பாவேந்தம் 14 திரை இலக்கியம் ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 14 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 344 = 376 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 235/- கெட்டி அட்டை : உருபா. 345/- படிகள் : 1000 நூலாக்கம் : திருமதி வ. மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : திருமதி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளை யில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! பாரதிதாசன் பெற்ற பேறு ‘பாவேந்தத் தொகுதிகளை ஒரு சேரப் பதிப்பிக்கப் பெற்ற பேறு! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டு கோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர் வெள்ளித் திரையில் பாவேந்தர் உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலை என்று திரைப்படக் கலையைப் பற்றிக் குறிப்பிடும் பாவேந்தர் பாரதிதாசன், சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச் சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும் என்று படத் துறையின் நோக்கத்தையும் விளக்கிப் பாடியுள்ளார். இலக்கியம், இதழியல், அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் திறமை படைத்தவராகத் திகழ்ந்த பாவேந்தர், திரைப்படத் துறையிலும் தம் ஆற்றலை வெளிப்படுததியுள்ளார். கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை என்று இலக்கியத் துறையின் பல்வேறு நிலைகளிலும் ஈடுபட்டதைப் போன்றே திரைப்படத் துறை யிலும் திரைக்கதை-வசனம் பாடல்கள் , விமர்சனம், தயாரிப்பு என்று எல்லாப் பிரிவுகளிலும் முனைந்து தம் முத்திரையைப் பதித்தவர் புரட்சிக் கவிஞர். வடுவூர் துரைசாமி அய்யங்காரின் கதையான பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்னும் படமாகும். டி.கே.எ. சகோதரர்கள் தயாரிப்பான இப்படம், ஸ்ரீ இராமானுஜர் வெளி வருவதற்கு ஓராண்டு முன்பே 1937ஆம் ஆண்டிலேயே வெளிவந்து விட்டது. எனவே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் எழுதி, முதன் முதலில் வெளியான திரைப்படம் என்ற பெருமையைப் பாலாமணி அல்லது பக்காத் திருடன் பெறுகின்றது. திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி, அதனால் பேரும் புகழும் பெற்றுக் கவிஞர் ஆனவர் அல்லர் நம் பாரதிதாசன். தம் பாட்டுத் திறத்தாலே சமுதாய விழிப்புணர்ச்சி ஊட்டி, அதன் மூலம் புரட்சிக் கவிஞராய்ப் புகழ் பெற்றவர். திரைப்படங்களால் பாரதிதாசனுக்கு விளம்பரம் வரவில்லை. ஆனால் பாரதிதாசனால் திரைப்படங்களுக்கு விளம்பரம் கிடைத்தன. திராவிட இயக்கத் தலைவர்களில் முதன் முதலாகத் திரைப் படத்திற் கென்று கதை வசனம் பாடல்கள் எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும். 1947ல் வெளிவந்த ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழிலேயே மிக நீளமான படமாகும். நடைமுறையில் நம்ப முடியாத, பல கற்பனைகள் கொண்ட ஒரு திரைப்படத்துக்குள் அடக்க முடியாது என்று கருதியிருந்த ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி கதையைச் சுருக்கி, அதன் சுவை குன்றாது திரைக்கதை வசனம் எழுதி வெற்றிப் படமாக உருவாக்கிய பெருமை பாவேந்தரையே சாரும். அந்தப் படத்தின் வெற்றி பகுத்தறிவு இயக்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புராண. இதிகாசங்களை முழுமூச்சில் எதிர்க்கும் பாரதிதாசன், அம்மாதிரியான கதைகளுக்குப் பணியாற்றலாமா? என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பாரதிதாசன், மக்களிடைய மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத்துறையில் ஒரு நுழைவு ஏற்படுத்தி இருக்கிறேன். பிராண நாதா, வாமி, சஹியே தவசிரேஷ்டரே போன்ற சொற்களை நீக்கி அருந்தமிழில் அத்தான், தோழி, குருவே என்று அழைக்க வைக் கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டு வந்தவர்களைத் தமிழ் அறிந்த இரக்க சிந்தை உடையவராகப் படைத்திருக்கிறேன் இந்தத் தொடக்க நிலை யில் இதைத் தான் செய்யமுடியும் இன்னும் முன்னேறி முற்போக்கு கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்க முடியும் என்று அவர்களுக்குப் பதிலளித்துத் தம் நிலையை விளக்கியுள்ளார். பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்று எதிர்பாராத முத்தம். இக் காவியத்தை பொன்முடி என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சு 1950 இல் கவிஞரின் திரைக்கதை வசனத்துடன் திரைப்படமாக வெளியிட்டது. பின்னர் 1952இல் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான வளையாபதியை சேலம் மாடர்ன் தியேட்டர்சு புரட்சிக் கவிஞர் கதை வசனம் பாடல்களுடன் வெளியிட்டது. இப்படத்தில் வளையாபதியாக நடித்த ஜி.முத்துக்கிருஷ்ணன் பாவேந்தரது வசனங்களைப் பேசியதன் பயனாக, இவர் பிற்காலத்தில் வளையாபதி முத்துக்கிருஷ்ணன் என்று படப்பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்டார். வளையாபதி படத்திற்குப்பின் பாரதிதாசன் திரைப்படத்திற்கென்று பாடல் எழுதுவதை முற்றாக நிறுத்திக்கொண்டார். முன்னரே வெளி வந்த கவிதைத் தொகுதிகளிலிருந்து ஏதேனும் ஒரு பாடலை, தங்களது படங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தார். பாவேந்தர் திரைப்படத்திற்கென்று பாடல்கள் எழுதிய படங்கள் 1. பாலாமணி அல்லது பக்காத் திருடன் (1937) 2. ஸ்ரீராமானுஜர் (1938) 3. கவி காளமேகம் (1940) 4. வளையாபதி ( 1952) 5. பெற்றமனம் (1960) பாரதிதாசன் கவிதைத் தொகுதியில் இருந்து இடம் பெற்ற பாடல்கள் 1. பொன்முடி (1950) (வெண்ணிலாவும் வானும் போல) 2. ஓர் இரவு (1951) (துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ) 3. கல்யாணி (1952) (அதோ பாரடி) 4. பராசக்தி (1952) (வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிடநாடு) 5. பணம் (1952) (பசியென்று வந்தாள் ஒரு பிடிசோறு) 6. அந்தமான் கைதி (1952) (அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்) 7. என் தங்கை (1952) (காதல் வாழ்விலே மகிழ்ந்தோம் கவலை தவிர்ந்தோம் 8. பூங்கோதை (1953) (தாயகமே நீ வாழி) 9. திரும்பிப் பார் (1953) ( பாண்டியன் என் சொல்லை) 10. ரத்தத்கண்ணீர் (1954) (ஆலையின் சங்கே நீ ஊதாயோ) 11. என்மகள் (1954) (எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்) 12. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954) (வெண்ணிலாவும் வானும்) 13. கோமதியின் காதலன் (1955) (நீலவான் ஆடைக்குள் ) 14. ரங்கோன் ராதா (1956) (தலைவாரிப் பூச்சூடி) 15. குலதெய்வம் (1956) (கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே) 16. நானே ராஜா(1956) (ஆடற்கலைக்கழகு தேடப் பிறந்தவள்) 17. பஞ்சவர்ணக் கிளி (1965) (தமிழுக்கும் அமுதென்று பேர்) 18. கலங்கரை விளக்கம் (1965) (எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்) 19. சந்திரோதயம் (1966) (புதியதோர் உலகம் செய்வோம்) 20. மணி மகுடம் (1966) (கொலை வாளினை எடடா!) 21. நம்மவீட்டுத் தெய்வம் (1970) (எங்கெங்குக் காணினும் சக்தியடா) 22. நான் ஏன் பிறந்தேன்? (1972) (சித்திரச் சோலையிலே) 23. பல்லாண்டு வாழ்க (1975) (புதியதோர் உலகம் செய்வோம்) 24. கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978) (காலையிளம் பரிதியிலே) 25. நிஜங்கள் (1982) ( அம்மா உன்றன் கைவளையாய் ) 26. புரட்சிக்காரன் (2000) (தூங்கம் புலியைப் பறை) உங்களுக்கு ஏன் இந்த சினிமா ஆசை? என்று பாவேந்தருக்கு நெருக்கமான பலரும் அவரிடம் வினவினர். அதற்குப் பாரதிதாசன் பதில் அளிக்கையில் இந்தத் திரைப்படத்துறை ஓர் ஆற்றல் வாய்ந்த துறை. இதன் மூலம் அறிவார்ந்த சிறந்த கருத்துக்களை மக்களிடம் எளிதில் பரப்ப முடியும். இந்தத் துறையை நாம் கைப்பற்றவேண்டும். இதன் மூலம் பணம் வந்தால் சென்னையின் மையமான பகுதியில் ஓர் அறிவா லயத்தை நிறுவவேண்டும். தலை சிறந்த தமிழ நூல்களெல்லாம் அங்கிருக்க வேண்டும். உலக மொழிகளில் அவை மொழிபெயர்க்கவேண்டும். அது போன்றே உலகத்தின் சிறந்த இலக்கியங்களெல்லாம் தமிழில் தரப்பட வேண்டும். அந்த ஆசையில்தான் இந்தப் படத்துறையில் ஈடுபடுகிறேன் என்று சொன்னாராம். (திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பிய சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் பொன்னடியான் கூறியது.) தாம் எழுதிய திரைக்கதை வசனங்களில் வடசொற்களை நீக்கி, வளமான தமிழ் நடைக்கு வித்திட்ட பாரதிதாசனின் தமிழ்த்தொண்டு போற்றற்குரியது. கலைகளில் மிகுபயன்விளைவிப்பது திரைப்படம் என்பது பாரதிதாசன் கருத்தாகும். திரைப்படம் மூலம் சமூதாயத்தில் மிகப் பெரிய மாறுதலை உருவாக்க முடியும் என்பது பாரதிதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். திரைப்படத் துறையை ஒரு சாக்கடை என்று புறக்கணிக்காமல் அதைப் பலரும் போற்றுகின்ற இலக்கியமாக மாற்றவேண்டும் என்று நினைத்தார். இலக்கியவுலகில் ஈடிணையற்ற எவ்வளவோ சாதனைகளைப் புரிந்த பாவேந்தர், வெள்ளித்திரையில் தம் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் மறைவுற்றார். 1963 : பாரதியார் வாழ்க்கையைப் படமாக்க முயற்சி. பலன் அளிக்க வில்லை 21.4.1964: பாவேந்தர் இறப்பிற்குப் பின் 1965 : பஞ்சவர்ணக்கிளி, கலங்கரை விளக்கம்; 1966: சந்திரோதயம்; மணிமகுடம்; 1970 நம்ம வீட்டுத் தெய்வம்; 1972 நான் ஏன் பிறந்தேன் 1975: பல்லாண்டு வாழ்க 1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை 1984: நிஜங்கள்; 2000 புரட்சிக்காரன் ஆகிய படங்களில் பாரதி தாசனின் பாடல் பயன்பட்டன. இன்னும் தொடரப்போகின்றன... - முனைவர் மு. சாயபு மரைக்காயர் தொகுத்த பாரதிதாசன் ஆய்வுக்கோவை (1990) எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.  ghntªj®! கண்ணைஇமை காப்பதுபோல் தமிழைக் காக்கும் கடப்பாடு தமிழர்க்கு வேண்டும் என்ற உண்மையினை யாவர்க்கும் விளங்கச் சொன்னார்! ஒண்டமிழ்க்கு வாழ்வதுவே வாழ்வாம்! அன்றித் தன்குடும்பம் தானென்று வாழும் வாழ்வு சாவுக்கே ஒப்பாகும் என்றார்! அந்தப் பொன்மொழிகள் நெஞ்சத்தைப் புதுக்கு மாயின் புதுமலராய் மணக்கும்நம் தமிழர் வாழ்வு! மொழியழிந்தால் இனமழியும் அந்த நாட்டின் முன்னேற்றம் தவிடுபொடி யாகும்! மேலும் பழிநேரும் வாழ்விலென அந்த நாளில், பக்குவமாய்ப் பாவேந்தர் பகர்ந்த தெல்லாம் இழிவுதனைத் துடைப்பதற்கே யாகும்! நம்மை ஈன்றதாயே தடுத்தாலும் மொழியை வீணே பழித்தோரை விட்டுவிடக் கூடா தென்ற பாடத்தைப் பயிற்றுவித்தே எழுச்சி தந்தார்! - கடவூர் மணிமாறன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1 : இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி - 2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஒருநாள் நிகழ்ச்சி) இரண்டாம் பகுதி (விருந்தோம்பல்) மூன்றாம் பகுதி (திருமணம்) நான்காம் பகுதி (மக்கட்பேறு) ஐந்தாம் பகுதி (முதியோர் காதல்) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10 : உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரஸ்புடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (தீபாவளி) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (முத்துப் பையன்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஒரு காட்சி சிறு நாடகம்) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் ஐ & ஐஐ 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா 1. ஆக்கம், 2. தீவினை 7. கொய்யாக் கனிகள் (கவிதை நாடகம்) தொகுதி -12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி -13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (செவ்வாயுலக யாத்திரை) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (விதவைகள் துயர்) 14. திருந்திய ராமாயணம்! (பால காண்டம் - டெலிபோன் படலம்) 15. இதயம் எப்படியிருக்கிறது? (ஏழைகள் சிரிக்கிறார்கள்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (மான்களின் ஒற்றுமை கண்டு அஞ்சி இறந்தது) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (னுசைநஉவடிச)யின் தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (அவளும் நானும்) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. “வாரி வயலார் வரலாறு” அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி -14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி -15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி -16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி -17 : பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி -18 : பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி -19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி -20 : கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி -22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி -23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி -24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் (தொகுதி 23இன் தொடர்ச்சி) 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி -25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (நெடுங்கதை) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (சூநபயவiஎந): பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும்வரலாறு x பதிப்பின்மதிப்பு xiv வெள்ளித் திரையில் பாவேந்தர் xvii 1. திரை இசைப் பாடல்கள் 1 திரைக்கதை - வசனங்கள் 59 1. காளமேகம் 60 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 69 3. பொன்முடி 169 4. வளையாபதி 203 5. பாண்டியன் பரிசு 242 6. முட்டாள் முத்தப்பா 247 7. மகாகவி பாரதியார் வரலாறு 251 8. திரைப்படத்தில் மகாகவி பாரதி 426 9. சுபத்ரா 427 10. சுலோசனா 429 திரை இசைப் பாடல்கள் 1. பாலாமணி அல்லது பக்காத் திருடன் - 1937 கோர பாடல் 1. கார்குகா சண்முகா கார்த்திகேயனே கார்குகா முருகா விவேக யோக நாதனே சீர்பெரும் நாதா சேயன்மேல் வாதா சிந்தாகுலம் தவிர்க்க வந்தருள் தயாபரா நிதா குருபர நாதனே குஞ்சித பாதனே கும்பாமுனி முதலோர் கும்பிடும் தயாபரா நிதா ...* *gl நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீ அது சுட்டப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்களால் இணைக்கப்பட்ட பாடல். சுத்தசாவேரி ராகம் 2. திருவருள் நீ புரிவா யிது தகுதியே ஸ்ரீஜெய பாரதியே ஜெகமிசை சருவலோக தயாபரி நீயே சமத்துவ வாழ்வினைத் தந்தருள் வாயே மருவிய உயிர் நிலையாகிய தாயே மதுரிதம் சேர் தமிழ் மொழியே உயர்வென மதித்து தினம் பிடித்து கடைத்தேறவே (திருவருள் நீ) பூஜிதமே புரிந்தோம் புகழ்பெறவே பூரண ஞான விலாச முந்துறவே தேசியவீர சுதந்திரம் வரவே திகழ்மதியே புகழ் நிதியே கொடுத்தருள் இசை அமுது மிசை பரவும் தேவியே (திருவருள் நீ) பாலாமணி பாட்டு தந்தை தாய் தெய்வமே நீரே மெட்டு 3. சந்தோஷ வாழ்வினைப் பெறுவாய் சஞ்சார உலகமே விரைவாய் நிந்தை மெலிவு நலி தீர்ந்து நிரந்தரம் சுதந்திரம் வாய்ந்து மைந்தர் சமத்துவம் சார்ந்து வாழிய பேரன்பு கூர்ந்து... தொகையறா சிந்தாத ரத்தமும் சிந்தினார் உன் மக்கள் சிதையாத உடல் சிதைந்தார் சந்ததம் யுத்தமேன் சாவதேன் உன்னுடைமை சகலர்க்கும் பொதுவல்லவோ... (சந்தோஷ...) பரதேசிப் பாட்டு பண்டார விருத்தம் இந்துதான் காபி 4. மண் பெண் பொன் ஈசனையில் நாளெல்லாம் மாயாதே மனதே உன்றன் உண்ணின்றான் எங்கும் உள்ளான் உருவருவாய் இருக்கின்றான் உணருவாய் நீ எண்ணுகின்ற எண்ணமெலாம் விழல் கண்டாய் பெரியபொருள் இருக்கும்போது கண்ணிருந்தும் குருடனைப் போல் உழல்கின்றாய் உழல்கின்றாய் - உண்மை காணாய் சச்சிதானந்தன் பாட்டு 5. நில்லாத இந்த வாழ்வு நீணிலத்தில் யாவும் பொய்யடா- வெள்ள நீரெழுத்தன்றோ இதை விசாரித்துய்யடா பொல்லாத இந்த்ரஜால வித்தை புவனம் யாவும் சொல்லவோ - நித்தம் புகழ்வதற்கே நமசிவாய மந்த்ரமல்லவோ மாதர்கள் போகம் வேண்டாம், மாய்ந்திடாத இன்பம் உண்ண மண்ணில் சாதலும் பிறத்தலும் தவிர்ந்த வாழ்வடா நீதர் யாரும் கூறுவார் நிதான உள்ளமே நன்கு நீ கொள்வாய் கிடைத்திடும் பேரின்ப வெள்ளமே பாலாமணி - தாமோதரன் பாட்டு உரைத்திடுவாய் உந்தன் மெட்டு 6. (பாலா) திருமண விஷயமாய் ஒருவித பயமும் சித்தத்தில் கொள்ளாதீர்... அன்பரே நீர் மருமலர் வாசம் வன மிழந்திடுமோ வழுத்துவீர் இது *ததியே நவநிதியே (தாமோ) தனியொரு மகிழ்ச்சியைத் தந்ததுன் வார்த்தை தருவேன் உனக்குப் பரிசே - பெண்ணரசே இனி இதற்கிணையாம் இப்புவி வரினும் இம்மியும் பெரிதன்றே, குணக்குன்றே (பாலா) உமக்குறும் மகிழ்ச்சிபோல் உன்மீதில் எனக்கும் உண்டென்றன் அன்புடையீர், அறிந்திடுவீர் அமைவுற வாழ்வினில் நாமினி மேலே அன்புயர் பதம் வகிப்போம் நன்று சுகிப்போம். கோபால முதலி பாட்டு அருமை நேசா மெட்டு 7. சகலமும் முடிந்ததினி தவறொன்றும் இல்லை நமக்கேதினித் தொல்லை என் சாகசத்திற் பாலாமணி வசம் ஆயினாள் அன்றோ முடியாததும் ஒன்றோ? எனைவிடப் பாக்கியவான் இங்கினி இல்லை - நீ நம்பிடென் சொல்லை நமக்கேதினிக் கடன் வாய்ந்தது திடன் யோசனை ஏனோ - முழு மூடனும் நானோ பாலாமணி பாட்டு ராகம் கல்யாணி பாக்யசுந்தரி மெட்டு 8. காத்தருள் புரி தேவி இது தருணமே பூத்திடும் பூம்பதமே புகலிடமாய் நிதமே தோத்திரம் செய்தேன் அம்மே துயர்தவிர் அமுதமே சரணம் வானவர் மாமுனிவர் அநுதினம் மேவி வாழ்த்தி வணங்கிடுவார் திருவடி தாவி தீனதயாபரியே கதியில்லை கூவித் தெரிவித்தேன் என் குறை நான் ஒரு பாவி வேதவல்லி பாட்டு போவோம் வா இந்நேரமே என்ற மெட்டு 9. வாசத்தென்றல் வீசுதே, பூங்காவனக் கிளி பேசுதே விலாச மலர்த்தடாகமே - வெண்தாமரஸ வியூகமே தொகையறா கூசாத மங்கைபோல் வெண்முல்லை முத்துநகை கொள்ளுதிங்கே கோகிலம் பண்பாட வண்டெலாம் சுருதிசெய்த தோகை மயில் ஆடல் விந்தை மாசூத பாடல் விருக்ஷங்கள் தூவிடு மலர்க்குலம் கண்கவருதே தொடர் பாட்டு மான் ஓடுதே சிங்காரமான பக்ஷிஜாலம் யாவும் தேனான காதல் இன்பம் தேரும் காட்சி புகழ்வதோ தாமோதரன் பாட்டு ஏதினிமேல் மெட்டு 10. வதையெலாம் மாமலைபோல் வாய்ந்திடல் ஆனேன்-அந்தோ காதலாம் நெஞ்சே - கனிரசம் கேட்டாய் கனலிடை நீதான் - சாதலோ - சாதல் - அந்தோ அன்பு செய்தார்க்கு நன்மை உண்டென்றார் அதுவும் பொய்தானோ - சதி செய்யப்பெற்றேன் பாலாமணி பாட்டு தன்னந்தனியாய் மெட்டு 11. சிந்தை நோக சுந்தர தேகம் துடித்திடல் ஆனதோ - அறியேனே இந்தக் கொடுமை இழைக்கலாமோ ஐயோ என்ன தொல்லை சகியாத தொல்லை உண்ணும் உணவைப் பறித்த தீயோர் ஊனம் என்ன இழைத்தாரோ அந்தோ வேதவல்லி பாட்டு ஓ மதனா மெட்டு 12. காதலெல்லாம் அவன் மீதிலே - என் அருஞ் சீதள மதியோ அவன் முகம் அறியேனே மாதளம் கவர்ந்தான் என் செய்வேன் நானே சோதி சொரூபன் ஓடி வாரானோ கண்டதும் காதல் கொண்டேனே அவன் மீதில் உண்டியும் வேம்பே ஆனதிப்போதில் தண்டமிழ்ப் பாட்டும் தணலோ என் காதில் தாமோதரன் பாட்டு மகா சோக தன்தாப மெட்டு 13. சதாசோகம் தாளேனே அநீதியே இதோ காலில் மீளாத தனையாள் நொந்தேன் அபராதம் நான் ஒன்றும் செய்தேனில்லை விபரீத விளைவாக நான் வாதை பெறவோ என்னால் தாளல் ஆகாதே அநீதியே மனாதீத மாசோகம் மிகவே பெற்றேன்.. பாலாமணி பாட்டு 14. தேவி நான் பாவியைப் போல் சிறையில் வாசம் செய்யலானேனே அனுபல்லவி மேவிய துயரம் தீரவேண்டி உந்தன் தாள் பணிந்தேனே சரணம் மின்னாமல் என் தலையில் வீழ்ந்ததையோ இடியே வேதனை நான் சகியேன் விடுதலை நீ செய்தருள்வாயே தேவியே கண்ணான காதலரின் கதி எவ்விதம் ஆச்சோ மண்ணான தெய்வநீதி மாதென் அளவில் மாறியே போச்சோ வேதாந்த அய்யங்கார் பாட்டு 15. பணமே உனதொரு மகிமையே மகிமை பாரினில் கோரிய காரியம் நடைபெறும் பணமே உனையே படையாதவர்க்கேது பகர்தரு மதிப்பே கிடையாது (பணமே...) பேசுதே உயர் திருவாசகம் நேராய் பீர் பிராந்தி ஒயின் புட்டிகள் ஜோராய் ஆஷி முதலிய கிளாவர் துருப்புடன் ஆடுதன் ஜாக்கியைப் போடெனக் குஷியாய் (பணமே...) வேதாந்த அய்யங்கார் பாட்டு 16. கண்டு உன்னில் கொண்ட மோகம் வீணா காணாமல் இருப்பேனோ நானோ என்றன் கண்ணாட்டியே ஆசை எனை வாட்டியே ஆனந்தம் கொடுப்பதுன்பேட்டியேஹாஹா... (கண்டு) வேதாந்த அய்யங்கார் பாட்டு 17. பாவையே உன்மீதினிலே கொண்ட ஆவல் தீருவேனோ ஆவல் தீருவேனோ - நான் அதிர்ஷ்டசாலிதானே நானோர் அதி கோவை இதழ் அமுதாலோர் அரு முத்தம் தேவி நீயே தருவாய் தேவி நீயே தருவாய் எனை மேவி பாங்கு வருவாய் விரைவாய் (மேவி பாங்கு...) இரவும் பகலும் ரதி உன் உருவம் பரிவுடனே வந்தெனையே மருவும் பாவை நீயே வருவாய் எனை மேவி இன்பம் தருவாய் விரைவாய் (மேவி பாங்கு) பாவேந்தரின் கடிதம் ஜனநாயகம் ஆசிரியர், தோழர் திருமலை சாமியும், தோழர் எ.வி. லிங்கமும் என்னை ஒன்றில் கட்டுப்படுத்த உரிமை யுடையவர் கள். மேலும் அவர்கள் ஈரோடு ஷண்முகா நந்தா டாக்கி கம்பெனியா ருக்கும் நண்பர்கள். நான் பாலாமணிக்குப் பாட்டு எழுதவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். டாக்கீகாரர்கள் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். ஈரோடு சென்றேன். பாலாமணிக்குடையவர் கதா சந்தர்ப்பங் களைச் சொல்லிப் பாட்டுக்கள் மாத்திரம் எழுதக் கட்டளையிட்டார்கள். என் வாலை அவிழ்க்கச் சந்தர்ப்பமே இல்லை. அவ்வாறே பாட்டுக்கள் மாத்திரம் எழுதிக் கொடுத்தேன். நான் வீடு திரும்பும்போது, பாலாமணியுடையவரை நோக்கி, பிரதானமாகக் கேட்ட வரம் ஒன்றே ஒன்று. அண்ணா சம்ப்ரதாயப்படி பாலாமணிப் பாடல்களைப் புத்தக மாக நீங்கள் அச்சடிக்கும்போது அதில் பிழையில்லாதிருக்க என்னை யும் கலந்துகொள்ளுங்கள். அவ்வாறே வரம் கிடைத்தது. பிறகு பாலாமணி வெளிவந்தது. எனக்குக் கொடுத்த வரத்தை உடனே உறிஞ்சிக் கொண்டார்களாதலால் லக்ஷணத்தின் எதிர்முனையில் பாட்டுப் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அது மாத்திரமல்ல. நான் எழுதிய பாடல்கள் சில நீக்கப்பட்டும், வேறு பாடல்கள் சில சேர்க்கப்பட்டும் இருப்பதைப் பார்த்தேன். அது பற்றி ஒன்றுமில்லை. இன்னின்ன பாடல்கள் இன்னின்னாரால் எழுதி யவை என்பதைக் குறிக்க வேண்டியது அவசியமல்லவா? அப்படிச் செய்யாமல் வேறொருவர் எழுதிய பாடல்களுக்கு, இடப் பக்கமாக * இக்குறி வைத்ததோடு நின்றார்கள். மேலும் அப் புத்தகத்தில் அச்சுப் பிழையில்லாத இடம் அருமையாகிவிட்டது. முதலாளிகட்கு இதில் கவலையிருக்க வேண்டியது அநாவசியமாகத் தோன்றலாம். இருந் தாலும் அவர்களின் இச் சட்டம் அக்கரமமானதும் நாணயமற்றதுமாகும். நான் விழுப்புரத்தில் பாலாமணி பார்க்கப் போனேன். அங்குத் தோழர் மிக் சேட் அவர்களைக் கண்டேன். இப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என்று கேட்டேன். அவர் கம்பெனியின் சார்பாகச் சொல்லிய பதில்கள் ரசமானவை. பாலாமணிக்குடையவர்கள் விரும்பியபடி நான் கோரஸாக எழுதிய பாடல் இது: ஸ்ரீ பாரத தேவி! புராதனியே! எழில் அன்னைநல் வீராவேசம் தீராக் காதல் மேவச் செய்தாய் என்னை! உதாரி ஜெயசீலி! காவேரி கங்கா தீர நாரீப்ரபல ஹிமய கிரி தேஹி கோடானு கோடிப் போர்வீரர் தங்கள் புனித வளமுடைய நிலத்தலைவி! முதல்வியே! அமுதுபோல் கவிதைகள் ஆர்ந்த சாந்தமுகி வாழி! இதை நீக்கி - ‘fh®Ffh õ©Kfh’ என்று, தொடங்கும் ஓர் பாட்டைச் சேர்த்ததற்கு என்ன காரணம் என்றேன். ஷண்முகாநந்தா டாக்கி என்று கம்பெனிக்குப் பேர் வைத்திருப்பதால் கோரஸிலும் ஷண்முகம் என்று வரவேண்டுமாம். காப்பாற்று குகா என்ற பொருளில், கா குகா என்று எழுதாமல் கார்குகா என்று எழுதுவதும், பாடச் செய்வதும் பிழையல்லவா? காரால் பிழை மொழியால் துவக்குவதுதானா மங்களகரம்? சரி போகட்டும். வேதவல்லியை நோக்கி, சச்சிதானந்தன் பாடும் மதுரித மொழியுடை யாய் ஒரு வார்த்தை சொல்வாய் என்று தொடங்கும் என் பாட்டை நீக்கியதற்குக் காரணம் கேட்டேன். சச்சிதாநந்தனாக நடிக்கும் ஸ்ரீ கருணாலய பாகவதர் அந்தப் பாட்டை வெகு இனிமையாகப் பாடி விடுவாராம். அதனால் வேதவல்லி நடிகைக்குக் குறைவு ஏற்பட்டு விடுமாம். முதலாளிக்கு வேண்டிய பேர்வழியைவிட வேறு பேர்வழி அழகாய் இருந்துவிட்டால், அந்த அழகனின் மூக்கை முதலாளி வெட்டிவிடலாம் என்று ஓர் சட்டம் உண்டாகாமல் இருப்பதுபற்றி வருத்தப்படாதிருக்க முடியுமா? - பாரதிதாசன் இதழ்: சினிமா உலகம், 19.9.1937  2. ஸ்ரீராமானுஜர் - 1938 கோர பாடல் ராகம் - மோகனம் தாளம் - ஏகம் வாழிய எழில் பாரத நிலம் வாழியவே பாரத வீரர் சமூகம் வாழிய எழில் பாரத நிலம் மலை உயர்வினில் நதிகளினால் வனவயல் விளைவினில் மதுரித கனிதரும் மரம் நறு மலரினில் உயரிய தாய்நாடு நமது வாழிய எழில் பாரத நிலம் சூழ்பல கோடி மக்களும் சோதரர் - என நாம் உணர்வடைகுவோம் உணர்வடைகுவம் எதிர் எவர் உளர் புவிமேல் வாழிய எழில் பாரத நிலம் மாமுனிவர் தீரர் அரசரெலாம் வாழ்ந்தனர் நமை ஈன்றருளினர் தூய்மை தவிர் விரோதிகள் எனில் தோள் உயர்த்துவோம் நாம் புதுநிலைபெற புதுநிலைபெற அறமுதைவிட வாய்மையால் வாழிய எழில் பாரத நிலம்... நாரதர் பாட்டு ராகம் - சாமா ஆதி தாளம் ஹரிபஜனை மெட்டு 2. கேட்பதெல்லாம் ஹரிகேசவன் பேர் - இங்கு கிடைப்பதெல்லாம் கிரி எடுத்தவன் சீர் கேட்பதெல்லாம் ஹரிகேசவன் பேர் - இங்கு... வேட்பதெல்லாம் திருவைகுந்தமே, நெஞ்சில் விளைவதெல்லாம் பரமானந்தமே கேட்பதெல்லாம் ஹரிகேசவன் பேர் இங்கு... வரரங்கர் பாட்டு ராகம் - இந்துதானி சர்வலகு தாளம் 3. யோகி தேகநிலை சோகமாகுதே... அழைக்கச் சென்ற அடியார் இன்னும் வராததேனோ வருந்துராரே அன்பர் குருவாம், நாதனே ஆளவந்தார் வாமியே (யோகி...) பக்த ரக்ஷகா, ஹரே முகுந்தா மாதவா, கேசவா, சர்வேவராகாஞ்சிவரதா,கானப்ரியாகருணைசெய்யேன்..m‹g® தேகநிலை சோகமாகுதே... ராமானுஜர் பாட்டு ராகம் - ஹம்ஸநாதம் ஆதி தாளம் பண்டுரீதிகொலு என்ற âயாகராஜர்gடல்bமட்டு4. ஓர் அணுவினை மேரு ஆக்குவாய் ஓதநீர்க்கடல் வற்றவும் செய்வாய் ஓர் அணுவினை மேரு ஆக்குவாய் தீரர் ஆக்குவாய் நீ ஆளாக்குவாய் ஸ்ரீமாதவா எவையும் செய்வாய் ஓர் அணுவினை மேரு ஆக்குவாய் ஓலம் இட்ட யானைக் கோடி தீமை தீர்த்தாய் உன்றன் கோயில் தன்னில் என்னைச் சேர்த்தனை ஞால ரக்ஷகா கருணையை வியந்தேன் நாலு வேதம் கான மூல ஸ்ரீ கோபலா ஓர் அணுவினை மேரு ஆக்குவாய் பஜனைப் பாட்டு ராகம் - இந்துதான் காபி ஆதிதாளம் ஏவாக்கிய சீதா என்ற மெட்டு 5. கோவிந்த ராஜா ஹரி முராரி ஆள்வாய் என்னை தேவகிபாலா த்யானானந்தா வைகுந்தா (கோவிந்தராஜா) ப்ரியவைஷ்ணவ ஜோதி, எனக்கருள் பாலிப்பாயே ப்ரேமநீ யாவும்நீ லக்ஷ்யம்நீ ப்ராணன்நீயே ஞானசோபன ஸ்ரீதரவேணு கான கோவிந்த ராஜா ஹரி முராரி ஆள்வாய் என்னை வரரங்கர் பாட்டு ராகம் - புன்னாகவராளி ஆதி தாளம் கனகசைல என்ற மெட்டு 6. வாராயோ கண்ணா, நீல வண்ணா கண்யா வாய்மையாளர் மித்ரா, விசித்ரா அனுபல்லவி ஹாரசுகிர்த துளசி தாரி, அதி விரைவிலே அருளே அமுதம் பெருகும் பார்வையில் ஓர் புறம் அண்டிடும் விதமே அழை யென்னை விஜய சுந்தரா வாராயோ கண்ணா நீல வண்ணா கண்யா சரணம் ராம கூர்ம ஸ்ரீவராக சிம்ஹா பரம கிருஷ்ண ஹே பரசுகோவாமனா நேமமச்ச புத்தாத்புத சாட்சாத் சகலலோக சரண்யா வாராயோ கண்ணா, நீல வண்ணா கண்யா வாய்மையாளர் மித்ரா, விசித்ரா வனஜாக்ஷி பாட்டு ராகம் - கானடா ஆதிதாளம் தேசந்தோ என்ற மெட்டு 7. மாதவனே கருணாகரனே ஸ்ரீ மாதவனே கருணாகரனே அனுபல்லவி பாதமலரது வேறாதாவறியேன் சீதளநயனா காவாயோ சரணம் தீனரக்ஷகனே திருமார்பகனே ஜகத்காரணனே ஹரியே கேசவ ஞானலோலா அருள்தாராய் வனஜாக்ஷியும் வரரங்கரும் பாட்டு ராகம் - கரஹரப்ரியா ஆதி தாளம் சரவதி கீர்த்தனை 8. மனிதர்கள் சமமே என்று சொல்வோம் வளரும் பேதத்தை வெல்வோம் அனுபல்லவி கனிபோலே தேனைப்போலே காகுத்தன் திருப்பத சுகம் பெறுவோம் சரணம் வாத்சல்யம் வேண்டும் பொறுமை வேண்டும் வாய்மை வேண்டும் பொதுஜன நலமே காத்திட அனுதினம் உழைத்திட வேண்டும் கதிபெற இவையெலாம் வேறென்ன வேண்டும் ராமானுஜர் பாட்டு ராகம் - கேதாரம் ஆதி தாளம் 9. வந்தால் வரட்டும் எனக்கே - திரு மறையருளியபடி எழுவித நரகமும் அனுபல்லவி இந்த லோக மக்கள் யாவர்க்கும் மோக்ஷம் இருப்பதென்றால் மந்த்ரம் உரைப்பது தவறேன் சரணம் இவ்வுடல் பெற்ற பயன் யாவர்க்கும் நலம் செய்தல் யாவரின் நோக்கமும் மோக்ஷமுற்றே உய்தல் திவ்ய மூலமந்த்ரம் செப்பிய இப்பிழைக்கே ஸ்ரீகுருபத மலர்உளம் கொண்டேன் தழைக்க திருவாலிமங்கை பாட்டு ராகம் - ஹிந்தோளம் ஆதி தாளம் மனசுலோனி மெட்டு 10. எப்பக்கஞ் சாமி விலகச் சொன்னீங்க இத்தே கேளுங்க கோவிச்சுக்காதீங்க எப்பக்கஞ் சாமி விலகச் சொன்னீங்க அனுபல்லவி இப்பக்கம் கண்ணபுரம் இருக்குங்க எதிர்பக்கத்திலேயோ திருமணக்கொல்லை எப்பக்கஞ் சாமி விலகச் சொன்னீங்க சரணம் ஒங்கப்பக்கம் வந்தா ஒத்திக்கோன்னுவீங்க ஒதுங்கிப் போயிட்டாலும் திருமங்கை மன்னர் அய்யங் கோவிந்தன் ஆகாசத்தே அடிமை கேட்ட கேள்வி ஏது பதிலுங்கோ  3. காளமேகம் - 1940 வரதன் தோப்பில் இராகம் - சுத்த சாவேரி தாளம் - சாப்பு 1. வான ஜோதி! சூர்ய தேவா! வா! வாழ்வின் உணர்வே அமுதே நீல வான ஜோதி! சூர்ய தேவா! ஞான நாதா ஆதி தேவா நாடும் உயிரே ஒளியே நீல வான ஜோதி! சூர்ய தேவா! 2. மோகனா வீட்டில் இராகம் - இந்துதான் காபி தாளம் - ஆதி 2. தகதக தேஜோந்மய தேகன் தியாகன், கவிதா மோகன் மாரன் தீரன் தமிழ் யூகன் தழுவிட இனிதாம் அழகிய இருதோள் ஜகமதில் அரிதாய் இலகிய குணவான் தரு சுகமதை நான் அடையப்படுமோ பூலோக மாரன் தீரன் தமிழ் யூகன் 3. வரதன் மடைப்பள்ளியில் 3. பூலோகம் எல்லாம் அவள் ரூபம் புதிதாகிய சோபித தீபம் முகமா நிலவா காணேனே முழங்காததென் மணிமொழி தானே மானே நகை சிந்துகிறாள் என்னை மாய்க்க மதுரித மலராம் - மதனது கணைதான் வதை புரிந்திடுதே - மனது நைந்திடுதே சமயமும் வருமோ தழுவிக் கொளவே 4. மோகனா நடனமாடும் போது இராகம் - காம்போதி தாளம் - மிரம் 4. எனதாசைக் குகந்தவன் இவன்தான்டி - சகி தினம் வீதி வருவாண்டி திரும்பி எனைப் பார்ப்பான்டி கன மையல் விளைத்தென்னைக் கண் ஜாடை செய்வான்டி புனை ஆத்தி மலர்த்தாரும் புன்னகை செய்யும் சீரும் அதி நேர்த்தி விழி யோரம் அருளோ மிக அபாரம் எனை ஆளத் தகும் என்றே என் நெஞ்சம் சென்றதன்றே மனதில் சிவனை வைத்தே மறைப்பேனோ உனக்கின்றே எனதாசைக் குகந்தவன் இவன்தாண்டி - சகி தினம் வீதி வருவாண்டி திரும்பி எனைப் பார்ப்பான்டி... பச்சைமாமலை போல் - வர்ணமெட்டு இராகம் - காம்போதி தாளம் - மிரம் 5. வருவதாய் உரைத்துச் சென்ற மலைமகள் குமாரன் வேலன் வருகிறான் சகி, கேள் அன்னோன் மலரடிச் சதங்கை ஓசை முருகவேள் நேர் நின்றாலோ மூளுமே நாணம் தோழி தரும் சுகம் தனை நினைந்தால் சன்ம சாபல்யமாமே இராகம் - ஸஹானா தாளம் – திரிபுடை 6. கையில் பணம் இல்லாமல் கலவி செய்ய வந்தீரோ(கையில்...) கடனானால் எழுந்திரும் வாமி ஐயனே தென் பழநி அருமைக் குமரேசனே அம்மான் மகாளானாலும் சும்மா வருவாளோ (கையில்...) இராகம் - பியாக் தாளம்-ஆதி7. பாடுறேன் நானே - பாடுறேன் நானே பாட்டுப் பாடுறேன் நானேஅடி தேனே ஹா-ஹா-ஹா-அஞ்சுகம் வேலையில்லாமல் தானே ... ... ... சுதி-சுர-லயம் இல்லாமல் தானே சுத்தமாய் பாடுறேன் கேளடி தேனே தம்பூரா தனிலே டொய் டொய் டொய் தாளமும் கையிலே சொய் சொய் சொய் வீணைதனிலே நிதானமாகவே சவ்-வி-வி-வி கொட்டு வரிசையைக் கேட்டுக்கோ - அதைக் கற்றுக்கொண்ட விதம் பார்த்துக்கோ சத்தமில்லாமலே மத்தாளம் தன்னிலே கைத்தாளத்துடனே தகிட தக்க தரிகிட தக தளாங்கு வரதன் கலக்கம் இராகம் - ஹம்சானந்தி தாளம் - ஆதி 8. மதமா? காதலா? மதாபிமானமே பெரிதெனும் விசாரம் மதிதனை மயக்குதே காதலாம் அதிசய வொளி தேன் பாயும் நதி மேலான பதம் யார்தாம் விடுவார் எழில் மோகனா மேல் வைத்த ஆசைதான் மேலானதா எலாம்தரும் பெரும் வைணவ விலாசம் இணையடி பெரிதா மோகனா எனதரும் பொருள் ஸ்ரீகாந்தன் எனை ஆட்கொண்ட பொருள் யாதோ பெரிது? இராகம் - பியாக் தாளம் - ஆதி 9. ஆடிடும் மயில்மிசை ஏறிடும் முருகா ஆதரவாகிட நீ வாராயோ கூடி ஆடலாம் வா அரி மருகா கூவுதல் காதினிலே கேளாதோ வா சரவணனே வழங்கு நற்குணனே ஈவரன் மகனே வாராயோ ஆசையுன் மேலே ஆதலினாலே ஆருயிரே எதிர் வாராயோ நீ வர நினைத்தால் தாய் தடுப்பாளோ நீலமயில் உனைத்தூக்காதோ பூவடியாலே பூமியின் மேலே போகமெலாந் தர வாராயோ மோகனா - தேவி முன் இராகம் - இந்துதான் காபி தாளம் – சாப்பு 10.. தாயே அருள்வாய் அருள்வாய் அருள்வாய் யார் துணை சொல்நீa தூயன்அருமகொள்துரஎன்மீதுநேயம் உறவசெய்யாயோமதமெனும்தடையால் மாதென்னைநீக்க மந்தஹாசiனவிடாnத(தாயே...) வீரி இராகம் - அமீர்கல்யாணி தாsம் -சா¥ò 11. பத்தினித்தனம் புரிஞ்சி போச்சி பட்டப் பகல்போல் போடி - போடி - போடி இத்தனைத் தினங்கள் மறைத்து வைத்தாய் உனது நடத்தையை மூடி - மூடி - மூடி மெத்த விபசாரியடி மேலுக்குச் சமுசாரியடி (பத்தினி...) வரதன் மனம் மாறுதல் இராகம் - கரகப் பிரியா 12. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்று மால் திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு இரண்டுருவு மொன்றா யிசைந்து. தாசிகள் சோபனப் பாடல் இராகம் - பீம்பளா தாளம் - சாப்பு 13.இரு கதலர்சீர்சொல்லி ஆடுவமே - பூங் காவனக் குயில்‘போல்படுவமேசீதநன்மாலைகள் சூடுவமே-நம் தீவிரமாய்ஒன்றுகூடூவமே இருபார்வையும்நர்சந்திப்பாகுதடி- மனப்பான்மையில்தன்சிந்திப்போகுதடிநரிட்டகாதல்ப்ரவாகத்திலே- இவர்நீந்துகின்றார்கள்உற்சாகத்திலேதி›ய காதலர்கயில்விலசமடி- நல்லகனியிதழ்தனில்மந்தகாசமடி ஓதற்கரியதிவர்நசமடி- இவர்உள்ளம்வளியினிற்ப் ரகாசமடி தேவி பக்தன் இராகம் - கௌரி மனோகரி தாளம் – ஆதி 14. எளியேனையாள் உலக நாயகி ஒளிமேனி காட்டி அருள் செய்குவாய் துளி ஞானமும் அணுகா என்னைத் தெளிவே அடையச் செய்குவாய் அன்னை கமழ் தாமரைப்பதம்காட்டுவாய்கலையாகியபால்ஊட்டுவாய்அமுதானசெந்தமிழ்ஞானமேஅடைவித்தல்உன்கடன்தானுமே கருணாகரிஎனைஆதரி கதிவேறில்லைஸ்ரீபராபரி சரணாலயம்என்பாக்கியம் தாயன்றிசேய்க்குண்டோபோக்கிடம்... எளியேனையாள் உலக நாயகி ஒளிமேனி காட்டி அருள் செய்குவாய் காளமேகம் இராகம் - நாதநாமக்கிரியை தாளம்- ஆதி 15. என்ன உதாரம் தேவி எனக்கருள் செய்தாய் இந்த நேரம் சீன்னமதயில் ஒளியைச்சேர்த்தப் செந்தமிழிக் கவியாக்ச செய்தாய் சேய்க்கும்தய்க்கும் உள்ளசொந்தம்தெரியஉன் பாதாரவிந்தம் சேவைசெய்யும் வண்ணம் செய்தாய்பக்கியனானேன் உன்கிருபைக்கே பாத்தியனானேன்ன் கருதார்த்தனனேன் (என்ன உதாரம்) இராகம் - ஆனந்த பைரவி பார்மீது தோன்றும் ஒளிமண்டலமொன்று பர்க்கையிலேர்மீதுவைத்த திருவிளக்காய் பர்க்கையிலே தேர் மீதுவைத்த திருவிளக்காய் அங்குதே விகண்டேன பர்மது கொண்ட அருளோஎனநன் இருக்கையிலேமர்மீதுதர்தொங்கும் மதுரைத்தாள் திறவயைஎன்றேஇராகம் - கல்யாணி முத்தேவி மார்க்கும் முதல்தேவி ஞாலத்து மூலத்தேவி அத்தேவி நான் கொண்ட ஆவலுக்கும் தமிழ் அன்பினுக்கும் ஒத்தே விரைந்து வந்தே என்றன் நாவில் உயிரெழுத்தை வைத்தே விரைந்து கவி பாடுகென்று மறைந்தனளே இராகம் - இந்தோளம் வட்டங் கொடுத்த நிலவோ எனத்தக்க மாமுகத்தாள் சட்டங் கொடுத்தும் புவியாவும் ஆண்டிடும் சக்கரத்தாள் இட்டங் கொடுத்தும் எலாம் கொடுத்துங் காளமேகமெனும் பட்டங் கொடுத்து நடந்தாள் பெரிய பதம் கொடுத்தே. சூரியனைப் பார்த்து இராகம் - தோடி 16. நாணுகின்றேன் என்று தன் முகங் காட்டிடும் நங்கையைப் போல் பேணுகின்றேன் என் தலைமீது உதிக்கின்ற பேரொளியில் பூணுகின்றேன் என்று பொன்னாடை பெற்றனள் பூமடந்தை காணுகின்றேன் அதில் என் அன்னை முக்கணிற்கண் ஒன்றையே. காளமேகம் இராகம் - கானடா தாளம் – ஆதி 17. கொஞ்சும் கிளிகள் பார், கீதங்கள் கேள் கோதைமோகனாநீ... (கொஞ்சும்கிளிகள்...) வஞ்சமாகியபூலோfவாழ்விš நல்வாழ்îகாதšவாழ்வன்றேh தங்கிaஇன்gஉலகிš சஞ்சரிக்f Úவாo பொங்குதேயடிஆனந்தம் பூங்காவனக்குயிலேமயிலே... (கொஞ்சும் கிளிகள்...) களமேகம் விருத்தம் 18. உனைப்பற்றிய கவி நீயே உனக்குப்பின் ஊரிலுள்ளோர் நினைப்பதற்குள்ள அடையாளங்கேள், இந்த நீணிலத்தில் இனிப்புற்ற தேன் அமுதம் தமிழ்ச் சோலை யெழில் நிலவு தனிப்பட்ட உன்னிதழ்போலே சிவந்திடும் தாமரையே. இளவரசன் இராகம் - சங்கராபரணம் தாளம் - ஆதி 19. சுகித்திட வாராயோ சொல்லாய்த் தமிழ் வல்லி சுகம் நீ இன்பம் நீ சர்வமும் நீயடி அகலாத உயிர்க்கானந்த தேகி மாவீரமே வா கவிதா வனிதையே இசை பெருகிடு மொழியே வா என்னுயிரின் ஒளியே உயர்வே உனையலால் கதியிலை அழகே மாத்தமிழர் ஆக்கமே, மானிடர் அறிவாம் உலகத்தின் ஆதிக்கமே நீ விருத்தம் இராகம் - சங்கராபரணம் 20. சீருள்ள வெண்குடை நற்றிருமலை ராஜசிங்க யேறே பேருள்ள உன் குடி நற்பிரதானியர் உற்ற பெரிய சேனை ஊருள்ள மாமக்கள் மற்று நீ உனது மனைமக்கள் யாரும் பாருள்ள காலமும் பன்னலமும் உற்றின்ப முற்ற வாழி * வெள்ளைக் கலை யுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம் வைத்த தாய் * இராகம் - சிம்ஹேந்திரமத்தியமம் கழியுந்திய கடல் உப்பென்று நன்னூற் கடலின் மொண்டு வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வண்கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கி மின்னிப் பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே * இராகம் - கானடா மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென் இச்சையிலுன் சன்ம மெடுக்கவா மச்சாகூர் மகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபாலா மாவா வா * இராகம் - காம்போதி வாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும் தாரணியுமெல்லாம் சலித்தனவால் நாரணனைப் பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த புண்வாயில் ஈ மொத்தபோது * இராகம் - புன்னாகவராளி நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடிமேல் இருக்கும் வெஞ்சினத்திற் பற்பட்டால் மீளாது விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம் * இராகம் - பிலஹரி செற்றலரை வென்ற திருமலைராயன் கரத்தில் வெற்றிபுரியும் வாளே வீரவாள் - மற்றையவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவாள் அவாளாம் * கோளர் இருக்கும் ஊர் கோள்களவு கற்றஊர் காளைகளாய் நின்று கதறும் ஊர் நாளையே விண்மாரி அற்று வெளுத்து மிகக்கறுத்து மண்மாரி பெய்க இந்த வான் * மோகனா இராகம் - இந்துதான் காபி தாளம் - சாப்பு 21. நாதா ப்ரியமான நாதா நாதா குரலோ வீணை சொல்லோ கனிதான் அன்றோ கோபமோ மாமதன் ரூபம், வருக இனிமேல் தாளேனே என் கண்ணாளனே நங்கை உடல் தீயுதே தாமதமே தகாது ப்ரியமான நாதா ப்ரியமான நாதா நாதா மோகனா இராகம் - இந்துதான் கானடா தாளம் - ஆதி 22. வாழ்க்கை உடம்பினில் காதலே ஜீவன் மலரினில் நறுந்தேன் வீணையில் நாதம் தேக்கிய அமுதில் சுவையின் சேர்க்கை தென்றலின் குளிர்ச்சி காதலே அன்றோ யாவுமே அதனால் காதலே ஜீவன் காளமேகம் காதலென்றே முழங்கே நீ முரசே - ஆவி மேவும் ஆண் - பெண் காதலினாலே விளைந்திடும் ப்ராணன் இலையெனில் மேலே வினைதான் ஏது விளைவுகள் ஏது கற்பனா சக்தியும் காதலின் சாயை யாவுமே அதனால் காதலே ஜீவன்    * இக் குறியிட்ட அனைத்துப் பாடல்களும் காளமேகம் தனிப்பாடல்கள் ஆகும். 4. வளையாபதி - 1952 1. வளையாபதி - சத்தியவதி சத்தியவதி : குலுங்கிடும்* பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே வளையாபதி : கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடிவந்த ஜோடிப்புறா கூடி ஆனந்தமாய் கொஞ்சிப் பாடிடுதே பாடிடுதே இன்பம் நாடிடுதே (குலுங்கிடும்) சத்தியவதி : குளிருடன் மாலை வேளை கொள்ளும் நேசம் என்ன சொல்வேன் வளையாபதி : மணமும் தென்றல் காற்றும் ஒன்றையொன்று மருவிடுதே. சத்தியவதி : அன்பால் முல்லைக் கொடி ஓடித் தாவிடுதே ஆனந்தம்நாதா மேவிடுதே வளையாபதி, சத்தியவதி : குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே வளையாபதி : காதலால் இன்ப வாழ்வு கைகூடும் எவ்வுயிர்க்கும் ஆதலாலே மயிலே சத்தியவதி : காதலால் நாமிருவர் * கமழ்ந்திடும் எனக் கவிஞர் இயற்றியதை இசையமைப்பாளர் குலுங்கிடும் என மாற்றிவிட்டார் என்ற கருத்து உண்டு. வளையாபதி : சேர்ந்தே இன்பமெல்லாம் வாய்ந்தே வாழ்ந்திடுவோம் வாழ்ந்திடுவோம் நாமே வாழ்ந்திடுவோம் சத்தியவதி : என்போல் பாக்கியவதி யாருமில்லை உலகினிலே வளையாபதி : இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே வளையாபதி, சத்தியவதி : குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால் வண்டு காதலினால் நாதா தாவிடுதே தாவிடுதே இன்பம் மேவிடுதே 2. வளையாபதி - சத்தியவதி சத்தியவதி : குளிர் தாமரை மலர்ப்பொய்கை கண்டேன் எளிதோ, கிடைப்பது அரிதோ, ஏழை இன்ப வாழ்க்கை இளமை நலமடைந்திடுமோ, வாழ்க்கை இன்னல் எய்தி விடுமோ, அறியேன் சத்தியவதி : கோடையிலே வளையாபதி : கோடையிலே குளிர் ஓடையைக் கண்டேன் வளையாபதி : விளையாடி வந்த அழகே அழகே வேண்டும் எனக்கே சத்தியவதி : குளிர் தாமரை மலர்ப்பொய்கை கண்டேன் வளையாபதி : கோடையிலே குளிர் ஓடையைக் கண்டேன் சத்தியவதி : குளிர் தாமரை மலர்ப்பொய்கை கண்டேன் எளிதோ, கிடைப்பது அரிதோ, ஏழை இன்ப வாழ்க்கை  5. பெற்றமனம் - 1960 1. ஒரே ஒரு பைசா தருவது பெரிசா போடுங்கள் சும்மாபுண்ணியம் அம்மா ஒரே ஒரு வாழை இலை விரித்து வட்டிக்க வேண்டாம் தாள முடியவில்லை தாளாத பசித்தொல்லை ஏழையானால் சாகவா வேண்டும் இரக்கம் வையுங்கள் என் தொல்லை தாண்டும் ஒரே ஒரு சட்டினிக்கும் இட்டிலிக்கும் கேட்கவில்லை அப்பா பட்டினிக்குப் பல்லைக் காட்டி நிற்பதும் தப்பா எட்டிப்போகச் சொன்னாலே எப்படி முடியும் என்னாலே ஏசாம கையும் கூசாம தாயே... ஒரே ஒரு இல்லாதவர்க்கெல்லாம் இருப்பவர் கொடுக்கலாம் கொடுத்தாலே புண்ணியம் வேறேது கண்ணியம் தொல்லை கண்டும் இல்லை என்று சொல்லாதீர் சோதனை ஆகாது வேதனை போகாது ஒரே ஒரு 2. பாடிப் பாடிப் பாடி வாடி வானம்பாடி பழமா உதடா இது ஆடி ஆடி ஆடி அருகினில் வாராய் அழகாகிய சேரனே பூனைபோல் மியாவ் மியாவ் மியாவ் யானைபோல் பாஹ் பாஹ் பாஹ் இரண்டு பேரும் உருண்டு புரண்டு மகிழ்ந்திட வாராய் ஆலம் பழம் மேலே வேல முள்ளு கீழே அண்ணாந்து பார் அடடடடடா காலில் முள்ளா அய்யய்யய்யோ லால லல்லல லாலா நல்லசோறு சோறு சோறு சோறு மிளகு சாறு - அஞ் சாறு பொரியல் வேறு - பழத் தாறு தாறாய் நூறு குந்தி போடு சப்ளம் குழம்பு மட்டும் தப்ளம் இந்தே பெரிசு அப்ளம் இருக்கும் அதிலே கொப்ளம் இரண்டு முழம் குறுக்கு - நல்ல இனிப்பு போளி பலே கறுக்கு பிரம்பு பெருத்த முறுக்கு போட்டுப் பல்லால் நொறுக்கு... அடடடடடா லட்டு கிடுகிடுன்னு புட்டு மொடா நெய்யெ விட்டு முழுங்கலாம் எம்மட்டு வராதப்பா வாந்தி - நம்ப வடக்கத்தியான் பூந்தி ஒரே கையால் ஏந்தி உள்ளே போட்டால் சாந்தி சீரகச் சம்பா அரிசி திருமால் வடை பெரிசி காரியம் எல்லாம் துரிசே காட்டணும் கை வரிசே புதுத் தினுசாலே காராசேவு போதா விட்டால் என்னைக் கூவு வெதுவெதுப்பா உப்புமா விழுங்கும் போது சக்கரை தூவு சென்னப்பட்டணம் ஓமப்பொடி தின்னாத் தெரியும் ரெண்டு படி இஞ்சியிலே உண்டு நல்ல தொக்குத்தான் - நல்ல எலுமிச்சம் பழம் ஊறவச்ச சுக்குத்தான் பஞ்சாமிருதம் பாயாசமோ தேன் தேன் தேன் அங்கும் பரிமாற இருப்பவனும் நான் நான் நான் 3. மனதிற்குகந்த மயிலே வான் விட்டு வந்த நிலாவே - ஆ உனை நத்துகின்ற எனை நீ உதறாதே அதனால் என் உயிர் போகுமே விரோதமேனோ நின்று கேட்டுப்போ மானே விரைவாய் மணப்பேன் உனை நானே விரைவாய் மணப்பேன் உனை நானே நாம் இருவர் சம்மதித்தால் எந்த நாய்தான் நம்மைத் தடுக்கும் சாமிக்கும் வேலையில்லை, சடங்குகள் காசைப் பிடுங்கிடவும் முடியாது சாதி,மதம், பல சாத்திரம் கோத்திரம் ஜோதிடம் எதையும் நம்பாதே அந்தச் சேதி எல்லாம் பழைய போதை சாதி... பாதகம் வரும் என்று பஞ்சாங்கம் பார்க்காதே நீ தானே என் வாழ்வின் வித்து பாதகம் அடிநான்தானேஉன்காதற்சொத்துவிரோதமேனோநின்னுகேட்டுப்போமானேவிரைவாய்மணப்பேன்உனைநானே விரைவாய்மணப்பேன்உனைநானே... விரைவாய்  6. ஓர் இரவு - 1951 சுசீலா துன்பம் நேர்கையில் யாழ் எடுத்துநீஇன்பம்சேர்க்கமாட்டாயா- vமக்»‹g« nrர்க்கமhட்டாயா அ‹பிலாeஞ்சில்தÄÊல்பாoநீmல்yல்நீக்fமா£டாயா...கண்z அல்லல் நீக்க மாட்டாயா... வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க... நீ அன்றை நற்றமிழ் கூத்தின் முறையினால் ஆடிக்காட்டமாட்டாயா அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது ... ... யாம் அறிகிலாத போது ... ... தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்டமாட்டாயா ... ... நீ இயம்பிக் காட்டமாட்டாயா ... ... சேகர் நீ அன்றை நற்றமிழ் கூத்தின் முறையினால் ஆடிக்காட்டமாட்டாயா ... ... கண்ணே ஆடிக்காட்டமாட்டாயா  7. பராசக்தி - 1952 திராவிட நாட்டுப் பண் வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு (வாழ்க) சூழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறனும் செறிந்த நாடு! (வாழ்க) பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம் கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு! (வாழ்க) அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக் குவியும் கடல்கள் முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய் முல்லைக் காடு மணக்கும் நாடு. (வாழ்க) ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின் சாற்றில் தென்றல் காற்றில் நல்ல ஆற்றல் மறவர் செயலில் பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு! (வாழ்க) திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க இங்குத் திராவிடர் வாழ்க மிகவே இன்பம் சூழ்ந்தே எங்கள் நாடு! (வாழ்க)  8. பணம் - 1952 இன்பம் பசி என்று* வந்தால் ஒருபிடி சோறு புசி என்று தந்துபார் அப்பா! பசி என்று வந்தால்... பசையற்ற உன்நெஞ்சில் இன்பம் உண்டாகும் பாருக் குழைப்பதே மேலான யோகம்! பசி என்று வந்தால் ஒருபிடி சோறு புசி என்று தந்துபார் அப்பா! பசி என்று வந்தால்... அறத்தால் வருவதே இன்பம் - அப்பா அதுவலால் பிறவெலாம் துன்பம்! திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று! பசி என்று வந்தால்...  9. கல்யாணி - 1952 வண்டிக்காரன் அதோ பாரடி, அவரே என் கணவர் அதோ பாரடி! புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி! அதோ பாரடி! இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி ஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டி தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி? சேரனே அவர் என்றால் அதில் என்ன அட்டி? (அதோ பாரடி) ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார் அடிசாயும் முன்னே வரவும் இசைந்தார் அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா ஆசை முத்தம் என்று தந்து நடந்தார் (அதோ பாரடி)  10. அந்தமான் கைதி - 1952 எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? ஒலி என்பதெல்லம் செந்தமிழ் முழக்கம் ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி,வில்,கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை பிற மாந்தர்க்கும் உயிரானதே பெறலான பேறு சிறிதல்லவே! அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?  11. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954 வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே (வெண்ணிலாவும்) வண்ணப்பூவும் மணமும் போலே மகரயாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே - எனது கன்னல் தமிழும் நானும் - நல்ல (வெண்ணிலாவும்) வையகமே உய்யுமாறு வாய்ந்த தமிழ் என் அரும்பேறு துய்யதான சங்கமெனும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை கையிலே வேலேந்தி கடல் உலகாள் மூவேந்தர் கருத்தேந்திக் காத்தார் - அந்தக் கன்னல் தமிழும் நானும் நல்ல....  12. என் தங்கை - 1952 காதலி : காதல் வாழ்விலே இருவரும் : மகிழ்ந்தோம் கவலை தவிர்ந்தோம் - நாம்.... காதலன் : மாதர் என்னும் மலரும் - ஆண் மக்கள் என்னும் வண்டுங்குலவும் (காதல்) காதலி : தென்றலோடு வானும் தேனார் தமிழும் சுவையும் காதலன் : அன்றில் ஆணும் பெண்ணும் இருவரும் : அணைவதான இணையில்லாத மெய்க் (காதல்) காதலி : இளமைப் பருவமிரண்டும் எழில்சேர் உள்ளமிரண்டும் காதலன் : அளவளாவும் போதில் பொழியும் - நல் அமுத மழையில் நனைவதான - மெய்க் (காதல்) காதலி : அலையில் மிதந்து செல்லும் - எழில் அன்னப் படகின் கோலம் காதலன் : நிலையில் நம்மை உயர்வு செய்து இருவரும் : நினைவு முழுதும் இனிமை புரியும் - மெய்க் (காதல்) 2 வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவி மக்களெல்லாம் ஒப்புடையார் ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ - இதை இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ? கூழுக்குப் பற்பலர் வாடவும், சிற்சிலர் கொள்ளை அடிப்பதும் நீதியோ? புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ? சிற்சிலர் வாழ்ந்திட பற்பலர் உழைத்துத் தீர்க எனும் இந்த லோகமே உறுவற்றொழிந்தாலும் நன்றாகுமே! காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன் காணத் தகுந்தது வறுமையோ? அவன் பூணத் தகுந்தது பொறுமையோ? மக்களெல்லாம் சமமாக அடைந்திட மாநிலம் தந்ததில் பஞ்சமோ? பசி மிக்கவரின் தொகை கொஞ்சமோ?  13. பூங்கோதை - 1953 தாயகமே வாழி தாயகமே வாழி! தாயகமே வாழ்க! தமிழ் கேரளம் தெலுங்கு துளுகன் னடமுறு தாயகமே வாழி! அலைமிகு காவிரி வெள்ளம் போலே அறிவொளி சேர்க்கும் கல்வியி னாலே நிலையினில் ஓங்கி வன்பகை வாட்டி நீணிலம் வாயார வாழ்த்தவே எங்கள் தாயகமே வாழி! வான் மீதேற தாய் மணிக்கொடி! வளர்க வீடெலாம் செங்குட்டு வன்கள்! வளமே ஓங்குக! நல்லற மாதர் மகிழ்வே பொங்குக! உலகினில் நமது தாயகமே வாழி!  14. திரும்பிப் பார் - 1953 பாண்டியன்மேல் காதல் பாண்டியன் என்சொல்லைத் தாண்டிப் போனாண்டி பாண்டியன் என் சொல்லை ... ஈண்டு மயலில்நான் தூண்டிலில் மீனாய் மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட - பாண்டியன் என் சொல்லை தமிழிசைப் பேச்சும் செங்கோலோச்சும்; தடக்கை வீச்சும் காதலைப் பாய்ச்சும்; இமைப்பினில் ஓடி அவனைத் தேடி என்னகம் நாடி வாடி போடி - பாண்டியன் என் சொல்லை பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது; வரும்போது பேசா திருக்க ஒண்ணாது; எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல் என்னுயிர் தாவிடும் அன்னவன் மேல் - பாண்டியன் என் சொல்லை  15. ரத்தக்கண்ணீர் - 1954 ஆலைத் தொழிலாளி ஆலையின் சங்கே நீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின் சங்கே நீ ஊதாயோ? காலை முதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே வேலை செய்தாரே என்வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே.. மேலைத் திசைதனில் வெயிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்த என் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும் உன் தொண்டை ஏன் காய்ந்ததே ஆலையின் சங்கே... குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இருநாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல்தேன் பொழியும் ஆலையின் சங்கே... 16. என் மகள் - 1954 இராகம் - சண்முகப்பிரியா தாளம் - ஆதி பல்லவி எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் அனுபல்லவி எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எங்கள் வாழ்வும் சரணம் திங்களோடு செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே! முழங்கு சங்கே! முழங்கு சங்கே! முழங்கு சங்கே! இராகம் - காபி தாளம் - ஏகம் சிங்களம் சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரர் என்று ஊதூது சங்கே பொங்கும் தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு! இராகம் - மோகனம் அட தாளம் வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள் கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரம்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் எங்கள் மூச்சாம், தமிழ் எங்கள் மூச்சாம்  17. கோமதியின் காதலன் - 1955 நிலவு நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை! கோல முழு தும்காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ! உனைக்காணும் போதினிலே என்னுளத்தில் ஊறிவரும் உணர்ச்சிதனை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை! நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  18. நானே ராஜா - 1955 ஆட வந்தாள்! ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள் ஆடாத பொற்பாவை ஆட வந்தாள்; என்னோ டாட வந்தாள்; மகிழ்ந் தாட வந்தாள்! ஆடற்கலை வாடாத தாமரைக்கை வானில் ஒளி தெறிக்க மங்காத செங்காந்தள் விரல்கள் பொருள் குறிக்க ஆடற்கலை ஓடு பிளந்த செம்மாதுளை போல் உதட்டில் உள்ளம் விளைத்த நகை மின்னவும் - காது ஓரத்து வண்டுவிழி ஓடைமலர் முகத்தில் ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும் ஆடற்கலை காடு சிலிர்க்கும்படி மேலாடு முந்தானை காற்றோடு காற்றாகப் பின்னவும் காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து கடிதில் இடைதுவள ஆடியதோ என்னவும் ஆடற்கலை  19. ரங்கோன் ராதா - 1956 தந்தை - பெண்ணுக்கு! தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! தலைவாரி சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி வேளைதோறும் கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? - நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! தலைவாரி படியாத பெண்ணாய் இருந்தால் - கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என் கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு கடிதாய் இருக்குமிப் போது! - கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது! கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு - பெண் கல்வி பெண்கல்வி என்கின்ற தன்போடு! தலைவாரி  20. குலதெய்வம் - 1956 கைம்மைப் பழி தொகையறா இன்ப வருக்க மெல்லாம் நிறைவாகி இருக்கின்ற பெண்கள் நிலை இங்கிவ்விதமாக இருக்குதண்ணே இதில் யாருக்கும் வெட்கம் இல்லை... பாட்டு வெட்கமில்லை வெட்கமில்லை - இதில் யாருக்கும் வெட்கமில்லை.... கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல் சிறந்திடும் பூஞ்சோலை - சீ சீ என்றிகழ்ந்திடப் பட்ட தண்ணே நறுஞ் சீதளப் பூமாலை நாடப் படாதென்று நீக்கி வைத்தார்கள் நலஞ்செய் நறுங்கனியைக் - கெட்ட நஞ்சென்று சொல்லி வைத்தார், எழில் வீணை நரம்பு தரும் தொனியை சூடத்தகாதென்று சொல்லி வைத்தார் - தலை சூடத்தகும் கிரீடத்தை - நாம் தொடவும் தகாதென்று சொன்னார், நறுந்தேன் துவைந்திடும் பொற்குடத்தை... வெட்கமில்லை வெட்கமில்லை - இதில் யாருக்கும் வெட்கமில்லை  21. கலங்கரை விளக்கம் - 1965 சங்க நாதம் சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர்கள் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! தொகையறா திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்! ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்று சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்! - எங்கள்  22. பஞ்சவர்ணக்கிளி - 1965 இன்பத் தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! - தமிழுக்கும் தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! - தமிழுக்கும்  23. சந்திரோதயம் - 1966 புதிய உலகு செய்வோம் புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்! - புதிய அறிஞர்தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய் நறுமண இதழ் பெண்ணே உன் நலம் காணார் ஞாலம் காணார் - புதிய தொகையறா பொதுமக்கள் நலம் நாடி புதுக் ** கருத்தைச் சொல்க புன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் எடுபல வாழ்ந்தால் எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்? - புதிய  24. மணிமகுடம் - 1966 தொகையறா சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறியகதை அதனால், நமக்கெல்லாம் உயிரின் வாதை*! வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே! குகைவாழ் ஒரு புலியே! உயர் குணமேவிய தமிழா! உலகாள உனது தாய் மிக உயிர்வாதை அடைகிறாள்; உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! தலையாகிய அறமே புரி சரிநீதி உதவுவாய்! சமமே பொருள் ஜனநாயகம் எனவே முர சறைவாய்!  25. நம்ம வீட்டுத் தெய்வம் - 1970 எங்கெங்குக் காணினும் சக்தியடா! - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா! - அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுதடா! - ஒரு கங்குலில் ஏழு முகிலினமும் வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள் மந்த நகையங்கு மின்னுதடா! காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை தோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த வைய முழுதும் தொண்டு செய்வேன் - என நீள இடையினின்றி நீ நினைத்தால் - அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே!  26. நான் ஏன் பிறந்தேன்? - 1972 சித்திரச் சோலைகளே! உமை நன்கு திருத்த இப் பாரினிலே - முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே! தாமரை பூத்த தடாகங்களே! உமைத் தந்த அக் காலத்திலே - எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே! ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ? தாரணியே தொழிலாளர் உழைப்புக்குச் சாட்சியும் நீயன்றோ? - பசி தீருமென்றால் உயிர்போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?  27. பல்லாண்டு வாழ்க - 1975 புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் புதியதோர் உலகம் செய்வோம் ... பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம் `இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் - புதியதோர் உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம் ஒரு பொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம்! இயல் பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம் ஈவதுண்டாம் எனில் அனைரும் புசிப்போம் - புதியதோர்  28. கண்ணன் ஒரு கைக்குழந்தை - 1978 காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் - அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டயிடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!  29. நிஜங்கள் - 1982 அம்மா உன்றன் கைவளையாய் ஆகமாட்டேனா அலுங்கிக் குலுங்கி நடக்கையிலே பாடமாட்டேனா? அம்மா... அம்மா.... அம்மா அம்மா உன்றன் காதணியாய் ஆகமாட்டேனா அசைந்து அசைந்து கதைகளினைச் சொல்ல மாட்டேனா? அம்மா.... அம்மா.... அம்மா அம்மா உன்றன் நெற்றிப் பொட்டாய் ஆகமாட்டேனா அழகொளியாய் நெற்றிவானில் மினுங்க மாட்டேனா? அம்மா... அம்மா... அம்மா  30. புரட்சிக்காரன் - 2000 தூங்கும் புலியைப் பறைகொண்டெழுப்பினோம் தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவண் இன்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி, வேல்கொண்டு தாக்குவோம்! பண்டைப் பெரும்புகழ் உடையோமா இல்லையா? பாருக்கு வீரத்தைச் சொன்னோமா இல்லையா? எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா? Nœ¢á* நரிதான் நடுங்கிற்றா இல்லையா? முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா? தமிழர் ஒற்றுமை நிறைந்ததா இல்லையா? தக்கைகள் ஆட்சி சரிந்ததா இல்லையா? தமக்குத் தமிழகம் அடிமையே என்னும் சழக்கு மரவேர் அறுந்ததா இல்லையா?  திரைக்கதை-வசனங்கள் 1. காளமேகம் நடிகர்கள் அகில இந்திய நாதவர வித்வான் டி.என். ராஜரத்னம் ... வரதன், காளமேகம் என்.எ.கிருஷ்ணன் ... கிட்டு ஸி.வி.வி. பந்துலு ... அதிமதுரகவி காளி என் ரத்தினம் ... கந்தப்புலவர் எம்.வி. மணி ... முத்துப்புலவர் எ. முருகேசன் ... அரசன் திருமலைராயன் மாடர் டி.வி. நமச்சிவாயம்... இளவரசன் ஜோக்கர் ராமுடு ... கமலக்கண்ணன் குஞ்சிதப்பாதம் பிள்ளை ... குஞ்சிதப்புலவர் கே.ஆர். வேணுகோபால சர்மா... நட்டுவக்கிழவன் கே.எ. முத்தையா பாகவதர்... தேவிபக்தன் ராமாமிருதசோழகனார்... மணியக்காரன் ஆர்.எ. ராமு, நடராஜன்,எம்.ஏ. பிச்சை பாண்டூரார், டி. தங்கையா, எ. என். சிவக்கொழுந்து, ஸி.ஜி. நம்மாழ்வார் செட்டியார், சகுனிராமசாமிப் பிள்ளை, சுந்தரபாஷ்யம் நாயுடு மற்றும் நூற்றுக்கணக்கானவர். நடிகையர் எ.பி.எல். தனலட்சுமி ... மோகனாங்கி டி.ஏ. மதுரம் ... அஞ்சுகம் பி.ஆர். மங்கலம் ... கந்தப்புலவர் மனைவி பி.எ. ஞானம் ... வீரி டி.என்.ராஜலக்ஷ்மி ... தேவி டி.எம். பட்டம்மாள் ... நடனமாது என்.கே. bபரியபாப்பு ... ர¤d« கே. சுப்புலக்ஷ்மி ... அமுதம் ஜி.எ. சரவதி ... கல்யாணி எம்.ஆர். சரவதி ... பச்சை எ.ஆர். மீனாட்சி, கே.டி. தனலட்சுமி ... இதர தாசிகள் சிறுமி சிட்டாணி ராஜலட்சுமி ... வீரியன் வளர்ப்புப் பெண் மனோன்மணி அம்மாள் ... மோகனாவின்தாய் டைரக்ஷன்... எல்லீ ஆர். டங்கன் வில்லிய«ஜே. மாய்லன் துணைடைரக்ஷன் ... பி.எ. செட்டியார், எ.ஜி. அய்யர் அசிடெண்டு ... எம்.ஏ. கணேசன் கதை, வசனம்,பாட்டு ... புதுவை பாரதிதாசன் சங்கீத டைரக்ஷன் ... ஆ. என். சின்னையா டூடியோ ... பிராக் ஜோதி மோஷன் பிக்சர் பக்க வாத்தியங்கள் ஆர்.என். சின்னையா ... ஆர்மோனியம் எம்.வி. சந்தானமைய்யா .. பிடில் வி.கோவிந்தசாமி ….. பிடில் ஆர்.என். தம்பி ... வீணை கே.வி. நாயுடு ... மிருதங்கம் வி. குப்புசாமிநாயுடு ... கிளாரினட்சாது கணபதிசாதிரி... ஜலதரங்கம்பந்தேகான சாகேப்... சாரங்கி கே. ராமகிருஷ்ண ராவ் ... பியானோ டி.கே. சபாபதி ... ஆர்கன் நகையா ... புல்லாங்குழல் டி.எஸ்.மணி ….. புல்புல்தாரா என். பார்த்தசாரதி நாயுடு ... சாக்போன் தயாரிப்பு ... மதுரை ஸ்ரீதண்டபாணிபிலிம் ஸ்லிமிடெட் சேலம் மோகினி பிக்சர்லிமிடட் பூரணஉரிமை... ஸ்ரீ தண்டபாணி பிலிம் லிமிடெட் மதுரை சிவமயம் காளமேகம் கதைச்சுருக்கம் அதிகாலை. ஸ்ரீரங்கம் பெரியகோவில். பரிசாரக வரதன் மடப் பள்ளியில் தன் தொழிலைக் கவனிக்கிறான். அவன் தோழன் கிட்டு அங்கு வர, அவனுடன் காவேரி நோக்கிச் செல்கிறான். காவிரியாற்றுப் படித்துறை. அடுத்தாற்போல் தோப்பு. திரு வானைக்கா சிவன்கோயில் தாசி மோகனாங்கியும், அவள் தங்கை அஞ்சுகமும், வீரி, ரத்னம், பச்சை, அமுதம், கல்யாணி முதலிய இதர தாசிகளும் நீராடுகிறார்கள். பெண்களின் வம்புப் பேச்சு. பொறாமைக் காரி வீரி கோபத்தோடு வீடு திரும்புகிறாள். வரதன் கிட்டுவோடு தோப்பிலிருந்து பாடுகிறான். அந்த இசை அமுதத்திலேதன்உள்ளத்தைப்பறிகொடுக்கிறாள்nமாகனாங்கி.வரதன் படித்துறைnநாக்கிவருகிறான்.அவனைப்பர்த்தவண்ணம்படிnயறியnமாகனா,கல்தவறிஆற்றில்விழுகிறாள்.வரதன் ஆற்றில் குதித்து அவளைக் கரை சேர்க்கிறான். காதல் பார்வைகள்; கனவு மொழிகள். திருவானைக்கா வீதியுலா. சுவாமி பவனி வருகிறது. மோக னாங்கியின் பரத நாட்டியம். வரதனும் கிட்டுவும் அங்கு வந்து மோக னாவின் நாட்டியத்தை ரசிக்கிறார்கள். காதலர் கண்கள் சந்திக்கின்றன. வரதன், கிட்டு நிற்குமிடம் அஞ்சுகம் வருகிறாள்; இருப்பிடம் கூறுகிறாள்; நாளை வருவதாக வரதன் சொல்கிறான். அடுத்த நாள் வரதனும் மோகனாவும் சந்திக்கின்றனர். காதல் மலர்கிறது. கிட்டு அஞ்சுகத்தைக் காதலிக்கிறான். மோகனா மீது பொறாமை கொண்ட வீரி, மற்ற தாசிகளையும் சேர்த்துக் கொண்டு, அஞ்சுகத்தை சண்டைக்கிழுக்கிறாள்; மோகனாவை மானபங்கப் படுத்தத் தீர்மானிக்கிறாள். திருவானைக்காவில் மார்கழித் திருநாள்; தாசிகள் திருவெம் பாவை பாடுகிறார்கள்; மோகனாவும் மற்றவர்களும் அதைப் பின்பற்று கிறார்கள். அந்தப்பாட்டில் வரும் எம் கொங்கை நின் அன்பர் அல்லால் தோள் சேரற்க என்ற அடியை மோகனா சொல்லும் பொழுது அனைவரும் சிரிக்கிறார்கள். மோகனா அவமதிக்கப் படுகிறாள். அன்றிரவு மோகனாவின் வீட்டுக்கு வரதன் வருகிறான். கதவு தாளிட்டிருக்கிறது. வரதன், ஆச்சரியத்தோடு கதவைத் தட்டுகிறான். மிகுந்த துக்கத்தோடு மோகனா சொல்லுகிறாள், இனி நான் சைவர் அல்லாதவரைத் தீண்டுவதில்லை என்று. மதமா? fhjyh? வரதன் திகைக்கிறான். பித்துப் பிடித்தவன் போல் போகிறான். அவன் மனம் மாறுகிறது. எம்மதமும் சம்மதம். சைவனாகிவிட நிச்சயிக்கிறான். இதற்கிடையில் அந்தப் பொறாமைக்காரி வீரி, மோகனாவுக்கு விபசார தோஷம் கற்பிக்க முயலுகிறாள். சிங்காரம் என்ற பேதை வாலிபனைச் சிங்காரித்து, மோகனா வீட்டுக்கு அனுப்புகிறாள்; அது வீரிக்கே அவமானமாக முடிகிறது. வரதனை நினைந்து வாடுகிறாள் மோகனா. வரதன் சைவனான செய்தி எட்டுகிறது. வரதன் திரு வானைக்காகோயில் மடப்பள்ளியில் பரிசாரகனகாச் சேர்க்கப் படுகிறான். தேவியின் அருளால் கவித்துவம் பெற விரும்புகிறான் ஒரு பக்தன்; கோயிலின் ஒரு புறத்தே அம்பிகையின் அருள் வேண்டி நிஷ்டையில் இருக்கிறான். கோயில் கிணற்றடியில் மோகனாவை வரதன் சந்தித்து, இரவு வீட்டுக்குப் போகும் போது இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொல்கிறான். கோயில் காரியங்கள் முடிந்த பிறகு, மோகனா, வரதனைத் தேடுகிறாள்; அவனைக் காணாமையால் வீடு திரும்புகிறாள். கோயில் கதவு சாத்தப்படுகிறது. பக்தன் மட்டும் ஒரு பக்கம் மந்திரம் செபித்துக் கொண்டிருக்கிறான். வரதனும் மோகனா விற்காக ஒரு பக்கத்தில் காத்திருக்கிறான். பக்தன் முன் தேவி அழகிய பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். அவன் அருகில் சென்று வாயைத் திறக்கச் சொல்கிறாள். தேவியைத் தாசி என்று நினைத்து விரட்டுகிறான் பக்தன். அதிர்ஷ்டஹீனன்! பிறகு, வரதனிடம் தேவி வருகிறாள். அவன், தேவியை மோகனா என்று நினைத்து வரவேற்கிறான்; அவள் கட்டளைப் படி வாயைத் திறக்கிறான். அம்பிகை, அவன் நாவில் ஓம் என்று சுழி வாங்குகிறாள். அதிர்ஷ்டசாலி! காளமேகம் போல் கவி பொழிக என்று வரதனை ஆசீர்வதித்து தேவி மறைகிறாள். காலை மலர்கிறது; கபாடம் திறக்கின்றனர்; கடல்மடை திறந்தாற் போல் கவிபொழிகிறார் காளமேகம். அம்பிகையின் அருள் விளையாட்டு ஊரெங்கும் பரவுகிறது. மோகனா மனம் பூரிக்கிறாள். வீரி முதலியோர் மோகனாவிடம் மன்னிப்புக் கோருகின்றனர். திருமலைராயன்பட்டினம்; அரசன் கொலுவிருக்கிறான். அவனது ஆதான வித்வான் அதிமதுரகவி மிகக் கொடியவன்; தன் பரிவாரங்க ளோடு அவனும் வீற்றிருக்கின்றனர். ஓர் உத்தமக் கவிஞரான முத்துப் புலவர் பரிசு பெற வருகிறார். அதிமதுரக் கவிக்கும் அவருக்கும் கவி சம்பந்தமாகச் சபையில் வாக்குவாதம் நடக்கிறது. நியாயமற்ற வகையிலே அதிமதுரக் கவியால் அவமானப்படுத்தப் படுகிறார் முத்துப் புலவர். அதிமதுரத்தின் சொற்படி அரசனும் நடக்கிறான். காளமேகமும் மோகனாங்கியும் உல்லாசமாக இருக்கின்றனர். முத்துப் புலவர் வந்து காளமேகத்தின் பாதத்தில் வீழ்கிறார்; அதிமதுர கவியின் ஆணவத்தை அடக்குமாறு வேண்டுகிறார். மோகனாவிடம் விடைபெற்று இருவரும் திருமலைராயன் பட்டினம் போகின்றனர். திருமலைராயன் நகர். அதிமதுரகவி ஆர்ப்பாட்டமாகப் பவனி வருகிறான். அவனது அறுபத்தி நான்கு தண்டிகைப் புலவர்களும் பின் தொடர்கின்றனர். கட்டியக்காரன் கட்டியங் கூறுகிறான். அனைவரும் பராக் சொல்கின்றனர். காளமேகமும் முத்துப் புலவரும் எதிர்ப்படு கின்றனர். அவர்கள் பராக் சொல்லவில்லை. கட்டியக்காரன் சொல்லும் படி வற்புறுத்துகிறான். காளமேகம், அதிமதுரகவியைக் கேலியாகப் பாடுகிறார். அதை அறிந்து அதிமதுரம் கோபமாகச் செல்கிறான்; அவர் யார் என்பதை வேவு மூலம் அறிகிறான். காளமேகத்தை மானபங்கம் செய்யத் தீர்மானிக் கிறான்; அரசனிடம் காளமேகத்தைப் பற்றிக் கோள் சொல்கிறான். அவன் சூழ்ச்சியில் அரசனும் வீழ்கிறான். ராஜசபை கூடியிருக்கிறது. காளமேகம் வருகிறார். அவருக்கு ஒரு மரியாதையும் செய்யவில்லை; ஆசனமும் அளிக்கவில்லை. காளமேகம் சகலசுலாவல்லியை மனம் கசிந்து வேண்டுகிறார். அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடம் தருகிறது. காளமேகம் கம்பீரமாக அதில் அமர்கிறார். அதிமதுரத்திற்கும் காளமேகத்திற்கும் வாக்குவாதம். இருவரும் தத்தம் கவிதா சக்தியைக் காட்டுகின்றனர். பலத்த விவாதம். ‘உமக்கு அரிகண்டம் பாடத் தெரியுமா? ... அதிமதுரம். ‘உமக்கு எமகண்டம் பாடத் தெரியுமா? ... காளமேகம். கடைசியில் அந்தப் பயங்கரமான எமகண்டம் பாடத் தாமே முன்வருகிறார் காளமேகம். மறுநாள். திறந்த வெளி ஆழமும் அகலமும் உள்ள நெருப்புக் குழி. அதன் நடுவில் பெரிய எண்ணெய் கொப்பறை. அதன் மேல் கட்டித் தொங்கும் உறி. அதில் காளமேகம் நிற்கிறார். அவர் கழுத்தில் கட்டிய சங்கிலி யானையின் துதிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் எவ்வித சமிக்ஞை கூறினும் உடனுக்குடன் பாடவேண்டும். இல்லையேல் யானை இழுத்து, கத்திகளால் கழுத்து வெட்டப்பட்டுக் கொப்பறையில் வீழந்து மாள வேண்டும். இதுவே, அந்தக் கொடிய பயங்கரமான எமகண்டம். அரசன் பிரதானியர், புலவர், பொதுமக்கள் சூழ்ந்திருந்தனர். அதி மதுரகவி முதலிய புலவர்கள் சமிக்ஞை கொடுக்கின்றனர். அத்தனைக்கும் வெகு பொருத்தமாகக் கவிபாடுகிறார் காளமேகம். பொதுமக்கள் பாராட்டு. அதிமதுரத்திற்கு ஆச்சரியம் எனினும் அவனது பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. உரியினின்றும் காளமேகம் இறக்கிவிடப்படுகிறார். தெரியும் இந்த ஜாலவித்தை யெல்லாம்; மரியாதையாக உம் ஊர் போய்ச் சேரும் என்று விரட்டுகிறான் அதிமதுரம். அதை அரசனும் ஆமோதிக்கிறான். பொதுமக்கள் ஆத்திரம். முத்துப்புலவர் மனம் பற்றி எரிகிறது. காளமேகம் மனம் புண்படுகிறது; திருமலை ராயன் நகர் மண்மாரி பெய்யப்பாடுகிறார். வானம் குமுறுகிறது; கட்டடங்கள் அதிர்கின்றன; மரங்கள் சாய்கின்றன; அரசன் நடுக்கம்; அதிமதுரம் ஓடுகிறான்... அதிமதுரத்தின் கதி என்ன? திருமலைராயன் நகர் எவ்வாறா கிறது? காளமேகம் என்ன செய்கிறார்? திடுக்கிடச் செய்யும் மற்ற சம்பவங்களைத் திரையில் காணுங்கள். சுபம்! சுபம்!! சுபம்!!!  காளமேகம் குறித்து தயாரிப்பாளர் தகவல் கவி காளமேகத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு. பொன்னாகரம் நஞ்சையா, பாரதிதாசன் அந்தப் படத்திற்குப் பாட்டெழுதி யதைக் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்... கவிஞர் முருகு சுந்தரம் தொகுத் தளித்திருக்கும் பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரையிலிருந்து ... எனக்கும் பாவேந்தருக்கும் முதல் தொடர்பு 1938ஆம் ஆண்டில் ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பர் களெல்லாம் கூடி மோகினி பிக்சர் என்ற பெயரில் ஒரு திரைப்படக் கம்பெனியைத் துவக்கி கவி காளமேகம் என்ற படத்தை எடுத்தோம். அந்தக் கம்பெனியில் பாகதர்கள், திரு.டி. கிருஷ்ணமூர்த்தி (நீதிக் கட்சிப் பிரமுகர்), திரு. கனகசபாபதி உடையார், கி.ஆ.பெ. விவநாதம், டி.என். ராமன் மற்றும் நான ... ... இப்படத்திற்குப் பாவேந்தர் பாரதிதாசன் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவரை நேரில் கண்டு பேசி இதைப் பற்றி முடிவு செய்ய புதுச்சேரி புறப்பட்டோம். புராணப் படம் என்றவுடன் பாவேந்தர் முதலில் மறுத்தார். சினிமாத் துறைக்குப் போய் புராணப் படம் எழுதித்தான் சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்டார். உங்கள் திறமை வெளிப் படவேண்டும் என்று வற்புறுத்திக் கூட்டிவந்தோம். பாவேந்தருக்கு ரூ.3000 கொடுக்கப்பட்டது. திரைப்பட எழுத்தாளருக்கு அந்தக் காலத்தில் அது பெரிய தொகை ... ... கவி காளமேகம் படப்பிடிப்பு கோடம்பாக்கம் பிராக்ஜோதி டூடியோவில் நடைபெற்றது. நடுவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மதுரை தண்டபாணி பிலிம்ஸோடு கூட்டுச் சேர்ந்து படத்தை முடிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இரண்டு முதலாளிகள். இரண்டு டைரக்டர்கள், ஏகப்பட்ட செலவு! படம் வெளிவந்ததும் சுமாராக ஓடியது. இழப்பு எதுவுமில்லை. குறைந்த லாபமே கிடைத்தது. கவிகாளமேகம் படப்பிடிப்பின்போது அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு அவர் இறக்கும் வரையில் தொடர்ந்தது ... ஒருமுறை கோயம்புத்தூர் லாட்ஜில் பாவேந்தர் தங்கியிருக் கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன். நாங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கோவை பட அதிபர் ஜூபிடர் சோமு திடீரென்று உள்ளே வந்தார். தாம் எடுக்கும் திரைப்படத்திற்கு உடனே பாடல் ஒன்று வேண்டுமென்றும் இப்போதே எழுதித்தர முடியுமா என்றும் கேட்டார். ஏன் எழுதாம...? Sequence சொல்லு என்றார் பாவேந்தர். பாடல் இடம்பெறும் சந்தர்ப்பத்தை சோமு சொன்னதும் சரியாகப் பத்து நிமிடத்தில் பாட்டை எழுதிக் கையில் கொடுத்துவிட்டார். உடனே ரூ.1000க்கு செக் ஒன்றை கொடுத்துவிட்டுப் பாடலை வாங்கிச் சென்றார் ஜூபிடர் சோமு ... (சோமு அவர்கள் வாங்கிச் சென்ற பாடல் எந்தப் படத்தில் இடம்பெற்றது என்று தெரியவில்லை ... எனது தேடலில் ஜூபிடர் படங்களில் பாரதிதாசன் பாடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. (காளமேகம் பாட்டுப் புத்தகத்தில் இல்லாத ஒரு குறிப்பு தயாரிப் பாளர் நஞ்சையாவால் தரப்பட்டிருக்கிறது - பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் என்னும் நூலில், காளமேகத்திற்கு இசை அமைப் பாளர் பொறுப்பை ஏற்றவர் டி.