கவியரசர் முடியரசன் படைப்புகள் 3 கவியரங்கில் முடியரசன் தமிழ் முழக்கம் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 ஆசிரியர் : முடியரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2008 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 224 = 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : இணையதளம் : www.tamilmann.in தொகுப்புரை கவியரசர் முடியரசன் கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும் என்பார் பேராசிரியர் அன்பழகன். அச்செல்வங்களை நாட்டுடைமை ஆக்கினார் தலைவர் கலைஞர். அவற்றில் மூன்றில் ஒரு பங்கே எம் தந்தையார் காலத்தில் நூல்வடிவம் பெற்றன. எஞ்சிய பெரும் பகுதி பெட்டகத்துள் கட்டுண்டு கிடந்தன. அவற்றின் சிறப்புகள் அப்போது எமக்குத் தெரியவில்லை. எந்தையும் ஏதும் கூறவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் தான் அதை உணர்ந்த நான், அச்செல்வங்களைத் தொகுத்து வெளியிட முயற்சி மேற்கொண்டேன். எனினும் அவரின் மறைவுக்கப் பின்னரே அவற்றிற்கு நூல்வடிவம் தர எம்மால் இயன்றது. அச்செல்வங்களைத் தமிழுலகிற்கு வழங்கியதன் மூலம், மகன் தந்தைக்காற்றும் கடமையை, கவின் கலைச்செல்வியாம் தமிழ் அன்னைக்கு ஆற்றும் தொண்டினை நிறைவேற்றிய மனநிறைவும் கொண்டேன். தொடர்ந்து அப்பணியை எம் வாழ்வின் இலக்காகக் கொண்டு, ஒல்லும் வகையெல்லாம் செயலாற்றி வருகின்றேன். இவ்வகையில், தந்தையின் அனைத்துப் படைப்பு களையும் ஒரே நேரத்தில் முழுத் தொகுப்பாகப் பதிப்பிக்க எண்ணியிருந்தேன். இந்நிலையில், 1999-இல் முனைவர் இளவரசு வழி, மொழிக்காவலர் கோ.இளவழகன் நட்பினைப் பெற்றேன். தமிழ்மண் பதிப்பகத்தின் முதல் வெளியீடு முடியரசன் நூல்களே. முழுத் தொகைப்பையும் தமிழ்மண் வெளியிடும் என அப்போது அவர் கூறினார். இப்போது அது கனிந்தது. முடியரசனார் படைப்புகளை முழுமையாகத் தொகுத்துத் தருமாறு அவர் கூறியதற்கிணங்க தொகுத்துத் தந்துள்ளேன். முந்தையரின் அரிய தமிழ்ச்சீர்களைத் தமிழர்க்களித்து வரும் அன்னார்க்கு என் பாராட்டு; அவ்வழி எந்தையாரின் செம்மொழிச் செல்வங்களையும் வழங்கும் அவர்க்கு என் நன்றி; தமிழ் மண்ணுக்கு என் வணக்கம். முடியரசன் .இப்பரிசிலுக்குயான்ஓர்வாணிகப்பரிசிலன்அல்லேன்........................ முற்றிய திருவின் மூவரே ஆயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழந்தவர். சலுகை போனால் போகட்டும்; என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர் வளையா முடியரசர்; வணங்கா முடியரசர்; தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க்காத ஆண்மை யாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர் அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப் போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர். தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசீயக்கவி; தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று; பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி; தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுதும் தமிழே உயிர்; கவிதையே மூச்சு. ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஓதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில். வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர். முடியரசன் நூல்கள்:- முடியரசன் கவிதைகள் - ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தாய்மொழியின் ஆட்சிக்கும் தமிழகத்தின் மீட்சிக்கும் பாடிய போர்ப்பரணிகள். மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது, காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளப் பாய்ச்சிய கூர்வேல்கள். கயமைகள் வீழ வீசிச் சுழற்றிய கைவாள்கள். காசுக்கும் கைம்மாறு பெறுதற்கும் மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டும் கெஞ்சாத தன்மான வரிகள். தமிழ் மானம் மீட்டெடுக்கப் பாடிய படைக்கலன்கள். வீழ்ந்த தமிழர் வாழ்ந்த வரலாறு மீள விழித்தெழப் பாடிய வீரக்கனல்கள். திராவிட எழுச்சிக் காலத்தில் கவியரங்கில் முடியரசன் முழங்கிய கவிமுழக்கம், முத்தமிழ்த் தோழர்க்கு முரசொலி முழக்கம்; அயலார்க்கோ இடிமுழக்கம். தாய்மொழி காப்போம் எனுமவர் தமிழ்முழக்கம். வீரத் தமிழரை வீறு கொண்டெழைத்த வேங்கை முழக்கம். திராவிடத் திருவிடத்திற்கு ஒளிதந்த ஞாயிறும் திங்களும். அரங்குகளில் ஆர்ப்பரித்த அயன்மொழிப் பாடல்களை அடக்கவந்த காவியப்பாவை. தமிழிலே இசையில்லை என்ற கூகைகளின் கூக்குரரை நெறிக்கக் கூவிய பாடுங்குயில். சிந்தை உருக்கும் தெய்வத் தமிழ்ப் பாசுரங்கள். குறள்நெறி கூறிய, தமிழ் மறை போற்றிய வள்ளுவர் கோட்டம், மனிதரைக் கண்டுகொண்டேன் என நற்சான்றோர் போற்றிய சொற்பூ மாலை. புரட்சி வெடிக்க, புதுமை பூக்க, பொதுமை மலர, சாதி ஒழிய, சமயம் அழிய, சாத்திரம் மறைய, சமத்துவம் தழைய, உழைப்போர் உயர, ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெற புதியதொரு விதி செய்வோம் எனப் புகன்ற சிவப்புப் பிழம்புகள், குமுகாயத்தில் பண்பாடு புண்பட்டு, ஒப்புரவு கரவு பட்டு, கொடுமைகள் மலிந்து, குறைகள் நிறைந்ததை கண்டு, உள்ளம் கொதித்து நெஞ்சு பொறுக்க வில்லையே எனக் குமுறியும், மாந்தரிடையே கயமை, இழிமை, நேர்மையின்மை, ஒழுங்குமீறல் பரவியதையறிந்து, மனம் நொந்து, மனிதனைத் தேடுகிறேன் எனத் தேடி, பண்பாடு காக்க, கொடுமைகள் மாய, குறைகள் களைய, தீயவை தீய வெடித்துக் கிளம்பிய எரிமலைக் கவிதைகள். உலக மொழிகளில் தேசீயக் காப்பியங்கள் எனக் கூறத்தக்க மூன்றனுள் ஒன்று பூங்கொடி - மொழிக்கொரு காப்பியம், கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் போராட்டம், மொழிப்புரட்சி வரலாறு. காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழும்; காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம். பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம். உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடிய, பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம். எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள். எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள். முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார் களைப் புடைக்க வைக்கும்; தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும். தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, தம் நெஞ்சிற்பூத்தவை எனும் கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழர் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்! முடியரசர் கவிபரப்பி முத்தமிழுலகுக்கு முடிசூட்டுவோம்! - பாரி முடியரசன். முடியரசன் குடில் 569, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003. பதிப்புரை கவியரசர் முடியரசன் 1920இல் பிறந்தவர். 1998இல் மறைந்தவர். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 25. இந்நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து பொருள் வழிப் பிரித்து 13 தொகுதிகளாக கவியரசர் முடியரசன் படைப்புகள் எனும் தலைப்பில் ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். கவியரசர் முடியரசன் பாவேந்தர் பாரதிதாசன் வழிநிலை அறிஞர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெருமக்களின் கொள்கையை தம் நெஞ்சில் தாங்கியவர். தன்னலம் கருதாது தமிழ்நலம் கருதியவர். தன்னை முன்னிறுத்தாது தமிழையும் தமிழரையும் முன்னிறுத்தியவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்ப்பன. தமிழர்களுக்குப் படைக்கருவிகளாக அரண் சேர்ப்பன. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் உயர்ந்த அறிவுச் செருக்கும் கொண்ட பாரதியின் பாடலுக்கு சான்றாக வாழ்ந்து காட்டியவர். புதுநூற்கள் புதுக்கருத்தால், பொதுவகையால் தரவேண்டும் புலவ ரெல்லாம் எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளுக்கு இலக்கியமாகவும் இலக்கணமாகவும் வாழ்ந்து மறைந்தவர். இருபதாம் நூற்றாண்டில் பா உலகில் புதுமைப் பூத்த மரபுக் கவிஞர். இவர்தம் நூல்களை ஒருசேர வெளியிடுவதில் பெருமை அடைகிறோம். நன்றி கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் மு.பாரி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செல்வி ச. அனுராதா மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் கணினிக்கோப்பு மு.ந.இராமசுப்ரமணிய ராசா, சு. நித்தியானந், செல்வி சு. ரேகா மெய்ப்பு மு. பாரி, சுப. இராமநாதன், புலவர். இராசவேலு, கி.குணத்தொகையன், அரு.அபிராமி, ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி பிறந்த ஊர் : பெரியகுளம். வாழ்ந்த ஊர் : காரைக்குடி தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998 கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை, (1947 - 49). மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78) திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிக் கலப்புத் திருமணம்) துணைவியார் : கலைச்செல்வி மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்: குமுதம் + பாண்டியன் = அருள்செல்வம், திருப்பாவை பாரி + பூங்கோதை = ஓவியம் அன்னம் + சற்குணம் = செழியன், இனியன் குமணன் + தேன்மொழி = அமுதன், யாழிசை செல்வம் + சுசீலா = கலைக்கோ அல்லி + பாண்டியன் = முகிலன் இயற்றிய நூல்கள் கவிதைத் தொகுதி 1. முடியரசன் கவிதைகள் 1954 2. காவியப் பாவை 1955 3. கவியரங்கில் முடியரசன் 1960 4. பாடுங்குயில் 1983 5. நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 6. மனிதனைத் தேடுகின்றேன் 1986 7. தமிழ் முழக்கம் 1999 8. நெஞ்சிற் பூத்தவை 1999 9. ஞாயிறும் திங்களும் 1999 10. வள்ளுவர் கோட்டம் 1999 11. புதியதொரு விதி செய்வோம் 1999 12. தாய்மொழி காப்போம் 2000 13. மனிதரைக் கண்டு கொண்டேன் 2005 காப்பியம் 14. பூங்கொடி 1964 15. வீரகாவியம் 1970 16. ஊன்றுகோல் 1983 17. இளம்பெருவழுதி (நாடகம்) 2008 சிறுகதைத் தொகுப்பு 18. எக்கோவின் காதல் 1999 கடித இலக்கியம் 19. அன்புள்ள பாண்டியனுக்கு 1999 20. அன்புள்ள இளவரசனுக்கு 1999 கட்டுரைத் தொகுப்பு 21. தமிழ் இலக்கணம் 1967 22 பாடுங் குயில்கள் 1975 23. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 24. எப்படி வளரும் தமிழ்? 2001 25. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) 2008 பொருளடக்கம் தொகுப்புரை iii பதிப்புரை vii வாழ்க்கைக்குறிப்பு ix இயற்றிய நூல்கள் x கவியரங்கில் முடியரசன் 1. தமிழ் வாழ்வு 3 2. ஆடவர் 11 3. எண்ணம் 19 4. உணவு 26 5. பாரதியும் கவிதையும் 30 6. நட்பு 36 7. யாதும் ஊரே யாவரும் கேளிர் 43 8. திரு. வி. க. 47 9. அழகப்பர் 57 10. அரசியல் அறிஞன் 66 11. குறிஞ்சி 72 12. எனக்கும் ஓர் அதியன் 80 13. பாரதி - வீரன் 85 14. முயல்வோம் வெல்வோம் 92 15. திராவிடநாட்டின் வளம் 97 16. உறவினர் 103 17. உரிமை 110 18. பாரதியார் 118 தமிழ் முழக்கம் முன்னுரை 131 தமிழ் வாழ்த்து 132 1. பாட்டுப் பறவைகள் 133 2. குயில்பாட்டு 139 3. தென்னாட்டுக் கலைகள் 143 4. பிரிவில் கண்ணகி 148 5. புகழ்க்கம்பன் 154 6. நமது வீரம் 158 7. நீரின் பெருமை 163 8. பறம்புமலை 170 9. செஞ்சொற் சிலம்பு 173 10. விண் குடும்பம் 179 11. ஊர்வலக் காட்சி 184 12. நெல்லின் கதை 188 13. மரத்தின் பெருமை 193 14. கம்பநாட்டில்... 198 15. பிறவிக் கவிஞன் 204 16. பாவேந்தர் வழங்கிய கொடை 207 17. பாரதி பொழிந்த மழை 212 18. அண்ணல் நடந்த அடிச்சுவடு 218 கவியரசர் முடியரசன் படைப்புகள் கவிதைகள் தொகுப்பு 1 முடியரசன் கவிதைகள் 1954 நெஞ்சிற் பூத்தவை 1999 தொகுப்பு 2 காவியப்பாவை 1955 பாடுங்குயில் 1983 தொகுப்பு 3 கவியரங்கில் முடியரசன் 1960 தமிழ் முழக்கம் 1999 தொகுப்பு 4 நெஞ்சு பொறுக்கவில்லையே 1985 மனிதனைத் தேடுகிறேன் 1986 மனிதரைக் கண்டுகொண்டேன் 2005 தொகுப்பு 5 தாய்மொழி காப்போம் 2001 புதியதொரு விதிசெய்வோம் 1999 தொகுப்பு 6 வள்ளுவர் கோட்டம் 1999 ஞாயிறும் திங்களும் 1999 காவியம் தொகுப்பு 7 óங்கொடி 1964 åuகாவியம் 1970 தொகுப்பு 8 Cன்றுகோல்1983 ïsம்பெருவழுதி புâயநூš2008 இலக்கணம் தொகுப்பு 9 தமிழ் இலக்கணம் 1967 பாடுங்குயில் 1975 தொகுப்பு 10 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு) புதிய நூல் கடித இலக்கியம் தொகுப்பு 11 அன்புள்ள பாண்டியனுக்கு 1999 அன்புள்ள இளவரசனுக்கு 1999 சிறுகதை + கட்டுரை தொகுப்பு 12 எப்படி வளரும் தமிழ்? 2001 எக்கோவின் காதல் 1999 தொகுப்பு 13 சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் 1990 கவியரங்கில் முடியரசன் 1. தமிழ் வாழ்வு எண்சீர் விருத்தம் தமிழ்பழுத்த சான்றோரும் மன்னர் தாமும் சங்கத்தால் தமிழாய்ந்த கூடல் தன்னில் தமிழ்வளர்க்கும் எழுத்தாளர் மன்றத் துள்ளோர், சாற்றினிமைக் கவிபுனையும் கவிஞர் கூட்டம், தமிழ்த்துணையே கடவுள்துணை என்றி றைஞ்சும் *தவமுனிவர், **நாவலராம் எங்கள் தோழர், தமிழ்திளைக்கும் மதுரைநகர்ச் சான்றோர் மாதர் அனைவர்க்குந் தலைதாழ்த்தி வணங்கு கின்றேன் (1) நம்நாடு தென்பொதிய மலைப்பிறந்து முல்லை தோய்ந்து தெருவெல்லாம் மணம்பரப்பும் தென்றல் நாடு; தொன்மைமிகு கடல்மூழ்கிக் குளித்தெ டுத்துத் தூயமணி முத்தாரம் அணியும் நாடு; வன்மைகொடு எவர்வரினும் போர்வாள் தாங்கி வாகையுடன் முரசொலியை முழக்கும் நாடு; மென்மைமிகு தமிழ்எழிலை வளர்க்கும் மன்றம் மேலோங்கும் நம்நாடு தமிழநாடு (2) இன்றைய நிலை இந்நாட்டைத் திராவிடநா டென்றுஞ் சொல்வர் இயல்புடைய நல்லறிஞர்; இந்த நாட்டில் முன்கூட்டி மூத்தகுடி தமிழர் என்போர் நாகரிக முதிர்ச்சியினில் வாழ்ந்த நல்லோர் இன்பூட்டும் தமிழ்வாழ்வைப் பாடுங் காலை இதயத்தால் பூரித்தேன்; ஆனால் இன்று பின்பாட்டுப் பாடுகிற தமிழன் வாழ்வைப் பேசுதற்கும் நாணுகின்றேன் கூசு கின்றேன் (3) இருவேறு வாழ்வு உயிர்பெரிதா? உன்மானம் பெரிதா? என்றால் உயிர்சிறிது மானந்தான் பெரிதே என்பான்; உயிர்கொடுத்தும் தன்மானம் ஒன்றே காப்பான் ஒருவாழ்வே தமிழ்வாழ்வு; குறளின் வாழ்வு; துயர்வருமேல் மானத்தை விலையாக் கூறித் துணிமணிகள் உணவுவகை நிறையப் பெற்று வயிறுவளர்க் குந்தொழிலால் உயிரைப் பேணி வாழ்வதுவா தமிழ்வாழ்வு? மனுவின் வாழ்வு (4) தன்னினத்தின் ஒருமகனைத் தமிழன் தன்னைத் தருக்குடையான் பிறநாட்டான் இழித்து ரைத்தால் என்னினத்தை இகழ்ந்தவனை விட்டு வையேன் என்றெழுந்த மறவாழ்வே தமிழ வாழ்வு; தன்னலத்தைத் தனிப்புகழைப் பணத்தைக் காசைத் தக்கபடி காப்பதற்குச் சூழ்ச்சி செய்து தன்னினத்தை மாற்றார்க்குக் காட்டிக் காலைத் தாங்குவதோ தமிழ்வாழ்வு? ஈன வாழ்வு; (5) ஒருகடவுள் ஒருசாதி என்ற பாங்கில் ஓரினமாய், அயலவரும் உறவாய் நண்பாய்ப் பெருமையுடன் தமிழ்மொழியை நாட்டைப் பேணிப் பீடுபெற வாழ்வதுவே தமிழ வாழ்வு; பெருகுதொகைக் கடவுளரும், உயர்வு தாழ்வு பிறவியினால் பேசுகின்ற எண்ணில் சாதிக் குறுமனமும், பேதைமையும் அடிமைப் பண்பும் கொள்வதுவோ தமிழ்வாழ்வு? கொடுமை வாழ்வு (6) எது தமிழ் வாழ்வு? நம்பெயரில் தமிழிருத்தல், ஆடல் பாடல் நாம்காணும் நிழற்படங்கள் தமிழைக் காட்டல், செம்மையுறு திருமணத்தில் தமிழை ஓதல், செய்தித்தாள் நற்றமிழை எழுதிக் காட்டல், நம்மினத்தார் உழைப்பிலுருப் பெற்ற கோவில் நல்லதமிழ்ப் பாட்டொலியே முழங்கச் செய்தல், நம்பிள்ளை பயில்கல்வி தமிழாய் நிற்றல், நாடெல்லாம் தமிழாயின் தமிழ வாழ்வு (7) எத்துணையர் தமிழ்ப்பெயரைத் தாங்கி யுள்ளார்? எவரேனும் ஓரிருவர் தமிழ்ப்பேர் சொன்னால் பித்தரென ஏசுவதும் கட்சி சார்த்தித் தி.மு.க. என்றிகழ்ந்தும் பேசல் கண்டோம்; முத்தமிழும் தி.மு.க. சொத்தா என்ன? Kis¤jãw f£áfËš jÄH® ïšiy?* கொத்தடிமை மனப்போக்கால் அயன்மொ ழிக்கே கும்பிட்டுத் திரிவதுவோ தமிழ வாழ்வு? (8) தமிழ் உண்டா? வானொலியில் இசையரங்கில் தமிழ்தான் உண்டா? வளங்கொழிக்கும் நிழற்படத்தின் பேச்சில் பாட்டில் தேனமிழ்தத் தமிழுண்டா? பழிக்கக் கண்டோம்; தெளிவின்றி ஒன்றிரண்டு தமிழைச் சொல்லும்; ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா? எடுத்துரைப்பார்க்(கு) அத்துறையில் இடமே யில்லை! *கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப்ப டங்கள் (9) வாழ்த்தொலிகள் மிகுகின்ற திரும ணத்தில் வடமொழியாம் செத்தமொழி சுமந்து செல்லும் **காழ்ப்புமிகும் மொழிப்பகைவர் புலம்பல் நன்றோ? கண்கெட்டுத் திரிவதுவோ? வேற்றி னத்தைத் தாழ்த்துகிறேன் எனக்கருதேல்; அவ்வி னத்தார் தமிழ்த்தலைவர் தலைமைகொள மணங்கொள் வாரோ? தாழ்த்துவது நாமல்லேம்; நம்மி னத்தைத் தாழ்த்துகிறார்; தாழ்வதுவோ தமிழ வாழ்வு? (10) செய்தித்தாள் நடத்திவரும் திருக்கூட் டத்தார் செய்துவரும் மொழிக்கொலையை நினைத்தால் நெஞ்சம் ***வெய்துயிர்த்துச் சாவதன்றி வழியே யில்லை; வேண்டுமெனக் கொலைசெய்யும் இதழ்கள் தம்மைக் கொய்தெறிய மனமின்றி நாமே காசு கொடுத்தவற்றை வளர்க்கின்றோம்; துணிந்தெ ழுந்து செய்யதமிழ் இதழ்நடத்த வருவோர்க் காணின் சிரித்தொதுக்கி விடுவதுவோ தமிழ வாழ்வு? (11) தமிழும் கடவுளும் சிவபெருமான் மனைவியுடன் முருகன் என்னும் சிறுவனையும் உடன்கொண்டு மதுரை நாட்டில் உவகையொடு தமிழ்மொழியின் சுவையைக் கூடி உண்ணுதற்கே அவதரித்தார் என்பர் சைவர்; தவமுனியாம் திருமழிசை பாடல் கேட்டுத் தண்டமிழின் பின்சென்றான் திருமால் என்பர்; இவரெல்லாம் சமயத்தில் தமிழைக் கூட்டி இனிதாகப் பேசிடுவார் ஏற்றங் கொள்வார் (12) கோவிலுக்குள் தமிழ்மொழியைப் புகுத்தல் காணின் கொதித்தெழுவார் மேற்படியார்; முதலில் நின்று தேவனுக்குத் தமிழ்சொல்லல் தீமை என்பார்; தேவருக்குப் *பாடையுண்டு அதைவி டுத்துச் சீவனிலாத் தமிழ்சொன்னால் செத்தோம் என்பார்; சிவன்மாலும் செத்தொழிவார் என்பார் அந்தோ! கூவுகிற இக்குரற்குச் செவிகொ டுத்துக் குலைவதுவோ தமிழ்வாழ்வு? ஆய்ந்து சொல்வீர்! (13) அரசியல் மொழியில் பொதுமொழியாம் எனும்பேரால் வளமே யில்லாப் புதுமொழியைச் சிறுமொழியைப் பள்ளி தோறும் புதுவழியில் புகுத்துகின்றார் இந்த நாட்டில்! புன்மொழியின் அடிமைகளாய்ப் புத்தி கெட்டுக் கதியற்றுப் போவதுவோ தமிழர் எல்லாம்? கையற்றுப் போவதுவோ தமிழின் செல்வம்? மதுநிகர்த்த செந்தமிழின் தூய்மை எல்லாம் மாய்வதுவும் தேய்வதுமோ தமிழ வாழ்வு? (14) எல்லைக்கோட்டில் கயலொடுவில் புலிக்கொடியை இமயக் கோட்டில் கட்டிஅதன் எல்லைவரை தமிழர் ஆண்டு வியனுலகில் புகழ்நாட்டி வீர வாழ்வில் வியப்பூட்டி வாழ்ந்ததுவே தமிழ வாழ்வு; அயலவர்க்கு வேங்கடத்தைப் பறிகொ டுத்தும் ஆண்மையொடு வாய்வீரம் பேசி நின்று செயலற்றுத் தேவிகுளப் பகுதி தந்து தேம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு (15) இலக்கியத் துறையில் பாண்டியநன் னாட்டகத்துச் சங்கங் கண்டு பாவேந்தர் கோவேந்தர் ஒன்று கூடி ஈண்டுபுகழ்த் தமிழாய்ந்து மொழியைப் பேணி இலக்கியங்கள் படைத்ததுமுன் தமிழ வாழ்வு; கூண்டிலுறு மொழியாக்கிக் கொடுமை செய்து குறைமதியர் காவலராய்க் கூடி நின்று வேண்டியதை இலக்கியமென் றெழுதிக் கொட்டி விளம்புவதே இன்றுள்ள தமிழ வாழ்வு (16) போர்த்துறையில் கைவேலைக் களிற்றின்மேற் பாய்ச்சி நின்று கடுகிவரும் வேழத்தை எதிர்க்க வேண்டி மெய்வேலைப் பறித்தெடுத்து நகைத்து நின்று மேவாரை வென்றதுதான் தமிழ வாழ்வு; மெய்வீரன் ஒருவனுடன் எதிரில் நிற்க மிகநடுங்கி மரங்களிடை மறைந்து நின்று பொய்வீரங் காட்டுகிற புன்மை யெல்லாம் புகழ்மிக்க தமிழ்வாழ்வோ? வேறு வாழ்வாம் (17) கற்பு நெறியில் ஐவருக்குப் பத்தினியாய் இருந்துங் கூட அயலான்மேல் ஆசையுள தென்று ரைத்த மைவிளைக்கும் கண்ணுடையாள் கற்பின் போக்கு மாண்புடைய தமிழ்வாழ்வா? வெட்கம் வெட்கம்! கைவிளைத்த பொருளெல்லாம் பரத்தைக் காக்கிக் கணவனவட் பிரிந்திருந்தும் தனது நெஞ்சில் மொய்விளைக்கும் நிறைகாத்து வாழ்ந்த எங்கள் முன்னையவள் கற்பன்றோ தமிழ வாழ்வு! (18) கொலையுண்டான் காதலன்தான் என்ற செய்தி கூர்வேலாய்த் தைத்தலுமே செல்வ மெல்லாம் நிலையுண்ட அறச்செயலுக் காக்கித் தூய நெறிநின்றாள் மாதவித்தாய்! விஞ்சு காம வலையுண்ட இந்திரனைத் தழுவி நின்ற வடிவழகி அகலிகையும் மேன்மை பெற்றாள், துலைகொண்ட கோல்போல ஆய்ந்து காணின் தூயதமிழ் வாழ்வுதனைத் தெரிந்து கொள்வீர் (19) ஒருமை கொள்க! அரசியற்கும் பொருளியற்கும் சாதி கட்கும் அப்படியே மொழியியற்கும் ஒவ்வோர் கட்சி பரவிவரக் காண்கின்றோம், ஒன்றுக் கொன்று பலங்கொண்டு தாக்குவதும் காணு கின்றோம் விரவியிவை வளருவதால் தமிழர் வாழ்வில் விளைபயன்தான் ஒன்றுண்டோ? அனைத்துங் கூடி ஒருநிலையாய் ஓரமைப்பாய் இயங்கக் கண்டால் உளதாகும் தமிழ்வாழ்வு; இன்றேல் தாழ்வே (20) காட்டுக வீரம்! வேலெடுத்துப் போர்தொடுத்த வீரம் எங்கே? வெங்குருதி வாளெங்கே? தோள்கள் எங்கே? கோலெடுத்த பேரெல்லாம் ஆள வந்தார் கொட்டாவி விட்டபடி தூங்கு கின்றாய்! மாலுடுத்த தமிழ்மகனே! மானம் எங்கே? மயங்காதே விழி! எழு! பார்! உலகை நோக்கு! கால்பிடித்து வாழ்வதுவோ தமிழ வாழ்வு? கானத்துப் புலிப்போத்தே வீரங் காட்டு! (21) தலைப்பு : தமிழ் வாழ்வு இடம் : எழுத்தாளர் மன்றம் - மதுரை நாள் : 28-9-1958 2. ஆடவர் எண்சீர் விருத்தம் காதலிக்கும் ஆடவனை இரவுப் போதில் காண்பதற்கு மறைந்திருந்து வரவு பார்க்கும் காதலியைப் போலமுழு நிலவுப் பெண்ணாள் கருமேகத் திரைமறைந்து முகத்தைக் காட்ட, ஏதமிலாத் தமிழொலிபோல் தென்றல் மெல்ல என்னுடலை வருட, உயர் மாடந் தன்னில் *போதனைய பஞ்சணையில் சாய்ந்து பாடல் புனைந்திடநான் ஆடவரை நினைந்தி ருந்தேன் (1) கலக்கமிலா உயர்நட்பு, பிறனில் வேண்டாக் கண்ணியம், ஓர் உடன்வயிற்றுப் பிறந்தோர் தம்முள் விலக்கமிலா துறுதுணையாய் நிற்றல், ஆள்வோர் வினைபிழைத்தால் இடித்துரைத்தல், பகைவர் **நாப்பண் செலக்கருதின் அஞ்சாமல் பேசும் வன்மை, செஞ்சோற்றுக் கடன்கழித்தல் முதலாம் ஆண்மை இலக்கணத்தைக் கடவாதார் இருக்கும் நாடே எழில்நாடாம்; கடப்பவர்கள் இருப்பின் காடாம் (2) கனவில் கம்பன் எனுமெண்ணம் அலையலையாய் நெஞ்சில் ஓட, இரண்டொன்று பாடல்களை என்வாய் பாடத் தனிநின்று வானரங்கில் திங்கள் என்பாள் தானாடக் கண்ணிமையில் உறக்கம் ஆட, மனம்நின்று செயல்நின்று கண்ண யர்ந்தேன் மறைந்துவிட்ட கம்பனங்கு வந்து நின்றான் கனவென்று நானறியேன் வணக்கம் என்றேன் கருதியது யா தென்று முறுவல் பூத்தான்* (3) ஆடவரைப் பாடென்றார் வழியைக் காணேன் அரிவையரைப் பாடென்றால் நூறு நூறு பாடல்வரும்; என்செய்வேன்? என்றேன்; தம்பீ பாடுதற்கு வழிசொல்வேன் என்னு டன்வா தேடிவரும் பாடல்கள்தாம் என்றான் கம்பன்; தித்திக்கும் சொல்கேட்டேன் உடன்பா டென்றேன்; மாடிவிடுத் தகல்வானில் பறந்து சென்றோம் வளம்சேரும் அயோத்திநகர் இதுகாண் என்றான் (4) கலிவெண்பா தயரதன் திசையெல்லாம் தேரோட்டித் **தெம்முனையில் வேந்தர் இசையெல்லாம் மேலோட்டி ஈடின்றித் தானாண்டான் பட்டத் தரசியரும் பாவையரும் எத்துணையோ கட்டிக் களித்தான் கணக்கில்லை மற்றவையும் சீருண்டு செல்வம் மிகவுண்டு பல்வளஞ்சேர் பாருண்டு மேலும் பலவுண்டாம் ஆனாலும் ஓடி விளையாட, உண்ணும் பொழுதிருந்(து) ஆடிக் கலத்துணவுள் அங்கை துழவுதற்கு, வேய்ங்குழலைத் தோற்கடிக்கும் வெள்ளை மழலைமொழி ஈங்களிக்க மக்களில்லை என்றேங்கி நின்றான்; பின் வில்வீரர் சொல்வீரர் வேண்டும் செயல்முடிக்கும் நல்வீரர் மக்களென நால்வரையும் பெற்றெடுத்தான் வீரச் செயல்புரியும் வேல்தாங்கும் காளையரின் தீரப் பணிகண்டு செம்மாந்து வாழ்ந்திருக்கும் *வெண்தாடி வேந்தனைப்பார் என்றவுடன் யாரென்றேன் விண்தோய் நகராளும் வேந்தன் தயரதனாம் என்றான் அதன்பின் எழில்சேர் மிதிலைநகர் சென்றேன் அவனோடு சேர்ந்து (5) எண்சீர் விருத்தம் சனகன் வில்வைத்தான் வளைப்பவற்கே சீதை என்றான்; வீரர்பலர் பெண்எனலும் ஓடி வந்தார்; **மல்வைத்த திருநெடுந்தோள் வளைய நெஞ்சும் வளைந்ததன்றி வில்வளைய வில்லை அந்தோ! கல்வைத்த தெனஇதயம் கலங்கி நின்று காசினியில் பெண்பெற்றால் துயரே என்ற சொல்வைத்த முகத்தானைச் சனகன் என்று சொல்வானைச் சோர்வானை அங்குக் கண்டோம் (6) கட்டளைக் கலித்துறை இராமன் வேள்வியை ஆக்கிடத் தம்பியும் பின்வர வீரமுடன் ஆள்வினை முற்றிய ஆடவன் சென்றான் மிதிலைவழி; தோள்வலி வில்லோன் துணைவிழி கவ்விய மாதரசி வாள்விழி கண்டனன் வாடினன் சென்றான் வழிநடந்தே (7) காதல் மடவார் கடைக்கண் விழியினைக் காட்டிவிட்டால் சாதலும் ஏற்பர் எளிதில் மலையும் தகர்ப்பரென்றே ஓதலும் உண்மை உயர்பெரு வில்லும் சனகனுள வேதனை யும்மொடித் தானொரு வீரன் மிதிலையிலே (8) நேரிசை ஆசிரியப்பா பரசுராமன் திருமண மாகித் திரும்புங் காலை நெறியில் ஒருவன் நின்று மறித்தனன் பொறிபடு விழியன் பூணூல் மார்பன் தவவடி வுடையன் தருக்கும் கொண்டோன் பவவினை அறுக்கப் பரமனை நாளும் நினைவோன் கையில் நீண்ட வில்லினன் அனையோன் மணவினை ஆர்ந்த குமரனை அணுகினன் இடியென ஆர்த்தனன் இளையோய்! ஓட்டை வில்லை ஒடித்தனை! என்கை காட்டும் வில்லை வளைத்திடு காண்போம் கேட்டோர் நடுங்க நீட்டினன் வில்லை; அன்பும் பணிவும் அரும்பிய நகையுடன் முன்புற நின்றவன் மூரிவில் வாங்கி வளைத்தனன் அதனை; வளைந்த(து) ஆணவம் களைத்தனன் துறவி கடுமொழி துறந்தான் சினமும் தொலைந்தது சிறியவன் முன்னே மனவலி குன்றி மரமென நின்றான்; அருளும் தவமும் ஆண்டவன் வரமும் பொருளும் புகழும் பிறவும் பெறினும் செருக்கும் தருக்கும் சேரின் ஒறுக்கும் ஒறுக்கும் உண்மை அறமே. (9) கலித்துறை குகனும் பரதனும் ஓடு புனற்கிடை ஓடம் விடுத்திடும் ஆழ்கங்கை வேடர் களுக்கிடை வீரம் நிறைந்திடும் Éšyhs‹‡ நாடு கொடுத்திடும் நாயகன் என்றிவர் தோழமையால் மூட மதிப்படு சாதி தொலைத்தனர் முன்னின்றார் (10) கண்டு மகிழ்ந்தனம்; காவி யுடுத்தோர் இளைஞன்*போர் கொண்டு நெருங்கினன் என்ன விரைந்தனன்; கோளரி**போல் மண்டி எழுந்தனன் மாய்த்திடு வேனவன் மார்பினையே ***விண்டுயிர் போக்குவென் என்று முழங்கினன் வேடுவர்கோன் (11) நெஞ்சு பொருந்திடும் நேய மிகுந்தவன் அவ்விளையோன் சஞ்சலம் ஓருரு வாகிய தோஎனச் சார்ந்திடலும் ****செஞ்சர வேடுவன் சிந்தை கலங்கினன் செய்தியுணர்ந்(து) ‡“mŠrd வண்ணர்கள் ஆயிரர் நின்னிகர் ஆவாரோ? (12) என்றனன்; அண்ணலும் யாண்டுளன் என்றான் வருமிளையோன்; குன்றன தோளன் கொடியிடை யாளுடன் வாழுமிடம் சென்றனன்; மூத்தோன் சிறியவ னைக்கண் டருள்பொழியச் சென்றுநம் நாட்டினில் நாட்டிடு செங்கோல் எனமொழிந்தான் (13) மண்ணாள் அரசொரு மங்கையின் சொல்லால் முறைகொன்றான்; அண்ணா! அருளுடன் ஆண்டிட வேண்டும்; அறமொன்றே கண்ணா நினைந்திடும் கண்ணிய னேநின் அரசுரிமை நண்ணேன் அரசியல் நாயக என்றனன் அவ்விளையோன் (14) அறுசீர் விருத்தம் கண்டனன் *புளிஞர் வேந்தன் கண்களில் நீர்சொ ரிந்தான்; மண்தனில் அரசுக் காக மாள்கிறார் உடன்பி றந்தார்; கண்டிடின் இவரை என்றும் **காழ்ப்பகை தோன்றா தென்று ***விண்டனன்; பின்னர் நாங்கள் விண்ணினில் பறந்து சென்றோம் (15) எண்சீர் விருத்தம் வாலி மலைமுகட்டில் முகில்தவழும் உயர்கிட் கிந்தை மாநகரில் இறங்கியதும் மனமு டைந்தேன்; கொலைமுகத்த கூரம்பு நெஞ்சந் தன்னில் குருதியினைப் பாயவிட எண்ண மெல்லாம் நிலைமுகத்தால் பேசுகின்றான் வாயுஞ் சோர்ந்தான் நெடுமலைபோல் புரள்கின்றான் வஞ்ச நெஞ்ச வலைமுகத்துள் சிக்குண்டான் போலும் என்று வருந்திஅவன் யாரென்றேன் வாலி யென்றான் (16) ஏனிந்த நிலையென்றேன்; உடன்பி றந்தார் இருவர்க்குள் நேர்ந்தபகை எனப்பு கன்றான்; வானிகந்த வலியானை எய்தோன் யாவன்? எனவினவ ஆண்டுளன்பார் என்று சுட்டக் கானிருந்த மரத்தடியில் வில்லைத் தாங்கி மறைந்திருந்த கரியவனைக் கண்ணாற் கண்டேன்; நானிலத்தில் வீரனென்போன் மறைந்தம் பெய்தல் நல்லதுவோ? வீரத்திற் கிழுக்காம் என்றேன் (17) முறுவலித்தான் அப்புலவன்; விடையே யில்லை; முணுமுணுத்தான் உடன்பிறப்புள் பிளவி ருந்தால் வருபவர்க்கு நல்விருந்தாம் நமது நாடு; வம்பெதற்கு? வாவா வென் றெனைய ழைத்தான்; *கருவரைகள் பலகடந்தோம் கடல்க டந்தோம் கண்கவரும் எழில்மாட இலங்கை என்னும் பெருநகருள் புகுந்தோம்அங் கரண்ம னைக்குள் பேசுகின்ற இடிமுழக்கம் கேட்டி ருந்தோம் (18) கும்பகருணனும் இராவணனும் பிறன்பொருளை **வேட்டெழுதல் குற்றம் ஒன்றோ பெருமைக்கும் நம்குடிக்கும் பேரி ழுக்காம் அறன்அன்றாம் மறம்அன்றாம் என்று ரைத்தான்; அடகும்ப கருணாஎன் உடன்பி றந்தும் திறனின்னும் அறிந்திலையே! சீசீ போபோ ***தெவ்வருடன் நீயும்போ! இன்றேல் ஓடி உறங்கிடுபோ! எனக்கனன்று சிரித்தான் வேந்தன் உளம்நடுங்கி உடல்நடுங்கி வியர்வி யர்த்தேன்; (19) அஞ்சேன்; உன் பகைவர்தமை நண்ணேன்; நீதான் பிழைசெய்தாய்; அண்ணனென இடித்து ரைத்தேன்; செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன்; சேரார் தம்மைச் சேர்ந்துளவு சொலமாட்டேன் வேந்தே! இன்றே வெஞ்சேனை கொண்டெழுவேன் யானோர் வீரன் வீணனலேன் என்றெழுந்தான்; என்றன் தோள்கள் நெஞ்சேறி நிமிர்ந்தனவே! வீரங் கொண்டான் நெறிதவறான் நன்றியுளான் வாழ்க வென்றேன்; (20) நிலைமண்டில ஆசிரியப்பா கனவு கலைந்தது பார்த்தனை தம்பி பற்பல ஆடவர் சேர்த்திடு நெஞ்சில் செந்நெறி ஒன்றே எவ்வழி ஆடவர் நல்லவர் உளரோ அவ்வழி நிலனும் நன்றென அவ்வை ஓதிய துணர்க! உயர்நிலை பெறுக! மேதினி ஓங்குக என்றனன் மேலோன்; எவ்வழி ஆடவர் எவ்வழி ஆடவர் எனநான் புலம்பிட என்மனை யாட்டி அவ்வுரை கேட்டே ஆடவர் வீரம் கனவில் தானோ காட்டுவ தென்றாள்; கண்விழித் தெழுந்தேன் கம்பனைக் காணேன் *பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் ஆடவர் பேசா தடங்குதல் உண்மை அதனால் யானும் அமைதலும் நன்றே, (21) தலைப்பு : கம்பன் கண்டபடி - ஆடவர் இடம் : கம்பன் திருநாள் - காரைக்குடி நாள் : 18.3.1954 3. எண்ணம் எண்சீர் விருத்தம் É©nfhŸfŸ nghYÄs§ fÉP® T£l« És¡fKw xËešF« gÇâ na!