கவியரசர் முடியரசன் படைப்புகள் 8 உன்றுகோல் இளம்பெருவழுதி முடியரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 312 = 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 210/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந் தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் காணாது ஈத்த இப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........ ................ முற்றிய திருவின் மூவரேஆயினு«பெட்பின்¿ஈதšயா«வேண்டலமே’ என்னும் சங்கப்புலவர்களி‹வைuவரிகளுக்கு¢சான்றாக¥பெருமிjவாழ்îவாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க் காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை -மனிதரிடைaபேதங்களைக்கற்பிக்Fம்ஏற்பாடுகiள -குருட்Lப்பழ¡கவழக்கங்கsச்சாடியவ®. மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல் களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, cள்ளம்bகாதித்துbநஞ்சுbபாறுக்கÉல்லையேvனக்Fமுறியும்,kந்தரிடையேfயமை,ïழிமை,nநர்மையின்மை,xழுங்குமீறல்gரவியதையறிந்து,kனம்bநாந்து,kனிதனைத்nதடுகிறேன்vனத்nதடி,gண்பாடுfக்க,bகாடுமைகள்kய,Fறைகள்fளைய,ÔயவைÔயbவடித்துக்»ளம்பியvரிமலைக்fÉதைகள். உyf மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25 இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் ஏக்கம் தீர்க்க எழுந்த நூல்! வானம்தான் பாடிற்றா? வான்பிலஷி பாடிற்றா? - என வானம்பாடியின் இசைகேட்ட மகிழ்ச்சியில் கிறங்கிப் போய்க் கேட்பார் பாவேந்தர் பாரதிதாசனார். அந்த வானம்பாடி யாகப் பாவலர் முடியரசனாரைப் பார்த்தவர் அறிஞர் அண்ணா! திராவிடர் நாட்டு வானம்பாடி என அவர் பாவலரைப் போற்றினார். தமிழின மேம்பாட்டிற்குத் தமது எழுத்தாற்றலால் உரம் சேர்த்துப் புகழ் பெற்றவர் முடியரசனார். இலக்கிய வடிவங்கள் எல்லாவற்றிலும் மூழ்கி எழுந்த அவருக்கு, நாடகக் காப்பியம் எழுத வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் நிறைவேறாமல் இருந்தது. இளம்பெருவழுதி அக் குறையைக் குறைத்தது. பேராசிரியர் தமிழண்ணல் முயற்சியும் துணைவேந்தர் இராமச்சந்திரனார் உறுதுணையும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் வழிகாட்டலும் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத்தின் வழி பாவலர் முடியரசனார் இந்நாடகக் காப்பியத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கின. இளம்பெருவழுதி 1985-ஆம் ஆண்டிலேயே பிறந்தபோதும், நம் கைகளில் தவழ இருபதாண்டுகளுக்கு மேல் காத்திருக்க நேர்ந்து விட்டது. இளம்பெருவழுதி நாடகக் காப்பியம் எழுவதற்கு மூல காரணம், முடியரசனாரே போர்வாள் (25.09.1948) இதழில் எழுதிய இளம்பெருவழுதி என்னும் சிறுகதைதான்! (அந்தக் கதையும் இந்நூலில் தனியே இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுகதை எழுவதற்குக் காரணமானவர் புலவர் தில்லை தா.அழகுவேலனார்.) சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் 1947 முதல் ஈராண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார் முடியரசனார். (பள்ளிப் பெயர் கா.சு. துரைராசு. அதன் தமிழ் வடிவம் முடியரசன்) அப்போது உடன் பணியாற்றியவர் புலவர் தா.அழகுவேலனார். முடியரசன் இவரை அண்ணன் என்று மதிப்போடு அழைப்பார். வழக்கம்போல் கடற்கரை சென்று இருவரும் உரையாடிக் கொண்டு இருந்தபோது, போரில் தோன்று இளம்பெருவழுதி கடலில் விழுந்து இறந்திருப்பானோ என அழகுவேலனார் ஓர் ஐயத்தை எழுப்பினார். முடியரசனார் சிந்தனை வயப்பட்டு நின்றார். அவர் மனத்தில் மின்னியதைச் சொற்களால் அளந்து சொன்னார். தமிழன் வீரத்தை அவ்வாறு இழிவாகக் கருதல் வேண்டா. தற்கொலையாக இருப்பின் கடலில் மாய்ந்த என்றுதான் அமைந்திருக்கும். கடலுள் மாய்ந்த என்றிருப்பதால் எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும். முடியரசனார் தந்த விளக்கத்தில் அழகுவேலனார்க்கு அளவற்ற மகிழ்ச்சி! அட! நீ சொல்வது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு கதை எழுது அவர் கூறியதற்கிணங்க எழுதிய கதைதான், போர்வாள் (25.9.1948) இதழில் வெளிவந்த இளம் பெருவழுதி அதன் விரிவாக உருவெடுத்ததே இளம்பெருவழுதி நாடகக் காப்பியம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் முயற்சியால், அங்குள்ள தமிழியற் புலத்தில் ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1985ஆம் ஆண்டு இந்நாடகக் காப்பியம் உருவானது. மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையால் பாதுகாக்கப்பட்டு வந்த இதன் கையெழுத்துப் படியை அரிதின் முயன்று பெற்று, அச்சேறும் வாய்ப்பை உருவாக்கியவர் திரு.மு.பாரி. முடியரசனாரின் மூத்த மைந்தர் மு.பாரி அவர்களின் விடா முயற்சியும், தமிழ்மண் பதிப்பகம் கோ.இளவழகனார் அவர்களின் பேருழைப்பும், பாவலரின் அனைத்துப் படைப்புகளும் ஒருசேரக் கிடைக்கும் நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளன. தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், அறிஞர் பலரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி நல்ல சூழலை அறிவுலகில் மலரவைத்துள்ளார். முடியரசனார் படைப்புகள் முழுமையாகக் கிடைக்கும் சூழல் மலர்ந்ததற்கும் அவரே காரணம்! தாளில் உறங்கிக் கிடந்த இளம்பெருவழுதி நம் மடியில் தவழும் நல்வாய்ப்பை உருவாக்கியோர் - நம் நன்றிக்குரியோர். “jd¡bfd thG« j‹dythâfŸ v§F« ïU¡»wh®fŸ!பிறர்க்கென வாழும் பொதுநல வாதிகள் அரிதாய் இருக்கிறார்கள்! ஆனால், அவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்னும் அழியாமல் வாழ்ந்து கொண்டுள்ளது. இந்த வரிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாத வியப்புடன் உலகம் தமிழர்களை மதிப்புடன் பார்க்கிறது. உண்டாலம்மஇவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே. (புறம்) இந்தப் புறநானூற்று வரிகள் தமிழினத்தின் சிந்தனை முதிர்ச்சிக்கு முகவரியாகிவிட்டன. புறநானூற்றில் இப்பாடலை எழுதிய புலவன் யார்? புலவனும் அவனே, அரசனும் அவனே! பாண்டிய அரசமரபைச் சேர்ந்த இளம்பெருவழுதி எழுதியது அப்பாடல்! அவன் சிந்தனை வியப்படையச் செய்கிறது. வாழ்வோ துயரத்தைத் தூண்டுகிறது. கடலுள் மூழ்கி இறந்து போனான் அந்த அரசப் புலவன் ! அதனால் வரலாறு அவனுக்குப் பெயரிட்டது கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. அவனது புறநானூற்றுப் பாடல் எல்லோரையும் கவர்ந்தது போலவே முடியரசனாரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை. இளம்பெருவழுதிக்கு ஒரு eடகக்காப்பியkளிகைvழுப்பி,mந்தப்òலமைnவந்தனைத்jனிவெளிச்சத்தில்mவர்Ãறுத்தÃனைத்ததுதான்Éயப்பு!நினைத்ததை முடியரசனார் நிறைவேற்றி விட்டார். போரில்லா உலகம் வேண்டும் என்னும் மையச் செய்தியை நோக்கி, இளம்பெருவழுதியின் வாழ்க்கை நிகழ்ச்சிப் படிகளின் வழியாக நம்மை நடத்திச் செல்கிறது இந்த நாடகக் காப்பியம். மனோன்மணீயம் பெ.சுந்தரனாருக்குப் பின் புலவர் குழந்தை, புலவர் ஆ.பழனி, பாவலர் ச.பாலசுந்தரம் முதலியோரால் வளப்படுத்தப்பட்ட நாடகத்தமிழுக்கு முடியரசனாரும் இளம்பெருவழுதியால் அணி சேர்த்துள்ளார். கிடைத்தது ஒருபாடல்தான் என்றாலும், முடியரசனார் தம் கற்பனையாற்றலால் இளம் பெருவழுதியின் முழுவாழ்வையும் நமக்குக் இந்நூலால் கிடைக்கச் செய்துவிட்டார். வழுதிக்குப் பெற்றோராக வலந்திரு பாண்டியன் - மாறன்மாதேவி இருவரையும் காட்டுகிறார். அறிவு புகட்டும் ஆசிரியராக கோட்புலி மறவன் வருகிறார். வழுதியின் வாழ்வில் சுரும்பார்குழலி, எழிலி எனும் இருபெண்கள் குறுக்கிடுகின்றனர். நெறிகாட்டி நிலைப்படுத்தும் அமைச்சராக வெண்டலை நாகனார் திகழ்கிறார். வஞ்சிநாட்டரசன் மலைக்கோன், கடாரத்தரசன் பெருந்திறற்சீயன் இருவரும் எதிரிகளாக நிற்கின்றனர். உடனிருந்தே சூழ்ச்சிவலை விரிக்கிறான் கணியன்நம்பி. வழியமைப்பது போல குழியமைக்க முயல்கிறான் படைத்தலைவன் வெல்போர்க் கடம்பன். இத்துணைத் தூண்களையும் இழுத்து நிறுத்திக் கட்டிய மாளிகைக்குள் நம்மை நடமாட வைக்கிறது இளம்பெருவழுதி நாடகக் காப்பியம்! இலக்கிய நுட்பம், காப்பிய உத்தி முதலிய ஓவியத் தூரிகைகளை ஏந்தியிருந்தாலும் - தமிழ் மேம்பாட்டுக் கருத்துணர்ச்சி சுவர் எழுப்புவதில் தான் முடியரசனார் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். சமகாலச் சூழலைத் தொட்டுக் காட்டும் அவர், ஈழ உரிமைப் போர் நெருப்பும் நம் நெஞ்சில் கனலற வைத்து விடுகிறார். கருத்துச் சோலைகளைக் காட்டியபடியே கதைப்பாதை நீள்கிறது. சிலையாக நிற்கிறான் இளம்பெருவழுதி! அவன் வாழ்வைக் கதையாக விவரிக்கிறார் முதியவர் ஒருவர். காதால் இளைஞன் ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். நாமும் கண்ணால் கேட்டபடிக் கதையோடு நகருமாறு காப்பியம் அமைக்கப்பட்டிருக்கிறது. நகர முடியாதபடி, ஆங்காங்கே கருத்துச் சோலைகள் குறுக்கிட்டு நம் மனத்தை மணத்தால் நிரப்புகின்றன. வீரம், கல்வி இரண்டில் எது சிறந்தது? வழுதி கேட்கும் வினாவிற்கு விளக்கம் தருகிறார் அமைச்சர் நாகனார். ஆண்மை பெண்மை ஆயிரு தன்மையுள் மேன்மையென் றொன்றை விளம்பல் தகுமோ? செறிதரும் அறிவு செங்கள வலிமை விரிநீர் வைப்பிற்கு இரண்டும் வேண்டும். மறுவறு கல்வி மனநலம் காக்கும் நிறைவுறு மறமோ நீணிலம் காக்கும். அவ்வளவு முகாமையான கல்வி பெண்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? வழுதியின் இந்தக் கேள்வி, முதற்கேள்வியின் நோக்கத்தை இப்போது புரியவைத்துவிடுகிறது. புரிந்து கொண்ட நாகனாரும் ஆண் பெண் சமத்துவத்தின் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறார். மண்ணும் ஒளியும் மழையும் பொதுமை எண்ணும் எழுத்தும் இருபாற் பொதுமை கண்கள் இரண்டும் காண்டற் குரித்தென ஒன்றுவிட் டொன்றை உரைப்பார் உளரோ? செவிகள் இரண்டுள் கேட்டற் குரிய செவியீ தென்று செப்புநர் உளரோ? சமத்துவ விளக்கைக் குமுகாயத்தின் ஒவ்வொரு துறைக்கும் உயர்த்திப் பிடித்து, வெளிச்சக் கதிர்களை விரிக்கிறது இக்காப்பியம். வடமொழியில் வழிபாடு செய்வதுதான் இறைவனுக்குப் பிடிக்கும் என்று கடவுளின் மனத்தை நகலெடுத்தவன் போல் வாதாடுகிறான் கணியன் நம்பி. தமிழ்மானம் காக்கும் ஓடும் நாகனாரிடமிருந்து கருத்துக்கணைகள் சீறிப்பாய்கின்றன. பிறமொழி வெறுப்பன் இறைவன் என்பது அறமும் அன்றே; அறிவும் அன்றே! சீனர் யவனர் சிங்களர் சாவகர் சோனகர் முதலோர் கோநகர் ஈண்டு வாணிகம் பொருட்டா வைகினர் ஈண்டி பேணி அவர்தொழூஉம் பெரும்பெயர்க் கடவுளர் திருச்செவி மாந்தித் திளைப்பது எம்மொழி? திருத்தகும் அம்மொழி தேவ மொழியோ? எந்நாட் டுறையும் இறைவன் அவரவர் அந்நாட் டம்மொழி அகமுற உவப்பர் தென்னா டுடையன் தென்மொழி வெறுப்பனோ? இனஎழுச்சிப் பெருவெள்ளம் இந்நாடகம் முழுவதும் இடையிடையே குமிழியிட்டுப் பாய்கின்றன. சொல்விளக்க நுட்பங்களால் சுவையேற்றுவதிலும் முடியரசனாரின் தனித்திறம் பளிச்சிடுகிறது. ஒற்றுமை, ஒருமை இரண்டும் ஒன்றா? இரண்டுக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டைப் பாவலர் கூறுகிறார்: ஒன்றுடன் மற்றொன்று இணைவது ஒற்றுமை. ஒன்றினுள் ஒன்று பொன்றுவது ஒருமை இணைந்தும் தனித்தும் இயங்குவது ஒற்றுமை அணைந்தபின் ஒன்றாய் அமைவது ஒருமை அடுக்குத் தொடர்போல் அமைவது ஒற்றுமை இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை. சொல் விளக்கச் சுவை வழங்குவதோடு, சொல்வளப் பெருக்கத்திற்கும் தமது ஆழ்ந்தகன்ற கல்விப்பரப்பால் நூல் முழுதும் வழியமைத்துள்ளார் முடியரசனார். உதுக்காண், அரத்தம், பொந்திகை எனப் பழந்தமிழ்ச் சொற்கள் பலவும் இந்நூலுள் உயிர்கொண்டு உலவுகின்றன. கதைப்போக்கில் பாடற்போட்டி ஒன்று வருகிறது. உண்டாலம்ம பாடலை இளம்பெருவழுதி எழுதி முதற்பரிசு பெறுவதாகக் கதையோடு புறநானூற்றைப் பொருத்திவிடுகிறார் பாவலர். இரண்டாம் பரிசு பெறும் சுரும்பார்குழலியின் பாடலாகச் சங்க இலக்கியச் சாயலில் முடியரசனார் வழங்கும் பாடல் நடைமுறை வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மரக்கலம் நடுக்குற அலைக்கும் மாகடல் புரக்கும் எனினும் பொங்குங் காலை அழிப்பன பலவே! அகல்வான் மிசையெழில் கொழிக்கும் பாலொளி அளிக்கும் வெண்மதி புணர்ந்தார்க் கின்பம் புரியும் அதுதான் தணந்தாக் குறுதுயர் தரூஉம் மறுநாள் நல்லன யாவும் நல்லன அல்ல ஒருகால் இனிதென உணரும் ஒன்றே மறுநாள் துனிதரும் அறிகதில் மனனே சுரும்பார் குழலியின் குரலாக முடியரசனார் தரும் இப்பாடல், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நூறாசிரியம் பாடல்களோடு ஒப்பிட்டு மகிழத் தூண்டுகிறது. போர்க்களக் காட்சியைப் பாவலர் விவரிக்கும் இந்நூலின் காட்சிகள், போர்வீரருள் ஒருவராய் நாமும் நிற்கும் உணர்வை ஊட்டுகின்றன: பண்ணோடு பணியாடப் படர்வானில் கொடியாடப் பரியோடு வந்து பொருதேர் எனத் தேர்ப்படைக் காட்சி நம்கண்முன் விரிகிறது. நெட்டுமதில் முற்றுகையில் நின்றபகை கண்டவர்கள் நெஞ்சம் அழிவார் கட்டுமரம் இட்டகத வைக்கடிதில் மூடியொரு காதம் அகல்வார். எனும் யானைப்படைக் காட்சி நமக்கே அச்சமூட்டுகிறது. முறுகுசி னத்துடன் அடிகள்பெ யர்த்தொரு முனைமுகம் முற்றிலுமே உறைகுரு திக்கறை படியம தர்த்தெழும் ஒலியெழு போர்க்களமே எனக் குதிரைப் படைக் காட்சி அவற்றின் ஓட்டத்தோடு நம்மையும் ஓடவைக்கிறது. வீரர் நெஞ்சில் வேல்கள் பாய மேவும் புண்ணின் வேதனை நேரும் புண்ணில் மெல்ல மெல்ல நெய்கள் பூசி ஆற்றுவார் எனும் காலாட்படைக்காட்சியில் வீரர் நடக்கும் ஓசை நம் காதில் கேட்கும். கடலில் அணிவகுக்கும் கப்பல் படையில் வங்கம், அம்பி, மதலை, பாறு, பஃறி, தோணி, தொள்ளை எனப் பல்வகைக் கப்பல்களும் போருக்குப் புறப்படுகின்றன. வங்கம் அம்பி மதலை என்பன எங்கும் கடலலை எதிர்ந்து செல்க. பாறு பஃறி தோளி தொள்ளை கூறு கூறாக் கூடிச் செல்க பாதை முதலாப் பாய்மரக் கலங்கள் போதம் பலவும் புணையொடு புகுக போருக்குச் செல்லும் இளம்பெருவழுதி வெற்றி பெற்று விட்டான் என்ற செய்தி வருகிறது. கூடவே இன்னொரு செய்தியும் வந்து இடிபோல் நெஞ்சில் இறங்குகிறது. காற்றில் சிக்கிய கப்பல் கவிழ்ந்து விடுகிறது. கப்பலோடு இளம்பெருவழுதியின் வாழ்வும் கடலில் மூழ்கி விடுகிறது. உயிரிழந்தான் என்னும் செய்தியே அது! ஒரே மகனைப் பறிகொடுத்ததால் துயரக்கடல் பெற்றோரைச் சூழ்ந்து கொள்கிறது. பாண்டியனார் குலக்கொழுந்தே! பாடல் சான்ற பைந்தமிழின் தவக்கொழுந்தே! பண்ப னைத்தும் ஈண்டியவோர் செயலகமே! எடுக்கும் போரில் இணையில்லாப் புறப்பொருளே! எழிலின் தோற்றம் பூண்டிருந்த நல்லுருவே! எனது நெஞ்சுள் பூத்திருந்த பொன்மலரே! புலம்ப விட்டு மாண்டனையோ நன்மகனே! ஆறாத் துயருடன் புலம்பும் பெற்றோரின் அழுகையொலி நம்நெஞ்சை உருக்குகிறது. மகனை இழந்த துயரின் கடுமையே, மன்னன் பாண்டியனுக்குப் போரின் கொடுமையைப் புரிய வைக்கிறது. இறந்தோர் உடலில் பிறந்ததே வெற்றி. பரந்தடு போரில் பிறந்ததே கொற்றம் மற்றவர் அழிவில் பெற்றஇக் கொற்றமும் வெற்றியும் புகழும் வேண்டுந கொல்லோ? இழப்பின் துயரம், மன்னனைப் போரில்லா உலகமைக்கும் உறுதி பூணச் செய்கிறது. இனத்தின் ஒற்றுமை மனத்தில் கொள்க! முனைப்பினை விடுக! முரணுதல் தவிர்க! அழிவுகள் தொலைக! அமைதி நிலவுக! பழிசெயும் போர்இனிப் பரவா தொழிக! அழிவை அழிக்கத் தீர்மானிக்கும் பாண்டியன் மனம், அமைதி உலகம் அமைய வழி கூறுகிறது. ஒருவருக் கொருவர் உதவுதல் அன்றித் திறையெனக் கோடல் தீர்தல் வேண்டும் உடன்பிறப்பு உணர்ச்சி ஒவ்வோர் உளத்தும் இடம்பெறின் அழிபோர் எழுதல் உண்டோ? மக்கள் பற்றும் மக்கள் பண்பும் மிக்க மனத்தில் மேவும்நல் அமைதி. அழிவெலாம் தொலைக! அமைதி நிலவுக! ஒழிக போரே! ஒழிக போரே! இந்த நாடகக் காப்பியம் உணர்த்தும் செய்தியாய், போர் இல்லா உலகத்தை முடியரசனார் முன்நிறுத்துகிறார். அவரின் இலக்கிய நெஞ்சம் இளம்பெருவழுதிக்கு எழுப்பிய இந்த வரலாற்று மாளிகை, இன எழுச்சிக் கருத்து விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த நாடகக் காப்பியம் வழங்கும் கருத்து வெளிச்சம், பாதையையும் கால்களையும் மறந்து விடாமல் தமிழினம் தன்னையுணர்ந்து பயணம் செய்ய வழிகாட்டுகிறது. பயணம் செய்தால் பயன் அடையலாம். -ந.கவுதமன். தாயகம் எசு.வி.எல்.நகர் சூலூர், கோவை 641 402 23.10.2008 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x ஊன்று கோல் பண்டிதமணி வரலாற்றுக் குறிப்பு 3 விழாப் பதிப்புரை 4 முதுபெரும்புலவர் செம்மல் அறிஞர் 5 வ.சுப.மாணிக்கம் பாடிய சிறப்புப் பாயிரம் 5 முன்னுரை 6 காப்பியச் செய்யுள்கள்-அடிவரையறை 9 தமிழ்க் கதிர் 11 தமிழண்ணல் 11 காப்பியப் பண்புகள் மிளிரும் கலைச்செல்வம் 12 ஊன்றுகோல் 13 காப்பியத் தொடக்கம் 17 காப்பியநலன் 18 காப்பிய நாயகர் பண்பு நலன்கள் 22 நகரத்தார் மரபு 23 படைப்பாளி இடம்பெறும் பாங்கு 27 கவிஞரைப்பற்றி 30 தமிழ்வாழ்த்து 36 1 கதிரெழு காதை 37 2 கலைபயில் காதை 43 3 சபைகாண் காதை 54 4 மணம் புணர் காதை 63 5 நெறியுணர் காதை 70 6 மயக்குறாக் காதை 74 7 வழக்காடு காதை 83 8 சொல்வல்ல காதை 88 9 நட்புவளர் காதை 101 10 பேராசிரியக் காதை 111 11 பொதுப்பணிபுரி காதை 118 12 விருதுபெறு காதை 125 13 நூல்தரு காதை 128 14 மணிவிழாக் காதை 135 15 பிணியுறு காதை 139 16 கதிர்மறை காதை 144 17 சிலைகாண் காதை 151 இளம்பெருவழுதி முன்னுரை 173 தமிழ் வாழ்த்து 175 கதைச் சுருக்கம் 176 நாடகமாந்தர் 179 இளம்பெருவழுதி 180 ஊன்று கோல் ஊன்று கோல் பண்டிதமணி வரலாற்றுக் குறிப்பு பிறப்பிடம் : மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் பிறந்தநாள் : 16-10-1881 விசு புரட்டாசி 22 - வெள்ளி பெற்றோர் : முத்துக்கருப்பன் செட்டியார்; சிவப்பி ஆச்சி திருமணம் : 1912 மனைவி : மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2 கல்வி : அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார் தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி கற்றார் காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம் சமயவறிவு பெற்றார். பணி : சன்மார்க்க சபைத் தோற்றம் 1909 ஈழச் செலவு 1933 அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் பணி 1934 -46 மணிவிழா 1941 வள்ளல் அண்ணாமலையரசர் தலைமை பட்டங்கள் : பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை வழங்கியது. மகாமகோபாத்தியாய 1942 நடுவணரசு சைவசித்தாந்த வித்தகர். முதுபெரும்புலவர் 1951 குன்றக்குடி ஆதீனம் விடுபெற்ற நாள் : 24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8ம் நாள் விழாப் பதிப்புரை பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறு வித்துவான் விசு.