வி. நமச்சிவாயம். இவர்தான் கண்ணகி படத்தில் பாலகோவலனாக நடித்தவர். பின்னாளில் திருவையாறு இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராக இருந்தவர்... இன்னொரு விஷயம். ராஜரத்தினம் பிள்ளை சம்பந்தப்பட்ட படத்தில், அதுவும் அவரே நடித்துப் பாடுகிற படத்தில், இசை அமைப்பாளருக்கு அதிக வேலை வைக்கமாட்டார் என்பது! என்.எ. கிருஷ்ணனின் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அவருடைய நண்பரான ராஜரத்தினம் பிள்ளை அங்கு வருவார் ... யார் இசை அமைப்பாளராக இருந்தாலும் ஓரிரு பாடல்களுக்கு மெட்டமைத்துச் செல்வார்! இது நான் கேள்விப் பட்டது.)  2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி கற்றறிந்தவன்! கலை ஞானமுள்ளவன்! சந்நியாசி! ஆனால், அவன் காமப் பித்தன். அஷ்டமா சித்தி அடைந்தால் தன் ஆசை களைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் பூதத்தை யோசனை கேட்கிறான். ஆயிரந் தலைகளைக் கொண்டு யாகம் செய்தால் அஷ்டமாசித்தி கிடைக்கும் என்றும், அதற்கு ஆதித்தபுரி மன்னன் மகள் அபூர்வ சிந்தாமணியின் அழகைப் பயன்படுத்திக் கொள் என்று பூதம் கூறுகிறது. அபூர்வ சிந்தாமணி கல்வியில் தேர்ந்த ஆணவக்காரி! தக்க ஆசானிடத்தில் மேலும் பாண்டித்யம் அடைய விரும்பினாள். அந்த சமயத்தில் கபட சந்நியாசி வந்து ஆசானாக அமருகிறான். அவந்தி நாட்டு மன்னனின் மகள் செங்கமலம் தன் பெற்றோரை இழந்து, சிந்தாமணியோடு சகோதரிபோல் வளர்ந்து வருகிறாள். சந்நியாசியிடம் சிந்தாமணி மிகுந்த குரு பக்தியுடன் இருந்து வரும்போது, சிந்தாமணி யின் அம்மான் புரந்தரன் அவளை மணக்க விரும்புகிறான். வந்த காரியத்தை முடிக்க, சமயத்தை எதிர்பார்த்திருந்த கபட சந்நியாசி, சிந்தாமணி கல்வியில் தேர்ந்த கணவனையே பெறவேண்டும் என்றும், தான் சொல்லுகிறபடி அவள் நடந்து சிறந்த கணவனையும், பெரும் புகழையும் பெறவேண்டும் என்றும் கூறுகிறான். சந்நியாசியின் திட்டப் படி சிந்தாமணியை மணக்க வருபவரை மூன்று கேள்விகள் கேட்ப தென்றும் சரியான விடை அளிப்பவரை மணந்து கொள்வது; இல்லா விடில் அவரது தலையை வாங்கி விடுவதென்றும் விளம்பரப்படுத்தப் படுகிறது. இதை அறிந்த புரந்தரன் வந்து, கேள்விக்கு விடையளிக்க முடியாமல் முதல் பலியாகிறான். இம்மாதிரி சிந்தாமணியை மணக்க வந்தவர்களின் எண்ணிக்கை 999 ஆகிறது. கைவல்யபுரத்து அரச குமாரன் மெய்யழகன் தன் ஆறு சகோதரர்களும் சிந்தாமணியால் மடிந்ததை அறிந்து, கேள்விக்கு விடை அளித்து பழி தீர்க்கச் சபதம் செய்துகொண்டு, தோழன் காளியுடன் ஆதித்தபுரிக்கு வந்து கேள்விகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் சிந்தாமணியின் கேள்விகளும் விடைகளும் தெரிந்த பின்பு அவளை மணந்து கொள்வதாகச் சொல்கிறான். செங்கமலம் கேள்விகளைச் சொல்லி, விடைகள் மதிவதனபுரத்திலும், சம்பங்கி புரத்திலும், நதிசீல புரத்திலும் இருப்பதாகச் சொல்கிறாள். மெய்யழகன் விடை அறிவதற்காகப் புறப்படுகிறான். தோட்டக்காரன் தங்கம் தான் வைக்கும் புள்ளிக்குக் கோலம் போட்டு முடிகிறவனை மணந்து கொள்வதாக விரதம் பூண்டிருக்க, காளி அவளை மயக்கிவிடுகிறான். காளியும் மெய்யழகனும் சந்நியாசி வேஷத்தில் கப்பலில் போகும் போது கப்பல் உடைந்து உயிர் தப்பி, வன காளியைப் பூசித்து, காரியம் வெற்றியடையவும், இறந்தவர் பிழைக்கவும் வரம் பெற்று, மதிவனத புரத்தை அடைகிறார்கள். அங்குள்ள தோட்டக்காரன் வீட்டில் இரவைக் கழிக்கிறார்கள். அவ்வூர் அரசன் சத்தியசீலன், சந்நியாசிகளை வெறுப்பதற்குக் காரணம் என்னவென்று தோட்டக்காரனின் மனைவி அவனிடம் கேட்கிறாள். அதற்குத் தோட்டக்காரன் கதை சொல்கிறான். மதிவனத புரத்தை ஆண்ட உத்தம கேதுவுக்கு 101 மனைவிகள்; 101 குமாரர்கள். நீக்கப்பட்டு வேறு தேசத்தில் இருந்த மூத்த மனைவியின் குமாரன் சத்தியசீலன், வயது வந்ததும், தந்தை தங்களை நீக்கி வைத்ததை அறிந்து வருந்துகிறான். பிறகு, அவர் போரில் தோல்வியடையவிருந்த சமயம் சத்தியசீலன் மாறு வேஷத்தில் சென்று பகைவனை விரட்டு கிறான். மன்னன் சத்தியசீலனை மெச்சி அவனை பிரதானியாக அமர்த்திக்கொண்டு, மற்ற 100 மைந்தர்களுக்கும் ஆசிரியனாக நியமிக்கிறான். பொறாமை கொண்ட நூற்றுவரும் சூழ்ச்சி செய்து காட்டிற்குப் போகிறார்கள். அரசன் சத்தியசீலனைச் சந்தேகித்து, தன் புத்திரர்களைக் கொண்டுவந்து சேர்க்காவிடில் தலைபோகும் என்று சொல்லவே, சகோதரரைத் தேடி அலைகிறான். கஞ்சனபுரத்து அரசனின் மகள் மஞ்சளழகி, பட்டத்துக்கு வந்த செம்படவ இளைஞனுக்கு இணங்காமல் தப்பி செம்படவர்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறாள். ஒரு கபட சந்நியாசி மஞ்சளழகியைக் கண்டு மோகித்து, மந்திரக்கோலால் மயக்கி, தூக்கிச் சென்று விடுகிறாள். சத்தியசீலன் இந்தக் காட்டின் வழியாக வரும்போது, சந்நியாசியைக் கண்டு அவனைப் பின்தொடர்ந்து தன் சகோதரர்கள் மயங்கிக் கிடப்பதைக் காண்கிறான். சந்நியாசி தன் மந்திரக் கோலின் மாயத்தால் அவர்களுக்கு உணவளித்து, பின் மீண்டும் மூர்ச்சையாக்கிவிட்டுப் போவதை சத்தியசீலன் கண்டு அவனை மேலும் பின்தொடருகிறான். மஞ்சளழகியை சந்நியாசி கற்பழிக்கப்போகும் சமயம் சத்தியசீலன் மந்திரக்கோலைப் பிடுங்கிக்கொண்டு சந்நியாசியை விரட்டி, மஞ்ச ளழகியையும் அழைத்துக்கொண்டு சகோதரர்களையும் எழுப்பிக் கொண்டு வருகிறான். அரசன் விவரம் அறிந்து மஞ்சளழகியை சத்திய சீலனுக்கு மணம்முடித்துப் பட்டமும் கட்டி வைக்கிறான் என்று தோட்டக்காரன் கதையை முடிக்கிறான். இக்கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மெய்யழகன் சிந்தாமணியின் முதல் கேள்விக்கு விடை இதுதான் என்று தெரிந்து கொள்கிறான். பிறகு, சத்தியசீலனிடம் இக் கேள்வியைச் சொல்லவே சத்தியசீலன்தானே நேரில் விடை யளிப்பதாகச் சொல்கிறான். பின்னர் மெய்யழகனும் காளியும் சம்பங்கி புரத்துக்குச் செல்கின்றனர். எல்லைப்புறக் காவல்காரனைச் சந்தித்த போது அவன் அவ்வூர் ராணி தம்பதியின் வீரச் செயல்களைச் சொல்கிறான்:- சம்பங்கிபுரத்தை ஆண்ட அரசன் அம்பரகேதுவுக்கு அம்பிகா நிதி ஏக புத்திரன். பிரதானியின் மகளான தம்பதியை அம்பிகாநிதி மணந்துகொள்ள விரும்புகிறான். இதற்கு மன்னன், சம்மதியாததால் அம்பிகாநிதி தன் முதல் மனைவி இளவேணியுடனும், தம்பதியுடன் புறப்பட்டு வேறு தேசத்திற்குப் போகிறான். வழியில் ஒரு புலியைத் துரத்திக்கொண்டுபோன அவன் வழிதவறிப் போய் விடுகிறான். காணாமற்போன கணவனைக் கண்டுபிடிப்பதற்காக தம்பதி ஆண் உடையணிந்து இளவேணியுடன் மணிபுரிக்கு வருகிறாள். குணபதி யரசன் தம்பதியை பிரதானி வேலைக்கு அமர்த்திக்கொள்கிறான். ஒரு நாள் இரவு கேட்ட பெருங்கூச்சலை அடக்க சுடுகாட்டிற்குப் போகிறாள் தம்பதி. அங்கு அழுதுகொண்டிருந்த ஒரு கிழவி ராட்சஸி யாக மாறி தம்பதியை விழுங்க வந்த சமயம், பெண் வாடை கண்டு, தம்பதியின் தைரியத்துக்கு மெச்சி, பளபளப்பான ஒரு சேலையையும் மோதிரத்தையும் கொடுத்து மறைகிறாள். அரசன் இந்த கண்டபேரண்ட ராட்சஸி ஒழிந்ததற்காகக் கொண் டாடிய விழாவிற்கு அந்தச் சேலையைக் கட்டிக் கொண்டு இளவேணி வருகிறாள். இதைப் பார்த்த அரசகுமாரிகளான பாரதி, விவேகவதி இருவரும் தங்களுக்கும் இதுபோன்ற சேலை வேண்டும் என்று கேட்கின்றனர். தம்பதி 6 மாதம் தவணை பெற்று ராட்சஸியினி மகன் பாம்பரக்கன் வசிக்கும் புட்கரபுரிக்கு வருகிறாள். அவனைக் கொன்று அவன் மகள் ரத்ன வல்லியைச் சந்திக்கவும் அவள் தம்பதிமீது காதல் கொண்டு தன்னையும் மகமேரு மலையிலிருக்கும் தன் தங்கை மாணிக்கவல்லியையும் மணந்து கொள்ளும்படி வேண்டுகிறாள். அதற் கிணங்கி தம்பதி மகமேருமலைக்குச் சென்று, அரக்கரைக் கொன்று சேலையுடன் மாணிக்கவல்லியுடனும் புட்கரபுரிக்கு வருகிறாள். அவ்வூர் அரசனின் மகள் சக்கரவேணியுடனும், அங்கு அகப்பட்ட கணவன் அம்பிகாநிதியுடனும் மணிபுரிக்கு வருகிறாள். சேலை கொண்டுவரும் வீரனைத் தான் மணப்போம் என்று சொன்ன பாரதி, விவேகவதி இருவரையும் அழைத்துக்கொண்டு தம்பதி தன் நாடு திரும்புகிறாள். வழியில், பஞ்ச வஞ்சியரையும் ஒரு கபட சந்நியாசி கவர்ந்து சென்று குகையில் பலாத்காரம் செய்கிறான். தேடிச் சென்ற தம்பதி, சந்நியாசியை அடித்துத் துரத்தி பஞ்ச வஞ்சியரையும் மீட்டு, சம்பங்கிபுரம் வந்து சேருகிறாள். அம்பிகாபதி தனக்குக் கிடைத்த ராஜ்யத்தை தம்பதிக்கு முடிசூட்டி வைக்கிறான் என்று கதையை முடிக்கிறான் காவற்காரன். இரண்டாவது கேள்விக்கு விடை இந்தக் கதைதான் என்றறிந்து மெய்யழகனும் காளியும் தம்பதியைச் சந்தித்து விபரம் கேட்கிறார்கள். தம்பதி கபட சந்நியாசியை ஒழிப்பதற்குத் தானே நேரில் வந்து விடையளிப்பதாகச் சொல்லுகிறாள். பிறகு மெய்யழகன், மூன்றாவது கேள்விக்கு விடை அறிவதற்காக நதிசீலபுரத்தை அடைகிறான். போகும் வழியில் மூன்று ராஜகுமாரிகளைச் சந்திக்கவும், அவர்களால் எதிர்பாராத வகையில் சிறையிடப்பட்டு பிறகு தந்திரமாய்த் தப்பி வெளியேறுகிறான். அதன்பிறகு பல கஷ்டங்களுக்குள்ளாகி, நதிசீலபுரத்தை அடைந்து மன்னனைப் பார்க்கச் செல்கிறான். அங்கு மன்னன் மதிவதனன் ஒரு திரீக்கும், இரண்டு நாய்களுக்கும் அன்னமிடச் செய்துவிட்டு, அந்த திரியையும், நாய்களையும் மூர்ச்சை அடையும் வரையில் அடிப்பதைப் பார்க்கிறான். மன்னனிடம் இதன் காரணம் கேட்கவே மன்னன் முதலில் கோபிக்கிறான். பிறகு அந்த திரி (தன் மனைவி) எவ்விதம் ஒரு சந்நியாசியிடம் தன் கற்பைப் பறி கொடுத்தா ளென்பதையும் கூறி, அதற்குத் தண்டனையாகவே தான் இப்படிச் செய்து வருவதாகச் சொல்கிறான். மெய்யழகன் மன்னனிடம் மூன்றாவது கேள்வியைக் கேட்கிறான். மன்னன் அக் கேள்விக்குத் தானே நேரில் பதில் சொல்லுவதாகப் புறப்படுகிறான். மன்னனை அழைத்துக்கொண்டு, வழியில் தம்பதி, சத்தியசீலனையும், கூட்டிக்கொண்டு மெய்யழகன் ஆதித்தபுரியை அடைகிறான். பிறகு மெய்யழகன் சிந்தாமணியிடம் சென்று அவளுடை மூன்று கேள்விகளுக்கும் தகுந்தவாறு பதில் அளிக்கிறான். தம்பதி சத்தியசீலன் ஆகியோரால் சிந்தாமணியின் குருவான சந்நியாசியின் கபட நாடகம் வெளியாக்கப்படுகிறது. தன் மனைவியின் கற்பைக் குலைத்ததற்காக மதிவதனன் அந்த சந்நியாசியின் தலையை ஒரேயடியில் சீவி பழிதீர்த்துக் கொள்ளுகிறான். காளி தேவியின் அருள் பெற்றிருந்த மெய்யழகன் சிந்தாமணி யிடம் தலைகளைப் பறிகொடுத்த 999 பேர்களையும் உயிர்ப்பிக்கிறான். பிறகு கேள்விகளுக்குப் பதிலறிய உதவிய செங்கமலத்தை மெய்யழகனும், முதன்முதலாக தன் தலையை தியாகம் செய்த புரந்தரன் சிந்தாமணியையும், கோலத்தழகி தங்கத்தை (மெய்யழகனின் தோழன்) காளியும் மணந்துகொள்கின்றனர். - குண்டூசி சினிமா இதழ், 1948 ஜனவரி.  ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி காட்சி - 1 சந்நியாசியின் குகை யாக குண்டம் ஆழ்ந்த சிந்தனை, கோபம் சந்நியாசி : (உலாவிக் கொண்டே) எடுத்த காரியம் எதிலும் தோல்வி! (உலாத்துகிறான்). (குண்டத்தில் குங்கிலியத்தை அடிக்கிறான். பூதம் தோன்றுகிறது) பூதம் : சந்நியாசியே என்ன வேண்டும் உனக்கு? சந்நி : என்ன வேண்டும்?... அதைப் பின்னால் சொல்கிறேன். இது வரைக்கும் எனக்கு ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் என்ன? பூதம் : நல்ல கேள்விதான் (சிரிப்பு). என்னை எண்ணி நீ யாகம் செய்வதுமுண்டு. பெண்டுகளை ஏமாற்றிப் போகம் அனுபவிப்பதும் உண்டு. உன் புத்திக்கும் காரிய சித்திக்கும் எவ்வளவு தூரம்? சந்நியாசி! நன்றாய் யோசி. சந்நி : ஆம்: ஆம்: பூதமே என்னை மன்னித்துவிடு. என் கஷ்டத்தை நீக்கு. இஷ்டசித்தியை உண்டாக்கு. பூதம் : இஷ்டசித்தி! இலேசல்ல! நீ ஆயிரம் தலைகளைக் கொண்டு வந்து அபார யாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு இஷ்டசித்தி. சந்நி : அப்படியா பூதமே! பூதமே! எப்படி முடியும்? ஏற்ற வழியை நீயே கூறினால் சாத்தியப்படலாம். பூதம் : ஆதித்தபுர மன்னன் மகள் அபூர்வ சிந்தாமணியை அணுகி! அவள் மேல் மோகம் கொண்டுவிடாமல் அவள் அழகைப் பயன்படுத்திக் கொள்! அவள் அழகுக்கு ஆயிரம் பேரல்ல. அகிலமே பலியாகவும் கூடும். போ. (மறைதல்) காட்சி - 2 அந்தப்புரம் அபூர்வா - பாட்டு 1 பல்லவி கலைஞானம் இல்லை யேனும் கற்றவர் சொல்கேட்க வேண்டுமே! அது நலமான செயல் செய்யத் தூண்டுமே! அனுபல்லவி உலகம் கலைஞானிகட்கே இன்பம் - கலை உணராதவர்க்கோ அது துன்பம். (கலை) சரணம் அலைந்திடும் மனக் குரங்கை நிறுத்தியே, நல் அன்பாகிய கோல் கொண்டு திருத்தியே, பல பொருள் தரும் அழகில் பொருத்தியே, பாராதவர்க் கில்லை அபி விருத்தியே, (கலை) செங்கமலம் : நீ படித்தவள். யார் இல்லை என்றார்கள்: உன் சொல்லைக் கேட்பதில்லையா நான்? நீ குத்தலாகப் பேசுகிறாயே அபூர்வம்! அபூர்வம் : கேட்டால் மாத்திரம் போதாது. பொருள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்லும் அரிய சொற் களை நம் கிளியுந்தான் கேட்கிறது. பயனென்ன? செங்கமலம் : அது சரி! நல்லா படிச்சவங்க ஒங்ககூட வாதம் பண்ணும் போது நாங்க கேக்கணும். ரொம்ப வேடிக்கையாய் இருக்கும். அபூர்வம் : எங்கே வருகிறார்கள். இந்தப் பூனையிடமா நெருங்கும் அந்தக் கிளிக் குஞ்சுகள்? உம் ... ... தோழி : (இடையில் தோன்றி) எளவரசியம்மா, ஒங்களை அரசர் அழைச்சாரு! அபூர்வம் : செங்கமலம் இரு. போய் வருகிறேன். காட்சி - 3 நீதிகேது மன்னன் அரண்மனை (நூல்களைப் பிரித்துப் பார்க்கிறான். மங்கையர்க்கரசி (அரசி) வருகிறாள்.) மங்கை : மகள் படித்த நூல்களை எடுத்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சி! நீதிகேது : இல்லையா மங்கையர்க்கரசி ... ... இன்னும் படிக்க வைக்க வேண்டும். நம் அருந்தவத்தில் முளைத்தது அது ஒன்று தானே! நமக்கு? மங்கை : கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும்? கணவன் மேல் அன்பு! நீதி : பெண்கட்கு வேண்டுவது அன்பு. பின்பு? வேறு ஒன்றும் வேண்டாமா? பெண்கள் அரசு செய்வது விரசமா? போர் செய்யட்டுமே யார் வேண்டாம் என்பார்? காவியம் வரைந்தால் பாவி என்பார்களா? ஓவியம் வரைந்தால் ஒப்பாதா உலகம்? தொழில் புரிந்தால் எழில் போய்விடுமா? மங்கையர்க்கரசி, அரிவையர் ஆளனிடம் அன்பு செய்ய வும் கல்வி வேண்டும். மங்கை : அவனை மணக்கவரும் அரச குமாரர்கள் அஞ்சுவார்கள். அவள் அதிகம் படித்தால்! நீதி : படிக்காதவன் அஞ்சுவது சகஜந்தானே, அன்றியும் எனக்குப்பின் இந்நாட்டை ஆள்பவள் என் மகளல்லவா? (அபூர்வம் வருகிறாள்) மங்கை : வாம்மா (அவள் கன்னத்தைத் தடவிக் கை முறிக்கிறாள்) இப்படி உட்கார். அபூர் : என்னப்பா? தேடினீர்களா? மங்கை : ஆசிரியரையா? நீதி : சர்வ சாதிர பண்டிதன் கிடைப்பது அரிதாயிருக்கிறது. ஏன் குழந்தாய் நம் கச்சியப்பக் கவிராயர் கையிருப்புள்ளவர் தானே. அபூர் : இல்லை. பழஞ்சுவடிகளிலிருந்து கைம்மாற்று.... நீதி : மணிப்புலவர்? அபூர் : மனப்பாடம். கற்பனையிராது. நீதி : எட்டையப்பர்? அபூர் : அவருக்குத் தம்பாட்டென்று ஓர் தனிப்பாட்டில்லை. செம்பாகமாகத் திரட்டித் தருவார் தெருப்பாட்டை சேவகன் : (வந்து பணிந்து) புண்ணியத் திருமேனி சந்நியாசி ஒருவர் ஆதான மண்டபத்தில் காத்திருக்கிறார். அழைத்துவர உத்தரவா? நீதி : அபசாரமல்லவா? நான் வருகிறேன். காட்சி - 4 அரசன் பணிந்து நிற்றல் சந்நியாசி : இந்த உடலின் பெயரென்ன? நீதிகேது : என் பெயர் நீதிகேது: இந்நாட்டின் அரசன். சந்தி : என் பெயர் ஹி... ஹி... ம ம மகாரத்தின் மகாரத்தின் தடிப்பு! இந் நாட்டை. ஆள்பவன் நீயா? ஆள்வோன் இருக்கிறான்; அவன் ஊரும் பேரும், உருவும் இல்லாதவன் என்று கூறுகிறது வேதம்! உன்னை நோவதில் பயனென்ன? நீ மூழ்கியிருக்கும் அந்த காரத்தில் நடத்து தம்பா. நீதி : உண்மை வாமி! (அரசன் உட்புறத்தில் நோக்க அவர்கள் - தோழிகள் தண்ணீர்ச் செம்பு. மலர் முதலியன கொண்டு வருகிறார்கள். அரசன் மாலை முதல் சாத்தி உணவுத் தட்டை எதிரில் வைத்து அருந்த வேண்டுகிறான் கையில்). சந்தி : பொன்னாடையா! பூமாலையா! நடுங்குகிறதப்பா என் உடல். இருந்தாலும் உன் உள்ளத்தைக் திருப்திபடுத்தவே இவைகளை அங்கீகரிக்கிறது அடிமை. (அரசன் முத்துமாலை சூட்டுகிறான்) சந்தி : முத்து மாலையா! ஓம்சக்தி! ஓம்சக்தி! இந்த நாய்க் கல்ல இது! என்னலாம் வல்ல ஈசனுக்கு! நல்லது. நீதி : வாமி ஒரு விண்ணப்பம். எல்லாம் உணர்ந்த நீங்கள், ஏழைகள் கடைத்தேற ஏதாவது மார்க்கம் சொல்லி யருள வேண்டாமா? சந்நி : ஏதறிந்தேன்! இல்லையே அப்பா! ஆயினும் தெரிந் ததைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பரோப கார்த்தம் இதம் சரீரம். நீதி : என் ஆசைக்கொரு பெண்.... சந்நி : பெண்ணைப் பற்றிய பேச்சு! நிறுத்து! நீதி : அபூர்வசிந்தாமணி, பெயர். கற்றறிந்த பெண். ஆயினும் தமிழ் வேதம், அபூர்வ கலைகள் கற்றுத்தர வேண்டும். சந்நி : பெண்ணாகியே வந்ததொரு மாயப்பிசாசம் என்பார் களே! கேள்விப் பட்டதில்லையா... ஆயினும் நீ வருந்தும் படி நடந்துகொள்ள எனக்கு விருப்ப மில்லை. சொல்லித் தருகிறேன். (போதல்) காட்சி - 5 சிங்காரத் தோட்டம் சந்நியாசி அரமம் சந்நியாசி : பெண்கள் என்று சொல்லுகிறார்களே அவர்கள் (அவர்களைக் கையால் காட்டி) இப்படித்தான் இருப்பார்களோ? அபூர் : (வியப்பு) ஆம் வாமி. சந்நி : விலகி இருக்க வேண்டும். சொன்னேன் என்று வருந்துவதா யிருந்தால் அருகிலேயே இரு! கேள் பெண்ணே! செல்வம் இல்லாதவன் வாழ்வும் சிறப்படையக்கூடும். அறிவில் லாதவன் வாணிபங் கூட அதிக லாபத்தைக் கொடுக்கலாம். தீயோர் வாழும் நாட்டிலும் அரசன் செங்கோல் நடத்தி விடலாம். ஆனால் குருவில்லாத வித்தை ஒருப் போதும் பயன்படாதல்லவவா? அபூர் : ஆம் வாமி. சந்நி : ஆசான் திறமையுடையவனாகக் கிடைத்துவிட்டால் போதுமா? பாடம் கேட்கும் மாணவரும் தெரிந்து கொள்ளும் திறமை யுடையவராய் இருத்தல் வேண்டும். அபூர் : நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். சந்நி : ஓஹோ படித்திருக்கிறாயா? என்ன படித்திருக்கிறாய்? தமிழ்மறை ஓதி உணர்ந்தாயா தையலே? அபூர் : இல்லை வாமி. சந்நி : திருக்குறள் தெரிந்ததுண்டோ, தெரிவையே? அபூர் : இல்லை வாமி! சந்நி : நாலடியார் நன்குணர்ந்தாயோ, நங்கையே? அபூர் : ஓரடி யேனும் அறியேன் வாமி. சந்நி : நிழலருமை வெயிலிலே; நின்றறிமின் ஈசன்; கழலருமை வெவ்வினையிற் காண்மின்; பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்றார் பெரியார். நாலிரண்டு என்றால்? அபூர் : நாலடியாரும் திருக்குறளும். சந்நி : ஆம்; அப்படிச் சொல்; நான் உனக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சொல்லி அதன் பிறகு வீட்டின் பத்தை விளக்குவேன்; அபூர் : வணக்கம். காட்சி - 6 ஆரமம் சந்நி : அறம், பொருள், இன்பம் என்பவற்றில் அறம் என்பது எது? திருவள்ளுவர் சொல்லுகிறார், அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். என்று தெரிகிறதா? பொறாமையும், ஆசையும், கோபமும் பிறருக்குத் தீமை விளை விக்கும். தீய சொற்களும் நீக்கி நல்ல குணம் செயல்களை மேற்கொள்வது அறம். வறுமை, தீமை விளைவிக்கும். ஆசையே பிறவிக்குக் காரணம்! கோபம் கொடிய நோய்! தீய சொற்கள் பிறரைச் சுடும். அபூர் : அறத்தால் என்ன பயன்? சந்நி : ஆம் அப்படிக் கேள். அறத்தால் வருவதே இன்பம் என்றார் வள்ளுவர். அபூர் : தெரிகிறது வாமி. சந்நி : பொருள் என்பது என்ன? சன்மார்க்கத்தில் தேடுவது பொருள்; பொருளால் பயனென்ன? பொருளி ல்லார்க்கு இவ்வுலகம் வீண், தெரிகிறதா? அபூர் : ஆம் வாமி; சந்நி : இன்பம் என்பது என்ன? காதல் கொண்ட ஒருவனும், ஒருத்தியும் அன்பினால் ஒன்றுபடுவது இன்பம். அபூர் : ஆதாரத்தோடு இவ்வாறு விளக்கியதே யில்லை எவரும்; மிக்க உபகாரம் வாமி; சந்நி : நாளைக்கு வீடு என்பதை விளக்குவேன். வணக்கம். காட்சி - 7 ஆரமம் சந்நியாசி : இதுவரைக்கும் சொல்லிவந்ததில் ஏதாகிலும் ஐயப்பாடு உண்டோ, அணங்கே? அபூர் : ஒருவனும் ஒருத்தியும் காதலால் ஒன்றுபடுவது இன்பம் என்றீர்கள்; அந்த இன்பத்தை நீங்கள் அனுபவித்ததுண்டோ வாமி? சந்நி : நல்ல கேள்வி; ஔவையார் அருளிச் செய்கிறார். அதற்கு விடை ஈதல் அறம், தீவினை விட்டு ஈட்டல் பொருள், எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம். பரனை (இறைவனை) நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. நான் மூன்றையும் விட்ட முழு ஞானியல்லவா? அபூர் : ஓ கோ! சந்நி : அறம், பொருள், இன்பம் இம்மூன்றும் இல்லறத்துக்கு உரியது. வீடு அதாவது மோட்சம் துறவறத்துக்கு உரியது. அபூர் : விளங்குகிறது வாமி: ஆயினும், மோட்சத்தைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? சந்நி : மக்களுக்கு நல்வழியைக் காட்ட எனக்கு ஆசை யுண்டு. ஆயினும் உனக்கு இந்தப் பருவத்தில் துறவின் இலக்கணத்தைச் சொல்லிப் பயனில்லையே! சொல் லத்தான் வேண்டும் என்றால் சொல்லுகிறேன். காட்சி - 8 சிந்தாமணியின் நிலையம் பாட்டு 2 பல்லவி கல்லாத மனிதரெலாம் பொல்லாதவர் அன்றோ என்போல், எல்லாம் அறிந்தவரே நல்லார் அன்றோ. அனுபல்லவி வில்லே சுமந்தவரும் வேதமுணர்ந்தவரும் வெல்ல மாட்டார் ஏனையே வெல்ல மாட்டார் எனையே (கல்லாத) சரணம் நல்வாழ்வு வாழ என்போல் கலைஞானமே நானில மக்கள்எலாம் பெறவேணுமே புல்லாகி வாழ்வதினால் அவமானமே என்போல் புலமைதான் மனிதர்க்குப் பிரதானமே (கல்லாத) செங்கமலம் வருகிறாள் அபூர் : செங்கமலம் வா! செங்கமலம் : என்ன செய்கிறாய் அபூர்வசிந்தாமணி? அபூர் : என்போன்றோர்க்கு எதுதான் வேலை? இதிகாசம், புராணம், தமிழ்மறை, முத்தமிழ்ச் சுவை இப்படித்தான். தெரியாதா? நீயும் என்போல் இப்படித்தான். அரச குமாரியே ஆயினும் யான் பெற்ற இன்பம் கிட்டுமா உனக்கு? எனக்குக் கிடைத்த மகான் யாருக்கும் கிடைக்கப் போவதில்லை. செங்கமலம்: அவர் கலைஞானமும், தபோபலமும் உடையவர் என்று தெரிகிறது. அபூர் : இல்லாவிட்டால் அவரிடம் எனக்கு ஏன் இத்தனை மதிப்பு? செங்கமலம் அந்தச் சர்வகலா வல்லவர்க்கு நான் அடிமையாகி விட்டேன். செங்கமலம்: சரியில்லை. உன்னை ஆளத்தக்கவன் உனக்கு வாய்க்கும் காதலன். காதலனுக்கே உன் அன்பு. அபூர் : மோசம் போகிறாய். எனக்கும் உனக்கும் வித்தியாசம் இருக்கிறது. காம வேட்கையிலே மதிமயங்கிச் சிறுவர்க்கு மணம் பேசி விரும்பித் தாலி கட்டையிலே இருந்து நடுக் கட்டையிலே போகும் மட்டும் கவலைதானே? செங்கமலம் : இப்படிச் சொன்னவர் எத்தனையோ பேர் சிந்தா : முனிவர்களின் நோக்கம்? செங்க : வனிதையர் மேல் ஏக்கம். சிந்தா : யோக முயற்சி? செங்க : போக முயற்சிதானே? சிந்தா : இருடிகள்! செங்க : இருடிகளை நம்பி மோசம் போனவர் எத்தனையோ குருடிகள். சிந்தா : என் குருநாதர்? செங்க : அதென்னமோ? சிந்தா : நான்? செங்க : நீயா? நீ அழகிய பருவமலர். விரைவிலே மணம் அடைந்து இன்ப வாழ்வடைய நான் ஆசிர்வாதம் செய்கிறேன். சிந்தா : இந்த உலகிலா எனக்கு மணவாளன் கிடைப்பான்? செங்க : ஏன் கிடைக்க மாட்டான்? சிந்தா : முட்டாள் உலகம் செங்கமலம் இது! செங்க : அப்படியனால் நீ நீங்கிக் கொள். இந்த உலகை விட்டு. சிந்தா : ஏன் விலகிவிட்டால்? செங்க : அறிஞர் உலகமாகிவிடும் அல்லவா? சிந்தா : ஏன் செங்கமலம். நான் அவ்வளவு முட்டாளா? செங்க : தற்புகழ்ச்சி தலைசிறந்த முட்டாள்தனம் என்பது நீ படித்த நூலில் இல்லையா என்ன? எவ்வளவோ அறிஞர்கள் இலை மறைவாகவோ, தலை மறைவாகவோ என இருப்பார்கள். சிந்தா : எனக்கேற்றவன் கிடைப்பதாயிருந்தால்? செங்க : பிரியந்தான். அப்புறம் பரியந்தான். பார்க்கணுமே பெண்ணைப் பல்லக்கிலே! சிந்தா : (சிரிப்பு) காட்சி - 9 நீதிகேது கையிலுள்ள கடிதத்தை உற்றுநோக்கியபடி இருக்க மங்கையர்க்கரசி செய்தி என்ன என்பதை எதிர்பார்க்கிறாள். நீதிகேது : மங்கையர்க்கரசி, உன் தம்பி புரந்தரன் கடிதம் எழுதி யிருக்கிறான். எம் மேல் அன்புள்ள மைத்துனர் நீதிகேது மன்னருக்கும் என் தமக்கையர் மங்கையர்க் கரசியவர்கட்கும் புரந்தரன் வணக்கம். திருமதி அபூர்வ சிந்தாமணியை எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன். உங்கள் சம்மதம் தெரிந்தால் என் பெற்றோருக்குச் சொல்லி, முறைப்படி, பெண்கேட்க அனுப் புகிறேன். இதைப்பற்றி நான் நேரில் பேசப் புறப்பட்டு வரவா? இங்ஙனம் தங்கள், புரந்தரன் நீதிகேது : பதில் எழுதவேண்டுமே? மங்கை : எழுதுங்களேன். உனக்குரிய சொத்தை நீ வந்து பெற்றுக் கொள்ள என்று. நீதி : நம் குழந்தைக்குச் சமமான கல்வி இருக்க வேண்டுமே அவனுக்கு? பரபர நன்மதிப்பால் ஏற்படுவது காதல், காதல் வாழ்வே இன்ப வாழ்வு. மங்கை : வீண் வேதாந்தம். அவன் என் தம்பி என்ற ஒரே அதிருப்தி தான். பெண்கொடுக்க மறுப்பதற்குக் காரணம். நீதி : குத்துண்ட கண்ணாடிபோல் உன் முகத்தில் எத்தனை கீறல்கள். தப்பர்த்தம் செய்து கொண்டாய்! நான் நினைப்பது வேறு! புரந்தரனை மணக்கக் குழந்தைக்குச் சம்மதமா? ஒருகுரல்: அப்பா! அம்மா! நீதி : மங்கையர்க்கரசி அதோ! வாம்மா! மங்கை : வாடா என் கண்ணே (அமர்கிறாள்) நீதி : உன் குருநாதர் சௌக்கியந்தானே? அபூர் : சௌக்கியம். அப்பா! அவர் எனக்கு ஆசிரியராக அமைந்தது. என் பூர்வஜென்ம பூஜாபலன். மங்கை : இல்லையம்மா நான் செய்த பூஜாபலன். நீதி : உன் அம்மான் கடிதம் எழுதியிருக்கிறார். அபூர் : என்னவென்று? நீதி : திருமணமாம். சிந்தா : என்றைக்கப்பா? நீதி : பெண், நிச்சயமானவுடன். சிந்தா : சந்திரகிரி மன்னர் மகளைப் பேசுங்கள் அவருக்கு. மங்கை : வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவ தாம்மா. சிந்தா : என்னைப் பற்றியா கூறுகிறீர்கள் அம்மா? மங்கை : பின்னே யாரைப் பற்றி? எனக்கு இரண்டு பெண்களா இருக்கிறார்கள்? மாமனை மணந்துகொள்ள விருப்பந் தானே? சிந்தா : என் குருநாதரைக் கேட்கவேண்டும் அம்மா! மங்கை : உன் திருமணத்திற்கா? அபூர் : எதற்கும் என் உடல், பொருள், ஆவி எவையும் அவருக்கே சொந்தம். மங்கை : குருநாதர் ஒத்துக் கொள்வாரல்லவோ. அபூர் : அவரைக் கேட்கவேண்டும். நீ : சரியம்மா. கேட்டுச் சொல்! அபூர் : நல்லதப்பா, போகட்டுமா? மங்கை : போகலாம் இரு. அபூர் : கிளியைப் பார்க்க வேண்டும் நான். (போகிறாள்) காட்சி - 10 சந்நியாசியின் ஆரமம் சிந்தனை (பூதம்) அவள் அழகை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். அவன் அழகுக்கு ஆயிரம் பேர் பலியாவதும் சுலபம். (அபூர்வம் வந்து பணிந்து நிற்றல்) சந்நியாசி : உட்கார்! சிந்தா : வாமி ஒரு விண்ணப்பம்! என்மாமன் மகன் என்னை மணந்துகொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதியிருக் கிறார். என் சம்மதத்தைக் கேட்டார்கள். வாமியை கேட்டுச் சொல்லுகிறேன் என்ற சொல்லிவிட்டு வந்தேன். சந்நி : (புன்னகையும், திகைப்பும்) அப்படியா? உன் பிரச்சனையில் தான் குழந்தாய் என் கீர்த்தி அடங்கி யிருக்கிறது. அபூர் : அப்படியா வாமி? சந்நி : கேள்! பெண்ணழகில் உன் அழகு தனி! அதனோடு கலை யழகு! உன்னைப்பற்றி உனக்குத் தெரியாமல் இருக்கலாம். இந்த உலகம் ஒர் இரும்புப் பட்டறை யானால் நீ அதில் தங்கக் களஞ்சியம். அபூர் : எல்லா பாக்கியமும் தங்களால்தான் வாமி! புரந்தரனை மணந்துகொள்ளவா? சந்நி : உன் மைத்துனைனை நீ மணந்துகொள்வதால் எனக்கு எவ்விதக் கீர்த்தியும் ஏற்பட வழியில்லையே! என் அருமை மாணவியே, உன்னைக் கொண்டு என் உலகப் புகழை நிலைநாட்டலாம் என்று நினைத் தேனே? அபூர் : நான் என்ன செய்யவேண்டும் அதற்கு? சந்நி : வெகு லேசாக உன்னை உன் மைத்துனனுக்குத் தத்தம் புரிய எண்ணிவிட்டாயே! அகிலம் போட்டியிடு கின்றதே உன் அழகுக்கு? கடலுலகில் கருத்தலைகள் உன் கலையழகை நோக்குகின்றனவே! ஒரு குள்ள மனிதன் கொடு என்றால் அள்ளிக் கொடுத்துவிடுவதா அழகின் குவியலை? அபூர் : நான் எங்கே சம்மதித்தேன்? உங்கள் கட்டளையைத் தானே எதிர்பார்த்திருக்கிறேன். சந்நியாசி : கலைஞானிகளில் உலகின் முதல்வன் நான்! என்னை உணர்ந்த தெரியாது கிடக்கும். இப்பரந்த உலகுக்கும் நான் இன்னான் என்று காட்டவேண்டும். ஆயினும் என் மகிமை உன்னால் வெளிப்படவேண்டும். உன் மகிமை என்னால் வெளிப்பட வேண்டும். உன்னை எனக்குத் தாரை வார்த்துக் கொடு. அபூர் : (தாரை வார்த்து) நான் தங்களுக்கு அடிமை! சந்நி : வெற்றி எனக்கு (கண்மூடி). மிக்க மகிழ்ச்சி. (ஆனந்தக் கண்ணீர்) ஒட்டக்கூத்தன் தன் பாட்டுக்கு எழுபது தலை கேட்டால். கிடைத்தவை ஆயிரந் தலைகள்! அவன் படைத்தது வையப் பெரும்புகழ். உன்னை மணக்க வருகிறவனை நீ கணக்காக மூன்று கேள்விகள் கேள்: விடை சொல்லத் தவறுகிறவனை வெட்டித் தள்ளு, உலகம் அறிய. அபூர் : வெகு தலைகள் சேரும் வாமி. சந்நி : ஆம் ஒவ்வொரு தலையும் உன் புகழை உயர்த்தும்! அபூர் : ஆம் வாமி! அப்படித்தான் வாமி! சந்நி : மூன்று கேள்விகட்கும் விடை சொல்லும் மெய் யறிஞனை நீ மனமார மணந்துகொள். ஏன்? பதில் சொல்லுகிறவன் பரமவிவேகியாக இருக்க வேண்டும். மூன்று கேள்வி களும் என்ன தெரியுமா? முதல். கே : 1) சகோதர வாஞ்சையும், சர்வஜீவ காருண்யமும் பூண்டு சந்நியாசியின் மந்திரக் கோலை அபகரித்த மன்னன் இருக்கிறானா? இறந்தானா? அவன் யார்? இரண்டாவது கேள்வி. 2) பெண்ணொருத்தி ஆண்வேடம் பூண்டு அமைச்சுத் தொழில்புரிந்து ஐந்து வஞ்சியர்களை மணப்பதாகக் கவர்ந்து வரும்போது அப்பெண்களுக்குரிய சந்நியாசியை அடித்துத் துரத்தியவன் இருக்கின்றானா? இறந்தானா, அவன் யார்? மூன்றாவது கேள்வி. 3) சந்நியாசிக்கு உதவிய சுதாவும், சுதாமதியும் உயிருடன் இருக்கின்றார்களா? இறந்து போனார்களா? சுதாமதியின் கதியென்ன? அபூர் : மகிழ்ச்சி வாமி! ஒடி என் உறுதியை அப்பா அம்மா வுக்குச் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். சந்நி : அஞ்சுவார்கள். அஞ்சாதே நீ! உன்னை அடக்கு வார்கள். இடந்தராதே! ஏமாற்றுவார்கள் ஏமாறாதே! அபூர் : அவர்கள் கிடக்கிறார்கள் (ஓடுகிறாள்.) சந்நி : என் கனவு பலித்தது! காட்சி - 10V தோட்டக்காரன் வீடு தோட்டக்காரன் குடிசையினின்று வெளிவந்து திண்ணையில் உட்காருகிறான் தோட்ட : அம்மா பாப்பா, அந்த வெத்லே பாக்குப் பொட்டியே எடுத்தா? பாப்பா : சரியா போச்சு. (வெளியே வந்து) உள்ளே இருந்து தானேப்பா வந்தே. பொட்டியே எடுத்து வந்துடப் படாது? தோட்ட : மறந்துட்டேம்மா. செத்தே, போயி எடுத்தா. பாப்பா : (முகச்சுருக்கத்தோடு, சென்று பெட்டியை எடுத்துவந்து தோட்டக்காரன் எதிரில் திட்டென்று வைத்து விட்டுத் திண்ணையில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு கோலம் பயிலுகிறாள்) என்னே இனிமே கூப்டாதேப்பா. கோலம் போடக் கத்துக்கறேன். தோட்ட : (பெட்டியைத் திறந்து பார்க்க அதில் ஒன்றுமில்லை) பாரம்மா இப்படி! பாப்பா : அந்தப் பக்கம் முடிச்சுட்டு வர்றேன். தோட்ட : எந்தப் பக்கம். பாப்பா : மேல்பக்கம். தோட்ட : கோலத்தயா சொல்றே. பாப்பா : பின்னே என்னாத்தே கேக்கறே? (கோலத்திலேயே கண்) தோட்ட : வெத்லே பெட்டியிலே ஒண்ணும் இல்லம்மா. ஏஞ் செல்லமில்லே. பாப்பா : அப்பா கோலம் போடக் கத்துக்கச் சொன்னேல்ல? தொல்லே பண்றியே? தோட்ட : தள்ளாத காலம்மா. பாப்பா : தள்ளாமே போயி எடுத்து வாரது? (வெற்றிலையை எடுத்து வாயிற் போட்டுக் குதப்பிக் கொண்டே) ரெண்டெழுத்து படிச் சிருந்தா மரியாதை தெரியும். பாப்பா : ஆமாம். இவரு ரொம்ப மேதாவி. படிக்க வச்சியே என்என. படிக்க மாட்டேன்னா சொன்னேன்? தோட்ட : ஒனக்காம்மா படிப்பு. இன்னுந்தான். தேடறன் ஒனக்கு வாத்தியாரை! பாப்பா : தேடுப்பா, இடியாப்பத்துக்கு தலைப்பு தேடினானாம் ஒருத்தன். ஆப்புடு மில்லே. அந்த மாதிரி கேடு! (உள்ளே போகிறாள்) காட்சி - 11 சிந்தனை நிலையம் அரசன் - மந்திரி. அபூர்வம் வருகிறாள். அரசன் : உன்னைத் தானம்மா எதிர்பார்த்திருக்கிறோம். அபூர்வம் : சேதி சொல்லத்தான் ஒடி வருகிறேனப்பா. அரசன் : அப்படியா? அபூர்வம் : நான் அழகுடையவள். அரசன் : யார் மறுப்பார்? அபூர்வம் : என்னிடம் உள்ள கலைஞானம் அளவில்லாதது. அரசன் : அறிவேன். அபூர்வம் : உலகம் அறிய வேண்டும். அரசன் : தானே அறிந்து கொள்ளும் அம்மா! அபூர்வம் : நானும் என் குருநாதரும் எங்களுக்குரிய புகழை எதிர் பார்ப்பது ஞாயந்தானே? அரசன் : ஒப்புக்கொள்கிறேன். அபூர்வம் : என்னை ஜெயிப்பவன் எனக்கு மணவாளனாகட்டும். நீதி கேது மன்னன் மகளை வாதில் வெல்ல முடியாமல் உயிரிழந் தார்கள் பலர் என்று உலகம் புகழட்டுமே! ஒட்டக்கூத்தன் புகழ் பெற்ற தெப்படி? மந்திரி : ஒட்டக்கூத்தன் அறுத்த தலைகள் உயிர்பெற்றன கலை வாணியால். அபூர்வம் : ஏன் பெறாது, என் குருநாதனால்? அரசன் : அவர் சக்தி வாய்ந்தவர்தான். மந்திரி! அதற்கேற்ற ஏற்பாடுகளை யெல்லாம் செய்துவிடு. அபூர்வம் : நான் போய் வருகிறேன் அப்பா. காட்சி - 11V சிந்தனை நிலையம் - போகும் வழி அரசன் : ஒன்றும் தோன்றவில்லை. என்ன பதில் எழுதுவது புரந்தரனுக்கு. மந்திரி : நீ உன் திருமணத்திற்காகப் புறப்பட்டு வருவது இப்போது உசிதமில்லை. அவ்வளவுதானே! அரசன் : அப்படித்தான் எழுதிவிடலாம். வருத்தப்படுவான். அம்மான் அல்லவா? இருக்கட்டும் அப்படித்தான் எழுதி விடலாம். மங்கையர்க்கரசிக்குத் தன் தம்பிக்கு நம் குழந்தையைக் கொடுத்துவிட வேண்டும் என்று விருப்பம். இருக்கட்டும் அப்படித்தான் எழுதிவிடலாம். காட்சி - 12 சுரேந்திரபுரி - புரந்தரன் அரண்மனை புரந்தரன் : நீ திருமணத்துக்காகப் புறப்பட்டு வருவது இப்போது உசித மில்லை. உசிதமில்லாமற் போனதற்குக் காரணம்? இப் போது உசிதமில்லையாம். எப்போது உசிதம்? தெரிவிக்க வேண்டாமா அந்த மடையன்? மாப்பிள்ளை தேடுவதில் எதேச்சாதிகாரம் செலுத்த எண்ணுகிறான். நிலத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம் அவன். அநு போக்காரனுடையது பயிர். அபூர்வ சிந்தாமணிக்கோ என் மேல் உயிர். அமைச்சரே நான் நேரே செல்லவேண்டும் ஆதித்த புரத்துக்கு. மந்திரி : மதியாதார் வீட்டை மிதிப்பது சரியல்லவே அரசே? புரந்தரன் : இங்கிருந்துவிட்டால் நான்? அந்தச் செங்கரும்பை, எங்கு விற்று விடுவானோ! சரி அந்த மூடப்பயல் மதிக்கவில்லை என்கூடப்பிறந்தவள். என்னை வரவேற்காதிருப்பாளா? மந்திரி : வரவேற்க மறுத்தால்? புரந் : பகையாளியின் கொல்லை. ஆயினும் படர்ந்திருப்பது என் சொந்தமுமில்லை. அன்றியும் ஒன்று கேள். கைதவறிப் போய்விட்டால், அந்தக் கன்னல் மொழி? என் வாழ்வுக்கு என்ன வழி. நான் வரும் வரைக்கும் ராஜ்யத்தைப் பார்த்துக் கொண்டிரும். காட்சி - 13 ஆதித்தபுரம் நீதிகேது : எங்கும் நம் அபூர்வசிந்தாமணியைப் பற்றிதான் பேச்சு! அதனோடு நம்மைப் பற்றிய பிரதாபம். மங்கை : மூன்று கேள்வி! சரியான பதில் சொன்னால் திருமணம். தவறினால் தலையே பறிமுதல், அபூர்வ சிந்தாமணி அப்படிப் பட்டவளா என்ற ஆச்சரியப்படுவார்கள் என்பதில் ஐய மில்லை. (சேவகன் வந்து வணங்கி) சேவகன் : தங்கள் மைத்துனர் புரந்தர மன்னர் வந்திருக்கிறார். மங்கை : அடடா, தம்பி வந்திருக்கிறானாமே. நீதிகேது : இதென்ன தர்ம சங்கடம். வர விடு! வரவிடு! (போதல்) நீதிகேது : வாரும் மைத்துனரே. மங்கை : வா தம்பி! புரந்தரன் : ஆம்! நான் அழையா வீட்டுக்கு நுழையாச் சம்பந்தி. வா என்று அழைத்தீர்களே, நன்றி மைத்துனரே; நன்றி அக்கா; மிக்க நன்றி! பெண்ணுக்கு அம்மான் வருகிறேன். என்று எழுதினால் வரவேண்டாம் என்று பதில் எழுதுவது மிக்க யோக்கியதையல்லவா? மிக்க நன்றி, அக்கா அவர்களே உங்கள் பெண்ணுக்கு அழகு இருக்கிறது. நீதிகேது : விவேகம்? புரந்தரன் : விவேகம் இருக்கிறதா? எனக்குத் தெரியாது. ஆகையால் அவளை மணக்க ஆசை இருக்கிறது எனக்கு! உங்கள் தயவை நாடுகிறேன்! அவ்வளவுதான். வாழ்வு வந்துவிட்ட தல்லவா உங்களுக்கு? நீதிகேது : கேளும் மைத்துனரே. உட்காரும்! மங்கை : கேள் தம்பி! உட்கார். புரந்தரன் : உட்காருகிறேன் அக்கா! தூங்கச்சொன்னாலும் தூங்கு கிறேன். அப்போதுதான் உங்கள் மகளை வேறு ஒருவ னுக்குக் கட்டிவைக்கலாம். நன்றாய்த் தூங்குகிறேன். தூங்கத் தானே வந்தேன்? (அமர்கிறான்) மங்கை : தம்பி இதைக் கேள்! புரந்தரன் : சொல்லக்கா, சொல்வதை மட்டும் கொஞ்சம் சீக்கிரம் சொல்லவேண்டும். ஏனென்றால் அபூர்வத்தை நான் கண்டு பேசவேண்டுமல்லவா? மங்கை : அபூர்வத்தின் குருநாதர் மகா மேதாவி. அவருடைய மகத்துவம், அவருடைய சிஷ்யையால் பிரசித்தமாக வேண்டும். அதற்கு வழி என்ன? புரந்தரன் : யாரைக் கேட்கிறாய்? மங்கை : அதற்கு அவர் ஒருவழி ஏற்படுத்தினார். அபூர்வத்தை மணக்க வருகிறவர் அவள் கேட்கும் மூன்று கேள்விகட்கு விடை சொல்ல வேண்டும். புரந்தரன் : ஓகோ கோ கோ மிக்க ஒழுங்கு. நீதி : அதனால், தன்போல் படித்தவனை மணந்து கொள்ள வசதி ஏற்படும் அல்லவா அபூர்வத்திற்கு? புரந்தரன் : ஆமாமாம், மூன்று கேள்விகட்கும் பதில் சொல்லா விட்டால் மணந்து கொள்ள மாட்டாள். பதில் சொல்லி விட்டால் மணந்து கொள்ளவாள். மிக்க விகேகி, உங்கள் மகள். நான் சொல்லுகிறேன் என்று வருத்தப்படக் கூடாது. ஒரு கழுதை பதில் சொல்லுகிறது கட்டிக் கொள்ள வேண்டியது தானே அந்தக் கழுதையை? நீதி : அதெப்படிப் பதில் சொல்ல முடியும், அந்தக் கேள்வி கட்குப் பதில் சொல்லுகிறவன் புஜபல பராக்கிரமும் உலக ஞானமும், சாத்ர விவேகமும் உடையவனாகத் தானே இருக்க முடியும்? புரந்தரன் : சரி என்னைக் கேட்கட்டும் போகிறேன். மங்கை : தம்பி போக வேண்டாம்! நீதி : போவது சரியல்ல. புரந்தரன் : ஏன் குட்டு வெளியாகிவிடும் என்ற அச்சமா? மங்கை : நான் சொல்வதைக் கேள் தம்பி, தம்பி என்று அழைக்க நீ ஒருவன்தான் இருக்கிறாய் எனக்கு. புரந்தரன் : அக்கா ஒருத்திதான் பக்கா கைகாரியாக, மைத்துனன் நானிருக்க அனாமாத்துப் பேர் வழியிடம் அபூர்வத்தைக் கட்டிவைத்து விட்டீர்கள். இந்த மராமத்து வேலையை மறைக்க நீங்கள் கட்டிடும் கறுப்புத் திரைக்குப் பேர், மூன்று கேள்விகள். நீதி : பதட்டப் பேசரே. அப்படி ஒன்றுமில்லை. மங்கை : தம்பி என் சொல்லைத் தட்டாதே. உன்னைக் கெஞ்சுவது உன்மேல் வைத்த அன்பினால். (வழி மறித்தல்) புரந்தரன் : கேள்விக்குப் பதில் சொல்கிறேன் ஏன் மறியல்? மங்கை : உன்னால் முடியாதே! புரந்தரன் : உனக்கெப்படித் தெரியும்? நீதி : அதற்கு அபார ஞாணம் வேண்டும். முடியா விட்டால்...? புரந்தரன் : முடியாவிட்டால் திரும்பி வந்துவிடுகிறேன். மங்கை : ஐயோ தம்பி பதில் சொல்லத் தெரியாவிட்டால் உன் தலை வெட்டப்படும். புரந்தரன் : ஆ! நீதி : அப்படி அபூர்வத்தின் பிரதிக்ஞை. புரந்தரன் : (கத்தியை உருவிக்கொண்டு) என் தலை வெட்டப் படும். பார்க்கிறேன். (போதல்) மங்கை : தம்பி! தம்பி! நீதி : (போனபின்) விதி யாரை விட்டது? மங்கையர்க்கரசி ஐயோ! காட்சி - 14 புரந்தரன் ஆராய்ச்சி மணி அடிக்கிறான் செங்கமலம்: ஆராய்ச்சி மணி அபூர்வம்! முதல் முதல் வந்தார் ஒருவர். சிந்தா : தைரியசாலி என்று சொல்ல வேண்டும். செங்கமலம் : தலையைக் கொடுக்கச் சம்மதித்துத் தானே வந்திருக்க வேண்டும். தோழி (விரைவில் வந்து) அம்மா அம்மா, ஒங்க அம்மான். புரந்தர மன்னர். சிந்தா : என்ன செங்கமலம், ஐயோ என் அன்னைக்கு அருமைத் தம்பி. தந்தைக்கும் எனக்கும் தட்ட ஒண்ணாத ஒட்டுதல். தலை வணங்கத் தயங்காதா என் உள்ளம்? சந்தி : (விரைவில் எதிர்த்தோன்றி) மணியடித்தவன் உன் மைத்துனன். உன் சபதத்திற்கு நல்ல சோதனை தான். மனம் தளராதே. சிந்தா : உறவென்றும் பாராமல் தலையை வெட்டினாள் என்று ஊர் தூற்றுமே என்று அஞ்சுகிறேன் வாமி. சந்நி : பிதற்றுகிறாய்! கேள். உலகப் போர் துவக்கிவிட்டாய். இந்த ஓலைச்சுருளில் தடுக்கி விழுந்துவிடுவதா? ஞானிகட்கு உற்றாரும் மற்றோரும் ஒன்றுதானே? என்ன? சிந்தா : சரிதான் குருநாதரே! சந்நியாசி : செங்கமலம் நிபந்தனையை அவனுக்குக் கூறு! கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிறேன் என்று ஒத்துக் கொண்டால் உள்ளே அழைத்து வா. உம். நான் மறைவிடத்தில் இருக்கிறேன். அமர்ந்திரு சிந்தாமணி உன் ஆசனத்தில். (தோழி, போதல், சந்நியாசி போதல்) காட்சி - 14ã கேள்வி அறை புரந்தரன் : இத்தனை நிபந்தனைகள் உன் அத்தானுக்குமா அபூர்வம்? அபூர்வம் : (கலங்காத நிலையில் இருக்கிறாள்) புரந்தரன் : காவிரி வெள்ளம் போல் கலகலவென்று பேசும் உன் வாய் அடைத்துவிட்டதா? அன்புவிழி அனல் விழியாக நடிக்கிறதா? கோபமா? அடிக்கடிச் சந்திக்காததால் மனதாபமா? இன்னதென்று சொன்னால்தானே? அபூர்வம் : (உடல் திரும்பாமல் முகத்தை மட்டும் மறுக்காகவும் மெதுவாகவும் திருப்பி) நாம் உறவினர். புரந்தரன் : ஆம், மந்தியும் அதன் மடியினை விட்டு விலகாத குட்டியும் போல. அபூர்வம் : ஆயினும் ... ... புரந்தரன் : ஆயினுமா? உன் வார்த்தைக் கிரணம் என் மையல் இருட்டை நீக்குவதாக இருக்கட்டும். அபூர்வம் : வாதம் செய்யும் இடம். மற்ற பேச்சுக் கூடாது. பதில் சொல்லச் சம்மதந்தானே? புரந்தரன் : குன்றின் மேல் ஏறிக்கொண்டது குரங்குக் குட்டி! வாதத்தைக் கண்டுவிட்டாள் வலிப்பைக் காணாமல்! கற்ற இறுமாப்பு ரத்தக் கலப்பையும் மறந்துவிடுமோ? அடி பொன்மானே துரத்திப் பிடிக்க வேண்டுமா நான், ராமனைப் போல! நீ என் கைம்மானடி! நான் உனக்கு அம்மானடி! சிந்தா : நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கும் பதில்? புரந்தரன் : சொல்லிவிட்டால்? சிந்தா : மணம். புரந்தரன் : இல்லாவிட்டால்? சிந்தா : பிணம். தலை வெட்டப்படும். புரந்தரன் : பதில் சொல்லப் பின்வாங்கவில்லை. வாதில் வென்று மணப்பது காதல் திருமணமல்லவே! உன்மேல் நான் கொண்ட காதல் சாதலைப் பொருட்படுத்தாது. ஆயினும் மைத்துனனை மரணக்குழியில் சேர்த்தாள் என்ற நிந்தனை உனக்கேன்? சிந்தா : முதற் கேள்வி. சகோதர வாஞ்சையும் சர்வஜீவ காருண்யமும் பூண்டு சந்நியாசியின் மந்திரக் கோலை அபகரித்த மன்னவன் இருக்கிறானா? இறந்தானா? அவன் யார்? விடை கூறும். புரந்தரன் : ... உம் சிந்தா : என்ன! விழிப்பதில் பயனில்லை. புரந்தரன் : தெரியவில்லை அபூர்வம். (தலைவிழுகிறது) (செங்கமலம் வெளியில் ஓடுகிறாள்) சிந்தா : (துன்ப முகத்தோடு) மின்னொளி போல் தோன்றினான். மின்னி மறைவதுபோல் மறைந்தான். ... ... ... ... ... சந்தி : உனக்குள்ள வித்தை பிரதாபத்தை இதோ உலகம் தொழுது கொண்டிருக்கிறது. நீ இங்கே அழுது கொண்டிருக்கிறாய். இந்தத் தலையையும் உடலையும் தக்கபடி எடுத்து வையுங்கள் பத்திரமாக. காட்சி - 15 தோழி பரபரப்புடன் ஓடி நீதிகேது மங்கையர்க்கரசி எதிரில். செங்கமலம்: தலை வெட்டுண்டு இறந்தார் புரந்தர மன்னர். மங்கை : (முகத்தில் அறைந்து கொண்டு) தம்பி! நீதி : (தலையில் கை வைத்துக்கொண்டு) அம்மான் என்றும் பார்க்கலாகாதா? காட்சி - 16 புகழ் பரவுகிறது திண்ணைப் பேச்சு : அவன் ஏன் சம்மதிச்சாண்ணேன், கேள்விக்குப் பதில் சொல்றதாக? அது சர்தான். அவள் படிப்பும் காரணமும் கமல முகமும் அடாடாடாடா ரொம்ப ... ... ரொம்ப ... ... வாட்போர் பயிலும் இடம் : இருவர் வாட்போர் செய்கின்றனர். ஒரு மன்னன் மகன் வருகிறான். ஒருவர் : புரந்தரன் போய்விட்டானோ? மற்றவர் : ஏன் எப்படி? ஒருவர் : அபூர்வ சிந்தாமணியை மணக்க ஆசை கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. நிபந்தனையின்படி தலை துண்டிக்கப் பட்டது. மற்றவர் : எவ்வளவு கலைத்திறம்! எவ்வளவுஅழகு! ஆஹா (புலவர் கூட்டம்) புலவர் : என்ன வியப்புங்காணும் புலவரே? புலவர்கள் :அபூர்வ சிந்தாமணியைப் பத்தித்தானே? ஆக்ஷேபனை என்ன? புலவர் : அந்தச் சந்நியாசி இருக்கிறாரே. புல 1 : எந்தச் சந்நியாசி? புல 2 : அந்தச் சந்நியாசி. புல 1 : மகா பண்டிதர் அவர். மாணவிதானே அவள்! எவள்? புல 2 : அவள். புல 1 : அப்படியிருக்கும்போது வாதுக்குப் போகலாமா அவளிடத்தில்? புல 2 : எவளிடத்தில் ? புல 1 : அவளிடத்தில். புல 2 : அப்படி இல்லை. அந்த விஷயம். அவள் அழகிய சுடர் விளக்கு. போகிறவர்கள் விட்டில் பூச்சிகள். காட்சி - 16V தோட்டக்காரன் வீடு பாப்பா கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள் திண்ணையில், வேலப்பன் வருகிறான். வேலு : ஏன் பாப்பா! ஒங்கப்பா இல்லை. பாப்பா : செத்துப் பூட்டாங்கன்னு எந்தக் கழுதை சொல்லிச்சு. வேலு : ஊஹும் ஊட்லே இருக்காங்களா, வெளியிலே கிளியிலே போயிருக்காங்களான்ணேன். பாப்பா : எப்படி இருந்தா தேவலே? வேலு : வெளியிலே போயிருந்தாதானே நம்பளுக்கு நல்லதுண் ணேன். ஏம் பாப்பா நீ ஆரெ கட்டிக்கப் போறே? பாப்பா : நான் சொல்றத்தே கேக்கறவனே! வேலு : நான் கேப்பனே. நீண்ணா சொல்லேன்! பாப்பா : சொல்ட்டா கேக்றியா? ஒடனே இந்த எடத்தைவுட்டு வெளியிலே போவணும். வேலு : போகிறான் (திரும்பி வருகிறான்) பாப்பா : ஏன் வந்தே? வேலு : சொன்னபடி போனேன். கண்ணாலம் பண்ணி க்றதுக்கு வந்தேன். பாப்பா : ஓகோ அடடா, சரி, இதியும் கேளு. நீ என்னை மறந்துவிடு. வேலு : மறந்துட்டேன். பாப்பா : இல்லே மறக்லே பூடு. (இதற்குள் தோட்டக்காரன் வந்துவிடுகிறான். வேலன் போய் விடுகிறான்) பாப்பா : அப்பா நீ எப்டியாபட்டவனே கட்டிக்கப் போறெண்ணா என்னாப்பா சொல்றது? தோட்ட : நான் வக்ற புள்ளியே நல்லா கூட்டிக் கோல மாக்றவனே கட்டிக்கிவேண்ணு சொல்லேன். பாப்பா : தப்பிபுட்டா? தோட்ட : நீ அவன் காலே வெட்டுவேண்ணு சொல்லு பாப்பா : அதாம்பா சரி. காட்சி - 17 வேறு ஊர் காந்தீபன் : தேன் குடத்தில் ஈயைப் போல் சிந்தாமணியிடத்தில் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் இந்த முயற்சியில் சாக்காடு ஏற்படட்டும் கவலையில்லை. சுந்தரன் : மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமே. அவள் ஓர் சாதிர விற்பன்னியாமே? காந்தி : என்னால் பதில் சொல்ல முடியும். என்னால் முடியாதது ஒன்றுதான். அவளைப் பார்க்காமல் இங்கே நான் இருப்பது தான். என்னால் முடியாது. புறப்படுவோம். (சிந்தாமணியின் கேள்வி மன்றம்.) சிந்தா : என்ன விழிக்கிறீர்? வந்தவன் : தெரியவில்லை (தலைபோகிறது) காட்சி - 18 செங்க : (மணி அடிக்கிறவனை நோக்கி) நிபந்தனை தெரியுமா? புதிய ஆள் : தெரியும். செங்க : உள்ளே போகலாம்! (போகிறான்) செங்க : (மற்றும் மணி அடிக்கிறவனை நோக்கி) நிபந்தனை தெரியுமா? மற்றொரு புதியவன் : தெரியாமலா வருவேன்? செங்க : போகலாம் உள்ளே! காட்சி - 19V ஒருபுறம் பலர் பேசிக்கொண்டே கேள்விக்குப் பதில் சொல்ல வருகிறார்கள். அதில் காந்தீபனும். ஆள் 1 : மூன்று கேள்விகளையும் சொல்லிவிட்டுப் பதில் கேட்பாளா? அல்லது ஒவ்வொன்றாகவா? ஆள் 2 : ஒவ்வொன்றாக ஆள் 3 : கேள்வி எந்தப் புதகத்திலிருந்து? ஆள் 2 : இன்ன புதகம் இன்ன பக்கம் இத்தனையாவது வரி என்று தெரிந்தால் இவ்வளவு நாள் அவருக்குக் கலியாணம் நடந்திருக்குமே? ஆள் 1 : சரி பார்ப்போம்! சாவு வந்தாலும், இருந்தாலும் என்னப் பண்ணப் போகிறோம் இந்த இழவு உலகத்தில். (போகிறார்கள்) காட்சி - 19 பி சிந்தாமணி காந்தீபன் சிந்த : இதுதான் முதல் கேள்வி ! விடை? காந்தி : அவன் இல்லை இறந்துவிட்டான். (தலை போகிறது) (மணி அடித்துக்கொண்டே இருக்கிறது.) காட்சி - 20 கைவல்யபுரம் - வனம் கூடாரத்தின் எதிரில் வேடுவர், பிரதானியர், மெய்யழகன். பாட்டு 3 எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்த தென்று கொட்டு முரசே - வாழ்வில் கட்டுத் தொலைந்த தென்று கொட்டு முரசே. இல்லாமை எனும் பிணி இல்லாமல் கல்வி நலம் எல்லார்க்கும் என்று சொல்லிக் கொட்டு முரசே - வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்த தென்று கொட்டு முரசே. சான்றான்மை இவ்வுலகில் தோன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்த தென்று கொட்டு முரசே - வாழ்வில் ஊன்றிய புகழ் சொல்லிக் கொட்டு முரசே ஈன்று புறந்தருதல் தாயின் கடன் உழைத்தல் எல்லார்க்கும் கடன் என்று கொட்டு முரசே - வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே. (ஒருவர் ஒடிவந்து காளிமுத்துவிடம் கூறுகிறான்) ஐயா ஐயா ரெண்டு சிங்கம் ஐயா. காளி : ரெண்டு சிங்கமா? நல்ல சிங்கம் ஒன்று அசிங்கம் ஒண்ணா? உம் ... எங்கே பாத்தே? ஒருவன் : மலே கொகையிலேயிருந்த வடக்கே ஒடிச்சி சிங்கம் காளி : அப்பா இதெ சின்ன ராசாகிட்டே சொல்லக்கூடாது. கம்முண்ணு இருந்துரு. ஒருவன் : போய்யா போய்யா (சின்ன ராசாவிடம் ஓடிச் சொல்லுகிறான்) சின்ன ராசா ரெண்டு சிங்கம் அங்கே இருக்குதுங்க. மெய் : எங்கே வில்? எடுத்துவா அம்பறாத் தூணியை! காளி : தம்பி கேளுங்க நாஞ் சொல்றத்தே. நீங்க அந்தப் பக்கம் போவக்கூடாது. மெய் : ஏன்? காளி : வாணாந்தம்பி! நான் காலமெல்லாம் ஒங்க ராசாங்கத்ல இருந்து வர்ரேன். சொல்றத்தே கேக்கணும் அந்தப் பக்கம் போவக்கூடாதுண்ணா போவக்கூடாது. மெய் : காரணம் இன்னதென்று சொன்னால்தானே? காளி : ஒங்க அண்ணமாரு அல்லாரும், செத்துபூட்டா ங்களேற ஏந் தெரியுமா? சொன்னப் பேச்சைக் கேக்காமே போனதனாலே தான். மெய் : என்ன புதுமை! சொற்புத்திக் கேளாமல் இப்பக்கம் போன தினால் என் தமயன்மார் மாண்டார்களா? விவரம் சொல்ல மாட்டாயா? காளி : சொல்ல வாணாண்ணு சொல்லியிருக்காங்க ஒங்கப்பா. மெய் : ரதத்தை ஆயத்தப்படுத்துங்கள். புறப்படுங்கள் அரண் மனை நோக்கி. காட்சி - 21 மெய்யழகன் பெற்றோர் மெய்யழகன் : அப்பா! அம்மா! மதிப்பேறிய மன்னன் மகன் நான். கொதிப்பேறிய உள்ளம் ஏன் எனக்கு? தோள் ஏன் எனக்கு? தோளிற் சுமந்த வாள் ஏன் எனக்கு? தவமாய்த் தவங்கிடந்து தரை மெழுகிச் சோறு தின்று பெற்றதாகச் சொல்லுவதுண்டு அன்னை, நானோ தவமானம் பெற்றவனாகச் சஞ்சரிக்கவில்லை. அவமானம் சுமந்து அலைகின்றேன். எப்படி எதற்காக இறந்தார்கள் என் அண்ணன்மார். அரசன் : அப்பா குழந்தாய்! அதை ஏன் கேட்கின்றாய்? உன்னை யாவது கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோமே அது போதும். மெய் : என்னையும் இழந்து விடாதீர்கள்! தந்தையே, நடந்ததைச் சொல்லுங்கள். அரசன் : பதறுகின்றாயே குழந்தாய்? ஆதித்தபுரி மன்னன் மகள் அபூர்வ சிந்தாமணியை மணக்க வேண்டுமானால், அவள் கேட்கும் மூன்று கேள்விகட்கும் பதில் சொல்ல வேண்டும். தவறினால் தலையை வெட்டிவிடுவாள். அவள் அழகுக்காக மணந்து கொள்ளச் சென்றார்கள் உன் அண்ணன்மார். தலையிழந்தார்கள். மெய் : பழிக்குப்பழி வாங்கி வருவேன் அரசி : போகாதேயப்பா. அரசன் : பொறு குழந்தாய்! மெய் : முன்னோர் குறை தீர்ப்பது பின்னோர் கடன். துன்ப வரலாறு கேட்ட பின்பும் பொறுப்பதா? விடை பெற்றுக் கொள்ளுகிறேன். (வணங்கிப் போதல்) காட்சி - 22 மெய்யழகன் அறை. விடியற்காலை, உடை உடுத்துகிறான். ஒருவன் : (வந்து) ரதம் சித்தம். மெய்ய : ரதம் வேண்டாம், குதிரை வேண்டும். ஒருவன் : அப்படியே! (போகிறான். அவனைக் காளிமுத்து வழியில் சந்திக்கிறான்) காளி : என்ன சேதி? ஒருவன் : இளையராஜா பயணம் செய்கிறார் ஆதித்த புரத்திற்கு. காளி : (மகிழ்ச்சியால் தோளை அடித்துக்கொண்டு ஓடுகிறான் மெய்யழகனிடம்) மெய் : என்னவென்று? காளி : தம்பியே உட்டுப்பிரியாதே! காளி : தம்பி! ஒரு கெனா கண்டேன் தம்பி. அம்மா வந்தா சொன்னா! எங்கே போனாலும் கூடவே போண்ணா. தம்பி போவட்டும் நாம்ப இங்கியே இருப்போம் இண்ணுதான் நெனைச்சேன். அது என்னுமோ அவ அப்படி சொல்லிபுட்டா. மெய் : சரி சரி! புறப்படு! அதற்காகத்தானே இந்தப் புளுகு? காளி : நானில்லை தம்பி அவ! மெய் : கிளம்பு விரைவில். காட்சி - 23 காலை சூரியோதயம் (இரண்டு குதிரைமீது இருவரும்) பாட்டு 4 செங்கதிரும் இங்கெதிரே தங்கத்தைப் போலே! சேர்ந்திருளை வாங்கியதே தென்கடலின் மேலே! பொங்கியதே எங்கும் ஒளி பூரிக்கும் உள்ளம்! புதுவாழ்விற் பாய்ந்ததுவே பேரின்ப வெள்ளம்! காட்சி - 24 ஆதித்தபுரியின் எல்லை மெய்யழகன் : (குதிரைமேல் இருந்தபடியே) ஆதித்தபுரியின் எல்லைப் புறமாக வந்தோம். அதோ ஒர் சத்திரம்! (இறங்கு கிறார்கள்) மெய் : அவள் கேட்கும் மூன்று கேள்விகளும் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான் முக்கியம். காளி : சத்திரத்திலே தகவல் கெடைச்சாலும் கெடைக்கும். தம்பி! குதிரையை இங்கேயே கட்டி வச்சிட்றேன். நம்ப வேஷத்தை மாத்திக்கணும். காளி : (வழிப்போக்கனை நோக்கி) ஏன்யா, அதோ தெரிதே, அது யார் தோட்டம்? வழிபோ : அதுவா? அதுதான் சிந்தாமணி தோட்டம். காளி : அந்தத் தோட்டத்லேதான் சிந்தாமணி இருக்றதோ. வழி : ஊஹும் அதுக்கு உள்ள ஒரு தோட்டத்லே. அங்க ஆரும் போகக்கூடாது. காளி : ஓஹோ சரி... காட்சி - 25 தோட்டக்காரன் களை எடுக்கிறான் காளி : நாங்க கும்பிடுகிறோம். தோட் : யாரு நீங்க? காளி : நாங்க செடி கொடி எப்படி பயிரிட்றதுண்ணு தெரிஞ் சுக்க வந்தோம். தோட் : ஓஹோ, அப்படியா? காளி : ஒங்களுக்கு இந்த வேலையிலே ரொம்ப அநு போகங்க! தோட் : நானு சின்ன புள்ளெயிலேருந்து இந்த வேலெ செய்கி றேன். எனக்கு இந்த சித்ரெ வந்தா அறுவது வயசு. காளி : அப்டிங்களா அருமை அருமை! என்னாங்க! ஒங்களெ தானே! ஒரு சங்கதிங்க! தோட் : என்னா! சும்மா சொல்லு தம்பி! காளி : எங்க ரெண்டு பேரியும் இங்க ஒங்ககிட்டே வேலைக்கி வச்சிக் கணும் ஆமாங்க. ஒங்களுக்கு, புண்ணியங்க. மெய் : சம்பளம் தேவையில்லை. தோட் : சரிதான். பொம்பளை புள்ளைவ பொழங்கற எடமாச்சே? காளி : அரகரா அரகரா அரகரா அப்டி எங்களே ஒண்ணும் நினைக்காதீங்க! தோட் : உம்... இது ஒரு ரகசியமான எடந்தம்பி. காளி : அரகரா... அரகரா... அரகரா எங்களாலே ஒண்ணும் வெளியே போவதுங்க. தோட் : இந்தப் புள்ளெயாண்டான் யாரு? காளி : எந் தம்பிங்க! தோட் : நீங்க தோட்டத்துக்கு உள் பக்கத்லே போவாதீங்க. காளி : இல்லிங்க, இல்லிங்க. தோட் : இருங்க. காட்சி - 26 சிந்தாமணி அறை செங்க : ஏன் சிந்தாமணி உனக்குச் சந்நியாசி எல்லாம் சொல்லிக் கொடுத்தார். திருமணத்தின் அவசியத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வில்லையா? சிந்தா : சொல்லிக் கொடுத்தார். எனக்குத் திருமணத்தில் பற்றில்லை. செங்க : காதற்குளத்திலே இன்பப் புனல் ஒரு சொட்டும் இல்லை? சிந்தா : இருக்கிறது. நான் ஒருவனுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதை வெறுக்கிறேன். அவன் வாடி என்பான். போடி என்பான். அதட்டிப் பேசுவான். பதட்டம் காட்டுவான். எனக்கு வேண்டாம். செங்க : அவன் நம்மை வாடி என்றால் மாம்பழச் சுளை வாயில் விழுந்தது போல் இருக்காதா? அபூர் : திருமண ஏக்கம் கனமாக இருக்கிறதே உனக்கு. செங்க : அது கிடக்கிறது எட்டிக்காய். காட்சி - 27 (தோட்டம்) காளி : ஐயா! வெத்லே போட்டுக்குங்க தோட் : (வெற்றிலை போட்டுக் கொண்டே) என்னா சேதி? காளி : ஒண்ணுமில்லிங்க. மாடு மேய்க்றானே மஞ்சினி அவன் வந்தானுங்க. தோட் : என்னா சொன்னான்? காளி : அலரிப் பூ கேட்டான். அலரிப்பூ தோட்டத்துக்கு அந்தப் பக்கம் இருக்குது. நாங்க அங்கே போகக் கூடாதுண்ணமா? அதுக்கு எங்களே அவன் அவமானமா பேசறான். தோட் : என்னா சொன்னான் அந்தப் பய? காளி : ஒங்களே அந்தத் தோட்டக்காரு வைக்கவேண்டிய எடத்லே தான் வச்சிருக்காரு! அரக்காசிக்கி ஒங்களே நம்பறாரா? என்னென்னமோ சொன்னானுங்க (அழுகை). தோட்ட :ஒனக்கு என்ன தம்பி பைத்யமா! நாலாயிரத்துக்கு நம்பலாமே ஒங்களே. அவன் கெடக்றான் நீங்க இண்ணையிலேயிருந்து எங்கியும் போங்க! வாங்க! காளி : (அழுகை) நல்லவுங்க. எங்களே அப்டி சொன்னான். அந்த ஈனப் பய்யன் (அழுகை) வா தம்பி. அந்த அலரி பூ கிட்ட (போகிறார்கள்) காட்சி - 28 சிந்தாமணி அறை செங்க : தோட்டத்துக்குப் போகலாமா? அபூர் : அதற்குள் ஆராய்ச்சி மணி அடித்தால்? செங் : ஓடி வந்துடலாம். குளிர்ந்த தென்றல் வீசும். இனிய காட்சி! மரம் கொத்தி புழுக்களைக் கொத்தும். அதே நேரத்தில்தான் பெட்டையை எண்ணிக் கத்தும். அபூர் : இதுதான் உனக்கு ஆனந்தம்! சரி வா! (போகிறார்கள்) காட்சி - 29 தெம்மாங்குப் பாட்டு 5 மெய் : முத்து மல்லிகை பறிக்க மொய்குழல் வராததினால் சித்தெறும்பு மொய்த்திடுதே பொன்னான அண்ணா! அவன் செய்யுந் தொழில் வேறும் உண்டோ கண்ணான அண்ணா! காளி : கொத்துக்கிளி தான் மகிழக் கோவைக்கனி ஊட்டுவதால் முத்துமல்லிகை மறந்தாள் பொன்னான தம்பி. இன்னும்! மற்றபடி வேளையில் கண்ணான தம்பி மெய் : நல்ல குளிர் தென்றவது நங்கையும் வராததினால் புல்லி தழைத் தாலாட்டுதே பொன்னான அண்ணா. இந்தப் போகமதை ஏன்மறந்தாள் கண்ணான அண்ணா! காளி : கொல்லிமலைச் சாரலிலே கோமகளைக் கண்டதினால் நல்ல தென்றலை மறந்தாள் பொன்னான தம்பி. இதில் நாமெதற்கு வாடுவது கண்ணான தம்பி (பாட்டைக் கேட்டுக்கொண்டே செங்கமலம் சிந்தாமணி வருகி றார்கள். மெய்யழகனையும் காளிமுத்துவையும் தாண்டித் தோட்டக் காரக் கிழவனிடம் போகிறார்கள். செங்கமலம் பார்வை மெய்யழகன் மேல் பாய்கிறது. அவள் நடை சோருகிறது. சமாளித்துக்கொண்டு சிந்தா மணியைப் பின்தொடர்கிறாள்) சிந்தா : ஏன் கிழவா! முல்லைக்கொடிகள் நல்ல நிலையில் இல்லையே? தோட்ட : ஐயோ! அம்மா முத்து முத்தா அரும்பு உட்ருக்குதே! பத்தும் பத்தாத்துக்கு ரெண்டு பசங்களையும் வச்சித் தண்ணி ஊத்தறேனே. செங்கமலம்: நீவைத்த ஆளா அவர்கள்? தோட்ட : ஆமாங்க, கேளுங்க அவுங்கிளியே. காளி : ஆமாந் தங்கச்சி அவுரு வைச்ச ஆளுதான் நாங்க. அலரிக்குத் தண்ணி ஊத்தாட்டி கொண்ணு புடுங்க சிறுவச்சிறுவ இருந்ததுங்களே இருவாட்சி இப்ப பாத்திங்களா? சிந்தா : சரி ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். (சிறிது தூரம் சென்று) செங்கமலம்: காக்கையின் கூட்டில் தங்கக் காசு இருப்பதுண்டு. அந்த ஏழை முகத்தில் அழகு ஒழுகிறது. சிந்தா : அதென்னமோ நான் பார்க்கவில்லை. செங்கமலம்: ஏன் சிந்தாமணி நம் குருநாதருக்கு மாலை கட்டு கிறானே மாணிக்கம் அவனை நீக்கி விட்டாயே? குப்பக் கிழவனை அமர்த்திவிட்டு வருகிறேன் நீ போ! (போகிறாள் சிந்தாமணி) காட்சி - 30 (மற்றொரு புறம்) மெய்யழகனும் காளியும் பேசுகிறார்கள். செங்கமலம் ஒட்டுக் கேட்கிறாள் மெய்யழகன்: அபூர்வ சிந்தாமணியைப் பார்த்தாய்விட்டது. கொடுமை குடியிருக்கும் கடைவிழி! பொறிபறக்கும் பார்வை! காளிமுத்து : எனக்கு மாத்திரம் ஒரே பயம். ஏன்னா நீங்க வேலைக் காரன் வேஷத்திலே இருக்கிறிங்க. அவளே கண்டதும் ராஜ குமாரனா பூட்டா என்னா ஆவும். மெய்யழகன்: காரியம் பெரியதா, வீரியம் பெரியதா? அப்படிச் செய்வேனா? செங்கமலம் : ராஜகுமாரன்! (பெருமூச்சு) காட்சி - 31 இரவு தோட்டம் மெய்யழகன் ஒரு மேடையில் சிந்தனையோடு இருக்க செங்கமலம் வருகை. செங்க : இரவுக்கும் மூடாத தாமரை மலர் உங்கள் விழி! நினைவுப் பூஞ்சோலையில் ரீங்கார வண்டு உங்கள் நெஞ்சம். மெய்யழகன்: விடிந்தவுடன் புன்னைக்குக் கிளைகழிக்க வேண்டும். பதிவு போடவேண்டும். செங்க : பரம்பரைத் தோட்டக்காரர் போலவே இருக்கிறது உங்கள் பேச்சு. நல்ல நடிப்பு! தொட்டால் போதும் என்று தோகையர் தவங்கிடக்கும் உங்கள் பட்டான கை மண் வெட்டியிலும் பட்டது. வில்லும் அம்பும் சுமக்கும் தோள் கல்லும் கட்டியும் சுமக்கிறது. காரணாத்தமாக. மெய்யழகன்: ஒன்றும் விளங்கவில்லையே! செங்க : ஒன்றுமட்டும் விளங்கியிருக்க வேண்டும். அழுக்குத் துணிக்குள் இருக்கும் அரசகுமாரரை நான் அறிந்து கொண்டேன் என்பது விளங்க வில்லையா உங்களுக்கு? மெய் : சரி, அப்படியே வைத்துக் கொள்! அதை எப்படித் தெரிந்து கொண்டாய்? செங்க : உங்களைத் தோட்டக்காரர் என்று எண்ணியபோதே முகவாட்டத்தில் மயங்கினேன், சிந்தாமணிக்குப் போக்குக் காட்டித் திரும்பி வந்த போது என் செவியில் நீங்கள் பேசிக்கொண்டது கேட்டது! அரசகுமாரர் என்பதை அறிந்தேன். நெஞ்சைப் பறிக்கொடுத்தேன். அயர மறுத்தன விழிகள். உமை நாடி வந்தேன். என்னைச் சமர்ப்பிக்கிறேன். உமது இணையடிகளில், மறுத்தால் உயிர்விடுவேன். மெய் : மறுக்கவில்லை. காரியம் கைக்கூடும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். செங்கமலம், அபூர்வ சிந்தாமணி கேட்கும் மூன்று கேள்விகள் என்னென்ன? செங்க : சந்நியாசியின் மந்திரக்கோலை அபகரித்த மன்னன் இருக்கிறானா? இறந்தானா? யார்? இரண்டாவது, ஆண் வேஷத்தோடு அமைச்சுத் தொழில் செய்து ஐந்து பெண்களைக் கவர்ந்து வரும் போது அந்தப் பெண்களுக்குரிய சந்நியாசியைத் துரத்தி யடித்தவன் இருக்கின்றானா? யார்? மூன்றாவது, சந்நியாசிக்குதவிய சுதாவும் சுதாமதியும் இருக்கின்றார்களா? சுதாமதியின் கதி என்ன? மெய் : இவைகளுக்கு விடை தெரியுமா உனக்கு? செங்க : தெரியாது. அபூர்வசிந்தாமணியை இன்றிரவு கேட்டு நாளை சொல்லுகிறேன். நாழியாகிறது. மெய் : செங்கமலம் உன்னைப் பிரிய மனமில்லை எனக்கு. வெற்றி கிடைக்கும் வரைக்கும் மெல்லியர் உறவு கூடாது என்பது என் விரதம். போய்வா. காட்சி - 32 தோட்டம், மறுதினம் பாப்பா வருகிறாள் காளி சந்திக்கிறான் காளி : ஏம் பாப்பா : ஒனக்கு மாப்ளே எப்டி யிருக்கணும்? பாப்பா : புள்ளி வைப்பேன் கோலத்துக்கு! அதை சரியா வட்டி புடணும். கட்டிக்கிவேன் இல்லே, காலே வெட்டிபுடுவேன். காளி : சத்தியமாவா! பாப்பா : சத்தியமா? காளி : அப்படிண்ணா நல்ல கோலம் போடத் தெரிஞ் சவங்களே கட்டிக்குவே இல்லை. பாப்பா : ஆமாம். காளி : நானு எப்டியாப்பட்டவளே கட்டிக்குவேந் தெரியுமா? சொல்றேன் நல்ல தென்னமரம் ஏறவளே தான் கட்டிகிவேன். பாப்பா : ஐயையோ, அப்ப உனக்கு எந்தப் பொம்பளேயும் கெடைக்கப் போறதில்லே. காளி : ஒனக்குந்தான் எந்த ஆம்பளெயும் கிடைக்கப் போறதில்லே. பாப்பா : பொம்பளே தென்னமரம் ஏறுவாளா? எங்கியாவது. காளி : ஆம்பளே கோலம் போடுவானா எங்கியாவது? பாப்பா : நீ ஆம்பளேயேத்தான் கட்டிக்கணும். காளி : நீ பொம்பளேயேத்தான் கட்டிக்கணும். பாப்பா : ஓகோ! ஆம்பளைய்க்கு கோலம் போட வராது. பொம் பளைக்குத்தான் வருமோ! ஐயையோ, நான் தெரியாமே சத்தியம் பண்ணிட்டேனே. என்னா பண்றது? காளி : சத்தியம் கெட்டுடப்படாதில்லே. பாப்பா : ஆமாம், அதுக்கு என்னா பண்றது? காளி : பொம்பளையதான் நீ வைக்கிற புள்ளிக்குக் கோலம் போடுவா. நீ பொம்பளேயத்தான் கட்டிக்கேன். அதனாலே என்னா? பாப்பா : சீ! நானு ஆம்பளையைத்தான் கட்டிக்கணும்! காளி : எப்படி முடியும்? கோலம் போட ஆம்பளைக்குத் தெரியாது. அப்படிண்ணா நான் ஒரு வழி சொல்றேன். நீ புள்ளி எப்படி வைப்பே. அதெ எப்டி கூட்டுவே. அதெ எனக்கு மொதல்லியே சொல்லிக் குடுத்துடு. நீ வைக்கிறாப் போல வை. நான் கூட்றாப்போல கூட்றேன். கட்டிக்றாப்போல என்னெ கட்டிக்க. நான் இட்டுக்றாப்போல இட்டுக்றேன். நீ வர்ராப்லே வா! நான் தர்ராப் போல தர்ரேன் ஒரு முத்தம்! எப்டி? பாப்பா : அப்டிதான் செய்யுங்க (நகைப்பு). பாட்டு - 6 பாப்பா : கண்ணாலே கண்ட போதே கட்டிக்கதான் நான் நெனைச்சேன் திட்டுவேண்ணுதான் மறைச்சேன் காளி : உயிரெத்தான் வைச்சிருந்தேன் ஒமேலே இம்மா நாளா ஒமேலே இம்மா நாளா ஒடிஞ்சதே ஏ நெஞ்சே தூளா. பாப்பா : நல்ல நாளு பாக்கணுமே நடக்கணுமே கல்யாணம் நடக்கணுமே கல்யாணம் கொளுத்தணும் மத்தாப்பு வாணம். காளி : கை கலந்தா போதும் பொன்னே கண்ணாலம் ஏண்டி கண்ணே கண்ணாலம் ஏண்டி கண்ணே எந்நாளும் நாம்ப ஒண்ணே. பாப்பா : அப்பா வர்ராப்போல இருக்குதே. ஆமாம் ஆமாம். (ஓட்டம்) காட்சி - 33 செங்க : ஏன் சிந்தாமணி ஆராய்ச்சி மணி ஒய்வாக இருக்கிறதா? சிந்தாமணி : எவனுக்கும் தைரியம் இல்லை என்று அர்த்தம்! செங்கமலம் : அதுமட்டும் மெய்தான். நீ கேட்கும் மூன்று கேள்வி களும் கஷ்டமானவை. எவனாவது பதில் சொல்ல மாட்டானா, எப்படியாவது இச் சிந்தாமணியை மண வறையில் பார்க்கமாட்டோமா என்று எதிர்பார்க்கிறேன். என் எண்ணத்தில் மண் விழுகிறது. ஏன் சிந்தாமணி மூன்று கேள்விகளுக்கும் என்ன பதில்? தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கிறது எனக்கு, என்னிடம் சொன்னால் என்ன சிந்தாமணி? சிந்தாமணி : மூன்று கேள்விகளுக்கும் விடை மதிவதனபுரத்திலும், சம்பங்கிபுரத்திலும், நதிசிலபுரத்திலும் கிடைக்கும். செங்கமலம் : அதெப்படிக் கிடைக்கும் அங்கே? சிந்தாமணி : அது தெரியாது. சந்நியாசியார் என்னிடம் சொன்னது இவ்வளவுதான். இதையும் நீ யாரிடமும் சொல்லாதே. செங்கமலம் : அது சரிதானே! ஆரிடமும் சொல்லாதே. தூக்கம் வரு கின்றது சிந்தாமணி. (தூங்குவதுபோல் பாசாங்கு. சிந்தாமணி தூங்கிவிட்டாள். செங்கமலம் வெளியில் மெதுவாக நழுவுகிறாள்) காட்சி - 34 (அன்றிரவு, தோட்டத்தில் மெய்யழகன் ஆவலோடு செங்கமலத்தை எதிர்பார்க்கிறான்) மெய்யழகன்: உன்னைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன் செங்கமலம். செங்கமலம் : தூக்கத்தோடு சண்டையிட்டுத் தொல்லையடைகிறீர் களே! சிந்தாமணிக்கும் செம்மையாகத் தெரியவில்லை விடை. முதல் கேள்விக்குப் பதில் மதிவதனபுரம் போய் ஆராய வேண்டுமாம். அடுத்த கேள்விக்குச் சம்பங்கி புரம், மூன்றாவது நதிசிலபுரம், இவ்வளவுதான் சொன்னா னாம் அந்தச் சந்நியாசி. மெய்யழகன்: செங்கமலம் எனக்கு விடை கொடு. செங்கமலம் : ஐயோ இப்போதே புறப்பட வேண்டுமா? மெய்யழகன்: பதில் தெரியும் வரைக்கும் ஒரு நொடி நேரத்தையும் வீணாக்க மாட்டேன். நீ வருந்தாதே. பேரன்பு பெற்றோர் பிரிய நேர்ந்த தென்றால் ஆர் சகிப்பார்? ஆயினும் காரியம் பெரிது கண்ணே! விரைவில் வந்துவிடுவேன் திருமணம் நமக்கு வெற்றிக்குப்பின். செங்கமலம் : என்னை மறவாதீர்கள். மெய்யழகன் : உடலை உயிர் மறக்குமா? (போகிறான்) பாட்டு 7 மெய்யழகன் : குளிர் வான நிலவே என் மனையாளும் நீயே கொள்கை நீ என்னருந் தெள்ளமுதும் நீயே! செங்கமலம் : ஒளியே என் உயிரே என் உள்ளத்தின் உணர்வே உற்றதுணையே என்றன் நற்றவப் பயனே! மெய்யழகன் : கோரிக்கை நிறைவேற்றி ஊருக்கு வருவேன் கொஞ்சி விளையாடி உன் இன்பமே பெறுவேன். செங்கமலம் : ஆருக்கும் கிட்டாத இன்பப்ர வாகம் அடைந்தேன் இனிமேல் ஏது சந்தேகம்? (காளிமுத்து தூங்குகிறான்) மெய்யழகன் : தூக்கமா? (தட்டுகிறான்) காளி : பாப்பா? மெய்ய : பாப்பாவா? அப்படியா சேதி? காளி : தம்பியா? மெய்ய : புறப்படு. காளி : விஷயம் ஏதாச்சும் வெளியாச்சா தம்பி? மெய்ய : வெளியாச்சி, வா சொல்லுகிறேன். காளி : சரி, சத்திரத்துக்குப் போங்க. தோ வந்துட்றேன். மெய்யழகன் : சரி; காட்சி - 35 தோட்டக்காரன் மகள் தூக்கம், காளிமுத்து தட்டி எழுப்புதல் பாப்பா : கண்ணாலம் எப்போ? காளி : இப்பத்தான் எழுந்திரு. பாப்பா : இப்போ எப்டி (எழுந்து) காளி : நானு அவசரமா ஊருக்குப் போவணும், நீ கண்லே தண்ணி வைக்காதே, போய் வாண்ணு சொல்லு, ஒம் பொன்னான வாயாலே. பாப்பா : இருங்கண்ணா இருக்கவா போறிங்க. போயி நாளைக்கி வந்திருவிங்கல்ல? காளி : நாளைக்கா, நாலுநாள் செல்லும், நானு வர்ரவரைக்கும் அந்தாண்டே இந்தாண்டே போவாதே. அவுங்களே இவங்களே பார்க்காதே. பதுவுசா இரு. ஆமாம். பாப்பா : இப்பவா போறிங்க. இருந்து விடிஞ்சி போங்களேன். காளி : உஹும் (போதல்) காட்சி - 36 மெய்யழகன் காளிமுத்து உடை மாற்றம் காட்சி - 37 குதிரைமேல் போய்க் கொண்டிருக்கிறார்கள் காட்சி - 38 மலை மெய்யழகன் : (குதிரை மேல் இருந்தபடி மலையைக் காட்டுகிறான்) சாரலில் ஆரமம் ஒன்று தோன்றுகிறது. (இறங்குகிறார்கள்) கிரியமா முனிவர் ஜெபமாலை உருட்டுகிறார். இருவரும் சென்று வணங்குகிறார்கள். கிரி : யார் நீங்கள்? தூரத்திலிருந்து வருவதாகத் தோன்று கிறது. இப்படி அமருங்கள். மெய்யழகன் : வாமி! கைவல்யபுர மன்னர் மகன் நான். என் தமையன்மார்களை அபூர்வ சிந்தாமணி என்பவள் கொன்றுவிட்டாள். மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆடவர்களைக் கொலை செய்து கொண்டிருக்கிறாள். கிரி : நானும் கேள்விப்பட்டேன். வாலிபர்களை வாதுக்கழைப் பதும், பதில் கூறத் தவறிவிட்டார்கள் என்று தலையை வாங்குவதுமாக இருக்கிறாள் ஒருத்தி என்று. அவள் பெயர் அபூர்வ சிந்தாமணியா? செய்யும் அக்ரமும் அபூர்வமாகத்தான் இருக்கிறது. மெய்யழகன் : ஆம் வாமி, அவள் நீதிகேது மன்னன் மகள். காளி : அவளே இப்டியெல்லாம் ஆட்டிப் படைக்கிறவன் ஒரு சந்நியாசிங்க. கிரி : இப்படி ஒரு சந்நியாசமா? தருமம் தலை தாழ்ந்து போகிறதே சம்போ! மெய்யழகன் : அவள் கேட்கும் மூன்று கேள்விகட்கும் பதில் சொல்ல வேண்டுமானால் மதிவனதபுரம், சம்பங்கிபுரம், நதிசில புரம் ஆகிய மூன்று நாடுகளிலும் நடந்துள்ள ரகசிய காரியங்களைத் தெரிந்து வரவேண்டுமாம். வாமி, இது என் போன்றோரில் தூல பலத்துடன் ஆக வேண்டிய காரியமல்ல வாமி, தங்களைப் போன்ற தபவிகளின் ஆத்ம பலத்தின் உதவி அடியேனுக்குத் தேவை. அருள் செய்யவேண்டும் வாமி. காளி : எங்க வில்லும், அம்பும் என்னா பண்ணுங்க. ஒங்க சொல்லும் தெம்புந்தானுங்க அல்லாம் பண்ணும். பாட்டு 8 பல்லவி சஞ்சலம் நீங்கிடும் தன்னலம் நீங்கினால் அஞ்சுதல் வேண்டாமே மனச் (சஞ்ச)... அனுபல்லவி வஞ்சம் பொறாமை பேதா பேதம் மாய்ந்தால் அண்டுமோ தீதொரு போதும் (சஞ்ச) சாரணம் செப்பும் உன் லட்சியப் பாதையை, அந்தத் திகைப்பான் கீழ்க்கடல் மறிக்குதப்பா - ஆசைக் கப்பலில் செல்வாய்! உடைந்தால் சங்கல்பம் கைக் கொண்டு நீந்திமா காளியைக் காண்பாய் (சஞ்ச) தெரிகிறதா? கீழ்க்கல் கடந்த கேடுகள் நீங்கி வெற்றியை அடைவீர்கள். உங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தக் காவி கமண்டலங்களைத் தரித்துக் கொள்ளுங்கள். மெய், காளி: (வணங்க.) ஆசிர்வதிக்கிறார். (உருமாறுகிறார்கள்) காட்சி - 39 (கப்பலில் காளிமுத்தும் மெய்யழகனும் போகிறார்கள். கப்பல் உடைபடுகிறது. நீந்திக் கரை சேருகிறார்கள்) காட்சி - 40 காளி கோயில் காளி : (கடற்கரையில் ஆயாசமாக) தம்பி, ரொம்ப தொல்லை ஊருக்குப் போய்டலாம். மெய் : இடையூறு நேருவது சகஜம். மனதை விட்டுவிடுகிறாயே. அதோ கோயில் ஒன்று தோன்றுகிறது. (போகிறார்கள்) காளி கோயிலில் காளியைத் தரிசிக்கிறார்கள். பாட்டு 9 பல்லவி மெய்யழகன்: தாயே தாயே காத்தருள்வாயே தனயரின் துன்பம் தீர்ப்பாய் நீயே. சரணம் தாரணிக் காதி காரணி அன்றே தலைவாங்கும் கொடுமை இருப்பது நன்றோ பூரணி புராதனி எம்துயர் ஒன்றே போக்கா திருப்பாயோ உன்மனம் குன்றோ. - தாரணி உலகீன்றவளே, அம்மா, என்நன்மை தீயாரின் தீமையை நீக்குவதல்லவா எங்கள் நோக்கம்? இரக்கம் இல்லையா? (காளி பிரசன்னம்) தேவி : வருந்தாதே, மதிவதனபுரம் ஒருநாள் பயணத்தில் அடையலாம். உனக்கு ஒருவரம் தருகிறேன். நீ நினைத்த காரியம் கைகூடும். என் பேர் சொல்லி நீர் தெளித்தால் இறந்தவர் பிழைப்பார்கள். மெய்யழகன் : மகா பாக்கியம் தாயே (இருவரும் வணங்கு கிறார்கள்) (வணங்கி எழுகிறார்கள்) காளி : (எழுந்து கும்பிட்டபடி தலைகுனிந்து) ரொம்ப சந்தோ ஷம்மா. ஜோட்டால் அடிக்கிறோம். அந்தச் சந்நியாசிப் பயலையும்! அந்தச் சண்டாள முண்டையையும். ஆமாம் அம்மா. (தேவியைப் பார்க்கிறான். அவள் மறைந்து விட்டது தெரிந்து) ஓகோ அம்மா மறைஞ்சிட்டாளா? (இருவரும் புறப்படுகிறார்கள்) காளி : அப்ப நாம்ப ஊருக்குத் திரும்பவேண்டியதில்லையே. காளிதேவியே நம்ப பக்கம் இருக்கும்போது. மெய்யழகன் : உன் தைர்யத்துக்கு நன்றி காட்சி - 41 மதிவதனபுரம் மாலைகட்டி வீடு - வீட்டின் முற்றம் மாலைகட்டி மண்ணப்பனும் அவன் மனைவி கன்னி யம்மாவும் மாலை கட்டிக் கொண்டிருக் கிறார்கள். மண் : கதிர் பச்சை நடுவ்வே வச்சி கட்னா மஞ்சசாமந்திக்கும் அதுக்கும் நல்லா எடுக்கும். கன்னி : கதிர் பச்சை ஏது? மாறுகாலம். (எதிரில் வந்து நிற்கிறார்கள் மெய்யழகனும் காளியும் காவி உடையுடன்) மெய் : இந்த நகரத்துக்கு என்ன பெயர் ஐயா? மண் : இதுதான் மதிவதனபொரம்! சரி நீங்க. மெய் : ராஜாவின் பெயர்? மண் : சத்திய சீல மகாராசா! சரி நீங்க ஓடனே இந்த ஊரை விட்டுப் பூடணுமே, நிக்கிறீங்களே! காளி : ஐயையோ ஏன்யா? மண் : எங்க ராசாவுக்கு சந்நியாசியே புடிக்காது. கண்டா கொண்ணுபுடு வாரு. உடனே ஓடிபுடுங்க ஆமாம். மெய் : மாலை நேரம். இருட்டிவிட்டது. இனிமேல் எங்கே போவது. ஐயா இன்று இரவு தங்கி விடிந்ததும் போய் விடுகிறோம். உங்கள் வீட்டுத் திண்ணையில் ஒருபக்கம் யாருக்கும் தெரியாமல் படுத்துக் கொள்கிறோம். தயவு செய்ய வேண்டும் ஐயா. (கட்டி முடித்த மாலைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு மண்ணப்பனும் மனைவியும் உள்ளே போகுமுன்) மண் : தா அடக்கமா யாருக்குமே தெரியாமே படுத்திருந்து விடிய ஓடிபுடுங்க (போகிறார்கள்) காளி : ஏந் தம்பி இந்த தொல்லே? இப்பவே ஓடிபுடுவமே! மெய் : பார்த்தாயா பயப்படுகிறாயே? காளி : காயாஷம் குடுத்தாரு காயாஷம்! முனிவர் வாயாணம் குடுத்தாரே அதனால்தானே இங்கே நம்பளே கழுத்ல உதைக்க வர்ராங்க? மெய் : பெரியோர் கட்டளை வீணாகுமா? ஒருபோதும் வீணாகாது. அமைதியாய் இருப்போம். (திண்ணையில் அமைதியாய் இருக்கிறார்கள். உள்ளே மாலை கட்டியும், மனைவியும் பேசுகிறார்கள். சாப்பிட்டுக் கொண்டும் சாதம் போட்டுக்கொண்டும்) காளி : நம்ப ராசாவுக்கு, சந்நியாசின்னா புடிக்கிலியே! அது என்ன? (இலை போடுகிறாள்) மண் : நீயும் இம்மா நாளு ராசா வூட்டுக்குப் போறே! பூவுகொடுக்கறே! பூமாலே குடுக்கறே! இந்தக் கதே தெரிலியே ஒனக்கு. கன்னி : தெரியாதே! சொன்னா தேவலை, சொல்லேன். காட்சி - 42 (குடிசையினுள் மண்ணப்பன் கதை சொல்லுகிறான்) மண் : இந்த மதிவதனபொரத்திலே அப்ப ஆண்ட உத்தம கேது ராசாவுக்கு நூத்திஒரு பொண்டாட்டி. கன்னி : அட எழவே! ஊம்? மண் : அல்லாருக்கும் மூத்தவபேரு கற்புக்கரசி. அவமேலே இல்லாத்தியும், பொல்லாத்தியும் சொல்லி ராசாவுக்குக் கோவத்தே மூட்ணாளுங்க மத்த நூறு சிறுக்கிகளும், ராசா என்னா பண்ணாரு அந்த மூத்தவளே புள்ளத் தாச்சிண்ணும் பார்க்காமே வேறே ஊர்லே நீக்கி வைச்சுட்டாரு. கன்னி : ஐயையோ! மண் : அவுருக்கும் அங்கே ஒரு ஆம்பளே புள்ளே பொறந்தது. அதே நேரத்லே இங்கே நூறு பேருக்கும் நூறு ஆம்பளே குழந்தைகள் பொறந்துட்டுதவ! அங்கே அந்த மூத்தவ ளுக்குப் பொறந்துதே அந்தக் கொழந் தெதான் இந்த நம்ப சத்தியசீல மகாராசா! கன்னி : அப்படியா! சரி அவருக்குச் சந்நியாசியே ஏம் புடிக்லே அதெ சொல்லலியே. மண் : சொல்ல மாட்டேனா? சத்தியசீலனும் பெரியவனா பூட்டான். இந்த நூறுபேரும் பெரிய பசங்களா பூட்டானுவ. இப்டி இருக்கும்போது மதிவதனபுரத்து மேலே எதிரி சேனெயே கூட்டிகினு வந்துட்டான். மதிவதனபுரம் தோத்துபுடும் போல இருக்குது. சத்தியசீலன் உருவுனாங்கத்தியே ஒடியாந்தான். எதிரியே துண்டு துண்டா துண்டு துண்டா வெட்டினான். நாட்டெ காப்பாத்திப் பூட்டானா! ராசா பார்த்தாரு சத்திய சீலனையே பிரதானியா அரண்மனையிலே அமத்திகினாரு. கன்னி : இந்த நூறு சிறிக்கிவுளுக்கும் நூறு பசங்களுக்கும் பொறாமையா இருக்கும். மண் : சத்தியசீலனே ஒழிச்சிபுடணுன்ணு அவன்மேலே இல்லாத் தியும் பொல்லாத்தியும் மூட்டிவுட்டுகினு தான் இருக்காங்க. இப்டி இருக்கும் போது