர்கள் ஆண்டார்கள் என்பதும் உண்மை. ஆனால் சமுதாய வாழ்க்கை ஒரே படித்தாக இருந்தது. வெளிப்பார்வைக்குக் காணப் பட்ட பல வேற்றுமைகளைப் பாரம்பர்ய தர்மம், கலைஞானம், ஆஸ்திக மனப்பான்மை முதலிய சக்திகள் ஒன்று சேர்ந்து அடியிலே இறுகப்பிடித்துக் கொண்டிருந்தன. பாரததேசத்து மண்ணும், அதிலே ஓடுகிற ஜீவநதிகளும் நம்முடையனவே யென்ற எண்ணம் ஒவ்வொரு பாரத வாசியினுடைய உள்ளத்திலேயும் வேரூன்றி யிருக்கிறது. சிந்து நதியிலே ஸ்நானஞ் செய் கிறவனும், தாம்பிர பரணியிலே தலை முழுகுகிறவனும், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்ற எழு நதிகளிலும் ஸ்நானம் செய்கிற புண்ணியம் தனக்குக் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக் கொண்டுதான் நீரில் இறங்குகிறான். காசிவாசி காஞ்சி தரிசனத் திற்கு விழைகிறான். குமரியைக் கண்டவன், இமயத்தையும் நாடுகிறான். இமாசலத்தின் இருதயத்திலே இருக்கிற பத்ரிநாத nக்ஷத்திரத்தில் கோயில் கொண்டருளி யிருக்கும் கடவுளுக்குப் பூசை செய்கிறவன் ஒரு திருவாங்கூர் போத்தி. நேபாள தேசத்திலே வசிக்கிறவனுக்கு இமய மலையில் எவ்வளவு உரிமை யுண்டோ அவ்வளவு உரிமை, பொதிய மலையிலே பிறந்தவனுக்கும் அங்கே உண்டு. சுருக்கமாகச் சொல்கிற போது, பாரத நாட்டிலே இருக்கிற தேவர்கள் முப்பத்து மூன்று கோடி பேராயிருக்கலாம்; ஆனால் தெய்வம் ஒன்று தான். இந்த ஒற்றுமை உணர்ச்சி நமது நாட்டில் முற்காலத்தில் பல படித்தாகப் பரிணமித்திருந்தது. செங்குட்டுவனென்னும் சேர மன்னன், கண்ணகியின் உருவத்தைச் சிலை வடிவமாகச் சமைப்பதற்கு, இமயமலையி லிருந்துதான் கல் வரவழைத்தான். சோழன் கரிகாற் பெரு வளத்தானுடைய காலத்தில் வடமலை பிறந்த பொன்னும் மணியும், காவிரிப்பூம் பட்டினத்துக் கடை வீதிகளில் குவிந்து கிடப்பதையும், தென்னாட்டிலுண்டான பொருள்கள் இமயமலைச் சாரலுக்குச் செல்வதையும் காண்கிறோம். மஹா பாரதப் போரின்போது இரண்டு பட்சத்துச் சேனைகளுக்கும் தென்னாட்டிலிருந்த ‘சேரமான் பெருஞ் சோற்று உதியன் சேரலாதன்’ என்ற ஒரு சேர மன்னன் பல்வகை உதவிகளைச் செய்திருக்கிறான். இங்ஙனம் மதம், பொருளாதாரம் முதலிய துறைகளில் பூர்வ காலத்து இந்தியா ஒற்றுமைப் பட்டே இருந்திருக்கிறது. இனி அரசியல் துறையில் பார்ப்போம். சிறு சிறு ராஜ்யங்கள் தோன்றி, அவற்றின் அரசர்கள் ஒருவர்க்கொருவர் போரிட்டுக் கொள்ளத் தொடங்கியது மகாபாரத யுத்தத்திற்குச் சிறிது காலம் முன்னிருந்துதான். அதற்கு முன்னால், உலகத்தையெல்லாம் கட்டி யாண்ட மன்னர்கள் பலர் நமது மாத்ரு பூமியில் கொலு வீற்றிருந் திருக்கிறார்கள். இவர்கள் சமுத்திரத்தின் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் தேச தேசாந்தரங்களுக் கெல்லாம் யாத்திரை செய்து ஜனங்களுக்கு நன்மையைச் செய்தும், அன்பு முறையில் தங்கள் அதிகாரத்தை ஸ்தாபித்தும் வந்திருக்கிறார்கள், இவர்கள் இன்ன விதமான ஆசனத்தில் அமர்தல் வேண்டும், இவ்வளவு படைகளை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற விவரங்கள் நமது முந்தைய நூல்களிலே கூறப் பட்டிருக்கின்றன. இவைகளைப் பற்றி விரிவாகப் பின்னர் கூறுவேன். ஸுத்யும்னன், பூரித்யும்னன், இந்திர த்யும்னன், குவலயாச்வன், யவனாச்வன், வப்ரயச்வன், அச்வபதி, சசவிந்து, அரிச் சந்திரன், அம்பரீஷன், ப்ரஹத்ரதன், சிபி, பரதன், ராமன், பகீரதன், திலீபன், மாந்தாதா, யயாதி, அனரண்யன் முதலிய மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களுக்குச் ‘சார்வ பௌம சக்ரவர்த்திகள்’ என்று பெயர். அதாவது பூமி முழுவதும் தங்கள் ஆக்ஞா சக்ரத்தைச் செலுத்துகிறவர்கள் என்று அர்த்தம். இவர்களுக்குப் பிற்காலத்தில்- அதாவது ஐரோப்பிய வித்வான்களுடைய குறுகிய திருஷ்டியில் சரித்திர காலம் என்று எதைச் சொல்கிறார்களோ அந்தக் காலத்தில்- சந்திரகுப்தன், அசோகன், சமுத்திர குப்தன் முதலியோர் சாம்ராஜ்ய சக்ரவர்த்திகளாகச் செங்கோல் செலுத்தவில்லையா? ‘குமரியொடு வட விமயத்தொரு மொழி வைத்து உலகாண்ட’ சேர மன்னனைப் பற்றி நீ கேள்விப் படவில்லையா? இமயமலையைத் தன் நாட்டின் எல்லையாக இவன் கொண்டிருந்ததால் இவனுக்கு ‘இமயவரம்பன்’ என்ற பெயரும் வழங்கப் பெற்றது. மொகலாய மன்னர் பரம்பரையில் வந்த அக்பர், பாரத சம்ராட்டாக வல்லவோ விளங்கினான்? சத்ரபதி சிவாஜியின் லட்சியம் எதுவாக இருந்தது? அந்நியர்களுடைய ஆதீனத்திற் குட்பட்டிராத ஒரு ஹிந்துஸ்தானத்தைக் காண வேண்டு மென்பதல்லவா? ஆகையால், சிரிளஞ் செம்மால்! பாரத நாடு, பிரிட்டி ஷாருடைய பிரவேசத்திற்கு முன்னர் ஒற்றுமைப்பட்டிருந்த காலங்கள் பல உண்டு என்பதை நீ நன்கு அறிதல் வேண்டும். உலகத்தின் பூகோள படத்தை உன்னெதிரில் விரித்துப் போட்டுக் கொள். இந்தியா எங்கே யிருக்கிறதென்று பார். உலகத்தை ஒரு பசுவாக நீ கற்பனை செய்து கொண்டாயானால், இந்தியா அதன் பால் சுரக்கும் மடியாக இருப்பதைக் காண்பாய். உலகினுக்கு உயிரை யளித்தது இந்த மடிதான். பாரததேச வாசிகள் தொன்று தொட்டு கோ பாலனம் செய்து கொண்டு வந்தது இந்தக் காரணத்தினால்தான் போலும். நமது நாட்டுக் கடவுளர்கள் கூட பசுபதி யென்றும் கோபாலன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவை யனைத்தையும் நாம் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்ட போதிலும், பசுவிற்கு ஜீவஸ்தானமாக எப்படி மடியிருக்கிறதோ அப்படியே உலகத்திற்கு நாம் இருக்கிறோம். பசு கொழுமையாக இருக்க வேண்டுமானால், மடி உலர்ந்து போகாமல் இருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் வேண்டுவதன் நோக்கம் இப்பொழுது புலனா கிறதா உனக்கு? உலகம் வாழத்தான். உலகத்தை உய்விக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு தான் நாம் முற்காலத்தில் நானா திசைகளுக்கும் சென்றோம்; ஏகாதிபத்திய எண்ணத்தோடு அல்ல. மஹாபாரத யுத்த சமயத்தில், நமது தேசம் முழு வதிலும் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டு அதனால் பலஹீனப்பட்டுப்போயிருந்தது. அந்த நிலையில் கூட நமது நாட்டார், ஜாவா, சுமத்ரா, சீனா முதலிய தேசங்களுக்குச் சென்று வியாபாரஞ் செய்திருக்கிறார்கள். சென்றவிட மெல்லாம் சிறப் படைந்ததோடு, ஆங்காங்கிருந்த ஜனங்களுடைய வாழ்க்கையி லேயே ஒரு மாறுதலை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். பௌத்த காலத்திற்குப் பின்னர்கூட, மௌர்ய வம்சத்தவரும் குப்த பரம்பரை யினரும் ஆண்டு கொண்டிருந்தபோது, ரோமராஜ்யமும், கிரேக்க ராஜ்யமும் நமது நாட்டோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தன. பாரத தேசத்து மன்னர் களுக்குப் பரிசில்கள் அனுப்புவதில் பெருமை கொண்டார்கள் பச்சிம தேசத்துப் புரவலர்கள். தமிழ் நூல் களில் பொதுவாக இந்த மேனாட்டார் ‘யவனர்’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர். இந்த யவனர்கள் முற்காலத்துத் தமிழ் மன்னர்களிடத்தில் பணியாட்களாக இருப்பதிலே ஒரு பெருமை கொண்டார்கள். ஆனால் இப்பொழுது நாம் அந்நியர் பணிக்கு ஆளாகி நிற்கிறோம். ஆர்ய புத்திரா ! உன் நாட்டிலே பெருமை கொள். உனது நாட்டின் பழமையிலே புதுமையைப்பார். அதற்காக நிகழ் காலத் திலே வாழ். பதி யிழந்தும், பலனையிழந்தும், படைத்த நிதி யிழந்தும், கட்டுரை யிழக்கிலாத பெருந்தகை அரிச்சந்திரன் பிறந்த நாட்டிலே நீ பிறந்ததற்காகப் பெருமை கொள்ளவில்லையா? இந்தப் புண்ணிய பூமியிலேயல்லவா, புருஷோத்த மனான ராமச்சந்திர மகாராஜன், தந்தை சொல் காத்தற் பொருட்டு, ஈரேழு ஆண்டுகள் வன வாசஞ் செய்தது? தந்தையின் சந்தோஷத்திற்காகத் தனது இகலோக வாழ்க் கையையும் பரலோக வாழ்க்கையையும் அர்ப்பணஞ் செய்துவிட்ட பீஷ்மனுடைய வழித்தோன்றலல்லவா நீ? அஹிம்சா தர்மத்தை அரசாங்க தர்மமாக அநுஷ்டானத்தில் கொண்டு வந்த அசோக மகாராஜனை ஈன்றெடுத்தது இந்த நாடுதானே? அந்நியர்க்கு அரைக்கணமும் அடி வருடமாட்டேன் என்று உறுதி கொண்டு, காட்டிலும் மேட்டிலும் காணவும் சகியாத அவஸ்தைகளை அநுபவித்தான் இருபத்தைந்து வருஷ காலம். யார்? மஹாராணா பிரதாப சிம்ஹன். அவனைப்பற்றி க்ஷத்ரிய ரமணிகள் பாடுகிற இசை இன்னும் உன் செவியில் விழவில்லையா? மகாராணா சங்கனைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறாயா? யுத்த களத்திலே மூர்ச்சையற்று விழுந்து கிடந்தபோது அவன் தேகத்தில் எண்பது இடங்களில் காயங்கள் இருந்தன! இப்படிப்பட்ட தியாகிகள் அவதரித்த நாட்டிலே நீ பிறந்திருக்கிறாய். என்ன பாக்கியம் உனக்கு? ஆசியாவும் உலக சமாதானமும் வாசகர்களுக்கு (முதல் பதிப்பு) உலகத்திலுள்ள எந்த ஒரு நாடும் இனி தனித்து வாழ முடியாது. சுதந்திரமாக வாழ்தலென்று சொன்னால் தனித்து வாழ்தல் என்ற அர்த்தம் இனி செல்லுபடியாகாது. மற்ற நாடுகளின் மீது நம்பிக்கை கொள்ளுதல், மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்தல், இவைகளின் மூலந்தான் இனி எந்த ஒரு நாடும் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு இன்றியமையாது வேண்டப் படுபவை, மற்ற நாடுகளைப் பற்றிய அறிவு, மற்ற நாடுகளுடன் தொடர்பு ஆகியவையேயாம் ஆசிய நாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அவைகளோடு தொடர்பு கொள்ள வேண்டு மென்ற ஓர் ஆசையை இந்தச் சிறிய நூல் எனது தமிழ்ச் சகோதரர்களிடையே உண்டு பண்ணுமானால் அஃது என்னுடைய பாக்கியமென்று கருதுவேன். இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது. ஆசியா ஒன்றுபட்டு விட்டது. “அன்பரெல்லாம் இன்பம் அருந்திட” உலகத்தில் சாந்தி நிலவுவதாக! சுதந்திரத் திருநாள் 15-08-1947 வெ. சாமிநாதன் வாசகர்களுக்கு (இரண்டாம் பதிப்பு) இந்த நூலின் முதற்பதிப்பு வெளியான பிறகு, ஆசிய நாடுகளின் மத்தியில், ஏன்? உலக வல்லரசுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துகொண்டு வருகிறது. இந்தியாவை நன்கு அறிந்து கொள்ள வேண்டு மென்ற ஆவல் உலக மக்களிடையே அதிகப்பட்டுக் கொண்டு வருகிறது. இவையிரண்டும் நமக்குப் பெருமை தரக்கூடிய விஷயங் களல்லவா? இவை இரண்டுக்கும் காரணம் என்ன? இந்தியா, நேரிய நோக்குடன் சமாதானப் பாதையில் சென்று கொண்டிருப்பதுதான். இப்படிச் சென்று கொண்டிருக்கிற வரையில், இதற்கு, யாரிட மிருந்தும் எவ்விதமான ஆபத்தும் ஏற்படாதென்பது உறுதி. ஆசியாவுக்கு, இந்தியா வழிகாட்டப் போகிறதென்று நூலின் கடைசியில் கூறியுள்ளோம். ஆசியாவுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கு இந்தியா வழிகாட்டிக் கொண்டு வருகிறது என்று இந்த இரண்டாம் பதிப்பின் முகவுரையில், தலையை நிமிர்த்திக் கொண்டு கூறுகிறோம். தியாகராயர் நகர், சென்னை 1-12-1953 வெ. சாமிநாதன் 1. ஆசியாவின் பழமை ஒரே நிலப்பரப்பை இரண்டு கண்டங்களென்று பிரித்து வைத்தார்கள். பிரித்தது யார், எப்பொழுது பிரித்தார்கள், ஏன் பிரித்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. கிரீஸ் தேசத்திலிருந்த சில அறிஞர்கள், எப்பொழுதோ ஒரு காலத்தில் ஒரு நாள் காலையில் எழுந்திருந்து சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்தார்களாம். என்ன தோன்றியதோ அவர்களுக்கு, சூரியன் பக்கமாயுள்ள பிரதேசத்திற்கு ‘அசு’ என்றும், எதிர்ப்புறமாயுள்ள பிரதேசத்திற்கு ‘எரேப்’ என்றும் முறையே பெயர் வைத்தார்களாம்.1 ‘அசு’ என்றால் சூரியன் உதிக்கும் பக்கமென்றும், ‘எரேப்’ என்றால் சூரியன் அஸ்தமிக்கின்ற பக்க மென்றும், அர்த்தம். இந்த இரண்டு வார்த்தைகளும் எந்த பாஷையைச் சேர்ந்தவை யென்பதும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அஸ்ஸிரியா தேசத்துப் புராதனச் சின்னங்களில் இந்த இரண்டு வார்த்தைகளும் காணப்படுகின்றன வென்றும், இவை மேலே சொன்ன அர்த்தத்திலேயே உபயோகிக்கப்பட்டிருக் கின்றன வென்றும் சரித்திர நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆக ‘அசு’ என்பது ஆசியாவாயிற்று; எரேப்’ என்பது ஐரோப்பாவாயிற்று. இது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இவ்விரண்டு பெயர்களின் மூலந்தான் தெரியவில்லை. இதற்காக நாம் வெட்கப்பட வேண்டியதுமில்லை. ஏனென்றால் கி.மு. ஐந்தாவது நூற்றாண்டிலே வாழ்ந்த பிரபல கிரேக்க சரித்திராசிரியனான ஹெரோடோட்டஸ்2 என்பவனே, தனக்கு இது தெரியவில்லையென்று கூறுகிறான். இதனால் அவன் காலத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முந்தி, இந்த ஆசிய-ஐரோப்பியப் பிரிவினை ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தெரிகிறது. ஆரம்பத்தில் கிரேக்கர்கள், தங்களுக்குக் கிழக்கிலுள்ள ஒரு சிறிய பிரதேசத்தையே ஆசியாவென்று அழைத்தனர். பின்னர் பூகோள சாஸ்திர அறிவு விருத்தியாக விருத்தியாக, இந்தப் பிரதேசத்தின் எல்லையும் விரிந்து வந்தது. ஆசியா, பல வர்ணங்களுடைய ஒரு மலர்; பன்மையாகத் தோற்ற மளிக்கும் ஒருமை; பல கண்டங்களையுடைய ஒரு கண்டம். ஆசியாவில் பல மொழிகள், பல மதங்கள், பல நிறங்கள், பல நாகரிகங்கள் விரவி நிற்கின்றன. இருந்தாலும் இவற்றின் அடிப்படை ஒன்றே; இவை வெளியிடும் உண்மை ஒன்றே; இவை நாடுகின்ற நலனும் ஒன்றே. ஆசியாவைத் தவிர்த்த மற்ற நான்கு கண்டங்களிலும் பெரும் பாலும் ஒரே மதத்தினரும், ஒரே நிறத்தினரும், ஒரே நாகரிகத்தினரு மான ஜனங்கள் வசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் வெவ்வேறு நலன் களை நாடுகின்றவர் களாயிருக்கிறார்கள்; வெவ்வேறு இனத்தினர் போலவே பரஸ்பரம் ஒருவருக் கொருவர் நடந்து கொள்கிறார்கள். ஆசியாவுக்கும் அதை விடுத்த மற்ற உலகத்திற்குமுள்ள வித்தியாசம் இது. ஆசியாவை இப்பொழுது சிலர் இரண்டு பிரிவுகளாக்கிப் பேசுகின்றனர். ஆசியா கண்டத்திலுள்ள ருஷ்யப் பகுதியையும் துருக்கியையும் சேர்த்து ஐரோப்பிய ஆசியாவென்றும், மற்ற நாடுகள் அனைத்தையும் சேர்த்து ஆசிய ஆசியாவென்றும் பேசுவர். பத் தொன்பதாவது நூற்றாண்டுத் தொடக்கத்தி லிருந்து ஐரோப்பா வின் கிழக்கெல்லையிலும் ஆசியாவின் மேற்கெல்லை யிலும் நடைபெற்றி ருக்கிற அரசியல் சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கிற போது இப்படி இரண்டாகப் பிரித்துப் பேசுவதும் பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் இருபதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தி லிருந்து இந்தப் பிரிவினைக்கு, இப்படிப் பிரித்துப் பேசுவதற்கு அவசியமே இராதென்று கருதுகிறோம். ஆசியாவிலுள்ள சகல நாடுகளும் இனி ஒரே குரலில் பேசப் போகின்றன என்பதன் சுப சூசகமல்லவோ, 1947 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் மூன்றாவது வாரம் டெல்லி மாநகரத்தில் கூடிய ஆசிய நல்லுறவு மகாநாடு? ஆசியா என்று சொன்னால் அதில் எகிப்தும் சேர்ந்திருக்கிற தென்பதே அர்த்தம். பூகோள சாஸ்திர ரீதியாக, எகிப்து, தனியான ஒரு கண்டத்தில்-ஆப்ரிக்காவில்-இருக்கிறதென்று சொல்லலா மாயினும், சரித்திர ரீதியாகப் பார்க்கிறபோது அஃது ஆசியாவைச் சேர்ந்ததாகவே இருக்கிறது. ஆசியா விலுள்ள நாடுகளுக்கும் அதற்கும் நீண்ட காலமாகவே நெருங்கிய கலாசாரத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. எகிப்தின் புராதன காலத்துச் சரித்திரக் காட்சிகள் பலவும் ஆசிய மண்ணிலேயே நடைபெற்றிருக்கின்றன. ஆசியாவில் தோன்றி மறைந்த நாகரிகங்கள், நின்று நிலவுகின்ற நாகரிகங்கள் ஆகிய இவற்றின் அடிப்படையான அமிசங்களும் எகிப்திய நாகரிகத்தின் அடிப்படையான அமிசங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. சிறப்பாக இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எகிப்துக்கும் பலவித ஒற்றுமைகள் உண்டு. மூன்றும் புராதனப் பெருமை வாய்ந்தவை; சிருஷ்டி சக்தி யுடை யவை. மூன்றும் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அரைபட்டவை; ஆயினும் அழித்தும் அழிபடாத தேசங்கள். இத்தகைய ஒற்றுமையான பல அமிசங்கள் இருப்பதனால்தான், மேலே சொல்லப்பெற்ற ஆசிய நல்லுறவு மகாநாட்டில் எகிப்து இடம் பெற்றது; அதன் நட வடிக்கைகளில் எகிப்தியப் பிரதிநிதிகள் பரிபூரணமாகப் பங் கெடுத்துக் கொண்டார்கள். பொதுவாகக் கீழ்நாடு அல்லது கிழக்கு நாடு என்று சொன்னால் அஃது ஆசியாவையே குறிக்கிறது. இந்தக் கீழ்நாட்டை, சமீப கிழக்குப் பிரதேச மென்றும் தூர கிழக்குப் பிரதேசமென்றும் இரண்டு பிரிவாகப் பிரிப்பதுண்டு. இந்தியாவுக்கு மேற்குப் புறமா யுள்ள நாடுகள் யாவும், அதாவது ஆப்கனிஸ்தானத்திலிருந்து துருக்கி வரையிலுள்ள நாடுகள் பலவும், சமீப கிழக்குப் பிரதேச மென்று அழைக்கப் பெறுகின்றது. இந்தப் பிரதேசத்தில் எகிப்தும் அடங்கும். இந்தியா, சீனா, ஜப்பான் இவைகளைச் சேர்ந்தாற் போலுள்ள தேசங்கள், தீவுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து தூர கிழக்குப் பிரதேசம் என்று பெயரைப் பெறுகின்றது.1 இங்ஙனம் ஆசியாவை மேற்குக் கிழக்காகப் பிரித்துப் பேசிய போதிலும், அதன்கண் ஆதிகாலந் தொட்டு நிகழ்ந்து வந்திருக்கின்ற பெரும்பற்றான குடியேற்றங்கள் அரசர்களின் படையெடுப்புகள் இவையெல்லாம் பெரும் பாலும் வடக்கு தெற்காகவோ தெற்கு வடக் காகவோதான் நடைபெற்றிருக் கின்றன. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் வடக்கும் தெற்குமாகப் பரவினார்கள் என்று சொல்லப் படுகின்றதல்லவா அந்தக் காலத்திலிருந்து பாபர் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த காலம் (1525 ஆம் வருஷம்) வரையில் ஆசிய சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை தெரியவரும். உலகத்திலுள்ள மற்ற நான்கு கண்டங்களைக் காட்டிலும் ஆசியாதான் உருவத்திலும் ஜனத்தொகையிலும் பெரியது. உலகத்தின் மொத்த விஸ்தீரணம்: 5,57,86,000 சதுர மைல்; ஆசியாவின் விஸ் தீரணம்: 1,64,29,987 சதுர மைல். உலகத்தின் மொத்த ஜனத்தொகை: 22,19,764 ஆயிரம்; ஆசியாவின் ஜனத்தொகை: 12,24,132 ஆயிரம். உலகத்தின் மொத்த விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பங்கு விஸ்தீரண முடையதாகவும், ஜனத்தொகையில் பாதிக்கு மேற்பட்ட ஜனத் தொகையுடைய தாகவும் ஆசியா இருக்கிறது. எனவே பரிமாணத் திலும் ஜனப் பெருக்கத்திலும் முதல் ஸ்தானம் வகிப்பது ஆசியாதான். உலகத்து அதிசயங்களுள் பெரும்பாலான அதிசயங்கள் தன்னிடத்தில் இருக்கின்றன என்று ஆசியா சொல்லிக் கொள்ளு மானால், அது, வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஒரு தாயார், ஒரு சிறு பெண்ணினிடம் தற்பெருமை பேசிக் கொள்வது போலிருக்கிறதென்று சிலர் கருதக் கூடுமாயினும், அந்த அதிசயங் களைப் பற்றிச் சுருக்கமாக இங்குச் சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கிறோம். உலகத்துப் புராதன கால அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். இவை தவிர நவீன கால அதிசயங்கள் பல உண்டு. இவற்றுள் பெரும் பாலன ஆசியாவில் இருக்கின்றன. சீனாவின் பெருஞ்சுவர் என்ன, எகிப்தின் பிரமிட் கோபுரங்கள் என்ன, பாபிலோனியாவின் தொங்கும் தோட்டங்களென்ன, சின்ன ஆசியாவிலுள்ள மௌஸோலியம் என்ன, பாரோஸ் தீவிலுள்ள-அலெக்ஸாந்திரியா துறைமுகத்தைச் சேர்ந்த-கலங்கரை விளக்கமென்ன, இவையெல்லாம் ஆசியாவில், அதன் புராதனப் பெருமைக்கு எடுத்துக் காட்டுகளாக இருக்கின்றன. இவை தவிர, இந்தியாவில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகால், பிஜப்பூரி லுள்ள கோல்கும்பஸ், சுக்கூரில் உள்ள லாயிட் அணைக்கட்டு, சீனாவில் இரண்டாயிரம் பண்டிதர்கள் சேர்ந்து மூன்று வருஷ காலம் இடைவிடாது உழைத்துத் தயாரித்த சீனப் பேரகராதி, கி.மு. 486ஆம் வருஷத்தில் தொடங்கித் தோண்டப்பெற்ற 1,200 மைல் நீளமுள்ள பெருவாய்க்கால், யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் நகரத்தில் ஆரம்பித்து பர்மாவிலுள்ள லாஷியோ நகரத்தில் வந்து முடிகின்ற 772 மைல் நீளமுள்ள பர்மா ரோடு, நான்கிங் நகரத்தி லுள்ள பீங்கான் கோபுரம், துருக்கியில் இஸ்த்தாம்பூலிலுள்ள ஸோபியா மசூதி ஆகிய இவையும், இவைபோன்ற இன்னும் பல நவீன அதிசயங்களும் ஆசியாவில் இருக்கின்றன. ஆசியாவின் பழமை வெகு ஆழமானது. ஸ்தூலமாகவோ மேற்போக்காகவோ பார்த்தால் அதன் ஆழம் எளிதிலே புலப் படாது. சாதாரணமாக ஐரோப்பிய சரித்திராசிரியர்கள், சிறப்பாக இந்திய இளைஞர் களின் உபயோகத்திற்கென்று எழுதும் பிரிட்டிஷ் சரித்திராசிரியர்கள், உலகத்து முக்கியமான ராஜ்யங்களின் உன்னத மான காலம், கிறிஸ்து சகாப்தத்திலிருந்துதான் தொடங்குகிறதென்ற தோரணையில் எழுதுகிறார்கள்; பேசுகிறார்கள். இப்படி இவர்கள் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எவ்வித நோக்கத்தையும் நாம் கற்பிக்க விரும்பவில்லை. இவர்களுடைய சரித்திர திருஷ்டி, கிரீஸ், ரோம் இவற்றிற்கு அப்பாற் செல்லாததுதான் இதற்குக் காரணம். இன்றைய ஐரோப்பிய நாகரிகத்தின் மேலான அமிசங்கள் பலவும் கிரீஸி லிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் கிடைத்த நன்கொடைகளே என்பது இவர்கள் நம்பிக்கை. ஆனால், உண்மையில் கிரேக்க நாகரிகமும் ரோம நாகரிகமும் ஆசிய நாகரிகங்களின் அடுத்த சந்ததிகளே. “கிரேக்க ரோம கலாசாரப் பண்புகள் பலவும், ஆசிய நாகரிகங்களைப் பின்னணியாகவும் அடிப்படையாகவும் கொண்டி ருக்கின்றன” என்கிறான் வில் ட்யூரண்ட்1 என்னும் அமெரிக்க அறிஞன். கிறிஸ்துநாதர் பிறப்பதற்கு ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னரேயே ஆசியாவில் அநேக சாம்ராஜ்யங்கள் தங்கமான வாழ்வு நடத்திக் கொண்டு வந்திருக்கின்றன. பார்க்கப் போனால், கிறிஸ்து பிறப்பதற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரிருந்தே இந்த ஆசிய சாம்ராஜ்யங்களின் பிற்பகல் வாழ்க்கை தொடங்கிவிட்டதென்று சொல்லவேண்டியிருக்கிறது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் உன்னத வாழ்வு, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முந்தியே-சரியாக கி.மு. 1050ஆம் வருஷத்தி லிருந்து-மங்கத் தொடங்கி விட்டது. பாபிலோனிய ஏகாதிபத்தியத்தின் அஸ்தமன வாழ்வு, இரண்டாவது நெபுகாட்நெஸ்ஸார்2 மன்னனிலிருந்து-கி.மு. 561 ஆம் வருஷத்திலிருந்து-ஆரம்பித்துவிட்டது. அஸ்ஸிரியா ராஜ்யம் கி.மு. 605 ஆம் வருஷத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. யூத சாம்ராஜ்யம், கி.மு. 937ஆம் வருஷத்திலிருந்து சறுக்க ஆரம்பித்து, பாபிலோனிய மன்னனான இரண்டாவது நெபுகாட் நெஸ்ஸார், கி.மு. 586 ஆம் வருஷம் ஜெருசலேம் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டதோடு அழிந்து போய்விட்டது. பாரசீக ஏகாதிபத்தியம் மகா அலெக்ஸாந்தரின் படை யெடுப்புக்கு முன்னமேயே- கி.மு. 446ஆம் வருஷத்திலிருந்தே – நிலை குலைந்து போயிருந்தது. இதனால்தான் மகா அலெக்ஸாந்தர் அதனைச் சுலபமாக ஆக்கிர மித்துக் கொண்டான். சீன சாம்ராஜ்யம் கி.மு. 600ஆம் வருஷத் திலேயே சுக்குநூறாகச் சிதறிப் போய்விட்டது. சுக்கு நூறாக என்று சொல்வது மிகைபடச் சொல்வதில்லை. வூ-பாங் என்ற ஓர் அரசன், தன்னுடைய படையெடுப்புகளில் துணை செய்த முக் கியஸ்தர் களைச் சன்மானிக்கிற வகையில் தன்னுடைய ராஜ்யத்தின் பெரும்பகுதியை 1,773 பிரிவுகளாகப் பிரித்துக் கொடுத்தான். இவர்களத்தனைப் பேரும் பின்னர் அந்த மன்னனின் ஆதிக்கத்திற்கு விரோதிகளானார்கள். சீனா முழுவதுமே சீர் குலைந்து போயிருந்தது. இந்த நிலையில்தான் லாவோத்ஸே, கன்பூஷியஸ் ஆகிய ஞானிகள் தோன்றினார்கள். கி.மு. 