திருநாவுக்கரசு, உலகஞ்சுற்றிய தமிழர் சோமலெ, புலவர் சோமசுந்தரனார் முதலிய பெருமக்களால் சுவையாக உரைநடையில் எழுதப் பட்டுள்ளது.இவ்வரலாறு தனிக்கட்டுரை களாகவும் பலரால் வரையப்பட்டுள. ஒரு காப்பியத்துக்கு வேண்டிய கூறுகள் இவ்வாழ்க்கை வரலாற்றில் மிளிர்ந்து கிடப்பதை எளிதில் உணரலாம். செய்யுட் சோலைகளில் திளைத்துக் குளிர்ந்து இலக்கிய நயங்கண்ட பண்டிதமணியார் வரலாறு செய்யுளுருப் பெறுவதே சிறப்பாம் என எனக்குத் தோன்றியது. புலவனைப் பொருளாகக் கொண்ட தமிழ்க்காப்பியம் இதுவரை தோன்றிய தில்லை. பண்டிதமணி வரலாறு காப்பியமாகு மேல், பல தமிழுணர்ச்சிக்கும் புதிய தமிழ் வளர்ச்சிக்கும் உரங்கிடைக்கும் என்றும் எண்ணினேன். கவியரசுப் புகழ் பெற்ற முடியரசன் என் மனக்கண் முன்னே தோன்றினார். பண்டிதமணி தோற்றி வளர்த்த சபையிற் புலமை பெற்ற மாணவர்; காப்பிய நாயகனை நேரிற் கண்டும் கேட்டும் தொழுதவர்; தமிழின் புறந்தொழாத் தன்மானக் கவிஞர்; காப்பியம் பாடிப் பழுத்த முதுபுலவர். அத்தகு கவியரசை வேண்டினேன். தமிழன்னைக்கு ஊன்றுகோல் வடித்துத் தந்தார். இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் என்ற பொய்யா மொழிக்கேற்ப, இன்று தமிழ்படும் பாட்டில் வல்லிய ஊன்றுகோல் ஒருவந்தம் வேண்டும். நாடெங்கும்சென்று தமிழ் நயம் பரப்பிய பண்டிதமணியை எழுபதாண்டுகள் தாங்கிய ஊன்றுகோல் என்றால், அதன் நேர்மையும் திண்மையும் ஒண்மையும் சொல்லுந்தரமோ? ஆம் உரைநடையிற் சொல்லுந்தரமில்லை, கவி நடையில் வெல்லுந் தரமுண்டு என்று காப்பியம் பாடுகின்றார் கவியரசு. சில்லறையாகக் கவிபாடும் இன்றைய இளங்கவிஞர்கட்கு இவ்வாழ்க்கைக் காப்பியம் புதிய கவிமுனை காட்டும் என்று நம்புகின்றேன். வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி 17.7.1983 முதுபெரும்புலவர் செம்மல் அறிஞர் வ.சுப.மாணிக்கம் பாடிய சிறப்புப் பாயிரம் ஊன்றுகோல் என்னும் ஒண்கதிர்க் காப்பியம் சான்றுநூ லாகச் சடுதியிற் பாடினன் பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன் மூடப் பழக்கஞ் சாடிய பாவலன் தூண்டுகை போலும் தொடர்பின் எனது வேண்டுகை ஏற்று விருந்தியம் படைத்தனன்; 34 இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா யாப்புப் படையா நல்லணி துணையாப் புரட்சி முரசாப் புதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன் மொழியர சோச்சும் முதல்முடி யரசன் குடியரசு போற்றுங் கொள்கை யோனே 44 ஊன்றுகோல் என்னும் ஒண்கதிர்க் காப்பியம் சான்று நூலாகச் சடுரிதயிற் பாடினன் பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன் மூடப் பழக்கஞ் சாடிய பாவலன் தூண்டுகை போலும் விருந்தியம் படைத்தனர்; இலக்கிய நிலமா இலக்கணம் அரணாக் கவிதை கோலாக் கற்பனை கொடியா வெல்க தமிழெஎனும் விறந்கொடி பொறியாத யாப்புப் படையா நல்ணி துணையாப் புரட்சி முரசா புதுமை துடியாத் தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன் மொழியர சோச்சும் முதல் முடியரசன் குடியரசு போற்றுங் கொள்கை யோனே. கதிரகம். காரைக்குடி 17-7-1983 வ.சுப.மாணிக்கம் முன்னுரை வலம்புரியில் நண்பர் ஒருவர் இல்லத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு யான் சென்றிருந்த காலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்.வ.சுப. மாணிக்கனா ருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவ்வமயம் அவர் நம் பண்டித மணியவர்களின் நூற்றாண்டு விழா வருகிறது. அவர்தம் வரலாற்றைக் காப்பியமாக்கித் தருக என என்பாற் கூறினர். யான், முதலில் இசைந்தேனல்லேன். பண்டிதமணியவர்கள் தலைசிறந்த தமிழ்ச் சான்றோர் மட்டுமல்லர்; சிவநெறிச் செல்வருங்கூட. ஆதலின் அவர்தம் வரலாற்றை நம்மால் எழுத இயலுமா? என்ற ஐயவினா என்னுள் எழுந்ததே அதற்குக் காரணம். F¿¥ã‰ F¿¥òzu tšyuha kh¡fdh® v‹ ja¡f¤ ij cz®ªjtuhŒ ‘ïjid¡ fUÉah¡ bfh©L Û©L« e« k¡fS¡F¤ jÄGz®it ô£lyhk‹nwh? என வழி மொழிந் தார். தமிழ் என்றவுடன் தலை வணங்கும் இயல்பினனாகிய யானும் இசைந்தேனாகினும் கண் தொல்லையால் எழுத இயலாத நிலையை யும் சுட்டிக் காட்டினேன். என் நிலைமையை நன்குணர்ந்த அவர் அனைத்து வகையானும் உதவத் தாம் ஏற்பாடு செய்வதாக மறு மொழி தந்தனர். பண்டிதமணியவர்களின் திருவுளப் பாங்கால், மேலைச் சிவபுரி, வ.பழ.சா.குடும்பத்தாரின் துணையுடன் உருவாக்கப்பட்ட சன்மார்க்க சபையில், பள்ளிக்கல்வியும் தமிழ்க் கல்வியும் பயின்றவன் யான். அந்நாளில் அடிக்கடி பண்டிதமணியவர்கள் சபைக்கு வருகை தருவார்கள். அப்பொழுதெல்லாம் யானும் என் உடன் பயின்றாரும் அப்புலவர் மணிக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்யும் பேறு பெற்றுள்ளோம். மேலும் சபை ஆண்டு விழாவிற்காக எழுந்தருளிய விபுலாநந்த அடிகள், கரந்தைக் கவியரசு, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீ, இரா.இராகவய்யங்கார் போன்ற பெருமக்களுக் கெல்லாம் தொண்டு செய்து மகிழ்ந்ததை இன்று நினைப்பினும் மெய்சிலிர்க்கிறது. பண்டிதமணியவர்கள், சபையில் வந்து தங்கியிருக்கும் பொழுது, பெருமக்கள் புடை சூழப் பெரிய விரிப்பில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் நின்ற வண்ணம் இருப்போம். அப்பொழுது அவர்கள், எங்கெங்கு எவ்வெந் நிகழ்ச்சிகள் நடந்தனவோ அவ்வந் நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாது சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். நகைச்சுவை ததும்ப, மலர்ந்த முகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இடையிடையே எம்மையும் பார்த்துக் கொள்வார்கள். அப்பார்வை நீங்களும் இவற்றை மனத்திற்கொளல் வேண்டும் என அறிவுறுத்து மாபோ லிருக்கும். ஆம், நாங்களும் நன்கு பதிய வைத்துக் கொண்டோம் என்பது போல முறுவலிப்போம். அந்நாநலம் படைத்த செம்மல், சபை விழாக்களில் நிகழ்த்திய ஒவ்வொரு சொற்பொழிவையும் ஊன்றிக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆன்றோர் வாய்ச் சொற்களைக் கேட்பது அப்பருவத்திலேயே எனக்குப் பேரின்பமாக இருந்தது.யான் தமிழிற் பெரும்புலமை பெற்றிலே னெனினும் தளராத தமிழ்ப்பற்றாளனாக இன்றும் இருந்து வருகிறேன் என்றால், அஃது அக்கேள்விப் பயனேயாம். அப்புலவர் மணிக்குத் தொண்டு செய்தும் அவர்தம் சொன் மழையில் தோய்ந்து தோய்ந்து இன்பங் கண்டும் யான் அறிந்து கொண்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே இதனை எழுதப் புகுந்தேன். கண்ணிற் படலம் படர்ந்து பார்வை குறைந்துள்ளமை யால் அவர்தம் நூல்களை இன்று படித்தறிய இயலவில்லை. யான் அறிந்த செய்திகள் சில; கிடைத்த செய்திகளும் சில, அறியாத வையும் கிடைக்காதவையும் பல.ஆதலிள் இது முழுமை பெற்ற நூலெனக் கோடல் பொருத்தமின்று. எழுதுங்கால் யான்பட்டபாடு எழுதுதற்கரியது.படலம் படர்ந்துள்ளமையான் ஒருகண் அறவே தெரியாது. மற்றொன்றும் அரைப்பார்வை.அதுவும் மங்கிய பார்வை. ஒருகண்ணை மூடி, மற்றொன்றைச் சற்றே திறந்து பூதக் கண்ணாடியின் துணையால் ஒவ்வோரெழுத்தாக எழுதுவேன். சிலவரிகள் எழுதியதும் மங்கி விடும். இடக்கை விரல்களைச் சுருட்டி வைத்து அவ்விடை வெளியில் பார்த்து எழுதுவேன். பின்னர் அதுவும் மங்கும்; வேதனை யுடன் நிறுத்திவிட்டு, இடைவேளைகொடுத்துப் பின்னர் எழுதுவேன். இக்கவியுலக ஆட்சி இரவுநேரத்திலேதான் நடைபெறும்; இரவு ஒரு மணியிலிருந்து மூன்று மணிவரை. சிலநாளிற் பகலிலும் செங்கோல் செலுத்துவ துண்டு. பகலை இரவாக்கிக் கொள்ள அப்போது கதவுகள் சாத்தப்பட்டிருக்கும். பண்டிதமணிபற்றி உலகஞ் சுற்றிய தமிழர் திரு.சோம. லெ. எழுதிய நூலும் பெருமழைப்புலவர் திரு. சோமசுந்தரனார் எழுதிய நூலும் என்னாட்சிக்குச் செங்கோலும் வெண்கொற்றக் குடையுமாய் விளங்கின. வித்துவான் திரு வி.சு. திருநாவுக்கரசு எழுதிய நூல் அமைச்சராக நின்று உதவிற்று. அற்றை நாளில் மகிபாலன்பட்டிக்குச் செல்வோர் வழியிடை எத்துணைப் படருழந்தனரோ அத்துணைப் படர் யானும் அடைந்தேன் எனினும் குறிக்கோளை நோக்கியே நடந்தேன். எப்படியோ என் தாய்க்கு ஓர் அணிகலன் செய்துமுடித்தேன் என்ற பெருமிதவுணர் வால் படர் மறந்து தளர்வுதுறந்து நிமிர்ந்து நிற்கின்றேன். இந்நூற் பாடல்களுள் உணர்ச்சிப் பெருக்கால் உந்தி வந்தன சில; கண்தொல்லையாற் பிந்தி வந்தன சில; உடற்றளர்வாலும் புறச் சூழலாலும் இடர்ப்பட்டு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியன சில; கனவிற் பிறந்தனவுஞ் சில. நயங்கூறும் நாயகன் வரலாறாதலின் ஆங்காங்கே நயங்களின் சாயல் விரவிக் கிடக்கும்; தொனிப் பொருளும் தோன்றக் கூடும். பயில்வோர் பார்வைக்கு அவை தென்படுமேல், பார்த்துப் படித்துப் படித்துச் சுவைத்து மகிழ்க. இந்நூலுக்கு ஊன்றுகோல் எனப் பெயருந்தந்து தாமே மனமுவந்து சிறப்புப் பாயிரமும் அளித்துப் பெருமை தந்த துணை வேந்தர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார் அவர்களின் தமிழ் நெஞ்சத்தை நன்றிப் பெருக்குடன் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன்.தமது நுண்மாண் நுழைபுலங்கொண்டு அணிந்துரை நல்கிய அறிஞர் தமிழண்ணலைப் போற்றி மகிழ்கின்றேன். அன்பன் முடியரசன் காப்பியச் செய்யுள்கள்-அடிவரையறை 1.கதிரெழு காதை : அறுசீர்விருத்தம் 22க்கு அடிகள் 88 2.கலைபயில் காதை : அறுசீர் விருத்தம்41க்குஅடிகள் 164 3.சபைகாண் காதை : எழுசீர் விருத்தம் 18க்குஅடிகள் 72 என்சீர்விருத்தம் 17க்குஅடிகள் 68 4.மணம்புணர்காதை : அறுசீர் விருத்தம் 16க்குஅடிகள் 64 அறுசீர்விருத்தம் (வேறு) 1 க்குஅடிகள் 4 எண்சீர்விருத்தம் 2 க்குஅடிகள் 8 அறுசீர்விருத்தம் 5க்குஅடிகள் 20 அறுசீர்விருத்தம் (வேறு)1க்கு அடிகள் 4 5.நெறியுணர்காதை : எண்சீர்விருத்தம் 14க்குஅடிகள் 56 6.மயக்குறாக் காதை : நிலைமண்டில ஆசிரியப்பா அடிகள் 285 7.வழக்காடு காதை : அறுசீர் விருத்தம் 5க்குஅடிகள் 20 அறுசீர் விருத்தம் (வேறு) 12க்குஅடிகள் 48 8.சொல்வல்லகாதை ; எண்சீர் விருத்தம் 31க்கு அடிகள்; 124 நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் 143 9.நட்புவளர்காதை : எண்சீர் விருத்தம் 5க்குஅடிகள் 20 நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் 56 எண்சீர் விருத்தம் 25க்குஅடிகள் 100 10. பேராசிரியக்காதை : எண்சீர் விருத்தம் 20க்கு அடிகள் 80 அறுசீர் விருத்தம் 6க்குஅடிகள் 24 11. பொதுப்பணிபுரிகாதை : எண்சீர் விருத்தம் 17க்குஅடிகள் 68 கட்டளைக்கலித்துறை 4க்குஅடிகள் 16 அறுசீர் விருத்தம் 1க்குஅடிகள் 4 கலிவெண்பாஅடிகள் 28 12.விருது பெறுகாதை : நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் 71 13. நூல்தருகாதை : நேரிசை ஆசிரியப்பாஅடிகள் 115 எண்சீர் விருத்தம் 1க்குஅடிகள் 4 அறுசீர் விருத்தம் 1க்கு அடிகள் 4 எண்சீர் விருத்தம் 3க்குஅடிகள் 12 நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் 8 அறுசீர் விருத்தம் 4க்கு அடிகள் 16 14. மணிவிழாக்காதை : அறுசீர் விருத்தம் 12க்குஅடிகள் 48 நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் 19 15. பிணியுறு காதை : எண்சீர் விருத்தம் 16க்கு அடிகள் 64 16. கதிர்மறை காதை : நேரிசை ஆசிரியப்பா அடிகள் 46 அறுசீர் விருத்தம் 2க்குஅடிகள் 8 எண்சீர் விருத்தம் 1க்குஅடிகள் 4 அறுசீர் விருத்தம் 1க்குஅடிகள் 4 கொச்சகக் கலிப்பா 4க்குஅடிகள் 16 அறுசீர் விருத்தம்7க்குஅடிகள் 28 எணிசீர் விருத்தம் 2க்குஅடிகள் 8 17. சிலைகாண் காதை : எண்சீர் விருத்தம் 6க்குஅடிகள் 24 அறுசீர் விருத்தம் 11க்குஅடிகள் 44 தமிழ்க் கதிர் தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன், தமிழியல் துறைத் தலைவர்,மதுரை காமராசர் பல்கலைக் கழகம். தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்று, நல்லாசிரியராய் விளங்கி, செழுந்தமிழின் சுவைதேரும் பாவலராய்ச் சான்றோராய் விளங்கி வருபவர் கவியரசு முடியரசர். பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட எண்ணும் இம் முடியரசர் நமக்குத் தொழில் கவிதை, நற்றமிழ்க்கு ஆக்கம் தேடுதல் என வாழ்ந்து வருபவர். தமிழ்நலம் கருதித் தன்னலம் விடுத்தவர்.சிந்துபாடும் சிற்றாறு போலும் செந்தமிழ் நடை வல்லவர். தமிழ்த்தாய்க்கு வாய்த்த, மறந்தும் புறந்தொழாத ஆழ்வார்; பாமலர்கள் கொண்டு நாளும் அவளை அருச்சிக்கும் நாயன்மார்; தமிழ்ப்பிழை செய்வாரை மனமுருக வைத்துத் தினமவரைத் திருத்தும் மணிவாசகர். கண்ணொளி மங்கினும் தமிழ் நலத்தைக் கூர்ந்து கண்டு,காட்டத் தளராதவர். தலைமுடி நரைப்பினும், தமிழைப் பாடும்போது இளமை பெற்று மீசையை முறுக்கும் தமிழ் மறவர்.தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஆயினும் தமிழ்த்தாயைப் பாடும் பணியில் ஓய்வு காணாதவர். பண்டிதமணி மகாமகோபாத்தியாய மு.கதிரேசனாரின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் புனைய, இவரினும் பொருத்தமானவர் வேறு எவருமிலர். மதுரை காமராசர் பல்கலைக் கழத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ.சுப மாணிக்கம் அவர்கள். பண்டிதமணி நூற்றாண்டு விழா நினைவாகப் பண்டித மணியைப் பற்றிப் பல் படைப்பு இலக்கியங்களையும் திறனாய்வு களையும் தக்கார் பலரைக் கொண்டு எழுத வைத்தனர். அம் முயற்சியுள் முடியரசனார்க்குக் காப்பியப் பணியை ஒப்படைத்த தொன்றே இவர் தம் ஒப்பரும் திறமைக்குச் சான்றாகும் எனலாம். காப்பியப் பண்புகள் மிளிரும் கலைச்செல்வம் பெருங் காப்பியப் பண்புகள் பல நிறைந்த சிறு காப்பியம் இது. கதிரெழுகாதை முதலாகச் சிலைகாண் காதை ஈறாகப் பதினேழு காதைகளை உடையது. அறுசீர்,எழுசீர், எண்சீர் விருத்தங் களையும், கட்டளைக்கலித்துறை, கொச்சகக் கலியினையும்கொண்டு, இடையிடை மிடைந்த நிலைமண்டில நேரிசையாசிரியங் களுடன் யாக்கப் பெற்றது. வாழ்க்கை வரலாற்றைப் புனைவுமிகுதியின்றி அவ்வாறே காப்பியமாக எழுத முடியும் என்பதற்கு இஃது ஒரு தக்க சான்றாகத் திகழ்கிறது. சோமலெ எழுதிய பண்டிதமணி என்ற நூல், இதற்குரிய பல கருத்துகளை நல்கியுள்ளது. எனினும் ஆசிரியர் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் படித்துப் பண்டிதமணியை அறிந்தவர் என்பதனால், தாமறிந்த பல செய்திகளையும் இதில் இணைத்துப் பாடியுள்ளார். பொதுவாகக் காப்பியங்களில் மிகைப் புனைவு களையும் புராணப் போக்கினையும் நம்பவியலாக் கூறுகளையும் இணைத்துப் பாடுதல் அதன் இலக்கணமென்பர். இதில் அக் கூறுகட்கிடமில்லை. எனவே, செம்பாதிக்குமேல் படித்துக்கொண்டே செல்லும் பொழுது. உரைநடை வரலாறொன்றுக்குக் கொடுக்கப் பட்ட செய்யுள் வடிவமோ என்ற நினைவு எழுகிறது. எனினும் நடையோட்டமும் கருத்துச்செறிவும் தடைபடாக் குருதியோட்டம் போல் காப்பியத்தை உயிர்ப்புடையதாக்குகிறது. கவிஞர் பிழையற்ற முறையில், யாப்பு வடிவத்துடன் பாப் புனையவேண்டும்; தமிழைப் பிறமொழிகட்காகப் புறக்கணித்துவிடக்கூடாது; சொற்பொழிவு, எழுத்துப் போன்ற துறைகளில் ஈடுபடுவோர் முதற்கண் நல்ல தமிழ்ப் புலமையுடையராதல் வேண்டும்; கடவுளின் திருமுன்னர்த் தமிழ் வழிபாடே தழைக்க வேண்டும்; எங்கும் எதிலும் தமிழுக்கு முதன்மை நல்க வேண்டும் என்றினைய கோட்பாடுகளில் நெஞ்சார்ந்த உறுதியுடையவர். மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் பல்லாண்டுகள் பயின்றதால் காப்பிய வரலாறு பற்றிய சொந்த அனுபவமுடையவர். இவையனைத்தும் இக் காப்பியத்து விரவிக் கிடந்து, மணமூட்டக் காணலாம். வருணனை, உவமை, பல்வகைச்சுவை, உட்பொருள் எனக் காப்பிய நலன்கள் பொதுளிய கலைப்பெட்டகமாகவும் இந்நூல் திகழ்கிறது. ஊன்றுகோல் இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415) என்பது திருக்குறள். ஊன்றுகோல் ஊற்றுக் கோலாக வலித்தமை அஃது உறுதிப்பாட்டோடும் திண்ணிதாகவும் இருத்தல் வேண்டும் என்பதையும் நினைப்பூட்டுகிறது. பண்டிதமணி கையகத்தே எப்பொழுதும் விளங்கி, அன்னாரது இயக்கத்திற்குத் துணைநின்ற அரிய ஊன்றுகோலினையே காப்பியப் பெயராகக் கொண்டமை இதற்கொரு தனிச் சிறப்பாகும். ஊன்றுகோல் போல உதவுதலாவது தளர்ந்துழி அதனை நீக்குதல் எனப் பரிமேலழகர் விளக்குவார். தமிழுக்குத் தளர்வு வராது எழுத்து, பேச்சுச் செம்மைகளை வற்புறுத்தி அம் மொழிவளர்ச்சிக்கு ஓர் ஊன்றுகோலென விளங்கியமை யாலும்,எப்பொழுதும் செவ்விய பேரரசரின் கையகத்தே விளங்கி அவர்தம் நடுவுநிலை, நல்லாட்சிகளை விளக்கி நின்ற செங்கோல் போல் கதிரேசர் கையில் விளங்கி யமையாலும் இக்காப்பியம் அச் சொல்லாட்சியில் அக்கறை காட்டிப் பலவிடத்தும் நன்கு புனை கின்றது. கவிஞரின் கருத்துப்படி கதிரேசற்கு ஏற்பட்டது காற்குறை யேயாகும் (1 :22). கதிரேசர் கையகத்தே கண்ட ஊன்றுகோல்; கதிர்காமத்துக் கடவுள் கதிரேசன் கையில் தண்டுகொண்டு (தண்டா யுதம்) நிற்பதுபோல இருந்ததைப் பகுத்தறிவு நெறிப்பட்ட பண் பாளராம் முடியரசர் சொல்லாமற் சொல்கின்றார். ஊன்றுகோல் ஒன்று பற்றி உரத்துடன் நிமிர்ந்து நின்றான் சான்றவர் போற்று மாறு