ஒரு நாளு இந்த நூறுபேரும் காட்டுக்கு வேட்டையாடப் போனாங்க. போனவுங்க போன வுங்கதான். வர்லே. அதுக்கு அரண்மனையிலே இருக்கும் சத்யசீலன் என்னா பண்ணுவான். அவனெ ராசா கூப்பிட்டாரு. கூப்பிட்டு ... ... (திண்ணையிலிருக்கும் மெய்யழகனும், காளி முத்தும் முதலிலிருந்து கவனித்து வருகிறார்கள்.) காட்சி - 43 மன்னன் : சத்திய சீலா என் நூறு மக்களும் எங்கே? சத்திய : வேட்டையாடக் காட்டுக்குச் சென்றதாகக் கேள்வி. மன்னன் : காட்டுக்குச் சென்றால் நாட்டுக்குத் திரும்பியிருப் பார்கள். ஆனால் அவர்கள் சிக்கித் தவிப்பது உன் பொறாமைக் காட்டில். சத்திய : என் நெஞ்சப் பயிரில் பொறாமை மிருகத்தை அனுமதித்தது இல்லை. மன்னன் : ஆட்டு மந்தையில் இந்த ஓநாயைச் சேர்த்தேன். சத்தி : அடாத நிந்தனை. மன்னன் : அடுத்துக் கெடுக்க நினைத்தாய். சத்தி : தன்னலம் விரும்புவோனின் எண்ணம். மன்னன் : வஞ்சனையே உன் உருவம். சத்தி : என் வாழ்வே மதிவதன புரத்துக்கு. மன்னன் : உயிரையிழக்காதே. என் மக்களை என்னிடம் சேர்ப்பது உன் வேலை. சத்தி : விரும்பியபடி செய்யத் தயங்கப் போவதில்லை விடை கொடுங்கள்! (போகிறான்) காட்சி - 44 குடிசை மண் : இப்படி சத்தியசீலன் பொறப்பட போறான். மஞ்சள் புரத்து அரசன் மகள் மஞ்சளழகி தன்னே ஒரு போக்கிரி செம்படவன் தொந்தரவு பன்றாண்ணு பயந்து போயி சேரியிலே பூந்துகினு இருக்கா. சேரியிலே இருக்றவங்க மஞ்சளழகியை ஆதரிச்சி வாராங்க ஒரு நாள் சேரியிலே காட்சி - 45 சேரி சேர்ந்தாடுதல் பாட்டு 10 ஆடுவோம் பள்ளுப் பாடுவோம் - நாமே பரமாநந்தம் பரமாநந்தம் பரமாநந்தம் பரமாநந்தம் கொண்டாடுவோம் (பள்ளு) நாடியது கைகூட வைத்திடும் நாம் வணங்கிவிடும் தெய்வமே நம்பி விட்டோம் அம்புவிமேல் நாம் எப்போதும் உய்வோமே ஆடிப்பாடிக் கிடக்கவும் நாம் அந்தந்த நாள் உழைப்பதும் நாம் ஆநந்தம் பரமாநந்தம் பரமாநந்தம் கொண்டாடுவோம் (பள்ளு) மஞ்சள் அழகியைச் சிறிது தூரத்தினின்று ஒரு சந்நியாசி பார்த்துப் பார்த்து அவளழகைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான். மஞ்சளழகிக்கு இது தெரியாது. அவளும் ஒருபுறம் போய் விடுகிறாள். சந்நியாசி மஞ்சளழகியைக் கவனிப்பதை அங்கிருந்த சேரி மக்கள் சிலர் ஊன்றிக் கவனிக்கிறார்கள். சேரியாள் ஒருவன் சந்நியாசியை அணுகினான். சேரி : என்ன சாமி பாக்கிறிங்க. ஆரைப் பாக்றிங்க? சந்நிய : நீங்கள் நல்ல தெய்வ பக்தியுடையவர்களாய் இருக்கிறீர்கள். சந்தோஷம்! (நழுவுகிறான். சேரி மக்கள் சந்தேகப்படுகிறார்கள்) சேரி : அம்மா! கொழந்த மஞ்சள் அழகி இங்கேவா! நீ எங்கியும் வெளியிலே கிளியிலே போவாதம்மா, பத்தரமா ஊட்லியே இரு. இருக்கறியா? மஞ்சள் : சரி அண்ணா. சேரி : நாங்க வேட்டைக்குப் போறோம். நாங்க அல்லாரும். காட்சி - 46 குடிசையினுள் மஞ்சளழகி முருகன் பிரார்த்தனை பாட்டு 11 உத்தம ராம்சேரி மக்களின் சேவை உவந்தே கருணை முருகா வை - வை மிக அனுபல்லவி சித்தம் சலிக்காமல் உழைக்கின்றாரே தினம் உழைத்தே காலம் கழிக்கின்றாரே (உத்தம) சரணம் பிறர் துன்பம் தம் துன்பம் எனவே பார்த்தார் பேதை எனைத் தங்கள் மகள் போல் காத்தார் இறந்தாலும் பிறரை ஏமாற்ற மாட்டார் இலகுவாய் நாட்டிலே கலகத்தை மூட்டார் (உத்தம) ஒரு குரல் : பசிக்கு ஒருபிடிச் சாதம் புசிஎன்று போட்டால் போதும் தாயே! (மஞ்சளழகி வெளியில் எட்டிப் பார்க்கிறாள்) சந்நியாசி : முகத்தில் லட்சுமி கடாட்சம் இருக்கிறது. சௌக்கியமாய் இருக்கணும் அம்மா! ஒரு பிடிச் சாதம் போதும். மஞ்சள் : வந்துவிட்டேன் வாமி (உள்ளே போகிறாள் அதற்குள் சந்நியாசி தன் மந்திரக்கோலை எடுத்து மந்திரிக்கிறான். மஞ்சளழகி சாதம் கொண்டு வருகையில்) சந்நியாசி : சத் ! நில் ! அவள் வாசற் படிக்கு உட்புறமே திடுக்கிட்டு நின்று சந்நியா சியை உற்று நோக்கியபடி நிற்கிறாள். அவன் மந்திரக் கோலைத் தன் முகத்தெதிரே நிறுத்திப் பிடிக்கிறான். மஞ்சள் அழகி மயங்கி விழுகிறாள். (சந்நியாசி அவளைத் தூக்கிப் போகிறான்) காட்சி - 47 (மாலை கட்டி மனைவி) மண் : இப்படி மஞ்சளழகி அடிபட்டுக் கெடக்கு கன்னி : ஐயையோ பாவம்! மண் : சத்யசீலன் பாட்டுக்குத் தம்பிமாரெ தேடத் திரியறான் அங்கே! காட்சி - 48 சத்திய சீலன் பாட்டு 12 இப்பாடல் மாற்றம் பெற்றுள்ளது தந்தையும் பகையாகி நிந்தை செய்தாரே தாயரும் எனைப் பிரிந்து தளர்வடைந்தாரே அனுபல்லவி சொந்த சகோதரர் துர்ப்புத்தி யாலே சூழ்ச்சிகள் விளைத்தாரே என்றன் மேலே சரணம் எங்கேதான் சென்றாரோ என்னுடன் பிறந்தார் எனைத்தேடும் வண்ணம் தந்தையார் புகன்றார் பொங்கும் சூரியனே! இருளே! நான்படும் பொல்லாங்கை அறிந்தீர் வேறெவர் அறிந்தார். (சந்நியாசி சந்தனம், பெண்கள் அணியத் தக்க மலர் இனிய கனிகளுடன் அப்பக்கம் போய்க் கொண்டிருப்பதைச் சத்தியசீலன் பார்க்கிறான்) சத்தி : (தனக்குள்) மாதருக்கேற்ற மலர், சந்தனம், சந்நியாசிக்கேன்? (தன்தலையில் முக்காடிட்டுச் சந்நியாசி பின்தொடர்கிறான்) காட்சி - 48A குகை குகை சார்ந்த பரந்த புல் தரையில் நூறு வாலிபர்கள் மூர்ச்சை யற்றுக் கிடக்கிறார்கள். சந்நியாசி மந்திரக் கோலால் எழுப்புகிறான். அருகில் வைக்கப்பட்டிருக்கும் மிடாவிலிருந்து அனைவரும் தண்ணீர் அருந்துகிறார்கள். உடனே மந்திரவாதி மந்திரக்கோலால் தட்டி மூர்ச்சையற்றுப் போகச் செய்கிறான். இவைகளை உடன்வந்த சத்தியசீலன் வியப்புடன் பார்த்துப் பதுங்கி முன்னே செல்லும் சந்நியாசியைத் தொடர்ந்து செல்லுகிறான். காட்சி - 49 குகையின் மற்றொரு புறம் பாட்டு 13 மஞ்சள் : சக்தி தோத்திரம் பல்லவி ஏதேது நான் சகியேன் – ஏ மாதா மகேவரி துன்பம் (ஏதேது) காதில்லையா என் கதை கேட்டிடவும் கண்ணில்லையா என் கவலையைப் பார்க்கவும் (ஏதேது) சரணம் பேதையாள் ஏன் ஒரு பெண்ணாய்ப் பிறந்தேன் பெருந்தணல் மேலே புழுப்போல் நலிந்தேன் ஆதாரம் உன்றன் பாதார விந்தம் அடியாள் உடல் ஊன் உனக்கே சொந்தம் (ஏதேது) சந்நியாசி : (வந்து காமப்பார்வையுடன்) மலர்சூடிக் கொள், சந்தனம் பூசிக் கொள். இதோ தித்திக்கும் கனிகள் (அவள் எதிரில் ஒவ்வொன்றாக வைக்கிறான்) மஞ்சள் : நானிருந்த இடத்துக்கு என்னை அனுப்பு. சந்நியாசி : சிறப்படையலாம். மஞ்சள் : இறப்படையலாம் இதிலும். சந்நி : மடமை நிறைந்த பேச்சு! மஞ்சள் : வஞ்சத்தின் உருவம். சந்நி : ஏசுகின்றாய் இன்றைக்கு. மஞ்சள் : அயோக்கியனே! என்னை ஆயிரம் துண்டாக்கு! துண்டம் ஒவ்வொன்றும் காறித் துப்பும் உன் முகத்தில்! சந்நி : என்ன? (அவளைத் தாவுகிறான்) (பின்னாலிருந்து அவன் மந்திரக்கோல் பிடுங்கப் படுகிறது. மயிர் பிடித்திழுத்துக் கீழே தள்ளப்படு கிறான் சந்நியாசி. எழுந்து பார்க்கின்றான். எதிரில் சத்தியசீலன் மந்திரக் கோலுடன் நிற்கிறான்.) சந்நி : (மந்திரக்கோலைப் பயத்துடன் பார்த்து நிதானித்து) புலப்படுகிறது. எனக்குப் பூர்வ ஞானம்! ஆம்! உன் கரம் என் சென்னியில் பட்டது. எனக்குப் பாப விமோசனம்! சத்தி : ஆம் ராமாயணத்தில்! இது அறிவுலகமடா ஆண்டிப் பயலே! (எட்டி அவன் மார்பில் உதைக்க எழுந்து சந்நியாசி ஒடுகிறான்) சத்திய : புலியிடம் சிக்கிய புள்ளிமான்! நீ யார்? மஞ்சள் : நான் காஞ்சன புரத்தரசன் மகள், என் பெயர் மஞ்சளழகி. எங்கள் அரண்மனையில் அண்டிய ஒரு துஷ்டனால் நான் பயந்து கடலில் விழப்போகும் சமயம் சேரிமக்களால் காப்பாற்றப்பட்டு அங்கே இருந்து வருகையில் காப்பாற்றப் பட்டு அங்கே இருந்து வருகையில் பிச்சைக்காரனாக வந்த சந்நியாசி தன் மந்திரக் கோலில் மந்திரத்தால் இங்கே கொண்டு வந்து இன்னலுக்குள்ளாக்கினான். தக்க சமயத்தில் சிரஞ்சீவியாகத் தாங்கள் வந்து காத்தீர்கள். சத்தி : பெண்ணே! எங்கே செல்லவேண்டும்? மஞ்சள் : தங்களிடம் அல்லது மரண பூமியில். சத்திய : மரணத்தை அநுமதிக்க மாட்டேன். (நாணம்) வாழ்ந்திரு என்னுடன் கன்னிப் பெண்ணாக! மஞ்சள் : நீங்கள் பிரமசாரியாக இருந்து பிராணனை விடப் போகிறீர்களா? சத்தி : அதெப்படி முடியும்? மஞ்சள் : அதான் என் கேள்வியும். சத்தி : நான் ஒருத்தியை மணக்கவேண்டும். நீ ஒருத்தனை மணக்க வேண்டும் அப்படித்தானே? மஞ்சள் : அதையே சுருங்கச் சொன்னால் போதும். நான் நீர் மணக்க வேண்டும். சத்தி : (புன்னகையுடன் கைகள் தாவ) அவள் ஓடி வந்து தழுவிக் கொள்கிறாள்.) பாட்டு 14 சத்தியசீலன் - மஞ்சளழகி கண்டதும் மலர்ந்த மெய்க் காதல் - உள்ளம் கலந்தும் மணந்தது புதுமை மண்மீதில் (கண்டதும்) கொண்ட நம்பசிக்கே கொம்பில் பழத்தையே கொள்ளக் கொண்டோம் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தோம் (கண்டதும்) தண்டா மரைத் தேனைக் கண்டு - வண்டு தானுண்ண என்னதடை உண்டு? பண்ணோடு செந்தமிழும் பாலோடு நற்சுவையும் பெண்ணுடன்ஆணும் போல் பேரின்பம் நாமடைவோம் (கண்டதும்) (இருவரும் போகிறார்கள்) காட்சி - 50 மண் : அப்புறம் அங்கே போயி தம்பிமாரே. மந்தரக் கோலால் எழுப்பிக்கினு ஊருக்கு வந்து சேர்ந்தான் அல்லா சேதியும் கேட்டு அவுங்கப்பா அவரெ அப்படியே கட்டிக்கினாரு. (என்று சொல்லி மாலைகட்டியாகிய மண்ணப்பன் தன் மனைவியாகிய கன்னியம்மாவைக் கட்டிக் கொள்கிறான்) கன்னி : சீச்சீ... உடு... உடு. மண் : உடாதே சொல்லச் சொன்னியில்ல கதையெ? கன்னி : உடாதே உட்டு உட்டு சொல்லு (விட்டுவிடுகிறான்) அப்புறம் ராசா என்னா பண்ணுவாரு மஞ்சளழ கியைச் சீலனுக்குக் கட்டிவைச்சிப் பட்டத்தையும் கட்டி வைச்சாரு. (இதையெல்லாம் மெய்யழகனும் காளிமுத்துவும் ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருந்தனர்) மெய் : (மெதுவாக) எப்படி கதை? காளி : கதையே தெரிஞ்சுக்க வைச்சுது நல்ல முனிவர்தான் அவுரு. மெய் : இப்போதாவது புத்தி வந்ததே. அந்தமட்டும் மகிழ்ச்சி தான். காட்சி - 51 திண்ணை மெய் : பொழுது விடிகிறது. சேவல் கூவுகிறது கேட்கிறதா? காளி : சரிதான் தம்பி சங்கதி தெரிஞ்சிச்சி போவலாம் இல்ல. நம்ம ஊருக்கு? மெய் : சத்தியசீல மன்னரைக் காண வேண்டாமா? காளி : ஐயையோ (ஓடுகிறான்) மெய் : இங்கே வா!... (வருகிறான்) காளி : வாங்க தம்பி போவலாம் ஊருக்கு? மெய் : கதையைக் கேட்ட பிறகும் காளிமுத்தாகவே தானே காட்சி அளிக்கிறாய். காளி : கோவிச்சிக்காதே அந்த மாலைகட்டி என்னா சொன்னான். மெய் : காவிகட்டிக் கொண்டு இந்த நகரத்தில் வரக்கூடாது என்றான். காளி : அப்படியா சொன்னான்? காவி கட்டிக்கினு வந்தா? மெய் : சரி கழற்றி விடுவோம். (உடை மாற்றிக் கொண்டு செல்லுதல்) காட்சி - 52 அரச சபை (நாட்டியம்) (ஓரியண்டல் அல்லது பரதம்) பாட்டு (காவடிச் சிந்து 15) மாலை வர்ணனை மாடுகள் புல்மேய்ந்து வீடு திரும்ப - மேற்கு மலை நோக்கி முதுவெயில் சாய - நன்செய் வயலுழுவார் உடல் ஓய ஏடுகொள் மாணவர் இல்லம் திரும்புகின்றார். பாடக் கருத்தில் உள்ளம் தோய குறடு திண்ணை பெருக்கிக் கூட்டித் தண்ணீர் தெளித்த பிறகு மா இருவிரலாலும் - புள்ளி உறவைத்துப் போடுவர் கோலம்! இறை காணக் கோடிட்டுச் சுடர் விளக்குத்திரியில் சூழும் அவர்கள் விழி வேலும்! மலர்க் கையில் விளக்கேந்தி வலக்கையில் சுடர்காத்து மாதர் அன்னம் போல் நடந்து - தெரு வாசற்படி மாடம் அடைந்து நின்று இலக்குத் தவறாமல் எண்ணெய்தளும்பாமல் இட்டார்கும் பிட்டார் உவந்து. (மெய்யழகனும் காளிமுத்தும் சபையில் பிரவேசிக் கிறார்கள்) சத்தி : (மெய்யழகன் முகப் பொலிவை உற்று நோக்கி) அன்பரே நீர் யார்? மெய் : அரசே! கைவல்யபுரத்து ராஜகுமாரன். என்பெயர் மெய் யழகன். நீதிகேதுவின் மகள் அபூர்வ சிந்தாமணி ஓர் சந்நியா சியுடன் இருந்து கொண்டு தன்னை மணக்க வருபவன் தன் மூன்று கேள்விகட்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிறாள். தவறினால் தலையைத் துணித்து வருகிறாள். என் தமயன்மார் ஆறுபேர் அவ்வாறே மடிந்தார்கள். உலகோபகாரமாக நான் அவளை வெல்லவேண்டும். முதல் கேள்விக்குப் பதில் அறிய இங்குவந்தேன். சத்தி : இங்கு எப்படிக் கிடைக்கும்? மெய் : அரசே, அவள் கேட்கும் முதல் கேள்வியைப் பாருங்கள். சகோதர வாஞ்சையும், ஜீவகாருண்யமும் உடையவனிட மிருந்து சந்நியாசியின் மந்திரக்கோலை அபகரித்து வாழும் மன்னன் இருக்கிறானா? இறந்தானா? அவன் யார்? சத்தி : ஆ! (தன் கத்தியை உருவிக் கொண்டு கீழே குதித்து) மெய்யழகரே அவனைக் காட்டும்! மெய் : பொறுக்க வேண்டும் அரசே. நான் இன்னும் சம்பங்கிபுரம், நதிசிலபுரம் சென்றால் மற்ற இரண்டு கேள்விகட்கும் விடை கிடைக்கும். அதன் பிறகு நான் தங்களை அழைக்கிறேன் வந்தால் உங்கள் வாளுக்கு வாய்க்கும்! இப்போது எனக்குச் செய்ய வேண்டிய உதவி ஒன்றுதான். சம்பங்கிபுரத்துக்கு வழி காட்டச் செய்ய வேண்டும். சத்தி : என்னைக் கொல்ல எண்ணியே நான் இருக்கிறேனா என்று விசாரிக்கிறானா? அவன்? விரைவில் நான், அந்த அயோக்கியனைச் சந்திக்கும்படி செய்ய வேண்டுகிறேன். மந்திரி! இவருக்குத் தக்க உதவி புரிந்து சம்பங்கி புரம் வரைக்கும் துணைப்படையை அனுப்பு! காட்சி - 53 காடு மெய்யழகனும் தோழனும் சத்தியசீலனின் பரிவாரங்களுடன் செல்லுகையில், பரிவாரத் தலைவன் மெய்யழகனை வணங்கிக் கூறுவான்: தலைவன் : இளவரசே. இதுதான் சம்பங்கி புரத்தின் எல்லை. அதோ நகர வாயிற் கோபுரம் தெரிகிறது. மெய் : ஓகோ! இனி நீங்கள் விடை பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அரசருக்கு என் நன்றியைச் சொல்லுங்கள். தலைவன் : அப்படியே (பரிவாரம் அணிவகுத்து வணக்கம் தெரிவித்துத் திரும்புகிறது) காளி : ஏந் தம்பி? இந்த நாட்லே அப்படி ஒண்ணும் வேறு வெதமா? மெய் : பயப்பட வேண்டாம் அப்படி ஒன்றும் நடக்காது. காளி : எதுக்குச் சொல்றேண்ணா. இந்த ஒலகத்லே மருந்தும் அரிசியும் கலந்தாப்லே, அடிக்க வந்ததும் அணைக்க வந்ததும் கலந்துகினு கெடக்குது, தம்பி. அதுக்கு சொன்னேன். மெய் : சரிதான் நட. காட்சி - 54 காவற்காரன் வீடு மெய் : (எட்ட இருந்து) அதோ, அவர் முகத்தில் கொஞ்சம் சாந்தகுணம் தோன்றுகிறது. விசாரிக்கலாம். புது மனிதரைச் சந்திக்கும்போது அவரை உயர்வுபடுத்திப் பேசும் வழக்கம் உன்னிடம் இல்லை. காளி : ஒகோ சரி தம்பி (போகிறார்கள்) காளி : ஐயா வணக்கங்க, ஒங்களே பாத்தா தென்னமர மாட்டம் இருக்குதுங்க. நீங்க இந்த ஊர்தானே? காவல்காரன்: நானா தென்னமரம்?... (கோபம்) மெய் : கோபிக்காதீர்கள். இளைப்பார வரும் வழிப் போக் கருக்கு இளநீர் தருவது தென்ன மரம். அதுபோல் நீர் ஓர் பரோபகாரி என்று சொல்கிறார்கள். இவர் ஒரு தமிழ்ப்புலவர். காவல் : ஓஹோ அப்படியா ஒக்காருங்க (மெய்யழகன் அடக்க ஒடுக்கமாக அமர, காளிமுத்து தன்னை ஒரு புலவ ராகவே காட்டிக்கொண்டு பாவனையில் அமர்ந் திருத்தல்) மெய் : இதுதான் சம்பங்கிபுரமோ? காவல் : ஆமாங்க! மெய் : இந்த நாட்டில் என்ன விசேஷம்? காளி : ஏதாச்சும் வெசேஷம் இருந்தா சொல்லுங்கள். காவல் : எந் வெசேஷத்தெ சொல்லச் சொல்றிங்க. மெய் : அரசரைப் பற்றியோ, அமைச்சரைப் பற்றியோ படைத் தலைவரைப் பற்றியோ நடந்த கதை நடக்கும் கதை இல்லையா? காவல் : கேளுங்க இந்த நாட்டு, சேனாதிபதி மவ பேருதம்பதி. அந்தத் தம்பதிக்கும் அம்பிகாநிதிக்கும் மனம் ஒத்துப் போச்சி. அவ அவங்கப்பாகிட்டே அப்பாப்பா, நானு அம்பிகாநிதியே கட்டிக்கப் போறேண்ணா. அதுக்கு அவுரு சொன்னாரு... எவுரு? அந்தச் சேனாதிபதி அம்பிகா நிதிக்குத்தான் ஏற் கனவே இளவேணிண்ணு ஒரு பொண்டாட்டி இருக்காளே. மறு பொண்டாட்டியா? நீ ஏன் போறே வாணாண்ணாரு. அவ கேக்கலே, தம்பதியும் அம்பி காநிதியும் கலியாணத்தை முடிச்சிக்கிறாங்க. அப்புறம் அம்பிகாநிதி என்ன பண்ணாரு? தம்பதியையும் இள வேணியையும் அழைச்சிக்கினு வேறே தேசத்துக்குப் பூட்டாரு. காளி : சரி ரெட்டைக் குதிரை சவாரி பண்ணிட்டாரு. காவல் : ஏம் பூட்டாங்க, சேனாதிபதி கோவந் தணியட்டும் அப்றம் வரலாண்ணு. காளி : ஓகோ, சரிதாங்கள். காவல் : ரெண்டு பேரியும் இட்டும் போம்போது வழியிலே ஒரு காடு. ரெண்டு பேரையும் ஒரு பக்கத்தே உட்டுட்டு அம்பிகாநிதி ஒரு புலியே தொரத்திகினு போனாரு. ரொம்ப தூரம் பூட்டாரு. திரும்பிவர வழி தெரியாம எங்கியோ பூட்டாரு! இந்த ரெண்டு பேரும் எந்த ரெண்டு பேரும்? தம்பதியும், இளவேணியும் நாலஞ்சி நாளா காத் திருந்தாங்க. ரொம்ப சங்கடப்பட்டுக்கினு கெடக்கறாங்க. காட்சி - 53A கூடாரம் இளவேணி : உன்னாலல்லவா தம்பதி இந்தக் தொல்லை. அவர் உயிரோடிருந்தால் இத்தனை நாள் வராமலா இருப்பார்? தீய மிருகங்கள் தின்று விட்டன அவரை. தம்பதி : அக்கா அவர் இறந்திருக்க மாட்டார். துஷ்ட மிருகங்கள் அவரை நெருங்கமுடியாது. வேட்டை யாடுவதில் இணையற்ற வல்லவர். இனியும் நாம் இங்கு இருப்பதில் பயனில்லை. தேடுவோம் அவரை. இளவே : எங்கே செல்வது? நாமோ பெண்கள். நம் இளமையும் நாம் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களும் தீய ஆடவர் கண்ணை உறுத்துமே. தம்பதி : அக்கா! நான் நம் நாதர் உடையை உடுத்துக்கொண்டு வருகிறேன். நாதர் பெயரையே வைத்துக் கொள்கிறேன். இளவே : ஏது உடை? தம்பதி : அவர், அரச உடையை அவிழ்த்து வைத்துவிட்டு, வேட்டை யுடையை அல்லவா அணிந்து சென்றிருக்கார். இதோ உடை (சென்று ஒரு புறமிருக்கும் அரச உடையை எடுத்து அணிகிறாள்.) இளவே : அவர் போலவே இருக்கிறாய் நீ இப்போது. தம்பதி : நான் தம்பதி என்பது நம் பல்லக்குப் போகிகளுக்குக் கூடத் தெரியக்கூடாது. வாருங்கள் அக்கா. (பல்லக்குப் போகிகளை அணுகி) தம்பதி : என்ன அஜாக்ரதை! என் புது மனைவி தம்பதி சென்ற இடம் உங்களுக்கும் தெரியாதா? கள்ளர் தூக்கிச் சென்றார்களா? அந்த அலங்காரி மனம் கலங்க விலங்கு தூக்கிச் சென்றதா? கண்மணி இளவேணி பல்லக்கில் ஏறு! தேட வேண்டும். (பல்லக்குப் போகிறது) காட்சி - 54A காவல்காரன் வீடு காவல் : போனாங்க போனாங்க. அப்படியே போனாங்களா. மணி புரிக்குப் பூட்டாங்க. அந்த மணிபுரியே பிராணி இல்லே. பிரதானி இல்லே. ஆம்ளேயாட்டமே இருக்காளே. இவர்தான். பிரதானி வேலைக்கு அமந்துட்டா. அந்த ராசாங் காத்லே, அப்படி யிருக்கும்போது ஒரு நாளு ராத்ரி, அந்த நாட்லே ஒரு சத்தம் கேட்டுது. ஊரே நடுங்கராப்போலே, அது இன்ன சத்த மிண்ணு, தெரியல. இந்தப் பிரதானியே அது இன்னாத் திண்ணு கண்டுபுடிச்சிவரச் சொல்லி அனுப்பினாரு. அந்த ராசா. காட்சி - 55 அகண்ட வெளி (இரவு) (ஒரு கிழவி அழுது கொண்டிருக்கிறாள். எதிரில் ஒரு மரத்தில் ஆடவன் தூக்கிலிட்டுத் தொங்குகிறான்) கிழவி ஒப்பாரிப்பாட்டு - 16 அடிவவுறு நாஞ்செமந்தேன். ஆசைக்குப் புள்ளே பெத்தேன் அடஏ மாணிக்கோம் துடிக்க வச்சி பூட்டியா நடுவவுறு நாஞ் செமந்தேன். நல்ல புள்ளே பெத்தேண்டா அடஏ மாணிக்கோம். மடுக்கிண்ணு பூட்டி யடா! தம்பதி : ஏன் பாட்டி அழுகிறாய்? இந்தப் பிணத்தின் வரலாறு என்ன? கிழவி : வாடாப்பா வா. தவமிருந்து பெத்த புள்ளே, தலைக்கி ஒசந்த புள்ளே. சம்பாரிச்சி போட்ற வயசு, மசானத்லே வந்து தூக்குப் போட்டுகினான். பொணத்தே அவுத்து குடப்பா, உனக்குப் புண்ணியமா இருக்கும். தம்பதி : (மரத்திலே ஏறுகிறாள். கிழவி ராட்சியாக மாறுகிறாள். சத்த மிடுகிறாள். தம்பதி தம் இடையில் கட்டியிருந்த வாளை உருவுகிறாள். ராட்சசி மோப்பம் பிடிக்கிறாள்) ராட் : தப்பினாய், நீ, ஒரு பெண்ணல்லவா! பெண்களை நான் தின்னுவதில்லை. மன்னித்தேன். தம்பதி : மன்னிக்க மாட்டேன் உன்னை (மரத்திலிருந்து ராட்சசியின் எதிரே குதித்து வாளை ஓச்சியபடி) நீ மாண்டு போகுமுன் உன் வரலாற்றைக் கூறிவிடு. ராட் : பயித்தியக்காரி பிழைத்துப்போ (நழுவப் பார்க்கிறாள்) தம்பதி : (எதிரில் ஓடி மறித்து) செத்துப்போ (வாளை ஓச்சுகிறாள்) ராட் : என்னை ஒன்றும் செய்யாதே வீரப்பெண்ணே! இந்தா இந்த மந்திர மோதிரத்தை அணிந்துகொள். அரக்கர்களாலும் பேய் பிசாசுகளாலும் உனக்கு அழிவு ஏற்படாது. இந்தச் சேலையைப் பார், விலை மதிக்க முடியாதது. மித மிஞ்சிய பிரகாசம் உள்ளது. எனக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் புட்கர புரியி லிருக்கிறார். அவனுக்கு இருவர் புத்திரிகள். மீதி நான்கு பிள்ளைகள். மகமேருகிரியில் வாழ்கிறார்கள். அவர்கள் மிக்க சூரர்கள். எனக்கு மன்னிப்புக்கொடு. தம்பதி : மனிதரைத் தின்பதில்லை. என்று உறுதிகொடு. ராட் : மனிதரைத் தின்னமாட்டேன். தம்பதி : மன்னித்தேன் (மறைதல்) காட்சி - 56 அரசன் மண்டபம் தம்பதி : (அரசன் கொலுவில்) மாய ராட்சசியால் ஏற்பட்ட கோர சப்தம் அரசே இனி இராது. அரசன் : மகிழ்ச்சி மந்திரி இந்தச் சந்தோஷச் செய்தியை நகர மக்களிடம் அறிவிக்கச் செய்வீர். அம்பிகாநிதி இன்று நடக்க இருக்கும் விருந்துக்கு நீர் உம் மனைவியுடன் வர வேண்டும். என் குமாரத்திகள் இருவர் மற்றும் என் மனைவி உறவினர், மந்திரி முதலியவர்கள் விருந்தில் கலந்துகொள்வார்கள். தம்பதி : மகா பாக்கியம் அரசே! காட்சி - 57 இளவேணி துன்பத்தால் சாய்ந்த தலை நிமிராமல் இருக்கிறாள் தம்பதி : (வருகிறாள்) அக்கா, நாதர் பிரிந்த துன்பத்தை வெளிக் காட்டாதீர்கள். அரசாங்கத்தில் எனக்குள்ள செல்வாக்கு அதிகப்பட்டு வருகிறது. அதனால் நம் நாதரைத் தேட வசதி உண்டாகிறதல்லவா? சீக்கிரம் கிடைத்து விடுவார் நம் மணவாளர். இள : அந்தப் பெருஞ்சத்தம் இன்னதென்று தெரிந்து கொண்டாயா? தம்பதி : சுடுகாட்டில் ஒரு ராட்சசியின் சத்தம். அவளை என் மந்திர வாளால் மாய்க்கப் போனபோது என்னைக் கெஞ்சி, இந்த மந்திர மோதிரத்தையும், ஒளி பொருந்திய சேலையையும் கொடுத்து மறைந்தாள். இந்த மகிழ்ச்சி யால் நம் இருவரையும் அரசர் விருந்துக்கு அழைத் திருக்கிறார். இந்தச் சேலையை அணிந்து கொண்டு வாருங்கள் என்னுடன். இள : நல்லது. தம்பதி : மறதியால், அங்கு என்னைத் தம்பதி என்று அழைத்து விடாதீர்கள். நாதா, நாதா என்று அழையுங்கள். இள : சரி நாதா (சிரிப்பு) காட்சி - 58 அரசன், இரு குமாரத்திகள், மற்றவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் இளவேணியும், தம்பதியும் வருகிறார்கள். அனைவரின் விழிகளும் சேலையில் ஊன்றுகின்றன. குமாரத்திகளின் கண்கள் வியப்புறுகின்றன. அரசகுமாரி : இப்படி வாருங்கள். அரசன் : அம்பிகாநிதி இப்படி அமருங்கள். (இளவேணி இரு பெண்களின் நடுவில் அமர்கிறாள். இரு பெண்களும் அச்சேலையைத் தொட்டுப் பார்க் கிறார்கள்) அ. குமாரி : அப்பா அப்பா! சூரியகிரணத்தையே இழையாக்கி சாலியன் நெய்தானா இச்சேலையை! அ. குமாரி : என்ன தகத்தகாயம்! பொன் இழைக்கு மின்னல் மெருகேற்றிப் பின்னியதா! அ. குமாரி : வண்ணக் களஞ்சியம்! இதுபோல் எங்கே கிடைக்கும் அம்மா? இளவேணி : வாங்கிக் கொடுத்த என் மணவாளரைத் தான் கேட்க வேண்டும் அம்மா! அரசன் : அம்பிகாநிதி! எங்கு வாங்கினீர்கள் இச்சேலையை? தம்பதி : பாட்டனார் காலத்தில் ஒரு அரக்கனிடமிருந்து கிடைத்தது. அரசன் : அப்படியா இதுபோன்ற சேலை வேண்டுமென்று என்னிரு பெண்களின் முகம் ஏங்குவதை என் உள்ளம் தாங்குவது அரிது. அன்பரே, இதுபோல் இரண்டு சேலைகள் சம்பாதித்துத் தர முடியுமா உங்களால்? தம்பதி : (நிதானித்து) நல்லது அரசே. ஆறுமாதத் தவணையில் கொண்டு வந்து சேர்க்கிறேன். அரசன் : குழந்தைகளே ! நம் பிரதானி அரிய காரியங்களைச் சிரமம் பாராது செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர். கட்டாயம் கொண்டு வருவார். விருந்துண்ணுங்கள். (அருந்துகிறார்கள்) காட்சி - 59 காவற்காரன் வீடு காவற் : இளவேணியை இருண்ணு சொல்லிட்டு, தம்பதி புட்கர புரிக்குப் போனா. போய்ச் சேர்ந்தாளா, அங்கே சர்ப்பக் கொளம் ஒண்ணு இருக்குது. அதிலே பாம்பு அரக்கன் இருக்கிறான். அந்த அரக்கனே யாரு அடக்றாங்களோ அவங்களுக்கு எம் பொண்ணு சக்கர வேணியே குடுப் பேண்ணு தண்டோரா போட்டிருக்கார். ராசா. அந்த சர்ப்பக்கொளத்தே தேடினாள் தம்பதி. காட்சி - 60 சர்ப்பக்குளம் தம்பதி சர்ப்பக்குளத்தை அடைகிறாள். சர்ப்பம் வெளிப்படுகிறது. உடனே அது அரக்கனாகிறது. தம்பதி : அரக்கனே மோதிரத்தைப் பார்! அரக்கன் : ஓஹோ! ... ... என்னாலாக வேண்டியது என்ன? தம்பதி : அவள் தந்த சேலையைப் போல் இன்னும் இரண்டு சேலைகள் வேண்டும். அரக்கன் : குளத்தில் உள்ளே அமைந்த மாளிகையில் சித்தின வல்லிக்குத்தான் சேலையைப் பற்றிய செய்தி தெரியும். தம்பதி : வழிகாட்டு, நான் போகிறேன். அரக்கன் : அதோ இருக்கும் பாதாளக் கதவைத் திறந்துகொண்டுபோக வேண்டும். ஆயினும் நான் உயிருடன் இருக்கும்வரைக் கும் நீ செல்ல முடியாது. (என்று சர்ப்பமாக மாறிய உடனே தம்பதி தன் வாளால் பாம்பை வெட்டிப் போட்டு உட்புகுதல்) காட்சி - 61 அதிசய மண்டபம் (சித்தினவல்லி படுத்திருக்கிறாள். தம்பதி பிரவேசிக்கிறாள்) சித்தி : (வியப்புடன்) யார்? தம்பதி : அயலூர். சித்தி : எப்படி வர முடிந்தது? தம்பதி : பாம்பு மடிந்தது. காட்சி - 62 காவற்காரன் வீடு காவிரி : சரி அதே மாதிரியா தம்பதி (மகம்மேரு) கிரிக்குப் போனாள். போயி அங்கே இருந்தவங்களே கொண்ணுட்டு மாணிக்க வல்லியே அழைச்சிக்கினு ரெண்டு சேலையையும் எடுத்து கினு மணிபுரிக்கு வந்து சேலையை ராசாகிட்ட குடுத்துள்ள டாளோ? காவல் : ஆமாம், ராசா தன்னுடைய ரெண்டு பெண்களிடத்லே குடுத்தான். காளி : அவ்வளவுதானா கதை? காவல் : ஐயையோ இருக்குதே. அரசன் சேலையே குடுத்துட் டானா...? காட்சி - 63 மண்டபம் குமாரத்தி : சேலை கொடுத்தவரை மாலையிட வேண்டும் அப்பா. குமாரி : அந்த வீரனே எனக்கு மாங்கல்ய தாரணம் செய்ய வேண்டும் அப்பா. அரசன் : உங்கள் ஆசை இயற்கையானதே. (தம்பதி வருகிறாள்) தம்பதி : அரசே! நான் ஊர் சென்று திரும்ப வேண்டும், விடை கேட்க வந்தேன். அரசன் : வீரரே ஒரு விண்ணப்பம், என் இரு பெண்களுக்கும் உம்மையன்றி ஏற்ற மணவாளன் இந்நிலத்தில் ஏது? தடை செய்யாது மணந்து கொள்ள வேண்டும். தம்பதி : என் எண்ணமும் அதுதான். அரசன் : கலியாண நாள் குறிக்கப் புரோகிதரை அழைகிவா? தம்பதி : அதற்கிடையில் பரம்பரை வழக்கம், பிள்ளை விட்டார்கள் வந்த பெண்பார்ப்பது. பரிசச் சடங்கு நடத்துவது முதலியவை நடக்க வேண்டு மல்லவா? அரசன் : ஓஹோ! ஆம் ஆம்! அன்னை தந்தையாருடன் நீவீர் அதிவிரைவில் வந்து விட வேண்டுமே. தம்பதி : இதற்கிடையில் தூக்கமா வரும்? (அனைவரும் சிரிப்பு) தம்பதி போவதை இரு பெண்களும் கண்ணுக்கு மறையும் வரை அன்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காட்சி - 64 காவற்காரன் வீடு காவற் : இப்டி தம்பதி வரும்போது தன் புருஷனாகிய அம்பி காநிதியைக் கண்டுபிடித்துவிட்டாள். அப்புறம் என்ன கொறவு, அம்பிகாநிதி, தம்பதி, இளவேணி, பஞ்ச வஞ்சிகள் அல்லாரும் தம்பதியின் தகப்பனால் கோவந் தணிஞ்சி போயிருப்பர் எண்ணு சம்பங்கி புரத்தை நோக்கி வர்ராங்க. வர்ர வழியிலே ஒரு சோலை, அந்தச் சோலையிலே தங்கி னாங்க. அந்தப் பஞ்ச வஞ்சிகள் இருக்காங்களே அவுங்க தனியாக ஒரு பக்கம் வெளையாடிக்னு இருக்காங்க. காட்சி - 65 வஞ்சிகள் : கண்மூடி ஆட்டம் ஆடலாம் கொஞ்ச நேரம் வஞ் : சின்ன குழந்தைகள் ஆடும் ஆட்டம் அது. வஞ் : நாமும் குழந்தைகளாயிருக்க ஆசைப் படுவோமே வஞ் : குழந்தை உள்ளம் தூய்மையான உள்ளம். வஞ் : சரி நான் உன் கண்ணை மூடுகிறேன். வஞ்சியின் கண்ணைத் தன் இரு விரலாலும் மூடியபடி யாடுகிறாள் உங்கம்மா என்ன பொம்மை தந்தாள் எங்கம்மா தங்கப் பொம்மை தந்தாள் தங்கப்பொம்மையை என்ன செய்ய நினைத்தாய்? உங்கள் இடத்தில் அதைத் தந்தேன் தங்கன் அதை எங்கேடி வைத்தான் சிங்காரப் பொட்டியிலே வைத்தான் சிங்காரப் பொட்டியடி போயெடு அவ கொடுத்தத திருனாண்டி தேடு வஞ்சி ஓடி ஒளியும் நால்வரையும் தேடி ஓடுகிறாள். ஒருத்தி அகப்படுகிறாள். அனைவரும் சிரிக்கிறார்கள். (எட்டியிருந்து பார்த்திருந்த சந்நியாசி அருகில் வந்து கூறுகிறான்.) சந்நியாசி : ஏன் பெண்களே, நீங்கள் ஏன் என் குகைக்கு வரவில்லை? 1. வஞ் : (வியப்புடன் நின்று) குகையா? நாங்கள் ஏன் வரவேண்டும். 2. வஞ் : (அவளைப் பின் தள்ளி) அது கிடக்கட்டும், அந்தக் குகை எங்க இருக்கிறது? சந்நியாசி : அதோ தெரியவில்லை? 3. வஞ் : (அவளைப் புறம் தள்ளி முன் வந்து இடுப்பில் கைகளை ஊன்றி) அது கிடக்கட்டும், நாங்கள் எதற்கு வர வேண்டும் குகைக்கு? சந்நியாசி : இந்தப் பக்கம் வரும்பெண்கள் எவரும் குகைக்கு வராமல் போக மாட்டார்கள். 4. வஞ் : (முன்வந்து) அது இருக்கட்டும், குகையில் நூதனம் என்ன? சந்நிய : தெரியாதா? அடடா! ஆடுகின்ற முயல்! பாடுகின்ற மான், ஓடுகின்ற பூஞ்செடி, மூன்று அதிசயங்கள் குகையில் இல்லையா? 5. வஞ் : ஐயையோ போகலாம்! ஐயா வருகிறோம் காட்டுகிறீர்களா? சந்நிய : கொஞ்ச நேரம், பொறுத்துப் போகப் படாதா, சரி வாருங்க (போகிறார்கள்) காட்சி - 66 குகை 5. வஞ் : இதுதான் குகையோ. இதிலேதான் நீங்கள் வாசமோ? சரி எங்கே ஆடுகின்ற முயல்? பாடுகின்ற மான்? ஓடுகின்ற பூஞ்செடி? 4. வஞ் : அதைக் காட்டுங்கள் முதலில்! சந்நி : அடாடா உங்களுக்கென்ன இவ்வளவு அவசரம். விருந்தாக வந்தவர்கள் நான் தருவதை அருந்தாமால் போவார்களா? என்னைப் பார்க்கப் பிடிக்க வில்லையா உங்களுக்கு? நான் ஓர் அரச குமாரன். காரணார்த் தமாக இந்தச் சந்நியாசி வேடம். 3. வஞ் : அரச குமாரரா நீர்? அப்படியா? மந்திரி குமாரர் என்றல்லவா நினைத்தோம். ஏன் அரச குமாரரே உங்கள் கதை எங்களுக்கு ஏன்? ஆடுகின்ற முயல் எங்கே ஐயா? சந்நி : காட்டாமலா? சரி உங்களுக்கு விவாகம் ஆக வில்லையா? 3. வஞ் : ஆய்விட்டதே. ஆடுகின்ற முயல் எங்கே? சந்யாசி : ஆடுகின்ற முயல், பாடுகின்ற மான், ஓடுகின்ற பூஞ் செடி, இவை மட்டுமா? அளவு சொல்ல முடியாத ஐவர்யங்கள்! ஆடை ஆபரணங்கள் எல்லாம் உங்களுக்கு. வஞ்சி : எங்களுக்கு வேண்டாமே! நீங்கள் அவைகளை யெல்லாம் விற்றுவிட்டுப் பின்னும் பல திரு வோடுகள் வாங்குங்கள். 2. வஞ் : அதென்ன அவரை அப்படிச் சொல்லுகிறீர்கள். அவர் அசல் ராஜகுமாரரல்லவா? சந்நி : உங்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான், என்னவென்று கேளுங்கள். 3. வஞ்சி : என்ன என்று கேட்கவில்லை? சந்நி : உங்கள் அன்புதான் தேவை. 5. வஞ் : இங்கே இல்லையே! அடுத்த வீட்டில் பாருங்கள். 4. வஞ் : ஆமாம் சந்நியாசியாரே 5. வஞ் : இல்லை இல்லை ராஜகுமாரர். சந்நி : நான் உங்களுக்கு ஏற்ற மணவாளன் நம்புங்கள். 1. வஞ் : இருக்கலாம், நாங்கள் உங்களுக்கு ஏற்ற மண வாட்டிகள் இல்லையே! சந்நி : ஏன்? 2. வஞ் : நாங்கள் பிச்சைக்காரிகள். 2. வஞ் : நாங்கள் நாலுவீடு நாராயண கோபாலம். வாருங்கள் எல்லாரும். (அனைவரும் குகையை விட்டு வெளியேற முயல, சந்நியாசி ஒடி குகையின் கதவைச் சாத்திக் கொண்டு போகிறான்.) சந்தி : கொட்டம் அடங்கினால் வட்டத்திற்கு வருவார்கள். காட்சி - 67 (அம்பிகாநிதி முதலியவர்கள் பஞ்ச வஞ்சியர்களைத் தேடி வாட்டத்துடன் உலாவிய பின்) அம்பி : எங்கே ... ... இல்லையே! தம்பி : இதென்ன விபரீதம். ஆட்களை அனுப்பித் தேடச் சொல் லுங்கள். நானும் இந்தப் பக்கத்திற் சென்று தேடுகிறேன். (போகிறார்கள்) காட்சி - 68 குகை குகையில் இரகசிய வழியாகத் தம்பதி உள்ளே நுழைகிறாள். சந்நியாசியும் பஞ்சவஞ்சியும் பேச்சு. சந்நியாசி : சாக வேண்டுமா? நீங்கள் வாழ வேண்டுமா? அன் போடு என்னைத் தழுவிக் கொள்ளுங்கள். 1. வஞ் : பேய் மகனே! சாவைத் தழுவ நேர்ந்தாலும் உன்னைத் தழுவ ஒப்ப மாட்டோம். சந்நியாசி : (தாவி) ஒரு முத்தமடி! (கையைப் பிடிக்க மற்ற நால்வரும் விரைந்து விலக்குகிறார்கள். ஒவ்வொரு பெண்ணையும் தாவுகிறான் சந்நியாசி. திரும்பிப் பார்த்து நடுங்குகிறான். தம்பதி தன் வாளை உருவுகிறாள்) சந்நியாசி : என்னை மன்னித்துவிடும். என்னை மன்னித்துவிடும். நான் நிராயுத பாணியல்லவா? என்னைக் கொல்வது அழகல்லவே. தம்பதி : ஆமாம், மகாயுத்த தர்மம் தெரிந்தவன். உயிர்ப் பிச்சை தந்தேன் ஓடு! இல்லையானால் உன் மந்திரம் தந்திரம் என்னிடம் செல்லும்போல் தோன்றினால் நில்லு! வாளை வைத்து விடுகிறேன். மற்போருக்கு (வாளை ஒரு பக்கம் வைத்து விட்டு சட்டையைத் தள்ளுகிறான்) வருகிறாயா? மடையா? சந்நியாசி : இல்லை, இல்லை, இல்லை. தம்பதி : ஓடும் (ஓடுகிறான் சந்நியாசி) காட்சி - 69 காவற்காரன் அப்றம் தம்பதி என்ன பண்ணா, தன்கணவன் அம்பிகாநிதி, இளவேணி, இந்த அஞ்சிபேரு அல்லாரையும் அழைச்சிகினு அப்பங்கிட்டே போனா. அப்பங் கோவந்தணிஞ்சி இருந்தான். அந்த அஞ்சி வஞ்சிக்கும் அம்பிகாநிதிக்கும் இன்னும் கண்ணாலம் ஆவுலியே, அதையும் முடிச்சி வச்சான் அங்கியே. மெய் : கஷ்டத்திற்குப் பின்புதான் சந்தோஷம். நல்ல கதை நாங்கள் போய் வருகிறோம், ஐயா. காவற் : எங்கே? காளி : அங்கே ஒரு எடத்துக்கப் போவணும் மெய் : (காளியைக் கோபித்து) எங்கே ஒர் இடத்துக்கு? ஊரைச் சுற்றிப் பார்க்கவேண்டும், ஐயா! (போகிறார்கள்) காட்சி - 70 தம்பதியின் அரண்மனை நாட்டியம் பாட்டு காவடிச் சிந்து 17 கட்டி எனை முத்தமிட்டான் மானே - என் கண்கலக்கம் கண்டுமறைந் தானே! வெட்கமாய் இருக்குதடி கட்டழகன் செய்கையால் நானே என் செய்வேனே! பட்டமரம் துளிர்க்கிறது போலே - அவன்கை பட்டதும் சிலிர்த்த தென்றன் மேலே கட்டுக்கடங்காத என்றன் காதல் தணிய வரச்சொல் சோலை இன்று மாலை கோபமில்லை எனக்கவன் மீதில் - என்று கூறடி தனியாய் அவன் காதில் ஆபத்தை விளைவிக்குமடி அன்னவன் மீது கொண்ட காதல் இப் போதில் (மெய்யழகன் பிரவேசிக்கிறான்) காவற் : (காவற்காரன் ஒருவன் தம்பதியைப் பணிந்து) கைவல்ய புரத்து மன்னர் குமாரனாம் தங்களைப் பார்க்க விரும்புகிறார். தம்பதி : வரவிடு ... ... வாரும்அரச குமாரரே! அமரும் என்ன செய்தி? மெய் : அரசியாரே, நான் கைவல்யபுரத்தை ஆளும் மன்னர்க்கு ஏழாவது பிள்ளை. என் பெயர் மெய்யழகன். ஆதித்தபுரி மன்னன் நீதிகேதுவின் மகள் அபூர்வ சிந்தாமணி ஒரு சந்நியாசியின் தூண்டுதலில் தன்னை மணக்க வருகிறவரை மூன்று கேள்விகள் கேட்பதும், தவறி விட்டான் என்று தலையை வாங்குவதுமாக இருக்கிறாள். என்னுடன் பிறந்தார் ஆறுபேரையும் அவள் இவ்வாறே கொன்றாள். அவளால் இவ்வகை இன்னல் ஏற்படாதிருக்க நான் பல நாடுகள் அலைந்து முதற் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டேன். இரண்டாவது கேள்விக்கு விடை இந்நாட்டில் கிடைக்கும் என்று கேள்விப் பட்டுத் தங்கள் உதவியை நாடி வந்தேன். தம்பதி : அப்படியா, அக் கேள்வியை இன்னதென்று கூறுங்கள். மெய் : மண்ணுலகில் பெண்ணாய்ப்பிறந்து ஆண்வேடம் பூண்டு அமைச்சுத் தொழில் புரிந்து பஞ்சவஞ்சியரை மணந்து கொள்வதாகக் கொண்டு போகும் போது அப்பெண்களைச் சிறை கொண்ட சந்நியாசியை அடித்துத் துரத்திய அரிவை இருக்கின்றாளா? இறந்து விட்டாளா? அவள் யார்? தம்பதி : (பல்லைக் கடித்து) ஆ! அவன் கொட்டம் இன்னும் அடங்க வில்லை. என்னை அவன் தேடுவது ஏன்? அவனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு யார் தந்தது? இளவரசே! நான்தான் அவள். அந்தப் பாதகச் சந்நியாசியை மன்னித்தேன் அந்நாள்! மன்னிக்க முடியாது இந்நாள்! என்னையா தேடினான். அவன் இருப்பிடத்தைக் காட்ட வேண்டும் எனக்கு! மெய் : மிக்க மகிழ்ச்சியம்மா. சிறிது பொறுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள். மூன்றாவது கேள்விக்கு விடை தேடி நான் நதிசிலபுரம் போகிறேன். விடை தெரிந்து கொண்டதும் தங்களை அழைக்கிறேன். அப்போத வனை நேரில் கண்டு தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ளலாம். தம்பதி : அப்படியா (நிதானித்து) நல்லது. மெய் : நான் சென்று வருகிறேன். தம்பதி : உண்டு போகலாம். மெய் : நல்லது. காட்சி - 71 நதிசிலம் சார்ந்த சந்தனபுரம் காளி : (நடந்துகொண்டே) பட்டோம். பட்டோம் அப்படிப் பட்டோம்! படாத பாடும் பட்டோம் நாமபட்ட பாடு ஆரும் பட்டிருக்க மாட்டாங்க. ஊருக்கு வல்லியா? மெய் : அடடா இதோ! இது நதிசிலபுரத்தைச் சார்ந்த சந்தன புரம்! அதோ சாலை! அதைச்சார்ந்த சோலை! குளிர்ந்த மாலை! கஷ்டம் நமக்கு எந்த மூலை? அஞ்சுவதே உன் வேலை வா! (போகிறார்கள்) (மெய்யழகன் ஆயாசமாக ஒரு மேடையில் அமர்தல், காளிமுத்து வேறுபுறம் போகிறான்) காளி : ஏந்தம்பி! அலுப்பா இருந்தா கொஞ்சம் இலுப்பப் பழம் பறிச்சித் திண்ணேன்! மெய் : அச்சப்படுகிறவன் பச்சைக் கொடிமுந்திரிப் பழம் தேடித் தின்னப் போ (போகிறான்) பாட்டு 18 மெய் : பல்லவி உணர்வெனும் பெரும்பதமே எவர்ககும் சதமே விடுவாய் சஞ்சலமே மனமே (உணர்) அனுபல்லவி தணியா ஊக்கம் ஆக்கத்திற் கழகென்னும் சான்றோர் மொழியே உலகசம் மதமே (உணர்) சரணம் மடமையினாலே வளர்வதே அச்சம் மலைபுரண்டாலும் அஞ்சாதே! கருத்தாய் எவர்ககும் உழைப்பாய் நிதமே (உணர்) (உறங்கிவிடுகிறான் மெய்யழகன்) அதே நேரத்தில், அங்கு தடாகத்தில் குளித்துக் கரையேறி சுந்தரவல்லி அங்கு வருகிறாள். சுந்தர : (கண்டு வியப்புடன்) தூங்கும் உடல்! தூங்காத அழகு! (சுற்றும் முற்றும் பார்க்கிறாள் பதைபதைப்புடன்! அங்குள்ள மரக்கிளையில் இருக்கும் மலர்களைப் பறித்து எட்ட நின்று அவன் மேல் எறிகிறாள். மேலும் மேலும் இதழ்களைப் பார்க்கிறாள். பல பக்கமும் பார்க்கிறாள். வெட்கத்துடன் சுந்தரவல்லி.) சுந்தர : யார்? மெய் : அரசகுமாரன் நதிசிலபுரம் போகவேண்டும். சுந்த : முக்கிய வேலையா? மெய் : ஆம்! சுந்த : முடித்துத் தரவேண்டுமா? மெய் : மிக்க நலமாயிருக்கும். சுந்தர : உங்களால் எனக்காக வேண்டியது ஒன்று. மெய் : மிகவும் முக்கியமோ? சுந்தர : ஆம்! மெய் : முடித்துத் தரவேண்டுமா? சுந்தர : மிக்க நலமாயிருக்கும் மெய் : என்ன? சுந்தர : என் சின்ன உள்ளம் தாங்காத பெருங்காதல் உங்கள் மீதில். மெய் : நான் தொடங்கிய காரியம் வெற்றி பெறும் வரைக்கும் எதிலும் என் மனம் செல்லாது. சுந்தர : நதிசிலத்தில் ஆக வேண்டியதை இதே நேரம் இங்கிருந்தே முடித்துக் கொடுப்பேனே! மெய் : ஒரு கேள்வி. காளி : (அருகில் வந்து கொண்டிருந்த காளிமுத்து) அதுக்குப் பதில் சொல்லிபுடுங்க. அப்றம் அல்லாம்! மெய் : சந்நியாசிக்கு உதவிய சுதாவும் ஆகாத மதியும் இருக்கின் றார்களா? இறந்தார்களா? என்ன கதி இதுதான் கேள்வி! சுந்தர : என் குருநாதனின் விரோதி! என் நாட்டில் அடி வைத்தாயா! காவற்காரர்களே! (காவற்காரர்கள் ஓடி வருகிறார்கள்) இப்பாதகனைக் கட்டிச் சென்று காவலில் வையுங்கள். காளி : ஐயையோ சும்மாங்கம்மா, அவன் நல்லவந்தாங்க சுந்தர : அவனா! மரியாதையில்லாமல் பேசுகிறாய் என் குருநாதரை! இவனையும் பிடியுங்கள் கொண்டு போங்கள். காளி : தம்பி, சொன்னேனே கேக்கப்படாதா? ஊருக்குப் போயிட்லாந் தம்பி. சுந்தரி : விட்டாதானே? காளி : ஓகோ வுடமாட்டிங்களா? மறந்து புட்டேனங்க. (இழுத்துப் போகிறார்கள்) காட்சி - 72 சிறைச்சாலை (காவல் காப்போன் கம்பிக் கதவின் சந்தின் வழியாகக் காளியிடம்) காவல் : நீங்க ஆரு? காளி : ஆறில்லே ரெண்டு! ரெண்டு பேர்! காவல் : நீங்க ஆர் இவர்னேன். காளி : நாங்க காத்ராயன் வூட்டுப் பசங்க. காவல் : என்னாது! (வியப்பு) காத்ராயன் இருக்கானா! அப்போ ஒங்களுக்கு என்ன வேலை? காளி : குத்துச் சண்டை, சடார் ஒதே. திடீர்பாய்ச்சல், சுளீர் அடி, கிறுக்குப் பட்டா, நறுக்கு கம்பு, இல்லியா இதெல்லாம் கத்துக் குடுக்கிறது? காவல் : ஒருத்தன ஒரே அடியிலே மல்லாத்தனும். என்னா செய்றது? காளி : நரம்பு வேலையாம். என்னங்க சின்னவேலே, ஒரே ஒரு பொடி வேலே காட்டித் தர்ரேன், கத்துக்குங்க, எம் பேர் இருக்கும் (இடம் விசாலமாக இருக்கின்றதா என்று கவனிக்கும் பாவனை) எடம் போதலே, தெறங்களேன் காட்றேன், நம்பளே தவற இங்கே யாரும் வர மாட்டாங்களே. காவல் : உம்... இப்ப ஆறா வருவாங்க (திறக்கிறான்). காளி : (வெளியே வந்து) வாயே தெறங்க. இது ஆகாஷத்லே பறக்ற வேலை. (காவல்காரன் வாயைத் திறக்கிறான். காளி துணியை அடைக்கிறான். பிறகு அவனை உள்ளே தள்ளிக் கால்களைக் கட்டிச் சிறையை இழுத்துச் சாத்திக் கொண்டு மெய்யழகனோடு வெளியே செல்லுகிறான்) காட்சி - 73 வல்லாளபுரம் நந்தவனம் செல்வநாயகம், தோழியர் தோழி : இளவரசியே, வெகு நாட்களா ஒங்களிடத்லே ஒரு சந்தேகம் கேட்கணுண்ணு! செல் : கேள், தெரிந்தால் சொல்லுகிறேன். தோழி : ஒங்களாட்டமே எல்லா பெண்களும் ஆம்பளேயே வெறுத்து காலத்தே தள்ளி வர்ராங்கண்ணு வைச்சிகிங்க. ஒலகம் என்னாவும்? அழிஞ்சுபுடாதா? செல் : அழிஞ்சி போவட்டுமே! தோழி : அல்லாரும் பூண்டத்துப் போறது நல்லதா? செல் : ஆருக்குக் கெடுதி என்று கேட்கிறேன். (இதற்குள் மெய்யழகனையும் காளிமுத்துவையும் சில பெண் காவற்காரர்கள். கட்டியிழுத்து வருகிறார்கள்) பெண் : அம்மா, நம்ப நந்தவனத்லே வந்தானுங்க இந்த ரெண்டு பேரும். செல் : (மெய்யழகனை உற்று நோக்கி வியப்புற்று) அவிழ்த்து விடுங்கள். (அவிழ்த்து விடுகின்றனர்) நீர் யார்? உம்முடன் உள்ள அவர் யார்? மெய் : (நான் ஒரு அரச குமாரன் ! அவர் என் நண்பர். நதிசிலபுரம் செல்லுகிறோம். செல் : எதற்காக? மெய் : அபூர்வசிந்தாமணி என்பவள் கேட்கும் மூன்றாவது கேள்விக்குப் பதில் தெரிந்து வர வேண்டும். செல் : உங்கள் நண்பரை ஒருபுறம் போயிருக்கச் சொல்லு கிறேன். மெய் : தனியாகப் பேச வேண்டுமா? காளி : நல்லா பேசுங்க, நானு கண்ணெ மூடிக்றேனே? செல் : சிறிது விலகியிருங்கள். காவற் பெண்களே, தோழி, மார்களே, இவரை அழைத்துக்கொண்டு ஒருபுறம் போயிருங்கள் (போகிறார்கள்). காளி : (மெய்யழகனைப் பார்த்து) அங்கே ஏன் அப்படி? ஆமாம் இங்கியும் வந்து அவுத்துடராங்க. மெய் : சரி ! சரி! (போகிறார்கள்) செல் : நதிசிலபுரத்து மன்னர் என் குரு! என் சொல்லைத் தட்ட மாட்டார். அவரால் ஆக வேண்டியதை நான் முடித்து வைப்பேன். நீர் ஒன்று முடித்து வைக்க வேண்டுமே எனக்கு! என் திருமணத்தை! ஆடவரை வெறுத்த என் விழிகள் நாடிய ஆணழகே, என் விண்ணப்பத்தை அவமதிக்க மாட்டீரே? மெய் : அவமதிக்கும் உத்தேசமில்லை. ஆயினும், எடுத்த காரியம் வெற்றி பெறும் வரைக்கும் எதிலும் என் உள்ளம் செல்லாது. செல் : ஏதோ கேள்விக்கு விடை தேடுகிறீர்கள். உங்கள் காதலையும் கட்டுப்படுத்தும் அவ்வளவு பெரிய முயற்சியா அது? மெய் : இளவரசியே பதில் தெரிந்து கொள்ள வேண்டியது என் உயிரைவிட முக்கியமானது. செல் : என்ன கேள்வி! சொல்லுங்கள் ! மெய் : கேள்வியா... கேள்வி இன்னதென்றா சொல்ல?... உம்?... நீ ஏன் கேட்கிறாய்? செல் : ஆச்சரியம்! ஏன் இத்தனை அச்சம்? அதிலும் உம்மைக் காதலித்த கன்னியிடத்தில்? மெய் : நதிசிலபுரம் செல்ல விடை கொடுத்தால் போதுமே. நான் தெரிந்துகொண்டு வருகிறேன் பதிலை! செல் : இன்னதென்று சொல்ல ஏன் அஞ்சுகிறீர்கள்? பாவையரிடம் பயப்படுவது வீரருக்கழகாகுமா? மெய் : சந்நியாசிக்கு ... ... செல் : என்ன? மெய் : உதவிய சுதா, ஆகாதமதியும் இருக்கின்றார்களா? இறந்து விட்டார்களா? கதி என்ன? செல் : ஓகோ! காவற் பெண்களே! (காவற் பெண்களை நோக்கிச் சென்று) இப்பாதகர்களைக் கட்டிக் கொண்டு போய்ச் சிறையில் வையுங்கள். காளி : கலியாணம் பண்ணிக்கறேண்ணியே இதான் கலி யாணமோ? (என்று காளிமுத்துத் தோழியை நோக்கிக் கேட்கிறான்) செல் : இங்கேயும் கலியாணப் பேச்சா! கட்டிக்கொண்டு போவீர்கள் காவற் பெண்களே! (கட்டுகிறார்கள்) காட்சி - 74 கைக் கட்டுடன் இருவரும் காலால் உதைக்க, இரு பெண்களும் விழுந்து விடுகிறார்கள். இருவரும் ஒரு பக்கம் ஓடி விடுகிறார்கள்! காட்சி - 75 வழிப்பாதை மெய் : எப்படி நிலைமை காளி : அவ அப்டி! இவ இப்டி! எல்லாம் மேப்படிதான் தம்பி. ஒரு பாடுமில்லை ஊருக்குப் பூட்டா! மெய் : ஒரு புது வழி சொல்கிறேன். நாம் இருவரும் இதிலிருந்து ஊமையாகவே நடிக்கவேண்டும். காளி : ஓகோ! சரி அப்படியே செய்றது! யாரு எது கேட்டாலும் பேசாமே இருந்துட்றது. அதோட செவனேண்ணு ஊட்டுக்குப் பூடலாமா? மெய் : ஊமையாயிருந்தே காரியத்தைச் சாதிக்கவேண்டும். என்னிடங்கூட நீ பேசாதே! காளி : என்னமோ தம்பி! சரி! (போகிறார்கள்) காட்சி - 76 மச்சபுரம் - நந்தவனம் காளி : (நந்தவனத்தில் உலாவிக் கொண்டே) இது மச்ச புரத்தின் நந்தவனமா தம்பி? மெய் : பேசுகிறாயே! காளி : (கையால் ஒவ்வொரு காட்சியையும் காட்டிக் கொண்டே போகிறான். வியப்புக் குறிப்பு) (பின்னால் ஒரு கூட்டம்) (பச்சைவேணியும் தோழியரும்) பச்சை : அதோ போகிறவர்கள் யார்? எப்படி வந்தார்கள் அன்னியர் கள்? தோழி : வாம்மா, அவுங்களை மடக்கித் தொரத்தலாம். (அனைவரும் ஓடி மறிக்கிறார்கள்) பச்சை : நீங்கள் யார்? காளி : பே பே பே மெய் : (தாங்கள் ஊமையென்று சைகையால் குறிப்பிடுகிறான்) (பச்சைவேணி காதல் பார்வை) பச்சை : வாருங்கள் என்று கையால் குறிப்பிட்டு சூரியன் மேற்கே மறைந்ததையும் காட்டி, மாளிகையில் தங்கச் சொல்லு கிறார்கள். (மாளிகையில் மெய் மறுபுறம் காளி இருவரும் கதவைச் சாத்திக் கொள்ளுகிறார்கள்) மறுபுரம் பச்சை : (தன் தோழியரை நோக்கி) ஊமைகளில் ஒருவன் என்ன அழகு! அவனைக் கண்டது முதல் எனக்கு அவன் நினை வாகவே இருக்கிறது. (தோழியும் பச்சை வேணியும் கதவில் சந்தால் மெய்யழ கனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்) (கட்டத்தினுள்ளே) காளி : தம்பி, பச்சை வேணிக்கு உம்மேல் ஆசையிருக்குது. (பச்சை வேணி வியப்பு) பச்சை : தோழி என் அதிர்ஷ்டம் ஆயிரம் பங்கு அதிகப்படுகிறது. (கதவைத் தட்டுகிறாள்) மெய் : (கதவைத் திறந்து என்ன செய்தி? (என்று கையால் ஜாடை காட்டுகிறான்) அவளும் ஜாடை காட்டித் தனியாக அழைத்துக்கொண்டு நந்தவனத்தின் நடுவில் மேடை மேல் அமர்த்தித் தானும் அமருகிறாள். பச்சை : யார்? எங்கு வந்தீர்கள்? இப்போது பேசினீர்கள் கேட்டிருந் தேன் மறைவிலிருந்து. பேசுங்கள். மெய் : நான் நதிசிலபுரத்துக்குப் போக வேண்டும். என் அரசர் எனக்குக் கட்டளை இட்டபடி! பச்சை : எந்த அரசர் கட்டளை ! இருக்கட்டும். நதிசில புரத்தில் என்ன வேண்டும். மெய் : ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்து வரும்படி அந்த அரசர் கட்டளையிட்டார். பச்சை : என்ன கேள்வி? மெய் : யாரிடத்திலும் சொல்லாதே என்று அந்த அரசர் சொல்லி இருக்கிறார். பச்சை : என்னை மணந்து கொள்ளுகிறீர்களா? மெய் : போய்வந்துதான்! பச்சை : போகவும் வேண்டாம். பிரயாசப்படவும் வேண்டாம். என் விருப்பத்தைப் பூர்த்தி செய்தால், கேள்விக்குப் பதில் இருக்கும் இடம் தேடி வரும்! ஒரு துளி அன்பு! ஒரு சொல் காதற் பசி! மெய் : பதில் தெரிந்து கொள்வதற்குமுன் எதிலும் மனதைச் செலுத்தக் கூடாது என்று அந்த அரசர் கட்டளை. பச்சை : கேள்வி இன்னதென்று சொல்லுங்கள் என்னால் நன்மை கிடைக்கும். மெய் : உம் ... பச்சை : சும்மா சொல்லுங்கள். மெய் : சந்நியாசிக்குதவிய சுதா, ஆகாதமதி இருவரும் இருக்கிறார் களா? இறந்தார்களா? அவர்கள் கதி என்ன? நானல்ல அந்த அரசர் சொன்னதைச் சொன்னேன். பச்சை : பகைவனிடத்தில் பாய்ந்தது என் காதல். துஷ்டனே தூங்கி எழுந்திரு. காலையில் நான் தரும் கடுந் தண்டனைக்குக் காத்திரு! (மெய்யழகன் கட்டடம் நோக்கிப் போகிறான்.) இருவரையும் உள்ளே விட்டுப் பூட்டுகிறாள் தோழி. (தோழியும், பச்சை வேணியும் போகிறார்கள்) உட்புறமிருந்து கதவுகள் மேலே உயர்த்தப்படுகின்றன. உடனே கதவுகள் திடீரென்று தலைகீழாக விழுகின்றன. (மெய்யழகனும் காளிமுத்தும் பறந்தோடுகிறார்கள்) காட்சி - 77 நதிசிலபுரம் - சத்திரத் திண்ணை காளி : மச்ச பொரத்லே இருட்டரை இருட்டு, ஆச்சி, நதிசிலபுரத்து திண்ணையிலே விடிஞ்சது. என்னா பண்றது. தோக்கறது தானே விக்னேவர பூசையெ! மெய் : துவக்கத்தானே வந்தோம். தூங்கவா வந்தோம். (இடையில் சத்திரத் தலைவர் வருகிறார்) மெய் : வரவேண்டும் ஐயா. நீங்கள் தானே சத்திரத் தலைவர்? தலைவர் : ஆமாம். மெய் : இதுதான் நதிசிலபுரமோ? தலை : ஆமாம். மெய் : அரசர் பெயர். தலைவர் : அரசர் மட்டுமல்ல, சக்ரவர்த்தியுங்கூட! பெயர் மதிவதன மகாராஜா! மெய் : திருப்தி! இன்று இங்கு இன்றிரவைக் கழிக்கலாமா? தலைவர் : சுகமாகப் படுத்துறங்கலாமே. (படுத்துக் கொள் கிறார்கள்) மெய் : சமதானத்தில் நாளைக்கு ஏதாவது கச்சேரி உண்டோ? தலைவர் : ஆடல், பாடல், சகலமும் தினமும் நடக்கிறதுண்டு. ஆனால் கொஞ்ச நாளா நடக்கிறதில்லை. மெய் : ஏன்? காளி : ராஜா வூட்லே எதாவது சாவு கீவு நடந்திருக்கும். தலைவர் : அப்படி ஒன்றுமில்லை. மகாராஜாவுக்குக் கொஞ்ச நாளாக ஏதோ ஒரு கிலேசம் மனசிலே. மெய் : என்ன கிலேகம்? தலைவர் : தெரியவில்லை! மெய் : மகாராசாவுக்கு மனச்சஞ்சலமிருந்தால் நாட்டு மக்களுக்கே தெரியாதா? தலைவர் : உம்... ஒருவருக்கும் தெரியவில்லை (தலைவரின் கொட்டாவி. அனைவரும் தூங்குகிறார்கள்). காட்சி - 78 அரண்மனையின் ஒருபுறம் காவற்காரனிடம் மெய்யழகன் சந்தித்துக் கூறுகிறான். மெய் : சக்ரவர்த்தியைச் சந்திக்க வேண்டும். நான் கைவல்யபுரத்து மன்னன் மகன். என் பெயர் மெய்யழகன். (காவற்காரன் உள்ளே போகிறான்) மதிவத : வரவேண்டும் குழந்தாய். என் அத்யந்த நண்பர் மகனைக் காண நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி! அமர்ந்திரு! (அமர்தல்) மதி : தந்தை நலந்தானே? அன்னையார் நலந்தானே? மெய் : சௌக்யமாக இருக்கிறார்கள். ஒருவன் : போஜனம் சித்தம் உணவருந்துவோமே மதி : ஓகோ. மெய் : நன்று. மகாராஜா (போகிறார்கள்) காட்சி - 79 போகும் போது மதிவதனன் ஓர் அறையில் புகுந்து அங்கிருந்த நாயை அடித்துவிட்டுப் பிறகு அதற்குச் சாப்பாடு வைத்துப் போகிறான். இதை வியப்புடன் கவனிக்கிறான் மெய்யழகன். காட்சி - 80 மற்றோர் அறை மற்றோர் அறையில் மெலிவுடன் படுத்திருந்த பெண்ணொருத் தியை அடித்து உணவளித்துப் போகிறான். (மதிவதன மகாராஜா முகத்தில் காணப்படும் குரோதத்தையும் உக்ரத்தையும் மெய்யழகன் கண்டு சும்மா இருந்து விடுகிறான்.) காட்சி - 81 உணவு விடுதி இருவரும் உணவருந்துகிறார்கள். பலமுறை மெய்யழகன் அவனைக் காரணம் கேட்க வாயெடுக்கிறான். ஆயினும் நிறுத்திக் கொள்கிறான். கடைசியாக மெய் : நாயின் வரலாறும் அந்த நங்கையின் வரலாறும் என்ன? மதி : ஏன் கேட்டாய்? (தான் உட்கார்ந்திருந்த மணைக் கட்டையால் மெய்யழகனைத் தாக்க, மெய்யழகன் மூர்ச்சை அடைகிறான்) (எதிரில் நின்றபடி நிதானித்து) நண்பனின் மகன்! சிறுபையன். (அவனை மூர்ச்சை நீக்கி எழுப்பு) இவ்விதம் கேள்வி கேட்க மாட்டாய் அல்லவா? மெய் : (சும்மா இருத்தல்) மதி : பிறர் ரகசியத்தில் தலையிடுவது சரியல்லவே. உணவருந்து. மெய் : ஆயிற்று மகாராஜா! (எழுந்திருந்து கை கழுவுகிறான்) காட்சி - 82 இளைப்பாறும் இடம் மெய் : தந்தைக்கு ஒப்பானவரே! தங்கள் நின்தனைக்கும், நெடுங் கோபத்துக்கும் ஆளானேன். மன்னிக்க வேண்டும். நான் போய் வருகிறேன். மதி : மெய்யழகா! ஐயோ ஏனப்பா? நீ இங்கேயே இருந்துவிடு. பிள்ளையில்லாதவன் நான். பிள்ளையாய் இங்கிரு. உன்னை நான் பெற்றாலென்ன? என் நண்பர் பெற்றாலென்ன? மெய் : இரண்டும் ஒன்றுதான், நான் ஏற்றுக் கொண்ட கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். மற்ற யோசனை பிறகு தான் விடை கொடுங்கள். மதி : பிள்ளாய்! வந்த காரியத்தை மறைப்பதாகத் தெரிகிறது. மெய் : மனதில் அமைதியில்லை. குறிப்பிட்டு வந்த காரியத்திலேயே சிந்தை செல்கிறது. மதி : அதை இன்னதென்று கூறு. மெய் : என் தமயன் மார் ஆறு பேரும் மாண்டார்கள். தந்தை தாய்க்கு நான் ஒருவன் மீதியுள்ளேன். இப்படி யிருக்கும் போது தங்களால் ஆபத்து நேர்ந்தால் அவர்கள் கதி என்ன ஆகும். ஆகையால் தங்களுடன் பேசவே அஞ்சுகிறேன். மதி : கோபத்தால் செய்த குற்றத்தையே நீ நினைத்துப் பேசாதே உன் அண்ணன்மார் ஆறுபேரும் மாண் டார்களா? ஐயோ ஏன்? அதையாவது கூற மாட்டாயா? மெய் : ஆதித்தபுரத்தரசன் மகள் அபூர்வசிந்தாமணி தன்னை மணக்க வருகிறவர்களை மூன்று கேள்விகள் கேட்கிறாள். பதில் சொல்லத் தவறினால் தலையை வெட்டி மாய்க்கிறாள். அநேக மன்னரும் என் தமையன்மார்களும் இவ்வாறு மாண்டார்கள்! ஆகையால் அவள் கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டு போய் அவளை ஜெயித்து உலகுக்கு நன்மை செய்ய எண்ணியே இவ்விதம் திரிகிறேன். மதி : அந்தக் கேள்வி என்ன? மெய் : பொறுமை இழந்து. பிறருக்குப் பொல்லாங்கு இழைக்கும் சுபாவமுள்ள தங்களிடமா அதைச் சொல்லத் துணிவேன். மதி : முன் கோபம் உடையவன்தான் நான், ஆயினும் என் அன்பால் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். மெய் : சந்நியாசிக்கு உதவிய சுதாவும், ஆகாத மதியும் உயிருடன் இருக்கிறார்களா? இறந்தார்களா? அவர்கள் கதி என்ன? மதி : ஆ. நீதான்! அந்த அயோக்கியன் (கத்தியை ஒங்குகிறான்) மெய் : என் வயதைப் பாருங்கள்! மதி :(நிதானித்து)ஆம்!...M«. அந்த அயோக்கியனின் தூதனாக, இருக்கலாமேநீ! சொல்லிவிடு மெய் :அந்jஅபூர்tசிந்தாமணியை¤த‹ஆயுதமாfவைத்து¡கொண்Lமக்களி‹தலைaவெட்oவருகிறான். உலகின் எதிரியாகிய அந்தச் சந்நியாசி யல்லவா? மதி : அப்படிச் சொல்! ஆம் அவன் எனக்கும் பகைவன். இப்போதே அவனை என் கண்களில் காட்டிவிடு. மெய் : என் சொல்லை நீங்கள் பொறுமையாய்க் கேட்ப தானால் தான் அவன் உங்களிடம் mகப்படுவான்.kâ : (மார்பில் கைவைத்து) உன் அருமை மொழி எனக்கு அமைதியை cண்டாக்குகிறது.eh‹ ஏன் நாய்களை அடித்தேன்? நான் ஏன் அந்த நங்கையை இம்சித்தேன். கேள்! இந்த வரலாறு உனக்குப் பயன்படும். மெய் : ஆம்; பதில் அதில்தான் இருக்கிறது. மதி : வேட்டையாடச் சென்ற நான் திடீரென்று அரண்மனைக்குத் திரும்பினேன். அந்தப்புரம் சென்றேன். என் மனைவி அங்கில்லை! நந்தவனத்தி லிருப்பதாகக் கேள்விப் பட்டு அங்குச் சென்றேன். அங்கு நான் கண்ட கோலத்தைக் கேள். காட்சி - 83 சந்நியாசியும், ராணியும் ஒரு மேடை மேல் ஒருவரை ஒருவர் தழுவியபடியிருக்கிறார்கள் சந்நியாசி : எத்தனை நாள் காத்திருந்தேனடி இன்ப மயிலே! ராணி : காத்திருந்தால்தான் கனி அருந்துவதில் ஆத்திரம் ஏற்படும். சந்நி : எந்த நாள் கிடைக்கும் உன் சந்தன மேனி என்று நொந்த நாள் நூறு, என்ன வேதனை? ராணி : இந்த நாள்தான் நாம் இன்புறும் நாள் என்று எழுதி இருக்கிறான் பிரம்மன். அரசன் : அட துரோகி. (என்று ஓடுகிறான்) (அரசன் வருவதைக் கண்ட சந்நியாசி ஓடுகிறான் உடனே அரசன் அங்கிருந்த நாய்களை நோக்கி ஏவுகிறான்) அரசன் ஓடி அவைகளை நோக்கிக் கையமர்த்த அவைகள் சும்மா இருந்து விடுகின்றன). அரசன் : அரண்மனை நோக்கி ஓடுங்கள் என் தண்டனைக்குக் காத்திருங்கள். (ஓடுகிறார்கள். அரசன் உருவிய கத்தியுடன் அவர்களைப் பின் தொடர்கிறான்) காட்சி - 84 அரசன் : அப்பனே, என் கையால் அந்தச் சந்நியாசியைச் சித்ரவதை செய்யவேண்டும். மெய் : அரசே நாளைக்கு, தம்பதியையும், சத்தியசீலனையும் அழைத்துக் கொண்டு ஆதித்த புரிக்குச் செல்ல வேண்டும். அரசன் : ஆம்! காட்சி - 85 ஆதித்தபுரம் அரண்மனை - நீதிகேது நீதி : பலர் உயிரிழக்கிறார்கள், நம் அபூர்வ சிந்தா மணியோ?... ... மங்கை : அவள் கேள்விக்குப் பதில் சொல்லுபவன் எவன்? அவளுக்குத் திருமணம் செய்து நாம் கண்ணால் பார்ப்பது எப்போது? நீதி : இப்படித் தலை வாங்குவதில் புகழா ஏற்படுகிறது? மங்கை : நான் நினைக்கவில்லை இகழ்ச்சி ஏற்படுகிறது. நீதி : என்ன செய்வது சந்நியாசியின் தூண்டுதலை வெறுப் பதா? இல்லை பெற்ற பெண்ணை வெறுப்பதா? காட்சி - 85A அரண்மனை மெய்யழகன் - நீதிகேது மெய் : உதவிய நான் எதிர்பார்க்கலாம். நீதி : நன்றாக. மெய் : வாதம் நடப்பது எங்கே? வாதம் நடக்கும் போது சந்நியாசி எங்கே இருப்பார்? நீதி : சிந்தாமணியின் தனியறையில் வாதம் நடைபெறும். அப்போது அதற்குப் பின்புறமாக மறைந்திருப்பார் சந்நியாசி! இளவரசே, இதுவரைக்கும் வாதத்தில் தோற்று மாண்டவர் மிகப்பலர். மெய் : அரசே, இதில் ஏதோ சந்நியாசியின் சூது இருக்கின்றது. கொலைக்கும் பழிக்கும் அவன்தான் காரண மாயிருப்பதால், வாதம் நடப்பது பொதுவான இடமாக இருப்பது நல்லது. நீதி : அப்படியே ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறேன். வாதம் நாளைக்கு! மெய் : நன்றி. காட்சி - 86 நந்தவனம் காளி : என்னடா? நம்ப ஆம்படையான் இத்தனை நாளா வல்லியே; என்னா பண்றதுண்ணு கவலெ கிவலே ஏதாவது இருந்துதா உனக்கு, ஏம் பாப்பா? பாப்பா : தே, பாருங்க அப்படிச் சொல்லாதிங்க. ஒங்க நெனைப்பு தான் எப்பவும் எனக்கு. மரத்தே பாத்தா ஒங்க ளாட்டம் தோணும். மாட்டையே பார்த்தா ஒங்களாட்டம் தோணும். கொளத்தே பார்த்தா ஒங்களாட்டம் தோணும். கட்டையே பார்த்தா ஒங்களாட்டம் தோணும். ஒரு நாள் ஒரு குரங்காட்டி வந்தானா? நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க. அவனே பார்த்தா ஒங்களாட்டம் அவனுடைக் கொரங்கே பார்த்தா ஒங்களாட்டம் தோணும். காளி : என்னியே நினைச்சி இருந்தே போல இருக்குது, அதனால் தான் நீ கண்ணே மூடிக்றத்தானே? பாப்பா : ஐயையோ மூடின கண்லே நீங்க. மூட்ண அடுப்லே சாணி சட்டிலே நீங்க. கலணியிலே நீங்க. கல்வரோ சட்டி நீங்க. போங்க, இன்னம் என்னாத்தே சொல்றது. காளி : அடி ஏன் உப்புமா உண்டை வடே பாயாசோம். என்டி ஒனக்கு ஆயாசோம்? (எதிரில் மெய்யழகன்) ஐயையோ பூடு பூடு பூடு பூடு தம்பி வருது! (அவள் போகிறாள்) தம்பி என்ன சேதி? பாப்பா வந்து பதிவு போடணுண்ணா. இருக்கட்டும் நாளைக்கி ஆவுட்டுண் ணேன். அதுதான் பேசியிருந்தோம். மெய் : பேச்சைமுடி, இதோ வந்துவிடுகிறேன். காளி : நீங்க எங்க தம்பி? (மெய்யழகன் போகிறான் பதில் சொல்லா மல்) உடனே பாப்பாவை ஓடியா ஓடியா என்று கைகாட்டி அழைக்கிறான். அவளும் ஓடி வருகிறாள். காட்சி - 87 நந்தவனம் வேறுபுறம் செங்கமலம் : உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன். நீங்கள் ஊர் வந்து சேர்ந்ததைக் கேள்விப்பட்டேன். தங்கத் தேர் வந்த மாதிரி இருந்தது எனக்கு. மெய் : செங்கமலம்! நாளைக்கு நான் அடையப் போகும் வெற்றிக்குக் காரணம் நீதான். எல்லாம் முடிந்து விடும் நாளைக்கு. செங் : திருமணம் கூடவா? மெய் : திருமணமுந்தான். தித்திக்கும் முத்தமும்தான். எத்தனை முத்தம் கொடுப்பாய் எனக்கு? செங் : நாளைக்கா? ஆயிரம்! மெய் : இப்போது ஒன்று அச்சாரமாக!... உம் உம்? பாட்டு - 20 செங்மலம் பாட்டு உள்ளமான வீணை - தனில் உவகையான கீதம் வெல்லமாகிப் பாயும் - அதில் மெல்ல ஆவி தோயும். மெய்யழகன் பாட்டு தெள்ளத் தெளிந்த - என சிந்தை மனமும் வடிவே! அள்ளும் சுவையும் தேனும் - இனி ஆவோம் நீயும் நானும். காட்சி - 88 சந்நியாசி அறை சிந்தா : வாமி நாளைக்கு ஒருவன் வருகிறான் பதில் சொல்ல. சந்நி : மெய்தானா? சிந்தா : நிச்சயமாக! சந்நி : தீர்ந்தது தொல்லை. சிந்தா : தீர்ந்ததா தொல்லை? அதென்ன? சந்நி : வருகிறவன் தொல்லை அவன் மரணத்தோடு தொலைந்து விடாதா? அதைச் சொன்னேன். சிந்தா : அதற்குச் சொன்னீர்களா? (சந்நியாசி உற்சாகத்தோடு தாண்டித் தாண்டி நடந்து உலாத்து கிறான்) சிந்தா : (போகிறாள்) சந்நி : மெய்தானா? சிந்தா : உண்மைதான் வாமி! சந்நி : போய்வா (போதல்) சந்நி : ஆயிரம் தலை ஆய்விட்டது. எனக்கு இணை ஒருவரும் இல்லை! காட்சி - 89 சிங்காரக்கோட்டை சிந்தா : (திரை நீக்கி வெளியே வந்து) கேள்விக்குப் பதில் சொல்கிறவர் என் முன் வரலாம்! மெய் : (எழுந்து) உன் கேள்வியைக் கேள். உன் கேள்விக்குப் பதில் உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கேள்! கேள்வி கேட்போர் அக் கேள்விக்குப் பதில் தெரிந்த வராய் இருக்க வேண்டும்! கேள்! சிந்தா : சகோதர வாஞ்சையும், ஜீவகாருண்யமும் பூண்டு சந்நியாசி யின் மந்திரக்கோலை அபகரித்து மண்ணு லகை யாளும் மன்னன் இருக்கின்றானா? இறந்தானா? அவன் யார்? இதற்குப் பதில் சொல்லக் கூடியவன் நீயல்ல, மறு கேள்வி : ஆண்வேடம் பூண்டு அமைச்சுத் தொழில் புரிந்து ஐந்து வஞ்சியரை மணந்து கொள்வதாக அபகரித்துப் போகிறவன். அப் பெண்களுக்குரிய சந்நியாசியை அடித்துத் துரத்தினான். அவன் இருக்கி றானா? இல்லையா? அவன் யார்? மூன்றாவது கேள்வியையும் கேளும். மலைக்காதீர். சந்நியாசிக்கு உதவிய சுதாவும் ஆகாதமதியும் உயிருடன் இருக்கிறார்களா? இறந்தார்களா? அவர்களின் கதி யென்ன? பதில் கூறும்! மெய் : கேள் என் பதிலை! உனக்கே பதில் தெரியாத மூன்று கேள்வி களுக்கும் என் பதிலைக் கேட்டுக் கொள்! சொன்னாலும் தெரியாது உனக்கு! உன் சந்நியா சியையும் அழைத்துப் பக்கத் தில் வைத்துக்கொண்டு கேள். என் பதில். அழைத்தாலும் வராமல் சுரங்கத்தில் ஒளிந்திருக்கும் சந்நியாசியை இழுத்தாகிலும் வந்து இங்கு வைத்துக் கொண்டு கேள் என் பதிலை. சந்நியாசியே வெளியில் வா. சுரங்கத்தில் பின் கதவு அடைக்கப்பட்டிருக்கும்! இந்தப் பக்கத்து வழியிலே வா! வந்து கொண்டே வா! இதோ சுரங்கத்தில் ரகசியக் கதவு திறக்கப் படுகிறது. வா! (சேவகர் பூமிக் கதவைத் திறக்கிறார்கள்) சந்நி : ஆணவப் பேச்சு! (சந்நியாசி வந்து அங்குள்ள நாற்காலியில் அமர்கிறான்) மெய் : கேள்விக்குடையவன் நீயாவிருந்தும் வாள் விழி மங்கையை மத்தியில் நிறுத்துகிறாய் அல்லவா? சந்நி : வீண் வார்த்தைகள்! மெய் : சொந்தச் சூழ்ச்சியை மறுக்க முடியவில்லை. சந்தி : மகா சூழ்ச்சியறிந்தவன்! கேள்விக்குப் பதில் சொல்! மெய் : என் பதிலைக் காதால் கேட்க எண்ணமா? உன் கண்களாலே பார்க்க ஆசையா? சிந்தாமணியே, கண்ணீர் சிந்தப்போகும் சந்நியாசியே, உங்கள் முதல் கேள்வி மந்திரத்தால் அபகரித்த மன்னர் இருக்கின் றானா? இறந்தானா? அவன் யார்? இறக்கவில்லை. இதோ பார். (திரையை நீக்கிக் கொண்டு சத்தியசீலன் தோன்றி உருவிய கத்தியை இடக்கையில் பிடித்தபடி வலக்கையில் சந்நியாசி யின் சிகையைப் பிடித்தபடி நிற்க) சந்நியாசி அவனை அண்ணாந்து பார்த்து உடல் நடுங்குகிறான். இரண்டாவது கேள்வி! உன்னை அடித்துத் துரத்திய அரிவை இருக்கின் றாளா? இதோ இருக்கின்றாள்! (தம்பதி வந்து சந்நியாசியைக் காரித் துப்புகிறாள்.) மூன்றாவது கேள்வி! சுதாவும், ஆகாதமதியும் இதோ அவர் பழுதில் லாமல் காட்டுவார். (மதிவதனன் வெளியே வந்து சந்நியா சியைச் சித்ரவதை செய்கிறான்) (அனைவரும் போகிறார்கள்) காட்சி - 90 மடிந்தவர்களைக் காளியை நினைத்துத் தண்ணீர் தெளித்து எழுப்புகிறான் மெய்யழகன். அனைவரும் எழுந்து மெய்யழகனை வாழ்த்துகிறார்கள். அரசன் : என் மகள் அபூர்வ சிந்தாமணியை உனக்கு உரிமை ஆக்குகிறேன். அங்கீகரிக்க வேண்டும். மெய் : ஆம்! அவள் என் உடைமைதான். ஆயினும் நான் அவளை அவள் மேல் காதல் கொண்டிருந்த அவள் அம்மான்புரந்தரனுக்கே மணம் செய்து வைக்கிறேன். அரசன் : தங்கள் சிந்தை சென்றவிடம் எது அரசகுமாரரே! மெய் : கூறுகிறேன். காளி : தம்பி, அந்தப் பாப்பா சங்கதி எப்படி? மெய் : அவள் உன்னை விரும்பினாள். மணந்து கொள். காளி : விரும்பினாளே மேளதாளத்தோடு. (நாணத்தோடும் ஐயத்தோடும் எதிரில் நிற்கும் செங்கமலத்தை நோக்குகிறான் மெய்யழகன்) என்னையும் இதோ நிற்கும் செங்கமலத்தையும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். (அனைவரும் கைதூக்கி) வாழ்க மணமக்கள்! காட்சி - 91 சிந்தா : மாமா மன்னிக்க வேண்டும் என்னை. புரந்தரன் : நம்மை நல்வழிப்படுத்த உழைத்த மெய்யழகனுக்குக் கூற வேண்டும் உன் மன்னிப்பை! காட்சி - 92 காளி : ஊம்! வா! கையே கோத்துக்க. கலியாணம் ஆவப் போவுதே. பாப்பா : வெக்கமா இருக்குதே! காளி : ஆமாம் எல்லாம் முடிஞ்சிப்போச்சி, இப்பத்தான் வெக்கப் பட்றே புது பெண்ணாட்டம். பாப்பா : அப்றம் ஏங்கண்ணாலம். காளி : ஒப்புக்குத்தான் வா. காட்சி - 93 பாட்டு 21 மெய்யழகன் செங்கமலம் பாட்டு இன்ப வாழ்வு நமக்கென்று சொல்லி எக்காளம் ஊதும் இரண்டுள்ளமே இன்ப வாழ்வு தொலைந்ததை எண்ணி நொந்தோம் என்றாகும் இரண்டுள்ளமே அன்பு வாழ்வு நமக்கென்று சொல்லி அடித்தான் பேரிகை நம் உள்ளமே பண்பு தீர்ந்தது வையத்தில் என்று வலம்புரி ஆர்த்தன நம் உள்ளமே!  3. பொன்முடி கதாபாத்திரங்கள் பொன்முடி... நரசிம்ம பாரதி சொக்கலிங்கம் ... ஆர். பாலசுப்பிர மணியம் மானநாய்க்கன்...Mœவh® குப்புசாமி வயிரவன் ... ஏழுமலை இரிசன்...V.fUzhÃâ தானப்பன் ... காளி என்.ரத்னம் கபாலிகன் ஜெயந்த்...v«.Í.r¡fugh குku குருபரர்...bgUkhŸ பூங்கோதை...khJÇ தேவி புனிதை... ராஜாமணி அன்னம் ... சரவதி வஞ்சி... தனலட்சுமி தயாரிப்பு... மாடர்ன் தியேட்டர் டைரக்ஷன்... எல்லி ஆர். டங்கன் கதை வசனம்... பாரதிதாசன் படம்வெளியாdஆண்L... 1951 கதைச் சுருக்கம் வாணிபத்துறையிலேவளம்பெற்று,தமிழ்நாடுவிளங்கியஅந்தநாளிலேகாவிரிப்பூம்பட்டிணத்தில்,மானநாயக்கன்,சொக்கலிங்கநாயக்கன்ஆகியஇருவரும்பிரசித்திபெற்றவணிகர்களாகவிளங்கினார்கள்.மானநாயக்கன் சகோதரியை சொக்கலிங்கம் மணம் செய்து கொண்டிருந்தான். மான நாயக்கனுக்கு பொன்முடி என்ற ஆண் குழந்தையும், சொக்க லிங்கத்திற்கு பூங்கோதை என்ற ஒரு பெண்ணும் பிறந்தனர். இளமை பருவத்திலிருந்தே பொன்முடியும் பூங்கோதையும் ஒன்றாக வளர்ந்தார்கள். இருவரிடையேயும் அளவு கடந்த பாசம் வளர்ந் தோங்கியது இவ்விருவரையும்வயதுவந்தவுடன்தம்பதிகளாக்கிவைக்க பெற்றர்களும்திட்டம் போட்டிருந்தார்கள். வருடங்fŸ பல கழிந்தன. பூங்கோதையும், பொன்முடியும் வாலிபப் பருவம் அடைந்துவிட்டனர். அவர்களது அன்பு காதலாக மாறியது. இந்த சமயத்தில் பூர்வீக சொத்து ஒன்றை விற்பனை செய்யும் விஷயத்தில் மானனுக்கும் சொக்கனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கள் தேய்பிறைபோல் வளர்ந்து கொடிய பகையாக மாறிவிட்டது. இது காரணமாக பொன்முடியை சந்திக்காவண்ணம் பூங்கோதைக்கு கட்டுக் காவல் விதித்தான் சொக்கன். வான் மழையின்று வாடிடும் பயிர்போல் காதலர் இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் காணாது தவித்தனர், ஆனால் பூக்காரப் பண்டாரம் உதவியால் இருவரும் ரகசியமாகக் கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தார்கள். மாறுவேடத்தில் வந்து தன்னைச் சந்திக்கும்படி பொன்முடிக்கு கடிதம் அனுப்புகிறாள் பூங் கோதை. தற்செயலாக அக் கடிதத்தை சொக்கன் பார்த்து விடுகிறான். சாமக்கோழி கூவும் நேரத்தில் பொன்முடி பூக்காரப் பண்டாரம் வேடத்தில் பூங்கோதையைச் சந்திக்கிறான். காதல் இன்பம் பெருக் கெடுத்தோடும் தருணத்திலே பொன்முடியின் முதுகில் சுரீரென்று சவுக்கடி விழுகிறது. சொக்கன் பொன்முடியை ஒரு மரத்தில் கட்டி வைத்து சவுக்கினால் மிகக் கொரூரமாக அடிக்கிறான். பூங்கோதை பாய்ந்தோடிப் போய் தன் காதலனைத் தழுவிக் கொள்ளுகிறாள். சொக்கனின் ஆத்திரம் அளவு கடந்துவிடுகிறது. பூங்கோதையைப் பிடித்திழுத்து அப்பால் தள்ளிவிட்டு தன் கை சலிக்கும்வரை பொன் முடியை சவுக்கால் விளாசி பிறகு கட்டவிழ்த்து விரட்டுகிறான். ரத்தம் கொதிக்கும் இந் நிகழ்ச்சியால்கூட பொன்முடியின் காதலை மாற்ற முடியவில்லை. பூங்கோதையை சதா நினைத்து ஏங்கியவண்ணம் இருக்கிறான் பொன்முடி. மான நாயக்கன் காதுக்கும் இச் செய்தி எட்டிவிடுகிறது. எப்படி யாவது பொன்முடியை அவளை மறக்கச் செய்யவேண்டுமென எண்ணி டில்லி செல்லும் ஒரு வர்த்தகக் கோஷ்டியோடு வியாபாரத் துக்கு அனுப்புகிறான். இதைக் கேள்விப்பட்ட பூங்கோதை புழுவாய்த் துடிக்கிறாள், பொன்முடியின் உடல்தான் டில்லிநோக்கிச் செல்கிறது. உள்ளம் பூங்கோதையைச் சுற்றியே வட்டமிட்டு நிற்கிறது! இதற் கிடையே பூங்கோதையை வேறு ஒருவனுக்கு மணம் முடிக்க சொக்க லிங்கம் ஏற்பாடு செய்கிறான். இதையறிந்த பூங்கோதை மறுக்கிறாள். அவளது தோழி புனிதை அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுகிறாள். அதுசமயம் டில்லி செல்லவிருக்கும் மற்றொரு வணிகக் கூட்டத்தில் ஆண்வேடத்தில் சென்றால் பொன்முடியை அடையலாம் என்று யோசனை கூறுகிறாள் புனிதை. காதலனைக் காணலாம், கட்டாய மணத்தினின்றும் தப்பலாம் என்ற ஆசையால் பூங்கோதை, வாழ்க் கையில் வெறுப்புற்றதால் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று எழுதிவைத்துவிட்டு வீட்டினின்றும் வெளியேறி, ஆண் வேடத்தில், வர்த்தகக் கோஷ்டியோடு டில்லி நோக்கிச் செல்லுகிறாள். பெற்றோர்கள் பதறி அலறுகிறார்கள். செந்தமிழ் நாட்டினை சிந்தையில் வாழ்த்தியே, செல்லுவோம், டில்லி செல்லுவோம் என்று பரணி பாடிக் கொண்டு சென்ற மறத்தமிழ் வணிகர் கூட்டத்தை நரபலி கொடுக்கும் கபாலிகர் கோஷ்டி பார்த்துவிடுகிறது. பணம் பறிக்கும் எண்ணத்தோடு, தமிழர்களைத் தானங் கேட்கின்றனர் கபாலிகர். பொன்முடி, கொலை வெறிகொண்டலையும் கபாலிகருக்கு சைவத் தமிழன் செப்புச் சல்லிக்காசுகூட கொடுக்கமாட்டான் என்று கூறி, அவர்களை விரட்டுகிறான். அவமதிப்பால் ஆத்திரமடைந்த கபாலிகர் தலைவன் தனது கூட்டத்தாரோடு தமிழர் கூட்டத்தை மறைந்திருந்து தாக்கி, பொன்முடியையும் சிறைப்பிடித்து காளிதேவிக்குப் பலியிட ஏற்பாடு செய்கிறான். சைவத்தின் உயர்வுக்குப் போராடிய வீரன் கயிற்றால் கட்டப்பட்டு சாவு முனையில் நிறுத்தப்பட்டிருக்கிறான்! நாற்புறமும் ரத்தவெறியர்களின் அகோரத் தாண்டவம். மறத் தமிழன் பொன்முடியின் கதி என்ன? காதலனைத் தேடிவந்த பூங்கோதை என்னவானாள்? கபாலிகர்களது வெறியாட்டத்தின் விளைவு என்ன? உண்மைக் காதல் வெற்றி பெற்றதா? காதலர்களின் முடிவு என்னவாயிற்று? விவரம் வெள்ளித் திரையில் காண்க! எதிர்பாராத முத்தம் காப்பியம் பற்றிய சிறப்புச் செய்திகள்  இக் காப்பியம், 1941-ஆம் ஆண்டில், காஞ்சி பொன்னப்பாவால், வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடப்பட்டது.  இக்காப்பியத்தை மேடை நாடகமாக நடத்திட கலைவாணர் என்.எ. கிருஷ்ணன் விரும்பினார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப, 1944ஆம் ஆண்டு நாடகமாக எழுதிக் கொடுத்தார் பாரதிதாசன்.  