கருணாமிர்த சாகரம் இரண்டாவது புத்தகம். முதல் பாகம் - இரண்டாம் பாகம் பொருள் அட்டவணை. இராகங்களின் தொகையும் அவற்றின் விபரமும். கருணாமிர்த சாகரம் இரண்டாவது புத்தகம் - முதல் பாகம் இராகங்களின் தொகையும் அவற்றின் விபரமும் இந்நூலுள் . . முதல்பாகம் : இராகங்களின் தொகையையும் அவற்றின் விபரங்களைப் பற்றியும் சொல்லும் நூல். கடவுள் துணை. கருணாமிர்த சாகரம். இரண்டாம் புத்தகம் முகவுரை. “கருணாமிர்த சாகரம்” இரண்டாம் புத்தகமாகிய இராக இலக்கணங்களைக் கூறும் இந்நூலின் வரலாற்றையும் இதில் எழுதியிருக்கும் விஷயங்களையும் பற்றிச் சொல்லுமுன், எங்கள் தந்தை ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், இசையில் காட்டிய ஆர்வத்தைப் பற்றியும் இசை சம்பந்தமாகச் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றியும் சுருக்கமாய்க் கூற விரும்புகிறோம். எங்கள் தந்தை தம்முடைய சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் பயிலுங் காலத்திலேயே இசையில் அதிக ஆர்வமுள்ளவர்களாய்ச் சிறு பாட்டுக்களை இராகங்களில் அமைத்துத் தம்முடன் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அதனால் இசையில் திறமை வாய்ந்தவரென எல்லா ஆசிரியர் களாலும் நன்கு மதிக்கப் பெற்று வந்ததாகக் கேள்வியுற்றிருக்கிறோம். பிற்காலத்தில் அவர்கள் அநேக பெருங் காரியங்கள் செய்து வந்தார்கள். கருணானந்தர் எனும் மகரிஷியின் அருள் பெற்று, அவர்களிடம் வைத்திய சாஸ்திரத்தையும், சில மருந்து மூலிகைகளையும் கற்றறிந்து, அதிக ஊக்கத் தோடும், அரிய முயற்சியோடும் மருந்துகள் செய்து, உலகத்தார் நன்மை அடையச் செய்து உலகப் பிரசித்தியைப் பெற்றார்கள். விவசாயத்தில் கரும்பு, சோளம் முதலானவைகள் பயிரிடும் முறைகளைப் பற்றி அநேகம் புத்தகங்கள் எழுதி வெளியிட்டதுடன், மிக்க பொருட் செலவில், பெரு முயற்சிகொண்டு, பற்பல மரம், செடி, கொடிகள் அடங்கிய மிக அழகான அகன்ற பெரிய “கருணானந்தபுரம்” எனும் தோட்டமும் அமைத்து அதினின்று விவசாய உலகம் அதிகப் பிரயோஜனம் அடையச் செய்தார்கள். ஒரு பெரிய அச்சுக்கூடமும் நாட்டி நடாத்தி வந்தார்கள். மற்றும் பற்பல கைத் தொழில்கள் அதாவது, சவுக்காரம் செய்தல், படம் பிடித்தல், ஒலிப்பதிவுத் தட்டுகள் செய்தல், கால் நடைப் பண்ணை நாட்டிச் சிறந்த பசு, காளைகளை வளர்த்தல் முதலிய பலவற்றைத் தொடங்கி நடத்தி வந்தார்கள். தம் இனத்தார் யாவரையும் வரவழைத்து, அவரவர்கள் திறமைக்கு ஏற்ற வேலைகளைக் கொடுத்து உதவியது மல்லாமல், யாவரும் நல்ல பக்தியடைய விருப்பங் கொண்டு தத்துவ சாஸ்திரத்தைப் போதித்து அதனை “நன்மறை காட்டும் நன்னெறி” என்னும் பெயரால் இரண்டு பகுதிகளாக இயற்றி வெளியிட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்து “ஜோதிஷ விமர்சனி சபை” ஒன்று நிறுவி, அதற்குத் தலைமை வகித்து நடத்தி வந்தார்கள். அவர்கள், இங்ஙனமாகிய தங்கள் நானாவித அலுவல்களுக்கிடையே இசையை முதன்மையாகப் பாவித்து, சங்கீத சாஸ்திர சம்பந்தமான நுட்பக் கருத்துக்களை ஆராய்வதிலும், இறைவன் துதியா யமைந்துள்ள இனிய தமிழ்ச் சாகித்தியங்கள் செய்வதிலும் மிக்க முயற்சியும், விருப்பமும் உடையவர்களாயிருந்தார்கள். நாங்கள் சிறுவர்களாயிருக்கும் பொழுதே, எங்களுக்குச் சங்கீதம் கற்பிக்க விரும்பி, அதற்காகத் தஞ்சையில் சங்கீதத்தில் சிறந்த வித்துவான் எனப் பெயர்பெற்ற அரண்மனை வித்துவான் வீணை வெங்கடாஜலம் ஐயர் அவர்கள் மூலமாக வீணையும், தியாகராஜ ஐயரின் சிஷ்யர் தியாகராஜப்பிள்ளையின் குமாரர் சாமியா பிள்ளை அவர்கள் மூலமாக வாய்ப்பாட்டும், முதல் முதலாக கீர்த்தனங்களையும், திண்டி ஜாக்கிகளையும், வசனங்களையும் ஒன்று சேர்த்து, கதாகாலஷேபம் செய்ய ஆரம்பித்து, அதில் பெயர் பெற்ற கிருஷ்ணபாகவதரின் சிஷ்யரும், கதா காலஷேபம் செய்வதிலும், பிடில் வாத்தியத்திலும் கைதேர்ந்தவருமான பஞ்சாபகேச பாகவதர் அவர்கள் மூலமாகப் பிடிலும் கற்றுக்கொள்ளச் செய்தார்கள். கர்நாடக சங்கீதம் சிறப்புற்றோங்கிய சோழ நாட்டிலுள்ள திருவாரூரில் அவதரித்த திரு. தியாகய்யரவர்கள் எப்பொழுதும் தெய்வ சந்நிதியில் இருந்து புதிது புதிதான சாஹித்தியங்கள் தினந்தோறும் செய்து, சகல சங்கீத லக்ஷணங்களோடும், ராக பாவத்தோடும், அர்த்த புஷ்டியோடும் கூடிய ஆயிரக்கணக்கான உருப்படிகளை, மனம் பரவசமாகி, அவர்கள் தாய் பாஷை யாகிய தெலுங்கிலே வெகு அழகாக யாவரும் கொண்டாடக் கூடியனவாக இயற்றியிருக்கிறார்கள். அங்ஙனமே தீக்ஷிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் முதலானோர் செய்த கீர்த்தனங்களும், வர்ணங்களும், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு பாஷைகளில் இருப்பதால், தமிழர்களாகிய நாம், பொருள் தெரியாமல் பாடுவதினால் சங்கீதத்தில் அர்த்தபாவம் என்ற மேலான பாகத்தை விருத்தி செய்ய ஏது இல்லாமலிருப்பதை, அவர்கள் கண்டு, பொருளின்றி இனிய ஓசையை மாத்திரம் அந்நிய பாஷைகளில் கேட்டுச் சந்தோஷப்படுவதை விட, இசையின் இனிய ஓசையோடு பொருளுமறிந்து, உணர்ச்சி மேலிட்டுப் பக்தி ரசமான கீர்த்தனைகளைக் கேட்டு ஆனந்திப்பதினால், கேட்பவர்கள் யாவரும் நற்பயனடைவார்கள் என்பதை உணர்ந்து, சில கீர்த்தனங்களுக்கும் வர்ணங் களுக்கும், இராகங்ளுக்கேற்ற விதமாகவும், பக்தி விருத்திக்குத் தகுதியாகவும் சுமார் 45 வருஷங்களுக்கு முன்னதாகத் தமிழ் சாஹித்தியங்கள் செய்து எங்களுக்குக் கற்பித்தார்கள். இவை இப்பொழுதும் பலரால் பாடப்பட்டு வருகின்றன. தமிழ் உலகுக்கு உபயோகமாயிருக்கும் பொருட்டுச் சுர சாகித்தியங் களோடு தாள அட்சரங்களுக்குள்ளடக்கி, மிகத் தெளிவாய், சங்கீதம் பயிலும் சிறுவர்கள் முதல் யாவரும் தெரிந்து கொள்ளக் கூடியதாய், 95 பாட்டுக்கள் அடங்கிய ‘கருணாமிர்த சாகரத்திரட்டு’ என்னும் புத்தகத்தை 1907-ம் ஆண்டில் அச்சிட்டார்கள். தெய்வத்தின் அருட் குணாதிசயங்களைத் தம் தாய் மொழியிலேயே பலவித ராகங்களில் அமைத்துப் பாடும்பொழுது, ஒருவன் மிகுந்த உணர்ச்சி யுடையவனாய், மனம் ஒடுங்கி, தியான நிலைக்கு வந்து, திருவுருவைத் தரிசிக்கும் மேலான பதவியடைவான். வெறும் இன்னிசையை மாத்திரம் கேட்பவர்கள், இராகத்தின் இனிமையை மட்டும் கேட்டு விரைவில் மறந்து போவார்கள். இயற்றமிழைக் கேட்டும், வாசித்தும் உணராத ஒருவன், இசைத் தமிழைக் கேட்கும் போது, அதன் பொருட் சுவையின் உணர்வடைவான். தமிழ் இசையின் மேன்மை இன்னதென்பதும், சங்கீத சாஸ்திரத்திற்கே அடிப்படை யான சுருதியைப் பற்றிய அரிய பெரிய விஷயங்களும் முதற் புத்தகமாகிய பொற்கடகம் என்ற கருணாமிர்த சாகரத்தில் அங்கங்கே விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. அந்நூலில் பண்டைத் தமிழ் மக்களே மக்களில் முதல்வரென்றும், தமிழ் மொழியே முதல் மொழியென்றும், அம்முதுமொழி, இயல், இசை, கூத்து என மூன்று பகுதியுடையதாயிருந்ததென்றும், இசைத்தமிழ் என்ற சாஸ்திரத்தில் சுருதிகள் அமைத்து, ராகங்கள் உண்டாக்கி, அவற்றைச் சேர்ந்த ஆளத்தி (ஆலாபனம்), அவிநயம் (அபிநயம்), பாணி (தாளம்) முதலியவைகளாலும், யாழ், வங்கியம் (குழல்), தண்ணுமை (மிருதங்கம்) முதலிய இசைக் கருவிகளாலும் சிறந்த புலமையுற்றுத் தமிழ் மக்களே முதன்மை பெற்றிருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளன. இன்னமும் ஒரு இயக்கில் (ஸ்தாயியில்) பாடப்படும் சுரங்கள் ஏழு என்றும், ச-ப, ச-ம, முறையில் ஏழாவது ஏழாவதாய், ஐந்தாவது ஐந்தாவதாய், உண்டாகும் சுரங்கள் 12 என்றும், இதையே ஆயப்பாலை என்றும், ஒரு இயக்கில் வரும் 12 சுரங்களும் சம அளவான ஓசையுடையவைகளாய் வருகின்றன என்றும், சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து அதாவது, ஒன்றிற் கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் மேலே போக வேண்டுமென்றும், ஒரு ஸ்தாயியை 12 ராசிகளாகப் பிரித்து அதில் இன்னின்ன ராசியில் வரும் சுரங்கள் பொருத்தமுள்ளவை என்றும், மற்றவை பொருந்தாவென்றும், ஒரு ஸ்தாயியின் பன்னிரு சுரங்களையும் ஒவ்வொரு சுரத்திற்கும் இரண்டிரண்டு அலகுகளாக வைத்து 24 அலகுகளாக நிச்சயித்து, அதில் இணை கிளையான இரண்டு சுரங்களில் இரண்டு அலகுகளைக் குறைத்து, கானம் செய்து பாடலமுதம் பருகினார்களென்றும், 22 சுருதிகளில் அடங்காவென்றும், 24, 48, 96 போன்ற நுட்ப சுருதிகளில் பூர்வ தமிழ் மக்கள் கானம் செய்தார்களென்றும், அதாவது, ஒரு ஆரோகண, அவரோகணத்தில் வரும் ஏழு சுரங்களில் இணைகிளையான அல்லது இணை இணையான சுரங்களில் அலகுகளைக் குறைத்து, பூர்வ தமிழ் மக்கள் கானம் செய்து வந்திருக்கிறார்களென்றும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ராசி வட்டத்தில் நிற்கும் பன்னிரு சுரஸ்தானங்களை ஆயப் பாலையென்றும், அதை இரண்டிரண்டாய்ப் பிரித்து 24 அலகுகளாக வருவது வட்டப்பாலை யென்றும், வட்டப்பாலையிலுள்ள 24 அலகுகளையும் இரண்டி ரண்டாகப் பிரித்து 48 அலகுகளாக வருவது திரிகோணப் பாலையென்றும், திரிகோணப்பாலையின் அலகுகளை இரண்டிரண்டாகப் பிரித்து 96 கால் சுருதிகளாக வருவது சதுரப்பாலையென்றும், அம்முறைப்படி பல்லாயிர வருஷங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் இனிமையாகப் பாடி வந்திருக்கிறார்களென்றும், தற்காலத்தில் நாம் பாடும் கர்நாடக சங்கீதத்திற்கும் அதற்குமுள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டி, ஒரு ஸ்தாயியின் பன்னிரு சுரங்களும் எப்படிச் சமமான இடைவெளிகளுள்ள சுருதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றனவென்றும், பூர்வ தமிழ் நூல்களின் தகுதியான மேற்கோள் களைக்கொண்டு மிக்க நுட்ப அறிவுடன் விளக்கி எழுதியிருக்கிறார்கள். இந்த அபிப்பிராயத்தை ஸ்தாபிப்பதில் நுட்பமான கணக்குகளும், லாகிர்தமும், எட்டு ஸ்தானம் வரை தசாம்ச பின்னங்களும், தந்தியின் நீளமும், ஓசை அலைகள் சென்ஸ்களின் கணக்குகளும், சுரம் சுருதிகளில் எவ்விதமான சந்தேகமும் உண்டாகாத கணித முறைகளும், நம் அனுபவத்தில் பாடிவரும் இராகங்களில் வரும் நுட்ப சுரம், சுருதிகளை அறியும் திருஷ்டாந்தங்களும் மிகத் தெளிவுற எடுத்துக்காட்டித் தமிழிசையின் ஒப்பற்ற உயர்வை யாவரும் உணரும்படியாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இசை சம்பந்தமான இவ்வித நுட்பமான கருத்துக்களை ஆராய்ந்து பல ஆண்டுகளாகப் பெரிதும் முயன்று, அவ்வப்போது சங்கீத சபைகள் கூட்டி, அதில் சங்கீத வித்துவான்களையும் சங்கீத ரசிகர்களையும் ஒன்று சேர்த்து அவர்களுடைய அபிப்பிராயங்களைக் கலந்து ஆலோசித்துச் சங்கீத விஷய மாய்த் தர்க்கித்து முக்கிய தத்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்கள். முதலாவது இசைச் சங்கத்தை 1912ம் வருஷம் மே மாதம் 27-ம் தேதியிலும், அது முதல் தொடர்ந்து சங்கங்கள் கூட்டி வந்து, ஏழாவது சங்கத்தை 1916-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 19, 20, 21 தேதிகளிலும் நடத்தினார்கள். அதில் சுருதியைப் பற்றிப் பல வித்துவான்கள் பலவிதமாய்ச் சொல்வதையறிந்து, அவையாவும் திட்டமாயும், அனுபவத்திற்கு வரக்கூடியதாயும் இல்லையென்று கண்டு, தென்னிந்திய சங்கீதத்தைப் பின்னும் விரிவாகத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தார்கள். நாம் அனுபவத்தில் பாடிக்கொண்டிருக்கும் தியாகய்யர், தீக்ஷிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் முதலிய பெரியோர் செய்த நுட்ப சுரங்கள் வரும் கீர்த்தனைகளை வீணையில் தந்தத்தாலான மெட்டுகள் வைத்துப் பார்த்து, நுட்பமான சுரங்களைக் குறித்து, நாம் வழக்கமாகப் பாடிவரும் தன்யாசி, சங்கராபரணம், தோடி, புன்னாகவராளி, ஆரபி, தேவகாந்தாரி, பவப்பிரியா, கைகவசி, கானடா, சஹானா, நாயகி, பியாகடை முதலிய அநேக இராகங்களின் நுட்ப சுரங்களைப் பாடிப் பார்த்து, நம் தென்னிந்திய சங்கீதம் 22 சுருதிகளில் அடங்காதென்பதையும், 24, 48, 96 போன்ற அதிநுட்ப சுரங்களே உள்ளதா யிருக்கின்ற தென்பதையும் இவையாவும் சிலப்பதிகாரமென்ற நம் பூர்வ தமிழ் நூலில் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்று வகுத்துக் காட்டியிருப்பதையும் எடுத்துக்காட்டி அதிக விரிவாக எழுதியிருக் கிறார்கள். மேலும் அங்ஙனம் எழுதியதைத் தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்திலும், 1916-ம் வருஷம் மார்ச்சு மாதம் 22-ம் தேதி பரோடாவில் நடந்த அகில இந்திய சங்கீத மகாநாட்டில், மேன்மை தங்கிய மகாராஜாவின் தலைமையிலும், தாகூர் நவாப் அலி அவர்களின் தலைமையின் கீழும், பரோடா திவான்சாகிப் V.P. மாதவராவ் அவர்கள் மேற்பார்வையிலும், (முதற் புத்தகம் 5ம் பாகத்தில் பார்க்கவும்) 24, 48, 96 போன்ற நுட்ப சுரங்கள் நம் அனுபவத்தில் பாடிக்கொண்டிருக்கும் கீர்த்தனைகளில் வருகிறதை, அந்த நுட்ப சுரங்கள் இருக்கும் இடத்தை வீணையில் மெட்டு வைத்துக் கமகம் வருவதை வாசித்தும் பாடிக்காட்டியும், ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களையும் வட்டப் பாலையின் 24 சுருதிகளையும் வரிசைக்கிரமமாய் வீணையோடும், வீணையில் லாமலும் எங்களைக் கொண்டு பாடிக்காட்டியுமிருக்கிறார்கள். கேட்ட வித்து வான்கள் யாவரும் நுட்பமான சுரங்கள் பாடப்பட்டதையும், அனுபோகத்தில் நாம் பாடும் கீர்த்தனைகளில் வரும் நுட்ப சுருதிகள் இன்னவையென்று நான்கு பாலைகளிலும் வரும் நுட்ப சுரங்களைப் பாடிக் காட்டியதையும் கேட்டு அதிக ஆச்சரியமும், சந்தோஷமும் கொண்டார்கள். சங்கீத வித்யா மகாஜன சங்கங்கள் நடத்தி வந்த சமயங்களில், அனேக இராகங்களுக்கு இராக சஞ்சாரங்கள் எழுதி, ஜீவசுரம், அமுதவைப்பு முதலிய வைகளைக் கண்டுபிடித்து, கீதம், கீர்த்தனம், சுரஜதி, வர்ணம் அமைக்கும் வகைகளை எங்களுக்குப் போதித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் போதித்த தின்படியே நம் பழக்கத்திலிருக்கும் இராகங்களிலும், புது இராகங்களிலும் ஸ்புடம் செய்து, சுமார் 60 கீர்த்தனங்கள் வரை எழுதியிருக்கிறோம். எங்கள் சிறிய தாயார் திருமதி பாக்கியம் அம்மையார் அவர்களாலும், எங்கள் சகோதரி திரு. அன்னபூரணி அம்மாள் அவர்களாலும் அநேக இராகங்களுக்கு ஸ்புடமும் கீதமும் கைப்பிரதிகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. சங்கீத வித்யா மகாஜன சங்கத்தில் நாங்கள் வச்சிரகாந்தி, மோகனம், நாகபூஷணி, ஹம்ஸத் தொனி, ஆனந்ததோடி, பௌளி, ஹிமாங்கி, ஆனந்தபைரவி முதலிய ராகங்களில் சில கீர்த்தனங்கள் பாடிக் காட்டினோம். சங்கீத வித்துவான்களும், மற்றும் வந்திருந்த பெரியோர்களும், இராகச் சாயையும், கீர்த்தனங்களின் போக்கும் அதிக அழகாக இருத்தலைக் கொண்டாடினார்கள். காயக சிகாமணி முத்தையா பாகவதர், விஜயநகரம் வீணை வெங்கட்டரமணதாஸ் மைசூர் வீணை சேஷண்ணா, கிருஷ்ண ராவ் முதலிய பெரிய வித்வான்கள் ஆச்சரியப் பட்டு, ஆசி வார்த்தைகள் பல கூறினர். ஆனால் “தமிழர்களுக்குச் சங்கீதம் ஏது? தமிழருக்குச் சங்கீத சாஸ்திரத்தைப் பற்றி என்ன தெரியும்? தமிழருக்கும், இசைக்கும் சம்பந்தமில்லை” என்று இழித்துரைத்த அக்காலத்தில், அதாவது சுமார் 30 வருஷங்களுக்கு முன்னதாக, அவர்கள் செய்த அரும் பெரும் வேலையைச், சிலர் வேண்டுமென்று” சுருதியைப் பற்றியும், கீதம், கீர்த்தனம் இயற்றுவதைப் பற்றியும், ஏன் இவர் எழுதிக்கொண்டும், சொல்லிக் கொண்டும் வீணாகப் பிரயாசைப் படுகிறார், “என்று வெகு ஏளனமாகப் பேசினார்கள். இசைத் தமிழின் பெருமையை அறியாமல், தற்பெருமை கொண்டு வேண்டுமென்று ஏளனமாய் அன்னோர் பேசியதையெல்லாம் பொருட்படுத் தாமல், அறிவுடைய பெரியோர் சிலராவது அதன் பெருமையை அறிந்து நற்பயனடைவார்களெனத் துணிந்து, அதிக சிரத்தையோடும், ஊக்கத்தோடும் இராகத்தின் இணை, கிளை, நட்பு, பகை சுரத்தொடர்களை எழுதி, ஜீவ சுரம் தெரிந்து, அதிலிருந்து கீதம், கீர்த்தனம் முதலானவைகள் எழுதி, அம்மட்டில் நில்லாது, சாதனையிலும் கொண்டு வந்து, தென்னிந்திய தமிழ் மக்கள் யாவரும் சங்கீத சாஸ்திரத்தில் முன்னேற்றமடைந்து விருத்தியடையவும், தென்னிந்திய சங்கீதம் கலப்பில்லாமல் சாஸ்திர முறையுள்ளதாயிருப்பதை யாவரும் தெரிந்துகொள்ளவும் அவாக்கொண்டு, தம் மனோரதத்தை நிறை வேற்றத் தம் காலத்தையும் பொருளையும் சங்கீதத்திற்காகவே பிரயோகித்து வந்தார்கள். சங்கீதத்தையே தம் உயிர் நிலையாக வைத்து இரவு பகலாய் அநேக வருஷங்கள் சங்கீத விஷயமாய், ஆசையோடும், ஊக்கத்தோடும், விடாமுயற்சியோடும் உழைத்து வந்தார்கள். இப்படிப் பல வருஷங்களாய் ஆராய்ந்தறிந்த ஒன்றை, அதாவது, ஒரு இராகத்தை ஸ்புடம் பண்ணிக் கணக்கிட்டு அதிலிருந்து ஜீவ சுரமும், அதற்கு இணை கிளையான சுரங்களில் அமுதவைப்பு வருவதையும், இன்னும் பாடலமுதமும் தெரிந்து, கீதம், கீர்த்தனம், பதம், சுரஜதி வர்ணம் முதலான வைகள் இயற்றும் விதத்தையும், எங்களுக்குப் போதித்து, இந்த அருமையான விஷயங்களை உலகத்தார் யாவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு, கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகத்தை எழுத ஆரம்பித்தார்கள். அதில் முதல் பாகத்தில், இராகங்களின் தொகையையும், அவற்றின் விபரங்களையும், இரண்டாம் பாகத்தில் உலகத்தில் பரம்பரையாய் வழங்கி வருகிற தாய் ராகங்களை அல்லது மேளக்கர்த்தாக்களைப் பற்றியும், மூன்றாம் பாகத்தில் 72 மேளக்கர்த்தா இராகங்களையும், அவற்றில் பிறக்கும் ஜன்ய ராகங்களையும், அவைகளின் ஆரோகண அவரோகண சுரங்களையும் அவைகள் இன்னின்ன அலகில் வருகின்றன என்பதையும், அதிக விளக்கமாய் எழுதி 256 பக்கங்கள் வரை அச்சிட்டு வைத்திருந்தார்கள். இதற்குப் பின் ஒரு இராகத்தின் ஆரோகண அவரோகண சுரங்களைத் தெரிந்து, ஸ்புடம் செய்து அதினின்று கீதம், கீர்த்தனை, சுரஜதி, வர்ணம் முதலியவைகளைச் செய்யும் முறையை எழுதி அச்சிடவேண்டும் என்ற நோக்கமுடையவர்களாய், பல குறிப்புக்களை எழுதி வைத்திருந்தார்கள். அவைகளில் சில குறிப்புக்கள் அடுத்த பதிப்பில் வெளிவரும். இம் முறை யானது பழைய ராகங்களில் மாத்திரமல்ல, புதிது புதிதான ராகங்களிலும் ஸ்புடம் செய்து, சுரங்களின் முக்கிய ஸ்தானமறிந்து, கீதம் கீர்த்தனை முதலியவை உண்டாக்கவும், ஸ்புடக் கணக்கிட்டு கர்னாடக ராகங்களைத் திருத்திக் கொள்ளவும் உதவியாயிருக்கும். சங்கீத அபிமானிகள் தங்கள் தங்கள் மனோபாவப்படி பெரிதாகவும், சிறியதாகவும், ஸ்புடக் கணக்கினால் புதிது புதிதாகக் கீதம் கீர்த்தனைகள் உண்டு பண்ணி ராகங்களின் போக்கை யறிந்து பக்தி ரசமான சாகித்தியங்களைச் செய்து அவற்றைப் பாடி ஆனந்தித்து அதினால் அதிகப் பலனடைவார்கள் என்று எண்ணி, இசைத் தமிழாகிய நம் சங்கீதம் மிகவும் நன்றாக ஒழுங்கு படுத்தப்பட்டு சிறந்த விதி களும், இலக்கணங்களும் பொருந்தியதென்று யாவரும் தெரிந்துகொள்ளுமாறு விரிவாக எழுத நினைத்து, அனேக முக்கியமான குறிப்புக்களையும் ஸ்புடக் கணக்குகளையும் எழுதி வைத்திருந்தார்கள். இசைத் தமிழ் என்ற சங்கீத சாஸ்திர இலக்கணத்தின் மேலான விஷயத்தை, சற்குருவான எங்கள் தந்தையார் எங்களுக்கு அதிக சிரத்தை யோடு போதித்தார்கள். எங்களுக்குப் போதித்தவைகளைக் கொண்டும், எழுதி வைத்த சில குறிப்புக்களைக் கொண்டும், சங்கீத உலகத்தாருக்குப் பிரயோ ஜனமாயிருக்குமாறு, சில சங்கீத ரஸிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இசை இலக்கண மேன்மையை விளக்கும் இந்நூலை வெளியிட்டோம். இந் நூலின் பின் பாகத்தில், சில ராகங்களை ஸ்புடம் செய்து இராக சஞ்சாரம், கீதம், கீர்த்தனை, சுரஜதி, வர்ணம் முதலியவைகளை எழுதிக் காட்டியிருக் கிறோம். சங்கீதக் கலை அதி நுட்பமான சாஸ்திர விதிகளும் இலக்கணமும் உள்ளதென்று தமிழ் மக்கள் இக்காலத்தில் நன்கு அறிவார்கள். ஒரு ராகத்தின் ஆரோகணம், அவரோகணம், ஒளடவம், சாடவம், சம்பூரணம், வக்ரம், வர்ஜ்ஜியம், சுருதி பேதங்கள், இணை, கிளை, நட்பு, பகைசுரம், ஜீவசுரம், அமுத வைப்பு, பாடல முதம் முதலியவை தெரிந்து அந்த ராகத்தைப்பாடி அதன் இனிமையைத் தெரிந்துகொண்டவர்கள் அதையே விரும்புவார்கள் என்பது நிச்சயம். இசை இலக்கணத்தைக் கொண்டு புதிய இராகங்கள், புதிய கீதம், கீர்த்தனைகள் எழுத விரும்புவோர்க்கும், சங்கீத ரஸிகர்களுக்கும் இந்நூல் மிகுந்த பிரயோஜனமா யிருக்கும். இந்நூலை விரைவில் முடிக்கும்படியாக அடிக்கடி எங்களை உற்சாகப் படுத்திய தஞ்சை ஜில்லா ஜட்ஜ் கனம் M.