327ஆம் வருஷம் மகா அலெக்ஸாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோழ்து, அதன்-இந்தியா வின்-புகழ்ச் சூரியன் சாய ஆரம்பித்துவிட்டிருந்தான். “அலெக்ஸாந்தர், காலங் கழித்தே இந்தியாவுக்கு வந்தான். அவன் வருவதற்கு வெகு காலத்திற்கு முந்தியே, இந்திய சமுதாயமானது, தனது அகநோக்கில் தனிநிலைமை யடைந்திருந்தது. அதன் வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் யாவும், வெளியுலகத்தின் வாழ்க்கை நியதிக்குப் பொருத்தமற்றதாயிருந்தது” என்கிறான் ஓர்ஆசிரியன். இவை தவிர, ஹிட்டைட்டிஸ் என்ன, பொனீஷியா என்ன, சுமேர் என்ன, அக்காட் என்ன,1 இப்படிப்பட்ட சிறிய ராஜ்யங்கள், உச்ச நிலையிலே அநேக வருஷ காலம் இருந்துவிட்டு, கிறிஸ்துவ சகத்திற்கு முன்னரேயே வீழ்ந்து போயின. இங்ஙனம் ஆசிய சாம்ராஜ்யங்கள் பலவும், கிறிஸ்துவ சகத்திற்கு முந்தியே பூரண வாழ்க்கையையும் வாழ்ந்துவிட்டிருந்தன. கிறிஸ்துவ சகத் தொடக்கத்தில் இவற்றுள் இறந்தவை போக இருந்தவை, முதுமை யெய்தி, அந்த முதுமைக்கு அறிகுறிகளான ஆட்டம், அசதி இவை களோடு கூடியனவாயிருந்தன என்றே சொல்லவேண்டும். பழமையானவையெல்லாம் பெருமையுடையனவல்ல. உண்மை. ஆசியாவை அதன் பழமைக்காக யாரும் பாராட்ட வேண்டிய தில்லை. இந்தப் பாராட்டுதலை அது யாரிடமிருந்தும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் ஆழமான அதன் பழமையிலிருந்து கிடைத் திருக்கிற அரிய பொக்கிஷங்களுக்காக அதற்கு யாரும் நன்றி செலுத்தவேண்டும். இன்று நாம் நாகரிக வசதிகளென்று எவை எவைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ, நல்வாழ்க்கை நடத்துவதற்குத் துணைக் கருவிகள் என்று எவை எவைகளைக் கருதிக் கொண்டிருக்கிறோமோ, அவை யாவும் ஆசியாவின் சிருஷ்டிகள்தான். ஏன், நாகரிகத்தின் சிருஷ்டிக்களமே ஆசியாதானே? ஆசியா, பிற்கால சந்ததியாருக்கு, இன்றைய உலகத்தினருக்கு வழங்கி யிருக்கும் பொருள்கள்தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வாசகர்கள் ஆவலுடையவர்களாயிருப்பார்களல்லவா? எண்ணும் எழுத்தும், இங்கியும் காகிதமும், புத்தகங்களும் புத்தக சாலைகளும், ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் உயர்தரக் கல்லூரி களும், இலக்கியமும் சங்கீதமும், காவியமும் ஓவியமும், கணித சாஸ்திரமும் வான சாஸ்திரமும், திசையறி கருவியும் காலங்காட்டும் கடிகாரமும், அச்சுத் தொழிலும் தச்சுத் தொழில் முதலிய தொழில் களும், கண்ணாடியும் பீங்கானும், தேயிலைப் பானமும் மது வகை களும், உடம்பில் அணியும் நகைகளும் பூசும் வாசனைகளும், உடுத்துகின்ற பட்டும் ஏறுகின்ற வாகனாதிகளும், விவசாயமும், வியாபாரமும், நாணயச் செலாவணியும், நோட்டுச் செலாவணியும், போக்குவரத்து வசதிகளும் தபால் வசதிகளும், சதுரங்க ஆட்டமும் குதிரைப் பந்து விளையாட்டும், ஒருவன் ஒருத்தியோடு வாழவேண்டு மென்ற நியதியும், பரம்பொருள் ஒன்று என்ற கொள்கையும், இவை போன்ற இன்னும் பலவும் ஆசியாவிலிருந்து பிறந்தவையே. கி.மு. நாலாயிரத்திருநூறு வருஷத்திற்கு முன்னரேயே எகிப்தில், ஜனங்கள், நாள் கிழமைகளை அறிய காலண்டரை உபயோகப் படுத்தி வந்தார்கள்; முணுமுணுக்காமல் அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்தி வந்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் அறுநூறு வருஷங் களுக்கு முன்னே அஸ்ஸிரியாவை ஆண்ட அஷுர்பாணி பால்1 என்ற அரசன், நினேவே2 என்ற தனது தலைநகரத்தில் பெரிய தொரு புத்தகசாலை வைத்திருந்தான். இந்தியாவிலும், சீனாவிலும் இத்தகைய புத்தகசாலைகள் இதற்கு முன்னரேயே இருந்தன வென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இன்று சிவில் சட்டங் களென்றும் கிரிமினல் சட்டங்களென்றும் சொல் கிறோம். ஆனால் கிறிஸ்து சகத்திற்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தியே பாபிலோனியாவில் ஆண்ட ஹாம்முராபி3 என்ற அரசன் சிறந்த தொரு சட்டத்தை இயற்றி வைத்திருக்கிறான். இங்ஙனமே அஸ்ஸிரி யாவிலும் இந்தியாவிலும் ஜன சமுதாயத்தின் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் உறுதுணையாயிருக்கப்பட்ட சட்ட திட்டங்கள் இருந்திருக்கின்றன. முதன்முதலாக, உழவுக்குக் குதிரையை உபயோகித்தது ஆசியாதான்; ஆகாரத்தைச் சமைத்துச் சாப்பிடத் தொடங்கியது ஆசியாதான்; வெடி மருந்தைக் கண்டுபிடித்தது ஆசியா (சீனாவில்)தான்; பூகோள படம் தயாரித்தது ஆசியா (பாபிலோனியாவில்)தான். இவ்வளவென்ன? முதன் முதலாகத் தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்தது கூட ஆசியாவில் (ஏகிப்தில்) தான்! செங்கல் வீடுகட்டி அதிலே வாழவும், நோய்தீர மருந்து உபயோகிக்கவும், கடலிலே கப்பல் செலுத்தவும், உலகத்தினருக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் ஆசிய மக்களே. ஹெரோடோட்டஸ் என்பவனை ‘சரித்திரத்தின் தந்தை’ என்று சொல்வர் மேனாட்டார். ஆனால் அவனுக்குப் பல நூற்றாண்டுகள் முந்தியே ஆசியாவில் அறிஞர் பலர் நுணுக்கமான சரித்திரங்கள் எழுதி வைத்துப் போயி ருக்கிறார்கள். கி.மு. 555ஆம் வருஷத் திலிருந்து 538ஆம் வருஷம் வரை-பதினேழு வருஷ காலம்-பாபிலோனியாவை ஆண்ட நபோனிடஸ்4 என்ற அரசன், சரித்திர ஆராய்ச்சி யிலும் பூமியி லிருந்து புராதனச் சின்னங்களைத் தோண்டி யெடுத்துப் பரி சோதனை செய்வதிலும் தன் ஆட்சிக்காலம் பூரா வையும் கழித்தான். தனிப்பட்ட மனிதர்கள், பரஸ்பரம் ஒருவருக் கொருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது முதல், ஓர் அரசாங்கத்திற்கும் மற்றோர் அரசாங்கத்திற்கும் எத்தகைய உறவுமுறை இருக்க வேண்டும், ஒன்றுக்கொன்று எப்படி கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்பது வரையில் சகலமான வற்றிற்கும், அதாவது அற வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் ஆசியாவே வழி காட்டியாயிருந்து வந்திருக்கிறது. உலகத்திலேயே முதன் முதலாக தீர்க்கதரிசிகள் தோன்றியதும் ஆசியாவிலேதான். கிறிஸ்துவ சகாப்தத்திற்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தி இப்புவெர், நெபெர் ரோஹு1 என்னும் பெயருடைய தீர்க்கதரிசிகள் இருவர் எகிப்தில் தோன்றி தங்கள் காலத்து அரசர்களுக்கு அறவுரைகள் வழங்கி யிருக்கிறார்கள்; தங்களுக்குப் பின்னாடி என்ன நடக்கப் போகிற தென்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். புண்ணிய நாடாகிய இந்தியாவில் எத்தனையோ புண்ணியாத்மாக்கள், மகாத்மாக்கள் அவதரித்திருக்கிறார்கள் என்பதை நாம் சொல்லாமலே வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள். மகான்களின் உற்பத்தி ஸ்தான மல்லவோ இந்தியா? இங்ஙனம் ஆசியா எதிலும் முதன்மை வகித்து வந்திருக்கிறது. ஒரு நாகரிகத்தின் முழுத்தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டு மானால், அதனைப் பல நிலைகளிலிருந்து பார்க்க வேண்டு மென்று சொல் வார்கள். இப்படிப் பல நிலைகளுக்கும் பொருந்துகிற நாகரிகந்தான் முழு நாகரிகம் அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு, பொருளாதார ஏற்பாடு, இலக்கிய சிருஷ்டி, கலை வளர்ச்சி, ஆத்மீக உன்னதி, இப்படி எந்த நிலையிலிருந்து பார்த்தாலும் ஆசிய நாகரிகம் முழு நாகரிகமாக இருக்கிறது. இப்படி முழு நாகரிகமாயிருப்பதனாலேயே அதனை அறிந்து கொள்வது சிறிது சிரமசாத்தியமாக இருக்கிறது அந்நியர்கள், அதாவது ஆசிய நாகரிகத் திற்குப் புறம்பானவர்கள், அதனைப் பற்றித் தவறாக வியாக்கியானம் செய்கிறார் களென்றால், அஃது அவர்களுடைய பக்குவமின்மையையே காட்டுகிறது. ஏனென்றால் அவர்கள் நாகரிகத்தை முழுசாகப் பாராதவர்கள்; அரை குறை யாகப் பார்த்துப் பழகியவர்கள். அவர்கள் ஆசிய நாகரிகத்தை ஸ்தூலமாகத்தான் பார்க்கிறார்கள். அதில் சூட்சும சக்திகள் பல அடங்கியிருக்கின்றன என்பதை அவர்கள் அறியார்கள். ஆசியாவின் நாகரிகம் மட்டுமென்ன, அதில் ஓடுகின்ற நதிகள், ஓங்கி நிற்கும் மலைகள், வானுற வளர்ந்திருக்கும் விருட்சங்கள் ஆகிய பலவும் சூட்சும சக்தியுடையனவாகவும் சூட்சும அர்த்த முடையனவாகவும் இருக்கின்றனவென்று கூறலாம். ஜீவநதிகளான சிந்துவும் கங்கையும், ஹோயாங்கோவும் யாங்க்ட்ஸீகியாங்கும், யூப்ரெட்டிஸும் டைக்ரிஸும், நைல் நதியும், பெருநிலங்களை வளம்படுத்தும் பெருந்தகையனவாக மட்டும் இல்லை; போக்கு வரத்து மார்க்கங்களாக மட்டும் இல்லை; அநேக நாகரிகங்களின் சிருஷ்டி ஸ்தலங்களாகவும் இருந்திருக்கின்றன. இமயம், ஹிந்துகுஷ், சினாய், ஆல்ட்டாய் போன்ற பல மலைகள், ஆறுகளின் உற்பத்தி ஸ்தானங்களாக மட்டும் இல்லை; பல்வகை மூலப் பொருள்களின் பெட்டகமாக மட்டுமில்லை; ஒன்றான பரம்பொருளோடு ஒன்றுபட்டிருக்கிற மகா புருஷர்களின் தவ பூமிகளாகவும் உபதேச மேடைகளாகவும் இருந் திருக்கின்றன. அரசும் ஆலும், கமுகும் தெங்கும் போன்ற உயர்விருட்சங்கள், அண்டினோர்க்கு உண்டிதரும் கலயங்களாக மட்டும் இல்லை; வெப்பத்தைத் தடுத்துத் தட்பத்தை அளிக்கும் விதானங்களாக மட்டும் இல்லை; ஞான ஒளிதரும் மோன விளக்குகளாயிருந் திருக்கின்றன. உலகத்தின் சகல மதங்களுக்கும் பிறப்பிடமாயுள்ளது ஆசியா. இந்த மதங்களின் மூல புருஷர்களத்தனை பேரும் அவதரித்ததும், மதப் பிரசாரஞ் செய்ததும் ஆசியாவிலேதான். உலகத்தின் மூலை முடுக்குகளிலேயுள்ள எந்த மதத்தினரும், தங்கள் மன மாசுகளைக் கழுவிக்கொள்ள ஆசியாவுக்குத்தான் யாத்திரையாக வருகிறார்கள். ஆசிய மண்ணின் ஒவ்வொரு பொடியும் புனிதமானது. “பொன்னை யும் வெள்ளியையும் காட்டிலும் ஆசியாவின் தூசி மண் எனக்குச் சிரேஷ்டமானது” என்கிறார் கேசவ சந்திர சேனர். சகல மதங்களுக்கும் பிறப்பிடமாயிருப்பது மட்டும் ஆசியாவின் விசேஷமல்ல; அந்தச் சகல மதங்களையும் ஒருதாய் வயிற்றில் பிறந்த சகோதரிகள்போல் வாழும்படி செய்திருக்கிறதே அதுதான் ஆசியாவின் விசேஷம். கிளைகள் பலவானாலும் அடிமரம் ஒன்றா யிருப்பதுபோல், மதங்கள் பலவானாலும், அவை புறப்பட்டுச் சென்றிருக்கிற திசைகள் வெவ்வேறானாலும் அவற்றின் அடிப்படை ஒன்றுதான் என்ற உண்மையை ஆசியா அங்கீகரித்துக் கொண்டு அதை அனுஷ்டித்தும் வந்திருக்கிறது. 2. ஆசியாவின் தகுதி உலகத்தைச் சமாதானக் கோயிலுக்கு அழைத்துச் செல்லக் கூடியவர் யார்? இதனைக் கடமையாகக் கருதிச் செய்யக் கூடியவர் யார்? யாருக்கு இந்தத் தகுதி உண்டு? ஆசிய மாதாதான்; அவள் ஒருத்திக்குத்தான் இந்தத் தகுதி உண்டு. மற்றத் தேசத் தாய்மார்களைக் காட்டிலும் அவள் மூத்தவள், பழம்பெருந்தேவி என்பதற்காக அவளுக்கு இந்தத் தகுதி உண்டு என்று நாம் சொல்லவில்லை. அவளுடைய பூர்விகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டு மென்பதற்காக அவளுடைய பழமையைப் பற்றிச் சென்ற அத்தியா யத்தில் சிறிது கூறினோமே தவிர அவளுடைய தகுதியை நிலை நாட்டு வதற்காகவல்ல. அவளுடைய தகுதி, அவளுடைய சிருஷ்டி சக்தியிலே, பரநல எண்ணத்திலே, வாழ்க்கையைப் பிரித்துப் பாராமல் தொகுத்துப் பார்க்கின்ற பழக்கத்திலே, இவை போன்ற இன்னும் பல தன்மைகளிலே இருக்கிறது. மற்றும் அநாதிகாலந் தொட்டு ஆசியா தான், உலகத்திலே நிலையான அமைதி நிலவ வேண்டு மென்று கோஷித்துக் கொண்டு வந்திருக்கிறது; கோரிக்கொண்டு வந்தி ருக்கிறது. சாந்திவாசகம் ஆசியாவின் சொந்த வாசகம். அமைதி கோரும் உரிமை அதற்குப் பரம்பரையாகவே இருக்கிறது. ஆனால் ஆசியா கோருகின்ற அமைதி, ஜீவனற்ற அமைதியல்ல; ஜீவனுள்ள அமைதி. லண்டன் மாநகரத்திலுள்ள வெஸ்ட் மினிஸ்ட்டர் மாதா கோயிலை;1 மௌனக் கோயிலென்றும் அமைதிக் கோயி லென்றும் சொல்வார்கள். ஆனால் அங்குக் குடிகொண்டிருக்கும் மௌனம், மரணத்தினுடைய மௌனம்; அமைதி, சவக்குழியி னுடைய அமைதி. இங்கிலாந்தின் இறந்து போன அரசர்கள், தங் களுடைய பகைமை களையெல்லாம் மறந்துவிட்டு, மௌனமாக, அமைதியாக, சகோதரர்கள்போல் பக்கத்திலே அங்குப் படுத்தி ருக்கிறார்கள். அவர்களுடைய சகோதர உறவு பிதிருலோகத்திற்கு ஏற்றதே தவிர பூலோகத்திற்குப் பொருந்தியதல்ல. ஆசியா, இத்தகைய மௌனத்தை, அமைதியை, சகோதர உறவைக் கோரவில்லை; நாடவுமில்லை. அது ஞான நிறைவினின் றெழும் மௌனத்தை, செயல் வேகத்தினின்று பிறக்கும் அமைதியை, ஒரு தாய் வயிற்றுப் பிறந்த சகோதர உறவைக் கோருகிறது; நாடுகிறது. “ஆசியா, எதனைத் தன்னுடைய பொதுவான லட்சிய மாகக் கொண்டிருக்கிறதோ அஃது, அந்த அமைதி, ஒன்று மில்லாமையினால் ஏற்படுகின்ற அமைதியல்ல; சரணாகதியடைந்து விடுவதனால் உண்டாகிற அமைதியல்ல; போர்த் தன்மையும் சிருஷ்டி சக்தியுமுடைய மனித ஆத்மாவானது மேனிலைக்குச் செல்கின்றபோது விளைகின்ற அமைதி” என்பது ஒரு வாக்கு. நாகரிகம் பிறந்தது ஆசியாவிலேதான். மனிதன் மனிதத் தன்மையில் வளர்ச்சியடைந்தது ஆசியாவில்தான். முடிவில்லாத சத்தியத்தின் முடிவைக் காணவேண்டுமென்று மனிதன் முயற்சி எடுத்துக்கொண்டது ஆசியாவில்தான். அப்படியே தர்மத்தினுடைய அஸ்திவாரத்தின் அடியிலே சென்று பார்க்க மனிதன் விழைந்ததும் ஆசியாவில்தான். ஆத்மா அமரத்தன்மையுடையது, அது சூரியனைப் போல் எல்லோரிடத்திலும் பிரகாசித்துக் கொண் டிருக்கிறது என்ற பேருண்மையை மனிதன் தெரிந்துகொண்டதும், தெரிவித்துக் கொண்டதும் ஆசியாவில்தான். ஒரு மேனாட்டு ஆசிரியன் கூறுகிறான்:- “ஆசியாவின் புராதன நாகரிகங்கள்தான், அதாவது எகிப்திய, பாபிலோனிய, ஹிட்டைட்டிஸ், அஸ்ஸிரிய, பர்ஷிய, இந்திய, சீன, ஹீப்ரூ நாகரிகங்கள்தான், சரித்திரத்தில் புகக்கூடிய அளவு பலமான ஒரு கலாசாரத்தை, ஒரு பண்பாட்டை முதன் முதலாக நிர்மாணம் செய்தன. எழுத்துக்களையும் எழுதுவதையும் முதன்முதலாகக் கொண்டிருந்தவை அவைதான். இதனால் பிற்கால சந்ததிகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து விட்டுப் போதல் அவைகளுக்குச் சாத்தியமாயிருந்தது. லௌகிகபர மான ஒரு கலாசாரத்தை அவைதான் முதன் முதலாக அபிவிருத்தி செய்தன. இதன் விளைவாக, சிந்தனை செய் வதற்கும் கலை வளர்ச்சிக்கும் இன்றியமையாது வேண்டப்படுகின்ற ஓய்வு அவைகளுக்குக் கிடைத்தது. அவைகளிடத்தில் - அந்த ஆசிய நாகரி கங்களிடத்தில்-தேசீய வாழ்வும் சர்வ தேசீய வாழ்வும் செழுமை யுற்றிருந்தன. இதனால் அந்த நாகரிகங்களின் மக்களுக்கு, தங்களைப் பற்றியும், தங்களுக்கும் மற்றச் சகோதர மக்களுக்கும் இருக்க வேண்டிய சம்பந்தங்களைப் பற்றியும், தங்கள் சமூக அமைப்பைப் பற்றியும், தங்கள் பரலோகத்தைப் பற்றியும் தீவிர மாகச் சிந்தனை செய்வது சாத்தியமா யிருந்தது.” யார் சிருஷ்டிக்கிறார்களோ அவர்களால்தான் அந்தச் சிருஷ்டியைக் காப்பாற்ற முடியும். சிருஷ்டியினுடைய மகத்துவம், சிருஷ்டியின்போது உண்டாகிற வேதனை, இவைகளை யெல்லாம் அவர்கள் நன்கு அறிவார்களா தலினால், அவர்களால்தான் அந்தப் பொறுப்பை உணர முடியும். பொறுப்பை உணர்கிறவர்கள்தான் கடமையை ஒழுங்காகச் செய்துகொண்டு போவார்கள். ஆகவே இன்றைய நாகரிகத்தை, அரசியல் சூழ்ச்சிகளினால் கறைப்படா திருக்கும்படிக்கும் அணுசக்தியினால் அழிந்து படாமலிருக்கும் படிக்கும் காப்பாற்ற வேண்டியது ஆசியாவின் கடமையாகும். உலகத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களையும் விட்டுவிட்டு ஆசியாவில் நாகரிகம் பிறப்பானேன் என்று வாசகர்கள் கேட்கலாம். அதனுடைய இயற்கை அமைப்புதான் இதற்குக் காரணம். நாகரிகம் பிறப்பதற்கு ஏற்றவிதமாக ஆசியாவின் இயற்கை நிலைமை இருக்கிறது. எப்படியென்றால், ஆசியாவின் பெரும்பாகம் சம சீதோஷ்ணப் பிர தேசம். பருவ மழைக்கு குறைவில்லை. செழுமையான மண்ணும், நைல், யூப்ரெட்டீஸ், டைக்ரிஸ், கங்கை, ஹோயாங்கோ ஆகிய இப்படிப்பட்ட நதிகளும், நில வளத்திற்குத் துணை புரிவனவா யிருக்கின்றன. இவையெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறபோது, உணவுப் பொருள்கள் நிறைய விளைவதற்குக் கேட்பானேன்? உலக மனைத் திற்கும் உணவு வழங்கக்கூடிய தானியக் களஞ்சியமாக ஆசியா இருப்ப தற்குக் காரணம் இதுதான். சமீபத்தில் எடுக்கப்பெற்ற புள்ளி விவரங்களைப் பரிசீலனை செய்து பார்த்தால் இது நன்கு தெரியவரும். இங்ஙனம் உணவுப் பொருள்கள் நிறைய விளைவதற்கு, இயற்கை பெரிதும் துணையாயிருப்பதனால், ஜனங்கள், தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு அதிகமான உழைப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாதவர்களா கிறார்கள். இவர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வு, அறிவை விருத்தி செய்து கொள் வதில் உபயோகமாகிறது; நாகரிகம் பிறக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் நானூற்று ஐம்பது வருஷங் களுக்கு முந்தி எகிப்தியர்களுடைய தினசரி வாழ்க்கை, எப்படி அதிக உழைப்பை மேற் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நடை பெற்று வந்தது என்பதைப்பற்றி ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்க சரித்திராசிரியன் பின் வருமாறு வருணிக்கிறான்:- “மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள்-எகிப்தியர்கள்-குறைவாக உழைத்துப் பூமியின் பலன்களை அனுபவிக்கிறார்கள். பயிர் விளைவுக்கு முன்னாடி செய்யப்படவேண்டிய உழுதல், வெட்டுதல், கொத்துதல் முதலிய எந்த விதமான சிரமங்களும் அவர்களுக்கு இல்லை. (நைல்) நதி, தானாகப் பிரவாகமெடுத்து ஓடி வருகிறது; நிலங்களில் பாய்கிறது. பிரவாகம் குறைந்தவுடன், அவரவர்களும், தங்கள் நிலங்களில் தானியங்களைத் தெளிக் கிறார்கள். தெளித்துவிட்டுப் பன்றிகளை ஓட்டுகிறார்கள். அவைகள் மிதிப்ப தனால் விதைகள் பூமியில் நன்றாக அழுந்திவிடுகின்றன. அறுவடை காலம் வரை காத்திருந்து பின்னர் அறுவடை செய்து கொண்டு விடுகிறார்கள்.” ஆசிய நாகரிகங்கள் பலவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. விவசாய நாகரிகங்கள் என்றுதான் இவைகளைச் சொல்வார்கள். ஆதிகாலத்திலிருந்து ஜனங்களுடைய முக்கிய ஜீவனோபாயம் விவசாயமாகவே இருந்து வந்திருக்கிறது. தங் களுடைய நித்திய வாழ்க்கை ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டி ருக்க வேண்டுமென்பதற்காகவே, ஜனங்கள், விவசாயத்திற்கு இன்றிய மையாது வேண்டப்படுகின்ற வெயில், மழை, காற்று இவைகளைத் தெய்வங்களாக வழிபட்டு வந்தார்கள்; கால் நடைகளைப் போற்றி வந்தார்கள். ஆசியாவின் எல்லா நாட்டு மக்களும் பசுவைப் போற்றி வந்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அவர்கள் தினசரி உபயோகித்த பழமொழிகள், கடவுளை நோக்கிப் பாடிய தோத்திரப் பாடல்கள், கற்பனை உலகத்திலிருந்து எழுந்த கவிதைகள் ஆகிய யாவும் விவசாயத்தையே மையமாகக் கொண்டிருக்கின்றன. சுமார் நாலாயிரம் வருஷங்களுக்கு முந்திய சீனப் பாடல்களில் இரண்டைக் கேளுங்கள்:- “அதோ அந்தக் களைகளை அப்புறப் படுத்துங்கள்; இதோ இந்த மரத்தின் அடிக்கட்டையைத் தோண்டி எடுங்கள்; உழு படையினால் மண் கட்டிகளை உடையுங்கள்; மண் வெட்டிகளை எடுத்துக் கொண்டு ஆயிரக் கணக்கில் வாருங்கள்; கணவாய்களில் இறங்குவோம்; மலைகள் மீது ஏறுவோம்...................” “மேகங்கள் சுருண்டு சுருண்டு செல்கின்றன பாருங்கள்; மெல்லிய மழைத்துளிகள் எவ்வளவு தெம்பை உண்டு பண்ணுகின்றன? மழை, முதலில் பொது நிலங்கள் மீது பொழியட்டும்; பின்னர் நமது நிலங்கள் மீது விழட்டும்; அதோ அந்தத் தானியக் கதிர்களை அறுக்க வேண்டாம்; இதோ இந்தத் தானியக் கட்டுகளை அப்படியே விட்டுவிடுங்கள்; இங்கே தானியங்களை வையுங்கள், விதவைகளின் உபயோகத்திற்காக; அங்கே சில மூலிகைகளை விட்டு வையுங்கள் அவர்கள் நோய் தீர்வதற்காக.......................” திருக்குறள் ஆசிரியர், கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பையே கூறுகிறார். அறஞ் செய்வதற்கும், பொருள் சேர்ப்பதற்கும், இன்பம் துய்ப்பதற்கும் ஏதுவாயிருப்பது மழையே. இந்த மழை, தானே உணவாகவும் உணவுப் பொருள்கள் உண்டா வதற்குக் காரணமாகவும் இருக்கிறது. இதனாலேயே மழைக்குச் சிறப்புக் கொடுத்திருக்கிறார் வள்ளுவனார். மழைக்குச் சிறப்புக் கொடுத்தலாவது என்ன? விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலி யுறுத்திச் சொன்னதேயாகும். மற்றும், உழுதுண்டு வாழ்வதைத் தான் வாழ்வு என்று சொல்கிறார் வள்ளுவர். ஏனென்றால் அந்த வாழ்க்கை யில் இனிமை இருக்கிறது; அமைதி இருக்கிறது; நிறைவு இருக்கிறது. நிறைவுடையதுதான் வாழ்க்கை; நல்வாழ்க்கை. எனவே நல்வாழ்க்கை நடத்துவதற்கு மூலமாயிருப்பது விவசாயம், “சீரைத் தேடின் ஏரைத்தேடு” என்பது நமது முன்னோர் வாசகம். ஆசிய மக்கள் நிறைவுடைய வாழ்க்கையை நடத்தினார்க ளென்று சொன்னால், அவர்கள் எவ்விதக் குறையும் இல்லாம லிருந்தார்களென்பதே அர்த்தம். குறை இருந்தால், அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டி உழைப்பதும் போராடுவதும் அவசியமாகும். ஆனால் ஆசிய மக்களுக்குக் காலம் நெடுகிலும் இந்த உழைப்புக்கும் போராட்டத்திற்கும் அவசியமே இல்லாமற் போய் விட்டது. இயற்கையோடு போராடி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைமை அவர்களுக்கு எப்பொழுதும் ஏற்பட்டதே கிடையாது. எந்த ஒரு தன்மையும், அவசியம் ஏற்படு கிறபோது தான் வெளிப்படுகிறது. அவசியம் இல்லாதபோது அந்தத் தன்மையும் இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிப் போய்விடுகிறது. ஆசிய மக்களுக்கு, பிழைப்பு நிமித்தம் போராட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; அமைதியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்வதற்கான அனுகூலங்கள் பலவும் அவர்களுக்கு இருந்தன. இதனால் அவர்களிடத்தில் போர்த் தன்மையே இல்லாமற் போய் விட்டது. அதாவது மற்றவர்களைக் கஷ்டப்படுத்தித் தாங்கள் சுகம் பெற வேண்டிய அவசியமே அவர்களுக்கு ஏற்படவில்லை. தீய சக்திகளை அழித்து நல்ல சக்திகளைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் போராடி இருக்கிறார்கள்; மற்றவர்கள் வாழவேண்டுமென்பதற்காகத் தாங்கள் அழிந்து போகிறவரை போராடியிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்காக, தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக, தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் எந்தக் காலத்திலும் போராடியதே இல்லை. ஆசிய மக்கள், போரிடும் சுபாவமில்லாதவர்கள் ஐரோப்பிய மக்களைக் காட்டிலும் அடங்கின சுபாவமுடையவர்கள் என்ற கிறிஸ்து பிறப்பதற்கு நானூறு வருஷங்களுக்கு முந்தியே அரிஸ்ட் டாட்டல் சொல்லியிருக்கிறான். “பொதுவாக சீதளப் பிரதேசங் களிலுள்ள ஜனங்கள், சிறப்பாக ஐரோப்பாவிலுள்ள ஜனங்கள், எதற்கும் அஞ்சாதவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் திறமையிலும் அறிவிலும் குறைவுடையவர்களாக யிருக்கிறார்கள். இதனால் இவர்கள் அநேகமாக சுதந்திரமுடையவர்களாக இருந்து கொண்டி ருக்கிறார்கள். ஆனால் அரசியலில் வளர்ச்சியடையாதவர்களாகவும் மற்றவர் களை ஆளுகின்ற திறமை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆசிய மக்களுக்குத் திறமையும் அறிவும் இருக்கின்றன. ஆனால் அஞ்சாத் தன்மையில் குறைவுடையவர்களா யிருக்கிறார்கள். இதனால் தான் இவர்கள் மற்றவர்களுக்கு ஆட்பட்டிருக்கும் பிரஜை களாகவும், அடிமைகளாகவும் இருக்கிறார்கள்.”1 அரிஸ்ட் டாட்டலுடைய இந்த அபிப்பிராயத்தை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது அவசிய மில்லை; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஆசிய மக்கள் எப்பொழுதுமே அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள், சமாதானப் பிரியர்களாயிருந்திருக் கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே அரிஸ்ட் டாட்டலினுடைய இந்த அபிப்பிராயத்தை எடுத்துக் காட்டினோம். ஓய்வும் அமைதியும் நிறைந்த இடத்தில் கலைகள் செழித்து வளர் வதற்குக் கேட்பானேன்? ஜனங்களுடைய வாழ்க்கையே கலை மயமாகி விட்டது. கலைமயமாகிவிட்டது என்றால் என்ன அர்த்தம்? வாழ்க்கையானது அழகாவும் இனிமையாகவும் இன்பகரமாகவும் நடைபெற்றது என்பதுதான். இன்றுகூட பர்மிய மக்களின் அன்றாட வாழ்க்கை யைக் கூர்ந்து கவனிப் போமானால், அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் யாவும் கலை மயமாக விளங்குவதைக் காணலாம். பொதுவாக ஆசிய மக்கள் அனைவருமே, சங்கீதம், சிற்பம், நாட்டியம் ஆகிய நுண் கலைகளில் பூரணமாக ஈடுபடுகிறவர்கள். உதாரணமாக சங்கீதத்திலே சீன மக்களுக் கிருக்கும் ஈடுபாட்டைப் பற்றி ஒரு சீன அறிஞன் பின்வருமாறு கூறுகிறான்:- “சீனர்கள் சங்கீதத்திற்குப் பிறக்காவிட்டாலும், சங்கீதத்தினால் போஷிக்கப்படு