இராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தோற்றம் : 02.08.1859 - மறைவு : 31.08.1919 கடவுள் துணை கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம் முகவுரை. அமுதமாய்ப் பெருகு மானந்தக் கடலாம் இதய மாஞ்சிறு குகைதனி லோர்பொறி உதித்த பிரணவத் தாலே யுருவாய் ஊமையா மெழுத்தா யோதொணா மறையாய் மனமெனு மாசான் வளர்கனல் மூட்ட உசுவாச நிசுவாசப் பெருங்காற் றுண்டாய் மந்தரத் தொனியாய் மனத்திடைத் தோன்றி மார்பு கண்டம் வரவரப் பருத்து மலர்நாசி நாக்கு மகிழுதடு தந்தம் தாடையா மைந்தின் திறத்தல் மூடல் விரிதல் குவிதல் வளைதல் நிமிர்தல் எனவிவ் வாறு தொழிலாற் பிறந்து பலபல தொனியாய்ப் பலபல வெழுத்தாய் நலந்தரு மறையாய் நாட்டியக் கலையாய் பற்றிய சுவாலைப் படர்ந்தன கிளைத்துச் சுற்றிய தாலே சூடச மறிந்து ஓத முடியா வுயர்நாத மாச்சே. நாதமே முக்கலை நாதமூ வெழுத்து நாதமே முக்குணம் நாதமே முப்பொருள் நாதம் மூவுல காகி விரிந்து நாதமாம் பரத்தில் லயித்தது பாரே. நாதம் பரத்தில் லயித்திடு மதனால் நாத மறிந்திடப் பரமு மறியலாம்,- என்னும் அகவல்களாலும், ‘ஆதியிலே வார்த்தையிருந்தது; அவ்வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது; அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்; சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவராலே யல்லாமல் உண்டாகவில்லை; அவருக்குள் ஜீவன் இருந்தது; அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது’. (யோவான் ஐ : ஐ-4) என்னும் சத்திய வேதத்தின் வசனங்களாலும், நாதபிரம்மமே ஆதி யென்றும், நாத பிரம்மத்தினாலே அண்டபுவன சராசரங்கள் யாவும் உண்டாயின வென்றும், அதனால் அல்லாமல் மற்றொன்றால் உண்டாக்கப்பட வில்லை யென்றும், அதுவே ஜீவதோற்றங்கள் யாவற்றிற்கும் உயிராய் விளங்குகிற தென்றும் காண்கிறோம். ஜீவர்கள் கீழ் ஆறு மேல் ஆறான பன்னிரண்டு ஸ்தானங்களைப் படிப்படியாய்ப் பெற்று விளங்கி நிற்பதுபோலவே, ஜீவர்களின் ஓசையும், சுத்தமத்திமம் வரை ஆறுஸ்தானங்களும், அதன் மேல் ஆறு ஸ்தானங்களு மாகப் பன்னிரண்டு விதமாகப் பிரிந்து ஏழுசுரங்களாய் விளங்கி நிற்கின்றது. ஆரோகணத்தில் சுத்த மத்திமத்தின் கீழுள்ள சுரசம்பந்தத்தினாலுண்டாகும் பலபேதங்களில் ஒன்றும், பிரதிமத்திமத்தின் மேலுள்ள சுரபேதங்களில் ஒன்றும் சேர்ந்து, ஏராளமான இராகபேதங்கள் உண்டாவதும், அவரோகண பேதங்கள்சேர்ந்து எண்ணிறந்த இராகங்கள் உண்டாவதும் போல, ஜீவன்களும் பல படிகளில் பல பேதமும், அவைகளுக்கேற்ற அறிவும், செயலும் உருவமும் பெற்று, விளங்கி நிற்பதை நாம் அறிவோம். வானமண்டலத்தில், பன்னிரண்டு இராசிகளில் ஏழு கிரகங்களின் சஞ்சார பேதத்தினால் எண்ணிறந்த இடபேதம் அமைந்து பல இராசிச் சக்கரங்கள் ஆவது போல், ஜீவர்கள் பன்னிரண்டு ஆதாரங்களில் வெவ்வேறு செயலையும் குணத்தையும் உருவத்தையும் பெற்று, வெவ்வேறு தோற்றங்களாக விளங்குகின்றனர். ஒன்றாயிருந்த ஆதார சட்சத்திற்கும் அதன்மேல் இரண்டாயிருந்த தார சட்சத்திற்கும் நடுவிலுள்ள இடைவெளியானது, பன்னிரண்டு சுரங்களாக வகுக்கப்பட்டு, அவற்றுள் ஏழு சுரங்களின் வெவ்வேறுவித சஞ்சார பேதத்தினால், அளவிறந்த மூர்ச்சனா பேதமுள்ள இராகங்கள் உண்டாயின. பன்னிரண்டு ஆதாரம் பெற்ற ஜீவனுடைய தத்துவங்களின்விவரம் சொல்லவந்த இடத்தில், இருபத்துநான்காகவும் நாற்பத்தெட்டாகவும் தொண்ணூற்றாறாகவும் பிரித்துச் சொன்னதுபோலவே, சங்கீத சாஸ்திரத்தில் வழங்கிவரும் பன்னிரண்டு சுரங்களையும், இருபத்துநான்கு சுருதிகளாகவும் நாற்பத்தெட்டு, தொண்தொண்ணூற்றாறு போன்ற நுட்ப சுருதிகளாகவும் பிரித்துக் கானம் செய்திருக்கிறார்கள். அவைகளே நாளது வரையும் நம் அனுபவத்திலிருக்கின்றன. அனுபவத்திலிருந்தும் அவைகளை இன்னவை யென்று அறிந்துகொள்ளாமையினால் பலர் பலவிதமாய்ச் சொல்லவும் எழுதவும் நேரிட்டது. ஒரு பட்டுப் பூச்சி தன் நூலினாலேயே தனக்கு ஒரு அழகிய கூடுண்டாக்கி, அதில் சிறிது காலம் சமாதியிருந்து, புழுவாய்ச் சஞ்சரிக்கும் தன் பூர்வ நிலை நீங்கி, ஆகாயத்தில் பறந்து திரியும் அழகுள்ள பூச்சியாக மாறுவதுபோல, நாத பிரம்மத்தினாலேயே உண்டாகிய ஜீவர்கள் தங்கள் இனிய கானத்தினால் பக்தி செய்து, ஏனோக்கு எலியாவைப்போலவும், கம்பலர் அசுவதரரைப் போலவும் மேம்பதம் அடைவார்கள் என்பது நிச்சயம். மற்றவர்களால் பேய் இருக்கிறதென்று பயமுறுத்தப்பட்ட மரத்தின் சமீபத்தில் மழைக்கால் இருட்டில் பிரயாணம் செய்யும் ஒருவன், தன் சக்திக்கேற்ற அளவு பலத்த சத்தத்துடன், தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடிக்கொண்டு பயங்கரமான அவ்விடத்தைக் கடந்து செல்லுகிறான். அவன் வாயிலிருந்துண்டான இனிய கீதம், அவன் காதின் வழியாக மூச்சோடு கலந்து உட்சென்று, பயத்தினால் உண்டாகும் இரத்தாசயத்தின் துடிப்பை மாற்றி, அவனுக்குண்டாகிய பயத்தையும் நீக்குகிறது. அதுவன்றி பயத்தினால் சரீரத்திலுள்ள இரத்தமெல்லாம் இரத்தாசயத்திற்கு வந்து வேகப்படுத்தும் பொழுது, இரத்தாசயம் வெடித்துவிடுகிறதென்று பொதுவாகச் சொல்வதை நாம் கேட்டிருப்போம். திடீரென்று உண்டான பெரும் சத்தமும், பயங்கரமான பெரும் சத்தமும், காதின் வழியாக இரத்தாசயத்திற்குச் சென்று, நம்மைத் திடுக்கிடச் செய்து சங்கடப்படுத்துவதை நம் அனுபவத்தால் அறிவோம். அப்படியே இனிய நாதமும் நம்முடைய சஞ்சலத்தைப் போக்கி ஜீவனை விருத்தியாக்கி நாத சொருபத்தில் லயிக்கச் செய்கிறது. உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் முத்தொழிலும், கடவுளுடைய ஒரு சொல்லாலே நடத்தப்படுகிற தென்று நாம் யாவரும் ஒப்புக்கொள்ளுகையில், நாதத்தினால் உண்டாகும் செயல்களையும் அதன் பெருமையையும் எவர் சொல்லவல்லவர்? இவ்வருமையான விஷயத்தைப் பற்றி யாதும் அறியாத நான் எழுதத் துணிந்ததைப் பெரியோர்கள் மன்னிக்கும்படி வணக்கமாய்க் கேட்டுக் கொள்ளுகிறேன். உலகிலுள்ள யாவராலும் மிகச் சிறந்ததென்று கொண்டாடப்படும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றிச்சொல்லும் பூர்வ இசைத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இசை நுணுக்கம், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள், சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமாகிய சுரங்களையும், சுருதிகளையும், நுட்ப சுருதிகளையும், இராக முண்டாக்கும் முறையையும், எவரும் இன்னும் அறிந்துகொள்ளக்கூடாத அவ்வளவு நுட்பமாகச் சொல்லுகின்றன வென்று நான் சொல்லவந்ததைப், பெரியோர்கள் அங்கீகரிக்கும்படி மிகவும் வணக்கமாய்ப் பிரார்த்திக்கிறேன். ஒரு பாஷையில், எழுத்துக்கள் தனித்தும், இரண்டு முதலாகத் தொடர்ந்தும் வார்த்தைகளாவதும், வார்த்தைகள் கிரமப்படி ஒன்றோடொன்று சேர்ந்து வசனங்களாவதும், பல வசனங்கள் ஒன்று சேர்ந்து காவிய மாவதும்போல, சுரங்களும், சுருதிகளும் ஆரோகண அவரோகணத்தில் பல பிரஸ்தாரங்களைப்பெற்று, இராகமாகின்றன என்று நாம் தெளிவாக அறிவோம். அப்படி இருந்தாலும், நாம் பாடுகிற இராகங்களிலும், கீர்த்தனங்களிலும் இன்னின்ன சுரங்களை உபயோகிக்கிறோமென்றும், இன்னின்ன முறையை அநுசரித்து இராகம் பாடுகிறோமென்றும் தெரியாதவர்களாயிருக்கிறோம். பூர்வம் தமிழ்மக்கள், சுரங்களையும் சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அநுசரித்துப் பாடிவந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும், பாடப்பட்டும், வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும், அந்நிய பாஷைச்சொற்களால் உருவமைந்தும், நாளதுவரை யும் வழங்கிவருகின்றன. பூர்வ தமிழ்மக்கள், ஒரு ஸ்தாயியில் ச-ப, ச-ம முறையாய் 12 சுரங்களைக் கண்டுபிடித்து, அவற்றில் கிரகசுரமாற்றிப் பல பண்களுண்டாக்கி, அவைகளில் இசைக்குப்பொருந்தும் முறைப்படிக் கானம் பண்ணி இருக்கிறார்களென்று, நாம் தெளிவாக அறிவோம். இதுவே ஆயப்பாலை முறையாகும். இதன் பின், ஒரு ஸ்தாயியை 24 சுருதிகளாகப் பிரித்து, அவற்றில் ச-ப, ச-ம முறையில் வரும் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு சுருதி குறைத்து, 16 ஜாதிப்பண்கள் பாடினார்களென்று தெரிகிறது. இவைகளே வட்டப்பாலை முறை என்று சொல்லப்படும். இதன்மேல் ச-ப, ச-ம முறையில் வரும் பன்னிரண்டு சுரங்களில், அரை அரை அலகாக வகுத்துத் திரிகோணப்பாலையாகவும், கால் கால் அலகு வகுத்துச் சதுரப்பாலையாகவும் கானம் பண்ணியிருக்கிறார்கள். அதாவது, அரை அரையான சுரங்களில் கானம் பண்ணுவதை ஆயப்பாலை என்ற முதற்படியாகவும், கால் கால் சுரங்களில் கானம் பண்ணுவதை வட்டப்பாலை என்ற இரண்டாம் படியாகவும், அரைக்கால் அரைக்கால் சுரங்களில் கானம் பண்ணுவதைத் திரிகோணப்பாலை என்ற மூன்றாம் படியாகவும், வீசம் வீசம் சுரங்களில் கானம்பண்ணுவதைச் சதுரப்பாலை யென்ற நாலாம் படியாகவும் வைத்துக், கானம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள், ச-ப, ச-ம முறைப்படி ஒரு ஸ்தாயியில் கண்டுபிடித்த 12 சுரங்களுள்ள ஆயப்பாலையின் சுரங்களில், பலரும் பல சந்தேகம் கொண்டு, ச-ப 2/3, ச-ம 3/4 என்று பெருக்கிப் பிரித்து முதற் படியிலேயே தள்ளாடிக் கொண்டிருப்பதையும், கிரகமாற்றி வெவ்வேறான பல இராகங்கள் பாடும் கிரமமறியாமல், பலவகைக் கீரை கலந்தாற் போல், பல இராகங்களையும் ஒன்று சேர்த்துப் பாடிக்கொண்டிருப்பதையும், நாம் பிரத்தியக்ஷமாய்க் காண்கிறோம். முதற் படியிலேயே இவ்வளவு அறியாமையிருக்குமானால், இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகளைப்பற்றி நாம் கேட்கவும் வேண்டுமோ? ஒரு ஸ்தாயியை 24 சுருதிகளாகப் பிரித்து, அவற்றில் இரண்டு சுருதி குறைத்து, வீணையில் கமகமாய் வாசித்து வந்த 16 ஜாதிப்பண்களின் முறை தெரியாமல், ஒரு ஸ்தாயியை 22 சமபாகங்களாகப் பிரித்து, அதற்கேற்ற விதமாய் இராக இலட்சணங்கள் சொல்லிக் கிராமமாற்றி, அவைகளில் சிலவற்றைத் தேவலோகத்திற்கனுப்பி, மற்றவைகளை அனுபோகத்திற்கு வராதவைகளாகச்செய்து, இரண்டாம் படியிலேயே இடறினார்கள். இடறின இவர்கள் முதற் படியிலாவது நிலைக்கவில்லை. ச-ப, ச-ம முறைப்படி, அணுவளவும் பிசகாமல் சம அளவுடையதாய் வரவேண்டிய 12 சுரங்களையும், அவைகளின் ஸ்தானத்தையுமறிந்து கொள்ளாமல், 2/3 , 3/4 என்ற எண்களை ஒன்றோடொன்று பெருக்கியும், பெருக்கிய எண்களைக் குறுக்கியும் சொல்லும் ஒற்றுமையில்லாத பல கணக்குகளைக் கவனிக்கும்பொழுது, பூர்வ தமிழ்மக்கள், முதற் படியாய் வழங்கிவந்த ஆயப்பாலையின் 12 சுரங்களையே, மற்றைய தேசத்தவர் இன்னும் திட்டமாயறிந்து கொள்ளாமல் இருக்கிறார்க ளென்று, நாம் நிச்சயமாய்ச் சொல்வோம். இவ்விஷயத்தில் நாம் தெளிந்த அறிவுள்ளவர்களாகும்பொழுது, ஒரு ஆரோகண அவரோகண சுரத்தில் இராகங்களுண்டாக்கவும், அதில் ஜீவசுர மின்னதென்று கண்டுகொள்ளவும், ஜீவசுரம் இன்னின்ன நுட்பமான சுருதிகள் சேர்ந்து வருகிறதென்று காணவும், அம்முறையில் கீர்த்தனம் எழுதவும், இராகங்களுக்கு வாய்ப்பாடாய் அமைந்த கீதம் எழுதவும் கூடியவர்களாவோம். சிறிய காலத்திற்கு முன்னிருந்த nக்ஷத்திரிஞ்ஞரும், தியாகராஜ ஐயரவர்களும், மகா வைத்தியநாத ஐயரவர்களும், புதிதாகச் செய்த சில பதங்களும், கீர்த்தனங்களும் இராக மாலிகைகளும் தற்கால வழக்கத்தி லிருக்கின்றன வென்று, நாமறிவோம். இவை, பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த இராகங்களின் அமைப்பையும், அழகையுமுடையவைகளாயிருக்கின்றன வென்றும் நாளதுவரையும் இவைகளை யொத்த இராகங்களில் பூர்வமாய மைந்துள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருவாய்மொழி முதலிய பண்களைப் பாடிக்கொண்டு வருகிறார்களென்றும், நாமறிவோம். என்றாலும், தமிழ்மக்கள் பழமையாக வழங்கிவந்த இராகங்களில், இவர்கள் வெகுகாலம் பழகிவந்த பழக்கத்தினாலும், சுரஞானத்தினாலும், தெய்வபக்தியினாலும் மற்றுஞ் சில புதிய இராகங்களில் கீர்த்தனங்கள் எழுதியிருக்கிறார்களென்று தெரிகிறது. இவர்கள் கீர்த்தனங்கள் எழுதுவதற்குரிய முக்கிய விதிகளை தம்முடைய பின்னடியார் எவருக்காவது சொல்லிவைத்ததாகவாவது, எழுதி வைத்ததாகவாவது தெரியவில்லை. இவர்கள் எழுதிய கீர்த்தனங்கள், ஒரு பொது விதியை அனுசரித்துச் செய்ததாக இல்லாமல், தங்கள் அனு போகத்தைக்கொண்டு எழுதினதாகத்தெரிகிறது. ஆனால் இராகங்களுண்டாக்கு வதற்கும், ஜீவசுரம் கண்டுபிடிப்பதற்கும், நுட்பமான சுருதிகள் வழங்கி வருவதற்குமுரிய பொதுவிதி இன்னதென்றறியாமலே, தெய்வ கிருபை யினாலும், மிகுந்த அனுபவத்தினாலும், அந்தந்த இராகங்களின் ஜீவநிலையைக் காட்டி, யாவரும் பின்பற்றும்படியான உயர்ந்த மார்க்கத்தை ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் விளங்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் செய்திருக்கும் இராக அமைப்பைக் கவனிப்போமானால், இராகம் செய்வதற்குரிய பொது விதியையறிந்து செய்தது போலத்தோன்றுகிறது. ஆனால், இவர்களைப்போல் அனுபோகமில்லாதிருந்தாலும், சுரஞானமுள்ள ஒருவர், இராகமுண்டாக்கும் பொது விதிகளைக்கொண்டு, இவர்கள் செய்தது போன்ற கீர்த்தனங்களை மிகச் சுலபமாகச் செய்யலாமென்பது நிச்சயம். இம்முறைகளைக் கண்ட நான், சுரஞானமுள்ள சங்கீத வித்துவான்கள் முன்னிலையில் பிரஸ்தாபப்படுத்தி, விருத்திசெய்யவேண்டுமென்னும் எண்ண முள்ளவனாய், சங்கீத வித்யாமகாஜன சங்கமென்ற ஒரு சபையை, 1912 ´ மே௴ 27 ²யில் ஸ்தாபித்து நடத்த நேரிட்டது. இதில், கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப்பற்றி வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் வந்ததனால், அவைகள் யாவற்றையும் ஆராய்ந்து பார்க்கவும், இதுபோல் மற்றவர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயங்களைப் பரிசோதிக்கவும், சங்கீத இரத்னாகரருடைய சுருதிமுறைகளையும் பூர்வ தமிழ்மக்களின் சுருதி முறைகளையும் ஆராய்ச்சி செய்யவும் நேரிட்டது. சுருதியைப்பற்றிப் பலர் பலவிதமான அபிப்பிராயம் கொள்வதனால், அவ்வபிப்பிராயங்கள் சரிதானா, அல்லவா என்று யாவரும் தெரிந்து கொள்வதற்கு அனுகூலமாக அவரவர்கள் கொடுக்கும் கணக்குகளைப் பரிசோதித்து, அட்டவணையாகக் காட்டவேண்டியது அவசியமாயிற்று. ச-ப 2/3, ச-ம 3/4 என்று வைத்துக்கொண்டு பெருக்கிச் செல்லும் கணக்கில், ஒருவருக் கொருவர் ஒற்றுமை இல்லாதிருப்பதால், அவர்கள் உபயோகிக்கும் தந்தியின் பின்னபாகங்களையும், பின்னபாகங்களுக்குச் சொல்லும் வைபரேஷன்களையும் சென்ட்ஸ்களையும் ஒத்துப்பார்ப்பதற்கும், அட்டவணை கொடுக்கவேண்டியதா யிற்று. சங்கீத இரத்னாகரரின் 22 சுருதி முறைப்படிச் சொல்லுகிறோமென்று, ஒன்றற்கொன்று பேதமான இருபதுக்கு மேற்பட்ட சுருதிமுறை சொல் வோர்களும், சங்கீத இரத்னாகரர் முறைப்படிச் சொல்லவில்லையென்று ருசுப்படுத்த, சங்கீத இரத்னாகரர் கருத்தின்படி, 22 சுருதிகள் இன்னின்ன கணக்கின்படி வருகின்றனவென்று, அட்டவணை காட்ட வேண்டியதாயிற்று. சங்கீத ரத்னாகரருடைய 22 சுருதி முறையையும், 22 சுருதிகளென்று சொல்லும் மற்றவர்கள் முறையையும், இப்புத்தகம் 2-ஆம் பாகத்தில் காணலாம். சங்கீத ‘இரத்னாகரரின் கருத்தின்படி, சுருதிகள் ஒன்றற்கொன்று தீவிரமாய்ப், படிப்படியாய், நடுவில் வேறு நாதம் உண்டாகாமல், ஒரு ஸ்தாயியில் வரவேண்டும் என்பதனால், Geometrical Progressionபடி வரவேண்டு மென்று தெளிவாகத் தெரிகிறது. அதல்லாமல், சுருதிகளைப் பற்றிச் சொல்லும் யாவரும், ஒரு தந்தியின் 2/3 இல் பஞ்சமும், 3/4 இல் மத்தியமும் வர வேண்டுமென்று சொல்வதனால், சற்றேறக்குறைய 2/3, 3/4 இல், பஞ்சமமும் மத்திமமும் வரவேண்டும் என்று நினைக்க வேண்டியதாயிருக்கிறது. இன்னும், பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இசைத்தமிழ் நூலில் சொல்லப்படும் முறைகளைக் கவனிக்கையில், சில அரிய விஷயங்கள் காணப்பட்டன. அவர்கள் ச-ப, ச-ப முறையாகவும், ‘ச-ம, ச-ம முறையாகவும், சுரஞானத்தைக்கொண்டு ஒரு ஸ்தாயியில் சுரங்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று, சிலப்பதிகாரத்தில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. ஒரு இராசி வட்டத்தில் 12 வீடுகள் அமைத்து, அவற்றில் ச-ப 7 ஆவது இராசியென்றும், அதற்கு 7ஆவது 7ஆவது ஆகத் தொடட்ட சுரத்திற்குத் திரும்ப வரும்பொழுது, 12 சுரத்தைக் கொடுக்கிறதென்றும் நாம் தெளிவாகக் காணலாம். இதை, வலமுறை அல்லது ஆரோகண முறையென்று சொல்லு கிறார்கள். இதுபோலவே, ச-ம, ச-ம முறையாக 5. ஆவது 5 ஆவதுஇராசியாக, இடமுறையாய் முன் கிடைத்த பன்னிரு சுரங்களும் கிடைக்கின்றனவென்று சொல்லுகிறார்கள். ‘வரன்முறை மருங்கின் ஐந்தினு மேழினும் உழைமுத லாகவும் உழையீ றாகவும் குரல்முத லாகவும் குரலீ றாகவும் - என்பதனால் ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களும், சம அளவான ஓசையுடையவை களாய் வருகின்றனவென்றும் ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களும், Geometrical Progressionபடியே வரவேண்டும் என்றும் காணக்கிடக்கின்றது. இதோடு, மற்றும் சில அரிய விஷயங்கள் இங்கே காணப்பட்டதனால், இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் வழங்கிவந்த முதற் சங்கத்தைப் பற்றியும், தமிழ் மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும், அது ஆங்கிலோ ஜெர்மன் பாஷைகளிலும் சமஸ்கிருத பாஷையிலும், ஸீத்திய எபிரேய பாஷைகளிலும் கலந்திருந்தும், மேற்காட்டிய பாஷைகள், தமிழில் உள்ள பூர்வ நூல்களில் கலக்கப் பெறாமையால் தமிழ்மொழி ஆதிமொழியா யிருக்கலாமென்றும், இசைத் தமிழாகிய சங்கீதம், முதல் முதலில் தமிழ்மொழியிலேயே உண்டாயிருக்க வேண்டும் என்றும், ஒரு காலத்தில் மிகுந்த விருத்தி நிலையிலிருந்த சங்கீதம், பிற்காலத்தில் மெலிவடைந்த காரணம் இன்னதென்றும், பாண்டிய அரசாட்சியற்றுப் போனபின், சோழ ராஜ்யத்தில் சங்கீதம் ஒருவாறு பேணப்பட்டு வந்ததென்றும், அச்சங்கீதத்தில் சிறந்து விளங்கிய சில வித்வான்களைப்பற்றிய குறிப்புகளும், சங்கீத வித்யா மகாஜன சங்கம் ஏற்படுவதற்குரிய காரணமும், அச்சபையில் வந்திருந்தவர்களும், அதில் சில கனவான்கள் சொல்லிய சில குறிப்புகளும், 6 கான்பெரென்ஸுக்கும் வந்திருந்த கனவான்களின் படங்களும், மற்றும் சில விஷயங்களும் இன்னின்னவை என்றும், இப்புத்தகம் முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்றாவது பாகத்தில், இசைத் தமிழைப்பற்றிச் சொல்லும் முக்கிய குறிப்புகளைப்பற்றியும், அக்காலத்தில் வழங்கிவந்த 4 பாலைகளைப் பற்றியும், நாற்பெரும் பண்களைப்பற்றியும், 4 ஜாதிப்பண்களைப் பற்றியும், 7 பாலைகள் பிறப்பதைப் பற்றியும், கிரகமாற்றி 16 ஜாதிகள் பிறப்பதைப் பற்றியும், கிரக சுரம் பிடித்துப் பாடுவதற்குரிய முறையைப் பற்றியும் சொல்லப்படும் மேற்கோள்களும், அவற்றின் கருத்துரையும், சொல்லப்பட்டுள்ளன. முதலாம் நூற்றாண்டின் கடைசியில் அதாவது இற்றைக்குச் சுமார் 1800 வருடங்களுக்கு முன் நடந்த கோவலன் சரித்திரத்தில், இளங்கோவடிகள் சங்கீத விஷயமாய்ச் சொல்லும் சொற்ப பகுதியின் சாரத்தைக் கவனிப்போ மானால், பூர்வ தமிழ் மக்களின் கானத்தின் உயர்வும், உலகத்தவர் எவரும் இன்னும் அறிந்துகொள்ளாத நுட்பங்களும், சொல்லப்படுகிறதை நாம் காண்போம். பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த சிறந்த இசைத்தமிழின் விதி முறைப்ழேபடியே, தென்னிந்திய சங்கீதமென்று தற்காலத்திற் சொல்லும் கானமும் இருக்கிறதென்றும், அந்நுட்ப விதிகளை அறியாதிருந்தாலும், அம் முறைப்படியே நாளது வரையும் பாடிக் கொண்டிருக்கிறோமென்றும், நாம் அறியும்பொழுது மிகுந்த சந்தோஷமடைவோம். சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன், யாழ் வாசிப்பதில் மிகத்தேர்ந்தவனாயிருந்தானென்றும், அப்படியே, யாழ் வாசிப்பதில் மிகத் தேர்ந்த நடனக் கன்னிகையாகிய மாதவியிடம் அன்பு வைத்தானென்றும் சொல்ல வந்தவிடத்தில், நடனத்தைப்பற்றியும், யாழைப் பற்றியும், குழலைப் பற்றியும், தண்ணுமையைப் பற்றியும், ஆளத்தியைப் பற்றியும், அவிநயத்தைப் பற்றியும், மற்றும் அவைகளைச் சேர்ந்த சில அங்கங்களைப் பற்றியும் இளங்கோவடிகள் சொல்லுகிறார். இளங்கோவடிகள் எழுதிய இந்த நூலுக்குச், சற்றேறக்குறைய 1000 வருடங்களுக்குப் பின் ஜெயங்கொண்டான் கவிச் சக்கரவர்த்தி பதவுரையும், அதற்குச் சுமார் 100 வருடங்களுக்குப் பின் அடியார்க்கு நல்லார் உரையும் எழுதியிருக்கிறார். இவ்விருவருடைய உரைகளில், பல இசைத்தமிழ் நூல்களின் மேற் கோளும், அனுபோகமும் சொல்லப்படுகின்றன. இசைத்தமிழைச் சொல்ல வந்த அநேக நூல்கள், அவர்கள் காலத்திலேயே இறந்துபோனதாகவும் அரை குறையாயிருந்த தாகவும் எண்ண இடமிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் காணப்படும் அகவல்களும், வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் மற்றும் சில இடங்களில் வந்துள்ள அகவல்களும், சொற்பமாயிருந்தாலும், எந்த தேசத்துத் தேர்ந்த சங்கீத வித்வான்களும் இன்னும் அறிந்து கொள்ளாத இராகம் உண்டாக்கும் முறை, நாற்பெரும் பண்களில் கிரகம் மாற்றி இரண்டு அலகு குறைத்துக் கமகமாய்ப் பிடிக்கும் 16 ஜாதிப் பண்களின் முறை, நுட்பச் சுருதிகள் இன்னின்ன இடங்களில் சேர்ந்து வருகின்றனவென்ற முறைபோன்ற பல அரிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றனவென்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவைகளில், ஒரு இராசிவட்டத்தைப் பன்னிரு கூறாகப் பிரித்து, ச-ப முறையாகவும் ச-ம முறையாகவும் 12 சுரங்கள் கண்டுபிடித்து, அம்முறையை ஆயப்பாலை யென்றும், பெண்களுக்குப் பிரியமானதென்றும் சொன்னார்கள். அதில் 12ஆவது இராசியில் நின்ற குரலிலிருந்து அதற்கு இரண்டாவது இராசியினின்ற ரிஷபத்தையும், நாலாவது இராசியினின்ற காந்தாரத்தையும், 5ஆவது இராசியினின்ற மத்திமத்தையும், 7ஆவது இராசியினின்ற பஞ்ச மத்தையும், 9ஆவது இராசியினின்ற தைவதத்தையும், 11 ஆவது இராசி யினின்ற நிஷாதத்தையும், 12ஆவது இராசியினின்ற சட்ஜமத்தையும் சேர்த்து, 7 சுரங்களில் ஒரு ஆரோகண அவரோகண முண்டாக்கி, அதற்குச் செம்பாலைப் பண் என்று பேர் கொடுத்து வழங்கிவந்திருக்கிறார்கள். இதையே நாம் தற்காலத்தில் சதுர் சுருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுர்சுருதி தைவதம், காகலி நிஷாதம், மேல் சட்ஜமம் உள்ள தீர சங்கராபரண மென்று வழங்கி வருகிறோம். தீர சங்கராபரணத்தில் உள்ள சுர முறைப்படி, அதாவது 1, 2, 2, 1, 2, 2, 2 என்ற இராசி முறைப்படிக் கிரகமாற்றிக்கொண்டுபோகும் பொழுது, படுமலைப் பாலைப்பண் அதாவது கரகரப்பிரியா, செவ்வழிப்பாலைப்பண் அல்லது தோடி, அரும்பாலைப்பண் அல்லது கல்யாணி, கோடிப்பாலைப்பண் அல்லது அரிகாம்போதி, விளரிப்பண் அல்லது பைரவி, மேற்செம்பாலைப்பண் அல்லது பஞ்சமமில்லாத தோடி யென்ற தாய் இராகங்களை உண்டாக்கி, அவைகளில், பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்ற சம்பூரண சாடவ ஒளடவ சுவராந்த மென்னும் பல இராகபேதங்களைப் பாடினார்களென்று தெரிகிறது. இதன் பின், ஒரு இராசிச்சக்கரத்தில் 12 ஆக வரும் சுரங்களை யாழில் பாடும்பொழுது இன்னின்ன சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடவேண்டுமென்று சொல்வதற்காக, வட்டப்பாலை முறை சொல்லியிருக்கிறார்கள். இதில் சட்சமமே சட்சமமாக (குரல் குரலாக) ஆரம்பிக்கிற காலத்தில் மருதயாழ் என்றும், மத்திமம் சட்சமமாக (உழை குரலாக) ஆரம்பிக்கிறகாலத்தில் குறிஞ்சி யாழ் என்றும், பஞ்சமம் சட்சமமாக (இளிகுரலாக) ஆரம்பிக்கும் பொழுது நெய்தல் யாழ் என்றும், நிஷாதம் சட்சமமாக (தாரம் குரலாக) ஆரம்பிக்கும்பொழுது பாலையாழ் என்றும், நாலுவகையாகப் பிரித்து அதில் விளரி கைக்கிளையில் (த, க வில்) ஒவ்வொரு அலகு குறைத்துக், கமகமாய்ப் பிடிக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இவைகள், நாம் தற்காலத்தில் வழங்கும் சங்கராபரணம், கல்யாணி, அரிகாம்போதி, தோடி என்ற இராகங்களாகும். ஆனால், இவைகளில் விளரி கைக்கிளை போல் வரும் 2 சுரங்களில், ஒவ்வொரு அலகு குறைந்து வரும். இந்நாலு பெரும்பண்களிளிலிருந்து ச, க, ப, நி என்ற 4 சுரங்களை, ச வாக ஆரம்பித்துக் கிரகம் மாற்றும் பொழுது பிறக்கும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் 4 ஜாதிகளுக்கு, விளரி கைக்கிளை போல் ஒவ்வொரு அலகு இன்ன விடத்தில் குறைந்து வரவேண்டுமென்ற முறையும், 16 ஜாதிப் பண்களின் பேர்களும் சொல்லியிருக்கிறார்கள். இம்முறையில், ச-ப, ச-ம முறையாகவரும் விளரி கைக்கிளையில், ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடியது போக, அரை அலகு குறைத்துப்பாடுவதை திரிகோணப்பாலை யென்றும், கால் அலகு குறைத்துப் பாடுவதை சதுரப்பாலை என்றும், சொல்லி யிருக்கிறார்கள். இப்படிச் சொன்னதில், ஒரு ஸ்தாயியில் 22 அலகுகள் என்று சொன்ன நூல் முறைப்படி, பொருள் செய்து அலகு மாற்றியும், ச-ம ஐந்தும், ச-ப ஏழுமானராசிகளில் வரும் மறைப்பு நீங்கிய முறையில், ஒரு ஸ்தாயியில் 24 அலகுகள் வருகின்றனவென்றும், 2 அலகு குறைத்துக் கமகமாய் யாழில் வாசிக்கும்பொழுது 22 அலகுகளென்றும், இது ‘உய்த்துணர வைப்பு’ என்ற நூல் மரபென்றும் சொல்லி, இம்மறைப்பு நீங்கியபின் ஏழு தாய் இராகங்கள் உண்டாகும் முறையையும், மத்திமத்தின் இரண்டு அலகை குரலில் வைத்துப் பன்னிருகால் கிரகம் மாற்றும் பொழுது உண்டாகும் பன்னிரு பாலை இராகங்களையும், அவைகளுக்குத் தற்காலத்தில் வழங்கும் பேர்களையும், சில மேற்கோள்களையும் காட்டியிருக்கிறேன். அதோடு, “ஆயத்துக் கீரா றறுநான்கு வட்டத்துக் கேயுங்கோ ணத்துக் கிரட்டிப்புத் - தூயவிசை நுண்மைக் கதிலிரட்டி நோனலகு மோர்நிலைக்கிங் கெண்மூன்று கேள்விகொண் டெண்” என்ற இசை மரபு வெண்பாப்படி ஒரு ஸ்தாயியில் ஆயப்பாலையில் வரும் 12 அரைச்சுரங்களையும், வட்டப்பாலையில் வரும் 24 ஆன கால் சுரங்களையும், திரிகோணப்பாலையில் வரும் 48 ஆன அரைக்கால் சுரங்களை யும், சதுரப்பாலையில் வரும் 96 ஆன வீசம் சுரங்களையும், நுட்பமாய்க் கண்டறிந்த தமிழ்மக்கள், தம் நுண்ணறிவிற்கேற்ப, யாழ் வாசிப்பதிலும், இராகம் ஆளத்திசெய்வதிலும் (இராகம் ஆலாபிப்பதிலும்) அவிநயிப்பதிலும், நடனஞ் செய்வதிலும், தாளத்திலும் குழலிலும், கணிதத்திலும், சோதிடத்திலும் மிகச் சிறந்த அறிவுடையவர்களாய் இருந்தார்களென்பதைக் காட்டச் சில குறிப்புகள் சொல்லியிருக்கிறேன். பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆதி இசைகளும், பண்களும் பலவிதமாகப் பேர் மாற்றப்பட்டு,700, 800 வருடங்களுக்குள் முற்றிலும் மாறித் ‘தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாது’ என்று சொல்லும்படி நேரிட்டிருப்பதைக் காட்டும் சில குறிப்புகளும், எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவைகளை மூன்றாம் பகுதியில் காணலாம் இப்புத்தகம் நான்காம் பாகத்தில், சுரங்கள் சுருதிகளினுடைய எண்களும், கணக்குகளும், அவைகள் வழங்கிவரும் இராகங்களும், அவற்றின் பேர்களும், அவைகள் வீணையில் இன்னின்ன விடங்களில் வருகின்றனவென்ற அளவு முறையும், தெளிவாகக் காணலாம். வானமண்டலத்தை 12 இராசிகளாகப்பிரித்து, அவைகளில் சஞ்சரிக்கும் ஏழு கிரகங்களின் கதிபேதத்தினால் உண்டாகும் வெவ்வேறு சஞ்சாரத்தைக் குறிக்கும் எண்ணிறந்த சாதகங்களைப் போலவும், அவைகளில் உண்டாகும் பலன்களைப்போலவும், முற்றிலும் ஒத்திருக்கும் விதமாகச் சங்கீத சாஸ்திரத்தையும் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு ஸ்தாயியை 12 சம அளவாகப்பிரித்து, அவைகளில் 7 சுரங்கள் வரவேண்டிய இடத்தையும், அவைகளைக் கிரகம் மாற்றும்பொழுது உண்டாகும் அளவிறந்த இராகபேதங்களையும், நுட்பமான சுருதிகள் சேர்ந்து வரும்பொழுது உண்டாகும் மூர்ச்சனா பேதங்களையும் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, கிரகங்கள் நட்பு, ஆட்சி, உச்சம், திரிகோணம், நீசம், பகை முதலிய இடங்களையடைய பலன் வெவ்வேறாவது போலவே, சங்கீதத்தில் வழங்கிவரும் 7 சுரங்களும் இணை, பகை, கிளை, நட்பு என்ற இடங்களின் பேதம் பெற்று, இனிமையும் செயலும் ஆகிய இவைகளில் வேறுபடுகின்றன. ஒரு இராசிச்சக்கரத்தில், 2, 4, 5, 7, 9, 11, 12 முதலிய இடங்கள் கொள்ளப்படும் சுபஸ்தானங்களென்றும் 3, 6, 8, 10 முதலிய இடங்கள் விலக்கப்படும் பகை ஸ்தானங்களென்றும் சொல்லியிருப்பது போலவே, சங்கீத சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கிறார்கள். குரலே குரலாக ஆரம்பிக்கும்போது உண்டாகும் செம்பாலைப்பண்ணின் ஏழு சுரங்களை 2, 4, 5, 7, 9, 11, 12 முதலிய இராசிகளில் நிற்கும் சுரங்களாகக் காண்போம். அதுவுமின்றி 1, 3, 6, 8, 10 முதலிய 5 இடங்களில் வரும் சுரங்களும், செம்பாலைப்பண் அல்லது சங்கராபரண ராகத்திற்குப் பகை சுரங்களென்றும், அவைகள் முற்றிலும் விலக்கப்படவேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்கள். சங்கராபரண முறைப்படி அல்லது செம்பாலைப் பண்ணின் சுர முறைப்படி கிரகமாற்றிக்கொண்டு போகும்பொழுது பல இராகங்கள் உண்டாகும் முறையையும் சொல்லியிருக்கிறார்கள். இதோடு உடற்கூறு சாஸ்திரத்திலும், தத்துவ சாஸ்திரத்திலும், யோக சாஸ்திரத்திலும், வைத்திய சாஸ்திரத்திலும், பூகோள சாஸ்திரத்திலும் ஏழு சுரங்களைப்போல் 7, 7 ஆக அமைந்த இலக்கங்களும், 12 ஆக அமைந்த இலக்கங்களும், மற்றும் 24, 48, 96 போன்ற இலக்கங்களும் ஓசை அலைகளின் கணக்கும், யோக சாஸ்திரத்தின் உண்மையும், மனிதனுடைய தூல சூட்சும காரணசரீரங்களில் விளங்குகின்றனவென்றும், அம்முறைப்படியே ஒருயாழின் அமைப்பும், அதன் ஓசையும், கணக்கும் ஒத்துவருகின்றன வென்றும் இப் பகுதியின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறேன். அதன்மேல் ஒரு ஸ்தாயியில் வரும் 7 சுரங்களும், 12 சுரங்களும் கிரகமாறும்பொழுது உண்டாகும் இராகபேதங்களும், ச-ப, ச-ம முறையில் ஒரு இராசி வட்டத்தில் சம அளவான ஓசையுடையதாய் 12 சுரங்கள் அமைவதை யும், ஒரு ஸ்தாயியை 24 அலகுகளாகவும், 48, 96 போன்ற நுட்ப சுருதிகளாக வும், வகுத்து வழங்கிய பூர்வ தமிழ்மக்களின் முறைக்கு ஏற்றதும், தற்காலக் கணிதசாஸ்திரிகள் யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதுமான Geometrical Progression படி, ஆதாரசட்ஜம் ஒன்றானால் அதன்மேல் வரும் சட்ஜம் இரண்டா யிருக்க வேண்டுமென்ற அநுபவப் பிரமாணத்தின்படிக்கு, ஒன்றிலிருந்து இரண்டு வரையும் சுரங்கள் படிப்படியாய் ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதம் உண்டாகாமல் எப்படித் தொடர்ந்து நிற்கின்றனவென்பதற்கு, 12x2, 24x 2, 48x 2, 96x 2 என்ற முறைப்படிச் சுரங்கள் வரும் தந்தியின் பின்ன பாகங்களும் ஓசையின் அலைகளும் ஸென்ட்சுகளும் காணக்கூடிய கணக்கும் சங்கீத சாஸ்திரத்திற்குப் பொருந்தும் ஒற்றுமையும் காட்டியிருக்கிறேன். இவையாவையும் ஒருங்கே பார்க்கும்படியாகப் பிரியப்படும் அன்பர்களுக்கு, மேரு முதல் மெட்டுவரை தந்தி நின்றாடும் இடம் 32 அங்குல நீளமுள்ளதான ஒரு வீணையில், மத்திய ஸ்தாயியான முதல் 16 அங்குல நீளத்தில், சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவிடத்தில் வருகின்றனவென்று பின் அளவு அட்டவணையும் வைத்திருக்கிறேன். இவ்வளவின்படி கிடைக்கக் கூடிய சுரங்களும் சுருதிகளும் வழங்கிவரும் ஆயப்பாலை, வட்டப் பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என்னும் 4 பாலைகளிலும், தற்காலம் நமது அநுபவத்திலிருக்கும் கீர்த்தனங்களில் 67 கீர்த்தனங்களைத் திஷ்டாந்தமாகக் கொடுத்திருக்கிறேன். மேலும் மேற்றிசையார் வழங்கும் 12 சுரங்களில், ரி த என்ற சுரத்திலும் நி ம என்ற சுரத்திலும் சொற்பபேதமிருந்தாலும், அதாவது சட்சமம் 240, ரிஷபம் 270 வைபரேஷன் (ஓசையின் அலைகள்) என்று வைத்துக்கொள்வோமானால் தைவதம் 11/2 ஆன பஞ்சம முறைப்படி 405 ஆய் வரவேண்டும். அதற்குப் தில் 400 என்று வருகிறது. நிஷாதம் 450 ஆனால் அதற்கு மேல் வரும் மத்திமம் 11/2 ஆன பஞ்சம முறைப்படி 675 ஆக வரவேண்டும். அதற்குப் பதில் 640 என்று வருகிறது. இச்சொற்ப பேதம் 2 சுரங்களுக்கும் ஏற்பட்டாலும், இவைகளும் சம அளவுள்ளதாக Geometrical Progressionபடி திருத்திக்கொள்ளலா மென்றும் மற்றும் சுரங்கள் பூர்வ தமிழ் மக்களின் முறைக்கு ஒத்ததாயிருக்கின்றனவென்றும், அவர்கள் வழங்கி வந்த அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்ற 4 ஜாதிகளில், ச க ப என்ற அகநிலை புறநிலை அருகியலாகும் மூன்று ஜாதிகளே Bass, Tenor, Altoஎன்னும் 3 parts ஆகுமென்றும், அவர்கள் குறித்த ளுவயகக nடிவயவiடிn படிச் சொற்ப அடையாளத்துடன் தென்னிந்திய சங்கீதத்தை விருத்தி பண்ணலாமென்றும் திஷ்டாந்தத்துடன் காட்டியிருக்கிறேன். உலகத்தவர் எவரும் கண்டும் கேட்டுமிராத நுட்பமான சுர ஞானத் தையும், அருமையான கீத முறையையும், பூர்வ தமிழ் மக்கள் உடையவர்களா யிருந்தார்கள் என்பதைக் காட்டச் சில பாண்டிய அரசர்களின் சாசனமும், அதன்முன் தமிழ்நாட்டிலிருந்து மெசொபொத்தேமியா, பாபிலோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி ராஜ்யங்களை ஸ்தாபித்துப் பிரபலமாய் ஆண்டுகொண்டிருந்த தமிழ்மக்கள் மிகுந்த நாகரிக முடையவர்களாய்ப் பலபல கலைகளில் தேர்ந்தவர்களாய்ப் பற்பல ஜாதி யாராய் அழைக்கப்பட்டார்களென்றும் அவர்கள் பேசிய தமிழ்மொழி, எபிரேய, கல்தேய, பாபிலோனிய, அசீரிய, சுமேரிய, பாரஸீக, பெல்ச்சிய, பெர்குயிஸ், பிராகிர்த, சீத்திய, ஆங்கிலோ, ஜெர்மானிய, சமஸ்கிருத பாஷைகளில் மிக ஏராளமாய்க் கலந்துவருவதினால் தமிழ்மக்களே மிகப் பூர்வமாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்க ளென்றும், அவர்களிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்ட காலத்தில் தங்களுக்குச் சமீபமுள்ள ஆசியா, சின்ன ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஒஷியானியா என்னுங் கண்டங்களின் கரையோரங்களில் தங்கினார்க ளென்றும், தப்பிப் பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக் கேற்றவிதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும் நாம் காண்பதற்கு உதவியாகச் சில சரித்திரக் குறிப்புகளும் சொல்லியிருக்கிறேன். சுருதி விஷயமாய் நான் எழுதிவந்த இப்புத்தகம் முடிகிற சமயத்தில், His Highness Gaekwarமகாராஜா நடத்திய ஆல் இந்திய மியூஸிக் கான்பரென்ஸுக்கு வரும்படி, பரோடா திவான் சாகிப் (மகா-ராச-ராச-சிறி) மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் அவர்கள் C.I.E. விரும்பிக் கேட்டுக் கொண்டதனால், அங்கே போய்ச் சங்கீத ரத்னாகரரின் 22 சுருதி முறையையும், தற்காலம் கர்நாடகத்தில் வழங்கி வரும் சுருதி முறையையும் விஸ்தரித்து ருசுப்படுத்திக்காட்டிக் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை யாவரும் எவ்வித ஆட்சேபனையுமின்றி ஒப்புக்கொள்ளும்படிச் செய்தேன். அங்கு நடந்தவைகளைப்பற்றிப் பேப்பர்கள் சொல்லிய அபிப்பிராயங்களையும் தனித்து எழுதிய அபிப்பிராயங்களையும், விரோதமாய் எழுதியவர்களின் அபிப் பிராயங்களையும், அவற்றிற்கு என்னால் எழுதப்பட்ட மறுப்பையும் ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளும் பரோடா கான்பரென்ஸும், என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். சுமார் 2500 வருடங்களுக்குமுன், ச-ப 2/3, ச-ம 3/4 என்று மட்டப் பலகையால் அளந்து கொண்டுபோன அளவு மேற்றிசையைக் குழப்ப, சுமார் 1400 வருடங்களுக்குமுன் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளென்று சொன்ன பரதருடைய சமஸ்கிருத நூலும், சுமார் 700 வருடங்களுக்கு முன்னுள்ள சங்கீத ரத்னாகரருடைய சமஸ்கிருத நூலும் கீழ்த்திசையை உழப்ப, இவைகளால் சுருதியைப்பற்றிய நிச்சயம் இன்னதென்று தெரியாமல் யாவரும் கலங்க நேரிட்டதினிமித்தம் இதைச் சற்று விரிவாக எழுத நேரிட்டது. உண்மையை யறியவேண்டுமென்று அவாக்கொண்ட விவேகிகளுக்கு இவை போதுமென்றெண்ணுகிறேன். என்றாலும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளையும், அவைகள் வழங்கி வரும் கீர்த்தனங்களையும் பற்றித், தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தார் என்ன அபிப்பிராயப்பட்டார்களென்று நாம் அறிய விரும்புவோமாகையால், 1916௵ ஆகஸ்டுமாதம் 19௳ இல் தஞ்சாவூரில் நடந்த சங்கீத வித்யா மகாஜன சங்கத்தைப்பற்றியும், அதில் தமிழில் தேர்ந்த புலவர் பஞ்சாயத்தின் அபிப்பிராயத்தையும், கணித சாஸ்திரிகள் பஞ்சாயத்தின் அபிப்பிராயத்தையும், சங்கீத வித்துவான்கள் பஞ்சாயத்தின் அபிப் பிராயங்களையும் அதன்மேல் பிரஸிடென்ட் மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. அவர்களின் அபிப்பிராயத்தையும், மைசூர் வைணீக சிகாமணி மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்கள் அபிப்பிராயத்தையும், ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளும் தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கமும்’ என்ற தலைப்பின் கீழும், இப்புத்தகத்தின் கடைசியில் விஜயநகரம் சமஸ்தான வித்வான் வைணீக சிரோமணி, மகா-ராச-ராச-சிறி வேங்கட ரமணதாஸ் அவர்கள் அபிப்பிராயத்தையும் சொல்லியிருக்கிறேன். அச் சபையில் வந்திருந்த தமிழ்ப் புலவர்கள் சொல்லிய அபிப்பிராயங்களைப் பொருள் அட்டவணையின் பின் வரும் பாயிர வரிசையில் சேர்த்திருக்கிறேன். இப்புத்தகத்தில் பூர்வ தமிழ்மக்களைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும், இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தைப்பற்றியும், அதில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளைப்பற்றியும், அதற்குச் சம்பந்தமான பல குறிப்புகளைப் பற்றியும் சொல்லியிருந்தாலும், சுருதியைப்பற்றிப் பலர் சொல்லும் பல அபிப் பிராயங்களையும், பரதர், சங்கீத ரத்னாகரர், பாரிஜாதக்காரர் முதலியவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களையும், பூர்வ தமிழ்மக்கள் வழங்கிவந்த சுருதிகளையும் சொல்லி, தமிழ்மக்கள் வழங்கிவந்த சுருதிகளே தற்கால வழக்கத்திலிருக்கின்றனவென்றும், இனி வருங்காலத்தவரும் அதன் முக்கிய மறிந்து மேன்மையானதென்று கொண்டாடக் கூடியதென்றும் விளங்கக்கூடிய குறிப்புகளை அதிகமாய்ச் சொல்லியிருக்கிறேன். பூர்வ தமிழ் மக்களில் தவ சிரேஷ்டரான பெரியோர்களின் கருத்தையும் வசனங்களையும் சொன்னேனே யொழியப் புதிதாக நான் சொல்லிவிட்டதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளவில்லை. எனக்கு முன்னுள்ள பெரியோர்களின் வசனங்களை அவர்கள் சொன்னபடியே என் புத்தகத்தில் எடுத்தாண்டிருக்கிறேன். அவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்த அருமையான விஷயங்களை அவர்கள் பேருடனும் புஸ்தகத்தின் பக்கங்களுடனும் எழுதியிருக்கிறேன். மலர்ந்த பூவின் மெல்லிய இதழ்களிலிருக்கும் மகரந்தத்தையும், அதனடியிலுள்ள தேனையும் எடுக்கவிரும்பிய தேனீ, அம்மலரைச் சுற்றிவந்து ரீங்காரம் செய்து, மகரந்தத்தையுந் தேனையும் மெதுவாக எடுத்துக்கொண்டு மறுபடியும் அதைச் சுற்றி ரீங்காரம் செய்து போவது போல, முன்னோர்களின் பேர்களை மனதார வணங்குவதைத் தவிர வேறு என்ன பிரதியுபகாரம் என்னால் அவர்கட்குச் செய்ய முடியும்? சங்கீதத்தைப்பற்றிய சில அருமையான விஷயங்கள் பூர்வ தமிழ் மக்களின் வழக்கத்திலிருந் தனவென்று, சிலப்பதிகாரத்திற்கூறிய சேரன் செங்குட்டுவன்தம்பியும் தவசிரேஷ்டருமான இளங்கோவடிகளுக்கும், அவர் எழுதிய பொருள் நிறைந்த அகவல்களுக்கு அவருக்குச் சுமார் 1000 வருடங்களுக்குப்பின் அரும்பத உரை எழுதிய ஜெயங்கொண்டான் கவிச் சக்கரவர்த்திக்கும், இவருக்கு 100 வருடங்களுக்குப்பின் சிலப்பதிகாரத்திற்கு உரையும் அவ்வுரையில் அக்காலம் சங்கீதத்திற்கென் றெழுதிய நூல்களின் பல மேற்கோள்களையும் எழுதிய அடியார்க்கு நல்லார்க்கும், இவ்வருமையான நூல் இராமபாணத்தால் அழிந்து போகாமல், பல பிரதிகளைத் தேடிப் பரிசோதித்து உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி அச்சிட்டுத்தந்த, பிரஸிடென்ஸி காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், உத்தமதானபுரம் மகா மகோபாத்தியாயர் மகா-ராச-ராச-சிறி சாமிநாதையர் அவர்களுக்கும், நானும் தமிழ்மக்களும் எவ்வித நன்றி பாராட்டக் கூடியவர் களென்று சொல்ல இயலாதவனாயிருக்கிறேன். இப்புத்தகம் ஆரம்பித்ததுமுதல் முடிவு வரையும் இங்கிலீஷ் வாக்கியங்களைத் தமிழில் திருப்பியும், தமிழிலுள்ளவைகளை இங்கிலீஷில் மொழிபெயர்த்தும், பிழை பரிசோதித்தும் தருவதில் மிகச்சிரமம் எடுத்துக் கொண்ட தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கம், Honorary Secretary உம், S.P.G. High Schoolதலைமை உபாத்தியாயரும், தஞ்சை S.P.G. Church Organist உம் ஆன மகா-ராச-ராச-சிறி A.G.பிச்சைமுத்து B.A., L.T,. அவர்களுக்கு நான் மிகவும் நன்றிபாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். இப்புத்தகம் ஆரம்பமுதல் முடிவுவரையும் பிழை திருத்தவும், தமிழ் நூல் ஆராய்ச்சி செய்யவும், மிகவும் உதவியாயிருந்த தஞ்சை, கலியாண சுந்தரம் ஹைஸ்கூல் தமிழ்த் தலைமைப் பண்டிதர் மகா-ராச-ராச-சிறி L.உலகநாதபிள்ளை அவர்களுக்கு மிகவும் நன்றிபாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். இப்புத்தகத்தில் வெவ்வேறு சுருதிமுறை சொல்வோர் கணக்குகளைப் பரிசோதனை செய்வதில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கச் சில காலம் உதவியாயிருந்த, காலஞ்சென்ற மகா-ராச-ராச-சிறி V. இராமையாகாரு B.A. அவர்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனம் சொல்லுகிறேன். இப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாயும், அரைகுறையாய் அச்சாகியும் இருக்கையில், அவைகளை வாசித்துப் பார்த்து, மிகுந்த சந்தோஷத்துடன் என்னை உற்சாகப்படுத்திய தமிழ் வித்வசிரோமணி, சோழவந்தான் மகா-ராச-ராச-சிறி அரசஞ் சண்முகம்பிள்ளை அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி, St.Joseph College தமிழ்த் தலைமைப் பண்டிதர் மகா-ராச-ராச-சிறி சவுரிராயபிள்ளை அவர்களுக்கும், பிரசிடென்ஸி காலேஜ் தமிழ்த் தலைமைப்பண்டிதர், உத்தமதானபுரம் மகாமகோ பாத்தியாயர், மகா-ராச-ராச-சிறி வே. சாமிநாதையர் அவர்களுக்கும், விருதை மகா-ராச-ராச-சிறி சிவஞானயோகி அவர்களுக்கும், சென்னை திராவிடியன் போர்ட் சேர்மென் தோட்டக்காடு மகா-ராச-ராச-சிறி T. இராமகிருஷ்ணபிள்ளை F.M.U., F.R.H.S. அவர்களுக்கும், அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், மகா-ராச-ராச-சிறி அரிகர பாரதியார் அவர்களுக்கும் சங்கீதத்திலும் கோட் வாத்தியத்திலும் கதை செய்வதிலும் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கும், அரிகேசவ நல்லூர், மகா-ராச-ராச-சிறி L.முத்தையா பாகவதர் அவர்களுக்கும், விஜயநகரம் சமஸ்தான வைணீக சிரோமணி, மகா-ராச-ராச-சிறி வீணை வேங்கடரமணதாஸ் அவர்களுக்கும், வையைச்சேரி மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி ஐயர் அவர்களுக்கும், தஞ்சை மகா-ராச-ராச-சிறி வேங்கடாசலமையர் அவர்களுக்கும், தஞ்சை மகா-ராச-ராச-சிறி சாமியா பிள்ளை அவர்களுக்கும், என் மனப்பூர்வமான வந்தனம் சொல்லுகிறேன். இந்நூல் முடிவுபெறுஞ் சமயத்தில், திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் மஹா சன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகளுக்குக் காண்பிக்க அவர்கள் இதனை அன்புகூர்ந்து முழுவதும் பார்வையிட்டு, ‘இத்தகைய நூல் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன் தரத்தக்கதே’ என்று சொல்லி மனமகிழ்ந்து ஆதரவு செய்ததற்காகப் பக்தி விநயத்துடன் நமஸ்கரிக்கின்றேன். திருக்கோயிலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ ஞானியார் மடாலயம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் இந்நூல் முழுவதும் பார்வையிட்டு அருமை பாராட்டியதற்காக மனப்பூர்வமாக நமஸ்கரிக்கின்றேன். இதிற் சொல்லப்படும் வித்துவான்கள் பலருடைய சரித்திரக் குறிப்புகளையும், தேவார திருவாசகங்களில் வழங்கும் பண்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் இராகமுறைப்படி, மகா-ராச-ராச-சிறி மகா வைத்தியநாதையர் அவர்கள் குறித்திருந்த இராக அட்டவணையையும் கொடுத்த, வையைச் சேரி, மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி ஐயர் அவர்களுக்கு, நன்றியறிந்த வந்தனம் சொல்லுகிறேன். தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்க விஷயமாகவும், இப்புத்தக விஷயமாகவும், அப்போதைக்கப்போது ஏற்படும் கடிதப் போக்கு வரவுகளில் உதவியாக வேலை செய்துவரும் தஞ்சை, சங்கீதவித்யா மகாஜன சங்கம், Honorary Secretary, மகா-ராச-ராச-சிறி N.P. சுப்பிரமணிய ஐயர் அவர்களுக்கு, மிகுந்த நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன். சங்கீதத்தில் வழங்கிவரும் சுரம், சுருதிகள் இன்னவையென்று ஒன்றோடொன்று ஒத்து வராத பலகணக்குகளைச் சொல்லியதனால், நான் அவைகளை ஆராயவும், அவைகள் யாவற்றிற்கும் மேலானதும், தற்கால அனுபோகத்திற்கு ஒத்திருப்பதுமான, பூர்வ தமிழ்மக்களின் கானத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகளையும், மேலான முறைகளையும் கண்டு பிடிக்கவும், அனுகூலமாயிருந்தவர்களுக்கும்,தமிழர்களுக்குச் சங்கீதம் ஏது? கண், காது, மூக்கு, வாய் என்னும் வார்த்தைகள் கூட சமஸ்கிருதத்தில் இருந்து திரிந்து தமிழில் வழங்குகின்றன என்று சொல்லிய கனவான்களுக்கும், நான் மிகவும் மனப் பூர்வமாக வந்தனம் சொல்லுகிறேன். தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்திற்கு வந்திருந்து அக்கிராசனம் வகித்து, சபையோரையும் என்னையும் உற்சாகப்படுத்திய, மைசூர் வைணீக வித்வான், மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் B.A.,அவர்களுக்கும், Retired Sub-Judge Palghat, மகா-ராச-ராச-சிறி இராமகிருஷ்ணையர் B.A.,B.L.,அவர்களுக்கும், கும்பகோணம் Sub-Judge மகா-ராச-ராச-சிறி பாலசுப்பிரமணிய ஐயர் B.A.,B.L.,அவர்களுக்கும் பரோடா திவான் சாகிப் மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. , அவர்களுக்கும், மைசூர் வைணீக சிகாமணி மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்களுக்கும் நன்றியறிந்த வந்தனம் சொல்லுகிறேன். ஒரு ஸ்தாயியில் வரும் நுட்பமான சுருதிகள் இன்னவையென்று அறிந்துகொள்ள இயலாமல், ச-ப முறையாய் ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்கள் வருவது ஏமாற்றத்தை உண்டாக்கக்கூடியவையென்றும், ச-ப முறை யில் ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகள் கிடைக்கின்றனவென்றும், அவைகளில் 22 சுருதிகளைப் பூர்வத்தோர் வழங்கி வந்திருக்கிறார்களென்றும், தமிழர்களுக்கு சங்கீதம் ஏது என்றும் சொல்லி, என் அபிப்பிராயத்திற்கு முற்றிலும் விரோதமாயிருந்தாலும், கர்நாடக சங்கீதத்தில் மிகப் பாண்டித்திய முள்ளவரென்று நாளது வரையும்,யாவராலும் கொண்டாடப்பட்டு வரும் சிறந்த வித்வான் மகா-ராச-ராச-சிறி மகாவைத்தியநாதையர் அவர்களிடத் திலும், கருந்தட்டான்குடி மகா-ராச-ராச-சிறி தியாகராஜபிள்ளை அவர்களிடத் திலும், கதை செய்வதில் தேர்ந்த மகா-ராச-ராச-சிறி கிருஷ்ண பாகவதரிடத் திலும் கேட்டுக்கொண்ட முறைப்படியே, யாவரும் கொண்டாடும்படி பழமை யான பல இனிய கீர்த்தனங்களைச் சுர சுத்தமாய்த் தாளத்துடன் மிகப் பிரயாசையோடு என் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்த மகா-ராச-ராச-சிறி பஞ்சாபகேச பாகவதர் அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனா யிருக்கிறேன். பல கீர்த்தனங்களில் வரும் நுட்பமான சுருதிகளின் ஓசைகளைச், சந்தேகமற அறிந்து கொள்ளக்கூடிய விதமாய், அவர்கள் சொல்லி வைத்ததினாலேயே நான் ஆராய்ச்சி செய்து சொல்வதற்கு உதவியா யிருந்ததென்று மனப் பூர்வமாய் ஒப்புக்கொள்கிறேன். அதோடு மகா மகோபாத்தியாயர் மகா-ராச-ராச-சிறி வே. சாமிநாதையர் அவர்கள், அழிந்துபோகாமல் அச்சிட்டுத் தந்த, நுட்பமான சுருதிகள் வழங்கும் நாலு பாலைகளைச் சொல்லும், பூர்வ தமிழ் முறைகளடங்கிய சிலப்பதிகாரத்தின் பேருதவியினாலேயே, இதை நான் எழுதக் கூடியவனா னேன் என்று மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்ளுகிறேன். சங்கீத விஷயமாய் எனக்குத் தோன்றிய புதிய முறைகளை நான் சொல்ல, அவைகளை மனஞ்சலியாமல் மிகப் பொறுமையோடு கற்றுக் கொண்டு, இராக முறையும் கீதமும் கீர்த்தனங்களும் செய்வதிலும், கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் நுட்பமான சுருதிகள் இன்னவையென்று கண்டு பிடிப்பதிலும், கான்பரென்ஸ்களில் பலர் முன்னிலையில் அவற்றைப் பாடிக் காட்டுவதிலும் இராகங்களைப் பிழைபார்ப்பதிலும், என் குமாரத்திகள் மரகதவல்லி அம்மாள் (Mrs. Durai Pandian), கனகவல்லி அம்மாள் (Mrs. Navamoney), எடுத்துக்கொண்ட பிரயாசையும் என் மனையாள் பாக்கியம் அம்மாளின் ஊக்கமும் மிகவும் பாராட்டத்தகுந்ததே. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதி விஷயமாக நான் நெடுநாள் செய்து வரும் வேலையை நன்கு மதித்ததற்காகவும், பரோடாவில் ஹிஸ் ஹைனஸ் மகாராஜா அவர்கள் நடத்திய கான்பரென்ஸுக்கு என்னை வரவழைத்தற்காகவும், தென்னிந்திய சங்கீதத்தின் சுருதிகளைப்பற்றி உபந் நியாசம் செய்து, வீணையின் மூலமாகவும், வாய்ப்பாட்டின் மூலமாகவும் திஷ்டாந்தப்படுத்திக்காட்ட எவ்வித ஆஷேபனையுமின்றி ஆல்-இந்திய மீயூசிக் கான்பரென்ஸ் சபையார் யாவரும் ஒப்புக்கொண்டபொழுது, தானும் அதில் மிகுந்த சந்தோஷமடைந்து, ஹிஸ் ஹைனஸ் மகாராஜா முன்னிலையிலும் பாடிக்காட்டும்படிச் செய்ததற்காகவும், தஞ்சையில் சுருதி நிச்சயம் செய்ய வேண்டுமென்று கூட்டப்பெற்ற ஏழாவது கான்பரென்ஸுக்குப் பிரசிடெண்டாக இருக்க ஒப்புக்கொண்டு நடத்தியதற்காகவும், பரோடா திவான் சாகிப் மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. அவர்களுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். சுருதி விஷயமாய் நான் விசாரிக்கையில், பலர் என் கருத்திற்கு விரோதமாய் வாதாடினாலும். சிலர் அலட்சியம் செய்தாலும், என் முறையை அறிந்த சிநேகிதர் சிலர் சமயத்தில் விலகிப் போனாலும், முன் பின் அறியாமல் தூஷித்தாலும், அவைகளை நான் பெரிதாக நினைக்கவில்லை. அறியாமையினால் இப்படிச் செய்தார்கள் என்று நான் அவர்களை மன்னித்தேன். தாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் நுட்பமான சுருதிகளைப் பற்றி நிச்சயமான ஞானமுண்டாகும் பொழுது, பூர்வம் தமிழ்மக்கள் வழங்கிவந்த 7, 12, 24, 48, 96 போன்ற நாதவேற்றுமைகள் தான் நிச்சயமானவை யென்று காண்பார்கள். இந்நாத வேற்றுமைகள் அனுபோகத்திற்கு வந்திருந்தும், எப்படி அறிந்துகொள்ளுகிறதென்ற விபரம் தெரியாமல் பலர் பலவிதமாய் நினைக்கவும், சொல்லவும் ஏற்பட்டார்கள். பூர்வம், தமிழ் மக்களின் நாலு பாலைகளில் நம் இராகங்கள் நுட்பமான சுருதிகளுடன் வருகின்றனவென்று தம் அனுபவத்தாற் காணும் பொழுது, சூரியனைக்கண்ட இருளும் பனியும் நீங்குவதுபோல, அவர்கள் அறியாமை உடனே நீங்கி விடுமென்று, நான் நிச்சயமாக நம்புகிறேன். என் நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. பூர்வ தமிழ் முறைப்படி, நான் இங்கே சொல்லியிருக்கும் சுருதி முறையும், அதன்படி பாடிக்காட்டிய அனுபோக முறையும், வீணை வாசிப்பதில் மிகத் தேர்ந்தவரென்று யாவராலும் கொண்டாடப்படும், மைசூர்சமஸ்தான வித்வான், வைணீக சிகாமணி மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா அவர்களாலும், மைசூர் வைணீக வித்வான் மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் B.A. அவர்களாலும், விஜயநகரம் சமஸ்தான வைணீக சிரோமணி மகா-ராச-ராச-சிறி வேங்கடரமணதாஸ் அவர்களாலும், பரோடா திவான் சாகிப், மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. அவர்களாலும், பூண்டி மகா-ராச-ராச-சிறி ராவ் பகதூர் V. ஹ. வாண்டையார் அவர்களாலும், மகா-ராச-ராச-சிறி A.G.பிச்சைமுத்து B.A.,L.T. , அவர்களாலும், வையைச்சேரி, மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி ஐயர் அவர்களாலும், திருநெல்வேலி, Hindu College Science Assistant மகா-ராச-ராச-சிறி மகாலிங்க ஐயர் அவர்களாலும், மற்றும் சில பிரபுக்களாலும், வித்வான் களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதோடு, தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் சங்கீத பஞ்சாயத்தாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மற்றும் அநேகர், நுட்பம் அறிய வேண்டுமென்று அடிக்கடி விசாரித்துக் கொண்டு மிருக்கிறார்கள். இப்புத்தகத்தில் பூர்வ தமிழ்மக்கள் சங்கீத சாஸ்திரத்தில் மிகுந்த தேர்ச்சியுடையவர்களாயிருந்தார்கள் என்றும், அவர்கள் தங்கள் கானத்தில் ஒரு ஸ்தாயியைப் பன்னிரண்டு சுரங்களாய்ப் பிரித்து, அவைகளில் கிரகம் மாற்றிப் பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்னும் சுரமுறைப்படி எண்ணிறந்த இராகங்கள் பாடிவந்தார்களென்றும், அதன் மேல் ஒருஸ்தாயியை 24 அலகுகளாய்ப்பிரித்து, ச-ப முறையில் வரும் பன்னிரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பதினாறு ஜாதிப்பண்களையும் அவற்றில் பிறக்கும்பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்ற 7, 6, 5, 4 போன்ற சுரபேதங்களுள்ள எண்ணிறந்த இராக பேதங்களையும் பாடினார்களென்றும், அதோடு ச-ப முறையாய் வரும் சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடினது போலவே, 1/4 , 1/2 , 3/4 , 1, 1¼ , 1½ , 1¾ போன்ற நுட்ப சுருதிகள் சேர்த்துக் கானம் செய்து வந்தார்களென்றும், அவைகளே தற்காலத்தில் பாடப்பட்டு வருகின்றனவென்றும், நாலு பாலைகளின் முறையில் பல இராகங்களைத் திஷ்டாந்தப்படுத்தித் தெளிவாகக் காட்டியிருக்கிறேன். 2/3 , 3/4 , 4/5 , 5/6 போன்ற பின்ன எண்களை, ‘இதுதான் Harmonic Ratio’, ‘இவைகள் தான் Theory of Sound முறைப்படியானவை’ என்று வாதித்துப், பன்னிரண்டு சுரங்களுக்காக வழக்காடி, உலகத்திலுள்ள சங்கீத சாஸ்திரிக ளெல்லாரும் தங்கள் மண்டைகளை உடைத்துக் கொள்ளும் இக்காலத்தில், நான் மாத்திரம் பூர்வ தமிழ்மக்களின் ச-ப முறைப்படி ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்கள் வருகின்றனவென்றும், அவைகள் Geometrical Progression படி வைபரேஷனிலும், வீணைத்தந்தியின் அளவிலும், சென்ட்ஸ்களிலும் ஒத்திருக்க வேண்டுமென்றும், சொல்வதை யார் ஆஷேபியாமல் இருப்பார்? அறிவுள்ள பெரியோர் அனுபோகத்திற்கு ஒத்திருக்கும் இம்முறைகளை யாழின் தந்தியில் வரும் அளவோடு ஒத்துப்பார்த்து ஒப்புக் கொள்வார். என்றாலும், ஆஷேபனை செய்யக்கூடியவர்கள் சிலர் இல்லாமலிருக்க மாட்டார்கள். அவர்களும் முன் பின் ஆராய்ந்து அனுபோகத்தைக் கவனிப்பார்களானால் அதிக சந்தோஷமடைவார்கள். ‘சங்கீதத்திற்குப் புதிய உலகம் தோன்றியிருக்கிறது, சங்கீதத்தில் வழங்கும் சுருதிகளை அறிவதில் இவைகள் போதும்’ என்று பரோடா கான்பரென்ஸில் சொன்ன அறிவாளிகளைப் போல யாவரும் சந்தோஷப்படும் காலம் சீக்கிரம் உண்டாகும். ஒரு ஸ்தாயியில் வரும் பன்னிரண்டு சுரங்களில் மயக்கம் கொண்டு ‘தமிழ் மக்களுக்கு சங்கீதம் ஏது? எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தவை’ யென்று போராடும் இக்காலத்தில், இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழில் ஒன்றாகிய சங்கீதத்தை, வெகு பூர்வமாகத் தமிழ்மக்கள் வழங்கி வந்தார்களென்றும், அதோடு தற்காலத்தவர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் என்று வாதாடுபவை 22 அல்ல, இருபத்து நான்காக இருக்கவேண்டுமென்றும், இதற்கு மேலாக 48, 96 போன்ற நுட்பசுரங்களிலும் தமிழ்மக்கள் கானம் செய்து வந்தார்கள் என்றும், நான் சொல்ல வந்த இடத்தில், தமிழ் மக்களின் பூர்வ நாட்டைப்பற்றியும், அவர்கள் கல்வித் தேர்ச்சியைப்பற்றியும், அவர்கள் நடத்திவந்த சங்கங்களைப் பற்றியும், பாஷையைப் பற்றியும், எழுத்துக்களைப் பற்றியும், எழுத்துகளுக்குள்ள ஓசையைப் பற்றியும், சில சரித்திரக் குறிப்புகளும், யுக்திக் குறிப்புகளும் அங்கங்கே சொல்லவேண்டியதாயிற்று. அவைகளைப் பெரும்பாலும் பல பெரியோர்களின் மேற்கோள்களுடனும், அனுபவத்துடனும் சொல்லியிருக்கிறேனே யொழிய, எந்தப் பாஷையைப் பற்றியாவது, தேசத்தைப் பற்றியாவது, வகுப்பாரைப் பற்றியாவது குறை சொல்ல வந்ததாக அறிவாளிகள் நினையாதிருக்கும் படிக், கேட்டுக் கொள்ளுகிறேன். சங்கீத வித்யா மகாஜன சங்கத்திற் சிலர் சொல்லிய குறிப்புகளுக்கே நான் பதில் சொன்னதாக இதைப்பார்க்கும் அறிவாளிகள் எண்ணும்படிக் கேட்டுக்கொள்ளுகிறேன். 1914௵- அக்டோபர்௴ 24-ஆம் தேதியில் நடந்த ஆறாவது மியூசிக் கான்பரென்ஸில் சுருதிகளைப்பற்றிச் சொல்லிய சிலர், முடிவாகத் தங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னதினால், நானும் என் அபிப்பிராயத்தைச் சபையார் முன் சொல்லவும் ருசுப்படுத்திக் காட்டவும் நினைத்தேன். அதோடு சுருக்கமாக அச்சடித்துச் சபையாருக்குக் கொடுக்கவும் விரும்பினேன். விரும்பிய ஆரம்பத்தில் நான் நினைத்த பல சுருதி முறைகளை எழுதிக் கொண்டு வருகையில், அவைகள் விரிவதைக் கண்டு, அவைகளைப் பார்க்கும் பலருக்கும் உபயோகமாயிருக்கும் என்று நினைத்து, எழுதிக்கொண்டு வரும்பொழுதே, அப்போதைக்கப்போது தோன்றிய சுருதிக்கனுகூலமான பல அரிய விஷயங்களையும், நான் தொடர்ந்து சுருக்கி எழுதவேண்டியதாயிற்று. இப்புத்தகம் முடிந்தபின் சுருதிகளைப்பற்றி நான் சொல்ல நினைத்ததனால், ஏழாவது கான்பரென்ஸ் கூடுவதற்குச் சில நாள் தாமத மாயிற்று. இதோடு, பரோடா கான்பரென்ஸுக்கு வரவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்டதனால். அங்கே போய்ப் பூர்வ தமிழ் மக்களின் அபிப் பிராயத்தை விளங்கச் சொல்லி, வீணையில் ருசுப்படுத்திக்காட்டினேன். பெரும்பாலும் கான்பரென்ஸுக்கு வந்திருந்த யாவரும், இந்துஸ்தான் சங்கீதத்தைப் பற்றியே பேசினதனால், கர்நாடக சங்கீதத்தில் வழங்கும் நுட்ப சுருதிகளை அறிந்து, அவைகளைப்பற்றி என்ன அபிப்பிராயம் ரிப்போர்ட்டில் எழுதுவார்களென்று நான் எதிர் பார்க்கவில்லை. அதோடு ரிப்போர்ட் இன்னும் அச்சாகி வெளிவராததனால், அவர்களுடைய அபிப்பிராயம் இன்னதென்று சொல்லக்கூடாததாயிருந்தாலும், அவர்களுள் சில விற்பன்னர் எழுதிய அபிப்பிராயங்களை இப்புத்தகத்தின் கடைசியில் சேர்த்திருக்கிறேன். 1916-ஆம்´ ஆகஸ்டுமாதம் 19-ஆம் தேதி நடந்த தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்ஸில், முழுநேரமும் ‘கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள்’ என்ற ஒரே விஷயத்தை விளக்கி திஷ்டாந்தப்படுத்திக் காட்ட வேண்டுமென்று, சப் கமிட்டியாரால் 1916-´ சூன்௴ 17ஆம்தேதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானத்தின்படியே, தமிழ் நூல்களில் வரும் சங்கீத விஷயம் ஆராய்ச்சி செய்வதற்குத் தமிழ்ப் புலவர்களடங்கிய பஞ்சாயத்தார் முன்னிலையிலும், ஒரு ஸ்தாயியில் 12, 24, 48, 96 போன்ற ஓசையின் ஒழுங்குக்கு கணக்கு இப்படி இருக்க வேண்டு மென்று Geometrical Progressionபடி செய்த கணக்குகள் சரிதானா என்று சோதிக்க கணித சாஸ்திரிகளின் பஞ்சாயத்தார் முன்னிலையிலும், Geometrical Progressionபடி வீணையில் கிடைக்கும் அளவில் ஒலிக்கும் நாதம் அனுபோகத்திலிருக்கும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வருகிறதா என்று பரிசோதிக்க சங்கீத வித்வான்களும் பிரபுக்களுமடங்கிய பஞ்சாயத்தார் முன்னிலையிலும், அவர்கள் விரும்பியபடி விஸ்தரித்துக்காட்டி, ஆஷேபனைகளுக்குச் சமாதானம் சொல்லி, சுருதி விஷயங்களை விசாரிப்பதினால் உண்டாகும் பிரயோஜனத்திற்குத் திஷ்டாந்தமாக இதுவரையும் வழக்கத்திலில்லாத இராகங்களில் புதிதாகச் செய்யப்பட்ட பல கீர்த்தனங்களை எனது குமாரத்திகள் மரகதவல்லி அம்மாள் (Mrs. Durai Pandian) கனகவல்லி அம்மாள் (Mrs. Navamoney)உதவியைக் கொண்டு வீணையிலும் வாய்ப் பாட்டிலும் பாடிக்காட்டினேன். மூன்று பஞ்சாயத்தார்களின் ரிப்போர்ட்டும் ஏழாவது கான்பரென்ஸுக்குப் பிரசிடெண்டாக விருந்த மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. அவர்களின் அபிப்பிராயமும் இப்புத்தகத்தின் கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்புத்தக வேலை ஆரம்பித்தது முதல் அது முடிகிறவரையும் நடந்த காரியங்களை ஒவ்வொன்றாய் நினைக்கும்பொழுது, அவை யாவும் தெய்வத்தின் கிருபையாகவும், அவரால் தூண்டப்பெற்றவர்களின் செயலாகவும் தோன்றுகின்றனவேயொழிய, என்னால் ஒன்றும் நடந்ததென்று எண்ணக்கூட வில்லை. நான் என்று அகங்கரித்து எதையாவது சொல்லியிருப்பேனே யானால், அத்தவறுதல் என்னுடையதாகும். தீவிரமாய் முடியவேண்டுமென்ற அவசரத்தில் அங்கங்கே என்னை அறியாமல் விடப்பட்ட தவறுதல்களை அப்போதைக்கப்போது திருத்தியிருக்கிறேன். சுருதிகளைப்பற்றிச் சொல்லும் முக்கிய காரியத்தில் கருத்துத் தவறிப் போகவில்லை என்பதை அறிவாளிகள் கவனித்து, எழுத்துப் பிழைகளையும், சொற்பிழைகளையும்மன்னிக்கும்படி மிகவும் கேட்டுக்கொள்ளுகிறேன். இதுவரையும், உலகத்தவர் எவரும் கண்டும் கேட்டுமிராததும் ஒரு ஆரோகண அவரோகணத்தில், பலவித அம்சங்களையும் கவனித்து, இனிமைபெற இராக சஞ்சாரம் செய்யும் முறையும், கீதமும் கீர்த்தனமும் எழுதும் முறையும், அவைகளில் ஜீவ சுரம் இன்னதென்று காணும் முறையும் யாவரும் அறிய புஸ்தக ரூபமாய் வெளியிட உத்தேசித்திருந்த நான், அவற்றிற்குரிய முக்கிய ஆதார விதிவகைகள் யாவும், சிலப்பதிகாரத்தில் அங்கங்கே சொல்லப்படுகிறதையறிந்து, மிகவும் சந்தோஷமடைந்தேன். அம் முறைகள் யாவையும் பற்றிச் சொல்லும் இரண்டாம் மூன்றாம் புத்தகங்கள் கூடிய சீக்கிரம் வெளிவரும். சுருக்கமாகச் சொல்லுமிடத்து, சரித்திர காலம் ஆரம்பிக்கிறதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு தமிழ் நாடாயிருந்ததென்றும், அதில் வசித்துவந்தவர்கள் தமிழர்களாயிருந்தார் களென்றும், லெமூரியாவில் பேசப்பட்டுவந்த பாஷை தமிழாயிருந்ததென்றும், அது இயல், இசை நாடகமென்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சியுடையதாயிருந்த தென்றும், அதன்பின்னுண்டான பிரளயங்களில் அந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கடலால் விழுங்கப்பட்டபின், பலகலைகளும் இசைத் தமிழைப்பற்றிச் சொல்லும் அரிய நூல்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, தற்காலம் அனுபோகத்திலிருக்கும் சொற்பமுறை மிஞ்சியிருக்கிற தென்றும் தெளிவாக அறிவோம். இற்றைக்குச் சுமார் 1850 வருடங்களுக்கு முன்னிருந்த இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தாலும் அதன் உரையாலும் சொற்ப பாகம் காண்கிறோம். இதில் உலகத்தவர் எவரும் தற்காலம்வரை கண்டுகொள்ளாமலிருக்கும் சுரம், சுருதிகள், இராகங்கள், இராகங்களுண்டாகும் முறைகளைப் பற்றி அங்கங்கே சுருக்கமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறதென்று காண்போம். பூர்வ தமிழ்மக்களின் சங்கீத முறையில் சிலவற்றை எழுதவந்த மற்றவர்கள் பூர்வ முறைக்கும் அனு போகத்திற்கும் ஒத்துவராத சில முறைகளையும் சுருதிக் கணக்குகளையும் எழுதி வைத்ததனால் இவ்வளவு தூரம் பலர் பலவாறாக நினைக்க இடமுண்டாயிற்று என்று தெளிவாகக் காண்போம். உலகத்தில் இதுவரையும் சங்கீதத்தைப்பற்றி எழுதிய சாஸ்திரங்கள் யாவற்றிலும் தமிழ் மக்களின் கானமுறை மிக மேலானதென்றும் எந்த தேசத்தவரும் நாளதுவரை அறிந்திராதவையென்றும் யாவரும் சாஸ்திர முறையாய் ஒப்புக்கொள்ளக் கூடியதென்றும் நாளிதுவரையும் தென் தமிழ்நாட்டில் அனுபோகத்தில் நிலைத்திருக்கிறவை யென்றும் திட்ட வட்டமாய் அறிந்து கொள்வோம். உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்ல முடியாதென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சிபெற்ற சங்கீத நூலைப்போலவே சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங்கலைகளும் மற்றும் பாஷைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றனவென்றும் வருகின்றனவென்றும் நூல் ஆராய்ச்சி செய்யும் அறிவாளிகள் காண்பார்கள். தமிழ் மக்களின் கானமே மிகப் பூர்வமானது. தமிழ் மக்களின் கானமே உலகத்தவர் கானங்கள் யாவற்றிலும் மிகுந்த தேர்ச்சியுள்ளது. உலகத்தவர் யாவரும் அனுபோகத்தில் காணக்கூடியது. அவர்கள் சொல்லும் ஏழு சுரங்களும் பன்னிரண்டான அரைச்சுரங்களும் இருபத்து நான்கான கால் சுருதிகளும், 48, 96 ஆன நுட்ப சுருதிகளும் நிச்சயமானவை. நாம் வாயினால் சொல்லவும் காதினால் கேட்கவும் கூடிய நுண்மையான ஓசை இன்னதென்று திட்டமாய் மற்றவர் அறிந்து கொள்ளாததனால் சுருதிகள் ஒன்றுதான், சுருதிகள் இரண்டு விதம், சுருதிகள் மூன்றுவிதம், சுருதிகள் நான்கு விதம், சுருதிகள் ஒன்பது விதம், சுருதிகள் பத்தொன்பது விதம், சுருதிகள் இருபத்திரண்டு விதம், சுருதிகள் இருபத்தைந்துவிதம், சுருதிகள் நாற்பத்து இரண்டு விதம், சுருதிகள் ஐம்பத்து மூன்று விதம், சுருதிகள் அறுபத்து ஆறு விதம், அனந்தங்கள் என்று பலர் பலவிதமாகச் சொல்லுகிறதாக நாம் அறிவோம். பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இசைத் தமிழின் வார்த்தைகளும் பல அரிய முறைகளும் தற்காலத்தில் முற்றும் வழக்கத்திலில்லாமல் அந்நிய பாஷைச்சொற்களால் வழங்கிவருவதால் அவற்றிற்குரிய பல குறிப்புகளையும் அங்கங்கே அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று. இப்புத்தகத்தின் நாலு பாகங்களில், ஒவ்வொன்றிலும் அடங்கியிருக்கும் விஷயங்கள் இன்னவையென்று, அதனதன் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அவைகளைக்கொண்டு நாலு பாகங்களின் கருத்தும் ஒருவாறு அறிந்துகொள்வது சுலபமாகும். ஆகையினால் இம் முகவுரை சுருக்கமாக எழுதப்பட்டது. புலியும் பசுவும் ஒரு துறையில் நீரருந்த, சகல கலைகளும் தொழில்களும் செழித்தோங்க, சகல வளங்களாலும் சிறந்து விளங்கிய இந்தியாவிற்கு ஏகசக்ராதிபதியாகவும் இங்கிலாந்திற்கு அரசராகவும் கருணை யுடன் மணிமுடி சூடி செங்கோல் கைக்கொண்ட His Most Gracious and Imperial Majesty King George V and Her Majesty Queen Mary அவர்களின் நல் அரசாட்சியின் ஏழாவது வருடத்தில், H.E. The Right Hon’ble, Lord Chelmsford, P.C., G.C. M.G அவர்கள் இந்தியாவிற்கு Viceroy ஆகவும், H.E. The Right Hon’ble, Baron Willingdon, G.C. I.E., அவர்கள் பம்பாய்க்கு Governorஆகவும், H.E. The Right Hon’ble, Baron Pentland of Lyth, P.C., G.C. I.E, அவர்கள் மதிராஸுக்கு Governor ஆகவும் இருந்த 1917-ஆம் வருடத்தில் இந்நூல் எழுதப்பெற்றது. நான் அறியவேண்டிய விஷயங்களைப் படிப்படியாய் உணர்த்தி, அனுக்கிரகம் செய்த பெரியோர்களை மனப்பூர்வமாய் வணங்குகிறேன். இவை யாவற்றிற்கும் ஆதிகாரணனாக விளங்கும் கர்த்தன் திருப்பாதங்களை நமஸ்கரிக்கிறேன். வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே மு. ஆபிரகாம்பண்டிதர். கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம் முதல் பாகம் இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம். இரண்டாம் பாகம் இருபத்திரண்டு சுருதிகள். மூன்றாம் பாகம் தென்னிந்தியாவில் வழங்கிவரும் இசைத்தமிழ்ச் சுருதிகள் நான்காம் பாகம் கர்நாடக சங்கீதமென்றழைக்கப்படும் இசைத்தமிழில் வழங்கி வரும் சுருதிகளின் கணக்கு. கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம் - முதற் பாகம் இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம் பொருள் அட்டவணை பூர்வ இசைத் தமிழில் (சங்கீதத்தில்) காணப்படும் அரும்பத விளக்கமும் சில குறிப்புகளும் 1. முத்தமிழ் - இ யல், இசை, நாடகமென்னும் மூவகைத் தமிழ். 2. இயற்றமிழ்- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும், இலக்கியங்களும். 3. இசைத்தமிழ் - சுரம், சுருதி, இராகம் என்னும் மூன்றின் இலக்கணங்களும் பன்னீராயிரம் ஆதி இசைகளும் பண்களும். 4. நாடகத்தமிழ் - தாளம், பாவனை, அலங்காரம், இரசம் என்னும் நாலு அங்கங்களையுடையது. எழுத்தோடு சொற்பொருள் யாப்பணி யென்னா வழுத்துஞ் சுருதிசுர வன்னம் - அழுத்துந் தனிவொற்றுப் பாவனை தான மிரசம் பனிரண் டிலக்கணமாம் பார். (மதிவாணன்) 5. இசை - பண், சுரம், காமரப்பாட்டு, கானம், கொளை, வரி, கந்திருவம், கீதம், இராகம், கேயம், நாதம் எனவும் அழைக்கப்பெறும். 6. ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளை, விளரி, தாரம் என்று பூர்வ தமிழ்மக்களால் வழங்கப்பட்டன. அவற்றுள், 7. குரல் - முதல் சுரம் (ச) சட்சமம் என்றும் 8. துத்தம் - இரண்டாம் சுரம் (ரி) ரிஷபம் என்றும் 9. கைக்கிளை - மூன்றாம் சுரம் (க) காந்தாரம் என்றும் 10. உழை - நான்காம் சுரம் (ம) மத்திமம் என்றும் 11. இளி - ஐந்தாம் சுரம் (ப) பஞ்சமம் என்றும் 12. விளரி - ஆறாம் சுரம் (த) தைவதம் என்றும் 13. தாரம் - ஏழாம் சுரம் (நி) நிஷாதம் என்றும் தற்காலத்தில் வழங்குவர். 14. ஏழிசைபிறக்கும் இடம் - மிடற்றால் குரல், நாவினால் துத்தம், அண்ணத்தால் கைக்கிளை சிரத்தால் உழை, நெற்றியால் இளி, நெஞ்சால் விளரி, மூக்கால் தாரம் பிறக்கும். 15. ஏழிசை தம்மில் பிறப்பதற்குத் தகுதி - தாரத்து உழை, உழையில் குரல், குரலில் இளி, இளியுள் துத்தம், துத்தத்துள் விளரி, விளரியுள் கைக் கிளையும் பிறப்பது தகுதி. சட்சமத்தின் ஓசை ஒன்றானால், பஞ்சமத்தின் ஓசை ஒன்றரையாய் வருவதால் இரண்டு ஓசையும் ஒன்றுபோல் பொருத்த முடைய ஓசையாய் வரும். பஞ்சமத்தை சட்சமமாகவைத்துக்கொண்டு அதற்குமேல் பொருந்தும் ஓசையாய்ப்பஞ்சமத்தைக் கண்டுபிடித்து மற்றும் சுரங்கள் யாவும் இம்முறையே பிறப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும் ப-ம வைப் போல் மற்றும் சுரங்கள் குறைந்த பொருத்தமுடையவைகளாய் இருப்பதாலும் பஞ்சம மத்திம முறையைச் சுரங்கள் பிறப்பதற்குத் தகுதியான முறையென்று சொன்னார். 16. பாலை-பகுப்பு அல்லது வகை; அது, ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என நான்கு வகைப்படும். 17. ஆயப்பாலை - ஒரு இராசி வட்டத்தில் ச-ப ச-ப முறையாக வலமுறையாய் வரும் அரை, அரையான பன்னிரு சுரங்களும், ச-ம ச-ம வாக இடமுறையாய்வரும் பன்னிரு சுரங்களும் அவைகளில் கிரகமாற்றும்பொழு துண்டாகும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை முதலிய ஏழு பாலைகளும் மற்றும் சிறு பாலைகளும் உண்டாகும் விதத்தைச் சொல்லும் முறை. 18. வட்டப்பாலை - ஒரு இராசிவட்டத்தில் ச-ப, ச-ம முறையில் வரும் பன்னிரு அரைச்சுரங்களையும் இரண்டிரண்டு அலகாகப்பிரித்து 24 அலகாக்கி விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய் வாசிக்கும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வகை யாழ் களையும் அவை ஒவ்வொன்றிலுண்டாகும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் போன்ற 16 ஜாதிப் பண்களையும் பற்றிச் சொல்லும் முறை. 19. திரிகோணப்பாலை - ஒவ்வொரு அலகில் கமகமாய்ப் பாடிய வட்டப்பாலை முறையைப்போல் 1/2 அலகு கமகமாய்ப் பாடும் முறை. 20. சதுரப்பாலை - திரிகோணப்பாலை முறையைப் போல ச-ப முறையில் வரும் இரண்டு சுரங்களில் கால், கால் அலகு கமகமாய் வாசிக்கும் முறை. 21. ஆயப்பாலைப்பண்கள் - ஆயப்பாலையில் பிறக்கும் இராகம். அது ஏழுவிதமாம். அவை செம்பாலைப்பண், படுமலைப்பாலைப்பண், செவ்வழிப் பாலைப்பண், அரும்பாலைப்பண், கோடிப்பாலைப்பண், விளரிப்பாலைப்பண், மேற்செம்பாலைப்பண் என்று சொல்லப்படும். அவைகள் ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு எழுத்தையும் முறையேகிரக மாற்றிச் சொல்லும் பொழுது உண்டாகும் இராகங்களாம். அவைகளைத் தற்காலத்தில் முறையே சங்கராபரணம் கரகரப்பிரியா, தோடி, கல்யாணி, அரிகாம்போதி, பைரவி, சுத்ததோடி என்னும் இராகங்களாக வழங்குகிறோம். 22. செம்பாலைப்பண் - குரலே குரலாக அதாவது ச-வே ச-வாக ஆரம்பித்துப் பாடப்படுவது; இதுவே தீரசங்கராபரணம் 23. படுமலைப்பாலைப்பண் - துத்தம் குரலாக அதாவது ரிஷபம் சட்சமமாகக் கிரகமாற்றிப் பாடுவது; இதுவே கரகரப்பிரியா. 24. செவ்வழிப்பாலைப்பண் - கைக்கிளை குரலாக அதாவது காந்தாரம் சட்சமமாக வைத்துக் கிரகசுர மாற்றிச்சொல்வது; இதனைத் தோடி என்பர். 25. அரும்பாலைப்பண் - உழை குரலாக அதாவது மத்திமம் சட்சமமாக வைத்துப் பாடுவது; இது கல்யாணி என்று பெயர் பெறும். 26. கோடிப்பாலைப்பண் - இளி குரலாக அதாவது பஞ்சமம் சட்சமமாக வைத்துப் பாடுவது; இதற்கு அரிகாம்போதி என்று பெயர். 27. விளரிப்பாலைப்பண் - விளரி குரலாக அதாவது தைவதம் சட்சமமாகப் பாடப்படுவது; இதுவே பைரவியாம். 28. மேற்செம்பாலைப்பண் - தாரம் குரலாக அதாவது நிஷாதம் சட்சமமாக ஆரம்பித்துப் பாடுவது; இதனை சுத்த தோடி என்பர். இவை ஏழும் ஆயப்பாலையில் வரும் ஏழு பெரும்பாலைகளாம். 29. வலிது - மேல் சுரமுடையது; செம்பாலைக்குப் படுமலைப்பாலை வலிது. அதாவது ச-வில் தொடங்கும் செம்பாலைக்கு ரி-யில் தொடங்கும் படுமலைப்பாலை மேல் சுரத்தைக்கொண்டு ஆரம்பிப்பதால் வலிதென்றார். இதைப்போலவே மற்றைப்பாலைகளும் ஒன்று மற்றொன்றினும் வலிதாகும். 30. பெரும்பண்கள் - நாலுவிதமாம். அவை மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தற்பண், பாலைப்பண் என்பவைகளாம். அவைகளை மருதயாழ், குறிஞ்சியாழ், நெய்தல்யாழ், பாலையாழ் எனவும் கூறுவர். 31. மருதயாழ் - குரலே குரலாக ஆரம்பிக்கும்பொழுது உண்டாகும் செம்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடுவது. 32. குறிஞ்சியாழ் - உழை குரலாக அதாவது மத்திமத்தை சட்சமமாக ஆரம்பித்துப்பாடும் அரும்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப பாடுவது. 33. நெய்தல்யாழ் - இளி குரலாகப்பாடும் கோடிப்பாலைப்பண்ணில் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடும் இராகமாம். 34. பாலையாழ் - தாரங் குரலாகப் பாடும் மேற்செம்பாலையில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப்பாடும் இராகமாம். இவைகள் விளரி, கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடப் படுவதால் வட்டப்பாலையின் உட்பிரிவாக அடங்கும். 35. ஜாதிப்பண்கள் - அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நாலாம். இவை நாலும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வித யாழ் பேதத்தால் பதினாறு வகையாகும். அவை அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம், அகநிலைக்குறிஞ்சி புறநிலைக் குறிஞ்சி என்றாற்போல அந்தந்த யாழின் பெயர்களை அடுத்து வரும். 36. அகநிலை - ஒவ்வொரு யாழின் ஆரம்ப சுரத்தில் வரும் இராகமே அகநிலையாம். 37. புறநிலை - நால்வகை யாழ்களின் ஆரம்ப சுரத்திற்கு நாலாவதான நட்பு நரம்பில் தொடங்கும் இராகமாம். ச-க வைப்போல். 38. அருகியல் - நால்வகை யாழின் ஆரம்ப சுரத்திற்கு ச-ப வைப்போல் இணையாக வரும் சுரத்தில் ஆரம்பிக்கும் இராகங்களாம். இது ச-ப முறையாம். 39. பெருகியல் - நால்வகை யாழ்களில் ஆரம்பிக்கும் சுரத்திற்கு முடிந்த சுரமாக வரும் சுரத்தில் துவங்கும் இராகங்களாம். ப-நி யைப்போல். 40. குரல் இளியாய் - என்றது ச-ப ச-ப முறையாய் வலமுறைதிரிதலுக்குப் பெயர். 41. உழைகுரலாய் - என்பது ம-ச ம-ச வாக இடமுறை திரிதல். 42. நரம்பு - பன்னிரு இராசிகளில் நின்ற சுரங்களாம். 43. நின்ற நரம்பு - எடுத்துக்கொண்ட சுரம். இச்சுரமே முடிந்த சுரமாகவும் வருவதனால் இதற்குப் பின்னுள்ள நரம்புகளே ஒன்று இரண்டு முதலிய நரம்புகளாகச் சொல்லப்படுகின்றன. மேருவில் நின்ற ஆதார சட்சம் பூச்சியமாக வைத்துக்கொண்டு ரிஷபம் 1, ரிஷபம் 2 காந்தாரம் 1, காந்தாரம் 2, ... ... நிஷாதம் 1 நிஷாதம் 2 சட்சம் 1சட்சம் 2 என்று தற்காலத்தில் நாம் கணக்கிடுவது போலவே இதுவு மிருக்கிறது. நின்றநரம்பு சட்சமமானால் முடிந்த பன்னிரண்டாம் நரம்பு மேல் சட்சமமாயிருக்கும். 44. இணைநரம்பு - நின்ற நரம்பிற்கு மேல் ஏழாவது இராசியில் வரும் பஞ்சமம். 45. கிளை நரம்பு - நின்ற நரம்பிற்கு ஐந்தாவது இராசியில் வரும் இரண்டு அலகுள்ள சுத்த மத்திமம். 46. நட்பு நரம்பு - நின்ற நரம்பிற்கு நாலாவது இராசியில் வரும் நாலலகு பெற்ற அந்தரகாந்தாரம். 47. இரண்டாம் நரம்பு - நின்ற நரம்பிற்கு இரண்டாவது இராசியில் வரும் நாலலகுள்ள ரிஷபம்; நின்ற சுரத்திற்கு இணை நரம்பிற்கு இணை நரம்பாய் வருவதினிமித்தம் இதை இணை நரம்பென்றும் சொல்லுவர். 48. பகை நரம்பு - நின்ற நரம்பிற்கு மூன்றாம், ஆறாம் இராசிகளில் வரும் சுரங்கள்; இவை நின்ற நரம்போடு பொருந்தாத நரம்புகளாம். 49. வண்ணப்பட்டடை - என்றது பஞ்சமமுறையை. அது ஆதியாய் ஒன்றாய் நின்ற சட்சமத்திற்கு ஒன்றரையாய்ச் சேரும் பஞ்சமம் மிகுந்த பொருத்தமுடையதாய் அம்முறையே சுரங்கள் யாவுங் கண்டு பிடிப்பதற்கு ஆதியாயிருந்ததனால் அடிமணை என்று பெயர் பெற்றது. வண்ணம் என்பது நிறம் அல்லது சுரங்களுக்குப் பெயர். பட்டடை நரம்புகளில் இளி அதாவது பஞ்சமத்திற்குப் பெயர். ஆகவே பஞ்சம முறைப்படிச் சுரங்களை அமைத்தல் என்று பொருள்கொள்க. 50. உழை முதலாகவும்- மத்திமம் முதலாக ம-ச, ம-ச என்று இடமுறையாய் வரும் சுரங்களை அறிதல். 51. உழை யீறாகவும் - மத்திமம் முதலாக ஆரம்பித்த சுரங்கள் மறுபடி மத்திமத்தில் ச-ம என்று முடிவடையவேண்டும் என்பதைக் குறிக்கிறது. ம, ப, த, நி, ச, ரி, க, ம என்பதுபோல். 52. குரல் முதலாகவும் குரலீறாகவும் - சட்சமத்தில் ஆரம்பித்த சுரம் ச, ரி, க, ம, ப, த, நி, ச என்று முடிவடைகிறதைக் குறிக்கிறது. 53. வரன் முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் - என்பது உழைகுரலாக ஐந்தாவது ஐந்தாவது இராசியிலும் குரல் இளியாக ஏழாவது ஏழாவது இராசியிலுமாகப் பன்னிரு சுரங்கள் வருவதைக் குறிக்கும். 54. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - என்பது குரல் முதலாக எடுத்து இளி குரலாகப் பாடினாள். அதாவது குரல் முதல் பஞ்சமம் வரையும் மந்தரஸ்தாயியாய்ப் பாடிப்பார்த்து அதிலிருந்து இளியைக் குரலாக வைத்துக் கொண்டு பாடினாள். குரலில் ஆரம்பித்து இரண்டு ஸ்தாயி பாடி அவ்விரு ஸ்தாயிகளையும் மூன்று ஸ்தாயிகளாக வைத்துப் பாடினாள் என்பதாம். 55. பதினாற் கோவை - 14 நரம்புகள் அல்லது 14 சுரங்கள் அல்லது 14 ஓசைகள். மனித சாரீரத்தால் சாதாரணமாய்ப் பாடக்கூடிய இரண்டு ஸ்தாயி சுரங்களை 14 (ஓசைகளை) இது குறிக்கும். 56. ஓரேழ்பாலை நிறுத்தல் வேண்டி - என்பது மேற்கண்ட பதினாற் கோவையில் மத்திய ஸ்தாயியாய் வழங்கும் ஏழு சுரங்களுக்கு அலகு மாற்றும் முறை 57. ஓர் நிலை - ஒரு ஸ்தாயி. 58. மூவகை இயக்கு - வலிவு, மெலிவு, சமன் என்னும் மூன்று ஸ்தாயிகள். 59. வலிவு - எல்லாவற்றிலும் அதிக (வலிந்த) ஓசையான சுரங்களுள்ளது. 60. மெலிவு - எல்லாச் சுரங்களிலும் மெலிந்த ஓசையுடையது. 61. சமன் - வலிவு மெலிவு மின்றிச் சமத்துவமா யிருக்கப்பட்ட சுரங்களுடையது. இதை மத்திய ஸ்தாயி என்று தற்காலம் வழங்குகிறோம். இவைகளையே மந்தோச்சசமம் என்று கூறுவர். 62. மெலிவிற்கெல்லை மந்தங்குரலே - ச, ரி, க, ம, ப, த, நி, ச ச, ரி, க, ம, ப, த, நி, ச என்ற இரண்டு ஸ்தாயியில் ச, ரி, க, ம என்ற நாலு சுரமும் மந்தர ஸ்தாயியாகும் மத்திமத்தில் ஆரம்பிக்கும் குரல் மந்தர ஸ்தாயியில் முடிந்த சுரமாயிருக்கிறது. 63. வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே - இதனால் முன் முறைப்படி இரண்டு ஸ்தாயியில் மந்தர ஸ்தாயியாகிய ச, ரி, க, ம என்பது போக ம, ப, த, நி, ச, ரி, க, ம என்ற மத்திய ஸ்தாயியும் போக மீதியாய் நிற்கும் ப, த, நி, என்பது ச, ரி, க என்ற தார ஸ்தாயி ஆகிறது. இதனால் தாரஸ்தாயிக்கு முடிந்த சுரம் க என்று சொல்வதற்காக வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே என்று சொல்லுகிறோம். 64. ஆதி இசைகள் - நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்தொண்ணூற்று ஒன்றாகிய ஆதி இசைகள். 65. இசையோர்தல் - சுருதி சேர்த்துச் சுரங்களை ச-ப முறையாய் ஓசை சரியாயிருக்கிற தாவென்று ஆராய்தல். 66. இசைநுண்மை - நுட்பமான ஓசை ஒரு ஸ்தாயியில் தொண்தொண்ணூற்றாறில் ஒன்றான அல்லது ஒரு முழுச் சுரத்தில் பதினாறில் ஒன்றான ஓசைக்குப் பெயர். இதனால் இசை நுண்மைக்கு மேல் ஓசையின் பேதந் தெரியக்கூடியதும் வாயினால் சொல்லக் கூடியதுமான சுருதிகளில்லையென்று காணப்படுகிறது. 67. கேள்வி - கேட்கப்படுகிறதினால் கேள்வி என்று பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்தார்கள். ஒரு அலகுள்ள ஓசைக்குப் பெயர். இதனைத் தற்காலத்தார் சுருதி என்பர். 68. அலகு - குறிப்பிட்ட ஒரு எண் அல்லது மாத்திரை. இங்கே குரல் (ச) இரண்டு இராசியில் நாலு அலகாகவும், துத்தம் (ரி) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் உழை (ம) ஒரு இராசியில் இரண்டு அலகாகவும், இளி (ப) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் தாரம் (நி)இரண்டு இராசியில் நாலு அலகாகவும் வருவதைக் கவனிக்கும் பொழுது இராசிகள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு எண்களாக அல்லது அலகுகளாகக் கணக்கிடப்பட்டிருக்கிற தென்றும் இம்முறையில் பன்னிரண்டு இராசிகளும் இருபத்து நான்கு அலகுகளாக நிற்கின்றனவென்றும் ச-ப, ச-ப வாக எவ்வேழு இராசியாக 12 சுரங்களும் வருவதினால் 7ஓ2=14 அலகுகளாக ச-ப வருகிறதென்றும் ச-ம, ச-ம வாக 5, 5 இராசிகள் 10 அலகுகளுடையவைகளாயிருக்கின்றனவென்றும் தெளிவாகத் தெரிகிறது. விளரிகைக்கிளையில் மூன்று மூன்று அலகாக வருவதை நாலு, நாலு அலகுகளாக வரும் அதாவது இரண்டு இராசியில் வரும் நாலு அலகில் ஒரு அலகு குறைத்து மூன்று அலகுடன் கமகமாய்ப் பிடிக்கவேண்டும் என்பது தெரிகிறது. 69. பண் - ஏழு சுரங்களுள்ள சம்பூரண இராகம். 70. பண்ணியம் - ஆறு சுரங்களுள்ள இராகம். 71. திறம் - ஐந்து சுரங்களுள்ள இராகம். 72. திறத்திறம் - நாலு சுரங்களுள்ள இராகம். இந்நான்கையும் முறையே, சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சுவராந்தமெனத் தற்காலத்தில் வழங்குகின்றனர். 73. ஆளத்தி - இராகம் ஆலாபித்தல். இது காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி என மூன்றாம். 74. ஆளத்தியின் எழுத்து - மவ்வும், நவ்வும், தவ்வும். ஐந்து நெடிலும், ஐந்து குறிலும். 75. குயிலுவக்கருவி - சங்கீதத்திற்குதவும் யாழ், குழல், தண்ணுமை முதலிய வாத்தியங்கள். 76. யாழ் - யாளி என்னும் மிருகத்தின் முகம்போலச் செய்தமைத்த கோட்டினையுடைய நரம்புக் கருவி. தற்காலம் வீணையென்று வழங்குகிறார்கள். 77. யாழுறுப்புகள் - கோடு, மாடகம், நரம்பு, பத்தர், ஆணி. 78. கோடு - யாழின் தண்டி. 79. மாடகம் - முறுக்காணி. 80. நரம்பு - தந்தி, தந்திரி, யாழ்நரம்பு. 81. பத்தர் - குடம். 82. திவவு - நரம்புகளை வலிபெறக்கட்டும் வார்க்கட் L.தற்காலம் இதை நாக பாசம் என்பர். இது சுரபத் என்னும் வாத்தியத்தில் நாளதுவரையும் கட்டிவரப்படுகிறது. 83. ஒற்று - நரம்பினும் பத்தரினும் தாக்குவதோர் கருவி. வீணையின் பக்கத்திலிருக்கும் மூன்று நரம்புகள் தங்குமிடம். இதை வளைவு ரேக்கு என்று தற்காலம் வழங்குகிறார்கள். 84. தந்திரிகரம் - இசை பிறக்க வைக்கும் மெட்டுகள். 85. ஆணி - ஒற்றுகள் அல்லது பக்கசாரணைகள் ஆரம்பிக்கும் இடத்தில் அந்நரம்புகளைத் தாங்கும் சிறு குமிள். இதைப் பொகடி என்று தற்காலம் வழங்குகிறார்கள். 86. யாழ்வகை - பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ், நாரத யாழ், தும்புரு யாழ், கீசக யாழ், மருத்துவ யாழ். மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 87. பேரியாழ் - இருபத்தொரு நரம்புகொண்டது. 88. மகரயாழ் - பதினேழு நரம்புடையது. 89. சகோடயாழ் - பதினாலு நரம்பு பெற்றது. 90. செங்கோட்டியாழ் - செம்மரத்தினால் செய்யப்பட்ட யாழ். இதற்கு இசை மீட்டும் நரம்புகள் நாலும் தாளம் மீட்டும் நரம்புகள் மூன்றுமாக ஏழு நரம்புண்L. 91. நாரதயாழ் - ஆயிரம் தந்திகள் அமைந்தது. மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 92. தும்புருயாழ் - 9 தந்திகள் பெற்றது. 93. கீசகயாழ் - 100 தந்திகள் வாய்ந்தது. 94. மருத்துவயாழ் - ஒரு தந்தி உடையது; மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 95. கலைத்தொழில் எட்டு - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 96. செம்பகை - எடுத்துக்கொண்ட இராகத்திற்கு இன்பமாய்ப் பொருந்தாத ஓசை. 97. ஆர்ப்பு - நரம்பின் முழக்கம் தன் அளவிற்கு மிஞ்சி அதிக ஓசை யுடையதாயிருத்தல். 98. அதிர்வு - சுரம் தொடர்ந்து ஒரே சுருதியாய் நிற்காமல் சிதறி இனிமையற்று உச்சரித்தல். 99. கூடம் - வாயினாற் சொல்லப்படும்பொழுது துவங்கின சுரத்திற்கு இசை பொருந்தாமல் மழுங்கி உச்சரிக்கப்படும் பகைச் சுரங்கள். நீரிலே நின்று அழுகின மரம், நெருப்புப்பட்ட மரம், இடி விழுந்த மரம், வேர்புழுவினால் பட்ட மரங்களினால் இத்தோஷங்க ளுண்டாகுமென்று சொல்லப்படுகிறது. 100. குழல் - வங்கியம்; இது மூங்கில், சந்தனம், செங்காலி என்னும் மரங்களாலும் வெண்கலத்தினாலும் செய்யப்படுவது. தற்காலத்தில் இதைப் புல்லாங்குழல் என்று வழங்குகிறோம். மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 101. தண்ணுமை - தாழ்ந்த குரலினை ஒரு பக்கமுடையதாய் மறுபக்கத்தில் அதற்கு இணையான பஞ்சம சுரத்தின் ஓசையுடையதாய்ச் செய்யப்பட்ட வாத்தியம். மற்றைய தோற் கருவிகள் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், சிறுபறை, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை. 102. முழவு - முழக்கப்படும் கருவிகள் அல்லது கொட்டுங்கருவிகள்; அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாண்முழவு, காலைமுழவு என எழுவகையாம். மற்றும் இவற்றின் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 103. பண் - பெருந்தானமெட்டினும் கிரியைகளெட்டாலும் பண்ணிப் படுப்பது. 104. பெருந் தானமெட்டு - நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை. 105. கிரிகை எட்டு - எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு. 106. நிலம் - வர்ணம் அல்லது எழுத்து. 107. கலம் - யாழ். 108. கண்டம் - மிடற்றுப் பாடல் அல்லது வாய்ப்பாட்L. 109. பாணி - தாளம் அது நாற்பத்தொரு வகைப்படும். 110. பாணியின் அங்கங்கள் - கொட்டு அரை மாத்திரை; அசை ஒரு மாத்திரை; தூக்கு இரண்டு மாத்திரை; அளவு மூன்று மாத்திரை. 111. சுவை ஒன்பது - வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுநிலைச்சுவை, உருத்திரச்சுவை. மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம்பாகத்தில் காண்க. 112. அவிநயம் - பாவம். வெகுண்டோனவிநயம், ஐயமுற்றோன்விநயம், சோம்பினோன விநயம், களித்தோனவிநயம், உவந்தோனவிநயம், அழுக்காறுடையோனவிநயம், இன்ப முற்றோனவிநயம், தெய்வமுற்றோன விநயம், ஞஞ்ஞையுற்றோனவிநயம், உடன் பட்டோனவிநயம், உறங்கினோன விநயம், துயிலுணர்ந்தோனவிநயம், செத்தோனவிநயம், மழை பெய்யப்பட் டோன விநயம், பனித்தலைப் பட்டோனவிநயம், வெயிற்றலைப்பட்டோன விநயம், நாணமுற்றோனவிநயம், வருத்தமுற்றோன விநயம், கண்ணோவுற் றோனவிநயம், தலைநோவுற்றோனவிநயம், அழற்றிறம்பட்டோனவிநயம், சீதமுற்றோனவிநயம், வெப்பமுற்றோனவிநயம், நஞ்சுண்டோனவிநயம் என விவை இருபத்துநான்கு வகைப்படும். இவற்றின் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகத்தில் காண்க. 113. குடமுதல் - இது வட்டப்பாலை வகுக்கச் சொல்லும் முறையில் வருகிறது; ஒன்றுக்குள் ஒன்று அடங்கும்படியாக மூன்று வட்டங்கள் அமைத்து, அவ்வட்டத்தைப் பன்னிரு இராசிகளாகப் பிரித்து, அதன் மேற்கோட்டில், மேடம் இடபம் மிதுனம் கற்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் என்னும் பன்னிரு இராசிகளைக் குறித்து, அதன் இரண்டாவது உட்கோட்டில் வலமுறையாய்க் குரலிளியாய் (ச-ப முறையில்) வரும் சுரங்களையும் அவற்றின் அலகுகளையும், மூன்றாவது உட்கோட்டில் உழை குரலாய் (ம-ச வாய்) இடமுறையாய் வரும் சுரங்களையும் அவைகளுக்குரிய அலகுகளையும் சொல்லியிருக்கிறார்கள். இம்முறை இராசி வட்டத்தில் ச-ப ஏழு ஏழாகவும் ம-ச ஐந்து ஐந்தாகவும் வரும் பன்னிரு சுரங்களும் ஒரே சம அளவுடையவைகளாய் இருக்கின்றன என்றறிவதற்கும், பொருத்த சுரங்கள் கண்டு பிடிப்பதற்கும் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைந்து வரும் நால்வகை யாழின் 16 சாதிப் பண்களை அறிவதற்கும் மிக அனுகூலமா யிருக்கிறது. இராசி வட்டத்தில் குறித்து வழங்கியதால் இதற்கு வட்டப்பாலை என்று பெயர் வழங்கலாயிற்று. 114. இளங்கோவடிகள் - முத்தமிழையும் வளர்த்த மூவேந்தராகிய சேர சோழ பாண்டியரில் சேரவம்சத்தைச் சேர்ந்தவர். பாண்டிய சோழ ராஜ்யங்களின் மேல் எல்லையாயுள்ள மலைநாட்டை ஆண்ட சேரலாதன் என்னும் அரசனது இளைய புதல்வர். சேரன் செங்குட்டுவனுக்கு இவர் சகோதரர். சிறு பிராயத்தில் துறவு மார்க்கத்தைக் கைக்கொண்டவர். இவர் காலத்தில் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவன் கோவலன் கொலை யுண்டமையால் மனம் வெறுத்துப் பாண்டிய நாட்டை விட்டுச் சேரநாட்டில் கொடுங்கோளூர் அல்லது வஞ்சி என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்து அங்கே மரணம் அடைந்தாள். இவள் மரணத்தின் பின் உண்டான கடுமையான பஞ்சத்தின் காரணம் கண்ணகியின் சாபமென்றும் அது தீர அவள்போல் ஒரு சிலை ஸ்தாபித்து உற்சவம் கொண்டாட வேண்டும் என்றும் தெரிந்து செங்குட்டுவன் கொடுங்கோளூரில் ஒரு பிரபலமான ஆலயம் கட்டி அதில் கண்ணகியைப்போல் கறுப்புக் கல்லினால் பத்தினிக் கடவுள் உருவமைத்து உற்சவம் கொண்டாடினார். இளங்கோவடிகள் இச்சரித்திரத்தைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரையுடைய நூலாக இயற்றி அதில் சேர சோழ பாண்டிய நாட்டையும் அவற்றை ஆண்ட அரசர்களையும் வளங்களையும் நாடு நகரச் சிறப்பையும் தமிழ் மக்களின் நாகரீகத்தையும் அவர்கள் காலத்தில் வழங்கிவந்த கலைகளையும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் குறித்துச் சொல்லுகிறார். அதில் அரங்கேற்று காதையிலும் கானல் வரியிலும் வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத்தில் வழங்கிவந்த இசைத்தமிழ் அல்லது சங்கீதத்தின் நுட்பமான பலபாகங்களைச் சொல்லியிருக்கிறார். பாண்டிய நாட்டில் நெடுஞ் செழியனும் உறையூரில் சோழன் பெருங்கிள்ளியும் இலங்கையில் முதற் கயவாகுவுமிருந்த காலத்தில் இருந்தவராதலால் இவர் முதலாம் நூற்றாண்டில் இருந்தவரென்றுதெரிகிறது. மற்றும் விவரம் சிலப்பதிகாரத்தில் காண்க. 115. அடியார்க்கு நல்லார் - இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் என்னும் நூலுக்கு உரையெழுதியவர். இவர் இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல், முதலிய நூல்களையும் இன்னும் பல பூர்வ நூல்களில் சிற்சில சூத்திரங்களையும் ஆதாரமாகக்கொண்டு இதற்கு உரையெழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. இவர் சற்றேறக்குறைய 12 ஆம் நூற்றாண்டிலிருந்தவராகத் தெரிகிறது. இவர் காட்டிய மேற்கோள்களைக்கொண்டு இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களாகிய பல சங்கீத நூல்கள் பிற்காலத்தில் அழிந்து போயினதாகத் தெரிகிறது. 116. ஜெயங்கொண்டான் - இவர் சிலப்பதிகாரத்திற்கு அரும்பதவுரை எழுதியவர். இவர் ஜெயங்கொண்டான் என்றும் கவிச்சக்கரவர்த்தி யென்றும் சொல்லப்படுகிறார். இவர் எழுதியிருக்கிற அரும்பத உரையில் சங்கீத விஷய மாக மிக அருமையான குறிப்புகள் காணப்படுகின்றன. அடியார்க்கு நல்லாரைப் பார்க்கிலும் இவருடைய உரையில் அரிய விஷயங்கள் விளங்கு கின்றன. இவர் கலிங்கத்துப்பரணி யென்னும் ஒரு அருமையான நூல் எழுதி யிருக்கிறார். இவர் சோழ ராஜ்யத்தில் (1080-1088-ல்) முதல் குலோத்துங்க சோழன் அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் அதாவது சற்றேறக்குறைய கி.பி. பதினோறாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்ததாகத் தெரிகிறது. Ancient India by S. Krishnasamy Iyengar, M.A. Page, 150. “Kulottunga’s age was also one of great religious and literary revival. In his reign flourished the Vaishnava reformer, Ramanuja, who had to betake himself to Mysore to avoid the displeasure of Kulottunga. Jayamkondan was his Kavichakravarti and possibly the commentator of the Silappaidkaram. Adiyarkkunallar, did not live much later, as he quotes twice from Jayamkondan, once acknowledging the authority by name and another time by the simple mention of Kavichakravarti. This would have been far from clear, if made much after jayamkondan’s time as there were other Kavichakravartis in the interim.” “குலோத்துங்கன் அரசாண்ட காலமானது பெரிய மத சீர்திருத்தங்களும் நூல் விஷயமான சீர்திருத்தங்களும் உண்டான காலம். வைஷ்ணவ மதத்தைச் சீர்திருத்திய ராமானுஜர் இந்தக்காலத்தில் இருந்தவர். குலோத்துங் கனைப்பகைத்துக் கொண்டதால் இவர் மைசூருக்கு ஓடிப்போக வேண்டியதா யிற்று. அவனுடைய கவிச்சக்கரவர்த்தியின் பெயர் ஜெயங்கொண்டான். சிலப்பதிகார உரை யெழுதினவர் இவராயிருக்கலாம். அடியார்க்கு நல்லார் இவருடைய உரையிலிருந்து இரண்டு மேற்கோள்கள் சொல்லுகிறபடியால் இவருக்குச் சற்றுப் பிந்தின காலத்தில் இருந்திருக்க வேண்டியது. இந்த இரண்டு மேற்கோள்களில் ஒன்றில் உரையாசிரியர் ஜெயங்கொண்டானுடைய பெயரை ஆதாரமாகச் சொல்லுகிறார். மற்றொன்றில் அவரைக் “கவிச் சக்கரவர்த்தி” என்று மாத்திரம் அழைக்கிறார். ஜெயங்கொண்டானுக்கு வெகு காலத்திற்குப்பின் இப்படிச் சொல்லிருந்தால் இந்த விஷயம் தெளிவாயிராது. ஏனென்றால் அந்தக்காலத்திற்கும் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் நடுவில் அநேகம் கவிச்சக்கரவர்த்திகள் இருந்தார்களே.” கருணாமிர்த சாகரப் பாயிரம். இப்புத்தகத்தைப் பார்வையிட்ட சில கனவான்களின் அபிப்பிராயம். திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்து ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய வாழ்த்துரை. முழுமுதற் கடவுள் படைத்த இவ்வுலகில் மக்களாற் பேசப்படும் மொழிகள் பல உள்ளன. இவற்றுள் தமிழ் ஒன்று. இது தொன்மையது. செவ்வியது, இனியது, விரிந்தது, குறைவற்றது. எம்மொழியும் இனிமை யுடையதெனினும் இதுபோன்று எம்மொழியும் மிகு இனிமை தரத்தக்கதன்று. இம்மொழியே மிகு இனிமையைத் தரத்தக்கது என்பது தோன்ற இனிமை எனப்பொருள்படும் தமிழ் என்பதே இம்மொழியின் பெயராயது. இங்ஙனம் மேம்பாடுபெற்ற தமிழ் இயல் இசை முதலிய பாகுபாடு டையது. இவற்றுள் இசை இலக்கணவரம்புடையது இவ்விசையிற்றேர்ந்த தமிழர் தாம் கற்றுத் தேர்ந்த தமிழிசையைக் கருணையினாற் பிற தேயத் தார்க்கும் அறிவுறுத்தி வந்தனர். கற்றவர் பலரும் தந்தந்தேயங்கட்குச் சென்று அபிமானத்தானே அறிவிக்க அறிவிக்க, பற்பல தேயங்களிற்றமிழிசை உணர்த்தினர். அறிவு நிலையானும் இடவேறுபாட்டானும் சிறிது மாறுபாடுடன் வழங்க நேர்ந்தது. தமிழுலகத்திற் சில பாகங்கடல்கொள்ளக் கிடந்தமையானும் பிற தேயத்தார் படையெழுச்சியானும் தமிழிசை உணர்ந்தாரும் இசை இலக்கண நூலும் அழியுங்கால் நேர்ந்தது. தம் பழைய பொருளை வேற்று நாட்டிற்கு அனுப்பிச் சில மாறுபாடுடனே திரும்பியபோது முன்னையினும் அப் பொருளை மிக விரும்புவது காலப்பிறழ்ச்சியின் இயற்கையன்றோ. தமிழிசை தென்னாட்டினின்றும் பல நாடு சென்று மாறுபாடுடன் இந்நாடு வந்தபோது இந்நாட்டிலுள்ளார் தம் பொருளே திரும்பி வந்துளது என்றறியாதார் போன்றவராகி அருகி வழங்கிவந்த இசையினும் வந்ததை மதித்துக் கற்பான் புகுந்தார் சிலர். பலர் வேற்று நாட்டினின்று இத்தென்னாட்டிற் குடியேறித் தாங்கள் புதுவதாகக் கொண்டுவந்த தென்றே கருதி இந்நாட்டிற் பரப்பிவந்தனர். புதுவதின்பாற்பட்ட மோகம் பழைமையதை மறந்துவிடச் செய்தது. பிறகு தமிழிசை இலக்கணம் நூலிற் காணக்கிடந்தது. மிக அருகித் தமிழிசையிற் பழகுவார் வாழ்ந்து வந்தனர். வருகின்றனர். இத்தன்மைத்தாம் நிலையைத் தமிழிசை வல்லாருட்சிலர் உணர்ந்து “பண்டைய நிலையை உணர்த்து வாருளரோ? முழுமுதற் கடவுளே! இசையாசிரியரே! யாழில் வல்லரே! பாண பத்திரரைப் பாதுகாத்தவரே! ஆடவல்லவரே! இசைக்குருகினோரே!” என வழுத்துந்தருணம் அப்பெருமானாரருள் ஸ்ரீ கருணா நந்தர் திருவருள் முழுதும் பெற்றவர் பால் சேர்ந்ததுபோலும் என அறிஞர் மதிக்க ஒருவர் எழுந்து பண்டைத் தமிழின் பண்பும் அத்தமிழிசையின் அற்புதமும், தமிழிசை வரலாற்றியல்பும் இன்ன பல பிறவும் விளக்கும் கருணாமிர்த சாகரம் எனும் வசன நூலியற்றி உலகிற்கு உபகரித்திருக்கின்றனர். இதுகாறும் தமிழிசை பற்றி இவ்வியல்பு நூல் ஒன்றும் வெளி வரவில்லை. இதனைச் செய்தவர் பண்டை இயற்றமிழ் நூல், சோதிடம், வைத்தியம், சிற்பம், விவசாயம், இசை நூல் ஆகிய இவற்றில் தம் குரு ஸ்ரீ கருணாநந்தர் திருவருளானே தாமே பெரிதும் தேர்ச்சியுறும் புண்ணிய முதிர்வினர். தம் புண்ணிய முதிர்வினை, தாம் மேற்கொண்ட இந்நூலில், மேற்கோளாகக் கொண்ட சிலப்பதிகாரம் இசை மரபு இவற்றின் மேற்கோளாலும் உரைவகுத்த வகையானும் காட்டுகின்றனர். உண்மை வழியிற் செலும் உயர்வினர். நன்மரபில் வந்தவர். தம் நன்னடையானே தக்கார் பலருளத்திற்றங்கும் வாழ்வினர். எஞ்சலில் வளஞ்சால் தஞ்சையில் வதிபவர். உள்ளதை எடுத்துக்காட்டும்போது பழகிவந்த பொருளில் வைத்த அபிமான மிகுதியின், பழகியதி லேற்றமும் புதுவதிற் குறைவுங்கூறுவது இந்நாட்டிற் பெரிதும் இயற்கை என்றெண்ணிப் பிறர் குறை கூற்றிற்குப் பின் வாங்காது உண்மையை வெளிப்படுக்கும் உன்னத நிலையினர். இந்நூலில் இவர் கூறும் 24 சுருதி புதுவது. 22 சுருதி பழயது. இவற்றின் உண்மை இசை வல்லார் துணிவதொன்றாம். அயலாராம் நாம் இவர் கூறும் காரணங்களை உற்றுநோக்குங்கால் “துணிவதொன்று” என்றே எண்ணுதற்கிடமுளது. இங்ஙன் பலதிற விசைமரபுகளை எடுத்துக் காட்டும் இந்நூல் என்றும் உலகில் நிலவுக, இந்நூலை இயற்றினார் ஸ்ரீமான் ஆபிரகாம் பண்டிதரவர்கள் நீண்ட ஆயுள், நோயிலா வாழ்வு, வளர்செல்வம், மனைமகார் இன்புறுநிலை, மருமகராதி கேளிர் பலருவப்புறுமியல் முதலிய நல்வளம் பெற்று வாழ்க, வாழ்க, வாழ்க என்றும். (ஒப்பம்.) சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். பல்லாவரம் சமரச சன்மார்க்க நிலைய குருவும் ஞானசாகரப் பத்திரிகாசிரியருமாகிய ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்கள் இயற்றிய வாழ்த்துரை. சுவாமி வேதாசலம், பல்லாவரம், சமரச சன்மார்க்க நிலைய குரு, மெய்கண்டான் ஆண்டு 699 ஞானசாகரப் பத்திரிகாசிரியர். பங்குனி௴ 22² தஞ்சைமாநகரத்திலுள்ள திருமகன் ஆபிரகாம் பண்டிதரவர்களால் எழுதப்பட்ட ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூல் எனது பார்வைக்கு வந்தது. இந்நூலை முழுதும் ஆராய்ந்து பார்த்து எனது கருத்து முற்றும் தெரிவித்தற்குப் போதுமான ஒழிவு காலம் இல்லையாயினும் இதனுட் பொருள்களை ஆங்காங்கு உற்றுப் பார்த்த அளவில் இஃது இசைத் தமிழ் நுணுக்கங்களையும் பிற்காலத்து இசை வளர்ச்சிகளையும் நன்கு விளக்குஞ் சிறந்த நூலாகு மென்பதே எனது கருத்து. பண்டைத் தமிழர்களிடத்திலேதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து பின்னர் ஆரியர் கைப்படலாயின என்று யான் நெடுநாட்குமுன்னரே ஆராய்ந்து கண்டமுடிவு, பல சிறந்த மேற்கோள்க ளோடும் அறிவு நுணுக்கத்தோடும் இந்நூலுள் விளக்கப்படுதல் கண்டு இந் நூலாசிரியரின் ஆராய்ச்சித்திறத்திற்கு மிக மகிழ்ந்தேன். இன்னுந் தமிழ் மக்களின் பண்டை நாகரீக வரலாற்றினைப்பற்றியும், நம் தமிழ் மொழியின் ஏற்றத்தைப்பற்றியும், இந்நூலாசிரியர் உரைப்பனவற்றிற் பெரும்பாலன என்கருத்திற்கு இசைந்திருக்கின்றன. ஆனால், இதில் விளக்கப்படும் இசையின் கூறுபாடுகளை யான் நன்குணர்ந்தவன் அல்லாமையால் அவற்றைக் குறித்து யான் எனது கருத்து மொழியகில்லேன்; அவை நன்குணர்ந்தாரே அது மொழிதற்குரியார். என் உணர்வுக்குப் புலப்பட்ட மாத்திரத்தில் இஃதொரு சிறந்த இசைத்தமிழ் நூலென்று துணிந்து சொல்லமாட்டுவேன். இவ்வரிய பெரிய நூலை உலகிற்குதவிய ஆபிரகாம் பண்டிதரவர்கட்குத் தமிழ் நன்மக்களும், பொதுவாக இசை நுணுக்கங்களில் விழைவுமிக்க எல்லாரும் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள். இந்நூல் என்றும் நின்று நிலவுக! இதனாசிரியர் நெடுங்காலம் இனிது வாழ்க. இங்ஙனம், (ஒப்பம்) வேதாசலம். எட்டயாபுரம் சமஸ்தானம் ஜமீன்தார் அவர்கள் அபிப்பிராயம். தஞ்சாவூர் ராவ் சாகேப் மு. ஆபிரகாம்பண்டிதரவர்கள் இயற்றிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் அதற்கமைந்த பேர்போலவே மிகுந்த விஸ்தாரமானதே. சில பாகங்களை நாம் ஸ்தூலமாய்ப் பார்வையிட்ட மட்டில் இத்திராவிட நாட்டில் அனாதியாய்த் தொன்றுதொட்டு வழங்கிவரப்பெற்ற தமிழ்ப் பாஷையிலுள்ள இயல், இசை, நாடகமென்ற முத்தமிழிலொன்றான இசைத் தமிழின் வரலாறும், இசைக்கு இன்றியமையாத சுரங்கள் 7-க்கு சுருதிகள் 24 என்ற உண்மையும் ஆயப்பாலை முதலிய நாற் பாலையின் பாகுபாட்டில் பல்லாயிரம் பண்கள் அதாவது இராகங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்ற விஷயமும், சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்களின் ஆதாரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும் சுருதிகள் 22 தானென்று சித்தாந்திப்பவர் கொள்கையை பல ஞாயங்களால் மறுத்திருக்கும் புதுமை ஒன்றே நூலாசிரிசியருடைய கல்வி கேள்வித் திறமையையும் நுட்பமான ஆராய்ச்சியையும் வியக்தமாய்க் காட்டுகிறது. இந்நூல் சங்கீதம் கற்பவர்களுக்கு அந்தகனுக்குக் கண் திறந்து விட்டாற் போலப் பேருதவி செய்யத்தக்கதுடன், இம்மை, மறுமைக்குரிய விசேஷ பலன்களையும் விளைவிக்கத்தக்கது. ஆகையால் இந்த அருமையான நூலை அளவிறந்த பிரயாசையுடனும் பொருட் செலவுடனும் பிரதிப்பிரயோஜனம் எதிர்பாராது லோகோபகாரமாய் வெளிப்படுத்திய நூலாசிரியருடைய பெருந்தன்மையையும் பேருதவியையும் பற்றி இத்தமிழ் நாட்டிலுள்ள சகல ஜனங்களும் எக்காலமும் பாராட்டத்தக்கதே. எட்டயாபுரம் ஸமஸ்தானம். 1-6-1916. (sd.) ETTAPPAN, Zemindar. சிறப்புப்பாயிரம். தமிழ்ப்பிரம சூத்திராசிரியராகிய மறைத்திருவன் சுவாமி. விருதை. சிவஞானயோகிகள் (ஆயுள்வேத பாஸ்கரர்) இயற்றியது. ஆசிரியப்பா. தமிழ் முக்கழகம் திருமலர் மணமென வொருமையின் மல்கி எண்ணில் பொழிற்பயிர் பண்ணிக் காக்கும் ஒப்பில் பெருமை மெய்ப்பொரு ளன்பு பாங்கி னிலைபெற் றோங்குந் தமிழகத் 5. தாறறி வுடைமைப் பேறுறு மக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொல்சார் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் 10. கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி பற்பல் லினப்பெயர் பெற்றுப் பெருகினர் தமிழகத் தினிய தமிழ்ச்சொல் வளர்ந்து தென்மா மதுரையின் மன்னிய பாண்டியர் ஆட்சியிற் பன்னீ ராயிர வாண்டு 15. முன்னர் முதன்மைக் கழகந் தோன்றி நிகழ்ந்த ததனில் நீளறி வகத்தியர் இயலிசை நாடக மெனுமுத் தமிழுக் கொருநூ லியற்றி வரியா வழங்கப் பரிபா டல்பல வருளா லுரைத்தனர். 20. முதன்மைக் கழக முன்னீர்ப் பட்டபின் எழா யிரத்தைநூ றாண்டுமுன் றுவக்கிய கவாட புரத்திடைக் கழக மதனிற் சிகண்டி யாரிசை நுணுக்கஞ் செய்தனர். மூவா யிரத்தெழு நூறிற் றுவக்கிய 25. கடைக்கழ கத்துக் கவின்பரி பாடல் ஆற்றற் பேரிசை கூத்துச் சிற்றிசை நிமிர்வரி முன்னைய வமிழ்தெனத் தோன்றின. ஆய்ந்து காணல் முதலிடைக் கழக முன்னீர் கொள்ளப் படுதலி னிந்தியப் படியின் வளம்வவி 30. அயனாட் டவரீ ராயிர மாண்டாப் படையெடுத் துத்துன் புறுத்திய படியால் நூல்களு மவற்றி நுண்ணிய வழக்கும் அருகி மறைந்தன வாதலி னவ்வழி திருமுறை கண்ட பெருமைச் சோழன் 35. நீல கண்டயாழ்ப் பாணர் மரபில் வந்தபெண் வழியா யறிந்து பரப்பினன் நந்துத லில்லா வந்த முறையில் தேவா ரப்பேர் மூவாத் தமிழ்மறை நசையொழி மேலோ ரிசைதிரு விசைப்பாப் 40. பண்ணொடு படிக்கு மண்ணின் வழக்கும் இசைநூன் முறைதே ரிளங்கோ வடிகள் சிலப்பதி காரச் செவ்விய மொழியும், படிமேற் புலவ ரடியார்க்கு நல்லார் உரையிற் கூறிய வுயர்மேற் கோளும், 45. பரிபா டல்பயில் பண்ணின் முறையும், மற்றுள பன்னூ னுட்பமும், ஆய்ந்து; சிற்பநூல் வல்லார் சிறிதோ ருறுப்புக் கைப்பெறின் மற்றெலாங் கண்டு கணக்காற் றேர்தல் போலத் தெய்வ நல்லருள் 50. காட்டப் பொருளெலாங் கருத்தி லோர்ந்தே; தமிழிசை நூல் ஆடு முதலாம் பன்னிரு வீட்டில் குரலிளிக் கொன்றொன்று கொடுத்தைந் தினுக்கும் இரண்டிரண் டாக வீயிற் பன்னிரண் டிலநிறை வெய்து; மிதுவே யாழிற் 55. பன்னிரு வீட்டிற் பயிலிசை யாகும்; அதையிரட் டிக்க விருபத்து நான்கு கேள்வி வருநிலை மூன்றினுங் கெழுமும்; ஒத்த வளவிற் பாத்தற் கொவ்வும்; இணைகிளை நட்புப் பகைமுறைக் கியலும்; 60. பழந்தமி ழிசைநூற் பாலைக ணான்கிற் பன்னீ ரில்லிற் பயில்வ தாயம்; ஆய மிரட்டிக்கி லாகும் வட்டம்; வட்ட மிரட்டிக்கில் வருந்திரி கோணம்; கோண மிரட்டிக்கிற் குலவுஞ் சதுரம்; 65. அறுநான் கலகுக ளிலையே லொன்றுமூன் றைந்தே ழலகி லொன்றா கேள்வி; கோணஞ் சதுர மிலையேற் கேள்விக் காலரை முக்காற் கணக்குக் கிடமிலை; ஆதலி னுள்கி யறிமி னென்றும்; 70. வட்டப் பாலையில் யாழ்வகை நான்கும் பன்னிரு பாலையும் பாலையே ழேழும் பெரும்பண் ணான்கும் சாதி நான்கும் உளவதில் விளரி கைக்கிளைக் கொவ்வோர் அலகு குறைத்திரு பத்திரண் டாக்கி 75. இசைக்க நூல்க ளிசைத்தன வென்றும்; பாலை நான்கிற் பன்னீ ராயிரம் பண்கள் தமிழிற் பல்கின வென்றும்; தென்னன் சிவனே மன்னெவை கட்கு முன்னிறை யாக்கொ ளின்றமிழ் வழக்கால், 80. தமிழ்க்கழ கங்கள் தழைக்கச் செய்த தென்னவர் மரபிற் சிறந்து தோன்றிக் கடல்கோட் பட்ட காலைத் தமிழகம் மரக்கலத் துய்ந்து மறுத்து மூர்செய்த சத்யவி ரதனெனச் சதபதப் பிராமணம் 85. எழிற்பா கவத மேனைப் புராணம் பலவும் பகர்வை வச்சுத மனுவும் அவர்வழி வந்த பாண்டிய ரனைவரும் தமிழிசை வளர்த்த தலைவ ராதலின் தென்னா தெனாவெனு மாளத்தி யிதுவரை 90. மன்னி வழங்கும் வழக்குள தென்றும்; இருக்கு முன்னைய வெழின்மறை மூன்றும் நாலிசை யோடு நண்ணிப் பின்னர்த் தமிழ னிராவண னமரே ழிசையொடு சாமம் பாடித் தண்ணருள் பெற்றனன் 95. அதுமுத லம்மறை யேழிசை யோடு வழங்கல் கேட்டலிற் பழம்புரை யேழிசை தமிழர்க் குரித்தெனல் சால்பாம் என்றும்; தமிழிசை நூலின் றகைமை விளக்கி வடமொழி யிசைநூல் ஆயிரத்து நானூ றாண்டின் முன்னர்த் 100. தோன்றிய பரதர் சொல்வட நூலில் பஞ்சம மிந்தளம் பாணற் கௌசிகம் வேளா வளிசீ ராக முன்னைய தமிழ்ப்பண் களுமறு நூற்றி யெண்ப தாண்டுமுற் றோன்றிய சாரங்க தேவர் 105. இயற்றிய ரத்நா கரத்தி லிந்தளம் காந்தாரம் பஞ்சமம் காந்தார பஞ்சமம் சாதாரி கௌசிகஞ் சுத்த சாதாரி குறிஞ்சியொண் தக்க ராகங் குச்சரி நட்டபாடை மேக ராக முன்னைய 110. தமிழிசை நூல்கள் சாற்றிய பண்களும் எடுத்துக் கூறலி னிவைதே வாரத் துளவெனச் சாரங்க தேவர் குறித்தலின் அன்னவர் தமிழிற் பண்களை யாய்ந்து வடமொழி யினினூல் வகுத்த காலை 115. ஈரல குகுறைத் திசைக்கப் பெற்ற வட்டப் பாலையி லிளிகுர லான நெய்தல் யாழ்க்குரிய நான்மூன் றிரண்டு நானான் மூன்றிரண் டாகிய கேள்வி இருபத் திரண்டினை யொருநிலைக் குரிய 120. அலகென மயங்கி யாக்கம் பேசி யுரைத்தன ரம்முறை யொத்த பகுப்பிற் கொவ்வா தன்றிக் கோணஞ் சதுரப் பாலையி னாற்பத் தெட்டுந் தொண்தொண்ணூற் றாறுமாப் பகுத்தற் கியலா தம்முறை 125. முன்னர்க் கூறி நானூ றாண்டு முந்தி யகோபிலர் பாரிஜா தத்திற் பின்னர் யாழிற் பன்னீ ரிசையே நாரதர் வழியென் றிராகம் வகுத்தனர் முன்னூற் றறுப தாண்டு முன்னர் 130. நனித்தமிழ் வெறுத்த ராமா மாத்தியர் தனிச்சுர மேள களாநிதி சாற்றினர் முன்னூ றாண்டு முன்சுதா நிதிநூல் கோவிந்த தீக்ஷிதர் குயிற்றின ரதன்பின் இருநூற் றைம்பதி யாண்டு முன்னர் 135. விளங்கிய வேங்கட மகிப்பேர் மிக்கோன் பேண்சதுர்த் தண்டிப் பிரகா சிகையில் ஏழுபா லையில்வரு பன்னிரு வட்டத் தியலு மெழுபத் திரண்டு மேளம் வகுத்தவை கட்கு வடமொழிப் புதுப்பெயர் 140. வழங்கின னன்னவர் முன்னைய பல்லோர் இசைக்குள கேள்வி யிருபத் திரண்டென் றுரைத்தமை முற்று மொவ்வா தென்றும், அளந்தோ ராம லவ்வழி நம்பிப் பற்பல ரிந்நாட் பாடகர் சொற்ற 145. கணக்கு களிலுள கறையிவை யென்றும் வடநூற் கண்ணுள வழுவெடுத் தோதி, மேற்கோள் ஆங்கில வல்லா ரளவிட் டறிந்து கேள்வி யலையிற் கிளக்குங் கணக்கும் பிரம மேளத் திருபா னான்கு 150. கேள்வி முறையிற் கிளந்த நலமும் இசைநூற் றொன்மை யினிது விளங்கக் கிறித்து மறைநூல் கிளந்த பலவும் பற்பல வறிஞர் பகர்மேற் கோளும் எடுத்துக் கூறி யியைபுகள் காட்டி 155. ஈரல குகுறைத் திசைக்கும் வட்டப் பாலைக் குரிய விருபா னிரண்டே நிலையொன் றுக்கியல் கேள்வியா மென்னல் செழும்பண் ணியல்திறந் திறத்திறங் கட்குறு மிருபது பதினா றீறாறு கேள்வி 160. களிலொன்று கூறல் கடுக்கு மதனால் கேள்வி யொருநிலைக் கெண்மூன் றேயாம் இன்றேல் நடைபெறு மிராகங் களிலுள காலரை முக்கா லலகு களுக்கோர் இடமிலை யிந்நாட் பாடக ரதற்குக் 165. கமக மெனப்பேர் கண்டுரைக் கின்றனர் சாரங்கர் கமக மிசையசை வென்றனர் இசையொன்று பிறிதி னெழிலைச் சார்தல் கமக மெனவேங் கடமகி சாற்றினர் இசைவினை யாகு மென்று மின்பம் 170. பயக்கக் குறைத்துப் பாடுதல் பாட லமுத மென்று மறைந்தனர் தமிழர் இசைநுண் ணலகும் பலவகை வினையும் வெவ்வே றென்பது வெளிப்படை யதனால் அலகி னுட்ப மடைதற் குரிய 175. வட்டங் கோணஞ் சதுரப் பாலைக் கேள்வி யிலையேற் கிளக்கக் கணக்கிலை நிலைக்கறு நான்கு கேள்வி நிகழ்த்திசை மரபுநூல் கண்டார் மயக்கங் கண்டிலர் என்று பகரு மென்வழக் குவந்து நூற்பயன் 180. இருந்தமிழ்ப் பண்கவ ரிருள்போ யகல அரும்பொற் பண்ணமு தமர்ந்தினி தருந்தி அன்பி னுலகோ ரின்பந் திளைக்க உலகெலாந் தமிழி னுயர்வுந் தொன்மையும் கண்டுள நன்மலர் விண்டு களிக்க 185. பண்களுக் குரிய பயனுடன் பலிக்கத் தெய்வந் தாழ்பவர் மெய்யன்பு பெருகிக் கருதிப் பாடிக் கனிந்துள முருகப் புதுவழி வாட்டி முதுதமிழ் நெறியைக் காட்டி நிலைக்குக் கேள்வி யெண்மூன் 190. றேயெனத் தீட்டி யுண்மையை நாட்டி யாவரு முணர நற்றமிழ் நடையில் கருணா மிருத சாகர மென்னும் நூலொன் றியற்றி ஞாலம் புகழதை அரங்கேற்றல் அஞ்சு பகுப்பினு மஞ்சா தாட்சி 195. நண்ணிச் செலுத்து மண்ணற் கோமான் ஐந்தாம் ஜார்ஜெனு மைந்தார் பெருமை மன்னிறை யன்பு துன்னிச் சான்ற கல்வி பொருளெனுஞ் செல்வ நிரம்பிய மராட மாகிய பரோடா நாட்டை 200. துய்க்கநன் றாளுங் கெய்க்கவா ரிறைவன் கிறித்தா யிரத்துத் தொள்ளா யிரப்பதி னாறா மாண்டி லனைவரும் வேண்ட இனிது நடாத்திய விசைப்பே ரவையில் பற்பல கொள்கைய ரொப்பி மகிழ 205. நன்றரங் கேற்றி மன்றினி லுள்ளார் ஐயந் தீர மெய்யெலாம் விரித்து எல்லாம் வல்ல விறைவன் மெச்சிய வண்மைப் பாணர் மரபிற் றோன்றித் தமிழ்மறைப் பண்கள் தழைக்கச் சோழன் 210. அவையிற் பாடிய வருட்பெண் மணியெனத் தோன்றி யறிவு சான்று தெய்வ அன்புங் கல்வி வன்புங் கற்பும் தேனினு மினிமை யானநற் பாட்டும் நிறைந்து பண்பிற் சிறந்து விளங்கும் 215. மரகத வல்லி கனகவல்லி யென்ற தன்பெண் மணிகள் யாழொடு பாடி நூற்படி வழங்கும் நுட்பங் காட்டச் செய்து தெளித்து மெய்ம்மைக் கடவுள் அருளுஞ் செல்வமு மலகில் நல்லோர் 220. நன்கு போற்று நலமுங் களிப்பும் அறமும் புகழு மடைந்து சிறந்தனன் ஆக்கியோன் மனுவின் குலத்து வந்த பாண்டியர் ஆண்டநன் னாட்டி லமைந்து சிறந்த சாம்பூர் வடகரைச் சாம்புவ னோடையிற் 225. சான்றா ரினத்திற் றலைமைபூண் டோங்கிய பல்லக் கூர்ந்த செல்வர் வழிவரு மெத்துநற் சீர்த்தி முத்துச் சாமிவேள் நன்மனை யாந்திரு வன்னம்மை யின்பால் அன்புங் கொடையும் அறமும் அருளும் 230. ஒருங்குரு வெடுத்திவ் விரும்புவி வந்தெனத் தோன்றிய வின்சொ லான்றநற் றோன்றல் மெய்ப்பொரு ளின்பா லுய்த்த மனத்தன் கல்வியுஞ் செல்வமு மல்கிய நல்லோன் நத்துமொண் பெருமைச் சித்தர் குழுமிய 235. சுருளி மலையின் மருவி யுறையும் கருணா நந்தத் தெருள்சான் முனிவற் கண்டுபே ரன்பு கொண்டவ ரருளால் வாதம் மருத்துவ மாதிநூன் முறைகள் அண்ணரு ஞான வுண்மை யுணர்ந்தோன் 240. உலக முழுவதும் நிலவத் தன்மருந் தூக்க மொடுமுயன் றாக்கம் பெற்றோன் சென்னைக் கவர்னர் தன்னிலம் வந்து விருந்துண் கின்ற பெருந்தகை யுடையோன் தஞ்சைச் சங்கீத வித்யா மகாஜன 245. சங்கம் நாட்டிய மங்காப் புகழோன் கிறித்து மறைநூ னிறைத்த வுளத்தன் ஆங்கில வாட்சிய ரறிந்துயர் வண்மை பணித்தராவ் சாஹிப் பட்டம் புனைந்தோன் ஆகிநற் றஞ்சையி லமுதென வோங்கும் 250. ஆபிர காமெனு மருந்தவத் தோனே. தனியன். காமணக்குந் தஞ்சைவள ராபிரகாம் பண்டிதனற் கலைக ளாய்ந்து பாமணக்க வியற்றுகரு ணாமிருத சாகரநூற் படிக்கி லின்ப நாமணக்குங் கேட்பவர்தஞ் செவிமணக்கும் பிழைக்கொள்கை நவியு முள்ளிற் றேமணக்கு மிசைநூலின் றேண்மணக்கு மணக்குமிறை திருநா ரன்றே. பொருள் முடிமுறை. தஞ்சை கல்யாண சுந்தரம் ஐஸ்கூல் தமிழ்த் தலைமைப் பண்டிதர், மகா-ராச-ராச-சிறி L.உலகநாதபிள்ளை அவர்கள் இயற்றியது. நேரிசை யாசிரியப்பா. பூவின் மணமென வெள்ளினு ணெய்போல் இயங்குவ நிலைப்பவென் றிருபாற் றிணையிலும் உள்ளும் புறமும் வெள்ளிடை யின்றி நீக்கற நிறைந்த போக்கறு மொருவன் 5. ஒப்புயர் விகந்த வருளா லொலிகெழும் ஆழி மானிலம் வாழிய வென்னப் பகைக்களி றுள்ளம் பதைபதைத் தொடுங்க மடங்கற் படாமெண் டிசையினு நுடங்க உருகெழு மேரித் திருமக டன்னோடு 10. நந்தா வென்றி ஐந்தாம் ஜார்ஜுமன் அரியணை மேவிய யாண்டே ழதனில் வரமிகு கிறித்துப் பரமன் பிறந்தபின் பத்தொன்ப தடுக்கிய நூற்றுப் பதினா றாட்டையி லிருநான் காஅந் திங்களில் 15. ஒன்றொழி யிருபதி லிருபதிற் கூடிய மஞ்சினந்த தவழு மிஞ்சிசூழ் தஞ்சை சங்கீத வித்தியா சபைக்கள மதனில் வயவா ளுழவன் சயமா கீர்த்தியன் நிலத்தரு திருவிற் பாண்டிய னிரீஇய 20. படுதிரை வாய்க்கொளு நடுவ ணவைக்கண் அகத்திய னோடிருந் தருந்தமி ழாய்ந்த தவலருங் கேள்வித் துவரைக் கோமான் திசைமயக் கறாத விசைப்புல வோர்கடம் பிணக்கந்த தீர்த்திசை நுணுக்கங் காட்டுவான் 25. மேவினன் போன்மென நானில மிசைப்பத் திருவுங் கல்வியு மருவதி காரமும் ஒருங்கு படைத்த பெருந்தகை விசும்பின் வானவர் கோமான் மணிக்கலப் பேழையின் வாய்திறந் தென்ன வயங்கிடு பரோடா 30. மாட்சிமை மிக்க சூழ்ச்சிசா லமைச்சர் வீ.பி. மாதவ ராவ். ஸி.i.இ. அக்கிரா சனத்தி லமர்ந்தினி திருப்ப இயலு மிசையுங் கணிதமு மென்னு முத்துறை போகிய வித்தகர் குழீஇ 35. நுண்ணிதிற் றெரிந்து பன்முறை வியப்பக் கழக மிரண்டுங் கார்கோள் கொண்டபின் அருந்தமி ழிசைநூல் பெருவழக் கொழிய மூன்றாங் கழகமு முடிந்த பின்றை இளங்கோ வடிக ளுளங்கனிந் துரைத்த 40. தேன்படு சுவையின் மூன்றுதமிழ் விராய உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளில் இலைமறை காயென மறைபடக் கிடந்த இசைநுணுக் கங்க ளசைவி லூக்கமுஞ் சுருளியெ மடிகள் கருணா னந்தர் 45. கான்மலர் பொழிந்த கருணையுங் காட்ட யாண்டுபல கழியத் துரீஇக் கண்டு செந்தமிழ் நிலத்தொடு முந்துறு மக்கள் வழிவழி யாக முறையினிற் பயின்ற பல்லியந் தழுஉம் பாடலி னியல்பும் 50. நாற்பெரும் பண்ணெனு நால்வகை யாழதன் பாற்படு நான்மைச் சாதியின் றிறனும் பண்ணொடு பண்ணியம் பண்டிறந் திறத்திறம் என்னும் பெற்றியிற் பண்ணி னீர்மையும் சிறுமை பெருமைக் கிருவரம் பெய்தி 55. ஐந்தினு மேழினும் வந்திடு நெறியிற் பன்னிரு வகைப்படூஉம் பாலையி னேர்மையும் முந்நான் கிரட்டி கேள்வியு மவற்றினு நுண்ணிய வாய சுருதியும் விளக்கும் ஆய முதலா வட்டமீ றாகப் 60. பாலைகள் வரைதரு பான்மையும் பிறவும் எவ்வ நீங்கி யெத்தகை யோருங் கைப்படு நெல்லியிற் காணத் தொகுத்து மேற்கோண் முதலா வேற்பன தோற்றிப் பிறர்மதங் களைஇத் தன்கோ ணிரீஇப் 65. பரீஇக் கழக மிரீஇயரங் கேறிய பாண்டிய ரென்ன மேவி யீண்டவை இன்னிசை மாட்சியி னியல்புண ராரு மயலற நாடி மாண்பொரு டேறக் கருணா னந்த சாகரம் எனுமிசை 70. யுரைசா னூலரங் கேற்றினன் புரைதபு தென்னவர் நாடு செய்தமா தவத்தான் முரண்பகை பனிக்கு மரண்டகு காப்பி னாவலொடு பெயரிய வூர்வட கரைக்கண் நலனொருங் குற்றென நண்ணிய சீலன் 75. தமிழ்மொழி யேமொழி தமிழிசை யிசையெனத் தாவின்றி நிறுவுந் தமிழ்நர் கோமான் தாழிசை வண்டுந் தமிழ்யாழ் முரலும் ஏழிசைச் சூழ லிடமென வாழ்வோன் முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து 80. பாலை யாமெனும் பான்மை வறிதாகப் பயினின் முரம்புடைப் பாலை திரித்து வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து தாதுந் தளிரு மேதகத் துவன்றிய பல்பூஞ் சோலையும் பயன்றரு மரனும் 85. நாண்மலர்க் கொடிகளு நனந்தலை மயங்க மயிலொடு குயில்கூஉங் குரலும் பயிலப் பன்னிறங் கஞலிய வின்சுவைக் கரும்பும் களிறு மாய்க்குங் கழனியுஞ் செறிதர முல்லையு மருதமு மென்னச் சொல்லியல் 90. கருணா னந்த புரங்கா ணுரவோன் ஒருகுடை நிழற்றி யிருநிலம் புரக்கு மன்னவர் மனங்கொளு நன்மதிப் புடையோன் பயன்மரம் பழுத்தென வூருணி நிறைந்தென நயனுடைச் செல்வம் பிறர்க்கென வாழ்வோன் 95. இல்ல முதலா வெல்லாப் பொருள்களும் அருட்குரு நாதற் காக்கியொன் றேனுந் தனக்கென வாழாத் தகைமை யாளன் திருத்தகு மரபின் மருத்துநூ லன்றி யெல்லாம் வல்ல பண்டித னிவனென 100. மீப்புக ழுலகெலா மோங்கும் ஆப்பிர காம்பெய ரறிஞர்பெரு மானே. மதுரைச் சங்க வித்வானும், சீகாழி லுத்தரன் ஹைஸ்கூல் தமிழ்ப்போதகாசிரியருமாகிய, பறங்கிப்பேட்டை, மகா-ராச-ராச-சிறி முத்துத்தாண்டவராயபிள்ளையவர்கள் இயற்றியவை. மதிக்கு மிசைப்பாண மாநிலத் தெம்போற் கதிக்கும் வரையதரிற் கான்போய்த் - துதித்தக்காற் றஞ்சை நகராள் தருவனா னாபிரகாம் தஞ்ச முனக்குத் தரும். பாடாண்டிணை, பாணாற்றுப்படை. (1) மலைசேர் மதிய வதனத்தர் கூத்திற் றலைசேர் தலைவநீ சாரின்-நிலைசேருங் காரன்ன தஞ்சையர் காவல னாபிரகாம் தாரன்ன வாக்கந் தரும். ..., கூத்தராற்றுப்படை. (2) தரைகொள் பெருவளத் தஞ்சைத்தேஞ் சாரின் மரைகொள் தமிழணங்கின் மாண - விரைகொள் அருளீந் தளிக்கு மவனா பிரகாம் பொருளீந் துவக்கும் புகழ். ..., புலவராற்றுப்படை. (3) மதியம் வதனந் தானா மதியக் கயல்பாய் தடத்துக் குவளை கண்ணா வியலர வின்பட மகல்விளக் காகப் பரம்பர னளிப்பப் பற்றினை யியலணி 5. யெனினு மினிப்பண் விறலீ யியம்புது நனிமகிழ் துடவை நறுமது துளிப்பக் களிவண் டாடுங் காமர் தஞ்சை மாநகர்ச் செலீஇ யாண்டுள கோமா னாடல்சா னாயகன் கூடலம் பதிக்க 10. ணரசு புரீஇப் பரசுமுத் தமிழைச் சங்கத் திரீஇ யிங்கிதப் படுத்திய வழுதியர் செழியர் வழிவருந் தோன்ற லியலே யிசையே யியலுநா டகமே பன்னரு மவற்றின் பன்னிரு பாலே 15. யகத்திய னிகர்ப்பச் சகத்திடை யாயுபு முப்பா னூற்கு மிப்பார் பரவு மியல்பின் கரையைப் பயில்வுறுங் கலைஞன் ஆபிரா முயரிய வப்ப னென்றும் ஆபிர காம்பல் லினத்தினர்க் கப்ப 20. னென்றும் வல்லவர் சொன்னவப் பரிசே நற்றமிழ் நயத்தை யுற்றநம் மரபோ ருணர்தர வுரைத்தலிற் குணஞ்செறி பெரியோ னிருங்கட லுடீஇய பெரும்புவி வகுத்துப் புரந்தருள் தூயோன் வரந்தரு போழ்தி 25. னுன்னைப் பெரிய வுறவின னாக்குவ லுன்னிற் புடவி யுயர்தவர் யாவரும் நன்னய முறுவ ரென்றவம் மாண்பே நம்மவர்க் கித்தமிழ் நலமெலாம் பகர்வோ னிருவே றுலகத் தியற்கை திருவேறு 30. தெள்ளிய ராதலும் வேறெனத் தேவ ரோதிய மாற்ற முவப்ப நீதியி னிருபொருட் செறிவும் விரவிய செம்மல் தம்பியர் தநயர் தன்னில் லத்துணை தும்புரு வியக்குந் துப்புறு மடந்தையர் 35. மரகத மன்ன மரகத வல்லியுங் கனகநேர் சிறப்பின் கனக வல்லியுஞ் செவ்விதி னில்லறஞ் செழிப்ப வுறுவோன் பாவு மிராச பத்தியின் முதிர்ந்து ராவு சாஹிபு மேவிய பட்டன் 40. இசையி னுணுக்க மிசைகெழீஇப் பயின்று பெருங்காப் பியமென வருங்கலை வாணர் சாற்றுகர் ணாமிர்த சாகரந் தன்னை மாதவ னணையசீர் மாதவ ராய மகிபன் பரோடா மன்னவன் பாங்க 45. னவைக்களத் திருந்திங் கரங்கேற்று நிபுணன் விருந்தோம் புந்தவ னறுந்தேன் றாரான் பல்வள நிலனுஞ் சொல்வளத் தொழிலு மாட மாளிகை கூடகோ புரமு மமைதரத் தஞ்சையிற் கமைபெறு குணத்து 50. நாற்கவி ராயரை மேற்படப் புரப்போன் ஆபிர காமென மேற்புல மெங்கு மீத லிசையி னிசைந்தோன் கீர்த்தி யாடி யுழுவலிற் பாடிப் படர்தியேற் கழகஞ் சாத்த விழைசெய லணியுங் 55. கொடுப்ப மிலைந்து விடுப்ப வுவந்து பூத்த கொடியிற் பொலிந்திங் கின்னே வருதி யிறைமக ளென்னவே. ..., விறலியாற்றுப்படை (4) திருநெல்வேலி, மகா வித்வான் மகா-ராச-ராச-சிறி கவிராஜ நெல்லையப்பபிள்ளை அவர்கள் இயற்றியது. சாற்றுகவி. சீராருந் தஞ்சைநக ராபிரகாம் பண்டிதனற் செல்வன் சங்கத் தாராறு திகழ்சடைய னொடுதேர்ந்த விசைநூலைத் தகையி னாய்ந்தே யீராறோ டீரைந்தாஞ் சுருதியென விசைப்பவர்சொல் லீர்ந்து போக்கி நேராருஞ் சுருதியெண்மூன் றெனத்தமிழ்நூன் முறைவிளக்கி நிலைக்க நாட்டி (1) பண்ணியல்புந் தண்டமிழின் மறையிலவை யண்ணியல்பும் பலவு மற்றார் எண்ணரிய நுண்மைகளு மினிதமுத மெனவியைந்து சாலும் விண்ணவரும் புகழ்கருணா மிருதசா கரநூலை விளம்பி யிந்த மண்ணுலகில் நண்ணுமுயர் புலவர்தினம் போற்றுநலம் வாய்த்தான் மன்னோ. (2) அம்பாசமுத்திரம், தீர்த்தபதி ஐஸ்கூல் தமிழ்ப்பண்டிதர், மகா-ராச-ராச-சிறி அரிகரபாரதியார் அவர்கள் இயற்றியது. தரவு கொச்சகக் கலிப்பா. 1. கார்பரவு கனம்பரவக் கருங்கோட்டி லிழிதருவெண் ணீர்பரவு நிலம்பரவு நீள்பொருநை நதியோடுஞ் சீர்பரவுந் தமிழொடுமத் திறம்பரவுஞ் சித்தசனார் தேர்பரவு மேர்பரவு தென்பாண்டி நன்னாட்டில் 2. தாற்றோடை வனமருந்து தடப்புழக்கைப் புழுதியளாய்த் தூற்றோடைக் களிறுகுராந் தொடர்மலையக் கீழ்சாரல் மேற்றோடைச் சுளைபிளப்ப வியன்பலவி னிழிதேறல் ஆற்றோடை நிறைபெறுசாம் பவனோடை யாம்பதியில் 3. ஈன்றோரிற் புவிபுரந்த எழில்வேம்பன் பழங்கிளையாய் ஏன்றோரீ ழத்தரசின் முடிபறிப்ப இதனிமித்தம் வான்றோயுஞ் சோலைநகர் நாடாண்ட வம்சமெனச் சான்றோர்கள் பலவிளக்குஞ் சான்றார்தம் பெருமரபில். வேறு 4. புவிசேரப் புகழந்தச் சான்றார்த மான்றகுலம் பொருவில் சீர்த்தி செவிசேரப் பெருங்கேள்வி பாலசுப்பி ரமணியப்பேர்ச் செல்வ னுண்மைச் சவிசேரு மரியாள்தன் தனயனிரு தாண்மலர்க்கே தாச னாகிச் சுவிசேட முத்தெனும்பே ரெய்தினன்றன் போனெனச் செப்பு வோனும். 5. சொற்றகவி சேடமுத்து பலநாளு மனுட்டித்த தூய்த வத்தாற் பெற்றசுகு மாரன்முத்து சாமியென்பா னில்லறத்தின் பெருமை யெய்தக் கற்றகற்பி னாலுயர்ந்த அனநடையன் னம்மாளைக் கடிம ணத்தில் உற்றனனீண் டவர்க்குதித்த மக்களெண்மர் தமின்முதலா யுதித்தோ னென்றும். 6. கலைகூர்ந்த லார்டுபெண்டு லண்டார்தர் லாலியெனுங் கவர்னர் கட்குந் தலைகூர்ந்த ஆர்பிடட்டு பெட்போர்ட்டாங் கலைக்டருக்குஞ் சகாய மான நிலைகூர்ந்த நிதித்தலைமை எய்தியசா மிக்கண்ணு நிபுண ருக்கும் அலைகூர்ந்த தலம்புகழும் ஆனரபிள் சிவசாமி ஐய ருக்கும். 7. சண்முகமெய் ஞானசிவா சாரியராஞ் சுவாமிகட்கும் சார்ந்தார்க் கெல்லாந் தண்முகமே தருமொருதி வான்மாத வராவவர்க்கும் தன்னே ருற்றார் உண்முகநீ ரறியூகி கமிஷனராம் பராங்குசநா யுடுகா ருக்கும்‘ மண்முகமே லுண்மையினின் றெண்மையுநீங் காதுநெறி யச்செல் வோர்க்கும். 8. இன்னிசைநூன் முறைதெரிந்து மன்னிசையை எவர்செவிக்கு மினிது பெய்து தன்னிசையை வளர்த்திடுமுத் தையனெனும் பாகவதர் தலைவ னுக்கும் மின்னிசைமாற் றாயிரஞ்சே ரபரஞ்சி யொழுக்கமென மிடற்றின் செவ்வித் தென்னிசையை யிசைக்குமகா லிங்கனெனப் பெயர்பூண்ட சீரா ளர்க்கும். 9. ஒருதைவஞ் சிவமதென ஒருமொழியுந் தமிழதென வுலகு றுத்தி விருதைநிலை நாட்டியசீர் விருதைசிவ ஞானியர்க்கும் வித்த கத்தோர் இருதயமாந் தமிழாய்ந்து வசனாதி நாற்கவியி னினிய நூல்கள் பொருதலறப் பலவிசைத்த அரிகரபா ரதியென்னப் புகலு மெற்கும் 10. பருத்தபரும் பாதகத்தின் உயிர்நீத்துப் பிறகெழுந்த பரம னார்க்கே கருத்துதவு படிவருக்குங் காயகற்ப நிலையிருந்த கனயோ கற்கு மருத்துவர்க்குஞ், சோதிடர்க்கும் இயலிசைநா டகத்தவர்க்கும் வறுமை யோர்பொன் பெருத்தவர்க்கு முளங்கனிந்து நேசிக்கு நேசனெனப் பேசு வோனும். 11. சகமேய தண்மையினா லுண்மையினால் வண்மையினால் தனத்தா லின்பம் அகமேவ வசனிக்கு மாற்றலொடு கல்விமதி அதிநுட் பத்தால் இகமேவு நாட்டாராம் நாடார்தம் வங்கிசமா மிரணி யச்சீர் மகமேருக் கோட்டில்வைத்த மங்காத சுடர்விளக்கின் வயங்கு வோனும். 12. செந்தமிழந் தெள்ளிசையுந் தேவர்பிரான் காதைகளுஞ் செவியே கேட்ப கந்தமுறு போனகமுங் கனகமுடன் புலவருக்குக் கையே நல்க வந்தவர்தம் மொழிகேட்டு வேண்டுவன வுசிதம்போல் வாய்வ ழங்க அந்தரங்க முழுதொருவர்க் காலயமே யாகநித மாக்கி னோனும். 13. இருளியலு மிகவாழ்க்கை யெனவெறுத்தே வைகைநதி யெழுந்து லாவும் சுருளியிலே சென்றுகரு ணாநிதியாம் முனிவரனைச் சூழ்ந்து போற்ற அருளியலு மவனளித்த வரன்முறையே மருத்துவங்க ளனைத்துந் தேர்ந்து தெருளியலும் வைத்தியத்தால் மன்னுயிரின் நோய்பலவுந் தீர்க்கிற் போனும். 14. பொல்லாத வினைபுரிந்திங் குயிர்வாழ்தல் பாவமெலாம் பொருந்து மென்றே நல்லான வுவாத்திமையாந் தொழிலதனை மனைவியுட னனிமேற் கொண்டு பல்லான நகருறைந்து சோழர்கடந் தலைநகராப் பகரா நின்ற அல்லான சோலையுடை சூழ்தஞ்சை மானகரை அடுத்தோ னென்றும். 15. அடுத்திட்ட தஞ்சையிலே எடுத்திட்ட முன்வினையின் ஆற்றாற் செந்நெல் மடுத்திட்ட பூம்பழனப் பரப்பினொடுங் கனிகளெல்லாம் மல்கித் தூங்கத் தொடுத்திட்ட சோலைகளு மிருநிதியு மணிமாடத் தொடர்புஞ் சூழல் உடுத்திட்ட தோற்றமுடன் அப்பதிக்கோ ரேற்றமுடன் உயர்ந்தோ னென்றும். 16. உரைதருவோன் அபிதானம் ஆபிரகாம் பண்டிதனென் றுலகங் கூறும் தரைதருமோர் தருமமெனு மவனப்பாற் றரணியெலாந் தனிக்கோ லோச்சு வரைதருதோள் ஆங்கிலசக் ராதிபதி யருணோக்க மரிதி னோக்கித் திரைதருமா னிலத்தளித்த ராவுசா யபுப்பட்டஞ் சிறப்பப் பெற்றோன். 17. மாண்மிக்க அணிகலனாம் பட்டப்பேர் தனைவனையவ் வள்ளல் பெற்ற ஆண்மக்க ணால்வருக்கும் பெண்மக்க ளறுவருக்கு மருமை யான பூண்மிக்க வணிதரல்போ லாங்கிலமும் பைந்தமிழும் பொலியச் செய்து பாண்மிக்க வூட்டிடப்பெண் மக்களுக்கோ ரிசைவலனைப் பார்த்த மைத்தான். 