தண்டுகொண் டங்கு நின்றான் (2:18) இளம்பிள்ளை வாதத்தால் பண்டிதமணியாரின் நவையுறு கால்கள் எங்கும் நடந்திட இயலவில்லை என்றாலும் அன்னாரின் குவிதரும் புகழோ யாண்டும் குலவிட நடந்த தங்கே என்கிறார் கவிஞர் (2:25). பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. (618) என்பார் திருவள்ளுவர். இதற்குப் பரிதியார் ஐம்பொறிகளில் ஒன்று குறையினும் குற்றமின்று: முயலாமையே குற்றம் எனவுரைத்தார். முடியரசர் விதியை நம்பி அழிவாரைக் கண்டு வேதனைப்படுபவ ராதலின்,பரிதியார் உரையை மேற்கொண்டு பாட்டிசைக்கின்றார். பொறியின்மை கண்டு நெஞ்சம் புழுங்கிலர் நாளும் நாளும் அறிவறிந் தொழுகல் வேண்டி ஆள்வினை உடைய ராகி நெறியிலே நடந்து வந்தார் (2:26) என்று பண்டிதமணியையும் நடக்கவைத்துக் காப்பியத்தை யும் நடத்துகிறார் பாட்டரசர். காப்பிய நடையுடன் திருக்குறளும் பிறபல நன்னூற் கருத்துகளும் விரவிநடக்கும் பாங்கு, இக் காப்பியத்தே ஆங்காங்கு இனங்கண்டு மகிழத்தக்கதாகும். பண்டிதமணியவர்கள் ஏழாம் ஆண்டிற் பள்ளிபுக்குச் சில மாதங்களே பயின்றனர். அப்போது அவர் கற்ற ஆத்திசூடி, உலகநீதி முதலிய சிறுசிறு நீதி நூல்களே அவரைப் பெரிதும் கவர்ந்தமையால், அவற்றை ஓதிஓதி மகிழ்ந்து, பிறகு சிறுகச் சிறுகப் பெருநூல்களை யெல்லாம் தாமே கற்றுத்தேரும் திறமையுடையவரா யினார். ஓதிய ஆத்தி சூடி ஊன்றுகோல் ஆகக் கொண்டே நீதிநூற் படிகள் ஏறி நெடியகாப் பியங்கள் என்னும் வீதிசேர் ஊர்கள் சுற்றி வீறுகொள் சங்கச் சான்றோர் ஓதிய இலக்கி யத்தின் உலகெலாம் உலவி வந்தார் (2:39) ஆத்திசூடியில் தொடங்கிய புலமை, அதனையே ஊன்று கோலாகக் கொண்டு, அளவிலா வளர்ச்சி பெற்றமை ஓர் அரிய நிகழ்ச்சியன்றோ? இங்ஙனம் பண்டிதமணிய வர்களின் வாழ்வில் நேர்ந்த அரிய நிகழ்ச்சிகளை மட்டுமே இந்நூல் தொகுத்துரைக்கிறது. சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து, வளர்த்த பெருமை பண்டிதமணிக்கு உண்டு, அதுபோலவே பண்டிதமணியின் புகழ் பெருகி வளர்ந்ததற்கு அச் சபையே உறுதுணையாயிற்று. பொன் குன்ற நகருறையும் புலவருக்குப் புகழ்விளைக்கும் சபையொன்று கிடைத்ததையா (3:21) என்றும் சாலவுணர் இவராலே சபையும் அந்தச் சபையாலே இவருமுடன் வளரக் கண்டோம் (3;25) என்றும் ஆசிரியர் இதனைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அதனால்தான் தழைத்துவரும் அருள்மனத்தர் பழநியப்பர் அமைத்த சபை இவருக்கோர் ஊன்றுகோல் அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக்கண்டோம் (3:31) எனப் பாவலர், பண்டிதமணியின் கையில் இலங்கிய ஊன்றுகோற்கு நிகராகக் கருத்தில் துலங்கிய சபையாகிய ஊன்றுகோலையும் நமக்கு நினைவுபடுத்துகிறார். பிறிதோரிடத்தில் பண்டிதமாமணியைத் தளர்ந்நிருந்த தமிழ்மாந்தர் செயலாற்ற ஊள்றுகோலாய் வருபவர்தாம் இவர் (4:5) என அறிவுறுத்துவது, நெஞ்சை நெகிழ்விக்கின்றது. இங்ஙனம் நூன் முழுமையும் இவ்வூன்றுகோற் செய்தி வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இடம்பெற்றுக் காப்பியத்திற்கேற்ற பாவிகமாகி நிற்கின்றது. தமிழுணர்வும் தமிழறிவும் தளருமிடத்தெல்லாம் அதனை மீண்டும் நிமிர்ந்து நிறுத்த, இவ் வூன்றுகோலைக் கவிஞர் பயன்படுத்திக் கொள்கிறார். பண்டிதமணியின் வரலாறு அதற்கு நன்கு கைகொடுத்து உதவுகிறது. தமிழ்மொழியைக் கையாள்வோர் ஏதும் பிழைசெய்யின், அவர் மனத்திற்பதியும் வண்ணம் அதனைச் சுட்டிக்காட்டுவது மணியாரின் செயலாகும். பீமகவி போன்ற போலிப் புலவர்களை அவர் அயராது சாடிநின்றார். அவர் தலைமையில் யாரும் பேச அஞ்சுவர் என்பதே, அவர் உடனுக்குடன் முகத்திலறைந்தாற்போல் குற்றங்குறைகளைச் சுட்டிச் சாடியதனாலே யாம். இதில் பலர் நெளிவு சுளிவு பார்த்து, விட்டுக் கொடுத்துப் போவதனாலேதான் இன்று பயிரையே களைகள் சூழ்ந்து மூடி விட்டன. எனவே பண்டிதமணியின் இத்திருவுளக் கருத்தை மனங்கொண்டு, இந் நூலாசிரியர் தாமும் அதே கருத்தினராதலின் அவ்வகையான் ஆற்றல் மிக்க கருத்துரைகளை, அறையவேண்டு மிடங்களிலெல்லாம் அடித்துக்கூறி நூலுணர்வை அந்நெறிப் படுத்தியுள்ளார். இலங்கையிலிருந்து வந்த கதிரேசரைத் தமிழெனும் தாயைக் காக்க வந்திவண் தங்கிவிட்டான்(2:16) என்பார். பண்டிதமணியாருடன் பழகிய முன்னோடியாம் அரசன் சண்முகனாரும் அடித்துரை யாற்ற வல்லர் (2:18). பண்டிதமணி வடமொழி கற்றாரேனும் தம்மொழி மறந்தாரல்லர்; தமிழராய் வாழ்ந்து நின்றார் (2;34) . வருமொழி கற்றுத் தாய்மொழி பழிக்கும் நாய்மனங் கொள்வாரைக் கவிஞர் கடிகின்றார். பெற்றதாய் மொழியிற் பற்றும் பிறமொழி தனில் மதிப்பும் உற்றிடல் வேண்டும் (2:37) என்பதே மணியார் உணர்த்திய உண்மை. நெறியுணர் காதையில், சமயநெறியில் பொய்ம்மை பூண்டு நின்றவர்களை இவர் விளக்கிக் காட்டுகின்றார். முற்றுறக் கல்லார் தாமும் முயல்கிறார் பாடல் யாக்க வெற்றரைத் தட்டிக் கேட்க வீறுகொள் புலவரில்லை (7:5) எனக் கவிஞர் நெறிபிறழாத பாடல் நெய்திடும் திறமை யில்லாரைக் கடிகின்றார். இன்றைய சொற்பொழிவாளர் குறைகளையும் சுட்டுகிறார் கவிஞர். இலக்கியங்கள் பயிலாமல் இலக்கணத்தின் இயல்பொன்றும் அறியாமல் நுனிப்புல் மேய்ந்து சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து சொலுமுறையாற் சொல்லாமல், முழக்கமிட்டுக் கலக்கிவரும் பேச்சாளர் (8:1) பெருகிவருவதை வருத்தத்துடன் புகல்கின்ற கவிஞர், ஒரு நல்ல பொழிஞனின் திறன்களையும் நன்கு வகுத்துரைக்கிறார். இலக்கணத்தை வெறுக்கின்ற இக் காலத்தைக் கடிந்து, நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற்றந்தோ (10:9) என இரங்குகின்றார். பாட்டரங்கில் பிறமொழிப் பாடல்களையே இசைப்பவர்க்கு இவர் தக்கவாறு இடித்துரை கூறித் தமிழை மீண்டும் பூக்கவிடா தொழிப்பதுதான் அவர்தம் நோக்கம் என அவருள்ளத்தையும் புலப்படுத்துகிறார். தமிழில் பிறமொழிச் சொற்கலந்து எழுதும் சிலரை மிகவும் இடித்துக்கூறிப் பிறமொழி கற்றும் நல்ல தமிழ் நடையிலெழுதும் கதிரேசரின் திறமையை விதந்தோது கிறார். நன்மொழி இதனுள் நாணம் இலராய்ப் பன்மொழிச் சொற்கள் பரவிடக் கலந்து, புன்மைச் செயலாற் பொருந்தாது எழுதும் பன்மொழிப் புலமைப் பயிற்சியரை அவர் நகையாடுகின்றார். எனவே பண்டிதமணியின் செம்மையும் செழுமையும் வாய்ந்த சொல்லும் செயலும் தமிழ்மக் கட்கு ஊன்றுகோலாய் உதவும். இழுக்கல் உடையுழி ஊன்றுகோல் போல, நாமும் அவர் தந்த ஊன்றுகோலைக் கொண்டு பயன்பட வாழ்வோமாக என்று இக் காப்பியம் நிறைவுறுகிறது. பண்டித மணியார் தந்த பயன் தரும் ஊன்றுகோலைக் கொண்டுளம் தளரா வண்ணம் கூடியே நடப்போம் வாரீர் (17:17) என்று, நம் நெடிய பயணத்தை நமக்கு நினைவூட்டி அமைகிறது இக் காப்பியம், இவ்வாறு பாவிகம் என்பது. காப்பியப் பண்பே என்பதற் கொப்ப இந்நூல் முழுதும் இக் கருத்துப் பல்வேறு முறைகளிலும் துறை களிலுமாக இழையோடுவது மேலும் ஆராய்ந்து மனங்கொள்ளுதற் குரியதாகும். காப்பியத் தொடக்கம் உலகெலாம் உணர்ந்து உலகம் யாவையும் என இவ்வாறு உலகை முன்வைத்து முறையே சேக்கிழாரும் கம்பரும் தொடங்கி யதற்கு இணங்க, இவர் உலகெலாம் உய்ய எனத் தொடங்குகிறார். முதல் பாட்டு தமிழ்த் தெய்வ வணக்கமாக அமைகிறது. உலகெலாம் உய்ய வைக்கும் உயரிய கொள்கை யாவும் நிலவிய தொகையும் பாட்டும் நிகழ்த்திய சங்கம் ஏறி அலகிலாப் பெருமை பூண்டாள் அன்னையாம் தமிழணங்கின் மலருலாம் அடிகள் வாழ்த்தி மகிழ்வுற மனத்துள் வைப்பாம். கவிஞர் முடியரசனாரின் தமிழ்வாழ்த்துகள் எதுவும் சோடை போவதில்லை, அதற்கவர் உள்ளத்துணர்வே காரணம். கரந்தைக் கட்டுரைகள் என்னும் நூலில், முதற்கண் நீ. கந்தசாமியார் பாடிய தமிழ்வாழ்த்து ஒன்றுண்டு. அதனை அற்றைநாளில் யாமனைவரும் பத்திமைப் பாசுரம் போல் பாடிப் பாடி மகிழ்வதுண்டு. அதனையே இறைவணக்கமாகக் கொண்டு கூட்டங்கள் தொடங்குவதுண்டு. ‘வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்ணினைக் கைழீ னாலுரை காலம் ஹிளீந்ணிடப் பைய நாவை அசைத்த பழந்தலீழ் ஐயை தாள்தலை கொண்டு பதிகுவாம்! இப்பாட்டு அன்றுதொட்டு எம் நெஞ்சைவிட்டு அகன்ற தில்லை. ஒரு நூல் எழுதித்தான் பெரும்புகழ் பெறவேண்டும் என்பதில்லை. ஒரு சிறுபாடல்கூட ஒருவருக்கு நிலைத்த புகழைத் தரமுடியும். பாவலர் முடியரசர், எழிலொழுகும் தமிழ்வாழ்த்து வையம் ஈன்ற சீரணியும் கலிவிருத்தம் பாடித் தந்து சிறப்படைந்த கரந்தையுறு கந்தசாமி (9:19) என்று, இதனைக் குறிப்பிடுவதிலிருந்து, இவருக்குத் தமிழ் வாழ்த்துப் பாடுவதிலுள்ள ஆர்வமும் புலப்படுகிறது. தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே தலைநின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீஇங்கு இலைஎன்றால் இன்பமெனக் கேது என்று, கவிஞர் முடியரசனார் பாடிய தமிழ்வாழ்த்தொன்றும், ஒருகால் கற்றவர்க்கு மனத்தைவிட்டு அகலாத மாண்புடையது. காப்பியநலன் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் முதலிய வற்றைக் கோடிட்டுக் காட்டிச் சுருங்கவுரைக்கும் திறம் குறிப்பிடற் பாலது. அங்கு வளக் குறைவுண்டெனினும் வாழ்வோரின் மனவளங் காட்டி நிறைவுசெய்யும் பாவலர் வெளிப்படை எனும் அணி நலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். குளங்களில் நிறையும் நீர்தான் குறையினும் ஆங்கு வாழ்வோர் உளங்களில் நிறையும் ஈரம் உலருதல் என்றுங் காணார் வளங்களிற் சுருங்கு மேனும் வழங்கலிற் சுருங்காக் கையர் களங்களில் பதர்க ளுண்டு காளையர் மணிகள் போல்வர் (1:11) வருணனைகளில் இந்நூல் அருமையில் எளிய அழகைக் காட்டுகிறது. பண்டிதமணி அழகான தோற்றப் பொலிவு உடையவர். அதற்குக் கண்ணேறு கழித்தல் போலவே, அவருக்குக் காற்குறை அமைந்திருந்தது. மேடையில் அவர் அமர்ந்திருந்து பேசும்போது, பரியவுடலும் பொன்னிற மேனியும் புன்னகை முகமுமாய் யாரையும் வயப்படுத்தும் தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரும்.அதை ஓவியம் தீட்டுகிறார் பாவரசர்: சிரிப்பிருக்கும் அவர்வாயில்;பேசும்காலை சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்முகத்தில்; விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியிரண்டில்; விரிநெற்றி பொலிவுபெற நீறிருக்கும்; பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்திருக்கும்; பளபளக்கும் அக்கழியில் பூணிருக்கும்; விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்திருப்போர் விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பிருக்கும். பொன்விசிறி மடிப்பொன்று தோளின்மீது புரண்டிருக்கும் வடமொழியும் பயின்றா ரேனும் மின்முகிலிற் பொழியுங்கால் அயன்மொழிச்சொல் மேவாத தமிழிருக்கும்; பிறர்கருத்தை முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங்காலை முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும் இனிதமர்ந்து நன்மணியார் நிற்காது பேசுகின்ற நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும். (8:6,7) வெறும் தோற்றத்தைவிடப் பேசிக்கொண்டிருக்கும் இயங்கு நிலையில் சித்திரித் திருப்பது உயிரோவியமாகிறது. இடையிடையே மறுப்புரை, எள்ளல், நகையாடல், கைதட்டு இருப்பதனால் மின்னலுடன் மழை பொழிவதை உவமை கூறுகிறார். நிற்காது பேசுகின்ற என்பது, காலூன்றி நின்று பேசுதற்கியலாத நிலையில் எப்போதும் அமர்ந்து பேசுதலை மட்டுமின்றி, இடையே தட்டுத்தடு மாறி நிற்காமல் சரமாரியாகப் பேசுதலையும் குறிக்கிறது. அவருடைய கண்ணின் ஒளியும் கருத்தின் ஒளியும் காண்போரையும் ஊடுருவி நிற்கும் எனக்காட்டுவது, பொலிவிற்குப் பொலி வூட்டும் சித்திரத் திறனாகும். பற்பல புதிய உவமைகள் இடம்பெற்று ஆசிரியரின் அனுபவத்தையும் இலக்கியக் கலைத்திறனையும் விளக்குகின்றன. காப்பியக் கதையே நம்பவியலாப் புராணத்தன்மை பெற்ற தாயிருக்குமெனல் அதன் பழையநிலை. எனினும் அழுத்தம்பெறப் புனைதலில், முடியரசர் பாவியத்திலும் அக்கூறு தலைநீட்டுகிறது. பண்டிதமணியவர்களே கூறியாங்கு, பழம்பெரு நூல்களை யெல்லாம் பயில்கின்றபொழுது, அவற்றை முன்கூட்டியறிந்திருந்தது போன்ற நினைவும் தெளிவும் அவருக்கு ஏற்பட்டனவாம். படித்தனன் எங்கோ முன்னர்ப் படித்தது போன்றுணர்ந்தான் (2:22) கற்பிக்கும் ஆசான் இன்றித் தனிமையில் அனைத்தும் கற்றுத் தக்கதோர் புலமை பெற்றான் (2:23) சொல்லிய ஆசான் பாடஞ் சொல்லுமுன் உணர்ந்து கொண்ட நல்லியற் புலமை கண்டு நயந்தவர் வியந்து நின்றார் (2:29) இவ்வாறு மணியார்க்குக் கல்வி கைவரப் பெற்றதன் காரணத் தைக் காப்பியப் புலவர் நடுநிலையோடு நவில்கின்றார். ஒருமையில் கற்ற கல்வி உதவிடும் எழுமை என்ற மறைமொழி புகன்ற வாய்மை மறைமொழி யாகா தன்றோ? தெரிதரும் முன்னை நூல்கள் தெளிவுறக் கற்கும் போது பரிவுடன் பழைய பாடம் படிப்பபோல் இருந்த தென்றார் (2:9) இங்ஙனம் நிகழ்ந்தமை புனைந்து கூறப்பட்டதன்று,காப்பிய நாயகரே வெளிப்படுத்திய உண்மையாகும். தமிழன்னையே தலைமகற்குற்ற குறைகண்டு மனம் நொந்து இக் கொடையினை நல்கினாள் என்னும்போதுதான், புலவர் காப்பியப் புலவராகின்றார். தலைமகன் இவனுக் குற்ற தாழ்வினைக் கண்டு நொந்தாள் இலைநிகர் இவனுக் கென்ன இவனைநான் உயர்வு செய்வேன் கலைமலி புலமை ஈவேன் கதிரொளி பரவ என்று தலையளி சொரிந்து நின்றாள் தமிழன்னை அவனை நோக்கி (2:19) ஒரு காப்பியப் புலவன் கதைநிகழ்ச்சிகளையெல்லாம் கூறுவ தோடுமட்டும் அமையானாய், தன் கருத்துகள், சிந்தனைகளை யெல்லாம் பெய்துவைக்கும் பேழையாகவும் காப்பியத்தைப் பயன்படுத்திக் கொள்வான் என்பர்.அதற்கொப்ப இவ் வாசிரியர் பேச்சாளன் இலக்கணம், மொழிபெயர்ப்பின் இலக்கணம், நூலா சிரியன் இலக்கணம், கவிஞன் இலக்கணம், ஈகை இலக்கணம் என்றினைய பல வரன்முறை விதிகள் போன்ற சிந்தனைகளை ஆங்காங்கு பெய்து வைத்துள்ளார். ஈகை என்பது எது? சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை மலைக்காட்டில் திரிமயில்கள் தோகை தனை வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை மலைக்கோட்டு மாமுகிலும் பிறர்சொல்லை மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவ தில்லை தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் பண்டிதமணியாரின் நட்புச் சிறப்பைப் பாடுமுகத்தான் குன்றக்குடி அடிகளின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்காகப் புனைந்துள்ளார். மறைமலையடிகள், நாட்டாரையா போன்ற பலரை விளக்கும் திறன், கவிஞரின் உணர்வு, ஈடுபாடு ஆகிய வற்றைப் புலப்படுத்துகிறது. முருக பத்தர் ஒருவர் பண்டிதமணியின் சமயப்பற்றை நினைத்து, அவரை ஏமாற்றி ஐயாயிரம் ரூபாய் பெறலாம் என எண்ணி வந்து நாடகமாடியபோது,தாமும் அதனையே பின்பற்றி அவரைச் சொல்லாமல் ஓடவைத்த செய்தி நகைச்சுவை மிளிர்வதாகும். மயக்குறாக் காதை படிப்படியாக, நகைச்சுவையை வளர்க்கும் பான்மை படித்து இன்புறத்தக்கது. கையில் காசில்லாதபோது பணமுடைஎன்பது ஒரு வழக்காறு. அதனைப் பணம் உடையார் என்றும் பண முடையார் என்றும் பிரித்து, இரட்டுற மொழிதலாக நயந்தோன்றக் கூறலாம். பண்டிதமணி குடும்பத்தார் பண முடையார் என்று மகட்கொடை நேர்ந்தோர் சற்றே மறுதலித்தபோது, மேலைச்சிவபுரி வ. பழ. சா. பழநியப்பர் பணம் உடையாரா தலினால் அக்கவலையைத் தவிர்க்க உதவினாராம். இத்தகைய சுவையான, இலக்கிய நயந்தோற்றும் பகுதிகள் இதிற்பலவுள. இலக்கிய நயம் பாராட்டுதலில் ஈடும் எடுப்புமற்றவரென மதிக்கப் பெற்ற ஒருவரது வரலாற்றுக் காப்பியமும் இத்தகைய நயங்களால் பொதுளப் பெற்றிருத்தல் சாலச்சிறப்பேயன்றோ? காப்பிய நாயகர் பண்பு நலன்கள் காப்பிய நாயகராம் கதிரேசரின் குணநலன்களும் இயல்புகளும் ஆற்றலும் அறிவும் இந் நூலுள் நடப்பியலாக நன்கு எடுத்தோதப் பட்டுள்ளன. இவ் வகையில் மிகைப் புனைவைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது. எப்பொழுதும் எதிலும் திருத்தமும் செம்மையுமே மணியாரின் குறிக்கோள்கள். உணவும் சுவையாக. நன்றாக அமைய வேண்டுமென அவர் விரும்புவர். பாச்சுவையில் குறைகாணின் எடுத்துச்சொல்லிப் பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல்போல நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக்காட்டி நன்கடிசில் அமைவதற்குப் பக்குவத்தை ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகுகாணிள் அடடாஓ எனநமக்கு வியப்புத் தோன்றும். (4:19) பண்டிதமணியின் உலகியலறிவும் நிகரற்றது. நூலறிவுடைய பலர் உலகியலில் யாதுமறியா இயல்பினராய் இருப்பர். கதிரார் அதற்கு மாறாக இருதுருவங்களும் இணையுமாறு வாழ்ந்தவர். அறிவிலும் பதவியிலும் உயர உயரச் செல்வத்திலும் உயர்ந்து விளங்கினார் அவர். வீடு கட்டுவது முதல், வரவுசெலவுக்கணக்குப் பார்ப்பது வரை நன்கறிந்த பல்கலைச் செல்வராக அவர் வாழ்ந்த மையைப் பாவியம் விரித்துக் கூறத் தவறவில்லை. இருவேறு உலகத்தியற்கைஎன்ற நூற்கணக்கை மாற்றி வைத்தது இவர்திறம் (4:25). தலைவரை நூன்முழுதும் பாராட்டும் இந்நூல் அவருக்கேற்ற வாழ்க்கைத் துணை, எங்ஙனம் அவர் உயர்வுக்கெல்லாம் உதவிய அரிய துணையாக அமைந்தது என்பதையும் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றது. கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை கதிர் மணியார் வீட்டிற் கண்டோம் என்று மதிக்கப்படும் மீனாட்சி அன்னை, கண்ணிறைந்த கணவனெனக் கதிராரின் மதிவிளைத்த மெய்பார்த்து மணந்துகொண்ட மாட்சி, மனம்நெகிழுமாறு விளக்கப்பெற்றுள்ளது. அவ்வன்னையைப் பலவாறு மனமுவந்து பாராட்டும் பாட்டுப் புலவர், பெண்மைக்கும் இல்லறத்தின் பெருமைக்கும் மதிப்பளித் தார்; உண்மைக்கும் கதிரேசர் உயர்வுக்கும் வாழ்வளித்தார் என முத்தாய்ப்பு வைத்துரைப்பது குறிப்பிடற்பாலதாகும். நகரத்தார் மரபு பண்டிதமணியார் நகரத்தார் சமுகத்தில் பிறந்ததனால், இடையிடையே நகரத்தார் நலன்களைப் பாராட்டிக் குறைகளைச் சுட்டும் போக்குக் காப்பியத்தில் நிழலாடுகிறது. மேலும் காப்பியப் பாவலர் செட்டிநாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்து, நகரத்தாரோடு