கிறவர்கள்; சங்கீதத்தை மணந்து கொள்கிறவர்கள்; சங்கீதத்திலேயே புதைக்கப் படுகிறவர்கள். அவர்கள் சங்கீதத்திற்குத் தொழுகிறார்கள்; சங்கீதத்திற்கு வேலை செய்கிறார்கள்; சங்கீதத்திற்கு விற்கிறார்கள்; சங்கீதத்திற்குப் படிக்கவும் செய்கிறார்கள்.” சங்கீதம், சிற்பம் ஆகிய மேற்சொன்ன நுண்கலைகளில் யார் அதிகமான ஈடுபாடுடையவர்களா யிருக்கிறார்களோ அவர்கள் உயரிய பண்பாடுகள் பலவும் நிறைந்தவர்களா யிருப்பார்க ளென்பது நிச்சயம். அவர்களுடைய அறிவு, உலகத்தோடு ஒட்ட ஒழுகும். அவர்களுடைய இதயம், உலகனைத்தையும் கட்டித் தழுவும். அவர்களுக்கு, தான் வேறு, தன்னைத் தவிர்த்த மற்றவர் வேறு என்ற வேற்றுமையே கிடையாது. அவர்கள், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்வர்; மற்றவர்கள் இன்புறக் கண்டு தாங்கள் இன்புறுவர். இந்தப் பண்பாடு எங்கிருந்து பிறந்தது? மண்ணிலிருந்து. எப்படி நாகரிகம் என்று சொன்னால் அது நகரத்தை யொட்டியது என்ற கருத்து நமக்கு ஏற்படுகிறதோ அதுபோல பண்பாடு என்று சொன்னால் அது மண்ணை யொட்டியது என்ற எண்ணமே நமக்கு உண்டாகிறது. மண்ணிலே உழைக்கிறவர்கள்தான், மண்ணினால் பிழைக்கிறவர்கள்தான், உண்மையான வாழ்க்கையை நடத்துகிற வர்கள். உழைப்பிலே இன்பங் காண்பவர்கள் யாரோ அவர்கள் வாழ்க்கையின் இனிமையை நுகரும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள், பிறர் பொருளின்மீது ஆசைப்படமாட்டார்கள்; மற்றவர்களை அடிமை கொள்ளமாட்டார்கள். நல்குரவு என்பது அவர்களிடத்தில் நெருங்காது. தன் மதிப்பு உணர்ச்சி அவர்க ளிடத்தில் தலைசிறந்து நிற்கும். அவர்கள் எப்படி நிலத்தை ஆழமாக உழுது அதிலிருந்து நல்ல பலனைக் காண் கிறார்களோ அதுபோல் வாழ்க்கையை ஆழ மாகப் பார்த்து அதன் நிறைவு களை யுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையென்பது, சில மணி நேரம் எரிந்துவிட்டு அணைந்துபோகிற விளக்கல்ல; அணையா விளக்கு; அமர ஜோதி. இதனால் நித்தியமாயுள்ளவை எவையோ, அவற்றிலேயே அவர்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இந்தப் பண்பாடு என்பது என்ன? இங்ஙனமே நாகரிகம் என்றால் என்ன? இவ்விரண்டினையும் பற்றி இங்குச் சிறிது வியாக்கியானம் செய்துகாட்ட விரும்புகிறோம். இவ்விரண்டும் ஒன்றே என்பது நமது கருத்து. வேண்டுமானால் முன்னதை மொட்டு என்றும் பின்னதை மலர் என்றும் கூறலாம். “நாகரிகமென்பது குடியானவர் குடிசையில் ஆரம்பிக்கிறது; ஆனால் அது நகரங்களில் மலர்கிறது” என்கிறான் ஓர் அமெரிக்க அறிஞன். அகவாழ்க்கையின் நிறைவு பண்பாடு என்றும், புறவாழ்க்கையின் நிறைவு நாகரிகம் என்றும் சிலர் பிரித்துக் கூறுவர். இதில் தவறொன்றுமில்லை. வாழ்க்கையைக் கூறு கூறாகப் பகுத்துப் பார்ப்போருக்கு இது சரிதான். ஆனால் வாழ்கையை மொத்தமாகப் பார்ப்போருக்கு இரண்டும்-பண்பாடும் நாகரிகமும்-ஒன்றாகவே தெரியும். அக வாழ்க்கையின் நிறைவுதானே புற வாழ்க்கையின் நிறைவு? ஒன்றில் குறைவு இருந்து மற்றொன்று நிறைவுடையதாயிருந்தால் அந்த வாழ்க்கை எப்படி உண்மையான வாழ்க்கையாகும்? பூரண வாழ்க்கையாகும்? எகிப்திலுள்ள பிரமிட் கோபுரங்களைப் பார்த்து, இவை, எகிப்தின் நாகரிகத்தைக் காட்டுகின்றன என்று சொல்கிறோம். சீனர்கள் மனிதத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள்; அவர்களோடு எந்த விவகாரம் நடத்தினாலும் அவர்களுடைய மனிதத் தன்மைக்குப் பங்கம் வராமல் நடத்தவேண்டும். இதனைச் சீனர்களுடைய பண்பாடு என்று சொல்கிறோம். பர்மியர் போன்ற சில ஜாதியார் உடம்பெல்லாம் பச்சை குத்திக் கொள் கிறார்கள். இதனை அவர்ளுடைய நாகரிகம் என்கிறோம். திபேத்தில் ஒரு ஸ்திரீ பல புருஷர்களை விவாகம் செய்துகொள்ளலாமென்ற வழக்கம் இருக்கிறது. இஃது அவர்களுடைய ஒழுக்கத்திற்கு முரண்பாடல்ல. இதனை அவர்களுடைய பண்பாடு என்று கூறுகிறோம். அப்படியானால் பண்பாடு, நாகரிகம் என்ற இரண்டும் எதைக் குறிக் கின்றன? பொருளையா, சுபாவத்தையா, பழக்க வழக்கத்தையா, எதைக் குறிக் கின்றன என்ற கேள்வி பிறக்கிறது. இதற்கு அறிஞர் பலரும் அவரவர் களுடைய புத்திக்கும் யுக்திக்கும் தகுந்தபடி பதில் சொல்லிக்கொண்டு போகிறார்கள். ஒரு ஜாதியாருடைய சிருஷ்டி சக்தியில்தான் அவர்களுடைய நாகரிகம் இருக்கிறதென்பர் சிலர்; ஒரு சமூகத்தார் அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்துகிறார்க ளென்பதைப் பொறுத்துத்தான் அவர்களுடைய பண்பாட்டை நிர்ணயிக்க வேண்டுமென்பர் வேறு சிலர். இந்தப் பல்வித வியாக்கி யானங்களில் நாம் இப்பொழுது பிரவேசிக்க வேண்டியதில்லை. பண்பாடு என்பதும் நாகரிகம் என்பதும் எந்த அடிப்படையின்மீது நிலைபெற்றிருக்கின்றன என்பதை மட்டும் இங்குச் சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்புகிறோம். உலகத்திலுள்ள பொருள்களை மூன்று வகையாகப் பிரிப்பர் அறிஞர். சில பொருள்கள் இருக்கின்றன. அவற்றை அவைகளின் உபயோகத்திற்காக வைத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக தச்சன் உளி வைத்துக் கொண்டிருக்கிறான். எதற்காக? அதன் அழகுக் காகவா? இல்லை; உபயோகத்திற்காக. உபயோகமில்லாவிட்டால் அதனை எறிந்துவிடத் தயார். இங்ஙனம் அநேக பொருள்களை அவை களின் உபயோகத்திற்காக மட்டுமே வைத்துக் கொண் டிருக்கிறோம். இன்னும் சில பொருள்கள் இருக்கின்றன. அவை மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு அவசியமானவையல்ல. இருந்தாலும் அவைகளை வைத்துக் கொண்டிருக்கிறோம்; உபயோகப்படுத்துகிறோம். உதாரண மாக, சங்கீதம், சிற்பம் முதலியவைகளைச் சொல்லலாம். அவைகளை, அவைகளின் அழகுக்காகவும், இனிமைக்காகவும் கையாளுகிறோமே தவிர உபயோகத்தை உத்தேசித்து அல்ல. அதாவது அவற்றை அவை களுக்காக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறோம்; அதன் பிரயோ ஜனத்திற்காகவல்ல. வேறு சில பொருள்கள் உள்ளன. அவைகளை அவைகளுக் காகவும், - அதாவது அவைகளின் அழகுக்காகவும் அல்லது இனிமைக்காகவும் அவை களின் பிரயோஜனத்திற்காகவும் வைத்துக் கொண்டிருக்கிறோம்; பயன்படுத்து கிறோம். உதாரணமாக நல்ல பாதைகள் இருக்கின்றன; அல்லது அழகான பாலங்கள் இருக்கின்றன. பாதையில்லாமலோ அல்லது பாலமில்லாமலோ ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் போதல் கூடும். இருந்தாலும் பாதை இருப்பதும் பாலமிருப்பதும் உபயோகமாகவும் இருக்கிறது; அழகாகவும் இருக்கிறது. இங்ஙனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள பொருள்களில், பிந்திய இரண்டு வகைப் பொருள்கள், பண்பாட்டுக்கு எடுத்துக் காட்டாக இருப்பன வென்று சொல்லலாம். ஒரு மனிதனைப் பார்த்து இவன் பண்பாடுடையவன் என்று சொல்கிறோம். அவனிடத்திலே உள்ள எதைப் பார்த்து இப்படிச் சொல்கிறோம்? அவன் ஒரு பொருளை அந்தப் பொருளுக்காக மட்டுமே அனுபவிக்கிறான்; அல்லது அதன் பிரயோஜனத்திற்காகவும் சேர்த்து அனுபவிக்கிறான். இங்ஙனம் பிரயோஜனத்தைக் கருதாமல், ஒரு பொருளை அதற்காக மட்டுமோ அல்லது அதன் பிரயோஜனத்திற்காகவும் சேர்த்தோ அனுபவிக்கின்ற தன்மை எதுவோ அதுதான் பண்பாடு என்று அழைத்தற்குரியது. ஆனால் இப்படிச் சொல்லிவிட்டால் பண் பாட்டைப் பற்றிப் பூராவும் சொன்னதாகாது. பண்பாட்டின் ஆரம்பம் என்றுதான் இந்த அனுபவிக்கின்ற தன்மையைச் சொல்ல வேண்டும். இந்தத் தன்மை மேலும் மேலும் வளர்ந்து செல்லக் கூடியது எப்படி? கோயிலின் கோபுரம் இருக்கிறது. அதனால் ஏதோ பெரிய பிரயோஜனம் இருக்கிறதென்று அது கட்டப்பெறவில்லை. ஆனாலும் அதனைப் பார்த்து ‘ஆ,ஆ, என்ன அழகு! என்ன வேலைப்பாடு’ என்று சொல்லி சந்தோஷப் படுகிறோம்; நம்மிடத்தில் ஒரு குதூகல உணர்ச்சி உண்டாகிறது. இப்படியே சூரியோதயம், சூரியாஸ்தமனம் முதலியவைகளையும் சொல்லலாம். சூரியனால் பிரயோஜனம் மட்டும் இருக்கிறது. ஆனால் சூரியோதயத்தையோ சூரியா ஸ்தமனத்தையோ பார்ப்பதனால் பிரயோஜனத்தோடுகூட ஒருவித இன்பமும் உண்டாகிறது; அந்த இரண்டு காட்சிகளைத் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவல் நம்மிடையே எழுகிறது. இங்ஙனம் நாம் தனித்துப் பார்ப்பதோடு, அப்படிப் பார்த்துச் சந்தோஷத்தை அனுபவிப்பதோடு நின்றுவிடக்கூடாது; மற்றவர் களையும் அனுபவிக்குமாறு செய்ய வேண்டும்; அது மட்டுமல்ல, அவர்கள் அனுபவிப்பதைப் பார்த்து நாம் சந்தோஷப்படவேண்டும். எல்லோருடனும் சேர்ந்து சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும், எல்லோரையும் சந்தோஷம் அனுபவிக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எந்த இடத்தில் தோன்றுகிறதோ அந்த இடத்தில் அன்பு மலர்கிறது; அதிலிருந்து சகோதர வாஞ்சை என்கிற வாசனை வீசுகிறது. எனவே பொதுமை எண்ணத்தைத் தூண்டுவது எதுவோ, பொதுமை எண்ணத்தை வளர்ப்பது எதுவோ, பொதுமை யிலிருந்து விளைவது எதுவோ அதுவே பண்பாடு என்று சுருக்கமாகக் கூறலாம். பொதுமையாகிற அடிப்படையின் மீது பண்பாடு என்கிற கட்டிடம் நிர்மாணம் செய்யப்படுகிறது என்றும் கூறலாம். ஆனால் இப்படிச் சொன்னதனாலேயே பண்பாட்டுக்குப் பூரண வியாக்கி யானமும் சொல்லிவிட்டதாகாது. ஏற்கனவே சொன்னபடி, அறிஞர்கள் இதற்கு வெவ்வேறு விதமான வியாக்கி யானங்கள் செய்திருக்கிறார்கள். “இனிய சுபாவம், நிதானம், ஆத்ம சக்தி, பொறுமை, ஞானம், வீரம் ஆகிய இவை யாவும் ஒரு பண் பட்ட மனத்தின் தன்மைகள்” என்கிறான் ஓர் அறிஞன். “அறிவையும் அழகையும் முக்கிய லட்சணங்களாகக் கொண்ட பூரண த்துவத்தை நாடுவது எதுவோ அதுதான் பண்பாடு” என்ற கருத்தைத் தெரிவிக் கிறான் இன்னோர் அறிஞன். “அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்” என்பது திருக்குறள். இனி நாகரிகத்தைப் பற்றி ஓரிரண்டு அறிஞர்கள் கூறியுள்ள கருத்துக் களை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். “நாகரிகமென்றால், புறச்சூழலில் காணப்படும் லௌகிக அபிவிருத்திகள் அல்ல. ஒரு மனிதனுடைய சீலத்தை, அந்த மனிதன் மூலமாக தேசத்தின் சீலத்தை மேன்மையுறச் செய்வது எதுவோ அதுதான் நாகரிகம்” என்பது ஓர் அறிஞனுடைய கருத்து. “வாழ்க்கைச் சாதனங்களின் அபிவிருத் தியைக் கொண்டு ஒரு நாகரிகத்தை அளந்து பார்க்கக் கூடாது. வாழ்க்கையின் தன்மையென்ன, அதற்கு என்ன மதிப்பு கொள்ளப் பட்டிருக்கிறது என்பதைக் கொண்டே நாகரிகத்தை அளந்து பார்க்கவேண்டும்” என்கிறான் வேறோர் அறிஞன். “கலைகளும் ஞானமும் நடத்தையும் ஒழுக்கமும் சேர்ந்த சேர்க்கைதான், பொக்கிஷந்தான் நாகரிகம்” என்பது ஓர் அமெரிக்க அறிஞனுடைய அபிப்பிராயம். இத்தகைய பண்பாடும் நாகரிகமும் நிறைந்தவர்களா யிருந்த தனாலேயே ஆசிய மக்கள் ஆதி காலந்தொட்டு, தங்களுடைய நலன் வேறு, மற்றவர்களுடைய நலன் வேறு என்று வித்தியாசம் பாராட்டாமல் எவ்லோருடைய நலனையும் நாடினார்கள்; தங்கள் நாடு, தங்கள் சமுதாயம் என்று தனித்துப் பாராமல் உலகனைத் தையும் ஒரு குடும்பமாகப் பார்த்தார்கள். ஒரு நல்ல காரியத்திற்கு எல்லோருடைய கூட்டுறவும் தேவையென்பதே இவர்களின் அடிப் படையான கொள்கையாயிருந்தது. இதனால் எல்லோரும் nக்ஷம மாயிருக்க வேண்டும், உலகம் சாந்தி பெற வேண்டுமென்பன போன்ற கோரிக்கைகள் இவர்களுடைய இலக்கியங்களில் பிரதிபலித்தன. எல்லோரும் nக்ஷமமாயிருக்க வேண்டுமானால், உலகத்தின் சாந்தி நிலவ வேண்டுமானால், எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும்; அந்தச் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு எல் லோருக்கும் சௌகரியங்களும் சந்தர்ப்பங்களும் இருக்கவேண்டும். ஒருவர் தாழ மற்றொருவார் வாழ்தல் என்ற ஏற்பாடே இருக்கக் கூடாது. ஒருவர் பட்டினி இருக்க மற்றொருவர் வயிறார உண்ணக் கூடாது. இந்த மாதிரியான பொதுமைக் கருத்துக்கள் ஆசிய மக்களுக்கு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது. அரசாங்க உத்தி யோகத்தில் அமரவேண்டிய ஒருவன் எப்படி நடந்துகொள்ள வேண்டு மென்பதைப்பற்றி கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுளுக்கு முன்னே எழுதப் பெற்ற ஓர் எகிப்தியப் பாடல் பின் வருமாறு கூறுகிறது:- “ஒரு முழ நிலத்திற்கு ஆசைப்படாதே; ஒரு விதவையின் நிலத்தில் அத்து மீறிச் செல்லாதே; உனது நிலத்தை உழுது பயிரிட்டு உனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்; உனது இடத்தில் தயாரித்த ஆகாரத்தையே சாப்பிடு; அக்கிரமமாக ஐயாயிரம் சம்பாதிப்பதைக் காட்டிலும் கடவுள் உனக்குக் கொடுக்கிற ஒரு பரை தானியமே போதுமானது. களஞ்சியத்திலிருக்கும் பெருஞ் செல்வத்தைக் காட்டிலும் கடவுளின் ஆணைக்குட்பட்டு வறுமையா யிருப்பது மேல்; துக்கத்தின் மத்தியிலே பெருஞ் செல்வத்தோடிருப்பதைக் காட்டிலும் சந்தோஷத்தின் மத்தியிலே சில துண்டு துணுக்குகளோடு வாழ்வதே மேல்....................” மானிட சமுதாயம் உடல், அதில் தான் ஒரு சிறு அங்கம் என்று பிரதியோர் ஆசிய மகனும் கருதிக்கொண்டிருந்தான். ஓர் அங்கத்திற்கு ஊறு ஏற்பட்டால் அது மற்ற அங்கங்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் அவனுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தது. இதனால் யாருக்கும் தீங்கிழைக்கக் கூடாது, அது தனக்கே தீங்கிழைத்துக் கொண்டதாகும் என்ற உணர்ச்சி அவனுக்கு இயற்கையாகவே ஏற்பட்டிருந்தது. தான் தீங்கிழைக் காமலிருந்ததோடு மட்டுமல்ல, மற்றவர்களையும் தீங்கினின்று தடுத்து வந்தான்; அப்படித் தடுத்து அவனை நல்வழிப் படுத்துவது தனது கடமை யென்று கருதினான். எப்படி புல் பூண்டுகளைக் களைந்துவிட்டு நெற்பயிரைச் செழிக்கச் செய்கிறோமோ அதுபோல தனி மனிதனிடத்திலும், மனித சமூகத்தினிடத்திலும் உள்ள கெட்ட தன்மைகளை அகற்றி நல்ல தன்மை களை வளர்ப்பதில் முனைந்து நின்றார்கள் ஆசிய மக்கள். பாரசீக வாசகங்கள் சிலவற்றைக் கேளுங்கள்:- “ஒருவன் சிறிய சொத்துக்காரனா யிருந்தாலும், பெருஞ் சொத்துடைய வனாயிருந்தாலும், வாய்மையுள்ளவர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும்; பொய் சொல்கிறவர்களிடத்தில் தீயவனாக நடந்துகொள்ளவேண்டும்.” “பிரதியொரு மனிதனையும் உன் நண்பனாகக் கருது. அதுவே உன் சுபாவம். பிரதியொரு மனிதனையும் நல் வாழ்க்கையிலே ஈடுபடுத்து; அதுவே உன் ஞானம். மற்றவர்களை, உன்னைப்போல் நினை; அதுவே உன் மதம். மற்றவர்கள் மூலமாக உனது சந் தோஷத்தைத் தேடிக்கொள்; அதுவே உன் ஆத்மா.” “மனிதர்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக ஒருவரை யொருவர் நேசிக்கிறார்களோ, ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமான சந்தோஷத்தை அடைகிறார்கள்.” எல்லோரும் சுதந்திரமா யிருக்க வேண்டுமென்ற கருத்து ஆசிய மக்களிடத்தில் நிலவியிருந்தது என்று மேலே சொன்னோமல்லவா, இஃது - இந்தக் கருத்து - அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் பிரதிபலித்துக் கொண்டிருந்ததை நன்கு காணலாம். அரசாங்க அதிகாரத்தை ஓரிடத்திலே தேக்கி வைத்துக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழேயுள்ள ஸ்தாபனங்களுக்கு வினியோகிப்பது என்ற முறை ஆசியாவிலே கிடையாது. அதிகார மானது, கீழே விரிந்து மேலே சுருங்கியிருந்தது. எப்படித் தனி மனிதன் தன்னைத்தான் ஆண்டுகொள்ள வேண்டுமென்ற நியதி இருந்ததோ அப்படியே பிரதியொரு சிறிய ஸ்தாபனமும் தன்னைத்தான் ஆண்டு கொள்ள வேண்டுமென்ற நியதி இருந்தது. இதனால்தான் ஆசியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் சமுதாய அமைப்பு, சமுதாயக் கட்டுப் பாடு, சமுதாய ஒழுங்கு இவைகளெல்லாம் நிலைகுலையாமலிருந்தன. ஆள்வது குறைவாகவும் வாழ்வது அதிகமாகவும் இருந்தது. அரசன் ஆள்வதற்காக இருக்கவில்லை; முறை செய்து காப்பாற்றுவதற் காகவே இருந்தான். ஒரு ராஜ்யத்தில் எவ்வளவுக் கெவ்வளவு ஆளுகை குறைவாயிருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்த ராஜ்யம் சுபிட்சமாயிருக்கும் என்பதே பொதுவான நியதியா யிருந்தது. ஒரு சீனப் பழமொழி கூறுகிறது:- “அதிகமாக ஆண்டால் ஐனங்கள் அதிகமான ஏழைகளாகிறார்கள்; அதிகமான சட்டங்கள் செய்தால், சட்டங்களை மீறுகிறவர்கள் அதிகமாகிறார்கள்.” மற்றவர்களுடைய துன்பங்களை அறிந்து கொள்ளக்கூடிய சக்தி ஆசியாவுக்குத்தான் உண்டு. அங்கு அவதரித்த மகான்க ளத்தனை பேரும் துன்பத்தை அனுபவித்தே உண்மையைக் கண்டி ருக்கிறார்கள். அந்த மகான்களில் அநேகர், மற்றவர்களுடைய இன்பத்திற்காகத் தாங்களே வலிய துன்பத்தை ஏற்றுக் கொண்டி ருக்கிறார்கள். அவர்களுடைய உபதேசங்கள் யாவும் மற்ற வர்களுடைய துன்பத்தைத் துடைக்கின்ற முறையிலேயே அமைந் திருக்கின்றன. யார் மற்றவர்களுடைய துன்பத்தை அறியும் சக்தி யுடையவர்களாயிருக்கிறார்களோ அவர்கள்தான் அந்தத் துன்பத் திற்குப் பரிகாரம் காணும் முயற்சியில் ஈடுபடுவார்கள்; அவர்களால் தான் அந்தத் துன்பத்தைப் பரிகரிக்க முடியும். ஆதலின் உலகத்தில் துன்பங்கள் ஒழிந்து இன்பம் துளிர்க்க வேண்டுமானால் அதற்கு ஆசிய மக்கள்தான் முனைய வேண்டும். கீழ்நாட்டையும் மேனாட்டையும், அல்லது ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒப்பிட்டுக் காட்டுகின்ற வகையில் சில அறிஞர்கள் ஆசியா மீது இரண்டு குற்றங்கள் சுமத்துவதுண்டு. ஆசியாவின் பண்பாட்டை அறியாத ஒரு தன்மையினாலேயே இவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் என்று முதலிலேயே நாம் சொல்லிக் கொண்டுவிட விரும்புகிறோம். இவர்களுடைய இரண்டு குற்றச் சாட்டுகளையும் சிறிது கவனிப்போம். முதலாவது குற்றச்சாட்டு என்னவென்றால், ஆசியா இருக்கிற நிலையில் இருப்பதிலேயே திருப்தியடைகிறது; எவ்வித மாற்றத் தையும் விரும்புவதில்லை: முன்னேறிச் செல்ல வேண்டுமென்ற ஆவலும் அதற்கு இல்லை. இதற்கு எதிராக, ஐரோப்பாவோ சதா மாறிக்கொண்டிருக்கிறது மாறுதல், முன்னேற்றத்தின் அறிகுறி யல்லவா? இப்படிக் கூறுகின்ற அறிஞர்கள், ஆசியா ஐரோப்பா வினால் ஆதிக்கங் கொள்ளப்பட்டதற்கு அதனுடைய ஒரு நிலைப் போக்குத்தான் காரணம் என்று சொல்லி ஆசியாவைத் தட்டி எழுப்புகிறார்கள்: முன்னே பிடித்துத் தள்ளுகிறார்கள். இவர்களுக்கு நாம் என்ன சொல்லுவது? வைத்தியனே, உன்னைச் சொஸ்தப் படுத்திக் கொள்’ என்று சொல்லி இவர்களுக்கு வணக்கஞ் செலுத்துகிறோம். ஆசியா, நிற்கின்ற நிலையிலே நிற்க விரும்புகிறதென்பது வாஸ்தவம். அதில்தான் அதனுடைய பெருமை இருக்கிறது. வாழ்க்கையின் பல துறை களிலும் அது பல விதமான பரி சோதனைகள் நடத்தி அவற்றில் எது யுக்த மானது, எது அனுசரிக்கத் தகுந்தது என்ற சில முடிவுகளைக் கண்டிருக்கிறது. இந்தக் கண்டி ருக்கிற நிலைக்கு அஃது-ஆசியா-எத்தனையோ நூற்றாண்டு களுக்கு முன் வந்துவிட்டது. அப்பொழுது ஐரோப்பா ஒரு பச்சிளங் குழந்தை; நாகரிகமின்னதென்று அறியாத நிலையிலிருந்தது. தான் சிறு குழந்தை யாயிருந்த காலத்தில் ஆசியா எப்படி இருந்ததோ அப்படியேதான் பெரிதாகி விட்ட பிறகும் பார்க்கிறது. தன்னைப் போல் ஆசியாவும் வளரவில்லையே என்று ஆசியாமீது இரக்கங் காட்டுகிற பாவனையில் பேசுகிறது. முன்னேற்றத்தின் அடியிலே இருக்கும் ஐரோப்பா முன்னேற்றத்தின் முடிவைக் கண்டுவிட்ட ஆசியாவைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமில்லை. ஆசியா, வாழ்க்கையின் எந்தத் துறையிலும் ஒரு நிதானம் வேண்டு மென்ற முடிவுக்கு வந்திருக்கிறது. எதிலும் ஒரு தீவிரத்திற்குச் செல்ல அது விரும்புவதில்லை. இதனையே குறுகிய மனப்பான்மை என்று குறையாகச் சொல்கிறார்கள் மேனாட்டார். உதாரணமாக, ஐரோப்பாவின் அரசியல் வாழ்க்கையையும் ஆசியாவின் அரசியல் வாழ்க்கையையும் எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவில் அநேக நூற்றாண்டுகளாக, அரசர்கள் தெய்வப் பிறவிகள், தெய்விக உரிமை யுடையவர்கள் என்ற கொள்கை அதிதீவிரமாக நிலவி வந்தது. இதனை ஆதரித்துக் கூச்சல் போட்ட கோஷ்டிகள்தான் எத்தனை? எழுந்த நூல்கள் தான் எத்தனை? இந்தக் கொள்கை காரணமாக அரசர்கள் கொடுங்கோலர்களானார்கள்; ஜனங்கள் சொல்லொணாத துன்பங் களை அனுபவித்தார்கள். இதன் விளைவு என்ன? அரசர்களுடைய தெய்விக உரிமையை எதிர்த்துப் பல இயக்கங்கள் கிளம்பின. அரசர்களுடைய தெய்விக உரிமை எவ்வளவு தீவிரத் திற்குச் சென்றதோ அவ்வளவு தீவிரத்திற்கு ஜனங்களுடைய ஆளும் உரிமையும் சென்றது. கடிகாரத்தின் தொங்கட்டத்தை ஒரு பக்கம் வேகமாகத் தட்டிவிட்டால் அது மறுபக்கமும் வேகமாகச் செல்லு மல்லவா? இவைகளினால் சமுதாயத்தில் எப்பொழுதும் ஓர் அதிர்ச்சி, ஒரு குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது; பூசல்களும் பிணக்குகளும் சகஜமாயின; அமைதியென்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இப் பொழுதும்-இந்த இருபதாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலும்- ஐரோப் பாவைப் பாருங்கள், எங்கேனும், யாரிடத்திலேனும் அமைதி இருக்கிறதா என்று. ஆசியாவோ, நெடுங்காலத்திற்கு முன்னரேயே, தீவிர முடி யாட்சி யிலுள்ள தீமைகளையும், தீவிர குடியாட்சியிலுள்ள தீமை களையும் உணர்ந்து, இரண்டிலுமுள்ள தீமைகளைக் களைந்து, இரண்டுக்கும் மத்திய மாக, குடிக்கோனாட்சி, அதாவது குடி தழுவிய கோனாட்சி என்ற முறையை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்தது. இதனையே பிற்காலத்து ஐரோப்பிய அரசாங்கங்களிற் சில பின்பற்றியிருக்கின்றன. இங்ஙனம் அரசியலிலே மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும், ஆசியா, நடுநிலையிலேயே இருந்து வந்திருக்கிறது; எதிலும் ஒரு நிதானத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது. நீண்ட கால அனுபவத்தின் மீது ஏற்பட்ட முடிவு இது. எப்பொழுதுமே அனுபவம் நிறைந்தவர்கள், பேச்சிலும் நடக்கையிலும் நிதானமாக இருப்பார்கள்; சுக துக்கங்களைச் சமதூக் கத்திலே வைத்துப் பார்ப்பார்கள். எதிலும் அவர்கள், தங்களை மிஞ்சிய ஒரு நிலைக்குச் செல்வ தில்லை. ஆசியாவினுடைய தன்மையும் இது தான். வில்லியம் ரோஷர்1 என்ற ஜெர்மானிய அறிஞன் கூறுகின்ற வாசகம் இங்குச் சிந்திக்கத் தக்கது:- “விவசாய நாகரிகமானது, இருக்கின்ற நிலையிலே இருப்பதையும் மேன் மக்களாட்சியையும் ஆதரிக்கிறது; தொழில் நாகரிகமானது, முற்போக்குடைய தாகவும், ஜனநாயக ஆட்சியை ஆதரிப்பதாகவும் இருக்கிறது.” இரண்டாவது குற்றச்சாட்டு என்னவென்றால் ஆசியாவானது, லௌகிகத்தை அடியோடு துறந்துவிட்டு பாரமார்த்திகத்திலே அதிக கவனஞ் செலுத்தி வந்திருக்கிறதென்பதாகும். ‘ஆசியாக்காரர்கள், இகலோகத்தை இழந்துவிட்டார்கள்; பரலோகத்திலிருந்து ஏதேனும் பரிசு கிடைக்குமாவென எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’ என்று சிலர் கேலியாகச் சொல்வ துண்டு. பொதுவாக, ஆசியாக்காரர்கள் உலக விவகாரம் தெரியாதவர்கள், வாழத் தெரியா தவர்கள் என்பது ஐரோப்பியர் பலருடைய அபிப்பிராயம். இந்த அபிப்பிராயம் தவறு என்று நாம் உரத்துச் சொல்ல விரும்புகிறோம். ஆசிய மக்கள், வாழ்க்கையைக் கூறுபடுத்திப் பார்க்கவில்லை யென்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். லௌகிகமும் பார மார்த்திகமும் சேர்ந்தது தான் வாழ்க்கையென்பதே அவர்க ளுடைய கோட்பாடாயிருந்து வந்திருக் கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கை யும் சமுதாய மனிதனுடைய வாழ்க்கையும் தனித்தனி அறைகள் என்கிற மாதிரியான எண்ணமே அவர் களுக்கு உதித்ததில்லை. ஆசியக் கிரந்தங்கள் யாவும் இரண்டையும் இயைபு படுத்தியே பேசி யிருக்கின்றன. இது விஷயத்தில் புராதன கிரீஸும் ஆசியாவைப் பின் பற்றியிருக்கிறதென்று சொல்லவேண்டும். முற்காலத்துக் கிரேக்க அறிஞர்கள், வாழ்க்கையை அற வாழ்க்கையென்றும் அரசியல் வாழ்க்கையென்றும் வேறுபடுத்திப் பாராமல் இரண்டையும் ஒன்றுபடுத்தியே பார்த்தார்கள். அரிஸ்ட்டாட்டல் எழுதிய “அரச நீதி”, அவனுடைய “அறநூ”லின் தொடர்ச்சியே. ஆசிய மக்களின் கொள்கைப்படி, அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. அறத்தால் வரும் பொருளைக் கொண்டு