அனந்தநாராயணய்யர், I.C.S. அவர்களின் இசைத் தமிழ் நுண்ணறிவைப் போற்றிப் பெரிதும் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். எங்கள் அருமை தந்தையார் மிகுந்த பிரயாசத்துடன் செய்துவைத்த வேலையிலுள்ள மேன்மையான பாகங்களை ஆராய்ந்தறிந்து விருத்திசெய்ய, அறிவிற்சிறந்த பெரியோரை வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறோம். பெருமை வாய்ந்த சங்கீத சாஸ்திரம் மென்மேலும் வளர்ந்து உலகத் திற்கு நன்மை பயக்கும் வண்ணம், தம்முடைய எல்லா நலங்களையும் தத்தஞ் செய்த எமது தந்தையாரின் நற்புகழ் நிலைத்து இந்நூலின் பயனாகச் சங்கீத உலகத்திற்குச் சகல நன்மைகளையும் அளிக்கும்படி, நாத சொரூபியாகிய தெய்வத்தின் திரு அருளைப் பிரார்த்திக்கிறோம். கருணாநிதி வைத்தியசாலை ஆ. சுந்தரபாண்டியன் தஞ்சாவூர். மரகதவல்லி துரைப்பாண்டியன் தஞ்சை ஜில்லா ஜட்ஜ், ஸ்ரீ M. அனந்தநாராயண ஐயர் M.A., I.C.S. அவர்களது மதிப்புரை. நமது கலைகள் அறுபத்து நான்கெனக் கூறப்பட்டிருந்தாலும், அவை களுள் சிதையா வடிவத்துடனும் பூர்வீகக் களையுடனும் விளங்குவன மிகச் சிலவே. அவைகளுள் கர்நாடக ஸங்கீதம் முன் ஸ்தானத்தி லிருப்பதென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தக் கலையும், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீ ச்யாமா சாஸ்திரிகள் எனப்படும் ஸங்கீத ‘மும்மணி’ களும் கேரள நாட்டரசர் ஸ்ரீ ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவும் வாழ்ந்து இந்தக் கலைக்கு அருந்தொண்டியற்றி வந்த காலத்திலடைந்த செழிப்பையும் பொலிவையும், பிற்காலத்தில் இழந்து நிற்பதாகவே கூற வேண்டும். இதற்குக் காரணம், முன்கூறிய ஸங்கீத மஹான்களை யொத்தவர் நமது நாட்டில் தோன்றாததே யென்று எளிதில் பகரலாம். ஆனால், இதனிடையே மற்றொரு சங்கை எழுகின்றது. மேற்கூறிய மஹான்களும் இசையிலக்கணமொன்றை அநுசரித் தன்றோ பல நுட்பமான கிளை ராகங்களில் கணக்கற்ற கீர்த்தனங்களை இயற்றிக் குவித்திருக்கிறார்கள்? ‘அநுக்ரஹ பலத்தினால் இயற்றினார்கள்’ என்ற கேவல சமாதானம் முற்றும் பொருந்துமா? தெய்வப் புலமை வாய்ந்த காளி தாஸர், கம்பர் முதலிய மஹாகவிகளும் ஓர் மொழியின் நுட்பங்களையும், யாப்பியலையும் கற்றறிந்தே, பிறகு கவித்வம் பெற்று விளக்கினவரன்றோ?’ இசையிலக்கணம் என்பத யாது? புதிதாகக் குறித்தவோர் ஆரோஹண அவரோஹணக் கிரமத்தில் ராகத்தைச் சிருட்டிக்கும் முறையும், அந்த ராகத்தில் கீதம், வர்ணம், கீர்த்தனைகளை இயற்றும் நுட்ப விதிகளும் எவை? இந்த விதிகளுக்கும், நமது ஸங்கீதத்தின் சுருதி நிலைகளுக்கும் சம்பந்த மென்ன? இவ்வாறெழும் சங்கைகளைத் தீரமாகவும் சாவதானமாகவும், எல்லை யற்ற பொறுமையுடனும் முயற்சியுடனும் ஆராய்ந்தவர், காலம் சென்ற ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள். காஷ்மீர தேசத்தவரும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான சாரங்கதேவர் இயற்றிய ஸங்கீத ரத்னாகரத்தில் கர்நாடக ஸங்கீதத்தின் சுருதிகள் 22 என்றும், 23 தந்திகள் அமையப்பெற்ற வீணையினால் அவைகளை நிர்ணயிக்கும் முறை யிதுவென்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன. பண்டிதர் அவர்கள் இந்த விஷயத்தை அதிநுட்பமாக ஆராய்ந்து, தமது கருணாமிர்தசாகரம் முதல் பாகத்தில் 24 சுருதிகளெனக் கொள்வதே தகுதியென்றும், அறிந்தோ அறியாம லோ நிகழும் ஸங்கீத சம்பிரதாயமும், இதை அநுசரித்தே யுள்ளதென்றும், பண்டைத் தமிழ்மக்கள் இவ்விதியை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாயியின் பன்னிரண்டு ஸ்வரங்களை 24 அலகுகளாக நிச்சயித்து ஸ்தாயியைப் பன்னிரண்டு ராசிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் பொருந்தும் ஸ்வரங்களைக்கொண்டு 24, 48, 96 என்ற நுட்ப சுருதிக் கணக்கில் ராகங்களைப் பெருக்கி அனுபவித்ததாகவும் எழுதியிருக்கிறார். இது விஷயத்தை அதிநுட்பமாய் ஆராய்ந்து நாம் அனுபவத்தில் பாடிக் கொண்டிருக்கும் இராகங்களைப் பிரித்து 2, 1, ½, ¼ போன்ற நுட்ப சுருதிகளை ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற அட்டவணைகளிற் பிரித்து அநேக இராகங்களில் வரும் நுட்பச் சுருதிகளைக் கருணாமிர்தசாகரம் முதல் புத்தகத்தில் பக்கங்களில் எழுதியிருக்கிறார். அவர் முடிவுகளை விவரமாகப் பரீக்ஷித்து, தகுந்தனவா அல்லவா என்று நிர்ண யிக்கும் ஒரு நூலையும் நான் இதுவரை பார்த்ததில்லை. இந்த சுருதி விஷயம் எப்படிப் போனாலென்ன? என்று புறக்கணிப்பது தவறென்றே எனக்குத் தோன்றுகிறது. இதற்குக் காரணங்களைக் கூறுகிறேன். நமது கர்நாடக ஸங்கீதம் பன்னிரன்டு ஸ்வர ஸ்தானங்களில் பழகப்பட்டு வந்தாலும் இவைகள் வெறும் ஸ்தூல நிதானங்களே யென்பதை யும், இவைகளால் மாத்திரம் ராகங்களின் நுட்ப நிலைகள் அறியப்படா என்பதையும் வித்துவான்கள் என்றும் ஒப்பவேண்டியவரே. இணை, கிளை, பகை, நட்பு என்பவைகளைப் பற்றி சிலப்பதிகாரம், கல்லாடம், தண்டி யலங்காரம், இசைமரபுடையார் முதலான பண்டைத் தமிழ் நூல்களில் சொல்லப்படும் முறையை அனுசரித்து யாவரும் அதினால் பிரயோ ஜனமடையுமாறு இசை இலக்கணத்தைப் (ஸ்புடம்) பற்றி பண்டிதரவர்கள் இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில், விஞ்ஞான முறையில் சுருதிகளின் நுட்ப பேதங்களை விளக்குமோர் நூல் வெளிவந்துள்ளது. (A Grammar of South Indian (Karnatic) Music By C.S. IYER.) ஒரே ஸ்வரஸ்தானம், ராகத்துக்குத் தக்கபடி தீவ்ரமாகவோ கோமளமாகவோ மாறுவது அநுபவப் பிரஸித்தம். பல உதாரணங்கள் கூறலாம். வராளி, கைகவசி போன்ற ராகங்களில் பிரதிமத்திமம் தீவ்ரமாக ஒலிப்பதும், (வராளி மத்திமம் என்ற வழக்குச் சொல் காண்க.) பியாகடையில் நிஷாத மத்திம ஸ்தானமும், ஆரபி சாமா போன்ற ஒத்த ராகங்களில் சதுச்ருதி ரிஷப ஸ்தான பேதத்தால் ராகச்சாயை மாறுவதும், மாயாமாளவ கௌள கல்யாணி ராகங்களில் காகலி நிஷாத ஸ்தானபேதமும், அநுபவத்தில் விளங்குவன. இவை விரிக்கின் பெருகும். கரஹரப்பியா, ஹரிகாம்போதி ராகங்களை உத்தராங்கத்திலேயே பாடி (பதநிஸ) சாயா பேதம் விளக்க முடியுமல்லவா? பன்னிரண்டு ஸ்வரங்களால் நமது ஸங்கீதம் ஒருநாளும் கட்டுப்படாது. ஏதோவொரு இசை இலக்கணத்தைக் கொண்டுதான், ஸ்ரீ தியாகராஜர் போன்ற ஸங்கீத மஹான்கள் ஒரு ஆரோஹண அவரோஹணக் கிரமத்தில் ஒரு மிகச் சிறிய மாறுபாட்டாலும் புது சஞ்சாரங்களை நிர்ணயித்து, கீர்த்தனைகளை இயற்றியிருக்கவேண்டும். இப்பொழுது பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தக் கருணாமிர்தசாகரம் இரண்டாம் புத்தகம் இந்தப் பரம ரஹஸியத்தை உலக நன்மைக்காக வெளிப்படுத்த முன் வந்துள்ளது. இதில் வெளியிடப்பட்ட ஸ்புடம் முறை வேறெந்த நூலிலும் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வித்வான்கள் முக்கியமாக இணை, கிளை, நட்பு, பகை (வாதி, ஸம்வாதி, அநுவாதி, விவாதி) ஸ்வரங்களின் உறவுகளையும் ஜீவசுரம், அமுதவைப்பு, பாடலமுதம் என்ற குறிப்புக்களையும், ‘ஸ்புடம் செய்யும் விதம்’ என்ற விதிகளையும், ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இறுதியில், மாயாமாளவ கௌளை, வச்சிரகாந்தி, (ஆபேரி) போன்ற பிரஸித்த ராகங்களிலும், கனகாங்கி (ஐ), தர்மவதி (59), பவப்பிரியா (44) போன்ற அபூர்வ மேளங்களிலும், நாகபூஷணி, கருணாகரி போன்ற அபூர்வ கிளை ராகங்களிலும், ஆனந்தரூபா, அபிராமம், ஞானப்பொன், சுந்தராங்கி போன்ற புது இராகங்களிலும் ஸ்புடத் தொடர்களும், கீதம், கீர்த்தனைகளும் இயற்றப் பட்டுள்ளன. இந்த நூலின் உயிர்நிலையான விஷயத்தின் அருமையையும் மேன்மையையும் கூறின் மிக விரியும். இந்த நூலில் காணப்படும் கீதம், கீர்த்தனை, முதலியவைகளை இயற்றிய ஸ்ரீமதி மரகதவல்லி துரைபாண்டியன் அம்மையார் அவர்கள், தமது தந்தையார் காலத்திலேயே உயர்குருவினிடம் இசையில் தகுந்த சிஷை பெற்று, நிச்சயமான நுட்ப சுருதிஞானமும் இந்த ஸ்புட முறையைக் கையாளும் ஆற்றலும் அடைந்தவர். இதை நான் அனுபவத்தில் கண்ட பின்பே, இந்த முறையின் உயர்வு ஒருவாறு எனக்குப் புலனாகியது. இன்னும் ஒரு மொழி. இதை இயற்றியவர் தமது சித்தாந்தத்தை யாவரும் ஒப்புக்கொள்ளுமாறு கேட்கவில்லை. வித்வான்கள் இதை ஆழ்ந்து, ஆராய்ந்து, உண்மை கண்டு, ஒப்பவோ மறுக்கவோ வேண்டுமென்றே விரும்பினார். அவர் தமது காலத்தில் ஸங்கீதத்தின் மறுமலர்ச்சியை இன்றுபோல் பார்க்கவில்லை. இன்றாவது, விஷயம் கடினமானதென்று திரஸ்கரம் செய்யாமல் வித்வான்கள் இதனுட் புகுந்து, 24 சுருதி பேதங்களை அஸ்திவாரமாகக் கொண்ட இந்த ஸ்புட முறையைக் கண்டு களிப்பதே, சாந்தியடைந்த பண்டிதரின் ஆத்மாவிற்கு மகிழ்ச்சி யளிப்பதாகும். அவரால் சங்கீத உலகத்தவர்க்கு ஏற்படும் பெரு நன்மை யாதெனில், ஸங்கீத ஞான முள்ள பலரும் இந்த ஸ்புடம் செய்யும் முறையினைக் கண்டு தெளிந்து, புதிய புதிய ராகங்களிலும் பல அபூர்வ கிளைராகங்களிலும் இறைவனை வழிபட்டு, நாதரூபமாய் ஆனந்த நர்த்தனமிடும் பரம் பொருளை கீர்த்தனா மலர்களினால் அர்ச்சிப்பதேயாகும். தஞ்சை, M. அனந்தநாராயணன் 15.2.1946 கடவுள் துணை கருணாமிர்த சாகரம். இரண்டாவது புத்தகம். இராகங்களைப் பற்றியது. முதல் பாகம். இராகங்களின் தொகையும் அவற்றின் விபரமும். 1. இரண்டாம் புத்தகத்தின் உள்ளுறை. பூவுலகையும் அவைகளிலுள்ள யாவையும் தமது சொல்லால் உண்டாக்கி அவையாவற்றையும் காத்து நடத்திவரும் கர்த்தனின் கிருபை யால் கருணாமிர்த சாகரம் இரண்டாம் புத்தகம் ஆரம்பிக்கப் பெற்றோம். எழுவகைத் தோற்றத்திலமைந்த ஏழு சுரங்களையும் அவைகள் சட்ஜம, பஞ்சம முறையாய் ஏழாவது ஏழாவதாய், இணை இணையாய், ஒரு ஸ்தாயியில மைந்த பன்னிரு அரைச்சுரங்களையும் அவைகளின் உட்பிரிவான இருபத்து நான்கு, நாற்பத்தெட்டு, தொண்ணூhற்றாறு போன்ற நுட்பமான சுருதிகளையும் அவைகளின் கணக்கையும் அவைகள் வழங்கிவந்த இராகங்களையும் பற்றிச் சில முக்கியமான குறிப்புகளை கருணாமிர்த சாகரம் முதற்புத்தகம் அல்லது கருணானந்தர் பொற்கடகத்தில் சுருக்கமாகப் பார்த்தோம். கருணானந்தர் பொற்கடகத்தில் பூர்வ தமிழ்மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழ் என்னும் சங்கீதத்திலுள்ள சுரம், சுருதிகள், நுட்ப சுருதிகளாகிய இவைகளே எக்காலத்திலும், எத்தேசத்தவரும் அனுஷ்டிக்கக் கூடிய மேலான முறையென்று ருசுப்படுத்துவதும் அம்முறையில் சுரம், சுருதிகளுக்கும், நுட்ப மான சுருதிகளுக்கும் கணக்குச் சொல்வதும் அக்கணக்கின்படி தற்கால அனுபவத்திலிருக்கும் இராகங்களை மெய்ப்பித்துக் காட்டவேண்டியதும் அதோடு சுருதிகளைப் பற்றி பலர் சொல்லும் அபிப்பிராயங்களையும் கணக்கினால் தவறுதலென்று ருசுப்படுத்திக் காட்ட வேண்டியதும் முக்கிய வேலையாயிற்று. பொற்கடகத்தின் பொருளைப் பூரணமாய்க் கவனிப்போமானால் பூர்வ தமிழ் மக்களே மக்களில் முதல்வரென்றும் அவர்கள் பேசிவந்த மொழியே முதல் மொழியென்றும் அம் முதுமொழி இயல், இசை, கூத்து என்னும் முப் பகுதியுடையதாய் இசைத்தமிழ் என்னும் சங்கீதம் பாஷையின் ஒரு அங்கமா யிருந்ததற்கு ஏற்பச் சுருதிகள் அமைப்பதிலும் இராகங்கள் உண்டாக்கும் முறையிலும் மற்றும் அதைச் சேர்ந்த ஆலாபம், அவிநயம், தாளம் முதலிய வைகளிலும் யாழ், குழல், வங்கியம், தண்ணுமை முதலிய வாத்தியக் கருவிகளிலும் தமிழ் மக்களே முதன்மை பெற்றிருந்தார்களென்றும் நமக்குப் புலப்படாமல் போகாது. எழுத்தில்லாமல் பேச்சுப்பழக்கத்தில் மாத்திரம் நிலைத்திருக்கும் பாஷை காலக்கிரமத்தில் பல பாஷையின் வார்த்தைகள் கலந்து இனந் தெரியாமல் போகும் என்பதை நாம் அறிவோம். அப்பாஷைக்கு எழுத்துண்டாய் அதற்குரிய வார்த்தைகளின்படி இலக்கணம் அமைந்து ஒழுங்குபடுமானால் அதன் பின் பலர் பலவிதமாய் நினைக்கவும், சொல்லவும் கூடிய ஒழுங்கீனம் உண்டாகமாட்டாது என்பதையும் அறிவோம். இதுபோலவே இராகங்களில் வழங்கிவரும் சுரம் சுருதிகள் இன்னவையென்று அறிந்து அவைகளுக்கேற்ற விதமாய் அவைகள் பொருந்தும் முறையில் ஒரு இராகம், கீதம், கீர்த்தனம் முதலியவை செய்யும் பொதுவிதியையும் தெரிந்து கொண்டால் மாத்திரம் தென்னிந்திய சங்கீதம் கலப்பின்றி நிலையுள்ளதாகும். பொற்கடகத்தில் ஒரு ஸ்தாயியில் பாடப்படும் சுரங்கள் ஏழு என்றும், ச-ப, ச-ம முறையாய் ஏழாவது ஏழாவதாய், ஐந்தாவது ஐந்தாவதாய் உண்டாகும் சுரங்கள் பன்னிரண்டு அரைச்சுரங்கள் என்றும், ஒரு ஸ்தாயியில் வழங்கும் பன்னிரண்டு அரைச் சுரங்களை இரண்டு இரண்டு அலகாகப் பிரித்து இருபத்து நான்கு சுருதிகளாகவும், அவைகளையும் பாதி பாதியாகப் பிரித்த 48, 96 போன்ற நுட்ப சுரங்களில் இனிமை பெற பூர்வ தமிழ் மக்கள் பல பண்களைப் பாடி பகவானை ஆராதித்து வந்தார்களென்றும் சுரம், சுருதிகளில் எவ்விதமான சந்தேகமும் உண்டாகாதபடி மிகத் தெளிவுறச் சொல்லி யிருந்தார்களென்றும் பார்த்தோம். அவைகளின் கணித முறையையும் அனுபவ முறைகளையறியும் திருஷ்டாந்தங்களையும் போதுமான அளவு பார்த்திருக்கிறோம். இதைப்போலவே 2/3, 2/3 ஆய்ப் போவதினாலுண்டாகும். 4/5, 5/6, 5/8, 9/10 போன்ற பின்னங்களில் கிடைக்கும் natural scale என்று சொல்லப் படும் unnatural scale ஒரு காலத்திலும் சங்கீதத்திற்கு வழங்கி வந்ததில்லையென்றும் அவைகள் ஒருநாளும் வழக்கத்தில் வரமாட்டா வென்றும் மிகத் தெளிவுறக் காண்போம். 2/3, 3/4 முறையாய் சங்கீதத்திற்கு சுரம், சுருதிகள் சொல்வோரின் அபிப்பிராயங்களை ஒன்றாகச் சேர்த்துப் பொற்கடகத்தில் (கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம்) 4 அட்டவணைகளில் யாவரும் இலகுவாய் அறிந்து கொள்ளும்படி கொடுத்திருக்கிறோம். மேலும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளுண்டென்று சொல்வோரின் கொள்கையைப் பல நியாய வழியாகவும் கணித மூலமாகவும் எடுத்துக் காட்டிக் கண்டித்திருக்கிறோம். இவைகள் சுருதியைப் பற்றித் தெளிவான அறிவையுண்டாக்குமென்று நம்புகிறோம். இதைப் போலவே ஒரு ஆரோகண அவரோகணத்தில் இராகம், கீதம், கீர்த்தனங்கள் செய்யத் தெரிவிக்கும் முறையும் மிக முக்கியமானதென்று எனக்குத் தோன்றுகிறது. என் பாஷைக் காரரும் என் தேசத்தவரும் அன்றி, உலகத்தவர் யாவரும் இம்முறையை அறிந்து சங்கீதத்தின் உயர்வை உண்மையில் கண்டு ஆனந்தப்பட வேண்டு மென்று விரும்பியே இதை எழுதுகிறேன். ஒரு ஆரோகண அவரோகணத்தில் இராகம் எழுதும் முறை இதுவரை யிலும் எங்கும் சொல்லப்படாததாலும் எவரும் அறிந்திராததாலும் இது அதிக உபயோகமாயிருக்குமென்று எண்ணுகிறோம். ஒரு ஆரோகண சுரங்களில் அச்சுரங்களுக்குரிய பொதுவிதியின்படி ஒரு இராகம் உண்டாக்கவும் இராக சஞ்சாரத்திற்கு வழிகாட்டும் கீதம் உண்டாக்கவும், அதிலிருந்து கீர்த்தனங்கள் முதலியவையுண்டாக்கவும் பூர்வம் முதல் தமிழ்மக்கள் திறமையுடையவர்களாயிருந்தார்களென்று பல உருப் படிகளினால் காண்கிறோம். அப்படியிருந்தாலும் அவைகள் இசையில் தேர்ந்த அவதார புருஷர்களால் மாத்திரம் செய்யப்பட்டிருக்கிறதாகச் சொல்லப் படுகிறது. இதனால் சங்கீத வித்தைக்கு ஆதாரமான முதல் பாடம் அதாவது கீதம் மற்றவர்களால் பாடம் பண்ணப்பட்டு வந்ததேயொழிய அதன் செய்முறை இன்னதென்று ஒருவரும் அறிந்துகொள்ள ஏதுவில்லாமல் போயிற்று. அதனால் அபூர்வமான சில இராகங்கள் நாளடைவில் மறைந்தும் மலினப்பட்டும் வருகின்றன. ஆரோகண அவரோகணங்களில் கீதங்கள் கீர்த்தனங்கள் எழுதும்படியான ஒரு முறை நமக்கு இருக்குமானால் பூர்வ இராகங்கள் காலக்கிரமத்தில் மறைந்து போகமாட்டா. சங்கீதமே இன்னதென்று தெரியாத சாதாரண அறிவுடைய ஒருவன் சங்கீத வித்வான்கள் கொண்டாடும்படியான ஒரு கீதத்தை திருத்தமுற எழுதக்கூடிய ஒரு முறை யிருப்பது சங்கீத சாஸ்திரத் திற்கு உயிர் நிலையான ஒரு உயர்ந்த இடமென்று நாம் எண்ணுகிறோம். எப்படி சுரஸ்தானங்களும் சுருதி ஸ்தானங்களும் நிலையுறச் சொல்லாமல் போனால் ஒரு இராகமில்லையோ, அது போலவே கீதம் எழுதும் முறை தெரியாமல் போனால் சங்கீத சாஸ்திரமே உயிரற்றதாகுமென்று திட்டமாகச் சொல்லலாம். கீதம் எழுதும் சரியான முறையை நாம் தெரிந்துகொள்வோமானால் இதன் முன்னுள்ள கீதங்கள், நெடுநாள் அனுபோகத்தைக்கொண்டு மிகுந்த பிரயாசையுடன் செய்யப்பட்டிருப்பதாகவும் அவைகளில் சிலபாகங்கள் விடப்பட்டிருப்பதாகவும், விடுபட்ட பாகங்களைக் காட்டுவதற்கு பல கீதங்கள் எழுதப்பட்டதாகவும் காண்போம். அதோடு ஒரு இராகத்தின் சீவசுரம் இன்னதென்று சங்கீதம் அதிகம் தெரியாதவர் கூடக் கண்டு சொல்லக் கூடியதான ஒரு முறையையும் கண்டிருக்கிறோம். பதினாறுக்குப் பதினாறு என்ற பெருக்கல் வாய்ப்பாட்டில் ஆறு எண்களின் பெருக்குத் தொகையைவிட்டு பத்துப் பெருக்குத் தொகையை வைத்து ஒரு வாய்ப்பாடும் மற்றொருவர் முந்தினவர் விட்ட ஆறு தொகையில் சில சேர்த்து மற்றும் பத்துத் தொகையில் ஒரு வாய்ப்பாடும் இப்படியே ஒருவர் பின் ஒருவராக வித்தியாசமான எத்தனையோ வாய்ப் பாடுகள் உண்டாக்கலாம். ஆனால் பதினாறு பெருக்குத் தொகையையும் பூரண மாய்த் தெரிந்த ஒருவன் இவைகள் சில தொகைகள் குறைந்துள்ளனவென்று சொல்வான். அதுபோலவே கீதம் எழுதத் தெரிந்தவனுக்கு அந்த இராகத்திற் குரிய சஞ்சாரமெல்லாம் வருவதைக் கண்ட பின் இதற்கு முன்னுள்ளவை சற்றுக் குறையுடையவை என்று காண்பான். ஒரு இராகத்திற்கு ஏழு எட்டு கீதம் படிக்கும் சிரமம் நீங்கி ஒரு கீதத்திலேயே ஒரு இராகத்திற் குரிய பூர்ண சஞ்சாரம் அறிவான். இம் மேலான ஒரு முறை எந்த தேசத்தவரின் சங்கீத சாஸ்திரத்திற்கும் இது வரையும் இருந்ததில்லை என்று துணிந்து சொல்லலாம். இம் முறைக் குரிய ஆதார விதிகள் பூர்வ தமிழ் நூல்களில் அங்கங்கே வெகு சுருக்கமாகக் காணக்கிடக்கின்றன. என்றாலும் அவைகளின் பொருளை அறிந்து அனுபவ முறை தெரிந்து அனுஷ்டானத்துக்குக் கொண்டு வரக் கூடியதாக இல்லை. மிகுந்த அனுபவமுடையவர்களுக்கு மாத்திரம் ஒருவாறு விளங்கக் கூடியதே யொழிய மற்றவர்கள் இலேசில் அறிந்துகொள்ளக் கூடியதாயில்லை. சங்கீத சாஸ்திரத்திற்கு உயிர் போன்ற இம்முறையை தெய்வாதீனமாய் நான் கண்டுபிடித்தேன் என்று சொல்வதைப் பெரியோர் மன்னிக்கும்படி மிகவும் கேட்டுக்கொள்ளுகிறேன். என் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் ஒழிந்த நேரங்களில் சொற்ப சங்கீத அப்பியாசம் செய்து வைத்த நான் அவர்களுக்கு இலேசாகத் தோன்றும்படி சங்கீத விஷயமாய் சில எழுதி வந்தேன். சங்கீத சாஸ்திரத்தில் வழங்கும் சில அருமையான இராகப் பிரஸ்தாரங்கள், பல்லவிப் பிரஸ்தாரங்கள், மேளக் கர்த்தாவின் விபரங்கள், ஒரு ஸ்தாயியில் இருபத்து நான்கு சுருதிகள் முதலியவைகளைப் பற்றி விசாரித்து எனக்குத் தெளிவாகத் தெரிந்தவற்றை எழுதிக் கொண்டு வந்தேன். இவ் விஷயங்களில் அரிகேசவநல்லூர் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்களும், தஞ்சை, வீணை, மகா-ராச-ராச-சிறி வேங்கடாசலம் ஐயர் அவர்களும் அப்போதைக்கப்போது உதவியாயிருந் தார்கள். இப்படிப் பல வருஷங்கள் வேலை செய்தும் என் மனது சங்கீத சாஸ்திரத்தின் விஷயத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஒரு ஆரோகண அவரோகணத்தில் இராக சஞ்சாரம் எழுதவும், கீதம் எழுதவும் கீர்த்தனம் எழுதவும் கூடிய முறை வந்தாலொழிய சங்கீத சாஸ்திரத்தின் முடிவைக் கண்டதாக எண்ணக்கூடாதென்ற அறிவு அடைந்தேன். பலமுகமாக பல சங்கீத வித்வான்களிடத்திலும் விசாரித்தேன். கீதம் எழுதும் முறை, இராகம் எழுதும் முறை, தெரிந்தவர்களிருக்கிறார்களா என்று பல நாள் விசாரித்தேன். அவ் விஷயத்தில் எவ்விதமான துப்பும் சொல்லக் கூடியவர்களை நான் பார்க்கவில்லை. இராக சஞ்சாரத்திற்கு சுருக்கம் எழுதுவதைப் பற்றி விசாரித்த பொழுது சிலர் ‘இவருக்கு சங்கீதப் பயித்தியம் பிடித்துவிட்டது’ என்று பரிகாசம் செய்தார்கள். கூடவே யிருந்து கவனித்த வீணை வேங்கடாசலம் ஐயர் அவர்கள் ‘ஏழு கடலுக்கும் எல்லை சுலபமாகப் போட்டு விடலாம். ஏழு சுரங்களில் பாடப்படும் ஒரு இராகத்திற்கு எல்லை கட்டிச் சொல்வது கூடிய காரியமல்ல’ என்று சொன்னார்கள். மற்றும் சிலர் ‘இவருக்கு முன் பின் சங்கீதம் ஒன்றுந் தெரியாது. ஏதோ மனதில் நினைத்துக்கொண்டு இப்படி உழைக்கிறார்’ என்று பரிகாசம் செய்தார்கள். இப்படி யிருக்கையில் மைசூர் வைணீக சிகாமணி மகா.ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்கள் தஞ்சைக்கு வந்தபோது இவ் விஷயத்தைப் பற்றிப் பல குறிப்புகள் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் மற்ற யாவையும் ஒப்புக் கொண்டாலும் கீதம் எழுதும் முறையைக் கேட்ட மாத்திரத்தில் ‘பரம்பரை யாய்ச் சங்கீதத்திலேயே சீவனம் பண்ணும் எங்கள் ஞாபத்திற்கு வராத அநேகக் காரியங்களைச் சொல்லுகிறீர்கள். அவைகள் நடக்கக் கூடிய காரியங்கள் என்று நான் நினைக்கவில்லை. தாங்கள் வீண் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லி விட்டு ரயிலுக்குப் போகும்பொழுது அவரோடு ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருந்த பென்ஷன் டிப்டி போஸ்ட் மாஸ்டர் எனது சிநேகிதர் கிருஷ்ணசாமி ஐயரிடம் ‘பண்டிதர் அவர்களுக்கு சங்கீதப் பயித்தியம் பிடிக்கும்போலத் தோன்றுகிறது. அவர் கேட்கிற கேள்விகளைப் பார்த்தால் ஆச்சரியமாகத் தோன்றுகிறது. ஆனால் நியாயமாகவு மிருக்கிறது. வெயில் காலம் அதிகமாயிருப்பதனால் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லிப் போனார்கள். இப்படிப் பல வழியில் விசாரித்தும் அனுகூலமான ஒரு குறிப்பை யாவது நான் காணவில்லை. ஆனால் ‘இப்படி ஒரு முறை யிருக்கவேண்டும்; இருந்தால் மிகப் பிரயோஜனமாயிருக்கும்’ என்ற எண்ணம் மாத்திரம் என் மனதை விட்டு ஒரு நிமிஷமும் நீங்கவில்லை. மேலும் என் அபிப்பிராயத்தை யொத்த சில முறைகளாவது எங்கே யாவது இருக்கலாமென்று நினைத்து சுதேசமித்திரன், மதுரைத் தமிழ்ச் சங்கத்து செந்தமிழ், ஸ்டான்டர்டு முதலிய பேப்பர்களுக்கும் மேற்றிசைக்கும் வியாசங்கள் எழுதியிருந்தேன். அவற்றுள் பல குறிப்புகளில் 5-வது குறிப்பு வருமாறு:- 5. ஒவ்வொரு இராகத்தின் சஞ்சாரக்கிரமம் அறிவதற்கு கீதம் ஆதார மென்கிறார்களே. அப்படிப்பட்ட கீதம் இப்போதுண்டாக்கக் கூடியவர்கள் இருப்பார்களானால் பின்வரும் அலகுள்ள சுரங்களில் தமக்குப் பிரியமான ஒரு தாளத்தில் கீதம் அமைத்துக் கீதம் அமைக்கும் விதத்தையும் என் சொற்ப அறிவுக்குத் தெளிவாக விதியுடன் சொல்ல அநுக்கிரகிப்பார்களா? 24-வது மேளம் வருணப்பிரியையில் ஜன்னியமான நவநீதபஞ்சமம் சகமத பதநிசா சநிபமரிசா. ரி-க 4 சுருதி; த-நி 6-வது சுருதி; சுத்தமத்திமம். மற்றும் அவ்வியாசம் முழுமையும் பொற்கடகத்தில் காண்க. இந்தியாவிலிருந்தாவது, மேற்றிசையிலிருந்தாவது என் விருப்பத்திற்குத் தகுந்த மறுமொழி கிடைக்கவில்லை. இராகம் கண்டுபிடிக்கும் முறையைக் கொண்டு புதிய கீர்த்தனங்களும் கீதங்களும் செய்து பிள்ளைகள் படிப்பதாகவும் மற்றவர்களும் புதிய கீர்த்தனங்கள் செய்து படிப்பதாகவும் சிம்ம சொற்பனம் கண்டு கொண்டிருந்தேன். இப்படிப் பல நாள் செல்லுகையில் ஒரு நாள் அரிகேசவ நல்லூர் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்களும், வீணை மகா-ராச-ராச-சிறி வேங்கடாசலம் ஐயர் அவர்களும் வீணை வாசித்துக் கொண்டிருந்த எனது மூத்த குமாரத்தி அன்னபூரணியம்மாளும், நானும் சங்கீத விஷயமாய்ப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இராகங்களை உண்டாக்குவதற்கு உதவியான ஒரு முறை தெய்வாதீனமாய் என் மனதில் தோன்றிற்று. உடனே மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்களை எழுதும் படியாகக் கேட்டுக்கொள்ள அம் முறைகளில் ஒன்றையும் விடாமல் பூரணமாய் எழுதினார்கள். இவைகள் இதற்கு முன் பின் எனக்குத் தெரியாதவைகளா யிருந்ததனால் மகா-ராச-ராச-சிறி வேங்கடாசலம் ஐயர் அவர்களும் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்களும் மிகுந்த ஆச்சரியப்பட்டு எழுதப்பட்டவைகளில் சொல்லியிருக்கும் முறைப்படி இராகம் பாடிப்பார்த்து அவை மிகவும் சரியாயிருக்கின்றனவென்று சந்தோஷமடைந்து அம் முறையே மற்றும் சில இராகங்களைச் செய்து பார்க்கையில் அவைகளும் சரியாயிருப்பதாக அனுபவத்தில் கண்டு அடைந்த சந்தோஷத் திற்கு அளவில்லை. ‘இன்று தான் சங்கீதத்திற்கு உயிர் பிறந்தது, இந்த இடம் தான் சங்கீதம் பிறந்த இடம்’ என்று மிகவும் கொண்டாடினார்கள். இம் முறையை மற்ற யாருக்கும் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். தங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்கும்பொழுது மகா-ராச-ராச-சிறி வேங்கடாசலம் ஐயரவர்கள் இதை ஒருவருக்கும் சொல்லக்கூடாதென்றும் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்கள் உலகத்திற்குச் சொன்னால் மிக உபகாரமாயிருக்குமென்றும் சொன்னார்கள். அதன் மேல் உலகத்தவருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றே நினைக்கிறேன். ஆனால் இன்னும் இதோடு கவனிக்க வேண்டிய சில காரியங்கள் இருக்கின்றனவென்று காண்கிறேன். நான் பூரணமாய்க் கண்டு வெளிப் படுத்தும் வரைக்கும் தாங்கள் இதை வெளிப்படுத்தாதிருக்கும்படி உறுதி சொல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அப்படியே அவர்களும் மிக சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார்கள். 1909-ஆம் வருஷத் துவக்க முதல் இதுவரையும் இராகங்களுக்குரிய முறைகளை எழுதுவதில் முயற்சி எடுத்து வந்தேன். பல அம்சங்களில் சில அம்சங்கள் விடப்பட்டுப் போனதாகக் கண்டு அப்போதைக்கப்போது திரும்பத் திரும்ப எழுதும் வேலை இரட்டித்தது. சில தூரம் அதாவது 700 இராகங்கள் எழுதின பின் மைசூர் வைணீக சிகாமணி மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்கள் தஞ்சையில் என் வீட்டிற்கு வந்த சமயத்தில் கீதங்களைப் படித்துக் காட்டினேன். அவர்களும் பல இராகங்களுக்கு கீதம் படிக்கும்படி கேட்டு அவைகள் முற்றிலும் சரியா யிருக்கிறதென்று கொண்டாடினார்கள். அதன்பின் ‘இப்படியெல்லாமிருந்தாலும் ஒரு வித்வானிடத்திலிருந்து தானே இவை கற்றுக்கொள்ள வேண்டியதா யிருக்கிறது’ என்று சொன்னார்கள். எதனால் அப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்க, ‘ஒரு இராகத்திற்கு சீவசுரம் இன்னதென்று தெரிந்தால் மாத்திரம் இவைகள் பிரயோஜனப்படும். இல்லையானால் படிப்பது கஷ்டமாகும். சீவ சுரம் கண்டு பிடிக்கும் முறை யிருந்தால் அப்போது மிகப் பிரயோஜனமா யிருக்கும்’ என்று சொன்னார்கள். இதன் முன் சீவசுரம் கண்டு எழுதும் நினைப்பில்லாதிருந்தாலும், இராகங்கள் செய்யும் முறையில் வரும் சில முறைகளைக் கவனித்தால், அதையும் கண்டுபிடித்துச் சொல்லலாமென்று எண்ணமுண்டாக, அவர் முன் கண்டுபிடித்து சொல்லலாம் என்று பதில் சொன்னேன். அவர் உடனே ஒரு இராகத்தைச் சொல்லி அதற்கு சீவ சுரம் சொல்லும்படி கேட்டார். கணக்குப் பார்த்து சீவ சுரம் இன்னதென்று ஒரு கடிதத்தில் குறித்து அவர்களையும் குறிக்கும்படியாகச் சொல்லி முடிவில் ஒத்துப் பார்த்து சந்தோஷ மடைந்தாலும், திருப்தியடையாமல் இன்னொன்று, இன்னொன்றாக ஏழு இராகங்களுக்கு சீவ சுரம் கேட்டு, அவைகள் யாவும் சரியாயிருக்கக் கண்டு திடீரென்று தான் எழுந்திருந்து, மேல் வஸ்திரங்களைத் தாழ்த்தி தன் இரு கைகளையும் குவித்துக்கொண்டு இது மகான்களாலும், இராஜாக்களாலும், நடக்கவேண்டிய காரியம் இதை தாங்கள் சீக்கிரம் அச்சிட்டு எங்கள் கண்ணுள்ள பொழுதே கொடுக்கவேண்டும்’ என்று பகவானைப் பிரார்த்தித்து பிரியமொழி பல சொன்னார்கள். நானும் பிரதி நமஸ்காரம் செய்து தெய்வ கிருபைக்காக நன்றி பாராட்டினேன். அதன்பின் என்னிடத்திற்கு வரும் சிறந்த வித்வான்களுக்கு நேரில் பாடிக் காட்டி அவர்கள் அபிப்பிராயம் அறிந்து இவை உலகத்திற்கு பிரசித்தப் படுத்தக் கூடியவை யென்று தைரியங் கொண்டேன். மைசூர் வைணீக சிகாமணி மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்களும் விஜயநகரம் வைணீக சிரோமணி மகா-ராச-ராச-சிறி வேங்கடரமணதாஸ் அவர்களும் மைசூர் வைணிகர் மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் B.A.அவர்களும் அரிகேசவநல்லூர் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்களும் உத்தமமான புதிய முறையென்று கொண்டாடியிருக்கிறார்கள். அதில் மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் அவர்கள் அபிப்பிராயம் பின் வருமாறு. Indian Music Journal. By H..P. Krishna Rao, B.A., Vol. I.No.5 1911 Page 102, 103. “Two days - 25th and 26th were spent at Tanjore in the company of Rao Sahib Abraham Pandither avl. The Rao Sahib is a very popular gentleman both by his profession and good nature. He is an ardent admirer of music and the treatise on music that he is writing is likely to be of immense good to the students only if he would carry out the plans he has chalked out. All his children are well versed in music, eastern as well as western, and it is a great pleasure to every friend of the Pandit to listen to the sweet singing of his children in solo or in concert. One admirable work that he is engaged in is the laying down of a set of rules for enabling every stuent of music to compose Gitams, Swarajatis and other Pieces. மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் B.A.அவர்களுடைய இந்தியன் மியூசிக் ஜர்னல் Vol. I. No.5. 1911 பக்கம் 102, 103. “25ஆம், 26 ஆம் தேதிகளாகிய இரண்டு நாட்களையும் தஞ்சாவூரில் Rao Sahib Pandither அவர்களுடன் கழித்தோம். தன்னுடைய தொழில் மூலமாயும் சற்குணத்தின் மூலமாயும் Rao Sahib அவர்கள் யாவராலும் நன்கு மதிக்கப் பட்டார்கள். சங்கீதத்தில் அவர்களுக்கு அத்யந்த பிரீதி. இப்போது அவர்கள் எழுதிக் கொண்டு வரும் சங்கீத நூலானது அவர்கள் மனதில் நினைத் திருக்கிற பிளான்படி முடிவடையுமானால் சங்கீதம் படிப்பவர்களுக்கு அதிகப் பிரயோசனமுள்ளதாய் இருக்கும். அவர்கள் குமாரர் குமாரத்திகள் எல்லாரும் மேற்றிசை சங்கீதத்திலும், கீழ்த்திசை சங்கீதத்திலும் தேர்ந்தவர்களானதால் அவர்கள் இன்னிசையோடு தனித்துப் பாடுவதையும், எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுவதையும் அவர்கள் சிநேகிதரெல்லாரும் கேட்டு ஆனந்திக்கும் படியான சிலாக்கியம் இருக்கிறது. இப்போது அவர்கள் செய்து வரும் வேலையின் அருமையான பாகம் என்னவென்றால் சங்கீதம் கற்கும் ஒவ்வொருவரும் தானாய் கீதம், ஸ்வரஜதி முதலியவற்றை எழுதும்படிக்கான விதிகளை எழுதிக்கொண்டு வருவதே.” ஒரு இராகத்திற்கும் மற்றொரு இராகத்திற்கும் சொற்பமாக ஒரு சுரம் வித்தியாசமிருந்தாலும் அது ஒன்றினாலேயே இராகம் முற்றிலும் பேதமாகு மென்பதை நாம் அறிவோம். சங்கராபரணத்திற்கும் கல்யாணிக்கும் உள்ள சுரத்தில் எல்லாம் ஒன்று போலிருந்தாலும், சங்கராபரணத்திற்கு சுத்த மத்திமமும், கல்யாணிக்குப் பிரதி மத்திமமுமாக மத்திமம் மாத்திரம் சற்று பேதப்படுவதனால், இராகத்தின் அம்சம் முற்றிலும் பேதப்படுகிறது. இது போலவே ஒன்று, இரண்டு, மூன்று முதலிய சுரங்களை விட்டு பாடுவதாலும் அவைகள் முன் பின்னாக வருவதானாலும் இராகங்கள் அதிகப் பேதத்தை அடையும். அதோடு ஆரோகணத்தில் ஒரு விதமாகவும், அவரோகணத்தில் வேறொரு விதமாகவும் சுரங்கள் வந்து இராகங்கள் அனந்த விதமாம். பூர்வ தமிழ் மக்கள் பன்னீராயிரம் ஆதி இசைகளைப் பாடிக்கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவைகள் வர வர, பழக்கத்திலில்லாமல் குறைந்து சுமார் ஆயிரத்து சொச்சம் இராகங்களுக்கு மாத்திரம் தற்காலத்தில் ஆரோகண அவரோகணங்கள் தெரிகின்றன. அவைகளில் சுமார் 100 இராகங்கள் வரைக்கும் பெரிய வித்வான்களுக்குள் பழக்கத்திலிருக்கின்றன. ஆகையால் தற்காலத்தில் ஆரோகண அவரோகணம் காணப்படும் எல்லா இராகங்களுக்கும் இராக முறை எழுதுவது மிகுந்த பணச் செலவும் பிரயாசையுமான காரியமாம். இராக முறைகளைப் பற்றி முதல் முதல் எழுத நினைத்து ஆயத்தம் செய்து வந்த நான் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தில் சுருதிகளின் விவாதத்தை முன்னிட்டு உண்டான சந்தேகங்களை நீக்க சுருதிகளைப் பற்றி முதற் புத்தகமாக எழுதவேண்டியதாயிற்று. அதனால் இது இரண்டாம் மூன்றாம் புத்தகங்களாக வெளியிட வேண்டியதாயிருக்கிறது. இராகங்களைப் பற்றிய முறை எழுது முன் வரக்கூடிய இராகங்கள் எத்தனை என்று அனுபோக பூர்வமாய்க் கணக்கிட்டு அறிந்துகொள்வது நமக்கு நல்லது. இப்படிப்பட்ட விஷயங்களை அதிக அவசியமல்லவென்று இதன் முன் சங்கீதத்தில் தேர்ந்த பல புண்ணியவான்கள் விட்டு விட்டதினால் சங்கீதத்திற்குரிய அநேக அம்சங்கள் தற்காலத்தில் புலப்படாமல் போயின. ஆகையால், 1. சுரப் பிரஸ்தாரங்களினால் சம்பூரணம், சாடவம், ஒளடவம் என்னும் வழியில் எத்தனை இராகங்கள் கிடைக்குமென்று முதல் முதல் அறிய வேண்டும். 2. உலகத்தில் நாளது வரையும் வழங்கிவந்த கர்த்தா இராகங்கள் இன்னவையென்று விசாரிக்கவேண்டும். 3. 72 மேளக் கர்த்தாக்களைப் பற்றியும் அவற்றில் வரும் ஜன்னிய இராகங்களைப் பற்றியும் கவனிக்கவேண்டும். 4. இராகம் உண்டாக்குவதற்குரிய முறைகளில் கவனிக்க வேண்டிய சில ஆதார விதிகளையும் இராகங்கள் செய்முறையையும் கவனிக்க வேண்டும். இந்நான்கு பிரிவுகளும் மிக முக்கியமானவை. இவைகளைப் பற்றிய விவரம் தெரியாமல் போகவே சங்கீதத்தில் சந்தேகம் உண்டாயிற்று. அதாவது, சுரப்பிரஸ்தாரங்கள். 1. ஏழு சுரங்களும் முன் பின்னாகக் கலந்து எத்தனை விதம் வரலாம்? அதில் வக்கிர வர்ச்சியமாக எப்படி வரலாம்? அப்படி வருபவைகளில் எத்தனை பிரஸ்தாரங்கள் வரும்? 2. அப்படி வந்த ஆரோகண அவரோகணங்கள் முறைப்படி கலந்து வெவ்வேறு விதமான இராகங்கள் எத்தனை உண்டாகும்? அதன்மேல் ஆரோகண அவரோகணங்கள் சம்பூரணமாகவும், 7x7 சம்பூரண சாடவமாகவும், 7x6 சம்பூரண ஒளடவமாகவும், 7x5 சாடவ சம்பூரணமாகவும், 6x7 சாடவ சாடவமாகவும், 6x6 சாடவ ஒளடவமாகவும், 6x5 ஒளடவ சம்பூரணமாகவும், 5x7 ஒளடவ சாடவமாகவும் 5x6 ஒளடவ ஒளடவமாகவும், 5x5 வருவதனால் எண்ணிறந்த இராகங்கள் உண்டாகும். இவற்றோடு ரிஷப காந்தாரமும் தைவத நிஷாதமும் 2,4,6 முதலிய அலகுகள் பெற்று மத்திமம் சுத்த மத்திமம், பிரதிமத்திமம் என்ற இரண்டு பேதத்தோடும் வரும்போது ஏராளமான இராகங்கள் உண்டாகலாம். இவைகள் யாவையும் கணக்கிட்டுச் சொல்வது யாவருக்கும் பிரயோசனமாயிருக்கும். என்றாலும் சம்பூரணம், சாடவம், ஒளடவம் என்ற மூவகையிலும் உண்டாகும் லட்சத்து எழுபத்தோராயிரத்து முந்நூற்றுத் தொண்ணுhற்றாறு இராகங்களையும், அவைகளிலிருந்து விகுருதி பேதத்தால் ஏற்படும் 72 தாய் இராகங்களின்படி உண்டாகக்கூடிய மற்றும் இராகங்களையும், வட்டப்பாலை திரிகோணப்பாலை சதுரப்பாலைகளில் வரும்போது உண்டாகும் எண்ணிறந்த இராகங்களையும் ஒருவாறு நாம் கவனிக்க வேண்டும். 3. தாய் இராகங்கள் அல்லது கர்த்தா இராகங்கள் என்று வழக்க மாய்ச் சொல்லிக்கொள்ளும் மேளக்கர்த்தாவைப்பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டும். அதிபூர்வமாகத் தென் தமிழ் நாட்டில் வழங்கி வந்த கர்த்தா இராகங்கள் இன்னின்னவை என்பதையும் (2) அதன் பின் தமிழ் நாட்டிற்கு வந்த மற்றவர் வழங்கி வந்த ஆறு கர்த்தா இராகங்களையும் அவற்றிற் கினமான முப்பத்தாறு இராகங்களையும் (3) 72 மேள கர்த்தா இராகங்களையும் (4) 4264 கர்த்தா இராகங்களையும் அவைகளின் சுர அமைப்பையும் பூர்வ தமிழ் மக்களின் அபிப்பிராயத்திற்கு ஒத்தவைகளும் தற்கால அனுபவத்தி லிருப்பவைகளுமாகிய 72 கர்த்தா இராகங்களைப் பற்றியும் அவைகளில் வரும் ஜன்னிய இராகங்களைப் பற்றியும் நாம் பார்க்கவேண்டும். 4. சம்பூரணம், சாடவம், ஒளடவமாக ஆரோகணம் அவரோகணம் ஒன்றுபோல் வரும் இராகங்களும் இவைகளில் ஆரோகணம் ஒன்றாகவும் அவரோகணம் வேறொரு விதமாகவும் ‘ஆரோகண அவரோகணங்களில் வக்கிரமாகவும் வக்கிரமில்லாமலும் கலந்து வரும் (1,71,396) லட்சத்து எழுபத்தோராயிரத்து முந்நூற்றுத் தொண்ணுhற்றாறு இராகங்களில் ஒன்றின் ஆரோகண அவரோகணத்தை வைத்துக்கொண்டு அதற்கு இசை முறை வைப்பு, இசைகூடா நரம்பு, ஆளத்தி செய்யுமாறு, பாடல் அமுதம், இசை பொருந்தும் முறையில் பண் அமைப்பு ஆகிய இந்த ஐந்து முக்கிய காரியங்களை கவனிக்க வேண்டும். 1. ஒரு ஆரோகண அவரோகணத்தில் சுரங்கள் ஒன்றோடொன்று பொருந்தும் முறையும், பொருந்தா முறையும் தெரிந்து கொண்டபின்பே அவற்றில் பாடல் அமுதம் அல்லது சீவ சுரம் இன்னதென்று காணவேண்டும். 2. ஒரு ஆரோகணத்தில் அமுதவைப்பு (சீவ சுரம்) தெரிந்தபின்பே ஆளத்தி பாட வேண்டும் அல்லது ஆலாபிக்கவேண்டும். 3. அமுதவைப்பு (சீவ சுரம்) தெரிந்து கொண்டபின்பே பண் (கீதம்) அமைக்க வேண்டும். 