நகரத்தாராகக் கலந்துறை வாழ்க்கை கொண்டவர். எனவே இவர் வாக்கில் இவ்வட்டார வழக்குகளும் இவர்தம் பழக்கவழக்கங்களும் வெளிப்படுதல் இயல்பேயாம். சிலசமயங்களில் இவர் பாடும் போது, நகரத்தாராய்ப் பிறந்தவர்க்குத் தலையைச் சற்றே நிமிர்த்திக் கொள்ளலாம் போலத்தோன்றும். இலக்கியப் பண்பா டின்னும் இருக்கிற தென்றுகூறித் துலக்கிடச் செட்டி நாடே துணையெனச் சொல்லலாகும் (1 :4) சைவமும் தமிழும் தழைத்தினி தோங்க, நாளும் பணிபுரியும் நகரத்தாரைப் பின்புலமாகக் கொண்ட வரலாறு இது. எனவே மகிபாலன்பட்டியில் வாழ்வோர், பொருளினால் மிகுந்த மேலோர், புலமையிற் சிறந்த நூலோர் என்று போற்றப்படுகின்றனர். திரைவழி கடந்து சென்று, திறமையால் ஈட்டுவார் காட்டப் படுகின்றனர். உருவினால் சிறிய தவ்வூர், உளத்தினால் சிறந்த மாந்தர் எனப் பாராட்டி, வளரிளம் காடு சூழ்ந்து வனப்பினில் பொலிந்து தோன்றும், குளமெலாம் மீன்கள் துள்ளிக் குதித்திடும் இயற்கை யைக் காட்டி, மனமதில் அமைதி காட்டி மதிவளர் புலமை கூட்டும் கனவுல கொன்று காட்டிக் கவிதையும் படைத்துக் காட்டும் (1 :10) என அவ்வூரைச் சிறப்பிக்கின்றார் ஆசிரியர். ஆனால் அவ்வூர் பண்டித மணியார் பொதுப்பணியிலீடுபட்டு நன்மை சில செயு முன்னர் எவ்வாறு இருந்ததென எடுத்துரைக்குமிடத்து, அதன் மழைக்காலச் சேற்றுநிலை படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அவ்வூருக்குப் போகும் வழிதான் பெரிதும் இடர்ப்பாடானது. திருமணம் முடித்தவர் பெண்ணழைத்துப் போகுமுன் மழைவந்து, ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால் மூன்று நாளானாலும் காத்திருந்து தான், வெள்ளம் வடிந்து பின் தம்மூர் போக வேண்டுமாம். இதனால் அவ்வூரில் சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பெரிதும் தயங்குவராம். இந் நிலைமையை நீக்க அரும்பாடுபட்டுப் பண்டிதமணியார் முயன்றார். பாலம் கட்டுவித்துப் பாதையைச் செப்பனிட்டார்; ஊருக்குள் அஞ்சலகம், பள்ளிக்கூடம் வரச்செய்தார். இவற்றைப் பாட்டில் வடிக்குமழகு படித்தின்புறத்தக்கது. ‘ஒருநாள் மகிபாலன் பட்டிக்குள் உற்றார் மறுநாளும் வந்துசெல மற்றும் மனம்ஜீழையார் கற்றாழை கள்ஹீ கருநாகம் புக்குவரும் புற்றாலே எங்கும் பொஸீந்ணிருக்கும்; வான்முகில்தான் சற்றே பொஷீழீன் சகணி பிறைந்ணிருக்கும் பற்றாக் குறைக்கங்குப் பள்ளம் படுகுஷீகள் ஆற்றில் புனலும் அடித்துத் ணிரண்டுவரும் சேற்று பிலமாய்அச் ஞிற்றூர் ஜீளங்கும், பகடு தனைப்பூட்டிப் பண்டிழீல் ஊர்வோர் சகடு தனைழீழுக்கத் தாங்குணித்து பிற்பார்; சுடுகாடும் அங்கேசுடர்ஜீட்டுக் கண்திற் படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும், கள்வர் ஞிலரும் கரந்து ணிளீந்ணிடுவர்; பேருந்து செல்லாப் பெருமை உடையதோர் ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்? இத்தகைய ஊரினைச் சீர்திருத்திய மணியாரின் முயற்சி, பொதுப்பணிபுரி காதையில் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தகைய பின்புலமான செட்டிநாட்டில் அன்று பலவூர்கள் இவ்வாறே இருந்தன. வெளிநாடு செல்வதே குறிக்கோளாகக் கொண்டவரா தலின் தத்தம் ஊர் நலனை அவர்கள் கருதிலர். எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்; அப் பையனை வெளிநாட்டிற்கனுப்பிவிடுவர். திண்ணையில் அமைந்த பள்ளி திருத்திடும் ஆசாற் சார்ந்தங்கு எண்ணுடன் எழுத்தும் கற்கும் இளையநற் பருவத் தாரைக் கண்ணெனும் வணிக நோக்கில் கலத்தினிற் செலவி டுத்தல் பண்ணுயர் செட்டி நாட்டுப் பழங்குடி வழக்க மாகும் (2 :10) அதற்கேற்பப்பண்டித மணியாரும் இலங்கைக்கு அனுப்பப் பட்டார். அங்கே அவர் துணிக்கடை வாணிகத்தில் அமர்த்தப் பட்டார். அவர் புத்தகம் எழுதுங்கையால், புதுத்துணி முடித்துத் தந்தார். கவிஞர் கருத்துப்படி, பிற்காலத்தில் பத்துடன் சங்கத் தொகையைச் சொல்வார், பணத்தொகை விலையைச் சொல்லி வாழ்ந்து வந்தார். துணிநயத்தை விரல்கள் தொட்டுப் பார்த்தாலும் சொல்நயத்திலேயே சிந்தை தோய்ந்து நின்றதாம். நகரத்தார்கள் முயற்சிமிக்கவர்கள். ஒன்று பெற்றாலும் அதனையே தம் முயற்சியால் பத்தாகப் பெருக்கிக்கொள்ள வல்ல வர்கள். மற்றவர்கள் பத்தைப் பெற்றாலும் ஒன்றோ இரண்டோதான் மீத்துவைப்பர். நகரத்தார்க்கும் பிறர்க்கும் இஃதொரு அடிப்படை வேறுபாடாகும். இத் திறமையைக் கதிரேசர் கல்வியிற் காட்டித்தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார் என்பது கவிஞரின் மதிப்பீடு. பெற்றிடும் ஒன்றைக் கொண்டே பத்தெனப் பெருக்கிக் காட்டக் கற்றவர் குடியில் வந்த கதிரேசச் செம்மல் - (2 :41) என்று ஒரு சமுதாயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈட்டுதல், சேமித்தல், வழங்குதல் என்பன அண்ணாமலை அரசர் கண்ட குறிக்கோள்கள். இது செட்டிநாட்டவர் அனைவரின் குறிக்கோள்களே எனப் பொதுவகையில் கூறலாம். இவற்றை நகரத்தார் பண்பில் தோய்ந்த நலன்கள் எனவும் சுட்டலாம். ஒருசாதி, ஒருசமூகம் என்ற உணர்வு குறுகியதே. ஆயின் அவ்வுணர்வே நாட்டுநலனும் மொழிநலனுமாகிய பொதுநலனை வளர்க்கப் பயன்படுமாயின் அது சாலச் சிறந்ததன்றோ? நகரத்தார்கள் என்றும் நகரத்தார்க்குமட்டுமே என நலன்நாடி உழைத்ததில்லை. உண்மை யிற் சொல்லப்போனால், நகரத்தார் எவரும் மற்றொரு நகரத்தார்க்கு மனமுவந்து உதவ முன்வருவதில்லை. அங்ஙனம் யாரும் உதவினர் களாயின், அதற்குத் தவிர்க்க முடியாத காரணமுண்டென்பதே உண்மை. எனினும் உலகு வாழ உதவும் அவர்கள் மனப்போக்கு உவகைதருவதேயாம். பாவலர் ஏறு முடியரசர் பெருமிதத்தோடு புனையும்போது, நெஞ்சம் கிளுகிளுக்கத்தான் செய்கிறது. திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத் திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக்கட்ட வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன் வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப்பந்தர் உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும் அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப் பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது பெருமை எனப் பேணுவது வணிகர்நாடு கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர் கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டுவிற்பர்; மடல் வரைந்து மனைக்கிழத்தி மனம்மகிழ மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத் தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகை மிகுத்துத் தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கிவந்து படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர் பலபலநல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர் (3 :1, 2) குலவிவரும் செல்வத்தைப் பெட்டகத்துட் குவித்தெடுத்துப் பார்ப்பது ஒரு வழக்கம் (3:7). ஆண்டு பதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப்பாலும் தாண்டவிட மாட்டார்கள்; தனவணிகர் வழக்கமிது; மரபின் கொள்கை பூண்டொழுகும் குலம் (4:1.) தமிழர்களே பழம்மரபில் பற்றுடையவர்கள் (Conservatives). நகரத்தார்களோ அதனிலும் ஆழமான மரபுபோற்றும் மனத்தினர். இங்ஙனம் நலம்பாராட்டினாலும், திருமணத்தில் அவர்கள் பணமே பெரிதென்று பகட்டித் தம் பண்புக்கு மாறாகப் பிடிவாதத் துடன் செயற்படுவதைத், தலைமேலடித்துக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர், குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர், நலம்பார்ப்பர், கலன்பார்ப்பர் நடந்துவரும் நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர், நிலம்பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர், நிகழ்மணத்தில் அறிவு, பண்பு நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர் நதரத்தார் நிலைதான் என்னே (4:3) இங்ஙனம் இந்நூலுட் காணும் நகரத்தார் நிறைகுறைகள் பற்றிய பல கருத்துகள் தொகுத்துக் காணுதற்குரியனவாம். இது நகரத்தார் ஊடே இருந்து பார்த்த பிறரொருவர் பார்வையாக இருப்பதனால் கூர்மையாகவும் சீர்மையாகவும் பதியத்தக்கதாக வுளது. படைப்பாளி இடம்பெறும் பாங்கு சிலப்பதிகாரத்தில் இளங்கோ தாமே ஒரு பாத்திரமாக இடம்பெற்றுத் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்வதுடன், பத்தினித் தெய்வத்தின்பால் தமக்குரிய பத்திமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். கவிஞர் முடியரசன் பண்டிதமணியின் தூண்டுதலால் மேலைச்சிவபுரி வ.பழ. சா. பழநியப்பர் உருவாக்கி, அவர் தம்பி அண்ணாமலையாரால் புறந்தரப்பட்டு. இன்று வரை அவர்களின் மக்கள் சாமிநாதர், சிதம்பரனார் மற்றும் பெயரர் சீனி என்ற பழநியப்பர் போல அனைவராலும் காக்கப்பட்டுவரும் சன்மார்க்க சபையில் தொடக்கக்கல்வி முதல் புலமைப்பட்டம் வரை பயின்றவர். மேலைச் சிவபுரிக்கு வந்த தமிழ்ச்சான்றோர்களின் உரைநலன் களைக் கேட்டுணர்ந்தவர். பண்டிதமணியின் சொற்பொழிவுகளைக் கேட்டும், சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா அவர்களுடன் பண்டிதமணி நோயுற்ற போது சென்று கண்டும் இத்தகைய நிகழ்ச்சிகளால் இவ்வரலாற்றிலும் சிறிது இடம்பெற்றவர். எனவே அவர் தம் உள்ளத் துணர்வுகளை வடிக்கும்போது தம்மை மறந்து பாடுகிறார். சன்மார்க்கசபைத்தாயை நினைந்து போற்றுகிறார். வ. பழ. சா. குடும்பத்தாரை வாயார, மனதாரப் புகழ்கின்றார். செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள் வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார் வ. பழ. சா. பழநியப்பர் ஒருவ ராவர் (3:8) என்று பழநியப்பரையும் அவர் தம்பி அண்ணாமலையையும் பெருமிதம் தோன்றக் குறிப்பிடுகிறார். பழநியப்பரின் பண்பு நலங்களை அடுக்கியுரைத்துவிட்டு, கற்றுணர்ந்தார் நல்லுறவும் கலந்தாடிக் களிக்கின்ற செவியுணர்வும் வல்லார்வந்து சொற்றதிரு முறைநூல்கள் செவிமடுத்துச் சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்குசேரப் பெற்றொளிரும் பழனியப்பர்.......(3:10) என்று இயல்மொழியாய் இசைக்கின்றார் முடியரசர். சன்மார்க்க சபையில் கற்றவர்கள் துலக்கமுறக் கற்றதனால் இன்று நாடறிந்த பேராசிரியர்களாய், கவியரசர்களாய்த் திகழ்கின்றமையையும் அவர் எடுத்துரைக்கும்போது, அவரது புகழுரை அவருக்கே சென்று சேர்வதும் புலனாகிறது. அவர் படிக்கிற காலத்தில் , அவருக்கு ஆசிரியராக, வழிகாட்டியாக இருந்த பலரை நினைவு கூர்கின்றார். நலந்தந்த சங்கரரும் ஆட்டு வித்த நடேசருமென் தெய்வங்கள்! நாளும் நாளும் வலம்வந்தே அருள்பெற்ற கோவிலுக்குள் மல்லிங்க சாமியொரு சாமி எற்குக் குலம்தந்த தமிழ்தந்த முத்து சாமி கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம் (3:33) மேலைச்சிவபுரிச் சன்மார்க்கசபை போன்றவை தோன்றி, இளமை முதல் தாய்ப்பால் ஊட்டி வளர்ப்பது போல் தாய்மொழிப் பற்றையும் அறிவையும் ஊட்டி வளர்க்குமானால், இங்கு தமிழ் வளர்ச்சிக்குத் தடைகளே எழா எனலாம். நாடு முழுவதும் இத்தகைய சபைகள் கழகங்கள் எழாவா என்ற ஏக்கத்தைக் கவிஞர் உரை தோற்று விக்கிறது. உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய மெள்ளத்தன் னாளாக்கிப் பாடல் வல்ல மேலவர்தம் கூட்டத்துள் ஒருவனாக்கி அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள் அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய், அந்தத் தள்ளைக்கு நானடினைம யான திந்தச் சன்மார்க்க சபையென்னும் கோவிலிற்றான் (3:32) கதிர் எழுந்து மறைந்த ஒருநாள் நிகழ்ச்சி போல ஒரு வாழ் நாளைச் சொல்லும் இக்காப்பியம் கதிராரை மட்டும் காட்டிற்றிலது. அவர் காலத் தமிழகத்தின் ஒரு பகுதியையே காட்டி நிற்கிறது. சொல்வளமும் நடைநலமும் மிக்க இக் காப்பியம் பொருள் நிறைவும் உணர்வுச் செறிவும் மிக்கதாக, மிளிர்கிறது; என்றுமுள தென்றமிழ் இன்றும் வளர்கிறது; இனியும் வளரும் என்பதைக் காட்டும் காலத்துக்கேற்ற காப்பியம் இதுவாகும். கவிஞரைப்பற்றி பெரியகுளம் ... ... மதுரை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் நகரம் மட்டுமன்று இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பசியைத் தணிக்கத் தமிழ் விருந்து படைத்த கவியரசு முடியரசனாரை ஈன்றெடுத்த நகரமும் ஆகும். 7-10-1920 தமிழ் நெஞ்சங்களில் நிலைபெற்றுவிட்ட நாள். ஏனெனில், அதுதான் கவியரசு முடியரசனார், சுப்பராயலு சீதா லெட்சுமி என்பார்க்கு மகனாகப் பிறந்த நல்ல நாள். பிறப்பினா லேயே பெருமை வந்து விடுமா? என்று சிலர் வினவுவர். வாழ்வின் சிறப்பினால் பெருமை வளர்கின்ற பொழுது அது பிறப்பையும் பெருமைப்படுத்திவிடுவது உண்மைதானே! உரிய வயதில் தொடக்கக் கல்வி கற்பிக்கப்பட்டது. தாய் மாமன் துரைசாமி பிற்கால இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இதனால் இலக்கியச் சாறு பருகும் பழக்கம் இளமையிலேயே இவருக்குக் கிட்டிற்று. அது இந்தக் கவிதை மீனுக்குப் பெரியகுளத்தை நல்ல நீச்சற்களமாக ஆக்கிற்று. வளைந்து கிடக்கும் மேற்குமலைத் தொடரும் அதில் மேய்ந்து திரியும் மேகக்காட்சியும்-இசைபாடும் புள்ளினமும் இறங்கிவரும் சிற்றாறும்-வெள்ளிக் காசை சுண்டிவிட்டாற் போலத் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களும் வெடித்துச் சிரித்துக் காண்பவர் விழியைக் கவரும் வாசமலர்க் குளமும் துரைராசுவின் இதயத்தைக் கவர்ந்தன; என்னவோ செய்தன; தாய்மாமன் துரைசாமி ஊட்டிய இலக்கியச் சாறு தன்வேலையைத் தொடங்கிவிட்டது. விளைவு...? இளைஞர் துரைராசு கவிஞர் முடியரசன் ஆனார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி தமிழறிவைத் தந்து சிறப்பித்தது. அக்கல்லூரியில் நிகழும் அறிஞர் பெருமக்களின் உரைகள், அப்போது நிகழ்ந்த உரையாடல்கள் கவிஞரின் உள்ளத்தில் ஆழ்ந்த மொழிப் பற்றையும் இனப்பற்றையும் கிளர்ந்தெழச் செய்தன. 1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தொடர்பு கொண்டார். இத்தொடர்பு அவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்தபோதிலும் 1943ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்லியுறவில்லை; தோல்வியுறுமாறு செய்யப்பட்டார். இடையிலே நவாபு டி. எசு. இராசமாணிக்கம் நாடகக்குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது; சென்றார். அங்கிருந்த சிறைவாழ்க்கை யும் மதவழிபாட்டு முறைகளும் வெறுப்பை விளைத்தன. எனவே போன சுவடு அழியுமுன்னரே திரும்பி வந்துவிட்டார். பின்னர்த் தம்மைத் தோல்வியுறச் செய்தவர்களைத் தோற்கடிப்பதற்காகத் தலைமறைவாக இருந்து படித்து 1947 இல் வித்துவான் பட்டம் பெற்றார். 1947-1949 வரையிலான இரண்டாண்டு காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது மட்டுமின்றி அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்றதாக இருந்தது. போர்வாள்,கதிரவன், குயில், முருகு,அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி எனும் இலக்கிய இதழ் பாரதிதாசன் பரம்பரையில் முன்னணியில் நிற்பவராக அறிமுகம் செய்து வைத்தது. சென்னையில் பேராசிரியர் மயிலை. átK¤J, jÄœ¤ bj‹wš âU.É.f., கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சாந்றோர் களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண்டிருந்தார். 1949ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர் களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்தகை யாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனியாக எதிர்ப்பதைக் காட்டிலும் துணையோடு சென்று எதிர்ப்பது தான் வெற்றிக்குரிய போராட்ட முறை என்பதனால் தக்க துணை யோடு (துணைவியாரோடு) ஈடுபட்டார். திருமணம் முடிந்த பின்னர்ச் சென்னையிலிருந்து விலகி வந்து காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்து 28 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆணும் பெண்ணும் சரிநிகர் என்ற பாரதியின் வாக்கை நிலைநிறுத்துவது போல் மகள்மார் மூவரையும் மகன்மார் மூவரையும் பிள்ளைச் செல்வங் களாகப் பெற்றுள்ளார். 1955 ஆம் ஆண்டில் குருதி உமிழும் கொடு நோய்க்கு இலக்கானார். பிழைப்பது அரிது என்ற நிலை வந்துற்ற போது புதுக் கோட்டை அண்ணல் சுப்பரமணியானார் தாயினும் சாலப் பரிந் தெழுந்து நோய்நீங்கி நலம் எய்த மருத்துவர் வி.கே. இராமச் சந்திரனார் துணையோடு எல்லா வகையானும் உதவி புரிந்தார். அவ்வுதவி இயம்பத் தீரா ஏற்றமுடையது. புத்துயிர் கொடுத்த அவ்வித்தகரைத் தந்தையாகவே கருதி வருகிறார். காலத்தினால் செய்த ஞாலத்தின் பெரிதாகிய அவ்வுதவியை நாடொறும் எண்ணி உருகுகின்றார். இடையிலே ஓராண்டு திரைப்படத்தின் ஈர்ப்புக் கவர்ச்சிக்கு ஆளாகிச் சென்னை சென்றார். ஆங்கு நிகழும் நிகழ்ச்சிகள் தம் இயல்புக்கு ஏலாதன என்பதைக் கண்டு மறு ஆண்டே தமிழாசிரியப் பணிக்கு மீண்டார். 