இன்பத் துய்த்தலிலேயே மனிதனுடைய வாழ்க்கை சிறப்படைகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை விடுத்து மற்ற இரண்டையும் கடைப் பிடித்தலினால் வாழ்க்கை பூர்த்தி யடையாது; அது நல் வாழ்க்கையுமாகாது. இந்த நல்வாழ்க்கை நடத்துவதுதான் பிரதியொரு மனிதனுடைய நோக்கமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தைக் கொண்ட ஆசிய மக்கள், லௌகிகம், பாரமார்த்திகம் என்ற இரண்டில் ஏதேனுமொன்றை மட்டும் கடைப் பிடித்திருப்பார்களா வென்று வாசகர்களைச் சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ஆசியாவின் பூர்விகக் கிரந்தங்கள் பலவும், காணமுடியாத கடவுளைப்பற்றி எவ்வளவு சவிஸ்தாரமாகச் சொல்லி யிருக்கின்றனவோ அவ்வளவு சவிஸ்தாரமாகக் காணப்படுகின்ற மனிதனைப் பற்றியும் கூறியிருக்கின்றன; அந்த மனிதனுக்குக் கடவுளை அடையும் வழியைக் காட்டியிருப்பது போல், அவன் வாழவேண்டிய வகையைப் பற்றியும் சொல்லி யிருக்கின்றன; தத்துவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருக் கின்றனவோ அவ்வளவு முக்கியத்துவம் அனுஷ்டா னத்திற்கும் கொடுத்துப் பேசியிருக்கின்றன; செயலற்ற எண்ணமோ, எண்ணத்தை அடிப்படையாகக் கொள்ளாத செயலோ பிரயோஜனப்படாது என்பதைப் பல முகத்தானும் வலியுறுத்தியிறுக்கின்றன. ஆசியாவின் முற்கால அறிஞர்கள், எந்தத் துறையையும் ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிடவில்லை. யோக சாஸ்திரத்தைச் சொன்னவர்கள் போக சாஸ்திரத்தையும் சொல்லி யிருக்கிறார்கள். மோனத்தின் இனிமையை விதந்து கூறியவர்கள் வானத்தையும் அதில் சஞ்சரிக்கும் கிரகங்களையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள். முப்பத்திரண்டு வித்தைகளென்றும் அறுபத்து நான்கு கலை களென்றும் இந்தியாவின் முன்னோர்கள் வகுத்துவிட்டு போனது எதைக் காட்டுகிறது? அவர்கள் வாழ்க்கையில் பல துறைகளையும் கண்டறிந்திருக்கின்ற மேதையை யல்லவோ காட்டுகிறது? தற்கால அறிஞர் களைத் திகைக்க வைக்கும் எத்தனையோ பிரச்னைகளுக்கு ஆசியாவின் முற்கால அறிஞர்கள் பரிகாரங்கண்டிருக்கிறார்கள். ஓர் அறிஞன் கூறுகிறான்:-“ (ஆசியாவின்) இந்தப் புராதன மக்களுடைய ஆச்சரியகரமான, எதிர்பாராத மேதையை என் னென்று சொல்வது? இவர்கள் அனுஷ்டான சாத்தியமான அநேக எண்ணங்களையும் தத்துவங்களையும் சொல்லி, அவைகளை நடை முறையில் கொணர்வதற்கான ஸ்தாபனங்கள் அமைக்கிற வழி களைப் பற்றியும் சொல்லியி ருக்கிறார்கள்.... தற்கால அறிஞர்களைக் திகைக்க வைக்கக்கூடிய அநேக பிரச்னைகளுக்கு இந்த முன் னோர்கள் பரிகாரங்கள் கண்டதோடு அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.” ஆசிய மக்கள், உலக விஷயங்களை எவ்வளவு நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார்கள். உலக விவகாரங்களை எவ்வளவு ஒழுங்காக நடத்தி வந்தார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களை இங்கே எடுத்துக் காட்ட விரும்பு கிறோம். கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் மூவாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னே பாபி லோனியாவில் வழங்கி வந்த இரண்டொரு பழமொழிகளைக் கேளுங்கள். இவைகளைக் கொண்டு பாபிலோனிய மக்கள் எத் தகைய நேரிய வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் என்பது தெரிய வரும். “பலசாலிகள், தங்கள் சொந்த சம்பாத்தியத் தினால் வாழ்கிறார்கள்; பலவீனர்கள், தங்களுடைய பிள்ளைகளின் சம்பாத்தியத்தினால் வாழ் கிறார்கள்.” “அவன் நேர்மையுள்ளவனாகவும் நல்லவனாகவும் இருக்கிறான். ஆயினும் அவனுடைய உடை கந்தலாக இருக்கிறது.” “குடும்பத்தினருடன் சச்சரவிட்டுக் கொள்வது, புனிதமான இடத்தை அசுத்தப்படுத்துவது போலாகும்.” பாபிலோனியர்கள், மிகப் புராதன காலத்திலிருந்தே, குடும்ப nக்ஷமத்தை விசாரித்து ஒருவருக்கொருவர் கடிதப் போக்குவரத்து செய்து கொண்டிருக் கிறார்கள். கடன் கொடுத்தல், நிலம் விற்றல், ஒருவருடைய சொத்துக்களை மற்றொருவருக்கு மாற்றுதல் இப்படிப் பட்டவைகளுக் கெல்லாம் பத்திரங்கள் எழுதிப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புருஷன், தன் மனைவிக்குப் பின் வருமாறு கடிதம் எழுதுகிறான்:- “மனைவி ஸெக்குவுக்கு நாபு-ஜேர்-உஷாப்ஷி எழுதியதாவது:- கடவுள் உனக்கு ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிப்பாராக! தெய்வ கிருபையால் நான் இங்கே சௌக்கியமாக இருக்கிறேன். உனக்கு பத்து கூர் (படி மரக்கால் போன்ற ஓர் அளவு) தானியம் கொடுக்கும்படி இக்கிஷாவின் மகன் இக்கின் மர்துக்குக்கு எழுதி யிருக்கிறேன். வீட்டு விஷயத்தில் பராமுகமாயிராதே. எல்லாவற்றையும் நன்றாகக் கவனித்துக் கொள். என் பொருட்டுக் கடவுளைக் கும்பிடு. நீ என்ன நினைக்கிறாய் (அதாவது உனக்கு என்ன வேண்டும்) என்பதைப் பற்றி எனக்கு எழுது.” கடன் கொடுத்த ஒருவன், தான் பெற்றுக்கொண்ட வட்டிக்குப் பின் வருமாறு ரசீது எழுதிக் கொடுத்திருக்கிறான்:- “ஐந்து ஷேக்கெல்களுக்கு (ஒரு நாணயம்) வருஷத்திற்கு ஒரு ஷேக்கெல் விகிதம் வட்டி கணக்குப் பண்ணி அதற்காக அரை மைனா வெள்ளியை, கிர்னினிஷாக் (என்பவ)னிடமிருந்து உர்துன் பாயே (என்பவன்) பெற்றுக் கொண்டதற்கு இதுவே ரசீது......... வருஷம் ஒன்பதாவது மாதத்தில் இது கொடுக்கப்பட்டது.” உலகத்தில் ஆண்களும் பெண்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதைப்பற்றி ஒரு சீனக் கிரந்தம் பின் வருமாறு கூறுகிறது:- “லட்சியம் வாய்ந்த ஒரு புருஷன், குதிரையைப் போல் அடக்கமாகவும், கட்டுப் பாடாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும். அப்படியே லட்சியம் வாய்ந்த ஒரு ஸ்திரீ, பசுவைப்போல் உழைப்பாளியாகவும், கற்புடையவளாகவும், சாதுவாகவும் இருக்க வேண்டும்.” சந்தோஷமாக வாழ்வதற்கு ஒரு சுருக்கமான வழி கூறுகிறான் லாவோத்ஸே என்ற சீன ஞானி. “உண்பதற்குச் சில பருக்கைகள்; குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர்; தலையணைக்கு முழங்கை; இவைகளிருந்தாலே நான் சந்தோஷமாயிருக்க முடியும். எளிமையைக் கடைப்பிடி; உள் அழகைக் காப்பாற்று; அகம்பாவத்தை அடக்கு; ஆசைகளுக்கு வரம்பு கட்டிக்கொள்.” இந்தியாவில் முனிவர்கள் பலர்; உலகத்தைத் துறந்துவிட்டு அடர்ந்த காடுகளிலும் இருண்ட குகைகளிலும் பரம்பொருளை நாடிக் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார்களென்று படிக்கிறோம். இவர்கள் காட்டிலே வசித் தாலும் நாட்டு விவகாரங்களை நன்கு அறிந்தவர்களாயிருந்தார்கள். மகா அலெக்ஸாந்தர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தானல்லவா, அப்பொழுது சில முனிவர்களைச் சந்திக்க விரும்பினான். அவர்களுடைய அதிமேதைமை பற்றியும் ஆத்ம சக்தியைப்பற்றியும் ஏற்கனவே கேள்விப் பட்டிருந் தானாதலின் அவர்களைச் சந்தித்து அவர்களுடன் சம்பாஷணை செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அப்படியே முனிவர்கள் பதின்மரைச் சந்தித்தான். ‘உங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். யார் முதலாவதாகச் சரியான பதில் அளிக்க வில்லையோ அவர்கள், தங்கள் உயிரை இழக்கத் தயாராயிருக்க வேண்டும். உங்களிலே மூத்தவர் இதற்கு நியாயாதிபதி யாக இருக்கட்டும்” என்று கூறினான். முனிவர்களும் சம்மதித் தார்கள். பின் வரும் சம்பாஷணை நடைபெற்றது:- வினா : உலகத்தில் இருக்கின்றவையா, இறந்து போனவையா, எவை அதிகமென்று நினைக்கிறீர்கள்? விடை : உயிரோடிருக்கின்றவைதான் அதிகம். இறந்தவை இருக்கவில்லையே. வினா : சுபாவந் தப்பின, அதாவது விகாரமான பெரிய ஜந்துக்கள் பூமியிலேயா, சமுத்திரத்திலேயா எங்கு அதிகமாக உற்பத்தியாகின்றன? விடை : பூமியில்தான்; சமுத்திரம் பூமியின் ஒரு பாகந்தானே? வினா : உயிருள்ளவைகளில் எது மிகவும் புத்தியுடையது? விடை : மனிதன் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. வினா : ஸாபாஸ் பிரதேசத்திலுள்ள ஜாதியாரை ஏன் கலகம் செய்யும்படி கிளப்பிவிடுகிறீர்கள்? விடை : கண்ணியமாக இறந்து போவதைக் காட்டிலும் கண்ணி யமாக வாழ்வதுதான் சிறந்தது என்று கருதுவதனால்தான். வினா : இரவா, பகலா, எது முதலில் சிருஷ்டிக்கப்பட்டது? விடை : பகல். வினா : ஒருவன், மற்றவர்களிடமிருந்து எப்படி அதிகமான அபிமானத்தைப் பெற முடியும்? விடை : பிறருக்கு அச்சத்தை உண்டு பண்ணாத ஒரு சக்தியை அவர் பெற்றிருந்தால். வினா : மனிதன் எப்படிக் கடவுளாதல் கூடும்? விடை : மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தைச் செய்தால். வினா : எது சக்தி வாய்ந்தது, வாழ்க்கையா, மரணமா? விடை : தனக்குப் பின்னால் பல துன்பங்களைக் கூட்டிக் கொண்டு வரும் வாழ்க்கைதான். வினா : ஒருவன் எவ்வளவு காலம் ஜீவித்திருக்க வேண்டும்? விடை : வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல் என்று அவன் நம்பாத வரையில். சம்பாஷணை முடிந்ததும், அலெக்ஸாந்தர் நீதிபதியைப் பார்த்து, “யாருடைய பதில் நன்றாயிருக்கிற”தென்று கேட்டான். “யாரும் சரியான பதில் சொல்லவில்லை. ஒருவருடைய பதிலைக் காட்டிலும் மற்றொருவருடைய பதில் மட்டமானதாகவே இருக் கிறது” என்றான் அந்த நியாயாதிபதி. “அப்படி யானால் நீதான் முதலில் இறக்க வேண்டும். ஏனென்றால் உன்னுடைய பதில்தான் மிகவும் மோசமாயிருக்கிறது” என்றான் அலெக்ஸாந்தர். “இல்லை அரசனே, யார் முதலாவதாகச் சரியான பதில் அளிக்கவில்லையோ, அவரைத் தான் மரணத்திற்குட்படுத்துவதாக நீ சொன்னா யென்பது ஞாபக மிருக்கட்டும் என்று திருப்பிச் சொன்னான் அந்த நியாயாதிபதி. இதைக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி கொண்ட அலெக்ஸாந்தர் எல்லோருக்கும் சன்மானங்கள் வழங்கினான். ப்ளூட்டார்க்1 என்ற கிரேக்க சரித்திராசிரியன் எழுதி வைத்துப் போயிருக்கிற வரலாறுகளில் இந்த நிகழ்ச்சி காணப் படுகிறது. இது கட்டுக்கதையோ உண்மைச் சம்பவமோ நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்படியிருந்த போதிலும், முற்கால இந்தியர் களுடைய லௌகிக ஞானம் இந்தச் சம்பாஷணையிலிருந்து நன்கு புலனாகிறது. அது நமக்குப் போதும். 3. ஐரோப்பாவும் ஆசியாவும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்குமுள்ள சில தாரதம்மியங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம். இப்படிச் சொல்வதனால், ஐரோப்பாவைத் தாழ்த்தியோ, ஆசியாவை உயர்த்தியோ காட்ட வேண்டுமென்பது நமது நோக்கமல்ல. அதனதனுடைய சூழ் நிலைக்கும் பரம்பரைக்கும் தகுந்தபடி அதனதனுடைய பழக்க வழக்கங்களும் மனப்பான்மைகளும் இருக்கின்றன. உலக சமாதானத் திற்கு ஆசியாதான் வழிகாட்ட முடியும், ஆசியாவுக்குத் தான் அந்தத் தகுதி உண்டு என்பதை நிர்த்தாரணம் செய்து காட்டுவதற்கு அதிகப் படியான அத்தாட்சியாகவே இந்தத் தார தம்மியங்களை எடுத்துச் சொல்கிறோம். ஐரோப்பா அறிவிலே பெருமை காண்கிறது; ஆசியாவோ, நம்பிக்கையிலே நிம்மதி பெறுகிறது. அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டியதுதான்; அந்த அறிவைக் கொண்டு உலகத்தைத் துருவித்துருவிப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் அந்த அறிவுக்குப் பின்னணியில் விசுவாசம் இல்லாவிட்டால், சிரத்தை இல்லா விட்டால், சீலமில்லாவிட்டால், உண்மையைக் காண முடியாது. இதயமில்லாத மூளை பக்தியில்லாத பூஜை. இன்றைய ஐரோப்பா, விஞ்ஞான அறிவை எவ்வளவு அதிகமாக வளர்த்துக் கொண்டி ருக்கிறது? ஆனால் இந்த வெறும் அறிவு எவ்வளவு அனர்த்தங் களை உண்டு பண்ணியிருக்கிறது? வெறும் அறிவு, ஆரம்பத்தில் ஊக்கத்தை உண்டுபண்ணினாலும் இறுதியில் அழிவிலேதான் கொண்டுபோய்ச் சேர்க்கும். அறிவு சக்தியுடையதுதான். ஆனால் அந்த அறிவு, அன்பைத் தழுவிக் கொண்டிராமற்போனால் மேலான தன்மைகளில் நம்பிக்கை கொள்ளாமற் போனால், அதன் சக்தியானது துஷ்பிரயோகந்தான் செய்யப்படும். விஞ்ஞான அறிவைக்கொண்டு ஸ்தூலத்தைப் பார்க்க முடியும். ஆனால் நம்பிக்கையைக் கொண்டு சூட்சுமத்தையும் காண முடியும். “விஞ்ஞானமானது நன்றாகப் பார்க்கிற இடத்தில்தான் காலடி எடுத்து வைக்கிறது; ஆனால் நம்பிக்கை, -இதனை அன்பு, விசுவாசம், சிரத்தை என்று எந்தப் பெயரிட்டு வேண்டு மானாலும் அழைக்கலாம். -பாராமலே முன் செல்லக்கூடியது. விஞ்ஞானம், தனக்கு முன்னோக்க மிருக்கிறதென்று பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் நம்பிக்கையோ, இருட்டிலேகூட முன்னேறிப் போக முடியும். மற்றவர்களுக்கு வழிகாட்டிச் செல்லும் சக்தி தனக்கு இருக்கிற தென்று விஞ்ஞானமானது கர்வமடையலாம். ஆனால் நம்பிக்கையோ, கைகொடுக்கிறது; அழைத்துச் செல்லப்பட்டால் அதற்காக வந்தனமளிக்கிறது.” அறிவு காரணமாக, ஐரோப்பா, நூல்களைப் படிக்கிறது. நம்பிக்கை காரணமாக, ஆசியா, அந்த நூல்களோடு சம்பாஷிக் கிறது; அந்த நூல்களில் வரும் பாத்திரங்களோடு உறவு கொண்டாடு கிறது; சம்பவங்களிலே ஐக்கியப் பட்டுவிடுகிறது. ஐரோப்பா, தத்துவ அளவிலே நிற்கிறது. ஆசியா, செயலிலே கவனஞ் செலுத்துகிறது. புதிய புதிய தத்துவங்களைக் கண்டு பிடித்து அவைகளுக்கு வியாக்கியானங்கள் எழுதிக் குவிக்கிறவர்களை ஐரோப்பா மேன்மைப் படுத்துகிறது. ஆசியா, செயலாற்றுகிறவர்களை, கர்ம யோகிகளைப் போற்றிப் பின்பற்றுகிறது. ஐரோப்பா, இயற்கையை ஆராய்ச்சி செய்கிறது. ஆசியா, இயற்கையிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுகிறது. இங்ஙனமே ஐரோப்பா, மனிதனை, மனிதனிடத்திலேயுள்ள சக்திகளை, உணர்ச்சிகளை ஆராய்கிறது. ஆசியா, அந்த மனிதனை, அவனிடத் திலேயுள்ள மனிதத் தன்மையை நம்புகிறது; அந்தத் தன்மைக்கு விண்ணப்பித்துக் கொள்கிறது. இன்னும் ஐரோப்பா, வாழ்க்கையைத் துண்டுதுண்டாகப் பிரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்கிறது. ஆசியா, வாழ்க்கையை மொத்தமாகப் பார்க்கிறது; அந்த வாழ்க்கையை வாழ்கிறது. ஓர் அறிஞன் கூறுகிறான்:- “ஐரோப்பாவுக்கு விஞ்ஞானம். அறிவு, தத்துவம் ஆகிய மூன்றும் உண்டு. ஆசியாவுக்கு நம்பிக்கை, சுய அறிவு, ஆத்மஞானம் ஆகிய மூன்றும் உண்டு.” ஐரோப்பா, தன் புலமையைப் பேச்சினால் புலப்படுத்துகிறது. ஆசியா, தன் ஞான நிறைவை மௌனத்தினால் காட்டுகிறது. ஐரோப்பா, ஓசையிலே இன்பம் நுகர்கிறது. ஆசியா, அமைதியிலே இனிமை, அனுபவிக்கிறது. ஐரோப்பா, எல்லோருடனும் போட்டிபோட வேண்டு மென்று சொல் கிறது. ஆசியா, எல்லோருடனும் ஒத்துழைக்க வேண்டுமென்று நெடுகிலும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து கொண்டு, ஒருவரை யொருவர் மிதித்துக் கொண்டு செல்வதுதான் முன்னேற்றம் என்று ஐரோப்பா கருதுகிறது. எல்லோருடனும் கைகோத்துக்கொண்டு சந்தோஷ மாகச் செல்வதுதான் முன்னேற்றம் என்று ஆசியா நம்புகிறது. அறிவின் உச்சாணிக் கிளையிலே ஏறி நின்று கொண்டிருந்தும் ஐரோப்பா கடவுள் காண முடியாதவர், அறிய முடியாதவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆசியா, நம்பிக்கையினால், கடவுளை அறிந்து, அடைந்தும் விட்டது ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னரேயே. ஐரோப்பா, மனிதர்களோடு மனிதர்கள் ஒன்றுபட வேண்டு மென்று முழக்கம் செய்கிறது. பூலோகத்தில் மனிதன் ஆளவேண்டு மென்று ஐரோப்பா சொல்கிறது. பூலோகத்தில் கடவுள் ராஜ்யம் நிலைக்க வேண்டு மென்று ஆசியா கோஷிக்கிறது. ஐரோப்பா, உரிமையைக் கொண்டாடுகிறது. ஆசியா, கடமையை வலியுறுத்துகிறது. ஐரோப்பாவின் சரித்திரம் உரிமைப் போராட்டமாகவே இருந்திருக்கிறது. ஆசியாவின் சரித்திரமோ யாருக்கும் அஞ்சாது கடமையைச் செய்துகொண்டு வந்த மகான் களுடைய வாழ்க்கையின் திரைப்படமாக இருக்கிறது. உரிமையின் மீது கொண்டுள்ள பற்றுள்ளம் காரணமாகத்தான் ஐரோப்பா, தனிமைக்கு அதிக மதிப்புக் கொடுத்து வந்திருக்கிறது. கடமையை வலியுறுத்தும் ஆசியாவோ, பொதுமைக்குப் புனிதமான ஒரு ஸ்தானம் கொடுத்து வந்திருக்கிறது. ஐரோப்பாவின் சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள். தனிமைக்காக, தனி மனிதன், தனிச் சமுதாயம், தனி நாடு ஆகிய இவைகளின் உரிமைக்காகப் பாடுபட்டவர்களைத் கௌரவித்திருக்கிறது; பொதுமைக்காகப் பாடுபட்டவர்களைக் தூற்றியும் துன்புறுத்தியும் வந்திருக் கிறது. ஆசியாவோ, பொதுமைக் காக, உலகனைத்தும் ஒரு குடும்ப மென்றும் மக்களனைவரும் கடவுளின் குழந்தைகளென்றும் போதனைசெய்து வந்தவர்களைப் பெரியோர்களாக வணங்கி வந்திருக்கிறது; தனிமையைப் பற்றிச் சொன்னவர்களை நிராகரித்திருக்கிறது. ஐரோப்பாவில் கார்ல் மார்க்ஸின் பொதுவுடைமைக் கொள்கை செல்வாக்குப் பெறவில்லை. அது வளரக் கூடாதென்பதற்காக எவ்வளவு முயற்சிகள் செய்யப்ப ட்டன? இன்னமும் செய்யப் படுகின்றன? ஆசியாவில் அவிபக்த குடும்பத்திற்கு விசேஷ மதிப் புண்டு. இஃது எதைக் காட்டுகிறது? ஆசிய மக்களின் பொதுமை உணர்ச்சியை. சமுதாயக் கட்டுப் பாட்டுக்கு ஆசியாவில் கொடுக்கப் படுகிற மதிப்பு ஐரோப்பாவில் கொடுக்கப்படுவதில்லை யென்று திண்ணமாகக் கூறலாம். ஐரோப்பா, பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்கிறது. ஆசியா, பலனைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. அதற்குக் காரியந்தான் பிரதானம். காரியத்தைச் செய்து கொண்டு போவதில் தான் அது திருப்திகாண்கிறது; இன்பமடைகிறது. பலனை எதிர் பார்ப்பதானால்தான் ஐரோப்பா, நிரானுகூல வாதத்திலே அடிக்கடி மூழ்கி விடுகிறது. இந்த நிரானுகூல மனப்பான்மை, மதத்திலே நாஸ்திகமாகவும், அரசியலிலே புரட்சியாகவும், சமுதாயத்திலே கீழோர் மேலோர் என்ற வேற்றுமையாகவும் பிரதிபலிக்கிறது. ஆசியாவோ எப்பொழுதும் சர்வானுகூலவாதி. இதனால் அஃது இருட்டிலேகூட வெளிச்சத்தைப் பார்க்கிறது; சமுதாயத்தில் அதிர்ச்சிகள் ஏற்பட்டால் அவைகளைச் சுலபமாகச் சமாளித்துக் கொண்டு விடுகிறது. ஐரோப்பாவின் அரசியல் முறைகள், பொருளாதார அமைப்புகள், சமுதாய ஒழுங்குகள் ஆகிய யாவும் பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆசியாவோ சகலமானவற்றிற்கும் அன்பையே அடிப்படை யாகக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சரித்திரம் பலாத் காரத்தின் சரித்திரந்தானே? ஐரோப்பாவுக்கு பலாத்காரத்தின் மீதிருந்த நம்பிக்கையானது, அடிமை வியாபாரத்தை ஆதரிக்கும்படி செய்தது; அதற்கு மத மெருகு கொடுத்தது; அதனை நியாயமென்று சாதித்தது. யேசு நாதரின் அடியார்களான பாதிரிமார்கள் அடிமை வியாபாரிகளை ஆசீர்வதித்தார்கள். ஆசியாவோ, பிற நாடுகளை அன்பினாலேயே ஆட்கொண்டது. அஹிம்ஸை தான் ஆசியாவின் உயிர் நாடி. அஹிம் ஸையை அஸ்திவாரமாகக் கொண்டுள்ள அமைப்புகள் பகட்டுடை யனவாயில்லாமற் போனாலும் நீடித்த ஆயுளுடையனவா யிருக்கின்றன. பலாத்காரத்தின் மீது அமைந்த கட்டிடங் களோ, சிறிது காலம் மினுக்கிவிட்டுச் சடுதியாகச் சரிந்து விழுந்து விடு கின்றன. நெப்போலியன் கூறுகிறான் ஓரிடத்தில்:- “அலெக்ஸாந்தரும் ஷார்லமேனும்1 நானும்2 பெரிய ஏகாதிபத்தியங்களை ஸ்தாபித்தோம். அவை களை பலாத்காரத்தின் மீது ஸ்தாபித்தோம். இப்பொழுது அவையெங்கே? யேசுநாதர், தமது ராஜ்யத்தை அன்பின்மீது ஸ்தாபித்தார். இன்று லட்சக்கணக்கான மக்கள் அவருக்காக இறக்கத் தயாராயிருக்கிறார்கள்.” ஐரோப்பாவுக்குச் சகிப்புத் தன்மையென்பது கிடையாது. ஆசியா வினுடைய லட்சணமே அதுதான். ஐரோப்பாவின் சிலுவைப் போர்கள் அதனுடைய சகிப்பின்மைக்குச் சிறந்த சாட்சியங்களாகும். ஆசியாவோ, எல்லா மதங்களும் ஒரே உண்மையைத்தான் நாடுகின்றன என்ற கொள்கையை அனுஷ்டானத்தில் காட்டி வந்தது. ஆசியாவின் இந்தச் சகிப்புத் தன்மை, சமரஸ நோக்கம், அதனுடைய பலவீனத் தினால் ஏற்பட்டதல்ல. கோழைத்தனமோ, அசிரத்தையோ, ஆசியாவினுடைய சகிப்புத் தன்மைக்குக் காரணமா யிருக்கவில்லை. தீமைகளை எப்பொழுதும் ஆசியா சகித்துக் கொண்டிருந்த தில்லை; அவைகளை அவ்வப்பொழுது எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. யேசு நாதருடைய உபதேசங்களைக் கவனியுங்கள். தீமை களை எவ்வளவு வன்மையாகக் கண்டித் திருக்கிறார்? ஆயினும் அவர் ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு என்று உப தேசித்தார். ஆசியாவில் உதித்த மகான்களெல்லோரும் லட்சியத்தோடு சமரஸம் செய்து கொண்டதில்லை; உண்மையைக் கடைப்பிடிக் காதவர்களிடம், தர்மத்தை அனுசரிக்காதவர்களிடம் சகிப்புத் தன்மை காட்டியது கிடையாது. சகிப்புத் தன்மை என்று சொன்னால், மற்றவர்களுடைய சுயமரியாதையை அங்கீகரிப்பது என்பதுவே அர்த்தம். இந்த அர்த்தத்தில்தான், ஆசியாவின் அரசியல் விவகாரங்கள், மதப் பிரசாரங்கள் யாவும் நடைபெற்றிருக்கின்றன. ஐரோப்பா, தேசீயக் கண்கொண்டுதான் எதையும் பார்க்கிறது; அதற்கு மேல் அதனுடைய திருஷ்டி செல்வதில்லை. ஆசியாவோ, சர்வ தேசீய திருஷ்டியில் எதையும் வைத்துப் பார்க்கிறது. ஆனால் இதற்காக அது தேசீயத்தைத் துறந்து விடுவதுமில்லை. தேசீயப் படிமீது நின்று கொண்டால்தான் சர்வ தேசீயக் காட்சி நன்கு தெரியும் என்பது அதன் கருத்து. ஐரோப்பாவின் தேசாபிமானம், தன் நாட்டு அளவோடு நின்றுவிடுகிறது. ஆசியாவின் தேசாபிமானம், தன் நாட்டோடு பிற நாடுகளையும் நேசிக்கிற அளவுக்கு விரிகிறது. ஆசியாவுக்கு யாரும் பகையில்லை; யார்மீதும் துவேஷ மில்லை. மற்றவர்கள் வீழ, தான் வாழவேண்டுமென்ற எண்ணம் அதற்கு எப்பொழுதும் இருந்ததில்லை. தன்னைப்போல் மற்றவர்களும் வாழவேண்டு மென்பதுதான் அதன் நெடுங்காலக் கோட்பாடா யிருந்து வந்திருக்கிறது. சுவாமி விவேகானந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்த ஒக்காக்கூரா கக்குஸோ1 என்ற ஜப்பானிய ஞானியின் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது:- “ஆசியா அனைத்தும் ஒன்றே. முடிவா யுள்ளதும் சர்வ வியாபகமாயுள்ளதும் எதுவோ அதனை நேசித்தல் என்கிற எண்ணமானது, ஆசியாவினுடைய எல்லாச் சமூகத்தின ருடைய பொதுவான பரம்பரைச் சொத்தாயிருக்கிறது. இதனால் தான் அவர்களுக்கு-ஆசிய சமூகத்தினருக்கு-உலகத்துப் பெரிய மதங்களனைத்தையும் தோற்றுவிப்பது சாத்தியமா யிருந்தது. ஐரோப்பாவின் ஜனங்களோ, தனித்துவத்தை, -குறிப்பிட்ட ஒன்றை-ஆராய்ச்சி செய்வதில்தான் பிரியப்படுகின்றனர்; வாழ்க்கையின் லட்சியம் எது என்பதை விட்டுவிட்டு வாழ்க்கையின் சாதனம் எது என்பதைத் தேடு கின்றனர்.” 4. சமாதான முயற்சிகள் உடம்புக்குத் தீங்கு உண்டு பண்ணும் உணவை மனிதன் விரும்பிச் சாப்பிடுகிறான்; சுவைத்துச் சாப்பிடுகிறான். தீங்கு உண்டு பண்ணும் என்று தெரிந்தும் அவன் நாவை அடக்கிக் கொள்ள முடியாமற் போய்விடுகிறான். அதுபோல் யுத்தத்தின் கொடுமைகளை அறிந்துகூட, அனுபவித்த பிறகும், அந்த யுத்தத்தில் ஈடுபட்டு விடுகிறான் மனிதன். அவனிடத்திலேயுள்ள மிருக சுபாவத்தைத் தக்க வாறு ஊக்கப்படுத்திவிட்டுவிட்டால். அஃது, அவனிடத்திலே யுள்ள தெய்விக சுபாவத்தை அடக்கி ஒடுக்கிவிட்டு, மரண தேவதையோடு கைகோத்துக் கொண்டு கோர தாண்டவம் செய்யத் துவங்கி விடுகிறது. உலகத்தில் இதுவரை எத்தனையோ யுத்தங்கள் நடைபெற்றிருக் கின்றன. இந்த யுத்தங்களில் மடிந்த வீரர்கள் எத்னை பேர்? சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் மட்டும் எத்தனை பேர் யமனுலகுக்குக் குடியேறியிருக்கின்றனர் என்பதைப் பாருங்கள். 1790 ஆம் வருஷத்திலிருந்து 1913ஆம் வருஷம் வரை நடைபெற்ற யுத்தங்களில் 1,85,52,000 பேர் சம்பந்தப்பட்டிருந்தார்கள். இவர்களில் 54,98,097 பேர் உயிரிழந்தார்கள். உயிர் இருந்தும் வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் இறந்து போனவர்கள் எத்தனை பேரென்பது தெரியவில்லை. 1904-5 ஆம் வருஷத்து ருஷ்ய-ஜப்பானிய யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் 25,000,000 பேர்; இவர்களில் உயிர் துறந்தவர்கள் 5,55,900 பேர். 1912-13 ஆம் வருஷங்களில் பால்கன் சண்டை நடைபெற்றதல்லவா, அதில் 12,30,000 பேர் ஈடு பட்டார்கள். இவர்களில் 3,50,000 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். 