4. அம்முறையே வர்ணம், கீர்த்தனம், பல்லவி முதலிய உருப்படிகள் செய்வதற்கு அநுகூலமாம். ஒரு ஆரோகண அவரோகணத்தில் சுரங்கள் பொருந்தும் முறையில் ஒன்றன் பின் ஒன்று வைப்பதே தமிழ் இராகங்கள் இனிமைபெறுவதற்கும், ஒரு இராகத்தின் சாயை மற்றொன்றோடு கலவாமல் தனித்துப் பெயர் சொல்லி அழைக்கப்படுவதற்கும், போதுமான காரணமாயிருக்கிறது. இந்த அருமையை அறியாத பலர் கர்நாடக சங்கீதத்தில் Harmony இல்லை என்று சொல்வார்கள். ஆனாலும் அவைகள் தனித்த அழகுடையவைகளாய் இருககின்றனவென்று கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். நாலு விதமாக ஒற்றுமைச் சுரம் தெரிந்து அதாவது பூர்வ தமிழ் மக்கள் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நாலுசாதியில் வழங்கிவந்த முறைப்படி பாடத்தெரிந்தவர்கள் அகநிலையில் அவரவர் இஷ்டப்படி எழுதிய ஒரு பாடலுக்கு மற்றும் மூன்று சாதிப்பாடல்கள் எழுதும் விதம் சொன்னார்களே யொழிய முதல் பாடலுக்கு இலக்கணம் சொல்லவில்லை; ஆனால் முதல் சாதி எப்படி எழுதுகிறதென்று தெரியாமல் சில பொதுக்குறிப்புகள் மாத்திரம் சொன்னார்கள். அதனால் பல இராகங்கள் கலந்து ஒன்றுபோல் தோன்றக் கூடியவைகளாய் இராகவேற்றுமையில்லாமல் கலங்குகின்றன. இவ்வாறின்றி வேற்றுமைகள் தெளிவாய்த் தெரிவதற்கு சுரங்கள் ஒன்றோடொன்று பொருந்தும் முறைமிக அவசியம். அதோடு ஒரு இராகத்தை அதன் எல்லா அழகோடும் ஆலாபிப்பதற்கு சீவசுரம் அல்லது பாடலமுதமாய் வருகிற சுரம் இன்னதென்று தெரியவேண்டும். சீவசுரம் இன்னதென்று அறிந்துகொள்வதற்கு இயலாமல் குரு பரம்பரையாய் நாளது வரையும் சொல்லப்பட்டு வருகிறது. மிக இரகசியமாக வெகுநாளைக்குப் பின் சொல்லப்படுகிறதாக நாம் அறிவோம். இதனால் புதிய இராகங்களில் ஒன்றைப் பாடுவதற்கு கூடாம லிருக்கிறதென்பது யாரும் அறிந்த காரியம். ஆளத்தி செய்யும் பொழுது அநேக விதமான பிரஸ்தாரக் கிரமங்கள் உபயோகிக்க நேரிடும். அக்காலத்தில் அந்த ஆரோகண அவரோகணத்திற்குப் பொருந்தாத தொகுதிகள் இன்னவையென்று அறிந்தால் மாத்திரம் அவைகளை விலக்கி இசைபொருந்தும் முறையில் அழகாகப்பாட முடியும். அதுவன்றி பகை நரம்புகள் கலக்குமானால் பண் அழகுபடாமல் வெறுப்புத்தரும். இம் முறையை நாம் ஒழுங்குபெற கவனிப்போமானால் இராகங்கள் மிக அழகாகவும் சுரங்கள் பொருந்தும் முறையில் அவைகளுக்குண்டாகும் இனிமையோடும் பொருளோடும் கேட்பவர்களை ஆனந்திக்கும் செயலோடும் பொருந்தி நிற்கும். இவைகளில் ஒவ்வொன்றையும் அறியவேண்டுமென்றும் அநுபோகத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்றும் அவாக்கொண்ட நான் இரவுபகலாய் இதே ஞாபகமாகவும், இதே பேச்சாகவுமிருந்து, இடைவிடாமல் பலமுறைகளைச் செய்துபார்த்துக்கொண்டு வருகையில் தெய்வாதீனமாய் ஒரு உத்தமமுறையைக் கண்டுபிடித்தேன். அதிலிருந்து அம்முறைக்கு அநுகூலமான பல குறிப்புகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிந்து அதற்கேற்ற விதமாய் இராக முறை எழுதியிருக்கிறேன். அதில் ஒவ்வொன் றையும் கற்க விரும்புவோர் சுலபமாய் அறிந்துகொள்ளக்கூடிய விதம் காட்டி யிருக்கிறேன். சில திருஷ்டாந்த மூலமாய் விளக்கியுமிருக்கிறேன். எனக்குத் தெரிந்தவைகள் மிகச் சொற்பமாய்த் தோன்றிய போதிலும் அவை தெரியுமுன் நான் அடைந்த துன்பத்தையும், அவைகள் தெரியாமல் மற்றவர்படும் கஷ்டத்தையும், அறிந்தே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறேன். கீதங்கள் எழுதும் முறையில் பல எழுதக்கூடும் என்பதையும் காட்டி யிருக்கிறேன். கீதம் எழுதுவதில் அவைகளுக்கு சாகித்தியம் செய்யும் முறை சில சொல்லியிருக்கிறேன். கீதங்கள் யாவுக்கும் சாகித்தியம் எழுதாமல் பாக்கி வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது அவரவர் தங்கள் தங்கள் விருப்பத்தின்படி அவைகளைச் செய்துகொள்ளட்டுமென்றே அவைகள் விடப் பட்டிருக்கின்றன. இராகங்களின் போக்கை அறிந்து பக்திரசமான சாகித்யங்கள் செய்துகொள்ளக்கூடியவர்கள் அப்போதைக்கப்போது செய்துகொள்ளலாம் என்பதே என்னுடைய நோக்கம். இராகங்களில் தற்கால அநுபோகத்திற்கு அவசியமானவைகள் எவைகளோ அவைகளை எவ்வித மறைப்புமின்றி எழுதியிருக்கிறேன். அநுபோகத்திற்கு வராதவைகளுக்குப் பதிலாக நான் எவ்விதமான கற்பனையும் யுக்தியும் நினைக்கவில்லை. அசம்பாவிதமான கட்டுக்கதைகள் நாளடைவில் பயனற்றவை யாவதோடு பிறர் கண்டு நகைக்கவும் கூடியவையாகுமே; என்றாலும் சுரங்களைப்பற்றிய சில நுட்பமான குறிப்புகளை நேரங் கிடைக்கும்பொழுது நான் எழுதுவேன். இது வரையிலும் எந்த தேசத்திலும் எவரும் அறிந்துகொள்ளாததாகிய ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஒரு இராகம் உண்டாக்கும் முறையை நான் தெய்வகிருபையால் வெளிப்படுத்தினேன் என்று பெருமை பாராட்டிச் சொல்லிக்கொள்ளக்கூடியதாயிருந்தாலும் அறிவிற்சிறந்த பெரியோர் அவை களில் ஒவ்வொன்றையும் நன்குமதித்து, அவற்றில் வரக்கூடிய சொற்ப குற்றங்களை நீக்கிக் குணத்தைக் கொள்ளும்படி மிகுந்த வணக்கத்துடன் பிரார்த்திக்கிறேன். இராகமுறை பல நாள் ஆராய்ச்சியின் பின் எழுதப்பட்டு பற்பல திருத்தங்களோடு பூரண தேர்ச்சி பெற்றதாக நான் கண்டபின் தேர்ந்த சங்கீத வித்வான்கள் பலருக்கும் காட்டி அவர்களும் மிக சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டபின் அம்முறையை பல சங்கீத வித்வான்களை ஒன்று சேர்த்து அவர்கள் முன்னிலையில் பிரஸ்தாபிக்க நினைத்து சங்கீத வித்யா மகாஜன சபை ஒன்று ஏற்படுத்தினேன். அதில் முதல் முதல் சுருதிகளைப் பற்றிப் பல அபிப்பிராயங்கள் வந்ததினால் சுருதிகளைப் பற்றித்தமிழ் நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தை விசாரிக்கையில் அங்கே அநேக விவரங்கள் காணப்பட்டன. அதில் இராகங்கள் செய்யும் முறையைப் பற்றி இன்னவிதந் தான் என்று திட்டமாகச் சொல்லப்படாமல்போனாலும் அங்கே சொல்லி யிருக்கிற முக்கியமான குறிப்புகளுக்கு ஏற்ற விதமாகவே செய்யப்பட்டிருக் கிறதென்று மிகுந்த சந்தோஷத்தோடு தங்கள் முன் சொல்லிக்கொள்ளுகிறேன். பூர்வ தமிழ் மக்கள் இசைத் தமிழில் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தார்க ளென்றும் இசைத் தமிழுக்கு வேண்டிய முக்கிய காரியங்கள் யாவும் அவர்களுடைய தினப் பழக்கத்திலேயே யிருந்தனவென்றும் அவர்கள் வழக்கத்திலிருந்த முறைகளுக்கு வழிகாட்டும் சங்கீத நூல் வெகுகாலத்திற்கு முன்னே அழிந்துபோயினவென்றும் அதனால் பழமையான ஒன்றையே நூதனமென்று சொல்லும்படி நேரிட்டதென்றும் காண்கிறேன். ‘பரதகண்டே வைவசுதமனுவந்தரே காவேரிதீரே’ நவஉ., என்று சங்கல்பம் செய்துகொள்ளும் இந்திய மக்கள் யாவரும் தாங்கள் வைவசுத மனுவி லிருந்து உண்டானவர்களென்றும் வைவசுத மனுவினாலேயே தாங்கள் கைக் கொண்டு நடக்கும் வேதமும் தர்ம சாஸ்திரமும் பல பாஷைகளும் உண்டாக்கப்பட்டனவென்றும் ஒப்புக்கொள்வார்கள். ஒரு பிரளய கால முண்டாகுங் காலத்தில் அப்பிரளயத்திற்கு முன் மிகுந்த உத்தமனாய் விளங்கும் ஒருவனைத் தெரிந்து, பிரளய காலத்தில் அவனைக் காப்பாற்றி, அடுத்த பிரளயத்திற்கு வித்தாய் நிற்கச் செய்வது வழக்கமென்று சொல்லப் படுகிறதே. அவன் மூலமாகவே வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும், பல பாஷைகளும், பல ஜாதியும், உண்டாயின என்று ஒப்புக்கொள்ளுகிறோமே; மனுவினால் சூரிய வம்சமும், அவன் மகள் இளையாலும் சந்திரன் மகன் புதனாலும் சந்திர வம்சமும் உண்டாயினவென்று காண்கிறோம். வைவசுத மனுவின் 27 சதுர் யுகங்களாகி 28-வது சதுர் யுக்ததில் கலியுகம் 5018ம் வருஷ மென்று கணக்குச் சொல்லுகிறோமே. இவ்வாதி புருஷன் மதுரைக்கருகிலுள்ள கிருதமாலா நதி தீரத்தில் தர்ப்பணம் செய்துகொண்டிருக்கையில், கையில் அள்ளிய ஜலத்தில் மச்ச அவதாரமாக மகா விஷ்ணு அவதரித்தார் என்றும்; பிரளயத்திற்குத் தப்ப இவனை இமயமலையின் அடிவாரம் சேர்த்தாரென்றும், இவனால் பிரஜைகள் உற்பத்தியானார்களென்றும், பாகவதம் 8-வது ஸ்கந்தம் 24-வது அத்தியாயத்திலும், 9-வது ஸ்கந்தம் 1-வது அத்தியாயத்திலும் சொல்லப் படுகிறதே. இவனைத் திராவிட தேசத்தரசனென்றும், சத்திய விரதனென்றும் பெயர் பூண்டவனென்றும், மதுரைக் கருகிலுள்ள கிருதமாலா நதி தீரத்தில் தர்ப்பணம் செய்துகொண்டிருந்தானென்றும், இவனே வைவசுத மனு ஆனான் என்றும், இவனிலிருந்தே சகல பிரஜைகளும், சகல பாஷைகளும் உண்டாயின வென்றும் அறிகிறோமே. தென் தமிழ் நாட்டில் அரசனாயிருந்த ஒரு பாண்டியனே வைவசுத மனு ஆனான், என்றும் அவன் பேசியது தமிழ் என்றும், காண்கையில் தமிழின் பூர்வத்தையும் அதுவே மக்கள் மொழிக்கு முந்தியதென்றும் இயல் இசை கூத்து என்னும் முத்தமிழும் மிகப் பூர்வமான தென்றும் சொல்லவும் வேண்டுமோ? அறிவுள்ளோர் கண்டுகளிப்பார். அதற்கிணங்க இராகங்கள் உண்டாக்கும் முறையும் பூர்வவழக்கின்படி உள்ள தென்று காணும்பொழுது தமிழ் மக்கள் யாவரும் மிகுந்த சந்தோஷத்தை யடைவார்கள் என்பது உண்மை. 2. ஏழு சுரங்களின் இராகப் பிரஸ்தாரத்தைப் பற்றி பூர்வ தமிழ் மக்கள் தாம் வழங்கிவந்த இசைத் தமிழில் ஏழு சுரங்களே வழங்கிவந்தார்கள் என்றும் ஒரு ஸ்தாயியில் ச-ப, ச-ம முறையாய்ப் பன்னிரண்டு அரைச் சுரங்கள் வழங்கி வந்தனவென்றும் அம் முறையே ஆயப் பாலை என்று அழைக்கப்பட்டதென்றும் நாம் இதன் முன் முதற்புத்தகமாகிய பொற்கடகத்தில் பார்த்திருக்கிறோம். அதில் ச-ப முறையாய்க் கிடைத்த பன்னிரண்டு அரைச் சுரங்களில் ஏழு வெவ்வேறு சுரங்கள் தெரிந்துகொண்டு வெவ்வேறு இராகங்களாகக் கிரகமாற்றி அவைகளில் பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்னும் சம்பூரண, சாடவ, ஒளடவ, சுவராந்தம் முதலிய பேதங்கள் செய்து வெவ்வேறு இராகங்கள் பாடினார்களென்றும் இரண்டு அலகுள்ள ஒரு அரைச் சுரத்தில் ஒரு அலகும் அரை அலகும், கால் அலகும் குறைத்து வட்டப் பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் இனிய இராகங்கள் பாடினார்களென்றும் பொற்கடகத்தில் பார்த்திருக்கிறோம். இதனால் நாம் பாடக்கூடிய இராகங்கள் பல இருக்கிறதாகத் தெரிகிறது. பூர்வ தமிழ் மக்கள் பன்னீராயிரம் ஆதி இசைகள் பாடினார்களென்று நூல் முகமாக நாம் அறிகிறோம். அப்படியிருந்தாலும் அதற்குச் சரியான கணக்கு நமக்குச் சொல்லப்படவில்லை. அதனால் ஒருவாறு தற்காலத்தில் நாம் கணக்கிடக் கூடிய இராகங்கள் இத்தனையென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏழு சுரங்களைப் பற்றியும் அவைகள் உண்டான நாடுகளைப் பற்றியும் அவைகளின் மற்றும் சில முக்கிய குறிப்புகளைப் பற்றியும் அவைகள் கிரகம் மாறும்பொழுது உண்டாகும் இராகங்களைப் பற்றியும் பொற்கடகத்தில் சொல்லியிருக்கிறோம். அதோடு அவற்றின் பெயர்களைப் பற்றி பொற் கடகத்தில் சொல்லியிருக்கிறோம். ஆகையால் அவைகளைப் பற்றித் திரும்பவும் இங்கு சொல்லவேண்டியது அவசியமாகத் தோன்றவில்லை. துவாரகையின் ஜலப்பிரளயத்தைப்பற்றி கிருஷ்ண பகவான் சொன்னதை யும் கலியுகம் ஆரம்பித்ததையும் நாம் கவனிக்கும்பொழுது கலியுகம் ஆரம்பித்த பின்பே மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்திருக்கவேண்டும். கலி ஆரம்பிக்கும் முன்பே கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்க மிருந்திருக்க வேண்டும். இரண்டாம் சங்கத்திலிருந்த சிகண்டிமாமுனிவர், “ச ரி க ம ப த நி யென் றேழெழுத்தாற் றானம் வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்குஞ் சூழ்முதலாஞ் சுத்தத் துளை” என்பதனால் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன் வழங்கி வந்த முறைப் படியே, ஏழு சுரங்களின் பெயர்களை வைத்துப் பேசுவோம். இதன் முன் பல்லாயிர வருடங்களுக்கு முன்னிருந்த தொல்காப்பியரும் அதன் முன் அகத்தியரும் வழங்கி வந்த முறைப்படியே ச, ரி, க, ம,ப, த, நி, என்ற இவ்வேழு பெயர்களும் நாளது வரையும் வழங்கி வருகிறதாகத் தமிழ் வழக்காலேயே தெரிகிறது. ச, ரி, க, ம, ப, த, நி, என்று ஏழு எழுத்துக்கள் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சொல்லடியாய்ப் பிறந்தன வென்று சொல்லும் முறை நியாயத்திற்கு ஒத்திராததாயிருந்தாலும் Hamilton Bridge என்பதை சரிவரச் சொல்லத் தெரியாதவர்கள் அம்பட்டன் வாராவதி என்று சொல்லுவது பிசகாய் இருந்தும் ஜன வழக்கத்தைப் பொருத்து Barber’ Bridge என்று வழங்கி வருவது போல ஜனங்கள் பெரும்பாலும் வழங்கும் வழக்கத்தை உத்தேசித்து ஷட்ஜம், ரிஷபம் காந்தாரமென்ற பெயரையே இங்கு வழங்க வேண்டியதாயிற்று. எப்படியிருந்தாலும் சுரத்தின் சரியான பெயரை யாவரும் அறிந்துகொள்வதே நமது முக்கிய நோக்கம். ச, ரி, க, ம, ப, த, நி, என்ற ஏழு சுரங்களும் பலவிதமான பிரஸ்தாரங்களைப் பெற்று வரும். அவைகளில் முக்கியமானவை (1) இராகப் பிரஸ்தாரம் (2) சுரப் பிரஸ்தாரம். இதில் சம்பூரண, சாடவ, ஒளடவப் பிரஸ்தாரங்களும் கடை மோனை, முதல்மோனைப் பிரஸ்தாரங்களும் அடங்கும். (3) தானப் பிரஸ்தாரம். (4) பல்லவிப் பிரஸ்தாரம் என நாலு விதமாம். இவற்றில் இராகப் பிரஸ்தாரம் என்பதைப் பற்றி இங்கே நாம் கவனிக்கவேண்டும். அதாவது இராகம் இத்தனை என்று கண்டுபிடிப்பதில் சம்பூரண, சாடவ, ஒளடவத்தில் எத்தனைப் பிரஸ்தாரங்கள் உண்டென்றும் அவைகளில் முன் பின் வக்கரிப்பதனால் எத்தனை ஆரோகணங்கள் கிடைக்கக்கூடும் என்றும் நாம் பார்க்கவேண்டும். இதில் பிரஸ்தார விவரங்களை வசன ரூபமாகச் சொல்லிக்கொண்டு போவதைப் பார்க்கிலும் அட்டவணை ரூபமாகக் காட்டுவது நல்லதென்று தோன்றுகிறது. அட்டவணை ரூபமாக இனம் இனமாய் இத்தனையென்று சொல்லி அவைகள் சம்பூரண சம்பூரணமாகவும், சம்பூரண சாடவமாகவும், சம்பூரண ஒளடவமாகவும் அப்படியே சாடவ சம்பூரணமாகவும், சாடவ சாடவ மாகவும், சாடவ ஒளடவமாகவும் இவை போலவே ஒளடவ சம்பூரணமாகவும், ஒளடவ சாடவமாகவும், ஒளடவ ஒளடவமாகவும் கலந்து வரும் முறையைத் திட்டமாக அறிந்துகொள்வதற்கு அட்டவணையே உதவியாயிருக்கும். அட்டவணை பின்வருமாறு. சம்பூரண, சாடவ, ஒளடவ பிரஸ்தாரங்களின் எண்கள் இவ் ஆறு இனங்களிலும் வரும் இராகங்களின் ஆரோகண அவரோ கணங்களைத் தெளிவுபடச் சொல்லாமையினால் அவைகள் எத்தனை என்று தெரியாமலும், உபயோகிக்கத் தெரியாமலும், சங்கீத சாஸ்திரத்தின் விருத்தி படிப்படியாய்க் குறைந்து சொற்ப இராகங்கள் மட்டும் இருப்பதாக நம் அனு போகத்தில் வழங்கிவருகிறது. இதோடு ஏன் இப்படிக் குறைந்து போயிற் றென்று கவனிப்போமானால் ஒரு ஆரோகண அவரோகணத்தில் புதிதாக ஒரு இராகம் உண்டாக்கும் முறை தெரியாமற்போனதனால் பழமையான இராகங்களில் வரும் சொற்பக் குற்றங்களை நீக்கிப் படிக்க முடியாமல் இது யாரால் முடியும் என்று விட்டுவிட்டார்கள். ஆகையினால் இராகங்கள் வரும் சுரம் சுருதிகளைப்பற்றிச் சந்தேகமற பல ஆட்சேபனைகளுக்கும் சமாதானம் சொல்லி அனுபோகத்தில் இருப்பவை என்று தெளிவாய் எடுத்துக்காட்டி முதற் புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன். பொற்கடகத்தைப் பூரணமாய்ப் பார்வை யிடுபவர்களுக்குச் சுரம், சுருதிகளைப் பற்றிய பலவகையான சந்தேகம் நீங்கிப் பூர்வ தமிழ்நாட்டின் இசைத்தமிழ் மேலானதென்று கொண்டாடும் எண்ணம் வராமல் போகாது. ஏழு சுரங்களின் பிரஸ்தாரம் 5040 என்று நாம் காண்பதுபோலவே; ஆறுவிதமான எண்களின் சம்பந்தத்தால், 1,71,396 (ஒரு லட்சத்து எழுபத்து ஓராயிரத்து முன்னூற்றுத் தொண்ணுhற்றாறு)இராகங்கள் உண்டாகும் என்பது தெளிவாய்த் தெரியும். இதோடு சம்பூரணம் அதாவது ஏழு சுரமுள்ள ஆரோகணம் அவரோகணம் ஒன்றில் 12 ஆன அரைச் சுரங்களின் பேதத்தினால் 72 தாய் இராகம் உண்டாவது போலவே 1,71,396 இராகங்களும் 72 பேதத்தையும் பெற்று வரும்போது எண்ணிக்கை பெரிதாகி வரும். ஆனாலும் அவைகளில் நாம் கவனிக்கக்கூடியதும், அனுபோகத்திற்கு வரக் கூடியதுமான ஆரோகண அவரோகணங்கள் இன்னவை என்று தெரிந்து கொள்வதற்குப் பின்வரும் அட்டவணை சொல்லியிருக்கிறோம். அட்டவணையில் கண்ட ஒரு ஆரோகண அவரோகணத்தை எடுத்துக் கொண்டு அதில் விகுருதி பேதத்தால் ஏற்படும் பேதத்தைக் குறித்துக்கொண்டு அதாவது சுரங்களின் அலகுகளைக் குறித்துக்கொண்டு நாலாம் பாகத்திற் சொல்லும் இராக முறைப்படி இராகம் உண்டாக்கிக் கொள்ளலாம். ஒளடவ, சாடவ, சம்பூரணத்தினால் கிடைக்கும் இராகங்கள் 1,71,396 என்று காணும்படி விவரமான கணக்கு அட்டவணையும் கொடுத்திருக்கிறேன். ஆயப் பாலையாய் வந்த 12 அரைச் சுரங்களில் கிரகமாற்றி 7 பெரும்பாலையும் 5 சிறு பாலையும் ஆகப் பன்னிரு பாலையும் பாடிய பூர்வ தமிழ் மக்களின் முறையில் வரும் காந்தார நிஷாதங்கள் 3, 3 ஆய் வழங்கி வரும் முறைப் படியும் ரிஷப காந்தார தைவத நிஷாதங்கள் 3, 3 ஆக வரும் முறையில் எழுதப்பட்டிருக்கும் வியாச கடகத்தின் முறைப்படியும் 24 சுருதி முறையில் எழுதிய பிரமமேளத்தின் உட்பிரிவாகிய ருத்திரமேளத்தின் முறைப்படியும் வேங்கடமகியின் அபிப்பிராயப்படியும் தற்காலம் பாடிவரும் கீர்த்தனங்களில் அநுபோகமாய் வழங்கிவரும் பன்னிரண்டு அரைச்சுரங்களினாலுண்டாகும் விகுருதி பேதங்கள் 72 என்ற கொள்கையை முற்றும் ஒப்புக்கொண்டு எழுதியிருக்கிறேன். பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆயப்பாலையின் 12 சுரபேதங்களே இராகம் உண்டாவதற்குப் போதுமான காரணமுடையதா யிருக்கிறதென்றும் அதன்மேல் நுட்பமான சுரங்களில்வரும் சுரங்கள் இராக பேதத்திற்கு மாத்திரம் உரியதே ஒழிய இராகங்கள் உண்டாவதற்கு அல்லது கர்த்தா இராகங்கள் உண்டாவதற்கு உதவியானவை அல்லவென்று மற்ற மேளக் கர்த்தா முறைகளை நீக்கி ஆயப்பாலை முறையில் வரும் 72 மேளக் கர்த்தாக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். இவற்றின் விவரங்களை இதன் பின் பார்ப்போம். மேல் அட்டவணையில் காட்டிய சுரப்பிரஸ்தாரங்களைப் பார்த்தோம். இவைகள் நியாயமாக வரவேண்டியவைகள் இன்னவையென்று நாம் கண்டாலும் அவைகளில் சிறுபான்மை வழக்கத்தில் வரக்கூடியவையல்ல என்று தோன்றக் கூடியவைகளை நீக்கி இராகம் எடுத்துக் கொள்ளலாம். அதிகம் தெரிந்த நிபுணர்களுக்கு அவைகளும் சாத்தியமானவையானதினால் கணிதமுறைப்படி வரக்கூடியவைகள் யாவையும் இங்கே காட்டினோம். இது நீங்கலாக இராகப் பிரஸ்தாரமென்ற தனிப்பிரதி ஒன்று வம்சபரம்பரையாய் வழங்கிவருகிறது. வம்சபரம்பரையாய் மிக அருமையாகப் பேணப்பட்டு வரும் அப்பிரஸ்தாரங்களையும் இங்குக் காட்டாமலிருக்கக் கூடவில்லை. அதை இதன் சில பக்கங்களுக்குப் பின் பார்ப்போம். 3. இராகங்களின் தொகையைக் காட்டும் அட்டவணை நாம் இதுவரையும் இராகப்பிரஸ்தாரங்களின் விபரம் காட்டும் அட்டவணைகளைக் கவனித்தோம். இவைகளில் சம்பூரண ஷாடவ, ஒளடவ, சுத்தப் பிரஸ்தாரங்களும் வக்கிர வர்ஜிய பிரஸ்தாரங்களும் தெளிவாய் அறியும்படிக் காட்டியிருக்கிறோம். ஒரு சுரம் முன்னாக வக்கிரிப்பதையும் பின்னாக வக்கிரிப்பதையும் கனத்த எழுத்துக்களுடனும் அவைகளைக் காட்டும் கோட்டுடனும் குறித்திருப்பதனால் அவைகள் இலேசாக அறிந்துக் கொள்ளப் போதுமானவை. மேலும் சுத்த சம்பூரணம் 1, வக்கிர சம்பூரணம் 38, சுத்த ஷாடவம் 6, வக்கிர ஷாடவம் 144, சுத்த ஒளடவம் 15, வக்கிர ஒளடவம் 210 ஆக இனம் ஆறிலும் 414 வெவ்வேறு ஆரோகணங்களும் அப்படியே 414 வெவ்வேறு அவரோகணங்களும் சேர்ந்து 1,71,396 இராக பேதங்கள் உண்டாகும். அவைகள் எப்படிக் கலந்துவரும் என்பதை இதன் அடியில் வரும் அட்டவணையில் தெளிவாகக் காண்போம். சுத்த, வக்கிர, சம்பூரண, ஷாடவ, ஒளடவ இராகங்களின் மொத்தத்தைக் காட்டும் அட்டவணை இனம் ஆறிலும் பிரகிருதிபிரஸ்தாரபேதத்தில் வரும் இராகங்கள் .. 