எம் கண்போலும் தமிழ்காக்கும் மறவர் ஏறே! கவிதையினால் உளங்கவர்ந்த கள்வா! இந்த மண்மீது நல்லறமே புரிந்து வாழும் வள்ளல்தரும் கல்லூரி பயில்வீர்! நல்ல பண்பூறக் கல்விதரும் பெரியீர்! ஈண்டிப் பாவரங்கில் அணிசெய்வீர்! வணக்கம் கொள்க (1) பழைய எண்ணங்கள் *பகைதவிர்ந்து நண்புற்று மெல்ல வந்து பலசொல்லி இரப்பாரேல் உயிரும் ஈவேன் **மிகைவிஞ்சி என்வலிமை இகழ்வா ராயின் வேங்கையினை இடர்குருடர் ஆவர்; யானை அகல்காலிற் படுமுளைபோற் பொன்றச் செய்வேன்; அழித்திலனேல் என்மாலை, பொருளை நச்சி*** நகுமகளிர் முயக்கிடையே குழைக என்றான் நலங்கிள்ளி; பிறர்மனையை நோக்கா எண்ணம் (2) *புலவர்பெருஞ் சித்திரனார் வறுமை போக்கப் புரவலர்பாற் பலபரிசில் பெற்று வந்து குலமனையாள் கைக்கொடுத்து, நயந்தோர்** யார்க்கும் கூடிமகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி, நலம்நுகர நாளைக்குத் தேவை என்று நயவாமல், என்னொடுஞ்சூ ழாமல்,*** நல்கிச் செலவழித்து மகிழ்வோம்நாம் எனப்பு கன்றார்; செல்வத்துப் பயனீதல் காட்டும் எண்ணம் (3) விருந்தயரும் பெருங்களிப்பால் வடக்கில் வாழ்வோர் விளைவறியார் தென்புலத்து வேந்தர் வீரம் குறைந்ததென இகழ்ந்துரைத்தார்; அதனைக் கேட்டுக் கோளரிபோல் வெகுண்டெழுந்து தமிழர் ஆற்றல் புரிந்துகொளச் செய்தான்அச் சேரன்; யாரும் புகழ்மிக்க தமிழினத்தைப் பழித்து ரைத்தால் எரிந்தெழுதல் தமிழனுக்குக் கடமையாகும் என்கின்ற இனப்பற்றைக் காட்டும் எண்ணம் (4) தன்பால்வந் திரந்தோனுக் கில்லை என்னான் தலைதந்தான் ஒருகுமணன்; பாடல் கேட்கும் அன்பார்வம் தலைதூக்க அரிய நெல்லிக் கனியொன்றை அதியனுமோர் அவ்வைக் கீந்தான்; வன்பாலை நடந்தயர்ந்தோன் முரசம் வைத்து வணங்குகட்டில் எனஅறியா துறங்க, வேந்தன் அன்பாக அருகிருந்து கவரி åᇠஅகமகிழ்ந்தான்; தமிழறிந்து மதிக்கு மெண்ணம் (5) பசிவருத்தக் குமணன்பால் பரிசில் கேட்கும் பாவலனோர் களிற்றின்மேல் மன்னர் நாணி ஒசிதரநான் **செம்மாந்து செலவி ழைந்தே உன்பாலுற் றேனென்றான்; அஞ்சி யின்பால் ***நசையின்றிப் பொருளீயின் பெறுதல் ஏலேன் நான்பரிசில் வணிகனலேன் என்றான்; மற்றோன், பசியுறினும் அரசன்போற் br«kš‡ உண்டு பாவலர்க்கும் என்றான்; தன் மான எண்ணம் (6) உயர் எண்ணங்கள் என்னாட்டிற் பிறர்க்கடிமை செய்யேன், ஏய்ப்போர்க் கிடமில்லை, செல்வத்தைக் கொள்ளை கொண்டு தின்பார்க்கும் இடம்ஈயேன் என்றெ ழுந்தார், திமிர்அரசு கொடுஞ்சிறைக்குள் அடைத்தும் அஞ்சார், பின்னீர்க்கும் தீண்டாமை ஒழிக என்றார், பிளவுதரும் மதவெறியை ஒழிக்கக் காந்தி தன்னாட்டு மதவெறியன் குண்டு தாங்கிச் சாய்ந்ததொரு செயற்கரிய தியாக எண்ணம் (7) *வெள்ளத்தால் வீடிழந்து பொருளி ழந்து வெந்துழலும் மாந்தருக்குத் துன்பம் போக்க மெள்ளத்தான் ஓரறிக்கை விடுத்து விட்டு மெத்தையின்மேற் புரளாமல் மனம்ப தைத்துத் துள்ளித்தான் பறந்தோடி நடந்து நீந்தித் துயருற்றுக் கண்கலங்கித் தொண்டு செய்தார் உள்ளத்தாற் பெருமனிதர் காம ராசர் உயரமைச்சர் மக்களைத்தாம் காக்கும் எண்ணம் (8) *தென்னாட்டைத் **தொன்றுமுதிர் காலங் கண்ட தேன்மொழியை அவ்வினத்தை இழித்துப் பேசின் ***வெந்காட்டச் செய்திடுவேன் எனச்சி னந்து விறல்மிகுக்கும் செயல்செய்தார், சிறையும் சென்றார், இந்நாட்டிற் சாதிமுறை ஒழிக என்றார், இகழ்வுரையும் கல்லடியும் பெற்றா ரேனும் முன்னோக்கிச் செல்கின்றார், உரமே மிக்கார், மூடமதி ïUŸbrF¡F§‡ கதிரே போல்வார் (9) *உடல்பழுத்தும் நரைமுதிர்ந்தும் நடந்து செல்ல ஊற்றுக்கோல் துணைகொண்டும் தளரா நெஞ்சர், மடம்படுத்த பழமைஎலாம் வேர றுந்து மடமடெனச் சாய்ந்தொழியத் தமிழர் வாழும் இடமெல்லாம் புயல்வீசப் புரட்சி செய்தார், இளைஞர்படை அறிஞர்படை பெருகக் கண்டார், திடங்கொண்ட நம்பெரியார் அரிய செய்தார். திருவிடத்தின் மன்னரெனும் உரிமை எண்ணம்; (10) புந்திக்குப் பொருந்தாத கொள்கை மாய்க்கப் புரட்சிசெயும் நல்லறிஞர், தீய சொற்கள் தந்தவர்க்கும் நாணும்வகை நன்மை செய்வார், ‡j©lhj சொல்லருவி, கலையின் தேக்கம், செந்தமிழ நாட்டுக்கு வாழ்நாள் எல்லாம் சேவைசெய்வார், காஞ்சிநகர் தந்த செம்மல், பந்தமுடன் அண்ணாஎன் றழைக்கப் பெற்றார் படும்பாடு நம்நாடு தழைக்கும் எண்ணம். (11) வேண்டா எண்ணங்கள் நன்றியுணர் வுள்ளதென உலகம் போற்றும் நல்லுணர்வு கொண்டிருந்தும் எச்சில் உண்டி ஒன்றுபெறத் தன்னினத்தைப் பகைக்கும் நாய்போல் உயர்பதவி பெறுதற்கே தன்னி னத்தைக் கொன்றுகுழி தோண்டுவது வேண்டா எண்ணம்; கொடும்பழிகள் செய்திருந்தும் உடைகள் மாற்றி வென்றிபெற உலகோரை ஏய்த்து வாழ்ந்து விளையாடித் திரிவதுவும் வேண்டா எண்ணம்; (12) ஒருகுலமே உண்டெனஇவ் வுலகுக் கோதும் உயர்நாட்டிற் சாதிமுறை வேண்டா எண்ணம்; தெருவோடு போவாரைக் கேலி செய்யும் சிறுபுத்தி நல்லவர்க்கு வேண்டா எண்ணம்; திருவுயர அறிவுயர வாழ்தல் கண்டு தேய்ந்துமனம் புழுங்குதலும் வேண்டா எண்ணம்; சிறவயிறு கழுவுதற்கு மானம் விட்டுச் சீரிழந்து வால்பிடித்தல் வேண்டா எண்ணம்; (13) வேண்டிய எண்ணங்கள் எண்ணுதற்கு மனம்வேண்டும், எண்ணிப் பின்னர் எடுத்துரைக்கும் உரம்வேண்டும், இதனைச் செய்ய நண்ணுபவர்க் கிடங்கொடுக்க வேண்டும், அன்றி நலிவுதரத் தடைசெய்ய எண்ணல் நன்றோ? கண்ணெதற்குக் காட்சிகளைக் காண அன்றோ? காணாமற் கண்மூட விழைதல் நன்றோ? உண்ணுதற்குப் பயனில்லா உண்டி ஏனோ? உரிமைநல்கல் ஆள்வோர்க்கு வேண்டும் எண்ணம்; (14) நாளைக்கு மாணவரே நாட்டை ஆள்வோர் நம்கையில் எதிர்காலம் உளதே என்று நாளுக்கு நாளுணர்ந்து கடமை ஆற்றும் நல்லுணர்வே ஆசாற்கு வேண்டும் எண்ணம்; வேளைக்கு வந்திருந்து காலம் பேணி வினையின்மேற் கருத்தூன்றி ஆசாற் போற்றிக் கேளிக்கை விடுத்தொழித்து மாண்பை ஆக்கக் கிளர்ந்தெழுதல் மாணவர்க்கு வேண்டும் எண்ணம் (15) துன்புறுவோர் நிலைகாணின் துடித்துச் சென்று தோள்தந்து துயர்துடைக்கும் எண்ணம் வேண்டும்; அன்பொன்றே நிறைகின்ற எண்ணம் வேண்டும்; அரிவையர்க்கும் உரிமைதரும் எண்ணம் வேண்டும்; என்பெறினும் நடுநிலைமை வழுவா எண்ணம் எல்லோர்க்கும் இனியசொலிப் பணியும் எண்ணம் முன்பிருந்த நன்றியுணர் வெண்ணம் வேண்டும்; மொழிந்தஇவை நாகரிக எண்ணம் என்பர். (16) கல்லூரிக் கல்விசொலத் தமிழே வேண்டும் கலைச்சொற்கள் தமிழ்மொழியில் ஆக்கல் வேண்டும் மெல்லோசைத் தமிழிசையே முழங்க வேண்டும் மேலுயர்ந்த கோவிலுளும் தமிழே வேண்டும் வல்லூறாய் வருமொழிகள் இங்கு வேண்டா வடவருக்குத் தாள்பிடித்துப் பதவி ஏற்கும் நல்லோரே நும்தாயை இகழ்ந்து கூறேல்! நம்நாடு தமிழ்நாடென் றாதல் வேண்டும் (17) அரசிருக்கை தமிழ்மொழிக்கே நல்க வேண்டும் ஆள்வோரும் இதையுணர வேண்டும் ஈது தரிசுநிலம் அன்றெமக்கும் உணர்ச்சி யுண்டு தமிழ்மொழிக்கே உயிரீயும் இளைஞர் உண்டு பரவிவரும் தென்றலென இனிது சொல்வோம் படியாமற் புறக்கணித்தால் வெகுள்வோம் போரின் முரசொலியே கேட்குமென உரைப்ப தெல்லாம் முடியரசர் வளர்த்ததமிழ் வாழும் எண்ணம். (18) தலைவர் : பாவேந்தர் பாரதிதாசனார் தலைப்பு : நாகரிகம் - எண்ணம் இடம் : அழகப்பா கல்லூரி - காரைக்குடி நாள் : 31-12-1955 4. உணவு கலிவெண்பா உணவுதனைப் பற்றி உயர்கவிதை யாக்கக் கனவுலகிற் சென்றேன்: கடும்பசியோ என்வயிற்றில் ஆடித் திரிந்துழல ஐயையோ என்புலமை ஓடித் தறிகெட் டொருசொல் வரக்காணேன்: பாழ்பசி வந்துவிடின் பத்தும் பறந்துபோம் சூழ்நிலையை இன்றுணர்ந்தேன்: தூய மனத்தெளிவும் பொங்கும் கவியுணர்வும் பூரிக்கும் நன்மகிழ்வும் தங்குமோ இவ்வுலகில் சாரும் உணவின்றேல்? அன்பேது? நெஞ்சில் நிறைவே(து)? அறிவமைதி என்பதுதான் ஏதேது? வாழ்க்கை வளமெய்த உண்டியொன்றே வேண்டுவ(து): உண்மையீ தென்பதனைக் கண்டுணர்ந்தேன் ஆதலினால் கால்வயிறே னும்நிரப்பிச் செய்யுள் புனைவமெனச் சிந்தித்துச் சேயிழாய்! உய்யும் வகையுண்டோ உண்டி சிறிதுண்டோ? என்றேன்; செவியேற்ற ஏந்திழையாள் ஓடிவந்து சென்ற முதல்நாளிற் செய்தபடி செய்தேன் எனவுரைத்தாள்; பொங்கலோ? என்றெழுந்தேன்; இல்லை மனவருத்தம் பொங்கலலால் மற்றில்லை பக்கத்துப் பெண்ணொருத்தி நெஞ்சிரங்கிப் பேருதவி செய்தமையால் உண்ண வழியுண்(டு) ஒருநா ழிகைபொறுப்பீர்! ஆக்கிப் படைக்கின்றேன் அத்தான் என;அவளை நோக்கிமுகம் தாழ்த்திப்பின் நூலெடுத்தேன் பாப்புனைய; சித்தம் கலங்கியதால் சீர்தளைகள் மாய்ந்தனவே எத்துயரம் வந்தாலும் எல்லை கடந்தறியேன் பாவை நிறுத்திவிட்டேன்; பையன் சிறுவனைஎன் பாவை அடிக்கப் பதறுவதைக் கேட்டெழுந்(து) ஏனடித்தாய்? என்றேன்; திருடியதால் என்றவுடன் நான்துடித்து நாமடித்துச் செய்தனையோ? என்றதட்ட, ஆமாம், பசியப்பா அன்னம் திருடிவிட்டேன் தீமை இனிச்செய்யேன் சீற்றம் தவிர்கென்றான்; வாயடைத்துப் போயினேன்; வாழ்வில் உணவின்றேல் தீயனதாம் பல்கும், திருட்டுத் தொழில்பெருகும் என்றுணர்ந்து மன்னித் திளையவனை விட்டுவிட்டேன்; முன்றில்முன் என்சிறுவர் மோதி அடிதடிகள் செய்திருந்தார்; சீறிச் சினந்துரைத்தேன்; ஓர்சிறுவன் மெய்யுரைத்தான்; என்னின் மிகுபண்டம் அண்ணனுக்(கு) அன்னை கொடுத்தாள், அதனால் பிணக்குற்றோம் என்னை அடிக்காதீர்! என்றுரைத் தோடிவிட்டான்; ஓஓ! அதுசரியே, ஓரிடத்தில் உண்டிமிகின் ஓவாப் பகைமூளும், ஓநாய்ச் செயல்விஞ்சும், பாரிற் சமமாகப் பாத்தூண் கொடுத்துவிடின்* போரில் இறங்குகின்ற புன்மைகள்தாம் உண்டோ? வயிற்றுக் கவலையின்றேல் வாழ்க்கைவளம் எய்தும் *அயிர்ப்பில்லை; உண்டிமுதற் றேஉணவின் பிண்ட மெனச் சாத்தன் பகர்ந்ததற்பின் சான்றின்னும் வேண்டுவதோ? ஏத்துங் கலையுணர்(வு) எங்கே உணவின்றேல்? செய்யுளெழ வில்லை; செயலின்றி நானிருந்தேன்; பையவந் தென்துணைவி பூசைப் பணியாற்ற எல்லாம் அமைத்தேன் எழுகவெனச் சொல்லியதும் நல்லாய்! பசியால் நலிவெய்தும் போது கடவுள் உணர்வகத்தில் காணல்எளி தாமோ? மடமை தொலைத்துயர்த்தும் மாண்புள்ள கல்வி பயில்என்றால் பையன் பசிஎன்று தேம்பி அயர்கின்றான் ஆதலினால் கல்வி அறிவேது? தூய அறமேது தொல்லை பெருகலன்றி? ஆய கலையே(து) அறியாமை சூழலன்றி? நாட்டிற் பசியிருந்தால் நல்லனவே தோன்றாஎன் றீட்டி உணவூட்டல் ஏற்ற அறமென்று வாழ்வுதனை அப்பணிக்கே வைத்தமணி மேகலைசொல் நாளும் நினைவிருத்தி நாம்வாழ வேண்டும்; இரந்துமுயிர் வாழும் இழிநிலையை நீக்கப் பரந்துதொண்டு செய்வதற்குப் பக்குவமும் வேண்டும்; அறிவு வளர்ந்தால் அடிமைமனம் மாயும்; அறிவு வளரஎனில் அப்பசியை மாய்க்கத் திறம்வேண்டும்; ஏர்த்தொழிலைத் தேய்க்காமல் காக்கும் உரம்வேண்டும்; அத்தொழிலோர் உள்ளத்தில் இன்பொன்றே நிற்கச் செயல்வேண்டும் நேரிழையே என்றுரைத்தேன்; நிற்கட்டும் சொற்பொழிவு! நேற்றுரைத்த சொல்லுக்கு மாற்றம் உரைக்கின்றீர்* மாண்டநல்ல சங்கத்தார் சோற்றுக் கவலையினால் சொல்லியநற் பாட்டுகள் நன்றுநன் றென்றீரே நானெதைத்தான் நம்புவது? என்றுரைத்தாள்; பேதாய்! எடுத்துரைப்பேன்; சோறின்றிப் பாடிய பாட்டெல்லாம் கோடிபெறும் பான்மையவேல் வாடி வதங்காத வாழ்வவர்கள் பெற்றிருந்தால் அப்பப்பா! நூற்செல்வம் ஆயிரம் ஆயிரமாச் செப்பிக் குவித்திருக்க மாட்டாரோ? தீப்பசியால் பாட்டுவரும் என்னுமுரை பாழாக வேண்டுமிங்கே நாட்டிற்பா வல்லார் நலிவெய்தக் கண்டிருந்தும் பாரா தவர்போலப் பாசாங்கு செய்துவிட்(டு) ஆரா வறுமையில் ஆழ்த்துகிறார் அந்தோ! ஒருவன் பசியால் உலகுக்கே தீமை வருமென்றால் அவ்வுணவு வாழ்வுக்கே அச்சன்றோ? வாழ்க்கை வளமுறநாம் வேண்டின் உணவொன்றே ஆக்கும் பொருளென் றறிந்ததனைக் காத்தோம்பிப் பாரதனில் யார்க்கும் பகிர்ந்துண்டு வாழ்வதற்கே ஓருறுதி கொள்வோம் உவந்து. தலைப்பு : வாழ்க்கை வளமுற - உணவு இடம் : வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி நாள் : 2-3-1956 5. பாரதியும் கவிதையும் நேரிசை ஆசிரியப்பா அவனோர் பரிதி உரிமைப்போரில் ஊரெலாந் திரட்டி அரியே றென்ன ஆர்த்தெழு வீரன் அரசியல் தலைவன் அரங்கிலும் தலைவன் கலைகள் வல்லான் கணேசப் பெயரினன் அவையோர் முதல்வர் அனைவர்க்கும் வணக்கம் (5) கவிஎனப் பிறந்தவன் காணும் இயற்கைத் தாயின் மடியில் தவழ்ந்து மகிழ்ந்தவன் உலகப் பள்ளியில் ஓதித் தெளிந்தவன் அஞ்சுதல் இல்லா ஆண்மையன் நறுமணப் பாமலர் தொடுத்துப் பாடுவ தவன்தொழில் (10) கவிதை மணிப்பெயர்க் காதலி கொழுநன் வையம் முழுதும் வணங்கிப் பணியப் பாட்டுத் திறத்தால் பாலித் திருந்தோன் கவிஞர் தம்முள் மணிமுடி யரசன் புதுமை பூக்கும் பொதுமைப் பூங்கா (15) பழமையை ஒதுக்கிப் பாயும் ஆறு செவியில் இன்னிசை சேர்க்கும் அருவி எட்டய புரத்தில் எழுந்திடும் பரிதி அவனே பாரதி வாழிய அவன்பேர்! எனக்குப் பாட்டன் இசைதரு கவிதை இயம்பிய பாரதி (20) பாட்டைப் பண்ணொடு கேட்ட பட்டிக் காட்டான் பகர்ந்ததாக் கவிமணி இசைத்தபின் யானுங் கூறல் நாணுந் தகைத்தே இருப்பினும் உரிமை எனக்கும் உண்டு; பாரதி தாசன் பரம்பரை வந்தோர் (25) பலர்பலர் ஆவர்; பாப்புனை தொழிலால் யானுமம் மரபே யாவரும் அறிகுவர்; பாரதி தாசனைத் தந்தோன் பாரதி அத்தகு முறையால் அவன்என் பாட்டன் பாட்டன் பாட்டினைப் பாடுவன் கேண்மோ! (30) அவன்தரும் நன்னூல் கதிரோன் மறைதல் காணா நாட்டிற்* காரிருள் நுழையக் கண்டதப் பாட்டு; வீட்டில் நாட்டில் வெறுத்தோம் தமிழைக் கண்ணயர்ந் திருந்தோம் கண்டனன் துடித்துப் பாரெலாம் தமிழொலி பரப்புக என்றே (35) ஆணை தந்த(து) அவன்நூ லன்றோ? நெஞ்சில் உரமிலார் நிமிர்ந்து நடந்திட வஞ்சனை போக்கி வாழ்வு மலர்ந்திட உடலும் உளமும் உரம்பெறப் பாடிச் சோதிடம் இகழ்எனச் சொல்லும் அந்நூல்; (40) சமநிலைப் பாடல் ஏழை அடிமை சாதியில் இழிந்தோர் இல்லை! எவரும் ஒருநிகர் எனவே சாற்றி முழங்கும் சமநிலைப் பாடல் கண்ணீர்த் துளிகள் குளத்தில் மரத்தில் குடிகொளும் பேயென உளத்தில் நடுக்குறும் உரமிலார் அதற்கு (45) மந்திரம் சூனியம் யந்திரம் என்பார் அந்தியில் பகலில் அஞ்சியே சாவார் சிப்பாய் தலையில் சிவப்பைக் காணின் அப்பா என்றே அப்பால் ஒளிவார் கஞ்சி யில்லாக் காரணம் ஓரார் (50) பஞ்சம் பஞ்சமெனப் பரிதவித் திருப்பார் நிலையினைக் கண்டு நெஞ்சு பொறாஅது கதறிச் சிந்திய கண்ணீர்த் துளிகள் பாரதி தந்த பாடல்கள் ஆகும்; வழக்கிடும் மன்றம் கற்பெனப் படுவது கன்னியர் தமக்கே (55) வற்புறுத் துவதை ஒப்புதல் செய்யோம் ஆடவர் தமக்கும் அதனை வைப்போம் ஏடுகள் செய்வோம் இளைப்பிலை உமக்கு மாடுகள் அல்லம் மாதர்கள் நாங்கள் சட்டம் செய்வோம் பட்டம் ஆள்வோம் (60) கட்டினைத் தகர்ப்போம் எனக்கனல் கக்கி மங்கையர் வழக்கிடும் மன்றமும் ஆகும்; மறைநூல் கூடும் பொருளின் கூட்டம் தெய்வம் விண்ணும் மண்ணும் வெயிலும் நிழலும் அறிவும் உயிரும் அனைத்தும் அஃதே (65) எழுதுகோல் தெய்வமென் எழுத்துந் தெய்வம் குழந்தையுங் கூளமுந் தெய்வ மென்றே கடவுட் கொள்கை கழறும் மறைநூல்; புரட்சிச் சின்னம் சத்திரம் சாவடி தண்ணீர்ப் பந்தர் வைத்தன போதும்! வாழ்வில் ஒளிதர (70) ஏழை மாந்தருக் கெழுத்தறி வித்து வீடுகள் தோறும் கலைவிளக் கேற்றுக வீதிகள் எங்கணும் வேண்டுக பள்ளி கல்வி இலாததோர் ஊரினைக் காணின் ஒளிநெருப் புண்ண ஊட்டுக என்று (75) பொங்கி எழுந்த புரட்சிச் சின்னம்; விடுதலை முரசம் பறையர் குறவர் பரவர் மறவர் திறமை மிகுத்திடும் தீதறு தொழிலைப் புரிந்தன ராகிப் புகழ்தரு கல்வி அறிவால் உயர்ந்திட அகிலம் எல்லாம் (80) வீறிட் டெழுந்த விடுதலை முரசம்; போர்ப்படை வரிசை வேதனை தந்திட வேற்படை வரினும் தலையில் வானம் தகர்ந்து வீழினும் அச்சம் இல்லை அச்சம் இல்லைஎன் றார்த்தெழுங் கவிதை போர்ப்படை வரிசை; (85) புதுமைக் கருவூலம் செத்தபின் செல்லும் உலகம் உளஎனல் பித்துரை பேயுரைஎன் றூதிய சங்கம்; சுதந்திர தாகம் தணிக்கும் சுனைநீர்; அடிமையில் மோகம் அழிக்கும் சுடரொளி; தாய்கை விலங்குகள் தகர்க்கும் சிற்றுளி (90) இன்னல்கள் தீர்க்கும் இனியநன் மருந்து; ஒருவற் குணவிலை எனும்உரை கூறின் உலகை அழிப்போம் எனவெழும் அணுவெடி; சாதி மதங்களைச் சாய்த்திடும் கொடுவாள்; அறிவுரை தருநூல் கற்றோர் மற்றோர் கற்பதற் கெளியது; (95) தேன்படு சுளைஎனத் தித்தித் திருப்பது; தாய்மொழி மறந்து தாழ்வினில் விழுந்து தமிழர் எனும்பெயர் தாங்கிடும் அன்பர் ஆணவம் அடங்க அறிவுரை புகல்வது; என்னால் ஒல்லுமோ? திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல் (100) பாரதிப் புலவனைப் பகர்வன் என்று பாரதி தாசன் பாடின ராயின் எளியேன் என்னால் இயம்பிடல் ஒல்லுமோ? அவனும் நாமும் வாழத் தமிழ்மொழி வழிகள் காட்டினன் நீளத் திரிந்து நெறிதடு மாறிக் (105) கண்குரு டாகிக் காலங் கழித்தோம் நாட்டுணர்வூட்டும் பாட்டுகள் சொன்னான் கேட்டில செவிகள் கிடந்தனம் செவிடாய் இசைத்தமிழ் பாடினான் இனித்தது தெரிந்தும் வசைக்கிலக் காகித் தமிழிசை மறந்து (110) வாய்திற வாமல் ஊமைய ராகி வாழ்ந்தோம், மங்கையர் வாழ்வினிற் புதுமை மலர்ந்திடக் காணோம், மதவெறி கொண்டோம், பழமைச் சேற்றில் படிந்தோம், மூடச் செயல்கள் பலவும் சேர்த்தோம் அந்தோ? (115) ஒற்றுமை விடுத்தோம், கற்றவை மறந்தோம், செற்றிடு விலங்குச் செயல்கள் மிகுந்தோம், அவன்மொழி மறந்தோம், ஆர்ப்பரித் திருந்தோம், மண்டபங் கண்டோம், மாலைகள் சூட்டினோம், கவிதைத் தொகுப்பெலாம் கண்கவர் முறையில் (120) அச்சில் வெளியிட் டகமிக மகிழ்ந்தோம்; கயமை வேண்டா ஐயகோ பற்பல பாடல்கள் காணோம் சிதைந்தன சிற்சில, சீரில சிற்சில, கவிதையை மறைத்தோம், கவிஞனைக் குறைத்தோம், பாரதி முகத்தில் படரும் மீசையை (125) நறுக்குந் தொழிலில் நாம்புகல் நன்றோ? கத்திரி வேலை காட்டுதல் தீமை; உலகம் பழிக்கும்; ஓங்குயர் கவிஞன் கண்ணைக் குத்துங் கயமை வேண்டா வாழிய உலகு அவனை உணர்வோம் அவன்வழி நடப்போம் (130) நாடும் மொழியும் நலம்பெறச் செய்வோம் வாழிய பாரதி! வாழிய தமிழ்மொழி! வாழிய தமிழினம் வாழிய! வாழிய தமிழகம் வாழிய உலகே! தலைவர் : திரு.சா. கணேசனார் இடம் : ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி - பாரதி விழா, காரைக்குடி. நாள் : 24.9.1955 6. நட்பு எண்சீர் விருத்தம் அகத்துக்கண் மாசிலராய், இன்னாச் சொற்கள் அழுக்காறு வெகுளிஅவா நான்கும் நீக்கித், தொகுக்கின்ற செல்வத்தால் ஈத்து வந்து, தொண்டொன்றே பேணிவரும் தலைவ ரேறே! மிகப்பழைய தமிழ்காக்க அறப்போர் ஆற்றும் வேங்கைஎனும் கவிமணிகாள்! அரங்கம் காணத் தொகுப்பாக இவண்வந்தீர்! jÄH ntns!* தொழுதெனது கவிதைகளைப் பாடு கின்றேன் (1) வேண்டும் நட்பு வளர்பிறையின் இயல்பினதாய், புலமைச் சான்றோன் வகுத்துரைத்த நூல்நயம்போல் இனிமைத் தாகித் தளர்நிலையில் உடுக்கைஇழந் தவன்கை போலத் தானேவந் துதவுவதாய், அகம்ம லர்ந்து வளருவதாய், மிகுதிக்கண் இடித்து ரைத்து வாழ்வுதரும் பண்பினதாய், நற்கு ணத்தின் விளைநிலமாய்ப் பழிநாணு கின்ற நட்பே விழைகஎன வள்ளுவப்பே ராசான் சொன்னான் (2) வேண்டா நட்பு சூதுமிகு நெஞ்சினராய்ச் சிரித்துப் பேசிச் சொல்வேறு வினைவேறு பட்டார் நட்பும், பாதகங்கள் செய்யார்போல் தொழுது நின்று படையொடுங்கும் கையுடைய ஒன்னார் நட்பும், தீதறியா நன்மனத்தால் அமையார் நட்பும், திறம்படுநூல் பலகற்றும் உள்ளம் மாணாப் *பேதுடையார் நட்புமிவை தீமை எல்லாம் பெருக்கிவிடும் கொள்ளற்க என்றும் சொன்னான் (3) உணர்ச்சி நட்பு காடெல்லாம் கழனியென வளங்கொ ழிக்கக் காவிரித்தாய் அருள்சுரக்கும் சோழ நாட்டுப் **பீடுயர்கோப் பெருஞ்சோழன், பாண்டி நாட்டுப் பெரும்புலமைப் பிசிராந்தைப் பெயரோன், என்போர் ***பாடரிய ஒருவர்புகழ் ஒருவர் கேட்டுப் பழகலலால் சேர்ந்திருந்து பழகல் இல்லார் ஊடெழுந்த உயர்நட்பின் திறத்தை நம்மால் உணர்ந்துரைக்க எளிதாமோ உலகீர் இன்றே? (4) வடக்கிருந்தான் அச்சோழன் என்று ணர்ந்து வழியருமை கருதிலராய் விரைந்து வந்து படக்கிடந்தார் அப்புலவர் என்ற செய்தி பாரறியும்; அழிவின்கண் அல்லல் உற்றுக் கிடப்பதுவே நட்பென்றும், உணர்ச்சி நட்பாங் கிழமைதரும், புணர்ச்சியது வேண்டா என்றும் எடுத்துரைத்த இலக்கணத்துக் கிலக்காய் உள்ளோர் இவ்வரிய இருநண்பர் அன்றோ சொல்வீர் (5) செயற்கரிய நட்பு ‘M‹wɪj gyrh‹nwh® thG« Cnu‹ MjÈdhš k»œªâUªnj‹ eiubah ʪnj‹ eh‹, òyå®! என்றுபிசி ராந்தைப் பேரார் நவிலுவரேல், உடலுரமும் மகிழ்வும் நட்புத் தான்றருமென் றுணர்கின்றோம், தக்கார் கூடி நகலினினி தாயிற்பின் காண்போம் அந்த வான்றொடுக்கும் பதிஎன்றார் சான்றோர்; வாழ்வில் செயற்கரிய யாவுளவோ நட்பே போல? (6) கொடுத்துங் கொளல் இறப்பொழிக்கும் மருந்தனைய, எங்குங் காணா இருநெல்லிக் கனிஒன்றை நெடுமான் அஞ்சி மறைந்திருந்து தானுண்ணும் மனமே இல்லான் கொடுத்துவக்கும் மாண்புடையன் ஈர நெஞ்சன் சுரக்கின்ற அன்பூற அவ்வை என்னும் சொற்கிழத்திக் கீந்துவந்தான் என்ற செய்கை, சிறப்பிருக்கும் பண்பினர்க்குப் பொருள்கொ டுத்துங் கொளல்வேண்டும் நட்பென்ற உண்மை காட்டும் (7) தெளிந்த நட்பு தண்ணிலவின் ஒளிக்கதிர்கள் சாள ரத்துள் தலைகாட்டி ஒளிசெய்ய, பஞ்சின் சேக்கை* வெண்மலரின் மணம்விரிக்க, தென்றற் காற்று விளையாடி அவண்திரிய**, பொய்யாச் சொல்லன்*** கண்மலர்கள் குவித்திருக்க அறியா நல்லாள் கணவனென அவனருகே துயிலக் கண்டான் கண்ணியவான் சீனக்கன், பதறல் இல்லான் கதறல்இலான் அவரிடையே பள்ளி கொண்டான் (8) உயிரனைய என்நண்பன் தெளிந்த இல்லில் ஒருதீங்கும் செயஒவ்வான், அறியா திங்கே அயர்ந்துறக்கம் கொண்டுள்ளான் என்றி ருந்த அயிர்ப்பில்லாச் சீனக்கன் நட்பை எண்ணின் உயிருருகும் ஊனுருகும் உள்ளமெல்லாம் உருகுமன்றோ? நட்டார், தன் மனம்நோ தக்க செயல்செய்யின் பேதைமைஎன் றுணர்க என்றே செப்பியநம் வள்ளுவன்சொல் சிந்தை கொள்வீர் (9) அன்பின் வழிவந்த நட்பு அரண்மனையில் தனியிடத்தில் துரியன் காதல் அரசியொடு சொக்கட்டான் கன்னன் ஆட, வருகின்ற** கொழுநற்கண் டெழுந்தாள்; வேந்தன் வரவறியாக் கன்னன்முன் றானை பற்றத் தருமணிமே கலையுகவே கண்டான் அந்தத் தலைவணங்கா முடியரசன்; துரியன் என்னும் உருமிடியே றன்னான்என் செய்வ னோஎன் றுளமொடுங்கி உயிரொடுங்கி நின்றான் கன்னன் (10) தோள்வலிமை படைவலிமை துணையின் வன்மை சொல்கின்ற வலிமைஎலாம் கொண்ட வேந்தன் தோள்விழையும் தன்மனையைக் கூசா திங்குத் தொட்டிழுத்த கையிரண்டைத் தலையை மெய்யை வாள்வலியாற் பலகூறா ஆக்க வல்லான், எடுப்பதுவோ கோப்பதுவோ மணியை என்றான்; நீள்அன்பின் வழிவந்த கேண்மை யாளர் ***அழிவந்த செய்யினுமன் பொழியார் அன்றோ! (11) ஈடிலா நட்பு மதிமுகத்துக் காதலியாள் தந்த இன்பம் மழலைமொழிச் செல்வங்கள் தந்த இன்பம் புதிர்போலும் மேலுலக வீடென் றிங்குப் புகல்கின்ற இன்பம்அறம் தந்த இன்பம் மதுவருந்திக் கவிநுகர்ந்து யாருங் காணா மயலுலகில் பறந்துவரும் இன்ப மெல்லாம் மதிமிகுத்த நட்பீனும் இன்பம் ஆமோ? மாநிலத்தீர் உயர்நட்பைப் பேணிக் கொள்வீர் (12) உடல்குறைக்கும் மனக்கவலை என்னும் நோய்க்கோர் ஒப்பரிய மருந்தாகிப், புண்ணும் ஆற்றித், தொடர்கின்ற துன்பத்திற் பங்கு கொண்டு, துணைநின்று, மகிழ்வாகத் துயரும் ஏற்றுக், கெடுவழியில் அறியாமல் செல்லுங் காலை கிளர்ந்தொளிரும் ஒளிவிளக்காய் வழியுங் காட்டி, உடனுறைந்து தோள்தந்து பகைப்பு லத்தும் உயிர்காக்கும் நட்பினைப்போல் உலகில் உண்டோ? (13) உளங்கவர் நட்பு காதலியைப் பிரிந்தேனும் இருத்தல் ஆகும் கருத்தொன்றும் நண்பரையார் பிரிய வல்லார்? தீதறியா நட்பதனின்* உலகில் நெஞ்சம் திறந்துரைக்க இடமுண்டோ? எண்ணக் கூட்டம் மோதுகின்ற பொழுதத்து மனங்க லங்கி மூழ்காமல் வழிப்படுத்த வல்லார் யாரோ? சூதறியா நண்பனுளம் திறந்து பார்ப்போர் துணைசெய்யும் நண்பருருத் தோன்றல் காண்பார் (14) தீய நட்பு தகுதியிலார் தம்புகழே பரப்பு தற்குத் தாளமிடும் நட்புண்டு; நண்பர் தம்முள் பகைவிளைத்துக் கோள்சொல்லி இன்பங் காணும் பதர்மனிதர் நட்புண்டு; மூன்று நான்கு பகலிருக்கும் சிற்றுண்டி நட்பும் உண்டு; பண்பில்லாச் சிறுமதியர் செய்த ஒன்றை மிகவுரைத்து மகிழ்கின்ற நட்பும் உண்டு; மெதுவாக வஞ்சிக்கும் நட்பும் உண்டு; (15) தொடர்வண்டி நட்புண்டு; பயனில் பேச்சுத் துணைக்காகத் திரிந்துவரும் நட்பும் உண்டு; *குடர்மிகுந்த தொந்திக்குப் பூசை செய்யக் கும்பிட்டு வால்பிடிக்கும் நட்பும் உண்டு; பிடர்சொரிந்து வாய்பிளந்து புகழ்ந்து பேசிப் பின்புறத்து வசைபொழியும் நட்பும் உண்டு; கடன்தந்து வளர்க்கின்ற நட்பும் உண்டு; காசினியீர் இவைஎல்லாம் நட்போ? சொல்வீர் (16) நட்பு மலர் உளமொன்றி உயிரொன்றி நன்மை தீமை உறுகாலத் துடனொன்றி உயர்ந்த செல்வ வளமென்றுங் குலமென்றும் சமய மென்றும் வகைப்படுத்தி உணராமல் வாழின் உள்ளக் குளமன்றில் நட்புமலர் பூத்துக் காட்டும்; குவலயத்தில் சிலரேஇப் பண்பு ணர்ந்தார்; களவொன்றும் நெஞ்சுடையார் பணத்தை வீசிப் பெறமுயல்வார் கடைச்சரக்கா இந்த நட்பு? (17) அமைதி தரும் நட்பு பகைகுறித்த நாடெல்லாம் பகைவி டுத்துப் பாரனைத்தும் ஆள்கின்ற மனம்வி டுத்துத் தொகைமிகுத்த அணுவெடியைக் கைவி டுத்துத் தொல்லைப்போர் வெறிவிடுத்து நட்பை நாடி வகைவகுத்து நாடோறும் திரியக் கண்டோம்; வல்லரசே இவ்வண்ணம் என்றால் நட்பின் தகைகுறித்து வாய்திறத்தல் எளிதோ சொல்வீர் தாரணியில் அமைதிக்கு நட்பே வேண்டும் (18) இந்தஒரு குறட்கழகம் வசதி ஒன்றும் இலாதிருந்தும் தளராத உழைப்பும் நட்பும் உந்திஎழும் தொண்டுளமும் துணையாக் கொண்டே ஒளிபெறச்செய் தேனப்பன் எண்ணம் வாழ்க! இந்தியினால் வடமொழியால் ஆங்கி லத்தால் இடர்வருமேல் இடுப்பொடிக்கும் வீரம் வாழ்க! புந்திதரும் குறள்வாழ்க! கழகம் வாழ்க! புதுமைஎலாம் நிறைந்தொளிரும் தமிழே வாழ்க! (19) தலைவர் : அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் தலைப்பு : வள்ளுவர் வாக்கில் - நட்பு இடம் : குறள்விழா - காரைக்குடி நாள் : 22.7.1956 7. யாதும் ஊரே யாவரும் கேளிர் வெண்கலிப்பா வணக்கம் செந்தமிழ்க்குக் காவலரே சிதம்பரநா தப்பெரியீர்! பைந்தமிழின் பாடலுக்கோர் பரம்பரையைத்* தந்தவரே! இந்தக் கவியரங்கில் எழுந்தருளுங் கவிமணிகாள்! வந்து செவிமடுப்பீர்! வணங்கிக் கவிசொல்வேன்: சுவை பிறந்தது ஓங்கும் மலைக்குகையில் உயர்ந்த மரக்கிளையில் ஆங்காங்கே தனிமனிதன் ஆர்ப்பரித்து வாழ்ந்திருந்தான் கூட்டு வாழ்வறியான் கொல்லும் வினையுடையான் காட்டு வாழ்வறிவான் காணும் விலங்கினத்தை வேட்டைத் தொழில்புரிந்து வேகாத் தசையுண்பான், காட்டு நெருப்பிடையே கருகிக் கிடந்தவொரு ஆட்டின் தசைசுவைத்தான் அடடா! சுவைகண்டு போட்டுப் பொசுக்கிப் புசிப்பதுவே தொழிலானான்: மொழி பிறந்தது வனவிலங்கை ஓர் நாள் வளர்நெருப்பிற் சுடுங்காலை அனல்சிறிது தாக்கியதால் ஆஊ என் றலறிவிட்டான் உள்ளத் துடிப்பை உணர்த்தும் ஒலிக்குறிப்பைத் தெள்ளத் தெளிந்துணர்ந்தான் தீசுட்ட அந்நாளில்; பக்கத்துக் காடுறைவோன் பலநாள் வருதலிலான் புக்கான் ஒருநாள் புதுமனிதன் வரவுணர்ந்து உள்ளத் தெழுமகிழ்ச்சி உந்தத் தலையசைத்து மெள்ளத்தன் வாயிதழை வா வென் றசைத்துவிட்டான்; மற்றொருநாள் வேறொருவன் மனம்வருந்தச் செயல்செய்தான் உற்றெழுந்த சீற்றம் உந்துதலால் உள்ளுணர்ச்சி சுற்றிச் சுழன்று சூடேறிப் போ வெனுஞ்சொல் பட்டுத் தெறித்ததுகாண் பதறும் அவனுதட்டில்; இவ்வண்ணம் ஓரெழுத்தால் இயலும் மொழிகண்டான் செவ்வியநன் மொழிஎன்று செப்பும் முறையாகத் தொகைவகையில் விரிவாக்கித் தொல்பழமைக் காலத்தே வகைசெய்தான்; அம்மொழியே வளர்தமிழாக் காண்கின்றோம். தமிழ் காட்டும் உலகம் தனிமுதலாம் அந்தத் தமிழ்காட்டும் நல்லுலகு *துனிமிகுத்த நாடெல்லாம் தொழுதேத்தும் வழிகாட்டி; யாதும்நம் ஊரேயாம் யாவரும்நம் கேளிரென்ற தீதில்லா இவ்வுலகைத் தெளிதமிழே காட்டிற்றுப் போருலக வெறியர்க்குப் புத்திவர நெறிகாட்டி ஓருலக வழிகாட்டும் உயர்மொழிதான் எங்கள்தமிழ் என்னும்போ துடல்சிலிர்க்கும் எலும்பெல்லாம் நெக்குருகும் உன்னும் உளங்குதிக்கும் உடலெல்லாம் தான்குதிக்கும் இன்னும்நாம் அவ்வுலகை ஏறிட்டும் பார்த்திலமே என்னும்போ துளம்வருந்தி இரங்கலலால் என்செய்வோம்? இனியேனும் அவ்வுலகை இங்காக்க முற்படுவோம் முனியாமல் அவ்வுலக முழுப்பொருளும் காண்போம்நாம்: யாதும் ஊரே யாதும்நம் ஊரென்றால் ஏதிலர்தம் நாடெல்லாம் சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதா? யாதும்நம் ஊரென்றால் ஏதிலர்க்கு* நம்நாட்டைச் சூதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா? அன்றதுதான் பேதைமையாம்; அவ்வவர்க்கு மொழியுண்டு தொன்றுதொட்ட பண்புண்டு சொல்வதற்கு நாடுண்டாம் இவ்விவற்றால் பகையின்றி எதிர்ப்பின்றிப் பிறவற்றை வவ்வும் மனமின்றி வாழும் நெறியறிந்து நட்புறவால் உளமொன்றி நடப்பதுவே அதன்பொருளாம் பெட்புற்றுத் தமிழ்காட்டும் இவ்வுலகைப் பேணுவம்நாம்; யாவரும் கேளிர் அனைவரும்நம் கேளிர்என்ற அம்மொழியும் அப்படியே, இனம்பலவாய் வாழ்ந்தாலும் இறுமாந்து பகைகொண்டு விலங்கினத்தின் கீழினமாய் விளையாடித் திரியாமல் குலங்கருதி மேலென்றுங் கீழென்றுங் குறியாமல் அவ்வவர்தம் நெறிபோற்றி அன்பொன்றே குறியென்று செவ்வியநன் மனங்காத்துச் செயலறமும் மிகக்காத்துத் தோழமையால் ஒன்றாகித் தூய்மையொடு உறவாகி வாழ விழைகஎன வகுத்ததுவே அதன்பொருளாம்; சாதிச் சழக்குண்டு சமயப் பிணக்குண்டு மோதிப் பகைக்க முரண்பட்ட அனைத்துண்டு* கீழான இக்குணத்தில் கேளிர் எனுமெண்ணம் பாழாம் நிலையன்றிப் பண்படுமோ நீர்சொல்லும்! பேரறிவு படைத்தோம்நாம் பேசுகிறோம்! பகுத்துணரும் ஓரறிவு தனையிழந்தோம் உயிர்க்கின்றோம் அந்தந்தோ! ஊர்காத்தும் நகர்காத்தும் உயர்நாடு தனைக்காத்தும் பார்காத்தும் யாதும்ஊர்ப் பண்புணர்ந்து மிகக்காத்தும் தற்காத்தும் தமிழினமுங் காத்துலகங் கேளிர்என்ற சொற்காத்தும் நல்லறிஞர்** சூழ்துணையால் நாம்வாழ்வோம்; தைத்திருநாள் வளைத்த இருள்கிழித்து வாடைப்*** பனிநீங்க முளைத்த இளம்பரிதி முகங்கண்டு வணங்கிடுவோம் குழைத்தெடுத்த பொங்கலுண்டு குலவிக் களித்திடுவோம் உழைப்பின் பயன்தருநாள் ஊரெல்லாம் புதுக்கும்நாள் தைத்திருநாள் இத்திருநாள் தமிழ்காட்டும் நல்லுலகில் வைத்துமனம் வாழ்வோம் மகிழ்ந்து. தலைவர் : செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார் தலைப்பு : தமிழ் காட்டும் நல்லுலகு - யாதும் ஊரே யாவரும் கேளிர் இடம் : வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி நாள் : 14.1.1957. 8. திரு. வி. க. எண்சீர் விருத்தம் குறளென்னுஞ் சொற்பொருளைச் சிறிதுங் காணார் குலவுதமிழ் இலக்கணத்தை என்றுங் கேளார் அறநூலோ பிறநூலோ ஒன்றுந் தேறார் அகரமுதல் வரிசைமட்டும் தெரிந்தாற் போதும் குறளிடத்துக் குறைசொல்வார் திருத்தம் செய்வார் புத்துரையுங் குறித்துரைப்பார் திருக்கு றட்குப் பிறவுரைகள் சரியில்லை பிழையே என்பார் பெருகிவரக் காண்கின்றோம் இந்த நாளில் (1) கற்றற்குத் தகுநூல்கள் கசடு நீக்கிக் கற்றுப்பின் அவைசொல்லும் வழியில் நின்று முற்றுமுணர் அறிவினராய் வாழ்ந்து காட்டி முதற்புலவன் வள்ளுவன்செய் குறள்நூ லுக்குத் *தெற்றெனுமா றுரையெழுதிக் காட்டி அந்தத் திருநெறியில் திரு. வி. க. வாழ்ந்து நின்ற **பெற்றியையான் ஓரளவு தெரிந்த வண்ணம் பாடுகிறேன் பிழையுளதேல் பொறுத்தல் வேண்டும் (2) கடவுட் கொள்கை ஒருநூறு சமயங்கள் படைத்துக் காட்டி உட்கிளைத்த சமயங்கள் பலவுங் கூட்டிப் பெருமைசொலி அத்தனைக்குந் தெய்வங் கண்டு, பெண்பார்த்து மணமுடித்துப் பிள்ளைப் பேறும் உருவாக்கி, ஒருசிலரை இரண்டாந் தாரத் துட்படுத்திப் பிறர்மனையை நாட வைத்துச் சிறுவர்விளை யாடலென ஆடிவிட்டுச் செம்மைநெறி காணாமல் திகைத்து நின்றோம் (3) இருள்சேர இவ்வண்ணந் திகைக்குங் காலை எழுந்ததுவோர் செம்பரிதி, உலகுக் கெல்லாம் மருள்போக ஒளிதந்து கடவுட் பாங்கை மறுவறநன் குணர்த்திற்று; செம்மை கண்டோம்; திருவுடைய வள்ளுவனாம் பரிதி காட்டும் திருநெறியே திரு. வி. க. வேண்டி நின்றார் திருநீறு பொலிநெற்றி உடையா ரேனும் தெய்வநெறி பொதுநெறியே கூறி வந்தார் (4) குறள் நெறியர் அழுக்காறும் அவாவெகுளி இன்னாச் சொல்லும் அகற்றியநன் மனத்துக்கண் மாசொன் றின்றி, ஒழுக்கமுயிர் எனஓம்பி, அறமே போற்றி, உள்ளத்தாற் பொய்யாமல் ஒழுகி, என்றும் வழுக்காமல் குணமென்னும் குன்றில் ஏறி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, நெஞ்சில் தழைக்கின்ற செந்தண்மை பூண்ட ஒன்றால் தகவுடைய அந்தணராய் விளங்கி நின்றார் (5) நாவதனாற் சுட்டவடு ஆறா தென்றே நாகாத்தார் திறமுடனே யாவுங் காத்தார்; *காவலரும் ஏவல்செயக் காத்தி ருக்கக் கற்றறிவு பெற்றிருந்தும் பணிவே கொண்டார்; பாவலர்தம் எல்லார்க்கும் பணிதல் நன்றாம் என்றவுரை பகுத்துணர்ந்து பெரியர் ஆனார்; மேவியதோர் தந்நிலையிற் றிரியா தாங்கண் மிகவடங்கி மலையினுமே பெரிதாய் நின்றார்; (6) **ஒப்புரவு கண்ணோட்டம் அன்பு வாய்மை உயர்நாணம் இவ்வைந்தால் சால்பு தாங்கிச் செப்பரிய ***மிகுதியினால் மிக்க செய்யின் செயற்கரிய தகுதியினால் அவரை வென்றார்; இப்புவியில் ஆணுக்குங் கற்பு வேண்டும் என்றதிரு வள்ளுவனார் நெறியில் நின்றார்; தப்பரிய குறள்நெறியிற் சிறிதும் மாறார் தமிழ்ப்பெரியார் திரு. வி. க. நற்பேர் வாழ்க! (7) எது அறம்? இல்லறமா துறவறமா இவ்வி ரண்டுள் எதுவேண்டும் எனவினவின், அறமென் றோத இல்லறமே சாலுமெனக் குறள்நூல் சொல்லும்; இந்நூலில் காமத்தை வேண்டா என்று சொல்லியவர் முன்னின்றே இல்ல றந்தான் தூயதெனச் சான்றுரைத்து நிறுவிக் காட்டி வெல்லுதலைத் தாம்கொண்டு குறள்நூல் வாக்கின் மெய்ப்பொருளை நன்குணர்ந்து விளக்கி நின்றார் (8) பெண்ணின் பெருமை சிறுவரையும் ஒருபொருளா எண்ணச் செய்யும் செல்வத்தைப் பெண்ணாக்கி, மடமை தீய்க்கும் பெருவலிய கல்வியையும் ஓர்பெண் ணாக்கி, பெறுவெற்றி, நல்லழகு, நிலம்பெண் ணாக்கி, வருபசியை நீக்குகின்ற கூலம்* மற்றும் வறுமையையும் பெண்ணாக்கி, வாழ்வில் என்றும் உறுதுணையாய் நல்விளக்காய் விளங்கு கின்ற ஓரினத்தைப் புண்ணாக்கி மகிழ்வு கொண்டோம் (9) இருகண்ணில் ஒருகண்ணைப் புண்ப டுத்தி இயற்கைஎழில் மறுகண்ணால் காண முந்தும் பெருமதியீர்! பெண்மைக்குப் பெருமை நல்கப் பிந்தாதீர்! நடந்துசெலக் காலி ரண்டும் சரிசமமா இல்லைஎனில் நொண்டி என்று சாற்றுவரால்; சமன்செய்து வாழ்க என்றார் பெருமைமிகு திரு. வி. க. நல்ல பெண்ணிற் பெருந்தக்க யாவுளவோ எனுஞ்சொல் ஓர்ந்தார்** (10) இனியவை கூறல் ***படிறிலதாய்ச், செம்பொருளைக் கண்டார் வாய்தான் பகருவதாய், அன்புலகந் திருப்ப தொன்றே படியதனில் இன்சொல்லென் றுரைக்கும் பாட்டைப் பயிலுங்கால் பொருள் njnw‹;‡ தமிழ வானின் விடிவெள்ளி திரு. வி. க. மொழியைக் கேட்டேன் விளங்காத அக்குறளின் பொருளுணர்ந்தேன் கடிதலிலா இன்சொல்லின் இலக்க ணத்தைக் கண்டுகொண்டேன் இனியவையே அவர்வாய்ச் சொற்கள் (11) *துனியுடைய ஒருசிலர்தாம் கூடி நின்று தூய்மைக்குத் தொடர்பிலராய் விலகிச் சென்று நனியிகந்த சுடுமொழிகள் கழறித் தம்முள் நகுமொழிகள் பலசொல்லி நகைத்தா ரேனும் **முனிவறியார், பணிவுடையார், இன்னாச் சொல்லை மொழிந்தறியார், அறிவுரையே உரைத்து நிற்பார் இனியஉள வாகவுமின் னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்தல் என்றார் அன்றோ? (12) சொல் வல்லார் பேரூராம் சென்னைநகர் ஆலை ஒன்றில் பெருந்துயரம் பட்டதொழி லாளர் எல்லாம் ***ஈரேழின் ஆயிரவர் ஒன்று கூடி இனிப்பொறுமை இலைஎன்று கொதித்தெ ழுந்தார்; ஓராளும் இல்லாமல் சுடுகா டாகும் ஒருவிரலைத் தலைவரவர் காட்டி நின்றால்; ஆரூரர் திரு. வி. க. தலைவர் அந்நாள் அவ்விரலை அசைத்தனரா இல்லை! இல்லை! (13) பசிவயிறும் குழிகண்ணும் உடையா ரேனும் பார்வையிலே சுட்டெரிக்கும் தோற்றங் கொண்டோர், விசைஒடிந்த உடலெனினும் ஒவ்வோர் என்பும் வில்லாகும் அம்பாகும் வீரங் கொண்டோர், நசையோடு தலைவர்தரும் ஆணை கொண்டு நாவசையாப் பொம்மைகளாய் நிற்றல் கண்டேன்; பிசகாமல் இனிதுசொல வல்லார்ப் பெற்றால் பெருஞாலம் விரைந்துதொழில் கேட்கு மன்றோ? (14) புகழ்த் தோற்றம் எய்தரிய செயல்செய்து புகழால் மிக்கும், எஞ்சாத பழிமிகவே இயற்றி நின்றும், வய்யகத்து மன்றதனில் தோன்றி நிற்போர் வகைவகையாப் பலருண்டு; நம்பே ராசான் செய்யரிய செயல்செய்து தோன்றும் போழ்தே செவ்வியநற் புகழுடனே தோன்றி நின்றார்; உய்வகையும் நமக்குரைத்து மறையும் போதும் உலகத்தார் உள்ளமெலாம் புகழக் கொண்டார் (15) நடுநிலைமை நடுநிலைமை ஒருசிறிது பிறழ்ந்தா ரேனும் நாடாளும் அமைச்சரவை இவர்க்கும் ஆங்கண் நடுவிருக்கும் ஒருபதவி தந்தி ருக்கும், நான்வணங்கும் இத்தலைவர் நயந்தா ரல்லர்; *நடுவிகந்த ஆக்கத்தை வேண்டேன் வேண்டேன் **நடுவொரீஇ அல்லசெய ஒவ்வேன் ஒவ்வேன் கெடுநிலைமைக் கேகாதீர்! நன்றே செய்வீர்! ***கிளந்தவெலாம் மறப்பதுவோ? என்றே சொன்னார் (16) சுருக்கத்தில் உயர்வு இடுக்கண்கள் பலவரினும் சிரித்து நிற்பார்; ïašbg‹gh®;¶ அற்றேமென் றல்லல் கொள்ளார்; ‡bfhL¡»‹w குணமுடைய ஒருவர் சென்று கொள்கவெனப் பெருநிதியம் தந்து நிற்கப் படுத்திருக்கும் இந்நிலையில் செல்வம் ஏனோ? பண்புடையீர்! கொள்ளேனென் றுயர்வுங் கொண்டார் கெடுக்கின்ற ‡RU¡f¤âš உயர்வு வேண்டும் கிழவரவர் குறள்கூறும் மானங் கொண்டார் (17) குணங்குற்றம் ஓர்தல் பலவாகக் கிளைத்தெழுந்த கட்சிக் கூட்டம், பாரிலுள அகச்சமையம், அவற்றி னோடு குலவாத புறச்சமையம், மற்றும் இங்குக் கூட்டுகிற கூட்டமெலாம் பறந்து செல்வார்; விலகாமல் அனைத்திடத்தும் புகுதல் கண்டு வியர்த்திருப்பர் பக்திஎனும் கவசம் பூண்டோர்; நலமாகும் குணம்நாடிக் குற்றம் நாடி நடுவாக மிகைநாடி மிக்க கொண்டார் (18) தவஞ்செய்தார் பிறனாக்கம் காணினிவர் பொறாமை கொள்ளார்; பேணிஅவர் பெருமைஎலாம் புகழ்ந்து பேசி அறனாக்கம் மிகப்பெற்றார்; மறந்து நின்றும் அணுவளவும் பிறன்கேடு சூழார்; மேலும் உரன்ஆக்கும் தவஞ்செய்தார்; காடு செல்லார்; உடுப்பதுவுங் காவிகொளார்; துறவும் பூணார்; தரங்கெடுக்கும் ஆசையினால் அவஞ்செய் யாராய்த் தங்கருமஞ் செய்துதவஞ் செய்தார் ஆவர் (19) உயர்நட்பு தொழிலாளர் நலங்கருதி உழைக்கும் போழ்து தூய்மனத்துக் காந்தியிவண் வந்தார் என்று முழுவாழ்வுத் தமிழ்ப்பெரியார் காணச் சென்றார்; முகஞ்சுருக்கி *எற்காணக் குருதி தோய்ந்து பழுதான கைகளோடு வந்தாய்? என்று பகர்ந்ததுமே திடுக்கிட்டார் திகைத்து நின்றார்; தொழுதபடி ஒருசொல்லும் கூறா ராகித் துயர்படிந்த மனத்தினராய் இல்லம் சேர்ந்தார் (20) அமைதிக்கே நமதுவிரல் அசையும் அல்லால் அறியாது மற்றொன்றும், குருதி ஏது? *சுமைமனத்தர் அவர்மனத்தை மாற்றி விட்டார்! சூதறியா நல்லுள்ள மேனும் கீழோர் இமைநொடியில் மற்றுவரோ? என்று சிந்தித் தினிதிருந்தார்; நோதக்க நட்டார் செய்யின் தமையறியாப் பேதைமையாம் கிழமை யும்மாம்; தமிழ்நெஞ்சம் வன்சொல்லை மறந்த தன்றே (21) தென்னாட்டில் இந்திமொழி புகுந்த காலை திருநாட்டின் **முதலமைச்சர் இவர்க்கு முன்பே பன்னாள்கள் பழகியநல் நண்ப ரேனும் பைந்தமிழ்க்குத் தீங்குசெய வேண்டா வென்று முன்கூட்டி இடித்துரைத்தார், அல்லல் ஏற்றார்; முகநகுதற் பொருட்டன்று நட்டல், நட்டார் பின்னீர்க்கும் மிகுதிக்கண் இடித்து ரைத்துப் பேசுதற்கே என்றகுறள் தெளிந்து நின்றார் (22) ஈரோட்டுப் பெரியாரும் திரு. வி. க. வும் இனிதுவப்பத் தலைக்கூடிப் பின்பு கொள்கை வேறாகிப் பிரிந்தாலும் உள்ளும் வண்ணம் விலகுதலே மேற்கொண்டார், என்றும் போலச் சீராட்டிப் பேசிடுவார், ஒருகால் ஆள்வோர் சிறைவைத்தார் பெரியாரை என்று கேட்டுச் சாராட்சி நடப்பதுவோ? சரிந்து மாயும் சமயமிதோ? எனக்கனன்று தலைமை ஏற்றார் (23) சென்னைநகர்ப் பெருந்திடலில் மக்கள் கூட்டம் சிங்கமெனச் சூழ்ந்திருக்கத் தலைவர் நின்றார் முன்புறத்தில் துப்பாக்கி வீரர் நின்றார் முதன்மைபெறும் ஊர்காவல் தலைவர் வந்து பின்னின்று மறுப்பாணை தந்தார்; திங்கள் பிழம்பனலைக் கக்கியது கண்டேன் கண்டேன் உன்னுமுனம் உடுக்கையிழந் தவன்கை போல உதவுநட்புக் கிலக்கியமாய் வாழ்ந்து நின்றார் (24) சொல்வல்ல நல்லறிஞர் காஞ்சி அண்ணா துரைஇவர்தம் கருத்துரையை மறுத்து ரைப்பார் வில்விடுக்கும் அம்பெனவே சிலகால் தாக்கி விரிவுரைகள் ஆற்றிடுவார்; கேட்டி ருந்தும் நல்லுள்ளம் கொண்டஇவர் நயந்து பேசி நல்லவரே இவ்விளைஞர் தமிழன் என்றே சொல்லிடுவார்; அழச்சொல்லி இடித்து ரைக்க வல்லார்நட் பாய்ந்துகொளும் தூய நெஞ்சர் (25) இவ்வண்ணம் வள்ளுவர்தம் வழியில் நின்ற என்தலைவர் திரு. வி. க. வாழ்விற் கண்ட மெய்வண்ணம் ஒருசிலவே விளம்பி நின்றேன் மேலான மெய்ந்நெறியே அவர்தம் தோற்றம் உய்வண்ணம் நமக்கவர்தாம் உணர்த்திச் சென்ற உண்மைகளை மறவாமல் ஓர்ந்து நின்று செய்வண்ணம் செயலாற்றி வாழ்வோம் வாழ்வோம் செந்தமிழும் நம்நாடும் வாழ்க! வாழ்க! (26) முடிப்புரை சிறந்தபுலச் சான்றோரை ஆக்கித் தந்தால் தென்னகமும் தேயாது வாழும் என்றால் மறைந்துவிட்ட திரு. வி. f., மொழிக்குன் றாய மறைமலையும் பாரதியும் உரிமை வேட்கை உரந்தழுவும் சிதம்பரனார், கல்வி கேள்வி உயர்கம்பன், இளங்கோவும் யாரோ சொல்வீர் திறங்கொண்ட பலர்பலரைத் தந்தும் தெற்குத் தேய்ந்ததுமேன்? ஆட்டுவித்தால் ஆடார் யாரே? (27) ஆட்டுவிக்க ஆடாமல் நாமே ஆள அரசுரிமை எய்தியபின் யாவ ரோடும் கூட்டுறவு கொளல்நன்றாம் தமிழும் வாழும் குலையாமல் தென்னகமும் வாழும் என்று கூட்டமெலாம் திரு. வி. க. கூறி வந்தார்; குறுகியநோக் கென்றுசிலர் திரித்துச் சொல்லிக் காட்டுவதை நம்பாதீர்! தென்ன கத்தைக் காப்பதுவே நமதுகடன் வாரீர்! வாரீர்! (28) தலைவர் : வள்ளுவர் வழியில் திரு.