பொன்முடி வாணிப வீதி அதிகாலை நேரம் பழந்தமிழ் நாட்டின் தொழில் வளமும் வாணிபச் சிறப்பும் மற்றும் பல பெருமைகளும் கொண்ட காவிரிப்பூம் பட்டினம். முத்துக் குளிப்போர் கடலில் படகுகளைச் செலுத்துகின்றனர். முத்து வியாபாரம் மும்முரமாக நடைபெற ஆரம்பிக்கிறது. ஊரின் பெரிய முத்து வியாபாரிகளில் ஒருவன் மானநாய்க்கன். அவன் தன் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக் கிறான். மானநாய்க்கனைத் தேடி வருகிறான் சொக்கலிங்கம். அவன் அவரது சகோதரியின் கணவன். அவனை வரவேற்று மானநாய்க்கண் பேசிக் கொண்டிருக்கிறான். மானநாய்க்கனின் ஒரே மகன் பொன்முடி. சொக்கலிங்கத்தின் ஒரே மகள் பூங்கோதை. இருவரும் பள்ளியில் படிக்கும் பருவத்தினர். பொன்முடி வீட்டினுள்ளிருந்து வருகிறான். பொன் : அப்பா!... காசு மான : எதுக்கடா தம்பி? பொன் : மிட்டாய் வாங்க. கணக்கன் குறுக்கிட்டு தம்பி பொய் சொல்லுதுங்க? என்றவன் பொன்முடியைப் பார்த்து பூங்கோதைக்குக் கொடுக்கறதுக்குத் தானே? என்று கேட்கிறான். மான : இந்தா... இந்தா. காசைக் கொடுக்கிறான். சொக் : என்னடா மாப்ளே!.... பள்ளிக்கூடம் போறியே... ஒழுங்கா பாடம் படிக்கிறியா? பொன் : படிக்கிறேன் மாமா. சொக் : ஒரு கணக்குக் கேட்கிறேன்... சொல்வாயா? பொன் : ஓ.... கேளுங்க. சொக் : மூன்று பசு, ஒரு குதிரை, இரண்டு காளை ஆக ஆறுக்கும் சேர்த்து எத்தனைக் கொம்பு? பொன் : பத்து...! சொக் : ஆறுக்கு எப்படி மாப்ளே பத்து வரும்? பொன் : குதிரைக்கு எப்படி மாமா கொம்பு வரும்? மான : அதெல்லாம் நம்ம பையனை ஏய்க்கமுடியாது மச்சான். கண : விரை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா முளைக்கும்? சொக் : செட்டிப் பிள்ளைக்கு கணக்குத்தானே முக்கியம். கெட்டிக் காரன்! ஏண்டா மாப்ளே? மாடு மேய்க்கத் தெரியுமா உனக்கு? பொன் : ஓ... ஒங்க மகளைக்கூட மேய்க்கத் தெரியும் மாமா! (எல்லாரும் சிரிக்கிறார்கள்) மான : அப்படிச் சொல்றா எஞ்சிங்கம்!... சொக் : டேய் மாப்ளே!... பொன் : பூங்கோதை பள்ளிக்கூடம் போகக் காத்துக் கிட்டிருப்பா மாமா... நான் போறேன்... பொன்முடி வெளியே ஓடுகிறான். சொக்கலிங்கம் வீடு. சொக்கலிங்கம் மனைவி வீட்டை மெழுகிக் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள். மூச்சு வாங்க பொன்முடி வேகமாக வந்துநிற்கிறான். பொன் : அத்தே! எங்கே பூங்கோதை? பூங் : (ஆவல் பொங்க) அத்தான்!... இதோ வந்திட்டேன்... போவமா? இருவரும் கைக்கோர்த்தபடி இறங்கும்போது, புனிதா வருகிறாள். அவள் பூங்கோதையின் நெருங்கிய தோழி. அவர்களுடன் சேர்ந்து பள்ளியில் படிப்பவள். மூவரும் கிளம்பிப் போகிறார்கள். வழியில் ஒரு மாந்தோப்பு, பூங்கோதை ஆசைப்பட, பொன்முடி மரத்திலிருந்து ஒரு மாங்காயை அடித்துப் பறிக்கிறான். மூவரும் அந்த மாங்காயைக் கடித்துத் தின்றபடி பள்ளிக்கூடம் போகிறார்கள். மணல் வீடு பொன்முடி, பூங்கோதை, புனிதா, சுப்பன் இப்படி எல்லாச் சிறுவர் சிறுமிகளும் மணல்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வீடு கட்டி முடிக்கப்படுகிறது. சுப் : சரி வீடு கட்டியாச்சு! இப்போ வீட்லே குடித்தனம் பண்றது யாரு? பொன் : அதுக்கு புருஷனும் பொண்டாட்டியுமால்ல இருக்கணும். வேல : அதுக்கென்ன, ஒரு கல்யாணம் நடத்திட்டா போவுது, ஒரு பொண்ணு, ஒரு மாப்ளே இருந்தாப்போதும் அவ்வளவுதானே? சுப் : ஆமா, நமக்குள்ளே பொண்ணு யாரு, மாப்ளேயாரு? புனி : பொண்ணு பூங்கோதை! பூங் : ஓ... எனக்குச் சம்மதம். வேல : அப்படீன்னா மாப்ளே...? சுப் : இதோ, நா மாப்ளே! பூங் : நீ மாப்ளையாயிருந்தா நான் பொண்ணாயிருக்க மாட்டேன். புனி : அப்ப பொன்முடிதான் மாப்ளே!... வேல : சரியான ஜோடி!... என்ன பொன்முடி, என்ன சொல்றே? பொன் : ஓ...! பூங்கோதையின் பக்கத்தில் வந்து பொன்முடி உட்காருகிறான். ஒருவன் மேளம் தட்ட, ஒருவன் நாதவரம் வாசிக்க, பொன்முடி பூங்கோதையின் கழுத்தில் தாலி கட்டுகிறான். தண்ணீர் எடுத்தபடி அந்தப் பக்கம் வரும் பொன்முடியின் தாய் அன்னமும், பூங்கோதையின் தாய் வஞ்சியும் குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்து விடுகிறார்கள். வஞ் : (மகிழ்வோடு) அண்ணி! எப்படி நம்ம குழந்தைகள்? அன் : சரிதான்... முறைப்படி அத்தை மகளுக்குத்தான் தாலி கட்டுகிறான். அவர்களைப் பார்த்துவிட்டு பொன்முடி, பூங்கோதை, புனிதா எல்லாரும் ஓடிவிடுகிறார்கள். மனமொத்த காதலர்கள் ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பொன்முடி கட்டிளம் காளையாக வளருகிறான். பருவம் மெரு கூட்ட, பொன்சிலை என பூங்கோதை வளர்ந்து நிற்கிறாள். வயதுடன் வளர்ந்த அவர்கள் காதலும் வளர்பிறை போல் வளர்ந்து, அவர்களை மனமொத்த காதலர்களாக்குகிறது. ஒருநாள் பூங்காவில் காதலர்களான பொன்முடியும் பூங்கோதையும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பூங்கோதை ஒரு புதரின் பின்னால் ஒளிந்து கொள்ள, பொன்முடி அவளைப் பிடித்து விடுகிறான். பொன் : (அவன் கையைப் பற்றியபடி) உம்.... என்னால் பிடிக்க முடியாதென்றா நினைத்தாய்? பூங் : அம்மாடி!... விடாக் கண்டனாயிருக்கிறீர்களே! பொன் : புலியிடமிருந்து புள்ளிமான் தப்பினாலும், என்னிடமிருந்து நீ தப்ப முடியாது!.... பூங் : ஆனாலும் இவ்வளவு முரட்டுத்தனம் கூடாது! பொன் : அது பருவம் காட்டு பண்பு!... ஏன் பயமா? நாம் என்ன, இன்னுமா சிறு குழந்தைகள்? பூங்கோதை! அன்புச் சோலை யில் பூத்து மலர்ந்த புது மலர்கள் நாம்! அதோ!... நம்மைப் பார்க்க நாணமடைந்து சந்திரனும் மேகத்தில் மறைகிறான்! பூங் : மறைவதற்குக் காரணம் நாணமல்ல! துரத்திப் பிடிப்பீர்களோ என்று உங்களிடம் கொண்ட பயம்! பொன் : என் சந்திரன் என் அருகே இருக்கும்போது வானத்திற்கு ஏன் தாவுகிறேன் அன்பே... பூங்கோதை... அவளை முத்தமிட முயற்சிக்கிறான். பூங்கோதை நாணத்துடன் தடுக்கிறாள். பூங் : போங்கள் அத்தான்! வர வர பைத்தியமாகத்தான் ஆகிறீர்கள்... சமைக்கப் பொறுத்தவர் சாப்பிடப் பொறுக்க வேண்டாமா? பொன் : பசி மயக்கம் கொண்டவன் தான் சர்க்கரைப் பொங்கலை எதிரே வைத்து எவ்வளவு நேரம் காத்துக்கிடப்பது? பூங் : அத்தான்! நமக்குப் பருவம் வந்துவிட்டது. பெற்றோருக்குத் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? நமது கல்யாணம் சீக்கிரம் முடிந்து விடும். கவலைப் படாதீர்கள். பொன் : பூங்கோதை! மாமாவும் அத்தையும் நம் கல்யாணம் பற்றி ஏதாவது பேசிக் கொண்டார்களா? பூங் : அத்தான்! ஏன் இந்த அவசரம்? உங்களை அடையப் பிறந்தவள் நான்! என்னை ஆளப் பிறந்தவர் நீங்கள்! பொன் : அதில் சந்தேகமில்லையே!... பூங் : (குறும்பாக வானில் இருக்கும் நிலவைக் காட்டி) அதோ அது சந்திரன் தானே? அதில் சந்தேகமில்லையே?... இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். விஷ வித்து மானநாய்க்கன் வீட்டில் உட்கார்ந்து, சில விலை உயர்ந்த நகைகளைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறான். மானநாய்க்கன் வீட்டு வேலைக்காரன் வயிரவன், வாழைத்தாருடன் வருகிறான். வயி : என்னாங்க எசமான், இந்த இரிசன் தொல்லைப் பெரிசாப் போச்சு. (இரிசன் சொக்கலிங்கம் வீட்டில் வேலை பார்த்து வருபவன்). மான : ஏண்டா, என்ன செய்யறான்? வயி : பொதுப் பூமியில் உழவு பண்றதே இப்படித்தானுங்க... நம்ம மாட்டுத் தீவனம் இல்லே, அதை அவன் மாட்டுக்குப் போட்டு போட்டு வீணாக்கறான். சொன்னா கோவம் நேத்து கன்னுப் போட்ட பசுமாட்டுக்கு வெந்தண்ணி வச்சி ஊத்தினேன். இவ்வ ளவு வெறகா எரிக்கறதூன்னு சண்டைக்கு வர்ரான். இன்னைக்கு நம்ம பங்கு வாழத்தாரு பெரிசாப் போச்சாம்... சண்டை... மான : ஏன், அவங்க அப்பன் வீட்டுச் சொத்தா? என்ன முழுகிப் போச்சாம்? வயி : மாப்ளே, நாயக்கருக்கு இரிசன் பேச்சுத்தானே இனிக்குது! இத பாருங்க, விவகாரம் பெரிசா வர்றதுக்க முன்னேய் நிலத்தைப் பிரிச்சிக்கிடர்து நல்லதுங்க. மான : புத்திசாலியாடா நீ! மூளை மட்டும் இருந்ததுன்னா ரொம்ப கெட்டிக்காரனாயிருப்பே. எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொல்றியே!... வயிரவனை விரட்டி அனுப்பி விடுகிறான். சொக்கலிங்கம் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கிறான். தரகன் அவனிடம், தரிசாகக் கிடக்கும் அவர்களது நிலத்தை நல்ல விலைக்கு வாங்க ஒருவர் வந்திருப்பதாகச் சொல்லி, ஆசையைத் தூண்டி விடுகிறான். சொக் : என்ன விலை கொடுப்பார்கள்? தர : ஆறாயிரம் வராகன். சொக் : (ஆச்சரியத்தோடு) ஆறாயிரமா? தர : ஆமாங்க... அது மாதிரி மூணு பூமி வாங்கலாம். நானே வாங்கித் தர்றேனுங்க... சொக் : ஆமா, ஆமா... இப்ப அப்படித்தான் சொல்லுவே. அப்றம் கேக்கப் போனா கிராக்கி ஏறிடும். தரகு வேற இருக்கு. தர : அதுக்கெல்லாம் இடம் வேறே... இங்கே செய்வேனா?... களவாட்றது பல இடம்னா கன்னக் கோல் சாத்றதுக்கு ஓர் இடம் வேணாங்களா? சொக் : சரி, முடித்துவிடு... இரி : (தரகனிடம்) அடப்பாவி! அதுலே ஒழைச்சித் தானே என் வயித்தைக் கழுவிக்கிட்டு இருந்தேன். சொக் : நீ போயி ஒன் வேலையைப் பார்ரா... நீயேண்டா பயப்பட்றே. சரி, போய் பேசி முடி. தர : அதெல்லாம் முடிச்சுட்டே வந்திட்டேன். இந்தாங்க அச்சாரம் (பணப்பையை கையில் வைத்தபடி) நீங்கதான் பெரியவங்க. இதுக்கு மானநாய்க்கரை ஒண்ணும் கேக்க வேண்டிய தில்லிங்களே!... சொக் : நான் சொல்லும்போது ஒண்ணும் தட்ட மாட்டான். தர : நீங்க சொல்லிட்டா மலையே பெரண்டாலும் பெரளமாட்டிங் கன்னு எனக்கு நல்லாத் தெரியும். இருந்தாலும் அவருகிட்ட சொல்லவேண்டிய கடமைக்குச் சொல்லிட்டா எழுதி முடிச்சிடலாம். கடைக்குப் போவுங்களா. சொக் : உம்... போனாப் போச்ச!... இருவரும் புறப்படுகின்றனர். சொக்கலிங்கம் அவனிடம் விஷயத்தைச் சொல்கிறான். மான : என்னங்க மச்சான்! இப்ப அதை வித்து ஜீவிதம் பண்ணணுங் கற கட்டாயம் ஒண்ணுமில்லையே நமக்கு. ஏதோ பூர்வீக சொத்து... அப்படியே இருந்திட்டுப் போகட்டுமே! சொக் : இல்லை மானா... நமக்கு பணம்தானே முக்யம். மான : மச்சான்! நான் இன்னொண்ணையும் முக்யமா நினைக்கி றேன். என்னன்னு கேக்குறீங்களா? அந்த நெலம் எனக்கும் என் தங்கச்சிக்குமா தகப்பனாரு குடுத்தது. ஏதோ நமக்குப் பின்னாலே நம்ம குழந்தைகள்தான் அனுபவிச்சிட்டுப் போகட்டுமே!... கணக்கன் குறுக்கிடுகிறான். கண : ஆமாங்க, பரம்பரைச் சொத்து பாழாக் கிடந்தாலும் விக்கப் படாதும்பாங்க. சொக் : அதுலே என்ன வருது மானா, அனுபவிக்கறதுக்கு அதை வித்து வரும் தொகைக் ஆளுக்கொரு நல்ல நிலமா வாங்கிட்டாப் போச்சு. நானும் அவருக்கே குடுக்கிறதா வாக்குக் கொடுத் துட்டேன். அச்சாரம் கூட வாங்கிட்டேன். என்ன சொல்றே. மான : இதென்ன மச்சான் வேடிக்கையாயிருக்கு. என்னக் கேக்காம வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கிட்டா, என்னை எப்படிக் கட்டுப்படுத்தும்? வஞ்சியை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. அவகூட ஒத்துக்கவே மாட்டா! சொக் : அவ என் வார்த்தையையா தட்டி விடுவாள்? நீ என்ன சொல்றே. என் நாணயத்தைக் காப்பாத்தப் போறியா, இல்லையா? கண : இது என்னாங்க... அவுங்க அவுங்க நாணயத்தை அவுங்க அவுங்கதான் காப்பாத்திக்கணும். மான: டே...nl... நீ சும்மா இருடா! இதென்ன நீங்க தெரியாமாப் பேசறீங்க? என்னெக் கேக்காம நீங்க வாக்குக் கொடுத்ததே தப்பு. நான் அதுக்கு ஒத்துக்கவே மாட்டேன். ஊஹூம்!... சொக் : நானா தெரியாமாப் பேசறேன். நிலம் எனக்கும் என் தங்கைக்கும் தானே சொந்தம். Ú® v¥go th¡F¤ juyh bk‹W brhš»whah? மான : அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்! என்ன முழுகிப் போச்சு? சொக் : என்ன முழுகிப் போச்சா? மானா, உனக்கு நல்லது செய்யவே வந்தேன். என்னை மூக்கறுத்து விட்டாய். ஒழிந்தது என் நாணயம். இதனால் நம் உறவுக்கே பங்கம் வந்துவிடும். முடிவாகக் கேட்கிறேன். என் சொல்லை நம்புகிறாயா, இல்லையா? மான : முடியாது! தரகன் : இதுக்குத்தானுங்க நாஞ்சொன்னது. நீங்க நெனக்கிறீங்க மச்சினனெ பெரிசா. அவுரு உங்களை மதிச்சாத்தானே? எண்ணம் சுத்தமில்லீங்க. மான : நிறுத்துடா.. மூடு வாயை... சும்மாக் கெடந்த kனுசனைப்nபாயிMசையைக்fட்டிmலங்கோலம்gண்ணிப்ãட்டு,vண்ணம்Rத்தமில்லையாமில்லே...Ó¢á nபா,bவளியே!தர : என்னங்க.... ஒங்களை பெரிசா மதிச்சு ஒங்களோட வந்தேன். இதுதானா மரியாதை? சொக் : அடேய்! இப்படிப் பேச எத்தனை நாள் காத்திருந்தே? அவனைச் சொன்னாலும் ஒண்ணுதான், என்னைச் சொன்னாலும் ஒண்ணுதான்! நான் ஆசைப் பட்டேனா? உன் சொத்துக்கா? மூன்று தலைமுறைக்கு குந்தித் தின்னாலும் மாளாதே என் செல்வம். எனக் கெதுக்கடா, ஊரான் சொத்து? மான : எனக்கும் அப்படியேதான்!... சொக் : அயோக்யப் பதரே! நீ யாரோ, நான் யாரோ! இந்த வினாடி முதல் ஒழிந்தது நம் உறவு. செத்தாலும் வாழ்ந்தாலும் கிடையாது. கோபமாகப் பேசிவிட்டு, தரகனுடன் வேகமாக வெளியேறுகிறான் சொக்கலிங்கம். கோபத்துடன் வீட்டுக்கு வரும் சொக்கலிங்கம், தன் மனைவி வஞ்சியிடம், மான நாய்க்கன் வீட்டில் நடந்ததைச் சொல்கிறான். வஞ்சி துடித்துப் போகிறாள். சொக் : எவ்வளவு உதவி செய்திருப்பேன் அவனுக்கு. நன்றி மறந்த நரிப்பயல். இனி என்றும் விழிக்கப் போவதில்லை அவன் முகத்தில். நமது சொந்தம் பந்தம் எல்லாம் தொலைந்தது இன்றோடு. எங்கே பூங்கோதை?... வஞ் : மாமன்!... வீட்டுக்குப் போயிருக்கிறாள். சொக் : மாமன்!... வஞ்சி, மானன் என் விரோதி. பூங்கோதை எந்தக் காரணத்தைக் கொண்டும் இனிமே அங்கே போகக் கூடாது. பொன்முடியோடு பேசவும் கூடாது. வஞ் : சேர்ந்து வளர்ந்த செழுங்கொடிகளை பூக்காமல் மணக்காமல் வெட்டிப் பிரிப்பதா? மாளாத ஆசைகளை மனதில் வைத்திருந்தேனே! சொக் : மறந்துவிடு எல்லாவற்றையும். இப்போதேபோய் அவளை அழைத்துக்கொண்டு வருகிறேன். கள்ளமில்லா உள்ளம் மானநாய்க்கன் தனக்கும் சொக்கலிங்கத்திற்கும் நடந்த பூசலை நினைத்து, மனைவி அன்னத்திடம் சொல்லி வேதனை பட்டுக் கொண்டிருக்கிறான். பூங்கோதை வருகிறாள். வழக்கம் போல அல்லாமல், வேதனையுடன் இருப்பதற்கு அவள் காரணம் கேட்கிறாள். மான : ஹூம்...! ஒண்ணுமில்லே... ஒங்கப்பாவுக்கும் எனக்கு கொஞ்சம் மனதாபம்... ஏன்... சண்டையின்னு தான் வச்சிக்கயே... பூங் : (பயந்து) சண்டையா?... மான : ஆமா... நீ இனிமே இங்க வர்றது கூட, அவ்வளவு உசித மில்லே. ஒங்கப்பாவுக்கும் பிடிக்காது... பூங் : உங்களுக்குள் சண்டையாய் இருந்தால் நான் ஏன் மாமா வரக்கூடாது? அன் : அம்மா... ஒம் மனசுலே கள்ளம் இல்லை. நீ இங்கே வரேன் னாலும் ஒங்கப்பா ரொம்பக் கோவக்காரரு. எதுக்கு வம்பு? பூங்கோதையிடம் ஒரு கூடை மாம்பழங்களை அன்னம் கொடுக்கிறாள். கண்களிலிருந்து நீர் வழிய அதை வாங்கிக் கொள்கிறாள் பூங்கோதை. அன் : இந்தாம்மா!.. இது நம்ம தோட்டத்து மாம்பழம். வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போ... பூங் : (கவலையுடன்) அப்படியானால் நான் இனிமேல் இங்கு வரவே கூடாதா. அத்தே? பூங்கோதை, அத்தை அன்னத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளைத் தேடி வரும் சொக்கலிங்கம் வாசலில் இருந்தபடி, அவள் பெயரை உரக்கச் சொல்லி அழைக்கிறான். நெஞ்சில் வேதனையுடன் பூங்கோதை போகிறாள். அவள் கையிலிருந்த பழத்தைத் தட்டிவிடும் சொக்கலிங்கம், அவள் இனி இந்த வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரிக்கிறான். வெளியில் சென்றிருந்த பொன்முடி, அவரைச் சமாதானப் படுத்த முயற்சிக்கிறான். அவனிடமும் கோபமாகப் பேசி, பூங்கோதையை அழைத்துச் செல்கிறான், சொக்கலிங்கம். தோழி புனிதாவிடம் தன் ஆற்றாமையைச் சொல்லி வேதனைப் படுகிறாள் பூங்கோதை. தண்ணீர் கொண்டு வர குளத்துக்குப் போகும் வழியில் இது நடக்கிறது. பூங் : புனிதை! அத்தானோடு நான் ஏன் அப்படி சேர்ந்து வளர்ந்தேன்! அவர் பிரிக்கப்பட்ட பிறகு ஏன் உயிர் வாழ்கிறேன்? புனி : இதென்னடி கேள்வி? என்றைக்காவது காணலாம். ஆனந்தமாகப் பேசலாம். அன்பாக கன்னத்தில் ஒரு தட்டு... ஆசையோடு உதட்டில் ஒரு லட்டு!... பூங் : விளையாட்டு போதுமடி புனிதை! அத்தானைக் காண்பேனா? அவர் அழகு மணித் தோளில் கொத்தும் கிளி ஆவேனா? கிடைக்குமா அந்த வாழ்வு? வருமா அந்த நன்னாள்? புனி : பூங்கோதை, கவலையை விடு! காலம் வரும். காதலர் அன்பைத் தடை செய்ய கடவுளுக்கும் வலிமையுண்டா? உனக்கென்று பிறந்தவர் பொன்முடி. பூங்கோதையைத் தேற்றிச் சமாதானப்படுத்துகிறாள் புனிதா. பூங்கோதையை நினைத்து, அவள் பெயரை முத்துக்களால் அடுக்கியபடி, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறான் பொன்முடி. அவனது நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு அதே சமயம், அவனைச் சமாதானப் படுத்தவும் முடியாமல் தவிக்கிறாள், பொன்முடியின் தாய் அன்னம். அதே சமயம் உள்ளே வரும் மானநாய்க்கன், பொன் முடியைப் பார்த்து, அவன் இன்னும் கடைக்குப் போக வில்லையா? என்று கேட்கிறான். ஊருக்கு குமரகுருபரர் வரப் போவதாகவும், ஊர்ச் சாவடி யிலே அதற்காக கூட்டம் போட்டிருப்பதாகவும் சொல்கிறான். ‘பூங்கோதையை வழியில் சந்திக்க முடியாதா? என்ற ஆவல் பரபரக்க, கிளம்புகிறான் பொன்முடி. அவன் எண்ணம் வீண் போகவில்லை. பூங்கோதை, தண்ணீர் எடுத்தபடி புனிதாவுடன் வருவதைப் பார்த்து விடுகிறான். பொன் : பூங்கோதை! பூங் : அத்தான் நீங்களா? பொன் : ஆம், நானேதான் பூங்கோதை! அவளை அணைத்தபடி, அருகிலிருக்கும் தோப்புக்குள் போகிறான். புன்சிரிப்போடு விடை கொடுத்து அனுப்புகிறாள் புனிதா. பொன் : பூங்கோதை, கடைக்குப் போகும் பேது இப்பக்கமாக வந்தால் உன்னைச் சந்திப்போமா என்று நினைத்தேன். வந்தேன். என் ஆசை வீணாகவில்லை. பூங் : அத்தான்! நானும் அப்படியே நினைத்தேன். என் ஆசையும் வீணாகவில்லை. பொன் : மனம் போல் வாழ்வு பூங்கோதை! யாழும் ஒலியும் போல் இருந்தோம். பாழும் பகைமையில் பிரிக்கப் பட்டோம், என்றாலும் ஒலி மறக்கவில்லை யாழை! சந்திரனை மறைக்கும் நேரம்... பூங் : எவ்வளவு நேரம் விலகாமல் இருக்கமுடியும்? காதலை அழிக்கும் சக்தி, கட்டுப்பாட்டுக்கு ஏது அத்தான்? நம்மைப் பிரித்து வைக்கும். நம் மனதை என்ன செய்ய முடியும்? பொன் : அந்த உறுதியே நமக்குக் கலங்கரை விளக்கம். நமது வாழ்வும் தாழ்வும் நம்பிக்கையில்தான்! கண்ணே, பருவகாலம் பூரண அழகைப் பாலித்து விட்டது நமக்கு. பூங் : (கவலையுடன்) நம் சந்திப்பைப் பெற்றோர்கள் அறிந்தால்... பொன் : விஷத்தை அமுதாக்கும் மெய்க் காதல், பெற்றோரின் நெஞ்சத்தைப் புனிதமாக்காதா? எனக்கு நம்பிக்கையுண்டு பூங்கோதை! அதிலும் நீ யார்; நான் யார்? பூங் : (அவன் கையைப் பிடித்துக் கொஞ்சலாக) அத்தான், யார் குறுக்கிட்டாலும் சரி, இனி என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது! பொன் : (உணர்ச்சி பொங்க) என் பைங்கிளியே! வாழப் பிறந்தவர்கள் நாம். என்ன தடை நேரட்டும், எதுவும் எவரும் நம்மைப் பிரிக்க முடியாது. நமது அன்பு இரும்புக் கவசம். பூங் : (அணைப்பிலிருந்து விடுபட்டு விடைபெறும் பாவனையில்) அத்தான், நாளைக்கும் மறக்க மாட்டீர்களே? பொன் : செங்கரும்பே! என் வாழ்வமுதை, வற்றாத இன்பப் புனலோடையை நான் மறப்பேனா! நாளை காலை இதே நேரத்தில் நான் இங்கு வருவேன்... ஆனால் நீ... பூங் : நான் வர மறந்தால் சூரியன் உதிக்கவே மறந்துவிடுவான்!... புன்னகையோடு, அவனைப் பார்த்த வண்ணம் புறப்படுகிறாள். பொன் : (அவளை அணைக்கத் துடிக்கும் பாவனையில் கைகளை நீட்டியபடி) பூங்கோதை! என் உயிரை உன்னோடு எடுத்துச் செல்கிறாய்... பூங் : பதறாதீர்கள் அத்தான்! அதில் பாதி என்னுடையதல்லவா? பத்திரமாக இருக்கும்! அவள் கிளம்பிப் போகிறாள்! பொன்முடி கடைக்குக் கிளம்புகிறான், தவறிய வாக்கு மானநாய்க்கண் மனைவி வஞ்சியுடன் பேசிக் கொண்டிருக் கிறான். வியாபாரத்தைக் கவனித்து விட்டுக் கடையிலிருந்து திரும்புகிறான் பொன்முடி. அவனை அழைத்து, மறுநாள் தான் கடைக்குப் போய் வியாபாரத்தைக் கவனிப்பதாகவும், தாழையூருக்குப் போய் சரக்கையும், பணத்தையும் வசூலித்துக் கொண்டு வரும்படியும் சொல்கிறார் மானநாய்க்கன். பொன்முடிக்குத் தந்தையின் கட்டளை அதிர்ச்சியைத் தருகிறது. மறுநாள் தன் காதலி பூங்கோதையை அவன் சந்திப்பதாகச் சொன்னது, என்ன ஆவது? இரவு தன் அறையில், படுக்கையில் உட்கார்ந்தபடி தனக் குள்ளேயே வேதனைப்பட்டுக் கொள்கிறான் பொன்முடி. பொன் : (தனக்குள் - சோகத்தோடு) நாளை உதிக்கும் சூரியன் மிகப் பொல்லாதவன். சுமைகுடம் தூக்கிச் சுடர்க்கொடி வந்திடுவாளே! ஆனால் நான்...? காத்திருப்பாளே எனக்காக ஐயோ, என்ன நினைப்பாளோ என்னைப் பற்றி? படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறான் தூக்கம் வர மறுக்கிறது. மீண்டும் தனக்குள் அரற்றிக் கொள்கிறான். பொன் : அன்பு முத்தங்களை, அளித்த வாக்குறுதிகளை எப்படி மறப்பேன்? நானும் ஏமாந்து அவளையும் ஏமாற வைப்பதா? உம்... நான் ஒரு கோழை! அறையில் எரிந்துகொண்டிருக்கும் குத்துவிளக்கில் எண்ணெய் தீர்ந்து இருள் சூழ்கிறது. பொன்முடியும் படுக்கையில் வீழ்கிறான். காதல் தூது தானப்பன் ஒரு பூ வியாபாரி. வீட்டுக்கு வீடு சென்று பூ கொடுத்து வருபவன். வழியில் அவனைப் பார்த்ததும் பொன்முடிக்கு யோசனை ஒன்று அரும்புகிறது. தான் வெளியூர் செல்லும் விவரத்தை ஓலையின் எழுதி, பூங்கோதைக்கு அவன் மூலம் அனுப்பத் திட்ட மிடுகிறான். அவனை அழைக்கிறான். பொன் : எங்கள் மாமா சொக்கலிங்கத்தின் வீட்டுக்கு நீதானே பூ கொடுக்கிறாய்! தான : ஆமாம் தம்பி...! பொன் : மயில் போன்ற சாயலுடையாள். மதி முகத்தாள். நீலக் கரு விழியாள். கோலச் சிற்றிடையாள். தென்னம் பாளைப் பிளந்து சிந்திடும் சிரிப்புக்காரி, பூங்கோதையைப் பார்த்ததுண்டா, நீ? தான : என்னங்க இப்படி கேக்கறீங்க. அதை நான் பார்க்காத நாளே கிடையாதே...! தன் திட்டத்தை அவனிடம் பொன்முடி வெளியிட, தானப்பன் சம்மதிக்க, பூங்கோதைக்கு ஓலையில் விவரத்தை எழுதி அவனிடம் பொன்முடி கொடுக்கிறான். தண்ணீர் எடுக்கப் பூங்கோதை வரும் போது, அவளைச் சந்தித்து ஓலையைக் கொடுக்கிறான் தானப்பன். ஆவல் பொங்க அதைப் பிரித்துப் படிக்கிறாள் பூங்கோதை. என் கட்டிக்கரும்பே! இன்பம் சுவைக்கக் காத்திருந்தேன். எதிர்பாராத தடங்க லொன்று நேர்ந்தது. இரவு முழுதும் தூக்கமில்லை. தந்தையின் கட்டளையைப் புறக்கணியாது தாழையூர் செல்கிறேன். என் உள்ளம் உன்னிடம். உயிரும் அங்கேயே! வையகத்தில் நூறாண்டு நான் எண்ணினாலும், தையல் உன்னை ராத்திரிக்குள் சந்திக்க வில்லையானால், என் மெய் யெங்கே? உயிர் தானெங்கே? வெடுக்கென்று பிரிந்து போகும். பூங்கோதை, நான் வாழ்வதற்கு வழி விடு. இப்படிக்கு அத்தான் பொன்முடி கடிதத்தைப் படித்து முடிக்கிறாள் பூங்கோதை. இதற்குப் பதில் வாங்கி வரும்படி பொன்முடி சொன்னதை தானப்பன் அவளிடம் சொல்ல, கூட இருக்கும் தோழி புனிதா, யோசனை சொல்கிறாள். புனி : நிலா கிளம்புற நேரத்திலே உங்கவீட்டு வாசல்வழியே வந்து கூட்டிப் போகும்படி எழுதிவிடு தொல்லையே இருக்காது, அதன்படியே தானப்பனிடம் ஓலை எழுதி பொன்முடிக்கு அனுப்ப, அவனும் அவளை அழைத்துக் கொண்டு, கடற்கரைக்குச் செல்கிறான். பால் போல் நிலவு காய்கிறது. பொன்முடியும் பூங்கோதையும் நெருங்கி அணைத்த வண்ணம் உட்கார்ந்திருக் கின்றனர். பொன் : பூங்கோதை, அமுதத்தால் ஆக்கப்பட்டதோ உன் அழகு மேனி? பூங் : ஏன் அத்தான்? பொன் : உன்னை விட்டிருந்தால் வாடிப் போகிறது என் உயிர். தொட்டு விட்டால் தழைக்கிறது. இன்பம் குதித்துப் பாய்கிறதே உடம்பெல்லாம்... பூங் : (அவன் கையை தன் கையில் எடுத்துவைத்துக் கொண்டு) அத்தான்! உங்கள் அன்புக்கரம் பட்டால் எட்டிக்காயும் கட்டிக் கரும்பாகுமே! பொன் : கண்ணே, அன்பு காட்டி அழகு வடிவு காட்டி என் ஐம்புலன் களையும் அடிமை கொண்டு விட்டாய். தேன்குடத்தில் விழுந்த ஈயாகி விட்டேன். பூங் : (குறும்பாக) முழுகி விடாதீர்கள் அத்தான்! மூச்சு முட்டிக் கொள்ளும். உங்கள் உடல் நலிந்து விட்டால் பிறகு நான் என்ன செய்வேன்? பொன் : நலிவு தந்த தேன் குடமே மருந்தாக இருக்கும் போது நான் ஏன் கவலைப்படவேண்டும்? இன்பத்தின் எல்லை வரைக்கும் நீந்துவேன். பூங்கோதை எழுந்திருக்க, அவனும் எழுந்திருக்கிறான். அவனைக் குறும்பாகப் பார்த்தபடி அவள் பேசுகிறாள். பூங் : அப்படியானால் இந்த வெண்ணிலாவும் தென்றலும் வீணாய்ப் போகாது. பொன் : பொன்னல்லவா நமது நேரம். ஆனால் கண்ணே, அந்த நட்சத்திரங்கள் படும் பாட்டைப் பார்!... பூங் : அப்படியொன்றும் தெரியவில்லையே! பொன் : நன்றாகப் பார்! நிலவையும் உன் முகத்தையும் பார்த்து விட்டு, எது நிலா எது முகம் என்று புரியாமல் கண்களைச் சிமிட்டி விழிக்கின்றன. பூங் : இல்லை அத்தான்! அந்தக் கண் சிமிட்டல் உங்களுக்கு விடும் அழைப்பு! பொன் : எனக்கா, எதற்கு? பூங் : சந்திரனின் பிரகாசம் சூரியன் கொடுக்கும் இரவல் ஒளி தானே? எனவே நாமும் ஏன் பெறக்கூடாது என்று எண்ணின, மயக்குவதற்கு உங்களைப் பார்த்துக் கண் வெட்டுகின்றன. பொன் : நான் என்ன சூரியனா...? பூங் : நான் சந்திரன் என்றால், நீங்கள் சூரியனே தான்! அத்தான் உங்கள் உறவு இல்லாவிட்டால், இந்த மலருக்கு மணமேது? பொன் : பூங்கோதை! இன்பக் காவியம் உன் பேச்சு. என் வாழ்வின் ஜீவ நரம்புகள் உன் காதல். நேரமாகி விட்டதை உணர்ந்து, பிரிய மனமில்லாமல் இருவரும் கிளம்புகின்றனர். பொன்முடி பூங்கோதையை அவள் வீடு வரை வந்து, விட்டுச் செல்கிறான். அப்போது அவனைப் பார்த்து விடுகிறான், சொக்கலிங்கத்தின் வீட்டு வேலைக்காரன் இரிசன். மறுநாள் சொக்கலிங்கத்திடம் இதைப் பற்றிச் சொல்கிறான் இரிசன். சொக்கலிங்கம் தன் மனைவி வஞ்சியிடம் இதைச் சொல்லி, பூங்கோதையை எங்கும் வெளியே அனுப்ப வேண்டாம்; சரியான பாதுகாப்பில் வை என்று சொல்லி விடுகிறான். இதை மறைவிலிருந்து கேட்கும் பூங்கோதை கவலைக்குள்ளாகிறாள். முதல் மழலை தமிழே! ஊருக்கு விஜயம் செய்திருக்கும் குமரகுருபரரைக் காண மானநாய்க்கன் குடும்பமும், சொக்கலிங்கம் குடும்பமும் வருகின்றன. தங்கள் பகையைக் காட்டிடும் வகையில் இரு குடும்பமும் சற்ற இடைவெளி விட்டுத் தள்ளியே அமர்கின்றனர். பூங்கோதையும், பொன்முடியும் இருக்கிறார்கள். குமரகுருபரர் பேசுகிறார். கும : சிவநேசச் செல்வர்களே! மெய்யன்பர்களே! சைவம் பரப்பும் தொண்டன் யான்! நீங்கள் எனக்களிக்கும் வரவேற்பும் உபசாரமும் சைவத்திற்களிப்பவையாகும். சைவ சமயம் மிகத் தொன்மையானது. ஆனால் அதனினும் தொன்மையானது நமது தாய் மொழியான இன்பத் தமிழ். நீங்க ளறிய வேண்டும், உயர் குலத்தின் முதல் மழலைப் பேச்சும், உலகம் கண்ட முதல் இயற்கை மொழியும் தமிழேயாகும். நான் தமிழன். தமிழன் என்பதில் பெருமை கொள்பவன். தமிழிலே காணுகின்றேன் என் தலைவனை. தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொகையின் பயனே என் பரமன். நரை பழுத்த துறைத்தீந்தமிழில் ஒழுகும் நறுஞ்சுவையே என் தெய்வம்! சிந்தை நெகிழப் பாடுங்கள் செந்தமிழில். வந்தனை செய்யுங்கள் வரம்பற்ற அருட்பெருங்கடலை! திருவருட் செல்வர்களே! மூன்று கடல் சூழ்ந்தது, மூவேந்தர் ஆண்டது, முத்தமிழ் முழக்குவது நம் தமிழ்நாடு. அறம், பொருள், இன்பம் என்று முப்பாலையும் வகுத்துரைத்த வள்ளுவனை ஈன்றது நம் தமிழ்நாடு. கலைஞர்களைக் கௌரவித்துக் கலை வளம் பெற்றது தமிழ்நாடு. அன்பே சிவம் என்னும் அறநெறிச் சைவம் முளைத்தது இங்கே. எவ்வுயிரும் பராபரன் சன்னதி, இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் என்ற பரந்த நெறி தமிழனுக் குரியது. மெய்யன்பர்களே! நமது நாடு, இனம், மொழி, சமயம், கலை, நாகரிகம் - இவற்றின் பெருமைகளை அகில உலகமும் பரப்ப வேண்டும், மாற்றாரும் உணர வேண்டும், நமது மாண்பை, ஆணை பிறந்துள்ளது அடியேனுக்கு. நான் இப்படியே பிரசாரத்தின் பொருட்டு வடநாடு செல்கிறேன். நீங்கள் எனக் களித்த உபசாரத்திற்கு நெஞ்சுகந்த வணக்கம். அன்பர்களே! வாழுங்கள் சைவ வாழ்வு! போற்றுங்கள் தமிழ் அன்னையை. இவைகளே உங்களுக்கு என் வேண்டுகோள்! எல்லோருக்கும் பிரசாதம் வழங்குகிறார். பூங்கோதையும் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு புனிதையுடன் வீடு திரும்புகிறாள். மண்டபத்தில் தன் காதலனைப் பார்த்த மகிழ்ச்சி அவள் இதய மெல்லாம் பரவி நிற்கிறது. மனம் விட்டுத் தன் தோழியிடம் பேசுகிறாள். பூங் : (தனக்குள்) அந்தப் பார்வையில் எவ்வளவு ஆவல்! உம்...! கனவில் கண்டது போலாயிற்று. புனி : நீ இங்கே தான் இருக்கிறே... ஒன் மனசைத் தான் மண்பத்தி லேயே உட்டுட்டு வந்திட்டே. பூங் : அத்தானைப் பார்த்த பிறகு என் ஆசை மிகுந்துவிட்டது. எப்படி யாவது அவரைச் சந்திக்க வேண்டுமே, என்னடி செய்வது? புனி : கரும்பு மேலே ஆசை வந்தா, கடிச்சித் தின்னாத் தான் தீரும்! பூங் : சரிதானடி! அதற்குத்தான் உன்னிடம் வழி கேட்கிறேன். ஓலை எழுதித் தானப்பனிடம் கொடுத்துப் பொன்முடிக்கு அனுப்பும் படி புனிதை யோசனை சொல்லப் பூங்கோதையும் ஓலை எழுதுகிறாள். இதற்குள் சமையல் கட்டிலிருந்து வஞ்சி அவளை அவசரமாக அழைக்க, எழுதிய ஓலையை அருகி லிருந்த வெற்றிலைப் பெட்டியின் கீழே மறைத்து வைத்து விட்டுச் செல்கிறாள். வெற்றிலை போடப் பெட்டியை எடுக்க வந்த சொக்கலிங்கம் ஓலையைப் பார்த்து விட்டு, அதை எடுத்துப் படிக்க, அவன் கண்கள் கோபத்தினால் சிவக்கின்றன. ஏதோ யோசனை செய்துவிட்டு, பழையபடி ஓலையை அங்கேயே வைத்துவிட்டுப் போய்விடுகிறான் சொக்கலிங்கம். தானப்பனிடம் அந்த ஓலையைக் கொடுத்து பொன்முடியிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறாள் பூங்கோதை. பொன்முடியை கடையில் சந்தித்து அந்த ஓலையைக் கொடுக்கிறான் தானப்பன். மறைவிடத்திற்கு அதை எடுத்துச் சென்று படிக்கிறான். அதில் பூங்கோதை எழுதியிருந்தாள்:- அன்பு வடிவமான அத்தான், வணக்கம். பழத்தோட்டம் அங்கே. தீராப் பசிக்காரி இவ்விடத்தில். அழத் துக்கம் வருகிறது. நினைக்கும் தோறும். என்னை கண்காணிக்க தந்தை ஏற்பாடு செய்துவிட்டார். வெளியே வருவதற்கு வழியில்லை. அத்தான், என் ஆவி உங்கள் அடைக்கலம். நீர் மறந்தால் செத்தேன். இது உண்மை! இவ்வுலகில் உம்மையல்லாமல் சத்தான பொருளைக் காணேன். சாத்திரம் கூறுகின்ற பரம்பொருளே பெரிதென்பார், பெரியோர்கள். வெட்கமா யிருக்குதத்தான், அவர்கள் எல்லாம் கைப்பிடித்தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார்போலும்! குளிர் புனல் ஓடையே, கொதிக்கின்றேன் இவ்விடத்தில் உங்கள் உறவு இல்லாவிடில் நில்லாது என் உயிர். அத்தான்! வழியொன்று சொல்லுகிறேன், நம் தூதுவன் தானப்பனை நன்றாகப் பாருங்கள்! முக்காடு முகத்திலே, தாடி வாய்புறம் எப்படி? அடியாளுக்கு இன்பம் தர அவ்வேடம் கொள்வீரோ? எளிதென்று நினைக்கிறேன். சரிதானே? அத்தான்! சேவல் கூவுவதைச் செவி கொடுத்துக் கேட்டிருப் பேன். கூட்டித் தெளிக்கவென்று வாசலுக்கு வந்திடுவேன். காரியம் செய்வது போல் காத்திருப்பேன். அவ்வேளை நீங்கள் வரவேண்டும், பண்டாரம்போல். எங்கள் வீட்டுக் கொல்லைப் புறம் ஏற்ற இடம். மாற்று வேண்டாம் அத்தான்! மனம் வையுங்கள். உங்கள், பூங்கோதை. ஓலையைப் படித்து முடித்துவிட்டுப் பொன்முடி பெருமூச்சு விடுகிறான். பூங்கோதையின் யோசனைப்படியே பண்டாரம் வேஷமணிந்து, அவள் வீட்டுக்கு வருகிறான். பூங் : (ஆசை பொங்க) அத்தான்!... பொன் : பூங்கோதை, மடிந்த என் உள்ளத்திற்கு மருந்தாயிற்று உன் ஓலை... பூங் : இரவு முழுதும் நெருப்பிலிட்ட புழுப்போலத் துடித்து விட்டேனத்தான். பொன் : இங்கென்ன வாழ்ந்ததாம்? பூங்கோதை, உண்ண முடியவில்லை. உறக்கம் வருவதில்லை. வியாபாரத்தில் கருத்தில்லை. நினைக்கும் நினைப்பெல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் உன் உருவம். பூங் : அத்தான்! ஈ குடித்த தேன் கூட்டை வடித்தல் போல வருத்தா தீர் என்னை, எத்தனை நாளைக்கு இப்படி இடர்ப்படுவது? அன்புடன் பொன்முடி அவளை அணைத்துக் கொள்கிறான். பொன் : பூங்கோதை, எப்படியும் நமது எண்ணம் முடிப் போம். உறுதி என்னும் அகழி சூழ்ந்த அன்புக் கோட்டையினுள் இருக்கும் நம் காதலை எவராலும் அசைக்கமுடியாது. திடீரென்று இருவர் மேலும் ஒரு சவுக்கடி விழுகிறது. இருவரும் திடுக்கிட்டுப் போய் எழுந்திருக்க எதிரே சொக்கலிங்கம் சவுக்குடன் நிற்கிறார். சொக் : அற்பப் பயலே! என்ன துணிச்சல்? கள்ளக் காதலா புரிகின்றாய், கபோதிப் பயலே?... டேய் இரிசா... வேலைக்காரன் இரிசனை அழைக்கிறான். பூங்கோதை பயந்து நடுங்கியபடி நிற்கிறாள். இரிசன் வருகிறான். பொன்முடியை அருகில் உள்ள புன்னை மரத்தில் கட்டச் சொல்கிறான். இரிசன் அப்படியே செய்கிறான். சொக் : (ஆவேசத்துடன்) கட்டு!... உரித்து விடுகிறேன் தோலை... (பூங்கோதையைப் பார்த்து) பழிகாரி! என் கண்யத்தைக் கரைத்து விட்டாயே! என் குடும்ப மானத்தைக் குலைத்து விட்டாயே! இதற்குத்தானா உன்னைப் பெற்றேன்? பொன் : மாமா. பூங்கோதையை மணக்க உரிமை இல்லையா எனக்கு? சொக் : (கோபத்துடன்) உரிமை!... என்னிடமா உரிமை கேட்கிறாய்? அயோக்கியப் பயலே!... (சவுக்கால் பொன்முடியை அடிக்கிறான்.) பூங் : அப்பா! அப்பா!... அடிக்காதீர்கள். அத்தானை அடிக்காதீர்கள்! தந்தையைப் போய்க் கட்டிக் கொள்கிறாள். சொக்கலிங்கம் பூங்கோதையைத் தள்ளிவிட்டு, பொன்முடியை அடிக்கிறான். கீழே விழுந்த பூங்கோதை, வேகமாக எழுந்து போய், பொன்முடியை மறைத்துக்கொள்ள, அவள் மேலும் சவுக்கடி விழுகிறது. சொக்கலிங்கம் அவளை நகரச் சொல்லியும் மறுத்து, பொன்முடியின் கழுத்தை இறுகக் கட்டிக் கொள்கிறாள். ஆத்திரம் பொங்க சொக்கலிங்கம் அவளை அடிக்கப் போகும்போது, சப்தம் கேட்டு வந்த வஞ்சி, பாய்ந்து தடுக்கிறாள். வஞ்சி பூங்கோதையை அழைத்துச் செல்ல, பொன்முடியை அடித்துத் திட்டி வெளியே அனுப்புகிறான் சொக்கலிங்கம். செய்தி தெரிந்தது இரிசன், மாநாய்க்கன் வீட்டு வேலைக்காரன் வயிரவனிடம் இச்சம்பவத்தைச் சொல்ல மானநாய்க்கனிடம் அதைத் தெரிவிக் கிறான் வயிரவன். பதறிப் போன மானநாய்க்கன் வயிரவனுடன் வீட்டுக்கு வந்து, பொன்முடியிடம் அது பற்றி விசாரிக்கிறான். பொன்முடியின் தாய் அன்னம் துடித்துப் போகிறாள். அன் : பொன்முடி! உன்னைப் பெர்றதுக்கு எவ்வளவு தான தர்மம் பண்ணியிருப்போம். இப்படி நீ தறுதலையாவா போவுணும்? பொன் : அப்படி என்னம்மா நான் தறுதலைத்தனம் செய்து விட்டேன்? மான : இன்னம் வேற என்னப்பா செய்யணும்? ஏய், மானமே பெரிசின்னு வாழ்ந்த மானநாய்க்கன் மகன், ஆகாதவன் கையிலே அடிபட்டான்னு நாலு பேரு சிரிப்பாங்களேடா! நான் எப்படிடா தலை நிமிர்ந்து தெருவுலே நடக்கறது? பொன் : அப்பா! தாராளமா நடக்கலாம்! உங்கள் மகன் அப்படி யென்றும் குத்தம் செய்துவிடவில்லை. மான : என்னடா சொல்றே? குத்தம் பண்ணலியா? இதவிட வேற என்னடா செய்யணும்? குத்தமே பண்ணலியாமில்லே, குத்தம்! பொன் : அப்பா! பூங்கோதையும் நானும் சிறு வயதிலிருந்து சேர்ந்து வளர்ந்தோம். வளர்க்கப்பட்டோம். எங்களிடம் அன்பு முளைத்து ஆசையாக மலர்ந்தது. அது காதலாக கனிந்தது... மான : ஏய்... ஏய்... நிறுத்துடா! ஏண்டா ஒனக்குத்தான் தெரியுமா காதல்? உம்...? அன் : என்னங்க இது, உங்களுக்கு புத்தி இருக்கா? புள்ளெக் கிட்டேப்போயி இதெல்லம் பேசிக்கிட்டு? யாரு, எவரு... அத்தை மவதானே? மான : அத்தை மகள்னா திருட்டுத்தனமாப் போயி, கள்ளக் காதல் பண்றதா? பொன் : காதல்!... அந்தப் புனிதமான சொல்லுக்கு மாசு கற்பிக்க வேண்டாம்! கள்ளத்தனம் என்று சொல்லிக் காதலின் கௌரவத்தைக் குலைக்க வேண்டாம். அப்பா! நான் திருட வில்லை. கொலை செய்யவில்லை. விபசாரம் செய்யவில்லை. என்னிடம் உயிரை வைத்துள்ள ஒரு பெண்ணிடம் அன்பு காட்டுவது குற்றமா? மான : அன்பு!... அதெல்லாம் கல்யாணத்துக்கப்புறமில்லே வச்சுக் கணும். அதுக்கு முன்னே ஒரு பொண்ணுகிட்டே ஒருத்தன் சும்மா ஓடுவானா? பேசறதே தப்பாச்சேடா? மடப்பய மவனே! ஏண்டா நான் சொல்லிக் கிட்டே இருக்கேன். வாதமா பண்றே, எங்கிட்டே? பொன் : வாதம்!... அப்பா இது வெறும் வாதமில்லை. என் வாழ்வின் போராட்டம். என் வாழ்வும் தாழ்வும் இதில்தானிருக்கிறது. பகையால் மாளாத காதல், கட்டுப்பாட்டால் கலங்காத அன்பு, விரோதத்தால் வீழாத எங்கள் ஆசை - எங்கள் தொடர்பு! நானும் பூங்கோதையும் மணப்பதென்று முடிவுசெய்து விட்டோம். என்ன நேர்ந்தாலும் எங்கள் மனம் மாறப் போவதில்லை. மான : (மனைவியிடம்) அன்னம்! இவனுக்கு மூளை கலங்கிப் போச்சாடி... பேசியபடி இப்படியும் அப்படியுமாக உலவி வரும் மானநாய்க்கனுக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. தன் மனைவி அன்னத்திற்குக் கண்களைச் சிமிட்டி ஜாடை செய்கிறான். மான : அன்னம்! அவ்வளவு உறுதியாயிருக்கிறப்ப எப்படியாவது செஞ்சித்தானே ஆகணும். ஏன், ஒரு காரியம் செய்யலாம். அவனோ கோவத்திலே இருக்கான். இப்ப நம்ம என்ன செய்ய முடியும்? நாளைக்கு வடக்கே போற நம்ம சரக்கோட பொன்முடி போயிட்டு வரட்டும். அதற்குள்ளே அவன் கோவமும் தீர்ந்திடும். மனமும் மாறிடும். வந்தவுடனே எப்படியாவது பூங்கோதையை கல்யாணம் பண்ணிப்புடுவம். என்ன சொல்றான் கேளு. அன்னம் பொன்முடியிடம் சென்று சமாதானப்படுத்தி, இதற்குச் சம்மதிக்க வைக்கிறாள். மறுநாள் வடக்கே செல்லும் வியாபார கோஷ்டியுடன் பொன்முடியும் புறப்படுகிறான். செய்தியைக் கேட்டுப் பூங்கோதை வேதனைப்பட்டு, கண்ணீர் வடிக்கிறாள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பூங்கோ தையை வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க சொக்கலிங்கம் திட்டமிடுகிறான். பணக்கார இடத்திலிருந்து பூங்கோதையைப் பெண் பார்த்து விட்டு நிச்சயம் செய்து கொண்டு போகிறார்கள். பூங்கோதைக்குத் தாள முடியாத துக்கம், வேதனை. வீட்டுத் தோட்டத்தில், பொன்முடியைச் சந்தித்துப் பேசிய புன்னைமரத்தடியில் கல்லாசனத்தில் உட்கார்ந்து கண்ணீர் விட்டபடி இருக்கும் தன் மகளிடம் வருகிறாள் வஞ்சி. வஞ் : பூங்கோதை, நீ அழுது என்னம்மா ஆகப் போகிறது? பூங் : அம்மா! அழகு ததும்பும் என் ஆசை அத்தான் எங்கே? இந்த அனுமாரெங்கேயம்மா? அப்பாவிடம் சொல்லி இந்த அநியாயத்திற்கு அணைபோட மாட்டீர்களா? வஞ் : என்னை என்ன செய்யச் சொல்றே? எல்லாம் விதிப்படித்தான் நடக்கும்! பூங் : (சலிப்பும் ஏளனமும் ஆத்திரமும் கொண்டு) விதி... எது விதி?... கண்களைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுவதா விதி? களங்கமற்ற எங்கள் காதலைப் பிளந்து காசுக்காக ஒரு கபோதியை என் கணவனாக்கத் திட்டமிடுவதா விதி? பெண் உலகம் சபிக்குமம்மா... தோழி புனிதை வருகிறாள். புனி : பூங்கோதை, கண்ணீர் வடிச்சா கவலை தீந்திடுமா? பூங் : புனிதை! ஒரு துளி விஷம் என் கவலையைத் தீர்த்து விடும்... புனி : சேச்சே! புத்தியில்லாதவள் தான் தற்கொலை பண்ணிக்குவா. பூங் : பின்பு என்ன? அத்தானுக்காகத் தாங்கிய இந்த உடலை, என் அப்பா வேறு யாருக்கும் விலை பேசமாட்டார் அல்லவா? சாவில்தாண்டி எனக்கு சாந்தி! எங்கே, அந்த உதவியைச் செய்யமாட்டாயா? பூங்கோதை அழுகிறாள். புனிதை அவளைச் சமாதானப் படுத்துகிறாள். புனி : நீ சாக வேண்டியதேயில்லை. சந்தோஷமாயிருக்க நான் வழி செய்கிறேன். பூங் : எப்படியடி? புனி : எப்படியோ? இந்தக் கல்யாணம் நடக்காம செய்ய வேண்டியது என் பொறுப்பு. நீ வருத்தப்படாம இரு. பூங் : என் இருண்ட வாழ்க்கைக்கு அணையா விளக்கடி நீ! புனிதை கிளம்பிப் போகிறாள். ஆண் வேடம் புனிதையின் சித்தப்பா மகன் முருகன். தானப்பன் தன்னிடமிருந்த விலை உயர்ந்த முத்துமாலையை விற்றுத்தரும்படி முருகனிடம் தருகிறான். வடக்கே சென்று அதை விற்றுத் தருவதாகச் சொல்லி, வாங்கிக் கொள்கிறான் முருகன். தானப்பனிடமிருந்து இச்செய்தியைக் கேட்ட புனிதை, பூங்கோதையை சந்தித்து, தன் திட்டத்தைச் சொல்கிறாள். ஆண் வேடம் தரித்து, வடக்கே செல்லும் முருகனுடன் பூங் கோதையும் புறப்பட்டுச் சென்றால், பொன்முடியைப் பார்த்து, அவனை அடைந்துவிடலாம் என்பதே புனிதையின் யோசனை. இந்த யோசனை பூங்கோதைக்கும் பிடித்து விட, தன் பெற் றோருக்கு கடிதம் ஒன்றை எழுதித் தன் படுக்கையில் வைத்து விட்டு, முருகனுடன் கிளம்பிப் போய் விடுகிறாள் பூங்கோதை. அத்தானைத் தவிர, வேறு யாரையும் நான் மணக்கப் போவதில்லை. அப்பாவின் பிடிவாதமோ அதை நடைபெறவிடப் போவதில்லை. என்னைத் தேடவேண்டாம். சாவதைத் தவிர வேறு வழியில்லையென்று முடிவு செய்துவிட்டேன். - பூங்கோதை மகளின் இக்கடிதத்தைப் படித்துப் பார்த்த வஞ்சியும், சொக்க லிங்கமும் பதறித் துடித்துப் போகிறார்கள். பூங்கோதையைத் தேட எல்லா முயற்சிகளும் செய்யப் படுகின்றன. *கபாலிகர் கூட்டம் பொன்முடி வரும் வியாபாரக் கூட்டத்தை, கபாலிகத் தலைவனும். அவனைச் சேர்ந்தவர்களும் வழிமறிக்கிறார்கள். மகா காளிக்கு ஆயிரம் பசுக்களைக் கொண்டு யாகம் செய்யப் போவதாகவும், அதற்குப் பொருள் தரும்படியும் மிரட்டுகிறான். நாங்கள் தென்னாட்டார். தமிழர்கள். சைவர்கள். கொலை வேள்வியைக் கூட்டோடு வெறுப்பவர்கள். தர்மத்தின் பெயரால் உயிர்க்கொலை புரிந்து ஊன் வளர்க்கும் ஒப்பாத செயலுக்கு ஒருக்காலும் உதவ மாட்டோம் என்று பொன்முடி மறுத்து விடுகிறான். கபாலிகர்கள் கோபத்துடன் திரும்பிப் போகிறார்கள். அவர்கள் மனதில் பழி வாங்கும் எண்ணம் துளிர் விடுகிறது. திரும்பிக் கூட்டமாக வந்து, வணிகர் கூட்டத்தைத் தாக்கி, பொன்முடியையும் பிடித்துச் செல்கிறார்கள். புத்தி வந்தது சொக்கலிங்கம் வேதனை கவ்வ, ஊஞ்சலில் உட்கார்ந் திருக்கிறான். அவன் பக்கத்தில் தலை விரி கோலமாக, சோகமே உருவாக வஞ்சி அமர்ந்திருக்கிறாள். பூங்கோதை அவர்களைப் பிரிந்து சென்ற துக்கம் அவர்களைத் தவிக்க வைக்கிறது. வஞ் : இத்தனை நாளாச்சு! இன்னும் கிடைக்கலியே எம்பொண்ணு, உயிரோடா இருக்கப்போவுது! கண்ணாட்டம் ஒண்ணு வச்சிருந்தேன். அதோட இஷ்டப்படி நடக்காம இப்படி வந்திட்டதே!... சொக் : இந்த மாதிரி நடக்குமுன்னு யாருக்குத் தெரியும்? வஞ் : நமக்கு சொத்திருந்தென்ன, சொகமிருந்தென்ன? வீடும் வாசலும் அனுபவிக்க யாரு? ஒங்க முரட்டுத்தனத்தாலே நம்ம குடும்பமும் நாசமாப் போச்சே...! சொக் : நான் என்னடி செய்யட்டும்? வஞ் : இன்னும் என்னத்தெ செய்யணும். பூவும் பிஞ்சுமா பூத்துக் குலுங்கும்னு இருந்தேன். என் எண்ணத்திலே மண்ணைப் போட்டுட்டீங்களே. புனிதை இதையெல்லாம் கேட்டபடி வருகிறாள். சொக் : என்ன செய்வது? முன் கோபத்தினால் மூடனாகிவிட்டேன்...! புனி : கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒங்க மனசு இப்படி மாறி யிருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும். விரோதத்தைப் பெரிசா நினைச்சீங்க. வஞ் : அதனாலத்தான் என் குடும்பம் இந்தக் கதிக்கு வந்தது. புனி : வெட்டிப்புட்டு, கட்டிக்கிட்டு அழுது என்ன பண்றது? உம்... நான் ஒண்ணு சொல்றேன், கோவிச்சுக்க மாட்டீங்களே? வஞ் : கோபமாவது மண்ணாவது. சொல்லும்மா! புனி : இப்பவும் ஒண்ணும் குடி முழுகிப் போவலே. அண்ணன் மனசு வச்சா எல்லாம் சரியாப் போயிடும். வஞ் : (ஓடிவந்து அவளைக் கட்டியணைத்து) புனிதை! என் தங்கம்ல, ஒங்கிட்ட ஏதாச்சும் சொல்லிட்டுப் போனாளா? சொல்லம்மா? புனிதை எல்லா விவரங்களையும் அவர்களிடம் சொல்கிறாள். சொக் : உண்மைக் காதலின் சக்தி தெரியாத மடையன் நான்! இவ்வளவு ஆசையோடு அவளைத் தேடி வடநாடு போவ தென்றால் அவர்களைப் பிரித்து வைக்க முடியாதுதான்! பகையைப் புதைத்துவிட்டு, உறவைப் புதுப்பித்துக் கொள்ள சொக்கலிங்கம் வஞ்சியை அழைத்துக் கொண்டு மானநாய்க்கன் வீட்டுக்குப் போகிறான். பிரிந்த குடும்பம், பிளவுபட்ட உறவு மீண்டும் ஒன்றாக இணைகிறது. பொன்முடியையும், பூங்கோதையையும் அழைத்து வரும்படி வயிரவனையும் இரிசனையும் அனுப்புகிறார்கள். முருகனும் பூங்கோதையும் வரும் கூட்டத்திடம், பொன்முடியின் கூட்டத்திலிருந்து தப்பி வந்த ஆள் பொன்முடியையும், தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சிலரையும் கபாலிகர்கள் பிடித்துக் கொண்டு போய், காளி கோயிலில் பலியிட வைத்திருப்பதை வாட்டத்துடன் சொல்கிறான். பூங்கோதை துடித்துப்போகிறாள். பொன்முடியைக் காப்பாற்ற வரும்படி எல்லாரையும் அழைத்துக் காளி கோயில் நோக்கிப் புறப்படுகிறாள். காளிகோயில் நெடிதுயர்ந்த காளி சிலையின் முன்பு ஒரு கம்பத்தில் பொன்முடி கட்டப் பட்டிருக்கிறான். அவனைச் சேர்ந்த மற்றவர்களும் கட்டப் பட்டிருக்கிறார்கள். பொன்முடியிடம் கபாலிகத் தலைவர் ஜெயந்த் வருகிறான். ஜெய் : அற்பச் சிறுவனே! மாகாளியைப் பார் என் மாதாவைப் பார். அண்டங்களை ரட்சிக்கும் மகேவரியைப் பார்! உன் ஆவி பிரியும் நேரத்திலாவது நீ செய்த அபசாரத்திற்கு அவளிடம் மன்னிப்பு கேள்! பொன் : மன்னிப்பு! மனித வேட்டையாடும் உன்னைப் பார்த்து மகிழ்ந் திருக்கும் மாகாளியிடம் மன்னிப்பு! உன் அகோர ஆட்டங் களை அடக்க வகையற்று மௌனம் சாதிக்கும் அந்த மாதாவிடம் மன்னிப்பு! அதுவும் மண்டைக் கொழுப்பேறிய உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு மன்னிப்பு! தமிழன் சரித்திரலேயே கிடையாது! ஜெய : (பொன்முடியின் கன்னத்தில் அறைந்து) அணையும் விளக்கில் ஜோதி! சாகும் நேரத்தில் வீசும். பொன் : அதுதான் தமிழனை விட்டு நீங்காத தனிப் பண்பு! ஜெய : அந்தப் பண்புதான் உன்னைப் பலி பீடத்துக்கு இழுத்து வந்திருக்கிறது. வாய் வீரம் பேசி, வாள்முனையில் நிற்கும் வாலிபனே! யாகத்துக்கு பொருள் தர முடியாதென்று புயல் வேகத்தில் முழக்கினாயே...! இப்போது அந்த முழக்கம் எங்கே? அந்த முழக்கம் எங்கே? அந்த முழக்கம் எங்கே? ஹ ஹ ஹ... பொன் : அந்த முழக்கம் இமயத்தின் எல்லையிலே! குமரி முனையிலே! விந்தியத்தின் விளிம்பிலே! எங்கெங்கு தமிழன் இருக் கிறானோ, அங்கெல்லாம் அந்த முழக்கம்! முடிவில்லா முழக்கம்! தென்னாட்டு மக்கள் தீராதி தீரனென்று தெரிவிக்கும் முழக்கம்! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சம்ஹாரம் நிசமென்று அறிவிக்கும் முழக்கம்! ஜெய : போதுமடா உன் பெருமை! தோல்வியால் துவண்டு தேவியின் பசியைத் தீர்க்க வந்து நிற்கும் ஆட்டுக் குட்டியே, உன்னை அடிமை கொண்ட வெற்றி வீரன் நான்! எனக்குத் தலை வணங்கு! பொன் : ஹூம்! தோளில் வலிவும், நெஞ்சில் வீரமும் நேர்மையில் நாட்டமும் இல்லாத கோழை உனக்கு, நான் தலை வணங்குவதா? மண்மேட்டுக்கு மலை மரியாதை செய்வதா? பூனைக்குப் புலி பூஜை செய்வதா? போர்முறை தெரியாத புல்லன்! சிங்கத்தை மறைந்திருந்து தாக்கிச் சிரித்து மகிழும் சிறு நரியே கேள்! அழுகிப் போன உன் பிணத்தை எங்கள் தமிழ் நாட்டுப் புழுக்கூடத் தீண்டாது! ஜெய் : (ஆத்திரத்துடன் காலால் தரையை, உதைத்து) போதும்! நாக்குத் திமிர் பிடித்துக் குரைக்கும் நாய்குட்டியே! எதிர்க்கும் திறமை எள்ளளவும் இல்லாத எலிக்குஞ்சே! அகம்பாவத்தில் கனத்துப் போன உன் இதயத்தைப் பிளந்து அம்பாளுக்குப் படைக்கிறேன். ஜெயந்த் தன் கூட்டத்தினருக்குக் கட்டளையிடுகிறான். பொன் : காளி! உலக மாதா! உனக்கும் இது இஷ்டம்தானா? நீ அளித்த சரீரம். அதை நீயே ருசி பார்ப்பதா? பிள்ளையைத் தின்று பசி யாறுவதுதான் பெற்ற தாயின் லட்சணமா? உன் திருவடி களைப் பன்னீரால் கழுவிப் பூஜிப்பதை விட, இந்தப் பாவிகள் உன்னை ரத்தத்தால் அபிஷேகிப்பதைத்தான் நீ ஏற்றுக் கொள்கிறாயா? பராசக்தியல்லவா? பாவங்களை அழிக்க வந்த அன்னை பார்வதி அல்லவா? துஷ்டர்கள் தலைகளை மாலையாய் அணிந்த துர்க்கா தேவியல்லவா நீ! இந்தத் துரோகிகள் சுற்றிவிடும் பம்பரம் தானாநீ? ஏன் பேசாம லிருக்கிறாய்? உன் பேரைச் சொல்லி உயிர்க் கொலை புரியும் இவர்களை ஏன் ஒழிக்காமலிருக்கிறாய்? பொன்முடி ஆவேசத்துடன் துடித்துக் கொண்டிருக்கும் சமயம் பூங்கோதை தன் கூட்டத்தினருடன் அங்கு வருகிறாள். பொன்முடி அவளைக் கண்டு அதிசயிக் கிறான். அவர்களைத் தேடி வரும் வயிரவனும் இரிசனும் வந்து சேருகிறார்கள். கபாலிகர் கூட்டத்துடன் சண்டை நடக்கிறது. கபாலிகர் கூட்டம் சிதறுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் வடநாடு யாத்திரை சென்ற குமர குருபரரும் தன் சீடர்களுடன் அங்கு வந்து விடுகிறார். பொன்முடியும் பூங்கோதையும் அவரை வந்து வணங்குகின்றனர். கும : மனிதனாகப் பிறந்தீர்கள்! ஆனால் மனிதனாக வாழ மறந்தீர் கள்! காக்கையிடம் ஒற்றுமை கண்டு கவிதை பாடினீர்கள். ஆனால் நாய்க்குணம் கொண்டு நாசமாகிறீர்கள்! ஈகை இரக்கம் அன்பு சத்தியம் இவற்றின் தாயகமாயிற்றே தமிழகம். சகல நாடுகளுக்கும் அகிம்சையைப் பரப்பிய அமர பூமியாயிற்றே தமிழகம்! பயிர் வாடுவதைக் கண்டு சகிக்கமாட்டானே தமிழன். பசுவை அதட்டி விரட்டுவதும் பாவமெனக் கூறுவானே தமிழன். அன்பே சிவம் என்பது அவனது இதய கீதமாயிற்றே! அந்தத் தமிழனா இப்படி ரத்த வெறி கொண்டு தலை விரிகோலமாய் ஆடுகிறான்? இளந்தமிழா, ஏனிப்படி? பொன்முடி விவரத்தைச் சொல்கிறான். பூங்கோதைக்கும் தனக்கும் உள்ள காதல் பற்றியும் சொல்கிறான். கும : பூங்கோதை! பெண்மையின் பெருமையை உலகறியச் செய்து விட்டாய். தமிழ்ச் சமுதாயம் அன்பின் மாளிகை. அதற்கொரு அணையா ஜோதியாகி விட்டாய். பூங் : சுவாமி! எங்கள் சோகத் தொடர்கதையின் இன்ப முடிவுரை தங்கள் வருகையால் இன்னும் சுவையேறிவிட்டது. எங்களை வாழ்த்துங்கள்! கும : உங்களை வாழ்க்கைத் துணைவராக்கி வாழ்த்துகிறேன். போர்க்களத்திலேயே பூக்கட்டும் உங்கள் புது வாழ்வு. (பூங்கோதை - பொன்முடி மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள்.) தமிழும் சுவையும் போல், யாழும் இசையும் போல், சைவமும் அன்பும் போல் - வாழ்க! நீங்கள் வளமெல்லாம் பெற்று! இருவரையும் வாழ்த்துகிறார் குமரகுருபரர். கும : பொன்முடி! நான் டில்லியினின்று திரும்பி நம்நாடு போகின்றேன். உங்கள் பெற்றோர்களைக் கண்டு நடந்ததை யெல்லாம் சொல்கிறேன். நீங்கள் மகிழ்வோடு சென்று வாணிபம் முடித்து வாருங்கள். நீடூழி வாழ்க! எல்லாரும் அவரை வணங்குகின்றனர். வியாபாரத்தை முடித்துவிட்டு மணமக்களாகத் திரும்பும் பூங்கோதை - பொன்முடியை மானநாய்க்கனும், சொக்கலிங்கமும் தங்கள் மனைவிமார்களுடனும், ஊர் மக்களுடனும் எதிர் கொண்டழைக்கின்றனர். அழியாக் காதல் காவியம் ஒன்று பிறக்கிறது.  4. வளையாபதி கதாபாத்திரங்கள் பங்கேற்ற கலைஞர்கள் வளையாபதி ... ஜி.முத்துக்கிருஷ்ணன் கனக வேளாளர் ... கே.கே.பெருமாள் சாத்தன் ... ஏ.கருணாநிதி உத்தமன் ... மாடர் ராமகிருஷ்ணன் அழகன் ... மாடர் சுதாகர் சுந்தரி ... டி.ஏ.ஜெயலட்சுமி சத்யவதி ... சௌகார் ஜானகி அல்லி ... டி.வி. முத்துலட்சுமி வேம்பு ... எம்.எ.எ. பாக்கியம் தயாரிப்பு ... மாடர்ன் தியேட்டர் டைரக்ஷன் ... டி.ஆர்.சுந்தரம். மதான் வசனம் - சிலபாடல்கள்...பாரதிதாசன் படம்வெளியானஆண்டு... 1952 கதைச்சுருக்கம் ஒன்பதுகோடிப் பொன்னுக்கு உரிமையாளனான வளையா பதிக்கு, மணமாகஆறுவருஷங்களாகியும் குழந்தபிறக்கவில்லை. பிள்ளையில்லாக் குறையால் மனம் ஒடிந்து, மனைவி அந்தரியிடம் மனக்கசப்புற்றுவாழ்ந்துவரும்நாளில்,வணிகவிஷயமாகமதுரைபகிறான்.அங்கே, தன் நண்பர் கனகவேளாளரின் மகளும், பள்ளித் தோழியுமான சத்தியவதியை இரண்டாந்தாரமாக மணந்து வருகிறான். சத்தியவதியின் வருகையால் தன் செல்வாக்குக் குறைந்து விட்டதையும், வளையாபதிக்கு தன்னிடமிருந்த அன்பு தேய் பிறை யாகி விட்டதையும், உணர்ந்த அந்தரி, சத்தியவதியை விரட்ட சதி செய்கிறாள். சத்தியவதியின் கல்யாணம் ஜாதிகெட்டதென்று கிளர்ச்சி செய்ய, தன் தம்பி சாத்தன்மூலம் ஊராரைத் தூண்டி விடுகிறாள். ஊராருக்குப் பணிய வளையாபதி மறுத்துவிடுகிறான் ... தோல்வியுற்ற அந்தரி சோர்ந்துவிடவில்லை. வளையாபதியின் அன்பைத் தன் பக்கம் வளைக்க, தனக்குக் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையை அவனுக்கு உண்டாக்க முடிவு செய்கிறாள். வைத்திய னுக்குப் பணம் கொடுத்து சரி செய்து, தான் கர்ப்பமென்று வளையாப தியிடம் சொல்லச் செய்கிறாள். வைத்தியன் சொல்லை உண்மை யென்று நம்பி, வளையாபதி அந்தரியிடம் வாஞ்சையாக இருக்கிறான். இந்தச் சமயத்தில் சத்யவதி நிஜமாகவே கர்ப்பமாகிறாள். இந்தச் செய்தியறிந்த அந்தரி, சத்தியவதியை விரட்ட, ஒரு சதி நாடகத்தையே உருவாக்குகிறாள் ... ... ஒருநாள் இரவு, வளையாபதி, அந்தரி அறையில் பேசிக் கொண் டிருக்கும்போது அந்தரியின் தோழி வேம்பு வந்து சத்தியவதியின் அறையில் ஆண் குரல் கேட்டதாகக் கூறுகிறாள். வளையாபதி பதைத்து ஓடுகிறான் - சத்தியவதியின் படுக்கையில் யாரோ ஒரு ஆள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த வளையாபதி ஆத்திரத்தில் கையி லிருந்த கத்தியை வீசுகிறான். முதுகில் பாய்ந்த கத்தியோடு அந்த ஆள் ஓடி விடுகிறான். சத்தியவதியை விபசாரி என்று நம்பிய வளையாபதி, அவளை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறான் - சத்தியவதி தந்தையிடம் அடைக்கலம் தேடி வருகிறாள். விபசாரப் பட்டத்தோடு விரட்டப்பட்ட பெண்ணுக்கு, ஆதரவு தருவது அநீதி என்று கனக வேளாளர், மகளை விரட்டி விடுகிறார். தன் தலைவிதிக்கு நொந்து தற்கொலை செய்து கொள்ள சத்தியவதி ஆற்றில் விழுகிறாள். நாகர் தலைவன் ஒருவன் அவளைக் காப்பாற்றி, கற்பழிக்க முயல்கிறான். தப்பிப் பிழைத்த சத்தியவதி ஒரு மூதாட்டியின் பாதுகாப்பில் காவிரிப்பூம்பட்டினத்திற் கருகில் உள்ள காட்டூர் அடைகிறாள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து உத்தமன் என்ற பெயரில் வளர்ந்து வருகிறான் ... ... தன் தம்பியின் ஆசை நாயகி அல்லிக்குப் பிறந்த குழந்தையை அழகன் என்ற பெயரில், தனக்குப் பிறந்ததாகச் சொல்லி அந்தரி, வளர்த்து வருகிறாள். ஆண்டுகள் பனிரெண்டு கழிகின்றன. உத்தமன் மேற்படிக்கு காவிரிப்பூம்பட்டினம் வந்து, அழகன் படிக்கும் பள்ளியில் சேருகிறான். உத்தமனுக்கும் அழகனுக்கும் பாட விஷயமாகத் தகராறு வளர்ந்தது. ஒருநாள் உத்தமன் அழகனை அடித்து அவன் சட்டையைக் கிழித்து விடுகிறான். அழகனின் அக்குளில் சூலப் பச்சை இருப்பதைப் பார்த்து மாணவர் கேலி செய்கின்றனர். அழகன் அந்தரியிடம் வந்து, சூலப் பச்சையைக் காட்டி அழ, அந்தரியும் சாத்தனும் கள்ளிப்பால் அடித்துக் கலைக்க முயற்சி செய்கின்றனர். சூலப் பச்சை விபரத்தை வளையாபதியின் காதில் படாதபடி மறைக்கின்றனர் ... ... வளையாபதி அழகன் அடிபட்ட செய்தி கேட்டு, சாத்தன் பின்தொடர பள்ளிக்கு வந்து உத்தமனை அடித்து, பள்ளியைவிட்டு நீக்கிவிட ஆசிரியருக்கு உத்தரவிடுகிறான். ஆசிரியர் மூலம் சாத்தன், உத்தமன் சத்தியவதியின் மகன் என்ற விபரமறிந்து இருவரையும் ஒழித்துவிட முடிவு கட்டுகிறான் ... ... அடிபட்டு வந்த உத்தமன், வளையாபதிமீது வழக்குத் தொடுக்க விரும்பவே சத்தியவதி மகனிடம் உண்மை வரலாற்றைச் சொல்லி விடுகிறாள். தன் தாய்க்கு நேர்ந்த பழியைப் போக்க, வளையாபதியை வளைய வைப்பதாக சபதம் செய்து உத்தமன் புறப்படுகிறான். தன் நண்பன் மாணிக்கம் துணையோடு உத்தமன் பல இடங்களுக்குச் சென்று சதியைக் கண்டுபிடிக்கிறான். கடைசியாக அல்லி வீட்டில் தந்திரமாக நுழைந்து சோதனை போடுகிறான். இதே நேரத்தில் சத்தியவதியை ஒழித்துக்கட்ட அவள் இருந்த குடிசைக்கு, சாத்தன் ஆட்களை ஏவி, தீ வைக்கிறான். சத்தியவதிக்கு என்ன நேர்ந்தது? உத்தமனின் சபதம் நிறைவே றிற்றா? வளையாபதி வளைந்து கொடுத்தானா? வெள்ளித்திரை பதில் கூறும்!  வளையாபதி பெரு வணிகன் வளையாபதி வாணிபத்துறையில் வளம் பெற்றுத் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டினம் இன்றைய வரலாற்றில் புதைந்து போன பழங்காவியம். இதோ, இந்தக் களையிழந்த மணல் பரப்பில்தான் கொடி பறந்த கோட்டைக் கொத்தளங்கள் இருந்தன. அடி சறுக்கும் பளிங்கு மாளிகைகள் இருந்தன. அரச வீதிகளும், ஆவண வீதிகளும் இருந்தன. இங்கேதான் உலகம் ஓடோடி வந்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டது. இங்கேதான் ஒன்பது கோடிப் பொன்னுக்கு அதிபதியாக வளையாபதி வாழ்ந்து வந்தான். நேர்மை தவறாத நாணயமான பெருமகன் அவன். அன்றைய வியாபாரத்தை முடித்துவிட்டு, ஆவல் பொங்க தன் அருமை மனைவியைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். அவன் வருவதற்குள், அவன் மனைவி சுந்தரி துடித்துப் போய் விடுகிறாள். சுந் : வாருங்கள் அத்தான். அலுவலகத்தில் ஆக வேண்டியதை கணக்கர் பார்த்துக் கொள்கிறார். நீங்கள் நேரத்தோடு வந்து விட வேண்டியது தானே? வளை : நேரம் அதிகமாகி விடவில்லையே? அருகிலுள்ள பணிப் பெண்ணை அழைக்கிறாள் சுந்தரி. சுந் : வேம்பு... சுவை நீர் கொண்டு வா. (அவள் போகிறாள்) சுந் : (பரிவோடு) களைப்போடு வந்திருக்கிறீர்களே...! வளை : இல்லை... காதலோடு வந்திருக்கிறேன்... இதோ உனக்கொரு பரிசு. கொண்டு வந்திருந்த வைர மாலையை அவளிடம் தருகிறான். சுந் : வைரமாலை...! கண்ணைப் பறிக்கின்றது அத்தான் (அவளை அன்புடன் அணைக்கிறான் வளையாபதி.) சுந்தரியின் தம்பி சாத்தன். அவன் அவ்வூர் தாசியான அல்லியிடம் சிநேகம் வைத்திருக்கிறான். வளையாபதியின் பரந்த சொத்துக்கு வாரிசு இல்லாத குறையை ஊர் மக்கள் அவனிடம் குத்திக் காட்டுகின்றனர். அவனுக்கும் சுந்தரிக்கும் திருமணமாகி ஆறு ஆண்டு களாகியும் தனக்கொரு வாரிசு பிறக்கவில்லை என்ற கவலை வளையாபதியை மிகவும் வாட்டுகிறது. தோட்டத்தில் இதை நினைத்தபடி வருத்தமாக அமர்ந் திருக்கிறான் வளையாபதி. சுந்தரி அப்போது அங்கு வருகிறாள். சுந் : அறை வீடு பிடிக்கவில்லை அத்தானுக்கு. சுந்தரியும் பிடிக்க வில்லை? வளை : பிடிக்கும் ஒட்டவைத்தால்..! சுந் : ஒட்டிய நாள் எல்லாம்...? வளை : ஒன்றுக்கும் உதவாத நாட்கள்! சுந் : விபரீதமாகப் பேசுகின்றீர்கள் அத்தான்? வளை : எனக்கு மட்டும் ஏன் இந்தத் தாழ்வு? சுந் : அப்படி என்ன அத்தான் உங்களுக்கு தாழ்வு? வளை : உம்... பாலுணவும் பழரசமும் உண்டு, பட்டுப் புடவை உடுத்துவதுதான் மேல் என்று நினைக்கும் உனக்கு. இருக்கும் தாழ்வு புரியவா போகிறது? சுந் : வற்றாத பொய்கையில் நற்றாமரைக்கும் ஏது நலிவு? வாழ்ந்தோம்... வாழ்கின்றோம்... வாழ்வோம். தாழ்வு தலை நீட்ட முடியாது. வளையாபதி தோட்டத்திலுள்ள வாழை மரத்தையே பார்த்தபடி இருக்கிறான். சுந் : உங்கள் மனதைக் கவரும்படி அந்த வாழையில் என்ன இருக்கிறது அத்தான்? வளை : வாழையும் வாழ்கிறது மக்களைப் பெற்று! நான் என்ன பெற்றேன்? நிமிர்ந்துபேசு! நீ என்ன பெற்றாய்? என் வாழ்வு என்ன பெற்றது? குலைகுலையாகப் பிள்ளை பெறாதவன் என்ற குறை பாட்டைத்தான் பெற்றது...! தாழ்வு தலை காட்ட வில்லையாம். சுந் : உங்கள் வெறுப்பு என் வாழ்வின் மறுப்பல்லவா? துன்ப நினைவுகள் தொலைத்து, இன்ப நினைவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்... வளை : ஆறுதல் கூறுகிறாய், ஆறாத என் நெஞ்சப் புண்ணை ஆற்ற! சுந் : ஆண்டவனுக்குப் பூஜை செய்வோம். வளை : ஆறு ஆண்டாக நடக்கிறது. கண்ட பயன்? சுந் : ஜோதிடத்தைப் பார்ப்போம்...! வளை : சொர்க்கத்திற்குப் போகும் நாளையா? சுந் : மனதை விடாதீர்கள்! உடல் கோளாறு ஏதாவது... வளை : வறுமையில் நலிந்தோமா? வாழ்க்கை முறையை மறந்தோமா...? சுந் : கோபிக்காதீர்கள் அத்தான்! ஒரு வேளை உங்களுக்கு வைத்தியம் வளை : பைத்தியமா உனக்கு? பாங்கான உடல்தான் இது? சுந் : அத்தான்! எதிர்காலம் பலன் தராதா? வளை : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகைத் தருமா? சுந் : (கொஞ்சலாக) நம்பிக்கை வையுங்கள் அத்தான்! வளை : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து...! சுந் : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச் சிப்பி. உள்ளொன்று வைத்து புறமொன்று ஏன் பேசுகிறீர்கள்? பிள்ளை பெறுபவளாக ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வது! என் மேல் ஏன் வீண் பழி? (விம்மி அழுதபடி விட்டினுள் விரைகிறாள் சுந்தரி. வளையாபதி வேதனையுடன் இருக்கிறான்.) கட்டிலில் வந்து விழுந்து, கண்ணீர் வடித்தபடி இருக்கும் சுந்தரியைப் பார்த்து, வேம்பு வருகிறாள். அவளது அழுகைக்கு காரணம் கேட்கிறாள்.) வேம்பு : ஏம்மா இப்படி அழறீங்க? அப்படி என்ன கப்பலா கவிந்து போச்சு! சுந் : வேம்பு! என் கணவர் ஒரு நாளும் என்னை இப்படிக் கடிந்த தில்லை. மலடி என்று மனம் கசந்தார். ஒரு குழந்தைக்குத் தாயாக வில்லை என்றால் என் வாழ்வு கவிழ்ந்து போன கப்பல்தான்! வேம்பு : உங்ககிட்ட அவர் வச்சிருக்கிற பிரியம் மூணு ஜென்மத்துக்கு தாங்குமே அம்மா. சுந் : (பெருமூச்சு விட்டு) நானும் எண்ணியதுண்டு. ஆனால் சந்ததி யில்லாக் குறை அவர் மனதைச் சுட்டு விட்டது. அவர் உள்ளம் கெட்டு விட்டது. அவர் அன்பு மாறாது இருக்க வேண்டுமானால் நான் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும். வேம்பு : (வருத்தமாக) மலடீங்கற சொல்லு பொம்பளைங்களுக்கே தீங்குதாம்மா! என்ன செய்யறது? சுந் : வேம்பு! எனக்கு யாருமில்லை. நீதான் வழி சொல்ல வேண்டும்...! வேம்பு : ஜோயரைக் கூட்டாறச் சொல்லுங்கம்மா தம்பிகிட்ட சொல்லி, கேட்கலாம். சுந் : தம்பி... என் நிலைமையைப் பற்றி கவலை கொள்கிறானா? எனக்கும் அவருக்கும் உள்ள உறவில் எள்ளத்தனை குறைந்தாலும் இவன் நிலை என்ன ஆகும்... இதை... இதைக் கேட்டுக்கொண்டே வருகிறான் சாத்தன். சாத் : உணராமயா இருக்கேன்! அக்கா உறவு மச்சான்கிட்டே அறுந்து போனா, நம்ம சங்கதி நாராயண கோபாலன்தான்! எப்படி? சுந் : ஒரு நல்ல ஜோயன் வேண்டும். சாத் : ஓ... நான் கூட்டியாந்திடறேன்... சாத்தன் கிளம்பிப் போகிறான். ஜோசியனை ஏற்பாடு செய்ய அக்காவிடம் வாங்கும் பணத்தை அல்லியிடம் கொண்டு போய் தருகிறான். மதுரை பயணம் வியாபார விஷயமாக மதுரைக்குப் பயணமாகிறான் வளையாபதி. மதுரையில் தனது நண்பன் கனக வேளாளர் வீட்டில் அவன் தங்குகிறான். கனகவேளாளரின் ஒரே மகள் சத்யவதி. காவிரிப் பூம்பட்டினத்திற்கு நவகலச நிர்மாண விழாவுக்குத் தந்தையுடன் சத்யவதி வந்திருந்தாள். அதனால் வளையாபதிக்கு ஏற்கனவே அவள் அறிமுகம். வளையாபதி வந்திருக்கும் விவரத்தை சத்யவதியிடம் போய்ச் சொல்கிறாள் அவள் தோழி அன்னம். கூடத்தில் உட்கார்ந்திருக்கிறான் வளையாபதி. அவனை வரவேற்று உபசரிக்கிறாள் சத்யவதி. இதற்குள் வெளியே சென்றிருந்த கனகவேளாளரும் திரும்புகிறார். கனக : அடடா! வரவேண்டும், வரவேண்டும். என்னைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள். வருவதாக ஒரு சேதி அனுப்பி இருக்கக் கூடாதா? வளை : வந்ததும் திரும்ப வேண்டிய பயணம். ஆனால் வியாபாரம் படியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்துதான் பார்க்க வேண்டும். கனக : ரொம்ப சந்தோஷம்! நண்பர்கள் பழங்கதையைப் பேசி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சத்தியப் பிரமாணம் தோட்டத்தில் பாடியபடி மரத்தில் சாய்ந்து நிற்கிறாள். அவள் பாடுவதற்கு எதிர்பதமாக வளையாபதி பாடியபடி அங்கு வருகிறான். அவனைப் பார்த்ததும் சத்யவதி வெட்கப்படுகிறாள். வளை : சத்யவதி! உன் மனமாளிகையில் என்னை அனுமதித்தாயா...? சத் : ஆம். நான் உங்களைக் கேட்கவிருந்த முதல் கேள்வியும் இதுதான். வளை : காலையில் உன்னைக் கண்டவுடன் என் நெஞ்சக் கதவு திறக்கப்பட்டு விட்டது. சத் : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா? வளை : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா? என் கண்ணைக் கவர்ந்த உன் கட்டழகால், என் கருத்தைக் கவர்ந்து விட்டாய், நீயாக! சத் : (உணர்ச்சி பொங்க) விரும்பினேன். விரும்பினீர்கள் உள்ளத்தின் உள்ளே அரும்பிய இரண்டு காதலரும்புகள் மலர்ந்தன. வாய்விட்டுப் பேசினோம். நம்மில் ஒருவரால் ஒருவர் வாழ்வோம் என்பதை உணர்ந்தோம். சற்று யோசனையுடன், அவனை நெருங்கி வருகிறாள் சத்யவதி. சத் : ஆனால்... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள். வளை : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி! சத் : அப்பாவின் அனுமதி? வளை : பித்துக் கொண்டவரல்ல! ஒப்புக் கொள்வார்! கனகவேளாளருக்கு இச்செய்தி எட்டுகிறது. அவர் மனம் விட்டு வளையாபதியிடம் பேசுகிறார். கனக : ஒப்புக் கொள்வதில் தடையில்லை. ஆனால் ஜாதி குறுக்கே இருக்கிறதே! வளை : ஜாதி... ஜாதிக்கு ஒரு நீதி. இது அநீதி! அநீதிக்கு நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த வைரத்தின் வைராக்கியத்தை ஜாதியின் அடிப்படையிலுள்ள எந்த நீதியும் உடைத்துவிட முடியாது... கனக : இரண்டாம் கல்யாணமாயிற்றே? வளை : இருந்தாலென்ன? சுந்தரிக்கு கல்யாணமாகி ஆறு ஆண்டு களாகின்றன. இதுவரை அவளுக்கு குழந்தையில்லை. சத்யவதிக் காவது குழந்தை பிறக்கும் என்ற ஆவலில் அவள் இந்தக் கல்யாணத்தை வரவேற்பாள். கனக : சத்யவதியை நீங்கள் கல்யாணம் செய்துகொள்வதில் சந்தோஷம்தான். நான் மறுக்கவில்லை. வளை : சத்தியவதியையே தாவுகின்றது என் உள்ளம்... கனக : உறவின் முறையார் ஒப்புக்கொள்ள வேண்டும். வளை : உறவின் முறையாருக்காக எங்கள் ஒட்டிய உள்ளங்கள் வெட்டுப்பட வேண்டுமா? ஒத்து வருபவர்களை வைத்துக் கொண்டு திருமணத்தை நாளை மறுநாளே நடத்தி விடுவோம். சாமியார் வந்தார் சாத்தன் ஒரு சாமியாரை அழைத்து வந்து சுந்தரிக்கு அறிமுகப் படுத்தி, பூஜை எல்லாம் நடத்துகிறான். அவளிடமிருந்து ஏராளமான பணத்தைப் பறித்துக் கொண்டு, குழந்தை பிறக்க ஒரு தாயத்தைக் கொடுக்கிறான் சாமியார். வழக்கம் போல அல்லியைப் பார்த்து, பரிசுகளை வழங்குகிறான் சாத்தன். மீண்டும் ஒரு ஜோதிடனை சுந்தரியிடம் அழைத்து வருகிறான். அவளுக்குப் பதினோரு மாதத்தில் பிள்ளை பிறக்கும் என்று ஜோதிடர் சொல்கிறார். ஜோதிடன் சென்ற சில நிமிஷங்களில் வளையாபதி வீடு திரும்புகிறான். வளை : சுந்தரி! இவள் சத்யவதி. கனகவேளாளர் மகள். சத் : நமகாரம் அக்கா. சுந் : வாம்மா. இருவருக்கும் சேர்த்து சுந்தரி ஆரத்தி எடுக்கிறாள். அவள் கை நடுங்குகிறது. வளையாபதி சுந்தரியிடம் நெருங்கி வருகிறான். வளை : நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து குடித்தனம் பண்ண வேண்டும். வளையபாதி உள்ளே போக, சத்யவதியை அழைத்துக் கொண்டு சுந்தரி அவனைத் தொடருகிறாள். சாத்தன் வேம்பு இருவரும் திகைத்து நிற்கிறார்கள். படுக்கையில் படுத்து விம்மி விம்மி அழுதபடி இருக்கிறாள் சுந்தரி. வேம்பு அவளைத் தேற்றுகிறாள். சுந் : இப்படிச் செய்வாரென்று நான் நினைக்கவேயில்லை வேம்பு. வேம்பு : ஆமாம்மா, இந்த அநியாயத்தை என்னான்னு சொல்றது? சுந் : எனக்கு ஒரு குழந்தை இருந்திருந்தால் இந்த விபரீதம் நடந் திருக்காது, வேம்பு! வேம்பு : குடுகுடுன்னு போயி குடுமியை சிரைச்சிக்கிட்டு வந்த மாதிரி, கொழந்தையில்லைன்னு போயி கொண்டாந்துட்டாரே ஒருத்தியை! இந்த ஆம்பளைங்க மனசே இப்படித்தாம்மா... சுந் : சக்களத்தி வந்துவிட்டாள். இனி என் வாழ்வே இருண்டு விடுமா...? வேம்பு : ஒங்க வாழ்வு ஏம்மா இருண்டு போகும்? அந்தது அதிகாரம் ஒங்க கையிலே இருக்கு. ஒண்ணு மில்லாத அவ வாழ்வுதான் இருண்டு போகும். சுந் : எது நடக்கட்டும், இந்த வீட்டில் எனக்குள்ள அதிகாரத்தை அவள் பறிக்க முயன்றால் பொறுக்கமாட்டேன். முன்னே வந்தவள் நான். முழு உரிமையும் எனக்குத்தான்! வேம்பு வெளியேறுகிறாள். வளையாபதி ஜாதி விட்டு கல்யாணம் செய்துகொண்டு வந்திருப்பதைப் பற்றி ஊர்மக்கள் பரவலாகப் பேசிக் கொள்கிறார்கள். சிலர் கண்டித்துப் பேசுகிறார்கள். சிலர் பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதற்கு? என்று ஒதுங்கி விடுகிறார்கள். வளையாபதியின் மாளிகையில், தன் அறையில் நிலைக் கண்ணாடி முன் நின்று, சத்யவதி தலைவாரிக் கொண்டிருக்கிறாள். வேம்பு வருகிறாள். வேம்பு : அம்மா! பன்னீர் செம்பு இங்கேயா இருக்கு? அம்மா கேட்டாங்க... சத் : இதோ கொடுக்கிறேன்... வேம்பு நானொன்று கேட்கிறேன், சொல்வாயா? வேம்பு : ஆகட்டுமம்மா. சத் : இந்த வீட்டில் நீ நெடுநாள் இருப்பவள். அவருக்கு என்ன உணவு பிடிக்கும்? வேம்பு : (சற்று யோசித்து) நெல்லரிசி உணவு. சத் : பலகாரம்? வேம்பு : ஊஹூம்... பழங்கள்தான். சத் : பானம்?? வேம்பு : காய்ச்சின பசும்பால். சத் : ம்...nt«ò, அவர் என்னை மணந்ததில் அக்காவுக்கு மகிழ்ச்சி தானே? வேம்பு : அது எனக்கெப்படி யம்மா தெரியும்? சத் : ஆமாம்... அத்தான் அடிக்கடி வெளியூர் போவதுண்டா? வேம்பு : திரை கடலோடியும் திரவியம் சேர்ப்பவரல்லவா? சத் : ஊரிலிருக்கும் போது, இரவில் அதிக நேரம் வெளியே தங்க மாட்டாரே?. வேம்பு : (கிண்டலாக) இதற்கு முன் தங்கியிருந்தாலும் இனிமேல் தங்க மாட்டார் நிச்சயமாக! சத் : வேம்பு!உன் பேச்சு fரும்பு! பன்னீர் செம்பு எடுத்துக் கொடுக்க, வேம்பு அதை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறாள். பூசல் ஆரம்பம் பிச்சைக்காரன் வாசலில் நிற்பதைப் பார்த்து, சத்யவதி தட்டில் அரிசி கொண்டு வந்து அவனுக்குப் போடுகிறாள். பிச் : மகராசி! நீங்க மக்களைப் பெத்து மங்களமா வாழணும். பிச்சைக்காரன் வாழ்த்தியதைக் கேட்டபடி, உள்ளேயிருந்த சுந்தரி ஆத்திரத் துடன் வருகிறாள். சுந் : அள்ளி இரைத்து ஆசீர்வாதத்தைத் தேடிக் கொள்கிறாயா? யாரைக் கேட்டடி பிச்சை போட்டாய்? சத் : பாவம் பரதேசிக்குப் போடுவதில்தானா குறைந்துவிடும்? சுந் : (கிண்டலாக) ஐயோ பாவம்! பரதேசிக்குத் தெரிகிறது பரதேசி யின் அருமை! செல்வத்திலே பிறந்த எனக்குத் தெரியுமடி செல்வத்தின் அருமை! ஆத்திரத்துடன் அவள் போக, கண் கலங்கியபடி சத்யவதி அவளைத் தொடர்ந்து உள்ளே போகிறாள். வளையாபதி கையில் வைத்திருக்கும் நகைப் பெட்டியை, தன் அருகில் நிற்கும் சத்யவதியிடம் தருகிறான். வளை : இதோ, நீ விரும்பிக்கேட்ட மரகத வளையல். சத் : அத்தான், அருமையான பச்சை! அக்காவுக்கு? வளை : அதே போல் உன் அக்காவுக்கு கெம்பு வளையல். சத் : கண்ணைப் பறிக்கின்றது... சுந்தரி வருகிறாள். சுந் : என்னை மறந்து விட்டீர்களா? சத் : இல்லையக்கா, இதோ நீங்கள் கேட்ட கெம்பு வளையல்...! அந்த வளையல்களை வாங்கிப் பார்த்து விட்டு முகம் சுளிக்கிறாள். வளை : நீ கேட்டது கெம்புதான் சுந்தரி... சுந் : எனக்கு மரகத வளையல்தான் வேண்டும்! சுந் : மரகத வளையல் அணியாமல் உங்கள் இளைய மனைவியின் அழகு குறைந்து விடுமானால் எனக்கு எதுவுமே வேண்டாம்! வளை : என் மனதைச் சோதிக்கிறாயா, சுந்தரி? சத் : இல்லை என் மனதை! அக்கா, உங்கள் மனம் போல் எடுத்துக் கொண்டு, மற்றதை எனக்குக் கொடுங்கள். (சுந்தரி மரகத வளையல்களை வாங்கிக் கொள்கிறாள்.) வளை : ம்... திருப்திதானே? வளையாபதி இருவரையும் பார்த்துச் சிரிக்கிறான். பூஜை அறையில் ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்து விட்டு, மாலையைப் போடப் போகிறாள் சத்யவதி. நளசுந்தரி கோபத்துடன் வருகிறாள். சுந் : சத்யவதி, என்ன காரியம் இது? நீயே பூஜை செய்யத் தொடங்கி விட்டாயா? சத் : இல்லையக்கா! அத்தான் பூஜை செய்ய ஆயத்தம் செய்கிறேன். சுந் : ஏன் நான் இறந்தா போய்விட்டேன்? வீட்டிற்குப் பெரியவள் நான் இருக்க, உனக்கேன் இதெல்லாம்? ஏதேது, எதையும் விடமாட்டாய் போலிருக்கிறதே! சத் : ஏனக்கா கோபிக்கிறீர்கள்? மூத்தோரின் சிரமத்தைக் குறைப்பது இளையவளின் கடமையாயிற்றே! சுந் : சிரமம்... சிரமத்தையா குறைக்கிறாய் நீ? என் செல்வாக்கை குறைக்கிறாய்! அந்ததை, அதிகாரத்தைக் குறைக்கிறாய்! சத் : இல்லையக்கா...! சுந் : என்னடி இல்லை...! இதெல்லாம் நான் செய்ய வேண்டியது... அவள் கையிலிருந்த மாலையைப் பிடுங்கிக் கொள்கிறாள். சுந் : நீ போ... போடி உன் வேலையைப் பார்த்துக் கொண்டு! எனக்குச் செய்கிற உதவி, நீ சும்மா இருப்பது தான்! உம்... போ... அவளை விரட்டி விடுகிறாள் சுந்தரி. சாப்பாட்டு அறை வளையாபதி சாப்பிட இலையின் முன் அமர்ந்திருக்கிறான். சுந்தரி தண்ணீர் வைக்கிறாள். சாப்பாடு பரிமாற வரும் சத்யவதியின் கையிலிருந்து அதைப் பறித்துக் கொள்கிறாள் சுந்தரி. சுந் : எனக்குப் பரிமாறத் தெரியும். நீ போய் தாம்பூலத்தைச் சித்தப்படுத்து சத்யவதி கலங்கி நிற்கிறாள். அவளைப் பார்த்து வளையாபதி சங்கடப்படுகிறான். வளை : அவள்தான் இன்றைக்குப் பரிமாறட்டுமே! சுந் : இளையாள் கைப்பட்டால் இனிப்பாக இருக்கும். உங்களுக்கு வரவர சுந்தரி கசந்து விட்டாள். வளை : கசப்பும் இனிப்பும் கையில் இல்லை, சுந்தரி, நடக்கும் பண்பில் இருக்கிறது. சுந் : பண்பு கெட்டவள் நான்! அன்பு மிக்கவள் அவள்! அப்படித் தானே? வளை : காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். சுந் : ஆமாம்... இப்போது என்னைப் பார்த்தால் உங்களுக்கு அப்படித்தான் தெரியும். சுவைத்து எறிந்த சக்கை நான். சுவைக்க வேண்டிய செங்கரும்பு அவள்! இல்லையா? வளை : அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்! ஆத்திரத்தோடு தட்டை வைத்து விட்டு சுந்தரி போகிறாள். மலைத்து நின்ற சத்யவதியிடம் பரிமாறச் சொல்கிறான் வளையாபதி. தன் அறையில் இருந்து ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தபடி - சோகமாக - நின்று கொண்டிருக்கிறாள் சத்யவதி. அவள் அப்படி நிற்பதைப் பார்த்து, மனம் நெகிழ்ந்த நிலையில், வளையாபதி அவளிடம் வருகிறான். வளை : சத்யவதி! சத் : அத்தான்... வளை : வருத்தமா...? சத் : உங்கள் மீதா...? எந்தக் காலத்திலும் ஏற்படாது அத்தான். வளை : பின் ஏன் இந்த சோகம்? சத் : ஒன்றுமில்லை அத்தான்...! வளை : என்னிடம் சொல்லவா பயம்? சத் : அக்காள் உங்களை நினைத்து ஏங்குகிறாள். வளை : (அலட்சியமாக) எதையாவது நினைத்து வீணுக்கு ஏங்குவது அவளுக்கு ஒரு விளையாட்டு! சத் : இருவரையும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை நடத்தச் சொன்னீர்களே அத்தான். வளை : இல்லையென்று சொல்லவில்லையே! சத் : நான்தானா இருவரும்! அக்காள் உங்கள் சொத்தல்லவா! வளை : அவளைப் பாதுகாக்கத் தவறி விட்டேனா? வைரங்களால் இழைத்திருக்கிறேன் அவளை! சத் : வைரத்தை ஆசிக்கவில்லையே அவள் உள்ளம்! வளை : பொன்னும் பட்டாடையும் போதுமான அளவுக்கு இருக்கின்றன அவளுக்கு. சத் : பொன்னிலும் பட்டாடையிலும் புதைவதில்லையே பெண் உள்ளம். வளை : பின் அவளுக்கு வேண்டியது என்ன? சத் : நீங்கள்...! வளை : நான் விலக்கிவிடவில்லையே அவளை. சத் : விலகி இருக்கின்றீர்களே அத்தான். பெண்ணுக்கு கணவ னின் அன்பும் ஆதரவும்தான் பொது. அவள் வாழ்வதே கணவனுக்காக அவன் காதலுக்காக... போங்கள் அத்தான்! அக்காளை இப்படி பதைக்க விடாதீர்கள்! வளை : இந்த பேச்சு ஜாலங்களால் எங்களைப் பெட்டி பாம்பாக்கி விடுகிறீர்கள்! சத் : இல்லை அத்தான், நீங்கள் அக்காளைப் போய் பார்க்கத்தான் வேண்டும். வளை : ம்... கோட்டைக் கீறி விட்டாய் நீ! தாண்ட முடியுமா நான்...? சரி... சுந்தரியின் அறை சத்யவதியைப் பற்றி தூபம் போட்டுக் கொண்டிருக்கிறாள் வேம்பு. வளையாபதி உள்ளே வருகிறான். வளை : சுந்தரி... முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மௌனமாக இருக்கிறாள் சுந்தரி. வளை : வந்தவனை வரவேற்க ஒரு வார்த்தைக்குப் பஞ்சமா...? சுந் : என் வரவேற்புக்குத்தான் மதிப்பில்லையே...! வளை : மதித்துத்தானே வந்தேன்... சுந் : வந்தீர்கள் வழி தவறி. சத்யவதி அறை தூரமில்லை. வளை : (பேச்சை மாற்ற நினைத்து) கண் கலங்கி இருக்கிறதே...! சுந் : நீங்கள் தந்த பரிசு இதுதானே? வளை : உன்னிடம் பராமுகமாய் இருந்தேன் என்று கோபமா? சுந் : உங்களை கோபிக்க நான் யார்? வளை : என் மனைவி! சுந் : இந்த நினைப்பு இன்றாவது வந்ததே...! வளை : அடேயப்பா, என்ன கோபம்? சிரிக்கிறான் வேடிக்கையாக. சுந் : இந்தச் சிரிப்பைக் காட்டித்தானே எங்களை சித்ரவதை செய்கிறீர்கள்? வளை : வா...? அவளை அழைத்துக் கொண்டு போகிறான். தோட்டக்காரனும் அவன் மனைவியும் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது பேச்சில் வளையாபதிக்குத் தெரியாமல் தன் தம்பி சாத்தனுக்கு, சுந்தரி அள்ளி அள்ளிக் கொடுப்பதும் அடிபடுகிறது. தோட்டத்துப் பக்கம் வரும் வளையாபதி இதைக் கேட்டு விடுகிறான். ஆத்திரத்துடன் சுந்தரியிடம் வருகிறான். வளை : இன்று எவ்வளவு கொடுத்தாய் உன் சாத்தனுக்கு? சுந் : (நடுங்கியபடி) நூறு பொன்...! வளை : நூறு பொன்! பிள்ளையில்லாச் சொத்தை அள்ளி இறைக்கிறாய். சுந் : யாருக்கோ கடன் தீர்க்க வேண்டுமாம்...! வளை : நானும் கடன் தானே தீர்க்கிறேன் உங்களைக் கட்டிக் கொண்டு...! சுந் : கேட்டுத்தானே நான்...? வளை : சாத்தனுக்கு கொடுப்பதெல்லாம் கூட, என்னைக் கேட்டுத் தானோ? அவன் ஊதாரித்தனத்தைப் பற்றி உனக்கு எவ்வளவு தூரம் எச்சரித்திருக்கிறேன்? உடன் பிறந்த பாசம், இல்லையா? சுந் : (கெஞ்சிய குரலில்) மன்னித்துவிடுங்கள் அத்தான்! இனி ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறேன். இளையவள் முன் என்மானத்தைக் காப்பாற்றுங்கள். வளை : (ஆவேசத்துடன்) உன் நீலித்தனம் என் முடிவை மாற்றிவிடாது. எடு சாவியை... சாவிக் கொத்தை அவளிடமிருந்து பிடுங்கி, தயங்கியபடி இருக்கும் சத்யவதியிடம் வளையாபதி கொடுக்கிறான். வளை : இன்று முதல் குடும்பப் பொறுப்பு உன்னுடையது. சுந்தரியோ - மற்றும் யாரோ - ஊதாரிச் செலவிற்கு இடம் கொடுக்காதே...! வளையாபதி வேகமாகப் போய்விட, பயத்துடன் சத்யவதி சுந்தரியைப் பார்க்கிறாள். சுந் : (எரிச்சலுடன்) குப்பை உயர்ந்தது. போபுரம் தாழ்ந்தது! சத்ய : (பயத்துடன்) அக்கா...! சுந் : என்னடி அக்கா! ஜாதி கெட்டவளே! ஏதோ பிள்ளை இல்லை என்று உன்னைக் கொண்டு வந்தால் உறவு கொண்டாடு கிறாயே... சத்ய : உங்கள் மனம் நோகவிட மாட்டேன். (சாவியை அவளிடம் நீட்டியபடி) நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தவறு நேர்ந்தால் நான் ஏற்றுக் கொள்கிறேன். அத்தானுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். சுந் : சொல்வாய்! ஏன் சொல்ல மாட்டாய்? தலையணை மந்திரம் அத்தானை ஆட்டி வைக்கிறாயே...! சத்ய : தவறாக எண்ணாதீர்கள் அக்கா. உங்கள் சுகமே... சுந் : (கிண்டலாக) உன் சுகம்! பார்த்தாலே தெரிகிறதே. நீ மதுரையை விட்டு அடி எடுத்து வைத்ததே என் குடியைக் கெடுக்கத் தானே? நான் அனுபவித்த சுகத்தை எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக கைவசம் செய்து கொண்டாய்... குடியிருக்க இடம் கொடுத்தால் மடத்தையே பறிக்கப் பார்க்கிறாய்! சத்ய : என்னை வீணாக புண்படுத்தாதீர்கள்! நான் வேண்டுமானால் தனியே ஒரு வீட்டில்... சுந் : ஆமாம்... இப்பொழுது கொஞ்சமாவது கண்ணில்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் மண்ணைப்போடத் தனிக் குடித்தனமா? இப்படி பசப்ப எப்படிக் கற்றாயடி? சத் : இல்லை அக்கா...! சத்தியமாய்... சுந் : உன் பெயரே அதுதானே? r...த்...a...t...