1914-18 ஆம் வருஷ முதல் உலக மகா யுத்தத்தில் மரித்தவர் சுமார் ஒரு கோடி பேர்; காயமடைந்தவர் சுமார் இரண்டு கோடி பேர். இந்த யுத்தத்திற்கு ஏற்பட்ட நேரடியான செலவு சுமார் 5,41,50,00,00,000 ரூபாய். 1939-45ஆம் வருஷ இரண்டாவது உலக மகாயுத்தத்தில் மாண்டவர், காயமடைந்தவர் எல்லோரும் சேர்ந்து சுமார் ஐந்தரை கோடி பேர். இந்த யுத்தத்திற்காக, ஒரு நாளைக்குச் சராசரி செலவான தொகை 1940 ஆம் வருஷம் 50 லட்சம் பவுன்; 1942 ஆம் வருஷம் 125 லட்சம் பவுன்; 1943 ஆம் வருஷம் 150 லட்சம் பவுன். இப்படிப் பிரதியொரு வருஷமும் தினசரிச் செலவு அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்த வீண் செலவை, இந்த அழிவைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்த பிறகுகூட ஓ மனிதனே, நீ எவ்வளவு தூரம் மனிதத் தன்மையில் வளர்ச்சியடைந்திருக்கிறாய்? உலகத்திலே சாசுவதமான சமாதானம் நிலவ வேண்டுமென்பதற்கு மூலாதாரமாக, உனது அண்டை அயலார்களுடன் எந்த அளவுக்கு நல்லுறவு பூண்டு அமைதியாக வாழ முற்பட்டிருக்கிறாய்? உலகத்தில் மனிதர்கள் வாழ்க்கைக்காகப் போட்டிபோட எப்பொழுது ஆரம்பித்தார்களோ அப்பொழுதே யுத்தமும் ஆரம்பித்துவிட்டது. அறிஞர்கள் யுத்த சாஸ்திரங்கள் எழுதினார்கள். அரசின் இன்றியமையாத அங்கமாக ஏற்பட்டது படை. போர் செய்வதற்கென்றே அமைந்தனர் ஒரு பிரிவினர் சமுதாயத்தில் ஆசியாவைப் பொறுத்த மட்டில் யுத்தமானது, தர்ம யுத்த மென்றும் அதர்ம யுத்தமென்றும் இரு வகையாகப் பிரிக்கப்பட்டது. தீமையைக் களைந்து நன்மையை நிலைநாட்ட நடத்துகிற யுத்தம் தர்ம யுத்தம்; மற்றக் காரணங்களுக்காக நடத்தும் யுத்தங் களெல்லாம் அதர்ம யுத்தம். ஐரோப்பிய அறிஞர்கள் யுத்தத்தை மூன்று வகையென்றும் நான்கு வகையென்றும் பல வகைகளாகப் பிரித்து ஒவ்வொரு வகையையும் பல நோக்கு நிலைகளிலிருந்து ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். உதாரணமாக லகோர்கெட்1 என்ற ஒரு பிரெஞ்சு அறிஞன், யுத்தம் நால்வகைப் பட்டதென்பதைப் பற்றி விஸ்தரித்துச் சுமார் எழுநூறு பக்கங் கொண்ட ஒரு நூலெழுதினான். யுத்தவெறி மேலீட்டால் யுத்தந்தொடுத்தல் ஒருவகை. இந்த யுத்தத்திற்கு எவ்வித காரணமும் இராது. குறிப்பிட்ட ஒரு நோக்கம் நிறைவேறுவதற்காக யுத்தந் தொடுத்தல் இரண்டாவது வகை. அதாவது சுதந்திரம் பெற வேண்டும், அல்லது வியாபாரம் நம் கைக்கு வரவேண்டும், அல்லது ஒரு நாட்டின் மீது ஆதிக்கங் கொள்ளவேண்டும், இப்படி ஏதோ ஒரு காரணத்திற் காகப் போர் செய்தல். உள்ளதுக்கு ஆபத்து ஏற்படுகிற பொழுது அதனைப் பாதுகாக்க நடத்துகிற யுத்தம் மூன்றாவது வகை. ஒரு நாட்டின் சுதந்திர வாழ்வுக்கோ, அல்லது வெளி நாட்டாருடன் ஒழுங்காக வர்த்தகம் செய்து கொண்டிருப்பதற்கோ பங்கம் ஏற்படுமென்று தெரிந்தால் அதனைத் தடுக்கத்தொடுக்கிற யுத்தம் இந்த மூன்றாவது வகையின் பாற்படும். உயிர் வாழ்க்கைக்காக நடைபெறும் யுத்தம் நான்காவது வகை. இப்படிப் பிரிக்கிறான் மேற்சொன்ன லகோர்கெட் என்ற அறிஞன். தற்கால யுத்தங்கள், நான்கு வகைக் காரணங்களில் ஏதோ ஒருவகைக் காரணத்தைப் பிரதானமாகக் கொண்டு நிகழ்கின்றன வென்று வேறோர் அறிஞன் சொல்கிறான். (1) உடன்படிக்கைகளின் வியாக்கியான விஷயத்திலோ அல்லது எல்லைப்புற நிர்ணய விஷயத்திலோ அபிப்பிராய பேதம் ஏற்படுவது ஒரு காரணம். (2) வியாபாரச் சலுகைகள் பெற முயலு வதோ, அல்லது அந்தச் சலுகைகள் கொடுக்க மறுப்பதோ மற்றொரு காரணம். (3) சிறுபான்மையோரு டைய உரிமைகளோ அல்லது ஜாதீய உரிமைகளோ அங்கீகரிக்கப் படாமலிருப்பதும் அல்லது அவை மறுக்கப்படுவதும் இன் னொரு காரணம். (4) ஒரு நாட்டின் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுகிற போது அதற்குப் பரிகாரந் தேடுதல் என்பது நான்காவது காரணம். இந்த நால்வகைக் காரணங்களில் ஏதோ ஒருவகைக் காரணந் தான் யுத்த நெருப்பை மூட்டுவிக்கின்றதாயினும் மற்ற மூவகைக் காரணங்களும் கூடச் சேர்ந்து கொள்கின்றன. ஆனால் இவைகளை உடனடியான காரணங் களென்று சொல்ல முடியாது. வருஷக் கணக் கிலும் தலைமுறைக் கணக்கிலும் வளர்ந்து வந்திருக்கிற மனஸ் தாபங்கள் இந்த நால்வகைக் காரணங்களாகப் பரிண மிக்கின்றன. 1914 ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய யுத்தம் திடீரென்று தோன்றியதல்ல. 1870 ஆம் வருஷத்தி லிருந்தே இதற்குக் காரணமான மனஸ்தாபங்கள், சூழ்ச்சிகள், ரகசிய உடன்படிக்கைகள் ஆகிய வெல்லாம் ஆரம்பித்துவிட்டன. யுத்தத்திற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் அப்பொழுதிருந்தே செய்யப்பட்டு வந்தன. ஆஸ்திரியாவின் இளவரசன் ஸெர்வியாவில் கொலை செய்யப்பட்டா னென்பதும் ஒரு வியாஜந்தான்; உடனடியான காரணந்தான். ஆனால் இதுவே அடிப்படையான காரணமாகாது. யுத்தம் சில சந்தர்ப்பங்களில் அவசியமாயிருக்கிறது, அதனால் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றனவென்று கூறுகின்ற ஒரு கட்சி எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. இந்தக் கட்சியினருடைய கூற்றில் உண்மை இருக்கிறதென்பதைப் பிற்காலத்துச் சில சம்ப வங்கள் நிரூபித்தும் இருக்கின்றன. ஐர்லாந்து, தனது சுதந்திரத்துக் காகப் போராடவேண்டியது அவசியமாகவே இருந்தது. ருஷ்யா, தனது பொதுவுடைமை லட்சியத்திற்கு ஆபத்து வராமலிருக்க 1918ஆம் வருஷத்திலிருந்து 1921ஆம் வருஷம் வரை மேற்கு ஐரோப்பிய வல்லரசுகளுடன் பலமான யுத்தம் செய்ய வேண்டியது அவசியமாயிருந்தது. சீனாவின் ஆயிரக்கணக்கான வருஷ வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட ஜப்பான்முனைந்தபோது அதனை எதிர்த்துச் சுமார் எட்டு வருஷ காலம் போராடுவது சீனாவுக்கு அவசியமாகவே இருந்தது. அமெரிக்காவில் வடமாகாணங் களுக்கும் தென் மாகாணங் களுக்கும் யுத்தம் நடைபெற்றிரா விட்டால் அடிமை வழக்கம் ஒழிந்திராது. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் சிறு சிறு நாடுகளாகப் பிரிந் திருந்த இத்தலி ஒன்றுபட்டது எதனால்? யுத்தத்தினாலல்லவோ? இவ்வளவென்ன? நாகரிகமே, யுத்தத்தை வாகனமாகக் கொண்டல்லவோ முன்னேறி வந்திருக்கிறது? 1912ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஐந்தாந் தேதி கூடிய அமெரிக்க காங்கிரஸில் ஒரு பிரதிநிதி பேசிய பேச்சில் பின் வரும் வாசகங்கள் காணப்படுகின்றன:- “நாகரிகம் என்று எதை நாம் அழைக் கிறோமோ அதன் ஒவ்வோர் அடி முன்னேற்றமும் யுத்தத்தின் விளைவுதான். நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த நியதி ஓரளவு நமது மதிப்புக்குரியதேயாகும்.... மனித சகோதரத்துவத்தைப் பற்றி நாம் தாராளமாகப் பேசுகிறோம்; உணர்ச்சியடைகிறோம்; ஏன், வெறி கொண்டவர் களாகக்கூட ஆகிவிடுகிறோம். சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்தில் எந்த ஒரு நாடும் பதினைந்து நிமிஷம் கூட வாழ்ந்ததாகத் தெரிய வில்லை.” இங்ஙனம் யுத்தத்திற்கு நியாயம் கற்பித்தும் அதனை ஆதரித்தும் நூல்கள் பல எழுந்தன; நாவன்மை படைத்த பலர் ஜனங்களுக்கு யுத்த வெறியை உண்டுபண்ணி வந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் திறமையானது அதனுடைய ராணுவ பலத்தைக் கொண்டு கணிக்கப்பட்டு வந்தது. போர்க் களத்தில் மாண்டவர்கள் வீரசொர்க்கம் அடைகிறார்களென்ற நம்பிக்கையும், அவர்கள் இறந்த இடத்தில் ஞாபகக் கல் நாட்டுகின்ற வழக்கமும் உலகத்தின் எல்லா நாடுகளிலும் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இவ்வளவெல்லாம் இருந்தாலும், உலகத்தில் ஆதிகாலந் தொட்டு சமாதான முயற்சிகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. யுத்தத்தினால் சாசுவதமான பலன் கிட்டாதென்பதை அறிஞர்கள் பலர் அறிவுறுத்தி வந்திருக் கிறார்கள். யுத்த கோஷம் செய்தவர்கள், நிகழ்காலத்திலே மட்டும் வாழ்ந்து விட்டு மறைந்து போயிருக் கிறார்கள். சமாதானச் சங்கு ஊதியவர்கள், நிகழ் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தார்களாயினும் எதிர் காலத்தில் அமரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். யுத்தத்தினால் கிடைக்கிற வெற்றி பனிக்கட்டி மாதிரி; சமாதானத்தினால் கிடைக்கிற வெற்றி தங்கக்கட்டி மாதிரி. இதனால்தான் யுத்தத்தில் வெற்றி பெறுவதைக் காட்டிலும் சமாதானத்தில் வெற்றி பெறுவது கடினம் என்று பெரியோர்கள் சொல்லிப் போந்தார்கள். சிறப்பாக ஆசியாவில் சமாதான வாழ்க்கைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. போர்த்தொழிலில் ஈடுபட்டவர்கள், சமுதாயத்தில் இரண்டாம்பட்ச அந்தஸ்தையே வகித்து வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலோ, பொதுவாக போர் முயற்சிகளுக்குத்தான் அதிகமான உற்சாகம் காட்டப்பட்டு வந்தி ருக்கிறது. போரிலே வெற்றி பெற்றவர்கள் போற்றப்பட்டு வந்தி ருக்கிறார்கள். சமாதான வாதிகளோ சமுதாயத்திலே செல்வாக்குப் பெறாமலும் ஜனங்களால் கேட்கப்படாமலும் இருந்திருக் கிறார்கள். சுருக்கமாக, “ராஜ்யங்கள் பிறப்பது போரிலே; இறப்பது சமாதானத் திலே” என்ற ரஸ்க்கின்1 என்னும் அறிஞனுடைய வாசகம், ஐரோப்பாவின் மனப்பான்மையைப் பிரதிபலித்துக் காட்டுவதா யிருக்கிறது. இங்ஙனம் செல்வாக்குப் பெறாமலும் கேட்கப் படாமலும் இருந்த போதிலும் இந்தச் சமாதானவாதிகள், தங்கள் சேவையைச் சலியாது செய்து வந்திருக்கிறார்கள்; சமாதான இயக்கங்களையும் சமாதான ஸ்தாபனங்களையும் ஆங்காங்கே தோற்றுவித்து, ஜனங்களிடத்தில் உலக சகோதரத்துவ உணர்ச்சியை வளர்த்து வந்திருக்கிறார்கள்; யுத்த உணர்ச்சியானது, மனித சுபாவத்தைச் சேர்ந்ததல்லவென்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். “யுத்தமானது, மனிதனின் சுய உணர்ச்சியைச் சேர்ந்ததல்ல; அஃது, ஓர் அரசாங்கம் எடுத்துக் கொள்கிற நடவடிக்கைகளின் ஒரு தோற்றம். மனித சுபாவத்திலே அஃது இல்லை; அஃது அரசியல் திட்டத்தின் ஓர் அமிசம்” என்பது கில்பர்ட் முர்ரேயின்2 வாக்கு. பொதுவாகப் பார்க்கப் போனால் கீழ்நாட்டைக் காட்டிலும் மேனாட்டில் தான் அதிகமான சமாதான இயக்கங்களும் சமாதான சங்கங்களும் தோன்றி வளர்ந்திருக்கின்றன; சமாதான வாதிகள் அதிகமான எதிர்ப்புகளைச் சமாளித்துக் கொண்டு பலத்த பிரசாரம் செய்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியப் படத் தக்கதொன்றுமில்லை. ஏனென்றால், எந்த இடத்தில் இயற்கைக்கு விரோதமான சக்திகள் உக்கிரமாக எழுகின்றனவோ அந்த இடத்தில்தான், அந்தச் சக்திகளை எதிர்த்து நிற்கின்ற வகையில் இயற்கைச் சக்திகள் உத் வேகத்துடன் கிளம்புகின்றன. எந்த அரசாங்கம் பலமான அடக்கு முறை களைக் கையாள்கின்றதோ அந்த அரசாங்கத்திற்கு விரோத மாகப் பலமான சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதுபோல் மேனாட்டில் போர்க்குணம் நிறைந் திருப்பதனாலேயே அதனை எதிர்க்கின்ற முறையில், அதனை அடக்கி ஒடுக்குகின்ற வகையில், சமாதான எண்ணங்கள் வளர்கின்றன; இந்த எண்ணங்களை வளர்ப்பது அவசியமாகின்றது. கீழ்நாட்டிலோ சமாதான மென்பது ஜனங்களுடைய சுபாவத்திலேயே இருக்கிறது. இதனால் அஃது அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்படவில்லை; பிரஸ் தாபிக்கப்பட வேண்டிய அவசியமுமில்லை. எந்த இடத்தில் எது இல்லையோ அதைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். சுவாமி விவேகானந்தர் கீழ் நாட்டிலே, மேனாட்டின் விஞ்ஞான அபிவிருத்தி களைப் பற்றியும் லௌகிக சித்திகளைப் பற்றியும் பேசி வந்தார்; மேனாட்டில், கீழ்நாட்டின் பாரமார்த்திக உயர்வைப் பற்றிப் பிரசாரஞ் செய்தார். இதை வாசகர்கள் சிந்திக்க வேண்டுகிறோம். ஆதலின், மேனாட்டின் சமாதான இயக்க சரித்திரத்தை இங்குச் சுருக்கமாகக் கூற விழைகிறோம். இப்படிக் கூறுவதற்கு முன்னர், உலகத்தில், சகோதரத்துவம் வளரவேண்டும், சமாதானம் நிலைக்கவேண்டுமென்று பாடுபட்ட அத்தனை பேருக்கும் நமது வணக்கத்தைச் செலுத்த விரும்பு கிறோம். டாண்ட்டே1 என்ன, காண்ட்2 என்ன, வில்லியம் பென்3 என்ன, இன்னும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேர்களும் குவேக்கர்கள்4 போன்ற கோஷ்டியினர்களும் அரசியல் அரங்கத்தில் பிரகாசமான நட் சத்திரங்களாயில்லாமலிருக்கலாம்; இவர்களுடைய பெயர்களும் வரலாறு களும் சாதாரண ஜனங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இருந்தாலும், சர்வதேச சங்கமென்றும் ஐக்கிய தேச ஸ்தாபன மென்றும் இப்பொழுது தோன்றி யுள்ள ஸ்தாபனங்களுக்கும், உலகத்திற்குப் பொதுவான ஓர் அரசாங்கம் ஏற்பட வேண்டுமென்பன போன்ற எண்ணங்களுக்கும் அடி கோலியவர்கள் இவர்களே. உலகத்தில் சகோதரத்துவமும் சமாதானமும் நிலவ வேண்டு மென்று பாடுபடுகிறவர்களைச் சமாதான வாதிகளென்றும் சர்வ தேசீயவாதிகளென்றும் இரண்டு பிரிவினராகப் பிரித்திருக்கிறார்கள் சமீப கால மேனாட்டு அறிஞர்கள். சமாதானவாதிகள், எந்தக் காரணத்தை முன்னிட்டும் யுத்தம் கூடாதென்ற கொள்கையுடை யவர்கள். ஏனென்றால் முதலாவது, இவர்கள் மானிட சமுதாயத்தின் ஒற்றுமையில் பூரண நம்பிக்கை யுடையவர்கள். ஒரு மனிதன் தற்கொலை செய்துகொண்டால் அது குற்றமாகக் கருதப்படுகிற தல்லவா? யுத்தம் என்பது என்ன? மானிட சமுதாயம் அனைத்தும் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதுதானே? எனவே, யுத்தமானது ஒரு பெரிய குற்றச் செயலாகும். இரண்டாவது, யுத்தத் தினால் எவ்வளவு சேதம்? எத்தனை பேருக்குத் துன்பம்? இஃது அனாவசியந்தானே? அழிவையும் துக்கத்தையும் ஆரம்பித்து விட்டு விட்டு, பிறகு அதனுடைய கொடுமையின் வேகத்தைக் குறைக்கப் பாடுபடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? எனவே, மானிட சமுதாயத் தின் நலனுக்காக யுத்தம் கூடாது. மூன்றாவது, ஒருவருக் கொருவர் சமாதான முறையில் வாழ்வதுதான் தருமம்; அதுதான் நியாயம் அப்படிக்கின்றி, யுத்தத்தின் மூலம் நியாயத்தை நிலைநாட்டுகிறோ மென்று சொல்வது சரியல்ல; நியாயமுமல்ல. பலாத்காரத்தினால் நியாயம் நிலை பெற்றுவிடாது. ஆகவே யுத்தமானது அநியாயமானது. நான்காவது, பரஸ்பர மனஸ்தாபங்களை யுத்தத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. யுத்தத்தினால் புதிய யுத்தங்கள் ஏற்படுவதற்கு ஏதுவிருக்கிறதே தவிர சமாதானம் உண்டாவதற்கு வழியில்லை. எனவே, முக்கயமான இந்த நான்கு காரணங்களை முன்னிட்டும், வேறு எந்தக் காரணத்தை முன்னிட்டும் யுத்தம் கூடாது. சமரஸ முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம், அவரவர் களுடைய நல்லெண்ணத்திற்கும் மேலான சுபாவங்களுக்கும் விண்ணப்பித்துக் கொள்வதன் மூலமும் யுத்தம் வராமல் தடுத்து சமாதானத்தை நிலைநாட்டவேண்டும். சமாதான வாதிகளின் திரண்ட கருத்துக்கள் இவை. சர்வ தேசீய வாதிகள், உலகத்திலுள்ள சர்வ தேசங்களும் பரஸ்பரம் நல்லுறவு பூண்டு வாழவேண்டுமென்றும், இப்படி வாழ்வதன் மூலம் யுத்தம் வராமல் தடுத்து சமாதானத்தை நிலை நாட்ட முடியுமென்றும் நம்புகிறவர்கள். பிரதியொரு தேசத் தினுடைய அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகள் வெவ் வேறா யிருந்த போதிலும், எல்லாத் தேசங்களுக்கும் பொதுவான நலன்கள் சில உண்டு. இந்த நலன்களைக் காப்பாற்றுவது பிரதி யொரு தேசத்தினுடைய கடமையுமாகும். எப்படிக் காப்பாற்றுவது? எல்லாத் தேசங்களும் ஒரு ஸ்தாபனமாக ஒன்று சேர்ந்து கொள்வதன் மூலம். இந்த ஸ்தாபனமானது அவரவர்களுடைய தனி நலன்களில் தலையிடுவதில்லை; பொதுவான நலன்களில் மட்டும் சிரத்தை காட்டுகிறது. இந்தப் பொது நலன்களுக்குப் பங்கம் ஏற்படுமானால், பங்கம் விளைவிப்பவர்கள் மீது யுத்தந் தொடுக்கலாம்; ஆனால் கடைசி பட்சமாகத்தான். சுருக்கமாக, சர்வ தேசீய வாதிகள், மனிதர்களை வேற்றுமைப்படுத்தும் அமிசங்களைப் புறக்கணித்து விட்டு ஒற்றுமைப்படுத்தும் அமிசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உலகத்தில் சமாதானம் நிலவவேண்டுமென்பதுதான் இவர்களுடைய கோட்பாடும். ஆனால் அந்தக் கோட்பாட்டுக்கு யுத்தம் புறம்பானதன்று. நுணுக்கமாகப் பார்த்தால் சமாதான வாதம் வேறு, சர்வ தேசீய வாதம் வேறு அல்ல என்பது தெரிய வரும். சமாதான வாதம் உலக சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டது; சர்வ தேசீய வாதம், உலக சகோதரத் துவத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. இரண்டும் ஒன்றுதானே? சமாதானமின்றிச் சகோதரத்துவமில்லை; சகோதரத் துவமின்றிச் சமாதானமில்லை. ஒன்றைக் கொண்டு மற்றொன்று பூரணத்துவமடைகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று விரிகிறது. வேண்டுமானால், சமாதான வாதத்தைத் தத்துவமென்றும் அந்தத் தத்துவத்தை அனுஷ்டானமாகக் கொண்டு வருகிறபோது அது சர்வ தேசீய வாதமாகப் பரிணமிக்கிறதென்றும் சொல்லலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் வாழ்ந்த மேனாட்டு அரசியல் ஞானிகள் சிலர், இனி நடைபெறக்கூடிய யுத்தங்கள் யாவும் உலக யுத்தங்களாகவே மூளும் என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். ப்ளோக்1 என்ற போலிஷ் அறிஞன், வருங்கால யுத்தங்களினால் நாகரிகமே அழிந்து போகக்கூடிய நிலைமை ஏற்படக் கூடுமென்றும், விபரீதமான கொடுமைகள் நிகழக்கூடு மென்றும் கூறுகிறான். இவர்களுடைய கூற்று எவ்வளவு உண்மை யாயிருக்கிறது! இவர்கள் சொல்லிப்போனதை இன்றைய தலை முறையினர் அனுபவித்து வருகிறார்கள். இந்த அனுபவத்தி லிருந்து மானிட சமுதாயம் விரைவிலே விடுதலை பெறவேண்டு மானால், பிரதியொரு நாட்டுப் பிரஜையும் உலக சமாதானத்திற்குப் பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபடுவதாகச் சங்கல்பம் செய்துகொள் வதற்கு முன்னர், இதுகாறும் அந்த லட்சியத்தை-உலக சமாதானத்தை - குறிக்கோளாகக் கொண்டு தோன்றிய இயக்கங்களைப் பற்றியும், அந்த இயக்கங்களின் மூல புருஷர்களைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமில்லையா? யேசுநாதர் காலத்திலிருந்து கிறிஸ்துவ முனிவர்கள் பலர், உலகத்துச் சர்வ ஜனங்களும் சகோதரர்கள்போல் வாழவேண்டு மென்றும், மனிதர்கள், வாழப் பிறக்கிறார்களே தவிர மாளப் பிறக்க வில்லையென்றும், ஆதலின் அந்த வாழ்வை மேன்மைப்படுத்துகின்ற வகையில் உலகத்தில் சமாதானம் நிலவ வேண்டுமென்றும், யுத்தமென்பது பெருவாரியான உயிர்ப்பலியே தவிர வேறொன்று மில்லையென்றும், யாருமே தங்கள் லட்சியத்தை அடைவதற்கு யுத்தத்தை ஒரு சாதனமாகக் கொள்ளக் கூடாதென்றும் உபதேசித்து வந்தார்கள். இவர்களுடைய உபதேசங்களைப் பின்பற்றிய கோஷ்டிகள் பல தோன்றின. இந்தக் கோஷ்டியினர், அந்தக் காலத்தவரால் தூற்றப் பட்டனர். இவர்கள் மீது எத்தனை பரிகாச அம்புகள் எய்யப் பட்டன! இவர்களுக்கு எத்தனை விதமான கொடுமைகள் இழைக்கப் பட்டன! இவர்களிடத்திலே குடி கொண்டிருந்த அன்பையும் சகோ தரத்துவத்தையும் நசுக்கப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. ஆனால் இவர்கள் நசித்துப் போனார்களே தவிர, இவர்களுடைய அன்பும் சகோதரத்துவமும் நசிக்கவில்லை; அதற்கு மாறாக முன்னைக் காட்டிலும் அதிக பிரகாசத்துடனும் தீவிரமாகவும் எங்கும் பரவின. இங்ஙனம் பரவுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் குவேக்கர்கள் என்பவர்கள் ஒரு முக்கியமான கோஷ்டியினர். கி.பி. பதினேழாவது நூற்றாண்டில் தோன்றிய இவர்கள், தங்களை ‘நண்பர்கள் சங்கம்’ என்றும் ‘சத்தியத்தின் சிநேகிதர்கள்’ என்றும் அழைத்துக்கொண்டு, ஜனங்களிடையே சமாதான எண்ணங்களைப் பரவச் செய்தார்கள். இந்த குவேக்கர் கோஷ்டியை ஸ்தாபித்தவன் ஜார்ஜ் பாக்ஸ்2 என்பவன். இவன், தன் கொள்கைகளுக்காகப் பலவிதமாக இம்சிக்கப் பட்டான்; பலதடவை சிறை சென்றான். இவனும் இவனோடு சேர்ந்த பதினோரு குவேக்கர்களும் 1660ஆம் வருஷம் ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். இது, சமாதான இயக்கத்தின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்றது. இதில் இவர்கள். உலக சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய மாதிரியான ரகசியச் சூழ்ச்சிகள், பகிரங்கச் சண்டைகள், பரஸ்பர சந்தேகங்கள், பொறாமைகள் ஆகிய அனைத்தையும் வன்மையாகக் கண்டித்திருந்தார்கள். இந்த அறிக்கையைத் தொடர்ந்தாற்போல் பல அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், நூல்கள் முதலியன வெளியாயின. பிரதியொரு மனிதனுடைய உயிரும் புனிதமானது; அந்தர்யாமியாயுள்ள ஒரு சக்தி அதனை இயங்குவிக்கிறது; அதனை அடக்கிவைப்பதற்கோ அழிப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை; அஹிம்சை முறையில் தான் மனிதர்களுடைய விவகாரங்கள் நடைபெறவேண்டும். இந்த மாதிரியான கருத்துக்களே மேற்படி வெளியீடுகளில் காணப் பட்டன. இந்தக் குவேக்கர்கள், தங்கள் கொள்கைக்காக, எல்லாவித துன்பங்களையும் புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டார்கள். குவேக்கர் கோஷ்டியைச் சேர்ந்த வில்லியம் பென்1 என்பவன், 1694ஆம் வருஷம் சமாதானத் திட்டமொன்றைத் தயாரித்து வெளி யிட்டான். இதில், சமாதானத்தினால் ஏற்படக் கூடிய நன்மைகளை யெல்லாம் விளக்கிச் சொல்லியிருந்தான். இந்தச் சமாதானத்தை எப்படி நிலைநாட்டுவது? ஐரோப்பாவிலுள்ள அரசர்கள் பலரும் சேர்ந்து சர்வதேச ஸ்தாபனம் ஒன்றை நிறுவவேண்டும்; இதில் தொண்ணூறு பிரதிநிதிகள் இருக்க வேண்டும்; இவர்கள் வருஷத்திற் கொருமுறை கூடி, ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் ஏற்படக்கூடிய மனஸ்தாபங் களைச் சமரஸ முறையிலேயே தீர்த்துக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். இதுதான் இவனுடைய திட்டத்தின் சாரம். இந்தத் திட்டத்தை இவன், தான் ஸ்தாபித்த பென்சில் வேனியா பிரதேசத்திலேயே அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தான். இந்தப் பிரதேசத்தில் பூர்விக காலந்தொட்டு வசித்துக் கொண்டிருந்த சுதேசிகளுடன் இவன், 1682ஆம் வருஷம் செய்துகொண்ட ஓர் உடன் படிக்கையின் மூலம், உலகத்திலேயே முதன்முதலாக ஆயுத பலத்தைத் துணையாகக் கொள்ளாத ஓர் அரசாங்கத்தை ஸ்தாபித்தான். சுதேசிகளைப் பார்த்து இவன் கூறினான்:- “நல்லெண்ணமும் நம்பிக்கையுமுடைய அகன்ற பாதையிலேயே நாம் இப்பொழுது சந்திக் கிறோம். நம்மிலே ஒரு தரப்பினருக்குப் பாதகமாக மற்றொரு தரப்பினர் அதிகமான நன்மைகளையடைய முயற்சி செய்யக் கூடாது. எல்லா விவகாரங்களும் பகிரங்கமாகவும் அன்பு முறை யிலுமே நடைபெறவேண்டும். நம்மிரு பிரிவினருக்கும் உள்ள தொடர்பை ஒரு சங்கிலிக்கு ஒப்பிட்டுச் சொல்ல நான் விரும்ப வில்லை. ஏனென்றால் அந்தச் சங்கிலி துருப்பிடித்துப் போகலாம். ஆனால் நாமோ ஒரு மனிதனுடைய தேகத்தைப் போன்றவர் களாயிருக்கிறோம்; ஒரே ரத்தமும் சதையும் போன்றவர்களாயி ருக்கிறோம்.” இந்த அன்பு முறையிலேயே இவன் சுதேசிகளுடன் சகல விவகாரங்களையும் நடத்தினான்; அற்புதமான வெற்றியும் அடைந்தான். பென்னின் சமாதான திட்டத்திற்கு எதிரொலி கொடுக்கிற மாதிரி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பதினெட்டாவது நூற்றாண்டில் பல சமாதான சங்கங்கள் தோன்றின; பல திட்டங்கள் வெளியாயின; பல மகாநாடுகள் கூடின. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் டேவிட் லோ டாட்ஜ்1 என்பவன், 1815ஆம் வருஷம் ஒரு சமாதான சங்கத்தை ஸ்தாபித்தான். இதைத் தொடர்ந் தாற்போல் அமெரிக்காவின் மற்றப் பாகங்களிலும் அநேக சமாதான சங்கங்கள் தோன்றின. ஐரோப்பாவிலும் லண்டன் என்ன, ஜினீவா என்ன, இப்படிப் பல முக்கியமான நகரங்களில் சமாதான சங்கங்கள் ஏற்பட்டு நல்லவேலை செய்தன. இந்த ஸ்தாபனங்களைத் தோற்று வித்தவர்களிற் பெரும்பாலோர் குவேக்கர்களே என்பதை இங்குக் குறிப்பிடவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமாதான இயக்க சரித்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் அமெரிக்கர் இருவர். ஒருவன் சார்லஸ் ஸம்னர்;2 இன்னொருவன் ஜேம்ஸ் ரஸ்ஸல் லவல்.3 இவ்விருவரும் சிறந்த மேதாவிகள்; நாவலர்கள். தங்கள் பேச்சாலும் பாட்டாலும், ஜனங்களிடையே சமாதான எண்ணங்களைப் பரப்பி வந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல சமாதான மகாநாடுகள் கூடின. இந்த மகாநாடுகளைக் கூட்டுவிப்பதற்கு முதற் காரணமாயிருந்தவன் எலிஹு புர்ரிட்4 என்பவன். இவன் ஒரு கருமான். சுயமாகக் கல்வி கற்று முன்னுக்கு வந்தவன். இவன் உலக சமாதானத்திலே பற்றுள்ளங் கொண்டு அதற்காக அல்லும் பகலும் உழைத்தான். 