வி.க. இடம் : குறள் விழா - காரைக்குடி நாள் : 11-8-1957 9. அழகப்பர் எண்சீர் விருத்தம் அகம்மலர்த்தும் செந்தமிழே! உயிரே! bkŒna!* அகிலத்து மொழிமுதலே! அன்பே! பண்பே! **புகல்கொடுத்துச் சிறியேனை ஆட்கொள் செல்வீ! பொழுதெல்லாம் களிப்பருளும் தெய்வத் தாயே! பகைதவிர்த்துத் தமிழ்பாடும் என்றன் நாவால் பாரறிய அழகப்பன் புகழு ரைக்க வகைவகுத்த சொற்பொருளால் அணியால் ஆன்ற*** வளமிக்க கவிவெறிஎன் நெஞ்சில் ஏற்று! (1) பற்றறுக்கும் துறவுநிலை பூண்டி ருந்தும் பால்மொழியாம் தமிழ்ப்பற்றுத் துறவா உள்ளம் பெற்றதனால் தாய்மொழிக்குத் தீமை என்றால் பேசாத மேடையிலும் பேசு கின்ற நற்றலைவ! கலைத்திருநாள் காணும் நல்லீர்! நலஞ்சான்ற கவிபுனைவீர் எங்கள் நெஞ்சில் உற்றிருக்கும் அழகப்ப வள்ளால்! அன்பின் உளங்கனிந்த என்வணக்கம் கொள்க நன்றே (2) அவையடக்கம் முன்னைஎழு வள்ளல்தமைச் சங்கச் சான்றோர் முழுமையுறு செந்தமிழால் புகழ்ந்துரைத்தார் என்னையுமோர் வள்ளல்புகழ் பாடச்சொல்லி ஏற்றமெனக் களித்தமைக்கு நன்றி; ஆனால் முன்னையவர் பொருள்கொண்டு, மகிழ்ந்து, வள்ளல் முன்னின்று, விலையில்லாக் கவிதை சொன்னார்; என்கவிக்குப் பொருளில்லை; அவனும் இல்லை எனினும்உயர் புகழுக்கே பாடுகின்றேன் (3) என்குலத்துப் பாவலர்தம் பனுவல் எல்லாம் எழுவள்ளல் செவிகுளிரக் கேட்டார் அந்நாள்; என்கவிக்குச் செவிகொடுக்க அழகன் இல்லை ஏங்குகிறேன்; அவனுயிரைக் குடித்த காற்றே! பொன்னுடலைச் சுவைத்தொளிர்ந்த தீயே! வானே! புல்லர்தமைப் பொறுத்திருக்கும் நிலமே! நீரே! தென்னகத்து வள்ளலிவன் செய்த தொண்டைச் சிறுசெந்நா விளம்புவதைக் கேட்பீர்! கேட்பீர்! (4) எழுவரா? எண்மரா? வரையாது வழங்குகொடை வள்ளல் தம்மை வரையறுத்தார் முன்னாளில் எழுவர் என்றே; குறையாமல் கல்விக்கே கோடி கோடி கொடுத்துயர்ந்த அழகனுமோர் வள்ளல் ஆனான் கரவாத பிறரெவரும் இருப்ப ரேல்இக் காலத்தும் உளரெழுவர் வள்ளல் என்பேம் பிறராருங் காணேமால், ஒருவன் நின்றான் பெருங்கொடைஞர் அறுவர்க்கு யாண்டுச் செல்கேம்? (5) ஆதலினால் முன்வகுத்த எழுவர் என்ற எண்மாற்றி அவருடனே எண்மர் என்போம்; ஓதுகின்ற மாணவரும் தேர்வுத் தாளில் உயர்வள்ளல் எண்மரென எழுதிப் போந்தால் பேதலியேம் மதிப்பெண்கள் உரிய நல்கிப் பெருங்கொடையால் வள்ளலென யாமும் வாழ்வோம்; ஏதமிலான் இத்துறையில் புரட்சி செய்தான் எவரிந்த அழகப்ப வள்ள லொப்பார்? (6) ஒரே வள்ளல்! அன்றிருந்த கொடையாளர் எழுவர் தாமோ? ஆயிரவர் இருந்தமைக்கு நூல்கள் சான்றாம்; என்றாலும் வள்ளலெனும் பெயரைப் பெற்றார் எழுவர்க்கு மேலில்லை; இற்றை நாளும் துன்றியதம் பொருளீவார் பலர்தா மேனும் துணிந்துரைக்கின் வள்ளலெனும் புகழைத் தாங்கி நின்றிருக்க அழகப்பன் ஒருவ னேதான்; நெஞ்சிருப்போர் கைவைத்தால் இதயம் சொல்லும் (7) அரசரும் வள்ளலும் தென்னாட்டுத் திசைதோறும் கோவில்கட்டித் திருப்பணிகள் எனும்பெயரால் அள்ளி வீசும் இந்நாட்டுப் பரம்பரையில் இருவர் தோன்றி இருநிதியம் கல்விக்கே வாரித் தந்தார்; முன்கூட்டிச் செய்தவர்நம் செட்டி நாட்டு முதல்மன்னர்;* அழகப்பர் மற்றோர் வள்ளல்; என்பாட்டுக் கடங்காது வள்ளல் உள்ளம் **கொடைமடமென் றிருசொல்லே சொல்லத் தோன்றும் (8) காடு கெடுத்தான் நடப்பவர்தம் கால்வருந்த முட்கள் தைக்கும் நச்சரவம் பலநெளியும் கொடிய காட்டைக் கெடுத்தொழித்து நகராக்கிக் கல்விக் கூடம் கிளைத்தெழும்பத் தானுறையும் இல்லுஞ் சேர்த்துக் கொடுத்திருக்கும் இயல்புடையான் ஈட்டுஞ் செல்வம் அத்தனையும் ஈத்துவக்குங் குமணன் போல்வான் படித்துவரும் பன்னூறு மக்கள் உள்ளம் பைந்தமிழால் அள்ளூறிப் பாடும் வள்ளல் (9) கலைக்கோவில்கள் அகரமுதல் நெடுங்கணக்கை ஓது தற்கும் அடுத்தடுத்த உயர்நிலையில் கற்ப தற்கும் மகளிருயர் கலைக்கல்வி பயிலு தற்கும் மாணாக்கர் கலைஎழிலை அறிவ தற்கும் தகவுடைய ஆசிரியப் பயிற்சிக் கென்றும் தளராத உடற்கல்வி கற்றற் கென்றும் புகலரிய விஞ்ஞானம் தொழில்நு ணுக்கம் பொறியியல்என் றத்தனைக்கும் கோவில் கண்டான் (10) துணிவுடையான் வணிகத்தால் அழகப்பன் அளகை* அப்பன் வாழ்வடைந்தான் எனினும்அதில் மூழ்க வில்லை; வணிகத்தில் பெரியதொரு இலாப மென்றால் வருமுன்பே அத்தொகையைக் கொடுத்தேன் என்பான் துணிவகத்தான் மிகப்பெரிய இலக்கம் என்ற தொகைக்குரிய மதிப்பெல்லாம் குறைத்து விட்டான்; **பணிகுறித்துக் கொடுத்ததொகை எண்ணு வீரேல் பகர்ந்ததனைச் சரிஎன்பீர் பொய்ம்மை இல்லை! (11) பாரி இருவர் நனிசெல்வம் ஆங்காங்குக் கல்விக் காக நயந்தளித்த பேருள்ளம் கண்ட நாட்டார் நுனிமூக்கிற் சுட்டுவிரல் சேர்த்து, முன்னை நூலிலன்றி யாங்கணுமே கண்ட தில்லை! இனிநமக்குப் பாரிஎன இருவர் கண்டோம் எனவியந்தார்; அச்செம்மல் விழைவே போல இனிதெனப்பல் கலைக்கழகம்* ஆதல் வேண்டும் இருநிலத்தில் அவர்புகழும் ஓங்க வேண்டும் (12) பெற்றோரானான் கல்லூரி வட்டத்தில் இனிதி ருந்து கல்விபயில் பன்னூறு மக்கள் காண்பான் எல்லாரும் சான்றோராம் என்று கேட்க இனியதொரு தாயாவான்; ஆடல் பாடல் வல்லார்போல் மாணவர்கள் நிகழ்ந்துங் காலை வள்ளலிவன் தந்தையினும் மகிழ்வே கூர்வான்; நல்லானை நோய்முறிக்க வீழ்ந்த போதும் நயவுரைகள் நகைச்சுவையில் வழங்கி வந்தான் (13) பெரியார் புகழ்ந்தார் முயன்றுபெறும் செல்வமெலாம் தமக்குப் பின்னர் முழுவுரிமை புதல்வர்க்கே ஆதல் உண்மை; அயர்வின்றி இவனுழைப்பால் கண்ட செல்வம் அவனுக்கே சொந்தமெனப் பெரியார் நாவால்* நயந்துரைக்கப் பெரும்பேறு பெற்றா னேனும் நான்சொல்வேன்; பட்டையந்தான் அவற்கே யன்றிப் பயன்முழுதும் நம்மக்கள் துய்க்கின் றாரால் பாடுதும்நாம் பாடுதும்நாம் வள்ளல் பேரே (14) நிலையாமையுணர்ந்தவன் நிலையாமை நிலையாமை என்று சொல்லி நிறைபொருளைத் தொகுப்பார்கள் வகுத்தல் காணார்; அலைவார்கள் இனுஞ்சேர்க்க மேலுஞ் சேர்ப்பர்; ஆனாலும் இன்பமொரு சிறிதுங் காணார்; அலையாழி பலகடந்தே இவனுஞ் சேர்த்தான் அப்படியே வகுத்தளித்தான் தனக்கொன் றில்லான்; நிலையாமை நன்குணர்ந்தான் இவனே அன்றோ? நிலைத்தபுகழ் இன்பமிகக் கொண்டு நின்றான் (15) அவனோர் கஞ்சன்! பொருள்கொடுத்தான் மிகக்கொடுத்தான்; அதனின் மேலாப் புகழ்கொண்டான்; கொடைசிறிது, சிறிய ஒன்றால் அருள்பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன்; அதிலென்ன வியப்புளதோ? மேலும் அன்னான் ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன்; உவந்தளித்தான் நிதியமெலாம், உண்மை; ஆனால் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீந் தானோ? வருகின்ற புகழெல்லாம் வைத்துக் கொண்டான் (16) எவ்வுயிர்க்கும் அருளாளன் வாடுபயிர் காணுங்கால் வாடி னேனென் றுளங்கனிய வாய்மொழிந்தார் வடலூர் வள்ளல்; ஆடுமலர்க் கொடிகண்ட மற்றோர் வள்ளல் அதுபடரத் தேர்தந்து *படர்து டைத்தான்; சாடுபுயல் வீசுகையில் நமது வள்ளல் தான்வளர்த்த செடிகளெலாம் வீழக் கண்டு வாடியதை நாமுணர்வோம்; எவ்வு யிர்க்கும் வள்ளலென்பார் இரங்கியருள் செய்வர் போலும் (17) வள்ளல்களை வென்றான் பாரிவிடும் தேரதனால் வாழ்வு பெற்ற படர்முல்லைக் கொடிஒன்றே; செல்வம் எல்லாம் வாரிவிடும் அழகப்பன் தந்த வீட்டால் வாழ்வுபெறும் பூங்கொடிகள் கணக்கில் உண்டோ? **சோரிவிடத் தலைதந்தான் குமணன் என்பர்; சொல்லரிய பொருளெல்லாம் கல்விக் காக ***மாரிபடத் தந்ததன்மேல் வாழ்வே தந்தான் மனமுள்ளோர் இவன்கொடையின் அருமை காண்பர் (18) படுபெயலால் மிகநனைந்து குளிரால் வாடிப் பதைபதைத்து நடுநடுங்கக் கண்டு, நெஞ்சு துடிதுடித்தே அடடா ஓ! என்று பேகன் துய்யமயில் ஒன்றுக்கே ஈந்தான் போர்வை; கொடையழகன் பலமயில்கள் கற்ப தற்குக் குடியிருக்கும் தன்வீட்டை ஈந்தான் கண்டோம்; கொடைமடத்தால் உளம்பெரிது பேக னுக்கு, கொடுப்பதிலே உரம்பெரிதே அழக னுக்கு (19) தமிழ்நாடு உலகோடு சமம் வண்மைமிகும் ஆய்தன்னால் நமது தெற்கு வடக்கோடு சமமாக நின்ற தென்றார்; உண்மையிது; நானொன்று துணிந்து சொல்வேன்; உறங்கினுமோர் கொடைக்கனவே காணும் நம்பன் வண்மையினால் உலகோடு சமமே என்பேன்; வடக்கென்ன கிடக்கட்டும் என்று ரைப்பேன்; பெண்மையுளார் அஞ்சிடுவர் ஆண்மை கொண்டேன் பேசுகின்றேன் பாடுகின்றேன் மறுப்பும் உண்டோ? (20) மாசு துடைத்தேன் கொடைத்திறத்தால் புகழ்கொண்டான் பாரி வள்ளல் குவலயத்தில் அவன்புகழே விஞ்சக் கண்டு படைத்திறத்தால் முடியரசர் வேந்தர் மூவர் பாரியின்மேல் அழுக்காறு கொண்டு கோட்டைக் *கடைத்திறப்பு நிகழாமற் சூழ்ந்து நின்றார்; கண்டபயன்? மாசொன்றே! கோட்டை யூரன் கொடைச்சிறப்பால் அரசர்சிலர் அழுக்கா றுற்றார் மாசுற்றார் என்கின்ற கொடுஞ்சொற் கேட்டேன் (21) வள்ளலுக்கு முடியரசர் விளைத்த தீமை வடுவாக அமைந்ததுவே! உலக மக்கள் எள்ளலுக்கும் பொருந்தியதே! என்று நெஞ்சில் எழுகின்ற பரிவால்அம் மாசு நீக்க வள்ளல்புகழ் முடியரசன் பாடு கின்றேன், வண்டமிழாற் பாத்தொடுத்துச் சூட்டுகின்றேன்; **மள்ளர்மிகு படைவலத்தாற் படைத்தார் மாசு; மகிழ்ந்தளிக்கும் ***தொடைநலத்தால் துடைத்தேன் மாசு (22) பண்பாளன் இறையன்பு நிறைமனத்தன் எனினும் தந்தை எனுந்தேவே தொழுதெழுவான்; உற்ற போது* நிறையன்பு கொண்டவரை, ஊக்கந் தந்து நிலைநிற்கச் செய்தவரை மறவா நன்றி யறிவுடையன் என்பதனை விடுதி காட்டும்; அரசியலில் பிறதுறையில் ஆன்ற சான்றோர் செறிநண்பு கொண்டமையைப் படங்கள் காட்டும்; சிரித்தமுகம் அவன்மனத்துத் தூய்மை காட்டும் (23) அனைத்தும் ஈந்தான் அள்ளியள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அந்தோ! வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு வினைமுயற்சி அத்தனையுங் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை அந்தப் போதும் உயிருளதே கொள்கவெனச் சாவுக் கீந்தான் (24) அழகப்பா நகரம் சாந்துணையும் ஈந்திருந்தோன் புகழைச் சாற்றச் சான்றோர்கள் பலர்வேண்டும்; ஒருவன் என்னால் ஆந்துணையோ? சிலபாடல் முற்றுஞ் சொல்ல அமைவாமோ? காவியமே சிறிது சாலும்; போந்துள்ள பெருமக்காள்! உம்மை ஒன்று போற்றிமிக வேண்டுகிறேன்; இந்த வட்டம் சூழ்ந்துள்ள, பகுதியையும் ஒன்றே ஆக்கி **அழகப்பன் நகரெனப்பேர் சூட்டு வீரே (25) தலைவர் : திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைப்பு : எட்டுத் தமிழ் வள்ளல் - அழகப்பர் இடம் : அழகப்பர் கல்லூரி - காரைக்குடி நாள் : 27-10-1957 10. அரசியல் அறிஞன் கலிவெண்பா கூடிக் கவியரங்கம் கூர்ந்து செவிமடுக்க நாடி இவண்வந்தீர்! நற்றலைமை ஏற்றுள்ள *தூத்துக் குடிமுத்தே! தூய கவிபுனைவீர்! ஏத்தி வணங்கி இயம்புகிறேன் என்கவிதை; இல்லாள் ஏக்கம் கூரை பிரிந்ததனால் கொட்டுமழை அத்தனையும் நேரே புகுந்து நிறைந்ததுகாண் நம்மில்லில் ஈரமிகு மண்சுவர்தான் எத்தனைநாள் தாங்கிவரும்? ஓரங் கரைந்தே ஒருபக்கஞ் சாய்ந்ததெனச் சொல்லாத நாளில்லை சொல்லிப் பயனில்லை! கல்லாகிப் போனீரோ? கற்பனையில் வாழ்கின்றீர்? ஊரெல்லாம் இப்படியா உங்களைப்போல் வாழ்கின்றார்? யாரிடம்போய் நானழுவேன்! என்றழுதாள் என்மனைவி; தூற்றாதே வாழ்க்கைத் துணைவியுனை வேண்டுகிறேன்; *நேற்றே விளம்பி நெடுமூச்சு வாங்கவைத்தாய்! இன்று *விளம்பி எடுக்காதே என்னுயிரை! ஒன்று திரண்டிங் குருவாகும் கற்பனையால் புத்துலகஞ் செய்யப் புறப்பட்ட பாவளத்தைக் கத்திக் கெடுக்காதே கட்டழகி எட்டியிரு! என்றுவாய் மூடவில்லை, ஏந்திழையாள் புன்னகைத்து, நன்று கவிமணியே! நான்விலகி நிற்கின்றேன், வீட்டைப் புதுக்க விதியில்லை, முன்னின்று நாட்டைப் புதுக்கவழி நாடுகிறீர்! அவ்வழியைத் தெள்ளத் தெளிவாத் தெரிவை எனக்குரைப்பீர்! உள்ளத் திருத்தி உணவை மறந்திருப்போம் என்றாள் அருகிருந்தாள்; என்னுயிரே! கூறுவன்கேள்! பொன்றா நலம்பயக்கும் புத்துலகங் காண்பதெனில் புத்துலகம் காணும் வழி மாசு மறுவகற்றி, மாண்பை மிகப்பெருக்கிக், காசு பணங்கொழிக்கக், கல்வி நலஞ்செழிக்க, மேழித் தொழில்சிறக்க, மீக்கூர் பசிபறக்க, ஆழிக் கடல்வணிகம் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பல்கிவர வேண்டுமடி! பாட்டால் முடிவதுவோ? சொல்லும் வினைமுடிக்க நல்லரசே வேண்டுமடி! புன்மைச் செயலொழித்து நன்மை புகவிடுத்தால் உண்மைப் புதுவுலகம் உண்டாகும் ஈதுண்மை; ஆள்வோர் புகுத்துசெயல் அத்தனையும் நன்றேஎன் றாள்வோரே தீர்ப்பளித்தல் ஆமோ? அரசியலில் வல்லவராய் நாளை வருவதெலாம் காண்கின்ற நல்லவராய்க் கல்வி நலங்கொண்ட பேரறிஞர் சிந்தித்துச் சீர்தூக்கிச் செப்புகிற நல்லுரையை வந்தித்துப் போற்றி வரவேற்க வேண்டுமடி! ஆள்கின்ற நாமே அறிஞரிவர் சொற்கேட்டால் தாழ்வன்றோ? என்னும் தவறான எண்ணத்தால் புத்துலகம் காண்பதில்லை; புற்றுலகங் காட்டிவிடும் தத்தைமொழி! என்றேன்; தடுத்து நிறுத்தி, அறிஞர் புகழ்பாடல் ஏனத்தான்? நன்கு புரியும் படியாப் புகன்றிடுவீர் என்றுரைத்தாள்; வானொலியார் கட்டளை கண்ணழகி! வானொலியார் கட்டளைதான், புத்துலகம் பண்ணுதற்கு நல்லறிஞன், பாவல்லான், விஞ்ஞானி, ஏருழவன், வாணிகன்,* இத்தகையார் தம்பங்கில் பேரறிஞன் பங்கிசைக்கப் பேணிக் கொடுத்ததனால் பாடுகின்றேன் என்றதும், அப் பாவை விழிசிவந்து, நாடு புதுமைபெற நங்கையரைத் தள்ளிவிட்டீர்! புத்துலகில் பெண்ணைப் புதைத்துவிட்டீர்! என்றெழுந்தாள்; இத்தவறு நானோ இழைத்தேன்? கனிமொழியே! எய்தவனை நோகா தெனைக்கடிந்தாய்! வானொலியார் செய்தபிழைக் கென்செய்வேன்? சேயிழையே! சற்றுக்கேள்! அறிஞன் இல்லா அரசு பொற்சிலம்பை விற்கவந்த பூம்புகார்க் கோவலனைப் பொற்கொல்லன் சொற்கேட்டுப் பொல்லாக் கொலைசெய்து பாண்டியன் செங்கோல் பழுதுபடக் காரணமென்? ஆண்டோர் அறிஞனிலாக் காரணமே ஆகும்; அரசியலில் அறிஞர் அறிவுடையோன் நல்லா றரசேகின் நல்ல நெறியுடைய நாடாகும் நேரிழையே! முன்பிருந்த ஆள்வோர் குடிகளிடம் அண்டி வரிவாங்கி வாழ்முறைகள் கூறி வழிசெய்தார் அன்றறிஞர்; தம்முட் பகைகொண்ட தார்வேந்தர் போர்தவிர்த்துச் செம்மை நெறிநடக்கச் செய்தார்கள் அன்றறிஞர்; மாதே அரசியலில் மாண்புடன் ஆள்பவர்கள் தீதிலா யாழுக்குத் தெள்நரம்பே போல்வார்கள், வீணை நரம்பை மிழற்ற விரல்வேண்டும், ஆணை செலுத்தும் அரசுக் கிவர்வேண்டும், பாட்டுச் சிதையாமல் பண்படுத்தி இன்புறுத்திக் காட்டும் இலக்கணமாய்க் காவல் புரிவார்கள், காதல் வளர்ந்தொளிரக் கண்பார்வை எப்படியோ ஓதும் அரசுக் குயர்அறிஞர் அப்படியாம்; அரசியல் போலிகள் இந்நாட் டரசியலும் இன்னுந் தலைசிறந்த எந்நாட் டரசியலும் எண்ணிஎண்ணிக் கற்றிருப்பார் கல்விச் சிறப்பிருக்கும் கற்றபடி பேச்சிருக்கும் இல்லை இவர்க்குநிகர் என்னும் படியிருக்கும் ஆனால் அரசியலில் ஆளும் பொறுப்பேற்கப் போனாலோ அத்தனையும் போயொழியும், அப்பதவி காத்துச் சுவைத்திருக்கக் கற்பனையும் சூழ்ச்சிகளும் மூத்துத் தலைதூக்கும் மூளை குழம்பிவிடும் வேண்டியவர் வேண்டாதார் வேண்டி அலைந்திடுவர் ஈண்டவரால் புத்துலகம் காண்டல் எளிதாமோ? வல்லவராய் மட்டும் வருபவரால் ஏதுபயன்? நல்லவராய் நாட்டு நலம்விழைவார் வேண்டும்? குடிஎன்றால் கள்என்று கூறும்அறி வாளர் படிசிறக்க ஆளப் பயன்படுதல் இல்லை; அரசென்றால் சுற்றும் மரமென்பார் தாமும் அரசு செலுத்துதற் காகாரே! உண்மைக் குடியரசின் நற்பொருளைக் கூர்த்துணர்ந்தார் நல்ல படியரசை ஆளப் பயன்படுவர் மாமயிலே! அறிஞர் கடமை ஆதலினால் அவ்வறிஞர் ஆசை பதவிஎனும் போதைகளில் சிக்குண்டு போகாமல், அஞ்சாமல், பாழும் அடிமைப் பழிசுமந்து தந்நலமே வாழும் முறையாலே வால்பிடித்து வாழாமல், நாட்டு நலங்கருதி, நாவீறு மிக்குயர்ந்து, கேட்டுச் செயலொழித்துக், கீழ்மைக் குணமொழித்துச், சிந்தித்துச் சிந்தித்துச் சிந்தனையில் காண்பவற்றை முந்திப் படைத்தரசை முன்னேற்ற வேண்டுமடி! அன்றே புதுவுலகம்! அவ்வுலகில் நாமரசர்! என்றேன்; அறிஞரிலே அத்தகையார் உள்ளனரோ? என்னுமோர் ஐயம் எழுப்பினள் என்மனையாள்; இன்னும் இருக்கின்றார் எத்துணையோ பேரென்றேன்; அவர் யார்? ஓரிருவர் சொல்லுங்கள் அத்தான்! எனவுரைத்தாள்; யாரெனநான் ஈங்குரைத்தல் நன்றன்று மற்றொருநாள் அப்பெயரைச் சொல்கின்றேன் என்றேன்; முகஞ்சுழித்துத் தப்பென்ன? சொல்கென்றாள்; சத்தமின்றிக் காதருகே பேர்சொன்னேன்; மாமழையின் பேரருளால் என்வீட்டில் நீர்சொட்டக் கண்விழித்தேன் நேற்று. தலைப்பு : புதியதோர் உலகு - அரசியல் அறிஞன் இடம் : வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி நாள் : 14-4-1958 விளம்பி ஆண்டுப் பிறப்பு 11. குறிஞ்சி கலிவெண்பா பாண்டி எமக்களித்த பாரதி தாசனெனும் பாண்டியனே! எங்கள் பரம்பரைக்கு நற்றலைவா! சார்ந்து கவியரங்கில் தண்டமிழால் பாப்புனைவீர்! ஆர்த்திங்கு வந்த அவையோரே! என் வணக்கம்; வள்ளல் மலை தூய மனத்தொண்டர் சுப்ரமண்யத் தோன்றல்தமை மேய புகழ்போல மேலோங்கு நல்லமலை; பொன்னாடை போர்த்துப் பொலியுமவர் தோற்றம்போல் மின்னாடு மேகங்கள் மேற்போர்த்த பச்சைமலை; பண்ணிசைக்கும் வண்டினஞ்சேர் பைம்பொழில்கள் சூழுமலை; அண்ணலார் நெஞ்சம்போல் தண்ணென் றிருக்குமலை; வண்ண மலர்தோய்ந்து வாசம் பரிமாற நண்ணும் குளிர்தென்றல் நாடோறும் வீசுமலை; வள்ளல் கரம்போல மாணிக்கம் முத்தெல்லாம் அள்ளி இறைக்கின்ற வெள்ளருவி ஆர்க்குமலை; வந்தார்க்குத் தந்து மனங்குளிரச் செய்வதற்கு முந்துவார் போல முகில்குளிரச் செய்யுமலை; காட்சி அந்த மலைச்சாரல் ஆழச் சுனையாட வந்தேன் ஒருநாள்; வடிவழகி ஆங்கொருத்தி வேங்கைமரத் தின்கீழ் விளையாடும் தோழிகளை நீங்கித் தனியிடத்தில் நின்றிருந்தாள்; அன்னவள்தான் வார்த்தெடுத்த பொற்சிலையோ? வானத்து வெண்ணிலவைப் பேர்த்தெடுத்துச் செய்தஒரு பெண்ணுருவோ? மின்கொடியோ? தேனார்ந்த தாமரையும் செவ்வாம்பல் மென்மலரும் கானார்ந்த நீலக் கருங்குவளைப் போதிரண்டும் எள்ளின் மலரும் எழில் மகிழம் பூவுடனே வெள்ளைநிற முல்லைஅர விந்தத்தின் மொட்டிரண்டும் செங்காந்தட் பூவிரண்டும் சேர்ந்து மலர்ந்திருக்கும் எங்கெங்கும் காணா இளவஞ்சிப் பூங்கொடியோ? ஆடுமயிற் சாயலுடன் அன்னத்தின் மென்னடையும் கூடும் கிளிமொழியின் கூட்டுப் படைப்பாவாள்; சிற்பி மனத்தகத்துக் கற்பனையாற் காண்பதன்றிப் பொற்பின் திருவுருவைப் பூரணமாச் சிற்றுளியால் காட்ட இயலாதே! காவியமும் ஓவியமும் போட்டியிட்டுத் தோற்பதன்றிப் பொற்பெழுதப் போகாத கண்ணுக் கினியாளைக் கண்டேன் விழிவழியே நண்ணிக் கலந்துளத்து நானானாள்; கட்டுண்டேன்; ஐயம் *மின்காட்டும் சிற்றிடையாள் **மேனாட்டின் ஆரணங்கோ? தென்னாட்டுக் காரிகையோ? அன்றி வடநாட்டுப் பேரணங்கோ? எந்நாட்டாள்? யாரென்று பேதுற்றேன்*** காரணங்கள் கண்டவுடன் என்னாட்டாள் என்றறிந்தேன்; தெளிவு சிற்றிடையில் காஞ்சிபுரச் சீலை உடுத்தியதால், சுற்றிமணி மேகலையும் சூழுவதால், மார்பகத்துச் சிந்தா மணிஎன்னும் செம்மணியைப் பூணுவதால், செந்தா மரைபுரையும் சீறடியில் மாண்புமிகு செஞ்சிலம்பு கொஞ்சுவதால், சேர்ந்தெனது நெஞ்சிலுறை வஞ்சியவள் கையில் வளையா பதிகலிக்கக் குண்டலமோ காதணியாய்க் கூடி விளங்குவதால், கண்டாள்மேல் ஐயம் கடிதகற்றி அம்மகள்தான் தென்னாட்டுக் காரிகையே செய்ய தமிழணங்கே என்பாட்டிற் கூடும் தலைமகளே என்றுணர்ந்தேன்; புனல்தரு புணர்ச்சி வெற்பின் சுனைநீரால் வேட்கை தணிப்பதற்கு முற்படுவாள் என்வேட்கை மூளுவதைத் தானறியாள்; Ú®gUF§ fhiy Ãiyjt¿ cŸåœªjhŸ ‘M®tUth® fh¥gj‰nf Ianfh! என்றரற்றத் தாவிக் குதித்தேன் தடந்தோளிற் கொண்டுவந்து நீவிக் கொடுத்தேன்; நிலையுணர்ந்தாள் நின்றாள்; தலைநிமிர்ந்து நோக்கினாள்; தையல் விழிதாம் கொலைநின்ற அம்போ? கொடுவாளோ? கூர்வேலோ? நெஞ்சத்துத் தைக்க நிலைதளர்ந்தேன் நோக்கினேன்; வஞ்சியவள் நாணத்தால் மண்கீறும் கால்விரலைப் பார்த்தாள்; அவளைநான் பாராமல் நிற்குங்கால் பார்த்து நகைசெய்தாள்; பாவையவள் பொன்னகையைக்* காட்டாமல் கொவ்வைக் கனியிதழாம் நற்கதவால் பூட்டி மறைத்துவைத்தாள்; பூவை யிமையசைவு வாவாவென் றென்னை வரவேற்புச் செய்வதுபோல் சாவாமல் என்னுயிரைத் தாங்க உதவியதே! அப்பார்வை நன்றி அறிவிப்போ? அல்லாமல் தப்பாஎன் காதலுக்குத் தக்க பரிசளிப்போ? குறிப்பறிதல் என்று தடுமாறி ஏங்குங்கால் வேல்விழியில் ஒன்றும் குறிப்புணர்ந்தேன் ஒப்புதலைக் கண்டுகொண்டேன் ஒர்நொடியில் இத்தனையும் ஒன்றாய் நிகழ்ந்தனவே கார்கண்ட தோகைமயில் ஆனேன் கணப்பொழுதில்; கோலக் குறிஞ்சியிடைக் கூடிவரும் ஆறோடி நீலக் கடலோடு நேர்ந்து கலப்பதுபோல் குன்றிற் பிறந்த குறமகளே! என்னெஞ்சில் ஒன்றிக் கலந்துவிட்டாய் ஓருயிர்நாம் என்றேன்; மலைக்குறவர் பெண்ணுக்கு மாலையிட உங்கள் குலப்பெருமை ஒப்புமோ? கூறுகநீர் என்றுரைத்தாள்; சாதி நமக்கில்லை சாதிப் பிணக்கெல்லாம் சங்கத் தமிழ்மாந்தர் ஆதிப் பழக்கமன் றவ்வழியில் வந்தவன்நான் கீழ்மைக் குணமெல்லாம் கெட்டொழியப் புத்துலக வாழ்வுக் குழைத்துவரும் வாலிபன்நான் மேலும் குறிஞ்சிநில மக்கள் குறவரெனச் சொல்வர் புரிந்தவர்கள் இக்குலத்தைப் புன்மைஎனப் பேசார் மலைமுகட்டில் நிற்கின்றோம் மண்மீ திருப்பார் நிலைவிட்டு நல்ல நெறிசெல்வோம் ஆதலினால் காதற் பெருவழியில் கன்னி துணையாகப் போதல் உளங்கொண்டேன் பொற்கொடியே! என்றேன்; தமிழ் மணம் மறையோர் வருவாரோ? மந்திரங்கள் சொல்லி முறையால் சடங்கெல்லாம் முற்ற முடிப்பாரோ? வேண்டும் திருமணத்தில் வேள்வி நெருப்புண்டோ? ஆண்டு நிகழும் அருவினைகள் சொல்க எனச், சேயிழையே! நம்மணத்தில் செந்தமிழே பாட்டிசைக்கும் காயெதற்கு நல்ல கனியிருக்க? நீயிருக்க நானும் அருகிருக்க நம்அண்ணல் முன்னிலையில் தேனும் சுவைப்பாலும் சேர்ந்ததுபோல் வாழ்த்தொலிக்க *நண்பன் அழகப்பன் நம்மைப் படம்பிடிக்கப் பண்பால் மணமாலை பாவையுனைச் சூட்டிடுவேன் வேற்று மணமுறைகள் வேண்டேன் நமதுதமிழ் ஏற்ற செயலொன்றே ஏற்பேன் எனமொழிந்தேன்; ஆழச் சுனையகத்தே ஆருயிரைக் காத்தமையால் வேழத் திறலுடையீர்! வென்றுகொண்டீர் என்னுளத்தை; m‹nw ck¡fhf M¡»É£nl‹ bkŒíÆiu; e‹nw kz«bgWnth« ehafnu! என்றுரைத்தாள்; ஒன்றானோம் ஓங்கு மலைக்குறிஞ்சி உண்டாக்கும் ஆறுவந்து தேங்கி மருதத்தைச் சீராக்கிக் காட்டுதல்போல் நற்குறிஞ்சி ஈன்றெடுத்த நங்காய் எனைக்கூடி வற்புடைய வாழ்வை வளமாக்கி வீறளித்தாய்! நன்செய் மருதநிலம் நம்குறிஞ்சிப் பார்வையின்றேல் புன்செய் நிலமுமிலாப் புல்லென்ற பாலைநிலம்; அவ்வண்ணம் நீயின்றேல் அன்பனென் வாழ்வெல்லாம் பொய்வண்ண வாழ்வாகி வன்பாலை போலாகும் என்றேன்; அவள்மறித்(து) அவ்வா றுரையாதீர் ஒன்றானோம் நாமினிமேல் உற்றதுணை நீரானீர் திங்கள் முடிசூடித் தேனருவி ஆர்க்கின்ற எங்கள் குறிஞ்சி எழில்காண்போம் என்றுரைத்தாள்; அச்சமில்லை கொல்லும் விலங்கெல்லாம் கூடித் திரிவதனால் மெல்லியல்நீ அஞ்சுவையே என்னலும்அம் மேன்மகள்தான் யானை புலிகரடி யாழிசைத்தால் தாழ்ந்துநிற்கும் *ஏனல் வனங்காப்பேன் ஏதச்சம்? என்றுரைத்தாள்; பாடினாள் பாடு குறமகளே! பண்ணொன்று பாடென்றேன் ஓடும் *மறிபோல ஓடியொரு யாழ்கொணர்ந்தாள்; மெல்விரலால் யாழ்நரம்பை மீட்டிக் குறிஞ்சிப்பண் நல்லிசையால் பாடினாள் நான்கேட்டு மெய்ம்மறந்தேன்; நாட்டை நினைத்தேன் தேன்பிழியாய்த் தித்திக்கும் தென்னாட்டின் பண்ணெல்லாம் ஏன்மறந்தார் இந்நாட்டார்? ஏதேதோ பாடுகின்றார்! பண்மறந்து போனாலும் பாட்டுப் பொருள்விளங்கத் தண்டமிழிற் பாடத் தயங்குவதேன்? என்றயர்ந்தேன்; பாட்டை நிறுத்திப் பசுங்கிள்ளைச் சொல்லாலே நாட்டம் இலைபோலும் நான்பாடும் பாட்டிலென; நாட்டை நினைந்தேன் நலங்கெட்டுப் போனவர்தம் கேட்டை நினைந்தேன் கிளிமொழியே! வேறில்லை தேனும் தினையும் என்றவுடன் என்னருகில் ஏந்திழையாள் வந்திருந்து குன்றின் குறிஞ்சிக் கிளைவிளைத்த செந்தேனும் கொல்லைப் புனத்துக் கொழுந்தினையின் மென்மாவும் வள்ளிக் கிழங்கும் வகையாகத் தான்படைத்தாள் சோலைக் காட்சி அந்தச் சுவையை அருந்தியபின் ஆங்கிருந்த சந்தனச் சோலைக்குள் சார்ந்தோம்; ஒருமரத்தில் பற்றிப் படர்ந்த பசுங்கொடியைக் காட்டினேன் முற்றச் சிவந்த முகஞ்சிவந்து நாணத்தால் என்குறிப்பை மாற்ற எழிலருவி பாரு மென்றாள் தன்குறிப்பை நானுணர்ந்து தையால்உன் கண்போலும் நீலக் கருங்குவளை நெஞ்சாற் பிணைந்தநமைக் கோல இதழ்திறந்து கூர்ப்பாக நோக்குதல்பார்! என்றுநான் காட்ட, இதழ்தந்த தாமரையை நின்று தவிக்கவிட்டு நீள்சுனைக்குத் தாவிவரும் வண்டொன் றருகிருந்து வாய்சூழல் பாருமென்றாள்; கண்டனத்தைக் கண்டுகொண்டேன் கைதந்த நல்லாரை வஞ்சித்துக் கைவிட்டவண்டுச் செயலினைநான் நெஞ்சத்துங் காணும் நினைப்பில்லேன் என்னுங்கால் பிரிவு குன்றத்தார் *தொண்டகம் கொட்டும் பறையொலியைக் குன்றத்தாள் கேட்டுக் குலத்தலைவர் வந்துவிட்டார் இன்றுபோய் நாளை இவண்வருவீர் என்றுரைக்க நன்றாம் எனப்பிரிந்தேன் நான். தலைவர் : புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தலைப்பு : குறிஞ்சி இடம் : அண்ணல் சுப்பிரமணியனார் மணிவிழா புதுக்கோட்டை நாள் : 19-10-1958 12. எனக்கும் ஓர் அதியன் நேரிசை ஆசிரியப்பா குறள்நெறி வாழும் கொள்கைக் கோவே! அருள்நெறி ஒழுகும் அண்ணால்! எங்கள் சுப்பிர மணியத் தோன்றால்! வணக்கம் மெய்ப்பொருள் உணர்ந்த மேலோய்! வணக்கம் தந்தாய்! என்னுயிர் தந்தாய்! என்கோ? அன்னாய்! என்னுயிர் அன்னாய்! என்கோ? இன்னருள் புரியும் என்கோ! என்கோ? எவ்வணம் நின்னை ஏத்திப் புகழ்வேன்! செய்வணம் அறியேன் சிறியேன் நின்னடி நெஞ்சத் திருத்தி நினைகுவன் அஞ்சலென் றருளுக தஞ்சம் நீயே (1) எண்சீர் விருத்தம் ஒழுக்கத்தின் உறைவிடமே! தொண்டும் பண்பும் ஒன்றாகி உருவெடுத்த நல்லோய்! மக்கள் அழுக்ககற்றும் திருக்குறளின் வார்ப்பே! எங்கள் ஐயாவே! அருளூற்றே! அன்பும் நண்பும் பழுத்திருக்கும் குளிர்தருவே! தொன்று தொட்டுப் பாங்குயர்ந்த குடிப்பிறப்பே! ஏழை மக்கள் வழித்துணையே! மணித்திருநாள் பெற்றோய்! நின்றன் வாழ்வெல்லாம் நலம்பெற்று வாழ்க வாழ்க (2) எண்சீர் விருத்தம் நின்னுடலில் தென்னாட்டுக் கருமை கண்டேன் நெஞ்சத்தில் சொல்லரிய செம்மை கண்டேன் நின்சொல்லில் நிலைத்திருக்கும் உண்மை கண்டேன் நீயுடுத்தும் ஆடையினில் வெண்மை கண்டேன் பொன்விரும்பாப் புகழ்விரும்பாத் தொண்டு ளத்தால் புரிகின்ற செயலிலெலாம் நன்மை கண்டேன் எந்நிலையும் எப்பொழுதும் அன்பா! நின்றன் இயல்புடைய வாழ்க்கையினில் குறளைக் கண்டேன் (3) ஆடவர்கள் எந்நிலத்து நல்லர் உள்ளார் அந்நிலத்தை நன்னிலமென் றவ்வை சொன்னாள்; தேடரிய செயல்வீர! சுப்ர மண்யச் செம்மலுன்னால் புதுக்கோட்டை புதிய கோட்டை நாடறிய ஆயிற்று; நின்னால் மேலும் நல்லவரும் பலரானார்; ஊர்கள் தோறும் பாடுபட ஓரொருவர் நின்போல் தோன்றின் பழம்பெருமை பேச்சிலன்றிச் செயலிற் காண்போம் (4) இந்நாளில் ஒருசிறிய நன்மை செய்தோர் இருநிலத்தார் அறியும்வகை எடுத்து ரைப்பர் பொன்னோடு புகழ்விரும்பிச் செய்தித் தாளில் புகழ்ந்தெழுதப் பொருள்கொடுப்பர்; பொய்ம்மை யன்று; முன்னாக நாற்பஃதாண் டெல்லை நீயே முனைந்திருந்து நற்பணிகள் ஆற்று கின்றாய்! இந்நாளும் பிறரறியா தடக்கி வைத்தாய்! என்போல்வார் பாட்டுக்கு மறைந்தா போகும்? (5) இவ்வுலகில் தீமையைத்தான் மறைத்துச் செய்வர்; நன்மைகளை ஏன்மறைத்துச் செய்கின் றாய்நீ? செவ்வியனே நீமறைத்துச் செயினும் எங்கள் சிறுசெந்நா பறையறைந்து யாண்டும் சாற்றும்; ஒவ்வியதே நின்னடக்கம் பெருமை காட்டும்; உலகுக்கு நாங்கள்சொலல் நன்றி காட்டும்; எவ்வகையால் முயன்றாலும் புலவன் நாவைத் தடைப்படுத்த இயலுவதோ? அடங்கா தன்றோ! (6) எழுத்தறிய மாட்டாமல் ஏங்கும் நாட்டில் எண்ணரிய திருப்பணிகள் எங்கும் ஆக்கி வழுத்துகின்ற மாந்தருக்கு நன்றுசொன்ன வாய்மொழியைப் பாரதியின் பாடல் தன்னை வழுத்திஅதை வாழ்வாக்கிக் கல்வித் தொண்டை வழுவாமல் ஆற்றுவதே கடவுள் தொண்டென் றழுத்தமுற மனத்திருத்தி நாளும் செய்வாய்! அறநெறியின் தனிமுதலே! வாழ்க வாழ்க! (7) உன்குணமும் உயர்ந்தஒரு தாய்வ யிற்றில் உடன்பிறந்த கோவிந்த சாமி என்போன் தன்குணமும் சீர்தூக்கிக் காணுங் காலை சரியாக நிறைகாட்ட முடியவில்லை; உன்குணமும் அவன்குணமும் ஒன்றை யொன்று விஞ்சவதால் உணர்ந்தறிய இயல வில்லை; நன்கொடையும் உயர்பண்பும் குடிப்பி றந்த நல்லோர்க்கு வாய்க்கின்ற இயல்பு போலும் (8) ஈகைமனம் பெற்றவனே! mWgh‹ M©il vŒJ»‹w ïªehËš Ëid eh§fŸ thifbgW« bgÇahuh¡ fhQ »‹nwh«; kU¤Jt¤J¡ fiyP®jik¡ fU¥gŠ rh‰W¥ ghifÃf® brªjÄÊš ghlš ešF« fÉP®jik, ïy¡»a¤âš njhŒªbj GªJ nkfbkd¢ brhšbghÊí« m¿P® j«ik nkyh¡» k»œªjt‹Ú m©zh!