1,71,396 மேற்காட்டிய அட்டவணையில் சுத்த சம்பூரணம்,சுத்த ஷாடவம்,சுத்த ஒளடவம், வக்கிர சம்பூரணம், வக்கிர ஷாடவம், வக்கிர ஒளடவம், என்ற ஆறு முக்கிய பேதங்களின் மொத்தம் 414 என்று கணக்கு ஏற்படுகிறது. இவைகள் ஒவ்வொன்றோடும் அவரோகணங்களில் ஆறு இனங்களும் மாறி வரும் பொழுது உண்டாகும் இராகங்கள் இனம் ஒன்றுக்கு இத்தனை இத்தனை யென்று தெளிவாகக் காண்போம். முதல் வரியில் ஆறு இனங்களிலும் தனித்தனி சொல்லப்படுகிறது போலவே முதல் கலத்தின் ஆறுவரிகளிலும் அவ்வவ்வினங்களின் கூடுதல் சொல்லப்படுகிறது. (1) சுத்த சம்பூரணம் ஒன்றே. அது ஆரோகணத்திலும் அவரோ கணத்திலும் மாறாமல் ஒன்று போலவேயிருக்கிறது. (2) சுத்த ஷாடவ பேதம் ஆறு. இவ்வாறு பேதங்கள் ஒவ்வொன் றோடும் இவ்வாறு பேதங்களும் அவரோகணமாய் வரும்பொழுது 6x6=36 ஆக பெருகி நிற்கும். (3) சுத்த ஒளடவம் 15 பேதம். இப் பதினைந்து பேதம் ஒவ்வொன் றோடும் சுத்த ஒளடவத்தின் பேதங்களும் அவரோகணமாய்க் கலந்து வரும் பொழுது 15x15=225 ஆகும். இப்படியே மற்ற பேதங்களும் ஆரோகணத்தில் ஒன்றாகவும் அவரோ கணத்தில் மற்றொன்றாகவும் பேதப்பட்டு வரும்பொழுது 1,71,396 இராக பேதங்கள் உண்டாகும் என்பதை முன் அட்டவணைகளினாலும் அவற்றைச் சுருக்கிக் காட்டும் கணித அட்டவணைகளினாலும் தெளிவாகக் காண்கிறோம். இவைகள் நியாயமானவைகள் என்றும், தனித்துத் தனித்து இராகங்களாய்ப் பாடக்கூடியவையென்றும் நாம் தெளிவாக அறியலாம். இவைகளில் எவ்வித மான ஆட்சேபனைகளும் சொல்ல அறிவாளிகள் துணியமாட்டார்கள். ஆனால் இராகம் செய்யும் முறை இன்னதென்று தெரியாத புண்ணியவான்கள் இதைக் கண்டு ஒருவேளை பரிகாசம் பண்ணுவார்கள். அறியாதவர்களின் குதர்க் கத்தை நாம் இங்கே பெரிதாக நினைக்கவில்லை. ஆனாலும் அறிவாளிகளின் கவனத்திற்கு வரவேண்டுமென்றே இங்கே குறிப்பிடுகிறோம். இந்த 1,71,396 பிரஸ்தாரங்களும் விக்ருதிபேதம் 72ஐயும் அடையும் கணக்கைக் கவனிப்போமானால் அவைகள் ஒருகோடியே இருபத்துமூன்று லட்சத்து நாற்பதினாயிரத்து ஐந்நூற்றுப் பன்னிரண்டாகுமென்று மிகத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். விக்ருதிபேதம் 72ஐ மேளகர்த்தாக்களைப் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாகத்தில் காண்க. 1,23,40,512 இராகங்களும் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகில் குறைந்துவரும் வட்டப் பாலையில் வரும்பொழுதும் அரை அலகு குறைந்து, திரிகோணப்பாலையாய் வரும்பொழுதும் கால் அலகு குறைந்து, சதுரப்பாலையில் வரும்பொழுதும் எத்தனை வித்தியாசமான இராகங்கள் உண்டாகுமென்று நாம் ஒருவாறு கணக்கிட்டுச் சொன்னாலும், ஆயிர இராகங்களுக்கு ஆரோகண அவரோ கணமாக அட்டவணையும், நூறு இராகங்களுக்குப் பெயரும் பத்து இராகங்கள் பாடவும் தெரிந்த பாடகர்கள் பயப்படுவார்களேயென்று அவைகளின் விரிவை இங்கே சொல்லவில்லை. பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த 12 அரைச்சுரங்களின் பேதத்தால் உண்டாகும் இராகங்கள் 1,23,40,512 என்று எவ்வித சந்தேகமுமில்லாமல் தெளிவாக நாம் ஒப்புக்கொள்ளுவோம். இதில் பூர்வ தமிழ்மக்கள் 12,000 (11,991) ஆதி இசைகள் பாடினார்கள் என்பதை நாம் கேட்கும்பொழுது ஆச்சரியப்பட மாட்டோம். சுத்த சுரங்களினால் அதாவது பிரகிருதி சுரங்களினாலுண்டாகிய பேதம் ஆறிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய மொத்தப் பிரஸ்தாரங்கள் 1,71,396. பிரகிருதிபேதங்கள்; அதாவது, சுரங்கள் 2, 4, 6 முதலிய அலகுகள் பெற்று வரும்பொழுது உண்டாகும் பிரஸ்தாரங்கள் 1,23,40,512 என்று அறிகிறோம். இதன்மேல் நுட்பமான சுருதிகள் சேர்ந்துவரும் இராகங்கள் ஏராளமாம். பிரகிருதி பேதத்தாலுண்டாகும். 1,71,396 இராகங்களில் சிலவற்றின் ஆரோகண அவரோகணங்களைப் பிரித்தெழுதும் முறையை அறிவதற்கும் விக்ருதி பேதத்தாலுண்டாகும் சில இராகங்களுக்கும் சில திருஷ்டாந்தம் எழுத வேண்டியதிருக்கிறது. அவைகள் பின்வருமாறு........ 4. மேற்காட்டிய ஆறு இனங்களிலுமிருந்து நாம் புதிதாகச் செய்யக்கூடிய சில இராகங்களுக்கு திருஷ்டாந்தம். 1. சம்பூரண ஆரோகணமும் சம்பூரண அவரோகணமும். இராகப் பிரஸ்தாரத்தில் சில பிரஸ்தாரங்களை எடுத்து ஆரோகண அவரோகண பேதமுடையதாய் இங்கே காட்டியிருக்கிறேன். அவற்றில் சம்பூரண ஆரோகணமும், சம்பூரண அவரோகணமுமாய் வருவதற்கு எட்டு திருஷ்டாந்தமும், சம்பூரண ஆரோகணமும் சாடவ அவரோகணமும் சேர்ந்து வருவதற்குப் பதினான்கும், சம்பூரண ஆரோகணமும் ஒளடவ அவரோ கணமும் சேர்ந்து வருவதற்குப் பதினைந்தும், ஷாடவ ஆரோகணமும் சம்பூரண அவரோகணமும் சேர்ந்து வருவதற்குப் பதினாறும், ஒளடவ சம்பூரணமாக வருவதற்குப் பதினான்கும், ஷாடவ ஷாடவமாக வருவதற்கு எழுபத்தாறும், ஷாடவ ஒளடவமாக வருவதற்கு முப்பத்தொன்றும், ஒளடவ ஷாடவமாக வருவதற்கு முப்பத்து நான்கும், ஒளடவ ஒளடவமாக வருவதற்குப் பத்துமாகக் கூடுதல் 218-ம் மேல் அட்டவணையில் காட்டப் பட்டிருக்கின்றன. இவைகளில் ஆரோகணம் ஒவ்வொன்றோடும் அவரோகணம் தனித்துக் கலந்து வரும்பொழுது 47,524 இராக பேதங்களுண்டாகும். விக்ருதி பேதத்தினாலுண்டாகும் பிரஸ்தாரங்களை இதன்பின் சொல்லுவோம். மேலும் பரம்பரையில் வழங்கிவரும் சில இராக அட்டவணைகளுமுண்டு. அவைகளில் ஒன்றை இதன் பின் காண்க. மேற்காட்டிய அட்டவணையில் 1920 ஆரோகணம் அடங்கிய இராகங்கள் சொல்லப்படுகின்றன. அதில் சுவராந்தமென்று சொல்லும் நாலு சுரங்களில் சொல்லப்படும் இராகங்கள் சாதாரணமாக இப்போது வழக்கத்தில் இல்லை. என்றாலும் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான்கள் படிக்கக்கூடியதேயொழிய படிக்கக்கூடாததல்ல. ஆனாலும் அங்கங்கே வரும் நாலு சுர இராகங்களை அடையாளமிட்டு இலக்கம்போட்டு வந்திருக்கிறேன். அவைகளின் மொத்தம் 120 என்று காண்போம். அந்த 120 இராகங்களையும் 1920 ஆன மொத்தத்தினின்று நீக்க 1800 இராகமும் இந்த 1800 இராகமும் ஆரோகணம் போலவே அவரோகணமும் வரும் இராகமாகிறது. இந்த 1800 இராகங்களின் ஆரோகணங்களை ஆதியாக வைத்து 1800 அவரோகணங்களையும் ஆரோகணம் ஒவ்வொன்றோடும் சேர்க்க 1800 x 1800 = 32,40,000 இராகங்கள் ஆகும். இந்த 32,40,000 இராகங்களும் விக்ருதி பேதங்களை ஏற்காத சுத்த சுர இராகங்களாம். 72 ஆன விக்ருதி பேதங்களைப் பெறும்பொழுது இவைகள் 32,40,000 x 72 - 23,32,80,000 இராகங்கள் ஆகும். இவைகளில் நமக்குப் பிரியமான எந்த ஆரோகணத்தையாவது, அவரோகணத்தையாவது நாம் எடுத்து ஒரு இராகம் உண்டாக்கிக்கொள்ளலாம். அவ்விராகம் ஆரோகண அவரோகணத்தில் வெவ்வேறாயிருந்தாலும் 72 ஆன விக்ருதி பேதத்தில் ஒன்றாக சுரத்தின் அலகுகள் குறிக்கப்படவேண்டும். அதன்பின் இராகம் எழுதும் முறையில் அவைகளை இராகமாக்கி கீதங்கள், கீர்த்தனங்கள் எழுதலாம். இவ்வளவு ஏராளமான இராகப்பிரஸ்தாரங்கள் இருந்தாலும் அவைகளில் சில இராகங்களைத் தான் நாம் படித்து வருகிறோம். அதிலும் நமக்கு இனிமையாகத்தோன்றும் சிலவற்றை மாத்திரம் கேட்டுவருகிறோம். நாம் இப்போது கேட்கும் இனிமையான சில இராகங்களைப் பார்க்கிலும் ஏராளமான பல இராகங்கள் உண்டாகக் கூடியதாயிருக்கின்றன என்று அறிவாளிகளுக்கு இவ்வட்டவணை எழுதினோம். இராகம் உண்டாக்கும் முறை பல்லாயிர வருடங்களுக்கு முன் மறைந்து போனதினிமித்தம் படித்தவைகளையே படித்துக் கேட்டவைகளையே கேட்டுக் காலம் தள்ளி வருகிறோம். இராக முறை செய்ய நமக்குத் தெரியும்பொழுது அநேகம் புதிய இராகங்களை நாம் கேட்போம். அவைகள் பழக்கத்திற்கு வரும்பொழுது இப்பொழுது பாடிக் கொண்டிருக்கும் இராகங்களை விடக் குறைந்ததென்று எண்ண மாட்டோம். படிக்கிற பாட்டுகளில் வரும் சுரம் சுருதிகள் இன்னதென்றறியாதவர்களுக்கு இது சற்றுக் கடினமாயிருக்கும். ஆரோகண அவரோகணத்தில் வழங்கிவரும் சுரங்களின் விக்ருதிபேதம் இன்னதென்று தெரிந்துகொண்டவுடன் இன்ன இராகமென்று கண்டுபிடித்துக்கொள்ளும் சுரஞானிகள் இவ்விஷயம் நன்றாய் அறிவார்கள். ஆகையால் இங்கே அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சம்பூரண, சாடவ, ஒளடவ பிரஸ்தாரத்தின் கிரமப்படி வரும் இராகங்கள் ... ... ... ... ... 1,71,396 இவ்விராகங்கள் விக்ருதி பேதம் 72ஐயும் அடையும்பொழுது ... 1,23,40,512 சம்பூரண, சாடவ, ஒளடவமாய் வழங்கிவரும் ,ராகங்களில் பரம்பரை அட்டவணையின்படி (54-வது பக்கம்) சுவராந்த இராகங்கள் நீக்கிவரும் இராகங்கள் (1800 x 1800) ... 32,40,000 இவைகள் ஒவ்வொன்றும் விக்ருதிபேதம் 72-ஐயும் பெறும் பொழுது ... ... ... ... 23,32,80,000 இவைகளில் ஒவ்வொன்றும் இராக இலட்சணங்களையும் ஒன்றற் கொன்றுள்ள வேற்றுமையையும் வெவ்வேறான அழகையுமுடையதென்று நாம் துணிந்து சொல்வோம். 72 விக்ருதி பேதங்களில் கனகாங்கி, ரத்னாங்கி போன்ற சில முதல் பேதங்களையும் சூலினி, சல நாட்டை போன்ற சில கடைசி பேதங்களையும் படிக்க முடியாமல் கஷ்டப்படும் பலர் இதைப் பரிகாசமாய் எண்ணினாலும் தங்கள் அறியாமையினால் இப்படி நினைக்கிறார்கள் என்று அறிவாளிகள் சிலராவது காண்பார்கள் என்ற தைரியங் கொண்டே இவைகளை எழுதினேன். இச்சுத்த பேதங்கள் ஒவ்வொன் றோடும் விக்ருதி பேதங்கள் 72ம் சேர்ந்து இராகங்கள் வெவ்வேறானது போலவே விக்ருதி பேதங்கள் ஒவ்வொன்றோடும் 1/4,1/8,1/16 போன்ற நுட்ப சுரங்கள் வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை முறையில் சேர்ந்து வரும்பொழுது எண்ணிறந்த இராகங்கள் உண்டாகுமென்பதை அளவிட்டுச் சொல்லக்கூடியதல்ல. தீரசங்கராபரணத்தில் ஜனித்த தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் ஒரே ஆரோகண அவரோகண மாயிருந்தாலும் ரிஷப தைவதங்களில் தேவ காந்தாரிக்கு ¾, ¾ அலகு சேர்ந்தும் ஆரபிக்கு ¼, ¼ அலகு சேர்ந்தும் வருகிறது. இதனால் இவ்விரண்டு இராகங்களுக்கும் எவ்வளவோ பேதம் ஏற்படுகிறது. தீரசங்கராபரணத்தில் ஜனித்த சங்கராபரணத்துக்கும் அதே தாய் இராகத்தில் ஜனித்த செஞ்சுருட்டிக்கும் ரிஷபதைவதமாய் 4½, 4½, ஆகவும் 4¼, 4½, ஆகவும் வருகிறது. இதோடு வக்கிர வர்ஜியங்கள் சேரும்பொழுதும் மிகுந்த பேதமாகிறதே. இவ்வித்தியாசத்தினாலேயே அல்லது சீவசுரங்கள் அலகு முறையில் பேதப்படுவதினாலேயே அவைகளைக் கணக்கிட்டுச் சொல்வது கூடிய காரியமாகத் தோற்றவில்லை. அதோடு சுத்த சுரத்தில், வரும் இலேசான இராகங்களைப் பாடம் பண்ணின சிலர் கனகாங்கி போன்ற விக்ருதி பேதத்தில் வரும் இராகங்களைப் படிக்க முடியாமல் பாட்டைப் பழிக்கிறார்கள். படிக்கிற பாட்டில் வரும் சுருதி இன்னதென்று அறியாதிருக் கிறார்கள். ஆகையினால் இவைகளைப் பற்றி அதிகம் சொல்ல நான் நினைக்க வில்லை என்றாலும் இதன்பின் சில பார்ப்போம். இனிமேல் உலகத்தில் வழங்கிவந்த தாய்,ராகங்களைப் பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டும். முதல் பாகம் முற்றிற்று கருணாமிர்த சாகரம் இரண்டாவது புத்தகம் - இரண்டாம் பாகம் உலகத்தில் பரம்பரையாய் வழங்கி வருகிற சில தாய் இராகங்கள் அல்லது மேளக்கர்த்தாக்கள் இந்நூலுள் . . இரண்டாம் பாகம் : உலகத்தில் பரம்பரையாய் வழங்கி வருகிற தாய் இராகங்களை அல்லது மேளக்கர்த்தாக்களைப் பற்றி விளக்கும் நூல். கடவுள் துணை. கருணாமிர்த சாகரம். இரண்டாம் புத்தகம். இரண்டாம் பாகம் உலகத்தில் வழங்கி வரும் தாய் இராகங்கள் அல்லது மேளக்கர்த்தாக்கள். 1. மேளக்கர்த்தாவைப் பற்றிய பொதுக் குறிப்புகள். அமிர்தமெனத் தேவர்களாலும், மனிதர்களாலும், மற்றும் சீவர்களாலும் கொண்டாடப்படும் சங்கீதமானது சிற்ப சாஸ்திரத்தில் முதன்மையாக விளங்குகிறது. யாவராலும் முதன்மையாகக் கொண்டாடப்படுகிற சங்கீத சாஸ்திரம் காதால் கேட்டு, மனதால் அறிந்து, ஆனந்திக்கக்கூடிய வித்தையாயிருப்பதால் இவ்விஷயத்தைப் பற்றி நான் அதிகம் சொல்ல இயலாதவனாயிருக்கிறேன். ஏனென்றால் சங்கீத சாஸ்திரத்தில் அதிகத் திறமையுள்ளோர் நாத வேற்றுமைகளை நுட்பமாய் அறிந்து பலபாகுபாடுகள் செய்து ஒவ்வொன்றிற்கும் சீவசுரம் கண்டு அச்சீவசுரத்தின் அதி தேவதைகளை அதிகமாய் ஆராதித்து அதாவது சீவசுரத்தின் இனிமை பிறக்க அப்பியாசம் செய்து அதினால் அற்புதமான பல காரியங்கள் செய்திருக்கிறார்களென்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த அருஞ் செயல்களின் இரகசியத்தைப் பற்றி இதன்பின் பார்ப்போம். முதற்புத்தகமாகிய பொற்கடகத்தில் சுரம், சுருதிகள், நுட்ப சுருதிகளையும் சுரங்கள் கிரகமாறும்பொழுது உண்டாகும் இராகங்களும், சுருதிகளைப் பற்றிப் பலர் சொல்லும் அபிப்பிராயமும், பூர்வ தமிழ் மக்கள் முறைப்படி தற்கால கானம் இருக்கிறதென்பதற்குக் கணிதமும், அனுபோகத்தில் ஒத்திருப்பதற்குச் சில திருஷ்டாந்தமும் காட்டியிருக்கிறேன். அதோடு ஒரு ஸ்தாயியில் ச-ப, ச-ம முறையாய் ஆயப்பாலையில் உண்டான பன்னிரண்டு சுரங்கள் தெரிந்து வெவ்வேறு விதமான ஆரோகண அவரோகணங்களை உண்டாக்கிப் பல பண்கள் அல்லது ராகங்கள் பாடின முறையையும் கிரகமாற்றி அதில் 1, 2, 2, 1, 2, 2, 2 என்ற ராசி முறைப்படி அல்லது செம்பாலைப்பண் என்ற தீரசங்கராபரண சுரமுறைப்படி ஆறு தாய் இராகங்கள் உண்டாகிற விதத்தையும், பன்னிரண்டு சுரங்களைக் கிரகமாற்றும்பொழுது உண்டாகும் ஏழு பெரும்பாலைகளையும், ஐந்து சிறு பாலைகளையும் பற்றிச் சொல்லியிருக்கிறேன். சுருதிகள் சம்பந்தமான வட்டப்பாலை முறையில் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வித யாழ்கள் அல்லது சட்சகிராமம், மத்திம கிராமம், பஞ்சமக் கிராமம், தாரக்கிராமம் என்னும் நாலு கிராமங்களைப் பற்றியும் அவைகளுள் உண்டாகும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நாலு சாதிகளான 16 பண்களைப் பற்றியும், அவைகளில் ச-ப, ச-ம முறையாய் வரும் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடுவதைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். இதோடு மற்றம் பல இராகங்கள் உண்டாகும் மேளக்கர்த்தாக்களைப் பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறேன். என்றாலும் விவரம் அறிந்துகொள்வதற்குப் போதுமான அளவு அங்கே சொல்ல இடமில்லை. ஆனால் சுருதி முறையை விளங்கிக் கொள்வதற்காக எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மாத்திரம் பொற்கடகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ச-ப முறையாய் ஒரு ஸ்தாயியில் உண்டாகும் பன்னிரண்டு சுரங்களும் அப் பன்னிரண்டு சுரங்களில் ஏழு சுர முறையிலும், ஆறு ஐந்து சுர முறைகளிலும், ஆரோகண அவரோகணம் மாறிவரும் முறையிலும், வக்கிர சுர முறையிலும் விக்ருதிபேத முறையிலும், இராகங்கள் மிக ஏராளமாய் உண்டாகக்கூடியவை என்று நாம் அறிந்தாலும் அவைகளுள் பிரத்தியட்சமாய் நாம் அறியக்கூடிய சில ஆரோகண அவரோகணமடங்கிய இராகங்களை இதன் முதல் பாகத்தில் பார்த்தோம். அவைகளினால் நாம் உண்டாக்கக்கூடிய இராகங்கள் இத்தனையென்றும் விக்ருதி பேதத்தினால் அவைகள் எப்படி பெருகி நிற்கின்றனவென்றும் காணச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறோம். அப்படி முதல்பாகத்தில் சொல்லியிருந்தாலும் அவைகளில் ஒவ்வொரு சுரமும் எத்தனை சுருதிகள் அல்லது அலகுகள் சேர்ந்து வருகிறதென்று ஒழுங்கு ஏற்பட்டாலொழிய ஒரு இராகம் என்று சொல்வதற்கும் இராகத்திற்குரிய விதி முறைகளோடு ஒரு இராகம், அதற்குக் கீதம், கீர்த்தனம் எழுதுவதற்கும் முடியாது. ஆகையால் ஒவ்வொரு சுரமும் இன்னின்ன சுருதியில் வருகிறதென்ற ஒரு முறையில்லாமற் போனால் இதற்கு முன் சொல்லப்பட்ட பிரஸ்தாரங்களினால் நமக்குப் பிரயோசனமில்லை. ஆகவே அவைகள் இன்னின்ன சுருதி முறையில் சொல்லப்பட வேண்டுமென்ற ஒழுங்குள்ள அட்டவணை நமக்கு இருக்கவேண்டும். அட்டவணையில் கண்ட இராகங்கள் கர்த்தா இராகங்களென்றும், தாய் இராகங்களென்றும், பாலைப் பண்களென்றும், பதினாறு சாதிப் பண்களென்றும் சொல்லப்படுகின்றன. இவைகள் உலகத் தோற்றமுதல் சனங்களின் அறிவு விருத்திக்கேற்றவாறு கொஞ்சங் கொஞ்சமாக விருத்தியடைந்திருப்பதாகத் தெரிகிறது. இது இயல்புதானே. எப்படியென்றால் முதல் முதல் ஓம் என்ற ஆதிநாதத்தை அனுசரித்த சங்கு, பேரிகை, முதலிய வாத்தியங்களும்; அதன் பின் ச-ப முறையாகச் சொல்லப்படும் தண்ணுமை, தக்கை, தடாரி, ஆமந்திரிகை போன்ற வாத்தியங்களும்; அதன் பின் ச ப ச, ச க ப ச என்ற ஒற்றுமையுள்ள தோல் கருவிகளும், துளைக் கருவிகளும், நரம்புக் கருவிகளும் உபயோகிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் பின் ச, ரி, க, ம, ப, த, நி, ச என்ற ஏழு சுரங்களும், அவற்றின் பின் பன்னிரண்டு சுரங்களும் உண்டாகி சங்கீதம் விருத்தியாகி வந்திருக்கிறது. இதிலும் நுட்பமாக யாழ் முதலிய வாத்தியங்களும், கமகத்தைக் குறிக்கும் இருபத்துநான்கு அலகில் சொல்லப்படும் வட்டப்பாலை முறையும் நாற்பத்தெட்டு, தொண்ணூhற்றாறு, நுட்ப சுருதிகளில் சொல்லப்படும் திரிகோணப்பாலை, சதுரப்பாலை முறைகளும் உண்டாயிருக்கின்றன. இவைகளில் உலகத்திற்கே பூர்வ குடிகளாகிய தென் தமிழ்நாட்டார் பல்லாயிர வருடங்களுக்கு முன்னாலேயே மிகத் தேர்ந்து இயல், இசை, நாடக மென்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் எழுதி தமிழ்ச் சங்கங்கள் ஏற்படுத்தி ஆராய்ந்து வந்தார்களென்றும், அவர்கள் பேசிவந்த தமிழ் மொழியே ஆதி மொழி யென்றும், அவர்கள் கற்று வந்த இசைத்தமிழே முதல் முதல் உண்டான சங்கீதமென்றும் பொற்கடகம் முதலாம் பாகத்தில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறோம். தென்தமிழ் நாடு இந்து மகா சமுத்திரத்தினால் மூடப்பட்டபின் தமிழ் மக்கள் வழங்கிவந்த பல அருங்கலைகளும் அதோடு சங்கீதமும் நூல் முறையில்லாமல் வெள்ளத் திற்குத் தப்பிவந்த சிலரின் மனப்பாடம் மாத்திரம் பின்னடியாருக்கு மிஞ்சின. அவைகள் பரம்பரையாய் செவியாரலாய் அணுவளவும் தவறாமல் நாளது வரையும் நிலைத்திருக்கின்றன; தற்காலத் தேர்ச்சிக்கும் மேற்பட்டவைகளாகத் தெரிகின்றன. வெகு சமீப காலத்தில் (கி.பி.1212-1247) வந்த சங்கீத ரத்னாகரர், மிக வீரமுள்ள புலியின் செயல் அறியாத சிறுவர்கள் புலியுருவாய் அமைந்த பொம்மைகளை வைத்து விளையாடுவதைப் போலத் தென்னிந்திய சங்கீதத்தின் நுட்பம் தெரியாமல், ஒரு ஸ்தாயியில் 22 ஸ்ருதிகள் வழங்கி வருகின்றனவென்று பெயர் வைத்துக் கிரகமாற்றிச், சங்கீதம் இப்படி யிருக்கிறதென்று நூல் எழுதி வைத்தார். தென்னிந்திய கானத்தில் வழங்கி வரும் நுட்ப சுருதிகள் 22 சுருதியில் அடங்கிவிடுமென்பதாக அவர் நினைத்தார். பிர்மமேளம் எழுதியவர் 24 சுருதிகளில் தென்னிந்திய சங்கீதம் அடங்கிவிடுமென்று மேளக்கர்த்தா எழுதினது போலவே இவரும் 22 சுருதிகளில் அடங்கிவிடும் என்று நினைத்தாரேயொழிய இவர் மேல் வேறு பிசகில்லை. ஆனால் 96 போன்ற நுட்ப சுருதியில் பாடப்படும் தென்னிந்திய கானத்தின் இரகசியம் தெரியாமல் இது எழுதப்பட்டிருக்கிறதென்று நாம் நிச்சயமாய் சொல்லுவோம். என்றாலும் காலா காலத்தில் வழங்கிய மேளக் கர்த்தாக்கள் பலவாயிருப்பதினால் அவைகளில் முக்கியமான சிலவற்றைச் சொல்லி அவற்றில் நாம் தற்காலம் அனுசரிக்கவேண்டியது இன்னதென்று தெளிவுறச் சொல்லவேண்டும். பூர்வமாய் வழங்கிவந்தவைகளில் சில பூரண மில்லாமலும், நுட்பமான சுருதிகள் வழங்குவதற்கு வழி துறையில்லாமலும், இருப்பதனால் நாம் சாரீரத்தில் சொல்லக்கூடிய நுட்ப சுருதிகள் யாவும் வழங்கவும், உலகிலுள்ள யாவரும் தெளிவுறத் தெரிந்துகொள்ளும் ஒரு முறையை (அட்டவணையைத்) தெரிந்துகொள்ளவும் வேண்டும். அம் முறையில் இன்னின்ன இராகங்கள் கொண்டு அவைகளுக்கு இராகம் செய்ய முறைபார்க்க வேண்டும். 