18. பார்த்தமைத்த காயகரு மகார்க்கருத்து சரளிமுதற் பலவி யீறா ஆர்த்தமுறை தனைக்கடந்தங் கிசைத்தலையு மிசையறியா ரநேகர் கூடி நீர்த்தவிசை நூற்பிறப்பு வடமொழிக்க ணல்லாது நிலத்தோர் பாங்கர் போர்த்ததமி ழிடமிலெனப் புகல்தலையுங் கேட்டுளத்திற் புண்பா டுற்றே. 19. பச்சங்கத் தரியறியாப் பரனடத்தி னிடைமுளைத்துப் பரந்த காலம் முச்சங்கத் திடைக் கிடந்து தேசமெலாந் தவழ்ந்தேறி முழங்கி மேன்மேல் உச்சங்கொ ளிசையினிய முத்தமிழி னொருதமிழா யுலாவக் கண்டும் அச்சங்கொ ளாதிங்க னவரிசைத்தல் வியப்பெனத்த னகத்தி லுன்னி. 20. பாண்பிறந்த நெறியிதென அதுவளர்ந்த விடமிதெனப் பரிபா லித்த மாண்பினரு மிவரென்ன மற்றதனைக் கையாண்டார் வகுப்பீ தென்னச் சேண்பிறங்கு நவநவமா யிராகங்கள் கீதாதி செய்தற் கான வேண்பிறங்கில் வழியிதெனச் சுருதிகளித் துணையென்ன விரிப்ப வேண்டி. 21. பதினான்கி யாண்டளவாய் மநுமுதலோர் வகுத்தளித்த பண்டை நூலும் விதிநூலெண் பரதவயித் தியநூலுஞ் சித்தர்பலர் விரித்த நூலுந் துதிமேவு மிதிகாச புராணமுதன் மதநூலின் றொகையும் வேண்டும் நிதிமேவு மேனாட்டார் நூல்பலவு மாய்ந்ததன்றி நிரம்பக் கேட்L. 22. சாரங்கர் உயர்பாரி ஜாதரொடு பரதரிவர் தந்த நூலின் சாரங்கள் பழையதமிழ்க் காவியமோ டகம்புறமாச் சாற்று நூலின் சாரங்கள் தமிழ்மறையி னமிழ்தினெழு தருமினிய சங்கீ தத்தின் சாரங்கள் சத்தியவே தத்திசையின் விரிகின்ற சாராம் சங்கள். 23. இன்னவிசை நுணுக்கமெலாஞ் செந்நெறியிற் றெரத்தெளிந்து சிந்தை யெல்லாம் தென்னிசையின் மயமாக வனுபவித்தவ் வனுபவத்தின் சீர்மை யெல்லாம் எந்நிலமுந் தெளிந்துய்வான் உண்மைநிலை கடைப்பிடித்தே இயம்ப லானான் முன்னநவின் றிட்டமுறை வினாக்களுக்கிங் கேற்றவிடை மொழியக் கேண்மின். 24. முதனடிப்பக் கோசிகத்தி னிடையெழுந்த திசையென்று முன்னை மூன்று விதமருவு தமிழ்க்கழக மதுவளர்ப்ப வளர்ந்ததென்றும் விரும்பி நாளும் பதனமுறக் காத்தவர்கள் திரவிடமூ வேந்தரென்றும் பராவு மன்னோர்க் கிதனமர்ந்த தமிழர்களே கையாண்டார் அந்நாள்தொட் டின்று மென்றும். 25. சரிமுதலா மெழுசுரங்கள் நிலைமாற இராகங்கள் சனிக்கு மந்த வரிமுறையிற் சிலவிசையே ஈண்டுவழக் கத்துளது மற்று மாற்றல் தெரிமுறையி லிராகங்கள் பல்லாயி ரத்தொகையிற் செறிவ வென்றும் உரியவந்த முறைநவமே யாயிடினும் பழமைமுறைக் குற்ற தென்றும் 26. அவ்வழியே கீதங்கள் கீர்த்தனைகள் இராகங்கள் ஆளத் திக்காஞ் செவ்வழிகட் குதாரணமாய்ப் பலவியற்றித் தமிழிசையின் சிறப்பீ தென்ன எவ்வழியுந் தலைதுளக்க வேற்றநெறி தனைப்புகன்று மிசைக்கோர் தாயின் ஒவ்வரிய சுருதிகளை ஒருவாறு கணித்தறிவா னுளத்தி லுன்னி 27. எழுமூன்றோ டொன்றென்றும் ஒன்றென்றும் பலவென்று மொழுங்கே தின்றி வழுமூண்ட மயக்கத்தால் வகுத்தவட நூல்களினை வகையின் மாற்றித் தொழுமூவில் தமிழ்மறையால் பரம்பரையால் அனுபவத்தால் சுருதி தன்னால் எழுமூது சுருதிஇரு பதினான்கே யாமெனவு மியம்புங் காலை 28. கடுத்தசிலர் வடமொழியிற் புகன்றதுவே சாலுமெனக் கழறி வாதந் தொடுத்திடலு மங்கவரைச் சுருதியுத்தி யனுபவத்தின் றுறைக ளாலே மடுத்தபிடி விடப்புரிந்தான் மற்றெனக்கு மிம்முறையின் மயக்கமெய்தல் அடுத்தறிந்துங் கதைநீப்ப ஆப்பிரகாம் பண்டிதனா மரிய சீலன். 29. தானீன்ற தனயைமர கதவல்லி கனகவல்லி தம்பாற் கூற மீனீன்ற விழிச்சியரச் சங்கீத விற்பனிகள் வீணை தன்னால் தேனீன்ற மிடற்றிசையால் சுருதிஇரு பதினான்காய்த் தெளியச் செய்தார் ஆனீன்ற கன்றெனவே அறியாது துள்ளுகிற்பார்க் கறைவ தென்னே. 30. முன்பந்த முறைநிகழ்ந்த விசைநுணுக்க முதலியன முடிந்து போகப் பின்பந்த விசைநுணுக்கம் புந்திவழி எவ்வழியோ பெரிது தோன்ற அன்பந்த முறாக்களிப்பி னம்புவியோர் அனுபவிக்கு மாறு செய்தான் இன்பந்த முளம்பெருக்கு மித்தலஞ்செய் கைம்மாறிங் கென்னே யென்னே. 31. இந்நூற்கிங் கேற்றகரு ணாமிருத சாகரப்பே ரியைய வைத்தே எந்நூற்குந் தலைபரோடா மன்னமைச்சர் மாதவராவ் இறைமை மேய தொன்னூற்க ணனிபயின்றார் நிறையவைக்க ணரங்கேற்றல் செய்தான் கானப் பன்னூற்கு மிந்நூன்மேம் பட்டதெனத் துதிமொழிகள் பாரித் தாரால். 32. மலைவிளங்கு மணிமாடத் தஞ்சையிலும் தமிழிசையில் வடாத தான கலைவிளங்கு புலவர்பலர் சிரந்துளக்க அரங்கேற்றல் கவினச் செய்தே அலைவிளங்கு கடல்புடைசூழ் அவனியெலாம் புகழ்நிலவா லலங்க ரித்தான் தலைவிளங்க வுதித்தவரி லிவன்றுணையா ரிருமைநயந் தனைப்பெற் றோரே. 33. இலக்கணமே இலக்கியமே காவியமே புராணாதி இதிகா சம்மே தலக்கணுயர் தமிழ்நாட்டுச் சரித்திரமே வைத்தியமே சமாதி யோகந் துலக்குமொரு நூலாதி யாகமமே சோதிடமே சுருதி கீத வலக்கணதே யென்பகரு ணாமிருத சாகரமா வழங்கிந்நூலே. மதுரை மகா-ராச-ராச-சிறி மு.ரா.கந்தசாமிக் கவிராயரவர்களியற்றிய சிறப்புப்பாயிரம். 1. பூமியையோர் சுரபியெனப் பரதமதின் மடியென்னப் பொலிதென் னாடு தேமலிபாற் சுரையென்ன வறிஞர்புகல் வளஞ்சிறந்த செழியர் நாட்டின் மாமலிபூந் தடச்சாம்பூர் வடகரையாந் திருநகரின் மாட்சி மேவும் பாமலிசீர் பெறுசான்றோர் பலருள்ளுஞ் சான்றோனாம் பான்மை மிக்கோன். 2. தவமருவும் பாலசுப்பி ரமணியமா லீன்றமுத்து சாமி வேளு முவமையிலா வன்னம்மா ளும்புரிந்த நலந்திரண்டோ ருருவ மாகிக் குவலயத்தி லுதித்தென்ன வந்தமுதற் குமரனுயர் குணங்கள் யாவு மிவனிடத்து வளரவளர்ந் தெண்ணில்கலை நிறைவுறப்பெற் றிலங்குஞ் சீலன். 3. மென்மதுர வாக்குடையான் மிளிருமுழு மதிக்குடையான் மேவ லார்செய் வன்மைமிகு செயற்குடையான் மாழைநூ லரைக்குடையான் வரையா தென்றும் நன்மைசெயத் தாமதியான் நலமிலரை யுளமதியா னன்னூல் கூறுந் தன்மையெலா நிறைமதியான் றகவில்வினை சம்மதியான் றயவான் மிக்கான். 4. ஐந்தருவோ விருநிதியோ மாமணியோ கருமுகிலோ வாவோ யாவு மிந்தவுல கினிலொன்றா யடுத்தாலு மிணையாகா வீகை மேலோன் செந்தமிழாங் கிலமாதி பலபாஷா பண்டித விசேட சீலன் சந்ததமும் பிறர்க்குதவி செய்வதிலே மனஞ்செலுத்துந் தரும வள்ளல். 5. கனவினிலு மறவாது கடவுளடி மலர்பேணுங் கருத்த னின்சொல் மனவமைதி பொறுமையன்பு வாய்மைவிடா முயற்சிமன மகிழ்ச்சி நல்லோ ரினமருவி யிருத்தலெளி யவரிடத்தி லிரக்கமிவை யெல்லாங் கொண்ட தனதனிகர் ஆபிரகாம் பண்டித குணாகர வுதார தீரன். 6. பூருவத்துப் புண்ணியத்தாற் றானினைத்த நன்மையெலாம் பொருந்தச் செய்ய நேரடுத்த துணைவியாய்க் கற்பினுக்கோ ரணியாகி நிலங்கொண் டாடும் பேர்படைத்து மிளிர்ஞான வடிவுபொன்னம் மாளுடனே பெரிதாங் கல்வி சீர்பெறப்போ தனைபுரியுந் தொழிலேற்றுத் தஞ்சைநகர் சிறப்ப வந்தான். 7. தண்டமிழி னிலக்கியமு மிலக்கணமும் பிறநூலுந் தகவி னாய்ந்து கொண்டுசெவி வழிப்புகுந்து மனத்துறைந்து கரும்புகனி கோற்றே னற்கற் கண்டமுத மெனவினிக்குஞ் சங்கீதத் துறைதேர்ந்து களிப்பு மேவி யெண்டிசையு மிசைபடைத்தான் ஆபிரகாம் பண்டிதப்பே ரிசைவல் லோனே. 8. நீரரிதாய்க் கல்லுமுள்ளு நிறைவதலாற் புல்லுமிலா நிலங்கள் வாங்கி யாருமிக வதிசயிப்பக் கிணறுகள்வா விகள்தோண்டி யகிலத் தெங்கும் பேரிருக்க மாபலா தென்னைமுதற் சோலைவளம் பெருகச் செய்து வாரமிக்க வளமருத வைப்பாக்கிச் சிறந்ததொழில் வலிமீக் கொண்டோன். 9. கருணைமிக நிறைபிரிட்டிஷ் மகராஜர் புகழோங்கக் கவின்சேர் சென்னை வருகவர்னர் ஸர்ஆர்தர் லாலிமஹாப் பிரபுவிவன் மாட்சி யெல்லாம் பெரிதுணர்ந்து ராவ்சாஹிப் என்றகவு ரவப்பட்டம் பிறங்கத் தந்தா ரிருநிலத்தில் ராவ்சாஹிப் ஆபிரகாம் பண்டிதமாற் கிணையா ரம்மா. 10. வாதம்வயித் தியம்யோகம் ஞானமிவை களைத்தெளிவாய் மனதிற் றேறுங் காதலுற்றா யிரத்தெண்தொண்ணூற் றெழுபத்தே ழாண்டிலுயர் கருணா நந்தர் பாததரி சனைசுருளி மலையிலெய்தி யவனருளாற் பலவுந் தேர்ந்து போதமிக்கீ ராறாண்டுகள் வயித்தியத்தா லுலகமெலாம் போற்றப் பெற்றான். 11. தான்பெற்ற பிள்ளைகளுங் குடும்பத்தார் பிள்ளைகளுந் தமிழா ராய்ந்து தேன்பெற்ற சுவைமலியுஞ் சங்கீத சாத்திரங்க டெளிவி னோர்ந்து வான்பெற்ற தெள்ளமுதந் துளிப்பவிசை பாடவும்யாழ் வகைகைக் கொண்டு கான்பெற்ற நலந்திகழ விசைமழைபெய் யவும்புரிந்து களிக்கும் செம்மல். 12. உத்தியோ கம்புரிய வந்துபல பெருநலங்க ளுஞற்றிச் சீரால் நித்தியா திபனிவனே யெனவாழுந் தஞ்சையிலே நிகழ்சங் கீத வித்தியா மஹாசனச பையெனுபே ரவையொன்று மேவத் தாபித் தெத்திசா முகத்திலுந்தன் னிசைவளரும் படிசெயும்பே ரேற்ற முள்ளோன். வேறு. 13. தித்திக்குஞ் செந்தேனோ தேம்பாகோ தெள்ளமுதோ புத்திக்கு ளிணையாகப் பொருந்துமெனுஞ் சங்கீத முத்திக்கு வழிகாட்டு முறையனைத்துந் தெளிவித்தே யெத்திக்குங் கொண்டாடு மேற்றமிகு தோற்றமுளோன். 14. கண்ணளவுக் கடங்காது கற்பகக்காக் களைமேவி யுண்ணமுதச் சுவைக்கனிக ளுதவுமிவன் சோலைவள மெண்ணளவிற் பொருந்துவதோ விசைவேந்தர் கவர்னர் முன்னோர் நண்ணிமிக மகிழ்பூத்து நாவினிக்கப் புகழ்வாரால். 15. உண்ணீரோ வெனப்பலரை யொருங்கழைத்தின் னுணவளிப்போன் மண்ணீரும் விண்ணீரும் வற்றுகினும் வற்றாத தெண்ணீராங் கிணறுகல்லித் தேகசுகம் பெறவிந்தத் தண்ணீரே போதுமெனத் தக்கவர்சொல் சொற்பெறுவோன். 16. இல்லார்க்குப் பொன்னளிப்பா னிரங்கிவந்தார்க் குணவளிப்பான் பொல்லாநோ யுடையவர்க்குப் பொருந்துமுயர் மருந்தளிப்பான் பல்லார்க்கும் வேண்டுவன பார்த்துப்பார்த் தினிதளிப்பான் எல்லார்க்கு முபகாரி மிவன்போல்வா ரிலையுலகில். 17. உண்டிகொடுப் பவர்தமையு முயிர்கொடுப்போ ரென்பர்பிணி மிண்டியிறக் குந்திதியின் மெலிபவருக் கருமருந்து கொண்டுதவி யுயிரையே கொடுக்குமிந்த ஆபிரகாம் பண்டிதமால் செயனோக்கிற் பகர்வதென்னோ வறிகிலமால். 18. கருணாநந்தப் பெரியோன் கருணைபுரிந் ததைமனத்தி லொருநாளு மறவாமை யுலகறியப் பலமருந்து நிருமாணம் புரிகருணா நிதிவயித்ய சாலைவைத்த பெருமான்றாய் தந்தைநிகர் பெற்றியன்பல் லுயிர்களுக்கே. 19. தன்றிருப்பே ருடனேராவ் சாய்பென்னும் பட்டமொன்று நன்றுதவுங் கவர்னர்ஸ்ரீ லாலியண்ணல் பெயர்விளங்க வென்றுமுயர் தருலாலி எலெக்ட்ரிக்பிரஸ் ஏற்படுத்தித் தென்றமிழ்நா டினிதேத்தச் சிறப்பித்த பெருந்தகையோன். வேறு 20. மக்களெலாங் கீதமுறைப் படிபயிலச் சுருதிநிலை வகுத்துக் கூறத் தொக்கவணுப் பிரமாணச் சுருதிகளை யுந்தெளிவாச் சொலநந் நாட்டுப் புக்ககீ தத்தினிலே கீதங்கீர்த் தனம்ராகம் பொருந்தப் பண்ணுந் தக்கமுறை யில்லையெனுங் குறையறவே ழிரண்டாண்டு தகமு யன்றான். 21. ஓரறிவே முதலாக வாறறிவு வரைகொள்ளு முயிர்க ளெல்லாந் தாரணியின் மகிழ்ந்துபர வசமேவக் கடவுளருஞ் சந்தோ ஷிக்கச் சீரதிகம் பெறுகீத முத்தியையுங் கொடுக்குமெனுஞ் சிறப்பைத் தேர்ந்தே யாருமினி திதையுணர வெளியிடுவா னொருபெருநூ லாக்க நேர்ந்தான். 22. அந்நூற்குப் பெயர்கருணா மிருதசா கரமெனவே யமைத்தா னந்த நன்னூலிற் றமிழ்த்தொன்மை தமிழுயர்வு தமிழொன்றே நற்றாய்ப் பாஷை யென்னுமுறை மறுக்கமுடி யாதநியா யங்களுட னெடுத்துக் காட்டிப் பன்னுபெரும் புலவருளங் குதுகுலிப்ப விளக்கியிருப் பதுடன் பின்னர். 23. தென்னிந்திய சங்கீதத் தொடக்கமத னுயர்வுபண்டே செகத்தை யாண்ட மன்னவரா தரித்தமுறை கோயில்களிற் கட்டளைகள் வகுத்த மாட்சி துன்னுசிலா சாசனங்க ளிவையிவையென் றெடுத்தெடுத்துச் சொற்க டோறுங் கன்னலமு தந்துளிப்பக் கரதலா மலகமெனக் கவினக் காட்டி. 24. பரதருடன் சாரங்க தேவர்முன்னோர் நூல்களிரு பானி ரண்டே சுருதியெனல் தவறென்னச் சங்கநூ லெனச்சிறந்து தொன்மை மேவும் பரிபாடல் சிலப்பதிகா ரம்பிங்க லந்தைமுதற் பலவற் றாலுங் கருதுயுக்தி யாலுமநு பவத்தாலும் விளக்கமுறக் காட்டி வைத்தே. 25. அனையபல பிரபலநி யாயங்க ளாற்சுருதி யறுநான் கென்றே நினைவுகொளக் கணக்குகளா தாரங்க ளொடுகாட்டி நிலைக்கச் செய்தும் இனையவகை யிசைநலங்கள் பற்பலவும் விளக்கியுநல் லிசைவல் லோர்கள் புனையுமபி தானமெலாங் காட்டியுமின் னும்பலசீர் பொருந்தச் சேர்த்தே. 26. சொற்செறிவாற் பொருட்பொலிவாற் பற்பலவி சேடமலி தொகையா லிங்ஙன் நற்பெருநூ லிஃதொன்றே யெனவுலகத் தெல்லவரு நயந்து கூறப் பொற்புமிக நிறைகருணா மிருதசா கரநூலைப் புனைந்து தந்தான் அற்புதமாங் கீதவல்லோன் ஆபிரகாம் பண்டிதன்போ லார்வல் லாரே. 27. மங்காத புகழ்மேவும் பரோடாமன் னிவ்வாண்டு மார்ச்சு மாதம் இங்காரும் பிரமிக்கத் தன்முன்னர்க் கூட்டுவித்த எல்லா இந்த்ய சங்கீத சபையினிலே திவானாகும் மாதவராவ் தக்கோ னாதி பொங்கார்வங் கல்வியிசைப் புலமைபடைத் தவர்பலரும் பொருந்தும் போது. 28. இந்தவுய ராபிரகாம் பண்டிதமாறன் றவத்தா லீன்றெ டுக்க வந்தமர கதவல்லி கனகவல்லி யெனும்பெயர்ப்பெண் மணிக ளோடு முந்தவுற்ற பெண்மணிகள் வாயாலும் வீணைகொண்டு முறைவ ழாது சந்தவிதிப் படியிசைத்தேம் பொழியச்செய் தவைமகிழ்ந்து சாற்றப் பெற்றே. 29. சுருதியறு நான்கெனற்குக் கணக்குநியா யமுமெடுத்துச் சொல்லி யாருஞ் சரிசரியென் றிடப்பெற்றுத் தான்செய்கரு ணாமிருத சார நூலின் மருவுபல விஷயமும் வியாசமா வாசித்தம் மன்னன் முன்னே பிரியமுற வரங்கேற்றப் பெற்றதெனின் மற்றிதன்சீர் பேசற் பாற்றே. 30. இடமுதவிப் பொருளுதவி யேவலா ளரையுதவி யினிய கூறி யுடலிலுள பிணியகல மருந்துதவி யுபகரிப்பா ருண்டோ வுண்டோ கடலுலகி லிவையனைத்தும் ஆபிரகாம் பண்டிதன்பாற் கண்டோங் கண்டோந் திடசுகச ரீரசம்பத் தாதியுட னிவன்வாழ்க செகத்தின் மன்னோ. சென்னை வெஸ்லிகாலேஜ் தலைமைத்தமிழ்ப்புலவர் மகா-ராச-ராச-சிறி திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இயற்றியது. நேரிசையாசிரியப்பா. இசைவடி வாகு மசைவிலாப் பொருளில் தோன்றிப் பன்மொழி யீன்ற வெங்கன்னி! மிடற்றி லிசையு மிடநாவி லியலும் விழிகை யாடலுங் கெழுமிய வன்னாய்! 5. வடவரை நீரிற் கிடந்த நாளினு நிலமாய்த் தென்கட னிலவிய நாளினும் வயங்கு தொன்மை யியங்கப் பெற்றவனை ஊரூர் தோறு மூர்ந்து புகுந்தே நாடுக டோறு நாடி யடைந்தே 10. வாக்கே யாண்டும் வழங்கச் செய்தே மாக்கள் பலரையு மக்க ளாக்கினை மூன்று கழகமு மான்ற புலவரும் அன்பு நூலொடு மின்புறக் கண்டனை முன்னை யூழோ பின்னைப் பிறரில் 15. செறிந்திய லுறுப்பைச் சிறிதே யிழந்தனை ஆட லிசையெனு நாடரு முறுப்போ மாற்றார் வயப்பட வாற்றா தயர்ந்தனை இசையுறுப் பில்லா ஏழையென் றுன்னை வசையுங் கூறி வழக்கை வீழ்த்தினர் 20. நின்பெருஞ் சேய்பலர் நின்னை மறந்தே அன்னவர்ப் போற்று மன்னவ ராயினர் இந்தப் போழ்தினிற் செந்தமிழ்ச் செல்வி! நின்னிசை யோங்கி முன்னிலை பெறவே ஒருவ னெழுந்தே யரும்பண் தொண்ணூலொடு 25. * நிலநீர் விலங்கே யொலிநூல் பலவும் ஆய்ந்தாய்ந் தடிக்கே வேய்ந்தன னின்று கருணா மிர்தசா கரமெனு மோரணி அவ்வணி யிடையே செவ்விய சுருதி இருபா னான்கெனு மிரும்பழங் கோண்மணி 30. பொலிவுற வமைத்தனன் புலவர்கண் மகிழ அன்னவ னெவனெனிற் சென்னி நாட்டிடைத் தஞ்சையி லுறையுஞ் செஞ்சொ லாளன் கருணா னந்த னருண்மிகப் பெற்றோன் கல்விப் பொருளுஞ் செல்வப் பொருளுஞ் 35. சால நிரம்பிய மேலவ னவையும் பிறர்க்குப் பயன்பெற வறச்செயல் கொண்டோன் மருந்து நூற்கட லருந்திய வறிஞன் நாதொண்ணூல் கோதொண்ணூல் பேணும் பெரியோன் யாழின் புலமையும் ஏழின் புலமையுந் 40. தோற்றிய தந்தை சாற்று தமிழுயிர் உண்மை வழுவா நண்பன் ஆபிர காம மாபுல வோனே. * Geology Zoology Philology சித்தாந்தசரபம் அஷ்டாவதானம், சிவஸ்ரீ-கலியாணசுந்தரயதீந்திர சுவாமிகள் இயற்றியது. பற்பலவா யிரமாயி ரம்வருடங் கட்குமுனர்ப் பரத கண்டம் பரவியவோர் தனிமொழியா யொப்பிலதா யமிழ்தினுநற் பண்பு வாய்ந்து பொற்புறுசங் கீதசுவை யுடனுலவி நாகரிகப் புலமை வீசிப் புறமொழிக ளுற்பத்திக் காதார மாவிளங்கிப் போற்ற யாரும் அற்புதம்வி ளைத்ததமி ழொன்றேயென் றதனுண்மை யாராய்ந் தோர்ந்தே யதற்காதா ரங்களெண் ணிலவாக வேகாட்டி யாரு மெச்ச நற்புவியி லுயர்கருணா மிர்தசா கரமெனுநூ னாட்டி வாய்மை நவின்றிட்டான் தஞ்சைராவ் சாகேப்ஆ பிரகாம்நன் னாவ லோனே. தஞ்சை சென்ட் பீட்டர்ஸ் ஹைஸ்கூல், தலைமைத் தமிழ்ப் பண்டிதர் மகா-ராச-ராச-சிறி ஆ. சேதுராம பாரதியார் அவர்கள் இயற்றியது. அறுசீர்க்கழினெடிலாசிரிய விருத்தம். 1. சீர்பூத்த விமயமலை யெனப்பொலியும் பொதியத்திற் சிறந்து தோன்றிப் பேர்பூத்த தமிழமுதத் தொடும்பழகிக் கங்கையிலும் பெருமை வாய்ந்த நீர்பூத்த பொருநைநதி பாய்தலினாற் பலவளங்க ணிறையப் பெற்று நார்பூத்த பெரியோர்கள் வாழ்வதற்கு நல்லிடமாம் பாண்டி நாட்டில், 2. பாற்கடலின் மீதுகருங் கார்க்கடல்போற் கண்வளரும் பரமன் மார்பிற் சேற்கருங்கட் டிருமகளுந் திசைமுகனா வமர்ந்தருள்பா மகளுஞ் சேர்ந்து நாற்கடல்சூ ழவனியுளோர் கொண்டாட வீற்றிருக்கு நலம தாகி மேற்கவிஞர் வாழ்தலுறு சாம்பவா னோடையெனும் பதியின் மேவி, 3. தங்குபுக ழுடைச்சான்றோர் குலத்தலைமை பெறுமுத்து சாமி வேளும் மங்கையருக் கரசியா மன்னம்மா ளெனும்புனித மாது முன்செய் பொங்குதவப் பயனாகிப் பிறந்தமுதற் குமரனெனப் பொலியுஞ் சீரான் சங்கநிதி யெனப்புலவ ருளங்களிக்கத் தருபுகழ்சேர் தகைமை யுள்ளோன், 4. அன்னையினு மன்புடையா னமைதருமின் சொல்லுடையா னறிவொ ழுக்கந் துன்னுபெரும் புகழுடையான் சொல்லுறுதி மாறாமை யுடைய தூயோன் தன்னிகரி லாதகரு ணானந்த சித்தனருள் சார்த லாலே மன்னுபதி னெண்சித்த நூல்வகையு மதன்பொருளு மனத்தி னோர்ந்தோன், 5. அவர்தலைமா நிலத்திலருக் கனைக்கண்ட பனியென்ன வடைந்தோர் நோய்கள் விலகியிட நன்மருந்து மேதகுசா லையும்வளஞ்சேர் சோலை தானும் குலவுகரு ணானந்தன் பெயராலே குயிற்றியறங் குறைவி லாது நிலைபெறுபொன் மாடமலி தஞ்சைநகர் தனிலென்று நிறுவி யுள்ளோன், 6. இயலிசைநா டகமூன்று மியைந்திலகு தமிழ்க்கடலை யினிதி னோர்ந்து மயலறுமம் மூன்றினிசை நூற்பெருமை யிதுவென்ன மகித லத்தில் நயமொழிசே ரிசைப்புலவ ரவைக்களத்தி னாலாறு சுருதி நாட்டி வியலுறுயாழ்க் கருவியிடை யுள்ளங்கை நெல்லியென விளக்கிப் பின்னும், 7. முன்னாளிற் றமிழ்நாட்டின் பெருமையுமந் நாட்டினின்முத் தமிழோர் வாழ்ந்து பன்னாளு மத்தமிழை யியலிசைநா டகமென்னப் பகுத்துக் காட்டிச் சொன்னார்க ளென்னவதன் பெருமையுமத் தூயதமிழ்ப் பாடைக் கெல்லாம் எந்நாளுந் தாயாகு மென்றுமதற் கிசையபல வேதுக் காட்டி, 8. ஐந்துவகை நிலப்பண்ணு மதற்குரிய யாழின்வகை யமைப்புங் கூறி மைந்துடைய வெழுவகைப்பா லையுமவற்றின் வகைநலமும் வகுத்து மாந்தர் சிந்தைமகிழ்ந் திடவினிக்குந் தேவாரப் பண்வகையுஞ் சீர்த்தி மிக்க செந்தமிழிற் பொருண்டைசொன் னடைசேர வசனத்திற் சிறப்ப தாக, 9. என்றுமழி யாதுகரு ணாமிருத சாகரமென் றினிய பேராற் றுன்றுசுவை நூலியற்றிச் சுருதிவல்லோர்க் கினிதாகத் தொகுத்து ரைத்தான் நன்றுநம தரசர்மகிழ்ந் துதவியராவ் சாகேப்பெ னலமுந் தாங்கிச் சென்றுபுகழ் திசைதோறுஞ் சிறக்குமா பிரகாமென் சீமான் றானே. அரிகேசநல்லூர் மகா-ராச-ராச-சிறி லி. முத்தையா பாகவதரவர்கள் இயற்றியது. நிலமண்டில ஆசிரியப்பா. பானில விரிந்த மானில மென்னும் கன்னி வதனமாங் கன்னி நாட்டில் ஆம்பலம் பொய்கைசூழ் சாம்பவ னோடையில் சான்றார் பலர்புகழ் சான்றார் மரபிற் 5. கன்னி மரியாள் தன்னிகர் காதலன் பொற்பதம் போற்று மற்புத னொழுக்கிற் புவிசே ரப்புகழ் சுவிசேட முத்தனார் நன்னய மகாரின் முன்னவ னாவோன் அன்பும் அருளும் இன்புயர் சீலமும் 10. கல்வியும் அறிவும் சொல்வினை யாற்றலும் ஈகையும் நீதியும் வாகையும் ஊகையும் கலந்தொரு வடிவம் நிலந்தனி லெடுத்தெனக் கருதுங் கனவா னிருநிதி வளத்தோன் கிளைபல சூழ்தர விளைநிலங் கனிமரப் 15. பொழிலொடு தஞ்சையில் எழில்பெற வுறைவோன் நிதமகிழ்ந் தேசுவின் பதமலர் பரவும் பத்தனா யினுமோர் சித்தனார் அருளினால் மாயிரு ஞாலத்தோர் ஆயுர் வேதியர் உச்சிமேற் றாங்கினர் மெச்சு மருத்துவன் 20. கற்றவ ரெவர்க்குஞ் சுற்ற மாவோன் நிறைபெறு கலைபல முறைபெறத் தெளிந்தோன் ஓங்கிய புகழ்சேர் ஆங்கில மன்னவர் கோவருள் செய்த ராவு சாயபுப் பட்ட மணிந்திவ் வட்டவா ருலகில் 25. மாப்பிர சத்திகூர் ஆப்பிர காமெனும் பண்டிதன் பண்டைத் தண்டமி ழிசைநூல் பற்பல ஆய்ந்ததின் நற்பல னாகச் செந்தமி ழிசையே முந்திய தென்றும் நால்வகைப் பாலையின் மேல்வகை விரிப்ப 30. வரன்முறை ஏற்ப சுரநிலை மற்ற இன்னும் இசைபல மன்னு மென்றும் நாட்டிய தன்றிக் கூட்டிய உதாரணம் பொருந்திய பற்பல கிருதிக ளியற்றியும் சுரநிலை வெவ்வேறு கருதிய மதத்தினைச் 35. சுருதி யுக்தி மருவிய அனுபவ முகத்தா லடக்கி மகத்தாஞ் சுருதி இருபதி னான்கென நிறுவினன் நூற்பேர் கருணா மிர்தசா கரமெனப் புனைந்துமன் சிரோமணி யாகிய பரோடா வேந்தர்க் 40. கரியதோ ரமைச்சர் விரிதரக் கூட்டிய கீத அவைக்கணும் மேதகு தஞ்சையிற் சேர்ந்தோர் சபைக்கணு மார்த்தியி னரங்கம் ஏற்றிச் சீர்த்தியால் நாற்றிசை முழுதும் விளங்கிடப் போர்த்தனன் வளங்கிளர் தரவே பன்னீரிலக்கணம் பயிலு முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முத்தமிழ்க் கவியரசு சிவானந்த யோகி டாக்டர், சண்முகம்பிள்ளை அவர்களியற்றிய சிறப்புப்பாயிரம். 1. இறைவனரு ளிலங்கவெமை யாண்டருளு மம்மையப்ப னியல்வ லத்தால் மறையுணர்ந்த மோனர்திற லிலங்குமர ணகழிமதில் வளஞ்சேர் தஞ்சை கறைதபுநற் பதியில்தமிழ் செழித்தோங்கப் பொதிகைமுனி கவின்கொண் டாருந் திறைகொள்மன னாபிரகாஞ் சௌமியன்சீ ரறிந்தபடி சிறிது சொல்வாம். 2. மின்பூத்த மகரந்தம் புதுநறவத் துண்சோலை வெகுவா யோங்கிக் கொன்பூத்த வமுதமெனப் புடைபரந்த பொன்னிநதி குலவு கங்கிற் பொன்பூத்த சென்னல்விளை மருதநிலம் பொலிந்திலகு சோழ நாட்டிற் றென்பூத்த வரசர்களாற் செழித்தாண்ட தஞ்சைநகர் சிறக்குஞ் ஸ்ரீமான். 3. பூமாது மலர்மாது புகழ்மாது பொலிந்திலகு பொற்பின் மிக்கான் நாமாது நேமாது நகைமுகத்துஞ் சொல்லிடத்தும் நகாரி யானோன் தூமாது விளங்குமனத் தூய்மையொடு வாய்மையுளந் துளங்குஞ் சீர்த்தி தேமாது காவல்புரிந் தெழின்மாது விளங்குசெம் பியனா மன்னோ. 4. ஆங்காங்கு மாடநிறை மாளிகையின் றொகையு மமைப்பமைப்பா முறவினர்க ளமையில்லத் தொகையும் தூங்குபெருஞ் சாலைசுற்றில் நுட்பமொடு சுழலும் நூதனமார் சலயந்தி ரங்கண்மாரு தத்தால் பாங்குபெற வியங்கழகும் பலமருதக் கங்கிற் பைங்கரும்பு வாழைசுவை யொட்டுமாங் கனிகள் ஓங்குதெங்கு வகைகளுட னுயர்மருதங் களிலே யுயர்சாலிப் பெருங்குவிய லுனதவரை யாமால். 5. வானுலகக் கண்காட்சி யிந்திரன்போல் வாழும் வளங்குலவு மாளிகையில் மஞ்ஞைகளித் தகவும் மீனுலவு சுனைகளிலே மிஞிறுகளித் தோட விளையாடிப் பசும்புல்லின் மீதுதுள்ளுங் காலி ஆனுலவுங் கன்றுடனே யந்தியெல்வை யினிலே யழகாகச் சேர்ந்தொழுகு மடுக்கணி செவ்வியினைக் கோனுலவுஞ் சேடனது குலிசநா விருந்தாற் குறித்துரைக்க லாகுமெனுங் கொள்கையில்நா ணினனே. 6. வரகுணபாண் டியன்றொடர்பி லபிராம பாண்டியன் வழிவந்த வேனாதி நாயனார் மரபிற் சிகரமுள வழுதிமுத்துச் சாமியன்னம் மாள்செய் திவ்யதவங் கலிநான்கொன் பஃதறுப திரண்டில் விரகமறு தெய்வரவுத் திரியுத்தி ராடம் வியன்சோம பூர்வபக்க மீரொன்பான் நாளிற் கிரகவமைப் பதிலாசா னுச்ச யோகங் கிளர்ச்சிமங் களமதனிற் * கெழுமியுதித் தனனே 7. அரசியலா ரரிவைமுகுர்த் தஞ்சிலையி லாரல் அமைச்சியா மகரத்தி லிராகுகட கத்திற் பரசுகுரு புதன்கேது ரவிசுங்க னரியிற் பதிந்தசநி யிராசியமைப் பதைப்பதிந்து பார்க்கிற் சரசகுண சம்பன்னன் றவயோகி சீலன் சாசுவத யோகவான் றயைமிகுகண் ணியன்றேர் முரசமொடு யாழ்கீத வகைமுழுங்குந் திவ்விய முன்றிலான் றன்வந்திரி முதல்வள்ள லாமால் 8. தெய்வமுறைப் பண்கடெரி மாவரசன் பாலிற் றிகழ்ராணி ரைபதூர்மா தவராவ்தி வானுங் கைவந்த கனியெனநா டகவிசையிற் றேர்ந்தே கண்டசதி வரிசைசுதி முறைபிசகா நெறியில் மெய்வந்த பல்லவிகள் வியன்பாடல் பத்தி மிகுகீர்த்த னைவிசிதங் கேட்டுமகிழ் வுற்றார் பொய்வந்த புலவர்புறப் போக்கிலொளித் தேங்கப் புகழ்மங்க ளம்வாழ்த்துப் புலமைமுழங் கினவே 9. பந்தனஞ்செய் யாகங்கள் பலவிரத மாற்றும் பக்குவத்திற் கேற்றபல சனனங்கள் தொடர்பால் இந்தனஞ்சேர் தவந்தேருங் கருணா னந்த விருடிதவ ராஜயோ கியர்பாலி லிழுத்துச் சந்தமா ருதம்வீசுஞ் சுருளிமலைச் செல்லுஞ் சமயத்திற் சார்ந்தார்யா வருந்தனித்து மயங்க வந்தனைசெய் முறைமையொடு மாதவர்க ளுடனே மகிமையணி மகிழ்வாக வனசுரத்தே கினரே 10. ஏகியவத் தவத்தர்பா லிளகுமன துடனே யீறிலான் போலொளிரு மிருடியர்பால் விடுக்க யோகியவ் விராசமுனி யுவந்திவனை நோக்கி யுண்மைநெறி தவறிடா துயர்நிலையைக் கண்டுஞ் சேகரஞ்சேர் குலமுறையிற் குணச்செல்வ னென்றுந் தெய்வவழி பாடுடைய தீரவா னென்றுஞ் சாகரஞ்சூ ழுலகிலிவன் றன்மைபொலிந் தோங்கத் தவாநிலைதேர் மூலிகைச் சரளங்காட் டினரே. 11. இவ்விதமாய் மனுமுறையிற் பிரபலமா மாறங் கியற்றியிரு ளகற்றியபின் பஃதாண்டு கழித்து எவ்வமெலாந் தொலையப்பின் பிவனுலகிற் காமா றியற்றிவினைத் தொடரருப்பந் தொலையவருள் புரிவான் செவ்விதேர் சிகிச்சையணி மருந்துசிந் தூரந் தெளிபற்ப முதலாய விலேகியங்கள் குளிகை அவ்வியமி லாமற்றந் தம்மரபு விளங்க வமைமகனா கச்சித்த ரொருவனைத்தந் தனரே. 12. மருத்துவந்தேர் தொழிலிவனால் வழிவழியேயுலகர் வருந்துதுன்ப மகன்றுமங் களமெய்தி மகிழப் பொருத்தமுறுஞ் சிகிச்சைபலப் புரிந்திவணே ருற்ற புண்ணியங்கள் திரண்டுபல வூழிமிகப் பெருக அருத்தமிட மேவலா தியவெல்லா மமைந்திங் கன்பெலா மணிமணியா யழகமைந்து பெருக திருத்தமிஞ்சுஞ் செய்கையெலாந் தெய்வருடழைக்கத் தேசவர சாள்மன்னர் செவ்வியில்வாழ் பவனே. வேறு 13. அளிதூங்குஞ் சுரும்பார்க்கு முய்யா னத்தி லழகுயருந் தெங்குபுளி கோங்கு வாழை களிதூங்கு மசோகத்தி யாச்சா வாத்தி கான்மர மிலந்தைபனை கனகற் சூரம் முளிதூங்கு கொன்றைநெல்லி நாவல் சந்த முருங்கைசண் பகமீந்து புன்னை நார்த்தை கிளிதூங்கு மாப்பலா வில்வம் பாலை கேழ்புன்னை பாதிரியுந் தமாலமா பலவே. வேறு 14. மகர முருக்கும் பட்ரோஜா கொடிசம் பங்கி வளர்மல்லி சிகர குசுமம் மனரசிதந் தேர்பம் பில்மாஸ் மாதுளையும் பகர விலஞ்சி மரையாம்பற் பகரும் நீலோற் பலம்பிசங்கந் தகரக் கரிய குழலார்கள் தங்குஞ் சோலை களிற்சமையும். 15. காணு மெழுதா வெழுத்ததனிற் கலந்த வனேக பிரிவெழுத்துந் தோணுஞ் செடிபூங் கொடியுருவந் துலங்கு விளிம்பின் பூங்கொடியுந் தாணு மெழுத்தின் வகையறைகள் சமையும் வளியெந் திரசாலை பூணு மாடி பங்களா புகழ்கல் மேஜை பீரோக்கள். 16. கரும்பொ னழகார் கேட்டமைத்துக் கைதே ரூலிங் பைண்டிங்கும் அரும்பு மாட்பிரஸ் கிளேஸ்ரீம்கள் அலமார் மைக ளமையுருளும் விரும்பு முலகர் கட்கினிதாய் விளங்கு நோடீஸ் புக்பாரங் கருதும் டைப்ஸ்கள் வார்ப்பிடங்கள் காட்சிக் கியலு மதிசயமே. 17. கால தேய நிகழ்வதனாற் கலந்த வுலகர் தமைவாட்டக் கோல வினையின் தொடர்பு தொட்டுக் கூற்றாய்வந்த நோய்கள்வகை மூலங் காலந் தெரிந்துணர்ந்து முதிருந் தேகக் கூறுணர்ந்து ஞால மதனில் மூலிக்கை நாட்டந் தெரிந்த நயசுகுணன். வேறு 18. தேனொழுகு மிலேகியமாத் திரைகட்டுவாதி சிறந்தரசா யனங்கள்சிந் தூரநற் பற்பம் வானொழுகு மமுதஷர் பத்துமுதலாய மாமருந்து வகைகள்வட கங்கள்குழித் தைலம் கானொழுகு புட்பவகை பன்னீ ரத்தர் காணும்நோ யாளிகள்கை கண்டபரி காரம் மீனொழுகு வானுலக விந்திரனைப்போல மேன்மையில் லறம்நடத்தும் விவேககண் ணியனே வேறு 19. பூர்க்கு முலக பாஷைகளிற் பொலிவாய் விளங்கிப் புகழ்மலிந்திங் கார்க்கும் நலந்தே ரருமையுய ரரங்கத் திருந்த மூவேந்தர் சேர்க்குந் தெய்வச் சுவைபழுத்துத் தெளிந்த வமிழ்தாந் தமிழ்மொழியிற் றூர்க்கு மனாதித் தொன்மையினைத் துலங்க விளக்குஞ் சுயாதிபதி. 20. நறவு துளிக்குந் துணர்மலியு நபசயத் தோங்கும் பணையில்லில் உறவோ ருடனே வுண்டுகளித் துவக்குஞ் சீல னுளப்புனிதன் துறவோர் காணிற் சூழ்ந்தன்னோர் துணையை நாடுந் தோன்றலனான் புறவைக் காத்த புரவலன்போற் புகழ்தேர் நிலையிற் புறஞ்செல்லான். 21. அன்ப ரிதய வுளக்கோயி லார்ந்த பரமா னந்தவெள்ளன் துன்ப மனதிற் றட்டாத துங்கத் துணையோ ரவையகலான் இன்ப நிறைவாந் துலாக்கோலி லிருந்திவ் வுலகோர் இடர்தீர்ப்பான் முனபி னுணர்ந்த நேயம்போல் முகவி லாச முறுவலுளான். வேறு 22. கலைபயின்ற வடிவழகன் கலியாண முகவழகன் கனிந்த வின்சொன் மலைபயின்ற பெருங்குணத்தன் வரம்பயின்ற வள்ளலனா உளமா றாது நிலைபயின்ற நெறியழகன் நிசம்பயின்ற சொல்லழகன் நினைவின் மேலாந் தலைபயின்ற துலையழகன் தாரதம் மியமிலாச் சதுரன் மன்னோ. வேறு 23. கண்ணார் நுதலா னருள்சுரந்த கருணை விலாசந் தேர்தமிழின் எண்ணார்ந் தொளிரு மியல்தேர்ந்திங் கேகத் துவத்தி னிலைதெரிந்து பண்ணார்ந் தொளிர்பாட் டியல்தேர்ந்து பயிலுந்தாள சதிலயைசீர் விண்ணார்ந் தியல்கின் னரராதி மேன்மை விளங்கச் செயும்விதுரன். 24. உலகத் தனாதி நிலைகளிலே யோங்கி யொளிருந் தமிழ்மொழியி விலகி யொளிரு மெய்ஞ்ஞானத் தியல்தே ரிசைநா டகத்தமிழின் றிலகம் போலு மருமையினைச் செலுத்துந் தெய்வச் சுருதிலயை கலகங் காணா விராகத்தின் கணக்கைத் தெரிக்குங் கண்காணி. 25. ஊறு தோன்றா நிலையுணர்ந்தங் குதிக்கு மேலா முபசாந்தந் தேறு நிலைநின் றறிவின்மயத் தியானந் தேர்சின் மயமுற்று வீறு மிராஜ யோகியர்கள் மேலாம் நிலைதேர் விவேகத்தன் ஆறு தெரிந்தோ ரமுதூறும் வளவாண் டகையா ரியனாவான். வேறு 26. இயலிசைநா டகத்தியலை யகத்தியரா றிரண்டாக்கு மேர்போ ராமல் அயலானா ரிடும்பைபல வாற்றிமிஞ்சு மசட்டைகுண வகந்தை மாளு மயலானார் கட்கெலா மன்னுமெழு தாவெழுத்தில் மகிழ்ந்த ளித்தான் கயல்புரளுஞ் சுனைசோலை தஞ்சைவா ழாபிரகாங் கண்யன் மன்னோ வேறு 27. பொன்னா லிலகு மனையாளும் புவியா லிலகு மகண்மாருந் தென்னா தெரிய லிசைநாட கந்தேர் செழிப்பின் சிறப்போசை முன்னே விளங்கு மாடகத்தின் முதித மோங்க முழக்குமெனில் என்னே தெய்வ மாதர்களி னியல்பை விளக்கு மெண்டிக்கும். 28. வாணி நிகர்த்த மனையாளும் வலத்திற் கியைந்த மகண்மாருஞ் சாணை பிடித்த விரத்தினம்போற் றகுந்த முறையிற் சுதிசேர்த்து வீணை முதலாம் வாத்தியத்தில் விளங்கக் கைதேர் விதிதவறா தாணை யுடன்வீ சத்தரைக்கா லரைமுக் காலிற் சுரவமைப்பை. 29. பலஞ்சே ரனேக காலத்திற் பலித்த தவத்தின் பண்பதனாற் குலஞ்சே ரரிய மானுடத்திற் குறிக்குந் தெய்வக் கணவகையிற் பலஞ்சே ரீசன் பத்தியுபா சனையோ டிசையா னந்தத்தில் அலஞ்சேர் பாக்கி யந்தழைக்கு மருமை யதனை யசைப்பரிதே. வேறு 30. சங்கீத ரத்தினா கரர்ஸ்தாயி யொன்றிற் றகுஞ்சுருதி யிருபத்தி ரண்டெனநிச் சயித்தார் அங்கதமா யமைந்தபல ருட்கருத்தை யகற்றி யதற்கியைந்த கணக்காலங் கமைமேற்கோள் காட்டி சங்கதமா யிருபத்தி நான்குசுரு திகளே சாசுவத மென்னநிச் சயத்தகைமை யுற்றான் இங்கிதமா கியசுகுண னேந்தலெனு மாப்ரகாம் இன்னமுத சுருதியிற்றே ரிருடியென லாமே. 31. முதற்சங்க முன்பல்லா யிரவருட கால முன்முழங்கு மாய்ப்பாலை வட்டப் பாலையையு மதற்கிணையாந் திரிகோணஞ் சதுரப்பா லைகட் கந்நாளி லகத்தியனார் சிறுபெருநூ லமைத்தார் குதர்க்கமிறொல் காப்பியனார் சார்பணியிற் சிறந்த கொள்கையியற் பன்னிரண்டாய்க் குறித்தணிநூற் கொடுத்தார் புதல்வர்குரு முனிவர்வழி பன்னிருவர் செயுநூற் புணர்பறியா விளம்புலவர் புறம்போந்தா ரொளித்தே. 32. ஆயப்பா லையிலுள்ள வெழுபாலை களையும் ஆம்வட்டப் பாலையீ ரிரண்டெனும்யாழ் களையும் நேயமுட னதில்நான்கு சாதிகளின் வகையில் நேருரிய விராகங்க ளத்தனையுந் தெளிவாய் ஆயகலை கர்நாட பூர்வசங்கீ தத்தி லமையிசைப்பா வழங்குநுட்ப மாஞ்சுருதி வகையிற் றூயவறு பதுமேலு தாரணங்கள் தோன்றச் சொல்லியெழு தாவெழுத்திற் றுலங்கக்காட் டினனே. 33. விரும்புகர்நா டகச்சுருதி விளைநுட்பக் கருத்தில் மேனாட்டார் களின்கணக்கை மேனிறுத்தி யொதுக்கி அரும்புமுறைப் படிநுட்ப மாங்கணக்கின் றொகையை அறிந்துகொள்ளும் படிதெளிவாய்க் காட்டினது மன்றி திரும்புஞ் சா பாமூன்றி லொன்றுகால்மா காணி தேர்காணி யரைக்காணி கீழரையே யரைக்கால் கரும்பாமுக் காணிமுந் திரியிம்மி யேழு கணக்கிடும்போ திற்பலரின் முறைகளைக் கண்டித்தே. 34. பூர்வதமிழ் முறையாகு மிசையிலா ளத்தி பொருந்தச்செய் முறைகளிலும் நடஞ்செய்முறை களிலும் ஆர்வவபி நயஞ்செய்முறை கொட்டுங்கரு விகளி லணிதானங் காட்டியாழ் மீட்டுமுறை களிலுஞ் சார்வேதங் கணிதசோ திடவைத்திய சரநூற் றகுமொழிகள் வகைசங்கீ தத்திலுள தென்னப் பார்வைபெறுங் கணக்குகளிற் கைதேர்ந்த நிபுணன் பாக்கியனாப் பிராம்பண்டி தன்றிறமை பலவே. 35. ஏர்போங்குந் தூலசூக் குமகார ணத்திற் கியல்யாழி னமைப்புகள்மா னுடதேகத் தமைப்பாய்ச் சார்போங்குஞ் சுருதிசுரங் காரணதே கத்திற் றகுங்கணக்கி னோசைநிலை யலைகளள வொடுமுன் பூர்வதமிழ் மக்கள் னாதியினி லாசியா புகழ்துருக்கி யைச்சார்ந்த மெஸ்பித்தோ மியாவில் ஆர்வமுடன் பாபிலோ னினிவேயா முதலா மமைநாடு களிற்சென்றங் கமைத்தார்பட் டினங்கள். 36. கிரமமுறைப் படிவெகுவா யரசாண்ட வன்னோர் கிருட்டினன்கொள் மச்சாவ தாரவடி வதனை பிரமையிலா வொழுக்கமுடன் பூசித்த தவந்தேர் பிரதான தமிழ்மக்கட் பெருந்தொகையா ரென்றுஞ் சிரமமிலா மீன்வடிவாற் காப்பாற்றப் பட்டோர் சிறப்பார்சத் தியவிரத பாண்டியன்றென் கூடற் பிரமநிலை தெரிந்தாண்டு மீன்கொடியை யுயர்த்தும் பிரபலபாண் டியரென்னப் பெரிதுவக்கின் றனரே. 37. இரண்டாமா யிரவருட முன்றமிழ்நூற் களிலே யேபிரேயு சீத்யகிரீக் ஜர்மன்சான்ஸ் கிரீடிற் றிரண்டமொழிக் கலப்புகளைச் சிறிதுங்கண் டறியாச் சிறப்பதனாற் றமிழ்மொழியே முதல்மொழியாந் தகைமை தரணிமுழு தோங்கிவளர்ந் துலவியதொன் மையினாற் றனித்தெய்வ மொழியெனத் தவமகிமை யுற்றோர் இரணியம்போற் போற்றுதிரு மந்திரந்தே வாரம் இயற்றிருவா சகவருட்பா வேற்றத்திற் பலவே. 38. இயலமைப்பாற் பிராணிகளி லெழுமொலிக ளெல்லா மேற்கனவே தமிழெழுத்தா லெழுதொனியைக் கொண்டும் செயன்மிகுமோர் கசடதப வெழுத்துக்கள் சிறப்பிற் றேர்ந்தவின மொன்றாகித் தெய்வமொழி யாகி அயலாகும் பாஷைகளின் றுணையெதிர்பா ராமல் அறிதற்கும் பயிலுதற்கு மதிகவிலே சாகி மயலொழியத் துதித்தற்கு மமிழ்தினுந்தேர் தெய்வ வல்லபத்தைத் தருமொழியாய் வழங்கிவந்த திதுவே. 39. காரணகா ரியந்தேர்ந்து கதிமையர சாளுங் கைக்குவார் மகாராஜா கனகபரோ டாவில் ஆரணசங் கீதவித்ய கான்பரஸி லருடேர் ஆபிரகாம் கிழத்தியம்மாள் பாக்கியவருந் ததியும் பூரணசங் கீதவித்ய வாத்யவீ ணைகளிற் பொருத்தமுறப் பாடுங்கின் னரமிதுன மகண்மார் தாரங்கொள் மரகதவல் லியுமவணேர் சகச சதித்துவங்கொள் கனகவல்லிக் கிணையாவ ரெவரே. 40. அன்னாணீள் தவந்தேறுஞ் சுந்தரபாண் டியப்பேர் அமைபுதல்வன் அணியிசையிற் றும்புருவ ரன்னான் பொன்னார்ந்த துரைராஜ மருமகன்பாண் டியனும் புகழ்பாக வதராம்பஞ் சாபகேச வாசான் தென்னாரி ராஜசபை யினிலாயப் பாலை திரிகோண சதுரவட்டப் பாலைப்பண் களையும் மன்னார்ந்து புகழ்கூற மகிழ்பெரியர் வாழ்த்து வலமங்க ளம்பாடி வரையறையுற் றனரே. சைவசித்தாந்த மகாசமாஜ அத்தியட்சரும், சென்னை மெய்கண்ட சந்தான சபைக்காரியதரிசியும், செம்பியம் ஹானரெரி மாஜெஸ்டிரேட்டுமாகிய பண்டிதரத்னம். மகா-ராச-ராச-சிறி புழலை திருநாவுக்கரசு முதலியாரவர்களியற்றியது. அறுசீர் விருத்தம். பஞ்சநதி சூழ்தஞ்சை மாநகர்செய் முதியதவப் பயனாய் வந்து மஞ்சணியும் வானுலக மருத்துவருங் கண்டுவக்க வகையினாய்ந்து தஞ்சமென வந்தடைவார்க் கஞ்சலென நோய்நாடித் தவிர்க்கு மேலாம் விஞ்சைமிகு முயர்கருணா னந்தனவன் வைத்தியத்தின் மிகுந்த செல்வன்.(1) தன்னிகரில் கடல்புடைசூ ழுலகமெலாந் தனிக்குடைக்கீழ்த் தனித்தெஞ் ஞான்றும் மன்னியவான் றொடுமுனைசெங் கோலோச்சி யரசாளு மகிமை சான்ற துன்னியவாங் கிலநற்றா யனையதுரைத் தனத்தவராற் றுலங்கத் தந்த பன்னரிய மிகுபுகழ்வாய்ந் திலகுபெரும் ராவ்சாஹெப் பட்டம் பெற்றோன்(2) அன்னவன்யா ரெனிலனைத்தும் பெற்றிலங்கு மியல்புறுமெய் யறிவான் மிக்க சொன்னதொரு மொழிக்குமொழி தித்திக்கு மினிமைதருந் தூய்மை யாளன் நன்னலங்கட் குரியவெலாம் புரியுஞ்சற் குணங்களொடு நவிலுந் தொன்மை என்னவுங்கற் றுணர்ந்தவுயர் ஆப்பிரகாம் பண்டிதரென் றியம்பு நல்லோன் (3) பலகலைக்கு முயரியதா யுச்சியின்மேல் வைத்துமகிழ் பரிவா லென்றும் நிலவலைய மெலாந்துதிக்கப் பொற்பமரற் புதம்விளைத்த நிகரி லாப்பேர் நிலவிடுஞ்செந் தமிழ்க்குரிய பலகோடி முறைபிறழா நியாயங் காட்டி நலமிகுதன் பெருமுயற்சிக் குறுதுணையா ராய்ச்சியினை நன்கு நாட்டி.(4) வடமொழிக்கு முன்மொழிதென் மொழியெனுந்தொல் காப்பியங்கள் வலிவாச் சொற்ற திடமுறுநற் பிரபலப்ர மாணவகை வகுத்ததொரு திறமை நோக்கி கடனிகர்க்குங் கல்வியினை யுண்டேப்ப மிடுபவருங் கவின்சேர் வாச அடலமருஞ் சிறப்புதனை யெடுத்துரைக்க வரிதரிதென் றறைவ தோர்ந்து(5) பாலையெவ ருங்கண்ட வுடன்பருகு வாரலது பழிப்பார் யாரிந் நூலையெடுத் தோதவலி யறிவுமிலா நுட்பமதை நோக்குங் கானான் மேலைவரு வதுமறியா வவாவதனை முன்னிட்டு மீக்கூ றுஞ்சீர் சாலைதவழ்ந் தோங்குகரு ணாமிருத சாகாரநூல் தந்திட் டானால். (6) சென்னை மயிலாப்பூர் ஸென்தோம் கலாசாலையிற் றலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்தவரும் கவரன்மெண்டில் உபகாரச்சம்பளம் பெற்று வருபவருமாகிய தில்லையம்பூர்த் தமிழ்ப்பண்டிதர் ஸோமயாஜி மகா-ராச-ராச-சிறி வேங்கடராம ஐயங்கார் அவர்கள் பாடியுதவிய சாத்துகவி ஆசிரியப்பா உலகிற் பலகலை வித்தைக ளோங்கும் இக்கலி நாளின் கவினை யுரைக்கின் அறநெறி யருள்நெறி யனைத்து முன்னிலை மாறிப் புதுநடை மலிந்தன வெங்கும் 5. நூதன விவேகிகள் நுழைந்தார் பலரும் பதவியுஞ் சுகமும் போகமும் பலிக்க மற்றதை நெஞ்சில் மதியா மாண்பினர் முன்னிலா நோயும் முறையிலாக் கல்வியும் இயானென தென்பது மிணைந்து வேரூன்றின 10. இத்ததி கண்டே யிணையிலா வரமாம் சமயசஞ் சீவி தரைமே லென்னக் கருணையே நிதிபோற் கண்ட தொன்றென ஆநந்த வெள்ள மதுவே யுருவென ஒருமா சுகுணரை யுதவினன் பரமன் 15. கலியுமிங் கில்லை கடுநோ யில்லை ஆவினைக் காப்பதில் ஆவலே மிக்கவர் அறிவின் மிக்கவர் அருமறை காப்பவர் தன்வந் தரிபோற் றரைநோ யழிப்பவர் இருபத் தைந்தா மாண்டி னளவும் 20. காடும் மலையுங் களைத்தே திரிந்தவர் பழநடை தன்னைப் பாரிற் காக்க கருணா நந்தராய்க் காணவே வந்தவர் சுருளி மலையிற் றோன்றிய சித்தரை அடிபணிந் தவர்பால் முப்பூச் சூக்குமம் 25. முறையா யுணர்ந்தே முனியருள் பெற்றா ரொப்பிலாச் சித்தரும் ஓருரை விண்டனர் நீயே யுலகில் நீளிசை பெறுவாய் மற்றொரு சித்தரும் மகிழ்ந்தே யருளுவர் ஆயுளும் பெருகும் அறிவா ராய்ச்சித் 30. துறையுள் முதன்மை முற்றுவை நிச்சயம் சோதிடம் வைத்தியம் சூக்கும நாத விந்துவின் சூக்குமம் விரிசங் கீதம் ஆமிந் நான்கினு மனைத்துல கோரும் போற்றுவர் சாற்றுவர் புனிதநீ யெனவே 35. சந்ததி யுடனே சம்பத் தெல்லாம் தாமே வந்திடுந் தரைமே லைந்து கிரகமே காதசம் கிடைத்த சிறப்பால் கன்னியே லக்கினம் கனசுக நான்கிற் சந்திரன் செவ்வாய் சதிருறச் சார்ந்தார் 40. பகையே யுலகிற் பாரா ரிவரென சூரியன் றோன்றல் சூழ்ந்தான் விரயம் சூரியன் றசையே முதலாய் நேர்ந்தது கடலி னெழுந்த கடுமா விடத்தைக் கண்டத் தடக்கிய கால கண்டர் 45. போலவே பிணியைப் போக்க வந்தவர் உருத்திரர் தன்மையை யுலகிற் குணர்த்த இரவுத்ரி யாண்டி லித்தரை வந்தவர் சங்கீத சங்கந் தஞ்சையி லாக்கிப் பல்லாண் டதனைப் பாலித் தப்பாற் 50. பரோடா வரசர் பண்புறு சபையி லிசைநா லாறென விசைவுறக் காட்டினர் தஞ்சையில் வாழ்பவர் தங்கிளை யோடும் மதுவனங் கண்டோ மற்றித் தஞ்சையில் எனவே புலகோ ரேத்துஞ் சோலையும் 55. ஆக்கி மூலிகை யனைத்துங் கண்டனர் ராவ்சா கிப்பென ராணியின் போர் தந்த பெயருந் தரைமேற் பெற்றவர் கருணா மிருதமாம் சாகரப் பெருநூல் இசைநூல் வகையி லியற்றிய மேலோன் 60. முதன்மைக் குறிமு முந்துறு பெயரார் ஆபிர காமெனு மரியபண் டிதரே. The Opinion of Dr. Sir. Subramania Iyer, Avl. K.C.I.E.,L.L.D., Dewan Bahadur, Retired Judge High Court, Madras. SIR. S. SUBRAMANIA IYER. BEACH HOUSE, MYLAPORE, MADRAS, 9TH APRIL 1917. Rao Saheb M. Abraham Pandither Avl’s work, Karunamrita Sagaram, is a technical treatise on which it is not competent for me to express any opinionworth recording. This much however must be clear to all, that the subject dealt with has been investigated with great throughness. The work cannot but prove invaluable and though my suggestion may seem strange yet I would venture to add that the substance of his discoveries should. if possible, be made accessible to English readers in a small book. I am sure the author will not find it impossible to carry out my suggestion and add to the great services he has rendered to the community during these many years. I wish his work every success. (Sd.) S. SUBRAMANIA IYER. Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூலானது சங்கீத சாஸ்திர விஷயத்தைப் பற்றிப் பேசுவதால் சங்கீதந் தெரியாத நான் அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்வது தகுதியாயிராது. ஆனால் அந்த நூலை வாசிப்போருக்குத் தெளிவாகத் தெரிவதென்ன வென்றால், சொல்லப்படுகிற விஷயமானது பூரண ஆராய்ச்சியின் பயனாகக் காணப்படுகிறது. இந்த நூலானது அத்தியந்த பிரயோஜனமுள்ளதாயிருக்கு மென்பதற்குத் தடையேயில்லை. நான் சொல்லுவது சிலருக்கு வித்தியாச மாகத் தோற்றினாலும் தோற்றலாம். அதென்ன வென்றால் அவர்கள் கண்டுபிடித்த புது முறையானது இங்கிலீஷில் சிறு புத்தகமாக எழுதப்பட்டு இங்கிலீஷ் வாசிக்கக்கூடிய யாவருக்கும் கொடுக்கப்படும் பட்சத்தில் அதிக நன்மை பயக்கும். இந்நூலாசிரியர்க்கு இது கூடாத காரியமல்ல. அவர்கள் இதையும் செய்வார்களானால் கடந்த பல வருஷங்களாக ஜனங்களுக்கு அவர்கள் செய்திருக்கும் பல நன்மைகளோடு இதுவும் ஒரு நன்மையாகும். இந்த நூல் தழைத்தோங்கி நன்மை பயக்கவேண்டுமென்பதே என்னுடைய மனப்பூர்வமான எண்ணம்." (ஒப்பம்) S. சுப்பிரமணிய ஐயர். The opinion of the Honourable Sir P.S. Sivaswamy Aiyer, Avl., K.C.S.I., C.I.E., SUDHARMA, EDWARD ELLIOT’S ROAD, MYLAPORE. Rao Sahib M. Abraham Pandither has for several years been an enthusiastic devotee and patron of the science and art of South Indian Music and has been with tireless industry prosecuting an investigation into the number of Srutis in vogue in Karnatic Music. He has also from time to time offered practical demonstrations of his theoris at the various musical conferences convened or attended by him. Expert opinion may be divided as to the correctness of his conclusions but there can be no two opinions as to the zeal and learning of the author or the value of the example set by him of a scientific study of the theory of Hindu Music. He deserves to be congratulated on the issue of the portly volume named ‘Karunamirthasagaram which is the outcome of his labours in a neglected field. 12-4-1917. (Sd.) P. S. SIVASWAMY AIYER Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் அநேக வருஷங்களாகத் தென்னிந்திய சங்கீத சாஸ்திரத்தையும் அதன் விதிகளை அனுபோகமாய் உபயோகிக்கும் முறையையும்பற்றி வெகு சிரத்தையுடன் ஆராய்ந்திருப்பது மல்லாமல், சங்கீத வித்தைக்கு ஒரு போஷகராயும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கர்நாடக சங்கீதத்தின் சுருதிகளை நிச்சயம் செய்வதில் இடைவிடாத முயற்சியோடு உழைத்திருக்கிறார்கள். இதுவு மல்லாமல் தான் கூட்டிய சங்கங்களிலும் தான் ஆஜராயிருந்த சங்கீத சங்கங்களிலும் இது விஷயத்தை அநேகந்தரம் ருசுப்படுத்தியுமிருக்கிறார்கள். அவர்கள் முறை சரியோ தப்போ என்பதைப்பற்றிச் சங்கீத வித்வான்களில் பலர் பல அபிப்பிராயம் கொள்ளலாம். ஆனால் நூலாசிரிய ருடைய வைராக்கியம் கல்விகளைப்பற்றியாவது, இந்திய சங்கீத சாஸ்திர ஆராய்ச்சி விஷயத்தில் அவர்கள் காண்பித்த முன் மாதிரியைப் பற்றியாவது இரண்டு அபிப்பிராயம் இல்லை. எல்லாரும் ஏகவாக்காய் அவர்களைப் புகழவேண்டியிருக்கிறது. வெகுகாலம் அசட்டை பண்ணப் பட்டிருந்த சங்கீத விஷயத்தில் அவர்கள் செய்த வேலையின் பலனாக இப்போது அச்சிடப் பட்டிருக்கும் கருணாமிர்த சாகரம் என்ற பெருநூலை எழுதியதற்காக நாம் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துதல் சொல்லுகிறோம்." (ஒப்பம்) P.S. சிவசாமி ஐயர் The opinion of Dewan Bahadur, the Honourable Mr. Justice, T. Sadasivier, Avl., B.A., M.L., Madras A copy of Karunamirta Sagaram by M. R. Ry. Rao Sahib M. Abraham Pandither of Tanjore has been sent to me. It is an elaborate treatise on the theory and practice of Music, covering about a thousand pages of the demi-quarto size. One of the many knotty problems that the work grapples with is the exact number of Srutis in the Octave. Whereas Saranga Deva and those who profess to follow him claim to have fixed the number at twenty two, Mr. Pandither seeks to establish that it is twenty four. His conclusion rests upon a scholarly investigation into the art of music in general and that of the ancient Tamils in particular - a conclusion, moreover, whose truth is said to have been verified in the actual singing of his daughters. It is not given for a Iayman like myself to speak with authority on the relative merits of the two theories. But it may be observed that there are musical experts who have given their hearty support to the theory which Mr. Pandither claims to have discovered. There can be no doubt that those interested in the divine art, especially as it prevails and has prevailed in India, will find the present work highly interesting and instructive. In the course of his researches into the state of Karnatic Music, the author has collected a body of valuable information regarding the greatness of the language, the literature and the arts of the ancient Tamils. which must prove very helpful to students of the history of Tamilagam. 5-3-17. (Sd.) T. SADASIVIER. "மகா-ராச-ராச-சிறி ராவ் சாயப் ஆபிரகாம் பண்டிதரவர்களால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் என் பார்வைக்கு அனுப்பப் பட்டது. அது இந்திய சங்கீத சாஸ்திரத்தைப்பற்றியும், அதன் விதிகளை உபயோகிக்கும் விஷயத்தைப்பற்றியும் பேசுகிற ஒரு விஸ்தாரமான நூல். டெமிக் குவார்ட்டேர சைசில் ஆயிரம் பக்கங்கள் அடங்கியது. அந்த நூல் எடுத்துப் பேசும் சிக்குமுக்கான அநேக விஷயங்களில் ஒன்று ஏதென்றால் ஒரு ஸ்தாயியில் எத்தனை சுருதிகள் உண்டு என்பதாம். சாரங்கதேவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சுருதிகள் 22 என்று சொல்லுகிறார்கள். Mr. பண்டிதரவர்களோ அது 24 என்று ஸ்தாபிக்க முன் வந்திருக்கிறார்கள். இந்திய சங்கீத சாஸ்திரத்தை, விசேஷமாய்ப் பூர்வ தமிழரின் சாஸ்திரத்தை வெகு சாமர்த்தியத்துடன் ஆராய்ச்சி செய்ததன் பலனாக இந்த அபிப்பிராயம் சாதிக்கப்படுகிறது. அதுவுமல்லாமல் இந்தச் சுருதிகளின் உண்மை அவர்கள் குமாரத்திகள் தாங்களே பாடி ருசுப்படுத்தினதால் நிச்சயமாக்கப்பட்டிருக்கிற தாகவும் தெரியவருகிறது. இரண்டுவித அபிப்பிராயங்களில் எது சரியென்று அதிகாரத்துடன் எடுத்துச் சொல்வது சங்கீதம் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு இயலுவதல்ல. ஆனால் நான் சொல்லக்கூடியது Mr. பண்டிதரவர்கள் கண்டு பிடித்திருக்கிற முறை சரியானதென்று ஒப்புக்கொள்ளும் சங்கீத விற்பன்னர்களும் உண்டு என்பதொன்றே. தெய்வத்தின் அம்சம் என்று சிறந்து விளங்கும் சங்கீத வித்தையில், அதிலும் இந்தியாவில் வழங்கி வந்ததும் இப்போது வழங்கியும் வரும் சங்கீதத்தில் பிரீதியுள்ளவர்கள் யாவரும், இந்த நூலை மிகவும் அருமையாகக் கொண்டாடிப் பிரயோஜனம் அடைவார்கள். கர்நாடக சங்கீதத்தைப்பற்றிய ஆராய்ச்சி செய்த விஷயத்தில் தமிழ் மொழியின் மேன்மை பண்டைத் தமிழருடைய நூல்கள் மற்ற வித்தைகள் முதலிய விஷயங்களைப்பற்றி அருமையான அநேக உண்மைகளைக் கண்டுபிடித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார்கள். இந்த அபிப்பிராயங்கள் தமிழகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்குப் பெரும் பயன் தருமென்பதற்குச் சந்தேகமில்லை." (ஒப்பம்) T. சதாசிவ ஐயர். The opinion of the Honourable Mr. Justice T.V. Seshagiri Aiyar Avl. T.V. SESHAGIRI AIYAR ANNANDALE HALL’S ROAD, EGMORE, MADRAS, S.C. Rao Saheb M. Abraham Pandither is well known throughout Southern India as a gentleman who has studied Indian Music scientifically, and one who has interested the public by his scholarly disquisitions on it. The present great work while it is primarily devoted to the exposition of the science and to correcting some popular misconceptions regarding it, indirectly gives a part of the history of Southern India as far as it is gatherable from musical compositions. The history of Tamil literature is also touched upon in the course of the book. I have gone through portions of the book and I find the disquistions both instructive and highly interesting. The Pandither has laid the Tamil public under deep obligations to him. 9-4-1917. (Sd.) T.V. SESHAGIRI AIYAR. "ராவ் சாயப் ஆ. ஆபிரகாம்பண்டிதரவர்கள் இந்திய சங்கீதத்தை சாஸ்திர விஷயமாய் ஆராய்ந்தறிந்த சிறந்த வித்வான் என்றுதென்னிந்தியா முழுவதிலும் கொண்டாடப்பட்டவர்களா யிருப்பதுமல்லாமல் தன்னுடைய கல்விவாய்ந்த சாமர்த்தியத்தினால் மற்றவர்கள் சங்கீதத்தில் பிரியப்படும்படி செய்தவர் என்று பேர் வாங்கினவர்கள். இப்போது அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் பெரும்நூலானது சங்கீதத்தை விஸ்தரிப்பதற்கும் அது விஷயமாய்ச் சாதாரணமான ஜனங்கள் கொண்டிருக்கும் தப்பான அபிப்பிராயங்களைக் கண்டிப்பதற்கும் முக்கியமாக எழுதப்பட்டபோதிலும் இசைத் தமிழைப்பற்றிச் சொல்லவந்த விடத்தில் தென்னிந்திய சரித்திரத்தை எவ்வளவு தூரம் சொல்லக் கூடுமோ அவ்வளவு தூரம் அது எடுத்துச் சொல்லுகிறது. தமிழ் நூல்களின் சரித்திரமும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. புஸ்தகத்தின் சில பாகங்களை நான் வாசித்தேன். சொல்லப்பட்டிருக்கும் விஷயமானது அதிக பிரயோசனமுள்ளதாயும் வாசிப்போரின் மனதைக் கவரக்கூடியதாயுமிருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்தோர் யாவரும் பண்டிதரவர்களுக்கு அதிக கடமைப்பட்டிருக்கிறார்கள்." (ஒப்பம்) T. V. சேஷகிரி ஐயர். The opinion of Rao Sahib, T. Ramakrishna Pillai Avl. B.A., F.M. U.M.R.A.S., F.R.H.S., THOTTAKKADU HOUSE, MADRAS 26TH FEBRUARY, 1917. I have gone through Mr. Abraham Pandither’s book on Indian Music. Apart from its merits as a book on the subject, there is much in it to interest the scholar engaged in the study of Tamil language and literature. I have no doubt when the book is published, it will form a valuable contribution to the subject and also furnish information on a variety of other subjects. I take this opportunity of congratulating the author on his having produced a work of such immense value. (Sd.) T. ramakrishna pillAI. “Mr. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இந்திய சங்கீதத்தைப்பற்றி எழுதிய புஸ்தகத்தைப் பார்வையிட்டேன். சங்கீத விஷயமாய் அதற்குள்ள அருமையையல்லாமல், தமிழ் பாஷையையும் அதில் எழுதப்பட்ட நூல் களையும் படிப்பவர்களுக்குப் பிரீதியை உண்டாக்கக்கூடிய விஷயங்கள் அநேகம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. புஸ்தகம் வெளியாகும்போது, அது சங்கீத விஷயத்திற்கு அத்தியந்த பிரயோஜனமுள்ளதாயிருக்கும் என்பது மாத்திரமல்ல, மற்றும் அநேக விஷயங்களையும் எடுத்துச் சொல்லுவதாகக் காணப்படும். இவ்வளவு பிரயோஜனமுள்ள நூலை எழுதிய ஆசிரியருக்கு நான் வாழ்த்துதல் சொல்லுகிறேன்." (ஒப்பம்) T. ராமகிருஷ்ண பிள்ளை. சென்னைக்கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ்ப் போதகாசிரியரும், சென்னைச் சர்வகலாசாலைத் தமிழ்ப் பரீக்ஷகர் சங்கத்தின் அக்கிராசனாதிபதியுமாகிய திரு. த. கனகசுந்திரம்பிள்ளை B.A. அவர்களின் அபிப்பிராயம். மகா-ராச-ராச-சிறி றாவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் இயற்றியுள்ள கருணாமிர்த சாகரமென்பது மிகவும் பயன்படுவதோரிசைத் தமிழ் நூல். இஃது இசைத்தமிழின் பழமையையும் பெரு வனப்பையும் எடுத்துரைப்பதனேரடமையாது தமிழ் மொழியின் மிகப் பெரும் பழமைக்குச் சான்று பகர்வன யாவற்றையும் திரட்டி எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளுமாறு ஒருங்கு சேர்த்துத் தந்துளது. இன்னும் இந்நூல் இசையின் நுணுக்கத்தைச் சாஸ்திர முறையாய் ஆராய்ந்துணர விரும்புவார்க்கு வேண்டிய கருவிகளை வேண்டிய மட்டுந் தந்துதவும் சாகரமாவதோடு சிலப்பதிகாரத்துரையில் அடியார்க்கு நல்லாரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ள பழைய இசைத்தமிழ் நூற் செய்யுட்களின் பொருளை உணர்ந்து கொள்வதற்கேற்ற கருவியாயுமுள்ளது. இந்த நூலாற் பண்டிதரவர்கள் சாதிக்கப்புகுந்தது வடமொழியில் சங்கீத ரத்னாகரமியற்றிய சாரங்கதேவர் முதலியோர் கூறுமாறு சுருதி இருபத்திரண்டல்ல, இருபத்து நான்கென்பது. இவ்வாதம் இசையுணர்ச்சி யில்லாத எம்போலியரால் நிச்சயிக்கப்படுவதொன்றன்றாயினும், தமது கொள்கைக்குச் சார்பாகப் பண்டிதரவர்கள் எடுத்துரைக்கும் நியாயங்களைக் கொண்டும். அவர்கொள்கைக்கெதிராக மற்றையோர் கூறுந்தடைகளுக்கு அவரால் இறுக்கப்பட்டுள்ள விடைகளைக் கொண்டும், இது காறும் இவ்வாதத்தில் வெற்றி பண்டிதரவர்கள் பாலதாயேயுளதென்று எம்மால் இனிது கூறவமையும். இத்தகைய அரிய பெரியநூலை இயற்றித் தந்ததற் காகத் தமிழுலகம் பண்டிதரவர்களுக்கு எஞ்ஞான்றும் கடமைப்பட்டதாயுளது. சென்னை, (ஒப்பம்) திரு. த. கனக சுந்திரம்பிள்ளை. 1917-ம் வருடம் பெப்றுவரி௴ 26-ந் தேதி. The opinion of M. R. Ry. T. Chelvakesavaroya Mudaliar, Avl., M.A., SUPERINTENDENT OF VERNACULAR STUDIES, PAICHAIYAPPA’S COLLEGE, MADRAS. Karunamrita Sagaram by Rao Sahib M. Abraham Pandithar is a voluminous work in four parts on the theory and art of music. In his systematic and comparative study of the different systems, and from his original researches, the author arrives at the conclusion that the primeval system of the Dravidas (the Tamils) is indigenous and unexcelled. A revival of the study of the ancient classics and their publication have confirmed the status of the Dravidas in the civilization of the old world. Silappathikaram, one of these classics, has been instrumental in determining the age of the Madura Tamil Academy very approximately. The glossary of Jayangondan and the elaborate commentary of a major portion of this epic by Adiyarkunallar have been instrumental in the hands of Abraham Pandithar in proving beyond doubt the scientific development and finish of the Dravidian system of music. These commentaries were written at a time when only parts of some of the ancient treatises on music were extant. The compilation and array of facts, and patient research in establishing his thesis/ show how the author has accomplished the Herculean task imposed by himself upon himself. Extracts from a number of out-of-the way authors of antiquities afford evidence of the vast erudition of the author and his collaborators. The book is written in simple modern Tamil prose. Any ordinary student can read and understand the author’s ideas. There can be no doubt that a reader with some knowledge of the theory of music can be immensely benefited by a careful study of the work. (Sd.) T. chelvakesavaroyan. “Rao Sahib M. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட கருணாமிர்தசாகரம் என்ற நூலானது சங்கீத சாஸ்திரத்தையும் அனுபவ முறையையும் பற்றிப்பேசுகிற 4 பாகங்களடங்கிய விஸ்தாரமான நூல். பலமுறைகளையும் கவனமாய் ஒத்துப் பார்த்துத் தன் சொந்த ஆராய்ச்சியின் பலனாக இந்நூலாசிரியர், திராவிடர் அல்லது தமிழருடைய பூர்வ தமிழ்முறையே ஆதிமுதல் தமிழ் நாட்டில் வழங்கிவந்ததென்றும் அதற்கு மிஞ்சிய சங்கீதம் வேறொன்று மில்லையென்றும் கண்டுபிடித்திருக்கிறார். பழைய தமிழ்நூல்கள் பிரசுரஞ்செய்யப்பட்டு யாவராலும் படிக்கப்பட்டதின் பலன் என்னவென்றால், திராவிடர் ஆதிகாலமுதல் கல்வி நாகரீகம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்னும் அபிப்பிராயமானது உறுதிசெய்யப்பட்டது. இந்தச் சிறந்த நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரமானது மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்த காலத்தைத் தீர்மானம்பண்ணுவதில் முக்கிய உதவியாயிருந்தது. ஜெயங் கொண்டானுடைய அரும்பத வுரையும், சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் திராவிட சங்கீத சாஸ்திரத்தையும் அதன் சிறப்பையும் ஸ்தாபிப்ப தற்குப் பண்டிதரவர்கள் கையில் போதுமான ஆதாரங்களாய் அகப்பட்டன. சங்கீத சாஸ்திர நூல்கள் அநேகம் அழிந்து மறைந்துபோன காலத்தில்தான் இவ்வுரைகள் எழுதப்பட்டன. விஷயங்களை ஒழுங்குபடுத்தியிருக்கிற அழகையும் தன் அபிப்பிராயத்தை ஸ்தாபிப்பதற்கு அத்தியந்த பொறுமையுடன் நூலாசிரியர் செய்திருக்கிற ஆராய்ச்சி யையும் கவனித்தால், தன் மீது தானே ஏற்றிக்கொண்ட மலைபோன்ற இந்த வேலை யின் சிறப்பு மற்றவர்க்கு நன்குவிளங்கும். தற்காலம் அதிகமாய் வழக்கத்திலிராத பல நூல்களிலிருந்து நூலாசிரியர் எடுத்துச்சொல்லும் மேற்கோள்களைக் கவனித்தால், ஆசிரியருடைய கல்வித்திறமையும் அவர்களோடு வேலை செய்தவர்களின் சாமர்த்தியமும் விளங்கும். யாவரும் அறிந்துகொள்ளக்கூடிய சுலபமான தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியமான யாவரும் நூலாசிரியருடைய அபிப்பிராயத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். சொற்ப சங்கீத ஞானம் உடையவர்களுங்கூட இந் நூலைப் படிப்பதினால் அதிக பிரயோசனத்தை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை." (ஒப்பம்) திருமணம். செல்வக்கேசவராயன். சென்னை, பிரசிடென்சி காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் மகா-ராச-ராச-சிறி மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்கள் அபிப்பிராயம். தஞ்சாவூர் மகா-ராச-ராச-சிறி ராவ்ஸாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரவர்கள் உலேரகோபகாரமாக எழுதி வெளியிட்டுள்ள கருணாமிருதசாகரம் என்னும் அருமையான புஸ்தகத்திற் சிற்சில பாகங்களை உவப்புடன் படித்துப் பார்த்தேன். தென்மொழியிலும் வடமொழியிலும் உள்ள இசை நூல்களில் மிகுந்த ஆராய்ச்சியுடையவர்களே பார்த்து அபிப்பிராயஞ் சொல்லக்கூடிய புத்தக மாகும் இது. ஆயினும் பண்டிதரவர்களுடைய விருப்பத்தை மறுத்தற்கஞ்சி எனக்குத் தோற்றியவற்றைத் தெரிவிக்கலானேன். எத்தனையோ வருஷங்களாகப் பண்டிதரவர்கள் சங்கீதத்தில் உழைத்து வருதலைப் பலராற் கேட்டிருப்பதன்றி நான் நேரிலும் அறிந்திருக்கிறேன். இவர்களுடைய உழைப்பு வீணாகாமல் என்றும் நிலைபெற்றிருக்கும்படி இப்புஸ்தகம் வெளிவந்தது மிகவும் பாராட்டத்தக்கதே. ஆங்காங்குள்ள சங்கீத வித்துவான்களையும், பண்டிதர்களையும் வருவித்து மகாசபைகூட்டி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கலந்தும், பழைய தமிழ்நூல்களாகிய சிலப்பதிகாரம் முதலியவற்றைச் செவ்வனே ஆராய்ந்தும் தமிழ் மொழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அமைந் திருந்தனவும் இக்காலத்து நன்கு விளங்காதனவுமாகிய சங்கீத முறைகளை யும் அவற்றின் பேதங்களையும் பின்னுமுள்ள நுட்பமான வற்றையும் யாவரும் எளிதில் அறிந்துகொள்ளும்படி விளக்கிப் பண்டிதரவர்கள் இந்நூலை வெளிப்படுத்தியதற்காகத் தமிழுலகம் இவர்கள்பால் நன்றிபாராட்டக் கடப்பாடுற்றிருக்கின்றது. "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு இவர்கள் செய்கையையே உதாரணமாகச் சொல்லலாம். இங்ஙனம் (ஒப்பம்) வே. சாமிநாதையன். சென்னை கவர்ண்மெண்டு மாதர் கலாசாலைத் தமிழ்ப்போதகாசிரியர் மகா-ராச-ராச-சிறி ஊ.சு. நமச்சிவாய முதலியார் அவர்களின் அபிப்பிராயம். C.R. Namasivaya Mudaliar, ‘Kaveri House,’ Lecturer in Tamil 130, Govindappa Naick St., Madras College for Women. Madras, E. வலம்படச் சுழலும் வரிவடிவு வாய்ந்து தனித்தியங்கும் வன்மை பெற்று என்றும் இளமை மாறாது விளங்கி நிற்கும் நந்தம் தமிழ் மொழி தொன்று தொட்டு இயல், இசை, நாடகம் என்னும் முத்திற அமைப்பினைக் கொண்டதோர் முதுமொழியாகும். உற்று நேரக்கின் அவை ஒன்றினெரன்று இணைந்து முறையே உயர்வுற விளங்குவதென்பது நன்கு புலனாகும். என்னை, இசைத்தமிழுக்கு இயற்றமிழும் நாடகத்தமிழுக்கு ஏனைய இரண்டு தமிழும் இன்றியமையாதனவன்றோ? இப்பகுதிகள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என வழங்கு மாற்றால் தமிழ் மொழியே மூன்று வகையாக மாறுபட்டதெனக் கருதுவார் பலர். அவை தமிழியல், தமிழிசை, தமிழ் நாடகம் எனத் தமிழியலும் இசையும் நாடகமும் ஏனைய மொழிப் பகுதிகளுக்கு மாறுபட்டு விளங்கும் திறத்தைக் குறித்தற்குப் போந்த தொடர்களேயாமென்க. இங்ஙனம் விதந்து கூறுதற்குற்ற காரணம் என்னையோவெனின், ஆரிய இயலும் ஆரிய இசையும், ஆரிய நாடகமும், தமிழ் நாட்டின்கண் வந்து கலந்த காலத்தே தமிழ் மக்கள் அவற்றைப் போற்றி மேற்கொண்ட காலத்தே அவற்றின் இவை வேறா மென்பதை உணர்த்தற் பொருட்டேயாமென்க. ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்னும் பழமொழியும் இதனை வலியுறுத்தும். வடமொழி என்பதற்கு மாறாகத் தென்மொழி என்பதும் ஆரிய மறை என்பதற்கு மாறாகத் தமிழ் மறை என்பதும் வழங்கிவருகின்றனவன்றோ? இனி நாளடைவில் இயற்றமிழ் ஒன்றும் நிலைத்து நின்று, ஏனைய இரண்டும் இறந்து பட்டன. அவை இறந்து பட்டமைக்குப் பலர் பல காரணங் கூறுவர். கூர்ந்து நேரக்கின் மாந்தரது வாழ்க்கைக்கும் நிலைக்கும் நாகரிகத் திற்கும் இயற்றமிழ் இன்றியமையாதது. இசை நாடகங்களோ வெனின் அவரது மகிழ்ச்சிக்கும் மனேரல்லாசமான காலப்போக்கிற்கும் கருவியானவை. நாடெங்கும் செழித்து நலம் பரவிய காலத்தினே பாட்டுங் கூத்தும் எங்கெங்கும் பரந்து விளங்கும். நந்தம் நாட்டில் நாளேற வந்த வறுமைப் பிணியும் அரசியல் மாற்றமுமே அவை இறந்து பட்டமைக்குக் காரணங் களாகும். இதுவேயுமன்றி, தமிழர் ஆரிய மொழியை மேற்கொண்டு அவர்தம் மதங்களையும், கொள்கைகளையும் கைப்பற்றிச் சின்னாளின் பின்னர் தாமும் ஆரியரே எனக்கூறப் புகுந்த அல்வழிச் செய்கையானே ஆரியரது இசை நாடகங்களைப் பெரிதும் போற்றித் தமக்குற்ற இசை நாடகங்களைக் கை நழுவவிட்டுக் கருதாதிருந்தமையே ஏற்றகாரணமெனலாம். கூத்தென்னும் தமிழ் மொழியை ஒழித்து நாடகமென்னும் ஆரியமொழி இத்தொடர்களில் இடம் பெற்றதும் இதற்குச்சான்றாகும். இனிப் பண்டைத் தமிழ் நூற்களில் காணும் இசைகளும் இசைக் கருவிகளும் இத்தகைய வென்று புலப்படுவதில்லை. அந்தோ, அவற்றிற்கூறும் மரங்களேனும் தெரிகின்றனவா? மலர்களேனும் தெரிகின்றனவா? ஏது மில்லையே. பொருள்களை உணர்த்தக் கருவிகளா நிற்கும் சொற்களை உணர்கின்றோமன்றி அவை யுணர்த்தும் பொருள்களை உணர்ந்தோ மில்லையே! இவ்வின்னல் தீர எத்தெய்வம் எதிர் நின்று வழிகாட்டுமோ! இக்காலத்தே தமிழ் மறைகளில் காணும் பண்களின் இசைத்திறமும் பளிங்குபோல் தெரிந்தபாடில்லையே! உரையாசிரியர் காலத்திலேயே இறந்து பட்டன இசை நாடகத் தமிழ் நூல்கள் எனின், இந்நாளில் எவற்றைக்கொண்டு அவற்றை ஆராய்வது? ஆழியிலுள்ள அரியமணிகளை மூழ்குதற்கான கருவி ஒரு சிறிதுமின்றி உயிரைத் துரும்பாக எண்ணி அவ்வாழியின் கண் மூழ்கி அம்மணியை எடுத்துக் கடைந்து உலகிற்களிக்கும் உயர்குணமும் மனவன்மையும் வாய்ந்த மானிடனேபோல் வளங்குன்றாத வள்ளியோனும் செந்தமிழ்ச் செல்வனும் அருங்கலை விநோதனும் உண்மைதேரும் உத்தமனும் அறிஞரைப் போற்றும் ஆண்டகையும் நல்லியல் வாய்ந்த நண்பனும் ஆகிய ஒருவன் வேண்டும். அன்னவனே இத்தகைய அரிய செய்கையை யமைவுற ஆற்றிடவல்லான். இதற்குத் தஞ்சை ராவ்சாகிப் ஆபிரகாம் பண்டிதர் என்னும் அண்ணலைக் கூறவே என் உள்ளம் ஒருப்படுகின்றது. நந்தம் பண்டிதர் இயற்றிய கருணாமிர்த சாகரம் என்னும் இசைத்தமிழ் நூலைச் சிற்சில இடங்களில் படித்துப்பார்த்தேன். பண்டைத்தமிழ் நூல்களில் ஆங்காங்கே அருகிக்கிடக்கும் விஷயங்களைத் திரட்டி அவற்றிற்கு ஆதரவான அமிசங்களைக் கூட்டி ஐயமற விளக்கியிருக்கின்றனர். தம் மதம் நிறுவப் பல அறிஞர்கள் கூறிய அடைவுகளையும் மேற்கோள்களையும் பிறநாட்டினர் கூறும் அமைதிகளையும் தடைவிடைகளாற் காட்டுகின்றனர். இசைநூற் பயிற்சி யுடையாரே துணிந்து கூறுவதற்கான விஷயங்களைப்பற்றி யான் ஏதுங் கூறுதற்கில்லேன். இசையைப்பற்றிய விஷயங்கள்யாவும் ஒருங்கே ஓரிடத்திற்காணுமாறு, காண்போர் கண்ணையும் மனத்தையும் கவரும் வண்ணம் அழகு பெற அச்சியற்றி அரியவிஷயங்களை இனிய நடையில் உலகுக்களித்த பண்டிதர் பண்பு என்றும் பாராட்டற் பாலதாம். செல்வம் பெற்றதனாற் செய்யத்தக்க செய்கையும் அடையத் தக்க கீர்த்தியும் இஃதேயன்றோ? நந்தம் பண்டிதரவர்கள் கீர்த்தி முன்னரே எங்கும் பரவிநிற்பினும் இந் நாளில் இவ்விசை நூலால் வரும் இசையே இயைந்த ஏற்றமுடையதாகும். எந்நாளும் நின்று நிலவும் இந்நூலின் மாட்சியே போல் இவர்தம் கீர்த்தியும் நின்று நிலவுமன்றே. தேவாரம் முதலிய தமிழ் மறைகளிற் காணும் பண்களுக்கு ஒத்துவரும் இராகங்களை இந்நூலில் ஓர் அடைவிற்காட்டி இதைப்பற்றிய நூலெரன்று விரைவில் வெளிவரும் என்று பண்டிதரவர்கள் காட்டிய குறிப்பைக்கண்டு பெருமகிழ்வடைகின்றேன். அவ்வகையில் தமிழ் மக்களின் மனத்தை விரைவில் மகிழ்விப்பாராக. இந்நூல் பெரிதும் தமிழிசையைப் போற்ற வந்ததாகும். ஆயினும் இதற்குக் கருணாமிருதசாகரம் எனப்பெயர் புனைந்தனர். இது தமது ஞானசிரியராம் கருணானந்தர் கருணையைத்துணையாகக் கோடற்குக் குறிப்பான் ஒற்றுமை நயம்படவைத்த பெயராதல் விளங்கும். ஆயினும் தாமியற்றிய நூலின் உள்ளுறை தெள்ளிதின் விளங்க இசைத் தமிழ்நூல் என்னும் கருணாமிர்த சாகரம் எனக்கூறின் சால அமைவுடைத்தாகும். (ஒப்பம்) கா. நமச்சிவாயன் The Opinion of Mr. J.S. Chandler Chairman, Tamil Lexicon Committee. ROYAPETTAH I am very much interested in the work of Rao Sahib M. Abraham Pandither of Tanjore in developing the theory and practice of Karnatic Music. A glance at the table of contents makes one wish to read it. It is well worthwhile for scholars like him to do much work, and in the clash of expert opinions a solid basis will be found for treating these subjects. His claims for Tamil as a language are large, but they are worth careful study. (Sd.) J.S. CHANDLER. "கர்நாடக சங்கீத சாஸ்திரத்தையும் அதை உபயோகிக்கும் முறை யையும் சீர்திருத்துவதைப் பற்றிப் பேசுகிற Rao Sahib M. ஆபிரகாம்பண்டிதர் அவர்களுடைய நூலின் மேல் எனக்கு அத்தியந்த பிரீதி உண்டாகிறது. பொருளடக்கத்தைப் பார்த்தாலே அதை வாசிக்கவேண்டு மென்ற அவாவுண்டாகிறது. அவர்களைப்போலக் கல்வியில் தேர்ச்சி யுள்ளவர்கள் அந்த வேலையைச் செய்வதில் அதிக நன்மையுண்டு இப்பேர்ப் பட்ட விஷயங்களைப்பற்றிப் பலரும் பல அபிப்பிராயம் சொல்லிப் போர் புரிந்தால் தான் நன்மை பிறக்கும். தர்க்கிக்கப்படும் விஷயத்திற்கும் திண்ணமான ஆதாரம் ஏற்படும். தமிழ்ப் பாஷையைப்பற்றி அதி சிலாக்கியமான காரியங்களைச் சொல்லுகிறார்கள். ஆனால் அவைகள் கவனித்து வாசிக்கத் தகுந்தவைகள்." (ஒப்பம்) J. S. சான்ட்லர். தமிழ் லெக்ஸிகன் கமிட்டித் தலைமைப் பண்டிதர் மகா-ராச-ராச-சிறி மு. இராகவையங்கார் அவர்கள் அபிப்பிராயம். தஞ்சை ராவ்ஸாஹிப் ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதிய "கருணாமிர்த சாகரம்" என்ற சங்கீத கோசத்தைப் பார்வையிடலானேன். இது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு 1184 பக்கங்கொண்ட ஒரு பெரு நூலாகவுள்ளது. இதர சங்கீத சாஸ்திரத்தின் ஆதி சரித்திரங்களும் சுருதிப் பாகுபாடுகளைப்பற்றிய வடநூற் குறிப்புக்களும் தமிழ்நாட்டிற் பண்டைக்காலத்தில் வழங்கிய இசைத் தமிழ் விஷயங்களின் ஆராய்ச்சிகளும் அவ்விசைத்தமிழ் முறைப்படி அமையும் சுருதிகளின் கணக்குகளும் பிறவும் இந்நூலுள் விரித்துக் கூறப்படு கின்றன. பண்டைத் தமிழிலக்கியங்களிலும் நிகண்டுகளிலும் இசைநூற் பகுதி களாகக் கண்ட வழக்குகளை யெல்லாம் சிறந்த ஆராய்ச்சியுடன் பண்டிதரவர்கள் விளங்கச்செய்திருப்பது மிகவும் புகழத்தக்கதாம். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை முதலியவற்றில் இளங்கோவடிகளும் அடியார்க்கு நல்லார் அரும்பதவுரைகாரர்களும் எழுதிய இசைத்தமிழ் விஷயங்களெல்லாம் பண்டிதரவர்கள் எழுதிய இந்நூலால் கரதலா மலகமாக விளக்கமுறுவதைக் காணலாம். வடநூல்களிலும், பழைய இசைத்தமிழ் நூல்களிலுங்கண்ட சுருதிகளின் பாகுபாடுகளைப் பண்டிதரவர்கள் நுட்பமாக ஆராய்ச்சி செய்திருப்பதைப்பற்றி, இசை நூலறிவுபோதா எம்போலியர் முடிவு சொல்ல இயலாதாயினும், இசைத்தமிழ் விஷயமான அரிய பெரிய நுட்பங்களைத் தம் அறிவாற்றலால் கண்டு பண்டிதரவர்கள் இத்தகைய நூலை முதன் முதலாக வெளியிட்டிருப்பது தமிழ்ப் பாஷைக்குச் செய்த ஒரு பேருபகார மென்பதில் தடையில்லை. கருணாமிர்த சாகரம் என்னும் பெயர்க்கேற்ப முற்காலத்தும் பிற்காலத்து முள்ள சங்கீத விஷயங்களெல்லாம் இந்நூலிடைப் பரந்து கிடத்தலால், இது தமிழ்மக்கட்கு ஒரு பெரிய நிதியே என்னலாம். இத்தகைய அரிய பெருங் காரியத்தைச் செய்து தமிழ் நாட்டார்க்கு உபகரித்த பண்டிதரவர்கள், நம்மவரது போற்றற்கும் புகழ்ச்சிக்கும் உரிமை பூண்டு, இதுபோலும் பெருங் காரியங்களைச் செய்து நீடூழி வாழத் திருவருளைச் சிந்தித்து வந்திருக்கின்றேன். (ஒப்பம்) மு. இராகவையங்கார். உ திருச்சிற்றம்பலம். சென்னை, முத்தியாலுப்பேட்டை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப்புலவர் மணிமங்கலம் மகா-ராச-ராச-சிறி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் எழுதிய சிறப்புப்பாயிரம். ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் போத மெய்ஞ்ஞான நலம்பெறற் பொருட்டே தமிழ் மொழியானது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழியியல் வரம்பு முற்றும் பெற்று விளங்கிய தனிச் சிறப்பு வாய்ந்த தென்பது நடுநிலை திறம்பா ஆராய்ச்சியாளர் யாவரானும் ஒருங்கு ஒப்புக்கோடற்பாலது. இது மிகப்பழைய மொழிகளாகிய இலத்தீன் ஹீப்ரு ஆரியம் முதலியவற்றெரடு ஒப்பக்கொள்ளும் தொன்மைபெற்று, அவையாவும் வழக்காறு அற்றெரழியவும் இன்று வரை இறவாப் பெரும் புகழ் கொண்டிலங்குகின்றது. இதனைப் பிறந்தகமாகக் கொண்டெழுந்த கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியனவும் ஒன்று பல வாய் விரிந்து மாறுபடவும் இஃதொன்றே வேறுபாடு ஒரு சிறிதும் இன்றி நிற்கும் மாட்சித்தாய் செவ்விய விழுப்பம் வாய்ப்பப் பெற்றெரளிர்கின்றது. இதன்கண் எழுதப்பட்ட அரிய பெரிய நூல்களான் இத் தீவிய மொழியைப் பயின்றோர் சிறந்த நாகரிகமும் அன்னேரர் வைகிய தமிழகம் எனப்படும் நாட்டின் வளமும் பெருமையும் நன்கு விளங்குகின்றன. நாற்பான் ஒன்பது நற்றமிழ் நாடுகள் கடல்கொள்ளப் பெற்றன என்னும் உண்மை, புலவர் பெருமானாகிய ஆசிரியர் நச்சினார்க்கினியராலும், பிறதேய சரித்திரக்காரரானும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அறியும் ஒவ்வொருவர் உள்ளமும் எத்துணைத் துன்பத்துள் அழுந்தும் என்பது அறுதியிட்டுரைக்க இயலாது. மேற்றிசையில் நாகரிகம் என்பதே முளைகிளம்பாத அக்காலத்துத் தமிழ்மக்கள் எல்லா நாகரிகச் சிறப்பும், கல்விப் பெருக்கும், பலகலைகளில் நிரம்பிய அறிவும், நுண்மையும் ஆழமும் உடையராய் மிளிர்ந்தனர் என்பது பண்டைத் தண்டமிழ் நூல்களாகிய குறுந்தொகை, நற்றிணை, அகம், புறம், தொல்காப்பியம் முதலியவற்றை ஒரு முறைப் பொது நேரக்கிற் காண்போர்க்கும் இனிது விளங்காமற் போகாது. இவற்றைப் பல ஆங்கிலப் புலவர்களும் ஆராய்ந்து நூன்முகத்தான் வெளியிட்டுள்ளார். பல தமிழ்ச் சான்றோரும் நூல் வாயிலாகவும் பனுவலானும் எடுத்தெழுதி நிறுவியுள்ளார். நிற்க. தமிழின் தொன்மையினை அறிதற்கு அதன்பால் இயற்கையின் அமைந்துள்ள அகப்பொருள் இயல் ஒன்றே சாலும் என்க. அஃது எத்துணை நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களை உட்கொண்டு, மக்களது முதல் நிலை தொட்டு வளர்ச்சி முறை ஒழுங்குகளைத் தெளித்துக் காட்டுகின்றது. நால்வகை நிலன் வகுத்ததும் அவற்றுக்கு உரிப்பொருள் கிளந்து கூறியதும் நுனித்தாராயற்பாலன. இக்கண்கொண்டு பார்க்கும் மதுகை இல்லார் தத்தமக்குத் தோன்றியவாறே கூறி ஒருதலைப்படாது இடர்ப்படுவர். மெய்ப்பாட்டுவமம், இறைச்சிப் பொருள் முதலியன எத்துணைச் சிறந்த நாகரிகம்பற்றி நிகழ்வன என்பதைக் கருத்தூன்றி யொருங்கி யுணர்க. கலைவழக்கு, கால் வழக்கு, கொடி வகை, அரசியல், மருத்தியல்பு, கோள்நிலை, குறிநூல், உறுப்புநூல் முதலிய யாவும் தமிழர் உணர்ந்தவையே என்பதற்கு உறுசான்றுகள் பல நூன்முகத்திற் கிடைக்கற்பாலன. முச்சங்கம் பாண்டி மன்னரான் நிறுவப்பட்டுத் தமிழ் ஆராயப்பெற்றது. இயற்றமிழுக்குச் சங்கம் இருந்தது போன்றே இசைக்கூற்றுக்கும் சங்கம் விளங்கியது என்பதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையாரின் கண்ணுள்ள ஏழிசைச்சூழல்புக்கோ என்னும் தொடர் மொழியும் இன்னும் சில காட்டுக்களும் ஏதுக்களென புலவர் ஒருவர் ஆராய்ந்து கூறினார். அவ்வாறே இசைச்சங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று. கூத்து நூல்களும் பல நிலவின என்பது உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் எடுத்தோதும் நூற்களான் அறியற்பாலன. இனி, இவ்வாறெல்லாம் தொன்மையும் மெல்லேரசையும் மன வமைதிக்கு இசைந்த பொருத்தமும் பரப்பும் நுண்மையும் விரிக்கத்தக்க தன்மையும் பிறமொழிக்கலப்பின்றித் தனித்தியங்கும் பேராற்றலும் சிறந்து விளங்குந் தமிழ் மொழியினை ஒன்றும் வேண்டாதார் சிலர், உண்மை காணும் விழைவின்றித் தமிழில் யாதும் இல்லை என்று வாய் கூசாது மொழிவர். அவரைத் தெருட்டுதல் மிகவும் அரிது என்க. தமிழிற்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்கள் பல இருத்தலின் அவையான் ஆக்கப்பட்ட மொழிகளைக் கேட்ட துணையானே வடமொழி என்பர். எல்லாவற்றையும் ஆரியம் என்று இவர் இன்புறுவது எற்றுக்கு? இவர் போல் ஏனையரும் நியாயமின்றிக் கூற முந்துவரேல் இவரது கொள்கை தலைசாய்க்கு மன்றோ. ஆகவே, ஒவ்வொருவரும் உண்மையினைப் பலதிறத்தானும் கூறுபடுத்து வைத்து ஆராய்ந்து கூறுதற்கு முயறல் வேண்டும். ஒரு சிலர் உண்மை கூறுவார் போன்று அவிநயித்துத் தமது கோட்பாடுகளையே சூழ்ச்சி வலியால் காட்டுவர். அஃது அறிஞர் கண்களுக்குப் பொள்ளெனத் தோன்றும் என்பதை அவர் உணர்வாராக. அல்லதூஉம் ஏனை நாடுகள் போலாது நந் தமிழ் நாட்டின்கண் மட்டும் மற்றெரரு பெருங்குறை காணப்படுகின்றது. அஃது அந்தணர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் அதனிற் புலவர்களாகப் பொலிந்தும் அது கொண்டு பிழைத்தும் பெருமையிற் சிறந்தும் அம்மொழிக்கட்பற்றின்றி இருத்தலாம். இக்குறை நீங்கின் நலம் பல பல்கும். தமிழ் முற்போந்து வளர்ச்சியடையும் மட்டில் தமிழ்நாடு தழையவே தழையாது என்பது முக்காலும் உண்மை. இனி, பிற்காலத்துச் சமய நூல்கள் வெளிப்பட்டு பற்றுமிக்குத் தமிழ்ச் சுவையினைப் பெரும்பான்மையும் குறைக்கத் தலைப்பட்டனவென்பது இழுக்காது. பல்லாயிரம் செந்தமிழ்ச் சொற்கள் விடுபட்டன. வடசொற்கள் கலந்தன. தமிழ்ச் சொல் ஒருவன் கருதியதனை இடத்துக்கு இசைய உணர்த்துவதாயிருப்பவும் அதனை விடுத்து வடசொல்லைப் பெய்துரைப்போன் தமிழ்க்குப் பெருந்தீங்கு இழைத்தவனாவான் என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் உள்ளத்தமைப்பாராக. தமிழ் நூல்கள் பாட்டுத்துறையிலும், உரை வகையிலும், ஆராய்ச்சித் திறத்தினும் பலப் பலவாகப் பல்குதல் வேண்டும். பழந்தமிழ் நூல்கள் செவ்வையாக அச்சிடப்பட்டு எல்லேரருக்கும் கிடைக்கத்தக்க வகைகளில் வைக்கப்படவேண்டும். தமிழர் இத்தகையமுயற்சிகள் செய்து தம் அருமருந்தன்ன மொழியினை வளர்த்து உலகின்புறக்கண்டு, தாமும் இன்புறுவாராக. இக்காலத்துத் தோன்றியுள்ள சில கிளர்ச்சிகளாலும் கருத்து நுட்பங்களாலும் தமிழ் முன்போல் பிறைமதிபோல் வளர்ந்து சிறக்கும் காலம் வந்து விட்டது என்று நினைத்துக் களிகூருகின்றோம். தமிழர் பல பழைய நூல்களைச் செப்பஞ்செய்து அச்சிடுகின்றனர். பலர் பாட்டியல்பை விளக்கி நிற்கின்றனர். பலர் பல வகை ஆராய்ச்சியிற் புக்கனர். காலஞ்சென்ற புலவர் பெருமான் கார்த்திகேய முதலியார் அவர்கள் போன்ற சான்றோர்களால் மொழி நூல் போன்ற தனியாராய்ச்சி நூல்கள் எழுவனவாயின. இத்தகைய காலத்துப் பதமமையக் காலை எழூஉங் கதிரவன் என்னத் தோன்றியது நம் நண்பர் தஞ்சை ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் கருணாமிருத சாகரம் என்னும் விழுமிய நூல். இஃது ஒவ்வொரு தமிழர் உள்ளத்தையும் உயிர்ப்பிக்கும் அமிழ்தத் துளிகள் பல அடங்கப் பெற்றுள்ள பரிய நூல் என்பதை ஒரு முறை நேரக்குவேரரும் தெள்ளத் தெளிய உணர்வர். நம் பண்டிதர் அவர்கள் பல ஆண்டுகளாகப் பெரிதும் முயன்று உழைத்ததன் பயனாக இச்சீரிய நூல் வெளிவந்துலவ நேர்ந்தது. செல்வமுடையாருள் பெரும்பான்மையோர் இக்காலத்துக் கல்வி என்னும் இன்பக் கடலுள் திளைத்தலைப் பெருங்குறையாக நினைக்கின்றனர். தமிழ் என்றால் கைப்பர்; புலவரென்றால் எள்ளுவர்; அங்ஙனமின்றி இவர்கள் தமிழ் மொழியின் கண் உண்மைப்பற்றுவைத்துழைத்துப் புலவர் பல தீட்டியுள்ள செழுந்தமிழ் நூல்களைத் துறைபோகக் கற்று நுணுக்கமாக ஆராய்ந்து செம்பொருளை உளங்கொள அமைத்துத் தமது நூலில் யாவரும் புலங்கொள விளங்க விரித்துள்ளார். தமிழின் தொன்மை குறித்து எழுதிய ஆங்கில நூலாசிரியன்மார் பலர் பொறித்த ஒண்பொருளை ஆங்காங்கு எடுத்துக்காட்டு கின்றனர். தமிழ்நாட்டைப் பற்றிய பல பொருள்கள் அதன்கண் பொதிந் துள்ளன. கடல்போல் பரந்து ஒளிரும் இதற்குக் கருணாமிர்த சாகரம், எனக் குறியிட்டமை சாலப்பொருந்தும் என்க. இயற்றமிழ்ச் சங்க வரலாற்றைத் திறம்பட முற்றும் எடுத்துக்காட்டுகின்றார். தமிழை இழித்துரைப்பார் கூற்றை நியாய வாயிலாகக் கண்டித்து அறிவு கொளுத்தும் நம் பண்டிதர் அவர்கள் நியாய வன்மை பெரிதும் பாராட்டற்பாலது. அங்ஙனம் போலிக் கொள்கைகள் பல பரிகரிக்கப்பட்டுள்ளன. இனி, இசைத்தமிழாராய்ச்சி குன்றிலிட்ட மணிவிளக்கென எஞ்ஞான்றும் ஒளியார்ந்து மிளிரும் பொலிவுபெற்றுத் திகழும் இதனைச் செவிக்கமுதென எவரும் போற்றல் வேண்டிக் கருணாமிர்த சாகரம், எனத் தலைக்குறி புனைந்தனரேர என்றும் எண்ணி மகிழ்கூர்ந்து உடல் பூரிக்கின்றோம். இவ்வாராய்ச்சியில் வடநூலின்கண் இசை நூலிற்கூறும் இருபத்திரண்டு சுருதி, நுட்பக் கணக்கிற்கு ஒத்துவாராமையைத் தேர்ந்து தெளிந்து அதனைக் கண்டித்துத் தமிழின்கண் சிலப்பதிகாரத்து உரை முகத்துக்காட்டியுள்ள சில குறிப்புக்களான் தமிழ்ச் சுருதி முறை இருபத்து நான்காதலே எல்லா நுட்ப திட்பங்கட்கும் இசைந்தது என்னும் உண்மையினை யாப்புறுத்து நிறுவியுள்ளார். இசை நுணுக்கம், இசைமரபு, பரிபாடல் முதலிய தொன்னூல் தேர்ச்சியும் மற்றைய நூல்களின் கூற்றுக்களையும் புடைபடவைத்துணர்ந்து பல கூரிய பொருள்களை வலியுறுத்திக் காட்டியுள்ளனர். இஃது ஆற்றவும் மதித்தன் மாலையது. காலக் கணக்கு வகையினையும் கோள்களின் நிலை இயக்கங்களையும் ஜீவசுரங்களின் தோற்ற வெரடுக்கங்களையும் நன்குணர்ந்து புதிது புதிதாகப் பல சுருதி பேதங்களைத் தாமே கண்டுணரும் திண்மையும் அமையப் பெற்றுள்ளார். இதனை நூலளவில் கண்டு மகிழ்தல் போதாதெனவுன்னித் தம் அருமைச் செல்விகளுக்கு இவற்றின் ஒட்ப நுட்பங்களைப் பயிற்றுவித்து அவர்களால் கேட்டு மகிழ்ந்து அநுபவ வாயிலாகவும் விளக்கிவருகின்றனர். அம்முறை இந்நூலில் செவ்வனம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் பொருட்டுத் தஞ்சை சங்கீத மஹாஜன சங்கம் ஒன்று நிறுவிப் பல சங்கீத வித்துவான்களை வருவித்துச் சிறப்புற நடத்திக்காட்டித் தமிழிசையின் ஒப்பற்ற உயர்வை யாவரும் உணரவைக்கின்றனர். இதனை வியந்து பல சங்கீத வித்வன்மணிகள் பாராட்டியுள்ளார்கள். அதுவேயுமன்றி, மக்கள் உடற்கூறு பஞ்சாக்கரத்தின்கண் அடங்கு முறை இந்நூலின்கண் விளங்கத் தீட்டப்பெற்றுள்ளது. தமிழ் இசைச் சிறப்பு இப்போது இனிது ஒளிர்வதாயிற்று. இத்துணை அருமைப் பாட்டை நந்தந் தமிழ்மொழி அமையப்பெற்றது நம்மவர் அருந்தவமன்றோ? அவற்றை உணராதிருத்தல் பெரும் பிழையாகும் என்பது மிகையாகாது. தமிழைப் பாண்டியரேபோல் இவர்களும் இன்னும் பன்னூலைத் தாமாக எழுதி வெளியிட்டும், பல நூல்களைப் பிரசுரித்தும், பலவற்றிற்கு உரை கண்டும், பலவற்றிற்கும் பனுவல் அவ்வத்துறைவல்லேரரால் எழுதுவித்தும் வளர்த்தல் வேண்டும் என்று விழைகின்றோம். இனி, இந்நூல் இனிமையான நடைபெற்றுத் தட்டற ஆற்றெரழுக்காக நடைபெறுகின்றது. நல்ல காகிதத்தில் முத்துப்போன்ற எழுத்துக்களால் அச்சிடப்பெற்றுக் கருத்துக்கழகு தருவதேபோல் கண்ணுக்கும் அழகையூட்டிக் கவர்கின்றது. தமிழர் ஒவ்வொருவர் பாலும் இஃது இன்றியமையாது இருத்தற்குரியதாகும். பல அரிய பொருள்களை ஓரிடத்து ஒருங்கே காட்டும் சிறப்புள்ளது. தமிழின்கண் இஃதோர் சிந்தா மணி என்று கூறுதல் உயர்வு நவிற்சியாகமாட்டாது. இஃது எஞ்ஞான்றும் நின்று நிலவவேண்டும் என்றும் இதனைப் படிக்கும் நண்பர்கள், தமிழ்ப் பெருமை உணர்ந்து கல்வியிற் சிறந்து அறிவுப் பெருஞ்செல்வம் தேக்கப்பெற்று இன்புறல் வேண்டுமென்றும் அதனான் இத்தமிழ்நாடு ஓங்கிப்பொலிதல் வேண்டுமென்றும் எல்லாம் வல்ல முழுமுதற் செழும்பொருளை மனமொழிமெய்களான் சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்றோம். நேரிசை ஆசிரியப்பா தொன்மை மென்மை தோற்றுபு விளங்கு நன்மை சான்ற நற்றமிழ் மாட்சி இருநில வரைப்பினி லினிதே துலங்க அருமை யறியா ரதனல முணர அழுக்கறு மாந்தர் இழுக்குற் றினையச் செந்தமிழ்ச் செல்வர் செவ்விய வின்பின் முந்துபு புக்கு நந்தாது திளைப்பத் தமிழ்நாட் டருமையுந் தவப்பல மேன்மையும் அமிழ்தென யாவரு மறிந்துளங் கூர இன்றமிழ் விழையார்க் கிருந்துயர் சேர நன்றுறு மொழியான் நற்பொருள் கொளுவித் தஞ்சை வாழுந் தமிழ்மணி யென்னும் விஞ்சை பொதிதரு வித்தக ஆபிரகாம் பண்டிதப் பெரியோன் பளகறு நூலாக் கண்டிதைக் கருணா சாகர மாக வையக் களித்து மகிழ்ந்தனன் மாதோ அன்னோன் எழுதிய அரும்பொருள் நூலும் இன்னேரன் றானு மிருங்கிளை யோடு துவன்றிப் பொலிந்து நிவந்த பேறுடன் தீஞ்சுவைத் தமிழைத் திருச்செவி யார்ந்து வாஞ்சை யோங்க வாழிய மாதோ காவிரி கரையிடு மாவிரி மணலினும் பலநா ளுலகினிற் பண்புற வாழிய மாதோ வாழிய மாதோ. எட்டையாபுரம் சமஸ்தானம் தெலுங்கு வித்வான் மகா-ராச-ராச-சிறி தி.சு. முருகேச பிள்ளை அவர்கள் அபிப்பிராயம். தஞ்சைமாநகர் மகா-ராச-ராச-சிறி ராவ் சாகேப் ஆ. ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதியுள்ள கருணாமிருத சாகரம் என்ற இசை நூலைக் கூடியவரை யான் பார்த்ததில் அந்நூல் இசைபயில் மாணவர் யாவர்க்கும் இன்றியமையாப் பயனளிக்கும் பெற்றியுடைத்து. அதனுட் பொருள்களெரவ் வெரன்றும் பன்னூலையுமெரருங்கேயாய்ந்து அவற்றின் கருப்பொருளைத் திரட்டிக் கூறப்பட்டுளது. தமிழ்மொழி மறுபுலச் சொற்களின் சார்பின்றித் தனியேயியங்கு மாண்புடைத் தனித் தொன் மொழியென்றும், அம்மொழிக்கோரணியென வெரளிரும் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்டுள்ள இசைத்தமிழிற் சார்ந்த ஆயப்பாலை முதலிய பன்னிரு பாலைகளாற் கிடைத்த பல்லாயிரம் பண்களுள் வட்டப்பாலையினடியாய்ப் பிறந்த பண்கள் இரண்டு சுருதி குறைத்து இருபானிரண்டு சுருதிகளோடு பாடப்படுகின்றனவென்றும், உண்மையில் ஒரு ஸ்தாயிக்கு இருபத்துநான்கு சுருதிகளே உள்ளனவென்றும் கூறியிருக்கின்றனர். தற்கால வழக்கிலிசைக்கப்படும் நரம்புக் கருவிகளுள் யாழிற்கிடக்கும் பன்னிரு வீடு (சுரங்) கட்கு வடமொழி இசை நூலாசிரியர் பல்லேரரும் தத்த நூற்களிற் கூறியுள்ள இருபத்திரண்டு சுருதிகள் அப்பன்னிரு வீட்டினும் ஒத்தியங்கும் அளவைக்காட்டாமையின், கணக்கிற்கொவ்வாவழி வழக்கிற் கெவ்வாறெரக்கு மென்ற ஐயப்பாடெரன்று என் மனதுட்டேரன்றிக் கிடந்தது. 22 சுருதிகளைப் பாகுபடுத்தலிலளவு ஒவ்வாவிடினும் 12 வீடுகளினெரலி யொத்தியல்கின்றது. ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கட்கு முறையே சுருதிகள் 4, 3, 2, 4, 4, 3, 2 என்ற வழி, யாழினிறுவிய வீடுகளில் ரி என்ற முதல் வீட்டிற்குச் சுருதிகள் 3, சுத்த காந்தாரமும் பஞ்ச சுருதி ரிஷப முமெரலிக்காநின்ற இரண்டாவது வீட்டிற்குச் சுருதிகள் 2, ஸாதாரண காந்தாரமும் ஷட்சுருதி ரிஷபமுமெரலிக்காநின்ற 3-வது வீட்டிற்குச் சுருதி 1; அந்தர காந்தார வெரலியைக் கிளப்பும் 4-வது வீட்டிற்குச் சுருதிகள் 2; சுத்த மத்தியம வெரலியை யெழுப்பும் 5-வது வீட்டிற்குச் சுருதி1 பிரதிமத்யமவெரலியைப் பிறப்பிக்கும் 6-வது வீட்டிற்குச் சுருதிகள் 3; பஞ்சமம் ஒலிக்காநின்ற 7-வது வீட்டிற்குச் சுருதி 1 என வடமொழி நூற்களிற் கூறப்பட்டுள்ளன. ஆகவே பூர்வாங்கத்தின் 1, 2, 3, 4, 5, 6, 7 வீடுகட்கு முறையே சுருதிகள் 3, 2, 1, 2, 1, 3, 1 எனக் கிடைத்தது. ஆயுங்கால், ஒத்த அளவைப்பெற்ற வீடுகட்கு ஏற்றத் தாழ்வான சுருதிகளெவ்வாறு பொருந்துமென்ற கடாவிற்கு எம்முறையானேர முன்னேரர் வகுத்த முறைக்கு நாம் எவ்வாற்றானெரழுங்கு படுத்தக்கூடும் எனத்தமிழ் இசை நூலைக் காண்டலும் பெறாத வடநூற் பயிற்சியார் பலரும் விடையளிக்கா நின்றனர். முதல் வீடுநிற்க, 2-வது வீட்டிற்குச் சுருதிகள் 2 என்றும் மூன்றாவது வீட்டிற்குச் சுருதி 1 என்றும் கூறின், தாழ்ந்த வெரலியையுடைய 2-வது வீட்டிற்குச் சுருதி 2 ஆயிருக்க அதைவிட வலித்தொலிக்கும் 3-வது வீட்டிற்கு அமைத்த சுருதி 1 என்பது எவ்வகைத்தானேர? நிற்க, யாழில் மேலே போகப் போக ஒன்றற்கொன்று யர்ந்த வெரலிக்கு அளவிடம் முறையே சற்றுக் குறைந்தேயிருத்தலால் 2-வது வீட்டைவிட 3-வது வீடு குறைவான சுருதியென ஒவ்வாவிடை புகல்வாராயின் 3-வது வீட்டைவிட உயரெரலியுடைய 4-வது வீட்டிற்கு மட்டும் அவ்வாறின்றி ஏற்றமான 2 சுருதிகளமைதலெங்ஙனேர? இவ்வாறே குறைந்துங் கூடியும் பகுக்கப்பட்டுள்ள சுருதிகளின் முறை முரணுடையது. இவ்விதம் அளவு முரண்பட்ட பாகுபாட்டையுடைய வீடுகள் ஒத்த அளவினையுடையன போலியொலி யொலிக்காநின்றனவென்பது மிக்கவியப்பே! இதனால், வடமொழி நூற்கண் கூறிய சுருதிப் பாகுபாடு நெறிதவறியதெனக் கோடலே சால்புடைத்தென விளங்குகின்றது. நம் பண்டிதரவர்கள் மிகவாராய்ந்தெடுத்தீந்த புதைபொருள் போன்ற தமிழ்ப் பண் முறையான 24 சுருதிகளே, மேற்கூறிய பன்னிரு வீடுகட்கும் வீடெரன்றுக்கு இரண்டிரண்டு சுருதிகளாய்ப் பகுத்த உண்மை நெறியே எமதையத்தை யொருங்கேயகற்றியது. ஒத்த அளவுடையனவாய்ப் பகுக்கப் பட்ட வீடு (சுரங்)களே இயலெரலியை யெழுப்பவல்லனவென்பது யாவர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையே. விரிவஞ்சி, பூர்வாங்கத்தைப்போல் உத்தராங்கத்தையும் விளக்காது விடுத்து, உலகுக்கோர்அரிய பெரிய நன்மை பயக்கத்தக்க இவ்விசைநூலைப்பற்றி உலகில் நிலவிய சுருதி சம்பந்தமான ஐயப்பாட்டை நீக்கி விளக்கியமைப் பலரும் கொண்டாடத்தக்கதென்றே சொல்லத் துணிந்தேன். (ஒப்பம்) முருகேசன், எட்டயாபுரம். திருநெல்வேலி திரிகூடராசப்பக்கவிராயர் பரம்பரையைச் சார்ந்தவரும் முன் இஞ்சினீருமாகிய காசி வாசி ஸ்ரீ முருகாநந்தம் சுவாமிகள் இயற்றிய வெண்பா. கீதத்தா லும்முத்தி கிட்டுமெனு முண்மையெலா நீதியா யீதி னிகழ்த்தினார் - ஆதரவா யண்டினரைக் காக்கவல ஆபிரகாம் பண்டிதரைக் கண்டார்க்கு மின்பமுறுங் காண் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப்பணிவிடை மகா-ராச-ராச-சிறி சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகளின் பரம்பரை மகா-ராச-ராச-சிறி சண்முக சுந்தர ஓதுவா மூர்த்திகளின் அபிப்பிராயம். தஞ்சாவூர் ராவ்சாய்பு ஆபிரகாம்பண்டிதரவர்கள் இயற்றிய "கருணாமிர்த சாகரம்" என்னும் நூலின் முதற்பாகத்தைப் பார்வையிட்டேன், அதில் இனிய தமிழின் பழமையான மூன்று சங்கங்களின் வரலாறுகளும் விரிவாய் விளக்கப்பட்டிருக்கின்றது. இயல், இசை, நாடகமென்னு முத்தமிழில் இசைத்தமிழின் ஏழிசை களையும் அவற்றிற்காதாரமாய் விளங்கும் இருபத்து நான்கு சுருதிகளையும், "பரிபாடல்கள்" "சிலப்பதிகாரம்" முதலிய சங்க நூல்களின் மேற்கோள்களைக் கொண்டு விளக்கி மற்றபாடையிற் கூறும் இருபத்திரண்டு சுருதிகள் நியாயத்திற்கும், அளவுப்பிரமாணங்களுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாமையை நன்கெடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும் தமிழ்வேதமென்னுந் தேவாரத்திருமுறையின் பண்களின் முறைகளையும் அவைகளை யோதவேண்டிய பாரம்பரியக் கிரமத்தையும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசை நூற்பயிற்சி செய்ய விரும்புவேரர் அனைவருக்கும் மிக்க பயன் படுவதுடன் இந்தியா தேசத்தில் 12000 வருடங்களுக்கு முன் சங்கீத மிருந்த வுயர்நிலைமையையுந் தெளிவுறுத்துகின்றது. ஆதலா லிந்நூலறிஞர்களனைவராலும் பாராட்டத்தக்கதே. Remarks of Mr. A.G. PICHAIMUTTHU, B.A., L.T., Headmaster, S. Peter’s High School. Organist, S. Peter’s, and Honorary Secretary to the Sangeetha Vidya Mahajana Sangam, Tanjore. It has been said against Indians that they generally lack originality and application. But this statement has been given the lie by the voluminous treatise on Indian Music, ‘Karunamirthasagaram’ written by Rao Sahib M.A. Pandither of Tanjore, S. India. Music is a subject fought shy of by many able scholars, who are experts in other departments, as it is highly technical in character. Those who are credited with a practical knowledge of it at the present day are those musicians who make it their means of livelihood, and most of these are utter strangers to the science of it. It is, therefore, a matter for extreme gratification that the author has combined in himself a complete knowledge of the Science and Art of Music, and has published this great work as the result of his disinterested labours. This exhaustive work which is the result of nearly 15 years of the author’s life, while dealing directly with the musical system of South India, throws a flood of light also on the literature and history of South India in general and that of the Tamil country in particular, as its literature and Music are inseparable. The indisputable originality displayed throughout the Book by the author, the innumerable authorities quoted in support of statements, the wealth of illustration he has brought to bear on various subjects, the fund of knowledge he possesses in many departments of life, the sparkling humour that now and then relieves the seriousness of such a technical work and the fearlessness and thoroughness with which the author establishes his theory on Srutis - all these clearly show his remarkable genius. The reader may find repetitions in many places, but the author has been quite conscious of them, and they have been made with the definite purpose of striking the ideas home. The author, no doubt, richly deserves a very high place among the literary writers of the day. The chief aim of the author is to show what the music of the ancient Tamil country was, and how modern Karnatic music is its counterpart. In this he has admirably succeeded. He proves by apt quotations from Tamil works, after careful study, how in the ancient Tamil music of S. India, the Octave was divisible into a number of equal tones. This is his fundamental position. This fact is supported by no less an authority than the great Sanskrit writer on Indian Music - Sarnga Dev of Kashmere - who lived about the 13th Century A.D. According to Sarnga Dev the Swarams of an Octave should be a gradually ascending series arranged like the equal rungs of a ladder without the possibility of admitting any other sound between. According to the author, the Octave is so divisible into 12, 24, 48 and 96 equal intervals, the series in all cases rising gradually by G.P. The author not only supports this theory by minute mathematical calculations, logarithams, decimals down to eight places as regards length of string, number of vibrations, cents etc., but it has also stood the rigid test of practice and demonstration vocally as well as on instruments. The practical side of it will be clear even to a close reader of the book, but to those who have actually witnessed the demonstration thereon the truth, of this will be quite evident and they will certainly testify that there could be no other system of music possible. Any ordinary Indian musician will accept that the Octave is divisible into 12 equal intervals, that a number of Indian Ragas are sung in these 12 Swarams only and that when change of Graham is made many different Ragas result from the process. This one fact alone strikes at the root of any theory which advocates unequal and irregular intervals for Indian music. In the course of the treatise the author, condemns the theory of 22 Srutis for the Octave and says that the advocates of it altogether misinterpret their leader Sarnga Dev and that their confusion is worse confounded by the fact that ganam in ancient India was made in the 22 Srutis of the series 24. I should personally like to see an array of these advocates with their Srutis and instruments in front of them. No two of them will agree as to the location of the different Swarasthanams. If they begin to argue they will be cutting each other’s throats in two minutes! A look into page 416 of the book will convince one of the truth of my statement. Except for the Swaram SA and its Octave there will be no unanimity! Many readers may think there is not much difference between the 22 and the 24 Srutis. It is not so. The two series are entirely different. All ancient and modern Karnatic Ragas are sung in the 24 Srutis only. The series 22 is only in the imagination of the singer! The professionals sing in the 24 Srutis only, but they are unconscious of the fact. If the advocates of the Dwavimsati Srutis would examine the Srutis they are using in singing, they will find that their theory is one thing and their practice another! If they accept the Saptaswarams, the 12 Swarams of the octave, the mother ragas derived from them and the principle of change of graham - which most of them do accept - then the 22 Srutis exist nowhere. The members of this school along with Mr. Clements, their captain, base their theory on the system of obtaining their so called harmonic or natural series by proceeding by perfect fifths or taking 2/3 the length of the string for each step or by the SA PA principle. But, to speak the truth, a few steps of this progression will land them in difficulties and they will tumble into the ditch! and never live to see the end of the Octave! How could the product of a recurring decimal like 2/3 ever come to an end? English musicians know that progression by fifths can never completely end the octave unless some manipulation is made. Piano tuners always tune the pianos by slightly flattening the fifths or else the perfect fifths in the course of progress will gather momentum and the result will be like the howling of the wolf! ‘Beware of the wolf” is the caution given to Piano tuners! The trouble will commence even at the third step when you come to decide the interval from D to A and from A to E. From this step forwards a number of artificial aids will be necessary such as cutting down a few vibrations here and there to keep up the farce of the progression by 2/3!! This is why they cry down artificial intervals and say that “Artificial music is an abomination”. I quite endorse this opinion and say, “yes, it is execrably so”. Only he advocates of the 22 srutis have recourse to this abomination. But the author does not base his system on this “equalised abomination” but establishes the existence of a gradually ascending equal series in nature which was in vogue among the Tamilians for centuries. The demonstration of the practical side of this system has been very ably done on several occasions by the author’s two daughters Srimati Maragathavalli Ammal and Kanagavalli Ammal, about whose admirable efficiency in Indian and English music I can personally testify. The author has given a number of tables and statements which give the calculations & c., of the various systems, reducing them all to one common standard (32 inches wire) for purpose of easy comparison, and also Rasi chakrams where his series are arranged in the four Palais of the ancient Tamils. This part of his work reflects, in a remarkable degree, the intelligence and patience of the author. A close study of them will be well worth the trouble. The Indian is a highly conservative being, and any theory, whether right or wrongs, which has been honoured by time will never be easily given up by him. Yet in the midst of this conservative nation we find many rational beings who are not afraid to proclaim the truth from the housetops when they know it to be true. It is a matter for pride that the truth of this theory has been accepted by such distinguished musical experts like Seshanna and H.P. Krishna Row of Mysore, Veenai Venkataramanadoos of Vijianagaram, Mutthaya Bhagavater of Harikasavanallur and others. Truth will triumph. I have not the slightest doubt that the publication of this book, thought it may cause a fllutter in the dovecotes of the Dwavimsatiites, will be an epoch making event in the history of the Music of South India. That it will create a wide interest in musical circles is certain. But, I hope, it will popularise the ancient Yal or the Veena used so much by the ancient. Tamils on account of its capability to reproduce faithfully the human voice and the minutes Srutis. It is sure to rouse the Karnatic Music from its present lethargy; it is sure to rescue it from the hands of the few professionals who blindly follow it and keep it as their heritage and throw its portals open to all without distinction of caste or creed so that it may become a part of the daily life of every Indian. Ist May, 1917. (Sd.) A.G.. PICHAIMUTTHU. தஞ்சை, சென்ற் பீற்றர்ஸ் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டரும் சென்ற் பீற்றர்ஸ் சர்ச் ஆர்கனிஸ்றுமான Mr. A.G. பிச்சைமுத்து B.A., L.T., அவர்களின் அபிப்பிராயம். இந்தியர்கள் புதிதான ஒரு காரியத்தைச் செய்வதிலாவது அதற்கென்று பிரயாசப்படுவதிலாவது ஏலாதவர்கள் என்று அவர்கள்மேல் சாதாரணமாய்க் குறை கூறுவதுண் L.ஆனால் தஞ்சை, Rao Sahib M.A, பண்டிதரவர்கள் இயற்றிய கருணாமிர்தசாகரம் என்ற இந்தப்பெரிய இசைத்தமிழ் நூலைப்பார்ப்பவர்க்கு அப்படிச் சொல்லுவதானது பொய்யென்று விளங்கும். சங்கீதம் அருமையான சாஸ்திரமானதால் மற்ற சாஸ்திரங்களில் தேர்ந்த நிபுணருங்கூட சங்கீத மென்றால் விலகிவிடுவார்கள். தற்காலம் அந்த வித்தையில் தேர்ந்தவர்கள் என்று எண்ணப்படும் வித்வான்களுங்கூட அதை வயிற்றுப்பிழைப்பிற்காக உபயோகிப்பதால் அவர்களில் பெரும்பான்மையோருக்கு சாஸ்திர விஷயம் கிஞ்சித்தேனும் தெரியாது. காரியங்கள் தற்காலம் இந்நிலைமை யிலிருக்கையில், நம்முடைய நூலாசிரியர் சங்கீத சாஸ்திரத்திலும் அதை அனுபோகமாய் உபயோகிக்கும் முறையிலும் நிபுணராயிருக்கிறார் என்று இந்த நூலினால் வெளியாவது மல்லாமல், யாதொரு பிரதி உபகாரத்தை எண்ணி இதைச் செய்யவில்லை யென்றும் தெரிகிறபோது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியுண்டாகிறது. இந்தப் பெருநூலை எழுதுவதில் இந்நூலாசிரியர் 15 வருஷம் இடை விடாமல் உழைத்திருக் கிறார்கள். இந்நூலானது தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி நேராய்ச்சொல்லுவதோடுகூட தென்னிந்திய சரித்திரத்தையும் அதன் பூர்வ நூல்களையும் பற்றிப் பெருக்கமாய்ப் பேசுவதுமல்லாமல் விசேஷமாய்த் தமிழ் நாட்டின் சரித்திரத்தையும் யாவருக்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச்சொல்லுகிறது. ஏனென்றால் தமிழ் நாட்டின் நூல்களையும் சங்கீதத்தையும் பிரித்துச் சொல்லுதல் கூடாத காரியமன்றோ? முதல் தொடங்கி புத்தகத்தின் கடைசிவரை சொல்லப்பட்டிருக்கும் புதிது புதிதான விஷயங்களையும், விஷயங்களை ஸ்தாபிப்பதில் நூலாசிரியர் உபயோகித்திருக்கும் கணக்கில்லாத மேற்கோள்களையும், அபிப்பிராயங்களை மனதில் படும்படி சொல்லுகிற விஷயத்தில் உபயோகித்திருக்கும் ஏராளமான உபமானங்களையும், அநேக சாஸ்திரங்களில் நூலாசிரியர் அடைந்திருக்கும் பாண்டித்தியத்தையும், இடைக்கிடையே மனக்கிளர்ச்சியை யுண்டுபண்ணும் படிக்காக அவர்கள் உபயோகித்திருக்கும் சிலேடைப்பிரயோகங்களையும் (அவையில்லாவிட்டால் புஸ்தகம் படிக்கக் கஷ்டமாய் இருக்குமே) சற்றும் பயமின்றி தன்னுடைய அபிப்பிராயத்தை முற்றிலும் சரியாக ஸ்தாபிக்கும் மேரையையும் நாம் நேரக்கும்போது, நூலாசிரியருடைய ஆச்சரியப்படத்தக்க பாண்டித்தியம் நன்கு விளங்கும். இந்நூலை வாசிப்பவர்கள் அங்கங்கே சில காரியங்களைத் திரும்பத்திரும்பச் சொல்லியிருப்பதைக் காணலாம். ஆனால் நூலாசிரியர் வேண்டுமென்றே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிச் சொன்னால்தான் காரியங்கள் நன்றாய் மனதிற்குப்புலப்படும் என்பதற்காகவே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளை யெல்லாம் நாம் கவனிக்கும்போது தற்கால நூலாசிரியருள் இவர்களுக்கும் ஒரு பெருமையான இடம் கிடைக்கவேண்டியது என்று சந்தேகமறச்சொல்லலாம். நூலாசிரியரின் முக்கிய நேரக்கம் பூர்வதமிழரின் கானம் இன்னது என்று எடுத்துச் சொல்வதும், தற்கால கர்நாடக ச்ங்கீதத்திற்கும் அதற்குமுள்ள ஒற்றுமையை ஸ்தாபிப்பதும் தான். இதுவிஷயத்தை ஆச்சரியப்படத்தக்க விதமாய்ச் சரிவர செய்து முடித்திருக்கிறார்கள். ஆதித்தென்னிந்திய சங்கீதத்தில் ஒரு ஸ்தாயி எப்படி சமமான இடைவெளிகளுள்ள சுருதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததென்று பூர்வ தமிழ் நூல்களின் தகுதியான மேற் கோள்களைக் கொண்டு வெகு ஜாக்கிரதையுடன் ஸ்தாபிக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய முறைக்கு ஆதார அபிப்பிராயம். இதை ஸ்தாபிக்கும் விஷயத்தில் அவர்களுக்கு அகப்பட்ட பெரிய ஆதாரம் ஏதென்றால் சங்கீத சாஸ்திரத்தைச் சமஸ்கிருத பாஷையில் எழுதினவரும், யாவராலும் பெரிய சங்கீத நூலாசிரியரென்று ஒப்புக்கொள்ளப்படுபவருமான காஷ்மீர் தேசத்தைச் சேர்ந்த சாரங்கதேவர்தான். இவர் 13-ம் நூற்றாண்டில் இருந்தவர். சுருதி விஷயமாய் இவர் சொல்லுவதென்னவென்றால், ஒரு ஸ்தாயியிலுள்ள சுரங்கள் ஒன்றற்கொன்று தீவிரமாய் படிப்படியாய் ஒரு ஏணியின் பழுக்களைப்போல சம அளவுள்ளவைகளாய் நடுவில் வேறு சுரங்கள் வர இடமில்லாமல் ஒழுங்கானவையாயிருக்கவேண்டும் என்பதே. இதற்கிசைந்தே நம்முடைய நூலாசிரியரும் ஒரு ஸ்தாயியை 12, 24, 48, 96 சமபாகங்களாகப் பிரிக்கிறார்கள். சுரங்கள் எல்லாம் ஒழுங்காய் ஒன்றற்கொன்று தீவிரமாய் Geometrical Progression இல் அமைகின்றன. இந்த அபிப்பிராயத்தை ஸ்தாபிப்பதில் நுட்பமான கணக்குகளும், லாகிரிதமும், எட்டுஸ்தானம் வரை தசாம்ஸ பின்னங்களும், தந்தியின் நீளமும், ஓசை அலைகள் சென்ட்ஸ்களின் கணக்குகளும் கொடுக்கப்பட்டிருப்பது மாத்திரமல்ல, அவைகள் முற்றிலும் சரியென்று பாடியும் வீணை முதலிய வாத்தியங்களில் வாசித்தும் ருசுப்படுத்தியிருக்கிறார்கள். புஸ்தகத்தைக் கவனமாய் வாசிக்கும் எவரும் அவர்கள் அபிப்பிராயம் அனுபோகத்திற்கு ஒத்திருக்கிறது என்பதைப் புஸ்தகத்திலிருந்தே எளிதில் கண்டுகொள்வார்கள். ஆனால் அவர்கள் செய்து காட்டிய ருசுவை நேரில் பார்த்தவர்களுக்கு அந்த முறையின் உண்மையும் அதைவிட வேறுவிதமான முறையெங்கும் அகப்படாது என்ற சத்தியமும் உடனே மனதில் உதிக்கும். எந்த இந்திய சாதாரண சங்கீத வித்வானும், ஒரு ஸ்தாயி 12 சம பாகங்களாகப் பிரிக்கப்படுகிறதென்றும், கணக்கில்லாத இந்திய இராகங்கள் இந்த 12 சுரங்களிலேயே பாடப்படுகின்றனவென்றும், கிரகமாற்றும் பொழுது இந்த 12 சுரங்களிலிருந்து வெவ்வேறு இராகங்கள் ஜனிக்கின்றன என்றும் தடையில்லாமல் ஒப்புக்கொள்வான். இந்திய சங்கீதம் ஒழுங்கற்ற இடைவெளிகளுள்ள சுரங்களாலானது என்று சொல்லும் எந்த முறையையும் அடியோடே வெட்டிச் சாய்ப்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளுண்டு என்று சாதிக்கும் கொள்கைக் காரரை மறுக்கிறார் நூலாசிரியர். சாரங்கதேவர் சொல்லுவதின் கருத்தை மற்றவர் தப்பாய் அர்த்தம் பண்ணினார்களென்று போதுமான நியாயங்காட்டிச் சொல்லுகிறார். பூர்வ இந்தியாவில் 24 சுருதிகளில் 22 சுருதியில் தமிழர் கானம் பண்ணினார்கள் என்ற அபிப்பிராயமும் இதோடே சேர்ந்தவுடன் பெரிய குழப்பமாய் முடிந்தது. துவாவிம்சதி சுருதிக்காரரில் சில வித்வான்களையும் அவர்களுடைய சுருதிகளையும் வாத்தியங்களையும் என் முன் நேரில் பார்க்க விரும்புகிறேன். உடனே அவர்களுடைய வெட்டவெளிச்சமெல்லாம் தெரிந்துவிடும், அவர்களுடைய சுரஸ்தானங்களைப்பற்றி இரண்டு பேர்கூட ஒற்றுமையான அபிப்பிராயம் சொல்லமாட்டார்கள். தர்க்கம்பண்ண ஆரம்பித்துவிட்டாலேர இரண்டு நிமிஷத்திற்குள் ஒருவர் கழுத்தை யொருவர் அறுத்துக் கொள்வார்கள். நான் சொல்லுவது நிஜமோ தப்போ என்று அறியவேண்டு மென்று விரும்புகிறவர்கள் இந்நூல் கருணாமிர்த சாகரத்தில் பார்க்கலாம். சட்ஜமத்தையும் மேல் சட்ஜமத்தையும் தவிர மற்ற எந்த சுரங்களிலாவது ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லையென்று அங்கே தெளிவாகக் காண்போம். சங்கீதந் தெரியாதவர்கள் 22 சுருதிக்கும் 24 சுருதிக்கும் அதிக வித்தியாச மில்லையென்று நினைப்பார்கள். அது தப்பு. இரண்டு சுரவரிசைகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தமில்லை. பூர்வ கர்நாடக இராகங்களும் தற்காலம் உபயோகத்திலிருக்கும் கர்நாடக இராகங்களும் பாடப்படுவது 24 சுருதிகளில் தான். 22 சுருதிகள் அந்தக் கொள்கைக்காரரின் மனதில் மாத்திரம்தான் இருக்கிறது. உண்மையாகவே அவைகள் வேறெங்கும் இல்லை. சங்கீத வித்வான்கள் பாடுவதெல்லாம் 24 சுருதிகளில்தான். ஆனால் அவைகளில் பாடுகிறோமென்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பாடும் சுருதிகளை ஆராய்ந்து பார்ப்பார்களானால் தாங்கள் சாதிப்பது ஒன்று பாடுவது வேறொன்று என்று அறிவார்கள். சப்தசுரங்கள், ஸ்தாயிக்கு 12 சுரங்கள், அவைகளில் உண்டாகும் தாய் இராகங்கள், கிரகமாறுதல் உண்டு என்னும் முக்கியமான சங்கதிகளை ஒப்புக்கொள்வார்களானால் - பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்வதும் வாஸ்தவம்-22 சுருதிகள் என்ற சுருதிக்கொள்கை எங்கும் இராது. இந்தக் கொள்கைக்காரர், அவர்களுடைய காப்டனாகிய கிளமெண்ட்ஸ் துரையுள்பட, ச-ப, ச-ப வாக 2/3 , 2/3 ஆகப் போவதினால் தங்களுடைய ஆர்மோனிக் சுரஸ்தானங்கள் கிடைக்கின்றன என்று சாதிக்கிறார்கள். ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால் இப்படி இரண்டடி தூரம் போவார்களானால் அவர்கள் எல்லாரும் திடீரெனக்குழியில் விழுவார்கள். ஸ்தாயியின் முடிவைக் காணமாட்டார்கள். தலையிலும் பக்கத்திலும் புள்ளியோடு திரும்பத் திரும்ப வரும் தசாம்சபின்னமாகிய 2/3 எப்படி முடிவுக்கு வரும்? இங்கிலீஷ் சங்கீதம் தெரிந்தவர்கள், ஐந்துஐந்தாகச் சுரங்களைக் கண்டுபிடித்துக் கொண்டுபோகும்போது சிற்சில குறைத்து வைக்காமல் போனால் ஸ்தாயி முடிவுக்கு வராது என்று அறிவார்கள். பியானாவின் சுரங்களுக்குச் சுருதி சேர்க்கும்போது அதைச் செய்பவர்கள் ச-ப வாக வரும் ஐந்துகளைச் சற்றுக்குறைத்து வைத்துக்கொண்டே போவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் ச-ப முறையாய் வரும் ஒவ்வொரு சுரமும் வர வரக் கூடிக் கடைசியில் ஓனாய் ஊளை போலாய்விடும். ஆகையால் "ஓனாய் வராமல் பார்த்துக்கொள்." என்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மூன்றாவது அடுக்கிலேயே அதாவது ரிஷபத்திலிருந்து தைவதமும், தைவதத்திலிருந்து காந்தாரமும் உண்டாகும் போதே துன்பம் ஆரம்பித்து விடும். அப்பொழுது அதைச்சரிப்படுத்தும்படி அங்கே கொஞ்சம் ஓசை அலைகளையும் இங்கே கொஞ்சம் ஓசை அலைகளையும் குறைத்துச் சிம்புகட்ட நேரிடும். அப்படிச் செய்யாவிட்டால் 2/3 ஆகப் போகிறதென்ற கூத்து முடிவுக்கு வராதே! இதற்காகவே "கைகளால் செய்யப்பட்ட சுருதிகளுள்ள சங்கீதமானது அருவருப்பு" என்று சொல்லப்பட்டிருக்கிறது. நானும் அது சரியென்று சொல்லி ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நூலாசிரியர் 22 சுருதிக்காரர்களைப் போல இப்படிக் கைகளால் செய்யப்பட்ட சுருதிகளாலான அருவருப்பைத் தன் முறைக்கு ஆதாரமாகக் கொள்ளாமல் பூர்வ தமிழருக்குள்ளே வழங்கி வந்ததும் சம இடைவெளிகளுள்ளதும் ஒன்றற்கொன்று தீவிரமாய் இயற்கையிலே உள்ளதுமான சுருதிகளாலான தன் சங்கீத முறையை ஸ்தாபிக்கிறார். இந்த முறையானது அநேக தடவைகளில் நூலாசிரியரது குமாரத்திகள் ஸ்ரீமதி மரகதவல்லி அம்மாளாலும் கனகவல்லி அம்மாளாலும் விஸ்தாரமாய் ருசுப்படுத்திக் காட்டப் பட்டிருக்கிறது. இந்த இரண்டு பெண்மணிகளும் இந்திய சங்கீதத்திலும் இங்கிலீஷ் சங்கீதத்திலும் அடைந்திருக்கிற ஆச்சரியப்படத்தக்க விதமான பாண்டித்தியத்தைப் பற்றி நான் நேரில் நற்சாட்சி கொடுக்கக்கூடும். இவைகளையல்லாமல் நூலாசிரியர் அநேக Tables, Statements முதலியவைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இவைகள் பல முறையையும் 32 அங்குலம் என்ற ஒரே முறைக்குக் கொண்டுவந்திருப்பதால் பற்பல முறைகளை எளிதில் ஒத்துப்பார்ப்பதற்கு உபயோகமாயிருக்கின்றன. இவைகள் பல முறைகளின் கணக்கு முதலியவற்றைச் சொல்லுகின்றன. இவைகளையல்லாமல் பூர்வதமிழரின் 4 பாலைகளிலும் சுரவரிசைகளைக் காண்பிப்பதற்கு இராசிச்சக்கரங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டு நூலாசிரியருடைய புத்தி கூர்மையும் பொறுமையும் இன்னதென்று இலேசில் அறிந்துகொள்ளலாம். அவைகளைக் கவனமாய்ப் படிப்பவருக்கு அவர்கள் அதில் செலவழித்தத காலம் வீண்போகாமல் பயனையுண்டாக்கும். பழையகாரியங்களே திறம், அவை சரியோதப்போ, வெகு காலம் அவைகள் இருந்தபடியால் அவைகளையே சரியாகக் கொள்ளவேண்டும், இலேசில் விட்டுவிடக்கூடாது என்பது இந்தியரின் இயற்கை. இப்பேர்ப்பட்ட இயற்கையுடைய ஜாதியின் மத்தியில், ஒரு காரியத்தை உண்மையென்று அறிந்த பிறகு அதைக் கூரைகளின்மேல் நின்று யாவருக்கும் தெரிய பிரஸ்தாபிக்க பயப்படக்கூடாது என்று நினைக்கும் அநேக ஞானிகளைப் பார்க்கிறோம். இந்த முறை சரிதானென்று பேர்போன சங்கீத வித்வசிரேரமணி களாகிய மைசூரைச் சேர்ந்த மகா-ராச-ராச-சிறி சேஷண்ணா, மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ், விஜயநகரம் மகா-ராச-ராச-சிறி வீணை வேங்கட ரமணதாஸ், மகா-ராச-ராச-சிறி முத்தையாபாகவதர் முதலியவர்கள் ஒப்புக் கொள்வதானது நமக்குப் பெருமையே, சத்தியம் ஜெயம் பெறுமல்லவா? இந்த நூலின் பிரசுரமானது துவாவிம்சதி சுருதிப் புறாக்கூட்டங்கள் தங்கள் சிறகுகளை அடித்துப் பீதியை அடையும்படி செய்த போதிலும் தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒரு முக்கியமான புது உயிர்கொடுத்த சம்பவமாய் இருக்குமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை. சங்கீதம் அறிந்தவர்களுக்குள் இது ஒருவித மனக்கிளர்ச்சியையும் பிரீதியையும் உண்டுபண்ணும் என்பது நிச்சயம். ஆனால் இதன் மூலமாய் பூர்வ தமிழருக்குள் மனிதசாரீரத்தையும் நுட்பமான சுருதிகளையும் அப்பட்டமாய் சப்தித்துக்காட்டக்கூடிய யாழ் அல்லது வீணை அதிகமாய் உபயோகிக்கப் பட்டதுபோல தற்காலமும் அது உபயோகிக்கப்பட்டுவருமானால் நலமா யிருக்கும். க்ஷீணித்துப்போன கர்நாடக சங்கீதத்தைத் திரும்பவும் உயிர்ப் பிக்கவும், தற்கால சங்கீதத்தைத் தங்களுடைய சொந்த செல்வமாகப் பூட்டி வைத்து அதைக் குருட்டுத்தனமாய் உபயோகிக்கும் வித்வான்களின் கையிலிருந்து தப்புவிக்கவும் ஜாதி மதவித்தியாசமில்லாமல் யாவரும் படிப்பதினால் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் அது உபயோகப்படுத்தப்படவும் இந்த நூல் பிரயோஜனமாயிருக்குமென்பது நிச்சயம். (ஒப்பம்) A.G. பிச்சமுத்து Opinion of Mr. N.P. SUBRAMANIA IYER, M.R.A.S., Journalist Author of “Astrological Series” Secretary, Sangeetha Vidya Mahajana Sangam, etc. Tanjore. Having had the good fortune to follow closely, for years, the labors undertaken by Mr. Pandither for the solution of the problem of the number of Sutis in the Hindu musical scale, I am thoroughly convinced of the immense value of this book to the enrichment and advancement of Indian music. It is, I think, safe to assert that a knowledge of the Srutis is an important factor in the ground-work of musical training. It is the law of the Srutis that makes Music an art, and a knowledge of that law is so much capital, held in reserve, against the encroachments of inharmony, however cleverly concealed. We have too few among professional musicians to-day who have a taste to cultivate a knowledge of the scienctific side of the art. That there are but 22 Srutis for the Octave is to them an inherited theory which lies somewhere at the back of their minds, but neither in vocal nor in instrumental music are they able to express the twenty two Taking this theory as a text, Mr. Pandither examines each assertion with the fairness of one trained to critical methods and with the exactness of a scientist, and we have a full and luminous presentation of the theory of 24 Srutis for the Octave, as also of the minute Srutis, 48 and 96. I am aware that this theory, so lucidly maintained in the pages of this book, has proved disquieting to the so-called votaries of the 22. But to talk of 22 without being able to demonstrate it, it in any manner, and, at the same time, to attack the conclusions of one who has handled the problem in a reverent andserious spirit is compatible neither with national pride nor with professional sincerity. The book is replete with information that must add to the culture of the reader while the historical facts, the tables and the illustrations lead him from page to page with increasing fascination. The reader is brought into touch with the civilization of the ancient Tamils and the marvellous efficiency attained by them in the practice of Music. This is another merit about the book and herein we see that the system of 24 Srutis is no forcible creation or re-arrangement but rather an interpretation of the ancient Tamil works whichallude to the theory of 7, 12, 24, 48 and 96 Srutis-a system which flourished in the blood of our ancestors thousands of years ago. No examination of Mr. Pandithers theory of 24 and the minute Srutis could have been more thorough than the one that was held at the All India Music Conference in Baroda, last year. There the exposition of the theory appealed to the reason of every one in the grand assemblage of musicians, while the practical demonstration thereof, by the accomplished daughters of Mr.Pandither, elicited unqualified praise. Similarly, the demonstration in the Palace, in the presence of their Highnesses the Gaekwar and the Maharani, in response to their special invitation, was a unique success. I had the happiness of being present on both, among many other, occasions. At the 7th Conference of the Sangita Vidya Mahajana Sangam, the theory and its practice, the mathematical calculations of Swarams and other details were minutely gone into by experts who were qualified to pronounce an opinion on the different aspects of the question. And, as will be seen from the following pages, they have borne unanimous testimony to the soundness of the theory and the conformity of the practice to the same. Scepticism and timid conservatism may feel dissatisfied and try to impair the value of the work, for some time, but the secrets of the science lay open to those who study it in a disinterested spirit, unhampered by prejudice. It is they who will try to follow in the footsteps of careful thinkers like Mr. Pandither who has spoken at length after years of painstaking and extensive research. (Sd.) N.P. SUBRAMANIA IYER. மகா-ராச-ராச-சிறி N.P. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் அபிப்பிராயம். இந்திய சங்கீத ஸ்தாயியில் வழங்கும் சுருதிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்த விஷயத்தில் Mr. பண்டிதரவர்கள் அநேக வருஷங்களாகச் செய்த முயற்சியை நேரில் பார்க்கும் சிலாக்கியத்தை நான் அடைந்தவனானதால் இந்தப் புத்தகம் இந்திய சங்கீதத்தை வளரச்செய்யும் விஷயத்திலும் அதற்கு அரிய பல விஷயங்களைச் சேர்க்கும் விஷயத்திலும் அதிக பிரயோசனத்தைத் தருமென்று நிச்சயமான அபிப்பிராயம் கொண்டிருக்கிறேன். சங்கீதத்தை அப்பியாசிக்கும் விஷயத்தில் எல்லாவற்றிற்கும் முக்கியமான மூல ஆதாரம் சுருதிகளைப்பற்றிய ஞானம்தான் என்று தடையில்லாமல் சொல்லலாம். சுருதிகளைப்பற்றிய பிரமாணமே சங்கீதத்தை அனுபவத்துக்கேற்ற ஒரு சாஸ்திரமாக்குகிறது. காதுக்கு இனிமையற்ற சங்கீதத்தை எவ்வளவு மூடிவைத்துப் பிரயோகம் பண்ணினபோதிலும் அது சரியான சங்கீதத்தைக் கெடுத்துவிடாதபடி இந்தச் சுருதிப் பிரமாணமானது எப்போதும் கையிலிருந்து உதவுகிற மூலதனம்போலிருக்கிறது. தற்காலம் சங்கீதத்தை வயிற்றுப் பிழைப்புக்காக உபயோகிக்கிற அநேகர் அதை அனுபோக சாஸ்திரமாக விருத்திக்குக்கொண்டு வருவதற்கு வேண்டிய சக்தியில்லாதவர்களா யிருக்கிறார்கள். ஸ்தாயிக்கு 22 சுருதிகள் உண்டென்ற அபிப்பிராயம் வம்ச பரம்பரையாய் அவர்கள் ஒப்புக்கொண்டு வந்த ஒரு கொள்கையாய் அவர்கள் மனதில் மாத்திரம் இருக்கிறதேயல்லாமல் அந்தச் சுருதிகளை வாயினால் சொல்லியாவது வாத்தியங்களில் வாசித்தாவது காட்டமுடியாதவர்களா யிருக்கிறார்கள். இந்தக் கொள்கையைப் பண்டிதரவர்கள் தன்முன் வைத்துக் கொண்டு அதைப்பற்றிப் பலரும் சொல்வதை ஒரு சாஸ்திரியின் நுண்மை யுடனும் தகுதியான ஆராய்ச்சியுடனும் எடுத்துக் கண்டித்திருக்கிறது மல்லாமல், ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகளும் மற்றும் நுட்பமான 48, 96 சுருதிகளும் உண்டென்னும் முறையைத் தெளிவாகவும் விஸ்தாரமாகவும் எடுத்துச் சொல்லி ஸ்தாபிக்கிறார்கள். இவ்வளவு தெளிவாய் இந்தப் புத்தகத்தில் இந்த முறையைச் சொன்னதானது 22 சுருதிக்காரர் மனதில் ஒருவிதக் குழப்பத்தையுண்டு பண்ணினதென்பது எனக்குத் தெரியும். 22 சுருதிகள் என்று சொல்லிக்கொண்டு அதை ருசுப்படுத்த முடியாமல் விழிப்பதும், அதே சமயத்தில் அந்த முறையைச் சங்கியையோடும் பக்தி விநயத்தோடும் ஆராய்ச்சி செய்தவர்களுடைய முடிவான அபிப் பிராயங்களைக் காரணமில்லாமல் எதிர்ப்பதும் நம்முடைய குலத்தின் பெருமைக்காவது சங்கீதத்தைக் கையாளுபவரின் உண்மைக்காவது அழகல்ல. புஸ்தகமானது பல விஷயங்களைப்பற்றி ஏராளமான குறிப்புகளுள்ள தானதால் வாசிப்பவருடைய அறிவை விருத்தி செய்யக் கூடியது. அதிலுள்ள சரித்திர விஷயங்களும் அட்டவணைகளும் உபமானங்களும் வாசிக்க வாசிக்க மனதை வசப்படுத்தக்கூடியவை. ஆதித்தமிழருடைய நாகரீகம், சங்கீத விஷயத்தில் அவர்கள் அடைந்திருந்த ஆச்சரிய விதமான பாண்டித்தியம் முதலிய விஷயங்கள் வாசிப்பவருக்குத் தெளிவாய்த் தெரியும். புஸ்தகத்தைப் பற்றிய இன்னெரரு முக்கியமான புகழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் சொல்லும் 22 சுருதிகள் முறை கட்டாயப்படுத்தியாவது மற்ற சுருதிகளை வேறு விதமான ஒழுங்குப்படுத்தியாவது உண்டாக்கப்பட்டதா யிராமல் ஆதித்தமிழ் நூல்களில் செய்யப்பட்ட 7, 12, 24, 48, 96 சுருதிகள் முறையிலிருந்து பிறந்ததென்று அறியவேண்டும். இம்முறை நமது முன்னேரர்களின் இரத்தத்தோடு ஆயிரமாயிரம் வருஷங்களாகக் கலந்து வந்திருக்கிறது. போனவருஷம் பரோடாவில் நடந்த கான்பரென்சில் பண்டிதரவர்களின் 24 சுருதி முறை பரீகை செய்யப்பட்டதுபோல் வேறெந்தச் சமயத்திலும் செய்யப்படவில்லை. அச்சமயம் அம்முறை விளக்கிக்காட்டப்பட்ட போது அங்குக் கூடியிருந்த பிரபல வித்வான்கள் யாவராலும் அது சரியென்று அங்கீகரிக்கப்பட்டதுமல்லாமல் பண்டிதரவர்கள் கல்வி வாய்ந்த குமாரத்திகளால் அம்முறை ருசுப்படுத்திக்காட்டப்பட்டபோது அவர்கள் எல்லாராலும் புகழப்பட்டார்கள். அவ்விதமாகவே கைக்வார் மகாராஜாவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் முன்னிலையிலும் மகாராணியவர்கள் முன்னிலையிலும் அரண்மனையில் அம்முறை ருசுப்படுத்தப்பட்டபோதும் அவர்கள் பெற்ற கீர்த்திப் பிரதாபம் சொல்லமுடியாது. இரண்டு சமயங்களிலும் மற்றவர்களோடுகூட நானும் ஆசராயிருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றேன். தஞ்சை சங்கீத மகாஜன சங்கத்தின் 7-வது கான்பரென்சிலும் இம்முறையும் அதன் ருசுவும் செய்து காட்டப்பட்டன. அதோடு சுரங்களின் கணக்குகளும் மற்றும் நுட்பமான விஷயங்களும் அந்த விஷயத்தைப் பலவிதமாயும் நேரக்கி ஆராய்ந்து அபிப்பிராயம் சொல்லக் கூடிய வித்வான்களால் நுட்பமாய்ப் பரீக்ஷிக்கப்பட்டது. இந்தப் புஸ்தகத்தின் பின் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி அம்முறை சாஸ்திர விஷயமாய்ச் சரியென்றும் அனுபவத்திற்கும் அது ஒத்ததாகவே இருக்கிறதென்றும் அவர்கள் எல்லாரும் நற்சாட்சி கொடுத்திருக்கிறார்கள். சந்தேகக்காரரும் பழையதே சரியென்று சாதிக்கும் கோழைகளும் இப்புத்தகத்தைப்பற்றித் திருப்திப்படாமல் அதினுடைய நல்ல வேலையைக் கெடுக்கும் படி பிரயாசப்படலாம். அதுவும் சில நாளைக்குத்தான் ஆனால் நிஷ்களங்க மனதுடனும் உண்மையை அறிய வேண்டும் என்ற அவாவுடனும் அதைப் படிப்பவருக்குச் சாஸ்திரத்தின் மறைபொருளான காரியங்களெல்லாம் எளிதில் விளங்கும். பண்டிதரவர்கள் அநேக வருஷங்களாய் விஸ்தாரமான முயற்சிசெய்துவந்ததின் பலனாக இந்த முறையை ஸ்தாபிக்கிறார்கள். அப்பேர்பட்ட நிஷ்களங்க மனதுள்ளவர்கள் தான் ஜாக்கிரதையான மனதுடன் இவர்கள் செய்த வேலையைப் போலச் செய்யக்கூடியவர்கள். (ஒப்பம்) N.P. சுப்பிரமணியஐயர். சென்னை எப்பா ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர் மகா-ராச-ராச-சிறி ஆ. தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள் கொடுத்த சாத்துகவி. 1. கடல்சூழும் நிலவுலகி லுளவுயிர்கள் யாவினுமா கதித்த தான உடல்சூழுங் கறையடியை நடம்புரிய மிக்கமகிழ் வூட்டு விக்கும் அடல்சூழுங் கொடும்புலியை வயவரியைச் சாதுகுணத் தமர வைக்கும் மிடல்சூழு மிவுளியினைச் செருக்களத்தே யுற்சாக மேவச் செய்யும். 