â! நீயே கணவருடன் சுகமாக வாழ்ந்திரு. பாடு, கூத்தாடு, கொஞ்சு, கோள் மூட்டு! போம்மா... போ...! உன்னைக் காணாமல் அவர் கண் பூத்து விட்டிருக்கும். சத்யவதி மெல்லப் போகிறாள். தன் தோழி வேம்புவுடன் சேர்ந்து கொண்டு, சத்யவதியை வளையாபதியிட மிருந்து பிரிக்க, சதித்திட்டம் போடுகிறாள் சுந்தரி. ஜாதிவிட்டு ஜாதியில் பெண் எடுத்ததால், ஆரம்பத்தில் வளையா பதி - சத்யவதி திருமணத்திற்கு எதிர்ப்பு ஊர் மக்களிடையே இருந்தது. அதை மீண்டும் கிளப்பிவிட ஏற்பாடு செய்கிறாள் சுந்தரி. சாத்தன் அதற்கு உதவுகிறான். நாட்டாண்மைக்ககாரரிடம் தூபம் போடுகிறான். அவரும் ஊர் பிரமுகர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வளையாபதியின் வீட்டுக்குச் சென்று இதுபற்றிப் பேசி முடிவெடுப்ப தென வருகிறார். வளையாபதி அவர்களை வரவேற்கிறான். வளை : வாருங்கள், என்ன சேதியாக வந்தீர்கள்? பெரி : வேற ஒண்ணுமில்லே, நீங்க ஒலகத்தோட ஒத்துப் போகணு மில்லே! வளை : உலகம் என்றால்? நாட் : எல்லாரும்தான்! வளை : ஐநூறு கோடிப் பேரா? உலகம் என்றால் அறிவு டையவர்கள். அறிவுடையவர் அபிப்பிராயத்தை ஆதரித்தே வந்திருக் கிறேன். இனியும் ஆதரிப்பேன். பெரி : இப்ப ரெண்டாந்தாரமா கட்டிட்டு வந்திருக்கிங்களே. அந்தப் பொண்ணு, அது எங்கத்திய பொண்ணு, என்ன ஜாதிங்கறது தான் கேள்வி? வளை : வேளாளர் மகள், மதுரையில் வளர்ந்தவள். நாட் : நீங்களோ வயிர வாணிகர், இந்த ஜாதிவுட்ட ஜாதி கல்யாணத்தை... வளை : அறிவுடையவர்கள் ஆட்சேபிக்கவில்லை...! பெரி : அப்ப நாம் எல்லாம் அறிவில்லாதவர்களா, என்னாங்க? நாட் : இந்தக் கல்யாணம் நம்ம சம்பிரதாயத்துக்குச் சரியா...? பெரி : நம்ம ஜாதி கௌரவத்தை பாழாக்க விடமாட்டோம். நாட் : அந்தப் பொண்ணை அவ ஊருக்கு அனுப்பிச்சிடுங்க. வளை : உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியும...? நாட் : பிரிச்சுத்தான் ஆகணும்... பெரி : அவளை உடனே வெறட்டிடணும்... வளை : இது அக்கிரமம்! நாட் : ஊராருக்கு வளைஞ்சு கொடுத்துக் கிட்டுத்தான் போகணும். வளை : வளைந்து கொடுக்க மாட்டேன். நாட் : வளைய வெக்கத்தான் வந்திருக்கோம். வளை : நிறுத்துங்கள்! எங்கே, எவரிடம் என்ன பேசுகிறோம் என்பது கவனமிருக்கட்டும்...! பெரி : எல்லாம் தெரிஞ்சுதான் சொல்றோம். ஜாதியைவுட்டுத் தள்ளி வைப்போம். நாட் : நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாடி வர மாட்டோம். வண்ணான் நாசுவனை வராமல் தடுப்போம். வளை : வளர்த்த வேண்டாம்! தைரியமிருந்தால் செய்து பாருங்கள். ஈட்டி எட்டிய வரையுந்தான் பாயும். பணம் பாதாளம் வரை பாயும் என்பதை மறந்து விடவேண்டாம். நீங்கள் போகலாம். நாட் : வாருங்கள், ஊருடன் பகைத்து வேருடன் கெடட்டும்! எல்லாரும் கிளம்பிப் போகிறார்கள். ஊராரின் எதிர்ப்புக் கண்டு சத்யவதி கலங்கிப் போகிறாள். சத்ய : அத்தான், எத்தனை பெரிய எதிர்ப்பு! வளை : அறிவில்லாதவர்களின் ஆர்ப்பட்டாம்! சத்ய : எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே அத்தான்! வளை : இவர்களுக்காக நாம் ஏன் அஞ்ச வேண்டும்? ஒன்றுபட்ட நம் உள்ளங்களைப் பிரிக்க ஊரார் யார்? களங்கமற்ற நம் வாழ்வில் குறுக்கிட இந்தக் கயவர்கள் யார்? சத்ய : இவ்வளவு பொல்லாங்கும் என்னால்தானே? வளை : பொல்லாங்கா? வெறும் மிரட்டல் சத்யவதி! வையமே திரண்டெதிர்த்தாலும், வாழ்வு தாழ்வு இரண்டிலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்! இது சத்தியம்! சத்ய : அத்தான்! இந்த அடிமைக்கு அபயம் அளித்தீர்கள். வளை : வா, மலர்வனத்திற்குப் போகலாம். அவளை அணைத்தபடி அழைத்துப் போகிறான். தங்களது திட்டம் தோற்றுவிட்டது கண்டு சுந்தரி - வேம்பு - சாத்தன் மூவரும் சேர்ந்து வேறு புதிய திட்டம் தீட்டுகின்றனர். சுந்தரி கர்ப்பமாகியிருப்பது போல் நடிப்பதென்றும், இதை ஊர்ஜிதப்படுத்த ஒரு வைத்தியரைச் சரிக்கட்டி விடுவதென்றும், யாருடைய குழந்தையையாவது அந்தச் சந்தர்ப்பத்தில் கொண்டு வந்து விடுவதென்றும் திட்டம் போடுகிறார்கள். அதன்படியே வளையாபதியிடம் சுந்தரி கர்ப்பமாகி யிருப்பதாகச் சொல்கிறாள். வளையாபதியும் அதை உண்மையென்று நம்பி மகிழ்ந்து போகிறான். சாத்தன் தன் காதலி அல்லியிடம் உண்மையைச் சொல்லி விடுகிறான். சத்யவதியும் கர்ப்பம் தரிக்கிறாள். இந்தச் செய்தி புதிய கலக்கத்தை சுந்தரியிடம் ஏற்படுத்திவிடுகிறது. வேம்பு சாத்தன் இருவரையும் அழைத்து யோசனை கேட்கிறாள். வேம்பு : இது என்னம்மா, சாண் ஏறினா, மொழம் சறுக்குதே! சாத் : நாம என்னென்னமோ நெனச்சு எதெதையோ செஞ் சோம். ஏன் அக்கா, நம்ம சொத்தெல்லாம் அவ மகனுக்கல்ல போயிடும். சுந் : துன்பத்தில் நான்! இன்பத்தில் அவள்! எனக்கு யமனாக வந்து முளைத்து என் வாழ்வையே பாழ் படுத்தி விட்டாள். அவள் ஒழிய வேண்டும் முதலில்...! எந்த விதத்திலாவது அவளை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும். வேம்பு : இதென்னம்மா பெரிசு! அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க... சுந் : அந்த சீதைக்கு ஒரு வண்ணான் முளைத்தான் வழிகோல. வேம்பு : இங்கே நாம் அப்படி வேலை செஞ்சா போவுது. உள்ளே வாங்க சொல்றேன். சாத் : முன்னே வெச்சிட்டோம காலெ. அப்பறம் பின்னால வைக்கக் கூடாது...! மூவரும் தனியறைக்குள் செல்கிறார்கள். சத்யவதியைப் பார்க்க சுந்தரி, அவளது இருப்பிடம் வருகிறாள். அவளை அன்புடன் வரவேற்கிறாள் சத்யவதி. சத்ய : வாருங்கள் அக்கா! உங்கள் உடம்பு இப்போது எப்படி யிருக்கிறது? சுந் : சுகந்தான்! (அவள் தலையை கோதிவிட்டபடி) வேம்பு விஷயம் சொன்னாள். உடனே ஓடிவந்தேன். ம்... அத்தா னிடம் சொல்லிவிட்டாயா? சத்ய : இதை எப்படியக்கா அவரிடம் சொல்வது? சுந் : உண்மைதான்! நீண்டநாள் பழகிய எனக்கே வெட்கமாக இருந்தது... நீ சொல்லாவிட்டால் என்ன, நான் சொல்லி விடுகிறேன். கிளம்பிப் போகிறாள். சதித்திட்டம் சாத்தன், சுந்தரி, வேம்பு மூவரும் சேர்ந்து சத்யவதியை ஒழிக்க தீர்மானிக்கிறார்கள். பாலில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துவிடுகிறாள் வேம்பு. வளையாபதி, சுந்தரியைப் பார்க்க வருகிறான். ஒரு மாம்பழத்தை அரிந்து, துண்டு துண்டாக அவளிடம் கொடுக்கிறான். வளை : எப்படி இருக்கிறது? சுந் : காலமில்லாத காலத்தில் ஆசையாய் வரவழைத்து, தங்கள் அன்புக் கையும் பட்டால் இனிக்காதா அத்தான்! வளை : இதைவிட இனிய பொருளை எனக்கு வழங்குவாயல்லவா! சுந் : ஓ... குழந்தையைச் சொல்கிறீர்களா...? வளை : ஆம்... குழந்தை உன் மடியில் விளையாடும் போது... சுந் : நீங்கள் அவனை எடுத்து உச்சி முகர்ந்து கொஞ்சு வீர்கள். அதைப் பார்த்து நான் மனம் பூரித்துப் போவேன். வளை : (கனவு கண்டபடி) குழந்தையைப் படிக்க வைத்து, ஒன்பது கோடிகளுக்கு உரியவனாக்கி நாற்றிசையிலும் என் குடும்ப விளக்கை ஒளி வீசச் செய்து ஆஹா...! அதைவிட வேறு மகிழ்ச்சியும் உண்டா சுந்தரி! தட்டுடன் வேம்பு வருகிறாள்: வளையாபதியைப் பார்த்ததும் திடுக்கிட்டு தட்டைக் கீழே போடுகிறாள். உட்கார்ந்திருந்த இருவரும் எழுந்திருக்கிறார்கள். சுந் : என்ன வேம்பு? வளை : எதைக் கண்டு இப்படி மிரளுகிறாய்? வேம்பு : (தடுமாற்றத்துடன்) ஒண்ணுமில்லிங்க... ஒண்ணுமில்லிங்க... சுந் : சொல் வேம்பு! ஏதோ நீ மறைக்கிறாய்...? வேம்பு : ம்... மன்னிச்சுடுங்கம்மா... தெரியாம வந்திட்டேன். திரும்பிப் போக முயற்சித்தவள் நிற்கிறாள். சுந் : என்ன வேம்பு? வேம்பு : இல்லேம்மா... தட்டு...j£L... எடுத்திட்டுப் போறேன். வளை : (தடுத்து)ஏதேhஒளிக்கிறாய்... உள்ளதைச் சொல்லி விடு. வேம்பு : சத்யவதி அம்மா அறையிலே... வேம்பு : சத்யவதி அம்மா அறையிலே... வளை: என்ன நேர்ந்தது? வேம்பு : அவங்களுக்குப் பால் கொண்டுட்டுப் போனேன். கதவெல் லாம் சாத்தியிருந்தது. உள்ளே ஆம்பளே குரல் கேட்டது... வளை : (திடுக்கிட்டபடி) என்ன...? வேம்பு : நீங்கதான் பேசிட்டிருக்கீங்கன்னு இங்கே வந்தேன். உங்களை இங்கே பார்த்ததும் திடுக்கிட்டுப் போயிட்டேன். வளை : அப்படியா? (மாம்பழம் அரிந்து கொண்டிருந்த கத்தியுடன், ஆத்திரத்துடன் சத்யவதியின் அறைக்கு வருகிறான். சத்யவதியின் அறையிலிருந்து ஓடியவனைப் பிடித்து வரும்படி சாத்தானை Vவுகிறான். இதற்குள் வேம்புவின் குரல் கேட்டு சுந்தரியின் அறைக்கு மீண்டும் வருகிறான். தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது போல் நடித்த சுந்தரியை விடுவிக்கிறான்.) சுந் : நம் குடும்பமானம் மரியாதை அத்தனையும் போய் விட்டது. நம் குடும்பத்தைக் கைகாட்டிப் பேசும்படி ஆக்கி விட்டாளே! இந்தப் பழி ஜென்ம ஜென்மத்துக்கும் மறையாது...! வளையாபதி அவளைச் சமாதானப்படுத்தி, படுக்கையில் கிடத்துகிறான். வேம்புவிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, சத்யவதியிடம் கோபம் பொங்க வருகிறான். வளை : வேசி...! சத்ய : ஆ... வளை : விபச்சாரி... யாரோடு இருந்தாய்? சத்ய : என்ன...? என்ன சொல்கிறீர்கள்? வளை : என்னடி நடிக்கிறாய், கற்பிழந்தவளே! சத்ய : அத்தான்...! வளை : போடி வெளியே! சத்ய : அத்தான்! அத்தான்...! வளை : பாவி! பதிக்குத் துரோகமிழைத்த பாதகி! கள்ளக் காதலனோடு கொஞ்சிக் கிடந்த காதகி! நவகோடியின் குடும்ப கௌரவத்தையே நாசமாக்கிய நயவஞ்சகி! கதறித் துடிக்கும் சத்யவதியை இழுத்துப்போய் வெளியே தள்ளுகிறான். சத்யவதி அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு மன்றாடுகிறாள். சத்ய : அத்தான்! சற்று கேளுங்கள்... நான் ஒரு பாவமும் அறியாதவள். நிரபராதி அத்தான்! வளை : நிரபராதி...! நீலிக் கண்ணீர் வடித்து என்னை ஏமாற்றி விடலாம் என்ற நினைப்பு! கற்பிழந்த கள்ளி! சத்ய : அத்தான்! நான் கற்பிழக்கவில்லை. ஒழுக்கத்தில் ஓர் இம்மியும் தவறியதில்லை. இதற்கு இந்த நிலவு விழாததே சாட்சி! வளை : பசப்புக்காரி! உன்னை நம்பும் காலம் மலை யேறி விட்டது. இனி இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. போய் விடு... சத்ய : அத்தான்! என்னை அனாதையாக்கி விடாதீர்கள்! உலகத்தார் முன் என்னை வேசி என்ற பழிக்கு ஆளாக்கி விடாதீர்கள், அத்தான்! வளை : உன் அழுகையும் கண்ணீரும் என் உறுதியை அசைக்க முடியாது! சத்ய : நான் இரண்டு மாத கர்ப்பிணி அத்தான்! அத்தான்...! அத்தான்...! வளையாபதி பேசாமல் நிற்கிறான். சத்ய : உங்கள் மனம் இரும்பாகி விட்டதா? ஆதரவான உங்கள் நெஞ்சம் நெருப்பாகி விட்டதா அத்தான்? ஆராய்ந்து பாராமல் என் வாழ்வைப் பாழாக்கி விடாதீர்கள் அத்தான்...! வளை : மங்காத என் புகழுக்கு மாசு தேடிய பாதகி! என் முகத்தில் விழிக்காதே! போ...! (கதவை மூடி தாளிட்டு விடுகிறான். அத்தான் என்று கண்களில் கண்ணீர் மல்க, கைக்கூப்பி அவனுக்கு வணக்கம் சொல்லியபடி வெளியே நடக்கிறாள் சத்யாவதி.) (தன் தந்தை கனகவேளாளர் வீட்டுக்கு வருகிறாள். மூடியிருக்கும் கதவைத் தட்டுகிறாள்.) சத்ய : அப்பா....! அப்பா...! (கதவைத் திறந்த கனகவேளாளர் பிரமித்துப் போகிறார். மகளை வரவேற்று, கரம் பற்றிக் கொள்கிறார்.) கனக : என் மகளா? சத்ய : ஆமப்பா...! கனக : நவகோடியின் நாயகியா? சத்ய : நலமிழந்த பிச்சைக்காரி...? கனக : யாரோடு வந்தாய் அம்மா? சத்ய : கண்ணீல் பெருகும் நீரோடு! கதியற்றவள் என்ற பேரோடு! கனக : காரணம்? சத்ய : நான் கர்ப்பமுற்றிருக்கிறேன் என்று சுந்தரி அக்காளிடம் ஒரு நாள் சொன்னேன். அன்றிரவே கற்பிழந்தவளாய்... இதுவரை அவளைப் பிடித்துத் கொண்டிருந்த வேளாளர் திடுக்கிட்டு விலகி நின்று விடுகிறார். கனக : ஆ! கற்பிழந்தவள்...! சத்ய : இல்லையப்பா...! அப்படிப் பட்டம் கட்டி, கண்கலங்க, கதிகலங்க துரத்தப்பட்டேன் அவரால்! இரும்புத் திரைக்குப் பின் என்ன சூழ்ச்சி, யாரால் நடந்தது என்பதெல்லாம் நான் அறியேன் அப்பா! நேரே ஓடி வர நேர்ந்தது அப்பாவிடம்! கனக : (வெறுப்புடன்) அப்பாவிடம்...! வாழ்க்கைப்பட்ட நீ மணவாள னோடு வரவில்லை. தன்னந்தனியாக தகுதிகெட்ட நிலை யோடு...! அப்பாவிடம்...! சத்ய : நான் நிரபராதியப்பா! கனக : பழி அவர் மேல்! அப்படித்தானே? இதுவரை உன்னை இங்கு நிற்க அனுமதித்ததே பிழை! நில்லாதே! வெளியில் போ! சத்ய : அப்பா...! அப்பா...! (அவர் கால்களைப் பற்றிக் கொண்டு மன்றாடுகிறாள்.) சத்ய : அப்பா... உங்கள் கடுகடுத்த முகத்தைக் கூட இதுவரை நான் கண்டதில்லேயே, அப்பா! நடை தளர்ந்து, எதிரில் வந்து நின்று, அடைக்கலம் என்ற அருமை மகளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு மொழி பஞ்சமா? அப்பா! பசியால் துடிக்கும் பாச மகளை புசி என்ற சொல்ல, ஒரு துளி அன்பு ஊற்றெடுக்க வில்லையா உங்கள் உள்ளத்தில்? விழுந்த மகளை எழுந்து போ என்கிறீர்களே அப்பா...! (சத்யவதி கதறக் கதற, கனகவேளாளர் விலகிப் போகிறார்.) கனக : வாழாத மகளுக்கு, வரவேற்பும் வந்தனோ பசாரமும் வேண்டும்? போ, வெளியே...! சத் : மிதித்த கிளை மளுக்கென்று முறிந்தது. மேல் கிளையைத் தாவினேன். மேல்கொண்டு தாக்குகின்றது... தாயற்ற பெண்ணப்பா, நான்... கனக : தந்தையுமற்ற பெண், இன்று முதல்...! சத் : (மெள்ள எழுந்தபடி) அப்பா! உனக்கு தாயும் நான், தந்தையும் நான் என்று சாற்றிவருவீர்களே! ஆசைக் கொருமகள் என்று காத்து வருவீர்களே! ஈன்ற நெஞ்சம் இன்று எரிமலை காண்பது புதுமையப்பா...! கனக : எரிக்காமல் விட்டு வைத்திருப்பது தான் புதுமை! சத் : பெண்ணுக்கு கண்ணொத்த மணவாளர் வீடும். ஈன்றோர் வீடும் போக்கிடம், போகச் சொல்கிறீர்களே! சாகச் சொல்கிறீர்களே! அப்பா... அப்பா...! அப்பா...! கனக : வாழச் சொல்லவா? மணவாளனை வஞ்சித்த மாயாவி! வெளியில் போய் விடு. அவளை இழுத்துக் கொண்டு, வாயிலுக்கு வருகிறார். சத்யவதி கதறுகிறாள். சத் : அப்பா! அறியாமல் பெண் மேல் பாவம் சுமத்துவது அநியாயம் அப்பா...! மணவாளரை நான் கனவிலும் வஞ்சிக்கவில்லை. கனக வேளாளர் மகள் கனவிலும் கற்பு தவற மாட்டாள்! நான் மாசற் றவள் என்பதற்கு மாய்ந்து போகாமல் கொதிக்கும் என் மனம் சாட்சி! மாய்க்காமல் வைத்திருக்கும் இந்த வையகம் சாட்சி...! கனக : உன் அத்தானிடம் கூறியிருக்க வேண்டும் இவைகளை...! அவள் பேசப் பேச கனக வேளாளர் விலகி விலகிப் போகிறார். சத் : அப்பா...! அப்பா...! நா வறண்டு போகிறது. கர்ப்பந்தாங்கி, கடும் பசியால் வாடி, இருப்பிடம் இன்றி ஏங்கும் மகளுக்கு, ஓர் ஒதுக்கிடம் தரவும் ஒப்பவில்லையா உங்கள் பெற்ற உள்ளம்? அழுதோடி வந்த மகளை, அதட்டித் துரத்திய தந்தை என்று உலகம் உங்களை இகழும் அப்பா...! கனக : இல்லை...! புகழும்...! போகின்றாயா, இல்லையா? அவளைத் துரத்தி விடுகிறார். சத்யவதி கண்ணீருடன் வெளியேறுகிறாள். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சத்யவதியை நாகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் காப்பாற்றி, தங்கள் இருப்பிடத்திற்கு அவளைத் தூக்கிச் சென்று, மூச்சுத் தெளிவித்து, காப்பாற்றுகிறார்கள். நாகர் தலைவன் சத்யவதியிடம் தவறாகப் பழக ஆரம்பிக்கிறான். இதைக் கண்டுகொண்ட சத்யவதி அவர்கள் கூட்டத்திலிருந்து தப்பி, காட்டுப் பாதை வழியே வெளியேறி, ஒரு பயணிகள் கூட்டத்திடம் வந்து சேருகிறாள். கூட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி, அவளைச் சமாதானப்படுத்துகிறாள். மூதா : அழுது என்னம்மா பிரயோசனம்? பெண்ணாகப் பிறந்தவள் கஷ்டத்தைக்கண்டு கலங்கலாமா? வாழ்க்கையில் கஷ்டம் சுகம் இரண்டையும்தான் எதிர்பார்க்கவேண்டும். சத் : நான் செத்திருந்தால் என் சோகக் கதை முடிந்திருக்கும். கொண்ட கணவரால் கைவிடப்பட்டு. ஆதரிக்கவேண்டிய தந்தையால் அடித்துத் துரத்தப்பட்ட நான், யாருக்காக வாழ வேண்டும்? மூதா : உன் கருவில் வளரும் அந்தச் சிசுவுக்காக, மாசுபடாத அந்த மாணிக்கத்துக்காக! சத் : செல்வக் குடியிலே பிறந்து, சீமானுக்கு வாழ்க்கைப்பட்டும் ஈன்றெடுத்து வளர்க்க ஒரு இடமில்லையே! மூதா : (உற்சாகம் பொங்க) நான் தருகிறேன் அம்மா! கலங்காதே! இங்கேயே இருந்து விடு. நான் உயிரோடு இருக்கும் வரை நீ எங்கும் போக வேண்டாம். உன் கஷ்டத்துக்கெல்லாம் ஒரு முடிவு வராமல் போகாது. சத் : முடிவு...! எல்லாம் நடந்து முடிந்தது. மூதா : அப்படிச் சொல்லாதே. இருட்டு இருட்டாகவே இருக்கா தம்மா. வெளிச்சம் வரும். உன் வயிற்றில் பிறக்கும் குழந்தை யால், உனக்கு விமோசனம் உண்டாகும். கவலைப்படாதே! சத்யவதி அவளது அன்பான பேச்சினால் சமாதானம் அடைகிறாள். இடமாற்றம் அல்லிக்குப் பிறக்கும் குழந்தையை, சாத்தன் தந்திரமாகப் பேசி ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டு வந்து, சுந்தரிக்குப் பிறந்த குழந்தை அது என்று வளையாபதியை நம்பும்படிச் செய்து விடுகிறார்கள். சத்யவதிக்கும் குழந்தை பிறக்கிறது. சுந்தரிக்குப் பிறந்ததாக நினைத்து விடும் குழந்தைக்கு அழகன் என்று பெயர் வைக்கப்படுகிறது. அவனுக்கு ஐந்து வயதானதும், படிப்புச் சொல்லி வைக்க ஏற்பாடாகிறது. அழகனோ படிப்பில் அக்கறை இல்லாதவனாக இருக்கிறான். அதே சமயம் சத்யவதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு உத்தமன் என்று பெயரிடப்பட்டு, அவனும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். தனது புத்திசாலித்தனத்தால் எளிதில் எல்லாவற்றையும் கற்கிறான் உத்தமன். மேல்படிப்புக்காக காவிரிப்பூம்பட்டினம் போகப்போவதாக உத்தமன் சொல்கிறான். அதைக் கேட்டதும் பதட்டப்படுகிறாள் சத்யவதி. அவளைப் பாதுகாத்து வரும் மூதாட்டி அவளைத் தேற்றுகிறாள். மூதா : ஏனம்மா, வீணாக மனதை அலட்டிக் கொள்கிறாய்? சத் : காவிரிப்பூம்பட்டினம் என்றவுடனே எனக்கொரு திகில் உண்டாகிறது. மூதா : உத்தமனுக்கு மேல்படிப்பில் மிகவும் ஆர்வம். இப்பொழுது இதெல்லாம் சொல்லி அவன் மனதை ஏன் குழப்ப வேண்டும்? சத் : என்றைக்கிருந்தாலும் ஒரு நாள் இதெல்லாம் சொல்லித் தானே ஆகவேண்டும்? மூதா : உன் கதையைக் கேட்டதும் பதட்டம் அடைவான். இளங்கன்று பயமறியாது என்பதுபோல் ஆத்திரத்தில் ஏதாவது செய்யத் துணிவான். இது ஆபத்தில் கெண்டு போய்விடும். சத் : விஷயம் தெரிந்தால் அவன் எச்சரிக்கையாக நடந்து கொள்ளமாட்டானா? மூதா : அவன் இன்னும் சிறு குழந்தை. தக்க வயது வரட்டும். படிப்பும் முடியட்டும். அப்பொழுது சொல்வது தான் நலம். சத் : சரியம்மா. காவிரிப்பூம்பட்டினத்தில் அழகன் (வளையாபதி தன் மகன் என்று நினைத்துக் கொண்டிருப்பவன்) படிக்கும் பள்ளியிலேயே, உத்தமன் சேர்க்கப்படுகிறான். படிப்பில் அவனுக்குள்ள ஆர்வம், திறமை கண்டு ஆசிரியர் வியந்து போகிறார். ஒரு நாள் மாணவர்களிடையே விளையாட்டில் தகராறு ஏற்படுகிறது. அழகனும், உத்தமனும் மோதிக் கொள்கிறார்கள். அழ : ஏண்டா, என்னெப் பொட்டைப் பையன்னா நினைச்சுக் கிட்டே? வளையாபதி மவண்டா மாட்டுக்காரப் பயலே! எஜமான் வூட்டுப் புள்ளைடா நானு, எரந்து குடிச்ச பயலே! உத் : டேய், மரியாதையாய் பேசு! அழ : என்னடா மொறைக்கறே? அந்த வாத்திப்பய ஒன்னெ புத்தி சாலின்னு சொல்லிட்டான்னா குதிக்கறே? அந்த வாத்தியா ரெல்லாம் வளையாபதி மவனுக்கு முன்னாலே எலிடா எலி! உத் : நீ பெரிய புலி! மாணி : என்னடா உத்தமா, சும்மா இருக்க மாட்டே? அழ : (கிண்டலாக) என்னடா, தலைவர் துள்றாரு! தளபதி அடக்கு றாரா! எல்லா பசங்களையும் காத்துலே ஊதி உட்ருவேன் தெரியுமா? தன் சகாக்களை அழைத்துக் கொண்டு அவன் கிளம்புகிறான். பள்ளியில் மட்டுமல்ல, வீட்டிலும் அவனது அட்டகாசம் தாங்க முடியவில்லை. சுந்தரி அவனைக் கடிந்து கொள்கிறாள். தடுக்க வந்த வேம்புவை காலால் எட்டி உதைக்கிறான். சுந்தரிக்கும் அதே நிலை தான் ஏற்படுகிறது. இந்தக் குரங்கைப் பிள்ளையாக எடுத்தோமோ என்று சுந்தரியும், இனிமே நினைச்சி என்ன செய்ய? mDgÉ¢á¤jh‹ MfQ«! என்று வேம்புவும், சுந்தரியும் வேதனைப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் வழியில் அழகனுக்கும் உத்தமனுக்கும் மறுபடியும் தகராறு ஏற்படுகிறது. மற்ற மாணவர்கள் ஓடி வருகிறார்கள். மாண : அடே! சண்டெ...! சண்டெ...! உத்தமனும் அழகனும் சண்டை போட்டுக்கறாங்க... சண்டையில் அழகனின் சட்டை கிழிய, சூலப்பச்சை தெரிகிறது. மாணி : அட, அக்குள்ளே சூலப்பச்சை! மற்ற மாணவர்கள்: சூலப்பச்ச டோய்! சூலப்பச்ச டோய்! மாணி : இவன் காளிக்குடி டோய்! எல்லாரும் : காளிக்குடி...! சூலப்பச்சை...! மாணவர்களின் கிண்டலினால் ஆத்திரம் கொண்ட அழகன் கோபத்துடன் செல்லுகிறான். உத்தமன் தன் மேல் படிந்த மண்ணை தட்டிவிட்டுக் கொள்கிறான். மாணி : நல்ல பாடம் கற்பிச்சிட்டே! இனி செத்தாலும் நம்ம வம்புக்கு வர மாட்டான். உத் : ஆமாம், சூலப்பச்சை, காளிக்குடி என்றால் என்ன? மாணி : கீழ்க்குடி மக்களுக்குத்தான் சூலப்பச்சை குத்தறது. உத் : குணத்தைத் தெரிந்துதான் இப்படி குத்தியிருக்கிறார்கள்! மாணவர்கள் பிரிந்து செல்கிறார்கள். சூலப்பச்சை, காளிக்குடி என்று மாணவர்கள் தன்னைக் கேலி செய்ததைப் பற்றி சுந்தரியிடம் முறையிடுகிறான் அழகன். உடம்பு முடியாமல் சீக்காக இருந்தபோது பிரார்த்தனைக்காக இதைக் குத்தியதாக சுந்தரி அவனைச் சமாதானப்படுத்துகிறாள். வளையாபதிக்குத் தெரியாமல் இதைச் செய்ததாக சாத்தன் அழகனிடம் சொல்லி, அவனது அப்பாவிடம் இதுபற்றிச் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறான். வேம்பு அழகனை அழைத்துச் செல்கிறாள். அல்லி, தன்னையும் ஏமாற்றி, அழகனுக்கு சூலப்பச்சை குத்தி விட்டதை சுந்தரியிடம் சொல்ல, அக்குளில்தானே குத்தியிருக்கிறது என்று சுந்தரி அப்போது அலட்சியமாக இருந்து விட்டதையும் நினைத்து வருத்தப்படுகிறார்கள். வெளியூர் சென்றிருக்கும் வளையாபதி திரும்புவதற்குள் அதை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று அவர்கள் தீர்மானிக் கிறார்கள். இதற்கிடையில் சாத்தன் அல்லியிடம் சென்று, தனக்குத் தெரியாமல் அழகனுக்கு சூலப்பச்சைக் குத்தியது பற்றி கண்டிக்கிறான். உண்மையின் விளக்கம் ஊர் திரும்பும் வளையாபதி, அழகன் ஏன் பள்ளிக்குப் போகவில்லை என்று கேட்கிறான். தனக்கும் உத்தமனுக்கும், நடந்த சண்டையைச் சொல்ல, வளையா பதியின் மகனை அடிக்க ஒருவன் பிறந்திருக்கிறானா இந்தக் காவிரிப் பூம்பட்டினத்தில்? காட்டு, வா என்று அழகனை இழுத்துக்கொண்டு போகிறான். சாத்தன் அவனைத் தொடருகிறான். உத்தமனை பள்ளியை விட்டே விரட்டச் சொல்லிவிடுகிறான் வளையாபதி. உத்தமன் சத்யவதியின் மகன் என்பதை ஆசிரியரிடமிருந்து தெரிந்துகொள்கிறான் சாத்தன். பள்ளியில் நடந்ததை தன் தாயிடம் விவரிக்கிறான் உத்தமன். தன் மகனை பள்ளியி லிருந்து நீக்கியது தன் கணவன் வளையாபதி என்பதை அறிந்ததும் துடிக்கிறாள். அதே சமயம் உத்தமனும், தன் தந்தைதான் வளையாபதி என்பதை சத்யவதி யிடமிருந்து அறிகிறான். உண்மையை உலகத்திற்குச் சொல்லவேண்டும் என்று தாயிடம் வாதாடுகிறான். உத் : நான் பிறந்தேன் உங்கள் வயிற்றில். ஏன் பிறந்தேன் என்று அறிந்துகொள்ளட்டும் இந்த உலகம்! தாயின் மேல் ஆணை! தந்தையின் மேல் ஆணை! சத் : வேண்டாம் உத்தமா. வேண்டாம்! இது சதிகார உலகம்! உத் : நேர்மை நம்மிடம் இருக்கும் போது, ஒழுங் கீனத்திற்கு நாம் ஏன் பயப்படவேண்டும்? அந்த வஞ்சகர் என் தாய்க்கு இடையிலிட்ட இரும்புத் திரையைக் கிழித்தெறிவேன்! என் தாய்க்கு சிறுமை செய்த பதர்களை ஒழிப்பேன்! என் அன்னை கற்பு தவறாதவள் என்று இந்த உலகமறியச் செய்வேன். சத் : உத்தமா, ஏழை சொல் அம்பலம் ஏறுமா? உன் தந்தையே நமக்கு வைரி. நாம் பேசாமல் இருந்து விடுவதுதான் நல்லது. உத் : அம்மா! இந்த அதர்மத்தைப் பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பதா? உண்மையும் கற்பும் புண்படுவதா? பொய்யும் வஞ்சகரும் செழிப்பதா? முடியாது. முடியாது! இந்த வளையாபதியை வளையும்படிச் செய்வேன்! சத் : வேண்டாம் உத்தமா! சுந்தரியும் சாத்தானும் நஞ்சுள்ளம் படைத்தவர்கள். நீ அங்கு போவது ஆபத்து. உத் : என்னைத் தடுக்காதீர்கள்! நீதிக்கும் நேர்மைக்கும் போராடு வேன். கற்புக்கரசி கண்ணகி பிறந்த காவிரிப்பூம்பட்டினத் தில், பாண்டிய நாட்டுப் பத்தினித் தெய்வம் என்தாய் என்று பலர் அறிய நிரூபிப்பேன் இவைகளைச் செய்து முடிப்பேன். இல்லா விட்டால் மகிழ்ச்சியுடன் இறப்பேன். உத்தமன் தன் தாய் நிரபராதி என்று நிரூபிக்க சாட்சியங்கள் தேடுவதில் ஈடுபடுகிறான். சாத்தன் மூலம், சத்யவதி உயிருடன் இருப்பதும், அவளுக்கும் - வளையாபதிக்கும் பிறந்தவன் உத்தமன் என்பதையும் சுந்தரியும், அவளது தோழி வேம்பும் தெரிந்துகொண்டு விடுகிறார்கள். சத்யவதியைக் கொல்ல, அவள் இருக்கும் குடிசைக்கு தீ வைத்து விட, தக்க சமயத்தில் ஓடிவந்து, தாயைக் காப்பாற்றுகிறான் உத்தமன். அல்லிக்குப் பிறந்தவன் தான் அழகன் என்பதும், வளையாபதி யின் வீட்டில் அன்று இரவு அவளுடன் படுக்கை அறையில் பேசிக் கொண்டிருந்ததும் அல்லியே என்பதையும் தனது முயற்சியில் தெரிந்துகொள்ளும் உத்தமன், நீதிமன்றத்தில் வளையாபதிக்கு எதிராக வழக்குக் தொடுக்கிறான் நீதிமன்றத்திலிருந்து வளையாபதிக்கு அழைப்பு வருகிறது. வழக்கு மன்றம் செல்கிறான் வளையாபதி. நீதிபதி : வளையாபதியாரே! உம்மீது வீட்டிற்கு தீ வைத்த குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. என்ன பதில் சொல்கிறீர்? வளை : கட்டுக் கதை...! குற்றம் சாட்டுவது யார்? உத் : நான்தான்! வளை : நீயா...? உன் வீட்டிற்கு நான் ஏன் தீ வைக்க வேண்டும்? உத் : உமது மடமையை மறைக்க! உமது அறியாமையைக் கண்டு உலகம் சிரிக்காமலிருக்க! வளை : நாவை அடக்கு! சொல்லவேண்டியதை விட்டு சுற்றி வளைக்கிறான். உத் : சுற்றித்தான் வளைக்க வேண்டியிருக்கிறது. சுயபுத்திக்கு விடுதலை கொடுத்து, இரவல் புத்தியில் வாழும் பெரிய மனிதரே! நினைவுபடுத்திக் கொள்ளும்! பதிமூன்று வருஷங் களுக்கு முன் என் அன்னை கருவுற்றிருந்ததையும் கருத்தில் கொள்ளாமல், அவள்மீது பழிச் சொல்லை அள்ளி வீசினீர். அதைக் கேட்கப் பொறாது பதறினாள். உம் காலடியில் விழுந்து கதறினாள். கலங்கலமாய் கண்ணீர் வடித்தாள்! உம் கல் நெஞ்சத்தில் மருந்துக்கும் சுரக்கவில்லை கருணை! வெளியே தள்ளிக் கதவை அடைத்தீர்... வளை : ஓ... அந்த வேசியின் மகனா? உத் : என்ன சொன்னீர்...? ஒன்பது கோடிப் பொன் உமக்கு அன்பை ஊட்டவில்லை. அகந்தையை ஊட்டியது! உமது தலைக்கு கிறுக்கை ஏற்றியது. உம் மனத்தின் ஈரத்தை உலர்த்தியது. சத் : (ஓடி வந்து) உத்தமா...! உத் : இங்கேன் வந்தீர்கள்? சத் : வேண்டாமடா! தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் வழக்கைக் கேட்டு நாடு சிரிக்குமடா! உத் : சிரிக்கட்டுமம்மா! நாடு நன்றாகச் சிரிக்கட்டும்! அவர் ஆணவம் ஒழிய வேண்டும்! அகந்தை ஒழிய வேண்டும்! சத் : உத்தமா...! அவர் உன் தந்தையடா...! உத் : தந்தை... தந்தை...! கடமையை மறந்தார். தனயன் எடுத்துக் காட்டுகிறான். இடித்தும் காட்டுவான். வளை : உத்தமி! ஒரு பிள்ளையும் பெற்றுக்கொண்டு, குத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாள். படிதாண்டாப் பத்தினி. பலர் காண நாடகமாடுகிறாள். உத் : பெண்ணிடம் வாய் வீரம் பேசும் பேடி! என்னிடம் உம் கை வரிசையைக் காட்டும். நீதிபதியவர்களே! என் தாயைப் பழித்தற்குத் காரணம் சொல்லட்டும். வளை : கைப்புண்ணைக் காண கண்ணாடி கேட்கிறான். கணவனின் மஞ்சத்தில் கள்ளக் காதலனுடன் இவள் கொஞ்சி விளையாடி யதைக் கண்டேன். உத் : கண்டீர், ஒண்டோடி ஒருத்தி நடித்த ஒற்றையங்க நாடகத்தை! ஆத்திரம் கொண்டீர்! அறிவிழந்தீர்! வளை : கண்ணால் கண்டவன் போல் கதை அளக்கிறான்! உத் : கதையா...? (கத்தியை எடுக்கிறான்) ஏன் விழிக்கிறீர்? நன்றாகப் பாரும்! கத்தியை வளையாபதியிடம் வீசுகிறான். வளையாபதி அதைப் பார்க்கிறான். வளை : ஆ... என் கத்தி! இதைத்தான் அன்று அவன்மீது வீசினேன்! உத் : அவனல்ல... அவள்! நீதிபதியவர்களே, அந்தக் கத்தி, அல்லி வீட்டிலிருந்து எடுத்தேன். அவளிடம் எப்படி வந்தது என்று அல்லி சொல்லட்டும். நீதிபதி அழைக்க அல்லி வந்து விவரம் சொல்கிறாள். அல் : என் அவுரு (சாத்தானைக் காட்டி) தாங்க ஆம்பளெ வேஷம் போட்டுக்கிட்டுப் போயி அப்படியெல்லாம் செய்யச் சொன்னாரு. சத்யவதியம்மா நிரபராதிங்க. வளை : என்ன மோசடி! என் தலை சுற்றுகிறது. உத் : விழுந்து விடாதீர்! விழவேண்டிய கட்டம் இனிமேல்தான் இருக்கிறது! நீதிபதியவர்களே, அழகனை அழையுங்கள். அழகன் வருகிறான். உத் : உம் அருமை மகன் அழகன்! அவன் அக்குளில் ஏன் சூலப்பச்சை குத்தியிருக்கிறது? வளை : சூலப்பச்சையா? அழ : ஆமாப்பா, கள்ளிப்பால் அடிச்சு மறைச்சிட்டாரு சாத்தன் மாமா... உத் : சூலப்பசையை மறைக்க முடியும். இதை மறைக்க முடியாது...! சாத்தன் அல்லிக்கு எழுதிய ஓலையை நீதிபதியிடம் உத்தமன் தருகிறான். எங்க அக்கா பிரசவ வேதனை நாடகத்தை ஆரம்பிச்சிட்டா. நேர்ல சொன்னபடி கொழந்தையை எடுத்துக்கிட்டுப் போக இன்னும் அரை நாழியிலே வர்ரேன் சாத்தன் அனுப்பிய ஓலையைப் படிக்கிறார். வளை : ஊர் சிரிக்க உடலெடுத்தேன். மனைவி வஞ்சகப் பேய்! மைத்துனன் நஞ்சு கொண்ட நாகம்! சாத்தானை அழையுங்கள்! நீதிபதி அழைக்க, சாத்தன் வருகிறான். வளை : வளர்த்தகடா மார்பில் பாய்ந்தது. ஒரு பாவமும் அறியாத என் உத்தம மனைவியை விரட்ட சதி செய்தாய். என் மகனுக்கு உலை வைத்து, உன் மகனை, நவகோடி நாயகனாக்கத் திட்ட மிட்டாய்! இது போதாதென்று வீட்டுக்கு தீயிட்டாய்! இல்லையா, சொல்! வளையாபதியின் வாய் பொய் பேசி அறியாது என்றாவது மிஞ்சட்டும் உண்மையைச் சொல். சாத்தன் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக் கொள்கிறான். வளை : உன் சதியை அறியாது மதியிழந்தேன்! நீதிபதி அவர்களே! என்னைத் தண்டியுங்கள். அக்கிரமக்காரருக்கு அடைக்கல மளித்த என்னைத் தண்டியுங்கள்! அநீதிக்கு ஆதரவு தந்த என்னைத் தண்டியுங்கள்...! நீதி : பதறாதீர்! நீதி நின்று வெல்லும் உத்தமா, வளையாபதி குற்ற மற்றவர். இந்த வழக்கு இரண்டு பெண்டாட்டிக்காரன், திண் டாட்டத்தின் விளைவு! சுந்தரியைத் தண்டிக்கும் பொறுப்பை வளையாபதிக்கே விட்டு விடுகிறேன். சாத்தானையும், அல்லி யையும் செய்த குற்றங்களுக்காக நாடு கடத்த மாட்சிமை தாங்கிய மன்னர்பிரான் பெயரால் ஆணை யிடுகிறேன். நீதி வென்றது! மன்றம் கலைகிறது! வளையாபதி, சத்யவதி உத்தமன் ஒன்று சேருகிறார்கள். சுந்தரியை மன்னித்து, ஏற்றுக் கொள்ளும்படி வளையாபதியிடம் கேட்டுக் கொள்கிறாள் சத்யவதி. ஆனால் அதற்குள் வழக்கு மன்றத்தில் நடந்த விவரம் அறிந்து விஷமருந்தி விடுகிறாள். எல்லாரும் அவளிடம் ஓடி வருகிறார்கள். தன்னை மன்னித்து விடும்படி கேட்டபடி உயிர் விடுகிறாள் சுந்தரி. உத்தமபுத்திரன் வளையாபதியின் மாளிகை. உத்தமன் பள்ளியிலிருந்து வராதது பற்றி சத்யவதியிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைகிறான் உத்தமன். உத் : அப்பா! பள்ளியில் நடந்த நேர்மை போட்டியில் எனக்குப் பரிசளித்தார்கள். வளை : மனித தர்மத்தை நிலை நாட்டும் உன் போன்ற உத்தம புத்திரர்களே நாட்டுக்குத் தேவை. சத் : தங்களைப் போன்ற வளையாத வீரர்கள். வளை : உன் போன்ற தர்ம தேவதைக்கு வளைந்து விடுகின்றனர்! எல்லாரும் மகிழ்ச்சி பொங்க சிரிக்கிறார்கள்.  5. பாண்டியன் பரிசு திரைப்படத் தொடக்கவிழா பாண்டியன் பரிசு படத்தை எடுப்பதென முடிவுசெய்து, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் உறுதி செய்யப்பட்டனர். தியாகராயர் நகர், ராமன்தெரு, இல்லத்துக்கு வருவதற்குமுன் தேனாம்பேட்டை போய தெருவிலுள்ள நடிகவேள் எம்.ஆர். ராதாவின் வீட்டுக்கு எதிர்ப்புறமிருந்த ஒரு கட்டடத்தில் பாவேந்தர் பட நிறுவனம் இயங்கி வந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர், புகழ்பெற்ற முன்னாள் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கோட்னீ, அவரது துணைவியார் கமலா கோட்னீ, படத் தொடக்க விழாவைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்பது அவர் பெரு விருப்பமாக இருந்தது. ஓய்வு ஒழிச்சலில்லாமல் நாட்டு நலப் பணியிலேயே ஈடுபட் டிருந்த, அந்நாள் முதல்வர் காமராஜர் அவர்களுடைய தேதி கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குத் தக்காரைப் பிடித்து எப்படியாவது காமராஜரை அழைத்துவிடவேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பெரிதும் முயற்சி செய்தார். அந்நாளில் பழைய ஜடி இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திவந்த ஜடி பரமசிவம் என்பவர் பாவேந்தருக்குத் தொடர்புடையவராக இருந்தார். அவர், நான் எப்படியும் காமராஜரிடம் தேதி வாங்கி விடுகிறேன் அய்யா என்று உறுதி கூறினார். உடனே பாவேந்தர், அதற்கு என்ன செலவானாலும் சரி; உடனே ஏற்பாடு செய் என்றார். இந்த ஜடி பரமசிவம் அறிவியக்கத் தலைவர் பெரியார் முதல் அனைத்துப் பகுத்தறிவு இயக்கத் தலைவர்களுக்கும், நீதிக்கட்சி தலைவர்களுக்கும் நெருக்கமானவர். அந்நாளில் இவர் அலுவலகம் இப்போது பாரதி சாலை என்று அழைக்கப்படுகிற பைக்கிராப்ட் சாலையில் கடற்கரையோர விளையாட்டுத் திடல் அருகில் இயங்கி வந்தது. இவருடைய அன்புக்குரிய இளவயதுத் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் இளந்தமிழன் பத்திரிகை ஆசிரியரும், சிறந்த தமிழறிஞருமான தி.வ. மெய்கண்டாரும் ஒருவர். காமராஜரின் பயணத்திட்டத்தை அறிந்துவந்த பரமசிவம் பாவேந்தரிடம், அய்யா! காமராஜர் இரண்டொரு நாளில் விழுப்புரம் கூட்டத்தில் பேசவிருக்கிறார். நான் அங்கேயே சென்று ஒப்புதல் பெற்று வந்துவிடுகிறேன் எனத் தெரிவித்தார். பாவேந்தரும் வேண்டிய பணத்தைக் கொடுத்து உடனே சென்றுவர இசைவளித்தார். பரமசிவம், காமராஜரின் பயணத் திட்டங்களின்படி அவரைத் தொடர்ந்து வாங்கி வந்துவிட்டார். இச் செய்தியையறிந்த பாவேந்தர் மட்டில்லாத மகிழ்ச்சியை அடைந்தார். குறிப்பிட்ட நாளில், திரைப்படத் தொடக்கவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கதாநாயகன் சிவாஜிகணேசனும், கதாநாயகி சரோஜா தேவியும், நடிகவேள் எம்.ஆர். ராதாவும் மற்றும் படத்துக்கு ஒப்பந்தமான பிற நடிகர், நடிகையரும் திரையுலகப் பெருமக்களும் பெருந்திரளாக வந்திருந்தார்கள். அப்போதைய சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர். சந்திரன், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் முருகதாசா, பாவேந்தரின் மகன் மன்னர் மன்னன், அவரது இரண்டாவது மாப்பிள்ளை தண்டபாணி ஆகியோருடன் நானும் வாயிலில் நின்று வருகை தந்தோரை வரவேற்கும் பேறு பெற்றேன். எங்கள் பட நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக அந்நாள் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் சாந்தாமியான் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தப் படத் தொடக்கவிழாவில் அவர் எடுத்த படங்களெல்லாம் பத்திரமாக, படநிறுவனத்தில் தொகுத்து வைக்கப்பட்டிருந்தது. அப் படங்கள் பலவற்றில் காமராஜர் போன்றோருடன் நானும் இருந்த படங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. காமராஜர் அவர்கள் குத்துவிளக்கேற்றிப் படத்தைத் தொடக்கி வைத்தார்கள். கோலாகலமாக நடந்த அந்த விழா என்றும் நினைத்து மகிழத்தக்க விழாவாக அமைந்திருந்தது. - நூல்: நினைவலைகளில் பாவேந்தர், ஆசிரியர் க. பொன்னடியான், வெளியீடு விகடன் பிரசுரம், திசம்பர் 2008.  பாரதியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படக் காட்சி அமைப்பு: 7. மகாகவி பாரதியார் வரலாறு 1. எட்டியாபுரம் 1. பாரதிதாசன் குழுவினர் - கமில் சுவலபில் குழுவினர் எட்டியாபுரம் அரண்மனையைப் பார்க்கிறார்கள். 2. பாரதி தொடக்க காலத்து எட்டியாபுரத்து மன்னரின் உருவப் படம், விளக்கம், 3. தர்பார் காட்சி மேற்படியூரில் சின்னசாமி ஐயர் வீடு 4. சின்னசாமி ஐயர், அதாவது பாரதி பிறந்த வீடு 5. பாரதிதாசன் பேச்சு; பாரதி பிறப்பிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி அடங்கி யிருக்கிறது *fÄš : அதென்ன? 2. கதைத் தொடக்கம் 6. சின்னசாமி ஐயர் வீட்டுத் தெருப்புறம் சொந்தக்காரர், ஆடவர் சிலர் கவலையுடன் உலாவுகின்றார்கள், அப்பக்கம் முத்துசாமி ஐயர் போகிறார், அவரை நோக்கிச் சின்னசாமி ஐயரின் சொந்தக்காரராகிய சாம்பசிவ ஐயர் அவசரமா? நீங்க சொன்னமாதிரி தான் வேட்டைக்காரரும் சொன்னார் என்கிறார். முத்துசாமி ஐயர் : நாந்தான் சொன்னேனே, சிங்கந்தான் (போகிறார்) சாம்பசிவ ஐயர் : நீங்க நல்லா கவனிச்சிங்களோண்ணேன். முத்துசாமி ஐயர் : பார்த்துத்தான் சொல்றேண்ணேன். (அவசரமாய்ப் போய்விடுகின்றார்) 7. இந்தச் சுருக்கமான உரையாடலைக் கேட்டிருந்த ஐயாசாமி வேட்டைக்காரர் பரபரப்புடன் தம் நண்பரை நோக்கி ஓடுகின்றார். 8. அவருடன் பல நண்பர்கள் கூடிவிடுகின்றார்கள். ஐயாசாமி தன் துப்பாக்கியுடன் நண்பர்களை உடனழைத்துக் கொண்டு ஓடுகின்றார். 9. ஐயாசாமி: நரி சுடுவதற்கு மருந்து ரவை கிடித்து வைத் திருந்தேன். அது அப்படியே கிடந்துவிட்டது. (ஓட்டம்) 10. ஐயாசாமி, குதிரையை இழுக்க வெடி கிளம்பிவிடுகின்றது. அது முன்னே ஓடிக்கொண்டிருந்த முருகன் காலில் பட்டுவிட, அதை முருகன் துடைத்துவிட்டு சிங்கம் சுட இந்தத் துப்பாக்கியா போதும்? (ஓடிக் கொண்டே) இல்லை இல்லை அரசரிடம் நறுக்குப் போடும் துப்பாக்கி இருக்கு. அதுக்குத்தானே இப்ப போறோம். (ஓடுகின்றார்கள்) அரண்மனை 11. அரசரின் உருவப்படம் உயிர்பெறுகின்றது. அரசர், பிரதானிகள் புலவர் உட்படக் கொலுவில் காட்சியளிக்கிறார். 12. ஐயாசாமி காட்டில் சிங்கம் வந்திருப்பது தெரிவிக்கிறான். விரைவில் நறுக்குப் போட்டு அடிக்கும் துப்பாக்கியைக் கேட்கிறான். அரசர் (வியப்புடன்) தென்னாட்டில் சிங்கம் இப்போது ஏது என்கிறார். புலவர் I : இப்போது எங்கே இருக்கிறது? ஐயா : ஏலமலைக் காட்டு வட்டாரத்திலே புலவர் : நீர் பார்த்தீரா? ஐயா : அதோ - ஆட்கள் பார்த்துவிட்டு வந்தார்கள். (வெளியில் ஓடி ஒருவனை அழைத்து வருகிறான்) முருகன் : நம்ப வேலிக்குட்டை இருக்குது பாருங்க. அந்த வட்டாரம் அமளி குமளி படுதுங்க அரசன் : அவன் ஏலமலை என்றான். சரி நீ உன் கண்ணால் பார்த்தாயா? முருகன் : பார்க்காமலா? வெள்ளை வெளேருண்ணு இருக்கு துங்க. புலவர் II : சரியாய்ப் போயிற்று. இன்னும் யார் பார்த்தார்? அழை. மற்றொருவன் : (வந்து) சிங்கம் சுத்த கறுப்புங்க, நான் நேரே பார்த்தேன். மற்றொருவன் :அப்படியே கப்பு ஊதா நிறங்க. கண்ணு மாத்திரம் ஒரே கறுப்பு. புலவர் : மகராஜா, மதத் தலைவர்கள் கடவுளைக் கண்ட கதைதான். (சிரிப்பு) அரசன் : கண்டார்களாமே புலவர் : கண்டவர் விண்டிலர். கடவுளைக் கண்டிருந்தால் சொல்லி யிருக்கமாட்டார்களா? அரசன் : அரண்மனையிலேயே இத்தனைபொய்யா? அஞ்சா மல் புளுகுகிறார்கள். புலவர் : விண்டவர் கண்டிலர். இவர்கள் காணாதவர்களே. அரசன் : ஏன் ஐயாசாமி நீ பார்த்தாயா உன் கண்ணாலே? ஐயா : இல்லைங்க மகாராஜா. கேள்விதானுங்க. புலவர் : முதலில் உன்னிடம் சொன்னவன் யார்? ஐயா : (அதே நேரம் அங்கு வந்த முத்துசாமி ஐயர் சாம்பசிவ ஐயர்களைக் காட்டுகிறான்) இதோ - இவருதானுங்க. அரசன் : என்ன சொன்னார்? ஐயா : நீங்க சொல்லலே! வேட்டைக்காரர் சொன்னார். சிங்கந்தான் பார்த்தேன்னு. சாம்ப : அடடே அதுவா ... ... முத்துசாமி ஐயர் ஆண்பிள்ளைதான் பிறக்கும் என்றார். முத்து : ஆண்பிள்ளை பிறக்கப் போகிறது என்பதற்குச் சிங்கம் என்றார். நீங்கள் துப்பாக்கியோடு கிளம்பிவிட்டீர்களோ? ஐயர் : வேட்டைக்காரன் இண்ணிங்க. முத்து : அதுவா - இதோ இவர் பெயர் வேட்டைக்கார வீரமுத்து. சோதிடர்! இவரைச் சொன்னேன். 12. சோதிடர் என்ன பலன் சொன்னார்? வீரமுத்து : சின்னசாமி ஐயருக்குப் பிறக்க இருப்பது ஆண் பிள்ளை. முத்துசாமி : நானும் அப்படித்தான் கூறியிருக்கேன் மகாராஜா. இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். நாங்கள் இப்போது மகாராஜாவிடம் வந்தது. ஒரு முக்கிய வேலையாக. அரண்மனையின் தோட்டக் கிணற்றில் நம் சின்ன சாமி ஐயர் விசிறி ஏற்றம் போட்டிருக்கிறார். மகாராஜா வருகை தந்து திறப்பு விழா நடத்தவேண்டும். மகாராஜாவுக்குக் கூடாரம் அடித்தாய்விட்டது. எல்லாம் சித்தம். அரசன் : போக வேண்டியதுதான் (எழுந்திருக்கிறார்) தோட்டம் 13. கூடாரம் அடித்திருக்கிறது. அரசர் புலவர் பிரதானிகள் வருகிறார் கள். அரசருக்கு வெண்சாமரம் வீசுகிறார்கள் இரு பெண்கள். சின்னசாமி ஐயர்: (அரசர்க்கு மாலைசூட்டுகிறார்) மகாராஜா இந்த விசிறி ஏற்றத்தைத் தொடங்கி வைத்தருள வேண்டுகிறேன். (அரசர் கிணற்றை ஒட்டி எழுந்துள்ள பெருந்தூணில் பொருத்தப் பட்டிருக்கும் விசிறியின் சுருக்குக் கயிற்றை இழுக்கிறார். விசிறி இலை காற்றில் விர் என்று சுற்றுகிறது.) அனைவரும் தண்ணீர் மேல்வருவதை நோக்கு கிறார்கள். சால் தண்ணீரை மேல் கொண்டுவந்து சாய்க்கிறது. புதுப்புனல் பிறந்தது என்கிறார் ஒருவர். அதே நேரத்தில் கணேச ஐயர், சின்னசாமி ஐயருக்குத் தலைச்சன் ஆண்குழந்தை பிறந்தது என்று கூறிக் கற்கண்டுத் தட்டை அரசரிடம் நீட்டுகின்றார். அரசர் : நம்மையெல்லாம் சின்னசாமி ஐயர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்துவிட்டார். சோதிடரே, என்ன நக்ஷத்ரம்? சோதிடர் : மூல நக்ஷத்திரம் நல்லவேளை. அரசர் : புலவரே, என்ன எண்ணுகிறீர்கள்? புலவர் : பாட்டு கட்டளைக்கலித்துறை ஆயிரத் தெண்ணுற்றெண் பத்திரண் டாண்டுநற் கார்த்திகையில் தோயுறு மூலத்துத் தோற்றுவித் தார்சின்ன சாமிஐயர் பாயுறு கங்கையும் பிள்ளையும் எட்டப்ப பார்த்திபஉன் தாயகத்துக் கொன்று தாரணிக் கொன்றென்று சாற்றிடவே அரசன் : (மகிழ்ச்சியோடு) மூல நக்ஷத்திரத்தில் சின்னசாமி ஐயர் தோற்றுவித்தார். என்னென்ன? புலவர் : கங்கையும் பிள்ளையும் அரசர் : கங்கையென்றது தண்ணீரை, பிள்ளை என்றது? புலவர் : சின்னசாமி ஐயருக்கு இப்போது தோன்றிய குழந்தையை. அரசர் : கங்கையும் பிள்ளையும் என்ற சொல் பொருத்தத் தினாலே, கங்கையின் பிள்ளை சுப்பிரமணிய னெனக் கொள்ளலாமே. சின்னசாமி:அப்படிக் கொள்வதுதான் பொருத்தம் பிறந்துள்ள பிள்ளைக்குப் பெயரே சுப்பிரமணியன்தானே? ஏன்? என் தந்தை பெயரும் சுப்பிரமணியன். புலவர் 2 : கங்கையின் பிள்ளை காங்கேயன் என்பது இன்னும் பொருத்தம். அரசர் : அது இங்கு பொருத்தமில்லை. இப்போது பிள் ளைக்குப் பெயரும் குறிப்பிட்டுவிட்டார் புலவர். புலவர் 2 : அந்தப் பிள்ளையின் எதிர்காலச் சிறப்பையும் புலவர் விளக்கியது குறிப்பிடத்தக்கது. பாயுறு கங்கையும் பிள்ளையும் தாயகத்துக் கொன்று தாரணிக் கொன்றென்று என்றார். தண்ணீர் தாயகத்துக்கு அதாவது எட்டியாபுரத் துக்கு, பிள்ளை தாரணிக்கு, உலகம் முன்னேறுவதற்காக. அரசர் : நன்று புலவரே, சின்னசாமி ஐயர் தந்தை பெயர் சுப்பிர மணிய ஐயரா? சின்ன : ஆம். அரசர் : சுப்பையா என்றீர்களே? சின்ன : அது செல்வப் பெயர் அரசர் : அப்படியானால் பிறந்த பையனுக்கும் செல்வப் பெயர் சுப்பையாதானே? சின்ன : ஆம் மகாராஜா அரசர் : அடுத்தபடி. புலவர் பாடுகின்றீரா? புலவர் : ஆம் மகாராஜா. பாட்டு: கட்டளைக் கலித்துறை அமுதுக்குப் பாற் கடல் ஆட்சிக் கெட்டப்ப அதிபர் எழில் சமையத்துக் குச்சைவம் தானத்துக் கேஒரு பாரி என்னத் தமிழுக்குச் சுப்பைய னைத்தந்த னர்சின்ன சாமி ஐயர் கமழ்கின்ற தின்றைக்கே நாளை வரும்புகழ் சாற்றிடவே. அரசர் : தமிழுக்கு ஒரு சுப்பையனைத தந்தனர் சின்னசாமி ஐயர், கமழ்கின்றது இன்றைக்கே நாளை வரும் புகழ், மிக நன்று. ஏன் புலவரே, பாட்டன்பேர் பிள்ளைக்கு வைக்க வேண்டும் என்பது பழய வழக்கமா? புலவர் 3 : பாட்டு நாட்டன்பும் நல்ல தமிழன்பும் முத்தமிழ் நாவலரின் மாட்டன்பும் பண்டைய மாண்பினில் அன்புமே வாய்ந்ததனால் ஈட்டன்பினால் நல்கும் எட்டப்ப னாகிய எம்மிறையே பாட்டன்பேர் பேரன்பேர் என்பது தான்நம் பழவழக்கே அரசர் : ஓகோ- பிறர் : ஆகா! அரசர் : விசிறி ஏற்றத் திறப்புவிழாவும் சுப்பிரமணியன் பிறப்பு விழாவும் நிறைவேறின. வாழ்க தமிழ்! வாழ்க சுப்பிரமணியன்! 14. சின்னசாமி ஐயர் வீடு அன்னை மற்றும் மகளிர் கூட்டம் சூழ்ந்திருக்க, மாதர் சிலர் தொட்டிலில் பிள்ளையைத் தாலாட்டுகிறார்கள். வாழ்த்துப்பாட்டு பொன்னுருக்கிக் கன்னான் அச்சில் வார்த்து - மேலும் புத்துயிரும் நல்லுணர்வும் சேர்த்துத் தென்னாடு பெற்றெடுத்த சின்னையா - எம் செங்கரும்பே வாழியவே என்னையா. கன்னலின் சாறெடுத்துக் காய்ச்சி - ஏலக் காய்நறுக்கிப் பன்னீரும் பாய்ச்சி - இந்தப் பொன்னூழி எமக்களித்த கற்கண்டு - சிங்கப் போத்தேநீ வாழியவே பல்லாண்டு தாலாட்டு கன்னித்தமிழ்க் காவலனே காவியத்து நாவலனே சின்னமணிக் கண்ணுறங்கு தாலேலோ சீரோங்கும் பாவலனே தாலேலோ மன்னவன் எட்டப்ப வள்ளலுமி ருக்கையிலே என்னகுறை இங்குனக்குத் தாலேலோ இளவீரா கண்ணுறங்கு தாலேலோ. 15. மற்றொருபுறம் அன்னை ஒருபுறம், தந்தை ஒருபுறம், அமர்ந்திருக் கிறார்கள். குழந்தையைக் குதிரை ஏற்றிப் பாடுகிறான் அம்மான். பாட்டு எங்கள் குதிரை தங்கக் குதிரை ஏறித் தம்பி ஓட்டும் குதிரை செங்கையி லேகடி வாளம் பிடித்துத் திக்கெட்டும் சுற்றி வரும் குதிரை அது (எங்கள்) துள்ளிப் பறக்கும் வெள்ளைக் குதிரை தூரத் தம்பி ஓட்டும் குதிரை கொள்ளுக் கட்டி நல்ல புல்லையும் போட்டால் கொண்டாட்டத்தால் ஓடும் குதிரை (எங்கள்) 16. அன்னையும் பிள்ளையும் அன்னை ஒரு விசிப் பலகையில் படுத்தபடி இருக் கிறாள். பக்கத்தில் (பெண்) குழந்தை படுத்திருக்கிறது. அண்டையில் சுப்பையா அவள் கைப்புறத்தில் நிற்கிறான். சொந்தக்காரி ஒருத்தி, உனக்கு இப்படி இருக்கிறது உடம்பு. அவர் என்ன என்றுகூட எட்டிப்பார்க்க வில்லை என்கிறாள். அதற்கு அன்னை. எல்லாரும் மிஷினில் சாமான்களைச் செய்வார்கள். எங்கள் ஐயர் மிஷினையே செய்ய முயற்சி செய்கிறார். என்கிறாள். மருத்துவர் அங்கு வருகிறார் கைபார்க்கிறார். மருந்து எழுதிக் கொடுத்து இதை ஐந்து நாள் சாப்பிடுங்கள். உடம்பு நலமாகிவிடும் என்கிறார். போய் விடுகிறார் சொந்தக்காரி உனக்கு உடம்பு நலமாய் விடும் நீ ஏன் அச்சப்படுகிறாய்? அன்னை : என்நிலை உனக்குத் தெரியாது. இந்த மருந்தை வாங்கி உண்டால் குணமாய்விடும். உண்மைதான். மருந்து வாங்க வேண்டுமே? சொந்தக்காரி : அதற்கும் பஞ்சமா- அன்னை : ஐயர் பிறவிப் பணக்காரர். ஆனால் எல்லாம் தீர்ந்து விட்டதே. சொந்தக்காரி : எப்படி? அன்னை : அத்தனையும் விழுங்கிவிட்டது இரும்பு சொந்தக்காரி : மருந்துக்குமில்லை? அன்னை : துரும்பு? சுப்பையன் : பாட்டி நீங்கள் போய் அப்பாவிடம் மருந்து வாங்கப் பணம் கேட்டு வாங்கி வாருங்கள் சொந்தக்காரி : ஏன் நீ போய்க் கேட்பது தானே, அப்பாதானே! 17. அரண்மனையில் சின்னசாமி ஐயர் உட்படப் புலவர் பலர் இராமாயணச் செய்யுள் பற்றி ஆராய்கின்றார்கள். மயிலின் முதற்குஞ்சுக்குத்தான் கொண்டை முளைக்கும் அதுபோல் மூத்தவனான இராமனுக்குத்தான் பட்டம் உரியது என்கிறாள் கைகேயி. இந்தச் செய்யுளின் உண்மைப்பொருளை விளக்குகிறார் சின்னசாமி ஐயர். அரசர் மகிழ்ச்சி அடைகிறார். அரசர், சுப்பையா நலம்பற்றிக் கேட்கிறார். அவனைத் தமிழில் வல்லவனாக்க வேண்டும் என்று அரசர் சொல்லச் சின்னசாமி ஐயர், என் ஆசை அவன் ஆங்கிலத்தில் வல்லவனாகி, பெரிய அலுவலில் அமரவேண்டும் என்பதுதான் என்கிறார். என் மகனுக்கு இப்போதே எனக்கு ஒழிந்த நேரத்தில் ஆங்கில எழுத்தைச் சொல்லிக் கொடுத்து வருகிறேன் என்கிறார். 18. தங்கையும் அண்ணனும் அண்ணன் : எப்படி அம்மா இருக்கு உடம்பு? தங்கை : மார்பில் வலி. இரத்தக் கொதிப்பின் அளவு கொஞ்சம் அதிகமாய் இருக்கிறதென்று மருத்துவர் மருந்து எழுதிக்கொடுத்தார். அண்ணன் : வாங்க வேண்டியது தானே? தங்கை : வாங்க வேண்டியதுதான் அண்ணா. அண்ணன் : பணமில்லையா? தங்கை : ஐயர் வருவார் அண்ணா. அண்ணன் : இதோ அம்மா பத்து ரூபாயை வைச்சிக்க, உடனே மருந்து வாங்கிச் சாப்பிடம்மா. குழந்தைகள் ரெண்டை யும் தெருவுலே விட்டுடாதே. தங்கை : அதுக்குத்தான் பார்க்கிறேன். இன்ணொண்ணு எம் மனசை வாட்டுது அண்ணா. பெரிய பையன் நல்ல புத்தி சாலி அதை ஐயர் கெடுத்துவிடுவார் போல் இருக்கிறது. என்னண்ணு கேளுங்க. இங்கிலீஷ் படிக்கச்சொல்றார் இப்போதே. பிள்ளைக்கு அஞ்சு வயசாயிற்றே தமிழ் ஆச்சாரப்படி தமிழ் எழுத்தை ஆசிரியரைக் கொண்டு தொடங்க வேண்டாமா? (அதே நேரத்தில் சின்னசாமி ஐயர் வருகிறார்) அண்ணன் : பட்டறைக்கார ஐயரா வாங்க. லட்சுமி உடல்நிலை எப்படிண்ணு கவனிச்சிங்களோ. இரத்தக் கொதிப்பு அதிகமாய் இருக்குண்ணு மருத்துவர் சொல்லி மருந்தும் எழுதிக் குடுத்துட்டுப் போயிருக்கார். லட்சுமிக்கு மார்பு வலியும் அதிகப்பட்டு இருக்கு. சின்னசாமி : எனக்கு மனையாள் உனக்கு தங்கையில்லையோ? அண்ணன் : பத்து ரூபாய் இருந்தது குடுத்தேன். மருந்து வாங்கி வர வேண்டியதுதான் பாக்கி. அது எனக்கு தெரிஞ்சுதுண்ணா இந்நேரம் வாங்கி வந்திருப்பேன். இன்ணொண்ணு - என்னாண்ணு கேளு. சுப்பையனுக்கு இங்கிலீசு சொல்லிக் கொடுக்கிறீர். நானும் பார்த்தேன். அவனுக்கு அஞ்சு வயசாச்சி. பள்ளியிலே வைச்சி படிப்பு ஆரம்பிக்க வேண்டாமோ? சின்ன சேதியில்லே லட்சுமிக்கு ஏற்பட்டிருக்கும் நோய் இந்த மன நோய்தான். லட்சுமி சாகப்பொழைக்கக் கிடக்கிறாள். பையனே பள்ளியிலே வைச்சுக் கண்ணாலே பாத்துட்டு சாகட்டும். (கண்ணீரைத் துடைத்துக்கொண்டே) இதைவிட உம்மிடம் பேச எனக்கு பிரியமில்லை (எழுந்து போகிறார் அண்ணன்) சின்னசாமி : அப்படியா? லட்சுமி இன்றைக்குத்தான் நாள் நன்றா இருக்கிறது வாத்தியாரிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன். சுவடி துவங்க. செலவு புடிக்குமே. என்ன பண்ணுவேன். கையில் காசில்லையே உனக்கு மருந்தும் அவசரமா வாங்கி ஆகணும். லட்சுமி : மருந்து நாளைக்கு, சுவடி துவக்குவதைக் கவனியுங்கள். சின்னசாமி : அப்படியா? சரி லட்சுமி : ஒரு சேதி கேட்கிறேன். கோவிச்சுக்காதீங்க. இங்கிலீஷிலா? சின்னசாமி : இல்லே இல்லே. இல்லே தமிழில்தான் லட்சுமி (லட்சுமி தன்னிடம் மருந்து வாங்க அண்ணன் கொடுத்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுக்க சின்னசாமி ஐயர் பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க வெளியிற் செல்லுகின்றார்.) 19. ஆசிரியர் - மாணவர் ஊர்வலம் ஆடவர் மகளிர் சூழ்ந்துவர, வாத்தியம் முழங்க அரண் மனையின் குதிரை வண்டியில் ஆசிரியரும் சுப்பையனும் அமர்ந் திருக்கிறார்கள். ஊர்வலம் செல்லுகின்றது. மக்கள் மகிழச்சியுடன் காணுகிறார்கள் தெருத்தோறும். 20. சின்னசாமி ஐயர் வீடு ஐந்து திரிக் குத்து விளக்கு சுடர் விட்டெரிகின்றது. எதிரில் ஆசிரியர் அமர்ந்து மாணவனுக்குச் சுவடி துவக்கு கின்றார். ஆசிரியர் : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு, சொல்லப்பா. அகர முதல சுப்பையா : அகரமுதல ஆசிரியர் : எழுத்தெல்லாம் ஆதி சுப்பையா : எழுத்தெல்லாம் ஆதி ஆசிரியர் : பகவன் முதற்றே உலகு சுப்பையா : பகவன் முதற்றே உலகு ஆசிரியர் : (ஓலைச்சுவடியைக் காட்டி) அ சுப்பையா : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ ஆசிரியர் : இன்னொரு முறை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ சுப்பையா : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ மகளிர் நடுவில் உட்கார்ந்திருக்கும் இலட்சுமி அம்மா முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகின்றது. ஆனந்தக் கண்ணீர் அரும்புகின்றது. (அரசர் பேரால் நூறு ரூபாய் மொய் எழுதப்படுகிறது) (உறவினர்களும் பலவாறு) சுப்பையன் குருவுக்குத் தக்ஷிணை வைத்துக் காலில் விழு கின்றான். மற்றும் தந்தை தாயார்களின் காலில் விழுகின்றான். தாம்பூலம் வழங்குகிறார்கள். பள்ளி மாணவர்க்கு அவல் கடலை பழம் வழங்குகிறார்கள். 21. கூடத்தில் லட்சுமியின் அண்ணனும் பிற சொந்தக்காரரும் சின்னசாமி ஐயரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவப் புலவர் வருகின்றார். மருத்துவர் : என்ன, அம்மாவுக்கு எப்படி இருக்கிறது. உடம்பு? மருந்து கொடுத்தீர்களா? சின்னசாமி : இதோ இப்போது தான் பையனுக்குச் சுவடி விழா நடந்து முடிந்தது. இருங்க. (சின்னசாமி ஐயர் மருத்துவருக்குத் தாம்பூலம் பழம் கொண்டு வர உள்ளே ஒரு புறம் செல்கிறார்) 21. அறையில் லட்சுமி : இன்னொரு தரம் சொல்லு தம்பி சுப்பையா : அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (தாய் தன் பிள்ளையைப் படுத்தபடி அணைத்துக் கொள்கிறாள். மார்பு வலியால் துடித்துப் புரளுகிறாள். சின்னசாமி ஐயரும் அண்ணனும் மருத்துவரும் உள்ளே வருகிறார்கள்.) சுப்பையா : அம்மா தமிழ் கேட்டார்கள் சொன்னேன். இதோ. சின்னசாமி : லட்சுமி லட்சுமி (லட்சுமி திரும்பி கண்விழித்துக் கடைசி முறையாகக் கூறுகின்றாள்) லட்சுமி : தமிழ் (உயிர் போய் விடுகின்றது) சின்னசாமி : தமிழே சொல்லிக் கொடுக்கிறேன் லட்சுமி உன் மகனுக்கு! லட்சுமி - லட்சுமி! ஐயோ போய்விட்டாள்! (மற்றும் துன்ப முழக்கம்) 22. சின்னசாமி ஐயர் வீடு (அதிகாலை. சுப்பையன் கையில் ஓலைச் சுவடியும் தடுக்கும் எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகின்றான். தங்கை லட்சுமியும் கூடவர முயலு கிறாள்.) சுப்பையன் : லட்சுமி நீ வராதே. நீ சின்ன பொண்ணு. வந்தா அப்பா திட்டுவார். (அதே நேரம் செல்லமையர் வருகிறார்) செல்லம் : என்னடா சுப்பையா அம்மாவை அனுப்பி ரெண்டு நாள் ஆகலே பள்ளிக்குக் கிளம்பிட்டே, சுப்பையா : அம்மா பள்ளிக் கூடத்திலே இருக்கறாங்க மாமா செல்லம் : அதென்னப்பா சுப்பையா : அங்கே தமிழ் இருக்கேல்யோ அப்படிண்ணா அம்மா அங்கேதான் இருப்பாங்க செல்லம் : (வியப்பு) லட்சுமி நீ இரு. (கைபிடித்து அழைத்துக் கொண்டே உள்ளே போகிறார் செல்லமையர்.) செல்லம் : என்ன மாமா ஒங்க பையன் பள்ளிக்குக் கௌம்பிட்டான். அவன் சொல்றான். பள்ளிக்கூடத்தில தமிழ் இருக்குது. தமிழ் உள்ள எடத்தில் எங்க அம்மா இருப்பாங்க. எப்படி? சின்ன : அப்படியா? தனியாகப் போவானா நீ கொண்டு போய் விட்டுவிட்டு வந்தா தேவலை. (செல்லம் பையனைப் பின் தொடர்கின்றார்.) 23. வழியில் தெருச்சண்டை ஜயம்மா : அதெல்லாம் ஒன்னே கேக்லே ஏ மூட்டுக்கோழி ஓ மூட்லே வந்து அடைஞ்சுதா இல்லியா. சீரங்கம் : நாஞ் சொல்றத்தே கேளு, ஆடாதே. ஜயம்மா : நாந் தேவடியாதான்டீ. ஏமூட்டுக் கோழி இட்ட முட்டையே குடுக்கிறியா இல்லியா? சீரங்கம் : எங்கூட்டுக்கு வரவுமில்லே, முட்டை இடவுமில்லே ஜயம்மா : என்னைக்கும்? சீரங்கம் : இன்னையோட மூணு நாளா? ஜயம்மா : அப்ப எங்கே போச்சி, எவ எடுத்தா? தெரியணு மில்லே சீரங்கம் : படபடண்ணு பேசாதே கேளு. அது அதோ அங்க வைக்கப் போர்லே அடையும், அங்க ஆர அமர தேடிப்பாரு. 24. வைக்கோல் போரில் தேடுகிறாள் அதே நேரம் அங்கு சுப்பையாவும் மாமாவும் வருகின்றார்கள். வைக்கோற் போரில் மூன்று முட்டைகள் காணப்படுகின்றன. சுப்பையா : மாமா, அது அஃகன்னா (என்கிறான், மாமா வியப்படைகிறார்) முட்டைக்கு உடையவள் : ஏலேலோ சிங்கம் பொருள் எங்கே போனாலும் எம்பொருள் தான். 25. மற்றும் வழியில் மாமா : மூன்று முட்டையும் சேர்ந்து அஃகன்னா மாதரி இருந்தது. ஏன் சுப்பையா அ எப்படி இருக்கும்? சுப்பையா : ஒரு தவளை அதுக்குப் பக்கத்தில் ஒரு தடி நட்டிருக்கும். மாமா : ஓகோ ஓகோ... ஆ? சுப்பையா : அந்தத் தடியிலே ஒரு வளையம் தொங்கும். மாமா : நல்லா சொன்னடா நீ! அதோ பள்ளிக்கூடம் போ, பள்ளிக்கூடம் விடும்போது நானு வந்து அழைச்சிட்டுப் போறேன் நீ தனியே வராதே. சுப்பையா : தனியே வர்லே பசங்களோட சேர்ந்து வருவேனே மாமா : எதுக்கும் நானும் வருவேன் (போதல்) 26. அரண்மனையில் (அரசர் தனி அறை) புலவர்கள் வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத் தையும் ஒப்பு நோக்கித்தர்க்கம் புரிகின்றார்கள். வால்மீகி ராமாயணத்தைச் சொல்லுக்குச் சொல் தமிழில் மொழி பெயர்க்கவில்லை. கருத்தைக் கூடக் கம்பர் திருத்தியமைத்திருக்கிறார். மிதிலை அரண்மனையிற் புகுந்த இராமன் சீதையைக் காணு கின்றான். காதல் கொள்ளுகின்றான். சீதையும் அவ்வாறே அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது காண்க. இது வால்மீகி சொல்லாதது. பிறவும் வாதிக்கப்படுகின்றது (அங்குச் சின்னசாமி ஐயர் இல்லாதது பிரதாபத்துக்கு வருகிறது.) (சின்னசாமி ஐயர் வருகிறார்) அரசர் : சுப்பையன் எப்படி? சின்னசாமி : அவன், இறந்த தாயை இன்னும் மறக்கவில்லை. வயதும் எட்டுக்கு மேல் ஆகிறது. நேற்று தன் தங்கையுடனும் தன் மாமனுடனும் வீட்டுக் கொல்லைக்குள் சென்றான். அங்கு முல்லைப் பருவ அரும்பு கண்டான். அவன் சொன்னானாம் என் சின்ன வயதில் எனக்குச் சுவடி துவங்கினார்கள் அப்போது அகர முதல என்னும் திருக்குறள் பாட்டை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அதைத் திரும்ப என் தாயார் படுக்கையில் கிடந்தபடி சொல்லச் சொன்னார் கள். சொன்னேன். அவர்கள் சிரித்தது இந்த முல்லை சிரித்தது போல் இருந்தது என்றானாம். (எல்லாரும் கையொலி செய்கிறார்கள்) அனைவரும் : என்ன உவமை! அரசர் : எட்டு வயதில் எட்டாத இடத்தை எட்டிவிட்டான் சுப்பையன். இதில் இரங்கத் தக்க ஒரு சேதி என்ன என்றால் அன்னை நினைவு அவனை விட்டு அகல வில்லை. சின்னசாமி ஐயரே, சுப்பையனுக்குவேறு ஓர் அன்னையை ஏற்பாடு செய்ய வேண்டும். காலம் தாழ்க்க வேண்டாம். சின்னசாமி : அரசரிடம் நானே விண்ணப்பிக்க எண்ணினேன். என் உறவினரில் சந்திரசேகரையரின் மகளை எனக்குப் பெண் பார்த்திருக்கிறார்கள். அரசர் : உடனே திருமணத்தை முடிக்க வேண்டியதுதான். வேண்டியதை அரண்மனையில் பெற்றுக் கொள்ளும். 27. சுப்பையனும் எட்டப்ப மன்னரும் (உடனே ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்த சுப்பையன் தந்தை முதலியவர்கள் போனவுடன் அரசரிடம் வந்து ஒரு தாளைத் தருகின்றான்.) அரசர் : நீ எழுதியதா இது (வியப்பு) எங்கே பாடு! சுப்பையன் : (பாட்டு) வில்லுக்கு விஜயன் வேலுக்கு முருகன் சொல்லுக்கு நம்திரு வள்ளுவனார் - இந்தத் தொல்லுல கில் இவர்க் கேஇணை யார் கல்விக்கொரு கம்பன் கற்புக்குக் கண்ணகி நல்லகொடைக் கொருபாரி என்பார் - இந்த நானிலத்தே இவர்க்கே இணையார்? முத்துக்குத் தென்கடல் மூச்சுக்கு முத்தமிழ் கொத்துக்கு முல்லை சிறப்பென்பார் - இந்தக் கூற்றை மறுத் திடயார் பிறந்தார்? எய்த்தவர்க்குத் துணை எத்தருக்குப் பகை மெய்த்தவர் எட்டப்ப மன்னர் என்பார் - தமிழ் மேதைக்கு நானிலத்தே இணையார்? (அரசர் சுப்பையாவை வெகுவாகப் புகழ்ந்து வாழ்த்துக் கூறுகிறார்) அரசர் : இதில் மூச்சுக்கு முத்தமிழ் என்றது என்ன? சுப்பையா : தமிழரின் மூச்சுக்கே ஆதாரமானது தமிழ். தமிழ் இல்லை என்றால் தமிழன் வாழ்வே இல்லை என்பது என் கருத்து. அரசர் : ஆம் சுப்பையா, நான் எட்டயபுரத்தில் தமிழ்ப் புலவர் களையும் சேர்த்துத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்துத் தமிழ்வளர்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். நீ புலவர்களிடம் தமிழ் கற்றுக் கொள்வதுண்டா? சுப்பையா : புலவர் அடிக்கடி அரசவையில் தமிழ் ஆராய்வார்கள். நான் மறைந்திருந்து கேட்பதுண்டு; அல்லாமலும் என் தந்தையாரிடமும் புலவர்கள் இலக்கிய ஆராய்ச்சி செய்வார்கள், கேட்டுக் கொண்டிருப்பேன். என் தாத்தாவும் ஒரு தமிழ்ப் புலவர். அவரிடமும் கேட்டுக் கொள்வேன். அரசர் : அப்பா உனக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை? சுப்பையன் : நான் தமிழ் படிப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவர் எனக்கு ஆங்கிலந்தான் சொல்லிக் கொடுப்பார். அரசர் : அப்படியா. இந்தா, உன் செலவுக்கு வைத்துக் கொள். நிறைய எழுது. அடிக்கடி என்னிடம் காட்டு. போய் வா. 28. சின்னசாமி ஐயர் வீட்டில் புலவர் சிலர் இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு முலைசுரந்த அன்னையா? முன்நின் - நிலை விளம்பக் கொங்கை சுரந்த அருட் கோமகளா? சம்பந்தா இங்குயர்ந்தார் ஆர்சொல் எனக்கு ... என்ற சிவப்ரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளை ஆராய்கின்றார்கள். சுப்பையன் ஒருபுறம் உட்கார்ந்து இருக்கின்றான். திருஞானசம்பந்தருக்கு உமாதேவி ஓர் அன்னை, மங்கையர்க் கரசி ஓர் அன்னை. இருவரில் எந்த அன்னை சிறந்த அன்னை என்ற கேள்விக்கு. மங்கையர்க்கரசியே சிறந்த அன்னை என்பதை சுப்பையா உறுதிப்படுத்தியதை அவன் அறிவுடைமையைப் புலவர் வியந்து பேசுகிறார்கள். ஒரு புலவர் சுப்பையாவை நோக்கி வரப்போகும் உன் அன்னை சிறந்தவரா? இறந்த அன்னை சிறந்தவரா? என்று கேட்க வரப்போகும் என் சிற்றன்னையை நான் அறியேன். அவர்களிடமிருக்கும் சிறப்பை நான் அறியேன். நான் அறிந்த அன்னை, சிறந்த அன்னை என்றுதான் இப்போது சொல்ல முடியும் என்கிறான். அதே நேரத்தில் சின்னசாமி ஐயர் வருகிறார். சுப்பையன் நழுவி விடுகின்றான். சுப்பையனின் அன்னை பற்றிய தீர்ப்பை அப்பாவிடம் சொல்லு கிறார்கள். அப்பா காட்டிக் கொள்ளாமல் தம் திருமணத்தின் போதே சுப்பையனுக்கும் பூணுல் சடங்கையும் முடிக்க இருப்பதைக் தெரிவிக்கிறார். 29. சின்னசாமி ஐயர் வீடு சின்னசாமி ஐயர் - வள்ளியம்மை திருமணம் அதே நேரத்தில் சுப்பையன் பூணூல் கல்யாணம் நடைபெறு கின்றது. 30. திருமணத்திற்குப் பின் தனியிடம் சுப்பையனை நோக்கிப் புலவர் கேட்டார்; புலவர் : எந்த அன்னை சிறந்தவள்? இப்போது சொல் பார்க்கலாம். சுப்பையன் : என்ன புலவரே இறந்த அன்னையைவிட இருக்கும் அன்னையாரே சிறந்தவள் என்பதில் என்ன தடை? (போகிறார்கள்) 31. எட்டியாபுரத்தில் ஒரு குளக்கரை பெண்கள் துணி தப்புகிறார்கள். சிலர் உடம்பு தேய்த்துக் கொள்ளு கிறார்கள். ஒரு மங்கை முங்கி முழுகுகின்றாள். படித்துறையில் அமைந்த திண்ணைகளில் சுப்பையாவும் தோழர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். சுப்பையா பாடுகிறான் பாட்டு முங்கி முழுகிடும் பெண்ணணங்கே ஒரு முத்தமும் தாராயோ? (மற்றவர்கள் கைத்தாளம் போட சுப்பையா தொடர்ந்து பாடுகிறான்.) செங்கை இரண்டாலும் செவியை அடைத்துச் சேல்விழி இரண்டையும் நீரில் விடுத்து (முங்கி முழுகிடும்) தங்கச் சரிகைப்புடவை விலகாமல் தாமரை அரும்பு வெளியில் இலகாமல் திங்கள் முகமும் எள்ளுப்பூ நாசியும் தெரிய நிமிர்ந்து மறையக் குனிந்து (முங்கி) எல்லாரும் : முங்கி முழுகிடும் ... ... (அதே நேரத்தில் ஆறுமுகமும் அவிநாசிலிங்கமும் அங்கு வருகிறார்கள்) ஆறுமுகம் : பெண்டுகள் குளிக்கிறாங்க. கொளந்தாந் தொறை யிலே கூடிகிட்டுக் கேலியா பண்றிங்க காலி பசங்களா. அவிநாசி : (சுப்பையாவின் கையைப் பிடித்துக்கொண்டு) எந்தப் பயடா பாடுன பய? சுப்பையன் : இங்ஙனம் தங்கள் அன்புள்ள முத்துசாமிக் கவிராயர். அவிநாசி : அப்டிண்ணா? சுப்-தோழன் : அந்தப் பாட்டு முத்துசாமிக் கவிராயர் பாடியதாம். ஆறுமுகம் : அவுரு பாடினா, அதைக் கொளத்தாந் தொறையிலே பெண்டுகள் குளிக்கிற போதுதான் பாடுறதோண்ணேன். சுப்பையா : வேறு எங்கே பாடவேண்டும்? எப்போது பாட வேண்டும்? சொல்லுமே, அவிநாசி : ஒங்க அக்கா தங்கச்சி குளிக்கிற எடத்லே போய் பாடனும் சுப்பையா : அந்த இடந்தான் ஐயா இது ஆறுமுகம் : அப்படிண்ணா சரிதான் அவிநாசி : புத்திசாலித்தனமா பேசிபுட்டான் மக்கு. மக்கு மக்குன்னு நாலுதடவை சொல்லணும் இல்லாட்டி ஒதை. சுப்பையா : சரி எல்லாரும் நான் சொல்லுகிறபடி சொல்ல வேண்டும். (தோழர்கள் அனைவரும் வரிசையாக எழுந்து நிற்கிறார்கள்) சுப்பையா : ஆட்டம் எ மக்கு அச்சம் உ மக்கு ஓட்டம் எ மக்கு உதை உ மக்கு (உதைத்து விட்டு ஓடுகிறார்கள். இருவரும் நாணி நிற்கிறார்கள் மாதர் கண்டு சிரிக்கிறார்கள்.) 32. சுப்பையன் தோழருடன் ஒரு தோழன் அங்குக் கட்டி இருந்த விளம்பரப் பலகையைப் படிக்கிறான். தோழன் 1 : இங்கிலீஷ் மெடிஷன் விற்கப்படும் சுப்பையன் : தமிழர் மானத்தைக் கூட! (தோழர்கள் சிரிப்பு) தோழன் 2 : கள்ளுக்கடை - இது எப்படி சுப்பையன் : தூய தமிழ்! இனிப்பு இனிப்பு! 33. சின்னசாமி ஐயர் வீட்டில் (சொந்தக்காரி குப்பம்மாவும் சின்னசாமி ஐயர் இரண்டாம் மனைவி வள்ளியம்மையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். குப்பம்மா கையில் வைத்திருந்த குச்சியை வீசிக் கொண்டிருக்கிறாள். சின்னம்மா தன் முழங்கையிலிருக்கும் சிரங்கைப் புய்த்துக் கொண்டிருக்கிறாள். சுப்பையா வருவதையறியாத குப்பம்மாவின் குச்சி சுப்பையா மேல் படுகிறது.) சின்னம்மா : தம்பி, குப்பம்மாவைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு! சுப்பையா : குரங்கு சேஷ்டைக் குப்பம்மா திருந்தாதது தப்பம்மா சிரங்கு பிடித்த சின்னம்மா மருந்து வாங்கி தின்னம்மா குப்பம்மா : அதான் கேட்டேன், அதான் கேட்டேன் சுப்பையா : சின்னம்மா, உங்களிடம் ஒரு காரியமாக வந்தேன் ஒன்றுமில்லை புத்தகங்கள் வாங்கவேண்டும். அப்பா விடம் ஐந்து ரூபாய் ஏற்பாடு பண்ணினா நலமாயிருக்கும் சின்னம்மா : ஏன் நீ கேளேன். அதென்ன என்னை கேளு என்னை கேளுண்றியே சுப்பையா : பால் பசுவினிடம் இருக்கிறது. கறப்பவர்களைக் கொண்டு தானே சின்னம்மா கறக்க வேண்டும். அல்லாதவர் கறந்தால் பல்லு என்ன ஆகும்? (சிரிப்பு) சின்னம்மா : ஆகட்டும். நீ கையலம்பு தம்பி, சாப்பிடு. சுப்பையன்: நான் தாத்தா வீட்டில் சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். போகவேண்டும். பணம் வாங்கி வையுங்கள். (போகிறான்) 34. சுப்பையன் - சோமு சந்திப்பு சோமு : இதோ வந்திட்டேன் நில்லு நில்லு சுப்பையன் : இந்தப் பக்கம் ஏது சோமு? சோமு : இங்கேதான் எங்கூட்டு நிலம். குத்தகைக்காரரிடம் அனுப்பினார்கள். சுப்பையா : நான் இங்கேதான் பெரும்பாலும் இருப்பேன். இதுதான் என்தாத்தா வீடு. வரலாம் வா. (இருவரும் போகிறார்கள்) 35. தாத்தா வீடு தாத்தா வீட்டில் தாத்தா, புலவர் சிலர், சின்னசாமி ஐயர் இருக்கிறார்கள். சுப்பையாவும் சோமுவும் வருவதைத் தாத்தா பார்க்கிறார். தாத்தா : சின்னசாமி, சுப்பையன் வருகிறான். (சின்னசாமி அறைக்கு நழுவி விடுகிறார்) சுப்பையன் தடதடவென்று உள்ளே நுழைகிறான். எதிரில் பட்டு வந்து இடித்துக் கொள்கிறான். சுப்பையன் கால் பட்டுவின் காலைக் காயப்படுத்தி விடுகின்றது. (பட்டு காலைப் பிடித்துக் கொள்ளுகின்றான்) தாத்தா : சுப்பையா, பாவம் பட்டு! காலை மிதித்துவிட்டாயே. ப்ராய சித்தமாக பட்டுக்கு ஒரு வெண்பா பாடிவிடு! சுப்பையா : (வெண்பா) மீளா அகலிகையும் வெஞ்சிலை இராமபிரான் தாளால் பதப்பட்டாள் தாரணியில் - கேளீர் மதப்பட்டான் தன்நேர் வருவாரைப் பாரான் பதப்பட்டான் என்றன் கால். சோமு : ... ... ... பட்டு புலவர்கள் : மிக நன்று சுப்பையா புகழோடு வாழ்க!. தாத்தா : சுப்பையா, இலை போட்டிருக்கா பாட்டி! உன் நண்பர் களையும் அழைச்சுண்டு போ. (போகிறார்கள்) (அறையினின்று கேட்டிருந்த சின்னசாமி வருகிறார்) சின்னசாமி : பையனைப் பற்றி அதிகமாக அவரவர் சொல்லுவார்கள் இன்றைக்குத்தான் நான் நேரில் கேட்டேன். தாத்தா : சுப்பையன் புகழ் எங்கும் பரவியிருக்கிறது. சின்னசாமி! அவனுக்கு வயசு என்ன ஆகிறது...? சின்னசாமி : இந்தச் சித்திரை வந்தால் பதினான்கு தாத்தா : திருமணத்தை முடிச்சுடணுமே சின்னசாமி : பார்த்திருக்கேன். ஆனா பொண்ணுக்கு எட்டு வயசா கிறது. தாத்தா : தேவலை, தேவலை முடிச்சுடப்பா. சின்னசாமி : உங்க ஆசீர்வாதம். நான் அந்த விஷயமாதான் போ றேன். அரசரிடத்திலும் விண்ணப்பிச்சுட வேண்டாமா? தாத்தா : நன்றாக (போதல்) 36. அரசரும் சின்னசாமி ஐயரும். அரசர் : (தனி அறையில்) சின்னசாமி ஐயரா? வாரும் உட்காரும். சுப்பையா எப்படி? சின்னசாமி ஐயரே, நீங்கள் சுப்பையாவைப் பிள்ளையாகப் பெற்றீர், பெரும் பேறு பெற்றீர்! இளைஞனாகவே தோன்றுகின்றான் உங்களுக் கெல்லாம். இந்த இளமையிலே அவனிடம் ஒரு பெருங் கவிஞனைக் காணுகின்றேன். நான் அளித்த குறிப்பை வைத்து அவன் ஆசுகவி பாடுகின்றான். கவியின் அமைப்பு கன்னற்சாறு! சின்னசாமி : அவன் விஷயமாகத்தான் அரசரிடம் பேச வந்தேன். திருமணத்தை முடித்துவிட வேண்டும். அரசர் : உடனே திருமணத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டியது என் கடனே. என்ன செய்திருக்கிறீர், பெண்? சின்னசாமி : சொந்தத்தில் ஒரு பெண் அழகு குணம் பொருத்த மாகவே அமைந்துள்ளன. ஒப்புதல் தந்துவிட்டார்கள் பெற்றோரும்! முதலில் அரசரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதுதானே முறை. திருமணம் மன்னரால் சிறப்படைய வேண்டும். அரசர் : செலவு என்னுடையது. சிறப்புறுவிப்பது என் பொறுப்பு. உடனே ஆவன செய்க. சின்னசாமி : அரசர் வாழ்க! (போதல்) 37. வள்ளியம்மையும் சின்னசாமி ஐயரும் சின்னசாமி : வள்ளி, திருமணப் பத்திரிகை அச்சடிக்கக் கொடுத் தாச்சு. முதல்லே நம்ம பையனை அழைச்சி, சீவலப்பேரி யிலே நம்ப பெரியவர்கள் சொந்தக்காரர் இருக்கிறார்கள். அவர்களை யெல்லாம் போய்ப் பார்த்து அவர்கள் ஆசீர் வாதத்தைப் பெற்று வரச்சொல்லு. ஏண்ணா - அவர்கள் பையன் பிறந்த போது பார்த்தார்கள், அவ்வளவுதான். நாம் தாம்பூலம் வைச்சு அழைக்கப் போனா பையனை பாத்ததில்லேண்ணு குறை சொல்லுவார்கள். வள்ளி : அதுதான் சரி. சுப்பையனும் அவர்களையெல்லாம் போய்ப் பார்க்கனும் பார்க்கணுண்ணு சொல்லிண்டுதான் இருக்கான். அங்கே சிங்காரம் இல்லே? சின்னசாமி : சிங்காரம், சுப்பையன் தாத்தா வீட்லே இருப்பான் அவசரமா அழைச்சா! (போகிறான்) 38. சுப்பையன், சோமு, சாம்பசிவம் (மாமன்) மற்றும் இருவர் ஆகிய வயதொத்த ஐவரும். மாட்டு வண்டி ஒன்றைத் தயார் செய்கிறார்கள் சுப்பையன் : சின்னப்பன், சீவலப்பேரி இங்கிருந்து எவ்வளவு தூரம்? சின்னப்பன் : இதோ இருக்குதுங்க சுப்பையன் : சோமு, எட்டுக்கல் தூரம் சோமு : அவன் இதோ இருக்குதுண்றானே சுப்பையா : இதோ என்றால் எட்டுக்கல் தூரம் என்று பொருள். சாம்பசிவம் : ஆமாமாம் அவன் அதோ என்றால் ஐம்பது அல்ல அறுபதுக்குக் குறையாது சுப்பையன் : அதோ பெரியவர் போகின்றாரே கேள். (அவர் மூன்று விரலைக் காட்டி நடக்கிறார்.) சோமு : மூன்று என்கின்றார், சுப்பையா. சுப்பையா : மூன்று காதமா? மூன்று நாள் பயணமா? மூன்று கல் தூரமா? விவரங்கேள் சாம்பு. சாம்பு : (பெரியவரைப் பார்க்கிறான். பெரியவர் முழங்கை காட்டிப் போகிறார்.) சுப்பையா : சரி மூன்றுகல் புறப்படட்டும் இரதம் போய்ச் சேர்ந்து விடுவது நம் விரதம் சாகுமுன் சவாரிக்குப் புறப்பட்டது மாடு சோமு : செத்தால் புதைத்து விடுவது நம் பாடு சுப்பையா : ஒரு சந்தேகம் சாம்ப : அதென்ன? சுப்பையா : நம் ஐந்து பேருக்கும் அருள் புரிவாரா இந்த பிருங்கி மகாரிஷி சோமு : செய்வார். செய்வார். சுப்பையா : ஏறட்டும் ஐந்து பேர்! போகட்டும் மொட்டைத்தேர்! (ஓட்டுகிறவனோடு ஐந்து பேரும் ஏறிக் கொள்ளுகிறார்கள்) வண்டி போகிறது சுப்பையன் : பாட்டு கட்டை வண்டி மொட்டை வண்டி காளை ஒரு சப்பையடா தொட்டியிலே ஆறுபேராம் சாம்பசிவமே - நம்மைக் கொட்டிக் கவிழ்த்தால் சங்கடம் சாம்பசிவமே மட்ட மட்டக் குண்டுக்கல்லாம் வழிமுற்றும் மேடுபள்ளம் கொட்டாப் புளி ஆறுபேரும் சாம்பசிவமே - கீழே கட்டாயம் உருள வேண்டும் சாம்பசிவமே. முன்பாரம் தொல்லையப்பா பின் பாரம் இல்லையப்பா உன் பாரம் நீங்க வேண்டும் சாம்பசிவமே - நீ ஒருவன் மட்டும் இறங்கிடடா சாம்பவசிவமே. முன்புறம் இருந்த சாம்பசிவம் இறங்க வண்டி குடைசாய்கிறது. அனைவரும் கீழே உருளுகிறார்கள். சுப்பையன் எழுந்து நின்று பாட்டைத் தொடர்கின்றான். உன்னாலே நாங்கெட்டோம் என்னாலே நீ கெட்டாய் முன்னாலே காளையைப் பார் சாம்பசிவமே - அதற்கு மூச்சிருந்தால் ஆச்சரியம் சாம்பசிவமே. சாம்பசிவம் : சுப்பையா, மூச்சிருக்கு! முழங்காலைப் பற்றி என்னைக் கேக்காதே சுப்பையா : (பாட்டு) வண்டிக் காரா இங்கு நொண்டி மாட்டோடு தங்கு அண்டையில் கிடைக்கும் நொங்கு தண்டியாய் உண்டு றங்கு செப்பக் கேளிர் வீரர்களே சேரன் செங்குட்டுவன் பேரர்களே வழிநடப்ப தல்லவா வீரத்தனம் வண்டியில் போவது சுத்த பேடித்தனம் சோமு : எவ்வளவு தூரம் இன்னம், தலைவரே? சுப்பையா : இரண்டு கல் தூரந்தான் காலரே சாம்பு : எப்போது போய்ச் சேரலாம் சுப்பரே. சுப்பையா : இந்த ஜன்மத்தில் சாம்பரே (எல்லாரும் சிரிப்பு) (நடந்து செல்லுகிறார்கள்) 39. சின்னசாமி ஐயர், வள்ளியம்மை சொந்தக்காரர் கூடிப் பேசியிருக்கிறார்கள். மகிழ்ச்சி முகத்தோடு சின்னசாமி ஐயர் வருகின்றார். சின்னசாமி : ஒரு நல்ல சேதி. பையன் திருமணத்தை அரண் மனையி லேயே வைத்துக் கொள்ளும்படி அரசர் சொல்லிவிட்டார். எல்லோரும் 1 : சுப்பையா அதிஷ்டக்காரன் 2 : அவன் மேலே அரசர்க்கு உயிர் 3 : திருமணம் ரொம்ப சிறப்பாயிருக்கும் சின்னசாமி : சுப்பையா சீவலப்பேரிக்குப் போனானே நேற்றைக்கு, இன் றைக்கு இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் வரவில்லையா? வள்ளியம்மை: எல்லாரையும் பார்த்துவிட்டுத்தானே வரணும், குழந்தையா பார்த்தா. இப்ப பெரியவனா பார்க்கறா. அங்கே இங்கே சாப்பிடுண்ணு ஆசையா கூப்பிட்டி ருப்பாண்ணா. சின்ன : பத்திரிக்கை அனுப்பணும் ஜமீன்தாருக்கெல்லாம். இருங்கள் (போகிறார்கள்) 40. அரண்மனையில் நிறையக் கூட்டம். ஒருபுறம் சுப்பையா இதிரி போட்டுக் கொண்டிருக்கிறான். துணிகளுக்கு. சின்னம்மா வள்ளி பரபரப்புடன் சுப்பையாவிடம் கூறுகின்றாள். வள்ளி : நலங்கு நலங்குண்ணு எல்லாரும் தேடறா. நீ என் னான்னா இங்கே இதிரி போட்றியே. சுப்பையா சுப்பையா : நேற்று நலங்கியதைத்தான் இன்று இதிரி போடு கிறேன். சின்னம்மா வள்ளி : இல்லேப்பா திருமணத்துக்கு முன்னே நலங்கிடுவாங்க பாரு. சுப்பையா : நலங்கிடுவாங்களா. அவர்களுக்கும் அதே கதிதானா. வள்ளி : பின்ன என்னதான் சொல்லணும் சுப்பையா : நலம் என்பதை நலங்கு என்று சொல்லக்கூடாது வள்ளி : அப்பா அங்கே எதிர்பார்த்திண்டிருக்கார் (சுப்பையா ஓடுகிறான்) 41. சுப்பையன் - செல்லம்மா திருமணம். வாத்தியம் முழங்குகிறது. ஆடவர் மகளிர் அமர்ந்திருக்கிறார்கள். அரசரும் ஜமீன்தார் களும் மிராசுதார்களும் உயர் இருக்கையில் வீற்றிருக்கிறார்கள். மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளுகிறார்கள். 