* வாழ்க! (9) *சீலமிகு சான்றோனே! நின்னி டத்துச் சிலகுறைகள் நான்கண்டேன் கூறு கின்றேன்; ஞாலமிசைத் திருக்குறளே ஓங்க நெஞ்சில் நாடுகிறாய்! தமிழொன்றே போற்று கின்றாய்! கோலமொழித் தமிழ்நெஞ்சங் கொண்ட வர்க்கே கொடுக்கின்றாய்! குறைகாணின் கடிந்து ரைப்பாய்! மேலுமெனைப் போல்வார்க்கும் பணிந்து நிற்பாய்! மேலேனே கணக்கறியாய் ஈயும் போது! (10) இவ்வுரைத்த குறையன்றிக் காண கில்லேன்; இனிஎனைநீ காத்தளித்த பண்பு சொல்வேன்; அவ்வைக்கு நெடுங்காலம் உயிர்நி லைக்க அதியனெனும் ஒருவள்ளல் இருந்தான் முன்னாள்; உய்வித்துச் சிறியேனை நீண்ட காலம் உயிர்வாழ அருளினைநீ; எனக்கும் அந்த அவ்வைக்கும் வள்ளல்களை ஈந்து காத்த அத்தமிழைச் செந்தமிழை வணங்கு கின்றேன் (11) குருதியுமிழ் கொடுநோய்க்கே ஆளாய் நின்றேன் குறுநகையும் பெருநகையும் இழந்து நின்றேன் செறுபகையும் எனைக்காணின் இரங்கி நிற்கும் செயலற்றேன் நடைதளர்ந்தேன் உடல்மெ லிந்தேன் மறுபடியும் உயிர்வாழ்வேன் என்ற எண்ணம் மாய்ந்துவிட மாயாத கவலை கொண்டேன்; உறுதியுனைக் காக்கின்றேன் என்று வந்தென் உயிர்காத்தாய்! உன்னருளால் வாழ்கின் றேன்நான் (12) உயிர்காத்த உத்தமனே! என்பாற் கண்ட உயர்வென்ன? தமிழன்றி வேறொன் றில்லை; செயிரில்லாச் செந்தமிழைப் பாடும் வாயில் செங்குருதி சிந்துவதா எனநி னைந்தோ? உயிர்பிழைத்தால் இவனும்போய்த் தமிழைக் காப்பான் உயர்கவிதை பலதருவான் எனுங்க ருத்தோ? அயர்வின்றி அருகிருந்து காத்த தாயே! ஆலயமாம் என்னுளத்தில் அமருந் தேவே! (13) தாய்தந்தை நல்லன்பைக் கண்டேன் அல்லேன் தகுபொழுதில் உதவுவதற் குறவு மில்லேன் நோய்வந்து மனத்துயரால் மாழ்குங் காலை நுவலரிய தனித்துணையாய் இராமச் சந்திரச்* சேய்கொண்டு மனநோவைத் தீர்த்து வைத்துச் சிறியேனை நின்குடும்பத் தொருவன் ஆக்கிச் சேய்போல ஆட்கொண்டாய்! அன்பு செய்தாய்! செம்மனத்தோய்! கைம்மாறு யாது செய்வேன்? (14) எந்நாளும் உன்பெயரைச் சொல்லிச் சொல்லி ஏத்துவதே தொழிலானேன் என்றன் சேய்க்குப் பொன்னான நின்பெயரைச் சூட்டி நெஞ்சில் பூசித்து மகிழ்கின்றேன் போற்று கின்றேன் நின்பேரன் என்மகனாம் கார ணத்தால் நீஎனக்குத் தந்தைமுறை ஆகி விட்டாய் என்னபிழை நான்செயினும் பொறுத்தல் வேண்டும் என்தந்தாய்! பொன்தந்தாய்! புகழும் தந்தாய்! (15) என்னுயிரைக் காத்தமையால் தன்க ழுத்தில் எழிற்றாலி மின்னுவதைக் கண்டு நெஞ்சால் என்மனையாள் வாழ்த்துகின்றாள்; என்றன் சேய்கள் எம்தந்தை தந்தாயென் றேத்து கின்றார்; நன்மழலைச் செல்வர்களைக், காதல் வாழ்வின் நற்றுணையை நான்மீண்டுங் காணச் செய்த உன்னுதவி நாடோறும் ஏத்து கின்றேன்; உயிரனையாய்! திருவடியை வாழ்த்துகின்றேன். (16) தலைவர் : புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத் தலைவர் தலைப்பு : அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார் இடம் : மணிவிழாவில் மனம் நெகிழப் பாடிய பாடல் நாள் : 19-10-1958 13. பாரதி - வீரன் எண்சீர் விருத்தம் பாரறியும் சரவணனார் தவக்கொ ழுந்தே! பரம்பரையாற் பெறுபுலத்தாற் கலையை ஆய்ந்து சீரறியும் கூரறிவுச் சான்றோய்! ஞானச் செந்தமிழ்வல் சம்பந்தா! தலைமை கொள்வோய்! பாரதியின் புகழ்பாட விழைந்து வந்த பாவலர்காள்! அவையோரே! வணக்கம்; என்னை வீரன்புகழ் பாடென்று விதித்து விட்டார் வீரத்தை மீசைதனிற் கண்டார் போலும் (1) பாரதியின் தாசனுக்குப் பொன்னி கண்ட பரம்பரையில் வந்தமையால் வீரம் என்பால் சேருமெனக் கருதினரோ? யாது சொல்வேன்! செந்தமிழில் தாய்நாட்டில் பற்று மிக்கோர் ஆருமுரம் மிகப்பெற்று வீர ராவர்; அப்பற்றும் கவிநெஞ்சும் வாய்க்கப் பெற்ற பாரதியை வீரன்தான் என்று கூறல் பசுவின்பால் வெண்ணிறந்தான் என்றல் போலாம் (2) யார் கவிஞன்? காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன். (3) ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தமது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். (4) முடியரசன் படைவலியால் நிலவுலகை ஆள்வர் மன்னர்; பாவலனாம் பாரதியோ உணர்ச்சி யூட்டும் *தொடைவலியால் வையத்தை ஆண்டு கொண்டு தொழுதேத்தும் முடியரசன் ஆனான் கண்டீர்! நடையழகு விளங்குகவி யரசன் பாட்டு நாடாண்ட பேரரசை நடுங்க வைத்த படைவரிசை; அப்படையால் உரிமை வேட்கை பாருக்கு நல்கியவன் வீரன் அன்றோ? (5) பாட்டு மறவன் இருளடைந்த கண்களுக்கும் ஒளியை யூட்டி இடிகின்ற நெஞ்சத்தில் உறுதி ஏற்றி மருளடைந்த மதியினர்க்குத் தெளிவு கூட்டி *மடிபடிந்த தேகத்தில் வீரம் மூட்டிச் சுருள்நரம்பில் முறுக்கேற்றிக் குருதி தன்னில் சூடேற்றித் தோளுக்கு வன்மை ஏற்றி அருள்கின்ற பாடலெலாம் ஆக்கித் தந்தோன் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு மறவன் அன்றோ? (6) மன்னர் கோலம் எழில்முகத்தில் சுருள்மீசை வீரங் காட்டும்; இருவிழிகள் கனல்கக்கி ஏற்றங் காட்டும்; தொழில்கவிதை யானாலும் மக்கட் குற்ற துயர்நீக்கும் செங்கோலாய்க் கைக்கோல் காட்டும்; விழியுயர்த்த இருபுருவம் வில்லாய்த் தோன்றும்; வெண்மைதரு தலைப்பாகை மகுடங் காட்டும்; பழிதவிர்த்த பாடலெலாம் படைகள் காட்டும்; பகைநடுக்கும் பேச்செல்லாம் முரசங் காட்டும்; (7) அவன் ஆணை வலியற்ற தோளுடைய மாந்தர் தம்மை வகைகெட்டுக் கிலிபிடித்த நெஞ்சர் தம்மை நலிவுற்றுத் துயர்மிஞ்சச் சாதி நூறு நவில்கின்ற கொடுமனத்துச் சழக்கர் தம்மைப் பொலிவுற்ற வீட்டுமொழி கல்லார் தம்மைப் பொய்ம்மொழிகள் உரைப்பவரைப் போபோ என்று புலியேற்றைப் போல்மொழிந்து வீரங் காட்டிப் புத்துலகை வாவாஎன் றழைக்கும் வேந்தன் (8) படைத்தலைவன் வணிகத்தின் பெயராலே உள்நு ழைந்து வளஞ்சுரண்டி வாழ்வுயர்ந்து மக்கள் தம்மைப் பணிவித்து நயவஞ்சர் துணையால் நாட்டைப் பாழ்படுத்திப் பக்குவமா அடிமை யாக்கித் துணிவுளத்தால் ஆண்டிருந்த வெள்ளை ஆட்சி தூள்தூளாய்ப் போவதற்குத் தமிழர் நாட்டில் அணிவகுத்த வீரர்தமை ஆக்கித் தந்த ஆண்மகன்யார்? பாரதிதான் வீரன் அன்றோ? (9) வஞ்சினம் மிகவிரைவில் தமிழின்ஒளி உலகம் எங்கும் மேலோங்கும்; இலையேல்என் பெயரை மாற்றி இகழுங்கள் எனக்கனன்று சூளு ரைத்தான்; எவர்மொழிக்கும் தலைவணங்கும் நம்மை நோக்கிப் புகழ்மிக்க தமிழ்மொழியை உலக மெல்லாம், புகுகின்ற தெருவெல்லாம் முழங்கச் செய்வீர்! வகைகெட்டுப் போகாதீர்! என்று ரைத்து வாழ்வுதந்த வீரனுக்கு வணக்கம் செய்வோம் (10) பொய்மிகுந்து துயர்செய்யும் கலியைக் கொன்று பூவுலகில் கிருதயுகம் கொணர்வேன் என்ற மெய்மிகுந்த பேராற்றல் கொண்ட வீரன்; மிகைசெய்யும் பழமையினைச் சாடி, மக்கள் உய்வழியைத் தருவீரன்; ஒருவன் உண்ண உணவின்றேல் உலகத்தை அழிப்போம் என்று கைவலிமை காட்டியவன் பாடல் எல்லாம் காட்டுகிற வீரத்தைக் காட்டப் போமோ? (11) காலனெனப் பேர்சொன்னால் போதும் நம்மோர் கால்நடுங்கும் கைநடுங்கும் துடிப்ப டங்கும் மேலனைத்தும் வியர்வரும்பும்; மனிதன் பண்பாம்; வீரமிகும் நெஞ்சுடையான் அஞ்சான்; கூற்றைக் காலனெனும் பேரானைக் கூவி, உன்னைப் புல்லெனவே கருதுகின்றேன் வாடா என்றன் காலருகே மிதிக்கின்றேன் என்று ரைத்த கவிவீரம் நினைப்போர்க்கு வீரம் ஊட்டும் (12) அச்சமிலான் பாண்டவரில் மூத்தவனாம் தருமன் தன்னைப் பண்புடையான் அறமுடையான் என்று சொல்லி ஆண்டவனாப் போற்றுகின்றார்; அவனி ழைத்த பெரும்பிழையை ஆர்சொல்வார்? அஞ்சு கின்றார்; தீண்டரிய சூதாடிப் பணயம் என்று தேயத்தை வைத்திழந்தான்; சீசீ நாட்டை ஆண்டஇவன் சிறியர்செயல் செய்தான் என்றே அரசுமுறை பிழைத்தமையை வீரன் சொன்னான் (13) சாதிப் பூசல் சாதியினால் தாழ்வுயர்வு பேசிப் பேசிச் சாத்திரத்தை வேதத்தைச் சான்று காட்டிப் பாதியில்நாம் படுகுழியில் வீழ்ந்து விட்டோம்; பறையனென்றும் குறவனென்றும் பார்ப்பான் என்றும் ஆதியிலே இல்லாத பழக்கந் தன்னை அணுகவிட்டோம்; அடிமையுற்றோம்; மிடிமைப் பட்டோம்; ஆதலினால் சாதியினை ஒழிக்க வேண்டி ஆடுவமே எனும்பாடல் பாடித் தந்தான் (14) தோற்றுவிட்டான்! பொல்லாத கொடுமைகளை விளைத்து நிற்கும் பொய்ம்மைகளை அழித்தொழிக்கும் சாதிப் போரில் எல்லாரும் ஓர்குலமாய் வாழ்க என்றும் எல்லாரும் சமமென்ப துறுதி யென்றும் சொல்லாளன் பாரதிதான் வெற்றிச் சங்கம் துணிந்தூதி விட்டாலும் தோல்வி கண்டான்; இல்லாத சாதிகளுக் கின்னும் ஆட்சி எங்கெங்கும் காணுகின்றோம் சாதிச் சூழ்ச்சி (15) தோற்றாலும் வீரமுளான் ஓய்தல் கொள்ளான் மீண்டும்போர் தொடுப்பதற்கே எண்ணங் கொள்வான்; ஆற்றல்மிகும் பாரதியும் சாதிப் போரில் ஆணினத்தை நம்பியதால் தோல்வி கண்டான் நாற்றமிகு சமுதாயச் சழக்க கற்ற நாரியரைக் குழந்தைகளை அண்டி நின்றே ஏற்றமென்றும் தாழ்ச்சியென்றும் சாதி கூறல் இல்லையடி பாவமடி பாப்பா என்றான். (16) வளர்ந்துவரும் பரம்பரைக்கு வீரம் ஊட்டின் வாகைபெறும் நாளைக்குச் சாதிப் போரில்; தளர்ந்தொழியும் அப்பகைமை இந்த நாட்டில்; சமத்துவந்தான் வளர்ந்துவரும் என்று நம்பிக் களங்கண்டான்; பாரதியைப் போற்று கின்ற காசினியீர்! பிறவியினால் உயர்வும் தாழ்வும் உளங்கொண்டு வாழ்வீரேல் மீண்டும் தோற்பான்; உரமுடையன் அவன்வெல்வான் சாதி தோற்றால்; (17) உண்மைத் தெய்வம் கடவுளர்தம் பெயராலே பகைமை காட்டிக் கணக்கில்லாத் தேவுகளைப் படைத்துக் கூட்டி மடமையிலே மூழ்கிஇருள் சூழ நெஞ்சம் மயங்குகையில் இளம்பரிதி என்னத் தோன்றி அடகெடுவீர்! அறிவிலிகாள்! உண்மை ஒன்றே ஆண்டவனாம் பிறவெல்லாம் பொய்யாம் என்று திடமுடைய வீரனலால் வேறு யார்தான் தெளிந்துரைக்க வல்லார்கள்? வாழ்க வீரன்! (18) போர் முழக்கம் மாதர்தமை இழிவுசெய்யும் மடமைக் கோட்டை மதிலிடிந்து பொடியாகத் தகர்ப்போம் மாய்ப்போம் வேதமுறை பழையமுறை என்று சொல்லி விரைந்தெழுந்தால் தீயிட்டுக் கொளுத்தி மாய்ப்போம் *தாதமுறை ஆணுக்கு வேண்டா என்றால் தையலர்க்கும் அம்முறையை வேண்டா என்போம் காதலர்க்குக் கற்புமுறை பொதுவில் வைப்போம் கண்ணிரண்டும் சரிசமமாக் காண்போம் என்றான் (19) வாழ்க வீரம்! அரசியலில் வீரனவன் சமுதா யத்தின் ஆணவத்தைத் தகர்த்தெரியும் வீரன் ஆவன் முரசொலியை முழக்குகின்ற தமிழின் வீரன் மூத்ததமிழ்க் கவிவீரன் பாடல் தன்னைப் பரசிநிதம் போற்றலுடன் அவன்வ குத்த பண்புடைய நெறியினில்நாம் செல்ல வேண்டும் சுருதிவிட்டுப் பாடாமல் நேர்மை செய்வோம் தூய்மைமிகு வீரத்தை வாழ்த்து வோமே. (20) தலைப்பு : பாரதி - வீரன் இடம் : இந்து மதாபிமான சங்கம் - காரைக்குடி நாள் : 1-11-1958 14. முயல்வோம் வெல்வோம் எண்சீர் விருத்தம் செந்தமிழ்க்கோர் உயிர்நிலையாம் குறளைத் தந்த செந்நாவன் புகழ்பாடக் *குழுமி யிங்கு வந்திருக்கும் பாவலரே! குறையாச் செல்வ வளந்தழைத்த அருள்பழுத்த தேவ கோட்டை தந்திருக்கும் பெருமக்காள்! ஈர நெஞ்சத் தாய்க்குலத்தீர்! வள்ளுவர்க்குத் திருநாள் செய்ய முந்திஎழும் ஆர்வத்தீர்! உங்கட் கெல்லாம் முழுமனத்தால் வாழ்த்துரைத்து நன்றி சொல்வேன் (1) செட்டிநாடு பழமைபெறு முக்கனிபோல் இனிக்கும் எங்கள் பைந்தமிழின் இசைவளத்தை, வஞ்ச நெஞ்சம் குழுமியொரு கூட்டமைத்து மறைத்து விட்டுக் கொடுமைசெயக் கண்டிருந்தும் தாளம் போட்டோம்; முழுமதியைக் கருமுகில்கள் சூழ்ந்து வந்து முகமறைத்த பொழுதத்துச் சிதறி ஓட எழுவளி**போல் பகைவிரட்டித் தமிழ்மொ ழிக்கே இசைவளர்த்துப் பெருமைகொண்ட திந்த நாடே (2) அறியாமை இருளகற்றி மக்கள் நெஞ்சில் அறிவொளியைச், சிந்திக்கும் ஆற்றல் தன்னைக் குறையாமல் கொடுத்துதவும் கல்விக் காகக் கோவில்களை உருவாக்கும் அரசர் தம்மை, வரையாமல் வழங்கியருள் வள்ளல் தம்மை வளர்த்துவிட்ட தெந்நாடு? சிற்பப் பாங்கு மறையாமல் காட்டிவரும் கோவில் கட்டி மாண்புகொண்ட தெந்நாடு? செட்டி நாடே (3) வாழ்க! வாழ்க! இந்நாட்டுப் பழம்பதியாம் இவ்வூர் தன்னில் எத்துணையோ அறமென்றும் திருநாள் என்றும் பொன்போட்டுச் செய்துவரல் கண்டோம்; இன்று புலவனுக்குத் தமிழ்மொழிக்கு மக்கள் வாழ அன்பூட்டி அறமுரைத்த திருக்கு றட்கும் ஆர்வத்தால் ஒருமித்துத் திருநாள் கண்டீர்! என்பாட்டுத் திறத்தாலே வாழ்த்து கின்றேன் இமைபோலக் குறள்நெறியைக் காப்பீர்! வாழ்வீர்! (4) மயிலும் வள்ளுவரும் மலர்விரிந்த குளிர்தென்றற் சோலை தன்னுள் மயிலொன்று தோகைவிரித் தாடக் கண்டேன்; சிலர்வந்தார் எனைச்சூழ்ந்து; மயிலைக் கண்டு சிந்தைதனைப் பறிகொடுத்தார் புகழக் கேட்டேன்; குலவியநல் தோகைஎழில் ஒருவர் சொன்னார், கொண்டைஎழில் மிகநன்றென் றொருவர் சொன்னார், நலமிகுந்த வண்ணங்கள் ஒருவர் சொன்னார், நடனந்தான் அருமைஎன மற்றோர் சொன்னார், (5) அரிவையரைத் தோற்கடித்த சாயல் கண்டோர் அடடாஎன் றதைப்புகழ்ந்தார், நீள்க ழுத்தை மருவுமெழிற் சிறுவிழியைப் புகழ்ந்தார் பல்லோர் வாய்மொழிந்த அத்தனையும் உண்மை! உண்மை! அறிஞனெனக் கவிஞனெனச் சமயப் பாங்கின் அறிவனெனச் சீர்திருத்த வாதி என்ன அரியதொரு பொருளியலில் மருத்து வத்தில் அகத்துறையிற் கைவந்த வல்லான் என்ன (6) வள்ளுவனைப் பாடவந்த கவிஞர் கூறும் வாய்மொழிகள் வாய்மொழியே; ஐயம் இல்லை; புள்ளிமயில் எழில்கொண்டார் வியந்து ரைத்த புகழ்மொழிகள் அத்துணையும் அதனைச் சாரும்; வள்ளுவற்கும் அப்படியே; துறைகள் தோறும் வகைவகையா வாகைபெறப் பாடி வைத்த தெள்ளுதமிழ் வல்லானை எந்த வண்ணம் தேர்ந்தெடுத்துப் புகழ்ந்தாலும் முற்றும் சாலும் (7) வானத்தை முழம் போடல் அணுவெடுத்துத் துளையிட்டுக் கடல்கள் ஏழும் அதனுள்ளே புகவிட்ட செய்கை போல மணிநிகர்த்த குறட்பாவில் உலக மெல்லாம் மடுத்துவைத்த வள்ளுவன்றன் ஆற்றல் தன்னைத் துணிந்தெடுத்து முழுதுரைக்க வல்லே மோநாம்? துளிதுளியா ஒருசிறிதே காணல் கூடும்; மணிநிறத்து வானத்தை நமது கையால் முழம்போட்டு மதிப்பிடுதல் முடிவ தொன்றோ? (8) நமது கடன் மக்களினம் இவ்வுலகில் இனிது வாழ வாழ்நெறிகள் கூறுமொரு நூல்தான் யாது? தெக்கணத்துத் திருநாடு தமிழர் நாடு தெளிந்துரைத்த திருக்குறளே; அதையு ணர்ந்து பக்குவமா நாமணுகி மதித்துப் போற்றிப் பண்புரைக்குந் திருமறையாக் காத்தல் வேண்டும் பொக்கைமனங் கொண்டவர்கள் வள்ளு வற்குப் புண்செய்து திரிகின்றார் போதும் போதும் (9) கற்றுக்குட்டிகள் கற்றறிந்த சான்றோரும் திருக்கு றட்குக் கண்டுணர்ந்து பொருள்சொல்ல அஞ்சு கின்றார்; சிற்றறிவால் தமிழ்நூலின் பெயர்கள் தாமும் தெரியாதார் புத்துரைகள் சொல்லப் போந்தார்! கற்றினங்கள் சிறுகுட்டை கலக்கல் ஆகும் கடல்தனையே சேறாகக் கலக்க எண்ணின் முற்றுறுமோ? நீந்துதற்குச் சிறிதும் கல்லார் முழுகாதீர் குறட்கடலுள் என்போம் என்போம் (10) சிலையானோம்! கண்டபடி கண்டவர்கள் தமிழர் நூலைக் கதைக்கின்றார் குழப்புகின்றார் கேட்பா ரில்லை; மண்டையடி கொடுப்பதற்கோ சங்க மில்லை; மனம்வைத்துக் காப்பதற்கோ அரசும் இல்லை; உண்டபடி உறங்குகின்றார் மக்கள் எல்லாம் உய்வதுதான் எப்படியோ தமிழும் நாமும்? அண்டையர்கள் மொழிகாக்கும் முறைமை கண்டும் அசையாத சிலையானோம் அந்தோ! அந்தோ! (11) அரிபோல் எழுவோம் இனியேனும் திருக்குறளை மதிப்போம் காப்போம்; இனிதான அறநெறியை உரைப்போம் கொள்வோம்; கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்; கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்; தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்; தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்; குனியாத மனனோடு வளர்வோம் வாழ்வோம்; குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே. (12) தேவகோட்டைத் திருவள்ளுவர் விழாக் கவியரங்கில் தலைமை ஏற்றுப் பாடிய பாடல் நாள் : 10-5-1959 15. திராவிடநாட்டின் வளம் கலிவெண்பா நீலக் கடலில் நிமிர்ந்தெழும்பும் பேரலைகள் கோலத் தமிழ்கேட்கக் கூடிவரும் நீள்கரையில் காணுந் திருநகராம் காரைக்கால் மூதூரில் பேணும் படியமைந்த பேரரங்க மாநாட்டில் முத்தமிழாம் தேன்பருக முன்னித் திரண்டெழுந்தே இத்திடலில் மொய்க்கும் இருபாலீர்! என்வணக்கம் MÇa¥ ngh®fl¡f M®¡F« beLŠbrÊa!* வீரியப் போர்தொடுக்கும் வெற்றித் திராவிடர்காள்! நாட்டின் வளமெல்லாம் நாடித் தொகுத்தெடுத்துப் பாட்டின் வளத்தாற் படைக்கின்றேன் இவ்வரங்கில் எல்லை வளம் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே இவ்வுலகில் முற்றோன்றி மூத்த குடியுடைய தொன்மையதாய்க்; கையால் கருத்துரைத்த காலங் கடந்தேகப் பையவே நாவசைத்த பாங்கில் நடைபயின்று, பண்பாடிக் கூத்தாடிப் பாரெங்கும் சென்றோடிப் பண்பாடு காட்டிப் பயிற்றுவிக்கும் தாயகமாய்த், தெற்கில் குமரியொடு சேரா வடதிசையில் நிற்கும் ஒருவிந்தம் நீள்கடல்கள் கீழ்மேலாய், எந்நாளும் மாறா இயல்பமைந்த எல்லையதாய், இந்நான்கின் எல்லை யிடைவிரிந்த நீள்பரப்பாய்க், கன்னடமாய் ஆந்திரமாய்க் கண்குளிரும் கேரளமாய் இன்னவற்றின் தாயாய் இலங்கும் தமிழகமாய்க், கூடும் திராவிடமாய்க் கோலோச்சும் தென்னகமே நாடி வருகின்ற நம்நாடு பொன்னாடு; புனல் வளம் நாடா வளத்ததுவாய் நாடி வருவோர்க்குக் கோடா மனத்தால் கொடுக்கும் இயல்புடைத்தாய்த், தள்ளா விளைவயலில் தாளாற்றும் ஏருழவர் கொள்ளா துழைத்துக் குவிக்கும் வளத்ததுவாய், வான மழைநீரும் வற்றாத ஊற்றகமும் கான மலையுதித்துக் காக்கின்ற ஆறுகளும் ஆயபுனல் மூன்றாலும் ஆக்கும் பெரும்பொருளால் தேயமெலாம் வேட்கின்ற சீர்மைத் தகைமைத்தாய், வள்ளுவம் காட்டும் வளமெல்லாம் தன்னகத்துக் கொள்ளும் திருநாடே கூட்டாட்சித் தென்னாடு; குறிஞ்சி வளம் நீளும் தொடர்மலைகள், நெஞ்சம் கவருமெழில் ஆளும் உயர்மலைகள், கோடை அனல்போக்கும் வண்ணக் குளிர்மலைகள், வாய்க்கும் பழமலைகள், எண்ணக் குறையாமல் எத்துணையோ ஈங்குண்டு; தென்னாட்டார் வீரம் தெரியாமல் போர்தொடுத்து *வெந்காட்டி மாற்றுருவில் ஓடிமறை வீரரைப்போல் ஓங்கும் மலைமேல் உராயும் முகிற்கூட்டம் தேங்கிக் குளிர்தாக்கத் தேய்ந்தே உருமாறி, நீராகி, ஆறாகி நிற்காமல் ஓடிஒரு பேராழி யுள்மறையும் பெற்றிமையும் ஈங்கிருக்கும்; உச்சி மலைவெடிப்பின் உள்ளிருந்து போந்துபல பச்சிலைகள் தண்மலர்கள் பற்றிக் கொடுவந்து தத்தித் தவழ்ந்து தடைசெய்யும் பாறைகளைக் குத்திப் பிளந்து குதித்தோடி மேலிருந்து தார்முரசம் என்னத் தடதடவென் றார்த்திரங்கிக் கார்முழக்கம் அஞ்சக் கடுகிவரும் பேரருவிக் கூட்டம் பலவுண்டு; கூடி முகிலினங்கள் காட்டகத்து மேய்வனபோல் காணும் களிறீட்டம்; தேக்கும் அகிலும் திரண்டுருண்ட சந்தனமும் காக்கும் குளிர்தென்றல் கார மிளகுடனே ஏலம் இவைபோன்ற எஞ்சா வளஞ்சுரந்து காலம் முழுதும் களிப்பிக்கும் நம்நாடு; முல்லை வளம் கூர்த்துக் கிளைத்தெழுந்த கொம்புடைய கொல்லேற்றைச் சேர்த்துப் பிடித்துத் திணறவைக்கும் காளையர்கள் வீரவிளை யாட்டால் விரும்பும் குலமகளைச் சேர மணமுடிக்கும் செம்புலத்துக் காடெல்லாம், இல்லை எனவுரையா தீத்துவக்கும் வள்ளலைப்போல் முல்லை முறுவலித்து மொய்க்கும் சுரும்புகளுக் கின்சுவைத்தேன் உண்பித் தினிதிருக்கும் முல்லைநிலம் புன்செய்ப் பயிர்வளங்கள் பூரிக்கும் கானகத்துக் *கோவலர்தம் செவ்வாய்க் குழலோசை கேட்டவுடன் ஆவலுடன் ஓடிவரும் ஆனிரைகள் சேர்நாடு; மருத வளம் சேற்றில் உழுது சிறுநெல் விதைதூவி நாற்றுப் பிடுங்கி நடுகாலில் நட்டுக் களையெடுத்து நீர்பாய்ச்சிக் காப்பதனால் நன்கு விளைகழனிச் செந்நெல் வியனுலகைக் காக்குமகம்; செங்கரும்புச் சாறெல்லாம் சேர்ந்தோடிப் பக்கத்துப் பொங்கிவரும் வாழைமரப் பாத்தி புகுவதனால் காய்க்குங் குலையில் கரும்பினிமை தானேறும்; வாய்க்குங் கமுகினங்கள் வானுயர்ந்த தென்னைஎன எண்ணும் படிவளரும்; எவ்விடத்துஞ் சோலைவளம், உண்ணும் பழமரங்கள் ஊரெல்லாம் தோன்றுதலால் காணும் இடமெல்லாம் கண்குளிரும் காட்சியதாய்த் தோணும் மருதவளம் சூழ்ந்திருக்கும் இந்நாடு; நெய்தல் வளம் முப்பாலும் ஆழியுண்டு மூழ்கியதன் உட்சென்றால் தப்பாமல் முத்துண்டு சார்ந்த பவழமுண் டாறு சுவையுள் அரிய சுவையாகக் கூறுமுயர் உப்புக் கொழிக்கும் அளமுண்டு; நாடெல்லாம் சுற்றி நலங்கொழிக்கும் வாணிகத்தால் ஏடெல்லாம் ஏத்த எழிற்கலங்கள் ஓட்டுதற் கேற்ற துறைமுகங்கள் எத்துணையோ ஈங்குண்டு; போற்றும் படியாய்ப் புவியிற் பெரும்பரப்பாய் ஓதுங் கடற்கரைகள் ஒன்றிரண்டாம் அன்னவற்றுள் ஈதும் ஒருகரையென் றெண்ணத் தலைநகரில் சேருங்கரையுண்டு செந்தமிழர் நாகரிகம் கூறுந் துறைமுகங்கள் கூடிக் கிடப்பதுண்டு; நெய்தல் வளத்தால் நெடுநாளாச் செல்வமழை பெய்யும் பெருநாடு பேணும் திருநாடு; கனிப்பொருள் வளம் தென்னாடு பொன்னாடாய்ச் செல்வ வளங்கொழிக்க இந்நாடு நெய்வேலி என்னுமூர் பெற்றுளது மண்ணுக்குள் பொன்விளைத்து மாண்புயர்ந்த தென்னாட்டில் எண்ணெய்க்கும் நல்ல இரும்புக்கும் பங்குண்(டு) அணுவாற்றல் செய்யும் அரும்பொருளும் உண்டு நுணுகின் கனிப்பொருள்கள் நூறுண்டு நம்நாட்டில்; வள நாடு ஆற்றுப் புனலும் அருகாது பொங்கிவரும் ஊற்றுப் புனலும் உவந்தூட்டும் நீர்நாடு கற்புவளம் வீரவளம் காட்டுதற்குக் கண்ணகியின் பொற்புருவம் அஃதொன்றே போதுமன்றோ? மேலான ஓவியமும் கட்டடமும் ஓங்குபுகழ்ச் சிற்பமுடன் காவியமும் காட்டும் கலைவளங்கள் சேர்நாடு சோற்றுவளம் ஆற்றுவளம் சொல்லரிய கல்விவளம் மாற்றுயர்ந்த தங்கவளம் மாசில்லா முத்துவளம் எல்லைவளம் மக்கள்வளம் இவ்வளவும் பெற்றுயர்ந்து தொல்லுலகில் மூத்துத் துளிர்க்குந் திருநாடாம்; ஏன் தாழ்ந்தது? இந்த வளநாட்டார் ஏழைகளாய்க் கூலிகளாய் நொந்து பிறநாடு நோக்கிப் புகுவதுமேன்? நாட்டு வளமெல்லாம் மாற்றான் சுரண்டிநமை ஓட்டாண்டி யாக்கி ஒடுக்கியதா லன்றோ? மடக்கும்பிடிப்பகற்றி வாழ்வோமேல் இங்குக் கிடைக்கும் வளமெல்லாம் கேடின்றி நாம்பெறுவோம்; வாகைசூட வாரீர்! நாட்டுக்கு வேண்டும் நலம்பெற்ற நம்நாட்டை வேட்டைக் களமாக்கும் வேற்றுப் புலத்தார்க்குத் தாள்பணிந்து மாளாதீர்! தாவிப் புறப்படுவீர்! வாழ்விழந்து போகாமல் வாகை பெறவாரீர்! தன்னாட்சி பெற்றுத் தனியரசாய் வாழ்ந்திடுவோம் பன்னாட்டுப் பேரவையில் பங்குபெற்று வாழ்வோம்நாம் வந்த சிறுமொழிகள் வாழ வழிவகுக்கும் சந்ததிகள் நம்நாட்டில் சேராமல் செய்திடுவோம் கோழைகளாய் மோழைகளாய்க் கூன்விழுந்த நெஞ்சினராய் ஏழைகளாய் வாழ இனியும் கருதாமல் கூடித் திரண்டெழுவீர்! கொட்டிடுக போர்முரசம் நாடித் திருநாட்டில் நம்மாட்சி நாட்டிடுவோம் வாழ்க திருநாடு வாழ்க நமதுரிமை வாழ்கநம் நாட்டின் வளம். தலைப்பு : திராவிட நாட்டின் வளம் இடம் : முத்தமிழ் மாநாடு - காரைக்கால் நாள் : 19-4-1959 16. உறவினர் எண்சீர் விருத்தம் தென்னாடு தன்னுரிமை பெறுதல் வேண்டித் தெளிந்துரைத்த நல்லறிஞர் கொள்கை தன்னால் என்னோடும் உறவாகித் தலைமை தாங்கும் எழிற்கவிஞ! கவியரங்கம் ஏறி நெஞ்சில் அன்போடு நாவினிக்கத் தமிழைப் பாடும் அத்தொழிலால் உறவினர்கள்! திருக்குறட்குத் துன்போடு போராடி வெற்றி கண்ட சுற்றத்தீர்! என்னினத்தீர்! வணங்கு கின்றேன் (1) தந்தைவழி தாய்வழியில் உறவு மில்லை தம்பிதங்கை அண்ணனென ஒருவ ரில்லை எந்தவழி சுற்றினுமோர் பங்கு கேட்கும் தாயத்தார் எவருமில்லை; உறவெ னக்குச் செந்தமிழ்தான்; ஈதன்றி மனைவி மக்கள் உறவினராச் செப்புதற்கிங் கிருக்கின் றார்;நான் எந்தவழி உறவினரைக் காட்ட வல்லேன்? இருப்பினுமென் கற்பனையில் காட்டு கின்றேன் (2) முப்போகம் விளைகின்ற நன்செய் உண்டு முகில்குளிரச் செய்கின்ற தோப்பும் உண்டு தப்பாது விளைகின்ற புன்செய் உண்டு தங்கநகை துணிமணிகள் அனைத்தும் உண்டு *துப்பாக்கும் பொழுதத்துப் புகைகள் கூடிச் சுடர்மறைக்கும் மேகமென நாளுந் தோன்றும் அப்போது வருமுறவோர் அடடா! சொல்லில் அடங்குவதோ? ஆயிரமாம் அதற்கும் மேலாம் (3) எங்கிருந்தோ எவரெவரோ வருவார்; வந்திங் கென்னலமும் மனைநலமும் வினவி நிற்பார்; தங்கியிருந் தெதையெதையோ கதை யளப்பார்; தயங்காமல் உறவுரைப்பார்; உங்கள் பாட்டன் தங்கைக்குக் கணவனுடன் பிறந்தான் மாமி தம்பிக்கும், என்பாட்டி தங்கை மாமன் பங்காளி மகளுக்கும் மணமு டித்த பனையூரார் எங்களவர் என்று சொல்வார் (4) இப்படியே உறவுரைத்து வந்து சூழும் என்சுற்றம் மாநாட்டுக் கூட்டம் ஒக்கும்; முப்பொழுதும் திருமணத்துக் காலம் போல மொய்த்திருந்து விருந்துண்பார் ஒலியே கேட்கும்; ஒப்புரவுப் பண்புணர்ந்தேன் உவந்து நிற்பேன்; உறவினர்க்கு **ஙப்போல நானி ருந்தேன்; இப்புவியில் இத்தனைப்பேர் உறவி ருக்க எனக்கென்ன குறையென்று நிமிர்ந்தி ருந்தேன் (5) வானத்து வெண்ணிலவாய் நானி ருப்பேன் வட்டமிடும் உறவினர்கள் விண்மீன் ஆவர்; கானத்துப் பழுமரத்தில் கனிகள் உண்ணக் கடுகிவரும் பறவையினம் போலச் சூழ்வர்; *பூநத்தும் தேனீக்கள் கூட்டில் மொய்த்தல் போற்கிளைஞர் பெருங்குழுவாய் வீட்டில் மொய்ப்பர்; தேனொத்த வெல்லத்தை மோப்பங் கண்டு தேடிவரும் எறும்பினத்தின் சாரை போல்வார்; (6) ஆவணியில் காதணிநாள் நிகழ்த்த எண்ணி ஆய்ந்தொருநாள் தேர்ந்தெடுத்து நெஞ்சிற் கொண்டு பாவைநிகர் என்மனையாள் செவியிற் சொன்னேன்; பாய்ந்தோடி உறவினர்கள் ஆடி மாதம் போவதன்முன் தம்குடும்பம் சுற்றம் சூழப் புகுந்தார்கள்; திடுக்கிட்டுத் துணையைப் பார்த்தேன் தேவையிலை இனியழைப்பு, செலவு மிச்சம் என்றுரைத்தாள் தேன்மொழியாள்; திகைத்து நின்றேன் (7) சாதியினை ஒழிப்பதுநம் கடமை என்று தக்கவளைக் கலப்புமணம் செய்து கொண்டேன்; காதலினால் பூத்தமணம் உறவினர்க்குக் கடுகளவும் நறுமணமாய்த் தோன்ற வில்லை; வேதநெறி பிழையாத அன்னார் என்றன் வீட்டுக்குள் வந்துவிடின், என்முன் நின்றே ஏதமிலாச் செயலாற்றும் கொள்கை வீரர் என்றெல்லாம் பட்டங்கள் வழங்கிச் செல்வார் (8) உள்ளொன்றும் புறமொன்றும் பேசி நிற்கும் உறவினரைப் படைக்கின்ற தெய்வம் ஆகி வெள்ளைநிறம் கொண்டிங்கே உலகை ஆட்டி விளையாடும் பணநாதன் கடைக்கண் நோக்கம் துள்ளிவிளை யாடுவதால் என்மேற் குற்றம் துணிந்துரையார்; பகைமாற்றி உறவை ஆக்கும் வெள்ளையப்பன் புரிகின்ற விளையாட் டெல்லாம் விரித்துரைப்பின் விந்தையினும் விந்தை யன்றோ! (9) உறவான ஒருவர்திரு மணத்துக் காக *ஒள்ளிழையை மக்களுடன் அழைத்துச் சென்றேன், மெருகோடு விளங்குமுயர் உந்து வண்டி விட்டிறங்கி நிற்பதன்முன் மணத்து வீட்டார் வருகவரு கென்றெனக்கு மாலை சூட்டி வரவேற்ற காட்சியினைக் கண்டோர் அங்கு வருகின்ற மணமகனோ என்ற யிர்த்து,** வாழ்வரசி அருகிருக்க ஐயம் விட்டார் (10) நான்பெற்ற செல்வத்தை எடுத்துக் கொஞ்சி நலமிக்க கன்னத்தைச் சிவக்க வைத்தார்; தேன்பெற்ற சொற்பேசும் சித்தி ரங்கள் தெளிவாகத் தங்களையே வார்த்தெ டுத்தாற் போன்றிருக்கக் காண்கின்றோம் என்று ரைத்தார்; புதல்வரெல்லாம் என்மனையாள் போன்றி ருந்தும் தேன்சொட்டப் புனைந்துரைத்த உறவின் மாந்தர் திருவிளையாட் டெடுத்துரைத்தல் இயல்வ தொன்றோ? (11) தண்ணீரோ வெந்நீரோ குளிப்ப தற்கு? தமக்கென்று தனியறையும் ஒதுக்கி விட்டோம்; உண்பீரோ இவ்வுணவு? களைத்தி ருப்பீர்! ஓய்வுகொளத் துயிலுங்கள் என்று ரைத்து மண்மகளைக் காணாது விரித்து வைத்த மலர்மெத்தை தலையணைகள் காட்டி நின்று பண்பாடி அருகிருந்து தாளம் போட்டுப் பல்வரிசை காட்டுகிற உறவு கண்டேன் (12) விரைந்துவரும் பொழுதத்துச் சட்டைப் பொத்தான் விட்டுவந்தேன்; உறவினர்கள் அதனைக் கண்டு மறைந்திருந்து பேசுகின்றார் அடடா இந்த மனிதரிடம் எளிமையைத்தான் காண்பீர்! செல்வம் நிறைந்தவர்கள் இப்படித்தான் இருத்தல் வேண்டும்; நிறைகுடங்கள் எப்போதும் தளும்பா அன்றோ? குறைந்தவர்தாம் கூத்தடிப்பர் என்று தம்முள் கூறுவது செவியில்விழ நகைத்துக் கொண்டேன் (13) சின்னாளில் வணிகத்தில் நட்டங் கண்டேன் சேர்ந்தடித்த பெரும்புயலால் வயல்கள் கெட்டேன் பொன்னகைகள் மாளிகைகள் ஒற்றி வைத்தேன் பொருள்முட்டுப் பாடடைந்து துயரால் நொந்தேன்; எந்நாளும் என்வீட்டில் உண்டு வந்த எண்ணில்லா உறவினரைக் காண வில்லை; பின்னோடித் தேடினுமே *அஞ்ச லென்று பேசுதற்கோர் ஆளில்லை தனித்து நின்றேன் (14) பணநாதன் அருளில்லாக் கார ணத்தால் பறவைகளாய்ப் பறந்தோடி விட்டார்; மேலும் கணமாக வந்தென்னை எறும்பு போலக் கடித்தார்கள்; கலப்புமணம் பழித்து ரைத்தார்; குணமில்லாத் தேனீயாய்க் கொட்டி னார்கள்; கூடிவருங் காலத்துக் கூடி வந்தார் உணவோடு நலம்பெற்றார்; செல்வ மெல்லாம் ஓடிவிடுங் காலத்தில் ஓடி விட்டார் (15) இப்பொழுதும் ஒருவர்திரு மணத்துக் காக என்குடும்பத் துடன்சென்றேன்; வரவு கூற எப்பொழுதும் முன்னிற்போர் எவரும் இல்லை; என்துணைவி வெறுங்கழுத்தும் கையுங் கண்டார்; சிப்பிதரு பொத்தான்கள் இல்லாச் சட்டை சிலைநிகர்க்கும் என்மக்கள் அனைத்துங் கண்டு செப்புகின்றார் பஞ்சைஎன; ஒதுங்கி நின்றார்; சிரித்திருந்தேன் உறவினர்தம் செய்கை கண்டு (16) படுப்பதற்கோர் படுக்கையிலை பாயும் இல்லை; பக்கத்து வீட்டிலொரு திண்ணை யோரம் தடுப்பதற்கோ ஆளில்லை சாய்ந்து கொண்டேன்; தவமிருந்து பெற்றமக வொன்றை அங்கே அடிப்பதைநான் கண்டெழுந்து தடுத்து நின்றேன்; அப்பப்பா இப்பொழுதே திருடக் கற்றுக் கொடுப்பதற்கோ அழைத்துவந்தாய்? என்று சொல்லிக் குழந்தையின்கைக் கனியொன்றைப் பறித்துச் சென்றார் (17) பொருளுடைய பொழுதிற்றான் வந்து சூழ்ந்து போற்றுகிற உறவுமுறை வளர்ந்து காணும்; பொருளிலையேல் ஒருபொருட்டா மதியா தன்றிப் புன்மொழிகள் புகலுதற்கும் அஞ்சா தந்தோ! பொருளுளதேல் சாப்பாட்டுக் கூட்டம்; கெட்டுப் போய்விடினோ கூப்பாட்டுக் கூட்டம் என்ற பொருளுரையைக் காட்டுகிற உறவை நம்பிப் புவிதன்னில் வாழ்வதுதான் நன்றோ சொல்வீர்! (18) இப்புவியில் என்னுறவின் முறைதான் சொன்னேன் ஈண்டுள்ளோர் நல்லவர்கள் குறளிற் கூறும் ஒப்புரவு தெரிந்தவர்கள்; திருக்கு றட்கே உயர்வுதரத் தேனப்பன் என்னும் நண்பன் செப்பரிய முயற்சியினால் இங்குக் கண்ட திருக்குறளின் கழகத்தில் உறவு கொண்டோர்; நற்குடும்ப நெறியறிந்து வாழும் சான்றோர் நலமனைத்தும் பெற்றிங்கு வாழ்க! வாழ்க! (19) தலைப்பு : குறள் நெறிக் குடும்பம் - உறவினர் இடம் : குறள்விழா - காரைக்குடி நாள் : 19-7-1959 17. உரிமை எண்சீர் விருத்தம் சமயத்தில் உதவுகின்ற தமிழர் பண்பால் தலைமைபெறும் பரந்தாமப் பெரியோய்! எங்கள் தமிழாய்ந்த புலவர்படைத் தலைவ ரேறே தமிழ்ச்சிங்கப் பாரதியே! இவ்வ ரங்கில் அமிழ்தெனும்நம் தமிழ்பாடக் குழுமி வந்த அன்புடையீர்! தாய்க்குலத்தீர்! உரிமை காக்கும் எமதருமை மதுரைநகர்ப் பேரூர் வாழ்வீர்! என்கவிதை தலைவணங்கிப் பாடு கின்றேன் (1) காஞ்சித் தென்றல் தென்பொதிய மலைஒன்றே தமிழர்க் காகத் தென்றலெனும் மென்காற்றை நல்கிற் றென்பர்; அன்புடையீர்! காஞ்சிபுரப் பேரூர் தானும் அறிஞரென்ற தென்றலொன்றை நல்கக் கண்டோம்; வன்புடைய வாடைவரின் பொதியத் தென்றல் வாயடங்கும்; இத்தென்றல் வாடை காணின் தென்புடைய புயலாகிப் பகையை மாய்க்கும் தெருவெல்லாம் மணம்பரப்பும் வாழ்க தென்றல் (2) உரிமை அஞ்சாது நாடுமொழி இனங்காக்கத் தொடுக்கும் போரில் நல்லுரிமை வேட்கையினைத் தடுப்ப தற்குக் கூடுசிறைக் கம்பிக்கும் வலிமை யில்லை; கொட்டுகின்ற குருதியினைக் கண்ட போதும், நாடுகிற பதவிதனை யிழந்த போதும், நடுக்குறுத்தும் கொடுவறுமை வந்த போதும், கேடுபல தொடர்ந்தாலும், தூக்கு மேடை கிடைத்தாலும் அஞ்சாதிவ் வுரிமை வேட்கை (3) காந்தியார் கட்டிவந்த பொருள்விற்க ஆங்கி லத்தார் கடல்கடந்து நுழைந்திங்கு நம்மை நாமே முட்டவிட்டுத் தந்திரமாக் கவர்ந்து நாட்டின் முழுவுரிமை கைக்கொண்டார்; அடிமை யாகிக் கெட்டிருக்கும் மாந்தரிலே காந்தி தோன்றிக் கிளர்ந்தெழுந்தார்; அயலவர்கள் நாட்டை ஆள விட்டிருந்த நிலைபோதும் எனக்க னன்று வீரப்போர் தொடுத்ததுமேன்? உரிமை வேட்கை (4) வ. உ. சி. முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து, முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின் எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து, மிளகெடுத்து, மயில்தோகை இறகெ டுத்துப் பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற பழங்கடலிற் சிதம்பரனார் கப்பல் ஓட்டி எத்துயர்க்கும் அஞ்சாமற் செக்கி ழுத்தும் ஏன்சிறையில் வாடினார்கள்? உரிமை வேட்கை (5) பெரியாரும் அறிஞரும் நமக்கென்று நாடுண்டு; மொழியும் உண்டு; நாகரிகத் தொன்மைமிகும் இனமும் உண்டு; சுமக்கின்ற அடிமைமனம் போதும் போதும்; சுரண்டுகின்ற வடவரொடு தொடர்பு போதும்; எமக்கென்று தனியாட்சித் திருநா டிங்கே எழுப்பிடுவோம் எனக்கிளர்ந்து போர்தொ டுத்துத் தமக்குநிகர் பெரியாரும் அறிஞர் தாமும் தனிமுழக்கம் புரிவதுமேன்? உரிமை வேட்கை (6) உயர்தனிச்செம் மொழிவழங்கும் தமிழர் நாட்டில் உரமில்லா வளமில்லா வரம்பும் இல்லா அயல்மொழிகள் நுழைந்துவரும் கொடுமை கண்ட அறிஞர்குழாம் புலவர்குழாம் வெகுண்டெ ழுந்து மயலொழிக்கப் புறப்படுதல் உரிமை வேட்கை; மண்ணெண்ணெய்த் துணைகொண்டு பிறமொ ழிக்கு நயமுடனே வரவுரைத்தல் அடிமை வேட்கை;* நமதுதமிழ் வாழ்த்திடுதல் அறிவு வேட்கை; (7) உரிமை எது? தெருவழியில் நடந்துசெல உரிமை யுண்டு; தெருநடுவிற் போவதுமோர் உரிமை யாமோ? பெருவழியில் ஊர்திக்கும் உரிமை யுண்டு பேணாமல் நடப்பவர்க்குத் தீமை யுண்டு; வருபவரைக் காணுரிமை கண்ணுக் குண்டு வழிதவறி முறைகெட்டு மாதர் தம்பால் கருவிழியைச் செலுத்துகிற கயமை நோக்கம் கண்ணுக்கு வேண்டியநல் லுரிமை யன்று (8) தன்னுரிமை வேண்டுமென நினைவோ ரெல்லாம், தம்மைப்போல் மற்றவரும் விழைவ ரென்று மன்னுயிரின் உரிமைஎலாம் மதித்தல் வேண்டும்; மானமுடன் தன்னுரிமை போற்ற லாலே பன்னரிய பொதுவுரிமைக் கிடுக்கண் செய்தல் பகுத்தறிவுக் கொவ்வாத உரிமை யாகும்; சின்னஒரு புழுவேனும் உரிமை காக்கச் சீறுவதை நம்கண்ணால் காணு கின்றோம் (9) பெண்ணுரிமை தற்காத்துத் தற்கொண்டான் தன்னைப் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வ கற்றிக் கற்கின்ற நூல்கற்றுக் கணவன் நெஞ்சக் கருத்துணர்ந்து கனிகின்ற அன்பு காட்டி இற்காத்தல் மாதர்தமக் குரிமை யாகும்; இகழ்வாகப் பிறர்பேச ஊரைச் சுற்றிப் பற்காட்டி உடல்மினுக்கிப் பண்பு கெட்டுப் பகட்டுவதைப் பெண்ணுரிமை என்று