2. இரையுண்ண நீரருந்த வெண்ணாது நெடுங்கழுத்தி ரவணந் தன்னுள் கரையிலாக் களிப்பெய்திக் களைப்பினையுங் கருதாது காலா றாது விரைவாகப் பாலைவனங் கடந்திடவே செலுத்திடுமிம் மெய்மை தேரில் தரைமீது சங்கீதந் தனக்கிணையா வேறெரன்றைச் சாற்ற லாமே. 3. வண்டிகளை யோட்டுகின்றோர் பாடுகின்ற தெம்பாங்கும் மற்றுங் கேட்டுச் சண்டிநிற மாடுகளு மிறுமாந்து கடும்பாரந் தாவி யீர்த்துக் கொண்டிவரு மானிரைகள் கோபால ரூதுபுல்லாங் குழலி னேரசைக் கண்டவரும் பால்கறக்கு முட்டவந்த சுதைபாடற் கானந் தித்தே. 4. வனவேடர் பாண்கேட்டு மனமுருகி யசையாது மான்க ணிற்கும் சுனகனுநல் லிசைகேட்கிற் குரைப்பின்றி யமர்ந்திருந்து சுகித்துப் போகும் புனலிற்செல் வங்கமதிற் குழலெரலியைச் செவியுற்றுப் புணரி நாய்கள் இனமெல்லாந் திரண்டெரன்றாய்த் தொடர்ந்துவருந் தொலைதூர மெக்க ளித்தே 5. கானரச மனுபவித்துக் கச்சகமுந் தலையசைத்துக் களியைக் காட்டும் வானமதிற் சஞ்சரிக்குஞ் சாதகமுங் கின்னரமு மற்றும் புள்ளும் ஞானமுட னிசைகேட்டங் கேமுறுவ தன்றித்தந் நாவாற் பாடி மோனமிகு முனிவரையு மேனையவ ரையுமின்பின் மூழ்த்து மாதோ 6. மாதவமென் பருவத்தே மதியநிறைந் தொளிகால மலைமேற் கானில் பாதவங்கள் செறிந்துள்ள பணையோரம் வீணையினற் பணைவா சிக்கில் ஆதரமோ டவ்விசைகேட் டானந்தித் தந்தரத்தே யசுண மாக்கள் போதமுஞ்சேரர்ந் தசைவற்று நிற்குமெனி லிசைப்பெருமை புகல்வார் யாரே. 7. தண்டலையிற் கம்பலையிற் றாருவினிற் செடிகொடியிற் றடத்திற் கானில் உண்டுபடு மலர்மதுவை யுண்டுமிக வுளமதர்த்தே யுழைக டேரறும் வண்டுகள்செவ் வழிமுரலும் வாவியிற்றா மரைவளைய மச்ச மார்ந்து கொண்டெமது செவிக்கமுதஞ் சொரிவதெனக் காதம்பங் கூவிப் பாடும். 8. மண்ணிலத் தற்பமா மசகந் தானுமே பண்ணுறப் பாடியே பறந்து லாவிடும் தண்ணிய வேரசையைச் சார்ந்து கேட்டிடும் எண்ணிலிவ் விசைவலை யாவை தாம்படா. 9. இல்லிடந் தோறுமற் றெங்கு முள்ளதாம் பல்லியு மிசைமிகப் பரிந்து கேட்குமால் நல்லிய லேரசையை நயந்து போந்துபின் மெல்லிய நூல்வலை மீளும் லூதையே. 10. குத்திவா ழுயிர்களுட் கொடிய நாகமும் மத்தமுற் றதுவென மகடி வாயெழு நத்துபுன் னாகவ ராளி கேட்டலும் உத்தியார் பைவிரித் துவப்பொ டாடுமே. 11. தொட்டிலிற் கிடந்தழத் துவக்கு மோர்சிசு கிட்டிவந் தம்மனை கிளத்து தால்செவிப் பட்டிடப் பொருமல்போய்ப் பருமி தங்கொளும் இட்டளந் தீர்த்திசை யின்பு மீயுமே. 12. அவ்விய நீக்கியே யருள ளித்திடும் செவ்வையில் சேரம்பினைத் தீர்த்துத் தாடரும் கவ்வைசேர் மூர்க்கமுங் கழித்துச் சாந்தமே ஒவ்வுறச் செய்திடு முயர்சங் கீதமே. 13. கவலைக டீர்த்துளக் களிப்பை யீந்திடும் புவனியை யுவணைபோற் பொலியச் செய்திடும் அவலம தொழித்துமிக் காற்ற னல்கிடும் துவல்கொலும் விடத்தையுந் தொலைக்குங் கீதமே. 14. நள்ளலர் தம்மையு நண்ப ராக்கிடும் உள்ளபல் லுயிர்கடம் முள்ள மீர்த்திடும் அள்ளையைக் கூளியை யடக்கிக் கட்டிடும் எள்ளரும் வலியுடைத் தினிய கீதமே. 15. தொழில்களைப் புரிந்து தளர்ச்சியுற் றவர்க்குத் தொய்வுநீக் குவதுசங் கீதம் ஒழிவிலா தோதி யெய்த்தவர் மூளைக் குறுதிநல் குவதுசங் கீதம் கழிபெருந் துயர மனத்தடைந் தவர்க்குக் களிப்பையீ குவதுசங் கீதம் அழிவிலான் புவிக்கோ ரமுதன விதைமுன் னளித்தன னறிஞரா லன்றே. 16. விலங்குகள் புட்க ளூர்வன நீரில் விளங்குபல் லுயிர்களு மிசையின் வலங்கொடிண் மையினா லிழுபடு முருகி மகிழ்ந்துமே பரவச மாகும் நலங்கொளு மனிதப் பிறவியிற் பிறந்தும் நல்லிசை கேட்டுரு காதான் இலங்கறி வில்லாக் கற்களோ விரும்போ வின்னவென் றுரைக்கறி யோமால். 17. காமரங் கேட்டு முருகிடா மனிதர் கசடரிற் றாழ்வுறு கசடர் ஈமநேர் மனமு நரகினு மிருண்ட தெண்ணமோ சர்ப்பனை சதியே யாமவர் நட்பும் வஞ்சக நிறைந்த தன்புமே கனவிலுங் கொள்ளார் தீமைசே ரவரை நம்பொணா தெனவே செப்பினர் புலமையின் மிக்கோர். 18. நல்லிசை வலியை நாட்டுவான் கருதி நக்கன்மா தவனெரடா னாயன் முல்லையம் பண்ணை யாழினி லிசைக்க முரளியி லின்னிசை தெரிக்கத் தொல்லையைந் தெழுத்தை வேணுவி லெரலிக்கத் தோற்றிய சராசர மனைத்தும் ஒல்லையி னுருகிக் களித்தன வென்றிங் குரைத்திடும் பற்பல புராணம். 19. இருநிலத் தடியா ரெவர்களே யெனினு மினிமையாய்ப் பாடல்கள் பாடித் திருவடி துதிக்கின் றனதுளங் கனிந்து திகழுவ ரன்பெனும் வலையின் மருவியே சிக்குண் டன்னவர் கேட்கும் வரனெலாம் பொருளெலாம் மறுக்கா தொருதனிப் பரம னருளுவ னென்னி லுயர்ந்தது பாணினு முண்டேர. 20. என்னுயிர்க் குயிரை யெப்பொருளுக்கு மிறைவனை யிமையவர் கணங்கள் துன்னியெம் மருங்குஞ் சூழ்ந்துகொண் டையன் சுபகுணங் களையெடுத் தோதி இன்னிசைக் கருவி முழக்கியே பாடி யேற்றவா றாடியே துதிப்பார் பொன்னுல கினிலும் பொலிந்திலங் குவது பொருவறு கீதமே யன்றோ. 21. இத்துணைப் பெருமை வாய்ந்த சங்கீத மேனைய கலைகளைப் போலும் அத்திசூ ழுலகில் வரவரச் சுருங்கி யரில்பல கலந்திடல் கண்டு சித்தமே சலியா திசைவலேரர் யாருஞ் சேர்ந்திட வெரருசபை நாட்டி வித்தகக் கருணா மிருதசா கரப்பேர் மேம்படு நூல்வழங் கினனால். 22. அன்னான் யாரென் றெமைவினவி னறைவேரங் கேண்மி னிப்புவியில் முன்னா டென்னா டாண்டுவந்த முதன்மை பெறுமூ வரசர்களுள் ஒன்னா ரஞ்ச நகுவேலா னுசிதன் வழியிற் றோன்றினவர் என்னா நவிலுஞ் சான்றார்தம் மினத்தி லுதித்த குணமேரு. 23. தஞ்சை நகருக் கதிபனெனத் தரையில் விளங்கு வாழ்வுடையோன் எஞ்ச லின்றித் திக்கெட்டு மெட்டுங் கீர்த்தி மிகப்படைத்தோன் கஞ்சம் போன்ற வதனமதிற் கருணை யொழுகு மிருவிழியோன் நஞ்ச மெனவே பொய்வெறுத்து நாளும் வாய்மை புகனாவான். 24. நாளுங் கல்வி ரசமதனை நச்சிப் பருகு மணிச்செவியான் காள முகிலு மைந்தருவுங் கண்டு வெட்கப் பொழிகரத்தான் வேளின் சரத்துக் கிடமின்றி விமலை வாழுந் தடமார்பான் ஆளுங் கேளு மோவாம லணுகிப் பணியு மலர்த்தாளான். 25. தேச மாளு மதிபதிகள் சிறந்த பிரபுக் கண்மிக்கோர் பாசம் வைத்தே கொண்டாடிப் பழகி யுறவா டுங்குரிசில் நேசங் கொண்டு சற்குருவாய் நேர்ந்த கருணா னந்தருப தேச மதனை மறவாது தினமுஞ் செவ்வை நெறிநிற்போன். 26. முன்னம் முத்து சாமியெனு முதல்வ னன்னம் மாளேரடும் பன்னாண் முயன்ற வருந்தவத்தின் பயனா வந்த பாக்கியவான் பின்ன ருதித்த ஜேசு தாசன் பீடார் தானி யேல்வில்யம் என்னு மூவர் தமையுந்த னினிய வனுச ராயுடையோன். 27. தென்னன் குலத்துத் தோன்றலெனத் தெளிவாய்க் காட்டுந்திருநாமம் மன்னுஞ் சுந்தர பாண்டியனை மனேரக்ய ஜேரதிப் பாண்டியனை துன்னுங் குணமா பாண்டியனைச் சேரர்வில் சவுந்தர பாண்டியனைத் தன்னின் புதல்வ ராய்ப்படைத்த தன்னே ரில்லாத் தாட்டீகன். 28. என்றுந் தேவப் பிரசாத மென்னு மெம்போற் பாவலரை யொன்றுங் குறைவெய் தாமற்றன் னுயிர்போற் றாங்கி யாதரிப்போன் இன்று மன்றே போலன்பி லிறையுங் குன்றா வுத்துங்கன் நன்றுந் தயையுங் கைம்மாறு நாடா தெவர்க்கும் புரிமகிபன். 29. பூதலத்தி லாதவனை யொத்தபெரு விளக்கம் பொருந்தியென்றும் நீங்காத பெருங்கொடையோ டிரக்கம் ஓதுகலை யுணர்ச்சிதவா மாண்பு பெருங்கீர்த்தி ஒருநாளுங் குறையாம லேரங்கு பெருவிபவம் நாதனடித் தாமரையை மறவாத வன்பு நல்லகுரு பக்திதள ராவூக்கப் பாடு சாதுகுண மீதனைத்து மெரருசேர வாய்ந்தோன் தஞ்சைநக ராபிரகாம் பண்டிதனா மாலே. 30. அன்று திருமா லமரர்க் கமுதகுடம் ஒன்றுதந் தானதிக முண்டுகொலேர-சென்றுதஞ்சை யாகரமே யென்னக்கொண் டாபிரகா மாலமுத சாகரமே தந்திட்டான் றான். தஞ்சாவூர், சதாவதானம் மகா-ராச-ராச-சிறி சுப்பிரமணிய ஐயரவர்கள் இயற்றிய ஆசிரிய விருத்தம். 1. அந்நாளி லியற்றமிழி லகத்தியனா மெரருமுனிவ னனைத்து மாராய்ந் தென்னாகு மொழிக்குமுடி வாமெழுத்துச் சுருதியெண்மூன் றென்னக் கண்டான் இந்நாளி லிசைத்தமிழிற் சுரமுடிவாஞ் சுருதிமூவெட் டென்னக் கண்டான் மன்னாகு மாப்பிரகாம் பண்டிதன்றான் புலமைப்பேர் மாண்பி வற்கே. முடிவாம் எழுத்து எ-து ஆவி ஞணநமன யரலவழளமெய் சாயுமுகர நாலாறு மீறே என்றபடி, சுருதி-ஒலி. சுரம்-சத்த சுரங்கள். புலமைப் பேர் எ-து பண்டிதன் என்னும் பெயர். மாண்பு - சிறப்பு. இவற்கு-இந்த ஆப்பிரகாம் என்பவனுக்கு. ஏகாரம் பிரிநிலை. 2. முத்தமிழு ளியற்றமிழின் முடிவாகு மெழுத்துக்கள் மூவெட் டென்ற சத்தியன்றேர்ந் தானாட கத்தமிழி னிருத்தவகை களைமூன் றெட்டென் றத்தமிழ்நா டன்றேர்ந்தா னிசைத்தமிழிற் சுரச்சுருதி யாறு நான்கென் றத்தமிகு மாப்பிரகாம் பண்டிதன்றேர்ந் தானடுநா யகமீ தாமே. முத்தமிழ்- இயல், இசை, நாடகம். நிருத்த வகைகள்-கூத்தின் விகற்பம். அத்தமிழ்நாடன்-ஒரு பாண்டியன். சுரச்சுருதி-சத்த சுரங்களின் ஒலி. நடுநாயகம்-நடுவிலுள்ள இசைத்தமிழ்ச்சுருதி. மீது ஆம்-மேலாகும். ஈது ஆமென்றுங் கொள்ளலாம். பெரிய குளந்தாலூகா பூசாரிக்கவண்டன் பட்டி மகா-ராச-ராச-சிறி ச. திருமலைவேலுக் கவிராயர் அவர்கள் சொல்லிய கவிகள். விருத்தம். பொங்குதிரைக் கடற்புவியிற் பண்டைநூ லெதுவெனத்தான் பொருந்த நாடிச் சங்கையறத் தெரிபுநற்சங் கீதசங்க மெரன்றமைத்துத் தனது சீர்த்தி யெங்கும்விளக் கியதெனவின் னிசைத்தமிழை விளக்கினனா லெழில்சேர் தஞ்சைத் துங்கமுறு மாபிரகாம் வள்ளல்பெருந் தன்மையையார் சொலவல் லாரே. வெண்பா. நாமே விசைத்தமிழை நன்குவிளக் கிக்கடல்சூழ் பூமே லழியாப் புகழ்படைத்தாய்-மாமேன்மை தள்ளா வினிமைத் தமிழுணர்ந்த வாபிரகாம் வள்ளா லுனக்கெவர்நேர் வார். விருத்தம். கரவறுசீர்த் தஞ்சையிற்சங் கீதவித்யா மகாசனசங் கத்தி ருந்து சரதகுண வாபிரகாம் பண்டிதமே லேரனருமைத் தவத்தால் வந்த மரகத வல்லியுங் கனக வல்லியும்பா டியவதிக மதுரகீத விரதமுணர்ந் தவர்தமக்கு வெலப்பாகுங் கசப்பாகு மிதுமெய் தானே. மகா-ராச-ராச-சிறி ச. திருமலைவேலுக் கவிராயரவர்கள் குமாரர் மகா-ராச-ராச-சிறி சங்குக்கவிராயர் இயற்றியது. விருத்தம். முத்தமிழு ணடுத்தமிழா மிசைத்தமிழி னிலக்கண நூன் முடிவை யெல்லாஞ் சித்தமகிழ் வுற்றுமிக புத்தியனு பவத்தினாற் றேர்ந்து நன்றாய்ப் புத்தமுத வாசகமா வரைந்துலகெங் கணும்விளக்கிப் புகழ்பெற் றானா லெத்திசையும் புகழ்ந்துரைக்குந் தஞ்சைநக ராபிரகா மெனுமே லேரனே பஞ்சகா வியத்துளெரன்றாஞ் சிலப்பதிகா ரக்கவிகள் பயின்மேற் கோளா வெஞ்சலிலா வகையெடுத்துக் காட்டியிசை யிலக்கணமு மெடுத்துக் காட்டித் தஞ்சைநக ராபிரகாம் வள்ளல்புரி சங்கபிர சங்க மோர்ந்து மிஞ்சியமுத் தமிழ்வலரு மிகவியந்தா ரெவரதனை வியவா தாரே. பதமுறுநந் தமிழ்நூலிற் பகருமிசை யிலக்கணத்தைப் பார்த்தே மின்றி யிதுவரையவ் விதிப்படியே பாடினா ரெரருவரையு மீங்குங் காணேஞ் சததளமா மலர்த்தடஞ்சூழ் தஞ்சையா பிரகாம்வித் தாரன் பெற்ற புதல்வியரவ் விதிப்படியே பாடினா ரற்புதமற் புதமீ தம்மா. சோழதேசத்தில் விளங்கும் பஞ்சநதபுரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கவர்ண்மெண்டு ஸமஸ்கிருத பாடசாலை முக்கிய உபாத்தியாயரும் ராதாமங்கல கிராம வாசியுமான கானகவி பிரம்மஸ்ரீ நாராயண சாஸ்திரிகள் அபிப்பிராயம். 1. உலகத்தைக்காப்பாற்ற வேண்டிய அபிலாஷையால் ஏற்படுத்தப்பட்ட அழகான தோட்டங்களாலும் அமிருதம்போல மதுரமான ஔஷதங்களாலும் ராவ்ஸாஹேப் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் ஜனங்களுக்கு உபகாரம் செய்தும் தன்பொருள் உதவியால் தமிழ்ப்பாஷையில் எழுதி தன் அபிப் பிராயத்தை வெளியிட்டு தன் கிரந்தத்தில் கீத சாஸ்திரத்தைப் பரவச்செய்து அதற்குச் சேரபை உண்டாக்கினார். 2. ஸங்கீத ரத்னாகர கிரந்தத்தை எழுதியவரின் இஷ்டமான சுருதி கிரமத்தைச் சங்கீத வித்வான்கள் இக்காலத்தில் பாட சக்தியற்றவர்கள். ஆகையால் பண்டிதர் அவர்கள் யத்னம் செய்தது ஜயமடைந்ததென்பது என் அபிப்பிராயம். 3. செம்மையாக விசாரணைசெய்து பண்டிதரால் விஸ்தாரமாக எழுதப்பட்டிருக்கும் கிரந்தத்தைப் பற்றி விஸ்தாரமாக எழுத முடியாததால் ஸங்கிரஹமாக எழுதுகிறேன். 4. தமிழ்ப்பாஷையில் 3 சங்கங்களில் ஏற்பட்ட வாதக்கலக்கத்துடன் கூடிய ஸங்கீத சம்பிரதாயம் வெகுகாலமாக இருப்பதாகச் செம்மையாக எடுத்துக் காட்டினார். 5. தேசாந்தரங்களில் ஸங்கீத பிரசுரம் நிறைந்திருக்கும் காலத்தில் இந்தத் தேசத்தில் ஸங்கீத ஸம்பிரதாயத்தை ஏற்படுத்தி, எடுத்துச் சொல்பவர் இல்லை. 6. தமிழ்ப் பாஷையில் வெகுகாலமாக ஏற்பட்ட சங்கதிதான் இதர பாஷைகளில் வெளிப்படுத்தப்பட்டதென்று தன் கிரந்தத்தில் விஸ்தாரமாக எடுத்துக் காண்பிக்கிறார். 7. தமிழ் வித்வான்களால் அப்பியஸிக்கப்பட்ட சங்கீத சாஸ்திர பிரஸ்தாப கோலாஹலத்தால் வேறு அபிப்பிராயம் கொல்பவர்களின் அபிப்பிராயம் கண்டிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. 8. ரத்னாகர கிரந்தத்தில் சொல்லி இருக்கும் உண்மையைக் கணித மூலமாகப் பிரசுரம் செய்தல் சங்கீத சாஸ்திரத்தில் ஆசையுள்ளவர்களைச் சந்தோஷப்படுத்தி வைக்கிறது. 9. தமிழ் வித்வான்களுக்குப் பழக்கமாகிய 96 சுருதியை பரிசீலனை செய்து அதைப் பாதிபாதியாக வகுத்து சுருதி கிடைக்கிறதென்று கணக்கினால் காட்டப்படுகிறது. 10. காயத்ரீ மந்திரத்தின் அக்ஷரங்களின் எண்ணிக்கையில் 2 அக்ஷரங்களை குறைத்து 22 சுருதி கிரமம் சாரங்கதேவர் ஏற்படுத்தினார். 11. சுருதிகள் 96 ஆகவும் 48 ஆகவும் 24 ஆகவும் 12 ஆகவும் பிரிக்கப்படுகிறது. 12. இந்தக் கர்னாடக கீதம் காயகர்களால் பாடப்படுகிறதென்பது பிரசித்தம். எண்ணிக்கையில் பேதம் ஏற்படுவது ராகம் பாடுவதில் உண்டாகும் பேதம். 13. மேற்கூறியவைகளில் ராவ்சாகேபு என்று பட்டப்பெயர் அடைந்த ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய கருணாமிருதஸாகரம் என்கிற கிரந்தத்தில் விஸ்தாரமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 14. வைத்தியம், யோகம், ஆயுர்வேதம், ஜேரதிடசாஸ்திரம், வேதாந்த சாஸ்திரம் சம்பந்தம் இருப்பதாக அவர் சுருதிகணக்கு எடுத்ததில் காட்டப் பட்டிருப்பதாக நான் அறிந்து கொண்டேன். 15. வீணை ரூபம் அதின் சுரம், சுருதி, சப்தம் முதலியவைகள் உண்டாவது மனுஷியனுடைய கழுத்து, சுர சுவாஸம் கலை முதலியவைகளை ஒத்து செய்யப்பட்டது. 16. மேற்கு தேசத்திய சங்கீத வித்வான்கள் சொல்லும் பரிமாணத்திற்குத் தக்கப்படி த்வனிசாம்யம் முன்காலத்திலேயே தமிழ் வித்வான்களால் அறியப் பட்டதென்பது பல விதமாக இந்தக் கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 17. மற்றவர்கள் பாடும் ஸ ம ப நி என்கிற 4 ஸ்வரங்களிலுண்டாகும் 4 வீணைகளில் ஸ க ப நி என்கிற ஸ்வரங்களிலிருந்து 4 ஜாதி உண்டாகிறது. 18. * * * * * * * * * 19. ரத்னாகரம் செய்தவரும், பரதமுனியும் முன் இருந்த திராவிடர்களும் இவ்விதமான ஸங்கீத ரஹஸ்யத்தை சொல்லவில்லை என்று காட்டப்பட்டது. 20. ஒரு ஸ்தாயியில் சுருதி 22 என்பது ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்றும் சுருதி 24 தான் என்பது சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. 21. சுருதி 22 என்று சொல்பவர்களின் கொள்கையை தடுப்பதற்கு இவ்வளவு பிரயாஸம் எடுத்துக் கொண்டு தன் அபிப்பிராயம் எழுதப்பட்டது. 22. சுருதிஸ்வரவிவேகம் சிரமத்தை எடுத்துக்கொண்டு இதுவரையில் ஒருவராலும் அறியப்படவில்லை. இந்தக் கிரந்தத்தில் திராவிட பிரமாணத்தால் காட்டப்படுகிறது. 23. தமிழ் சொற்கள் மிருகபக்ஷி, த்வனிக்கு சமானமான விந்யாசத்துடன் கூடியவைகளாக வெகு காலமாயிருக்கிறது. பாஷையின் உற்பத்திக்குக் காரணம் பிராகிருத மூலங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 24. மற்றவர்களாலறியக்கூடாத கீதி, சுருதி ஸ்வரஸ்தானங்களைச் சொன்ன காரணத்தினால் திராவிடர்கள் முன்னமே அறிந்தவர்களென்றும் கெளரவ மடைந்தவர்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. 25. பரோடா ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டதும் சங்கீத வித்வான்கள் சமூகமும் அடங்கியதுமான சபையில் தன் பெண்கள் பாடி ராஜா மந்திரி முதலியவர்கள் சந்தோஷமடைந்ததைக் கொண்டே இவர் அபிப்பிராயம் ஒப்புக்கொள்ளப்பட்டது. 26. ஆபிரகாம் பண்டிதர் சிரமப்பட்டு எழுதிய கிரந்தத்தில் சூக்ஷமமாக அறியக்கூடிய விஷயங்களை விசாரணை செய்திருக்கிறார். 27. ஜனங்களுக்குக் கொடுப்பதற்காகவே தனார்ஜனம் செய்த இப் பிரபு மேன்மையாக இருக்கக் கடவர். இவ்விதம் நாராயணகவி தன் அபிப்பிராயத்தை ஒளிக்காமல் வெளியிட்டார். எட்டையாபுரம் சமஸ்தானம் ஸமஸ்கிருத வித்வான் பிரம்மஸ்ரீ குருநாத சாஸ்திரிகள் அபிப்பிராயம் 1. முன்காலத்தில் மஹாவிஷ்ணு சமுத்திரத்தைக் கடைந்து அமிருதம் எடுத்ததுபோல சங்கீத சாஸ்திர சமுத்திரத்திலிருந்து ராவ்சாஹேப் ஆபிரகாம் பண்டிதர் கருணாமிருதம் என்கிற சுருதி விஷய கிரந்தமான அமிருதத்தை அடைந்தார். 2. எவ்விதம் முன்காலத்தில் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட அமிருதம் தேவர்களுக்குப் பிரீதியை உண்டாக்கியதோ அவ்விதமாகச் சங்கீத ஸாஹித்யம் அறிந்தவர்களும் கானம் செய்பவர்களுமான வித்வான்களுக்கு இந்தக் கர்ணாமிருத கிரந்தம் பிரீதியை உண்டாக்க வேண்டும். 3. பாடுமந்திரத்தை உச்சாரணம் செய்பவர்களை ரக்ஷிப்பதால் காயத்ரீ என்கிற பெயர் ஏற்பட்டது. அந்தக் காயத்ரீ மந்திரத்தில் இருக்கும் 24 அக்ஷரங்களும் 24 சுருதிஸ்தானங்களாயிருக்கின்றன. 4. ஜபம் செய்வதில் மந்திரத்தில் உள்ள அக்ஷரத்தை விடுவது தோஷ மாகும். கானம் செய்வதில் சுருதியைக் குறைப்பது தோஷமாகும். அந்தச் சுருதியின் எண்ணிக்கை 24 சுருதிஸ்தானங்களாலும் 24 என்பதில் ஸந்தேக மில்லை. 5. ஆகையால் உத்தமவித்வான்கள் எல்லா பிரயத்னங்கள் செய்தும் 24 எண்ணிக்கையுள்ள சுருதிஸ்தானங்களை அறிந்துகொள்ள வேண்டும். (தஞ்சாவூர் வக்கீல் மகா-ராச-ராச-சிறி பி.வி. கிருஷ்ணசாமி ஐயரவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.) சங்கீதத்தில் தேர்ந்த பல வித்வசிரேரமணிகளின் அபிப்பிராயங்களை கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம் - நான்காம் பாகத்தில் காணலாம். "குறைநிலத்தானத்தியன்ற பாடலமுதம் பருகினான்" என்றபடி குறைந்த சுரமாக வரும் நுட்பசுருதிகளின் இனிமையையறிந்த பல வித்வசிரேரமணிகள் சங்கீத வித்யாமகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்ஸில் கொடுத்த அபிப்பிராயங்களும் பிறவும் இப்புத்தகத்தின் நான்காம் பாகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 1. பரோடா, திவான் சாகிப் மகா-ராச-ராச-சிறி V.P. மாதவராவ் C.I.E. அவர்கள். 2. மகா-ராச-ராச-சிறி வைணீகசிகாமணி சேஷண்ணா அவர்கள், மைசூர். 3. மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் அவர்கள், மைசூர். 4. மகா-ராச-ராச-சிறி V. N. பட்கண்டி B.A.,L.L.B., அவர்கள். 5. மகா-ராச-ராச-சிறி வேங்கடரமணதாஸ் அவர்கள், விஜயநகரம். 6. மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்கள், அரிகேசவநல்லூர் சாத்துகவி. 7. மகா-ராச-ராச-சிறி பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சை. 8. மகா-ராச-ராச-சிறி M.S. ராமசாமி ஐயர் அவர்கள், மதுரை. 9. மகா-ராச-ராச-சிறி மு. L.நரசிங்கராவ் அவர்கள், விஜயநகரம். 10. மகா-ராச-ராச-சிறி R. சக்ரபாணிராவ் அவர்கள், தஞ்சை. தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தின் ஏழாவது கான்பரென்சின் பஞ்சாயத்தார். 11. மகா-ராச-ராச-சிறி V. A. வாண்டையார் அவர்கள். 12. மகா-ராச-ராச-சிறி A.G.பிச்சைமுத்து B.A.,L.T. , அவர்கள். 13. மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி ஐயர் அவர்கள். 14. மகா-ராச-ராச-சிறி மகாலிங்க ஐயர் அவர்கள். 15. மகா-ராச-ராச-சிறி பத்மநாத ஐயர் அவர்கள். 16. மகா-ராச-ராச-சிறி சாமியாபிள்ளை அவர்கள். 17. மகா-ராச-ராச-சிறி பரதம் நாராயணசாமி ஐயர் அவர்கள். 18. மகா-ராச-ராச-சிறி சப்தரிஷிபாகவதர் அவர்கள். 19. மகா-ராச-ராச-சிறி சித்ரகவி சிவராமபாகவதர் அவர்கள். 20. மகா-ராச-ராச-சிறி விருதை சிவஞானயோகிகள் அவர்கள். 21. மகா-ராச-ராச-சிறி T. K. வேம்பு ஐயர் B.A.,L.T. , அவர்கள். மற்றும் சில அன்பர்களின் கடிதங்களிலும் காணலாம். கருணாமிர்த சாகரம் முதல் புத்தகம் - முதல் பாகம் இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம் இந்நூலுள் . . முதற்பாகம் : சங்கீதம் பூர்வகாலத்தில் இயல், இசை, நாடகமென்னும், முத்தமிழில் ஒன்றாயிருந்ததென்பதையும், தமிழ் மொழியின் பூர்வீகத்தையும், தமிழ் நாட்டின் தொன்மையையும், இசைத் தமிழ் வழங்கிய விவரத்தையும் சில இசை வல்லோரையும் பற்றிச் சொல்லும். கடவுள் துணை. கருணாமிர்த சாகரம். முதல் புத்தகம். முதல் பாகம். இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம். I. சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும். உலகெல்லாம் தனது ஒரு சொல்லால் உண்டாக்கி, அவை யாவற்றிற்கும் தானே உயிராய், ஆனந்த மூர்த்தியாய், அனந்த கல்யாணகுணசீலனாய் ஆண்டு நடத்திவரும் கர்த்தன் இரு பொற்பாத கமலங்களை வணங்கி, கருணாமிர்த சாகரம் என்னும் இச்சங்கீத சாஸ்திரத்தை எழுதத் தொடங்குகிறேன். உலகுக்கு முதல்வனான கர்த்தன், முதல் முதல் நாதசொரூபியாய், பின் ஜீவனாய், ஜீவர்களின் உணர்வாய், உணர்வில் அறிவாய், அறிவில் ஆனந்தமாய், ஆனந்தத்தில் நாதமாய், நாதத்தில் கீதமாய், கீதத்தில் லயமாய், ஆனந்த நர்த்தனஞ்செய்து உலகைப் பரிபாலிக்கிறான். சத்து சித்து ஆனந்தனாய், அண்டபுவன சராசரங்கள் அனைத்தும் நிறைந்து நின்ற அப்பரமனை உள்ளுணர்ந்த பெரியோர், தமது தூல தத்துவங்களையும் சூட்சம தத்துவங்களையும் காரணனாகிய அக் கர்த்தனிடத்தில் ஒடுக்கி, அவனில் விளங்கும் கோடி சூரிய பிரபையில் தாங்களும் பிரபை பெற்று, ஜீவகாருண்யம் பாராட்டி, முத்தி நிலைபெற சதா துதித்து வணங்கினார்கள். வணங்கிய பெரியோர் அடைந்த மேம்பதவியைக் கண்டு, தாமும் அப்பதம் பெற ஆசித்து, ஆனந்த மூர்த்தியை இடைவிடாது துதித்து, அவரவர்க்காகும் அளவற்ற கிருபை பெற்றார் மற்றவரும். கிருபை பெற்றோர் யாவரும், மேலான அவன் புகழைச் சொல்லித் துதித்துக் கானம் செய்கிறார்களேயொழிய, தம்மை இழிவு படுத்தும் லௌகீக கானங்களைச் செய்யார். இக்கானமும், கான மூர்த்தியின் சிருஷ்டி திதி சம்மாரம் என்னும் முத்தொழில் போலவே, தோற்றம் விருத்திலயத்தையுடைய அபிநயம் ராகம் தாளம் என்னும் மூன்று அங்கங்களையுடையJ. இம்மூன்றையும் ஒன்றாகப் பாவித்து, முத்தொழில் மூர்த்தியைப் பத்திசெய்யவேண்டியது அவசியம். அப்படிச் செய்வதால் அவன் அருட்செயலில் காணப்படும் யாவற்றிலும், அவனே அங்கங்குப் பரிபூரணனாய் இருந்து அபிநயித்து ஆடிப்பாடி ஆனந்த நர்த்தனஞ் செய்கிறானென்று, பிரத்தியட்சமாய் அறியலாம். ஆனந்தக் கூத்தாடும் முதல்வனைக் காணும் பக்தன், தானும் இன்னிசையுடன் ஆடிப்பாடிக் கர்த்தனைக் கொண்டாடுவான். கர்த்தனைக் கொண்டாடிய பக்தர்களுள் தங்கள் தங்கள் அனு போகத்திற்கு ஏற்றவாறு தெய்வத்தை ராஜனாகவும், பெற்றெடுத்த தாய் தந்தை யாகவும், குருவாகவும், ஆபத்சகாயனாகவும், துயர்தீர்த்த மருத்துவனாகவும், அருமைமகவாகவும், இனிய மணவாளனாகவும் பாவித்து வாயார வாழ்த்தினர் சிலர்; தோத்திரித்து வணங்கினார் பலர்; இடர் தீர்க்க இறைஞ்சினார் சிலர்; நினைத்தவை பெற வேண்டினர் அநேகர்; பிரிவாற்றாமையால் பிரலாபித்தார் சிலர்; கண்டடைந்த சிலர் ஆனந்தக் கூத்தாடினார்; காணவிரும்பிய பலர் தூதுபாடி உசாவினார்; உள்ளன்பு மேலிட்டு, உவந்துதுதித்தார். அவன் குணங்களை ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்து விஸ்தரித்து, மற்றவர் அறிய வியந்து பாடினார். தங்கள் அபாத்திரத்தை நினைந்து இரங்கினார். தம் தவறுதல்களை நினைத்து மன்னிக்கப் பிரார்த்தித்தார். காதல் மிகுந்த சிலர், அவன் திரு உருவை நினைத்து, உணவையும் உலகையும் மறந்தார். உத்தமர்களின் ஜீவியத்தையும் அவர்கள் பகவானைத் துதித்துப் பாடியவற்றுள் உத்தமமான பாகங்களையும் ஒன்றாய்த் திரட்டி, மற்றவர்கள் பின்பற்றப் பரம்பரையாய்ச் சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர். பின்னுள்ளோர், அதையே வேதமென எழுதி வைத்தார்கள். வேதத்தை ஆதாரமாகக்கொண்ட ஒவ்வொருவரும், தெய்வ சந்நிதிகளிலும் பொது ஸ்தலங்களிலும், தங்கள் வணக்கத்திலும், வேதத்திலுள்ள சிலபாகங்களைத் தாமே பாட்டாகப்பாடி ஆராதித்து, ஆனந்தமடைந்து வந்தார்கள். பாடச்சக்தியில்லாதவர்கள், பாடகர்களை நியமித்துப் பாடச்சொல்லிக் கேட்டு ஆனந்தித்து வந்தார்கள். பாடுதற்குத் துணைக்கருவிகள் பலபலசெய்து, மிகுந்த தொனியுடன் ஆர்ப்பரித்தார்கள். தங்கள் தங்கள் வருத்தம் யாவும் மறந்து, ஏகமனதாய் இன்னிசையில் ஈடுபட்டு, பகவானை ஆராதிக்கும் இந்நிலை நன்னிலையென்று நினைத்து, மேலுலகத்திலும் தெய்வத்தை இப்படியே ஆராதிப்போமென்று ஆசித்து, மேலும் மேலும் ஊக்கம் கொண்டார்கள். தங்கள் கானத்தைப் பல முகமாய் விருத்திசெய்ய, இனிய சுரங்களையும் அவைகளின் ஆலாபனத்தையும், எல்லோரும் ஏகோபித்துச் சொல்லக்கூடிய கால அளவாகிய தாளத்தையும், ஒன்றின்பின் ஒன்றாய்க்கண்டு விருத்தியடைந்து வந்தார்கள் இவற்றில் அனுகூல மடைந்து வருகையில், தங்களுக்குச் சந்தோஷமான காலங்களிலும், தெய்வ சந்நிதியிலும், தாங்கள் சாப்பிடுங் காலத்திலுங்கூட, பாடத்துவங்கினார்கள். தெருவில் விளையாடும் சிறுவர்களின் கானவிருத்தியைப்போல, நாம் கேட்கும் இனிய கானமும், பலயுகங்களாகப் பல உபகரணங்களைக்கொண்டு விருத்தியாயிற்றென்று நாம் அறிய வேண்டும். எப்படியென்றால், ஓசைதரும் பலகைகள் பெட்டிகள் கதவுகள் தகரத்தகடுகள் முதலியவைகளைத் தட்டி, ஜதி கணம் லயமென்னும் தாளத்துக்குரிய அங்கங்கள் ஒருவரும் போதிக்காமலே சுயமாய் அறிந்துகொண்ட பேச்சறியாத பாலர்கள், தாங்கள் கொஞ்சம் பெரியவர்களாகும்பொழுது, சிறு தம்பட்டம் கொட்டாங்கச்சித்தம்பட்டம் கெஞ்ஜிரா முதலியவைகளில் பழகி விளையாடுகிறார்கள். அதன் மேல் அதில் பிரியமுள்ள சிலர் பெரியவர்களாகும்பொழுது, இருபக்கமும் தோல் கட்டிய மத்தளம் மிருதங்கம் பேரி உடுக்கை நகரா தபிலா போன்ற கொட்டுங் கருவிகளைச்செய்து, கடிப்பினால் அடித்துத் தாளத்தில் விருத்தியானார்கள். தாள ஞானம் முதல் முதல் எல்லாருக்கும் இயல்பாய் அமைந்திருக்கிறJ. குழந்தைகள் பிறந்து நாலைந்து மாதத்திற்குள் சங்கீதத்தைக் கேட்கும்போது தாளத்துடன் சாய்ந்தாடுவதை நாம் அறிவோம். மேலும் ஒவ்வொருவருடைய சுவாசமும் இரத்தாசயத்துடிப்பும், காலப்பிரமாணத்தை யுடைய தாகவே யிருக்கிறது. இதுபோலவே, தெருவில் விளையாடும் சிறுவர்கள், பூவரசு போன்ற மரத்தின் இலைகளைச் சுருட்டி, அதில் சிறுத்த ஒரு பாகத்தைக் கையினால் அமுக்கி, ஒடுங்கிய துவாரமிருக்கும்படி செய்து அதில் ஊதியும், அதன்பின் குழலின் பருமனுக்கும் அதன் வாய்க்கும் தகுந்த விதமாய்ச் சத்தம் பிறக்கிறதென்று கண்டு, கீழ் மேலாயுள்ள இரண்டு அல்லது மூன்று நாலு சத்தங்களைச் சேர்த்தும் அதில் ஒற்றுமை கண்டு சந்தோஷித்தார்கள். பின்பு துவாரமுள்ள பூசணி இலைக்காம்புகளை குழல்களாக நறுக்கி அவைகளின் ஒரு பக்கத்தில் இலைக் குழல்களை வைத்து ஊத, குழல்கள் எவ்வளவு நீளுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சத்தம் மந்தமாகிறதென்றும், குழல்கள் குறுகக்குறுகத் தொனியுள்ள நாதம் பிறக்கிறதென்றும் கண்டு, ஏகோபித்து ஆனந்தக் கூத்தாடினார்கள். இவர்களில் இன்னிசையில் பிரியங்கொண்ட சிலர், பெரியவர்களானபொழுது கொம்பு சங்கு மூங்கில் ஈரக்கழி நாணல் முதலியவைகளில் துளையிட்டும், மரம் பொன் வெள்ளி பித்தளை முதலியவற்றில் பல வடிவங்களுடன் குழல்செய்து துளையிட்டும், இன்னிசை பிறக்க ஊதினார்கள். இதுபோலவே, நரம்புக் கருவிகளிலும் படிப்படியாய் விருத்தியானார்கள். வளையக்கூடிய ஒரு குச்சியில், மெல்லிய கயிறு அல்லது நரம்புகளைக் கட்டி மீட்ட, ஓசை பிறப்பதை அறிந்தார்கள். அதினின்று பெரிய மூங்கில்களை வில் போலும் வளைத்துத் தோல் வடங்கள் கட்டி, குணத்தொனிசெய்து மணிகளையும் சதங்கைகளையும் கோத்துத் தாளத்திற்கு இணங்கக் குறுகிய கடிப்பினால் அடித்து, வில்லடிப்பாட்டுகள் படித்தார்கள். தந்திகள் அல்லது நரம்புகள், ஆகாயமடங்கிய ஒரு பாத்திரம் பெட்டி அல்லது சுரைக் குடுக்கை வழியாய்ச் செல்லும்பொழுது, அதிக நாதம் கொடுக்கிற தென்று படிப்படியாய்க் கண்டு, துந்தினாமா, ஒரு தந்திச் சுரைக்காய்க்கின்னரி போலொத்த வாத்தியங்கள் செய்து, தங்கள் சாரீரத்திற்கேற்ற சுருதி வைத்துக் கொண்டு, பகவானுடைய குணங்களை வர்ணித்துப் பாடினார்கள். கைகளால் மீட்டுவதற்குப் பதில், வில்லுகளால் தந்திகளை இழுத்து வாசிக்கக்கூடிய அகப்பைக்கின்னரிகள் போன்றவை செய்து வாசித்தார்கள். பிறகு மானிட சாரீரத்திற்கு ஒத்ததும் சுரஸ்தானங்கள் குறிப்பிட்டதுமான மிகச் சிறப்புப் பொருந்திய வீணை செய்தார்கள். அதனின்றும் சங்கீதம், அதற்குரிய சில விதிகளுடன் விருத்தியாகிக்கொண்டே வருகிறது. சிறுவர்கள் தட்டி விளையாடும் பலகைக் கதவின் ஓசையிலிருந்து, தம்பட்டம் பேரிகை மத்தளம் மிருதங்கம் தபிலா உடுக்கை கைத்தாளம் சேமக்கலம் சல்லரி மணி சதங்கை முதலிய கொட்டுங் கருவிகளும், ஊதி விளையாடிய இலைக்குழல்களிலிருந்து, தாரை ஒத்து நாகசுரம் முகவீணை மகடி புல்லாங்குழல் கொம்பு சங்கு முதலிய துளைக்கருவிகளும், பல்லினால் கடித்து கையினால் பிடித்திழுத்து ஒரு கையினால் மீட்டிப் பிறந்த இனிய நாதத்திலிருந்து, துந்தினாமா கின்னரி தம்புரு அகப்பைக்கின்னரி சுந்தரி வீணை ருத்திரவீணை பேரியாழ் மகரயாழ் முதலிய மீட்டும் தந்தி வாத்தியங்களும் சிறுவர் விளையாட்டிலிருந்தே தோன்றி, படிப்படியாய் விருத்தியாயினவென்று நாம் அறிகிறோம். நாதனது திருவிளையாட்டை எடுத்துக்கூறத் திறமையுடையோர் யாவர்! மேற்கூறிய வாத்தியங்கள், தேசத்தாரின் கைத்தொழில் திறமைக்குத் தகுந்தபடி, வெவ்வேறு உருவங்களையும் பாஷையால் வெவ்வேறு பெயர்களையும் பெறுவதேயன்றி, காரியத்தில் சங்கீதத்திற்குத் துணைக் கருவிகளாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இக்கான விதியின் அருமை பற்றியும், வாத்தியங்களின் உதவிபற்றியும், ஒவ்வொரு தேசத்தாரும், தாங்கள் வழங்கும் கானத்தைத் தெய்வமே கொடுத்தாரென்றும், உபதேசித்தாரென்றும், தாமே செய்து காட்டினாரென்றும் மேன்மை பாராட்டுந் தகுதியுடையதா யிருக்கிறது. தினை அளவு பனித்துளி, எதிர்நிற்கும் மலையையும் வெகு திட்டமாகத் தனக்குள் பிரதிபிம்பித்துக் காட்டி நிற்பது போல, ஒவ்வொரு தேசத்தின் கானமும், அந்தந்தத் தேசத்தார் மனதைப் பரவசப்படுத்தி, தேடரும் திரவியக்குன்றாகிய தெய்வத்தையும் தன்னிற்காட்ட சக்தியுடையதா யிருக்கிறது. “ஆதியிலே வார்த்தை (நாதம்) இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை (நாதம்) தேவனாயிருந்தJ. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டான தொன்றும் அவரையல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவனிருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தJ. உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிராசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர்மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. இந்த வார்த்தை (நாதம்) மாமிசமாகிக் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள் வாசம் பண்ணினார்.” (யோவான் 1 - 1 முதல்) எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமாயிருந்த நாதத்தினால் உலகம் படிப்படியாய் சூட்சும தூல தோற்றத்தையடைந்தJ. தூல சூட்சம காரண மென்னும் முந்நிலைகளையும் அடைந்த ஜீவர்களுடைய உள்ளத்திலிருந்து, அவர்கள் கருத்தைத் தெரிவிக்கச் சூட்சமமான பலபல இனிய தொனிகளும், தூலமான பலபல அபிநயங்களும் உண்டாயின. கருத்தைத் தெரிவிக்கும் தொனிகளும் அபிநயங்களும், காலக்கிரமத்தில் பாஷையாகி வரிவடிவமாய் எழுதப்பட்டு, நூல்களும் சாஸ்திரங்களும் கலைகளுமாயின. தாங்கள் மிகவும் அருமையாக நினைத்தவைகளும், வாழையடிவாழையாய் வந்த பரம்பரையாருக்குப் பாடம் சொல்லிவைத்து வந்தவைகளுமான தெய்வ தோத்திரங்களையே, முதல் முதல் எழுதிவைத்தார்கள். அதினாலேயே அதற்கு முதல் நூல் என்று பெயர் உண்டாயிற்று. காதினாலேயே கேட்டுப் பாடமாக்கிக்கொண்டிருந்தகாலத்தில், அதைச் சுருதி என்றார்கள். முதல் நூல் உண்டானபின், அதன் உட்பொருளை அறிவதற்கு ஏதுவான உபாயங்களையும் உபநிடதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் அறுபத்துநாலு கலைகளையும், அவைகளை நுட்பமாய் விளக்குவதற்கு ஏதுவாக இதிகாசங்களையும் புராணங் களையும் செய்தார்கள். தெய்வ பக்தர்களின் இருதயமாகிய களஞ்சியத்தி லிருந்து வரும் செய்யுள்களில் மறைந்திருக்கும் கருத்துகள், உள்ளபடி அர்த்தமாவது கூடியதல்லவே. நாதப் பிரமத்தையே கீதமாய்த் தோத்திரிக்கும் வேதம் எப்படி முக்கியமானதோ, அப்படியே நாதப்பிரமத்தையே விஸ்தரிக்கும் சங்கீத சாஸ்திரமாகிய காந்தர்வ வேதமும் முக்கியமானJ. வேதத்தின் உபாங்கமாகிய காந்தர்வவேதத்தை அல்லது சங்கீதத்தை, கைலாசத்தில் நிருதி மூலையில் நிருத்தம் என்னும் பெயருடன் பரம சிவன் உபதேசித்ததாக இன்னும் சொல்லப்பட்டு வருகிறது. இம்முதல்நூலுக்குப்பின், அநேகவழி நூல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதை வாசிக்கும் கனவான்களே! இற்றைக்கு அனேக ஆயிர வருஷங்களுக்கு முன்னுள்ளதாக எண்ணப்படும் முதல் நூலில், அதாவது, சாம வேதத்தில், இன்று நாம் எல்லா வாத்தியங்களிலும் இன்னிசையுடையதென்று மதிக்கும் வீணையும், அதன் செய்முறையும் கூறப்பட்டிருப்பதுமன்றி அதைக் கொண்டே பகவானைத் துதிக்கவேண்டுமென்றும் சொல்லியிருக்குமானால், இந்திய சங்கீதத்தின் பூர்வீகத்தை என்னென்று சொல்வது சரஸ்வதி நாரதர் தும்புரு அநுமான் முதலிய பெரியோர்கள், தங்கள் தங்கள் வீணையைக் கொண்டு இடைவிடாமல் தெய்வத்தைத் துதித்துக் கொண்டிருக்கிறார் களென்றும், பரமசிவன் தமது இருகாதிலும் கம்பலர் அசுவதரர் என்னும் வைணீக சிரோமணிகளைக் குண்டலமாகத் தரித்துக்கொண்டு அவர்கள் கானத்தைச் சதா கேட்டுக்கொண்டிருக்கிறாரென்றும் சொல்லப்படுமானால், வீணாகானத்தின் மேன்மையையும் சங்கீதத்தின் பூர்வத்தையும் நிதானிக்கத்தக்க வல்லவர் யாவர்? அருள் நாதன் உலகில் அவதரித்த சமயத்தில், தேவ சேனைகள் வானத்தில் தோன்றி, பூமியிலுள்ளோர் கேட்கும்படி “உன்னதங்களிலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமு முண்டாவதாக” வென்று பாடினார்களானால், சங்கீதத்தின் உபயோகமும் உபயோகிக்கும் சமயமும் எவ்வளவு மேலானவையென்று காண்கிறோம். மேலும், தேவலோகத்தில் தேவாசனத்தின்முன் சகல பரிசுத்தவான்களும் தேவதூதர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களை வாசித்துக்கொண்டு, புதுப்பாட்டைச் சதா பாடுகிறதாகவும், “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்; வானமும் பூமியும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கின்றன” வென்று முழங்குகிறதாகவும் சொல்லப்படுமானால், இம்மை மறுமை என்னும் இருநிலைகளிலும் சங்கீதத்தின் முக்கியத்தை எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? இம்முக்கியமான விஷயத்தில், அதாவது, சங்கீதத்தின் மேன்மையையும் அதன் பூர்வத்தையும் சொல்லவேண்டிய விஷயத்தில், தெய்வத்தின் நித்திய காலத்தையும், பூமி உண்டான காலமுதல் இதுவரையும் சென்ற நாட்களையுமே அதற்குக் காலமாகவும், மோட்ச பிராப்தியையே அது தரும் மேன்மையாகவும் சொல்லக் கூடியதேயன்றி, வேறு சிறப்புச்சொல்ல இயலாத மேம்பாடுடையதாயிருக்கிறது. மேலும், பெரியோர்களால் சொல்லப்பட்ட பற்பல பாக்களும், பகவானைத் துதிக்கும் பாக்களும், இன்னிசைகலந்தபின்பே, மனதைப் பரவசப்படுத்தக் கூடியவைகளா யிருக்கின்றனவென்பதை நாமெல்லாரும் அறிவோம். பூமியில் மறைந்துகிடக்கும் வித்துக்கள் மழையினால் முளைத்துத் தழைத்துப் பூத்துக் காய்த்து நற்பலனைத்தருவதுபோல, முன்னோர்களின் பாக்கள் யாவும், இன்னிசை கலந்தபின்பே உயர்வான அர்த்தங்களை மனதிற்குப் புலப்படுத்தி ஆனந்தம் அடைவிக்கிறJ. “கல்லேனும் ஐய ஒருகாலத்தில் உருகும் என்கன்னெஞ்சம் உருகவிலையே.” “நாடகத்தால் உன்னடியார்போல் நடித்J.” என்ற பாட்டுகள் ஒரு இராகத்தில் வெவ்வேறு விதமான ஆலாபனம் செய்யப்படும் போது அவற்றில் அடங்கிய கருத்துகள் எத்தனையோ, அத்தனையும் மனதுக்குப் புலப்படும். அன்றியும், இன்னிசையானது, மனவருத்தம் தீர்த்துச் சமாதானத்தைத்தரும்; சரீர துன்பத்தையும் போக்கடித்து இளைப்பாறுதல் தரும்; வேலையின்கஷ்டம் தோன்றாதபடி உற்சாகம் செய்துவைக்கும். இரவில் கண்விழித்து இராட்டினம் நூற்கும் ஸ்திரீகள், தங்கள் வருத்தம்தீர இன்னிசையோடு பகவானைத் துதிக்கிறார்கள். ஏற்றம் இறைக்கும் சமுசாரியும், மா அரைக்கும் ஸ்திரியும், ஓடம்தள்ளும் ஓடக் காரனும், நாற்றுநடும் பெண்களும், சாந்து இடிக்கும்கூலிகளும், பகவானைத் துதித்துப் பாடித் தங்கள் வருத்தத்தை மறந்து, தங்கள் வாழ்நாட்களை வெகு உல்லாசமாய்க் கழிக்கிறார்கள். கப்பரை ஏந்தி யாசிக்கும் பிச்சைக்காரனும் சேமக்கலங்கொட்டி யாசிக்கும் தாதனும், உபாதானம் வாங்கும் பிரமசாரியும், அன்னம்யாசிக்கும் அன்னக் காவடிக்காரனும் எக்காலக்கண்ணி, பராபரக் கண்ணி, உடற்கூறு, நெஞ்சறிவிளக்கம் முதலிய ஞானப்பாடல்களை இனிய பண்ணோடு படித்துத் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள். தாயின் இனிய தாலாட்டுப் பாட்டைக் கேட்டுத் தூங்கும் குழந்தை இன்னும் கேட்க விரும்பி ஊம்கொட்டுகிறJ. கன்றுக்குப் பால்கொடாத முரட்டுப் பசுக்கள், கீதாரி பாடும் இசைக்கு வசப்பட்டுப் பூரணமாகப் பால்கொடுக்கிறJ. பிறர் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து வசிக்கும் நாகப்பாம்பும், பாம்பாட்டிகள் ஊதும் மகடியின் இனிய நாதத்தைக்கேட்டுத் தன்னை மறந்து ஆனந்தத்தினால் படம்விரித்தாடுகிறJ. கீதாரியின் இனிய புல்லாங்குழல் ஓசையைக்கேட்டு, மாடுகள் பின் செல்லுகின்றன. பட்டாளத்தில் வாசிக்கும் வாத்தியங்களின் ஓசையால், போர்வீரர்கள் உற்சாகமடைகிறார்கள். குதிரைகள், வாத்தியங்களின் தாளங்களுக்கு ஏற்றவிதமாய் கால்கள் வைத்து நடந்து வெகு தீவிரமாய் முன்னேறிச் செல்லுகின்றன. இனிய ஓசையுடைய பட்சிகள், அதிகாலையில் விழித்துப்பாடுவதையும், அதே காலத்தில் கோவில்களிலும் ராஜ அரண்மனை களிலும் சங்கீத வாத்தியங்கள் முழங்குவதையும், மணிகள் அடிப்பதையும், நாம் கேட்கிறோம். மாலையிலும் அப்படியே நாம் யாவரும் பகவானை இன்னிசையுடன் ஆராதிக்கிறோம். இப்படி, பலவிதத்திலும் மனுஷனுக்குச் சந்தோஷத்தைத் தருவதற்குச் சங்கீதத்தைவிடச் சிறந்தது வேறொன்று மில்லை. சங்கீதமே, இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மேன்மையுடையJ. சங்கீதத்தினால் துதிப்பதே நம்மை உண்டாக்கின கர்த்தனுக்குப் பிரியமானJ. நாரதர் தும்புரு அநுமார் இராவணன் தாவீதரசன் முதலியவர்கள் சங்கீதத்தைக் கொண்டே தெய்வத்தின் கிருபையைப் பெற்றார்கள். சங்கீதமானது மனதைச் சாந்தப்படுத்தி, தெய்வத்தோடு ஒற்றுமைப்படச் செய்கிறJ. சங்கீதமானது சகல நற்குணங்களையும் வளர்த்துத் தெய்வபதம் பெறச் செய்கிறJ. இம்மேம்பாடுடைய சங்கீதத்தை அப்பியாசிக்கும் ஜனங்கள் எவர்களோ, அவர்களை அது உயர்த்தி அவர்களிருக்கும் தேசத்தை மேன்மைப் படுத்திச் சகல கலைகளிலும் செல்வத்திலும் தெய்வபக்தியிலும் விருத்தி யடையச்செய்கிறJ. ராஜனும் குடிகளும் சங்கீதத்தை மேலானதாக மதித்து அப்பியாசிப்பார்களானால், அவர்களைத் தேவர்களென்றும் தேவஜனங்க ளென்றும், அவர்கள் குடியிருக்குமிடத்தைத் தேவபூமியென்றும், மற்றவர்கள் கொண்டாடும் உன்னத நிலைக்குள்ளாகச் செய்கிறJ. சங்கீதத்தைக்கொண்டு தெய்வத்தை ஆராதிக்கும் உத்தம அரசர்கள், தெய்வ பிரமாணங்கள் கடுகளவும் பிசகாமல், புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க, மன்னுயிர் யாவும் தன்னுயிராக நினைத்துப் பரிபாலனம்செய்து, நீதி இரக்கம் பொறுமை அன்பு சமாதானம் முதலிய உத்தம குணங்களோடு குடிகளை நடத்தி, இவ்வுலகத்திலேயே மோட்சானந்தத்தை நிலை நாட்டுகிறார்கள். இவ்வளவு மேம்பாடுடைய சங்கீதத்தை அற்பமாக நினைத்துலௌகிக வழிகளில் உபயோகப்படுத்துகிறவர்கள் புன்னெறியடைந்து மறைந்து போவார்கள் என்பது நிச்சயம். தெய்வத்தைத் துதிப்பதையே முதன்மையாகக்கொண்ட நம் முன்னோர் சங்கீத சாஸ்திரத்தைப்பற்றி மிக விரிவாக எழுதியிருந்தார்க ளென்றாலும், எழுதப்பட்டவைகள் இக்காலத்தில் பெரும்பாலும் அழிந்தும் நூதனமானவைகள் உண்டாகியும் பலதப்பறைகள் கலந்தும் இருப்பதனால், தெளிவாய் அறிந்து கொள்வதற்கு அரிதாயிருக்கிறது. சங்கீதம் உற்பத்தியான காலம் இடம் ஆதரித்து வளர்த்தவர்களின் பெயர் முதலியவைகளைத் திட்டமாய் அறிந்து கொள்வது இலேசான காரியமல்ல. என்றாலும், ஒருவாறு உலகத்தவர் வழக்கத்திலும் பழக்கத்திலும் முன் நூல்களிலும் வழங்கிவரும் சில காரியங்களைக்கொண்டு, நாம் அறியக்கூடிய சில ஆதாரங்களைப் பார்ப்பது, ஒருவாறு நமக்குத் திருப்தியைத் தருமென்று எண்ணுகிறேன். II. சங்கீதம் பூர்வமாயுள்ளதென்பற்குச் சத்தியவேத ஆதாரமும் அக்காலத்தில் வழங்கி வந்த சங்கீத வாத்தியங்களும். 1. ஜலப்பிரளயத்திற்கு முன் கின்னரமும் நாகசுரமும் இருந்தன வென்பJ. தென்னிந்திய சங்கீதத்தின் காலத்தை நாம் பார்ப்பதற்குமுன், இதற்கு அப்புறமாயிருந்த தேசங்களில் ஒருவாறு நிச்சயிக்கக்கூடியவையும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் ஒப்புக் கொள்ளக்கூடியவையுமாகிய சத்திய வேதத்தில் உள்ள சில ஆதாரங்களைப் பார்ப்போம்: இற்றைக்குச் சற்றேறக் குறைய 3400 வருஷங்களுக்கு முன்னிருந்த மோசே முனிவரால் எழுதப்பட்ட ஆதியாகமம் 4-ம் அதிகாரம் 20, 21, 22-ம் வாக்கியங்களில் “ஆதாள் யாபாலைப் பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரனுடைய பெயர் யூபால். அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்.” என்று எழுதியிருக்கிறது. கின்னரக்காரருக்கும் நாகசுரக்காரருக்கும் தந்தையாகிய யூபாலும், பித்தளை இரும்பு முதலிய லோகங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குத் தந்தையாகிய தூபால்காயீனும் கிறிஸ்து பிறந்ததற்குச் சற்றேறக்குறைய 4000 வருஷங்களுக்கு முன்னிருந்ததாக வேதசாஸ்திரிகள் கணித்திருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குப் பின்னுள்ள 1914 வருஷங்களையும் அதோடு சேர்த்துப் பார்ப்போமேயானால் இற்றைக்குச் சற்றேறக்குறைய 5900 வருஷங்களுக்கு முன்னுள்ளதாகும். இவர்கள் இருந்த காலத்திற்குச் சுமார் 1650 வருஷங்களுக்குப்பின் ஜலப்பிரளயம் வந்ததாகத் தெரிகிறது. ஜலப்பிரளய காலத்திற்கு முன்னாலேயே சின்ன ஆசியாவிலுள்ள பூர்வத்தார், சங்கீத வித்தையிலும் மற்றும் கைத்தொழில்களிலும் பேர் போனவர்களாய் இருந்தார்களென்று வெகு திட்டமாய்த் தெரிகிறது. மேலும் காயீன் ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பெயரையிட்டானென்றும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் ராக்ஷதர் பூமியிலிருந்தார்களென்றும், பெயர் பெற்ற மனுஷராகிய பலவான்கள் 969, 962, 900, 800, 700 முதலிய வருஷம் வரைக்கும் நீடித்த ஆயுளுடையவர்களாயிருந்தார்களென்றும், அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்தவர்கள். இதுபோலவே, ஜலப் பிரளயத்திற்குமுன் இந்தியாவிலும், நீண்ட ஆயுள் பெற்ற மனிதர்களும் இராக்ஷதர்களும் பிரபலமான பட்டணங்களும் அரசர்களும் கின்னரம் நாகசுரம் வீணை புல்லாங்குழல் தாளம் அபிநயம் முதலியவைகளைப்பற்றிச் சொல்லும் சங்கீத சாஸ்திரமுமிருந்தனவென்று இதன்பின் பார்ப்போம். 2. மோசே முனிவரின் பாட்டும், மிரியாமின் நடனமும் தம்புரோடு கூடிய பாட்டும் ஜலப்பிரளயத்திற்குப் பின்பு, இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப் படுகையில் எகிப்தியர் செங்கடலில் அமிழ்ந்தபோது, சத்துருபயம் நீக்கித் தங்களைக் காத்தற்காக மோசே முனிவரும் இஸ்ரவேல் புத்திரரும், கர்த்தரைப் புகழ்ந்து பாடினார்களென்று யாத்திராகமம் 15-ம் அதிகாரம் முதலாவது வாக்கியத்திலும், “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கத் தரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்சென்று கர்த்தரைப் பாடினார்கள்” என்று அதே அதிகாரம் 20-ம் வசனத்திலும் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். அவர்கள் பாடிய வசனங்களைப் பார்க்கையில், தற்காலத்தின் நாகரீகத்திலும் மேலானதாகவே தெய்வத்தைப் புகழ்ந்து துதித்திருக்கிறார்க ளென்று அறியலாம். அவர்கள் பாட்டுப்பாடப் பழகியிருந்தார்களென்றும் ஸ்திரீகள் அனேகர் தம்புரோடு பாடி நடனம் பண்ணினார்கள் என்றும் சொல்வதைக் கவனிக்கையில், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியம் அநேகமிருந்ததாகவும் அதோடு பாடப் பழகியிருந்ததாகவும் தாங்கள் பாடிய பாட்டுக்கிணங்க நடனம்பண்ண ஸ்திரீகளும் பழகியிருந்த தாகவும் அறிகிறோம். இது இன்றைக்குச் சுமார் 3400 வருஷங்களுக்கு முன் என்று திட்டமாய்த் தெரிகிறது. 3. தெபொராளின் பாட்டு அதன்பின் நியாயாதிபதிகள் 5-ம் அதிகாரத்தில், லபிதோத்தின் மனைவியாகி தெபொராள் என்னும் தீர்க்கதரிசி, 900 இருப்பு ரதங்களோடு எதிர்த்து வந்த சிசெராவின்மேல் தனக்கு வெற்றிகிடைத்த சமயத்தில், தெய்வத்தைத் துதித்துப் பாடினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் பாடிய வசனங்களை அவ்வைந்தாம் அதிகாரத்தில் முழுதும் காணலாம். அப்பாட்டு ஒரு யுத்தத்தையும் அதில் பலவான்கள்காட்டிய பராக்கிரமத்தையும், யுத்தம் நடந்த இடத்தையும் சத்துருக்கள் அடைந்த தோல்வியையும் தான் அடைந்த வெற்றியையும், நேரிற் கண்டது போல் யாவரும் தெளிவாய் அறிந்துகொள்ளக் கூடிய விதமாய், மிகவும் அலங்காரமாய் எழுதப் பட்டிருக்கிறJ. ஒரு ஸ்திரீ மிகுந்த கர்ப்பனாலங்காரத்துடன் கவி செய்திருப்பதைப் பார்த்தால் அக்காலத்தி லேயே சாகித்தியம் செய்யவும் அலங்காரமாய்ப் பாடவும் கூடியவர்களாய்ப் பூர்வத்தார் இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது. அது இற்றைக்கு 3200 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 4. யெப்தாவின் மகள் நடனமும் தம்புரோடு கூடியபாட்டும் அதன்பின் நியாயாதிபதிகள் 11-ம் அதிகாரம் 34-ம் வாக்கியத்தில், யெப்தா என்னும் நியாயாதிபதி, அம்மோன் புத்திரரை முறியடித்து வெற்றிவேந்தனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிவருகையில், அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனம்செய்து அவனுக்கு எதிர் கொண்டுவந்தாள் என்று சொல்லப் பட்டிருக்கிறJ. அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 3070 வருஷங்களுக்குமுன் என்று அங்கே காணப்படுகிறது. 5. தாவீது ராஜாவின் சங்கீதமும் பக்தியும் நடனமும் அவர் காலத்தில் வழங்கி வந்த வாத்திய வகைகளும் i சாமுவேல் 16-ம் அதிகாரம் 23-ம் வாக்கியத்தில் “ஒரு பொல்லாத ஆவி சவுலைப்பிடிக்கும்போது தாவீது சுர மண்டலத்தையெடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதல் அடைந்து சொஸ்தமாவான்.” என்பதைக் கவனிக்கையில் பொல்லாத ஆவிகளின் சேஷ்டை சங்கீதத்தால் சௌக்கியமாகுமென்று அதன் முன்வாக்கியங்களில் சொல்லி யிருக்கிறதையும் அப்படியே சௌக்கியமடைந்ததையும் நாம் காண்கிறோம். இதில் சொல்லப்படும் தாவீது என்பவர், சங்கீதத்தில் மிகவும் தேர்ந்தவர். சாகித்தியம் செய்வதிலும் அதைச் சுரமண்டலம் வீணை முதலிய வாத்தியங் களில் வாசிப்பதிலும், விதம்விதமான வாத்தியக்கருவிகள் உண்டாக்குவதிலும் கைதேர்ந்தவர். தெய்வத்தினிடத்தில் மிகுந்த பக்தியுள்ளவர். தெய்வசமூகத்தில் பாடுவதும் நடனம்பண்ணுவதும் மற்றவர்களையும் அப்படிப்பாடியாடச் செய்வதும் அவருக்கு மிகவும் பிரியம். 2 சாமுவேல் 6-ம் அதிகாரம் 5, 14, 15-ம் வாக்கியங்கள்: “தாவீது இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும் சுரமண்டலம் தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும் கர்த்தருக்கு முன்பாக ஆடிப் பாடிக்கொண்டு போனார்கள். தாவீது சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக் கொண்டு தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான். அப்படியே தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டு வந்தார்கள்.” மேல் வாக்கியங்களைக் கவனிக்கும்பொழுது, சற்றேறக்குறைய இற்றைக்கு 3000 வருஷங்களுக்கு முன்னே, சகலவிதமான வாத்தியங்களும் நடனமும் சங்கீதத்தோடு சேர்ந்து தேவசந்நிதியில் உபயோகிக்கப்பட்டன வென்று நாம் காண்கிறோம். மேற்காட்டிய சங்கீதக்காரனாகிய தாவீது, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு முக்கியமான ராஜன் என்றும், சங்கீதமே உருவாக அவதரித்தவனென்றும் நாம் அறியவேண்டும். இவ்வாசன் எழுதிய சங்கீதங்களை, நாம் சத்திய வேதத்தில் மிகவும் விஸ்தாரமாகப் பார்க்கலாம். அவைகளில், ஒரு உத்தம பக்தனது நெஞ்சத்தின் கனிவும், தெய்வத்தில் அவன் வைத்திருக்கும் உறுதியும், அவன் மனநேர்மையும் மிகத்தெளிவாய் விளங்குகிறJ. அவ்வளவு மகிமை பொருந்திய பாடகர்கள் தற்காலத்தில் கிடைப்பது அரிJ. அவர் எழுதிய சங்கீதங்கள், அவைகளை வாசிக்கும் உண்மையான பக்தர்களுக்கு, அவரவர்கள் சமயங்களுக்கு ஏற்றவைகளாய்ப் புதிது புதிதான கருத்துகளை மனதில் உண்டாக்கக்கூடிய விதமாய் அமைந்திருக்கின்றன. உண்மையான ஒரு பக்தன், தான் புதிதாக தெய்வத்தைத் துதிக்கச் சில வார்த்தைகள் சொல்ல ஆரம்பிப்பானேயானால், அவ் வார்த்தைகள் தாவீது அரசன் சங்கீதத்தில் இருக்கிறதாகக் காண்பான். அவ்வளவு மேன்மை பொருந்திய பக்தனாகிய தாவீது அரசன் தாம் எழுதிய 92-ம் சங்கீதம் 1, 2, 3-ம் வாக்கியங்களில் “கர்த்தரைத் துதிப்பதும் , உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவதும், பத்து நரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.” என்றும், 150-ம் சங்கீதத்தில் “அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்து அவரைத் துதியுங்கள். அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.” என்றும் பாடியிருக்கிறதைக் கவனிப்போமானால், அவர் காலத்திலுள்ள சங்கீதத்தின் உயர்வையும் வாத்தியங்களின் மிகுதியையும் அவைகள் யாவையும் கொண்டு தெய்வத்தையே பக்திசெய்தா ரென்பதையும் நாம் காணலாம். இவ்வுத்தமனே தேவ சந்நிதியில் பாடகர்களைப் பலபாகங்களாகப் பிரித்து, இராகத் தலைவர்களை ஏற்படுத்தி, முறை முறையாய்ப் பல வாத்தியங்களைக்கொண்டு தெய்வத்தைத் துதிக்கும்படி முதல் முதல் நியமித்தவர். இவர் புத்திரனாகிய சாலொமோன் அரசனும் மிகுந்த ஞானமுடையவனாயிருந்தான். 6. சாலொமோன் ராஜன் சங்கீதமும் 288 பாடகர்களை ஆலயத்தில் நியமித்ததும். i. இராஜாக்கள் 4. 32, 33-ம் வாக்கியங்களில். “அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்J. லீபனோனிலிருக்கிற கேதுரு மரங்கள் முதற்கொண்டு கவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டு வரைக்குமுள்ள மரம் முதலிய தாபரங்களைக் குறித்தும் மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.” என்று கூறியிருப்பதைக் காணலாம். இந்த ஞானமுள்ள அரசனும், தன் தகப்பனைப் போலவே தேவாலயத்தில் சங்கீத வாத்தியத்தோடு கடவுளைத் துதித்து ஆராதித்துவந்தான். தான் கட்டின மகிமைபொருந்திய தேவாலயத்தில் முறைமுறையாய்க் கீர்த்தனம்பாடத்திட்டம் செய்திருந்தான் என்று 1நாளாகமம் 25, 6, 7-ம் வாக்கியங்களில் காண்போம். அதாவது, “இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள்தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள். கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப் பேராயிருந்தார்கள்.” இந்த இருநூற்றெண்பத்தெட்டுப் பேரும் ஒவ்வொரு வகுப்புக்குப் பன்னிரண்டு பன்னிரண்டு பேராக 24 பாகங்களாக்கப்பட்டு, அந்தி சந்தி மத்தியானங்களில் ஒவ்வொருநாளும் தங்கள்தங்கள் முறைப்படி தேவாலயத்தில் கானம் செய்துவந்தார்கள். இவ்வளவு ஏராளமான பாடகர்கள் தங்கள்தங்கள் முறைப்படி ஆலயத்தில் கானம் செய்து வந்ததைப்போல, உலகத்தில் வேறு எந்த ராஜ்ஜியத்திலாவது எந்த ஆலயத்திலாவது நடந்து வந்ததென்று நாம் இதுவரையும் கேள்விப்பட்டதில்லை. இது சற்றேறக்குறைய இற்றைக்கு 2930 வருஷங்களுக்குமுன்னென்று கணக்கிடப்பட்டிருக்கிறJ. 7. பாபிலோனில் நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையும் அதன் முன் வாசிக்கப்பட்ட வாத்தியக் கருவிகளும். பாபிலோன் என்னும் கல்தேயர் தலை நகரில் அரசாட்சி செய்து வந்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜன், 60 முழ உயரமும் 6 முழு அகலமுமான ஒரு பொற் சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியில் நிறுத்தி, அச்சிலையின் பிரதிஷ்டைக்குச் சகலரும் வரும்படி அழைத்திருந்தான் என்று தானியேல் தீர்க்கதரிசனம் 3-ம் அதிகாரத்தின் துவக்கத்தில் நாம் பார்க்கலாம். அவ்வதிகாரத்தின் 4-ம் 5-ம் வாக்கியங்களில். “கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்ன வென்றால்: எக்காளம், நாகசுரம்,கின்னரம், வீணை, சுரமண்டலம் தம்புரு முதலான சகலவித கீத வாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்பொழுது, நீங்கள் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுசாத்நேச்சார் நிறுத்தின பொற் சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.* * * என்றான்.” இவ்வசனத்தை நாம் கவனிக்கையில், கீதவாத்தியங்கள் ஆதிகாலத்தில் எப்படி உபயோகிக்கப்பட்டு வந்தனவென்பதைத் திட்டமாய்க் காண்கிறோம். 8. பாபிலோன் அரண்மனையில் காலை மாலை மத்தியானங்களில் சங்கீத வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன என்பது. தானியேல் 6-ம் அதிகாரம் 18-ம் வாக்கியத்தில் “பின்பு ராஜா தன் அரண்மனைக்குப்போய், இரா முழுவதும் போஜனம் பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலுமிருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமல் போயிற்று.” என்று சொல்லியிருக்கிறதைக் காண்போம். இதனால், ராஜாக்கள் காலைகளில் தாங்கள் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், சாயந்தரம் வேலை யொழிந்து உல்லாசமாயிருக்கும் காலத்திலும், இராத்திரி போஜனம் பண்ணின பின்பும், அரண்மனையில் வாத்தியங்கள் முழங்கும்படி செய்வது வழக்கமாயிருந்ததாகத் தெரிகிறது. தற்காலத்திலும் இதைக் காணலாம். இவ்வழக்கம், இன்று நேற்றல்ல, சுமார் 2450 வருஷங்களுக்கு முன்னுள்ள தென்று சத்தியவேதத்தில் சொல்லப்படுகிற கணக்கினால் தெரியவருகிறது. இப்படிச் சங்கீதத்தை ராஜ அரண்மனைகளில் உபயோகித்து வந்த பாபிலோன் என்னும் பெரிய நகரைப்பற்றிச் சில காரியங்களை ஒருவாறு கவனிப்பது, தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வ நிலையை விசாரிக்கும் நமக்குப் பிரயோஜனமாயிருக்குமென்று நம்புகிறேன். 9. பாபிலோனும் நினிவேயும் அவைகளைச் சேர்ந்த பட்டணங்களும் நிமிரோத் என்பவனால் கட்டப்பட்டJ. பாபிலோன் நினிவே என்னும் நகரங்கள், சின்ன ஆசியாவில் திகரிஸ் நதியின் மேல் கட்டப்பட்டிருந்தன. ஆதியாகமம் 10-ம் அதிகாரம் 8ம் வாக்கிய முதல் இந்நகரங்களையும் அவைகளைச் சேர்ந்தனவாகச் சொல்லப்படும் மற்றும் சில பட்டணங்களையும்பற்றிய விவரங்களைக் காணலாம். அதாவது, நோவாவின் குமாரர்கள், சேம் காம் யாப்பேத். “காமுடைய குமாரர், கூஷ் மிஸ்ராயீம் பூத் கானான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான். இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச் சொல் உண்டாயிற்று. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள். அந்தத் தேசத்திலிருந்து ஆசூருக்குப் புறப்பட்டுப்போய் நினிவேயையும் ரெகெபோத் பட்டணத்தையும் காலாகையும் நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.” இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில், பாபிலோன், நிம்ரோத்துடைய ராஜ்யத்தின் முக்கியமான ஸ்தானம் என்று காண்கிறது. இது தவிர, நினிவேப் பட்டணத்தையும் அதிலும் பெரிதான வேறு சில பட்டணங்களையும் கட்டினதாகக் காண்கிறோம். ஆகவே, பாபிலோன் சத்திய வேதாகமத்தில் சொல்லியபடி 4261 வருஷங்களுக்குமுன் உண்டானJ. நேபுகாத்நேச்சார் பாபிலோனில் அரசாட்சி செய்த காலமோ, கிறிஸ்துவுக்கு 580 வருஷங்களுக்கு முன்னும் இற்றைக்கு 2494 வருஷங்களுக்கு முன்னுமானJ. கிட்டத் தட்ட கி.மு. 540-ம் வருஷத்தில் சைரஸ் (கோரேஸ்) என்பவனால் இந்தப்பாபிலோன் ராஜ்யம் அழிக்கப்பட்டுப் போயிற்று. 10. பாபிலோன் என்னும் நகரத்தின் சிறப்பும் அதன் அழிவும். இந்நகரம் உலகத்திலுள்ள நகரங்கள் யாவற்றிலும் மிகுந்த பூர்வீகமும் அதிக விசாலமுமானதாக விருந்தJ. தற்காலத்தில், உலகத்தில் பெரியபட்டணமாக மதிக்கப்படும் லண்டன்மா நகரத்தைப்பார்க்கிலும் பாபிலோன் மூன்றுபங்கு பெரிJ. லண்டன்மாநகரத்தைத் தற்காலத்துப் பாபிலோன் என்றழைக்கக்கூடியதாக அது அவ்வளவு சிறப்புடையதாயிருந்தJ. லண்டன், தெம்ஸ் (Thames) ஆற்றின் இருபக்கங்களிலும் அமைந்திருப்பது போலவே, பாபிலோன், ஐபிராத்து ஆற்றின் இருபக்கங்களிலும் செங்கல்களால் கட்டப்பட்ட கைபிடிச்சுவர்களுடனும் படித்துறைகளுடனும் இருபக்கங்களிலும் விசாலமான பாதைகளுடனும் பாதைகளின் பக்கங்களில் உன்னதமான மூன்று நான்கு அடுக்கு மாளிகைகளுடனும் வெகு ஒழுங்காகக் கட்டப்பட்டு, மிக அழகான தோற்றமுடையதாயிருந்தJ. இதன் நடுமத்தியில் இருபாகத்தையும் இணைக்கக்கூடிய ஒரு பெரிய பாலம் வெகுபலமாகவும் உன்னதமாகவும் கட்டப்பட்டிருந்தJ. சமமான இடத்தில் சரிசதுரமாகப் பக்கத்துக்குப் பக்கம் 15 மைல் அளவுடன் 225 சதுர மைல் பரப்புள்ளதாகக் கட்டப்பட்டJ. இப்பட்டணம் மொத்தத்தில் 625 சரிசதுரங்களாகப் பிரிக்கப்பட்டு, அவைகள் ஒவ்வொன்றும் 25, 25 தெருக்களாக வகுக்கப்பட்டிருந்தJ. பெரும் தெருக்கள் ஒவ்வொன்றும் நதியின் இருபக்கங்களிலும் வந்துசேரும்படி நேர்நேராக அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றும் பிரமாண்டமான பித்தளைக் கதவுகளுடையதாயிருந்தJ. நிலைகளும் கதவுகளும், முற்றிலும் பித்தளை. அதுபோலவே கோட்டையின் 120 கதவுகளும் முழுதும் பித்தளையினால் ஆகியவை. இப்பட்டணத்தைச்சுற்றிலும் 75-அடி உயரமும் மேல்பாகத்தில் 32-அடி அகலமுமுடையதாக பிரமாண்டமான கோட்டை கட்டப்பட்டிருந்தJ. நடுவில் ஓடிய ஆற்றின்ஜலம் அதிகமாகுங் காலத்தில் வடிந்து போகிறதற்காகக் கோட்டைக்குவெளியே 40 மைல்சரிசதுரமும் 1600 சதுரமைல் விஸ்தீரணமும் 35-அடி ஆழமுமுள்ள ஒருபெரிய குளமும், பட்டணத்தைச் சுற்றிலும் 200 முழ ஆழமும் 50 முழ அகலமுமான அகழும் வெட்டப் பட்டிருந்தன. சாமக்காரர்களிருக்கும்படி கட்டிய கோபுரத்தின் நடுமத்தி வழியாகக் கோட்டையின்மேல் 4 குதிரை பூட்டிய பெரிய ரதங்கள் தாராளமாய்ச் சுற்றிவரும்படி பாதையுமிருந்தJ. கோட்டையின் நடுமத்தியில் வட்டமான இரண்டு உள்கோட்டைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில், ராஜனுடைய அரண்மனையும் அதைச்சேர்ந்த உத்தியானவனங்களும் மற்றொன்றில், பீலஸ் என்னும் சுக்கிரபகவானுக்குக்கட்டிய ஆலயமும் மிகப் பிரமாண்டாயிருந்தன. அவ்வாலயத்தில் மிகவும் உயரமான பித்தளைக் கதவுகள் அநேகமிருந்தன. அதன் நிலைகளும் படிகளும் எல்லாம் பித்தளை. உள்பாகத்தில் அனேக பிராகாரங்கள் மிகவும் நேர்த்தியாய் அமைக்கப் பட்டிருந்ததோடு அதிலுள்ள விக்கிரகங்களும் அவ்வாலயத்தின் தட்டுமுட்டுகளும் சமையல் பாத்திரங்களும் முற்றிலும் பசும்பொன்னாக விருந்தன. இரவு பகல் இன்னதென்று அறியமுடியாமல் மயங்கும்படி அதிக ஜனப்பழக்கமுள்ளதாகவும் வியாபாரம் பெருத்ததாகவும் அந்நகரம் விளங்கிற்று. அங்குள்ளோர் உயர்ந்த ரத்தினக் கம்பளங்கள் மெல்லிய சால்வைகள் அரசர்களுக்குரிய பீதாம்பர முதலிய உயர்ந்தவஸ்திரங்கள் செய்வதில் மிகவும் கை தேர்ந்தவர்களாயிருந்தார்கள். இற்றைக்கு 3365 வருஷங்களுக்கு முன் இஸ்ரவேல் ஜனங்களால் அழிக்கப்பட்ட எரிகோபட்டணத்தில் (யோசுவா 7-21ல்) “கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 சேக்கல் வெள்ளியையும் 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் நான் கண்டு அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்.” என்று ஆகான் சொல்லியிருக்கிறதைப் பார்க்கும்பொழுது, மிகுந்த பூர்வ காலத்திலேயே மிக அலங்காரமான சாயங்களுடன் நாணயமான வேலைப் பாடுடையதாய் மற்ற தேசத்தவர் விரும்பும் படியான விலையுயர்ந்த வஸ்திரங்கள் நெய்யப்பட்டு வந்தனவென்பது வெளியாகிறது. மேலும், பட்டணத்தின் நடுமத்தியில் வானமளாவிய உயரத்துடனும் மிகுந்த விஸ்தாரத்துடனும் ஆகாயத்தில் தொங்குவதுபோல் காணப்படும் ஒரு தோட்டமிருந்தJ. ஒவ்வொன்றும் 50 அடி உயரமுடைய எண்ணிறந்த ஆர்ச்சு (வளைவு) களால் தாங்கப்பட்ட மேல்மாடியும், அதன்மேல் சுற்றி ஒரு அங்கணமிட்டு ஆர்ச்சுகளால் தாங்கப்பட்ட இன்னொரு மேல்மாடியும் இப்படியே படிப்படியாய் ஒரு அங்கணம் குறைத்து அநேக மாடிகளுள்ளதான ஒரு பிரமாண்டமான கட்டடம் கட்டுவித்தான். அக்கட்டத்தின் மேல்மாடியில் சுற்றி விட்டிருக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் போதுமான கைபிடிச்சுவர்கள் எழுப்பி, அதிலிருந்து தண்ணீர் ஒழுகாதபடி ஈயத்தகட்டினால் மூடி, அது நிறையப் பெரிய மரங்களும் வேர்விடும்படியான ஆழத்திற்கு நல்ல மண்களைக்கொட்டி, அதில் தூரதேசத்திலுள்ள யாவரும் கண்டுகளிக்கும் படியாகப் பலதேச விருக்ஷங்களையும் கனிதரும் மரங்களையும் புஷ்பச்செடிகளையும் கொடிகளையும் நாட்டிவைத்தான். இப்படியே ஒன்றுக்குமேல் ஒன்றாய் உயர்ந்த ஒவ்வொரு தளத்தின் மட்டங்களிலும் மேல்மட்டத்திலும் மிகவும் அலங்காரமாய்ச் செய்யப்பட்டிருந்தJ. இவைகளை ஒன்றின்பின் ஒன்றாய் ஏறிப்பார்ப்பதற்கு அனுகூலமான படிகளும் கட்டப்பட்டிருந்தன. இவ்வுன்னதமும் விஸ்தாரமுமான தோட்டம் பார்ப்பதற்கு மரங்கள் அடர்ந்த ஒரு சிறு குன்றைப்போல் மிக அலங்காரமாய்த் தோன்றுமாம். ஆகாயத்தோட்டத்தின் கீழ்ப்பாகம் மிகவும் பலமாய் அமைக்கப்பட்டிருந்தJ. ஒவ்வொன்று நாலடிக்குநாலடி கனமுள்ளதும் 16 அடிக்குமேல் நீளமுள்ளதுமான அநேக கல் உத்திரங்களுடன் பிரமாண்டமான கம்பங்களால் தாங்கப்பட்டிருந்தJ. ஒவ்வொரு மாடியிலும் மிகவும் விஸ்தாரமான அறைகள் ஏராளமாயிருந்தன. அவைகளின் கீழேயுள்ள முதல் மாளிகையில், ஜனங்கள் யாவரும்கண்டு ஆனந்தப்படக்கூடிய நாடக சாலைகளும், கண்காக்ஷிசாலைகளும், புத்தகசாலைகளும், விளையாடும் இடங்களும், இளைப்பாறும் இடங்களும், கடைகளும், இன்னும் பலவிதமான சந்தோஷங்களுக்குரிய இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதன்மேலுள்ள மாடிகளில், ராஜ்ய நிர்வாகத்துக்குரிய கச்சேரிகள் ஒன்றிலும் நீதிஸ்தலங்கள் மற்றொன்றிலும் ராஜாங்கத்துக்கு உபயோகமும் அநேகவித ஆடம்பரமுமான ஸ்தலங்கள் வேறொன்றிலுமாக அமைக்கப்பட்டிருந்தன. அது, காலா காலங்களில் தோட்டக்கச்சேரி செய்யவும் ஆனந்தம் கொண்டாடவும்கூடிய ஸ்தலமாயிருந்தJ. இவ்வுன்னதமான தோட்டத்துக்குத் தண்ணீர் தூக்கிக் கொண்டுபோவது கூடிய காரியமாயில்லாததினால் ஆற்றிலிருந்து தண்ணீர் இறைப்பதற்காக ஒரு பிரமாண்டமான யந்திரம் (நுபேiநே) இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பட்டணம் மிக விஸ்தீரணமும் ஜன அடர்த்தியு முடையதாயிருந்ததினால், ஒரு பக்கத்தில் நடக்கும் காரியம் மற்றொரு பக்கத்துக்கு இலேசாய்த் தெரியாதாம். இப்பெரிய பட்டணத்தைத் தங்கள் வாசஸ்தலமாக்கிக்கொள்ள அநேக வியாபாரிகளும் பிரபுக்களும் அங்கு வந்துசேர்ந்தார்கள். அது, உலகத்திலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் மிகவும் பெரியதாகவும் அதிகத் திரவியமுடையதாகவும் பலமுள்ளதாகவுமிருந்தJ. அங்குள்ளவர்கள் எல்லா வித்தைகளிலும் கைத்தொழில்களிலும் மிகச் சிறந்தவர்களாயிருந்தார்கள். அங்கே கொலை, களவு, விபசாரம் முதலிய தீமைகளும் அதிகமாயிருந்தன. பாபிலோன் ராஜன், பக்கத்துராஜ்யங்களில் காலாகாலங்களில் படையெடுத்து அத்தேசத்தின் பொருள்களையும் ஜனங் களையும் தன் பட்டணத்தில் கொண்டுவந்து நிரப்புவது வழக்கம். அதுபோலவே, பக்கத்திலுள்ள யாவரும், இப்பாபிலோன் ராஜ்யத்தையும் அதன் மகிமையையும் தாங்கள் அடையவேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சற்றேறக்குறைய 2000 வருஷங்களாக நிலைத்திருந்த பாபிலோன் ராஜ்யத்தை, பாபிலோனியர் தங்களுக்குச் செய்த கொடுமைகளை நினைத்து அதை அழித்து அக்கினியினால் கொளுத்தி அதை நாசமாக்கவேண்டுமென்று, பலர் துடித்துக்கொண்டிருந்தார்கள். பாபிலோனியர் பீலஸ் என்னும் தெய்வத்திற்கு ஒரு பெரிய உற்சவம் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் அசீரியா தேசத்து ராஜனாகிய கோரேஸ் என்பவன், இற்றைக்கு 2454 வருஷங்களுக்குமுன் அதன்மேல் படையெடுத்து ஐபிராத்துஆற்றின் தண்ணீரைப் பட்டணத்துக்குள் திருப்பிப் பெருகவிட்டும் அக்கினியினால் கொளுத்தி நாசமாக்கியும் அநேக ஜனங்களை வெட்டியும் அரண்மனை வாசல் வருகிறவரையும் பாபிலோன் ராஜன் அறியாதிருந்தான். அதன்மேல், ராஜனையும் கொன்று பட்டணத்தைத் தன் வசப்படுத்திக்கொண்டான். நாள் செல்லச்செல்ல அதன் மகிமையும் குறைந்து படிப்படியாய் முற்றிலும் அழிந்து, மண்மேடுகளாய்க் கற்குவியல்களாய்த் துஷ்ட மிருகங்களும் ஜீவஜெந்துக்களும் செடிகளும் நிறைந்த சதுப்பு நிலமாய் நாளது வரையும் காணப்படுகிறது. யாத்திரை செய்கிறவர்களில் அதன் பூர்வ சரித்திரத்தையும் அதன் சிறப்பையும் கேட்டிருந்தவர்கள் அதின் நடுவில் போகும்பொழுது பிரமிப்பினாலும் ஆச்சரியத்தினாலும் ஒருவிதத் திகில் பிடித்தவர்களா வார்களாம். ஆந்தைகளின் அலறலும் நரிகளின் ஊளையும் துஷ்ட மிருகங்களின் கூச்சலும் மிகப் பயங்கரமாயிருக்குமாம். யாத்திரீகர்கள் பூர்வகாலத்தின் நாகரீகத்தைக் குறிக்கும் சில அடையாளங்களையும் கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களையும் தங்கள் தேசத்திற்குக் கொண்டு போவார்களாம். 11. நினிவே நகரமும் அதன் சிறப்பும் அதன் அழிவும் இம்மகா பாபிலோன் என்னும் நகரத்திற்கும் பெரிதாயிருக்கவேண்டு மென்று திகரீஸ் ஆற்றில் நிமிரோத்தினால் கட்டப்பட்ட நினிவே என்னும் நகரம், மூன்றுநாள் பயணம் நடந்து செல்லக்கூடிய விஸ்தாரமுடையதாக இருந்ததென்று சொல்லப்படுகிறது. 19 மைல் நீளமும் 11 மைல் அகலமும் 60 மைல் சுற்றளவுமுள்ளதாய் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களுடையதா யிருந்தJ. நூறு அடி உயரமும், மேல் உயரத்தில் மூன்று வண்டிகள் பக்கம் பக்கமாக ஓடக்கூடிய விசாலமும், ஒன்றொன்று 200 அடி உயரமுள்ள 1500 கோபுரங்களுடைய கோட்டையுமிருந்தJ. கோட்டைக்குள்ளாக உள்கோட்டை இரண்டும் அகழ் இரண்டுமாக மிகவும் அரணிப்பாய்க் கட்டப்பட்டிருந்தJ. கிறிஸ்துவுக்குமுன் 862-ம் வருஷத்தில் யோனா பிரசங்கிக்கப்போன நகரம் இதுவே. இம்மகாநகரமும், கிறிஸ்துவுக்குமுன் 753-ம் வருஷம் அகாஸ்வேரு ராஜனால், இப்போது காணப்படும் சில சுவர்களும் அகழ்களும் தவிர, மற்ற யாவும் குப்பை மேடாக்கப்பட்டJ. 12. அகாஸ்வேரு ராஜனும் ராஜ ஸ்திரீயும் செய்த விருந்துகளின் சிறப்பு அகாஸ்வேரு ராஜன் இந்துதேசமுதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கு முள்ள 127 நாடுகளை அரசாண்டானென்று சொல்லியிருப்பதோடு, மிகவும் சம்பிரமான விருந்து தன் அதிகாரத்திற்குள்பட்ட நாடுகளின் அதிபதிகளுக்கும் பிரபுக்களுக்கும் ஊழியக்காரர்களுக்கும் 180 நாள் செய்தானென்றும், அது முடிந்தபின் தன் ராஜ அரண்மனையிலுள்ள சிங்காரத்தோட்ட மண்டபத்தில் தன் அரண்மனைக்கு வந்திருந்த பெரியோர் முதல் சிறியோர் வரைக்குமுள்ள யாவருக்கும் ஏழுநாள் விருந்து செய்தானென்றும், அப்படியே ராஜஸ்திரீயாகிய வஸ்தியும்ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாளென்றும் சொல்லப்படுகிறது. எஸ்தரின் சரித்திரம் 1-ம் அதிகாரம் 6-ம் வாக்கியத்தில் மண்டபத்தின் சிறப்பைப் பின் வருமாறு காணலாம். “அங்கே வெண்கலத்தூண்களின் மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற் சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தJ. பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப் பட்டJ.” இன்றைக்கு 2435 வருஷங்களுக்குமுன் நடந்த ஒரு தோட்டக் கச்சேரியின் (Garden Party) சிறப்பும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவு சிறப்புப் பொருந்திய அகாஸ்வேருவின் ராஜ்யமும் சூசான் பட்டணத்துடன் பின்னொரு காலத்தில் அழிந்துபோயிற்று. இவை யாவற்றையும் நாம் கவனிக்கையில், ஜலப்பிரளயத்தின்பின் நிமிரோத் மிகவும் பிரபலமான பட்டணங்களைக் கட்டினான் என்பதும், பிரபலமான சில பட்டணங்கள் அவன் ராஜ்யங்களில் தலைநகர்களா யிருந்தனவென்பதும், நம்முடைய கவனத்திற்கு வராமல்போகா. அப் பூர்வகாலத்திலே, தற்கால நாகரீகமுடையோரும் மிகவும் வியந்து பாராட்டக்கூடிய காரியங்கள் அநேகம் இருந்ததாகக் காணலாம். பாபிலோனது விஸ்தீரணமும், அதன் அமைப்பின் ஒழுங்கும், தொங்குதோட்டமும், பெரிய யந்திரமும் (நுபேiநே), எண்ணிறந்த பித்தளைக் கதவுகளும், பிரமாண்டமான ஏரியும், 60 முழ உயரமும் 6 முழ அகலமுமுள்ள பொற்சிலையும், அக்காலத்திலிருந்த வாத்தியக்கருவிகளும், அவைகளை உபயோகித்த முறையும், 70 முழ உயரமுள்ள கோட்டையும், அதைச்சுற்றியுள்ள அகழியும், மிகுந்த வியப்பைத்தராமல்போகா. அக்காலத்தில் மிகவும் ஏராளமான ஜனங்களுக்கு 6 மாதம் அல்லது 180 நாள்வரைக்கும் தொடர்ந்து செய்யப்பட்ட ராஜவிருந்தும் அரண்மனைத் தோட்டவிருந்தும் அம்மண்டபத்தின் சிறப்பும் ஸ்திரீகளுக்கென்று ராஜஸ்திரீயால் செய்யப்பட்ட விருந்தும்போலத் தற்காலத்தில் நாம் காண்பது இலேசான காரியமோ? ஜலப்பிரளயத்திற்குமுன் 900, 930, 960 என்னும் நீண்ட ஆயுளோடு இருந்த ஜனங்களும் ராக்ஷதர்களும் பலவான்களும் பிரளயத்தினால் அழிந்தபின், மனிதர் 120, 100, 80, 70 என்னும் குறுகிய ஆயுளுடையவர்களானார்கள். பிரளயத்திற்குப் பின்னுள்ளவர்களே இவ்வளவு பிரபலமாக இருந்திருப்பார்களென்றால், சுமார் ஆயிரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட வருஷம் ஆயுள்பெற்ற வீரர்களும் ராக்ஷதர்களும் கட்டிய பட்டணங்கள் எவ்வளவு பெரியவைகளும் சிறப்புடையவைகளுமாக இருந்திருக்கவேண்டும்? உலகத்தில் முதல்முதல் பிறந்த ஒரு மனிதன் ஒரு பட்டணத்தைக்கட்டி அதற்குத் தன் மகன்பெயரை யிட்டானென்று சொல்வது, சற்று யோசனைக்கிடமாயிருக்கிறது. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள காலத்தை ஒரு யுகத்தின் கடைசியாக வைத்துக்கொள்வோமானால், அவர்களுக்குப் பட்டணங்களும், நீண்ட ஆயுளும், கின்னரம் நாகசுரம் முதலான வாத்தியங்களின் விருத்தியும், இரும்பு பித்தளை முதலிய கைத்தொழில்களின் மிகுதியும் இருந்தனவென்று சொல்லத்தகுதியாயிருக்கும். 13. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள ஏனோக், நோவா என்னும் உத்தமர்களின் தபR. மேலும், மனிதர்கள் ஜலப்பிரளயத்திற்குமுன் எப்படி அதிக ஆயுளும் திறமையுமுடையவர் களாயிருந்தார்களோ,அப்படியே தெய்வ பக்தியிலும் மேம்பாடடைந்திருந்தார்களென்று தெளிவாய் அறிகிறோம். உலகை வெறுத்துத் தெய்வத்தோடேயே சஞ்சரித்துக்கொண்டிருந்து உயிரோடே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கின் தபசும், அக்காலத்தி லிருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய்த் தெய்வத்தோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, 300 முழ நீளமும் (தற்கால முழமல்ல) 50 முழ அகலமும் 30 முழ உயரமுமான மூன்று அடுக்குள்ள பேழையென்னும் கப்பலைச்செய்து கொண்டு, மற்றவர்கள் பாவவழியை விட்டு மனந்திரும்பப் பிரசங்கம்செய்து, ஜலப்பிரளயத்திற்குப் பின்னுள்ள ஜனத்திரளுக்கு முதல்வனான நோவாவின்பக்தியும், விளங்கியது அந்தப் பூர்வகாலத்திலேயே. III. ஜலப்பிரளயத்தால் அழிக்கப்பட்ட தமிழ் நாடுகளும் கலைகளும். 1. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள சரித்திரங்களைப்பற்றிக் கால நிச்சயம் செய்வது சற்றுப் பிரயாசையென்பJ. ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள சரித்திரங்களை நுட்பமாகச் சொல்லப் போனால், தற்காலத்தவருக்குப் பிரியமாயிராJ. அவைகள் பழமையான கதைகளாக எண்ணப்படுமேயொழிய, உண்மையாய் நடந்தவையென்று ஒப்புக் கொள்ளப்படுவது சற்றுக்கடினமாகும். உண்மையை அறியப் பிரயாசைப்படும் சரித்திர ஆராய்ச்சிக்காரர், பூமியில் புதைந்திருக்கும் பிரமாண்டமான பிராணிகளின் எலும்புகளைக்கொண்டும் மனிதர்களின் எலும்புகளைக் கொண்டும், கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்களைக்கொண்டும், பூர்வ சாசனங்களைக்கொண்டும், கண்டெடுக்கிற பணங்களின் முத்திரைகளைக் கொண்டும், புதைந்திருக்கிற நகரங்களைக்கொண்டும், இயற்கையைக்கொண்டும் மேற்சொல்லியவைகளைப் பார்க்கிலும் அதிகக்காலங்களைச் சொல்லுவார்கள்; அதுவும் உண்மையே. இந்தியாவில் அதிபூர்வமாக எண்ணப்படும் எத்தனையோ பட்டணங்களும் கோட்டைகளும், ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றியழிந்து, இக்காலத்தில் மண்மேடுகளாய்க் காணப்படுகின்றன. அவைகளின் பேரும்பிரஸ்தாபமும், அக்காலத்தவர் பராக்கிரமமும், கலைகளின் சிறப்பும், பக்தியின் உயர்வும்பழங்கதையாய்ச் சொல்லப்பட்டுவருகின்றனவே யன்றி, நிதரிசனமாக ஒன்றையும் காணோம். இது காலத்தின் இயற்கை. இந்தியாவில், பிரளயத்துக்கு முன்னுள்ளகாலத்தில், பராக்கிரமமுள்ள ராக்ஷதர்களும், தபசில் சிறந்த ரிஷிகளும், சத்தியமும் நீதியும் தவறாமல் ஆண்டுகொண்டிருந்த ராஜாக்களும், மிகுந்த பராக்கிரமமுள்ள போர்வீரரும், பொருளின் அருமைதெரிந்த வர்த்தகர்களும், கைத்தொழிலில்தேர்ந்த தொழிலாளர்களும், கலைகள் ஒவ்வொன்றிலும் தேர்ந்த வித்வான்களும் இருந்தார்களென்று நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். இந்தியாவின் பூர்வ சரித்திரங்களுக்குத் திட்டமான காலவரையறை இல்லாததினாலும், அவைகளில் மிகுந்தகற்பனைகள் கலந்திருப்பதினாலும் திட்டம் சொல்லக் கூடாத நிலையில் நின்று தத்தளிக்கவேண்டியதாயிருக்கிறது. ஆனாலும், பூர்வமான சில நூல்களில் அங்கங்கே சொல்லப்படும் சிலகாரியங்களினாலும் உண்மையை ஒருவாறு அறியவும் நிச்சயிக்கவும் கூடியதாயிருக்கிறது. இப்படி நிச்சயிக்கக்கூடியவைகளைப்பற்றியும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமையான அபிப்பிராயங்களுடன் ஒருவாறு சமாதானத்துக்கு வரவேண்டியதா யிருக்கிறதேயொழிய, உள்ளத்து உள்ளபடி நிச்சயிக்க இயலாததாயிருக்கிறது. அப்படியிருந்தாலும், உலகத்திற்குப் பொதுவான சில சம்பவங்களைக் கொண்டும் நூல்களைக்கொண்டும் இந்தியாவின் பூர்வீகத்தைப்பற்றி நான் சொல்வது, உண்மையைவிசாரிக்கும் விவேகிகளுக்கு அவைகளை ஞாபகப் படுத்தக் கூடியதாயாவது இருக்குமென்று எண்ணிச் சில வார்த்தைகளைச் சொல்லத்துணிந்தேன். 2. திராவிட தேசத் தரசனாகிய சத்தியவிரதனும் ஜலப்பிரளயமும். பாகவத வசனம், எட்டாவது ஸ்கந்தம், 24ம் அத்தியாயம். “போன கல்பத்தினுடைய அந்தத்தில் பிரம்மாவினுடைய நித்திரை யினால் உண்டான நைமித்திக மென்று சொல்லப்பட்ட பிரளயம் உண்டாச்சுJ. அந்தப் பிரளயத்தில் பூமி முதலான லோகங்களெல்லாஞ் சமுத்திரத்தில் முழுகிப்போச்சுJ. அப்போது காலவசத்தினால் நித்திரையடைந்து சயனிக்க வேணுமென்கிற இச்சையையுடையவனான பிரமதேவனுடைய முகத்தினின்றும் உண்டாகாநின்ற வேதங்களைச் சமீபத்திலிரா நின்ற அயக்கிரீவாசுரனானவன் அபகரித்தான். அப்போது ஸ்ரீ பகவானாயும் சர்வ நியந்தாவாயுமிருக்கிற ஸ்ரீ ஹரியானவர், தானவேந்திரனான அயக் கிரீவனுடைய சேஷ்டையை அறிந்து மச்சிய ரூபத்தைத் தரித்தார். அந்தக் காலத்தில் சத்திய விரதனென்று பெயரையுடையவனாயும் மகானாயும் பகவானிடத்தில் பக்தியுடையவனாயுமிருக்கிற ஒரு ராஜ ரிஷியானவன், ஜலத்தையே பானம் பண்ணிக்கொண்டு தபசு செய்துகொண்டிருந்தான். யாதொரு அந்த சத்திய விரதனென்கிற ராஜாவே இந்தக் கல்பத்தில் விவசுவானுடைய பிள்ளையாயும் சிரார்த்த தேவனென்று பிரசித்தனாயும் ஸ்ரீ ஹரியினால் மனுவாகக் கல்பிக்கப்பட்டிருக்கிறான். அந்த ராஜரிஷியானவன், ஒருக்கால் கிருதமாலா நதியில் ஜலதர்ப்பணஞ் செய்யும்போது, அவனுடைய கையில் இராநின்ற ஜலத்தில் ஒரு மச்சியமானது இருந்தJ. திரவிட தேசாதிபதியான அந்தச் சத்திய விரதனென்கிற ராஜரிஷியானவன், தன்கையிலிராநின்ற அந்த மச்சிய ஜலத்தை நதிஜலத்தில் சேர்த்துவிட்டான். அப்போது அந்த மச்சியமானது மகா தயாளுவான அந்தச் சத்திய விரதனைக் குறித்து மிகவும் தைரியத்தோடு ஒரு வார்த்தை சொல்லிற்று. “வாராய் ராஜரிஷியே! இன்றைக்கு ஏழாநாள் இந்தப் பூமி முதலான மூன்று லோகமும் பிரளய சமுத்திரத்தில் முழுகப்போகின்றJ. அப்போது நம்மால் ஏவப்பட்டதாயும் விசாலமாயும் ஒரு ஓடமானது உன்னை அடையப்போகின்றJ. நீயும் சமஸ்தமான ஓஷதிகளையும் நானாவிதங்களான வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, சப்தரிஷிகளோடும் சர்வ பலத்தோடுங் கூடினவனாய் அந்தப் பெரிதான ஓடத்தில் ஏறிக்கொண்டு, மகா அந்தகாரமான சமுத்திரத்தில் மகாரிஷிகளுடைய கடாட்சத்தினால் தீரனாய்ச் சஞ்சரிக்கப்போகிறாய். அப்போது மகா பலவானான வாயுவினால் அலைக்கப் பட்ட அந்த ஓடத்தைச் சமீபத்தில் வரா நின்ற என்னுடைய கொம்பிலே சேர்த்து, மகா சர்ப்பத்தினால் இழுத்துக் கட்டக்கடவாய். அப்போது நான், ரிஷிகளோடுகூட இராநின்ற உன்னையும் ஓடத்தையுமிழுத்துக்கொண்டு, பிரமாவினுடைய ராத்திரி காலமானது எவ்வளவோ, அவ்வளவு காலமும் சமுத்திரத்தில் சஞ்சரிக்கப்போகிறேன். அப்போது நீ பண்ணப்பட்ட பிரசினங்களினால் பரப்பிரம சொரூபமான என்னுடைய மகிமையை யதார்த்தமாக அறியப்போகிறாயென்று சொல்லிற்று. பின்பு சமுத்திரமானது வருஷிக்கப்பட்ட மேகங்களினால் விர்த்தியடைந்து, கரைபுரண்டு, பூமியெங்கும் வியாபித்தJ. அந்த ராஜரிஷியும் பகவத் பாதாரவிந்தத்தைத் தியானம் பண்ணிக்கொண்டிருக்கும் போது தன்னண்டையே வராநின்ற ஓடத்தைப் பார்த்து, அந்த ஓடத்தில் ஓஷதிகளையெல்லா மேற்றிக் கொண்டு சப்தரிஷிகளோடுங் கூட தானுமேறிக்கொண்டான். அப்போது அந்த ரிஷிகளெல்லாம் சந்துஷ்டாளாய் அந்த ராஜரிஷியைப்பார்த்து, பகவானுடைய பாதாரவிந்தத்தைத் தியானம் பண்ணுவீராகில் நம்மை இந்தச் சங்கடத்தினின்றும் ரட்சிப்பாரென்று சொல்லாநின்ற அந்த ரிஷிகளுடைய வார்த்தையைக்கேட்டு, ராஜரிஷியும் பகவானையே தியானம் பண்ணிக்கொண்டிருந்தார்.” ௸ பாகவத வசனம் ஒன்பதாவது ஸ்கந்தம், முதலாம் அத்தியாயம். “திராவிடதேசாதிபதியான சத்தியவிரதனென்கிற யாதொரு ராஜ ரிஷி யானவன் பூர்வ கல்பாந்தத்தில் மகாபுருஷனான ஸ்ரீ பகவானுடைய சேவையினால் உத்தமமான கியானத்தையடைந்தானோ, அந்த ராஜரிஷியே இப்போது வைவசு தமனுவாக இருக்கிறானென்று என்னால் கேட்கப்பட்டJ. இட்சுவாகு முதலான ராஜாக்கள் அந்த மனுவினுடைய புத்திராளென்று உம்மாலே சொல்லப்பட்டார்கள்.” இதினின்றும் அறியவேண்டியது என்னவென்றால், திராவிட தேசாதிபதியான சத்திய விரதன் என்கிற ராஜரிஷியானவர் மிகுந்த தபசுபண்ணிக்கொண்டிருந்தாரென்பதும், அக்காலத்தில் பூமி ஜலப் பிரளயத்தினால் அழிக்கப்பட்டதென்பதும், சத்தியவிரதன் என்கிற திராவிட தேசாதிபதியும் ஒரு விசாலமான கப்பலில் சமஸ்தமான ஓஷதிகளுடனும் நானாவிதமான வித்துக்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஏறிக்கொண்டு, மலையின் அடிவாரத்தில் தங்கினாரென்பதும், மகாவிஷ்ணு இப்பக்தனைக் காப்பாற்றுவதற்காகத் தமது முதல் அவதாரமாகிய மச்சாவதாரத்தை எடுத்தாரென்பதுமே, இவ்விருத்தாந்தம், சத்திய வேதாகமத்தில் ஜலப் பிரளயத்தையும் நோவாவையும் நோவா காப்பாற்றப்பட்ட பேழையையும் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்றுக்கு முற்றிலும் ஒத்திருக்கிறJ. இடம் மாத்திரம் ஆசியாத்துருக்கியின் (Asiatic Turkey) ஒருபாகமாகவும் இந்தியாவின் தென்பாகமாகவும் பேதப்படுகிறJ. 3. துவாரகைக்கரசனாகிய கிருஷ்ணபகவானும் ஜலப்பிரளயமும். பாகவதம், பதினேராவது ஸ்கந்தம், 30-ம் அத்தியாயம். ஸ்ரீ பகவான் வாக்கியம். “வாராய்சாரதி! நீ துவாரகாபட்டணத்துக்குப்போய், பந்துக்களுக்கு யாதவர்கள் ஒருத்தருக்கொருத்தர் யுத்தம்பண்ணி அடிபட்டுப்போனதையும், யோகமார்க்கத்தினால் பலராமர் பரமபதத்தையடைந்ததையும், நான் இச்சாசரீரத்தை விட்டுவிட்டதையுஞ் சொல்லக்கடவாய். பந்துக்களோடே கூடிக்கொண்டிருக்கிற நீங்கள் துவாரகையிலிருக்க வேண்டாம். என்னால் விடப்பட்டிருக்கிற இந்தத் துவாரகாபட்டணத்தைச் சமுத்திரமானது முழுகிப்போனதாகப் பண்ணப்போகிறJ. ஆகையினால் நீங்கள் சமஸ்தமான பேர்களும் அவாளவாள் பந்துஜனங்களையும் நம்முடைய மாதா பிதாக்களையும் அழைத்துக்கொண்டு அர்ச்சுனனாலே ரக்ஷிக்கப்பட்டவர்களாய் இந்திரப்பிரஸ்தத்தைப் போயடையுங்களென்று பந்துக்கள் பொருட்டுச் சொல்லக்கடவாய்.” ௸பாகவத வசனம், ௸ ஸ்கந்தம், 31-ம் அத்தியாயம். ஸ்ரீ சுகர் வாக்கியம். “வாராய்மகானுபாவனே! அந்தக்ஷணத்தில் சமுத்திரமானது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கிரகத்தை விட்டுவிட்டு அவரால் விடப்பட்டிருக்கிற துவாரகாபட்டணம் சமஸ்தத்தையு முழுகப் பண்ணியJ. * * * * * * * * * * “பிற்பாடு அர்ச்சுனனானவன் அசேஷர்களாயிருக்கிற பாலவிருத்தர்களை யழைத்துக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்தை வந்தடைந்து, அவ்விடத்தில் வச்சிரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணிவைத்தான்.” ௸ பாகவத வசனம் பன்னிரண்டாவது ஸ்கந்தம், 2-ம் அத்தியாயம். “எப்போது பகவானான ஸ்ரீ விஷ்ணுவினுடைய அம்சமாயும் சத்துவ சொரூபமாயுமுள்ள தேகமானது ஸ்ரீ வைகுண்டத்தையடைந்ததோ, அப்போதே கலியானதுண்டானJ. ஸ்ரீ லட்சுமிபதியான ஸ்ரீ கிருஷ்ணரானவர் தம்முடைய பாதபத்மங்களால் ஸ்பரிசித்துக்கொண்டு பூமியிலிருந்தவரையில் அந்தக் கலியானது பூமியை ஆக்கிரமிக்கைக்குச் சமர்த்துள்ள தல்லாமற்போயிற்று.” மேலே பாகவதத்தினின்றும் எடுத்துக் காட்டிய சிலபாகங்களினால், துவாபரயுகத்தின் கடைசியில் கிருஷ்ணபகவானிருந்ததாகவும், துவாரகையும் அதைச்சேர்ந்த இடங்களும் ஜலப்பிரளயத்தில் அழிந்து போகப்போவதை யறிந்து அதில் தம் ஜனங்கள் அழிந்து போகாதபடி அர்ச்சுனனுக்கு முன்னெச்சரிக்கைசெய்து தமது பின்னடியார்களை இந்திரப்பிரஸ்தம் அல்லது தற்காலத்தில் டில்லி என்றழைக்கப்படும் பட்டணத்திற்குக் கொண்டுபோய்க் குடியேற்றச் சொன்னதாகவும், அப்படியே அர்ச்சுனன் இந்திரப்பிரஸ்தத் திற்குப்போய் அவ்விடத்தில் வச்சிரனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்த தாகவும், கிருஷ்ணபகவானுடைய தேகம் மறைந்தவுடன் கலியுகம் உண்டானதாகவும் தெரிகிறது. இற்றைக்கு 5014 வருஷங்களுக்கு முன் கலியுகம் ஆரம்பித்ததென்று சாதாரணமாய் நாம் யாவரும் அறிவோம். துவாரகாபட்டணமோ (Dwaraka) இந்தியாவின் மேல்பாகத்தில் ஸிந்து (Indus) நதியின் முகத்துவாரத்துக்குச் சமீபத்திலுள்ள கச் (Cutch) நாட்டின் தென்புறமாய் கத்தியேவாரின் (Kathiawar) மேல்கோடியில் கடல் ஓரமாயிருக்கிறது. கச் நாடும் கத்தியேவாரின் பெரும்பாகமும் ஜலப்பிரளயத்தால் ஒருகாலத்தில் மிகவும் அழிக்கப்ட்டிருக்கின்றனவென்று திட்டமாய்த் தெரிகிறது. இந்தக் கத்தியேவாருக்குச் சமீபத்திலுள்ள கச் (Gulf of Cutch) குடாவும் அரபிக்கடலைச்சேர்ந்த பாரசீகக் (Persian Gulf) குடாவும் ஆதேன் (Gulf of Aden) குடாவும், செங்கடலும் (Red Sea) ஒரு காலத்தில் இந்தியாவின் தென்பாகத்திலுண்டான பூமிமாறுதலால் தங்களுக்கு எதிர்ப்பட்ட தாழ்ந்த பூபாகங்களை அழித்துவிட்டனவென்று நாம் நினைக்க இடந்தருகிறJ. பூமியின் நடுப்பாகத்தில் அக்கினியிருக்கிற படியால், அவ்வக்கினி உஷ்ணம் மிகுந்த சிலபாகத்தின்வழியாகப் பூமிக்குச்சமீபித்துப் பூமியின் மேற்பரப்பை மேடுபள்ளமாக்கிச் சமுத்திரத்தைத் தரையாகவும் தரையைச் சமுத்திரமாகவும் மாற்றிவைக்கிற இயற்கையை அனுசரித்து, அரபியா (Arabia) இந்தியா (India) பர்மா (Burma) முதலிய தேசங்களுக்கு எதிரிலுள்ள பூமியின் பெரும்பாகங்கள் ஜலப்பிரளயத்தால் விழுங்கப்பட்டிருக்கக்கண்டுமென்று ஊகிக்க இடந்தருகிறJ. துவாரகா பிரதேசம் அழிந்தகாலத்திலேயே நோவாவின்காலத்து ஜலப்பிரளயமும் உண்டாயிருக்கலாமென்று நாம் ஒருவாறு நினைக்கலாம். இற்றைக்கு 4263 வருஷங்களுக்கு முன்னுண்டான தென்று சொல்லப்படும் பிரளயமும் 5000 வருஷங்களுக்கு முன்னுண்டானதென்று சொல்லப்படும் பிரளயமும் காலவித்தியாசமாய்ச் சொல்லப்படுகிறதேதவிர, மற்றப்படி ஒரேகாலத்தில் நடந்ததாக நினைக்க ஏதுவிருக்கிறது. தென்னிந்தியாவுக்குத் தென்பாகத்திலிருந்த 49 நாடுகளும் அதன் முக்கியநகரமாகிய தென்மதுரையும் கடலால் அழிக்கப்பட்டனவென்று பூர்வ தமிழ் நூல்களினால் புலப்படுகிறJ. 4. தென்னிந்தியாவிலுள்ள ஆவிடையார்கோயிலும் ஜலப்பிரளயத்துக்குத் தப்பிய 300 சோழியப் பிராமணர்களும். இக்காலத்தில் மிகவும் நேர்த்தியான சிற்பவேலைகளுள்ளதாக எண்ணப்படும் ஆவிடையார் கோயிலில் நடந்த சிலகாரியங்கள் இந்தியாவில் சுற்றுப்பிரயாணம்செய்யும் பிரயாணிகளுக்கு ஞாபகமிருக்கலாம். South India Railway Illustrated Guide 1913. “In the village of Avudyarkoil is an ancient temple which though small, is considered one of the most perfect specimens of its class in Southern India. * * * * * * According to legends the temple occupies the site where, after the deluge, Siva with a colony of three hundred disciples called Solias was established for the purpose of propagating the Brahmin Religion.” “ஆவிடையார்கோயிலிலிருக்கும் பூர்வமானகோயில் சிறிதாயிருந் தாலும் தென்னிந்தியாவிலுள்ள கோயில்களுள் மிகவும் முக்கியமான சிற்ப வேலைப்பாடுகளுள்ளவைகளில் முதன்மையானJ. ஆலயம் இப்போது இருக்குமிடத்தில், ஜலப்பிரளயத்திற்குப்பின் சோழியர்கள் என்று அழைக்கப் படுகிற முந்நூறு பெயர்களை அங்கே கொண்டுவந்து, பிராமணமதத்தை விருத்திபண்ணும்படியாக, சிவன் குடியேற்றினாரென்று புராணங்களில் சொல்லப்படுகிறது.” இதைக் கவனிக்கும்பொழுது, இந்தியாவின் தென்பாகம் ஒருகாலத்தில் கடலால் விழுங்கப்பட்டிருக்கவேண்டுமென்றும், துவாரகையிலிருந்து இந்திரப் பிரஸ்தத்துக்கு உயிர் தப்ப ஓடிப்போனவர்களைப்போல இத்தென்பாகத்தி லிருந்தவர்களும் தங்களுக்குச் சமீபத்திலுள்ள உயர்ந்த இடங்களுக்கு உயிர்தப்ப ஓடிப்போய்க் குடியேறினார்களென்றும் சொல்ல ஏதுவிருக்கிறது. 5. ஜலப்பிரளயத்தினால் விழுங்கப்பட்ட இடங்களும் பிரளயகாலத்தின் கணக்கும். இப்படி ஜலத்தினால் விழுங்கப்பட்ட பிரதேசங்களின் சிலபாகம் ஒருவாறு கடலால் விடப்பட்டுப் பின் ஜனங்களின் குடியிருப்புக்குத் தகுதியாயிற்றென்று நினைக்கவேண்டும். செங்கடலுக்குப் பக்கத்திலுள்ள ஆப்பிரிக்காவின் (Africa) சிலபாகமும் அரபியாவும் ஆசியாத் துருக்கி பாரசீகம் (Persia) பெலுகிஸ்தான் (Baluchistan) இத்தேசங்களின் சிலபாகமும் தென்னிந்தியாவின் கீழ்பாகமும் கடற்கரைமணல்களால் நிரப்பப்பட்டிருப்பதும், மணல் நிறைந்த இடங்களில் அநேக கிராமங்களும் பட்டணங்களும் அழிந்துகிடப்பதும், மணலுக்குக் கீழே பூர்வமாயுள்ள தன்தரைகாணப்படுவதும், ஒருகாலத்தில் ஜலப்பிரளயம் உண்டாகி அனேகதேசத்தை அழித்ததென்று சொல்ல இடந்தருகின்றன. ஜலப்பிரளயம் உண்டானது யூதர்கள் (துநறள) தாங்கள் சொல்லும் கணக்கின்படி கி.மு. 2015-ம் வருஷம் அதாவது இற்றைக்கு 4019 வருஷங்களுக்குமுன் என்றும், கிளெமென்ட் அலக்சான்ட்ரினாஸ் (Clement Alexandrinas) என்பவர் கி.மு. 3475-ம்௵ அதாவது இற்றைக்கு 5389 வருஷங்களுக்குமுன் என்றும், இயூரிபியஸ் (Euribius) என்பவர் கி.மு. 2459-ம் ´ அதாவது இற்றைக்கு 4373 வருஷங்களுக்குமுன் என்றும், பீட் (Bede)என்பவர் கி.மு. 3544-ம்௵ ´ அதாவது இற்றைக்கு 5458 வருஷங்களுக்குமுன் என்றும், அர்ஷர் (Ursher) என்பவர் கி.மு. 2349-ம்௵ ´ அதாவது இற்றைக்கு 4263 வருஷங்களுக்குமுன் என்றும், ஹேல்ஸ் (Hales) என்பவர் கி.மு. 3153-ம் ´ அதாவது இற்றைக்கு 5067 வருஷங்களுக்குமுன் என்றும் சொல்லுகிறார்கள். இவைகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாமையாயிருக்கிறது இயல்புதான்; ஏனென்றால், இக்காலங்களை நிர்ணயம் பண்ணுகிறவர்கள், பிரளயமுண்டான அக்காலத்திலிருந்தவர்களல்ல. அதற்குச் சுமார் 1000, 2000, 3000, 4000, 5000 வருஷங்களுக்குப் பின்னிருந்தவர்கள். ஜலப்பிரளயம் உண்டானகாலத்தில் அல்லது அதற்குமுன் வழங்கியகாலத்தில் உண்டான காலக்கணக்குகள் ஒன்றும் திட்டமாய் அகப்படவில்லை. காலக்கணக்குகள் ஒவ்வொரு ராஜ்யத்தின் முக்கியமான பட்டணங்களிலுள்ள பத்திரங்கள் முதலிய எழுத்து ஆதாரங்கள் மூலமாய் அறியப்படவேண்டும். அப்படி அறிவதற்கேது வில்லாமல் பிரதான நகரங்கள் அழிந்துபோனபடியினால், அதற்குப்புறம்பே யிருக்கும் மற்றவர்கள்சொல்லும் காலக்கணக்கோடு நாம் திருப்தியாயிருக்க வேண்டுவதன்றி வேறு என்ன செய்யக்கூடும்? மிகவும் பிரபலமாயிருந்த துவாரகையும் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட பட்டணமும் வெகு காலத்துக்கு முன்னேயே அழிந்து அடையாளம் தெரியாமல் போனதுபோலவே மற்றும் அநேக இடங்களும் போயிருக்கவேண்டும். 6. ஜலப்பிரளயகாலத்தில் அழிந்துபோன தென்னிந்தியாவின் பெரும்பாகம். ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்பட்ட பல சிறுபாகங்களைத்தவிர இந்தியாவின் தென்பாகத்திலுள்ள பெரும்பாகமும், சமுத்திரத்தில் முழுகிப் போயிருக்கவேண்டுமென்று காட்டப் பல சாட்சிகள் அகப்படுகின்றன. இதைவாசிக்கும் கனவான்களே, ஜலப்பிரளயத்துக்கு முன்னுள்ள காலத்தில், கின்னரம் நாகசுரம் செய்கிறவர்களும் அவைகளை உபயோகப் படுத்துகிறவர்களும் இருந்தார்களென்று சத்தியவேதத்தில் சொல்லியபடி, தென்னிந்தியாவின் தென்பாகத்தில் கடலால் அழிக்கப்பட்ட தென்மதுரை யிலும், ஆயிரம்தந்திகள் பூட்டிய நாரதப்பேரியாழ் முதலிய வீணைகளும் நாரதீயம் அகத்தியம் பெருநாரை பெருங்குருகு என்னும் இசைநூல்களும் இருந்தனவாகச் சொல்லப்படுகிறதினால், தென்னிந்தியசங்கீதத்தின் பூர்வீகத்தை அறிவதற்காக அந்நாட்டைப்பற்றி இன்னும் சிலகாரியங்களை விசாரிப்பது நல்லதென்றுதோன்றுகிறது. இவ்விஷயம் சற்று விரிவாகுமாகையால், என்சுயமாக அதிகம் சொல்லாமல், தென்னிந்தியாவின் தென் பாகத்தைப் பற்றி மற்றவர்கள்சொல்லும் அபிப்பிராயத்தில் சிலபாகங்களை எடுத்துத்தொகுத்து இங்கே காட்டுகிறேன். 7. ஜலப்பிரளயமும் தென்னிந்தியாவும். முதல்முதல் இந்தியாவின் தென்பாகம் ஒரு காலத்தில் ஜலப் பிரளயத்தினால் அழிக்கப்பட்டதென்றும், அதுமிகவும் விசாலமான பூமி பாகமென்றும், அதிலேயே ஆதிமனிதர்கள் குடியேறினார்களென்றும், பின்வரும் வசனங்களில் காணப்படுகிறது. Vol. I of the Manual of the administration, Madras Presidency P. 33 Foot-note (2). Hypothesis of the geneology and general migrations of the races of man:- “There are a number of circumstances (especially chronological facts), which suggest that the primaeval home of man was a continent now sunk below the surface of the Indian ocean, which extended along the south of Asia, as it is at present (and probably in direct connection at some points with it); towards the east as far as Further India and the Sunda Islands, towards the west as far as Madagascar and the south-eastern shores of Africa. Many facts in animal and vegetable geography render the former existence of such a South Indian continent very probable. To this continent has been given the name of Lemuria, from the primitive mammals of that name which were characteristic of it. By assuming Lemuria to have been man’s primaeval home, the explanation of the geographical distribution of the human species by migraion is much facilitated.” “மனிதனின் ஆதி இருப்பிடம், இந்துமகா சமுத்திரத்தில் பூர்வம் இருந்து பிறகு முழகிப்போன ஓர் கண்டம் என்றும், அது ஆசியாவில் இப்போது தென்புறத்திலிருக்கிற அளவவ்வளவாயும், கிழக்கில் இந்துசீனதீப கல்பம் (Further India.) சன்டா (Sunda)) தீவுகள் வரைக்கும் விசாலித்திருந்தது என்றும், மேற்கே அக்கண்டம் மதகாஸ்கார் தீவுவரைக்கும் ஆப்பிரிக்காவின் தென்கிழக்குக் கரைவரைக்கும் விசாலித்திருந்தது என்றும் நினைக்க அநேக ஏதுக்கள் உண்டு. மிருகங்கள் செடி கொடி மரங்கள் முதலியவற்றின் அமைப்பைக் கவனிக்கையில், அப்பேர்ப்பட்ட தென்னிந்திய கண்டம் ஒன்று இருந்தது என்று ஊகிக்க இடமுண்டு. இந்தக்கண்டத்துக்கு லெமூரியா (Lemuria) என்றபேர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கண்டத்தில் வசித்த Mammals (அதாவது குட்டிகளுக்குப் பால்கொடுத்து வளர்க்கும் மிருகங்கள்) மூலமாய் அந்தப்பேர் உண்டானJ. இந்த லெமூரியாக் கண்டமே ஆதிமனிதர் குடியேறினகண்டம் என்று வைத்துக்கொள்வோமானால், மனிதர் இடம்விட்டு இடம் பேர்ந்து குடியேறின சரித்திரத்தை வெகு எளிதில் தீர்த்துவிடலாம்.” Vol. I of the Manual of the administration of the Madras Presidency P. III, 110. “Investigations in relation to race show it to be by no means impossible that Southern India was once the passage-ground by which the ancient progenitors of Northern and Mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the East coast of an age which is indeterminate but quite beyond the ordinary calculations of History.” “ஜாதிகள் ஓரிடமிருந்து வேறிடம் பேர்ந்த சரித்திரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, இப்போது வடகண்டத்திலும் மத்தியதரைக் கடலையடுத்தும் வசிக்கும் ஜாதியாரின் முன்னோர்கள் தென்னிந்தியா வழியாய்த்தான் தாங்கள் இப்போது இருக்கும் இடத்திற்குச் சென்றிருக்கவேண்டும்என்று நினைக்க இடமுண்டு. இந்தியாவின் கீழ்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகளின் தன்மையைக் கவனித்தால், சரித்திரம் தொடங்காத காலத்துள்ள மனிதர் இந்தியாவின் கீழ்கரையில் ஒருகாலம் வசித்திருந்தார்களென்று தீர்மானிக்கலாம்.” “Antiquarian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historic methods. These results are specially to be regretted, as without doubt the population who have for many ages occupied this portion of the peninsula are a great people, influencing the world not much perhaps by moral and intellectual attributes, but to a great extent by superior physical qualities.” “கல்விமான்கள் இதுவிஷயத்தில் செய்யும் முயற்சிகளினால், இப்போதுதான் ஆதிகாலத்து மனிதரைப் பற்றிய அநேக சங்கதிகள் வெளியா கின்றன. இவைகள் முன்னாலேயே வெளிக்குவராமற் போயினவே என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் கீழ்கரையில் ஆதியில் வசித்த ஜனங்கள் ஒரு பெரிய ஜாதியாரென்பதற்கும் ஒழுக்க விஷயத்திலாவது கல்வி விஷயத்திலாவது அவர்கள் அதிகமாய்த் தேர்ச்சி அடைந்திராவிட்டாலும் தேக அமைப்பில் மற்றும் அனேக ஜாதியரைவிட விசேஷித்திருந்தார்கள் என்பதற்கும் சந்தேகமில்லை.” இதில் கண்டபடியே, இந்தியாவின் தென்பாகத்திலே பூர்வீகத்தில் இருந்த ஜனங்கள் மிகுந்த பராக்கிரமமுள்ளவர்களாய், தேக அமைப்பில் ஜலப் பிரளயத்துக்குமுன் 900, 1000 வருஷம் ஜீவித்திருந்த மனிதர்களின் தேக அமைப்பிற்கு ஒத்திருந்ததாகக் காண்கிறோம். அவர்கள் காலத்திலிருந்த வழக்க ஒழுக்கங்கள் நாகரீகம் வித்தை முதலியவைகளைப் பற்றி அதிகம் சொல்லுவதற்குத் தகுதியான ஆதாரம் இதை எழுதியவருக்குக் கிடைக்க வில்லை யென்று தோன்றுகிறது. Manual of the administration of the Madras Presidency Vol. I Chapter. I Page (4). “The Sanskrit authors of the Pooranas, writing in the north described Ceylon as much more extensive than it now is, and as stretching especially towards the west and south; thereby not representing, no doubt, the fact in Pooranic times, but embodying nevertheless traditions current among Indian Nations. * * * * * * The Sanskrit astronomers place their chief Meridian in Lunka, but it was a line to the west of the present Ceylon. These remarks bear on the theory, that in the most ancient times there was a connection between Southern India and Madagascar. * * * * * It also accords with the local tradition recorded by the Buddhists which state that Ceylon was gradually contracted by submergence. * * * * * The date assigned to the Noachian deluge of Scripture in 2348 B.C. That of the severance in detail a great submergence on the west, and a tradition exists that the great and little Basseo rocks on the east are left by an eastern submergence.” “வடதேசத்தில் புராணங்களை சமஸ்கிருதத்தில் எழுதின நூலாசிரி யர்கள் இலங்கை தேசம் இப்பொழுது இருப்பதைவிட அதிக பெரியதா யிருந்ததாயும், விசேஷமாக மேற்கேயும் தெற்கேயும் அதிகமாய் விசாலித்து இருந்ததாயும் சொல்லுகிறார்கள். இப்படி அவர்கள் சொல்லுவதானது சரித்திரவிஷயமாய் நிச்சயத்தைக் காண்பிக்காவிட்டாலும் அக்காலத்தில் இந்தியதேசத்தவருக்குள் பாரம்பரையாய் நிசம் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சங்கதியை நிச்சயப்படுத்துகிறதாயிருக்கிறது.* * * * * * சமஸ்கிருத வானசாஸ்திரிகள் தங்கள் யாமியோத்தர ரேகையைக் கணிப்பது லங்கையை மத்தியாய் வைத்துக் கொண்டுதான். ஆனால் அந்த ரேகை இப்போது இருக்கிற இலங்கைக்குச் சற்று மேற்கிலிருந்தJ. அதிபூர்வ காலங்களில் தென்னிந்தியாவுக்கும் மதகாஸ்கர் தீவுக்கும் சம்பந்தம் இருந்தது என்ற கொள்கையை இது நிச்சயப்படுத்துகிறJ. * * * * * * இலங்கையானது கொஞ்சங்கொஞ்சமாய் கடலால் சூழப்பட்டுச் சிறிய தாய்ப் போனது என்று அங்குள்ள புத்த மதஸ்தரால் எழுதிவைக்கப்பட்ட பாரம் பரியச் சங்கதிக்கும் இது ஒத்திருக்கிறJ.* * * * * * நோவாவின் காலத்தில் உண்டான ஜலப்பிரளயம் சத்தியவேதத்தில் கி.மு. 2348-ம் ஸ்ரீ த்தில் உண்டானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேற்கே அநேக தேசங்கள் கடலுக்குள் முழுகிப்போனதாயும் கிழக்கில் உண்டான ஜலப் பிரளயத்தினால் க்ஷயளளஉடி சடிஉமள என்ற பெரிதும் சிறிதுமான கன்மலைகள் பூமி மட்டத்துக்கு மேல் தெரிந்ததாயும் பாரம்பரியமாய்ச் சொல்லிக் கொள்ளப்படுகிறது.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், நோவாவின் காலத்தி லுண்டான ஜலப்பிரளயம்போல் ஒரு பிரளயமுண்டாகி இந்துமகா சமுத்திரத்தில் மிகவும் விசாலித்திருந்த இலங்கைத் தீவின் பெரும்பாகத்தை அழித்துவிட்டதென்று தெளிவாகத் தெரிகிறது. காலத்தின் வரையறையை மேற்றிசையாரும் கீழ்த்திசையாரும் தனித்தனியே குறித்து வைத்திருக்கிறார்கள். ஆகையினால் நிச்சயமாகவே ஒரு பிரளய முண்டாகி யிருக்கவேண்டுமென்று சொல்வது தப்பாகமாட்டாJ. 8. பௌத்தரின் ஜலப்பிரளய காலக்கணிதம். I x Manual of the Administration, of the Madras Presidency Vol. I, P. 110, III “The most ancient facts regarding Southern Indian are remarkable. Geology and Natural history alike make it certain that at a time within the bounds of human knowledge, this country did not form part of Asia. A large southern continent, of which this country once formed part has been assured as necessary to account for the different circumstances. The Sanskrit Pooranic writers, the Ceylon Booddhists, and the local traditions of the West Coast, all indicate in different manners a agreat disturbance of the point of the Peninsula and Ceylon within recent times. The date given by English theologians to the Noachian deluge is 2348 B. C; and that given by the Ceylon Booddhists to the latest submergence in the region of Ceylon is 2387 B. C. The two dates cannot have been arrived at with mutual knowledge. Investigations in relation to race show it to be by no means impossible that Southern India was once the passage ground by which the ancient progenitors of Northern and Mediterranian races proceeded to the parts of the globe which they now inhabit.” “தென்னிந்தியாவைப்பற்றிய பூர்வகாலத்துச் சங்கதிகள் மிகவும் கவனிக்கப்படத்தக்கவை. தென்னிந்தியாவானது, ஜனங்கள் நாகரீகமடைந்து சரித்திரங்களை எழுதிய காலத்துக்குள், ஆசியாகண்டத்தின் ஓர் பாகமா யிருக்கவில்லையென்று, பூகர்ப்ப சாஸ்திரமும் இயற்கை சாஸ்திரமும் நிச்சயமாய்க் கூறுகின்றன. இந்தச் சாஸ்திரங்களில் ஏற்படும் சங்கதிகளுக்கு முகாந்தரம் கூறுவதற்காக, ஒரு பெரிய தென்கண்டம் இருந்ததாகவும் இந்தத் தென்னிந்தியா அதில் ஓர் பாகமாயிருந்ததாகவும் வைத்துக்கொள்வது வெகு அவசியமாயிருக்கிறது. சொற்ப வருஷங்களுக்கு முன் இந்திய தீபகல்பத்தின் தென் முனைப்பாகமும் இலங்கைத்தீவும் வெகு மாறுதல்களடைந்தனவென்று, புராணங்களை எழுதிய சமஸ்கிருத நூலாசிரியராலும், இலங்கையிலுள்ள புத்த மதத்தாராலும், இந்திய மேற்குக்கரையிலுள்ள பாரம்பரியங்களினாலும் தெரியவருகிறது. நோவாவின் காலத்திலுண்டான ஜலப்பிரளயம் கி.மு. 2348-ம் ௵´த்தில் உண்டானதாக ஆங்கிலேய வேதசாஸ்திரிகள் கூறுகிறார்கள். இலங்கையில் கடைசியில் உண்டான பிரளயம் கி.மு. 2387-ம் ௵ த்தில் உண்டானதாக இலங்கையிலுள்ள புத்த மதக்குருக்கள் கூறுகிறார்கள். இரண்டுகாலங்களும், ஒருவருக்கொருவர் முன்னேசொல்லிவைத்துக்கொண்டு எழுதினவையல்ல. ஆதியில் ஜாதிகள் உற்பத்தியானதைப்பற்றிச் சொல்லும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்க்கையில் என்ன தெரிகிறதென்றால், வடக்குக்கண்டத்திலும் மத்தியதரைக்கடலையடுத்த நாடுகளிலும் இப்போது வசிக்கும் ஜாதியாரின் முன்னோர்கள் தாங்கள் நாடிசசென்ற தேசங்களுக்குப் போகும் வழியில் தென்னிந்தியா வழியாய்த்தான் போனார்கள் என்று நினைக்க அநேக காரியங்கள் ஏற்பட்டிருக்கிறது”. மேலே காட்டிய வசனங்களைக் கவனிக்கையில், புத்த சமயக் குருக்களால் ஜலப்பிரளயம் உண்டானதாகச் சொல்லப்படும் கி. K. 2387-ம் ´ அதாவது இற்றைக்குச் சுமார் 4,300 வருஷங்களுக்கு முன் இலங்கையின் பெரும்பாகம் கடலால் அழிக்கப்பட்டிருக்கிறதென்று தெளிவாகத் தெரிகிறது. மேலும் தென்னிந்தியாவின் தென்பக்கமாயுள்ள பூமியின் பெரும்பாகம் கடலால் அழிக்கப்பட்ட காலத்தில் அங்குள்ளோர் தென்னிந்தியாவின் வழியாகவே மற்ற இடங்களுக்குக் குடியேறிச் சென்றார்கள் என்று காணப்படுகிறது. 9. சத்திய விரதனது கப்பலும் மலயமலையும். The Tamilian Antiquary by Pandit D. Savariroyan, M.R.A.S. “Before this diluvial catastrophe, the western Ghats were known as the Northern mountains in relation to the southern Land which was submerged by the ocean. The Satapata Brahmana relates that the ark of Manu rested in the Northern mountains and the Puranas mention that he, the ‘Lord of the Dravida’, underwent austere penance in the Malaya. The Mahabharata and the Puranas give an account of seven other Rishis who accompanied Manu and settled in the new colony. This indicates the advent of other clans led by other Rishis who followed the footsteps of the “Lord of the Dravida”. Thus it appears that the Tamilian race that settled in the Pandu land belonged to these eight Rishis or Prajapatis, one of whom was the famous Rishi Pulastya of the extreme south, from whom were descended Agastya, the Tamil Muni and Ravana, the king of South. The Satapata Brahmana, in which the story of Manu first occurs, does not mention the name of the Nothern Mountains. However, there is ample evidence in the Puranic accounts to identify the ‘Northern Mountains’ with the Western Ghats, and the particular spot on which the ark rested with Malaya.” “ஜலப்பிரளயத்தினால் நேரிட்ட இந்த விபத்துக்குமுன் கடலால் மூடப்பட்டு அழிந்த தென் தேசத்தைப்பற்றிச் சொல்லுமிடத்தில், மேற்குக் கணவாய் மலைகளை வடக்கேயுள்ள மலைகள் என்று சொல்லியிருக்கிறது. ‘சத பத பிராமணம்’ என்ற நூலில் மனுவின் பேழையானது வடக்கு மலைகளில் தங்கினதாயும், புராணங்களில் ‘திராவிட அதிபதி’ மலைய மலையில் கொடுந்தவம் புரிந்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. வேறு ஏழு ரிஷிகள் மனுவுடன் அவர் புதிதாய்க் குடியேறின இடங்களில் அவருடன்கூடச் சென்றிருந்ததாக மகாபாரதமும் புராண நூல்களும் கூறுகின்றன. இதினால் என்ன வெளியாகிறதென்றால் ‘திராவிட அதிபதி’ செய்ததுபோல் மற்ற ரிஷிகளால் வழி நடத்தப்பட்டு மற்ற ஜாதிகளும் புதுக்குடியேறினார்கள் என்பதுதான். இவ்விதமாய், பாண்டிதேசத்தில் குடியேறின தமிழர்கள் மேற்சொன்ன எட்டு ரிஷிகள் அல்லது பிரஜாபதிகளைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்றும் அவர்களில் ஒருவர் தென் கோடியில் வசித்த பேர்போன புலஸ்திய ரிஷி என்றும் தெளிவாகிறJ. இந்தப் புலஸ்திய ரிஷி வழியில்தான் தமிழ் முனியாகிய அகஸ்திய ரிஷியும் தென்தேசத்தரசனாகிய இராவணனும் தோன்றினார்கள். மனுவின் சரித்திரம் முதல்முதல் சொல்லப்பட்டிருக்கிற நூலாகிய சதாபத பிராமணத்தில் வடக்கு மலைகளைப்பற்றி ஒன்றும் சொல்லப்பட வில்லை. என்றாலும், வடக்குமலைகள் மேற்குக்கணவாய் மலைகள்தான் என்பதற்கும் பேழை தங்கின இடம் ‘மலயம்’ என்பதற்கும் புராணங்களில் போதுமான ஆதாரங்களுண்டு.” மேற்கண்ட சிலவரிகளில் திராவிட தேசத்தரசனாகிய சத்தியவிரதன் ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படியாக ஏறிச்சென்ற கப்பல் அதற்கு வடதிசை யிலுள்ள மலையமலையில் ரிஷிகளுடன் வந்து தங்கினதாகக் காண்கிறது. மலயம் என்பது பொதிகை மலைக்குப்பெயர்; கிருதமாலா நதியென்பது இக்காலத்தில் இல்லாத நதியென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். மதுரைக் கருகிலுள்ள வைகைநதிக் கரையில் திராவிடதேசத்தாசனாகிய சத்தியவிரதன் தவசு செய்து கொண்டிருந்தான் என்பது பொருந்தாJ. மேலும், மலயமலை என்பது உத்தர மதுரைக்குத் தெற்கிலுள்ள மலையாகுமே யொழிய வடக்கிலுள்ள மலையாகமாட்டாJ. ஆனால் மேற்றிசைமலைகளில் உற்பத்தியான குமரியாறு தென்பாண்டி நாட்டிற்கு வடவெல்லையாய் நின்று அழிந்து போனது போல, கிருதமாலாநதியும் பொதியமலையிலுற்பத்தியாகித் தென் மதுரைக்கருகில் ஓடிக்கொண்டிருந்து சத்தியவிரதன் தவஞ்செய்வதற் கேற்ற இடமாயிருந்து பின்பு அழிந்து போயிருக்கவேண்டும். அப்படியானால், தென்னிந்தியாவிற்கு வெகுதூரம் தெற்கேயிருந்த தென்மதுரை கடலால் அழிக்கப்பட்ட காலத்தில், அங்கிருந்த சத்தியவிரதனென்னும் திராவிட தேசத்தரசன் கப்பலேறித் தென்மதுரைக்கு வடக்கிலுள்ள மலயமலைக்கு வந்து சேர்ந்தானென்று சொல்வதே பொருந்தும். 10. கன்னியா குமரியின் புராதன கோயில்கள். Essays by S.V. Thomas, M.A. Page 84. “The earliest mention of Cape Comorin by European writers is contemporaneous with the time of Alexander the Great. We have reason to believe that so early as the time of the Periplus the Cape was already famous as a sacred shrine of the Hindus. The temple was dedicated to Siva’s wife, called Kumari, or young woman as emblematic of eternal youth and beauty. It is impossible to decide the precise site of the ancient temple seen by the Greek sailors. There are at present three temples at Cape Comorin. One is in complete ruins, and the sea is every day swallowing it up. This is probably the ancient of the three. Another is situated on an elevated rock the foot of which is constantly washed by the waves. The temple is antique in appearence and structure, but is dedicated evidently to Siva’s son, not wife, as it contains a rude stone image of Ganesa. The third is the temple which pilgrims now go to visit. This has a comparatively modernlook about it. * * * * * * It is very probable that the most ancient temple has been buried under the sea, and that when the encroachments of the sea were arrested by the solid rocks that now stand out to check its progress, another temple was built and dedicated to the same goddess. This view is supported by the report that is current among the fishermen living in the neighbourhood. They say that in 1883, when the green sun perplexed the scientific world, the sea receded all of a sudden some furlongs that there were then scen the ruins of old buildings with brazen gates and other accompaniments, that some of the fishermen ventured out to drage them ashore, but that before they could succeed the sea came back to assert her ancient dominion, and the enterprise was given over. If this be true, we have strong reasons for supposing that the temple which astonised the Greeks is imbedded in sea, and that the present temple afterwards rose to the honour of the tutelary goddess of the Cape.” “ஐரோப்பிய சரித்திரக்காரர் கன்னியாகுமரியைப்பற்றி முதல் முதல் சொல்லுங்காலம் மகா அலெக்சாந்தருடைய காலத்துக்குச் சரியாய் இருக்கிறJ. பெரிப்ளஸ் என்னும் நூல் எழுதப்பட்ட காலத்திலேயே அந்த முனையானது இந்துக்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாக இருந்தது என்று நினைக்க ஏதுவுண்டு. அதிலுள்ள கோயில் சிவனுடைய மனைவியாகிய பார்வதிபேரால் பிரதிஷ்டை பண்ணப்பட்டிருந்தJ. (“குமரி” என்றால் அழகிய இளம்பெண், நித்திய இளமையையும் அழகையும் உடைய பார்வதி.) கிரேக்க மாலுமிகளால் பார்க்கப்பட்ட கோயில் எந்த ஸ்தலத்தில் கட்டப்பட்டிருந்த தென்று இப்போது சொல்லமுடியாJ. இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் எல்லாவற்றிலும் பழமை யானது என்று லேசில் ஒப்புக்கொள்ளக்கூடியது அழிந்துபோய்க் கடலில் முழுகிக்கொண்டேவருகிறது. மற்றொன்று உயரமான கன்மலையின்மேல் கட்டப்பட்டிருக்கிறது; அதின் அடிவாரத்தில் கடல் அலைகள் எப்போதும் அடித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்தக் கோயில் வெளித்தோற்றத்திலும் கட்டட அமைப்பிலும் அதிகப் பழமையானதாகத் தோற்றுகிறது: அது பார்வதி பேரால் பிரதிஷ்டைபண்ணப்படாமல், சிவனுடைய குமாரன்பேரால் பிரதிஷ்டை யாயிருக்கிறது. ஏனென்றால், கல்லால் கரடுமுரடாய்ச் செய்த கணேசருடைய விக்கிரகம் அதில் இருக்கிறJ. மூன்றாவது கோயில்தான் இப்போது சுவாமி தரிசனத்துக்கு வருபவர்கள் வழங்கும் கோயில். அதைப்பார்த்தால் தற்காலம் கட்டப்பட்டதுபோல் தெரிகிறது. ஆனால் நாம் நிதானமாய்ச் சொல்லக்கூடியது என்னவென்றால், அவைகளில் எல்லாவற்றிலும் அதிக பூர்வமான கோயில் கடலுக்குள் முழுகிப்போயிருக்கவேண்டும் என்றும், நாளாவட்டத்தில் கடல் அந்தக் கன்மலையைத் தாக்கமுடியாதென்று கண்டபோது அந்த மலையின்மேல் பார்வதிக்கு வேறொரு கோயில் கட்டப்பட்டது என்றும் நினைக்கலாம். அந்தப் பக்கத்தில் வசிக்கும் செமபடவருக்குள்ளும் இதே தாற்பரியம்தான் தற்காலம்வரை இருப்பதாகத்தெரிகிறது. அவர்கள் சொல்லுவது என்ன வென்றால், 1883-ம் வருஷத்தில் சூரியன் பச்சைநிறமாகி, சாஸ்திரிகளெல்லாம் அதினிமித்தம் மயங்கினபோது, அவ்விடத்தில் கடலானது சில பர்லாங்குகள் தூரம் உள்ளுக்குச் சென்றுவிட்டதாம். அப்போது திடீரென்று பல இடிந்த கட்டடங்கள் கடலில் தோன்றினதாகவும் அவைகளெல்லாம் வெண்கலக் கதவுகளுள்ளவைகளாயிருந்தமையால் சில மீன்பரவர் கண்டு அவைகளைக் கரைக்கு இழுத்துவர முயன்றதாகவும், ஆனால் அவர்கள் திரும்பிவருமுன் கடல் அவைகளை மறுபடியும் மூடிப்போட்டதாகவும், பிறகு அவர்கள் அவைகளைக் கரைக்குக் கொண்டுவர முடியாமல் விட்டுவிட்டதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள். இது நிச்சயமாய் இருக்குமானால், கிரேக்கர்கள் கண்டு பிரமிப்படைந்த கோயில் கடலில் முழுகிப்போயிருக்க வேண்டும் என்றும் இப்போது பார்வதிக்குக் கட்டப்பட்டிருக்கும் கோயில் பின்னால் உண்டானதென்றும் நினைக்க இடமுண்டு.” மேற்கண்ட வசனங்களில், தென்னிந்தியாவின் தெற்குக் கடைசியில் இருக்கும் கன்னியாகுமரியில் நித்தியகுமரியாய்விளங்கும் பார்வதி தேவியாரின் கோயில் கடலுக்குள் அமிழ்ந்திருப்பதாகவும் அதற்குப் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களும் கடலால் மோதப்பட்டு நிற்கிறதாகவும் கணேசர் ஆலயங்களும் அங்கேயிருக்கிறதாகவும் காண்கிறோம். கடலால் மூடப்பட்ட இக்கட்டடங்கள் 1883-ம் வருஷத்தில் ஒரு சமயம் கடலால் சில தூரம் விடப்பட்டகாலத்தில், அக்கட்டங்களிலிருந்த வெண்கலக் கதவுகளை மீன் பிடிப்போர் கண்டு கரைசேர்க்கப்பிரயத்தனப் படுகையில், கடல் மறுபடியும் பொங்கி வருவதைப்பார்த்து அப்பிரயத்தனத்தை விட்டுவிட்டார்களென்று சொல்லப்படுகிறது. அக்காலத்திலுள்ளோர் தங்கள் அரசமாளிகையிலும் கோட்டை வாசலிலும் கோயில் வாசல்களிலும் பொன்னாலும் வெண்கலத்தாலும் கதவுநிலைகள் செய்து உபயோகித்து வந்தார்களென்று அறிகிறோம். மேலும் கன்னியாகுமரியிலுள்ள பூர்வ ஆலயங்கள் கடலால் அழிக்கப்பட்டிருக்கின்றனவென்பதும் தெரிகிறது. 11. லெமூரியா இருந்த இடம். Castes and Tribes of Southern India Vol. I, Intro. P. 20, 21 by E. Thurston. “In the chapter devoted to ‘Migration and distribution of organisms, ‘Haeckel, in referring to the continual changing of the distribution of land and water on the surface of the earth, says; “The Indian ocean formed a continent, which extended fromthe Sunda Islands along the Southern Coast of Asia to the east coast of Africa. This large continent of former times Sclater has called Lemuria, from the monkey-like animals which inhabited it, and it is at the same time of great importance from being the probable cradle of the human race. The important proof which Wallace has furnished by the help of chronological facts, that the presentMalayan Archipelago consists in reality of two completely different divisions, is particularly interesting. The western division, the Indo-Malayan Archipelago, comprising the large islands of Borneo, Java, and Sumatra, was formerly connected by Malacca with the Asiatic continent, and probably also with the Lemurian continent just mentioned. The eastern division, on the other hand, the Austro-Malayan Archipelago, comprising Celees, the Moluccas, New Guinea, Solomon’s Islands, etc., was formerly directly connected with Australia.” “இந்து மகாசமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது; அக்கண்டம் சந்தாத்தீவுகளிலிருந்து ஆசியாக்கண்டத்தின் தென்கரை நெடுகச்சென்று ஆப்பிரிக்காக்கண்டத்தின் கீழ்கரைவரைக்கும் எட்டியிருந்தJ. முற்காலங்களி லிருந்த இந்தப்பெரிய கண்டத்துக்கு, அதில்வசித்த குரங்கு போன்ற பிராணிகளி லிருந்து ஸ்க்லெய்ற்றர் என்பவர் லெமூரியா என்று பேர்கொடுத்திருக்கிறார். மனிதஜாதியின் ஆதி பிறப்பிடமாயிருந்திருக்கலாம் என்று உத்தேசிக்கப் படுவதினால் இக்கண்டம் அதிக முக்கியமானJ. தற்காலத்திலிருக்கும் மலாயாத்தீபகணம் உண்மையில் ஒன்றுக்கொன்று முற்றும் வித்தியாசமான இரண்டு பிரிவுகளடங்கியது என்பதாகக் காலவரிசையாய் ஏற்பட்ட சங்கதிகளைக்கொண்டு உவாலெஸ் என்பவர் திருஷ்டாந்தப்படுத்தியது விசேஷித்த இனிமையுள்ளJ. மேற்பிரிவாகிய இந்துமலாயாத் தீபகணம், போர்ணியோ ஜாவா சுமாத்திரா என்னும் பெரிய தீவுகளடங்கியJ. அது முற்காலத்தில் ஆசியாக்கண்டத்தோடும் அநேகமாய் இங்கே சொல்ல யிருக்கப்பட்ட லெமூரியாக்கண்டத்தோடும் மலாக்காவினால் இணைக்கப் பட்டிருந்தJ. இதற்குமாறாகக் கீழ்ப்பிரிவாகிய ஆஸ்திரோமலாயாத் தீபகணம், செலிபிஸ் மொலுக்காஸ் நியுகினியா சாலொமோன் தீவுகள் முதலானவைகள் அடங்கியதாய்ப் பழையகாலத்தில் ஆஸ்திரேலியாவோடு இணைக்கப் பட்டிருந்தது என்று ஹெக்கேல் என்பவர் கூறுகிறார்.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், இந்துமகாசமுத்திரத்தில் தென்னிந்தியாவுக்குத் தென்பக்கத்திலிருந்த இந்தியகண்டமானது ஆதி மனுஷர்கள் உற்பத்தியாவதற்கு இடமாயிருந்ததென்றும், எல்லாஜாதிகளும் சுகமாய்த் தங்கியிருந்த தொட்டிலாயிருந்ததென்றும், அது அழிந்தபின் அதிலிருந்து தங்களுக்கு எதிர்ப்பட்ட கரைகளுக்குச் சென்று அங்கு விருத்தியானார்களென்றும் தெரிகிறது. இந்து மகாசமுத்திரத்தைச் சுற்றியுள்ள தீவுகளிலும் தேசங்களிலுமிருக்கும் ஜனங்களையும் பழக்க வழக்கங்களையும் செடிகொடி மரங்களையும் இயற்கையின் அமைப்புத்தெரிந்த சாஸ்திரிகள் லெமூரியா என்று அழைக்கப்படும் இந்தியகண்டத்திலிருந்தே ஜனங்கள் பரவியிருக்கவேண்டுமென்று சொல்லுகிறார்கள். மேலும், ஜலப்பிரளயமானது உண்டானகாலத்தில் எல்லாரும் அழிந்துபோக, தெய்வ அனுக்கிரகத்தால் எங்கள் தேசத்தில் இன்னபக்தன் கப்பல் மூலமாய் தப்பிப்பிழைத்தா ரென்றும், அவருடைய சந்ததிதான் நாங்களென்றும், ஒவ்வொரு தேசத்தாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களென்பதை இதன் பின்வரும் வரிகளில் காணலாம்: 12. ஜலப்பிரளயத்தைக் குறித்த பல அபிப்பிராயங்கள். The New Popular Encyclopedia Vol. IV, Page 325. “Many other nations mention, in the mythological part of their history, inundations which in their essential particulars, agree with the scriptural account of Noah’s preservation. Hence many persons have inferred the universality of this innundation. To this, it has been replied that each nation localizes the chief events and actors as connected with itself, necessitating an Ararat, an ark and a Noah in each instance. Fohi in the Chinese mythology, Sottivrata or Satyavrata in the Indian, Xisuthrus in the Chaldaean, Ogyges and Deucalion in the Greek, have each been recognized by many as the Noah of the sacred scriptures under a different name. Even the American Indians have a tradition of a similar deluge, and a renewal of the human race from the family of one individual. All these individuals are said by their respective nations to have been saved, and to have become a second father of mankind.” “வேறு அநேக ஜாதியாரும் தங்கள் புராணக் கதைகளில் பிரளயங்களைக் குறித்துச் சொல்லுகிறார்கள். அவ்வரலாறுகளெல்லாம், முக்கியமான விஷயங்களில், நோவா காப்பாற்றப்பட்டதாகச் சத்தியவேதத்திற் கூறியுள்ள வரலாற்றுக்கு ஒத்திருக்கிறJ. ஆகையால், அநேகர் இந்தப்பிரளயம் உலகமெங்கும் உண்டாயிருக்கலாமென்று யூகிக்கிறார்கள். அதற்கு ஒவ்வொரு தேசத்தாரும் பிரளயத்தின் முக்கிய சங்கதிகளைத் தங்கள் தேசத்திலேயே நடந்ததாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தேசத்தார்களேயென்ப தாகவும் கூறி, ஆரராத்போன்ற ஒரு மலையையும், பேழையைப்போன்ற ஒரு கப்பலையும், நோவாவைப்போன்ற ஒரு முனியையும் ஏற்படுத்துகிறார்களே யென்று ஆஷேபனை கூறப்படுகிறJ. சீனருடைய புராணக் கதைகளில் சொல்லப்படும் ‘போஹி’யும் இந்துபுராணங்களில் சொல்லப்படும் ‘சத்திய விரதனு’ம், கல்தேயருடைய கதைகளிற் சொல்லப்படும் ‘சிசுத்துரசு’ம், கிரேக்கருடைய கட்டுக்கதைகளிற் சொல்லப்படும் ‘ஒஜீஜெசு’ம் ‘டியுகெலியனு’ம், சத்திய வேதத்திற் கூறப்பட்டுள்ள நோவாதானென்றும் நோவாவுக்கே, வெவ்வேறு தேசத்தில் வெவ்வேறு பெயர் சொல்லப்படுகிற தென்றும் பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். அமெரிக்க இந்தியர்களுக்குள் ளேயும், இப்படிப் பட்ட ஒரு பிரளயமுண்டானதாகவும் பின்பு ஒரேயொரு மனிதனுடைய குடும்பத்திலிருந்து திரும்பவும் மனிதர் விருத்தியானதாகவும் பாரம்பரியமாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. இப்படியே அவரவர்கள் தேசத்திலும் ஒரு மனிதன் தப்பிப் பாதுகாக்கப்பட்டானென்றும், அவன் மனித ஜாதிகளுக்கு இரண்டாவது தந்தையானான் அதாவது, இரண்டாந்தரம் மனிதர் அவனிலிருந்து உற்பத்தியாகிப் பெருகினார்களென்றும் சொல்லப்பட்டு வருகிறது.” மேற்கண்ட வசனங்களில் சீனா இந்தியா கல்தேயா சின்னஆசியா அமெரிக்கா முதலிய தேசங்கள் ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோனதாகவும், அப்படி அழிந்த காலத்தில் நோவாவின் குடும்பத்தைப் போன்ற ஒரு உத்தமமான குடும்பம் காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லிக்கொள்ளப்படுகிறது. ஆகவே, ஜலப்பிரளயம் ஒரு காலத்தில் உண்டாயிருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை அந்தந்தத்தேசங்களில் ஜலப்பிரளய முண்டாயிருக்குமா என்று நாம் சந்தேகிக்கலாம். ஆகிலும் உற்று நோக்குவோமானால், அவைகள் யாவும் உண்மையே என்று காண்போம். லெமூரியா என்னும் பெருங்கண்டம் தண்ணீருக்குள் அமிழ்ந்து போகையில், அதன் சுற்றுக்கரையிலுள்ளோர் தங்களுக்கு எதிர்ப்பட்ட மற்ற இடங்களுக்கு ஏன் போயிருக்கக் கூடாது? ஆபத்தான காலங்களில் அனேகர் அழிந்து போயிருக்க, சிலர்மாத்திரம் தப்பக்கூடாதா? தப்பியவர்கள் தங்களுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் தயாரித்து விருத்தியாகக் கூடாதா? விருத்தியான பின்னடியார் எங்கள் முற்பிதாவாகிய இன்னார் காலத்தில் நாங்கள் இங்கு வந்தோமென்று மென்மையாய்ச் சொல்லிக்கொள்வது இயல்புதானே. லெமூரியாக்கண்டம் அழிந்த காலத்தில் சின்ன ஆசியாவில் நோவாவும் இந்தியாவில் சத்தியவிரதனும் சீனாவில் போகியும் அமெரிக்காவில் ஒரு பக்தனும் ஆப்பிரிக்காவில் ஒரு புண்ணியவானும் தப்பிப்பிழைத்தார்களென்று சொல்வது அசம்பாவிதமல்லவே. இத்தேசங்களின் ஓரங்கள் லெமூரியாவிற்கு சமீபித்திருந்ததென்று நாம் அறியவேண்டும். இவர்களைப்போல இன்னும் எத்தனையோ பேர் தப்பியிருக்கலாம். 13. அழிந்துபோன உவரிப்பட்டினம். Essays by S.V. Thomas, M.A. Page 85. “About six miles from Cape Comorin stands a small fishing village called Uvari, or Ovari. This village, I am inclined to think, occupies the site of the Ophir of the Bible. In the first place, although Ovari is at present only a small fishing village, yet unlike other villages of a similar kind, it posseses a solid stone temple, which is as old as any other temple in India, and is to-day visited by pilgrims from the remotest corners of the country, thus showing that it once had a glory, and a name that have long ago departed. Again, the word Uvari or Ovari means in Tamil nothing more or less than a scaport, being connected with Uvar, salt or salt sea. We may, therefore, reasonably conclude that Ovari was a great emporium of trade and that it was by pre-eminence called the seaport, which the merchants of Tyre might have mistaken for its proper name, a thing which often happens in South India. To more than 95 percent of the Tamil people Madras is known only by the name of ‘the city.’ Further with regard to the general appearance of Ovari the sand banks that are found there have the character of earth piled by artificial means, that is, they looks as if they have been dug out of the Earth and thrown up as mounds. Add to this circumstance the fact that when heavy rains have washed down the earth from thesde hcaps of sand, people have now and then picked up pieces of gold. The inhabitants mention this fact not because they know anything about Ophir and its gold, so as to be ambitious of connecting their village with that name, but as an instance to show that once their village was inhabited by very rich people, who left their gold in their place when they themselves went the way of all mankind.” “கன்னியாகுமரி முனைக்குச்சற்றேறக்குறைய ஆறுமைல் தூரத்தில் உவரி அல்லது ஒவரி என்ற செம்படவர் வசிக்கும் ஒரு கிராமம் இருக்கிறJ. அந்தக்கிராமம் சத்திய வேதத்திற் கூறியுள்ள ஒப்பீர் நகரிருந்த இடத்திலிருக்கிறதென்று நான் எண்ணுகிறேன். அதற்குப் பல முகாந்தரங்கள் உள. முதலாவது, அது முக்கியமற்ற செம்படவருடைய கிராமமானபோதிலும், அதைப்போலொத்த மற்ற கிராமங்களுக்கு வித்தியாசமாக, ஒரு ஸ்திரமான கல்லாலமைந்தகோயில் அதற்கு உண்டு. அந்தக்கோயில் இந்தியாவிலுள்ள மற்றக்கோயில்களைப்போலவே அதிகப்பழமையானதாயும் தேசத்தின் நானா திசைகளிலுமிருந்து ஜனங்கள் அங்கே சுவாமி தரிசனத்துக்கு வரும்படியான அவ்வளவு மகிமையுள்ளதாயும் இருக்கிறJ. இதனாலே அது ஒருகாலத்தில் அதிகப்பேர் பிரஸ்தாப மகிமையுடையதாயிருந்ததென்று தோன்றுகிறது. இரண்டாவது, உவரி என்றால் தமிழில் கடற்றுறைமுகம் என்று அர்த்தம். அதாவது உப்பு என்று பொருள்படும் உவர் என்றமொழியுடன் சம்பந்தப்பட்டJ. இந்தக்குறிப்புகளினின்று உவரியானது வர்த்தகத்துக்குப் பேர்போன இடமா யிருந்திருக்கவேண்டும் என்றும், முக்கிய வியாபார ஸ்தலமானதினால் அதை உவரி அல்லது விசேஷித்த துறைமுகம் என்றழைத்தார்கள் என்றும், தீருநகரின் வர்த்தகர் உவரியே அதற்குப் பேர் என்று தப்பாய் நினைத்தார்கள் என்றும் சந்தேகமறச் சொல்லலாம். இப்பேர்ப்பட்ட தப்பான எண்ணங்கள் தென்னிந்தியாவில் வழக்கமாய் உண்டாகிறதுதான். (உதாரணமாக, நூற்றில் 95 பேர் மதராசைப் ‘பட்டணம்’ என்றுதானே அழைக்கிறார்கள்.) மூன்றாவது, அந்த உவரி என்னும் கிராமத்தின் பொதுவான வெளித்தோற்றத்தைக் கவனித்தால், அங்குள்ள மணல் மேடுகள் தரையில் இருந்து வெட்டப்பட்டுக் குவிக்கப்பட்ட மேடுகள்போல் காணப்படுகின்றன. நான்காவது, பெருமழை பெய்து இந்த மணல்மேடுகள் கரையும்போது ஜனங்கள் அம்மேடுகளிலிருந்து பொன் நாணயங்களை எடுத்திருக்கிறார்கள். அக்கிராமவாசிகள் இந்தச்சங்கதியைச் சொல்லும்போது தங்கள் கிராமம் பூர்வகாலத்தில் மகிமைபெற்றிருந்த “ஒப்பீர்” என்னும் நகரம்தான் என்ற பெருமையான காரியத்தை ஸ்தாபிக்க வராமல், தங்கள் கிராமம் முற்காலத்தில் தனவான்கள் வசித்த இடமென்றும் அவர்கள் மரிக்குங்கால் தங்கள் பொன்னையும் திரவியத்தையும் அவ்விடத்தில் விட்டு மரித்தார்கள் என்றும் அர்த்தப்படும்படியாகவே அப்படிச்சொல்லுகிறார்கள்.” கன்னியாகுமரிக்குச் சுமார் ஆறுமைல் தூரத்திலுள்ள உவரியென்னும் கடற்றுறைமுகத்தில் பூர்வ காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயில்களிருந்ததாகவும், அவை இப்போது பிரதானமற்றுப்போனதாகவும், அங்குள்ள மேடான இடங்களில் பொன்நாணயங்கள் மழைபெய்கிற காலங்களில் கண்டெடுக்கப்படுகிறதாகவும் தோன்றுகிறது. அவ்விடத்தில் வழங்கிவந்த பொன் நாணயங்கள் மிக மாற்றுயர்ந்தாயிருந்ததின் நிமித்தம் சாலொமோன் என்னும் யூதேயாதேசத்து ராஜன் தான் மிகுந்த மகிமை யுடையதாய்க் கட்டிய தேவாலயத்தின் கதவுகளைப் பசும்பொன் தகட்டினால் மூடினான் என்பதைக்கொண்டும், ஒப்பீரின் தங்கத்தை ஈராமின் கப்பல்கள் வருஷந்தோறும் காணிக்கையாகக்கொண்டு வந்து சாலொமோனுக்குக் கொடுத்தனவென்றும் 1. ராஜாக்கள் 10, 11, 22-ல் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் தர்ஷீஸின் கப்பல்கள் பொன்னையும் வெள்ளியையும் யானைத் தந்தங்களையும் குரங்குகளையும் மயில்களையும் கொண்டுவரும் என்றும் சொல்லியிருப்பதைக் கொண்டும், சுமார் 3,000 வருஷங்களுக்கு முன்னாலேயே உவரியென்னும் கிராமம் கடற்றுறைப் பட்டணமாயிருந்ததென்றும், அங்குள்ள பொன் மிகவும் நேர்த்தியானதென்றும், அதை மேற்றிசை வியாபாரிகள் வாங்கிக்கொண்டு போனார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. இற்றைக்குச் சுமார் 3,000 வருஷங்களுக்குமுன் பசும்பொன்னையும் ரத்தினங்களையும் வாசனைத்திரவியங்களையும் சந்தனக்கட்டைகளையும் யானைத் தந்தங் களையும் தங்கள் வியாபாரப் பொருளாக மற்றத்தேசங்களுக்கு ஏற்றுமதி செய்த அவ்விடம் இப்போது அழிந்து அடையாளம் தெரியாமல் நிற்கிறJ. பூர்வகாலத்தில் அங்குள்ளோர் செய்த வியாபாரத்தைக் கவனிக்கும் போது அவர்கள் மிகுந்த நாகரிகமுடையவர்களாயும் செல்வப்பெருக்குடையவர்களாயு மிருந்தார்களென்று சொல்லாமலே விளங்குகிறJ. இதன்முன் சரித்திர ஆராய்ச்சிக்காரர் சொல்லிய சிலவரிகளைக் கவனித்த நாம் தென்னிந்தியாவிற்குத் தெற்கே இந்துமகாசமுத்திரத்தில் விசாலித்திருந்து ஜலப்பிரளயத்தினால் அழிந்து போன பூபாகம் லெமூரியா வென்றும், இந்துமகாசமுத்திரத்தில் அது இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோக, அதிலுள்ளோர் தங்களுக்குச் சமீபத்திலுள்ள தென்னிந்தியா விலும் இந்து சீனதீப கற்பத்திலும் சந்தா சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளிலும் மதகாஸ்கர் தீவிலும் ஆப்பிரிக்க அமெரிக்காவின் தென் பாகங்களிலும் போய்க் குடியேறினார்களென்றும் தெரிகிறது. இப்படி அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் உலகத்தின் சரித்திரம் எழுத ஆரம்பிக்கும் முன்னாலேயே மிகுந்த நாகரீகமும் கல்வியுமுடையவர்களா யிருந்தார்க ளென்று பல கல்விமான்கள் சொல்லியிருக்கிறார்கள். அதோடு அழிந்துபோன அக்கண்டத்திலிருந்தவர்கள் தமிழ்ப் பாஷையையே பேசி வந்தார்களென்றும் லெமூரியா அழிந்தபின்பே மற்றப்பாஷைகள் தமிழில் கலக்க ஆரம்பித்ததென்றும் நாம் அறிவோம். மேலும், உலக சரித்திரத்தை எழுத ஆரம்பித்த அநேகர், தங்கள் தங்கள் தேசத்தில் நாகரீகம் கல்வி கைத் தொழில் சரித்திரம் உண்டான காலத்தையே பிரதானமாக வைத்துக்கொண்டு, அதற்குச் சற்று முன்பின்னாகவே மற்றத் தேசத்துச் சரித்திரமிருக்குமென்று உத்தேசங் கட்டினார்கள். இதனால் ஒரு தேசத்தினுடைய பூர்வீகம் மாறி, உண்மை கண்டு அறிவதற்கு ஏதுவில்லாமற் போகிறJ. மற்றுஞ் சிலர் தமக்கு முன் எழுதியவர்களுடைய அபிப்பிராயத்தையே சாதித்துச் சொல்லுகிறார்கள். உலகத்தின் இயற்கை அமைப்பைக் கவனித்துச் சரியான காலம் சொல்லுகிறவர்கள் பைத்தியக்காரராக நினைக்கப்படு கிறார்கள். வேறு சிலர், தாங்கள் சொல்லும் காரியங்கள் எல்லாராலும் நம்பப்படவேண்டுமென்பதை உத்தேசித்துத் தாங்கள் எழுதிவைத்தவைகளை அநாதியாயுள்ளதென்றும், வெகுபூர் வந்தொட்டு இருக்கிறதென்றும், இது ரிஷிகளால் எழுதப்பட்ட தென்றும், இதை நம்பாதவர்கள் இன்னின்ன சாபத்துக்குள்ளாவார்களென்றும் சொல்லுகிறார்கள். வேறு சிலர், பூர்வமாயுள்ள கிரந்தங்களில் நூதனமாய்த் தங்கள் சுயபிரயோஜனத்தை விரும்பிச்செய்த சில சூத்திரங்களை அங்கங்கே நுழைத்துவிடுகிறார்கள். இதனால் இந்தியாவின் பூர்வ சரித்திரங்கள் கால வரையறை சொல்ல ஏதுவில்லாமல் சந்தேகிக்கும் நிலையில் வந்துவிட்டது. நூற்றைக் கெடுத்தது குறுணி என்பதுபோல தற்காலத்தவர் செய்யும் சொற்பப் புரட்டுகள் பூர்வமாயுள்ள நல்லதையும் கெடுத்துவிடுகிறJ. அப்படி யிருந்தாலும் தென்னிந்தியாவில் பூர்வமாய்ப் பேசப்பட்டுவந்த தமிழ்ப் பாஷையின் இலக்கணமாகிய தொல்காப்பியம் நாளது வரையும் எவ்விதக் கலப்புமற்றுத் தன் பூர்வத்தை விளக்கிக் காட்டிக்கொண்டு நிற்பதை நாம் காண்கிறோம். அந்நூல் முதல் ஊழியின் இறுதியிலிருந்த அதாவது இற்றைக்குச் சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னிருந்த முதற்சங்கத்தின் கடைசியில் கடலால் விழுங்கப்பட்ட தென்மதுரையில் ஆண்டுகொண்டிருந்த நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்டதென்றும் அந்நூலே இடைச்சங்கத்தாருக்கு ஆதார நூலாயிருந்ததென்றும் இதன் பின் காண்போம். தொல்காப்பியர் தமது குருவாகிய அகத்தியரால் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழைப்பற்றியும் எழுதிய 80,000 சூத்திரங்களைக்குறுக்கி 8,000 சூத்திரமாகச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. Manual of the Administration of the Madras Presidency, Vol. III, Page 907. “Tol (bjhš-tol. Tam.) old - Tolgauppyam (bjhšfh¥ãa« - tolgappiyam). From (above and kavya, san, Poem). Tamil grammar (lacshanam) by Tolgauppyan of Madura, pupil of Agastyan whose grammar, consisting of 80,000 rules, he abridged, reducing the number to 8,000. The Tolgauppyam complete should consist of three parts; on letters, words and prosody, or rather versification as an art. Of these the last part cannot be found complete. Tolgauppyam has had three commentaries written upon it by Natchinarkiny, Yilampooran, and Shenauvareiyan (Nunnool).” “தொல்காப்பியம் என்பது அகஸ்தியருடைய மாணாக்கனான மதுரைத் தொல்காப்பியரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கணம். 80,000 சூத்திரங்களடங்கிய பேரகத்தியம் என்னும் அகஸ்தியருடைய இலக்கணத்தைச் சுருக்கி இவர் 8,000 சூத்திரங்களால் தமது இலக்கண நூலை எழுதினார். தொல்காப்பியம் முழு நூலும் எழுத்து சொல் யாப்பு என்னும் மூன்று பிரிவுகளையுடையதா யிருக்கவேண்டும். இவைகளில் கடைசிப்பிரிவு பூரணமாய்க் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர் இளம்பூரணர் சேனாவரையர் என்ற மூவர் தொல்காப்பியத்துக்கு உரை யெழுதியிருக்கிறார்கள்.” இவர் எழுதிய சூத்திரங்கள் தமிழ் மக்களால் பசும்பொன்னிலும் சிறந்தவைகளாக நாளதுவரையும் போற்றப்பட்டுவருகின்றன. இருந்தாலும், அவர் கருத்துக்கள் யாவும் தெரிந்துகொண்டு அனுபோகத்துக்குக் கொண்டுவந்தவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும். மேலும், தொல்காப்பியம் 8,000 சூத்திரங்களுடையதென்று மக்லீன் பண்டிதர் சொல்லும் வசனங்களைக் கவனிக்கையில், தற்காலத்தில் வழங்கும் 1612 சூத்திரங்கள் மிகச் சொற்பமென்றே சொல்லவேண்டும்; மீதியான 6,388 சூத்திரங்கள் அந்தின் வாய்ப்பட்டு அழிந்துபோயினவென்று நினைக்க இடமிருக்கிறது. உவின்ஸ்லோ பண்டிதர் சொல்லுகிற 12,000 சூத்திரங்கள் சிற்றகத்தியமாயிருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இப்படி அழிந்துபோன தொல்காப்பியம், பூர்வ தமிழரின் வழக்க ஒழுக்கங்கள் ராஜமுறைமைகள் நிலத்தின் பாகுபாடுகள் வீணையின் வகைகள் முதலியவைகளைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்லுகிறJ. தற்காலத்தில் காணப்படும் பாஷையின் தேர்ச்சி அனைத்திற்கும்மேலான இலக்கணமுடையதாய் விளங்குகிறJ. தமிழின் பெருமை இன்னதென்று அறிந்து கொள்வதற்கு அது போதுமானதென்றே நினைக்கவேண்டும். 14. மிகப்பூர்வ காலத்தைக்காட்டும் சில முக்கிய குறிப்புகள். தொல்காப்பியம் உண்டாவதற்கு முன் 4,400 வருஷங்களாகவிருந்த முதல் சங்கத்தையும் அதில் தலைமை வகித்த புலவர்களையும்பற்றி நாம் கேட்கையில், இது உள்ளதாயிருக்குமோ, உலகமுண்டாகி இன்னும் 6,000 வருஷமாகவில்லையே 9,000, 10,000 வருஷங்களுக்குக் கணக்குச் சொல்லுகிறாரேயென்று நாம் நினைப்போம். 3,400 வருஷங்களுக்கு முன் மோசே முனிவரால் எழுதப்பட்ட ஆதியாகமத்தில் உலகசிருஷ்டி கிரம வரலாற்றில் சொல்லப்படும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ஊழிகாலமா யிருக்கவேண்டுமென்பது சரித்திரக்காரர்களுடைய கொள்கை. ஏனென்றால், மோசேயின் பேழைக்குள் வந்தடைந்த மிருகங்களைப் பார்க்கிலும் எத்தனையோ மடங்கு பெரிதான மிருகங்களின் எலும்புகள் மண்ணில் புதைந்திருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகப் பெரிதான மனித எலும்புகளும் வரவரக் காணப்படுகிறது. கடலால் அழியாத சில மேட்டுப் பாங்கான இடங்களில் 20,000 வருஷங்களுக்கு மேற்பட்டவைகளான மரங்கள் இருக்கிறதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மரத்தின் வளர்ச்சியைக்காட்டும் ரேகைகளைக் கொண்டு கணிக்கும் வருஷங்கள் தவறுதலுடையவையாகா வென்று துணிந்து சொல்லலாமென்பதைப் பின் வரும் வாக்கியங்களால் கண்டுகொள்வோம். Doubts of Infidels, “The bones of man, of the type of the North American Indian, have been exhumed from the delta of the Mississippi at New Orleans, which were found lying below the fourth forest level, and making large allowance, must have lain here for more than fifty-thousand years. The exhumed relics of ancient civilization in the valley of the Nile antedate the History of the Jewish theocracy and the foot prints of the Creator are found in the granite pages of the primary and fossiliferous rocks, long anterior to the fabulous era of this Genesaical history of creation. Humboldt describes a tree now growing in the famous gardens of Montezuma, as more than six-thousand years old, and another in Central America as but little less than twenty-thousand years old.” “வடஅமெரிக்க இந்தியர்களின் தேக அமைப்பையொத்த மனித எலும்புகள், மிசிசிப்பிநதியின் சங்கம பூமியில் நியு ஆர்லியன்ஸ் என்னும் இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. வனமட்டத்தின் நாலாவது படைத்தரைக்குக்கீழே அவைகள் புதைந்து கிடந்தன. ஆகையால் எப்படிப்பார்த்தாலும், குறைந்த பட்சம் 50,000 வருஷங்களுக்கு மேலாகவே அவைகள் அங்கே இருந்திருக்கவேண்டும். நீலநதியின் பள்ளத்தாக்கில் வெட்டியெடுக்கப்பட்டவைகளான பண்டைக்காலத்து நாகரீகச் சின்னங்கள் யூதருடைய வேதசரித்திரத்துக்கு முற்பட்டவைகளாயிருக்கின்றன. அங்குள்ள பாறைகளின் முதல் அடுக்கிலும் ஸ்தாவரஜங்கம சிலாரூபங்களடங்கிய அடுக்குகளிலும் சிருஷ்டிகர்த்தாவினுடைய அதிசயச்செயல்களின் அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளெல்லாம் ஆதியாகமத்தில் கூறியுள்ள சிருஷ்டிப்புச் சரித்திரத்துக்கு நீண்டகாலத்திற்கு முற்பட்டவைகளா யிருக்கின்றன. மொன்றிஜூமாவின் பேர்பெற்ற தோட்டத்தில் 6,000 வருஷங்களுக்கு மேற்பட்ட ஒரு மரத்தைப்பற்றியும் மத்திய அமெரிக்காவில் கொஞ்சங்குறைய 20,000 வருஷங்களாயிருக்கிற இன்னொரு மரத்தைப் பற்றியும் ஹம்போல்ட்ஸ் என்பவர் விபரமாய்க் கூறுகிறார்.” வடஅமெரிக்க இந்தியரின் தேக அமைப்பையொத்த மனித எலும்புகள் நியூஆர்லியன்ஸ் என்னும் இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டனவென்றும் அவைகள் குறைந்தது 50,000 வருஷங்களுக்கு மேலுள்ளதாக இருக்கவேண்டு மென்றும் சொல்லுகிறார். பிரளயத்தினால் காடுகளும் சோலைகளுமாயிருந்த இடங்கள் மண்ணால் மூடப்பட்டு மறுபடியும் தரையாக அதன்மேல் அநேகஆயிரம் வருஷங்களானதின் பின் வேறொரு பிரளயமுண்டாகி மரங்கள் சோலைகளை அழித்து மண்ணால் நிரப்பியதாகவும் இப்படியே நாலுதரம் பிரளயமுண்டாகி வனங்களை அழித்து மண்படையுண்டாயிருக்கிறதாகவும் தெரிகிறது. ஒவ்வொரு மண்படையின் குறிப்புகளினாலும் அப்படைகளி லிருக்கும் மரங்களின் குறிப்புகளினாலும் ஒவ்வொருபடையும் உத்தேசம் அநேக ஆயிரம்வருஷங்களாகி யிருக்கவேண்டுமென்று சாஸ்திரிகள் கணக்கிடுகிறார்கள். இதில் காலாவதியாயிருக்கும் அடிப்படையில் வடஅமெரிக்க இந்தியரின் அங்கங்கள் புதைந்திருப்பதைக் கண்டுபிடித்தவர்கள் அவைகள் மண்ணில் 50,000 வருஷங்களுக்கு முன்னாலேயே புதைந்திருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதுபோலவே நீலநதியின் கரை யோரங்களிலும் பூர்வ நாகரீகத்தைக் குறிக்கும் சின்னங்களிருந்ததாகச் சொல்லுகிறார்கள். மேலும் ஜீவனுள்ளவைகளில் வெகுகாலம் நீடித் திருக்கக்கூடிய பப்பரப்புளி யென்றமரம் 20,000 வருஷங்கள் ஆயுளுடைய தாயிருக்கிறதென்று சொல்லுகிறார்கள். இம்மரம் தென்னிந்தியாவில் அங்கங்கே நாளது வரையும் காண்கிறோம். தென்னிந்தியாவிற்கு இது இயற்கையாயுள்ள மரமேயொழிய நூதனமான மரமல்ல. மேலும் இம்மரத்தின் தன்மையை அறிந்த சித்தர்கள் அதில் ஒரு சிறு துவாரஞ்செய்து துருசு சுண்ணத்தை அமுக்கிவைப்பார்கள்; சிறிது நேரத்துக்குள் அதிலிருந்து தண்ணீர் ஊறும்; அந்தத் தண்ணீரைச் சிறு பாத்திரங்களில் பிடித்துத் தங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுவார்கள். சாப்பிட்டவுடன் தங்களையறியாத மயக்கம் அவர்களுக்கு உண்டாக நாலுநாள் பரியந்தம் பிரக்கினையற்றுப் படுத்திருந்து பின் எழுந்திருப்பார்கள். இப்படி அதன் ரசத்தைச் சாப்பிடுவது அவர்கள் செய்யும் யோகசாதனைக்கும் கற்பசாதனைக்கும் அனுகூலமானதென்று எண்ணப்படுகிறJ. ஒரு மரத்தின் உபயோகத்தை நன்றாய் ஒரு தேசத்தார் அறிந்திருப்பார்களானால் அந்த மரம் அத்தேசத்திற்கேயுரிய தென்று சொல்லாமலே விளங்கும். தென்னிந்தியாவின் சில இடங்களில் இதைப்பூத விருக்ஷமென்று சொல்லுவார்கள். இது பரிசுத்தமான விருக்ஷமென்று பொதுவாக எண்ணப்படுகிறJ. ஆகையினால் அதன் கிளைகளையாவது இலைகளையாவது ஒருவரும் சேதப்படுத்துகிறதில்லை. அதன் அடிப்பாகம் பெருத்து நுனிப்பாகம் சிறுத்துக் கோபுரத்தின் சாய்வாக வளர்ந்திருக்கும். இம்மரத்தைத் தஞ்சாவூர் ஜில்லாவிலும் ஏராளமாய்க் காணலாம். திருநெல்வெலி மதுரை முதலிய இடங்களிலும் அங்கங்கேயிருக்கிறது. தஞ்சாவூரில், சிவகங்கைத் தோட்டத்தில் ஒரு மரமும் வெண்ணாற்றங் கரையில் ஒரு மரமுமிருக்கிறJ. இப்படியே காவேரிப்பாய்ச்சலிலும் அனேக மரங்களிருக்கலாம். இம்மரங்களைக் குறுக்காக அறுத்து அவைகளில் சுற்றிச் சுற்றியிருக்கும் ரேகைகளைக்கொண்டு இத்தனை வருஷமாக இம்மரங்கள் நிற்கின்றனவென்று சாஸ்திரிகள் கண்டுபிடிக்கிறார்கள். இவைகளைக்கொண்டு நாம் சொல்லுகிற முதல் ஊழியின் காலம் அதிகமாகாதென்றே தோன்றுகிறது. இம்மரங்கள் வேறு சில இடங்களிலிருப்பதாக அடியில்வரும் வசனத்தில் காணலாம். Dravidian comparative Grammar by Bishop Caldwell, “Huge old speciments of the Baobab, or Adansonia Digitata, an African tree, of which the Hindus do not know even the name, may still be seen in or near - various sites of foreign commerce in the extreme south of the Indian peninsula: e.g. in Kottar, near Cape Comorin, and near Tuticorin in Tinnevelly - possibly on the site of the ancient Kolkhi.” “இந்தியாவின் தென்கோடியில், அந்நியதேசங்களோடு வர்த்தகம் நடத்திவந்த அநேக துறைமுகப்பட்டணங்களிலும் அவைகளுக்குச்சமீபத்திலும், பேயோபாப் அல்லது அடன்ஸோனியா டிஜிற்றாற்றா என்ற ஆப்பிரிக்காக் கண்டத்து மரம், நீண்டு பாரித்துப் பிரமாண்டமாய் வளர்ந்து நிற்பதைக் காணலாம். அவைகள் வெகுகாலத்து மரங்கள். உதாரணமாக, கன்னியாகுமரி முனைக்குச் சமீபமான கோட்டாற்றிலேயும் திருநெல்வேலியைச்சார்ந்த தூத்துக்குடிக்குச் சமீபமாகக் கொற்கை யென்ற பழையநகரிருந்த இடத்திலேயும் இம்மரங்கள் நிற்கின்றன. இவைகளின் பேர்முதலாய் இந்துக்களுக்குத் தெரியவில்லை.” மேலேகூறிய பேயோபாப் என்றமரம் ஆப்பிரிக்காக்கண்டத்து மரமென்றும் அன்னியதேச வியாபாரசம்பந்தமான துறைமுகப்பட்டணங்களில் அது காணப்படுகிறதென்றும் அதன் பெயர் இந்துக்களுக்குத் தெரியவில்லை யென்றும் சொல்லுகிறார். இம்மரத்தின் உபயோகத்தை அறிந்திருந்த தென்னிந்திய ஜனங்களுக்கு அது நூதனமான மரமல்ல. ஆனால் ஆப்பிரிக்காவுக்கும் தென்னிந்தியாவுக்கும் நடுவிலுள்ள பூபாகத்தில் இம்மரம் ஏராளமா யிருந்திருக்கவேண்டுமென்றும், அப்பூபாகம் அழிந்தபின் அதற்குச் சம்பந்தப்பட்டதான பூமிகளில் அங்கங்கே காணப்படுகிறதென்றும் நாம் நினைக்க ஏதுவிருக்கிறது. அம்மரத்தைப்பற்றி, உவின்ஸ்லோ அகராதி “பப்பரப்புளி - (also பெருக்கமரம்) A species of large tree, Adonsonia digitata, L” என்றும், வாசுதேவநாயுடு எழுதிய ஆயுர்வேத பாராவாரம் “யானைப்புளியமரம், பப்பரப்புளி, பூரிமம், அடன்ஸோனியா டிஜிடாடா ஹனடிளேடிnயை னுபைவையவய பேயோபாப் க்ஷயடியெb மங்கி ப்ரெட் ட்ரீ ஆடிமேநல-செநயன வசநந. ஆபிரிக்கா தேசத்திலும் இப்போது நமது தேசத்திலும் இந்த மரம் விஸ்தாரமாய்விட்டது. பழத்தின் சதைக்கு ஸங்கோசநி (நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் சீழ் முதலியவற்றை நிறுத்தும்) அந்தரஸ் நிக்தகாரி (உட்கொண்டால் தாதுக்களின் எரிச்சலைச் சாந்தி செய்து அவற்றைத்துவள்விக்கும்) செய்கைகளுண்டு. இதைச் சீதபேதிக்கும் சீதசுரங்களுக்கும் கொடுக்கலாம்.” என்றும் சொல்லியிருப்பதினால் மேலேகூறிய மரம் பப்பரப்புளி என்று அறியலாம். மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் நரம்புகளையும் சரீரதாதுக்களையும் சுருக்கி உதிரம் சீழ் முதலியவற்றை நிறுத்தக்கூடியதான சக்தி பப்பரப்புளி (பூத விருக்ஷம்) என்ற மரத்துக்கு இருந்ததினால் சித்தர்கள் அதை உபயோகப்படுத்துகிறதாகச் சொல்லப்படுகிறது மிகப்பொருத்தமாகத் தெரிகிறது. நீண்ட ஆயுளுள்ள இம்மரம் நீண்ட ஆயுளை விரும்பித் தவஞ்செய்த பெரியோர்களுள்ள லெமூரியாவில் அது பூர்வமாயிருந்திருக்க வேண்டும். லெமூரியா அழிந்துபோன பின் அதோடு நிலச் சம்பந்தம் பெற்ற ஆப்பிரிக்கா தென்னிந்தியா முதலிய பூபாகங்களில் காணப்படுவது இயற்கையே. பொதிகைமலையின் பக்கத்திலும் காவேரியாற்றின் பக்கங்களிலும் இருப்பதே அவைகள் மற்றத் தேசங்களிலிருந்து வரவில்லை யென்பதைக் காட்டுகிறது. Castes and Tribes of Southern India by E. Thurston Vol. I, Intro. P. XXIV. “On the evidence of the very close affinities between the plants and animals in Africa and India at a very remote period, Mr. R.D. Oldham concludes that there was once a continuous stretch of dry land connecting South Africa and India.” “மிகப்பழமையானகாலங்களில் ஆப்பிரிக்காவிலிருந்த ஸ்தாவரஜங்கமங் களுக்கும் இந்தியா விலிருந்த ஸ்தாவரஜங்கமங்களுக்கும் இருக்கும் நெருங்கின ஒற்றுமையைக்கொண்டு, ஆர்.டி. ஓல்டஹாம் என்பவர், ஒருகாலத்தில் தென் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒரேதொடர்ச்சி யான பெருந்தரை இணைத்துக் கொண்டிருந்தது என்று தீர்மானிக்கிறார்.” மேற்கண்டவரிகளை நாம் கவனிக்கையில் லெமூரியாக்கண்டமும் தென் ஆப்பிரிக்காவும் வெகுகாலத்துக்குமுன் தொடர்ச்சியான பூசம்பந்த முடையதாயிருந்ததென்று தெரிகிறது. லெமூரியா அழிந்தபின் ஆப்பிரிக்காவின் தென்பாகத்திலும் தென்னிந்தியாவிலும் காணப்படும் தாவர வர்க்கங்களின் ஒற்றுமையே இதற்குக் காரணமென்றுஞ் சொல்லுகிறார். இதைக்கொண்டு பப்பரப்புளி என்ற மரம் ஆப்பிரிக்காவிலிருந்து, கொண்டுவரப் படவில்லை, தென்னிந்தியாவிற்கேயுரிய மரமென்று தெளிவாகத்தெரிகிறது. மேலும் பதினாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே எகிப்தியர் களிருந்தார்களென்றும், அவர்கள் தண்டசக்கரம் முதலிய யந்திரங்களின் உதவியின்றிக் கையினாலேயே மண்பாண்டங்கள் செய்தார்களென்றும் காண்கிறோம். Hutchinson’s History of the Nations, Early Egyptians making pottery 10,000 years ago. “The most abundant handwork of the early Egyptians was the finely made pottery entirely formed by hand. It was built up from the base and in form so true that no error is pereeptible. The facing was finished with a coat of red hacmatite, which turned to a brilliant black in the furnace. It is interesting to note that the same materials are used in the same kindof patterns by the hill tribes at the back of Algeria at the present time.” ஆதி எகிப்தியர் 10,000 வருஷங்களுக்கு முன் மண்பாண்டங்கள் செய்தல். “ஆதி எகிப்தியர் அபரிமிதமாய்ச் செய்துவந்த கைத்தொழில் என்னவென்றால், வெகு நேர்த்தியாய் யந்திர உதவியில்லாமல் கையினால் செய்த மண்பாத்திரவேலையே, அடிமுதல் உருவத்தில் யாதொரு பிசகும் இல்லாமல் கையாலேயே அது செய்யப்பட்டJ. சிவப்புச் செங்கல் பொடியினால் அதற்கு மேல் பூச்சுப்பூசப்பட்டJ. இதை நெருப்பில் சுட்டவுடன் அந்தச்சிவப்பு கறுப்பு நிறமாய் மாறினJ. இதில் விசேஷமாய்க் கவனிக்க வேண்டியது, அதே தளவாடங்களினால் அதேவித மட்பாத்திரங்கள் இப்போது அல்ஜீரியாவுக்குப்பின் பக்கத்திலுள்ள மலைவாசிகளால் செய்யப்படுகிறது என்பதே.” இதனால், இற்றைக்குப் பத்தாயிர வருஷங்களுக்கு முன்னாலேயே மனிதர்களிருந்திருக்கிறார் களென்று தெரிகிறது. மேலும் அதற்கு நீண்டகாலம் முன்னாகவே பூர்வமாக மனிதர்களிருந்திருக்க வேண்டுமென்றும் இதைக் கொண்டு சொல்லலாம். ஏனென்றால், மனுஷர் உண்டானபின் அவர்களை அடைந்திருககும் தேர்ச்சியைக்கொண்டு நாட்களைக் கவனிப்போமானால், முதல்முதல் காய்களையும் பழங்களையும் வித்துக்களையும் தேனையும் சாப்பிட்டுக்கொண்டிருந்த காலமென்றும், இரண்டாவது கரகரப்புள்ள கிழங்குகளையும் காய்களையும் கொட்டைகளையும் சுட்டுத்தின்ன நெருப்பின் உபயோகத்தை அறிந்தகாலமென்றும், மூன்றாவது சமைப்பதற்கு அனுகூலமாக மட்பாத்திரங்களை யுண்டாக்கி அதில் பாகப்படுத்திய தானியவகைகளையும் காய் கறி கீரைகளையும் சாப்பிட்டு வந்தகாலமென்றும் நாம் நினைக்க வேண்டும். இன்னும் கருவிகள் சம்பந்தமாகவும் வஸ்திர சம்பந்தமாகவும் வாசஸ்தல சம்பந்தமாகவும் சரித்திர ஆராய்ச்சிக்காரர் வெகு பூர்வீகத்தைச் சொல்லுகிறார்கள். அவ்விதமாய் நாம் கவனிக்கையில் ஒரு எகிப்தியன் மண்பாத்திரம் செய்த காலம் மனுஷன் உற்பத்தியான காலத்திற்கு வெகு காலத்திற்குப் பின்னுள்ளதாயிருக்கவேண்டும். ஐம்பதினாயிரம் வருஷங் களுக்குமுன் புதைந்திருக்கவேண்டுமென்று சொன்ன மனித எலும்பைக் கொண்டு மனிதர்கள் வெகுகாலத்திற்கு முன்னாலேயுண்டாயிருக்க வேண்டு மென்று தெரிகிறது. அமெரிக்காவிலும் எகிப்திலும் காணப்படும் பொருள்கள் தென்னிந்திய கண்டத்திலும் அதாவது லெமூரியாவிலும் மனிதர்களிருந் திருக்கவேண்டுமென்று ருசுப்படுத்துகின்றன. ஆகையினால் சுமார் 8,000 வருங்களுக்கு முன் தொல்காப்பியரிருந்தாரென்றும் 12,000 வருஷங்களுக்கு முன்பே முதல் சங்கம் ஆரம்பித்ததென்றும் நாம் சொல்வது அதிகமாகாJ. 8,000 வருஷங்களுக்கு முன்னும் 12,000 வருஷங்களுக்குப் பின்னுமான முதற்சங்கத்தில் அகஸ்தியரிருந்தாரென்றும் அதில் இயல், இசை, நாடக மென்னும் முத்தமிழைப்பற்றியும் இலக்கணஞ் சொன்னார் என்றும் சொல்வது அற்ப ஆயுளுள்ள நமக்கு ஆச்சரியமாகத்தோன்றும். இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னிருந்து இறையனாரகப்பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் சொல்லுகிறதை நாம் நம்பாமல் இருக்கலாமோ? அவர் சொல்லிய வசனங்கள் பொய்யாயிருக்குமோ? ‘நெற்றிக்கண்காட்டினாலும் குற்றம் குற்றமே’யென்று பரமசிவனோடு வாதாடிய ஒரு வித்வசிரோமணி பொய் சொல்லுவாரா? அவர் அப்படிச் சொன்னாலும் அவர் காலத்திலிருந்த தமிழ்ச் சங்கப்புலவர்கள் மறுக்காமல் விட்டு விடுவார்களா? ஒருவர் எதையுஞ் சொல்லுகிறது, தாட்சணியத்திற்காக மற்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறது என்ற இக்காலமல்லவே அக்காலம். இக்காலத்தை அடியார்க்கு நல்லாரும் சொல்லுகிறார்; ஆகையினால் இக்காரியம் பூர்வந்தொட்டு உண்மையான தாகவே தோன்றுகிறது. தொல்காப்பியத்தில் காணப்படும் முதல் ஊழியி லிருந்த தேசத்தின் எல்லைகளும் தமிழ்ப்பாஷையின் சிறந்த இலக்கணமும் இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கிறதே போதுமானதாகத் தோன்றுகிறது. 15. தென்னிந்தியாவின் மார்க்கம் பூர்வத்திலுள்ளோரைப்பற்றி நாம் விசாரிக்க ஆரம்பிப்போமானால், நீதிதவறாமல் அரசாட்சிசெய்த ராஜாக்களையும் இடைவிடாமல் தெய்வத்தை வணங்கிவந்த பக்தர்களையும் பக்தியிலும் கலைகளிலும் சிறந்த சித்தர்களையும் (ரிஷிகள்) பற்றி விஸ்தாரமாகக் கேள்விப்படுவோம். தென்னிந்தியாவிற்குத் தென்பக்கத்திலுள்ள லெமூரியாவிலிருந்த ஜனங்களாகிய அவர்கள் இந்து மதத்திற்கும் தெய்வ வணக்கத்திற்கும் நாகரீகத்திற்கும் காரணமாயிருந்தார்களென்றும் இந்து மார்க்கம் அவர்களாலேயே வடநாட்டிற்குக் கொண்டுபோகப்பட்டதென்றும் பின் வரும் வசனங்களில் காணலாம். District Manual of Madras, Pt. III, “Mr. Pope in his edition of the Abbe Dubois’ work says that in South India numberless legends relating to devout worship pers of the Linga are current: that some of them are curious, and they are exclusively of southern origin. And Wilson states in his introduction to the catalogue that tradition uniformly Points to an extension of Hinduism and civilization from the extreme south of the Peninsula.” “தென்னிந்தியாவில் லிங்கத்தைப் பூசித்தவர்களைப்பற்றிய கட்டுக் கதைகள் அநேகமுண்டு. அவைகளில் அநேகம் விநோதமாயும், தெற்கே யிருந்து உற்பத்தியானதாயும் தோற்றுகின்றன என்று போப் துரை Abbe Dubois நூலின் பதிப்புரையில் கூறுகிறார். இந்துமதமும் நாகரீகமும் இந்தியாவின் தென்கோடியில் உற்பத்தியாகி வடக்கே கொண்டுபோகப்பட்டது என்று பாரம்பரியங்கள் ஒன்று போலக் கூறுகின்றன என்று டாக்டர் உவில்சன் (Dr. Wilson) தமது நூலின் முகவுரையில் சொல்லுகிறார்.” மேலேகண்ட வாக்கியங்களையும், கிருஷ்ணபகவான் தம் ஜனங்களைத் துவாரகையிலிருந்து வடகிழக்கிலுள்ள இந்திரபிரஸ்தத்தில் ஜலப்பிரளயத் திற்குத் தப்பிப்போய்க் குடியேறும்படி அர்ச்சுனனுக்குச் சொன்னதையும், ஜலப்பிரளயத்தின் அழிவினின்று தப்பிய 300 சோழிய பிராமணர்களைப் பிராமணமதம் விருத்தியாகப் பரமசிவன் ஆவிடையார்கோயிலில் வைத்துக் காப்பாற்றியதையும் கவனிக்கையில், தெற்கிலிருந்து ஜனங்கள் வடக்கே போனார்களென்று சொல்லுவது ஒப்புக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது. அதோடுகூட, தென்னிந்தியாவின் முக்கியமான இடங்கள் ஒவ்வொன்றிலும் பிரமாண்டமான கோயில்கள் அற்புதமான கல்வேலைப்பாடு களுள்ளவைகளாயும் பென்னம்பெரிய தேர்களுள்ளவைகளாயும் இருக்கவும் சிவஷேத்திரங்களும் லிங்க ஸ்தாபனங்களும் ஏராளமாய் இருக்கவும் காண்கிறோம். வடஇந்தியாவிலோ, அப்பேர்ப்பட்ட கோயில்களைக் காண்பது மிக அரிJ. மேலும் தென்மதுரையிலுள்ளோர் விசேஷமாக சிவபக்தியிற் சிறந்தவர்களாயிருந்தார்க ளென்பது தெளிவாகத் தெரிகிறது. சிவபெருமானும் அவர் குமாரனாகிய முருகக்கடவுளும் விக்னேஸ்வரரும் தென்மதுரை யிலுள்ளோர் கொண்டாடும் தேவர்களாயிருந்தார்கள். அழிந்துபோன லெமூரியா என்னும் பெரும் கண்டத்திலுள்ள தேசங்கள் யாவற்றிலும் சிவபக்தியே விசேஷித்திருந்ததாக நாம் காணலாம். சிவபெருமானும் முருகக் கடவுளும் தென்மதுரை ராஜ்யத்திற்கு மூலபுருஷர்களாயிருந்து அநேக சீர்திருத்தங்கள் செய்து முன்பின் 4,400 வருஷங்களாகவிருந்த முதற் சங்கத்தில் தலைமை வகித்துத் தமிழை ஆதரித்துவந்தவர்களாயு மிருந்தார்கள். அதனாலும் அவர்களிடத்தில் விளங்கிய தெய்வீகத்தினாலும் அவர்களிடத்தில் பக்தி கொண்டு பென்னம் பெரியகோயில் கட்டி மூல ஸ்தானத்தில் லிங்கஸ்தாபனம் செய்து தேர்கள் அமைத்து உற்சவங்கள் கொண்டாடினார்கள். கோயில்களில் உற்சவங்களும் தினபூஜையும் கிரமமாய் நடந்து வருவதற்கென்று மானியங்களும் காணிக்கைகளும் கொடுத்து வந்திருக்கிறார்க்ள. உலகம் முடிந்தாலும் ஒழிந்துபோகாதிருக்கும்படி உம்பளம் சம்பளங்களினால் ஊழியம் ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தியிருக்கிறார்க்ள. பகல் இரவாக 60 நாழிகையிலும் இன்னின்ன பூஜை இன்னினன அன்னபானாதி களுடன் இன்னின்னரால் நடத்தப்பட வேண்டுமென்று நியமம் செய்திருக்கிறார்கள். கோயில்களில் தெய்வ சந்நிதியில் ஆடுகிறவர்களும் பாடுகிறவர்களும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்களில் தங்கள் பணிவிடைகளைச் செய்வார்கள். தெய்வ பக்தியுள்ள ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு தங்களுக்கு அவகாசமான எந்த நேரத்திலும் போய் சுவாமி தரிசனஞ் செய்வார்கள். கோயிலுக்கு வேண்டிய புஷ்பங்கள் தரும் நந்தவனங்களை வைத்து வளர்ப்பது, அதிலிருந்து அதிகாலையில் புஷ்பங்கள் எடுத்துக்கொடுப்பது, கோயில் பிராகாரங்களைச் சுத்தஞ் செய்வது, விளக்குப் போடுவது முதலிய கைங்கரியங்களை மிக உற்சாகத்தோடு செய்வார்கள். தெய்வ சந்நிதியில் தேவாரம் திருவாசகம் போன்ற பண்களினால் மனமுருகப்பாடி தெய்வத்தை ஆராதிப்பார்கள். ஐம்புலன்களையுமடக்கி, பகவானுடைய சந்நிதியில் நிஷ்டையிருந்து தியானிப்பார்க்ள. இராகாதி தீக்குணங்களுக்கு இருப்பிடமாகிய உடலை வருத்தும் விரதங்கள் அனுஷ்டிப்பார்கள். இன்னும் நினைத்தற்கும் சொல்லுதற்கு முடியாத அநேகவிதமான ஆராதனைகளாலும் காணிக்கை களாலும் ஆடல் பாடல்களாலும் ஆலயம் எப்பொழுதும் நிறைந்திருக்கும். இதை ஆலவாய் என்னும் உத்தரமதுரையின் ஆலயத்திலே அம்மன் சந்நிதி யிலே அரை நாழிகை காத்திருந்து பார்த்தவர்கள் நன்றாய் அறிவார்கள். சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நாலு படிகளையுமுடையவர்கள் தங்கள் தங்கள் அறிவுக்கேற்ற விதமாய் ஆராதித்து வரக்கூடியதாக ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஜலப்பிரளயத்திற்குத் தப்பின சிலர், தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறித் தங்கள் காலத்திலுள்ள பூர்வமான ஆலயங்களைப்போல ஆலயங்கள் கட்டி, அவ்விடத்தில் தாங்கள் வணங்கிய தெய்வத்தையேஇங்கே வணங்கினார்களென்றும் தெரியவருகிறது. எப்படி இந்துமதம் தென்னிந்தியாவின் தெற்கிலுள்ள விஸ்தாரமான நாடுகளில் மிகப் பூர்வீகமாயிருந்ததோ, அப்படியே அப்பெருநாட்டின் பாஷை யாகிய தமிழும் எவ்விதமான கலப்புமற்றுத் தனிப்பாஷையாய் ஜலப் பிரளயத்துக்கு முன்னாலேயே யிருந்ததென்று பின்வரும் வசனங்களில் பார்ப்போம். IV. தமிழ்ப்பாஷையினது தொன்மை. 1. தென்னாட்டிலுள்ளோர் வழங்கிவந்த தமிழ்ப் பாஷையின் பூர்வீகமும் சிறப்பும். இதை வாசிக்கும் கனவான்களே, தென்னிந்திய சங்கீதத்தின் நுட்பத்தையும் அதன் பூர்வீகத்தையும் நாம் அறியவேண்டுமானால் சங்கீதத் தமிழையும் நாடகத் தமிழையும் தன் அங்கமாகக்கொண்டு முத்தமிழ் என்று பெயர்வழங்கும் தமிழ்ப்பாஷையைப்பற்றி நாம் சற்றுவிசாரிக்க வேண்டியது அவசியம். தமிழ்ப்பாஷையுண்டான காலமே கர்நாடக சங்கீதமும் உண்டான காலமாம்; தமிழ்ப்பாஷைக்குரிய இனிமையே தென்னிந்திய சங்கீதத்தின் இனிமையாம். தமிழ்ப்பாஷை எப்படி அன்னிய பாஷைகளோடு கலவாத தனித்த பாஷையோ அப்படியே தென்னிந்திய சங்கீதமும் மற்றச் சங்கீதங்களோடு கலவாமல் தனித்த விதிகளுடையதாம். அறிஞர்களால் உயர்ந்ததென்று எண்ணப்படும் தென்னிந்திய சங்கீதத்தையும் அதன் மற்றும் வரலாறுகளையும் நாம் விசாரிக்கு முன் தமிழ்ப்பாஷையின் தொன்மை யையும் அதன் சிறப்பையும் பற்றிப்பார்க்க வேண்டும். இங்கே மற்றப் பாஷைகளோடு ஒப்பிட்டும் மற்றத்தேசங்களோடு ஒப்பிட்டும் மற்றவரால் தமிழ்ப்பாஷைக்கு உண்டான நன்மை தீமைகளைக் காட்டியும் அறிஞர்கள் சொல்லும் சில வசனங்களை எழுதினேனே யொழிய மற்ற எந்த விதத்திலும் ஒரு பாஷையையாவது ஒரு ஜாதியாரையாவது குறைசொல்ல வந்ததாக நினையாதிருக்கும்படி மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். உலகச் சரித்திரங்கள் எழுதப்படுவதற்கு முன்னும் மற்றத் தேசத்தார் நாகரீகமுடையவர்களாகுவதற்கு முன்னும், அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ளோர் நாகரீகமுடையவர் களாயிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரக்காரர் சொல்வதற்கிணங்க, அக்கண்டத்திலுள்ள தென்மதுரையும், அதில் அரசாண்டு வந்த பாண்டிய ராஜர்களும் சங்கப்புலவர்களும் பேசி வந்த பாஷையாகிய தமிழும், மிகுந்ததொன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவைகளா யிருந்தன. தமிழ் என்னும் பதத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த தமி என்னும் முதனிலையானது ஒப்பின்மை, தனிமை என்றும், தமிழ் என்னும் பதமானது இனிமை, மதுரம் என்றும் அர்த்தப்படுமென்று நாம் அறிவோம். அவ்வர்த்தத்திற்கிணங்கத் தமிழ்ப்பாஷையானது மேன்மை பொருந்தியதாய் மற்றப் பாஷைகள் கலவாதாயிருந்ததென்று சில அறிஞர் சொல்லும் அபிப்பிராயங்களை இங்கே பார்ப்போம். Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. 42. “There is little doubt that the Dravidian languages are incomparably older in point of time than the Sanskrit. It is not an unreasonable supposition that they once occupied the whole of Hindustan and have been driven to their present position to the south and along the coast by the encroachment of other languages coming from the North-west.” “திராவிட பாஷைகள் சமஸ்கிருத பாஷைக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளவை யென்பதற்குச் சந்தேகமேயில்லை. ஆதியில் அவைகள் இந்துஸ்தானம் முழுவதும் வழங்கிவந்ததென்றும், பிறகு வடமேற்கிலிருந்து உற்பத்தியான மற்றப் பாஷைகள் வரவர, அவை தற்காலம் இருக்கிற கீழ்கரை, தென்கோடி முதலிய இடங்களுக்குத் துரத்தப்பட்டன என்றும் நினைக்க இடமுண்டு.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்குமுன் இந்துதேசம் முழுவதிலும் பேசப்பட்ட பாஷை தமிழ் என்று தோன்றுகிறது. மேலும் தமிழானது காலசம்பவங்களினால் மாறுதலை யடைந்தாலும் அதன் இலக்கணம் மாறாமல் ஒரேமாதிரியாயிருக்கக்கூடிய அவ்வளவு தேர்ச்சியை அநேகமாயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே அடைந்திருந்ததென்று பின்வரும் வசனங்களில் காணலாம். Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. 112. “As far as present evidence goes, however, they are indigenous to India, and perhaps specially indigenous to Southern India........ As to their language, no other is known to which it can be affiliated. It stands alone, without any immediate predecessor. In origin, it must be long anterior to the Sanskrit, which has subsequently played so important a political part with regard to it. Its original strength is shown by the great persistence of its grammatical formations through all the vicissitudes of history.” “தற்காலத்தில் ஏற்படும் குறிப்புகளைக் கவனித்தால், அவர்கள் இந்தியாவிலே, முக்கியமாய்த் தென்னிந்தியாவிலே உற்பத்தியானவர்களென்று தெரிகிறது. அவர்கள் பாஷையோவென்றால், மற்ற எந்தப் பாஷைக்கும் சொந்தமானதாகச் சொல்லக்கூடியதாக இல்லை. அதற்குமுன்னுள்ள மற்றெந்தப் பாஷையோடும் அது சேராமல் தனியே நிற்கிறJ. உற்பத்தியைப் பார்த்தால், அது சமஸ்கிருதத்துக்கு வெகு காலத்துக்கு முன்னுள்ளJ. ராஜாங்க விஷயமாய் சமஸ்கிருதம் பிற்காலத்தில் வெகு முக்கியத்துக்கு வந்தபோதிலும் உற்பத்தியில் அது பிந்தினது தான், தமிழ்ப்பாஷையினுடைய ஆதிபலத்தை யறியவேண்டுமானால், சரித்திர சம்பந்தமான மாறுதல்கள் எத்தனையோ உண்டாகியும் அதன் இலக்கண உறுப்புகள் மாறாமல் எக்காலும் அதே விதமாய் இருப்பதைக் கவனித்தால் விளங்கும்.” மேற்கண்ட வசனங்களை நாம் கவனிக்கையில், எபிரேய பாஷையின் எழுத்துக்களிலிருந்து சில கிரேக்க எழுத்துக்களும் கிரேக்க பாஷையின் எழுத்துக்களிலிருந்து பாலி பாஷையின் எழுத்துக்களும், பாலி பாஷையின் எழுத்துக்களிலிருந்து சமஸ்கிருத பாஷையின் எழுத்துக்களும் அவைகளி லிருந்து அநேக பிராகிரத பாஷையின் எழுத்துக்களும் வந்ததென்றும், அப்பாஷையின் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவர்களா யிருக்கின்றனவென்றும் சொல்லுவது போல, தமிழ்ப்பாஷையின் இன்ன பாஷையிலிருந்து உண்டானதென்று சொல்ல ஏதுவில்லாமல் தனித்த பாஷையாயிருக்கிறதென்று சொல்லுகிறார். மேலும் எத்தனையோ சரித்திர சம்பந்தமான மாறுதல்கள் உண்டானபோதிலும் அவைகளினால் மாற்றப்படாத இலக்கண விதிகளைப் பூர்வமாய் அடைந்திருக்கிறதென்றும் சொல்லுகிறார். மிகப்பூர்வமாயுள்ள இத்தமிழ்மொழி அதன் பின்வந்த வேறு எந்தப் பாஷை யாலும் யாதொரு மாறுதலையுமுண்டாக்க முடியாமல் தனிப்பாஷையா யிருந்து வருகிறதென்பதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. 49. “North Indian Civilization, when it came as far south as the Tamul country, found the people already in possession of the art of writing and of cultivated language. in consequence of this, Sanskrit did not regulate the Tamil phonetic system, and merely held the place of a foreign learned language.” “வடஇந்தியாவின் நாகரீகமானது, தெற்கே தமிழ் நாடுமட்டும் வந்தபோது, எழுத்து, பாஷை முதலிய நாகரீகத்துக்குரிய சின்னங்கள் தென்னாட்டு ஜனங்களுக்குள் முன்னமேயிருக்கக் கண்டJ. இதனால் தான் சமஸ்கிருத பாஷையானது தமிழ்ப் பாஷையில் எவ்வித மாறுதலையும் உண்டாக்கமுடியாமல், ஒரு அன்னிய பாஷையாகவே இருந்துவருகிறது.” மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் வடதேசத்திலிருந்து வந்த ஆரியரைப்போலவே அப்போதிருந்த தமிழ்மக்களும் நாகரீகத்திலும் கல்வி யிலும் சிறந்தவர்களாயிருந்தார்கள்; தாங்கள் போகுமிடங்களில் தங்கள் பாஷையின் நலங்காட்டி அங்குள்ள பாஷையில் பல மாறுதல்களை யுண்டாக்கினது போல தமிழ்மொழியை மாற்ற அவர்களால் இயலாமல் போயிற்றென்று தெளிவாகத் தெரிகிறது. மிகத் தொன்மையான தமிழ் மொழிக்குத் திராவிடமென்றும் அதைச்சேர்ந்த பாஷைகள் பேசும் தேசத்துக்குத் திராவிடதேசமென்றும் ஜனங்களுக்குத் திராவிடரென்றும் ஆரியர்கள் பெயர் வைத்தார்கள். தமிழென்ற பதத்தைச் சிறந்ததாக எண்ணும் தங்கள் பாஷையில் எழுதிக்கொள்ளத் திறமையில்லாமல் அதற்கு முற்றிலும் சம்பந்த மில்லாத வேறொரு பெயரைக்கொண்டு அழைக்கப் புகுந்தார்கள் என்பதைப் பின்வரும் வசனங்களில் காண்க. சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி. பக்கம். 489. “தமிழ் நாட்டரசர் மூவரும் சூர்யசந்திர வம்சத்திலிருந்து பிரிந்தவர்கள்; இவர்கள் துவாபரயுகத்திற்கு முன்பும் அரசாண்டதாகத் தெரிகிறது. ஒரு பாண்டியன் பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் சேனைக்கு அன்னமிட்டதாகத் தெரிகிறது. இவன் தமிழ்ப் புலவரை ஆதரித்தவன். * * * * * * * பின்னுமிவ்வரிய பாஷை மற்றைப் பாஷைகள்போல் வேறு பாஷைகளின் துணைவலி பெறாது தானாய் விளங்கும் ஏற்றமுற்றது; இதனை அறிவுற்ளோர் பலர் பழைய நூல்களிற் கண்டறியலாம். ஆயின் தமிழ் என்பது திராவிடம் என்பதின்றிரிபன்றோவெனின் திரிபாகாJ. தமிழ், தெலுங்கு, கன்னடம், மகாராஷ்டரம், கூர்ச்சரம் இவைகளையுந் திராவிடமென்பவாகலின் இதற்கே யுரியதாகாJ. ஆயினும் அப்பெயர் கூறவந்த வடநூலார் அக்காலத்திற்கு முன்றானே தோன்றிய பாஷைக்குத் தாங்கள் பெயரறியாது அந்நாட்டில் தாங்கள் வந்த காலத்து இட்ட பெயராகவுமிருத்தலின் இது வடமொழிக்குப் பிந்தியதாகாJ. வடமொழி வடநாட்டிலிருந்ததுபோல் தென்மொழி தென்னாட்டி லிருந்தJ. இதனால் தமிழ்ப் பாஷை தனித்த பூர்வ பாஷையென்பது கொள்ளக்கிடந்தJ.” தமிழ்மொழியென்று சொல்லவுங்கூட வெறுத்த ஆரியர், திராவிட பாஷையென்று பெயர் வைத்தார். தமிழ் என்ற பதம் சமஸ்கிருத பாஷையினின்றே யுண்டானதென்று மற்றவர் எண்ணும்படி திராவிடம் என்ற வார்த்தை, ட, வுக்கு ள, வரலாம் என்ற விதிப்படி திராமிளம் என்று வந்ததாகவும் திராமிளம் என்ற வார்த்தை இரண்டாம் எழுத்துக் குறுகித் திரமிளம் என்று வந்ததாகவும், அதன்பின் இரண்டாம் எழுத்துக் கெட்டுத் தமிளம் என்று ஆனதாகவும், தமிளம்தானே அம்கெட்டு தமிழ் என்று வந்த தாகவும் சொல்லுகிறார்கள். எப்படியானாலும் ஆகட்டும் வி அதாவது வகர இகரத்தின் கெதி என்னவாயிற்று? அதற்கும் ஒரு நியாயம் சொன்னால் நன்றாயிருக்கும். அதற்கும் மகர இரகத்திற்கும் என்ன சம்பந்தம்? இப்படியே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறவன் கதைபோல சொல்லக்கூடியதா யிருப்பதினால் அல்லவோ சொற்ப வரிகளுக்கும் அர்த்தந்தெரியாமல் எளியநடையிலுள்ள சாரங்கதேவர் எழுதிய சங்கீதரத்னாகரத்தின் ஒரு சுலோகத்திற்கு 20 விதமாய் அர்த்தஞ்செய்தும், உண்மையறியாமல் போனார்கள். எழுத்து எழுத்தாய் அர்த்தஞ்செய்வதை நாம் கவனித்தால் எல்லாம் பிரமம் என்று தெரிந்து கொண்டவன் மௌனம் சாதித்தது போலாகுமே யொழிய வாய்திறக்கமுடியாது என்பது தெளிவாய்த் தெரிகிறது. சமஸ்கிருதம் உயர்ந்த பாஷையென்றும் அரிய விஷயங்கள் அதில் எழுதப்பட்டிருக்கின்றனவென்றும் நாம் ஒப்புக் கொண்டாலும் பேச்சுப்பழக்கத் திற்கு வராத பாஷையென்றே சொல்லவேண்டியதாயிருக்கிறது. தமிழில் வழங்கும் அனேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற் கிணங்க நூல்களும் புராணங்களும் கட்டுக்கதைகளுஞ் செய்து பரப்பிவந்தார்கள். நீர் என்ற பதம் நீரம் என்ற சமஸ்கிருத பதத்திலிருந்து வந்ததென்றும் தமிழர் பேசும் வார்த்தைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு சமஸ்கிருதமென்றும் வாய் கூசாமல் சொல்லுவார்களானால் வேறு என்ன சொல்லமாட்டார்கள்! முதல் ஊழிக்கு முன் 4,400 வருஷங்களாகச் சங்கம் வைத்து நடத்திய வித்வசிரோமணிகளும் அக்காலத்தும் அதற்கு முன்னுமிருந்த ஏராளமான தமிழ் மக்களும் தண்ணீர் குடிக்கவில்லையோ? அல்லது அதற்கு ஏற்ற பெயர் வைக்கத் தெரியாதிருந்தார்களோ? ஆரியர் வந்தபின்தானோ அவர்கள் குளிர்ந்த நீருக்கு தண்ணீரன்றும் சூடுள்ள நீருக்கு வெந்நீரென்றும் இப்படியே ஆற்றுநீர் ஊற்றுநீர் சேற்றுநீர் செந்நீர் செயநீர் கடல்நீர் குடிநீர் இளநீர் கண்ணீர் உமிழ்நீர் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள்? இப்படியே சிறந்த ஏராளமான தமிழ் மொழிகளைத் தங்கள் பாஷையிலிருந்தே வந்ததென்று சொல்வதற்கு ஏற்றதாகச் சில எழுத்துக்களைக் கூட்டியும் சில எழுத்துக்களைக் குறைத்தும் நெடில் குறிலாகவும் குறில் நெடிலாகவும் மாற்றியும் சம்பந்தமில்லாத எழுத்துக்களாகத்திரித்தும் வழங்கினார்கள். தமிழ் நாட்டிலுள்ள சில முக்கியமான மலைகளுக்கும் ஆறுகளுக்கும் பட்டணங் களுக்கும் மனுஷர்களுக்கும் சமஸ்கிருதப் பெயர்கள் வைத்துப் புராணங்களும் கதைகளும் கட்டினார்கள். தாங்கள் செய்த புராணங்களையும் கவிகளையும் பிறர் அறியப் பிரசங்கித்து ராஜாக்களையும் ஜனங்களையும் உண்மையென்று நம்பும்படி நீர் என்ற வார்த்தையை, நீர நீரம் நாரம் என்று மாற்றி அவைகளிலிருந்து நாரதம் நாராயணன் என்று தொடுத்துக்கொண்டு பின் நாரதத்திலும், நீரத்திலிருந்தும் நீர் வந்ததென்று சொன்னதை நம்புகிறவர்கள், அவர்கள் கட்டிய கதைகளையும் நம்பினார்கள். அவர்கள் சொன்னதை யெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்டபின் சமஸ்கிருத பாஷையின் அனேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத்தலைப்பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியமில்லை. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலுள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தைத் தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டுபோனார்களென்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ் நாட்டினின்றே இசைத் தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டுமென்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது. அதன் விபரம் இதன்பின் பார்ப்போம். தமிழ்மொழியோடு வடமொழி கலந்தவிதம் பின் வரும் வசனங்களில் காணலாம். 2. தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு. Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (4.) “It is to be observed that though the long list of names mentioned in the Pooranas are all Sanskrit, these are only book names. The names of the country reported or ascertained by Aryan travellers and settlers were invariably translated into Sanskrit by the literary caste of the Aryans. It is a very common error to suppose that because none but Sanskrit names are found in the ancient literature of the country, it was therfore a country occupied by an Aryan people, and that all the places mentioned were founded by the Aryans. But in fact as the Aryan visitors to India had the monopoly of literature, the indigenous names could only appear in a Sanskrit form; and no argument is to be thence deduced in one direction or another as to the extent of Aryan coloizations. In later times Aryan influence has undoubtedly given current names to geographical places even in Southern India. * * * It will be seen from the next note that Greek literature is analogous to Sanskrit in presenting indigenous Indian names in such a Greek dress that they are not easily recognisable; but the Greeks did not at all to the same extent actually translate Indian names.” “புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிற நீண்ட அட்டவணைப் பெயர்க ளெல்லாம் சமஸ்கிருதப் பெயர்களாயிருந்தபோதிலும் அவைகளெல்லாம் புஸ்தகப் பெயர்களேயொழிய உண்மையான பெயர்களல்ல. ஆரியரான பிரயாணிகளும் புதுக்குடியேறுவோர்களும் தாங்கள் கண்டதாக அல்லது கேள்விப்பட்டதாகச் சொல்லும் தேசங்களின் பெயர்களெல்லாம் ஆரிய வித்வான்களால் தப்பாமல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. இந்து தேசத்தின் பழமையான நூல்களிலெல்லாம் சமஸ்கிருதப்பெயர்களே காணப்படுவதால் அந்தத் தேசம் ஆரியரால் குடியேறப்பெற்ற தேசமென்றும் அதில் சொல்லியிருக்கும் இடங்களெல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட் டவையென்று நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பாயிருக்கிறது. உண்மை என்னவென்றால், இந்தியாவுக்கு வந்த ஆரியர்தான் இந்திய நூல்கள் சமஸ்தத்தையும் எழுதினவர்களானதால் அங்கங்குள்ள இடப்பெயர்கள் சமஸ்கிருதத்தில் மாத்திரம் இருக்கும்படியாயிற்று. இந்தப் பெயர்களை வைத்துக்கொண்டு ஆரியர் குடியேறின நாடுகளைப்பற்றி இப்படியாவது அப்படியாவது யாதொன்றை ஸ்தாபிக்க முயலுவது தப்பு. ஆனால் பிந்திய காலங்களில் ஆரியருக்குண்டான செல்வாக்கினால்தான் தென்னிந்தியாவில் கூடத் தற்காலம் வழங்கிவரும் இடப்பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. பின் சொல்லப்போகும் விஷயத்தினால், சமஸ்கிருதம் போலவே கிரேக்க நூல்களும் இந்தியப்பேர்களை கிரேக்கப் பேர்கள்போல மாற்றிச் சொல்வதினால் அவைகள் இந்தியப் பேர்கள் என்ற உருவே தெரியாமல் போகின்றன என்ற சங்கதி வெளியாகும். ஆனாலும் ஆரியர் செய்தது போல கிரேக்கர் அவ்வளவு தூரம் இந்தியப் பேர்களைக் தங்களுடையவைபோல் மாற்றிக்கொள்ளவில்லை.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் தமிழ் மொழிகள் ஆரியரால் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டுப் புராணங்களில் எழுதப்பட்டதாகவும் தாங்கள் கட்டாத பட்டணத்திற்குங் குடியிராத வீட்டுக்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துக் கேள்விப்பட்டதை மாத்திரங்கொண்டு புராணக்கதைகள் கட்டுவதில் சிலர் தேர்ந்தவர்கள் என்பதாகவும் தெரிகிறது. தாங்கள் கேள்விப்பட்டதை மாத்திரமல்ல, உத்தேசமாய் நினைப்பதையும் உள்ளதுபோல் எழுதிவைக்கும் சாமர்த்தியம் ஆரியருக்குச் சுபாவமாகவே அமைந்திருக்கிறJ. அவர்களிற் சிலர் நூதனமாய் உலகத்தில் ஒன்று உண்டானால், அதுவும் எங்கள் பழைய புராணங்களி லிருக்கிறதென்று சொல்லக்கூடிய விதமாய்க் கற்பனை செய்துவைப்பார்கள். இந்தக் கற்பனைகளுக்குள் இந்தியர்கள். கட்டுப்பட வழக்கப்பட்டுவிட்டார்கள். நூதனமாய் இந்தியாவில் பிரவேசித்த ஆரியர், இதன்முன் இந்தியாவில் வசித்த ஜனங்களையும் அவர்கள் பாஷையையும் அப்பாஷையிலுள்ள நூல்களையும் அங்குள்ள ராஜாக்கள் பெரியோர்களின் சரித்திரங்களையும் முற்றிலும் மறைத்து, தங்கள் பாஷையையும் தங்கள் நூலையும் தங்கள் பெரியோரையுமே சொல்ல ஆரம்பித்தார்கள். இந்தியாவிற்கு வந்த கிரேக்கர்கள் இந்தியாவிலுள்ள சிலபெயர்களைத் தங்கள் பாஷையில் மாற்றியபோது அவைகள் இந்தியப்பெயர்களென்று உருவே தெரியாமல் போயிற்றென்றும் அதைப்பார்க்கிலும் அதிகமாய் ஆரியர்கள் இந்தியபெயர்களைச் சமஸ்கிருதத்தில் மாற்றினார்களென்றும் சொல்லுகிறார். இந்தியா ஆரியராலேயே குடியேற்றப்பட்ட தேசமென்றும் அதிலுள்ள இடங்கள் எல்லாம் ஆரியரால் ஸ்தாபிக்கப்பட்டனவென்றும் நினைப்பது மிகவும் சாதாரணமான தப்பாயிருக்கிறதென்று மக்லீன் பண்டிதர் சொல்லுகிறது போலவே, சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் உண்டானதென்றும், சமஸ்கிருத வார்த்தைகள் கலவாமல் தமிழ்ப் பாஷை வழங்கமுடியாதென்றும் சொல்வதும் தப்பென்று சொல்லவேண்டியதாயிருக்கிறது. முதல் ஊழியில் முதல் தமிழ்ச்சங்கமும் அச்சங்கத்திற்குரிய நூல்களும் அத்தேசமும் அழிந்து போனபின் அதில் தொல்காப்பியம் ஒன்றே மிஞ்சினதாகக் காணப்படுகிறது. அதன்பின் இடைச்சங்கத்தார் காலத்து உண்டாகிய பல நூல்களும் இரண்டாவது ஊழியில் அழிந்துபோயின. அவற்றில் மிஞ்சியிருந்த சில நூல்களும் சமஸ்கிருத மொழிக்கலப்பாலும் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்று சொல்லும் வசனத்தாலும் கறைப்படுத்தப்பட்டிருக்கின்றன வென்று பின்வரும் வசனங்களில் தெரிகிறது. தமிழ்ப் பண்டிதர் சூரியநாராயண சாஸ்திரியார் B.A.,எழுதிய தமிழ் மொழியின் வரலாறு, பக்கம் 14, 15. “வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்கவழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லாதிருந்த ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச்சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர். ‘முற்படைப்பதனில் வேறாகிய முறைமைபோல் நால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்! என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவலையுங் காண்க. இன்னும் அவர் தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்துகொண்டனர்; தமிழரிடத் திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினர். * * * * * * தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு மியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி, தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபி வகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ் மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.” மேற்காட்டிய வசனங்களைக் கவனிக்கையில் சமஸ்கிருத பாஷை யிலேயே மிகுந்த பற்றுள்ள ஒரு ஆரியர் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னமே அவற்றைத் தாம் அறிந்தன போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தனபோலவும் காட்டினாரென்று சொல்வதை நாம் கவனிக்கையில், தமிழிலுள்ள பல நூல்கள் வடமொழியில் மாற்றப்பட்டதாகவும் தற்காலம்வழங்கும் தமிழ் நூல்களில் சமஸ்கிருதத்திற்குப் பின்னே இவைகளுண்டானவையென்று தோன்றும்படி சில தித்துப்பாடுகள் அங்கங்கே செய்ததாகவும் நினைக்க இடந்தருகிறJ. வடமொழிச் சம்பந்தமுள்ள சில பேரகத்தியச் சூத்திரங்களும், தொல்காப்பியச் சூத்திரங்களும், சில வைத்திய, வாத, யோக, ஞான, சோதிட நூல்களும் சில தித்துப்பாடுகளையுடையனவாயிருக்கின்றனவென்று சொல்லத்தக்கதாக அங்கங்கே சில வார்த்தைகளும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. அகத்தியருடைய மாணாக்கரில் ஒருவராகிய கழாரம்பர் இயற்றியதாக வெளி வந்திருக்கும் பேரிசைச் சூத்திரம் என்னும் நூலை நாம் கவனிப்போமானால், இவ்வுண்மை நன்கு புலப்படும். அப்புஸ்தகத்தில் முதலாவது ஒலி வடிவாயிருந்த காலமென்றும் இரண்டாவது அட்சரகாலமென்றும் மூன்றாவது இலக்கண காலமென்றும் நாலாவது சங்ககாலமென்றும் நாம் ஐந்தாவது மடாதிபதிகளின் ஆதீனகாலமென்றும் ஆறாவது சமணகாலமென்றும் ஏழாவது புராணகாலமென்றும் எட்டாவது அதமகாலமென்றும் ஒன்பதாவது திருவிளையாடற் காலமென்றும் பத்தாவது தற்காலமென்றும் சொல்லுகிறார். இவ்வொழுங்கைச் சுமார் 34 வருஷங்களுக்கு முன் வீரசோழியத்திற்குப் பதிப்புரை எழுதிய சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வசனங்களில் காண்கிறோம். ஆகையால் விசு வருஷத்திற்குப் பின்னே இப்பேரிசைச் சூத்திரம் புதிதாக எழுதப் பட்டிருக்கவேண்டும். அதிலும் ஐந்தாவது அநாதாரகாலமென்று தாமோதரம்பிள்ளை அவர்கள் சொன்னதை மாற்றி “சித்தெலா நிறைந்து சித்தா யமர்ந்த தேசிகர் மரபில் சிறந்து விளங்கும் மடாதி பதிகளா மாண்பமை ஞானியர் அளவிற் படுவதவ் வதீன காலம்.” என்னும் சூத்திரம் ஐந்தாவதாக எழுதப்பட்டிருக்கிறJ. இவைகளை நாம் கவனிக்கையில், அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவருள் கழாரம்பர் எழுதியிருக்க மாட்டாரென்று திட்டமாய்த் தெரிகிறது. தமிழ் நடையும் அதை ருசுப்படுத்துகிறJ. மேலும் அகத்தியர் காலத்திலிருந்த கழாரம்பர் தற்காலம் வரைக்கும் தமிழ்ப்பாஷையின் காலவர்த்தமானத்தை எப்படிச் சொன்னார்? அப்படிச் சொன்னது உண்மையானால் தற்காலத்துக்கு மேல்வரும் பிற்காலத்தைப்பற்றி ஏன் யாதொன்றும் சொல்லவில்லை? இது சமஸ் கிருதத்தில் பேரபிமானமுள்ள ஒருவர் கற்பனையே என்போம். இது போலவே பேரகத்திய சூத்திரங்களிலும் தொல்காப்பியச் சூத்திரங்களிலும் தமிழ் வடமொழிக்குப் பிந்தியதென்று காட்டும்படி செய்திருக்கும் சில எழுத்து மாறுதல்களையும் வார்த்தை மாறுதல்களையும் சூத்திரமாறுதல்களையும் இது முதற்கொண்டாவது தமிழ் மக்கள் ஊன்றிப்பார்ப்பார்களாக. இப்படியே தமிழில் வழங்கிய சங்கீதநூலும் அதாவது இசைத்தமிழும் ஆதியில் சமஸ்கிருதத்தி லிருந்தே தமிழருக்கு வந்ததென்று யாவரும் எண்ணும் படியாகிவிட்டது. ஆனால் சமஸ்கிருத நூல்களில் வழங்கிவரும் சங்கீத முறைக்கும் தென்னாட்டில் வழங்கும் கர்நாடக சங்கீத முறைக்கும் மிகுந்த வித்தியாச மிருக்கிறதென்று அறிவாளிகள் காண்பார்கள். வடபாஷையில் எழுதப்பட்ட சுருதி முறைகளுள்ள கானம் தென்னாட்டில் வழங்காமல்போனாலும் வடபாஷையிலுள்ள பெயர்களே சங்கீதத்தில் வழங்கிவருகின்றன. இவ்விபரம் யாவும் இதன்பின் பார்ப்போம். மேலும் கடைச்சங்க காலத்தில் தோன்றிய ஜைனராலும் ஆரியராலும் சமஸ்கிருத வார்த்தைகள் தமிழ் மொழியோடு கலக்க ஆரம்பித்ததென்றும் தமிழ் மொழிகள் மற்றப்பாஷைகளோடு கலந்ததென்றும் பின்வரும் வசனங்களால் தெரிகிறது. Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P. (41-42.) “The greater number of the Sanskrit and Pracrita words in the Dravidian languages were introduced by the Jaina writers. Some tatsamas, however, were introduced by the three comparatively modern philosophic schools: the sheiva Siddhaunta, the School of Sankaracharya and the School of Ramanoojacharya. Sanskrit words are said to have been introduced even before the time of the Jains, but it is doubtful whether these are not ancient words common to both Aryan and Dravidian languages.” “திராவிடபாஷைகளில் வரும் சமஸ்கிருத பிராகிருத வார்த்தைகளில் மிகுதியானவை ஜைன வித்துவான்களால் முதல் முதல் திராவிட பாஷைகளில் உபயோகிக்கப்பட்டன. ஆனாலும் சில தற்சமங்கள் சிறிது காலங்களுக்கு முன்னேற்படுத்தப்பட்ட சைவசித்தாந்தம் சங்கராசாரியம் ராமானுஜாசாரியம் என்ற மூன்று சமயவாதிகளாலும் முதல் முதல் இப்பாஷைகளில் உபயோகிக் கப்பட்டன. ஜைனருடைய காலத்துக்கு முன்னேயே சமஸ்கிருத வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகின்றJ. ஆனால் அவைகள் ஆரிய திராவிடபாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப்படாதோ என்று சந்தேகிக்க இடமிருக்கிறது.” இதில், அக்காலத்தில் வழங்கிவந்த சில மொழிகள் ஆரிய திராவிட பாஷைகளுக்குப் பொதுவான வார்த்தைகளாயிருக்கப்படாதோவென்று சந்தேகிக்க இடமிருக்கிறதென்கிறார். சமஸ்கிருத பாஷையில் மிகுந்த வைராக்கியமுள்ள ஆரியர் தாங்கள் செல்லுமிடங்களிலுள்ள பாஷைகளில் வழங்கும் வார்த்தைகளையும் கருத்துக்களையும் புதிது புதிதாக அமைத்து நூல் உண்டாக்கினார்கள். ஆகையினால் தமிழ்மொழிகளும் சமஸ்கிருதத்தில் பல சேர்க்கப்பட்டதென்று தெளிவாகத் தெரிகிறது. சமஸ்கிருத பாஷையோடு சேர்ந்து பூர்வ சுலோகங்களில் அமைந்தபின் அவ்வார்த்தைகள் இரண்டுக்கும் பொதுவாயிருக்கலாமோவென்று சந்தேகிக்க இடந்தருவது கால இயல்புதானே. இரவல் வாங்கினதைத் திரும்பக் கொடுக்கக்கூடாதென்ற எண்ணம் வந்தபின் அதை இனந்தெரியாமல் பண்ணுவது உலக இயற்கைதானே. ‘இரவல் உடைமை, எனக் கிசைவாயிருக்கிறது, என் அப்பா ஆணை நான் கொடுக்க மாட்டேன்’ என்றதுபோல இதுவுமாயிற்று. இப்படித் தமிழ்மொழிகள் பலவும் சமஸ்கிருதத்தில் கலந்த பின்பும், அநேக தமிழ் நூல்கள் சமஸ்கிருதத்தில் திருப்பப்பட்டபின்பும்தான், சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ்மொழிகள் பலவும், நூல்கள் பலவும் வந்தனவென்று சொல்லத் துணிந்தார்களென்பதைப் பின்வரும் வசனங்களில் காணலாம். Dravidian Comparative Grammar by Bishop Caldwell “Professor Wilson observes that the spoken languages of the South were cultivated in imitation and privalry of the Sanskrit, and but partially aspired to an independent literature; that the pricipal compositions in Tamil, Telugu, Canarese, and Malayalam are trainslations of paraphrases from Sanskrit works; and that they largely borrow the phraseology of their originals. This representation is not perfectly correct, in so far as the Tamil is concerned; for the compositions that are universally admitted to be the ablest and finest in the language, viz., the Cural and the Chintamani, are perfectly independent of the Sanskrit, and original in design as well as in exccution.” “தெற்கே பேசப்படுகிற பாஷைகள் சமஸ்கிருதத்தைப் பார்த்து அதற்கு மாறாக உண்டாக்கப்பட்டவைகளென்றும், அவைகள் சுய கிரந்தங்களை உண்டாக்கப் பிரயத்தனம் பண்ணியும் பலிக்கவில்லையென்றும், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள பாஷைகளிலுள்ள முக்கியமான நூல்களெல்லாம் சமஸ்கிருத நூல்களின் மொழி பெயர்ப்புகளேயென்றும், அவைகள் சமஸ்கிருத மொழிகளையும் தொடர்மொழிகளையும் வாசகப்போக்கையும் நடையையு முடையவைகளா யிருக்கின்றன வென்றும் உவில்சன் பண்டிதர் கூறுகிறார். இப்படி அவர் கூறுவது, தமிழ்ப்பாஷையின் விஷயத்தில் முற்றிலும் சரியல்ல. ஏனெனில், அந்தப்பாஷையில் மிகவும் நேர்த்தியானவைகளும் சிறந்தவைகளுமென்று உலகத்திலுள்ள அறிஞர்கள் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிற திருக்குறளும் சிந்தாமணியும் சமஸ் கிருதக் கலப்பேயின்றி முழுதும் தமிழ்மயமாகவே விளங்குகின்றன.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், சமஸ்கிருத பாஷையே முந்தியுண்டானதென்றும் அதற்கு எதிரிடையாகத் தமிழும் தமிழைச்சேர்ந்த பாஷைகளு முண்டாக்கப்பட்டனவென்றும் திராவிட நூல்கள் சமஸ்கிருத பாஷையின் மொழி பெயர்ப்புகளாயிருக்கின்றனவென்றும் அவற்றின் நடை சமஸ்கிருதத்தின் நடையையே ஒத்திருக்கிறதென்றும் உவில்சன் பண்டிதர் சந்தேகிக்கிறார். இதுபோலவே தற்காலத்திலுள்ள சமஸ்கிருதபண்டிதர் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்ளுகிறார்க்ள. ஆரிய பாஷையின் வார்த்தைகள் கலந்தபின்பும் தமிழ் மொழிகளை ஆரியபாஷை வார்த்தைகளாகச் சேர்த்துக்கொண்ட பின்பும் சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ் வந்ததென்று சொல்லாமல் வேறே என்ன சொல்வார்கள்? சென்ற 800 வருஷங்களுக்குள் பல புராணங்களும் சில வேதாந்த நூல்களும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் அதுகொண்டு அதற்கு முன்னுள்ள தமிழ் நூல்களெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்தே வந்தன என்று சாதித்தல் எங்ஙனம் பொருந்தும்? சமஸ்கிருதபாஷைகளெல்லாம் முழுதும் தமிழ் வார்த்தைகளால் அமைந்திருப்பதற்குத் திருக்குறளும் சிந்தாமணியும் இங்கே உதாரணமாகக் காட்டப்படுகின்றன. இவற்றில் வழங்கிவரும் சில தமிழ் வார்த்தைகளைச் சமஸ்கிருத வார்த்தைகளென்று சொல்லும் பேதைகளுமுண்டு. திருக்குறள் தமிழ் நாடும் தமிழ் வேந்தரும் பலவிதத்திலும் சீர்குலைந்து-தேய்ந்தகாலம் செய்யப்பட்டதென்று நாம் அறிவோம். இதிலும் மேலானவைகளாக இயல் இசை நாடகமென்னும் முத்தமிழுக்கும் எழுதிய நூல்களும் நீதி நூல்களும் முதற் பிரளயத்தாலும் இரண்டாம் பிரளயத்தாலும் அழிந்துபோய்விட்டன. ஆரியரும் சமணரும் தமிழ்நாட்டில் கலந்தபின்பும் மூன்றாவது தமிழ்ச் சங்கத்தின் இறுதியிலும் திருக்குறள் முதலிய தமிழ் நூல்கள் வெளிவந்தன. அதன் முன்னுள்ள தமிழ் மொழிகள் மிகச்சிறந்தவகையென்றும் கலப்பற்றவை யென்றும் சிறந்த இலக்கணமுடையவை யென்றும் தொல்காப்பியத்தால் அறிவோம். தமிழ் மொழியின் தொன்மையைக் கவனித்தறிந்த எவரும் சமஸ்கிருதத்தினின்று தமிழ் வந்ததென்று சொல்லமாட்டார். 3. தமிழே தாய்ப்பாஷையாயிருந்தது என்பது. தமிழ்ப்பாஷையானது வெகுகாலங்களுக்கு முன்னாலேயே மிகச் சீர்திருத்த மடைந்திருந்த தென்பதும் இலக்கணங்களையுடையதா யிருந்த தென்பதும் பின்வரும் வசனங்களில் காண்போம். Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P.29. “No person who has any acquaintance with the principles of comparative philogy and who has carefully studied the Grammars and vocabularies of the Dravidian Languages, and compared them with those of the Sanskrit, can suppose that the grammatical structure and inflexional forms of those languages and the greater number of their more important roots are capable of being derived from the Sanskrit by any process of corruption whatsoever.” “பாஷாதத்துவ சாஸ்திரவிதிகளைக் கொஞ்சமாவது அறிந்து, திராவிட பாஷைகளின் இலக்கணங் களையும் நிகண்டு திவாகரம் பிங்கலந்தை அகராதி முதலானவைகளையும் கவனமாய்ப்படித்து, அவைகளைச் சமஸ்கிருத பாஷையின் அமரம் முதலிய நிகண்டுகளோடும் அகராதிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்த எவரும், அந்தப்பாஷைகளின் இலக்கணவடிவங்களும் பதரூப பேதங்களும் வேற்றுமைகளும் அவைகளின் அதிக முக்கியமான பகுதிகளில் மிகுதியானவைகளும், சமஸ்கிருதத் தினின்று மருவியேனும் அல்லது வேறு எவ்விதமாயாகிலும் சிதைந்தேனும் வந்திருக்குமென்று நினைக்கமாட்டார்கள்.” Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P.4 “This language (Tamil) being the earliest cultivated of all the Dravidian idioms, the most copious, and that which contains the largest portion and the richest variety of indubitably ancient forms, it is deservedly placed at the head of the list.” “திராவிட பாஷைகளெல்லாவற்றிலும் தமிழே அதிபூர்வகாலத்திலேயே சீர்ப்படுத்தப்பட்டு விர்த்தியடைந்த பாஷையாயும் விஸ்தாரமான பாஷை யாயும் யாதொரு சந்தேகமுமின்றிப் பண்டையுருச்சொற்களை ஏராளமாயும் நிறைவாயுமுடைய பாஷையாயுமிருப்பதினாலே, அதை நியாயமாய் முதல் முதல் வைத்திருக்கிறJ.” “From the various particulars mentioned above, it appears certain that the Tamil language was of all the Dravidian idioms the earliest cultivated; it also appears highly probable, that in the endeavour to ascertain the characteristics of the primitive Dravidian speech, from which the various existing dialects have been derived, most assistance will be furnished by the Tamil.” “மேலே கூறிய பற்பல விஷயங்களினாலும் திராவிடபாஷைக ளெல்லா வற்றிலும் தமிழ்ப்பாஷையே அதிகப் பூர்வீகமானதென்று நிச்சயமாய்த் தோன்றுகிறது. தற்காலத்திலிருக்கும் பல கிளைப்பாஷைகளுக்கு மூல பாஷையாயிருந்த திராவிடபாஷையின் ஆதிரூபத்தை அறிய முயற்சி செய்தால், தமிழே முன்னின்று அதிக உதவி செய்யுமென்றும் தோன்றுகிறது.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், திராவிடபாஷையென்று ஆரியர் அழைக்கும் பாஷைகளுக்குத் தமிழே தாய்ப் பாஷையென்றும், சிறந்த இலக்கணமுடையதென்றும், பூர்வகாலத்தது என்றும், சமஸ்கிருதத்தினின்று முற்றிலும் வேறான பாஷையென்றும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், தொல்காப்பியம் மிகப் பழமையானதென்றும், நுட்பமான இலக்கண விதிகளையுடைய தென்றும், அவர் மேற்கோள்களைக்கொண்டு அவருக்கு முந்திய காலத்திலேயே தமிழ் வித்வான்களிருந்திருக்க வேண்டுமென்பதை அறியலாமென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Manual of the Administration of the Madras Presidency. Vol. I, P (56) “Tamil literature is the oldest among the Dravidian languages. To the sage Agastiya (of unknown date) are attributed not only the formation of the alphabet and first treatise upon grammar, but also a number of treatises on various sciences. But nothing authentic survives from such an ancient time. The oldest extent Tamil grammar is called the “Tolgauppiam’ that is to say ‘The ancient book’: Such a work must have been preceded by centuries of literary culture as it lays down rules for different kinds of poetical compositions, duduced from examples furnished by the best authors whose works were then in existence. Its date cannot, however, be fixed.” “திராவிட பாஷைகளில் எழுதப்பட்ட நூல்களில் அதிகப் பழமை யானவை தமிழ்ப்பாஷையில் உள்ளவை. அறியமுடியாத அதிபூர்வகாலத் திருந்த அகத்தியமுனி, தமிழுக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்தி, முதல் இலக்கண நூலையும் வைத்தியம், சோதிடம், ஞானம் முதலிய பல சாஸ்திர நூல்களையும் எழுதினதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு பழமை யான காலத்திலிருந்து நிச்சயமான யாதொன்றும் நமக்கு கிடைக்கவில்லை. இப்போதிருக்கிற பழமையான தமிழ் இலக்கண நூலுக்குத் “தொல்காப்பியம்” (அல்லது ஆதி புஸ்தகம்) என்று பெயர். ஆனால் அந்தப் புஸ்தகத்தில் பலவகைப்பாக்கள் இயற்றுவதற்கு வேண்டிய பலவிதிகள் நுட்பமாய்ச் சொல்லப்பட்டிருப்பதால் அது எழுதப்பட்ட காலத்துக்கு அதி முன்னேயே ஜனங்கள் நூல் எழுதுவதில் அதிக நாகரீகமடைந்திருக்க வேண்டுமென்பது வெளியாகிறது. யாப்பியலுக்கு வேண்டிய விதிகளுக்கு உதாரணங்கள் அக்காலத்துக்கு முன்னுள்ள வித்வான்களின் நூல்களிலிருந்து எடுக்கப் பட்டிருக்கின்றன. ஆகிலும் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தை நிச்சயிக்க முடியாJ.” மேற்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கையில், தமிழ்ப்பாஷைக்கு எழுத்துக்கள் அமைத்து இலக்கணம் வகுத்து இலக்கியம் செய்தவர் அகஸ்தியரென்று சொல்லுகிறார்கள். அவரிருந்த காலம் தெரியவில்லை. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னாலேயே அநேக வித்வான்களிருந் திருப்பதாகத் தெரிகிறதென்கிறார். அகத்தியர் காலத்திற்கு முன்பே தமிழ்ப் பாஷையிருந்ததென்றும் அவர்கள் தமிழ்ப்பாஷையில் சிறந்த நூல்கள் செய்திருந்தார்களென்றும் அகத்தியர் தாமே சொல்லியிருக்கிறார். அது பின்வரும் சூத்திரங்களால் தெரிகிறது. பேரகத்தியம் “இலக்கண மென்பதிலக்கிய முறையுற வைத்ததென்று வழங்கப்படுமே.” “இலக்கிய மின்றி யிலக்கணமின்றே எள்ளின்றாகி லெண்ணெயுமின்றே எள்ளினின்றெண் ணெயெடுப்பது போல இலக்கியத்தினின் றெடுபடு மிலக்கணம்.” இதனால் அகத்தியருக்கு முன்னாலேயே தமிழ் மிகத் தேர்ச்சி பெற்றிருந்ததென்று தெளிவாகத் தெரிகிறது. திருவிளையாடற்புராணமும் இதனை வலியுறுத்துகிறJ. அக்காலத்திருந்த தமிழின் தேர்ச்சிக்குத் தகுந்தபடி இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தாரென்று தோன்றுகிறது. “வடவேங்கடந் தென்குமரியாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமாயிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச் செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்படவெண்ணிப் புலந்தொகுத்தோனே. - - - - ” இதில் தொல்காப்பியர் தமக்கு முன்னுள்ள தமிழ்நூல்களை ஆராய்ச்சி செய்து, தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளுமாகிய இருவழியிலும் வழங்கும் எழுத்து, சொல், பொருள்களுக்கு இலக்கணம் சொன்னதாகச் சொல்லுகிறார். இதைக்கொண்டு தமிழின் பூர்வமும் அதன் பூரண நிலையும் தெளிவாக அறியலாம். 4. தமிழ்பாஷையின் வார்த்தைகளை வர்த்தக சம்பந்தமுள்ள மற்ற தேசத்தவர் வழங்கிவந்தார்களென்பJ. மேலும் தென்னிந்தியாவோடு வர்த்தகஞ் செய்த கிரேக்கரும் பினீசியரும் வியாபாரப் பொருளாகக் கொண்டுபோன வஸ்துக்களின் பெயர்களைத் தங்கள் பாஷையில் அப்படியே வழங்கிவந்தார்களென்று பின்வரும் வாக்கியங்களால் தெரிகிறது. Preface to Winslow’s Dictionary “It is said that the Language of the Mountaineers of Rajah Mahal abounds in terms identified with Tamil and Telugu. What is more singular, the names by which the ivory, apes, and peacocks, conveyed by Solomon’s ships of Tarshish were known, are the same with those still used in Tamil; seeming to imply that the traders visited Ceylon, or India, and obtained with these novelties their Tamil names, Danta, Kapi, and Togai, as found in the Hebrew Bible.” “ராஜாமஹால் மலைத்தேசவாசிகள் பாஷையில், தமிழ் தெலுங்கு மொழிகள் ஏராளமாயிருக் கின்றனவென்று சொல்லப்படுகிறது. சாலோமோ னுடைய தர்ஷீஸின் கப்பல்கள் கொண்டுபோன தந்தம், குரங்கு, மயில் முதலானவைகளின் பெயர்களைக் கவனிக்கையில், அவைகள் தற்காலத்திலும் தமிழ்ப்பாஷையில் வழங்கி வருகிற பெயர்களென்றும், அன்னிய தேசத்தி லிருந்து வியாபாரிகள் இலங்கை இந்தியா முதலானவிடங்களுக்கு வந்திருந்தார்களென்றும், அப்பொருள்களோடு எபிரேய பைபிளில் காணப்படும் தந்தம், கபி, தோகை என்னும் அவைகளின் தமிழ்ப் பெயர்களையும் கேட்டறிந்து கொண்டு போனார்களென்றும் தெரியவருகிறது.” மேற்காட்டியபடி இந்தியாவில் வியாபாரஞ்செய்த காலம் கிறிஸ்துவுக்குச் சற்றேறக்குறைய 1,000 வருஷங்களுக்கு முற்பட்டJ. சுமார் 3,000 வருஷங்களுக்கு முன் தென்னிந்தியாவோடு வியாபார மூலமாய்ச் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியாவிற்கு மாத்திர முரியதான வியாபாரச் சரக்குகளின் பெயர்களைத் தமிழிலேயே சொல்லி வந்திருக்கவேண்டும். ஆனால் வர்த்தகர்கள் எந்தச் சரக்குகளை இந்தியாவில் இறக்குமதி பண்ணினார்களென்று தெரியவில்லை. இந்தியாவிற்கு நூதனமாகத் தோன்றும் கோலிகள் பீங்கான்கள் விளையாட்டுப் பொருள்கள் முதலியவைகளைத் தவிர வேறு எதை இறக்குமதி செய்திருப்பார்கள்? ஆகையினால் கிரேக்கு, எபிரேயு முதலிய அன்னியபாஷைகளின் மொழிகள், தமிழோடு அதிகமாய்க் கலந்திருக்கமாட்டாவென்று தோன்றுகிறது. Manual of the Administration of the Madras Presidency, Vol. I, P (48,) “The Phoenicians were the first to adopt a purely alphabetic system. The general voice of antiquity gives them this credit and the facts agree with the rumour. The Indo-Arabian alphabet is held to represent the Himyarite of South Arabia and the alphabets of India as shown in the Asoka’s inscriptions. It will be seen later that this scheme does not provide for the original alphabet of the Dravidian nations, which remains thus unaffiliated in the same way as are the Dravidian languages themselves.” “எழுத்துக்களை முதல்முதல் உபயோகித்தவர்கள் பினீசியர். பூர்வ நூல்களெல்லாம் இதைப்பற்றிச் சாட்சி கொடுக்கின்றன. விஷயங்களும் அவைகளுக்கு ஒத்திருக்கின்றன. அசோகனுடைய சிலை எழுத்துக்களைப் பார்த்தால், இந்திய அரபியருடைய எழுத்துக்களெல்லாம் தென் அரபியாவிலுள்ள ஹிமயாரிடி எழுத்துக்களினின்றும் இந்தியாவின் எழுத்துக்களினின்றும் உண்டானவையென்று தெரிகிறது. இந்த முறையில் திராவிடருடைய எழுத்து முறை உற்பத்தியைப்பற்றி யாதொன்றும் சொல்லவில்லை. திராவிட பாஷைகள் எப்படி ஒன்றோடும் சேராமல் தனிமை யாய் நிற்கின்றனவோ அப்படியே திராவிட எழுத்துக்களும் நிற்கின்றன.” மேற்கண்ட வசனங்களில், ஆசியாத்துருக்கியில் மத்திய தரைக்கடலை யடுத்த பினீசிய நாட்டிலேயே முதல்முதல் எழுத்துக்கள் உண்டாயினவென்று சொல்லப்படுகிறது. அசோகனுடைய சிலை எழுத்து, தென் அரேபியாவின் சித்திர எழுத்துக்களாலும் இந்திய எழுத்துக்களாலுமுண்டான தென்று சொல்லுகிறார். ஆனால் திராவிட பாஷையின் எழுத்துக்கள் அவைகளோடு சேராமல் தனித்து நிற்கின்றனவென்று சொல்வதை நாம் கவனிக்கவேண்டும். 5. திராவிடபாஷையின் எழுத்துக்கள் பினீசிய பாஷையிலிருந்தும் சமஸ்கிருத பாஷையிலிருந்தும் உண்டாகவில்லையென்பJ. இந்திய பாஷையின் அட்சரங்கள் பினீசிய பாஷையிலிருந்து உண்டா யிருக்கமாட்டாவென்று அடியில் வரும் வசனங்களில் காணலாம். Sanskrit-English Dictionary by Monier Williams, M.A., Preface, P. XVI. “According to Mr. Edward Thomas (Prinsep’s Indian Antiquities, Vol. II. Page 42) the theory by which Professor Weber has sought to establish a Phoenician origin for the Indian alphabets is untenable. There are, however, two sets of Buddhist inscriptions, and that of Kapurdigiri is decidedly traceable to a Phoenician source. Those on the rock of Girnar (Giri-nagara) in Kathywar, Gujarat, which are said to be most important in their relation to the present Indian alphabets, are not so clearly traceable. Mr. Thomas appears to have good ground for thinking that many of the Nagari letters were derived from the Dravidians of the south.” “எட்வர்ட் தாமஸ் என்பவர் (இந்திய புராதனங்கள் 2-ம் பாகம், பக்கம் 42.) சொல்லுகிறதாவது இந்திய பாஷையின் அட்சரம் பினீசிய பாஷையெழுத்தி லிருந்து வந்ததென்று உவெபர் பண்டிதர் சொல்லுகிறது நிற்கக்கூடிய ஆதாரமுடையதல்ல. என்றாலும், இருவிதமான புத்தசிலாசாசனங்கள் இருக்கின்றன. அவற்றுள் கப்புர்டிகிரியிலுள்ள சிலையெழுத்துக்கள் பினீசிய அக்ஷரத்திலிருந்து உண்டாயிருப்பதாகத் தெரிய வருகிறது. குஜராத்திலுள்ள கத்தியவாரில் கிரிநகரா என்னும் பாறையில் காணப்படும் மிக முக்கியமானவையும் தற்கால இந்திய பாஷைகளின் அக்ஷரங்களுக்குச் சம்பந்தமுடையவையுமான எழுத்துக்கள் என்று சொல்லப்படுபவை அவ்வளவு தெளிவான ஒற்றுமையில்லாதவைகளாயிருக்கின்றன. நாகரி எழுத்துக்களில் அநேகம் தென்னிந்தியாவிலுள்ள திராவிட பாஷைகளிலிருந்து வந்ததென்று தாமஸ் துரை ஊகிக்கிறதற்கு ஏற்ற முகாந்தரங்களிருக்கின்றனவெனக் கூறுகிறார்.” மேற்கண்ட வசனங்களில் சிலாசாசனங்களைக்கொண்டு இந்தியபாஷை பினீசியபாஷைக்கு அவ்வளவு ஒத்திருக்கவில்லையென்று சொல்லுகிறதாகக் காண்கிறோம். ஆகையினால் இந்திய பாஷை பினீசிய பாஷையி லிருந்துண்டானதல்ல வென்பது தெரிகிறது. தமிழ்ப்பாஷை சமஸ்கிருத பாஷையிலிருந்துண்டான பாஷையல்ல. அதன் இலக்கணம் சமஸ்கிருத பாஷையின் இலக்கணத்திற்கு வித்தியாசமுடையதா யிருக்கிறதென்று அடியில்வரும் வசனங்களில் பார்ப்போம். Preface to Winslow’s Dictionary. “Unlike several of the vernaculars of India, it is not, as some have supposed, a daughter of the Sanskrit. Its Alphabet differs not only in character, but in sound; and is more limited. Its grammar, though conformed to the Sanskrit, as far as the genius of the Language would allow, is still very different. It has not article, no relative pronoun, no dual number, no optative mood. It differs in its numerals, in many nouns, and adverbs, and in technical terms in grammar. In the declension of its nouns, the conjugation of its verbs, and the arrangement of its sentences, it more resembles the Latin.” “சிலர் நினைக்கிறபடி, இந்தியாவில் வழங்கிவரும் அநேக சுதேச பாஷைகளைப்போல் தமிழ்ப்பாஷை சமஸ்கிருதத்திலிருந்து உண்டானதல்ல. அதின் அக்ஷரம் வடிவத்தில் மாத்திரமல்ல, ஓசையிலும் வித்தியாசப்படுகிறJ. சுருக்கமாயுமிருக்கிறJ. அதின் இலக்கணம், பாஷைப் போக்கு இடங் கொடுக்கிற மட்டுக்கும் சமஸ்கிருத பாஷையின் இலக்கணத்தை அனுசரித்துச் செய்யப்பட்டி ருந்தாலும், பெரும் வித்க்கிறJ. ய, யn, வாந என்னும் (யசவiஉடநள) போன்ற குறிப்பிடைச் சொற்களாவது பிரதிப் பெயர்ச் சொற்களாவது துவிவசனம் என்னும் இருமைகாட்டும் சொற்களாவது அதில் கிடையாது. எண்ணுச்சொற்களிலும், அநேக பெயர்ச்சொற்களிலும், வினைச் சொற்களிலும், வினையுரிச்சொற்களிலும், இலக்கண பரிபாஷைச்சொற்களிலும் வித்தியாச முடையதாயிருக்கிறது. பெயர்ச்சொற்கள் வினைச்சொற்களின் ரூப பேதங்களிலும், வாக்கிய அமைப்பிலும் அது லத்தீன் பாஷையை ஒத்திருக்கிறJ.” மேற்கண்ட வசனங்களில், சமஸ்கிருத பாஷையையும் தமிழ்ப் பாஷையையும் இலக்கணத்தில் ஒப்பிட்டுக்காட்டி தமிழ் லத்தீன் பாஷைக்கு ஒத்திருக்கிறதென்றும் அதன் சொற்களும் எழுத்துக்களும் சுருக்கமானவை யென்றும் ஓசையிலும் வடிவத்திலும் சமஸ்கிருதத்திற்கு வித்தியாசமானவை யென்றும் சொல்லுகிறார். சிறு குழந்தையின் வாயினால் சொல்வதற்கேற்ற மதளைச் (மழலை) சொற்களும், தேர்ந்த வித்வான்கள் சொல்லத் தகுந்த உயர்ந்த வார்த்தைகளும் சாதாரண ஜனங்கள் தங்கள் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கப் போதுமான எளிதான வார்த்தைகளுமுடையது தமிழ்ப்பாஷையே. யாவரும் மிகச்சுலபமாய் உச்சரிக்கவும் உச்சரித்ததின்படி எழுதவும் எழுதிய எழுத்துக்கள் யாவும் திரும்ப உச்சரிக்கக்கூடியதாகவும் விளங்கி நிற்பது தமிழே. சமஸ்கிருதபாஷையின் வார்த்தைகள் கலவாமல் தமிழ் தனியாய் பேசப் படக்கூடிய பாஷையென்று அடியில்வரும் வசனங்களில்காணலாம். Preface to Winslow’s Dictionary. “It is evident that there was an early literature in Tamil independent of Sanskrit; it is certain that Tamil could do without Sanskrit much better than English without Latin. * * * * * The reason why Tamil is more independent of Sanskrit than the Northern Languages, and even than the other Dravidian tongues, is, that it has not been left, like those, principally to the cultivation of the Brahmans.” “பூர்வதமிழ்நூல்கள் சமஸ்கிருதக் கலப்பில்லாமலிருக்கின்றன. லத்தீன் கலவாமல் இங்கிலீஷை எழுதக்கூடியதைப்பார்க்கிலும் அதிக நன்றாய்ச் சமஸ்கிருதம் கலவாமல் தமிழ்ப் பாஷையை யெழுதலாம். * * * * * தமிழில் சமஸ்கிருத பாஷை அதிகமாய்க் கலவாதிருப்பதற்குக் காரணமென்னவென்றால் வடபாஷைகளைப்போலும், மற்றத்திராவிட பாஷைகளைப் போலும், பிராமண நூலாசிரியர்கள் அநேகர் தமிழ்ப்பாஷைக் கில்லாமற்போனதே.” முதல் இரண்டு சங்கங்களிலுமிருந்த இசை நூல்களும் நாடகநூல்களும் அழிந்து குறைவு பட்ட காலத்தில் தென்னிந்தியாவின் சங்கீதத்தை பூரணமாய்க்கற்றும் அதற்குரிய சில நூல்கள் எழுதியும் தற்காலம் வரையும் நீடித்திருக்கும் நிலைக்குப் பெரும்பாலும் ஆரிய வித்வசிரோமணிகள் காரணமாயிருந்தார்களென்று சொல்லவும் நன்றிபாராட்டவும் தமிழ்மக்கள் மறந்து போகக்கூடாJ. 6. தமிழ் பல சிறந்த கலைகளையுடைய பாஷை என்பது. தமிழ்ப்பாஷை மிக நேர்த்தியான பதங்களுடைய பாஷையென்றும், பூர்வீக நூல்களையும் புலவர்களையுமுடையதென்றும், பின்வரும் வசனத்தில் நாம் காண்போம். Preface to Winslow’s Dictionary. “A native author of repute, well versed in English, as well as his own vernacular, has said, adopting the words of Mr. Taylor before mentioned ‘it is one of the most copious, refined, and polished languages spoken by man’. This author has added, what may admit of doubt, ‘few nations on earth can perhaps boast of so many poets as the Tamils’. As, however, all their carlier literature was in poetry, even Dictionaries and Grammars, and works on Medicine, Law, Architecture and Theology, the Number of poets, so called, must have been great.” “ஆங்கிலேய பாஷையைத் தீரக்கற்றவரும், தம்முடைய சுயபாஷையின் திறமை பெற்றவருமான ஓர் பேர்போன சுதேச நூலாசிரியர், மிஸ்டர் டேய்லர் சொல்வதற்கு ஒற்றுமையாக, மனிதர் பேசும் பாஷைகளுள் தமிழ்ப்பாஷை அநேக அபிப்பிராயங்களைத் தெரிவிக்கக்கூடியதும், மிக நேர்த்தியும் ஏராளமுமான சொற்களையுடையதுமான பாஷையென்று தெரிவிக்கிறார். பின்னும் அவர் தமிழ்ப் பாஷையில் தேர்ந்த புலவர்கள் ஏராளமாயிருப்பது போல் உலகத்தில் மற்ற எந்தப்பாஷையிலுமில்லை என்று கூறுகிறார். அவர்களின் பூர்வீக காவியங்கள், அகராதிகள், இலக்கண நூல்கள், வைத்திய சாஸ்திரங்கள், சட்டசாஸ்திரங்கள் சிற்பசாஸ்திரங்கள், வேதசாஸ்திரங்கள் முதலானவைகளெல்லாம் செய்யுளிலேயேயிருப்பதால், அவைகளின் நூலாசிரியர்களாகிய புலவர்களும் ஏராளம்.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், ஒரு பாஷைக்கும் ஒரு தேசத்துக்குமுரிய கலைகள் யாவும் தமிழிலிருந்ததாகக் காண்கிறோம். அறுபத்துநாலு கலைகளையும் ஒவ்வொன்றும் ஒரு திருவிளையாட்டாகப் பரமசிவன் நடத்திக்காட்டியது தமிழ் நாட்டிலல்லவோ. ஆகையினால் வேண்டும் கலைகள் யாவும் பூர்வ தமிழ் நாட்டிலிருந்தனவென்றும் பின் அழிந்துபோயினவென்றும் நாம் நினைக்கவேண்டும். Preface to Winslow’s Dictionary. “It is not perhaps extravagant to say, that, in its poetic form, the Tamil is more polished and exact than the Greek, and in both dialects, with its borrowed treasures, more copious than the Latin. In its fulness and power it more resembles English and German than any other living language. Its prose style is yet in a forming state, and will well repay the labor of accurate scholars in moulding it properly. Many natives who write poetry readily, cannot write a page of correct prose.” “தமிழ்ப் பாஷையாவது செய்யுள் நடையில் கிரேக்க பாஷையைப் பார்க்கிலும் அதிக பளபளப்பும் திருத்தமும் பொருந்தியதாய், கருத்துக்களை அதிகத்திட்டமாய்க் காட்டக்கூடியதாயிருக்கிறதென்று சொல்வது அதை மட்டுக்கு (அளவுக்கு) மிஞ்சிப்புகழ்வதாகாJ. அது மற்றப் பாஷைகளிலிருந்து சேர்த்துக்கொண்ட மொழிகளுள்பட செய்யுள் நடையிலும் வாசக நடையிலும் அதற்கிருக்கும் மொழிகள் லத்தீன் மொழிகளைவிட அதிக ஏராளமாம். அதன் நிறைவிலும் பெலத்திலும் தற்காலத்திலிருக்கும் மற்றெந்தப் பாஷையையும் விட இங்கிலீஷ் ஜர்மன் பாஷைகளை ஒத்திருக்கிறJ. அதற்கு வசன நடை படிப்படியாய் ஏற்பட்டுக்கொண்டு வருகிறது: அதைச் சரியான நடையில் ஒழுங்குபடுத்த முயலுகிறவர்கள் தங்கள் பிரயாசத்தின் பலனையடையாமற் போகமாட்டார்கள். சொன்னவுடனே கவி யெழுதக்கூடிய அநேக தமிழர்கள் பிழையில்லாமல் வசனம் ஒரு பக்கங்கூட எழுத முடியாதவர்களா யிருக்கிறார்கள்.” மேற்கண்ட வசனங்களில் தமிழ்ப்பாஷையானது ஆங்கிலேய ஜெர்மானிய பாஷைகளைப்போலப் பூரணமும் சிறப்பும் பெற்று பேச்சு வழக்குடைய உயிர்ப்பாஷையாய் விளங்குகிற தென்கிறார். Preface to Winslow’s Dictionary “The Tamil is not a vulgar dialect. Before the principal basis of the English had a written character, it was a highly polished language. Its name signifies sweetness, and though not so musical as the Telugu, in its poetic form especially, it is not without its claim to cuphonic charms, and ‘linked sweetness.” “தமிழ்ப்பாஷை கொச்சையான பாஷையல்ல. ஆங்கிலேய பாஷைக்கு எழுத்து வடிவம் ஏற்படுவதற்கு முன்னமே தமிழ் பளபளப்பும் மழமழப்பும் மிகுந்து தேர்ந்த சிறந்த பாஷையாயிருந்தJ. தமிழ் என்பதற்கு மதுரம் என்று அர்த்தமாம். தெலுங்கைப்போல் அவ்வளவு இனிய ஓசை யுள்ளதல்ல வென்றாலும் கேட்பவர்களுக்கு ஆநந்தத்தை விளைவிப்பதிலும் தொடர்ச்சி யான இனிமை பயப்பதிலும் தமிழ்ப்பாஷைக்குச் சக்தியில்லாமற் போக வில்லை.” மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில், இங்கிலீஷ்பாஷைக்கு எழுத்துக்களுண்டாவதற்கு முன்னாலேயே தமிழ்ப்பாஷை சிறந்து விளங்கினதென்று தெரிகிறது. 7. சமஸ்கிருதபாஷை யுண்டானதைப்பற்றிய சில குறிப்புகள். Preface to Winslow’s Dictionary. “In the opinion of the Rev. William Taylor, the able Editor of Dr. Rottler’s Dictionary, ‘there was originally one simple homogeneous dialect, spoken by rude, simple aborigines from the Himalaya to Cape Comorin ‘ Mr. Taylor thinks that, ‘the earliest probable refinement of it was the Pali of the North, and the Tamil of the extreme South,’ and that, ‘the Sanscrit assumed its own form by engrafting numerous Chaldaic terms of science and others of common use in the old Pali.’ It is evident from their names, that the Pali must have been anterior to the Sanscrit, the former signifying root or original, and the latter finished or polished. It is stated by Colonel Sykes that very ancient inscriptions on rocks and coins, are found in Pali and Pracrit four hundred years earlier than in Sanscrit.” “ராட்லர் அகராதியைப் பிரசுரஞ்செய்தவரான வில்லியம் டேய்லர் என்பவர், ஆதியில் இமய பர்வத முதல் கன்னியாகுமரிமுனைவரை, நாகரீகமில்லாதவர்களும் பேதமையுள்ளவர்களுமான பூர்வீகக் குடிகளுக்குள் யாதொரு கலப்பில்லாத ஒரேபாஷை பேசப்பட்டு வந்ததென்றும், அது முதற் சீர்திருத்தத்தை யடைந்து வட தேசத்தில் பாலியாகவும் தென்கோடியில் தமிழாகவும் வழங்கியதென்றும், பழைய பாலிபாஷையில் ஏராளமான கல்தேய சாஸ்திர சம்பந்தமான பரிபாஷைகளையும் சாதாரண வழக்கத்தி லுள்ள அநேக மொழிகளையும் சேர்த்துக்கொண்டு சமஸ்கிருதபாஷையை யுண்டாக்கினார் களென்றும் அபிப்பிராயப்படுகிறார். இந்தப் பாஷைகளின் பேர்களைக் கவனிக்கையில் பாலிபாஷை சமஸ்கிருதத்திற்கு முந்தினதென்று தெளிவாகிறJ. ‘பாலி’ என்றால் மூலம் அல்லது முந்தினது என்றும், ‘சமஸ்கிருதம்’ என்றால் திருத்தம் பெற்றது அல்லது செம்மையாக்கப்பட்டது என்றும் அர்த்தம். கற்பாறைகளிலும் நாணயங்களிலுமுள்ள அதிபூர்வீக சாஸனங்களில் பாலியிலும் பிராகிருதத்திலும் எழுதப்பட்டவைகள் சமஸ் கிருதத்தில் எழுதப்பட்டவைகளுக்கு 400 வருஷங்களுக்கு முந்தினவைகளா யிருக்கின்றனவென்று கர்னெல் சைக்ஸ் கூறுகிறார்.” மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில், இந்தியாவின் பூர்வத்தோர் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையும் குடியிருந்தார்களென்றும், அவர்களுள் யாதொரு கலப்புமற்ற ஒரே பாஷை பேசப்பட்டு வந்ததென்றும், அப்பாஷை வடபாகத்தில் பாலியென்றும் தென்பாகத்தில் தமிழ் என்றும் சொல்லப்பட்டதென்றும் சொல்லுகிறார். பாலி பாஷையிலிருந்தும் அனேக கல்தேய பதங்களினின்றும் கலந்து எடுக்கப்பட்டு சமஸ்கிருதமென்ற ஒரு பாஷையுண்டானதென்று சொல்லுகிறார். பூர்வீகத்தில் கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்களைக்கொண்டும் நாணயங்களிலுள்ள எழுத்துக்களைகொண்டும் பாலி பாஷையே பூர்வமானதென்று தெரிகிறது. பாலிபாஷையைப்போல பிராகிருத பாஷைகளும் சமஸ்கிருதத்தைவிட 400-வருஷங்களுக்கு முந்தினது என்றும் பாலிபாஷையை ஆதிமூலபாஷை யென்றும் சமஸ்கிருதம் அதிலிருந்து எடுக்கப்பட்டு முடிவு பெற்றிருக்கிற பாஷையென்றும் சொல்லுகிறார். இதைக்கொண்டு பாலி பாஷையிலிருந்தும் பிராகிருத பாஷையிலிருந்தும் நன்றாயுண்டாக்கப்பட்ட பாஷை சமஸ்கிருத மென்று தெரிகிறது. சமஸ்கிருதம் என்ற பெயருக்கே ‘நன்றாய்ச் செய்யப்பட்டது’ என்று அர்த்தமாம். பாலி என்பது மூலமென்றும் பிராகிருதியென்பது முதல் என்றும் அர்த்தமாம். இவ்வார்த்தைகளின் அர்த்தங்களைக் கவனிக்கையில், ஆதி யாகவும் முதலாகவுமுள்ள பல பாஷைகளிலிருந்து மொழிகள் சேர்க்கப்பட்டு அதற்கிணங்க இலக்கணமுஞ் செய்யப்பட்டு நன்றாய்த் திருத்தப்பட்ட பாஷை சமஸ்கிருதமென்று விளங்குகிறJ. ஆரியர்கள் தாங்கள் பிரயாணம் பண்ணிவந்த தேசங்களிலுள்ள பாஷையின் பலமொழிகளையும் ஒன்று சேர்த்து, சமஸ்கிருதமென்ற புதுப்பாஷை ஒன்று செய்தார்களென்று தெளிவாகத் தெரிகிறது. அப்படியே கிரேக்கு, லத்தீன், எபிரேயு, சீத்தியம், பாலி, பிராகிருதம், தமிழ் முதலிய பாஷைகள் இதில் கலந்திருக்கிறதைத் தற்கால அனுபோகத்தால் காண்கிறோம். மேலும் இடுகுறிப்பெயர்களே ஆதி வார்த்தைகளா யிருக்க வேண்டுமென்றும் அதன் பின்பே காரணப்பெயர்கள் வழங்கக்கூடியதென்றும் அறிவாளிகள் யாவரும் ஒப்புக்கொள்வார்கள். சங்கீத சாஸ்திரத்திலும் பூர்வ தமிழ் நூல்கள் வழங்கிவந்த இயற்கையான மொழிகள் நிற்க, ஒவ்வொன்றிற்கும் காரணப்பெயர்கள் அமைத்து வழங்கி வருவதைக் கவனித்தால், சமஸ்கிருதத்திலுள்ள சங்கீத சாஸ்திரங்கள் யாவும் பிற்காலத்திலுண்டானவையென்றே நினைக்க ஏதுவிருக்கிறது. 8. எபிரேய சீத்திய ஐரோப்பிய சமஸ்கிருதபாஷைகளில் தமிழ் மொழிகள் காணப்படுகின்றன என்பதற்குச் சில திருஷ்டாந்தம். பாஷைகளில் சிறந்ததாகச் சொல்லப்படும் சமஸ்கிருத பாஷையும் சில வார்த்தைகளைத் தமிழ்ப்பாஷையிலிருந்து எடுத்திருப்பதாகப் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Preface to Winslow’s Dictionary. “While nearly all the vernaculars of India have been greatly enriched from the Sanscrit, that wonderful language has condescended to borrow even from the Dravidian group, of which the Tamil is the oldest, and the principal. Dr. Caldwell in his learned Dravidian Comparative Grammar, instances 31 words in Sanscrit taken from Dravidian tongues, and 25 borrowed by both from some common source. He is of opinion that the Sanscrit derived its cerebral consonants from the Dravidian.” “இந்தியாவிலுள்ள மற்றெல்லாப்பாஷைகளும் கடன்வாங்கிக்கொள்ளும் படியாக அவ்வளவு சிறந்த தாய் சமஸ்கிருதமிருந்தாலும், அதுவும் திராவிட பாஷையிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. திராவிட பாஷைகளில் அதிகப் பூர்வீகமானதும் முக்கியமானதும் தமிழ்தான். டாக்டர் கால்டுவெல் தம்முடைய சிறந்த திராவிடபாஷை இலக்கணத்தில், திராவிடபாஷையி லிருந்து சமஸ்கிருதத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறதற்கு உதாரணமாக 31 வார்த்தைகளும், சமஸ்கிருதமும் திராவிடமும் வேறொரு பொதுப்பாஷையி லிருந்து கடன் வாங்கியிருப்பதற்கு உதாரணமாக 25 வார்த்தைகளும் காட்டியிருக்கிறார். சமஸ்கிருதபாஷையானது நெஞ்சிலிருந்து வரக்கூடிய சில மெய்யெழுத்துக்களை (ட ண ள ர) திராவிட பாஷையிலிருந்து சேர்த்துக்கொண்டதாக அபிப்பிராயப்படுகிறார்.” மேற்கண்ட வசனங்களில் பல தமிழ் மொழிகள் சமஸ்கிருத பாஷையில் சேர்ந்திருப்பதாகவும் சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வேறு பல வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் வருவதாகவும் தமிழுக்குரிய ட ண ள ர என்ற எழுத்துக்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத் திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டனவென்றும் சொல்லுகிறார். மேலும், ஒரு காலத்தில் ஒரு இடத்திலிருந்தே ஜாதிகள் யாவரும் தனித்தனி பிரிந்துபோயிருக்க வேண்டுமென்றும், அவர்கள் பிரிந்து போகுமுன் தமிழ்ப் பாஷையையே பேசிவந்தார்களென்றும், பல காரணங்களைக்கொண்டு ஊகிக்க இடமிருக்கிறது. உலகச்சரித்திரம் உண்டாவதற்கு முன்னாலேயே இப்பேர்ப்பட்ட ஒரு பெரும் பிரிவு உண்டாயிருக்கவேண்டுமென்றும் தோன்றுகிறது. அப்படிப்பிரிந்துபோனவர்கள் தாங்கள் பூர்வமாய்ப் பேசிவந்த பாஷையையே அரைகுறையாய்ப் பேசியிருக்கவேண்டும். ஏனென்றால், ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்படும் ஜனங்களில், அனேக அறிவாளிகளும் செல்வவான்களும் தப்பித்துக்கொள்ளத் திறமையற்றிருக்க, சாதாரண கூலி வேலைசெய்கிறவனும் நீந்தத் தெரிந்தவனுமே தப்பிப் பிழைக்க முடியும். சாதாரண மனிதனுக்கு 200, 300 வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டுமானால் மற்றொருவன் கூட்டுறவும் வேண்டும். இல்லையானால் மறந்துபோம். மறந்தபின் தங்களுக்குப்பிரியமானதும் லேசானதுமான நூதன வார்த்தைகளைக் கொண்டே உலகக்காரியங்கள் பேச்சுப்பழக்கத்திற்கு வரவேண்டும். இப்படி வெகுகாலம் சென்று விட்டால், தங்கள் பூர்வ வார்த்தைகள் வெகுதூரம் மாறி, முதல் எழுத்து நீண்டும் குறுகியும் இன எழுத்து வந்தும் வழங்கும். அப்படியே கடை எழுத்துக்கெட்டும் நீண்டும் குறுகியும் வேறொரு எழுத்து வந்து விரவியும் வழங்கும். இப்படிப் பல பாஷைகளிலும் வழங்கும் வார்த்தைகளை ஒருங்கு சேர்த்துப் பார்ப்போமானால், 8,000 வருஷங்களுக்கு முன்னிருந்த தொல்காப்பியர் காலத்தில் 4,400 வருஷங்களாக இருந்த முதற்சங்கத்தார் ஆதரித்து வந்த தமிழ்ப்பாஷையே பூர்வமான பாஷையென்றும், அவர்களிருந்த லெமூரியா அழிந்தபின் தங்களுக்கு எதிர்ப்பட்ட கரைகளுக்குத் தமிழர் குடியேறினார்களென்றும், திட்டமாகச் சொல்லலாம். அவர்கள் சிதறிப்போன பின் தேச சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தபடியும் ஆகாராதிகளுக்குத் தகுந்தபடியும் கைத்தொழிலுக்கும் கல்விக்கும் தகுந்தபடியும் வெவ்வேறு பாஷைக்காரராகவும் தேசத்தாராகவும் அழைக்கப்பட்டார்கள் என்று தோன்றுகிறது. மேற்படி ஜாதியார் பேசும் பாஷைகளில் தமிழ் வார்த்தைகள் காணப்படுவதே அதற்குப் போதுமான அத்தாட்சி. சமஸ்கிருத பாஷையில் அநேக வார்த்தைகளும் சில எழுத்துக்களும் தமிழிலிருந்து எடுக்கப்பட்டு வழக்கத்திலிருக்கின்றன. Preface to Winslow’s Dictionary. “But from affinities traced out by him, in addition to those hereafter given, it would seen that we may go farther back for many roots and forms in these tongues, to some common fountain both for them and for the languages of the Indo-European family, including Sanscrit; nearer to the time when ‘the whole earth was of one language.’ He specifies 85 words in the Dravidian, as having Seythian affinities, 31 as Semitic, and 106 connectedwith the west Indo European family, distinct from those in Sanscrit..” “அவரால் காட்டப்பட்டிருக்கிற ஒற்றுமைகளிலிருந்தும் இனிக் கூறப்படுபவைகளிலிருந்தும் இந்தப் பாஷைகளிலுள்ள அநேக முதனிலை களுக்காகவும் பதரூபங்களுக்காகவும் அவைகளுக்கும் சமஸ்கிருத முள்பட்ட இந்து ஐரோப்பிய பாஷையினங்களுக்கும் பொதுவான ஊற்றுவரைக்கும் வெகுதூரம் போகலாமென்று தோன்றுகிறது. அதாவது, பூமியெங்கும் ஒரே பாஷையிருந்தகாலம் வரைக்கும் எட்டிப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. சீத்திய சம்பந்தமுள்ள 85 சொற்களையும் சேம் வமிசத்தாரின் பாஷைக்குச் சம்பந்தமுள்ள 31 சொற்களையும் சமஸ்கிருதத்துக்கு வேறாகிய மேலை இந்து ஐரோப்பிய இனத்தைச்சேர்ந்த 106 சொற்களையும் எடுத்துக் காட்டுகிறார்.” Comparative Grammar By Bishop Caldwell P. 453. “Some of the words which are contained in the following list, have Sanskrit as well as Classical or West Aryan analogies; but they have been placed in this, rather than in the preceding, list, because the West Aryan affinities are clearer, more direct, and more certain than the Sanskrit ones. The greater number, however, of the words that follow, though indubitably connected with the western tongues, and especially with the Greek and Latin, exhibit no analogy whatever to any words contained in the Sanskrit. If the existence of this class of analogies can be clearly established, it must be concluded either that the Dravidians were at an early period near neighbours of the West Aryan tribes, subsequently to the separation of their tribes from the Sanskrit speaking people, or that both races were descended from a common source. The majority of the Dravidian words which exhibit West Aryan analogies, do not belong to that primary, rudimental class to which the words that the Dravidian languages have in common with the Scythian are to be referred. Nevertheless, they are so numerous, many of them are so remarkable, and when all are viewed together, the analogy which they bring to light is so distinct, that an ultimate relation of some kind between the Dravidian and the Indo-European familes, may be regarded as conclusively established.” “பின் சொல்லப்படும் அட்டவணையில் உள்ள சில வார்த்தைகள் சமஸ்கிருதத்தோடும் மேற்றிசை ஆரிய அல்லது சிறந்தவிலக்கிய பாஷைக ளோடும் சம்பந்தப்பட்டவைகளாயிருக்கின்றன. ஆனால் அவைகளைச் சமஸ்கிருத அட்டவணையில் சேர்க்காமல் மேற்கு ஆரிய பாஷைகளோடு வைத்தற்குக் காரணம் என்னவென்றால், அந்தப்பாஷைகளோடு சேர்ந்த சம்பந்தங்கள் சமஸ்கிருத பாஷைச் சம்பந்தங்களைவிட அதிகத் தெளி வானவை யாயும் அதிக நெருங்கினவையாயும் அதிக நிச்சயமானவை யாயும் இருக்கின்றன. பின்வரும் வார்த்தைகளிலனேகம் முக்கியமான ஆரிய பாஷைகளாகிய கிரேக்கு லத்தீன் பாஷைகளோடு சந்தேகமின்றிச் சம்பந்தப் பட்டவைகளாயிருந்தும் சமஸ்கிருத பாஷையோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வித வகுப்பான சம்பந்தங்கள் இருப்பதின் நிச்சயத்தை நாம் ஸ்தாபிக்கக்கூடுமானால், திராவிடர் ஆதியில் மேற்கு ஆரிய ஜாதியாரோடு நெருங்கி வாசம் செய்தார்களென்றாவது அதாவது சமஸ்கிருதம் பேசும் ஜாதியாரைவிட்டுப்பிரிந்த பிறகு அப்படி வசித்தார்களென்றாவது அல்லது இருஜாதியாரும் ஒரே பொதுவான ஜாதியிலிருந்து உற்பத்தியானார்களென்றாவது நிச்சயமாய்ச் சொல்ல ஏதுவுண்டு. மேலை யாரிய சம்பந்தத்தைக் காண்பிக்கும் திராவிட வார்த்தைகள் பெரும்பாலும் திராவிட பாஷைகளுக்கும் சீத்திய பாஷைகளுக்கும் பொதுவாயுள்ள ஆதி பூர்வ பாஷைக்குச் சொந்தமானவை யல்ல வென்றாலும், அவைகள் ஏராளமாயிருப்பதாலும் அவைகளில் அநேகம் விசேஷித்தவைகளாயிருப்பதாலும், அவைகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் கவனிக்கையில் அவைகளுக்குள்ள சம்பந்தம் வெகு தெளிவாய்த் தெரிவதாலும், திராவிடபாஷைகளுக்கும் அல்லது இந்து ஐரோப்பிய பாஷைகளுக்கும் ஏதோ ஒருவிதமான சம்பந்தம் இருந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாய் ஸ்தாபிக்கலாம்.” மேற்கண்ட வசனத்தினால் பாஷை சம்பந்தமான ஒற்றுமையைக் கவனித்தால் மனிதர் ஆதியில் ஒரே பொதுவான ஜாதியிலிருந்து உற்பத்தியானார்களென்றும் தமிழ்ப் பாஷையோடு மற்றெல்லாப் பாஷைகளுக்கும் சம்பந்தமிருப்பதினால் அவர்கள் ஆதியில் ஒருபாஷை பேசியிருக்க வேண்டுமென்றும் நிச்சயிக்க எதுவிருக்கிறதென்பதைப் பின்வரும் வசனத்தில் காணலாம். I சமஸ்கிருதத்தில் வழங்கும் தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம். 1. அக்கா 9. கடு 17. கோட்டை 25. பொன் 2. அத்தா 10. கலை 18. கட்டில் 26. பள்ளி 3. அடவி 11. காவேரி 19. சவம் 27. பாகம் 4. ஆணி 12. குசம் 20. சா 28. மீன் 5. அம்பா 13. கூச்சல் 21. சாய் 29. வெள் 6. அம்மா 14. குடி 22. நானா (வெள்ளி, வெளிச்சம்) 7. அடே 15. கூன் 23. நீர் 30. வளை 8. ஆளி 16. குளம் 24. பட்டணம் 31. வளையம் II சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வார்த்தைகளுக்கு உதாரணம். 1. அடி 6. கட 11. கிழி 16. தடி 21. பால் (பகுப்பு) 2. உதை 7. கழுதை 12. கெடு 17. தூவு 22. பிற 3. அடை 8. சின்ன 13. சிறை 18. தூறு 23. பால் 4. என 9. குதிரை 14. சிலிர் 19. நட 24. பேசு 5. ஊர 10. கீறு 15. செ 20. பாடு 25. பூ III இந்து ஐரோப்பிய இனமொழிகள் அதாவது, ஐரோப்பிய பாஷைகளில் காணப்படும் தமிழ் மொழிகளுக்கு உதாரணம். 1. அசை 18. ஓரம் 35.கேள் 52. திருப்பு 69. புகழ் 86. மாழ்கு 2. அருவி 19. கடிதல் 36.கொல் 53. நசுக்கு 70. புறம் 87. மிகு 3. அலை 20. கண் 37. சாக்கு 54. நரம்பு 71. பூசை 88. முழுகு 4. அவா 21. கரடி 38. சாத்து 55. நினை 72. பெரு 89. முகில் 5. ஒளவை 22. கழுகு 39. சாடி 56. நீந்து 73. பெறு 90. முயலு 6. ஆவி 23. களவு 40. சால் 57. நெய்ய 74. பேய் 91. முறுமுறு 7. இழு 24. கெபி 41. சீறு 58. படு(வருந்து)75. பையன் 92.மூக்கு 8. இரும்பு 25. காய் 42. சுடு 59. படு 76. பொறு 93. மெத்தை 9. ஈனு 26. செய் 43. செப்பு 60. பண்ண 77. பொழுது94. மெல் 10. உயர் 27. கிண்டு 44. செல் 61. அனுப்பு 78. பொவ்வு 95. வலி 11. எரி 28. கிழம் 45. தகு 62. பழ (மை) 79. போ 96. வளர் 12. உழு 29. கிழமை 46. தயிர் 63. பழு 80. போடு 97. விண் 13. உளை 30. கிளை 47. தின் 64.பல 81. விழு 98. விறை 14. ஊளை 31. குப்பை 48. திற 65.பள்ளி 82. மகன் 99. வீண் 15. எய் 32. குறு 49. தீண்டு 66.பிய்க்க 83. மயிர் 100. வேண்டு 16. எழு 33. குருடு 50. தெள் 67.பீரி 84. மற 101. வேறு 17. எல்லாம் 34. குளிர் 51. தொலை 68.பிள்ளை 85. மா IV எபிரேயு முதலிய பாஷைகளில் காணப்படுகிற தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம். 1. அப்பா 7. இறங்கு 13. சாக்கு 19. கவர் 25. பால் 2. அம்பா 8. எரி 14. சால் 20. செவ்வை 26. பெறு 3. ஆறு 9. ஊர் 15. சாய் 21. நாட்டு 27. வா 4. அல்(அல்ல) 10. எறி 16. சினம் 21. நீட்டு 28. மாய் 5. அவா 11. எரு 17. சீறு 23. நோக்கு 29. மாறு 6. இரு 12. கூர் 18. சுமை 24. பழு 30. மிசுக்கன் 31. மெத்தை V சீத்தியபாஷையிலுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம். 1. அக்கா 20. கத்தி 41. செவி 62. பொன் 2. அத்தன் 21. கடி, கறி 42. கேள் 63. பல் 3. ஆத்தாள் 22. கட்டு 43. கொல் 64. பால் 4. அன்னை 23. கண்ணீர் 44. கோ, கோன் 65. பிடி 5. அப்பன் 24. கப்பல் 45. கோழி 66. பிறகு 6. அம்மாள், அம்மை, 25. கரு 46. சாரல் 67. பிள்ளை அம்மன் 26. கரடி 47. சா 68 புகை 7. அரு 27. கழுகு 48. சேறு 69. பெண் 8. அல், ஏல் 28. கழுத்து 49. தலை 70. வயிறு (எதிர்மறை விகுதிகள்) 29. கல் 50. தீ 71. வாழ் 9. ஒளவை 30. கள்ளம் 51. தூசி 72. மனை 10. அலை 31. காற்று 52. தோல் 73. மரம் 11. ஆறு 32. காய்ச்சு 53. நக்கு 74. மறி 12. ஆம் 33. கால் 54. நகை 75. மலை 13. இரும்பு 34. கிழ 55. நாய் 76. முறுமுறு 14. நீஞ்சு 35. கீழ் 56. நெற்றி 77. முட்டை 15. உயர 36. குதிரை 57. நெய் 78. வானம் 16. உள் 37. குடில், குடிசை 58. நோக்கு 79. வாய் 17. எழுது 38. குளிர் 59. ஞாயிறு 80. விழி 18. எலும்பு 39. கை 60. பசுமை 81. வெளிச்சம் 19.ஒக்க 40. கெபி 61. பையன், பயல் மேலே காட்டிய ஐந்து அட்டவணைகளில் கண்ட வார்த்தைகளைக் கவனிக்கையில், அவைகள் ஒவ்வொன்றும் தமிழ் நாட்டில் சாதாரணமாய் கல்வியறிவில்லாத ஏழை ஜனங்களும் நாளதுவரை பேசிக்கொண்டிருக்கிற வார்த்தைகளா யிருக்கிறதேயொழிய உயர்ந்த வார்த்தைகளாயில்லை. இவைகளே பிறநாட்டுக்குக் கொண்டுபோகப் பட்டிருக்கவேண்டுமென்றும் அவ்விடத்தில் பல திரிபுகளையும் விகாரங்களையுமடைந்து வித்தியாசப் பட்டிருக்கின்றன வென்றும் நாம் நினைக்க வேண்டும். இங்கே கண்ட வார்த்தைகளை முதலாக வைத்துக்கொண்டு விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம், வேற்றுமை உருபுகள், அடைமொழி முதலியவை சேர்ந்து எத்தனையோ வார்த்தைகளுண்டாகி நாளது வரையும் வழக்கத்திலிருந்து வருகின்றனவென்று தமிழ் மக்கள் நன்றாய் அறிவார்கள். இதனால் மேற்காட்டிய அட்டவணையில் கண்ட வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளே யென்று நிச்சயமாகச் சொல்லலாம். மேலும் தமிழ்ப்பாஷைக்கும் சமஸ்கிருத பாஷைக்கும் பொதுவான வேறொரு பாஷையிலிருந்து வழங்கிவரும் வார்த்தைகள் 25 என்று சொல்வதை நாம் கவனிக்கையில் அவ்வார்த்தைகள் பூர்வந்தொடுத்து தமிழ்பாஷையிலே வழங்கி வருகிற வார்த்தைக ளென்பதையும் பூர்வநூலாகிய தொல்காப்பியத்தில் சொல்லப்படும் வார்த்தை களாகவே காணப்படுகிறதென்பதையும் அறிவாளிகள் அறிவார்கள். மேற்காட்டிய 25 வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகளென்பதற்குச் சந்தேக மில்லை. மேற்கண்ட சில தமிழ்மொழிகளும் இன்னும் பல மொழிகளும் பல மாறுதல்களுடன் அநேக பாஷைகளில் கலந்திருக்கிறதென்பதை இன்னும் பூரணமாய் விசாரிப்போமானால், சாதாரணமாய்த் தமிழில் வழங்கும் வார்த்தைகளே மற்றவர்கள் பாஷைக்கு ஆதியாயிருந்திருக்க வேண்டுமென்று நாம் எண்ண இடந்தரும். (a) தமிழ் மொழிகள் பலவாறாகத் திரிந்து மற்ற பாஷைகளில் வழங்கி வருவதைக் காட்டும் சில உதாரணங்கள். இயற்கையின் அமைப்பில் ஜீவப்பிராணிகளினிடம் விளங்கி நிற்கும் சில ஓசைகள் தமிழ்ப்பாஷையின் சில எழுத்துக்களின் ஓசையையும் சில வார்த்தைகளின் ஓசையையும் ஒத்த தாயிருக்கின்றன. அம்மா என்ற பசுங்கன்றின் ஓசையை யறியாத இந்துக்கள் ஒருவருமில்லை. அப்படியே அக்கா, அக்கோ என்ற குயிலின் அல்லது அக்காபட்சியின் ஓசையுமிருக்கிறJ. கா, கி, கு, கூ, சு, ஈ, ஊ, மா, மே, ஞா முதலிய எழுத்துக்களை முதற்கொண்டு தொனிக்கும் ஜீவப்பிராணிகளின் சத்தத்தையும் நாம் கேட்டிருப்போம். இவ்வோசையின் எழுத்துக்களுக்கு இணங்க வழங்கிவரும் வார்த்தைகளை நாம் கவனித்தால் மனுட தோற்றத்தின் ஆதிகாலம் இவ்வார்த்தைகளையும் ஓசைகளையு முடையதாகவே யிருந்ததென்று தோன்றுகிறது. எந்தப் பாஷையிலும், கேட்கவும் கற்றுக்கொள்ளவுங்கூடாத சிறு பிராயத்தில் பசுங்கன்றின் ஓசையை ஒத்த மா, ம்மா, அம்மா என்ற வார்த்தைகளைச் சொல்லுவதை நாம் காணலாம். இவ்வார்த்தை நாவினாலும் உதட்டினாலும் உச்சரிப்பதற்கு வெகு சுலபமான முந்திய வார்த்தையாயிருக்கிறது. இதன் பின் உதடுகளினாலும் நாவினாலும் வெகு சுலபமாய் உச்சரிக்கக்கூடிய அப்பா, அக்கா, அத்தை, மாமா, தாத்தா, பாப்பா முதலிய வார்த்தைகள் படிப்படியாய் பழக்கத்திற்கு வருகின்றன. இவ்வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனிப்போ மானால் அகாரம் என்ற முதல் எழுத்தும் அம்மா என்ற பசுங்கன்றின் ஓசையும் அக்கா என்ற பட்சியின் ஓசையும் முதல் முதல் வழங்கிவந்திருக்க வேண்டுமென்று நினைக்க இடமிருக்கிறது. 1. அம்மா என்ற தமிழ்மொழி, சமஸ்கிருதத்தில் அம்பா, அம்மா என்றும், ஹை ஜெர்மன் பாஷையில் அம்மா என்றும், ஆஸ்கன் பாஷையில் அம்மா என்றும், ஐஸ்லாண்டு பாஷையில் அம்மா - பாட்டி என்றும், ஜெர்மன் பாஷையில் அம்மே = Nurse என்றும், சாமாய்டி பாஷையில் அம்மா என்றும், ஜெனிசை பாஷையில் அம், அம்மா என்றும், எஸ்ரியன் பாஷையில் எம்மா என்றும், பினீசிய பாஷையில் எமா என்றும், சிந்து பாஷையில் அமா என்றும், மலைய பாஷையில் அம என்றும், தூலு பாஷையில் அம்மே (mother),, அப்பே (father) என்றும், மங்கோலிய பாஷையில் அமா, fatherச என்றும், திபேத்து பாஷையில் மா, மோ ஸ்திரீ என்றும், எபிரேய பாஷையில் ஏம், இம் என்றும், சிரியாக் பாஷையில் ஆமோ என்றும் வழங்கி வருகிறது. 2. அப்பா என்று சொல்லுகிற தமிழ் வார்த்தையை கவனிப்போ மானால் தெலுங்கு கன்னடங்களில் அப்பா என்றும், பூத்தான் பாஷையில் அப்பா என்றும், போத்தியா பாஷையில் அபா என்றும், எபிரேயு பாஷையில் ஆப் என்றும், கல்தேய பாஷையில் அப்பா என்றும், சீரியா பாஷையில் ஆபோ என்றும், ஆரமேக் பாஷையில் அப்பா என்றும், சிங்கள பாஷையில் அப்பா என்றும் சொல்லப்படுகிறது. 3. அக்காள் என்ற தமிழ் வார்த்தை சமஸ்கிருதத்தில் அக்கா = தாய் என்றும், கன்னடம் தெலுங்கில் அக்கா=மூத்த சகோதரி என்றும், மகாராஷ்டரத்தில் அகா என்றும், தன் கூசியன் பாஷையில் அக்கின் என்றும், மங்கோலிய பாஷையில் அக்கான் என்றும், தீபேத்து பாஷையில் அக்கே என்றும், துருக்கி பாஷையில் எகே என்றும், மார்டுவின் பாஷையில் அகி என்றும், உக்கிரியன் பாஷையில் இக்கியன் என்றும், லேப்பிஸ் பாஷையில் அக்கே=சம்சாரம் அல்லது பாட்டி என்றும், மாங்கல் பாஷையில் அகா = மூத்த சகோதரன் என்றும், ஐகர் பாஷையில் அகா=மூத்த சகோதரன் என்றும், தன் கூசியன் பாஷையில் அகி-மூத்த சகோதரனென்றும், ஓஸ்டியாக் பாஷையில் இக்கி=மூத்தவன் என்றும், பினிசிய பாஷையில் உக்கோ=மூத்தவன் என்றும், அங்கேரிய பாஷையில் அக் என்றும், வழங்கிவருகிறது. மேல்கண்ட வார்த்தைகளைக் கவனிக்கையில் கலப்பில்லாத 10 சேர் பாலில் முதல்வன் ஒரு சேர் பால் எடுத்துக்கொண்டு ஒரு சேர் தண்ணீர் விட்டுவைத்துப்போனான். இரண்டாவதாக வந்த ஒருவன் ஒருசேர் பால் எடுத்துக்கொண்டு ஒரு சேர் தண்ணீர் விட்டு வைத்துப்போனான். இப்படி பலர் எடுத்தபின் போகப்போக பால் நிறமும்மணமும் குறைந்து பச்சைத் தண்ணீர் ஆவது போல பாஷையின் வார்த்தைகளும் அடையாளம் தெரியாமல் ஆகின்றன. அம்மா என்ற தமிழ் வார்த்தை அம்மே, அம்மை, அமா, அம, அம், எமா, எம்மா, ஏம், இம், அம்பா, அப்பே என்றும் ஆமோ என்றும் மா, மோ என்றும் மாறி வருகிறது. அக்காள் என்ற தமிழ் வார்த்தை அக்கா, அக்காம், அக்கின், அக்கே, அகி, அக்கி, அகா, இக்கி, எகே, இக்கியன், உக்கோ, ஆக் என்றும் மாறி வருகிறது. அப்பா என்ற தமிழ் வார்த்தை அப்பா, அபா, ஆபோ, ஆப் என்றும் மாறி வருகிறது. 4. மேலும் கோ, கோன் என்ற தமிழ்மொழி திராவிடபாஷைகளில் வழங்குகிறJ. அதுபோலவே துருக்கி பாஷையிலும் மங்கோலிய பாஷை யிலும் கான், காகான் என்றும், ஓஸ்டியாக் பாஷையில் கோன் என்றும் சீத்தியபாஷையின் கோ என்றும் வழங்குகிறJ. 5. கொல் என்ற தமிழ்ப்பதம் ரஷியன் பாஷையில் கொல்யு என்றும், இங்கிலீஷில் கில், குவேல் என்றும், பினீசியபாஷையில் கியோல் என்றும், ழரமிஸ் பாஷையில்கோலம் என்றும், சிர்ஸானியன் பாஷையில் குலா என்றும், அங்கேரி பாஷையில் அல் என்றும், நார்வே பாஷையில் கில்லா என்றும், டச் பாஷையில் கொல்லன் என்றும், ஐஸ்லேண்ட் பாஷையில் கொல்லா என்றும் மாறி வருகிறது. கொல் என்ற தமிழ்ப்பதம் கொல்யு, கொல்லன், கொல்லா, கில், கில்லா, குலா, குவேல், கோலம், கியோல், அல் என்றும் மாறிவருவது மிகவும் விந்தையாயிருக்கிறது. 6. இப்படியே குடி என்ற தமிழ்ப்பதமானது வீடு என்று அர்த்தப் படுகையில் சமஸ் கிருதத்தில் குடி, படகுடிறம்= கீத்துக்குடிசை என்றும், குடும்பா என்றும், தெலுங்கு கன்னடங்களில் குடி = கோவில் என்றும், குடிசை = சிறு வீடு என்றும் பினீசிய பாஷையில் கோட்டா என்றும், சரமிஸ் பாஷையில் குடா என்றும், மார்டுவின் பாஷையில் குடோ என்றும் ஓஸ்டியாக் பாஷையிலும் சாக்சன் பாஷையிலும் காட் என்றும் வழங்கிவருகிறது. 7. நீர் என்ற தமிழ்மொழி சமஸ்கிருதத்தில் நீர, நீரம் என்றும், தெலுங்கில் நீரமு, நீரு, நீள்ளு என்றும், காண்டு பாஷையில் நீர் என்றும், பிராகு பாஷையில் ஈர் என்றும், கிரேக்க பாஷையில் நீரோ என்றும் வழங்கி வருகிறது. 8. மின் என்னும் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு பிறந்த மீன் என்னும் தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் மீனம், மீன் என்று வழங்குகிறJ. 9. பட்டணம், பட்டி என்ற தமிழ்ப்பதம் கன்னடத்தில் அட்டி என்றும், தெலுங்கில் பட்டி என்றும், சமஸ்கிருதத்தில் பேட்டா, பட்டம், பட்டணம், பத்தனம் என்றும் வழங்குகிறJ. 10. கடு, கடிமை, கடி என்ற தமிழ்ப்பதமானது சமஸ்கிருதத்தில் கடு, கடுகா, கடுகு என்று வழங்குகிறJ. இப்படியே தமிழ்ப் பதங்கள் பல மாறுதல்களையடைந்து உலகத்திலுள்ள முக்கியமான பாஷைகளோடு கலந்திருப்பதை நாம் யாவரும் திட்டமாகக் காண்கிறோம். வார்த்தைகளின் இனிமையையும் எழுத்துக்களின் சுருக்கத்தையும் உச்சரிப்பின் சுலபத்தையும் கவனிக்கையில், தமிழ்மொழிகளே ஆதியில் உண்டாகியிருக்க வேண்டுமென்று தெளிவாகக்காட்டுகிறது. இன்னும் நாம் கவனிப்போமானால் அட்டவணையில் கொடுத்த வார்த்தைகளைப் பார்க்கிலும் ஏராளமான வார்த்தைகள் ஒவ்வொரு பாஷையிலும் வழங்கி வருவதாகக் காண்போம். தமிழ்மொழிகள் வெவ் வேறுவித மாறுதல்களை யடைந்து மற்ற பாஷையில் வழங்குவதும் அதற்கு இலக்கணங்கள் சொல்லப் பட்டதும் போல தமிழ் மொழிகளோடு மற்ற பாஷைகள் கலவாமல் தனித்தனியாய் நிற்பதே தமிழ் கலப்புறாத தனிப்பாஷையென்று காட்டுகிறது. சமஸ்கிருதத்திற்கும் அதன் கிளைப்பாஷைகளுக்கும் இந்த ஐரோப்பிய பாஷைகளுக்கும் பொதுவான ஊற்று வரைக்கும் நாம் போய் சீத்திய பாஷையில் சேர்ந்திருக்கும் தமிழ் மொழிகளையும் எபிரேய பாஷையில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் சமஸ்கிருத பாஷையில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் இந்து ஐரோப்பிய பாஷைகளில் கலந்திருக்கும் தமிழ் மொழிகளையும் கவனிக்கையில், தமிழ்ப்பாஷை தாய்ப்பாஷையாயிருக்கலா மென்று தோன்றுகிறது. முதற் சங்கமிருந்த காலத்தையும் அதில் சங்கீத மிருந்த உயர்ந்த நிலையையும் பூர்வ தமிழ் நூல்களின் மூலமாய் நாம் அறிகையில் இது சரியாயிருக்கலாமென்று நிச்சயமாய்த் தோன்றுகிறது. இவ்வளவு பூர்வமும் மேன்மையும் பொருந்திய தமிழ்ப்பாஷையை ஆதரித்து விருத்தி செய்யவேண்டுமென்று கால்டுவெல் அத்தியக்ஷரவர்கள் சொல்லும் வசனங்களாவன:- Dravidian Comparative Grammar by Bishop Caldwell, P. 31. “The Tamil, however, the most highly cultivated ab-intra of all Dravidian idioms, can dispense with its Sanskrit altogether, if need be, and not only stand alone but flourish without its aid.” “என்றாலும், திராவிடபாஷைகள் அனைத்திலும் தமிழ் தன்னிலேயே விருத்தியடைந்து சீர்ப்படுத்தப்பட்டதாயிருப்பதினால், அவசியமானால் தன்னோடு கலந்திருக்கிற ஓம் ந ம சி வ ய என்ற ஐந்து அட்சரங்கள் சரீரத்தில் நிற்கும் விதத்தைக்காட்டும் படம். திருமூலர் திருவம்பலச் சக்கரம் 67. அஞ்சுகவஞ் செழுத்துண்மை யறிந்தபின் னெஞ்சகத்துள்ளே நிறையும் பராபரம் வஞ்சகமில்லை மனைக்கும ழிவில்லை தஞ்சமிதுவென்று சாற்றுகின் றேனே. சிவவாக்கியம் பக்கம் 3. நவ்விரண்டு காலதாய் நவின்றமவ்வு வயிறதாய்ச் யவ்விரண்டு கண்ணதாய மர்ந்திருந்த காரணஞ் சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்த வவ்வுவாயதா செவ்வியொத்துநின்றதே சிவாயமைந்தெழுத்துமே சமஸ்கிருதத்தை முற்றிலும் களைந்துபோட்டு, தனியே நிற்க மாத்திர மல்ல, சமஸ்கிருதத்தின் உதவி யெவ்வளவுமின்றித் தழைத்துச் செழித்துப் பிரகாசித்திருக்கவும் கூடும்.” தமிழ்மொழி முதற் சங்கத்தாராலும், இரண்டாஞ் சங்கத்தாராலும் யாதொரு கலப்புமின்றி பேணப்பட்டு வந்ததுபோல மூன்றாம் சங்கத்தார் காலத்தில் பல கலப்புடன் பேணப்பட்டு வந்தது. தமிழின் அருமை தெரிந்த பல பௌத்த வித்வசிரோமணிகளும் தமிழ் ஆரிய வித்வசிரோமணிகளும் இலக்கண இலக்கியங்கள் எழுதவும் வேறு சிலர் பூர்வ நூல்களுக்கு உரை யெழுதவும் ஆரம்பித்தார்கள். இதினால் பல சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலக்கவும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் உண்டானதாக எண்ணவும் சில கருத்துகள் கலக்கவும் ஏதுவாயிற்று. இருந்தாலும் முந்திய இரண்டு சங்கங்களின் இறுதியில் அழிந்துபோன தமிழ் நூல்களுக்குப் பதில் சில நூல்கள் எழுதியும் உரையெழுதியும் வைத்தார்களேயென்று சந்தோஷப்பட வேண்டியதா யிருக்கிறது. தென்னாட்டின் கலைகளில் மிகச் சிறந்த இசைத் தமிழாகிய சங்கீதத்தைப் புதைபொருளாகத் தற்காலம் எண்ணுவதுபோலவே அக்காலத்திலுள்ளவரும் எண்ணித் தங்கள் சுய பாஷையிலேயே பலபேர்கள் கொடுத்து எழுதி வைத்தார்களென்று தோன்றுகிறது. தமிழ்ப் பாஷையை நன்றாய் ஆராய்ந்து அதில் மிகுந்த தேர்ச்சியடைந்த கால்டுவெல் அத்தியக்ஷர் அவர்கள் தமிழ்ப்பாஷையில் வைத்திருக்கும் அபிமானத்தைப் போல் தமிழ்மக்கள் அபிமானம் வைத்து ஊக்கங் காட்டினால், தமிழ்ப்பாஷை பூர்வ உயர் நிலையை அடையுமென்று நம்புகிறேன். 9. தமிழ்ப்பாஷையே எல்லாப்பாஷைகளுக்கும் தாய்ப்பாஷையா யிருந்திருக்க வேண்டுமென்பதற்கு யாவரும் மறுக்கக்கூடாத முக்கிய ஆதாரம் பிரணவமந்திரம். ஓம் என்ற பிரணவ அட்சரம் பரமசிவத்தையே குறிக்குமென்றும், அதைத் தியானம் பண்ணுகிறவன் சிவத்தையே அடைகிறானென்றும், சிவமாகவே விளங்குகிறானென்றும், அவ்வெழுத்தே மூலமந்திரமா மென்றும், அம் மந்திரத்தைக்கொண்டே தாங்கள் ஆரம்பிக்கும் எதையும் தொடங்க இடை யூறின்றி முடியுமென்றும் அறிந்த தமிழ்மக்கள் அதையே தங்களுக்கு ஜெபமாகக் காலைமாலைகளில் செய்து வந்தார்களென்பது நாம் யாவரும் அறிந்த விஷயமே. பிராணாயாமம் செய்து சுவாசிக்கும் சுவாசத்தின் கால அளவை விருத்தி செய்து அதனால் ஆயுள் நீடித்திருக்கும் வல்லமைபெற்று “வாசி வாவென்று வாசியில் ஊடாடி வாசியை உள்ளே வைத்துநீ பூஜித்தால் வாசியும் ஈசனும் மருவி ஒன்றாகும் வாசியைப் போல்சித்தி மற்றொன்றும் இல்லையே.” என்ற வாக்கியத்தின்படி தெய்வப் பிரசன்னமும் பெற்று விளங்கினார்கள். தாங்கள் யோக சாதனை செய்கையில் ஓம் என்ற பிரணவ அட்சரத்தையே உச்சரித்து மாத்திரைகளின் கணக்கை நிச்சயப்படுத்திக் கொண்டு வந்தார்கள். இவ்வெழுத்தினால் குறிக்கப்படும் சிவத்தினின்று ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற பஞ்சசத்திகள் உண்டாகிற தாகவும் அச்சக்திகளின் செயல்களைப் பெறுவதற்கு ந ம சி வ ய என்ற ஐந்து அட்சரங்களை அதாவது பஞ்சாட்சரத்தை நடுவணை பிடித்துமாறி ஐந்து மந்திரங்களாக்கி ந ம சி வ ய, சி வ ய ந ம, ய ந ம சி வ, ம சி வ ய ந, வ ய ந ம சி என்ற ஐந்து மந்திரங்களிலிருந்தும் 125 என்னும் அநேக மந்திரங்களுண்டாக்கி, அவைகள் ஒவ்வொன்றிற்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச் சேர்த்து ஜெபித்து, அவ்வொவ்வொன்றிற்குமுரிய செயல் களையும் பெறுவார்களென்று விரிவாகச் சொல்லியும், மற்றவர்களுக்கு உபதேசித்தும், தாங்கள் சாதித்தும், தம்பனம், மோகனம், வசியம், மாரணம், உச்சாடனம், ஆகருடணம், வித்துவேடனம், பேதனம் என்னும் அஷ்ட கர்மசித்திகளையும் பெற்றுச் சிறந்து விளங்கினார்கள். இன்னும் இவ்வைந்து எழுத்துக்கள் நிறைந்த சிதம்பரச்சக்கரத்தைச் ஜெபிக்கவும் கோயில்களில் ஸ்தாபிக்கவும் வேண்டிய விதிகளும் முறைகளும் விரிவாய்ச்சொல்லி யிருக்கிறார்கள். இவ்வைந்து எழுத்துக்களும் பிரணவத்தின் ஐந்து சக்திக ளென்றும், இவ்வைந்து சக்திகளும் பிரணவத்தி லடக்கமென்றும், பிரணவமே பிரமமென்றும், பிரமமே பேரண்டம் சிற்றண்டமென்றும், பிரணவமே பிராணனென்றும், பிரணவமே அகார, உகார, மகாரமென்ற அட்சரங்களின் சேர்க்கையான ஓம் என்றும், சத்து, சித்து, ஆனந்தமென்றும், சிருஷ்டி திதி லயமென்னும் முத்தொழில்களாகி உலகம் நடத்தப்பட்டு வருகிறதென்றும், எட்டும் இரண்டும் பத்துமான அளவுடன் விளங்கிக்கொண்டிருக்கிறதென்றும், அகார, உகார, மகாரமான ரவி, மதி, அக்கினி என்று சொல்லப்படும் கலைகளாய் உயிர்கள் தோறும் பிராணனாய் விளங்குகிறதென்றும், இப்பிராணனே ஜீவனென்றும், ஆணவம், காமம், மாயை என்ற மும்மலமற்ற ஜீவனே சிவனென்றும், ஜீவச்செயல் ஒழிந்து சிவச்செயலில் நிற்பதே தவசென்றும், யோகமென்றும், மோட்சமென்றும் கண்டறிந்தார்கள். இதையே பல நூலாக பக்குவர்களுக்குத் தகுந்தவிதம் எழுதிவைத்தார்கள். இவ்வெழுத்துக்களின் பெருமையையும் செயல்களையும் அவர்கள் எழுதிய யோக நூல்களிலும் ஞான நூல்களிலும் மிக விரிவாகக் காணலாம். ஓம் நமசிவய என்ற எழுத்துக்களை நாம் கவனிப்போமானால் மூலா தாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் சரீரத்தின் ஆறு ஆதாரங்களிலுள்ள எழுத்துக்களாகச் சொல்லப்படுகிறதை அறிவோம். இவ்வாறு எழுத்துக்களும் நிற்கும் வரிசையை நாம் கவனிப் போமானால், கீழ்முக நோக்கிய மூலாதாரத்திலிருந்து மேல்முக நோக்கிய மூலமாகிய ஆக்கினா ஸ்தானம் வரையும் மேல்நோக்கிச் செல்வதாக அறிவோம். மேல் மூலத்தில் யகார அட்சரத்தில் விளங்கும் ஓங்காரம் சிரசையும் கீழ்மூலத்தில் விளங்கும் ஓங்காரம் மர்ம ஸ்தானத்தையும் குறிக்கும். இவ்விரண்டு இடங்களிலும் அங்கத்தின் கூறுபாடுகளை நாம் கவனிப்போமானால், ஓம் என்ற அட்சரத்தின் வடிவமும் ஒரு யானைத் தலையின் வடிவமும் ஒரு தவளைக்குஞ்சாகிய அரைத்தவளையின் வடிவமும் ஒத்திருக்கு மென்பதை நாம் அறியலாம். வலது கண்ணில் சுழித்து வட்டம் வீசி, இடது கண்ணில் சுழித்து வட்டத்தை இருகூறாகப் பிரிக்கக் கால் இழுத்து, கடையில் சுழித்த ரகசியத்தைத் தன்னையறிந்த மகான்கள் உணர்வார்கள். அகார உகாரமுமாய் இரண்டும் மகாரமான மகிமையை மற்றவர் அறியாமையினால் அவர்களுக்கு மந்திரமாக்கினார். மந்திரமாய் விளங்கும் இவ்வட்சரம் நேத்திரமான இரு சுழிகளாகவும் மூளையின் இருபாகமாகவும் மூளையினின்று புறப்பட்ட வாசியின் காலாகவும் சகல சித்துமாகவும் விளங்கி நின்றதுபோலவே, கீழ்மூலத்திலும் ஜீவர்கள் உற்பத்தியாகும் ஜனனேந்திரிய அவயவங்களாக ஓங்காரமாய் விளங்கி நிற்கிறJ. இது மாத்திரமா? இவ்விரு இடங்களிலும் ஒங்காரத்தை ஒத்திருந்த இந்தச் சரீரமானது ஆதி நாதத்தில் விருத்த வடிவமுள்ள தலையும் ஒடுங்கிச் சிறுத்தவாலுமுள்ள ஓங்காரத்தை ஒத்திருக்கும் ஒரு சிறு அரைத்தவளைக் குஞ்சுபோல இருந்ததென்று கற்றுணர்ந்தோர் சொல்வார்கள். இம்முதல் வடிவத்தையும் கீழ்மேல் மூலங்களில் விளங்கும் அதன் சொரூபத்தையும் குறிக்கும் ஓங்காரத்தை மூலமந்திர அட்சரமாக்கினார்கள். இவ்வட்சரத்தின் மகிமையை உள்முகமாக அறிவதற்குத் தன்னை அறிதலென்றும், தன்னை அறிதலே தலைவனைக் காண வழியாகுமென்றும் சொன்னார்கள். தன்னை அறிவதற்காக தூல சரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்களையும் சூட்சும சரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்களையும் மிக விரிவாகக் கூறியிருக்கிறார்கள். வேதாந்த சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ஓம் என்ற அட்சரம் தமிழுக்கே உரியJ. தமிழ் அட்சரத்திலேயே தூல அட்சரத்தின் வடிவம் தோன்றுகிறது. மந்திரங்களுக்கு முதன்மையான ஓம் என்ற பிரணவ மந்திரம், அ + உ + ம் = ஓம் என்று முடிந்த விதத்தையும் ஓசையையும் தூல வடிவையும் உள்ளது உள்ளபடியே காட்டிக் கொண்டு நிற்கிறJ. இச்சூட்சம அட்சரத்தை வேறு எந்தப் பாஷை எழுத்தும் உள்ளது உள்ளபடி உட்பொருளை விளக்கி நிற்கக் காணோம். ஓம் என்ற மந்திரத்தை மிகப் பிரதானமாகக் கொண்டு தங்கள் இகபர வாழ்விற்கு இதுவே ஆதியென்று அனுஷ்டித்துவரும் ஆரியர், தாங்கள் முத்திரையாய் வழங்கும் இவ்வெழுத்திற்கு தமிழ் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தைப்போடுவார்? வேறு எழுத்துப் போட்டால் உட்பொருளைக்குறிக்குமா? குறியாத அந்நிய எழுத்தைப்போட்டு ஜெபிக்கலாமா? 