1966இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கல்வித் துறையினரால் இவர்மீது வழக்கொன்று கொண்டு வரப் பட்டது. விசாரணை நடைபெற்றது. அப்போது இந்தியை எதிர்ப்பவன்தான் நான். அதற்கு என் பாடல்களே சான்று. ஆனால் இப்பொழுது சாற்றப்பட்டிருக்கும் குற்றங்கள் பொய்யானவை. என்மீது பழிசுமத்துவதற்காக இட்டுக் கட்டப்பட்டவை என்று வாக்குமூலம் கொடுத்தார். ஆய்வுக்குப் பின்னர் வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. இளமைக் காலத்தில் முருகனைப் பாடுவதே முத்தமிழ் கற்றதன்பயன் என்றிருந்த இவர் 1940- க்குப் பிறகுசமுதாயச் சூழல்-நாடு-மொழி இவற்றையே பாடிவருகின்றார். சூழ்நிலையின் தாக்கமும், சுயமரியாதை இயக்க வேட்கையும், பாவேந்தர் பால் கொண்ட பற்றும் கடவுள் மேலிருந்த கருத்தை மாற்றிக் காலத்தின் தேவையைப் பாடவந்த கவிஞராக ஆக்கிவிட்டன. கலப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதைபல பாடிய இவர் தாமும் கலப்பு மணம் செய்து கொண்டு தம் பிள்ளைகட்கும் கலப்பு மணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றிதேடித் தந்துள்ளார். அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு சாதிசமயங்களுக்குள் ஆட்படாமை - நன்றி மறவாமை - நட்பைப் பேணல் - கொள்கைப் பிடிப்பு - குறிக்கோள் வாழ்வு - உதவும் உள்ளம் - ஒட்டார் பின் செல்லாமை - ஆசிரியர்ப் போற்றல் - ஆகியன இவர்தம் இயல்பிற் சில. சங்கப் புலவர் தம் பாடலே பாடல் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனா கவும், பாரதிதாசனாரைத் தந்தை - யாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கையுடையராக விளங்குகிறார். பெரும்பாலும் தன்னை மறந்த லயம் தன்னில் இருக்கும் இயல்பினர். புட்டிகளின் துணையால் அன்று; எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால். கனவிலும் கவிதைபாடுவது என்பது இவருக்கே உள்ள தனித் திறனாகும். கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரிமாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது. இஃது இயற்கை வழங்கிய அருட் கொடை என்றே கூறல் வேண்டும். அழகின் சிரிப்பு என்ற இவர்தம் கவிதை 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரிய தெனப் பாவேந்தர் பாரதிதாசனால் தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறப்பினை யுடையது. 1966இல் முடியரசன் கவிதைகள் என்ற நூலும், 1973இல் வீரகாவியம் என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பலபாடல்கள் சாகித்திய அகாதெமியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1966இல் பறம்பு மலையில் நடந்த பாரிவிழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவர்க்குக் கவியரசு என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979ஆம் ஆண்டு பெங்களூர் உலகத் தமிழ்க் கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். இதுபோலவே இவர்பாற் பயின்ற மாணவர் சிலர் இவர்தம் மணிவிழா நாளன்று (7-10-1979) பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர். 1980 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக மாநில இலக்கிய அணி, கவிஞரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியது. அப்பொழுது கழகத்தின் சார்பில் டாக்டர் கலைஞர் அவர்கள் பத்தாயிரம் வெண்பொன் பொற்கிழி வழங்கிப் பாராட்டிச் சிறப்புச் செய்தார் 1983 ஆம் ஆண்டு தமிழகப் புலவர் குழு தமிழ்ச் சான்றோர் என்னும் விருது வழங்கிச்சிறப்பித்தது. எல்லா நம்பிக்கைகளிலும் மேலானதாக அவர் கொண்டிருப்பது என்றும் நானோர் இளைஞன் என்ற நம்பிக்கையே. இந்த நம்பிக்கை சுவையும், பயனும் முதிர்ந்த பல கவிதைகளை மேலும் தரும் என்று நம்புவோமாக. உள்ளுறை பக்கஎண் 1. கதிரெழு காதை 2. கலை பயில் காதை 3. சபை காண் கதை 4. மணம் புணர் காதை 5. நெறியுணர் காதை 6. மயக்குறாக் காதை 7. வழக்காடு காதை 8. சொல்வல்ல காதை 9. நட்பு வளர் காதை 10. பேராசிரியர் காதை 11. பொதுப்பணி புரி காதை 12. விருதுபெறு காதை 13. நூல் தரு காதை 14. மலைவிழாக் காதை 15. பிணியுறு காதை 16. கதிர்மறை காதை 17. சிலைகாண் காதை தமிழ்வாழ்த்து ஆழமாப் பயின்றே னல்லேன் அகலமும் அற்றே யாகும் யாழநின் னருளா லம்மே யாப்பென ஒன்று கட்டிச் சூழும்நின் னடிக்கே சூட்டிச் சொக்கிநான் வணங்கு கின்றேன் ஏழையேன் இளகும் நெஞ்சில் என்றும்நீ இருத்தல் வேண்டும் -முடியரசன் 1 கதிரெழு காதை உலகெலாம் உய்ய வைக்கும் உயரிய கொள்கை யாவும் நிலவிய தொகையும் பாட்டும் நிகழ்த்திய சங்கம் ஏறி அலகிலாப் பெருமை பூண்டாள் அன்னையாம் தமிழ ணங்கின் மலருலாம் அடிகள் வாழ்த்தி மகிழ்வுற மனத்துள் வைப்பாம் 1 யாதும்நம் ஊரே யாகும் யாவருங் கேளிர் என்னும் கோதிலாக் கொள்கை முற்றுங் குறித்திடும் பாட லொன்றை, ஓதுவார் உள்ள மெல்லாம் உவந்துவந் தேத்தும் வண்ணம் ஓதினான் 1கணியன் என்னும் ஒப்பிலாச் சங்கச் சான்றோன் 2 விரிமனக் கொள்கை யெல்லாம் விரித்திடுஞ் சங்கப் பாட்டுக் குரியவன் கணியன் என்னும் ஒருதனிப் புலவ னான குரிசிலை உலகம் போற்றக் கொடுத்தது தமிழ்ப்பூங் குன்றம் சிறியதே எனினும் மிக்க சிறப்பினாற் பெரிய தாகும் 3 இலக்கியப் பண்பா டின்னும் இருக்கிற தென்று கூறித் துலக்கிடச் செட்டி நாடே துணையெனச் சொல்ல லாகும் நலத்தகும் அந்நாட் டுள்ள நமதுபூங் குன்றுக் கின்று சொலப்படும் பெயரோ நல்லோர் சூழ்மகி பாலன் பட்டி 4 பொருளினால் மிகுந்த மேலோர் புலமையிற் சிறந்த நூலோர் அருளினால் இரங்கும் நல்லோர் அன்புடன் பண்பும் உள்ளோர் குறளினால் உரைத்த கொள்கை குறிக்கொளும் இல்ல றத்தார் மருளினால் திரியா மாந்தர் மதியினார் வாழும் நல்லூர் 5 திரைவழி கடந்து சென்று திறமையால் ஈட்டு வாரும் 1செறுவழி உழுது செல்வம் சேர்த்ததை உதவு வாரும் தருவழி யறிந்து செல்வம் தக்கவர்க் கருளு வாரும் ஒருவழி அறமே யாக உலவிடும் நல்லூர் அவ்வூர் 6 இளஞ்சிறார் பயிலும் பள்ளி இருப்பதங் கொன்றே ஒன்று புழங்குவார் இருவர் மூவர் போய்வரும் தெருவி ரண்டு வழங்கிடும் கடைகள் மூன்று வடிவினிற் சிறிய வாகும் அளவுவார் மக்க ளீட்டம் ஆயிரத் தைந்நூ றாகும் 7 உருவினிற் சிறிய தவ்வூர் உளத்தினாற் சிறந்த மாந்தர் மருவியங் குறைத லாலே மதிப்பினில் உயர்ந்த தாகும் 2உருவுகண் டெள்ளல் வேண்டா ஓதுவ தறநூல் அன்றோ? 3உரியவர் நல்ல ரானால் ஒருநிலம் நல்ல தாகும் வளரிளங் காடு சூழ்ந்து வனப்பினிற் பொலிந்து தோன்றும்; 4அளறிடை விளைந்து நிற்கும் அணிவயல் அழகு கூட்டும்; 5களமர்கள் சென்று சென்று கடமைகள் ஆற்றி மீள்வர்; குளமெலாம் மீன்கள் துள்ளிக் குதித்திடுங் காட்சி யுண்டு. 9 புனல்தரு மணிமுத் தாறு புறத்தினிற் சூழ்ந்து நிற்கும்; இனமலர் பூக்குஞ் சோலை எழில்தரும் இயற்கைக் காட்சி மனமதில் அமைதி காட்டி மதிவளர் புலமை கூட்டும்; கனவுல கொன்று காட்டிக் கவிதையும் படைத்துக் காட்டும் 10 குளங்களில் நிறையும் நீர்தான் குறையினும் ஆங்கு வாழ்வோர் உளங்களில் நிறையும் ஈரம் உலருதல் என்றுங் காணார் வளங்களிற் சுருங்கு மேனும் வழங்கலிற் சுருங்காக் கையர் களங்களிற் பதர்க ளுண்டு காளையர் மணிகள் போல்வர் 11 நிழல்களே சாயும் அன்றி நிலையினிற் சாயா நெஞ்சர் கழனியில் வரம்பு செய்வர் கற்பதில் வரம்பு செய்யார் உழவினிற் களைகள் தோன்றும் உறவினிற் களைகள் காணார் அழல்களே சுடுவ தன்றி அவர்மொழி சுடுவ தில்லை 12 உழுகலங் குழிகள் செய்யும்; ஒருவர்மற் றொருவர்க் காகக் குழியகழ் வினைகள் செய்யார் கூடியே வாழ்ந்து நிற்பர், புழுங்குதல் அரிசிக் கன்றிப் புந்தியில் அதனைக் கொள்ளார் பழகுதற் கினியர் அந்தப் பகுதியில் வாழும் மாந்தர் 13 குலவுவார் நடந்து செல்லக் குறுவழி கொண்ட தேனும் உலகுளார் நடந்து செல்ல உயர்வழி பலவுஞ் சொல்லி அலகிலாப் பெருமை பூண்ட அரும்பெரும் 1பாடல் தந்து நிலமெலாம் புகழ்வி ரித்து நிலவுவ தவ்வூர் ஆகும் 14 சிலவிதை தூவி விட்டுச் செந்நெலாற் களஞ்சி யத்தைக் குலவுற நிறைத்துக் காட்டுங் குடியினர் வாழுஞ் சிற்றூர் உலகினர் வியக்கும் 2பாடல் ஒன்றினைக் கொடுத்து விட்டுப் பலபல பாடல் கொண்டு பல்கிடுஞ் சிறப்பிற் றாகும் 15 பெருமைசேர் பூங்குன் றத்துப் பீடுயர் வணிகர் தம்முள் கருணைவாழ் மனத்தர் முத்துக் கருப்பனென் றொருபேர் தாங்கும் திருவினார் துணைவி யான சிவப்பியார் மணிவ யிற்றுள் கருவிலே உருவ மான கதிரவன் எழுந்தான் அம்மா! 16 பெற்றவர் உள்ளம் பொங்கப் பிறந்தநல் வீடும் ஊரும் பெற்றொளி விளங்கப் பண்டை இலக்கியம் பிறங்கித் தோன்றக் கற்றவர் நெஞ்ச மெல்லாம் கதிர்விடத் தமிழ வானில் உற்றெழு கதிரைக் கண்டாள் உவந்தனள் தமிழ்த்தாய் அங்கே 17 விசுபுரட் டாசித் திங்கள் வெள்ளியாம் இரண்டாம் நாளில் பசுபதிக் குரிய தென்று பகருமா திரைநன் னாளில் பசுமையிற் பொலியும் அந்தப் பதியினர் பெற்றோர் மற்றோர் நசைமிகு தமிழ்த்தாய் செய்த நற்றவப் பயனைக் கண்டார் 18 கதிரொளி தரும்பிள் ளைக்குக் கதிரேசன் எனும்பே ரிட்டார் மதியொளி முகத்திற் கண்டு மகிழ்ந்தனர் உற்றார் பெற்றார் எதிரென எவரு மில்லா இளம்பிள்ளை இரண்டாண் டாகப் புதுமெரு குடனே நாளும் பொலிவுற வளர்ந்த தங்கே 19 வரும்பகை யனைத்துந் தாங்கி வளர்தமிழ் மொழிக்கோர் ஆக்கம் அரும்புதல் காணின் ஆங்கே அல்லலும் அணுகு மாபோல் பெருங்கதிர் மணியைப் பாழ்நோய் பிடித்தது மூன்றாம் ஆண்டில் 1இரும்படர் தந்த நோயை இளம்பிள்ளை வாதம் என்றார் 20 செஞ்சுடர்ப் பரிதி கண்டோர் சிந்தையுள் மகிழுங் காலை அஞ்சிடு மாறு வாழ்வில் ஆரிருள் படர்ந்த தம்மா! பிஞ்சினைப் பற்றும் நோயாற் பெற்றவர் நைந்து நொந்த நெஞ்சின ராகி நாளும் நெடிதுயிர்த் தங்கு வாழ்ந்தார் 21 காற்குறை யதனைக் கண்டு கலங்கின ரேனும் பெற்றோர் மேற்குறை நேரா வண்ணம் விழிப்புடன் காத்து வந்தார் பார்க்குரை செய்ய வல்ல பண்டித மணியா வாரென் றார்க்கது தெரியும்? காலம் ஆக்கிடும் செயல்தான் என்னே! 22 2 கலைபயில் காதை திண்ணையிற் பள்ளி வைத்தே தெளிவுறக் கற்கக் கல்விப் பண்ணையென் றதனைக் கொண்டே பயின்றனர் அற்றை நாளில்; எண்ணுடன் எழுத்தும் மண்ணில் ஏட்டினில் எழுதி ஓதிக் கண்ணென மதித்துப் போற்றிக் கல்வியை ஓம்பிக் காத்தார் 1 பலர்புகழ் கல்வி கற்கப் பச்சிளஞ் சிறுவர் எல்லாம் புலருமுன் விழித்துக் கொள்வார் புள்ளெனப் பறந்து செல்வார்; மலர்விரல் கொண்டு மண்ணில் வடிவுற எழுதிக் காட்டி அலர்சிறு வாயால் ஓதி அவரவர் முறைவைப் பாரே 2 எழுத்தறி வித்த ஆசான் இறைவனென் றெண்ணி வந்தார் பழுத்தநல் லறிவும் அன்பும் பண்புடன் கருணை நெஞ்சும் வழுத்திடுந் தோற்ற முங்கொள் வானவன்1, பயில வந்தோர் தழைத்திடல் ஒன்றே கொண்டு தண்ணளி சுரப்பன் நன்றே 3 மூவிரண் டாண்டு செல்ல முதன்முதல் தொடங்குங் கல்வி நாவினில் ஓதி ஓதி நலம்பெற விழைந்து பள்ளிக் கோவிலுட் புகுந்த தந்தக் குலக்கதி ரேசப் பிள்ளை பூவினுள் மணிவண் டொன்று புகுந்தது தேனை மாந்த 4 பழுதற எழுதக் கற்றுப் படித்தனன் நெடுங்க ணக்கை அழகிய ஆத்தி சூடி அறஞ்சொலும் உலக நீதி விழைவுடன் ஓதி ஓதி விரைவினிற் கற்றுத் தேர்ந்து தொழுதகும் ஆசா னுக்குத் தொடுத்தனன் புகழின் ஆரம் 5 படித்தனன் ஏழு திங்கள் பயின்றது போதும் என்று தடுத்திட எண்ணி முற்றுப் புள்ளியும் தந்தை வைத்தார் அடிக்கடி படித்த பாடல் அடிமனத் தெழுந்து நின்று நடித்ததோர் இன்பக் கூத்து நாளெலாம் நினைந்து பார்த்தான் 6 பள்ளியில் ஏழு திங்கள் பயில்கதி ரேசப் பிள்ளை தெள்ளிய மதிய ராகித் தேர்ந்தநற் புலவ ராகி அள்ளிய புகழாம் செல்வம் அளப்பில பெற்றான் என்றால் உள்ளவும் படுமோ அந்த ஓய்விலா உழைப்பை அம்மா! 7 இருமொழி வல்ல ரானார் இனியசொல் வல்ல ரானார் உரைசெய உரிய ரானார் உயர்கவி தருவ ரானார் பொருள்நயம் தெரிய லானார் புகழும்நூல் வரைய லானார் வருமிவை திங்கள் ஏழில் எவ்வணம் வாய்த்த வம்மா! 8 ஒருமையிற் கற்ற கல்வி உதவிடும் எழுமை என்ற மறைமொழி புகன்ற வாய்மை மறைமொழி யாகா தன்றோ? 1. தெரிதரும் முன்னை நூல்கள் தெளிவுறக் கற்கும் போது பரிவுடன் பழைய பாடம் படிப்பபோல் இருந்த தென்றார் 9 திண்ணையில் அமைந்த பள்ளி திருத்திடும் ஆசாற் சார்ந்தங் கெண்ணுடன் எழுத்துங் கற்கும் இளையநற் பருவத் தாரைக் கண்ணெனும் வணிக நோக்கில், கலத்தினிற் செலவி டுத்தல் பண்ணுயர் செட்டி நாட்டுப் பழங்குடி வழக்க மாகும் 10 வணிகர்தம் குலத்து வந்த வழக்கினால் இலங்கை யென்னும் அணிநகர்க் குய்த்து வைத்தார் அக்கதி ரேசன் தந்தை; பணியினை ஏற்ற பிள்ளை; பதினோராண் டகவை கொண்டான், துணிபகர் கடையில் அந்தத் துய்யவன் பணிமேற் கொண்டான் 11 முத்தமிழ் அளக்க வல்ல முழுமதி பெறுவான் அங்கே அத்துணி அளந்து விற்றான் அவன்நிலை யாரே கண்டார் புத்தகம் எழுதுங் கையால் புதுத்துணி மடித்துத் தந்தான் 1பத்துடன் தொகையைச் சொல்வான் பணத்தொகை விலையைச் சொன்னான் 12 தொகைஎனும் நூல்சொல் வாயால் துணித்தொகை பகர்ந்த போதும் தகுதியின் மிக்க சான்றோர் தம்முடன் பழகி வந்தான் வகைபடு துணிக ளெல்லாம் வாணிகம் செய்யும் போதும் அகமொரு தனித்த போக்கை அவாவியே சென்ற தங்கே 13 துணிகளைக் கைகள் பற்றும் தூய்மையை நெஞ்சம் பற்றும் 1அணிகலை விழிகள் நோக்கும் 2அணிகளை உள்ளம் நோக்கும் துணிநயம் விரல்கள் பார்க்கும் சொல்நயம் சிந்தை பார்க்கும் மணியவன் நினைவு முற்றும் மற்றுமோர் உலகிற் செல்லும் 14 நடந்தன ஆண்டு மூன்று நயந்துணி விலைகள் பேசித் தொடர்ந்தது விற்கும் செய்கை துணிபடு மாறு, தந்தை கடந்தனர் வாழ்வை என்ற கடுந்துயர் தருஞ்சொற் கேட்டுப் படர்ந்தனன் விரைந்து தன்னைப் படைத்ததாய் நாட்டை நோக்கி 15 தந்தைதாம் பிரிந்தார், ஆனால் தமிழெனும் தாயைக் காக்க வந்திவண் தங்கி விட்டான் வாழ்வுக்கு வழியைத் தேடிச் சிந்தையைப் பறக்க விட்டான் சிலபகல் கழிந்த பின்னர் வந்தது மீண்டும் வாதம் பறந்திட வழியே யில்லை 16 முற்றிய வாத நோய்தான் முழுவலி கொண்டு தாக்க வற்றிய காலைப் பெற்றான் வளர்கதி ரேசன் அந்தோ! பெற்றவள் அதனைக் கண்டு பெருந்துயர் உற்றா ளேனும் பற்றுளங் குறைய வில்லை பரிவினைச் சொரிந்து நின்றாள் 17 ஈன்றவள் மனத்திற் கொண்ட இடரினைப் போக்கு தற்கோ 1நான்றகால் தளர்ச்சி போக்கி நன்கனம் நடப்ப தற்கோ ஊன்றுகோல் ஒன்று பற்றி உரத்துடன் நிமிர்ந்து நின்றான் சான்றவர் போற்று மாறு தண்டுகொண் டங்கு நின்றான் 18 தலைமகன் இவனுக் குற்ற தாழ்வினைக் கண்டு நொந்தாள் இலைநிகர் இவனுக் கென்ன இவனைநான் உயர்வு செய்வேன் கலைமலி புலமை ஈவேன் கதிரொளி பரவ வென்று தலையளி சொரிந்து நின்றாள் தமிழன்னை அவனை நோக்கி 19 தன்னுளே தங்கி நின்று தனிநடம் புரியும் எங்கள் அன்னையாம் தமிழ ணங்கின் 1அடிகளை எண்ணுந் தோறும் இன்பெலாம் ஒருங்கு கண்டான் இவன்மனம் உருகக் கண்டான் அன்பெலாந் திரண்டு தாயின் ஆரமு துண்டு வந்தான் 20 பள்ளியில் ஆத்தி சூடி படித்ததை நினைந்து பார்த்தான்; தெள்ளிய இன்பம் இந்தச் சிற்றடி தருமேல் மற்றை உள்ளுறை இலக்கி யங்கள் ஊற்றெனச் சுரந்து நெஞ்சை அள்ளுமே எனநி னைந்தான் ஆய்ந்தனன் ஏடு தேடி 21 கிடைத்தது கம்ப நாடன் கிளத்திய காப்பி யந்தான் படித்தனன்; எங்கோ முன்னர்ப் படித்தது போன்று ணர்ந்தான்; முடித்திடத் தடைக ளில்லை மூழ்கினன் இலக்கி யத்துள்; அடித்தளத் தூறி வந்த அவாவினால் வளர்ந்து விட்டான் 22 இனியநல் லார்வம் விஞ்ச இனுஞ்சில தேடிப் பெற்றான்; கனிவுடன் விளக்கிக் கூறிக் கற்பிக்கும் ஆசா னின்றித் தனிமையில் அனைத்துங் கற்றுத் தக்கதோர் புலமை பெற்றான் தனிமொழி தமிழே யன்றோ தனித்திருந் ததனைக் கற்றான் 23 அரும்பிய புலமை யாற்றல் அழகிய மொட்டும் ஆகி, விரும்பிய போதும் ஆகி, விளைந்திடும் நறவம் மாந்தச் சுரும்பினம் மொய்க்கும் வண்ணம் தூயநன் மலரும் ஆகி விரிந்தது; மணமும் சற்றே வீசிடத் தொடங்கிற் றங்கே 24 கவர்மணம் நுகர்ந்த மாந்தர் களித்தனர் புகழ்ந்து நின்றார்; அவனெனும் சொல்லை மாற்றி அவரென அழைக்க லுற்றார்; நவையுறு கால்கள் எங்கும் நடந்திட இயல வில்லை; குவிதரும் புகழோ யாண்டும் குலவிட நடந்த தங்கே 25 பொறியின்மை கண்டு நெஞ்சம் புழுங்கிலர். நாளும் நாளும் அறிவறிந் தொழுகல் வேண்டி ஆள்வினை உடைய ராகி நெறியிலே நடந்து வந்தார்; நிலைபுகழ்க் கலைகள் கற்கும் குறியிலே குறையா ராகிக் கூடிய ஆர்வங் கொண்டார் 26 கசடற மொழியில் தேற இலக்கணங் கற்க எண்ணும் நசையின ராகி நாளும் நயந்தது பயின்று வந்தார் அசைவிலா ஊக்கங் கொண்டே ஆசானை அணுகிக் கற்க இசையுநர் ஒருவர்த் தேடி இருந்தன ராக அந்நாள் 27 படித்தநல் லிலக்க ணத்திற் பழுத்ததோர் புலமை யாலே அடித்துரை யாற்ற வல்ல அரசன்சண் முகனார் நட்புக் கிடைத்தது கதிரே சர்க்குக் கிளர்ந்தெழும் உணர்வு பொங்கப் படித்தனர் அவர்பால் நன்கு பழையதொல் காப்பி யத்தை 28 சொல்லிய ஆசான் பாடஞ் சொல்லுமுன் உணர்ந்து கொண்ட கல்லியற் புலமை கண்டு நயந்தவர் வியந்து நின்றார் முல்லையின் மணத்தைக் காட்ட முன்வருந் தென்ற லானார்; கல்வியின் மணியைத் தீட்டிக் கடைந்தொளி நல்கி நின்றார் 29 தன்னுணர் வுந்தித் தள்ளத் தணிவிலா ஆர்வத் தாலே தென்மொழி தேர்ந்த பின்னர் வடமொழி தெளிவான் வேண்டி நன்னய மொழியில் வல்ல நல்லவர்த் தேடி நின்றார்; பன்மொழி கற்றுத் தேறல் பைந்தமிழ்க் காக்கந் தானே 30 சாத்திரங் கற்றுத் தேர்ந்த 1 நாரணன் என்று சாற்றும் சாத்திரி ஒருவர்க் கண்டார் தம்முளக் கருத்தைச் சொன்னார், பாத்திரம் ஏற்ற தென்று பயிற்றிட அவரும் நேர்ந்தார்; ஏத்திடும் வண்ணங் கற்றார்; இருமொழி வல்ல ரானார் 31 வடமொழிப் பயிற்சி முந்நூல் வகுப்பினர்க் குரிய தென்பார் அடஇது வியப்பே யன்றோ? அப்படி மொழிதான் உண்டா? இடமுடை ஞாலத் துள்ளார் எம்மொழி விழைவ ரேனும் திடமுடன் முயல்வ ராகின் தெள்ளிதின் உணர லாகும் 32 துளிர்த்தெழும் ஆர்வம் ஒன்றே துணையெனக் கொண்டார்; ஆற்றல் பளிச்சிடும் வண்ணம் தொன்மைப் பழமொழி கற்றுத் தேர்ந்தார்; அளித்திட ஈட்டு கின்ற அக்குடிப் பிறந்த செம்மல் கொழித்திடுங் கல்விச் செல்வம் குவித்தனர் வழங்கு தற்கே 33 அம்மொழி வல்லார் தாமும் ஆவென வியந்து நிற்கச் செம்மையிற் றெளிந்து தேர்ந்து செழும்புலம் மிளிரப் பெற்றார்; எம்மொழி பயின்றா ரேனும் 1இரும்புலம் பெற்றா ரேனும் தம்மொழி மறந்தா ரல்லர் தமிழராய் வாழ்ந்து நின்றார் 34 வாய்மொழி கல்லா ராகி வருமொழி மட்டுங் கற்றுத் தாய்மொழி பழித்து வாழ்ந்து தமிழரென் றிருப்பா ருள்ளார்; ஆய்மொழி பயின்றும் மற்றை அயன்மொழிக் கடிமை யாகும் நாய்மனங் கொள்வார் தாமும் நந்தமிழ் நாட்டில் உள்ளார் 35 அறிவினை வளர்க்க வேண்டி அயன்மொழி ஒன்றைக் கற்றார்; செறிதரும் அறிவைக் கொண்டு செந்தமிழ் பேணி நின்றார்; நெறிதடு மாற வில்லை நெடும்புகழ்த் தமிழை என்றும் குறைபடப் பேச வில்லை குலக்கதி ரேசர் மாதோ 36 பெற்றதாய் மொழியிற் பற்றும் பிறமொழி தனில்ம திப்பும் உற்றிடல் வேண்டு மென்னும் உளக்குறிப் புணர்த்தல் போலப் பெற்றதம் பெயரின் முன்னர்ப் பிறங்குதல் தமிழே யாக மற்றது வடமொ ழிக்கண் மருவிய 1பெயரர்ஆனார் 37 இருமொழி நூல்கள் தேடி எப்பொருட் டாகக் கற்றார்? பொருள்வரும் புகழும் வந்து பொலிந்திடும் என்றா கற்றார்? ஒருசிறி தேனும் அவ்வா றுளத்தினிற் கருத வில்லை; இருள்படர் வாழ்வில் இன்பம் எய்துதல் குறித்தே கற்றார் 38 ஓதிய ஆத்தி சூடி ஊன்றுகோ லாகக் கொண்டே நீதிநூற் படிகள் ஏறி, நெடியகாப் பியங்க ளென்னும் வீதிசேர் ஊர்கள் சுற்றி, வீறுகொள் சங்கச் சான்றோர் ஓதிய இலக்கி யத்தின் உலகெலாம் உலவி வந்தார் 39 சமயநூற் பொய்கை மூழ்கிச் சாத்திரக் கரைகள் கண்டார்; அமைவுறும் வடமொ ழிக்கண் ணாறுகள் கடந்து வந்தார் இமிழ்கடல் இலக்க ணத்தில் எழிலுற நீந்தி வந்தார்; தமிழ்மொழிப் பெருமை யெல்லாம் சாற்றியே உலவி வந்தார் 40 பெற்றிடும் ஒன்றைக் கொண்டே பத்தெனப் பெருக்கிக் காட்டக் கற்றவர் குடியில் வந்த கதிரேசச் செம்மல் தாமும் பெற்றதைக் கொண்டே நாளும் பெருக்கினர் கல்விச் செல்வம் சுற்றமும் நட்புந் தம்மைச் சூழ்ந்திட வாழ்ந்து வந்தார் 41 3 சபைகாண் காதை திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத் திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக் கட்ட, வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன் வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப் பந்தர் உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும் அறச்சாலை உண்டாக்கக் குளங்கள் தோண்டப் பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது பெருமைஎனப் பேணுவது வணிகர் நாடு! 