சொல்லார் (10) மாணவரும் தொண்டரும் கற்கின்ற மாணவர்க்கும் உரிமையுண்டு கடமைகளும் உண்டென்று கருதல் வேண்டும்; கற்பிக்கும் ஆசானை மதிக்க வேண்டும் கல்வியினில் கருத்தூன்றிப் படித்தல் வேண்டும்; முற்போக்குக் கட்சிகளில் தொண்டர் கட்கும் முழுவுரிமை உண்டெனினும் தலைவன் சொல்லில் நிற்கின்ற நிலைவேண்டும்; உரிமை வேட்டோர் கடமையையும் நெஞ்சிருத்தின் நாடு நன்றாம் (11) சொல்லும் செயலும் அனைத்துலக நிலைபேசி, அமைதி ஓங்க ஆர்ப்பரித்து, நாடுபிடிக் கின்ற எண்ணம் தினைத்துணையும் எமக்கில்லை என்ற கொள்கை தீவிரமாப் பேசுகிற அண்டை நாட்டார், முனைத்தெழுந்து பிறரெல்லைக் கோட்டைத் தாண்டி மீண்டுமவர் உலகப்போர் மூளு தற்கு நினைக்கின்றார்; பிறருரிமை பறிப்ப தற்கு நினைப்பவரைத் தடுப்பதுநம் உரிமை யாகும் (12) எழுத்துரிமை எழுத்தாளர் மன்றத்திற் பாடு கின்றேன் எழுத்துரிமை ஓரளவு உரைத்தல் வேண்டும்; எழுத்தாளர்க் கிந்நாட்டிற் பஞ்ச மில்லை ஏனென்றால் அஃதொன்றே எளிமை யாகும்; முழுத்தாளில் எழுதமட்டுந் தெரிந்தாற் போதும் மொழியறிவு, கலையுணர்வு, கல்வி ஆற்றல், தழைத்தோங்கும் சிந்தனைகள் ஒன்றும் வேண்டா; தமிழெழுத்துச் சிலமட்டுந் தெரிந்தாற்போதும் (13) இருக்கின்ற தமிழ்நூலைப் படிப்ப துண்டா? எவரெவரோ சிந்தித்து வரைந்த நூலில் பொறுக்குகின்ற பேரெல்லாம் இந்த நாட்டிற் புகழ்மிக்க எழுத்தாளர்! அவரை எல்லாம் உருத்ததட்டித் தடுப்பதற்கோர் வகையும் இல்லை; ஓரிருவர் தடுத்தாலும் உரிமை என்பார்; கிறுக்கரிடம் அகப்பட்ட தமிழ ணங்கே! கேடின்றி நினக்குரிமை கிடைப்ப தென்றோ? (14) தமிழெழுதிச் சோறுண்டு வாழ்ந்தி ருப்போர் தனிமொழியைத் தாய்மொழியை இகழ்ந்து பேசித் தமிழகத்தில் தமிழில்எழுத் தாளர் ஆவர்; தப்பின்றிக் கலப்பின்றி எழுதும் முன்னோர் தமிழெல்லாம் பழித்துரைக்கும் கயமை யிங்கு தழைப்பதுவோ உரிமை? அது மடமை; எங்கள் தமிழிகழ்வோர் நாவடக்கக் கொதித்துப் பாயும் தன்மானம் உடமையன்றோ உரிமை யாகும் (15) எழுத்தாளர் நெஞ்சத்தில் உரிமை வேண்டும்; எப்படியோ உண்டுடுத்து மற்றோ ரைப்போல் பிழைத்தாலே போதுமென எழுதிக் கொட்டி வால்பிடித்துப் பின்செல்லல் உரிமை யன்று; வழுக்காணின் அஞ்சாமல் எழுதி, வாய்மை வாழ்வதற்கு வழிவகுத்தல் உரிமை யாகும்; இழுக்கான நடையெழுதிப் பிறரைத் தாக்கி எழுதுவதே தொழிலாதல் உரிமையன்று (16) எழுத்துரிமை எனச்சொல்லி எழுதித் தீர்க்கும் ஏடுகளில் சிலவற்றைக் காணின் அங்குப் புழுத்திருக்கும் கயமைகளே காணும்; எண்ணும் புலன்நடுங்கும் கைநடுங்கும் கண்கள் கூசும்; கொழுத்தவர்கள் குடித்தனத்தில் நடக்குந் தீமை, கொடுப்பதற்கோ செய்தித்தாள்? படிப்பார் நெஞ்சை அழுக்காக்கிக் கெடுப்பதற்கோ உரிமை? நல்ல அறிவுடையார் இச்செயலைச் சிறுமை என்பர் (17) பேச்சுரிமை அன்றிருந்த அரசரிடம் குறைகள் காணின் அருகிருந்து வற்புறுத்தி அறமு ரைத்தார் நன்றுடைய தமிழ்ப்புலவர்; வரிகு றைக்க நயவுரைகள் புகன்றிருந்தார்; அரசு மன்றில் சென்றிருந்து வழக்குரைத்தாள் கற்பின் செல்வி; செந்தமிழின் முன்னூல்கள் செப்பும் உண்மை ஒன்றுண்டு; முடியரசன் ஆட்சி தன்னில் உரிமையெலாம் இருந்ததென உணரு கின்றோம் (18) அரசியலில் குறைகாணின் இடித்து ரைக்கும் அவ்வுரிமை அனைவர்க்கும் வேண்டும் இன்று; முறைசெய்வோர் அவ்வுரிமை பறிப்ப தற்கு முனைவதுவும் நன்றன்று, செவிகொ டுத்துப் பரிவுடனே ஏற்பதிலோர் நன்மை யுண்டு, பாராளும் முறைமையது; வேண்டு மென்றே நரிபடைத்த குணமுடையார் குறைகள் சொல்லி நால்வருண முறைபுகுத்தல் உரிமை யன்று (19) பேச்சுரிமை உண்டென்று சங்கம் ஏறிப் பித்தரைப்போல் மனம்போன போக்கில் எல்லாம் தீச்சொல்லை வழங்குவதும் உரிமை யன்று; தெளிவான கருத்தொன்றே கூறல் வேண்டும்; மூச்சுக்கு முந்நூறு வசவு சொல்லி முறைகெட்டுப் பேசுவதும் உரிமை யாமோ? ஏச்சாலே என்னபயன்? எதிரி யுள்ளம் ஏற்கும்வகை பேசுதலே உரிமை யாகும் (20) சிந்தனையை எண்ணத்தை அடிமை யாக்கிச் செயற்படினோர் நலமில்லை; அறிவு கொண்டு சிந்திக்க முனைவதுவும் சிந்தித் தாய்ந்த சீர்மைகளைப் பேசுவதும் உரிமை யாகும்; நிந்தனையைக் கைவிட்டு, நிலைமை சொல்லும் நேரத்தில் நடுநின்று, கேட்போர்க் கெல்லாம் புந்தியினில் படும்வகையில் புகல வேண்டும்; புகலுங்கால் நாகாத்தல் உரிமை யாகும் (21) விடுதலைப் போர் தென்றல்தவழ் நாட்டினரே! முரசொ லித்துத் தென்னகத்தைத் திருநாட்டை மீட்ப தற்கு மன்றங்கள் அமைத்திடுவீர்? போர்வாள் ஏந்தும் மாவீரர் படைசேர்ப்பீர்! இனமு ழக்கம் நின்றெங்கும் எழுப்பிடுவீர்! சிறையைக் காட்டின் நிமிர்ந்திருந்து முல்லைமலர்ச் சோலை என்பீர்! கொன்றொழிக்கக் கயிறெடுத்தால் கழுத்தைக் காட்டிக் குலவுமெழில் முத்தாரம் என்று கொள்வீர்! (22) வீரமிகு நம்நாடு பாரில் ஓங்க விடுதலைப்போர் தொடங்கிடுவீர்! உரிமை பெற்றுத் தீரமிகு தனியரசாய் மக்க ளாட்சி செழித்தோங்கச் செய்வதுநும் உரிமை யாகும்; கூரறிவுத் திராவிடன்பால் அடுத்தி ருக்கும் குடிலர்களைச் சகுனிகளை உடன்பி றந்தும் மாறுபடு வீடணரை விழித்தி ருந்து மாற்றிடுவீர்! நம்நாடு வாழ்க நன்றே (23) தலைப்பு : உரிமை இடம் : எழுத்தாளர் மன்றம் - மதுரை நாள் : 8-11-1959 18. பாரதியார் நேரிசை வெண்பா *முருகா! முதல்வா! முத்தமிழில் நெஞ்சை உருகவைக்கும் மாணவர்காள்! உண்மை - மருவியநல் ஞானஞ்சேர் ஆசிரிய நல்லோரே என்கவியை நானுஞ்சொல் கின்றேன் நயந்து எண்சீர் விருத்தம் தமிழ் வாழ்த்து கவிதைஎனுங் காதலிபால் உன்னைப் பெற்றேன் கண்ணம்மா! தமிழ்மகளே! முத்த மிட்டேன் கவிவெறியோ கள்வெறியோ அறிய கில்லேன் கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன்; செவிபொருந்தும் விழிகண்ணீர் சிந்தக் காணின் செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும் புவிபுகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன் போர்தொடுப்பேன் உனைக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன் கலிவெண்பா முன்னுரை நாடி வருவோர்க்கு நற்கல்வி ஊட்டுதற்குக் கூடி வருமுணர்வால் கோவில் இடமெல்லாம் பள்ளித் தலமாக்கிப் பாமரர்க்கும் ஏழையர்க்கும் அள்ளிக் கொடுக்கும் அறிவுப் பணிபுரியும் குன்றா வளநல்கும் குன்றக் குடிமலையில் ஒன்றும் மலைவாழை ஓங்குந் தலைவாழை செந்தமிழே நெஞ்சிற் சிவமாக்கும் செவ்வாழை இந்தச் சுவைவாழைக் கென்வணக்கம் கூறுகின்றேன்; முன்னைப் பழமரங்கள் மூதறிவால் வாழ்மரங்கள் மின்னல் இடிபுயலால் வீழாமல் நிற்குமரம் பற்பலவாய்ச் சூழும் பழவாழைத் தோட்டத்துள் பொற்புடனே நற்கனிகள் புக்குப் பறித்தெடுத்து நல்கும் கவிகாள்! கனியின் நலம்துய்க்க மல்கும் செவியுணர்வின் மாமணிகாள் என்வணக்கம்; வாழையடி வாழை சங்க இலக்கியங்கள் சாகாக் கனிநல்கிப் பொங்குகின்ற வாழைமரப் பூங்கா எனவுரைத்தார் மூவாத் தமிழ்வளர்க்கும் மு. வ. அவர்மொழியை நாவார வாழ்த்துகிறேன்; நாடு நலங்கொழிக்க ஆயிரம்பல் லாயிரமாய் அவ்வாழை ஒவ்வொன்றும் ஆயினவாம்; பாரதியும் அவ்வழியில் ஓர்வாழை; பாரதியாம் வாழை பயந்த அடிவாழை பாரதி தாசனென்று பாருரைக்கும்; இவ்வாழை எண்ணில் அடங்கா இளம்வாழை பெற்றதுண்டு நண்ணி வளர்வாழைத் தோட்டத்துள் நானொருவன்; வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டத்துள் ஏழையேன் நிற்க இடம்தந்த என்தமிழ்த்தாய் வாழ்கஎன வாழ்த்தி வணங்குகிறேன்; என்குலமும் வாழ்கஎன வாழ்த்துகிறேன் வாழ்க கனியனைத்தும்; கவிக்கனி பாவல்ல வாழை பழுத்தகனி துய்ப்போர்க்கு நாவெல்லாம் இன்சுவையாம், நாளெல்லாம் நற்சுவையாம், சொல்ல இனிக்கும், சுவைக்க இனித்திருக்கும், மெல்ல நினைக்க மிகஇனிக்கும், மீண்டினிக்கும், கேட்கச் செவியினிக்கும், நாடோறும் கேட்பதற்கு வேட்கும் படியினிக்கும், வேண்டும் பொழுதினிக்கும், இன்றினிக்கும், நாளைக் கினித்திருக்கும், இக்கனியே என்றும் இனிக்கும்; இதனினிப்புக் கொப்புண்டோ? உண்ண மிகஇனிக்கும் உண்டால் தெவிட்டாது; வண்ணம் கனிந்திருக்கும் வாடாது நின்றிருக்கும்; பாரதி வாழை பாரதியாம் இவ்வாழை பாக்கனிகள் உண்பிக்கப் பாரறிய எட்டைப் பதிமண்ணில் தோன்றியது; மண்ணின் வளத்தால் மறமிக்க காவலரால் உண்ணுநன் னீரால் உரமோ டுயருங்கால் சென்னை நகர்க்குச் சிலர்கொண்டு சென்றார்கள்; நன்னீரா வார்த்தார்கள்? நாளும் திருக்கூவப் புன்னீரால் பூசை புரிந்தார்கள்; ஆனாலும் *முன்னீர்மை போகவில்லை மும்மடங்காக் கண்டதனால் ஆங்கிலத்தார் கண்பார்வை அவ்வாழை மேற்படலால் தீங்குளத்தார் வஞ்சத் திருடர் அறியாமல் பாண்டிப் பதியில் பதித்துக் கடல்நீரை வேண்டி இறைத்திறைத்து வீரச் சுவைமாற்றக் கூடி உழைத்தார்கள்; கூடும் புதுவையில்தான் நாடிவரும் புத்துலக நல்லாசான் நம்ஆசான் ஈடில் புரட்சி எழிற்கவிஞன் என்னுமொரு பாடல் தருவாழை பாருக் களித்ததுவே; பயனும் சுவையும் வாழையிலை காய்கனிபூ பட்டை வளர்தண்டு கீழே யுறுகிழங்கு கேடின்றிப் பயனுறல்போல் பாவல்ல வாழை பயக்கின்ற அத்துணையும் **ஓவின்றி மக்கட் குறுபயனை நல்குவதாம்; காதற் சுவையுண்டு கல்விச் சுவையுண்டு தீதற்ற வீரச் சுவையும் தெரிவதுண்டு பத்திச் சுவையும் பழமை தரும்சுவையும் மெத்தப் புதுமை விரும்பும் சுவையும் புரட்சிச் சுவையும் புகுந்தபகை வர்க்கு மருட்சிச் சுவையும் வழங்குவது நம்வாழை; சுவைகாணார் சாதிச் சழக்காலே சாப்பிடுவோர், மேலுலகம் ஓதிப் பிழைப்பவர்கள், ஓரா யிரந்தெய்வம் உண்டென் றலைந்திடுவோர், ஊரேய்த்து வாழ்ந்திடுவோர் உண்டாற் சுவைநல்கா திவ்வாழை உண்மையிது; அகப்பகைவர் பாரதியின் பேர்சொல்லிப் பாங்குபெறும் நல்லன்பர் வீரமிகு பாடல்களை வெட்டிவிட்டுக் காட்டுகின்றார்; சூரன் முகத்திற் சுருண்டுவளர் மீசைதனில் ஓரங் குறைத்தால் உருவமது பாரதியோ? தாள்குறைத்து மேல்குறைத்துத் தண்டொன்றே கைப்பற்றி ஆள்பிடித்து வாழைஎன ஆர்க்கின்றார் சூதுடையார்; பாரதி வந்தான் வீர உருக்குறைத்து வேடிக்கை காட்டுகின்ற பேரின் செருக்கொழிந்து தீயாதோ? என்றேன் நான்; தீயுமடா! தீயுமடா! தீப்பகைவர் தற்செருக்கு; நீயுமெழு! நீயுமெழு! நேர்நின்று போர்தொடுப்பாய் என்ற வுரைகேட்டேன் ஏறனைய பாரதியும் ஒன்றி எனதுமனத் துள்ளே நகைத்துநின்றான்; கானத்து வாழ்புலியாய்க், கத்துபுனல் நீந்திவரும் மீனத்தில் நற்கயலாய், மேல்நோக்கிப் பாய்கின்ற அம்பிருக்கும் வில்லாகி ஆரிருளை ஓட்டுகின்ற செம்பொனிள ஞாயிறெனச் செக்கச் சிவந்துநின்றான்; நின்றானை நோக்கி நிலையெல்லாம் பேசுகநீ என்றேனை நோக்கி இளையவனே! என்தம்பி! உன்னுளத்தே நின்றிங்கே ஊதுகின்றேன் வெண்சங்கம் முன்னெழுந்து போர்தொடுக்க முற்படுநீ! ஒன்றுரைப்பேன் என்றூதும் சங்கொலியை என்னால் இயன்றவரை நின்றூது கின்றேன் நிமிர்ந்து எண்சீர் விருத்தம் சங்கு முழங்கியது நாமிருக்கும் நாட்டிற்குத் தமிழ்நா டென்று நாமமிட முறையிட்டோம்; ஆள்வோர் பட்டை நாமமிட்டார் நம்முகத்தில்; மாற்றுக் கட்சி நல்லறிஞர் உரைத்தமையால் மறுத்தோம் என்றார்; தீமனமா? ஆணவமா? ஆட்சி தந்த செருக்குரையா? அடிமைமனப் போக்கா? இல்லை; நாமமது தமிழரெனத் திரிவோர், நாட்டை நற்பெயரால் அழைப்பதற்கு நாணி நின்றார் என்னாடு தமிழ்நாடென் றியம்பக் கேட்டால் என்செவியில் தேன்பாயும் என்று கூறின் பன்னாடை மதியுடையார் வெறுப்புணர்ச்சி பகையுணர்ச்சி என்றெல்லாம் பகட்டு கின்றார்; தென்னாடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார்; எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பார் உன்னாட்டில் தமிழாட்சி கொடுத்து விட்டோம் உயர்கலைகள் தமிழ்மொழியில் உண்டா? என்று தென்னாட்டை உணராதார் கேட்பர்; உண்டு; தீக்கிரையாய்ப் போனதுண்டு; நெஞ்சை யள்ளும் பொன்னேட்டைத் தின்றொழித்த நெருப்பும் சொல்லும் போகட்டும்; புதுக்கலைகள் செய்து காட்டும் முன்னேற்றம் தமிழிலுண்டு; நேற்று வந்த மொழியாளர் கேட்பதெனில் விந்தை தம்பி! மெத்தவளர் புதுக்கலைகள் தமிழிற் செய்து மேன்மைபெற வேண்டுமென்று பாடி நின்றேன்; செத்தமொழி சுமப்பதற்கு நாடு கின்றீர்! செந்தமிழை வாழ்மொழியைச் சாக டிக்கப் பித்தரெனப் பிதற்றுகின்றீர்! நன்றோ? சொல்வீர்! பிறனாட்சி தொலைந்துவிடின் தமிழின் மாட்சி எத்திசையும் பரவிவரும் என்றி ருந்தேன்; இகழ்ச்சிக்கோ போர்ப்பாட்டுப் பாடி வைத்தேன்? கலைமலிந்த தமிழ்நாட்டில் வணங்கு தற்குக் கடவுளர்தாம் ஆயிரம்பேர்; அவர்கட் கெல்லாம் பலமனைவி; இவரன்றி வேறு பக்கம் படையெடுப்பும் நடப்பதுண்டு; மக்கள் உண்டு; தொலைவிலிருந் திங்குவந்த சாமி யுண்டு; தொழுகின்ற அத்தனைக்கும் சமயம் உண்டு; நிலையான தமிழ்ச்சமயம் எதுதான் என்று நிலைநாட்டி வழிகாட்ட முயலக் காணேன் பித்தாகிப் போனநும்பால் மானம் உண்டா? பெருமிதஞ்சேர் வீரமுண்டா? தமிழர் வாழ்வில் செத்தாலும் பிறந்தாலும் மணம்செய் தாலும் செந்தமிழின் ஒலியுண்டா? பிள்ளை கட்கு நத்துதமிழ்ப் பேருண்டா? பேச்சில், பாட்டில், நயந்தெடுக்கும் வழிபாட்டில், உமது வாழ்வில் எத்துறையும் தமிழில்லை! தமிழன் என்ற இனமொன்றும் உளதென்று சொலவும் வெட்கம்! நண்போடு வரவேற்றீர் வந்த வந்த நாட்டவரை; உமைமறந்தீர்! அவரைக் கூடிக் கண்மூடிக் கிடந்துழன்றீர்! பண்பி ழந்தீர்! கண்டகண்ட கோட்பாட்டைத் தழுவி நின்றீர்! பண்பாட்டை முதன்முதலில் உலகுக் கோதிப் பாங்குயர்ந்த நிலைமறந்தீர்! உணர்ச்சி யற்றுக் *கண்பாடு கொண்டிங்கே கவலை யற்றுக் கிடக்கின்றீர்! கண்விழித்துக் காண்ப தென்றோ? இன்றெழுந்து தமிழ்காப்பீர்! ஒருமைப் பாட்டை ஏனிழந்தீர்? ஆனாலும் வீரம் எங்கே? குன்றெடுத்த தோளெங்கே? மானம் எங்கே? குறைந்ததுவோ? நான்பிறந்த மண்ணின் பக்கம் நின்றிருக்கும் கல்லெல்லாம் இந்தி கண்டேன் நெடுங்கல்லாச் சுடுமண்ணா ஆகி விட்டீர்! ஒன்றுசொன்னேன் தெருவெல்லாம் தமிழ்மு ழங்க உரைத்தஎனைக் கல்லெல்லாம் சிரிக்கக் கண்டேன் சிரிப்பதற்கோ உரிமைப்போர் தொடுத்து நின்றோம்? செந்நீரும் கண்ணீரும் சிந்திக் காத்தோம்? பறிப்பதற்கோ தென்னாட்டார் உரிமை எல்லாம்? பாரதத்தின் பெயர்சொல்லி வடக்கு மட்டும் பருப்பதற்கோ? செந்தமிழ்நற் றமிழர் வாழ்ந்து பாரதமும் வாழ்கவென உணர்ந்தே சொன்னேன் மறுத்துரைத்தால் ஈரோடும் காஞ்சி யுந்தாம்* வழிசொல்லும்; புதியதொரு விதியும் செய்யும் என்றுரைத்தான் பாரதிஎன் னெஞ்சி னுள்ளே; என்னுடலம் நடுநடுங்கி வியர்த்து நின்றேன்; ஒன்றியுளம் பற்றிநின்ற கவிஞன் சற்றே ஒதுங்கிஎதிர் நின்றுரைத்தான்; அஞ்சி அஞ்சிப் பொன்றுமுயிர் தாங்குகின்றாய் போ! போ! மானம் போற்றுகின்ற வீரநெஞ்சாய் வா! வா! தாதன் என்றுசொல வாழ்பவனே போ! போ! சிங்க ஏறனையாய் அச்சமிலாய் வா! வா! என்றான். பஃறொடை வெண்பா முடிவுரை வாழையடி வாழைக்கு வாய்மொழியால் வீரத்தைக் கோழை மனத்திற் கொதிப்பேற்றிப் பாய்ச் சிவிட்டான்; சூடு தணியவில்லை சொல்லெல்லாம் தீயாக்கிப் பாடும் கவிதைகளில் பாயவிட எண்ணந்தான்; நாடு பொறுக்குமோ என்றெண்ணி நல்லஇளஞ் சூடு படக்கொடுத்தேன்; ஈதும் சுடுமென்றால் குற்றம் எனதன்று; முற்றுந் தலைவாழை பெற்ற சுவையைத்தான் பின்வாழை ஈன்றுநிற்கும்; நாநலம் கொண்டார்க்கு நல்ல சுவைநல்கும் பாநலம் வல்ல பரம்பரையில் யானொருவன் ஈனும் கனியை இருந்து சுவைக்கவிட்டு நானும் இருப்பேன் நயந்து. தலைவர் : திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் தலைப்பு : வாழையடி வாழை - பாரதியார் இடம் : சரபோசி மன்னர் கல்லூரி - தஞ்சாவூர் நாள் : 21-2-1960 தமிழ் முழக்கம் முன்னுரை கவியரசர் முடியரசனார் அவர்கள் கடந்த 1945 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளுக்குமிடையே, நூற்றுக்கணக்கான கவியரங்க மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தவர். அந்தக் காலக்கட்டத்தில், அவர் முழங்கும் கவியரங்க மேடைகளைச் சுற்றி, அவரின் கவிமுழக்கத்தைக் கேட்க, அவர் தரும் தமிழின்பத்தை நுகர, ஆயிரக்கணக்காகத் தமிழன்பர்கள் தேனீக்களாக மொய்ப்பர். அவரது கவிமுழக்கம் கேட்டு அவையினர் மகிழ்வால் எழும் கையொலிச் சத்தம் விண்ணை முட்டிடும். அக் கவியரங்குகளில், அவர் தலைமையேற்று முழங்கிய கவிதைகள் பல அவற்றுள் சில மட்டும் இத்தொகுப்பில் இடம் தொகுத்துத் தந்துள்ளேன். இக்கவிதைகளைப் படிக்கும் பொழுது முடியரசனாரின் தமிழ் முழக்கம், சலசலக்கும் அருவியின் பேரிரைச்சலாகவும், தடையின்றி ஒடும் ஆற்றொழுக் காகவும் இருப்பதை உணரலாம். தமிழின்ப வெள்ளத்தில் நீந்தலாம். என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் குரல் முழக்கம் இன்று ஓய்ந்திருக்கலாம். ஆனால், அவரின் கவி முழக்கம் காலத்தை வென்று முழங்கும். அவரது தமிழ் முழக்கம் என்றென்றும் ஒலித்துக் கொண்டே யிருக்கும். எந்தையின் தமிழ் முழக்கத்தை வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தார்க்கு என் நன்றியைப் பதிவுசெய்ய வேண்டியது எனது கடமை. அன்பன், பாரி முரயரசன் முடியரசன் குடில் மனை எண் : 569 சூடாமணி நகர், காரைக்குடி - 630003 தமிழ் வாழ்த்து எழுத்தின் வகையெலாம் இயம்புவாய் போற்றி! பழுத்த சொற்றிறம் பகர்வாய் போற்றி! பொருள்கள் பற்பல அருள்வாய் போற்றி! யாப்பெனும் அருங்கலன் இசைப்பாய் போற்றி! அணிகள் எழிலுற அணிவாய் போற்றி! போற்றி ஐந்திறம் புகலும் தாயே! - முடியரசன் 1.பாட்டுப் பறவைகள் கலிவெண்பா முன்னைப் புலவரெலாம் முன்னின்று பாடல்சொல அன்னைத் திருநாட்டை ஆண்டார் தமிழ்வேந்தர்; பார்தாங்கும் மூவேந்தர் பண்டை முடியரசர் பேர்தாங்குங் காரணத்தாற் பேரறிவுச் சான்றோர்கள், பாடுங் கவியரங்கிற் பாட்டுத் தலைவனெனக் கூடும் படிவைத்தார் கொல்லோ அறியகிலேன்; பாடி மகிழ்வித்த பாட்டுப் பறவைகளைப் பாடி மகிழ்விக்கப் பன்னிருவர் வந்துள்ளார்; பாட்டரங்கில் என்னையுமோர் பங்குகொளச் செய்திடுமா நாட்டவர்க்கென் நன்றி நவில்கின்றேன் கைகுவித்தே; 10 காலத்தை வென்றவளே, கற்பனைக்கும் எட்டாமல் ஞாலத்தில் நின்றொளிரும் நந்தா மணிவிளக்கே, நெஞ்சத் திருக்கோவில் நின்றிருந் தெந்நாளும் அஞ்சலெனச் சொல்லி அரவணைக்குந் தெய்வதமே, நெஞ்சை அகலாக்கி நீங்காத அன்பென்னும் பஞ்சைத் திரியாக்கிப் பற்றும் உணர்வை எரியாக்கி ஏற்றும் எழில்விளக்கே, முன்னைப் பெரியார்க்குந் தோன்றாப் பெருமை படைத்தவளே, சங்கத்தார் நெஞ்சமெனுந் தண்பொழிலிற் கூடிமனம் பொங்கத்தான் ஆடிவரும் புள்ளி எழில்மயிலே, 20 பாவாணர் நாவிற் பழகிப் பழகிநின்று கூவாமற் கூவிக் குளிர்விக்கும் பூங்குயிலே, அப்பாலும் இப்பாலும் ஆடித் திரியாமல் தப்பேதுஞ் செய்யாமல் தக்க நெறிநடக்க எப்போதும் நன்றுரைத் தெம்மைப் புரப்பதற்கு முப்பாலைத் தந்து முறைப்படுத்தும் நற்றாயே, மோதும் பகைதவிர்க்க மொய்ம்புடனே சென்றங்குத் தூதுசொலி மீண்ட துணிவுடைய பாட்டரசி அவ்வைப் பெருமாட்டி ஆண்டாண்டு வாழ்ந்திடவே செய்வித்த பேராற்றல் சேரும் செழுங்கனியே, 30 கற்புக் கடம்பூண்ட கண்ணகியாம் பெண்மகளைப் பொற்புடைய தெய்வமெனப் போற்றி வணங்குதற்குக் கற்கோஜீல் அன்றெடுத்த நற்கோஜீன் நின்வந்த சொற்கோஜீன் காப்நியத்துள் தோன்றிவரும் யாஷீசையே, சாலறிவன் வாதிகத்தான் சாத்தன்மதி மேகலையாம் நூலதன்பால் ஹிட்டுவைத்த நுண்புலமை வைப்புமுதல் வற்றாது மேலும் வளஞ்சுரந்து கூடிவர அற்றைநாள் கண்ட அமுத சுரநியே, தேவன் ணிருத்தக்கன் செம்மைஜிறச் செய்தஹீத்த பாவல்ல ஞிந்தா மதிழீற் படரொஹீயே, 40 வன்நில் ணிதிக்காமல் வந்த வடமொஷீயைத் தென்பாகக் கற்றுணர்ந்து தேர்ந்த ஒருகம்பன் நாஜீளீத்த பாட்டில் நடம்பழீன்று வந்தெங்கள் காஜீளீத்தாய் வெள்ளம்போற் காணுங் கஜீநலமே, பூவேந்ணிப் பொங்கிப் பொஷீகின்ற தேனெடுத்து நாவேந்தத் தந்தசுவை நன்றன் றெனஷிரைக்கப் பாவேந்துஞ் சொற்சுவையாப் பாடியவெண் பாவேந்தன் பூவேந்தத் தந்த புகழேந்ணி வந்தவளே, சீர்கெட்டுப் பாடித் ணிருட்டுக் கஜீபாடிப் பேர்கெட்டுப் போனாலும் பேர்கஜீஞன் என்றுரைத்துப் 50 பாட்டுத் தளையறுத்துப் பாடிவளீன் கூத்தனதைக் கேட்டுத் தலையறுத்தான் என்று கிளந்ணிடுவர்; பாட்டுத் ணிறமறியாப் பாவலரைச் சீறியெழுந் தோட்டுந் ணிறலுடையான் ஒட்டக்கூத் தன்பாவால் வெற்றுக் கஜீயென்று வெட்டிஜிம் பாடிடுவான் உற்ற உயர்கஜீயென் றொட்டிஜிம் பாடிடுவான் வெட்டிஜிம் ஒட்டிஜிம் வேண்டும் படிஜிரைத்த ஒட்டக்கூத் தன்பாட்டில் ஒட்டிவருங் காளீகையே, பண்டைநாள் தொட்டுப் பகையாக வந்தவற்றைக் கண்டு கலங்காமற் கண்டாய் களம்பலஷிம் 60 சென்றகள மெல்லாம் செயங்கொண்டாய் ஆதஸீனால் ஹின்றும் பரதிபல ஏற்றுவரும் போர்முரசே, தென்மலைழீல் தோன்றித் ணிளீகூட ராசன்றன் சொன்லீடைஜிம் பாட்டொஸீழீற் சொக்குகுற வஞ்ஞியே, ‘எல்லா மதங்களுமுண் டென்றாலும் ஓர்பகைஜிம் அல்லா மதமொன்றே ஆக்கிடுக மாவீடமே, கூறாய்ப் நிளீயல்’ எனக் கூறிழீங்கு யாவரைஜிம் சீறா நலங்கொண்டு சேர்த்தணைக்குஞ் செந்தலீழே, ‘சாணி சமயமென்று சண்டைழீட்டு மாயாதீர் சோணி வடிவொன்றே தூய ஹிறை’என்று 70 வள்ளலருட் பாஜீல் வடித்தெடுத்த தேன்சுவையே, உள்ளம் உருக்கி உணர்ஜீக்குந் தெள்ளமுதே, என்று புகழ்பாடி என்னம்மை தாள்பதிந்தேன் பின்று முகமலர்ந்தாள் நீள்ஜீஷீழீல் நீர்துஹீத்தாள்; ‘பாடு மகனேநீ பாடடா என்புகழை, நீடுதுழீல் நீங்கி பிலீர்ந்தெழுந்து பாடடா; கேடு தொலைந்ததெனக் கீழ்வான் ஞிவந்ததென நாடு ஞிறந்ததென நாளும்நீ பாடடா; வாவீற் பறந்துவந்து வட்டலீட்டுப் பாருலகை மேவீன்று பாரடா மேன்மைஎலாம் பாடடா; 80 ஞிம்புட் பறவைஎனச் செப்நினான் உன்முன்னோன் தெம்புளத்தே கொண்டு ஞிறகை ஜீளீத்தெழுவாய், வாபறந்து வாவீல் வலமாச் சுழன்றுணிளீ நீபறந்து வந்தால் பிலமெல்லாங் கண்டிடுவாய்’; என்றமொஷீ கேட்டேன்நான் எப்படி வான்பறப்பேன் என்றயர்ந்தேன்; அஃதுணர்ந்த என்னன்னை மூரஸீத்துச் ‘செல்வ மகனே ஞிறகிருந்தும் நீயறியாய் சொல்வ துடையேன் சொலுமுன்னே மேலெழுவாய், உள்ளத்தே வற்றாமல் ஊறிவரும் பேருணர்ச்ஞி வெள்ளத்தை ஓர்பால் ஜீளீஞிறகாக் கொண்டிடுக, 90 கற்ற ஹிலக்கணத்ணிற் கண்ட ணிறமெல்லாம் மற்றோர் ஞிறகா மணித்துணர்ந்து கொண்டெழுக; கற்பனையாம் வாவீற் கடுகிப் பறந்துஜீடு, அற்புடைய பூலீக்கும் அப்பாலே வந்துஜீடு, பாடும் பறவையடா பாடி மகிழ்ந்ணிடடா, வாடும் பிலைஎதற்கு வாவா ஜீரைந்’தென்றாள்; கண்ணை ழீமைக்குமுன் கற்பனைழீல் ஏறிஜீட்டேன் மண்ணை மறந்தேன் மகிழ்ச்ஞிக்கோர் எல்லைழீலை; ஜீண்திற் பறந்தேன் ஜீழைஜிந் ணிசைஎல்லாம் நண்தித் ணிளீந்தேன் நற்றாய் உடன்வந்தாள்; 100 ஆங்கிருந்து பார்த்தேன் அடடாஓ மண்பரப்நில் தேங்கிஜிள காட்ஞியெலாஞ் செப்புந் ணிறவீல்லை; நெஞ்சங் குஹீர்ந்து நெடுவாவீல் அங்குலீங்கும் ஜீஞ்சுங் கஹீப்பால் ஜீளையாடி நான்பறந்தேன்; பாடிப் பறந்தேன் பசுமை வளமெல்லாம் கூடிக் கிடக்கின்ற கோலமெலாங் கண்டுணர்ந்தேன்; காட்ஞிஎலாங் கண்டு கஹீகூர நான்பறந்தேன்; மாட்ஞிமைசேர் என்னன்னை மற்றுஞ் ஞிலசொன்னாள்: ‘நாட்டு வளமெல்லாம் நாடிச் ஞிறகடித்துப் பாட்டுப் பறவைஎனப் பண்பாடி வந்தனைநீ, 110 எண்தி லடங்கா ஹியற்கை வளங்களெலாம் மண்தில் ஹிருந்தும் மவீதன் பிலைமட்டும் வற்றி வறண்டு வறுமை லீகஷிற்றுச் சுற்றி யலைகின்றான் சோற்றுக் கழுகின்றான் ஏனென் றறிந்தாயா? என்று வினவினள்தாய்; நானொன் றறியேன் நவிலெனக்கு நீ யென்றேன்; கையிருந்தும் காலிருந்தும் காடு கழனியெனச் செய்யிருந்தும் வேலையது செய்ய மனமின்றிச் சோம்பித் திரிகின்றான்; சோற்றுக் கவலையினால் தேம்பித் தவிக்கின்றான்; தீங்கின்றி வாழ 120 உழைப்பை மதிப்பதில்லை ஓய்ந்திருந்தே இங்குப் பிழைக்க விழைகின்றான் பேதைமையாற் சாகின்றான்; மண்ணிற் கிடந்து மடிகின்ற மாந்தனை நீ நண்ணி உணர்வூட்டு, நாளும் வலிவூட்டு, கண்ணைத் திறந்துவிடு, காலத்தை ஞாலத்தை எண்ணித் தொழில்புரிய ஏவிவிடு, மண்ணகத்தே வாழ்வாங்கு வாழ வழிமுறைகள் சொல்லிவிடு; தாழ்வாகி நிற்போர் தலைநிமிரச் செய்துவிடு; பாடும் பறவையெனப் பாடி வருபவனே கூடும் உனக்கொன்று கூறுகிறேன் நெஞ்சிற்கொள்; 130 மண்ணை விடுத்தெழுந்து மாந்தன் உடல்தவிர்த்து வண்ணப் பருந்தேபோல் வானிற் பறந்தாலும் செத்துக் கிடக்குஞ் சிறப்பில் இழியுணவை நத்திப் பறந்திறங்கும் நாட்டத்தை விட்டுவிடு, சொன்னதையே சொல்லுங் கிளிப்பிள்ளை யாகாமல் உன்னதையே சொல்லி உயரப் பறந்துதிரி; மாட்டின் முதுகிருந்து மாறாது கொத்திமிக வாட்டியதைப் புண்படுத்தும் வாடிக்கைக் காகமெனப் புண்படுத்த ஆசைகொளும் புன்செயலை விட்டுவிடு, பண்படுத்தப் பாடிப் பழகிப் பறந்துதிரி, 140 வான வெளியெங்கும் வட்டமிட்டு வட்டமிட்டே ஆன அமைதிக் கடையாள வெண்புறவாய் நாளும் பறந்துதிரி, நாட்டில் நலம்பெருகத் தோளை உயர்த்தித் துணிந்தே பறந்துதிரி, காலைக் கதிரவனைக் கண்டபினும் தூங்காதே, சோலைக் குயிலாகிச் சுற்றிப் பறந்துதிரி; கூவிப் பறந்திடடா கொள்கையைப் பாடிடடா தாவிக் குதித்திடடா என்றாள் தமிழன்னை; நாடிச் சிறகடித்து நாட்டின் நிலையுயரப் பாடித் திரிந்தேன் பறந்து. 150 திருவள்ளுவர், அவ்வை, இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர், கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார், திரிகூடராசப்பக் கவிராயர், உமறுப்புலவர், இராமலிங்க வள்ளலார் - இவர்களைப் பற்றிப் பாடிப் பன்னிருவர் அரங்கேறினர். உலகத்தமிழ் மாநாடு சென்னை 6.1.1968 2. குயில்பாட்டு கலிவெண்பா பாரதியின் பாமலர்கள் பற்பலவாய்ப் பூத்திருக்கும் சீருயர்ந்த பூங்காவுட் சென்று குயிற்பாட்டை நட்ட நடுஇரவில் நான்சுவைத்தேன்; அப்பாட்டில் தொட்டஇட மெல்லாம் சுவையேறி நின்றதம்மா! முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பன்னிப் படைத்தளித்த பாவளத்தை என்னென்பேன்! காதல் வெறியேறிக் கள்மயக்கந் தானேறி மோதித் துளைக்குமொரு மோகத் துயராலே புத்தி தடுமாறிப் பொம்மையெனத் தான்நடந்து நத்தி மலர்ச்சோலை நான்கு புறந்தேடிக் 10 கானக் குயிலிசைத்த காதல் நெடும்பாட்டால் மோனப் பெருவெளியில் மோகப் பெருமயக்கில் அக்குயிலி கள்ளிதழை ஆசையொடு முத்தமிட்டுச் சொக்கிச் சுகந்தனிலே சொல்லெல்லாஞ் சூடேற்றிப் பாட்டை வடித்தெடுத்துப் பக்குவமாத் தேன்கலந்து நாட்டுக் களித்தஒரு நற்பாங்கை நான் சொலவோ? மாஞ்சோலை வான் கிளையில் வண்ணக் குயிலிருந்து தீஞ்சுவையிற் பாடுந் திறத்தினைத்தான் செப்புவனோ? இன்ப வெறியேறி ஏக்கம் மிகவாகித் துன்பங் கலந்திருக்கத் தோகைக் குயில்பாடும் 20 பாட்டின் இயல்பைத்தான் பாடுவனோ? அப்பாட்டைக் கேட்டுக் கிறுகிறுத்த கேண்மையைத்தான் செப்புவனோ? மண்ணில் நிகரில்லா மங்கையினைக் கண்டவுடன் நண்ணித் தழுவி நலம்நுகர்ந்து வேறின்றி ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே மேவிவிழிமூடி மேலான இன்பமெனும் காதற் சுரத்தாற் கவிஞன் தனைமறந்து மேதக்க பாட்டிசைத்து மேல்நோக்கிச் செல்லுங்கால் கையிற் கிடந்திருந்த காரிகையாள் தான்மறைய ஐயவோ என்றரற்றி ஐயன் மிகப்பதறிப் 30 பாட்டை முடிக்காமல் பாதியிலே விட்டுவிட்ட பாட்டுத் திறத்தைத்தான் பாடியிங்குக் காட்டுவனோ? கட்டுக் கதைகூறிக் காவியமாப் பாடிவைத்த கட்டுக் கடங்காத கற்பனையைக் கூறுவனோ? ஓங்கும் மலையருவி ஓடோடி வந்திறங்கித் தேங்காமற் பாய்ந்து திரண்டோடும் ஆற்றினைப்போல் வேகங் குறையாமல் வீறுற்றுப் பாட்டாகப் போகின்ற சொல்லோட்டப் பொற்பைத்தான் சொல்லுவனோ? கொம்பின் எருதாய்க் குயிலாய்க் குரங்காகி நம்பி இளவரசாய் நாயகியாய்ப் பாடுவதும் 40 பெண்ணாகி ஆணாகிப் பேசுங் கதைக்கிங்கே கண்ணாகி நிற்கின்ற காவியத்தில் பங்கேற்போர் அவ்வவராய் நின்றே அழகாகப் பேசுகின்ற செவ்வியநற் போக்கினையும் செப்பி விளக்குவனோ? சொல்லுங் குயிலிசைத்த சோகத்தைச் செப்புவனோ? கொல்லுங் கொடுங்காதல் வேகத்தைக் கூறுவனோ? நல்ல அணிநயமும் நாடும் உவமைகளும் சொல்லின் தொடர்நலமும் சொற்செட்டுங் காட்டுவனோ? காதற் குரங்காரைக் கண்ட குயிலங்கே ஓதும் முறையினுக்கோர் ஒப்புண்டோ? m¡FÆšjh‹, 50 “கூவீ ழீருக்குங் கொலுநேர்த்ணி தன்வீலுமே வானரர்தம் சாணிக்கு மாந்தர்பிக ரோ”வென்று வஞ்சப் புகழ்ச்ஞியால் வாளீ ஜீடுஞ்சொல்லை நெஞ்ஞில் பினைத்தாலே நேரும் பெருஞ்ஞிளீப்பு; வாய்ச்சொல்லை நம்நிஜீட்ட வற்றற் ஞிறுகுரங்கு போய்ச்செய்த சேட்டைகளும் பூளீத்துப் பேஞியதும் கூறும் அழகைத்தான் கூறுவனோ?ஆற்றல்மிகும் ஏறு வருகைதர இன்குயிலி அவ்வெருதைக் காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே பூமியிலே மாடுபோற் பொற்புடையார் யார்?என்று 60 பாரித் துரைத்துப் பலவும் புகழ்வதுபோற் கூறி யிருப்பதைத்தான் கூறி விரிப்பேனோ? நல்ல ஒளிநல்கும் ஞாயிற்றைப் பாடுகிறான் : புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தைசெயும் சோதிஎனக் காலை எழும்புங் கதிரோனைக் கூறுமுறை மேலைப் புலவரையும் மிஞ்சிவிட்ட தென்பேனோ? நாதத்தில் சேரும் நயத்தை வியந்துரைக்கும் போதத்தை எப்படிநான் போற்றி உரைத்திடுவேன்! 70 என்றுநான் ஏங்கி இருக்கையிலே ஓர்குயில்தான் என்றன் மனக்கவலை ஏகும் படியாகக் குக்குக்கூ குக்குவெனக் கூவி வரல்கண்டேன்; எக்களிப்பு மீதூர்ந் தெழுந்திருந்தேன் அக்கணமே நானுங் குயிலானேன் நாடித் தொடர்ந்ததனைத் தேனே திருமகளே தித்திக்குந் தெள்ளமுதே, யாரென் றெனக்குரைப்பாய்என்றேன்நான்; அக்குயிலி, பாரதியின் காதற் பசுங்குயிலி நானேதான் என்றுரைக்க நற்குயிலே எங்கள்கவி பாரதியை நன்று விரும்பியபின் நாற்காலி மாடனையும் 80 நீள்வால் குரங்கனையும் நெஞ்சில் விருப்போடு தாழ்காதற் பேச்சு மொழிந்தாய் சரிதானோ? நல்ல செயலிதுவோ? நானறியச் செப்பென்றேன்; புல்லும் மனத்தாற் புகுந்த எதிரிகளை வெல்லும் வகையறியேன் வெற்றுக்குப் பொய்ம்மொழிகள் சொல்லிக் கழித்ததன்றிச் சூதொன்றும் நானறியேன் என்றுவிடை கூறி இனிதிருக்க நானமர்ந்து நன்று குயிலே நமக்குகந்த பாரதிதான் வேதாந்த மாக விரித்த பொருளுரைகள் ஏதேனும் உண்டோ? எனக்கதனைக் கூறாயோ? 90 என்று நான் கேட்டேன்; இனியகுயில் வாய்திறக்க, கொன்று தொலைக்கக் கொடும்பாவி ஓர்கயவன் கல்லை எடுத்துக் கவண்வைத் தெறிந்தானே! தொல்லை மிகவாய்த் துடித்து விழுந்தேன்நான்; பஞ்சு பிதுங்கும் பழைய தலையணையைத் தஞ்சம் புகுந்த தளிர்மேனி மூட்டைகள்தாம் கொஞ்சி விளையாடக் கூம்புமிரு கண்மலர்ந்தேன் நெஞ்சத் தவிப்பு நெடுங்கனவாய்ப் போனதந்தோ! பாரதியார் நற்குயிலின் பாட்டுக்குள் வேதாந்தம் யாரறியச் சொல்லிடுவார் இங்கு. 100 இந்து மதாபிமான சங்கம், காரைக்குடி 11.9.1961 3. தென்னாட்டுக் கலைகள் கலிவெண்பா சீருடைய நுண்கலைகள் சேர்ந்திலங்கும் நாடொன்றே பேருலகில் நாகரிகம் பெற்றிருக்கும் நாடென்பர்; ஆயகலை அத்தனையும் அத்தனைக்கும் நூற்பகுப்பும் தூய நெறிமுறையில் தோற்றுவித்து வாழ்ந்தவர்நாம்; நல்ல கலைவளர்த்து நாகரிக நாடென்று சொல்லும் நிலைதன்னைத் தொன்றுமுதல் பெற்றிருந்தோம்; சிற்பக்கலை கல்லெடுத்தான் கைச்சிற் றுளிஎடுத்தான் அக்கல்லில் சில்லெடுத்தான் நல்ல சிலையொன்று கண்டெடுத்தான்; கற்பனையில் கண்டெடுத்த காதற் பொருளெல்லாம் சிற்பமென ஆக்கிச் சிறப்பெடுத்தான் நம்முன்னோன்; 10 கல்லைக் கலையாக்கும் கைத்திறனை நீள்கடல்மா மல்லைக் கருங்குன்றம் மாறின்றிக் கூறிநிற்கும்; தென்மதுரைக் கோவிலுக்குள் தேர்வடிவக் கல்லெல்லாம் நன்மதுர மெல்லிசையால் நாளெல்லாம் பாடிநிற்கும்; விண்ணெட்டும் கோபுரங்கள் விந்தைதரும் நற்சிலைகள் உண்ணட்ட கற்றூண்கள் ஓங்கும் மதிற்புறங்கள் ஒவ்வொன்றும் காட்டும் உயிர்ச்சிலைகள் நம்சிற்பச் செவ்விதனைக் கூறிச் சிறப்பெல்லாம் பேசிநிற்கும்; தஞ்சைப் பெருவுடையான் தங்கும் தளியதனுள் நெஞ்சைக் கவரும் நிலையில் நிமிர்ந்திருக்கும் 20 காளை வடிவாய கல்லருகில் செல்வோர்கள் தோளெல்லாம் பூரிப்பர்; தொன்மைத் தமிழ்மாந்தர் சிற்பக் கலைத்துறையில் சேர்த்துவைத்த சீர்த்தியெலாம் கற்பனையில் தேக்கிக் களிப்பார்கள் உண்மையிது; கட்டடக்கலை வான முகட்டு வழிஏற வைத்தஒரு ஏணி எனத்தோன்றும் எண்ணில்லாக் கோபுரங்கள், மாடங்கள், மாளிகைகள், மாற்றுயர்ந்த பொன்வேய்ந்த கூடங்கள், கொற்றவர்கள் கூடும் அரண்மனைகள், போர்யானைக் கூட்டம் புகுந்துவரும் நேர்வாயில் போர்கருதி யாரும் புகமுடியாச் சீர்வாயில், 30 மாற்றார் கடந்தறியா மாமதில்கள் இத்தனையும் சாற்றாவோ கட்டடத்து நுண்கலைக்குச் சான்றாக; விஞ்சும் எழிலால் வியப்பூட்டும் கோபுரத்தைத் தஞ்சைப் பெரும்பதியில் தந்தமன்னன் சாய்ந்துவிட்டான் ஆக்கிப் படைத்தானே அன்னவனும் சாய்ந்துவிட்டான்; தேக்குபுகழ் மட்டும் தினையளவும் சாயவில்லை; கோபுரத்தில் காணும் கொடுமுடியின் தன்னிழலும் ஓர்புறமும் சாயவில்லை; ஒப்பில்லை இக்கலைக்கே; இசைக்கலை நெஞ்சைக் கனிவித்து நெக்குருகச் செய்விக்கும் விஞ்சைக் கலையாகும் விந்தை இசைக்கலையில் 40 ஒப்புயர் வில்லாமல் ஓங்குநிலை பெற்றிருந்தோம் செப்புகின்ற சான்றுகளோ எப்பொழுதும் ஈங்குண்டு; காட்டில்வளர் மூங்கிலிடைக் கார்வண்டு போய்த்துளைத்த தோட்டில் நுழைகாற்றுத் தோற்றுவித்த நல்லிசையைக் கேட்டான் மனங்களித்தான்; நாடோறும் கேட்பதற்கு வேட்டான், எடுத்தான் *வெதிரைத் துளைத்தான் குழல்கண்டான்; வாயைக் குவித்திசையை ஊதிப் பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன்யார்? வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப் பூட்டித் தெறித்தான் புதிய ஒலிகேட்டான்; 50 விண்ண் ணெனஇசைத்த ஓசை வியப்பூட்டப் பண்ண் ணிசைக்கும்யாழ் பண்ணி நமக்களித்தான்; வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுரித்து மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்; காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு தோய்ந்துதோய்ந் தாடுவதால் தோன்றியதோர் பேரோசை அன்றே படைத்தான் அளப்பரிய தோற்கருவி; நன்றாம் இசைக்கருவி நாலுவகை செய்தமைத்தான்; கூவும் குயில்கண்டான் கொக்கரித்துக் கூவிநின்றான் யாவும் இசையாகப் பாயும் நிலையுணர்ந்தான்; 60 பந்தென்றும் கும்மியென்றும் பாய்ந்தாடும் ஊசலென்றும் வந்த விளையாட்டில் மங்கையர்கள் பாடிடுவர்; ஏற்றம் இறைப்பார் இசைக்கின்ற பாட்டோசை; நாற்று நடுவோர்கள் நாவசைக்கும் கூட்டோசை, கொல்லைத் தினையிடிக்கும் கோல்வளையார் பாடுகின்ற *வள்ளைப்பாட் டெல்லாம் வளரிசையைக் காட்டாவோ? சீராரும் தன்மகவைச் சின்னஒரு தொட்டிலிலிட் டாராரோ பாடுகின்ற அப்பாட்டுப் போதாதோ? ஒப்பாரிப் பாட்டுக்கோர் ஒப்புண்டோ? அஃதேபோல் எப்பாரில் கண்டீர்கள்? ஈடில்லாக் கற்பனையாம்; 70 நடனக்கலை பாடற் கலைசொன்னோம்; பாடல் துணையாக ஆடற் கலையும் அறிந்தவனே நம்முன்னோன்; விண்ணில் தவழ்ந்து விளையாடும் கார்முகிலைக் கண்ணெதிரில் கண்டு களித்தெழுந்த வண்ணமயில் தோகை தனைவிரித்துத் துள்ளிவிளை யாடுகையில் ஓகை மிகவாக உள்ளந்தான் துள்ளியதால் அன்றுமுதல் ஆடுகிறான் ஆடுகிறான் அம்பலத்தே நின்றுநடம் ஆடுகிறான் நேரில்லாக் கூத்தே; குரவை துணங்கை கொடுகொட்டி என்று பரவிவர நாளும் பலவகையில் கண்டுநின்றான்; 80 கூத்தன் விறலி குறிக்கும் பொருளென்ன? வேத்தியலும் மக்கள் விரும்பும் பொதுவியலும் சொல்லும் பொருளென்ன? சொல்லுதலும் வேண்டுவதோ? கல்லுந்தான் சொல்லாதோ ஆடற் கலைத்திறனை? மாதவித்தாய் ஆடும் மரபெல்லாம் கண்டபினும் ஏன்தவித்தாய்? நல்ல எழிற்கலைகள் கண்டவன் நீ! ஓவியக்கலை வீட்டுச் சுவரில் விளங்குமேற் கூரைதனில் காட்டும் திறமெல்லாம் காட்டித் திரைதன்னில் ஊட்டும் பலவண்ணம் ஊட்டி உயிரோவம் தீட்டும் திறலோனைத் தேர்ந்தெடுத்தே அன்னவனைக் 90 *கண்ணுள் வினைஞனெனக் கட்டுரைத்தே ஓவியத்துச் செந்நூல் படைத்துச் செழிப்படையச் செய்தவர் நாம்; நெய்தற்கலை பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம்; பாவோ டிழையோடப் பஞ்சாலும் பட்டாலும் ஓவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம்; நெய்தற் கலையாவும் *நெய்தல் உரிப்பொருளாய் எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்; இலக்கியக்கலை கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச் சொல்லிற் சுடரேற்றிச் சொல்லரிய காவியமென் 100 றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம் தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல் காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று; மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான் ஓதும் புகழ்சேர் உயர்ந்த புறங்கண்டான்; தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான் ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் தோயும் படிவாழ்வைத் துய்த்திருந்தான்; அவ்வாழ்வு மீண்டும் தழைக்க வியனுலகம் பாராட்ட வேண்டுமீ தென்றன் விழைவு. 