10. பஞ்சாட்சரங்களின் சேர்க்கையாலே தூலவடிவம் தோன்றுகிறது. ந ம சி வ ய என்ற ஐந்து அட்சரங்களினால் குறிக்கப்படும் ஐந்து ஸ்தானங்களிலும் முறையே பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்ற ஐந்து பூதங்களும் பிர்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற பஞ்சகர்த்தாக்களும் பஞ்ச வர்ணங்களும் நாலு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, மூன்று அட்சரங்களுமான 51 அட்சரங்களும் இவ்வட்சரங்களினால் குறிக்கப்படும் பிதுர், தேவர், தேவதைகள் சக்திகளும் விளங்கி நின்று ஓர் உடலாய் ஓர் ஜீவனாய்த் தெய்வபதியாய்த் தெய்வ வாகனமாய் தெய்வ ஆலயமாய் விளங்குகிறதென்று மிக விஸ்தாரமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார்கள். “ஐம்ப தெழுத்தே அமர்ந்த வேதங்கள் ஐம்ப தெழுத்தே ஆகமம் ஆதிகள் ஐம்ப தெழுத்தின் அறிவை அறிந்தபின் ஐம்ப தெழுத்தே ஐந்தெழுத்தாமே.” என்ற திருமூலர் திருமந்திரத்தின்படி தெய்வச் செயல்கள் அத்தனையும் ஐந்து அட்சரங்களால் குறிக்கப்படும் ஐந்து ஸ்தானங்களிலும் ஐந்து கர்த்தாக்களா கவும் சக்திகளாகவுமம் பெற்று தெய்வபதம் அடைந்தார்கள். அதன் மேன்மை யையறிந்த பெரியோர்கள் தீமைக்கு விலகி நன்மை செய்வதையே ஜீவர் களுக்குக் கற்பிக்கவும் தன்னைப் போல் பிறனை நேசிக்கும் ஜீவகாருண்ய மாகிய நிர்விகற்ப சமாதியில் நின்று முத்திநெறி கூடவும் வேண்டிய சாதனங்களையும் விதிகளையும் வேதமாக எழுதி வைத்தார்கள். வேதத்தின் திறவுகோலாகிய மௌனாட்சரத்தின் மகிமையை அனுஷ்டித்தவரே அறிவார். பிரணவ அட்சரத்தின் உடலாகிய பஞ்சாட்சரங்களின் வடிவத்தைக் கவனிப்போமானால், நகாரம் என்ற முதல் எழுத்து இடம் வலமாக மாறி சுவாதிஷ்டான சக்கரத்தில் எழுத அதுவே இரண்டு கால்களாகவும், இரண்டாவது எழுத்தாகிய மகாரத்தை இடம் வலமாக இணைத்து மணி பூரகத்தில் அடைக்க அது வயிறாகவும், சிகாரமாகிய மூன்றாவது எழுத்தை இடம் வலம் இணைத்து அநாகதச் சக்கரத்தில் எழுத இரண்டு கைகளாகவும் இரத்தாசயமாகவும், விசுத்தி ஸ்தானத்தில் முன்போல் நாலாவது எழுத்தாகிய வகாரத்தையெழுத சுவாசாசயமாகவும் கழுத்தாகவும், ஆக்கினா ஸ்தானத்தில் யகாரம் எழுத அது ஓங்காரமாகவும் விளங்கி, ஒரு மனுட சரீரத்தின் அமைப்பையும் அங்கங்களையும் காட்டிக் கொண்டிருக்கும். ஆதிஸ்தான மாகிய மேல் முக்கோணத்தில் விளங்கும் ஓங்கார வடிவம் சிரசையும் கீழ்முகம் நோக்கிய முக்கோணமாய் விளங்கும் மூலாதாரத்தில் ஓங்கார வடிவம் பிரஜாபதியையும் குறிக்கும். பிரஜைகள் உற்பத்திக்குக் காரணமாகிய மூலாதாரத்தில் உட்பொருளாய் விளங்கும் கருவும் ஓங்கார சொரூபமாய் நிற்கும். இப்படித் தூல சூட்சம காரணம் என்னும் மூன்று வழியிலும்விளங்கி நிற்கும் ஓம் என்ற அட்சரமும் அது விளங்கி நிற்கும் தூல சரீரமும் நமசிவய என்ற ஐந்து அட்சரங்களினாலாகிய சரீரத்தில் முக்கியமாக விளங்கி நிற்கிறJ. தூல சரீரத்தின் ஆறு ஆதாரச்சக்கரங்களையும் எழுதி அவைகளில் அட்சரங்கள் பொருந்தி வடிவுண்டாகும் விதத்தையும் நாம் பூர்வ தமிழ் நூல்களில் தெளிவாகக் காண்போம். ந ம சி வ ய என்ற இவ்வைந்து அட்சரங்களின் வடிவைப்போலலொத்த எழுத்துக்கள் மற்றும் பாஷைகளிலில்லை யென்பது நிச்சயம். மந்திரங்களில் முதன்மைபெற்ற இம்மந்திரமும் மந்திரத்தின் உட்பொருள்களைக் குறிக்கும் அட்சரமும் தமிழ் பாஷைக்கேயுரியவை. மற்றவர் ஜெபித்தாலும் ஜெபித்த மந்திரத்தின் உட்பொருள் காட்டும் அட்சரங்கள் இல்லாது போனாரென்பது நிச்சயம். இதுபற்றியே, தமிழ்ப்பாஷை மிகப்பூர்வமாயுள்ளதென்று நாம் துணிந்து சொல்லலாம். 11. ஒன்றிலிருந்தே உலக முண்டானதுபோல் தமிழிலுள்ள க,ச,ட,த,ப என்ற எழுத்துக்களிலிருந்தே மற்ற நாலு எழுத்துக்கள் வந்தன. ஆதியில் ஒன்றாகவும் அதன் பின்பே இரண்டு மூன்றாகவும் விருத்திக்கு வருவது உலக இயற்கை. ஒன்றாயிருந்த முதல் வஸ்துவி லிருந்தே சகலமும் உண்டாயிற்று. ஒரு பாஷையில் வழங்கிவரும் பல ஓசைகளுடைய இனவெழுத்துக்களை ஒன்றாகச் செய்வது மனுட இயற்கை யல்லவே. ஒன்றிலிருந்து பல நூதனங்களுண்டாக்குவதே இயல்பு. இவ் வுண்மைக்கேற்ப, க,ச,ட,த,ப என்ற ஆதி ஓசைகளிலிருந்து ஒவ்வொன்றிற்கு நந்நான்கு எழுத்துக்கள் வீதம் விருத்தியாவது இயல்பே. மனதில் எண்ணும் கருத்துக்கள் யாவையும் சொல்வதற்கு அனுகூலமாக இவ்வெழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதைப்பற்றி மிகவும் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. மற்றும் சமஸ்கிருத எழுத்தைப்பற்றிச் சொல்ல இங்கு அவசியமில்லையாதலால் விடப்பட்டJ. இவ்வெழுத்துக்களில் சில தமிழிலும் வழங்குவதற்கு இலக்கணமும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகை யினால் தமிழ்ப் பாஷையும் அதன் எழுத்துக்களும் மிகுந்த பூர்வமானவை யென்றும், தமிழ்ப்பாஷை யாதோடும் கலப்புறாத தனிப்பாஷை யென்றும் அதன் பின்னே மற்றப் பாஷைகளுண்டா யிருக்கவேண்டுமென்றும் தோன்றுகிறது. தமிழ் என்ற பதத்தில் வழங்கும் ழ என்ற சிறப்பெழுத்து மற்ற எந்தப் பாஷைக்காரரும் தங்கள் பாஷையின் எழுத்துக்களினால் எழுதி உச்சரிக்கக் கூடாத மேம்பாடுடைய தென்பதையும் மறந்துபோகக்கூடாJ. மிகத் தொன்மையும் தனிமையுமான இப்பாஷை மிகப்பூர்வீகமான தென்மதுரையில் அரசாண்டுகொண்டிருந்த பாண்டிய ராஜாக்களினால் ஆதரிக்கப்பட்டும் அக்கிராசனம் பெற்றும் மிகவும் உன்னத நிலையிலிருந்தJ. ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோன 49 தமிழ்நாடுகளிலுமிருந்த சிறந்த வித்வான்கள் யாவரும் ஒரு சங்கமாகச் சேர்க்கப்பட்டு அரிய பெரிய விஷயங்களை விசாரித்தும் சிறந்த நூல்களை அரங்கேற்றியும் வந்தார்கள். 12. தென்னிந்தியாவின் தென்பக்கத்திலுள்ள தென்மதுரையும், தென்மதுரை அழிந்தபின் தென்னிந்தியாவும் சங்கீதத்தில் மிகப் பூர்வமுடையவை யென்பJ. இதன் முன்னுள்ள எல்லாவற்றையும் நாம் கவனிக்கையில், தென்னிந்தி யாவின் தென்பாகத்தில் இந்துமகா சமுத்திரத்தில் விசாலித்திருந்த லெமூரியா என்னும் கண்டம் ஒன்றிருந்ததென்றும், அதுவே ஜாதிகள் யாவும் பிறந்து வளர்ந்த தொட்டிலாயிருந்த தென்றும், அவ்விடத்துள்ளோர் அக்கண்டம் அழிந்தபின் அதைச்சுற்றியுள்ள தீவுகளிலும் நாடுகளிலும் குடியேறினார்க ளென்றும் தெரிகிறது. அவ்விடத்திலுள்ள மரங்கள் மிருகங்கள் மனிதர்களைக் கொண்டும், சுற்றிடங்களிலகப்படும் மனித எலும்புகள் பிராணிகளின் எலும்புகளைக் கொண்டும், பாஷைகளில் கலந்திருக்கும் வார்த்தைகளைக் கொண்டும், பூர்வகாலத்தில் அவர்கள் வெகு நாகரீகமுடையவர் களாயிருந்தார் களென்றும், அவர்கள் தமிழ்ப்பாஷையையே பேசினார்களென்றும் நீண்ட ஆயுளுள்ளவர்களாயும் பலசாலிகளாயு மிருந்தார்களென்றும் காணப்படுகிறது. இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழ்நாடு அழிந்தபின், அதன் சமீபத்திலுள்ள தென்னிந்தியாவில் அங்கிருந் தோர் அனேகர் தப்பி அடைக்கலம் புகுந்திருக்கலாமென்றும், அது தமிழ்நாட்டின் ஒரு பாகமாயிருந்ததனால், இயல் இசை நாடகமென்னும் முத் தமிழுக்குரிய சில அம்சங்களும் ஒருவாறு அந்நாட்டில் வழங்கிவந்தன வென்றும் நாம் நினைக்கவேண்டும். அதனாலேயே வெகு பூர்வந்தொட்டுத் தென்னிந்தியாவின் சங்கீதம் சாஸ்திர முறைமையுடையதென்று யாவராலும் கொண்டாடப்பட்டு வந்தது. வாழையடி வாழையாய் வம்சபரம்பரையாய்க் கோயில் சம்பளங்களினால் ஆதரிக்கப்பட்டு வந்த நடனமாதர்களும், அவர்கள் அண்ணாவிகளும், நாகசுரக்காரர்களும், தவுல்காரர்களும், ஓச்சர்களும், புல்லாங் குழல் வாசிப்பவர்களும், வீணை வாசிப்பவர்களும், சங்கீத சாஸ்திரத்தைப் பேணி நாளதுவரையும் படித்துவருகிறார்கள். இவர்களினின்றே தென்னிந்திய சங்கீதத்தை மற்றவர் கற்றுக்கொண்டாரென்றும், கற்றுக்கொள்ளுகிறார்க ளென்றும் பிரத்தியட்சமாய் அறியலாம். வீணை வாசிப்பதிலும், வாய்ப்பாட்டுப் பாடுவதிலும் தேர்ந்த வித்வான்களுக்கும் பாடம் சொல்லக்கூடிய நாகசுரக்காரர்கள் இன்றைக்கும் இருக்கிறார்களென்பதை நாம் காணலாம். ஆகவே சங்கீதத்தைத் தங்கள் ஜீவனமாகக் கொண்ட ஒரு வகுப்பாரால் பரதம், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், நாகசுரம், மேளம் முதலிய சங்கீத அம்சங்கள் முக்கியமாய்ப் பேணப்பட்டும் மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டும் வந்திருக்கிறதென்று நாம் எண்ண இடமிருக்கிறது. வடபாஷையில் தேர்ந்த வித்வான்கள் ஏராளமாயிருக்கும் வடநாட்டில், தென்னாட்டின் சங்கீதம்போல் சிறந்த சங்கீதமில்லையென்று நாம் காண்பதே, சங்கீத சாஸ்திரம் ஆதியில் தமிழிலேயே யிருந்ததென்பதற்கும், தென்னாட்டிலேயே வழங்கிவந்ததென்பதற்கும் தென்னாட்டிற்கு வந்தபின்பே ஆரியர் அதில் தேர்ந்தவர்களானார் களென்பதற்கும் தெளிவான அத்தாட்சியாகிறJ. மேன்மையுடையதாகிய தென்னிந்திய சங்கீத முறைமையை 4,440 வருஷங்களாகவிருந்த முதற் சங்கத்தாரும் ராஜர்களும் பிரபுக்களும் வித்வான்களும் ஆதரித்து அருமையான நூல்கள் எழுதி மிகவும் விருத்தி நிலைக்குக் கொண்டுவந்திருந்தார்களென்பதை நாம் விசாரித்தறிந்தால், இந்தியாவின் சங்கீதம் மிகப் பூர்வமாயுள்ளதென்பது நமக்கு விளங்கும். ஆகையினால் தென்மதுரையிலிருந்த முதல் சங்கத்தையும் கபாடபுரத்தி லிருந்த இடைச்சங்கத்தையும் உத்தர மதுரையிலிருந்த மூன்றாவது சங்கத்தையும் பற்றிச் சொல்லும் சில காரியங்களைப் பார்ப்போம். 13. தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தரமதுரையிலுமிருந்த மூன்று சங்கங்களைப்பற்றிய சில முக்கிய குறிப்புகள். இத்தமிழ்மொழியை விருத்தி செய்துவந்த முச்சங்கங்களுள் முதற்சங்கம் முதல் ஊழியின் இறுதியிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இம் முதற்சங்கமிருந்த காலத்தையும் அதில் வழங்கிய நூல்களையும்பற்றி அறிவதே நமக்கு அவசியமாம். இற்றைக்குச் சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னுள்ள ஒரு கல்விச்சபையையும் அதில் வழங்கி வந்த நூல்களையும் அந்நூல்களுள் சங்கீதத்தின் பெருமையையும் அறிவதே நமக்கு முக்கியம். ஆகையால் கடல் கொண்ட தென்மதுரையிலிருந்த முதற்சங்கத்தைப்பற்றியும், கடலால் அழிக்கப்பட்ட கபாடபுரத்திலிருந்த இரண்டாம் சங்கத்தைப்பற்றியும், உத்தர மதுரையென்ற தற்கால மதுரையிருந்த மூன்றாம் சங்கத்தைப்பற்றியும் கல்விமான்கள் கூறும் சில ஆதாரங்களைச் சற்றுக் கவனிப்போம். இற்றைக்குச் சுமார் 1,800 வருஷங்களுக்கு முன் சேரநாட்டில் அரசாண்ட செங்குட்டுவன் என்பவருடைய தம்பி இளங்கோவடிகள் ‘சிலப்பதிகாரம்’ என்னும் ஒருநூல் எழுதியிருக்கிறார். அதில் அக்காலத்திலுள்ள ராஜ்யங்களின் பெருமை, ராஜாக்களின்தன்மை, அரசாட்சி முதலியவைகள் தெளிவாக விளங்குகின்றன. கதாநாயகனாகிய கோவலனையும் அவன் காதலித்த நடனக் கணிகையாகிய மாதவியையும் பற்றிச்சொல்லுமிடத்து, இவ்விருவரும் வீணை வாசிப்பதில் மிகவும் பாண்டித்தியமுடையவர்களாயிருந்தார்களென்றும் மாதவி பரதத்திலும் மிகத் தேர்ந்தவளாயிருந்தாளென்றும் கூறிப் பரதத்தின் சில முக்கிய அம்சங்களையும் சிறப்பாக எடுத்துச்சொல்லுகிறார். அதற்கு உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் காலத்தில் கேள்வியிலும் அரைகுறையாயிருந்த நூல்களிலுமிருந்து சங்கீதத்தைப்பற்றி எழுதிய உரைகளில் சில முக்கியமான அம்சங்கள் வெளியாகின்றன. இந்நூலை வெளிப்படுத்திய மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதஐயர் அவர்களால் எழுதப்பட்ட சில குறிப்புகளை இங்கே பார்ப்போம். சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் வரலாறு, “இளங்கோவடிகள் காலம் கடைச்சங்கப் புலவர் காலமென்று நிச்சயிக்கப் படுகிறJ. அக்கடைச்சங்கப்புலவருட் சிறந்தவரும் மதுரைக் கணக்காயனார் மகனாருமாகிய நக்கீரனார் இறையனாரகப் பொருளுக்குத் தாம் இயற்றியவுரையில் இந்நூலிற் கானல் வரியிலுள்ள “நிணங்கொள்,” “துறைமேய் வலம்புரி” “நேர்ந்தநங்காதலர்” “புணர்துணை” என்னும் பாடல்களை யெடுத்து உதாரணமாகக் காட்டியிருப்பதுங் காண்க. இளங்கோவடிகளுக்குத் தமையனாகிய செங்குட்டுவன் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியார்க்குக் கோயில் சமைத்து விழாக்கொண்டாடிய காலத்து இலங்கை யரசனாகிய கயவாகுவென்பவன் உடனிருந்தானென்று வரந்தருகாதையாலும், அக் கயவாகுவும் இலங்கையிற் கண்ணகியார்க்குக் கோயில் கட்டுவித்து விழாக்கொண்டாடினானென்று இந்நூற்பதிகத்தைச் சார்ந்த உரைபெறு கட்டுரையாலுந் தெரிகின்றன. இற்றைக்குச் சற்றேறக்குறைய 1,760 வருடங்களுக்கு முன்பு கயவாகுவென்னு மரசனொருவன் இருந்தானென்று இலங்கைச் சரித்திரத்தாற் (மகாவம்சம்) புலப்படுகின்றJ. பின்னும் சற்றேறக் குறைய 760 வருடங்களுக்கு முன்பு கயவாகு வென்னும் மற்றோர் ராஜனிருந்ததாகவும் அச்சரித்திரத்தால் தெரியவருகின்றJ. ஆயினும், இந்நூலிற் கூறிய வேறு சில அரசர்களுடைய காலத்தை ஆராயும்போது இந் நூலாசிரியர் காலம் இரண்டாங்கயவாகுவின் காலத்திற்கு முந்தியதாகத் தெரிகின்றமையின், இவர்காலம் முதற்கயவாகுவின் காலமென்றே துணியப்படுகின்றJ.” இவ்வசனங்களில் மகாவம்சம் என்ற இலங்கைச் சரித்திரத்தால் கயவாகுவின் காலமும் அக்காலத்திலிருந்த இளங்கோவடிகளின் காலமும் கடைச்சங்கத்தின் புலவருள் ஒருவராகிய நக்கீரனார் காலமும் ஒன்றென்று நினைக்க இடமிருக்கிறது. கயவாகுவின் காலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1,800 வருஷங்களாகும். மேலும் கூலவாணிகன் சாத்தனாரால் செய்யப்பட்டமணி மேகலையென்னும் நூலை நச்சினார்க்கினியனார் சிறப்பித்துச் சொல்லுவதைக் கவனிக்கும்பொழுது கூலவாணிகன் சாத்தனார் காலமும் இளங்கோவடிகள் காலமும் ஒன்றென்று கொள்ள இடமிருக்கிறது. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய நக்கீரனாருடைய காலத்திற்குப் பிந்தினதாயிருக்கவேண்டுமென்று ஊகிக்க இடமிருக்கிறது. மேற்கண்டபடி 1,800 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட நூலில், ஜலப் பிரளயத்தில் அழிந்துபோன தென்மதுரையிலிருந்த முதற் சங்கத்தைப் பற்றியும் இரண்டாவது சங்கமிருந்த கபாடபுரத்தைப் பற்றியும் மிகவும் தெளிவாக எழுதுகிறார். 14. முதற் சங்கமும் தென் மதுரையைச் சேர்ந்த 49 நாடுகளும் கடலால் அழிந்ததைப்பற்றி. சிலப்பதிகாரம், வேனிற்காதையுரை. “நெடியோன் குன்றம்-வேங்கடமலை. தொடியோள்-பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமு மென்றது என்னை யெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையு முள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீயினார். காய்சின வழுதிமுதற் கடுங்கோனீறாயுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர் மலிவானென மலிந்த ஏழ் தெங்கநாடும் ஏழ் மதுரைநாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகாரை நாடும் ஏழ் குறும்பனைநாடுமென்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றாரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், ‘வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள’ என்பதனாலும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும் உரையாசிரியராகிய இளம்பூரண வடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும். அஃது அற்றாக, வடக்கின்கண் வேங்கடமலை தெற்கின்கட் குமரிக்கடலெனக் குறியாற் கூறினவர் கீழ்பான் மேல்பாற்கு எல்லை கூறாதது என்னையோ வெனில், நெடுந்திசையாகிய வடபாற்கெல்லை குன்றமென்றும் தென்பாற் கெல்லை குமரிப் பௌவமென்றும் கூறினமையான் ஒழிந்த திசைகட்கு ஒழிந்த பௌவம் எல்லை என்பதாயிற்று; என்னை? ‘வேங்கடங்குமரி தீம்புனற் பௌவமென் றிந்நான்கெல்லை தமிழது வழக்கே’ என்றார் சிகண்டியாரு மாகலின். அன்றியும் வட திசைக்கண் வடுகொழிந்த திரிபுடை மொழி பலவுளவாகலான், மலையெல்லை கூறி ஒழிந்த திசை மூன்றிற்கும் திரிபின்மையாற் கடலெல்லை கூறினாரெனினுமமையும்.” இவ்வுரையால் தென்னிந்தியாவின் தென்பாகத்திலுள்ள குமரி நாட்டிற்குக் குமரியாறு வடவெல்லையா யிருந்ததென்றும் குமரிநாடு வரை 49 நாடுகளும் கடலால் அழிந்துபோயின வென்றும் பார்த்தோம். அவ்வழிந்து போன 49 நாடுகளைப்பற்றிய சில விஷயங்களை இதன் பின்வரும் வசனங்களில் காணலாம். 15. முதல் ஊழியில் 49 தமிழ் நாடுகளைப்பற்றிய சில விபரம். தமிழ்மொழியின் வரலாறு, “புறநானூற்றிற் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் ‘பஃறுளியாறு’ வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப்பட்டுளது; சின்னாண் முன்னர் வெளிப்பட்ட ‘செங்கோன்றரைச் செலவு’ என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடியார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ் தெங்காடு முதலிய நாடுகளைச் சார்ந்து ‘பெருவளநாடு’ முதலிய பிறநாடுகளும், ‘மணிமலை’ முதலிய சில மலைகளும், ‘முத்தூர்’ முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், ‘பெருநூல்’, ‘இயனூல்’ எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் காலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவளநாட் டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது, “செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான் துங்கன் றமிழ்த்தாப் புலித்தொடரா-லங்கிசைத்தான் சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி யக்கரக்கோ நாமஞ்சு வாம்” என்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்கநாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றJ. இவையனைத்தையும் உற்றுநோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்று கிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கடல் கொள்ளப்பட்டன வென்பது புலனாம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழுநூறு காவதமும் ஏழாயிர மைலெல்லையளவாம். ‘இந்துமகா சமுத்திரம்’ இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளJ. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுமுடையதென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறுலக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி ‘மோரீசுத்தீவு’க்கும் ‘பம்பாய்’ நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத் தைந்நூறுமைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள ‘கெர்கியூலன்’ என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள ‘குமரிமுனை’ யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் ‘மடகாசிகர்தீவு’ முதற் ‘சுமாத்திரா’, ‘ஜாவா’ முதலியவற்றை யுள்ளடக்கிய ‘சந்தாத் தீவுகள்’ அளவும் விரிந்து கிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும். இக்குமரிநாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையிலும் மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் ‘லெமூரியா’ என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒருகாலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்துபோயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழங்கியது தமிழ்ப்பாஷையா மென்றும், பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினர் மேற்புல விஞ்ஞானி களுளொருவர்.” இப்படிப் பழமையான நாட்டிற்குத் தலைநகரம் தென்மதுரையென்றும், அவ்விடத்திலுள்ளோர் தமிழ்ப் பாஷையையே பேசி வந்தார்களென்றும், 549 சங்கப்புலவர்களிருந்தார்களென்றும், தமிழ்ப் பாஷையிற் சிறந்த 4,449 வித்வான்கள் வருஷந்தோறும் ஒவ்வொருவராக 4,440 வருஷங்கள்வரை தமிழ்ச் சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்களென்றும், அதுபோலவே இடைச் சங்கமும் கடைச்சங்கமும் தொடர்ந்து நடந்து வந்தனவென்றும் பின்வரும் வசனங்களால் காணலாம். 16. முச்சங்கமிருந்த காலமும், அவைகளிலிருந்த புலவர்களும், இராஜாக்களும், அரங்கேற்றிய நூல்களும். தமிழ்மொழியின் வரலாறு, 1. முதற்சங்கம். “இம் முச்சங்கங்களையும் பற்றி ‘இறையனாரகப்பொருளுரை’ யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப் பழமையான சரிதம். அதன் கண்ணே, தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்பJ. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ ‘பரிபாட’லும் ‘முதுநாரை’யும் ‘முதுகுருகு’ங் ‘களரியாவிரை’யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் ‘அகத்தியம்’ என்ப எனத் தலைச்சங்கத்தைப் பற்றியும், 2. இடைச்சங்கம் இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழிமோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்ட ரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்ட ‘கலியு’ம் ‘குருகு’ம் ‘வெண்டாளி’யும் வியாழமாலையகவலு மென இத்தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் ‘அகத்திய’மும் ‘தொல் காப்பிய’மும், ‘மாபுராண’மும் ‘இசை நுணுக்க’ மும் ‘பூதபுராண’ முமென இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது என இடைச்சங்கத்தைப்பற்றியும் பல கூறப்பட்டுள. இக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும், இடைச் சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன்றறுபத்து மூன்றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்களிரண்டும் நீடித்த காலம் நடந்து வந்திருக்கவேண்டுமென்பதிலும் பலநூல்களியற்றப் பட்டனவென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தனரென்பதிலும், சங்கமிரண்டும் முறையேயிருந்த மதுரையுங் கபாட புரமுங் கடல் கொள்ளப்பட்டன வென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்துபட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லையென்னலாம். மற்றுப் பாண்டிய ராசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்து மூன்றாண்டு மாக ஆண்டு வந்தனரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஒரே தொடர்ச்சி யாக ஆண்டுவந்தன ரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுகளும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ? இடைச்சங்கமிருந்த மூவாயிரத்தெழுநூற்றியாண்டில் இடை யீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ? இவற்றிற்கும் ஒருவாறு உத்தேச வகையால் தக்க கணக்கிட்டுக் கொள்ளின் மேற்கூறிய பாண்டியர் எண்பத் தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத் தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகு மென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர். 3. கடைச்சங்கம் களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறை யாளராகிய நீலகண்டனார் “கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரு மென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப, அவர்களாற் பாடப்பட்டன ‘நெடுந்தொகைநானூறு’ம் ‘குறுந்தொகை நானூறு’ம் ‘நற்றிணைநானூறு’ம் ‘ஐங்குறுநூறு’ம் ‘பதிற்றுப்பத்து’ம் ‘நூற்றைம்பதுகலியு’ம் ‘எழுபதுபரிபாடலு’ம் ‘கூத்து’ம் ‘வரி’யும் ‘பேரிசை’யும் ‘சிற்றிசை’யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் ‘அகத்திய’முந் ‘தொல்காப்பிய’முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூhற்றைம் பதிற்றியாண் டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ‘உத்தரமதுரை’ யென்ப. அவருட்கவியரங் கேறினார் மூவர் பாண்டியரென்ப” என்று கடைச்சங்கத்தைப் பற்றிக் கூறாநின்றனர்.” [இதோடு கடைச்சங்கக் காலத்தின் இறுதியில் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றிய காலத்திலிருந்த சங்கப்புலவர்கள் சாற்றுக்கவி கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு மூன்றாவது சங்கத்தின் கடைசியி லிருந்த வித்வசிரோமணிகளின் பெயர்கள் சில தெரியவருகிறது. அவையாவன:- மேற்கண்ட வித்வசிரோமணிகள் தமிழில் வைத்த அபிமானத்தை அவர்கள் சொல்லிய பாக்களினால் தெளிவாய் அறியலாம்.] தமிழ் மொழியின் வரலாறு “இக்கூற்றை யாராயுமிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலம் இடையீடு பட்டுக் கழிந்த காலத்தோடுங்கூடி ஆயிரத் தொண்ணூற் றைம்பதிற்றி யாண்டாகின்றJ. பாண்டியரொவ்வொரு வரும் (இடையீட்டுக் காலத்தொடுங்கூட்டி) முப்பத்தெட்டாண்டுகள் அரசாட்சி செய்தவராகின்றனர். இது நம்புதற்பாற்றே. இனித்தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும் இடைச்சங்கமிருந்த மூவாயிரத்தெழுநூறு வருஷங்களும் கடைச்சங்கமிருந்த ஆயிரத் தொண்ணூற்றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கி.பி. நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி.மு. ஒன்பதினாயிரத் தொண்ணூற்றுத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சி கூறிவந்த விடத்து, கி.மு. 8,000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள வென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச்சங்கமேற்பட்டு விட்டதென்றல் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு. * * * * * இவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னும் கண்டு பிடிக்கப்படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘அகத்தியம்’ என்ற நூலின் கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலும், கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட ‘எட்டுத்தொகை’ என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் ‘பத்துப்பாட்டு’ம், ‘பதினெண்கீழ்க்கணக்கு’ மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க: “நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை.” இவ்வெட்டுத் தொகையுட் ‘கலித்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு’ என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்துள. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னையதொன்றும் புறப்பொருளுங் கூறுவனவாம்.” மேற்கண்ட சில குறிப்புக்களினால் சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கடைச்சங்கப்புலவர் காலமிருந்தாரென்றும், அது இற்றைக்கு 1,800 வருஷங்களுக்குமுன் இலங்கையின் அரசனாகிய கயவாகுவின் காலமென்றும் விளங்குகிறJ. இறையனாரகப்பொருளுக்கு உரை எழுதிய நக்கீரனார் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் சிலவரிகளை மேற்கோளாக எடுத்தாளுகிறார் என்பதைக்கொண்டும், நக்கீரனார் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர் என்பதைக் கொண்டும், இவர்காலமும் கடைச்சங்க காலமென்று திட்டமாய்த் தெரிகிறது. இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் உரையில், முதல் ஊழியின் இறுதியின்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இருந்ததென்றும், அதில் வருஷம் ஒவ்வொருவராக 4,449 வித்வ சிரோமணிகள் சங்கத்திற்குத் தலைமை வகித்தார்களென்றும், காய்சின வழுதிமுதல் கடுங்கோனீறாகவுள்ள 89 பாண்டிய ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்தார்களென்றும், அவர்களுள் 7 பாண்டியர்கள் கவியரங்கேறித் தலைமை வகித்தார்களென்றும் தெளிவாக அறிகிறோம். அவருள் ஒருவனான சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் தொல்காப்பியம் என்னும் சிறந்த நூல் எழுதப்பட்டJ. இவர்காலத்தில் அவன் அரசாண்டுகொண்டிருந்த தென்மதுரையும் அதைச்சேர்ந்த 49 நாடுகளும் கடலால் அழிக்கப்பட்டன. புறநானூற்றில் கடல்கொண்ட தென்னாட்டில் பஃறுளி என்னும் ஆறுவடிம்பலம்ப நின்ற பாண்டியனால் வெட்டப்பட்டதென்று சொல்லப்படுகிறது. செங்கோன்றரைச் செலவு என்றதோர் சிறு நூலினால் முதல் ஊழியிலிருந்த சில நாடுகளின் பெயரும் மலைகளின் பெயரும் ஊர்களின் பெயரும் சில புலவர்களின் பெயரும், சில நூல்களின் பெயரும் வெளியாகின்றன. இது குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையிலுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவைத்தனியூர்ச் சேந்தன் என்னும் புலவன் பாடினதென்று தெரிகிறது. இது முதல் ஊழியின் காலமாம். (a) முதல் ஊழியில் தமிழ்ப்பாஷையின் உன்னத நிலை முதல் ஊழிகாலத்தில் நாரதர் அகத்தியர் முதலிய பெரியோர் எழுதிய சில சூத்திரங்களினால் தமிழ்ப்பாஷை விருத்தியடைந்து மிகவும் உன்னத மான நிலையெய்தி மிக மதுரமுடையதாய் எவ்விதக் கலப்பும் கடினமுமின்றி அமுதமொத்திருந்ததென்று தமிழின் அருமை தெரிந்த யாவரும் அறிவார்கள். பிரளயத்திற்குப்பின் தமிழர் பல இடங்களுக்கும் பரவினதினாலும் பல பாஷை பேசுவோர் இடைச்சங்கத்திலும் கடைச்சங்கத்திலும் கலந்ததினாலும் பல பாஷைகளும் கலந்து அதன் தனிச்சிறப்புக் குறைந்ததென்று சொல்ல வேண்டும். அதுபோலவே அக்காலத்தில் தென்னிந்திய சங்கீதத்தின் நிலையும் கலப்புற்றிருக்கவேண்டுமென்று நினைக்க நாம் மறந்துபோகக்கூடாJ. இதோடு இடைச்சங்க காலத்தில், முந்தியிருந்த அகத்தியம் முதலிய சில பூர்வ நூல்களின் சிலபாகம் கொற்கை அல்லது கபாடபுரம் கடல்கொண்டபோது அழிந்தன. திருநெல்வேலியின் தென் கீழ்ப்பக்கத்தில், கடற்கரையோரத்தில் கடல் அலைகளால் மோதப்பட்ட மதில்களுடன் விளங்கி நிற்கும் திருச்செந்தூர்க் கோயிலுக்குச் சுமார் 10 மைல் சமீபத்தில், இப்போது கொற்கையென்று அழைக்கப்படும் கிராமத்திற்குக் கீழ்ப்பக்கமாய்ப் பெரிய ஆலயங்களுடனும் அரண்மனைகளுடனும் மதில்களுடனும் ஒரு நகரம் கடலுக்குள் மூழ்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படியே தென்னிந்தியாவின் கீழ்க்கரைகளில் அனேக ஆலயங்களும் கோட்டைகளும் கடல்வாய்ப்பட்டு அழிக்கப்பட்டிருக்குமென்று எண்ண இடந்தருகிறJ. விசாகப்பட்டணத்துக்குச் சமீபத்தில் கடலுக்குள்ளிருக்கும் சுப்பிரமணியர் ஆலயத்தையும், மகாபலிபுரத்துக்குச் சமீபத்தில் கடலுக்குள்ளிருக்கும் சிவாலயத்தையும் பார்த்தவர்களுக்கு இதன் உண்மை தெரியாமல் போகாJ. கடலால் அழிக்கப்பட்ட தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் மதுரையிலும் சற்றேறக்குறைய 9,000 வருடங்களாய்த் தமிழ்ச்சங்கம் நடந்ததாக அறியலாம். 657 சங்கப்புலவர்க ளிருந்தார்களென்றும், 8,598 புலவர்கள் தலைமை வகித்தார்களென்றும், 197 பாண்டிய ராஜாக்கள் அதை ஆதரித்து வந்தார்க ளென்றும், அதில் 15 பாண்டிய ராஜாக்கள் கவியரங்கேறினார் களென்றும் தெளிவாய்த் தெரிகிறது. செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரமும் திரணதூமாக்கினி எழுதிய தொல்காப்பியமும் கூலவாணிகன் சாத்தனார் எழுதிய மணிமேகலையும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண்கீழ்க் கணக்கும் மற்றும் பல தமிழ்நூல்களும் சங்கப் புலவர்களாலும் தமிழ்நாட்டு அரசர்களாலும் இயற்றப்பட்டுத் தமிழர்க்கு மிகப் பூர்வ நூல்களாக விளங்கி நிற்கின்றன. இந்நூல்கள் சொற்சுவை பொருட்சுவை பொருந்தியவைகளாய் இலக்கண வழுவின்றி எழுதப்பட்டவைகளாய்த் தமிழ் கற்றறிந்தோர் கொண்டாடக் கூடியவைகளாய் இன்னும் விளங்குகின்றனவென்று நாம் அறிவோம். இற்றைக்கு ஆயிரமாயிரம் வருஷங்களுக்குமுன் எழுதப்பட்ட இத் தமிழ்நூல்களின் நடைச்சிறப்பு தற்காலத்தவர் மேலானதென்று மதிக்கக் கூடியதாக விருக்கிறதே, தமிழ் மிகப் பழமையானதும் சிறந்ததுமான பாஷையென்று காட்டப்போதுமானJ. மேலும் உலகத்தார் யாவராலும் கொண்டாடப்படும் சிறந்த கருத்துக்கள் யாவையும் தன்னகத்திலடக்கிக்கொண்டிருக்கும் திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளினது தமிழருமையையும் சுவையையும் உயர்வையும் அறியாதவரும் உண்டோ? அவர் சகோதரியாகிய ஒளவையார் எழுதிய இருசொல் முதுமொழியாகிய ஆத்திசூடியையும் நாற்சொல் முதுமொழியாகிய கொன்றைவேந்தனையும் முதல்முதல் மனனம் பண்ணாத தமிழ்மக்களும் உண்டோ? இச்சீவியத்திற்கு இன்றியமையாத இதோபதேசம் யாவற்றையும் இலகுவான நடையில் தகுந்த உவமானங்களுடன் ஞாபகப்படுத்தக் கொண்டிருக்கும் குறள், ஆத்திசூடிபோன்ற நூல்களின் பெருமையும், ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முற்பட்ட அவைகளின் தொன்மையும் இதர பாஷையிலுள்ள நூல்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் சாஸ்திர ஆராய்ச்சிக் காரருக்கு மிகவும் தெளிவாக விளங்கும். தேவாரம், திருவாசகம், திருவாய் மொழியென்னும் பக்திநூல்களின் அருமையை எடுத்துச் சொல்லவல்லவர் யார்? 17. தலைச்சங்க காலத்தில் சங்கீதத்தின் உயர்நிலை. இம் முதல்ஊழியில் 4,440 வருஷங்களாகச் சங்கமிருந்தJ. சங்கத்தாரால் செய்யப்பட்ட முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், களரியாவிரை என்பவையும் இவற்றிற்கு முதல் நூலாயிருந்த அகத்தியமும் கடலால் அழிக்கப்பட்டன. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் சொன்ன அகத்தியத்தில் இசையின் (சங்கீத) பாகமும் இசைத்தமிழையே தனித்துச் சொன்ன பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயமும் முதல் ஊழியில் மிகவும் விரிவாக வழங்கிவந்திருக்க வேண்டும். அந்நூல்களுக்கிணங்க அமைந்த பெருங்கலம் அல்லது 1,000 தந்திகள் பூட்டிய பேரியாழ் என்னும் வீணையும் 21, 17, 14 தந்திகள் பூட்டிய மற்றும் சில வீணைகளும் அழிந்தன. பெருங்கலத்தையே நாரத வீணையென்பார். ‘யாழாசிரியனாகிய நாரதன்’ என்று அக்காலத்து நூல்களில் சொல்லப்படுவதை நாம் கவனிக்கையில், முதல் சங்கத்தின் காலத்திலே அவர் வீணையில் வல்லவராயிருந்தா ரென்றும் மற்றவர்களுக்கு வீணை கற்பிக்கும் குருவாயிருந்தாரென்றும் சங்கீதத்தைப் பற்றிப் பஞ்சபாரதீயம் என்னும் நூல் எழுதியிருந்தாரென்றும் தெரிகிறது. முதல்ஊழியில் எழுதிய சங்கீத நூல்களிலுள்ள சில அகத்தியச் சூத்திரங்களும் மிகக் கொஞ்சமான நாரதச் சூத்திரங்களும் மேற்கோளாக அங்கங்கே காணப்படுகின்றனவன்றி முழு நூலும் அகப்படுகிறதில்லை. அகப்பட்ட சூத்திரங்களுள் சில இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன் எழுதிய சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லாரால் எழுதிய உரையிலும் வெளிப்படுகின்றன. ஜலப்பிரளயத்திற்கு முன்னிருந்தகாலத்தில் 4,440 வருஷங்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ச்சங்கம் இருந்ததையும், 4,449 வித்வ சிரோமணிகள் தலைமை வகித்ததையும், அச் சங்கத்தில் சங்கீத நூல்கள் ஏராளமாயிருந்ததையும், பெருங்கலம் முதலிய வாத்தியங்கள் இருந்ததையும் இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னிருந்த ஒரு இளவரசனும் 1,000 வருஷங்களுக்கு முன்னிருந்த அடியார்க்கு நல்லாரும் சொல்லும்போது அதை யார் மறுக்கக்கூடும்? இதற்கு நூறு, இருநூறு வருஷங்களுக்கு முன்பின்னானகாலமே கரிகால் சோழன், கயவாகு முதலியவர்களின் காலமாகும். 18. முதல் ஊழியில் பெருமைவாய்ந்திருந்த சங்கீதம் பின் ஊழியில் குறைந்த விதம். பூர்வகாலத்தின் சரித்திரங்களை நாம் நன்றாய்க்கவனிப்போமானால், சங்கீதமானது தெய்வ சந்நிதியில் ஆராதனைகளில் மிகவும் உபயோகிக்கப் பட்டு வந்ததென்று காண்போம். எவ்வித பிரதிப்பிரயோஜனத்தையும் விரும்பாமல், அரசன்முதல் குடிகள்வரையும் சங்கீத அப்பியாசம் செய்திருந்தார்களென்று தெரிகிறது. தாவீது ராஜன் எப்படிக் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தன் ஜனங்களுடன் சங்கீதம் பாடி நர்த்தனம் பண்ணிக் கொண்டு வந்தானோ, அப்படியே சுமார் 1,800 வருஷங்களுக்கு முன்னுள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகால் சோழனும், மதுரையில் ராஜசேகர பாண்டியனும், அதன்முன் சிதம்பரத்தில் நடராஜனும், பரத சாஸ்திரத்தில் தேர்ந்தவர்களாய் நடனம்பண்ணினார்களென்று அறிவோம். தமது பக்தனாகிய பாணபத்திரனுக்காக வீணையில் சாதாரி ராகம் பாடியதும், பாணபத்திரனுடைய மனைவியின் வீணாகானம் சிறந்ததென்று சாட்சி சொல்ல வந்ததும், பரமசிவ னென்று சொல்லப்படுகிறதே. இவ்வளவு மேன்மை பொருந்திய சங்கீதமும் பரதமும் நாள் செல்லச்செல்லக் குறைவுபட்டு, சமணராலும் பௌத்தராலும் அருமையறியாத ராஜாக்களாலும் கண்டிக்கப்பட்டுத் தேய்ந்து தற்காலத்தில் ஏழைகள் கைப்புகுந்திருக்கிறதே என்று விசனப்படுகிறேன். ஜலப்பிரளயத்திற்கு முன் மிகவும் அருமையாக எண்ணப்பட்டதும் தெய்வசமுகத்தில் ஆடிப்பாடிக் கொண்டாடக்கூடியதுமாயிருந்த சங்கீதத்தைப் போதிக்கும் இசை நூல்களும் இசை வல்லோரும் ஜலப்பிரளயத்தால் அழிந்தபின் (நோவாவின் பேழையில் தப்பிய சொற்பப்பேர்கள் போல) சிலர் மாத்திரம் அப்பிரளயத்திற்குத் தப்பினார்கள். சமுத்திரத்தில் தென்னிந்தியா விற்குத் தெற்கே 49 நாடுகளின் பிரதான நகரமாயுள்ள தென்மதுரை யழிந்தபோது அதன் வடகோடியிலிருந்த சொற்ப ஜனங்கள் மாத்திரம் அழியாமல் தப்பினார்களென்று நினைக்க இடமிருக்கிறது. ஜலப்பிரளயம் வரும் காலம் இன்னதென்று தெரியாதிருந்ததனால் அனேக வித்வான்களும் இசை வல்லோரும் பிரளயத்தில் அழிந்துபோனார்கள். அழிந்தவர்கள் போக அதன் வடபாகமாகிய தென்னிந்தியாவிலுள்ள அகத்தியர் போன்ற சில சங்கத்தலைவர்கள், கடல் கொண்டுபோன முதல் சங்கத்தைப்போல இரண்டாம் சங்கமொன்றைக் கபாடபுரத்தில் ஏற்படுத்தினார்கள். கொற்கையில் ஆளுகை செய்யத்தொடங்கின பாண்டிய ராஜாக்களைப்பற்றி விசாரித்தால், தென்மதுரையை யாண்ட ராஜாக்கள் தான் இங்கு வந்து ஆண்டார்களென்று சொல்ல இடமில்லை. ஆனால் அந்த ராஜவம்சத்தைச்சேர்ந்தவர்களே இங்கே அரசாண்டார்களென்று நினைக்கலாம். கொற்கையிற்போலவே உக்கிரமன்னன் கோட்டை சுந்தரபாண்டிபுரம் தென்காசி கருவைநல்லூர் கோட்டாறு வள்ளியூர் பன்றிகுளம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆதித்தபுரம் மணற்படை செங்கோட்டை முதலிய சிறு நாடுகளிலும், பாண்டிய வம்சத்தவர்கள் ஆண்டு கொண்டிருந்தார்களென்பதாக, இடிந்துபோன கோட்டைகளாலும் சுவர்களாலும் இன்றும் காணக்கூடியதாயிருக்கிறது. தென்மதுரைக்கு வெகுதூரம் வடக்கி லிருந்த சிற்சில சிற்றரசர்களாலும், அழிந்து போகாமல் மிஞ்சியிருந்த சில சங்கப் புலவர்களாலும் இரண்டாம் சங்கம் மறுபடியும் ஆரம்பமாயிற்று. இவர்களில் அநேகர், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரு தமிழையும் நன்றாய் அறிந்துகொள்ளாதவர்க ளென்றே சொல்லவேண்டும். முதல் ஊழியில் மிஞ்சிய சிலபேருக்கும் அதை எடுத்து நிறுத்தும் ஊக்கமும் குறைந்தJ. தாங்கள் அனேக நூறு வயதுடையவர் களாய்ச் சாதித்துக் காட்டிய அரிய வித்தைகளை அற்ப ஆயுளுள்ள மற்றவருக்குச் சொல்லவும் மலைத்தார்கள் போலும். முதல் ஊழியி லுள்ளவர்கள் ஆயிரம் வருஷங்களாகவும் அநேக ஆயிரம்வருஷங்களாகவு மிருந்தார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. அப்புராணங்கள் உண்மைக்கு மிஞ்சிப் பாரித்துக் கூறுவதாக நாம் எண்ணினாலும், சத்திய வேதத்திலும் இற்றைக்கு 6,000-வருஷங்களுக்குமுன் 960-வருஷம் ஆயுளுள்ளவர்களிருந்தார்களென்றும் 4,500 வருஷங்களுக்கு முன்னிருந்த நோவா தன் 500-வது வயதில் சேமைப் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றை நோக்குமிடத்து தென்மதுரையிலிருந்த 4,400-க்கு மேற்பட்ட சங்கப்புலவர்களும் 4,400-க்கு மேற்பட்ட சங்கத்தின் காலமும் யுக்திக்குப் பொருத்தமாகத் தோன்றாதிராJ. அப்படியே அக்காலத்திலிருந்த சங்கத்தார் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் நீண்டகாலம் பயின்றார்க ளென்பதும் உண்மைதானென்று ஒப்புக்கொள்வோம். ஜலப்பிரளயத்திற்குப் பின்னுள்ள மற்றவர் அற்ப ஆயுள்பெற்றவர்களானதினால் 1,000-தந்தி பூட்டிய பேரியாழில் பழகுவதை படிப்படியாக விட்டுவிட்டார்கள். நாரதரின் சுருதி முறைப்படி கானம் பண்ணும் நுட்பத்தை அறியாது வெறுத்தார்கள். கண் முகம் கரம் கால் சிரம் முதலிய அங்கங்களின் அபிநயத்தால் சரித்திரங்களை விளக்கும் பரதசாஸ்திரத்தின் அருமையைத் தெரிந்துகொள்ளாது மயங்கினார்கள். இப்படியிருக்குங் காலத்தில், இடைச்சங்கமிருந்த கபாடபுரம் கடலால் அழிக்கப்பட்டJ. அங்கிருந்த முடத்திருமாறன் என்னும் பாண்டியன் வடநாட்டிற்கு வந்து அங்கே கடம்பவனத்தைக்கண்டு இப்போதிருக்கும் கூடல் ஆலவாய் என்னும் வடமதுரையைக்கட்டி அதில் மூன்றாவது சங்கத்தை ஸ்தாபித்தான். இக்கடைச்சங்க காலத்தில் பௌத்தமதமும சமணமதமும் ஊடாடின. அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களில் சிலர் பௌத்த மதத்தையும் சமண மதத்தையும் தழுவலானார்கள். ஆரியரும் மெள்ள மெள்ளத் தென்னாட்டில் வந்து நிலைத்தார்கள். 19. தென்னிந்திய சங்கீதமும் அதில் ஆரியக் கலப்பும். முதல் ஊழியின் இறுதியில் செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் இடைச்சங்கத்திற்கும் கடைச்சங்கத்திற்கும் ஆதார நூலா யிருந்ததென்று இதன்முன் நாம் பார்த்திருக்கிறோம். அவ்விலக்கணநூலில், முதல் ஊழிகாலம் சத்தியமும் நெறியுந் தவறாத காலமென்றும், பின் ஊழி காலம் ஒழுங்கு தவறிய காலமென்றும், அதற்கேற்பச் சில கலியாண ஒழுங்குகளை ரிஷிகள் செய்தார்களென்றும் அவ்வாசிரியர் சொல்லுகிறார். தொல்காப்பியம், பொருளதிகாரம், 4-வது கற்பியல், 144-வது சூத்திரம் “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க்காகிய காலமு முண்டே” இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியார், முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்றும், அது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்ந்தது என்றும், தலைச்சங்கத்தாரும் முதல்நூல் ஆசிரியர் (அகஸ்தியர்) கூறிய முறையே கரணம் ஒன்றென்று செய்யுள் செய்தார் என்றும் சொல்லுகிறார். தொல்காப்பியம், பொருளதிகாரம், 4வது கற்பியல், 145-வது சூத்திரம் “பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரணமென்ப” இதற்கு உரையாசிரியர் ஆதி ஊழிகழிந்தபின் இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவும் சிறந்து தோன்றியதினால் இருடிகளாகிய பெரியோர், மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் கட்டினார் என்று கூறுகிறார். ஐயர் என்பது முதல் நூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது என்கிறார். பின்னும் இவ்வாசிரியர் ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின், முதல்நூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறி, தாம் நூல் செய்கின்ற காலத்து, பொய்யும் வழுவும்பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறும் கூறினார் என்கிறார். மேற் குறித்த தொல்காப்பியர் சூத்திரத்தையும் நச்சினார்க்கினியார் செய்த உரை யையும் நாம் கவனிக்கையில், முதல் நூலாகிய அகத்தியத்திற்கு வழி நூலாகிய தொல்காப்பியம் எழுதிய காலத்தில் மேலோருக்கு ஒரு சடங்கும், கீழோருக்கு வேறு சடங்குமாக, வட நூலோர் வகுத்தார்களென்றும், தலைச் சங்கத்திருந்தோர் காலத்து, அப்பேதமில்லாமல் நான்கு வருணத்தாருக்கும் சடங்கு ஒன்றாயிருந்ததென்றும் விளங்குகிறJ. அக்காலத்தில் வேதத்தை வெவ்வேறாக வகுத்து நான்கு ஜாதியாரும் இன்னின்னது செய்யவேண்டு மென்று வகுத்ததாகப் பார்க்கிறோம். இதனாலே முதல் ஊழியில் வேதங்கள் வகுக்கப்படவில்லை யென்றும், வருண ஆச்சிரம தருமங்கள் உண்டாக வில்லையென்றும், அது சத்தியம் தவறாமல் நடந்துகொண்ட காலமென்றும் அறிகிறோம். அக்காலமுதல் தமிழோடு வடபாஷையும் கொஞ்சங் கொஞ்சமாகக் கலந்துகொள்ள ஆரம்பித்தJ. அதுமுதற்கொண்டு ஆரியரும் தமிழ்ப்பாஷைக்குச் சில உபகாரங்கள் செய்தார்களென்றும் தமிழ்ப்பாஷையின் அருமை தெரியாத மற்றவர்கள் தமிழையும் அதின் பூர்வ நூல்களையும் தலை யெடுக்காது செய்தார்களென்றும் சூரியநாராயண சாஸ்திரிகள் B.A.,எழுதிய ‘தமிழ் மொழியின் வரலாறு’ இரண்டாம் அதிகாரத்தைக் கவனிக்கும்பொழுது தெரியவருகிறது. இது உலக இயற்கைதானே. ஒன்று அதிகப்பழமையானபின் மறுபடியும் பேணுவாரில்லாது போனால் எக்கெதியடையுமோ அக்கதியே தமிழ்ப்பாஷைக்கும் ஏற்பட்டது. தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழையே தாய்ப்பாஷையாகக்கொண்ட சில தென்னாட்டு அந்தணர் தங்கள் தாயினிடம் கற்றுக்கொண்ட சில காரியங்களைத் தமிழில் எழுதி வைக்காமல் தாங்கள் நூதனமாய்க் கற்றுக் கொண்ட சமஸ்கிருதத்திலேயே எழுதிவைக்கும் வழக்கமுடையவர் களானார்கள். சற்றேறக்குறைய 360 வருஷங்களுக்கு முன், தமிழ்நாட்டுள் ஒன்றாகிய சோழ ராஜ்யத்தில் மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் குமாரர் வெங்கடமகி என்பவர், பூர்வ தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவந்த ராகங்களிலுள்ள ஆரோகணம் அவரோகணங்களை ஒழுங்குபடுத்தி, அவைகளில் வழங்கிவரும் சுரங்கள் இன்னின்ன ஸ்தானங்களில் வருகிற தென்று அறியக்கூடியதான மேளகர்த்தாவும் அதற்கிணங்க லக்ஷணகீதமும் செய்து, “சதுர்தண்டிப்பிரகாசிகை” என்ற பெயருடன் ஒரு நூல் வெளியிட்டார். அந்நூல் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களையே குறிக்கக் கூடியதாயிருந்தாலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளை அறிந்து கொள்வதற்கு ஏதுவான நூலாயில்லை, ஏனென்றால், கர்நாடக சங்கீதத்தின் சாராம்சத்தையே சொன்ன இவர் தமிழில் எழுதாது சமஸ்கிருத பாஷையில் எழுதிவைத்தது, பிறர் முற்றிலும் மயங்குவதற்கு இடமா யிருக்கிறது. கர்நாடக சங்கீதத்தைக் கற்றறிந்தோரில் சிலர், துவாவிம்சதி சுருதியைப்பற்றிச் சொல்லும் வடமொழி நூல்களைப் பார்த்துவிட்டு, அது சரியென்றும் இது தப்பென்றும் சொல்லுகிறார்கள். 72 மேளக்கர்த்தாவையும் ஒப்புக்கொள்ளாத சிலர், இன்றையதினமும் இருக்கிறார்கள். 72 மேளக் கர்த்தாவுக்கு ராகமாலிகை பாடிய மஹா வைத்தியநாதையர் அவர்கள், செந்தமிழ்ப்பழக்கமுடையவர்களாய்ப் பெரிய புராணத்திற்கு அநேக மிக அருமையான கீர்த்தனைகள் செய்திருந்தாலும், ராகமாலிகைக்குச் சமஸ் கிருதத்தில் சாகித்தியம் செய்தது என்ன அபிப்பிராயமோ? இப்படியே ஒவ்வொரு காலத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதினால் கலப்புத்தோன்றி, காலக்கிரமத்தில் விசுவாமித்திர சிருஷ்டியாய் இனந் தெரியாமல் மயங்க வருவது இயல்புதான். ஆக்கியோனுடைய கருத்து இன்னதென்று அப்பாஷைக்குடையவரே தெரியாமல் மயங்குவாரானால், மற்றொரு பாஷைக்காரர் அறிவது எப்படி? சாரங்கதேவர் துவாவிம்சதி சுருதிகளைப்பற்றி எழுதிய சில சமஸ்கிருத சுலோகங்களைச் சற்றேறக் குறைய 20 விதமாய் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள். இப்படியே வெவ்வேறு அபிப்பிராயமுள்ள பௌத்தரும் சமணருமான பலவித்துவான்கள் பலபல காலங்களில் ராஜனை வசப்படுத்திக்கொண்டும் தமிழ்வித்வான்களைக் கட்சிசேர்த்துக்கொண்டும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மெள்ளமெள்ள நிலைநாட்டினார்கள். இசை, நாடகம் என்னும் இருதமிழும் சிற்றின்பத்தையே விளைவிக்கக்கூடியதா யிருக்கின்றனவென்று தாங்கள் வெறுத்ததுமன்றி, முற்றிலும் அது தலைகாட்டாதபடி தொலைக்கப் புகுந்தனர் என்று பின்வரும் வசனங்களில் பார்ப்போம். 20. பௌத்தரும் சமணரும் கலந்து சங்கீதத்தையும் நாடகத்தையும் தொலைக்கப்புகுந்ததும் அதில் அழிந்துபோன நூல்களும். தமிழ் மொழியின் வரலாறு, “இத்துணைப்பெருமை வாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை? தமிழ்நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவே யென்பது துணியப்படும். அது கடவுளர் திருவிழாக்காலங்களில் ஆடல் பாடல்களிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயிற்று. சிலகாலத்தின் பின்னர்க்கதை நடையான மனப்பாடங்களும் உடன்கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் ‘வேத்தியல், பொதுவியல்’ என்ற இருபிரிவினதாகி அரசர்களாலும் ஏனையோராலும் ஆதரித்து வளர்க்கப்பட்டJ. கி.மு. மூன்றாநூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினுஞ் சற்று முற்காலத்தினதால் நாடகத் தமிழ் உயிர்நிலையுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ் நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்டானதொரு தொழிலென்றே ஆதியில் மதிக்கப்பட்டது என்று ‘நாடகவிய’ லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க. இவ்வாறு தோன்றிவளர்ந்த நாடகத்தமிழ் வீழ்நிலையையடையப் புகுந்தJ. அதற்குற்ற காரணம் யாது? ஒழுக்க நிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ் சைனரும் நாடகக் காட்சியாற் காமமே அறிவினும் மிகப்பெருகுகின்றதென்ற போலிக்கொள்கையுடையராய்த் தமது நூல்களிற் கடியப்படுவவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனைசெய்து நாடகத் தமிழைத் தலையெழ வொட்டாது அடக்கி வந்தனர். ஒளவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினை யச்சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத்தமிழைக் கடிந்தது ஓராச்சரியமன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக் கிடையில் நாடகத்தமிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது?” தமிழ் மொழியின் வரலாறு, “இவ்வுலக வாழ்க்கைக்கு அறம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, ‘அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது’ என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடியவேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து, இசைத்தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். (இசை நாடகங் காமத்தை விளைக்கு மென்றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்) அம் முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ! அழிந்துபோயின. இப்போழ்தத்து எஞ்சியிருப்பன மிகச்சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத்தருள்க. பண்டிதராயினார் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே, அது பாமரர் கையகப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றJ. அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த ‘பரதம்’, ‘அகத்தியம்’, ‘முறுவல்’, ‘சயந்தம்’, ‘குணநூல்’ ‘செயிற்றியம்’, ‘மதிவாணர் நாடகத் தமிழ்நூல்’, ‘கூத்தநூல்’, ‘நூல்’, என்ற நாடகத் தமிழ்நூல்களெல்லாம் யாண்டுப்போ யொளித்தன?” முன் வசனங்களை கவனிக்கையில், ஆரியரும் பௌத்தரும் சமணரும் தென் இந்தியாவிற்கு வந்த பின்பே தமிழ்ப் பாஷையில் கலப்புத் தோன்றினதென்று நாம் நிச்சயமாய்ச் சொல்லலாம். அகத்திய மாமுனிவர் எழுதிய பேரகத்தியம் என்னும் நூல் மிகவிரிவாயிருந்ததுபற்றி, அதைக் குறுக்கிச் சிற்றகத்தியம் என்னும் நூல் செய்தார் என்று தோன்றுகிறது. இதினால் தமிழ் இலக்கியம் மிகுந்த விரிவுடையதாயிருந்ததென்று புலப்படுகிறJ. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்றபடி, இலக்கியம் மிகவும் பூரண நிலையிலிருந்ததென்று நாம் அறியவேண்டும். அவர் எழுதிய இலக்கணம் விரிவாயிருந்ததுபற்றி, தொல்காப்பிய முனிவரால் இயற்றமிழுக்கு மாத்திரம் தொல்காப்பியம் எழுதப்பட்டJ. பவணந்தி முனிவரால் நன்னூலும், வீரமா முனிவரால் தொன்னூலும் செய்யப்பட்டன. மேலும் வீரசோழியம் இலக்கண விளக்கம் போப்பையர் இலக்கணம் இலக்கணச் சுருக்கம் இலக்கண விளக்கச் சூறாவளி இலக்கண சூடாமணி முத்துவீரியம் முதலிய சுருங்கிய நூல்கள் உண்டாயின. இவைகளும் இயற்ற மிழையே சொல்லுகின்றன. 700-க்கு மேற்பட்ட பாவினங்களிருந்ததாகச் சொல்லிய பேரகத்தியத்திலிருந்து வர வரக் குறுகிச் சில பாவினங்களுக்கு மாத்திரம் இலக்கணம் சொல்லப் பட்டிருப்பதை நோக்க, பூர்வத்திலிருந்த இசை நூலும் யாழும் பரதமும் வரவரப் படிப்படியாய்க் குறைந்தும் தேய்ந்தும் போயினவென்று சொல்ல வேண்டும். இத்தோடு தென்னிந்தியாவிற்குப் பூர்வகுடிகளல்லாத மற்றவர் யாவரும் இதற்கு அனுகூல சத்துருக்களானார்கள். இங்ஙனம் கடைச்சங்க காலத்தில் இப்படிப் பட்டவர்களால் இசைநூல்கள் பலவும் அழிக்கப்பட்டன வென்று தெளிவாகத் தோன்றுகிறது. இயல் இசைநாடகமென்னும் முத்தமிழ் சொன்ன அகத்தியத்திலிருந்து இயற்றமிழின் சில பாகங்களுக்கு மாத்திரம் தொல்காப்பியர் இலக்கணம் சொன்னார். அவர் சொன்னதிலிருந்து அதற்குப் பின்னுள்ளோர் குறுக்கிச் சொன்னார்களென்று நாம் தெளிவாய் அறியலாம். அகத்தியருடைய காலத்தில், சங்கீதமும் பரதமும் இவை சம்பந்தமான கூத்துக்களும் தமிழ்நாட்டில் மிக விரிவாக இருந்தனவென்று அவர் சொல்லிய சில சூத்திரங்களினால் தெரிகிறது. தொல்காப்பியர் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று நான்கு நிலங்களையும் அவற்றிற்குரிய கருப் பொருள்களையும் பற்றிச் சொல்லிய சூத்திரமாவது:- “தெய்வமுணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ யவ்வகை பிறவுங் கருவென மொழிப.” இதில் ஒவ்வொரு நிலத்திற்குரிய தெய்வம், உண்பொருள் அல்லது உணவு தானியங்கள், மிருகங்கள், மரங்கள், பறவைகள், பறைகள், தொழில்கள், யாழின் இனங்கள் இன்னவையென்று சொல்லுகிறார். ஒவ்வொரு நிலங்களின் கருப்பொருள்கள். இன்னவென்று நச்சினார்க்கினியார் உரையில் மிகத் தெளிவாகச் சொல்லப்படுகின்றன. தொல்காப்பியர் பொருளிலக்கணம் சொல்லியவிடத்துத் தலைவனுந் தலைவியும் எந்நிலத்திற்குரியவர்களோ அந்நிலத்திற்குரிய தெய்வம் உணா முதலிய கருப்பொருள்கள் மாறாமல் கவி சொல்லவேண்டுமென்று விதித்திருக்கிறார். ஐவகை நிலத்தின் கருப்பொருள் விபரம் “முல்லைக்கு உணா, வரகுஞ்சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங்குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரைமேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலுங் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ், பிறவு மென்றதனாற், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர், கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு உணா, ஐவன நெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை, முருகியமுந் தொண்டகப் பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலும் கிளி கடிதலும்; யாழ், குறிஞ்சியாழ்; பிறவுமென்றதனாற், பூகாந்தளும் வேங்கையுஞ் சுனைக்குவளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர்நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும், நெல்லரிகிணையும்; செய்தி, நடுதலுங் களை கட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருத யாழ். பிறவுமென்றதனாற், பூ, தாமரையுங் கழுநீரும்: நீர், யாற்றுநீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்களென்பனவேயாம். நெய்தற்கு உணா, மீன் விலையும் உப்பு விலையும்; மா, உமண்பகடு போல்வன; முதலயுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று. மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள், அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி மீன்படுத்தலும் உப்புவிளைத்தலும் அவை விற்றலும்; யாழ், நெய்தல் யாழ். பிறவு மென்றதனாற், பூ, கைதையும் நெய்தலும்; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும். பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்; மா, வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள் கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறை கோட்பறையும் நிரைகோட்பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறை கோடலும்; யாழ், பாலையாழ்; பிறவுமென்றதனாற், பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர் அருநீர்க்கூவலுஞ்” சுனையும்; ஊர், பறந்தலை.” இவைகளைக்கொண்டு தொல்காப்பியர் காலத்திலேயே அதாவது இற்றைக்கு சுமார் 8,000 வருஷங்களுக்கு முன்னாலேயே யாழ்வகைகளும் அவற்றிற்குரிய இலக்கண விதிமுறைகளும் மிக விரிவாக இருந்திருக்கின்றன வென்று மிகவும் தெளிவாய்க் காணலாம். முல்லையாழ் குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ், பாலையாழ் முதலிய யாழ்களின் சுர அமைப்பைப்பற்றி இதின் பின் பார்ப்போம். 21. சங்கீதத்தைப் பற்றிச் சொல்லும் பூர்வ தமிழ் நூல்கள் இன்னின்னவென்பJ. சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இசைத்தமிழைக் கூறுமிடத்தில், இசை நூல்களும் பேரியாழும் அழிந்து போனதைப் பற்றியும் தாம் உரை எழுதுவதற்கு உதவியாயிருந்த சில நூல்களைப் பற்றியும் சொல்லுகிறார். அவை வருமாறு :- “இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயம் முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதி காணாமையின், அவையும் இறந்தனபோலும். இறக்கவே வரும் பெருங்கல முதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது; என்னை? ‘ஆயிரநரம்பிற் றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தரதளவுங், கோட்டினதளவு, மொத்த வென்ப விருமூன்றிரட்டி, வணர்சா ணொழித்தெனவைத்தனர் புலவர்’ என நூலுள்ளும் ‘தலமுத லூழியிற்றானவர் தருக்கறப், புலமகளாளர் புரிநரப்பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச், செலவு முறை யெல்லாஞ் செல்கையிற்றெரிந்து, மற்றையாழுங் கற்றுமுறை பிழையான் எனக் கதையினுள்ளுங் கூறினாராகலாற் பேரியாழ் முதலியனவும் இறந்தன வெனக் கொள்க. இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுல னென்னும் தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்புசெல்வோன் திலோத்தமை யென்னுந் தெய்வமகளைக் கண்டு தேரிற்கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர் பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பராசைவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும், கடைச் சங்கமீரீஇய பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதி நாடகத் தமிழ் நாலு மெனவைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களென்றேனும் ஒருபுடையொப்புமை கொண்டு முடித்தலைக்கருதிற்று இவ்வுரையெனக் கொள்க.” மேற்கண்ட சில வசனங்களினால், முதல் ஊழியின் காலத்தில் தேவவிருடி நாரதர் செய்த பஞ்ச பாரதீயமும் பரதமும் அகத்தியமும் பேரியாழும் அழிந்தன; இடைச் சங்க காலத்திலுள்ள முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்னும் நூல்களும் குற்றுயிராய் அழிந்தன; இடைச் சங்க காலத்தில் செய்யப்பட்ட இசை நுணுக்கம் முதலிய சில நூல்கள் இந்நூல் உரையெழுதுவதற்கு உதவியாயிருந்தனவென்றும் தெரிகிறது. அவர் கடைசியாகச் சொல்லுகிற நூல்களும் பூரணமாய் இப்போது இல்லை. இது தவிர, சங்கீதத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் காலத்தில் இன்னின்ன நூல்களிருந்தனவென்று சொல்லும் சில விபரம், தென்னிந்திய சங்கீதத்தின் பூர்வத்தையறிய விரும்பும் நமக்குப் பிரயோசனமாயிக்கும். ஆதலால், அவைகளையும் இங்குப் பார்ப்போம். “அகத்தியம் : இஃது இயல் இசை நாடகமென்னும் முத்தமிழிலக் கணத்தையும் தெரிவிப்பதாகிய ஒரு பெரிய இலக்கண நூல்; தென் மதுரைக் கணிருந்த தலைச்சங்கப் புலவர்களுள் முதல்வராகிய அகத்திய முனிவரா லருளிச் செய்யப்பட்டJ. இது நச்சினார்க்கினியார் காலத்திலேயே இறந்து போயிற்றென்று தெரிகிறது. ஆயினும் இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டும் பழையவுரைகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இசை நுணுக்கம் : இது சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரனென்பவன் இசையறிதற்பொருட்டு, அகத்தி முனியவர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவராகிய சிகண்டியென்னும் அருந்தவமுனிவரால் வெண்பாவாலியற்றப் பட்ட இசைத் தமிழ் நூல்; இஃது இடைச்சங்கமிருந்த காலத்துச் செய்யப் பட்டதென்று அடியார்க்கு நல்லாருரையாலும், அச்சங்கப் புலவர்க்கு நூலாகவிருந்ததென்று இறையனாரகப் பொருளுரையாலும் தெரிகிறது. இந்திரகாளியம் : இது யாமளேந்திரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று. குணநூல் : இது நாடகத் தமிழ் நூல்களுளொன்று. இதிலுள்ள சில சூத்திரங்கள் மட்டுமே நடைபெறுகின்றனவென்றும் நூல் இறந்து போயிற் றென்றும் அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். கூத்தநூல் : இது நாடகத் தமிழ் நூல். இதன் வரலாறு வேறொன்றுந் தெரியவில்லை. சயந்தம் : இது நாடகத் தமிழ் நூல்களுளொன்று. இதிலுள்ள சூத்திரங்களிற் சில நடைபெறுகின்றனவன்றி நூலின் முதனடுவிறுதி காணாமையின் இந்நூல் இறந்ததுபோலுமென்று அடியார்க்கு நல்லாரெழுதியிருக்கின்றனர். செயிற்றியம் : இது செயிற்றியனாரென்னும் ஆசிரியராற் சூத்திரரூபமாக இயற்றப்பட்ட நாடகத் தமிழ் நூல். இதின் சூத்திரங்களிற் சில நடைபெறுகின்றனவன்றி நூலின் முதனடுவிறுதி காணாமையின் இறந்ததுபோலுமென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். தாளவகையோத்து : இது தாளவிலக்கணத்தைக் கூறு நூல்களுள் ஒன்று. இதன் வரலாறு வேறொன்றுந் தெரியவில்லை. நூல் : இது நாடகத் தமிழ் நூலுளொன்றன் பெயரென்று மட்டுந் தெரிகிறது. இதன் வரலாறு வேறு யாதொன்றுந் தெரியவில்லை. பஞ்சபாரதீயம் : இது தேவவிருடி நாரதன் செய்த இசைத்தமிழ் நூல்; தம்முடைய காலத்திலேயே இந்நூலிறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். பஞ்சமரபு : இஃது அறிவனாரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட இசைத்தமிழ் நூல். சிலப்பதிகாரவுரை எழுதுவதற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று. பரதசேனாபதீயம் : இஃது ஆதிவாயிலாரென்னும் ஆசிரியரால் வெண்பாவாற் செய்யப்பட்ட நாடகத் தமிழ் நூல்; சிலப்பதிகாரவுரை யெழுதுவ தற்கு அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று. பரதம் : இது நாடகத் தமிழ் நூலுளொன்று; இதனை இறந்துபோன நூல்களுள் ஒன்றாக அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். பெருங்குருகு : இது தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொன்று; இந்நூல் தமது காலத்தேதானே இறந்துபோயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதியிருக்கின்றனர். இது முதுகுரு கென்றும் சொல்லப்படும். பெருநாரை : இது தலைச்சங்கப் புலவரியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொன்று; அடியார்க்கு நல்லார் காலத்தேதானே இஃது இறந்துபோயிற்றென்று தெரிகிறது. மதிவாணர் நாடகத் தமிழ்நூல் : இது சூத்திரப்பாவாலும் வெண்பாவாலும் மதிவாணனாரென்னும் பாண்டியரொருவராற் செய்யப்பட்ட நாடகத் தமிழ் நூல்; அடியார்க்கு நல்லார் உரையெழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட நூல்களுளொன்று. முறுவல் : இது பழைய நாடகத் தமிழ் நூல்களுளொன்று; இந்நூல் அக்காலத்தே இறந்து போயிற்றென்று அடியார்க்கு நல்லார் எழுதி யிருக்கின்றனர்.” மேற்கண்டவைகளை நாம் கவனிக்கையில் ஜலப்பிரளயத்திற்கு முன்னுள்ள முதல் சங்ககாலத்தில், இசையைப் பற்றிய நூல்களும் வாத்தியங்களும் முதன்மை பெற்றிருந்தனவென்றும் இடைச் சங்க காலத்தில் சில அழிந்து சில இருந்தனவென்றும் கடைச்சங்க காலத்தில் சில குற்றுயிராகி மனனம் செய்த சில சூத்திரங்கள் மாத்திரமிருக்கும் நிலைக்கு வந்தனவென்றும் அறிகின்றோம். தற்காலத்தில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் கொண்ட நூல்களுமிறந்தன. உரையாசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டிய சில சொற்ப சூத்திரங்கள் மாத்திரம் சிலப்பதிகாரத்தைத் தேடியச்சிட்ட மகாமகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்களின் புண்ணியத்தால் காணக் கிடைத்தன. இப்படித் தேடுவாரும் ஆதரிப்பாருமின்றி நம் தென்னிந்திய சங்கீத நூல்கள் அழிந்து போயினமையின் விசனிக்கக் கூடியதாயிருக்கிறது. இவ்வாறிருந்தாலும் பரம்பரையாய் மனனம் பண்ணிய சில ராகங்களும் பரதமும் தாளமும் முற்றிலும் ஒழிந்து போகவில்லை. கோயில்களில் ஊழியம் செய்யும் நாகசுரக்காரர்களாலும் நடனக்காரர்களாலும் அவர்கள் அண்ணாவிகளாலும் மேளக்காரர்களாலும் வீணை வாசிப்பவர் களாலும் கோயில் உம்பளங்களினால் மிகவும் அருமையாகக் காப்பாற்றப் பட்டு இதுவரையும் நீடித்திருக்கின்றன. இப்படியிருந்தாலும் சங்கீதத்தைத் தெளிவாய் அறிந்து கொள்வதற்கு உதவியான நூல்கள் பூர்ணமாயில்லாத தனால் பூர்வமாயுள்ள கர்நாடக சுத்தம் கெட்டு சுருதிகளைப் பற்றிச் சந்தேகிக்கும்படியான நிலைக்கு வந்தது என்றாலும் தென்னிந்திய சங்கீதத்தைக் கவனிக்கும் இந்துக்களும் மற்றும் அன்னிய தேசத்தாரும் அது மிகுந்த தேர்ச்சியுடையதென்றும் சாஸ்திர முறையையுடைய தென்றும் மற்றவைகளோடு கலவாத பரிசுத்தமுடையதென்றும் வியந்து சொல்லக் கூடியதாயிருக்கிறது. இந்து தேசத்தின் பூர்வீக நாகரீகமும் அவர்கள் பக்தியும் தெய்வ ஆராதனையில் உபயோகித்த அவர்கள் சங்கீதமும் அவர்கள் பாஷையும் மிகவும் கொண்டாடக் கூடியதாயிருந்தன. 22. தமிழ்நாட்டின் செல்வமும் அதன் நாகரீகமும். தமிழ்நாட்டின் தொன்மையையும் கல்விச் சிறப்பையும் சங்கப் புலவர் பெருக்கையும், அவர்கள் செய்த சங்கீத நூல்களின் அருமையையும் பார்த்த நாம், அந்நாட்டின் செல்வத்தையும் நாகரீகத்தையும் ஒருவாறு சுருக்கமாய்ப் பார்ப்பது நல்லதென்று நினைக்கிறேன். வெகுகாலத்திற்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் ராமாயணத்தில், சுக்கிரீவன் வானரர்களுக்குச் சீதையின் இருப்பிடத்தைச் சொல்லுகையில், பாண்டிய நாட்டைப் பற்றி மிகவும் வியந்து பேசுவதைக் கொண்டு பாண்டியர்கள் மிகுந்த அறிவுடையவர்களாயிருந்தார்க ளென்றும் மிகச் செழிப்புள்ள நாட்டையுடையவர் களாயிருந்தார்களென்றும் தெரிகிறது. பொன்னிறத்ததாயும் அழகுடையதாயும் முத்துமணி முதலிய வற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவைக் காண்பீர் என்று தென்முகமாகச் செல்லும் வானர வீரர்களைப் பார்த்துச் சுக்கிரீவன் சொன்னான் என்பதாக வால்மீகி முனிவர் சொல்லுகிறார். இதில் பாண்டிய ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்த கோட்டை வாசற் கதவைச் சிறப்பித்துக் கூறுகிறார். அதன் கோட்டை வாசலும் கதவும் முத்துநவரத்தினங்களினால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகுடையதா யிருக்குமென்று சொல்லுகிறார். ஒரு பட்டணத்தையும் அதன் அழகையும் அதன் செல்வத்தையும் சொல்லவந்தவர், அப்பட்டணத்தின் வாசற்கதவின் அழகையும் அது விலையுயர்ந்த தங்கத்தால் செய்யப்பட்டு நவரத்தினங் களாலும் முத்துக்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பற்றிச் சொல்லுகிறார். கோட்டை வாசல் நிலையும் கதவும் இப்படியிருக்குமானால் மற்றவைகளைச் சொல்ல வேண்டியதில்லை யென்றே குறுக்கிச் சொன்னார். வாயிற்கதவைக் காண்பீர் என்று சொல்வதைக் கவனிக்கையில அவ்வாயிற் கதவு மிகவும் உன்னதமானதாகவும் விசாலமுடையதாகவு மிருக்க வேண்டும். பென்னம் பெரிய மிருகங்களும் ஜீவஜெந்துக்களும் அக்காலத்தில் இருந்தனவென்பதை நாம் அறிவோம். பிர்மாண்டமான யானைகளின் மேல் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாரி வைத்து அதின் மேல் ராஜாக்கள் போகுங்காலத்தில் அதில் நிற்கிறவனுக்கும் அவன் பிடித்திருக்கிற முத்துக் குடைக்கும் மேல் மிகவும் உயரமாகக் கோட்டைவாசலிருக்கக் கட்டுவது வழக்கம். கதவுகள் பொன்னாயிருந்ததினால் அவைகளின் பிரகாசத்தால் வெகு தூரத்திலிருந்தே அதைக் காணலாம் என்பதே கருத்J. மேலும் ராவணனுடைய கோட்டையைப் பிடித்தபின் ராவணன் முகம், கை, கால் சுத்தம் செய்யுமிடத்தில் போட்டிருந்த பெரிதும் விலைமதிக்கக் கூடாததுமான மரகதப் பச்சைக் கற்களைக் கண்டு இராமர் ஆச்சரியத்துடன் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கொண்டு ராவணனுடைய கோட்டையும் அவன் ஐசுவரியமும் தென்பாண்டி நாட்டின் வளப்பத்திற்கு ஒத்ததாகவேயிருந்ததென்று சொல்ல ஏதுவிருக்கிறது. ராவணனுடைய நாட்டில் இலங்கை ஒரு பாகமாகச் சொல்ல வேண்டுமேயொழிய அவன் பிரதான இருப்பிடம் இந்துமகா சமுத்திரத்தில் வெகுதூரம் தெற்கே யிருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. பாரத யுத்தம் நடந்த காலத்தில் பஞ்சபாண்டவருக்கு உதவியாக யுத்தம் முடியும் வரை சேரநாட்டரசனாகிய உதியன் சேரலாதன் என்னும் சேரன் அவர்களுக்கு உணவு அளித்து சேனைகளுக்கு மிகவும் உதவினான் என்று சொல்லப்படுகிறது. ராவணன் மிகுந்த பலசாலியாகவும் பத்துத் தலைகளுடன் நீண்ட காலம் அரசாட்சி செய்து கொண்டு வந்தவனாகவும் அவனுடைய ராஜ்யம் இந்தியாவில் விந்தியமலை வரையும் விசாலித்திருந்ததாகவும் விந்திய மலைக்குத் தென் பக்கத்திலிருந்த அவனுடைய பிரதானிகளாகிய கரன், தூஷணன் என்றவர்கள் 14,000 வெங்கல ரதங்களுடன், சிசேரா 900 இருப்பு ரதங்களுடன் இஸ்ரவேலரோடு சண்டைக்கு வந்தது போல, ராமருடன் யுத்தத்துக்கு வந்தார்கள் என்பதாகவும் நாம் அறிவோம். அப்படியே இவன் மிகுந்த கலைவல்லோனாக இருந்தானென்றும் சங்கீதத்திலும் முக்கிய தேர்ச்சி பெற்றிருந்தானென்றும் நாம் பார்க்கலாம். கைலாசமலையை வேரோடு பிடுங்கி எடுக்கையில், அதன் கீழ் பரமசிவனால் நசுக்கப்பட்டா னென்றும் அப்போது பாரம் பொறுக்காமல் பரமசிவனைச் சாமவேதத்தினால் கானம் பண்ணினானென்றும் சொல்லப்படுகிறது. அவன் காலத்திலிருந்த ரிக்குவேதம் உதாத்த அநுதாத்தமாகிய ரி, த, க, நி என்னும் சுரங்களோடு மாத்திரம் கானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் சாமவேதத்தை ச, ம, ப என்னும் சுவரித ஓசைகளையும் சேர்த்து கானம் பண்ணினானென்றும் தோன்றுகிறது. சாமவேதம் சங்கீதத்தில் வழங்கும் சுவரங்களைச் சம்பூர்ணமாயுடைய தாயிற்று. தெய்வ தோத்திரங்களடங்கிய சாம வேதத்தைச் சங்கீதத்தின் பூர்ணசுரங்களோடு முதல் முதல் பாடினவன் ராவணனே. வேதத்திற்கு முன் இல்லாத சில சுரங்களை அவன் சேர்த்துக் கானம் பண்ணினதும் இதைக் கொண்டே பரமசிவன் மனது இறங்கிச் சாப விமோசனம் செய்ததும் நாளது வரையும் சொல்லப்படுகிJ. தென் தேசத்துக்குரிய பண்முறைப்படி ஆரோகண அவரோகணங்களைப் பூர்த்தி செய்து சாமகானம் பண்ணினான் என்று காண்கிறோம். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணமாகிய அகத்தியத்தை அகஸ்தியர் சொல்வதற்கு முன்பே சங்கீதம், பரதம் முதலிய அரிய வித்தைகளை இந்நாட்டில் மிகவும் விஸ்தாரமாயிருந்தனவென்று அவர் சொல்லும் சில சூத்திரங்களைக் கொண்டு புலப்படுகிறJ. மேலும் ஜலப் பிரளயத்திற்கு முன்னுள்ள காலத்தில் சின்னாக்காரரும் நாகசுரக்காரரும் இருந்தார்களென்று சத்திய வேதத்தில் சொல்லுகிறதைக் கவனிக்கும்பொழுது தென் மதுரையிலும் அதைச் சேர்ந்த 49 நாடுகளிலும் சங்கீதம் மிக விஸ்தாரா மாயிருந்திருக்க வேண்டுமென்று நம்ப இடமிருக்கிறது. பாபிலோன் பட்டணத்திலும் நினிவேப்பட்டணத்திலும் இருந்ததாகச் சொல்லப்படும் பித்தளைக் கதவுகள் போல பிரமாண்டமான கதவுகளும் நிலைகளும் இக்காலத்தில் காண்பது அரிJ. அதுவும் ஒன்றிரண்டல்ல நூற்றுக்கணக்காய்ச் சொல்லப்படுகிறது. இப்போது ஒன்று கூடக்காணோம். ஆனால் நிமிரோத் கட்டிய பாபிலோன் ராஜ்யத்திற்கு அநேக காலங்களுக்கு முன்புள்ள தென் மதுரையிலோ நவரத்தினங்கள் இழைத்த மிகப் பெரிதான அநேக பொற்கதவுகளிருந்திருக்க வேண்டும். ராவணனுடைய கோட்டையும் அதன் சிறப்பும் செல்வமும் தென்மதுரைப் பட்டணத்திற்குக் குறைந்ததாயிராவென்று நினைக்க இடமிருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் துவாரகையை ஆண்டு கொண்டிருந்த கிருஷ்ணபகவானுடைய தங்கை சுபத்திரையைக் கலியாணம் செய்திருந்த அர்ச்சுனன் மதுரைக்கு (மணவூர்) வந்தானென்றும் மதுரைக்கரசனாகிய சித்திரவாகன பாண்டியன் மகளாகிய சித்திராங்கதையை மணம் செய்து மூன்று வருஷம் பாண்டிய நாட்டிலேயே யிருந்தானென்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது. இது தவிர அர்ச்சுனன் மச்சதேசத்தின் விராடபுரத்தில் அரண்மனையிலுள்ள ஸ்திரீகளுக்குப் பரதசாஸ்திரம் சொல்லி வைத்தானென்றும் அவன் மகன் அபிமன்னன் கலியாணத்திற்குத் தமிழ்நாட்டு மூவேந்தராகிய சேர சோழ பாண்டியர்கள் வந்தார்களென்றும் சொல்லப் படுகிறJ. அக்காலத்திலிருந்த ராஜாக்களின் ஒற்றுமையும் அவர்கள் நாகரீகமும் சங்கீதத்திலும் பரதத்திலும் அவர்கள் வைத்திருந்த பிரியமும் இக்காலத்திலுள்ள நாம் அறிவதற்குக்கூடாத விஸ்தார முடையதா யிருக்கின்றன. ராமருடைய பிள்ளைகளாகிய குசன், லவன் என்னும் பாலியர்கள் வால்மீகி முனிவரால் கற்பிக்கப்பட்டு ராஜசபையில் ராமாயணக் கதை செய்வதில் மிகப் பாண்டித்திய முடையவர்களாய் விளங்கினார்கள் என்பதைப் பார்க்கிலும் வேறு திருஷ்டாந்தமும் வேண்டுமா? பாபிலோன் ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த தரியுராஜன் காலத்தில் தெய்வ ஆராதனை செய்து கொண்டிருந்த பக்தனாகிய தானியேலைச் சிங்கக் குகையில் போட்ட விசனத்தால் தரியுராஜன் சாப்பிடவும் கீதவாத்தியங்களைக் கேட்கவும் பிரியமற்றவனாய் இராமுழுவதும் விழித்திருந்தானென்று சொல்லப்படுவ தையும் தற்காலத்தில் இராஜாக்களுடைய மாளிகைகளில் இரவு பகல் கீதவாத்திய முழக்கம் கேட்பதையும் காண்கிற நாம் இற்றைக்கு 2,500 வருஷங்களுக்கு முன்னிருந்த வழக்கமே பூர்வ தென் மதுரையிலு மிருந்ததென்று எண்ண இடமிருக்கிறது. இப்படிப் பூர்வத்தார் கல்வியிலும் சங்கீதத்திலும் செல்வத்திலும் சிறந்திருந்தார்களென்று சொல்லுவதோடு நகருக்குரிய பண்டசாலை, நவதானியக் கடைகள், பருத்தி, பட்டு, சரிகை, ரோமம் முதலியவற்றால் செய்த விதம் விதமான ஆடைகள், அகில், சந்தனம், புனுகு, ஜவ்வாது, கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்கள், வயிரம், கெம்பு, முத்து, பவளம் முதலிய நவரத்தினங்கள் ஆகிய இவைகளை மிகுதியாய் உடையவர்களாயிருந்தார்களென்றும் இளங்கோவடிகள் சொல்லும் சிலப்பதிகாரத்தில் நகர் காண் காதையிலும் ஊர் காண் காதையிலும் விஸ்தாரமாய் அறியலாம். 23. தென்னிந்தியாவின் சிற்பவேலையின் உயர்வு. நாம் முன்னோர்களின் சிற்ப வேலையைப் பார்ப்போமானால், மிகுந்த பிரமிப்பையடைவோம். கல் கைகளோடு மேல் வளைவுகள் அமைந்த கோயில் மேற்கூரை தாழ்வாரங்களையும், போதிகைச் சுருள்களையும், ஒரே கல் கம்பத்தில் அமைந்த விக்கிரகங்களையும், மிகவும் நேர்த்தியாக மெருகிடப்பட்ட கருங்கற் சொரூபங்களையும், புஷ்பங்களின் இதழ்கள் போலச் செய்யப்பட்ட சுதை வேலைகளையும், கருங்கல் வில்லையும் அதன் நாணையும், கருங்கல் சங்கிலிகளையும் மதுரை, ஆவிடையார் கோயில், தென்காசி, மகாபலிபுரம், திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சிதம்பரம், வேலூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர் முதலிய ஸ்தலங்களில் காணலாம். மேலும் இற்றைக்கு 500 வருஷங்களுக்கு முன் விஜயநகரத்தின் ராஜனாயிருந்த கிருஷ்ணதேவராய ரென்பவர் மதுரை, ஸ்ரீரங்கம் போன்ற பெரிய ஆலயங்களுக்கு முகப்புக் கோபுரம் கட்ட ஆரம்பித்திருக்கிறார். வேலையின் அழகையும் முழுதும் கல்வேலையாயிருப்பதையும் வாசல்களுக்காக நிறுத்திய கல் நிலைகளையும் அநேகர் அறிந்திருப்பார்கள். அவைகள் இன்றும் ‘ராயர் கோபுரத் தடிப்படைபோல்’ என்று பழமொழியாய் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொருவரால் பூர்த்தி செய்ய முடியாத அவ்வளவு பெரிதாயும் இவ்வளவு காலத்துக்குள் முடிந்ததொன்று சொல்வதற்கியலாத அவ்வளவு வேலைப் பாடுடையதாயும், பார்த்தவர்கள் பிரமிப்படையக் கூடியதாயு மிருக்கிறதென்று நாம் அறிவோம். 24. தென்னாட்டின் தெய்வங்களும் அவர்களின் தமிழ் திறமும். இறையனாரகப் பொருளுக்கு உரையெழுதிய நக்கீரனார் ஜலப் பிரளயத்திற்கு அனேக வருஷங்களுக்கு முன்னாலேயே முதற் சங்கமிருந்த தென்றும் தலைச்சங்கத்தில் அகஸ்தியரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றமெறிந்த முருகவேளும் சிறந்த சங்கப் புலவர்களாயிருந்து நடத்தினார்களென்றும் சொல்லுகிறார். இதைக்கொண்டு பரமசிவன் தாமே தென்மதுரையில் அரசாண்டு வந்தாரென்றும், அவர் குமாரனாகிய சுப்பிரமணியரும் தென்மதுரையிலிருந்தவரென்றும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் விருத்தி செய்து சங்கத் தலைமை பெற்றிருந்தார்க ளென்றும் தெளிவாக அறிகிறோம். கடைச்சங்க காலத்தில் சிவபெருமான் தர்மியென்பவருக்கு அக்காலத்தில் உத்தர மதுரையில் ஆண்டு கொண்டிருந்த வங்கிசசூடாமணி யென்னும் சண்பகபாண்டியன் மனதில் நினைத்த கருத்திற்கிணங்கிய கவியொன்று எழுதிக்கொடுத்து 1,000 பொன் பரிசு பெறும்படி செய்தார் என்பதையும், “தமிழ் அறியும் பெருமானே தன்னைச்சேர்ந்தார் நன்னிதியே திருவாலவாய் என்னும் மதுரைக்கரசனே” - என்றும் “பாட்டுக்குருகுந் தமிழ்ச் சொக்கநாதர்” - என்றும் “தெய்வத் தமிழ்கூடல்” - என்றும் “சங்கம் பொங்கும் பண்முத்தமிழ்க்கோர்பயனே சவுந்திரபாண்டியனே” என்றும் பல வித்வான்கள் புகழ்வதையும் நாம் கவனிக்கும்பொழுது தமிழ்ப்பாஷை பரமசிவன் நேசித்த பாஷையென்று தெளிவாய்த் தெரிகிறது. உத்தர மதுரையில் தடாதகைப் பிராட்டியாரைக் கலியாணஞ் செய்து கொண்ட சுந்திர பாண்டியனும் அவர் குமாரனாகிய உக்கிர பாண்டியனும் மதுரையில் தமிழ் அரசர்களாயிருந்தார்களென்றும் இவர்களே சிவபெருமான் முருகக் கடவுளின் அவதாரமென்றும் சொல்லப்படுகிறது. மேலும் பாண்டியராஜர்கள் யாவருக்கும் தமிழ்நாடன், தென்னவன், தமிழர் கோமான், கூடற் கோமான், கடம்பவனநாதன், மதுரேசன் (மதுரைக்கரசன்), பாண்டி வள நாடன் எனப் பல பெயருண்மையும், பரமசிவனையும் சுப்பிரமணியரையும் அவர்கள் பரம்பரையில் உதித்த பாண்டிய ராஜாக்களையும் மற்றவர்கள் புகழ்ந்திருப்ப தையும் நாம் காணலாம். சிவபெருமானும் அவர் பரம்பரையிலுதித்த பாண்டிய வரசர்களும் தென்மதுரை, கொற்கை, உத்தரமதுரை என்னும் இடங்களில் ஆண்டு வந்தார்களென்றும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்து வந்தார்களென்றும் தெளிவாக அறிகிறோம். இவர்களில் மிகுந்த பிரசித்தி பெற்ற அரசர்களுக்குக் கோயில் கட்டி அவர்களைத் தெய்வங்களாக வணங்கி வந்தார்கள். இப்பரம்பரையிலுள்ளோர் யாவரும் தென்பாண்டி நாட்டில் முதல் சங்கத்துக்கு முதன்மையான பரமசிவனையும் அவர் குமாரனாகிய முருகக் கடவுளையும் ஆராதித்து வந்தார்கள். தென்னிந்தியா விலும், சுமத்திரா, ஜாவா என்னும் தீவுகளிலும், சுப்பிரமணியர் ஆலயங்களும் விக்னேஸ்வரர் ஆலயங்களும் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இந்தியாவின் வடபாகத்திலும் மற்றும் இடங்களிலும் இவ்வாலயங்களிருக்கக் காண்பது அரிJ. உத்தரமதுரையில் சுமார் 130 தலைமுறையாக ஆண்டு கொண்டு வந்த ராஜாக்கள் சிவ பெருமான் என்னும் சோமசுந்திரபாண்டியனின் வம்சத்தார்க ளென்பதை, திருவாலவாய் என்னும் உத்தரமதுரையின் ஸ்தலபுராணத்தில் அல்லது திருவிளையாடல் புராணத்தில் தெளிவாகக் காணலாம். அதில் விறகு விற்றபடலம் அல்லது யாழ் வாசித்த படலத்திலும் இசைவாதுவென்ற படலத்திலும் கால் மாறியாடிய படலத்திலும் சங்கீதத்தைப் பற்றியும் பரதத்தைப் பற்றியும் தாளத்தைப் பற்றியும் சுருக்கமாய்ச் சொல்லியிருக்கிறது. 25. முச்சங்கங்களின் காலத்தைக்கொண்டு இந்தியாவின் பூர்வ சரித்திரத்தை ஒருவாறு திட்டமாய் அறியலாம் என்பது. இதை வாசிக்கும் கனவான்களே! இந்தியாவின் காலக்கணக்கு தற்காலத்தைப்போல ஒன்று, இரண்டு என்ற இலக்கத்தோடு சொல்லப்படாமல் இன்ன மனுவின் காலமென்றும் இன்ன யுகமென்றும் இத்தனையாவது பரிவிருத்தி யென்றும் (120 வருஷம்) இன்ன பெயருடைய வருஷமென்றும் (பவ, யுவ, என்பது போல்) இன்ன ராசி மாதம் என்றும் (மேடரவி) சொல்லுவது வழக்கம். இதோடு மனிதனின் அற்ப ஆயுளை நினைத்து வெகுதானிய வருஷம் கடகரவியில் பிறந்தானென்றும் சொல்லுவது வழக்கம். இதில் எந்த வெகுதானிய வருஷமென்றும் எத்தனையாவது பரிவிருத்தியென்றும் எந்த ஆயிலியத் திருவிழாவென்றும், எந்தயுகமென்றும் சொல்லாமையினால் நிச்சயம் சொல்லக்கூடாமல் மயங்குவது இயல்பே. மேலும் பிதுர்பக்தி அதிகமாயுள்ள இந்திய ராஜவம்சங்களில், முன்னோர்களின் பெயரே அடிக்கடி வழங்கி வருகிறது வழக்கம். இப்படி வருவதினால் இந்தியாவில் கால நிச்சயம் சொல்லுவது சற்று வருத்தமாகத் தோன்றுகிறது. மேலும் பூர்வத்தில் புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதியவர்கள் கால நிச்சயத்தின் அருமையை அறியாமல் அவர்கள் மனம்போனபடி கால நிர்ணயம் சொல்லியிருக்கிறார்கள். 360 நாள் கொண்டது மனுட வருடமென்றும், அப்படி 360 கொண்டது தேவ வருடமென்றும் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ராஜாக்களும் தேவ வருடத்தில் 60,000, 40,000, 10,000 வருடங்கள் ஆண்டார்களென்றும் அனேக ரிஷிகள் அனேக ஊழி காலங் களாகவும் அநேக சதுர்யுகங்களாகவு மிருந்தார்களென்றும் சொல்லப்படுகிறது. இதினால் இந்திய சரித்திரத்தின் கால நிர்ணயம் சரியாகச் சொல்வது கூடிய காரியமாகத் தோன்றவில்லை. எந்தச் சரித்திரமும் இப்படிப்பட்ட கற்பனைகள் கலந்ததாகவேயிருக்கிறது. இதோடு நீதி நூல்கள் எழுதிய வித்வ சிரோமணிகளை கவனிப்போமானால் காப்பு முதல் கடை வரையிலும் தங்கள் ஊரையாவது பெயரையாவது பிறந்த வருஷத்தையாவது சொல்வது வழக்கமாயில்லை. திருக்குறள், ஆத்தி சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி முதலியவைகளைக் கவனித்தால் இவ்வுண்மை தெரியும். தற்காலத்தைப்போல் புஸ்தகம் பதிவு செய்து வைக்கிற (Register) வழக்கமு மில்லை. அப்படியே எழுதி வைத்தாலும் முதல் ஏட்டிலாவது கடைசி ஏட்டிலாவது எழுதி வைப்பார்கள். வைத்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் முதல் ஏட்டையும் கடைசி ஏட்டையும் முதல் முதல் செல்லுகள் அரிப்பது வழக்கம். இப்படி அரித்து விடுகிறதும் காலந்தெரியாமல் போவதும் இயற்கை. சில நூறு வருஷங்களுக்கு முன்னுள்ள நூல்களை அநேக சதுர்யுகங்களுக்கு முன்னுள்ளதென்று சொல்லிக் கொள்வது பெருமையென்று ஒரு தப்பான அபிப்பிராயம் வளர்ந்துவிட்டது. இப்படிக் காலந்தெரியாமல் போவதோடுகூட சிலர் தாங்கள் எழுதிய நூலுக்குப் பெரியவர்கள் பெயரை போட்டுவிட்டால் அதி பூர்வமாக எண்ணப்படுமென்று நினைத்துப் பெயர் மாற்றி வைக்கிறார்கள். விசேஷமாக நீதிநூல்களிலும் உண்மை விளக்கும் சாஸ்திரங்களிலும் உள்ளது உள்ளபடியே அனுபோகத்துக்கு வரக்கூடிய சாஸ்திரங்களிலும் இப்படிச் செய்கிறதில்லை. ஆனால் கற்பனைகளும் கட்டுக்கதைகளும் நிறைந்த நூல்களிலே இவைகளை நாம் காணலாம். திருஷ்டாந்தமாக ஸ்தல புராணங்கள் புதிது புதிதாய் உண்டாக்கப்படுவதை அறிவோம். அக்கதை சொல்வதற்கு வியாச பகவானும் அதைக்கேட்டு ஜனமேஜயருக்குச் சொல்ல நடுவில் ஒரு சூதபுராணிகரும், அதைத் தூண்டிவிட ஒரு நாரதரும் எழுதுவதற்கு மற்றொரு வியாசரும், எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். அவர்கள் சொல்வதை வியாசர் எப்படியாவது எழுதி விடுவார். அதன் பின் இவர்கள் எழுதினதெல்லாம் வேதமும் புராணமுமாகிவிடும். சூதபுராணிகர் என்பதும் நாரதர் என்பதும் வியாசர் என்பதும் பெயர் வேற்றுமையால் வேறாகத் தோன்றினும் புராணம் எழுதினவர் ஒருவர் என்றே தோன்றுகிறது. எழுதினவர் இன்னாரென்று நமக்குத் தெரிந்திருந்தும் இவர் இப்படி அநேக ஸ்தலங்களுக்குப் புராணங்கள் எழுதியிருக்கிறார் என்று நாம் அறிந்தும் சூதபுராணிகர், நாரதர், வியாசர் போன்ற மகான்கள் பெயர்களும், சில தேவர்கள் பெயர்களும் வருவதினால் மாத்திரம் அவரால் எழுதப்பட்ட யாவும் உண்மையென்று நம்பி விடுகிறோம். பரிசீலனை பண்ணாத இக்குருட்டு நம்பிக்கை இந்தியாவுக்கே சிறந்ததாகத் தோன்றுகிறது. ஆகையினால் புராணங்கள் சொல்வதைக் கொண்டு மாத்திரம் நாம் இந்தியாவின் காலத்தை நிச்சயிப்பது கூடாத காரியம். ஆயிரம் ஆயிரமான வருஷங்களுக்கு மேற்பட்ட சங்கதிகளை பூர்வ சரித்திரங்களைக் கொண்டே ஒருவாறு சொல்லலாமேயொழிய நிச்சயமாய்ச் சொல்லுவது கூடிய காரியமாயில்லை. முச்சங்கமும் அவைகளிருந்த வருஷமும் எவ்வித ஆஷேபணையுமின்றி நாம் ஒப்புக் கொள்ளக் கூடிய சரித்திரமுடையதாகத் தெரிகிறது. அவ்வருஷத்தைக் கொண்டு மற்ற நடவடிக்கைகளையும் நாம் ஒத்துப் பார்த்தால் இந்திய பூர்வீக சரித்திரங்களின் உண்மை விளங்கும். தென் மதுரையும் அதைச் சேர்ந்த 49 நாடுகளும் தண்ணீருக்குள் மூழ்கிப் போனதால் வேறு எவ்விதமான துப்புந் துலங்க வில்லை. அப்படியில்லாதிருந்தால் நமக்கு வேண்டிய அநேக ஆதாரங்கள் அங்கே கிடைத்திருக்கும். அழிந்துபோன லெமூரியாவைப் பற்றியும் அதன் சுற்றிடங்களிலிருக்கும் இயற்கை அமைப்பின் சில குறிப்புகளைப் பற்றியும் தமிழ்ப்பாஷையின் பூர்வத்தைப் பற்றியும் தமிழ் மொழிகள் பல பாஷையில் கலந்திருப்பதைப் பற்றியும் சாத்திர ஆராய்ச்சிக்காரர்கள் சொல்பவை உண்மையென்று புலப்படுகின்றன. இன்னும்சில நாள் செல்லச் செல்ல இதிலும் மேலான சில ஆதாரங்கள் கிடைக்கலாம். அதிபூர்வமாயுள்ள லெமூரியாவில் தமிழ்ப் பாஷையே பேசப்பட்டு வந்ததென்றும் தமிழ்ப்பாஷையே மற்றெல்லா பாஷைகளுக்கும் முந்தினதென்றும் சாஸ்திரிகள் கூறும் அபிப்பிராயம் சரியென்று நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். இந்துமகா சமுத்திரத்தின் தென்பக்கத்திலுள்ள கெர்கியூலன் தீவுவரை விசாலித்திருந்த பூமியே ஒரு காலத்தில் அதாவது முதல் ஊழிக்குமுன் தமிழ் மக்கள் குடியிருந்த நாடாகவும் 4,400 வருஷங்களாக முதற் சங்கமிருந்த பூமியாகவும் தோன்றுகிறது. இதோடு இந்நாட்டின் தென்பாரிசத்தில் பல மலைத் தொடர்களால் சூழப்பட்ட குமரியென்ற மலைச் சிகரமிருந்ததாகவும் அதிலிருந்து பஃறுளியாறு வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் வெட்டப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேற்றிசை மலைகளிலிருந்து அரபிக் கடலில் விழும் பெரிய ஆற்றைக் கிழக்குத் திசையில் வரும்படி வைகை வாய்க்கால் வெட்டி விட்டது போல இதுவுமிருக்கலாமென்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது. இது ஒரு பெரிய ஜீவநதியாயிருக்க வேண்டும். இந்நதியும் குமரி ஆறும் இமயமலைபோலொத்த குமரிமலைகளின் தொடர்ச்சி யினின்று உற்பத்தியாயிருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இம்மலையும் நதியும் அழிந்த காலத்தில் அந்நாட்டிற்கு வட எல்லையா யிருந்த குமரியாறும் அழிந்து போயிற்று. இதனுடைய பூர்வீகத்தையும் அறிந்து கொள்வதற்கு அதிக ஏதுக்களில்லாதிருந்தாலும் அழிந்துபோன முதற் சங்கத்தின் கடைசி காலத்திலிருந்து தப்பிக் கபாடபுரத்துக்கு வந்த முடத்திருமாறன் என்ற கடைசி பாண்டியனும் அகஸ்தியர் தொல்காப்பியர் போன்ற முதற் சங்கப் புலவர்களும் ஒருவாறு முதற் சங்கத்தின் பெருமையை இரண்டாஞ் சங்கத்துக்குப் புலப்படுத்தி யிருப்பார்களென்று தோன்றுகிறது. மற்றப்படி 4,440 வருஷங்கள் நடந்த தமிழ் சங்கத்தை 4,449 வித்வ சிரோமணிகள் தலைமை வகித்தார்களென்ற திட்டமான கணக்கு ஏற்பட்டிருக்காJ. இதற்கு சுமார் 3,700 வருஷங்களுக்கு பின்னுண்டான மற்றொரு அழிவினால் முந்தின ஊழியின் அழிவு, நுட்பமான சில சரித்திரங்களல்லாத அட்டவணையாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் வித்வபரம்பரையாக இது வழங்கி வந்ததினால் இது உண்மைத் தவறுதல் என்று நினைக்க இடமில்லை. மூன்றாவது சங்கம் அழிந்து இற்றைக்கு சுமார் 1,800 வருஷங்கள் ஆயிற்றென்பது யாவரும் அறிந்த விஷயம். அப்படியிருந்தாலும் ஒரு தமிழ்ச் சங்கமிருந்ததாகச் சொல்லப்படவில்லை. கிறிஸ்து பிறந்த இரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் சங்கம் கலைந்துபோனபின் சுமார் 1,000 வருஷங்களாக அதாவது கி.பி. 1,200 வருஷங்கள் வரைக்கும் பாண்டிய ராஜகுலத்தவர்களாலே அரசாக்ஷி செய்யப்பட்டு வந்தது. அதன்பின் சுமார் 50 வருஷங்களாக ஆதி சுல்தான் என்னும் மகமதிய அரசனும் அதன்பின் விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர் போன்ற சில நாயக்க வம்சத்தவர்களும் அதன்பின் முராரி ராயர், அப்பாஜி ராயர், சந்தா சாயபு, கான் சாயபு போன்ற அநேகம் சில்லரை ராஜாக்களும் ஒரு வருஷம் இரண்டு வருஷம் போன்ற அற்ப காலங்கள் ஒருவர்பின் ஒருவராக கலகஞ் செய்து கொண்டு அரசாக்ஷி செய்து வந்தார்கள். 1,801-ம் வருஷம் மதுரையும் அதைச்சேர்ந்த நாடுகளும் மாட்சிமை தங்கிய ஆங்கிலேயர் ஆளுகையில் வருகிற வரையும் நாட்டில் சமாதானமில்லாதிருந்தJ. தன் உயிரையும் குடும்பத்தார் உயிர்களையும் தனது பொருள்களையும் காப்பாற்ற சக்தியில்லாது தவித்துக் கொண்டிருக்குங் காலத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் வைத்து நடத்துவது கூடிய காரியமாகுமா? அதோடு அன்னிய பாஷைகளில் எழுதிய பல நூல்களும் வார்த்தைகளும் இனிய தீஞ்சொற் றமிழ்ப் பாஷையைக் கலங்கடித்தJ. 26. மாட்சிமை தங்கிய விக்டோரியா சக்கரவர்த்தினி அவர்கள் காலத்தில் மதுரை நாலாவது தமிழ்ச்சங்கம் ஆரம்பமாயிற்று. எவ்வுயிரையும் தன்னுயிர்போல் நினைத்து அரசாட்சி செய்து வரும் ஆங்கிலேய துரைத்தனத்தார் உள் நாட்டுக் கலகங்களையடக்கி வெளிநாட்டார் படையெடுப்பைத் தடுத்து துஷ்ட ராஜர்களை நீக்கி குடிகள் சுகமுற்று வாழ்வதற்கு அனுகூலமான தந்தி, தபால், பெரும் பாதைகள், இருப்புப் பாதைகள், நீர் பாசன வசதிகள், வைத்தியசாலைகள், கல்விச்சாலைகள், கலாசாலைகள், நியாயஸ்தலங்கள் முதலியவைகளை ஏற்படுத்தி இந்தியாவைச் சமாதான நிலைக்குக் கொண்டு வந்தார்கள். தாயில்லாக் குழந்தைகளுக்கு உற்ற தாய் போல கருணை சுரந்து தன் மக்களிலும் அருமையாய் நினைக்கும் ஆங்கிலேய அரசியாய் விளங்கின விக்டோரியா மகாராணி அவர்கள் இந்தியாவின் ராஜ சுதந்தரமும் பின் ஏக சக்கராதிபத்யமும் பெற்றுத் தரும நீதி தவறாமல் 1,837 முதல் 1,901 வரையும் சுமர் 64 வருஷங்களாக மிகுந்த சமாதானத்தோடு அரசாட்சி செய்து வந்தார்கள். இவ்வுத்தம அரசாட்சியின் பயனாக இந்திய தேசத்தின் உள்நாட்டுக் கலகங்கள் ஓய்ந்தன. நீதி தவறிய பல கொடுஞ்செயல்கள் ஒழிந்தன. ஜனங்கள் ஒன்று சேரவும் சகோதர உரிமை பாராட்டவும் பல சங்கங்கள் உண்டாயின. தமிழ்ப் பாஷையின் பூர்வீகத்தையும் அதன் சொற்சுவை பொருட்சுவையு மறிந்த பலர் பழைய தமிழ் நூல்களைத் தேடவும் அதை ஆராய்ச்சி செய்யவும் அச்சிடவும் ஒரு சபை கூட்டவும் ஆரம்பித்தார்கள். ஆங்கிலேய அரசாட்சியில் இந்தியாவில் முதல் சக்கிராதிபத்யம் பெற்ற விக்டோரியா சக்கரவர்த்தினி அவர்களின் அரசாட்சியின் 64வது வருஷமாகிய 1901வது வருஷத்தில் நாலாவது சங்கம் ஆரம்பமாயிற்று. கலியுகம் 3,200 இல் மூன்றாவது சங்கம் கலைந்து போக அதற்குச் சுமார் 1,800 வருஷங்களுக்குப் பின் கலியுகம் 5,002 இல் மதுரை நாலாவது தமிழ்ச் சங்கங்கூடி 13 வருஷங்களாக நடந்து வருகிறதையும் அதில் 251க்கு மேற்பட்ட பல வித்வசிரோமணிகள் சேர்ந்திருப்பதையும் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருவதையும் நாம் காண்கையில், இதற்கு முன் நடந்த மூன்று சங்கங்களையும் அதன் பெருமையையும் உண்மைத் தவறுதலென்று யார் மறுக்கக்கூடும்? பாலவனத்தம் ஜமீன்தார் ஸ்ரீமான் பாண்டித்துரை தேவர் அவர்களின் பெருமுயற்சியால் இந்நாலாம் சங்கம் ஆரம்பித்தJ. இந்நாலாஞ் சங்கத்திற்கு பாலவனத்தம் தமிழ்ச் சங்க மென்றாவது பாண்டித்துரை தமிழ்ச்சங்கமென்றாவது பெயர் வைக்கலாமே. அப்படியில்லாமல் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்று வைத்ததானது, இதன் முன் மதுரையில் நடந்த தமிழ்ச் சங்கத்தின் பெயரையே முதற்காரணமாகக் கொண்டு வைக்கப்பட்டதென்று தோன்றுகிறது. இதன் முன் பிரபலமான மூன்று சங்கங்களிருந்ததினால் இதற்கு நாலாம் சங்கமென்ற பெயர் வந்தது. இந்நாலாம் சங்கத்தைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள் அதாவது, ஆரம்பித்த காலம், கூட்டப்பட்ட சங்கத்தில் தலைமை வகித்தவர்கள், சங்கத்தை ஆதரித்து வரும் ராஜர்களும் கனவான்களும், சங்கத்தை நடத்தி வருவதில் பிரயாசை எடுத்துக் கொள்ளுங் கனவான்களும், சங்கத்தில் அங்கத்தினராக இருக்கும் வித்வான்களும் ஆகிய இவர்களைப் பற்றிச் சுருக்கமாய்ப் பார்ப்பது முந்திய மூன்று சங்கங்களின் உண்மையை அறியாதவர்களுக்கு அவற்றின் உண்மையை வெளிப்படுத்துமென்று எண்ணுகிறேன். நாலாவது மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901ம்௵ ´ மே௴ 24² ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டJ. இதுவரை 13 வருஷமாக சங்கம் கூடிற்று 1. ஸ்ரீமான் பாண்டித் துரைத் தேவர் அவர்கள் 2. ” S. சாமிநாதவிஜயதேவர் அவர்கள் 3. ” P.S.. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் 4. ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் 5. ஸ்ரீமான் ராவ்பகதூர் M. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் 6. ” ஆனரபிள் K. இராம ஐயங்கார் அவர்கள் 7. ” ஆனரபிள் P. இராமநாதன் அவர்கள் 8. மகா-ராச-ராச-சிறி மகாமகோபாத்தியாயர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் ஆகிய இவர்களால் தலைமை வகித்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அடியிற்கண்ட கனவான்களும் மற்றும் கனவான்களும் சங்கத்திற்கு வேண்டிய பொருளுதவி செய்து ஆதரித்து வந்திருக்கிறார்கள். 1. பாலவனத்தம் ஜமீன்தார் ஸ்ரீமான் பொ. பாண்டித்துரைத் தேவர் அவர்கள் சங்க ஸ்தாபகர் 2. மாட்சிமை தங்கிய பாஸ்கரசேதுபதியவர்கள் 3. ” ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதியவர்கள் 4. ” புதுக்கோட்டை மகாராஜா அவர்கள் 5. ” திருவாங்கூர் மகாராஜா அவர்கள் 6. ” பரோடா மகாராஜா அவர்கள் 7. ” மைசூர் மகாராஜா அவர்கள் 8. ” தர்பங்கா மகாராஜா அவர்கள் 9. ” கொச்சி மகாராஜா அவர்கள் 10. ” எட்டையாபுரம் மகாராஜா அவர்கள் 11. ஆண்டிப்பட்டி ஜமீன்தார் ஸ்ரீமான் பெத்தாச்சி செட்டியார் அவர்கள் 12. ஸ்ரீமான் V.T.S.. சேவுக பாண்டியத்தேவர் அவர்கள் ஜமீன்தார் சேத்தூர் 13. ” A.L.A.R.. அருணாசலம் செட்டியார் அவர்கள் 14. ” இராமச்சந்திர தேவர் அவர்கள் 15. ” சுப்பிரமணிய தீர்த்தபதி அவர்கள் ஜமீன்தார் சிங்கம்பட்டி 16. ” ராஜா M. தினகரபகதூர் அவர்கள் 17. ” ராம. மெ. சித. வைரவன் செட்டியார் அவர்கள் தேவகோட்டை 18. ” மெ.லெ.மெ. இராமநாதன் செடியார் அவர்கள் ” 19. ” மெ.அரு.நா. இராமநாதன் செட்டியாரவர்கள் ” 20. ” ராம.அரு.அரு.ராம. அருணாசலஞ்செட்டியார் அவர்கள் ” 21. ” அரு.அரு.சோம. சோமசுந்தரஞ் செட்டியார் அவர்கள் ” 22. ” மெ.அரு.அரு. அருணாசலஞ்செட்டியார் அவர்கள் ” 23. ” முத்து கரு.வெ. அழகப்ப செட்டியார் அவர்கள் ” 24. ” வீர.லெ.ராம.லெ. பெத்தப்பெருமாள் செட்டியார் அவர்கள் ” இன்னும் பல கனவான்கள் உதவி செய்திருக்கிறார்கள். இது தவிர அடியிற் கண்ட கனவான்கள் சங்கத்தின் விருத்திக்கான விஷயங்களைக் கவனித்து சங்கத்தை நடத்தி வருகிறார்கள். 1. மாட்சிமை தங்கிய ஸ்ரீமான் ராஜராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி அவர்கள் அக்கிராசனாதிபதி 2. S.R.M.M.T.T. பெத்தாச்சி செட்டியார் அவர்கள், உப அக்கிராசனாதிபதி 3. மகா-ராச-ராச-சிறி மகாமகோபாத்தியாயர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் 4. ” V. கோபாலசுவாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள் 5. மகா-ராச-ராச-சிறி தக்ஷணாமூர்த்தி துரைராஜா அவர்கள், B.A. B.L., 6. ” நல்லசாமி பிள்ளை அவர்கள், B.A. B.L., 7. ” Ct. A.V. சோமசுந்தரம்பிள்ளை அவர்கள், B.A. B.L., 8. ” T.A.இராமலிங்கம் செட்டியாரவர்கள், B.A. B.L., 9. 9. ” R. இராகவையங்கார் அவர்கள் 10. ” Rao Saheb K. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் 11. ” V.S. இராமசுவாமி சாஸ்திரிகள் அவர்கள் 12. ” கான்பகதூர் H.. அப்துல் சுபான் சாகிப் அவர்கள் 13. ” S. கோபாலசாமி ஐயங்கார் அவர்கள், B.A. 14. ” T.N.சுந்தரராஜ ஐயங்கார் அவர்கள், B.A. B.L. 15. ” T.C.ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள், B.A. B.L. அடியில் வரும் கனவான்கள் இச்சங்கத்தின் அங்கத்தினராக இருந்து அநேக அரிய விஷயங்களை வசன நடையாகவும் செய்யுள் நடையாகவும் புதிதாக எழுதி சங்கத்தில் அரங்கேற்றியும் பழைய நூல்களை வெளிப்படுத்தியும் பற்பல ஆராய்ச்சிகள் செய்தும் வருகிறார்கள். 1. மகா-ராச-ராச-சிறி உ.வே.சாமிநாதையர் அவர்கள், மஹா மஹோ பாத்தியாயர், பிரசிடென்சி காலேஜ், சென்னை. 2. ” ரா. இராகவையங்காரவர்கள், சேதுசமஸ்தான வித்வான் இராமநாதபுரம் 3. ” திரு. நாராயணைங்காரவர்கள், செந்தமிழ்ப் பத்திராதிபர் மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை. 4. ” ஸ்ரீ அரங்கசாமி ஐயங்காரவர்கள், தலைமை உபாத்தியாயர், தமிழ்ச்சங்கம் கலாசாலை, மதுரை. 5. ” சேற்றூர் ரா. சுப்பிரமணிக்கவிராயவர்கள், திருவாவடுதுறை ஆதீன வித்வான் 6. ” அ. சண்முகம்பிள்ளை அவர்கள், தமிழ் வித்வான், சோழவந்தான் 7. ” அம்பலவாண நாவலரவர்கள், தமிழ் வித்வான், திருநெல்வேலி. 8. ” பூவை-அஷ்டாவதானம்-கலியாணசுந்தர முதலியாரவர்கள், தமிழ் வித்வான், சென்னை. 9. ” அ. நாராயணசாமி ஐயரவர்கள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர், டவுன் ஹைஸ்கூல், கும்பகோணம். 10. ” தி.ப. சிவராம பிள்ளையவர்கள், தலைமை தமிழ்ப் பண்டிதர், இந்து காலேஜ், திருநெல்வேலி. 11. ” M. முத்துத் தம்பிப் பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், நாவலர் கோட்டம், யாழ்ப்பாணம். 12. ” அ. குமாரசாமிப் பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், சுன்னாகம், யாழ்ப்பாணம். 13. ” கவிராஜ-நெல்லையப்ப பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், திருநெல்வேலி. 14. ” ரெ. அப்புவையங்காரவர்கள், தமிழ்ப் பண்டிதர், ஹிந்து ஹைஸ்கூல், ஸ்ரீவில்லிபுத்தூர். 15. ” ப.அ. முத்துத்தாண்டவராய பிள்ளையவர்கள், தமிழ் வித்வான், தரங்கம்பாடி. 16. ” பி.எஸ். தெய்வசிகாமணி ஐயரவர்கள், தமிழ்ப்பண்டிதர், ராஜா ஹைஸ்கூல், சிவகங்கை. 17. ” K. ரா. கந்தசாமிக்கவிராயவர்கள், பத்திராதிபர், “வித்யாபாநு” மதுரை. 18. ” K. ரா. அருணாசலக்கவிராயரவர்கள், தமிழ் வித்வான், விவேகபாநு ஆபீஸ், மதுரை. 19. ” காஞ்சி-நாகலிங்க முதலியாரவர்கள், தமிழ் வித்வான், சென்னை. 20. ” எம்.எஸ். சுப்பிரமணியக் கவிராயரவர்கள், தமிழ்ப் பண்டிதர், இந்து காலேஜ், திருநெல்வேலி. 21. ” கோ. ஸ்ரீநிவாஸாசாரியாரவர்கள், தலைமைத் தமிழ்ப்ண்டிதர், காலேஜ், மைசூர். 22. மகா-ராச-ராச-சிறித. கைலாசம் பிள்ளையவர்கள், சைவப்பிரகாச வித்தியாசாலைத் தலைவர், யாழ்ப்பாணம். 23. ” வெ. சதாசிவசெட்டியாரவர்கள், தமிழ்ப் பண்டிதர், S. P.G. காலேஜ், திருச்சிராப்பள்ளி. 24. ” வி. குப்புசாமி ராஜு அவர்கள், வித்வான் கோவிந்தன் பிரதர்ஸ், தஞ்சாவூர். 25. ” நா. சுவாமி வேதாசலம், சென்னை. 26. ” கா. கோபாலாசாரியாரவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், கிரிஸ்டியன் காலேஜ், சென்னை. 27. ” தெ.ச. சுப்பிரமணிய பிள்ளையர்கள் திருஞானசம்பந்த மடாலய சபை, தூத்துக்குடி. 28. ” பொ.K. முத்தையாபிள்ளையவர்கள், தூத்துக்குடி. 29. ” சுவாமி உருத்திர கோடீசுரர், தர்ம லாட்ஜ், புத்தன் சந்தை, திருவனந்தபுரம். 30. ” C. அரங்கசாமி நாயக்கரவர்கள், ஜார்ஜ் டவுன், சென்னை. 31. ” V. கோபாலசுவாமி ரகுநாத ராஜாளியாரவர்கள், ஹரித்வார மங்கலம், தஞ்சாவூர் ஜில்லா. 32. ” K. சாம்பசிவநாயனாரவர்கள், தமிழ் வித்வான், சாலியமங்கலம், தஞ்சாவூர். 33. ” ஜி. சதாசிவம்பிள்ளையவர்கள், நீலலோசனி பத்திராதிபர், நாகப்பட்டணம். 34. ” நல்ல குற்றாலம் பிள்ளையவர்கள், தமிழ்ப்பண்டிதர், சேதுபதி ஹைஸ்கூல், மதுரை. 35. ” C.S. சொக்கலிங்கம் பிள்ளையவர்கள், தமிழ்ப்பண்டிதர், கோயம்புத்தூர். 36. ” ரா.ம. பழனிவேல் பிள்ளையவர்கள், Iron Merchant, Keelavasal, Tanjore. 37. ” M.V. இராமாநுஜாசாரியரவர்கள், தமிழ்ப்பண்டிதர், காலேஜ், கும்பகோணம். 38. ” M. பழனிசாமிக் கவுண்டரவர்கள், குமரலிங்கம், பழனித் தாலுகா. 39. ” செ.K. சையத்மகமத் ஆலிம்புலவரவர்கள், கீழக்கரை. 40. ” S. இராதாகிருஷ்ணய்யர் அவர்கள், B.A.,F.M.C. ஞரனரமடிவயா 41. ” ஐ. சுப்பிரமணிய ஐயரவர்கள், B.A.,Editor, “Swadesa Mitran”, Madras. 42. ” T. ராமகிருஷ்ண பிள்ளையவர்கள், B.A.,High Court, Madras. 43. ” K. சுந்தரராமையரவர்கள், M.A., Lecturer, Kumbakonam 44. ” J.M. நல்லசாமி பிள்ளையவர்கள், B.A.,B.L. கமிட்டி, தமிழ்ச்சங்கம்,மதுரை. 45. ” K. G. சேஷையரவர்கள், B.A.,B.L., ஹைகோர்ட்டு வக்கீல், திருவனந்தபுரம். 46. ” B.S. சுப்பிரமணிய ஐயரவர்கள், B.A.,Revenue Board Officer, Madras. 47. ” S. V. கள்ளபிரான் பிள்ளையவர்கள், B.A.,pecial Deputy Collector, Trichy. 48. ” பகடால் S. P. நரசிம்மலு நாயுடுகாரு அவர்கள், Editor, Cresent, Coimbatore. 49. ” S. சாமிநாதையரவர்கள், சன்னதித் தெரு, இராமனாதபுரம். 50. ” S. பால்வண்ண முதலியாரவர்கள், Secretary, S.V. Sabha, Tirunelvelly. 51. ” M.S. பூர்ணலிங்கம் பிள்ளையவர்கள், B.A.,Bridge, Tirunelvelly. 52. ” T.C.ஸ்ரீநிவாசையங்காரவர்கள், B.A.,B.L., Hon Secretary, Tamil Sangam. 53. ” ஐ. சாமினாத முதலியாரவர்கள், Supervisor of Primary Schools, Tanjore. 54. ” V.P. சுப்பிரமணிய முதலியாரவர்கள், G. B.V.C., Dy. Supdt. Civil Veterinary, Madras. 55. ” V. முத்துக்குமரசாமி முதலியாரவர்கள், B.A.,Inspector, Rangoon. 56. ” சித்-கைலாசம் பிள்ளையவர்கள், Secretariat, Colombo. 57. ” கற்குளம்-குப்புசாமி முதலியாரவர்கள், B.A., Government Secretariat, Madras. 58. மகா-ராச-ராச-சிறி S. கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள், M.A., M.R.A.S. , Bangalore City. 59. ” T. கனகசுந்தரம் பிள்ளையவர்கள், B.A.,315, Mint Street, Madras. 60. ” P. வெங்கிடசாமி முதலியாரவர்கள், Huzur Sheristadar, Tirunelvelly. 61. ” V.J. தம்பிப் பிள்ளையவர்கள், M.R.A.S. , Wellavetti, Colombo. 62. ” T.A. இராமலிங்க செட்டியாரவர்கள், B.A.,B.L., Coimbatore. 63. ” N.V. சுந்தரராஜ ஐயரவர்கள், B.A., 1st Grade Pleader, Ramnad. 64. ” K. தேவநாதாசாரியரவர்கள், Tamil Pandit, Maha Raja’s College/ Mysore. 65. ” T. இலட்சுமண பிள்ளையவர்கள், B.A., Huzur Office, Trivandrum. 66. ” K. V. சுப்பையர் அவர்கள், Head Master, T.H. School, Madras. 67. ” M.R. ஸ்ரீநிவாஸையங்கார் அவர்கள், Tamil Vidwan, Pudukotah. 68. ” M.K. M. அப்துல் காதிறு ராவுத்தரவர்கள், Hakdhar, Sothukudi. 69. ” M. Julien Vinsen Esq., Professor al ‘Ecole de Langues Orientals 58 rue’del University. Paris. 70. ” M. N. சேஷையரவர்கள், கூநயஉhநச, சேதுபதி ஹைஸ்கூல், மதுரை. 71. ” பெருகவாழ்ந்தான் அரங்காசாரியரவர்கள், மகாமகோபாத்தி யாயர், கும்பகோணம். 72. ” தி.ஈ. ஸ்ரீநிவாசாசாரியாரவர்கள், ஸமஸ்கிருத பண்டிதர், காலேஜ், கும்பகோணம். 73. ” வி. ஸ்ரீநிவாசாசாரியாரவர்கள், ஸமஸ்கிருத வித்துவான், இராமநாதபுரம். 74. ” வீராசாமி ஐயங்காரவர்கள், ஸமஸ்தான வியாகரண வித்வான், எட்டையாபுரம். 75. ” சந்திரசேகர சாஸ்திரிகளவர்கள், மகாமகோபாத்தியாயர், ஸமஸ்கிருத பண்டிதர், சென்னை. 76. ” ஆர். கிருஷ்ணமாசாரியரவர்கள், M.A., ஸமஸ்கிருத பாடசாலை இன்ஸ்பெக்டர், சென்னை. 77. ” L.K. துளசிராம் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட்டு வக்கீல், மதுரை. 78. ” தக்ஷிணாமூர்த்தி துரைராஜா அவர்கள், B.A.,B.L., ஹைக் கோர்ட்டு வக்கீல்,மதுரை. 79. ” சுந்தரலிங்கசாமி காமயநாயக்கரவர்கள், மதுரை. 80. ” கான் பகதூர் H. அப்துல் பஹான் சாகேப் அவர்கள், ரிடயர்டு, அஸிஸ்டெண்டு போலீஸ் சூபரிண்டெண்டெண்ட், மதுரை. 81. ” K. அண்ணாமலைப்பிள்ளை, தமிழ்பண்டிதர், அம்மனூர், திருத்துறைப்பூண்டி. 82. ” கா.ப. செய்குதம்பிப் பாலரவர்கள், சந்தித் தெரு, கோட்டாறு. 83. ” S. காளியண்ணக் கவுண்டரவர்கள், சேர்வாம்பட்டி ஜமீன்தார், திருச்சங்கோடு. 84. ” M. கதிரேச செட்டியாரவர்கள், மகிபாலன் பட்டி, இராமநாதபுரம் 85. ” N. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், போலீஸ் S.H.O. திருமக் கோட்டை, தஞ்சை. 86. ” J.V. சுப்பிரமணிய ஐயரவர்கள், B.A., மானேஜர் P.W.D.. பல்லாரி. 87. ” தி.அ. முத்துசாமிக்கோனாரவர்கள், செக்ரட்டேரி சைவசமாஜம், திருச்சங்கோடு. 88. ” M.P. Mascarenhas Esq., Coral Mills Co., (Ltd.) தூத்துக்குடி. 89. ” T.A. கோபிநாத ராவ் அவர்கள், M.A., ஆர்க்கியாலாஜிகல் சூபரின்டெண்டெண்டு, திருவனந்தபுரம். 90. மகா-ராச-ராச-சிறிநெல்லையப்ப பிள்ளையவர்கள், B.A.,சப்-மாஜிஸ்டிரேட், உடுமலைப் பேட்டை. 91. ” முத்துரத்ன முதலியாரவர்கள், திருவாரூர். 92. ” M.V. மீனாக்ஷிசுந்தர முதலியாரவர்கள், 1st கிரேடு பிளீடர், கோயம்புத்தூர். 93. ” P. இராமநாத முதலியாரவர்கள், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. 94. ” Y.S. டேலர் போதகர் கீழவாசல், மதுரை. 95. ” T.N.தங்கவேலு முதலியாரவர்கள், அஸிஸ்டெண்டு ஆடிட்டர், சென்னை. 96. ” பாவா. வைத்திலிங்க முதலியாரவர்கள், மிராசுதார், திருவாரூர். 97. ” ராவ்பகதூர் K. S. ஸ்ரீநிவாசம் பிள்ளையவர்கள், பிளீடர், தஞ்சை. 98. ” இராமசுப்பா முதலியாரவர்கள், மிராசுதார், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி. 99. ” ஸ்ரீலஸ்ரீ. ஆனந்தசண்முக சரணாலய சுவாமிகள், தில்லைவளாகம், தஞ்சை. 100. ” S. V.M. சுவாமிநாத பிள்ளையவர்கள், மர்ச்சென்ட், வெளிப்பாளையம், நாகை. 101. ” P. சாம்சன் எஸ்குயர், அட்வகேட், மைங்கியன், பர்மா. 102. ” அ. சுந்தரநாத பிள்ளையவர்கள், தமிழ்ப்பண்டிதர், S. P.G. காலேஜ், திருச்சி. 103. ” குமாரசாமி முதலியாரவர்கள், பெரிய வீடு, குன்னூர், ஸ்ரீவில்லிப்புத்தூர். 104. ” M. மாரியப்ப பிள்ளையவர்கள், மிராசுதார், கருவப்பநாயக்கன் பேட்டை, திருச்சி. 105. ” உ.சி.ப.செ.யி. பக்கீர் மைதீன் ராவுத்தர், மதுரை. 106. ” S. கிருஷ்ணசாமி சேனைய நாடாரவர்கள், மிராசுதார், பள்ளியூர். 107. ” A. சிதம்பர முதலியாரவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர், உத்தரன்மேரூர், செங்கற்பட்டு. 108. ” S. கிருஷ்ணசாமி ஐயரவர்கள், தமிழ்ப் பண்டிதர், காலேஜ், திருவனந்தபுரம். 109. ” V.M. தங்கையா நாயக்கரவர்கள், மிராசுதார், வளத்தாமங்கலம், தஞ்சை. 110. ” S. கோவிந்தசாமி பிள்ளையவர்கள், மானேஜர், S. S. ஸ்கூல், அவளிவணல்லூர், தஞ்சாவூர். 111. ” K. கிருஷ்ணசாமித் தேவரவர்கள், மிராசுதார், அவளிவணல்லூர், தஞ்சாவூர். 112. ” A.M. சடகோபா ராமானுஜாச்சாரியரவர்கள், Tamil Pandit, N.H. School, Trichy. 113. ” இராமசாமி வன்னியரவர்கள், மிராசுதார், புலவர்நத்தம், தஞ்சை. 114. ” பம்பையா சேதுராயரவர்கள், நற்றமிழ்ச் சங்கத் தலைவர், இளங்காடு. 115. ” S. ஞானசிகாமணி முதலியாரவர்கள், B.A.,ஸ்ரீவைகுண்டம். 116. ” K. R. வெங்கட்டராமையர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 117. ” M. பஞ்சநதம் பிள்ளையவர்கள், கீழவீதி, திருவையாறு. 118. ” M. வெங்கடசாமி நாட்டரவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், S. P.G. காலேஜ், திருச்சி. 119. ” வீ.ர. பக்கிரிசாமி பிள்ளையவர்கள், நாகப்பட்டணம். 120. ” இராமசாமி பிள்ளையவர்கள், உபாத்தியாயர், புதுக்கோட்டை. 121. ” T.N.சுந்தரராஜையங்காரவர்கள், B.A.,B.L., Hon. Secretary, Tamil Sangam, Madura. 122. ” Rao Saheb M. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், கருணாநிதி மெடிகல் ஹால், தஞ்சை. 123. ” முத்துவிஜய ரகுநாத முத்துக்குமார வணங்கா முடிவலுவதி தேவரவர்கள், ஜமீன்தார், தஞ்சை. 124. ” R. சாமினாத விஜயதேவரவர்கள், பாப்பாநாடு, ஜமீன்தார், தஞ்சை. 125. மகா-ராச-ராச-சிறிT. பக்தவத்சலம் அவர்கள், B.A.,வெப்பேரி, சென்னை. 126. ” C.V. கிருஷ்ணசாமி ஐயரவர்கள், டிஸ்டிரிக்ட் முன்சீப், திருவாரூர், தஞ்சை. 127. ” P.S. இராமலிங்க விஜயதேவரவர்கள், யங்கர் ஜமீன்தார் டிக பாப்பாநாடு, தஞ்சை. 128. ” P. குமாரசாமி பிள்ளையவர்கள், B.A.,ஹெட்கிளர்க், முன்சீப் கோர்ட், மதுரை. 129. ” S. கோபாலசாமி ஐயங்காரவர்கள், B.A., வக்கீல் Auditor, Tamil Sangam. 130. ” Hon. S. Rn. M.. இராமசாமி செட்டியாரவர்கள், முனிசிபல் சேர்மன், சிதம்பரம். 131. ” N.A.V. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், B.A.,B.L., திருநெல்வேலிப்பாலம். 132. ” யாழ்ப்பாணத்து நல்லூர் உபயவேதாகம பண்டிதர், சிங்கப்பூர். 133. ” S. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், ஹைக்கோர்ட் வக்கீல், சென்னை. 134. ” ராஜமன்னார்சாமி நாடாழ்வார் அவர்கள், சீராளூர், தஞ்சாவூர். 135. ” வெங்கடாசல ரகுநாத ராஜாளியாரவர்கள், மிராசுதார், தஞ்சாவூர். 136. ” V. அப்பாசாமி வாண்டையாரவர்கள், லாண்டு லார்டு பூண்டி, தஞ்சை. 137. ” K. சதாசிவ செட்டியாரவர்கள், தங்கசாலைத் தெரு, சென்னை. 138. ” மோசூர்-முனிசாமி முதலியாரவர்கள், 175, மின்ட் ஸ்ட்ரீட், ஜார்ஜ் டவுன், சென்னை. 139. ” K. P. அருணாசல முதலியாரவர்கள், மிராசுதார், கொடிவிநாயகநல்லூர், திருத்துறைப் பூண்டி. 140. ” வன்மீகலிங்கம் பிள்ளையவர்கள், மிராசுதார். மணலி, திருத்துறைப்பூண்டி. 141. ” M. கோபாலகிருஷ்ணையரவர்கள், தமிழ்ப்பண்டிதர், மதுரைக் காலேஜ். 142. ” S. D. கிருஷ்ணையங்காரவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 143. ” M.S. சேஷையங்காரவர்கள், B.A.,1st கிரேட் பிளீடர், மதுரை. 144. ” A. கோபாலமுத்துசாமி நாயுடு அவர்கள், டீச்சர், கவர்ண்மெண்டு ஸ்கூல், பாகூர். 145. ” V. சுந்தரமய்யர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 146. ” V.S. லெட்சுமி நாராயணர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 147. ” K. வெங்கோபராவ் அவர்கள், தானப்ப முதலியார், அக்கிரகாரம், மதுரை. 148. ” C. நடேசையர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 149. ” C. ஸ்ரீநிவாஸ ராவ் ஸாகேப் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 150. ” C.S. வெங்கடாச்சாரியார் அவர்கள், ஹைக்கோர்ட் வக்கீல், சென்னை. 151. ” T. இராமசாமி ஐயங்கார் அவர்கள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 152. ” P.N. நாகநாதய்யர் அவர்கள், B.A.,வக்கீல், மதுரை. 153. ” M. மாதுவையர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 154. ” C. ஸ்ரீநிவாஸ ஐயரவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 155. ” A. ரெங்கசாமி ஐயரவர்கள், கவர்ண்மெண்டு பிளீடர், இராமநாதபுரம். 156. ” V.R. சடகோபய்யங்கார் அவர்கள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 157. ” G. சோமயாஜி ஐயர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 158. ” V. இராமச்சந்திர ஐயர் அவர்கள், B.A.,B.L., கவர்ண்மெண்டு பிளீடர், மதுரை. 159. ” S. இராமசாமி ஐயங்காரவர்கள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 160. மகா-ராச-ராச-சிறிG. A. சுந்தரமையரவர்கள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 161. ” S. ஹரிஹர ஐயரவர்கள், வக்கீல், மதுரை. 162. ” Honourable K. இராமையங்காரவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 163. ” மெ.அரு.நா. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை. 164. ” N. நடேசையர் அவர்கள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 165. ” ஜனகராஜாத்தேவர் அவர்கள், மதுரை. 166. ” S. பூபாலம்பிள்ளையவர்கள், சீப் கிளர்க்கு, P.W.D. Batticaloa, Ceylon.. 167. ” A. உக்ரபாண்டியம் பிள்ளையவர்கள், வக்கீல், இராமநாதபுரம். 168. ” நம்பெருமாளையங்கார் அவர்கள், முகவூர், திருப்பாசேத்தி Post (Ramnad Dt.) 169. ” காரை. K. சபாரத்தின ஐயர் அவர்கள், தமிழ்ப்பண்டிதர், யாழ்ப்பாணம். 170. ” V.S. இராமசாமி சாஸ்திரிகள், B.A.,B.L., வக்கீல், மதுரை. 171. ” S. A. சுப்பிரமணிய ஐயரவர்கள், Head Master,, மதுரை காலேஜ். 172. ” S. Rm. M. Ct. பெத்தாச்சி செட்டியாரவர்கள், M.R. A.S. , கானாடுகாத்தான், வைஸ் பிரஸிடெண்டு, தமிழ்ச்சங்கம், மதுரை. 173. ” G. இராமசாமி ஐயங்காரவர்கள், லாண்டு லார்டு, மதுரை. 174. ” K. இராகவையங்காரவர்கள், தமிழ்ப்பண்டிதர், தமிழ் லெக்ஸிகன் ஆபீஸ், மதுரை. 175. ” சுப்பிரமணிய பிள்ளையவர்கள், பேஷ்கார், திருப்பாச்சேத்தி போஸ்டு. 176. ” P. சுப்பராய ஐயரவர்கள், B.A.,வக்கீல், மதுரை. 177. ” A. சுந்தரமையரவர்கள், வக்கீல், மதுரை. 178. ” K. கோபாலய்யங்காரவர்கள், பிளீடர், பரமகுடி. 179. ” M. நாகலிங்கம் பிள்ளையவர்கள், பிளீடர், இராமநாதபுரம். 180. ” M.C. ஆனையப்ப முதலியாரவர்கள், தமிழ்ப்பண்டிதர், நாமக்கல். 181. ” C.M. ராஜு செட்டியாரவர்கள், M.B.P.G. , சென்னை. 182. ” முத்து க.மா. நடேசன் செட்டியாரவர்கள், தேவகோட்டை. 183. ” P.K. இராமசாமி ஐயங்காரவர்கள், ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 184. ” S. வேதாந்தமையங்காரவர்கள், பிளீடர், பரமகுடி. 185. ” T.V. கோதண்டராமய்யரவர்கள், பிளீடர், பரமகுடி. 186. ” A.S. சுப்பையரவர்கள், பிளீடர், பரமகுடி. 187. ” ALVR. Rm.. சிதம்பரஞ்செட்டியாரவர்கள், தேவகோட்டை. 188. ” S. நாகலிங்கம்பிள்ளையவர்கள், பிளீடர், பரமகுடி. 189. ” T.V. இராமசாமி ஐயங்காரவர்கள், பிளீடர், பரமகுடி. 190. ” S. கங்காதரமய்யரவர்கள், இராமநாதபுரம். 191. ” B.B. சுப்பராமய்யரவர்கள், தமிழ்ப்பண்டிதர், மதுரை. 192. ” நெ.ரா. சுப்பிரமணியசர்மா அவர்கள், தமிழ்ப்பண்டிதர், A.M. ஹைஸ்கூல், பசுமலை. 193. ” K. கோவிந்தசாமி ஐயரவர்கள், தமிழ்ப்பண்டிதர், மதுரை. 194. ” T.R. ஸ்ரீநிவாஸையங்காரவர்கள், வக்கீல், மதுரை. 195. ” A.R. நாராயணையரவர்கள், பிளீடர், ஸ்ரீவில்லிபுத்தூர். 196. ” S. R. வெங்கிடாச்சாரியாரவர்கள், பிளீடர், ஸ்ரீவில்லிபுத்தூர். 197. ” றா.கு. நல்ல குற்றாலம் பிள்ளையவர்கள், பிளீடர், ஸ்ரீவில்லிபுத்தூர். 198. ” S. சுப்பையரவர்கள், பிளீடர், ஸ்ரீவில்லிபுத்தூர். 199. ” D. சுந்தரராஜ ஐயங்காரவர்கள், பிளீடர், மதுரை. 200. மகா-ராச-ராச-சிறி M.S. வெங்குசாமி ஐயரவர்கள், பிளீடர், மதுரை. 201. ” நா.கூ.ரெ. நாச்சியப்ப முதலியாரவர்கள், நாகப்பட்டணம். 202. ” ராவ் பகதூர் G. ஸ்ரீநிவாசராவ் அவர்கள், 1st Grade Pleader,, மதுரை. 203. ” T. இராமானுஜ ஐயங்காரவர்கள், வக்கீல், இராமநாதபுரம். 204. ” K. V. இராமாச்சாரியாரவர்கள், தெற்கு மாசி வீதி, மதுரை. 205. ” அரு.அ.அரு.ராம. அருணாசலஞ் செட்டியாரவர்கள், காரைக்குடி. 206. ” C.M. வெங்கிடாஜலபதி ஐயரவர்கள், முனிசிபல் கவுன்சிலர், மதுரை. 207. ” R.வெ.அழ. நாகாசாமி செட்டியாரவர்கள், இளையாங்குடி. 208. ” S. M. முத்தையா ரோட்ரிகோ அவர்கள், Shop Keepers, Chilaw, 209. ” R. சடகோபாசாரியார் அவர்கள், மானேஜர், சேத்தூர். 210. ” T.V. சிதம்பர ஐயரவர்கள், தமிழ்ப்பண்டிதர், திருவனந்தபுரம். 211. ” R. கிருஷ்ணமாசாரியார் அவர்கள், மதுரை. 212. ” K. A. வெங்கிட சுப்பிரமணிய ஐயர் அவர்கள், பிளீடர், மதுரை. 213. ” D.S. ரெங்காச்சாரியர் அவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், சிவகங்கை. 214. ” V. மாணிக்கம்பிள்ளை அவர்கள், பிளீடர், மதுரை. 215. ” C. பத்மனாபய்யங்கார் அவர்கள், பிளீடர், மைலாப்பூர். 216. ” M.V. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், பிளீடர், மதுரை. 217. ” R.S. நாராயணசாமி ஐயர் அவர்கள், வக்கீல், மதுரை. 218. ” P.R. கிருஷ்ணமாச்சாரியாரவர்கள், தமிழ் வித்வான், மதுரை. 219. ” P.K. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், Sub Assistant Surgeon, Madras. 220. ” K. வடிவேலு செட்டியார் அவர்கள், எடிட்டர், லோகோபகாரி, சென்னை. 221. ” வி.தி. ஸ்ரீநிவாஸய்யங்காரவர்கள், தமிழ்ப்பண்டிதர், காலேஜ், புதுக்கோட்டை. 222. ” அ. கந்தசாமி பிள்ளையவர்கள், தமிழ்ப்பண்டிதர், காட்டுப்புத்தூர், திருச்சி. 223. ” C.A.C. காசிநாதன் செட்டியாரவர்கள், கொத்தமங்கலம், Ramnad District.. 224. ” அள.அ.அரு. அண்ணாமலை செட்டியாரவர்கள், லேவாதேவி, கீழசெவல்பட்டி. 225. ” பெ. ஈசுவரமூர்த்தியா பிள்ளையவர்கள், வியாபாரம், தூத்துக்குடி. 226. ” அ. வரதநஞ்சய பிள்ளையவர்கள், தாரமங்கலம், Salem.. 227. ” B.J.M. குலசேகரராஜ் அவர்கள், பிரகாசபுரம், Nazareth, (Tirunelvelly Dt.) 228. ” V. ஸ்ரீநிவாஸ தேசிகாச்சாரியரவர்கள், First Grade Pleader, Madura. 229. ” V.R. வெங்கட்டராமய்யரவர்கள், Thambipatti, Watrap. 230. ” V. ரெங்காசாரியரவர்கள், 40, Tank Square, Triplicane. 231. ” Pandit. S. சிவானந்தம் பிள்ளையவர்கள், Native Doctor, Madras. 232. ” V. முத்துசாமி ஐயரவர்கள், M.A., L.T., Inspector of Schools, Aruppukotta. 233. ” P. சிதம்பர புன்னைவனனாதன் அவர்கள், தமிழ்ப்பண்டிதர், Hindu College, Tirunelvelly. 234. ” K. M. முத்துகிருஷ்ண பிள்ளையவர்கள், Land Holder, Kalakadu, Tirunelvelly Dt.. 235. ” Rao Bahadur. S. பவானந்தம் பிள்ளையவர்கள், F.R.H.S. (Lond) M.R.A.S. (Lond) Assistant Commissioner of Police, Madras City. 236. ” T.S. சுப்பிரமணிய ஐயரவர்கள், B.A.,B.L., B.A., B.L., First Grade Pleader, Madras. 237. ” R. ரெங்காசாரியர் அவர்கள், B.A.,L.T., First Assistant, Madanapalle. 238. ” R. கணபதி ஐயரவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், மதுரை. 239. ” R. நாகேஸ்வர ஐயரவர்கள், Journalist, Madura.. 240. மகா-ராச-ராச-சிறிM. ரெங்கசாமி ஐயரவர்கள், B.A.,B.L., வக்கீல், இராமநாதபுரம். 241. ” S. P. நாகஸ்வாமி ஐயரவர்கள், Pleader, Ramnad. 242. ” S. சீனிமுருகம் பிள்ளையவர்கள், வக்கீல், திருப்பத்தூர். 243. ” Dewan Bahadur. L.D. சுவாமிக்கண்ணு பிள்ளையவர்கள், M.A., B.L., L.L.B., Registrar of Co-operative Societies, Madras. 244. ” மாவை.வே. விசுவநாதபிள்ளை அவர்கள், தமிழ்ப்பண்டிதர், G. T. Madras. 245. ” W. நாராயணையரவர்கள், B.A., Sheristadar, District Court, Chitoor. 246. ” D.. கோபாலாச்சார்லு அவர்கள், Vaidyaratna Pandit, Principal, Ayurvedic College, Madras. 247. ” The Hon’ble Rao Bahadur, Mr. P.. கேசவபிள்ளை அவர்கள், Pleader, Gooty. 248. ” வ.மு. இரத்னேஸ்வர ஐயரவர்கள், தமிழ்ப்பண்டிதர், S. M.S. , காரைக்குடி. 249. ” T.V. உமாமகேஸ்வரம் பிள்ளையவர்கள், B.A.,B.L., வக்கீல், தஞ்சாவூர். 250. ” P. ஸம்பந்த முதலியாரவர்கள், B.A.,B.L., ஹைக்கோர்ட் வக்கீல், Madras. 251. ” A.G. பிச்சைமுத்துபிள்ளை அவர்கள், B.A.,L.T., St. Peter’s High School, Tanjore. 27. முச்சங்கங்களிருந்த காலத்தைப் பற்றி ஒருவாறு சொல்லக்கூடியவை. கிறிஸ்து பிறந்து இற்றைக்கு 1,914 வருஷங்களாகின்றன. கலியுகம் பிறந்து 5,014 வருஷங்களாகின்றன. கிறிஸ்து பிறந்து 100 வருஷங்கள் வரையிலும் மூன்றாவது சங்கமிருந்ததாகவும் அதன்பின் இல்லாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது சங்கமோ 1,850 வருஷங்கள் உத்தர மதுரையில் நிலைத்திருந்தJ. ஆகையினால் இற்றைக்கு 3,664 வருஷங்களுக்குமுன் மூன்றாவது சங்கம் ஆரம்பமாயிற்றென்று தெளிவாய்த் தெரிகிறது. கலியுகம் துவாரகை யழிந்தபின் ஆரம்பமாயிற்றென்றும் சற்றேறக் குறைய அக்காலத்தில் இந்து சமுத்திரத்தின் ஓரமாயுள்ள பல இடங்களில் பிரளயம் உண்டாயிற்றென்றும் இதன்முன் நாம் பார்த்திருக்கிறோம். அப் பிரளயத்தில் இரண்டாம் சங்கமிருந்த கபாடபுரம் அழிபட்டதென்று தோன்றுகிறது. அப்படியானால் கலியுகத்தில் 1,350 வருஷங்களுக்குப் பிறகே மூன்றாவது சங்கம் ஆரம்பித்ததாகச் சொல்ல வேண்டும். இந்த 1,350 வருஷங்களில் கொற்கையிலிருந்த பாண்டிய ராஜாக்கள் எங்கே யிருந்தார்க ளென்று கேட்க நேரிடும். அவர்கள் இப்போதிருக்கும் உத்தர மதுரைக்கு ஐந்து ஆறு மைலுக்கு கீழ்பாகத்திருந்த மணவூரில் வந்து தங்கி அங்கே அரண்மனை கட்டி அதிலிருந்தார்களென்று தோன்றுகிறது. அவ்விடத்திலிருந்து இப்போ திருக்கும் மதுரையில் ஒரு சிறிய ஆலயமும் பட்டணமும் கட்டி மதுரையில் அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் முன்னிருந்த இடம் பழ மதுரையென்று சொல்லப்படுகிறது. இடிந்துபோன அரண்மனைகளும் மேடுகளும் இன்றும் காணப்படுகின்றன. வைகையாற்றங் கரையிலிருந்த மணவூரில் அர்ச்சுனன் வந்து தங்கியதாகவும் அப்போதிருந்த சித்தராங்கதன் என்னும் பாண்டியனுடைய மகளை அவன் கலியாணஞ் செய்ததாகவும் புராணங்களில் சொல்லப்படுகிறது. இதைக்கொண்டு மூலப் பிரளயத்தினால் கபாடபுரம் அழிக்கப்பட்டபின் பழ மதுரையில் அல்லது மணவூரில் பாண்டிய ராஜாக்கள் நெடுநாள் இருந்தார்களென்றும் மணவூரி லிருந்தே மதுரையைக் கட்டி அதன்பின் சங்கம் ஸ்தாபித்தார்களென்றும் நாம் நினைக்கலாம். கலியுக ஆரம்பத்திலுண்டான பிரளயம் போக அதன்முன் ஒரு பிரளயமும் உண்டானதாக நாம் அறிகிறோம். அது சத்திய விரதனுடைய காலத்தில் நடந்ததாக எண்ண இடமிருக்கிறது. கலியுகம் ஆரம்பிக்கும் முன் 3,700 வருஷங்கள் கபாட புரத்தில் பாண்டிய ராஜாங்கமிருந்ததாகவும் சங்கமிருந்த தாகவும் சொல்லப்படுவதைக் கொண்டு இற்றைக்கு 8,700 வருஷங்களுக்கு முன் ஒரு பிரளயமுண்டாயிற்றென்று தோன்றுகிறது. அந்தப் பிரளயத்துக்கு முன் தென்மதுரையில் ஆண்டுகொண்டிருந்த நிலந்தருதிருவிற் பாண்டியனின் காலத்து இருந்த தொல்காப்பியர் இடைச்சங்கத்தி லிருந்தாரென்று சொல்வதைக் கவனிக்கையில் தொல்காப்பியம் 8,700 வருஷங்களுக்கு முன்னுள்ளதென்றும் அக்காலத்தில் தென் மதுரை கடலால் அழிக்கப் பட்டதென்றும் தோன்றுகிறது. தென் மதுரையில் 4,440 வருஷங்களாக சங்கமிருந்ததாகச் சொல்லுவதை நாம் கவனிக்கையில் இற்றைக்கு சற்றேறக் குறைய 13,000 வருஷத்துக்கு முன் முதற்சங்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் தலைமுறைக் கணக்குகளைப் பார்த்தாலும் ஆதரித்த ராஜர்களில் கவியரங்கேறியவர்கள் கணக்கைப் பார்த்தாலும் அக்காலத்துத் தமிழ் நடையைப் பார்த்தாலும் இச்சங்க காலம் உண்மையானதென்று தெளிவாகத் தெரியும். கற்பனைகள் பல கலந்த புராணங்களைக் கொண்டு இதன் நிச்சயம் சொல்லக் கூடாது. புராணங்கள் அநேகமாய் இற்றைக்கு சுமார் 1,000, 1,500 வருஷங்களுக்கு முன்தான் எழுதப்பட்டனவென்று அறிவாளிகள் பலர் நினைக்கிறார்கள். மதுரைத் திருவிளையாடற்புராணத்தில் 5,000, 8,000, 10,000, 15,000 வருஷங்களாக ஒவ்வொரு பாண்டியனும் ஆண்டானென்று சொல்லியிருக்கிறது. ஆனால் முச்சங்கங்களைப் பற்றிச் சொல்லுமிடத்து 50, 63, 38 வருஷங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கு வருகிறது. இதிலும் சந்ததி யற்று இடையிற் கழிந்த காலமும் சேர்ந்திருக்கலாமென்று எண்ண இடமிருக்கிறது. இவைகளைக் கொண்டு தமிழ்ப்பாஷை மிகப் பூர்வமான தென்றும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் சங்கீதமும் 13,000 வருஷங்களுக்கு முன்னாலேயேயிருந்ததென்றும் சொல்வது உண்மையென்று தெளிவாகக் காண்கிறோம். இதை வாசிக்கும் கனவான்களே! இற்றைக்கு 13,000 வருஷங்களுக்கு முன் ஒரு தமிழ்ச் சங்கமிருந்ததென்பதையும் முடிமன்னர்களும் முனிவர்களும் அரிய கலை வல்லோரும் அதில் சேர்ந்து இயல் இசை நாடகமென்னும் முத்தமிழையும் விருத்தி செய்தார்கள் என்பதையும் ஒருவேளை ஆச்சரியமாகவும் மற்றொருவேளை சந்தேகமாகவும் எண்ணுவோம். பூர்வகாலத்திலுள்ளோர் காலங்களைத் திட்டமாய்க் குறிக்கக்கூடிய தான குறிப்புகள் வைக்காததனால், நாம் இப்போது அறிந்து கொள்வது பிரயாசையாய்த் தோன்றுகிறது. காலம் திட்டமாக அறிய வேண்டுமானால் புற சரித்திரங்களையும் சிற்சில ஏதுக்களையும் கொண்டு மாத்திரம் அறியக்கூடியதாயிருக்கிறது. அவ்வழக்கமே இப்போது எழுதப்படும் புஸ்தகங்களிலும் காணப்படுகிறது. இப்போது நாம் வழங்கி வரும் அநேக புத்தகங்களில் இதைக் காணலாம். இப்புத்தகங்கள் ரிஜிஸ்டர் செய்யப்படா திருந்தால் காலவரையறை சொல்ல முடியாமல் நிற்கும். இதோடு பூர்வ நூல்களில் தாங்கள் எழுதிய வருஷத்தை மாத்திரம் வெகுதானிய, விரோதிகிருது என்று போட்டுவிடுகிறது வழக்கம். இதினால் முந்தின புஸ்தகம் பிந்தினதாகவும் பிந்தின புஸ்தகம் முந்தினதாகவும் எண்ண நேரிடுகிறJ. இருந்தாலும் தற்காலத்தில் நாகரீகமற்றது என்று நாம் நினைக்கும் பூர்வ எழுத்துக்களில், திருஷ்டாந்தமாக, எ, ம என்ற எழுத்துக்கள் புள்ளி பெறும் வழக்கத்தைத் தொல்காப்பியர் சொல்வதை நாம் கவனிக்கையில் தமிழ்ப்பாஷை மிகப் பூர்வமுள்ளதென்றே தோன்றுகிறது. மேலும் பூமியின் இயற்கை வளர்ச்சியைக் குறித்துக் கூறும் எக்கேல் (Haeckel) என்னும் தத்துவ சாஸ்திரியின் அபிப்பிராயம் இன்னதென்று தெரிந்திருக்கிறோம். அவர் இப்பூமியில் ஜீவராசிகள் 5 கோடி வருஷங்களுக்கு முன்னமேயே இருந்திருக்க வேண்டுமென்று கற்களின் நடுமத்தியில் காணப்படும் இப்பி, சங்கு, நத்தை போன்ற சிறு பிராணிகளின் ஓடுகளின் வடிவத்தைக் கொண்டு தீர்மானிக்கிறார். இப்படிப்பட்ட கற்களை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம். இவர் ஜீவப்பிராணிகளிலிருந்து மனுஷன் எப்படி உண்டானான் என்கிற உண்மையைப் பிராணிகளின் எலும்புகளைக் கொண்டும் அதன்பின் கருப்பாசயத்தின் அமைப்பைக் கொண்டும் கருவின் முதல் தோற்றத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும், தலையின் அமைப்பைக் கொண்டும் மிக விரிவாகச் சொல்கிறார். அவைகளில் மனுஷன் எந்தக் காலத்தில் உண்டானான் என்பதைப் பற்றியும் ஆதியில் அவன் வசித்த இடத்தைப் பற்றியும் அங்கிருந்தவர்கள் பேசி வந்த பாஷையைப் பற்றியும் அவர் சொல்லும் சில அபிப்பிராயங்களைப் பார்ப்பது பிரயோசனமா யிருக்குமென்று நம்புகிறேன். 