1842 ஆம் வருஷத்திலிருந்து 1851 ஆம் வருஷத்திற்குள் ஐரோப்பாவில் மொத்தம் ஐந்து சமாதான மகாநாடுகள் கூடின. இந்த ஐந்தையும் கூட்டி நடத்தியவன் எலிஹு புர்ரிட். வில்லியம் கிரெமார்1 என்ற ஒருவன். இவன் பிரிட்டிஷ் காமன்ஸ் சபையின் அங்கத்தினன். இவன் 1889 ஆம் வருஷம் ‘சர்வ பார்லிமெண்டரி யூனியன்’2 என்ற ஒரு ஸ்தாபனத்தைத் தோற்று வித்து, சர்வ தேசத் தகராறு களை மத்தியஸ்தத்தின் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற முறைக்கு அடி கோலினான். உலக சமாதானத்தை முன்னிட்டு இவன் உழைத்த உழைப்பைப் பாராட்டு முகத்தான் இவனுக்கு 1903 ஆம் வருஷம் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. நோபல் பரிசு ஸ்தாபகமான ஆல்ப்ரெட் நோபல்,3 பிரதி யொரு வருஷமும், அந்த வருஷத்தில் உலக சமாதானத்திற்காகச் சொல்லாலோ, செயலாலோ அதிகமாக உழைத்தவர்களுக்குச் சுமார் ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் கொண்ட ஒரு பண முடிப்பு கொடுக்க வேண்டு மென்று 1896ஆம் வருஷம் ஒரு நிதி ஏற்படுத்தி விட்டுப் போனான். இங்ஙனமே அமெரிக்காவில் எட்வின்கின்4 என்ற ஒரு புஸ்தக வியாபாரி, பாஸ்ட்டன் நகரத்தில் ‘உலக சமாதான ஸ்தாபன’5 மொன்றைத் தோற்று வித்து அதற்கு மூலதனமாக முப்பது லட்சம் ரூபாய் கொடுத்தான். ஆண்ட்ரூ கார்னிகி6 என்ற அமெரிக்க கோடீசுவரன், உலகத்தில் சமாதானம் நிலவ வேண்டு மென்பதற்காக 1911ஆம் வருஷம் ஒரு பெருந்தொகையை நன்கொடையாக அளித்தான்; இது தவிர ஹேக் நகரத்தில் சமாதான மாளிகை யொன்றைக் கட்டிக் கொடுத்தான். சமாதான இயக்க சரித்திரத்தில் ஹேக் நகரம் மிகவும் பிரசித்த மானது. இங்கு 1899 ஆம் வருஷத்திலும் 1907ஆம் வருஷத்திலும் இரண்டு சமாதான மகாநாடுகள் கூடின. தேசங்களுக்குள் ஏற்படக் கூடிய மனஸ்தாபங்களைத் தீர்த்து வைப்பதற்காக ஹேக்கிலேயே ஒரு சாசுவத நீதி ஸ்தலம் ஏற்பட வேண்டுமென்று முதல் மகா நாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் இந்த நீதி ஸ்தலம் 1901ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்திலிருந்து, தன் வேலையைத் துவங் கியது. துவங்கினாலென்ன? இந்த நீதி ஸ்தலத்தின் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டது யார்? தவிர, தேசங்களின் ஆயுத பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி மேற்படி இரண்டு மகாநாடுகளிலும் உரத்துப் பேசப் பட்டது. ஆனால் எந்தத் தேசமும் குறைத்துக் கொள்ளவில்லை. சுருக்கமாக, இவ்விரு மகாநாடுகளினாலும் எவ்வித நன்மையும் உண்டாகவில்லை யென்றே சொல்லவேண்டும். நன்மை ஏற்படாமற் போனதற்குக் காரணம் ஐரோப்பிய வல்லரசுகளாக அப்பொழுதிருந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய மூன்றின் பரஸ்பரப் பொறாமையேயாகும். 1914ஆம் வருஷம் முதல் உலக மகா யுத்தம் தொடங்கிய தல்லவா, இதற்குச் சுமார் மூன்று வருஷம் முன்னாடியிருந்து ஐரோப்பாவில், சமாதானத்தைப்பற்றி அதிகமான சொற் பொழிவுகள் நிகழ்ந்தன; உடன்படிக்கைகள் நிறைவேறின. அமெரிக்கா மட்டும் சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு சுமார் இருபது ஒப்பந்தங்களுக்குப் பேச்சு வார்த்தைகள் நடத்தியது. இவ்வள வெல்லாம் நடைபெற்றும், 1914ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் யுத்த நெருப்பு மூண்டேவிட்டது. இந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்கூட, சமாதான வாதிகள் பலர் தங்கள் பிரசாரத்தை விடாமல் செய்து வந்தார்கள். இங்கிலாந்தில் 1916 ஆம் வருஷம் ‘யுத்த ஒழிப்புச் சங்கம்’ ஒன்று தோற்றுவிக்கப்பட்டது; இன்னும் சில ஸ்தாபனங்களும் தோன்றின. யுத்த ஒழிப்பு இயக்கத்தின் சரித்திரத்தில் கெல்லாக் ஒப்பந்த1த் தையும் குறிப்பிடவேண்டும். இது 1928ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் இதில் பதினைந்து நாடுகள் கையொப்பமிட்டன. பின்னர் வேறு பல நாடுகளும் கையெழுத்துச் செய்தன. ஆயினும் என்ன பிரயோஜனம்? இதற்குப் பிறகு யுத்த எண்ணங்கள் வளர்ந்தனவே தவிர குறைய வில்லை. பிரதியோர் அரசாங்கமும் தனது ஆயுத பலத்தை ரகசிய மாகவும் வெளிப்படையாகவும் அதிகரித்துக் கொண்டு வந்தது. 1939 ஆம் வருஷ மகாயுத்தம்! இனி சர்வ தேசீயத் துறைக்கு வருவோம். முதல் உலக மகா யுத்தத் திற்குப் பிறகு சர்வதேச சங்கம் ஏற்பட்டதல்லவா அதுதான் சர்வ தேசங்களும் சேர்ந்து அமைத்துக் கொண்ட முதலாவது ஸ்தாபனமென்று வாசகர்கள் கருதவேண்டாம். உலகத்திலே எதுவும் புதிதில்லையென்று சொல்வார்கள். சர்வ தேச சங்கத்தைப் பொறுத்த மட்டில் இது முற்றிலும் உண்மை. சர்வதேச ஸ்தாபனத்தின் ஐரோப்பிய அஸ்திவாரம் சுமார் மூவாயிரத்தைந்நூறு வருஷ ஆழமுடையதாயிருக்கிறதென்றால், வாசகர்கள் நிச்சயம் ஆச்சரியப் படுவார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு 1497ஆம் வருஷங்களுக்கு முந்தி கிரீஸ் தேசத்தில் பன்னிரண்டு ஜாதியினர் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருந் தார்கள். இவர்கள் மேற்படி கி.மு. 1497ஆம் வருஷத்தில் ஒன்றுகூடி, தங்கள் அனைவருக்கும் பொதுவாயுள்ள விவகாரங் களைப் பைசல் செய்து கொள்வதற்கென்று ஒரு பொதுச்சபையை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்தச் சபையானது, தெர்மாப்பலே கணவாயிலுள்ள அந்த்தேலா1 என்ற இடத்தில் ஒவ்வொரு வருஷமும் கூடியது. இந்தப் பொதுச் சபையின் உத்திரவுகளை நிறை வேற்ற நிருவாக சபையொன்று இருந்தது. ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிரதிநிதி விகிதம் இதில் பன்னிரண்டுபேர் அங்கத்தினர்க ளிருந்தார்கள். இவர்கள், ஒரு ஜாதியினரும் மற்றொரு ஜாதியினரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பரஸ்பரம் சண்டை போட்டுக் கொள்வதில்லை யென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர். இந்த ஸ்தாபனம் வரவர விருத்தி யடைந்தது. கி.மு. 191 ஆம் வருஷம் இதில் பதினேழு அங்கத்தினர்கள் இருந்தார்கள். கி.பி. 200 ஆம் வருஷம் வரை இந்தச் சபை வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. சர்வதேச ஸ்தாபனமொன்று இருக்கவேண்டுமென்பதைப் பற்றி அறிஞர் பலர் அனேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே சில திட்டங்கள் வகுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவற்றில் முக்கியமான சிலவற்றை இங்குச் சுருக்கமாக எடுத்துக்காட்ட விரும்புகிறோம். தாந்தே என்ற இத்தாலியக் கவிஞன், தன்னுடைய ஒரு நூலில்2 மேற்குக் கிறிஸ்தவ நாடுகள் பலவும் அரசியல் விஷயங்களில் ஒற்றுமைப் பட்டிருக்கக் கூடிய வகையில் ஒரு திட்டம் வகுத்துச் சொல்லியிருக்கின்றான். இவனுடைய காலத்தில் புனித ரோம ஏகாதிபத்தியத்திற்கும் இத்தலியிலுள்ள சிறு சிறு ராஜ்யங்களுக்கும் அடிக்கடி சண்டைகள் நடைபெற்று வந்தன. இதை எப்படியாவது நிறுத்தி, சமாதானத்தை நிலைபெறுத்த வேண்டுமென்ற ஆவலினாலேயே இவன் மேற்படி திட்டத்தை வகுத்தான். பதினாறாவது நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்துவ மதத்தில் பிரவேசித்து விட்ட அனாசாரங்கள் பலவற்றை அகற்ற வேண்டு மென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்த இயக்கம் ஐரோப்பாவெங்கணும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக கத்தோலிக்கர்களுக்கும் புராட்டெஸ்ட் டெண்ட்டு களுக்கும் மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. இவை முற்றி இரு பிரிவின ருக்கும் பெரிய சண்டையாக மூண்டது. இது 1618ஆம் வருஷம் தொடங்கி 1648 ஆம் வருஷம் வரை நடைபெற்றது. இதனால் இதற்கு ‘முப்பது வருஷயுத்தம்’3 என்று பெயர். விடாமல் நடைபெற்ற இந்த யுத்தத்தின் விளைவாக, ஜனங்களுடைய மனமானது சமாதான திக்கை நோக்கியது. சமாதானத்தை லட்சியமாகக் கொண்ட சர்வதேச ஸ்தாபனம் ஒன்றை அமைக்க வேண்டுவதற்கான திட்டங்கள் பல உருக்கொண்டன. இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை மூன்று. ஐரோப்பாவிலுள்ள எல்லா அரசர்களும், தங்களுடைய தூதர்கள் மூலம் ஒரு நிரந்தர ஸ்தாபனமாக வெனிஸ் நகரத்தில் ஒன்றுகூட வேண்டு மென்றும், ஐரோப்பாவிலுள்ள ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் ஏற்படக் கூடிய மனஸ்தாபங்களை, மேற்படி தூதர்கள் பரஸ்பரம் நேர்முக மாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் எமரிக் க்ரூஸ்1 என்பவன் 1623 ஆம் வருஷம் ஒரு திட்டம் வெளியிட்டான். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் யுத்தம் ஏற்படுவதற்குக் காரணம் வியாபாரந்தான் என்றும், இந்த வியாபார முறைகளை ஒழுங்குபடுத்திவிடுவது அவசியமென்றும் இவன் தன் திட்டத்தில் வலியுறுத்தியிருந்தான். ஹ்யூகோ க்ரோஷியஸ்2 என்பவன், சர்வதேசங்களும் பொதுவாக அனுசரிக்கக்கூடிய சில சட்டதிட்டங்கள் இருக்கவேண்டுமென்றும், சர்வ தேச பஞ்சாயத்து மூலம் ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத் திற்கும் உண்டாகக் கூடிய மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் ஒரு திட்டம் 1625ஆம் வருஷம் தயாரித்தான். ஒழுங்கானதொரு சர்வ தேச சட்டத்தை முதன்முதலாக இயற்றிக் கொடுத்தவன் இந்த க்ரோஷியஸ்தான். ஸல்லி3 என்ற ஒரு பிரெஞ்சு ராஜதந்திரி, ஐரோப்பாவைப் பதினைந்து நாடுகளாகப் பிரித்து, இந்தப் பதினைந்து நாடுகளும் ஒரு சமஷ்டியாகச் சேரவேண்டுமென்று ஒரு திட்டம் போட்டான். இந்தச் சமஷ்டியை எழுபது பேரடங்கிய ஒரு சபை நிருவாகம் செய்ய வேண்டுமென்றும், இந்தச் சபையினரே ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்கும் ஏற்படுகின்ற மனஸ்தாபங்களைத் தீர்த்து வைப்பார்க ளென்றும், இவர்களுடைய தீர்ப்பு அவசியமானால், பலாத்காரத்தைப் பிரயோகித்து நிறைவேற்றப்பட வேண்டு மென்றும், அப்படியானால் தான் யுத்ததைத் தடுக்க முடியுமென்றும் இவனுடைய திட்டம் கூறியது. ஸல்லியின் திட்டத்தை விரிவுபடுத்தியும் சிற்சில மாற்றங்க ளோடும் செயிண்ட்பீரே4 என்ன, லீப்நிட்ஸ்5 என்ன, ரூஸ்ஸோ6 என்ன இவர் களெல்லோரும் சில திட்டங்களை வெளியிட்டார்கள். ஜெரெமிபெந்தாம்7 என்பவன், ஐரோப்பிய நாடுகள், தங்கள் ஆயுத பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்றும், சர்வதேச கோர்ட் ஒன்று நிறுவி அதன் மூலம் எல்லா மனஸ்தாபங்களையும் பைசல் செய்து கொள்ள வேண்டுமென்றும் ஒரு திட்டம் பிரகடனம் செய்தான். ஜெர்மன் தத்துவ ஞானியாகிய இம்மானுயுவல் காண்ட்1, 1795ஆம் வருஷம் “நிரந்தர சமாதானம்” என்ற ஒரு நூலை வெளியிட்டான். யுத்தத்திற்கு முக்கிய காரணம் முடியரசு முறைகள் இருப்பதுதான்; ஆதலின் எல்லா நாடுகளிலும் பொதுஜன ஆட்சி நிறுவப்பட வேண்டும்; எந்த ஒரு ராஜ்யத்திலும் நிரந்தரமாக ஒரு ராணுவம் இருக்கக்கூடாது; எந்த நாடும், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகக் கடன் வாங்கக்கூடாது; ஐரோப்பாவிலுள்ள எல்லாச் சுதந்திர நாடுகளும் ஒரு சமஷ்டியாகச் சேர வேண்டும்; ஒரு நாட்டின் விவகாரங்களில் மற்றொரு நாடு பலாத்காரத்தைத் துணையாகக்கொண்டு தலை யிடக்கூடாது; யுத்தத்தின் கொடுமைகளை எவ்வளவு தூரம் குறைக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் குறைக்கவேண்டும். இந்த மாதிரியான கருத்துக்கள் காண்டிட்டின் திட்டத்தில் அடங்கியிருந்தன. பத்தொன்பதாவது நூற்றாண்டில் பிரான்சில் பல புரட்சிகள் நடைபெற்றனவல்லவா, இந்தப் புரட்சிகள்தான் ஐரோப்பாவின் சமாதானத்தைக் குலைத்துவிடுகின்றன என்ற கருத்துடன் லார்ட் காஸல்ரே2யினுடைய முயற்சியின் பேரில் “ஐரோப்பிய இணக்கம்”3 ஒன்று ஏற்பட்டது. இந்த இணக்கத்தில் பிரான்ஸ் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐரோப்பாவின் பொதுவான அமைதிக்கு எந்த ஒரு நாடேனும் பங்கம் விளைவிக்குமாயின் அந்த நாட்டின் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க, மேற்படி “ஐரோப்பிய இணக்கம்” அடிக்கடி கூட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. இந்த இணக்கம் 1815 ஆம் வருஷம் வரை உயிரோடிருந்ததென்றே சொல்லவேண்டும். இதன் மூலமாகச் சில தகராறுகளும் தீர்க்கப்பட்டன. மேற்படி “ஐரோப்பிய இணக்கத்”தின் ஜீவிய காலத்தில், அதாவது 1815ஆம் வருஷத்திலிருந்து 1913 ஆம் வருஷம் வரையுள்ள இடைப்பட்ட சுமார் நூறு வருஷ காலத்தில், சர்வதேச ஸ்தாபன மொன்று ஏற்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பல திட்டங்கள் வெளியாயின. வில்லியம் லாட்4 என்ற ஓர் அமெரிக்கன், எல்லாக் கிறிஸ்துவ நாடுகளின் தூதர்களும் ஒரு மகாநாட்டில் கூடி சர்வதேச விவகாரங்களைப் பைசல் செய்து கொள்ள வேண்டு மென்றும், சர்வதேச நீதி ஸ்தலமொன்று நிறுவப்பட வேண்டு மென்றும் ஒரு திட்டம் வெளியிட்டான். ஜேம்ஸ் மில்லும்5 அவனுடைய பிரபல குமாரனாகிய ஜான் ஸ்ட்டூவர்ட் மில்லும்1, சர்வதேச பஞ்சாயத்து முறையை ஆதரித்துத் திட்டங்கள் வெளியிட்டார்கள். ஒழுங்கான சர்வதேச நிருவாகம், சர்வ தேச ஒற்றுமை ஆகிய இரண்டையும் முன்னிட்டு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஒரு சமஷ்டி யாகச் சேரவேண்டுமென்று ப்ளுண்ஷ்லி2 என்ற ஜெர்மானிய அரசியல் பண்டிதன் ஒரு திட்டம் வகுத்தான். இங்ஙனம் பல அறிஞர்கள் சர்வ தேச சங்கத்திற்கு அடிகோலி வைத்தார்கள். கடைசியாக, 1914-18ஆம் வருஷ மகா யுத்தத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றிக் கொள்ளு முகத்தான் 1920 ஆம் வருஷம் “சர்வ தேச சங்கம்”3 ஸ்தாபிக்கப்பட்டது. “சர்வ தேச ஒத்துழைப்பு, சர்வ தேச அமைதி, சர்வ தேசப் பாதுகாப்பு இவைகளின் அபிவிருத்திக்காகவும், யுத்தத்தில் இறங்கக்கூடாதென்ற நிபந்தனையை ஒப்புக் கொள்ளு முகத்தானும் தேசங்களுக்குள் பகிரங்கமான, நியாயமுள்ள, கௌரவமான உறவு முறைகள் இருக்க வேண்டுமென்பதற்காகவும், சர்வதேச சட்டங்களை அனுசரிக்கிற வகையில் எல்லா அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் இருக்க வேண்டு மென்பதற்காகவும், ஒழுங்கான அரசாங்க அமைப் பின்கீழ் வாழும் பிரஜை களின் விஷயமாக எடுத்துக் கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளிலும் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டிருக்கிற உடன்படிக்கைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்பதற்காக வும்” இந்தச் சர்வ தேச சங்கம் காணப் பட்டது. ஆனால் இந்தச் சங்கம் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியுமல்லவா? இதனுடைய அடுத்த வாரிசு தான் 1946 ஆம் வருஷத் தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய தேச ஸ்தாபனம்.4 இருபதாவது நூற்றாண்டுத் தொடக்கத்தில் உலகத்தில் மொத்தம் 425 சமாதான ஸ்தாபனங்கள் இருந்தன. தேசவாரியாக இவைகளைப் பிரிப்போ மானால், டென்மார்க்கில் 94, ஸ்வீடனில் 79, ஜெர்மனியில் 72, பிரிட்டனில் 46, நார்வேயில் 38, ஸ்விட்ஜ்ர் லாந்தில் 26, பிரான்சில் 16, அமெரிக்கா ஐக்கிய நாட்டில் 15, இத்தலியில் 13, ஆஸ்திரியாவில் 9, ஹங்கேரியில் 2, பெல்ஜியத்தில் 1, போர்த்துகலில் 1, ருஷ்யாவில் 1, ஜப்பானிலும் ஆஸ்திரேலியா விலும் சேர்ந்து 3 ஸ்தாபனங்கள் இருந்தன. 1914ஆம் வருஷ யுத்தத் தொடக்கத்தின் போது மொத்தம் 26 நாடுகளில் இந்தச் சமாதான ஸ்தாபனங்கள் பரவியிருந்தன. ஆயினும் இவைகளால் யுத்தத்தைத் தடுக்க முடியவில்லை. ஏன் என்று வாசகர்கள் கேட்கலாமல்லவா? மேலே சொல்லப்பெற்ற சமாதான திட்டங்கள், ஸ்தாபனங்கள், சர்வதேச ஸ்தாபன திட்டங்கள் இயக்கங்கள் ஆகிய யாவும் ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை அல்லது கிறிஸ்துவ நாடுகளின் ஒற்றுமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுந்தன. இவைகளின் திருஷ்டியெல்லாம் ஐரோப்பாவின் எல்லையோடு நின்றுவிட்டது; அதற்குமேல் செல்லவில்லை. தவிர, இவையாவும் அரசியல் விவகாரங்களில் ஒற்றுமையாயிருக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே பாடுபட்டன; மற்ற விவகாரங்களில் இவை சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம், இவை, தனி மனிதனுடைய வாழ்க்கையையோ ஒரு தேசத்தினுடைய வாழ்க்கையையோ மொத்தமாகப் பாராமல் தனித்தனி அறை களாகப் பிரித்துப் பார்த்ததுதான். மற்றும் இந்தச் சமாதான இயக்கங்கள், சர்வதேச ஸ்தாபனங்கள் ஆகிய யாவும், ஏகபோக உரிமைச் சக்திகளை எதிர்த்துப் போராடும் பலமுடையனவா யில்லை. இதனால் அந்தச் சக்திகள், இந்த இயக்கங்களையும் ஸ்தா பனங்களையும் தலையோங்க விடாமல் செய்து வந்தன. இன்னும், இந்த இயக்கங்கள், ஸ்தாபனங்கள் ஆகியன. வெறும் ஏட்டுச் சுரைக் காய்களாக இருந்தனவே தவிர கிரியாம்சையில் ஒன்றையும் செய்யாமலிருந்தன. கடைசியாகத் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச சங்க மானது, ஓரளவு காரியத்தில் இறங்க முற்பட்டதென்பது வாஸ்தவம். ஆனால் முற்பட்ட அளவோடு அதனுடைய முற்போக்கு நின்று விட்டது. அதில் அங்கத்தினராகச் சேர்ந்திருந்த வல்லரசுகள், தங்கள் உரிமைகளை ஊர்ஜிதம் செய்துகொள்வதிலும் வலுப்படுத்திக் கொள்வதிலும் கவனஞ் செலுத்தினவே தவிர, தங்களைத் தவிர்த்த மற்றவர்கள் விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகளையும் செய்யவேண்டிய கடமைகளையும் மறந்துவிட்டன. 1936ஆம் வருஷம் இத்தலியின் ஆக்ரமிப்பைக் கண்டித்து எத்தி யோப்பியா எழுப்பிய கூக்குரல் சர்வதேச சங்கத்தின் காதிலேயே விழாமல் போய்விட்டதென்பதை இங்கு வாசகர்களுக்கு நினை வூட்ட விரும்புகிறோம். அது முதற் கொண்டே அந்தச் சங்கத்தின் தேய்பிறைக் காலம் ஆரம்பித்துவிட்டதென்று சொல்ல வேண்டும். இத்தகைய காரணங்களினால் மேற்சொன்ன சமாதான இயக்கங்கள், சர்வதேச ஸ்தாபனங்கள் ஆகிய யாவும் தங்கள் நோக்கத்தில் சித்தி பெறாமற் போயின. அப்படியானால் இனிச் செய்ய வேண்டுவது யார்? உலக சமாதானத்திற்கு வழியென்ன? 5. சமாதானத்திற்கு வழி உலகத்திலுள்ள பிரதியொரு ராஜ்யமும், தன்னுடைய ராணுவ பலத்தை, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு மட்டும் வைத்துக் கொள்ளவேண்டும், அதற்குமேல் அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று நிர்ணயப்படுத்திவிட்டால், சண்டைகள் ஏற்படுவதற்கு வழி யில்லை என்று சிலர் கருதி வந்தார்கள்; இன்னமும் சிலர் இப்படிக் கருது கிறார்களோ என்னவோ தெரியாது. இங்ஙனம் கருதுகிறவர்கள் இருப்பார் களானால் இவர்களை, படித்தும் பயன் பெறாதவர்களென்றுதான் சொல்ல வேண்டும். ராணுவ பலத்தை வரையறுத்துவிட வேண்டுமென்று சொல் கிறவர் களுடைய அடிப்படையான எண்ணம் என்னவென்றால், உலகத்தில் சண்டைகள் உண்டாவதெல்லாம் ஆயுதங்களினால்தான், ஆதலின் அந்த ஆயுதங்களை குறைவுபடுத்திவிட்டால் யுத்தங்கள் ஏற்படுவதற்கு ஏதுவில்லாமற் போகிறது என்பதுதான். ஆனால் இந்த எண்ணமே தவறு. ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், ஜனங்கள், கையினாலும் காலினாலும் சண்டைபோட்டுக் கொண்டி ருந்தார்கள்; கழிகளும் கற்களும் யுத்தக் கருவிகளாக உபயோகிக்கப் பட்டன. ஆயுதங்கள் அதிகப்படியான உபயோகத்தில் இல்லாத காலத்திலும் உலகத்தில் சண்டைகள் நடைபெற வில்லையா? ஜனங்கள் லட்சக் கணக்கில் மடியவில்லையா? எனவே, ஆயுதங்கள், யுத்தத்திற்குக் காரணமல்ல; அவை யுத்தம் நடைபெறுவதற்கான சாதனங்கள்தான். இந்தச் சாதனங்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொள் வதினால் யுத்தத்தின் வேகம் குறையலாமென்று சொல்வதிலே அர்த்தமிருக் கிறது. ஆனால் இந்தச் சாதனங்களை உபயோகியாம லிருந்தால் யுத்தமே நின்றுவிடும் என்று சொல்வதிலே அர்த்த மில்லை. யுத்தத்தின் உற்பத்தி ஸ்தானம் மனிதர்களுடைய மனந்தான். மனத்திலே எழும் பகைமை, பொறாமை, முதலிய மாசுக்களை அப் புறப் படுத்திவிட்டு அவைகளின் ஸ்தானத்தில் பரஸ்பர நல்லெண்ணம், நம்பிக்கை முதலியவைகளை நிலைபெறச் செய்வார்களானால் யுத்தம் தோன்று வதற்கான காரணங்களே இல்லாமற் போகின்றன; நிலையான சமாதானம் நிலவுவதற்குத் தகுதியான சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரு தேசத்தின் ஆயுத பலத்தை ஒரு வரையறைக் குட்படுத்து வதன் மூலம் உலகத்தில் யுத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்ற இந்த எண்ணம் இருக்கிறதே இதனை, ஒரு பிரச்னையாகவே எடுத்துக்கொண்டு ஆதி காலத்திலிருந்து அநேக அறிஞர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்; ராஜதந்திரிகள் பலர் இதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் யாரும் வெற்றி பெறவே இல்லை. 1921 ஆம் வருஷம் நவம்பர் மாதம் வாஷிங்க்ட்டன் நகரத்தில் கூட்டப்பெற்ற மகாநாடு தான், முதன்முதலாகக் கூட்டப்பெற்ற ஆயுதப் பரிகரண மகாநாடு என்று வாசகர்கள் கருதவேண்டாம். கிறிஸ்து பிறப்பதற்கு 546 வருஷங்களுக்கு முந்தியே சீனா இது விஷயத்தில் சிரத்தை காட்டியிருக்கிறது. ஆயுதங்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டுமென்று சீன ராஜதந்திரிகள் சில திட்டங்கள் வகுத்து அவைகளை நடை முறையில் கொணரப் பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். இந்த ஆயுதப் பரிகரண விஷயத்திலும் ஆசியாதான் முதன்முதலாக வழி காட்டியது என்பதை இங்குச் சிறிது பெருமையோடு வாசகர்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகிறோம். பழைய சரித்திரம் ஒரு புறமிருக்கட்டும்; சென்ற நூற்றாண்டிலே கூட, அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டில், ஐரோப்பாவில் இந்த ஆயுதப் பரிகரணப் பிரச்னை, ராஜதந்திரிகளுடைய கவனத்தின் முன்னணியில் வந்து நின்றிருக்கிறது. புர்ரிட் என்பவனுடைய முயற்சியின் பேரில் ஐரோப்பாவில் சில சமாதான மகாநாடுகள் கூடினவென்று முன்னே சொல்லியிருக்கிறோ மல்லவா, இந்த மகாநாடுகளில் ஒன்று 1848ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இருபதாந்தேதி ப்ரஸ்ஸெல்ஸ் நகரத்தில் கூடியது. ஏழு நாடுகள் இதில் கலந்து கொண்டன. முந்நூறு பிரதிநிதிகள் ஆஜராயிருந்தார்கள். ஆயுதப் பரிகரண விஷயத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் வழி காட்டவேண்டு மென்று இந்த மகாநாட்டில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தைப் பற்றி வாதம் நடை பெறுகையில், பெல்ஜிய தேசத்துப் பிரதிநிதியொருவன், “ஆயுத பலத்தை வரையறுத்துக் கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டது. பெரிய யுத்த தந்திரி என்று சொல்லப்படுகிறவன் யார்? புத்திசாலியான ஒரு கொலைகாரன்தானே?” என்று படபடத்துக் கூறி, அப் பொழுதைய ஐரோப்பிய மகா ஜனங்களுக்கு யுத்தத்தின் மீதிருந்த அருவருப்பை வெளிப்படுத்தினான். ஆயினும் என்ன? 1848 ஆம் வருஷத்திற்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள் எந்த அளவுக்குத் தங்கள் ஆயுத பலத்தைக் குறைத்துக் கொண்டன, பிரிட்டனும் அமெரிக்காவும் எவ்வளவு தூரம் வழிகாட்டின என்பவைகளைப் பற்றி நாம் விஸ்தரித்துச் சொல்ல விரும்பவில்லை. 