110 அழகப்பர் கலைக்கல்லூரி காரைக்குடி 28.10.1961 4. பிரிவில் கண்ணகி எண்சீர் விருத்தம் காவிரியின் புகுமுகமாம் பட்டி னத்துள் கார்தவழும் நெடுமாட வீதி ஒன்றில் பூவிரிந்து கொடிபடர்ந்து கோலஞ் செய்யும் புகுவாயில் மாளிகையின் சாள ரத்துத் தாவுமெழிற் கொடியொன்று கொழுகொம் பின்றித் தனியாக அசைந்தாடி நீர்பி லிற்றக் கூவிழந்து குயிலங்கே தேம்பக் கண்டேன் கோலமயில் ஆடாமல் நிற்கக் கண்டேன். 1 மலர்முழுதும் செடிகொடியில் வெதும்பக் கண்டேன் மணம்பரப்பும் அம்மலரைக் கொய்வா ரில்லை; புலர்பொழுதிற் புல்லென்ற முன்றில் கண்டேன் பூங்கொடியார் இடுகின்ற கோலம் இல்லை; பொலிவிழந்து நெடுங்கதவம் நிற்கக் கண்டேன் புதியரென விருந்தயர வருவா ரில்லை; பலவகைய புள்ளினமும் வாடக் கண்டேன் பழந்தந்து பால்தந்து புரப்பா ரில்லை. 2 கடலாடை உடுத்தமகள் கதிரோன் என்ற கணவனவற் பிரிந்தமையால் மலர்க்கண் மல்கித் தடநீரைச் சிந்தமருண் மாலை கூடித் தரையெல்லாம் மயக்குறுத்தத், திசைகள் சோர, இடமேதும் இல்லைஎனச் சொல்லும் வண்ணம் இரவெழுந்து படையெடுத்துச் சூழ்ந்து நிற்க, உடுவாகக் கண்ணீரைத் துளித்துக் கொட்டி உயர்வானில் நிலவணங்கு தனித்து நின்றாள். 3 புறமெல்லாம் அவலத்தின் குறிகள் காட்டப் பொன்னிறத்த மனையகத்துப் புகுந்து சென்றேன்; நிறமெல்லாம் ஒளிகுறைந்து, பிரிவுத் துன்பம் நெஞ்சமெலாம் மிகநிறைந்து, புவியி லுள்ள துறவெல்லாம் சேர்ந்ததுபோல் நலம்து றந்து, துணைவிழிகள் நீர்துறந்து, துயில்து றந்து-அவ் விரவெல்லாந் தவஞ்செய்யுங் கற்புத் தெய்வம் இன்னலுக்கோர் வடிவுதந்து விளங்கக் கண்டேன். 4 அடிமலருங் கொடியிடையும் வறிதே யாக அணிசிலம்பும் மேகலையும் பேழை வைகும்; நெடிதுயிர்ப்ப மங்கலநாண் அணிந்த தன்றி நேரிழைகள் அத்துணையுந் துறந்த மேனி கொடியெழுத மறந்துவிட்ட தோளில் வண்ணக் குங்குமத்தின் சுவடில்லை பொலிவும் இல்லை; வடிபுனலால் விழிமுழுதும் சிவந்த தன்றி வண்ணவிழி மையெழுதிக் கருக்க வில்லை. 5 கரும்புருவச் சிலைநுதலின் திலக மெங்கே? காதமர்ந்து தோள்வருடும் குழைகள் எங்கே? அரும்புமிள நகைஎங்கே? கொவ்வை தோற்கும் அவ்விதழின் நிறமெங்கே? எழிலும் எங்கே? சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் கொத்தும் எங்கே? குழற்பூசும் நறுநெய்தான் எங்கே எங்கே? இரும்புமனம் குழைவிக்கும் துயரந் தாங்கி இருக்கின்ற மாமணியை அங்குக் கண்டேன். 6 சுடர்காலுஞ் செங்கதிரை வழிய னுப்பித் தொடுவானில் வெண்மதியம் ஆட்சி செய்ய, மடவார்கள் கொழுநரொடு மாடமுன்றில் மலர்தூவு பஞ்சணையிற் சார்ந்து, கொண்டான் தடமார்பில் புதையுண்டும் புலந்தும் கூடித் தண்ணிலவுப் பயன்கொண்டு, மலர்கள் சிந்தக் கொடிபோல நுடங்கினராய்த் துயிலில் ஆழ்ந்தார்; குலமகளாம் கண்ணகியோ துயரில் ஆழ்ந்தாள். 7 தற்கொண்ட காதலனைத் தணியா இன்பந் தந்தவனைக் கோவலனைப் பிரிந்து நின்ற விற்கொண்ட புருவத்தாள் நினைந்த ழுங்கி வேதனையில் அழுதழுது சிந்தும் நீரால் சொற்கொண்ட புகார்ப்பதியின் கடல்நீர் யாவும் சுவைமாறி உவர்ப்பாகிப் போயிற் றந்தோ! இற்கொண்ட அவளிருப்பு நெய்தல் ஆகும் இரங்குதலே அவளுரிமைப் பொருளும் ஆகும். 8 கண்ணகியை ஏன்பிரிந்தான்? அவளி டத்துக் கண்டகுறை ஒன்றுண்டா? இல்லை இல்லை; எண்ணரிய செல்வத்தான் வான்நி கர்த்த ஈகைவலான் மாநாய்கன் மகளாய் வந்தாள்; வண்ணமுக மங்கையர்கள் தொழுது போற்ற வயங்கியநற் பெருங்குணத்தாள்; வடிவு சொல்ல மண்ணகத்து நிகரில்லை; காமன் தேவி, மண்மகள்என் றிவர்தாமே ஒருசார் ஒப்பர். 9 பொற்கொடியோ பூங்கொம்போ என்ற யிர்க்கப் பூத்திருக்கும் நல முடையாள், கொண்டான் சொல்லும் சொற்படியே நடக்கின்ற மென்கு ணத்தாள், சூதறியாள், அவள்வயதோ ஈரா றாண்டு பொற்புடைய தெய்வமகள், கற்பின் செல்வி, புரையில்லாக் குலக்கொம்பர் இந்த மின்னை எற்கடியோ பிரிந்திருந்தான் துன்பந் தந்தான்? ஈரமிலா நெஞ்சத்தான் செல்வக் கோமான். 10 நெற்றிக்குப் பிறைநிகராம்; வேலி ரண்டு நீள்விழிக்குச் சரிநிகராம்; விழியின் மேல்பால் உற்றிருக்கும் கரும்புருவம் கரும்பு வில்லாம்; ஒளிமல்கும் வச்சிரத்தின் நடுப்பா கந்தான் சிற்றிடைக்கு நிகராகும்; இயல்பான் வந்த சீரிளமைப் பேரழகை மாதர் கூடி *எற்றுக்குச் செயற்கையினாற் கோலஞ் செய்தார்? எதைஎதையோ சுமையாகப் பூட்டு கின்றார்! 11 கானகத்தே தோகைமயில் சென்று புக்குக் கரந்துறையக் காரணமென்? துள்ளும் புள்ளி மானடுத்த விழியாளின் சாயல் வேண்டி மனமுடைந்து படுதோல்வி கண்டே யன்றோ? மீனடுத்த புனல்தொடுத்த வயல்வ ரப்பில் மெலிந்தொதுங்கி அன்னங்கள் வாழ்வ தென்கொல்? தேனடுத்த மொழியாளின் நடையைக் கற்கத் திணறியதால் தவறியதால் வெட்கி யன்றோ? 12 மழலைமொழிக் கிள்ளைஎலாம் பிரியா தங்கு மங்கையிவள் கையகத்தே நிற்ப தென்கொல்? குழலிசையும் யாழிசையும் அமிழ்தப் பாகும் குழைத்தெடுத்த இவள்குரலைக் கற்க அன்றோ? அழகுவலம் புரிமுத்தே! கரும்பே! தேனே! அருமருந்தே! கதிர்மணியே! பொன்னே! நின்னைச் சுழல்அலையிற் பிறவாத அமிழ்தம் என்கோ? சொல்யாழிற் பிறவாத இசைதான் என்கோ? 13 என்றெல்லாம் கண்ணகியை நலம்பா ராட்டி இசைத்தவன்தான் அவள்நலியப் பிரிந்து விட்டான்; மன்றலன்று வாழ்த்துங்கால் மாதர் கூடி மன்னவனைப் பிரியாமல் *கவவுக் கைகள் ஒன்றுதலில் ஞெகிழாமல் அறுக தீதென் றுரைமொழியை எதிர்மறையால் மொழிந்து நின்றார்; அன்றவரே பிரிவுண்மை அறிந்த தாலே அவ்வண்ணம் பகர்ந்தனரோ அந்தோ! அந்தோ! 14 காதலரைப் பிரிமாதர், பெற்றெ டுத்த கனிமழலை மகவுமுகம் நோக்கி நின்று நோதகவு தணிந்திருப்பர்; பிரிவில் வாடி நுடங்குகின்ற கொடியிடையாள் கண்ண கித்தாய் மேதகுநல் முதுபார்ப்பான் மறையு ணர்த்த மேவுமழல் வலஞ்செய்து மணந்து கொண்டும் காதலெனுங் கடல்மூழ்கி நின்றும் அந்தக் கடல்தனிலே முத்தொன்றும் கண்டா ளல்லள். 15 ஆதலினால் பிரிவென்னுங் கொடிய பாவி அவட்களித்த பெருந்துயரம் தணிக்கும் ஆற்றை ஏதொன்றும் அறியாளாய் இரங்கி நெஞ்சை இடருக்கே அளித்துவிட்டாள்; கோவ லற்கு மாதவிபோல் எழுதவிலை முடங்க லொன்றும் மனத்தகத்தே குமுறலெலாம் எழுதி வைத்தாள்; தீதறியா அன்னையிவள் பிரிவுத் துன்பம் செப்புதற்கு முயல்வமெனின் இயல்வ தொன்றோ? 16 காதலரைப் பிரிந்தமையால் வருந்தும் மாதர் கண்சிவந்து வெகுண்டிருப்பார்; அதுத ணிக்கும் சூதறிந்த ஆடவர்தாம் விருந்தாய் வந்தார் துணையுடனே இற்புகுதச் சிவப்பு மாறி மாதர்விழி கருங்குவளை நிறமே எய்தும்; மனக்குறிப்பைக் கருப்புடனே சிவப்புக் காட்டும்; கோதறியா இவள்விழியோ சிவக்க வில்லை கொட்டுகிற புனலோடு கருமை காட்டும். 17 உயிரனைய தேவந்தி என்னுந் தோழி உளமுருகிக் கண்ணகிபால் வந்து நின்று, செயிரறுநீர்க் குண்டங்கள் இரண்டுள் மூழ்கிச் சிந்தையினால் காமனைநாம் வணங்கி நின்றால் துயரொன்றும் அணுகாமல் இன்பம் மேவித் துணையுடனே வாழ்வுவரும் என்றா ளாக. மயலுடையாய், துறைமூழ்கித் தெய்வம் போற்றல் மரபன்றே; எங்கட்குக் கணவன் தெய்வம். 18 எனவுரைத்துத் தமிழகத்து மரபு காத்தும் எழும்போதும் கொழுநனையே தொழுது வாழும் நனவகத்து நிறைமாதர் மானங் காத்தும் நாம்வணங்குந் தெய்வமென ஆற்றி நின்றாள்; தினவகத்தான் மாதவியைப் பிரிந்து, மீண்டு, செல்வமெலாம் இழந்தமையால் நாணு கின்றேன் எனவுரைத்தான்; உளசிலம்பு கொள்க என்ற இன்முகத்தாள் பண்புளத்தை யாண்டுக் காண்போம்? 19 பிரிவாலே துயரடைந்தும், மீண்டு வந்தான் பின்சென்று படருழந்தும், கணவற் காக இருள்வானின் நிலவாக வாழ்ந்து நின்றாய்! இன்றுணைவன் கொடுங்கோன்மைக் கிரையாய் மாண்ட உரையாலே நின்னுளத்துக் கொழுந்து விட்ட ஒளிநெருப்பால் வென்றிகண்டாய்! கொடுங்கோல் சாய்க்க எரிதானோர் வழியென்றால் என்னு ளத்தும் எரிதழலை மூட்டிவிடு தாயே வாழி! 20 கண்ணகி விழா திருச்செங்கோடு 24.5.1964 5. புகழ்க்கம்பன் எண்சீர் விருத்தம் புகழ்மிகுத்து வாழ்வாரே வாழ்வார் நல்ல புகழ்விடுத்தார் வாழாதார் என்றே வாய்மை புகல்கின்ற முந்தையருள் முதல்வ னான பொய்யாத மொழிப்புலவன் சொன்னான்; மேலும் புகழ்வருமேல் இன்னுயிருங் கொடுத்து நிற்பர் புன்மைவரும் எனில்உலகே கிடைக்கு மேனும் இகழ்ந்ததனைக் கொள்ளார்நற் சான்றோர் என்றே இளம்பருவப் பெருவழுதி இயம்பி நின்றான். 1 பிறக்குங்கால் புகழோடு பிறப்பா ருண்டு; பிறந்தபினர்த் தம்முழைப்பால் அறிவின் ஆற்றல் சிறக்குங்கால் புகழடைந்து வாழ்வார் உண்டு; செலவழித்து விலைகொடுத்துப் புகழை வாங்கப் பறக்கும்பேர் சிலருண்டு; வேண்டு மென்றே பலர்க்கதனைச் சுமத்துவதும் வழக்கில் உண்டு; பிறக்குங்கால் புகழோடு பிறந்தான் கம்பன் பெருமைக்கே உறைவிடமாய்த் திகழ்ந்து நின்றான். 2 இயலைந்தும் ஐங்குழுவாய் அமர்ந்தி ருக்க, எண்சுவைகள் பேராயம் எட்டாய் நிற்க; மயல்தவிர்ந்த புலமைஎனும் மகுடஞ் சூடி, மக்கள் மன அரியணையில் வீற்றி ருந்து, செயல்மிகுந்த உணர்ச்சிஎனும் செங்கோல் தாங்கிச், சீரியநற் கற்பனைவெண் குடைமேல் ஓங்கப் பயன்மிகுந்த கவியுலகை ஆட்சி செய்யும் பாவல்ல முடியரசன் கம்பன் ஆவன். 3 பெண்மையுடன் ஆண்மையுமென் றிரண்டும் ஒன்றின் பேசுமொரு காதலுக்குச் சிறப்பி ருக்கும்; வண்மையுள உணர்ச்சியுடன் இலக்க ணத்தின் வகைசேரின் பாடலுக்கு மதிப்பி ருக்கும்; பண்ணலங்கள் நன்குணர்ந்த முந்தை மாந்தர் பாடலுக்கு வகுத்துரைத்த வழியீ தாகும்; கண்ணெனவே அவ்வழியைப் போற்றிக் கம்பன் கவிமரபைச் சிதைக்காமல் புகழைப் பெற்றான். 4 பணிசெய்வோம் எமைத்தேர்க என்று நம்முன் பணிந்துவரும் வேட்பாளர் வரிசை போல அணியணியாய்ச் சொல்லெல்லாங் கூடி நின்றே அவன்முன்னே தவங்கிடக்கும்; அவற்றில் தேர்ந்து மணியனைய சொல்லெடுத்துக் கோத்து நல்ல மதிப்பேற்றி மெருகேற்றி அணிகள் செய்தான்; அணிமிகுந்த அவன்பாடல் உலக மெல்லாம் அளப்பரிய புகழ்பெற்று வாழக் கண்டோம். 5 விருத்தமெனும் ஒண்பாவால் புகழைப் பெற்றார் வேறொருவர் ஈங்கில்லை; கம்பன் பெற்ற பெருத்தபுகழ் பாரறியும்; வண்ண மெல்லாம் பெருங்களிப்பால் கூத்தாடி நிற்கும் பாட்டுத் திறத்தைஒரு பழமொழியே அளந்து கூறும்; தென்மொழியான் கம்பன்றன் வீட்டில் கட்டும் சிறுத்தஒரு தறிகூடக் கவிதை யாகச் செப்புமெனில் புகழ்சொல்ல வல்லார் யாரே? 6 வில்வளைத்துப் பேராற்றல் விளங்கக் காட்டி மிதிலைதரும் எழிலணங்கை மணந்தான் அண்ணல்; சொல்வளைத்துப் பாவாற்றல் துலங்கக் காட்டிச் சொல்லரிய புகழணங்கை மணந்தான் கம்பன்; மல்விளைக்குந் தோளுடையான் மருங்கு காணா அலைமகட்கு மணவணிநூல் சூட்டி நின்றான்; சொல்விளைக்கும் நாவுடையான் மருங்கு காணும் கலைமகட்குச் சுவையணிநூல் சூட்டி நின்றான். 7 கற்றறிவு கம்பனுக்குச் சிறிதும் இல்லை காளிவந்தாள் அவன்நாவில் எழுதி விட்டாள் பற்றுடையார் இவ்வண்ணம் கட்டி விட்டார் பகுத்தறிவுக் கொவ்வாத கதையீ தாகும்; முற்றுணர்ந்த அறிஞனவன், கலைப்ப ரப்பில் மூழ்கிஎழுங் கலைஞனவன், காலங் காணாச் சொற்றமிழிற் கவிஞனவன், நறைப ழுத்த துறைத்தமிழில் தோய்ந்தெழுந்த புலவன் ஆவன். 8 தொடுத்திருக்கும் பழம்பாடற் றொடைகள் தாங்கித் தொன்மைக்கும் தூய்மைக்கும் முதன்மை காட்ட எடுத்திருக்கும் எங்கள்தமிழ்க் கடல்க டந்தான் எல்லையிலாப் புகழடைந்தான்; தென்பு லத்தை அடுத்திருக்கும் வடமொழியும் எல்லை கண்டான்; அம்மொழியைப் படிஎன்றே அவனை யாரும் தொடுத்திருந்து வற்புறுத்தித் தொலைக்க வில்லை; துணைமொழியாய்ப் பயின்றதனிற் புலமை பெற்றான். 9 பலமொழிகள் இவ்வண்ணங் கற்று ணர்ந்த பாங்கறிந்து கல்வியினாற் பெரியன் கம்பன் புலவனிவன் என்றெல்லாஞ் சான்றோர் வாயால் புகழ்ந்துரைக்கப் பெருவாழ்வு வாழ்ந்தி ருந்தான்; குலமுனிவன் வன்மீகன் காதை கற்றுக் குலவுதமிழ்க் கடவுட்கோர் கோவில் கண்டான் இலகுபுகழ் பெறவாழ்ந்தான் ஏற்றங் கொண்டான் என்றுமுள தென்றமிழ்க்குப் புகழுந் தந்தான். 10 தனக்கொருவர் செய்ந்நன்றி மறவேல் என்ற தமிழ்மொழியும் முந்தைவழி; அதனைக் கம்பன் மனத்திருத்திப் பெரும்புகழுக் குரியன் ஆனான்; மதியுடையான் பாட்டுவளம், வெண்ணெய் நல்லூர் தனக்குரியான் சடையப்பன் மனமு வந்து தந்துவந்த சோற்றுவளம் அன்றோ? அந்தப் பனைத்துணைய நன்றியினை மறவா தென்றும் பாட்டகத்தே பாடிவைத்துப் புகழும் பெற்றான். 11 காரைக்குடி மார்ச்சு, 1965 6. நமது வீரம் கலிவெண்பா வீரமுடன் காதல் விழியாம் எமக்கென்று கூறியிவண் வாழ்ந்த குலத்திற் பிறந்தவர்நாம்; காதலெனிற் காளையர்க்குக் கற்கண்டாம்; அஃதுரைக்க ஈதன்று நேரம்; இருபாலும் போர்முகில்கள் சூழும் பொழுதத்துச் சொல்லரிய வீரமன்றிப் பாழும் பிறவுணர்வைப் பற்றிடுமோ நம்நெஞ்சம்? ஆதலினால் வீரத்தை ஆர்வமுடன் பாடுதற்குப் போதருமுன் அவ்வீரம் பூக்குமிடம் நாமறிவோம்; நாடும் மொழியும் நலமிக்க இல்லாளும் வீடும் முதலா விளம்பும் உரிமைகளில் 10 ஊறு விளைவிக்க உள்ளும் பகைகாணின் வீரம் முளைக்கும் விளைநிலங்கள் ஆகுமவை; மன்னர் விளைத்த மறப்போரும், மக்களிங்கு *நென்னல் தொடுத்த அறப்போரும் நேர்சான்றாம்; ஈயென் றிரந்தால் எனதாட்சி மட்டுமன்று மாயும் உயிரெனினும் மாற்றமின்றி ஈந்திடுவேன்; எங்கள்குல மானத்தை ஏற்றமிகும் வீரத்தை இங்கவர்தாம் போற்றாராய் எள்ளிஎமை மோதவரின் போர்க்களிற்றின் காலடியில் புக்கழியும் வேய்முளைபோல் சேர்த்தழியச் செய்திடுவேன்; செங்கட் புலியொன்று 20 கண்டுயிலும் போழ்தத்துக் காணாமல் காலிடறிக் கொண்டதன்மேல் வீழுங் குருடன்தான் தப்புவனோ? தப்பா தழித்துத் தறுகண்மை காட்டிடுவேன்; இப்பார் எமக்குரிமை யாருக்கும் விட்டுவிடோம் என்றுரைத்த வஞ்சினத்தான் எம்முன்னோன்; அவ்வேந்தன் நின்றுரைத்த வீரத்தை நெஞ்சிற் பதித்துள்ளோம்; தாய்க்குலத்தின் வீரத்தைச் சற்றே நினைந்துவிடின் போய்க்களத்தில் இன்றே புகுவோம் எனத்தோன்றும்; ஈன்று புறந்தருதல் எற்குத் தலைக்கடனாம் ஆன்ற சமர்முருக்கி ஆர்த்த களிறடக்கி 30 வென்று திரும்புதலே வீரமிக்க காளையர்க் கென்றுங் கடனாகும் என்றுரைத்தாள் ஓரன்னை; மாற்றான் படையெடுத்து வந்தான் எனப்புகன்ற மாற்றம் செவிபுகுத மானத்தான் ஓரிளைஞன் வேலெடுத்தான் போர்தொடுத்தான் வீரச் சமர்க்களத்தில் காலொடித்தான் கையொடித்தான் கண்ணிமைக்கும் நேரத்தில் சாகடித்தான் பற்பலரைச் சாகாரை நாற்புறமும் போகடித்தான் ஆனாலும் தன்னுயிரைப் போக்கடித்தான்; வீரக் குலமகன்தான் வேலேந்திப் போனானே நேரிற் பொருதானோ? neuhiu bt‹whndh? 40 என்றவன்தாய் கேட்டாள்; இழிமகனாம் ஓர்பேதை துன்றமரில் *வெந்காட்டித் தோற்று மடிந்தானென் றோர்பழியைக் கூறிவிட்டான்; ஓடியவன் என்மகனா? ஊர்பழிக்கச் செய்தனனா? ஒன்னார்க்குத் தோற்றோடும் பாவி மகனுக்கோ பால்கொடுத்தேன் என்றவன் தாய் ஆவி துடித்தாள் அலறிப் புலம்பியவள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள் வாளெடுத்து; பார்த்தலத்தை மூடியபோல் பற்பலரின் மெய்கிடக்கக் கண்டாள் அவண்கிடந்த கட்டிளமைக் காளையரின் புண்தாழ் குருதியுடல் ஒவ்வொன்றும் போய்ப்பார்த்தாள்; 50 கைவிரல்கள் வேல்பிடிக்கக் கண்ணிமைகள் தாம்மலர மெய்குருதி நீர்வடிக்க மேலவன்றன் மார்பகத்தே பாய்ந்ததொரு கூர்வேல் பளிச்சிட்டுத் தானிற்கச் சாய்ந்ததிரு வாய்மகனைத் தாமரையைப் போல்முகனை வெற்றிப்புன் மூரலொடு வீழ்ந்து கிடந்தானைப் பற்றிப் பலமுறையும் பார்த்தாள் விழிமல்க; ஈன்றெடுத்த ஞான்றையினும் எல்லையிலாப் பேருவகை ஏன்றுளத்தாற் பூரித்தாள்; எம்மன்னை வாழியரோ! வெங்கொடுமைச் சாக்காட்டை வீர விளையாட்டென் றெங்கள்குலம் எண்ணும் இயல்பினது; போர்ப்பரணி 60 பாடி மகிழும் பரம்பரையேம்; வாகைமலர் சூடி வருகின்ற தொல்குடியேம்; ஏந்தியநற் கைவேல் களிற்றொடு போக்கி வரும்போதும் மெய்வேல் பறித்தெடுத்து மேலேறிப் பாய்ந்திடுவோம்; போரில் விழுப்புண் படாஅத நாளெல்லாம் சீரில்லா நாளென்று செப்புந் திறலுடையேம்; ஆற்றல் மிகவிருந்தும் அஞ்சாத நெஞ்சிருந்தும் கூற்றம் எனவெகுளும் கோவேந்தர் ஆண்டிருந்தும் தூற்றும் படியானோம் தொண்டடிமை யாகிவிட்டோம் ஏற்றம் தனையிழந்தோம் ஏதிலர்க் காளானோம்; 70 வேலில்லை வாளில்லை வெட்டில்லை குத்தில்லை கோலில்லை கொற்றக் குடையில்லை ஆயினுமே வந்து புகுந்தவர்கள் வாணிகத்தின் பேர்சொல்லித் தந்திரத்தால் நம்நாட்டைத் தட்டிப் பறித்தார்கள்; வெள்ளை மனத்தினர்நாம் வெள்ளை நிறத்தவர்க்குக் கொள்ளை யடிக்கக் கொடுத்துவிட்டோம் நம்நாட்டை; செல்வம் பறிபோகச் சீரிழந்து நாடிழந் தல்லும் பகலும் அடிமைகளாய் நொந்துழன்றோம்; குற்றம் புரிந்திங்குக் கோலேந்தும் மாற்றாரைச் செற்றம் மிகக்கொண்டு சீறிப் பகைத்தெழுந்தோம்; 80 ஆண்ட கொடுங்கோலர் ஆணவத்தாற் செய்தவெலாம் மீண்டும் நினைத்துவிடின் மெய்சிலிர்க்கும் கண்சிவக்கும்; வாட்டுஞ் சிறையெனினும் வாட்டம் அடையவிலை, வேட்டு, துளைத்தாலும் வீரம் அடங்கவிலை, நாட்டை நினைந்ததனால் நம்முரிமை வேட்டதனால் வீட்டை மறந்தோம் விடுதலைக்கே பாடுபட்டோம்; அந்நாளில் நம்மவர்கள் ஆற்றிய நற்றொண்டால் இந்நாள் உரிமையினை ஏற்று மகிழ்கின்றோம்; அஞ்சாமல் துஞ்சாமல் ஆர்த்தெழுந்த போர்வீரம் எஞ்சாமல் நின்றிருக்க இன்றதனைப் பாடுவம்நாம்; 90 செந்தமிழை நம்முயிரைச் சீர்கொண்ட தாய்மொழியை எந்தமொழி தன்னாலும் ஏங்க விடுவதில்லை ஆட்சி மொழியுரிமை அன்னை மொழிக்கானால் மாட்சி நமக்காகும் என்றெழுந்த மாணவரைச் சுட்டழித்த போதும் துளங்காமல் நின்றிருந்து கட்டிளமைக் காளையர்கள் காட்டியநல் வீரத்தைப் பாடாமல் விட்டுவிடப் பாவலரால் ஒல்லுவதோ? பாடாமல் நாவெதற்குப் பாவெதற்குப் பாடுவம்நாம்; மேன்மைத் தமிழ்காக்க மேலெல்லாந் தீயூட்டி ஆண்மைத் திறமுரைத்த ஆடவரைப் பாடுவம் நாம்; 100 இவ்வனைய வீரத்தின் ஏற்றத்தைப் பாடுவதால் செவ்வியநன் னெஞ்சத்தில் சிந்தா உரமேறும்; சீனத்த ரானாலும் செந்நெறிசெல் லாப்பாகித் தானத்த ரானாலும் *தண்டெடுத்துப் போர் முடிப்போம்; காளைப் பருவத்தீர் காய்ந்தெழுதல் நும்கடனாம் நாளைத் திருநாட்டின் நாயகங்கள் நீவிரன்றோ? வீரம் மறவாதீர் வேற்றவர்தாம் நம்நாட்டின் ஓரம் புகுதற்கும் ஒவ்வாதீர், காவலர் நீர்; நீதமிலார் தக்கஒரு நேரமெதிர் பார்க்கின்றார் பேதலித்து நம்முள்ளே பேதம் விளைக்காதீர்; 110 செந்நீருங் கண்ணீருஞ் சிந்தி வளர்த்தபயிர் புன்னீர்மை கொண்டோரால் போயொழியப் பார்ப்பதுவோ? நாமிருக்கும் நாடு நமதன்றோ? வேற்றவர்தாம் பூமியினை ஆண்டிருக்கப் புல்லடிமை ஆவதுவோ? ஆளப் பிறந்தவர்கள் ஆளடிமை செய்வதுவோ நாளைப் பிறப்பவர்கள் நம்மையன்றோ தூற்றிடுவர்; வேங்கைப் புலிக்கூட்டம் வீரத் திருக்கூட்டம் நீங்கள் என அறிவேன்; நேரார்தாம் இந்நாட்டில் காலெடுத்து வைத்தால் உடலங்கள் காலாகும்; வாலடக்கி வந்த வழிதிரும்பும் என்றுரைத்தால் 120 போரெடுத்து வந்திருக்கும் புல்லியர் ஓர்நொடியில் மாரடைத்துச் சாகாரோ? மான மறவர்யாம், எம்முரிமை தீண்டுவரேல் எம்முயிர்கள் வெல்லமல்ல, எம்முனையும் துச்சமென எள்ளி நகைத்திடுவோம் என்றெழுக காளையர்காள், ஏது தடைபடைகள்? நன்று புரிந்திடுக நாடு தழைத்திடுக; ஒன்றிவரும் நல்லுணர்வால் உம்பால் உரைக்கின்றேன் நின்று பணி செய்வீர் நிமிர்ந்து. காதர்முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம் 5.12.1965 7. நீரின் பெருமை கலிவெண்பா பூதங்கள் ஐந்தாலும் பூத்ததுதான் இவ்வுலகம் வேதங்கள் மற்றுள்ள விஞ்ஞான நூல்களெலாம் ஓதுகின்ற உண்மையிதே; ஓதுமோர் ஐந்தனுள் தீதகன்ற நானும் திகழ்கின்றேன்; என்னைத்தான் நீரென்று பேர்குறிப்பர் நீணிலத்தார்; பாருக்கு வேரென்று சொல்லி வியந்துரைக்கத் தக்கவன்யான்; நீரின் றமையா துலகமெனக் கூறியபின் வேறென்ன சான்று விளம்புதற் கீங்குளது? பற்பலவாம் நற்பண்பு பாரில் எனைப்போலக் கற்றவரைக் கண்டதிலை; காணுங்கள் என்பண்பை; 10 காவிற் செழித்தஒரு கான்முல்லை கொம்பின்றித் தாவிப் படர்தற்குத் தள்ளாடும் வேளைதனில் காரோட்டும் கையுடையான் கண்டுமனம் நைந்துருகித் தேர்காட்டிச் சென்றானோர் தென்னாட்டான் வேள்பாரி; கூடிவருங் கார்முகில்கள் கொட்டும் மழைநனைக்க ஆடிவரும் மாமயிலுக் காடைகொடுத் தான்பேகன்; நாட்டுக் குரியவன்தான் காட்டுக்குச் சென்றாலும் பாட்டுக் குருகிப் பரிசிலெனத் தன்தலையை ஈந்தான் ஒருகுமணன் ஈகைக்கோர் பேரரசன்; வேந்தன் அதியன் விறலிக்கு நெல்லிதந்தான்; 20 இவ்வனைய வண்மையினர் ஈரமுள்ள நெஞ்சத்தார்; அவ்வனைய ஈரந்தான் ஆருக்குச் சொந்தமென்பீர்? எற்கென்று வாய்த்த இயல்பன்றோ? தண்ணளியாம் சொற்களித்த தண்மை எனக்குரிய சொத்தன்றோ? ஊருக்கும் பாருக்கும் ஒத்துழைப்பேன்; சீறிவரும் போருக்கு நானெழுந்தால் போடும் தடையில்லை! கற்பனைஎன் றெண்ணேல் கடவுள் எனத்தகுவேன்; தற்பெருமை யன்றிதற்குச் சான்று பகர்கின்றேன்; என்னருளை வேண்டாதார் இவ்வுலகில் யாருள்ளார்? சொன்ன இருதிணையின் சோர்வுதரும் வேட்கைதனை 30 நீக்கி மறைத்தருளும் நீர்மை உடையவன்நான்; காக்குமிக் காரணத்தால் காதல்மீக் கூரஎனை ஆறென் றழைத்திடுவர், ஏரிகுளம் என்றிசைப்பர், ஊறுங் கிணறென்பர், ஓங்கும் அருவிஎன்பர், கொட்டும் மழைஎன்றுங் கோலச் சுனைஎன்றும் சொட்டும் பனிஎன்றும் சூழும் புனலென்றும் பாயுமொரு வெள்ளமெனப் பற்பலவாம் தோற்றத்தில் ஆயிரம்பேர் சொல்லி அழைப்பார்கள்; நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன், இல்லா இடமில்லை; பொங்கும் மகிழ்ச்சியினால் பூசிப்பார் முன்னிற்பேன், 40 விண்ணில் இருப்பேன், விளையாடிக் கூத்திடுவேன், மண்ணில் இருப்பேன், மலைமேல் குடியிருப்பேன், கட்புலனா காமல் கரந்திருப்பேன், என்னடியைத் *தொட்டகழும் நல்ல **தொழும்பர்க் கிலக்காவேன்; பேருருவங் கொண்டு பிறங்கித் திகழ்ந்தாலும் சீறுருவம் பெற்றுச் சிலகால் வருவதுண்டு; காட்சி தருமுருவம் காணா அருவுருவம் மாட்சியுறப் பெற்றிருப்பேன், ஆவியாய் வானெழுந்து காற்றிற் கலந்திருப்பேன், கார்முகிலா மாறியருள் ஊற்றிப் பொழிந்துலகோர் உள்ளங் குளிர்விப்பேன்; 50 தூணில் இருப்பான் துரும்பிலும் நின்றிருப்பான் காணும் பொருளில் கடவுள் கலந்திருப்பான் என்றுரைப்பர்; ஆய்ந்துணரின் என்னிலையும் அப்படியே; நன்றினிக்குந் தெங்கின்காய் நான்புகுந்து வாழ்ந்திருப்பேன்; மாங்கனியில் செங்கரும்பில் மற்றுள்ள தீங்கனியில் தேங்குசுவைச் சாறாகச் சேர்ந்திருப்பேன்; ஆய்ச்சியர்தம் மோருக்குள் பாலுக்குள் மூழ்கிக் கலந்திருப்பேன்; பாருக்குள் யாரறியார்? பற்றுடையோர் தாம்விழைவர்; செப்புத் தகட்டினால் செய்தபெரும் பானைகளும் துப்புரவு செய்யாத தோண்டிகளும் பித்தளையின் 60 பாண்டமுடன் மட்குடமும் பாழுற்ற வாளிகளும் வேண்டிக் குழாயடியில் வெய்யிலென்றும் பாராமல் மாதவங்கள் செய்தங்கு மண்டிக் கிடப்பதெலாம் பூதலத்தென் தோற்றப் பொலிவைக் கருதியன்றோ? என்சமயம் நின்சமயம் இஃதே முதன்மையென வன்சொல் லுரைத்து வழக்கிடுவோர் போல்நின் றெனதெனது முன்பானை என்றுவழக் கிட்டுத் தனதுகுடம் தூக்கித் தடுமாறி ஓடிவரும் பெண்டிர் குழல்பற்றிப் பேசா தனபேசிச் சண்டை யிடுவதெலாம் தண்ணீராம் என்பொருட்டே; 70 ஆக்குந் தொழிலுடையேன் ஆகும் பொருளனைத்தும் காக்கும் வினையுடையேன் காத்த அவைமுழுதும் நீக்குந் திறலுடையேன் நீங்கா விளையாட்டிற் போக்கும் பொழுதில் புரிகின்றேன் முத்தொழிலும்; முந்நீர்மை செய்திங்கு முப்பொழுதும் வாழ்கின்ற என்னீர்மை சொன்னேன் இறைவனெனில் ஒவ்வாதோ? இத்துணைதான் என்பெருமை என்றெண்ணிப் போகாதீர்; அத்தனையும் சொல்லில் அடங்கா தடங்காது; தாயைப் பிழைத்தாலும் தண்ணீர்க் கொருகுறையும் தோயப் பிழைக்காதீர் தொன்மை மொழியிஃதாம்; 80 என்றுரைத்த போதும் இருநிலத்து மாந்தரெலாம் நன்றியின்றிச் செய்துவரும் நாலா யிரம்பிழையும் ஏற்றுப் பொறுக்குமெனை எள்ளி நிலந்தன்னைச் சாற்றும் பொறுமைக்குச் சான்றோர் உவமிப்பர்! செல்வரென அல்லரெனச் சிந்தித்துப் பார்ப்பதிலை அல்லரென நல்லரென ஆய்தல் எனக்கில்லை நெல்லுக்கும் புல்லுக்கும் நேர்நின் றுதவிடுவேன் சொல்லுக்குச் சொல்லவிலை; தோழர் அனைவருமே சாதி சமயங்கள் சண்டையிடுங் கட்சிஎன ஓதி வருவார்கள் ஒன்றையும் நான்பாரேன்; 90 எல்லாரும் நல்லரென்பேன் யாவருங் கேளிரென்பேன் பொல்லார் எனவுரையேன் பூணும் பகையறியேன்; ஆனாலும் ஓர்பகைவன் அந்தோ இருக்கின்றான்; மேனாள்தொட் டென்னிடத்து மேவாப் பகைகொண்டான்; தீண்டார் ஒருவருமே *தீயன் அவனென்றே; காண்பார் ஒருவரிலர் காந்தும் குணத்தனென; சின்னவன் என்றென்னைச் சீறிச் சிவந்தெழுவான் அன்னவன் முன்னேநான் ஆர்த்துப் படர்ந்தெழுவேன்; பாவம் அவனுடலம் பாழாய்க் கருகிவிடும்; நாவை அடக்காதார் நைந்தழிவர் ஈதுண்மை; 100 காதலால் ஒன்றுபடுங் காளையரும் கன்னியரும் பேதமிலா நெஞ்சாற் பிணைவதுபோல், உண்மையுளங் கொண்டிலங்கும் நட்பினர் கூறுபடலின்றிக் கண்டுணர்ந்து நெஞ்சம் கலந்தொன்றாய்க் கூடுதல்போல் எப்புலத்துச் சார்ந்தாலும் அப்புலத்து வண்ணம்பெற் றிப்புவியில் வாழ்வேன் எனக்கென வண்ணமிலேன்; பள்ளிச் சிறுவர்க்குப் பாரில் எனைப்போல உள்ளம் மகிழ்விப்பார் உள்ளனரோ? இல்லைஎன்பேன்; கூவிப் பலகூறிக் கொட்டமடித் தென்மடியில் தாவிக் குதித்துமிக தாண்டவங்கள் ஆடிடுவர்; 110 தோணிபல செய்து சுதந்திரக் கப்பலினால் வாணிகம் செய்வதுபோல் வட்டமிட்டுத் தாம்மகிழ்வர்; பேசும்பொற் சித்திரமாம் பிள்ளை விழிக்கடையில் வீசுமொளி முத்தாய் விளங்கித் ததும்பிநின்று காவியம் வல்லார்க்கும் ஒவியம் வல்லார்க்கும் பூவியக்குங் கற்பனைகள் பூத்துவரச் செய்திடுவேன்; ஊடிவரும் மெல்லியலார் ஒண்மலர்க் கன்னத்தில் ஓடிவரும் நீராவேன்; ஆடவர் கண்டுவிடின் ஐம்புலனும் ஒன்றாகி, அந்தோ நடுநடுங்கி, வெம்பியுளம் வாட்டமுற, வீரம் நிலைகலங்கப் 120 பொற்றொடியர் நெஞ்சங்கள் பூரித்தே எக்களிக்க வெற்றி பெறவே விளையாட் டயர்ந்திடுவேன்; சால்புணர்ந்தோர் கூறும் தகவுரைகள் கேளாது கோல்பிறழ்ந்தார் ஆட்சியில் கூழுக்கும் வக்கில்லார் கூன்விழுந்த மேனி, குழிவிழுந்த கன்னங்கள், ஏன் பிறந்தோம் என்றேங்கும் நெஞ்சம், இவையுடையார் கண்களிலே தேங்கிக் கசிந்து துளியாகி மண்ணிற் கொடுங்கோன்மை மாய்க்கும் படையாவேன்; சோர்வின்றிப் பாடுபட்டும் சோறின்றிப் பாடுபட ஏர்வென்றி கொண்டமகன் ஏங்கித் தவித்திருக்கும் 130 மண்குடிலுக் குள்ளே மழைவடிவில் நான்புகுவேன்; புண்படுமா றந்தமகன் பொன்றும் நிலைகண்டு மேற்கூரை ஏறிநான் மெல்ல அழுதிருப்பேன் காற்கூரை எல்லாம் கசிந்துகண் ணீர்வடிப்பேன்; வண்ணமலர்க் காநுழைவேன்; வாய்திறந்த கிண்ணமென எண்ணும் படிவிரிந் தேந்தியுள தாமரையைக் கண்டு மனங்குளிர்வேன்; கண்ணுக் கழகுதரும் வண்டு தமிழ்பாடும் வண்ண மலர்ச்செடிகள், பூத்துக் குலுங்குமெழிற் பூங்கொடிகள் அத்தனையும் பார்த்துச் சிரிப்பேன்; படர்ந்து வருமகிழ்ச்சி 140 இன்பக்கண் ணீராய் இலைநுனியில் பூவிதழில் மென்பனித் துளிபோல வீற்றுக் கொலுவிருப்பேன்; பாருலகம் தானியங்கப் பண்ணுதலால் என்பேரை ஆரமிழ்தம் என்றும் அழைத்திடுவர்; இவ்வுலகில் உண்பொருளை உண்டாக்கி உண்பொருளும் நானாவேன்; என்பெருமை இம்மட்டோ? ஏர்முனைநாள் என்னும்நாள் நானில்லை என்றால் நடந்திடுமோ? ஆழ்கடற்கும் கானிலுள புல்லுக்கும் கட்டாயம் என்கருணை வேண்டும் எனவுணர்ந்தே வேதப் பெரும்புலவன் ஆண்டவன்பேர் சொல்லி அடுத்தபடி என்சிறப்பை 150 ஓதி மகிழ்ந்தனன்; ஓயாமல் ஆடிவரும் பாதிமதி சூடும் பரமன் சடைமுடிமேல் என்னைஏன் வைத்தான்? எனதருமை கண்டன்றோ! முன்னைத் தமிழ்ச்சுவையில் மூழ்கித் திளைத்தவன்யான் ஏறும் சுவைப்பாட்டின் ஏடுகள் நான்சுவைத்தேன் கூறுமென் சொல்லில் குறையில்லை பொய்யில்லை நான்சுவைத்து விட்டெறிந்த நாலடியார் ஏட்டைத்தான் தேன்சுவைபோல் நீங்கள் தெரிந்தெடுத்துப் பாடுகின்றீர்; மூழ்கி வருவோர்க்கு முத்தளிப்பேன், சிற்சிலகால் ஆழ்கடலில் செம்பவழ ஆரம் அளித்துவப்பேன்; 160 ஈந்துவக்கும் என்னீர்மை எல்லாரும் நன்குணர்ந்தும் போந்தொருவர் கஞ்சனெனப் பொய்யில் எனையிகழ்ந்தார்; என்பால், உவர்ப்புண்டாம் யார்க்கும் உதவேனாம் வன்பால் இவருரைத்த வாய்மொழியை நம்பாதீர்; நாச்சுவையோ டுண்பது நான்நல்கும் உப்பன்றோ? பேச்செதற்கு - உப்பிட்ட பேரை இகழ்வதற்கோ? மூவா திருக்க முடியா துயிரிருக்கச் சாவா மருந்தளித்தேன் சார்ந்துவரும் வானவர்க்கு; பாலுக்கும் வெண்ணெய்க்கும் பானை திருடிவரும் மாலுக்கு மால்தந்த மாமகளைத் தந்ததன்பின் 170 பாலுங் குடியென்றேன் பாலே குடிகொண்டான்; நாலுந் தெரிந்தவன்தான் நாகரிகம் தேர்ந்தவன்தான் பெண்ணெடுத்த வீட்டில் பிரியா திருந்துவிட்டான் புண்படுத்தும் ஓர்சொல் புகன்றறியேன் இன்றுவரை; பிச்சைஎடுத் தெந்நாளும் பித்தன்போல் கூத்தாட்டம் இச்சையுடன் ஆடிவரும் இவ்வாழ்வும் வாழ்வாமோ? என்று வெறுத்தான்போல் ஆலம் எடுத்துண்டான் அன்று துடித்தே அமுதம் பொழிநிலவைக் கொள்ளென் றவற்களித்தேன்; கூறுமிவ் வண்மையால் வள்ளலென் றோத வகையறியார் என்னைஒரு 180 கஞ்சனென்றால் சீற்றம் கடுகிவரும்; ஆனாலும் நெஞ்சம் வெறுக்கவிலை நீண்ட பொறுமையினேன்; தண்ணளியால் பார்காக்குந் தக்க பொறுப்புடையேன் விண்வெளியில் செல்வேன் விரைந்து. தியாகராசர் கல்லூரி மதுரைஞு 22.2.1966 8. பறம்புமலை எண்சீர் விருத்தம் பாடிவருஞ் சுரும்பினங்கள் களிக்கும் வண்ணம் பைந்தேனைச் சுரந்தூட்டும் குவளைப் பூக்கள்; ஊடிவரும் மங்கையர்தம் விழிக ளென்ன ஒளிமின்னிப் பிறழ்ந்துபிறழ்ந் தலையும் மீன்கள்; ஓடிவருந் தென்றலிலே புலர வைத்த ஒள்ளியமெல் லாடையென அலைகள் செல்லும்; ஆடியவர் மனங்குளிர நலமே கூட்டும் அரியநறுந் தண்புனல்சேர் சுனைகள் உண்டு. 1 வான்பொய்த்த காலத்தும் சுனையின் ஈட்டம் வற்றாத புனல்சுரந்து வளமை காட்டும்; மான்மொய்த்துத் திரிகின்ற சாரல் எல்லாம் வளவியவேய் நெல்விளைந்து செழுமை காட்டும்; தேன்கைத்த தென்னநறுஞ் சுளைகள் நல்குந் தீம்பலவின் பழம்முதிர்ந்து கனிவு காட்டும்; மீன்மொய்க்குஞ் சுனைகளெலாம் *இறாலு டைந்து மேலிருந்து தேன்சொரிய இனிமை காட்டும். 2 அகழ்வார்க்குப் பசிகளையக் கிழங்கு நல்கி அங்கங்கே கொடிவள்ளி படர்ந்தி ருக்கும்; முகில்பார்க்கும் பொழுதெல்லாம் மயிலின் கூட்டம் முழுமகிழ்வால் தோகைவிரித் தாடி நிற்கும்; பகல்பார்க்க இயலாமல் அடர்ந்த சோலைப் பசுங்கிளிகள் தமிழ்பயிலும்; குருவிக் கூட்டம் மிகவார்க்கும்; மரந்தோறுந் தாவித் தாவி *மேவனதாம் செய்தொழுகும் மந்திக் கூட்டம். 3 வளம்பலவும் நிறைந்திருக்கும்; வருவோர்க் கெல்லாம் வறுமையினைத் தொலைத்திருக்கும்; பகைமை பூண்டு களம்புகுதும் வேந்தர்தமக் கரிதாய் நிற்கும், கவிஞர்க்கும் விறலியர்க்கும் எளிதாய்த் தோன்றும்; உளங்கவரும் பாவல்ல கபிலன் போன்ற ஒப்பரிய புலவர்தமைக் கொண்டி ருக்கும்; துளங்கரிய பறம்புமலை, பாரி வாழ்ந்த தொன்னாளில் புகழ்மணக்க ஓங்கி நிற்கும். 