28. குரங்கினத்திலிருந்து மனுஷன் உற்பத்தியானான் என்பது. “The Evolution of Man.” By Professor Haeckel P. 352. “Hence in the genealogy of the mammals we must derive man immediately from the Catarrhive group, and locate the origin of the human race in the Old World. Only the early root form from which both descended was common to them.” “மம்மேலிய வகுப்பைச் சேர்ந்த மிருகங்களின் வம்ச அட்டவணையை நாம் பார்க்கும்போது மனிதன் காற்றர்கிவ் (Catarrhive) என்னப்பட்ட குரங்குகளின் இனத்திலிருந்து உற்பத்தியானவன் என்றும், மனித ஜாதியே பழைய உலகத்திலிருந்து ஜெனித்தது என்றும் சொல்ல வேண்டியதா யிருக்கிறது. ஆனால் இரு ஜாதிக்கும் பொதுவாயிருந்தது எதுவென்றால், அவை இரண்டும் ஆதியில் உற்பத்தியாவதற்குக் காரணமாயிருந்த ஆதிஜெனன ரூபமே.” மேற்கண்ட வரிகளைக் கவனிக்கும்போது மனிதன் குரங்கினத்திலிருந்தே உற்பத்தியானான் என்றும் மனுஷர்களுக்கும் குரங்குகளுக்கும் உற்பத்திக்குக் காரணமாயிருந்த ஆதி மூலஸ்தானம் ஒரே விதமாயிருக்கிறதென்றும் சொல்லுகிறார். அப்படி உற்பத்தியான ஆதிமனுட ஜாதி பழைய உலகத்தில் ஜெனித்ததாகச் சொல்லுகிறார். இப்பழைய உலகம் இந்து சமுத்திரத்தில் இருந்து முழுகிப்போனதாக நாம் நினைக்கும் லெமூரியாக் கண்டமே. இக்கண்டத்தின் இயற்கை அமைப்பிலுள்ள சில செடி கொடிகளையும் மரங்களையுங் கொண்டு அதற்கு சுற்றிலுமுள்ள சில தீவுகளையும் தேசங்களையும் எல்லை யாக அவர் சொல்லுவதை நாம் இதன்பின் பார்ப்போம். குரங்குகளின் இனத்தில் கிழக்கு தேசங்களில் வசிக்கும் குரங்குகளி லிருந்தே மனிதன் உற்பத்தியாகியிருக்க வேண்டுமென்று பின்வரும் வசனங்களில் காணலாம். “The Evolution of Man.” By Professor Haeckel P. 259. “The other group, to which man belongs, are the Eopitheca or eastern apes; they are found in Asia and Africa, and were formerly in Europe. All the eastern apes agree with man of the features that are chiefly used in Zoological Classification to distinguish between the two Simian groups, especially in the dentition.” “மனித ஜாதியைச் சேர்த்துச் சொல்லும் மற்றொரு வகுப்பு குரங்குகளுக்கு ஈயோபித்தக்கா அல்லது கீழ் தேசத்துக் குரங்குகள் என்று பேர். அவைகள் தற்காலம் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அகப்படும். முற் காலத்தில் அவைகள் ஐரோப்பாவில் இருந்தன. சிமியென் வகுப்பைச் சேர்ந்த இரண்டுவித குரங்குகளின் வித்தியாசத்தையும் மிருக சாஸ்திரத்தில் பிரித்து எழுதும்போது கிழக்குதேசக் குரங்குகளுக்கும் மனிதருக்கும் அநேக விஷயங்களில், முக்கியமாய் பல் விஷயத்தில், அதிக பொருத்தம் இருக்கிறதாகத் தெரிகிறது.” கிழக்குத் தேசம் என்று ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் குறிக்கிறார். ஆசியாவின் கரையோரங் களிலும் ஆப்பிரிக்காவின் கரையோரங்களிலும் வசிக்கும் குரங்குகளில் ஒரு வகுப்பே மனித ஜாதி உண்டாகுவதற்குக் காரணமாயிருந்ததென்று தோன்றுகிறது. “The Evolution of Man.” By Professor Haeckel P. 261. “The apes of the Old World, or all the living or fossil apes of Asia, Africa and Europe, have the same dentition as man.” “பழைய உலகத்திலுள்ள குரங்குகளும், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாக் கண்டங்களில் தற்காலம் இருக்கும் குரங்குகளும், ஒரு காலம் இருந்து அழிந்து போனதாக கற்களில் பதித்த ரூபம் மூலமாய் நாம் அறியும் குரங்கு ஜாதிகளும் மனிதனைப் போலொத்த பற்களையுடைத்தாயிருந்தன.” இதில் பழைய உலகத்திலிருந்து அழிந்துபோன குரங்குகள் கற்களின் நடுவில் காணப்படுவதையும் அவ் உருவங்கள் மனிதனைப் போலொத்த பற்களையுடைதாயிருந்தன என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறார். அவைகளில் அழிந்து போகாமல் தப்பி மீந்தவை இப்போது எந்தெந்த இடங்களிலிருக்கின்றனவென்று பின்வரும் வசனங்களில் காண்போம். “The Evolution of Man.” By Professor Haeckel P. 257. “These living survivors are scattered far over the southern part of the Old World. Most of the species live in Madagascar, some in Sunda Islands, others on the mainland of Asia and Africa. Some of these were almost as big as men, such as the diluvial lemurogonon Megaladapis of Madagascar.” “அவைகளில் தப்பி மீந்து உயிரோடிருப்பவைகள் பழைய உலகத்தின் தென்பாகங்களில் அநேக இடங்களில் சிதறுண்டிருக்கின்றன. அந்த ஜாதியில் மிச்சமானவைகள் மதகாஸ்கார் தீவிலும், சில சந்தா தீவுகளிலும், மற்றவை ஆசிய ஆப்பிரிக்கா கண்டங்களின் தரைபாகங்களிலும் வசிக்கின்றன. இவைகளில் சில மனிதரைப்போல் பெரியவைகள், முக்கியமாய் மதகாஸ்கார் தீவிலுள்ள டைலூவியல் லெமுராகனான மெகலடேப்பிஸ் (diluvial lemurogonon Megaladapis) என்னும் ஜாதிக்குரங்குகள்.” அவைகளில் அழிவுக்குத் தப்பி உயிரோடிருப்பவை பழைய உலகம் அல்லது லெமூரியாவின் பக்கத்து இடமான மதகாஸ்கார், சந்தா முதலிய தீவுகளிலும் ஆசியா ஆப்பிரிக்கா கண்டங்களின் தரைபாகங்களிலும் வசிக்கின்றன என்பதாகத் தெளிவாய்த் தெரிகிறது. 29. மனித உற்பத்தியின் காலத்தைப் பற்றி. மனிதர்கள் உற்பத்தியான காலத்தையும் அவர்கள் பேசும் சக்தி பெற்ற காலத்தையும் ஒருவாறு இன்னதென்று பின்வரும் வசனங்களில் காணலாம். “The Evolution of Man.” By Professor Haeckel P. 203. “The first appearance of man, or, to be more precise, the development of man from some closely related group of Apes, probably falls in either the miocene or the pliocene period, the middle or the last section of the Tertiary period. Others believe that man properly so-called man endowed with speech was not evolved from the non-speaking ape-man (Pithecan thropus) until the following, the anthropozoic age. In this fifth and last section of the organic history of the earth we have the full development and dispersion of the various races of men, and so it is called the Anthropozoic as well as the Quaternary period. In the imperfect condition of palcontological and ethnographical science we cannot as yet give a confident answer to the question whether the evolution of the human race from some extinct ape or lemur took place at the beginning of this or towards the middle or the end of the Tertiary period. However this much is certain the development of civilisation falls in the anthropozoic age, and this is merely an insignificant fraction of the vast period of the whole history of life. When we remember this, it seems ridiculous to restrict the word “history” to the civilised period. If we devide into a hundred equal parts the whole period of history of life, from the spontaneous generation of the first monera to the present day, and if we then represent the relative duration of the five chief sections or ages, as calculated from the average thickness of the strata they contain, as percentages of this, we get something like the following relation : (i) Archeolithic or archeozoic (Primordial) age ... 53.6 (ii) Paleolithic or paleozoic (Primary) ” ... 32.1 (iii) Mesolithic or Mesozoic (Secondary) ” ... 11.5 (iv) Cenolithic or cenozoic (Tertiary) ” ... 2.3 (v) Anthropolithic or anthropozoic (Quaternary)” ... 0.5 100.0 In any case, the “Historical period: is an insignificant quantity compared with the vast length of the precedings ages, in which there was no question of human existence on our planet. Even the important Cenozoic or Tertiary period, in which the first placentals or higher mammals appear, probably amounts to little over two per cent of the whole organic age.” “மனிதனின் ஆதி உற்பத்தியின் காலம், அல்லது கராராய்ச் சொல்ல வேண்டுமானால், மனிதன் அவனுக்கு நெருங்கிய சம்பந்தமுள்ள ஒருவிதக் குரங்கு ஜாதியிலிருந்து உற்பத்தியான காலமானது மியோசீன் (Miocene) காலத்திலாவது, பிளையோசீன் (Pliocene) காலத்திலாவது அதாவது Tertiary காலத்தின் மத்தி அல்லது கடைசிக்காலம் என்று சொல்ல வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், மனிதன் அதாவது சரியாய்ப் பேசக்கூடிய தத்துவமுள்ள மனிதன், பேச சக்தியற்ற குரங்கு மனித ஜாதியினின்றும் உற்பத்தியான காலம் இந்தக் காலத்திலல்ல, இதற்குப் பின்னுள்ள Anthropozoic காலத்தில் என்கிறார்கள். பூமியில் புல் பூண்டு மிருக உற்பத்தி உண்டான இந்த ஐந்தாவது ஆறாவது கடைசி காலத்தில் தான் மனிதனின் பூரண உற்பத்தியும் அவன் பல ஜாதியாய்ப் பிரிந்த விஷயமும் நடந்தன. அதினால்தான் அதற்கு Anthropozoic அதாவது மனிதன் உயிரைப் பெற்ற காலமென்றும் நான்காவது (Quarternary Perios) காலமென்றும் பெயர். பூர்வ மிருகங்களைப் பற்றிப் பேசும் சாஸ்திரமும் பூர்வ ஜாதிகளைப் பற்றிப் பேசும் சாஸ்திரமும் பூரணப்படாததால் மனித ஜாதி, அழிந்துபோன ஒரு வாலற்ற குரங்கு அல்லது Lemur என்னும் மிருகத்திலிருந்து இந்த நாலாவது காலத்தின் துவக்கத்திலோ அல்லது Tertiary காலத்தின் நடுவிலோ கடைசியிலோ உற்பத்தியானதென்ற கேள்விக்குப் பதில் உரைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம். நாகரீகம் விர்த்தியானது Anthropozoic காலத்தில்தான். ஆனால் ஜீவராசிகளின் முழு சரித்திரத்தையும் அடக்கிக்கொண்டிருக்கும் பிரமாண்டமான கால அளவிற்குள் இந்த ஹவோசடியீடிணடிiஉ காலமானது ஒரு சிறு அண்டம்தான். இதை நாம் நினைக்கையில் சரித்திரம் என்பது நாகரீக காலத்தைக் குறிக்கிறது என்று சொல்வது ஏளனம் பண்ணுவது போல் இருக்கிறJ. ஆதி அணு (Monera) தானாய் உற்பத்தியான கால முதல் தற்காலம் வரைக்குமுள்ள ஜீவராசிகளின் காலம் முழுதையும் நூறு சமபாகங்களாகப் பிரித்து, ஐந்து முக்கிய காலங்களின் அளவையும் அவைகளுக்குள்ள ஸற்றேற்றாவின் (Strata) பருமனுக்குத் தக்கதாக அவைகளின் காலத்தையும் நிச்சயித்தால், பின்வரும் Percentage (அதாவது நூற்றுக்கும் அந்தந்தக் காலங்களுக்குமுள்ள தாரதம்மியம்) வரும் :- (i) ஆதி துவக்கக் கல்லின் காலம் (Archeolithic or Archeozoic) (Primordial) ... 53.6 (ii) பழைய கல்லின் காலம் (Paleolithic or Paleozoic) (Primary) ... 32.1 (iii) மத்திய கல்லின் காலம் (Mesolithic or Mesozoic (Secondary) ... 11.5 (iv) பிந்திய காலக் கல்லின் காலம் (Cenolithic or Cenozoic) (Tertiary) ... 2.3 (v) மனிதர் உற்பத்தி கல்லின் காலம் (Anthropolithic or Anthropozoic) (Quaternary) ... 0.5 100.0 என்றாலும் சரித்திர காலத்தை மற்றக் காலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய கிரகமாகிய பூமியிலேயே மனித வாசனையில்லாத பூர்வ காலத்தின் அளவுக்கும் இதற்கும் அனந்தகால வித்தியாசம் இருக்கிறJ. அந்தப்பூர்வ காலங்களோடு ஒப்பிடப்படும்போது இதோ அதிக சிறியதாய் இருக்கிறJ. மம்மேலியா வகுப்பைச் சேர்ந்த உயர்ந்த பிராணிகள் உண்டான முக்கியமான Cenozoic காலங்கூட மொத்தத்தில் நூற்றில் இரண்டுதான்.” இதில் இற்றைக்குமுன் ஜீவன் உற்பத்தியானதாக நினைக்கும் காலத்தை 5 கோடி வருஷமாக வைத்துக் கொண்டு அதை நூறு பாகமாகப் பிரித்து அதில் ஐந்து காலம் சொல்லுகிறார். அதில் நாலாவது காலத்தின் மத்தியில் குரங்கினமும் அதன்பின் மனுஷனும் உண்டாயிருந்தானென்றும் ஐந்தாவது காலத்தில் மனுஷன் பேசவும் தன் இஷ்டம் போல் மற்ற இடங்களுக்குப் போகவும் வரவும் கூடியவனாயிருந்தானென்றும் சொல்லுகிறார். இந்த ஐந்தாவது காலம் இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வருஷமென்று அவர் கணக்கால் தெரிகிறது. இந்த இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வருஷத்தின் துவக்கத்தில் பேசவும் சஞ்சரிக்கவும் ஆரம்பித்த மனுஷன் சுமார் இற்றைக்கு 50,000 வருஷங்களுக்கு முன்னாலாவது சில நாகரீகமும் தேர்ச்சியும் பெற்று விருத்தியாகியிருக்க வேண்டுமென்று நாம் நினைக்கலாம். இற்றைக்கு சுமார் 20,000 வருஷங்களுக்கு முன்னாலேயே அவன் எழுதத் தெரிந்தவனாகவும் பல கலைகள் தெரிந்தவனாகவுமிருந்திருக்க வேண்டும். 30. முதல்முதல் மனித ஜாதி உண்டான இடம் லெமூரியாவென்பJ. இப்படி முதல்முதல் தேர்ச்சி பெற்ற மனுஷ ஜாதி பழைய உலகம் அல்லது லெமூரியாக் கண்டத்திலேயே யிருந்திருக்க வேண்டுமென்றும் அக்கண்டம் அழிந்தபின் பல இடங்களுக்குப் பிரிந்து போயிருக்க வேண்டுமென்றும் பின்வரும் வசனங்களில் காணலாம். “The Evolution of Man.” By Professor Haeckel P. 264. “The third, and last, stage of our animal ancestry is the true or speaking man (Homo), who was gradually evolved from the preceding stage by the advance of animal language into articulate human speech. As to the time and place of this real “creation of man” we can only express tentative opinions. It was probably during the Diluvial period in the hotter zone of the Old World either on the mainland in tropical Africa or Asia, or on an earlier continent (Lemuria now sunk below the waves of the Indian Ocean), which stretched from East Africa (Madagascar, Abyssinia) to East Asia (Sunda Islands, further India). I have given fully in my “History of creation” the weighty reasons for claiming this descent of man from the anthropoid eastern apes and shown how we may conceive the spread of the various races from this “Paradise” over the whole earth. I have also dealt fully with the relations of the various races and species of men to each other. “நாம் மிருகங்களினின்று உற்பத்தியான மூன்றுபடிகளையும் சொல்லு மிடத்து அவைகளில் கடைசிப் படியேதென்றால் ஓமோ (Homo) அதாவது பேசக் கூடிய மனிதனே. இந்த ஓமோ (Homo) என்ற மனிதன் முந்தினபடியினின்றும் மிருகபாஷை மனிதபாஷையாய் விர்த்தியானதில் நாளா வர்த்தியில் ஜெனித்தவன். இந்த மனிதன் எப்படி உண்டானானென்றாவது எவ்விடத்தில் உண்டானானென்றாவது அதிக நிச்சயமாகச் சொல்ல முடியாJ. அநேகமாய் பழைய உலகத்தின் காங்கையான பாகத்தில் ஜலப்பிரளய காலத்தில் ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவின் தளபாகத்திலாவது, அல்லது அதற்கு முன்னிருந்த லெமூரியா என்னும் அழிந்து போன கண்டத்திலாவது உண்டா யிருக்க வேண்டும். (இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன இந்தக் கண்டமானது கீழ் ஆபிரிக்கா அதாவது மதகாஸ்கர் அபிசினியா தேசம் முதல் கீழ் ஆசியா அதாவது சந்தா தீவுகள் கிழக்குக் கோடி இந்தியா வரை விசாலித்திருந்தJ.) “சிஷ்டிப்பின் சரித்திரம்” என்று நான் எழுதிய நூலில் மனிதன் எப்படி (யவோசடியீடினை) கிழக்கு தேச குரங்குகளிலிருந்து உற்பத்தியானான் என்பதற்கும் எப்படி ஆதியில் பலஜாதியாரும் நான் சொல்லிய கண்டமாகிய இந்தப் பரதீசினின்று பல இடங்களுக்குப் பிரிந்து போனார்கள் என்பதற்கும் திடமான ஆதாரங்களை எடுத்துக் கூறியிருக்கிறேன். பல ஜாதியாருக்கு முள்ள வித்தியாசங்களையும், ஒரேவிதமான ஜாதிகளுக்குள் இருக்கப்பட்ட நெருங்கிய சம்பந்தத்தையும் அந்தப் புஸ்தகத்தில் விஸ்தாரமாய்ச் சொல்லி யிருக்கிறேன்.” மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் பேசக்கூடிய மனிதன், பேசக்கூடாத வாலில்லாக் குரங்கினின்றும் உற்பத்தியானான் என்றும், மிருக பாஷையினின்றே மனித பாஷை நாளடைவில் விருத்தியானதென்றும், அப்படி விருத்திக்கு வந்த அதாவது பேசக்கூடிய மனிதன் உஷ்ணப் பிரதேசத்தில் வசித்தானென்றும், அது ஒரு காலத்தில் முழுகிப்போயிற்றென்றும், அம் முழுகிப் போன இடமே லெமூரியாவென்றும், அது ஆப்பிரிக்கா, மதகாஸ்கார், அபிசினியா, சந்தா, இந்தியா முதலிய பூபாகங்களுக்கு சமீபத்திலிருந்த தென்றும், இந்த இடமே ஆதியில் மனிதர் உண்டான பாரதீசாயிருந்த தென்றும், அது அழிந்து போன பின் அதற்கு சுற்றுப் பக்கங்களிலுள்ள இடங்களுக்குப் பிரிந்து போனார்களென்றும் தெளிவாகத் தெரிகிறது. லெமூரியா என்னும் இந்த பழைய உலகத்தில் தென் மதுரையிருந்ததென்றும், தென்மதுரையில் தமிழ்ச் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 4,400 வருஷங்களுக்குப் பின் கடலால் அழிந்துபோனதென்றும், அவ்விடத்தில் பேசிவந்த தமிழ்ப் பாஷை பல இடங்களுக்குக் கொண்டு போகப்பட்டு பல பாஷைகளிலும் அங்கங்கே காணப்படுகிறதென்றும் இதன்முன் பார்த்தோம். இத்தமிழ்ப் பாஷையே இயற்கையாயுள்ள மிருகபாஷைகளின் சில ஓசைகளை யுடையதாயிருக்கிற தென்றும் இது ஒப்பற்ற தனிப்பாஷையாய் நாளது வரையும் இருந்து வருகிறதென்றும் இதன்முன் கவனித்தோம். ஆனால் அப்படி ஒரு பாஷை எல்லா பாஷைகளுக்கும் ஆதியாயிருந்திருக்குமா என்று நாம் நினைப்போம். அவ்விஷயத்தில் எக்கேல் (ழயநஉமநட) என்னும் மகா தத்துவ சாஸ்திரியார் சொல்லுவதைப் பார்ப்போம். “The Evolution of Man.” By Professor Haeckel P. 203. “All philogists of any competence in their science now agree that all human languages have been gradually evolved from very rudimentary beginnings.” “தங்கள் சாஸ்திரத்தில் நிபுணர் என்று ஒப்புக் கொள்ளப்படுகிற எல்லாப் பாஷா சாஸ்திரிகளும் மனிதரால் பேசப்படும் எல்லா பாஷைகளும் சிறு துவக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விருத்திக்கு வந்தவை என்று ஒப்புக்கொள்கிறார்கள்.” மேற்கண்ட வரிகளைக் கவனிக்கும்பொழுது மிருகபாஷையிலிருந்து மனிதபாஷை பேச ஆரம்பித்தவர்களிருந்த லெமூரியாவை ஆதி பாஷை யிருந்த இடமென்றும், அந்த லெமூரியா நாட்டில் ஏழு பெரும்பாகங்களிலும் பேசப்பட்டு வந்த பாஷையே ஆதிபாஷையென்றும் சொல்ல நியாயமிருக்கிறJ. 31. லெமூரியா நாட்டிலே முதல் முதல் மனிதர்கள் உற்பத்தியானது போல முதல் முதல் பேசப்பட்ட பாஷையும் லெமூரியா நாட்டிலேயே உண்டாயிற்று என்பது “The Evolution of Man.” By Professor Haeckel P. 204. “As we have been convinced from Comparative anatomy and ontogeny, and from paleontology, that all past and living vertebrates descent from a common ancestor, so the comparative study of dead and living Indo-Germanic tongues proves beyond question that they are all modifications of one primitive language. This view of their origin is now accepted by all the chief philologists who have worked in this branch and are unprejudiced. “மிருகங்களின் தேகக்கூறுகளைப் பரீட்சிப்பதாலும், அவைகளின் ஆதி உற்பத்தியை நோக்குவதாலும், முற்காலத்தில் உள்ள மிருகங்களின் தோற்றம் தேகக்கூறு முதலியவைகளைக் கவனிப்பதாலும், ஆதிகால தற்கால முதுகெலும்புள்ள இனங்களெல்லாம் ஒரு பொது முற்பிதாவினின்று உற்பத்தியாயிருக்க வேண்டுமென்று நாம் நிச்சயிப்பதுபோலவே, இரண்டு ஜெர்மானிக் (Indo-Germanic) வகுப்பைச் சேர்ந்த இறந்துபோன பாஷைகளையும் இப்போது உயிரோடிருக்கும் பாஷைகளையும் நாம் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகளெல்லாம் ஒரு ஆதிபாஷையினின்று உண்டாயிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். இப்படி அவைகள் உற்பத்தியாயின என்ற கொள்கை யானது இந்த விஷயத்தில் சிரத்தையெடுத்துத் தாரதம்மியம் பார்க்காமல் உழைத்த எல்லா பாஷா வித்வான்களாலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.” மேற்கண்ட மிருகங்களின் தேகக்கூறுபாடுகளையும் முதுகெலும்பையும் கவனிக்கையில் எல்லா ஜீவராசிகளும் ஒரு முற்பிதாவினின்று உண்டானவை யென்று நாம் நினைக்கிறதற்கு ஏதுவிருக்கிறது போலவே, பூர்வமாயுள்ள அனேக பாஷைகள் ஆதியில் ஒரு பாஷையிலிருந்தே உண்டானவையென்று விசாரிக்கும் விவேகிகள் ஒப்புக் கொள்ளுவார்கள் என்கிறார். ஆதி மனிதர்கள் பல இடங்களுக்குப் பிரிந்துபோனபின் அவர்கள் ஆதியில் பேசிய பாஷையே பல மாறுதல்களையடைந்து வெவ்வேறு பெயர்களை அடைந்ததென்று இதன்முன் பார்த்திருக்கிறோம. அப்படி வழங்கிய பாஷைகளுள் ஆதிபாஷையின் வார்த்தைகள் காணப்படுவது பிராணிகளின் தத்துவ சாஸ்திரத்தைக் காட்டும் திருஷ்டாந்தங்களைப் பார்க்கிலும் அதிக நிச்சயஞ் சொல்லக் கூடியதாயிருக்கிறதென்று பின்வரும் வசனங்களில் சொல்லுகிறார். “The Evolution of Man.” By Professor Haeckel P. 205. “We find just the same thing in comparing the various dead and living languages that have developed from a common primitive tongue. If we examine our genealogical tree of the Indo-Germanic languages in this light, we see at once that all the older or parent tongues, of which we regard the living varieties of the stem as divergent daughter grand-daughter languages, have been extinct for some time. The Aryo-Romanic, and the Slavo Germanic tongues have completely disappeared; so also the Aryan, the Greco-Roman, the Slavo-Lettic, and the ancient Germanic. Even their daughters and grand-daughters have been lost; all the living Indo-Germanic languages are only related in the sense that they are divergent discendants of common stem forms. Some forms have diverged more, and some less, from the original stem-form. This easily demonstrable fact illustrates very well the analogous case of the origin of the vertebrate species. Phylogenetic comparative philology here yields a strong support to phylogenetic comparative zoology. But the one can adduce more direct evidence than the other, as the palentological material of philology the old monuments of the extinct tongue have been preserved much better than the paleontological material of zoology the fossilised bones and imprints of vertebrates.” “ஒரே ஆதிபாஷையினின்றும் உற்பத்தியான பலவித இறந்துபோன பாஷைகளையும் உபயோகத்திலிருக்கும் பாஷைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் நாம் அதேவித முடிவான அபிப்பிராயத்துக்குத்தான் வருவோம். இந்தக் கொள்கையை மனதில் வைத்துக் கொண்டு நம்முடைய இண்டு ஜெர்மானிக் (Indo-Germanic) பாஷைகளின் வம்ச அட்டவணையை நாம் சோதிப்போமானால், இப்போது வழங்குகிற எந்தெந்த பாஷைகளை பூர்வ பாஷைகளின் குமாரத்தி அல்லது பேத்தி என்று நினைக்கிறோமோ அந்தந்த பூர்வ பாஷைகளெல்லாம் வெகுகாலமாய் உபயோகத்திலில்லாமல் இறந்து போனவைகளாய்த் தெரிகின்றன. ஆரியோரோமானிக் (Aryo-Romanic) பாஷைகளும், சிலவோ ஜெர்மானிக் (Slavo-Germanic) பாஷைகளும் முழுதும் காணாமல் மறைந்தன. அப்படியே ஆரியன் (Aryan) கிரிக்கோரோமன் (Greco-Roman) சிலவோ லெட்டிக் (Slavo-Lettic) பூர்வ ஜெர்மானிக் (Germanic) முதலிய பாஷைகளெல்லாம் ஒழிந்துபோயின. இவைகளின் குமாரத்திகளும் பேத்திகளுங்கூட ஒழிந்து போயின. தற்காலம் வழங்கும் இண்டு ஜெர்மானிக் (Indo-Germanic) பாஷைகளெல்லாம் எது விஷயத்தில் ஒத்திருக்கின்றன வென்றால், ஒரே அடியில் பிறந்தும் பல வித்தியாசமான பின் சந்ததியாரை உடையவைகளாயிருப்பதில்தான் ஆதி பாஷையிலிருந்து சில அநேக மாறுதல்களடைந்தும் சில கொஞ்ச மாறுதல்களடைந்தும் காணப்படுகின்றன. எளிதில் ரூபகாரப்படுத்தக்கூடிய இந்த விஷயமானது இதற்கு ஒப்பான முதுகெலும்புடைய ஜீவராசிகளின் உற்பத்தியை விளக்கக்கூடியதாயிருக்கிறது. பல பாஷைகளின் உற்பத்தியைக் காட்டுகிற பாஷா சாஸ்திரமானது பல மிருகங்களின் உற்பத்தியைக் காட்டும் மிருக சாஸ்திரத்திற்கு பலத்த உதவியாயிருக்கிறது. ஆனால் ஒன்று மற்றொன்றைவிட திடமாய் ரூபகாரப் படுத்தும் விஷயத்தில் அதிக சிறந்ததாயிருக்கிறது. எப்படியென்றால் பாஷா சாஸ்திரத்திற்கு வேண்டிய ஆதாரங்கள் முதலியவை, அதாவது அழிந்துபோன பாஷைகளின் சின்னங்கள், மிருக சாஸ்திர ஆதாரங்களாகிய எலும்பு முதலியவைகளின் கல் அச்சுகளைவிட திறமாய் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கின்றன.” மேற்காட்டிய சில வரிகளை நாம் கவனிக்கையில் இப்போது வழங்கி வருகிற எல்லாப் பாஷைகளும் ஒரே ஒரு பாஷையிலிருந்து உண்டானவை யென்று தெளிவாகத் தெரிகிறது. அப்பாஷை லெமூரியா என்னும் பழைய உலகத்தில் பேசப்பட்டு வந்தது. அந்த ஆதி பாஷையின் வார்த்தைகள் பலவும் பல பாஷைகளோடு கலந்திருப்பதைக் கொண்டு பல ஜெந்துக்களின் உற்பத்தியையும் மிருகங்களிலிருந்து உண்டான மனுஷனின் உற்பத்தியையும் திட்டமாய்த் தெரிந்து கொள்வதற்கு பலத்த உதவியாயிருக்கும் என்றும் தோன்றுகிறது. பாஷைகளில் வழங்கிவரும் ஆதி பாஷையின் சில வார்த்தைகள் கற்களில் தோன்றும் மிருகச் சின்னங்களைப் பார்க்கிலும் பலத்த சாட்சியாக விளங்கி நிற்கின்றன. 32. லெமூரியா நாட்டில் பேசப்பட்டு வந்த பாஷை தமிழ்ப்பாஷையே என்பது. மனித ஜாதி உற்பத்தியான ஆதிபூமி லெமூரியா என்று நாம் பலவிதத்தாலும் திட்டமாய் அறிகிறோம். லெமூரியாக் கண்டத்திலிருந்து மனித ஜாதிகளும் மனித ஜாதிக்கு முந்திய வாலில்லாக் குரங்கினமும் மற்றும் சில பிராணிகளும் தாவர வர்க்கங்களும் அதற்கு சுற்றிலுமுள்ள இடங்களிலிருப்பதைக் கொண்டு தென்னிந்தியாவின் தென்பாகத்திலிருந்து அழிந்து போனதாகச் சொல்லப்படும் குமரிநாடே லெமூரியாவென்று தெளிவாகத் தெரிகிறது. குமரியாற்றிற்கும், பஃறுளியாற்றிற்கும் நடுவிலிருந்த தாகச் சொல்லப்படும் மிகுந்த நீர் வளமுள்ள ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலைநாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்றநாடும், ஏழ் குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் ஆகிய 49 நாடுகளடங்கிய தென்பாண்டி நாடே மனித ஜாதிக்கு ஆதி பிறப்பிடமென்று தெளிவாகத் தெரிகிறது. ஏழு ஏழு நாற்பத்தொன்பது நாடுகள் என்று சொல்லுவதை நாம் கவனிக்கையில் நாவல் தீவு, (நாவல் மரம்) இறலித் தீவு, (இத்திமரம்) குசைத் தீவு, (நாணல்) கிரவுஞ்சத் தீவு, (அன்றில்) புஷ்கரத்தீவு, (யானை) தெங்குத் தீவு, கமுகுத் தீவு என்ற ஏழு பெரும் பூபாகங்களும் ஆஸ்ட்ரேலியா, சுமாத்திரா, ஜாவா போல ஏழு தீவுகளாயிருந்திருக்கலாமென்றும் அவைகள் ஒவ் வொன்றும் எவ்வேழு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கலாமென்றும் தோன்றுகிறது. தென்னிந்தியாவில் இயற்கையாய்க் காணப்படும் நாவல், இத்தி, நாணல், அன்றில், யானை, தெங்கு, கமுகு முதலிய மரங்களும் ஜீவராசிகளும் ஏழு தீவுகளிலும் மிகுதியாய் இருந்ததாகத் தெரிகிறது. மற்ற இடங்களி லிருப்பதாக நாம் காணமாட்டோம். சப்த சுரங்களும் இவ்வேழு தீவுகளிலேயே யிருந்து உண்டானதாக பூர்வ நூல்களில் சொல்லப்படுகிறது. இந்த நாற்பத் தொன்பது நாடும் கடலால் அழிக்கப்படுமுன் மிகுந்த செழிப்புடையதாயும் இயற்கை அமைப்பின் வளங்கள் மிகுந்ததாயும் பாண்டிய ராஜர்களால் ஆளப்பட்டு வந்ததாயும் நாம் இதன்முன் பார்த்தோம். கடலால் அழிந்த இந்நாட்டிற்கு தென்மதுரை தலைநகராயிருந்தJ. இதில் தமிழையே பேசி வந்தார்கள். இத்தமிழ் மொழியே பல இடங்களிலும் பல பாஷைகளிலும் வழங்கி வருகிறதென்று இதன்முன் விஸ்தாரமாகப் பார்த்தோம். தமிழ்ப் பாஷையில் எழுதப்பட்ட பல அரிய விஷயங்களும் நூல்களும் பிரளயத்தால் அழிக்கப்பட்டபின் பாஷையின் மிகவும் சொற்பமான பாகமாத்திரம் மிஞ்சி நின்றJ. பூர்வமுள்ள நூல்களில் வழங்கி வரும் சில வார்த்தைகள் இன்னும் அர்த்தந் தெரியாமல் அப்படியே நிற்கின்றன. அநேக அரும் பதங்கள் வழங்காமல் ஒழிந்தன. இப்படி நூல்களும் நூல்களின் பொருள்களும் பொருள்களை விளக்கும் அரும்பதங்களும் ஒழிந்தபின், நெய்யரியில் மிஞ்சிய இலை சிறுவர் வாய் வந்தது போல நாடோடிய வழக்கத்திலிருக்கும் வார்த்தைகளே தமிழில் வழங்கி வருகின்றன. இத்தமிழ்மொழி பூர்வமாய் லெமூரியாவில் பேசப்பட்டு வந்ததென்பதையும் அது பல பாஷைகளில் கலந்திருக்கிறதென்பதையும் இயற்கை அமைப்பின் ஓசைகளுக்கு மிகுந்த பொருத்தமுடைய தாயிருக்கிறதென்பதையும் எழுத்துக்களின் சுலபமான வடிவையும் எழுத்துத் தவறாத உச்சரிப்பையும் கொண்டு தமிழே ஆதிபூர்வ பாஷையென்று திட்டமாகத் தெரிகிறது. 49 தமிழ் நாடுகளடங்கிய லெமூரியா அழிந்த காலத்தில் தமிழரும், தமிழில் எழுதப்பட்ட கலைஞானங்களும் அழிந்து போனதினால், தமிழை அற்பமாக நினைத்து அலட்சியம் செய்யும் கேவல நிலைக்கு வந்தது. பெருங்காயமிருந்த பாத்திரத்தில் எஞ்சி நின்ற வாசனைபோல மிகச் சொற்பமான பாகம் இரண்டாஞ் சங்க காலத்தில் நூல்களாக விளங்கின. தொல்காப்பியத்தையும் மற்றும் சில நூல்களையும் நாம் உற்று நோக்கினால் வைத்தியம், வாதம், யோகம், ஞானம், சோதிடம், சித்திரம், சங்கீதம் முதலிய 64 கலைகளும் தமிழ்நாட்டில் மிகுந்த பெருமை பெற்று வழங்கி வந்தனவென்று அறிவோம். முதற் சங்கமிருந்த தென் மதுரையில் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாயுள்ள 89 பாண்டியர்கள் அரசாட்சி செய்து கொண்டிருந்தார்கள். அவருள் ஏழு பாண்டிய ராஜர்கள் கவியரங்கேறினார்கள். அவர்களுள் சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் எழுநூற்றுக்காவதம் பரவியிருந்த 49 பாண்டிய நாடும் கடலால் அழிந்தன. 33. தென்னாட்டைப் பற்றியும் தென்னாட்டின் பாஷையைப் பற்றியும் ராஜாங்கத்தைப் பற்றியும் சொல்லும் அபிப்பிராயத்தை ஒத்துப்பார்த்தல். தமிழ் வழங்கும் தென்னாட்டிலேயே தமது ஜீவிய நாளெல்லாம் தங்கியிருந்து தமிழ்ப் பாஷையைத் தீர விசாரித்த கால்ட்வெல் (Caldwell) அத்தியட்சர் அவர்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திலும், எபிரு பாஷையிலும், ஆங்கிலோ சாக்சன் பாஷைகளிலும், சீத்திய பாஷைகளிலும், மற்றும் சில பாஷைகளிலும் வழங்கி வரும் வார்த்தைகளை வெவ்வேறாகப் பிரித்துச் சொல்வதை இதன் முன் பார்த்தோம். அதைக்கொண்டு மற்ற எல்லாப் பாஷைகளுக்கும் தமிழ்ப் பாஷையே ஆதி ஊற்றாயிருக்கலாமென்று இதன் முன் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம். தமிழ்ப் பாஷையின் வார்த்தைகள் பல பாஷைகளிலும் கலந்திருப்பதைக் கொண்டு ஆதியில் தமிழ் மக்கள் பல நாடுகளுக்குப் போயிருக்க வேண்டுமென்றாவது அல்லது மற்றவர் தமிழ் நாட்டிற்கு வந்து கலந்து உறவாடியிருக்க வேண்டுமென்றாவது எண்ண இடமிருக்கிறது. ஆனால் எக்கேல் (Haeckel) என்னும் தத்துவசாஸ்திரியார் சொல்லுவதை நாம் கவனிப்போமானால் தென்னிந்தியாவின் தென் பாகத்திலிருந்த லெமூரியா என்னும் கண்டம் மிகப்பூர்வமாயுள்ள பழைய உலகமென்றும், அதுவே ஜனங்கள் முதல் முதல் உற்பத்தியான பரதீசாயிருந்ததென்றும் சொல்லுகிறார். பாஷைகள் பல மாறி மாறி புதிதாக்கப்பட்டு வந்தாலும் அவைகளில் கலந்திருக்கும் வார்த்தைகளைக் கவனித்தால் அவைகள் மிகப்பூர்வமான ஒரு பாஷையினின்றே வந்திருக்க வேண்டுமென்றும் அவ்வார்த்தைகள் மனுஷ உற்பத்தியையும் அவர்கள் உற்பத்தியான நாட்டையும் அந்நாட்டில் வழங்கி வந்த பாஷையையும் கண்டுபிடிப்பதற்கு முக்கிய உதவியாயிருக்குமென்றும் சொல்லுகிறார். தமிழ் வார்த்தைகள் பல பாஷைகளில் கலந்திருப்பதைக் கொண்டு தமிழ்ப்பாஷை தனித்த பாஷையாயிருக்கலாமென்று எண்ணும் கால்ட்வெல் அத்தியட்சர் அவர்களும் தென்னிந்தியாவின் தென்பாகத்திலிருந்து அழிந்துபோன லெமூரியாவே ஜனங்கள் உற்பத்தியான பரதீசு என்று சொல்லும் எக்கேல் தத்துவசாஸ்திரியாரும் இற்றைக்குச் சுமார் 50 வருஷங்களுக்கு உட்பட்டவர்களென்று நாம் அறிவோம். ஆனால் இற்றைக்கு சுமார் 1,800 வருஷங்களுக்கு முன் இறையனாரகப் பொருளுக்கு உரை யெழுதிய நக்கீரரும், அக்காலத்திருந்த ராஜாக்கள், தேசங்கள், கலைகள் முதலியவைகளை ஒருவாறு அறிந்து கொள்ளற்கேதுவாயிருக்கிற சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும் தென்னிந்தியாவின் தென் பக்கத்திலுள்ள குமரியாற்றிற்கும் குமரியாற்றின் ஏழுநூற்றுக் காவதங்களுக்கு அப்புறமுள்ள பஃறுளியாற்றிற்கும் இடையிலிருந்த 49 தமிழ் நாடுகள் அழிந்து போனதாகச் சொல்லுகிறார்கள். அந்நாடுகளுக்கு தென்மதுரை ராஜதானியாக இருந்ததென்றும், அதில் 89 பாண்டியர்கள் 4,440 ஆண்டு பரம்பரையாய் அரசாட்சி செய்தும் தமிழ்ச்சங்கத்தை ஆதரித்தும் வந்தார்களென்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் சொல்லியிருப்பவை இதன்முன் பாஷையைப் பற்றியும் லெமூரியாவைப் பற்றியும் எழுதிய கால்ட்வெல் அத்தியட்சர் அவர்களுக்கும் எக்கேல் என்னும் தத்துவ சாஸ்திரியாருக்கும் தெரிந்திருக்கு மானால் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ்ப் பாஷையைப் பற்றியும் பாண்டிய ராஜ்யத்தைப் பற்றியும் அதிக நுட்பமான விஷயங்களைச் சொல்லி யிருப்பார்கள். இம்மூன்றையும் சீர் தூக்கிப் பார்ப்போமேயானால் ஒருவர் தமிழ்ப் பாஷையின் பூர்வத்தையும் அதன் மேன்மையையும் மற்றொருவர் தமிழ்ப் பாஷை வழங்கி வந்த லெமூரியா நாட்டையும் அதன் இயற்கையையும் பற்றிச் சொல்லுகிறார். மற்றவர், லெமூரியா என்று பிறர் சொல்லும் அடையாளங்களோடுகூடிய 49 தமிழ் நாடுகளையும் சில ஊர்களையும், மலைகளையும், ஆறுகளையும், ராஜர்களையும், சங்கப் புலவர்களையும், அக்காலத்து வழங்கி வந்த நூல்களையும் சயமாகீர்த்தியனாகிய நிலந் தருதிருவிற் பாண்டியன் காலத்தில் கடலால் அழிந்துபோனதையும் சொல்லு கிறார்கள். இவர்கள் இற்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னுள்ளவர்கள். இதிலும் முன்னதாக இற்றைக்கு சுமார் 8,700 வருஷங்களுக்கு முன் தென்மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்தில் அதங்கோட்டாசான் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றியதென்று தொல்காப்பிய பாயிரத்தில் சொல்லப்படுவதையும் நாம் கவனிப்போமானால் தனித்துத் தனித்து விசாரித்த பலருடைய அபிப் பிராயங்கள் லெமூரியா என்று அழைக்கப்படும் பூர்வ தமிழ்நாடாகிய தென்பாண்டி நாட்டிற்கே பொருந்துமென்று தெளிவாகத் தெரிகிறது. இதோடு தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தரமதுரையிலும் சுமார் 13,000 வருஷங்களாக இற்றைக்கு சுமார் 700 வருஷங்கள் வரையும் பாண்டிய ராஜர்களே அரசாட்சி செய்து கொண்டு வந்திருக்கிறார்களென்பதைப் பூர்வ தமிழ் நூல்களினாலும், அதன்பின் ஸ்தலபுராணங்களினாலும் தெளிவாக அறிகிறோம். சான்றோர் குலத்தவரான இவர்கள் நாடன், நாடான், பாண்டியன், தென்னவன், தமிழ்நாடன் எனப் பல புலவர்களால் புகழப் பெற்று வந்தார்க ளென்றும் நாம் அறிகிறோம். இவ்வளவு காலம் ஆண்டு கொண்டிருந்த ராஜ வம்சத்தவர்கள் இப்போது இல்லாமல் போனார்களாவென்று நினைக்க நேரிடும். மூன்றாவது சங்கத்தின் கடைசியில் பாண்டிய ராஜனுக்கும் சங்கப் புலவர்களுக்கும் சில மனவருத்தம் நேரிட சங்கங்கலைந்து தமிழைப்பற்றி விசாரிக்கும் ஊக்கம் குறைந்து தமிழ் அரசர்களை அற்பமாய் நினைக்கும் கஷ்டகாலம் ஆரம்பித்தJ. அதற்குப்பின் சுமார் ஆயிர வருஷங்களாக அரசாட்சியிருந்தாலும் பல உள் கலகத்தினால் அரசாட்சி முடிந்தJ. அதன் பின் வந்த மகம்மதியர்களும், நாயக்கர்களும் மற்றும் எவரும் சான்றோர் குலத்தவருக்கு சத்துருக்கள் ஆனார்கள். அதனால் அவர்கள் வரவர பூமி உரிமை இழந்து சொற்பத்தில் ஜீவனம் செய்யும்படியான நிலைக்கு வந்தார்கள். அவர்களுள் நாளது வரையும் நிலைத்திருக்கும் தெய்வபக்தி, ராஜபக்தி, தைரியம், உண்மை, முயற்சி, பொருளீட்டல், அடக்கம் முதலிய உத்தம குணங்களையும் அவர்களுக்குள் வழங்கிவரும் குலப்பெயர்களையும் பட்டப் பெயர்களையும் கவனிக்கும் அறிவாளிகள் இந்தியாவின் தென் பாகத்தில் மிகுந்து வசிக்கும் தமிழ் மக்களாகிய சான்றோர் குலத்தவரே பூர்வ பாண்டியராஜ வம்சத்தவர்களென்று காண்பார்கள். உண்மையுள்ள தேவபக்தனாயிருந்த தாவீது அரசனும் மிகுந்த ஞானி என்று எண்ணப்படும் அவன் குமாரன் சாலோமோன் அரசனும் பக்கத்து தேசத்து ராஜாக்கள் கப்பங்கட்ட பிரபலமாய் அரசாட்சி செய்து கொண்டிருந்த யூதேயா ராஜ்யம் அழிய, திரும்ப அவ்விராஜ்யத்துக்கு வரும் எண்ணமற்ற ஏழைகளாய்ப்போன யூதர்களையும், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான ராஜாக்களாயிருந்து இப்போது ராஜ்யம் இழந்து செல்வமும் இழந்து வறிஞராய் சஞ்சரிக்கும், அமெரிக்காவிலுள்ள சிகப்புநிற இந்தியர்களையும் (Red Indians), ஆப்பிரிக்காவில் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்று நெடுநாள் அரசாட்சி செய்து கொண்டிருந்து பிறகு அவை யாவும் இழந்து மிகத்தாழ்ந்த ஜாதியார் என்று எண்ணப்படும் கேவல நிலையில் தற்காலம் இருக்கும் சூலு, காவ்பர் (Zulu, Kaffir) என்னும் தென் ஆப்பிரிக்க ஜாதியாரையும் அறிவாளிகள் அறிவார்கள். இதுபோலவே பூர்வ தமிழ் அரசர்களாய் விளங்கிய பாண்டிய ராஜாக்களும் அவர்கள் அரசாட்சியும் போனபின் அவர்கள் பின்னடியாரும் மிக ஏழைகளாகித் தமிழ் நாட்டின் ஓர் பாகமாகிய தென்னிந்தியாவின் தென் பக்கத்தில் நாளதுவரையும் ஜனப்பெருக்குடன் நிலைத்து விருத்தியடைந்து வருகிறார்கள் என்பதையும் அறிவாளிகள் அறியாமற்போகார்கள். மேஷத்தில் உச்சனாயிருந்த சூரியன் படிப்படியாய்க் குறைந்து துலா ராசியில் நீசனாகிறது போலவும் பின் படிப்படியாய் வளர்ந்து மேஷத்தில் உச்சனாகிறது போலவும், ஒரு காலத்தில் தலையாயிருந்தது, மற்றொரு காலத்தில் வாலாகவும், வாலாக இருந்தது தலையாகவும் மாறும் இருதலை மணியனைப் போலவும் இதுவுமாகியது உலக இயற்கைதானே. மேல் கீழாகவும் கீழ் மேலாகவும் ஆகுங்காலத்தில் அதற்கேற்ப நடந்து கொள்வது மனுஷ இயற்கை. ராஜர்கள் முறியடிக்கப்பட்டு தம் குடிகளே தமக்குச் சத்துருக்களாகுங் காலத்தில் காடுகளில் மறைந்து காய் கனிகளைத் தின்று விறகு வெட்டி ஜீவனம் பண்ணுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு ராகத்தில் வழங்கும் சுரங்கள் மூன்று ஸ்தாயிகளிலும் ஆரோகண அவரோகண கதியாய் சஞ்சாரம் பெற்று வாதி சம்வாதி விதிப்படி உண்டாகும் பல பிரஸ்தாரத்தினால் ஆனந்தம் உண்டாக்குவதுபோல அண்ட புவன சராசரங்களுக்குக் கர்த்தனான தெய்வத்திற்கு இதுவும் ஒரு திருவிளையாட்டே. இப்படி பாண்டியராஜ்யம் அழிகையில் சங்கீத நூல்கள் பலவும் அழிந்து போயின. அதில் தப்பிப் பிழைத்தவர் பல தேசத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் வழங்கி வந்த தமிழ்ப்பாஷை காலஞ்செல்லச் செல்ல முற்றிலும் மாறி வேறு பாஷையாயிற்று. அப்படியானாலும் தமிழ்ப் பாஷையின் சாதாரண சொற்கள் பலவும் அப்பாஷைகளில் வழங்கி வருகின்றன. அதுபோலவே தென்னிந்திய சங்கீதத்திற்குரிய சில அம்சங்கள் மாறித் தேசத்துக்குத் தேசம் கானம் வேறுபட்டாலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த முக்கிய சுரங்களே மாறாமல் வழங்கி வருகின்றன. சுருதிகள் இத்தனையிருக்கலா மென்று வேறு சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும், அவைகளை உபயோகிக்கும் வழியும் வாத்தியத்தின் உதவியுமில்லாமல் வாய்ச்சொல்லோடு மாத்திரம் நிற்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவிலோ பன்னிரண்டு சுரங்களையும் அவைகளினிடையே வழங்கும் நுட்பமான சுருதிகளையுமுடைய கானம் செய்துகொண்டு வருகிறார்கள். தங்கள் அனுபோகத்திலிருக்கும் அம்மேன்மையான கானம் பூர்வ தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையென்று அறியார்கள். அவைகள் சேரும் முறை இன்னதென்றும் அதுவே சங்கீதத்திற்கு பிரதான மென்றும் நினைக்க மறந்து போனார்கள். பரம்பரையாயுள்ள பாடமே தற்காலம் வரைக்கும் உண்மையைக் காப்பாற்றிக் கொண்டு நிற்கிறJ. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் ரகசியங்களை வட பாஷையில் எழுதியவர்கள் இவ்விஷயத்தில் தவறிப் போனார்களென்பதை இதன்பின் பார்ப்போம். சங்கீதத்துக்குரிய பெயர்களையும் இராகங்களின் பெயர்களையும் முற்றிலும் மாற்றிப் பூர்வத் தமிழ்ப்பெயர்கள் இல்லாமல் சமஸ்கிருதத்தில் புஸ்தகங்கள் எழுதி வைத்தார்கள். இவ்வுண்மையை இதன்பின் அறிவோம். அதன் முன் இந்திய சங்கீதத்தைப்பற்றியும் அதில் வடதேசத்து சங்கீதத்தைப் பற்றியும் இந்துஸ்தான் சங்கீதத்தைப்பற்றியும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றியும் மற்றவர் சொல்லும் சில அபிப்பிராயங்களை நாம் கவனிப்பது நல்லதென்று நினைக்கிறேன். V. இந்திய சங்கீதத்தைப் பற்றிப் பலர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயம் 1. இந்திய சங்கீதத்தைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம். தென்னிந்தியாவிற்குத் தெற்கேயிருந்த லெமூரியா என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஆதிபாண்டிநாடு நாற்பத்தொன்பதும் கடலால் அழிக்கப் பட்டபின், பூர்வத்தில் அது அடைந்திருந்த எல்லா நாகரிகமும் முற்றிலும் அழிந்தன. அதைப்பற்றிப் பிறர் சொல்லித் தெரிந்து கொள்ளவாவது ஓலைச் சாசனங்கள் செப்புப் பட்டயங்கள் கல்வெட்டுகள் முதலியவைகளினால் அறிந்து கொள்ளவாவது ஏதுவில்லாமல் போய்விட்டது. இருந்தாலும், அங்கங்கே சிதறிக் கிடந்த சில நூல்களினாலும் இடைச்சங்கத்திலும் கடைச்சங்கத்திலு மிருந்த வித்வான்களினால் சொல்லப்பட்ட சொற்ப ஆதாரங்களினாலும் கொஞ்சம் தெரிகிறதேயன்றி முற்றும் தெரியவில்லை. ஆனாலும் பரம்பரை யாய்க் கேள்வி மூலமாய்க் காப்பாற்றப்பட்டு வரும் சங்கீதத்தைக் கொண்டும் சில கைத்தொழில்களைக் கொண்டு இப்படித் தேர்ச்சியுள்ள ஒரு கால மிருந்தது என்று யாவரும் நினைக்க இடமிருக்கிறது. இப்படி நினைப்பவர்களின் அபிப்பிராயம் ஒன்றுக்கொன்று சில பாகங்களில் வித்தியாசமாயிருந்தாலும் பூர்வீகத்திலிருந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்குப் போதுமானவையென்றே நினைக்கிறேன். கிறிஸ்து பரமாத்துமா உலகில் அவதரிக்கும் காலத்தில் குருச்சந்திரயோகமும் சந்திர மங்களயோகமும் பெற்ற சனி மீனத்தில் நிற்க ஒரு பெரிய வானஜோதி தோன்றுமென்றும், அச்சோதி தோன்றும் ராசி பாகைகளுக்கு ஒத்ததான பூபாகத்தில் மிக மகத்துவமுள்ள ஒரு அவதார புருஷன் பிறப்பாரென்றும், லக்கனாதிபதி சூரியன் நீச பங்கராஜயோகமும் புதன் உச்சமும் புத்திர ஸ்தானத்தில் ராகுவும் நிற்பதைக்கொண்டு அவர் இராட்ச´ ஐப்பசி மாதம் 18ம் தேதி 483/4 நாழிகைக்கு ஜனனமாவார் என்றும் கணிதத்தால் அறிந்து அவர் பிறக்கிற காலத்தில் அவரைக் கண்டு காணிக்கைகளுடன் தரிசிக்க வேண்டு மென்று வெகுதூரம் யாத்திரை செய்து தரிசித்த கிழக்கு தேசத்து சாஸ்திரிகளின் கணிதத்தின் நுட்பமும் வான சாஸ்திரத்தின் நிச்சயமும் அவதார புருஷர்களைத் தரிசிக்க விரும்பிய அவர்கள் பக்தியும் நாம் பார்த்து ஆச்சரியப்பட வேண்டியதாயிருக்கிறது. இவர்கள் தமிழ் மூவரசர்களா யிருக்கலாமென்று ஊகிக்கப்படுகிறார்கள். கணிதத்தில் மிகுந்த நுட்பமான பின்ன பாகங்களுக்கும் 36 ஸ்தானங்கள் வரை பெரிய லக்கங்களுக்கும் பெயர் வைத்து அழைக்கிற வழக்கமானது மிகவும் கொண்டாடக்கூடியதே. அப்படியே சிற்ப சாஸ்திரத்திலும் சங்கீதத்திலும் மிகுந்த பாண்டித்திய மடைந் திருந்தார்கள். பத்துக்குப்பத்து சதுரமாயுள்ள ஒரு மெல்லிய சால்வையை ஒரு கைக்குள் அடங்கும்படியாகச் செய்திருப்பார்களானால் அவர்கள் கைத் தொழிலின் திறமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? ஒரு நெல்லின் உமியை இரண்டு பாகமாகப் பிரித்து, உள்ளிருக்கும் அரிசியில் விக்னேஸ்பரர் சொரூபமும் சுப்பிரமணியர் சொரூபமும் எந்த அம்சத்திலும் குறைவுபடாமல் செய்து, பழையபடி அதில் வைத்து மூடித் தங்கள் கைத்தொழில் சாமர்த்தியத்தைக் காட்டக்கூடியவர்களும், மிகுந்த பலமுடையனவும் சத்துருக்கள் தொடுங்காலத்தில் தொட்ட அநேகரை அதம் பண்ணிப் போடக்கூடியனவுமான பொறிகளையும் பதுமைகளையும் செய்யக் கூடியவர்களும் அநேகரிருந்தார்கள். இப்படிக் கைத்தொழில், சித்திரம், சங்கீதம், யோகசாதனை, வைத்தியம் முதலியவைகள் இந்தியாவில் ஒரு காலத்தில் அங்கங்கேயிருந்து வந்தனவென்று யாவரும் சொல்வார்கள். ஆனால் இவ்வரிய வித்தைகள் தங்கள் பிராணன் போகிற வரைக்கும் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குங்கூடச் சொல்லி வைக்க மனமில்லாதவர்களினால் அங்கங்கே மறைந்து போய்விட்டன. அவைகள் பூர்வசரித்திரங்களை அறிய விரும்பும் சிலருக்கு விசாரணையின்மேல் கிடைக்கக் கூடியனவாகவும் ஊகிக்கக் கூடியனவாகவு மிருக்கின்றனவேயொழிய, திட்டமாய் வரக்கூடியவை மிகச் சிலவே. இருந்தாலும், சரித்திர ஆராய்ச்சிக்காரர் அவர்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லும் குறிப்புகளில் சில கவனிக்கத் தகுந்தவை. Hindu Music and the Gayan Samaj Part II. P. 8. “But upon the testimony of works of great antiquity lying around us (some 4,000 to 8,000 years old), we can safely affirm that Hindu music was developed into a system in very ancient times, in times of which we have no genuine records, in times when all other nations of the world were struggling with the elements for existence, in times when Hindu Rishis were enjoying the fruits of civilization and occupying themselves with the contemplation of the mighty powers of the eternal Brahma.” “நம்மைச்சுற்றி நாம் பார்க்கும் 8,000 வருஷங்களுக்கு முன்னுள்ள பழமையான நூல்களின் சாக்ஷியத்தை வைத்துக் கொண்டு இந்திய சங்கீதமானது ஆதிகாலத்திலேயே ஒரு முறையாக ஸ்தாபனமானதென்று நாம் தைரியமாய்ச் சொல்லலாம். இப்படிச் சங்கீதம் உண்டான காலமானது நமக்கு அதைப்பற்றித்திட்டமான சரித்திர சாஸனங்கள் இல்லாதகாலம். அந்தக்காலமானது உலகத்தின் மற்றெல்லா ஜாதியாரும் திட நிலைமைக்கு வேண்டிய ஏதுக்கள்கூட இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காலம். அந்தக் காலமானது இந்து மகரிஷிகள் நாகரீகமடைந்ததினால் உண்டாகும் பலன்களைப் பூரணமாய் அனுபவித்துக் கொண்டு பிரம்மத்தினுடைய அளவிலடங்கா வல்லமையை எப்போதுந் தியானித்துக் கொண்டு தங்கள் வாழ்நாளை செலவழித்த காலம்.” இதில் இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன்னும் இந்தியாவில் சங்கீதம் இருந்ததை பழைமையான நூல்கள் சொல்லுகின்றனவென்று சொல்லுகிறார். சங்கீதத்தில் மாத்திரமல்ல, நெசவிலும், நிலையுள்ள சாயங்கள் போடுவதிலும், விதம்விதமான வாத்தியக் கருவிகள் செய்வதிலும் தேர்ச்சியடைந் திருந்தார்களென்று பின்வரும் வசனங்களில் தெரிந்து கொள்ளலாம். Mill’s History of Br. India, Vol 1, Page II. “Of the exquisite degree of perfection to which the Hindus have carried the productions of the loom, it would be idle to offer any description. Among the arts of the Hindus, that of printing and dyeing their cloths has been celebrated; and the beauty and brilliancy as well as durability of the colours they produce are worthy of particular praise.” Dr. Tennant says, “If we are to judge merely from the number of instruments and the frequency with which they apply them, the Hindus might be regarded as considerable proficients in music.” “தரியுபயோகித்தல், துணி நெய்தல் ஆகிய வித்தைகளில் இந்துக்கள் அதி சம்பூரண தேர்ச்சியடைந்திருந்தவர்களாகையால் அதைப்பற்றி இங்கு விஸ்தரிப்பது அசாத்தியமான காரியம். இந்துக்கள் தேர்ச்சியடைந்த வித்தைகளுள் துணிகளில் சித்திரங்களை அச்சிடுவதும் அவைகளுக்கு சாயம் தோய்ப்பதும் வெகு விசேஷித்தவை. அந்தச் சாயங்கள் அழகிலும், பகட்டிலும், நீடித்து நிலைத்திருப்பதிலும் விசேஷித்திருந்தனவாகச் சொல்லப்படுகின்றன. இந்துக்கள் உபயோகப்படுத்துகிற வாத்தியங்களின் இலக்கத்தைக் கவனிக்கிறபோதும் அவர்கள் அடிக்கடி அவைகளை உபயோகிக்கிற விஷயத்தைக் கவனிக்கிறபோதும் அவர்கள் சங்கீதத்தில் வெகுதூரம் தேர்ச்சியடைந்திருந்தார்கள் என்று தெளிவாகிறது, என்று னுச. கூநnயேவே சொல்லுகிறார்.” மேலும் ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வருவதற்கு முன்னேயே இந்தியாவிலிருந்த பூர்வ குடிகள் மிகுந்த நாகரீகமுடையவர்களா யிருந்தார்களென்று பின்வரும் வசனங்களில் காணலாம். India through the ages. Steels P.I. “Even if we go so far back as B.C. 2,000, the voices of men who have lived and died are still to be heard in the earlier hymns of the Rig-Veda.” “These same hymns incidentally tell us that the Aryan invaders found a people in India civilised enough to have towns and disciplined troops, to have weapons and banners, women whose ornaments were of gold, poisoned arrows whose heads were of some metal that was probably iron.” “இந்துதேச சரித்திரத்தில் ரிக்கு வேதத்தில் கடவுளுக்குச் சொல்லப்படும் பிரார்த்தனைகளைக் கவனித்துப் பார்ப்போமானால் அந்தக் காலத்தில் அதாவது ஏறக்குறைய 4,000 வருஷங்களுக்கு முன்னிருந்த மனிதரின் பழக்க வழக்கம் முதலியவைகள் நமக்கு நன்றாய்த் தெரிய வருகிறது. அதே பிரார்த்தனைகளிலிருந்து நாம் மற்றும் காரியங்களையும் அறிகிறோம். அதென்னவெனில், ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்தபோது அங்கிருந்த ஜனங்கள் நாகரீகத்துக்குரிய அநேக அம்சங்களை உடையவர்களா யிருந்ததைக் கண்டார்கள். அவை யாவையெனில், இந்துக்கள் நகரங்களில் வசித்தார்கள். நன்றாய்ப் பயிற்றுவிக்கப்பட்ட சேனைகள் அவர்களுக்கு இருந்தன. அவர்களுடைய ஸ்திரீகள் தங்க நகைகளையணிந்திருந்தார்கள். நுனியில் விஷமேற்றப்பட்ட இரும்புப் பூண்களையுடைய அம்புகளை உபயோகித்திருந்தார்கள் என்பவைகளே.” மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் ஆரியர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோதே தென்னிந்தியாவிலுள்ள ஜனங்கள் ராஜ்ய பாரத்திற்குரிய கோட்டை கொத்தளங்களுடைய நகரங்களில் யுத்தப் பயிற்சிபெற்ற சேனைகளுடனும் ஆடை ஆபரணங்களின் அழகோடும் விஷம் ஏற்றப்பெற்ற ஆயுதங்களுடனும் வசித்து வந்தார்களென்று சொல்லுகிறார். தாங்கள் குடியிருக்கும் தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதியும் புல்பூண்டு தாவரம் தானியங்களின் குறைவையும் அறிந்து தாங்களும் தங்கள் ஆடு மாடுகளும் பிழைப்பதற்கேற்ற வசதியான இடம் தேடி வந்த ஆரியர், யாகஞ் செய்தும் சோமரச பானஞ் செய்தும் வந்தார்களென்று வேதத்தினாலேயே தெளிவாக அறிகிறோம். இவர்கள் வருவதற்குமுன் தென்னிந்தியாவில் உயிர்களைக் கொல்லா விரதத்தையும் மாமிசம் புசிக்காத சைவநெறியையும் மேன்மையாகக் கொண்டொழுகியவர் மிகுதியாயிருந்தார்களென்று பூர்வ தமிழ் நூல்கள் மூலமாய் அறிகிறோம். நாளடைவில் அவர்கள் தங்கள் வேதத்திலுள்ள பிரார்த்தனைகள் சொல்லும் சங்கீத முறையை விட்டுத் தென்னிந்தியாவிற்குரிய கான முறையை மிகுதியாய்ப் பயின்று வருகிறார்கள் என்பதையும் நாம் இங்கே மறந்து போகக்கூடாJ. சங்கீதமானது இந்தியர்களுடைய நாகரீகத்தை விருத்தி பண்ணின சாஸ்திரங்களில் ஒன்றாயிருந்ததென்றும் இற்றைக்குச் சுமார் 2,300 வருஷங்களுக்குமுன் பாணினியின் காலத்திலேயே ஒழுங்குடன் அமைக்கப் பட்டிருந்ததென்றும் இந்தியாவிலிருந்தே எகிப்து (Egypt) பாரசீகம் (Persia) அரேபியா (Arabia) கிரேக் (Greece) முதலிய தேசங்களுக்குக் கொண்டு போகப்பட்டதென்றும் பின்வரும் சில வாக்கியங்களால் காணலாம். W.W. Hunter’s The Indian Empire P. 110-112. INDIAN MUSIC. “The Indian art of Music (Gandharva Veda) was destined to exercise a wider influence. A regular system of notation had been worked out before the age of Panini (350 B.C.), and the seven notes were designatred by their initial letters. This notation passed from the Brahmans through the Persians to Arabia and was thence introduced into European music by Guido L. Arezzo at the beginning of the 11th Century. Some indeed, suppose that our modern word gamut comes not from the Greek letter gamma, but from the Indian gama in Prakrit; (in Sanskrit, Grama) literally a musical scale” “காந்தர்வ வேதம் என்றழைக்கப்பட்ட இந்திய சங்கீதமானது இந்தியருடைய நாகரீகத்தை விருத்தி பண்ணின அநேக கருவிகளில் சிரேஷ்டமானJ. கி.மு. 350 வருஷத்துக்கு முற்பட்ட பாணினி (ஞயnini) முனிவர் காலத்திலேயே, இந்திய சங்கீதமானது ஒருவித ஒழுங்குடன் அமைக்கப்பட்டு, இராகங்களை சுரப்படுத்தும் முறை, ஸப்த சுரங்களையும் அவைகளைத் தொடங்கும் எழுத்துக்களால் அழைத்தல் முதலிய ஒழுங்குகளுடனும் இருந்ததாகத் தெரிகிறது. இராகங்களைச் சுரங்களாக எழுதும் இம்முறை யானது பிராமணர்களிடமிருந்து பாரசீகர் மூலமாய் அரேபியாவுக்குக் கொண்டு போகப்பட்டு, அப்புறம் அவர்களிடமிருந்து 11வது நூற்றாண்டின் துவக்கத்தில், Guido L. Arezzo என்பவரால் ஐரோப்பிய சங்கீதத்தில் அமைக்கப்பட்டJ. தற்காலம் சங்கீதத்தில் வழங்கி வரும் ‘‘Gamut’’ என்னும் பதமானது கிரேக்கு எழுத்தாகிய ‘Gamma’ என்பதிலிருந்து உண்டானது என்று சிலர் அபிப்பிராயப்படுவதுபோல் நினையாமல் இந்திய பதமாகிய ‘கிராமம்’ (அதாவது ஆரோகண அவரோகணம்) என்னும் பதத்திலிருந்து உண்டானதாகச் சிலர் நினைக்கிறார்கள்.” கிறிஸ்துவுக்குமுன் 2,500க்கும் 1,400க்கும் நடுவிலுள்ள பிராமணிய காலம் (கிரந்தங்கள் உண்டான காலம்) என்று அழைக்கப்படும் 4,400 ஆம் வருஷத்திலேயே இந்திய சங்கீதத்துக்குரிய ஆரோகண அவரோ கணங்களிருந்தனவென்றும் இன்னும் நுட்பமாய் விசாரித்தால் இந்திய சங்கீதத்தின் காலம் மிகப்பூர்வமானதென்று அறியலாமென்றும் சங்கீத சாஸ்திரத்தின் அநேக பாகங்கள் இந்தியாவிலேயே ஜெனித்தனவென்றும் பின்வரும் வாக்கியங்களால் அறியலாம். Hindu Musical Scale and 22 Srutis By K.B. Deval Page I. “It might be stated here at the outset that the Hindu musical scale dates as far back as the Brahman Period which is calculated, according to modern researches, to extend from 2,500 B.C. to 1,400 B.C. It is possible that further researches might modify this date or might, perhaps carry it still farther back. But we may be certain that our scale dates farther back than the Greek scale which is acknowledged to be the parent of modern European scales. Capt. Day in his ‘Music of Southern India; observes :- The Historial Strabo shows that the Greek influence extended to India, and also that Greek musicians of a certain school attributed the grater part of the science of music to India.” “ஆரம்பத்தில் இப்போது நாம் அவசியமாய்ச் சொல்ல வேண்டியதென்ன வென்றால் இந்திய சங்கீதத்தில் வழங்கும் ஆரோகணங்கள் ‘பிராமணிய காலம்’ என்று சொல்லப்பட்ட அதாவது கி.மு. 2,500க்கும் 1,400க்கு இடையிலுள்ள காலத்திலேயே உபயோகத்திலிருந்தன என்று தற்கால சாஸ்திர ஆராய்ச்சியின் மூலமாய்த் தெரிய வருகிறது. இன்னும் இதிலும் அநேக விசேஷமான ஆராய்ச்சிகள் நடக்குமானால் இந்திய சங்கீத காலம் இன்னும் முன்னுக்கு உள்ளதாய்த் தெரிய வரலாம். ஆனால் நாம் ஸ்திரமாய்ச் சொல்லக்கூடியது, தற்காலம் ஐரோப்பாவில் வழங்கும் ஆரோகணங்களுக்குத் தாயாக எண்ணப்படும் கிரேக்க ஆரோகணங்களுக்கு முன்னான காலத்திலும் இந்திய ஆரோகணங்கள் இருந்தன என்பதாம். ‘தென்னிந்திய சங்கீதம்’ என்ற நூலில் Captain Day என்பவர் ‘சரித்திர சாஸ்திரியாகிய Strabo சொல்லுகிறபடி கிரேக்கருடைய சங்கீதத்தின் பிரகாசம் இந்தியா வரையில் எட்டியது என்றும் கிரேக் வித்வான்களில் ஒரு சாரார் சங்கீத சாஸ்திரத்தின் அதிகமான பாகம் இந்தியாவிலிருந்து ஜெனித்தது என்று ஒப்புக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரராகிய ளுவசயbடி சொல்லுகிறார்’ என்று கூறுகிறார்.” இந்திய சங்கீதம் இற்றைக்குச் சற்றேறக்குறைய 3,000 - 4,000 வருஷங்களுக்கு முன் பிராமணிய காலத்திலுண்டானதாகவும் கிறிஸ்துவுக்கு 350 வருஷங்களுக்கு முன்னுள்ள பாணினி என்பவர் காலத்திலிருந்ததாகவும் பிராமணர்களிடமிருந்து மற்ற தேசத்தாருக்குப் பரவினதாகவும் மேற்கண்ட வரிகளில் காண்கிறோம். அதில் இன்னும் விசேஷமான ஆராய்ச்சி செய்தால் இதற்கு வெகு காலத்திற்கு முன்னாலேயே இந்தியாவில் சங்கீதமிருந்ததென்று சொல்லலாம் என்கிறார். தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்களின் கருப்பொருள்கள் சொல்ல வந்த இடத்தில் நால்வகையான யாழ்களையும் பற்றி விபரஞ் சொல்லுகிறார். அதில் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்ற நாலு யாழ்களின் சுருதிமுறைகளைக் கவனிப்போமானால் ஷட்ஜமம், மத்திமம், பஞ்சமம், நிஷாதம் ஆகிய நாலு சுரங்களை சுருதியாக வைத்துக் கொண்டு கானம்பண்ணப்படுவதென்று இதன் பின்விபரமாய் அறிவோம். தொல்காப்பியர் தனக்கு முன் வழங்கி வந்த சங்கீத நுட்பத்தையே அங்கே சொன்னார். இதைப்பற்றி அகஸ்தியரும் நாரதரும் விரிவாக நூல் எழுதியிருந்ததாகவும் தெரிகிறது. இது தென்மதுரையில் சங்கமிருந்த காலமாம். சங்கம் உண்டாவதற்கு முன்பே சங்கீதமிருந்திருக்க வேண்டுமென்று நாம் திட்டமாகச் சொல்லலாம். இத்தென்மதுரை அழிகையில் இங்கிருந்தோர் முன்னமே தாம் கற்றுக்கொண்ட சிற் சில சுரங்களைத் தங்கள் தேசத்தில் விருத்தி செய்திருக்கலாமென்றும் பழையபடி தென்னிந்தியாவிலுள்ள கானத்தைக் கொண்டே தங்கள் கானத்தை விருத்தி செய்து கொண்டார்களென்றும் நாம் அறிய வேண்டும். இதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள். தென்னிந்தியாவின் சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களை பைதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க தத்துவ சாஸ்திரி 2/3, 3/4 என்ற அளவின் மூலமாய்க் கொண்டு போனார் என்பதை இதன்பின் அறிவோம். சுரங்களிலுள்ள வெகு நுட்பமான கூடுதல் குறைதலை அறியாமல் பலவிதமான சந்தேகங்கள் ஜனித்திருக்கிறதென்று பின் பார்ப்போம். இந்தியாவில் யாகஞ் செய்யும்பொழுது இரண்டு பிராமணர்கள் வீணை வாசிக்க, மற்றொரு பிராமணர் வேதங்களைப் பாடிக்கொண்டிருக்க வேண்டும். அப்படிப்பட்ட கானமில்லாத ஒரு யாகம் பிரயோசனமில்லை யென்று பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Hindu Music and the Gayan Samaj, Part I. P. 21. “The system of instrumental music was in practice in the earliest times of the history of our land and it was held that sacrifical rites (yagams) had no efficacy unless two Brahmans played upon the Vina in concert with a third Brahman singing.” “நம் நாட்டின் ஆதி சரித்திர காலந் தொடங்கிச் சங்கீத வாத்தியங்களை உபயோகப்படுத்தும் முறை ஏற்பட்டிருந்திருக்கிறJ. யாகம் செய்யும்போது இரண்டு பிராமணர்கள் வீணையில் வாசிக்க மூன்றாவது பிராமணர் ஒருவர் சேர்ந்து பாடினாலொழிய அந்த யாகத்தில் ஒரு பிரயோசனமுமில்லை என்று கொள்ளப்பட்டJ.” இந்திய சங்கீதம் மனதைச் சாந்தப்படுத்தித் தெய்வத்தினிடத்தில் மனதை நிலைநிற்கச் செய்கிறதென்று பின்வரும் வாக்கியங்களில் பார்க்கலாம். Hindu Music and the Gayan Samaj, Part II, P. 30. “Music is one of the most innocent and elevating indoor amusements. It affords pleasure to all and delights specially those who cultivate and develop a taste for it. It softens and refines the mind and elevates its devotion to the Creator of the Universe. Relying upon the testimony only of works of great antiquity lying around us some 4,000 to 8,000 years old, we can safely affirm that Hindu music is of very ancient origin, and was developed into a system and science when Hindu Rishis resided and meditated in the primoeval forests, and inaugurated civilization.” “சங்கீதமானது காலத்தை நல்வழியில் செலவழிக்கக் கூடியதும், மனசைப் பரவசப்படுத்தக் கூடியதுமான ஓர் நல்ல பழக்கம். அது யாவருக்கும் சந்தோஷத்தைத் தரத்தக்கதும், முக்கியமாய் அதில் விருப்பமுடையவராய் அதைக் கற்றோருக்கு அதிக ஆனந்தத்தைத் தரத்தக்கதுமாயிருக்கிறது. அது மனதைச் சாந்தப்படுத்திச் சுத்தப்படுத்தி உலகைப் படைத்த சிருஷ்டிகரிடத்தில் அம்மனதை வசப்படுத்துகிறJ. 4,000 வருஷ முதல் 8,000 வருஷங்களுக்கு முன்னே அது ஏற்பட்டது என்று நம்மைச் சுற்றியிருக்கும் பழமையான சாஸ்திர நூல்கள் மூலமாய் அறிந்த நாம் இந்திய சங்கீதமானது வெகு பழமையானதென்றும், இந்திய மகா ரிஷிகள் காடுகளில் வசித்து தபசு செய்து வந்த காலத்திலேயே ஒரு சாஸ்திர முறையாய் ஏற்படுத்தப்பட்டிருந்த தென்றும், சகல நாகரீகத்துக்கும் அது ஆதி உற்பத்தியாயிருந்ததென்றும் தடையில்லாமல் சொல்லலாம்.” மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் சங்கீதமானது இந்தியாவில் மிகப் பழமையான சாஸ்திரமென்றும் தபோதனர்களால் அப்பியாசிக்கப் பட்டும் சாஸ்திரமாய் எழுதப்பட்டும் வந்ததென்றும் சகல நாகரீகத்திற்கும் அது ஆதி உற்பத்தியாயிருந்ததென்றும் சொல்லுகிறார். உலகின் உற்பத்திக்கு நாதமே ஆதிகாரணமா யிருந்தததுபோல ஒரு மனுஷனின் நாகரீகத்திற்கும் பக்திக்கும் அவன் உள்ளத்திலிருந் துண்டாகும் நாதமே முதலாயிருக்கிறது. எங்குமுள்ளதாய் விளங்கும் ஒருவனே எல்லா ஜீவப்பிராணிகளின் உள்ளத்திலுமிருக்கிறான். அவ்வுள்ளம் அம்மெய்ப்பொருளை (உண்மையை) யுடையதா யிருக்குமானால் எல்லாமுள்ளதாகவும் அது குறையக் குறையப் படிப்படியாய் ஒன்றுமில்லாததாகவும் ஆகிறதை நாம் அறிவோம். நல்ல உள்ளம் இல்லாதவன் நல்ல வார்த்தைகளை யில்லாதவனாகிறான். உண்மை அவன் வாயினின்று வருகிறதில்லை என்பதையும் நாம் அறிவோம். ஒருவன் சொன்ன இனிய வசனங்களும் இன்பமான ஓசைகளும் சொன்ன அவனிடத்திலேயே திரும்பப் போய்ச் சேருகின்றன. இப்படி மாறிமாறி உண்டாகும் செயலே ஒருவனில் நிலைத்திருக்கும்பொழுது அவன் ஆனந்த முடையவனாகிறான். உண்மையான ஆனந்தத்திற்கு உண்மையான நாதமே ஆதிகாரணம். இவ்வுண்மை விருத்திக்கு மூலகாரணத்தையே ஆத்மம் என்றும் பரம் என்றும் அறிவுடையோர்கள் சொல்வார்கள். உண்மை யினின்று தோன்றும் ஆனந்தமும் ஆனந்தத்தினின்று தோன்றும் கீதமும் எவ்விடத்தி லிருந்து உண் டாயிற்றோ அந்த இடத்தையே அலங்காரப்படுத்துகிறJ. அதாவது அதில் உண்மையாய் விளங்கும் தெய்வத்தினிடத்தில் நிலைக்கும்படிச் செய்கிறJ. தெய்வத்திலேயே நிலைத்திருந்த தபோதனர்கள் சங்கீதத்தை உதவியாகக் கொண்டு தங்கள் தபசைச் செய்து வந்தார்கள். ஜீவகாருண்யம், அடக்கம், பொறுமை, கீழ்ப்படிதல், அன்பு முதலிய உத்தம குணங்கள் விளங்கித் தெய்வ புத்திரராக உலகத்தில் பிரகாசித்தார்கள். இதற்கு மாறாக அதாவது உண்மைக்கு மாறாகச் செய்யும் கானங்கள் செய்தவனைப் பல அல்லல் செய்து பொய்யனாக்குமென்பது நிச்சயம். வேதமுண்டான காலத்திலேயே அவைகள் ராகத்தோடு பாடப்பட்ட தென்றும் ஒரு சுரத்தைக் கொண்டும் இரண்டு சுரத்தைக் கொண்டும் மூன்று சுரத்தைக் கொண்டும் கானம் பண்ணிக் கொண்டிருந்தார்களென்றும் அதன்பின் ஐந்து, ஆறு, ஏழு என்னும் சுரங்களையும் அந்தந்த சுரங்களுக்குப் பொருத்தமுள்ள மேல் சுரங்களையும் சேர்த்து உதாத்த, அனுதாத்த, ஸ்வரிதம் என்று வழங்கி வந்தார்களென்றும் பின்வரும் வாக்கியங்களால் தெரிகிறது. Hindu Music and the Gayan Samaj, P. 4. “As has been already observed, our Rishi ancestors, in very early times, had been chanting vedic hymns and setting them to music, and mention of this fact in the vedas is frequently made in the Rigveda, as for instance, in such assertions as Archino Gayanti, Ganthino Gayanti and Samino Gayanti. Again, in later times Panini and other acharyas or teachers describe the science, and all this goes to show distinctly that music was cultivated among our ancestors to a large extent, and whith great assiduity and taste. The Arka system of music, it is said, was based upon only one note, the Gathika system upon two, and the Samika upon three, and to these was subsequently added another system termed the swarantara (another note) based upon four notes. There was thus vital difference between the system adopted by the Rishis and those adopted by the Acharyas; and Panini, to make up the difference, while regarding in his vyakarana Sutras, the three swaras” (Udatta, Anudatta and Swarita), as the main notes, points out in his (Siksha), the connection between the system by three and those by seven notes thus : (Udatta) includes (ni and ga) (Anudatta) includes (ri and dha) and (Swarita) includes (sa, ma, pa) “நாம் முன்னே சொன்னபடி, நம்முடைய முன்னோர்களாயிருந்த ரிஷிமார்கள் ஆதிகாலத்திலேயே வேதத்திலுள்ள பிரார்த்தனைகளைப் பாடி சுரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி ரிக்கு வேதத்தில் அநேக இடங்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. உதாரணமாக, அர்ச்சினோகாயந்தி, காயந்தினோகாயந்தி முதலிய முறைகள் சொல்லப்படுகின்றன. பிற்காலங்களில் பாணினி முதலிய ஆசிரியர்களும் வித்வான்களும் இந்த வித்தையை விஸ்தரித்துச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் நாம் கவனிக்கும்போது, சங்கீதமானது நமது முன்னோரால் வெகு சிரத்தையோடும் பிரியத்தோடும் விருத்தி பண்ணப்பட்டு வந்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். ‘அர்க்கா’ என்னும் முறையானது ஒரே சுரத்தையும் ‘காதிகா’ என்பது இரண்டு சுரத்தையும், ‘சாமிகா’ என்பது மூன்று சுரத்தையும் உடைத்தாயிருந்தது என்றும், இவைகளோடுகூட நாலு சுரத்தையுடைய ‘ஸ்வராந்தம்’ என்னும் வேறொரு முறை உண்டாயிற்று என்றும் தெரிகிறது. ஆகையால், ரிஷிகளின் முறைக்கும் ஆசாரியரின் முறைக்கும் அனந்த வித்தியாசமிருந்ததால் இந்த இரண்டு முறையையும் சம்பந்தப்படுத்தும் படியாக என்ன செய்தாரென்றால், தம்முடைய ‘வியாகரண சூத்திரத்தில்’ மூன்று சுரங்களாகிய உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் என்பவைகளை மூல சுரங்களாக வைத்துக் கொண்டும், தம்முடைய “சிiக்ஷ”யில் அந்த மூன்று சுரங்களுக்கும் சப்தசுரங்களுக்குமுள்ள சம்பந்தத்தை பின்வருமாறு காண்பிக்கிறார்” “உதாத்தம் நிஷாதத்தையும் காந்தாரத்தையும்” “அனுதாத்தம் ரிஷபத்தையும் தைவதத்தையும்” ஸ்வரிதம் சட்ஜ மத்திம பஞ்சமங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது என்கிறார்.” இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் வடமொழி இலக்கணம் சொன்ன பாணினி (Panini) முனிவரின் காலத்தில் ஸப்த சுரங்களும் சங்கீதத்தின் சில முக்கிய அம்சங்களும் சொல்லப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. வடதேசத்தி லிருந்து வந்த ஆரியர் முதல் முதல் ஒன்று, இரண்டு, மூன்று சுரங்களோடு உதாத்த அனுதாத்தமாகக் கானம் செய்து வந்தார்களென்று தெளிவாக அறிகிறோம். ஆனால் இந்தியாவின் தென்பாகத்திலுள்ள ராவணேஸ்வரன் என்னும் ராஜன் சாமவேதத்தை ஸப்த சுரங்களினாலும் பாடினானென்றும் அதன் பின்பே ஸப்த சுரங்களும் அவற்றின் விக்ருதி சுவரங்களும் சாம வேதத்தில் பழக்கத்திற்கு வந்தனவென்றும் எண்ண இடமிருக்கிறது. இடைச் சங்கத்தின் துவக்கத்திலிருந்த தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னாலேயே சங்கீத சாஸ்திரம் மிக உன்னத நிலையிலிருந்ததென்று நாம் முன்னே பார்த்தோம். இது பாணினியின் காலத்திற்கு அநேக ஆயிர வருஷங்களுக்கு முன்னுள்ளJ. பாணினி ராவணனுடைய காலத்திற்கும் தொல்காப்பியரின் காலத்திற்கும் மிகப் பிந்தினவரென்றும் இளங்கோவடிகள் காலத்திற்குச் சமீபித்தவர் என்றும் சொல்ல வேண்டும். பாணினியின் காலத்திற்கு முன்னா லேயே சாம வேதம் பாடும் விதம் ராவணேஸ்பரனால் கற்பிக்கப்பட்ட தென்றும் அதற்கு முன்னாலேயே இசை நூல் அகத்தியராலும் நாரதராலும் சொல்லப்பட்டிருந்ததென்றும் நாம் அறிய வேண்டும். ராவணேஸ்பரனால் சங்கீத வாத்தியம் செய்யப்பட்டதாக பின்வரும் வசனங்களில் காணலாம். History of Music by Hunt P. 141. “The family of stringed instruments played with a bow has been a very numerous one. The most ancient Viol on record appears to be the ravenstrom (or ravanstrom), still played in India by the mendicant monks of Buddhah. Tradition says that this primitive instrument was invented by one of the kings of Ceylon, but the date assigned to this monarch is somewhat about five thousand years before Christ. It said, that the ravenstrom was the precursor of the gondok, or Russian Fiddle; and the Welsh crwth, which had six strings strung across a flat bridge, and was played partly with the bow, and partly by plucking with the fingers.” “வில்லினால் வாசிக்கப்படும் தந்திவாத்தியங்களின் தொகை அனந்தம். அவைகளில் வெகு பூர்வமாயுள்ளதாகச் சொல்லப்படும் (Viol) கின்னரம் என்ற வாத்தியமானது, தற்காலத்திலும் இந்தியாவில் பௌத்தமத சந்நியாசி களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிற ராவணேஸ்வரம் என்னும் வாத்தியமே. இந்த ஆதிவாத்தியமானது இலங்கையை ஆண்ட அரசர்களில் ஒருவனால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அரசன் அரசாண்ட காலம் கிறிஸ்துவுக்கு முன் 5,000 வருஷங்கள் என்று பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது. சுரளளயைn குனைனடந அல்லது ழுடினேடிம என்னும் வாத்தியமானது, இந்த இராவணேஸ்வரம் என்னும் வாத்தியத்திலிருந்து உண்டானது என்பதற்குத் தடையில்லை. வேல்ஸ் தேசத்தில் உபயோகப் படுத்தப்படும் ஊசறவா என்னும் வாத்தியமும் இதிலிருந்து உண்டானதுதான். அதற்கு ஏழு தந்திகள் உண்டு. அது வில்லினால் வாசிக்கப்படலாம், அல்லது விரலினால் மீட்டவும் படலாம்.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கும்பொழுது ராவணேஸ்வரம் நாம் சாதாரணமாய் தெருவில் பார்க்கும் அகப்பைக் கின்னரியைப் போலிருக்கு மென்று நினைக்க ஏதுவிருக்கிறது. இதை அல்லது இதற்கு சற்றுப் பெரிதா யுள்ளதும் வில்லினால் வாசிக்கக்கூடியதுமான ஒரு வாத்தியத்தை ராவணேஸ்வரன் செய்தானென்று சொல்வதை நம்ப இடமில்லை. அவனுடைய சாஸ்திர வல்லமைக்கேற்பச் சங்கீதத்தில் தேர்ந்த ஆரியர்கள் கண்டு பிடிக்காத சுரங்களையும் கண்டுபிடித்து அதில் சாமவேதத்தைப் பாடிப் பரமசிவன் கிருபையைப் பெறுதற்குத் தகுந்ததான உயர்வுடைய வாத்தியமொன்று செய்திருப்பானே யொழிய, குறவர் செய்து ஆறு பைசாவுக்கு விற்று ஜீவனம்பண்ணும் ஒரு அகப்பைக் கின்னரியைச் செய்தானென்று சொல்வது முற்றிலும் ஒவ்வாJ. ராவணன் ஆண்ட தீவுகளில் தேங்காய் பெரிதாயிருந்ததினால் அக்கொட்டாங்கச்சிகளைக் கொண்டு அகப்பைக் கின்னரி செய்து சிறுவர்களுக்கும் சொற்பத்தில் ஜீவனம் பண்ணும் பரதேசிகளுக்கும் விளையாட்டுப் பொருளாக விற்று வந்தார்கள். இதற்கு ராவணேஸ்வரம் என்று பெயர் வந்திருக்கலாமென்று நினைக்கிறேன். 10,417 சுலோகங்களையுடைய ரிக்கு வேதமே மிகப்பூர்வமாயுள்ளJ. இவ்வேதம் எசுர், சாமம், அதர்வணம் என்ற மூன்று வேதங்களையும் தன்னிலடக்கிக் கொண்டிருந்தது. ராவணேஸ்வரன் ரிக்கு வேதத்தை நன்றாய்த் தெரிந்தவனா யிருந்ததினால், அவைகளுள் பரமசிவனை தோத்தரிக்கக் கூடியனவாயிருந்த சில சுலோகங்களைத் தன் காலத்தில் பழக்கமாயிருந்த தென்னாட்டுச் சங்கீத முறைப்படி ஸப்த சுரங்களையுமுடையதாகிய இனிய பண்ணில் கானம் பண்ணினானென்று விளங்குகிறJ. இக்கானத்தில் மிகப் பிரீதியுடையவராய் ராவணன் பிழையை மன்னித்ததின் நிமித்தம் சிவனை சாமகானப்பிரியர் என்று நாளது வரையும் சொல்லப்பட்டு வருகிறது. சாம, பேத, தான, தண்டம் என்னும் ராஜ தந்திரம் நான்கையும் அறிந்த ராவணேஸ்வரன், பகவான் தன்னை மன்னிக்கும்படியாக ரிக்குவேதத்தின் சில பாகத்தை வீணையுடன் கானம் பண்ணினான். சாமம் + வேதம் = சாமவேதம்; சாமம் = சமாதானம் பண்ணுதல். தன் மேல் கொண்ட கோபம் தணிந்து சமாதானமாகும்படி பிரார்த்தனை பண்ணினதினால் இக்கீதத்திற்குச் சாமகானம் அல்லது சாமவேதம் என்று பெயர் வந்திருக்கலாம். சோமயாகஞ் செய்யுங்காலத்தில் தெய்வத்தைத் தோத்தரிக்கும் பாடல்களுக்குச் சாமகானம் என்று பெயர் வழங்குகிறJ. சோமம் என்பது ஒரு விருக்ஷத்திற்கும் ஒரு செடிக்கும் பெயராக வழங்கி வருகிறதென்று தெரிகிறது. சோம விருக்ஷம் காடாயிருந்ததென்றும் சோமக் கொடி (சோமலதை)யை கொண்டு வந்தானென்றும் சொல்லப்படுகிறது. சோமச்செடி யிலிருந்துண்டாகும் ஒருவித குடிநீர் ஆனந்தத்தை விளைவித்து மயக்கத்தை உண்டாக்கும் வஸ்துவாயிருந்ததென்று தோன்றுகிறது. யாகத்திற்குரிய பதார்த்தங்களை பாகஞ்செய்து அவரவர்கள் யாகபாகம் பெற்றுக்கொண்டபின் தங்களுக்குப் போதுமான அளவு சோமரசபானம் பண்ணும் பொழுது சந்திர லோகத்திலிருக்கிறதாக நினைக்கும் தங்கள் பிதிர்களுக்காக சோமனை அல்லது சந்திரனைப் பார்த்து கானம் பண்ணுவார்கள் என்று பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Music of Hindustan by Fox Strangways P. 249-250. “Samaveda. The symbol round which the elaborate ritual of the Samaveda gathers is that sacrifice of which the drinking of the juice of the Soma plant was the central point. The virtues of this juice are recapitulated in the ninth book of the Rig Veda, from which mainly the words for the Saman chants are taken. Soma is translated moon plant; and the Samaveda is specially connected with the worship of ancestors, whose abode was the moon. Great care was taken not to deviat from the original melody-types and rhythms and the religous efficacy of the hymns was held to depend largely on the right application of directions contained in the Brahmanic explanations (Brahmana not later than the sixth century B.C.) of the Vedic text “Samhita.” The expense of the full cermonical was not small; the Soma sacrifice involved days in performance and months in preparation. A full description of its elaborate and gorgeous ritual is to be found in the Aitareyabrahmana of the Rig Veda translated into English by Martin Haug, 1863, and its close connection with the fire-worship of the Zorastrains is there detailed.” “சாமவேதம். சாமவேதத்தில் சொல்லப்பட்ட அதிமேன்மையான சடங் காசாரங்கள் எல்லாவற்றிலுமுக்கியமானது என்னவென்றால் சோமலதையின் ரசத்தைக் குடிப்பதாகிய பலியே. இவ்விரசத்தின் பெருமையைப்பற்றி ரிக்குவேதத்தின் ஒன்பதாவது அதிகாரத்தில் விஸ்தாரமாய்ப் பார்க்கலாம். சாம வேதத்தின் சுலோகஞ் சொல்லுதலும் இதிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறJ. சோம என்றால் சந்திரச்செடி. சாமவேதத்திற்கும் பிதிர் வணக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அதென்னவென்றால் அப்பிதிர்க்கள் சந்திரனில் வசிக்கிறார்கள் என்னும் நம்பிக்கையே. இந்தச் சுலோகங்கள் ஆதியில் எழுதப் பட்ட இராகமேரையிலும் தாளத்திலும் இப்போது சொல்லப்படுகிறதா என்பதைப்பற்றி அதிக கவலையுள்ளவர்களா யிருந்தார்கள். வேதங்களைச் சேர்ந்த பிராமணங்களில் சங்கீதத்தைப்பற்றிச் சொல்லியிருக்கும் விதிகளின்படி இந்த சாமவேத சுலோகங்கள் சொல்லப்படாவிட்டால் அவைகளில் யாதொரு பயனுமில்லை யென்று கொண்டார்கள். (பிராமணங்கள் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் உள்ளவை). சடங்கா சாரங்களுக்குச் சென்ற செலவானது கொஞ்சமல்ல. சோமரச பலி ஒன்றைச் செலுத்துவதற்கு அநேக நாள் பிடித்தன. அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் முடிவு பெற அநேக மாதங்கள் சென்றன. இந்தப் பலியின் அதிகாம்பீரமான சடங்குகளைப் பற்றியறிய வேண்டுமானால் ரிக்கு வேதத்திலுள்ள ஆய்த்தரிய பிராமணத்தில் பார்க்கலாம். இந்த நூல் ஆயசவin ழயரப என்பவரால் 1863ல் இங்கிலீஷில் மொழி பெயர்க்கப்பட்டJ. இந்தச் சடங்குகளுக்கும் பார்சிகளால் செய்யப்படும் அக்கினி வணக்கத்திலுள்ள சடங்குகளுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தம் இதில் நன்றாய் வெளிப்படும்.” சோமனைப் பார்த்துப் பிரார்த்திக்கும் கானத்திற்குச் சோமகானம் அல்லது சாமகானம் என்றும் சோமரசம் குடித்துச் சொல்லும் பாட்டிற்குச் சாமகானமென்றும் பெயர் வரலாம். ஆனால் ராவணேஸ்வரன் பரமசிவனை இன்னிசையுடன் பாடியபின்பே அதற்கு சாமகானம் என்று பெயர் வந்திருப்பதாக நாம் நினைக்க வேண்டும். ரிக்குவேதத்திலுள்ள சுலோகங்களே ராவணனால் கானம் செய்யப்பட்டபின் சாமவேதமென்று அழைக்கப்பட்டன என்று நாளது வரையும் உலக வழக்கத்தில் சொல்லப்படுகிறது. மேற்கண்ட வாக்கியங்களில் கண்ட சரித்திரத்தை நாம் இதன் முன் கேள்விப்பட்டிருக்கிறோம். இச்சரித்திரத்தை ஞாபகப்படுத்துவதற்காக மதுரை ஆலயத்தில் செய்யப்பட்டிருக்கும் சொரூபத்தையும் பார்த்திருக்கிறோம். இதில் ராவணேஸ்வரன் ஒரு வீணையை வைத்துக்கொண்டு தன் இருபது கைகளினாலும் வாசிக்கிறதாகக் காணப்படுகிறது. மேலும் மதுரைக்குச் சமீபத்திலுள்ள ஆவிடையார்கோயிலிலும் மற்றைய சிவஸ்தலங்களிலும் ராவண வாகனம் (கைலாசவாகனம்) என்ற வெள்ளி வாகனத்திலும் ராவணன் வீணை வாசிக்கிறதாகவே தோன்றுகிறது. சுமார் 2,000-3,000, வருஷங்களுக்கு முன்னுள்ள ஆலயத்தின் சித்திரத்தையும் வாகனத்தின் சித்திரத்தையும் கவனிக்கையில் ராவணேஸ்வரம் ஒரு வில்வாத்தியம் என்று நினைக்க இடமில்லை. ஆனால் இந்து சங்கீதத்தின் அதி பூர்வமாயுள்ளதும் தற்காலத்தில் இல்லாததும் ஆயிரம் தந்தி பூட்டியதுமாகிய பேரியாழ் என்பதை ராவணன் செய்து தன் 20 கரங்களினாலும் அவைகளை மீட்டி வாசித்தானென்று சொல்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது. அக்காலத்திற்கு முன்னமேயே சங்கீதம் பூரண தேர்ச்சியடைந்திருந்த தென்று நாம் நிச்சயிக்கலாம். அக்காலத்தில் பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் முதலிய வீணைகளிருந்தனவாகக் காணப்படுகின்றனவே யொழிய இந்த அகப்பைக் கின்னரி இருந்ததாக ஓரிடத்தும் சொல்லக் காணோம். வாத்தியங்களின் உதவியைக் கொண்டு ஒருவனாய்த் தனித்துப் பாடும் வழக்கம், இந்திய சங்கீதத்திற்கு மிகப் பூர்வமாகவேயுள்ளது என்று பின்வரும் வாக்கியங்களில் காணப்படுகிறது. H.M. Scale & Srutis, By K.B. Deval P. 46. “The essential basis of music is melody and this is contained admittedly in the Hindu scale to its full extent. This has been the main charm of the Hindu system of music for thousands of years in the past and will continue to remain so for a number of years in the future.” “எல்லாச் சங்கீதத்துக்கும் ஆதாரம் தனிச்சுரங்களை ஒன்றின்பின் ஒன்றாய்ச் சொல்லுவதுதான் (melody). இது இந்திய சங்கீதத்தில் பூரண அளவாய் இருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அநேக ஆயிர வருஷங்களாய் இந்திய சங்கீதம் இனிமையாயிருப்பதற்குக் காரணம் இதுவே. இது காரணம் பற்றியே வரப்போகிற வருஷங்களிலும் அது வெகு பிரசித்தமாயிருக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை.” இவ்வாக்கியங்களில் ராகம் பாடுவது மிக இனிமையுடையதென்று சொல்லுகிறார். இனி வரப்போகுங் காலங்களிலும் இது மிகவும் மேன்மை யுடையதாக எண்ணப்படுமென்றும் நிச்சயஞ் சொல்லுகிறார். உண்மை யிலேயே அவைகள் மேன்மையுடையவைகளா யிருப்பதற்குக் காரணம் பின்வரும் வாக்கியத்தில் காணலாம். The Indian Empire by W.W. Hunter. P. III. “It is, indeed, impossible to adequately represent the Indian system by the European notation; and the full range of its effects can only be rendered by Indian instruments a vast collection of sound-producers, slowly elaborated during 2,000 years to suit the special requirements of Hindu music. The complicated structure of its musical modes (rags) rests upon three separate systems, one of which consists of five, another of six, and the other of seven notes. It preserves in a living state some of the early forms which puzzle the student of Greek music, side by side with the most complicated developments.” “இந்திய இராகங்களை ஐரோப்பிய சங்கீதத்தில் வழங்கி வரும் கோடுகள் நோட்டுக்கள் மூலமாய் சுரப்படுத்துவது கூடாதகாரியம். அந்த இராகங்களின் முழு இனிமையையும் பிரஸ்தாரத்தையும் அறிய வேண்டு மானால் இந்திய சங்கீத வாத்தியங்கள் மூலமாய்த்தான் அறியலாம். இந்த வாத்தியங்கள் ஒன்றிரண்டல்ல, நேற்று முன்றாநாள் உண்டானவையுமல்ல. அவைகளின் தொகை அதிகம். அவையுண்டான காலமும் 2,000 வருஷங்களுக்கு முன்னாகும். அவை ஒரே காலத்தில் உண்டானவையுமல்ல. அந்தந்தக் காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்கபடி படிப்படியாய் 2,000 வருஷங்களாகச் சோதிக்கப்பட்டும் பிரஸ்தாரத்துக்குக் கொண்டுவரப்பட்டவை. இந்திய சங்கீதத்துக்கு ஆதாரமாயிருக்கப்பட்ட ஆரோகண அவரோகணங்கள் மூன்று வகையுள்ளன. ஒன்று 5 சுரங்களும், ஒன்று 6 சுரங்களும், ஒன்று 7 சுரங்களுமுள்ளன. ஆதியில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோகண அவரோகணங்கள் அவ்வளவு சிக்குமுக்காய் இருப்பதால் கிரேக்க சங்கீதம் அறிந்தவர்கள்கூட அவைகளைக் கண்டால் யாதென்றறியாமல் திகைப்பார்கள்.” இவ்வசனங்களை கவனிக்கையில் இதை எழுதியவர் இந்திய சங்கீத சாஸ்திரத்தின் நுட்பங்களை நன்றாய் அறிந்தவரென்பது விளங்குகிறJ. முதல் முதல் ஐரோப்பியச் சுரத்தைக் கோடுகளில் குறிக்கும் வழக்கம்போல குறிக்கக் கூடாத விதமாக நுட்பமான சுரங்களிருக்கின்றனவென்று சொல்லுகிறார். அந்நுட்பமான சுரங்களையும் இந்திய சங்கீத வாத்தியங்களின் மூலமாய்த்தான் அறியலாமென்றும் அந்நுட்பமான சுரங்களே இந்திய ராகங்களின் இனிமையுடையனவென்றும் சொல்லுகிறார். இந்நுட்பமான சுரமே இந்திய சங்கீதத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறதென்று அறிந்தாலும் இலகுவாய்ச் சொல்லிக்காட்டவும் இன்னின்ன அளவில் வருகிறதென்று எழுதிக்காட்டவும் அறியாதிருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் வழங்கி வரும் வாத்தியக் கருவிகள் 2,000 வருஷங்களுக்கு முன்னாலேயே உண்டாக்கப் பட்டவையென்றும் ஒளடவ, சாடவ, சம்பூரணம் என்னும் ஆரோகண அவரோகணங்களில் பாடும் ஒரு ராகம் மற்றவர்கள் அறிந்துகொள்ளக் கூடாத அவ்வளவு தேர்ச்சி பெற்றவையென்றும் சொல்லுகிறார். மேற்றிசை சங்கீதத்திற்கும் கீழ்த்திசை சங்கீதத்திற்குமுள்ள வித்தியாசத்தையும் தனித்துப்பாடும் இந்திய சங்கீதத்தின் மேன்மையையும் அது விருத்தியடையாமல் போனதற்குக் காரணத்தையும் Capt. Dayபின்வருமாறு சொல்லுகிறார். Vide Hindhustani Sangita Paddhati. P. 329, 330. “The wide divergence of thaste in the matter of music between European and Asiatic nations has doubtless arisen from the fact that while the western nations gradually discarded the employment of mode, and clothed the melody with harmony, the Eastern nations in this respect made little or no progress; and now, in India, the employment of authentic modes and melody types (or ragas) is still jealously adhered to. Speaking of this, Capt. Willard remarks “To expect an endless variety in the melody of Hindustan would be an injudicous hope as their authentic melody is limited to a certain number, said to have been composed by professors universally acknowledged to have possessed not only real merit but also the original genius of composition, beyond the precinets of whose authority it would be criminal to trespass. What the more reputed of the moderns have done is that they have adopted them to their own purposes, and found others by the combination of two or more of them. Thus far they are licensed, but they dare not proceed a step further. Whatever merit an entire modern composition might possess, should it have no resemblance to the established melody of the country, it would be looked upon as spurious. It is implicitly believed that it is impossible to add to the number of these one single melody of equal merit. So tenacious are the natives of Hindustan of the ancient practices.” The continued employment of mode combined with the almost entire absence of harmony, has prevented Indian music from reaching any higher pitch of development such as has been attained elsewhere. It stands to reason also that this is the chief cause of the monotony which causes Indian music to be little appreciated by, if not repellent to, European ears. Since the early periods of India history, music would seem to have been cultivated more as a science than an art. More attention seems to have been paid to elaborate and tedious artistic skill than to simple and natural melody. Hence arose technical rules that marred the pristine sweetness of melody, the very life of all real music. To a great extent this must be attributed to the art falling into the hands of illiterate “Virtuosi.” Their influence which caused music to suffer both in purity of style and simplicity is being felt less and less. The great aim of music - “Rakti” or the power of affecting the heart-now asserts itself more and more, and is slowly but surely bringing about a return to the early type of sweet, simple melody.” “ஐரோப்பிய ஜாதியாருக்கும் ஆசியாவிலுள்ள ஜாதியாருக்கும் சங்கீத விஷயத்தில் இருக்கும் வித்தி யாசத்திற்குக் காரணமென்ன வென்றால், மேற்றிசை ஜாதியார் வரவர ஆரோகண அவரோகண விஷயமாய் ஏற்படும் இராகங்களை விட்டுவிட்டு ஏக காலத்தில் பல அனுசுரங்களை அமைத்துப் பாடுவதையே விசேஷமாக விருத்தி செய்தார்கள். கீழ்த்திசையார் இது விஷயத்தில் யாதொரு முயற்சியும் செய்யவில்லை. தற்காலத்திலும் இந்தியாவில் (authentic modes) ஆரோகண அவரோகணங்களையும் இராகப் பிரஸ்தாரங்களையும்விட சங்கீதம் வேறில்லை என்ற கொள்கை மேம்பாடுடையதாயிருக்கிறது. இது விஷயத்தைப்பற்றி Captain Willard என்பவர் சொல்லுவது யாதெனில், இந்து தேசத்திலுள்ளோர் உபயோகிக்கும் ஆரோகண அவரோகணங்கள் (authentic modes) சொற்பமானவையாதலால், இந்தியருடைய இராகவித்தியாசங்கள் கணக்கிலடங்காதவையாயிருக்கும் என்று எண்ணுவது பிசகு. அப்படி எண்ணுவதும் நியாய விரோதமாயிருக்கும். இந்த ஆரோகணங்கள் (authentic modes) சங்கீதத்தில் வித்வத் திறமையையும் உருவாக்கும் திறமையையும் உடைத்தாயிருந்த பல வித்வான்களால் அமைக்கப்பட்டவையென்று யாவரும் ஒப்புக்கொள்வதால்,அவர்களுடைய வரையைக் கடந்து நாம் செல்வது குற்றமாயிருக்கும். தற்கால வித்வான்கள் அந்த ஆரோகணங்களைத் தாங்களும் அங்கீகரித்து உபயோகத்துக்குக் கொண்டு வந்ததுமல்லாமல் அவைகளில் இரண்டொன்றை ஒன்று சேர்த்ததால் புதிதான சிலவற்றைக் கண்டுபிடித்து மிருக்கிறார்கள். இவ்வளவு தூரம் இவர்கள் செய்யலாமே யொழிய இதற்கு மேல் நூதனமாய் ஒன்றையும் அவர்கள் செய்ய அதிகாரமேயில்லை. தற்காலம் உண்டு பண்ணப்பட்ட சங்கீதமானது எவ்வளவு மதிப்பை உடைத்தாயிருந்தபோதிலும், தேசத்தில் பரம்பரையாய் வழங்கப்படும் ஆரோகண அவரோகணங்களுக்கு ஒத்திராவிட்டால் குற்றமென்று கொள்ளப்படும். இப்போது இருக்கிற ராகங்களோடு புதிதாய் ஏதாவது ஒன்றை யாவது சேர்ப்பது கூடாத காரியம் என்று இந்து வித்வான்கள் நிச்சயமாய் நம்புகிறார்கள். பழமையை விடாப்பிடியாய்ப் பிடித்தல் என்கிற வழக்கம் இவர்களுக்குள் இருப்பதால் இப்படி நினைக்கிறார்கள். தனி சுரங்களாலான இராகங்களையே விருத்தி செய்து பல அனுசுரங்களை ஏக காலத்தில் சேர்த்துச் சொல்வதைக் (Harmony) கட்டோடே விட்டுவிட்டதுதான் இந்திய சங்கீதமானது மற்ற தேச சங்கீதம் விருத்தியடைந்ததுபோல அடையாததற்குக் காரணம். ஐரோப்பியருடைய காதுக்கு இந்திய ஸங்கீதம் இனிமையாயிராமல் ஒரே ரீதியுடையதாய்க் காணப்படுவதற்கும் இதுவே காரணம். இந்துதேச சரித்திரத்தின் ஆரம்பகால முதல் இந்திய சங்கீதமானது சாஸ்திர சம்பந்தமான விஷயத்தில் தேர்ச்சியை அடைந்திருந்ததேயொழிய பாடுதல், வாத்தியங்களில் வாசித்தல் முதலிய விஷயங்களில் அதிக விருத்தி யடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இராகங்களைச் சுத்தமாய் யாவருக்கும் விளங்கக்கூடிய முறையில் சொல்வதைப் பெரியதாய் நினைக்காமல் இராகங்களைக் கஷ்டமாய் ஆக்கிக் காண்பிப்பதே வித்தையென நினைத்தார்கள். ஆகையால்தான் புதிது புதிதான முறைகள் தோன்றி ஆதியில் இராகங்களுக்கு இருந்த அழகைக் கெடுத்துவிட்டன. சங்கீதத்தின் அழகு யாவருக்கும் எளிதில் விளங்கும் அதின் லேசான முறையன்றோ? இப்படிச் சங்கீதம் கெட்டுப்போனதற்கு முக்கியக் காரணம் யாதென்றால், படிப்பறியாத பாடகர், வாத்தியக்காரர் முதலியவர்கள் கையில் சங்கீதம் அகப்பட்டுக் கொண்டதுதான். ஆனால் சங்கீதமானது இப்படிச் சுத்தமின்றிக் கலப்பாவதினாலும் லேசான முறைகளை விட்டு விடுவதினாலும் கெட்டுப் போவதற்குக் காரணமாயிருந்தவர்கள் இப்போது வரவர ஒழிந்துபோகிறார்கள். ஆகையால் இப்போது சங்கீதமானது முன்னிருந்த ஆதித் தனிநிலைமைக்குத் திரும்பி வருகிறது என்பதற்குச் சந்தேகமில்லை. எல்லாச் சங்கீதத்தினுடைய முக்கிய அம்சம் என்னவென்றால், கல்லையும் கரையப்பண்ணும்படியான அவ்வளவு இனிமையைக் கொடுப்பதுதான். தற்கால சங்கீதம் இவ்வழியில் திரும்புகிறது என்கிறதற்கும் போதுமான ஆதாரங்கள் உண்டு.” இதில் மேற்றிசையார் ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஏற்படும் ராகம் ஒன்றை அதற்குரிய அழகோடு பாடுவதை விட்டுவிட்டு ஷட்ஜமம், காந்தாரம், பஞ்சமம், மேல்ஷட்ஜமம் முதலிய அனுசுரங்களை வைத்துக் கொண்டு நாலு பாகமாகப் படிக்கும் அழகையே விருத்தி செய்தார்களென்றும், இந்தியர்கள் அப்படிச் செய்யாமல் ராகத்தையே படிப்பது மேலென்று நினைத்தார்களென்றும் சொல்லுகிறார். இவ்வுண்மையை நாமும் அங்கீகரிக்க வேண்டியதே. பூர்வத்தில் இரண்டு மூன்று நாலு சுரங்களோடு வேதத்தைக் கானம் செய்த காலத்தில், சிலர் ஷட்ஜமத்திலும் சிலர் மேல் ஷட்ஜமத்திலும் துவக்கிப் பாடுவது வழக்கம். இவ்வழக்கம் வேதபாராயணம் பண்ணும் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் நாளதுவரை பழக்கமாயிருக்கிறதென்றும் இதுவே பலர் சேர்ந்து பாடும் முறையாயிருந்ததென்றும் நாம் அறிய வேண்டும். இவ்வழக்கத்தினின்றே மற்ற தேசத்தார் சேர்ந்து பாடும் முறையை விருத்திக்குக் கொண்டு வந்தார்களென்றும், ஆனால் இம்முறை மிகப் பூர்வமாய் இந்தியாவிலேயே வழங்கி வந்ததென்றும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் பாராட்டக்கூடியதாகவுமிருக்கிறJ. உற்சவ காலங்களில் ஸ்வாமி வெளிப்புறப்படும்பொழுது ஸ்வாமியின் பின்னால் வேதகானம் பண்ணுவதை நாம் கவனித்தால் இவ்வுண்மை விளங்கும். ஆனால் ஸப்த சுரங்களு முண்டாகி அவைகளின் பிரஸ்தாரபேதத்தினால் அநேக ராகங்கள் உண்டானதை அறிந்த பின், ஒன்று சேர்ந்து பாடும் வழக்கத்தில் தனித்துப் பாடும் அழகு உண்டாகமாட்டாதென்று அறிந்தார்கள். ஷட்ஜமத்தில் ஆரம்பித்துச் சங்கராபரண ராகஞ்சொல்லும் ஒருவருக்கு, காந்தாரத்தில் ஆரம்பித்துப்பாடுவது அனுமத்தோடி ராகமாகவும், பஞ்சமத்தில் ஆரம்பித்துப் பாடும் மற்றவருக்கு ஹரிகாம்போதி ராகமாகவும் வரும். ஆக மூன்று ராகங்களையும் ஒன்று சேர்ப்பதினால் காதுக்கு இனிமையையும் மனதுக்கு ஒடுக்கத்தையும் தராJ. ஆனால் முடியும் இடங்களில் அல்லது சில சுரங்கள் ஒன்று சேருமிடத்தில் சற்று இனிமையாயிருக்கும். மெய் மறந்த உன்னத நிலைக்கு அனுசுரங்கள் சேர்ந்த சங்கீதம் உதவியாயிருக்கமாட்டாJ. ஆனால் மனதைப் பலவழிப்படுத்திச் சரீரத்தை உற்சாகப்படுத்தி வைக்கும். இவ் வுண்மையை அறிந்தே தனித்துப் பாடும் முறையை இந்தியாவில் தனித்துத் தபசு செய்து கொண்டிருந்த பெரியோர் விருத்தி செய்து கொண்டு வந்தார்களென்று நிச்சயமாய்ச் சொல்லலாம். இந்தியாவைப் போலொத்த உஷ்ண பிரதேசத்திலுள்ளோர் கருவி, கரணங்கள் ஒடுங்கி நிற்க நீண்ட ஜீவனையும் விரிந்து நிற்கக் குறுகிய ஆயுளையும் உடையவராவார்கள். ஆனால் ஐரோப்பாவைப் போன்ற குளிர்ந்த பிரதேசங்களிலுள்ளோர் கருவி, கரணங்கள் ஒடுங்கி நிற்கில் குளிரினால் விறைத்து ஆயுள் குறுகிப் போவார்கள். தங்களை உஷ்ணப்படுத்துவதற்கு வேண்டிய ஆகாரமும், உடையும் அனலும், ஆட்டமும் அவர்களுக்கு மிகவும் அவசியமே. இதற்கேற்ப உஷ்ணப் பிரதேசத்தில் குளிர்ந்த நீரூற்றுக்களும் சீதளப் பிரதேசத்தில் வெந் நீரூற்றுக்களும் அமைந்திருப்பது இங்குக் கவனிக்கத்தக்கJ. இவ்வியற்கையை அனுசரித்தே எல்லோரும் பாடவும் ஆடவும் கூடியவிதமாக குளிர்ந்த தேசத்தின் சங்கீதம் அமைந்திருக்கிறJ. இந்தியாவில் பகிர்முகப்பட்ட மனதை ஒருவழிப்படுத்தித் தியான நிலைக்குக் கொண்டு வரக்கூடிய விதமாகவும், நெடுநேரம் சமாதி கூடும் விதமாய் ராகவிஸ்தாரமுடையதாகவும் மிகவும் சிறந்த அமைப்புடையதாகவும் அழகுடையதாகவும் செய்யப்பட்டிருக்கிறJ. ஆடவும் பாடவும் விரும்புவோன் மேற்றிசைச் சங்கீதத்தில் பிரியப்படுவான். அமைந்து மனமடங்கி தியான நிலையில் நிற்க விரும்புவோன் தென்னிந்திய சங்கீதத்தின் ஒரு ராகத்தை ஆறுமாதமானாலும் தொடர்ந்து பாடிக்கொண்டும் கேட்டுக் கொண்டுமிருப்பான். இது இயற்கை அமைப்பே. குளிர் காலமாகிய மாரிக்காலத்தில் காய்த்த காய்கள் தித்திப்பில்லாமலும் பழுக்காமலும் நெடுநாள் மரத்தில் நிற்பதையும், புஷ்பங்கள் வாசனையின்றிச் சிலநாள் உதிராமலிருப்பதையும் நாம் அறிவோம். ஆனால் உஷ்ண காலத்தில் வெகு சீக்கிரத்தில் காய்கள் அதிக மதுரமுடையவையாகி விடுவதையும் புஷ்பங்கள் அதிக வாசனையுடையனவாய் சீக்கிரம் உதிர்ந்து விடுவதையும் நாம் காணலாம். அதிகக் குளிர்ச்சியான தோப்புகளுள்ள ஆற்றோரங்களிலும் மலைகளின் குகைகளிலும் தபசு செய்து கொண்டிருந்த பெரியோர் தங்கள் தபசுக்கனுகூலமாக வீணை என்னும் சிறந்த வாத்தியத்தை வைத்துக்கொண்டு ஒரு ராகத்தை அநேக காலம் அப்பியாசித்து ஆலாபனை செய்து தனித்துப் பாடும் வழக்கத்தை விருத்தி செய்து வந்திருக்கிறார்கள் என்று நாம் அறிய வேண்டும். மாலைக்காலத்தில் உதயமும் உதயகாலத்தில் மாலையும் இருப்பதுபோல் உணரக்காட்டும் ராகத்தின் அழகு, அனுசுரங்களைச் சேர்த்துப் பாடுவதினால் உண்டாகமாட்டாதென்பது திண்ணம். ஆகையினால் ஆரோகண அவரோகணத்தில் ஒளடவ, சாடவ, சம்பூரணம் என்னும் சுரப்படி வக்கிர வர்ஜிய காலக்கிரமம் அறிந்து ஒரு ராகத்தைப்பாடி அதன் இனிமை தெரிந்து கொண்டவர்கள் அதையே விரும்புவார்கள் என்பது நிச்சயம். பழமையை விடாப்பிடியாய் பிடிக்கிற வழக்கம் இந்துக்களுக் குள்ளிருப்பதால் புதிதாக ஒரு ராகம் உண்டாக்குவது கூடாத காரியமென்று சங்கீத வித்வான்கள் நிச்சயமாய் நம்புகிறார்கள் என்கிறார். இவ்விஷயத்தில் இவர் அபிப்பிராயத்தை முற்றிலும் ஒப்புக்கொள்ளுகிறோம். பூர்வத்தில் இந்தியா விலிருந்த பெரியோர் ஒவ்வொரு ராகத்தையும் விஸ்தாரம் செய்வதற்கு வேண்டிய கிராமத்தை கீதமாகச் செய்து வைத்தார்கள். அக்கீதமே தற்காலத்திலுள்ள வித்வான்களுக்கு ராகத்தை விஸ்தாரம் பண்ணுவதில் ஊன்று கோல் போல் உதவுகிறJ. இப்படிப்பட்ட கீதம் செய்யக்கூடிய விதிமுறைகள் அழிந்துபோயின. ஆகையினால் முன்னோர் செய்து வைத்த கீதங்கள் எத்தனையோ அத்தனை ராகங்கள் மாத்திரந்தான் இப்போது பாடப்பட்டு வருகின்றன. புதிதாக ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஒரு ராகம் ஒருவர் பாடுவாரானால், அதில் அநேக தப்பிதங்கள் ஏற்பட்டு இதைப் பாடாமல் விட்டுவிடுவதே நல்லதென்று அவருக்கே தோன்றும். திறவு கோலில்லாத பூட்டைத் திறக்கவும் பின் பூட்டவும் முடியாதிருக்கிறது எப்படியோ அப்படியே இந்திய சங்கீதத்தின் நிலையுமிருக்கிறJ. இது தவிர “சாஸ்திர சம்பந்தமாகத் தேர்ச்சி யடைந்திருந்தார்களேயொழிய, பாடுவதில் அவ்வளவு தேர்ச்சியடையவில்லை” என்று சொல்லுகிறார். அனுபோகம் வேறு சொல் வேறாயிருந்த சில சங்கீத சாஸ்திரங்களினால் இப்படிச் சொல்ல நேரிடுகிறதே யொழிய சாஸ்திரத்தின் மர்மம் தெரியுமானால் இவ்விதம் நினைக்க மாட்டோம். மேலும் அவர் சொல்லியது போலவே, இழிவான தொழில் உள்ளவர்களாலும் அறியாமை யுள்ளவர்களாலும் சங்கீதம் தன் மதிப்பை இழந்ததென்று நாமும் சொல்லுகிறோம். ஆத்மலாபம் பெற உண்டான கீதம் அர்த்த நிமித்தம் விற்கப்படுவதை அறிந்த பெரியோர் அருவருப்பது நியாயந்தானே. கிரீடாதிபதிகளாலும் அவதார மூர்த்திகளாலும் ரிஷிகளாலும் ஆடிக் கொண்டாடப்பட்டு வந்த சங்கீதம், கழைக்கூத்தாடிகளாலும் கூத்தாடுகிறவர் களாலும் நடனஞ்செய்பவர்களாலும் அரை குறையாய் அப்பியாசிக்கப்பட்டும், சங்கீத வித்வான்களென்று தங்களைக் காட்டிக் கொள்ளுகிறவர்களால் தற் காலத்தில் பெரும்பாலும் படிக்கப்பட்டும் வருவதே சங்கீதம் குறைவான நிலைக்கு வந்ததற்கு காரணமென்று சொல்ல இடந்தருகிறJ. இந்திய சங்கீதத்திற்கு முக்கியமான மார்க்கவிதி தவறி, பெரும்பாலும் தேசிகமானதற்குக் காரணம் இந்திய தேசத்துப் பிரபுக்களின் கவனக்குறைவே யொழிய வேறல்ல. இந்தியாவில் சங்கீதம் மிக உயர்வாகக் கொண்டாடப்பட்ட தென்றும் வாய்மொழியால் பரம்பரையாய்ப் பாடப்படும் கீதங்களை நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டுமென்றும் பின்வரும் வசனங்களில் தெரிகிறது. Doctor Coomarasawmy’s Foreword to “The Study of Indian Music” by E. Clements. “Long anterior to this, however, music was a most highly cultivated-perhaps the most highly cultivated of India arts, and to the present day it has remained the most continuously vital and most universally appreciated art of India.” “காளிதாசன் பரதர் காலத்துக்கு முன்னேயே சங்கீதமானது எல்லா இந்திய சாஸ்திர வித்தைகளிலும் அதிகமாய்ப் பயிலப்பட்டு வந்தது என்றும் ஆதிகாலமுதல் தற்காலம் வரை தொன்றுதொட்டு உயிருள்ளதாயும், இந்தியாவில் எல்லா வித்தைகளிலும் சிரேஷ்டமானதாயும் கொண்டாடப் பட்டதென்றும் தெரிய வருகிறது.” “It is far better that the method of oral transmission should be maintained.” “வாய்மொழியால் பரம்பரையாய் வரும் முறையே விசேஷமாகக் கொள்ளப்பட வேண்டும்.” வாய்மொழியாய் பரம்பரையாய் வரும் முறையையே விசேஷமாய்க் கொள்ள வேண்டும். இவ்வார்த்தையை நாம் நன்றாய் இங்கே கவனிக்க வேண்டும். இந்தியாவின் முக்கியமான வழக்கம் ஒன்று இதனால் அறிவோம். இந்தியாவின் அருமையான அநேக கலைகளும் தொழில்களும் தகுதியுள்ள ஒருவனுக்குக் கர்ணபரம்பரையாய் அதாவது தன் அந்திய காலத்தில் வெகு ரகசியமாய் காதில் சொல்லப்பட்டு வந்ததாக அறிவோம். சில மந்திரங்களின் ரகசியங்களும் வேதாந்தத்தின் ரகசியமும் வாதத்தின் ரகசியமும் முப்பூவின் முறையும் போன்ற சில அருமையான வித்தைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளால் பூர்த்திபெறக்கூடியவையாயிருந்தன. அப்படிப்பட்ட ரகசிய மொழி அல்லது குருமொழியின்றி எழுதப்பட்ட புஸ்தகங்கள் ஏராளமா யிருந்தும் ஒரு பிரயோஜனத்தையும் தராJ. இதோடு சில அரிய வித்தைகள் தொட்டுக்காட்ட அதாவது செய்து காட்ட வேண்டியவைகளாகவும் இருந்தன. இச்செய்முறை தொட்டுக்காட்டாத வரையும் விளங்குவது கடினமாகும். வைத்தியம் வாதம் முதலிய தொழில்களில் வரும் இடைபாகம் பஞ்ச பூத இனபாகமும் வான சாஸ்திரம் யோக சாஸ்திரம் முதலியவைகளில் வரும் கணிதமுறைகளும் வேதாந்த சாஸ்திரத்தில் வரும் பஞ்சீகரண தத்துவச் செயல்களும் முக்குண தத்துவச் செயல்களும் போன்ற அநேக ரகசியம் சொல்லப்படாமல் சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றனவென்று நாம் அறிவோம். “எல்லார்கண் முன்னிற்கும் எடுத்துரைக்கும் குரு அருளில்லாமற் போனால் சொல்லாலும் வாராது” என்ற வாக்கியத்தின்படி மிக விரிவான நூல்களுக்கும் பெரியோர் தொட்டுக்காட்ட வேண்டிய சில ரகசியங்கள் வைத்தெழுதியிருக்கிறார்கள். அக்குருமொழியில்லாமல் போனால் சாவி யில்லாத ஒருவன் பூட்டிய வீட்டை எப்படிச் சுற்றிச் சுற்றி மயங்குவானோ அப்படியே குருமொழியில்லாத சாஸ்திரங்களும் விளங்காமல் அனர்த்தம் விளைவிக்கும். ஒரு நெருப்புக்குச்சியின் வெளிச்சம் எப்படி இருட்டின் அந்தகாரத்தை நீக்கி உள்ளதைக்காட்டுகிறதோ அப்படிப்போல் பெரியோர்கள் சொல்லும் ஒரு வார்த்தையின் பின் வாசிக்கும் ஒரு சாஸ்திரம் மிகத் தெளிவாக அர்த்தமாகிறJ. இப்படியே தென்னிந்திய சங்கீத சாஸ்திரத்தின் சுருதி முறையிலும் ஒரு ரகசியம் மறைக்கப்பட்டிருக்கிற தென்பதை இதன்பின் பார்ப்போம். இச் சுருதி முறைக்குரிய திறவுகோல் (ரகசியம்) தெரியுமானால் தென்னிந்திய சங்கீதம் மாத்திரம் சாஸ்திர யுக்தமுடைய தென்றும் மற்றவை குறைவுள்ளவையென்றும் நாம் இலகுவாய் அறிந்து கொள்வோம். தென்னிந்தியாவில் பாடப்பட்டு வரும் ராகங்களும் அவைகளுக்குரிய சுரங்களும் அணுப்பிரமாணமும் தவறாமல் பரம்பரையாய் நாளது வரையும் கோயில் ஊழியக்காரர்களால் பேணப்பட்டு வந்திருக்கிறதென்றும் அதுவே கர்நாடக சங்கீதம் சுத்தமாயிருக்கிறதற்குக் காரணம் என்றும் நாம் அறிய வேண்டும். இக்கர்நாடக முறையின் ரகசியம் தெரிந்து கொள்ளாமை யினாலேயே சுருதியைப் பற்றிப் பலர் பலவாறாக புஸ்தகங்கள் எழுதவும் வாதஞ் செய்யவும் நேரிட்டது. மேல் காற்றினால் கிழக்கே போன பட்சிகளும் சருகுகளும் கீழ் காற்றினால் மறுபடி மேற்கே போவதுபோல மற்றவர் கீதமும் காலதருமத் திற்குத் தகுந்தபடி அப்படியும் இப்படியும் பல மாறுதல்களையடைந்தாலும் தமிழ்நாட்டின் சங்கீதம் ஒன்று மாத்திரம் மாறாமல் நிற்கிறதென்று அறிவோம். தமிழ் நாட்டில் வழங்கி வரும் சங்கீதத்திற்குரிய பூர்வ நூல்கள் முற்றிலும் அழிந்து போனாலும் பரம்பரையாய் வழங்கி வரும் பாடமுறைகள் சங்கீதத்தின் ரகசியம் யாவும் அறிந்து கொள்வதற்குப் போதுமானவை யென்றும் அம்முறையைக் கொண்டு சங்கீத சாஸ்திரத்தின் முக்கியமான தத்துவங்களைக் கண்டுபிடிக்கவும் அதுபோலவே மற்றொன்று நூதனமாய் உண்டாக்கவும் கூடிய விதமாயிருக்கிறதென்று நாம் நிச்சயம் சொல்லுவோம். ராகங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இரண்டாம் புத்தகத்தில் இதன் விபரம் யாவும் தெளிவாகக் காணலாம். ஒரு சொல்லால் விரிந்த பல சொல் மறைந்த ஒரு சொல்லை விளக்கி நிற்பது போல சங்கீதத்தில் விரிந்த பல உருப்படிகள் சொல்லாமல் விட்ட சுருதி ரகசியத்தை விளக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கர்ண பரம்பரையாய் வழங்கி வரும் கர்நாடக ராகங்களின் அழகே அவ்விராகங்களின் ரகசியத்தையும் காட்டிக் கொண்டு நிற்கிறதென்று இதன்பின் பார்ப்போம். எரிகிற விளக்கை விட்டில் பூச்சி விழுந்து கெடுத்துத் தானும் கெட்டதுபோலாகாமல் புதிதான தேசிக ராகங்களைக் கேட்டு சில அவாந்தர சுரங்களை கர்நாடக சங்கீதத்தில் கலந்து வழங்கும் கெடுதல்களை நீக்கிக் கர்நாடக முறைப்படி தங்கள் கானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்படி கர்நாடக சங்கீதம் பயிலும் கனவான்கள் யாவரையும் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். பின்வரும் வாக்கியங்களில் இந்திய சங்கீதத்தின் இனிமையை மற்றவர்கள் அறிந்து கொள்ளாததற்குக் காரணம் கூறுகிறார். The Indian empire by W.W. Hunter. P. III. “Melodies which the Indian composer pronounces to be the perfection of harmony, and which have for ages touched the hearts and fired the imagination of Indian audiences, are condemned as discord by the European critic. The Hindu ear has been trained to recognise modifications of sound which the European ear refuses to take pleasure in. Our ears on the other hand, have been taught to expect harmonic combinations of its own. The Indian musician declines altogether to be judged by the few simple Hindu airs which the English ear can appreciate.” “இராகங்களில் அதிக இனிமையுடையவையென்றும், சிரேஷ்ட சுரப் பொருத்தமுள்ளவையென்றும், நீண்ட காலங்களாக இந்தியருடைய மனதை உருகச் செய்து பரவசப்படுத்தினவை என்றும் யாவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டவைகள், சுரப்பொருத்தம் அற்றவையென்று ஐரோப்பியரால் தள்ளிவிடப் படுகின்றன. இந்தியருடைய காதுக்கு இனிமையென்றெண்ணப்படும் நுட்பமான சிறு சுரங்கள் ஐரோப்பியருடைய காதுகளுக்கு வெறுப்பாயிருக்கின்றன. நம்முடைய காதுகளோ ஐரோப்பியருடைய சுரங்களுக்கு மாறுபட்ட ஒற்றுமைச் சுரங்களையே கேட்டு ஆனந்திக்கும் பழக்கத்தை யடைந்திருக்கின்றன. இந்து சங்கீதத்தின் சில இலேசான துண்டுகளை ஐரோப்பியர் இனிமையாயிருந்ததாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் இந்து வித்வான்கள் இந்து சங்கீதத்தின் இனிமைக்கு இந்தச் சிறு துண்டுகள் தான் சாட்சி என்று ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை.” இந்திய சங்கீதம் வெகுநாளைக்கு முன்னுள்ளதென்றும் ஒவ்வொரு சுரமும் மும்மூன்று பிரிவுடைய தாயிருந்ததென்றும் தென்னிந்திய சங்கீதம் வேதங்களை ஓதுவதற்கு மிக அனுகூலமாய் இருக்கிறதென்றும் பின்வரும் வசனங்களில் காணலாம். Hindu Music and the Gayan Samaj, P. ii P. 36 (Kunte) “It is now positively established by documentary evidence that at least 7,000 years before Christ. India had developed a system of musical notation, that the seven notes were scientifically arranged, each note being divided into three the sharp, flat, and the proper note itself. All the inscriptions as yet discovered, and the Sanskrit literature that has been brought to light, place this statement beyond doubt. This fact has a scientific side. Though all the world over, notes, the elements of music, are seven only, yet the great variety of modes and melodies differ in European and Indian music, which is either ancient or modern, Southern or Northern. The Southern or the Dravidian system is more Vedic than the Northern or Hindustani Dhanga. There is what is called a constant mode in Maharastra. This is the remnant of the system of singing vedic psalms. It consists of opening modulation, soft, steady and slow in its progress. this is followed by notes the pitch of which is high, the modulation is strong, varied and rapid in its flow. This is followed by a combination of both leading to agreeable cadences. In a treatise on music, which is at any rate as ancient as the third century before Christ, a connection between physiological condition of human blood in the course of a day, and the changes of temper which these conditions necessitate are explained.” “குறைந்தபக்ஷம் கிறிஸ்து பிறக்க 7,000 வருஷங்களுக்கு முன் இந்தியாவில் சங்கீத சுரங்கள் எழுதும் முறை உண்டாயிருந்ததென்றும் சப்த சுரங்களும் சாஸ்திர விதிப்படி ஒழுங்காய்க் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன என்றும், ஒவ்வொரு சுரமும் மூன்று பிரிவுள்ளதாயிருந்தது. அதாவது சுரமும் சுரத்துக்குக் கொஞ்சம் கூடிய சுருதியும் சுரத்துக்குக் கொஞ்சம் குறைந்த சுருதியுமாக மூன்று என்றும் எழுத்து ஆதாரங்கள் மூலமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிற சில எழுத்துகளும், கிரந்த நூல்களும் இதை ஒட்டியே ஸ்திரமாய்ப் பேசுகின்றன. இந்தக் கொள்கையானது சாஸ்திர சம்பந்தமுள்ளதாயும் இருக்கிறJ. உலகமெங்கும் கானத்துக்கு ஆதாரமாகிய சுரங்கள் ஏழு என்ற சத்தியம் வழங்கி வந்த போதிலும், இந்திய சங்கீதத்திலும் ஐரோப்பிய சங்கீதத்திலும் வழங்கப்படும் ஆரோகணங்களும் இராகங்களும் அநேகங்களாயும் ஒன்றுக்கொன்று அனந்த வித்தியாசமுள்ளவை களாயும் இருக்கின்றன. இது விஷயத்தில், ஆதிமுறைகளோ, தற்கால முறைகளோ, வடதேசமுறைகளோ, தென்தேசமுறைகளோ எவையானாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் அநேகமுள்ளவைகளா யிருக்கின்றன. தென்தேச அல்லது திராவிட சங்கீதமானது, வடதேச இந்துஸ்தானிடங்காவைவிட வேதங்களை ஓதுவதற்கு அதிக பிரயோசனமுள்ளதாயிருக்கிறதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் மாறாத ஆரோகணம் (constant mode) என்ற ஓர் முறையுண்டு. வேதத்திலுள்ள சங்கீதங்களை ஓதும் முறையினின்று மீந்த ஓர் முறையாம் இJ. அது ஆரம்பத்தில் மெதுவான ஏற்றத் தாழ்ச்சியான பேதங்களாய் ஆரம்பித்து வரவர கம்பீரித்துப்போவதான ஓர்வித கோஷ்டிகானம். பிறகு வரவர உயர்ந்த சுரங்களுக்குப் போய் அதிதுரிதமாக வித்தியாசம் வித்தியசமான சுர பேதங்களுள்ள பெருங்கானமாகி விடுகிறJ. அதற்குப் பின் இரண்டுவித கானங்களும் ஒன்று சேர்ந்து ஒரு அடி கான அமைதலான முடிவுக்கு வருகிறது. கிறிஸ்துவுக்கு முன் மூன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் சங்கீத நூலானது ஓர் நாளின் பல நிமிஷங்களுள் மனித தேகத்தில் இருக்கும் இரத்த ஓட்டத்தின் நிலைக்கும் இதன் மூலமாய் மனிதகுணம் மாறும் நிலைக்கும் சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறJ.” இதில் நாம் கவனிக்க வேண்டிய தொன்றுண்டு. ஸப்த சுரங்களும் மும்மூன்று பிரிவுகளுடையன வாயிருந்தனவென்றும், அதாவது சுரமும், சுரத்திற்குக் கொஞ்சங்கூடிய சுருதியும், சுரத்திற்குக் கொஞ்சம் குறைந்த சுருதியுமாக மூன்று என்றும் சொல்லுகிறார். இதைக் கவனிப்போமேயானால், எவ்வளவு கூடியிருந்த தென்றும் எவ்வளவு குறைந்திருந்ததென்றும் ஒரு கேள்வியுண்டாகும். சுருதிகளைப் பற்றிய சந்தேகம் இன்னும் அதிகப்படுமேயொழிய ஒரு நிச்சயத்திற்கும் வராது. சுரங்கள் ஏழுக்கும் மும்மூன்றாக 21 சுருதிகளாகின்றன. 22 என்று சொன்ன சுருதிகளுக்கு இரு விரோதப்படுமே. இப்படி நிச்சயமில்லாத வார்த்தைகளைச் சொல்லுவதே சுருதிகளைப் பற்றிப் பலபல அபிப்பிராயங்கள் உண்டாவதற்குக் காரணம். மேலும் தென்தேச அல்லது திராவிட சங்கீதமானது வேதங்களை ஓதுவதற்கு அதிகப் பிரயோசன முள்ளதாயிருக்கிறது என்கிறார். வடதிசை சாஸ்திர விற்பன்னர் ஒருவர் தென்னிந்தியாவின் சங்கீதம் வேதம் ஓதுவதற்கு ஏற்றதாயிருக்கிறதென்று சொல்வதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். தென்னிந்தியாவில் ராவணேஸ்வரன் ஸப்த சுரங்களைக் கொண்டும் சாமவேதத்தைக் கானம் பண்ணும் முறைக்கு முந்தினவனாயிருந்தானென்றும் அவன் தென்னிந்தியாவின் சமீபத்திலுள்ள இலங்கைக்கரசனென்றும் நாம் அறிவோம். ஸப்த சுரங்களோடு சேர்ந்து வழங்கிய பல சுருதிகளும் பூர்வமுள்ள தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டு, பூர்வமான வேதகானத்திற்கும் மற்றும் கானத்திற்கும் தென்னிந்தியாவே முந்தினது என்று சொல்ல நியாயமிருக்கிறJ. 2. தென்னிந்திய சங்கீதத்தில் தேசிகக் கலப்பு வந்த விதம். தென்னிந்திய சங்கீதமானது வடதேசத்திற்குப் பலராலும் கொண்டு போகப்பட்டதென்றும், மற்றவர்களால் அது கையாளப்படுங் காலத்தில் அவரவர்கள் பாஷைக்கும் தேசத்துக்கும் தகுந்தபடி பல பேதங்களையும் அடைந்ததென்றும் பின்வரும் வசனங்களில் காணலாம். Oriental Music, P. 82 P. 30. Chinnaswami Moodr., M.A. “Considering the prodigious number of nationalities and the diversity of provincial dialects in existence throughout the length and breadth of the Indian Empire, it should be no matter for astonishment if there be found any number of heterogeneous systems, as well as incongruous classifications in standard works forming the musical literature of the land. The primary distinction is into two classes, Marga (celestial) and Desi (terrestrial); the latter is now broadly divided into Hindustani and Karnata, the former representing the school established by Hanuma, and the latter the much more ancient and authentic system introduced by Narada, the inventor of all arts and sciences. It is clear however that local tastes and methods of training have considerably upset the theories originally propounded. In the extreme north, there is a system of six Ragas and thirty-six Raginis which are grouped together diferently by different authors; in the west of India the divergencies are still wider, through the origin is traceable to the same source; in the extreme south only thirty-two are recognised as principal Ragas, of which 8 are classed as Purusha and 24 as Stri, while a few more are designatred by other fanciful names. Another classification is into 32 ancient and 42 recent Ragas. All these are manifestly incomplete. Of late the Hindustani element (which has itself much deteriorated owing to foreign admixture) has been ingrafted on the Dravidian modes to an alarming extent, so that it is a matter of no small difficulty to distinguish the purely classical from the adulterated systems. The tendency is at present to demolish all system and to sail clear of all trammels rules and regulations imposed by the ancient framers of the science; but it is evident that this is not the proper method of effecting reform or insuring progress. Each system should be taken up separately by itself, and while its true original and individual character is jealously maintained, it should be divested of all useless encumbrances and incrustations which obstruct or retard improvement.” கீழ்த்திசை சங்கீதத்தின் விசேஷ அம்சங்களும் அதைப்பற்றிய பல அபிப்பிராயங்களும். “இந்திய ராஜ்யமானது அநேக ஜாதியார் நிறைந்துள்ளதாயும், மாகாணங்கள் தோறும் வெவ்வேறு பாஷைகள் வழங்குவதாயும் இருப்பதால், சங்கீத சாஸ்திர விஷயத்தில் பலவித விததியாசங்களுள்ள பலமுறைகளும் சங்கீத சாஸ்திரப் புஸ்தகங்களை அட்டவணை முறையாய் ஒழுங்குபடுத்த முயன்ற முக்கிய நூல்களில் அநேக வித்தியாசங்களும் ஏற்பட்டு யாவும் குழப்பமாய்க் காணப்படுவது அவ்வளவு ஆச்சரியமான காரியமல்ல. ஆதியில் சங்கீதமானது இரண்டு பிரிவுள்ளதாகக் காணப்படுகிறது. அவை மார்க்கம் அல்லது தேவகானம், தேசிகம் அல்லது இவ்வுலக கானம் என்பவைகளாம். இவைகளில் தேசிகமானது இந்துஸ்தானி, கர்நாடகம் என்ற இரண்டு பிரிவுகளாகக் காணப்படுகிறது. அவற்றுள் முந்தினது ஹனுமாரால் ஏற்படுத்தப்பட்ட முறையென்றும், பிந்தினது எல்லா சாஸ்திரத்துக்கும் ஆதி காரணராகிய நாரதரால் ஏற்படுத்தப்பட்ட முறையென்றும் கொள்ளப்படுகிறது. இந்தப் பிந்தினமுறை முந்தினதைவிட பூர்வீகமென்றும், முற்றிலும் சரியென்று நம்பக்கூடியதென்றும் கொள்ளப்படுகிறது. ஆனாலும், ஆதியில் ஸ்தாபித்த முறைகள், இடபேதத்தினாலும் சொல்லிக் கொடுக்கும் முறை பேதத்தினாலும் அதிக வித்தியாசமுள்ளவைகளாய்ப் போயின என்று நன்றாய் வெளியாகிறது. வடதேசத்தில், ஆறு இராகங்களும் 36 ராகினிகளும் அடங்கிய ஒருமுறை இருப்பதாகவும், அவை பல விதவான்களால் பலவிதமாய் அடுக்கிச் சொல்லப்படுவதாயும் தெரிகிறது. மேற்குத் தேச சங்கீதமோ இதே முறையிலிருந்து உண்டான போதிலும், வித்தியாசங்கள் இன்னும் அனந்தம் உடையன. தென்னாட்டில் தாய் ராகங்கள் 32 தான் என்றும், அவைகளில் 8 புருஷராகங்களென்றும், 24 ஸ்திரீ ராகங்களென்றும், சொல்வதுடன் மற்றவைகளுக்கு அநேக வேடிக்கைப் பெயர் கொடுத்தும் அழைக்கிறார்கள். இன்னொரு முறையென்னவென்றால், பூர்வராகங்கள் 32 என்றும், தற்கால ராகங்கள் 42 என்றும் பிரிப்பது. ஆனால் இவையெல்லாம் முடிவற்ற வகுப்புகளேயென்று பரிஷ்காரமாய்த் தெரிகிறது. தற்காலத்தில் வேற்றுச் சங்கீதத்தின் கலப்பால் அதிக வித்தியாசமடைந்திருக்கிற இந்துஸ்தானி சங்கீதம் திராவிட சங்கீதத்தோடு அபரிமிதமாய்க் கலந்திருப்பதானது, திராவிட சங்கீதத்துக்கு நேரிடக்கூடிய அபாயத்தையும் கலப்பில்லாத பூர்வசங்கீதத்துக்கும் கலப்புள்ள தற்கால சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாமைக்கு ஏதுவாயிருக்கிறது. இவ்விதக் கஷ்டங்களிருப்பதால் தற்காலத்தில் யாவரும் செய்கிறதென்னவென்றால், எல்லா முறையையும் தவிர்த்து முற்காலத்து வித்வான்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதே. ஆனால் இப்படிச் செய்வது சீர்திருத்தஞ் செய்தலுக்கும் விருத்தி செய்தலுக்கும் அழகல்ல. ஆனால் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு முறையையும் தனித்தனியே எடுத்துக் கொண்டு, அதனுடைய விசேஷித்த ஆதி அம்சத்தைவிட்டு நிலைபெயர விடாமல், அதன் விருத்திக்கு இடையூறாயிருக்கக்கூடிய பிரயோசனமற்ற வழிவகைகள் யாவையும் விலக்கி, அவைகளைச் சீர்திருத்த வேண்டியதேயாம்.” இதைக் கவனிக்கையில் மார்க்கம் தேசிகம் என்கிற பிரிவுகள் இரண்டும் சங்கீதத்திலிருந்ததென்றும் மார்க்கம் என்பது தேவகானமென்றும், தேசிகம் என்பது இந்துஸ்தானி கர்நாடகமென்ற இரண்டு பிரிவுகளுள்ளதென்றும், முந்தினராகிய இந்துஸ்தானி அனுமாரால் செய்யப்பட்டதென்றும், பிந்தினதாகிய கர்நாடகம் நாரதரால் ஏற்படுத்தப்பட்டதென்றும் சொல்லுகிறார். எல்லாச் சாஸ்திரங்களுக்கும் ஆதிகாரணராகிய நாரதரால் ஸ்தாபிக்கப்பட்ட முறை சரியானதென்றும், பூர்வீகமானதென்றும், இடபேதங்களினால் மாறுதல் அடைந்ததென்றும் சொல்லுகிறார். ஆனால் மார்க்கம் என்ற முறையே ரிஷிகளால் உண்டாக்கப்பட்டதென்றும், அதனையே அநுமார், நாரதர், ராவணேஸ்பரன் முதலியவர்கள் கானம் செய்ததென்றும், அதுவே சரியான முறையென்றும், தென்னிந்தியாவின் சங்கீதமாகிய கர்நாடகம் சுத்தம் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுள்ளதென்றும் நாம் அறிய வேண்டும். அநுமாரால் இந்துஸ்தானி உண்டாயிற்றென்று சொல்லுவது முற்றிலும் ஒவ்வாJ. நாரதரால் செய்யப்பட்ட மார்க்க முறை வட தேசத்தில் சென்று தேசங்கள்தோறும் வெவ்வேறு சுரங்கள் கலக்கப் பெற்றதினால் தேசிகமென்று பெயர் பெற்றது. சுரஞானமில்லாத சிறுவர்களும் ஸ்திரீகளும் பிறரும் தேசிக முறையை அனுசரிக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. தேசிகம் என்பது சங்கீத இலக்கணம் தவிர்ந்து வழங்கிய வழுவமைதியான ஒரு முறையென்று நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். மேலும் தென்னாட்டில் பூர்வகாலத்திலேயே 11,991 பண்களிருந்ததாகச் சிலப்பதிகாரத்தின் பழைய உரைகாரர் சொல்லியிருக்கிறார். தென்னாட்டில் பிரதிமத்திமத்தோடு பாடப்படும் கல்யாணி வட நாட்டிற்குப் போய் கிரமம் மீறி பிரதிமத்திமத்தோடு வேறு இரண்டு மத்திமங்களையும் அப்படியே காந்தார நிஷாதங்களிலும் இரண்டு இரண்டு சுரங்களையும் சேர்த்துக் கொண்டு தென்னாட்டுக்குவர, தென்னாட்டிலுள்ளோர் அதை மிகவும் அழகாயிருக்கிறதென்று பழகுகிறார்கள். இப்படியே ஆனந்த பைரவி, காம்போதி, தோடி முதலிய ராகங்களும் வரவரக் கலப்புற்றதாய் மார்க்க முறையை இழந்து, முற்றிலும் தேசிகமாகி, கர்நாடக சங்கீதத்தின் உயர்வைக் கெடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. இப்படிச் சுரங்கள் கலக்கக் கலக்க, கர்நாடக ராகங்கள் யாவும் ஒரே ராகம் போல் தோன்றும்படியாகிவிடும். இந்துஸ்தானி முதலிய கீதங்களில் தற்காலத்தில் நாம் சொல்லும் குறைகளையே கர்நாடக சங்கீதத்திற்கும் சொல்ல நேரிடும். கர்நாடக சங்கீதம் மிகவும் ஒழுங்குள்ள மேலான சங்கீதமென்றும, பௌத்த சங்கீதமும் மகம்மதிய சங்கீதமும் தேசிகமென்று வழங்கி வந்தனவென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Hindu Music and the Gayan Samaj, P. I. P. 8. “The Margi System, although preserved still in Sanskrit works on Music, owing to want of cultivation, political influence, and other adventitious circumstances has almost become extinct. Desi with its numerous ramifications is the system now obtaining in India. Music is divided into Nibadha and Anibadha, that set in words and that not, the former being Margi and the latter Desi. The Desi System first acquired importance from the Buddhist musicians, and received fuller development from Mussulmans who introduced khyal from the Hindu Dhruvapada system and from that the Tappa. Besides these, there is the southern Indian system, distinct in itself, and constituting an important section of the Indian musical system, termed the Carnataka system.” “மார்க்கம்’ என்னும் முறையானது, சங்கீத கிரந்த நூல்களில் இந்நாள் வரைக்கும் காணப்பட்ட போதிலும், அப்பியாசம், துரைத்தனத்தாரின் ஆதரிப்பு முதலிய விருத்திக்குரிய ஏதுக்கள் இல்லாமல் பெரும்பாலும் அருகிப் போய்விட்டது. ஆனால் தேசிகமும் அதில் கிளைத்த அநேக முறைகளுந்தான் தற்காலம் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. சங்கீதமானது நிபதம், அநிபதம் என்று இருவகைப்படும். நிபதம் சாகித்தியமுடையJ. அநிபதம் சாகித்தியமற்றJ. முந்தினது மார்க்கம். பிந்தினது தேசிகம். தேசிகமுறையானது முதல் முதல் பௌத்த சங்கீத வித்வான்களால் பெருமையடைந்து பிறகு மகமதியரால் பூரணம் பெற்றது. மகம்மதியர் இந்து துருவபத முறையினின்று கியால் என்னப்பட்ட முறையையும், கியால் என்னும் முறையினின்று டப்பா என்னும் முறையையும் ஏற்படுத்தினார்கள். இந்த முறைகளையல்லாமல் தென்னிந்திய கர்நாடக முறையென்று ஒன்றும் உண்டு. இது மற்றவைக ளோடு கலவாமல் இந்திய சங்கீத முறைகளில் வெகு முக்கியமான ஓர் முறையாய் விளங்கிக் கொண்டிருக்கிறJ.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், மார்க்கம் என்னும் முறை அப்பியாசிப்பாரில்லாமல் நூல் அளவாகவே நின்றுவிட்டதென்றும், தேசிகம் பலவாறாகக் கிளைத்து விருத்தியாகி விட்டதென்றும் தெரிய வருகிறது. தென்னிந்திய சங்கீதத்தைப் பூர்ணமாயறியாத பௌத்தரும்அவர்க்குப் பின் மகம்மதியரும் தேசிகத்தைப் படித்து வந்தார்கள். சுரஞானமில்லாமல் பல சுரங்கள் கலந்த தேசிகம் அதிகமாய் வழங்கும் வடநாட்டிலுள்ள ஒருவர், மற்றவைகளோடு கலவாத கர்நாடக சங்கீதம் என்னும் ஒரு முக்கிய முறையிருக்கிறதென்று சொல்லுவதை நாம் கவனிக்க வேண்டும். மேலும், அவர்கள் வழங்கி வருகிற துர்பத், தில்லானா, கியால், டப்பா, டோமரி முதலிய கீத முறைகள் மிகச் சுலபமானவையென்று நாம் அறிவோம். ஆனால் கர்நாடகத்தில் வழங்கி வரும் கீதம், தானவர்ணம், சௌக்கவர்ணம், கீர்த்தனம், பல்லவி, ராகமாலிகை முதலியவை, சங்கீத சாஸ்திரத்துக்குப் பொருந்தும்படி செய்யப்பட்டு மிகுந்த தாள அமைப்புடன் தேர்ச்சியடைந்திருப்பவை என்று நாம் அறிவோம். மகம்மதியரால் விருத்திக்குக் கொண்டு வரப்பட்ட இந்துஸ்தானி என்னும் தேசிகமுறையானது, தென்னிந்திய சங்கீதத்தினின்றே உண்டான முறையென்றும், தென்னிந்தியாவிலிருந்து வடநாட்டுக்குப் போனதென்றும், தென்னிந்திய சங்கீத வித்வான்கள் அல்லாவுடீன் என்பவரால் சிறைகளாக வடநாட்டுக்குக் கொண்டு போகப்பட்டார்களென்றும், அவ்வாறு கொண்டு போகப்பட்டவர்களில் தக்ஷணத்தைச் சேர்ந்த சங்கீத வித்வான் நாயக் கோபால் என்பவர் ஒருவரென்றும் பின்வரும் வாக்கியங்களில் காண்கிறோம். இதில் கண்ட நாயக் கோபால் என்பவர் சுமார் 400 வருஷங்களுக்கு முன் தாளார்ணவம், ராககதம்பம், பிரபந்தம் முதலிய நூல்கள் செய்தவரென்று சாரங்க தேவர் நூலுக்கு உரையெழுதிய கல்லிநாதர் சொல்லுகிறாரென்று சுப்பராமதீக்ஷதர் கூறுகிறார். இவர் சுருதியைப் பற்றி நன்றாய்த் தெரிந்தவரென்று சதுர்தண்டி பிரகாசிகையெழுதிய வெங்கடமகி சொல்லுகிறார். இவர் தீபகம் என்னும் ராகம் பாடி ஒருவரும் ஏற்றாமலே ஒரு விளக்கை எரியும்படிச் செய்தாரென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. Universal History of Music, P. 84. “The Mahomedans as a ruling nation came in contact with the people of India for the first time in the 11th century, and since then a change has been worked into the music system of the country. The Mahomedans did not encourage the theory of the art, but they patronized practical musicians and were themselves instrumental in composing and introducing several styles of songs or devising new forms of musical instruments. It is related by Mahomedan historians of the period that when Dacca was invaded by Allaudin in 1294 and the conquest of the south of India was completed (1310) by his Mogul general Malik Kafer, music was in such a flourishing condition, that all the musicians and their Hindu preceptors were taken with the armies, and settled in the North. It is said that the celebrated Persian poet and musician Amir Khosru came to India during the rule of Allaudin and defeated in a contest the musician of the South, Nayak Gopal, who had come to Delhi with a view to challenge the musicians of the court. Amir Khosru is reported to have given the name of Safar to the Tritantri Vina of the classic days and to have divided the Rags into twelve Mokams which were subsequently subdivided by other Mahomedan musicians into 24 Sobha and 48 Guswas.” “மகம்மதியர் ராஜாங்கத்திற்குரிய ஓர் ஜாதியாராய் இந்துக்களுடன் முதல் முதல் கலந்தது 11-ம் நூற்றாண்டில்தான். அது முதல் இந்திய சங்கீதத்தில் ஓர்வித மாறுதல் உண்டாக ஆரம்பித்தJ. மகம்மதியர் சங்கீத சாஸ்திரத்தை அதிகமாய் அபிவிர்த்திக்குக் கொண்டு வராமல், சங்கீத வித்தியாப் பியாசத்தை ஆதரித்து வந்ததாகத் தெரிகிறது. அவர்கள் தாங்களே சாகித்தியம், கவிகள் செய்ததாகவும் அநேக புதுவிதமான பாட்டுகளை உண்டு பண்ணினதாகவும், அநேக புதுமாதிரியான வாத்தியங்களை உண்டு பண்ணினதாகவும் தெரிகிறது. 