42. மணமக்கள் பொன்னூசல் பெண்கள் சிலர் ஊஞ்சல் அசைத்துப் பாடுகிறார்கள். பெண் மாப்பிள்ளை ஊஞ்சலில் அமர்ந்திருக்கின்றனர். பாட்டு எட்டப்ப பூபதியின் வெற்றிவேல் துணையிருக்க அட்டிஏன்? மாப்பிள்ளைபெண் ஆடீரோ ஊஞ்சல் எட்டுதிக் கும்புகழ ஆடிரோ ஊஞ்சல் பட்டுப்பட் டாவளியாம் பறித்த மல்லிகைப் பூமாலையாம் கொட்டழகு மாப்பிளை பெண் ஆடீரோ ஊஞ்சல் எட்டுவகைச் செல்வங்களே ஆடீரோ ஊஞ்சல் மங்களம் தோகைமயில் செல்லம்மாள் தூயன்சுப் பிரமணியன் நேயப்பெண் மாப்பிளைக்கே மங்களம் மங்களம் நெஞ்சொத்து வாழ்வார்க்கே சுப மங்களம் (ஊஞ்சல், மங்களம் முடிந்ததும் கிருஷ்ண சிவம் பேசுகிறார்) கிருஷ்ணசிவம் : திருமணம் திவ்வியமா முடிஞ்சுது. மாப்பிள்ளை, தன் சார்பிலும் தன் மனைவியார் சார்பிலும் நன்றி சொல் றத்துக்கு முன்னே சபையோருக்கு நமகாரம் பண்ணிக் கொள்றது. மாப்பிள்ளை எழுந்து விரைந்து சென்று எட்டப்ப பூபதிக்கு கை கூப்பி வணக்கம் செய்துவிட்டு மற்றும் தந்தை தாயாருக்கு வணக்கம் செய்துவிட்டு. அங்கிருந்த பெரியோர்க்கும் தாய்மாருக்கும் வணக்கம் செய்து அரண்மனைக்கு வெளியில் குழுமிஇருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வணக்கம் புரியப் போகிறார். கிருஷ்ணசிவம்: அதென்ன சுப்பிரமணியம்; அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களா? சுப்பிரமணியன் நிற்கவில்லை. தாழ்த்தப் பட்டவர் களுக்கெல்லாம் தாழ்ந்து வணக்கம் செய்துவிட்டு வருகிறார். அவர் கிருஷ்ண சிவத்துக்குப் பதில் சொன்னார். சுப்பிர : பாட்டு பாரினில் பிறந்தபோ தெவரும் பண்பினார் பூரியார் எனப்பெயர் பூண்ட தில்லையால் சீரியர் என்னலும் தீயர் என்னலும் சேரினத் தியல்பினால் சேர்ந்த நாமமே என்ற பெரியோர் வாக்கையும் நீங்கள் கவனிக்கவேண்டும். அது மட்டுமன்று நம் வள்ளுவப் பெருந்தகை வகுத்ததென்ன? பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யால் மக்களில் வேற்றுமை பாராட்டுவதா? எவர் செய்யும் காரியம்! (அரசர் கையொலி செய்ய அனைவரும் கையொலி எழுப்பு கிறார்கள்) அரசர் : வாழ்க சுப்பிரமணியன்! வாழ்க மணமக்கள்! (வாத்தியம் பெருமுழக்கம் செய்கிறது) 43. சுப்பிரமணியன் சோமசுந்தரம் சாம்பு மூவரும் மாந்தோப்பில் உட்கார்ந்தபடி சாம்ப : சோமுவுக்குத் திருமணம் எப்போ? சோமு : ஏற்பாடாகிறது. இப்போதே நான் மாப்பிள்ளைதான். சுப்பிர : அப்படிச் சொல்லு மாப்பிள்ளை சோமு : முடிந்தது போலத்தான் மாமா சாம்ப : நல்ல மாப்பிளே நல்ல மாமா! அவரு மகா கிழவர் மலையரசர். இவர் சோமசுந்தரம் பார்வதியை மணக்கப் போகிறார்! எண்ணைக்குத் திருமணம் மாப்பிள்ளை? சோமு : இன்னும் சிலநாளில், ஆகக் கூடி இந்த ஆண்டில்தான். சாம்ப : பொண்ணு சுப்பையனுக்குக் கிடைச்ச மாதிரிதானா? பறிச்சதும் உண்ற மாதிரியா? சுப்பி : நன்றாக நினைவுபடுத்தினாய் சோமு. (ஓடி எதிரில் தொங்கிய மாம்பழத்தைப் பறித்துச் சுளையை சுவைத்துண்ணு கிறான்) சோமு : அப்படித்தான். பறித்தான் பழத்தை! உரித்தான் தோலை! சுவைத் தான் சுளையை! சாம்பு : ஐயோ பாவம் சுப்பையன்தான் உடனே சுவைக்கத் தோதில்லை சுப்பையா :தித்திக்கும் மாம்பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சிலநாள் பொறுத்துண்டால் சுவைத்தால் சுவை மிகுதியில்லை? (அனைவரும் வியப்பில் ஆழ்கின்றார்கள்.) சாம்ப : நீ சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதோ பாரு, பூவும் தும்பியும், தேனைக் காணுகின்றது. உடனே பருகி விடுகின்றது. சுப்பை : இல்லை. தேனைக் காணும்.! பாடும்! பதப்படுத்தும்! பொறுத்தே உண்ணும் சோமு : சாம்பு அந்த வாயாடியிடம் உன் ஜெம்பம் செல்லாது சாம்பு : ஏன் சுப்பையா, நேரே எங்கே? சோமு : பள்ளிக்கூடந்தான் சுப்பிர : நான் வரமுடியாது சோமு. நீ மட்டும் போ. சோமு : நிரம்ப வேலையோ உனக்கு? சுப்பை : நேரே அரண்மனைக்கு. அங்கிருந்து தாத்தா வீட்டுக்கு. அதன் பிறகு அப்பா வீட்டுக்கு. சாம்பு : அப்பா வீட்டுக்குக் கூடவா? சோமு : மனைவி அங்கேதானே இருக்கிறாள், அப்பாவுக்கு உடம்புக்கு என்ன சுப்பையா? சுப்பை : தரித்திரம், மிக்க வனப்பினை ஒடுக்கிச் சரீரத்தை உலர்தர வாட்டும். தரித்திரம் அளவில் சோம்பலை எழுப்பும் சாற்றரும் உலோபத்தை மிடுக்கும். தரித்திரம் தலைவன் தலைவியர்க் கிடையே தவிர்க்கொணாக் கலாம் பல விளைக்கும். தரித்திரம் அவமானம் பொய் சூது தரும். இதிற் கொடியது ஒன்றிலையே. சுப்பையாவின் கவலை ததும்பும் முகம் மற்றவர்க்குக் கண்ணீரை உண்டாக்குகின்றது. 44. தாத்தா இராமசாமி ஐயரும் சுப்பையாவும் தாத்தா : என்ன சுப்பையா எங்கே போயிட்டே? உன் மாமன் கிருஷ்ண சிவமும் அவன் ஆத்துக்காரியும் காசிக்குக் கிளம்புகிறார்கள். உன்னைத் தேடினார்கள். பயணம் சொல்லிக்கறதுக்கு. சுப்பையா: ஏது? செலவுக்கு என்ன பண்ணுவார்கள் தாத்தா? தாத்தா : ஒரு செல்வந்தர் உதவி கெடைச்சிருக்கு அங்கே தர்ம தாபனம் ஒன்றுக்கு உடையவர். அவர், இவருக் குள்ள பக்தி வைராக்கியத்துக்காக இவரை அழைச் சுண்டு போய் கூட வேலைக்கு வைச்சுக்கிறதுண்ற எண்ணம் போலிருக்கு. ஒங்கப்பா ரொம்பக் காயலா இருக்காருண்ணு வருத்தப் பட்டார். எல்லாம் நாங்க கவனிச்சிக்கறோண்ணு சொல்லி யனுப்பினேன். சுப்பையா : அரண்மனைக்குப் போகவேண்டும். நான் போய்வருகிறேன். தாத்தா : சாப்பாடாச்சோ? சுப்பையா : இங்கே சாப்பிட்டுவிட்டுத்தானே வெளியிற் போனேன். (போதல்) 45. அரண்மனை அரசவை புலவர் பலர் கூடியிருக்கின்றார்கள். காந்திமதிநாதப்பிள்ளை கூடியுள்ளார்கள். சுப்பையன் : (அவையில் நுழைகிறான்) எட்டுத்திசையும் எட்டும் புகழ் எட்டப்ப பூபதி வாழ்க. அரசர் : சுப்பையா! வா! அப்பா இருக்கையில், நீ அமர்ந்திரு. புலவர் 1 : காளமேகமே வருக! புவவர் 2 : காளமேகம் சிறிது கவிமழை பொழியட்டுமே. சுப்பையன் : மேகம் வேண்டும்போதெல்லாம் பொழிவதில்லை. அது இயற்கையின் கொடை. ஆதலால், அரசர் : சுப்பையன் என்று அழைப்பதைவிட சுப்பிர மணியன் என்று அழைப்பது ஏற்றது. காளமேகம் என்று சுப்பிரமணியனைச் சிறப்பிப்பதைவிட பாரதி - என்ற சிறப்புப் பெயரை ஒட்டி சுப்பிரமணிய பாரதி என்றழைக்கட்டும் உலக மக்கள். (அனைவரும் கையொலி செய்கின்றனர்) புலவர் 3 : வாழ்க சுப்பிரமணிய பாரதி! அனைவரும் : வாழ்க! (அங்கு அமர்ந்திருந்த காந்திமதிநாதபிள்ளை வாழ்த்துவதில் கலந்து கொள்ளவில்லை. அவர் முகத்தில் மகிழ்ச்சி தவழவில்லை.) காந்தி : அரசர் ஆணை தந்தால் பாரதிக்கு ஒரு விண்ணப்பம் போடுவேன். அரசர் : ஆகட்டும். காந்தி : பாரதி, கடைசி அடி பாரதி சின்ன பயல் என்று வரும் படி வெண்பா ஒன்று ஆகட்டும். பாரதி : (வெண்பா) ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால் ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனையே பாரதி சின்னப் பயல் (புலவர் பலரும் கையொலி. காந்திமதிநாதன் தலைகுனிவு) அரசர் : வசை, வந்த இடத்திற்கே திரும்பிற்று. அது நிற்க. பாரதிப் பட்டம் சுப்பிரமணியனுக்குத் தகும் அன்றோ? புலவர்கள்: தகும்! தகும்! காந்தி : (தலையைச் சிறிது நிமிர்த்தி மெல்ல) தகும்! பாரதி : எதிர்ப்பில் வெளிப்படும் மனித சக்தி என்று பெரியோர்கள் சொல்லுவார்கள் இந்த வெண்பாவின் விளைவுக்குப் பிள்ளையவர்களின் எதிர்ப்பே காரணம் என்பது என் அபிப்பிராயம். அரசர் : அது உண்மை பாரதி. அப்பாவுக்கு உடம்பு எப்படி இருக்கிறது? பாரதி : வலிவு குன்றியிருக்கிறார். நடக்க முடிகிறதில்லை. நான் பெரும்பாலும் தாத்தா வீட்டில் இருக்கிறேன். அப்பாவைப் பார்க்கத்தான் நினைக்கிறேன். அரசரிடம் விடைபெற்றுக் கொள்கிறேன். (FŪJ கும்பிடுகிறார்.) அரசர் : பாரதி, போய்வா 46. சுப்பிரமணியபாரதியும் சின்னசாமி ஐயரும் சின்னசாமி ஐயர் படுத்திருக்கிறார் ஒரு விசிப் பலகையில், அண்டையில் ஆடவரும் மகளிருமாகிய உறவினர் சூழ்ந்திருக் கிறார்கள். சுப்பிரமணிய பாரதி சென்று சஞ்சல முகத்துடன் சிறிது தள்ளி நிற்கிறார். துரைசாமி: வா! வா! சுப்பையா! சின்னசாமி ஐயரே சுப்பையன் வந்திருக்கிறான். தந்தையின் உடல்நிலை பற்றி வருத்தத்தோடு நிற்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்லு. சின்ன : அவன் ஆங்கிலம் கற்றது சிறிதே. ஆனால் தமிழில் பெருந் தகுதி பெற்று விளங்குகிறான். அரசவையில் தக்க மதிப்பைப் பெற்றிருக்கிறான். சின்னம்மா, தங்கை லட்சுமி மற்றும் பந்துக்களை எனக்குப்பின் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனையே சார்ந்தது. பெருஞ்செல்வம் பெற்றிருந்தேன். இருந்ததெல்லாம்தோற்றேன். என் மெலிவுக்குக் காரணம் உடல் நோயல்ல. இந்த மன நோய்தான். தம்பி, இங்கேயே என் கண்முன் இரு! இந்த நிலையில் என்னைப் பிரியாதே! (பாரதி கண்ணீர்) 47. செல்லம்மா இருக்கும் இடம் நோக்கி வள்ளியம்மை - பாரதி வருகிறார்கள். செல்லம்மாவுடன் மகளிர் பலர் பேசியிருக்கிறார்கள். வள்ளி : தாத்தா வீடே கதியாய் இருந்துவிட்டால் உன் ஆத்தா வீடு எப்படியாகிறது? சுப்பையா நீ இல்லாத இந்த வீடு வெண் ணிலவு இல்லாத விண் என்பார்களே அப்படியே! உன் மனையாள் சின்னவள்தான் ஆனாலும் உன்னைப் பாராத ஏக்கம் அவளுக்கு ஏராளம். பாரதி : பாட்டு தேடக்கிடையாத சொன்னமே - உயிர்ச் சித்திரமே மட அன்னமே - அரோ சிக்குது பால் தயிர் அன்னமே கொடுஞ் சிலைவேள் கணை கொலை வேலென விரி மார்பினில் நடுவே துளை செய்வது கண்டிலை இன்னமே - என்ன செய்தேனோ நான்பழி முன்னமே. கன்னத்தி னிற்குயில் சத்தமே - கேட்கக் கன்றுதுபார் என்றன் சித்தமே - மயக் கஞ்செய்யு தேகாமப் பித்தமே - உடல் கனலேறிய மெழுகாயின இனியாகிலும் அடி பாதகி கட்டி அணைந்தொரு முத்தமே தந்தால் கை தொழு வேனுனை நித்தமே. மற்றவர்கள் சிரிக்கிறார்கள். செல்லம்மா நாணித் தலை குனிகிறாள். வள்ளி : பத்து வயது சின்ன பெண்ணுக்குக் கவிஞனின் காதற் சுவை அநுபவம் எப்படிப் புரியும்? அவள் எதிரில் இப்படியா பாடுவது? பாரதி : இவ்வாறு அண்ணாமலை ரெட்டியார் பாடுகிறார். வள்ளி : ஓகோ - சரி. காப்பி கொண்டா செல்லம்மா. (அவள் போகிறாள்) பாரதி : இதோ வந்து விடுகிறேன் சின்னம்மா. (போகிறார்) மகளிர் : மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லம்மாவுக்கு இப்படியல்லவா வாய்க்க வேண்டும். அவனை அடைய அவள் என்ன தவம் செய்திருக்க வேண்டும். (பாரதி வருகிறார். காப்பி கொடுக்கிறாள் செல்லம்மா) வள்ளி : சர்க்கரை போட்டியோ? பாரதி : போடாவிட்டாலும் இனிக்கும் என் காதலி கையால் கொடுப்பதனாலே (எல்லாரும் சிரிப்பு) 48. பாரதி கண்ணீர் மலைவீழ்அருவி தந்தையின் பிணம் வளர்த்தப்பட்டிருக்கிறது. மகளிர் ஆடவர் பற்பலர் சூழ்ந்திருக்கிறார்கள். பாரதி கண்ணீர் மலைவீழ் அருவியாகத் தலை சாய்த்து நின்றபடி பேசுகின்றார். அனைவரும் வாய்வாளாது கேட்டிருக்கின்றார்கள். அவர்கள் கண்களும் நீரை உகுத்தன. பாரதி : பார்ப்பனக் குலம் கெட்டு அழிந்து போன பாழான கலியுகம் இது. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பொருள் தேடுவ தொன்றையே தொழிலாகக் கொண்டார் என் தந்தையார். ஆர்ப்பாட்டத்தோடு பலபல வாணிகம் செய்து பொருள் தேடி வாழ்ந்தார். நீரிற் குமிழியாகிய அப்பொருள் நீங்கவே மனந் தளர்ந்து உடல் நலம் குன்றினார். சாக்காட்டைத் தழுவினார். நம்மைக் கைகழுவினார். வறுமை எம்மைத் தழுவியது. மகிழ்ச்சி எம்மைக் கை கழுவியது. உன் சிற்றன்னை இருக்கிறாள். உன் மனைவி இருக்கின்றாள். உன் தங்கை இருக்கின்றாள். உறவினர் இருக்கின்றார்கள். அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு உனக்கே என்றார் என் தந்தையார். தமிழ்த் தாயே உன் பொறுப்பு. என்னையும், என்னை அண்டினோரையும் காப்பாற்று. 49. அரசர் முதலிய பெருங்கூட்டம் பின் தொடரப் பாடையில் சின்னசாமி சடலம். பாரதி உடன் செல்லுகின்றார். 50. ஒரு சோலையை அடுத்துள்ள மணல் வெளியில் நண்பரும் பாரதியும். பாரதி : இளங்கதிர்! இருளை ஒளி விழுங்கிற்று. உலகைத் தன்மயம் ஆக்கியது தங்கப்பரிதி. நண்பர் : பாரதி, கதிரவன் அறிவுள்ளதா? பாரதி : அறிவுக்கு ஆதாரமானது அறிவற்றதாகுமா? நண்பர் : அறிவுப் பொருள் கட்டுப்பாட்டுக்கடங்கி நாடோறும் செய் வதையே செய்து கொண்டிருக்குமா? பாரதி : தனக்காகவா? உலகுக்காக! மக்கட்கு, ஜீவராசிகட்கு! கடமை இன்னதென்று காட்டுகின்றான் கதிரவன். அறிவுப் பொருள்! தேவன்! தனக்கென வாழாதவன்! என்றும் செல்வன்! தனக்கென வாழ்பவன், அறிவில்லாதவன், ஏழை! உலகுக்காக வாழ்ந்தான் பார்ப்பனன் அது அந்தக் காலம். உலகத்தைக் காக்க வேண்டும் பார்ப்பனன். பார்ப்பனனை உலகம் காக்கும்! தனக்கென வாழும்பார்ப்பனனை உலகம் மனிதன் என்று கூட மதிக்காது நாளைக்கு வேண்டும் என்று இன்றைக்குப் பொருள் சேர்த்து வைப்பவன் பார்ப்பனன் அல்லன். தன்னலம் நோக்காதவன் எவனும் சிறந்த பார்ப்பனன் ஆகிறான். தன்னல நோக்குவானைப் பார்ப்பனன் என்பதைச் சாத்திரம் ஆதரிக்கவில்லை. என் தந்தை பின்னாளில் குடும்பத்துக்கு வேண்டும் என்று பொருள் தேடுவதிலேயே காலங்கழித்தார். பொருள் தேடினார். மேலும் மேலும் பொருள் தேட முனைந்து உள்ள பொருளையும் இழந்தார். தன்னல வாழ்வினால் வரும் இன்னல் இதுதான். (அதே நேரத்தில் சோமசுந்தரம் வந்து) சோம : பாரதி! உன் மாமன் கிருஷ்ணசிவமும் உன் அத்தை யும் பல்லக்கில் பரமசிவனும் பார்வதியும் போலப் பவனி வருகின்றார்கள். உலக குரு என்பார்கள், அவருக்குக்கூட அவ்வளவு வரவேற்பிருக்காது. பாரதி : பிறர் நலம் கருதும் பெரியோர் அடையும் பேற்றை அவர் அடைகின்றார். போவோமா? (போகின்றார்) 51. பாரதி வீடு அறைக் கதவின் மறைவில் செல்லம்மா நின்று கவனிக்கிறாள். கிருஷ்ணசிவம், குப்பம்மாள், சோமு, வள்ளி, பாரதி பேசிக் கொண்டிருக் கிறார்கள். கிருஷ்ணசிவம் : ஆங்கிலம் பேசத் தெரியும். பேசினால் புரிந்து கொள்ள முடியும் என்னால். தமிழ் நன்றாய்த் தெரியும். குப்பம்மாள் : கவிஞன் இல்லியா! கிருஷ்ணசிவம் : கவிஞன்! உன் அத்தை உன்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்கிறாள். செல்லம்மா அறியாதவள். அவள் இங்கேயே பெரியவர்களிடம் இருக்கட்டும். நான் நினைப்பது என்னவென்றால் நீ சமகிருதம் படிக்கணும். இந்தியும் படிக்கணும் ஏதோ ஈவரன் நல்ல வழி காட்டாமலா போய்விடுவான். நாங்கள் வந்து ஒரு மாதம் ஆகப் போவுது. இன்று புறப்பட்டுப் போக வேண்டும். அதற்குள் யோசித்து முடிவு சொல்லு. குப்பம்மாள் : தம்பி ஒன்றுக்கும் யோசிக்காதே. அங்கு நீ வந்தால் உனக்கு ஒன்றும் குறை வாராது. இங்கே இருக்கும் செல்லம்மா முதலியவர்க்கும் மாதாமாதம் செலவுக்கு அனுப்பிவிடலாம்பா. பாரதி : நல்லது அத்தை! வருகின்றேன் மாமா! சோமு : அப்படியானால் இன்றிரவு புகைவண்டிக்கா? பாரதி, எல்லோரிடமும் சொல்லிக்கொள். ஆக வேண்டிய வைகளையெல்லாம் பார். 52. சின்னம்மா, செல்லம்மா அறை பாரதி : சின்னம்மா தங்கள் கருத்து எப்படி? சின்ன : அப்படித்தான் செய் தம்பி. பாரதி : செல்லம்மா, நான் காசிக்கு மாமா அத்தையுடன் போய் வருகிறேன். சின்னம்மா இருக்கிறார்கள். மற்றவர்கள் இருக்கிறார்கள். பாட்டி இருக்கிறார்கள். உனக்கு ஒரு குறைவும் இராது. போய் வரட்டுமா? (அதே நேரம் சோமு வருகின்றான்) பாரதி : என்ன, சின்னம்மா ஒப்புக்கொண்டார்கள், செல்லம்மா ஆசேஷபிக்கவில்லை. சோமு : ஒப்புக் கொண்டார்களா? பாரதி : சேதியெல்லாம் சொல்லி வந்தேன். ஆக வேண்டியதை யெல்லாம் அடுக்கினேன். முகத்தை உம்மென்று வைத்திருக் கிறாள். ஆடவில்லை அசையவில்லை, அசல் தங்கச் சிலை. சின்னம்மா : இருந்தா சிரிப்பும் விளையாட்டுமா இருப்பாள். காசிக்குப் போறாண்ணா கஷ்டம் இருக்கும். ஆனால் போகாதேண்ணு சொல்லலே அவள்... செல்லம்மா, போகட்டுமா அவன்? (மெல்ல தலை அசைகிறது. கண்ணீரும் சிறிது அரும்புகின்றது.) 53. சோமு வீடு (சோமு பாரதிக்கு முதல் மனிதன் தோன்றியது எங்கே என்பது பற்றி விளக்குகின்றான்.) சோமு : முதல் மனிதன். உலக உருண்டை தண்ணீர் மயமாகக் காட்சி அளிக்கின்றது. அதன் எதிரே சிறிது தூரத்தில் காணப்படும் சூரியனின் வெப்பம் உலக உருண்டை யின் நடுக்கோட்டில் தாக்குகின்றது. நடுக் கோட்டில் தண்ணீர் வற்றுகின்றது. முதல் மனிதன் குழந்தை நிலையில் காணப்படுகின்றான். பெண்களும் ஆண்களும் குழந்தை நிலையில் காணப் பட்டார்கள். மக்கள் வருகிறார்கள். உலகின் பல பக்கங்களிலும் பரவினார்கள். இவ்வாறு மனிதன் முதலில் தோன்றிய இடம் நம் தென்னகமாகிய குமரி நாடு என்றே ஆராய்ச்சி யாளர் முடிவு செய்திருக்கிறார்கள். மனித நாகரீகம் தோன்றிய இடம், மனித நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே. அதாவது மனிதர் நாகரிகம் தோன்றிய இடம் குமரி நாடே. நாற்பத்தொன்பது நாடுகள். அந்த குமரிநாட்டில் ஏழ்தெங்கம், ஏழ்குன்றம், ஏழ்குமரி, ஏழ் முன்பாலை, ஏழ் பின்பாலை, ஏழ் குணகாரை, ஏழ் குறும்பனை என 49 உள் நாடுகள் இருந்தன. அவைகள் எங்கே? கடல்கோள் : மூன்றுமுறை பெருகிவந்து கடல் கொண்டது. கடல் கொள்ளுந்தோறும், தங்கியிருந்த தமிழர்கள் கடல் கொள்ளாத பகுதியாகிய இன்றுள்ள நம் தென்னாடு வந்தார்கள். அவ்வாறு தென்புலத்தாரை இங்கிருந்த தமிழர்கள் ஆதரிக்கிறார்கள். இவ்வாறு அவர்களை ஆதரிக்க வேண்டும் என்பதைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று கூறி வள்ளுவரும் வற்புறுத்தினார். தமிழ் நான்மறை அறம் பொருள் இன்பம் வீடு என்ப வற்றை அடிப்படையாகக் கொண்டு உலகில் முதன் முதலில் தோன்றிய நான்மறை தமிழ் நான்மறை யாகும். கடல் கொண்டபின் அங்கே ஆட்சி நடத்தியிருந்த பாண்டியன் மதுரைத்தமிழ்ச் சங்கம் தோற்று வித்தான். அக்காலத்தில் இமயமலைவரைக்கும் தமிழ் அல்லாமல் வேறு மொழியை உச்சரிக்க உதடுகள் இல்லை. இதை நீ அறிந்திரு சுப்பிரமண்ய பாரதி. பாரதி : இன்றுமுதல் நீயும் உன்னைச் சோமசுந்தர பாரதி என்று கூறிக்கொள். நான் கொடுத்த பட்டம் இது. எனக்கு விடைகொடு. சோம : நலத்தோடு போய் வா (கண்ணீர்). (பாரதி போகிறார்) 54. புகை வண்டி பாரதி, கிருஷ்ணசிவம், குப்பம்மா மூவரையும் புகைவண்டி சுமந்து ஓடுகின்றது. 55. கிருஷ்ண சிவம் வீடு மூன்றடுக்கு மாளிகையாய் அமைந்த தரும இல்லம் கிருஷ்ண சிவம் வீடு. சிவம், குப்பு, பாரதி இறங்குகிறார்கள். 56. கங்கைக் கரைநோக்கி பாலுவும் பாரதியும் பாலு : புதுப்பாக்கம் என்ற ஊரில் பிறந்தவன் நான். காசி யாத்திரை செய்யவேண்டும் என்ற ஆசையால் இப்பக்கம் வந்தேன். திக்கின்றித் தவித்தேன். சுவாமியை அடைந்தேன். தம்மிடத்தில் வைத்து என்னை ஆதரித்து வருகிறார். பாரதி : யார்? பாலு : உங்கள் மாமா கிருஷ்ண சிவம். இப்பக்கமாகப் போக வேண்டும். விசுவநாதர் கோயிலுக்கு. பாரதி : முதலில் கங்கைக்கு சோமு. பாலு : ஓகோசோமு. இப்படித்தான். (போகிறார்கள்) கங்கைக்கரை படிக்கட்டிலிருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் குளிக்கிறார்கள். பாலு : இங்குதான் குளிக்க வேண்டும். பாரதி : கரையில் தனியிடத்திலிருந்து கங்கா தரிசனம் பண்ண வேண்டும். கரையெங்குமுள்ள இயற்கை யழகைக் கண்ணாரக் காண வேண்டும். வா (பாரதி கங்கைக் கரையில் இயற்கையில் அழகில் ஈடுபடுகிறார்) 57. காசிப் பல்கலைக் கழகம் பாரதியும் கிருஷ்ணசிவமும் கழகத்தில் நுழைகிறார்கள். கிருஷ்ணசிவம் வெளியிற் செல்லுகிறார். 58. கிருஷ்ணசிவமும் பாரதியும் (அத்தை குப்பம்மா கிருஷ்ணசிவனுக்கு வெற்றிலை கொண்டு வந்து வைத்து ஒரு பக்கம் உட்காருகிறாள். பாரதி ஒரு புறமாக எட்டி ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.) கிருஷ்ண : சமகிருதம், இந்தி இந்த பாஷைகளின் சப்த இனிமை எப்படி? பாரதி : இருக்கிறது கிருஷ்ண : எனக்கு மிகவும் பிடிக்கிறது பாரதி பாரதி : தமிழ் ஒலி, இனிமையில்லையா? கிருஷ்ண : உன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகச் சொல்லு. தமிழ் எப்படி? பாரதி : குயிலின் கொஞ்சல் கிருஷ்ண : சமகிருதம்? பாரதி : குக்கலின் குரைப்பு குப்பம்மா : பின்னென்னங்க பாரதி : தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்று பொருள். நான் சொன்னதல்ல, தமிழ்ச் சான்றோர் சொன்னது. கிருஷ்ண : குக்கலின் குரைப்பு. அதாவது நாய் குலைக்ற மாதிரியா இருக்கிறது சமகிருத பாஷை? பாரதி : எழுத்துக்களின் ஒலி மார்பிலிருந்து கிளம்பவேண்டும். தமிழ் அப்படியல்ல ... கிருஷ்ண : உன் அபிப்ராயம் அதுவாயிருந்தாலும் அதை இந்தப் பக்கத்து மனிதர்களிடம் வெளிப்படுத்தவேண்டாம். கிருஷ்ண : இந்தியைப் பற்றி உன் அபிப்ராயம்? பாரதி : அதே தான் கிருஷ்ண : என் நண்பர் ஒருவர் ஈவர்தா என்று. அவர் மொழி ஆராய்ச்சி செய்பவர். அவரிடம் சொன்னேன். பார்க்கணு மின்னு ஆசைப்பட்டார். அவரிடம் நீ பேசும்போது இந்தியைப் பற்றியும் சம கிருதத்தைப் பற்றியும் குறைத்துப் பேசவேண்டும். பாரதி : நாளைக்குச் சந்திக்கலாம் மாமா! 59. ஈவரதாஸைக் கிருஷ்ணசிவம் அறிமுகப்படுத்திவிட்டு. ஒருபுறம் மறைந்திருந்து நடப்பதைக் கவனிக்கிறார் குப்பம்மாவுடன். பாரதிக்கும் ஈவரதாஸுக்கும் நடந்த சொற்போரில், தமிழின் தொன்மை, மேன்மை, இனிமை தனித்தன்மை வலியுறுத்தப்படுகிறது. பாரதி கடைசியாக ஈவரதாசை நோக்கி, பிறமொழிக்குரிய மேன்மையை ஒழித்துக் கட்ட முழுநேரத்தையும் செலவிடுவதைவிட சமகிருதத்திற்கு உயிர்கொடுத்து அதை வளர்ப்பதில் முழுக் கவனத்தையும் செலவிடுவது நல்லது என்று முடிக்கிறார். ஈவரதா மகிழ்ச்சியோடு விடைபெற்றுக்கொள்கிறார். கிருஷ்ணசிவம் பாரதியிடம் பேசுகையில். என் சுகவாழ்வுக்கு ஈவரதாகளின் ஆதரவு தேவை என்றாலும் தமிழைப் பற்றிய அவர்களின் அறியா மையை என்னால் பொறுக்க முடியவில்லை. நன்று கூறினாய் பாரதி, ஈவரதா வருத்தப்படவில்லை. ஞாயத்தை உணர்ந்து மகிழ்ச்சியே அடைந்தான். குப்பம்மா : ரொம்ப திருப்தி தம்பி (சாப்பாட்டுக்கு எழுந்திருக்கிறார்கள்) 60. முடிதிருத்தகம் பாரதி : புது முறைப்படி மயிரைக் கத்தரிக்க வேண்டும். அழகான முறையில் முறுக்கு மீசை தேவை. கடைக்காரன்: நீங்கள் தமிழ்நாடா? ஐயரா? பாரதி : நான் தமிழ் நாட்டுக்காரன்தான். கடைக்காரன்: கிராப்பும் மீசையும் பிராமணரின் வர்ணாரம தர்மத்துக்கு விரோதம் இல்லிங்களா? பாரதி : வர்ணாரமம் உச்சிக்குடுமி, ஐந்தாறு மயிரில்தானா ஒட்டிக் கொண்டிருக்கிறது? வேலையைப் பார் ஐயா. 61. அத்தை முன் பாரதி குப்பம்மாள் : ஐயோ அப்பா! காரியத்தை, கெடுத்துக் கொண்டாயே! மாமா கண்டால் என்னாகும்? நீ என்ன கைம்பெண்ணா மொட்டை அடித்துக்கொள்ள? பிராமணர் வீட்டுப் பிள்ளைக்கு முறுக்கு மீசையா? அதே நேரத்தில் கிருஷ்ணசிவம்:அவனை அறையில் வைத்துச் சோறு போடக் கூடாது. என்ன காரியம் செய்தாயடா? (பாரதி மாடிக்குப் போய்விடுகின்றார்) (பாரதிக்குச் சாப்பாடு, அத்தை குப்பம்மா மேல் மாடிக்கு உணவு கொண்டு வருகின்றாள்) குப்பம்மா : நீ வருத்தப்படாதே அப்பா, ஆரம்பத்தில் மாமா அப்படிக்கூச்சல் போட்டாலும் உன்மீது அவருக் குள்ள பற்றும் பாசமும் போய்விடாது. பாரதி : தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டதாலும் மீசை வைத்துக் கொண்டதாலும் என்ன மூழ்கி விடும்? புதுமையை எதிர்க்கலாமா அத்தை, பழமையையே போற்றவேண்டும் என்றால் ரயிலில்கூட ப்ராம்மணன் ஏறக்கூடாது. குப்பம்மாள் : சாப்பிடப்பா, மனசிலே வருத்தம் வைக்காதே (சாப்பிடுகிறார்) 62. பூசை மண்டபத்தில் கிருஷ்ணசிவம் கிருஷ்ண : (தம் பரிவாரத்தை நோக்கி) பூசை ஆரம்பத்திலேயே ஓதுவாரை வரச் சொன்னேன் என்று சொல்லி வையுங்கள். மார்கழி மாதம் திருவாதிரைக் கொண்டாட்டம் காசியிலே எல்லா இடத்திலேயும் நடக்கும். கடைசி நேரத்திலே ஓதுவார் அங்கே போனார் இங்கே போனார் என்றால் விடமாட்டேன். பூசை நடை முறை கிருஷ்ணசிவம் பூசை நடக்கு முன் ஓதுவார் எங்கே? என்றார். இன்னும் வரவில்லை என்று கூற ஆளை அனுப்பி விட்டுக் காத்திருக் கிறார் கிருஷ்ணசிவம். வெகுநேரம் பொறுத்துத்திரும்பி வந்த ஆள் ஓதுவார் வீட்டில் இல்லை, எப்போது வருவார் என்றும் தெரியவில்லையாம்! குதித்தெழுந்தார் கிருஷ்ணசிவம் குப்பம்மாவிடம் ஓடி நிற்கத்தான் அவரால் முடிந்தது. குப்பம்மா எதிரில் நின்று விசுவநாதா நடராஜா இதுவும் உன் சோதனையா? இதுபோன்ற விக்கினங்கள் இந்தப் பத்தாண்டுகளாக நேர்ந்ததில்லையே அப்பா குப்பம்மா : ஏன் இப்படி வருந்தரீங்க. நம்ம சுப்பையா இருக்கிறானே பாரதியைக் குப்பம்மா அழைத்து அவர் தலைக் கிராப்பு மறையும் படிப் பட்டுக்சுற்றி அனுப்புகிறாள். 63. பாரதி, முறைப்படி அமர்ந்து, முறைப்படி திருவெம்பாவை சுவடி பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார். வந்திருந்தவர்கள் ஆகா என்றார்கள். கிருஷ்ண சிவம் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் தாங்க முடியாமல் கைவீசி அங்கேயே உலாத்தத் தொடங்குகின்றார். இனிதாக - பொருள் விளங்கும்படியாகப் பண்முறைக்கு ஒத்த வகையில் பாடிமுடித்தார் பாரதி. 64. கிருஷ்ணசிவம் மகிழ்ச்சி கிருஷ்ணசிவம் ஓடிப் பாரதியைக் கட்டிப் பிடித்தபடி கிருஷ்ண : எனக்குப் பெருமை தந்துவிட்டது உனக்குள்ள தமிழுணர்வு, இனிதான உன் குரல், கேட்டவர் உள்ளத்தை யெல்லாம் புனிதப் படுத்தியது என்றால், திருவெம்பாவை பாடிய திறம் உருகவைத்தது என் உள்ளத்தை - மக்கள் உள்ளத்தை! மீசை ஏன்? கிராப் ஏன் என்று கோபப்பட்டேன் அப்பா. தாடி ஏன்? மொட்டை ஏன்? இவை என்ன பயன் விளைத்தன எமக்கு? பாரதி வாழ்க! அதே நேரத்தில் அஞ்சல்காரன் ஓர் அஞ்சலைத் தந்து போகிறான். அதை வாங்கிக் கிருஷ்ணசிவம். மனத்தோடு படித்துத் தனித்தோடிக் குப்பம்மாவிடம் காட்டுகிறார். கிருஷ்ண : செல்லம்மா புஷ்பவதி ஆய்விட்டாள். தம்பி! இங்கே வா உன் மனைவி புஷ்பவதி ஆகியிருக் கிறாள். (பாரதி தலைகுனிந்து புன்முறுவல் கொள்கின்றார்.) 65. அரசர் வருகை கிருஷ்ண : குப்பு, எட்டியாபுரம் அரசர் எங்களையும் பாரதியையும் பார்க்க வருவதாக அவர் இறங்கி உள்ள மாளிகை யினின்று சேதி அனுப்பியிருக்கிறார். குப்பு : நல்லதாப் போயிட்டுது, அரசர் கூடவே பையனை அனுப்பிடலாம். (ஓர் ஆள்வந்து, எட்டயபுரம் அரசர் உங்களையும் பாரதியையும் பார்க்க வேண்டும் என்று நம் ஆகாய மண்டபத்தில் அமர்ந்துள்ளார்) குப்பு : நானும் வர்ரேனே அவன் எங்கே பாரதி? பாரதி : இருக்கிறேன். (அரசரைக் கண்டு) வாழ்க! வாழ்க மன்னா! (வணங்குகின்றார். மற்றவரும் அப்படி) அரசர் : பாரதி நலமா? பாரதி : தங்கள் அருள் அரசர் : கிருஷ்ண சிவனார் அம்மையார் நலந்தானே? நான் கங்கை மூழ்க இங்கு வந்தேன். பாரதியை உடன் அழைத்துப் போகலாம் என்று எண்ணுகின்றேன். அண்மையில் பாரதியின் மனைவி பூப்பு எய்தியதாகவும் அதுபற்றி மஞ்சள் நீர் சுற்றும் சடங்கொன்று நடப்பதாகவும் நம் அரசியார் சொன்னார்கள். அப்போதே நினைத்தேன் காசிக்குப் போகையில் நம் ஆசுகவியை அழைத்து வந்துவிடவேண்டும் என்று! பாரதி இருக்கும் அரண்மனை ஓரதிசயம். வரலாம் அல்லவா? கிருஷ்ண : தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம். அரசர் : அம்மையாருக்கு? கிருஷ்ண : தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம். அரசர் : கவிஞர் என்ன சொல்லுகிறார்? பாரதி : அரசர் ஆணைக்குக் கோணையாகவா? இல்லவே இல்லை. அரசர் : நேரமில்லை. கிளம்ப வேண்டியதுதான். 66. பயணமாகின்றார்கள் அரசர் : (ஆட்களை நோக்கி) வண்டியைக் கொண்டுவந்து இங்கே நிறுத்து! என்னுடன் பாரதி வருகிறார். நேரே நாம் இறங்கியிருக்கும் மாளிகைக்குப்போ) (பாரதி கையில் ஒரு மூட்டையுடன் தோன்றுகிறார். உடன் கிருஷ்ணசிவம் குப்பம்மா) பாரதி : (பரபரப்புடன்) கங்கைக்கு என் கடைசி வாழ்த்து. என்று கூறி மேல் மாடிக்கு ஓடி நிலா முற்றத்தில் நின்று பாடுகிறார். அரசர் முதலியவர்களும் தெருப் புறம் நின்று கேட்கிறார்கள். கங்கைக்கு வாழ்த்தும் வரவேற்பும் பாட்டு கங்கையே வாழி கங்கையே வாழி அங்கை ஆயிரம் தாவி ஆழ வங்கக் கடலைத் தழுவி மகிழ்வாய் புனிதை அனைவர் தம்மையும் நீதான் புனித மாக்குவை. பூவைமார்க்கெலாம் அழிவிலா அழகை இளமையை அளிப்பாய் பொழி உலப்பூவால் காயாற் பழத்தால் வளம் பெறச் செய்வாய் மக்கள் மகிழ்ச்சி நீ மாமன் வீட்டில் வளர்ந்தேன் இந்நாள் கோமான் எட்டப்பர் கொண்டல் என்னோர்க்கு வாவென அழைத்தார் மகிழ்ந்துடன் பட்டேன். நாடொறும் நின்புனல் ஆடி மகிழ்ந்த நான் பிரிய என் மனம் வருந்தலாயிற்றே கங்கையே வாழி கங்கையே வாழி இங்கென் அறிக்கை ஒன்று கேட்க மணமலர் சுமக்கும் மணியுடல் பிணம்பல பலப்பல சுமக்க இப்பாங்கு மக்கள் இயற்றும் மதியிலாச் செயலால் ஐயேயோ நீ பொறுப்பினும் உன்றன் தூயமெய் பொறுக்குமோ ஒன்று செய் அதனை இன்றே செய் செய் தென்பால் நோக்கிச் சீறி நிலம் கிழித்து உன்பால் அன்பும் மதிப்பும் உடைய தமிழக மக்கட்கு அமுதாய் வருவாய் ஆண்டுதோறும் விழாக்கள் உனக்கு நீ தூண்டும் துறை தொறும் தவறாப் பூசனை வருக கங்கையே மகிழ்ச்சி பெருகத் தென்பால் பெருக்கெடுத்து வருகவே! 67. இரண்டு குதிரைக் கோச்சு பாரதியும் அரசரும் வண்டியில் ஏறிக் கொள்ளுகிறார்கள். கிருஷ்ணசிவன், குப்பம்மா வழியனுப்புகிறார்கள். அத்தைக்கும் மாமாவுக்கும் கும்பிடுபோடுகின்றார் பாரதி. வண்டி போகின்றது. 68. ஒற்றைக் குதிரை கட்டிய கோச்சில் பாரதி வீடுவந்து இறங்குகிறார். செல்லம்மா ஆலஞ்சுற்றுகிறாள். சற்று ஒதுங்கி வள்ளியம்மா நிற்கிறாள். அதற்கப்புறம் பாட்டி பாரதி : ஏன் செல்லம்மா, பொட்டு இட வேண்டாமா எனக்கு? சின்னம்மா! சொல்லிக்கொடுத்த நீங்கள் சரியாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டாமோ? (சிரிப்புக்குப் பின்) சின்னம்மா அவள் தானேயப்பா வீட்டில் சுமங்கலி என்று கூற அனைவரும் உள்ளே போகிறார்கள்.) 69. சாம்பசிவமும் பாரதியும் சாம்ப : இன்றைக்கு ருது சாந்தி முகூர்த்தம் வைச்சிருக்கா. பாரதி : வைத்திருக்கிறார்கள் என்று சொல் அதுக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்கள் சின்னம்மா. சாம்ப : ஐயருக்குச் சொல்லணும். அதற்கான செலவு இருக்கு வாத்தியத்துக்கு சொல்லணும். பாரதி : இவர்கள் ஏன்? சாம்ப : சாந்தி முகூர்த்தம்னா அப்படித்தானே பாரதி : அதிலே ஒன்றும் மாற்றம் இருக்கக்கூடாது இல்லையா? சாம்ப : ஆமாம். பாரதி : இன்றைக்கு என் வீட்டில் நம் உறவினர் தவிர எவரும் வரக்கூடாது. என்னையும் செல்லம்மாவையும் பொறுத்த தனிச் செய்தி இது. எவரும் தலையிடக்கூடாது. சின்னம்மாப் பழசியிடமும், பாட்டிப் பழைய பழசியிடமும் சொல்லிவிடு. பழம் பழம் பழசியாகிய நீயும் இதை அறிந்து நடந்து கொள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த சின்னம்மா வருகிறார்கள்) சின்ன : இந்தச் சடங்கை என்ன மாதிரிதான் முடிக்கிறதிண்றநீ பாரதி : சடங்கும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்கிறேன் சின்னம்மா. சின்ன : நம்ம வைதிகம் என்னமா போறது? பாரதி : அது ஒன்றும் கெட்டுப்போகாது. நாம் எல்லாவற்றிற்கும் அதை இடித்துக் குட்டிச் சுவராக்க வேண்டாம். சின்ன : தோஷமில்லியோ? பாரதி : அப்படி ஒன்றுமில்லை சின்னம்மா, நீங்கள் போகலாம். பாட்டியை வரச்சொல்லுங்கள். பாட்டி : (வந்து) எக்கியம் வளத்த வேண்டியது முக்கியம். சாந்தி இருக்கு. மந்த்ரம் இருக்கு. தள்ளிடறதோ? பாரதி : பாட்டி நான் சொல்றபடிகேள். இவை எல்லாம் முறிந்த இராட்டினங்கள், ஒதுக்கி வைக்கத்தக்கவை. அறையை மெழுகிக் கோலம் போட்டு மாலையிலேயே படுக்கையைச் சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இரவு சாப்பிட்டவுடன் செல்லம்மா நாணிக் கோணி நாலு பக்கமும் பார்த்து விழிக்காமல் மாப்பிள்ளையுடன் அறைக்கு பாட்டி அனுப்பிவிட வேண்டும் அவ்வளவு தான். முற்றிற்று மேலே பேச்சில்லை. பாட்டி : நான் அவசரமாக தாத்தாவிடம் போகவேண்டும். பாரதி : போய் வருக. எனக்கும் விடை தருக. (பாரதி போகிறார்) 70. இராமசாமி ஐயர் வீடு பாரதி வீட்டினுள் நுழைகின்றார். தாத்தா யார்? யார்? என்று பன்முறை வினாவுகின்றார். பாரதி : நான்தான் சுப்பையன் தாத்தா : (மேலும் உற்றுப்பார்த்து) சுப்பையாவா? சுப்பையா இதென்ன கோலம்? குடுமி வெள்ளைக்கார பாணி. மீசை பிராமணருக்கு அடுக்காதது. உன்னை ஒரு பிராமணன் என்று யார் ஒப்புவார்? நமக்கு என்று ஓர் ஆச்சாரம் அனுஷ்டானம் உண்டு சுப்பையா. பாரதி : ஒரே நாட்டில்? தாத்தா : ஒரே நாடுதான். பிராமணர் சூத்திரர் என்று பல ஜாதி உண்டு. ஜாதிக்கான ஆச்சாரம் அனுஷ்டானம் உண்டு என்கிறேன். பாரதி : கடல் நீர்த்துளிகட்கும் கடலுக்கும் இடையில் தடைச் சுவரா? அனைத்துயிர் ஒன்று என்று எண்ணி அரும்பசிக்(கு) உணவு தந்து மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறு முண்டோ? தாத்தா : அது ஞானிகட்கல்லவா? சுப்பையா : நாம் இன்னும் எவ்வளவு காலம் அஞ்ஞானிகளாகவே இருப்பது தாத்தா? தாத்தா : மறுக்கக் கூடியதில்லை. வழக்கம் மறுக்கின்றது. காரணம் நெஞ்சத்தில் தெளிவில்லை. உட்காரப்பா. இன்றைக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் வைத்திருப்பதாகச் சொல்லி அனுப்பினாள் உன் சின்னம்மா. அதற்கான காரியம் எல்லாம் ஏற்பாடா கின்றனவா? சுப்பையா: சாந்தி எக்யம், புரோகிதர், மேளதாளம். ஆச்சாரம் என்னமோ சொன்னார்கள். அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவில்லை. வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். தாத்தா : சொந்தக்காரர் எதிர்ப்பார்களே. பாரதி : எதிர்ப்பு வேண்டும் கருத்துப் பிரசாரத்திற்கு! தாத்தா : வைதீகம் உடைந்து போகிறது பாரதி : வைதீகச் சிற்றறைவிட்டு நாம் வெளி வரவேண்டும். உலக மக்களில் இரண்டறக் கலக்க வேண்டும். தாத்தா : அரசருடன் அங்கிருந்து வந்தபின் அரசரை மறுபடி பார்த்தாயா? பாரதி : உங்களைப் பார்த்த பின் அரசரைப் பார்க்க வேண்டும் என்று முதலில் உங்களைப் பார்த்தேன். தாத்தா : போஜனம்? ஆகட்டுமே. பாரதி : முடிந்தது. வணக்கம் தாத்தா தாத்தா : ஆசீர்வாதம் (போகிறார்) 71. அரண்மனை முத்தமிழ் வளாகம் (அரசர், புலவர்கள் அமைந்திருக்க பாரதி தோன்றுகிறார்.) அரசர் : வருக கவிஞரே, நீர் வரமாட்டீர் என்று எம் ஆராய்ச்சியைத் துவங்கிவிட எண்ணினோம். பாரதி : முத்தமிழ் வளாகத்திற்கு வருவதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக் கூடியது என்ன இருக்க முடியும்? அரசர் : இன்று உனக்கு ருது சாந்தி முகூர்த்தம் ஆயிற்றே பாரதி பாரதி : அது பகலில் அல்லவே. அரசர் : அது சார்ந்த சடங்குகள் பகலெல்லாம் இருக்குமே பாரதி : அவை தேவையற்றவை அரசர் : ஆ! அப்படியா அவைகளை மறுத்துவிட்டாயா? பாரதி : வெறுத்துவிட்டேன். அரசர் : அறிவு சொல்லுகிறது பாரதி உனக்கும் உன் மனைவிக்கும் ஏற்பட இருக்கும் முதல் சந்திப்பில் மற்றவர்க்கு வேலை யில்லை என்று, உன் உள்ளத்தில் வேறுபாடுகள் புகுந் துள்ளன. அவைகளை நீக்கு! நீ வைதீகத்தில் ஒருமைப் பாடு கொள்ள வேண்டாமா? பாரதி : ஒருமைப்பாடு பற்றி இன்று ஆராயத் தொடங்கலாம் என்று நான் எண்ணுகின்றேன். அரசர் ஒப்புதலை எதிர்பார்க் கிறேன். அரசர் : ஏன் புலவர்களே? புலவர் : நன்று அரசே அரசர் : ஒருமைப்பாடு என்பது பற்றிய ஆராய்ச்சியை நம் கவிஞர் சுப்பிரமணிய பாரதி துவக்கம் செய்வார்கள். பாரதி : மாட்சிமை தங்கிய அரசர் அவர்களே, மற்றும் அன்பு மிக்க தமிழ்ப் புலவர்களே, ஒருமைப்பாடு என்பது, சாதி ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப் பாடு, அறிவு ஒருமைப்பாடு, உணர்வு ஒருமைப் பாடு, தலைவன் தலைவியர் ஒருமைப் பாடு பல்வகை. இவை நன்மை விளைவிப்பவை. இவை மக்கட்கு அவசியம் தேவை. மடமை ஒருமைப்பாடு என ஒன்றுண்டு அது தீமை விளைப்பது. பிற்போக்குத் தன்மையை அது விரைவு படுத்தும். இனி, தேச ஒருமைப்பாடு ஒன்று. என் தேசம் இது, உன் தேசம் அது என்ற வேற்றுமை உணர்ச்சி இன்றி, எல்லா தேசங் களும் ஒரே தேசம் என்ற ஒருமைப் பாடு, இன ஒருமைப் பாடு என்பதும் இதுதான். இது எப்போது ஏற்படும்? ஒரு கால் சாதி ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு, அரசியல் ஒருமைப் பாடு, அறிவு ஒருமைப்பாடு, உணர்வு ஒருமைப்பாடு, ஏற்பட்டபின் ஏற்படலாம். இன்னொன்று : மொழி ஒருமைப்பாடு தமிழும் சமகிருதமும் ஆங்கிலமும் இந்தியும், பிரான்சும், சீனமும் ஆகிய வேற்றுமை நீங்கி எல்லாம் ஒன்றே எனும் ஒருமைப்பாடுதான் மொழி ஒருமைப் பாடு. இந்த ஒருமைப்பாட்டின் பயன் இனத்தின் தற்கொலை. இது உலக மக்களின் கல்லறையில் தான் நிலை பெறும். (கை ஒலி) அரசர் : தன் தாய் மொழியை எவன்விடுவான்? உயிரை விட்டுக் கொடுக்க மனிதன் ஒப்புவானா? மொழியை விட எவனும் ஒப்பமாட்டான் புலவர்களே. அரசர் : இப்போது பாரதி சொன்ன கருத்துக்களை நாம் மேலும்மேலும் எண்ணி ஒரு முடிவுக்கு வரவேண்டும். பாரதி : முடிவையும் அடுத்த வாரம் அறிவிக்க வேண்டும். அரசர் : பாரதி, நீ விடைபெற்றுக் கொள் இன்பத்தை நோக்கி நீ விரைந்து செல்க. (போதல்) 72. எட்டியாபுரத்தில் ஒரு சோலை சோலையில் பாரதி செல்லம்மா கோட்டுப் பூக்களை இருவரும் அண்ணாந்து பார்த்தபடி நிற்கிறார்கள். இருவரும் கை கோத்து நின்கிறார்கள். பாரதி புதிய முறையில் ஓப்பன் ஷர்ட் அதன்மேல் டுவிட் கோட், தலையில் அழகிய வால் விட்ட முண்டாசு. அரசர் தம் பரிவாரத்தோடு அந்தப் பக்கம் வந்தவர்கள். பாரதி ஜோடியைப் பார்த்து மகிழ்ந்து போகிறார்கள். 73. அரசர் போகும்போது அரசர் : சாம்பசிவம், சோலையில் பாரதியும் செல்லம்மாவும் வானப்படத்தில் ஒரு ஜோடி வண்ண ஓவியம். காதலியின் நெஞ்சத்தைப் பாரதி கவர்ந்து விட்டான். இவன் அழகுக்கு அவள் அடிமையாகி விட்டாள். பாரதியின் உடையைப் பார்த்தாயா? தலையில் அழகிய தலைக்கட்டு பின்னால் காற்றில் பறந்தபடி மெல்லிய தொங்கல். முனை சேர்ந்து வான் நோக்கும் இரண்டு கரிய பட்டு மீசை. மேல்சட்டை ஐரோப்பியப் பாங்கு. அது பாரதிக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இடையில் வேட்டி. பஞ்சகச்சம் அதுதான் இந்தியப் பாங்கு காலில் சிலிப்பர் பளபளப்பான தோலால் ஆனது. பாரதி சுவை உணர்வுடையவன். அவள் தேன் மலர் - பாரதி தும்பி! சாம்பசிவம்:அரசே நேற்றிரவு நான் கண்டது கனவா நனவா தெரியவில்லை. பாட்டி, செல்லம்மாவை அவனிருக்கும் அறைக்கு அனுப்பிக் கதவு மூடப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின் மெல்லிய குரல் ஒன்று கேட்டது. அது பாரதி குரலா? அல்லது வானம் பாடியதா, வையம் பாடியதா புரியவில்லை. பாட்டு எந்த நேரமும் நின்மேல் ஏறுதடி சிறுகள்ளி குற வள்ளி என் கண்முன் காட்சியளித்த பாரததேவியின் படம் உயிர் பெற்றெதிர் வந்தது. ஆனந்தக் கூத்தாடினாள். எதிரில் வணங்கி நின்ற பாரதியை செல்லம்மாவை, தலையில் அஞ்சலிக் கைவைத்து ஆசீர்வதித்தாள். என்னை அறியேன். நான் கும்பிட்டேன். பாட்டி அழைத்தாள். நினைவு பெற்றேன். அரசர் : உன் உள்ளப் பாங்கு உயர்ந்தது. அது உனக்கு இவ்வகைக் காட்சியளித்தது (போகிறார்கள்) 74. பாரதியும் ஷெல்லியும் பாரதி, ஷெல்லி படித்துக் கொண்டிருக்கிறார். சாம்பசிவம் வருகின்றார். சாம்பசிவம் : கவிஞர் என்ன படிக்கிறார்? பாரதி : ஷெல்லி சாம்பசிவம் : ஷெல்லி நாதிகன் இல்லையா? பாரதி : அதனால்தான் படிக்கிறேன். சாம்பசிவம் : நாதிகம் உனக்குப் பிடிக்குமோ? பாரதி : அதற்கல்லடா, ஆதிகன் பாட்டு செக்குமாடு. வழக்கப் படி சந்தைச் சத்தம். கட்டற்ற நிலையில் பரந்த உலகைச் சுற்றுகிறவன் நாதிகன். கற்பனை அவன் சம்பாதித்த சொத்தாயிருக்கும் ஆதிகன் கலம்பகத்தைப் பார்த்துக் கலம்பகம், அந்தா தியைப் பார்த்து அந்தாதி! சரக்கெல்லாம் இரவல்தானே சாம்பசிவம் : பாரத - இராமாயணம் முதலிய இதிகாசங்கள்? பாரதி : பொழுது விடிந்து பொழுது போனால் வாழ வழி தேடுவதா? எம்பிரான் திருவடி அடையும் முயற்சியில் ஈடுபடுவதா? அல்லாமலும் பழசி அடா (அதே நேரத்தில் உறவினர் ஒருவர் வீட்டினின்று சாவு செய்தி வருகிறது. பாரதியும் சாம்புவும் பதைபதைப்புடன் புறப்படுகிறார்கள்.) 75. பிணவீடு பிணம் கிடக்கிறது. சுற்றிலும் மக்கள் சூழ்ந்திருக் கிறார்கள். பாரதி போய் ஒருபுறம் உட்காருகிறார். இறந்த மனைவிக்குரியவர் பாரதியைப் பார்க்கிறார். வீட்டார் : (அவர்) ஏண்டா பாரதி? தெய்வம் இல்லை என்று கூறுகிறாயே, உயிரோடிருந்த என் மனைவி பிணமாய்க் கிடக்கிறாள். பிராணம் எங்கே போயிற்று அதை ருசுப்படுத்தேண்டா. பாரதி : தாத்தா, நீங்கள் வயதில் மூத்தவர், மரியாதை இல்லா மல் நான் நடந்து கொண்டதாகச் சொல்லு வீர்கள். சுருக்கமாக அர்த்தமுள்ளதாக பதில் கூறுகிறேன். கோபித்துக் கொள்ளக் கூடாது. ஆத்மா பிரமத்தில்தான் லயமாயிற்று. பிணம் எடுக்க வேண்டும். மேலே நடக்க வேண்டியவைகளை கவனிப்போம். அனைவரும் : அதுதான் சரி. 76. குளத்தில் பாரதி பாரதி குளத்தில் மூழ்குகின்றார். அதே நேரத்தில் பாரதி மனைவி செல்லம்மாவும் அடுத்த வீட்டு மீனாளும் நீர் எடுக்கக் குடத்தோடு அங்கு வருகின் றார்கள். மீனா : செல்லம்மா ஒங்க ஆத்துக்காரர் பாக்கலியா. அவரு ஒன்னெ பாக்குறாரு. செல்லம்மா : நானும் பார்த்துக்கிட்டே இருந்தா அடுப்பிலே உலை பொங்கி வழிஞ்சுடுமே (செல்லம்மா தன் காதலனைக் கடைக் கண்ணால் பார்த்துப் புன்சிரிப்புக் கொள்ளுகிறாள்.) மீனா : சாவுக்குப் போய் வந்து குளிக்றாரா? செல்ல : சுடுகாட்டுத் தீட்டில்லியோ மீனா : நாதிகர் என்றாளே வைதிகத்லே முழுகி இருக் றாப்லே தோணுறதே செல்ல : அது என்னமோ எனக்குத் தெரியாது அவர் இப்ப முழுகிறது வைதீகமில்லை குளந்தான் (போகிறார்கள்) 77. அரண்மனை முத்தமிழ் வளாகம் அரசர் : (புலவர்களை - பாரதியை நோக்கி) மடல் என்பது பிற்காலத்து நூற்களில் ஒன்றா? பாரதி : ஆம். உலாமடல் என்றும் வளமடல் என்றும் இருவகை. வருணகுலாதித்தன் மடல் இக்காலத்தில் எல்லாராலும் பாராட்டப்படுகிறது. அரசர் : இன்று வருணகுலாதித்தன் மடல் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம் (வருணகுலாதித்தன் மடல் - பாரதி பாடிப்பொருள் விளக்குகின்றார். அரசர் மகிழ்ச்சி) அரசர் : அடுத்த வாரமும் இவ்வாறே இன்பத்துறை பற்றியதாக ஆராயப்பட வேண்டும். 78. பாரதியும் பத்தினியும் என்ன கறி வைக்க என்று செல்லம்மா கேட்கிறாள் நேற்றென்ன கறி? என்று பாரதி கேட்கிறார். செல் : முருங்கக்காயும் பருப்பும் சாம்பார். பாரதி : இன்று கத்தரிக்காயும் பருப்பும் சாம்பார் வைத்துவிடு. (என்று கூறிப் பாரதியார் போய்விடுகிறார்.) 79. பாரதி சாப்பாட்டுக்கு செல் : இலை போட்டிருக்கு! பாரதி சாப்பிடத் தொடங்குகின்றார். பாரதி : என்ன சாம்பார்? கத்தரிக்காயும் பருப்புமா? செல்லம்மா, போதும், போதும், ரசம் போடு. (சாப்பிடத் தொடங்குகிறார்.) ஒரு நாளைப்போல ரசம். நூதனம் ஒன்றுமில்லையே. எட்டய புரம் அரண்மனை உத்தியோகம் போல! மோர் இருக்கில்ல. செல் : அதுவும் அப்படித்தானே இருக்கும்! நூதனம் என்ன இருக்கப்போவுது? பாரதி : (சிரிப்பு) அதுசரி. இப்படி எல்லாம் வெறுப்புத் தோன்றாது. ஒரு பாயசம், ஒரு வடை, பருப்பு, புத்துருக்கு நெய், ஒரு துவட்டல், ஒரு பச்சடி, ஒரு வறுவல் இன்னும் இவைகளின் பரிவாரம் இருந்தால்! கையில் நிறையப் பணமிருந்தால்! தானே. சம்பளப் பிழைப்பிலும் சதா அடிமைப் பிழைப்பு. இதில் உண்டதையே உண்ண வேண்டியதுதான். அதுவும்- கத்தரிக்காய் முருங்கக்காய் மேற்படி துவரம் பருப்பு மேற்படி ரசம் மேற்படி மோர் (எழுந்து போய்க் கையலம்புகிறார். செல்லம்மா கண்ணீர்) 80. கூடத்தில் பாரதி முத்துப்புலவர் வருகிறார். பாரதியார் நலந்தானே.? பாரதி : இருக்கிறேன் அவ்வளவுதான். ஏது இவ்வளவு தூரம். அரசர் தாலாட்ட அழைத்தாரோ? புலவர் : அரசர் போக்கு நமக்கெல்லாம் வெறுப்பைத் தான் உண்டாக்குகின்றது பாரதி : (கலித்துறை) எட்டப்ப பூபதிக் கில்லாத் தகுதி இருப்பது போல் கட்டிக் கவிதை அளந்திட வேண்டும் கணந்தொறுமே குட்டியும் பையனும் கொஞ்சியதாகக் குறித்தகவி கொட்டிக் குவித்திடில் மட்டற்றதாகும் குதூகலமே. புலவர் : ஆகா! உண்மை! உண்மை! நான் வர்ரேன் பாரதியார். (போகிறார்) (மறைந்து கொண்டிருந்த செல்லம்மா பாரதியிடம் வருகிறார்.) செல்ல : அரசரை இழித்துப் பாடினீர்கள். பாரதி : உண்மையைப் பாடினேன். செல்ல : புலவர் அதை அப்படியே கொண்டு போய் அரசர் காதில் போடக்கூடும். பாரதி : அப்படித்தான் நினைக்கிறேன் செல்லம்மா, அதனால் நமக்கு நன்மைதான். அரண்மனை அடிமைப் பிழைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. அரசர் கோபித்ததைக் காரணமாகவைத்து விலகிக்கொள்ள விரும்புகிறேன் செல்லம்மா, வெளியுலகம், விரிந்த அரங்கு, கிணற்றுத் தவளையாக எத்தனை நாள் இருப்பது? உள்ளே கம்ப இராமாயணம் இருக்கிறது எடுத்து வா. 81. விருத்தாச்சலம் பிள்ளையும் பாரதியும் விருத்தா : வணக்கம் சார்! பாரதி : வணக்கம் - தூய தமிழ். மகிழ்ச்சி. சார் - மிலேச்ச மொழி - வருந்துகிறேன் ஐயா. விருத்தா : மன்னிக்க வேண்டும் ஐயா. என் உத்தியோகம் ஆங்கில ஆசிரியர். ஆயினும் தமிழ்ப் பற்று என்னைத் தங்களைப் பார்க்கத் தூண்டியது. இப்போது சம தானத்தில்தானே? பாரதி : சமதானம் பற்றி நிதானம் பண்ணியதில் பிழைப் புக்கும் சரி ஆசைக்கும் சரி வேறு தானம் தேடிக் கொண்டிருக் கிறேன். விருத்தா : சேதுபதி கலாசாலைக்குத் தவம் பலித்தது. பாரதி : என்ன? விருத்தா : சோழவந்தான் அரசஞ் சண்முகனார், கலாசாலையில் தமிழாசிரியர், அவர் நீங்கிக் கொண்டார். அந்த இடத் திற்கு ஆசிரியர் ஒருவர் தேவை. கவிஞர் விரும்பினால் நாளைக்கே அலுவலை ஒப்புக்கொள்ளலாமே. 82. பாரதியும் செல்லம்மாவும் பாரதி : மதுரையில் அலுவல் கிடைக்கிறது. சம்பளமும், சம தானம் கொடுத்ததைவிட அதிகமிருக்கும். சந்தேக மில்லை. நான் போய் அலுவலை ஒப்புக் கொள்ளு கிறேன். அங்கே நமக்கு ஒரு வீடு பார்த்துக் கொண்டு இரண்டு நாளில் திரும்புகிறேன். என்ன, உனக்கு மகிழ்ச்சி தானே? நாமிருவரும் தனிக் குடித்தனம் செல்லம்மா. செல்லம்மா : (மகிழ்ச்சி) சரி (போகிறார்) 83. பாரதியும் விருத்தாசலமும் பாரதி : ஆங்கில ஆசிரியரே, கிளம்புவோமா. (போகிறார்கள்) 84. பாரதி வகுப்பில் பாரதி : அரிச்சந்திர புராணமா? சரி நீ செய்யுளைப் படி இராமன் : அமைச்சரைத் தூதர் ஓடி அழைக்க என் றரசர் கூற இமைப்பினில் சென்ற ழைத்தார் யாவரும் ஒருங்கே ஈண்டிச் சமைத்த வினையை வென்றான் தாமரைச் சரணம் போற்றி எமைக்கடி தழைத்த வாறென் இயம்புக என்று ரைத்தார் பாரதி : உரை நடையா? இது பாட்டு. அதற்குரிய பண் ணோடு படிக்க வேண்டும். சரி நீ பதப்பிரிவு செய். சீனு : அமைச்சரை - தூதர் ஓடி அழைக்க, என்று அரசன் கூற இமைப்பினில் சென்று அழைத்தார் யாவரும் ஒருங்கே ஈண்டி சமைத்த தீ வினையை வென்றான் - தாமரை - சரணம் போற்றி - எமை - கடிது அழைத்த - வாறென் பாரதி : பிழை, வாறென், பிரி - நீ. சவரி : அழைத்த ஆறென் பாரதி : பிழை - நீ? முத்து : ஆறு என் பாரதி : அப்படி அழைத்த ஆறு என்? பிறகு முத்து : இயம்புக என்று உரைத்தார். பாரதி : இந்தச் செய்யுளில் என்ன சொல்லப்படுகின்றது? இராமன் : காட்டு விலங்குகள் நாட்டில் புகுந்து பயிர் பச்சைகளை அழிக்கின்றன என்று குடிகள் அரசரிடம் முறையிட்டார்கள். உடனே அரசன் தூதர் அமைச்சரை ஓடி அழைக்கட்டும் என்று கூறிய அளவில் அந்தத் தூதர்கள் இமைப் பொழுதில் ஓடி அழைத்தார்கள். அமைச்சர் யாவரும் ஒருமிக்க அரசனெதிர் கூடி, எமைக் கடிது அழைத்த விதம் என்ன இயம்புக என்று கேட்டார்கள். பாரதி : சமைத்த தீவினையை வென்றான். தாமரைச் சரணம் போற்றி எமைக் கடிது அழைத்தவாறு என் என்றார்கள் அல்லவா? ஆறு சொற்களில் அழைத்துள்ள கருத்தைச் சொல்ல வில்லை - இல்லையா? இராமன் : ஆம் ஐயா! பாரதி : பதப்பொருள்? பொருள் வெளிப்படை. ஆயினும் சமைத்த? இராமன் : உண்டாக்கிய. பாரதி : தீவினையை. இராமன் : தீய வினையை. பாரதி : பிறகு? இராமன் : வென்றான், வென்றவனாகிய அரசனின் தாமரைச் சரணம் - தாமரையை ஒத்ததிருவடிகளை, போற்றி - வணங்கி. பாரதி : எமைக் கடிது அழைத்தாறு என இயம்புக என்றுரைத் தார் அவ்வளவு ஆறு என்? இராமன் : வகை என்ன? பாரதி : நல்லது. அமைச்சரைத் தூதர் என்ன தொடர்? இராமன் : தெரியவில்லை ஐயா. பாரதி : நீ? சீனி : தெரியவில்லை ஐயா. பாரதி : இலக்கணம் நன்றாகச் சொல்லிக் கொடுக்கப் படவில்லை. `அமைச்சரை என்பதில் ஐ என்ற வேற்றுமை உருபு. சீனி : இரண்டாம் வேற்றுமை உருபு. பாரதி : அதனால்? இரண்டாம் வேற்றுமைத் தொகா நிலைத் தொடர். சீனி : தெரிந்து கொண்டோம் பாரதி : அமைச்சரைத் தூதர் என்று இடையிலே ஒற்று மிகுந்ததற்கு என்ன விதி? தெரியவில்லை? இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - என்பது படித்தில்லையா? இராமன் : படித்த நினைவு உண்டாகின்றது. சீனி : அவ்வளவு விரிவாக இதற்கு முன்னிருந்த ஆசிரியர் பாடம் சொன்னதில்லை. பாரதி : பிழை அவர் மேற்பாதி. உங்கள் மேற்பாதி என்று நினைக்கிறேன். 85. மதுரை சேதுபதி கலாசாலைத் தலைவர் ஸ்ரீநிவாசையங்கார் ஸ்ரீநி : (பிள்ளைகளுடன்) தமிழாசிரியர் எப்படி? பிள் : பெரும்புலவர், போதிப்பதில் சூரர். மகாவித்வான், சோழ வந்தான், சண்முகம் பிள்ளையைவிடத் தமிழ்நாட்டில் வித்வான் ஒருவருமில்லை. அவரை விழுங்கிவிட்டார் சுப்பிரமணிய பாரதி என்றால் இவர் வித்வத் தன்மை வியக்கத்தக்கது அல்லவா? ஆனால் இவர் வந்து இப்போது எவ்வளவு நாளாகிறது. மூன்று மாசமா? உங்களுக்கு கொடுப்பினை இல்லை. அவர் சுதேசமித்ரனுக்கு ஆசிரியராகப் போகிறார். (பிள்ளைகள் தவிப்பு) 85. (அ) சுதேசமித்ரன் அலுவலகம் (ஜி. சுப்பிரமணியர் ஆசிரியர் அறையில் அமைந்திருக் கிறார். அவரிடம் வேணுகோபால் ஐயர் வருகிறார்) ஜி.சுப் : வாரும்! துணையாசிரியராக சுப்பிரமணிய பாரதி என்பவர் வருகிறார். அவர் ஒரு கவிஞர். தமிழ்ப் புலவர். சமகிருதம் படித்தவர். ஆங்கிலம் படித்தவர். துணையாசிரியருக்கு அறையைச் சுத்தப்படுத்தி வேண்டிய வசதி செய்து வையுங்கள். (போதல்) (பாரதி வண்டியில் வந்து இறங்குகின்றார்) ஜி. சுப்பிரமணியர் முன் பாரதி. (எதிரில் வந்து வணங்குகின்றார். பாரதியை மகிழ்ச்சியோடு பார்க்கின்றார் ஜி. சுப்ரமணிய ஐயர்.) ஜி.சுப் : நீங்கள் எட்டயாபுரம் அரண்மனையில் இருந்து ஏன் விலகினீர்கள்? பாரதி : அறையில் ஆடினேன் அம்பலத்திலும் ஆட ஆசை யுண்டாவது இயற்கைதானே? ஜி.சுப். : சரிதான், சரிதான். (மணியடிக்கின்றார். மற்றொருவர் வருகின்றார்) ஜி.சுப். : இவர்களைத் துணையாசிரியர் அறையிற் கொண்டுபோய் விடும். அவரிடம் ஒப்படைக்க வேண்டியவற்றை ஒப்ப டைக்க வேண்டும். (பாரதியை நோக்கி) இவரிடம் தொடக்கத்தில் எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளாலாம். குடும்பம்? பாரதி : வீடு பார்த்துக் கொடுத்தால் உடனே அழைத்து வந்துவிட முடியும். ஜி.சுப். : ஆகட்டும்! பாரதி : அறைக்குப் போகலாமா? ஜி.சுப் : ஆமாம். (வணங்கிப் போதல்) 86. பாரதி தம் அலுவலறையில் எழுதுகின்றார். 87. வீடு தோறும் சுதேசமித்திரன் (வீடுதோறும் படிக்கிறார்கள். அதில் பாரதி பாடல் கண்டு வியப் புறுகின்றார்கள்.) பாட்டு: பொது நலம் கருதுக சி. சுப்பிரமணிய பாரதி அறுசீர் விருத்தம் பன்னலம் வாய்ந்த நாடு பாரத நாடு பின் நாள் இன்னலுள் அவம திப்பும் எய்திடக் காணு கின்றோம் தின்னுதல் உடுத்தல் இன்பம் தேடுவான் எவனும் இந்நாள் தன்னலம் நாடு தல்போல் பிறர்நலம் நாடல் வேண்டும் தானுண்டு தன்பெண் டாட்டி பிள்ளைகள் உண்டென் னாமல் ஏனென்றன் அண்டை வீட்டான் இன்னலை அடைந்தான் என்று மானத்தில் இனமா னத்தை மனத்தினிற் கொள்க தன்னால் ஆனதைத் தனக்கும் நாட்டில் அனைவர்க்கும் செய்தல் வேண்டும். புறாவுயிர் காத்தி டத்தன் பொன்னுயிர் தரஇ சைந்த இறையவன் வாழ்ந்த நாட்டில் இனநலம் பேணும் நாட்டில் சிறார்களும் இனத்தார் செல்வம் கண்டின்பம் அடைதல் இன்றி பொறாமையும் கொண்டா ரென்றால் பொது நலம் என்ன ஆகும்! 88. காலை மலர்கின்றது வ.உ. சிதம்பரம்பிள்ளை படுக்கையைவிட்டு எழுந்து வெளியிற் சென்று சுதேசமித்திரன் வாங்குகின்றார். ஆசையோடு படிக்கின்றார். ஆருக்கதிகாரம் சி. சுப்பிரமணியபாரதி பாரத நாடு - நம் பழம்பெரும் நாடு வீரரின் நாடு - நம் வெற்றித் திரு நாடு சீரற்றுப் போகுதடா - நாம் திக்கற்றுப் போனதுண்டோ ஆருக் கதிகாரம் - நாட்டை ஆளும் அதிகாரம்? ஒற்றுமை வேண்டாமா - சேர்ந் துழைக்க வேண்டாமா பெற்றித் திருநாட்டை - நாம் பெற்றிட வேண்டாமா குற்றம் இழைப்போமோ - இனி கூனிக் கிடப்போமோ வெற்றி நமக்கேயாம் - முழு விடுதலை நமக்கே 89. சுதேசமித்திரன் அலுவலகத்தில் வ.உ. சிதம்பரனார் (சிதம்பரம் பிள்ளை சுதேசமித்திரன் ஆசிரியராகிய ஜி. சுப்பிரமணிய ஐயரைக் காணுகிறார்.) ஜி. சுப்பி : பிள்ளையவாள் சுதேசமித்ரனைப் பார்த்து வருகிறீர்களா? சிதம்பரம் : பார்த்ததால் பாரதியைப் பார்க்க ஓடிவந்தேன். (இருவரும் எழுந்து பாரதி அறைக்கு வருகிறார்கள்) சுப்பி : பாரதி! இவாள்தாம் வ.உ.சிதம்பரப்பிள்ளை தேசபக்தர். நாட்டுக்கு இப்பாங்கில் முன்னின்று உழைப்பவர் இவாள் தாம். உங்களை அவருக்கு அறிமுகப்படுத்துகிறேன். பாரதி : வணக்கம்! (எழுந்து) உட்காருங்கள். (இருவரும் அமரப் பாரதியும் அமர்கின்றார்.) சுப்பிர : பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். பாரதப் பாம்பைக் காணும் ஆங்கிலேயர் எங்கே நடுங்கு கிறார்கள்? இதை அவர் பாம்பென்று நினைக்கவில்லை. பழுதை என்று எண்ணுகின்றார்கள். பாம்பு, படமெடுத்தாடினால்தானே, படுத்துக் கிடக்கிறது! நமக்கு இப்போது நல்ல மகுடிக்காரர் கிடைத்திருக்கிறார். மகுடி ஊதவும் தொடங்கிவிட்டார். பிள்ளையவாளும் சுதேச மித்திரனில் கண்டிருக்கிறார்கள். பாரதம் படமெடுத்தாடப் போகிறது. ஆங்கிலேயப்படை கண்டு நடுங்கப் போகிறது என்பது என் கருத்து. பிள்ளையவாள் மேற்போட்டிருக்கும் நாட்டுத் தொண்டைப் பாரதத்திற்கும் பகிர்ந்து கொடுத்து நாட்டை மீட்பார் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிதம்பரம் : அதுதான் என் நோக்கம். பாரதியார் பாட்டில் ஒவ்வொரு சொல்லும் உணர்வை எழுப்புகின்றது. இந்நாள் மட்டும் அவர் எட்டியாபுரத்தில் அடங்கிக் கிடந்தார். இப்போது தான் நம்மையும் நாட்டையும் எட்டிப் பார்த்தார். இனி நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்பதில் அட்டியில்லை. நாம் பாரதியாரை நல்ல சந்தர்ப்பத்தில் சந்திக்கிறோம். காசியில் காங்கிர நடக்கப் போகின்றது. காசிக் காங்கிர இதுவரைக்கும் நடந்ததைப் போன்றதல்ல 90. வ.உ. சிதம்பரனார் வீட்டில் (சிதம்பரனார் முதல் தேசபக்தர்கள் பலர் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.) பாரதி பாட்டு மன்னுமிமைய மலை எங்கள்மலையே மானில மேலது போற்பிறிதிலையே இன்னறு நீர்க்கங்கை இவ்விதன் மாண்பிற் கெதிரெது வேறே. (வந்தேமாதரம் என்ற கோஷம் வானைப் பிளக்கிறது) 91. அனைவரும் செல்லுகின்றனர் புகைவண்டிக்கு! புகைவண்டி கிளம்புகின்றது. 92. காசி காங்கிர மாநாடு பெருங்கூட்டம் காட்சியளிக்கிறது. திலகர், தாதாபாய் நெளரோஜி, பாரதி முதலியோர் உணர்ச்சி யுடன் பேச்சைக் கவனிக்கிறார்கள். 93. திலகரைக் காணல் திலகர் தெருவில் வெயிலில் குடைபிடித்தபடி எதிரில் கட்டப் படும் கட்டடத்தை மேற்பார்வை பார்த்திருக்கிறார்கள். சிதம்பரம் பிள்ளையும் பாரதியும் அணுகுகின்றனர். சிதம்பரம்: வந்தேமாதரம் (கும்பிடுகிறார்) திலகர் : வந்தேமாதரம். தேச பக்தி பெருகி வருகிறது. மெட்ரா பாங்கில், இவர் யார்? சிதம்பரம்: இவர் தமிழ் நாட்டுக் கவிஞர். இன்று பெருகிவரும் தேசபக்தி இவர் கவியால் வருவதாகும். திலகர் : மிக்க மகிழ்ச்சி. கவிஞரைத் தேடி நான் அலையாத நாளில்லை. தேடாத இடமில்லை. சுதந்திர தாகத்தை உண்டு பண்ணக் கவிஞர் வேண்டும். (பாரதி கவியைத் திலகரிடம் சிதம்பரனார் காட்டுகிறார்) திலகர் : நன்று. உங்கள் புகழ் உலகெல்லாம் பரவுக. நமதே. (இருவரும் வணங்கி மீளுகிறார்கள்) 94. சிதம்பரனாரும் பாரதியும் சிதம்பரம் : டம்டம் என்பது ஓர் ஊர். அங்குத்தான் இருக்கிறார் விவேகானந்தர் மாணவி நிவேதிதா தேவி. நான் பன்முறை அவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். வானைப்போல விரிந்த உள்ளம் உடையவர்கள். தத்துவ ஞானம் மிகுதி. விருப்ப மிருந்தால் நீங்கள் போய்ப் பாருங்கள். நான் உணவு விடுதியில் ஒரு நண்பரைப் பார்க்கவேண்டும். பாரதி : என்ன இருந்தாலும் நிவேதிதா ஆங்கில நாட்டு அன்னிய ஜாதிதானே சிதம்பரம் : அப்படியில்லை. பாரதி : எதற்கும் பார்க்கின்றேன். (போதல்) 95. நிவேதிதாவும் பாரதியாரும் பாரதியாரைக் கண்டதும் நிவேதிதாதேவி நமதே என்றார்கள். அதைக் கேட்ட பாரதி விழித்தார். அவர் முகத்தில் வியப்புக் குறி தோன்றுவதைக் கொண்டு நிவேதிதா பாரதியின் பேதபுத்தியை அறிந்து கொண்டார். நிவே : மகனே உட்கார். நீ யார், எங்கிருந்து வருகின்றாய்? பாரதி : நான் ஒரு கவிஞன். சென்னை மாநகர். என் பெயர் சுப்பிரமணிய பாரதி. நிவே : மிக்க மகிழ்ச்சி மகனே. உனக்கு நான் முதலில் சொல்ல எண்ணுவது இதுதான். உன் மனத்திலுள்ள பிரிவுணர்ச் சியை நீக்கு. ஜாதி மதம் குலம் கோத்திரம் என்ற அநாகரிக மான வித்தியாசங்களை விடு. நீ ஒரு தீரனாக சரித்திர பிரசித்தி பெற்ற தேவனாக வேண்டும். அன்பனே உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா? பாரதி : (வெட்கித் தலைகுனிந்து) தாயே எனக்குத் திருமணமாகி இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும் உண்டு. நிவே : நிரம்ப மகிழ்ச்சி. ஆனால் நீ ஏன் உன் மனைவியை உடன ழைத்து வரவில்லை. பாரதி : இன்னும் எங்களில் மனைவியை சரி சமமாய்ப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் ஏற்பட வில்லை. இந்த நிலையில் அவளைக் காங்கிரசுக்கு அழைத்து வருவதென்பது எப்படி முடியும்? நிவே : (கோபமுகத்துடன்) ஆடவர் பலர் படித்தும் ஒன்றும் அறியாதவர்கள். சுயநல வெறியர்கள்; பெண்களை அடிமைகள் என்று நினைக்கிறார்கள். உன் போன்ற அறிஞர்கட்கு இது அடுக்குமா? தக்க கல்வியும் உரிமையும் தையலர்கட்கு அளிக்கா விட்டால் சமூகச் சீர்திருத்தம் சாத்தியமா? சரி, போனது போகட்டும். இனியாகிலும் அவளைத் தனி என்று நினைக்காதே. உன் இடதுகை என்றாவது நினைக்க வேண்டும். அவளைத் தெய்வமென்று போற்றி வருதல் வேண்டும். பாரதி : தாயே அப்படியே (கும்பிட்டார்) நிவே : மகனே, இது என் நினைவாக உன்னிடம் என்றும் இருக்கட்டும் ஓர் ஆலிலையைக் கொடுக்க அதை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார் பாரதி. (போதல்) 96. பாரதியும் திருமலாச்சாரியாரும் பாரதி வீட்டில் தன் அன்பு மனையாளிடம் தன் உள்ளத்தின் நிலையை விவரித்துக் கொண்டிருந்தார். பாரதி : ஜி. சுப்பிரமணிய ஐயர் என் அரசியல் குரு. என் புகழுக்கு அவரும் காரணமானவர். அவரை எந்நாளும் மறக்கமுடியாது. ஆயினும், எட்டியாபுரத்துக் கொத்தடிமை எனக்குப் பிடிக்காதது போலவே, ஐயரின் அதிகாரமும் எனக்குப் பிடிக்கவில்லை. நாட்டுக்கு நான் செய்யவேண்டிய தொண்டு களுக்கு சுதேசமித்ரன் அறையும் போதாது செல்லம்மா. தங்கு தடையின்றிப் பொதுமக்களுக்கு என் எண்ணங்களை அறிவிக்க முடியவில்லை. (செல்லம்மா ஏதோ சொல்லத் தொடங்குகிறார்) பாரதி : நான் எழுதுகிறேன், எனக்குச் சுதந்திரம் கொடு. பாட்டு என்று தணியு மிந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்றெம தன்னை கை விலங்குகள் போகும் என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய் ஆகும் அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே, அன்பில் எம் வாழ்வினை ஆதரிப்போனே வென்றி தருந்துணை நின்னருள் அன்றோ மெய்யடியோம் இன்னும் வாடுதல் நன்றோ பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ தாயுந்தன் குழந்தையைத்தள்ளிடப்போமோ அஞ்சல் என் றருள் செயும் கடமை இல் லாயோ ஐயா நீயும் நின் அறம் மறந்தாயோ வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனே வீரசிகாமணி அடியவர் கோனே (இதே நேரத்தில் வெளியில் காத்திருந்த திருமலாச்சாரி மேலும் காத்திருக்க எண்ணவில்லை.) திருமலை : பாரதி இருக்காரோ? பாரதி : யார்? (வெளியில் வந்து) திருமலை : நான் திருமலாச்சாரி, ப்ரம்மவாதின் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை ஆசிரியன். பாரதி : கேள்விப்பட்டிருக்கிறேன் ஆசிரியரே! வணக்கம். பத்திரிக்கையின் பேரோ எளிமையாய் இல்லை. அர்த்தம் புரியாது மக்களுக்கு. அதையும் ஆங்கிலத்தில் புதைத்து விட்டீர்கள். திருமலை : (சிரித்து விட்டு) அதைத் தமிழில் நடத்த வேண்டும் என்பது எண்ணம். பாரதி : நாட்டுக்கா? வீட்டுக்கா? நாட்டுக்கானால் சுயராஜ்யம் கேட்கவேண்டும்! வீட்டுக்கானால் பிரம்மோபதேசமாக இருக்கலாம். திருமலை : இல்லை இல்லை, நாட்டுக்கு. உங்கள் நடையில்; தூய மொழியில். பாரதி : அதில் நான் என்ன செய்யவேண்டும்? திருமலை : எல்லா பொறுப்பும் உங்களுக்கே. எல்லா அதிகாரமும் உங்களுக்கே. பாரதி : என் எண்ணமுரசு எவர்க்கும் கேட்கும்வண்ணம் வாய்ப் பளித்தால் போதும் திருமலை : அணுவும் தடங்கல் இராது. பாரதி : நடத்துவோம், துவங்குங்கள். திரமலை : சுதேசமித்திரனில் தங்கள் நிலை? பாரதி : விரிவான இடமில்லை. (திருமலாச்சாரி கண்ணீர் வடிக்கிறார்) திருமலை : உங்கள் தேச கைங்கரியம் ஜெயம் அடையும் - பத்திரிகைக்குப் பெயர்? பாரதி : இந்தியா! (இருவரும் போகிறார்கள்) 97. பாரதி இந்தியா அலுவலகத்தில்! பாரதி இந்தியா எழுதுகிறார். 98. பாரதி இந்தியா பத்திரிக்கையுடன் (கட்டாக) மக்கள் மன்றத்துக்குப் போகிறார். 99. மக்கள் மன்றத்தில் இந்தியா விற்கிறார். அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் காசு கொடுத்து வாங்குகிறார்கள். தோளில் தொங்கும் பையில் காசுகளைப் போடுகிறார். அனைவரும் பத்திரிகை படிக்கிறார்கள். 100. பக்த ஜனசங்கத்தில் - பாரதியுடன் ஒரு கூட்டம் போகிறது. பத்திரிக்கை விற்பனை ஆகிறது. வாங்கிப் படிக்கிறார்கள். பத்திரிகையின் முதற்பக்கத்தில் படம். அது இந்தியா. ஒரு பசு! அதன் காலில் இந்தியன் என்ற கன்றுக்குட்டி கட்டப் பட்டிருக்கிறது வெள்ளைக்காரன் பாலைக் கறக்கிறான். இந்தப் படம் மக்கள் உள்ளத்தைக் கவருகின்றது. 101. தெருவில் பாரதியும் தொண்டர்களும் பத்திரிக்கை விற்கிறார்கள். பணப்பை பெருத்து விடுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆள் வந்து பாரதியிடம் கூறுகிறான். குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாயிருக்கிறது மருத்துவர் மருந்து எழுதிக் கொடுத்தார். மருந்துக் கடையில் போய்க் கேட்டேன். ஐந்து ரூபாய் ஆகும். அம்மா உங்களிடம் ஐந்து ரூபாய் வாங்கி வரச் சொன்னார்கள் என்கிறான் (உடன் இருந்த தொண்டர்கள் பதறுகிறார்கள். பணம் கொடுங்கள் என்று பாரதிக்குக் கூறுகிறார்கள். பாரதி - தன் சட்டைச் சாக்கில் தேடுகிறார். மூன்று ரூபாய்ச் சில்லரை இருக்கிறது. நீட்டுகிறார்.) பாரதி : மூன்று ரூபாயில் முடித்துக்கொள். அவ்வளவுதான் இருந்தது. தொண்டன் : அதோ பணம் பாரதி : அது நாட்டுக்குச் சொந்தம். (போகிறார்கள்) 102. கூட்டம் போகிறது வழியில், ஏழைகள் ஒரு கோயிலின் வாயிலில் உட்கார்ந்து வருவார் போவாரைக் கெஞ்சுகிறார்கள். பாரதி பணமூட்டையைக் கீழே இறக்கிவைத்து தலைக்கு ஒருபிடி காசு போடுகிறார். தொண்டர் : இந்தப் பணம் நாட்டுக்குச் சொந்தம் என்றீர்களே. பாரதி : ஆமாம்! இவர்கள்தானே நாடு! (போகிறார்கள்.) 103. மக்கள் மன்றத்தில் கூட்டம் சிதம்பரம்பிள்ளை முதலிய 100 பேர்கள் கூடியிருக்கிறார்கள். பாரதி பேசுகிறார்: பத்திரிகையில் எழுதுகிறோம். தெருவில் பாடுகிறோம். அந்த அளவு சுயராஜ்யக் கிளர்ச்சி மக்கள் உள்ளத்தைக் கவர் கின்றது. போதுமா? என்று கேட்கிறேன். சுயராஜ்யதினம் என ஒரு நாளைக் குறிப்பிட்டு மக்களைத் திரட்டி ஊர்வலமாகத் திருவல்லிக் கேணிக் கடற்கரைக்குச் செல்லவேண்டும் அங்கு சுயராஜ்யத்தின் முக்கியம் பற்றித் தலைவர்கள் பேசவேண்டும். இது நான் கொண்டுவந்த தீர்மானம். இதுபற்றி அங்கத்தினர்கள் யோசித்து என் தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டுகின்றேன். (கை ஒலி) திருமலாச்சாரி : நான் தீர்மானத்தை ஆதரிக்கின்றேன். ஜி.சுப்பிர : உடனே செய்யத் தகுந்த காரியம் இது வ.உ.சி. : இது பற்றி ஊர்தோறும் கூட்டம் போட்டுக் கடற்கரைக் கூட்டத்து மக்களைத் திரட்டவேண்டும் பாரதி : கட்டாயம் - கட்டாயம். பாட்டு ஆடுவோமே - பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் நாமென் (றாடு) (எல்லாரும் கைத்தாளம்) 104. ஊர்வலம் உருவாகிறது மக்கள் கூட்டம் மிகுதியாயிருக்கிறது ஜி. சுப்பிரமணிய ஐயர் பாரதி யிடம் கூறுகிறார்: பாரதி நாம் அரசினரை எதிர்த்துக் காரியம் செய்கிறோம். நம்மை ஆதரிக்க மக்கள் அஞ்சு கிறார்கள். இதோ பாருங்கள். வாத்தியக்காரர் வர முடியாது என்கிறார்கள். (பாரதி விரைந்தோடுகிறார்) 105. வாத்தியக்காரரும் பாரதியும் பாரதி:தம்பிமார்களே, மக்கள் கடல் போல் வந்து கூடிவிட்டார்கள். ஊர்வலம் புறப்பட உங்களால்தான் தடை. வாத்தியமில்லாவிட்டால் ஊர்வலம் சிறப்படையாது. நீங்கள் அஞ்சவேண்டாம் அதிகாரிகளுக்கு. உங்களுக்கு வரும் கெடுதியை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். உங்களைச் சிறையில் தள்ளினால், உங்களுக்காக நான் சிறைக்குப் போகிறேன். புறப்படுங்கள். (உடனே தவில் ஒத்து நாதவரம் துவக்கப்படுகிறது. பாரதி முன்னே செல்ல வாத்தியம் பின்தொடர்கின்றது) 106. ஊர்வலம் போகிறது பாரதி முன்னணியில் நடந்த வண்ணம் பாடுகிறார். வீரசுந்தரம் வேண்டி நின்றார் பின்னர் ... ... ... 107. கடற்கரையில் கூட்டம். தலைவர்கள் பேசுகிறார்கள். மக்கள் பாரதி பேசட்டும் என்று கூச்சலிடுகிறார்கள் - பாரதி பேச்சு பாட்டு வந்தே மா தரம் ஜய வந்தே மா தரம் ஜய ... ... ... (மக்கள் வந்தே மாதரம் கோஷத்துடன் கலைகிறார்கள்) 108. இந்தியா (பத்திரிகை) இந்தியா காரியாலயத்தில் கூட்டம் கட்டுக்கொள்ளவில்லை. விபின சந்திர பாலர் வரவேற்பு. லாலா லஜபதிராயை நாடு கடத்தியது. சிதம்பரம்பிள்ளை மேல் அரசாங்கத்தின் அடக்கு முறை. அவை பற்றிய செய்தியை இந்தியா பத்திரிகை படங்களுடன் வெளியிடுகின்றது. 109. கூட்டம் பாரதியார், எதிராஜ சுரேந்திரநாத் ஆர்ய, ஜி. சுப்பிரமணியர் முதலியவர்கள் சங்கத்தில் கூடி விபின சந்திரபாலர் வந்து போனதினால் ஏற்பட்டிருக்கும் மக்களுணர்ச்சியைக் குன்றவிடக் கூடாது என்றும் கடற்கரைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்றும் முடிவு செய்கின்றார்கள். 110. கடற்கரைக் கூட்டம். சுதேசிச் சாமான்களுக்கு ஆதரவு. விதேசிச் சாமான்கள் மறுப்புப் பற்றிய தீர்மானம். பாரதி பேச்சு வீடுகளில் எல்லாம் அயல் நாட்டுச் சாமான்கள் ஆடம்பரப் பொருள்கள் உடைபடுகின்றன. எரிபடுகின்றன. கடைகளின் எதிரில் அயல்நாட்டு உடைகள், சாமான்களுக்கு அதோகதி! பாரதி : வீரர் சிதம்பரம்பிள்ளை தூத்துக்குடி - கொழும்பு கப்பல் விடும் வேலையை இந்திய டீம் நாவிகேஷன் கம்பெனியே நடத்தி வருகின்றது. சிதம் : இந்திய சுதேசி நாவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் ஒரு கம்பெனி தொடங்கி இருக்கிறேன். பாரதி : மகிழ்ச்சி, மகிழ்ச்சி. கப்பல்? சிதம் : லாமே, காலியா என்ற இரண்டு கப்பல்களைத் தவணைக் கடனுக்கு விலைக்கு வாங்கினேன். இந்தப் பக்கத்தில் உள்ளவர்களிடம் கம்பெனிப் பங்கு நிதி திரட்டிக் கொடுப்பீர் என்று நம்புகிறேன். பாரதி : இதற்குப் பயன்படாத ஜென்மம் இருந்தென்ன மண்ணாகிப் போயென்ன? எழுந்திரும். சிதம் : சாப்பிடவில்லை மாமா பாரதி : போகுமிடமெல்லாம் சாப்பாடுதான் எழுந்திரும் பிள்ளை யவாள் (போகிறார்கள்) 111. தண்டல் பாரதி பல இடங்களில் சிதம்பரனாருடன் நுழைகின்றார். நிறையப் பங்குதாரர்கள் சேருகின்றார்கள். (சங்கத்தில் பத்திரிக்கை படிக்கப்படுகிறது.) பாரதி : ராஷ்பிகாரிகோஷ் அறிவாளி என்பதை நாம் ஒத்துக் கொள்ளுகிறோம். ஆனால் அவர் மிதவாதி என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திரப் பயிர் தொண்டைக் கதிரில் இருக்கிறது. வாய்க்காலால் நீர் பாய வேண்டிய நேரத்தில் ருத்ரணியால் தண்ணீர் பாய்ச்சலாமோ? நாம் லாலா லஜபதிராயை ஆதரிப்போம். (பாரதி - சிதம்பரனார் தலைமையில் ஒரு கூட்டம் சூரத் காங்கிரசுக்குப் புறப்படுகின்றது. வந்தே மாதரம் லாலாலஜபதிராய் வாழ்க - ரயில் புறப்படுகின்றது) தமிழ்நாட்டார் தங்கும் பகுதி: காங்கிர மாநாட்டுப் பந்தலில் தமிழ்நாட்டார் தங்கும் பகுதியில் திலகர் தோன்றுகிறார். பாரதி : திலக் மகாராஜுக்கு ஜேய்! மகாராஜ் விரும்பிய வண்ணம் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் லாலாவை ஆதரிக்கவும் ராஷ்பிகாரியை எதிர்க்கவும் வந்திருக்கிறோம். திலகர் : ஒற்றுமை குலையாமல் இருங்கள். ஒரே பக்கத்தில் உட்காருங் கள். கார்யாரம்பத்திலே எவரும் அஞ்சலாகாது. தமிழரால் தான் என் உத்தேசம் நிறைவேறவேண்டும் அமிதவாதிகளின் மானம். தேசமானம் காப்பாற்றப் படவேண்டும். (கும்பிடுகிறார் - போகிறார்) தமிழர் : திலகருக்கு வாழ்த்து 112. மகாநாடு தொடக்கம் இந்த மகாநாட்டுக்கு ராஷ்பிகாரி கோஷத் தலைவராக முன் மொழிகின்றேன். (பாரதி ஓடி) பாரதி : நாங்கள் தியாகி - லாலாலஜபதிராய் அவர்களைத்தலைவராக முன் மொழிகின்றோம். சில மிதவாதிகள் போய் ராஷ்பிகாரியைத் தலைமைப் பிரசங்கம் செய்யும்படி அழைத்து வருகிறார்கள். அவர் பிரசங்கத்தைத் தொடங்கினார். கூட்டத்தில் கூச்சல். திலகர் எழுந்திருந்து மேடைக்கு வருகின்றார். நிதானக் கட்சியினர் கூட்டமாக திலகரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தூக்கு கின்றனர். திலகருக்கு ஆபத்து. மற்றொரு கூட்டம் தூக்கு வதை விலக்குகிறது. பாரதி முன்னின்று பணியாற்று கிறார். நாற்காலிகள் திலகரை நோக்கிப் பறந்து வருகின்றன. ஆயினும் அவை பாரதி முதலியவர்களால் தடுக்கப்படு கின்றன. வந்த இடத்திற்கே திரும்பப் பறக்கின்றன. போலிசார் தலையிட்டனர். கலகத்தை அடக்கினர். 113. பத்திரிகாசிரியர் கூட்டம், பாரதியார் பாரதி : நம் நோக்கம் நிறைவேறவேண்டும். அரசினரை நாம் கண்டிக்கும்போதெல்லாம் பத்திரிகைகள் ஒற்றுமையாய் இருந்து அதை ஆதரிக்கவேண்டும். அடக்குமுறை தலை விரித்தாடுகின்றது. எதிர்க்க வேண்டும் பத்திரிக்கை எல்லாம். (வந்தே மாதரம்) 114. செயற்குழுக் கூட்டம் பாரதி : தூத்துக்குடியில் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதற்காக தொடர்ந்து வழக்கில் நானும் நண்பர்களும் சாட்சி சொன்னோம். அதனால் சிதம்பரம் பிள்ளையைச் சுப்பிரமணிய சிவத்தை யும் - விடுதலை செய்யக்கூடும் என்று நம்பினோம். கொடிய தண்டனைக்கு உட்படுத்தினார்கள். அரசாங்கப் பேய்கள். அவர்கள் அரசியல் தெரியாதவர்கள். அவர்களின் இந்த அடக்குமுறை. நம் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்திவிட்டது. நாம் அஞ்சாது உழைக்க வேண்டும். இந்தியா ஆபிசில் பத்திரிகை விற்பனை மிகுதியாய் விடுகிறது. படங்கள் சேதிகள் மக்களைத் தட்டி எழுப்புவன. வாரண்டுகள் பிறக்கின்றன: இந்தியா பத்திரிகையின் சீநிவாசாச்சாரி வீட்டில் போலீ சூழ்ந்து கொள்ளுகின்றது. அவர் கைது செய்யப்படுகிறார். ஜி. சுப்பிரமணியரும் அவ்வாறே. 115. தூத்துக்குடிச் சிறையில் சிதம்பரனார் (பாரதியார் சிதம்பரனாரைச் சிறையில் சந்திக்கிறார்) சிதம் : செக்கிழுக்கிறேன் மாமா பாரதி : வெள்ளையன் ஆட்சி விளக்குப் படர்ந்து எரிகிறது பிள்ளை யவாள். அது அவிந்துபோகும் நேரம். சிதம் : தேசத்தொண்டில் ஈடுபட்டவர்கள் செக்கிழுக்க அஞ்ச மாட்டார்கள். சாகவும் துணிந்தவர். இதை வெள்ளையர் அறியார் - அறிந்து கொள்ளுவார்கள். பாரதி : துன்பத்தை இன்பமாகக் கொண்ட புத்தர் நாட்டில் இன்பத்தைப் பிரிந்தால் இறந்துபடுவான் தமிழன் என்று வெள்ளையர் நினைக்கின்றார்கள். சிதம் : இப்படியெல்லாம் எண்ணி உற்சாகத்தால் மாமா, நீங்கள் சிறைப்பட்டு விடக்கூடாது. ஜி. சுப்பிரமணிய ஐயரையும், ஸ்ரீநிவாச்சாரியாரையும் சிறைப் படுத்திய வெள்ளையர் ஆட்சி உம்மைச் சும்மாவிட்டுவிடாது, வாரண்டு எடுத்திருக்கும். நீரும் சிறைப்பட்டுவிட்டால் தேசக்கிளர்ச்சி விடுதலை முயற்சி என்னாகும்? நீர் புதுச்சேரிக்குத் தப்பிப் போய்விடவேண்டும். அதுவும் நம் நாடுதான். ஆனால் பிரெஞ்சுக்காரன் ஆட்சியில் விடுதலைக் கிளர்ச்சி குற்றமானதல்ல. பாரதி : அப்படியா? (போதல்) 116. பாரதியும் செல்லம்மாவும் வீட்டில் பாரதியும் மனைவியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாரதி : ஜி. சுப்பிரமணிய ஐயரையும் ஸ்ரீநிவாசாச்சாரியையும் சிறைப்படுத்திவிட்டார்கள். தூத்துக்குடியில் சிதம்பரனாரைக் கடுமையாகத் தண்டித்து விட்டார்கள். சிதம்பரனார் சிறையில் செக்கிழுக்கிறார் செல்லம்மா. அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. செல் : மனைவியையும் ஒரு பெண்ணையும் மறந்து, ஏற்பட்டிருக்கும் நம் வறுமையை மறந்து உங்களால் இப்படிப் பேச முடிகிறது. காரணம், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேசபக்திதான். பாரதி : உனக்கு தேசபக்தி வேண்டாமோ? செல் : எனக்கு இதுவரைக்கும் ஏற்பட்டிருப்பது பதி பக்தியும் குழந்தை பக்தியும்தான் பாரதி : இருக்க வேண்டியதுதான். அதற்கு ஓரளவுவேண்டும் செல்லம்மா. பற்றுக் கொள்வதில் ஏற்படும் இன்பத்தைவிட அந்தப் பற்றை விடுவதால் அதிக இன்பம் உண்டு என்கிறார் புத்தர். பாப்பா அழுகிறாற் போலிருக்கிறது போய்க் கவனி. பாரதிதன் சாய்வு நாற்காலியில்! கனவுப் பாட்டு கனவென்ன கனவே - என்றன் கண்துயிலாது நனவினிலேயுற்ற - கன கானகங் கண்டேன் - அடர் கானகங் கண்டேன் குன்றத்தின் மீதே- புத்த பகவன் - எங்கள் புத்த பகவன் - அவன் சுத்த மெய்ஞ்ஞானச் சுடர் முகம் கண்டேன் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... வில்லினை எடடா - கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய்திட டா (பாரதி எழுந்து விடுகின்றார். மனக்கண்ணில் தோன்றும் வெள்ளையரை நோக்கிக் கூறுகின்றார்) வில்லினை எடடா (அதே நேரத்தில் குவளைக் கண்ணன் அங்கு வந்துவிடு கின்றார்) குவளை : நீங்கள்தான் பாரதியோ? திருமலாச்சாரி முதலிய உங்கள் நண்பர்கள் அனுப்பினார் கள். உங்கள் மேல் வாரண்டு ஏற்படுத்துகிறார்கள். நீங்கள் புதுச்சேரிக்குப் போய்விடுவது நல்லது. நீங்கள் சிறைப் படுவதால் நாட்டுக்கு நலமில்லை. சிதம்பரம் பிள்ளையும் அவாளுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பிரஞ்சு மக்களையும் நீங்கள் நம் சுயராஜ்யக் கிளர்ச்சிக்கு ஆதரவுகள் வேண்டுமானால் நீங்களும் அங்கிருந்து சுதந்தரமாகக் காரியங்களைச் செய்ய வேண்டுமானால் புதுவைக்குப் புறப்படுங்கள். என் ஷட்டகர் சிட்டி குப்புசாமி ஐயர் புதுச்சேரியில் இருக்கிறார். அவரிடம் உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அங்கே நீங்கள் சவுகரியமாக இருக்கலாம். அங்கே உங்கள் நிலைமையைச் சீர்ப் பண்ணிக்கொண்டு உங்கள் குடும்பத்தைப் புதுவைக்கே அழைத்துக் கொள்ளலாம். இதோ கடிதம். புறப்படவேண்டும்! (பாரதியார் புதுவைக்கு! ரெயில் புறப்படுகின்றது) 117. ரயில் புறப்படும் போது செல்லம்மாவின் தமையனார் கே.