1 கடல்கடந்து நெடுந்தொலைவு சென்றிடுவர் கணக்கிலநாள் அங்கிருந்து கொண்டு விற்பர்;1 மடல்வரைந்து மனைக்கிழத்தி மனமகிழ மறவாமல் உய்த்திடுவர்; நெடுநாள் தொட்டுத் தொடர்ந்தெழுந்த ஆள்வினையால் தொகைமிகுத்துத் தாய்நாட்டுத் துறைமுகத்தை நோக்கி வந்து படர்ந்துவரும் ஆர்வத்தாற் கால்வைப்பர் பலபலநல் லறஞ்செய்யக் கால்கோள் வைப்பர் 2 வழங்குதலை வழக்காக்கி வாழ்ந்திருந்த வணிகர்சிலர் புதியஅறஞ் செயநி னைந்தார் முழங்குதிரைக் கடல்கடந்து முயன்றுபெறுஞ் செல்வமெலாம் ஈந்துவக்க முனைந்து வந்தார்; எழுங்கலைகள் பலவளருங் கழகங்கள் எழிலறிவுக் கலைக்கோவில் எழுப்பி நின்றார்; பழங்கலைகள் பதிப்பித்தார் தமிழிசைக்குப் பயன்பட்டார் மாறிவருங் காலம் நோக்கி 3 கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர் கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்; பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால் பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்; மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும் கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும் அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே? 4 நல்லறத்தை விலைகொடுத்து வாங்குவது நாகரிகச் செயலன்று, நாளும் ஓங்கும் பல்வளங்கள் பெற்றவர்தாம் ஊருணிபோல் பழமரம்போல் மருந்துமரம் போல நின்று நல்குதலை இயல்பாகக் கொளல்வேண்டும் நல்லவர்கள் ஒப்புரவென் றதைத்தான் சொல்வர்; இல்லறத்தாள் மனமகிழத் தலையளித்தல் இயல்பன்றோ? விலைகொடுத்துப் பெறுவா ருண்டோ 5 சொலக்கேட்டு விழியிமைகள் இமைப்பதிலை தூண்டுவதால் ஈகைமனம் பிறப்ப தில்லை; மலைக்காட்டில் திரிமயில்கள் தோகைதனை வற்புறுத்திக் கூறுவதால் விரிப்ப தில்லை, மலைக்கோட்டு மாமுகிலும் பிறர் சொல்லை மதித்தெழுந்து மழைநீரைப் பொழிவ தில்லை; தலைக்கொள்ளும் இயல்புணர்வால் மனங்குளிர்ந்து தானுவந்து வழங்குவதே ஈகை யாகும் 6 குலவிவருஞ் செல்வத்தைப் பெட்டகத்துட் குவித்தெடுத்துப் பார்ப்பதிலே என்ன கண்டோம்? செலவுசெயத் தன்னலந்தான் வழியென்று தனித்துண்டு வாழ்வதிற்றான் என்னகண்டோம்? பலவிருந்தும் உண்பதுவும் உடுப்பதுவும் 1ஓரளவே; பகுத்துணர்ந்தால் உண்மை தோன்றும்; உலவிவரும் 2இயல்பினதை ஒடுக்காமல் ஊர்நலத்துக் குதவிவரல் இன்ப மன்றோ? 7 ஈத்துவக்கும் இன்பத்தை நன்குணர்ந்த இயல்புடையார் பலருண்டு செட்டி நாட்டில்; சேர்த்தமைத்துத் தொகுத்திருந்து காத்துவரும் செழுநிதியை வகுத்தளிக்க வல்லார் தம்முள் வாழ்த்தெடுத்துப் பாடுதற்குத் தகுதியுளார் வ. பழ. சா. பழநியப்பர் ஒருவ ராவர் ஏத்துமவர்க் குடன்பிறந்து பின்னிற்கும் இளையவரண் ணாமலையும் ஒருவ ராவர் 8 அடியவர்பால், அருந்தமிழை யுணர்ந்தவர்பால் அளப்பரிய பற்றுடையார், அணுகி வந்த மிடியவர்பால் இரங்குமனம் மிக்குடையார்; மேலவரோ டுரையாடி மகிழுங் கொள்கைப் பிடியுடையார், நெறியுடையார், பிறர்க்குதவும் பேறுடையார், சிவமுடையார்; நாளும் இந்த நடையுடையார் பழநியப்பர்; பின்வந்த நல்லவரும் அவ்வணமே ஒழுகி வந்தார் 9 கற்றுணர்ந்தார் நல்லுறவும், கலந்தாடிக் களிக்கின்ற செவியுணர்வும், வல்லார் வந்து சொற்றதிரு முறைநூல்கள் செவிமடுத்துச் சுவைக்கின்ற புலனுணர்வும் ஒருங்கு சேரப் பெற்றொளிரும் பழநியப்பர் பெரிதுவந்து பெரும்பொருள்கள் வழங்கிவரும் உணர்வும் கொண்டார், பெற்றபொருள் பிறர்மகிழத் தாம்மகிழப் பிரிப்பதுதான் இன்பமென உணர்ந்து கொண்டார் 10 சிவநெறியும் பொதுநலமும் செவியுணர்வும் சேர்ந்துறையும் பழநியப்பர் வாழும் மேலைச் சிவபுரிக்குக் கதிரேசர் செலுந்தோறும் தெள்ளியரைச் சந்திப்பார் நல்லநல்ல கவிதருவார் பொருள்தருவார்; சமயத்தின் கருத்துரைப்பார்; பழகியஅந் நல்லார் நட்புக் கவரிலதாய்ச் செறிவினதாய் வளர்ந்ததனால் கலைமகளும் திருமகளும் இணையக் கண்டோம் 11 கலைமகளின் திருவுளத்துக் குறிப்பறிந்து களிநடஞ்செய் திருமகளும் இயங்கி வந்தாள்; நிலைபெறுமோர் திருப்பணியை நிலையாத உலகத்தில் நிகழ்த்துவது நிதிபெற் றார்க்குத் தலையாய பணியாகும் எனுமுணர்வைத் தகுபொழுதில் கதிரேசர் விதைத்து விட்டார்; கலையாத ஆள்வினையர் பழநியப்பர் கருத்துக்குள் முளைத்தெழுந்து கதிர்க்கக் கண்டார். 12 அரசன்சண் முகனார்தாம் தலைமை பெற அவ்வூரில் அவையொன்று கூடிற் றாகப் பரசுபுலஞ் சான்றோரும் வந்திருந்து பற்பலநற் கருத்தெடுத்துப் பகர்தல் கேட்டுப் பரிவுகொடு நன்காய்ந்து பாராட்டும் படியாக முடிபொன்று படைத்து நின்றார்; தரிசுநிலம் விளைநிலமாய்ப் பயனளிக்கச் சபையொன்று காண்பதெனத் தீர்வு செய்தார் 13 நன்றாய்ந்து சீர்தூக்கி அவர்கண்ட நலம்பயக்கும் முடிபதனால் நானி லத்து நின்றார்ந்த புகழ்பரப்புஞ் சன்மார்க்க சபையொன்று நெடிதோங்கி நிற்கக் கண்டோம்; வென்றாரும் அறியாத தமிழ்தழைக்க விளைநிலம் போற் கல்லூரி யொன்று கண்டார்; சென்றாரும் எளிமையில்நூல் பயிலுதற்குச் செந்தமிழ்நூல் நிலையமொன்றும் தொடங்கி வைத்தார். 14 தமக்காகத் தமிழ்வளர்ப்பார் சிலருண்டு தமிழ்காக்கத் தமைவளர்ப்பார் சிலரும் உண்டு நமக்கோஇவ் வுண்மைநிலை தெரியாது நாவலிமை கொண்டவர்தாம் மயக்கி நிற்பர்; தமிழுக்கே தமிழ்வளர்த்தார் தமைமறந்தார் தம்பியையும் பழநியப்பர் பிணைத்துக் கொண்டார் நமக்காக வாழ்ந்துவரும் பரம்பரையை நாளெல்லாம் நினைந்துளத்தால் வாழ்த்து வோமே 15 கல்வியுடன் ஒழுக்கங்கள் பரவிவரக் கற்றுணர்ந்த சான்றோராற் பொழிவு செய்தல், பல்வகையில் துண்டறிக்கை அவைபற்றி அச்சிட்டுப் பலருக்கும் பயன்கொ டுத்தல், சொல்வளமை கொண்டிலங்கும் ஆசானைத் துணைக் கொண்டு மாணவர்க்குப் பயிற்று வித்தல், நல்லுணவும் உறைவிடமும் பயில்பவர்க்கு நல்கி உயர் தமிழ்கொடுத்தல் சபையின் நோக்கம், 16 எங்கெங்கே தமிழ்ச்சான்றோர் தமிழ்நாட்டில் இருக்கின்றார் அவரெல்லாங் குழுமி வந்து சங்கங்கள் மொழியாய்ந்த செயல்போலத் தமிழாய்ந்து நூலாய்ந்து கண்ட வற்றை இங்கெங்கள் செவிகுளிர மனங்குளிர இனிதளித்தார் மகிழ்வித்தார் ஏற்றந் தந்தார்; பொங்குங்கள் மலர்மணம்போல் இச்சபையின் புகழ்மணமும் பரவிற்றுப் பூமி எங்கும். 17 இலக்கணநூல் வல்லுநரும் இலக்கியநூல் சொல்லுநரும் ஆசான்மா ராக நின்று துலக்கமுற விளக்கமுறப் பயிற்றிய நற் றொண்டதனாற் பயன்பெற்றோர் அளவைச் சொல்ல இலக்கமிலை, பல்கலைசேர் கழகங்கள் கல்லூரி பள்ளியெனும் இவற்றி லெல்லாம் தலைக்கொளும்பே ராசிரியப் பொறுப்பினராய்ச் சான்றோராய்க் கவியரசாய்த் திகழு கின்றார். 18 தொடுவதெலாந் துலங்கவைக்குங் குடியில் வந்த தொடர்பதனால் பழநியப்பர் தொடங்கி வைத்த நெடியபுகழ்ச் சன்மார்க்க சபைவ ளர்ந்து நிலைத்திருந்து துலங்குவதைக் காணு கின்றோம்; விடுகதிர்போல் விளங்குகதி ரேசர், நெஞ்சின் விழைவிலுரு வானசபைத் தொடர்பால் குன்றில் இடுவிளக்கின் ஒளிபோலத் தமிழ்நா டெங்கும் இசைபரப்பித் தமிழ்பரப்பி விளங்க லுற்றார். 19 நிலைத்தபணி புரிந்திருக்கும் பழநி யப்பர் நிலையாமை தமக்குவரல் உணர்ந்து கொண்டார் களைத்துடலம் பிணியுற்று வருந்தும் போதும் கவலையெலாம் சபையின்மேல் வைத்தி ருந்தார்; அலைத்தகடல் சூழிலங்கை சென்றி ருந்த அண்ணாம லைக்குமடல் எழுதி வைத்தார்; மலைக்காமல் சன்மார்க்க சபையை என்றும் வளர்ப்பதுநின் கடமையென வரைந்தி ருந்தார் 20 பின்வந்த அவ்விளவல் தலைமை யேற்ற பிறகுசபைப் பொறுப்பனைத்தும் கதிரே சர்க்கு முன்வந்து சேர்ந்தமையால் தாமே நின்று முழுநோக்கும் அதனிடத்துச் செலுத்தி வந்தார், வன்குன்றத் தோளுடையான், உழைப்புக் கஞ்சான், உழவனுக்கு வயலொன்று வாய்த்த தைப்போல் பொன்குன்ற நகருறையும் புலவ ருக்குப் புகழ்விளைக்குஞ் சபையொன்று கிடைத்த தையா. 21 பேருந்து முதலான ஊர்தி காணாப் பெருமைத்தாம் அவ்வூரில்1 ஆண்டு தோறும் சீருந்தச் சிறப்புந்த விழாந டக்கும்; செந்தமிழில் வல்லரெனச் செப்பு கின்ற பேருந்துஞ் சான்றோர்தாம் பெரிது வந்து வழியருமை பேணாது குழுமி வந்து காருந்திப் பொழிவதுபோற் பொழிந்தி ருப்பர், களித்ததனுள் நனைந்திருப்பர் அவையோர் கேட்டு 22 ஒருவாரத் திருநாள்போல் சபையின் சார்பில் ஊர்மகிழ நிகழ்வுறுமவ் விழாவுக் காக வருவார்க்கும் ஆய்வுரைகள் அள்ளி யள்ளித் தருவார்க்கும் நல்லுணவு வழங்குஞ் சாலை, பொருள்வார்க்கும் அப்புலவர் தங்கு தற்குப் பொலிவுதரும் உள்ளறைகள், கேட்க வந்து நிறைவார்க்குப் பூம்பந்தர் அனைத்துந் தென்னை நெடுங்கீற்றால் ஒப்பனையால் விளங்கச் செய்வர் 23 எளிதாகச் சென்றுவரும் வாய்ப்பே யின்றி இலங்கிடுமவ் வூருக்கு விழவு காண வெளியூரில் வாழ்பவர்கள் சகடு கட்டி விழைந்தோடி வந்தங்குக் குழுமு வார்கள்; ஒளிகாலும் மணியெருதுக் கூட்டம் உண்ண உருவாகும் முன்கூட்டி வைக்கோற் குன்றம்; அளியாளர் ஒவ்வொன்றும் எண்ணி எண்ணி அழகுறவே விழாநடத்தி வந்தார்அன்று. 24 நூலறிவும் நுண்மதியும் மாட்சி யுற்ற நுழைபுலமும் நிறைசான்றோர் விழாவில் வந்து வாலறிவுத் திறங்காட்டி உறைவர் பன்னாள் வளர்பயிர்க்கு மழைபோல வாய்த்த தங்கே, காலமுணர் கதிரேசர் புலவர் தம்பால் கலந்துசவி மனமகிழ்ந்து செழித்து நின்றார், சாலவுணர் இவராலே சபையும், அந்தச் சபையாலே இவருமுடன் வளரக் கண்டோம். 25 தாங்கற்ற வடமொழியிற் சிலநூல் தேர்ந்து சபையுதவத் தமிழ்மொழியிற் பெயர்த்த ளித்தார்; ஈங்குற்ற அவற்றையெலாம் வெளியீ டாக்கி எம்சபைதான் உலகுக்குக் கொடுத்த தன்று, வீங்குபுகழ் யாங்கணுமே கதிரே சர்க்கு விரைந்ததனற் பரவியது; சபையின் பேரும் ஓங்கியது; நாளுக்கு நாள்ம லர்ந்தே ஒன்றற்கொன் றுதவியென வளரக் கண்டோம் 26 பதினாறாம் ஆண்டுவிழா சபைந டத்தும் பருவத்தில் விரிவுரைகள் ஆற்ற வந்த மதிவாணர் பலர்கூடிச் சிந்தித் தாய்ந்து மகிபாலன் பட்டியெனும் பூங்குன் றத்துக் கதிரேசர் சபைவளர ஆற்றுந் தொண்டும் கற்றுணர்ந்த நற்புலமைப் பெருக்குங் கண்டு பதிவான பெயராகி விளங்கும் வண்ணம் பண்டிதமா மணியென்னும் பட்டம் தந்தார் 27 பலசிறப்புப் பெயரிவர்க்குக் கிடைத்த பின்பும் பண்டிதர்க்குள் மணியென்னும் பட்டம் மட்டும் உலகினர்க்குத் தெரிதருமா றுயர்த்திக் காட்ட ஒளிநல்கும் மணியாகித் தமிழ்நா டெங்கும் ஒலியெழுப்பும் மணியாகி ஓங்கி நின்றார்; உவந்தளித்த விருதுக்கு மதிப்பும் தந்தார்; புலமைக்குக் கிடைத்தபெயர் நிலைக்கும் வண்ணம் போற்றியதைக் காத்தோம்பித் துலக்கிக் கொண்டார். 28 தனியரசாய்த் தமிழரசாய் விளங்கி வந்த தகவுடைய 1புதுக்கோட்டை மன்னர் தம்மை இனியதமிழ்க் கல்லூரி தொடங்க வேண்டி எடுத்துரைத்தார், கல்விதருங் கூட மெல்லாம் இனியுரிமை தமிழுக்குத் தருதல் வேண்டும் வடமொழியை எடுத்தியம்பும் நிலைய மெங்கும் கனிதமிழைக் கற்பிக்க வேண்டும் என்று வடமொழியுங் கற்றவர்தாம் சாற்றி வந்தார் 29 புலமிக்க கதிரேசர் தாய்மொ ழிக்குப் புரிந்துவருந் தொண்டெல்லாம் சபையார் கண்டு நலமிக்க அப்பணிக்குச் சிறப்புச் செய்ய நாட்டமிகக் கொண்டவராய்ச் செட்டி நாட்டு வளமிக்க மன்னரண்ணா மலையைக் கொண்டு மணிப்புலவர் படமொன்றைத் திறந்து வைத்தார்; தலைமைக்குத் தகுமணியார் நன்றி சொல்லிச் சபைக்குமுதல் மாணாக்கன் நான்தான் என்றார் 30 எமக்கெல்லாந் தமிழமுதை ஊட்டி யூட்டி எமதறிவை வளர்த்துநலந் தந்த தாயாம் இமைக்குநிகர் எனநின்று தமிழைக் காக்கும் இயல்புடைய நற்சபைக்கோர் ஊன்று கோலாய்த் தமக்குநிகர் இலாமணியார் விளங்கி நிற்கத் தழைத்துவரும் அருள்மனத்தர் பழநி யப்பர் அமைத்தசபை இவருக்கோர் ஊன்று கோலாய் அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக் கண்டோம் 31 உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி, உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய மெள்ளத்தன் னாளாக்கிப், பாடல் வல்ல மேலவர்தம் கூட்டத்துள் ஒருவ னாக்கி, அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள் அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய்; அந்தத் தள்ளைக்கு நானடிமை யான திந்தச் சன்மார்க்க சபையென்னுங் கோவி லிற்றான் 32 நலந்தந்த சங்கரரும் 1ஆட்டு வித்த நடேசருமென் தெய்வங்கள், நாளும் நாளும் வலம் வந்தே அருள்பெற்ற கோவி லுக்குள் மல்லிங்க சாமியொரு சாமி, எற்குக் குலந்தந்த தமிழ்தந்த முத்து சாமி கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி; உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம் 33 கதிர்மணிபாற் கற்றுணர்ந்த தலைமா ணாக்கர் கான்முளையாய் அவர்க்குப்பின் விளக்குஞ் செம்மல் புதுமுறையாற் றமிழாயும் புலமை யாளர் போதுமெனும் மனங்கொண்டு வாழும் நல்லர் இதுசரியென் றவர்மனத்திற் கொள்வ ராயின் எப்பொருட்டும் பிடித்தபிடி விடாத நெஞ்சர் முதுபுலவர் ஏற்றிருந்த சபைப்பொ றுப்பை முற்றுணர்ந்த மாணிக்கம் 2ஏற்றுக் கொண்டார் 34 பொருட்டுறையில் சபைதளரும் நிலைய றிந்து பொறுப்பேற்ற மாணிக்கம் கல்விக் கீயும் அருட்கொடையோர் இவ்வுலகில் இன்று முள்ளார் ஆதலினால் திரட்டுதும்யாம் எனத்து ணிந்து மருட்கடலுங் கடந்துபொருள் தொகுத்து வந்து வளர்க்கின்றார் மாணிக்கத் தூணாய் நின்று; திருச்சபையும் சீனிதுணை 3யாகி நிற்கத் திருக்குறள்போல் தன்னிறைவாற் பொலிதல் கண்டோம் 35 4 மணம் புணர் காதை ஆண்டுபதின் மூன்றானால் ஆடவர்தம் திருமணத்தை அதற்கப் பாலும் தாண்டவிட மாட்டார்கள் தனவணிகர் வழக்கமிது; மரபின் கொள்கை பூண்டொழுகும் குலத்துவரும் பூங்குன்றப் புலவருக்கோ முப்பான் ஆண்டு தாண்டியுமப் பேற்றுக்குத் தகுதிதர அக்குலத்தார் தள்ளி நின்றார் 1 நூலொன்றும் பொருளுணர்ந்து நயமுணர்ந்து நுவல்கின்ற நிறைபு லத்தார் காலொன்றுங் குறையறிந்து பெண்கொடுக்கக் கருதுபவர் எவரு மில்லை; வேலொன்று தருபுண்ணில் வெந்தழல்தான் வீழ்வதுபோல் வெந்து நொந்து நாளொன்று வாராதோ எனக்கலங்கி நலிந்துழன்றார் அவரை ஈன்றார் 2 குலம்பார்ப்பர், குவிசெல்வ வளம்பார்ப்பர், குடிபார்ப்பர், சீரும் பார்ப்பர், நலம்பார்ப்பர், கலன்பார்ப்பர், நடந்துவரும் நடைபார்ப்பர், உடையும் பார்ப்பர், நிலம்பார்ப்பர், நாகரிக மனைபார்ப்பர், நிகழ்மணத்தில் அறிவு, பண்பு நலம்பார்க்கும் நிலைமட்டும் மறந்திடுவர் நகரத்தார் நிலைதான் என்னே! 3 மகனுக்குத் திருமணநாள் வாராதோ எனஈன்றார் வருந்தி நிற்க, தொகைமிக்க நூல்வல்லார் அதையுணர்ந்து துயர் விடுக என்பின் வந்தார் மகிழ்வுக்கு வழிசெய்க மணஞ் செய்க மற்றெனக்குத் தேவை யில்லை; 1பகலுக்கும் பயின்றிடுவேன் சபைவளரப் பணிசெய்வேன் எனப்ப கர்ந்தார் 4 உறுபிணியாற் கால்தளர்ந்த கதிரேசர் உளந்தளரார், ஊன்று கோலின் பெருவலியால் நாடெங்கும் நடந்துலவித் தமிழ்பரப்பி, அதனைப் பேணாச் சிறுசெயலால் தளர்ந்திருந்த தமிழ்மாந்தர் செயலாற்ற ஊன்று கோலாய் வருபவர்தாம் இவரென்று தெளியார்தாம் மகட்கொடைக்கு மறுத்து வந்தார். 5 கல்விவளம் பரப்புவதாற் கதிரேசர் புகழ்மணந்து காணும் செவ்வி செல்வவளங் குறியாகக் கொண்டோர்க்குச் செவ்வையுறத் தெரிய வில்லை; அவ்வளவில் ஒருமணத்தைப் பொருட்டாக அவர்மனத்திற் கொள்ளா ராகி எவ்வகையில் தமிழ்மணக்கச் செய்வமென எந்நாளும் எண்ணி நின்றார் 6 செல்வாக்குப் பரவிவரப் புகழ்ச்செல்வம் சேர்ந்துவர அத்தை வீட்டார் நல்வாக்குக் கொடுத்தார்கள் மகட்கொடைக்கு நாளடைவில் மாறி விட்டார் இல்வாழ்க்கைத் துணைவியென முதன்மகளை ஈவதென்று சொன்ன சொல்லை அல்வாக்கென் றாக்கியவர் வேறிடத்தில் அம்மகளைக் கொடுத்து விட்டார். 7 முன்னவள்பேர் கலியாணி; அம்மகளை மொய்த்தமலர் சூட்டு தற்குச் சொன்னமொழி மாறியது நெஞ்சத்தைச் சுட்டதனால் திருந்தி வந்து, மின்னுமெழில் முகத்தாளைக் குணமிகுந்த மேலாளைக் கலியா ணிக்குப் பின்னவளை மீனாட்சி எனப்பகரும் பேராளைத் தரநி னைந்தார். 8 மணியுடையார் உடற்குறையைக் கருதிலராய் மகட்கொடைக்கு முன்வந் தார்தாம் 1 பணமுடையார் இவரென்று சற்றுமனம் பரிதவிக்க அதனைக் கண்டு பணமுடையார் சபைகண்ட பழநியப்பர் பரிவுடையார் மணத்திற் கென்ன பணந்தடையா? கவலற்க ஈப்போவில்2 பங்காளி யாக்கிக் கொள்வேன் 9 மலைத்திடுதல் கைவிடுக மணஞ்செய்க வழிசெய்வேன் என்று கூறிக் கலைத்துறையில் வல்லகதி ரேசர்க்குக் கடையிலொரு பங்குந் தந்தார் நலத்தக்க மீனாட்சி, கதிரேசர் நல்லறத்தில் துணைவரானார் நிலைத்தக்க சபைத்தொடர்பால் மதிபெற்றார் நிதிபெற்றார் மணமும் பெற்றார். 10 கைநிறைந்த பொருள்பார்ப்பர் பெண்பெற்றார் கண்ணிறைந்த கணவ னைத்தான் மைவரைந்த விழியுடைய பெண்பார்ப்பாள் மாநிலத்தில் ஈதி யற்கை 1ஐவிளைந்த கொடியிடையார் மீனாட்சி, அன்பரவர் மெய்யைப் பாரார் 2தைநிறைந்த மதிவிளைந்த மெய்பார்த்துத் தரம்பார்த்து மணந்து கொண்டார். 