1,294-ம் வருஷத்தில் னுயஉஉய நகரம் அல்லாவுடின் என்பவரால் முற்றுகை போடப்பட்டு, 1,310-ம் வருஷத்தில் தென்னிந்தியாவானது அவருடைய தளகர்த்தனாகிய மாலிக் காபர் என்பவனால் பூரணமாய் ஜெயிக்கப்பட்ட போது, சங்கீதமானது வெகு திருப்தி யான நிலைமையில் இருந்ததாகவும், எல்லாச் சங்கீத வித்வான்களோடு அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த இந்து வித்வான்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோய் வடக்கே குடியேற்றினதாகவும் சொல்லப் படுகிறது. பேர்போன பாரசீகக் கவியும் சங்கீத வித்வானுமான அமீர்குஸ்ரு என்பவன் அல்லாவுடின் அரசாண்ட சமயத்தில் இந்தியாவுக்கு வந்ததாகவும், சமஸ்தான வித்வான்களின் திறமையைச் சோதிக்க வேண்டுமென்று டில்லிக்கு வந்திருந்த தக்ஷணத்தைச் சேர்ந்த நாயக் கோபால் என்பவனை ஜெயித்ததாகவும் சொல்லப்படுகிறது. அமீர்குஸ்ரு என்பவன் ஆதிகாலத்து திரிதந்திரி வீணைக்கு Satar என்னும் பேர்கொடுத்ததாகவும் அவன் இராகங்களை 12 மோகங்களாகப் பிரித்ததாகவும், அவைகள் பிற்பாடு மற்ற மகம்மதியரால் 24 சோபங்களாகவும் 48 குஸ்வங்களாகவும் பிரிக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது.” இதைக்கொண்டு வடநாட்டில் தென்னிந்திய சங்கீதத்தைப் போல் உயர்வுள்ள சங்கீத முறை இல்லையென்று கண்ட மற்றவர் தென்னாட்டி லிருந்து வித்வான்களைக் கொண்டு போய் வடநாட்டில் குடியேற்றி, சங்கீதத்தை விருத்தி செய்தார்களென்று எண்ண இடமிருக்கிறது. இந்தியா விற்குப் படையெடுத்து வந்த மகா அலெக்சாந்தரும் இந்தியாவிலிருந்து சங்கீத வித்வான்களையும் மற்றும் சில வித்வான்களையும் கூட்டிக் கொண்டு போனான் என்று பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் வழங்கி வந்த இந்திய சங்கீதம் மகம்மதியருடைய காலத்தில் மிகவும் ஈனஸ்திதியடைந்து இந்துஸ்தான் என்ற பெயருடன் வழங்கி வந்தது என்பதைப் பின்வரும் வாக்கியங்களில் அறியலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 5. “In later years music became a distinct trade, especially under Musalman rulers and passed into the hands of the lower orders and the unlearned; and to this cause operating through a long succession of years, the differences between the Hindustani and Karnatic systems must be in a great measure attributed.” “பிற்காலத்தில் சங்கீதமானது விசேஷமாய் மகம்மதிய அரசாட்சியின் காலத்தில், ஒரு வியாபாரம் போல ஆகிய, கீழ் ஜாதியாருடைய கையிலும் படிப்பறியாதவர்கள் கையிலும் போய்ச் சேர்ந்தJ. இந்த விதமாய் அநேக ஆண்டுகள் கழியவே அநேக மாறுதல்கள் உண்டாய்விட்டன. இந்த மாறுதல்களே அநேகமாய் கர்நாடக சங்கீதத்துக்கும் இந்துஸ்தான் சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்திற்கு ஆதிகாரணம்.” அக்பர் காலத்திலிருந்த சங்கீத வித்வான்களையும் அவர்கள் உபயோகித்த சுரங்களின் நுட்பத்தையும் பின்வரும் வாக்கியங்களில் அறியலாம். The Indian Empire, by W.W. Hunter, P. 110-111. “Hindu music, after a period of excessive elaboration sank under the Mahomedans into a state of arrested development. Of the 36 chief musicians in the time of Akbar, only 5 were Hindus. Not content with tones and semitones, the Indian musicians employ a more minute subdivision, together with a number of tonal modifications, which the Western ear neither recognises nor enjoys. Thus they divide the octave into 22 subtones instead of the 12 tones and semitones of the European scale. This is one of several fundamental differences, but it alone suffices to render Indian music barbaric to us; giving it the effect of a Scotch ballad in a minor key, sung intentionally a little out of tune.” “வெகுதூரம் விருத்தியடைந்திருந்த இந்திய சங்கீதமானது மகம்மதியர் அரசாண்ட காலத்தில் விருத்தி குன்றத் தொடங்கிற்று. அக்பர் காலத்தில் இருந்த 36 சிரேஷ்ட சங்கீத வித்வான்களுள் இந்தியர் ஐந்தே ஐந்து பேர்தான். முழு சுரங்களும் அரை சுரங்களும் போதுமென்றிராமல் இந்திய சங்கீத வித்வான்கள், கால், அரைக்கால் முதலிய நுட்பமான வித்தியாசமுள்ள சிறு சுரங்களையும் உபயோகிக்கிறார்கள். இந்த அணுப்பிரமாணமான சுரங்கள் ஐரோப்பியருக்குத் தெரிகிறதுமில்லை, அப்பேர்ப்பட்ட சுரங்கள் ஏற்படும் ராகங்களில் அவர்கள் பிரியப்படுகிறதுமில்லை. ஐரோப்பிய சங்கீதத்தில் இருப்பதுபோல் ஒரு ஸ்தாயியை முழுதும் அரையுமாக 12 சுரங்களாய்ப் பிரிக்காமல், 22 சுரங்களாகப் பிரிக்கிறார்கள். இரண்டு சங்கீதத்திற்குமுள்ள அநேக வித்தியாசங்களில் இது ஒன்று. ஆனால் இந்த ஒரு காரணத்தினா லேயே இந்திய சங்கீதம் நம்முடைய காதுகளுக்கு அநாகரீகமுள்ளதாகத் தோற்றுகிறJ. அது தாழ்ந்த சுரத்தில் (ஆinடிச மநல இல்) வேணுமென்று சுரம் கூட்டிக் குறைத்துப் பாடப்படுகிற Scotch ballad -ஐ ஒத்திருக்கிற தென்று சொல்லலாம்.” இந்தியாவை மிகுந்த நேர்மையுடன் (1556-1605) சுமார் 50 வருஷங்கள் ஆண்டு கொண்டிருந்த, அக்பர் சக்கிரவர்த்தியின் சபையில் 36 சிரேஷ்ட சங்கீத வித்வான்களிருந்தார்கள் என்றும், அதில் இந்திய சங்கீத வித்வான்கள் ஐந்தே ஐந்து பேர் மாத்திரம் இருந்தார்களென்றும் தெரிகிறது. தஞ்சாவூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த அரியலூரில் இருந்த ஒரு ஜாகீர்தார் கச்சியுவரெங்க பூபதி என்பவர் தன் காலத்தில் 365 தேர்ந்த கர்நாடக சங்கீத வித்வான்களை வைத்து ஆதரித்தார் என்றும், அவர்களால் கச்சியுவரெங்கபூபதி என்ற முத்திரையுடன் அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் பாடப்பட்டிருக் கின்றனவென்றும் நாம் அறிகையில் வடதேசத்தில் இந்திய சங்கீத வித்வான்கள் எவ்வளவு சொற்பமாயிருந்தார்களென்று காண்போம். மேலும், அவர்கள் மிக நுட்பமான கால், அரைக்கால், முதலிய சுரங்களையும் சேர்த்து உபயோகப்படுத்திக் கொண்டு வந்தார்களென்றும் அறிகிறோம். கால் அரைக்கால் சுரங்களை இந்திய சங்கீத வித்வான்கள் உபயோகித்துக் கொண்டு வந்தார்கள் என்று சொன்னவர் ஒரு ஸ்தாயியில் 22 சுரங்களாகப் பிரிக்கிறார்கள் என்று சொல்லுகிறார். இது முன்னுக்குப் பின் ஒவ்வாதிருக்கிறது. ஏழு சுரங்களும் 22 சுரங்களாகப் பிரிந்தது என்றும், அவைகள் கால் அரைக்கால் என்ற அளவில் வரவில்லை யென்றும் இதின் பின் பார்ப்போம். 3. தென்னிந்திய சங்கீதம் வேறு, வட இந்திய சங்கீதம் வேறு என்பதைப் பற்றி. இது வரையும் நாம் பார்த்தவைகளைக் கொண்டு, தென்னிந்தியாவில் நாரதர் அகஸ்தியர் முதலியவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தென்னிந்திய சங்கீதமானது வடநாட்டிற்குச் சென்று சில சுரங்களைச் சேர்த்துக்கொண்டு தேசிகமாகி இந்துஸ்தானி சங்கீதம் என்ற பெயருடன் வடஇந்தியாவில் வழங்கி வந்ததென்று தெளிவாய்த் தெரிகிறது. மார்க்கம் என்ற தேவகானம் தென்னிந்தியாவிலும், இந்துஸ்தானியென்ற தேசிககானம் வடஇந்தியாவிலும் வழங்கி வருகின்றதென்று பின்வரும் வசனங்களால் அறியலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 12. “Of the two systems practised in Southern India at the present time, the Hindustani is somewhat akin to that of Northern India and Bengal. It is practised mostly by Mussalman musicians while the Karnatic is confined more to those of the Southern races. The latter which may be called the national music of the South, is far more scientific and refined than the Hindustani and its professors arc, as a rule, men of much better education, a fact that is not without influence upon their music and seems apparent in all their melodies but particularly in the renderings they give of them.” “தற்காலம் தென்னிந்தியாவில் வழங்கும் இரண்டு முறைகளில் இந்துஸ்தானி சங்கீதமானது, வட இந்தியாவிலும் பங்காளத்திலும் வழங்கும் சங்கீதத்திற்குச் சற்று ஒத்திருக்கிறJ. அது விசேஷமாய் மகமதிய சங்கீதக்காரராலும் கர்நாடக சங்கீதமானது தென்னிந்திய ஜாதியாராலும் முறையே உபயோகிக்கப்படுகின்றJ. தென்னிந்திய ஜாதியாரின் சங்கீத மென்றழைக்கப்படும் கர்நாடக சங்கீதமானது இந்துஸ்தானி சங்கீதத்தைவிட அதிக சாஸ்திரோக்தமானதும் அதிக சுத்தமானது மாயிருப்பது மல்லாமல் அதைப்படிக்கும் வித்வான்களும் இந்துஸ்தானி சங்கீதத்தைப் படிப்பவரை விடக் கல்வியறிவில் தேர்ந்தவர்களாயிருக்கிறார்கள் என்பது பெரும்பாலும் உண்மையே. இப்படிக் கல்வியில் அபிவிருத்தியில்லை யென்று சொல்லுவ தானது இந்துஸ்தானி சங்கீதத்தில் வழங்கும் இராகங்களையும் விசேஷமாய் அவைகளை அவர்கள் பிரஸ்தாரம் செய்து காண்பிப்பதையும் கவனித்தால் நன்றாய் விளங்கும்.” மேல் வசனங்களில் தென்னிந்திய ஜாதியாரின் சங்கீத மென்றழைக்கப்படும் கர்நாடகமானது இந்துஸ்தானி சங்கீதத்தைவிட சாஸ்திரயுக்தமானதென்றும் கலப்பில்லாமல் சுத்தமாயிருக்கிறதென்றும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களால் அப்பியாசிக்கப்பட்டு வருகிறதென்றும் சிறந்த ராகப் பிரஸ்தாரமுடைய தாயிருக்கிற தென்றும் சொல்லுகிறார். தென்னிந்தியாவில் தென்பாகத்தில் அழிந்துபோன தென்னிந்திய கண்டத்தில் தென் மதுரையிருந்த காலத்தையும் அதிலிருந்த சங்கப் புலவர்களையும் அதில் சங்கீதம் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த தென்பதையும் நாம் இதன் முன் பார்த்திருக்கிறோம். அவர்களில் சங்கீதத்தைப் பழகியவர்களும் வீணை வாசிக்கத் தேர்ந்தவர்களும் தெய்வ சந்நிதியில் நர்த்தனம் பண்ணித் தெய்வத்தைத் தொழுது கொண்டவர்களும் யாரென்று விசாரிப்போமேயானால் அவ்விராஜ்யத்தையாண்ட முடிமன்னர்களும் அவதார மூர்த்திகளும் இளவரசர்களும் பிரபுக்களுமாயிருந்தார்களென்று நாம் பெருமை பாராட்டிக் கொள்வோம். கிரீடாதிபதிகளாகிய தங்கள் அரசர்கள் சங்கீதத்திலும் பரதத்திலும் மிகுந்த பிரியமுள்ளவர்களாயிருக்கிறார்களென்று அறிந்த மற்றவரும் தென்னிந்தியாவிற்கு வந்த பிறரும் சங்கீதத்தையும் பரதத்தையும் மிகவும் அப்பியாசித்துத் தேர்ந்தவர்களானார்கள். மேலும், ராஜாங்கத்தை விட்டு தபசு செய்யச் சென்ற ராஜரிஷிகளும் அவர்கள் சிஷ்யவர்க்கங்களான தென்னாட்டு அந்தணரும் தங்கள் தபசுக்கு அனுகூலமாகச் சங்கீதத்தை உபயோகப்படுத்திக் கொண்டு வந்தார்கள். இவ்விதமாக ஜனங்களில் உயர்ந்தவர்களாக மதிக்கப்படும் தபசிகளாலும் கற்றறிந்தவர்களாலும் ஆரியராலும் சங்கீதம் பேணப்பட்டு மிக அருமையுடையதாக எண்ணப்பட்டது. இப்படியாவராலும் அருமையாகக் கொண்டாடப்பட்ட சங்கீதம் கோவில் களிலும் வைதீக கருமங்களிலும் கலியாணங்களிலும் உபயோகிக்கப்பட்டு வந்தது. தென்னாட்டில் பாண்டிய ராஜ்யம் நாதனற்றுப் போனபின் சங்கீதமும் தேடுவாரற்றுப்போக தமிழ்நாட்டு மூவேந்தர்களிலொருவரான சோழ ராஜாக்களால் விருத்தியடைந்து வந்தது. தமிழ்நாடுகளில் ஒன்றாகிய சோழ நாடும் சோழ அரசர்களை இழந்தபின் வடுக ராஜாக்களாலும் அவர்களுக்குப் பின் மகாராஷ்டிர ராஜாக்களாலும் இற்றைக்கு 60 வருஷங்களுக்கு முன் வரையும் ஆளப்பட்டு வந்தது. அதில் சோழ ராஜாக்களாலும் நாயக்க ராஜாக்கள் சிலராலும், மகாராஷ்டிர ராஜாக்கள் சிலராலும் ஒருவாறு சங்கீதமும் பரதமும் பேணப்பட்டு வந்தன. ஆதி காலந்தொட்டுத் தொடர்ச்சியாய்த் தென்னிந்தியா விலேயே சங்கீதம் வளர்ந்து வந்திருக்கிறதென்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 5. “Music has almost without interruption flourished there (in Southern India) from very remote ages. The higher branches of musical profession were formely confined to either Brahmins (Bhagavatars) or to men of very high caste. Music being of divine origin was regarded as sacred, and it was considered impious for any but men of the caste to wish to acquire any knowledge of its principles. It was and still is called the fifth Veda. Hence the ancient Brahmins of the country would have excommunicated any of their number who would have so far presumed as to betray the sacred writings to any but the elect, whose mouths only were esteemed sufficiently holy to utter words so sacred. Indeed it was the knowledge of which they were possessed that was the chief cause of the reverence and adoration paid to the Brahmins of old and which gave them power and influence they prized so much. It was thus that the ancient musicians sang their own composition.” “சங்கீதமானது தென்னிந்தியாவில் ஆதி காலந்தொட்டு தொடர்ச்சியாய் வளர்ந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் சங்கீதத்தை உயர்ந்த தொழிலாகக் கொண்டவர்கள் பிராமண பாகவதர்களாயாவது உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாயாவது இருந்தார்கள். சங்கீதமானது கடவுளிடமிருந்து ஜனித்தபடியால் அது வைதீக முறையைச் சேர்ந்ததாக எண்ணப்பட்டது மாத்திரமல்ல. அதன் முறைகளை உயர்குலத்தார் மாத்திரம் படிக்கலாம் மற்றவர் படித்தால் அது பக்திக்கு விரோதமென்றும் எண்ணப்பட்டது. சங்கீதமானது ஆதி முதல் ஐந்தாம் வேதமாயிருந்தது மாத்திரமல்ல, எல்லாராலும் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டு அந்தப் பேரால் அழைக்கப்படுகிறதாயுமிருக்கிறJ. ஆகையால் இந்தியாவின் ஆதி பிராமணரல்லாத மற்றவருக்கு யாராவது சொல்லிக் கொடுக்கத் துணியும்பட்சத்தில் அவர்களை ஜாதியிலிருந்து விலக்கிப் போட்டது மல்லாமல், வேதவிஷயங்களை எடுத்துச் சொல்வதற்குத் தங்கள் வாய்கள் மாத்திரமே பரிசுத்தமானவையென்று எண்ணியும் வந்தார்கள். ஆதி பிராமணருக்குச் செலுத்தப்பட்ட வணக்கமும் மரியாதையும் அந்தஸ்தும் அதிகாரமும் வெகு மேன்மையாக எண்ணிவந்த அவர்கள் செல்வாக்கும் இந்தக் காரணத்தினாலேயே. ஆகையால் ஆதி சங்கீதவித்வான்கள் தங்களுடைய சொந்த சாஹித்தியங்களையே பாடி வந்தார்கள்.” இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் சங்கீதமானது கடவுளிடத்தி லிருந்துண்டானதென்றும் அதை மிகுந்த மேன்மையாய் அதன் ரகசியங்களை மற்றவர் அறியாவண்ணம் வைத்திருந்தார்களென்றும் சொல்லுகிறார். ஆரியர் தென்னிந்தியாவிற்கு வரும் முன்னதாகவே சங்கீதமும் அதைச் சேர்ந்ததான பரதம், தாளம் முதலிய அங்கங்களும் மிக விஸ்தாரமடைந்து வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகளுடன் அப்பியாசிக்கப்பட்டு வந்ததென்றும், அவைகள் கோயில்களிலும் ராஜ அரண்மனைகளிலும் முக்கியமாய் உபயோகப்பட்டு வந்ததென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். ஆரியர் தென்னாட்டிற்கு வந்தபின் தென்னிந்திய சங்கீதத்தைக் கற்றுக் கொண்டு அதில் தேர்ந்தவர்களானார்கள். வேத சுலோகங்களை எப்படி நாளது வரையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமுடையவர்களாயிருக்கிறார்களோ அதுபோலவே மற்றவரிடத் திலிருந்து கற்றுக்கொண்ட தென்னிந்திய சங்கீதத்தையும் பிறருக்குச் சொல்லிக் கொடுக்க மனமற்றவர் களானார்கள். அன்றியும் பூர்வமாய்ச் செய்த தமிழ் உருப்படிகளை நீக்கிப் புதிதாகத் தங்கள் தங்கள் பரம்பரைக்கென்று சமஸ்கிருதம் தெலுங்குபோன்ற பாஷைகளில் உருப்படிகள் செய்து அவற்றையே வழங்கினார்கள். அவைகள் முற்றிலும் பூர்வதமிழ் நடையையே அனுசரித்து இருக்கிறதேயொழிய வேறில்லை. இதனால் காலக்கிரமத்தில் தென்னிந்தியாவினின்றுண்டான சங்கீதம் வடநாட்டின் சமஸ்கிருத்திலிருந்துண்டானதாக எண்ணும்படியாயிற்று. மேலும் கர்நாடக சங்கீதமும் இந்துஸ்தான் சங்கீதமும் வெவ்வேறு என்பதையும் இந்துஸ்தானி சங்கீதத்தைவிட கடவுளிடமிருந்துண்டானதாக எண்ணப்படும் கர்நாடக சங்கீதத்தில் கடவுளுக்கிருக்கும் தேஜசும் பிரகாசமும் சூழ்ந்துகொண்டிக்கின்றனவென்றும் பக்திக்குரிய நூல்கள் யாவும் இச் சங்கீதத்தில் சம்பந்தப்பட்டேயிருக்கிறதாகவும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 2,3 and 4. “Since the Sangita Parijata which is believed to be one of the latest of these Sanskrit works, had been written by Ahobila, two separate schools or systems of music have arisen and are now known by the names of Hindustani and Karnatic. The Karnatic appears to have been elaborated as a distinct system subsequent to the advent of the Aryans to the south of India. The two systems although sprung from the same origin have since undergone independantly considerable changes and are now totally distinct from each other. Of Hindu music in Southern India, since the fall of the Hindu Empire of Vijayanagar Tanjore has been the only school and from it those of Travancore and other places have doubtless been founded. Mahomedan music taken as a while, has little t recommend itself even at the present day. The ideans professed by Hindus offer a curious contrast for music from a Hindu standpoint. It is associated with all that is bright and sweet in life; its origin ascribed directly to divine providence causes it to be regarded as surrounded by a halo of sanctity. Almost all the religious literature of the Hindus breathes music.” “ஸமஸ்கிருத நூல்களில் சொற்பகாலத்துக்கு முன்தான் எழுதப்பட்டது என்று ஒப்புக் கொள்ளப்பட்டவைகளில் ஒன்றாகிய சங்கீத பாரிஜாதம் (Sangita Parijatam) அகோபிலர் என்பவரால் எழுதப்பட்ட கால முதல் இரண்டு வித்தியாசமான சங்கீத முறைகள் அதாவது இந்துஸ்தானி, கர்நாடகம் என்பவை உண்டாயிருக்கின்றன. ஆரியர்கள் இந்தியாவின் தென்பாகத்தில் குடியேறின காலத்திற்குப் பிற்பாடு கர்நாடக சங்கீதமானது பிரத்தியேகமான ஓர் முறையாய் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டு முறைகளும் ஒரே உற்பத்தியிலிருந்து உண்டானபோதிலும் தனித்தனியே ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாமலே பல மாறுதல்களை யடைந்து ஒன்றற்கொன்று முற்றும் பேதமானவைகளாய்க் காணப்படுகின்றன. விஜயநகர ராஜ்யம் விழுந்த காலமுதல் தென்னிந்திய சங்கீத முறைகளில் தஞ்சைநகர் முறை ஒன்றுதான் விசேஷமானதாகத் தெரிகிறது. இந் நகரிலிருந்துதான் திருவனந்தபுரத்துக்கும் மற்ற இடங்களுக்குச் சங்கீத முறைகள் பரவின. மகம்மதிய சங்கீதத்தைத் தொகையாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், தற்காலம் யாவராலும் பிரியப்பட்டு ஒப்புக்கொள்ளக்கூடிய அம்சங்கள் அதில் அதிகம் கிடையாது. ஆனால் இந்து சங்கீதத்தைப் பார்த்தாலோ, இந்துக்களுடைய சங்கீத அம்சங்களுக்கும் யாவரும் ஆச்சரியப்படக்கூடிய சில வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இந்துக்களுடைய சங்கீதமானது ஏதேது மகிமையாயும் நமது ஜீவியத்தில் இன்பமாயும் உள்ளது என்று நினைப் போமோ அவைகளோடெல்லாம் சம்பந்தப்பட்டேயிருக்கிறது. சங்கீதமானது கடவுளிடமிருந்து உண்டானது என்கிற எண்ணம் பூர்வமாயிருக்கிறபடியால் கடவுளுக்கிருக்கும் ஒருவிதமான தேஜசும் பிரகாசமும் அதை எப்போதும் சூழ்ந்து நிற்கிறதாகக் கொண்டாடப்படுகிறJ. இந்துக்களுடைய பக்திக்குரிய நூல்களெல்லாம் சங்கீதவாசனையுள்ளதாகவேயிருக்கின்றன.” இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் சற்றேறக்குறைய 300 வருஷங்களுக்கு முன்னிருந்த பாரிஜாதக்காரர், அக்காலத்திற்கு சுமார் 400 வருஷங்களுக்கு முன்னிருந்த சங்கீத ரத்னா கரத்தின் சுருதி முறை தென்னிந்திய கானத்தில் வழங்கி வந்த சுருதிகளுக்கு ஒத்து வரவில்லை யென்ற அபிப்பிராயத்தையுடையவராய் இப்போது வீணையில் வழங்கிவரும் 12 சுரங்களை எடுத்துக் கொண்டு மீதியான பத்து சிறு சுரங்களையும் தள்ளி அளவு சொல்லுகிறார். அவர் வாக்கியங்களில் மீதியான பத்தையுந் தள்ளி ராக லட்சணம் சொல்லுகிறேன் என்கிறார். இதைக்கொண்டு அவர் காலத்திலேயே சங்கீத ரத்னாகரர் சுருதிமுறை கர்நாடக சங்கீதத்தின் சுருதி முறைக்கு ஒத்ததல்லவென்ற விவாதம் இருந்ததாகத் தெரிகிறது. “துவாவிம்சதி சுருதிகள்” என்ற சொல் எப்படி வந்ததென்பதைப் பற்றி இதன் பின் பார்ப்போம். கர்நாடக சங்கீதம் பாரிஜாதக்காரருக்குப் பிறகுண்டானதென்று தவறுதலாகச் சொன்னவர்களின் அபிப்பிராயத்தைக் கொண்டு Capt. Day இப்படி எழுதினாரே யொழிய மற்றபடியல்ல. அவருக்குத் தென்னிந்திய சங்கீதத்தின் உண்மை தெரிந்தவர்கள் விபரம் சொல்லியிருப்பார்களானால் இந்திய சங்கீதத்தின் ஆதார நியாயங்களை வெகு நுட்பமாக உலகத்துக்குச் சொல்லியிருப்பார். இந்தியாவின் பூர்வத்தையும் அதன் கலைகளையும் விசாரிக்க வரும் மேற்றிசை கனவான்களில் அநேகர் சில சில சமயங்களில் மிகவும் சொற்ப அறிவுடையவர்களால் வழிகாட்டப்பட்டு அவ்விடத்திலுள்ள காரியங்களை அவர்கள் மூலமாய் அறிந்துகொண்டு போகிறார்கள். ஒரு சிறிய மூக்கணாம் கயிற்றில் கட்டுப்பட்ட மாடு அக்கயிற்றின் மூலமாக நடத்தப்படுவதுபோல இதுவும் கால இயல்பாகிறJ. இதனால் விவேகிகள் சில சமயங்களில் தப்பான அபிப்பிராயம் கொள்வதை அடிக்கடி நாம் காண்கிறோம். இந்திய சங்கீதத்தைப் பற்றிய நுட்பம் இன்னதென்றறியாமல் சுமார் 2,500 வருஷங்களாகத் தவறுதலான அபிப்பிராயமுண்டாகி விவாதங்கள் நடந்து வருகிறதென்பதை நாம் அறிவோமானால் இதைப் பெரிதாக நினைக்க மாட்டோம். ஆரியர்கள் இந்தியாவின் தென்பாகத்தில் குடியேறின காலத்திற்குப் பிற்பாடு கர்நாடக சங்கீதமானது பிரத்தியேகமான ஓர் முறையாக ஏற்படுத்தப் பட்ட தென்பதாகத் தெரிகிறதென்கிறார். இது உண்மையே. ஆரியர்கள் கடைச் சங்க காலத்திலும் அதற்குப் பின்னும் தமிழ் நாட்டில் வந்து தமிழைக்கற்று தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரையெழுதவும் நூல்கள் இயற்றவும் ஆரம்பித்தார்களென்றும், அதனால் சமஸ்கிருத மொழிகள் அங்கங்கே காணப்படுகின்றனவென்றும், தமிழின் பூர்வீகத்தை சந்தேகிக்கும்படியான வார்த்தைகளும் கலந்திருக்கின்றனவென்றும், அழிந்துபோன தமிழ் நூல்களின் சாரத்தை சமஸ்கிருதத்தில் செய்திருக்கலாமென்றும் இதன்முன் சொன்னோம். அதுபோலவே கர்நாடக சங்கீதமென்ற பிரத்தியேகமான ஒரு முறையும் இந்துஸ்தானி என்று தற்காலத்தில் வழங்கும் வடநாட்டின் சங்கீத முறையென்று எழுதப்பட்டதாக இங்கே காணப்படுகிறது. இவ்விரண்டும் ஒரே உற்பத்தியிலிருந்து உண்டானதாகவும் அப்படி உண்டானபோதிலும் தனித்தனியே ஒன்றற்கொன்று சம்பந்தமில்லாத பல மாறுதல்களையும் உடைத்தாயிருக்கின்றதென்றும் தெளிவாகச் சொல்லுகிறார். இதனால் வெகு பூர்வமாயுள்ள தென்னிந்திய சங்கீதத்தின் சுருதி முறையின் ரகசியம் தெரியாமல் துவாவிம்சதி சுருதிகளென்று எழுதிய சமஸ்கிருத முறை யொன்றும் அதன்பின் தென்னிந்திய கானத்தில் பாண்டித்தியமடைந்த வித்வான்கள் தென்னிந்திய சங்கீதத்தை அனுசரித்து எழுதிய பாரிஜாதம் போன்ற சமஸ்கிருத நூல்களும் ஆக இரண்டுமுறையுண்டானதாகச் சொல்லுகிறார். அதில் தென்னிந்திய சங்கீதமுறை தஞ்சைநகர் ஒன்றில்தான் விசேஷமாயிருந்ததாகவும் அதன்பின் மற்றிடங்களுக்குப் போனதாகவும் சொல்லுகிறார். சுமார் 300 வருஷங்களுக்கு முன் தஞ்சை நகரிலிருந்து வேங்கடமகி எழுதிய “சதுர்தண்டிப்பிரகாசிகை”யும் அதன்பின் அதைப்போன்ற பல சிறு நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டனவென்றும் அவைகள் கர்நாடக சங்கீதத்தின் உண்மையையே தெரிவிப்பவைகளென்றும் இதன் முன் சொல்லியிருக்கிறோம். நாலு பாலைகளிலிருந்துண்டாகும் 103 பண்களும் 12,000 ராகங்களும் இன்னவென்று விபரஞ்சொல்லும் தமிழ் நூல்கள் அழிந்தபின் அவற்றிற்கு இரண்டாவதான ஆயப்பாலையின் 12 சுரங்களையும் அவைகளால் உண்டாகும் 72 மேளங்களையும் ஒழுங்குபடுத்தி இவ்வளவாவது கர்நாடக சங்கீதத்திற்கு எழுதி வைத்தார்களேயென்று மிகவும் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பூர்வமாய் வழங்கி வந்த ராகங்களின் பெயர்களையும் சில சந்தேக சொற்களையும் முற்றிலும் மாற்றி சமஸ்கிருத அட்சரங்களைக் கொண்டு லக்கங்கள் கண்டுபிடிக்கும் பதங்களையும் சேர்த்து சுரங்களுக்கும் ராகங்களுக்கும் காரணப் பெயரிட்டு ஜாதி வகுத்து சமஸ்கிருதத்திற்குரிய சில விசேஷ லட்சணங்களெல்லாம் அதோடு சேர்த்து எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் பூர்வமாயுள்ள இடங்களுக்கும் பட்டணங்களுக்கும் ராஜர்களுக்கும் வெவ்வேறு புதிய சமஸ்கிருத பெயர்கள் கொடுத்து சமஸ்கிருதத்தில் வழங்குவதுபோல சங்கீதத்திலும் நூல் எழுதி வைத்தார்கள். பூர்வந்தொட்டு தென்னிந்தியாவின் கோயில்களில் நாளதுவரையும் சொல்லிக்கொண்டு வரும் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய தெய்வ ஸ்தோத்திரங்கள் ஓதுவாராலும் மற்றும் பக்தர்களாலும் சொல்லப்படுகிறதை நாம் கேட்டிருக்கிறோம். அவைகளில் இன்னின்ன ராகங்களில் பாடவேண்டுமென்று அப்புத்தகங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. அம்முறைப்படியே நாளது வரையும் கானம் செய்து கொண்டு வருகிறார்களென்றும் தெரிகிறது. அப்படியிருந்தும் அதில் வழங்கி வந்த பண் இந்தளம், பண்காந்தாரம், பண் கொல்லி, பண் சீகாமரம், பண் தக்கேசி, பண் குறிஞ்சி, பண் நட்டபாடை, பண் குறுந்தொகை, பண் திருத்தாண்டகம் இவைபோன்ற பூர்வப் பெயர்கள் சமஸ்கிருத நூல்களில் வழங்காதிருப்பதைப் பிரத்தியட்சமாய்ப் பார்க்கிறோம். ஆனால் பூர்வமாய்ப் படிக்கப்பட்டு வந்த தேவாரங்களே நூதனமான சமஸ்கிருத பெயர்களினால் அழைக்கப்படும் ராகங்களாகப் பெயர் மாறி வழங்குகின்றனவென்று நாம் அறிய வேண்டும். பெயர் மாற்றி வழங்குகிற இயல்பைப் பற்றி இதன் முன் மற்றவரால் கேட்டிருக்கிறோம். இவைகள் யாவற்றையுங்கொண்டு பூர்வ காலத்தில் வழங்கி வந்த தென்னிந்திய சங்கீத முறை பைதாகரஸ் (Pythagoras) போன்ற தத்துவ கிரேக்க சாஸ்திரியினால் 2/3, 3/4 என்றும், பரதர், சங்கீத ரத்னாகரர் போன்ற சமஸ்கிருத சிரோமணிகளால் 22 என்றும், போசான்கே (Bosanquet) போன்றவர்களால் 53 என்றும், வேங்கடமகி, சங்கீதபாரிஜாதக்காரர் முதலியவர்களால் 12 என்றும் வெவ்வேறுவிதமான அபிப்பிரயாங்களை யுடையதாய்ப் பல நூல்கள் எழுதப்பட்டன. ‘இதுதான் யானை’ யென்று சாதிப்பவர்கள்போல அவரவர்கள் நியாயங்கள் பல சொல்லி நூல்கள் எழுதினார்கள். இவ்வளவு சந்தேகப்பட்ட காலத்தில் தென்னிந்திய சங்கீதத்தை இவ்வளவு நுட்பமாய் விசாரித்ததானது இவருடைய பாண்டித்தியத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. உத்தர மதுரையில் பாண்டிய ராஜாங்கம் விழுந்த காலத்தில் சோழர்களும் அதன்பின் தெலுங்கர்களான நாயக்க ராஜர்களும் பாண்டிய ராஜ்யத்தைச் சில காலம் ஆண்டு வந்தார்களென்று காண்கிறோம். அக்காலத்தில் அவ்விடத்திலிருந்து தாங்கள் அருமையாய் நினைத்த சங்கீதத்தையும் அதை அப்பியாசித்திருந்தவர்களையும் தங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய் அதிகமாய் விருத்தி செய்தார்கள். இதனால் விஜயநகரமும் தஞ்சைநகரும் முக்கியமானதாக நாளது வரையும் விளங்குகின்றன. தமிழ்நாட்டின் கீதம் தமிழ் அரசர்களையும் தமிழ் தெய்வங்களையும் அண்டியே நாளதுவரையும் பிழைத்து வந்திருக்கிறதென்று அறிவாளிகள் அறிவார்கள். கர்நாடக சங்கீதத்தின் முதன்மையையும் அது கையாளப்பட்டு வந்த விதத்தையும் கண்டறிந்த Capt. Dayகடவுளைத் தேஜசு சூழ்ந்திருப்பதுபோல தென்னிந்திய சங்கீதத்தையும் தேஜசு சூழ்ந்திருந்ததென்று சொல்லுகிறார். இம்மகானுடைய பெருமையை என்னென்று சொல்வோம்? மேற்றிசையிலுள்ள ஒரு உத்தமருக்கு இவ்வுன்னத எண்ணங்கள் உண்டாகு மானால், தென்னிந்திய சங்கீதத்தையே தம் ஜீவனாகக் கொண்ட வித்வான்களுக்கு இவ்வெண்ணங்கள் உண்டாக வேண்டாமா? உண்டானால் மார்க்கம் தவறி வழங்கும் கானங்களில் பிரியப்படுவார்களா? மேலும், சங்கீத பாரிஜாதக்காரருக்கும் (கி.பி. 1,600) சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவருக்கும் (கி.பி. 1,200) அவர் காலத்துக்கு முந்திய பரதருக்கும் (கி.பி. 500) அனேக ஆயிர வருஷங்களுக்கு முன்னே முதல் ஊழியில் கர்நாடக சங்கீதம் ஏற்பட்டதென்று நாம் அறிய வேண்டும். மேலும், பாண்டிய ராஜ்யம் அழிந்தபின் தென்னிந்தியாவிலிருந்த விஜயநகரம், தஞ்சை நகரம், திருவனந்தபுரம், மைசூர் முதலிய இடங்களில் தென்னிந்திய சங்கீதம் அரசர்களின் அடைக்கலம் பெற்று ஆதரிக்கப்பட்டு வந்தது. வட இந்தியா கலகங்களினாலும் குழப்பத்தினாலும் நிறைந்த காலத்தில் தென்னிந்தியா சமாதானமாயிருந்ததென்றும் சங்கீதம், விருத்தியானதென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 13. “The theory, modes and notation in present use throughout the whole of India are derived from that taught originally by the earlier Sanskrit musicians; but owing to the south of India having been less disturbed by internal commotions and having been more subject to Hindu rule than either Deccan or Northern Provinces, the science of music would seem to have been maintained and cultivated long after the original art had been lost in the north. Hence Southern India music or as it is more usually called Karnatic, bears as far as we can judge, a very close resemblance to what the Sanskrit must have been, and in many cases we can clearly trace the development and refinements introduced from time to time upon the original Ragas.” “தற்காலம் இந்தியா முழுதும் உபயோகப்டும் சங்கீத சாஸ்திர விதிகளும் ஆரோகணங்களும் சுரக் குறிப்புகளும் ஆதியில் சமஸ்கிருத சங்கீத வித்வான்களுடைய முறையிலிருந்தே உண்டாயின. ஆனால் தென்னிந்தி யாவில் குழப்பங்களும் கலகங்களும் அதிகமாயில்லாமல் இந்து ராஜாங்கத்தின் நிழலில் இந்தியர் அமைதலாய்க் காலந்தள்ளி வந்தபடியால், தக்ஷணம் வட இந்தியா முதலிய நாடுகளைவிட இந்நாட்டில் சங்கீதமானது நிலையாய் இருந்து வந்ததுமல்லாமல் வடநாட்டில் சுத்த சங்கீதம் அழிந்து போன பிறகுங்கூட தென்னிந்தியாவில் சங்கீதம் அபிவிர்த்தியடைந்தே வந்தது. ஆகையால் கர்நாடக சங்கீதமானது ஆதி ராகங்களில் கால வித்தியாசத்துக்குத் தகுந்தபடி இடைக் கிடையே உண்டான சுத்தமாயும் அழகாயுமுள்ள அம்சங்களை நன்றே விளக்கிக் காட்டுகிறது.” தமிழ் இசை நூல்களாகிய அகத்தியம் பஞ்சபாரதீயம் பெருநாரை பெருங்குருகு முதலிய இசை நூல்கள் ஜலப்பிரளயத்தால் அழிந்து போயின வென்று முன் பார்த்தோம். அதன் பின்னுள்ள சில நூல்களும் கபாடபுரம் கடல் கொண்ட காலத்தில் அழிந்து போயின. அரைகுறையான சில சிறு நூல்கள் கடைச்சங்க காலத்தில் பேணுவாரற்றுப்போயின. அதன்பின் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சில நூல்களே வழங்கி வருகின்றன. ஆகிலும், அந்நூல்களில் சொல்லப்படுகிறவைகளுக்கும் தென்னிந்திய சங்கீதத்திற்கும் மிகப் பேதமிருக்கிறதென்று அறிவாளிகள் உணர்வார்கள். இதன்முன், தென்னிந்திய சங்கீதம் வேறு, வட இந்திய சங்கீதம் வேறு என்று பல கனவான்களின் அபிப்பிராயமும் இருக்கிறJ. இவ்விரண்டு முறைகளுக்கும் எவ்வித பேதமிருக்கிறதென்று பின்வரும் சில வாக்கியங்களில் சொல்லப் படுகிறது :- The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 15. “The exact definition of what constituted a sruti is difficult to determine; but it is thus gaguely given by the Sangita Ratnavali “A sruti is formed by the smallest intervals of sound and is perceivable by the ear; it is of 22 kinds; also every distinct audible sound is a sruti; it is a sruti because it is to be heard by the ear.” Doubts however exist as to whether the intervals of the srutis were equal or not. In the arrangement of the sruties, modern usage is diametrically opposite to the classical one; the latter placing them before the note to which they respectively belong, while the former gives position after the notes. It is difficult to dertermine when or by whom the alteration was effected. The arrangement of the frets of the Vina and other stringed instruments accord with the modern acceptation of the principle. Accordingly to the rule laid down in the classical treatises, the disposition of the notes is reversed in the case of the Darve instruments and out of this reversed arrangement perhaps the modern theory about the arrangement of the position of all sruties has been worked. (Tagore)” “சுருதியென்பது யாது என்று நுட்பமாய்ச் சொல்லுவது கஷ்டமானாலும், சங்கீத ரத்னாவளியில், நம்முடைய காதால் கேட்கக்கூடிய அதிநுட்பமான இடைவெளிகளுள்ள சப்தந்தான் அது என்றும், அது 22 வகைப்பட்டதென்றும் காதினால் கேட்டறியக்கூடிய ஒவ்வொரு தனித்தனியான இடைவெளிக்கும் அந்தப் பெயரென்றும் காதினால் கேட்கப்படுவதினால் அதற்குச் சுருதியென்ற பெயரென்றும் சொல்லியிருக்கிறது. ஆனால் சுரங்களுக்கு இடையில் வரும் இடைவெளிகள் (iவேநசஎயடள) யாவும் ஒரே அளவுடையனவோ என்பதைப் பற்றி மாத்திரம் சந்தேகமுண்டு. சுருதிகளை அமைக்கும் ஒழுங்கில், தற்கால முறைக்கும் ஆதி முறைக்கும் நேர்விரோதமிருக்கிறJ. சுருதிகள் வரும் இடமானது ஆதி முறைப்படி சுருதிக்கு முந்தியும் தற்கால முறைப்படி சுருதிக்குப் பிந்தியுமாயிருக்கிறது. இந்த மாறுதல் எப்போது உண்டானதென்றும் யாரால் உண்டானதென்றும் தெரிவது பிரயாசையாசையாயிருக்கிறது. ஆனால் வீணை மெட்டுகள் வைக்கப்படும் விதத்தையும் மற்ற தந்தி வாத்தியங்களையும் கவனித்தால் அவை தற்காலம் ஒப்புக்கொள்ளப்பட்ட முறைப்படியே இருக்கின்றன. தாருவாத்தியங்களில் ஆதிமுறைக்கு விரோதமாகவே மெட்டுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இப்படி மாறான முறையிலிருந்தே தற்கால சுருதிகளுடைய ஸ்தானம் குறிக்கப்பட்ட தாயிருக்கலாம்.” மேற்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கையில் சங்கீதரத்னாகரர் அதிநுட்பமான இடைவெளி களுள்ள 22 சுருதிகள் வருகிறதாகச் சொல்லுகிறார் என்று எழுதினார். ஆனால் சுரங்களுக்கு இடையில் வரும் இடைவெளிகள் ஒரே அளவுடையனவா என்று சந்தேகிக்கிறார். ஆதிமுறைக்கும் தற்கால முறைக்கும் பேதமிருப்பதைக் கொண்டே இப்படிச் சந்தேகிக்கிறார். ஆனால், வீணை மெட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் விதத்தைக் கவனித்தால் தற்காலம் ஒப்புக் கொள்ளக்கூடிய முறைப்படியே யிருக்கிறதென்று சொல்லுகிறார். அதாவது, தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்ததாக விருக்கிறதென்று நாம் நினைக்க வேண்டும். தாரு வாத்தியங்களில் ஆதிமுறைக்கு விரோதமாக மெட்டுகள் வைக்கப் பட்டிருக்கிறது என்கிறார். இவ்விஷயத்தில் தேசிகமான இந்துஸ்தானி பழகியபின் அதற்குத் தகுந்தபடியே வாத்தியங்களில் சுரஸ்தானங்களும் நழுவலாயிருக்க வேண்டியது அவசியந்தானே. இந்தத் தேசத்திற்கு தகுந்த நூல் சங்கீத ரத்னாகரமென்று அநேகர் அபிப்பிராயப்படுகிறார்கள். சங்கீத ரத்னாகரருடைய முறைப்படி பார்த்தால் இந்துஸ்தான் கீதத்திற்கு முழுதும் ஒத்திருக்க மாட்டாதென்று அறிவார்கள். இந்துஸ்தான் சங்கீத முறையையே எழுத வந்த Mr. Clements, Mr. Deval முதலியவர்களின் சுருதி நிர்ணயம் சாரங்கதேவர் அபிப்பிராயப்படி அல்ல என்பதை இதன் பின் பார்ப்போம். ஏனென்றால், இடைவெளிகள் ஒரே அளவுடையவாயிருக்க வேண்டுமென்ற சாரங்கர் முறைக்கு விரோதமாக வெவ்வேறு இடைவெளிகளுள்ள சுரங்களை நிச்சயம் பண்ணியிருக்கிறார்கள். வடதேசத்தில் உபயோகிக்கும் சுரத்தின் இடைவெளி களுக்கும் தென்தேசத்தில் உபயோகிக்கும் சுரத்தின் இடைவெளிகளுக்கும் மிகுந்த பேதமுண்டென்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Oriental Music by Chinnasawmi Moodr. M.A., P. I, 4. P. 37. “The mathematical ratios of the Indian Gamut likewise vary in the north and south of India. But this extremely complicated question may be left open for the present, because for all practical purposes the system of equal temperament which coincides almost exactly with the adjustment of frets on the Vina is found to meet all existing requirements more or less satisfactorily. It is admitted on all hands that this curious coincidence has been arrived at by the two nations through distinct processes, quite independently of each other; and historical research so far as it has been made, has established the fact that the Indian system has remained in statuquo for ages before the Lux ab oriente dawned upon the West.” “வட தேசத்தில் உபயோகப்படும் ஆரோகண அவரோகணங்களில் ஒரு சுரத்துக்கும் அதற்கு அடுத்து வரும் சுரத்துக்கும் இடையிலுள்ள இடைவெளி யைப்பற்றிய கணக்குக்கும் தென் தேசத்தில் வழங்கும் சுருதி இடைவெளிகளின் கணக்குக்கும் வித்தியாசமுண்டு. ஆகையால் சிக்கு முக்கான இந்த விஷயத்தைப்பற்றி இப்போது யோசிக்கத் தேவையில்லை. ஒரு ஸ்தாயியின் சுரங்களைச் சமபாகமாய்ப் பிரித்து அவைகளுக்கு ஸ்தானங்களை ஏற்படுத்தும் முறையானது (Equal temperament) வீணையில் வழங்கும் மெட்டுகளினால் சுருதிகளை நிச்சயப்படுத்தும் முறைக்கு ஒத்ததாகவேயிருப்பதால் நமக்குச் சங்கீத விஷயமாய் அவசிய மாய் வேண்டிய காரியங்களை யெல்லாம் பூர்த்தி பண்ண அதுபோதுமானதா யிருக்கிறது. இப்படி இரு ஜாதியாரும் ஒருவர் வழியை ஒருவர் நோக்காமல் வெவ்வேறுவிதமான வழிகளின் மூலமாய் ஒரேவிதமான முடிவுக்கு வந்ததானது அதிக விந்தையான இசைக் குறிப்பாயிருக்கிறது என்று யாவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆகையால், இந்திய முறையானது ஆதிகாலந் தொடங்கி அதாவது கீழ்த்தேசத்தின் சங்கீதவொளி மேல்தேசத்தில் பிரகாசித்த காலத்துக்கு முன்னேயே தொடங்கி கையாளப்பட்டு வருகின்றதென்று சரித்திர ஆராய்ச்சிகளின் மூலமாய் அறிய இடமிருக்கிறது.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கும்போது வீணையில் வழங்கும் மெட்டுகளினால் சுருதிகளை நிச்சயப்படுத்தும்முறை ஒரு ஸ்தாயியின் சுரங்களைச் சமபாகமாய்ப் பிரித்து ஸ்தானங்களை ஏற்படுத்தும் முறைக்கு ஒத்திருப்பதினால் சங்கீத விஷயமான காரியங்களை பூர்த்தி பண்ண இதுவே போதுமானதாயிருக்கிறது. இது விஷயத்தில் மேற்றிசையாரும் தென்னிந்தியரும் ஒரே விதமான அபிப்பிராயங் களையுடையவர்களா யிருக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறதென்றும் சரித்திர ஆராய்ச்சியின் மூலமாய் வெகு காலத்திற்கு முன்னேயே இது இந்தியாவிலிருந்ததென்று எண்ண இடமிருக்கிறதென்றும் சொல்லுகிறார். இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன்னாலேயே நால்வகையாழும் அவற்றின் இலக்கணமும் தென்மதுரையிலிருந்ததென்று நாம் இதன்முன் பார்த்திருக்கிறோம். அவைகளைப்பற்றிய விபரமும் சுருதி சேர்க்கும் முறையையும் பின்னால் அறிவோம். சாரங்கதேவரால் சொல்லப்பட்ட துவாவிம்சதி முறைகள் கர்நாடக சங்கீதத்திற்கு உதவியாயிருக்குமா அல்லவா என்பதனைப் பற்றி நாம் அறிவது மிக அவசியம். கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னதென்று இன்னும் நிச்சயமாய்ச் சொல்லப்படாதிருப்பதனால் துவாவிம்சதி சுருதிகளுக்கும் இதற்குமுள்ள தாரதம்மியத்தை எடுத்துச் சொல்வது அவ்வளவு தகுதியாயிருக்கமாட்டாJ. இருவித சுருதிகளையும் இனிமேல் ஒத்துப் பார்க்கும்பொழுது, இரண்டிற்கு முள்ள தாரதம்மியத்தைத் தெளிவாய் அறிந்து கொள்வோம். ஆயினும், சங்கீதரத்னாகரம் என்னும் நூலில் கண்டபடி சுருதி குறிக்கிறோமென்று சொல்பவர்களின் கணக்குகளைச் சாரங்கதேவர் கணக்கோடு ஒத்துப்பார்க்க வேண்டியது மிகவும் முக்கியமாயிருக்கிறது. சாரங்கதேவரோ ஒரு ஸ்தாயியில் வரும் சுரங்கள் சமஅளவுடையவை களாயிருக்க வேண்டுமென்று இடையில் வேறு சுரங்களுண்டாகாமல் ஒன்றற்கொன்று தீவிரமாய்ப் படிப்படியாய்ப் போக வேண்டுமென்றும் சொல்லுகிறார். ஆனால் வடதேசத்தில் வழங்கும் கானம் இடைவெளிகளில் வித்தியாசமுடையதாய்க் காணப்படுகிறது. அவைகள் சுரங்களை அளந்து தந்தியை 2/3, 3/4 என்று போடுவதால் உண்டாகும் பல பேதங்களென்று இதன் பின் பார்ப்போம். தென்னிந்தியாவில் வழங்கும் கர்நாடக சங்கீதமோ இவ்விரண்டிற்கும் வித்தியாசமான வேறொருமுறையென்று தெளிவாய்த் தெரிகிறது. மேலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளையும் சங்கீத ரத்னாகரத்தில் வழங்கி வந்த சுருதிகளையும் நன்றாய் அறிந்த பைதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க தத்துவ சாஸ்திரியார் தென்னிந்திய சங்கீதத்தில் கண்ட ம, ப என்ற சுரங்களை காதிற்கேட்டுச் சுருதி கூட்டும் முறையைத் தாம் ஞாபகப்படுத்திக் கொள்ளும் பழக்கமில்லாமையால் 2/3, 3/4 என்னும் அளவினால் குறித்துக் கொண்டு மேற்றேசத்தில் சங்கீதத்தை விருத்தி செய்தார். அது முதல் தென்னிந்திய சங்கீத சுரங்களின் அளவுக்கும் வித்தியாசம் ஏற்பட்டது. நாள் செல்லச் செல்ல அம்முறை சரியான பொருத்தமுடையவையல்ல என்று சிலர் வாதிக்கவும் இதே மாதிரி அளந்துபோடும் முறையைச் சொல்லும் சங்கீத பாரிஜாதம் போன்ற நூல்களைப் பார்த்த இந்திய வித்வசிரோமணிகள் தாங்கள் பாடும் சில ராகங்களுக்கு அது பொருத்தமாயிருப்பதினால் பைதாகரஸ் கண்டுபிடித்த டையடானிக்ஸ்கேல் (Diatonic Scale) சரியென்றும் அதற்குப்பின் ஹார்மனி (Harmony) வரும்படி ஆங்கிலேயர் கண்டுபிடித்த சம அளவுள்ள சுரங்கள் (Equal temperament) சரியல்லவென்றும் குறை சொல்ல ஆரம்பித்தார்கள். இப்படிப் பலபேர் சொல்லும் அபிப்பிராயங்களைக் கவனித்தவர்கள் சங்கீதரத்னாகர முறைப்படி 22 சுருதிகளையும் அத்தோடு கலக்க வெகு பிரயாசைப்பட்டார்கள். சமஸ்கிருத சுலோகங்களிலுள்ளவை உண்மையென்று ஸ்தாபிக்க முயன்றவர்கள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளையும் அவற்றை உள்ளதை உள்ளபடி காட்டி உதவியாயிருந்த வீணையையும் தவறுதல் உடையதென்று சொன்னாலொழிய தங்கள் வார்த்தை செல்லாதென்று அறிந்து நூதன அபிப்பிராயங்களையும் சொல்லுகிறார்கள். துவாவிம்சதி சுருதி என்னும் இடறுகல் இன்னதென்றறிவார்களானால் இப்படிச் சொல்லமாட்டார்கள். அறியாததினாலே சுருதியைப் பற்றிச் சொல்லும் இடமெல்லாம் சந்தேகமும் குதர்க்கமும், ஒழுங்கீனமும் உண்டாகின்றன. நுட்பமான சுருதிகளையுடைய தென்னிந்திய கானத்தில் வழங்கி வரும் சில ராகங்கள் துவாவிம்சதி சுருதி கணக்கின்படியும் குறிக்கக் கூடியதா யிருக்கிறதினால் இது சரியென்று சொல்லவும் சொற்ப ஏதுவிருக்கிறது. ஆனால் 10, 15 ராகங்களுக்காக ஆயிரம் பதினாயிரமான ராகங்களை விட்டுவிடுகிறதா? ஒரு ஸ்தாயியில் 12 சுரங்கள் வருகிற தென்பதையும் அவைகள் இந்திய சங்கீதத்தில் வரும் சுரங்களுக்கும் வீணையில் வரும் சுரங்களுக்கும் சரியாயிருக்கிற தென்பதையும் பின் வரும் வாக்கியங்களில் காணலாம். The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 20. “The Hindu octave, like the European, is divided into twelve semitones. (The view is supported by both Sir W. Jones and Mr. Fowke. “Asiatic researches.”) Sir W. Jones remarks “I tried in vain to discover in practice any difference between the Indian scale and that of our own but knowing my ear to be very insufficiently exercised, I requested a German professor of music to accompany on his violin a Hindu lutenist who sang by note some popular airs on the loves of Krishna and Radha and he assured me that the scales were the same; and Mr. Shore afterwards informed me that when the voice of a native singer was in tune with his Harpsichord he found the Hindu series of seven notes to ascend like ours by a sharp third. From many experiments I am led to believe that a wrong idea as to the temperament of the Indian scale as practically employed has hitherto been held. I played over all the various scales shown later upon a pianoforte tuned to Equal temperament in the presence of several well known Hindustani and Karnatic musicians, all of whom assured me that they corresponded exactly to those of the Vina. Upon comparing the two instruments this was found to be the case as far as could be judged by the ear alone, in every instance. Maula Bux, a man of considerable attainments, took pains to explain to me that the tempering of the modern Indian scales differed in no whit from the European.” “இந்திய ஸ்தாயியானது ஐரோப்பிய ஸ்தாயியைப் போலவே 12 அரை சுரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறJ. (இந்தக் கொள்கையானது Sir W. Jones என்பவராலும் Mr. Fowke என்பவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது என்று Asiatic researches என்ற புஸ்தகத்தில் சொல்லியிருக்கிறது.) Sir W. Jones சொல்வதென்ன வென்றால் அனுபோகத்தில் இந்திய Scaleகும் நம்முடைய Scaleகும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கும்படி எவ்வளவோ பிரயாசப்பட்டும் பயன்பட வில்லை. மேலும் என்னுடைய சங்கீத ஞானம் அதிக அப்பியாசிக்கப் படாதிருந்ததால் சங்கீதத்தில் தேர்ந்த ஒரு ஜர்மன் வித்வானை கிருஷ்ணன், இராதா இவர்களுடைய நேசத்தைப் பற்றிய சில சோகரசமுள்ள கீதங்களை ஒரு இந்து வித்வான் பாடுகையில் அவர் கூட பிடிலில் அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டபோது அந்த ஜர்மன் வித்வான் இரண்டு Scaleகும் யாதொரு வித்தியாசமில்லை என்று எனக்கு எதிர்மொழி பகர்ந்தார். Mr. Shore என்பவரும் ஒரு இந்திய வித்வான் தன்னுடைய Harpsichord or Piano வுக்கு இசைந்து பாடுகையில் இந்து Scale ஆரோகணத்தில் சரியாய் நம்முடைய ஏழு நோட்டுக்கும் ஒத்திருந்ததென்றும் மூன்றாவது நோட்டாகிய காந்தாரம் நம்முடைய E.. நோட்டைப் போலவே சற்றுக் கூடுத (sharp) லாய் இருந்ததாகவும் என்னிடம் சொன்னார். நான் சோதனை செய்து பார்த்த அநேக காரியங்கள் மூலமாய் நான் என்ன அறிந்து கொள்ளுகிறேன் என்றால், அப்பியாசத்தில் இந்து Scale உடைய temperament ஐப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இதுவரைக்கும் யாவருடைய மனதிலும் இருந்தது என்பதே. Equal temperament முறையாய் உண்டாக்கப்பட்டிருந்த ஒரு Piano வில் பேர்போன இந்துஸ்தானி கர்நாடக சங்கீத வித்வான்கள் முன்னிலையில் நான் பல Scale ஐயும் வாசித்துக் காண்பித்தபோது அவர்களெல்லாம் ஏகோபித்து பியானா Piano விலுள்ள சுரங்கள் வீணையின் சுரங்களுக்குச்சரியாய் ஒத்திருந்தது என்று உறுதியாய்ச் சொன்னார்கள். இரண்டு வாத்தியங்களையும் ஒத்திட்டுப் பார்க்கையில் செவியாறலாய்க் கேட்கும்போது இரண்டு வாத்தியங்களிலுமுள்ள சுரங்களுக்கும் யாதொரு வித்தியாசமில்லையென்று தெரிந்தது. சங்கீத வித்தைகளிலும் மற்ற வித்தைகளிலும் பேர்போன Maula Bux என்பவர் தற்கால இந்திய Scale முறைக்கும் ஐரோப்பிய முறைக்கும் கிஞ்சித்தேனும் வித்தியாச மில்லையென்று எனக்கு எடுத்துக்காட்ட அதிகப் பிரயாசப்பட்டார்.” மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் அநேக விஷயங்களை அறிந்துகொள்ள உதவியாயிருக்கும் தென்னிந்திய சங்கீதம் என்னும் புத்தகத்தையெழுதிய Capt. Day என்பவர், ஆங்கிலேயர் தற்காலம் வழங்கி வரும் 12 சுரங்களும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் 12 சுரங்களும் எவ்விதத்திலும் சரியாயிருப்பதாகப் பல பரிட்சைகள் பார்த்ததாகச் சொல்லுகிறார். அதோடு Equal temperament முறையான இச்சுரங்களைப்பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் இதுவரைக்கும் யாவருடைய மனதிலும் இருந்தது என்கிறார். இந்தச் சம அளவுள்ள சுரவரிசை நால்வகையாழ்களின் விபரந்தெரிந்த அறிவாளிகள் இவை பூர்வம் தென்மதுரையில் தமிழ்நாட்டில் இருந்ததென்றும் அதிலும் நுட்பமான சுருதி முறை அக்காலத்திலேயே வழங்கி வந்ததென்றும் அறிவார்கள். பூர்வமாயுள்ள அம்முறை அதன்பின் அளவினால் மேற்றிசைக்கும் போனதினால் அதன் நுட்பம் இழந்து சில விகாரங்களையடந்தJ. அதுபோலவே அந்தப் பன்னிரண்டு சுரங்களுக்குப் பூர்வ நூல்களில் வழங்கி வரும் 22 அலகுகளும் ராசி மானமும் பொருத்தமும் அறியாமல் தவறுதலாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதி வருகிறதென்று பின்னுள்ள நூல்களில் எழுதப்பட்டJ. இப்படி எழுதப்பட்ட ஒரு தவறுதலான முறையும் ஞலவாயபடிசயள கொண்டு போன திட்டமில்லாத ஒரு முறையும் கூடி பல புத்தகங்களாக வெளி வந்திருக்கின்றன. “தான் கெட்டதுமல்லாமல் சந்திரபுஷ்கரணியையும் கூடக் கெடுத்தான்” என்பது போலத் தவறுதலாய் வழங்கும் இந்த இரண்டும் தங்களைப்போல தென்னிந்திய சங்கீதத்தையும் மூக்கறை பண்ணப் பார்க்கிறJ. தென்னிந்திய சங்கீதம் தன்னை ஆதரித்து வந்த பாண்டியராஜர்கள் காலத்திற்குப்பின் விசேஷமாய்ச் சோழ நாட்டில் ஆதரவு பெற்று வந்தது. சோழ நாட்டில் மிகுந்து வழங்கி வந்த தென்னிந்திய சங்கீதம் நீர்வற்றிய குளத்தின் பட்சிகளைப்போல பல இடங்களுக்கும் பறந்து கொண்டிருக்கிறJ. எப்படியிருந்தாலும் தென்னிந்தியாவில் விசேஷமாயிருக்கும் சிவ ஷேத்திரங்களும் விஷ்ணு ஸ்தலங்களுமுள்ள வரையில் கர்நாடக சங்கீதம் இல்லாமல் போகாதென்பது நிச்சயம். ஏனென்றால் சங்கீதத்திற்கு மிகவும் முக்கிய வாத்தியமான வீணையும், குழலும் பூர்வகாலத்தில் வழங்கி வந்தது போலவே தற்காலத்திலும் வழங்கி வருகிறது. இவ்விரண்டும் முழுச் சுரங்களையும் அரைச்சுரங்களையும் அதன் பின்வரும் நுட்பச்சுரங்களையும் இன்னதென்று காட்டக்கூடிய விதமாக அமைந்திருக்கிறJ. இப்படி மேன்மையும் மாறாததுமான ஒரு முறை கர்நாடக சங்கீதத்தில் ஏற்கனவே அமைக்கப் பட்டிருக்கிறதென்று பின்வரும் வாக்கியங்களில் காண்போம்.” The Music and the Musical Instruments of Southern India, by C.R. Day, P. 29. “The following table kindly sent me by Mr. Ellis shows the results obtained from a most minute and careful examination made by him and by Mr. A.J. Hipkins of a beautiful old Vina, in perfect condition now in my possession. This instrument is between two or three hundred years old and is from the collection in the Tanjore palace. the results as will be seen tend to prove that the frets were purposely arranged for something like equal temperament. We see therefore that in India much the same results have been independently arrived at by the native musicians as have been attained by subsequent science in Europe.” “அடியில் சொல்லும் அட்டவணையானது Mr. Ellis உம் Mr. A.J. Hipkins உம் சேர்ந்து ஒரு சிறந்த பழைய வீணையிலிருந்தும் அதி நுட்பமும் ஜாக்கிரதை யுமான ஆராய்ச்சியினால் கண்டுபிடிக்கப்பட்டJ. அந்த வீணை இப்போதும் என் வசமிருக்கிறது. இந்த வாத்தியம் 200, 300 வருஷங்களுக்கு முன் உள்ளது. தஞ்சை அரண்மனையில் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்தவைகளில் ஒன்று. மெட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கைப் பார்த்தால் Equal temperament முறைக்கிணங்கச் சுருதிகளை உண்டாக்குவதற்காகச் செய்யப் பட்டது போலிருக்கிறது. அதிலிருந்து நாம் அறிவதென்னவென்றால் ஐரோப்பாவில் பிற்கால சாஸ்திர விஷயமாய்க் கண்டுபிடிக்கப்பட்ட சங்கதிகள் இந்தியாவில் சங்கீத வித்வான்களால் தங்கள் தங்கள் சொந்த அப்பியாசத் தினாலேயே இதற்கு முன்னே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதே.” மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் தஞ்சாவூரிலிருந்து இங்கிலாந்துக்குக் கொண்டுபோன வீணையைப் பற்றிய சில முக்கிய விஷயங்கள் சொல்லுகிறார். அவ்வீணை தஞ்சாவூர் அரண்மனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தவைகளில் ஒன்றென்றும், அதில் பதிப்பிக்கப்பட்டிருந்த மெட்டுகள் Equal temperament முறைக்கிணங்க சுருதிகளை உண்டாக்குவதற்கு இசைந்தவைகளாயிருந்ததாகவும் காண்கிறது. அதை Mr. Ellis உம் Mr. A.J. Hipkins உம் சேர்ந்து பரிட்சை பார்த்ததாகவும் அதில் ஐரோப்பாவில் 2,000 வருஷமாக வழங்கி வந்த Diatonic Scale சுரங்களைப் போலில்லாமல் hயசஅடிலே பாடுவதற்கு அனுகூலமாக சுமார் 100, 200 வருஷங்களுக்கு முன் ஆங்கிலேயே சங்கீத வித்வான்கள் கண்டுபிடித்திருக்கும் Equal temperament முறைக்கு ஒத்ததாயிருக்கிறதென்றும் வீணையின் சுரங்கள் இந்திய சங்கீத வித்வான்களால் தங்கள் சொந்த அபிப்பிராயத்தினாலேயே ஐரோப்பியர் கண்டுபிடிக்குமுன்னே கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றனவென்றும் சொல்லுகிறார். இவ்வளவு தூரம் முயற்சி எடுத்து விசாரித்து வீணையில் காணும் சுரங்கள் Equal temperament முறைக்குச் சரியாயிருக்கிறதென்றும் இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்த முறையென்றும் உள்ளதை உள்ளபடி வெளியிட்ட Capt. Day என்னும் கனவானுடைய பெருமையை இதன் முன்னும் சொல்லியிருக்கிறோம். இப்பேர்ப்பட்ட ஒருவர் இன்னும் சற்று நுட்பமாக விசாரித்தால் இம்முறை இற்றைக்குச் சுமார் 1,800 வருஷங்களுக்கு முன், இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் அதற்கு அநேக ஆயிர வருஷங்களுக்கு முன் எழுதிய தொல்காப்பியத்திலுமுள்ள சில வரிகளைக் கொண்டு அதிபூர்வமாயுள்ள தமிழ் நாட்டில் வழங்கி வந்த கீதமுறைமையில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் அம்முறைப்படியே நாளதுவரையும் தமிழ் மக்கள் கானம் செய்கிறார்களென்றும் அறியாமற்போகார். சமஓசையுள்ள 12 சுரகானத்தோடு நுட்பமான சுருதிகள் சேர்ந்து வழங்கும் மற்றொரு பெருமுறையும் தென்னிந்தியாவில் நாளதுவரையும் வழங்கி வருகிறது. அவைகளில் வழங்கி வரும்சிறு சுரங்கள் இன்னதென்று பாடுகிறவர்களால் சொல்ல முடியாமலும் கேட்கிறவர்களால் கண்டுபிடிக்க முடியாமலும் இருப்பதினால் அல்லவோ தென்னிந்திய சங்கீதத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ளாமல் போனார்கள். வீணையென்னும் சிறந்த வாத்தியத்தின் அமைப்பும் அதன் ரகசியமும் அதன் பூர்வமும் அறியாத சிலர் மெட்டுகளோடு வழங்கும் வீணைகள் தற்காலம் ஐரோப்பாவில் வழங்கி வரும் சமஓசையுள்ள சுரங்களுக்கு (Equal temperament ) ஏற்றவிதமாகச் சமீபகாலத்தில் தஞ்சாவூரில் அரசாண்டு கொண்டிருந்த சேவப்ப நாயக்கருக்காக அமைக்கப்பட்டதென்றும் சொல்லுகிறார்கள். உண்மையறிந்தால் அப்படிச் சொல்லமாட்டார். வீணையில் காணப்படும் மெட்டுகளின்படி உண்டாகும் சுரங்களே நமது ராகங்களில் பிரதானமாயிருக்கிறவையென்றும் அதில் இரண்டொரு சுரங்கள் ஒரு சுரத்திற்கு கூடிய அல்லது குறைந்த இம்முறையே பூர்வ தமிழ் நூல்களில் எழுதப்பட்டிருந்ததென்றும் பூர்வ தமிழ்நாட்டில் வழங்கி வந்ததென்றும் தெளிவாக இதன்பின் தென்னிந்திய சங்கீத சுருதி முறையில் அறிவோம். ஒரு காலத்தில் சகல கலைகளிலும்சிறப்புற்றோங்கிய தமிழ்நாடு பூர்வ பூமியாயிருந்ததென்றும் அதிலேயே ஜாதிகள் உற்பத்தியானார்களென்றும் அவர்கள் பாஷையே பல பாஷைகளில் கலந்திருக்கிறதென்றும் தமிழ்நாட்டில் மூன்று சங்கங்களிருந்ததென்றும் அதில் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ் ஆராய்ச்சி செய்யப்பட்டதென்றும் இசைத்தமிழாகிய சங்கீதத்திற் குரிய பல நூல்கள் எழுதப்பட்டிருந்ததென்றும் எழுதப்பட்ட சங்கீத நூல்கள் இருமுறை கடலால் அழிந்து போயினவென்றும் பின்வந்தவர்களால் சங்கீதம் விருத்தியாகாமல் குறைந்ததென்றும் சுருக்கமாகப் பார்த்தோம். இப்படிக் குறைந்த நிலையிலுள்ள சங்கீதத்தைப்பற்றித் தற்காலத்திலுள்ள சில கனவான்கள் சொல்லும் அபிப்பிராயத்தையும் கவனித்தோம். அதில் வடதேச கானம் இந்துஸ்தான் கானம் தென்னிந்திய கானம் என்னும் மூன்றிலும் தென்னிந்திய கானமே மார்க்க விதியுடையதென்றும் சாஸ்திரயுக்தமான தென்றும் பலபல ராகங்களையுடையதென்றும் பிறர் சொல்லும் அபிப் பிராயத்தைத் தெளிவாகக் கண்டோம். தென்னிந்திய கானம் மாறாத அமைப்புடையதாய் அழகுடையதாய் தோன்றுவதற்கு ஒவ்வொரு ராகத்தில் வரும் சுரங்கள் ஆரோகண அவரோகணத்தில் இன்னின்ன சுருதியுடைய சுரங்கள் வர வேண்டுமென்றும் சாடவ ஒளடவ ராகங்களில் விடப்பட்ட சுரங்கள் அவ்விராகத்தின் சஞ்சாரம் முற்றிலும் விலக்கப்பட வேண்டு மென்றும் முன்பின்னாக வரும் சுரங்கள் (வக்கிரசுரங்கள்) ராகசஞ்சார முழுவதிலும் தன் இனத்தையே முற்றிலும் ஒத்திருக்க வேண்டுமென்றும் ஆரோகண அவரோகணத்திலில்லாத சுரங்கள் ராகசஞ்சாரத்தில் முறை பிறழ்ந்து வழங்காமலிருக்க வேண்டுமென்றும் ஒவ்வொரு ராகத்தின் ஜீவசுரங்கள் இன்னதென்றும் இன்னின்ன காலத்தில் இன்னின்ன சமயத்தில் இன்னின்ன ராகங்கள் பொருத்தமாயிருக்கு மென்றும் இன்னின்ன பண்களுக்கு இன்னின்ன ராகம் சொல்லப்பட வேண்டுமென்றும் பரம்பரையாய்ப் போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்விதமான முறைகள் தொன்றுதொட்டு ராஜாக்களின் மானியங்களினாலும் கோவில் சம்பள உம்பளங்களினாலும் ஆதரிக்கப்பட்டு வந்தன. மேலும் ராஜசபையிலும் கலியாணகாலங்களிலும் பட்டணப் பிரவேச காலங்களிலும் காலாகாலத்தில் சங்கீதம் உபயோகிக்கப்பட்டு வந்தது. அரண்மனைகளிலும் கோயில்களிலும் அந்திசந்தி மத்தியானம் என்னும் மூன்று காலங்களிலும் சங்கீதம் முழங்கத் தினக் கட்டளை ஏற்படுத்தி அதற்கு ஏற்றதாகப் பாடகர்களை நியமித்தார்கள். ஒரு ராஜ்யத்தில் ஆண்டுகொண்டிருக்கும் ராஜன் தன்ராஜ்யத்தின் பலபாகங்களிலும் பலகோயில்கள் கட்டி அதற்கு வேண்டிய பொருள் தரும் மானியங்கள் விட்டு ஆராதனை காலங்களில், மணி, சங்கு, பேரிகை, மத்தளம், நாகசுரம், புல்லாங்குழல், வீணை முதலிய வாத்தியங்கள் வாசிப்பதற்கும் தேவாரம் திருவாசகம் திருவாய்மொழி முதலிய தோத்திரங்கள் சொல்வதற்கும் பாடுவதற்கும் ஆடுவதற்கும் தகுதியான பேர்களை நியமித்து அவர்களுக்கு வீடும் சம்பள உம்பளங்களும் ஏற்படுத்தி வைப்பது வழக்கம். இப்படியே ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிவஷேத்திரங்களையும் விஷ்ணுஷேத்திரங்களையும் நாம் மிகுதியாய் அறிவோம். அவைகளில் சங்கீத ஊழியஞ் செய்யும் வகுப்பார் சங்கீதத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்டு அதையே அப்பியாசித்துக் கொண்டும் அதையே விருத்தி செய்து கொண்டும் நாளதுவரையு மிருக்கிறார்கள் என்பதை நாம் யாவரும் அறிவோம். இம்முறை இன்று நேற்றல்ல, பல ஆயிர வருஷங்களாக நடந்து வருகிறது. இதனாலேயே தென்னிந்திய சங்கீதம் தேசிகம் கலவாமல் கர்நாடக சுத்தமாயிருக்கிறதென்று சொல்ல வேண்டும். வாய்ப்பாட்டுப் பாடும் மற்றவர் கானத்திற்கும் கர்நாடக சுத்தமாய் வாசிக்கும் ஒரு நாகசுரத்திற்குமுள்ள பேதத்தை அறிவாளிகள் காண்பார்கள். கோயில்களில் வாசிக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், நாகசுரம் முதலிய இனிய கானத்தில் ஈடுபட்ட சில பிரபுக்களும் மற்றவரும் அதைப் பாடம் பண்ணி தாங்கள் ஆனந்தித்ததோடு பிறரையும் ஆனந்திக்கச் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களுள் சிலர் மிகுந்த பாண்டித்தியமடைந்து பிறரால் கொண்டாடப்பட்டு சன்மானிக்கப்பட்டும் வந்தார்கள். வேறு சிலர் பிரதிப் பிரயோஜனத்தை விரும்பாமல் பகவானைத் துதிப்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவிட்டார்கள். மற்றும் சிலர் சங்கீத சாஸ்திரத்தின் சிலசில பாகங்களை எழுதினார்கள். இப்படித் தோன்றிய வித்வசிரோமணிகளில் முக்கியமானவர்களைப் பற்றியும் சில குறிப்புகள் பார்ப்பது சங்கீதத்தைப் பற்றி விசாரிக்கும் நமக்குப் பிரியமாயிருக்குமென்று நம்புகிறேன். VI. தென்னிந்திய சங்கீதத்தை அப்பியாசித்து வந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள். 1. பொதுக் குறிப்புகள். சீர்பெற்றிலங்கிய தென்னிந்திய கண்டமே அதாவது குமரிநாடே லெமூரியாக் கண்டமென்றும் அந்நாட்டில் பேசப்பட்டு வந்த பாஷை தமிழ் என்றும் அங்கே அரசாட்சி செய்து வந்தோர் பாண்டிய ராஜர்களென்றும் அவர்கள்முதல் சங்கம் கூட்டி அறிவிற் சிறந்த ராஜர்களையும் தபோதனர்களையும் வித்வான்களையும் ஒன்று சேர்த்துப் பல கலைகளையும் ஆராய்ச்சி செய்து நூல் எழுதி வந்தார்களென்றும் இதன் முன் சுருக்கமாகப் பார்த்தோம். அவற்றுள் முத்தமிழில் ஒரு பாகமாக அப்பியாசிக்கப்பட்டு வந்த சங்கீதம் குமரிநாடு அழிந்தபின் பலவிதத்திலும் சீர்கெட்டுத் தனக்குரிய ஆதார நூல்களையும் இழந்ததென்றும் அதன்பின் இடைச்சங்க காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் மீதியாயிருந்த சில சிறிய நூல்கள் எழுதப்பட்டும் சிலகாலம் நின்று பின் மறைந்து போயினவென்றும் இதன் முன் பார்த்தோம். கடைச்சங்க காலத்திலும் அதற்குப் பிற்காலத்திலும் தென்னிந்தியாவிற்கு வந்த பலராலும் தென்னிந்திய சங்கீதம் அப்பியாசிக்கப்பட்டதென்றும் அக் காலத்திலேயே வெவ்வேறு பாஷைகளில் எழுதப்பட்டதென்றும் நினைக்க ஏதுவிருக்கிறது. ஏனென்றால் பூர்வ தமிழ்நாட்டில் வழங்கி வந்த கானத்தில் வரும் 22 அலகுகள் என்ற வார்த்தையை இன்னதென்று அறிந்து கொள்ளாமல் 22 சுருதிகள் ஒரு ஸ்தாயியில் வரவேண்டுமென்று சந்தேகப்படும் நிலையில் மற்றப் பாஷையில் எழுதி வைத்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பழக்கத்தி லிருக்கும் கானம் முறையையுடையதாகவும் 22 சுருதிகளுக்கு ஒவ்வாத தாகவும் நாளது வரையுமிருந்து வருகிறது. மற்ற பாஷைகளில் 400, 500, 1,000, 2,000 வருஷங்களுக்குமுன் எழுதப்பட்டதாகத் தாங்கள் சொல்லும் சில சூத்திரம் தன்னிலேயே தலைதூக்கி நிற்கத் தகுதியில்லாதிருந்தாலும் தலை தூக்கி நிற்கும் தென்னிந்திய சங்கீதத்தையும் தள்ளாடும்படியான சந்தேகத் துக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறJ. இச்சந்தேகமும் அன்னிய பாஷையில் எழுதப்பட்ட நூல்களை வாசித்தறியக்கூடியவர்களிடத்திலுண்டாகிறதே யொழியக் கர்நாடக சங்கீதத்தைப் பரம்பரையாய்ப் பழகியவரும் தொன்று தொட்டு தேவஸ்தானங்களினால் ஆதரிக்கப்பட்டவருமாகிய ஊழியக் காரருக்குள் அல்லது சங்கீதக்காரருக்குள் உண்டாகிறதில்லை. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருமானால் அவை தென்னிந்திய சங்கீதத்திற்கு ஒத்துவராதென்றும் வேதம் சொல்லும் சுரங்களுக்கு சரியாயிருக்கமாட்டா தென்றும் அது வழக்கத்துக்கு வராத ஒரு முறையென்றும் தென்னிந்திய கானம் 22 சுருதியின்படியில்லையென்றும் சொல்லும் கனவான்களின் அபிப் பிராயத்தையும் இதன் முன் பார்த்திருக்கிறோம். 22 சுருதியென்று அறியாமலும் துவாவிம்சதி சுருதியென்ற பெயரையே கேட்காமலுமிருக்கிற அநேக வித்வான்கள் இன்றுமிருக்கிறார்கள். மற்றும் சிலர் துவாவிம்சதி சுருதி யென்ற சொல்லைக்கொண்டு தங்கள் அனுபோகத்திலிருக்கும் தென்னிந்திய சங்கீதத்தைப் பரீட்சித்துப் பார்த்துச் சொல்ல இயலாதவர்களாயிருக்கிறார்கள். இப்படி சுருதியைப்பற்றிய திட்டமான நூல் ஆதாரமில்லாதிருந்தாலும் பரம்பரையாய் சங்கீதத்தையே படித்து அதைச் சேர்ந்ததான வீணை, புல்லாங்குழல், நாகசுரம், மேளம், மிருதங்கம், பரதம், வாய்ப்பாட்டு முதலியவைகளில் தேர்ச்சி பெற்றுக் கோயில் தோன்றிய கால முதல் கோயில் சம்பளத்தினாலேயே ஆதரிக்கப்பட்டு வரும் ஜனங்களால் தென்னிந்திய சங்கீதம் ஒருவாறு காப்பாற்றப்பட்டும் அவர்களால் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது. தான் உண்டாக்கினதெல்லாம் நல்லதென்று கண்ட கர்த்தன் தன் சமுகத்தில் சகல பரிசுத்தவான்களும் தங்கள் தங்கள் வாத்தியங்களுடன் “கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று பாடவும் துதித்துக் கொண்டு ஆடவும் பார்த்து வீற்றிருக்கிறாரென்று சொல்லுவதை நாம் கவனிக்கையில் சங்கீதத்தின் தோற்றத்திற்கும் அதன் விருத்திக்கும் தெய்வமே முதல்வரென்று தெளிவாகத் தெரிகிறது. மேலும் உலகத்திலுள்ள பக்தர்களும் சகல ஜீவபிராணிகளுமான யாவற்றின் துதியையும் கர்த்தனே அடைகிறான் என்று சொல்வதைக் கொண்டு சங்கீதத்தின் பிரயோஜனமும் உயர்ந்தென்று அறிகிறோம். தெய்வத்தால் உண்டாக்கப்பட்ட யாவும் தங்கள் தங்களுக்குரிய இன்னிசை யால் பகவானைத் துதிக்கிறதாகக் காண்கிறோம். ஆகாயமண்டலத்தில் நாம் காணும் கிரங்களும் வானஜோதிகளும் தங்களைத் தாங்களே சுற்றும் வேகத்தினால் இனிய நாதமுண்டாகிறJ. அவைகள் பரிமாணத்தில் சிறிது பெரிதாயிருப்பதினால் வெவ்வேறு ஓசைகள் பிறக்கின்றன. பெரிய சிறகுடைய ஒலுங்குகள் பறக்கும்போது உண்டாகும் ஓசையைப் பார்க்கிலும் அதிக சிறிதான கொசுக்கள் பறக்கும்போதுண்டாகும் ஓசை உச்சமாயிருக் கிறதென்று நாம் அறிவோம். இதோடு மெதுவாய்ச் சுற்றும்பொழுது மந்தமான ஓசையும் அதிவிரைவாய்ச் சுற்றும்பொழுது உச்சமான ஓசையும் உண்டாகிறது. அப்படியே வானஜோதிகள் தாங்கள் சுற்றும்போது உண்டாகும் ஓசையினால் பகவானைத் துதிக்கின்றன. அதுபோலவே ஒவ்வொரு ஜீவர்களும் தங்கள் உத்தமமான ஜீவியத்தாலும் பக்தியாலும் கானத்தாலும் பகவானைத் துதிக்கிறார்கள். தாவரராசிகள் தங்கள் கனியின் மதுரத்தாலும் புஷ்பத்தின் வாசனையாலும் பலன்களின் நன்மை யாலும் பகவானைத் துதித்தும் மற்றவர்கள் துதிக்க ஏவியும் வருகின்றன. சோலையில் வசிக்கும் பட்சிகள் பகவானைத் துதித்துப் பாடுவதை நாம் நன்றாய் அறிவோம். அப்படியே நவமணிகள் தங்கள் ஒளியினாலும் அருவிகள் தங்கள் ஓசையினாலும் ஆறுகள் தங்கள் ஒலியினாலும், கடல்கள் தங்கள் அலை இரைச்சலாலும் ஓயாமல் துதித்துக்கொண்டே யிருக்கின்றன. இப்படித் தெய்வத்தைத் துதித்துக் கொண்டேயிருக்கும் உத்தமமான வழக்கம் ஜீவபிராணிகள் யாவருக்கும் இயற்கையாய் உரியJ. அப்படியிருந்தாலும் விசேஷமாக சிலர் மாத்திரம் சங்கீதத்தை அப்பியாசித்து பிறர் ஆனந்திக்கக் கூடியதாகச் சொல்லத்தகுந்தவர்களா யிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னகாலத்தி லிருந்தார்களென்று திட்டமாய்ச் சொல்லக்கூடாத சரித்திரமுடையவர்களாயிருக்கிறார்கள். என்றாலும் ஒருவாறு அவர்கள் சங்கீதப் பயிற்சியையும் அவர்கள் பெருமையையும் பார்ப்பது நம்மை ஞாபகப்படுத்தும் ஒரு குறிப்பாயாவது இருக்குமென்று நம்புகிறேன். பாண்டிய ராஜ்யம் கடைச்சங்கம் அழிந்தபின் பலவிதத்திலும் சீர்கெட்டு சோழ ராஜாக்கள் சிலரால் ஜெயிக்கப்பட்டும் பின் சிலகாலம் தனி அரசு பெற்றும் மாறி மாறி சுமார் 2000 வருஷத்திற்கு முன்னிருந்தே குறைந்த நிலைக்கு வந்ததென்றும் இற்றைக்கு 700, 800 வருஷங்களாக முற்றிலும் அந்நியர் ஆளுகைக்குட்பட்டதென்றும் நாம் அறிவோம். 2. சோழ ராஜ்யத்தின் சங்கீத நிலை கி.மு. 272-231 வரையும் அரசாண்டு கொண்டிருந்த வடதேசத்துப் புத்த சமயத்தரசனான அசோகனுடைய புத்திரனும் புத்திரியும் தென்னாட்டிற்கு வந்ததாகவும் சேர சோழ பாண்டிய ராஜாக்களுடன் உடன்படிக்கை செய்த தாகவும் கி.மு. 247-இல் சோழ ராஜ்யத்தார் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றதாகவும் அதன்பின் கி.மு. 150-இல் மறுபடியும் படையெடுத்ததாகவும் இலங்கைச் சரித்திரத்தால் தெரிகிறது. அதன்பின் கி.பி. 50 முதல் 95-ம் வருஷம் வரையும் சோழ ராஜ்யத்திற் கரசனாயிருந்த முதலாவது கரிகால் சோழன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராக்கிக் கொண்டு பிரபலமாக அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தன் ராஜ்யம் நீர்வளம் பொருந்தியதாயிருக்கவேண்டிப் பல அணைகளும் ஆற்றிற்குக் கரைகளும் கட்டுவித்தான். அநேக வாய்க்கால்களும் வெட்டினான். கடல்வளம் பெருக்கி கப்பல்கள், படகுகள் முதலிய நீரோடும் கலங்கள் செய்து சீனா, பர்மா, கிரேக்கு, ஜாவா முதலிய தேசத்தாரோடு வியாபாரம் செய்து வந்தான். கரைத்தொழில் கடற்றொழில் முதலியவைகளுக்கு வேண்டிய உதவி புரிந்து தொழிலாளர்களை விருத்தி செய்தான். நீதி சாஸ்திரம், வேத சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், வான சாஸ்திரம், யுத்த சாஸ்திரம் ஆகிய ஐந்து சாஸ்திரமும் தெரிந்தவரை ஒரு சபையாகச் சேர்த்து அவர்கள் யோசனைகேட்டு அரசாட்சி நடத்தி வந்தான். அவன் காலத்தில் தமிழ்ப் பாஷையும், அதன் சிறந்த கலைகளும் மிகவும் விருத்தியடைந்தன. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் தேர்ந்த புலவர்களையும் தமிழ்ப்புலமையிற் சிறந்த பெண்மணிகளையும் மிகவும் ஆதரித்து வந்தான். முதலாவது கரிகால் சோழனாகிய இவன் காலத்தில் சேர ராஜ்யத்தில் சேரன் செங்குட்டுவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். இவன் தம்பி இளங்கோவடிகள் துறவியாய்த் தவசுபண்ணிக்கொண்டிருந்தார். பாண்டிய ராஜ்யத்தில் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் மதுரையில் அரசாண்டு கொண்டிருந்தான். வெள்ளி அம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி என்னும் பாண்டியனும் இவன் காலத்திலிருந்ததாகத் தெரிகிறது. அதோடு காவிரி நதியின் சங்கமுகத்திலுள்ள காவிரிப்பூம் பட்டினத்தில் மாசாத்துவான் என்னும் வணிகன் மகன் கோவலன் அந்நகரிலுள்ள மாதவி என்னும் நடனக் கன்னிகையை அவள் ஆடல் பாடல்களால் நேசித்துத் தன் பொருளெல்லாம் இழந்தபின் மதுரைமா நகருக்குச் சென்று மீந்த பொருளாகிய சிலம்பை விற்கும் சமயம் அது அரண்மனைச் சிலம்பென்று அவ்விடத்துள்ள பொற்கொல்லன் பாண்டியன் சமுகம் தெரிவிக்கப் பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்லும்படி ஆக்கினை செய்தான். அச்சமயத்தில் கோவலன் மனைவி கண்ணகி என்பவள் ராஜ சமுகம் சென்று சிலம்பு, திருடிய சிலம்பல்ல, தன் சிலம்பென்று ருசுபடுத்தியவுடன் பாண்டியன் நெடுஞ்செழியன் தீர விசாரியாமல் இக்காரியம் செய்தோமென்று சிம்மாசனத் திலிருந்து திடீரென விழுந்து இறந்தான். இச்சம்பவத்தில் கூடிய ஜனங்கள் கோவலனைப் பொய்யாய்க் குற்றஞ்சாட்டிக் கொல்லுவித்த பொற்கொல்லர் வீதிக்கு அழுது சென்ற கண்ணகியுடன் சென்றார்கள். அவ்வீதி முற்றிலும் நெருப்பால் அழிந்தJ. இச்சம்பவம் கரிகால் சோழன் காலத்தில் நடந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாடுகள் மூன்றில் ஒன்றான சோழநாட்டில் வீணை வாசித்தலின் திறமை காணப்படுகிறது. சேரநாட்டில் இளங்கோவடிகளால் வீணையின் விபரம் சொல்லப்படுகிறது. இவ்விரண்டும் பாண்டிய ராஜ்யத்தில் விஸ்தாரமாயிருந்ததென்றும் சங்கப் புலவர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்ததென்றும் சிறந்த நூல்கள் இருந்ததென்றும் இதன் முன் பார்த்திருக்கிறோம். இம்மூன்று ராஜ்யங்களிலும் முதன்மை பெற்றிருந்த பாண்டிய ராஜ்ஜியம் அழிந்தபின் அதைக் கைப்பற்றிய சோழ ராஜாங்கத்தின் ஆதரவின் கீழ் சங்கீதமும் மற்றும் கலைகளும் விருத்தியாகி வந்தன. பூர்வத்திலுள்ள ராஜர்கள் ஒரு ராஜ்யத்தை ஜெயிக்கும் பொழுது அவ்விடத்தி லுள்ள பொருள்களைப் பெரிதாய் எண்ணாமல் சங்கீத வித்வான்களையும் மற்றும் கலை வல்லோரையும் சிறைபிடித்துப் போனர்களென்றும் தங்கள் நாட்டில் அவர்களை வைத்து ஆதரித்துக் கல்வி விருத்தி செய்தார்களென்றும் இதன்முன் அடிக்கடி பார்த்திருக்கிறோம். அதுபோலவே கரிகால் சோழனும் பலவகையிலும் தன் நாட்டைக் கல்விப் பொருளாலும் செல்வப் பொருளாலும் வளப்படுத்தினான். இவனைப்பற்றி அக்காலத்திருந்த உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப்பாலையிலும் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் மற்றும் விபரம் யாவும் விரிவாகக் காணலாம். இதன்பின் இவன் மகன் நலங்கிள்ளி என்னும் சோழன் கி.பி. 95 முதல் 105 வரையும் அரசாண்டான். இவன் புத்திரன் கிள்ளிவளவனும் அவன் சகோதரன் பெருநற்கிள்ளி என்பவனும் கி.பி. 105 முதல் 150 வரையும் அரசாண்டார்கள். பெருநற்கிள்ளி என்பவர் காலத்தில் திருசிராப்பள்ளிக்குச் சமீபத்திலுள்ள உறையூர் ராஜதானியாக்கப்பட்டது போலும். மேலும் பெருநற்கிள்ளி என்பவர் ஒரு ராஜசூயயாகம் செய்தாரென்றும் அதற்குச் சோழராஜனும் பாண்டியராஜனும் இலங்கை அரசனும் வந்திருந்தார் களென்றும் தெரிகிறது. இவருக்குப்பின் இரண்டு தலைமுறை ராஜ்ய மிருந்ததாகத் தெரிகிறது. கி.பி. 130-246 வருஷம் வரை உறையூர் சோழ ராஜ்யத்தின் தலைநகராயிருந்தJ. அதன் பின் சோழ ராஜர்களைப் பற்றி விபரம் காணோம். சுமார் கி.பி. 600-ம் வருஷத்தில் கோச்செங்கண்ணான் என்னும் சோழராஜன் ஒருவரிருந்ததாகவும் இவர் மிகவும் தெய்வபக்தியுடையவராய்ச் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களுமாக 70-க்கு மேற்பட்ட ஆலயங்கள் கட்டினதாகவும் “Tanjore District Gazetteer” என்னும் புஸ்தகத்தினால் தெரிகிறது. இவர்பின் விஜயாலயன் என்னும் சோழராஜன் காஞ்சிபுரத்திலிருந்து தஞ்சாவூரை ஜெயித்து பரகேசரிவர்மன் என்னும் பட்டப்பெயருடன் உக்கல், காஞ்சிவரம், திருக்கோயிலூர், சுசீந்திரம் முதலிய இடங்களைக் கட்டிக்கொண்டு ஆளுகை செய்து வந்தாரென்று அங்கங்குள்ள கல் சாசனங்களால் தெரிகிறது. கி.பி. 846 முதல் 880 வரையும் இவர் காலமாம். இவருக்குப்பின் இவர் பிள்ளையாகிய முதல் ஆதித்திய ராஜகேசரிவர்மன் கி.பி. 880-ம் வருஷ முதல் 907-ம் வருஷம் வரை அரசாட்சி செய்தார். இவர் பாண்டியராஜனாகிய வரகுண பாண்டியனையும் பல்லவ் அபரஜித்தையும் ஜெயித்துக் கொங்கு நாட்டையும் தன் ஆளுகைக் குட்படுத்தினார். இவருக்குப்பின் பராந்தகர் I அல்லது பரகேசரிவர்மன், வீரநாராயணன் என்ற பட்டப் பெயருடன் கி.பி. 907 முதல் 947 வரையும் அரசாட்சி செய்தார். இவர் பாண்டியராஜ்யத்தில் ராஜசிம்மனோடு கி.பி. 910-ல் சண்டை செய்து ஜெயித்தார். சிதம்பரம் கோயில் பெரிய சபைக்குத் தங்க ஓடுகள் போட்டிருக்கிறார். இவர் ஆட்சி செய்த 40 வருஷத்தில் 37-ம் வருஷம் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று அவ்விராஜனோடு சண்டை செய்து அதைத் தன் ஆளுகைக்குட்படுத்தினார். இவருக்கு ஐந்து புத்திரர்களிருந்தார்கள். இவர்களில் முதல்வனான ராஜாதித்யன் என்ற பட்டப்பெயருள்ள ராஜகேசரிவர்மன் பட்டத்துக்கு வந்தான். இவர்க்குப் பின் இவர் தம்பியாகிய கண்டராதித்தன் பட்டத்துக்கு வந்தார். இவர் இறந்த பின்இவர் மனைவி கோனேரி ராஜபுரத்தில் ஒரு கோயில் கட்டி அதில் தன் புருஷன் சிலையையும் ஸ்தாபித்து வைத்தாள். இவர் தம்பி அருஞ்செயன் அல்லது அருச்சுனா. இவர் பிள்ளை பராந்தகன் II அல்லது சுந்தரசோழன். இவர்க்குப்பின் ஆதித்தியர் II அல்லது கரிகாலன் II. இவர்க்குப் பின் பரகேசரிவர்மன் அல்லது உத்தமச்சோழன் கி.பி. 970 முதல் 985 வரையும் அரசாண்டார். இவர் தனக்குப்பின் ராஜராஜன் பட்டத்துக்கு வரவேண்டுமென்று வாக்குக் கொடுத்து அவர் மைனராய் (Minor) இருக்கும் பொழுது ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. ராஜராஜசோழன் என்பவர் சோழராஜர்களுள் மிகச் சிறந்தவராகத் தெரிகிறது. பூர்வம் சோழராஜ்யத்தின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டு கொண்டிருந்த முதலாம் கரிகால் சோழன் எவ்வளவு பிரபல ராஜனாயிருந்தானோ அப்படியே இவனுமிருந்தானென்று சொல்ல வேண்டும். இவன் யுவ ராஜனாயிருக்குங் காலத்தில் அருமொழித்தேவன் என்று பெயர். தான் ராஜ்யத்திற்கு வந்த மூன்றாம் வருஷத்தில் மும்முடிச்சோழன் என்று பெயர் வைத்துக் கொண்டான். பன்னிரண்டாம் வருஷத்தில் காந்தளூர் முதலிய கரைப் பட்டணங்களைப் பிடித்துக் கொண்டான். பதினாலாம் வருஷத்தின் துவக்கத்தில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகை பாடி, வெங்கைநாடு முதலியவைகளை ஜெயித்தான். பதினாலாம் வருஷத்தின் பின் பாகத்தில் பாண்டியராஜ்யத்தையும் பதினாறாம் வருஷம் கொல்லத்தையும் கலிங்கத்தையும் 20-ம் வருஷத்தில் இலங்கையையும் ஜெயித்தான். 29-ம் வருஷத்தில் லக்கதீவுகளைச் சேர்ந்த 12,000 தீவுகளையும் பிடித்துக் கொண்டானென்று சொல்லப்படுகிறது. கடைசிக்காலங்களில் இவனுக்கு ஜெயங் கொண்டானென்றும் ராஜாஸ்ரயன் என்றும் பெயர் வழங்கிற்று. இவர் தஞ்சை மாநகரிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினான் என்ற தோன்றுகிறது. இவ்வாலயத்தில் எழுதப்பட்ட சிலாசாசனங்களில் இவனும் இவன் மனைவியரும் மற்றும் குடும்பத்தாரும் பல தருமங்கள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இவன் காலத்தில் சங்கீதமும் மற்றும் அருங்கலைகளும் விருத்தியாகியிருந்ததாகக் காணலாம். இவன் சோழராஜ்யத்தின் பிரபலமா யுள்ள சில ஆலயங்களுக்குப் பாடகர்களை நியமித்து அவர்களுக்குக் குடியிருப்பு இடங்களும் மானியங்களும் தினக்கட்டளையும் ஏற்படுத்தி யிருக்கிறான். இவன் மரணமடைகையில் மதுரை திருநெல்வேலி தவிர சென்னை ராஜதானியிலுள்ள பூமி முழுதையும் ஆண்டுகொண்டிருந்தான். இன்னும் தான் ஜெயிக்கிறதற்கு நாடுகளில்லையே யென்று வருத்தப் பட்டானாம். மிகவும் பராக்கிரமமுள்ள இவ்வரசன் 1013-ல் இறந்தான். இவன் குமாரன் ராஜேந்திரன் அல்லது கங்கைகண்ட சோழன், முடிகொண்ட சோழன், உத்தமசோழன் என்ற பெயர்களுடன் கி.பி. 1010-1042 வரை ஆண்டான். அக்காலத்தில் கலிங்க நாட்டையும் கங்கை நதிப் பிரதேசங்களையும் பர்மா தேசத்தையும் ஜெயித்துத் தன் ஆளுகைக்குள் படுத்தினான். இவன் மகன் ராஜாதிராஜன் 1042-ல் பட்டத்துக்கு வந்தான். இவனுக்கும் சோமேசுர சாளுக்கியனுக்கும் ஓயாது சண்டை நடந்த கொண்டிருந்தது. இவன் 1052-ம் வருஷத்தில் துங்கபத்திரா நதிக்குச் சமீபத்தில் கோப்பம் என்ற இடத்தில் சண்டையில் இறந்தான். இவன் இறந்தவுடன் இவன் சகோதரன் சோமேசுர சாளுக்கியனுடன் சண்டை செய்து வெற்றியடைந்து 1052-1061 வரை அரசாட்சி செய்தான். இவன் பின் வீர ராஜேந்திரன் அல்லது சகல புவனாசிரயர் என்பவர் 1062-1070 வரையும் அரசாட்சி செய்தார். இவர் முந்தின ராஜேந்திரனுடைய சகோதரர். இவர் காலத்தில் கங்கைவாடியிலிருந்து விக்கிரமாதித்தன் படை யெடுத்து வந்தான். அவனை ஜெயித்து ஓடும்படி துரத்தினார். வைக்கலன் என்பவனை வேங்கி நாட்டில் ஜெயித்தார். பெஜவாடாவிலும் துங்கபத்திரா சங்கமத்திலும் சாளுக்கியரை ஜெயித்தார். தான் பட்டத்துக்கு வந்த ஐந்தாவது வருடத்தில் கேரளம், பாண்டியம், கலிங்கம் என்னும் நாடுகளை ஜெயித்து ராஜாதிராஜன் என்னும் பட்டப் பெயருடன் அரசாட்சி செய்தார். இவன் மகன் அதிராஜ ராஜன் ஒரு வருஷம் ஆண்டான். அதன்பின் ராஜராஜன் குமாரத்தி மகன் ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன் என்ற பட்டப்பெயருடன் காஞ்சிபுரத்தில் ராஜப் பிரதிநிதியாய்ப் பன்னிரண்டாம் வயதில் நியமிக்கப்பட்டான். குந்தளதேசம் என்ற காவிரிக்கரையிலுள்ள நாட்டிற்கு ராஜனானான். பாண்டியராஜனை ஜெயித்தான். மன்னார்குடாவைத் தன் வசப்படுத்திக்கொண்டான். திருநெல்வேலி பொதியமலை, கன்னியாகுமரி, கோட்டாறு, சையமலை, குடமலைநாடு, விழிஞம், சாலை முதலிய இடங்களை 1085-ல் ஜெயித்தான். இவன் காலத்தில் மதுரை தவிர சென்னை ராஜதானி முழுதும் சோழ ராஜ்யத்தைச் சேர்ந்ததாயிருந்தJ. இவன் காலத்தில் நில அளவு ஏற்பட்டது. அந்த அளவுகோலுக்கு ஸ்ரீபாதம் என்று பெயர். கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் என்பவர் இவன் காலத்திலிருந்தார். வேங்கி தேசத்தையும் கலிங்கத்தையும் 1084-ல் ஜெயித்து சோழராஜாக்களில் சிறந்தவராய் விளங்கினார். சக்கிலர் இவர் காலத்திலிருந்தார். இவர் தன் காலத்தில் வழங்கி வந்த சில சுங்கங்களைத் தள்ளிவிட்டதனால் இவர்க்கு சுங்கந் தவிர்த்த சோழன் என்று பெயர் வழங்கலாயிற்று. இவருக்குப் பின் விக்கிரமச்சோழன் 1118 முதல் 1135 வரையாண்டு வந்தார். இவர் குலோத்துங்கனின் நாலாவது மகன். இவருக்குப் பின் இரண்டாவது குலோத்துங்கன் 1135 முதல் 1150 வரையும் திரிபுவனச் சக்கிரவர்த்தி என்ற பெயருடன் அரசாண்டு வந்தார். இவர் காலத்தில் ஒட்டக்கூத்தர் இருந்தார். இரண்டாவது ராஜாதி ராஜ சோழன் 1164 முதல் 1178 வரையும் அரசாண்டார். இவர் காலத்தில் சக்கிலர், கம்பன், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, அடியார்க்குநல்லார் முதலிய வித்வ சிரோமணி களிருந்ததாகத் தெரிகிறது. மூன்றாவது குலோத்துங்கன் 1178 முதல் 1216 வரையும் அரசாட்சி செய்தார். இவர் மிகுந்த தெய்வ பக்தியுடையவர். அநேக சிவாலயங்களைப் புதிதாகக் கட்டியும் அநேக பழைய சிவாலயங்களைப் பழுதுபார்த்தும் வைத்தார். இவர் பின் திரி விக்கிரம சக்கிரவர்த்தி அல்லது மூன்றாவது ராஜாதி ராஜ சோழன் 1216-ல் பட்டத்துக்கு வந்து 1244 வரையும் ஆண்டு கொண்டிருந்தார். அதன்பின் ராஜேந்திர சோழ தேவர் 1245-1267 வரையும் ஆண்டார். இவர்களைப் பற்றிய இன்னும் சில விவரங்களைக் கிருஷ்ணசாமி ஐயங்கார் M.A. எழுதிய “இந்திய பூர்வ சரித்திரம்” என்ற புஸ்தகத்திலும் “Tanjore District Gazertteer” என்னும் புஸ்தகத்திலும் காணலாம். ராஜேந்திர சோழ தேவருக்குப்பின் அதாவது 1267-ம் வருஷத்திற்குப்பின் சரியான ராஜாக்களில்லாமல் சோழ ராஜ்யத்தின் பலம் வரவரக் குறைந்து சுமார் 300 வருஷங்களாகப் பலவித துன்பங்களையும் அடைந்து வந்தது. அதில் 1310-ல் மாலிக்காபர் என்னும் மகம்மதியர் மதுரையையும், திருசிராப்பள்ளியையும் ஜெயித்து 50 வருஷம் ஆண்டார். அதன்பின் சோழ ராஜ்யம் விஜயநகரத் தரசர்களுக்குள் வந்தது. 1335 முதல் 1343 வரை புக்கராயனும் அதன்பின் விருபாட்சனும் சோழ ராஜ்யத்தை எடுத்துக் கொண்டார்கள். 1374-1375 வரையும் திருசிராப்பள்ளியைக் கம்பன்ன உடையார் ஆண்டு கொண்டு வந்தார். 1379 முதல் 1391 வரை திருசிராப்பள்ளியை அரிகரராயன் ஆண்டார். தஞ்சாவூரில் 1443-ல் எழுதிய கல்வெட்டு தான சாசன மூலமாய்த் தேவராயரிருந்ததாகத் தெரிகிறது. 1455-ல் திருமலைராயன் கொடுத்த கல்வெட்டுச் சாசனங்களும் தஞ்சையிலிருக்கிறJ. 1475-ம் வருஷமுதல் 1500-ம் வருஷம் வரை விஜயநகர மந்திரிகளாகிய சாளுவ ராஜாக்களால் சோழ ராஜ்யம் ஆளப்பட்டு வந்திருக்கிறது. 1517 முதல் 1518 வரையும் கிருஷ்ணதேவராயர் இருந்ததாகச் சாசனங்களால் தெரிகிறது. 1532-ல் அச்சுததேவர் பாண்டியனை ஜெயித்துத் தாம்பரபரணியின் கரையில் ஒரு ஸ்தம்பம் நாட்டினார். 1537-ல் தஞ்சை நாகை, கர்நாடகக் கரை இவைகளை ஜெயித்து விஜயநகர ராஜ்யத்திற்குச் சொந்தமாக்கினார். 1539-ல் இவர் தான சாசனம் கொடுத்திருக்கிறார். இந்த அச்சுத தேவருக்கு மந்திரியா யிருந்த சேவப்பநாயக்கர் 1549 முதல் 1572 வரையும் சோழ ராஜ்யத்தை யாண்டு வந்தார். அச்சுதப்பநாயக்கர் 1572-1614 வரைக்கும் அரசாட்சி செய்தார். இவர் காலத்தில் இவருக்கு மந்திரியாயிருந்த கோவிந்த தீக்ஷதருடைய பிள்ளை வேங்கடமகி என்பவர் ஆயப்பாலையில் வரும் பன்னிரு சுரங்களையும் அவைகள் சுருதி மாறும்போதுண்டாகும் 72 மேளக்கர்த்தாவையும் செய்தா ரென்று சொல்லப்படுகிறது. இதன் விபரம் பின்பார்ப்போம். ரெகுநாதநாயக்கர் 1614 முதல் ஆண்டாரென்றும் அவர் பின் விஜயராகவநாயக்கர் ராஜ்ய பாரஞ்செய்து 1673-ல் மரணமடைந்தாரென்றும் சொல்லப்படுகிறது. இவருக்குப் பின் மகராஷ்டிர ராஜ்யத்தில் ராஜனாயிருந்த ஷாஜிக்குச் சிவாஜி என்றும் வெங்காஜி யென்றும் இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் மகராஷ்டிர ராஜ்யத்திற்கு அதிபதியானான். அவன் தம்பியாகிய வெங்காஜி ஒரு சிறிய துணைப்படையுடன் படையெடுத்து வந்து தஞ்சாவூரை மிகச் சுலபமாக தன் வசப்படுத்திக் கொண்டார். இவருக்கு எக்கோஜியென்று மறுபெயரும் வழங்கும். இவர் கால முதல் சோழ ராஜ்யம் மகராஷ்டிர ராஜாக்களால் ஆளப்பட்டு வந்தது. இவர் 1674-1687 வரையும் அரசாண்டார். இவர் மகன் ஷாஜி 1687-1711 வரையும் ஆண்டார். இவர் சகோதரர் சரபோஜி-ஐ 1711-1727 வருஷம் வரையும் ஆண்டு கொண்டிருந்தார். இவர் பின் இவர் சகோதரர் துக்கோஜி 1728-1735 வரையும் ஆளுகை செய்தார். துக்கோஜி இறந்தபின் அவர் பிள்ளைகள் மூவரில் முதலவரான பாவா சாகிப் ஒரு வருஷமும் அவர் மனைவி இரண்டு வருஷமும் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் இரண்டாவது குமாரனான சாயாஜி 1740 வரை இரண்டு வருஷம் ஆண்டார். மூன்றாங் குமாரனான பிரதாபசிங் 1740-1763 வரையும் அரசாட்சி செய்தார். இதன்பின் 1763 முதல் 1787 வரையும் துளஜாஜி மகராஜா அரசாட்சி செய்து கொண்டிருந்தார். இவர் காலத்தில் சங்கீத வித்தை பழையபடி கவனத்திற்கு வந்தது. இவர் பல இடங்களிலிருந்தும் வித்வான்களை வரவழைத்து அப்போதைக்கப்போது சபை நடத்தினதாகத் தெரிகிறது. இவரும் இவர் பட்டமகிஷியும் சங்கீதத்திலும் மற்றும் கலைகளிலும் மிகப் பாண்டித்தியமுடையவர்களா யிருந்தார்கள். திருநெல்வேலியில் செந்தில்வேல அண்ணாவி பரதத்திலும் பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் மிகுந்த பாண்டித்தியமுடையரென்று கேள்விப்பட்டுப் பல்லக்கனுப்ப செந்தில் வேலவன் விருத்தாப்பயித்தினால் வர இயலாமல் தன் மகன் மகாதேவனை அனுப்பி வைத்தார். அவன் தஞ்சை வந்தபின் சங்கீதம் மிகவும் நல்ல நிலைக்கு வந்ததென்று நாளது வரையும் சொல்லப்படுகிறது. இவர் பின் இவர் மகன் சரபோஜி சிறுவயதாயிருந்ததினால் துளஜாஜி மகாராஜாவின் தம்பி அமரசிங் பட்டத்துக்கு வந்தார். இவர் 1787-1798 வருஷம் வரை ஆண்டு கொண்டிருந்தார். இவர் பின் சரபோஜி II மகாராஜா 1798-1824 வரையும் ஆண்டு கொண்டிருந்தார். இவருக்குப் பின் இவர் புத்திரனான சிவாஜி 1824 முதல் 1856 வரையும் ஆண்டு கொண்டிருந்தார். இவர்க்குப் பின் நாதனற்றுப்போன சோழராஜ்யம் கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலிய நன்மைகளை விருத்தி செய்து வரும் காருண்ய ஆங்கிலேய அரசாட்சிக்குட்பட்டJ. துளஜாஜி மகாராஜாவின் காலத்திலிருந்தே சங்கீத வித்வான்கள் சோழமண்டலத்தில் அதிகமானார்கள் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் துளஜாஜி மகாராஜா தன் நாட்டின் அதிக செழிப்புள்ள இடங்களில் சங்கீத வித்வான்களுக்கு மானியம் கொடுத்துக் குடியிருப்பு இடமும் கொடுத்து மிக மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறார். அவர் கொடுத்த மானியங்களில் சில நாளது வரையும் அப்பரம்பரையாரால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. மகாதேவன் அண்ணாவியினால் சங்கீதம், சங்கீதத்தின் நயமான அம்சங்கள் தஞ்சாவூரில் விருத்தியான தென்றும் தோன்றுகிறது. அவன் வம்ச பரம்பரையாரும் அவன் சிஷ்ய பரம்பரையாரும் சோழமண்டலத்திலும் மற்றும் தமிழ் நாட்டிலும் பரவியிருக்கக் காண்கிறோம். சோழராஜ்யத்தை முதல் முதல் சோழ ராஜாக்களும் பின் விஜய நகரத்தாரும் அதன் பின், நாயக்க ராஜாக்களும் பின் மகராஷ்டிர ராஜாக்களும் ஆண்டுகொண்டு வந்திருக்கிறதாக இதன்முன் பார்த்தோம். இதில் கி.மு. 200, 300 வருஷங்களுக்குமுன் சேர சோழ பாண்டிய ராஜர்களிருந்ததாகவும் அவர்களோடு அசோகனுடைய குமாரனும் குமாரத்தியும் உடன்படிக்கை செய்ததாகவும் காண்கிறோம். ஆனால் இதற்கு வெகுகாலத்திற்கு முன்னாலேயே சேரசோழ பாண்டிய ராஜ்யங்களிருந்ததாகப் பரம்பரையாயும் புராணங்கள் இதிகாசங்கள் மூலமாயும் அறிவோம். அவைகளில் பாண்டியராஜ்யம் மிகப் பூர்வீகமான சரித்திரத்தையுடைய தென்றும் அதனாலேயே பாண்டியர்களுக்குப் பழையர் என்று பெயர் வந்திருக்கலாமென்றும் எண்ண இடமிருக்கிறது. பாண்டிய ராஜ்யத்தின் முதல் ராஜதானியாகிய தென் மதுரையையும் அதிலிருந்த தமிழ்ச்சங்கத்தையும் அதனை ஆண்டு கொண்டு வந்த ராஜாக்களையும் தமிழ்ப்பாஷையையும் பற்றி இதன்முன் சுருக்கமாய்ப் பார்த்திருக்கிறோம். அக்காலம் தொட்டு இந்நாள் வரையும் பேச்சு வழக்கத்தோடும் நூல் வழக்கத்தோடும் சிறந்து விளங்கும் தமிழ்ப்பாஷையின் அனேகவார்த்தைகள் உலகத்திலுள்ள பல பாஷைகளோடு கலந்திருப்பதையும் இதன்முன் கவனித்தோம். பூர்வம் பாண்டியராஜாக்களின் செல்வாக்கும் செயலும் வரவரக் குறைந்ததென்றும் அப்படியே அவர்கள் பேசி வந்த தமிழ்ப் பாஷையின் அநேக சிறந்த வார்த்தைகள் வரவர வழக்கத்திலில்லாமல் குறைந்ததென்றும் கடைச் சங்க காலத்திற்குப் பின் அந்நியராஜர்கள் வர அந்நிய பாஷைகளும் அதோடு ஏராளமாகக் கலந்ததென்றும் அதன் நிமித்தம் பல சந்தேகங்களுண்டாவதற்குக் காரணமாயிற்றென்றும் இதன்முன் பார்த்தோம். கிறிஸ்துவுக்கு அநேக ஆயிர வருஷங்களுக்கு முன்னிருந்தே பாண்டியராஜ்யம் மிகவும் உன்னதமான நிலையிலிருந்து வந்திருக்கிறது. அதன்பின் சோழ ராஜர்கள் பலத்து மற்ற ராஜ்யங்களோடும் பாண்டியராஜாக்களோடும் சண்டைசெய்து ஜெயித்து வந்திருக்கிறார்கள் என்கிறதாகப் பார்க்கிறோம். ஊழிக்காலத்தின் மாறுதல்களால் இராஜதானி இடம்மாறினாலும் பெயர் மாறாமல் கடைசி வரையும் மதுரையில் பாண்டியராஜாக்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் ஊழியில்லாதிருந்தும் சோழராஜ்யத்தார் ஒரு இடத்தில் நிலைத் திராமல் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் முதலிய பல இடங்களை ஒன்றன்பின் ஒன்றாய்த் தலைநகராகக் கொண்டார்களென்று தெரிகிறது. மேலும் மதுரையைத் தவிர சென்னை ராஜதானி முற்றிலும் ஆண்டு வந்தார்களென்றும் தெரிகிறது. சோழ ராஜ்யம் பாண்டிய ராஜ்யத்தைப்போல ஒரே குலத்தவராலல்லாமல் அப்போதைக்கப்போது வெவ்வேறு குலத்தவரால் சிலசில காலம் ஆண்டு வரப்பட்டJ. பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டு கொண்டு வந்த வம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்ற பெயர்களுடன் ஜமீன்தாரராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதைச் சோழநாட்டில் காண்போம். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டிய ராஜ்யத்தை ஜெயித்து சொந்தப் படுத்திக் கொண்ட காலத்தில் பாண்டியராஜ வம்சத்தவர் ஆண்டு கொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக் கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்த நிலைக்கு வந்தார்கள். சேர ராஜ்யம் ஒன்று மாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே அரசாட்சியுடையதா யிருந்துகொண்டு வருகிறது. சோழராஜ்யத்தை மேன்மைப்படுத்தி ஆண்டு வந்த ராஜாக்களில் கரிகால் சோழனையே முதல்வனாகச் சொல்ல வேண்டும். அவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் பரதத்திலும் வீணை வாசிப்பதிலும் மிகத் தேர்ந்த மாதவியும் வீணை வாசிப்பதில் கைதேர்ந்த கோவலனும் இருந்தார்கள். இவர்களின் வீணைவாசிப்பைப் பற்றிச் சேரநாட்டிலுள்ள சேரன்செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சுருக்கமாகச் சொல்லுகிறார். அதைக்கொண்டு கரிகால் சோழன் காலத்திலேயே தமிழ்நாடுகளில் வீணை வாத்தியமும் பரதநாட்டியமும் பூர்ணநிலையிலிருந்த தென்று தெரிகிறது. அவர்கள் காலத்திலேயே ஷட்ஜம பஞ்சம முறையாய் வரும் பன்னிரு சுரங்களும் ஆயப்பாலை முறையில் வருகிறதாகக் காண்கிறோம். அப்படி வழங்கி வந்த முறை தற்காலத்தவருக்குத் தெரியாமையினால் பூர்வமுள்ள வீணைகளில் நிலையான மெட்டுகள் வைக்கப்படவில்லையென்றும் நகட்டி இராகத்துக்குத் தகுந்தவிதம் வைத்துக் கொள்ளும் வீணையிருந்ததென்றும் நேற்றையுள்ள சேவப்பநாயக்கருக்காக ஆங்கிலேயர் சுரங்களுக்கு ஏற்ற விதமாய் நிலைவரமான மெட்டுகள் போடப்பட்டதென்றும் சொல்லுகிறவர்களுமுண்டு. இதிலும் நுட்பமான சுருதிகள் வழங்கும் வேறுசில முறைகளும் அவர் காலத்திலிருந்தது. அவ்விபரம் இதன் பின் பார்ப்போம். கிறிஸ்து பிறந்து 50-95 வரையும் இக்கரிகாலன் இருந்தார். இவர் பல வித்வான்களையும், தொழிலாளர்களையும் பல இடங்களிலிருந்து வரவழைத்துக் காவிரிப் பூம்பட்டினத்தில் குடியேற்றினதாகவும் இதன் முன் பார்த்தோம். இவர்க்குப் பின் சோழ ராஜ்யத்தில் விளங்கிய கோச்செங்கண்ணான் 70-க்கு மேற்பட்ட சிவாலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினதாகக் காண்கிறோம். இவர் காலம் சுமார் கி.பி. 600 ஆக இருக்கலாமென்று சந்தேகிக்கக் கூடியதாயிருக்கிறது. விஜயாலயர் காஞ்சிபுரத்திலிருந்து 840-ல் தாஞ்சாவூரை ஜெயித்தா ரென்றும் பரகேசரி வர்மன் என்ற முதல் பராந்தகர் என்பவர் 907-ல் பட்டத்துக்கு வந்து சிதம்பரம் ஆலயத்தில் தங்க ஓடுகள் போட்டிருக்கிறா ரென்றும் அறிகிறோம். ராஜராஜன் என்னும் சோழராஜன் 985-ல் பட்டத்துக்கு வந்தார். சிறு பிராயத்தில் இவருக்கு அருமொழித்தேவன் என்றும் அதன் பின் மும்முடிச் சோழனென்றும் பெயர் வழங்கி வந்தது. இவர் காலத்தில் சோழராஜ்யம் மிக உன்னத நிலையை யடைந்திருந்தJ. இவர் அரசாட்சியின் காலத்தில் தஞ்சை பெரியகோயில் கட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. கோயிலின் சுற்றுச் சுவர்களில் இவரால் வெட்டுவிக்கப்பட்ட அநேகதான சாசனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இவராலும் இவர் குடும்பத்தாராலும் கொடுக்கப்பட்டதென்று சாசனங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதோடு இவர் காலத்திலும் கோயில்களிலும் சங்கீதமுறை நடத்தும் விபரங்களையும் ஒரு சாசனத்தில் காணலாம். இவர் காலத்தில் பல இடங்களிலிருந்து சங்கீதத்தில் தேர்ந்தவர்களை வரவழைத்து மனை, மானியம், உம்பளம் சம்பளம் கொடுத்து வெகு பெயரை ஆதரித்து வந்ததாகப் பார்க்கிறோம். அது முதல் சங்கீதம் தஞ்சை மாநகரில் பிரபல விருத்திக்கு வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. இவர்க்கு வெகு காலத்திற்குப் பின் இவருடைய பேரன் (மகள் பிள்ளை) முதல் குலோத்துங்கச் சோழன் பட்டத்துக்கு வந்தார். இவர் காலத்தில் நிலங்களின் அளவு கணக்கு ஏற்படுத்தப்பட்டJ. அளவு கோலுக்கு ஸ்ரீபாதமென்று பெயர். ஒரு வேலி நிலத்தில் ஒரு சதுர அங்குலத்தையும் விடாமல் குறிக்கக் கூடிய நுட்பமான அளவு இவரால் ஏற்படுத்தப்பட்டJ. இவர் காலத்தில் கவிச் சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டானிருந்ததாகத் தெரிகிறது. இரண்டாவது குலோத்துங்கன் காலத்தில் அதாவது 1135-1150 வரையிலும் ஒட்டக்கூத்தனும் அவர் காலத்துக்குப் பின் 1164-ல் பட்டத்துக்கு வந்த ராஜாதிராஜன் காலத்தில் சக்கிலர், கம்பன், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, அடியார்க்கு நல்லார் முதலியவர்களிருந்ததாகத் தெரிகிறது. அதன் பின் 1572-ம் வருஷத்தில் சோழராஜ்யத்திற்கு நாயக்கராஜர்களில் இரண்டாவது அரசனாய் வந்த அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் அவருக்கு மந்திரியாயிருந்த கோவிந்ததீக்ஷதர் அவர்கள் குமாரன் வேங்கடமகியிருந்தார். இவர் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த பன்னிரு சுரங்களையும் வைத்துக் கொண்டு அவைகளிலிருந்து 72 மேளக்கர்த்தா செய்து அதற்குக் கீதமும் லக்ஷண சாகித்தியமும் செய்தார். ஒவ்வொரு கர்த்தாராகங்களிலும் இன்னின்ன ஜன்னிய ராகங்கள் வரலாமென்றும் குறித்தார். தென்னிந்திய சங்கீதத்தில் நுட்பமான சுருதிகளோடு வழங்கும் ராகங்கள் இன்னின்ன மேளக்கர்த்தாவிலடங்குமென்று அவர் குறித்திருந்தாலும் நுட்பமான சுருதிகள் சொல்லப்படவில்லை. அதனால் தற்காலத்துள்ளவர் அதையும் கெடுத்து இந்துஸ்தானி போல ஒன்றாக்க நினைக்கிறார்கள். அச்சுதப்ப நாயக்கர் தஞ்சாவூரை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் சங்கீதம் கவனிக்கப்பட்டு வந்ததென்று தெளிவாக இதனால் அறிகிறோம். இதற்கு வெகு காலத்திற்குப்பின் 1763-ல் சோழராஜ்யத்திற்கு ராஜனான துளஜாஜி மகாராஜா என்னும் மகாராஷ்டிர அரசன் காலத்தில் சங்கீதம் மிகவும் விருத்தியானதென்று சொல்ல இடந்தருகிறJ. இவர் காலத்தில் பூர்வ சங்கீத முறைகளில் சிறந்த வீணை, வாய்ப்பாட்டு, பரதம், அபிநயம், புல்லாங்குழல் முதலியவைகளை விருத்தி செய்தாரென்று தோன்றுகிறது. இவர் காலத்திலிருந்த சங்கீத வித்வான்கள் இன்னின்னார் என்பதையும் இதன் பின் பார்ப்போம். சோழ ராஜ்யத்தில் சங்கீதம் விருத்தியாகியிருந்ததென்று சொல்வதற்கு ஏற்றவிதமாய் ராஜராஜன் என்னும் சோழன் சுமார் 1000 வருஷங்களுக்கு முன் தஞ்சை பெரியகோயில் சுவர்களில் எழுதி வைத்த ஒரு சாசனத்தை இங்கே பார்ப்போமானால் அதுவே சங்கீதம் சுமார் 1000 வருஷங்களுக்கு முன்பே விருத்தியான நிலைமையிலிருந்ததென்று காட்டும். அதில் சில முக்கிய குறிப்பை மாத்திரம் இங்கே எழுதுவது போதுமானதாகத் தோன்றினாலும் மிகப் பூர்வமும் முற்றிலும் சங்கீதக்காரரையே சொல்வதும் ஆகிய அச்சிலாசாசனத்தை உள்ளபடியே இங்குக் காட்டுவது நலமென்று தோன்றுகிறது. இது “South Indian inscriptions Vol. II. Pt. III” -ல் சொல்லப்படுகிறது. 3. தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசனம். இது கோயில் வெளிப்பிரகாரத்தின் மதில் சுவரில் வெளிப்புறத்தில் வடமேற்கு மூலையிலுள்ள கல் வரிசைகளில் எழுதப்பட்டிருக்கிறJ. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வெங்கை நாடுங் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல்வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேசெழியாரைத் தேசுகொள் கோராஜகேசரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்குயாண்டு இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்ய உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பெயரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப்பண்டாரத்தேய் பெறவும் இவர்களில் செத்தார்க்கும் அநாதேசம்போனார்க்கும் தலைமாறு அவ்வவர்க்கு அடுத்த முறை கடவார் அந்நெல்லுப்பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யவும் அவ்வவர்க்கு அடுத்த முறை கடவார் தாந்தாம் யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வித்து அந்நெல்லுப் பெறவும் அவ்வவர்க்கு அடுத்த முறை கடவாரின்றியொழியில் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியும் விண்ணப்பஞ்செய்ய இட்டு இட்ட அவனே அவ்வவர் பெறும்படி நெல்லுப் பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் திருவாய் மொழிந்தருளினபடி கல்லில் வெட்டியது :- (a) இரண்டாவது சாசனம் ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வெங்கை நாடுங் கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமும் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தாண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராஜகேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவருக்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்கு நிவந்தக்காரர் உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த நிவந்தக்காரர்களுக்கும் உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார் தளிச்சேரிப் பெண்டுகளாகச் சோழமண்டலத் தளிச்சேரிகளில் நின்று கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரி பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலன்வேலியினால் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும் இப்படி பங்கு பெற்ற இவர்களில் செத்தார்க்கும் அனா தேசம் போனார்க்கும் தலைமாறு இவ்விவர்க்கு அடுத்தமுறை கடவார் இக்காணி பெற்றுப் பணி செய்யவும் அடுத்தமுறை கடவார் தாந்தாம் யோக்யர் அல்லாதுவிடில் யோக்யரா யிருப்பாரை ஆளிட்டு பணி செய்வித்துக் கொள்ளப் பெறவும் அடுத்தமுறை கடவார் இல்லாதுவிடில் அவ்வவர் நியாயங்களுக்குத் தக்கவரில் அவ்வவர் நியாயங்களிலாரே யோக்கியராயிருப்பாரை ஆளிட்டு இட்ட அவனே காணி பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய் மொழிந்தருளினபடி கல்லில் வெட்டினது :- தளிச்சேரிப் பெண்டுகள் :- கணக்கு 4. மேற்கண்ட சாசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள். ராஜராஜ சோழனே தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினாரென்பது “நாம் எடுப்பித்ததிருக்கற்றளி” என்ற அவரது சாசனத்திற் காணும் வாசகத்தால் தெரிகிறது. அதோடு அவரும் அவர் பட்ட ஸ்திரீகளும் அவர் குடும்பத்தாரில் சிலரும் தங்கள் சொந்தப் பொருள்களினால் தஞ்சாவூர் திருவையாறு முதலிய கோயில்களுக்கு அநேக கைங்கரியங்களும் தர்மங்களும் செய்திருக்கிறார்களென்று மற்றும் சில சாசனங்களால் அறிகிறோம். இவர் கி.பி. 985-1013 வரையும் ஏறக்குறைய 29 வருஷம் ஆண்டார் என்று சொல்லப் படுகிறது. தான் உயிரோடிருக்கும் காலத்தில் தன் குமாரன் ராஜேந்திரனுக்கு 1010-ல் பட்டங் கட்டித்தான் மேல் பார்த்துக் கொண்டு வந்தார். அவருடைய அரசாட்சியின் கடைசியில் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். தன் இறுதிக் காலத்தில் இன்னும் நான் ஜெயிப்பதற்கு நாடுகளில்லையே யென்று அவர் வருத்தப்பட்டார் என்பதைக் கொண்டு சிறு பிராயத்திலேயே பட்டத்துக்கு வந்ததைக் கொண்டு விருத்தாப்பியத்திற்கு முன்னாலேயே அவர் இறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தான் இறக்க 3 வருஷங்களுக்கு முன் மகனிடத்தில் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டுக் கோயில் கட்டுமான வேலைகளில் தன் முழு நேரத்தையும் செலவழித்திருக்க வேண்டும். அப்படியில்லாதிருந்தால் பல யுத்தங்களும் படையெடுப்புகளுமுள்ள காலத்தில் கல் கிடைக்காத தஞ்சையில் பென்னம் பெரிய கல்லினால் ஆகிய நந்தியும் கோபுரத்தின் உச்சியில் பாவுதற்கு 251/2 அடி சதுரமும் 80 டன் கனமுள்ள ஒரே மூடு கல்லும் சேகரித்துச் செய்ய முடியாது என்று நினைக்கிறேன். மேலும் கல் வேலை செய்த சிற்பிகளுக்கும் சுதைவேலை செய்து வந்த கொத்தர்களுக்கும் அவர்கள் வேலை செய்யும் காலத்தில் தாமும் கூடவேயிருந்து தின்பண்டமும் தாம்பூலமும் கொடுத்து உற்சாகப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஒரு சமயத்தில் மிக அருமையான வேலை செய்து கொண்டிருந்த சிற்பாசாரி ஒருவன் தாம்பூலத்திற்காக தன் வேலைக்காரனிடம் பின்னால் கை நீட்டும் சமயத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இவர் அறிந்து தான் தாம்பூலம் மடித்துக் கொடுத்ததாகவும் அது சற்று வித்தியாசப்பட்டிருந்ததையறிந்த சிற்பாசாரி திரும்பிப் பார்த்து மகாராஜன் என்று கண்டு வணங்கினான் என்று கர்ண பரம்பரையாய் நாளது வரையும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதைப்போல் இன்னும் அநேக சங்கதிகளைச் சொல்லக் கேள்விப்படுகிறோம். இன்னும் மேற்கண்ட சாசனங்களை நாம் கவனிக்கையில் ராஜர்களுடைய வீரம், அவர்களடைந்த வெற்றி, அவர்களுக்குரிய பட்டப் பெயர்கள் முதலியவைகளைச் சாசனத்தின் தலைப்பில் சொல்லப்படும் மெய்க் கீர்த்தியில் காண்கிறோம். அதன் பின் கோயிலில் ஆடுவார், பாடுவாராக ஊழியஞ் செய்யும் ஊழியக்காரர்களும் அவர்கள் தினம் பெறும் சம்பளம் அல்லது அக்கணக்கின்படி வருஷ சம்பளம் இவ்வளவென்று அவர்கள் குடியிருக்கும் மனைகளின்னதென்றும் சொல்லப்படுகிறது. அம்முறையில் ஒருவனுக்குப்பின் ஒருவன் தலைமுறை தலைமுறையாய்ப் பெறும் விவரமும் அது தவறின் இன்னார் பெற வேண்டுமென்ற விவரமும் சொல்லப்படுகிறது. இவைகள் யாவையும் சாசனத்தில் விவரமாய்க் காணலாம். இதில் முதல் சாசனத்தில் நாற்பத்தெட்டு பிடாரர்களும் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பது பெயர்கள் சொல்லப்படுகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு முக்குறுணி அல்லது ஆறு மரக்கால் வீதம் சம்பளம் பெற்றுக் கோயிலில் ஊழியஞ் செய்து வர நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்ய இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார் களென்று அறிகிறோம். திருப்பதிகம் என்பது அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரையர் போன்ற பெரியவர்கள் தங்கள் காலத்தில் தரிசித்த தெய்வத்தையும் ஸ்தலங்களையும் புகழ்ந்து பாடிய பத்துப் பத்துப் பாடல்களாம். அவைகளே தற்காலத்தில் தேவாரம், திருவாசகம் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளைக் கோவில் பூஜா காலங்களில் பண்ணோடும் பக்க வாத்தியத்தோடும் பாடும்படி கட்டளை ஏற்படுத்தியதாகத் தெளிவாக அறிகிறோம். இவை South Indian inscriptions Vol. II Part iii-ல் 252-ம் பக்கத்தில் சொல்லப்படுகின்றன. இரண்டாவது சாசனத்தில் ஆரம்பத்தில் நடனம் செய்கிறவர்களுடைய பெயர் காணப்படுகின்றJ. இவர்கள் 400 பேர் எனத் தெரிகிறது. இவர்கள் இன்னின்ன ஊர்களிலிருந்து வந்தவர்களென்றும் இதன்முன் இன்னின்ன கோவில்களில் ஊழியஞ் செய்தவர்களென்றும் காண்கிறோம். சாசனத்தில் சோழமண்டலம் தளிச்சேரிகளினின்று கொண்டு வந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கு என்று சொல்லுவதைக் கவனிக்கையில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்படுதற்கு முன்னாலேயே திருக்காரோணம் (நாகப்பட்டணம் ஆலயம்) திருவிடமருதூர், திருவாரூர், தஞ்சை மாமணிக்கோயில் (விண்ணாற்றங்கரையிலுள்ள நீலமேகப் பெருமாள் கோயில்) திருமாகாளம், கடம்பூர், திருமறைக்காடு, விடையபுரம், வேளூர், திருவையாறு, தலையாலங்காடு, நன்னிலம், காவேரிப்பூம்பட்டினம், பழையாறு, கோட்டூர், திருச்சோற்றுத்துறை, உத்தமதானிபுரம், நேமம், பாச்சில், திருவேதிகுடி, திருநெய்த்தானம், திருச்செந்தூர், பழுவூர், பந்தநல்லூர் முதலிய பல ஸ்தலங்களிலிருந்து நடன கன்னிகைகளைக் கொண்டு வந்து கோயில் ஊழியத்துக்கு நியமித்ததாக நாம் காண்கிறோம். இதினால் இவர் காலத்துக்கு முன்னாலேயே அதாவது சுமார் 1000 வருஷங்களுக்கு முன்னாலேயே மேற்கண்ட ஊர்களில் சில ஆலயங்களும் விஷ்ணு ஆலயங்களு மிருந்த தாகவும் அவைகளில் நடன கன்னிகைகளிருந்ததாகவும் வாத்தியக்காரர்களு மிருந்ததாகவும் சொல்லத் தெளிவாயிருக்கிறது. ஆனால் இதன் முன்னா லேயே முச்சங்கங்களிருந்த காலத்தில் ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் ஆடல் பாடல்களிருந்ததாக இதன் முன் பார்த்திருக்கிறோம். இவ்வூர் நக்கன் என்றும் இத்தளி நக்கன் என்றும் தஞ்சாவூர் நக்கன் என்றும் அடிக்கடி வருவதை நாம் கவனிக்கையில் தஞ்சை மாநகரத்திலே இவ்வாலயம் கட்டுவதற்கு முன் அதாவது ராஜராஜசோழன் காலத்திற்கு முன்னாலேயே அநேக நடன கன்னிகைகளும் சங்கீதக்காரர்களு மிருந்தார்களென்பதைத் தெளிவாக அறிகிறோம். தளிச்சேரி என்பது கோயிலைச் சேர்ந்த குடியிருப்புக்குப் பெயர். “நாம் எடுத்த கற்றளி” என்பதில் நாம் கட்டுவித்த கல் கோயில் என்று பொருள்படுகிறJ. ஆகையினால் இத்தளி என்பதற்கு இந்தக் கோயில் என்பது அர்த்தம். தளிச்சேரி என்பதுகோயிலைச் சேர்ந்த தெரு. இதன் பின் 401-ம் லக்க முதல் 406-ம் லக்கமுடிய உள்ள பேர்கள் நடனம் கற்றுக் கொடுக்கிறவர் களாகவும் நடனம் செய்து வைக்கிறவர்களா கவும் இருக்கிறார்கள். இவ்வார்த்தையையே நட்டுவ னென்றும் அண்ணாவி என்றும் வழங்குகிறதை நாம் பார்க்கிறோம். கானபாடி ஐவர், இவரில் 413-ம் லக்கத்தில் மூவரும் 414-ம் லக்கத்தில் இருவரும் சொல்லப் படுகின்றனர். 415 முதல் மூன்று லக்கங்களில் முக வீணைக்காரர் சொல்லப்படுகிறார்கள். 422 முதல் இரண்டு லக்கங்களில் உடுக்கை வாசிக்கிறவர்கள் பேர் சொல்லப்படுகிறது. 424-425 இரண்டு லக்கங்களில் வீணை வாசிப்போர் பெயர் காணப்படுகிறது. 426-ல் ஆரியம் பாடுவார் மூவர் என்று அறிகிறோம். 427 முதல் 4 லக்கங்களில் தமிழ்ப் பாடுவோர் பெயரும் 431 முதல் இரண்டு லக்கங்களில் கொட்டி மத்தளக்காரர் பெயரும் 433 முதல் மூன்று லக்கங்களில் முத்திரைச் சங்கு ஊதுவோர் பெயரும் 436 முதல் 16 லக்கங்களில் பக்கவாத்தியக்காரர் பெயரும் 463 முதல் ஐந்து லக்கங்களில் கட்டியம் கூறுவோர் பெயரும் 468-469-ல் காந்தர்வர் இருவர் பெயரும் சொல்லப்படுகின்றன. 478 முதல் ஆறு லக்கங்களுக்கு எதிரில் மேளம் வாசிப்பவர் 66 பேர்களுக்குப் பங்கு சொல்லப்படுகிறது. இது தவிர விளக்குப் போடுகிறவர்கள், நீர் தெளிப்பவர்கள், எடுபிடி சாமான் தூக்குகிறவர்கள், குசவன், வண்ணான், நாவிதன், சோதிடன், கொல்லன், தையான், கன்னான், தச்சன், தட்டான், பாணன், கணக்கர் முதலிய கோயில் ஊழியக்காரர் பெயரும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விவரமும் பங்கும் சொல்லப்படுகின்றன. பங்கு ஒன்று என்பது இரண்டாவது சாசனத்தில் கண்ட “பங்குவழி பங்கு ஒன்றினால் நிலன் வேலியினால் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாக வும்” என்ற வசனத்தைக் கவனிக்கையில் தற்காலத்தின் 100 கலமாகிறJ. அது அக்காலத்தில் ஒரு வேலி நிலத்தின் ஒரு வருஷ வரும்படியாம். அது குடி வாரம் போக என்று தோன்றுகிறது. மேல்வாரமாகிய இந்நூற்றுக் கலமும் வித்வான்களுக்கும் மற்றும் மானியக்காரருக்கும் நாளது வரையும் வழங்கி வருகிறதை நாம் காணலாம். இரண்டு பங்குக்காரர் வருஷம் 200 கலமும் ஒன்றரை, ஒன்று, அரை பங்குள்ளவர்கள் தங்கள் பங்கு வீதமாகவும் வாங்கிக் கொண்டு ஊழியஞ் செய்து வந்தார்களென்று தோன்றுகிறது. இதில் வீணை வாசிப்போர் இருவருக்குப் பங்கு சொல்லப்படுகிறது. பூர்வ காலத்திலுள்ள பெரிய கோயில்கள் ஒவ்வொன்றிலும் இப்படியே சம்பளங்கள் ஏற்படுத்தி வைத்திருந்ததாகக் கேள்விப்படுகிறோம். அதோடு ராவணவாகனம் என்ற வெள்ளி வாகனத்தில் ராவணன் வீணை வாசிப்பதையும் நாம் பார்த்திருப்போம். பாணபத்திரனுக்காக விறகு சுமக்கும் ஆளாய் சாதாரி ராகம் பாடி ஏமநாதனை விரட்டியது பரமசிவனென்று படித்திருக்கிறோம். வீணா கானத்தில் பிரியமுள்ள பரமசிவனுக்கு அவருடைய ஆலயங்களில் வீணா கானம் வாசிக்கத் திட்டஞ் செய்திருப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது. மேலும் வாத்தியங்களில் இனிமையும் உயிருமுடையது வீணையென்று யாவரும் கொண்டாடுகிறோம். அப்படியே பரமசிவனும் வீணாகானப் பிரிய னென்று சொல்லப்படுகிறார். இவ்வீணையையும் இதன் அங்கக் கூறுபாடுகளையும் பற்றிப் பின்னே பார்ப்போம். இதன் பின் ஆரியம் பாடுவோர் மூவரைப் பற்றிச் சாசனத்தில் காண்கிறோம். ஆரியம் என்பது சமஸ்கிருதம் என்றும் சமஸ்கிருதத்திலுள்ள பாட்டுக்களைப் பாடுகிறவர்களை ஆரியம் பாடுவோரென்றும் இங்கே சொல்லப்படுகிறதாக நினைக்க வேண்டும். ஆனால் இவர்களை வேதம் சொல்லுகிறவர்களென்று நினைக்க ஏதுமில்லை. ஏனென்றால் செம்பியன் வாத்தியன் மாராயனுக்கு என்ற சொல் பிராமணர்களைக் குறிக்கவில்லை. 418, 420, 421 இலும் கட்டியம் கூறுவோர்களுக்கும் 463, 464, 465, 466 லக்கங்களிலும் நட்டுவம் செய்பவருக்கு 401- ம் லக்கத்திலும் மாராயன் என்ற பெயர்கள் வருகின்றன. நட்டுவனாகவும் கட்டியம் சொல்பவனாகவும் பாட்டுப் பாடுகிற வனாகவும் வருகிறவர்கள் இன்னார் என்றும் பிராமணர்கள் இவ்வேலையில் வரமாட்டார்களென்றும் நாம் திட்டமாய் அறிவோம். ஆகையினால் ஆரியம் பாடுவாரென்பது சமஸ்கிருத பாட்டுப் பாடுகிறவர்கள் என்று தோன்றுகிறது. தமிழ் பாடுவோர் நால்வர், இவர்கள் சந்நதி முன்னிருந்து தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலிய தெய்வஸ்தோத்திரங்களை மனமுருக்கும் தமிழ்ப்பண்களோடு பாடிக்கொண்டிருப்பார்கள். தெய்வத்தை வணங்கப் போகிறவர்களும் அப்படியே தங்களுக்குத் தெரிந்த பண்களை மேற்கண்டவர்களோடு சேர்ந்தும் தனித்தும் பாடுகிற வழக்கம் இன்றைக்குமிருக்கிறது. இதன்பின் 431-ல் கொட்டி மத்தளம் ஒன்றுக்குக் காந்தர்வனுக்கு என்றும் 432-ல் காந்தர்வ துரைக்காவாலிக்கென்றும் 468-ல் தளிச்சேரி பெண்டுகளுக்கும் காந்தர்விகளுக்கும் நாயகஞ் செய்ய என்றும் வருவதைக் காண்கிறோம். இதனால் காந்தர்வர்கள் பாடுகிறவர்களென்று தெரிகிறது. கந்தர்வம் என்று பாட்டுக்குப் பெயர். இவ்வார்த்தை வழக்கத்திலில்லாமல் போயிற்றென்று காண்கிறோம். இச்சாசனத்தில் அடிக்கடி காணப்படும் பெரையன், செம்பியன், மாராயன், உவைச்சன், நட்டவம், நக்கன் என்னும் வார்த்தைகளில் சில திரிந்து தற்காலம் ஓச்சன் நட்டுவன் என்று வழங்கியும் சில வழக்கத்திலில்லாமல் போனதும் போல இதுவுமிருக்க வேண்டும். கந்தர்வர்களும், கந்தர்விகளும் மிகுந்த பாடுந் திறமையுடையவர்களாயும் அழகுள்ளவர்களாயுமிருப்பவர்கள். அதுபற்றி அவர்களைத் தேவலோகத்திலிருந்து வந்தார்களென்று தேவர் சபையில் பாடினார் என்றும் புராணங்களில் பெருமையாகச் சொல்லி யிருக்கிறதே யொழிய மற்றல்ல. தேவர் சபையில் கந்தர்வர்கள் பாடினார் என்றும் நடனமாதர்கள் ஆடினார்களென்றும் கேள்விப்படுவோமே யொழிய மற்றவர் ஆடினார் பாடினார் என்று கேள்விப்படமாட்டோம். ஆகையினால் கந்தர்வர்கள் பாட்டையே தங்கள் ஜீவனமாகக் கொண்ட ஒரு வகுப்பார் என்று தெரிகிறது. இவர்கள் தஞ்சாவூர் கோயில் ஊழியத்திலும் அமர்ந்திருந்ததாகக் காண்கிறோம். இவர்கள் தேவலோகத்திலுள்ளவர்களல்ல, பூலோகத்தி லுள்ளவர்களே, தற்காலமுமிருக் கிறார்கள். இவை யாவற்றையும் நாம் கவனிக்கையில் இற்றைக்கு 1,000 வருஷங்களுக்கு முன்னும் அதற்குப் பல ஆயிர வருஷங்களுக்கு முன்னேயும் சங்கீதமும் பரதமும் தென்னிந்தியாவில் மிக விஸ்தாரமாக உன்னத நிலைபெற்றிருந்த தென்று நாம் அறிகிறோம். பாண்டியராஜ்யத்தில் முச்சங்கங்களிருந்த காலத்தில் சங்கீதத்தைப் பற்றிய விஷயங்கள் யாவும் பாஷையின் ஒரு பகுதியாகப் பிரதானங் கொண்டு வழங்கி வந்ததென்று நாம் இதன் முன் பார்த்தோம். இது தமிழ்நாட்டில் சுமார் 12,000 வருஷங்களுக்கு முன்னிருந்தே பழக்கமுள்ள தென்றும் பாஷையின் ஒரு பாகமென்றும் தென்மதுரை நாடு அல்லது லெமூரியா அழிந்த காலத்தில் பல இடங்களுக்குப் பரவியதென்றும் தென்மதுரையிலுள்ளோர் சங்கீத சாஸ்திரங்களை இழந்தபின் தங்களுக்குப் பழக்கமாயிருக்கிற உருப்படிகளைப் பரம்பரையாய்ப் பின்னடி யாருக்குப் போதித்து வந்தாரென்றும் அதுவே தென்னிந்திய சங்கீதம் மேன்மையுடையதென்று கொண்டாடுவதற்குக் காரணமாய் நாளது வரையிருக்கிறதென்றும் நாம் அறிய வேண்டும். சோழ மண்டலத்தின் முக்கியத் தேவாலயங்களில் போலவே மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, சங்கரநாயனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி முதலிய இடங்களிலுள்ள கோயில்களிலும் சங்கீத வகுப்பார் ஏற்பட்டிருக் கிறார்கள். அவ்வாலயங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துச்சொல்ல இங்கு அவசியமில்லை. இதுவே போதுமென்று நினைக்கிறேன். 5. தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கியக் குறிப்புகளும். பொன்னிலும் சிறந்ததாகப் பூர்வத்துள்ளோர் போற்றி வந்த இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் கடைச்சங்க காலம் வரையும் அதாவது கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையும் பாண்டிய ராஜர்கள் ஆதரித்து வந்தார்களென்றும் அதன்பின் தமிழை விசாரிக்கும் ஊக்கங் குறைந்ததென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். அக்காலம் முதல் அதாவது கி.பி. 50-ம் வருஷம் முதல் சோழ ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்த கரிகால் சோழன் தமிழ் வித்வான்களையும் வித்வசிரோமணிகளான பெண்களையும் ஆதரித்துப் பல சன்மானங்கள் செய்து புலவர் கூட்டங்களை விருத்தி செய்தாரென்று காண்கிறோம். அவர் காலத்தில் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழும் தெரிந்த பலர் பற்பல இடங்களிலுமிருந்து அங்கு வந்து சேர்ந்தார்களென்று தோன்றுகிறது. சோழராஜாக்கள் சேரராஜ்யத்தையும் பாண்டியராஜ்யத்தையும் இலங்கைத் தீவுகளையும் தெலுங்கு நாட்டையும் அடிக்கடி தங்கள் அரசாட்சிக்குட்படுத்தினார்களென்றும் பார்த்தோம். இது காரணத்தினாலும் பல வித்வசிரோமணிகள் சோழராஜ்யத்தில் வந்து தங்கியிருக்கலாம். இதன்பின் மும்முடிச் சோழன் என்று அழைக்கப்பட்ட ராஜகேசரிவர்மன் ராஜராஜ சோழன் 1013-ம் வருஷத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டி முடித்திருக் கிறாரென்று தெரிகிறது. விஜயாலயன் என்னும் சோழராஜன் காஞ்சிபுரத்தி லிருந்து வந்து தஞ்சாவூரை ஜெயித்து கி.பி. 846-880 ஆண்டுகொண்டிருந்தா ரென்று சொல்லியிருந்தாலும் ராஜராஜசோழன் காலம் முதற்கொண்டே தஞ்சை நகரம் சோழராஜ்யத்தின் முக்கியப் பட்டணமாக விளங்கிற்றென்று தோன்றுகிறது. அதுமுதல் தஞ்சை மாநகரம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் தேர்ந்தோருக்கு உறைவிடமாயிற்று. அவருக்குப்பின் ராஜேந்திர சோழன் என்னும் குலோத்துங்க சோழன் காலத்திலும் அதாவது கி.பி. 1084-இலும் அதற்குப்பின் இரண்டாவது குலோத்துங்கன் காலமாகிய கி.பி. 1135 இலும் அநேக தமிழ் வித்வ சிரோமணிகளிருந்ததாகத் தெரிகிறது. முதல் குலோத்துங்கன் காலத்தில் கவிச்சக்கரவர்த்தி ஜெயங் கொண்டான் என்பவரும் இரண்டாவது குலோத்துங்கன் காலத்தில் ஒட்டக்கூத்தரு மிருந்த தாகத் தெரிகிறது. இரண்டாவது ராஜாதிராஜ சோழன் காலத்தில் (1164-1178) கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, அடியார்க்கு நல்லார் முதலிய வித்வசிரோமணிகள் இருந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் சோழராஜ்யத்தின் விஸ்தீரணமும் செல்வாக்கும் குறைந்தன. பலர் ஒருவர் பின் ஒருவராகச் சொற்ப காலம் ஆளுகை செய்தார்கள். அதனால் பிரபல வித்வான்களுடைய கூட்டமும் கலைந்ததென்று தோன்றுகிறது. மேலும் தெலுங்கு பாஷை பேசுவோரும் மகராஷ்டிர பாஷை பேசுவோரும் சோழமண்டலத்துக்கு அரசர்களாய் வந்தார்கள். அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் (1572-1614) இயல் இசை நாடக மென்னும் முத்தமிழில் இசைத்தமிழாகிய சங்கீதத்தை மாத்திரம் வேங்கடமகி கவனித்ததாகத் தெரிகிறது. 1763-1787 வரையும் ஆண்டுகொண்டிருந்த துளஜாஜி மகராஜா காலத்தில் இசைத்தமிழில் தேர்ந்த பல வித்வான்களை வரவழைத்து ஆதரித்து விருத்தி செய்தாரென்று தெரிகிறது. இவர் காலத்தில் தாம் திருநெல்வேலியிலிருந்து வரவழைத்த செந்தில்வேல அண்ணாவி மகன் மகாதேவ அண்ணாவிக்கும் மற்றும் சங்கீத வித்வான்களுக்கும் சோழ ராஜ்யத்தின் செழிப்புள்ள இடங்களில் 10 வேலி, 5 வேலி, 2 வேலி, 1 வேலி ஆக அநேக மானியங்கள் அளித்தும் வீடுகள் கட்டிக் கொடுத்தும் விருத்திக்குக் கொண்டு வந்திருக்கிறார். இவர் காலத்திலும் இவர் மகன் சரபோஜி மகாராஜா காலத்திலும் பிரபலமான சங்கீத வித்வான்கள் சோழராஜ்யத்தில் தோன்றி யிருக்கிறார்கள். சோழ ராஜ்யத்தில் தற்காலம் ராஜ ஆதரவு குறைந்ததன் நிமித்தம் சங்கீதத்தினுடைய விருத்தியும் ஒருவாறு குறைந்ததென்றே சொல்ல வேண்டும். மேலும் வாய்ப்பாட்டுப் பாடுவதிலிருக்கும் சங்கீத நுட்பங்களும் பெருமை பொருந்திய சில கிரமங்களும் கேட்பாரும் கவனிப்பாருமற்றுக் கதையாய் முடிந்ததJ. தற்காலம் கடைப்பாட்டாயிருப்பது பின் எப்படி முடியுமோ அறியோம். இருந்தாலும் விவரம் தெரியக்கூடிய சில சங்கீத வித்வான்களைப் பற்றி இங்குப் பார்ப்பது நலமென்று தோன்றுகிறது. இவர்களில் சிலருக்கு இந்தியாவின் வழக்கம்போல நிச்சயமான காலம் சொல்லப்படவில்லை. சில முக்கியமான புஸ்தகங்களைப் பழமை யானதென்று சிலர் வாங்கமாட்டார்களென நினைத்து அவற்றில் வருஷம் போடாமல் விட்டுவிடுகிறது போலத் தங்களை மிகப்பூர்வ காலத்திலுள்ளவர்கள் என்று நினைக்கும்படித் திட்டமானகாலம் சொல்லுகிற தில்லை. இருந்தாலும் அக்காலத்திலிருந்த ராஜாக்களைக் கொண்டும் சில பெரிய வித்வான்களைக் கொண்டும் தெரியக்கூடிய காலம் சொல்லப்பட்டிருக்கிறது. ‘தற்காலமிருக்கிறார்’ என்பதை 1914-இல் இருக்கிறார் என வைத்துக் கொள்ள வேண்டும். இப்போதிருக்கிறவர்களும் இதன் முன்னிருந்தவர்களுமான சில வித்வசிரோமணிகளின் விவரம் போதுமானபடி இன்னும் கிடைக்கவில்லை. பல ஜில்லாக்களிலும் அங்கங்கே பூர்வந்தொட்டு பரம்பரையாய் வித்துவான்களாயிருந்து வரும் நாகசுரக்காரர்களில் மிகுதியானவர் பேர்களையும் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான்களுடைய விவரம் கிடைக்கும்பொழுது அவைகளை இரண்டாம் புத்தகத்தில் சேர்த்து வெளியிடுவோம். அதோடு இங்கே குறிப்பிட்ட வித்வசிரோமணிகளைப் பற்றித் திட்டமான காலமும் மற்றும் குறிப்பிடக்கூடிய விஷயங்களும் தெரியப்படுத்தினால் இத்துடன் சேர்த்துக் கொள்ளுவோம். அ அகிலாண்ட ஐயர். பூர்வம் தஞ்சாவூர். ஐதராபாத்தில் (Hyderabad) பாரிஸ்டர் அட் லா (Barrister-at-law) வாயிருந்தார். இவர் வீணை நன்றாய் வாசிப்பார் . இந்திய சங்கீதத்தை மேற்றிசையாருக்குச் சொல்லி வந்திருக்கிறார். அகோபிலர். இவர் கடப்பை ஜில்லாவில் அகோபில மடத்துக்குச் சமீபத்தில் இற்றைக்குச் சுமார் 300 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சங்கீத இரத்னாகரத்தையும், ஆஞ்சநேயமதத்தையும் அனுசரித்து சங்கீத பாரிஜாதம் என்ற சங்கீத இலட்சண கிரந்தத்தை எழுதியிருக்கிறார். அக்கிள் சுவாமி. இவர் சிதம்பரத்துக்குச் சமீபம் ஒரு கிராமத்தி லிருந்தவர். சமஸ்கிருதத்தில் கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். இவருக்குண்டா யிருந்த பெருவியாதிக்குக் கலியாணி இராகத்தில் “தாவக்க கரக்கமலே” என்ற கீர்த்தனம் பாடிப் பகவானைப் பிரார்த்திக்க ³ ரோகம் முழுவதும் நீங்கி நல்ல சௌக்கியம் பெற்றதாகச் சொல்லுகிறார்கள். இற்றைக்குச் சுமார் 70 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். அங்கண்ணா. தஞ்சாவூர். இவர் கர்நாடக முறைப்படி மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். லயக்கியான சம்பன்னர், தற்காலத்திலுள்ளவர். அங்கண்ணா. வேங்கடகிரி சமஸ்தானம். இவர் வீணை நன்றாய் வாசிப்பார். அண்ணாசாமி சாஸ்திரி. 1827-1900. இவர் சாமா சாஸ்திரிகளின் ஜேஷ்ட பௌத்திரர். வாய்ப்பாட்டிலும் பிடில் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். அநேக கீர்த்தனங்களையும் தானங்களையும் செய்திருக்கிறார். அண்ணாச்சி ஐயர். தஞ்சாவூரில் சரபோஜி மகாராஜா காலத்தில் (1798-1824) சமஸ்தான வித்வான். வீணையிலும் பாட்டிலும் பேர் பெற்றவர். அண்ணு, சோழமுத்து, இராமசுவாமி. இம்மூவரும் சகோதரர்கள். இவர்களில், அண்ணும் இராமசுவாமியும் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்கள். சோழமுத்து பரத நாட்டியம் கற்றுக் கொடுப்பதிலும் பிடில் வாசிப்பதிலும் பேர் பெற்றவர். அத்துக்கான். குவாலியர் சமஸ்தான வித்வான். சரபோஜி மகாராஜா சபையில் பாடி சன்மானம் பெற்றுப் போயிருக்கிறார். அப்பன். இவர் வெகு இனிமையாயும் சம்பிரதாயமாயும் பிடில் வாசிப்பார். இவருக்கு 5 பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் அப்புக்குட்டி பிடில் வெகு சுத்தமாய் வாசிப்பார். மற்றவர்கள் வாய்ப்பாட்டிலும் வீணை முதலானவைகளிலும் சிறந்தவர்கள். அப்பாக்கண்ணு. பொன்னுசாமி மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார். அவர் மருமகன் மாணிக்கமும் நாராயணசாமியும் பிடில் நன்றாய் வாசிப்பார்கள். அப்பாக்கண்ணு பிள்ளை. வீணை அப்பாக்கண்ணுப்பிள்ளை யென்று பெயர் வழங்கும். சிதம்பரத்தில் இப்போதிருக்கிறார். வீணை வாசிப்பதிலும் பரதநாட்டியம் சொல்லி வைப்பதிலும் மிகத் தேர்ந்தவர். அநேகர் இவரிடத்தில் படித்திருக்கிறார்கள். அப்பாசாமி ஐயர். இவர் மகா வைத்தியநாதையரின் சகோதரர். தமையனார் கூடவேயிருந்தவர். சங்கீதத்தில் நல்ல ஞான முள்ளவர். தற்காலம் இருக்கிறார். அப்பாஜி ஐயர், வேங்கட ஐயர். கோயம்புத்தூர், இவர்கள் மிருதங்கம் சுகமாய் வாசிப்பார்கள். அப்பாத்துரை ஐயங்கார். இராமநாதபுரம் ஸ்ரீனிவாசையங்காரின் மாணாக்கர், ஜலதரங்கம் நன்றாய் வாசிப்பார். அப்பாத்துரை ஐயர். திருப்பூந்துருத்தி. இவர் வீணை திருமலை ஐயரின் மாணாக்கர். சிவாஜி மகாராஜா காலத்தில் (1824-1865) தஞ்சாவூர் சமஸ்தான வித்வானாயிருந்தவர். சங்கீதத்திலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ந்தவர். இவரது பிள்ளை பஞ்சாபகேச பாகவதரும் மாணாக்கர் கிருஷ்ண பாகவதரும் சிறந்த வித்வான்கள். அப்பாய். இவர் சபாபதியின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் கன்னி மிருதங்கத்தில் தேர்ந்தவர். அப்பாவு. இவர் நாகலிங்கத்தின் தம்பி. பிடில் நன்றாய் வாசிப்பார். அப்புக்குட்டி, சாமுக்குட்டி. இவர்கள் சகோதரர்கள். வாய்ப்பாட்டில் மிகச் சிறந்தவர்கள். அப்பு பாகவதர். இவர் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். வெகு விசித்திரமாய்ப் பாடுவார். இவர் தம்பி பிடில் நன்றாய் வாசிப்பார். அப்பையர். இவர் வீணை விஜயவராகப்பையரின் பௌத்திரர். அநேக வாத்தியங்களில் சிறந்தவராய் இந்துஸ்தானி நன்றாய்ப்பாடி பல சமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். இவர் குமாரர் தசவாத்தியம் கிருஷ்ணையர். அமியப்பா, முனுசாமி, முத்து. இவர்கள் மிருதங்கத்தில் மிகத் தேர்ந்தவர்கள். அழகாய் வாசிப்பார்கள். அம்பாயிரம். பிடில் வெகு நன்றாய் வாசிப்பார். இவர் வாசிப்பைத் தஞ்சாவூர் இராமா நாயுடு பங்களாவில் வாசிக்கக் கேட்ட பைடால குருமூர்த்தி சாஸ்திரி இவருக்குச் சிங்கக்குட்டி என்று பேர் வைத்தார். இவர் பிள்ளை அப்பன் பிடில் வாசிப்பது சம்பிரதாயமாய் இருக்கும். இவருக்கு 5 பிள்ளைகள். அவர்களில் மூத்தவராகிய அப்புக்குட்டி பிடில் வெகு சுத்தமாய் வாசிப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பாட்டிலும் வீணை முதலானவைகளிலும் சிறந்த ஞானமுண்டு. அயிலாண்டம். (அகிலாண்டம்) இவள் குருமூர்த்தி நட்டுவனாரிடம் வீணையும் பரதமும் கற்றுக் கொண்டு ஸ்ரீரங்கத்திலிருந்தாள். இவள் பெண்களும் வீணை வாசிப்பதிலும் ராகம் பல்லவி பாடுவதிலும் ஷேத்திரிய பதங்களை பரதபாவத்துடன் பாடி ஆடுவதிலும் பெயர் பெற்றவர்களா யிருந்தார்கள். இரங்கநாயகி, குந்தளம், சொக்கு இவர்கள் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்தவர்கள். அரிகர பாகவதர். இவர் இப்போது வீரவநல்லூரிலிருக்கிறார். பிடில் நன்றாய் வாசிப்பார். அரிகதைகளும் சிவகதைகளும் செய்வார். இவர் முத்தையா பாகவதரின் சகோதரர். அரிதீர்த்த ஐயர். இவர் இராமபாகவதரின் மாணாக்கர். வாய்ப்பாட்டு நன்றாய்ப் பாடுவார். இப்போது புதுக்கோட்டையிலிருக்கிறார். அரிராவ். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். அருணாசல ஐயர். காஞ்சிபுரம். இவர் திருவாலங்காடு ஐயாவையரின் மாணாக்கர். இவருக்கு மிருதங்கமும் கடவாத்தியமும் நன்றாய் வாசிக்கத் தெரியும். அருணாசல ஐயர். பட்டணம். நன்றாய்ப் பாடுவார். அருணாசலக் கவிராயர். சீகாழியிலிருந்தவர். தமிழ்ப் பாஷையிலுள்ள ஐந்திலக்கணங்களையும் நன்றாய் அறிந்தவர். துளஜாமகராஜா (1763-1787) காலத்திலிருந்தவர். இவர் இராமாயணக் கதைகளை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற இரசங்களுடன் தகுந்த இராகங்களில் வர்ணக்கிரமங்கள் விளங்கும்படி 6 காண்டங்களுக்கும் தமிழில் கீர்த்தனங்கள் செய்து சென்னப்பட்டணம் மணலி முத்துகிருஷ்ண முதலியார் அவர்களின் சபையில் அரங்கேற்றிக் கனகாபிஷேகம் பெற்றவர். அருணாசலஞ்செட்டியார். ஜமீன்தார் தேவகோட்டை. வாய்ப்பாட்டிலும், சுரபத் முதலிய வாத்தியங்களிலும் தேர்ந்தவர். சங்கீத சாஸ்திரத்தை அறிந்தவர். அருணாசலமும், குருசாமியும். காஞ்சிபுரத்திலுள்ளவர்கள், மிருதங்கமும் கடமும் நன்றாய் வாசிப்பார்ககள். அருணாசலம். இவர் மகாதேவன் பரம்பரையைச் சேர்ந்தவர். நல்லப்பாவின் தம்பி. இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானம் உண்டு. அருணாசலம். கார்வெட்டிநகரம். வாய்ப்பாட்டிலும் கிஞ்சிராவிலும் கெட்டிக்காரர். அழகசிங்கையா. இவர் வீணை ஜீயரின் குமாரர். வீணை வாசிப்பதிலும் அநேகருக்கு சிட்சை சொல்லி வைப்பதிலும் சிறந்தவர். அழகநம்பி. இவர் மிருதங்கம் வாசிப்பது மிக அழகாயிருக்கும். தற்காலத்தில் கும்பகோணத்திலிருக்கிறார். அனந்தராம பாகவதர். இவரைப் பாலக்காடு அனந்தராம பாகவதர் என்று சொல்வார்கள். தற்காலத்தில் கும்பகோணத்திலிருக்கிறார். வாய்ப்பாட்டில் மிகத் திறமையுடையவர். கதைகளும் செய்வார். பிடில் முதலிய வாத்தியங்களிலும் பழக்கமுண்டு. அனந்தராமையர். இவர் மகாதேவையரின் மாணாக்கர். மிக விரிவாயும் அழகாயும் வாய்ப்பாட்டுப் பாடுவார். அரிகதையும் செய்வார். தற்காலத்திலுள்ளவர். அனந்தராமையர். சாத்தனூர் பிடில் அனந்தராமையர் என்று சொல்லுவார்கள். பிடில் நன்றாய் வாசிப்பார். வாய்ப்பாட்டும் பாடுவார். தற்காலம் கும்பகோணத்திலிருக்கிறார். அனந்தாச்சாரியார். கோயம்புத்தூர். கடவாத்தியத்தில் மிகத் தேர்ந்தவர். அஸ்ட்ரக கெங்காராம். இவர் குவாலியர் பலவந்தராவின் மாணாக்கர். சங்கீதத்தில் மகா வித்வான். ஹரிநாயக். 