2. பூர்வ தமிழ்மக்கள் ஒரு ஸ்தாயியில் வழங்கிவந்த பன்னிரு சுரங்கள் ஒரு ஸ்தாயியில் முதல் முதல் ஒலிப்பது ஆதாரசட்சம். ஆதார சட்சத்திற்குப் பின் ஆதார சட்சத்தோடு பொருந்தும் சுரம் அதற்கு மேல் ஸ்தாயி சட்சம். அது வீணைத் தந்தியை இரு கூறாகப் பிரிக்குமிடத்தில் இருக்கிறது. ஆதாரசட்சத்திற்கும் மத்திய ஸ்தாயி முடிந்த சட்சத்திற்கும் நடுவில் தந்தியின் நீளத்தில் சற்றேறக்குறைய மூன்றிலொன்றான பாகத்தில் வரும் பஞ்சமம் சட்சமத்தோடு மிகப்பொருந்தும் ஓசையுடையது. சட்சமத் தோடு பொருந்தும் இப் பஞ்சமத்தைக் கொண்டே ஒரு ஸ்தாயியில் சுரங்கள் யாவும் கண்டுபிடிக்கப்படுகின்றன. சட்சமம் உயர்ந்த அல்லது தாழ்ந்த ஓசை யுடையதாய் எடுத்துக்கொண்டாலும் பஞ்சமம் அதற்குப் பொருத்தமான ஓசை யுடையதாய் வருகிறதென்று நாம் அறிவோம். அதுபோலவே சட்சமத்திற்குப் பஞ்சமம் கண்டுபிடித்து அதன் பின்பஞ்சமத்தை சட்சமமாக வைத்துக்கொண்டு, அதற்குப் பஞ்சமம் கண்டு, அப்பஞ்சமத்தை சட்சமமாக வைத்துக்கொண்டு அதற்குப் பஞ்சமம் கண்டு இப்படியே பஞ்சமம் கண்டு பிடித்துக்கொண்டு போக ஒரு ஸ்தாயியில் 12 சுரங்களும் கிடைக்கும். இவை சரியான சுரஞான முள்ளவர்களுக்கு மாத்திரம் கூடியதென்று சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை “ஏற்றிய குரலிளி யென்றிரு நரம்பி னொப்பக் கேட்கு முணர்வின னாகி” என்பதினால் சட்சமம், பஞ்சமம் சேரும் சரியான ஓசையை உணர்ந்தவர்களே சட்சம பஞ்சம முறையாய் ஒரு ஸ்தாயியில் பன்னிரு சுரங்கள் வருகின்றனவென்று காண்பார்கள். மற்றவர் ஒரு ஸ்தாயியில் சரியானபடி முடிவுபெறாமல் ஸ்தாயிக்குமேல் கூடியும் குறைந்தும் போய் ஒரு ஸ்தாயியில் பல சுரங்களும் சுருதிகளுமிருக்கின்றனவென்று வாதாடுவார்கள். ஆனால் பூர்வ தமிழ் மக்கள் ‘வண்ணப்பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு’ அதாவது சட்சம பஞ்சம முறையாய் யாழில் பன்னிரு சுரங்களை அமைத்து அவைகளில் இணை, கிளை, பகை, நட்பென்னும் சுரங்களை ஆராய்ந்து பகை நரம்பு நீக்கி ஏழு சுரங்களில் கானம் செய்திருக்கிறார்களென்று நாம் அறிகிறோம். பஞ்சம முறையாய் சுரங்கள் கண்டுபிடிப்பதற்கு அனுகூலமாய் ஒரு இராசி வட்டத்தைப் பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்து அவைகளில் ரிஷப இராசி முதல் ச-ப முறையாய் சுரங்கள் தொடர்ந்து வரும் முறையை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். குரலை அதாவது சட்சமத்தை எடுத்துக் கொண்டால் அதற்குமேல் வரும் ஏழாவது இராசியாகிய தனுசில் பஞ்சமம் (இனி) நிற்கும். பஞ்சமத்தை சட்சமமாக எடுத்துக்கொண்டால் அதற்குமேல் வரும் ஏழாவது இராசியாகிய கடகத்தில் ரிஷபம் (துத்தம்) தோன்றும். துத்தத்தை சட்சமமாக எடுத்துக்கொண்டால் அதற்குமேல் ஏழாவது இராசி யாகிய கும்பத்தில் தைவதம் (விளரி) தோன்றும். இப்படியே ஏழாவது ஏழாவது இராசியில் வரும் சுரங்கள் சட்சம பஞ்சம முறையாய்ப் பொருத்த முடையவைகளென்றும் இம்முறையே ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்களும் கிடைக்கின்றன என்றும் காண்கிறோம். அடியில் வரும் வட்டப்பாலைச் சக்கரத்தில் காண்க. ச-ப முறையாய் வட்டப்பாலையில் வலவோட்டாய் உண்டாகும் பன்னிரு சுரங்கள். பூர்வ தமிழ் மக்கள் ஒரு ஸ்தாயியில் வழங்கி வந்த பன்னிரு சுரங்கள். ச-ம முறையாய் வட்டப்பாலையில் இடவோட்டாய் உண்டாகும் பன்னிரு சுரங்கள். 3. பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆறு தாய் இராகங்கள் உண்டாகும் விதம். செம்பாலையில் பிறக்கும் ஏழு பெரும் பண்களும் இன்னின்ன இடைவெளியோடு பன்னிரண்டு இராசிகளில் நிற்கின்றனவென்பதைக் காட்டும் அட்டவணை. பன்னிரண்டு சுரங்களே பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்தார்களென்றும் இவற்றில் கிரக சுரம் மாற்றி ஆறு தாய் இராகங்களும் அவற்றின் ஜன்னிய இராகங்களும் பாடினார்களென்றும் காண்கிறோம். இப்பன்னிரு சுரங்களில் 1, 2, 2, 1, 2, 2, 2, என்ற இராசிகளில் வரும் சுரங்களை ஆதி இராகமாக அதாவது செம்பாலைப் பண்ணாக எடுத்துக் கொண்டு அம்முறையே கிரகமாற்றி ஆறு தாய் இராகங்கள் இதனால் காந்தார நிஷாதங்கள் மூன்று இடங்கள் பெற்று வருவதாகக் காண்போம். அப்படியே பஞ்சம மத்திமங்களும், காந்தார மத்திம ஸ்தானங்களைப் பெற்று வழங்குகிறதாகவும் காண் கிறோம். ரிஷப தைவதங்களும், காந்தார நிஷாதங்களின் இடங்களில் வழங்கிவந்திருக்கிறதென்று தோன்றுகிறது. ஒரு ஸ்தாயியில் ச-ப முறையாக உண்டாகும் சுரங்கள் பன்னிரண்டென்றும் அச் சுரங்களை கிரகமாற்றி ஆறு தாய் இராகங்களும் அவைகளில் பல கிளை இராகங்களும் உண்டாக்கி பூர்வ தமிழ் மக்கள் கானம் செய்தார்களென்றும் பார்த்தோம். அவைகளில் காந்தார நிஷாதங்கள் தமக்குரிய இரண்டு இராசியில் வழங்குவதோடு தங்களுக்குக் கீழுள்ள ரிஷப தைவதங்களில் ஒரு இடத்தையும் பெற்று மூன்று இராசிகளில் ஆறு அலகோடு வழங்கிவருவதையும் பார்த்தோம். இதனால் தற்காலத்தில் ரிஷப தைவதங்களும் காந்தார நிஷாதமும் மூன்று மூன்று இராசி அல்லது ஆறு அலகு பெற்று வழங்கி வரும் முறை பூர்வ காலத்தில் இசைத் தமிழில் வழங்கிவந்ததென்று தெளிவாக அறிகிறோம். இம்முறையினால் இப்போது வழங்கி வரும் 72 மேளக்கர்த்தாவின் முறை அக்காலத்தில் இருந்ததாகச் சொல்லவேண்டும். அல்லது 72 மேளக்கர்த்தாக்கள் உண்டாவதற்கு ஆதாரமான அம்சங்களிருந்தன வென்றாவது சொல்ல வேண்டும். இது தவிர வட்டப்பாலை 1 அல்லது 1/24 சுருதியும், திரிகோணப்பாலை ½ அல்லது 1/48 சுருதியும், சதுரப்பாலை ஙு அல்லது 1/96 என்ற நுட்ப சுருதியும் பன்னிரண்டான அரைச் சுரங்களில் ச-ப முறையாய் வரும் 2 சுரங்களோடு சேர்த்துப் பாடப்பட்டு வந்திருக்கின்றனவென்று தெளிவாக அறிகிறோம். தாய் இராகங்களின் கிளை இராகங்களில் நுட்பமான சுருதிகள் பலவும் சம்பந்தப்பட்டு வருவதனால், முக்கியமான அரைச் சுரங்களையே பிரதானமாகக்கொண்டு, அவற்றை அந்தந்த தாய் இராகங்களின் ஜன்னிய இராகமென்று சொன்னார்கள். அதன் விபரம் தற்காலத்தில் தெரிந்து கொள்ளாமல் பலர் பலவிதமாய்க் குதர்க்கம் செய்வார்கள். பூர்வ தமிழ் முறைப்படி 12 சுரங்களில் கிரகமாற்றி அநேக இராகங்கள் உண்டாக்கியது போலவே பன்னிரண்டு சுரங்கள் சேர்ந்து 72 விதமான தாய் இராகங்கள் உண்டாக்கி அவைகளில் தற்காலத்தில் வழங்கும் இராகங்கள் யாவும் குறித்ததானது மிகவும் கொண்டாடக் கூடியது. 72 மேளக்கர்த்தா புதிதாக யாரோ எழுதிவிட்டார்கள் ; அவற்றில் கர்த்தா இராகங்களே சுருதி பேதமாய்ப் பாடப்படுகின்றன ; இது சரியல்ல’ என்று குரங்குப்பிடியாய்ச் சாதிக்கிறவர்களும் பலர் உண்டு. விக்ருதி பேதங்களால் உண்டான 72 தாய் இராகங்களையும் சொல்லி அவைகளிலுண்டாகும் கிளை இராகங்கள் இன்னின்ன சுருதியோடு வழங்கிவருகின்றன வென்றும் ‘ஆயம், சதுரம், திரிகோணம், வட்டமெனப் பாய நான்கும் பாலையாகு’ மென்று பூர்வ இசைத்தமிழில் சொல்லிய முறைப்படி நுட்ப சுருதிகள் சேர்ந்துவருகிற விதம் இன்னதென்றும் தெளிவுறச் சொல்லியிருப்பார்களானால் எல்லாரும் கண்டுகொள்ள ஏதுவாயிருக்கும். அது சொல்லாமையினால் ‘பாம்பைப் பிடித்த குரங்கு பாம்பு அழுகி இற்று விழுகிற வரைக்கும் ஆகாரமின்றிச் சேதுபோய் ஸ்நானம் பண்ண அலைந்த கதைபோல்’ ஆகிவிட்டது. சங்கீதமென்றால் தொட்டவிடமெல்லாம் குதர்க்கம். கர்த்தா இராகங்களில் சந்தேகம். ஆரோகண அவரோகணமாய் வரும் சுரங்களின் முறை இப்படி வரலாமா என்று சந்தேகம். வாதி சம்வாதியான சுரங்களில் சந்தேகம். சீவ சுரத்தில் சந்தேகம். சத்துரு சுரங்களில் சந்தேகம். இப்படி தொட்டவிட மெல்லாம் சந்தேக முண்டாகிச் சரியான முறையைக் காணாமையினால் நாத சொரூபமாய் நின்ற உண்மையைக் கட்டுக்கதைகளினால் ஊன்றக்கட்டுவார்போலக் காலந் தள்ளிக்கொண்டு வருகிறார்கள். இதோடு போயிற்றா? உண்மையை விசாரித்து அனுபோகத்திற்கு வரும் முறையைச் சொல்லுகிறவர்களுக்கும் இடறு கல்லாயிருக்கிறார்கள். 72 மேளக்கர்த்தாவைப் பற்றிய சில குறிப்பு இதன்பின் சொல்லப்படும். 5. பூர்வ தமிழ்மக்கள் ஒரு ஸ்தாயியில் வழங்கி வந்த நால்வகையாழும் (கிராமமும்) பதினாறு சாதிப் பண்களும். ஒரு ஸ்தாயியில் ச-ப முறையாய் உண்டாகும் பன்னிரண்டு சுரங்களில் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால் வகை யாழ் பிரித்து அதாவது சட்ச கிராமம், மத்திம கிராமம், பஞ்சம கிராமம், தாரக்கிராமம் என்று கிராமம் வகுத்து இராகங்களைப் பெருக்கிப் பாடி வந்திருக்கிறார்கள். அதன்மேல் ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது யாழிலும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நாலு சாதி இராகங்களுண்டாக்கிப் பதினாறு சாதிப் பண்கள் பாடி வந்திருக்கிறார்கள். இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்றுண்டு. இணை இணையாய் அல்லது ஏழாவது ஏழாவதாய் அல்லது சட்சம பஞ்சம முறையாய் வரும் எந்த இரண்டு சுரத்திலாவது ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய் யாழில் படிக்க வேண்டுமென்று சொல்லியிருப்பதே, இப்படிச் சொன்னதை சரியாக விளங்கிக்கொள்ளாமல் மற்றவர்கள் ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகள்தான் உண்டென்று எல்லைகட்டி வைத்தார்கள். சங்கீத சாஸ்திரத்திற்கு இது ஒரு பெரிய மயக்கமான இடம். நால்வகை யாழில் பிறக்கும் 16 பண்களின் பெயரும் அவற்றின் ஆரம்ப சுரமும் அலகு முறையும். 6. பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த திரிகோணப்பாலை, சதுரப்பாலை இராகங்கள். ஆயப்பாலை முறையாய்க் கிரகம் மாற்றிப் பல தாய் இராகங்களைப் பாடி வந்தது போலவே வட்டப்பாலை முறையில் நால்வகை யாழ் முறையில் கிராமம் மாற்றி இரண்டு அலகு குறைத்துப் பல இராகங்கள் பாடி வந்தார்கள். நால்வகை யாழில் கிராமம் மாற்றிப் பாடினது போலவே அவைகளில் சாதி மாற்றியும் பல இராகங்கள் பாடினார்கள். இதன்பின் யாழ் முறைப்படிக் கமகமாய்ப் பாடி வந்த இரண்டு சுரங்களில் ஙூ அலகு குறைத்து அல்லது சேர்த்துப் பாடிய திரிகோணப்பாலையாலும் ஙு அலகு சேர்த்து அல்லது குறைத்துப்பாடிய சதுரப்பாலையாலும் அளவிறந்த இராகங்கள் உண்டாக்கி இனிமைபெறப் பாடியிருக்கிறார்களென்றும் அவ்விராகங்களில் பல நம் அனுபோகத்தில் இன்றுவரையும் இருக்கின்றனவென்றும் காண்கிறோம். (கருணாமிருத சாகரம் முதல் புத்தகம் 5ம் பாகத்தில் காண்க.) 7. சங்கீத ரத்னாகரம் இராகவிவேக அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் இராகாங்க ராகங்கள். ஜன்னிய இராகங்களில் பாஷாங்கங்கள் (1) வேளாவளி (2) பிஞ்சினி (3) நட்ட உபாங்கங்கள் இவைகளில் *இவ்வடையாளமிட்ட இராகங்கள் பூர்வ தமிழ்மக்கள் பாடிவந்த இராகங்களென்று இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னிருந்த பிங்கல முனிவர் நிகண்டில் காணலாம். 8. பரதர் நூலில் சொல்லப்படும் 36 தாய் இராகங்கள். இனிமேல் 36 இராகங்களின் உற்பத்தியைப்பற்றிச் சொல்லுகிறேன். 1. பைரவம் 2. பஞ்சமம் 3. நாடம் 4. மல்லாரம் 5. கௌடமாளவம் 6. தேஷாஸம் இந்த ஆறு இராகங்களும் உலகபிரசித்தியாய்ச் சொல்லப்படுகின்றன. இவைகள் ஒவ்வொன்றிலு மிருந்துண்டாகும் இராகங்களைச் சொல்லுகிறேன். 9. பரதர் தமது காலத்திற்கு முற்பட்ட மிகப்பழமையான நூல்களில் சொல்லப்படுகிறதாகச் சொல்லும் 36 தாய் இராகங்கள். 1. பைரவம் 3. இந்தோளம் 5. மேகநாதம் * 2. மாளவ கௌசிகம் 4. தீபகம் 6. ஸ்ரீராகம் இவைகள் ஒவ்வொன்றிற்கும் ஐந்து ஐந்து ஸ்திரீ ராகங்களுண்டு. அவையாவன:- இவை மண்டலகண்டிதர் எழுதிய மாதுர்கா விலாசத்தில் 141, 142, 143 ஆம் பக்கங்களில் சொல்லப்படுகின்றன. *மேக இராகம் என்று பூர்வ தமிழ்மக்களும் மேக விரஞ்சி அல்லது வேகவிரஞ்சி என்று சங்கீத ரத்னாகரரும் வழங்கிவந்தார்கள். தற்காலத்தில் மேகரஞ்சனி என்று வழங்கி வருகிறது. அப்படியானால் ஆறு தாய் இராகங்களும் தமிழ் இராகங்களே. 10. பூர்வ தமிழ் நாட்டில் வழங்கி வந்த இராகங்கள். மேற்காட்டிய அட்டவணையை நாம் கவனிக்கையில் எட்டு புருட இராகமென்றும் அவைகள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாக இருபத்துநான்கு ஸ்திரி இராகங்களென்றும் சொல்வதாகக் காண்போம். அவைகள் முப்பத்திரண்டும் 4 x 8 = 32 ஆக வழங்கி வந்திருக்கலா மென்றும் நாம் நினைக்க இடமிருக்கிறது. சுத்தசுரங்கள் பன்னிரண்டாக வழங்கிவரும் முறையில் இரண்டு அலகுபெற்ற ரிஷபம் இரண்டு அலகு பெற்ற காந்தாரத்தோடும் நாலு அலகுள்ள காந்தாரத்தோடும் வரும்பொழுது இரண்டு பேதத்தைப் பெறும். அப்படியே நாலு அலகுள்ள ரிஷபம் காந்தாரத்தின் இரண்டு பேதங்களையும் பெறும். ஆக ரிஷபகாந்தாரங்கள் நாலு பேதத்தை யடையும். இம்முறையே தைவத நிஷாதங்களும் நாலு பேதத்தையடையும். ரிஷப காந்தாரத்தின் நாலு பேதங்களில் ஒவ்வொன்றோடும் தைவத நிஷாதங்கள் கலந்து வரும்பொழுது 4 x 4 = 16 பேதங்களாகும். இதோடு சுத்த மத்திமமும் பிரதிமத்திமமும் இப் பதினாறு பேதங்களோடு கலந்து வரும்பொழுது முப்பத்திரண்டாகும். இம் முறையில் வழங்கிவரும் தற்கால இராகங்களின் முறைப்படி பெயர் சொல்லி யிருக்கிறோம். பூர்வ முறைப்படி அவ்விராகங்கள் இன்னின்ன சுரமுறையில் இருந்தனவென்று சொல்லும் நூல் இல்லை. இருந்தாலும், ரிஷப காந்தாரங்களின் நாலு முக்கியமான பேதங் களையும் அவற்றோடு பிரதிமத்திமம் கலந்து வரும் பொழுதுண்டாகும் நாலு பேதங்களையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு 8 புருட இராகங்களென்று சொல்வதாகவும் அதற்குப் பின் ரிஷப தைவதங்களின் பேதத்தினால் வரும் மும் மூன்று இராகங்களை ரிஷப காந்தாரத்தோடு வரும் 8 இராகங்களோடு சேர்த்து இனம் பிரித்துச் சொல்லுவதாகவும் நாம் நினைக்கவேண்டி யிருக்கிறது. இதனால் சுரபேதங்களை அறிந்துகொள்ளக் கூடிய விதமாய் ரி-க வின் நாலு பேதங்களை புருட இராகமென்றும் த-நி யின் பேதங்களை ஸ்திரீ இராகமென்றும் பெயரிட்டழைக்கிறதாகக் காண்கிறோம். ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு சுரத்தில் ரி-க வின் முன் பாகத்தைப் பிரதானமாய் எடுத்துக் கொண்டு அதற்கு வாதி சம்வாதியான த-நி என்ற பேதங்களை ஸ்திரீ பாகமாக்கிப் பெயர் வைத்ததானது மிகவும் கொண்டாடத்தக்கது. பஞ்சமத்தின் கீழுள்ள ரி-க என்ற சுரங்கள் பஞ்சமத்திற்கு மேலுள்ள த-நி சுரங்களோடு சட்சம பஞ்சம முறையாய்ச் சேர்ந்து வருகின்றனவென்று நாம் அறிவோம். இதையே இணை சுரமென்றும் பொருத்த சுரமென்றும் இம்முறையே சுரங்கள் கண்டுபிடித்தார்களென்றும் சொல்லுவது மிகப் பொருத்தமாயிருக்கிறது. சட்சமத்திற்கு எப்படிப் பஞ்சமம் இணை சுரமாய் அல்லது களத்திர சுரமாய் வருகிறதோ அம்முறையில் புருட இராகமென்றும் ஸ்திரி இராகமென்றும் பெயர் வைத்ததாக நாம் கவனிக்கவேண்டும். இம்முறையில் 32 தாய் இராகங்கள் பிறக்கும் முறை பின் வரும் அட்டவணையில் காண்க. 11. பூர்வ தமிழ்நாட்டில் வழங்கிவந்த 32 இராகங்கள். (32 இராகத்தில் சுத்த மத்திம இராகங்கள் 16-ம் பிரதி மத்திம இராகங்கள் 16-ம்) 12. தற்காலம் வழங்கிவரும் 72 மேளக்கர்த்தாக்களைப்பற்றி. பூர்வ தமிழ்மக்கள் ஒருஸ்தாயியில் வழங்கி வந்த ஏழு சுரங்களை செம்பாலைப்பண் அல்லது தீர சங்கராபரண முறைப்படி, 1, 2, 2, 1, 2, 2, 2, என்னும் இராசிகளின் இடைவெளியுள்ளதாய் அதாவது சட்சமத்திற்கு ஒரு இராசியும் ரிஷபத்திற்கு இரண்டு இராசியும், காந்தாரத்திற்கு இரண்டு இராசியும், மத்தி மத்திற்கு ஒரு இராசியும் பஞ்சமத்திற்கு இரண்டு இராசியும் தைவதத்திற்கு இரண்டு இராசியும் நிஷாதத்திற்கு இரண்டு இராசியுமாக; சட்சமம் 2 அலகும், (சுருதியும்), ரிஷபம் நாலு அலகும், காந்தாரம் நாலு அலகும், மத்திமம் இரண்டு அலகும், பஞ்சமம் நாலு அலகும், தைவதம் நாலு அலகும், நிஷாதம் நாலு அலகுமாக வைத்துப் பாடியிருக்கிறார்களென்று தெளிவாக அறிகிறோம். இதனால் ஒருஸ்தாயியில் ச-ப முறையாய் அல்லது இணை இணையாய் அல்லது ஏழாவது ஏழாவது இராசியாய் சுரம் பொருந்தும் முறையில் பன்னிரண்டு அரைச்சுரங்கள் அதாவது இரண்டு அலகுள்ள அல்லது இரண்டு சுருதிகொண்ட பன்னிரண்டு சுரங்கள் கண்டு பிடித்து அவற்றைப் பன்னிரண்டு இராசிகளில் அமைத்துச் செம்பாலை அல்லது சங்கராபரண முறைப்படிக் கிரக மாற்றி ஆறு தாய் இராகங்களும் அவைகளைச் சேர்ந்த பல கிளை இராகங்களும் பாடினார்களென்று இதன் முன் பல இடங்களிலும் சொல்லி யிருக்கிறோம். மேலும் இம்முறையில் பன்னிரு பாலை பிறக்கும் வழியில் காணப்படும் சில சுர சம்பந்தங்களினால் பல இராகங்கள் உண்டாகும் முறையும் தோன்றுகிறது. சக்கரத்தில் காண்கிறபடி ரிஷப காந்தாரங்கள் நாலு பேதத்தையடைவதுபோல, ஆயப்பாலை முறையில் பிறக்கும் பன்னிரு பாலையில் ரிஷப காந்தாரங்கள் தங்கள் இடம் விட்டு முன்பின் சென்று மும்மூன்றாகி ஆறு பேதத்தை அடையக் கூடியவையென்று 2, 4, 7, 9, 11, ஆம் வரிகளில் காண்போம். அதாவது நாலாவது தைவதத்தில் நிஷாதமும் நாலாவது ரிஷபத்தில் காந்தராமும் கீழ் இறங்கி நிற்கிறதாகக் காண்போம். இதுபோலவே மத்திம பஞ்சமங்களும் காந்தார மத்திமங்களின் இடத்தில் இறங்கி நிற்கின்றன. இதனால் சுரங்கள் வரவேண்டிய இரண்டு இராசிகள் போக மூன்று இராசிகள் வரும்படியாக அமைத்துப் பல பேதங்களுண்டாக்கி 12000 ஆதி இசைகள் பாடினார்களென்று காண்கிறோம். பன்னிருசுரங்களில் பாடிய ஆயப்பாலை முறையும் இருபத்து நான்கு சுருதிகளில் இரண்டு சுருதி குறைத்துக் கானம்பண்ணிவந்த வட்டப்பாலை முறையும் இன்னும் நுட்பமான சுருதிகளில் கானம் பண்ணி வந்த திரிகோணப்பாலை சதுரப்பாலை முறைகளும் இசைத் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. இவைகளால் எண்ணிறந்த இராகங்களுண்டாகக் கூடுமாயினும் இவற்றின் ஆரோகண அவரோகணங்கள் இன்னவையென்று காணக் கிடைக்காமையால் நாம் வற்புறுத்திச் செல்ல ஏதுவில்லை. தேவாரம், திருவிசைப்பா, திருத்தாண்டகம் முதலிய பக்திக்குரிய நூல்களில் சொல்லப் படும் இராகங்களின் பெயரைக் கொண்டும் அவைகளின் சந்தத்தைக்கொண்டும் அவைகளுக்கு ஆரோகண அவரோகணங்களைக் கண்டுபிடித்து இக் காலத்தில் பாடப்படும் இன்னின்ன இராகத்திற்குச் சரியாயிருக்கிறதென்று நாம் குறித்துக் கொண்டாலும் அவைகளிற் சில தற்கால முறைப்படி மாறியிருக்கலாமே. அவைகளிற் சிலவற்றை பொற்கடகத்தில் பார்த்திருக்கிறோம். மற்றும் தமிழ் நாட்டில் வழங்கிவரும் கலித்துறை, வெண்பா, விருத்தங்களின் இராகங்கள் யாவும், பூர்வ தமிழ்ப் பெயர்கள் மாறி அன்னிய பாஷையின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இப்படிச் சந்தேகமான நிலைக்கு வந்த காலத்தில் ‘தமிழர்களுக்கு ஏது சங்கீதம்?’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லுவார்கள்? உள்ளக் கருத்தை உள்ளபடி சொல்லவும், பிறர் அறிந்துகொள்ளவும் போதுமான தமிழ் மொழிகள் இருந்தும்; அவைகளை விட்டு விட்டு வடமொழியில் சொல்வது மிக அழகென்று நினைத்துப், பல வட சொற்களைச் சேர்த்து, இரண்டொரு தமிழ் மொழிகளையும் அவற்றோடு கலந்து, இது தமிழ் மொழி என்று சொல்லுகிறவர்கள் நிறைந்த இக்காலத்தில் நான் எதைச் சொல்வது? இயற்றமிழேயன்றி, இசைத்தமிழும், நாடகத்தமிழும், அன்னிய சொற்களின் கலப்பினால் நாளடைவில் தமிழர்களுக்குச் சங்கீதம் ஏது என்று சொல்லும் நிலைக்கு வந்தனவோ? இசை, கூத்து என்ற தமிழின் இரு பகுதிகளும் ஒழிந்துபோகுமே. தமிழ்மக்கள் முத்தமிழையும் ஆதரிக்காத குறையால் இவ்விதம் நேர்ந்ததேயொழிய மற்றவரைக் குறை சொல்வதற்கு இடமில்லை. இப்படி வருந்தக் கூடிய நிலைமையில் நாமிருக்கிறோமென்று தெளிவாக அறிந்தாலும்; தற்காலம் வழக்கத்திலிருக்கும் முறையை மாற்றிச் சொல்வது நல்லதென்று நினைக்கவில்லை. மாற்றிச் சொல்வதற்கு மிகுந்த விருப்பம் எனக்கிருந்தாலும் சாஸ்திர விஷயமான சில இரகசியங்களைத் தெளிவான நடையில்யாவரும் அறிந்துகொள்ளும்படி தற்காலம் அனுபவத்திலிருக்கிற முறைப்படிச் சொல்வதே மேல் என்று நினைக்கிறேன். 