ஆர். அப்பாத்துரை ஐயரிடம் பாரதி கூறினார். என்னடா, நான் புதுவைக்குச் செல்லுகிறேன். செல்லம்மாவும் குழந்தையும் என்ன ஆவார்கள். அப்பா : நீ ஒன்றும் மனத்தை அலட்டிச் கொள்ளாதே. நான்பார்த்துக் கொள்ளமாட்டேனா. ஒரு செல்லம்மாவுக்காக எடுத்த காரியத்தை விடாதே. உன் தியாகத்தினால் கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை ஏற்படும். நீ சிறை செல்ல வேண்டி வந்தாலும் நான் உன் குடும்பத்தைப் பராமரித்துக் கொள்வேன். பாரதி : சரி, ரயில் புறப்படுகிறது. பாலபாரதியைத் தனியே துவக்கி நடத்து, நான் புதுவையிலிருந்து வியாசங்கள், பாட்டுக்கள் அனுப்புகிறேன். அப்பா : நல்லது (ரயில் போகிறது) 118. காலை ரயிலில் பாரதியார் புஷ் வண்டியில் பாரதி பெருமாள் கோவில் தெரு (புதுவை) சிட்டி குப்புசாமி ஐயர் வீட்டின் எதிரில் வந்து சேருகிறார். புஷ் வண்டிக்காரன் இதுதான் சிட்டி ஐயர் வீடு என்கிறான். சிட்டியின் பாட்டு பாரதியின் உள்ளத்தைக் கவருகிறது. பாட்டு நா - ரா - ய - ணா - ய - ந - மோ. ... ... ... ... ... ... ... ... ... ... என்ற பல்லவியைச் சாதகம் செய்து கொண்டிருக்கிறார் சிட்டி. அது வெளியில் கேட்கிறது. சிறிது நேரம் நினைவு செலுத்தியிருந்த பாரதி உள்ளே செல்லுகிறார். புஷ் வண்டிக்காரனுக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுக் கடிதத்தைச் சிட்டியிடம் பாரதி கொடுக்கிறார். பாரதி : இசை உலகில் சஞ்சரித்துக் கொண்டு இன்பத்தை நுகர்ந்து கொண்டிருந்தீர்கள். என் வருகை இடையூறாயிற்று. (கடிதத்தைப் பார்க்கிறார் சிட்டி. அதிர்ச்சி அடைகிறார்) சிட்டி : (எழுந்து வணக்கம் செலுத்தி) உட்காருங்கள். (பாரதி சிட்டியின் எதிரில் பாயில் உட்காருகின்றார்) உங்களுக்கு ஒரு குறையும் இராது வாமி. சுகமாக இங்கேயே இருங்கள். நீங்கள் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு நான் பூர்வத்தில் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கவேண்டும். நான் இசைப் பைத்தியம் உடையவன். இப்போது, பல்லவி பாடியிருந்தேன். கவிஞருக்கு இசையில் பயிற்சி உண்டோ? நான் பாடியிருந்தது எப்படி? பாரதி : தென்னாட்டில் பிறந்த இசைக்குப் பல்லாயிரக் கணக்கில் வயதாகிறது. உயர்ந்த இலட்சியமுடையது. இந்த நாளில் அதன் நிலையைக் கவனித்தால் அது பாதை தவறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். சொல்லின் பொருளை விளக்க இசை உபயோகப்பட வேண்டும். சொல்லையும் பொருளையும் மறந்து, இசை தன்னையே மேம்படுத்திக் கொண்டுபோகிறது. இசைத்தமிழ் மீண்டும் தன் இளமைத் தன்மையை அடைய வேண்டும். உதாரணம்: தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பி னளாம் எங்கள் தாய் சிட்டி : ஆகா! தாங்கள் அருளிச் செய்ததோ? பாரதி : ஆம்! இதில் சொல்லும், கருத்தும் இசையைச் சாதனமாகக் கொண்டு மக்களுக்கு உணர்ச்சியைச் செய்கின்றது. பாட்டின் நோக்கம் அதுதானே. சிட்டி : உண்மை வாமி. விரைவில் தாங்கள் காலைக் கடன்களை முடித்துக்கொள்ளுங்கள். அமுது பண்ணனும். 119. குவளையும் செல்லம்மாவும் குவளை : அம்மா! பாரதி புதுச்சேரிக்குப் போனதிலே இங்கிலீஷ் காரனுக்கு ரொம்பக் கடுப்பு. காரணம் என்னாண்ணா தேசபக்தர்களுக்குப் பாரதி ஒரு புதிய வழியைக் காட்டிவிட்டார். அல்லியோ! இனி வாரண்டுகாரர்கள் எல்லாம் புதுச்சேரிக்குப் போய்விடுவார்கள். இங்கிலீஷ் காரன் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. அது பிரெஞ்சு அரசாங்கம். பிரெஞ்சுக்காரன் தன்னை அடைந்த தேச பக்தர்களுக்கு ஆதரவு கொடுப்பானே அல்லாமல் காட்டிக்கொடுக்கமாட்டான். நான் இங்கே எனக்குத் தெரிஞ்ச போலீகாரனைப் பாரதி பற்றிக் கேட்டேன். இப்படி அநேக உண்மைகளையெல்லாம் சொன்னான். நான் கூடப் புதுச்சேரிக்குப் போய்விட்டு வந்தேன். அப்பாத்துரை ஐயர் வந்தா சமாசாரத்தைச் சொல்லுங்கள். செல்லம்மாள் : ஐயர் நண்ணா இருக்காரா? போனதும் கடிதம் போடு. ஐயரையும் கடிதம் போடச் சொல்லு. (போதல்) 120. பாரதியும் சிட்டியும் (சிட்டி வெளியிற் போய் வருகிறார். பாரதி அவரை வெளியில் எதிர் பார்த்து நிற்கின்றார்.) பாரதி : நிலைமை எப்படி? சிட்டி : என்ன வாமி பண்ணுவேன்? பாரதி இங்கிலீஷ்காரனுக்கு விரோதி, அவரை வைத்திருக்காதீர்ண்ணு நாங்கள் உமக்கு சொல்லி நாலைந்து நாளாய்விட்டது. வந்ததை அனுபவின்றா! பாரதி : இதெல்லாம் பிரெஞ்சு சட்டமோ பிரஞ்சுக்காரனோ சொல்லிய தாகக் கொள்ளக்கூடாது. கீழே உள்ள போலீ காரர் இங்கிலீஷ் காரன் தூண்டுதலால் சொல்லுகிறார்கள். ஆயினும் இதைவிட்டு விரைவில் போகப் பிரயத்தனப் படுகிறேன். ஆனாலும் சீக்கிரம் வழியேற்படும். சிட்டி உள்ளே போகிறார். பாரதி வெளித் திண்ணையில் அயர்ந்து உட்கார்ந்து விடுகின்றார். 121. குவளை வருகிறான் பாரதி : நல்ல வேளைக்கு வந்தாய் கிருஷ்ணன்! நான் உடனே வீட்டை விட்டு போய்விட வேண்டும். குப்புசாமி ஐயருக்குப் புதுச்சேரிப் போலிசின் கெடுபிடி அதிகரித்து விட்டது. குவளை: அவன் ஒரு கிணற்றுத்தவளை. எழுந்திரும், புறப்படும். அதோ என் நண்பர் வீடு! (பாரதி பயணம் சொல்லிவிட்டுத் துணிப் பெட்டியுடன் கிளம்புகிறார் குவளையுடன்) 122. புதுவையில் இந்தியா பத்திரிக்கை புதுவை இந்தியா அலுவலகத்தில் கூட்டம். இந்தியா வெளி வருகின்றது. எல்லாரும் வாங்குகின்றார்கள். ஒரு கடையில் ஒருவன் இந்தியா படிக்கிறான். அவன் நெஞ்சை யும் விழியையும் கவருகின்றது முற்பக்கச் சித்திரம். பாரதமாதா கால் விலங்குடன் கண்ணீர் வடிக்கின்றாள் ஒருபக்கம் வெள்ளைக்காரன் முடிபூண்டு கையில் ஒரு பெரிய வாளுடன் மீசையை முறுக்குகின்றான். மற்றொரு பக்கம் சில வாலிபர்கூடி இந்தியா பத்திரிகையில் வந்த பாட்டை உணர்ச்சியுடன் பாடுகிறார்கள். பாட்டு: பாரத தேசமென்று முரசறை வாய் - அது பாரதர்க்கே சொந்த மென்று முரசறை வாய் வீரர்தம் நாடி தென்று முரசறை வாய் - இங்கு வேலை பிறர்க் கில்லை என்று முரசறை வாய் அயலவர்க்காட்சியில்லை எங்கள் நிலத்தில் - எம்மை அடிமைகள் என்று சொல்லல் என்ன வேடிக்கை. புயலும் கிளம்பிற்றென்று கொட்டு முரசே பொடிபட்டுப் போனதென்று கொட்டு முரசே இதை உரக்கப் பாடுகிறார். கூட்டம் சேர்ந்து விடுகிறது. கூட்டத்தில் உணர்ச்சி தோன்றுகிறது. 123. ரயிலடியில் பாரதி, முருகேசபிள்ளை வில்லியனூர் சீனிவாசாச்சாரி திருமலாச்சாரி குவளை மற்றும் பலர் ரயிலடியில் காத்திருக்கிறார்கள். வரவிருக்கும் அரவிந்த கோஷைப் பார்க்கும் ஆவலால் பொது மக்களும் காத்திருக்கிறார்கள். (கூட்டத்தைப் பிளந்து ஓர் ஆள் வருகிறார்) ஆள் : அரவிந்த கோஷ் சங்கரசெட்டியார் வீட்டுக்கு வந்து விட்டார். இதைச் சங்கரசெட்டியாரே பாரதியாரிடம் சொல்லச் சொன்னார். (பாரதி வியப்பு! மற்றவரும் ஆச்சரியத்தோடு - சங்கர செட்டியார் வீடு நோக்கிச் செல்லுகிறார்கள்.) 124. அரவிந்தர் மாடியில் (பாரதியும் சங்கரசெட்டியாரும் அரவிந்தரை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் மாடியில் நின்றபடி) பாரதி : நாம் சுதந்திரமடைய வேண்டும். வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போகவேண்டும் என்று பாடுபடு கின்றார் கள் தேசத் தலைவர்கள். அந்தத் தலைவர்களில் தலை சிறந்த மகான் அரவிந்தகோஷ் இவர்தாம். (பார்த்தாய் விட்டது! வணக்கம்!) அனைவரும் கலைந்து போகிறார்கள். 124. ஆ. அரவிந்தரும் தமிழும் (வி.வி.எ. பாரதி, திருமலாச்சாரி, சங்கரசெட்டியார், ஸ்ரீநிவாசாச் சாரி, குவளைக்கண்ணன் முதலியவர்கள்) பாரதி : இவர்தான் - வி.வி.எ. இங்கிலாந்துக்கு உயர் படிப்புக்குப் போனவர், அங்கே இந்திய சுதந்தரக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இங்கிலீஷ் காரனால் தொல்லைக்குட்பட்டார். நம் போலவே புதுச்சேரியைப் புகலாக அடைந்தவர்! திருமலாச்சாரி சென்னையில் இந்தியாப் பத்திரிக்கையை தொடங்கிப் பெருங்கிளர்ச்சி செய்தவர். ஆங்கிலேயரால் நிறுத்தப் பட்டது. இதோ புதுவையில் அது நடத்தப்பட்டு வருகின்றது. நன்றாக நடக்கிறது. அரவிந் : திருமலாச்சாரியே எடிட்டரா? திரு : சென்னையிலும் சரி, புதுவையிலும் சரி ஆசிரியர் பாரதிதான். அதில் வரும் பாரதி பாட்டுக்குத் தமிழ் நாட்டில் மதிப்பதிகம் பாரதி : அவர்தான் சங்கரஞ்செட்டியார் மற்றும் இவர்கள் முருகேசப் பிள்ளை. இங்கு - வந்துள்ள - இனிமேல் வரக் கூடிய தேச பக்தர்கட்கெல்லாம் பேராதரவு தருகின்ற வர்கள். இவர் சீனி வாசாச்சாரி, வியாபாரி, தேசபக்தர், இங்கிலீஷ்காரனுக்கு விரோதி குவளைக் கண்ணன். வி.வி.எ : பாரதி கவிதை மோகங்கொண்டவர் தேசபக்தர்களுக்கு அஞ்சாமல் உழைப்பவர். அரவிந் : உங்களுக்கெல்லாம் தாய்மொழி? பாரதி : தமிழ் அரவிந் : அப்படி ஒரு மொழியா? அதை எவ்வளவு மக்கள் பேசுகிறார்கள்? பாரதி : அந்தக் காலத்தில் பாரத நாட்டின் தாய்மொழி தமிழ்தான். இப்போது நாலுகோடி மக்களால் பேசப்படுகின்றது. அரவி : ஓர் இனத்தின் மேன்மை, முன்னேற்றம் அந்த இனத்தின் மொழியில்தான் அமைந்து இருக்கின்றன. இன்று இந்தியாவில் உன்னத நிலையை அடைந்துள்ள மொழி பெங்காலி ஒன்றுதான். அது உயர்ந்த எண்ணங்கள் மக்களுக்குச் சொல்லப் பயன்பட்டு வருகின்றது. கவிஞர் களை அது உண்டாக்குகின்றது. குவளை: தமிழும் அப்படித்தான். அரவிந் : அப்படியா? நண்பர்களே, ஆத்மா அழிவதில்லை. உடல் அழியக் காணுகின்றோம். ஆதலால் மனிதன் சாவதில்லை ஆங்கிலேயனை எதிர்த்துப்போர் செய் என்பது தான் நம் சுயராஜ்ஜியக் கிளர்ச்சிக்கே மூலக் கொள்கை. இதை உங்கள் தாய்மொழியில் மக்களுக்கு விளக்க முடியுமா? அச்சம்கூடாது என்று பேச்சளவில் சொல்லி கொண்டிருந் தால் அச்சம் போகாது. அச்சம் எங்கிருந்து உண்டா கின்றது. அஞ்சாமையால் ஏற்படும். பயன் என்ன? ஆதலால் சாகப் பயப்படலாமா என்பவைகளின் தத்துவத்தை மக்களுக்கு விளக்குவதன் மூலமாகவே வெள்ளைக்காரனை நாம் வெல்லவேண்டும். உடலோம்புதல் வேண்டும். சங்கர : சாப்பாடு போட்டுக் காத்திருக்கிறது. அரவி : அடிக்கடி சந்திப்போம். தென் நாட்டில் தேசியம் ஓர் உயர்ந்த நிலையைப் பெற்றிருக்கிறது. கவிஞர்களைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி! (பிரிவு) 125. வழியில் குவளை: தமிழ் மட்டமான மொழி. தமிழர்கள் கோழைகள். என்பது தான் அரவிந்தகோஷ் எண்ணமா? பாரதி : ஏன் கிருஷ்ணன். அரவிந்தகோஷ். தென்னாட்டுக்குப் புதியவர், இன்றைக்கு வந்த விருந்தாளி. குவளை: தலைவர் என்கிறீரே. சிறைக்கு அஞ்சி ஓடி வருகிற இவர் ஓடிவரும் இடத்தில் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா? பெங்காலியை உயர்ந்த தென்று தமிழர்களிடம் சொன்னது அவர் அறியா மையைக் காட்டுகிறதா இல்லையா? வ.வே.சு.: ஏன் கிருஷ்ணன்? சிறைக்கு அஞ்சி ஓடிவந்தவர் என்கிறாய் அவரை, நாம்? குவளை: நமா. நீ என்று சொல்லும் பாரதியைச் சொல்லும் சீனிவாச் சாரியைச் சொல்லும் என்னையும் கோழைகள் வரிசை யில் சேர்த்து விடவேண்டாம். நான் இங்கு அஞ்சி ஓடி வந்தவனல்ல. இந்த ஊர். கல்வே காலேஜின் மாணவன் வேறு. கரடிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்கின்றவன். விடுமுறை நாட்களில் சென்னை வருவதுண்டு. மற்றக் காலமெல்லாம் வீரப் பயிற்சி. ஆங்கிலப் படிப்பின் இடையிலும் என் தாய் மொழி ஆராய்ச்சி. கருத்து. நிகழ்ச்சி. 126. குவளை, கனக. சுப்புரத்தினம், பினாகபாணி முதலியவர்கள் கல்வே காலேஜில் விளையாட்டு நேரத்தில் பார் விளையாடு கிறார்கள். கல்வே காலேஜின் எதிர்த்த வீட்டில் வேணு தலைமையில் தரைப்பாடம் நடக்கிறது. பல இளைஞர்களுடன். கனக சுப்புரத்தினம், குவளை காணப்படுகிறார்கள். 127. போகிறார்கள் பாரதி முகம் வீரம் பேசுகிறது. வ.வே.சு. முகம் கடுமை அடைகிறது. 128. கோஷ் மரக்கறி உணவுதான் உயர்ந்தது, பாபமில்லாதது என்பதோர் மூடக் கொள்கை வளர்ந்து வந்துள்ளது. இந்த நாட்டில், முக்கால் வேக் காட்டுடன் ரத்தம் ஒழுக ஒழுக மாட்டுக் கறியும் நல்ல விகியும் இந்தியன் தின்று குடிக்கப் பழகவேண்டும். அப்போதுதான் வெள்ளைக் காரனை எதிர்க்கும் ஆற்றல் நம்மவர்க்கு ஏற்படும். மாட்டுக் கறி தின்பது பாபமில்லை. மாட்டை அவன் கொல்ல வில்லை. கொல்லமுடியாது என்ற தத்துவ உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும். அதே நேரத்தில் குவளை பாடுகிறான் வில்லினை எடடா - கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய் திடடா ஒன்றுள துண்மை - என்றும் ஒன்றுள துண்மை - அதைக் கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது - ஒன் குவளை : இது பாரதி பாடியது. வ.வே.சு : கிருஷ்ணன், இருக்கட்டும். குவளை : இப்போது கோஷ் சொன்ன தத்துவம் அனைத்தும் சுருக்கமாக அழகாகப் பாரதி இப்படிப் பாடியுள்ளார். பாரதி : (அதை ஆங்கிலத்தில் விளக்குகின்றார்) கோஷ் : அப்படியா? மிக நன்றாக இருக்கிறது. பாரதி மிக உயர்ந்த கவி. 129. பாரதி வீட்டில் கூட்டம் (திருமலாச்சாரி பாரதி முதலியவர்கள் கூடிப் பேசுகிறார்கள்) திருமலா : பிரிட்டிஷ் எல்லையில் இந்தியா வரக்கூடாதாம் பிரஞ்சிந்தியா வுக்கு மட்டும் இந்தியா நடந்தால் எத்தனை பிரதி அடிக்கலாம். அதனால் எப்படிச் செலவு கட்டும்? பாரதி : அது நடக்காமல் நின்றுவிட வேண்டும் என்பதற் காகத்தான் இந்தத் தடை. காரைக்காலிலும் புதுவையிலும் செலவாகும் இந்தியா பத்திரிக்கை 2000 தான். கட்டாது. நிறுத்திவிட வேண்டியது தான். தருமமும் இனி நடக்க வேண்டாம். திருமலா : எனக்கு என்ன வேலை? எனக்கு ஓர் ஆசை; நாம் மேல் நாடு சுற்றுப் பயணம் செய்து வரவேண்டும். நம் நாட்டில் தொழில் வளர்க்கவேண்டும். இந்தியாவில் ஆங்கிலேயன் செய்து வரும் அக்கிரமங்களை மேல் நாடுகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும். பல நாடுகளின் ஆதரவுகளையும் திரட்ட வேண்டும். பாரதி : என்னால் முடியாது ஆச்சாரியார். என் மனைவியும் கருப்பிணி, உங்கள் திட்டத்தைச் சிறிது காலம் தள்ளிவைக்க வேண் டியதுதான். (இதே நேரம் தபால்காரன் சுதேசமித்திரனும் தபாலும் கொடுக்கிறான்) பாரதி : (சுதேசமித்திரனைப் பிரிக்கிறார்) பாட்டு நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச் சொல் லில்வீரரடி ... ... திருமலா : பேஷ் ப்ரமாதம் பாரதி பாரதி : (தபாலைப் பார்த்துவிட்டுத் திருமலாச்சாரியிடம் கொடுத்து), இதையும் பாருங்கள். கடிதம் திரு. ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதிக்கு, நேற்றைய மித்ரனில் வெளிவந்த உங்களின் தேச சேவை பற்றிய உரைநடைக்கு நாட்டில் அபார வரவேற்பு இருந்தது. இன்று வெளிவந்த நடிப்புச் சுதேசி சிறந்த கவி. நீங்கள் இதுபோலவே ஒருநாள் உரைநடை ஒருநாள் பாட்டு என்ற முறையில் எழுதிவர வேண்டுகிறேன். உங்கள் எழுத்துக்குத் தக்க கைம்மாறு செய்ய முடியாவிட்டாலும் இயன்றளவு மாதா மாதம் ஒரு தொகை அனுப்பப்படும். பாரதி : சுதேசமித்திரனுக்கும் என் (ஆசிரியர்) சிறுசேவையால் கிளர்ச்சி ஏற்படுவதாக. சுதேசமித்திரனால் என் கவிதையும் கீர்த்தி அடைவதாக. திருமலா: உன்னால் தென்னாடு உணர்வுபெற்று வருகின்றது. இனியும், உணர்வுபெற்று வாழும். பாரதி வாழ்க. நான் வருகிறேன். பாரதி : ஆகட்டும். 130. கரடிக்கூட வாத்தியார் வேணு திருமணம். திருமணம் முடிந்தது. நடுப்பகல் சாப்பாடு முடிந்தது. தெருப் பந்தலில் சிறு பாட்டுக்கச்சேரி பிடில் திருவேங்கடம் பிடில் வாசிக்கிறார் மற்றும் மிருதங்கம் முதலியன. சுப்புரத்தினம் பாடுகிறார் பாட்டு வீர சுதந்திரம் வேண்டி ... இந்தப் பாடல் துவக்கத்திலேயே பாரதி, வ.வே.சு. சீனிவாசாச்சாரி வருகின்றார்கள். வேணுவை நோக்கிக் கையமர்த்துகிறார் பாரதி. அதன் படி பாரதி முதலியவர்கள் வருவதைச் சுப்புரத்தினத்துக்கு அறிவிக்க வில்லை. சுப்புரத்தினம் தெற்கு முகநோக்கி குந்திப் பாடுகிறார். அவர்கள் வடக்கு பந்தல் வாசல் வழியாக வந்தார்கள். சுப்புரத்தினத்தின் பின்புறமாக அவர்கள் அமர்ந்து பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீர சுதந்திரம் என்ற பாட்டின் முடிவு கச்சேரி முடிவு. சுப்புரத்தினம், பாரதி முதலியவர்கட்கு அறிமுகப்படுத்தப் படுகின்றார். பாரதி வேணுவிடம் இவரை நம் வீட்டுக்கு அழைத்து வரவேண்டாமோ என்று போகிறார். 131. பாரதி வீட்டில் சுப்புரத்தினம். சிவா, சாமிநாதய்யர் (வாத்தியார் தம்பி) கோவிந்தராஜ நாயுடு சூழ்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள். வேணுவும் சுப்புரத்தினமும் வருகின்றார்கள். சிவா மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார். கோவிந்தராஜ நாயுடு சாமிநாதய்யர். சிவா : வாமி, இவர் வாத்தியார் சுப்புரத்தினம். பாட்டு நன்றாய் எழுதுவார். பாரதியார் : சுப்புரத்நம், அடிக்கடி இங்கே வரவேண்டும். என் பாட்டுக் களெல்லாம் அதோ அந்தப் பெட்டியில் பார்க்க வேண்டும். சிவா, சுப்புரத்நம் என் பாட்டைப் பாடியிருந்தார். கேட்டேன். பாடின மாதிரியைக் கொண்டே இவரும் ஒரு புலவர் கவிஞர் என்பதைத் தெரிந்துகொண்டேன். தமிழ்ப் புலவர் தொடர்பு எனக்கு வேண்டும். (தபால் வருகிறது) (பாரதி பிரித்துப் பார்க்கிறார். சுப்புரத்னம் பெட்டியை அடைகிறார்.) இதுவரைக்கும் எழுதிய பாட்டுக்களைப் பிரதி செய்துள்ள நோட்டுக்களையெல்லாம் பார்க்கிறார். 132. ஹொக்குப் பாட்டைப் பாரதி படித்துச் சுவைக்கிறார். அதன் அருமையைக் கூறுகிறார். பாரதி : சுப்புரத்தினம் இவ்வளவு சுருக்கமாக நாலைந்து வரிகளில் ஒரு காப்பியத்தை முடிக்கும் ஆற்றல் உலகில் வேறெந்த கவிஞனிடமும் நான் கண்டதில்லை. இதில் கண்டுள்ள கருத்துக்களைத் தமிழில் எழுதினால் ஏறத்தாழ ஐந்து பக்க புல்கேப் நிறைந்துவிடும். சுப்பு : வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் - வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி இதில் ஒரு சிறுகாப்பியம் இருக்கவில்லையா? பாரதி : விவரித்துச் சொல்லேன் பார்ப்போம். சுப்பு : பிரிந்து சென்ற உன் துணைவர் கட்டாயம் வந்து விடுவார். நீ கவலைப்படவேண்டாம் என்றாள். அதற்குத் தலைவி கவலைப் படாமல் எப்படி இருக்க முடியும். அவர் எனக்குத் தரும் இன்பத்தின் அருமை உனக்குத் தெரியாமையால் நீ இப்படிக் கூறுகின்றாய். நான் அன்பு செய்கின்ற எனதன்பர் கொடுக்கும் இன்பம் உலகில் வாழும் மக்கட்கு வானம், காலம் அறிந்து, அளவு அறிந்து பெய்தால் எப்படியோ அப்படிப்பட்டது. இவ்வளவுதான் அந்த ஒன்றே முக்கால் வரியில் அடங்கி யிருக்கிறது. பாரதி : நீ இதில் வருவித்துக் கொண்ட சொற்கள் பல. அந்த நிலை ஹொக்குப் பாட்டில் இல்லை. எல்லாச் சொல்லும் அடங்கி யிருக்கின்றன. ஆனால் சுப்புரத்தினம் ஹொக்குப் பாட்டுக்குத் திருக்குறள் தோற்றதென்று சொல்லமாட்டேன். வெற்றெனத் தொடுக்காமல் சில சொற்களில் பெரும் பொருளை மன நிறையக் கொடுக்கின்றார் வள்ளுவர். வெர்ஹேரன் தரும் பொருளில் அவ்வளவு, உயர்வு, இல்லைதான். சொல்லமைப்பு வியப்பை விளைக்கின்றது ஹொக்குப் பாட்டு. சிவா : பசிக்குதே வாமி பாரதி : சாப்பிடப் போகிறார். 133. பாரதியும் நண்பர்களும் வாத்தியார் சுப்பிரமணிய ஐயரும் சுப்புரத்தினமும் (பாரதி சுதேசமித்திரன் பார்க்கிறார்) பாரதி : பிஜித் தீவில் தோட்டத் தொழிலாளர் படும் பாட்டைப் பாருங்கள். சுப்புரத்தினமும் வாத்தியாரும் பத்திரிகையைப் படிக் கிறார்கள் அதேநேரத்தில் பாரதி பாட்டு எழுதத் தொடங் குகிறார். பாவம் இராகத்தில் கரும்புத் தோட்டத்திலே ... ... ... அதே நேரத்தில் வி.வி.எஸும் வந்துவிடுகின்றார். பாரதி முதலிலிருந்து பாடுகிறார். நண்பர்கள் கண்ணீர். சுப்புரத்தினம் பெயர்த்தெழுதுகிறார். சுதேசமித்திரனுக்கு அனுப்பப்படுகின்றது. 134. புதுவை வெள்ளையர் தெருவில் சி.ஐ.டி. சி.ஐ.டி. மாளிகையினின்று உடுப்பில்லாத போலீசுகாரர்கள் - அவர்களின் சூப்ரண்டாகிய அப்துல் கறீம் வேலைக்கு அனுப்பி வைக்கிறார். ஒருவன் பாரதி வீட்டின் எதிர்வீட்டில். மற்றொருவன் வி.வி.எ. வீட்டின் எதிர்வீட்டுக்கு நடுவில், இன்னொருவன். ஸ்ரீநிவாசாச்சாரி வீட்டெதிரில், ஒருவன் முருகேசபிள்ளை வீட்டெதிரில் உட்கார்ந்துகொள்ள, மற்றவர்கள் பத்துப்பேர் அரவிந்தர் வீட்டின் எதிரில் அமர்ந்து கொள்ளுகிறார்கள். பாரதி வீட்டின் எதிரில் உட்கார்ந்திருப்பவன் பாரதி வீட்டினின்று வெளிவந்த சுப்புரத்தினத்தை நெருங்கி பாரதி வீட்டில் இருக்கிறாரா? என்கிறான். சுப்பு : அவர் இரவு 12 மணிக்குத் திருப்பாதிரிப்புலியூருக்குப் போனவர் இன்னும் திரும்பவில்லை என்று அம்மா அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். (சி.ஐ.டி. ஓடுகிறார். சுப்பு சிரிக்கிறார்) சி.ஐ.டி மாளிகைக்குப் போன சி.ஐ.டி. சூப்ரண்டண்டிடம் செய்தி கூற சூப்ரண்டென்ட் காரில் ஏறிக்கொண்டு எங்கேயோ போகிறார். சி.ஐ.டி. பலர் பல பக்கமும் பரபரப்புடன் ஓடுகிறார்கள். ஒரு சி.ஐ.டி. ஓடி முருகேசப் பிள்ளை தெருச் சன்னலில் எட்டிப் பார்க்கிறார் வீட்டினுளே இருந்துவந்த கோவிந்தசாமி கோதண்டராமன் இருவரும் ஓடி சி.ஐ.டியை இழுத்துப்போட்டு உதைக்கிறார்கள். முத்தால்பேட்டை கிருஷ்ணன் வீட்டின் எதிரில் இருந்த சி.ஐ.டி. கிருஷ்ணசாமியைக் கண்டு பாரதியைக் காணோம் சார். எங்கே என்று சொல்லுங்களேன் என்றார். கிருஷ்ணன் போய்ப்பார்த்துச் சொல்லுகிறேன் என்னுடன் வா என்று அழைத்துக்கொண்டு சென்னை இராஜவீதி ஈவரன் கோயில் முடக்கில் வரும்போது. இராஜகோபால் புகையிலைக்காரர் அவர் அண்ணன் இருவரும் கிருஷ்ணசாமியைக் கண்டு, சுதேசிகளுக்கு எதிர்ப்பாக பேசி பாரதியைத்தேடிக் கொடுக்கத் தான் வேண்டும். அதுதான் புண்ணியம் என்கிறார்கள். கிருஷ்ணன் சரி என்று இருவரோடு அந்தக் கடையில் இருந்த மற்ற சி.ஐ.டியையும் அழைத்துக் கொண்டு எதிரில் இருந்த வி.வி.எ வீட்டை அடைகையில் அங்கு ஆறுமுகச் செட்டியாருடன் பேசிக் கொண்டிருந்த சிவக்கொழுந்து நாய்க்கர் எதிரில் விறகுக் கடைக் கட்டையை எடுத்துக் கொண்டு ஓடி ஓடி அனைவரையும் அடிக்கிறார். எல்லாரும் பாரதி வீட்டுத் தெருவில் ஓடுகிறார்கள். பாரதி தம் வீட்டினின்று சிரிக்கின்றார். அவர்கள் பாரதியைக் கெஞ்சுகிறார்கள். எங்களை ஒன்றும் செய்யாதிருக்கும்படி சொல்லுங்கள் என்று அவர் அதிர்ச்சிக்குக் காரணம் கேட்க, சுப்புரத்தினம் சொன்னதைச் சொல்லுகிறார்கள். பாரதி, கிருஷ்ணன், சிவக்கொழுந்து நாயக்கர் முதலியவர்கள் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். 136. பாரதி வருத்தம் பாரதி தபால் பிரித்துப் பார்க்கிறார் இனி நீங்கள் எழுதும் கவிதைகளுக்குச் சுதேசமித்திரனில் இடமில்லை மன்னிக்கவும். பாரதி : (நண்பர்களிடம்) இதோ பாருங்கள். சுப்புரத்தினம், வாத்தியார், சிவக்கொழுந்து, ராஜா (நாராயணசாமி) படித்துப் பார்த்து, வாத்தியார் : அட பாவி, இவருக்குக் கவி பிடிக்கவில்லை. இது வரைக்கும் படித்துச் சுவை கண்டவர்களின் நிலை என்னாகும்? பாரதி அசட்டுச் சிரிப்பு. அதே நேரத்தில் வந்திருந்த மற்றொரு கடிதம். ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதிக்கு நமகாரம். நம் எட்டியா புரம் இராஜாவை ஆஷ் கலக்டர் அடிக்கடி சந்திக்கிறான். எப்படியும் அரசர் உம்மைத் தருவித்துப் பிடித்துக் கொடுத்து விடவேண்டுமாம். உமது தேசத் தொண்டு ஆங்கிலேயனுக்குப் பெருந் தொல்லையை விளைவிக்கிறது. இப்படிக்கு - சி. மகாதேவன் பாரதி : சுதேசமித்ரனுக்கு இங்கிலீஷ்காரன் நெருக்கடி ஏற்பட்டிருக் கலாம். இத்தனை காலம் என் கவிதைகளை வெளியிட்டு வந்தவர் திடீரென்று இப்படிக் கவிதை வேண்டாம் என்றதற்கு வேறு காரணம் என்ன இருக்கமுடியும்? (பாரதி வெளியிற் கிளம்புகிறார். வந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு) 137. அரவிந்தரும் பாரதியும் பாரதி : என் தொண்டுக்கு இங்கிலீஷ்காரன் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. (அரவிந்தர் கடிதங்களைப் பார்க்கிறார்) பாரதி : ஆஷ் கலக்டர் முயன்று பார்க்கிறான். அரவிந் : சி.ஐ.டி. தொல்லை எப்படி இருக்கிறது? பாரதி : புதுச்சேரி சர்க்கார் உத்தியோகதர்களுக்கு வெகுமதியின் பேரால் பணம் கொடுக்கப்படுகிறது. ஊரிலுள்ள மயூரேசன் இராஜகோபால் முதலியவர்களையும் பிடித்து நமக்கு விரோதமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டி வருகிறார்கள். இங்குள்ள சில உத்தியோகதர்களும் தனிப் பட்ட சிலரும் நம்மீது பொய்க்குற்றம் சோடிக்க எண்ணி யிருப்பதாகக் கேள்வி. இந்தச் சர்க்காருக்கே வலை வீசுகிறார்கள் இங்கிலாந்து சர்க்கார். பல சதிகள் நம்மை நோக்கிப் பல்லைக் கடிக்கின்றனர். (பாரதி வெளியே வருகின்றார். அவருடன் அங்கிருந்த தமிழ்த் தொண்டர்கள் உடன் சேர்ந்து கொள்ளுகின்றனர்.) பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்துளோ ரெலாம் எதிர்த்து வந்த போதிலும் அச்ச (பாடிக்கொண்டே பல வீதிகளைக் கடந்து வீடுவருகின்றார். பாதி வீடுவரும்போது அவருடன் இருந்த மக்கள் ஆயிரம் பேர்கள்) 138. பாரதியும் மாமனும் மாடியில் பாரதியை மாமா வந்து காணுகிறார். பாரதி மாமாவை உறுத்திப் பார்த்துச் சினம் பொங்கும் விழியுடன் கூறுகிறார். பாரதி : எங்கிருந்து? ஜமீன்தாரிடமிருந்துதானே. என்னைப் பிடித்துக் கொண்டுவரும்படி உன்னை அனுப்பினாரா? மாமா : அதற்குத்தான் அவர் அனுப்பினார். நான் அதற்கு இணங்கு வேனா பாரதி? அரசருக்கு ஆஷ் கலக்டரின் நெருக்கடி அதிகம் - சலுகையை எல்லாம் மட்டுப்படுத்தி விட்டான் ஆஷ். இப்படி அரசருக்கு நெருக்கடியையும் உண்டு பண்ணி வருகிறான். அவன் எண்ணத்தைப் பூர்த்தி பண்ணி வைக்க அரசர் எண்ணியதில் தவறு என்ன? பாவம். பாரதி : பிரெஞ்சுக்காரன் என்னைப் பிடித்து உன்னிடம் கொடுத்து விடுவானா? நீ என்னைப் பிடித்துக்கொண்டு போக நான் என்ன கோழிக் குஞ்சா? நான் கோழிக் குஞ்சானாலும் என்னைப் பிடித்துக் கொண்டு போகும்படிப் புதுச்சேரி மக்கள் உன்னை விட்டு விடுவார்களா? நீ அரசர்க்குச் சொல்லியிருக்க வேண்டும், நீரே கொஞ்சம் புதுச்சேரி எல்லையில் கால்வைத்துப் பாரும் என்று. இப்போதே அவரிடம் கூறு. அரசரே நீரே உம் படையைக் கூட்டிக் கொண்டு புதுச்சேரிக்குப் போய் பாரதியைப் பிடித்துக் கொண்டுவந்து வேண்டியதை அடையும் என்று, போடா வெளியில். (மாமா போகிறார்) (வழியில் பாரதி அன்பர்கள் வளைத்துக் கொண்டு - அரசரையும் அவரையும் திட்டுகின்றார்கள்) பாரதி : அவனை விடுங்கள் (போதல்) 139. பாரதி வீட்டில் சக்தி பூசை வீட்டின் தெருப் பக்கத்துக் கூண்டறையில் சுவரில் கத்தி, பிச்சுவா பொருத்தப்படுகின்றன. மற்றும் பூத்தொங்கல் பெங்கால் காளிப்படம். பாரதி அரவிந்தர் வீட்டினின்று வருகிறார். மாலை 4 மணிக்குக் கிளம்பி வந்து விடுவதாக அரவிந்தர் சொல்லி விட்டார். நான் கார் அனுப்புவதாகச் சொல்லிவிட்டேன். சா. குப்புசாமி ஐயரிடம் போய்க் கார் கேளுங்கள் என்று வேணுநாயக்கரிடம் கூறுகிறார். பாரதி மாடியில் சென்று பாட்டு எழுதுகிறார். கீழே சாண்டோ கிருஷ்ணன் கத்தி விளையாட்டு நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கெல்லாம் பூஜைக்கு வந்து விடுவதாகப் போகிறார். செல்லம்மா பொங்கல் வடையுடன் சமையல் முடிக்கிறார்கள். பாரதி கீழே வருகிறார். மணி 2½ ஆகிறது. கார் எங்கே? வேணு : அவர் கார் அயலூருக்குப் போயிருக்கிறதுண்ணு சொல்லி விட்டார். பாரதி : இங்கிலீஷ்காரனுக்குப் பயப்படுகிறார். பணக்காரனே இப்படி! சுப்புரத்தினம், 4 மணிக்கெல்லாம் வண்டி அனுப்பவேண்டுமே கோஷுக்கு? (சுப்புரத்தினம் விரைவாக எங்கேயோ செல்லுகிறார்) 140. திருமுடி நடராஜ செட்டியாரும் சுப்புரத்தினமும் சுப்புரத்தினம் அவசரத்தைச் செட்டியாரிடம் கூறி இரட்டைக் குதிரை பூட்டிய லாண்டோவைக் கேட்க, அவர் அவசரமாக வண்டியைப் பூட்டுவித்து அனுப்புகிறார். வண்டி, செட்டித் தெரு காளத்தீவரன் கோவிலை அடைகிறது. அரவிந்தரும் கிழக்கேயிருந்து ஒரு புஷ் வண்டியில் வருகிறார். பாரதி வடக்கேயிருந்து வருகிறவர், சுப்புரத்தினத்தின் சாரட் வண்டியையும் அரவிந்தரையும் பார்த்துவிடுகிறார். இறங்கி அரவிந்தரைச் சாரட்டில் ஏற்றித் தாமும் அண்டையில் உட்கார்ந்துகொண்டு நேரத்தோடு வண்டி அனுப்பாததற்கு ஒரு கற்பனையான காரணத்தைச் சொல்லிவிடுகிறார். இங்கு இந்துக்கள் வழக்கம். கோயிலை வண்டி தாண்டிச் செல்லக் கூடாது. அதனால் வண்டியை இங்கேயே நிறுத்தி உங்களை புஷ் வண்டியில் அழைக்க வந்தேன். 141. அரவிந்தரும் பாரதியும் வருகை இருவரும் உள்ளே நுழைகிறார்கள். வாத்தியம் முழங்குகிறது. கூடத்தில் சங்கர செட்டியார் முருகேசப் பிள்ளை, ஜீயர் நாயுடு அன்பு டாக்டர் முதல் நூற்றுக்கணக்கானவர் அமர்ந்திருக்கிறார்கள். அனை வருக்கும் வணக்கம் செலுத்த அவர்களும் எழுந்து நின்று வணங்கி அமர்கிறார்கள். உயர் ஆசனத்தில் அரவிந்தர் அமர்கின்றார். பாரதி மேற் பார்வை. 1. வேணு நாயகர் கம்பு சுற்றுகிறார் 2. பங்காரு நாயக்கர் மகன் பெரிய பட்டா சுழற்றுகிறார். 3. சாண்டோ கிருஷ்ணன் ஜோடிபட்டா சுழற்றுகிறார். 4. சட்டாம்பிள்ளை ஷண்முகம் தன் ஜோடியுடன் கழி விளையாடு கிறார். காளிக்குத் தீபாரதனை நடத்துகிறார். கும்பிட்டு நின்று பாடுகிறார் பாரதி. தக தகத்தகத் தகத்தக வென்றாடோமோ - சிவ சக்தி சக்தி சக்தி என்று பாடோமோ தக ... ... ... பாரதி ஆடுகிறார். குவளை ஆடுகிறார். முடிவில் பொங்கல் வடை பழம் வெற்றிலை விநியோகம் நடக்கிறது. வெளியிலிருந்து ஐயோ என்ற கூச்சல். அனைவரும் வெளியே போய்ப் பார்க்கின்றார்கள். சூப்ரண்ட் டெண்டு சி.ஐ.டி. பலர் உதைப்பட்டுச் சிதறி ஓடுகிறார்கள். குவளையும் சாண்டோ கிருஷ்ணனும் ஆட்டுமந்தையில் இரண்டு புலிகள். அன்பு டாக்டர் கையமர்த்துகிறார். இதெல்லாம் தவறு உள்ளே அரவிந்தர், பராசக்தி அருள் புரிய வேண்டும். பாரதியார் தென்னாட்டில் ஓர் எழுச்சியை உண்டாக்கி விட்டார். அவர் ஒரு புரட்சிக் கவி. அவரைப் பராசக்தி காக்க (போகிறார்) 142. பாரதி வீட்டில் சமபந்தி போஜனம் அர்லோக் முதலிய நால்வர் தாழ்த்தப்பட்டவர், சுப்புரத்தினம், ராஜா, வாத்தியார் சாமிநாத ஐயர், கோவிந்தராஜ நாயுடு முதலியவர்கள் பாரதியுடன் பந்தியமர்ந்து சாப்பிடுகிறார்கள். செல்லம்மா, பெரிய பெண் தங்கம்மா, உதவ அம்மாக்கண்ணு பரிமாறுகிறார்கள். நடுவில் - வ.வே.சு. ஐயர் வந்தவர் திகைக்கிறார். பாரதி : உட்காரலாமோ? வ.வே.சு : இ ஹி ஹி... ஆயிற்று. (சற்று நின்று திரும்பிப் போய் விடுகிறார்) பாரதி : (மற்றவர்களைப் பார்த்து) அவர் என்னை மூடன் என்று எண்ணுகிறார். அதனால் போய்விட்டார் நாணத்தோடு ராஜா : அவர் வர்ணாரம தர்மத்தில் நம்பிக்கை உடையவர். பாரதி பாரத ஜாதி என்று ஒன்றுபட்டு எழுகிறது. தன் இலட்சியத்தை நாடி ஓடுகின்றது. பாரதி : அப்படியென்றால் என்ன அர்த்தம்? ராஜா : வர்ணாரம தர்மம் செத்துவிட்டது என்று அர்த்தம். (பந்தி முடிகிறது) 143. மாடியில் சாப்பாடு முடிந்தவுடன் மாடியில் அனைவரும் உட்கார்ந்து பாரதி வாயைப் பார்த்திருக்கிறார்கள். பாரதி : நண்பர்களே, சாதியில்லை. மக்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவ னில்லை. கனகலிங்கத்தைவிட என்னை உயர்ந்தவன் என்று உளறிக் கொண்டிருந்தது என் பூணூல். அதை வெகு நாளைக்கு முன் அறுத்து எறிந்தேன். இன்றைக்கு கனகலிங்கத்திற்குப் பூணுல் இல்லாததால் அவனைத் தாழ்ந்தவன் என்று எவனாவது சொல்லக்கூடும் என்று நினைத்தால், இதே கனகலிங்கம் பிராமணன் என்று கூறிக்கொள்ள நான் அவனுக்குப் பூணுல் போடுகிறேன். கனகலிங்கம் மக்களில் பேதம் பாராட்டும் வ.வே.சு. ஐயரைவிட உயர்ந்த ஞானம் உடையவன் என்று நான் கூறினேன். மறுப்பவன் எவன்? நண்பர்களே, நீங்கள் எல்லாரும் ஞானிகள். ஆதலால் நீங்கள் உயர்ந்தவர்கள். பாரததேசம் வாழ்க! ஜாதி மதங்களின் நம்பிக்கை ஒழிக! 144. ஞான பானு ஞானபானு மாத சஞ்சிகை தபாலில் வருகிறது. பாரதி பார்க்கிறார். அதில் வ.வே.சு. ஐயர் எழுதிய கவிகள் என்ற தலைப்புடைய வியாசத்தைப் படிக்கிறார். பாரதி : சுப்புரத்தினம், ஆயிரம் ஆண்டுகளாக இன்றுவரைக்கும் தமிழில் கவிஞன் ஒருவனும் தோன்றவில்லையாம். (பாரதி முகம் வாடுகிறது) சுப்பு : தமிழ்நாட்டு மக்கள் உங்கள் கவியை உச்சிமேல் தூக்கிக் கொண்டாடுகின்றார்கள். ஒருநாள் உங்கள் பாட்டு சுதேச மித்திரனில் வரவில்லையென்றால் ஆயிரக்கணக்கானவர்கள் உங்களுக்குக் கடிதம் எழுதுவார்கள். நீங்கள் எழுதுவதை நிறுத்தியதால் சுதேசமித்திரன் சந்தாதாரர்கள் குறைந்து விட்டார்கள். சுதேசமித்திரன் குப்புற வீழ்ந்துவிட்டதை எவரும் அறிவார்கள். வ.வே.சு. ஐயர் போன்ற தேசபக்தர்கள் - பரோபகாரிகள் தோன்றும் கவிக்கு ஒரு தோள் கொடுத்துத் தாங்க நினைக்க வேண்டும். பாரதி : வருந்தாதே சுப்புரத்தினம். இதற்கெல்லாம் அஞ்சிவிடக் கூடாது. நம் காரியத்தை நாம் திறம்பட நடத்திக்கொண்டு போவோம். சுப்பு : அவரையே கேட்கிறேன். (பாரதி தடுத்துவிட்டார்) பாரதி : ஞானபானுவை அப்படியே பெட்டியில் வைத்திரு. 145. வாஞ்சி ஐயர் வருகை வாத்தியார் சுப்பிரமணிய ஐயரும் குவளையும் சுப்புரத்தினமும் பாரதி வீட்டுக்கு வருகிறார்கள். மாடியில் மெல்லிய இசை, அமுதென வானைத் தழுவுகின்றது. மூவரும் தெருவில் நின்றபடியே இசைக்குக் காது கொடுக்கிறார்கள். குவளை : யாழா, குழலா! வாத்தி : ஆகக் கூடி பாடுகின்றவர் மனிதர் சுப்பு : சிவா! (மூவரும் மாடியை அடைகின்றார்கள்; சிவா பாட்டை நிறுத்திவிடுகின்றார்) சிவா : வாங்க குவளை! ஏன் வாமி உட்காருங்கள். சுப்பு : உட்கார்ந்து என்ன செய்வது சிவா. நீ பாட்டை நிறுத்தி விட்டாயே. பாரதி : இந்நேரம் அமுதைப் பொழிந்தது குயில், நீங்கள் வந்ததும் நான் அமுதை இழந்தேன். சிவா பாடுவதை நிறுத்திக் கொண்டார். (அதே நேரத்தில் வாஞ்சி ஐயர் வருகின்றார்) பாரதி : வாஞ்சி, வா.வா. உட்கார் வெகு நாட்கள் ஆகின்றன. வீட்டில் எல்லாரும் சௌகரியம் தானே. வாஞ்சி : சௌகரியந்தான். உன் சௌகரியத்தை நேரிற் கண்டு விசாரித்துப் போகலாம் என வந்தேன். உன் நிலை என்ன? பாரதி : ஆஷ் கலக்டர். எட்டியாபுரத்தாரை தொந்தரவு பண்ணு கிறான். அவர் என்னைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய் கிறார். மாமாவைத் தொந்தரவு பண்ணி என்னைப் பிடித்து வர அனுப்பினார். அவரும் தொந்தரவு பொறுக்க முடியாமல் என்னிடம் வந்து அழுது விட்டுப்போனார். ஆஷ் செய்ற தொல்லைக்கு அளவே இல்லை. என் கவிகளை. கட்டுரைகளை சுதேசமித்திரனில் வெளியிடக் கூடாது என்று செய்துவிட்டான். அதனால் எனக்கு வருமான நஷ்டம். ஆசிரியருக்கோ சந்தாதாரர் நஷ்டம். இன்னும் பிரெஞ்சு சர்க்காரில் உள்ள உத்தியோகதரை எல்லாம் அழைத்து எங்களுக்கெல்லாம் தொல்லை கொடுக்கிறார்கள். இதெல்லாம் ஆஷ் தூண்டுதல் என்றே எண்ணுகின்றேன். எனக்கு என்ன பயம்? எட்டியாபுரத்தில் ஆஷுக்குப் பயந்து, அவன் எண்ணத்தை நிறைவுபடுத்த யாரையாவது என்னிடம் அனுப்பிக் கொன்றுவிட செய்தாலும் செய்வார். என் நண்பர்கள் சொந்தக்காரர் எல்லாரையும் அரசர் அழைக்கிறார். ஆஷ் மனோ பீஷ்டத்தைப் பூர்த்தி செய்ய என் மாமன் என்னைக் கொண்டு வருவதாகச் சொல்லி இங்கு வந்தார் என்றால் அரசர் நிலையைத் தெரிந்து கொள்வதுதானே. அவர் ஆஷ் எண்ணத்தின்படி என்னைத் தொலைப்ப தென்று கங்கணம் கட்டியிருக்கிறார். வாஞ்சி : அரசர் என்னப்பா பண்ணுவார்? ஆஷை ஒழித்தால் உன்தொல்லை தீரும். ஊர்த் தொல்லை தீரும். எங்கே வீட்டில்? பிள்ளைகள் எங்கே? பாரதி : சாப்பிடு. அதோ செல்லம்மா. அதோ பசங்க. (போகிறார்கள்) 146. வாஞ்சி - மாடசாமி இருவீரர்கள் மணியாச்சி ஜங்ஷன் டிக்கட் வாயிலை கடக்கிறார்கள். ரயில் வருகின்றது. முதல் வகுப்பிலிருந்து இறங்குகின்றான் கலக்டர் ஆஷ். வேட்டுச் சத்தம் கூட்ட மக்களின் காதை அதிர்ச்சியடையச் செய்கிறது. வாஞ்சியை போலீ பிடித்துக் கொள்கிறது. அதே நேரம் மற்றொரு வாலிபர் தன் எதிரில் வரும் போலிசுக் கண்ணுக்குத் தப்பி அமைதியான முறையில் நழுவி விடுகின்றார். வாஞ்சியை போலீசு, இன்பெக்டர் மற்றும் பலர் அழைத்துச் செல்கிறார்கள். வாஞ்சி அங்கிருந்த கக்கூசைச் சுட்டிக் காட்டி அதனுள் போகிறார். திடீர் வேட்டுச் சத்தம். போலீசுகாரர்கள் கக்கூசிலிருந்து வாஞ்சி ஐயரின் பிணத்தைத் தூக்கி வருகின்றார்கள். 147. சுதேசமித்திரனில் ஆஷ் கலக்டர் சுடப்பட்டார். அந்த இடத்திலே இறந்தார். சுட்ட வாஞ்சி ஐயரும் தற்கொலை செய்துகொண்டார். மணியாச்சி சந்திப்பில் கலக்டரைச் சுட்டதாக வாஞ்சி ஐயரைப் போலீசு கைது செய்தது. சுடப்பட்ட ஆஷ் கலக்டர் அதே இடத்தில் இறந்தார். பிடிபட்ட வாஞ்சியும் கக்கூசுக்குள் போய் தம்மிடமிருந்த சுழல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். வாஞ்சி ஐயருடன் வந்ததாகக் கருதப்படும் ஒருவரை போலீசு தேடுகிறது. இந்தக் கொலைக்கு உடந்தையாகப் பலர் இருந்திருக்கக் கூடும் என்பது போலீசின் அபிப்பிராயம். துப்பறிகிறார்கள். நகர்தோறும் கூட்டம் கூட்டமாக சேதி படிக்கிறார்கள். 148. பாரதிக்குச் சேதி தபால்காரன் காலையில் சுதேசமித்திரன் கொண்டு வருகின்றான். எதிர்பார்க்கும் வழக்கப்படி எதிர்பார்த்திருந்த பாரதி வாங்கிப் படிக்கிறார். அவர் விழிகள் வியப்பில் ஆழ்கின்றன. அவர் செல்லம்மா என்று கூவியபடி உள்ளே ஓடுகிறார். 149. பாரதி அரவிந்தர் வீட்டுக்கு 150. பாரதி வ.வே.சு ஐயர் வீட்டுக்கு 151. பாரதி முருகேச பிள்ளை வீட்டுக்கு 152. சி.ஐ.டி. பரபரப்பு தெருவில் சுதேசிகள் வீடுதோறும் சூழ்ந்து கொள்ளுகிறார்கள். எங்கும் பரபரப்பு. 153 பாரதி வீட்டில் மாடசாமி இரவு 2 மணிக்கு பாரதி வீடு தட்டப்படுகின்றது. பாரதி : யார்? மாடசாமி : அப்பாத்துரை அனுப்பினார். (பாரதி திறந்து விடுகிறார்) பாரதி : இந்நேரத்தில் ஏன்? மாடசாமி : என் பெயர் மாடசாமி. நான் வ.உ.சி.யின் சொந்தக்காரன். வாஞ்சி ஐயர் செய்த குற்றத்தை என்மேலும் சாட்டு கிறார்கள். பாரதி : கூவாதீர்! (பாரதி தெருவில் போய் யாராவது சி.ஐ.டி. சுற்றுகிறார்களா என்று பார்க்கிறார்) செல்லம்மா என்று மெதுவாகக் கூறுகிறார். கதவைச் சாத்திக்கொள். இதோ வந்துவிடுகிறேன். 154. வேணு நாய்க்கர் வீடு தட்டப்படுகிறது வேணு : யார்? பாரதி : நான்தான் பாரதி. கதவைத் திற. இவர் உன் வசத்தில் இருக் கட்டும். விவரம் இவர் சொல்லுவார். இவர் இங்கிருப்பது யாருக்கும் தெரியவேண்டாம். இவர்மேல் இங்கிலீசுகாரன் வாரண்ட் எடுத்திருக்கிறான். இந்த வாரண்டுப்படி பிரெஞ்சு சர்க்கார் இவரைப் பிடித்து இங்கிலீசுகாரனிடம் ஒப்புக் கொடுத்துவிடவும் கூடும். வேணு : எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் போங்கள் நாழிகை ஆகிறது. (போகிறார்) 155. வேணு நாய்க்கர் வீடு காலை கோழி கூவுகிறது. சுப்புரத்தினம் வருகிறார். வேணு நாயக்கர் வீட்டின் இறைப்பில் வேப்பிலை செருகியிருக்கிறது. வேணு நாய்க்கர் தெருக் கதவுக்குப் பின்புறம் பெருமரம் ஒன்றை நடுகிறார். சுப்பு : என்ன அண்ணாத்தை? வேணு : அம்மாவுக்கு அம்மை வார்த்திருக்குது. பெரியம்மை சுப்பு : இது ஏன் மரம்? வேணு : உள்ளே ஒரு புறாவை புடிச்சிக்கிணு பூட்றானுக. அதோடு ஒருத்தன் நுழைய இடம்விட்டு கதவின் பின்னாலே இந்த மரத்தை நடுறேன். குத்துச் சண்டை மாணிக்கம் இருக்கானே அடிக்கடி கும்பலோடு இந்தப் பக்கம் போறான். கும்பல் உள்ளே நுழைஞ்சா ஒருத்தன் சமாளிக்கணும். அதுக்குள்ளே ஒவ்வொருத்தனா நுழையற மாதிரி செய்துட்டா. சுப்பு : எதுக்கும் கதவுக்குப் பின்னாலே பரங்கு ஜட்காவைத் தயாராய் மாட்டி வைக்கணும் அண்ணாத்தை. வேணு : அதுதான் சரி. அதெல்லாம் ஒழுங்கா ஏற்பாடு பண்ணு. புதுப் புறா ஒண்ணு வந்திருக்கு சுப்பு. வாஞ்சி ஐயர் கூட இருந்த பொறா பேரு மாடசாமி. ராத்திரி 2 மணிக்கு ஐயர் கொண்டுவந்து நம்மகிட்டே ஒப்படைச்சிபுட்டு போறாரு. மொதல்ல பொறாவைப் பாரு. வா. சுப்பு : அண்ணாத்தை, மோசம் போறே. வேப்பிலை கட்டியிருக் கிறதுக்கு விரோதம். நான் இப்பவே, பொறாவைப் பார்க்கிறது. கசறத்துக்கு வர்றவங்களைக்கூட வரவேணாண்ணு சொல்லிப்புடு. ஒரு வாரம் பொறுத்து வரட்டும். ஏன்னா கசறத்து எடுக்க கூடத்தை ஒழுங்கு பண்ணனும். ஒரு வாரத்துக்கு அம்மா வெளியே வரவேண்டாம், யாரையும் உள்ளே விட வேண்டாம். வேணு : நீ பூட்டா? சுப்பு : நானும் இருக்கப்படாது (போதல்) 156. பாரதி வீட்டில் மாடியில் ராஜா (நாராயணசாமி) சிவா, சாமிநாதையர், கோவிந்த ராஜுலு நாயுடு, வாத்தியார் முதலிய பலர் பாரதியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர். சிவா பாரதிக்குச் சுருட்டு ஒன்று சுருட்டிக் கொடுத்துவிட்டுத் தாம் ஒன்று பற்றவைக்கிறார். சாமிநாத ஐயர் கருவடிக்குப்பம் தோப்புப் பற்றி வர்ணிக்கிறார். கோவிந்தராஜ நாயுடு இருக்கும் இராகத்தின் எழுத்துப் படி பாட்டுக்கள் உண்டாக்கப்பட வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறார். இந்த நேரத்தில் இந்த அரட்டை கச்சேரியில் சேராமல் சுப்புரத் தினம் மூலையிலிருந்த பெட்டியைத் திறந்து அதில் உள்ள பாரதி பாட்டு கையெழுத்துப் பிரதிகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். சாமிநா : என்ன சுப்புரத்தினம், கச்சேரியில் கலந்து கொள்ளவில்லை? தனியாக இருந்துகொண்டு பாட்டுக்களை ஆராய்கின்றார். சிவா : ஐயர் கவி எழுதுகிறார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பாரதி : சுப்புரத்தினம் ஒரு கவி. உங்களுக்குச் சாதாரணமாகத் தோன்றக் கூடும். இராஜா : எங்கே கவி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். பாரதி வேகத்தோடு எழுகிறார். ஒரு பக்கம் இருந்த புல்கேப் வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் எதிரில் பெட்டிமேல் வைக்கிறார். பாரதி : சுப்புரத்தினம் ஒரு பாட்டு எழுது. (சொல்லிவிட்டு உணர்ச்சியுடன் உலாவுகிறார். சுப்பு எழுதுகிறார். பாரதி உலாவிய வண்ணம் கவனிக்கிறார். 16 வரி இரண்டடி பூர்த்தி ஆகிறது.) பாரதி : இரண்டடி முடிந்து போய்விட்டதே. சுப்பு : (பாரதியிடம் கொடுத்து) இரண்டடிதான். (பாரதி நின்றபடி ஆவேசத்துடன் பாடுகிறார்) எங்கெங்குக் காணினும் சக்தியடா ... (மாடி அதிர்ந்தது போலிருந்தது. கேட்டவர்கள் உணர்ச்சி வசப்படுகின்றனர்.) பாரதி : ராஜா, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய கவிஞன் நான் என்பது மட்டுமல்ல. இதோ சுப்புரத்தினமும் அப்படிப்பட்ட கவி. உன் வ.வே.சு. ஐயரிடம் இதைக்காட்டு. (தாளை இராஜா எதிரில் போடுகிறார். பின் அதைப் பல காப்பிகளாக எழுதுகிறார் பாரதி) சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டிய பிரதியில் ஸ்ரீ சி. சுப்பிர மணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றும் குறிப்பிடுகிறார். 157. சுதேசமித்திரன் எங்கும் சுதேசமித்திரன் படிக்கப்படுகிறது. அரவிந்தர் வீட்டில் ராமசாமி ஐயர் (வ.ரா.) முதலியவர்கள் எங்கெங்குக் காணினும் சக்தியடா என்ற பாட்டைப் பாடிக் காட்ட அங்கிருந்த வங்காளி இளைஞர்கள் அனைவரும் சுவைக்கிறார்கள். கன்னிகாபரமேவரி கோவில் ஆர்மோனியப் பள்ளியில் சுப்புரத்தினம் புகழ் பேசப்படுகின்றது. 158. பாரதியும் சுப்புரத்தினமும் சுதேசமித்திரன் பிரதியைப்பெட்டியில் வைத்துச் சாத்துகிறார். பாரதி : சுப்புரத்தினம், உனக்கு ஒரு சேதி தெரியுமா. உனக்குத் தெரியாமல் இங்கு வருகின்ற பல பெரியவர்கள் பாட்டுக்கள் எழுதி எழுதி என்னிடம் திருத்திக்கொண்டு போவார்கள். அவர்களுக்குத் தெரிவதில்லை. பிரெஞ்சு புலவரா யிருக்கலாம் ... ... இனி அந்தத் தொல்லை எனக்கு ஏற்படாதென்று நினைக் கிறேன். உண்மைக்கவி இதுதான் என்று உன் கவிதையைக் காட்டிவிட்டேன். சுயராஜ்யாவுக்கு கவி எப்படி உண்டாகிறான் என்பது பற்றி எழுதியிருக்கிறேன். அதில் உன்னைத்தான் உதாரணம் காட்டி யிருக்கிறேன். நீ இதற்கு முன் எழுதியுள்ள ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் ஒரு வகை. அது பழநடை. இப்போது எழுதியது என் நடை. என் கவிதா மண்டலத்தில் நீ ஒருவன். (வாத்தியார் வருகிறார். பேச்சு நிறுத்தப்படுகிறது) 159. பாரதி வீட்டில் வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், வ.வே.சு. ஐயர், சுப்புரத்தினம் முத்தால்பேட்டைக் கிருஷ்ணசாமி முதலியவர்கள் இருக்கிறார்கள். பாரதி : சுப்புரத்தினம், மாடசாமி எப்படி இருக்கார்? சுப்பு : அவருக்கு எப்போதும் யாராலும் ஒரு கெடுதியும் நேராது. ஒரு நோய் வராது. அவர் ஒழுக்கமுள்ளவர். மன ஆற்றல் அபாரம். பொய் பேசாதவர்கள். உலகத்தில் இருக்கமாட்டார் கள் என்பார்கள். அது பொய். அவர் எப்போதும் எந்தச் சந்தர்ப்பத் திலும் பொய் பேசாதவர், இப்போது ஆராய்கிறார். பாரதி : பாட்டு எழுதுவாரா? சுப்பு : நன்றாக எழுதுகிறார். உங்கள் பாட்டுக்கள்தாம் அவருக்கு வழிகாட்டி. (எல்லாரும் மகிழ்கிறார்கள்) தபால் வருகிறது. பிரித்துப் படிக்கிறார். பாரதி பூ என்று தபாலை வாத்தியாரிடம் கொடுக்கிறார். (அவர் கடிதத்தைப் படித்து முடிக்கிறார்) சுப்பு : என்ன அது படியுங்கள்! வாத்தி : நண்பர் சுப்பிரமணிய பாரதி அவர்கட்கு வங்கக் கவி ரவீந்திரநாத் டாகூரின் வங்காளி மொழிக் கவிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவருக்கு உலகப் புகழ் தேடித் தந்தவரிடம் அந்த மொழி பெயர்ப்பு வித்தையைப் பயிற்சி பெற்றவன் நான். என் பெயர் கஜின். சென்னைக்கு வந்து தமிழ்க் கவிஞர் யார் என்று விசாரித்தேன். உங்கள் கவி யாற்றலைத் தெரிந்து கொண்டதன் விளைவாக இந்தக் கடிதத்தை உங்கட்கு எழுகிறேன். உங்கள் தமிழ்க் கவியை எனக்கு அனுப்புங்கள். அந்தக் கவியின் ஒவ்வொரு சொல்லின் மேலும் அதே அர்த்தமுள்ள ஆங்கிலச் சொல்லைப் போடுங்கள். பிறகு அந்தப் பாட்டின் கருத்தைக் கடைசியில் எழுதுங்கள். அப்படி நீங்கள் அனுப்பினால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து புரூப் அனுப்புகிறேன். உங்கள் சம்மதத்தைப் பெற்று அதைப் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறேன். இப்படிக்கு கஜின் சுப்பு : ஆஹா. எழுதுங்கள்! ஒரு பாட்டு எழுதி அனுப்புங்கள். உடனே செய்யவேண்டியதல்லவா இந்த வேலை. வாத்தி : இதில் உங்களுக்கு உத்ஸாகம் ஏற்படாதற்கு என்ன காரணம்? பாரதி : (சிரித்து) நினைவின் எழுத்துருவம் பாட்டு. அது கவிஞனின் தாய்மொழியில் அமைவது. வேறு மொழியிலுமா அதை மொழி பெயர்க்க முடியும்? சுப்பு : முடிகிறதா இல்லையா பார்ப்போமே. வங்காள மொழியி னின்று ஆங்கிலத்தில் அதுவும் தாகூரின் பாட்டை மொழி பெயர்த்தவர் ஒருவர் இருக்கிறாரா? இல்லையா? அவர் போலத் தானே இவர்? வாத்தி : ஒன்று எழுதி அனுப்பத்தானே வேண்டும்? பாரதி : (ஆலாபனை). ஆ... ஆ... ஆ... வேண்டுமடி எப் போதும் விடுதலை அம்மா வே ... (பாடுகிறார்) (கேட்டவர் மெய்ம் மறந்து போகிறார்கள்) பாரதி : இங்கிலீஷ் வார்த்தை ஒவ்வொன்றுக்கும் போடவேண்டும் என்கிறார்களே அதன்மேலும். அந்தப் பாட்டின் கருத்தை எழுதவேண்டும் என்கிறாரே. நான் கோஷிடம் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன். வாத்தி : உடனே போய்வாருங்கள். சுப்பு : நாங்கள் வரக்கூடாதோ? பாரதி : ஓ வரலாமே. (அனைவரும் போகிறார்கள்) 160. அரவிந்தரிடம் பேசியிருந்து விட்டு வெளியில் வருகிறார் பாரதி. பாரதி : (சிரித்துக் கொண்டே) என்ன சுப்பிரமணிய ஐயர், கோஷ் அந்தப் பாட்டின் கருத்தையெல்லாம் நல்ல இங்கிலீஷில் எழுதிவிட்டார். வார்த்தைக்கு வார்த்தை இங்கிலீஷும் முடித்துவிட்டார். கஜின்சுக்கு அனுப்பியாய்விட்டது. ஆனால் கோஷ் எனக்கொரு வேலை வைத்துவிட்டார். ஓர் ஆங்கிலப் பாட்டைத் தழுவித் தமிழ்ப் பாட்டு ஒன்று அமைக்கச் சொல்லிவிட்டார். சுப்பு : தலைப்பு? பாரதி : ஊழிக் கூத்து வாத்தி : எழுதி இங்கே நீங்களே பாடிக் காட்டவேண்டும். அப்போது தான் நன்றாயிருக்கும். பாரதி : ஜமாஜுடலாம். வாருங்கள். 161. பாரதி குளித்தபின் பாட்டு எண்ணுங் காரியங்கள் எல்லாம் - வெற்றி பெறப் புரிந்தருள வேண்டும் - தொழில் பண்ணப் பெரு நிதியும் வேண்டும் - அதில் பல்லோர் துணைபுரிய ... இந்தச் சத்தம் பாரதி வீட்டின் மாடியில் இருக்கும் நண்பர்களின் காதில் அமுதைப் பொழிகின்றது. மீண்டும் பாரதி சாப்பிட்டுக் கொண்டே தோளை வலியுடையதாக்கி ... ... வாத்தியார் : ஏது புதிதாக இருக்கிறதே. (பாட்டில் அவரவர் காது செலுத்துகிறார்கள்) பாரதி வருகிறார். சுப்பு : புதிய பாட்டு. மிக நன்றாயிருந்தது. பாரதி : அது சட்டாம்பிள்ளை சண்முகப்பத்தர், கரடிக் கூடத்தில் தன்டால் எடுக்கும்போது பாட ஒரு பாட்டுக் கேட்டார். அதற்காக மட்டுமின்றி நாட்டார் வாழ்க்கை உயர்வுக் கான மந்த்ரமாக - அவரவர் நாடோறும் பாடுவதற்காக எழுதினேன். பாடுகிறார் விண்ணும் மண்ணும் தனியாளும் ... ... தபால்காரன் வருகிறான் தபாலை வாங்கி படிக்கிறார். நியூ இந்தியாவைப் பார்க்கிறார் பாரதி : அரிய ருஷ்டி கஜின்ஸின் புதிய சாதனை! சுப்பிர மணிய ஐயரே, ஆங்கில மொழிபெயர்ப்பு. வேண்டுமடி எப்போதும் விடுதலை படித்துவிட்டுக் கொடுங்கள். அரவிந்தருக்கு அனுப்ப வேண்டும். வாத்தி : ஆஹா! மலைத்தீர்கள்? பாரதி : என் ஜீவியத்தில் இப்படிப்பட்ட அரிய வித்தையைக் கண்டிருந் தால்தானே. சுப்பு : நீங்களே கோஷிடம் கொண்டுபோய்க் காட்டி அபிப்ரா யம் கேட்கலாமே. பாரதி : நான் தமிழில் எழுதச்சொன்னதை எழுதினீரா என்று கேட்பாரே. வாத்தி : அதையும் எழுதிவிடுங்களேன். பாரதி : இரண்டையும் எழுதிக் கொண்டு போகிறேன். நீங்கள் சரியாய் மாலை 5மணிக்கெல்லாம் கோஷ் வீட்டுக்கு வந்து விடுங்கள். (போதல்) 162. அரவிந்தர் வீட்டில் வெள்ளையர் வீதியிலுள்ள அரவிந்தர் வீட்டில் பெங்காலிகள், ரிஷார், மதாம் ரிஷார், சேன்திலேர், பாரதி, சுப்புரத்தினம், வாத்தியார் சிவா, சிவக்கொழுந்து நாய்க்கர், ஆறுமுகம் செட்டியார், சங்கர செட்டியார், வ.வே.சு. ஸ்ரீநிவாசாச்சாரி, குவளைக் கண்ணன், முருகேச பிள்ளை, வேணு மற்றும் பலர். பாரதி : இர அன்னை அன்னை அன்னை ஆடுங் கூத்தை நாடச்செய்தாள் என்னை ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... பாட்டுக்கு ஆடுகின்றாள் ஒருத்தி, பக்கமேளம் அளவோடு ஒத்திசைக்கிறது. முடிவில்... ரிஷார் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறார். அரவிந்தர் : பாரதி உலக கவி. தொல்லை தரும் இந்த உலகத்தினின்று நம்மை ஆநந்த உலகத்தில் சஞ்சரிக்க வைத்தார். ஆம். நாம் இத்தனை நேரம் ஆநந்த உலகில் இன்புற்றுக் கிடந்தோம். பாரதி இந்த நாட்டு மக்களை எல்லாம் மகிழ்ச்சி உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற வேண்டும். பாரதி வாழ்க! வாழ்க பாரத தேசம் (கையொலி) 163. தெருப்பாட்டு குவளைப்பாட்டு விடுதலை - விடுதலை - விடுதலை பறையருக்கும் இங்குத் தீய புலையருக்கும் விடுதலை - விடுதலை (பாடிக் கொண்டு போகிறார். உடன் நூற்றுக்கணக்கான வாலிபர் மாணவர். ஈவரன் கோயில் எதிர்த்தவீடு, ஆறுமுகம் செட்டி யாருடையது. குறட்டில் போட்டிருக்கும் விசிப் பலகையில் வாத்தியார், வ.வே.சு. ஆறுமுகம் செட்டியார், சிவக் கொழுந்து நாய்க்கர் குந்தியிருக் கிறார்கள்.) வாத்தி : என்ன கிருஷ்ணன்! வா உட்கார். குவளை : பாட்டு எப்படி? கருத்துப் பிடிக்கிறதா? ஆனால் வி.வி.எ. ஐயருக்கு பிடிக்காது. (வி.வி.எ. அசட்டுச் சிரிப்பு) பறையன் பறையனாகவே இருக்கணும் அவருக்கு புலையன் புலையனாகவே இருக்கணும். பாப்பான் மட்டும் கருவாடு ஏற்றுமதிகூடப் பண்ணலாம். பாப்பான் வட்டிக்கு விடுவது சரிதான் என்கிறார் வி.வி.எ. சிவ : இது பாரதி பாடியது தானே குவளை : வேறு எவனால் பாடமுடியும்? இன்னொன்று; பாரதி பாடியதா யிருந்தாலும் வி.வி.எஸுக்கு பிடிக்காது. அவர்தான். ஆயிரம் வருஷமா ஒரு கவி கூடத் தோன்றிய தில்லை என்கிறாரே. ஓய் வி.வி.எ கவிண்ணா என்னாண்ணு தெரியுமா ஓய் உமக்கு. உலக அறிஞன் அரவிந்த கோஷ் என்ன ஆனார் பாரதி பாட்டில்? பார்த்தீரண்ணோ நீர்? பொதுவுக்கு உழைப்ப தாகச் சொல்லிக் கொள்ற எவனும் வர்ணாரம தருமப் பித்துக் கொண்டவனா இருக்கக் கூடாது. அவன் சென்னைக் கீழ்ப்பாக்கம் ஆபத்திரிக்குப் போயாகணும். t.nt.R.: அரவிந்த கோஷ் நேற்றுப் பாரதி உலககவி என்றார். எனக்கு உடன்பாடுதான் கிருஷ்ணன், கோபம் கூடாது. உட்காருங்கள். குவளை : பாரதி, புதுச்சேதி ஒன்று இருக்கிறது. அல்லாரையும் அழைச் சுண்டு வாண்ணாறு. வர்ரிங்களா? (போகிறார்கள்) குவளை : தெருவில் விண்ணும் மண்ணும் தனியாளும் ... ... ... 164. பாரதி வீடு நண்பர்களின் இடையில் பாரதி தமக்கு வந்த அஞ்சலைப் படிக்கிறார். ஸ்ரீமான் பாரதி அவர்களுக்கு... தயவு செய்து தாங்கள் முன் போலச் சுதேசமித்ரனுக்குப் பாட்டு எழுதியனுப்பக் கோருகிறேன். உங்கள் பாட்டு நிறுத்தப்பட்ட நாளில் சந்தா வெகுவாகக் குறைந்துவிட்டன. மீண்டும் மித்திரனை உயர்த்துவது உங்கள் கடமை. தங்கள் ரங்கசாமி ஐயங்கார் வாத் : பாட்டுவேண்டாம் என்கிறார். கஜின் மொழி பெயர்ப்பைப் பார்த்தபின் வேண்டும் என்கிறார். பாரதி : சுப்புரத்தினம்! அந்தப் பாட்டைச் சுதேசமித்ரனுக்குப் பெயர்த் தெழுதி அனுப்பிவிடு. சுப்பு : (எழுதி வைத்திருந்ததைப் படிக்கிறார்) யாமறிந்த மொழிகளிலே ... ... ... திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும். வாத்தி : சரிசரி, சுதேசமித்திரன் ஆசிரியருக்கே புத்தி கற்பிக்கிறது அந்த அடி. தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்குயார் சிறப்புக் கண்டார். (அனைவரும் கும்பிடுகிறார்கள். ஆஹா என்கிறார்கள்) 165. சித்தாந்தசாமி கோயில் பாரதி, சுப்புரத்தினம், குவளை, வாத்தியார் தென்றலை நுகர்ந்து இனிய காட்சி கண்டு கோயிலில் அமர்ந்தவர்கள். மாலை 5 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். 166. பாரதியும் செல்லம்மாவும் பாரதி வீடு புகுந்ததும் செல்லம்மா : இன்றைக்கு எங்கே? பாரதி : சித்தாந்தசாமி கோயிலும் தென்றலும் என்ன நேர்த்தி தெரியுமா? நீதான் வரமாட்டேன் என்கிறாயே அப்படி ஓர் இடம் வேண்டும். பாட்டு எழுதப் போகிறேன். செல்லம்மா : சொல்லுங்கள் நான் எழுதப் போகிறேன். பாரதி : அப்படியா. மகிழ்ச்சி பாட்டு காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் ... ... ... ... ... ... ... ... ... பாட்டுக் கலந்திடவே - அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் (பாரதி செல்லம்மாவின் கன்னத்தில் தட்டிக் கொடுக்கின்றார்) (கதவு சாத்தப்படுகின்றது) கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டு தர வேண்டும். 167. கடற்கரைக்கு பாரதி, சீனிவாசாச்சாரி முதலிய நண்பர்களுடன் போய்க் கொண் டிருக்கிறார். துய்ப்ளேக் சிலையருகில் ஓரிளையவன், தன் கையி லிருந்த ஆத்தி சூடியைப் படித்துக்கொண்டிருந்தவன் - அங்கு வந்து கொண்டிருந்த பாரதி கூட்டத்தை விட்டு வேறிடம் போக எழுந்தவன் இளமையிற் கல் என்று உரக்கக் கூறிச் செல்கிறான். இளமையில் என்பதை மறுத்து மறுநொடியில் பாரதி முதுமையில் மண் முழக்கஞ் செய்தார். நண்பர்கள் வியப்புற்று நின்றார்கள். வி.வி.எ. : ஔவையார் ஆத்திசூடியின் அர்த்தத்தையே உதாசினம் பண்ணிவிட்டீர்களே. பாரதி : நீரிற் குமிழி இளமை என்பது போன்ற செய்யுள்களின் கருத்தால், இந்த நாட்டு மக்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இளமையை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இளமை யிற் கல் என்ற ஔவையார் வாக்கியம் அதையே வற்புறுத்துவதாய் இருந்தது. அதை மறுக்கவேண்டும் அல்லவா? வாத்தியார்: இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஒரு புதிய ஆத்திசூடி செய்யுங்கள் நீங்கள். பாரதி : கடற்கரையில் இன்று காற்று வாங்கியபடியே ஆத்தி சூடியைச் செய்வோமா? 168. கடற்கரை மணலில் வாத்தி : அ... பாரதி : அச்சம் தவிர் வாத் : ஆ... பாரதி : ஆண்மை தவறேல் வாத் : இ பாரதி : இளைத்தல் இகழ்ச்சி வாத் : ஈ பாரதி : ஈகை திறன் வா : உ பா : உடலினை உறுதிசெய் வாத் : வௌ... பாரதி : வௌவுதல் நீக்கு (வீடு திரும்புகிறார்கள்) 169. மடுவுக்கு அதிகாலையில் பாரதி வீடு தட்டப்படுகிறது. பாரதி : வந்தேன்... வந்தேன்... மடுவுக்குத்தானே? சாமிநாதன் : தீர்மானப்படி நாங்கள் வந்துவிட்டோம். (வழியில்) பாரதி : பார்த்தசாரதி ஐயங்காரை அழைக்க வேண்டாமா? சாமி : அவர் தயாராயிருப்பார். 170. பார்த்தசாரதி ஐயங்கார் சத்திரத்தில் கூட்டம் நுழைகின்றது. பார்த்தசாரதி ஐயங்கார் தாயார் (முதியவர்) பாரதியைக் காணுகிறார். தாயார் : ஏன் பாரதி ஒங்க பாட்டெல்லாம் தம்பி அடிக்கடி சொல்லுவான். கேட்டு வர்றேன். பிரமாநந்தம் - திருவாய் மொழியிலே திருப்பள்ளி எழுச்சி இருக்கே, அந்த மாதிரி ஒண்ணு பாடுங்க. இது மார்கழி மாசமில்லே. பாரதி : அப்படியே ஆகட்டும் அம்மா. (பார்த்தசாரதி சிரித்துக் கொண்டே வருகிறார்) (மடுவுக்குப் புறப்பாடு) 171. எதிர்த்த மாடி பாரதி தம் வீட்டின் மாடியிலிருந்து கீழே வாசலில் பருப்புக் காயவைக்கும் தன் செல்லம்மாவைக் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார். எதிர்த்த வீட்டின் மாடியின் சன்னல் வழியாக ஒரு தாசி பாரதியைப் பார்த்து நிற்கிறாள். பின்னால் வந்த சிவா, எதிர்த்த வீட்டு ஏந்திழைக்கு ஐயர் மேற்காதல் என்றார். பாரதி, ஐயருக்குச் செல்லம்மா மேற்காதல், என்று பதில் கூறுகிறார். சிவா : அது இருக்கட்டும். இன்றைக்கு ஒரு புதிய மெட்டுக் கேட்கலாமா? தெருவை எட்டிப் பாருங்கள். குடக்கூத்து ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகின்றார்கள். பாட்டு எட்டடிக் குச்சுக்குள்ளே - திருத்தணி எத்தனை நாளிருப்பேன். மச்சூடு கட்டித் தாரும் - திருத்தணி மலையில் வேலோனே. சிவா : எப்படி? (கேலிச்சிரிப்பு) பாரதி : சிவா. கல்கண்டு மெட்டு. மறைந்து வரும் தமிழ்ச் செல்வம். (கேட்டுச் சுவைத்து நிற்கிறார். சிவா மலைத்து நிற்கிறார்.) சிவா : இப்படிப்பட்ட மெட்டுக்கள் வேணுமானால் எங்களூரில் எவ்வளவோ கிடைக்குமே. பாரதி : காட்டினால் மகிழ்ச்சியாச்சே சிவா. சிவா : இதே நேரம் நடேசையர் மிட்டாய்க் கடை யண்டை போகணும். அங்கே சுண்ணாம்பு இடிக்கிறார்கள். பாரதி : பாட்டுப்பாடிக் கொண்டே. சிவா : ஆமாம். பாரதி : செல்லம்மா! இதோ வந்துவிட்டேன்! வந்து சாப்பிடுகிறேன். (சிவா, பாரதி போகிறார்கள்) வழியில், பாரதி : (அருகில் வரும் சிவா காதில்) சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே - உலகில் ஏற்றம் புரிய வந்தாய். சிவா : ஆஹா. அதோ பாருங்கள் மெட்டு (சுண்ணாம்பு இடிக்கிறார்கள் பெண்கள்) பாட்டு தானனே தானானனே தன தானனே தானன தானேனனா பாரதி - கைந் நொடித்துத் தாளம் போடுகிறார் அவர்முகம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. சிவா : போகலாமா? பாரதி : இன்னும் எங்கே போகலாம்? சிவா : சொல்றேன் எல்லாவற்றையும் ஒரே நேரத்லே சொல்லி விடுவதா? (பாரதி சிரிப்பு) போகிறார்கள். 172. நீங்கள் சாப்பிடுங்கள். நான் மாடியில் இருக்கிறேன் சுவாமி. பாரதி வருகின்றார் மாடிக்கு பாரதி : சிவா கொஞ்சம் இரு. இதோ கொஞ்சம் எழுதிவிட்டு வருகிறேன். உம்? சிவா : சரி பாரதி : சுருட்டு வேண்டுமோ - இதோ (சிவா சுருட்டு பற்ற வைக்கிறார். பாரதி எழுதுகிறார்) கண்ணம்மா என் காதலி தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையிலே செண்பகத் தோட்டத்திலே ... ... ... ... பாரதி : சிவா, கண்ணன் பாட்டு என்ற புது நூல் இயற்றி யிருக்கிறேன். நாளைக்கு நம் நண்பர்கள் அனைவரும் வரும்படி ஏற்பாடு செய். படித்துக் காட்டப்படும். 173. சுப்புரத்தினம் வருகை எழுதிக் கொண்டிருந்த பாரதி எரிச்சலுடன் நிமிர்கின்றார். பாரதி : சுப்புரத்தினம் வா. எனக்கு எழுத ஓடவில்லை மனம். இத்தனை நாள் தனியாக நான் பார்க்கும் மாடியில் பார், அதோ ஊஞ்சல் ஆடினாள். இன்று சூப்ரண்டண்டும்கூட உட்கார்ந்து கொண்டான். நம் மேல் பொய்க் கேசுகள் ஜோடித்துக் கொண்டி ருக்கிறான். அவன் அந்தத் தாசியை என் வீட்டில் எதிரிலேயே வைத்துக் கொண்டது. அவன் என்னை வென்றுவிட்ட தென்று எண்ணு கின்றான். பாட்டெழுத மனம் போகவில்லை. அவள் ஆர் தெரியுமா? பெத்தாச்சி செட்டியின் கூத்தி. அவளை இந்த அப்துல்கரீம் இழுத்து வந்துவிட்டான். அவளுக்கு என்னைத் தெரியும். என்னையும் மயக்க முயற்சி செய்தான். முடியாது என்றும் தெரிந்து கொண்டிருப்பான். நீ இதில் கவனிக்க வேண்டும் இதை மற்றவரிடம் சொல்ல எனக்கு இஷ்டமில்லை. சுப்பு : நாளைக்கு இங்கு அவள் இருக்கமாட்டாள். மனத் தொல்லை வேண்டாம் உங்களுக்கு. எழுதுங்கள். நான் போய் காரியத்தைக் கவனிக்க வேண்டும். (போதல்) 174. வேணு நாயக்கர் கரடிக் கூடம் சுப்பு : கோதண்டராமா. நீதான் இருக்கிறாயா? வேறு யாரு மில்லையா? அப்துல் கரீம், பாரதி வீட்டின் எதிரில் மாடியில் அந்தத் தாசியுடன் ஊஞ்சல் ஆடுகிறான். இதேநேரத்தில் அவளை அந்த வீட்டைவிட்டுக் கிளப்ப வேண்டும். ஒரு ஜட்கா எடுத்துக் கொண்டு என்னுடன் வா. கோதண் : (ஓடி உள்ளேயிருந்து ஜட்காவுடன் வெளிவந்து) வா . 175. தாசி வீடு இருவரும் உள்ளே செல்லுகிறார்கள். கீழ்க் கட்டில் நாற்காலியில் உடகார்ந்திருந்த தாசி எழுந்து, தாசி : வாங்க, என்னா சேதி, உட்காருங்கள் சுப்பு : சூப்ரண்டெண்ட் இல்லையா? தாசி : அவர் போய்விட்டார் என்ன சேதி? என்னிடம் சொல்லக் கூடாதா. சும்மா சொல்லுங்கள். சுப்பு : பாரதி இங்கிலீஷ்காரருக்குப் பகைவர். நீங்கள் இங்கிலீஷ் காரனின் ஆட்கள், உங்கள் எதிர்வீட்டில் பாரதி. பாரதி எதிர் வீட்டில் சூப்ரெண்டும் நீங்களும். இந்த நிலை இன்றைக்கே மாறவேண்டும். இன்றைக்கே நீங்கள் வேறு இடம் தேடிக்கொண்டு போவது நல்லது. பாரதி எண்ணத்தை எதிர்க்கவேண்டாம். தாசி : இல்லை இல்லை இல்லை இதுவரைக்கும் நான் இங்கு மன்னிப்பார் ஐயர் என்று எண்ணினேன். எப்படி மன்னிக்க முடியும்? சூப்ரிண்டெண்டு பச்சை விரோதி. அவருக்கு இங்கு இடங் கொடுத்திருக்கிறேன். ஐயர் மன்னிக்கவேண்டும். நாளைக்கு இங்கே இருக்க மாட்டேன் உறுதி. சுப்பு : மகிழ்ச்சி அம்மா. தாசி : எதிரில்தானே இருக்கிறீர்கள். பார்த்துக்கொண்டுதானே இருப்பீர்கள். இதோ ஆள் சேதி அனுப்பி விடுகிறேன். ஒரு மணி நேரத்தில் வீடுமாற்றம் தொடங்கிவிடும். ஐயரை மன்னிக்கச் சொல்லுங்கள். சுப்பு : நல்லது வருகிறோம். (அவள் கும்பிடுகிறாள். இருவரும் கும்பிடுகிறார்கள்) 176. வீட்டு நடையில் தாசி : ஒரு சேதி, நீங்கள் மட்டும் (தனித்துப் பேசுகிறார்கள்) வி.வி.எ. வீட்டின் கிணற்றில் ரிவால்வார் போட்டிருக் கிறார்கள். நாளைக்குப் பிரஞ்சு போலிசு சோதனை போடப்போகிறது. மனதில் வையுங்கள். சுப்பு : அம்மா நன்றி. 177. சுப்புரத்தினம் பரபரப்பு (பாரதியை மாடியில் காணுகிறார் சுப்பு) பாரதி : வெற்றியா? சுப்பு : வெற்றிமேல் வெற்றி, நீங்கள் வி.வி.எ வீட்டுக்கு விரைந்து செல்லுங்கள். அவர் வீட்டுக்கிணற்றில் எதிரிகள் ரிவால் வாரைப் போட்டிருக்கிறார்கள். நாளை வீட்டைச் சோதனை போடப் போகிறார்கள். அதை எடுத்துவிட வேண்டும் அல்லவா. பாரதி : (பரபரப்பு) அவள் சொன்னாளா? சுப்பு : ஆம். (பாரதி பறக்கிறார்) 178. அன்றிரவு பாரதி : கடவுள்தந்த முன்னறிவிப்பு சுப்பு : இல்லை அவள், காதல் தந்த முன்னறிவிப்பு. பாரதி : (பாரதி நிதானம், சிரிப்பு) அதுசரிதான். சுப்பு : சாமான்கள் வண்டியில் ஏற்றப்படுவதைப் பார்த்தீர்களா? பாரதி : ஆமாம் வ.வே.சு. ஐயர் சொல்லுகிறார் அவளை அங்கேயே வைத்திருந்தால் தேவலை என்கிறார். சுப்பு : அது விபரீதத்தில் கொண்டுபோய் விடும். பாரதி : (சிரிப்பு) ஆமாம். அப்புறம் அவள் நம் வீட்டுக்கே வர ஆரம்பித்து விடுவாள். அப்துல்கரீம் அவளைக் கொலை செய்துபோடுவான். போகட்டும் அவள். எங்கே வீடு? சுப்பு : வெள்ளைக்காரத் தெருவிலேயே பாரதி : நாளைக்கு நாம் வி.வி.எ. வீட்டிலேயே இருந்தால் வேடிக்கை பார்க்கலாம். சுப்பு : சரி. கோதண்டராமன், தெருவில் இருக்கிறான். அவனை நடேசையர் கடைக்கு அழைத்துப் போவதாய்ச் சொன்னேன். பாரதி : கோதண்டராமன் வெளியிலேயே ஏன் நிற்க வேண்டும்? சுப்பு : வராமல் என்ன? அவன் சிகரெட் பற்ற வைக்கிறான் (போதல்) கண்ணம்மா என் குழந்தை பாரதி ஒருபுறம் உட்கார்ந்து பாடுகிறார். குழந்தை ஆடுகிறது. சின்னஞ்சிறு கிளியே - கண்ணம்மா செல்வக் களஞ்சியமே ... ... ... ... ... ... ... ... ... ... ... கண்ணன் என் காதலி தீர்த்தக்கரை தனிலே ... ... ... பாரதி எதிரில் காதலி ஆடுகிறாள். 179. பாரதி வீட்டை நோக்கி அறிஞர் கூட்டம் ஈவரன் தருமராஜா கோயில் தெருவில் அறிஞர் கூட்டம் கண்டு கொள்ளவில்லை. ஆறுமுக செட்டியார், வி.வி.எ. வாத்தியார், ராஜா ஆகியோர் தலைமையில் மிகப்பலர். பாரதி வீடு நோக்கிச் செல்லுகிறார்கள். சங்கர செட்டியார், ஜீயர் நாயுடு, அன்பு டாக்டர், வேணு நாயக்கர், சாண்டோ கிருஷ்ணன், கோதண்டராமன் ஆகியோரும் பாரதி வீட்டை நோக்கிப் போகிறார்கள். சி.ஐ.டி. கூட்டம் பாரதி வீட்டின் எதிரில் கூடி இருக்கிறது. பாரதி மாடியிலிருந்து பார்க்கிறார். வருக. வருக என்று எதிர் ஓடி வந்து மாடிக்கு அழைத்துச் செல்லுகிறார். தினசரியில் கண்ட உருசியப்புரட்சி பற்றிக் கேட்கிறார்கள். உணர்ச்சிக் குரிய விவாதத்தின் பின் பாரதி பாடுகிறார். புதிய ருஷியா பாரதி எழுந்து நின்று ஆவேசத்தோடு பெருங்குரல் எடுத்துப் பாடுகின்றார். மாகாளி பரா சக்தி 180. பாரதி வீட்டில் கண்ணன் என் விளையாட்டுப்பிள்ளை... சிறு நாடகம் நாடக பாத்திரங்கள் கண்ணன், அயல் வீட்டுப் பெண், நண்பரின் வீட்டுக்குடையவன் தாய். தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவினிற் பெண்களுக்கோயாத தொல்லை. வாத் : கண்ணன் பாட்டு நூல் முழுவதும் முடிந்துவிட்டதா? பாரதி : ஆமாம். நாற்பது பாடல்கள் வாத் : நூல் வெளிவந்தால் லோகோபகாரமாயிருக்கும். வி.வி.எ. : சாகுந்தலம் உங்களுக்குப் பிடித்தமான காவ்யம் அதை மொழி பெயர்த்தால் நன்றாயிருக்கும். பாரதி : அதைவிட சாகுந்தலத்தை நாடகமாக எழுதி நாமே நடித்தால் எப்படி இருக்கும்? சுப்பு : பேஷ்! நீங்கள் துஷ்யந்தன்! வி.வி.எ : ஸ்ரீநிவாசாச்சாரி சகுந்தலை. (ஆச்சாரி சிரிப்பு) ஸ்ரீநிநிவாச் : கண்ணுவ ரிஷிக்குப் பொருத்தம் வி.வி.எ. ஐயர். பாரதி : துர்வாசர்? குவளையா? குவளை : நம்ப நாடகந்தான் தத்துக் குத்தலாயிருக்கே. இதிலே நாமும் ஒரு நாடகமா நடத்தணும்? சேதி தெரியுமோ. அரவிந்தகோஷ் வீட்லே தடுக்கப் பட்ட புதகம் நான்கு திருட்டுப் போயிருக்கு. அந்த மயூரேசம் பயல் வேலையா இருக்கும் என்று நினைக்கிறார்கள். கோஷ் சஞ்சலத்தில் இருக்கிறார். பாரதி : (ஆழ்ந்த யோசனை) பாடி முடிந்தது (கூட்டத்தினர் உணர்ச்சி வசப்பட்டு வாய் மூடி இருக்கின்றனர்.) வி.வி.எ. : ஜனங்களின் உத்வேகத்திற்கு ஜார் கொடுமைதான் காரணம் பாரதி : அது மட்டும் காரணமன்று. மக்கள்தமைப் பிரிவினைப் படுத்தும் ஜாதிப் பேய் அங்கில்லை. வர்ணாரம பேதம் அங்கில்லை. (அனைவரும் கைதட்டல்) வி.வி.எ. : சுதேசமித்ரனில் உங்கள் துராச்சாரத்தை எதிர்த்து ஜானகி ராமையர் எழுதியிருந்தார். அதற்கு மறுப்பு எழுத வேண்டாமா? பாரதி : தலையில் ஐந்தாறு மயிரும் அக்குளுக்கு மேல் அழுக்குக் கயிறும் என்றால் அந்த ஆச்சாரத்தை நான் அனுசரிக்க முடியாது என்று எழுதியிருந்தேனே. வி.வி.எ. : (சிரிப்பு) மற்றவர் கைதட்டல் வி.வி.எ : நீங்கள் எழுதிய அந்த மறுப்பை சுதேசமித்ரன் வெளி யிட்டதா? பாரதி : முன் பக்கத்தில்! பொதுவாக ஆசிரியர் விரிந்த மனப் பான்மையுடையவர். முதலில் என் பாட்டு வேண்டாம் என்றாரே என்றால் - காரணம் அவரல்ல. அதிகாரிகளின் நெருக்கடி. வாத் : கண்ணன் பாட்டு நடந்து வருகிறதா? பாரதி : நாளைக்கு உங்களிடம் படித்துக் காட்ட இருக்கிறேன். 181. கோயிலுக்குப் பெண்கள் படை பாரதி மனைவி, வி.வி.எ. மனைவி, சீனிவாசாச்சாரி மனைவி பல பெண்டிரும் பெருமாள் கோவில் உற்சவத்திற்குப் போகிறார்கள். பெருமாள் கோயில் குருக்கள்மார் பாரதி மனைவிக்கு அளவிறந்து மரியாதை செய்கிறார்கள் மற்றவர்களைவிட! தனித்தனி அர்ச்சனை முதலிய நடைபெறுவிக்கிறார்கள் குருக்கள்மார். பெருமாள் எடுப்புச் சிலை கோயிலை ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள் அம்மையார். மகளிர் எல்லாரும் பாரதி மனைவி யையே ஆசையோடு கவனிக்கிறார்கள். ஒரு பாட்டி அருகில் வந்து கேட்கிறாள் செல்லம்மாவை. பாட்டி : அவாள் எல்லாம் நிறைய நகை பண்ணிப் போட்டிருக் கிறார்களே ஒனக்கு பாரதி நகை பண்ணி போடலியா? செல்ல : (முகம் கூம்புகிறது) இல்லே. பாட்டி : அது ஏன்? செல்ல : அது ஏனோ, கோயிலுக்கு வர்ரவா யார் நகை போட்டிருக்கா யார் நகை போட்டில்லேண்றதை கவனிக்கத்தானா வர்ரது? இதுக்குத்தான் நான் கோயிலுக்கு வர்லேண்ணேன். நீங்கள் விடவில்லை. (போகிறார்கள்) 182. செல்லம்மாவும் சங்கரையரும் செல்லம்மாவின் பந்துவாகிய சங்கரையர் பாரதியார் எழுதிய பாட்டுக்களையெல்லாம் பார்த்து பாட்டுக்களின் தலைப்பில் இன்ன ராகம். இன்ன தாளம் என்று போடுகிறார். தஞ்சமுலகினில் எங்கணும் இன்றித் தவித்துத் தடுமாறி - இந்தப் பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன் பாரமுனக்காண்டே - ஆண்டே பாரமுனக்காண்டே என்ற அடியைப் பாரதி பாடும் பாணியில் - சாமிநாதையரும் கோவிந்த ராஜுலு நாயுடும் பாடிக் காட்டுகிறார்கள். எந்த இராகத்திலும் சேரவில்லை என்று சங்கரையர் தொல்லை யடைகிறார். மற்ற இருவரும் சிரிக்கிறார்கள். பாரதி வருகிறார். நடப்பதை விசாரிக்கிறார். பாரதி : பாட்டு இராகத்தையும் தாளத்தையும் தேடி முடிவு பண்ணிக் கொண்டு தோன்றுவதில்லை. கவிஞன் உள்ளத்தை ஒரு பொருள் ஓர் எண்ணம் கவரும். ஒரு பாவம் தோன்றும். பாட்டுச் சுரக்கும். என் பாட்டைப் பாடிப் பார்ப்பவர் அது இன்ன மெட்டில் பாட வேண்டும் என்ற முடிவுக்கு வர நீ ஏக தேசம் சேருகின்ற ஒரு இராகத்தைக் குறிக்கத் தான் முடியும். அதை விட்டு அப்படியே சுரப்படுத் தினால் யாருக்குச் சுரம் தெரியப் போகிறது. சுரம் என்றால் ஜுரம் காய்ச்சல் நோயைத்தான் நினைப்பார்கள். நான் கன இராகங்களில் பாட்டு அமைக்க வில்லை. அப்படி அமைவதுமில்லை. சின்ன சின்ன வரிகள் - இடையில் தொய்யாமல், தெரிவிப்பதாகவேயிருக்கும். தெரிகிறதா? சங்கர் : நீங்கள் சொன்னபடியே இன்ன இராகத்தில் ஏகதேசம் ஒத்து வருகிறது என்றுதான் குறித்திருக் கிறேன். பாரதி : நீ சாப்பிட வரலையோ? (போகிறார்கள்) (பாரதியும் சங்கரையரும் சாப்பாட்டில் அமர்கின்றார்கள். தங்கம்மா பரிமாறுகிறார்கள்) பாரதி : அம்மா எங்கே? செல்லம்மா. குழந்தைக்கு என்ன தெரியும். அதை அனுப்பிச்சுட்டு நீ அறையிலே புகுந்துட்டே? தங்கம்மா: அறையிலே புகுந்துக்காமே அம்பலத்திலே ஆட என்ன நகை பண்ணிப் போட்டிருக்கே அம்மாவுக்கு? (பாரதி முகம் கருகிவிட்டது) பாரதி : அம்மா அப்படிச் சொன்னாளா உன்னிடத்திலே.. பராசக்தி என் உள்ளத்தில் அமைதியைச் சேர். (பாரதி எழுந்து விடுகிறார்) 183. சங்கரனும் தங்கம்மாவும் செல்லம்மாவும் நீ சாப்பாட்டு நேரத்தில் இதைச் சொல்லலாமோ? (வருந்திப் பேசுகிறார்கள்; பாரதி மாடியில் போய்ப் படுத்துக் கொள்கிறார்). 184. அன்றிரவு பாரதி இல்லை. சி.ஐ.டி. தேடுகிறார்கள். வேணு நாய்க்கர், அம்மாக்கண்ணு தேடுகிறார்கள். வி.வி.எ. ஸ்ரீநிவாசாச்சாரி தேடுகிறார்கள். (muɪj® பதறுகிறார்.) இரயிலடிக்கு ஓடுகிறார்கள். வேணு நாயக்கரும் கோவிந்த சாமியும் கோதண்டராமனும். பாரதி, டிக்கெட் கொடுக்கும் இடத்தின் எதிரில் உணர்ச்சியுடன் உலவுகிறார். வேணுநாய்க்கர், அரவிந்தர் முதலியவர் பதறுவதைக் கூறி, வாருங்கள் வீட்டுக்கு என்று கெஞ்சுகிறார். பாரதி : வேணு, பெண்டாட்டியால் அவமானப்பட்டுக் கொண்டிருப் பதை விட இங்கிலீஷ்காரன் சிறைமேல். வீட்டுக்குப்போ. நான் வருவதாக உத்தேசமில்லை. 185. சுப்புரத்தினம் வருகை புதுவைக்கு இரண்டு கல் தொலைவிலுள்ள முத்திரைப் பாளை யத்துக்கு ஆள் ஓடுகிறான். சுப்புரத்தினம் ஓட்டமாக வருகின்றார். ரயிலடியில் ஒரு புஷ் வண்டியைக் கொண்டு நிறுத்தி சுப்பு : (பாரதியிடம் ஓடிநின்று) மனைவியின் தொந்தரவால் பாரதி வெளியேறினார். சிறைப்படுத்தப்பட்டார் என்று நாளைக்கு உலக மெலாம் சேதி பறக்குமே. அது சரியில்லை - உருளம்பேட்டையில், நடராஜ ஆச்சாரி நாடகம் பார்த்துவிட்டு பிறகு யோசித்து ஒரு முடிவு பண்ணலாம். பாரதி : (குஷி) நடராஜ ஆச்சாரி கெட்டிக்காரனா? சுப்பு : துக்கடாக்களைக்கேளுங்களேன். (புஷ் வண்டி போகிறது) 186. நாடகம் நடராஜ ஆச்சாரி திருடனாக வருமுன் உள்ளிருந்தே பாட்டை ஆரம்பிக்கிறான். பாரதி சபாஷ் என்கிறார். கதை தொடங்குகிறது. சில பாட்டுக்கள் நடந்தேறின. ஒரு பெண்ணோடு அவன் நெருங்கி நடித்ததும் ஆடியதும் சகிக்கவில்லை. பாரதி : போகலாமா? சுப்பு : இருக்கவா முடியும்? (போகிறது புஷ்வண்டி) ஓட்டடா ரதத்தை.... கல்வே காலேஜண்டை போகிறது. வழிபார்த்துக் கொண்டிருந்த அம்மாக்கண்ணு சந்திக்கிறார்கள். வண்டியை நிறுத்து என்கிறார் பாரதி. அம்மாக்கண்ணு தம் மடியில் கட்டி வைத்திருக்கும் கடலைச் சுண்டலை இந்தாங்கசாமி வாயிலே போடுங்க. பாரதி வாயில் போடுகிறார். அவருக்குப் பசி. அம்ருதம் அம்ருதம் என்றார் கடலைச் சுண்டலை. ஓட்டடா ரதத்தை என்றார் உடைசல் புஷ் வண்டியை. அவர் நிச்சயமாக அப்போது தேவலோகத்தில்தான் இருந்தாரோ என்னமோ. சுப்புரத்தினம் பாரதியை அவர் வீட்டுக்கே கொண்டு போய் விட்டார். 187. கண்ணீரைத் துடைத்தபடி சாப்பாடு போடுகிறார்கள் செல்லம்மா பாரதி : நான்தான் வந்துவிட்டேனே செல்லம்மா (சாப்பிடுகிறார்) 188. கருவடிக்குப்பம் பூங்கா இல்லம் இரவு 2 மணிக்கு கருவடிக்குப்பம் பூங்கா இல்லத்தில் அரவிந்தர் தலைமையில் ஓர் இரகசியக் கூட்டம் நடக்கிறது. பாரதி வி.வி.எ. சீனிவாசாச்சாரி குவளைக்கண்ணன் முத்தியால் பேட்டைக் கிருஷ்ணசாமி செட்டியார், மாடசாமி கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். வேணுநாயக்கர் முதலிய பலர் ஒருபுறம் உட்கார்ந் துள்ளார்கள். அரவிந்தர் : நண்பர்களே, சென்னைக்கு இளவரசர் வந்தபோது புதுவையிலிருந்து எவரும் சென்னைக்குப் போகக்கூடாது என்று திட்டம்போட்டிருந்தார்கள். இங்கிலீஷ்காரர் நிபந்தனை கெடுபிடியாய் கையாளப்பட்டது. நம் கந்தசாமி ஆச்சாரி வக்கீல் மகன் சுப்ரமணியன் நம் கூட்டத்தைச் சேர்ந்தவர். அந்த நிபந்தனைக்குக் கட்டுப்படாமல் சென்னைக்கு ரயிலில் புறப்பட்டார் அவர் கண்டமங்கலம் டேஷனில் கைதுசெய்யப்பட்டார். விழா முடிந்ததும் விடுதலை செய்யப்பட்டார். இதில் நாம் வருந்தத்தக்கது ஒன்று என்னவென்றால், அவரைக் கைது செய்த இராதாக்கிருஷ்ணன் ரயில்வே போலீ எட்கான்டேபிள் - சுப்பிரமணியனை அடித்தார். அவரை நாம் விட்டு வைக்கலாமா? ஒன்று. இரண்டாவது. ஈவரன்கோயில் சென்னை ராஜவீதி சந்திப்பில் ரங்கநாதன் என்பவருக்குச் சொந்தமான புகையிலைக் கடை சி.