4 பல்வளமும் நிறைந்திருந்து நலமே செய்த பறம்புதனைக் கொடுங்குன்றம் என்ற தேனோ? சொல்வளமும் பொருள்வளமும் நிறைந்த பாடல் சொலும்புலவர் பலர்வளைத்து நின்ற தாலோ? மல்வளமும் வில்வளமும் கொண்ட வேந்தர் மனம்புழுங்கிப் படைவளைத்து நின்ற தாலோ? கொல்பகையால் அணுகவொணாக் கடுமை கண்டோ கொடுங்குன்றம் என்றதனை அழைத்தார் முன்னோர். 5 பாரிக்கே உரியதெனும் பறம்பு வெற்பைப் பாடுங்காற் கபிலனெனும் உணர்வு, நெஞ்சில் பூரித்தே நின்றிருக்கக் காணு கின்றேன்; புலமையினாற் பாடுவதைக் கேட்டு வந்து வாரித்தான் ஈவதற்குப் பாரி யில்லை; வள்ளலவன் இன்றிருப்பின் நாங்கள் இன்ப வாரிக்குள் திளைத்திருப்போம் வறுமை என்னும் வன்பகையைத் தொலைத்திருப்போம் வாழ்வுங் காண்போம். 6 வாடுகின்ற முல்லைக்குத் தேர்கொ டுத்த வள்ளன்மைக் குணமுடையோன், வாழ்வு வேண்டிப் பாடுகின்ற எம்மவரைக் காவா திங்கே பார்த்திருத்தல் செய்வானோ? வானில் ஒன்றாய்க் கூடுகின்ற முகிலுக்கும் வண்மை சொல்லிக் கொடுத்திருந்த பாரியின்றன் புகழை நெஞ்சாற் பாடுகின்ற பாடலுக்குப் பொருள்சி றக்கும் பாவலர்தம் வாழ்வுக்கும் வழிபி றக்கும். 7 பாவலர்க்கும் மற்றவர்க்கும் நெஞ்சு வந்து பாரிவள்ளல் தனக்குரிய முந்நூ றூரும் நாவலர்கள் புகழ்ந்துரைக்கக் கொடுத்து யர்ந்தான் நல்லவன்பேர் வாழியவே! தமிழ ணங்கின் சேவடிக்கே தொண்டுசெயும் அடிகள் என்னைச் சீராட்டிப் பொன்னாடை சூட்டி வாழ்த்திப் பாவுலகக் கவியரசென் றொருபேர் தந்தார் பரிவுளத்தை வணங்குகின்றேன் வாழ்க நன்றே. 8 பறம்புமலையில் 30.4.1966-இல் நடைபெற்ற பாரிவிழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவியரசு என்ற விருது வழங்கப் பாடியது.) 9. செஞ்சொற் சிலம்பு கலிவெண்பா செஞ்சொற் சிலம்பிற் செறியுஞ் சுவையதனை நெஞ்சிற் சிறிதே நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்; சேரநன் னாட்டிற் செழித்துயர்ந்த நற்பலவைக் கீறியதன் கோதகற்றிக் கிட்டுஞ் சுளையெடுத்துச், சேலத்து மாங்கனியுள் தேர்ந்த சிலஎடுத்து மேலிட்ட தோல்சீவி மெல்லியநற் றுண்டாக்கி, மாற்றுச் சுவையறியா மாமலையின் வாழைதரும் தாற்றுக் கனியைத் தனியே உரித்தெடுத்துக், கோடுயர்ந்த வெற்பின் குறிஞ்சித்தேன் பெய்ததனில் நீடுநனி ஊறியபின் நேருஞ் சுவைமுழுதும் 10 செஞ்சொற் சிலம்பில் செறிந்திருக்கும்; அச்சுவையை விஞ்சும் படியும் விளைந்திருக்கும்; அந்நூலை ஆழ்ந்து பயின்றால் அறிவெல்லாம் நன்கினிக்கும்; சூழ்ந்து நினையுங்கால் சொல்லரிய பேரின்பம் நெஞ்சில் விளைந்து நிலைத்திருக்கும்; சொல்லுங்கால் அஞ்சுபுல னெல்லாம் அடங்கி ஒருபுலனாம் வண்ணம் இனித்திருக்கும்; வாலறிவன் பாச்சுவையின் வண்ணம் முழுதுரைக்க வாயொன்று போதாதே! சிலம்பின் பெருமை எங்கிருந்தோ வந்தோர் இசைத்த கதையன்றாம் இங்கிருந்தோர் வாழ்வை இளங்கோ நமக்களித்தான்; 20 இந்நாட்டார் தென்னாட்டார் என்போர் வரலாறே முன்காட்டி நிற்க முகிழ்த்தபெருங் காப்பியமாம்; செந்தமிழ் நாட்டுக்கே செப்பும் உரிமைகொள வந்ததிருக் காப்பியமே வானவன்செய் பொற்சிலம்பு; ஒன்றன் மொழிபெயர்ப்பு நூலன் றுலகோர்தாம் நின்று மொழிபெயர்க்கும் நூலாய் நிலைத்ததுகாண்; கூறுந் தலைமக்கள் கோலேந்தும் வேந்தரலர் சேருமவ் வேந்தர் சிறுதுணையே செய்திருப்பர்; வாழுங் குடிமக்கள் வாய்த்ததலை மக்களெனச் சூழும் படியாச் சொலும்புரட்சிக் காப்பியமே; 30 முத்தமிழ்க்காப்பியம் போற்றும் இயற்றமிழிற் பூத்துப் பலவகையில் ஏற்றமுறும் பாவகைகள் ஏந்தும் இயல்பதனால், கேட்டார்ப் பிணித்துக் கிளர்ச்சிகொளச் செய்கின்ற பாட்டாம் இசைத்தமிழின் பாற்பட் டியங்கிவரும் ஊசல் வரிமுதலா ஓதும் வரிப்பாட்டும் பேசுங் குரவைகளும் பேணி இசைப்பதனால், கூத்துக் குரியதாக் கூறும் உரைப்பாட்டும் பாத்தொகையி னூடே பரிந்து நடமிடலால் முத்தமிழின் காப்பியமாய் முன்னோர் புகழ்ந்துரைக்கும் வித்தகஞ்சேர் நூலாய் விளங்குவது நம்சிலம்பே; 40 தொன்மை வனப்பு செய்யுள் தொடர்நிலைக்குச் செப்பும் வனப்பெட்டென் றையன்தொல் காப்பியன் ஆக்கிப் படைத்தளித்தான்; சொன்னவகை எட்டனுள்ளும் தொன்மை ஒருவனப்பாம்; அன்னவனப் பொன்றுக் கணிகலனாக் கொண்டிங்குச் சேரன் சிலம்பினையுஞ் சேர்த்து மொழிகவெனக் கூறிய நச்சருரை யாரும் உணர்வார்கள்; நீதிநூல் ஆராய்ந்து பாராமல் அல்லல் செயுமரசு சீரோய்ந்து போயொழியச் செய்யும் உயரறமே; சொற்காத்துத் தற்காத்துச் சோர்வின்றி நன்னெறியால் இற்காக்குங் கற்புடைய ஏந்திழையைப் பார்போற்றும்; 50 சூழ்மதியால் மற்றொன்று சூழினும் முந்துருத் தூழ்வினைதான் வந்தே உறுபயனை ஊட்டிவிடும்; இம்மூன்று நீதி எடுத்துணர்த்தத் தோன்றியநூல் அம்மா பெருந்துறவி ஆக்கும் ஒருநூலே; நாட்டியல் நூல் கூத்தும் இசையுங் குறிக்கும் இயல்பனைத்தும் பாத்துப் பகர்ந்தணிசேர் பாவில் அரங்கேற்றும்; அன்பின் விளைந்த அகப்பொருளின் நற்றுறைகள் இன்பில் அமைந்தங் கிடையிடையே கொஞ்சிவரும்; அஞ்சலிலாப் போர்முறைக் காகும் புறத்துறைகள் எஞ்சலிலா தெங்கும் எழிலுடனே ஆர்ப்பரிக்கும்; 60 நாட்டுவளஞ் சொல்லி நகரின் நலமுரைத்துக் காட்டும் பொழுதுநகர்க் கண்ணுறையும் பல்வேறு மக்களெலாம் வாழும் வகைமுழுதுஞ் சித்திரித்துத் தக்கவணம் பாடிக் குடியிருப்புத் தந்திருக்கும்; ஒன்பான் மணிபற்றி ஓதும் இயல்புக்குத் தன்பால் இடந்தந்து சாயா ஒளிநல்கும்; குன்றினிடைச் சேர்பொருள்கள் கூடிக் குவிந்திருக்கும் முன்றில்தனை அங்கே முழுமைபெறக் காட்டிநிற்கும்; அஞ்சு நிலவகைகள், அங்கே நிகழ்திருநாள், கொஞ்சும் இசை, கூத்துக் கோலமுடன் கூறிவரும்; 70 தன்னினத்தைப் புன்மொழியால் தாக்கி யிகழ்மொழிகள் சொன்னவர்மேற் போர்தொடுத்துச் சூடும் பெருவாகை; இவ்வண்ணந் தென்னாட் டியல்புமதன் பண்பாடும் செவ்வண்ணங் கூறுஞ் சிலம்பென்னும் நன்னூலே; பெயர்க்காரணம் செம்பொற் சிலம்பால் சிறந்து விளங்குவதால் நம்புஞ் சிலப்பதி காரப்பேர் நண்ணுமென்றே செந்தமிழ்க்கோர் ஆரமெனச் செப்புந் திருநூற்கு வந்தபெயர்க் காரணத்தை வல்லார் நவின்றிடுவர்; கோப்பெருந் தேவி, குளிர்முத்தை உள்ளிட்டு யாப்பமைத்துக் காலில் அணிந்த சிலம்பொன்றாம்; 80 கண்ணகி நல்லாள்தன் காலில் அணிந்திருந்த பண்ணுறுநல் மாணிக்கப் பைம்பொற் சிலம்பொன்றாம்; எந்தச் சிலம்பால் எழிற்பெயரைப் பெற்றதென வந்ததோர் ஐயம் வளர்ந்து வளர்ந்துவரச் சிந்தை கலங்கித் தெளிவின்றி நானிருந்தேன்; முந்தை மொழிப்புலவன் முன்னேற்றப் பாவேந்தன் எந்தைக்குத் தந்தைஎனும் என்பாட்டன் பாரதிதன் தந்தஒரு பாடல் தரும்விளக்கம் கண்டுணர்ந்தேன்; தேருஞ் சிலப்பதி காரமென் றோர்மணி* ஆரம் படைத்ததமிழ் நாடென் றடிபடைத்தான் 90 அந்த மணிமொழியால் அன்னை மணிச்சிலம்பே தந்தபெயர் ஈதென்று சிந்தை தெளிந்திருந்தேன்; பெண்மை பேணும் நூல் மங்கல வாழ்த்து மகிழ்ந்துரைத்த பேராசான் திங்களை முன்போற்றிச் செய்யகதிர் ஞாயிற்றைப் பின்போற்றிச் செல்கின்ற பெற்றிமையை நாம்சுவைப்போம்; பெண்போற்றும் காரணத்தால் பேசுகிறார் இவ்வண்ணம்; கண்ணகியுங் கோவலனுங் காதல் மணங்கொண்டு பண்ணமைந்த கட்டில் பயில்கின்ற காலைஅக் காட்சி கதிர்ஒருங்கு காண இருந்ததுபோல் மாட்சி பெறவிளங்க வாய்ந்த தெனமொழிந்தார்; 100 கண்டஇரு காதலர்க்கும் காட்டாம் கதிரிரண்டும் கொண்ட குறிப்புணர்ந்தோம்; கோச்சேரன் காப்பியத்துள் தன்னே ரிலாத தலைமைபெறும் பேருரிமை மின்னேர் இடையாட்கே மேவுவதும் நாமறிவோம்; ஆதலினால் காவியத்தில் ஆட்சிசெயும் பெண்பாலாம் மாதவட்கு முன்னே மதிப்பளிக்க எண்ணியவர் திங்களைமுன் போற்றுகிறார் திங்களுமோர் பெண்பாலென் றெங்கும் இலக்கியத்தே ஏத்துவதும் உண்டன்றோ? மங்கல வாழ்த்து பூம்புகார் தென்மதுரை பொற்புமிகும் வஞ்சியென ஆம்முறையால் காண்டம் அமைத்து நிரல்செய்து 110 சோழனுக்கும் பாண்டியற்கும் சொல்லுமெழிற் சேரனுக்கும் வாழஇடந் தந்து வகைசெய்தார் ஒவ்வொன்றில்; மாவளத்தான் வெண்குடைக்கு வட்டவுருத் திங்களையும் பூவளர்க்கும் ஆணைக்குப் பொன்செய் பகலனையும் காவிரியின் தண்ணளிக்குக் காரினையும் ஒப்புரைத்து நாவுயரப் போற்றி நகரின் நலம்போற்றி மங்கல வாழ்த்தாக வாழ்த்தி முதன்முதல் அங்கம் பெறும்புகார்க் காண்டத்துள் ஆக்கிவைத்தார்; மாமுடிகள் தாங்கிவரும் மாமன்னர் மூவர்க்கும் ஆமுரிய நீள்கதையை ஆக்கும் பெருமகனார் 120 கோடுயர்ந்த ஞாலத்தின் கோவடிகள் அன்னவர்தாம் கோடுதல் இல்லாமல் *கோல்முனைபோல் நேர்நின்று மூவர்க்கும் ஓர்நிகரில் யாவர்க்கும் ஏல்வகையில் காவியத்துட் பாடல் கடனாகும்; ஈதுணர்ந்தும் பாண்டியற்குஞ் சேரனுக்கும் பாடுமொரு மங்கலமாம் ஈண்டுபுகழ் வாழ்த்தொன் றியம்பாத காரணமென்? குற்றமற்ற கோவலனைக் கோலேந்தும் பாண்டியன்தான் பற்றித் திருடனென வெட்டிக் கொலைசெய்து கண்ணகிக்கு மாறாத கண்ணீர் விளைவித்த பெண்பழிக்கு நாணித்தான் பேசா திருந்தனரோ? 130 கற்புடைய பெண்மகளைக் காணுங் கடவுளெனப் பொற்புடனே ஓர்சிலையாப் பூசித்துக் கற்கோவில் ஆக்கிப் படைத்த அருந்திறலோன் சேரனுக்குத் தேக்குபுகழ் மங்கலமே செப்பாத தென்கருதி? தன்னாட்டான் ஓர் வயிற்றுள் தன்னோடு டுடன்பிறந்தான் முன்காட்டும் இந்த முறைமையினால் கூசினரோ? பாடி யிருந்தொருகால் தேடி யலைவோர்க்குக் கூடி யடையாமல் ஓடி ஒளிந்ததுவோ? ஆரே அறிவார் அதனுண்மைக் காரணத்தை! நேரே சிலம்பில் நினைவைப் பதியவைத் 140 தின்னும் நுணுகி அணுகுங்கால் எத்துணையோ பொன்னும் மணியும் புதிதுபுதி தாப்பெறலாம் கூடும் நலமனைத்தும் கூர்ந்துணர்வீர் நம்மிளங்கோ பாடுஞ் சிலம்பைப் படித்து. கண்ணகி விழா திருச்செங்கோடு 25.5.1966 10. விண் குடும்பம் கலிவெண்பா உப்புமுதல் எல்லா உணவுப் பொருள்விலைகள் செப்பரிய ஏற்றத்தாற் செய்வ தறியாமல் மண்ணிற் குடும்பம் மதிமயங்கி நிற்குங்கால் விண்ணிற் குடும்பம் விரும்பிப் படைப்பதற்கு முன்வந்தார் இவ்வரங்கில் முத்தமிழில் வல்லவர்தாம்; என்சொல்லி வாழ்த்துவேன் இந்தத் துணிவுளத்தை! பேராசைக் காரர்களின் பேயாட்டப் போர்முகில்கள் தீராமற் சூழ்ந்து திகைக்கும் படியாக மின்வெட்டும் போழ்தத்து மேவாச் செயல்செய்து, கண்கட்டு வித்தையெனக் கள்ளத் தனம்புரிந்து. 10 பண்டங்கள் யாவும் பதுக்கி மறைக்கின்ற முண்டங்கள், தாங்க முடியா விலைச்சுமையை நந்தலையில் ஏற்றுகின்றார்; நாடோறும் ஏற்றுவதால் வெந்துழன்று நொந்துமனம் வில்லாய் வளைகின்றோம்; வில்லாய் வளைந்தவர் வீறுற் றெழுவாரேல் சொல்லால் அதன்விளைவைச் சொல்ல முடிந்திடுமோ? தாழ்ந்து நிமிர்கின்ற வில்லின் நுனிபட்டுப் போழ்ந்துமுகம் செங்குருதி பொங்கி வழியாதோ? பற்றாக் குறையினைப் பாவியிவர் காசுபணப் பற்றால் விளைக்கின்றார்; பாரகத்தில் பஞ்சமெனும் 20 மூடுபனி சூழ முனைகின்றார் இக்கொடியர்; கேடுதருங் கொள்ளையரைக் கேட்பதற்கோர் ஆளில்லை; ஏனில்லை? செங்கதிரோன் இங்கே எழுவதற்கு நானுண் டெனச்சொல்லி நல்ல விடிவெள்ளி தோன்றிவரக் காண்கின்றோம்; துய்ய கதிரோனும் வான்றிகழ வந்துவிடின் வாட்டி வதைக்குமிந்த மூடுபனி சேர்ந்துருகி ஓடுபனி யாகாதோ? நாடுநலம் பெற்றிலங்கும் நாளிங்கு வாராதோ? வந்துவிடும்; வந்துவிடின் வாழ்விற் படுகின்ற வெந்துயரம் அத்தனையும் வீழ்ந்துநிலா வாகுமன்றே; 30 மண்ணிற் குடும்பங்கள் மாண்புற்று முன்னேற எண்ணுகதிர் வாழ்த்தி இனிக்காண்போம் விண்குடும்பம்; நாட்டிற் குடும்பமெனில் நற்றலைவன் வேண்டுமன்றோ? காட்டுமிவ் விண்குடும்பங் காக்குந் தலைவன்யார்? வாழுங் கதிரவன்றான் வானிற் றலைமகனாம்; ஏழு கிழமையென எண்ணும் பொழுதில்நாம் முன்னையிடந் தந்து மொழிவது ஞாயிறெனும் முன்னவனை யன்றோ? முதன்மை அவற்களித்த காரணத்தால், விண்குடும்பங் காக்குந் தலைமையினால் தாரணிந்த நல்ல தலைமகனாக் கொண்டிடுவோம்; 40 காக்குந் தலைவன் கதிரோன் எனப்படுமேல் ஆக்குந் தலைமகள்யார்? அந்தத் திருமடந்தை தண்மைக்கும் மென்மைக்கும் தங்கும் இடமாவாள் பெண்மைக்கோர் காட்டாகப் பேசும் இயல்புடையாள், நாணத்தாற் கார்முகிலாம் நற்றுகிலைப் போர்த்திவரும் வானத்தாள், தேனொத்தாள், வட்ட ஒளிமுகத்தாள்; இத்தனையுங் கொண்டாளை ஏத்தி நிலவணங்கென் றித்தரையோர் போற்றி இசைத்து மகிழ்வார்கள்; வானமெனும் பந்தரிட்டு, வாருமழைத் தாரைகளை ஈனுமொளித் தோரணமா ஏற்றியங்குத் தொங்கவிட்டு, 50 மின்னலெனும் நல்ல விளக்கேற்றி, வானத்தே துன்னுமுகிற் கூட்டந் துகிலாக மேல்விரித்து, ஆர்த்துவரும் மத்தளம்போல் அங்கே இடிமுழங்கச், சேர்க்கும் எழுவண்ணஞ் செய்யுமொரு வானவில்லை வண்ணமலர் கொண்ட மணமிக்க மாலையெனக் கண்ணழகன் சேயோன் கதிர்க்கையால் கொண்டுவந்து, மீன்களெனுஞ் சுற்றம் மிடைந்தங்குச் சூழ்ந்திருக்கத், தேன்கலந்த சொல்லாளைத் திங்களெனும் நல்லாளை வானவரும் *மீனவரும் வாய்மலர்ந்து வாழ்த்தெடுப்ப, வானவன் சூட்டிஒரு வாழ்க்கைத் துணைபெற்றான்; 60 தீதறியா அந்தத் திருமதிதான் ஓரிரவில் காதலினாற் கொண்ட களியாட்டில் நாணிநிற்கச் செங்கதிரோன் மெய்தொட்டான்; சற்றே சினந்தவளாய் அங்கே கருமுகிலாம் ஆடை எடுத்துமுகம் மூடி மறைத்தருகில் ஊடிப் புலந்துநின்றாள்; ஓடித் துகில்பற்றி ஒண்முகத்தில் வாய்புதைத்தான்; வாய்மலர்ந்து தான்நகைத்தாள்; வானப் பெருவெளியில் **பாய்மலர்ந்து மின்னலெனப் பற்றிப் படர்ந்ததுகாண்; நெற்றியிற் பொட்டு நெடுங்கறை ஆகிவிடப் பற்றிய கையைப் பறித்துக்கொண் டோடிவிட்டாள்; 70 பின்பற்றி ஓடியவன் பேதைதுகில் தொட்டிழுக்க முன்பற்று மேகலையின் முத்துகள் அத்தனையும் கொட்டிச் சிதறிக் குளிர்வானின் மேற்கிடந்து முற்றும் உடுக்கணமாய் அங்கே முகிழ்த்தனவோ? கட்டுப்பா டில்லாத காலத்தே இவ்விருவர் கட்டுப்பட் டில்லறங் கண்டமையால் தம்வாழ்வில் எண்ணில்லாப் பிள்ளைகளை ஈன்றனரோ? அம்மக்கள் விண்ணிற் றிரிந்து விளையாடுங் காட்சியைத்தான் மண்ணகத்து மாந்தர் உடுவென்று மாற்றினரோ? கண்பட்டு விட்டதென்பார் காதுக்குட் சொல்கின்றேன்; 80 எத்துணைதான் இன்பம் இழைந்திழைந்து வாழ்ந்தாலும் ஒத்தமனங் கொண்டிங் குயர்வுடனே வாழ்ந்தாலும் ஒன்றிரண்டு பூசல் உறுவ தியல்பாகும்; கன்றிமனங் காய்ந்து கழறுவதும் அவ்வியல்பே; வாழுங் குடும்ப வழக்குக்கு வானத்துச் சூழுங் குடும்பமும் சொல்லுங்கால் தப்பாது; வானக் குடும்பத்தில் வாய்த்ததொரு பூசலினால் தானந்தக் கூக்குரலோ? தையல் பெருங்குரலோ? செங்கதிரோன் றன்குரலோ? செவ்விதிற் கேட்கவிலை; பொங்கும் இடியென்று பூசி மெழுகுகின்றார்; 90 வீட்டில் நடப்பதெலாம் வேற்றார் தெரியாமல் பூட்டி மறைப்பதுதான் போற்றுங் குடும்பமென்பர்; வாழ்ந்து வருநாளில் வான்மகள்தன் மெய்யொளியிற் றாழ்ந்து மெலிந்து தளர்ந்து நடைபயின்றாள்; கண்பட்டுப் போகக் கணக்கில் மகப்பெற்றாள் புண்பட்டாள் துன்புற்றாள் பொன்மேனி வாடிவர நோயிற் பிணிப்புண்டாள், நுண்ணிடைபோல் தேய்ந்தழகுச் சாயல் இழந்திழந்து சாய்ந்தே மறைந்துவிட்டாள்; காதற் கணவன் கதிரோன் மனமுடைந்து, சாதல் உறுமகளே சாய்வதற்கோ தேய்ந்தனைநீ? 100 நீளுலகில் என்றும் நிலைத்துநிலாப் பெண்மணியே பாழுலகோர் நெஞ்சிற் பரிவுடனே நின்னை நிலவுநில வென்றுரைப்பர்; நீயென்ன செய்வாய்! நிலையாமை காட்டினைநீ; நெஞ்சத்துப் புக்கவளே, நாளை பிறப்பாயோ? நான்மகிழ வாராயோ? njhis¥ òz®ªâ‹g¢ brhšyKJ jhuhnah? என்றெல்லா மேங்கி இரங்கிப் புலம்பிக்கண் கன்றும் படியாகக் கண்ணீர் சொரிந்திருந்தான்; விண்ணிற் கதிரோன் விடுத்தகண் ணீரினைத்தான் மண்ணில் இருப்போர் மழையென்று கொண்டனரோ? 110 இன்பமுடன் துன்பம் இணைந்ததுதான் வாழ்க்கைஎன மன்பதையோர் எண்ணி மனங்கொண்டு வாழ்வாரேல் நல்ல குடும்பம் நடத்தி மகிழ்ந்திடலாம் அல்லல் சிறிதுமிலை யாம். தமிழ் இலக்கியப் பெருமன்றம் இராசிபுரம் 25.9.1966 11. ஊர்வலக் காட்சி கலிவெண்பா பேருலகில் நான்குமொழி பெற்றாலும் இன்றுவரை சீரிளமை குன்றாத தெய்வத் திருமகளே, ஆடிப் பெருக்காலும் ஆர்த்த நெருப்பாலும் வாடிச் சிதையாமல் வாழ்ந்து வருபவளே, பொங்கிச் சினந்தெழுந்து போராட வந்தகடல் சங்கத்து வைத்திருந்த சான்றோர்தம் ஏடுபல கொள்ளைகொண்டு போனாலுங் கோலஞ் சிதையாமல் உள்ள தமிழரசி ஒப்பில்லா வாழ்வரசி, மூவேந்தர் ஆட்சி முடிந்தபினர் யார்யாரோ கோவேந்தர் என்றிங்குக் கோலேந்தி வந்தவர்கள் 10 அவ்வவர்தம் தாய்மொழிக்கே ஆக்கங்கள் தந்தாலும் செவ்வியநல் லாற்றல் சிதையாமல் நிற்பவளே, ஆழக் கடலலைகள் ஆர்த்துப் பெருங்குழுவாய்ச் சூழத் தொடர்ந்து தொடுகரையை நோக்கிவரும் நீண்ட கடல்போல் நெடுங்களிப்பால் மாந்தரினம் ஈண்டிவரக் கண்டே இறும்பூது கொள்கின்றேன்; ஈதென்ன தாயே எனவினவ, அவ்வன்னை காதருகில் வந்ததனைக் காட்டித் திருமகனே, ஞாலமெலாந் தேமதுர நல்லோசை கேட்டிடவே கோலமிகு மாநாடு கூட்டிக் களிக்கின்றார்; 20 வந்துவெளி நாட்டார் வணக்கஞ் செலுத்துகிற அந்தத் திருநாளில் ஆர்த்துவருங் கூட்டமடா; என்றன் புகழ்காக்க ஈடில்லாப் பேருழைப்பை அன்று கொடுத்துயர்ந்த அன்புமிகு சான்றோர்க்கு - அலையெழுப்பும் ஆழி அடைகரையில் நல்ல சிலையெழுப்பிப் போற்றுஞ் சிறப்பனைத்துங் காணுதி நீ; யாதும்நம் ஊராக யாவரும்நம் கேளிரென ஓதும் மொழியால் உலகந் திரண்டதைப்பார்; மண்ணில் தரைதெரிய மாட்டா தணிவகுத்துக் கண்ணைக் கவர்ந்து கருத்தை மகிழ்விக்க 30 ஊர்ந்துவரும் ஊர்வலத்தில் உள்ளக் கிளர்ச்சியுடன் சேர்ந்துவரும் மக்கள் செறிந்திருக்குங் காட்சியடா; நீண்டதுதிக் கையை நிமிர்த்துப் பெருங்களிறு - ஆண்டு நடந்துவர அக்களிற்றைப் பின்தொடர்ந்து காவடிகள் நல்ல கரகங்கள் ஆடிவரப் பூவடியர் நாட்டுப் புறமாதர் போலழகுப் பாவையர்கள் ஆடிவரும் பாங்கெல்லாம் இங்கேகாண்; யாவையுமுன் கண்ணால் அழகுறவே காணங்கே; நாட்டின் பழங்கருவி நாத சுரக்கருவிப் பாட்டின் ஒலிகேட்டுப் பாடுகநீ பாவலனே; 40 வண்ணக் கொடிபிடித்து வஞ்சியருங் காளையரும் நண்ணிப் படர்கின்ற நல்லழகைப் பாரங்கே; கட்டழகுப் பெண்மகளிர் காலிற் சதங்கைகட்டி இட்டடிகள் மாறா தெடுத்தாடும் நாட்டியங்காண்; எப்படையும் இப்படைக் கீடில்லை என்றுரைக்க முப்படையாய் மொய்த்திங்கு முன்னேறும் வீரரைப்பார்; செந்தமிழைக் காக்குஞ் சிறப்புடைய வேற்குமணன் வந்தஒரு பாவலர்க்கு வாய்த்த தலைகொடுக்க வாளெடுத்த வள்ளல் வடிவத்தைக் காட்டுமிந்த நாளெடுத்த ஊர்வலத்தை நாட்டமொடு கண்டிடுநீ; 50 அவ்வை நெடிதிருப்பின் அன்னைமொழி வாழுமெனச் செவ்வை மனமுடையான் சீரதியன் நெல்லிக் கனிகொடுத்த காட்சியிலே காட்டும் பணிவை இனிதெடுத்து வந்த எழிலெல்லாம் பார்மகனே; வார்முரசு கட்டிலிலே வந்து துயில்கின்ற சீர்வரிசைப் பாவலர்க்குச் செங்கோல் அரசனங்கு நின்றிருந்து வெண்கவரி நீள்கையால் வீசுகிற அன்றிருந்த காட்சி அழகெல்லாங் காண்மகனே; பாவேந்தர் தம்மைப் பணிந்து மதித்துவந்த பூவேந்தர் ஆண்டிருந்த பொற்காலம் அக்காலம்; 60 மீண்டுமொரு பொற்காலம் மீளத் திருவுளத்துப் பூண்டெழுந்த என்மகனே போராட்டப் பாட்டெழுது; ஆளும் பொறுப்பேற்றோர் ஆட்சி பிழைத்துவிடின் வாழுமொரு பெண்ணும் வழக்குரைத்து நீதிபெறும் நாடடா ஈதென்று நாளெல்லாஞ் சொல்பவளைப் பாடடா கண்ணகியைப் பாரடா, முன்னைப் *புறங்காட்டும் வீரர் புறங்காட்டாப் போரின் திறங்காட்டி நிற்கின்ற தீரத்தைக் காட்டுகின்ற கோட்டைப்போர்க் காட்சியினைக் கூர்ந்து மனத்திறுத்தி நாட்டுக்கோர் பாட்டெழுதி நல்கி மகிழ்ந்திடுநீ; 70 போரெடுத்துச் சென்ற புகல்களிற்றைப் பூட்டிநெற் போரடித்த காட்சிப் பொலிவினையும் இங்கேகாண்; பண்டைப் புகார்நகரில் பண்டங்கள் கொண்டுசெல அண்டைப் பிறநாட்டார் அண்டிவருங் காட்சியைப்பார்; நீலத் திரைக்கடலில் நீந்திவருங் கப்பலுடன் கோலத் திருமுகத்தன் கொள்கைப் பெருங்கோமான் செந்தமிழன் வீர சிதம்பரன் நிற்கின்றான் இந்தநிலை கண்டுணர்தல் இன்றைக்குத் தேவையடா; செஞ்சிக்கோன் தந்த செழுங்கோட்டை மாட்சியிது; வஞ்சிக்கோன் தம்பிமுதல் வார்த்தெடுத்த காப்பியங்கள் 80 ஐந்து மகவாக ஆங்கே அருகிருக்க மைந்துடன்நான் நிற்கின்ற மாண்புயர்ந்த காட்சியிது; ஆறுபடை வீடெழுப்பி ஆங்கருகில் நக்கீரன் வீறுபெற நிற்கும் விறல்மிகுந்த காட்சியைப்பார்; பாவை நலம்பாடிப் பள்ளிகொளும் ஆரணங்கைப் பாவை துயிலெழுப்பும் பாங்கினையும் ஈங்கேகாண்; மாமல்லைக் காட்சி, மனுநீதிச் சோழனொடு பூமுல்லை தேர்பெற்ற பொற்பினையும் காணுகநீ; பாரெல்லாம் என்பெயரைப் பாடிப் புகழ்ந்தேத்தச் சீரெல்லாஞ் செய்துவரும் செம்மை யுளத்தானாம் 90 உன்னண்ணன் நல்லெண்ணம் ஓங்கிவரும் நல்லண்ணன் என்கண்ணன் ஆங்கே எழிலுடனே நிற்கின்ற தோற்றத்தைக் காட்டுகிற தூய சிலையுருவின் ஏற்றத்தைக் கண்டுமகிழ் என்றாள் தமிழன்னை; ஊர்வலத்தைக் கண்டேன் உணர்ச்சி வயப்பட்டேன் பேருளத்தில் இன்பமிகப் பெற்று. உலகத்தமிழ் மாநாடு சென்னை 6.1.1968 12. நெல்லின் கதை கலிவெண்பா ஆண்டவற்கோர் ஆயிரம்பேர் ஆமென்பர்; நெல்லெனும்பேர் பூண்டிருக்கும் என்றனுக்கும் பூட்டுந் திருநாமம் எண்ணி லடங்காதிங் கேடெடுத்தாற் போதாது; மண்ணிற் பெருகிவரும் மாண்பினைநான் கூறுகிறேன்; சீரகத்துச் சம்பா சிறுமணிநல் சித்தடியான் ஊரகத்தார் போற்றுகிற உய்யக்கொண் டானென்பர்; அம்பா சமுத்திரம் ஆலைமிகு கோவைதருஞ் சம்பா எனஎன்னைச் சாற்றிப் புகழ்வதுண்டு; கார்த்திகைச் சம்பா கருடன்சம் பாவென்று நேர்த்தியுடன் என்னை நினைப்பவரும் உண்டு; 10 குதிரைவால் நல்யானைக் கொம்பனுடன் தங்கம் புதுவகைய மல்லிகை போகிணி கிச்சடி கைவிரைச் சம்பாவாய்க் காட்சி யளிப்பதுண்டு; செய்விளையும் என்றனுக்குச் செப்பும்பேர் இன்னுமுண்டு; முத்துவெள்ளை கட்டைவெள்ளை மொய்க்குங் கொடிவெள்ளை சித்திரைக்கார் வெள்ளைக்கார் செப்பும் மணல்வாரி பூங்கார் கருங்குறுவை பூம்பாளைப் பேரெல்லாம் ஈங்கே எடுத்துரைத்தால் ஏதேது நேரமையா? கூறும் மிளகியிலே கூடும் பெயர்களெல்லாம் யாரும் அறிவாரே! அத்தனையும் போதாவென் 20 றாங்கிலப்பேர் சொல்லி அழைப்பதையுங் கேட்டிருப்பீர் ஈங்கெனக்கு நேர்சொல்ல யாரே இருக்கின்றார்? பார்மிகுத்த மாந்தர் பசிநீக்கும் எண்ணத்தால் சீர்திருத்தம் என்னைப்போற் செய்தவரார் இங்கே? கடல்கடந்து நானோர் கலப்புமணஞ் செய்தே இடர்களைய வந்துள்ளேன்; எல்லாரும் போற்றிஎனை ஆடுதுறை என்றே அழைப்பதையுங் கேட்டிருப்பீர்; நீடுபுகழ் கொண்டஇந்த நெல்லுக்கு நேருண்டோ? நாடோறும் வானொலியார் நத்திப் புகழ்ந்தென்னைப் பாடாத நாளுண்டா? பத்தியுடன் என்பெயரைச் 30 சொல்லாத நாளுண்டா? வேளாண்மைத் தோத்திரங்கள் இல்லாத நாளுண்டா? என்னருமைத் தொண்டரவர்; செல்வ வளமிக்க சீமான் எனைப்போலப் பல்வகைய ஊர்தி படைத்தவரார் இவ்வுலகில்? பேருந்து வண்டிகளில் பெட்புடன்நான் செல்வதுண்டு, நீருண்ட மேகமென நீள்புகையைக் கக்கும் தொடர்வண்டி ஏறித் தொடர்வதுண்டு; நீரில் படர்வதெனில் நல்ல படகுண்டு கப்பலுண்டு, காட்டுவழிச் செல்வதெனில் மாட்டுவண்டி ஏறிடுவேன், மேட்டுக் குடியார்போல் வேற்றுமைகள் பாராட்டேன்; 40 ஏந்திவர ஊர்திகள் நான் எத்தனையோ பெற்றிருந்தும் மாந்தர் தலைகூட வாகனமாக் கொள்வதுண்டு; நொந்திருக்கும் நோயொன்று வந்துவிடின் வான்பறந்து வந்தெனக்குச் செய்யும் மருத்துவங்கள் எத்தனையோ! நாடாள வந்ததொரு நல்வேந்தன் நானென்றால் கூடா தெனமறுத்துக் கூறிடுவார் யாருமில்லை; தஞ்சைத் தரணியிற்றான் என்றன் தனியாட்சி நஞ்சைப் புலமெல்லாம் நல்லாட்சி செய்திடுவேன்; காராளர் வந்தாடிப் பட்டமெனைச் சூட்டிடுவார் ஊராளும் நல்லமைச்சர் உண்டு துணையாக; 50 நானாளும் நன்னிலத்தை நச்சாக்க நல்லவரைப் போல்நாளும் வந்துபுகின் பொங்கிக் களையெடுப்பேன்; எல்லைஎன்று முள்வேலி இட்டே எனதுநிலம் தொல்லைஒன்றுங் காணாமல் தொன்றுமுதல் காத்திருப்பேன்; பொன்னகரைச் சுற்றிப் புறமதில்கள் வேண்டுமன்றோ? முன்வளைத்த நால்வரப்பும் மொய்ம்புடைய கோட்டைகளாம்; நெல்லுக்கே என்றிறைத்த நீரைக் கருணையினால் புல்லுக்கும் ஆங்கே பொசியவைப்பேன்; அக்கருணை போற்றாமல் என்னைப் புறக்கணித்து வந்தவிழல் சேற்றோடு சேறாகச் சீரழியச் செய்துவிடப் 60 போராடும் காராளர் பொன்றாக் களமறவர் ஏராளம் ஏராளம் என்பாற் பணிபுரிவார்; மண்ணின் வலிமைமிகும் மார்பைப் பிளந்தெறியும் எண்ணில் உழுகலங்கள் எல்லாம் படைக்கலங்கள்; நாட்டை வலுப்பபடுத்த நான்விரும்பி எத்தனையோ கோட்டை புகுந்தங்குக் கொண்டதுண்டு வெற்றிபல; ஆர்க்கும் ஒலியோ டணிவகுத்து நிற்கின்ற போர்க்களங்கள் போய்ப்புகுந்து போர்விளைத்து வந்தவன்நான் இத்தனையும் பெற்றுள்ள என்னை அரசனெனச் சொற்றமொழி யாரே துணிந்து மறுத்துரைப்பார்? 70 நெல்லே ருழவரெனும் நேரியரிங் கில்லைஎனில் வில்லே ருழவரெங்கே? சொல்லே ருழவரெங்கே? இவ்வண்ணம் என்பெருமை எவ்வளவோ ஈங்குளவாம்; அவ்வளவும் சொல்லில் அடங்கிடுமோ? என்றாலும் ஏனோ பதரென்றே என்குலத்தைத் தூற்றுகின்றார்? நானோஇம் மாந்தர் நகைப்பிற் கிடமானேன்? மக்களிலே மிக்கபதர் வாழ்வதனைக் கண்டிருந்தும் தொக்கஅவர் கூட்டத்தைத் தூற்றா திருக்கின்றார்; வைக்கோலாய் மற்றும் உமிதவிடாய் வந்தாலும் எக்காலும் அவ்வடிவில் என்னால் உதவியுண்டு; 80 மக்கள் பதரானால் மாநிலத்தில் யாருக்கும் தக்க உதவி தருவாரோ? தந்ததிலை; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்றென்னைப் பண்டொருவர் நன்முறையிற் பாராட்டிச் சொன்னாலும் நெஞ்சந் துணிந்தொருவர் நெல்லுமுயிர் அன்றென்று வெஞ்சொல் மொழிந்தென்றன் விஞ்சு புகழ்குறைத்தார்; செல்வமென என்னைத்தான் செப்பிடுவார் முன்பெல்லாம் வல்வினையர் செல்வமென மற்றவற்றை இன்றுரைப்பர்; காராளர் ஓட்டுங் கலப்பை வகுத்தவழி நீராலே வாழ்ந்து நிலத்தில் இடுந்தழையால் 90 நாளும் உரம்பெற்று நன்கு செழித்தோங்கி நீளும் பயிராய் நிமிர்ந்தெழிலாய் நின்றிருப்பேன் பால்பற்றிச் சூல்முற்றிப் பையத் தலைகுனிவேன்; நூல்கற்ற பாவாணர் நுண்ணியதங் கற்பனையால் பற்பலவாக் கட்டுரைத்துப் பாடி மகிழ்ந்தார்கள்; எற்குற்ற ஓர்கவலை யாரே அறிவார்கள்? முற்ற முதிர்ந்தோமே முன்னே விதைத்தவர்கள் உற்றரி வாளுடனே ஒடி வருவாரே வாளோடு வந்தவர்கள் தாளோ டரிவாரே தாளாதுல கட்டித் தயங்கா தடிப்பாரே 100 மாடேற்றி என்தலையை வந்து மிதித்திடுவார் சூடேற்றி வேகவைத்துத் தொல்லை தருவார் இடிப்பார் அரைப்பார்என் தோலை உரிப்பார் கடிப்பார் உலையில் கருணையின்றி வேகவைப்பார் மாவாக மாற்றி மனம்போன போக்கினிலே நாவால் சுவைத்திடவே நாலுவகைப் பண்டங்கள் செய்வாரே என்றுளத்தில் சிந்தித்த காரணத்தால் வெய்தே உயிர்த்துமனம் வெம்பித் தலைசாய்த்தேன்; என்னை உருவாக்க எத்தனையோ பாடுபட்ட பொன்னன் குடிலுக்குட் போகவிட எண்ணாமல் 110 மன்னன் எனவாழ்வோன் மாமனைக்குக் கொண்டுசென் றென்னைக் களஞ்சியத்தில் இட்டு நிறைப்பாரே போட்டு மறைப்பாரே பொல்லாங்குக் காரரென நாட்டு நடப்புணர்ந்து நான்தலையைத் தொங்கவிட்டேன்; மெய்யாகக் கற்றவர்க்கு மேலாம் உவமைசொலிப் பொய்வாய்ப் புலவர்மனம் போனபடி பாடிவிட்டார்; எத்தனைதான் என்னை இடர்ப்படுத்தி நின்றாலும் பித்துலகங் கொண்ட பெரும்பசியைப் போக்குதற்கே ஏற்றுள்ளேன் இம்மேனி; என்றும் பொதுநலமே போற்றிடுவேன் துன்பம் பொறுத்திடுவேன் ஈதுறுதி; 120 நாடெல்லாம் வாழ நனிதுயரம் நான்பெற்றேன் பாடெல்லாம் நான்வாழப் பட்டான் உழவன்மகன் ஆனால் அவன்வாழ யாரே நினைக்கின்றார்? மேனாள் முதலாக மேழித் தொழிலுக்கும் அத்தொழிலை ஆற்றும் அருமை உழவர்க்கும் மெத்த புகழுண்டு மேன்மையுண்டு பாட்டினிலே நாட்டினிலே மாறாய் நடப்பதைத்தான் காண்கின்றேன் ஏட்டில் எழுதியதைக் காட்டிஎனை ஏய்க்கின்றார்; நாணயத்தைச் சேர்ப்பதற்கு நாணயத்தை விற்றுவரும் வாணிகத்தார் என்றன் வளர்புகழைக் கொல்கின்றார்; 130 ஊறவைத்து நாறவைத்து - ஊரெல்லாம் எற்பழித்துக் கூறவைத்த அந்தக் கொடுமைக்கோர் எல்லையுண்டா? நாட்டில் நடக்கவிட நாடாமல் எங்கெங்கோ போட்டுப் பதுக்குகின்றார் போலிக் கயவரெனைக் கண்டகண்ட திக்கிற் கடத்திக் கொடுபோகும் தொண்டர்களைக் காணுங்கால் தூவென் றுமிழீரோ? நாட்டு நலங்கருதும் நான்வாழும் நன்னிலத்தைக் கேட்டுக் குணம்படைத்துக் கீழ்வாழை செங்கரும்பு கூடிக் கவர்வதற்கோர் கொள்கை வகுத்திடுமேல் வேடிக்கை பார்க்க விழைவேனோ? என்னையிங்கு 140 வாழ விடுங்கள் வளர விடுங்களெனத் தாழ உரைத்திடுவேன் தாண்டிவரின் போர்தொடுப்பேன் மக்கள் பொதுவாழ்வு மங்கலமாய்ப் பொங்கிவரத் தக்க வழிசெய்து தன்னாட்சி ஓங்கிடவே எண்ணி உழைத்திடுவேன் என்பணிக்கு நற்றுணையாய் நண்ணி வருவீர் நயந்து. பொங்கல் விழா -திருச்சி வானொலி நிலையம் 14.1.1968. 13. மரத்தின் பெருமை எண்சீர் விருத்தம் மரமென்றால் எல்லாரும் *எண்மை யாக மதிக்கின்றார்; உண்மையினில் மாந்த ருக்குக் கரவின்றி உதவுவதில் அதனைப் போலக் கண்டதிலை; நன்றிசொலி வாழ்த்த லின்றித் தரமின்றிப் பழிக்கின்ற நிலைமை கண்டோம்; தண்ணென்ற நிழல்தந்து, காற்றுந் தந்து வருகின்ற மேகத்தைக் குளிரச் செய்து, வான்மழையைப் பெய்விக்கும் மரத்தின் கூட்டம். 1 விதையென்னும் சிறுமுதலைப் போட்ட பின்னர் வியன்பெரிய மரமாகிப் பூத்துக் காய்த்துச் சதையுடைய சாறுடைய கனிகள் ஆக்கிச் சார்ந்தோர்க்குச் சுவைநல்கிப் பசியை நீக்கி விதைமுதலாம் ஒருவிதையைப் பன்னூ றாக விளைவித்துக் கண்டுமுதல் பெருக்கிக் காட்டும் கதையுடைய மரம்போல வணிகப் பாங்கு கற்றவரை யாண்டுலகிற் கண்டோம் நாமே. 2 மாடங்கள், கூடங்கள் தோன்றா முன்னர் மக்களுக்குக் கல்விதனைப் புகட்டு தற்குப் பாடங்கள் அறிவுறுத்தித் தந்த தெல்லாம் படர்ந்துவளர் மரத்தடிதான்; எழுதி வைத்த ஏடந்த மரந்தந்த பிச்சை யன்றோ? எழுத்துணர்த்தும் ஆசானும் வாழ்ந்த சிற்றில் ஓடறிந்த துண்டோ அம் மரமே தந்த ஓலைகளே மேற்பரப்பை அழகு செய்யும். 3 கல்லடிகள் பட்டாலும், தலையில் ஏறிக் காலடிகள் வைத்தாலும், கழிகள் கொண்டு வல்லமையின் எறிந்தாலும் பொறுமை மேவி, வாய்திறந்து பேசாமல் கனிகள் நல்கி நல்லபயன் செய்துவரும் மரங்க ளெல்லாம் நாட்டுக்கோர் நீதிதனை நவின்று நிற்கும்; செல்வமிகப் பெற்றவர்கள் மற்ற வர்க்குஞ் செய்திடுக ஒப்புரவென்று றுணர்த்திக் காட்டும். 4 வேர்கொடுக்கும், பால்கொடுக்கும், வெட்டு வோர்க்கு மேற்பட்டை கொடுத்திருக்கும், பற்றும் நோயின் வேர்கொடுக்கக் காய்கொடுக்கும், பூக்கொ டுக்கும் விளைந்துவருங் கனிகொடுக்கும், இலைகொ டுக்கும்; ஆர்கொடுக்க வல்லார்கள் என்னைப் போலென் றருமருந்து மரமொன்று நிமிர்ந்தி ருக்கும்; பேர்படைத்த செல்வரெலாம் பிறரும் வாழப் பெருந்துன்பம் உறும்போதும் வழங்கச் சொல்லும். 5 படரஒரு வழியின்றி மயங்கி நிற்கும் பைங்கொடிகள் தழுவுதற்கும் இடங்கொ டுக்கும்; படபடனெச் சிறகடித்துப் பறந்து சுற்றும் பறவையினந் தங்குதற்குங் கைகொ டுக்கும்; உடலினையும் சிலபறவை ஓட்டை செய்தே உறைவிடமாக் கொண்டிருக்க உவந்த ளிக்கும்; மடமடனெச் சாய்கின்ற நிலைவந் தாலும் மங்கையர்கள் அடுப்பெரிக்க விறகு நல்கும். 6 காட்டுமரம் என்றாலும் மீன வர்க்குக் கட்டுமர மாகி, அது கடலில் ஓடும்; நாட்டரசன் கையகத்துச் செங்கோ லாகி நல்லாட்சி புரிகின்ற குறியைக் காட்டும்; கேட்டுணரும் மாணவரை முறைப்ப டுத்தக் கேள்விமிகும் ஆசான்கைக் கோலாய் நிற்கும்; வீட்டகத்தே தூணாகிப் பிறவும் ஆகி விளைக்கின்ற பயனெல்லாம் விளம்பப் போமோ? 7 இடுக்கண்கள் பலவாகிச் சூழ்ந்த போதும் இயல்பொன்றுங் கெடுதலிலாச் சான்றோர் போல அடுத்தடுத்துத் தேய்த்தாலும் சிறிது கூட அதற்குரிய மணங்குன்றா மரங்க ளுண்டு; படுக்கின்ற நிலையுற்ற பெற்றோர் தம்மைப் பரிவுடனே தாங்குகிற மக்கள் போல, விடுக்கின்ற வேர்சிதைந்து முதிர்ந்த காலை விழுதுகளால் தாங்குகிற மரங்க ளுண்டு. 8 ஓங்குபுகழ் இவ்வளவுங் கொண்டி ருந்தும் ஓரிரண்டு குறைகளையும் பெற்ற துண்டு; தீங்குடைய கீழ்மக்கள் தாம்பி றந்த தேயத்தைக் கேடுறவே செய்வ தைப்போல் நீங்கரிய காட்டகமாந் தாய கத்தை நெருப்பதனால் கேடுறுத்தும் மரமும் உண்டு; மூங்கிலெனும் அம்மரந்தான் மோதி மோதி முன்பிறந்த வீட்டுக்கே கொள்ளி வைக்கும். 9 அரம்போலுங் கூர்மைமிகும் அறிவ ரேனும் அயலவர்தம் துயர்க்கிரங்காச் சிலரைப் போல மரஞ்சூழும் காட்டகத்தே அருகில் நிற்கும் மரமொன்று வாடுகிற பொழுது கண்டும் இரங்காமல் நிற்கின்ற குணமும் உண்டாம். ஈடில்லாச் செல்வவளம் பெற்றி ருந்தும் உறங்காமல் காத்திருக்குங் கஞ்சன் போல ஒருகனியும் உதவாத எட்டி யுண்டு. 10 தோன்றிவரும் நாள்தொட்டு மடியுங் காறும் துணைசெய்யும்; மடிந்தபினும் பயனேநல்கும்; ஊன்றிவளர் வேர்முதலாத் தன்பா லுள்ள உறுப்பெல்லாங் கொடுத்துதவும்; உயிரும் ஈயும்; மான்திரியுங் காட்டகத்தும் மாந்தர் வாழும் நாட்டகத்தும் மதில்சூழும் வீட்ட கத்தும் வான்தடவித் தலைவிரித்து நிமிர்ந்து நிற்கும்; வாழ்வெல்லாம் பிறருக்கே ஆக்கி நிற்கும். 11 பேசுமொழி கண்டறியா முன்னர் மாந்தர் பெருங்கிளையிற் பரணமைத்து வாழ்ந்த துண்டு; வீசுபுயல் வேகத்துப் புரவி யோடு வினைமிக்க தேர்ப்படையும் வேந்தன் றானும் காசுபண மில்லாமல் தங்கு தற்குக் காற்றுநிழல் அத்தனையும் தந்தி ருக்கும்; மூசுபுகழ் மூவேந்தர் தலையிற் சூடும் மும்மலரும் தந்ததெது? மரமே யன்றோ? 12 கொஞ்சுமொழிச் செல்வத்தைத், தன்னை ஏற்றுக் கொண்டவளைப் பஞ்சணையில் தனிக்க விட்டு, மஞ்சுதவழ் வான்மாடங் கொண்டி லங்கும் மாமனையை நீத்தகன்று, செல்வ வாழ்வோ *தஞ்சமெனத் துறந்தோடி, நாட்டு மக்கள் தவிப்பகற்றத் துயர்துடைக்க வழியைத் தேடி, அஞ்சுபொறி காத்தவனாம் புத்தன் வந்தான் அரசமரத் தடியில்தான் ஞானம் பெற்றான். 13 உள்ளத்தை உருகவைக்கும் வாச கத்தை உலகுக்குச் சொன்னமணி வாச கர்க்கு வெள்ளத்துச் சடைமுடியன் ஞானம் ஓதி விளக்கியதும் குருந்தமரத் தடியில் என்பர்; கள்ளத்தைப் பாவத்தை நீக்கும் என்றே கைதொழுது வணங்கவரும் ஏசு தன்னை அள்ளிக்கொண் டிலங்குகின்ற சிலுவை தானும் அம்மரத்தின் உறுப்பளித்த சலுகை யன்றோ? 