72 மேளக்கர்த்தா என்று சொல்லும் அட்டவணை எந்தக் காலத்தில் உண்டான தென்று திட்டமாகச் சொல்லக்கூடாதிருந்தாலும் சுமார் 250 வருஷங்களுக்கு முன்னிருந்த வேங்கடமகியினால் உண்டானதென்று சொல்ல ஏதுவில்லை. மேலும் 1212-1247 வரையுமிருந்த சங்கீதரத்னாகரருடைய காலத்தில் இம்முறையிருந்ததாகவும் எண்ண ஏதுவில்லை. வேங்கடமகியின் காலத்திற்கு முன்னும் சங்கீத ரத்னாகரருடைய காலத்திற்குப் பின்னுமாகிய இடைப்பட்ட காலத்தில் இது உண்டாகியிருக்கவேண்டும். இராமனாதபுர சமஸ்தானத்தில் தற்காலமிருக்கும் மகா-ராச-ராச-சிறி சீனிவாச ஐயங்கார் அவர்களிடத்திலுள்ள பழமையான எட்டுப் பிரதிகளைப் பார்த்துக்கொண்டு வருகையில் வியாச கடகம் என்ற பெயருடன் 72 மேளக்கர்த்தாவின் லக்ஷணம் சொல்லும் ஒரு ஏட்டைப் பார்த்தேன். அதில் கனகாங்கி, ரத்னாங்கி, கானமூர்த்தி, வனஸ்பதி என்ற கடபயாதி சங்கையுடன் தற்காலம் வழங்கிவரும் 72 மேளக்கர்த்தாக்கள் சுலோக ரூபமாகக் காணப்பட்டன. இப்புத்தகம் எழுதியவர் வேத வியாசர் அல்ல என்றும் அவருக்குப் பின் வந்த பல வியாசர்களில் ஒரு வியாசராயிருக்க வேண்டு மென்றும் தோன்றுகிறது. வேதம் வகுத்த வியாசரால் எழுதப்பட்டிருக்கு மானால் சங்தகீத ரத்னாகரரும் அவர்க்கு முற்பட்ட பரதரும் அம்முறை யையே தம் புத்தகத்தில் எடுத்ததாண்டிருப்பார்கள். பூர்வதென்தமிழ் நாடு கடல்கொண்டபின் பூர்வ தமிழ் மக்களில் சங்கீதத்திற்குரிய பரம்பரையாரின் பழக்கத்திலிருந்த உருப்படிகளைப் பாடக் கேட்ட மற்றவர்கள் இசைத் தமிழுக்கு எல்லைபோட ஆரம்பித்தார்கள். பலர் பலவாறாக எழுதிவருகையில் 72 மேளக்கர்த்தாவில் இசைத் தமிழ் யாவும் அடங்கிவிடுமென்று பன்னிருபாலையின் சுரப்படி 72 தாய் இராகம் உண்டாக்கி அவைகளில் எண்ணிறந்த இராகங்களைக் குறித்தார்கள். இதன் பின் இதிலும் நுட்பமாக சுரங்கள் கலந்து வருகின்றனவென்று அனுபவத்தால் அறிந்து 24 சுருதிகளில் மேளக்கர்த்தா உண்டாக்கி விட்டால் தமிழ் இராகங்கள் அனைத்தையும் அதில் அடக்கிவிடலாமென்று நினைத்து 4624 தாய் இராகங்களடங்கிய பிர்ம மேளம் என்ற நூலை கனகையா கலி சாதுரீகம் என்பவர் தெலுங்கில் வியாக்கியானத்துடன் எழுதியிருக்கிறார். இதில் 24 சுருதிகளில் வரும் சுரங்களின் சேர்க்கையால் உண்டாகும் 1156 பேதங்கள் சுத்த மத்திமம் முதல் பஞ்சமம் வரையுமுள்ள மத்திமத்தின் நாலு பேதங்கள் சம்பந்தப்படும்பொழுது 4624 மேளக்கர்த்தாவாகச் சொல்லப் படுகின்றன. 12 அரைச் சுரங்களில் வரும் 72 மேளக்கர்த்தாக்கள் ருத்ர மேள மென்றும் ஒற்றைப்பட்ட பத்து சுருதிகளும் சட்சமம், பஞ்சமம் சேர்ந்த 200 மேளக்கர்த்தாக்களும் விஷ்ணு மேளமென்றும் 24 சுருதிகளாகிய 4624 மேளமும் பிர்ம மேளமென்றும் சொல்லப்படுகின்றன. பிர்ம மேளத்தில் விஷ்ணு மேளமும் ருத்ர மேளமும் அடங்கியிருக்கின்றன. இவைகளில் முதல் சுத்தமத்திம மேளத்தின் இராகங்களுக்குப் பெயரும் சுரம் கிரக நியாச அம்சங்களும் சூத்திர ரூபமாய்ச் சொல்லும் மேளாதிகார லட்சணம் என்ற புத்தகம் தஞ்சை அரண்மனை சரஸ்வதிமஹால் என்ற புத்தகசாலையில் இன்றுமிருக்கிறது. இதில் கனகாங்கி ரத்னாங்கி என்ற 72 மேளக்கர்த்தாவும் அதன் அதன் சுரமுறையில் கடபயாதி எண் முறைப்படி வருகின்றன. ஆனால் மற்றப் பெயர்கள் அம்முறையில் அமையவில்லை. இதனால் கனகாங்கி ரத்னாங்கி முதலிய 72 மேளக்கர்த்தாக்களையும் ஒருவர் செய்த பின்பே 24 சுருதி முறையில் சொல்லப்படும் பிர்ம மேளம் செய்யப்பட்டிருக்கவேண்டுமென்று தெளிவாகக் காண்கிறோம். இது நிற்க பூர்வ தமிழ் மக்களின் கானம் 72 மேளக்கர்த்தாவில் அடங்கவில்லை என்று நினைத்து எழுதிய பிர்ம மேளத்திலும் அடங்காதது கண்டு பிர்மமேளத்தின் முறையை அனுசரிக்காமல் விட்டு விட்டார் போலும். தமிழ் மக்கள் பயின்ற திரிகோணப்பாலை சதுரப் பாலைகளில் வழங்கி வரும் 48, 96 ஆன நுட்ப சுருதிகள் 24 சுருதிகளுக்குள் எப்படி அடங்கும்? ஆகையால் பிர்ம மேளம் வழங்காதொழிந்தது. ஆயப்பாலை முறையில் வழங்கி வரும் பன்னிரு சுரங்கள் இராக உற்பத்திக்குக் காரணமாயிருக்கிறதென்று நாம் அறிகிறோம். இப் பன்னிரு சுரங்களே கிரக மாற்றும் பொழுதும், கிராம மாற்றும்பொழுதும், சாதிகள் மாற்றும் பொழுதும், பல பேதங்களைப்பெறும். ஆனால் வட்டப்பாலை முறையில் வரும் சுருதிகள் இருபத்து நான்கிலும் மேளக்கர்த்தா உண்டாக்கும் விதம் தமிழ் நூலில் சொல்லவில்லை. ஆதலால் இராகங்களுண்டாவதற்கு ஒரு ஸ்தாயியிலுள்ள 12 சுரங்களையே ஆதாரமாக எடுத்துக்கொள்வோம். இப்பன்னிரண்டு சுரங்களின் கலப்பினாலுண்டாகும் 4 விக்ருதி சுரங்களையும் சேர்த்து 72 மேளக்கர்த்தா செய்திருக்கும் அட்டவணையைப் பிரதானமாக எடுத்துக்கொண்டால் அவைகளில் சம்பூர்ணம், சாடவம், ஒளடவம் என்ற பேதங்களும் 24 அலகில் இரண்டு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடப்படும் வட்டப்பாலை இராகங்களும் ½ அலகு ¼ அலகு குறைத்துப் பாடும் திரிகோணப்பாலை, சதுரப் பாலை இராகங்களும் இன்னின்னவையென்று தெளிவாகக் குறித்துக் கொள்ளலாம். பொற்கடகத்தில் காட்டியிருக்கும் நாலு அட்டவணைகளில் இவற்றிற்கு திஷ்டாந்தம் காண்க. இதைத் தவிர தற்கால வழக்கத்தின்படியும் இசைத்தமிழ் முறைப்படியும் பொருந்தும் வேறு மார்க்கம் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆயப்பாலை முறைப்படி 72 மேளக்கர்த்தாவில் இன்ன கர்த்தாவைச் சேர்ந்த இராக மென்றும் இச் சுரங்களோடு சேர்ந்து வரும் நுட்ப சுரங்களுக்குத் தகுந்த விதம் இன்ன பாலையைச் சேர்ந்த இராகமென்றும் தெளிவாக இனம் பிரித்துச் சொல்லலாம். அப்படியானால் பாடப்படும் எந்த இராகமும் எவ்வித மயக்கமுமின்றிச் சொல்லக் கூடியதாயிருக்கும். நுட்ப சுருதிகள் வழங்குமிடம் இன்னதென்று தெரியாமல் பன்னிரண்டு சுரத்திலேயே சந்தேகப் பட்டுத் தற்காலத்தில் வாதாடிக்கொண்டிருக்கிறோம். அனுபவத்திலிருக்கும் கீர்த்தனைகள் பன்னிரண்டு சுரத்திலேயே பாடப்பட்டு வருகின்றனவென்றும் அவைகளில் வாதி சம் வாதியாக வரும் இரண்டு இரண்டு சுரங்கள் நுட்ப சுருதிகள் சேர்ந்து வருகின்றனவென்றும் பொற்கடகத்தில் நாலு அட்டவணை யாகத் திருஷ்டாந்தம் கொடுத்திருக்கிறோம். இன்னும் பல திருஷ்டாந்தம் கொடுக்கலாம். பூர்வ தமிழ் மக்கள் பெற்றிருந்த சுர ஞானமும் சுரம் சுருதிகளில் அவர்கள் செய்திருந்த நாலுவகை பாகுபாடுகளும் போனபின் சந்தேகம் உண்டாவது இயற்கைதானே. நாலு விதமான பாலைகள் போனபின் நுட்ப சுருதிகள் சேர்ந்த இராகங்களை இனம் பிரித்துச் சொல்வதும் கூடியதல்லவே. இப்படிக் கூடாதிருக்கும் காலத்தில் பலர் பலவிதமாய்ச் சுரங்களையும், சுருதிகளையும், நிச்சயிக்க ஆரம்பித்தார்கள். உற்று விசாரிக்கும் விவேகிகள் நஞ்சுண்ட மீனைப்போல் இன்னது செய்வதென்றறியாமல் மயங்கினார்கள். கொஞ்சம் மயக்கம் தெளிகிற காலத்தில் தாங்கள் சொன்ன முறைகளே சரியானவையென்று கணக்குக் காட்டி வாதாடத் தொடங்கினார்கள். ஆனால் தாங்கள் வாதாடும் கணக்கின்படி பாடிப்பார்க்க நினைக்கவில்லை. பூர்வமா யுள்ளதைப் பாடிப்பார்க்கும்போது சிலர் தங்கள் முறை சரியானதல்லவென்று தாங்களே பின்வாங்கிக்கொண்டார்கள். பின்வாங்கிய பிறகும் பழைய மயக்கத்தினால் பொய்ப் பஞ்சமத்தையாவது பிடித்துக்கொண்டு சாதித்து விடலாமென்று சட்சம, பஞ்சம பொருத்தம் சில இடங்களில் 12 சுருதியாகவும், சில இடங்களில் 13 சுருதியாகவும், வருகிற தென்று கணக்குக் காட்டினார்கள். இது கையில் காசில்லாத ஒருவன் கணக்கினால் காரியம் முடித்துக்கொள்ள நினைத்ததுபோல் ஆயிற்று. வேறு சிலர் பன்னிரண்டு சுரங்களில் ரி, க, த, நி, யில் வழங்கிவரும் விக்ருதி சுரம் நாலையும் சேர்த்து ஒரு ஸ்தாயியில் 16 சுருதிகள் வழங்குகின்றனவென்றும், அதோடு அவற்றிற்கு அனுசுரமாக அவைகள் ஒருஸ்தாயியில் 32 ஆகின்றன என்றும், மூன்று ஸ்தாயியிலும் 96 ஆகின்றனவென்றும் சொல்லிவைத்தார்கள். அதோடு ஒரு தந்தியில் ஐந்தாவது நூலில் சுத்தரிஷபமும், எட்டரை யாவது நூலில் சதுர் சுருதி ரிஷபமும், பதினோராவது நூலில் சட்சுருதி ரிஷபமும், பன்னிரண்டாவது நூலில் சுத்த காந்தாரமும், பதினேழாவது நூலில் சாதாரண காந்தாரமும், இருபதாவது நூலில் அந்தர காந்தாரமும், இருபத்தாறாவது நூலில் சுத்தமத்திமமும் முப்பதாவது நூலில் பிரதி மத்திமமும் முப்பத்து நான்காவது நூலில் பஞ்சமமும் பேசுகிறதென்று அளவுடன் எல்லை கட்டிவைத்தார்கள். சுத்தமத்திமம் இருபத்தாறாவது நூலில் பேசுகின்றதென்று சொல்வதனால் அத்தந்தியின் நீளம் 104 நூலாய் அல்லது 13 அங்குலமாயிருக்கவேண்டும். அப்படியானால் அதன் மூன்றிலொரு பாகமாகிய முப்பத்துநான்கு நூலில் வரும் பஞ்சமத்தின் அளவின்படி 34 x 3 = 102 நூல் நீளமுள்ளதாகக் காணப்படுகிறது. இவ்வளவு வித்தியாசமான கணக்கு சட்சம பஞ்சம முறையாய்ப் போகும் பன்னிரண்டு சுரங்களுக்குக் கொஞ்சமாவது ஒத்து வருமா? இது ஒன்றே இக்கணக்கைப் பிசகென்று நாம் யாவரும் அறிந்து கொள்ளப் போதுமானது. மேலும் பதினோராவது நூலில் சட்சுருதி ரிஷபமும் பன்னிரண்டாவது நூலில் சுத்த காந்தாரமும் வருகிறதென்று சொல்வார்கள். எட்டரையாவது நூலில் வரும் சதுர்சுருதியாக வழங்கும் சுத்த காந்தாரத்திற்கும் பன்னி ரண்டாவது நூலில் கிடைக்கும் சுத்தகாந்தாரத்திற்கும் என்ன சம்பந்தம்? எட்டரையாவது நூலில் வருகிறதென்று சொல்லும் சுத்த காந்தாரமே தற்காலம் வழங்கிவரும் மேளக்கர்த்தாக்களில் வருகிறதாகக் காண்கிறோம். ஆனால் சட்சுருதி ரிஷபத்திற்கு மேல் ஒரு சுத்த காந்தாரமிருக்கிறதென்று எந்த நூலில் ஆதாரமிருக்கிறது? சுர சம்பந்தங்களின் முறையும் பாடிக் கொண்டு வருகிற பாட்டின் அனுபோகமும் இன்னதென்று தெரியாத மகா வித்வான்களின் ஆடம்பரமென்று நாம் காண்போம். இதைப்பற்றி அநேகக் குறிப்புகள் சொல்லக்கூடியதாயிருந்தாலும் அவசியமில்லாமையால் விடப் பட்டன. பூர்வ தமிழ் மக்கள் முறைப்படி ஒரு ஸ்தாயியில் சட்சம பஞ்சம முறையாய்க் கிடைக்கும் பன்னிரண்டு சுரங்களே நேற்று, வழங்கியவை; இன்று வழங்குகிறவை; நாளைக்கும் வழங்கி வரக்கூடியவை. மலைகள் நிலை பெயர்ந்தாலும், கடல் கரைபுரண்டாலும், ஏழு கண்டங்களும் அழிந்து இந்துமகா சமுத்திரமானாலும், என்றும் நிலைத்திருப்பது இந்தப் பன்னிரண்டு சுரங்களே. இப்பன்னிரண்டைப் பதினாறென்று சொல்லுகிறவர்களை இப்போது பாடிக் கொண்டிருக்கும் பாட்டையும், இப்பாட்டு உண்டாகும் பன்னிரண்டு சுரங்களையும் அறியாதவர்களென்றே சொல்லவேண்டும். இப்பன்னிரண்டு சுரங்களிலிருந்து உண்டாகும் நாலு விக்ருதி பேதங்களை பின் வரும் அட்டவணையில் காண்க. ஆயப்பாலையின் பன்னிரு சுரங்கள் பதினாறு சுரங்களாய் வழங்கி வருவதைக் காட்டும் அட்டவணை. இம்முறையே 72 மேளம் உண்டானதற்குக் காரணம். நாம் வீணையில் ரிஷபத்திற்கு இரண்டு மெட்டுகளும், காந்தாரத்திற்கு இரண்டு மெட்டுகளும், ஆக நாலுமெட்டுள்ள இடங்களில் ரிஷப காந்தாரங்கள் பேசுகின்றன என்றறிவோம். ரிஷபத்திற்குரிய இரண்டு ஸ்தானங்களோடு கலந்து நாலு பேதம் உண்டாக ஏதுவாயிருந்தது. அப்படியே தைவத நிஷாதங்களின் நாலு பேதங்கள் ரிஷப காந்தாரங்களின் நாலு பேதங்களோடு தனித்தனி கலந்து பதினாறு பேதங்களும் சுத்தமத்திமம் பிரதிமத்திம பேதத்தினால் இவைகள் முப்பத்திரண்டு ஆன விதமும் முந்தின அட்டவணையில் பார்த்திருக்கிறோம். அதுபோலவே 72 மேளக்கர்த்தாவின் முறையுமிருக்கிறதேயொழிய வேறல்ல. ஆனால் நாலு இடங்கள் பெற்ற ரிஷப காந்தாரத்தில் இரண்டு, மூன்று, நாலு என்ற மூன்று இடங்களும் காந்தாரத்தின் இடமாக வைத்துக்கொண்டும் அதுபோல முதல் மூன்று இடங்களும் ரிஷபத்தின் இடமாக வைத்துக்கொண்டும் இராகம் சொல்லி யிருக்கிறார்கள். அதாவது இரண்டு அலகுள்ள ரிஷபத்தோடு இரண்டு அலகுள்ள காந்தாரமும், நாலு அலகுள்ள காந்தாரமும், ஆறு அலகுள்ள காந்தாரமும், வெவ்வேறு இராகங்களாக மூன்று இராகங்கள் உண்டாகலாமே. அதுபோலவே நாலு அலகுள்ள ரிஷபத்தோடு நாலு அலகுள்ள காந்தாரமும், ஆறு அலகுள்ள காந்தாரமும் சேர்ந்து வெவ்வேறான இரண்டு இராகங்கள் உண்டாகலாம். மேலும் முன் முறைப்படி ஆறு அலகுள்ள ரிஷபமும், ஆறு அலகுள்ள காந்தாரமும் சேர்ந்து ஒரு இராகம் உண்டாகும்.ஆக சுத்த ரிஷபத் தோடு மூன்று இராகங்களும் சதுர் சுருதி ரிஷபத்தோடு இரண்டு இராகங்களும் சட்சுருதியோடு ஒரு இராகமும் ஆக ஆறுவிதமான வெவ்வேறு இராகங்கள் உண்டாகும். அதுபோலவே தைவத நிஷாதங்களும் ஆறு பேதத்தையடைகின்றன. சுத்த காந்தாரம் வழங்கிவரும் இராகங்களிற் சதுர் சுருதி ரிஷபமே சுத்த காந்தாரமாக வழங்கி வருகிறது. சதுர்சுருதி ரிஷபம் வழங்கி வரும் இராகங்களில் சட்சுருதி ரிஷபத்தையே சாதாரண காந்தாரமென்று வழங்குகிறார்கள். இதில் சதுர் சுருதி ரிஷபத்தில் சுத்த காந்தாரமென்று பெயர் வைத்துக்கொண்டதும் சாதாரண காந்தாரம் வழங்குகிற இடத்தில் சட்சுருதி ரிஷபம் என்று வைத்துக்கொண்டதும் விக்ருதி பேதங்களாம். இது போலவே தைவதத்தின் நாலாவது சுருதி சுத்த நிஷாதமென்றும் கைசிக நிஷாதம் சட்சுருதி தைவதமென்றும் வழங்கி வருவது விக்ருதி பேதமாம். இவ்வழக்கத்தின்படியே 72 மேளக்கர்த்தாவும் படிக்கப்படுகின்றன. வீணையின் பன்னிரண்டு மெட்டுகளில் வழங்கி வரும் இப்பன்னிரண்டு சுரங்களே 72 மேளக்கர்த்தாவிலும் வழங்கி வருகின்றன. இதில் சந்தேகப்பட்டு பதினாறு சுருதிகள் வழங்கி வருகின்றனவென்று கைப்புரட்டும் வாய்ப்புரட்டும் செய்கிறவர்களின் புரளியைக் கண்டு அறிவுள்ளோர் மயங்கமாட்டார். ஆயப்பாலையாய் வரும் பன்னிரண்டு சுரங்களில் இரண்டொரு சுரங்களில் கமகமாய்ச் சேர்ந்து வரும் நுட்ப சுரங்கள் இன்னவையென்று அறியாதவர்களே இப்படிச் சந்தேகங்கொள்வார்கள். ஆயப்பாலை முறையில் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை என்னும் ஆறு தாய் இராகங்கள் உண்டாவது போலவே இவ்வெழு பத்திரண்டு மேளக்கர்த்தாக்களின் இராகங்களில் கிரகமாற்றும் பொழுது ஏராளமான அநேக இராகங்கள் உண்டாகும். அவ்விவரம் இதன் பின் பார்ப்போம். 72 மேளக்கர்த்தாக்களின் சுரம் நிற்கும் முறையை பின் வரும் அட்டவணைகளில் தெளிவாக அறிந்துகொள்ளலாம். 13. 72 மேளக்கர்த்தாக்களில் சுத்த மத்திம சக்கரம் 6-உம் அவைகளில் வரும் 36 தாய் இராகங்களும். 72 மேளக்கர்த்தாக்களில் சுத்த மத்திம சக்கரம் 6-ம் அவைகளில் வரும் 36 தாய் இராகங்களும். (தொடர்ச்சி). 72 மேளக்கர்த்தாக்களில் பிரதி மத்திம சக்கரம் 6-ம் அவைகளில் வரும் 36 தாய் இராகங்களும். 72 மேளக்கர்த்தாக்களில் பிரதி மத்திம சக்கரம் 6-ம் அவைகளில் வரும் 36 தாய் இராகங்களும். (துடர்ச்சி). 72 மேளக்கர்த்தாக்களில் சுத்த மத்திம இராகங்கள் 36-ம் பிரதி மத்திம இராகங்கள் 36-ம் பக்கம் பக்கமாய் காட்டும் அட்டவணை 13. 72 மேளக்கர்த்தாக்களின் பெயர்களும் அவைகளை மாற்றி வேங்கடமகி வழங்கி வந்த பெயர்களும். மேற்காட்டிய அட்டவணையைக் கவனிக்கும்பொழுது 1 முதல் 72 இலக்கங்களை அறியும்படியாக கடபயாதி முறைப்படி எழுத்துக்களுக்கு இலக்கம் குறித்து அதைக்கொண்டு இத்தனையாவது மேளமென்று தெரிந்து கொள்ளும்படி வார்த்தை அமைத்து இராகத்தின் பெயரும் இலக்கமும் சேர்ந்து வருமாறு சொல்லிவைத்த வடமொழியாளர் வழக்கப்படி 72 பெயர்வைத்து தாய் இராகங்களை வழங்கியிருக்கிறதாக அறிவோம். 1 முதல் 72 வரையு முள்ள தாய் இராகங்கள் இத்தனையாவது இராகம் என்று அறிய இலக்கங்களுடன் அமைந்திருப்பது ஒருவாறு பன்னிரண்டு சுரங்களில் வரும் பிரஸ்தாரங்களில் இத்தனையாவது பிரஸ்தாரமென்று அறியக் கூடியதா யிருந்தாலும், பூர்வம் வழங்கிவந்த தமிழ் இராகங்களின் பெயர்கள் முற்றிலும் மாற்றப்பட்டு இனந்தெரியாமல் போயிற்றென்று நாம் அறியவேண்டும். இருந்தாலும் பூர்வ தமிழ் இராகங்களின் சுரமும் அலகுமுறையும் சொல்லும் நூல்கள் இதுவரை நமக்குக் கிடைக்காததனால், அவைகளைப் பற்றித் திட்டமாய்ச் சொல்லக்கூடவில்லை. பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த நாலு பாலைகளிலுள்ள இராகங்களின் நுட்பம் யாவும் சொல்ல முடியாமற் போனாலும் அவைகளை இனம் பிரித்துக் காட்டக்கூடிய ஆயப்பாலை முறையின் எல்லாப் பேதங்களும் 72 மேளகர்த்தாவின் முறைப்படியே இருக்கின்றனவென்றும் 72 மேளங்களின் பேதங்களும் உண்டாவதற்கு ஆயப் பாலையின் கிரகம் மாற்றும் முறையே காரணமாயிருக்கிறதென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். நூதனமாகப் பெயர் கொடுப்பதும், பழமையான பெயர்களை மாற்றுவதும், நூலின் உண்மை அறியாத புண்ணியவான்கள் செய்கிற வேலையென்று தெளிவாய்த் தெரிகிறது. ஒரு சாஸ்திரத்தில் எல்லாருக்கும் பொதுவாக விளங்காத இடத்தை விளக்கிச் சொல்வதும், அந்த சாஸ்திரம் வளர்வதற்கு அனுகூலமான உண்மைகளை நூதனமாய்க் கண்டு அனுபோகத்திற்குக் கொண்டுவந்து நிலைத்தவைகளை விளக்கிச் சொல்வதும், நூலாசிரியர்களின் கடமை. இப்படியில்லாமல் கட்டுக்கதைகளைக் கற்பிப்பதும், காரணம் சொல்லுகிறேன் என்று தலையைச்சுற்றி மூக்கைப்பிடிப்பதும், வழங்கிவந்த பெயரை மாற்றி வைப்பதும், யாவரையும் கலங்கவைக்குமே யொழிய தெளியவைக்கமாட்டா. கனகாங்கி, ரத்னாங்கி என்ற 72 மேளக் கர்த்தாக்களின் மாறுதலான பெயர்களை எட்டையாபுரம் சமஸ்தானம் சுப்பராம தீக்ஷதர் செய்த சங்கீத சம்பிரதாய பிரதர்சினி என்ற புத்தகத்தில் காணலாம். அதோடு 72 மேளக்கர்த்தா இராகங்களிலிருந்து உண்டாகிய சாடவ, ஒளடவ இராகங்களையே கர்த்தா இராகமாகச் சொல்லுகிறார். ஏன் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதற்குத் தகுதியான காரணம் சொல்லவில்லை. ‘தாய் இராகமானது எப்போதும் சம்பூரண இராகமாகவே இருக்கவேண்டும்’ என்ற பொது விதிக்கு மாறுபட்டிருக்கிறதாகக் காண்கிறோம். கனகாங்கி, ரத்னாங்கி என்ற முந்தின முறையைப்போல் தெளிவாயில்லாமல் மாறுபட்டிருப்பதால் தற்கால அனுபோகத்திற்கு வராமல் போயிற்றென்று தெளிவாகக் காண்கிறோம். இதன்பின் தென்னிந்தியாவின் பழங் குடிகளாகிய தமிழ் மக்கள் பாடிக்கொண்டிருந்த நாலு பாலையில் வரும் இராகங்களையும் இனம் பிரிக்க முடியாமல் 24 சுருதிகளில் குறித்து விடலாம் என்று செய்த பிர்மமேளத்தின் விவரத்தையும்; அதைச் சேர்ந்த விஷ்ணுமேளம்; ருத்ர மேளங்களையும் நாம் ஒருவாறு பார்ப்பது உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன். 14. பிர்ம மேளத்தில் சொல்லப்படும் விஷ்ணு மேளம். பூர்வ தமிழ்மக்கள் வட்டப்பாலையில் வரும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நாலு யாழ் முறையில் கிரகமாற்றி அவை ஒவ்வொன்றிலும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் சாதி முறைப்படிக் கமகமாய் யாழ் வாசித்தார்கள் என்றும் அதிலும் நுட்பமாக 1/8 , 1/16 போன்ற நுட்ப சுருதிகளைச் சேர்த்துப் பாடினார்களென்றும் அவைகள் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலையென்று நாலு பெரும் பிரிவுகளாக வகுக்கப் பட்டிருந்தனவென்றும் பொற்கடகத்தில் விவரம் சொல்லியிருக்கிறோம். இம்முறையின் நுட்பம் அறியாமல் தற்காலத்தில் குழப்பம் இருப்பதுபோலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னும் இருந்ததனால், 12 சுரங்களின் விக்ருதி பேதத்தால் உண்டான 72 மேளக்கர்த்தாவை ஒப்புக் கொண்டு அவற்றை ருத்ரமேளமாகவும், ஒற்றைப்பட்ட சுருதிகளினால் அதாவது 12 சுரங்களில் பாதியான சுரங்களினால் உண்டான 200 கர்த்தாக்களை விஷ்ணு மேளமாகவும், இவ்விரண்டும் கலந்துண்டாகும் 4624 மேளங்களைப் பிர்மமேளமாகவும், கனகையா கவிசாதுரீகம் என்பவர் சொல்லியிருக்கிறார். இந்த 4624 பேதங்களும் 24 சுருதியின் சம்பந்தத்தினா லுண்டானவை. பன்னிரண்டு அரைச் சுரத்தினால் 72 மேளக்கர்த்தா உண்டான முறைப்படி 24 சுருதியினால் இப்பிர்ம மேளம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ருத்ரமேளமென்று அழைக்கப்படும் எழுபத்திரண்டில் சுத்தமத்திமம், பிரதி மத்திமம் என்று இரண்டு பேதங்களுண்டானது போல, சுத்தமத்திமம் முதல் மத்திமத்தின் நாலு பேதங்களும் சேர்ந்து நாலு பேதங்களாக வழங்கி வருகின்றது. இந்த 4624 கர்த்தா பேதங்களில் ருத்ரமேளமும், விஷ்ணு மேளமும் சுர முறைப்படி பிர்ம மேளத்தில் அடங்கியிருக்கின்றன. மேலும் ருத்ர மேளம் மனிதரால் கானம் செய்யக் கூடியதென்றும், ருத்ர வீணையில் வாசிக்கக்கூடியதென்றும், விஷ்ணு மேளம் காற்றினால் ஊதி வாசிக்கக்கூடிய நாகசுரம் முதலிய துளைக் கருவிகளைக்கொண்டு அசுரரால் வாசிக்கக்கூடியதென்றும், அதை அனந்தசயனன் அசுரருக்கென்று சொன்னா ரென்றும், மற்றும் 24 சுருதிகளும் கலந்த 4624 மேளங்களும் பிர்ம வீணையில் கமகமாய் வாசிக்கக் கூடியவையென்றும் அங்கே சொல்லப்படுகிறது. பொற்கடகத்தில் வந்துள்ள பரிபாடலில் தென் மதுரையின் அருகில் ஓடும் வைகைப் பெருக்கின் விழாக் கொண்டாடுவதைக் கூறுமிடத்தில் ‘தெய்வப் பிரமம் செய்குவோரும்’ என்று சொல்லியிருப்பதைக் கவனிக்கும்பொழுது, பிர்ம வீணையில் கானம் செய்ததாக எண்ண இடமிருக்கிறது. அதாவது 24 சுருதிமுறையில் கானம் செய்தார்களென்று தோன்றுகிறது. அக்கால வழக்கப்படி திரிகோணப்பாலை, சதுரப்பாலை முறையின் நுட்ப சுருதிகளில் கானம் செய்வோருக்கு இது எளிதாயிருக்கலாமே! அவ்விரு முறையையும் அறிவதற்குரிய சாஸ்திரமில்லாமற் போனபின் நாலு பாலைகளும் பிர்ம மேளத்தில் அடங்கி விடுமென்று 24 சுருதிகளடங்கிய பிர்ம மேளம் சொன்னது கொண்டாடக்கூடியதே. என்றாலும் பிர்மமேள அட்டவணையைப் போல ஒன்று இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் 24 சுருதிகளில் வீணையில் வாசிப்பதை பிர்ம வீணையென்று சொன்னார்கள் என்பதாக ஊகிக்க இடமிருக்கிறது. இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுரம், சுருதிகளை அறியவேண்டு மென்று பலமுகமாய் விசாரித்து தற்கால வழக்கத்திலிருக்கும் கீர்த்தனை களைப் பாடிப்பார்த்து வருகையில், சுர, சஞ்சார பேதத்தினால் ஒரு ஸ்தாயி யில் 24 சுருதிகள் இருக்க வேண்டுமென்று கண்டு அம் முறைப்படி 24 சுருதி யடங்கிய மேளகர்த்தா ஒன்று தயார் செய்து இதில் எல்லா இராகங்களும் சுருதிகளும் அடங்கிவிடுமென்று ஒருவாறு நான் திருப்தியடைந்தேன். அதன்பின் சிலகாலம் பொறுத்து அரிகேசவ நல்லூர் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்கள் பிர்மமேளம் செய்யும் விவரமடங்கிய புத்தகம் ஒன்று கொண்டுவந்ததைக்கண்டு மிகுந்த தைரியமடைந்தேன். பின்னும் சிலகாலம் பொறுத்து இப்புத்தகத்தை அனுசரித்து ஒவ்வொரு மேளத்திற்கும் விவரம் சொல்லும் மேளாதிகார லக்ஷணம் என்னும் ஒரு புத்தகம் தஞ்சாவூர் அரமனை சரஸ்வதிமாலிலிருக்கக் கண்டேன். அதில் 1022 இராகங்களுக்குப் பெயர்சொல்லப் படுவதாலும், அவைகளின் இடையில் 72 மேளக்கர்த்தாவில் சில காணப்படுவதாலும், அம்மேளக்கர்த்தாக்களில் சில 24 சுருதி முறையில் வரும் இராகங்களாகக் குறிக்கப்பட்டிருப்பதாலும், அவைகளையும் இங்கே காட்டவேண்டியது அவசியமாயிற்று. 