ஐ.டிகளின் சதியாலோசனை சபையாக உபயோகப்பட்டு வருகின்றது. ஜெயராயர் பெர்சப்தேர், சென்னை போத குருசாமிப் பிள்ளை, மயூரேசன் ஆகி நம் எதிரிகளால், ரங்க நாதன் கூட்டம் பெரும் பெரும் வருமானம் அடைந்து வருகிறது. புதுவை மக்களை நமக்கு எதிரிகளாகும்படி அவர்கள் ஆள்சேர்த்து வருகிறது. பகிரங்க விஷயம். இதை நாம் விட்டு வைக்கலாகாது. மூன்றாவது. என் வீட்டிலிருந்து வெளி வரக்கூடாத புத்தகங்கள் நான்கு காணாமல் போயின. அவை கண்டு பிடிக்கப்பட வேண்டும். நான்காவது. சில நாட்களாக அப்துல்கரீம் ஆட்களின் செய்கை யில் ஓர் அத்துமீறிய நிலை காணப்படுகிறது. இவைகள் உடனே கவனிக்கப்படவேண்டும். நமக்கு எதிராக வேலை செய்யும் அதிகாரிகள் அடக்கப்பட வேண்டும். நம் நண்பர் பாரதியின் துணையால் நமக்குப் புதுவை, காரைக்கால் மக்களின் ஆதரவு அதிகப்பட்டிருந்தும் நமக்கு இந்த நிலையா? பிரஞ்சு சர்க்காரின் ஆதரவுடைய கெப்ளே வெள்ளையரா யிருந்தும் நம்மையெல்லாம் ஆதரிக்கத் தவறியதில்லை. பெர்சப்தேர், ஜெயராயர் நம் நாட்டவராயிருந்தும் நம்மை இங்கிலீஷ்காரனிடம் பிடித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது வருந்தத்தக்கது. பிரஞ்சு சர்க்காரின் உத்யோகதர் ஆதரவு நமக்கு மிகுதி. இது மகிழ்ச்சிக்குரியது. நம்மவர்கட்கு ஒன்று சொல்வேன். நம்மவரில் ஒருவர், நம் எதிரிகளில் ஒருவரிடம் பேசச் சம்மதிப்பதும் அவர் நம் தகவல்களை அவர்களிடம் விற்பதும் வேறு வேறு அல்ல. இதை நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி வைக்க வேண்டும். கூட்டம் முடிந்து அனைவரும் புறப்படுகிறார்கள். அரவிந்தர் பாரதியையும், வி.வி. எஸையும் தனியாக ஒரு புறம் அழைக்கிறார். 189. சுப்புரத்தினம் வீடு, ஆறுமுகசெட்டியார் வீடு மாடசாமியைப் பிடிக்க அடிக்கடி பிரஞ்சுப் போலீசாரால் சோதனை போடப்படுகிறது. இதற்குத் தக்க முயற்சி செய்து இந்தத் தொல்லைகளை மட்டுப் படுத்தவேண்டும். அரவிந்தர் : மாடசாமியை சைகோனுக்கு அனுப்ப வழிதேட வேண்டும். எப்படி டிக்கட் எடுப்பது? யார் போய் எடுப்பது. என்ன பெயர் சொல்லி? மாடசாமி கையில் தம் பெயரைப் பச்சைகுத்திக் கொண்டிருக் கிறார். எல்லாவற்றையும் யோசித்து ஒரு முடிவு செய்யுங்கள். மாடசாமியும் இங்கு அடைபட்டுக் கிடப்பதற்கு இஷ்டப் பட வில்லை. பாரதி : ஆகட்டும். (போதல்) 190. செல்லம்மா சமையல் கட்டில் செல்லம்மா காய்கறி அரிகிறார்கள். பாடிக்கொண்டே காணி நிலம் வேண்டும். ... ... ... ... ... ... ... ... . பாட்டுக்கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டும். இதைச் சொல்லும்போது அம்மா உதடு புன்சிரிப்புக் கொள்ளுகிறது. அதே நேரத்தில் சகுந்தலா (சின்ன பாப்பா) அங்கு வந்து விடுகிறாள். சகுந் : எனக்கும் அந்த பாட்டைச்சொல்லிக் குடும்மா. செல் : இந்தப் பாட்டு வேண்டாம் மாடியிலே அப்பா இருக்கார் எனக்கு ஒரு பாட்டு சொல்லப்பாண்ணு கேளு. சொல்லுவார். கத்துக்கோ. 191. சகுந்தலா மாடியில் சகுந்தலா : அப்பா எனக்கொரு பாட்டுச் சொல்லப்பா அம்மா பாடிகிட்டு இருந்தாங்க. காணி நிலம் வேண்டு மிண்ணு - அதைச் சொல்லிக் குடுங்கள்ணேன். அது வேணாம் அப்பாவை கேளுண்ணாங்க. பாரதி : ஓடி விளையாடு பாப்பா - நீ ... ... ... ... ... ... ... ... ... ... பாரதி : நீ அதைப் பெயர்த்து எழுதிக்கொள்ள வேண்டும். பாராமே பாட நெட்டுருப் பண்ணவேணும் (சின்ன பாப்பா எழுதிக்கொண்டு கீழே ஓடுகிறது) 192. 7 மணி இரவில் மாடசாமி : வாருங்கள், இப்போதுதானா? சுப்பு : நேரே கூனிச்சம்பட்டிலிருந்து வருகிறேன். (மாடசாமி தாளை நீட்டுகிறார்) சுப்பு : மற்றவர்களிடம் இவைகளைச் சொன்னதே தப்பு. முதலில் உங்கள் சேதி, பணம். மாடசாமி : இருக்கிறது சுப்பு : நான் வர்ரேன். (போதல்) 193. பாரதி வீடு பாரதி : நேரே கூனிச்சம்பட்டிலிருந்தா? சின்ன பாப்பாவுக்குக் காய்ச்சல் என்று அன்பு டாக்டரை அழைச் சேன். அவர் வந்து நம் வீட்டுக் கிணற்றைக் கவனித்தார். கிணற்று நீரில் சூரிய வெளிச்சம் படவில்லை. இந்த வீட்டையே மாற்றிவிட்டால் நல்லது என்றார். எதிர்த்த வீடு காலியாய்த் தானே இருக்கிறது. சுப்பு : அவ்வளவுதானே? பாரதி : முன்பணம் கேட்பானே? சுப்பு : ஏன்? இல்லையா? பாரதி : ஏது? சுப்பு : நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நான் போய் வருகிறேன். (முத்தால்பேட்டையில்) சுப்பு : கிருஷ்ணசாமி, எனக்கு ஒரு கைலி தேவை. டர்க்கி தொப்பி தேவை ஒன்று. மற்றொன்று. பாரதிக்கு வீடு மாற்ற வேண்டும். எதிர்த்த வீடு காலி. அவரிடம் முன் பணம் கொடுத்து வாடகைச் சீட்டை முடித்துவிட வேண்டும். கிருஷ் : அதிகாலையில் வந்து விடுகிறேன். இதோ கைலி டர்க்கித் தொப்பி. சுப்பு : நான் வருகின்றேன். 194. காலையில் ஒரு புஷ் வண்டியில் ஒரு சாயபு - உடன் செப்பஞ் செய்யப்பெற்ற பெட்டிகள், படுக்கை, பாரதி வீட்டுத்தெருக் குறட்டில் கந்தன் நிற்கிறார். 195. புஷ் வண்டி பாரதி வீட்டின் எதிரில் நிற்கிறது. சாயபு : பாரதி இக்கிறாராம்புளே. கந்தன் : நீங்க யாரு? சாயபு : அவர் கிட்டே தனியா பேசணும். 196. இருவரும் மாடிக்குப் போகிறார்கள் பாரதி : யார் (அதிர்ச்சி. கண்ணில் பெரு விழிப்பு) சாயபு : நிமிரு எதித்த வீடு கேட்டிமா? பாரதி : நீர் யார் என்றேன்? சாயபு : சைகோனுக்கு நாம்ப சபுரு போறோம். இந்த வீட்டை ஒங்களுக்கு முடிச்சிபுட சொல்லியிருக்கேன். பாரதி : சுப்புரத்தினம் சாயபு : கண்டுபிடித்து விட்டீர்களே (தன் நாலு பட்டை நீலக்கண்ணாடியை எடுக்கிறார்) பாரதி : கொஞ்சங்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசிப் பேச்சால் சந்தேகம் ஏற்பட்டது. சுப்பு : நான் சைகோனுக்கு டிக்கட் வாங்கிக்கொண்டு என் பெட்டியுடன் எனக்காகக் காத்திருக்கும் படகில் கப்பலுக்குப் போவேன். கீரைப்பாளையத்திலிருந்து மாடசாமி படகில் கப்பலுக்கு வந்து ஏறிக்கொண்டவுடன் என்னுடையை அவருக்குக் கொடுத்து, என்னிடமிருக்கும் டிக்கட்டையும் அவரிடம் கொடுத்து விடுவேன். எதற்கும் எங்களுக்குத் துணையாகக் கப்பலண்டை கட்டு மரங்களும் நிற்கும். பத்து மணி ஆகிறது - வேலையை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். (போதல்) 197. படகில் சுப்புரத்தினம் சுப்புரத்தினம் கடற்கரை மெசாழரி மரீத்தீம் என்ற கட்டிடத் தினின்று பெட்டி படுக்கைகளுடன் கடற்கரைப் படகிலேறிக் கொள்ள, படகு கப்பலை நோக்கி விரைகின்றது. ஆனால் அந்தப் படகு மற்றொரு விசைப் படகால் துரத்திச் செல்லப்படுகிறது. சுப்புரத்தினம் படகிலிருந்து சைகை காட்ட, மாடசாமியின் கட்டுமரம் கரையைத் தாவுகிறது. சுப்புரத்தினம் கட்டுமரம் ஒன்றில் மாறிக் கப்பலைத் தாண்ட கப்பலின் பின்புறமாக நடுக்கடலை நோக்கிப் பாய்ந்து மறைகிறது கட்டுமரம். விசைப்படகிலிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள் கப்பலைத் தடவிப்பார்த்துக் கரை நோக்கி மீளுகிறார்கள். சுப்புரத்தினத்தின் இரண்டு கட்டுமரக்காரர் ஆகிய மூவரும் அன்றிரவை நடுக்கடலில் கழித்து விடியக் கீரைப்பாளையத்தை யடைகிறார்கள். 198. மாடசாமி இடமாற்றம் கல்வே காலேஜின் எதிரில் உள்ள வேணுநாய்க்கர் கொட்டடி வீட்டிலிருந்து காமாட்சியம்மன் கோவிலின் மேலண்டை வீட்டுக்கு மாடசாமி மாற்றப்படுகிறார். ஆறுமுகசெட்டியார் வீடு பிரஞ்சு போலீசு தலைவர்களால் சூழ்ந்து கொள்ளப்படுகிறது. வீடு சோதனைக்குள்ளாகிறது. தடையம் ஒன்றுமில்லை என்ற முடிவை வெளியிலிருந்து பாரதியாரும் அவருடனிருந்த மக்களும் தெரிந்து கொள்ளுகிறார்கள். அதே போல் ஜெயராயர் B.A., மயூரேசன் முதலிய கங்காணிக ளும் தெரிந்து கொள்ளுகிறார்கள். ஜெயராயர் கூனி நடக்கிறார். பாரதியார் நிமிர்ந்து நடக்கிறார். மக்களின் கையொலி வானைப் பிளக்கின்றது. 199. மற்றொரு சோதனை சுப்புரத்தினம் வீடு, போலீசு தலைவர் பிரஞ்சு சார்ஜெண்டுகள் ஆகிய நூறு பேர்களால் சூழ்ந்துகொள்ளப்படுகிறது. வேணு நாய்க்கர் கோவிந்தராசு பத்தர் நுழைந்து சாட்சியாக போலிசு உள்ளே நுழைந்து தேடுகிறது. ஒருவர் கிணற்றில் குதித்துத் தேடுகிறார். உடனே அவர் மாடியில் ஓடித் தேடிப் பார்த்து விடுவிடு என்று இறங்குகையில் வேணு நாய்க்கர் கால்பட்டு திடீரென்று குப்புற விழுந்து மண்டையுடைகிறார். அவர் போலீசு தலைவரிடம் சொல்லுகிறார். நான் இறங்கும்போது என் காலை வேணுநாய்க்கர் தட்டிவிட்டார். வேணுநாய்க்கர் சொல்லுகிறார்: ஏண்டா, நீ ஓடிவருகிற வேகத்தில என் காலை மிதித்து விட்டதுமல்லாமல் என் மேல் பிராது வேறே கொடுக்கிறாயோ? இதே நேரம் தெருவில் குடைபிடித்துக் கொண்டு நின்றிருந்த ஜெயராயர் B.A., போலீசு துணைத்தலைவர் கச்சிராயருக்கு ஒரு சேதி அனுப்புகிறார். ஆள்வந்து காதில் சொன்னது: கூட்டத்தில் உள்ள பெரிய அலமாரியில் மாடசாமி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். சோதிக்கவும். கச்சிராயர் தலைவரை நோக்கி இந்தக் கோரிக்கையைச் சொல்லுகிறார். தலைவர் சுப்புரத்தினத்தைக் கேட்டுக் கொள்கிறார். அலமாரியைத் திறவுங்கள் (திறந்து காட்டப்பட்டது) தலைவர் கூறுகிறார்: சுப்புரத்தினம் அவர்களே, உங்கள்மேல் இந்தப் பொய்ப் புகார்களை ஏற்பாடு செய்பவர் யார்? சுப்பு : பெரியகடைப் போலீசு சௌந்திரம் ஒன்று. தெருவில் நின்றிருக்கும் ஜெயராயர் B.A., மற்றொருவர். மறுநாளே சௌந்திரம் மாற்றப்பட்டார். ஜெயராயர் B.A., ஆசிரியர் எச்சரிக்கப்பட்டார். 200. பொதுமக்கள் ஆத்திரம். துய்ப்ளேக் தெருமுனையில் அமைந்த அப்பாத்துரைப்பிள்ளை ஷாப்பின் குறட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் காணப்படுகிறார். அவர் கண்டமங்கலம் ரயில்வே போலீசு சி.ஐ.டி. அவர்தான் சுப்பிரமணியனை டேஷனில் அடித்தவர். அவர் கடைத்தெருவிலுள்ள வியாபாரிகள் நூறு பேரால் சூழ்ந்து கொள்ளப்படுகிறார். அப்போது சரியாய் நடுப்பகல் 12 மணி. சித்திரை மாசம். அவரை அடித்துத் தள்ளி அவர் இரண்டு கால்களையும் கயிற்றால் பரபர என்று தெருவுக்கு இழுத்துக்கொண்டு போய், பெரியக் கடைப் போலீசீல் - இவன்தான் பாலசுப்பிரமணியனை அடித்தவன் என்றும் பிராது கொடுக்கிறார்கள். இது தெரிந்து சி.ஐ.டி. சூப்பரின்டெண்ட் அப்துல்கரீமும் போலீசுக்கு வந்து அடித்தவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கோருகிறார். முடிவாக போலீசுதலைவர் அடிபட்டவரை நோக்கி: நீ எங்கிருப்பது? அடிப்பட்டவர் : நான் கண்டமங்கலம் சி.ஐ.டி. போலீசு அதிகாரி : உடனே புதுவை எல்லையை விட்டுப் போய்விடு. அப்துல் கரீம் அழுதுகொண்டே மாலுக்குப் போகிறார். அடிப்பட்டவர் புஷ் வண்டியில் தவழ்ந்துகொண்டு போய் ஏறுகிறார் (மக்கள் சிரிப்பு) 201. ஷேடோ தலைக்கனம் வி.வி.எ வீட்டைவிட்டு வெளிச் செல்லுகிறார். அவரை நெருங்கி இரண்டு கஜ துரத்தில் குப்புசாமி என்ற ஷேடோ (சி.ஐ.டி) செல்கிறார். மேலும் அவன் வாயில் என்றுமில்லாத முறையில் சிகரேட் காட்சியளிக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் வி.வி.எ. செல்லுகிறார். பொது மக்கள் வயிற்றெரிச்சல் அடைகிறார்கள். ரெங்கநாதன் புகையிலைக் கடையில் நிறைய உட்கார்ந் திருக்கும் சி.ஐ.டிக்களின் முகங்கள் சிரிக்கின்றன. ரங்கநாதன் பாரதி முதலியவர்களைப் பற்றி உரக்கப் பேசித் திட்டுகிறான். 202. முத்தைய முதலியார் புதுவை செக்றேடேரியேட் தலைவர் முத்தைய முதலியார் வீட்டினின்று ஜீயர் நாயுடு பரபரப்புடன் வெளிவந்து தம் ரிக்ஷாவில் ஏறுகிறார். சி.ஐ.டி. இருவர் அவரைப் பின்பற்றுகிறார்கள். 203. ஜீயர் நாயுடு ஜீயர் நாயுடு பாரதி வீட்டுக்கு வருகிறார். அவர் பாரதியுடன் அரவிந்தர் வீட்டைநோக்கி விரைகிறார். 204. அரவிந்தர் வீடு அரவிந்தர் வீட்டினின்று பல வங்காள இளைஞர்களும் மற்ற இளைஞர்களும் சைக்கிளில் பறக்கிறார்கள். 205. வி.வி.எ கூட்டம் வி.வி.எ வீட்டில் குழுமியிருந்த இளைஞர்களோடு வி.வி.எ ஐயரும் அரவிந்தர் வீடு நோக்கி விரைகிறார். 206. முருகேசப் பிள்ளை முருகேசப் பிள்ளையும் கோவிந்தசாமி வேணுநாய்க்கர் முதலியர் களுடன் அரவிந்தர் வீட்டுக்கு விரைந்து செல்லுகிறார். 207. புதுவை மக்கள் கூட்டம் சிறிது நேரத்தில் அரவிந்தர் வீட்டை மொய்த்துக்கொள்ளுகிறது. ஜயராம்பிள்ளையும் அவர் நண்பர்களும் கூட்டத்தின் நடுவினின்று சூளுரைக்கின்றார்கள். இந்தப் பிரஞ்சு சர்க்கார் சுதேசிகளை இங்கிலீஷ்காரனிடம் பிடித்துக் கொடுத்துவிட்டால், இந்த பிரஞ்சு சர்க்காரை நாங்கள் வங்காளக் குடாக் கடலில் பிடித்துத் தூக்கிப்போடுவோம். சூழ்ந்திருப்பவர்கள் நிலைமை தெரிந்து கொதிக்கிறார்கள். பாரதி வாழ்க! அரவிந்தர் வாழ்க! சுதேசிகள் எல்லாரும் வாழ்க! முழக்கம் வானைப்பிளக்கிறது. பாரதி அரவிந்தர் வீட்டு மாடியிலிருந்து ஓடி வந்து அமைதியை நிலை நாட்டுகிறார். மக்களைக் கலைந்து போகும்படி கேட்டுக் கொள்ளுகிறார். அரவிந்தர் மாடியிலிருநது அரவிந்தர் ஒரு கோழை என்று உரத்த குரலுடன் வெளிவருகிறார் குவளை. தோளை வலியுடைய தாக்கி - உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி வாளைக் கொண்டு பிளந்தாலும் என்ற அடியை உரக்கப் பாடிக்கொண்டு தெருவெல்லாம் சுற்றி - வெள்ளையர் தெருவிலும் சுற்றித் திரிகிறார். 208. பாரதி பாரதி, அரவிந்தர் மாடியை விட்டுக் கீழ் வீட்டில் வருகிறார். பாரதி எழுதுகிறார் - இன்னும் எழுதுகிறார். ஐந்து படிகள் எழுதி முடித்து - அவைகளை ஐந்து கவரில் போடுகிறார். முகவரி எழுதுகிறார். திருமதி ஜீயர் நாயுடு, திருமதி சின்னைய ஞானப்பிரகாச முதலியார், திருமதி கெப்ளே, திருமதி அவோக்கா ராசு உடையார். (பாரதி வெளியில் செல்லுகிறார்) 209. திருமதி வி.வி.எ திருமதி பாரதி, திருமதி ஸ்ரீநிவாசாச்சாரி ஆகிய மூவரும் முதலில் சின்னைய ஞானப்ரகாச முதலியார் வீட்டில் நுழைகிறார்கள். திருமதி சின்னையாவிடம் தாம் கையொப்பமிட்ட விண்ணப் பத்தைக் கொடுக்கிறார்கள். அம்மையார் கவனிக்கிறார். பிள்ளைகுட்டிகள் சூழ்ந்து கொள்ளு கிறார்கள். உரக்கப் படிக்கிறார். திருமதி சின்னைய ஞானப்பிரகாசம் அவர்களே, நீங்கள் பூசும், மஞ்சளும், அணியும், குங்குமமும் வாழ்க. உங்கள் தாலியும் பூவும் எந்நாளும் வாழ்க. அம்மையாரே, பாரதி, வ.வே.சு. ஐயர், சீனிவாசாச்சாரி, அரவிந்த கோஷ் ஆகியோர் இந்தியா அடிமை நிலை நீங்கிச் சுதந்தரத்தோடு வாழ வேண்டும் என்று போராடும் தேச பக்தர்கள், அதாவது இங்கிலீஷ் காரருக்குப் பகைவர்கள் அவர்கள், இவர்களைச் சிறையிட்டுத் துன்புறுத்த நினைத்தது வியப்பில்லை. அதனால் இந்த தேசபக்தர்கள் பிரஞ்சிந்தியாவைத் தஞ்ச மென்று அடைந்தார்கள். தஞ்சமென்று அடைந்தாரைத் தாய் என அணைத்து ஆதரிக்கும் பிரஞ்சிந்திய சர்க்கார் இந்தத் தேச பக்தர்களையெல்லாம் இங்கிலீஷ் காரனிடமே பிடித்துக் கொடுத்து விடுவது என்று தீர்மானிக்கப் போகிறதாம் நாளைக்கே. தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றால் உங்கள் கணவரிடம் அடங்கி இருக்கிறதாம். ஐயா மனம் வைத்தால் தேச பக்தர்களைக் காக்க முடியுமாம். பாரதியின் மனைவி, வி.வி.எ. மனைவி ஸ்ரீநிவாசாச்சாரி மனைவி உங்களிடம் கோருவது. எங்கள் மஞ்சள், எங்கள் குங்குமம், எங்கள் தாலி, நீங்கள் வாழ வையுங்கள் என்பதுதான். திருமதி. ஞானப்பிரகாசம்: நாளை நடக்க இருக்கும் கோன்சேய் பிரிவேயில் தேசபக்தர் களை இங்கிலீஷ்காரனிடம் ஒப்படைக்கும் கொடிய யோசனையை இந்தச் சர்க்கார் கைவிடும்படி என் கணவர் செய்யவில்லையானால் நான் அவருக்கு மனைவியல்ல. அவர் எனக்குக் கணவரல்ல. கண்களில் ஓர் ஒளி, முகத்தில் நிமிர்வு, அம்மையார் மூன்று சகோதரிகளையும் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகிறார். தெருவரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி அழகிய டாக்கார்ட் வண்டியில் ஏற்றி மற்றவர்களையும் பார்த்துவிட்டு சஞ்சலமின்றி வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஐயாமார்களுக்கெல்லாம் என் வணக்கம். வண்டி கெப்ளே வீடு, ஜீயர் வீடு, அவோக்கா, ராசுஉடையார் வீடு போய்ப் போய்த் திரும்புகிறது. 210. அடுத்த ஒரு மணி நேரத்துக்கெல்லாம் பாரதி வீட்டில் சின்னைய ஞானப்ரகாசம் முதலிய உறுப்பினர் பாரதியிடம் நேரில் வீட்டுக்கு வந்து பிடித்துக் கொடுக்கும் பிரச்சனை கைவிடப் பட்டது என்கிறார்கள். பாரதி மாடியில் ஏறிநின்று தெருவில் காத்திருக்கும் பெரு மக்களை நோக்கி விவரம் கூறிக் கும்பிட்டு நிற்கிறார். மக்கள் : வாழ்க பாரதி! வாழ்க தேச பக்தர்கள்! குவளை மாடியில் இருக்கும் பாரதியை வாமி என்கிறார் பாரதி : ஏன்? குவளை : இப்பதான் கோஷ் சிரித்தார். வி.வி.எ. முழுக்கண்ணும் திறந்து பார்த்தார். இந்த நல்ல முடிவு இல்லாமே போச்சு செத்தார்கள்! 211. மாலை 7 மணி ரங்கநாதன் புகையிலைக் கடை எதிரில் நின்று சிவா : நாடு விடுதலையடைய வேண்டும் என்று பாடுபட்டதால் இங்கிலீஷ்காரன் வாரண்டு எடுத்தான். நாம்தாம் துணை என்று சுதேசிகள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் காட்டிக் கொடுக்கிறவன் சி.ஐ.டி.களிடம் காசு வாங்கிக் கொண்டு உளவு சொல்லுகிறவன் எப்படிப்பட்டவன் இதுக்கு ஒரு கடை சி.ஐ.டி. பசங்க தங்குதற்கென்றே விசிப்பலகை. ரங்கநாதன்: ஆமாண்டா அசைக்க முடியாதுடா. சுதேசிகளால்தான் என்னடா முடியும்? இங்கிலீஷ்காரனை என்னடா செய்ய முடியும். இந்தக் கொத்தவரங்கா பசங்களாலே. சிவா : ரங்கநாதா - புகையிலைக் கடை ஏலம் வருகிறது. உன் கடையை ஏலம் எடுக்க முடியாது. சி.ஐ.டியைக் குந்த வைத்துக் காசு வாங்கவும் முடியாது. பாரதி யிடம் போய் மன்னிப்புக் கேள். அவர்களுக்கு எதிராக இனி நடக்காதே. என் நண்பன் நீ உன் மேல் எனக்குள்ள இரக்கத்தால் இது சொன்னேன். ரங்கநாதன்: செய்டா. உன்னால் ஆனதைப் பார். என்னால் ஆனதைப் பார்க்கிறேன். சிவா : அப்ப திருந்துவதாக உத்தேசமில்லை ரங்கநாதன்: நீதாண்டா திருந்தணும் சிவா : அப்படிண்ணா வரண்டா (போதல்) 212. தொமேன் - ஆபீசில் புகையிலைக் கடை ஏலம் போடும் பெருங்கூடத்தில் மக்கள் நிறைந் திருக்கிறார்கள். பெருங்கலகம் நடக்கக் கூடும் என்று போலீசு கூட்டத்தின் நடுவில், சுற்றுப்புறத்தில் போடப் பட்டிருக்கிறது. தொமேன் அதிகாரி வெள்ளைக்காரர். கூட்டத்தில் சொல்லு கிறார். பிரஞ்சிந்தியன் எவனும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் உரிமை யுடையவன். ஒருவன் உரிமையை எதிர்க்க நினைப்பவன் எவனாயிருந் தாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியவன் நான். ஈவரன் கோயில் புகையிலைக் கடை ஏலம் நடக்கப் போகிறது. அதில் தக்க போட்டி இருப்பதாகத் தெரிகிறது. இங்குக் கூடியுள்ள எல்லாரும் அமைதியைக் காக்க என்னுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன். கூடியுள்ளவர்கள் தரையில் உட்கார வைக்கப்படுகின்றனர். ஒருபுறம், சிவா சுப்புரத்தினம் முத்தால்பேட்டை கிருஷ்ணசாமி முருகேசப்பிள்ளை சின்னமகன் கனகராஜா. மற்றொரு பக்கம்: ரங்கநாதன், வதாத் சாலை சுப்பிரமணியன், சாராயக்கடை சுப்புராய நாயக்கர், வதாத் சோலைத் தாண்டவன் குப்பம் முருகன், குத்துக்கார தெய்வசிகாமணி கிராமணி, குத்துச் சண்டை மாணிக்கம். 213. மத்தியத முயற்சி சாராயக் கடை சுப்புராய நாய்க்கர், என்ன வாத்தியாரே இதிலேல்லாம் நீங்க தலையிடலாமா? சாலையான் உங்க மேலே கோவமா இருக்கான். சுப்புரத்தினம்: நாய்க்கரே, சர்க்கோ சர்க்கோ சங்கதியல்ல இது. இந்தியா வின் முப்பதுகோடி மக்களின் நன்மையைப் பற்றியது. பேசாமல் நீங்கள் வீட்டுக்குப் போகலாம். மேலே நடக்க இருப்பதை வேடிக்கை பார்க்கலாம். (போகிறார்) தெய்வசிகாமணி கிராமணி : சுப்பு, ரங்கநாதன் அந்தப் புகையிலைக் கடையால் பொழைக்கிறான். அவன் பொழைப்பை நீ ஏன் கெடுக்கிறாய். உனக்கு ஏன் இத்தனை பேர்களின் விரோதம். சுப்பு : அண்ணாத்தை, ஏலம் எடுத்து விடுகிறேன். அதன் பிறகு காரணம் சொல்லுகிறேன். இப்போது காரணம் சொன்னால் அவ்வளவு இலேசில் உங்களால் புரிந்துகொள்ளமுடியாது. இல்லை, என்னையும் சிவாவையும் உங்கள் சமாவால் ஏதாவது செய்ய முடிந்தால் செய்து பாருங்கள். (மணி அடித்தாய் விட்டது. ஏலம் கூறப்படுகிறது) ஏலக்காரர் : 450 ரங்க : 451 சிவா : 452 ... ... ரங்கநாதன் : 1500 சிவா : 1501 (ஏலம் சிவப்பிரகாச நாய்க்கருக்கு விட்டாயிற்று) சாலையார் சுப்ப :எவன் அவனுக்கு ஜாமீன்போட வருகிறான் பார்க்கிறேன். சுப்புரத்தினம் : கிருஷ்ணன் கிருஷ்ணன் : இதோ வந்துவிட்டேன். (கிருஷ்ணன் ஜாமீன் போடுகிறார் கையொலி. ஏலம் அனைத்தும் முடிவுபெறுகிறது. கும்பல் கலைகிறது) 214. சாலையார், தெருவில் வந்து ஒற்றைப் படியில் சிவாவை நோக்கியபடி நிற்கிறார். சிவாவும் சுப்புரத்தினமும் வெளிவருகிறார்கள். சாலையார்: எங்கடா இருந்து 1501 ரூபாய் கட்டப் போறே சிவா. சுப்பு : சுப்பிரமணியா, சிவா பிறவிச் செல்வர். உன்போல் சர்க்கோ சர்க்கோ அல்ல. (அதே நேரத்தில் சுப்புரத்தினத்தை நோக்கி ஜெயராம் பிள்ளை, இராமகிருஷ்ணன், இராமகிருஷ்ண பிள்ளை... பிள்ளை நால்வரும் வருகிறார்கள். சாலையார் பார்க்கிறார். நழுவுகின்றார் சாலையார்) சுப்பு : சரி, இப்போது சொல்லியவைகளை நன்றாக வரப் பண்ணுங்கள். அவர்கள் படிக்கிறார்கள். தமிழ் நன்றாக வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுகிறார்கள். மாடியிலிருந்து பாரதி, வாத்தியார் சுப்பிரமணிய ஐயர், சங்கர செட்டியார், சிவக் கொழுந்து நாயக்கர், ராமசாமி ஐயங்கார், ராமசாமி ஐயர் ஒருங்கு கூடி வங்காளிகளைப் பாடிக்காட்டச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் அரவிந்தரும் அங்கே வந்து விடுகின்றார். நளனி முதலியவர்கள் பாடுகிறார்கள். வலிமையத்ர தோலினாய் வா வா வா மார்பிலே ஒடுங்குவாய் போ போ போ அரவிந்தர் : எப்படி! சரிதானா? பாரதி : அற்ற. அத்ர இல்லை வங்காளி : அத்ர.... (அனைவரும் சிரிப்பு) அரவிந்தர் முகம் சிறிதாகிறது. வங்காளி : ஏத்ரமிந்த்ரி வாழுவாய் போ போ போ 214. ஹ. அரவிந்தர் வீட்டில் பாரதியும் சுப்புரத்தினமும் அரவிந்தர் வீட்டுக்குப் போகிறார்கள். வங்காளிகள், அரவிந்தர் உடனிருப்பவர் நளனி, ரோய் சக்கர வர்த்தி முதலியவர்கள் எதிர்கொண்டழைத்துக் கூறுகிறார்கள். வங்காளி : பாரதி உங்கள் தமிழ்ப்பாட்டைப் பாட எங்களுக்கு ஆசை யாயிருக்கிறது அதை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பாரதி : சுப்புரத்தினம் இவர்கட்கு நம் பாட்டைப் பாடக் கற்றுக் கொடு. பாரதி அரவிந்தருடன் மாடிக்குப் போய் விடுகிறார். கீழே சுப்புரத்தினம் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறார். (போகின்ற பாரதம்) சுப்பு : வலிமை அற்ற தோளினாய் போ போ போ வங்காளி : வலிமை அத்ற தோலினாய் போ போ போ சுப்பு : அத்ர இல்லை, அற்ற வங் : ஓகோ சுப்பு : வலிமையற்ற தோளினாய் போ போ போ வங் : வலிமை அத்ர தோலினாய் போ போ போ சுப்பு : சரி எப்படியாவாது உளறுங்கள்... மார்பிலே ஒடுங்குவாய் போ போ போ இன்று பாரதத்திடை நாய் போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ வங் : இந்தரு பாரதத்திடை நாய் போலே ஏத்ர மிந்த்ரி வாழுவாய் போ போ போ பாரதி : தமிழ் மொழியிலுள்ள ஒலிகள் பெங்காலியிலும் இல்லை. வேறு எந்த மொழியிலும் இல்லை. ழற்ற - ன்ற - முதலிய ஒலிகள் தமிழுக்கே சிறப்பானவை; நீங்கள் தமிழ்ப் பாட்டைக் கற்றுக்கொள்ள முடியாது. வங்காளி : ஷஜஹ முலிய ஒலிகள் தமிழில் இல்லை என்கிறார்களே. பாரதி : தமிழன் வெகு இலேசாக்கி சரியாக அந்த எழுத்துக் களை உச்சரிக்கிறான். ஆதலால் நீங்கள் சொல்லுவது தப்பு. மொழியில் உயர்ந்தது தொன்மை வாய்ந்தது தமிழ். வங்காளி புதிது. ஆனால் இடைக்காலத்தில் வங்காளி இலக்கியம் அதிகப்பட்டிருப்பதில் ஐயமில்லை. அரவிந்தர் :தமிழ் மொழி பற்றி நான் அறிந்துகொள்ள ஆசைப்ப டுகிறேன். (போகிறார்கள்) 215. புதுவைக் குருசு குப்பத்தில் நந்தகோபால் செட்டியார் தம் ஊரில் சாமிநாத ஆச்சாரியைக் கொண்டு அரிச்சந்திர விலாசம் திறந்த ளி அரங்கில் நடத்துகிறார். பெருமக்கள் நாடகம் பார்க்க வருகிறார்கள். அரங்கநாதனும் சுப்புரத்தினமும் நடுஇரவில் நாடகம் பார்க்கப் போகிறார்கள் வெகு தொலைவிலே நின்று நாடகம் பார்க்கிறார்கள். ஆயினும் மயூரேசன் பார்த்து விடுகின்றான். இருவரையும் நெருங்குகிறான். மயூரேசன்: என்ன வாத்தியாரே சுதேசிகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள். சுப்பு : அவர்கள் கிடக்கிறார்கள், நீ எப்படி இருக்கிறாய் மயூரேசன் மயூரேசன் : வால்காட் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். சுப்பு : சம்பளம்? மயூ : எண்ணுறு. என்ன அரங்கநாதன் சவுக்கியமா? என்ன நெட்டப்பாக்கந்தானா? அர : ஆமாம், மெஷேர் வால்காட் கம்பெனியிலாவது உன் வாலை அடக்கிக்கொண்டு இரு மொஷேர். மயூ : இதே பார் அரங்கநாதன்! இது என்னிடம் இருக்கும் வரைக்கும் என்னை எவனாலும் அசைக்க முடியாது. (ரிவால்வரைக் காட்டுகிறான் உடனே அதைப் பையில் போட்டுக்கொள்ளு கிறான்) என்ன வாத்தியாரே சுதேசிகள் விஷயம் இப்ப உங்களுக்குப் பிடிக்கிறதில்லையோ? சுப்பு : அது மட்டுமல்ல. அறுத்துக்கொண்டேன்! மயூரே : அடபாவி, நானும் நீங்களும் குடும்ப உறவினர் போல இருவரும் பள்ளி நண்பர்கள். எனக்கு நீங்கள் ஒத்திருந்தால் உங்களுக்கு பல லட்சம் கிடைத்திருக்கும். இப்போதும் கெட்டுப் போகவில்லை. என்னுடனிருக்க வேண்டும். சுதேசிகளைத் திரும்பியும் பார்க்கக்கூடாது. உம் என்று சொல்லுங்கள் லட்சக்கணக்காக வாங்கித் தருகிறேன். சுப்பு : உம் என்றுதான் சொல்லுகிறேன். எனக்கு லட்சம் வாண்டாம். காலையில் 50 ரூபாய் எனக்குக் கிடைத்தால் போதும் பலசரக்குக் கடைக்காரன் பாக்கிக்காகக் கொந்தி எடுக்கிறான் என்னை. (மயூரேசன் மணி பார்க்கிறான்) மயூரேசன் : நிச்சயமாக நம்புங்க வாத்தியார். போகலாமா? சுப்பு : போகலாம். 216. மயூரேசன் வீடு இரவு மணி இரண்டரை - மயூரேசன் வீட்டில் மூவரும் தெருப்பக்கத்துக் கூண்டறையில் படுத்துக்கொள்ளுகிறார்கள். 217. மாடசாமியும் சுப்புரத்தினமும் சுப்புரத்தினம் மாடசாமி எதிரில் அதே இரவு 4 மணிக்கு 5 புத்தகத்தை அடுக்காக வைக்கிறார். அதன் மேல் இது மயூரேசன் ரிவால்வார் என்று மப்ளரில் சுருட்டி யிருந்தபடி வைக்கிறார். மாடசாமி : (எழுந்து கூத்தாடுகிறார்) இவைகள் அரவிந்தரிடமிருந்து களவு போன புத்தகங்கள். எப்படி? எங்கிருந்து? (அவர் ரிவால்வாரைத் திறக்கிறார். அது ரிவால்வாரில்லை. ஷேவிங்கு சோப்புக்குழாய்.) (மாடசாமியும் சுப்புரத்தினமும் பாரதியிடம் போகிறார்கள். பாரதியும் மற்றவரும் அரவிந்தரிடம் போகிறார்கள்) அரவிந் : இது திருட்டல்ல. நீங்க இந்த நாட்டுக்குச் செய்த தொண்டு. நீங்கள் வாழ்க. 218. மாடசாமியைப் பிடிக்க காமாட்சியம்மன் கோயிலின் மேலண்டை மாடியில் கந்தன் சுப்புரத்தினம், மாடசாமி பேசியிருக்கிறார்கள். கந்தன் அக்பர்ஷா சிகரேட் வாங்க வெளியிற் சென்றவன் மற்றவர்களிடம் சொல்லாமல் போனார். தெருக்கதவு திறந்தே யிருக்கிறது. பல பூட்ஸுகளின் சத்தம். சுப்புரத்தினம் உதவியால் மாடசாமி துரோபதையம்மன் கோயில் தெருப்பக்கம் குதித்துத் தப்பித்துக் கொண்டான். சுப்புரத்தினம் ஏறிவந்து கொண்டிருக்கும் போலீசுகாரர் கண்ணில்படக் கூடாது. அதனால் சுப்பு ரத்தினம் மாடியினின்று காமாட்சியம்மன் கோவில் சுற்றுச் சுவரின் உட் புறத்துத் திசையில் குதித்துப் பாரதியிடம் சேதி சொல்ல ஓடுகையில் பாரதியும் வேணுநாய்க்கரும் எதிரில் வருகிறார்கள். சுப்புரத்தினம், மாடசாமி தப்பித்துக்கொண்டதை மகிழ்ச்சியுடன் தெரி விக்கிறார். பாரதியும் வேணுவும் அதைக் கவனிக்கவில்லை. பேய் போல் விழிக்கிறார்கள். சுப்புரத்தினம் அரவிந்தரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார். சுப்புரத்தினமும், அரவிந்தரும் வேணுவும் பாரதியும் தலத்துக்கு புஷ் வண்டியில் வருகிறார்கள். சுப்புரத்தினம் குதித்த உயரத்தைக் கவனிக்கிறார்கள். அரவிந்தர் : சுப்புரத்தினம் உங்களால் இன்னொருமுறை இவ்வளவு உயரத்திலிருந்து குதிக்க முடியாது. உங்கள் தைரியம் இந்த நாட்டுக்கு மிக்க பயனளிக்கிறது. (போதல்) 219. நளவருடக் காற்று இரவு 8 மணிக்கெல்லாம் காற்று புயலாக மாறித் தன் வாலை அவிழ்த்து விட்டது. அதனோடு பெருமழை வீடுகளின் அதி வாரத்தைத் தோண்டுகிறது. அவற்றோடு விண்வீழ் கொள்ளி ஆகாயத்தில் நீந்திப் பூலோகத்தில் இறங்குகின்றது. புதுவை வட்டாரத்தை நகரங்களை சிற்றூர்களைப் பூமியோடு பெயர்த்துப் பொடியாக்கி வங்காள விரிகுடாவில் கரைக்கும் முயற்சி இதுவே, என்று மக்கள் நடுங்குகிறார்கள். சில வீடுகளின் மேற்கூரைகளும் சிற்றூரில் ஆல் முதலிய பெரு மரங்களும் வானிற் சுழன்று வட்டமிடுகின்றன. தந்திக் கம்பிகள் தரையில் சிலந்திக்கூடு. வட்டார மக்கள் நடுங்கும் நடுக்கத்திலும். ஓருள்ளம் மட்டும் அமைதியான வேகத்தில் காற்று என்பது பற்றிய பாட்டை ராகத்தோடு உரக்கப் படிக்கிறது. பாரதியின் இடதுகை, எரியும் மெழுகுவர்த்தி அணையாமல் காத்துக் கொள்ளுகின்றது. பாரதி அமைதியுள்ளம் செல்லம்மாவையும் பெண் குழந்தை களையும் அச்சந்தவிர் என்கிறது. 220. பொழுது விடிந்தது அலங்கோலமாகக் காட்சியளிக்கும் நகரின் தெருவெல்லாம் பாரதி, நகரின் அருகில் அமைந்த சிற்றூரிலெல்லாம் பாரதி. பாரதி, தாம் கண்ட காட்சிகளைப் பற்றி மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றிச் சுதேசமித்திரனில் எழுதித் தள்ளுகிறார். பாரதி கவிஞர் மட்டுமல்லர். தேசபக்தர் மட்டுமல்லர். அவர் தன்னலங்கருதாத மக்களின் தொண்டர் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். 221. மூன்று நாளைக்குப் பின் சுப்புரத்தினம் தம் வீட்டில் கட்டிலில் காய்ச்சலோடு படுத்துக் கிடக்கிறார். அவர் உடம்பில் தைத்திருந்த பெரும் பெரும் முட்களை டாக்டர் எடுத்து புண் தோறும் மருந்து வைத்துக் கட்டியிருக்கிறார். பாரதி ஆலங்குப்பம் வைத்தியலிங்க நாய்க்கர் இருவரும் வந்து நிலைமை விசாரித்து அருகில் உட்கார்ந்திருக்கிறார். அவர்களோடு சுப்புரத்தினம் தாயார், தமையனார் முதலிய உறவினரும் சூழ்ந்திருக்கிறார்கள். தெருவார் எல்லாரும் வந்து விடுகிறார்கள். வேணு நாய்க்கர் வந்து பாரதியை வணங்கி காற்றடித்தபின் நீங்கள் ஊர் மக்களின் நன்மையில் அக்கரை எடுத்துக் கொண்டீர்கள். உங்கள் பரோபகாரத்தை மக்கள் எல்லாரும் பாராட்டுகிறார்கள் பாரதி : வேணு நான் காற்றுச் செய்த தொல்லையில் மக்களின் நிலையை எண்ணி நேரில் அங்கங்குச் சென்று நிலைமையை மித்திரனுக்கு எழுதினேன். இது பரோபகாரந்தான். நீ பரோபகாரம் என்பதன் முழு உருவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதைக்கேள்:- காற்று மழை விண் வீழ்கொள்ளி இவை ஆலங் குப்பத்தில் - நாய்க்கர் வீடு தவிர மற்றவர் வீடுகளையெல்லாம் தரைமட்டமாக்கி விட்டன. ஆடு மாடுகளின் ஒரே ஒரு வெள்ளாட்டுக் குட்டி தவிர மற்றவையெல்லாம் இடிபாடுகளில் புதைந்து மடிந்தன. ஆலமரம், அரசமரம், தென்னை, பனை முதலிய பெருமரங்கள் எல்லாம் கட்டவிழ்த்து உதறிய துடைப்பங் குச்சிகள். தம் வீட்டில் எவரும் இல்லை. அனைவரும் வெகுதூரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்தனர். சுப்புரத்தின வாத்தியார், இதோ வைத்தியலிங்க நாய்க்கர் மற்றும் ஆலங்குப்பத்து எத்தாசிவில் கொம்மி ஷண்முகம் மூவரின் நிலை என்ன தெரியுமா? ஊருக்கப்பால் வயற்புறத்தில் மண்டிக் கிடந்த வெள்ளத்தில் வீசி யெறிந்தது சுழன்றடிக்கும் புயல். தலையைக் கிளப்பினால் மூச்சுத் தாங்கவில்லை. இருக்குமிடத் திலேயே காலந்தள்ள எண்ணினால் வெள்ளத்தில் மூழ்கிச் சாகவேண்டும். இந்த நிலையில் சுப்புரத்தினம் மற்ற இருவரையும் சிறிது தூரத்தில் இருந்த மேட்டுப்பாங்கைத் தேடி அங்கே கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார். மேட்டிலும் காற்றின் எதிர்ப்பு இருவரையும் கொன்றுவிடும் நிலையைச் சுப்புரத்தினம் உணர்ந்தார். தாம் இருப்பது எந்த இடம் என்ற நினைவும் தோன்றவில்லை. இந்த நிலையில் ஒரு மணி நேரம் - வேலி முள்ளிலும் - உறை யில்லாத கிணற்றிலும் தூக்கி எறியும் காற்றையும் சமாளித்து ஒரு கோயிலைக் கண்டு, உடனே திரும்பி வந்து இருவரையும் ஒவ்வொரு வராகத் தூக்கிக் கொண்டு போய்க் கோயிலிற் சேர்த்தார் சுப்புரத்தினம். கோயிலைத் தேடினார் - கண்டார் - அதன்பிறகு இரு சீவன் களுக்காகத் திரும்பி வந்தார். அந்த இடந்தான் பரோபகாரம் என்பது தன் முழு உருவத்தையும் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து சுப்புரத்தினம் தமையனாராகிய சுப்பராயன் பேசுகிறார். ஆலங்குப்பத்திலிருந்து வந்தான் - அம்மா என்றான் அண்ணா என்றான். மூன்றாவது - பாரதி சவுக்கியமா என்றான். சவுக்கியம் அவருக்கு ஒன்றுமில்லை என்றோம். படுத்தான் கட்டிலில் - காய்ச்சல் துவக்கிற்று. உடலைத் தூக்கித் தூக்கிப்போடுகிறது. எவ்வளவோ மருத்துவம் நடக்கிறது. இன்னும் உணர்வு தோன்றவில்லை. (அனைவரும் அழுதார்கள்) 223. அன்று மாலை சுப்புரத்தினத்தை அரவிந்தர் வீட்டிற்குப் பாரதி கொண்டு போனார். அரவிந்தர் : உங்கள் பரோபகாரம் நாட்டுக்கே பயன் விளைக்கக் கூடியது நீங்கள் வாழ்க! 224. பலாப்புத்தூர் ஸ்ரீநிவாச ஐயங்கார் பாரதி வீட்டு மாடியில், சுப்புரத்தினம், கோவிந்தராஜுலு நாயுடு, சாமிநாதையர், சிவா, பாரதி. பாரதி ஜன்னல் இடுக்கில் சுருட்டுப் பொட்டலத்தைத் தடவுகிறார். காலி. பாரதி : சிவமே சுருட்டு இல்லை ஐயா. சிவா : சுவாமி இதோ ஆயிற்று. (என்று புகையிலைக் கட்டை எடுத்து அதில் ஒரு புகையிலை விரித்துக் கிழித்து சுருட்டுச் சுற்றி பாரதியாரிடம் கொடுக்க அவர் வாயில் வைத்துக்கொள்ள சிவா குச்சிகிழித்து - பற்றவைக்கிறார்) பாரதி : புகையிலை இனிது. சுருட்டிய மாதிரி இனிது. காரம் இனிது. புகை நிறம் இனிது. சுவை இனிது. எங்கே இறகு? (எழுதுகிறார்) சுப்பு : ஏங்க நீங்கள் புதுவை வந்து பத்தாண்டு ஆகிறது. புகையிலையால் சுருட்டிய சுருட்டைப் பற்ற வைக்கிறீர்கள். ஆனால் இந்நாள் வரைக்கும் சுருட்டுச் சுருட்ட நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை. பாரதி : சுப்புரத்தினம், இவ்வளவு காலம் ஆகியும் நானே புகை யிலையைச் சுருட்டாக்கக் கற்றுக்கொள்ளாமைக்கு நீங்கள்தான் காரணம். நானே சுருட்டும்படி நீங்கள் என்னைவிட்டதே இல்லை. (பாரதி எழுதுகிறார். அவர் நிமிர்கின்றார்) பலாப்புத்தூர் ஸ்ரீநிவாச ஐயங்கார் என்றதொரு தங்கநிற மேனியைக் காணுகின்றார். எழுந்தோடிக்கட்டிக் கொள்கின்றார். ஐயங்கார் தோளில், உத்தரீயத்தின் மேல் பாரதி சுருட்டு உட்கார்ந்து கொண்டு புகை கிளப்புகின்றது. இதை இருவரும் அறிந்தார் இலர். சாமிநாதையர் ஓடி உத்தரீயத்தைக் காப்பாற்றுகிறார். பாரதி : எவ்வளவு காலம் ஆயிற்றப்பா! ஐயங்கார் : பத்து ஆண்டு ஆகப் போகிறதப்பா இன்னும் கட்டிய தோள் பிரியவில்லை. (இருவரும் எதிர் எதிர் உட்கார்ந்தார்கள்) 1. இருவரும் இளமையில் ஆடிப்பாடிய சிறுகதை. 2. அவர் மனைவி மக்கள் நிலை. 3. இவர் மனைவி மக்கள் நிலை. மூன்று அத்தியாயம் முடிந்தன. ஐயங்கார் : நான் புதுவைக்கு ஏன் வந்தேன் தெரியுமா? உங்களூர்ப் பெருமாள் கோயில் தரும கர்த்தாக்கள் இராமா யணத்தைப் பன்னிரண்டு பிரிவாகப் பன்னிரண்டு நாளில் கதாகால க்ஷேபம் பண்ணி முடிக்கணுமின்னு அழைச்சா. பாரதி : அப்படியா. மகிழ்ச்சியப்பா மகிழ்ச்சியப்பா. பக்க வாத்திய மெல்லாம்? ஐயங்கார் : என்னோட வந்திருக்கா. பாலக்காட்டு மணிண்ணு ஒரு பிள்ளை மிருதங்கம் அபாரம் . நல்லபிடில் - தவிர பின்பாட்டு ரெண்டு பேர். பஹு நண்ணாயிருக்கும் பிர்க்கா அநாயாசம். பாரதி : அப்டிண்ணா புதுச்சேரியில் சங்கீத மழைதான். ஐயங்கார் : இவ்வளவு தூரத்தில் இந்த சான்ஸை நான் ஒப்புக் கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா? இடையிடையே பாட்டுக்கள் குறைகின்றன. உன்னிடம் சொல்லி எழுதிக் கொள்ளலாம் என்பது தான். (பாரதி முகம் துன்பத்தில் ஆழ்கின்றது. இன்னது பதில் சொல்வதென்று பாரதிக்கு விளங்கவில்லை.) பாரதி : பாகவதரே, அது... சுப்புரத்தினம். அவர் நன்றாகப் பாடுவார். பாகவதர் : நம்புகிறேன். நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள். பாரதி : பாகவதரே, மெட்டும் கருத்தும் சேர்ந்து புதிய பாட்டாக வெளியிடுவது என் வழக்கம். ஒரு மெட்டைச்சொல்லி - ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிட்டு - பாட்டு எழுதிக் கொடுப்பது என்பது என்னால் முடிவ தில்லை. சுப்புரத்தினம், இவர் கேட்பது புரிகிறதா? கோவிந் : புரிகிறது பாகவதர்வாள் இவர் எழுதிக் கொடுப்பார் உமக்குச் சந்தேகம் வேண்டாம். சாமிநாத : இப்போதே எழுந்திரும் வாரும் எழுதிக் காட்டச் சொல்லுகிறேன். பாரதி : சுப்புரத்தினம் தமிழ்ப் புலவர், கவிஞர். எழுந்திரு. (அனைவரும் பெருமாள் கோயிலின் எதிர்வீட்டிற்கு வருகிறார்கள்) பாகவதர், பாலக்காட்டு மணி. இருவர் பின்பாட்டுக்காரர். சுப்பு, சாமிநாதன், கோவிந்தராசலு நாயுடு வட்டமாகப் பாயில் உட்காரு கிறார்கள். பாகவதர் தத்தகாரம் எழுதுகிறார். பாகவதர் : கலைக்கோட்டு மகரிஷியை நகரில் அழைத்து வரச் சில பெண்கள் செல்லுகிறார்கள். அந்த இடத்துக்கு இந்தத் தத்தகாரப்படி ஒன்று எழுதுங்கள். சுப்பு : பாட்டு இந்த்ராதியர் கண்டு மகிழும் மடந்தை பலர் நடந்தார் இலையோ இடைஎன மயல்கொள வரும் - இந்த்ராதியர் சிந்துர வாயிதழ் சந்த்ரிகை வீசிடப் பந்த மிலாமுனி தங்கும் வனத்திடை - இந்த்ராதியர் செந்தேனில் இனிக்கும் பக்ஷணமும் சீதக்குல மலரும் சிதையா மதுரித மொழுகிட வரும் - செந்தேனில் சந்தன குங்குமச் சாந்து வகைகளும் மந்த மாருதம் வீசும் நந்தனமே என்று - இந்த்ராதியர் (பாட்டு எழுதிய இந்தத் தாளைப் பாகவதர் எதிரில் திருப்புகிறார் சுப்புரத்தினம்) பாகவதர் : (பாடுகிறார்) இந்த்ராதியர் கண்டு மகிழும் மடந்தை பலர் நடந்தார். பேஷ் அப்புறம்... இலையே... இதென்ன? சுப்பு : சுருள், இலையோ இடையென மயல்கொள வரும் இந்த்ராதியர். பாகவதர் சுருளைச் சொல்லிப் பார்க்கிறார். தாளம் விடுகிறது. இப்படிப் பலமுறை மிருதங்கக்காரர் சொல்லிப் பார்க்கிறார் தாளம் விடுகிறது. பிறகு பின் பாட்டுக்காரர் தாளம் போகிறது. ஆனால் சுப்புரத் தினம் சரியாகச் சொல்லிக் காட்டுகிறார். அவர்களுக்கு வரவில்லை. சுப்பு : இலையோ இடை என மயல் கொளவரும் என்ற சுருள் நாக்கில் படியவில்லை. நன்றாக வரப் பண்ணினால் இலேசாகச் சொல்லிவிடலாம். (வரப்பண்ணுகிறார்கள்) பாகவதர் : நன்றாய் வருகிறது புலவரே. (பாரதி வந்து விடுகிறார்) பாரதி : எப்படி? பாகவதர் : இரு. இரு. (எழுந்து பாட்டைத் தாளத்தோடும் நாட்டியம் ஆடியபடி சொல்லிக் காட்டுகிறார்.) பாரதி : சபாஷ், சுப்புரத்நம் எழுதியதுதானே! பாகவதர் : அம்ருதம் பாரதி. நீ சிபாரிசு பண்ணினவர் சோடையாகவா இருப்பார். (சிற்றுணவு நடக்கிறது) பாரதி : எத்தனை பாட்டு தேவை? பாகவதர் : பத்துத் தேவை. பாரதி : சர்வ சாதாரணம் அவருக்கு. 225. வெளியில் சாமிநாதய்யர் கோவிந்தராஜுலு நாயுடு, சிவா, சுப்புரத்தினம். கோவிந்த : பாடுகின்றவனிடத்திலிருந்து பாட்டு வெளியாகிறது. ராகத்தோடு, தாளத்தோடு, பாவத்தோடு, கருத்தோடு. ஆனால் அந்தக் கவிஞனிடம் ஒரு கருத்தை அதற் குண்டான இராக தாளத்தைச் சொல்லி தக்க சொற்களைச் சேர்க்கச் சொன்னால் அவனுக்கு அது சிரமம். சாமிநாத : உம்மிடம் இரண்டும் காணுகின்றோம். சொற்களை அடுக்கு வதில் உமக்கு நீண்ட நாள் பழக்கந்தான் அதற்குக் காரணம். 226. அரவிந்தர் வீடு பாரதி, அரவிந்தர் வி.விஎ. சீனிவாசாச்சாரி மற்றும் வங்காளிக ள். ராமசாமி ஐயங்கார், நாகசாமி, குவளை முதலியவர்கள். அரவிந்தர் : நண்பர்களே, அஹிம்ஸா முறையால் காந்தி தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றதைக் கண்டு நம் திலகர் சாகும்போது இந்தியாவி னின்று ஆங்கிலேயரைத் துரத்தும் பொறுப்பைக் காந்தி யிடம் ஒப்படைத்தார். இப்போது காந்தி, துவக்கியுள்ள ஒத்துழையாமை இயக்கத்தையும் அகிம்ஸா முறையில் தான் நடத்த முடியும் என்கிறார். அதற்கு அவர், ஒரு கோடித் தொண்டர், ஒரு கோடி ரூபாய், வேண்டும் என்கிறார். மற்றும் அவர் சொல்லும் அஹிம்ஸா முறையால் ஆங் கிலேயரைத் துரத்த முடியுமா? அலுவலில் உள்ளவர் எல்லாம் நீங்கிக் கொள்ள வேண்டும். கோர்ட் பகிஷ் கரிக்கப்படவேண்டும். வக்கீல் வேலைகளை விடவேண்டும். பஞ்சு நூற்று - நெய்து உடுத்த வேண்டும். சத்யாகிரக முறையில் நம்மை நாம் தண்டித்துக் கொள்வதன் மூலம் - சிறைசெல்வதன் மூலம் - மக்களின் அநுதாபத்தை வளர்க்க வேண்டும். இந்து முலீம் ஒற்றுமையைப் பெருக்கவேண்டும். இவைகள் எல்லாம் நடக்கக் கூடியனவா? எனக்குக் காந்தி ஒத்துழையாமை முறையில் நம்பிக்கையில்லை. பாரதி : இவ்வளவுக்கு நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்த முடியுமா? முடிந்தால் வெற்றிதான். வ.வே.சு. : யார் வைத்த தீயோ கொழுக்கட்டை வெந்தால் சரிதான். கோஷ் : நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை. நமக்குக் காந்தி முறையில் நம்பிக்கை இல்லை என்பதனையும் நாம் மக்களிடம் சொல்லப் போவதில்லை. வந்தே மாதரம்! அனைவரும் : வந்தே மாதரம்! 227. உருசியாவில் புரட்சி ஜார் வீழ்ச்சி மாகாளி பராசக்தி உருசிய நாட் டிற் கடைக் கண்வைத்தாள்! அங்கே ஆகாவென் றெழுந்ததுபார் யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான். இது நண்பர் பலரின்முன் பாடிக் காட்டப்பட்டது. 228. பெல்ஜியம் வீழ்ச்சி சுதேசமித்திரனில் வீழ்ச்சி பற்றிப் பார்க்கிறார். அவர் மனம் புண்படுகின்றது. அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் ... என்ற கவிதை உண்டாகிறது. 229. பத்திரிக்கைச் செய்தி மாஜிட்ரேட் முன் மகாத்மா காந்தி மற்றும் தலைவர்கள். இராணுவத்திற் சேர்ந்துள்ள இந்தியர்கள். அதிகாரிகள், வீரர்கள் அனைவரும் வேலையை விட்டு வெளிவருக என்று காந்தியும் தலைவர்களும் விடுத்த அறிக்கையின் பொருட்டு குற்றவாளிகளாக மாஜிட்ரேட்முன் கொண்டுவரப்பட்டனர். குற்றவாளிகள்: மகாத்மா காந்தி, மகமட் அலி, சவுகட்அலி, அரத் மொசானி, மதன் மோகன் மாளவியா, சங்கராச்சாரி, லாலாலஜபதிராய் முதலியவர்கள். இதைப் படித்தவுடன், தம்மைச் சூழ்ந்திருந்த நண்பர்களுக்கு மகாத்மாவின் அருஞ்செயல் பற்றிப் புகழ் சூட்டலானார். பிறகு கீழ்வரும் கவிதையை எழுதினார். மகாத்மா காந்தி பஞ்சகம் வாழ்க நீ எம்மான் இந்த... 230. பாரதியும் கிருஷ்ணனும் பாரதி : கிருஷ்ணன் சென்னையிலேயே தங்கிவிட்டாயா? கிருஷ் : அதிலும் பார்த்தசாரதி கோயில்லேன்ணேன், பாரதி : புதுச்சேரியிலே இன்னும் அடைபட்டுக்கிடக்க எனக்குப் பிடிக்கவில்லை. கிருஷ்ண : புதுச்சேரி எல்லையை விட்டுத் தாண்டலாமா நீ? பாரதி : சண்டை சமாதானம் ஆயிட்டுது. பொதுமன்னிப்பும் குற்ற வாளிகட்கெல்லாம் கொடுத்திருக்கான் இங்கிலீஷ்காரன். ஆனால் எங்கள் சேதி இன்னும் விளங்கவில்லை. நான் போய்த்தான் பார்க்கிறேனே கிருஷ்ணன் கிருஷ்ண : பாருங்களேன். என்ன எழுதுகிறீர்? பாரதி : பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் - அச்சமில்லை கிருஷ்ண : (அதைக் குறித்துக் கொள்ளுகிறான்) (பாரதியை நோக்கி) காலையிலே கிளம்புகிறீரா? பாரதி : கோஷிடம் சொல்லணும் மற்றவரிடம் சொல்லணும் கிருஷ்ண : முதலில் நான் ஒருமுறை சொல்லிவிட்டு வந்து விடுகிறேன். (தெருவில்) கிருஷ்ண : அச்சமில்லை அச்சமில்லை.... 231. எல்லையைக் கடத்தல் பாரதி, செல்லம்மா, குழந்தைகள், செல்லம்மா உறவினர் ஆடவர் இருவர் ஜட்காவில் கூடலூரை அடைகிறார்கள். அங்கே போலீசார் பாரதியைக் கைதுசெய்ய வந்தார்கள். பாரதி : என் பேரில் என்ன குற்றம்? எதற்காக வாரண்டு? அதைச் சொல்லிவிட்டு என்னைச் சிறைப்படுத்துங்கள். போலீசு : மேலதிகாரிகளின் உத்தரவு (பாரதி மட்டும் பிடித்துச் செல்லப்படுகின்றார். மற்றவர்கள் போகிறார்கள்) 232. கூடலூர்ச் சிறையில் பாரதி வேணு நாயக்கரும் சுப்புரத்தினமும் சிறையில் கம்பிக் கதவுக்கு 50 அடிதூரத்துக்கு இப்பாலிருந்து பாரதியைப் பார்க்கிறார்கள். அல்லல் முகத்துடன் பாரதி பேசுகிறார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் நிலைகள் மூன்று. இன்பநிலை, துன்பநிலை, இடைப்பட்ட நிலை. இவைகள் மனிதனை விட்டுப் பிரிவதில்லை. மனித வாழ்க்கையின் நிழல்கள் இவை. இன்பத்தில் மகிழ்கிறான் மனிதன். துன்பத்தில் துன்புறுகிறான். ஆனால் துன்புற்றுப் பழக வேண்டும் இன்பம் நிலையற்ற தாகையால் இன்னதுதான் இன்பம், இன்னதுதான் துன்பம் என்று இலக்கணம் கூறிவிடமுடியாது. ஒருவனுக்கு இன்பமானது மற்றொருவ னுக்குத் துன்பந் தருவதாகவும் இருக்கும். துன்பம் பற்றியது அப்படித்தான். ஆபுத்திரன் பிச்சைக்காரர்கள் இருக்குமிடம் தேடித் திரிந்து பிச்சை யிடுவான். இந்திரன் என்ன செய்தான். பிச்சைக்காரனே இல்லாமற் செய்துவிட்டான். ஆபுத்திரனுக்கு அது துன்பமாக முடிந்தது. அத்துன் பத்தைப் பொறுக்க முடியவில்லை. உண்ணாமலிருந்து உயிர்விட்டான். நான் ஓடி ஆடித் திரிந்து மக்களுக்கு வேண்டியது பற்றி எழுதி யின்புறுவதுண்டு. இந்தச் சிறை என் இன்பத்துக்கு இடையூ றாயிற்று என்றால் பொறுக்க முடியவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்றால் நிபந்தனை கேட்பார்கள். சுப்புரத்தினம் : எழுதிக் கொடுத்து எப்படியாவது வெளிவாருங்கள். நாட்டுக்கு உங்கள் கவிதைத் தொண்டு இன்றியமை யாதது. 233. வக்கீல் துரைசாமி ஐயர் வீடு. வக்கீல் துரைசாமி, தங்கம்மா, சகுந்தலை, செல்லம்மா மற்றும் மகளிர் பேசியிருக்கையில் பாரதி வருகின்றார். வக்கீல் : நீங்கள் செய்ததுதான் சரி. இன்னும் சில நாட்கள் நீங்கள் சிறையில் இருந்தீர்களானால் உங்கள் உயிருக்கே ஆபத்து என்பதை உங்கள் உடம்பின் இன்றைய நிலையே நிரூபிக்கிறது. (செல்லம்மா கண்ணீர்) வக்கீல் : உடல் கருத்திருக்கிறது. இளைத்திருக்கிறது. பாரதி : சிறை வாசம் எனக்குத் துன்பமானது. வக்கீல் : சாப்பிடுங்கள். 234. புதுவையில் குவளை : சுப்புரத்தினம், பாரதி ஒரு கோழை, மன்னிப்புத் தாளில் மூன்றுதரம் கையொப்பம் போட்டுக் கொடுத்தார் பாரதி. விடுதலை அடைந்தார். நேரே சென்னைக்குப் போய் அங்கிருந்து கடையத்துக்குப் போகப் போகிறார். சுப்பு : நிபந்தனை என்ன? குவளை : அரசியலில் கலந்துகொள்ளக் கூடாது. ஒரே இடத்தில் இருக்கவேண்டும். வேற்றூர் போக வேண்டுமானால் போலீசில் உத்தரவுபெற வேண்டும். சுப்பு : கிருஷ்ணன். நாமெல்லாரும் பாரதியை மீண்டும் பெற்றோம். கோழைகளை வீரராக்க வாழும் பாரதியைக் கோழை என்று சொல்லாதே. குவளை : அச்சமில்லை அச்சமில்லை (பாடிக் கொண்டே போதல்) 235. விட்டுப்போன நிகழ்ச்சித் துளி புதுச்சேரி பாலய சுவாமி மடம் ஆண்டுவிழாக் கூட்டத்தில் திரு.வி.க. பேசுகிறார். பேச்சுக்கிடையில்:சாதி என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. தமிழகத்தில் சாதிக் கொள்ளை இருந்ததேயில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற வள்ளுவர் கருத்தையும் உன்னுக. ஒரு நாள் என் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். இரவு 8 மணி ஆய் விட்டது. அதற்குமேல் தொலைவிலுள்ள என் வீட்டுக்கு வந்து சேரவும் முடியாது. நண்பர் சாப்பிடச்சொன்னார். சாப்பிட்டு முடிந்தது. அங்கு வந்திருந்த என் மற்றொரு நண்பர் என்னைத் தனியாக அழைத்து. இது தாழ்த்தப்பட்டவர் வீடு. இதில் சாப்பிட்டீரே. மறந்தீரோ என்றார். மக்கள் நிகர் என்பதை நான் எக்காலத்தும் மறந்ததில்லை என்று கூறினேன். பாரதி சப்பணித்து உட்கார்ந்திருந்தவர் முழங்காற் படியிட்டு எழுந்து கைதட்டுகிறார். அனைவரும் அப்படி. அடுத்தபடியாகப் பேச வந்தவர் வெறும் செய்யுளையே - புரியாத நிலையில் பாடி விரசப்படுத்துகிறார். பாரதி : என்ன இவன்? சுப்பு : கூவாதீர்கள், போகலாமா? பாரதி எழுந்திருக்கிறார். வ.வே.சு. சீனிவாசாச்சாரி முதலியவர் கள். எழுந்திருக்கிறார்கள். அங்கு இருந்த பெருங்கூட்டம் முழுதும் எழுந்துவிடுகிறது. சொற்பொழிவாளர் தம்பித்து நிற்கிறார். 236. கடையத்தில் பாரதி மைத்துனர் சங்கரன் பாரதியாரை நோக்கிச் சற்று வெறுப்பாகப் பேசத் தொடங்கினார். சங்கர : புதுவையிலிருந்து நீர் சம்பாதித்து வந்தது என்ன? பாரதி : கவிஞன் என்ற புகழ் சங்கர : அந்தப் புகழ் சோறு போட்டுவிடுமோ பாரதி : போடாமல் விட்டுவிடுமோ (அதே நேரத்தில் சொ. முருகப்பா வந்துவிடுகின்றார். நலம் விசாரித்தபின்) முருகப்பா : காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் சார்பில் கவிஞருக்கு ஒரு வரவேற்பளிக்க விரும்புகின்றார்கள். எங்கள் விருப்பத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரதி : சரி புறப்படுகின்றோம். சங்கரன், குடும்பத்திற்கு அவசரமாக இப்போது என்ன தேவை? முருகப்பா : இதோ. இதை வைத்துக் கொள்ளுங்கள். நூறு ரூபாய். கவிஞர் வரும்போது இன்னும் கொண்டு வருவார். (சங்கரன் பெற்றுக் கொள்ளுகிறார்) 237. காரைக்குடி பயணம் காரைக்குடி இந்து மதாபிமான சங்கக் கட்டிடத்தில் பெருங் கூட்டத்தில் பாரதிக்கு மாலை சூட்டி மரியாதை நிகழ்த்தினார்கள். பாரதி பாடுகிறார். பாட்டு மண்ணுலகின் மீதினிலே.... பாரதிக்குக் கல் இழைத்த இறகு - பொற்கிழி - பரிசில் கொடுத்து வழியனுப்புகிறார்கள். தமிழ் வாழ்க என்ற கோஷம். 238. கடையத்தில் பாரதி நண்பர் நாராயணபிள்ளைக்குப் பாரதி கல்லிழைத்த இறகைப் பரிசாகக் கொடுத்தார். நாராயணபிள்ளை நாடோறும் மாம்பழம் மாதுளம்பழம் பூ வகைகள் கொணர்ந்து மகிழ்விப்பார். 239. குர்ஆன் போதனை கடையத்துக்கு அருகிலுள்ள சிற்றூரான பொட்டல் புதூர் முலீம்களுக்கு பாரதி நாள்தோறும் குர்ஆன் உபதேச மொழிகளைச் சொல்லி மகிழ்விப்பார். 240. கடையத்தில் ஸ்ரீராம நவமிக்கு காலக்ஷேபம் செய்ய வந்திருந்த காயக சிகாமணி, முத்தைய பாகவதர் முதலியவர்கட்கு ஜய பேரிகை கொட்டடா - என்ற பாட்டைப் பாடி மகிழ்ச்சி யளித்தார். 241. பாகவதர் காலக்ஷேபம் தேவகோட்டைப் பாகவதர் காலக்ஷேபம் நடக்கிறது. இடையில் அவர் சொன்னார். வேடுவர்கள் பயிர்களை மிருகங்கள் அழித்துப் பாழ்படுத்து வதைத் தடுக்கும்படி சாமிக்குப் பூசை நடத்துகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு ஆவேசம் வந்தது. அவன் பாடுகிறான். பாக்கும் வைச்சான். பழமும் வச்சான். வெத்லே வச்சான், போய்லே வச்சான் ஒண்ணு வைக்க மறந்துட்டான் சுண்ணாம்பில்லே - சுண்ணாம்பில்லே. பாரதி விழுந்து விழுந்து சிரிக்கிறார். அருகில் இருந்தவர்கள் ஏன்? என்கிறார்கள். பாரதி : இன்றைய தமிழ் மக்களுக்குப் பொருத்தமான பாட்டு இது. மக்கள் : எப்படி? பாரதி : தமிழ் மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான் நிகரில்லாத செல்வம் வச்சான். ஒண்ணு வைக்க மறந்துட்டான். புத்தியில்லே புத்தியில்லே (அனைவரும் சிரிப்பு) 242. பஜனைகோஷ்டி ஊர் சுற்றி வருகிறது. பாரதியும் உடன் செல்லுகிறார். பாடகர் ஒருவர் தெலுங்குப் பாட்டுப் பாடுகிறார். அதன் பிறகு மற்றொருவர் சமகிருதப் பாட்டுப்பாடுகிறார். பாரதி நான் பாடுகிறேன் என்கிறார். ஆசுகவி பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா ... ... ... எல்லாரும் ஆசையுடன் கேட்கிறார்கள். முடிவில் முதலில் பாடியவர் தெலுங்கில் தொடங்குகிறார். கேட்பவர் - வேண்டாம் பாரதியைப் பாடச் சொல்லுங் கள் என்கிறார்கள். பாரதி : பின்னென்ன ஓய். தமிழர்களுக்குத் தமிழில் பாடாமல் உமக்கும் அவர்களுக்கும் பொருள் விளங்காத மொழியில் பாடினால். (பாரதி தமிழில் பாடுகிறார்.) 243. எட்டயாபுரத்தில் பாரதி பாரதி குடும்பத்துடன் ஒரு குதிரை வண்டியில் வந்து இறங்குகிறார்கள். கூட்டம் கூடிவிடுகிறது. பார்ப்பவர் பலவாறு பேசிக் கொள்ளுகிறார்கள். ஒருவர்: சென்னைக்குப் போகுமுன் எப்படி இருந்தார். என்ன அழகு. என்ன உடை. இளைத்துவிட்டார். தாடியும் மீசையும் அவரைச் சாமியாராக்கிவிட்டன. மற்றொருவர்:அதென்ன அவர் மிரள மிரள விழிக்கிறார். பைத்தியம் போல இருக்கிறாரே. இன்னொருவர் : சிறைக்குப் போனார். புதுவையில் பலகாலம் தங்கி னார். இங்கிலீஷ்காரனை எதிர்த்து வேலைசெய்தார். சும்மா விடுவானா. 244. பாரதி வீட்டில் பாரதி : செல்லம்மா, ராஜாத் தோட்டத்துக்குப் போகலாமா? செல்ல : நாம் ஊருக்குத் தகுந்தபடி அல்லவா நடந்துகொள்ள வேண்டும். கணவருடன் மனைவி உலாவுவதைக் கண்டால் நம்மைக் கேலி செய்வார்கள். பாரதி : நம்முடைய மனிதர் நம்மைத் தூஷிப்பதும் நமக்கு ஆநந்தமல்லவா? பாரதியும் செல்லம்மாவும் சேர்ந்து கைகோத்தபடி தோட்டம் நோக்கிச் செல்லுகிறார்கள். கூட்டம் கூடிவிடுகிறது. இருவரும் செல்லுவதைப் பார்த்தபடி கூட்டம் பின்தொடர்கின்றது. தோட்டத்தில் பாரதி செல்லம்மா. ஒரு தமிழ்ப் புலவர் கூட்டத்தின் நடுவே தோன்றிப் பாரதியாரை நோக்கிக் கூறினார். உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்றார் திருவள்ளுவர். பாரதி பாடுகிறார். (அருகில் செல்லம்மா கைகூப்பியபடி நிற்கிறார்) ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம்! பூணும் நல்லறத் தோடிங் குபெண் உருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்... பாடி முடிந்ததும் புலவரும் மற்றவரும் விழுந்தபடியும் நின்ற படியும் கைகூப்பி வணங்கிச் செல்லுகின்றார்கள்.... 245. சுதேசமித்ரன் ஆசிரியர் பாரதிவீட்டில் பாரதியிடம் நேரில் சுதேசமித்திரன் ஆசிரியர் வந்திருக்கும் சேதி அவ்வூர்ப் பெரிய மனிதரையும் படித்தவர்களையும் ஒரு கலக்கு கலக்கிவிடுகிறது. எட்டியாபுரத்தில் பாரதி பிறந்தது. எட்டியாபுரத்துக்கே சரித்திரப் புகழ் என்றனர் படித்தவரும் செல்வர்களும். 246. பாரதியும் ஆசிரியரும் ஆசிரியர் : கனம் பாரதி அவர்களே சுதேசமித்ரன் விழுந்துவிட்டது. பாரதி : காரணம்? ஆசிரியர் : நான் காந்தி ஒத்துழையாமையை ஆதரிக்கவில்லை. பாரதி : ஆதரிக்கவேண்டும். ஆசிரியர் : இங்கிலீஷ்காரன் எரிச்சலுக்கு ஆளாகவேண்டும். பாரதி : அதைப் பார்த்தால் - சுதேசமித்ரன் வீழ்ச்சிக்கு வருந்த லாகாது. ஆசிரியர் : உங்களிடம் வந்தது சுதேசமித்ரனைக் காப்பாற்ற வேண்டும், என்பதற்காகத்தான். பாரதி : என்னால் என்ன செய்யமுடியும் என்கிறீர்கள். ஆசிரியர் : துணையாசிரியராக - காரியாலயத்திலிருந்து வீழ்ந்த மித்ரனை எழுப்பவேண்டும். பாரதி : ஒத்துழையாமையை ஆதரித்துத்தான் எழுதுவேன். ஆசிரியர் : (வெகுவாக யோசித்து) சரி - உடனே சென்னைக்குக் குடும்பத்தோடு புறப்படவேண்டுமே. பாரதி : இங்கே கொடுக்கவேண்டியது வாங்கவேண்டியது இருக்கும். திடீரென்று கிளம்ப... ? ஆசிரியர் : எதற்கும் யோசிக்க வேண்டாம் ஆயிர ரூபாய் முன் பணமாக வைத்துக்கொள்ளுங்கள். பாரதி : சரி 247. சென்னையில் காந்தி காந்தி, இராஜகோபாலாச்சாரி, காந்தி பிரவேட் செக்றடெரி - பிறர் உட்கார்ந்திருக்கிறார்கள். வெளியில் பெருமக்கள் காத்திருக்கிறார்கள். பாரதி திடீரென்று அங்கு வருகிறார். காந்திக்கென்று போட் டிருந்த மெத்தையில் ஒருபுறம் வந்து குந்துகிறார் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. பாரதி பேச்சைத் தொடங்குகின்றார். பாரதி : மகாத்மா காந்தி அவர்களே, நான் ஒரு கூட்டம் போடு கிறேன். நீங்கள் அந்தக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும். காந்தி : என்றைக்கு? எப்போது? பாரதி : இன்று மாலை காந்தி : நண்பர் தேசாய், வேறு எங்கேயாவது போக வேண்டி யிருக்கிறதா பாரும். தேசாய் : வேறு முக்கியமாகப் போக வேண்டியதிருக்கிறது. காந்தி : வேறுநாள் குறிப்பிடுங்கள். பாரதி : எல்லா ஏற்பாடும் செய்தாய்விட்டது. வேறு நாளைக்கு மாற்றமுடியாது. உங்கள் பெருமுயற்சி வெற்றியடைக. (பாரதி போகின்றார்) காந்தி : (இராஜாஜியை நோக்கி) இவர் யார்? இராஜாஜி: இவர் ஒரு தமிழ்க் கவிஞர். இவர் முன்கூட்டியே கூட்டம் நடத்தும் நேரத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருக்க வேண்டும். காந்தி : நம் முயற்சியை ஆதரிக்கிறவர்தாமே. இராஜாஜி: ஆம் காந்தி : அப்படி இருக்க அவரைப் புறக்கணிக்கலாமா? உங்களை அவர் முன்கூட்டியே அணுக எண்ணாததற்குக் காரணம் என்ன? எல்லாரையும் கூட்டிக்கொண்டு செல்வதன் மூலமே நம் முயற்சியில் வெற்றிபெற முடியும். 248. கடற்கரையில் கூட்டம் பெருமக்களின் முன் பாரதி பேசுகிறார். தேச சகோதரர்களே, இருள் கொண்ட நெஞ்சங்களின் எதிரில் மகாத்மா காட்சியளிக்க வேண்டும். இந்த வகையில் அவருக்கு நேரமில்லை. அவர் இங்கு வராவிட்டாலும் அதோ அவர் நம் முன் நம் மனக் கண் முன் காட்சியளிக் கின்றார். மகாத்மா காந்தி வாழ்க. மிதவாதியாக இருந்த மதன்மோகன் மாளவியாவும், அரசியலில் கலக்காத சங்கராச்சாரியாரும், இந்துக்களல்லாத முகமதியத் தலைவர்களான மகமத்அலி ஷவுகத் அலிகளும் மற்றும் எல்லாக் கட்சிக்காரர்களும் மகாத்மா காந்தியின் விடுதலைக் கட்சியில் சேர்ந்து சிறைக்கும் தயார் என்கிறார்கள். சென்னையும் - கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்வதால் உண்டாகும் புகழை அடையவேண்டும். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ஒருவர் நலத்துக்காக அன்று - நாட்டின் விடுதலைக்கு. உலகாண்ட பாரத நாடு ஆங்கிலேயரின் அடிமையாக இருப்பதால் யாருக்கும் பெருமையில்லை. நாம் உலகில் மக்களினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அறிவுடைய பண்டை மக்கள் என்பதையும் உலகுக்குக்காட்ட வேண்டாமா? ஒன்றுபடுவோம். நன்று பெறுவோம் (பாட்டு) ஜெய பேரிகை கொட்டடா... (கை தட்டல்) 249. பார்த்தசாரதி கோயிலில் பாரதி குவளைக் கண்ணனும் பாரதியும் யானை கட்டியிருக்கும் மண்டபம் செல்லுகிறார்கள். பாரதி யானையை நெருங்கி அதற்குப் பழம் முதலிய பண்டம் கொடுக்கிறார். தடவிக் கொடுக்கிறார். குவளை : என்ன வாமி யானையிடம்? விலங்கு! அதற்குள்ள வபாவம் எங்கே போகும்? விலகி நில்லுங்கள். யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் என்பார்கள். பாரதி : கிருஷ்ணா, விலங்கு பறவை முதலியவைகளுக்கும் ஆத்மா உண்டு. இன்பம் இது, துன்பம் இது என்று அறியும் அறிவு அவற் றிற்கும் உண்டு. விலங்கு, பறவைகள் எல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்பே மனித இனம் நமக்கெல்லாம் விரோதம் என்று முடிவுகட்டிவிட்டன. அந்த எண்ணம் அவைகளுக்கு நாளடைவில் குறைந்து வருகின்றதா என்றால் இல்லை. மனிதனின் நாகரிகம் வளர வளர அவைகளுக்கு நம்மேல் விரோதமனப்பான்மையும் அதிகரித்து வருகின்றது. தனிமனிதன் அவைகளிடம் அன்பு பாராட்டுவதன் மூலமாக அந்த விரோதத்தை தணிக்க முடியும் அவை நம்மேல் பாசம் காட்டும். கிருஷ்ணா, மனிதனுக்கு, மொத்தத்தில் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். (போகிறார்கள்) 250. சுதேசமித்ரன் காரியாலயத்தில் பாரதி பாரதி காரியாலயத்தில் ஓர் அறையில் உட்கார்ந்து எழுதுகிறார். பார்த்தசாரதி ஐயங்கார் வருகிறார்.... சார், ஒத்துழையாமை இயக்கத்தை நாம் ஆதரித்தால் இங்கிலீஷ்காரன் மித்ரனையே அழித்துவிடுவானே... பாரதி : அவன் ஆட்சியை நாம் அழிப்போம். அதற்கிடையில் மித்ரனை அவன் அழித்தால் அதற்காக மகிழவேண்டும். சுயநலத்திற்கிடமில்லை பொதுத்தொண்டில். (அவர் போகிறார்) சுப்பிரமணிய ஐயர்: பாரதி சுதேசமித்ரனில் வந்துவிட்டார் என்ற விஷயம் காட்டுத் தீப் போல் ஊர் முழுதும் பரவி விட்டது. 1000 சந்தா என்று குறைந்ததுபோனது, இப்போது பதினாறாயிரம் ஆய்விட்டது உங்களால் மித்ரனுக்கு நல்ல எதிர்காலம் ஏற்படப்போகிறது. பாரதி : உங்கள் நம்பிக்கை வீணாகாது என்று எண்ணுகிறேன். (போகிறார்) 251. வக்கீல் துரைசாமி ஐயர் வீட்டில் நண்பர் கூட்டம். பாரதி பேசுகிறார். ஒத்துழையாமை இயக்கம் நாம் இழந்த உரிமையை மீட்கத் தோன்றிய ஒரு பேராற்றல். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மனிதன் செத்தால் அவன் மீண்டும் பிறக்கின்றான். ஆதலால் சாக அஞ்சாதே. அடி இங்கிலீஷ்காரனை - என்றார் திலகர். அஹிம்ஸையால் - தன்னல மறுப்பால் நாட்டில் ஒற்றுமையை வளர்த்து ஆங்கிலேயனை ஓட்டம் பிடிக்க வைப்போம் என்கிறார் மகாத்மா காந்தி. திலகர் முயற்சி பயனளிக்கவில்லை. அவரும் ஆயுளை முடித்துக் கொண்டார். காந்தி முயற்சியில் நமக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது. விடுதலை முயற்சி கட்டாயம் வெற்றி தரும் என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். நம் பேச்சும் மனமும் மூச்சும் எப்போதும் எவ்விடத்திலும் காந்தியின் இயக்கத்தின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். (அனைவரும் கைதட்டல்) 252. நண்பர்களும் பாரதியும் பாரதி : நான் எழுதியள்ள இனி எழுத இருக்கும் புத்தகங்களை வெளியிட ஒரு நிறுவனம் அமைக்கவேண்டும். ஒத்துழை யாமை இயக்கத்தைப் பிரசாரம் செய்ய பிரசார மண்டலம் ஒன்று அமைக்கவேண்டும். ஒருவர் : அவசியம், அவசியம். மற்றவர் : நீர் பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று இனிமேல் சொல்ல மாட்டீரே? பாரதி : அதைச் சொல்லுவதற்காகத்தான் அது. சாதி ஒழிப்பு என்பது ஒத்துழையாமையின் மூச்சு. அடிப்படைப் பேதமையை ஒழிக்காமல் விடுதலை வரும் என்பது வீண் கனவு. நான் சொல்லுகின்றேன்... சாதி நிலைத்த நிலையில் நமக்கு விடுதலை வேண்டாம். இந்தக் கெடுதலையே இருக்கட்டும். (கைதட்டல்) 253. பாரதியும் மணி ஐயரும் மணிஐயர்: பாரதி ஐயரா? வரணும். அமருங்கள். பாரதி : பாரதி. ஐயரில்லை, மனிதன், சவுக்கியமா? நான் நாட்டு மக்களுக்கு நல்ல நூற்கள் எழுதி வைத் திருக்கின்றேன். இனியும் எழுத உத்தேசம். கையில் பணமில்லை. நீங்கள் பணக்காரர். பண உதவி கோரி வந்தேன். மணிஐயர்: பண உதவி செய்யமுடியாது. பாரதி : புரட்சி. புரட்சி. புரட்சி தேவை. (என்று இடியென முழங்கி வெளியேறுகின்றார் பாரதி) விட்டது 254. கடைய வாசத்தின்போது ஒரு திருமணத்திற்காகப் பாரதி மனைவி யுடனும் மகள்மாருடனும் திருவனந்தபுரம் சென்றார். அப்போது குடும்பத்துடன் மியூசியம் சென்றார். மியூசியத்தில் பாரதி, புலியிடம் நெருங்கிப் பார்த்தார். அதைத் தடவிக்கொடுக்க எண்ணினார். காவற்காரன்: ஐயா, புலியுடனும் சிங்கத்துடனும் மட்டும் நெருங்க வேண்டாம். பாரதி : என்னை அவை ஒன்றும் செய்யமாட்டா. (மற்றும் குரங்கு முதலியவைகளுக்குத் தின்பண்டங்கள் தந்து மகிழ்ந்தார்) 255. கூனிச்சம்பட்டான் சத்திரத்தில் பாரதி புதுவையிலிருந்து முத்தால்பேட்டைக்குப் போகும் வழியில் அமைந்த கூனிச்சம்பட்டான் சத்திரம் காசிப் பார்ப்பனர் வந்து இறங்கு மிடம். அங்கே இரண்டு மூன்றுநாள் கூட்டமாகத் தங்குவார்கள். அவர்கட்கு சத்திரத்தில் சதாவர்த்தியுண்டு. பாரதி, சுப்புரத்தினம் இருவரும் அதே சத்திரத்தில் மாலைப் போதில் தங்கியிருக்கிறார்கள். காசிப் பார்ப்பனரின் இந்திப் பேச்சைக் கேட்க விரும்பியதால்... சத்திரத்தின் உள்ளே - காசிப் பார்ப்பனர் பேசிக் கொண்டிருக் கின்றார்கள். சத்திரத்தின் வெளியில் ஏழை மகளிர் ஆபாச ஆரவாரம் நடக்கிறது. அதே நேரத்தில் சொல்லி வைத்தபடி கந்தன் சில ஆட்க ளிடம் மாலைப் பதநீரும் இளநொங்கும் அனுப்பவந்து சேருகிறது. பனை மட்டைத் தொன்னையில் பதநீரும் இளநொங்கும் காட்சியளிக்கிறது. பாரதி அருந்துகிறார். தெருவில் மகளிர் ஆபாசக் கூச்சல் மிகுதிப்படுகிறது. உள்ளே இந்திப் பேச்சும் மிகுதியாகிறது. பாரதி அவற்றிற்கும் காது கொடுக்கிறார். சுப்பு : பதநீர் எப்படி? பாரதி : அம்ருதம்! சுப்பு : பெண்கள் பேச்சு எப்படி? பாரதி : இதைவிட இனிது தமிழ்! 256. பாரதியும் சுப்புரத்தினமும் சுப்பு : லட்சுமண பிரசாத் என் நண்பர். கற்பகம் என்ற மாத இதழ் நடத்துகின்றார். அதற்கு உங்கள் உருவப்படம் வேண்டும். அதை நான் பிளாக் செய்து கொண்டு போக வேண்டும். பாரதி : சரி. நீதான் கற்பகத்தை எழுதுகிறாயா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி சுப்பு : புதுவையை விட்டு நீங்கள் சென்னைக்குப் போன வுடன் கவிதைகளை எழுதிக் குவிப்பீர்கள். அவை புத்தகமாக வெளிவந்துகொண்டிருக்கும் என்று எண்ணி மகிழ்ந் திருந்தேன். இவ்வளவு காலமாயிற்று. நீங்கள் சென்னைக்கு வந்து எழுதிய கவிதைகள் மிகச் சில! பாரதி : ஏன் வந்தோம் புதுவையை விட்டு என்று நான் ஒவ்வொரு நிமிஷமும் எண்ணி வருந்துகிறேன். சென்னை - காக்காய் பிடிப்பவர்கட்குத் தாமரைக் குளம். சாதி ஒழிய வேண்டும் என்று அன்றும் இன்றும் சொன்ன, சொல்கின்ற, சொல்லும் எனக்கு நச்சுப் பொய்கை. என் எதிரிகளுக்கு என்னைப் பற்றிய கொள்கை ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? என் கையில் பணத்தை ஏறவிடக் கூடாது. என் நினைப்பு நூல் வடிமாக வருவதால் அவர்களின் ஆதிக்கம் கெடும் என்றுஅவர்கள் எண்ணு கிறார்கள். சுப்புரத்தினம்! நான் வாழவேண்டும் என்று நினைக்கும் புதுவை நண்பர்களை விட்டு, சாகவேண்டும் என்று நினைக்கும் சென்னை நண்பர்களை அடைந்தேன். இன்று வரைக்கும் என் கவிதைத்தொண்டு என்னைக் காப்பாற்றி வருகிறது. நாம் சாப்பிட்டுவிட்டு உருவப்படம் எடுக்கலாம். 257. கவிஞர் பெருமானை வெறிகொண்ட யானை தள்ளியது. பாரதி அன்பன் பத்மநாபன் பாரதியிடம் பரபரப்புடன் சொல்லு கின்றான். வாமி, உங்கள் யானைக்கு வெறிபிடித்துவிட்டது. எல்லாரை யும் துரத்துது. இப்போ பழையபடி கோயிலில் வந்து நிற்குது. பாரதி : (பாட்டு) அந்நாளில் யானையிடர் தீர்த்த அருட் பெருமான் இந்நாளில் இந்த எழில்யானை - முன்வந்து கொண்ட வெறி, நீக்கி ஆட் கொள்ளானோ கோவிந்தன் தொண்டனுக்கோ அந்தத் தொண்டு? (பாரதி ஓடுகிறார்) 258. கோயில் யானை கட்டும் இடத்தில் யானை நிற்கிறது. பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் அச்சத்தோடு. பாரதி அதனிடம் நெருங்கி அதன் துதிக்கையைத் தடவிக் கொடுக்கிறார் யானை தள்ளிவிடுகிறது. பாரதி யானையின் நான்கு கால்களுக்கு நடுவில் விழுந்தவர் அசைவற்றுக் கிடக்கின்றார். மக்கள் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஓடிவந்த குவளைக் கண்ணன் - காலடியிற் கிடந்த பாரதியைக் கைப்பிள்ளை போல் தூக்கிவந்து காப்பாற்றுகிறார். மக்கள் குவளைக் கண்ணனைக் கும்பிடுகிறார்கள். கோவிந்தா என்ற சத்தம் வானைப் பிளக்கிறது. அதே நேரத்தில், வ.வே.சு. ஐயர் சீனிவாசாச்சாரியார் முதலியவர்கள் வந்து விடுகிறார்கள். கூட்டத்தார் : யானை தள்ளிக் காலடியில் கிடத்திவிட்டது பாரதியாரை. குவளை ஐயங்கார் காப்பாற்றாவிட்டால் செத்திருப்பார். கீழே கிடத்தப்பட்டிருக்கும் பாரதியாரை நோக்கிய வ.வே.சு. கூறினார். இங்கிலீஷ்காரன் வாரண்டு எடுத்துவிட்டபோது பாரதியை, கிருஷ்ணா, அன்றுங் காத்தாய்! இன்றும் காத்தாயப்பா! மருத்துவமனை நோக்கிப் போகிறது பாரதி கிடக்கும் வண்டி!  குறிப்பு : பாரதியின் இறுதி நாளைச் சித்தரிக்கும் இந்தக் காட்சியை முடித்தபோது, தொடர்ந்து பல நாட்களாக எழுதிக்கொண்டே இருந்ததன் விளைவாக மார்பு வலியால் பாவேந்தர் மருத்துவம் பார்த்துக் கொண்டார். மேலும் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு மீளாத் துயிலில் ஆழ்ந்தார். பாவேந்தர் அவர்கள் தம் அன்பிற்குரிய பாரதியின் உடலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் குறிப்பினை எழுதி முடித்தவர் - மருத்துவமனை சென்று திரும்புகையில் சடலமாகவே திரும்பினார் என்பது நம்மை நெகிழ வைப்பதாகும். - நன்றி: பாட்டுப் பறவைகள் ஜுலை - 2000, மன்னர் மன்னன் 8. சுபத்ரா திரைக்கதைச் சுருக்கம் யுதீஷ்டர மன்னனுக்கு இந்திரப்பிரத ராஜ்யாபிஷேகம் நடைபெறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் முடிசூட்டும் வைபவத்தை நடத்தி வைக்கிறார். அவ்வமயம் கிருஷ்ணன் பாண்டவர்களைப் புகழ்ந்துபேசி, உலக முழுவதும் ஒரு குடைக்கீழ் ஆளுவீராக என்று தருமனுக்கு ஆசி கூறி அங்கிருந்த துரியோதனனிடம் உனக்கும் விருப்பந்தானே என்று கேட்கவும் துரியோதனன் மனம் புழுங்கிப் பாண்டவர்களிடம் மேலும் பொறாமைகொண்டு எவ்விதத்திலாவது, பூண்டோடு பாண்ட வர்களை ஒழித்துவிட, சகுனியுடன் யோசிக்கிறான். கிருஷ்ணனின் உதவி இருக்கும்வரை பாண்டவர்களை அசைக்கக் கூட முடியா தென்றும் ஆகவே கிருஷ்ணனின் தங்கை சுபத்ரையை பலராமன் மூலமாகத் துரியோதனன் மணந்துகொண்டால் கிருஷ்ணன், மைத்துன னான துரியோதனனை ஆதரிப்பான் என்றும் சொல்ல, துரியோதனன் மகிழ்ந்து சகுனியை உயர்ந்த பரிசுகளுடன் பலராமரிடம் பெண் கேட்க அனுப்புகிறான். பசுக்களை இழந்த பிராமணனுக்கு மீட்டுக் கொடுக்கும் பொருட்டு அர்ஜுனன் காண்டீபத்தை எடுக்கப் போகும்போது தருமனும் திரௌபதியும் ஏகாந்தமாய் இருந்ததைப் பார்த்துவிட்டதின் பலனாகத் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டுப் பல தீர்த்தங்களாடி பிரபாஸ தீர்த்தம் வந்து சேருகிறான். பலராமர் துரியோதனனுக்குச் சுபத்ரையைத் திருமணம் செய்து கொடுப்பதாகச் சகுனியிடம் நிச்சயதாம்பூலம் கொடுக்கிறார். இவை அனைத்தும் கிருஷ்ணனுக்குத் தெரிந்தும் தெரியாதவர்போல இருந்து வருகிறார். அர்ஜுனனையே கணவனாக வரித்த சுபத்ரை - பெரிய அண்ணன் முடிவைக் கேட்டு அவரிடம் வாதாடியும் பிரயோஜனம் இல்லாமல் போகவே கிருஷ்ணனிடம் ருக்மணி, சுபத்ரைக்குப் பரிந்து பேசுகிறாள். முடிவில் கிருஷ்ணன் சுபத்ரையின் மனோபீஷ்டம் நிறை வேறும் என்று ஆசி கூறுகிறார். அர்ஜுனனுக்குச் சுபத்ரா துரியோ தனன் திருமணத்தைப் பற்றி வேதியர் உருவத்தில் சென்று தெரி விக்கிறார். அர்ஜுனன் தான் காதலித்த சுபத்ரை, துரியோதனனுக்கு வாழ்க்கைப் படுவதை எண்ணி மனம் வருந்திக் கிருஷ்ணனை வணங்க, கிருஷ்ணன் வந்து அர்ஜுனனைச் சந்நியாசி உருவத்தோடு ரைவத மலைக்குச் சென்று இருக்கும்படிச் சொல்ல அர்ஜுனனும் ரைவத மலைக்குப்போய் வசித்துக்கொண்டு இருக்கிறான். கிருஷ்ண னின் ஏற்பாட்டின்படி இந்திரவிழா கொண்டாடுவதற்காகப் பலராமர், கிருஷ்ணன், சுபத்ரை, யாதவர்கள் முதலியோர் வருகின்றனர். சந்நி யாசி வந்திருப்பதை அறிந்த பலராமர் சந்நியாசியை அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வந்து கன்னியா மாடத்தில் இருக்கச் செய்து சுபத்ரையைச் சிரூஷைக்கு அமர்த்துகிறார். இவையெல்லாம் கிருஷ்ணனின் ஏற்பாடாக இருந்தபோதிலும் தடுப்பதுபோல் தடுத்துச் சம்மதித்து இருக்கிறார். முகூர்த்தநாள் நெருங்குகிறது. மணமகன் துரியோதனனும் பரிவாரிங்களும் துவாரகைக்கு வந்து நகர்ப்புறத்தில் கூடாரத்தில் தங்கி இருக்கின்றனர். சுபத்ரையும் சந்நியாசியும் நெருங்கிப் பழகவே சுபத்ரை சந்நியாசியை அர்ஜுனன் என்று கூறிக் கொள்கிறாள். கிருஷ்ணன் தனது ஏற்பாட்டின் படி இருவருக்கும் காந்தர்வ விவாகம் செய்வித்து இந்திரபிரதத்திற்கு அனுப்பி வைக்கிறார். காவலாளிகள் மூலம் அறிந்த பலராமர் அவர்களை விரட்டிக்கொண்டு போகிறார். சுபத்ரை, சந்நியாசி ஏறிச் சென்ற ரதம் அச்சு முறிந்துவிடுகிறது. பலராமர் வந்துவிடுகிறார். அர்ஜுனன் வில்லெடுத்து நாணேற்றுகிறான். சுபத்ரை, தடுத்துத் தன் பொருட்டு அண்ணாவை ஒன்றும் செய்யவேண்டாம், சின்னண்ணா நமக்கு இருக்கிறார், காப்பாற்றுவார் என்று வேண்டிக் கொள்ள சந்நியாசி ஒன்றும் செய்யாது இருந்துவிட இருவரும் அரச மன்றத்திற்குக் கொண்டுபோகப் படுகின்றனர். பலராமன் சந்நியாசியை இகழ்ந்து பேசுகிறார். சந்நியாசி அர்ஜுனன் உருவடைந்ததும் துரியோதனன் தூண்டுதலால் சித்ரவதை செய்யும்படி உத்தரவிடுகிறார். கிருஷ்ணன், பலராமன் கோபத்தை மாற்றிச் சமாதானம் செய்துவிடுகிறார். பிறகு சுபத்ரைக்கும் அர்ஜுனனுக்கும் திருமணம் விமரிசையாக நடை பெறுகிறது. இருவரும் இன்பம் அடையும்படிச் செய்த கிருஷ்ணன் அவர்களை ஆசிர்வதிக்கிறார்.  9. சுலோசனா திரைக்கதைச் சுருக்கம் இராவணேவரன் மைந்தன் மேகநாதன், பூலோகத்தையும் தேவலோகத்தையும் வெற்றிபெற்று இந்திரனையும் சிறைப்பிடித்துக் கொண்டு வருகிறான். பிரம்மதேவன் தோன்றி மேகநாதன் விரும்பிய வரத்தை அளித்து (நிகும்பலை யாகம்) இந்திரனை வெற்றிபெற்ற தினால் இந்திரஜித் என்ற நாமதேயத்தையும் அளித்துத் தேவராசனைச் சிறை மீட்டுச் செல்கிறாள். இந்திரஜித் தந்தையின் கட்டளையைச் சிரமேற்கொண்டு பாதாள லோகத்திற்குச் சென்று ஆதிசேஷனை வென்று அவன் மகள் சுலோ சனையைத் தூக்கிவந்து மணம்புரிந்து கொள்கிறான். கோப மடைந்த ஆதிசேஷன் வயிர நெஞ்சனாகி, வேதியர் உருவடைந்து இந்திரஜித்தி டம் வந்து, அவன் உயிரை இச்சாதனமாகக் கேட்கிறான். இந்திரசித் போர்க்களத்தில் வந்து தன் உயிரைப் பெற்றுக் கொள்ளும் படிச் சொல்லுகிறான். இந்திரசித் மகா வரப்ரசாதியாகையால் ஆதிசேஷன் ஒன்றும் செய்ய இயலாதவனாகிச் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறான். சுலோசனையும் இந்திரசித்தும் இணைபிரியாத தம்பதிகளாக இன்பம் துய்த்து இல்லறம் நடத்தி வருகிறார்கள். சில காலத்துக்குப் பிறகு சீதையை மீட்கும் பொருட்டு ராமலக்ஷ் மணர் மாபெரும் வானரசேனையுடன் ராவணாதியருடன் போர் புரிந்து கொண்டிருக்கின்றனர். அக்ஷயன், அதிகாயன், கும்பகர்ணன் முதலிய வீரர்களை இழந்து இராவணன் சீதைமேல் வைத்த காதலால் இந்திர சித்தையும் போருக்கு அனுப்புகிறான். இந்திர சித் மாயா ஜாலங்கள் புரிந்து பெரும் போர் செய்கிறான். ஆயினும், அவன் விடுத்த நாகபாசம் பிரம்மாதிரம் எல்லாம் பயனற்றுப்போய் விடுகின்றன. ஜெகத்தை வென்ற தனது வீரம் பயனற்றுப் போனதற்குக் காரணம் அதர்ம யுத்தம் என்று எடுத்துக் கூறியும் திருந்தாத ராவண னுக்குத் தான் மகனாகப் பிறந்த கடனுக்காக நிகும்பலைக்குச் சென்று யாகம் செய்து கொண்டிருக்கிறான். அதனை விபீஷணன் மூலம் அறிந்த லக்ஷ்மணன் யாகத்தை அழித்து இந்திரசித்தன் கரத்தைத் துண்டித்துவிட்டு, சிரத்தைக் கொய்து, ராமனிடம் அனுப்பிவிடுகிறான். துண்டுபட்ட கரம் தர்மபத்தினியான சுலோசனையிடம் வந்து, ராமனிடம் சென்ற தன் தலையைப் பெற்றுத் தீக்குளித்துத் தன்னை வந்து அடையும்படி எழுதித் தெரிவிக்கிறது. கணவனைப் பிரிந்து வருந்தியிருந்த சுலோசனை, ராமனிடம் சென்று தனது கற்பின் மகிமையால் கணவன் தலையைப் பேசும்படி செய்து, ராமனின் உதவியால் உடன்கட்டை யேறி கணவனுடன் வீர சுவர்க்கம் புகுந்து அமரத்துவம் அடைகிறாள். 