11 பெண்ணணங்கின் பெருந்துணிவை 3ஈகமிகு பேருளத்தை இரக்கப் பண்பை எண்ணினிங்குப் புல்லரிக்கும் இருவிழிகள் புனல்மல்கும் இறும்பூ தாகும்; அண்ணலிங்குப் பெற்றதுணை மனவளத்தை அளந்துரைக்க யாரே வல்லார்? கண்ணகியைக் கண்ணெதிரே கண்டதில்லை கதிர்மணியார் வீட்டிற் கண்டோம் 12 கொண்டான்றன் குறிப்புணர்ந்து நடந்தொழுகுங் குலமகளாய்க் கூடி வந்து கண்டாரை விருந்தோம்பிக் காக்கின்ற கலைமகளாய் எவரை வீட்டிற் கண்டாலும் பணிந்துரைத்துக் கனிந்தமொழி தருமகளாய் எளிமை பூண்டு கண்டாரும் தொழத்தக்க திருமகளாய்க் கற்பரசி வாழ்ந்து வந்தார் 13 கலைவாழ்வின் விளக்கமெனக் கதிரேசர் காண்பரெனிற் கற்பின் செல்வி கலைவாழ்வின் அமைதியெனத் திகழ்ந்திடுவர்; கனிவாயில் மூர லொன்று நிலையாகக் குடியிருக்கும் களங்கமிலா நெஞ்சிருக்கும்; அங்கி ருந்து விளைவாகும் மொழியெல்லாம் மழலையென இனிமையினை விளைத்து நிற்கும் 14 அயர்வின்றி விருந்தோம்பும் பண்பிருக்கும்; அவர்பிறந்த செட்டி நாட்டின் உயர்வொளிர அமைதிமிகும் கோலத்தில் உடலிருக்கும்; கணவர்க் கென்றே உயிர்வாழும் பெருமையுடன் மெல்லுடலில் உரமிருக்கும்; காணுந் தோறும் உயவந்த தமிழன்னை போல்வ ரென, 1தெ.பொ. மீ உரைத்தார் அன்று 15 பெண்மைக்கு மதிப்பளித்துப் பேணிவரும் வணிகர்குலம் பெருகும் நாட்டில் தண்மைக்கு மனந்தந்த மீனாட்சி ஆண்மைக்குத் தாம்ப ணிந்து பெண்மைக்கு மதிப்பளித்தார், இல்லறத்தின் பெருமைக்கும் மதிப்ப ளித்தார் உண்மைக்கும் கதிரேசர் உயர்வுக்கும் வாழ்வளித்தார் அதுவே வாழ்க்கை. 16 பேணிய குழலில் தோன்றும் பிசிரிலா இசையைப் போலக் காணும்நல் வாழ்வு கண்டார்; கனிவுறும் இனிமை அன்பு பூணுநல் லழகு தூய்மை பொலிசுவை அமைதி யாவும் மாணுற அமைந்த வாழ்வு மணிபெறும் வாழ்வே யாகும் 17 பாவமுதின் எண்சுவையும் தோய்ந்தெ டுத்துப் பகர்கின்ற வாயுடையார்; படைத்து வைத்த நாவமுதின் அறுசுவையும் நன்கு கண்டு நுகர்கின்ற நாவுடையார்; வடித்துத் தந்த பூவமுதின் வாசகத்தைத் தூய்க்குங் காலைப் புனல்மல்கும் விழியுடையார்; மணியார் நாளும் காவமரும் மலர்சூழூம் சுரும்பு போலக் காலமெலாம் சுவைவாழ்வு வாழ்ந்து வந்தார் 18 பாச்சுவையிற் குறைகாணின் எடுத்துச் சொல்லிப் பாங்குபெற வழியுரைக்கும் ஆற்றல் போல நாச்சுவையிற் குறையிருப்பின் சுட்டிக் காட்டி நன்கடிசில் அமைவதற்குப் பக்கு வத்தை 1ஆச்சியிடம் எடுத்துரைக்கும் அழகு காணின் அடடாஓ எனநமக்கு வியப்புத் தோன்றும்; நூற்சுவையார் எச்சுவையும் ஆழ்ந்து நோக்கும் நுண்ணறிவுப் புலனுணர்வுத் திறந்தான் என்னே! 19 கற்பனை படைத்துக் காட்டும் கலையுல கதனில் வாழ்வோர் முற்படும் உலக வாழ்வின் நடைமுறை முற்றுந் தேறார்; கற்பனை ஏடு வேறு காண்குறும் நாடு வேறு சொற்பொருள் உண்மை உண்மை தொன்றுதொட் டியற்கை யாகும் 20 கண்முனம் படரா ஒன்றைக் கருத்தினுள் படைத்துக் கொண்டு நண்ணுமவ் வுலகிற் புக்கு நலிவெலாம் மறந்தே இன்பப் பண்ணுயர் பாடல் பாடிப் பறந்தவண் திரிவா னுக்கு 1மண்படும் வாழ்வா வந்து மனத்தினில் தோன்றி நிற்கும்? 21 தான்படுந் துயர்ம றப்பான் தன்னினந் தனைநி னைப்பான் வான்படு பொருளை யெல்லாம் வாரிவந் தவர்கள் வாழ்வு மேம்படக் கொடுப்பான் போல மேவுமப் பித்தன் கண்ணில் ஏன்படும் உலக வாழ்க்கை? ஈதவன் இயற்கை யாகும் 22 கற்பனைப் பித்தன் போலக் கதிர்மணி வாழ்ந்தா ரல்லர்; பிற்படும் புலவ ரெல்லாம் பெருமையே கொள்ளு மாறு நற்புகழ் அரசர் போற்ற நண்பரும் ஆகி நின்று பற்பலர் போற்றும் வண்ணம் பாரினைத் தெரிந்து வாழ்ந்தார் 23 உலகியல் நன்கு தேர்ந்தார் இவரைப்போல ஒருவ ரில்லை; கலைபயில் அறிவும் அந்த உலகிய லறிவுங் கண்டோர் துலையினில் தூக்கிப் பார்ப்பின் மிக்கது தோன்றா ராக அலைபடும் மனத்த ராவார்; அவ்வணம் தெளிந்து நின்றார் 24 மேற்கணக்காய்க் கீழ்க்கணக்காய் மேவுபதி னெண்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்; பார்த்தலத்தில் வரவுபற்றுப் பார்க்கின்ற பணக்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்; மேற்புலத்தாற் றெளிவுபெறல், மிகுதிருவால் மேம்படுதல் வெவ்வே றென்ற 1நூற்கணக்கை மாற்றிவைத்த இவர்திறத்தை நுண்ணறிவை வியவார் யாரோ? 25 5 நெறியுணர் காதை போராடிச் செங்கதிரோன் தோன்று முன்னர்ப் புலர்காலைப் பொழுதத்துக் கடமை யாற்றி, நீராடி வெள்ளியமெல் லாடை பூண்டு, 1நீறாடி மலரடியை நினைந்து, நெற்றி நீறாடி மெய்யெல்லாம் பொலிந்தி ருக்க, நிறைமொழிகள் சிலசொல்லி வணங்கிப் பின்னர் யாரோடும் உரையாடல் முதலாம் செய்கை யாவையுமே செய்துவரல் அவர்வ ழக்கம் 1 தேவாரம் ஓதுபவர்க் காணின் மூவர் திருமுறையுள் அப்பர்தரும் மாசில்வீணை நாவாரப் பாடுகவே பாடு கென்று நயந்துரைப்பார், அப்பாடல் இசைக்குங் காலை மீவானில் வெண்மதியம் ஊர்ந்து செல்ல வேனிலிளம் பருவத்துத் தென்றல் வீசப் பூவாரும் பொய்கையினுட் குடைந்து வந்த புத்துணர்வு கொண்டவர்போல் திளைத்தி ருப்பார் 2 சமயத்தை நன்குணர்ந்து திளைத்துத் தோய்ந்து தளராத செம்பொருளைக் கண்ட சைவர்; உமைநத்தும் இறைவனடி மலரை என்றும் ஒருமையுடன் நினைந்துருகும் தூய நெஞ்சர்; தமைமுற்றித் துயரங்கள் சூழ்ந்த போதும் தண்புனல்சேர் சடையான்பால் முறையிட் டாங்கண் சுமைமுற்றுந் தவிர்ந்ததுபோல் இன்பங் காண்பார், சுடர்மணியார் மெய்ச்சமய நெறியில் நின்றார் 3 அன்புவளர் சமயத்தை விழைந்த தன்றி ஆர்ப்பாட்டச் சமயத்தை விரும்ப வில்லை; என்புருக இறைவனடி தொழுத லன்றி ஏமாற்று வேலைக்குக் கொள்ள வில்லை; பொன்பொருள்கள் வருமென்று பற்ற வில்லை பொலிமனத்து தூய்மைக்கே பற்றி நின்றார், புன்மையென வாழ்க்கையினை வெறுக்க வில்லை புணையாக அதைப்பற்றி வாழ்ந்து வந்தார் 4 உள்ளத்தாற் பொய்யாது சிவனை எண்ணும் உயர்சமயம் இவர்கொண்ட சமய மாகும்; கள்ளத்தார் கயமையினார் கரந்து வாழக் கண்டமதம் இவர்கொண்ட மதமே யன்று; வெள்ளைத்தூள் பொடிபூசும் மெய்ய ரேனும் வேடத்தைத் திருவுளத்தும் நினைந்தா ரல்லர்; எள்ளித்தான் சமயத்தை நகைக்கும் பாங்கில் எச்செயலும் என்றுமவர் கொண்ட தில்லை 5 புறப்பொருளாச் சமயத்தைக் கொண்டா ரல்லர் புந்திமகிழ் அகப்பொருளென் றெண்ணி வாழ்ந்தார் மறச்செயலுக் குற்றதென நினைந்தா ரல்லர் மனத்துக்கண் அறத்துக்கே துணையாக் கொண்டார் பிறர்க்குரிய சமயத்தைப் பகைத்து வாழும் பேதைமையைக் கனவகத்தும் எண்ண வில்லை மறப்பரிய மனையாள்மாட் டவர வர்க்கு மதிப்பிருக்கும் அன்பிருக்கும் அதனா லென்ன? 6 கொண்டவன்பால், தன்னோடு பிறந்த வன்பால் குலமங்கை செலுத்திவரும் அன்பி னுக்குள் கண்டறியும் இருதன்மை இருத்தல் போலக் கடைப்பிடித்து நடப்பதற்குச் சிறந்த தாக அண்டியதன் சமயத்திற் சிறப்பு நோக்கும் அடுத்தபிற சமயத்திற் பொதுவின் நோக்கும் கொண்டொழுகல் யாவர்க்கும் கடமை என்பார் கூடாராய்ப் பகைமைகொளல் மடமை என்பார் 7 கல்லானும் செம்பானும் வடித்து வைத்த கடவுளெனும் வடிவங்கள் கண்டு வந்தே எல்லாரும் நிற்பதுபோல் நில்லா ராகி இணைந்துமனம் உவந்துருகிக் கசிந்து நின்று சொல்லாலும், பொருளாலும், துய்க்கும் இன்பப் பயனாலும் சொலற்கரிய பெருமைத் தாய நல்லோர்தம் அருண்மொழிகள் நிறைந்த நூலுள் நாயகனைக் கண்டுவப்பார் அருளின் செல்வர் 8 கற்கோவில் வலம்வந்து சிலையில் நிற்கும் கடவுளரை வணங்கலினும் அடியார் செய்த சொற்கோவில் வலம்வந்து, தடையே யின்றித் துணிந்தெழுந்து கருவறைக்குட் புகுந்து சென்று முற்காணுஞ் செம்பொருளைக் கண்டு கண்டு மூழ்குவதில் வணங்குவதில் இன்பங் கண்டார்; தெற்கோதும் திருமுறையுட் பேறு பெற்ற திருவுடையார் அருளுடையார் இவரே யாவர் 9 கடையிரவு கழிந்தபினர் விழிம லர்ந்து கனிவுதரும் வாசகத்தை விரித்து நெஞ்சில் இடையறவு படாவகையில் ஓதி ஓதி இறைவனடி நினைந்துருகி மகிழ்ந்து பின்னர் மடலெழுதும் மெய்யன்பர் மகிழு மாறு மறவாமல் அவ்வவர்க்கும் ஏற்ற பாங்கில் விடையெழுதும் இயல்பதனைக் கடமை யாக விடையுடையன் அடிபரவும் தொழும்பர் கொண்டார் 10 ஒருபாதி உமையவட்குத் தனது மெய்யில் இடமளித்த ஒருவனடி உளத்திற் கொண்டார், ஒருபாதி தமதுளத்திற் செந்த மிழ்க்கும் ஒருபாதி சிவநெறிக்கும் இடம ளித்தார், இருவேறு மொழியுணர்ந்தும் உளத்திற் றோய்ந்த இனியதமிழ் மொழியாலே தொழுது வந்தார்; திருவாத வூரர்மொழி மூவர் ஓதும் திருமொழிகள் இவர்நெஞ்கை யுருக்கி நிற்கும் 11 வான்கலந்த மாணிக்க வாச கர்தாம் வாய்மலர்ந்து பொழிந்ததிரு வாச கத்தைத் தாங்கலந்து பாடுங்காற் செங்க ரும்பின் செழுஞ்சாறு வடித்தெடுத்துக் குறிஞ்சி தந்த தேன்கலந்து பால்கலந்து முற்றி நின்ற தீங்கனியின் சுவைகலந்து பிறந்து வந்த ஊன்கலந்தும் உயிர்கலந்தும் பருகுங் காலை உவட்டாமல் இனிப்பதுபோல் இன்பங் காண்பார் 12 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் குளிர்மரங்கள் சூழுமகி பாலன் பட்டி மேடையிலும் ஓடையிலும் மற்று முள்ள வீதியிலும் தமையொத்த சிறுவ ரோடும் ஆடையிலே இவருளத்தைக் கவர்ந்து கொண்ட அரியதமிழ் மொழிதந்த நீதி நூலின் பாடலினாற் பெறுமின்பம் தழைத்தெ ழுந்து படர்ந்துவர மெய்யுணர்வாய் மிளிரப் பெற்றார் 13 கொலைகளவு பொய்யொடுகள் காமம் என்ற குற்றங்கள் தவிர்த்துமனம் தூய்மை யாக்கி, மலையளவு துயர்வரினும் நெறியில் நின்று மாறாது மற்றவர்க்குத் துயர்த ராது நலமருவு செயல்செய்யும் அன்பு பூண்டும் நம்முயிர்போற் பிறவுயிரை மதித்தல் செய்தும் உலகுபுகழ் மாந்தரென வாழ்தல் ஒன்றே உயர்சமயம் அச்சமய நெறியில் நின்றார் 14 6 மயக்குறாக் காதை மெய்ம்மைச் சமயம் விழைபவர் ஆயினும் பொய்ம்மைச் சமயப் போர்வையுள் நடக்கும் கயமைச் செயலைக் கடிவதிற் சற்றும் தயக்கங் காட்டார்;தமிழ்மணி வாழ்வில் நடந்த சமயப் போலியின் நடிப்பும் 5 தொடர்ந்திவர் கொடுத்த படிப்புஞ் சொல்லுவாம்; காற்றும் வெளிச்சமும் கலந்து விரவும் கீற்றுக் கொட்டகைக் கீழமர்ந் திருந்து பயிலுதல் எழுதுதல் பண்டிதர் வழக்கம்; துயிலெழுந் தொருநாள் தொன்னூல் ஒன்றைப் 10 படித்துச் சுவைத்துப் பழநூ லதனுள் தொடுத்த விழியொடு தோய்ந்தினி திருக்க, குளிர்புன லாடித் தளிர்புரை மேனியில் ஒளிபெறு திருநீ றொருங்குறப் பூசி உருத்தி ராக்க உயர்வடம் பூண்டு 15 பருத்துயர் மேனியர் பத்தர் ஒருவர் முருகா முருகாஎன் றுருகும் வாயர் அருகே வந்தவர் அன்பின் வடிவாய் முகிழ்த்த விழியொடு முருகா எனக்கை குவித்து நின்றனர் கோலம் பொலிவுற; 20 கோலப் பொலிவாற் சீலத் தவர்போற் காணப் படுமவர் காட்சியின் மயங்கிப் பண்டிதர் எழுந்து பணிவுடன் வணங்கி அண்டர் போல்வரும் அடியீர் இருக்கையில் அமர்ந்தருள் செய்கஎன் றன்புரை கூறியும் 25 அமர்ந்திலர், அடியவர் அன்பின் பெருக்கால் தம்முகம் மாறிக் கண்புனல் மல்கி மும்முறை வாயால் முருகா என்றனர்; பத்தியின் பெருக்கைப் பார்த்த புலவர் உத்தியால் இயல்பை உணரா ராகிப் 30 பொய்த்தவ வேட முத்த நாதப் பத்தனைக் கண்ட மெய்ப்பொரு ளார்போல் தாமும் மாறித் தம்முளம் நெகிழ்ந்து, பெரியோர் இயல்பின் பெற்றிதான் என்னே! அருளாற் பெரியீர் அமர்ந்தினி திருந்து 35 கட்டளை யிடுக என்று கழறிப் பெட்டவர் பன்முறை வேண்டிய பின்னர் உற்றவண் அமர்ந்தனர் உறுதவ வேடர்; எத்தகு பத்தி! எத்தகு காட்சி! ஆ! ஆ! முருகா அருளல் வேண்டும் 40 என்ன மணியார் பன்னிய பின்னர்த் தென்முகக் கடவுள் சின்முத் திரைபோற் கையை அமைத்துக் காட்டி யதன்பின் பைய வாயாற் பத்தர் பேசினர்; முருகா முருகா கருதிய பயனைப் 45 பெறுவான் வந்திலன்; பேணிய அன்பனைத் தரிசித்து வாவெனத் தணிகை முருகன் கட்டளை யிட்டனன்; கந்தன் ஆணையைத் தலைமேற் கொண்டிவன்1 வருகை தந்தனன்; எனுமுரை கேட்ட இப்பெரும் புலவர் 50 நனிமிக மகிழ்ந்து நல்லீர் உலகில் எத்தனை எத்தனை அன்பர் இருக்கப் பத்தியில் எளியேன் பக்கல் வருகென முருகன் பணித்தது முன்னைப் பிறவியின் வருபெரும் பேறே! வாய்மலர்ந் தின்னும் 55 உத்தர வாக வேண்டுமென் றோதினர்; சற்றுப் பொறுக்க எனக்கை காட்டி முற்றிய வேடர் மோனங் கொண்டுபின் முருகா முருகா என்று மொழிந்தனர், அருளுக முருகா அருளுக எனக்கனிந் 60 திருமொழிப் புலவர் இயம்பக் கேட்டுக் கடம்பன் கட்டளை கதிர்செலும் மாலை வெளியிடப் படுமென விளம்பினர் பத்தர்; பகலுண வுண்டு பத்தர் உறங்கி மிகமகிழ்ந் தெழுந்து மேலவர் கோலம் 65 தாங்கி வந்து தரிசனம் தந்தனர் ஆங்கவர் வருங்கால் ஓங்குயர் வடமொழி பாங்குடன் அறிந்தவர், பண்டித மணியுடன் கலந்துரை யாடி யிருத்தலைக் கண்டே உளந்திறந் தாட அவர்இடை யூறாய் 70 இருத்தலைக் குறிப்பால் உணர்த்தினர் பத்தர்; வடமொழி யாளர் படர்ந்ததற் பின்னர் தடநுதல் நீற்றினர் தனித்துப் பேசினர்; முருகா முருகா முகவை நகருக் கருகே அமைந்த சிற்றூர் இவனூர்; 75 நெடுநா ளாக இவன்மனம் நினைந்து படருமோர் ஆசை பற்றி யுள்ளான்; இரந்து பெறாமல் இருக்கும் பொருளால் உரங்கொளும் வேலற் கொருபெருங் கோவில் எழுப்பும் ஆசையால் இருந்தஐ யாயிரம் 80 முழுக்கத் தீர்ந்தும் முற்றுப் பெற்றிலாச் செயலால் வருந்திச் சேவற் கொடியோன் செயலே யாக எனஇவன் நினைந்து முருகன் தலைமேற் பொறுப்பை ஏற்றி வரும்நாள் ஒருநாள் வடிவேல் முருகன் 85 கனவில் தோன்றிக் கவலை கொள்ளேல் எனக்கோர் ஆலயம் எடுக்க நினைந்தனை மனத்தெழும் ஆசைக்கு மற்றவ ரிடத்தே இரந்து பொருள்பெறல் இழுக்கென எண்ணினை உறுதிப் பாட்டினை உளத்தாற் போற்றினேன்; 90 உன்போல் அன்பன் ஒருவன் ஆங்குளன் அன்பன் அவன்பொருள் உன்பொரு ளாகும் வேறென நினைத்தல் வேண்டா, நாளையே 1சேறி மகிபால புரிக்கெனச் செப்பிக் கதிரேச அன்பனைக் கண்டென் கட்டளை 95 இதுவெனக் கூறு; புதுவகை அன்பால் ஐயா யிரமவன் அளிப்பான் நின்னிடம் மெய்யான் அவன்தரும் ஐயா யிரமும் பெற்று வந்து முற்றா திருக்கும் நற்றிருப் பணியை முற்றுறச் செய்க 100 கட்டளை யிதனைக் கந்தன் அருளினன் ஆங்கவன் கட்டளை தாங்கி வந்ததை ஈங்குய்ப் பதுவே இவன்கட னாகும் எனுமொழி இயம்ப, இருமொழிப் புலவர் நனிமிக மகிழ்ந்து பனிவிழி ததும்ப 105 மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைம்மலர் குவித்து முருகா நின்பெருங் கருணைதான் என்னே! உருகா நின்றுளம் உன்பெயர் ஓதிப் பெருகும் அடியவர் எத்தனை பேருளர்! அவரெலாம் இருக்க அடியேன் மாட்டுக் 110 கட்டளை யிட்ட கருணையே கருணை! கிட்டரும் புண்ணியச் செயல்செயக் கிளத்தி அடியனை ஆளா ஆக்கிய அருட்குப் படிமிசை எங்ஙனம் பாராட் டுரைப்பேன்? என்ற மொஷீயால் எழுந்தருள் பத்தர்க் 115 கிரட்டிப் பாக எழுந்தது நம்பகம்; மீண்டுங் கூறினர்; ‘ஆண்டவன் முருகன் ஈண்டருள் ஆணையை ஏற்று முடிப்பேன்; எஹீயேன் எனைஜிம் பொருட்டென எண்தி அஹீயீர் கனஜீடை அருஹீய கந்தன் 120 கட்டளை பற்றிஎன் கனஜீலும் தோன்றிச் சுட்டி யருளுதல் ஆகா தோ?அம் முருகன் அருட்கியான் முழுத்தக விலனோ? நெடுந்தொலை வென்றும் நினையா னாகிப் படர்ந்திவண் உமைவரப் பணித்த முருகன் 125 எளியேன் கனவிலும் வாரா திருப்பனோ? அளியன் அவன்தான் அடியேன் கனவிடை இற்றை இரவில் எழுந்தருள் செய்குவன் மற்றைநாள் விடியல் கட்டளை நிறைவுறச் செய்குவன்என்று செப்பின ராக; 130 உருகும் புலவர் உரையால் அவர்க்கு பெருகும் நம்பிக்கை பிறந்தது; பின்னர் முருகன் அடியவர் முகத்தில் ஐயமும் மறுகித் தோன்றி மறைய, முருகா அவ்வணம் ஆகுக எனுமொழி அருளிக் 135 கவ்விய இரவு கழிந்தபின் மறுநாள் தண்புன லாடி வெண்பொடி பூசி முன்பொலி வேடம் மும்மடங் காகப் புனைந்து வந்தஅப் புண்ணியர் முருகா முருகா என்று மொழிந்துகை கூப்பி 140 இருந்தனர்; இருந்தவர் வரவெதிர் நோக்கிப் புனலும் ஆடிப் பொடியும் ஆடி முனமுறு நிலையினும் முகப்பொலி வுடனே புலவர் இருத்தலைப் புண்ணியர் நோக்கி அலைவுறும் ஐயம் அகன்றன ராகி 145 உருகி யெழுந்த உள்ளத் தன்பின் முருகிய நிலைபோல் முருகா என்றனர்; புலவர் மணியும் புன்னகை பூத்தே, அலகிலா விளையாட் டாறு முகனாம் முருகன் திருவருட் பெருமைதான் என்னே! 150 வேண்டுவார் வேண்டுவ தீவதோ டன்றி மும்மடங் குதவுவான் வள்ளல் முருகனென் றிம்மொழி கூறி; அம்மநும் பத்தியால் எளியேன் எனக்கும் எழில்மிகும் முருகன் அளிய னாகி அருளினன் காட்சி 155 எத்தகு கோலம்! எத்தகு காட்சி! ஆ ஆ! அளப்பரும் பேரொளிப் பிழம்பு நீல மயிலில் நேரிழை யாருடன் கோலக் காட்சி கொடுத்தருள் புரிந்தனன் இரவிடைக் கண்ட காட்சிதான் என்னே! 