24 சுருதி முறைப்படி சில இராகங்கள் வருவதனால் இம்முறை பூர்வகாலத்திலிருந்த தென்றும், 12 சுர முறையிலும் 24 சுருதி முறையிலும் பல குழப்பங்கள் உண்டாகி வாதாட்டமிருந்ததென்றும், அவற்றில் பல முறைகளைத் தள்ளி 12 சுர முறையையும், 24 சுருதி முறையையும் நிச்சயம் பண்ணுவதற்கென்று இவைகள் உண்டாகி யிருக்கின்றனவென்றும் நாம் நினைக்க இடம் தருகிறது. 24 சுருதியினால் செய்யப்பட்ட பிர்ம மேளம் கிடைத்தபின், சங்கீதத்திலுள்ள சில சந்தேகங்கள் தீர்ந்துவிட்டனவென்று நினைத்திருந் தாலும்; அவற்றினும் நுட்பமான சுருதிகள் பல கீர்த்தனங்களிலும், பண்களிலும், வருகின்றனவென்று கண்டபின்; பல எண்ணங்களும், சந்தேகங்களும் என் மனதில் தோன்றின. பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்ற நாலு பாலைகளையும், அவைகளின் விவரத்தையும், கண்டபின் பிர்மமேளம் சுரம், சுருதிகளினுடைய விவரம் அறிவதற்கு போதாதென்றும்; இவைகளிற் சொல்லப்படும் சுருதி முறைப்படி இராகங்கள் உண்டாக்குவதும், பாடுவதும் கூடிய காரியமல்லவென்றும் பல நாள் ஆராய்ச்சியினால் அறிந்தேன். தாய் இராகங்களும், கிளை இராகங்களும் உண்டாவதற்கு செம்பாலைப் பண் முறை அல்லது தீரசங்கராபரண முறையிற் சொல்லும் பன்னிரண்டு சுரங்களே ஆதாரமானவை. இப் பன்னிரண்டு சுரங்களே நம் பூர்வத்தோர் பாடி வந்த ஆறு தாய் இராங்களையும், 36 பூர்வ இராகங்களையும், 32 இராகங்களையும், 72 மேளக்கர்த்தாவையும், அவைகளில் ஜன்னியமான பல இராகங்களையும் பிறப்பிக்கக் கூடியவை. இவைகளில் விளரிகைக்கிளையைப் போல ச-ப முறையாய் வரும் 2 சுரங்களில் 1, ¾, ½, ¼ போன்ற சுருதிகளைக் கூட்டியும் குறைத்தும் கமகமாய்ப் பிடித்துப் பல இராகபேதங்களை உண்டாக்கலாம். ஆகையால் பிர்ம மேளத்தையும் நீக்கி, ருத்ரமேளமென்று சொல்லப்படும் 72 மேளக்கர்த்தாவில் தற்கால வழக்க முறைப்படியே இராகம் சொல்ல வேண்டியதாயிற்று. ஆயினும் பிர்மமேளத்தின் விவரம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லதென்று நினைக்கிறேன். விஷ்ணு மேளம் 200. (கால் கால் சுரங்களினால் பாடப்படுவது.) சுத்த மத்திம சக்கரம் 10-க்கு மேளம் 100 சுரம்14. விஷ்ணு மேளம் 200. (கால் கால் சுரங்களினால் பாடப்படுவது.) சுத்த மத்திம சக்கரம் 10-க்கு மேளம் 100 சுரம்14.(தொடர்ச்சி) விஷ்ணு மேளம் 200. (கால் கால் சுரங்களினால் பாடப்படுவது.) சுத்த மத்திம சக்கரம் 10-க்கு மேளம் 100 சுரம்14.(தொடர்ச்சி) விஷ்ணு மேளம் 200. (கால் கால் சுரங்களினால் பாடப்படுவது.) சுத்த மத்திம சக்கரம் 10-க்கு மேளம் 100 சுரம்14.(தொடர்ச்சி) மேற்கண்ட அட்டவணையினால் விஷ்ணுமேளத்தின் முதற்பாகம் தெளிவாகக் காணப்படுகிறது. அதாவது மத்திமத்தின் மூன்றாவது சுருதி சேர்ந்துவரும் 100 மேளக்கர்த்தாக்களில் ரிஷப காந்தாரங்களும், தைவத நிஷாதங்களும், முறைப்படி எப்படிக் கலந்துவருகின்றனவென்று அறிகிறோம். இதன் முன் ருத்திரமேளமென்று அழைக்கப்படும் மேளக்கர்த்தாக்களில் சுத்த மத்திமம் கலக்கும்போது 36 தாய்இராகங்களும், பிரதிமத்திமம் கலக்கும் பொழுது 36 தாய் இராகங்களுமாக எப்படி 72 மேளக்கர்த்தாவாயிற்றோ; அதுபோலவே இரண்டு அலகுள்ள சுத்தமத்திமத்தின் மேல்வரும் மூன்று அலகு சேர்ந்துள்ள 100 தாய் இராகங்களும், அதன்மேல் ஐந்து அலகுள்ள சுதபஞ்சம மத்திமம் கலந்துவரும் 100 தாய் இராகங்களும் உண்டாகின்றன. அவைகளில் வழங்கிவரும் ரிஷப காந்தார தைவத நிஷாதங்கள் அட்டவனை முறைப்படியே யல்லாமல் வேறுவிதமல்ல. ஆகையால் மத்திமத்தின் ஐந்தாவது சுருதியாகிய சுத பஞ்சமத்தில் வரும் இரண்டாவது பாகத்திலுள்ள 100 இராகங்களையும் திரும்பவும் சொல்லவேண்டியது அவசியமில்லையென்று விடப்பட்டது. இதில் சில இராகங்கள் குறிக்கப்படக் கூடியதாயிருந்தாலும், இராகங்கள் உண்டாக்கு வதற்கும், அதன் பின் படிப்பதற்கும் கூடியவையல்ல வென்று அவைகளைத் தள்ளி, ஆயப்பாலை முறையில் வரும் ருத்திர மேளம் 72ஐயும் அனு போகத்திற்கு வரக்கூடியவையென்று எடுத்துக்கொண்டோம். இனி பிர்ம மேளம் 4624 இன் விவரத்தைச் சிறிது பார்ப்போம் 15. பிர்மமேளம் பிர்மமேளமென்பது, வட்டப்பாலை முறையில் ஒரு ஸ்தாயியில் வரும் இருபத்து நான்கு அலகுகளின் சேர்க்கையால் உண்டான 4624 தாய் இராகங்களை உடையது. சுத்தமத்திம இராகங்கள் பிரதிமத்திம இராகங்களென்று ஆயப்பாலை முறையில் வரும் 72 மேளக்கர்த்தாக்களைப் போல இதுவும் அமைக்கப் பட்டிருக்கிறது. 72 தாய் இராகங்களடங்கிய ருத்ரமேளத்தில் எப்படி சுத்த மத்திம இராகங்கள் 36 என்றும் பிரதிமத்திம இராகங்கள் 36 என்றும் வகுக்கப் பட்டிருக்கிறதோ, அப்படியே இரண்டு அலகு பெற்ற சுத்த மத்திமம் சேர்ந்த 1156 இராகங்களும், மூன்று அலகு பெற்ற அப்பிரதிமத்திமம் சேர்ந்த 1156 இராகங்களும், நாலு அலகுள்ள பிரதிமத்திமம் கலந்த 1156 இராகங்களும், ஐந்து அலகுள்ள சுதபஞ்சம மத்திமத்தில் வரும் 1156 இராகங்களுமாக நாலு இனத்தில் 4624 இராகங்கள் உண்டாகின்றன. இது ஆயப்பாலையின் இரண்டிரண்டு அலகு பெற்ற சுரங்களும் வட்டப் பாலையின் முறைப்படி ஒவ்வொரு அலகு பெற்ற சுருதிகளும் கலந்து வருவது. இதன்முன் ஒற்றைப்பட்ட சுருதிகள் வழங்கிவரும் மேளங்கள் 200ஐயும் விஷ்ணு மேளமென்றும், இரண்டிரண்டு அலகுள்ள பன்னிரண்டு சுரங்களி லுண்டாகும் இராகங்களை ருத்திரமேளமென்றும், நாம் முன் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். 24 சுருதிகளில் வழங்கி வருவது பிர்மமேளமென்றும், இருபத்துநான்கில் ஒற்றைப்பட்ட சுருதிகளில் வழங்கிவருவது விஷ்ணுமேள மென்றும், 12 சுரங்களில் வழங்கி வருவது ருத்திரமேளமென்றும், கனகையா கவிசாதூரீயம் சொல்லுகிறார். இம்மூன்று அட்டவணைக்குள் உலகத்தில் பாடப்படும் இராகங்கள்யாவும் அடங்கிவிடுமென்பது இவர் கருத்து. அப்படி நினைக்க ஏதுவுமிருக்கிறது. ஆனால் அது சரியல்ல. எப்படியென்றால் 32,40,000 இராகப்பிரஸ்தாரத்தில் 4624 விக்ருதி பேதங்களும் சேரும்பொழுது 14,98,17,60,000 இராகங்கள் உண்டாகுமென்பதை நாம் அறியலாம். அவைகளைக் கொண்டு பூர்வ தமிழ்மக்கள் பாடிவந்த இராகங்கள் அத்தனையும் பாடி விடலாமென்று நினைத்தார்போலும். ஆனால், ஆதித் தமிழ் இசைகள் 12000 (11,991) என்று பூர்வ தமிழ்மக்கள் வழங்கி வந்த இராகங்கள் பலவுமிருந்தாலும், அவைகள் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் நாலு பெரும் பிரிவுடையதாயும், அம்முறையில் ஏராளமான இராகங்கள் உண்டாகக் கூடியதாயும், அம்முறைப்படி உண்டான ஏராளமான இராகங்கள் தற்கால அனுபவத்தில் உள்ளதாயும் இருப்பதால், பூர்வமாயுள்ள பாலை முறைகளைத் தள்ளி, பிர்ம மேளத்தை ஒப்புக்கொள்வது சரியல்ல என்று தெளிவாய்த் தெரிகிறது. என்றாலும் 72 மேளக் கர்த்தாவின்படி பாடுகிறோமென்று பாடிக் கொண்டுவரும் சில இராகங்கள் பிர்ம மேளத்தின் அலகு முறைப்படி வருகிறதையாவது காணக்கூடியதாயிருப்பதால் இங்கே சொல்ல வேண்டியதாயிற்று. பிர்மமேளத்திற்கு சுரங்கள் பன்னிரண்டே. இப்பன்னிரண்டின் பாதி பாதியான சுரங்கள் பன்னிரண்டும் சேர்ந்து இருபத்துநாலாக வழங்கி வருகின்றன. இவ்விருபத்துநாலில் ஒவ்வொரு சுருதிபெற்ற ரிஷபம் ஏழு; காந்தாரம் ஏழு; மத்திமம் நாலு; தைவதம் ஏழு; நிஷாதம் ஏழு. இவைகள் இன்னின்ன சுருதிகள், இன்னின்ன சுருதிகளோடு சேர்ந்துவரும் என்று பொற்கடகம் அட்டவணையில் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். மற்றும் காந்தார நிஷாதங்களின் விக்ருதிபேதங்கள் பத்தும் அவைகளின் மறு பெயர்களும் அட்டவணையின் தலைப்பில் குறித்திருக்கிறோம். ரிஷப காந்தாரங்களின் பேதங்கள் முப்பத்துநாலாகும். அதுபோலவே தைவத நிஷாதங்களின் பேதமும் முப்பத்துநாலாம். முப்பத்துநாலான இவ்விரு பாகங்களில் மத்திமத்திற்கு முன்னுள்ள முதல் பாகத்தில் வரும் ரி-க வின் முப்பத்துநாலு பேதங்களில் முதலாவது பேதத்தை எடுத்துக்கொண்டு அம்முதல் வரியோடு பஞ்சமத்திற்குப் பின்னுள்ள தைவதநிஷாதங்களின் முப்பத்துநாலு பேதங்களையும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சேர்க்க வெவ்வேறு விதமான முப்பத்துநாலு இராகங்கள் முதல் வரியிலிருந்து உண்டாகின்றன. அதுபோலவே ரி-க வின் முப்பத்துநாலு பேதங்களோடு த-நி யின் முப்பத்துநாலு பேதங்களையும் ஒவ்வொன்றாய்ச் சேர்க்க 34 x 34 = 1156 கர்த்தா இராகங்களுண்டாகின்றன. இவற்றை அட்டவணையில் காண்க. இரண்டு அலகுபெற்ற சுத்தமத்திமமே இதற்கு மத்திமமாம். அதுபோலவே 3, 4, 5 அலகு பெற்ற மத்திமங்கள் ஒவ்வொரு சக்கரத்தோடும் சேர்ந்து வர 1156 ஒ 4=4624 மேளமாம். இதில் இரண்டு அலகுபெற்ற சுத்த மத்திமத்தின் சில இராகங்களும் நாலு அலகு பெற்ற பிரதி மத்திமத்தின் சில இராகங்களும் 72 மேளக்கர்த்தா முறையில் வருவதாகக் காண்போம். இவையாவும் இரண்டிரண்டு அலகு பெற்ற இராகங்கள். ஙூ அலகும் ஙு அலகும் பெற்று வரும் அநேக இராகங்கள் தற்கால அனுபவத்திலிருப்பதால் இதற்கு மேலாக மேளக்கர்த்தா இருக்கலாமென்று நாம் நினைக்க நேரிடும். ஆனால் ஆயப்பாலை முறைப்படிக் கிரகம் மாற்றித் தாய் இராகங்களும் அநேக கிளை இராகங்களும் உண்டாக்கிப் பல இராகங்கள் பாடி வந்திருக்கிறார்களென்று சொல்வதனால் இராகங்கள் உண்டாவதற்கு ஆயப் பாலை முறையே சிறந்தது. மற்றும் பாலைகள் முறைகளைக் குறித்துக் கொள்வதற்கும் 72 மேளக்கர்த்தாவே போதுமானதென்று எண்ணுகிறேன். 72 மேளக்கர்த்தா சுரக்கிரமப்படியும் இலக்கத்தின்படியும் பிர்மமேளத்தில் அங்கங்கே வருவதனால் 72 மேளக்கர்த்தா உண்டாக்கப்பட்ட பின்பே பிர்மமேளம் உண்டாயிருக்கலாமெனத் தோன்றுகிறது. பிர்மமேளத்தின் 4624 தாய் இராகங்களும் அவைகளடங்கிய 136 சக்கரங்களும் இன்னமுறைப்படி உண்டாகிறதென்று காட்டும் சுருக்கச் சக்கரம் இதன்பின் வரும் அட்டவணையில் காண்க. தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகாலிலுள்ள மேளாதிகார லக்ஷணம் என்னும் நூலில் மேளத்தின் பெயரும், இன்னின்ன சுரங்கள் சேர்ந்து இன்னின்ன மேளமாகிறதென்ற குறிப்பும், சட்ச கிரக நியாச அம்சமென்னும் பொதுக்குறிப்பும், ஒன்றுபோல் தெலுங்கில் சூத்திர ரூபமாக எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளை இங்கு அட்டவணையில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். ஆகையால் சூத்திரங்களை இங்கு சொல்ல அவசியமில்லை என்று எண்ணுகிறேன். 24 சுருதி முறைப்படி ரிஷப காந்தாரத்தின் 34 பேதங்களையும் தைவத நிஷாதத்தின் 34 பேதங்களையும் தனித்தனிக் காட்டும் அட்டவணை. பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 1 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 2 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 3 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 4 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 5 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 6 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 7 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 8 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 9 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 10 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 11 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 12 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 13 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 14 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 15 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 16 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 17 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 18 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 19 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 20 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 21 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 22 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 23 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 24 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 25 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 26 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 27 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 28 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 29 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 30 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 31 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 32 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 33 ஆவது பிர்ம மேளம் 4624-ல் சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கில் 34 ஆவது இதன் முன்னுள்ள 34 பக்கங்களில் பிர்மமேளத்தின் நாலு பாகங்களில் ஒன்றாகிய சுத்த மத்திம சக்கரம் முப்பத்துநான்கையும் பார்த்தோம். இம் முப்பத்துநான்கு சக்கரங்கள் எப்படியுண்டாயினவென்ற முப்பத்துநான்கு பேதங்களையும் 126 ஆம் பக்கத்திலுள்ள அட்டவணையில் காண்போம். இவைகளில் நாம் வழக்கமாய்ப் பாடிக்கொண்டிருக்கும் 72 மேளக்கர்த்தாவில் முப்பத்தாறு தாய் இராகங்களை ஒருவாறு உத்தேசமாய்க் குறித்திருந்தாலும் அவைகள் அனுபோகத்தில்கண்ட முறைப்படி சற்று முன்பின்னாய் வருகிறதாகக் காணப்படுகின்றன. அவைகளில் சில அடியில் சொல்லப்படுகின்றன. அதில் அனுபோகத்திலிருக்கிற முறைப்படி வரும் அலகுகளும் அவைகளுக்கு நேரே சொல்லியிருக்கிறோம். அனுமத்தோடியில் வரும் காந்தார நிஷாதங்கள் அனுபோகத்தில் மூன்றரை அலகாகப் பாடப்படுகின்றன. ஆனால் பிர்மமேளத்தில் அவைகள் மூன்று அலகின்கீழ் வரலாமேயொழிய மூன்றரை அலகாக வருவதற்கு இடமில்லை. ஆகையினால் 48 சுருதிகளுள்ள ஒரு முறையில் வரவேண்டும். தீரசங்கராபரணத்தில் வரும் ரிஷப தைவதங்கள் பஞ்ச சுருதியென்று வேங்கடமகி சொல்லுகிறார். இதனால் சங்கராபரணம் பிர்ம மேளத்தின்படி வருகிறதென்று உத்தேசிக்கலாம். ஆனால் அந்த இராகம் 48 சுருதிகளைப் பற்றிச் சொல்லும் திரிகோணப்பாலையில் 4½ ,4½ அலகுடையதாக வருகிறது. ஆகையினால் 24 அலகுள்ள பிர்ம மேளத்தில் ஒவ்வொன்றான அதாவது 1, 2, 3, 4 போன்ற முழு அலகுகள் வரும் இராகங்களைச் சொல்லலாமேயொழிய ¼, ¼ ,¾, 1¼, ¾, 1½, ¾ ,1, ¾, ¾, ¾ போன்ற நுட்ப சுருதிகள் வழங்கும் இராகங்களைச் சொல்ல முடியாது. பொற்கடகத்தில் சொல்லி யிருக்கும் ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் நாலுவித அட்டவணைகளின் முறைப்படிக் குறிக்கலாமேயொழிய பிர்மமேளத்தின்படி 4624 இராகங்களில் கர்நாடக இராகங்கள் அத்தனையும் குறித்துக்கொள்ள முடியாது. மேலும் பிர்மமேளத்திற் சொல்லியிருக்கும் அலகு முறைப்படி எல்லா இராகங்களும் இதுவரையும் பாடப்பட்டதுமில்லை, இனிமேல் பாடக் கூடியதுமில்லை. ஏனென்றால், இப்போது அனுபோகத்திலிருக்கும் இராகங்களில் இணை இணையானதும் கிளை கிளையானதுமான இரண்டு சுரங்களில் மாத்திரம், ¼, ½, ¾¾, 1, 1¼, 1¼, 1¾ போன்றவை ஒன்று சேர்ந்து வருமேயொழிய எல்லா இராகங்களிலும் பொதுவாக அப்படி வரமாட்டா. அதோடு மற்ற சுரங்கள் யாவும் பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த ஆயப் பாலையின் பன்னிரு சுரங்களாகவே வரும். இது தவிர மேளக்கர்த்தா என்று சொல்லும்பொழுது தாய் இராகம் என்று நாம் அறிவோம். தாய் இராகங்களில் அநேக ஜன்னிய இராகங்கள் இருக்கவேண்டும். அனேக ஜன்னிய இராகங்களையுடைய ஒரு தாய் இராகம் இருக்குமானால் அது இராகங்களை உண்டாக்கக்கூடிய பொது விதிக்கு அமைந்ததாக இருக்கவேண்டும். அப்பொதுவிதிக்கு பிர்மமேளத்தின் சுரங்கள் ஒத்துவரவில்லை. ஆகையினால் சங்கீதத்தில் வழங்கி வரும் நுட்ப சுருதிகளைக் குறித்துக்கொள்ளவும் இராகமுண்டாக்கவும் அதன் ஜீவ சுரம் காணவும் கூடியதல்லாததினால் அதையும் நீக்கலாயிற்று. மேற்கண்ட காரணங்களால் பிர்ம மேளமும் தற்காலத்தில் நம் அனுபோகத்திற்கு வரக்கூடியதல்லவென்று அதை விட்டுவிட வேண்டியதா யிருக்கிறது. இவ்விரண்டாம் பாகத்தில் இந்தியாவில் அப்போதைக்கப்போது வழங்கிவந்த இராகங்களின் முறைகளை ஒருவாறு பார்த்தோம். அவைகளில் பூர்வ தமிழ்மக்கள் ச-ப ச-ப வாகவும் ச-ம, ச-ம வாகவும் கண்டு பிடித்த 12 சுரங்களைக் கிரகமாற்றும் பொழுது உண்டான பெரும்பாலை ஏழும், சிறுபாலை ஐந்துமாகப் பன்னிரு பாலையுண்டாகும் முறையில் காந்தார நிஷாதங்களில் மும் மூன்றாக வரும் விக்ருதிபேதங்களை அனுசரித்து உண்டாக்கப்பட்ட 72மேளக்கர்த்தாவே சரியானதென்று நாம் சொல்லக்கூடியதா யிருக்கிறது. 72 மேளக்கர்த்தாவோடு 24அலகாய்ப் பிரித்துச்சொல்லும் வட்டப்பாலை முறையும் 48 அரை அலகாய்ப் பிரித்துச்சொல்லும் திரிகோணப்பாலை முறையும் 96 கால் அலகாய்ப் பிரித்துச்சொல்லும் சதுரப்பாலை முறையும் சேர்த்துச் சொல்லக்கூடியதாயிருப்பதனால் 72 மேளக்கர்த்தாவே தற்காலத்தில் வழங்கக்கூடியதென்று மிக உறுதியாகச் சொல்வோம். மேலும் ஆயப்பாலை முறையில் வரும் பன்னிரு சுரங்களி லிருந்துண்டாகும் இராகங்களுக்கே இராகலக்ஷணம் சொல்லியிருக்கிறதாக பூர்வநூல்களால் தெரிகிறது. ஆகையினால் பன்னிரு சுரங்களால் உண்டாகும் 72 தாய் இராகங்களுக்கும் அவைகளிலிருந்துண்டாகும் பல ஜன்னிய இராகங்களுக்கும் இராக அட்டவணையும், இராகம் செய்யும் முறையும் இதன் பின் வரும் மூன்றாம் பாகத்தில் பார்ப்போம். இரண்டாம் பாகம் முற்றிற்று.