1849 ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் மாநகரில் கூடிய சமாதான மகாநாட்டில் விக்ட்டர் ஹ்யூகோ1 என்ற பிரெஞ்சு அறிஞன் பேசுகையில், அந்த வருஷத்திற்கு முந்தின முப்பத்து நான்கு வருஷங்களில், 12,80,00,000 பவுன், ஆயுதங் களுக்காகச் செலவழிக்கப் பட்டிருக்கிறதென்று ஒரு கணக்குப்போட்டுக் காட்டினான். கேவலம் உயிர்க் கொலைக்காகச் செல வழிக்கப்படுகின்ற இந்தச் செலவு நிற்கவேண்டுமென்றும், அப்படி நின்று, யுத்தங்களில் உபயோகப்படுகின்ற பீரங்கிகள், பொருட்காட்சிப் பொருள் களாகும் காலத்தைத்தான் எதிர்பார்ப்பதாகவும், இவன் மேற்படி மகாநாட்டில் கூறினான். ஆனால் ஹ்யூகோ! உன்னுடைய கோரிக்கை, உன் காலத்திலேயே பகற் கனவாகப் போய் விட்டது! பிரெஞ்சுக் குடியரசின் தலைவனாயிருந்த மூன்றாவது நெப்போலியன்2 என்பவன், சர்வதேச ஆயுதப் பரிகரணமகாநாடு ஒன்று உடனே கூட்டப்பட வேண்டுமென்று ஒரு திட்டம் வெளியிட்டான். இந்தத் திட்டத்தை “கிரேட் பிரிட்டனைத் தவிர மற்ற ஐரோப்பா பூராவும் வரவேற்றது; ஆனால் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருகிற விஷயத்தில், ஐரோப்பா முழுவதும் இதனைப் புறக்கணித்துவிட்டது.” இங்ஙனம் பலதடவை ஆயுதப் பரிகரண முயற்சிகள் நடை பெற்றி ருக்கின்றன. ஆனால் எல்லாம் பேச்சளவோடு நின்று போயினவே தவிர காரியத்தில் ஒன்றும் பலிக்கவில்லை. அதற்கு மாறாக, ஆயுதப் பரி கரணப் பேச்சுகள் வலுக்க வலுக்க, அந்த விகிதாசாரத்திற்கு, ஆயுதப் பெருக்க முயற்சிகள் அதிகரித்துக் கொண்டு வந்திருக்கின்றன. 1921ஆம் வருஷம் வாஷிங்க்ட்டன் நகரத்தில் ஆயுதப் பரி கரணப் பேச்சுகள் தொடங்கப்பட்டனவல்லவா, அதற்குப் பிறகு 1927ஆம் வருஷத்திலிருந்து 1930 ஆம் வருஷம் வரை உலகத்துச் சில முக்கிய வல்லரசுகள் யுத்த தளவாடங்களுக்கு எவ்வளவு பணம் செல வழித்து வந்திருக்கின்றன என்பதைப் பின்வரும் புள்ளி விவரத் தினால் தெரிந்து கொள்ளலாம். வல்லரசுகளின் 1927-28 1928-29 1929-30 பெயர் ரூபாய் ரூபாய் ரூபாய் அமெரிக்கா 1,87,38,00,000 2,05,41,00,000 2,22,30,00,000 (ஐக்கிய நாடுகள்) கிரேட் பிரிட்டன் 1,71,22,75,200 1,65,43,92,000 1,64,18,53,800 பிரான்ஸ் 1,38,46,29,000 1,22,37,30,000 1,56,97,20,000 இத்தலி 81,80,70,072 73,22,06,280 70,26,87,960 ஜப்பான் 72,27,09,330 71,71,06,020 74,16,87,960 மொத்தம் 6,51,14,83,602 6,38,15,34,300 6,87,89,49,720 இங்ஙனம் யுத்த தளவாடங்களுக்காகச் செலவழிக்கப்படும் தொகை யானது வரவர அதிகரித்துக் கொண்டு வருவதைப் பார்த்த வல்லரசுகள், மறுபடியும் தங்கள் தங்கள் ஆயுத பலத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இறங்கின. 1932 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மற்றோர் ஆயுதப் பரிகரண மகாநாடு கூடியது. 1933ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் வரையில் இதன் நட வடிக்கைகள் நடைபெற்றன. கடைசியில் எவ்வித முடிவுக்கும் வராமல் மகாநாடு கலைந்தது. இப்படிக் கலைந்து சரியாக ஆறு வருஷங் கழித்து இரண்டாவது உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. எதற்காக இவ்வளவு தூரம் சொல்கிறோமென்றால், யுத்த தள வாடங் களைக் குறைத்துக் கொண்டு விடுவதனால் மட்டும் யுத்தம் வராமலிராது, சமாதானம் ஏற்பட்டுவிடாது என்பதை வலியுறுத்து வதற்குத்தான்.யுத்தம் ஏற்படுவதற்குப் பல காரணங்களுண்டு. அந்தக் காரணங் களை அலசி ஆராய்ந்து அகற்றவேண்டும். ஒரு தேசத்தினுடைய அரசியல் தலைவர்கள், நீண்ட காலமாகவே போட்டு வந்திருக்கிற திட்டங்கள், அனுசரித்து வந்திருக்கிற கொள்கைகள் இவைகளின் விளைவாக யுத்தம் உண்டாகலாம். அல்லது தலைமுறை தலைமுறை யாக ஜனங்களிடத்திலே ஊறிப் போயிருக் கிற நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகளுக்கு அவர்கள் வைத்திருக்கிற மதிப்பு, அந்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு நிலவும் எண்ணப்போக்கு, இவை களின் காரணமாகவும் யுத்தம் ஏற்படலாம். அல்லது ஜனங்களுக்கு, உள்ளூரவோ வெளிப்படையாகவோ சில ஆசைகள் இருக்கும்! ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள யுத்தத்தில் பிரவேசிக்கலாம். அல்லது, தாங்கள் யாரைச் சத்துருக்களாகக் கருதிக் கொண்டிருக் கிறார்களோ அவர்களைப்பற்றி விபரீதமான சந்தேகங் கொண்டு, அதனால் பயமடைந்து, அந்த பயத்தின் காரணமாக யுத்தத்தில் ஒரு தேசத்தினர் இறங்கலாம். அல்லது ஒரு நாட்டை வெற்றி கொள்வதனால் பெருமையுண்டு, அந்தப் பெருமை நமக்குக் கிட்டவேண்டு மென்ற எண்ண மேலீட்டினாலோ, ஒரு நாட்டிலுள்ள பொருள்களுக்கு ஆசைப்பட்டோ, ஒரு நாட்டின் மீது ஆதிக்கஞ் செலுத்த வேண்டுமென்ற அதிகார ஆசையினாலோ யுத்தம் நிகழலாம். அல்லது தங்களுடைய சொத்து சுதந்திரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்து அவைகளைக் காப்பாற்றும் பொருட்டு போரில் தலையிடலாம். அல்லது ஒரு நாட்டு ஜனங்கள், ஏதோ ஒருவித வெறியினால் யுத்தத்தில் ஈடுபடவேண்டுமென்று கூக்குரலிடுவார் களானால், அந்தக் கூக்குரலுக்குச் செவி சாய்க்கு முகத்தான் அந்த நாட்டு அரசாங்கம், யுத்தத்தில் இறங்குகிறது. அல்லது தேசத்திற்குக் கௌரவஹானி ஏற்பட்டுவிட்டதென்று கருதி அதற்குப் பரிகாரந்தேடுகிற வகையில் யுத்தம் மூளுவதுண்டு. அல்லது உள்நாட்டிலே குழப்பங்கள் ஏற்பட்டால் அவைகளைச் சமாளிக்க முடியாத நிலையில் ஜனங்களுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக அந்த நாட்டு அரசாங்கத்தினர் அண்டை அயலி லுள்ள நாடுகளை வலுச் சண்டைக்கிழுப்பதுண்டு. இன்னோரன்ன காரணங்களினால் யுத்தங்கள் உண்டாகின்றன. இந்தக் காரணங் களை அகற்ற வேண்டுமானால் ஜனங்களுடைய மனப்பான்மையை மாற்றவேண்டும். ஜனங்களுடைய மனப்பான்மையை மாற்றுவது எப்படி? கல்வியின் மூலமாகத்தான். மனிதனிடத்திலே அடங்கிக் கிடக்கும் மேலான தன்மைகளைக் கல்லியெடுத்து வெளிக்குக் கொண்டு வருவது எதுவோ அதுதான் கல்வி. இத்தகைய கல்வியையே சிறுவர், சிறுமியர்களுக்குப் புகட்டவேண்டும். சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளில், கல்வி முறையைப் பொறுத்த மட்டில் உலகத்துப் பலநாடுகளிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப் பட்டு வந்திருக்கின்றன. இவைகளினால் சில நன்மைகள் ஏற் பட்டிருக் கின்றன வென்பது வாஸ்தவம். ஆனால் இந்த நன்மைகள் அந்தந்த நாட்டு அளவோடு நின்றுவிட்டனவே தவிர, உலகப் பொதுவுக்குப் பரவவில்லை. தேசீயம் தேவைதான்; தேசீய சக்திகள் வளர்ச்சி பெற வேண்டியதுதான்; ஆனால் சர்வ தேசீயத்திற்கு, உலகப் பொதுவுக்கு விரோதமாகவல்ல. சர்வ தேசீயத்தைத் தழுவிக் கொண்டிராத தேசீயம், காற்றில்லாத வீடு மாதிரி, வியாதிகள் உண்டாவதற்கு ஏதுவாயிருப்பதுபோல், தனிப்பட்ட தேசீயத்தினால் சுயநலம், தான் என்ற மமதை, பிறர் விஷயத்தில் அலட்சியம் ஆகிய சுபாவங்களே ஆக்கம் பெறும். ஓர் அறிஞன் கூறுகிறான், - “தேசீயம் என்கிற இந்த எண்ணம் இருக்கிறதே இது மிகவும் கேவலமானது; சுயநலம் வாய்ந்தது; கிறிஸ்துவத் தன்மையற்றது; முற்போக்கான நாகரிகத்திற்கு முற்றிலும் விரோதமானது. இந்தத் தேசீய எண்ணத்தை வளர்க்கிறவர்கள், இது விஷயமாகக் காட்டும் உற்சாகத்தைப் போல் இன்னமும் தீவிரமாகக் காட்டத் தொடங்குவார்களானால், உலக சமாதானத்திற்கு மட்டுமல்ல, எல்லாவித முன்னேற்றத்திற்கும், நல்ல அரசாங்கத்திற்கும் ஆபத்து ஏற்படும். ஆதலின், தேசீயத்திற்கு முரண் பாடில்லாத சர்வ தேசீய உணர்ச்சியை உண்டு பண்ணக்கூடிய கல்வி முறை பரவுமாறு செய்யவேண்டும்.” ஆனால் இஃது எப்படி சாத்தியம், தேசீயம் அழிந்ததுதானே சர்வ தேசீயம் என்று சிலர் கேட்கலாம். இல்லவே இல்லை. தேசீயம் உயிர் என்றால் சர்வ தேசீயம் உடல்; தேசீயம் வேரென்றால் சர்வ தேசீயம் விருட்சம். உயிரும் உடலும், வேரும் விருட்சமும் ஒன்றா யிருப்பது சாத்திய மென்றால், தேசீயமும் சர்வ தேசீயமும் ஒன்றா யிருப்பது ஏன் அசாத்தியம்? இது விஷயத்தில் ஆசியா, எத்தனையோ ஆயிரக் கணக்கான வருஷங் களுக்கு முன்னரிருந்தே வழிகாட்டி வந்திருக்கிறது; இன்றும் காந்தியடிகளின் மூலம் வழிகாட்டிக் கொண்டுவருகிறது. உலகத்திலுள்ள சர்வ ஜனங்களும் சௌக்கிய மாயிருக்கவேண்டும் , உலகமெங்கும் செழித்திருக்கவேண்டும். என்பன போன்ற கருத்துக்களே, ஆசிய மக்களின் அன்றாடப் பிரார்த்தனையா யிருந்து வந்திருக்கிறது. உலகத்தின் எந்த மூலை முடுக்கில் நல்லது ஒன்று இருக்கிறதென்று தெரிந்தால் அதனை அறியவும், அதனைக் கடைப் பிடிக்கவும் ஆசிய மக்கள் முயன்றிருக்கிறார்கள். அறிவையும் அன்பையும் பரிவர்த்தனை செய்து கொள்கிற விஷயத்தில் அவர்கள், நாடு, மதம், சமூகம் முதலிய எந்த விதமான வேற்றுமைகளையும் பாராட்டியதே கிடையாது. “தேசீயத்தோடு சர்வ தேசீயத்தையும், அஹிம்ஸையோடு வெற்றியையும் இணைக்கத் தெரிந்துகொண்டிருக்கிற உலகத்துச் சிறந்த ராஜ தந்திரி” என்று காந்தியடிகளுக்குப் புகழ்மாலை சூட்டு கிறான் ஜார்ஜ் காட்லின்1 என்ற அறிஞன். தேசீயத்தையும் சர்வ தேசீயத்தையும் வாழ்க்கையிலே இணைத்து வாழ்ந்து காட்டுகிற ஒரு மகானை நம் கண் முன்னர் பார்த்துக் கொண்டிருக்கிறபோது, அந்த இரண்டும் ஒன்றுபடாது, முரண்பட்டு நிற்கும் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? உலக திருஷ்டி கொண்டு போதிக்கப்படுகிற கல்விமுறை இப்படியிருக்க வேண்டுமென்பதைப் பற்றி அறிஞர்கள் அவ்வப் பொழுது பல யோசனைகளைச் சொல்லி வந்திருக்கிறார்கள். இந்த யோசனைகளை யெல்லாம் திரட்டிச் சாரமாகச் சொல்லவேண்டு மானால், இளைஞர்கள் கல்வி பயிலுங் காலத்தில், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டு அதனால் வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு அல்லது அசிரத்தை உண்டாகாதிருக்குமாறு செய்யவேண்டும்; சகல விதங்களிலும் வளமுடைய ஒரு சூழ்நிலையில், தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பிரதியோர் இளைஞனும் உணரவேண்டும்; தன்னுடைய உயிருக்கோ, பொருளுக்கோ, மானத்துக்கோ எவ்வித ஆபத்தும் எப்பொழுதும் ஏற்படாதென்ற ஒரு நம்பிக்கைச் சூழலின் மத்தியில் படிக்க வேண்டும்; எதிலும் ஒரு நிதானம் இருக்குமாறு செய்யவேண்டும்; தன்னம்பிக்கையை வளரச் செய்ய வேண்டும்; பரஸ்பர உதவி, பரஸ்பர நம்பிக்கை இவைகளினால்தான் வாழ்க்கை வளம்பெறுகிறதென்ற உண்மையை உணருமாறு செய்யவேண்டும்; பொதுமை எண்ணத்தை வளர்க்கவேண்டும்; உரிமையைக் காட்டி லும் கடமையிலே பற்றுள்ளங் கொள்ளுமாறு செய்ய வேண்டும்; அறிவைக் கூர்மைப்படுத்துவதோடு இருதயத்தையும் விசாலப் படுத்த வேண்டும்; இன்னோரன்ன கருத்துக்களை உலகத்துக் கல்வி நிபுணர்கள் மனத்திலே கொண்டு கல்வி முறையை நிர்மாணஞ் செய்வார்களானால், உலகத்தில் சமாதானம் ஏற்பட வழி பிறக்கும். உலக சமாதானம் என்பது என்ன? தனிமனிதனுடைய சமா தானத்தின் விரிவுதானே? இந்தத் தனிமனிதனிடத்தில் போர்த் தன்மைகள் ஏதேனும் இருந்தால் அவைகளை அகற்றி, அவைகளின் ஸ்தானத்தில் சமாதான எண்ணங்கள் நிலைபெறும் படியான ஒரு கல்வித் திட்டத்தையே பிரதியோர் அரசாங்கமும் வகுக்கவேண்டும். அரசாங்கமானது, தன்னுடைய நோக்கத்திற் கிணங்க கல்வி முறையை வகுக்காமல், ஜனங்களை நல்வழிப்படுத்து வதையே நோக்கமாகக் கொள்ளவேண்டும். அதாவது, கல்வி ஸ்தாபனங்கள், அரசாங்கத்தின் பிரசார பீடங்களாக இராமல், ஜனங்களுடைய மேலான சுபாவங்களை வளர்க்கும் செழுமண் பூமிகளாயிருக்க வேண்டும். இந்தக் கல்வி ஸ்தாபனங்களுக்குப் பொருளுதவி செய்வது அரசாங்கத்தின் கடமை. இதைத் தவிர்த்து அந்த ஸ்தாபனங்களின் நடைமுறையிலோ, அவைகளின் பாடக் கிரமத்திலோ அரசாங்கம் தலையிடுமானால், அஃது, அதன் அத்துமீறின செயலேயாகும். இங்ஙனம் ஆதரவு கொடுக்கிற அளவோடு அரசாங்கம் நின்றுவிடு மானால், அதற்குமேல் அனாவசியமாகத் தலையிடாதிருக்கு மானால், தேசத்தின் இலக்கியம், கலை முதலியன சுதந்திரக் கோலந்தாங்கி, வாழையடி வாழையென வளர்ச்சிபெறும். பூர்விக இந்தியாவில், கல்வி முறை இப்படித்தான் அமைந்திருந்தது, கல்வி ஸ்தாபனங் களின் போஷகர் ஸ்தானத்தில் அரசாங்கம் இருந்ததே தவிர, அவைகளுக்கு வழிகாட்டவோ, அவைகளை வழிநடத்திச் செல்லவோ இல்லை. இதன் விளைவு என்னவென்றால், அரச பீடங்களின் மாற்றத்தினால், சமுதாய ஒழுங்கு எப்படி குலையாமலிருந்ததோ அப்படியே கல்வி முறையும் மாறாமலிருந்தது; தேசத்தின் கலா சாரங்கள் கட்டுக் குலையாம லிருந்தன. அரசாங்கத்தின் பிரசார பீடங்களாகக் கல்வி ஸ்தாபனங்கள் இருக்கு மானால் அதன் விளைவு என்னவென்பதை இத்தலியிலும் ஜெர்மனியிலும் கண்கூடாகக் கண்டோம். 1923 ஆம் வருஷம் இத்தலியில், முஸோலினி, அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டதும், முதன்முதலாகக் கல்வி முறையைச் சீர்திருத்த வேண்டு மென்று சொல்லி, கல்விச்சாலைகளில் பாசிஸக் கொள்கைகளைப் புகுத்தினான்; தேசத்தின் சிறுவர் சிறுமிகளை பாசிஸ்ட்டுகளாக் கினான்; “பசுக்களுக்கும் பெண்களுக்கும் பிரிட்டிஷாருக்குந் தான் சமாதானம் தேவை”யென்று சொல்லி சமாதானத்தைப் பரிகசித் தான். கடைசியில் என்ன கண்டான்? தானும் அழிந்து, தான் சிருஷ் டித்த பாசிஸ்ட் இத்தலியையும் அழித்துவிட்டான். இதே காரணத் தினால்தான், அதாவது அரசாங்கத்தின் பிரசார பீடங்களாகக் கல்வி ஸ்தாபனங்களை ஆக்கிவிட்ட காரணத்தினால்தான் ஹிட்லருடைய வாழ்வு, மின்னல் வாழ்வாக, பத்து வருஷத்திற்குள்ளே முடிந்து விட்டது; அவன் கண்ட நாஜி ஜெர்மனியும், நிரபராதிகளான ஜனங்களின்-ஆம்; லட்சக்கணக்கான ஜனங்களின்-சாபத்தீயிலே வெந்துவிட்டது. ஆதலின் உலகத்திலுள்ள பிரதியோர் அரசாங்கமும், தன்னுடைய பிரஜைகளுக்கு, யுத்தத்தினால் ஏற்படக்கூடிய கஷ்ட நிஷ்டூரங்களை நன்கு எடுத்துச் சொல்லவேண்டும். இதற்கு முதற்படி யாக, பள்ளிக்கூடத்துச் சரித்திர பாடபுத்தகங்களைத் திருத்தி எழுது விக்கவேண்டும். இங்ஙனம் சரித்திர புத்தகங்கள் திருத்தி எழுதப்பட வேண்டுமென்ற எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் கூடிய சமாதான மகாநாடுகள் பலவற்றிலும் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் அறிஞர்கள். உதாரணமாக, 1890 ஆம் வருஷம் ஜூலை மாதம் லண்டனில் கூடிய ஒரு சமாதான மகாநாட்டில், உலகத்திலுள்ள சரித்திராசிரியர்கள் அனைவரும், தங்கள் சரித்திர நூல்களில் யுத்தத்தின் கொடுமைகளையும் அவைகளின் நிஷ்பிரயோ ஜனத்தையும் வலியுறுத்தி எழுதவேண்டு மென்று ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சர்வதேச ஐக்கியத்தை வளர்ப்பதற்காக, சர்வ தேசீயப் பத்திரிகை யொன்று தொடங்கப்பட வேண்டுமென்று, மேற்படி மகாநாட்டில் மற்றொரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆனால் இந்த நல்ல எண்ணங் களெல்லாம் தீர்மான அளவோடு நின்றுவிட்டன; செயல் ரூபமாக வெளிவர வில்லை. இனியேனும், இரண்டாவது உலக மகாயுத்தத்தின் கொடுமைகளை அனுபவித்த பிறகேனும், உலகத்துச் சரித்தி ராசிரியர்களே, உங்கள் சரித்திர நூல்களை மேற்சொன்ன வகையில் எழுத முற்படுங்கள். ஆனால் யுத்தத்தின் கொடுமைகளை வருணித்துக் காட்டு வதோடு நின்றுவிடக் கூடாது; சமாதானத்தினால் ஏற்படக்கூடிய நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் சமாதானத்திற்காகப் பாடுபட்டவர்களுடைய வரலாறு களை இளைஞர்களின் மனதில் பதியவைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் சரித்திர பாடம் போதிக்கும் ஆசிரியர்களே, இந்த விஷயத்தில் உங்கள் பொறுப்பு மகத்தானது; வருங்கால உலக சமாதானக் கோயிலை நிர்மாணிக்கிற திருப்பணி உங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இங்ஙனம் நூலாசிரியர்கள், போதகாசிரியர்கள் ஆகிய எல்லோரும் சமாதான தேவதையின் மீது தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டு மானால், முதலில், பிரதியொரு நாட்டு அரசாங்கமும், தன் கவனத்தை மட்டுமல்ல, தன் சக்தியனைத்தையும் சமாதானத்திற்காகச் செலவழிக்க வேண்டும். அதாவது அரசாங்கத்தின் செல்வம், செல்வாக்கு ஆகிய இரண்டும் சமாதான காரியங்களுக்காக மட்டுமே உபயோகப்பட வேண்டும். ஜனங் களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்துதல், சமுதாய ஒற்றுமையை வளர்த்தல், எல்லோரும் கல்வியறிவு பெற வசதிகள் செய்து கொடுத்தல், பிரதியொரு நபருக்கும், அவருடைய திறமையை உபயோகிக்கவோ, அப்படி உபயோகித்து, தன் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவோ சந்தர்ப்பங்கள் இருக்கும்படி செய்தல், பொருள் பலத்தைக் கொண்டு ஒருவரை யொருவர் அடக்கி ஆளாமலிருக்க வகை ஏற்படுத்துதல் இந்த மாதிரியான காரியங்களுக்காகவே அரசாங்கத்தின் செலவினங்கள் இருக்க வேண்டும். இப்படி யெல்லாம் செய்வது, அந்தந்த நாட்டின் நாகரிக பரம்பரையை அனு சரித்த தாகவும், தேசீய வாழ்வை வளம்படுத்துவதாகவும் இருக்க வேண்டு மென்பதோடுகூட, உலக ஒற்றுமையையும், உலக சமாதானத்தையும் நாடுவதாக இருக்க வேண்டும். யுத்தமில்லாமலிருப்பது மட்டும் சமாதானமல்ல; நல்வாழ்வு நடத்து வதற்கான சந்தர்ப்பங்களை அதிகமாக அளிக்கக்கூடிய ஒரு சூழ்நிலைதான் சமாதானம். சமாதானத்திற்கு இலக்கணம் சொல்ல வேண்டுமானால், உழைப்பின் பலனை, எவ்வித வெளிக் கட்டுப்பாடு களுமின்றி, அமைதியாக இருந்து அனுபவிப்பதற்கு ஏதுவாயி ருப்பது எதுவோ அதுதான் சமாதானம் என்று சுருக்கமாகச் சொல்லாம். சிலர் நினைக்கிறார்கள், சமாதானமென்பது செயலற்ற ஒரு நிலையென்று. இல்லவே இல்லை. செயல் நிறைந்த ஒரு நிலைதான் சமாதான நிலை. அதில், நல்லதைச் செய்ய வேண்டுமென்கிற துடி துடிப்பும், மின்சார வேகத்தில் காரியங்களைச் செய்து கொண்டி ருக்க வேண்டுமென்கிற ஆவலும், பிரதியொரு மனிதனும் சான் றோனாக வாழவேண்டுமென்கிற சிரத்தையும், சிரம் அற்றுப் போனாலும் சீலம் பிறழக்கூடாது என்கிற உறுதியும் அடங்கி யிருக்கின்றன. அங்கு, கோழைத்தனத்திற்கு இடமில்லை; அச்சத்திற்கு இடமில்லை. இவ்விரண்டும் இல்லாத காரணத்தினால் அங்கு துரோகம், துவேஷம் முதலிய வியாதிகள் பரவுவதில்லை. அங்கு சங்கீதத் திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதோ அவ்வளவு முக்கியத்துவம் வீரத்திற்கும் கொடுக்கப் படுகிறது. அங்கு, பணிவுக்கு எவ்வளவு பெருமையுண்டோ அவ்வளவு பெருமை, நிமிர்ந்த நடைக்கும் உண்டு. அங்கு துறவுக்குள்ள பெருமை வாழ்க் கைக்குமுண்டு இத்தகைய சமாதான நிலைதான் உலகத்தில் ஏற் படவேண்டும். எந்த நாட்டில் அரசாங்கம் வேறாகவும் குடிகள் வேறாகவும், எந்த நாட்டில் அரசாங்கத்தின் நலன் வேறாகவும் குடிகளின் நலன் வேறாகவும் இருக்கிறதோ, அந்த நாட்டில் அடிக்கடி சமாதான பங்கம் ஏற்படுவதைச் சரித்திரத்தில் பரக்கக் காணலாம். அரசாங்க மானது ஜனங்களுடைய நல்வாழ்வுக்கு, தான் பொறுப்பில்லை யென்று கருதிவிடுகிறது. இங்ஙனமே ஜனங் களும், அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மைக்கு, அதனுடைய நற் பெயருக்குத் தாங்கள் பொறுப்பில்லையென்று கருதிவிடுகிறார்கள். ஒருவருடைய nக்ஷமத் திலே மற்றொருவருக்கு அக்கரை ஏற்படுவதில்லை. விளைவு என்ன? ஜனங்கள், அரசாங்கத்திற்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிறார்கள்; கலகம் விளைவிக்கிறார்கள். இவைகளுக்குப் பிரதியாக, அரசாங்க மானது, ஜனங்களுக்கு விரோதமாக அடக்குமுறைகளைப் பிரயோ கிக்கிறது; சிறைச்சாலைகள் விஸ்தீரணமடைகின்றன; தூக்கு மரங்களுக்கு வேலை இருந்து கொண்டிருக்கிறது. நாட்டில் ஒரே குழப்பம். பொருளுற்பத்தி சுருங்குகிறது; சமுதாய வாழ்வு சீர்குலை கிறது; ஜனங்கள் ஏக்கமடைந்தவர்களாய் தன்னம்பிக்கை இழந்து விடுகிறார்கள். அமைதிக்கு இடமெங்கே? இந்த நிலை, பெரும் பாலான நாடுகளில் இருக்குமானால், உலகத்தில் பொதுவாக சமாதானத்திற்கு ஹானி உண்டாகிறது. ஆதலின் பிரதியொரு நாட்டிலும், அந்த நாட்டு மக்களுடைய அரசாங்கமே நடைபெறுமாறு செய்ய வேண்டும். அந்த அரசாங்க அமைப்பு, அந்த நாட்டுக் கலாசாரம், பரம்பரை, நாகரிகம் இவைகளை அனுசரித்தாற் போலவே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஜனங்களுடைய மேலான தன்மைகளெல்லாம் விகாசமடையும். சுதந்திர வாழ்வானது, ஜனங் களிடத்தில் தன்னம்பிக்கையை உண்டு பண்ணுகிறது. தன்னம்பிக்கை யுடையவர்கள், மற்றவர்களிடத்தில் அவநம்பிக்கை கொள்வதில்லை. இதனால் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் சுமுகமான உறவு முறைகள் ஏற்படுகின்றன. உலகத் துக்குப் பொதுவான ஓர் ஆபத்து ஏற்படு மென்று தெரிந்தால், அதை எல்லா நாட்டாரும் சேர்ந்து சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையும், சமாளிக்க வேண்டுமென்ற உறுதியும் உண்டாகின்றன. அப்படியே உலகத்துக்குப் பொதுவான நன்மை களைச் செய்யும் விஷயத்தில் எல்லா நாடுகளும் ஒன்று படுகின்றன. அப்படி ஒன்றுபடுவது, தங்களுக்குத் தாங்களே நன்மை செய்து கொள்கிற மாதிரி; அதாவது தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை, சுதந்திர வாழ்வை ஊர்ஜிதம் செய்துகொள்ளுகிறமாதிரி என்று ஒவ்வொரு நாடும் உணர்ந்து கொண்டுவிடுமானால், உலகத்தில் சாசுவதமான சமாதானம் நிலவும். பல துறைகளில் பயிற்சிபெற்ற பிறகே, பல வருஷ அனுபவத் திற்குப் பிறகே ஒருவன் அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென்று பிளேட்டோ முதல் அரசியல் அறிஞர் பலரும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அரசியலில் ஈடுபடுகிறவர்கள், தம்மைத் தாம் ஆண்டுகொள்ளும் சக்தியுடையவர் களாகவும், தன்னலம் சிறிதும் இல்லாதவர்களாகவும், தூயமனமும் சீல சுபாவ முடையவர் களாகவும், எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் களாகவும், அனைத்திற்கும் மேலாக, அனுபவ ஞானம் நிரம்பப் பெற்றவர் களாகவும் இருக்கவேண்டும். ஆனால் துரதிருஷ்ட வசமாக இப் பொழுது உலகத்தில் பெரும்பாலும் எது விஷயத்திலும் பக்குவ மில்லாதவர்கள்தான் அரசியலில் பிரவேசித்திருக்கிறார்கள். இவர் களுடைய அதிகாரப் பிடிக்குள்தான் அரசாங்கங்களின் நிருவாகம் நடைபெறுகிறது. யுத்தத்திற்கு விதை தெளிக்கிறவர்களும் இவர்கள் தான்; சமாதான மகாநாட்டில் மேஜையைச்சுற்றி அமர்கிறவர்களும் இவர்கள்தான். இவர்களால் உலகத்தில் எப்படி சாசுவதமான சமா தானத்தை உண்டுபண்ண முடியும்? இத்தகைய அரசியல் வாதிகள் தீர்க்கதிருஷ்டியுடையவர்களா யிருப்பார்களென்று எதிர் பார்க்க முடியாது. ஆனால் சமாதானத்தை நிலை நாட்டுவதற்கு தீர்க்க திருஷ்டி வேண்டும். நிகழ்காலத்திலே எழும் பிரச்னை களை மட்டுமே பரிசீலனை செய்து அவைகளுக்கு ஒரு பரிகாரம் கண்டு விட்டால் மட்டும் சமாதானம் ஏற்பட்டு விடாது. எதிர் காலத்திலே இன்னது இன்னது இப்படி இப்படி நடைபெறக்கூடும் என்பதை ஊகத்தினாலே உணர்ந்தும், முந்திய அனுபவத்தினாலே அறிந்தும், அதற்கான வகையில் நிகழ்காலத்தில் காரியங்களைச் செய்யவேண்டும். இதைச் செய்யக் கூடியவர்கள் அரசியல் ஞானிகளே தவிர வெறும் அரசியல் வாதிகளல்லர். “அரசியல்வாதிகள், ஆறு மாதத்திற்கு அப்பால் என்ன நடைபெறப் போகிறதென்பதைத் தெரிந்து கொள்கிற விஷயத்தில் கண்மூடிகளா யிருக்கிறார்கள்” என்கிறான் ஓர் அறிஞன். உண்மையான வாசகம் இது. வார்சேல் சமாதான மகாநாட்டில் வெறும் அரசியல் வாதிகள் மட்டும் அமர்ந்து சமாதான ஒப்பந்தத்தைத் தயாரித்து ஜெர்மனி யிடமிருந்து கையெழுத்து வாங்கிவிட்டதனால்தான், அப்படி வாங்கினால் நிகழக்கூடிய விளைவுகள் என்னவென்பதை அறியும் சக்தி, தீர்க்கதிருஷ்டி இல்லாமலிருந்ததால்தான், இரண்டாவது உலக மகாயுத்தம் மூண்டது. முதல் உலக மகாயுத்தத்தின் முடிவிலேயே, இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு அஸ்திவாரக்கல் நாட்டப் பட்டுவிட்டது. அந்த வார்சேல் சமாதான மகாநாட்டில் ஒரு காந்தியோ, ஒரு லெனினோ கலந்து கொண்டிருந்தால், இந்த விபரீதங்கள் நிகழ்ந்திருக்குமா? சாதாரணமாக அரசியல்வாதிகள், ஒரு நாட்டின் பொருள் உற்பத்தி, செல்வ நிலைமை, ஆயுத பலம் முதலியவற்றை நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; அவைகளினால் மற்ற நாடுகளுக்கு உண்டாகக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்து சொல்வதில் நிபுணர்களாயிருக்கிறார்கள். ஆனால் இவர்கள்-இந்த அரசியல் வாதிகள்-ஒரு நாட்டின் மனிதர்களைத்தான் தெரிந்துகொள்வ தில்லை. அவர்களுடைய சமுதாயப் பழக்கவழக்கங்கள், அரசியல் முறைகள் முதலியவைகள் இந்த