160 முருகன் அருளே அருளென மொழிந்தனர்; கேட்ட துறவி, வேட்டது பெற்றோம் போட்ட திட்டமும் பொய்த்தில தாகி ஐயா யிரமும் மெய்யாம் என்று செய்யான் அடிகளைச் சிந்தை செய்தனர்; 165 முருகனார் மகிழ்வை முகத்தான் உணர்ந்த திருவினார் சிலசொல் செப்பினர் ஐய, உள்ளிய தொகையோ ஓரைந் தாயிரம் வள்ளல் முருகன் காட்டிய வழியால் மும்மடங் காகி நம்மிடம் வருமாம் 170 அம்முதல் பெற்றதும் அதிலொரு பங்கை நீவிர் விழைந்த கோவில் எழுப்பவும் மேவும் முருகனை நாளும் வழிபட மற்றொரு பங்கை வழங்கவும் பணித்தனன்; எஞ்சிய ஐந்தை இவண்எழும் நும்போல் 175 வஞ்சமில் லன்பர் வருவ ராயின் அவர்தமக் குதவ அருளினன்;அதுகேட் டுவகை மீக்கூர்ந் தொள்வேல் முருகா அருட்பெருங் கடலே ஆண்டவா நின்னுளக் கருத்தினை முடிக்குங் கடப்பா டுடையேன் 180 ஆயினும் அடியேன் அத்தனைப் பெரும்பொருள் ஈயும் நிலையில் இன்றிலேன் நின்றன் ஆணையை எவ்வணம் ஆற்றுவேன்? v‹d¡ காணும் வஷீஜிங் காட்டினன் முருகன்’ என்ற மொஷீகேட் டீடிலா மகிழ்ஜீல் 185 ஒன்றிய உளத்தால் உறுதவ வேடர் ‘வடிவேல் முருகா வாய்த்தபின் ஆணையை அடியர் ஹிவர்க்கும் அருஹீனை என்னே! என்றுபா ராட்டி இருமொழிப் புலவரின் ஒன்றும் முகத்தை உற்று நோக்கி 190 முழுமுதற் பொருளாம் முருகன் பொருள்பெற வழிசொலா திருப்பனோ? அவன் சொலும் வஷீயை அடியன் ஹிவனுக் கறைதல் ஒல்லுமோ? என்னலும், புலவர் எழில்வேல் முருகன் சொன்ன மொழிகள் தூய மறையெனப் 195 போற்றத் தக்கன; பொருந்திய நெஞ்சம் ஏற்றுளோம் ஆதலின் இசைத்தநல் வழியை நும்மிடம் புகல இம்மியுந் தடையிலை என்று கூறி எதிர்வெளி நிலத்தில் நின்ற வெள்வேல் மரத்தினைச் சுட்ட, 200 ஒன்றும் தோன்றா உளத்துட னிருந்த சாமியை நோக்கிச் சாற்றினர் புலவர்; வெள்வேல் முருகற்கு மிகவும் உகந்தது வள்ளல் கைவேல் வெள்வே லன்றோ? இம்மரம் அதன்பேர் ஏற்றுள தாதலின் 205 அம்மரம் விரும்பினன், அதனைக் காட்டி அதன்கீழ்த் திசையில் ஆறு முழத்தில் பதமுற ஆழந் தோண்டிப் பார்ப்பின் பசும்பொன் அங்கே பதுங்கிக் கிடக்கும் எடுத்ததைத் திருப்பணி இயற்றத் தருகவென் 210 றருளிச் செய்தனன் ஆறு முகத்தான் என்றதும் மகிழ்ச்சி ஏகிய முகத்தில் துன்றும் வருத்தந் தோன்ற இருந்த துறவியை நோக்கித் தொழுதகு பெரியீர்! அருளிய ஆணையை ஐயுறல் வேண்டா 215 கந்தன் நமக்கருள் கட்டளை பொய்க்குமா? இந்தப் பணியில் இன்னுமேன் தாழ்வு? தொடுகுஷீ அமைத்தல் தொண்டர் நமக்கே ஹிடுபதி யாகும் ஆதஸீன் ஐய, 220 ஊரார் அரவம் ஒடுங்கிய நின்னர் ஈராறு கையன் ஹிட்ட பதியை ஹின்றிராப் பொழுதே ஹிருவருந் தொடங்குதும்’ என்றனர் புலவர்; ஹிரங்கிய குரஸீல் வந்தவர் ணிருவாய் மலர்ந்தனர் ‘செய்யலாம் 225 தொடுகுஷீ யதனுட் படுபொருள் ஒருகால் அடைதல் ஹியலா தாகினென் செய்வோம்! என்னுமோர் ஐயம் எழுப்பலும் ஆஆ! இன்ன வகையில் எண்ணுதல் தகுமா? நெடுந்தொலை ஜீருந்ணிவ் ஜீடந்தவீல் வரஉமைக் 230 கடம்பன் அருஹீனன்; ஹிருவர் கனஜீலும் மழீ;ல்லீசை ஏறி மனைஜீ மாரொடும் அழீல்வேல் முருகன் காட்ஞி யருஹீனன்; பொன்வீன் புதையல் பொருந்தும் ஹிடமும் சொன்னவன் அவனே, சொலும்அம் மொஷீழீல் 235 ஐயம் உறுதல் அடாத பாதகம்; ஐய நும்போல் அறியாத் தனத்தால் மெய்யன் மொஷீழீல் ஐயம் உற்றுநான் ஆண்டவா முருகா அக்குஷீ யதனைத் தோண்டிய நின்னர்ச் சொலும்பொன் ஹிலையேல் 240 யாமென் செய்குவோம்? என்று வினவ, பூமென் முகத்திற் புன்னகை அரும்பி, ஆறு முகத்தான் சீறுத லின்றித் தேறுதல் மொழியுஞ் செப்பினன்; அந்தக் கலியுக வரதன் கருணைதான் என்னென 245 மலியும் உவகை மனத்தன் ஆகினேன்; எனுமொழி கேட்டவர் இக்குழி தோண்டுதல் இன்றியே அப்பொருள் எளிதிற் கிடைக்கலாம் அன்றித் தோண்டினும் அப்பொருள் கிடைக்கலாம் என்று நினைந்துளம் ஆறுதல் எய்தி, 250 வழிபடும் முருகன் வழிதரா திருப்பனோ? வழியென எதனை வாய்மலர்ந் தருளினன்? எளியன் இவனுக்கியம்புக என்றனர்; அடியவர் அவாவின் விரைவினைக் கண்டு, பொடிசேர் மேனியீர் புதையற் பொருள் பெற 255 ஆறு முழத்தின் ஆழம் அமையச் சோருத லின்றித் தோண்டுக, அதனுட் செம்பொன் இலதேல் செய்தஅக் குழியுள் அன்பின் வந்த அடியவன் அவனைச் சீவன் முத்தி சேர்பயன் என்று 260 யாவரும் போற்ற ஆவியோ டிறக்கி முறையாற் சமாதி முற்றுறக் கட்டி இறையோற் கெழுப்பும் கோவிலும் எடுத்து நினது கையால் நித்திய பூசையும் இயற்றுக என்றோர் ஆணை யிட்டனன்; 265 முருகன் ஆணையை முடிமிசைக் கொண்டு கருதி நடக்குங் கடப்பா டுடையேன்; ஐய நீவிரும் ஐயுறல் விடுத்தும் தளர்ந்து பின் வாங்குதல் தவிர்த்தும் இதனை அங்கீ கரித்துடன் அருளுதல் வேண்டும் 270 இங்ஙனம் புலவர் இசைத்தது கேட்டுத் துங்க முகமும் துவண்டது; வாயும் மலரா திருந்தது; மற்றவர் நிலையை நோக்கிய புலவர், நோன்பிற் பெரியீர்! ஆக்கிய தவப்பயன் வாய்த்தது போலும், 275 ஒள்வேல் முருகன் உகந்த வெள்வேல், தலத்தின் விருட்சம் ஆகித் தழைக்க அந் நிலத்திடைக் கோவிலும் நிமிர்ந்தெழு மாகின் அளப்பில் தவமே! ஆர்க்கது வாய்க்கும்? மலைத்தல் தவிர்க மற்றுண வுண்டு 280 மாலைப் பொழுதில் வந்தருள் புரிக; என்றதும் சாமிகள் எழுந்து நடந்தனர், மாலை வந்தது மாதவர் வந்திலர், கந்தன் பெயரால் கயிறு திரித்தவர் அந்தர்த் தியானம் ஆகினர் அன்றே! 285 7 வழக்காடு காதை கலையறி வார்ந்த நெஞ்சிற் கருவுறும் கவிதை எண்ணம், புலமையிற் செறிந்த பாடல் புதல்வனாய் வந்து தோன்றும், கலையது கருக்கொள் ளாராய்க் கருவினை உயிர்க்க எண்ணின் நலமுறும் மகவா தோன்றும்? eif¥g‹nwh tªJ njh‹W«! 1 நிறைபுலம் செழிக்கப் பெற்றோர் நிலையுறும் பாடல் யாக்கும் முறைகளும் தெரிதல் வேண்டும் முற்றிய புலமை என்றால் நெறிபிற ழாத பாடல் நெய்திடுந் திறமை வேண்டும், நெறிபெறுந் தமிழ்த் தொண் டாக நினைத்திதைச் செய்க என்பார், 2 பிழைபடப் பாடல் யாத்தல் பீடுயர் தமிழ்மொ ழிக்கே அழிவிலாப் பழியை ஆக்கும் ஆதலின் நண்ப ரேனும் வழுவுறும் பாடலொ ன்றை வடிப்பினும் வெகுண்டு ரைப்பார் இழிவுறும் செயலைச் செய்ய 3 இனியும்நீர் முயலேல் என்பார். பிறதுறை வல்லா ராகப் பிறங்குதல் உடையார் இந்தத் துறையிலும் இறங்கி நின்று தூய்மையைக் கலக்கு கின்றார்; நிறைவுறுங் கைகால் இல்லார் நெடும்புனல் நீந்த வந்தால் கரைதனை அடைதல் உண்டோ? கையறு நிலைதான் உண்டு. 4 முற்றுறக் கல்லார் தாமும் முயல்கிறார் பாடல் யாக்க, வெற்றரைத் தட்டிக் கேட்க வீறுகொள் புலவ ரில்லை மற்றைநாள் வாழ்வைச் சற்றும் மனத்தினுட் கொள்ளா ராகிப் புற்றுறை ஈயல் போலப் புறப்படல் காணு கின்றோம் 5 (அறுசீர் விருத்தம்-வேறு) முற்றாத கல்வி நலம், முழுமைபெறாக் கவிதைவளம், முனைப்பில் நின்று வெற்றாக ஆர்ப்பரிக்கும் பேச்சுவளம், வீமகவி என்ற பேரும் பெற்றார்தாம் தனவணிகர் நாட்டகத்துப் பெருங்கவிஎன் றெடுத்துக் கூறிச் சுற்றாத இடமில்லை, அப்புலவர் சுடர்மணிக்கு நண்ப ரானார் 6 கலைமகளின் அருள்பெற்ற கவிஞன்யான் கண்ணசைத்தால் என்முன் நிற்பாள்; சொலுமொழிகள் கேட்டேவல் செய்திடுவாள்; சொன்னதுதான் பலிக்கச் செய்வாள்; புலவனென துளமகிழப் பொருள்தந்தால் பூரித்துப் பாடல் சொல்வேன் அலைமகளின் அருள்கிடைக்கும் தராவிடினோ அறம்பாடித் தொலைப்பேன் என்பார் 7 சொன்னவெலாம் உண்மையென நம்பிநின்று தொண்டுசெயல் தொன்று தொட்டு மன்னிவரும் இயல்பன்றோ? அவ்வியல்பு மாறாத செல்வர் எல்லாம் பன்னிவரும் வீமகவி சொல்லெல்லாம் பலிக்குமென அஞ்சி அஞ்சி என்னபொருள் கேட்டாலும் அவர்மகிழ இலைஎன்னா தீந்து வந்தார் 8 பொருள்பெற்று நலம்பெற்றுப் புவியெங்கும் புகழ்பெற்றுக் கலையின் அன்னை அருள்பெற்றேன் எனவுரைக்கும் வீமகவி அங்கங்குத் தலபு ராணம் மருள்பெற்ற மக்களிடம் பாடிவரு மானங்கள் பெருக்கி வந்தார்; இருளுற்ற உலகத்தில் விழியற்றோன் ஏறுநடை போடு மாபோல்! 9 தனக்குரிய தளையன்றிப் பிறதளைகள் தட்டாத வெண்பா யாப்பால் மனக்குரிய நீதிவழி எனும்நூலை வடித்தெடுத்துத் தேவ கோட்டைத் தனப்பெரியார் இரட்டித்த அருசோம சுந்தரனார்1 தலைமை ஏற்க நினைத்தபடி அரங்கேற்ற வீமகவி நிகழ்ச்சியினை அமைத்தி ருந்தார். 10 அரங்கேறும் அழைப் பேற்ற நம்மணியும் அங்கிருந்தார்; பாடல் கேட்டுத் தரங்கூற வல்லஇவர் அதுகேட்டுத் தலைவலியைப் பொறுத்துக் கொண்டார்; இரங்காது நிற்பாரோ நற்புலவர்? என்செய்வ தெனநி னைந்தே அரங்கேறி முடிகாறும் அமைதியுடன் அவ்வவையில் வீற்றிருந்தார். 11 வீமகவி என்பாரைத் தனித்தழைத்து நீதிவழி வெண்பா நூலின் தாமறியும் வழுவனைத்தும் எடுத்துரைத்துத் தமிழுக்குத் தீங்கு செய்யுங் காமமினி வேண்டற்க இத்தொழிலைக் கைவிடுக என்று ரைக்க, ஊமையின்முன் மூக்கதனை வருடுங்கால் உறுசினத்தை அவர்தாம் பெற்றார். 12 திருந்தமனங் கொள்ளாராய்த் தேவையிலாச் சினமுற்று, நீதி நூலிற் பொருந்தவழி புகலாத வீமகவி புழுக்கத்திற் கடிமை யானார்; பெருந்திறமை கொண்டிலங்கும் நன்மணியைப் பெருஞ்சொற்கள் பேசி நின்று வருந்தும் வணம் பழிதூற்றத் தலைப்பட்டார்; வருங்காற்றில் மணியார் கேட்டார். 13 நன்செய்நிலத் துறுகளைகள் வளர்வதனால் நலமொன்றும் வாய்ப்ப தில்லை; புன்கவிகள் வளர்வதனால் நற்றமிழ்க்குப் புகழொன்றும் வாய்ப்ப தில்லை; பின்பதனாற் கேடுகள்தாம் சூழுமெனப் பெரும்புலவர் நினைந்தா ராகிச் சின்மொழிகள் மிடைந்ததல புராணத்தின் சீர்கேட்டை விளக்கி விட்டார். 14 மேடைகளில் துணிந்தேறி முழக்கிவரும் வீமகவி பேச்சிற் காணும் சோடைகளை இதழ்களிலே எடுத்தெழுதிச் சொத்தையெனச் சுட்டிக்காட்டப் பாடுவதைக் கண்டஞ்சி வந்தோரும் பதரிதுவென் றுணர்ந்து கொண்டார்; கூடிவருஞ் செல்வமுடன் செல்வாக்குங் குறைந்தனவே வீம ருக்கு. 15 என்கவியில் என்பேச்சில் குறைதேடி எழுதியதால் நாடி வந்த என்வருவாய் நன்மானம் இழந்தேனென் றொருவழக்குத் தொடர்ந்தா ராகத் தென்மொழியும் ஆங்கிலமுந் தேர்ந்துணர்ந்த வழக்குரைஞர் யாரோ என்று நன்மணியார் தஞ்சார்பில் வழக்காடும் நல்லவரைத் தேடி வந்தார். 16 நற்றமிழில் வல்லவராய் வழக்குரைக்கும் நாவலராய்ச் சிங்கம் என்று பற்றுடனே சொலநிற்கும் பசுமலையார் பாரதியார் இவர்க்கு வந்தார்; சொற்றவறும் வீமகவி இடுவழக்கில் தோற்றோடச் செய்து விட்டார்; அற்றைமுதல் இவ்விருவர் 1நண்பானார் அந்நண்பர் 2பகைவ ரானார். 17 8 சொல்வல்ல காதை இலக்கியங்கள் பயிலாமல், இலக்க ணத்தின் இயல்பொன்றும் அறியாமல், நுனிப்புல் மேய்ந்து சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து சொலுமுறையாற் சொல்லாமல், முழக்க மிட்டுக் கலக்கிவரும் பேச்சாளர் இற்றை நாளில் கணக்கிலராய்ப் பெருகிவரல் காணு கின்றோம்; இலக்கவர்க்குப் பொருள்வருவாய் ஒன்றே யன்றி இலக்கியத்தின் வளர்ச்சியன்று; யாது செய்வோம்? 1 பழுதறநூல் பயில்வார்பின் அதனுள் தோய்ந்து பயன்பெறுவார் இன்புறுவார் சிந்தித் தாய்ந்து முழுமதியாற் பகுத்துணர்ந்து முடிபு காண்பார் மொழியுங்கால் நிரல்படுத்தி அவையில் நின்று வழுவகல நன்மொழியாற் கேட்போர் நெஞ்சம் மகிழ்ந்துகொள எடுத்துரைப்பார் அற்றை நாளில்; தொழுதகையார் பெறுமின்பம் பிறரும் பெற்றுத் துய்ப்பதையே காமுறுதல் தொன்மைக் கொள்கை. 2 தென்மொழியும் வடமொழியும் தேர்ந்த நெஞ்சர்; தெளிவுபெற இருமொழியின் நூல்க ளெல்லாம் அன்புறவே கற்றுணர்ந்து சுவைக்குஞ் செல்வர்; ஆய்ந்தறியும் கூர்மதியர்; தெளிந்த சொல்லர்; தென்பொதியத் தென்றலென மெல்லப் பேசித் தெரிந்தவையின் நிலைக்கேற்பக் கொள்ளும் வண்ணம் சின்மொழியால் விளக்கிடுவார் மகிழவைப்பார் செப்பரிய திறத்ததுவாம் மணியார் பேச்சு! 3 நூலுக்குள் அவர்நுழைந்து திளைத்து வந்து நுவலுங்காற் சொல்லுக்குச் சொல்லி னிக்கும் பாலுக்குள் மறைந்திருக்கும் நெய்யைப் போலப் பாட்டுக்குட் புதைந்திருக்கும் நயங்க ளெல்லாம் மேலுக்கு வந்தின்பம் நல்கும் வண்ணம் மேடையிலே சொன்மழையைப் பொழிந்தி ருப்பார் 1தாலுக்குள் தமிழ்எழிலின் நடனங் கண்டு தமைமறந்து செவிமடுப்பர் அவையோர் நன்றே. 4 பல்வரிசை யில்லாத வாய்ம லர்ந்து பாட்டுரைத்துப் பொருளுரைத்து நயமு ரைக்கும் சொல்வரிசை, நூலுக்குள் தோய்ந்து தோய்ந்து சுடர்விடும்நற் றமிழ்ப்புலமைப் பெருக்கைக் காட்டும்; சொல்லியநல் வாயிதழில் தவழ்ந்து மின்னித் தொடர்ந்திருக்கும் புன்னகைதான், பாட்ட ணங்கின் மெல்லியநல் லிதழ்சுவைத்துச் சுவைத்துக் கண்ட மேலான இன்பத்தின் களிப்பைக் காட்டும். 5 சிரிப்பிருக்கும் அவர்வாயில் பேசுங் காலை சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்மு கத்தில்; விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியி ரண்டில்; விரிநெற்றி பொலிவுபெற நீறி ருக்கும்; பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்தி ருக்கும்; பளபளக்கும் அக்கழியில் பூணி ருக்கும்; விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்தி ருப்போர் விழிகளுக்குள் வியப்பிருக்கும் களிப்பி ருக்கும். 6 பொன்விசிறி மடிப்பொன்று தோளின் மீது புரண்டிருக்கும்; வடமொழியும் பயின்றா ரேனும் மின்முகிலிற் பொழியுங்கால் அயல்மொ ழிச்சொல் மேவாத தமிழிருக்கும்; பிறர்க ருத்தை முன்னியல்பின் எள்ளலொடு மறுக்குங் காலை முனைமழுங்காக் கூர்ப்பிருக்கும்; இனித மர்ந்து நன்மணியார் 1நிற்காது பேசு கின்ற நாவன்மை கண்டுலகம் போற்றி நிற்கும். 7 தங்குதடை யின்றியவர் பேசுங் காட்சி தமிழ்பயிலும் அந்நாளிற் கண்ட துண்டு பொங்குநரை முதுமையொடு பெற்ற பின்பும் புதுமையுடன் பசுமையுடன் எமது ளத்தில் தங்கிஎமை மகிழ்வுறுத்தும் வழியுங் காட்டும்; தணியாத தமிழ்க்காதல் ஊட்டி நிற்கும்; சங்கத்துப் பாடலுக்கு நயங்கள் சொல்வார் அடடாஅச் சான்றோர்போல் யாரு ரைப்பார்? 8 எப்பொருளும் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கார் எனினுமவர் சங்கத்துப் பாடல் என்றால் ஒப்பெதுவும் இலைஎன்ன உவகை கொள்வார்; உள்ளூறி வருமொழியாற் பொழிந்து நிற்பார்; எப்பொருளும் கல்லாரும் விளங்கிக் கொள்ள எளிதிலதை விளக்குவதை வியவார் யாரே? அப்பெருநூ லவற்றிடையே அகப்பொ ருட்பா அரங்கமர்ந்து கொடுப்பதிலே அவரே ஒப்பார். 9 கேட்டாரை வயப்படுத்தி மகிழ வைத்துக் கேளாரும் விழைந்துவர மொழியுஞ் சொல்லர்; பாட்டாரும் நாநலத்தால் வகைப்ப டுத்துப் பயன்விளைய முறைப்படுத்து விளக்குஞ் சொல்லர்; ஏட்டாலும் பேச்சாலும் மறுத்து ரைக்க இயலாத படியுரைக்கும் வெல்லுஞ் சொல்லர்; நாட்டாரை விரைந்து தொழில் கேட்கச் செய்யும் நகரத்தார் குலத்துதித்த இனிய சொல்லர். 10 நாவசையும் மணியொலியைக் கேளா ஊர்கள் நமதுதமிழ் நாட்டிலிலை; கரையை நோக்கித் தாவலைகள் படர்ந்துவருங் கடல்க டந்தும் தமிழ்மணியின் ஓசையது கேட்ட துண்டு; பாவமுது படைக்குமிசை செவிம டுத்தார் பாராட்டிப் பாராட்டி அழைப்ப துண்டு; கோவலர் வாய்க் குழல்போலக் கேட்டார் நெஞ்சைக் குளிர்விக்கும் இயல்பிற்றே சொல்லின் வன்மை. 11 கதிரேசர் எனும்பெயரைச் சுருக்க மாகக் கதிஎன்று கூறுவது வழக்க மாகும் எதிரேதும் இல்லாத சொல்லின் செல்வர் எழிலொழுகுந் தனிநடையர் ரா. பி. சேது மதிசேரும் பிள்ளையவர் பண்டி தர்க்கு மனமுவந்தே பாராட்டு வழங்கும் போது கதிரேச மாமணியார் தமிழ்மொ ழிக்குக் கதியாவார் எனமகிழ நயமு ரைத்தார். 12 கனிமொழியால் நாவசைத்துப் பேசுங் காலை காப்பியத்துள் இரண்டறவே கலந்து நிற்பார்; மனமகிழும் காப்பியமே அவரா யிற்று மணிமொழியார் காப்பியத்தின் வடிவ மானார்; தனியுயர்வுக் காப்பியத்தின் அருவித் தோற்றம் தனிநடையில் சொற்பொழியும் இவர்தம் தோற்றம் எனமொழிந்தார் திரு.வி.க. முருக னுக்கு முருகுசெயும் இயல்புடையார் மேலுஞ் சொன்னார். 13 வண்டிசைக்கும் யாழோசை, குயிலின் பாட்டு, வண்ணமயில் எழிலாட்டம், அருவி வீழ்ந்து கொண்டெழுப்பும் நன்முழவு, பிறவுங் கூடிக் கொழிக்கின்ற இன்பத்தைத் தமிழில் தோய்ந்த பண்டிதரின் மணிமொழியில் நாவு திர்க்கும் பாநயத்திற் பெற்றுணர லாகு மென்று பண்டையநற் றமிழ்மொழியின் அழகு ணர்ச்சிப் பாட்டுக்குப் பொருளான பெரியார்1 சொன்னார். 14 அவையறிந்து பேசுங்கால் பொருள்வி ளங்க அளப்பரிய உவமைகளை வழங்கி நிற்பார்; சுவைபெருக இரண்டுபொருள் கொள்ளும் சொல்லைச் சொலிமகிழ்ந்து மகிழ்வளிப்பார்; அந்தப் பேச்சில் எவர்மனமும் இசைந்திருக்கும்; மறுப்பி ருக்கும்; இனிப்பிருக்கும்; எள்ளலுடன் கலந்தி ருக்கும்; அவர்பேச்சில் தமிழ்மொழியின் மணமி ருக்கும்; அவர்மூச்சில் இலக்கியத்தின் நயமி ருக்கும். 15 பாட்டுக்கு நயமுரைக்குந் திறமே யன்றிப் பழையபரி மேலழகன் உரைக்குங் கூடக் கேட்டுவக்க நயமுரைக்குந் திறமை கொண்டார்; கிளர்ச்சிதரும் இவர்பேச்சைச் சுவைத்து ணர்ந்து கூட்டெழுந்த வேட்கையினால் அரங்கந் தோறும் கொலுவிருந்து தலைமையுரை நல்கும் வண்ணம் நாட்டவர்தாம் நிரல்படவே வேண்டி நிற்பர்; நாளெல்லாம் புகழ்பரப்பும் தலைமைப் பேச்சு. 16 கதிரேசர் தலைவரெனுஞ் சொல்லைக் கேட்டால் கற்றவரும் பேசுதற்குத் தயங்கி நிற்பர்; மதிவாணர் பேசுங்கால் தவறு காணின் மறுப்புரைக்கக் கண்ணோட்டஞ் சிறிதுங் காட்டார்; அதனாலே எழுவாரை மட்டந் தட்டல் அவர்கொள்கை எனக்கருதல் வேண்டா; பேச்சில் எதுவேனுங் குறைநேரின் தமிழுக் கன்றோ இழிவுவரும் எனுங்கருத்தால் மறுப்பு ரைப்பார். 17 புலவர்தமை இகழ்ந்துரைப்பார் எவரே யாகப் பொறுமைகொளார் மறுத்திடுவார் அச்சங் கொள்ளார்; பொலிவுதரும் பதவியினால் ஓர மைச்சர் புலவர்தமை இகழ்வுரையால் எள்ளல் செய்தார்; இலகுதமிழ் ஆசிரியர், 1க.கா. என்ற இரண்டுக்கும் மேலொன்றும் அறியார் என்றார்; பலருமவண் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்; பண்டிதமா மணியுமதைப் பார்த்தி ருந்தார். 18 அமைச்சர்தரும் மதிப்புரைகள் உண்மை; ஆனால் அதற்குமேல் இவர்தெரிந்த பொருள்தான் என்ன? நமக்குலகில் கடவுளொடு காதல் என்ற நற்பொருளை விஞ்சுகிற பொருள்தான் உண்டா? தமிழ்ப்புலவர், அரசியலில் ஆங்கி லத்தில் தனிப்புலவர், இவ்வகையில் யாரும் ஒன்றே; அமைப்பிதன்மேல் அறியாதார் கூட்டத் துள்ளே அமைச்சருந்தாம் ஒருவரெனத் துணிந்து ரைத்தார் 19 பண்டிதமா மணிமொழியைக் கேட்ட மக்கள் பாராட்டிக் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்; தண்டமிழைப் பழித்தாலும் கைகள் தட்டித் தமிழ்மாந்தர் ஒலியெழுப்பி மகிழ்ந்தி ருப்பர்; விண்டவரை மறுத்துரைத்துத் தாக்கும் போதும் வேகமுடன் கைதட்டி ஆர்ப்ப ரிப்பர்; கண்டபடி கைதட்டிக் களித்தல் ஏனோ? கையிருக்குங் காரணத்தால் தட்டித் தீர்ப்பர். 20 கற்றார்க்குக் களிப்பருள அரங்கில் ஏறிக் கதிரேசர் பேசுங்கால் குழப்பஞ் செய்ய உற்றார்க்கும், பொருள்பலவும் எடுத்து வீசி உடைத்தார்க்கும் கலங்கிலராய் அவரை நோக்கி சொற்போர்க்கே யாம்1 அணியம்! வல்லீ ராயின் துணிந்தெழுக அமர்செய்வோம்; அல்லீ ரென்றால் மற்போர்க்குத் தகுதியொன்றும் இல்லேம் என்று மதிகொடுத்த உரப்பெருக்கால் உரைத்தார் அன்று 21 கனன்றெழுந்து தமையீன்ற தாய கத்தின் கால்விலங்கை உடைப்பதற்குக் கல்லு டைத்தார்; முனைத்தெழுந்து வெள்ளையரை ஓட்டு தற்கே முந்நீரில் மரக்கலத்தை ஓட்டி நின்றார்; சினந்தெழுந்து தந்நாட்டைச் சிறையின் மீட்கச் சிறைபுகுந்தார்; செக்கிழுத்தார்; தெக்க ணத்தார் மனம் விழைந்து தாய்மொழிக்குந் தொண்டு செய்தார் மானமுள்ள தமிழனுக்குத் தெரியும் நன்கு. 22 இலக்கணநூல் பதிப்பித்தார், இலக்கியங்கள் இனிதாய்ந்து தெளிந்திருந்தார், குறளை நன்கு துலக்கமுறக் கற்றுணந்தார், ஆங்கி லத்தில் தோய்ந்தெழுந்து மொழிபெயர்த்தார், பாடல் யாத்தார், குலத்தமிழர் வ.உ.சி. மனந்தி றந்து, கூர்மதியர் மணிப்புலவர் தலைமை ஏற்றால் விளக்குகிறேன் குறள்பற்றி என்றார்; என்றால் வியத்தக்க கதிரேசர் தலைமை என்னே! 23 இசைவளர்க்கும் மாநாடு, சமயக் கொள்கை எடுத்தியம்பும் மாநாடு, தமிழைக் காத்து நசைவளர்க்கும் மாநாடு, சங்க நூல்கள் நயமுரைக்கும் மாநாடு, கடல்க டந்தார் இசைவளர்க்கும் மாநாடு, புகழ்ம ணக்க எங்கெங்கு நடந்தாலும் தலைமை ஏற்கத் திசைமுழுக்க இவரைத்தான் அழைத்துச் செல்வர் திருமொழியார் தலைமைக்குத் தலைமை செய்தார். 24 òyik¡F totbkd¤ âfœªj br«kš ngh‰¿bfhS« v« ‘mUzh rydh®1 x®ehŸ fiyÄ¡f