14 சொல்லாலும் எண்ணாலும் அளக்கவொண்ணாச் சோதியனாம் பரமனவன், கற்ற கேள்வி வல்லார்கள் நால்வர்க்கும் மறைகள் காணா வாக்கிறந்த நிறைபொருளாய், உலகில் உள்ள எல்லாமாய், அல்லதுமாய் இருந்த பாங்கை இருந்தபடி அப்படியே இருந்து காட்டிக் கல்லாலின் புடையமர்ந்தே சொன்னான் என்பர்; கடவுட்கும் மரத்தருமை தெரிந்த தன்றே. 15 தேசியக்கல்லூரி திருச்சிராப்பள்ளி 28.2.1970. 14. கம்ப நாட்டில்... எண்சீர் விருத்தம் கம்பனைஓர் சக்ரவர்த்தி என்று சொன்னார் கனன்றெழுந்தேன் முடியரசன் ஆன தாலே; வெம்பியெழுந் தார்ப்பரித்தேன்; தோள்கள் தட்டி வீரரெலாம் வருகவெனக் கூவி நின்றேன்; தெம்புடைய என்மறவர் போர்வி ருப்பால் தினவெடுத்த திண்டோளர் திரண்டு வந்தார்; நம்பியவர் துணையாக என்றன் வீரம் நாட்டுதற்குப் படையெடுத்தேன் கம்பன் நாட்டில். 1 கனன்றெழுந்து படையெடுத்த என்முன் கோட்டைக் கதவடைக்க வில்லை அதைத் திறந்தே வைத்தான்; முனைந்தெழுந்து காவல்செயும் வீரர் இல்லை; முற்றுகையைத் தடுக்கின்ற படையு மில்லை; சினந்தெழுந்த என்னுடன்போர் செய்ய அஞ்சிச் செயலற்று நின்றனனோ கம்பன் என்று நினைந்தெனது படைதொடர உட்பு குந்தேன் நிறைந்தொளிரும் அமைதியையே அங்குக் கண்டேன். 2 உருவியவாள் உறையகத்தே உறங்க வைத்தேன்; உளத்தடத்தில் பொங்கிவரும் உணர்ச்சி ஒன்று மருவியதால் இனமறியா மகிழ்ச்சி கொண்டு மன்னனவன் அரசிருக்கும் மன்றஞ் சென்றேன்; பெருகியதோர் அறிவொளியைத் தேக்கி வைத்த பெருவிழியன் விரிநுதலன் என்னை நோக்கி, அருகினில்வா என்மகனே என்று கூறி, அகங்குளிர இருகையும் நீட்டி நின்றான். 3 அரவணைக்க நீட்டியகை யதனுள் ஏதோ அடங்கியுள தெனநினைந்து கூர்ந்து நோக்க, அறம்வளர்க்கும் குறளேடும், புலம்வ ளர்க்கும் அழகியதொல் காப்பியமாம் ஏடும் கண்டேன்; பொரநினைந்த என்மனத்தை நொந்து கொண்டேன்; பொன்னிவள நாட்டான்முன் மண்டி யிட்டு, நறவுகுக்கும் மலர்ப்பொழில்சூழ் நினது நாட்டை நான்கண்டு மகிழவந்தேன் என்று ரைத்தேன். 4 என்றுமுள தென்றமிழைப் பாடிப் பாடி இயல்தவழ்ந்து விளையாடும் நாவின் வேந்தன், நின்றஎனை நகைதவழ இனிது நோக்கி நேரியனே என்னுடன்வா எனது நாட்டில் துன்றுமெழிற் சிறப்பெல்லாம் காட்டு கின்றேன்; தோழமையால் அதுகண்டு மீண்ட பின்னர் நின்றனுயர் நாட்டினையும் அதுபோல் ஆக்க நினைந்தெழுக என்றுரைத்தான்; அவன்பின் சென்றேன். 5 செந்தமிழின் பாட்டரசன் கம்ப நாடன் செங்கோன்மை செலுத்திவரும் நாட்டில் வாழ்வோர் சிந்தைகொளும் மகிழ்ச்சியினால் சிரித்துப் பேசிச் சிந்துகிற கண்ணீரே அங்குக் கண்டேன்; வெந்துழல்வோர் திரண்டெழுந்து நீதி கேட்க வெகுண்டரசு தாக்கியதால் அவர்தம் மெய்கள் சிந்துகிற குருதியிலே தோய்த்தெ டுத்துச் செங்கோலாக் காட்டுகிற கோன்மை காணேன். 6 வயலொன்றைக் காத்துவரும் உழவன் போல வையமெலாம் காக்கின்ற கோன்மை கண்டேன்; உயிரொன்றி வாழ்கின்ற உடம்பாய் நின்றே உயிரனைத்துங் காக்கின்ற கோன்மை கண்டேன்; செயிரின்றி இயல்பினிலே ஒருமைப் பாடு செழித்துயரச் செய்கின்ற கோன்மை கண்டேன்; கயலொன்றும் விழிமடவார் கற்பைக் காக்கும் கருத்தேபோல் நிலங்காக்குங் கோன்மை கண்டேன். 7 கலைதெரியும் மண்டபங்கள் அங்குக் கண்டேன் கல்லெறியும் மண்டபங்கள் அங்கே இல்லை; விலையறியாக் கல்விதனை விரும்பிக் கற்று வீறுபெறும் மாணாக்கர் குழுவைக் கண்டேன்; நிலையறிய மாட்டாமல் மயங்கி, வேலை நிறுத்தங்கள் செய்வோரைக் கண்டே னல்லேன்; அலைதவழும் கடலொலிபோல் ஆர்ப்பா ரில்லை அமைதியுடன் சுவடிகளே பார்ப்பா ருண்டு. 8 காசுபணம் தந்துகலைப் பட்டம் வாங்கும் காளையரை அந்நாட்டில் எங்குங் காணேன்; ஆசிரியச் செய்கின்ற கடமை பூண்டும் அன்பளிப்புத் தொகையாகப் பொருள்கள் பெற்று, மாசுபடத் தேர்வெழுதி வந்த பேர்க்கும் மதிப்பெண்கள் வழங்குகிற கயமை இல்லை; ஆசிரியர் மாணவர்க்குள் பகையும் இல்லை அப்பன்மகன் எனமதிக்கும் உறவே கண்டேன். 9 பயிலவரும் மாணவர்கள் தெளிந்து தேரப் பயிற்றுமொழி எந்தமொழி என்று கேட்கும் *மயலறிவும் சொற்போரும் அங்கே இல்லை; மதியுடையார் செந்தமிழே மொழியக் கேட்டேன்; வயிறுவளர்ப் பொன்றனையே குறியாக் கொண்டு வழங்குகிற கல்வியினை அங்குக் காணேன்; உயரறிவு வளர்ச்சிக்கே உதவுங் கல்வி உணர்த்துகிற மேன்மைதனை அங்குக் கண்டேன். 10 கந்தனுக்கே நிகராய இளைஞர் எல்லாம் கலைபலவுந் தெரிகின்ற கழகங் கண்டேன்; சந்தனத்து *நகில்மடவார் சதங்கை கட்டிச் சதிதவறா தாடிவரும் அரங்கங் கண்டேன்; பந்தடித்துப் பயில்கலையும் மற்று முள்ள பன்னரிய நுண்கலையும் தேர்ந்து வல்லோர் வந்திருக்கும் இடம்பலவுங் கண்டு கண்டு வளர்கலைகள் மிகுநாட்டை வாழ்த்தி நின்றேன். 11 குழலிசையும் யாழிசையும் எழுப்பும் ஓசை குயிலிசையை வண்டிசையை விஞ்சி நிற்கும்; முழவுவகைத் தோற்கருவி தனித்தும் சேர்ந்தும் முழங்குகிற பேரொலிகள் இடியை விஞ்சும்; பழகுமவர் மிடற்றெழுந்த பாடல் தந்த பண்ணெல்லாம் தெளிதேனை விஞ்சி நிற்கும்; அழகொழுகும் இடைமடவார் அரங்கம் ஏறி ஆடுகின்ற எழில்கண்டு மயில்கள் சோரும். 12 கலையுடுத்துக் குழலிசைக்கத் தாளங் காத்துக் கைவழியே விழிசெலுத்தும் நடனங் கண்டேன்; கலைவிடுத்துக் குழல்விரித்து மானம் விட்டுக் காசொன்றே குறியென்று பிறந்த மேனி நிலைபடைத்துச் சூடுண்ட மண்பு ழுப்போல் நெளிந்துகுதித் தாடுகின்ற பேய்கள் இல்லை; நிலைகெடுத்த கலைகெடுத்த பரணிப் பேய்கள் நெளிவினுக்குக் கலையின்பேர் சூட்ட வில்லை. 13 பண்ணுடனே திறமனைத்தும் உணர்ந்த வல்லோர் பாட்டரங்கில் தமிழிசையே முழங்கக் கேட்டேன்; *கண்ணறவக் களிப்பினிலும் பாணர் தம்வாய் கன்னிமொழித் தமிழிசையே பாடக் கேட்டேன்; எண்ணமெனக் கெங்கெங்கோ ஓடிஓடி எனதுதமிழ் நாட்டுநிலை நினைந்த தங்கே; நண்ணிஎனைத் தோள்தொட்டுக் கம்ப நாடன் நலமிக்க வேளாண்மை காண்க என்றான். 14 படியரிசித் திட்டங்கள் அங்கே யில்லை படிமுழுதும் நெல்விளைந்து கிடப்ப தாலே; குடிபுரப்போர் உழமறுப்புச் செய்ய வில்லை கொடுமைகளைக் காணாத கார ணத்தால்; இடுவரம்புச் சட்டங்கள் அங்கே இல்லை எழில்வயல்கள் உழவரிடம் இருப்ப தாலே; படுபொருளைப் பதுக்குகிற பழக்கம் இல்லை பார்முழுதும் நினைத்தவெலாம் கிடைப்ப தாலே. 15 உரம்போடத் தழையறுப்பர் அன்றி மற்றோர் உயிர்போகத் தலையறுக்குந் தொழிலைச் செய்யார்; தரங்காணும் பயிரறுப்பர் அன்றி மற்றோர் தவிதவிக்க உயிரறுக்க நினையார் அங்கே; வரம்பாடும் களையெடுப்பர் அன்றி மற்றோர் வரம்புகளை எடுக்கமனம் விரும்பார் அங்கே; 1அறம்பாடுஞ் செயல்முறைகள் விளைப்ப ரன்றி 2அறம்பாடும் தீவினைகள் விளையா ரங்கே. 16 பலவகைய தொழில் வளங்கள் படைத்து நிற்பார் பணிபுரியும் நிறுவனங்கள் அடைத்து நில்லார்; உலகுடனே தலைநிமிர உழைத்து நிற்பார் உண்டாக்கும் பொருள்தடுத்து வளைத்து நில்லார்; கலகமொடு கயமைசெய விருப்பங் கொள்ளார் கடமைகளைப் புரிவதற்கு வெறுப்புங் கொள்ளார்; பலதொழில்கள் புரிவினைஞர் பகைமை கொள்ளார் பாடுபடும் நிலைக்கேற்பப் பயனே கொள்வார். 17 ஏற்றுமதிப் பொருள்களெலாம் மலைபோற் கண்டேன் இறக்குமதிப் பொருள்களெலாம் சிலவே கண்டேன்; காற்றுவழிக் கலஞ்செலுத்தும் வணிகங் கண்டேன் கணக்கின்றிப் பொருள்குவிக்குந் திறமுங் கண்டேன்; போற்றுமதிக் கணக்கரெலாம் எழுதும் ஏட்டில் பொய்யான கணக்கிரண்டு காண வில்லை; தூற்றுகின்ற பழியொன்றும் பெற்றா ரல்லர் துலவுக்கோல் போல்வணிகம் செய்வ தாலே. 18 சாதியெனும் தொழுநோயை அறியா மக்கள் சமுதாயப் பண்புடனே ஒழுகக் கண்டேன்; ஓதிவருங் கல்வியினால், உற்ற செல்வ உயர்ச்சியினால், பிறநலத்தால் மிளிரக் கண்டேன்; பாதிமதி நுதல்மடவார் பிள்ளை கட்குப் பாலூட்டித் தமைக்கொண்ட கணவற் பேணிக் கோதில்மனை நலங்காத்து விருந்தும் ஓம்பிக் குடும்பத்தின் விளக்காக விளங்கக் கண்டேன். 19 சமையங்கள் பலவெனினும் உயர்வு தாழ்வுச் சண்டையின்றிச் செம்பொருள்தான் ஒன்றே என்று அமைதியுடன் அப்பொருளை அகத்தி றுத்தி அன்புவழி ஒழுகிவரும் நிலையைக் கண்டேன்; இமையந்தன் நிலைகெடினும் ஆணும் பெண்ணும் இமையளவும் வழுவாத ஒழுக்கங் கண்டேன்; எமதவ்வை உரைக்கிணங்க மக்கள் நல்லர் என்பதனால் உயர்ந்தோங்கும் நாடு கண்டேன். 20 கம்பன் திருநாள் காரைக்குடி 21.3.1970 15.பிறவிக் கவிஞன் எண்சீர் விருத்தம் சங்கத்துப் புலவரெலாம் காத்த ளித்த சாறுநிறை கனிமரங்கள் நிறைந்தி ருக்கும், செங்குட்டு வற்கிளையோன், கம்ப நாடன் திருத்தக்கன் நடுசெடிகள் படர்ந்தி ருக்கும், எங்கட்கோர் உயிர்மூச்சாய் இயங்கு கின்ற இனியதிருக் குறளென்னும் தென்றல் வீசும் துங்கத்தொல் காப்பியனார் இட்ட வேலி சூழ்ந்திருக்கும் இலக்கியப்பூஞ் சோலைக் குள்ளே. 1 புகுந்திருந்து சிறைவிரித்துப் பறந்து சுற்றிப் பூத்துள்ள எழில்கண்டு கனிசு வைத்து, மிகுந்துவரும் எக்களிப்பால் கூவிக் கூவி மிதந்துவரும் இசைபரப்பி இன்பம் நல்கி, மகிழ்ந்திருந்த ஓர்குயிலைக் கண்டு வந்து மாகவிஞர் பாரதியார் பற்றி வந்தார்; அகங்கனிந்து கனிநல்கி வளர்த்துப் பின்னர் அக்குயிலைத் தமிழ்மொழிக்கே வழங்கி விட்டார். 2 பாரதியார் வழங்குகொடை யாக வந்த பாவேந்தன் பாரதிக்குத் தாசன் என்பான் சீரறியார் யாருள்ளார்? அந்த வள்ளல் சிறிதளித்த கொடையாலே கவிஞர் ஆகி ஊரறிய நாடறிய வாழ்வு பெற்றோர் ஒருநூற்றின் மேலாக விளங்கு கின்றார்; கூரறிவுப் பாவேந்தன் எனையும் ஈங்குக் கொடையாக வழங்கியுளான் நாட்டுக் காக. 3 துறைதோறும் துறைதோறும் தீங்கு செய்து தூயதமிழ்ப் பண்பாட்டை மாற்றி விட்டு, மறைவாக நமக்குள்ளே பிளவுண் டாக்கி வஞ்சனையால் சூழ்ச்சியினால் வாழ்வு பெற்ற கறைசேரும் ஆரியமாம் காரி ருட்டைக் கடிதினிலே வெருண்டோடச் செய்து, மீண்டும் நிறைவான தமிழ்வாழ்வு மிளிர வேண்டி நீள்துயிலை நீக்கஎழும் கதிரோன் போல்வான். 4 வஞ்சத்தை ஒருசிறிதும் அறிய மாட்டான் மற்றவர்தம் உயர்வுக்குப் புழுங்க மாட்டான்; நெஞ்சத்தைத் தமிழ்மொழிக்கே தந்த தாலே நினைக்கின்ற தன்கருத்தை மறைக்க மாட்டான்; அஞ்சித்தன் னுளக்கருத்தைக் குறைக்க மாட்டான்; அதுவருமே இதுவருமே எனந டுங்கிக் கெஞ்சித்தன் பெருமிதத்தைச் சிதைக்க மாட்டான் கிளர்ந்துவரும் அரியேற்றின் தோற்றங் கொண்டான். 5 எவர்வரினும் நம்புகின்ற தூய வுள்ளம் இழிபொய்ம்மை சூதறியாக் குழந்தை யுள்ளம் தவறெதுவும் தமிழ்மொழிக்குச் செய்வார் இங்கே தலையெடுத்தால் சீறியெழும் புலிப்போத் துள்ளம் சுவர்வைத்துத் தடுத்துநமைப் பிரித்து வைக்கும் சூழ்ச்சிகளைச் சுட்டெரிக்கும் புரட்சி யுள்ளம் கவிதையெனும் அமுதமழை பொழியு முள்ளம் கருவடிவம் உறும்போதே கவிஞன் ஆனோன். 6 அதுவேண்டும் இதுவேண்டும் எனவி ரும்பி அடிவருடிப் பிழைக்கின்ற கயமை வேண்டான்; எதுவேண்டும் நாடுயர என்று நோக்கி எழுச்சிமிகு கவிதைகளை ஈந்து நிற்பான்; மதுவேண்டும் வண்டெனவே மாறி மாறி மாற்றார்க்கு வால்பிடித்துத் திரிய மாட்டான்; சதிவேண்டான் மற்றவரைத் தாழ்த்த எண்ணான், சங்கத்துப் புலவனென வாழ்ந்த மேலோன். 7 பாரிவிழா பறம்புமலை 18.4.1970 16. பாவேந்தர் வழங்கிய கொடை எண்சீர் விருத்தம் பூவேந்தர் வழங்குகொடை, காலப் போக்கிற் போய்மறையும் நிலைமைத்தாம்; பெருமை சான்ற நாவேந்தர் வழங்குகொடை கால மெல்லாம் நலம்பயந்து நிலைத்திருக்கும்; பாண்டி தந்த பாவேந்தன் வழங்குகொடை கவிக்கு லத்துப் பரம்பரையாய்த் தலைமுறைகள் தோறும் நிற்கும்; சாவேந்திப் போனபினும் தழைத்து நிற்கும் தகைமைத்தாம் அக்கவிஞன் தந்த செல்வம். 1 பாவேந்தன் வழங்குகொடைப் பெருமை எல்லாம் பகுத்தெடுத்து வகைப்படுத்திச் சிறப்பை எல்லாம் நாவேந்திப் பாடுதற்கு யாரால் ஒல்லும்? நாளொன்று போதுவதோ? பலநாள் வேண்டும்; கோவேந்தர் போலஎழில் தோற்றங் கொண்டோன் கொடைசொல்லக் காவியங்கள் பலவும் வேண்டும்; பூவேந்தும் நறவமென இனிக்கும் செஞ்சொற் புரட்சிப்பாக் கொடைஞனவன் கொற்றம் வாழ்க. 2 குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம் குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்; திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித் தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித் தெருட்டுகின்ற தமிழியக்கம் ஒன்று தந்தான்; திரிகாற்று கதிர்திங்கள் இவற்றி னுள்ளே உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும் உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற. 3 கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன் கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்; பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும் புன்மைகளை மாய்ப்பதற்கு, வீரம் மிக்க பாத்திறத்தான் தமிழச்சி ஏந்தும் கத்தி படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்க வேண்டி எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான். 4 காவியங்கள் எனும்பெயரில் நல்ல நல்ல கருத்துகளை உள்ளடக்கி நிலைத்து நிற்கும் ஓவியங்கள் பலதந்தான்; பரிசி லாக உயர்பாண்டி யன்பரிசில் எனும்நூல் தந்தான்; பூவியங்கும் செழுந்தேனோ? கரும்பின் சாறோ? புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து போற்றுவணம் தொகுதி யாக நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான். 5 பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்த்துப் பைந்தமிழ்த்தேன் சுவைக்கின்ற முல்லைக் காடு; மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து மலையிறங்குந் தேனருவி; துன்பம் என்னும் மயல்இரிய நம்முளத்தை இளமை யாக்கி மகிழ்வுதரும் இசையமுது பாடித் தந்தான்; இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால் இரணியன்தான், எதிர்நிற்க எவரு மில்லை. 6 கொடைதந்தான் பாவேந்தன் பெற்றுக் கொண்டோம்; கொடுத்தவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்த துண்டா? விடைதந்து தலைநிமிர்ந்து நிற்ப தற்கு விதியுண்டா? மதியுண்டா? வெட்கம்! வெட்கம்! படைதந்தான் வீரரென நமைநி னைந்து; பற்றியநாம் பேடியர்போல் நடுங்கு கின்றோம்; உடையுண்டு போனதலால் நமது வீரம் ஒளியுண்டு நின்றதென உரைக்கப் போமோ? 7 ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவரும் நாளை யிங்கு நாடப்பா! ஏழைமுத லாளி என்ற நாடகத்தைக் கலைத்தொழிக்க நாளும் எண்ணிப் பாடப்பா உலகப்பா உன்றன் பாட்டை! பார்மகிழப் போடப்பா *புதிய பாட்டை! கேடப்பா மேல்கீழ்கள் என்று சொன்னான் கேட்டிருந்தும் ஊமையப்பர் ஆகி நின்றோம். 8 புதியதோர் உலகமினிப் படைப்போம் வாரீர் பொசுங்கட்டும் கெடுதிதரும் பழைமை எல்லாம்; மதியதனை ஒளிசெய்வோம்; உயர்வு கொள்வோம்; மதம்சாதிக் கொடுமைகளை விட்டொ ழிப்போம்; விதியதனை நம்பிமனம் சோர்ந்து நின்று வீணாகிப் போகாமல், பொதுமை காணும் விதியதனைச் செய்திடுவோம் என்றான்; நாமோ விழிதிறக்க மனமின்றி உறங்கு கின்றோம். 9 தெற்கோதும் தேவாரம் ஆழ்வார் தந்த திருவாய்நன் மொழியான தேனி ருக்கக் கற்கோவில் உட்புறத்தே புரியாப் பாடை கால்வைத்த தெவ்வாறு? நெஞ்சு ருக்கும் சொற்கோவின் நற்போற்றி அகவல் எங்கே? தூயவர்தம் திருமொழிகள் இறைவன் காதில் நிற்காது போய்விடுமோ? என்று கேட்டான்; நிற்கின்றோம் சிலையாக நாமும் சேர்ந்து. 10 தமிழ்நாட்டுப் பாடகரே தமிழைப் பாடித் தமிழ்மானம் காத்திடுவீர் என்று சொன்னான்; அமிழ்தூட்டும் தாய்மொழியைப் பாடா ராகி அவர்மானம் தமிழ்மானம் அனைத்தும் விட்டார்; தமிழ்வேட்டுப் பாடுதற்கு முனைந்த பேரைத் தமிழ்ப்பகைவர் படுகுழியில் அழுத்து கின்றார்; தமிழ்நாட்டு மாந்தரெனும் நாமும் சேர்ந்து ததிங்கிணத்தோம் போடுகின்றோம் மானம் கெட்டு. 11 வேறு உன்னை வளர்ப்பன உணவே - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்ன வழங்கினன் பாடல் - எனினும் எதனை வளர்த்தனம் இங்கே? தென்னை வளர்ந்தது போலே - இந்தத் தேகம் வளர்ந்தது மேலே கன்னல் நிகர்த்திடும் தமிழை - நெஞ்சில் கட்டி வளர்த்ததும் உண்டோ? 12 கொடியோர்செயல் அறவே ஒரு கொலைவாளினை எடடா! இடியேறெனப் புலியேறென எழுவாய்கணை தொடடா படிவாழவும் தமிழ்வாழவும் பகைமாயவும் கொடுவாள்* பிடிவாவெனத் தருவான்எனின் பெறவேயிலை அதையே. 13 தலையாகிய அறமேபுரி சமவாழ்வினைப் பெறவே இலையோ உரம்? மலையோபகை? எழுவாய்தமிழ் மகனே! பலநாளிதை மொழிவானவன் பயனேஇலை அடஓ! சிலையாமென இருந்தோம்செவி செவிடாகிய ததனால். 14 கொண்டவர் மாண்டனர் என்பதால் மங்கையர் கோலமெ லாமழித் தோம் - எதிர் கண்டவர் ஏசிடக் கைம்பெண்டிர் என்றபேர் கண்ணீ ருடன்கொடுத் தோம். 15 கொண்டவள் போனபின் நின்றிடும் ஆண்மகன் கூடிக்கு லாவிடு வான் - எனில் கண்டுநிகர்மொழிப் பெண்டிரை மட்டிலும் காதல் மறுத்திடல் ஏன்? 16 கோரிக்கை யற்றுக் கிடக்குதடா இங்கு வேரிற் பழுத்த பலா - எனக் கூறிக்கை தந்திட வேண்டுமென் றானவன் கோலக்கை தந்தவ ரார்? 17 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கெனப் பொங்கி முழங்கிடச் சங்கமொன் றளித்தான் சங்கமது முழங்காமல் போயொளிந்த தெங்கே? 18 வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம் தங்குதடை யில்லாமல் தந்தகவி சொன்னமொழி எங்கே போச்சாம்? இங்கினியும் செந்தமிழில் கல்விசொல வழியிலதேல் என்ன பேச்சாம்? 19 பாரிவிழா பறம்புமலை 18.4.1970 17. பாரதி பொழிந்த மழை எண்சீர் விருத்தம் காலதனால் உனைமிதிப்பேன் காலா வாடா கவியிதனில் இடிமுழக்கம் ஒலிக்கக் கேட்டேன்; நூலமரும் நெஞ்சத்தில், நுவலும் வாக்கில் நுடங்காத உண்மையொளி மின்னக் கண்டேன்; கோலமிகு வெள்ளத்தின் பெருக்கைப் போலக் கொடுத்தகவிப் பெருக்கத்தில், உணர்ச்சிப் பாங்கில் ஞாலமிசைத் தெள்ளுதமிழ் மழையைக் கண்டேன் நான்நனைந்து நனைந்தெழுந்து பாடு கின்றேன். 1 வள்ளுவனும் இளங்கோவும் மற்று முள்ளோர் வகுத்தமைத்த நூற்கடலுள் தவழ்ந்த மேகம், உள்ளெழுந்த உணர்ச்சிஎனும் பெருங்காற் றுந்த உயர்ந்தெழுந்து கற்பனைவான் திரிந்த மேகம், துள்ளிவருஞ் சொற்களெனும் இடிமு ழக்கித் தூயதமிழ்ப் பார்வையினால் மின்னும் மேகம், கள்ளுமிழும் கவிப்பயிர்கள் செழிக்க வேண்டிக் கருக்கொண்டு தமிழ்மழையைப் பொழிந்த மேகம். 2 அடிமைஎனுங் கொடுவெயிலின் வெம்மை தாக்க அகம்வறண்டு, செயல்திரிந்து, பொருள்நீர் வற்றி, மிடிமைஎனும் வெடிப்புற்றுத், தொடர்ந்து வந்த மேலான உரங்கெட்டுத் தொழில்கள் என்னும் செடிகொடிகள் அடிவதங்கி, உரிமை என்னும் செழும்பயிர்கள் மிகவாடி, மயங்குங் காலை இடியுடைய கோடைமழை போல வந்தான் இந்நாடு செழித்துயரப் பொழிந்து நின்றான். 3 தலைவரெனும் உழவரெலாம் சொல்லேர் கொண்டு தாய்நாட்டார் மனப்புலத்தைப் பண்ப டுத்தி, நிலையுடைய உரிமையுணர் வென்னும் வித்தை நிலமெல்லாந் தூவிவிட்டார்; அந்தப் போழ்து கலையுணரும் பாரதியாம் மேகந் தோன்றிக் கவிமழையை நிலங்குளிரப் பொழியக் கண்டோம்; விலைமதியா விடுதலையாம் பயிர்செ ழித்து விளைபயனும் நனிநல்கி வளரக் கண்டோம். 4 சேர்த்தெடுத்த சொல்விளங்குங் கவிதை வானில் திரிந்துவரும் பாரதியாம் எழில்சேர் கொண்டல் கார்த்தொடுப்பால் இடியிடித்துப் பொழிதல் போலக் கவித்தொடுப்பால் உணர்ச்சியினை முழக்கி, மின்னி, ஆர்த்தடித்த தமிழ்மழையால் திரண்ட வெள்ளம் ஆங்கிலத்தார் அடித்துவைத்த கூடா ரத்தைப் பேர்த்தெடுத்துத் தள்ளியதை அறியா ருண்டோ? பெருமழையின் ஆற்றலினைத் தெரியா ருண்டோ? 5 கள்ளெடுத்துத் தீயெடுத்துச் சேர்த்து நல்ல காற்றெடுத்து வான்வெளியும் கலந்து வைத்துத் தெள்ளுதமிழ்ப் பெரும்புலவன் கவிதை யாக்கித் தீந்திமிதீம் எனமுழங்கிப் பெய்தான்; நீரின் அள்ளுசுவைப் பெருமைஎலாம் சுருங்கக் கூறின் அகங்கவரு மெண்சுவையும் பொருந்தி நிற்கும்; துள்ளிவரும் உணர்ச்சியினால் வேகங் காட்டுந் தொடர்மழையில் நனைந்தவர்க்கு வீரந் தோன்றும். 6 பொதுவுடைமைச் செம்புலத்துப் பெய்யும் போது புத்துலகச் செம்மைநிறம் பொருந்தி நிற்கும்; மதியுடைமைக் கார்நிலத்திற் கொட்டுங் காலை மலர்ந்திருக்குங் கருவண்ணம்; கருமை செம்மை பொதுளியநற் பூமிதனில் பொழியும் போது பூத்திருக்கும் இருவண்ணம்; மதத்திற் பெய்தால் அதனுடைய வண்ணமுமாய்க் காட்சி நல்கும்; அமரகவி பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம். 7 பழங்குப்பை கூளமெலாம் அடித்துச் செல்லும்; பகுத்தறிவுப் புலத்தையது குளிரச் செய்யும்; வளங்கெட்ட வறுமையுடன் செல்வ மென்று வருமேடு பள்ளமெலாம் சமப்ப டுத்தும்; விளங்குற்ற அறிவுவளம், உரிமை வேட்கை, வீரமிக்க துணிவுள்ளம், இன்னோ ரன்ன களங்கமறு நறுமலர்கள் மலரச் செய்யும் கவிஞனவன் பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம். 8 எங்கள்சுதந் திரதாகம் தணிவ தெந்நாள்? என்றேங்கும் பொழுதத்துத் தாகம் தீர்க்கச் சிங்கமகன் கோடைமழை யாக வந்தான்; செந்தமிழர் திருநாட்டைப் பாடும் போது பொங்கிவருங் காலமழை யாகி நின்றான்; புதுமுறையில் பாஞ்சாலி சபதம் பாடிப் பங்கமறப் பொதுநெறியில் தெய்வப் பாடற் பண்பாடி அடைமழையாய்ப் பொழிந்து நின்றான். 9 பாரதிபெய் தமிழ்மழையால் சாவா தின்னும் பாட்டுலகம் வழங்கிவரும் கார ணத்தால் *வாரமிகும் அம்மழையை அமிழ்தம் என்றே வாய்மணக்கச் சொல்லிடலாம்; பாடல் என்னும் ஈரமழை பெய்யாது பொய்த்தி ருந்தால் இனியகவிக் கடலுந்தன் னீர்மை குன்றும்; நேரமெலாந் தன்னுரிமைப் பசியே வந்து நின்றிருந்து நமைவருந்தி உடற்றும் அன்றோ? 10 ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடி வந்த அடலேற்றுப் பெரும்புலவன் வேட்டெழுந்து சீர்ப்பாட்டுத் தமிழ்மழையைப் பெய்யா விட்டால் செந்தமிழர் நெஞ்சமெலாம் வாடி நிற்கும்; ஏர்ப்பாட்டுப் பாடாமல் ஓய்ந்தி ருக்கும்; இன்பமலர் சாய்ந்திருக்கும், எழுச்சி யூட்டும் போர்ப்பாட்டு மொழியுணர்ச்சி என்னும் பச்சைப் புல்நுனியுங் காண்பரிதாய்க் காய்ந்தி ருக்கும். 11 பாமரரே! விலங்குகளே! பான்மை கெட்டீர்! பார்வைதனை யிழந்துவிட்டீர்! செவிடும் ஆனீர்! ehkkJ jÄHbud thœå®! என்று நாமுணர இடித்திடித்துப் பொழிந்த போதும் ஏமமுற வீட்டுமொழி கற்கு மெண்ணம் எங்கணுமே மலரவில்லை; வேறு வேறு தீமொழியே பயில்கின்ற விழல்கள் இன்னும் தெருவெல்லாம் வளர்வதையே காணு கின்றோம். 12 ‘beŠrkJ bghW¡fÉiy ïªj eh£L Ãiybf£l khªj®jik ÃidªJ É£lhš tŠridfŸ òǪâLth®; khd« É£L thœî¡nf miyªâLth®; ãw¥ò¡ FŸns bfhŠrnkh ãÇÉidfŸ? என்று கண்ணீர் கொட்டுதமிழ் மழைபொழிந்தும் ஒற்று மைக்கு நஞ்சையிலே இடமில்லை; கள்ளி காளான் நன்றாக வளர்ந்துவரக் காணு கின்றோம். 13 தண்ணீரை விட்டோநாம் இந்த நாட்டில் தன்னுரிமைப் பயிர்வளர்த்தோம்? நாளும் நாளும் கண்ணீரும் செந்நீரும் சிந்திச் சிந்திக் காத்திருந்தோம்; கருகாமல் வளர்ப்பீர் என்று புண்ணான தனதுமனம் பொங்கிப் பொங்கிப் பொழிந்தானே வானமழை! அதனைச் சற்றும் எண்ணாமல் திரிகின்றோம்; நெஞ்சில் ஈரம் ஏறாமல் இருக்கின்றோம் பாறை யாக. 14 மழைபெய்தும் விளைவறியாக் களிமண் ணாக வன்பாறை நிலமாகக் கிடக்கின் றோம்நாம்; கழைபெய்த சாறிருந்தும் அதனை மாந்திக் களிக்காமல் எதைஎதையோ பருகு கின்றோம்; விழைவெல்லாம், பாரதியின் எண்ண மெல்லாம், வெறுங்கனவாய்ப் பகற்கனவாய்ப் போவ தென்றால் நுழைமதியன் பாவேந்தன் தனது நெஞ்சம் நொந்தழிந்து போகானோ? நன்றோ சொல்வீர்? 15 முன்பிருந்தோர் எழுதியநூற் கடலுள் மூழ்கி முகந்துவரும் பாரதியாம் மேகம் இங்கே அன்பளைந்து தமிழ்மழையைப் பொழிந்த தாலே ஆறுபல தமிழகத்தே பாயக் கண்டோம்; என்பொடிந்த தேகத்தும் எழுச்சி யூட்டும் எம்கவிபா ரதிதாசன் ஓரா றாவர்; என்பினையும் உருக்குமணிக் கவிதை சொன்ன எங்கள்கவி மணியாரும் ஓரா றாவர். 16 நாட்டுக்குப் பாட்டுரைத்து விருது பெற்ற நாமக்கல் கவிஞரும்ஓர் நல்லா றாவர்; ஏட்டுக்குள் அடங்காத கவிஞ ரான எம்போல்வார் கிளைநதிகள் ஆவோம் கண்டீர்; பாட்டுக்குப் பரம்பரைகள் தோன்றி நின்று பயனல்கும் வாய்க்கால்கள் பலவும் உண்டு கேட்டுக்குத் துணைபோவார் கவிதை என்று கிறுக்கிடுவர் அவரெல்லாம் வடிகால் ஆவர். 17 இந்துமதாபிமான சங்கம் காரைக்குடி 16.9.1973 18. அண்ணல் நடந்த அடிச்சுவடு கலிவெண்பா பெற்றெடுத்த தாய்நாட்டைப் பேணி வளர்க்கின்ற பற்றுளத்தை விட்டுப் பதராக வாழ்ந்திருந்தோம்; வாணிகத்தால் நம்நாட்டில் வந்து புகுந்தவர்கள் கூனுளத்து வஞ்சகர்தம் கூட்டுறவால் ஏமாற்றி நாட்டைப் பறித்தார்கள் நாமடிமை ஆகிநின்றோம்; கேட்டை உணராமல் கீழடிமை செய்துவந்தோம்; தாயகத்துச் செல்வமெலாம் தம்முடைமை யாக்கி அவர் போயவற்றால் வாழ்வைப் புதுக்கி மகிழ்ந்தார்கள்; எல்லா வளமிருந்தும் எழையராய் நாமிருந்தோம்; பொல்லா வறுமையினால் பொன்றிக் கிடந்துழன்றோம்; 10 தாய்நாட்டு மண்ணில் தலைநிமிர்ந்து வாழாமல் சேய்நாட்டார் காலடியிற் சிக்கித் தவித்தடிமை செய்து மகிழ்ந்திருந்தோம் சிந்தனையும் அற்றிருந்தோம்; கைதி எனவாழ்ந்து காலங் கழித்துவந்தோம்; நாட்டுக் குரியவர்யார்? நாம்யார்? எனவறியோம்; கூட்டுப் பறவையெனக் கொத்தடிமை ஆகியதால் நல்ல நினைவிழந்து, நாகரிகப் பண்பிழந்து, செல்லும் நெறிதிரிந்து, சீர்மை மிகவிழந்து, கண்கள் இரண்டிருந்தும் காணாக் குருடர்களாய், நண்ணும் செவியிருந்தும் நல்லொலிகள் கேளாராய், 20 வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்திருந்தோம்; பெற்றெடுத்த தாயிருந்தும் பிள்ளை தவிப்பதுபோல் நாமுழன்றோம்; நாட்டுரிமை என்னும் நலமுணர மாட்டாமல் ஆட்டுகிற வாறெல்லாம் ஆடித் தொழும்புசெய நத்தித் திரிந்தோம்; நல்லறிவு தோன்றாமல் பித்துப் பிடித்தவர்போல் பேதுற்றுக் கெட்டலைந்தோம்; கும்பிட்டுக் கைகட்டிக் கூடார்பின் சென்றொழுகிக் கும்பி வளர்ப்பதுவே கொள்கைஎன வாழ்ந்தோம்; அறியாமைப் பேரிருளில் ஆழ்ந்ததனால் ஒன்றும் புரியாமல் நின்று புலம்பி அலமந்தோம்; 30 அல்லல் பொறுக்காமல் ஆர்த்தெழுந்த நெஞ்சங்கள் அல்லும் பகலும் அயர்வின்றிச் சிந்தித்துச் சொந்த நிலந்தன்னைச் சூதருக்கோ விட்டுவிட இந்த உடலெடுத்தோம்? ஏனிந்த வெங்கொடுமை? கொத்தடிமை சாயாதோ? கோல்கொண்டார் செய்கொடுமை அத்தனையும் மாயாதோ? M©ik ãwthnjh? என்று மயங்கி இடருற்று மாழ்குங்கால் ஒன்று விடிவெள்ளி ஓர்பால் மலர்ந்ததுகாண்; போர்வீரர் செய்த புரட்சி எனும்வெள்ளி பார்மீது தோன்றிப் பரவிச் சுடர்காட்ட, 40 எங்கும் உரிமைஒளி ஏறிப் படர்ந்ததனால் இங்கு விடிவுவரும் என்னும் நிலைகண்டோம்; போர்பந்தர் என்னுமொரு பொற்புடைய பேர்தாங்கும் ஊர்தந்த ஞாயிறென ஓர்மகன் தோன்றினன்காண்; ஞாயிற்றின் தோற்றத்தால் ஞாலம் மலர்ச்சிபெறப் போயிற் றடிமைஎனும் பொல்லா இருட்கூட்டம்; தூக்கம் கலைந்தொழியத் துள்ளிக் குதித்தெழுந்தோம்; ஏக்கம் அகன்றோட இன்பம் மிகப்பெற்றோம்; காந்தம் எனஈர்க்கும் காந்தி எனும் பெயரை ஏந்தும் சுடர்க்கதிரோன் இங்கெழுந்து வந்தனன்காண்; 50 தன்வாழ்வு நாடாமல் தான்பிறந்த தாயகத்தின் பொன்வாழ்வு காண்பதற்குப் புண்வாழ்வை ஏற்றவனை, தன்னையே நாட்டுக்குத் தந்துவிட்ட நல்லவனை, இன்னல்கள் அத்தனையும் ஏற்று நடந்தவனை, நோற்றுப் பிறந்தவனை நூறாண்டு சென்றபினும் ஏற்றிப் புகழ்கின்றோம்; எஞ்ஞான்றும் போற்றிடுவோம்; பூத்த மலர்முகமும் பொக்கைவாய்ப் புன்சிரிப்பும் பார்த்துக் கலங்கிவிட்டார் பாராண்ட வெள்ளையர்கள்; ஆடை குறைந்தாலும் ஆண்மை குறையாத மேடை முழக்கத்தால் மேல்நாட்டார் அஞ்சிவிட்டார்; 60 தீங்கிழைத்துப் பார்த்தாலும் தீரன் கலங்காமல் ஓங்கி வளருவதால் ஓலமிட்டார் ஆளவந்தார்; நாட்டுணர்ச்சி ஊட்டுகிறார்; நாட்டார் உரிமையினைக் கேட்டெழுச்சி கொண்டு கிளர்ச்சிகளும் செய்கின்றார்; கொத்தடிமை செய்கின்ற கூட்டம் கிளர்ந்தெழவே வித்திட்டார் என்றுரைத்து வெள்ளையர்கள் அண்ணலைக் கூட்டுச் சிறைக்குள்ளே கூசா தடைத்துவைத்துப் பூட்டிக் களித்தார்கள்; புண்ணியனோ அஞ்சவில்லை சிந்தனையை மாய்க்கச் சிறைக்கூடம் வல்லதென எந்தவர லாறும் எடுத்துரைக்கக் கேட்டதிலை; 70 வெட்டவெட்டப் பூச்செடிகள் மீண்டும் செழித்துவரும்; கொட்டிலுக்குள் வைத்த கொடிசெடிகள் சாளரத்துக் கம்பிவழி புக்குக் கதிரோனை நோக்கிவரும்; அம்புவியிற் காணும் அதுவே இயற்கைவிதி; நாட்டினை உய்விக்க நாடி எழும்வீரர் கேட்டினைக் கண்டஞ்சார்; கேடெல்லாம் பூமாலை; பூட்டுஞ் சிறைச்சாலை பூஞ்சோலை யாகிவிடும்; தீட்டுங் கொலைக்கருவி தேன்மலரா மாறிவிடும்; நச்சருந்தச் சொன்னாலும் செக்கிழுக்கச் சொன்னாலும் அச்சம் அவர்க்கில்லை ஆண்மையுடன் முன்னிற்பர்; 80 கொள்கை உடையானைக் கொண்ட குறிக்கோளில் உள்ளம் உடையானை ஊராள்வோர் தண்டனைகள் வாட்டிவிடும், கொள்கைகளை மாற்றிவிடும் என்றிருந்தால் கோட்டைவிடுங் காட்சியைத்தான் கொண்டுவரும் கண்முன்னே; அண்ணலிவர் பட்டதுயர் ஆள்வோரால் பட்டஅடி எண்ணில் அடங்காது - எனினுமவர் வெற்றிகண்டார்; பாருலகம் எங்கணுமே பாராத வெற்றியிது! ஓருருவம் உண்மை உழைப்பால் பெறும்வெற்றி! கொள்ளையிட வில்லை கொலைப்புரட்சி செய்யவில்லை வெள்ளமெனச் செங்குருதி வீணாகச் சிந்தவில்லை 90 அன்புப் புரட்சி அகிம்சைப் புரட்சியினால் இன்பத் திருநாட்டில் ஏற்பட்ட வெற்றியிது! வெற்றித் திருமகனை, வேண்டும் விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவனைப் பேணி வணங்கிடுவோம்; அன்றொருநாள் மாந்தர் அறிவை இழந்துவிட்டுக் கொன்றுதிரி காட்டுக் கொடுவிலங்காய் மாறிவிட்டார்; கொள்ளை யடித்தார், கொலைகள் மிகச்செய்தார்; அள்ளியள்ளி உண்டார் அரிவையர்தம் கற்பைஎலாம்; பிள்ளையென்று பாரார் பெரியரென்றுந் தாம்நோக்கார் வெள்ளைமனப் பெண்டிரென எள்ளளவும் எண்ணாராய் 100 மாமதங் கொண்டு மதவெறியால் மக்களெனும் நாமமது கெட்டுவிட நாட்டு விலங்கானார்; செத்து மடிந்தவர்தம் செந்நீரும், பெண்கற்பைக் கொத்துங் கழுகாலே கொட்டுகிற கண்ணீரும் ஆறாய்ப் பெருக அழுகுரலே மீதூரத் தீராப் பழியொன்றே தேடும் நவகாளி; கொண்ட மதத்தால் கொடுவிலங்கா மாறியதால் பெண்டிர் கதறியழப் பேயாட்டம் ஆடுபவர் செய்தீமை அண்ணல் செவிபுகுதக் கண்கலங்கி வெய்துயிர்த்து, ஆங்கே விரைந்து புறப்பட்டார்; 110 கண்டோர் தடுத்தார்நம் காந்திக்குத் தீங்கெதுவும் உண்டாகும் என்றே உளந்துடித்து நின்றார்கள்; அண்ணல் தயங்கவில்லை அன்றே புறப்பட்டார்; பண்ணுங் கொடுஞ்செயலைப் பார்த்தும் பொறுத்திடவோ என்நாட்டார் கையால் இறப்பு வருமானால் முன்கூட்டிச் சென்று முடிந்து மகிழ்ந்திடுவேன் என்றுரைத்துக் கால்நோக எங்கும் நடந்தேகி நன்றுரைத்தார்; அவ்வூரில் நல்லமைதி கண்டுவந்தார்; தீண்டாமை என்னுமொரு தீய பழக்கத்தை வேண்டா மெனத்தொடுத்த வீரப்போர் பற்பலவாம்; 120 ஆண்டவன் முன்னிலையில் அன்பர்கள் சென்றருளை வேண்ட நினைப்பவர்க்கு வேண்டாம் தடைஎதுவும் என்றே அறப்போரை ஏற்று நடத்தியதால் அன்றே கதவடைத்த ஆலயங்கள் தாம்திறந்த; நல்லொழுக்கம் காத்து நடந்து நமைக்காத்த வள்ளலுக்கு நெஞ்சால் வணக்கஞ் செலுத்திடுவோம்; உண்மைக் கடவுளென ஓதி ஒழுகிவந்த அண்ணல் திருவடிக்கே அஞ்சலிகள் செய்திடுவோம்; நம்மையே உய்விக்க நாளும் உழைத்துவந்த பெம்மான் திருமார்பில் பேதை மனத்தேம்நாம் 130 தந்த பரிசிலென்ன? தந்தை மனம்மகிழ வந்த பரிசிலென்ன? வாயில்லை சொல்லுதற்கு; ஊரெல்லாம் நாடெல்லாம் ஓவென் றலறிடவும் பாரெல்லாம், ஏங்கிடவும் பாவம் புரிந்துவிட்டோம்; வாய்மை வழிநடந்தார், வாழும் நெறிநடந்தார், தீமை தருகின்ற தீண்டாமை வேண்டாவென் றெண்ணி அதன்வண்ணம் எந்நாளும் தாம்நடந்தார், நண்ணார் தமக்கும் நலமே செயநடந்தார், இன்னா தனசெய்யா தென்றும் நடந்துவந்தார், ஒன்னார் மனமும் உருகும் படிநடந்தார், 140 அஞ்சாமை என்னும் அரிய வழிநடந்தார், எஞ்சா விடுதலைக்கே எப்பொழு தும்நடந்தார்; அண்ணல் நடந்த அடிச்சுவட்டில் நாம்நடக்க எண்ணி முனைந்தோமோ? எங்கோ நடந்துவிட்டோம்; நாட்டை மறந்தோம் நமையே நாம்நினைந்தோம்; கேட்டைப் பெருக்கினோம் கீழ்மைச் செயல்புரிந்தோம்; நாட்டை வளமாக்கும் நல்ல தொழிலாளர் பாட்டை மதித்தோமா? பாட்டாளி வாழ்வுயர ஏட்டில் எழுதிவிட்டோம் எள்ளளவும் ஏற்றமில்லை; வாட்டி வதைக்கின்றோம் வாழ்வைச் சுரண்டுகின்றோம்; 150 சாத்திரத்தின் பேர்சொல்லித் தாழ்த்திவிட்ட மக்களுக்கு ஆத்திரங்கள் தோன்றாமுன் அன்போ டவர்தமக்குக் கொட்டு முழக்கோடு கோவிற் கதவெல்லாம் தட்டித் திறந்துவிட்டோம் சாதி தொலைத்தோமா? தீண்டாமை வேண்டுமெனச் செப்பித் திரிகின்ற வேண்டாத *பூரிகளும் மேலோங்கிப் பேசுகின்றார்; தேர்தலிலே சாதி தெளியத் தெரியவைத்தோம் ஊர்முழுதும் வேர்பலவாய் ஊன்றிக் கிளைக்கவிட்டோம்; சாதிக்கு நன்மதிப்பு சற்றே குறைந்தாலும் வீதிக்குள் வீட்டுக்குள் வீறு குறையவில்லை; 160 எல்லாரும் ஓரினமென் றெண்ணி நடக்கவெனச் சொல்லாத ஏடில்லை, சொல்லாத் தலைவரிலை! இன்னும் மதவெறியை எள்ளவும் போக்கவிலை என்னும் படியிங்கே எங்கும் மதச்சண்டை; அண்ணல் நடந்த அடிச்சுவட்டைக் காணவில்லை மண்ணெடுத்துத் தூவி மறைத்து நடக்கின்றோம்; எத்தனையோ கல்தூரம் ஏந்தல் நடந்துவந்தார்; அத்தனையும் அச்சுவடு தோன்றா தழித்துவிட்டோம்; அன்னவர்க்கு மண்டபங்கள் அங்கங்கே கட்டிவைத்தோம் சொன்னவற்றை மட்டும் தொலைவில் கட்டிவைத்தோம்; 170 நல்லோன் எடுத்துரைத்த நல்ல கருத்தெல்லாம் உள்ளே நுழையாமல் உள்ளத்தைப் பூட்டிவிட்டோம்; தந்தைக்கு நாம்செய்யும் தக்கதொரு கைம்மாறா? சிந்தைக்கும் சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும் தூய்மை கொடுத்துத் தொடர்பு படுத்திஅதை வாய்மை எனஎண்ணி வாழ முயன்றோமா? ஆர்ப்பரிப்பும் பூசனையும் அண்ணல் விழைவதில்லை ஏற்புடைய வாய்மையே என்றும் உகந்திருந்தார்; அண்ணல் நடந்த அடிச்சுவட்டைப் பார்த்ததன்மேல் எண்ணி நடப்போம் இனி. 180 காந்தி நூற்றாண்டு விழா அரூர் சேலம் மாவட்டம்