அரசியல்வாதிகளுக்குச் சரியாகப் புரிவதில்லை; புரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலும் இவர் களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் பிற நாட்டாரைப் பற்றி இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற அறிவெல்லாம் மேற்போக்கான அறிவே தவிர ஆழ்ந்த அறிவாகாது. இந்த மேற்போக்கான அறிவைக் கொண்டு இவர்கள் மற்ற நாட்டாரைப் பற்றி ஓர் அபிப்பிராயங் கொண்டுவிடுகிறார்கள்; அவர்களை எப்படி நடத்தவேண்டும் அல்லது அவர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஒரு முடிவு கட்டிவிடுகிறார்கள். விளைவது தீமையே தவிர நன்மையில்லை. சமாதான பங்கம் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், ஒரு நாட்டாரை மற்றொரு நாட்டார் சரியாகத் தெரிந்துகொள்ளா திருப்பதுதான். தெரிந்து கொள்வது சிறிது கடினமே. ஆனால் கடினமான முயற்சிக்குப் பிறகுதானே நிலையான ஒரு நன்மை உண்டாகும்? ஒரே இனத்தினர் ஒரே மதத்தினர் என்று சொல்லக் கூடிய ஐரிஷ்காரரும் பிரிட்டிஷ்காரரும்கூட, ஒருவரை யொருவர் சரியாகத் தெரிந்துகொள்ளாத காரணத்தினால்தானே, வருஷக் கணக்கில் போராடிக் கொண்டிருந்தார்கள்? ஐர்லாந்தின் சுதந்திரப் போராட்டச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இப்பொழுது கூட, இரண்டு மகா யுத்தங்களில் ஒத் துழைத்த பிறகுங்கூட, அமெரிக்கர்களும் பிரிட்டிஷாரும் பரஸ்பரம் ஒருவரை யொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்களா வென்பது சந்தேகமான கேள்வியாயிருக் கிறது. இங்ஙனம் ஒரு நாட்டாரை மற்றொரு நாட்டார் புரிந்து கொள்ளாமை யினால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன. இவைகள் ஏற்படாமல் இருப்பதற்கு வழி தேட வேண்டும். ஒருவரை யொருவர் அறிந்து கொள்ள வசதிகள் செய்யவேண்டும். அதாவது, ஒவ்வொரு நாட்டிலும், மற்ற நாடுகளின் இலக்கியங்கள், கலைகள் முதலிய வற்றை அறிமுகப்படுத்தக் கூடிய ஸ்தாபனங்கள் நிறுவ வேண்டும்; அவைகளுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கமும் ஆதரவு அளிக்க வேண்டும். இதனால் ஓர் அரசாங்கத்திற்கும் மற்றோர் அரசாங் கத்திற்கும் நல்லுறவு ஏற்படுவதோடு, ஒரு நாட்டு மக்களுக்கும் மற்றொரு நாட்டு மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகிறது. ஒருவரை யொருவர் நன்கு தெரிந்து கொள்கிறார்கள். தப்பபிப்பிராயங்கள் ஏதேனும் இருந்தால் அவை அகல்கின்றன. அரசியல் ஞானிகள் என்று மேலே சொன்னோமே, அவர்கள் யாரோ தனிப்பட்ட பெயர்வழிகள், அவர்களைக் காண்பதோ நெருங்குவதோ அரிது என்று வாசகர்கள் கருதவேண்டாம். அவர்கள் நம்மைப் போன்றவர்கள்தான்; நம் மத்தியிலேதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், கட்சி அரசியலில் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை; கட்சி விவகாரங்களைக் கச்சை கட்டிக்கொண்டு பேசுவதில்லை. தேசத்திற்குப் பொதுவான அரசியலில் தலை யிட்டுத் தங்களாலியன்ற தொண்டை, ஆரவாரமில்லாமல் செய்துகொண்டு வருகிறார்கள். அவர்கள், தேச வரம்பு, பாஷை வரம்பு இவைகளைக் கடந்தவர்கள்; எல்லா நாட்டினராலும் சிறப்பிக்கப்படுகின்றவர்கள். அவர் களுடைய ஆழ்ந்த அறிவு, பரந்த மனம், அநுதாப உணர்ச்சி ஆகிய இவை எங்குமே வரவேற்கப்படுகின்றன. இத்தகையவர்களை அரசியல் ஞானிகளென்று அழைப்பது, உலக விவகாரங்களில் சம்பந்தப்படாமல் ஒதுங்கியிருக்கிற ஒரு சிலரைக் குறிப்பதுபோல இருக்கிறதென்று வாசகர்கள் கருதுவார்க ளானால், இவர்களை ராஜதந்திரிகள் என்று அழைக்க நாம் சித்தமாயிருக்கிறோம். எந்தப் பெயரிட்டழைத்தால் என்ன? அந்தப் பெயர்களுக்குரியவர்கள் ஒருவர்தான்; அதாவது நல்ல ஒரு சிலர்தான். ப்ளூட்டார்க் என்ற கிரேக்க சரித்திராசிரியன் கூறுகிற மாதிரி, ராஜதந்திரி என்பவன், உத்தியோகம் வகிப்பவனல்ல; சட்ட சபை களில் உரத்துப் பேசுகிற வனல்ல; வெளி நாடுகளுக்குத் தூதனாகச் செல்கிறவனல்ல. மற்றும், ராஜ தந்திரமென்பது, குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஆரம்பித்து, அந்த நோக்கம் நிறைவேறியவுடன் முடித்துவிடுகின்ற ஒரு பிரயாணமல்ல; போராட்டமு மல்ல; அப்படியே, குறிப்பிட்ட ஒரு காலம் வரை தாங்கிக் கொண்டிருந்து பிறகு இறக்கி வைக்கிற சுமையுமல்ல. ராஜதந்திரியென்பவன், எப்பொழுதும் இடைவிடாது உழைக்கின்றவன்; பலாபலன்களை எதிர் பாராமலும், விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமலும், பொறுப்பையோ, பதவியையோ ஏற்று அதைத் திறம்பட நடத்துகிறவன். இப்படியே ராஜதந்திரமென்பது, அரசியல் சேவையின் மற்றொரு பெயர்; மற்றவர் களுடைய தூண்டுதலோ வேண்டுதலோ இல்லாமல் தானே சுயமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஸ்தாபனம்; எவ்வித ஊதியத்தையும் விரும்பாத ஒரு ஸ்தானம். ராஜ தந்திரமென்பதற்கு ஒரு மேனாட்டு அறிஞன் பின் வருமாறு லட்சணங் கூறுகிறான்:- “உண்மையான ராஜ தந்திரத்திற்கு, பொதுவாக வியாக்கியானஞ் செய்ய வேண்டுமானால், ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உள்ள சிநேகத்தைப் பாதுகாத்து வருவதோடு அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருப்பது; அப்படியே ஒரு நாட்டின் நியாயமான நலன்களை மற்றொரு நாட்டில் வளர்த்துக் கொடுப்பது. இந்த நலன்களில் எவை எவை நியாமானவை எவை எவை நியாயத்திற்குப் புறம்பானவை யென்பதைப் பாகுபடுத்திக் காண்கிற விஷயத்தில் ஒரு ராஜதந்திரி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இரண்டு நாடுகளுக்கும் சாதகமாயிருப்பவை எவையோ அவைதான் நியாயமான நலன்கள்.” இத்தகைய ராஜதந்திரிகளை அல்லது அரசியல் ஞானிகளை உலகப் பொதுப்படையான அரசியலில் பிரவேசிக்குமாறு செய்ய வேண்டும்; சமாதான மகாநாடுகளில் இவர்களுக்கு முக்கிய ஸ்தானங்கள் அளிக்கவேண்டும்; சர்வ தேசங்களுக்கும் பொதுவாக வுள்ள ஸ்தாபனங்களில் இவர்களை, இவர் களுடைய சொந்த ஹோதாவில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் எந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள், எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற பிரச்னையே எழுதல் கூடாது. உதாரணமாக காந்தியடிகள் போன்றவர்களை ஐக்கிய தேச ஸ்தாபனத்தில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் உலகத்திலே சாசுவதமானசமாதானம் நிலவுவதற்கு ஏதுவுண்டாகும். சமாதானமென்பதை முழுசாக, பூரணமாகப் பார்க்க வேண்டுமே தவிர, கூறுகூறாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. எப்படி ஒரு மனிதனு டைய வாழ்க்கையையோ, ஒரு சமுதாயத்தினுடைய வாழ்க்கை யையோ தனித்தனிப் பகுதியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாதோ அப்படியே சமாதானத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. சமாதானத் தோடு கூடியதுதானே வாழ்க்கை? பூரண சமாதானந்தான் பூரண வாழ்க்கை. அரைகுறையான சமாதான மேற்படும் பட்சத்தில், வாழ்க்கையும் அரை குறையாக, பயத்திற்கும் ஆபத்திற்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும். தற்போதைய அரசியல் வாதிகள், ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இருக்கவேண்டிய தொடர்பை, தனித்தனிக் கூறு களாகப் பிரித்துப் பார்க்கிறார்களே தவிர, மொத்தமாகப் பார்ப்ப தில்லை. இதனால் ஒரு துறையிலே சுமுகமான தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் வேறொரு துறையில் பிணக்கு ஏற்பட்டு இது வளர்ந்துகொண்டு வருகிறது. கடைசியில் இந்தப் பிணக்கு வளரவளர மற்றொரு துறையிலிருந்த சுமுகமான தொடர்புக்குப் பங்கம் ஏற்பட்டு, இறுதியில் அறவே அற்றுப் போகிறது. விளைவு என்ன? யுத்தம். உலக சமாதானம் ஏற்படவேண்டுமானால் மூன்று முக்கிய மான பிரச்னைகளைச் சேர்ந்தாற்போல் கவனிக்க வேண்டுமென்று ஆல்ப்ரெட் ஜிம்மெர்ன்1 என்ற அறிஞன் கூறுகிறான். அதாவது, அரசியல், பொருளாதாரம், தரும நியாயம் ஆகிய இந்த மூன்றினை யும் சேர்த்தே பார்க்க வேண்டுமென்பது இவன் கருத்து. ஒரு பிரச்னையை அரசியல் கண்கொண்டு பார்க்கிறபோது சரியென்றும், அதை நிறைவேற்றவேண்டியது அவசிய மென்றும் பொருளாதாரத் திற்குப் பெரிய பலவீனத்தை உண்டு பண்ணுவ தாயிருக்கக் கூடும். இங்ஙனமே, அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் பொருத்தமா யிருப்பது தரும நியாயத்திற்கு விரோதமாயிருக்கலாம். இம்மூன்றில் அரசியலும் பொருளாதாரமும் ஸ்தூலமாகப் பார்க்கப் படக் கூடியவை; தரும நியாயமோ சூட்சுமமாகவுள்ளது. ஆனால் அதற்குத் தான் அதிக சக்தி உண்டு. அதனை அனுசரித்து நடப்ப தனால் உண்டாகக்கூடிய சாதகங்களோ, அதனைப் புறக்கணிப்ப தனால் உண்டாகக் கூடிய பாதகங்களோ உடனடியாகத் தெரிவ தில்லை. இதனால்தான் இன்றைய அரசியல்வாதிகள் அதற்கு லேசான மதிப்புக் கொடுத்து, அதனை அலட்சியமாகப் புறக் கணித்து விடுகிறார்கள். ஆனால் அப்படிப் புறக்கணிப்பது, சிறிது காலத்திற்குப் பிறகு பேராபத்தாக விளைகிறது. ஒருவாறு ஒழுங்கு பட்டுப்போன அரசியல் பொருளாதாரப் பிரச்னைகள்கூட அந்த ஆபத்தில் உடைந்துபோய் விடுகின்றன. தீர்க்க திருஷ்டி படைத்த அரசியல்வாதிகள் அல்லது அரசியல் ஞானிகள், சமாதான மகா நாடுகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொல்வது இதற்குத்தான். சர்வதேச ஸ்தாபனமொன்றை ஏற்படுத்திவிடுவதனால் மட்டும் உலக சமாதானம் உண்டாகிவிடாது. உதாரணமாக இப்பொழுது உலகத்திலுள்ள தேசங்கள் பெரும்பாலானவற்றை அங்கத்தினர்க ளாகக் கொண்ட ஐக்கிய தேச ஸ்தாபனம் இருக்கிறது. ‘இந்த ஸ்தாபனத்தைத் தொடங்கிவிட்டோம், இனி, இந்த ஸ்தாபனத்தில் சேர்ந்துள்ள அங்கத்தினர் தேசங்களின் விவகாரங்களைக் கவனிக்கும் வேலையையும் இவைகளுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் வேலை யையும், இந்தத் தேசங்கள் பலவும் சேர்ந்த மேற்படி ஸ்தாபனம் செய்து கொண்டு போகும், நமக்கு இனிக் கவலையில்லை, உலகத்தில் இனிச் சண்டைகள் நடைபெறமாட்டா, சமாதானம் தானாக வந்துவிடும்’ என்று பிரதியொரு தேசமும் நினைத்துக் கொண்டு சும்மாயிருக்குமானால் உலக சமாதானம் ஏற்பட்டு விடுமா? ஒருகாலும் ஏற்படாது. மறைந்துபோன சர்வதேச சங்கத்தில் சேர்ந் திருந்த அங்கத்தினர் தேசங்கள் யாவும் இதே மாதிரியான மனப் பான்மையைத்தான் கொண்டிருந்தன. இதனால் விளைந்தது என்ன வென்பதை நாம் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை. இந்த ஸ்தாபனத்தினால், அதாவது சர்வதேசச் சங்கத் தினால், சமாதானத்தை நிலைநாட்ட முடியாமற் போனது மட்டு மல்ல, யுத்தத்தைத் தடுக்கவும் முடியவில்லை. 1919ஆம் வருஷத்தி லிருந்து 1938 ஆம் வருஷம் வரை உலகத்தில் மொத்தம் பதினான்கு யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஐக்கிய தேச ஸ்தாபனத்திற்கு இஃதொரு நல்ல பாடமாயிருக்க வேண்டும். ஐக்கிய தேச ஸ்தாபனம் உலக சமாதானத்திற்குப் பாது காப்பாளனாக இருக்கவேண்டுமானால், அதில் சேர்ந்துள்ள பிரதி யோர் அங்கத்தினர் நாடும், உலக சமாதானத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, தனது உள்நாட்டு விவகாரங்களையும் வெளிநாட்டு விவகாரங்களையும் நடத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்; அந்த உரிமைக்காகப் போராடுகிற நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டும்; அந்த உரிமையை வாங்கிக் கொடுக்கவேண்டும். இங்ஙனம் உதவி செய்வது முதலிய காரியங்களை ஐக்கிய தேச ஸ்தாபனத்தின் மூல மாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் அந்த ஸ்தாபனத்தின் மதிப்பு அதிகப்படும். ஸ்தாபனத்திற்கென்று தனியான மதிப்பு ஏது? அங்கத்தினர்கள் கொடுக்கிற மதிப்புத்தானே? அது போல், ஸ்தாபனமானது, தனியாக இருந்து சமாதானத்தை நிலை நாட்ட முடியாது; அதன் அங்கத்தினர் தேசங்கள், தனித்தனியாகவும், சேர்ந்தாற்போலவும் சமாதானத்திற்குப் பாடுபடவேண்டும். எந்த ஒரு தேசம் ஏகாதிபத்திய வலையை வீச முற்படுகிறதோ அந்தத் தேசம் அந்த வலையிலேயே அகப்பட்டுக் கொண்டு அழிந்து போகிறது. ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்தியிருந்து, சரித்திரம் போதிக்கிற உண்மை இது. கிரேக்க ஏகாதிபத்தியமென்ன, ரோம ஏகாதிபத்தியமென்ன, பாரசீக ஏகாதிபத்தியமென்ன, இவை யெல்லாம் அழிந்துபட்டது எதனால்? ஏகாதிபத்தியப் பேராசை கொண்டதனால்தான். சரித்திர காலத்திற்குச் செல்வானேன்? சமீபத்தில் நம் கண்முன்னே, இத்தலி, ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத் தியங்கள் அழிந்துபோனதைப் பார்த்தோ மல்லவா? எத்தியோப்பா மீது படையெடுத்த காலத்திலிருந்து இத்தலிக்கும், ஜெக்கோஸ் லோவேகியா மீது படையெடுத்த காலத்திலிருந்து ஜெர்மனிக்கும், சீனாவின்மீது படை யெடுத்த காலத்திலிருந்து ஜப்பானுக்கும் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. இதில் ஆச்சரியமென்னவென்றால், படையெடுத்த மூன்று நாடுகளும் வாழ் விழந்து நிற்கின்றன; படையெடுக்கப்பட்ட மூன்று நாடுகளும் உயிரோடு, மற்ற வல்லரசு களின் அநுதாபத்திற்கும் ஆதரவுக்கும் உரியனவாய் இருக்கின்றன. “மற்றவர்களை அழிக்க முற்படுகிறவன், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்” என்ற வாசகம், ஏகாதிபத்திய ஆசை கொண்டிருக்கிற தேசங்களுக்கு எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது? இந்த ஆசை கொள்ளும் தேசங்கள் தாங்கள் அழிந்துபடுவதோடு, உலக சமா தானத்தையும் குலைத்து விட்டுப் போகின்றன. ஏகாதிபத்திய ஆசை யானது விஷவாயு மாதிரி. அது தொலை தூரத்திலுள்ளவர்களையும் பாதிக்கிறது; அதன் விளைவு, ஓரிரண்டு தலைமுறைகள் வரையிலும் இருக்கிறது. எனவே இந்த வாயு எந்த இடத்திலும் பரவாமலும், ஏன், எந்த இடத்திலிருந்தும் உற்பத்தியாகாமலும் பார்த்துக் கொள்வது ஐக்கிய தேச ஸ்தாபனத்தின் பொறுப்பாகும்; அதாவது எல்லாத் தேசங்களினுடைய பொறுப்புமாகும். பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் மேனாட்டார் ஏகாதிபத்தியக் கோலந்தாங்கிக் கீழ்நாட்டில் புரிந்த திருவிளையாடல்கள் மிகவும் கேவலமானவை; பெரிதும் அருவருக்கத் தக்கவை. இங்கே மேனாட்டார் என்று சொல்கிற போது டச்சுக்காரர், போர்த்துகேசியர், பிரெஞ்சுக் காரர், ருஷ்யர், ஜெர்மானியர், பிரிட்டிஷார், அமெரிக்கர் ஆகிய எல்லோரையும் சேர்த்தே சொல்கிறோம். ஆசிய நாடுகள் ஒவ்வொன்றிலும் இவர்கள் செய்த சூழ்ச்சிகள்தான் எத்தனை? கொள்ளை கொண்ட பொருள்கள்தான் எவ்வளவு? அம்மம்ம! சொல்வதற்கு நா குழறுகிறது; எழுதுவதற்குக் கை கூசுகிறது. இவைகளைத் தொகுத்துத் தனியாக ஒரு சரித்திரம் எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படுகின்ற சரித்திரம், மேனாட் டாருடைய ஏகாதிபத்திய வாழ்வுக்கு ஒரு ஞாபகக் கல்லாயிருக்கும். மேனாட்டார், பதினேழாவது நூற்றாண்டில், வியாபாரிக ளாகவும் வைத்தியர்களாகவும் பாதிரிமார்களாகவும் ஆசிய நாடுகளில் பிரவேசித்தனர். பதினெட்டாவது நூற்றாண்டில், வியா பாரச் சலுகைகள் வேண்டுமென்று கோரி ஆசிய நாடுகளின் அரச சபைகளில் மனுச்செய்துகொண்டனர்; கோரிக்கைகளைப் பெற்றனர்; ஆசிய மக்களின் இருதய விசாலத்தைத் தங்கள் சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டனர். பத்தொன்பதாவது நூற்றாண்டில், கீழ்நாடுகள் பெரும்பாலனவற்றின்மீதும் தங்கள் அரசியல் ஆதிக் கத்தைத் திணித்துவிட்டனர். பதினெட்டாவது நூற்றாண்டில், கீழ் நாட்டு அரசவைகளில் மேனாட்டார் மண்டியிட்டுத் தங்கள் கோரிக்கைகளை அடைந்தனர். ஆனால் பத்தொன்பதாவது நூற் றாண்டில், மேனாட்டு அரசவைகளில் கீழ்நாட்டார் மண்டியிட்டுத் தங்கள் குறைகளைத் தெரிவித்துக் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது! பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் மேனாட்டார், தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைக் கொண்டு திணிப்பதற்கு ஏற்ற சந்தைக்கூடங்களாக்கிவிட்டனர் கீழ்நாடுகளை. அப்படிக் கொண்டு திணிப்பதற்கு அனுகூலமாயிருக்கும் பொருட்டு, தங்கள் அரசியல் ஆதிக்கத்தையும் ஊர்ஜிதம் செய்துகொண்டனர். இதற்காக மேனாட்டாருக் குள்ளேயே எவ்வளவு போட்டி! எவ்வளவு பொறாமை! இவைகளுக்கெல்லாம் ஆசிய நாடுகளையே போட்டி ஸ்தலங்களாகவும் யுத்த களங்களாகவும் உபயோகித்துக் கொண்டனர். இந்தியாவில் பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக் காரருக்கும் போட்டி. ஈரானில் பிரிட்டிஷாருக்கும் ருஷ்யருக்கும் போட்டி. சிரியா, லெப னான் முதலிய பிரதேசங்களில் பிரெஞ்சுக்காரருக்கும் பிரிட்டி ஷாருக்கும் போட்டி. சீனாவில் அமெரிக்கருக்கும் பிரிட்டிஷா ருக்கும் போட்டி: இந்தப் போட்டாபோட்டிகளினால், ஆசிய நாடு களின் அரசியல் அமைப்புகளும், பொருளாதார ஒழுங்குகளும், சமுதாயக் கட்டுப்பாடுகளும் சீர்குலைந்து போயின. இவைதவிர, இவைகளுக்குள்ளேயே பரஸ்பர சச்சரவுகள் ஏற்பட்டன. ஆசிய மக்களனைவரும் ஓரினம், ஒருகுலம் என்ற நூற்றாண்டுக் கணக்காக இருந்த எண்ணமானது உடைந்துபோய், ஒவ்வொரு நாட்டினரும், அதாவது ஆசியாவிலுள்ள ஒவ்வொரு நாட்டினரும், தங்களை வேற்று வேற்று நாட்டினராகக் கருதிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் விரோதங் காட்டினர். ஒரே நாட்டில், தலைமுறை தலைமுறையாகச் சகோதரர்கள்போல் வாழ்ந்துகொண்டு வந்த மக்களுக்குள்ளேயே பிணக்குகள் ஏற்பட்டன. வகுப்புப் பூசல்கள், ஜாதிச் சண்டைகள் முதலியன சமுதாய ஒற்றுமையைச் செல்லரித்தன. இவையெல்லாம் அந்நிய ஆதிக்கத்தின் விளைவுகள். அந்நிய ஆதிக்கத்தினால் உண்டாகிவரும், விபரீதங்களை ஆசிய மக்கள் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்தி லிருந்து மெதுமெதுவாக உணரத் தலைப்பட்டனர். தங்களுடைய பழைய சுதந்திர வாழ்வையும், அந்நிய ஆதிக்கத்தி னால் ஏற்பட்டி ருக்கிற இப்பொழுதைய அடிமை வாழ்வையும் சீர்தூக்கிப் பார்த்தனர். அந்நியர்களுக்கு விரோதமான இயக்கங்கள், ஸ்தாபனங்கள் முதலியன பெருகின. அந்நிய ஆதிக்கத்தின் மீது துவேஷம் வளர்ந்தது. இது திரண்டு, இந்தியாவில் 1857 ஆம் வருஷம், சிப்பாய்க் கலகம் என்று தவறாகச் சொல்லப்படுகின்ற அந்நியர்க்கு விரோதமான புரட்சியாகவும், சீனாவில் 1900ஆம் வருஷத்து பாக்ஸர் கலக மாகவும் வெடித்தது. இங்ஙனமே ஆசியாவின் மற்ற நாடுகளிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாகச் சிறுசிறு புரட்சிகள் நடைபெற்றன. இந்தத் துவேஷ உணர்ச்சியானது, மேலும் மேலும் வளர்ந்து, தானே எரிந்தோ, மற்றவர்களை எரித்துவிட்டோ போகாமல், நல்ல வேளையாக நாளாவட்டத்தில் தேசீய உணர்ச்சியாக உருவெடுத்தது. முதல் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஆசியாவின் ஒவ்வொரு நாட்டிலும் இந்தத் தேசீய உணர்ச்சி தலை தூக்கி நின்றது. முதல் மகாயுத்தம் முடிவுற்ற காலத்திற்கும் இரண்டாவது மகாயுத்தம் தொடங்கிய காலத்திற்கும் மத்தியிலுள்ள காலம், பிரதியோர் ஆசிய நாட்டினுடைய தேசீய இயக்கத்தின் பருவ காலம். அழிவு வேலைகளும் ஆக்க வேலைகளும் சேர்ந்தாற்போல் இந்தக் காலத்தில் நடைபெற்றன. தொண்டர்களின் சிறைவாச மென்ன, தலைவர்களின் தேசப் பிரஷ்டங்களென்ன, அந்நியப் பொருள்களின் பகிஷ்காரங் களென்ன, சுதேசத் தொழில்களின் பெருக்கமென்ன, இவை யெல்லாம் இந்தக் கால சரித்திரத்தின் தனித்தனி அத்தியாயங் களாகும். இரண்டாவது உலக மகாயுத்தம் காலத்தில், இந்தத் தேசீய உணர்ச்சி யானது, எவ்வாற்றானும் யாரை அனுசரித்தாயினும், எந்த முறையைக் கடைப் பிடித்தாயினும், ஏகாதிபத்தியப் பிடியினின்று விடுதலையடைந்துவிட வேண்டுமென்ற முயற்சியாகப் பரிணமித்தது. இந்தோசீனா, மலேயா, பர்மா, பிலிப்பைன் தீவுகள் முதலிய தூர கிழக்கு நாடுகளில், அந்தந்த நாட்டுத் தேசீயவாதிகள், ஜப்பானியர்களுடன் கைகுலுக்கியது, அந்நிய ஆதிக்கத்தி லிருந்து விலகி சுதந்திர வாழ்வு நடத்தவேண்டுமென்ற ஆவலினால் செய்த காரியமே தவிர, ஓர் ஆதிக்கத்தை விடுத்து மற்றோர் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வதற்காகவல்ல. அப்படிச் செய்வது பிசாசிடமிருந்து விடுபட்டுப் பாழுங் கிணற்றிலே குதித்ததுபோலாகுமல்லவா? இரண்டாவது உலக மகாயுத்தமும் முடிந்துவிட்டது. ஆசிய நாடுகளின் மீதிருந்த ஏகாதிபத்தியப் பிடி தளர்ந்து விட்டது. ஆசியாவின் ஒவ்வொரு நாடும் சுதந்திரக்கொடி தூக்கிவிட்டது. ஒவ்வொரு நாட்டிலும் தேசீய அரசாங்கங்கள், பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் அமைந்துவிட்டன. இவை யாவும் ஒன்றுபட்ட ஒரு சமஷ்டியாக, ஒரே குடும்பமாக இப்பொழுது காட்சி யளிக்கின்றன. ஆசியாவின் ஒற்றுமையை இனி யாரும், எந்த ஏகாதிபத்தியச் சக்தியும் கலைக்க முடியாது; கலைக்கவும் இனி ஆசியா விடாது. ஏனென்றால், வேற்றுமைப்பட்டு வாழ்ந்ததனால் அஃது எவ்வளவோ வேதனைகளை அடைந்திருக்கிறது. இந்த அனுபவத்தினால் அது சுய உணர்வு பெற்றுவிட்டது. பெருமை நிறைந்த தனது பூர்விக வாழ்வை, காலத்தோடு இயைபு படுத்தி மீண்டும் வாழ அது தீர்மானித்துவிட்டது. ஆசியா வாழ்க! விழிப்படைந்துவிட்ட ஆசியா, ஒற்றுமையான ஆசியா, சுதந்திர ஆசியா, இனி உலகத்தைச் சமாதானப் பாதையில் அழைத்துக் கொண்டு போகப்போகிறது. அதற்கு-ஆசியாவுக்கு-இந்தியா வழி காட்டப் போகிறது. இது நிச்சயம்; சத்தியம். அனுபந்தம்-1 ஆசிய நாடுகளைப் பற்றிய விவரங்கள் எண் நாட்டின் பெயர் விஸ்திரணம் ஜனத் தொகை தலைநகரம் சதுர மைல் லட்சம் 1 அர்மீனியா 12,000 13 எரிவான் 2 அஸெர்பைஜான் 33,000 30 பாக்கூ 3 ஆப்கனிஸ்தானம் 2,50,000 120 காபூல் 4 இந்தியா 13,44,772 3,300 டெல்லி 5 இந்தோ-சீனா 2,86,000 230 ஹனோய் 6 இந்தோனேஷியா 7,33,296 700 ஜோக்ஜாகர்தா 7 இலங்கை 25,332 60 கொழும்பு 8 ஈராக் 1,77,100 48 பாக்தாத் 9 ஈரான் 6,28,000 160 டெஹ்ரன் 10 உஸ்பெக்ஸ்தான் 1,58,000 630 தாஷ்க்கெண்ட் 11 எகிப்து 3,86,198 160 கெய்ரோ 12 காஜக்ஸ்தான் 10,56,000 60 அல்மா- அட்டா 13 கிர்க்கிஜியா 78,000 150 ப்ரூன்ஸே 14 கொரியா 86,000 250 ஸியோல் 15 சிரியா 53,000 280 டமாஸ்க்கஸ் 16 சீனா 15,32,800 4,500 நான்கிங் 17 சையாம் 2,00,148 150 பாங்காக் 18 சௌதி அரேபியா 7,00,000 520 மெக்கா 19 ட்ரான்ஸ்ஜார்டன் 34,740 4 அம்மன் 20 தாட்ஜிகிஸ்தான் 55,000 150 ஸ்ட்டாலினாபாட் 21 திபேத்து 4,63,320 50 லாஸ்ஸா 22 துருக்கி 2,95,000 190 அங்க்காரா 23 துருக்கிமெனிஸ்தான் 1,87,000 130 அஷ்க்காபாத் 24 நேபாளம் 54,000 560 காட்மண்டு 25 பர்மா 2,61,610 160 ரங்கூன் 26 பாக்கிஸ்தான் 2,36,638 700 கராச்சி 27 பாலஸ்தீனம் 10,429 170 ஜெருசலேம் 28 பிலிப்பைன் தீவுகள் 1,15,600 160 மணிலா 29 பூட்டான் 18,000 3 புனக்கா 30 மலேயா 53,240 55 சிங்கப்பூர் 31 யெமென் 75,000 250 ஸானா 32 லெபனான் 4,000 11 பெய்ரத் 33 வெளிமங்கோலியா 10,00,000 10 உலான்பட் டோர்கோட்டா 34 ஜப்பான் 1,47,201 712 டோக்கியோ 35 ஜார்ஜியா 27,000 35 டைப்ளிஸ் அனுபந்தம்-2 ஆசியாவின் பொருளுற்பத்தி விவரங்கள் பொருள் உலகத்தின் மொத்த ஆசியாவின் உற்பத்தி சதவிகிதம் உற்பத்தி ஆயிரம் டன் ஆயிரம் டன் அரிசி 1,47,100 1,40,500 95.5 பார்லி 50,550 15,800 31.2 கோதுமை 1,78,600 39,000 21.8 சோளம் 1,28,300 16,400 12.8 தேயிலை 800 785 97.5 புகையிலை 3,000 1,320 44.0 கரும்பு சர்க்கரை 20,220 9,410 46.5 எள்ளு 1,500 1,340 89.3 பருத்தி விதை 12,450 3,390 27.2 சணல் விதை 2,520 470 18.6 கொப்பரை 1,866 1,567 84.4 வேர்க்கடலை 8,600 6,700 78.0 பஞ்சு 6,340 1,570 24.7 நிலக்கரி 13,17,300 1,21,000 9.2 இரும்பு 78,500 5,400 6.8 பெட்ரோல் 2,85,123 48,395 17.0 காரீயம் 1,04,300 5,500 5.1 எஃகு 1,35,100 7,250 5.3 ஈயம் 1,715 103 6.0 துத்தநாகம் 1,620 60 3.7 மாங்கனீஸ் 3,025 610 20.0 அலுமினியம் 1,100 55 5.0 தகரம் 189 120 63.4 குரோம் 520 164 31.5 டங்ஸ்ட்டன் 21 14 66.5 ஆண்ட்டிமோனி 41 14 34.1 மைக்கா 8 6 75.0 சிமெண்ட் 85,000 9,000 10.6 ரப்பர் 1,411 1,370 97.1 கெட்டிநார் 493 140 28.5 பக்குவம் பெறாத பட்டு 5,920 5,344 90.2