1500. இவர் “சங்கீதசாரம்” என்ற புஸ்தகம் செய்திருக்கிறார். ஆ ஆதப்பா (பச்சிமிரியம்). இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பெரிய வித்வான். அனேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவரது பேரப்பிள்ளை வீணை சுப்புக்குட்டி ஐயர். வீணை அழகாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். இவர் குமாரர் சுப்பண்ணா வீணையை ஒழுங்கு தவறாமல் வாசிக்கத்தக்கவர். ஆதப்பையர். இவர் தஞ்சாவூரில் பிரதாபசிங் மகாராஜா, துளஜாஜி மகராஜ காலங்களில் (1740-1787) சமஸ்தான வித்வானாக இருந்தவர். பாலசிட்சைக்காக வேண்டிய வர்ணங்களும் கீதங்களும் ரக்தி ராகங்களிலும் தேசிக ராகங்களிலும் செய்திருப்பதோடு ஸ்ரீ வேங்கடரமண முத்திரையுடன் விசேஷ கமக ஜாதிகளில் அனேக கீர்த்தனங்களும் செய்திருக்கிறார். இராகாலாபனை மத்திம கால பல்லவி பண்கள் இவரால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. வாயால் பாடவும் வீணையில் வாசிக்கவும் மிக ரஞ்சினை கொடுக்கிற “வெரிபோனி” யென்ற தானவர்ணத்தை பைரவி ராகத்தில் செய்திருக்கிறார். இவர் குமாரர் வீணை கிருஷ்ணையர். ஆதிமூர்த்தி ஐயர். இவர் பல்லவி கோபாலையரின் பிள்ளை. சிவாஜி மகாராஜா காலத்தில் (1824-1865) சமஸ்தான வித்வான். சல்லகாலி கிருஷ்ணயரின் ஞாதி, வீணை மிக அழகாய் வாசிப்பார். இவருடைய பிள்ளை வீணை வேங்கிடாசல ஐயர். ஆயில்யமகாராஜா. திருவனந்தபுரம் சமஸ்தானாதிபதி. இவர் பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்தவர். 40 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். ஆறுமுகம். இராயபுரம். இவர் பிடில் நன்றாய் வாசிப்பார். ஆனந்தகுமாரசாமி. A. இவர் ழடிnடிசயடெந P. குமாரசாமியின் குமாரர். இவரும் இவர் சமுசாரமும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பிலும் கெட்டிக்காரர்கள், ஊடநஅநவேள எழுதிய “ஐவசடினரஉவiடிn வடி ஐனேயைn ஆரளiஉ” என்ற புஸ்தகத்துக்கு முகவுரை எழுதியிருக்கிறார். 1909-ல் “நுளளயலள in யேவiடியேட ஐனநயடளைஅ” என்ற புஸ்தகம் செய்திருக்கிறார். அதில் முதல் 20 பக்கம் இந்திய சங்கீதத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறJ. கொழும்புவாசியான இவர் லண்டனில் இருக்கிறார். ஆனை ஐயர். இவர் சகோதரர் ஐயாவையர். இவர்களை ஆனை ஐயா என்று கூப்பிடுவார்கள். சரபோஜி மகராஜா காலத்தில் (1798-1824) சமஸ்தான வித்வானாயிருந்தவர். சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, சங்கீதம் முதலியவைகளில் மிகத் தேர்ந்தவர். தமிழில் அனேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இ இரகுபதிராவ். இவர் கமாஸ்தார் மாதவராவின் குமாரர். நன்றாய்ப் பாடுவார். சுரபத்தும், மிருதங்கமும் மிக அற்புதமாய் வாசிப்பார். இரங்கசாமி. ஸ்ரீரங்கம். அந்தனூர் சுப்பையரின் மாணாக்கர். அநேக வர்ணங்களையும் கிருதிகளையும் செய்திருக்கிறார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். பிடில் சுரபத் நன்றாய் வாசிப்பார். இவர் மாப்பிள்ளை சுப்பையா மாமனாரைப் போலவே பாடுவார். இரங்கசாமி ஐயங்கார். இவர் சென்னப்பட்டணம் வேப்பேரியில் சிறுவர்களுக்குச் சங்கீத பாடசாலை வைத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் மாதாந்த சங்கீதப் பத்திரிகை போட்டுக் கொண்டு மிருக்கிறார். வீணை, பிடில் நன்றாய் வாசிப்பார். இரங்கசாமி முதலியார். குளித்தலை, சிதம்பரத்தில் சங்கீத வித்வானாயிருக்கிறார். இரங்காச்சாரியார். இவர் தஞ்சாவூர் சுப்பராய சாஸ்திரியின் மாணாக்கர். பிடில் சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார். சென்னபட்டணம் சின்ன சிங்களாச்சாரியாரும் பெரிய சிங்களாச்சாரியாரும் இவரது மாணாக்கர்கள். இரங்காச்சாரியார். இவரை ஸ்ரீபெரும்புத்தூர் இரங்காச்சாரியார் என்றழைப்பார்கள். இவர் அலசூர் கிருஷ்ணையரின் மாணாக்கர்; நல்ல தாளஞானமுடையவர். பல்லவி அநேக ஜதிகளில் பாடுவார். இரங்காச்சாரியார். சந்திரகிரி, அலசூர் கிருஷ்ணையர் குமாரரான சுப்பராய சாஸ்திரியாரின் மாணாக்கர். பிடிலில் கமக மார்க்கங்களை வெகு அழகாய் வாசிப்பார். இரத்தினதேவி. சங்கீத சாகித்தியத்திலும் பாட்டிலும் கெட்டிக்காரர். இந்த அம்மாள் 30 நிபால், பஞ்சாப் கீர்த்தனைகளை 1913-வது வருஷத்தில் அச்சுப்போட்டு பிரசுரப்படுத்தியிருக்கிறார். இரபீந்தரநாத் தாகோர். இவர் வங்காளத்தில் உலகப் பிரசித்தமான தாகோர் குடும்பத்தைச் சேர்ந்தவர். வங்காள சங்கீத சாகித்தியங்களில் பிரபலமான வித்வான். இராகவாச்சாரியார். பெங்களூர். நன்றாய்ப் பாடுவார். இராகவையங்கார். முன்சீபுதார் மன்னார்குடி. கன ராகங்களை நன்றாய்ப் பாடுவார். வீணையும் வாசிப்பார். இராகவையர். இவரைக் கோயம்புத்தூர் இராகவையர் என்றழைப்பார்கள். கன நய தேசிகங்களை நன்றாயறிந்து அழகாய்ப் பாடுவார். இவர் திருவனந்தபுரம் சமஸ்தானம் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். இராகவையர், இராமானுஜ ஐயர், எம்பெருமானார். இவர்கள் சகோதரர்கள், இராகவையரும் எம்பெருமானாரும் பிடில் அற்புதமாய் வாசிப்பார்கள். இராமானுஜ ஐயர் கர்நாடகம் சுத்தமாய்ப் பாடுவார். இராகவையர் குமாரர் நம்பெருமாளையா பிடில் நன்றாய் வாசிப்பார். இராகவையரும் இவர் குமாரர்களும். வீணை சுகமாய் வாசிப்பார்கள். இராஜா ஜெகத்ஜோதிர்மல்லா. 1650. “சங்கீத சாரசங்கிரகம்” “சங்கீதபாஸ்கரம்” என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். இராஜாஜெகதீஸ்வரராம வெங்கடேஸ்வர எட்டப்பராஜா. 1899. எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்தில் அதிக பிரியமுள்ளவர். சங்கீத சாகித்தியத்தில் கெட்டிக்காரர். கமாஸ் இராகத்தில் ‘முருகா தருகிலையா’ என்ற கீர்த்தனமும் பைரவி இராகத்தில் ‘வாவா நீ வள்ளிமணாளா’ என்ற கீர்த்தனமும் செய்திருக்கிறார். இவருடைய சபையில் சுப்பராம தீக்ஷதர் சங்கீத வித்வானாயிருந்தார். ³ தீக்ஷதர் செய்த “சங்கீத சம்பிரதாய பிரதர்சனி” என்ற புஸ்தகம் அச்சிடப் பொருளுதவி செய்தார். இராஜா சுரேந்திரமோகன் தாகோர். இவர், சிற்பம், சித்திரம் கலை முதலிய சாஸ்திரங்களில் ஏக சந்தகிராகி என்றும் மகா வித்வான்கள் என்றும் பேர் எடுத்த தாகோர் குடும்பத்தில் ஒருவர். இவர் வங்காள சங்கீத சாகித்தியத்தில் சிறந்தவர். சங்கீத விஷயமாய் அநேக நூல்கள் எழுதி யிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் பரம்பரையைச் சேர்ந்தவர். இராஜா மான். இவர் குவாலியர் தேச அரசன். துருபத் முறையை ஒழுங்குபடுத்தினார். இராஜு ஐயர். லால்குடி. பிடில் வாசிப்பார். இராணா கும்பகர்ண மகிமேந்திரா. 1450. “ரசிகப்பிரியா” “சங்கீத மீமாம்சா” “சங்கீத இராஜா” என்ற நூல்களை எழுதியவர். இராதாகிருஷ்ண ஐயர். சித்தூர். இவர் திருவையாற்று தியாகராஜ ஐயரின் மாணாக்கர். பக்திரசமான கீர்த்தனைகளை மிக அழகாய்ப் பாடுவார். இராதாகிருஷ்ண பாகவதர். இவர் கும்பகோணத்திலிருக்கிறார். பிடிலும் ஆர்மோனியமும் நன்றாய் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராதாகிருஷ்ண பாகவதர். இவர் தலைநாயர் பல்லவி சோமுஐயரின் குமாரர். நன்றாய்ப் பிடில் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராதாகிருஷ்ணையர். லால்குடி இராமையரின் குமாரர். வாய்ப்பாட்டிலும் பிடில் வாசிப்பிலும் கெட்டிக்காரர். தற்காலத்திலுள்ளவர். இராதாகிருஷ்ணையர். கோபால பாகவதர் குமாரர். குன்னங்குடி கிருஷ்ணையரிடம் சங்கீதம் கற்றுத் தேர்ந்தவர். இராதாகிருஷ்ணையர். கிஞ்சிரா வாசிப்பார். இவர் குமாரர் தியாகராஜ ஐயர் சுகமாய்ப் பாடுவார். இராமகாளாஸ்திரி ஐயர். இவருக்கு வீணை இராம காளாஸ்திரி ஐயர் என்று பேர். சங்கீதத்திலும் வீணையிலும் மகாவித்வான். இவர் மாணாக்கர் வீணை பெருமாள் ஐயர். தீபாம்பாள்புரம் கஸ்தூரி ரெங்கையர் சுண்டி வேங்கடசுப்பையர், இவர் பிள்ளை சுண்டி வேங்கடரமணையர், சௌக்கம் வீரபத்திர ஐயர், சௌக்கம் சீனுவையர் இந்த 6 பேரும் சங்கீதத்தில் பேர் பெற்ற வித்வான்களாயிருந்தார்கள். இராமகிருஷ்ண ஐயர். சாலியமங்கலம். வீணை வாசிப்பார். இராமகிருஷ்ண பாகவதர். திருநெல்வேலி. வீணை வாசிப்பார். இராமகிருஷ்ணையர். இவர் திருவனந்தபுரம் சமஸ்தான வித்வான். பரமேஸ்வர பாகவதரின் குமாரர். வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் தேர்ந்தவர். தற்காலத்திலுள்ளவர். இராமகிருஷ்ணையர். இராயவேலூர். சுகமாய்ப்பாடுவார். இராமகிருஷ்ணையர் B.A.,B.L., Retired Sub-Judge, Palghat.. இவர் தேர்ந்த சங்கீத ஞானமுடையவர். நன்றாய் வீணை வாசிப்பார். தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றியும் சுருதிகளைப் பற்றியும் அனேக வியாசங்கள் எழுதியிருக்கிறார். இராமசாமி. கரூர். நன்றாய்ப் பாடுவார். இராமசாமி அண்ணாவி. இவர் திருநெல்வேலியில் தளவா முதலியார் காலத்தில் வீணை வாசிப்பதிலும் பரத சாஸ்திரத்திலும் கெட்டிக்காரரா யிருந்தார். இவரிடம் திருநெல்வேலி வெள்ளையும், மாரிமுத்தும், சொர்ணமும், மதுரை காளிமுத்தும், அவள் மகளும் பாட்டும் வீணையும் கற்றுக் கொண்டார்கள். இராமசாமி ஐயர். இவர் மைசூர் வேங்கடராமையர் குமாரர். இவரும் இவர் சகோதரர் இலட்சுமண ஐயரும் வீணை சுகமாய் வாசிப்பார்கள். இராமசுவாமி. கொரநாடு இராமசுவாமி என்று சொல்லுவார்கள். முத்துசுவாமி தீக்ஷதரின் மாணாக்கர். சங்கீத இலட்சண சமர்த்தர். இராமசுவாமி. திருவிடைமருதூர். இவர் மிருதங்கம் தாளம் தவறாமல் வாசிப்பார். இராமசுவாமி. மாயவரம், நாகசுரம் வாசிப்பார். இராமசுவாமி ஐயங்கார். ஸ்ரீரங்கம், வீணை வாசிப்பார். இராமசுவாமி ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருக்கிறார். இவர் பிள்ளைகளும் சங்கீதத்திலும் பிடில் மிருதங்கம் முதலியவைகளிலும் நல்ல அப்பியாசமுள்ளவர்கள். இராமசுவாமி ஐயர். காஞ்சிபுரம், சங்கீத வித்வான். இராமசுவாமி ஐயர். இவர் மகா வைத்தியனாத ஐயரின் தமையன். தமிழ், தெலுங்கு, சங்கீதம் இவைகளில் சிறந்த புலவர், பெரிய புராணத்தையும் மாணிக்கவாசகர், மார்க்கண்டேயர், பிரகலாதன் முதலிய அநேகர் சரித்திரங்களையும் சீதா கலியாணத்தையும் தமிழில் கீர்த்தனமாகச் செய்திருக்கிறார். திருவையாற்றந் தாதியும், திருச்செந்தூர் சந்தவிருத்தமும் பாடியிருக்கிறார். சேது சமஸ்தானத்தில் தமிழ் வித்வானாயிருந்த போது ‘மோனைச் சிங்கம்’ என்று பட்டப்பேர் பெற்றவர். இவர் குமாரர் வையை R. சுப்பிரமணிய ஐயர், தஞ்சாவூர் S.P.G. High School- -ல் தமிழ்ப் பண்டிதராயிருக்கிறார். இவருக்குச் சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. இராமசுவாமி ஐயர். இவர் திருவனந்தபுரம் கிட்டுப் பாகவதர் குமாரர். பிடில் அற்புதமாய் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராமசுவாமி ஐயர். இவர் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையரின் மாணாக்கர் பிடில் நன்றாய் வாசிப்பார். இராமசுவாமி ஐயர். இவர் வராகப்பையரின் வம்சத்தார். வீணையில் வித்வான். இராமசுவாமி தீக்ஷதர். கி.பி. 1735 வேங்கடேஸ்வர தீக்ஷதரின் குமாரர். மத்தியார்ச்சுனத்தில் வேங்கிடமகியின் மாமன் பேரனான வேங்கிட வைத்தியனாத தீக்ஷதரிடத்தில் வீணையும் சதுர் தண்டிப் பிரகாசிகையும் கற்றவர். தஞ்சாவூரில் அமரசிங் மகாராஜா காலத்தில் சமஸ்தான வித்வானா யிருந்து சன்மானம் பெற்றவர். இவரது பிள்ளைகள் முத்துசாமி தீக்ஷதர், சின்னசாமி தீக்ஷதர், பாலசாமி தீக்ஷதர் என்று மூவர். இந்தக் குடும்பத்தை மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரும் அவர் பிள்ளை சின்னையா முதலியாரும் ஆதரித்து வந்தார்கள். சின்னையா முதலியார் பேரில் இவர் செய்த 108 இராகதாள மாலிகைக்காக முதலியார் கனகாபிஷேகம் செய்தார். தன்னுடைய இரண்டாவது பிள்ளை சின்னசாமி தீக்ஷதருக்குக் கண்பார்வை குறைவுபட திருப்பதி வேங்கடாசல ஸ்வாமி சந்நிதியில் 45 நாளிருந்து ‘வேகவாகினி’ ராகத்தைப் பல்லவியாக எடுத்து இதர 48 இராகத்தில் ராகமாலிகை செய்து ஸ்வாமியை பிரார்த்தித்துக் கண்பார்வை பெற்றுத் திரும்பி வந்தார் என்பர். மீனாட்சி அம்மன்பேரில் 44 ராகத்தில் ஒரு ராக மாலிகையும், ரீதிகௌளா, இந்தோளா, மனோகரி, பூர்ணச்சந்திரிகா ராகங்களில் சௌக்க வர்ணங்களும், சங்கராபரண தான வர்ணங்களும், அனேக கீர்த்தனைகளும் வேங்கட கிருஷ்ண முத்திரையுடன் செய்திருக்கிறார். அம்சதொனி ராகத்தை விசேஷமாய்க் கற்பித்து பதங்கள் செய்திருக்கிறார். இராமசுவாமி பாகவதர். லால்குடி. சங்கீத வித்வான். இராமசுவாமி பாகவதர். மாயவரம். சங்கீத வித்வான். இராமசுவாமி பாகவதர். யோகி. இவர் கிட்டு பாகவதரின் மாணாக்கர். சௌக்கமாயும் நன்றாயும் வாசிப்பார். இராமசுவாமி பாகவதர். திருவிசநல்லூர். சங்கீத வித்வான். இராமசேது பாலசுவாமி. இவர் வீணையும் மிருதங்கமும் வாசிப்பார். இனிமையான குரலுடன் பாடுவார். ஷேத்திரியபதம் குப்பையரிடம் சொல்லிக் கொண்டவர். இராமச்சந்திர தொண்டமான் மகாராஜா. புதுக்கோட்டை. இவர் வீணை சுப்புக்குட்டி ஐயரிடம் சங்கீதமும் வீணையும் கற்றுக் கொண்டவர். நன்றாய்ப் பாடுவார். இராமச்சந்திர பாகவதர். இவர் திருவனந்தபுரம் வீணை கலியாண கிருஷ்ண ஐயரின் தம்பி. இவரும் வீணை மிகுந்த சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். இராமச்சந்திர பாகவதர். இவர் எட்டையாபுரம் சமஸ்தான வித்வானாயிருந்தார். சம்பிரதாயமாயும் தாளம் தவறாமலும் பாடுவார். இராமச்சந்திர பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். இராமச்சந்திரையர். திருவத்தூர், பிடில் நன்றாய் வாசிப்பார். இராமச்சந்திரையர். நாகப்பட்டினத்துக்குச் சமீபம் கீவளூர். சுகமான சாரீரத்துடன் பாடுவார். தற்காலத்திலுள்ளவர். இராமண்ணாசுவாமி. தஞ்சாவூர். மடாதிபதி பரம்பரை. வீணை மிருதங்கம் வாசிப்பார். இராம தாசர். இவர் கோபன்னாமாத்தியரின் குமாரர். சுமார் 300 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். பத்திராஜலம் தாலுகாவில் தாசில்தாரா யிருக்கையில் சர்க்கார் பணத்தை இராமபத்திரர் கோயிலை விருத்தி செய்வதற்கும் சுவாமிக்கு நகைகள் செய்வதற்கும் உபயோகித்ததினால் நவாபினால் சிறையில் வைக்கப்பட்டபோது ஸ்ரீ இராமர் பேரில் அநேக கீர்த்தனங்கள் பாடிப் பிரார்த்தித்தனராம். அவை விசேஷமாய் வழக்கத்தி லிருக்கின்றன. சங்கீத சாகித்தியத்தில் மிக வல்லவர். இராம தாசுலு. இவர் புதுக்கோட்டை சமஸ்தான சங்கீத வித்வான் சேஷாசல பாகவதரின் தம்பி. சங்கீத சாகித்யங்களில் தேர்ந்தவர். இராம முத்திரையுடன் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இராம தாஸ். பெங்களூர். நன்றாய்ப் பாடுவார். இராமதாஸ் சுவாமி. தஞ்சாவூர். இவர் மகாராஷ்டிர மடாதிபதி பரம்பரையைச் சேர்ந்தவர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். இராமநாதன் (Honourable P.) இவர் அரிச்சந்திர நாடகத்தை இங்கிலீஷில் எழுதி லண்டன் பட்டணத்திலும் ஐரோப்பாவின் பல பெரிய பட்டணங்களிலும் ஆட்டுவித்துப் புகழ் பெற்றவர். இலங்கை சட்ட நிர்மாண சபையின் அங்கத்தினருள் ஒருவர். இராம பாரதி, கலியாண பாரதி. இவர்கள் தஞ்சாவூர் ஜில்லா வேட்டனூர் கிராமத்திலுள்ளவர்கள். இருவரும் சங்கீதத்திலும் பாட்டிலும் சிறந்தவர்கள். இராமபாரதி சிவகங்கை சமஸ்தானத்திலும் கலியாணபாரதி புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் வித்வான்களாயிருந்தவர்கள், இராமபாரதி குமாரர் கோபால பாகவதர் நன்றாய்ப் பாடுவார். இராம ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். இராமாஞ்சலு. இவர் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். கர்நாடகமும் இந்துஸ்தானியும் நன்றாய்ப் பாடுவார். இராமாஞ்சுலு நாயுடு. (பதால) ஷேத்திரக்ஞர் பதங்களையும் சாரங்க பாணி பதங்களையும் செட்டி பட்டணம் சீனையர் பதங்களையும் நன்றாய்ப் பாடுவார். இராமாஞ்சுலு நாயுடு. மிருதங்கம் சுகமாய் வாசிப்பார். இராமாமாத்தியர். கி.பி. 1550. இவர் திம்மா மாத்தியரின் குமாரர். விஜயநகர சக்கிரவர்த்தியான வேங்கடாத்திரி ராஜ சபையில் சமஸ்தான பண்டிதர். பரதசாஸ்திரத்தில் மகா நிபுணர். இவருடைய சாமர்த்தியத்தைப் புகழ்ந்து சமஸ்தானத்தில் இவரை “அபிநவவரதாச்சாரியார்” என்ற பட்டப் பெயரால் அழைத்தார்கள். ஏலா, ராக கதம்பம், சுவராங்கம், கத்திய பிரபந்தம், பஞ்சதாளேஸ்வரியம், ஸ்ரீரங்கவிலாசம் என்ற நூல்கள் செய்திருக்கிறார். ராஜாவின் விருப்பத்தின்படி சங்கீத இலட்சணங்களடங்கிய ‘சங்கீதசுரமேள களாநிதி’ என்னும் அருமையான நூலையும் செய்திருக்கிறார். இராமமிர்தம். உமையாள்புரம் கிருஷ்ணையர் தௌகித்திரர். வாய்ப் பாட்டிலும் பிடிலிலும் கெட்டிக்காரர். இராமானந்த எதீன்துருலு. இவர் சமஸ்கிருதத்தில் “கௌரிராகப் பிரபந்தம்” என்னும் சங்கீத நூல் செய்திருக்கிறார். அகோபிலருக்குப் பின்னிருந்தவரென்று தெரிகிறது. இராமானுஜ ஐயர். திருநகரி. இவர் வீணையிலும் சாகித்தியத்திலும் நல்ல ஞானமுடையவர். இராமானுஜாச்சாரியார். இவர் திருப்பதி துரைசாமி ஐயங்காரின் சகோதரர். வீணையிலும் பிடிலிலும் சிறந்த வித்வான். இராமானுஜாச்சாரியார். இவரை படக்கப்பேட்டு இராமானுஜாச்சாரியர் என்றழைப்பார்கள். இவர் வீணை குப்பையரின் மாணாக்கர். வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். இராமுடு பாகவதர். திருமலை ராஜன் பட்டணம். இவர் சுரம் சப்தங்களோடு சேர்த்துப் பல்லவியை விஸ்தரித்துப் பாடுவார். இராமையங்கார். ஸ்ரீவில்லிபுத்தூர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் மாணாக்கர் கந்தாடை திருமலை ஐயங்கார் நன்றாய்ப் பாடுவார். இராமையங்கார். சங்கீத வித்வான். இராமையரும் இவர் பிள்ளை கிருஷ்ணசுவாமியும். பிடில் நன்றாய் வாசிப்பார்கள். இராமையர். இவரைக் திருக்குன்னம், ராமையர் என்று சொல்லுவார்கள். அனந்தசயனம் கோவிந்தபெருமாளின் மாணாக்கர். இவர் ஷட்காலம் நன்றாய்ப் பாடுவார். இவரது பிள்ளை சாமி சாஸ்திரியாரும் வாய்ப்பாட்டில் மிகுந்த யோக்கியதையுடையவர். இராமையர். லால்குடி. பெரிய வித்வான். இவர் பிள்ளை குருசாமி ஐயர். நன்றாயும் சம்பிரதாயமாயும் பாடுவார். கடவாத்தியம் அற்புதமாய் வாசிப்பார். இரண்டாவது குமாரர் இராதாகிருஷ்ணையர் பாட்டிலும் பிடிலிலும் கெட்டிக்காரர். இராம் சாகேப். இவரை நிம்ளக்கர் சாய்பு என்றும் சொல்லுவார்கள். இவர் மிகவும் அழகாயும் சுத்தமாயும் பாடுவார். வீணை பிடில் நன்றாய் வாசிப்பார். பரோடா முதலான இடங்களுக்குப் போய்ப்பாடி மகாவித்வான் என்று பேர் பெற்றவர். இராயாச்சாரியார். இவர் விஜயநகரம் சமஸ்தான வித்வான், குருராயாச்சாரியாரின் மாணாக்கர். வடதேசத்து கத்துமார்க்கத்தில் அநேகஜாதிகளைத் தாளம் தவறாமல் பாடுவார். இருதய நாராயணர். “இருதயப்பிரகாசிகை” என்ற சங்கீத புஸ்தகம் எழுதியிருக்கிறார். இலட்சுமணாச்சாரியார். விசித்திர சதாவதானி கனபாடி வித்வான். இவர் அரிகதையிலும், பகவத் கதாப்பிரசங்கத்திலும் மிகச் சிறந்தவர். இலட்சுமிகாந்த மகாராஜா. இவர் சமஸ்கிருதத்திலும் சங்கீதத்திலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர். கீர்த்தனங்கள் வர்ணங்கள் சாகித்தியங்கள் செய்திருக்கிறார். அவைகளை நாளதுவரையும் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். இலட்சுமிநாராயண பாபு. இவர் விஜயநகர சமஸ்தானத்தில் ருத்திரவீணை வாசிப்பதில் சிறந்தவர். இலட்சுமையர். இவர் சதாசிவராவின் மாணாக்கரான வேங்கடரமண பாகவதரின் மாணாக்கர். சதாசிவராவின் கீர்த்தனைகளையும் தியாகையர் கீர்த்தனைகளையும் ஏற்பாடாய்ப் பாடுவார். இவரது மைத்துனர் ஐயலையாவும் சதாசிவராயர் கீர்த்தனைகளை நன்றாய்ப் பாடுவார். உ உபேந்திர கிசோரே. இவர் கல்கத்தாவில் பெரிய வித்வான். எ எம்பெருமான் ஐயர். பிடில் அற்புதமாய் வாசிப்பார். இவர் பிள்ளை தேசிகலு வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். ஏ ஏனாதி. பரதசிட்சை சொல்லி வைப்பதில் வல்லவர். ஐ ஐயாசாமி. நாகப்பட்டணம். இவர் பிடில் சுகமாய் வாசிப்பார். ஐயாசாமி. திருவாரூர். முத்துசுவாமி தீக்ஷதரின் மாணாக்கர். தான வர்ண பதங்கள் அநேகம் செய்திருக்கிறார். ஐயா பாகவதர். தியாகராஜ ஐயரின் முதன்மையான மாணாக்கர். வீணை பிடில் வாத்தியங்களிலும் இராகம் பல்லவி பாடுவதிலும் சிறந்தவர். இவர் மாணாக்கர் சிவராம கிருஷ்ணையர். ஐயாவையர். திருவலம் (North Arcot.) இராகம் பல்லவி பாடுவதில் பேர் பெற்றவர். மைசூர் மகராஜா கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சமஸ்தான வித்வான். இவர் மாணாக்கர் மைசூர் சதாசிவராயர். ஐயாவையர். இவர் தஞ்சாவூர் வேங்கிடசுப்பையரின் குமாரர். ஆனை ஐயரின் சகோதரர். சரபோஜி மகராஜா காலத்தில் (1787-1798) சமஸ்தானத்தில் வித்வானாயிருந்தவர். சமஸ்கிருதம் தமிழ் தெலுங்கு பாஷைகளில் சிறந்த பண்டிதர். இவருடைய மாணாக்கர் வையைச்சேரி துரைசாமி ஐயர் என்கிற பஞ்சனத ஐயர். ஓ ஓதப்பையர். இவரை சிக்க ஓதப்பையர் என்றழைப்பார்கள். இவர் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சிறந்த வீணை வித்வானாயிருந்தவர். வீணை விஜயவராகப்பையரும் சல்லகாலி வீரராகவையாவும் இவர் வம்சத்தில் பிறந்த சகோதரர்கள். க கச்சி. மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். கச்சி சாஸ்திரி. இவர் சாமாசாஸ்திரியின் மருகர், நன்றாய்ப் பாடுவார். பிடிலும் வாசிப்பார் நல்ல தாளஞானமுள்ளவர். கஸ்தூரிரங்கையர். தீபாம்பாள்புரம். இவர் வீணை சிறிய காளஸ்திரி ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் கீர்த்தி பெற்றவராயிருந்தார். கடுவா பாகவதர். இவருக்கே முத்தையா பாகவதர் என்றும் பேர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சோம்பூர் வடகரையிலிருந்தார். வாய்ப்பாட்டிலும் தாள ஞானத்திலும் நல்ல விற்பத்தியுள்ளவர். கணபதி ஐயர். இவரை முக்கேகணபதி ஐயர் என்றழைப்பார்கள். இவர் திருவனந்தபுரம் சமஸ்தான வித்வான். பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். மிகவும் நன்றாய்ப் பாடுவார். கணபதி ஐயர். சப்ஜட்ஜ், தஞ்சாவூர். வீணை வாசிப்பிலும் பாட்டிலும் வல்லவர். கணபதி சாஸ்திரிகள். மெலட்டூர். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சிறிய தகப்பனார். தலை அசையாமல் கத்தி கட்டிக் கொண்டு அதிக அழகாய்ப் பாடுவார். நல்ல தாளஞானமுள்ளவர். பெரிய சமஸ்தானங்களில் விசேஷ சன்மானங்களைப் பெற்றிருக்கிறார். பரத சாஸ்திரத்தில் இவரிடத்தில் நிருத்தங்களைக் கற்றுக் கொண்டவர்கள் தாளத்தில் கெட்டிக்காரரா யிருக்கிறார்கள். கணேச கிரிக்கி-பாவா கிரிக்கி. இவர்கள் பூனாவாசிகள். துர்பத்தியால தில்லானா தோம்ரீலு கஜ்ஜல் இலாவணி தறானால் முதலானவைகளையும் மற்றவர் பாடமுடியாத டப்பாக்களையும் நன்றாய்ப் பாடுவார்கள். கண்ணுசாமி பிள்ளை. பரத சங்கீத சாகித்திய வித்வான். மலையாளம், ராமநாதபுரம் முதலிய சமஸ்த்தானங்களில் அநேக பரிசு பெற்றவர். பரோடா சமஸ்தானத்தில் மாதத்துக்கு 75 ரூபாய் சம்பளமும் 15 ரூபாய் படியும் பெற்று 10 வருஷம் அங்கிருந்து அநேகருக்குச் சொல்லி வைத்தவர். கண்ணுசாமி ராவ். சிட்டு சுவாமிராவ் சகோதரர். புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தார்கள். கண்ணுசாமிராவ் புல்லாங்குழலிலும் பிடிலிலும் ஆர்மோனியத்திலும் சுரபத்திலும் சிறந்த யோக்கியதையுள்ளவர். தற்காலத்திலுள்ளவர். கந்தசாமி. தஞ்சாவூர். சுகமாய்ப் பாடுவார். நல்ல தாளஞானமுண்டு. பரதம் ஆட்டி வைப்பதில் கெட்டிக்காரர். கந்தசாமி பிள்ளை. இவர் மதுரை மீனாட்சி சுந்தர ஆலயத்தின் நட்டுவாங்கப் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தர அண்ணாவியின் குமாரர். பரத சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர். கலியாண கிருஷ்ணையர். திருவனந்தபுரம் சமஸ்தானம். வீணை வெகு விசித்திரமாயும் இனிமையாயும் வாசிப்பார். இவர் தம்பி இராமச்சந்திர பாகவதர் மிகுந்த சம்பிரதாயமாயும் சுத்தமாயும் வாசிப்பார். கலியாண சுந்தரம் பிள்ளை. இவர் பரத சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர். மதுரை ஆலயத்தின் நட்டுவாங்கப் பரம்பரையில் வந்த மீனாட்சி சுந்தரம் அண்ணாவியின் குமாரர். கலியாண பாரதி. பட்டுக்கோட்டை தாலுகா வேட்டனூரிலுள்ளவர். புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்தார். நன்றாய்ப் பாடுவார். கல்லிநாதர். கி.பி. 1553. இவர் இராமாமாத்தியர் குலத்தில் பிறந்த இலட்சுமணாச்சாரியாரின் குமாரர். இம்மிடி தேவராயசக்கிரவர்த்தி காலத்தில் விஜயநகர சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். சங்கீத இரத்னாகரத்துக்கு இவர் செய்திருக்கும் உரை எல்லாராலும் சிறந்ததாகக் கொண்டாடப்படுகிறJ. இவருடைய மிகுந்த கல்வித் தேர்ச்சிக்காகச் சதுர கல்லி நாதர் என்றும் அபிநவ பரதாச்சாரியார் என்றும் கல்கி நாதரென்றும் அழைக்கப்பட்டார். கற்பபுரி, தர்மபுரி வாரு. இவர்கள் கற்பபுரி தர்மபுரி என்ற முத்திரையுடன் சிருங்கார ரசத்தில் அநேக ஜாவளிகள் செய்திருக்கிறார்கள். கன்னி. இவர் கும்பகோணம் பிடில் அப்பாயியின் குமாரர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். கன்னி. (தட்டாரக்கன்னி) இவர் பிடில் மிருதங்கம் கடவாத்தியம் நன்றாய் வாசிப்பார். கன்னையா. தஞ்சாவூர் கன்னையாகாரு. இவர் சங்கீதத்தில் பெரிய இலட்சண வித்வான். இவரது மாணாக்கர் முகுந்தையா, சிந்தாமணி, வட்டி சுப்பையா. தற்காலத்திலுள்ளவர். கா காந்தீஸ்வர அண்ணாவி. மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலய நட்டுவாங்கப் பரம்பரையில் வந்தவர். இவர் பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். காபிரியேல் உபதேசியார். நல்லூர் திருநெல்வேலி ஜில்லா. அர்த்த புஷ்டியுள்ள அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். காமராஜு. இவர் விஜயநகரம் சமஸ்தானத்திலிருந்தார். பிடில் வாசிப்பதிலும் தாளஞானத்திலும் அபிநயத்திலும் சிறந்த வித்வான். காளாஸ்திரி ஐயர். (வீணை) வீணை சாம்ப ஐயரின் சகோதரர். சரபோஜி மகாராஜா காலத்தில் (1798-1824) தஞ்சாவூரில் சமஸ்தான வித்வான். இவரது சம்சாரமும் இராஜ ஸ்திரீகளிடத்தில் வீணை வாசிப்பார்களாம். இவர் தன் பிள்ளையினுடைய நல்ல வீணை வாசிப்பைக் கேட்டு அசூயைப்பட்டார் என்று பரம்பரையில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கி கிட்டு பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தான வித்வான். பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர் சுரபத் நன்றாய் வாசிப்பார். இவர் மாணாக்கர் யோகி ராமசாமி பாகவதர். கிரிராஜகவி. திருவாரூர். மகாராஷ்டிர ராஜாக்களில் இரண்டாவது இராஜாவானஷாஜி மகராஜா காலத்தில் (1687-1711) தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருந்தார். சங்கீதத்தையே தனமாகக் கொண்டவர். பக்திரசமாயும் வேதாந்த சாரமாயும் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். கிரிவாசப்பா. இவர் பரதம் சொல்லி வைப்பதில் கெட்டிக்காரர். கிருஷ்ணசாமி ஐயர். இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் குமாரர். வீணையிலும் பிடிலிலும் கைதேர்ந்தவர். இவர் சாரீரம் கின்னரதந்தியின் ஓசைபோல் மிக இனிமையாய் இருக்கும். தற்காலத்திலுள்ளவர். கிருஷ்ணசாமி ஜாதவராவ்சாயேப். சிவாஜி மகராஜாவின் மைத்துனர். நன்றாய்ப் பாடுவார். வீணை முதலிய வாத்தியங்களும் வாசிப்பார். இவர் மகா வைத்தியநாதையரின் மாணாக்கர். கிருஷ்ண பாகவதர். தஞ்சாவூர் கர்னாடக இந்துஸ்தானி சங்கீதங்களில் தக்க ஞானம் உடையவர். சுரபத், பிடில், மிருதங்கம், கிஞ்சிரா இவைகளை சுகமாய் வாசிப்பார். யாவருக்கும் மனமகிழ்ச்சி யுண்டாகும்படி அரிகதையும் செய்வார். இவர் வடதேசத்து வித்வான்கள் கண்ணிகள் பாடிக்கொண்டு கதை செய்வதையும் தென்னாட்டில் கீர்த்தனமும் வசனமுமாகச் சேர்ந்து நாடகம் ஆடுவதையும் ஒன்றாகச் சேர்த்துக் கீர்த்தனங்களும் திண்டி ஜாக்கிகளும் வசனமும் கலந்து கதை செய்வதில் முதல் முதல் ஆரம்பித்தவர். இவருக்குப் பிறகுதான் கதை செய்கிறவர்கள் என்ற வகுப்பார் புதிதாய் ஆரம்பமானார்கள். சபையோரை சந்தோஷப்படுத்தும்படியான சாமர்த்தியமுடையவர். பஞ்சாபிகேச பாகவதர் இவரின் முக்கிய மாணாக்கர். கிருஷ்ணப்பா. இவரைப் பிடாரம் கிருஷ்ணப்பா என்று அழைப்பார்கள். இவர் மைசூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருக்கிறார். வீணை நன்றாய் வாசிப்பார். மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணப்பா. (நர்த்தக்க) இவர் தஞ்சாவூர்வாசி. மிக அழகாய் மேளம் வாசிப்பார். கிருஷ்ணமாச்சாரியார். இவரைக் குளத்தூர் கிருஷ்ணமாச்சாரியார் என்றழைப்பார்கள். இவர் பட்டணம் சுப்பிரமணியையரின் மாணாக்கர். பிடில் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லி வைப்பதில் மிகத் தேர்ந்தவர். கிருஷ்ணமாச்சாரியார். வீணையிலும் பாட்டிலும் சிறந்தவர். கிருஷ்ணமாச்சாரியார். காலாட்டிப்பேட்டை. இவர் சென்னப் பட்டணம் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணமூர்த்தி. இவரை வாசு கிருஷ்ணமூர்த்தி யென்றழைப்பார்கள். கமக மார்க்கத்தில் சம்பிரதாயமாயும், சுத்தமாயும், இனிமையாயும் வீணை வாசிப்பார். கிருஷ்ணாஜி. இவர் தஞ்சை நகரில் நாகசுரத்தில் கைதேர்ந்தவர். கிருஷ்ணாஜி பல்லால் தேவால். (Retired Dy. Collector) இந்தச் சங்கீதத்தில் வழங்கி வரும் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி இந்துஸ்தான் சங்கீதத்தில் அதிசமர்த்தரான அப்துல் கரீம் என்ற சங்கீத வித்வானை வைத்து ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். கிருஷ்ணையங்கார். முன்சீபு, திருசிராப்பள்ளி, வீணையிலும் பாட்டிலும் கெட்டிக் காரராயிருந்தார். கிருஷ்ணையங்கார். மதுரை, இவர் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான், ராகம், பல்லவி, நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணையர். இவரைப் பாலக்காட்டு கிருஷ்ணையர் என்று அழைப்பார்கள். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணையர். உமையாள்புரம். இவர் மானம்புச்சாவடி வேங்கட சுப்பையரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். சிட்சை நன்றாய் சொல்லிக் கொடுப்பார். இவருடைய மாணாக்கர் மாயவரம் பஞ்சாபிகேச சாஸ்திரியார். கிருஷ்ணையர். வீணை கிருஷ்ணையா என்றழைப்பார்கள். இவர் ஆதிப்பையரின் குமாரர். வீணை வாசிப்பதிலும் சங்கீதத்திலும் மிக கெட்டிக்காரர். மைசூர், விஜய நகரம், புதுக்கோட்டை ராஜாக்கள் பேரில் 7 தாளங்களில் துருவதாளம் தவிர மற்ற 6 தாளங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் போட்டுக் கொண்டு வந்தால் தன் கையில் துருவதாளம் போட்டுப் பாடி பல்லவியில் கொண்டு வந்து முத்தாய்க்கும்போது இவ்வேழு தாளமும் அறுதியாய் தாள ஆரம்பத்தில் எடுக்கும் படியாய்ப் பாடப்பட்டவர். இவர் குமாரர் வீணை சுப்புக் குட்டி ஐயர். கிருஷ்ணையர். சங்கீத வித்வான். கிருஷ்ணையர். இவர் சல்லகாலி கிருஷ்ணையர். பல்லவி கோபாலையரின் குமாரர். சிவாஜி மகாராஜா காலத்தில் (1824-1865) தஞ்சாவூர் சமஸ்தான வித்வான். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் சமர்த்தர். வீணையில் பக்கசாரணை தந்தி மீட்டாமலே வாய்ப்பாட்டுப் போல சம்பிரதாயமாயும் எல்லாருக்கும் இனிமையாயிருக்கும்படியாயும் வாசிப்பார். வாய்ப்பாட்டும் வீணை வாசிப்பும் தென்றற் காற்றுக்குச் சமானமாகச் சுகமாயிருந்ததால் இவர்க்கு ‘சல்லகாலி கிருஷ்ணையர்’ என்ற பட்டப் பெயர் உண்டாயிற்று. இவர் மாணாக்கர் திருவாலங்காடு தியாகராஜ தீக்ஷதர், வேணுக் குறிச்சி சதாசிவ ஐயர் காஞ்சிபுரம் நீலகண்ட சாஸ்திரி, அகிலாண்டபுரம் தர்ம தீக்ஷதர், மாயவரம் வீணை வைத்தியநாதையர். கிருஷ்ணையர் (கனம்). இவருக்குக் கனம் கிருஷ்ணையர் என்று பெயர். இவர் உடையார் பாளையத்தார். தமிழிலும் சங்கீதத்திலும் வித்வான். பல்லவி பாடுவதிலும் சமர்த்தர். இவர் பதங்கள் சிருங்கார ரசங்களும் கடுமையான வர்ண கிரமங்களும் ஒரிக்கையுமாயிருக்கும். உடையார் பாளையம் ஜமீன்தார் பேரில் அநேக பதங்கள் செய்திருக்கிறார். இவரைத் தியாகராஜ ஐயர் காலத்தி லிருந்ததாகச் சொல்லுகிறார்கள். கிருஷ்ணையர். திருக்கழுக்குன்றம். கத்திக் கட்டிக் கொண்டு கனம் பாடுவார். தமிழில் அநேக கீர்த்தனைகளையும் பதங்களையும் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். இவரைத் தசவாத்தியம் கிருஷ்ணையர் என்று அழைப்பார்கள். இவர் அப்பையர் குமாரர். அநேக வாத்தியங்களில் சிறந்தவராய் இந்துஸ்தானி நன்றாய்ப்பாடி பல சமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். கிருஷ்ணையர். இவர் தஞ்சாவூர் ஆமன்சம் குப்பையருடைய குமாரர். நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணையர். சிதம்பரத்திலிருந்தார். பல்லவி சிவராம ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். கர்னாடக ஒழுங்குப்படிப் பாடுவார். கிருஷ்ணையர். திருக்கோடிக்காவல். இவர் பிடிலில் அதிக சாதகம் செய்திருக்கிறார். சுகமாய் வாசிப்பார். கிருஷ்ணையர். உமையாள்புரம். சங்கீதத்தில் மிக கெட்டிக்காரர். இவர் மாணாக்கரும் பந்துவுமான ராஜாராம்ராவ் தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளை ஒழுங்காய்ப் பாடுவார். கிருஷ்ணையர். கும்பகோணம். கஷ்டமான சுரங்களை நன்றாய்ப் பாடுவார். இவர் பாட்டு இனிமையாயிருக்கும். கிருஷ்ணையர். குன்னங்குடி. இவர் சங்கீதத்தில் அதிகக் கெட்டிக்காரர். இவரிடம் கோபால பாகவதர் குமாரர் தாசரதி ஐயரும் ராதாகிருஷ்ணையரும் கற்றுக் கொண்டார்கள். கிருஷ்ணையர். இவர் சுரபத் கிருஷ்ணையர் என்ற பெயருடன் புதுக்கோட்டை சமஸ்தான வித்வானாயிருந்தவர். சுரபத் வாசிக்கிறதில் விசேஷ ஞானமுள்ளவர். தாளம் தவறாமலும் வெளியேயிருந்து கேட்கிறவர்களுக்கு வீணை வாசிக்கிறது போலத் தோன்றும்படியும் அவ்வளவு நன்றாய் அப்பியாசம் செய்திருந்தார். கிருஷ்ணையர். பழனி, கடவாத்தியம் வாசிப்பதில் கைதேர்ந்தவராயிருந்தார். கிருஷ்ணையர். குன்னங்குடி. இவர் இராமநாதபுரம் சமஸ்தான வித்வானாயிருந்த அநேக வர்ணங்களையும் தில்லானாக்களையும் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். அலசூர், பல்லவி சிவராமையரின் மாணாக்கர். இவர் மைசூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருந்து பல்லவி பாடுவதிலும் தாள ஞானத்திலும் பிரக்யாதி பெற்றவராயிருந்து நகாஸ் ருத்தப்பாவுக்கும் பௌத்திரர் சுப்பண்ணாவுக்கும் ஸ்ரீ பெரும்புத்தூர் ரெங்காச்சாரியருக்கும் சொல்லி வைத்தார். அவர் குமாரர் சுப்பராய சாஸ்திரியார். கிருஷ்ணையர். இவரைத் திருப்புள்ளி கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். பிடில் நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணையர். இவரை மைலாப்பூர் கிருஷ்ணையர் என்று அழைப்பார்கள். இவர் சங்கீத ஞானமுடையவர். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். கிருஷ்ணையர். இவருக்குத் தலைநாயர் ஜனன பூமி. சரபோஜி மகாராஜா காலத்தில் (1798-1824) தஞ்சாவூர் சமஸ்தானத்தில் விகடம் செய்து கொண்டிருந்தார். சங்கீதம் நன்றாய்த் தெரியும். இவருடைய பிள்ளை பல்லவி சோமு ஐயர். கிருஷ்ணையர். இவரைப் புதுச்சேரிக் கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். திருநெல்வேலியிலிருந்தார். பிடில் நன்றாய் வாசிப்பார். கிருஷ்ணையர். நிராகாட்டம். இவரை நிராகாட்டம் கிருஷ்ணையர் என்றழைப்பார்கள். விஜய நகரம் சமஸ்தானத்திலிருந்தார். நன்றாய்ப் பாடுவார். கிருஷ்ணையர். இவருக்குக் கோட்வாத்தியம் கிருஷ்ணையர் என்று பெயர். இவர் கோட் வாத்தியம் நன்றாய் வாசிப்பார். கிரோஸ்ஸே [J. Grosset (Lyons) France]. இவர் இந்து சங்கீதத்தில் அதிக அபிமானமும் பிரியமும் உள்ள பிரான்சு துரை. இவர் சமஸ்கிருதம் கற்றுப் பரதர் செய்த பரத நாட்டிய சாஸ்திரத்தைப் பிரான்சு பாஷையில் மொழி பெயர்த்து அச்சிட்டிருக்கிறார். கிளமெண்ட்ஸ் (E. Clements, C.S.). இவர் பம்பாய் இராஜதானி சத்தாராவில் ஜட்ஜாயிருந்தார். தேவால் என்பவர் இந்து சங்கீத துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி எழுதின கிரந்தத்துக்கு முகவுரை எழுதினதோடு தாமும் அதை அனுசரித்து “Introduction to the study of Indian music” என்ற புஸ்தகமும் எழுதியிருக்கிறார். கு குஞ்சு மேனன், சப்ஜட்ஜ். கள்ளிக்கோட்டை. வீணைவாசிப்பதிலும் பாட்டிலும் கெட்டிக்காரர். குட்டையா செட்டியார். பல்லவி சோமு ஐயரின் மாணாக்கர். எல்லா வாத்தியங்களிலும் அப்பியாசமுண்டு. நன்றாய்ப் பாடுவார். சங்கீத வித்வான்களை ஆதரிப்பவர். குப்புசாமி. பெரிய குப்புசாமியும் சின்னக் குப்புசாமியும் சகோதரர்கள். இவர்கள் ஐதராபாத்திலிருந்தார்கள். பெரிய குப்புசாமி பிடில் அழகாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். அனேக வர்ணங்களையும் செய்திருக்கிறார். சின்னக் குப்புசாமியும் தமையனைப் போலவே பிடில் நன்றாய் வாசிப்பார். குப்புசாமி ஐயர். அமரசிங் மகாராஜா காலத்திலும் சரபோஜி மகாராஜா காலத்திலும் தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்தவர். இவருடைய கீர்த்தனைகள் பக்திரசமாயும் பதங்கள் சிருங்கார ரசமாயும் இருக்கின்றன. வரத வேங்கட முத்திரையுடன் அநேக கீர்த்தனைகளையும் பதஸாஹித்தியங்களையும் செய்திருக்கிறார். குப்புசாமி ஐயர். இவர் சென்னை வீணை குப்பையரிடம் சிட்சை சொல்லிக்கொண்டு காஞ்சிபுரத்திலிருந்தார். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார். குப்பையர். 1850. இவரை வீணைக் குப்பையர், திருவத்தூர் குப்பையர், என்றும் சொல்லுவார்கள். வீணை அதிக அற்புதமாய் வாசிப்பார். பாடினாலும் வெகு அழகாயிருக்கும். வித்வான்களுக்கெல்லாம் வெகு உபகாரியாயிருந்தார். பிடிலும் நன்றாய் வாசிப்பார். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் தில்லானாக்களையும் செய்திருக்கிறார். இவருக்கு நூற்றுக்கணக்கான மாணாக்கர்களுண்டு. அத்தனை பேரையும் தன் வீட்டிலே வைத்து ஆதரித்துச் சிட்சையும் சொல்லிக் கொடுத்து வந்தார். இவர் ஸ்ரீ ராமநவமி உற்சவத்தையும் நவராத்திரி உற்சவத்தையும் விசேஷமாய்க் கொண்டாடுவார். மிகுந்த பக்தியும் அதி சுலபமுமானவர். சர்வ சங்கீதங்களையுமுடையவரான கான சக்கிரவர்த்தி என்று பட்டப்பேர் பெற்றவர். இவர் மாணாக்கர்களில் சூரத்தவாசி வேங்கடரமணையா, சீத்தராமையர், பொன்னுசாமி விசேஷ மானவர்கள். கிருஷ்ண ஸ்வாமி ஐயர், இராமசுவாமி ஐயர், தியாகராஜ ஐயர் என்ற இவர் பிள்ளைகளும் சங்கீதத்தில் நல்ல பிரக்யாதியுள்ளவர்கள். இவர்களில் தியாகராஜ ஐயர் தகப்பனார் செய்த வர்ணங்களையும் தில்லானாக்களையும், கீர்த்தனைகளையும் புஸ்தகமாக அச்சிட்டிருக்கிறார். குப்பையர். இவரை ஆமன்சம் குப்பையர் என்றழைப்பார்கள். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருந்தார். பதங்களை அழகாய்ப்பாடுவார். இவர் பிள்ளை கிருஷ்ணையரும் நன்றாய்ப் பாடுவார். குமாரசாமி முதலியார். ஆழ்வார் குறிச்சி. இவர் தளவா முதலியாரின் பந்J. திருநெல்வேலியிலிருந்தார். சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரர். குருசாமி. காஞ்சீபுரம். இவரும் இவர் தம்பி அருணாசலமும் மிருதங்கமும் கடவாத்தியமும் நன்றாய் வாசிப்பார்கள். குருசாமி ஐயர். இவர் சங்கீத வித்வான் லால்குடி இராமையரின் குமாரர். கர்நாடகம் சுத்தமாய்ப் பாடுவார். கடவாத்தியமும் வாசிப்பார். குருசாமி ஐயர். இவர் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் பந்J. அந்தனூர் சுப்பையரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார். குருமூர்த்தி சாஸ்திரியார். இவர் திருநெல்வேலி ஜில்லா கயற்றாத்தில் இராமசாமி தீக்ஷீதரின் கடைசி காலத்திலிருந்தார். சங்கீதத்தில் அதிசமர்த்தர். அநேக கீத பிரபந்தங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். சென்னப் பட்டணம் மணலி சின்னையா முதலியாரால் மிகவும் சன்மானிக்கப்பட்டவர். குருமூர்த்தி சாஸ்திரியார். இவருக்குப் பைடால குருமூர்த்தி சாஸ்திரி என்று பேர். சென்னப் பட்டணத்திலிருந்தார். கன நய தேசிகங்களை வெகு நன்றாயும் அழகாயும் பாடுவார். அநேக கீத பிரபந்தங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவர் தம்பி பைடால சுப்பராய சாஸ்திரியாரும் நன்றாய்ப் பாடுவார். குருமூர்த்தி நட்டுவர். இவர் திருநெல்வேலியிலிருந்து வந்த மகாதேவ அண்ணாவியின் குமாரர். வீணை வாசிப்பிலும் பரதசாஸ்திரத்திலும் சாகித்தியம் செய்வதிலும் சிறந்த வித்வான். இவரைச் சென்னப் பட்டணம் கன்னையசெட்டியார் அழைத்துக் கொண்டு போய் தம்மைச் சேர்ந்தவர்களுக்குச் சங்கீதம் சொல்லி வைக்கும்படி ஏற்பாடு செய்து பிரியமாய் வைத்திருந்தார். இவர் முத்துசாமி, தம்பியப்பன் என்ற பிள்ளைகளுக்கும் பொன்னுசாமி அப்பாக்கண்ணு என்ற மாணாக்கர்களுக்கும் மற்றும் அனேகருக்கும் சொல்லி வைத்தார். குருராயாச்சாரியார். விஜயநகரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். கன நயதேசிகங்களை நன்றாய் அறிந்து பாடுவதில் பிரசித்தியடைந்திருந்தார். அநேக தானங்களையும் சுரஜதிகளையும் இராகச் சிட்டாக்களையும் சுர பல்லவிகளையும் பல்லவி முறைகளையும் கீதங்களையும் செய்திருக்கிறார். வீணையில் ஷட்காலங்களையும் விசாலமாய் வாசிப்பார். இவருக்கு மகாராஜா குடை வெண்சாமரை முதலிய விருதுகள் கொடுத்திருந்தார். இவரிடம் அநேகர்கள் சொல்லிக்கொண்டார்கள். குலசேகரப் பெருமாள். திருவனந்தபுரம் மகாராஜா. மலையாளம், தெலுங்கு, இந்துஸ்தானி, சமஸ்கிருதம், இங்கிலீஷ் முதலிய பாஷைகளில் நல்ல ஞானமுள்ளவர். சங்கீதத்தில் விசேஷ அபிமானமும் பாண்டித்தியமு முடையவர். அநேக ரக்தி இராக தேசிக இராகங்களில் சௌக்க வர்ணங்களும் கீர்த்தனைகளும் பத்மனாப முத்திரையுடன் செய்திருக்கிறார். அநேக சங்கீத வித்வான்களை வைத்து ஆதரித்து வந்தார். தஞ்சாவூர் சமஸ்தானத்திலிருந்து வடிவேல் நட்டுவனாரை வரவழைத்துத் தம்முடைய சமஸ்தானத்தில் சங்கீதம், பரதநாட்டியம் சொல்லி வைக்கும்படியாக வைத்திருந்து அவருக்கு யானைத் தந்தத்தினாலே வீணை பிடில் தம்பூர் முதலியவைகளைச் செய்து கொடுத்திருக்கிறார். குலாபு மண்டில். இவர் அக்பர் சமஸ்தானத்தில் வித்வானாயிருந்த மீயான்டான்சினி (தாத்தாச் சாரியார்)யின் பரம்பரை. சிவகங்கை சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாயிருந்தார். இவருக்கு 10 வாத்தியங்களில் பாண்டித்தியம் உண்டு. குலாப் மொய்தீன். ஐதராபாத்து இந்துஸ்தானியில் அழகாய்ப் பாடுவார். இவர் தமையன் பிள்ளை சித்தாரா தபேலா வெகு இனிமையாய் வாசிப்பார். நன்றாய்ப் பாடுவார். கூ கூவனசாமி ஐயர். நாட்டைக் குறிஞ்சி இராகத்தில் இவர் செய்திருக்கும் தாள வர்ணம் விசேஷ பிரக்யாதியுடையJ. இவர் கார்வேடி நகர சமஸ்தான வித்வான் கோவிந்தசாமி ஐயரின் சகோதரர். கெ கெங்கைமுத்து பிள்ளை. திருநெல்வேலி, மதுரை அனவரத தானநாதர் சன்னிதானத்து வித்வான். மதுரையில் பரத சாஸ்திரம் அநேகருக்குச் சொல்லி வைத்திருக்கிறார். கவிராஜ நெல்லையப்பா பிள்ளை அனுமதிப்படி “நடனாதி வாத்தியரஞ்சனம்” என்னும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இவர் மதுரை ஜில்லா ராமநாதபுரம் கல்லுமடை மிராசுதார் குப்பையாண்டி பிள்ளை குமாரர் முத்திரப்ப பிள்ளையின் சகோதரர். கெங்கை முத்து நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்யத்தில் தேர்ந்தவர். சுப்பராய நட்டுவனாரும் சிதம்பர நட்டுவனாரும் இவர் பிள்ளைகள். கே கேசவையா. இவருக்குப் பொப்பிலி கேசவையா என்று பேர். பொப்பிலி சமஸ்தானத்திலிருந்தார். சங்கீதத்தில் பெரிய வித்வான். அநேக சமஸ் தானங்களுக்குப் போய் சன்மானம் பெற்றிருக்கிறார். சரபோஜி மகராஜா காலத்தில் (1798-1824) தஞ்சாவூருக்கும் வந்திருக்கிறார். இவர் மற்றவர்களால் முடியாத அநேக காரியங்களைச் சாதித்திருக்கிறார். கொ கொண்டையர். இவர் வீணை பெருமாள் ஐயரின் தம்பி. சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர். கொண்டையர். (சுரம்) இவ பந்தர்வாசி. சுரங்களையும் சப்த பல்லவிகளையும் கிரகசுரங்களையும் மிக ஒழுங்காய்ப் பாடுவார். இதனாலே இவரை சுரம் கொண்டையர் என்றழைத்தார்கள். கோ கோட்டை சாமித்தேவர். பாலவனத்தம் ஜமீன்தார். லால்குடி சங்கீத வித்வான் இராதாகிருஷ்ண ஐயரைக் கூடவே வைத்துக்கொண்டு சங்கீதத் திலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரராயிருந்தார். 12 வருஷங்களுக்கு முன்னிருந்தார்கள். கோட்டையா. பந்தர். இவர் பாடிக்கொண்டே பிடிலும் வாசிப்பார். இரண்டும் சேர்த்துக் கேட்க இனிமையாயிருக்கும். கோதண்டராம ஐயர். ஸ்ரீரங்கம். கர்னாடக இராகத்தைப் பிடில் இங்கிலீஷ் மெட்டுப்படி சம்பிரதாயமாய் வாசிப்பார். இவர் தம்பியும் இவரைப் போலவே வாசிப்பார். கோபாலகிருஷ்ண பாரதி. இவர் ஆனை தாண்டவபுரத்திலிருந்தார். விசாலமான மனோபாவனை யுடையவர். நந்தனார் சரித்திரத்தையும் இராக மாலிகைகளையும் அநேக கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். கோபாலசாமி ஐயர். இவர் புதுக்கோட்டை சமஸ்தான சங்கீத வித்வான். மாதுருபூதையாவின் குமாரர். சங்கீத இலட்சணங்களை நன்றாயறிந்தவர். பழமையான கீர்த்தனைகளையும் இராகங்களின் அம்சங்களையும் அறிந்து நன்றாய்ப் பல்லவி பாடுவார். கோபாலசாமி ஐயர். வீணை வரகப்பையரின் வமிசத்தார். வீணையிலும் சங்கீத இலட்சணங்களிலும் சிறந்த வித்வான். பல இடங்களிலும் போய்ச் சன்மானம் பெற்றிருக்கிறார். இளையரசனேந்தல் ஜமீனில் வித்வானா யிருக்கிறார். கோபால நாயக்கர். தஞ்சாவூர் சங்கீத வித்வான். கோபால பாகவதர். வரகூர். அரிகதை செய்வதில் உலகப் பிரசித்தியா யிருந்தார். கோபால பாகவதர். இராம பாரதி குமாரர். இவர் தகப்பனாரிடமும் தியாகராஜா ஐயரிடமும் கற்றுக் கொண்டு நன்றாய்ப் பாடுவார். கோபால பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானம் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். கோபாலையர். இவர் கரூர் வேங்கடராம ஐயரின் மாணாக்கர். பிடில் நன்றாய் வாசிப்பார். கோபாலையர். பல்லவி கோபாலையர். பச்சிமிரியம் ஆதிப்பையரின் மாணாக்கர். இவர் அமர சிங்மகாராஜா சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தான வித்வான். அனேக வர்ணங்களையும், கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். இவர் செய்திருக்கும் ‘வனஜாட்சி’ என்ற தான வர்ணத்தைக் கவனித்தால் இவருக்குச் சங்கீதத்திலுள்ள சுரசாகித்ய கற்பனைகள் தெளிவாய் தெரியும். காம்போதி தோடி ராகங்களில் அடதாளத்தில் தானவர்ணங்களை வேங்கடமுத்திரையுடன் செய்திருக்கிறார். பல்லவி பாடுவதில் அதிசமர்த்தராயிருந்ததால் பல்லவி கோபாலையர் என்றழைத்தார்கள். கோபாலையர். இவரை நெரூர் கோபாலையர் என்றழைப்பார்கள். இவர் பாட்டு மிகுந்த இனிமையாயிருக்கும். தற்காலத்திலுள்ளவர். கோபால் நாயக். 1310௵ டில்லிச்சக்கிரவர்த்தி அலாவுடீன் சேனாதிபதியான மாலிக்காபரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துப்போன சங்கீத வித்வான்களில் இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். கோவிந்த ஐயர். துரைசாமி ஐயரின் குமாரர். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்தவர். கோவிந்தசாமி. கோயம்புத்தூர். பிடில் நன்றாய் வாசிப்பார். கோவிந்தசாமி ஐயர். கார்வேடி நகர் சமஸ்தான வித்வான். சங்கீதத்தில் நல்ல பாண்டித்தியமுடையவர். தெலுங்கு பதங்களைச் சேர்த்து சிருங்கார ரசத்தில் சாஹித்தியங்கள் செய்திருக்கிறார். நவரோஜ் கேதாரகௌளை இராகங்களில் அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். ஆதிப்பையருக்கு முன்னிருந்தவரென்று தெரிகிறது. கோவிந்தசாமி ஐயர். சங்கீத சாஹித்தியங்களில் நல்ல பாண்டித்திய முள்ளவர். இவர் சிறந்த சிலாக்கியமான 5 வர்ணமெட்டுகள் செய்திருக்கிறார். நன்றாய்ப் பாடுவார். கோவிந்தசாமிப் பிள்ளை. திருச்சிராப் பள்ளி. தற்காலத்திலுள்ளவர். நன்றாய் பிடில் வாசிப்பார். கோவிந்த சிவம். மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயரின் குமாரர். இவரும் இவர் சகோதரர் சபாபதி ஐயரும் தியாகராஜ ஐயரிடம் கற்றுச் சங்கீத சாகித்தியத்தில் பேர் பெற்றவர்களாயிருந்தார்கள். தமிழில் சிவபரமாய் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். கோவிந்த தீக்ஷதர். இவர் தஞ்சாவூர் சமஸ்தான நாயக்க வம்ச இரண்டாவது அரசரான அச்சுதப்ப நாயக்கரிடம் (1572-1614) மந்திரியாயிருந்தவர். இவருக்குச் சங்கீதம் நன்றாய்த் தெரியும். அநேக இலட்சண கீதங்கள் எழுதியிருக்கிறார். இவர்தான் வீணைக்கு 24 மெட்டு வைத்தவரென்றும் அதற்குமுன் 12 மெட்டுத்தானுண்டென்றும் பிரகிருதி விக்ருதி பேதங்களுக்குத் தகுந்தபடி அப்போதைக்கப்போது மேளம் பண்ணிக்கொண்டிருந்த வழக்கம். இவர் காலத்திலிருந்ததென்றும் இவர்கள் பரம்பரையில் சொல்லிக் கொள்ளுகிறார்கள். கோவிந்த மாரன். இவர் திருவனந்தபுர சமஸ்தானத்திலிருந்தார். ஷட்கால கோவிந்த தாஸ் என்று சொல்லுவார்கள். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்வான். திருவையாறு தியாகராஜ ஐயரிடம் வந்து அதி அற்புதமாய் வீணை வாசித்தபோது அவர் ஆச்சரியப்பட்டு “எந்தரோ மகானுபாவுலுவார்; அந்தரீகி வந்தனமு” என்று பாடினார். ச சகஸ்த்ர புத்தி. இவர் பூனாவில் காயனசமாஜத்தின் காரியதரிசி. ‘சங்கீத போதம்’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். சங்கமசாஸ்திரி. இவர் பொப்பிலி சமஸ்தான நந்திகான வெங்கையரின் மைத்துனர். வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். சங்கர ராவ், விஸ்வநாத ராவ். இவர்கள் சகோதரர்கள். தஞ்சாவூர் சமஸ்தான வைத்தியர்களாயிருந்ததோடு சங்கீதத்திலும் நல்ல ஞான முடையவர்களாயிருந்தார்கள். சங்கரராவ் சுரபத்சுகமாய் வாசிப்பார். நன்றாய்ப் பாடுவார். சங்கரையர். கண்ணனூர். இவர் சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்தவர். சங்கரையர். இவர் திருவத்தூர் தியாகராஜ ஐயரின் மாணாக்கர். மாணாக்கர்களுக்குச் சொல்லி வைப்பதில் சொல்வன்மையுள்ளவர். சஞ்சீவி ஐயர். பச்சிமிரியம் ஆதப்பையரின் மாணாக்கர். பல்லவி கோபாலையரின் தம்பி. சங்கீதத்தில் மிகக் கெட்டிக்காரர். இவர் குமாரர் பல்லவி சீதாராமையர். சஞ்சீவி ராவ். சரபசாஸ்திரியாரின் மாணாக்கர். புல்லாங்குழல் நன்றாய் வாசிப்பார். தற்காலத்திலுள்ளவர். சடகோப நாயுடு. இவர் வீணை அதிசம்பிரதாயமாய் வாசிப்பார். சட்டம்பிள்ளை. பிரகாசபுரம், திருநெல்வேலி ஜில்லா, பொருட் செறிவான அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சதாசிவ ஐயர். இவரை வேலுக்குறிச்சி சதாசிவ ஐயர் என்றழைப்பார்கள். இவர் சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர். சங்கீதத்தில் கெட்டிக்காரர். சதாசிவ பிரம்மம். கரூர், நெரூர் முதலான இடங்களிலிருந்தவர். இவர் செய்த சமஸ்கிருத கீர்த்தனைகள் இப்போதும் வழக்கத்திலிருக்கின்றன. சுமார் 175 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சதாசிவம். இவர் பிடிலிலும் ஆர்மோனியத்திலும் கெட்டிக்காரர். சதாசிவ ராயர். இவர் மைசூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானா யிருந்தவர். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் விசேஷபாண்டித்திய முடையவர். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் தில்லானாக் களையும் செய்திருக்கிறார். இராயாவாள் கிருதிகள் என்று வழக்கத்தி லிருக்கிறது. திரவிய சம்பன்னராயிருந்ததோடு வித்வான்களைச் சன்மானிக்கிறதில் தாராள மனதுடையவராயும் விதரணை தெரிந்து செய்கிறவராயுமிருந்தார். சத்தியநாதன். உபதேசியார். தஞ்சாவூர். இவர் பொருட்செறிவுள்ள அனேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சத்ரசிங். இந்துஸ்தானி பாட்டு நன்றாய்ப் பாடுவார். இவர் தம்பி குமாரர் சுந்தரசிங் பிடில் நன்றாய் வாசிப்பார். சந்திரசேகர சாஸ்திரியார். பெங்களூர். சங்கீத சாகித்தியத்தில் விசேஷ பாண்டித்தியமுள்ளவர். அநேக ஜாவளிகளைப் பாலச்சந்திர முத்திரையுடன் செய்திருக்கிறார். சந்திரபிரபு. இவர் பாவ நகரில் சிறந்த வித்வான். சபாபதி. சிதம்பரம். இவர் சிதம்பரம் கிருஷ்ணையரின் மாணாக்கர். மிக இனிமையாய்ப் பாடுவார். சபாபதி. இவர் மேளம் வாசிப்பதிலும் ஆட்டி வைப்பதிலும் கெட்டிக்காரர். சபாபதி. அம்பாயிரத்தின் தம்பி. பாட்டிலும் பிடில் வாசிப்பதிலும் சிறந்தவர். இவர் குமாரர் அப்பாய் பிடிலும் அவர் குமாரர் கன்னி மிருதங்கமும் நன்றாய் வாசிப்பார்கள். சபாபதி ஐயர். மன்னார்குடி. பரத சாஸ்திரத்தில் சிறந்த வித்வான். இராஜகோபாலாங்கிதமாய் அநேக பதங்கள் எழுதியிருக்கிறார். சபாபதி ஐயர். இவர் மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயரின் குமாரர். தியாகராஜ ஐயரிடம் சொல்லிக்கொண்டு சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவரா யிருந்தார். சபாபதி நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்தியங்களில் மிகத் தேர்ந்தவர். அநேக ராஜாக்களாலும் பிரபுக்களாலும் தோடா, கண்டி முதலிய சன்மானங்கள் பெற்றவர். சபேசையர். இவர் சாம்பசிவ ஐயரின் குமாரர். மகா வைத்தியநாதையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர். பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார். சென்ன பட்டணத்திலிருக்கிறார். இவர் மாணாக்கர் அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். சப்தரிஷி பாகவதர். தஞ்சாவூர். சமஸ்கிருத பண்டிதர், வேதபுராணிகர். சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர். கதைகள் செய்வார். சரப சாஸ்திரியார். கும்பகோணம். சங்கீத சாகித்தியங்களில் விசேஷ யோக்கியதை யுடையவர். புல்லாங்குழலில் மிக இனிமையாய் இராகங்களைப் பிரஸ்தரிப்பார். சர்வ சாஸ்திரியார். (சிஷ்டு) பொப்பிலி சமஸ்தானத்தில் வீணையில் பெரிய வித்வான். இவர் தம்பி சிஷ்டு சலமையா. சலமையா. இவரை சிஷ்டு சலமையா என்றழைப்பார்கள். இவர் வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார். இவர் தம்பி சிஷ்டு பகவான்லு வீணையில் அதிக சாதகம் செய்திருக்கிறார். சவ்வியசாசி ஐயங்கார். இவர் மைசூர் சமஸ்தானத்தில் வித்வானா யிருந்தார். இரண்டு கையாலும் வீணை நன்றாய் வாசிப்பதால் ‘சவ்வியசாசி’ என்ற பட்டப் பெயர் சமஸ்தானத்திலுண்டாயிற்று. வீணை அதிகம் சாதகம் பண்ணியிருக்கிறார். இவர் அநேகமெட்டு ஜாதிகளைச் சேர்த்து வாசிக்கும்போது மிகுந்த சுகமாயிருக்கும். சற்குணம். (உவின்பிரட்) போதகர். பத்திரசமான அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சா சாமண்ணா. இவரை வீணை சாமண்ணா என்றழைப்பார்கள். மைசூரில் சமஸ்தான வித்வான். கமக மார்க்கங்களை வீணையில் அதிக சுகமாயும் சம்பிரதாயமாயும் வாசிப்பார். இவர் குமாரரும் வீணை நன்றாய் வாசிப்பார். மருகர் சுப்பராயர் வாய்ப்பாட்டு நன்றாய்ப் பாடுவார். பிறருக்குச் சொல்லி வைக்கும் சொல்வன்மை உடையவர். சாமராஜ உடையார், மைசூர் மகாராஜா. சங்கீதத்திலும் வீணை வாசிப்பிலும் சிறந்தவர். சாமளையர். திருநெல்வேலி. பிடில் நன்றாய் வாசிப்பார். சாமா சாஸ்திரியார். 1763. திருவாரூரில் பிறந்தார். சங்கீத சாகித்தியத்தில் சிறந்த வித்வான். சாமா கிருஷ்ணமுத்திரையுடன் அநேக கீர்த்தனைகளையும் சாகித்தியங்களையும் சுரஜதிகளையும் தான வர்ணங்களையும் விசேஷ கற்பனைகளும் தாள நுட்பங்களும் வெளிப்படும்படி செய்திருக்கிறார். அலசூர் கிருஷ்ணையர் குமாரரான சுப்பராய சாஸ்திரியார் இவருடைய மாணாக்கர். சாமிநாத ஐயர். இவரைப் பழமாறனேரி சாமினாதையர் என்றழைப்பார்கள். மகாவைத்தியநாத ஐயரவர்களின் மாணாக்கர். இவர் சங்கீத லட்சிய, லக்ஷணங்களில் சிறந்த வித்வான். மூன்று ஸ்தாயிகளிலும் பிடில் வாசித்துக் கொண்டு இனிமையாகப் பாடுவார். ‘இராக விபோதினி’ என்னும் சங்கீத நூல் எழுதி அச்சிட்டிருக்கிறார். தற்காலத்திலுள்ள வித்வான்களில் கர்நாடக ராகங்களை சுத்தமாய் வாசிப்பார். சாமிநாத சாஸ்திரி. திருக்குன்னம் இராமையரின் குமாரர். நன்றாய்ப் பாடுவார். சாமிநாதன். தஞ்சாவூர். இவருக்குச் சங்கீதமும் பரத சாஸ்திரமும் நன்றாய்த் தெரியும். ஆட்டி வைப்பதில் நல்ல திறமையுடையவர். இவர் குமாரர் கோவிந்தசாமியும் தகப்பனைப் போலவே பெயரெடுத்தவர். சாமிநாதன். தஞ்சாவூர். பரத சாஸ்திரப்படி ஆட்டி வைப்பதில் கெட்டிக்காரர். சாமிநாதன். சிதம்பரம். இவரும் வெங்குவும் சகோதரர்கள். தாளத்திலும் மிருதங்கத்திலும் பேர் பெற்றவர்கள். சாமியா பிள்ளை. இவர் தஞ்சாவூர் தியாகராஜ பிள்ளையின் குமாரர். வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் பலசிட்சை சொல்லி வைப்பதில் தேர்ந்தவர். சாமிராவ். மிருதங்கம் வாசிப்பதில் கெட்டிக்காரர். சாமுக்குட்டி. இவரும் இவர் சகோதரர் அப்புக்குட்டியும் சங்கீதத்திலும் வாய்ப்பாட்டிலும் விசேஷ பிரக்யாதி யுடையவர்கள். சாமையா. இவர் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கரான மகாதேவையரின் குமாரர். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் கெட்டிக்காரர். சாமையர். இவரும் இவர் குமாரர் பாலகிருஷ்ணையரும் பிடில் நன்றாய் வாசிப்பார்கள். சாமையர். கரூர். இவரும் இவர் சகோதரர் பெரிய தேவையா சின்ன தேவையாவும் நன்றாய்ப் பாடுவார்கள். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார்கள். சாம்ப ஐயர். இவருக்குத் தஞ்சாவூர் வீணை சாம்ப ஐயர் என்று பேர். மைசூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். வேதத்தையும் உப நிஷத்துக்களையும் வீணையில் நன்றாய்க் கானம் பண்ணுவார். கனமார்க்கம் இவர் சொத்து. தில்லானாக்களில் ஒவ்வொரு அட்சரத்தையும் மீட்டி அநேக பேதங்களுடன் நூறு வீணைகள் ஒரே காலத்தில் வாசித்தால் எவ்வளவு கணிப்புண்டாக்குமோ அவ்வளவு காம்பீரமாய் வாசிப்பார். இவர் குமாரர் பங்காரு சுவாமி ஐயர். சாம்பசிவ ஐயர். சபாபதி ஐயரின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் சபேசையர். சாம்ப மூர்த்தி ராவ் B.A.,B.L. தஞ்சாவூர் இவர் வீணை வாசிப்பார். இவருக்கு நல்ல சங்கீத ஞானமுண்டு. சாரங்க தேவர். காஸ்மீர தேசத்தவர். சொட்டிலதேவரின் குமாரர். டௌலத்தாபாத் என்னும் தேவகிரி ராஜ்யத்தில் கி.பி. 1210-1247 வரை ஆண்ட சிம்மண ராஜசபையில் சமஸ்தான வித்வான். இவர் சமஸ்கிருதத்திலும் சங்கீதத்திலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர் “அத்தியாத்தும விவேகம்” என்ற வேதாந்த கிரந்தத்தையும் பரதர், மதங்கர், கீர்த்திதரர், கோகலர், கம்பலர், அசுவதரர், ஆஞ்சிநேயர், அபிநவகுப்தர், சோமேஸ்வரர் ஆகிய இவர்களுடைய அபிப்பிராயங்களை அனுசரித்து “சங்கீத ரத்னாகரம்” என்ற அருமையான சங்கீத நூலையும் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார். சந்தேகமில்லாதவர் என்று பொருள்படும் ‘நிஸ்சங்கன்’ என்ற பட்டப் பெயரையுடையவர். சாரங்கபாணி. இவர் கார்வேடி நகரம் சமஸ்தானத்திலிருந்தார். சங்கீத சாஹித்தியங்களில் மிகுந்த கெட்டிக்காரர். சிருங்கார ரசமாய் அநேக பதங்கள் செய்திருக்கிறார். சாரங்கபாணி நாயுடு. இவரும் இவர் பாட்டனார் சடகோப நாயுடுவும் நன்றாய் வீணை வாசிப்பார்கள். சிட்சை சொல்லிக் கொடுப்பதில் தேர்ந்தவர்கள். சி சிங்களாச்சாரியார். இவர்களைத் தச்சூர் சின்ன சிங்களாச்சாரியார், பெரிய சிங்களாச்சாரியார் என்றழைப்பார்கள். சென்னப் பட்டணத்திலிருந்தார்கள். இவர்கள் சாமா சாஸ்திரியாரின் குமாரரான தஞ்சாவூர் சுப்பராய சாஸ்திரி யாரிடமும் அவர் மாணாக்கர் பிடில் ரெங்காச்சாரியாரிடமும் சொல்லிக் கொண்டவர்கள். பெரிய சிங்களாச்சாரியார் சம்பிரதாயமாய்ப் பிடில் வாசிப்பார். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சாகித்தியங்கள் செய்திருக்கிறார். சங்கீதத்தில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர். அநேக கீர்த்தனைககளையும் ஜாவளிகளையும் செய்திருக்கிறார். இவர் தம்பி சின்ன சிங்களாச்சாரியார் வாய்ப்பாட்டிலும், சுரபத், பிடிலிலும் சம்பிரதாயமான பாண்டித்தியமுடையவர். சங்கீத வித்தியார்த்திகளின் பொருட்டு இவர் தமையனார் செய்திருந்த கிருதிகளைக் கொண்டு சுரமஞ்சரி, காயக பாரிஜாதம், சங்கீத களாநிதி, காயகலோசனம், காயகசித்தாஞ்சனம் முதலிய நூல்களைச் செய்து அச்சிட்டிருக்கிறார். இவர்கள் மாணாக்கர்களில் வேங்கடராமையா, ஜாலையா, துரைசாமி ஐயங்கார், இராமானுஜாச்சாரியார், தென் மடம் நரசிம்மாச்சாரியர், இவர் தம்பி வரதாச்சாரியார், பாபைய சாஸ்திரி முதலானவர்கள் விசேஷித்தவர்கள். சிட்டு சுவாமி ராவ். இவர் புதுக்கோட்டை சமஸ்தானம் கண்ணுசாமி ராவின் சகோதரர். சுரபத்தில் அதிகமாய்ச் சாதித்திருக்கிறார். சுரபத்தில் இவர் வாசிப்பு அதிக அழகாயிருக்கும். சிதம்பர ஐயர். இவரைப் போலகம் சிதம்பரம் ஐயர் என்றழைப்பார்கள். இவர் வாய்ப்பாட்டிலும் கடவாத்தியத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். சிதம்பர நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். சிந்தாமணி. சங்கீத வித்வான். சிந்தாமணி. இவர் தஞ்சாவூர் கன்னையாகாருவின் மாணாக்கர். சாரந்தா மிகவும் நன்றாய் வாசிப்பார். சிவகாசி அப்பாவு அண்ணாவி. இவர் சிவகாசி ஆலயத்தின் சங்கீத பரம்பரையைச் சேர்ந்தவர். பரத சங்கீதத்தில் தேர்ந்தவர். சிவசாமி உடையார். தண்ணீர்க்குன்னம். இவர் பாட்டிலும் வீணை முதலான எல்லா வாத்தியங்களிலும் மகா வித்வான். சிவசாம்பையர். நாகப்பட்டணம். நன்றாய்ப் பாடுவார். சிவராம பாகவதர். இவரை அண்டமி சிவராம பாகவதர் என்றழைப்பார்கள். இவர் அரிகதை மிகவும் நன்றாய்ச் செய்வார். சிவராம பாகவதர். தஞ்சாவூர். சங்கீத சாகித்தியங்களிலும் அரிகதை செய்வதிலும் பிரக்யாதி பெற்றவர். இவரைச் சித்திரகவி சிவராம பாகவதர் என்றழைப்பார்கள். சிவராமாஸ்ரமுலு. 1827. திருவாரூரில் இருந்தார். இவர் “நிஜபஜனை சுகபத்ததி” என்னும் நூல் செய்திருக்கிறார். இவர் செய்த பக்தி ரசமான கீர்த்தனை அநேகமிருக்கிறது. சிவராமையர். இவருக்குப் பல்லவி சிவராமையர் என்று பேர். பல்லவி கோபாலையரின் சகோதரரான சஞ்சீவி ஐயரின் குமாரர். பல்லவி பாடுவதில் மிகுந்த சாமர்த்தியர். இவர் குமாரர் பிடில் சுப்பராவ். சிவராமகிருஷ்ணையர். பிடில் நன்றாய் வாசிப்பார். சிவராமகிருஷ்ணையர். இவர் மானம்புச்சாவடி வேங்கட சுப்ப ஐயரின் மாணாக்கராகிய சுப்பராம பாகவதர் குமாரர். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளைப் பிடிலில் நன்றாய் வாசிப்பார். சிவானந்தம். திருநெல்வேலி மகாதேவ அண்ணாவியின் குமாரர். இவர் சங்கீதத்திலும் பரதத்திலும் கெட்டிக்காரர். இவருக்கு மகாதேவன் சாமிநாதன் என்று இரண்டு பிள்ளைகள். இவர் சடைமுடி, சுந்தரம், தோகூர் சுப்பலக்ஷிமி, புதுக்கோட்டை அம்மாளு முதலியவர்களுக்கு நிருத்தம் சொல்லி வைத்திருக்கிறார். சிவானந்தம் நட்டுவனார். இவர் தஞ்சாவூர் வடிவேல் நட்டுவனாரின் சகோதரர். பரத சங்கீத சாஸ்திரத்தில் தேர்ந்தவர். பாவம் சொல்லி வைப்பதில் மிகவும் வல்லவர். சிவாஜி மகாராஜாவால் மிகவும் கொண்டாடப் பெற்றவர். அநேகருக்குப் பாவம் சொல்லி வைத்திருக்கிறார். சின்னச்சாமி. திருக்கழுக்குன்றம். ஆர்மோனியம் சுகமாய் வாசிப்பார். சின்னச்சாமி தீக்ஷதர். இவர் இராமசுவாமி தீக்ஷதரின் பிள்ளை. முத்துசுவாமி தீக்ஷதரின் தம்பி. சங்கீதத்திலும், வீணை வாசிப்பதிலும், பாடுவதிலும் சிறந்த வித்வான். கலியாணி இராகத்தில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சின்னச்சாமித் தேவர். சொக்கம்பட்டி. இவர் சொக்கம்பட்டி ஜமீன்தாரின் தம்பி. சங்கீத சாகித்தியத்திலும் வீணை வாசிப்பிலும் தமிழிலும் பெரிய வித்வான். சின்னச்சாமி பாகவதர். திருவள்ளூர். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் அநேக நிரூபணங்களை எழுதியிருக்கிறார். சின்னச்சாமி முதலியார் M.A., இவர் Chief Secretariat உயர்ந்த உத்தியோகத்திலிருந்தார். சங்கீதத்தில் அதிக விருப்பமும் அபிமானமும் உள்ளவர். தென்னிந்திய சங்கீதத்தை ஒழுங்கு படுத்த வேணுமென்று தம்முடைய சரீரப் பிரயாசத்தையும் தம்முடைய திரவியம் முழுவதையும் செலவு செய்தவர். இந்து சங்கீதத்தை ஐரோப்பிய சங்கீத Staff notation ல் போடும்படியாகப் பிரயாசப்பட்டுச் சிலவற்றை அச்சிட்டார். தான் எடுத்துக் கொண்ட காரியம் முற்றுப் பெறாமலே காலஞ்சென்று போனார். சின்னச்சாமையா. இவர் தட்டார நக்கையாவின் தமயன் குமாரர். வெகு சுகமாயும் விதரணையாயும் பாடுவார். சின்னத்தம்பி அண்ணாவி. மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையைச் சேர்ந்தவர். பரதத்தில் தேர்ந்தவர். சின்னத்தேவையா. கரூர். நன்றாய்ப் பாடுவார் கர்நாடக சுத்தமாய்ப் பிடில் வாசிப்பார். சின்ன பாரதி. மாயவரம், தமிழிலும், சங்கீதத்திலும் நல்ல பாண்டித்ய முடையவர். சின்ன வைத்தி, பெரிய வைத்தி. இவர்கள் சகோதரர்கள். சிவகங்கைக்குச் சமீபத்திலுள்ள இராதா மங்கலம் இவர்கள் பிறந்த இடம். சிவகங்கை சமஸ்தானத்தில் சங்கீதத்தில் மகாவித்வான்கள். இரண்டு பேரும் சேர்ந்து பாடினால் வெகு அழகாயிருக்கும். சின்னையா, பொன்னையா, வடிவேல். இவர்கள் மூன்று பேரும் நிருத்தத்துக்காக சுரங்கள் சலாம், ஜதி, வர்ணங்கள், தில்லானாக்கள், இராக மாலிகைகள் செய்திருக்கிறார்கள். இவைகளைப் பாடக் கேட்கும் ஜனங்கள் அதிக ஆனந்தமாய்ப் பரவசப்படுவார்கள். திருவனந்தபுரம் சமஸ்தானத் திலிருந்தார்கள். சின்னையா. கி.பி. 1,500. இவருக்குத் தாளப்பாக்கம் சின்னையா என்று பேர். இவர் வேங்கடாசலபதியைப் பக்தி பண்ணிக் கொண்டு திருப்பதியில் இருந்தவர். சுவாமிக்குத் தோடையம், மங்களம், சரணம், எச்சரிக்கை கீர்த்தனங்கள், தூப தீப அலங்கார நைவேத்யாதி உபசாரங்களுக்குத் தகுந்த கீர்த்தனங்கள், வசந்தோற்சவக் கீர்த்தனைகள், திருப்பள்ளி எழுச்சிக் கீர்த்தனைகள், திவ்யநாம சங்கீர்த்தனங்கள், பஜனை பத்ததி முதலியவைகளை இவரே முதல் முதல் செய்தவர். இராமமாத்தியருக்கு முன்னிருந்தவராகத் தெரிகிறது. சின்னையா நட்டுவனார். தஞ்சாவூர். வடிவேல் நட்டுவனாரின் சகோதரர். பரத நாட்டியம் சொல்லி வைப்பதில் இவருக்கு இணையானவர் ஒருவரு மில்லையென்று நாளதுவரையும் சொல்லப்படுகிறது. சிவாஜி மகாராஜா காலத்திலிருந்தவர். இவர் செய்த பரதத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் ஆடக் கற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் மகாராஜா இதன் பின் புருஷர்கள் நடனம் பண்ணுவதற்கும் தன் அரண்மனை மாடுகளுக்கு முன்னால் புருஷர்கள் ஆடுவதற்கும் இடஞ் செய்து பரதநாட்டியத்தை விருத்தி செய்தார். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். சின்னையா பாகவதர். இவர் திருநெல்வேலியிலிருந்தார். வீணையில் சிறந்த வித்வான். இவருக்கு அநேக மாணாக்கர் இருந்தார்கள். மற்ற தேசத்தி லிருந்து வரும் வித்வான்களையும் ஆதரிக்கும்படியான தன்மை யுடையவராயிருந்தார். சீ சீத்தாராம பாகவதர். இவர் திருவனந்தபுரம் பரமேஸ்வர பாகவதரின் மாணாக்கர். மிகவும் நன்றாய்ப் பாடுவார். சீத்தாராமையர். தாசில்தார், மதுரை. இவர் அந்தண நல்லூர் சுப்பையரிடம் சொல்லிக் கொண்டு வீணை முதலான வாத்திய வாசிப்பிலும் வாய்ப்பாட்டிலும் கெட்டிக்காரராயிருந்தார். சீத்தாராமையர். இவருக்குச் சோல்ஜர் சீத்தாராமையர் என்று பேர். திருவையாறு தியாகராஜ ஐயர் மாணாக்கர். இராகம் பல்லவி நன்றாய்ப் பாடுவார். சீத்தாராமையர். விஜயநகரம் சமஸ்தான வித்வான். குருராயாச்சாரி யாருடைய குமாரர். தகப்பனாருக்குப்பின் சமஸ்தான வித்வானாயிருந்தார். இவர் வீணையில் ஷட்காலங்களையும் நன்றாய் வாசிப்பார். வீணையில் அதிகமாய் அப்பியாசம் செய்து பல்லவிகளையும் இராகங்களையும் நன்றாய்ப் பிரஸ்தரித்து சுகமாய் வாசிப்பார். சீத்தாராமையர். இவருக்குத் தோடி சீதாராமையர் என்று பெயர். இவர் சரபோஜி மகாராஜா கால ஆரம்பத்தில் தஞ்சாவூரிலிருந்தவர். இவர் தோடி இராகத்தையே தமது சொத்தாகக் கொண்டு அதில் அதிகப் பிரியமும் அதிக உழைப்புமுள்ளவர். தோடி இராகத்தை அநேக வித கற்பனைகளுடன் விந்நியாசப்படுத்திப்பாடும் பழக்கத்தையுடையவர். சீத்தாராமையர். இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் மாணாக்கர். ராகம், பல்லவி இவைகளை வெகு ஒழுங்காய்ப் பாடுவார். சீத்தாராK. ஐதராபாத்J. இவர் பெரிய குப்புசாமி சின்னக் குப்புசாமியின் சகோதரர். பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார். சீனிவாச ஐயர். திருநெல்வேலி. சங்கீதத்தில் அநேக நுட்பங்கள் தெரிந்த சங்கீத வித்வான். பிடில் நன்றாய் வாசிப்பார். சீனிவாச ஐயங்கார். இவர் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் மாணாக்கர். ராகம், பல்லவிகள் நன்றாய்ப் பாடுவார். சங்கீத லட்சிய லட்சணங்களை அறிந்த சிறந்த வித்வான். பல இடங்களுக்கும் போய் விசேஷ சன்மானம் பெற்றிருக்கிறார். இராமனாதபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானாய் அநேக மாணாக்கர்களுக்குச் சொல்லி வைத்துக் கொண்டுமிருக்கிறார். சீனிவாச ராவ். ஸ்ரீரங்கம். பீமாச்சாரியார் குமாரர். தகப்பனும் மகனும் நன்றாய்ப் பாடுவார்கள். பீமாச்சாரியார் வீணை வாசிப்பார். சீனிவாச ராவ். கும்பகோணம். மகா வைத்தியநாதையரின் மாணாக்கரான உமையாள்புரம் சாமிநாத ஐயரின் மாணாக்கர். புல்லாங்குழல் சுகமாய் வாசிப்பார். சீனிவாச ராவ். இவருக்குக் கோட்டு வாத்தியம் சீனிவாச ராவ் என்று பெயர். கோட்டு வாத்தியத்திலும் பிடிலிலும் கமகங்களுடன் வெகு இனிமை யாய் வாசிப்பார். காம்பீரமாய்ப் பாட்டும் பாடுவார். சீனிவாசையர். அர்த்தபுஷ்டியுள்ள அநேக பதங்களையும் கீர்த்தனை களையும் தமிழ்ப்பாஷையில் விஜயகோபால் முத்திரையுடன் செய்திருக்கிறார். இவர் மதுரையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் மந்திரியாயிருந்தவர். சீனுவையர் சௌக்கம். இவர் சரபோஜி, சிவாஜி மகாராஜாக்கள் காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தான வித்வானாயிருந்தவர். சௌக்கமாயும் விளம்பமாயும் ராக ஆலாபனைகள் பாடும் சாமர்த்தியத்தால் இவருக்குச் ‘சௌக்கம் சீனுவையர்’ என்று பெயர் உண்டாயிற்று. சீனையங்கார். செட்டிபட்டணம். இவர் சங்கீதத்தில் பெரிய வித்வான். அநேக பதங்கள் எழுதியிருக்கிறார். சீனையா. இவரைக் கனம் சீனையா என்று அழைப்பார்கள். இவர் சேஷையரின் குமாரர். வாதுல தேசிகருடைய மாணாக்கர். சமஸ்கிருதம், தெலுங்கு, சங்கீதம் இவைகளில் மிகுந்த பாண்டித்திய முடையவர். விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாளில் மந்திரியா யிருந்தவர். மன்னார் ரங்க முத்திரையுடன் அநேக கீர்த்தனைகளும், பதங்களும் செய்திருக்கிறார். இவர் ஷேத்திரக்ஞர் காலத்தில் இருந்ததாகச் சொல்லுகிறார்கள். சு சுதாகளச. 1324. இவர் “சங்கீதோபநிஷத்” “சங்கீதோபநிஷத்சாரம்” என்னும் புஸ்தகங்களை எழுதியிருக்கிறார். சுந்தர ஐயர். இவர் பிடில் வாசித்துக் கொண்டே பாடுவார். குரலும் பிடிலும் சேர்ந்து அதி இனிமையாயிருக்கும். சுந்தர ஐயர். இவர் பைடால சுப்பராய சாஸ்திரியாரின் குமாரர். மிக இனிமையாய்ப் பாடுவார். சுந்தர சிங். இவரும் இவர் தமையன் சதுர்சிங்கும் இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார்கள். இவர் பிடில் சுகமாய் வாசிப்பார். சுந்தர நாயக்கர். சப்ஜட்ஜ் நாகப்பட்டணம் வீணை பிடில் நன்றாய் வாசிப்பார். பாடுவார். சுந்தரப்பையர், சுப்பராமையர், சேஷையர். இந்த மூன்று சகோதரர்களும் சங்கீத வித்வான்கள். இவர்கள் தமிழில் பதங்களும் கீர்த்தனைகளும் செய்திருக்கிறார்கள். சுந்தரம் ஐயர். உமையாள்புரம். மானம்புச்சாவடி வெங்கிடு சுப்பையரின் மாணாக்கர். இவர் இராகம், பல்லவி, கீர்த்தனைகள் மிக நன்றாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயரும் கொரத்தவாசி வேங்கடரமண ஐயரும் பிடில் நடேச ஐயரும் இவருடைய மாணாக்கர்கள். நடேச ஐயர் பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார். சுந்தரம் ஐயர். வக்கீல். சித்தூர். வீணை வாசிப்பிலும் பாட்டிலும் சமர்த்தர். சுந்தர ராவ். தஞ்சாவூர். சுகமான சாரீரத்துடன் நன்றாய்ப் பாடுவார். இவர்க்குத் தோடி சுந்தர ராவ் என்று பெயர். தஞ்சாவூர் மகாராஷ்டிர வம்சம். இவர் பிள்ளையும் தோடி ராகம் நன்றாய்ப் பாடுவார். சுபாங்கர். 1700. இவர் ‘சங்கீத தாமோதரம்’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். சுப்பண்ணா. இவர் வீணை சுப்புக்குட்டி ஐயரின் குமாரர். வீணையை கர்நாடக சம்பிரதாயமாய் ஒழுங்காய் வாசிப்பவர். சுப்பண்ணா. இவரை பக்ஷி சுப்பண்ணா என்று அழைப்பார்கள். மைசூர் சமஸ்தானத்தில் வீணை வித்வான். வீணை சாம்ப ஐயரின் மாணாக்கர். இவர் வாயால் பாடிக் கொண்டே வீணை வாசிக்கும் பத்ததி மிக அபூர்வமானJ. இன்னும் அநேக வாத்தியங்களும் வாசிப்பார். சுப்பராம ஐயர். இவர் சேஷாசல ஐயரின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். இவர் தம்பியும் நன்றாய்ப் பாடுவார். சுப்பராம தீக்ஷதர். இவர் பாலசுவாமி தீக்ஷதரின் பேரனும், (மகள் பிள்ளை) சுவிகார புத்திரனு மானவர். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். பாலசுவாமி தீக்ஷதரிடத்தும், விளாத்தி குளம் கிருஷ்ணாமாத்தியரிடத்தும் காவியம் வீணை நாடகம் அலங்காரம் முதலானவைகளையும் சங்கீத இலக்கிய இலட்சணங்களையும் கற்றுக் கொண்டார். ஜெகதீஸ்வர ராம வேங்கடேஸ்வர ராஜா நாளில் எட்டையாபுரத்தில சமஸ்தான வித்வானாயிருந்தார். சௌக்கவர்ணங்கள் தானவர்ணங்கள் கீர்த்தனைகள் இராகமாலிகைகள் இராக சஞ்சாரங்கள் செய்திருக்கிறார். இவைகளை இவர் செய்திருக்கும் “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி”யில் பார்க்கலாம். இவரும் சின்னச்சாமி முதலியாருமாக எட்டையாபுரம் இராஜாவின் உதவியைக் கொண்டு “சங்கீத சம்பிரதாய பிரதர்சனி” என்னும் சங்கீத நூலைச் செய்திருக்கிறார்கள். இவருடைய மாணாக்கர் எட்டையாபுரம் தியாகராஜ ஐயர். சுப்பராமையர். வைத்தீஸ்வரன் கோவில். தமிழிலும் சங்கீதத்திலும் வித்வான். இவர் முத்துக் குமர முத்திரையுடன் அநேக பதங்கள் செய்திருக்கிறார். சுமார் 50 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சுப்பராய அண்ணாவி. திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் தேவாரம், திருவாசகம் சொல்லும் ஓதுவாராயிருந்தார். சங்கீத சாஸ்திரங்களிலும் பரத சங்கீத சாகித்தியங்களிலும் தேர்ந்தவர். சுப்பராய சாஸ்திரியார். 1803. சாமா சாஸ்திரியாரின் குமாரர். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் இவைகளில் விசேஷ பாண்டித்திய முடையவர். அநேக கீர்த்தனைகளும் சுரஜதிகளும் செய்திருக்கிறார். இவர் மாணாக்கர் பொன்னுசாமி. சுப்பராய சாஸ்திரியார். சென்னப்பட்டணம் பைடால குருமூர்த்தி சாஸ்திரியாரின் சகோதரர். நன்றாய்ப் பாடுவார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். இவர் குமாரர் சுந்தரையர் மிக இனிமையாய்ப் பாடுவார். சுப்பராய சாஸ்திரியார். இவர் அலசூர் கிருஷ்ணையர் குமாரர். சாமா சாஸ்திரியாரிடம் சிட்சை சொல்லிக் கொண்டு பெரிய வித்வானாயிருந்தார். குமார முத்திரையுடன் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இவருடைய குமாரர் அண்ணாசாமி சாஸ்திரியாரும் மருகர் கச்சி சாஸ்திரியாரும் பலரும் மதிக்கும்படியான கெட்டிக்கார வித்வான்களாயிருக்கிறார்கள். பிரம்பூர் கிருஷ்ணையர், சந்திரகிரி இரங்காச்சாரியார், திருஞானமுதலியார், சிமிட்டா இராகவலுசெட்டி, பிடில் பாலு இவர்களும் சுப்பராய சாஸ்திரியாரிடம் சொல்லிக் கொண்டவர்கள். சுப்பராய நட்டுவனார். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். இவர் பாடிய வர்ணங்களும் கீர்த்தனைகளும் துளஜா மகாராஜா பேரிலும் கடவுள் பேரிலும் முத்திரையுடன் இருக்கின்றன. துளஜா மகாராஜாவால் பல்லக்கு முதலிய விருதுகளும், பூமிகளும், ஆபரணங்களும் இப்போது நட்டுவன்சாவடி யென்றழைக்கப்படுகிற கட்டிடமும் இவருக்குக் கொடுக்கப்பட்டன. இவர் அநேகருக்குச் சங்கீத வித்தையைப் போதித்திருக்கிறார். இவருக்குப் பொன்னையா, சின்னையா, சிவானந்தம் என்ற மூன்று குமாரர்களுண்டு. அவர்களும் சங்கீதத்தில் மிகத் தேர்ந்தவர்கள். சுப்பராயர். இவரைப் பிச்சாண்டார் கோவில் சுப்பராயர் என்பார்கள். நீலகண்ட ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் அபார செயலுள்ளவர். இவர் பாடினால் கின்னர தந்தியில் வாசித்தது போல ஜனங்களுக்கு மயக்கத்தை யுண்டு பண்ணும். சுப்பராயலு. பிச்சாண்டார் கோவில். அதிமனோகரமாய்ப் பாடுவார். இவருடைய மாணாக்கர் சிவசாம்பையர். சுப்பராயலு. திருவள்ளூர். இவர் திருவள்ளூர் செங்கல்ராயுடுவின் மருகர். நாகசுரம் நன்றாய் வாசிப்பார். சுப்பராயலு. திருப்பாதிரிப்புலியூர். இவரும் வையாபுரியும் முத்தும் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்கள். சுப்பாராவ். இவரைப் பிடில் சுப்பாராவ் என்றழைப்பார்கள். பல்லவி சிவராமையரின் குமாரர். பிடில் தாளம் தவறாமல் வெகு சுத்தமாய் வாசிப்பார். சுப்பாராவ். இவர் பித்தாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்வானா யிருக்கிறார். வீணை மிகவும் நன்றாய் வாசிப்பார். சுப்பிரமணிய ஐயர். இவரைப் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் என்றழைப்பார்கள். திருவையாற்றிலிருந்து பிறகு சென்னப்பட்டணத்தில் போயிருந்தார். கனநயதேசிகங்களையும் இராகங்களையும் சம்பிரதாயமாய்ப் பல்லவியுடன் நன்றாய்ப் பாடுவார். அநேக கீர்த்தனைகளையும் வர்ணங்களையும் ஜாவளிகளையும் தில்லானாக்களையும் சுகமான வர்ண மெட்டுகளுடன் செய்திருக்கிறார். பெரியோர் செய்த கீர்த்தனைகளை அவர்கள் போன வழி தவறாமல் சுகமாய்ப் பாடுவார். இவரும் இவர் தமையனார் பஞ்சநத சாஸ்திரிகளும் சேர்ந்து பாடும் கீர்த்தனைகளைக் கேட்டவர்களுக்கு மற்றவர் பாடும் பல்லவியைக் கேட்க விருப்பமிருக்காJ. இராமநாதபுரம் சீனிவாச ஐயங்கார், பிடில் கிருஷ்ணமாச்சாரியார், காஞ்சி சேஷையர், சேஷகிரி ராவ் இவர்கள் மாணாக்கர்கள். இவர்கள் சுப்பிரமணிய ஐயர் செய்திருக்கும் கீர்த்தனைகளையும் பல்லவிகளையும் ஒழுங்காய்ப் பாடுவார்கள். சுமார் 15 வருஷங்களுக்கு முன் காலஞ்சென்றார். சுப்பிரமணிய ஐயர். கங்குந்தி. சம்பிரதாயமாய்ப் பாடுவார். சுப்பிரமணிய ஐயர். இவருக்குத் திருவையாற்று சுப்பிரமணிய ஐயர் என்று பெயர். மைசூர் சமஸ்தானத்தில் வித்வானாயிருக்கிறார். தாளத்தில் விசேஷ ஞானமுள்ளவர். அநேக ஜாதி பேதங்களைச் செய்து பல்லவி பாடுவார். சுப்பிரமணிய ஐயர். நேமம். இவர் தியாகராஜ ஐயரின் மாணாக்கர். இராகம் பல்லவி நன்றாய்ப் பாடுவார். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளை வெகு சுத்தமாய்ப் பாடுவார். சுப்பிரமணிய ஐயர். வேட்டனூர். இவர் புதுக்கோட்டையிலிருக்கிறார். நன்றாய்ப் பாடுவார். ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். திருவாவடுதுறைத் தம்பிரான் சுவாமி. மகா வைத்தியநாத ஐயரிடம் சொல்லிக் கொண்டு வாய்ப்பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் வல்லவராயிருந்தார். சுப்புக்குட்டி ஐயர். இவரை வீணை சுப்புக்குட்டி ஐயர் என்றழைப்பார்கள். இவர் பச்சிமிரியம் ஆதப்பையாவின் பௌத்திரர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வித்வான். வீணையில் இராக ஆலாபனை மத்திம கால பல்லவி சுரகல்பனைகள் தசவித கமகங்கள் பிரகாசிக்கும்படியும் அதீத அனாகத சம விஷம கிரகங்கள் விளங்கும்படியும் நன்றாய் வாசிப்பார். இவர் 70 வயது வரை வீணை வாசித்துக் கொண்டிருந்து சுமார் 1870-ல் காலஞ் சென்றிருப்பதாகத் தெரிகிறது. இவர் குமாரர் வீணை சுப்பண்ணா. சுப்புக்குட்டி ஐயர். மைலாப்பூர். திருவத்தூர் தியாகையர் மாணாக்கரான வீணை வேணுவின் மாணாக்கர். சங்கீதம் நன்றாய்த் தெரியும். சுப்புச்சா வையர். வக்கீல். கும்பகோணம். இனிமையான சாரீரத்துடன் ஐயரவாள் கீர்த்தனைகளை நன்றாய்ப் பாடுவார். உமையாள்புரம் கிருஷ்ணசுந்தர பாகவதரின் மாணாக்கர். சுப்பையர். இவருக்கு அந்தனூர் சுப்பையர் என்று பெயர். இவர் தியாகையர் மாணாக்கரான நங்கபுரம் நீலகண்டையரின் மாணாக்கர். சாதாரண வித்வான்களால் சாதிக்க முடியாத கமக மார்க்கங்களையும் அதீத அனாகதங்களையும் மிகச் சுலபமாய் வாசிப்பார். இவர் ஷேத்திரஞ்ஞர் பதங்களை வாய்ப்பாட்டாகவும் வாத்தியத்துடனும் நன்றாய்ப் பாடுவார். இவர் மாணாக்கரும் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் பந்துவுமான குருசாமி ஐயரும் பிடில் நன்றாய் வாசிப்பார். ஸ்ரீரங்கம் இரங்கசாமியும் இவருடைய மாணாக்கர். சுப்பையர். இவருக்கு ஜெஞ்சாமாருதம் சுப்பையர் என்று பெயர். தஞ்சாவூர் கன்னையரின் மாணாக்கர். மூன்று ஸ்தாயியிலும் சுகமாய்ப் பாடுவார். மைசூர் மகாராஜா சபையில் ‘ஜெஞ்சாமாருதம்’ என்று பட்டப் பேர் கொடுக்கப் பெற்றவர். சுப்பையர். இவருக்கு விட்டே சுப்பையர் என்று பெயர். இவரும் தஞ்சாவூர் கன்னையரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். சுப்பையர். ஸ்ரீவைகுண்டம். அதி ரமணீயமாய்ப் பாடுவார். சுப்பையர். ஸ்ரீரங்கம். அந்தனூர் சுப்பையரின் மாணாக்கரான ரெங்கசாமியின் மருமகர். இவர் நன்றாய்ப் பாடுவார். சுப்பையா பாகவதர். திருநெல்வேலி ஜில்லா. பிடில் நன்றாய் வாசிப்பார். அரிகதையும் செய்வார். சுயம்பிரகாச எதீந்துருலு. இவர் சுமார் 60 வருஷங்களுக்கு முன் மாயவரத்திலிருந்தார். சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சுவாமி பாகவதர். இவரை உமையாள்புரம் சுவாமி பாகவதர் என்றழைப்பார்கள். கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் ஆகிய இவர்களின் தமயன் குமாரர். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளில் அநேகம் பாடமுண்டு. இக்கீர்த்தனைகளைத் தவிர வேறு கீர்த்தனைகளைப் பாடுகிறதில்லை என்ற விரதமுடையவர். தற்காலத்திலுள்ளவர். சுவேதாரண்ய ஐயர். இவர் தீக்ஷதர் மாணாக்கரான வேட்டனூர் வேங்கடராமையரின் குமாரர். பிடில் நன்றாய் வாசிப்பார். சூ சூரியநாராயண சாஸ்திரியார். இவருக்குத் தூர்வாச சூரியநாராயண சாஸ்திரியார் என்று பெயர். விஜயநகரம் சமஸ்தானத்திலிருந்தார். வீணையில் ஷட்காலங்களை வாசிப்பதிலும் ஒவ்வொரு அட்சரத்தை மீட்டுவதிலும் விசேஷ ஞானமுடையவர். வீணையில் அதிக சாதக முடையவர். அநேக சாகித்தியங்களும் செய்திருக்கிறார். செ செந்தில் வேலண்ணாவி. திருநெல்வேலியில் ஓச்சர் என்ற ஜாதியில் பிறந்தவர். நெல்லையப்பர் கோயிலில் வீணை வாசித்துக் கொண்டும் பரதநாட்டியம் பயிற்றுவித்துக் கொண்டும் ஓதுவார்களுக்கு ராகத்தோடு பாடும்படியாகச் சொல்லி வைத்துக் கொண்டுமிருந்தார். புளையன் என்ற பிரபு இவரை ஆதரித்து வந்தார். சோழநாட்டிற்கு வந்த இவர் மாணாக்கராகிய ஓதுவர்களின் பாட்டைக்கேட்ட துளஜா மகாராஜா மனுஷாளை அனுப்பி இவரைப் போலவே சங்கீதத்தில் கெட்டிக்காரரான இவருடைய குமாரர் மகாதேவ அண்ணாவியை வரவழைத்து தஞ்சாவூர் சமஸ்தானத்தில் கர்நாடக சங்கீதத்தை விருத்தி பண்ணினார். செந்து மேனன். முன்சீபு. பாலக்காடு. நன்றாய் வீணை வாசிப்பார். பாடுவார். பரமேஸ்வர பாகவதரிடம் சொல்லிக் கொண்டவர். செல்வகணபதி தீக்ஷதர். சிதம்பரம். சென்னப்பட்டணம் சிங்களாச்சாரி யாரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர். சென்னமல்லப்பா. பெங்களூர். வீணை சம்பிரதாயமாய் வாசிப்பார். சே சேதுராம ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். சேதுராம ராவ். தஞ்சாவூர். மிருதங்கம் துக்காராம் ராவின் மாணாக்கர். மிருதங்கம் சுகமாய் வாசிப்பார். சேத்தூர் ஜமீன்தார். இவர் சங்கீத சாகித்தியத்திலும் தமிழிலும் வீணை வாத்தியத்திலும் கெட்டிக்காரர். இவர்கள் பரம்பரையாகவே தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வித்வான்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் முத்தையா பாகவதரைக் கூட வைத்துக் கொண்டு அப்பியாசித்துக் கொண்டார். சேஷ ஐயங்கார். இவர் அயோத்தியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கநாதர் பேரில் அநேக கீர்த்தனைகள் செய்து பாடிக் கொண்டிருந்தார். அதில் இப்போது அநேக கீர்த்தனைகள் வரை வழக்கத்திலிருக்கின்றன. இவர் கீர்த்தனைகள் சங்கீத சாஸ்திர ஒழுங்குப்படிச் சரியாயிருப்பதால் இவருக்கு மார்க்கதரிசி சேஷ ஐயங்கார் என்று பெயர் வழங்குகிறJ. சேஷகிரி சாஸ்திரியார் M.A., சங்கீத சாகித்தியங்களில் விசேஷ பிரக்ஞையுடையவர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் தம்பி வேங்கடேச சாஸ்திரி வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லி வைப்பதில் சமர்த்தர். சேஷண்ணா. இவர்க்கு வீணை சேஷண்ணா என்று பெயர். வீணை சுப்பண்ணாவின் மாணாக்கர். மைசூர் சமஸ்தானத்தில் மகாராஜா சாமராஜ உடையார் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் சமஸ்தான வித்வான். ரவைஜாதி மார்க்கங்களையும் வீணையில் வெகு அற்புதமாய் வாசிப்பார். இவருக்குப் பிடிலிலும், ஜலதரங்கத்திலும் பழக்கமுண்டு. அநேக சமஸ் தானங்களிலும் போய் கீர்த்திபெற்றவராக இருக்கிறார். சேஷாசல ஐயர். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்த சங்கீத வித்வான். சம்பிரதாயமாய்ப் பாடுவார். சேஷாசல பாகவதர். சாமா சாஸ்திரிகளின் மாணாக்கர். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சங்கீத வித்வான். சங்கீத சாகித்தியங்களிலும் கானத்திலும் சமர்த்தர். தெலுங்கில் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். இவர் குமாரர் மாதுருபூதையாவும் தம்பி இராமதாசரும் சங்கீத வித்வான்கள். சேஷையர். இவரைக் காஞ்சீபுரம் கூடால சேஷையர் என்றழைப்பார்கள். குருமூர்த்தி சாஸ்திரியாரின் மாணாக்கர். சிறந்த வித்வான். அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். இவர் பிள்ளை சுப்பையரும் மாணாக்கர் நாகோஜி ராவும் நன்றாய்ப் பாடுவார்கள். சேஷையர். இவர் சுந்தரப்பையர் சுப்பராமையர்களின் சகோதரர். சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர். தமிழில் அநேக கீர்த்தனைகளையும் பதங்களையும் செய்திருக்கிறார். சேஷையர். இவர் சேலத்துக்குச் சமீபம் நெய்க்கார்பட்டியிலிருந்தார். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருக்கிறார். சோ சோட்டு மியான். இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார். சோமநாதர். 1609. இவர் “இராகவிபோதம்” என்ற நூல் எழுதியிருக்கிறார். அதை மைசூர் H.P. கிருஷ்ண ராவ், தாம் பிரசுரித்து வரும் Indian Music Journal என்ற பத்திரிகையில் மொழி பெயர்த்திருக்கிறார். சோமாஜி பாகவதர். இவர் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் பெரிய வித்வான். சோமு ஐயர். இவரைத் தஞ்சாவூர் ஜில்லா தலைஞாயர் பல்லவி சோமு ஐயர் என்றழைப்பார்கள். தஞ்சாவூர் சமஸ்தான விகடகவி கிருஷ்ணையரின் குமாரர். இராகம், பல்லவி சம்பிரதாயமாயும், லயசுத்தமாயும் பாடுவார். இவர் குமாரர் இராதாகிருஷ்ணையர் பாட்டிலும் பிடில் வாசிப்பிலும் கெட்டிக்காரர். பல்லவி சோமு ஐயரிடம் தேவகோட்டை குட்டையன் செட்டியார் சொல்லிக் கொண்டார். சோழமுத்து. இவர் அண்ணு, இராமசுவாமி என்பவர்களின் சகோதரர். பரத நாட்டியம் கற்றுக் கொடுப்பதிலும் பிடில் வாசிப்பதிலும் கெட்டிக்காரர். ஜா ஜாலையா. இவர் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். வெகு நன்றாய்ப் பாடுவார். கன்னிகாபரமேஸ்வரி தேவஸ்தானத்தில் 18 வருஷம் உத்தியோக மாயிருந்தார். சங்கீதத்தில் பால சிட்சை செய்திருக்கிறார். ஜானகிராம ஐயர். இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் மாணாக்கர். சுகமாய்ப் பாடுவார். ஜான் பால்மர் ரையிட்டர். நாகர்கோவில். இவர் பொருள் செறிவுள்ள அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். ஜீ ஜீயர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் அழக சிங்கரையாவும் வீணை நன்றாய் வாசிப்பார். அநேகருக்கு சிட்சை சொல்லி வைத்திருக்கிறார். ஜெ ஜெகதீஸ்வர ராமகுமர எட்டப்ப ராஜா. எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழ் தெலுங்கு சமஸ்கிருதம் சங்கீதம் இவைகளில் நல்ல விற்பத்தியுடையவர். வீணை வாசிப்பார். கணபதிமேல் கார்த்திகேய முத்திரையுடன் அநேக சூர்ணிகைகளும் சுலோகங்களும் ரக்திராக தேசிக இராகங்களில் கீர்த்தனங்களும் செய்திருக்கிறார். அநேக சங்கீத வித்வான்களை ஆதரித்து வந்தார். பாலசுவாமி தீக்ஷதர், அப்புக்குட்டி ஐயர், மீனாக்ஷி சுந்தரம் ஐயர், வீணை சுப்பையா அண்ணாவி, வெங்கு பாகவதர், மதுரை இராமையா, தேவூர் சுப்பிரமணிய ஐயர் முதலானவர்கள் இவர் சபையிலிருந்த சங்கீத வித்வான்களில் முக்கியமானவர்கள். ஜெகதீஸ்வர ராம வேங்கடேஸ்வர எட்டப்ப ராஜா. இவர் எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்தில் அதிகப் பிரியமும் வீணை சுரபத் சித்தார் ஜலதரங்கம் மிருதங்கம் கடம் முதலிய வாத்தியங்களில் நல்ல அப்பியாசமும் உள்ளவர். “முருகா உனை நம்பினேனையா” என்ற சுரஜதி செய்திருக்கிறார். ஜெயதேவர். 1100. வங்காள தேசத்தில் கிண்டவில்வா அல்லது கிந்து வில்வம் என்ற கிராமத்தில் வசித்த போஜல தேவரின் குமாரர். கோவர்த்தனாச்சாரியாரின் மாணாக்கர். வல்லாள சேன மகாராஜன் புத்திரரான இலட்சுமண சேனமகாராஜன் சபையில் இருந்தார். இவர் காலத்தில் உமாபதிதரர், சரணர், கோவர்த்தனாசாரியார், தோபி கவிராஜர் முதலியவர்களிருந்தார்கள். இவர் “கீதாகோவிந்தம்” என்ற அஷ்டபதி கிரந்தத்தை சங்கீத ரூபமாய்ச் செய்திருப்பதோடு “பிரசன்ன இராகம்” என்ற நாடகமும் செய்திருக்கிறார். ஸ் ஸ்ட்ராங்குவேஸ். A.H. Fox Strangways. இவர் ஐரோப்பியர். இந்து சங்கீதத்தின் சுவாராம்ஸத்தைத் தெரிந்து கொள்ளும்படியாக இந்தியாவுக்கு வந்து பல இடங்களுக்குப் போய் அநேக சங்கீத வித்வான்களைக் கண்டு சம்பாஷித்து “Hindustan Music” என்னும் ஓர் புஸ்தகம் எழுதியிருக்கிறார். ஷா ஷாஜி மகாராஜா. இவர் தஞ்சாவூர் மகாராஷ்டிர ராஜாக்களில் இரண்டாவது அரசனாவார். ஏகோஜி மகாராஜாவின் குமாரர். 1687-1711 வரை சோழ மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர். மகாராஷ்டிரம், தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய பாஷைகளிலும் சங்கீத சாகித்தியங்களிலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். திருவாரூர் தியாகராஜ சுவாமியின் பேரில் தெலுங்கில் பல்லக்கி நாடகத்தை சங்கீத ரூபமாய்ச் செய்திருக்கிறார். ஷே ஷேத்திரிஞ்ஞர். இவர் சித்தூர் ஜில்லா சந்திரகிரி தாலுகா மூவபுரியில் கோபாலசாமி ஆலயத்தில் பகவானைப் பக்தி பண்ணிக் கொண்டிருந்தார். பக்தி மேலீட்டால் நாயகன் நாயகி பாவனையில் பகவான் இலட்சணங்களைப் பொருட் செறிவுள்ளதாயும் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்த சிருங்கார ரசங்கள் வெளிப்படும் கைசிக ரீதியாயும் இனிமையான சொற்களால் தகுந்த இராகங்க ளோடும், தாதுக்களோடும் அநேக பதங்களைச் செய்திருக்கிறார். இவ்வளவு அர்த்த புஷ்டியும் இனிமையுமான பதங்களை இதுவரையும் வேறெவரும் செய்யவில்லை. இவர் மதுரை, தஞ்சாவூர் கோலகொண்டா முதலிய சமஸ்தானாதிபதிகள் சபையில் பதங்கள் சொல்லி விருது பெற்றிருக்கிறார். காஞ்சி வரதராஜர் பேரிலும் செவ்வந்திலிங்கேசர் பேரிலும் ‘முவ்வ கோபால’ என்ற முத்திரையுடன் பதங்கள் செய்திருக்கிறார். இவர் தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் இருந்ததாகவும் 1000 பதங்கள் வரை செய்திருப்பதாகவும் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஷேமகர்ணா. 1570. இவர் “இராகமாலா” என்ற புஸ்தகம் எழுதி யிருக்கிறார். த தம்பியப்பன். இவர் குருமூர்த்தி நட்டுவனாரின் குமாரர். சரபோஜி சிவாஜி மகாராஜாக்கள் காலத்தில் திருவாரூர் தியாகராஜ ஆலயத்தில் நட்டுவாங்கத் தொழில் செய்தவர். திருவாரூர் ஞானம், கமலம் முதலியவர்களுக்குச் சங்கீதமும், பரதமும் சொல்லி வைத்தவர். சங்கீதத்திலும் மிருதங்கத்திலும் லட்சிய லட்சணங்களில் சமர்த்தர். இவருக்குச் சுத்த மிருதங்கம் தம்பியப்பா என்று பெயர். மகாராஜா காலத்தில் மாதச் சம்பளமும், வீடும் மானியமும் இவருக்கிருந்தன. இராமசாமி தீக்ஷதர், முத்துசுவாமி தீக்ஷதர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார். தர்ம தீக்ஷதர். அகிலாண்டபுரம். இவர் சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர். வீணை வாசிப்பதில் சிறந்தவர். தக்ஷிணாமூர்த்தி. புதுக்கோட்டை. கிஞ்சிரா மாமுண்டியாபிள்ளையின் மாணாக்கர். இவர் கடம் மிருதங்கம் கிஞ்சிரா நன்றாய் வாசிப்பார். தக்ஷிணாமூர்த்தி. தஞ்சாவூர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். தக்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. பந்தர். நன்றாய்ப் பாடுவார். தா தாசரதி ஐயர். இவர் கோல பாகவதர் குமாரர். குன்னங்குடி கிருஷ்ணையரிடம் சொல்லிக் கொண்டு சங்கீத வித்வானாயிருந்தார். தாசரி. சுரபத் மிகவும் நன்றாய் வாசிப்பார். தாண்டவராயத் தம்பிரான். இவர் கல்லிடைக் குறிச்சி மடத்தில் கார்பார் தம்பிரானாக இருந்தார். தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பதிலும் அதி சமர்த்தர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். தாதாச்சாரியார். இவர் அக்பர் சக்கிரவர்த்தியால் தென்னிந்தியாவி லிருந்து டில்லிக்குக் கொண்டு போகப்பட்ட ஒரு கர்நாடக சங்கீத வித்வான். இவர் மகமதியராகி மியான்டான்சின் என்ற பெயருடன் சங்கீத வித்வானா யிருந்தார். தாமோதர மிஸ்ரா. 1560-1647. இவர் 1625 ல் ‘சங்கீத தற்பணா’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். தாவத் சாயபு. தஞ்சாவூர். சாரந்தாவில் சிறந்த வித்வான். லயத்துடன் நன்றாய்ப் பாடுவார். தி திம்மா மாத்தியர். 1550-1600. இவரும் இவர் குமாரர் இராமா மாத்தியரும் சேர்ந்து ‘சங்கீத சுரமேளகளாநிதி’ என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்கள். தியாகராஜ ஐயர். இவர் தஞ்சாவூரில் ஷாஜி மகாராஜா காலத்தில் சமஸ்தான வித்வானாயிருந்த கிரிராஜ கவியின் பௌத்திரர். இராம பிரம்மத்தின் குமாரர். தமக்குப் பூர்வீகமான திருவாரூரை விட்டுக் காவேரி நதி தீர்த்தத்திலுள்ள திருவையாற்றில் வந்து சமஸ்கிருதம், வேதாத்தியாயனம், காவியம், நாடகம், அலங்கார உற்பத்தி ஆகிய இவைகளைப் படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்வான் சுண்டி வேங்கடரமண ஐயாவிடத்தில் சங்கீத இலட்சணங்கள், தாளங்கள், இராகாலாபனைகள், பல்லவிகள் முதலிய சங்கீத நுட்பங்களை ஏக சந்தக்கிராகியாய் அப்பியாசித்து சங்கீத சாகித்தியங்களில் தனக்குச் சமானம் எவருமில்லை என்று சொல்லும்படியான அபார சக்தியை உடையவரானார். இவர் எப்பொழுதும் ஸ்ரீ இராமர் சந்நிதியிலேயிருந்து புதிது புதிதான சாகித்தியங்கள் தினந்தோறும் செய்தும் வீணை வாசித்து பஜனை செய்த கொண்டுமிருப்பார். இவருக்குச் சகல சங்கீத இலட்சணங்களும் அமைந்த சாகித்தியங்கள் நினைத்தவுடனே செய்யும் பழக்கமிருந்தJ. இவர் இரண்டாயிரத்துக்கு மேல் வர்ணங்களும் கீர்த்தனைகளுமான சாகித்தியங்கள் செய்திருக்கிறார். தென்னிந்திய சங்கீத வித்வான்களும், சங்கீத ஞான முடையவர்களும் இவருடைய சாகித்தியங்களைச் செவியாரலாகவாவது கேட்காமலிருப்பது அபூர்வம். இவருடைய மாணாக்கர்கள் ஐயா பாகவதர், சுப்பராம பாகவதர், கணேச ஐயர், வாலாஜா பேட்டை வேங்கடராம பாகவதர், சோல்ஜர் சீத்தாராம ஐயர், திருவத்தூர் வீணை குப்பையர், அமுர்தலிங்கம் பிள்ளை, தில்லை ஸ்தானம் இராமையங்கார், மானம்புச்சாவடி வேங்கிடு சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ணையர், இவர் தம்பி சுந்திரம் ஐயர். இவர்களில் வீணை குப்பையரும் வேங்கிடு சுப்பையரும் பெரிய வித்வான்களாயிருந்தார்கள். தியாகராஜ ஐயர். இவரை திருவத்தூர் தியாகராஜ ஐயர் என்றும் பெத்துநாயக்கன் பேட்டை தியாகராஜ ஐயர் என்றும் சொல்லுவார்கள். இவர் திருவையாறு தியாகராஜ ஐயர் மாணாக்கரான வீணை குப்பையரின் குமாரர். தன் தகப்பனாரிடமே சங்கீதமும் வீணையும் கற்றுக் கொண்டவர். இராகம் பல்லவிகளிலும் வீணை வாசிப்பிலும் சிறந்த வித்வானாக விளங்கினார். அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் செய்து தன் தகப்பனார் செய்திருந்த சாகித்தியங்களையும் சேர்த்து அச்சிட்டிருக்கிறார். தியாகராஜ ஐயர். மைசூர். கிஞ்சிரா ராதாகிருஷ்ண ஐயரின் குமாரர். நன்றாய்ப் பாடுவார். தியாகராஜ ஐயர். எட்டையாபுரம் சுப்பராம தீட்சதரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். தியாகராஜ சாஸ்திரிகள். திருவேலங்காடு. இவர் வீணை வைத்தியநாதையரின் குரு. சங்கீத சாகித்தியத்திலும் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் மகா வித்துவான். தியாகராஜ தீக்ஷதர். திருவேலங்காடு சல்லகாலி கிருஷ்ணையரின் மாணாக்கர் சங்கீத சாகித்தியங்களில் கெட்டிக்காரர். வீணையில் சிறந்தவர். தியாகராஜ பிள்ளை. வையைச்சேரி துரைசாமி ஐயரின் மாணாக்கர். இவர் சங்கீதத்திலும் தாளத்திலும் பல்லவி பாடுவதிலும் சிட்சை சொல்லி வைப்பதிலும் கெட்டிக்காரர். தியாகராஜ ஐயர் கீர்த்தனைகளில் அநேகம் இவருக்குப் பாடமுண்டு. இவருடைய பிள்ளை பாட்டு சாமியா பிள்ளையும் ஒரத்தநாட்டுச் சத்திரம் அமீனா மாதவ ராவும் நாகபட்டணம் சிவ சாம்பு ஐயரும் இவரிடம் சொல்லிக் கொண்டவர்கள். திரிகூடராசப்ப கவிராயர். திருக்குற்றாலத்துக்குச் சமீபம் மேல் அகரத்திலிருந்தவர். இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் சிறந்த வித்துவான். “குற்றாலக் குறவஞ்சி” முதலிய அநேக நூல்கள் செய்திருக்கிறார். குறவஞ்சி மேடென்ற பெயருள்ள நஞ்சை மானியமாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. திருக்கடவூர் பாரதி. மாயவரம். தமிழிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர். திருமலை ஐயங்கார். இவருக்குக் கந்தாடை திருமலை ஐயங்கார் என்று பெயர். ஸ்ரீ வில்லிபுத்தூர் இராமையங்காரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். திருமலை ஐயங்கார். இவருக்கு ஆன்மறைநாடு திருமலை ஐயங்கார் என்று பெயர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். திருமலை ஐயர். வீணை ஆதிப்பையரின் குமாரர். துளஜா மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமத்தானத்தில் சங்கீத வித்வானாக இருந்தவர். சங்கீதத்திலும் வீணையிலும் தேர்ந்தவர். இவருடைய மாணாக்கர் திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயர். திருமலை ராவ்சாகேப் ஜாகீர்தார். ஆரணி. மைசூர் வீணை சதாசிவ ராயரையும் கிஞ்சிரா இராதாகிருஷ்ணையரையும் கூட வைத்துக் கொண்டு சங்கீதத்திலும் வீணை வாசிப்பிலும் கெட்டிக்காரராயிருந்தார். திருவேங்கடப்பையர். இவர் வீணை வாசிப்பில் சமர்த்தர். அநேக தானங்களைச் செய்திருக்கிறார். திருவேங்கடாச்சாரியார். நீடாமங்கலம். இவருக்குச் சரஸ்வதி திருவேங்கடாச்சாரியார் என்று பெயர். சமஸ்கிருதத்திலும் பரத சாஸ்திரத்திலும் தேர்ந்த பண்டிதர். து துக்காராம். இவர் பிரபலமான மகாராஷ்டிர சங்கீத வித்துவான். கர்நாடக சங்கீதத்துக்குத் தியாகராஜ ஐயர் எப்படியோ அப்படியே மகாராஷ்டிர சங்கீதத்தில் இவர் பிரபலமுடையவர். துக்காராம் ராவ். இவர் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். துரைசாமி ஐயங்கார். சென்னப் பட்டணம் சிங்களாச்சாரியாரின் மாணாக்கர். இவர் சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரர். திருப்பதி மகந்துவுக்கு வீணை சொல்லி வைத்துக் கொண்டிருக்கிறார். துரைசாமி ஐயர். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் திருவையாற்றி லிருந்தார். சங்கீத சாகித்தியங்களில் தேர்ந்த வித்துவான். சுப்பிரமணிய முத்திரையுடன் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். துரைசாமி ஐயர். இவரை மத்தியார்ச்சுனம் துரைசாமி ஐயர் என்று சொல்வார்கள். இவர் சங்கீத சாகித்தியங்களில் பேர் பெற்றவர். மிக இனிமையாய்ப் பாடுவார். இவருக்குச் சபாபதி ஐயரென்றும் கோவிந்த சிவனென்றும் இரண்டு குமாரர் இருக்கிறார்கள். துரைசாமி ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தானம் அப்பு பாகவதரின் குமாரர். கொச்சி சமஸ்தானத்தில் வக்கீலா யிருக்கிறார். வெகு விசித்திரமாய்ப் பாடுவார். இவர் தம்பி பிடில் நன்றாய் வாசிப்பார். துரைசாமி ஐயர். இவர் மணித்தட்டு வைத்தி ஐயர் குமாரர். அதிக இனிமையாப் பாடுவார். துரைசாமி ஐயர். தஞ்சாவூரை அடுத்த வையைச்சேரி. சரபோஜி மகாராஜா காலத்தில் சமஸ்தானம் சங்கீத வித்துவானாயிருந்தார். ஆனை ஐயா அவர்களின் மாணாக்கர். மேற்படி ஆனை ஐயா அவர்களின் ஒன்றுவிட்ட பாட்டன் பிள்ளை. இவருக்குச் சாம்பமூர்த்தி ஐயர், இராம சுவாமி ஐயர், மகா வைத்தியநாதையர், அப்பாசாமி ஐயர் பிள்ளைகள். தியாகராஜ பிள்ளை இவரிடத்தில் சொல்லிக் கொண்டவர். திருவையாற்றில் வீடும் திருப்பூந்துருத்தியில் வேலி சர்வமானியமும் மகாராஜா கொடுத்திருக்கிறார். துரைசாமி ஐயர். திருவையாறு. இவர் தியாகராஜ ஐயர் கீர்த்தனைகள், தில்லானாக்கள், ஜாவளிகள் இவைகளை ஜனங்களை ரஞ்சிக்கப் பாடுவார். துளஜா மகாராஜா. 1763-1787. இவர் சோழமண்டலத்தில் தஞ்சையை அரசாண்டு கொண்டிருந்த 5-வது மகாராஷ்டிர அரசர். சங்கீதத்தில் விசேஷ அபிமானமும் பிரியமும் உள்ளவர். இவரும் இவருடைய பாய் சாஹேப் அம்மணியும் வீணை வாசிப்பார்கள். இவர் சங்கீத வித்துவான்களுக்குச் சன்மானங்களும் மானியங்களும் கொடுத்து வந்தார். கர்நாடக சங்கீதத்தை பாவ இராக தாளத்துடன் ஒழுங்குபடுத்தி விருத்தி பண்ணுவதற்காகத் திருநெல்வேலியிலிருந்து மகாதேவ நட்டுவனாரை வரவழைத்துச் சமஸ்தானத்தில் வைத்து ஆதரித்து வந்தார். ஆதிப்பையர், சுண்டி வேங்கட சுப்பையர், வீணை சுப்புக் குட்டி ஐயர், வெங்கிடு சுப்பையர், மகிபாலை வீணைப் பெருமாள் ஐயர், மகாதேவன் முதலானவர்கள் இவர் சபையிலிருந்தவர்களில் விசேஷ சங்கீத வித்துவான்கள். 1770ல் ‘சங்கீத சாராமிர்தம்’ என்ற சங்கீத நூலைச் செய்திருக்கிறார். தே தேவநாயக ஐயங்கார். திருவனந்தபுரம். சங்கீத சாகித்தியங்களில் விசேஷ பண்டிதர். அநேக நல்ல கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். இவர் குமாரர்களும் நன்றாய்ப் பாடுவார்கள். தேவராஜு நாயுடு. தஞ்சாவூர் கோவிந்தசாமியின் குமாரர். மோர்சிங்கும், கடவாத்தியமும் நன்றாய் வாசிப்பார். தேவையா. கரூர். பெரிய தேவையா, சின்ன தேவையா, சாமையா இவர்கள் சகோதரர்கள். நன்றாய்ப் பாடுவார்கள். பிடில் சம்பிரதாயமாய் வாசிப்பார்கள். ந நக்கையர். (தட்டார நக்கையர்) இவர் சங்கீதத்தில் விசேஷமாய் உழைத்திருக்கிறார். அபாரமாய்ப் பாடுவார். அநேக அழகான கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். நஞ்சுண்டப்பா. பெங்களூர். பிடில் வெகு சுகமாய் வாசிப்பார். நடராஜ பாகவதர். திருக்காட்டுப்பள்ளி. இவர் சங்கீதத்திலும் அரிகதை செய்வதிலும் மிகவும் கெட்டிக்காரர். நடேச ஐயர். இவர் உமையாள்புரம் சுந்தர ஐயரின் பந்துவும் மாணாக்கருமானவர். பாட்டிலும் பிடில் வாசிப்பிலும் சிட்சை சொல்லி வைப்பதிலும் அதிக சமர்த்தர். நடேச ஐயர். தியாகராஜ ஐயரின் மாணாக்கரான நேமம் சுப்பிரமணிய ஐயரின் குமாரர். சுகமாய்ப் பாடுவார். நடேச கிரிக்கி. பூனா. இவர் துரபத், கியால், தில்லானா, தோம்ரீலு, கச்சல், இலாவணி, தாரநால் முதலானவைகளை நன்றாய் வாசிப்பார். நடேச தீக்ஷதர். கும்பகோணம். இவர் நன்றாய் அரிகதை செய்வார். நடேச பாகவதர். மிலட்டூர். இவர் சங்கீதத்திலும் அரிகதை செய்வதிலும் கெட்டிக்காரர். நடேசன். (கொரநாடு மாயூரம்) நாகசுரம் அதிகமாய் வாசிப்பார். நம்பெருமாளையர். இவர் ராகவையர் குமாரர். பிடில் மிகவும் சுகமாய் வாசிப்பார். ஸ்ரீலஸ்ரீ நரசிம்ம அபிநயசுவாமி, சிருங்கேரி, சாரதா பீடாதிபதி. இவர் வீணையிலும் பாட்டிலும் சாகித்திய ஞானத்திலும் அபார பிரக்கியாதியுள்ளவர். நரசிம்ம ஐயங்கார். நாமக்கல். இவர் ராகம் பல்லவி சம்பிரதாயமாய்ப் பாடுவார். நரசிம்ம பாகவதர். நாமக்கல் வாசியான இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து அரிகதை செய்து கொண்டிருக்கிறார். இவருக்குச் சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. நரசிம்ம பாகவதர். அரிகதையைப் பக்தி ரசமாய்ச் செய்வார். நரசையர். இவருக்கு ஷட்கால நரசையர் என்று பெயர். சேலம் வாசியான இவர் வெகுகாலம் பெங்களூரிலிருந்தார். அநேக வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் செய்திருப்பதோடு அநேக வித்தியார்த்திகளுக்குச் சங்கீதமும் சொல்லி வைத்திருக்கிறார். நரசையர். இவருக்குப் பதால நரசையர் என்று பெயர். இவர் வெகு சுகமாய்ப் பாடுவார். அநேக பதங்களுக்குப் பாடாந்தரம் செய்திருக்கிறார். நரசையா. இவரைச் சங்கராபரணம் நரசையா என்றழைப்பார்கள். சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். தமிழில் அநேக சங்கீத கற்பனைகளுள்ள பதங்கள் செய்திருக்கிறார். சங்கராபரண ராகத்தை விசேஷ கற்பனைகளுடன் ஆலாபித்துப் பாடுவார். நல்லப்பா. நாகசுரம் மகாதேவன் பரம்பரையைச் சேர்ந்தவர். கணக்குத் தவறாமல் நன்றாய் நாகசுரம் வாசிப்பார். இவர் தம்பி அருணாசலமும் சங்கீதத்தில் நல்ல ஞானஸ்தர். நன்னுமியா, மீரலி. இவர்கள் இருவரும் சகோதரர்கள். தோலெக் நன்றாய் வாசிப்பார்கள். நன்னேகான். இவர் பாவ நகரில் சிறந்த சங்கீத வித்துவான். நா நாகபூஷணம். இவர் விஜயநகரம் சமஸ்தான வித்துவான். குருராயாச்சாரியாரின் மாணாக்கர். வீணை சுகமாய் வாசிப்பார். நாகலிங்கம் அப்பாவு. பிடில் நன்றாய் வாசிப்பார். நாகராஜ பாகவதர். இவர் தஞ்சாவூர் கோவிந்தசாமி பாகவதரின் மாணாக்கர். அரிகதை நன்றாய்ச் செய்வார். பிடில் நன்றாய் வாசிப்பார். நாகராஜ ராவ். கும்பகோணம். இவர் புல்லாங்குழல் நன்றாய் வாசிப்பார். நாகராஜ ராவ். தஞ்சாவூர். மிருதங்கம் சேதுராம் ராவின் மாமனார். இவர் வீணை, பிடில், மிருதங்கம் வாய்ப்பாட்டுகளில் கெட்டிக்காரர். இவருடைய மாணாக்கர் வெங்காசாமி ராவ். நாகாசாமி மாடிகராவ் சாயப். இவர் சரபோஜி மகாராஜாவின் மருமகன். வீணையும் மற்றும் வாத்தியங்களும் வாசிப்பார். எல்லா வித்துவான்களும் இவரிடம் போய்ப் பாடிக் காட்டுவது வழக்கம். நாகோஜி ராவ். இவர் காஞ்சிபுரம் கூடால சேஷ ஐயரவர்களின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். நாகோஜி ராவ், B.A., F.M.U., Retired Inspector of Schools, சங்கீதத்தில அதிக விருப்பமும் அபிமானமும் உள்ளவர். பள்ளிக்கூடச் சிறுவருக்கு உபயோகப் படும்படி இராக சுரக்கரமத்தில் சிறு புஸ்தகம் எழுதியிருக்கிறார். துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி இவர் செய்த வியாசம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுத் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சபையின் 2வது கான்பரன்சில் படிக்கப் பட்டJ. துவாவிம்சதி சுருதி வீணை என்ற பெயருடைய வீணையைக் கள்ளிப்பலகையில் தயார் செய்து அநேகருக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கும்பகோணத்திலிருந்த காலத்தில் இராதாகிருஷ்ண பாகவதரைக் கொண்டு துவாவிம்சதி சுருதி ஆர்மோனியம் ஒன்று தயார் செய்திருக்கிறார். நாராயண ஐயங்கார். இவருக்குச் சேட்டலூர் நாராயண ஐயங்கார் என்று பெயர் வழங்கும். “அபிநய சாரசம்புடம்” என்னும் புத்தகம் எழுதியிருக்கிறார். நாராயண ஐயர். உமையாள்புரம். கடவாத்தியம் வெகு நன்றாய் வாசிப்பார். நாராயணசாமி. சீர்காழி. பிடிலிலும் ஆர்மோனியத்திலும் கெட்டிக்காரர். நாராயணசாமி. நீடாமங்கலம். இவரும் இவர் பிள்ளையும் நன்றாய்ப் பாடுவார்கள். நாராயணசாமி. திருப்பதி. வீணை நன்றாய் வாசிப்பார். நாராயணசாமி அப்பா. தஞ்சாவூரிலிருந்த மகாராஷ்டிர ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மிருதங்கம் அதி ரமணியமாக வாசிப்பார். வாய்ப் பாட்டோடாவது வாத்தியத்தோடாவது தனியாகவாவது இவர் மிருதங்கம் வாசிக்கும்போது ஒவ்வொரு ரவைஜாதியும் நன்றாய்த் தெரியும்படி அவ்வளவு தெளிவாய் வாசிப்பார். நாராயணசாமி ஐயர். புதுக்கோட்டை சமஸ்தான வித்துவான். அப்புக்குட்டி ஐயரின் பௌத்திரர். இவரைப் பிடில் நாராயணசாமி ஐயரென்றும் சொல்லுவார்கள். புதுக்கோட்டைக்குச் சமீபம் திருக்கோகர்ணத்திலிருக்கிறார். சங்கீத சாகித்தியங்களிலும் பிடில் வாசிப்பதிலும் உலகப் பிரசித்தியான வித்துவான். நாராயணசாமி ஐயர். உமையாள்புரம். இவருக்கு பரதம் நாராயணசாமி ஐயர் என்று பெயர். இவர் சங்கீதத்திலும், பரதசாஸ்திரத்திலும் சிறந்த வித்துவான். நாராயணசாமி ஐயர். இவர் வீணைப் பெருமாளையரின் சகோதரர். மிகவும் நன்றாய் வீணை வாசிப்பார். நாராயணசாமி ஐயர். திருவிசநல்லூர், இராகம், பல்லவிகளைப் பாடுவார். வீணையும் பிடிலும் அதிசுகமாய் வாசிப்பார். பல்லவி சோமு ஐயரின் மாணாக்கர். நாராயணசாமி முதலியார். தாசில்தார் சாத்தூர். இவர் வீணை வாசிப்பதிலும் பாடுவதிலும் பெரிய வித்துவான். நாராயண தாஸ். விஜயநகரம். வீணை வாசிப்பதிலும் அரிகதை செய்வதிலும் தேர்ந்தவர். நாராயண தீர்த்தர். முந்நூறு வருஷங்களுக்கு முன்னிருந்தவர். சமஸ்கிருதத்தில் ‘கிருஷ்ணதரங்கம்’ என்ற நூல் எழுதியிருக்கிறார். இவர் செய்த பண்கள் வெகு நன்றாயிருக்கும். நாராயண தேவர். 1765. இவர் “சங்கீத நாராயண” என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். நீ நீலகண்ட ஐயர். இவரை நங்கவரம் நீலகண்டைய ரென்றழைப்பார்கள். தியாகராஜ ஐயரவர்களின் மாணாக்கர். சங்கீதத்தில் சிறந்த வித்துவான். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி வைப்பதில் சிரத்தையும், சொல் வன்மையுமுடையவர். இவரிடம் அந்தனூர் சுப்பையர், அவர் தம்பி சுந்தரம் ஐயர், மணித்தட்டு வைத்தி முதலானவர்கள் சிட்சை சொல்லிக் கொண்டார்கள். ப பகவான் தாஸ். ஆர்மோனியம் நன்றாய் வாசிப்பார். பகவான்லு. இவர்க்கு சிஷ்டு பகவான்லு என்று பெயர். வீணை சிஷ்டு சர்வ சாஸ்திரியாரின் சகோதரர். வீணையில் விசேஷ சாதகம் செய்திருக்கிறார். பக்கிரி. கும்பகோணம். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பங்காருசாமி ஐயர். மைசூர் சமஸ்தான சங்கீத வித்துவான். வீணை சாம்ப ஐயரின் குமாரர். வீணை நன்றாய் வாசிப்பார். பஞ்சநத ஐயர். சாத்தனூர். இவர் பெரியோர் சொல்லிய முறைப்படி பாடி மனதை உருகும்படி செய்வார். சில வர்ணங்கள் செய்திருக்கிறார். பஞ்சநத சாஸ்திரியார். இவர் தரங்கம்பாடி சாமா சாஸ்திரியின் மாணாக்கர். தன் குருவைப் போலவே அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். நன்றாய்ப் பாடுவார். பஞ்சநத சாஸ்திரியார். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சகோதரர். இவர் தம் சகோதரரோடு இருந்து சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவரா யிருந்தார். வெகு சுகமாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயர். இவர் குரத்தவாசி வேங்கடரமண ஐயர் உமையாள்புரம் சுந்தரமையர் ஆகிய இவர்களின் மாணாக்கர். ராகம் பல்லவி கீர்த்தனைகள் சம்பிரதாயமாய்ப் பாடுவார். பஞ்சாபகேச ஐயர். இவர் தியாகராஜ ஐயரின் தௌகித்ரர். மானம்புச்சாவடி வேங்கட சுப்பையரின் மாணாக்கர். மிகவும் அருமையாகப் பாடுவார். பஞ்சாபகேச சாஸ்திரி. கும்பகோணம். இவரைத் திருப்பயணம் பஞ்சாபகேச பாகவதரென்று அழைப்பார்கள். சமஸ்கிருதத்திலும், சங்கீத சாகித்தியங்களிலும், அரிகதை செய்வதிலும் விசேஷ பாண்டித்திய முடையவர். பஞ்சாபகேச சாஸ்திரி. திருவாரூர். இவர் இராகத்தையும் பல்லவி யையும் பழைய வித்துவ சம்பிரதாயப்படிப் பாடுவார். தீட்சதர் கீர்த்தனைகளை மிக ஏற்பாட்டுடன் பாடுவார். பஞ்சாபகேச சாஸ்திரியார். உமையாள்புரம் கிருஷ்ண ஐயரின் மாணாக்கர். சங்கீதத்தில் நல்ல ஞானமுடையவர். சிட்சை சொல்லி வைப்பதில் மிகவும் சமர்த்தர். பஞ்சாபகேச பாகவதர். இவர் கிருஷ்ண பாகவதருக்குப் பரதம் சொல்லி வைத்த திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயரின் குமாரர். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதரின் மாணாக்கர். சங்கீத இலட்சிய லட்சணங்களிலும் பல்லவி பாடுவதிலும் சிறந்த வித்துவான். அதி நுட்பமான கமக சுரங்களும் தெளிவாய்த் தெரியும்படிப் பிடில் மிக இனிமையாய் வாசிப்பார். அரிகதை செய்து ஜனங்களை ரஞ்சிக்கச் செய்வதில் உலகப் பிரசித்தமானவர். சிட்சை சொல்லி வைப்பதில் சிரத்தையும் சொல்வன்மையு முடையவர். இவர் மாணாக்கர் சேஷ பாகவதர். பஞ்சாபகேசன். தஞ்சாவூர். தாளத்திலும் ஆட்டி வைப்பதிலும் கெட்டிக்காரர். பஞ்சு ஐயர். வாய்ப்பாட்டிலும் சுரபத்திலும் சிறந்த வித்துவான். பஞ்சுசாமி சாகிப். சுரபத்தும் மிருதங்கமும் மிகவும் அற்புதமாய் வாசிப்பார். பஞ்சுசாமி ராவ். இராஜாவின் பந்J. இவர் வீணை பிடில் சுரபத் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பட்கோசாமி. இவர்க்கு ஜகநாத பட்கோசாமி என்று பெயர். தஞ்சாவூர். இவர் பால சரஸ்வதி வாசிப்பதில் தேர்ந்தவர். King Edward VII, Prince of Wales பிரபுவாக இந்தியாவுக்கு வந்த காலத்தில் இவர் தம் பால சரஸ்வதி என்ற வீணையில் அதிக அற்புதமாகக் கானம் செய்து சன்மானம் பெற்றிருக்கிறார். இவர் குமாரர் மணி பட்கோசுவாமி வீணை, மிருதங்கம், ஆர்மோனியம் முதலியவைகளை நன்றாய் வாசிப்பார். பட்டாபிராம ஐயர். மைசூர் சமஸ்தானத்திலிருந்தார். சங்கீத சாகித்தியங்கள் விசேஷமாய்ச் செய்திருக்கிறார்கள். அநேக ஜாவளிகளை நாடக அங்கமாய் எழுதியிருக்கிறார். பத்மநாப நாயுடு. தஞ்சாவூர். பிடில் வாசிப்பதிலும் சிட்சை சொல்லிக் கொடுப்பதிலும் கெட்டிக்காரர். பத்மநாபாச் சாரியார். விஜயநகர சமஸ்தானம், சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பதிலும் பேர் போனவர். பரமேஸ்வர ஐயர். ஐயலூர். தஞ்சாவூர் மிருதங்க நாராயணசாமி அப்பாவின் மாணாக்கர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பரமேஸ்வர பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் வித்துவான். வீணை சுரபத் வாசிப்பதிலும், அரிகதை செய்வதிலும் சிறந்த வித்துவான். இவர் சாரீரம் கின்னர தந்திபோல் இனிய சுரமாயும் மிக அழகாயு மிருக்கும். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். கிட்டு பாகவதர், அப்பு பாகவதர், கோபால பாகவதர், சீத்தாராம பாகவதர், முக்கே கணபதி ஐயர், கோயமுத்தூர் இராகவ ஐயர், முதலியோர் இவருடைய மாணாக்கர்கள். மகாதேவ ஐயர், ராமகிருஷ்ண ஐயர் இவர் பிள்ளைகள். பரிமள இரங்கன். சுமார் 200 வருஷங்களுக்கு முன் வடதேசத்தி லிருந்தவர். இவர் பரிமள இரங்கர் என்கிற முத்திரையுடன் தெலுங்கில் எதிபிராசங்களுடன் அநேக பதங்கள் செய்திருக்கிறார். பலவந்த ராவ். இவருக்குத் தார்வாட பலவந்த ராவ் என்று பெயர். பல்லாரி ஜில்லாவி லிருந்தார். இந்துஸ்தானி கர்நாடக சங்கீதங்களில் நல்ல ஞானஸ்தர். இந்துஸ்தானி கமக மார்க்கமாய் மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார். இவரைப் போலவே இவர் பிள்ளைகளிருவரும் இந்துஸ்தானி பாடிக் கேட்போர் மனதை ஆனந்தப்படுத்துவார்கள். பலவந்த ராவ், பையா சாஹேப். குவாலியர் மாதவ மகாராஜா அவர்களின் தம்பி. இவர் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பிலும் அதி சமர்த்தர். ஸ்ரீ கிருஷ்ணன் பேரில் அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார். பவப்பட்டா. 1640. இவர் “சங்கீதானுபாங்குச” என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். பவப்பட்டா. 1680. “அனூப சங்கீத விலாசா”, ‘மரளிப்பிரகாச’ “நஷ்டோ திஷ்ட பிரபோ தக திரவ்பத டீக” என்ற புஸ்தகங்களை எழுதியிருக்கிறார். பனேகான். நேப்பாள வாசியான இவர் இந்துஸ்தானியைப் பாடாந்தரங்களாகப் பாடுவதிலும் டப்பா விஸ்தரித்துப் பாடுவதிலும் சமர்த்தர். கர்நாடகத்தில் பல்லவிகளை எப்படி விஸ்தாரமாய் வின்னியாசப்படுத்தி வாசிக்கலாமோ அப்படி இந்துஸ்தானியிலும் விரிவாய்ப் பாடுவார். பா பாக்கியநாதன். P. சிவகாசி. அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். பாண்டித் துரைசாமித் தேவர். ஜமீன்தார் பாலவனத்தம். இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் பாட்டிலும் வாத்திய வாசிப்புகளிலும் ஜெகப்பிரசித்தர். பாப்பையா. பெங்களூர். கின்னர தந்தியின் நாதம்போலச் சுகமாய்ப் பாடுவார். பாரதி. மாயவரம். திருக்கடவூர் பாரதி, சின்னபாரதி இருவரும் சகோதரர்கள். தமிழிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்திய முடையவர்கள். பார்த்தசாரதி நாயுடு. சென்னப் பட்டணம். வீணை வேணுவின் மாணாக்கர். சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் சிறந்த வித்துவான். பாலகிருஷ்ண செட்டியார். இவர் அதிக சுகமாய்ப் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். பிடில் தவிர மற்ற வாத்தியங்களை எல்லாம் சுகமாய் வாசிப்பார். பாலகிருஷ்ணையர். இவர் கிருஷ்ண பாகவதரின் மாணாக்கர். இவரும் இவர் தகப்பனார் சாமையரும் நன்றாய்ப் பிடில் வாசிப்பார்கள். பாலசுவாமி தீக்ஷதர். 1786-1859. இராமசுவாமி தீக்ஷதரின் குமாரர். சங்கீத இலட்சிய இலட்சணங்களை நன்றாய் அறிந்தவர். சென்னையில் மணலி சின்னையா முதலியாரால் ஒரு ஆங்கிலேயே துரையிடத்திலும் பிடில் வாசிக்கக் கற்றுக் கொண்டவர். வீணை சுரபத் சித்தாராவும் வாசிப்பார். எட்டையாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். சாரங்க, தர்பார், கன்னட, ருத்திரப்பிரியா இராகங்களில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வேங்கடேஸ்வர எட்டப்ப ராஜா பேரில் ருத்திரப்பிரியா, தர்பார், வசந்தா இந்த இராகங்களில முத்தாயி சுரங்களோடு தருக்கள் செய்து பாடி இராஜாவால் சன்மானிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பௌத்திரரும் சுவீகார புத்திரருமானவர் சுப்பராய தீக்ஷதர். பாலபுவனாதபட். இவர் குவாலியர் பாவாவின் பௌத்திரர். இந்துஸ்தானியில் நன்றாய் அரிகதை செய்வார். பாலு ஐயர். சென்னப் பட்டணம். பிடில் வாசிப்பதில் கெட்டிக்காரர். பாலு முதலியார். Dr. திருசிராப்பள்ளி, பிச்சாண்டார் கோவில் சுப்பராயரிடம் சொல்லிக் கொண்டு பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரராயிருந்தார். பாவவினாச முதலியார். இவர் தமிழிலும் சங்கீதத்திலும் பண்டிதர். பாவவினாச முத்திரையுடன் நிந்தாஸ்துதியாய் அநேக பதங்கள் செய்திருக்கிறார். துளஜா மகாராஜா காலத்திலிருந்தவர். பாவா. இவர் குவாலியரிலிருந்து வந்தவர். இந்துஸ்தானியில் விசேஷ சுவாரசத்தோடு அரிகதை செய்வார். பாஸ்கர சேதுபதி. இராமநாதபுர சமஸ்தானாதிபதி. தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் சிறந்தவர். இனிமையான குரலுடன் அழகாய்ப் பாடுவார். பி பிங்கள். B.A. இவர் 1898-ல் “இந்திய சங்கீதம்” என்ற பேருடன் இந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றி இங்கிலீஷிலும் மகாராஷ்டிரத்திலும் புஸ்தகம் எழுதியிருக்கிறார். பிச்சமுத்து. B.A.,LT. இவர் சங்கீதத்தில் அதிக அபிமானமும் பிரியமுமுள்ளவர். ஆங்கிலேயே சங்கீதத்தில் உயர்தர பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர். ஆர்மோனியம் பியானா அதிகமாய் வாசிப்பார். இவரிடம் சொல்லிக் கொண்ட அநேகர் பல இடங்களிலும் Organists களாயிருக்கிறார்கள். பிரதாபசிங் மகாராஜா. மத்யார்ச்சுனம். இவர் தஞ்சாவூரை ஆண்டு கொண்டிருந்த அமீர்சிங் மகாராஜாவின் குமாரர். சங்கீதம் நன்றாய்த் தெரிந்தவர். மிருதங்கத்தில் கெட்டிக்காரர். மகாராஷ்டிர பாஷையில் வர்ணக் கிரமங்கள் விளங்கும்படி ‘நவரத்தின மாலிகை’ என்னும் இராகதாள மாலிகை ஒன்றை சுரப்படுத்தி யிருக்கிறார். சிவாஜி மகாராஜா காலத்துக்குச் சில காலத்துக்கு முன் காலஞ்சென்றார். பிரதாப ராமசுவாமி பாகவதர். நீடாமங்கலத்துச் சமீபத்திலுள்ள பூவனூர். இவர் சங்கீதத்திலும் சமஸ்கிருத சாகித்தியங்கள் செய்வதிலும் பாண்டித்திய முடையவர். பு புண்டரீக விட்டலா. இவர் 16-வது நூற்றாண்டின் கடைசியிலிருந்தவர். “நிர்த்தன நிர்ணயா” “இராக மஞ்சரி”, “சீக்கிர போதனி”, “நாமமாலா”, “ஷட்ராக சந்திரோதய”, “இராகமாலா”, “சங்கீத விருத்த இரத்தினாகரா” என்ற புஸ்தகங்கள் செய்திருக்கிறார். புரந்தர விட்டலதாஸ். இவர் பூனாவில் கோடீஸ்வரராக இருந்து ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமாளின் பக்தி மேலிட்டால் புதிது புதிதாகக் கீர்த்தனைகள் செய்து பஜனை செய்துகொண்டேயிருப்பார். இவர் அலங்காரங்கள், பிள்ளையார் கீதங்கள், கீர்த்தனைகள், சூளாதிகள், பிரபந்தங்கள், தாயங்கள், பகவான் நாமக்கிருதிகள் முதலியவைகளைச் செய்திருக்கிறார். வேதாந்த விஷயமாயுள்ள இவைகள் உத்தரதேச மடங்களில் நாளது வரையிலும் வழக்கத்திலிருக்கின்றன. புருஷோத்தம மிஸ்ரா. 1730. இவர் “சங்கீத நாராயணா” என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். பெ பெரிய குப்புசாமி. ஐதராபாத். இவர் அதிக ரமணீயமாயும் சம்பிரதாயமாயும் பிடில் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். பெரியதம்பி அண்ணாவி. இவருக்குச் சூரியமூர்த்தி அண்ணாவி என்று பெயர். மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் நட்டுவாங்கப் பரம்பரையில் வந்தவர். பரதத்தில் மிகக் கெட்டிக்காரர். பெரிய தேவையா. கரூர். நன்றாய்ப் பாடுவார். கர்நாடக சுத்தியாய்ப் பிடில் வாசிப்பார். பெரிய பக்கிரி. இவரை மன்னார்குடி பக்கிரி என்று சொல்லுவார்கள். நாகசுரம் அதிக அற்புதமாய் வாசிப்பார். பெரிய வைத்தி. இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானா யிருந்தார். இவரும் இவர் சகோதரர் சின்ன வைத்தியும் சங்கீத சாகித்தியங்களிலும் பாட்டிலும் உலகப் பிரசித்தியா யிருந்தார்கள். பெருமாளையர். இவரை மகிபாலை வீணைப் பெருமாளையர் என்றழைப்பார்கள். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் 1798-1824 தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தவர். வீணை காளாஸ்திரி ஐயரின் மாணாக்கர். இவர் வம்சத்தார்கள் பரம்பரையாக வீணை வித்துவான்களா யிருக்கிறார்கள். கனராக தாளங்களை வாசிப்பதில் பிரசித்தர். பைரவி முதலான ரக்தி ராகங்களை வந்தது திரும்ப வராமல் 10 நாள் வரை வாசிப்பார். வடதேச சமஸ்தானங்களில் சத்திர சாமர பல்லக்கு ரத்தின கசித வீணை முதலானவைகளைச் சன்மானமாகப் பெற்றிருக்கிறார். புதுக்கோட்டை ராஜா ரகுநாத தொண்டமான் சபையில் ஒரே இராகத்தை 20 நாள் கிரமமாய் வாசித்துச் சன்மானிக்கப் பெற்றவர். வீணையில் தாளங்கள் தவறாமல் வாசிக்கிறதில் மிகப் பிரசித்தியுடையவர். தஞ்சாவூர் மகாராஜா மகிபாலை என்ற கிராமத்தை இவருக்குச் சர்வமானியம் செய்திருக்கிறார். இவர் தம்பி வீணை நாராயணசாமி ஐயர் நன்றாய் வீணை வாசிப்பார். பெருமாளையர். மதுரை. இவரும் இவர் தகப்பனாரும் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்கள். பை பையா. தஞ்சாவூர். இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார். சுரபத் நன்றாய் வாசிப்பார். பொ பொன்னம்பலம். இவர் நாகலிங்கம் அப்பாவின் குமாரர். பிடிலும் ஆர்மோனியமும் நன்றாய் வாசிப்பார். பொன்னுசாமி. இருப்பூர். பிடில் நன்றாய் வாசிப்பார். பொன்னுசாமி. திருவத்தூர். குப்பையரோடிருந்து அவரைப் போலவே சங்கீதத்தில் நல்ல யோக்கியதை உடையவராய் விளங்கினார். பிடில் நன்றாய் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். சென்னப்பட்டணத்தி லிருந்தவர். பொன்னுசாமி. தஞ்சாவூர் சுப்பராய சாஸ்திரிகளின் மாணாக்கர். தன்குரு செய்த கீர்த்தனைகளையும் சாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளையும் தமிழ்ப் பதங்களையும் நன்றாய்ப் பாடுவார். பொன்னுசாமி. மதுரை. நாகசுரம் மிகவும் நன்றாய் வாசிப்பார். பொன்னுசாமி அண்ணாவி. மதுரை. மதுரை சுந்தரேசர் ஆலயத்தின் நட்டுவாங்கப் பரம்பரையில் வந்தவர். ஆட்டி வைப்பதிலும் வாத்தியங்களிலும் பெயர் பெற்றவர். பொன்னையா. திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் நிருத்தம் சொல்லிக் கொடுப்பதில் கெட்டிக்காரராயிருந்தார். வடிவேலுடன் சேர்ந்து நிருத்தத்திற்கு வேண்டியதான சாகித்தியங்கள் செய்திருக்கிறார். பொன்னையா நட்டுவனார். தமிழிலும் தெலுங்கிலும் பூரண பாண்டித்திய முடையவராய் அநேக கீர்த்தனங்களும் வர்ணங்களும் செய்திருக்கிறார். இவர் தஞ்சை சிவாஜி மகாராஜா சபையிலும் மைசூர் கிருஷ்ணாஜி பூபால ராஜா சபையிலும் பெரிதும் கொண்டாடப்பட்டவரா யிருந்தார். மைசூர் மலையாளம் தஞ்சாவூர் முதலிய இடங்களை ஆண்ட மகாராஜாக்கள் பேரில் அநேக கீர்த்தனைகளும் சாகித்தியங்களும் செய்திருக்கிறார். பரதநாட்டியத்திற்கு வேண்டிய வர்ணங்கள் சாகித்தியங்கள் பதங்கள் ஆகிய இவைகளையும் பரத முறைகளையும் செய்து ஹிம ஸேது பரியந்தம் வழங்கும்படிச் செய்தவரென சங்கீத வித்துவான்களால் நாளது வரையும் கொண்டாடப்படுகிறவர். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். பொன்னையா பிள்ளை. தஞ்சாவூர். பரத சங்கீத வித்துவான். ராகம் பல்லவி பாடுவதிலும் பரத நாட்டியம் செய்து வைப்பதிலும் மிகச் சமர்த்தர். அநேகருக்குச் சிட்சை சொல்லி வைத்திருக்கிறார். ம மகம்மத் ஷார்க்வி. ஜான்பூர். இவர் கியால் பத்ததியை உண்டாக்கினவர். மகம்மேரு. தஞ்சாவூர் வாசியான இவர் திருவனந்தபுர சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். மூன்றரை ஸ்தாயி வரைக்கும் பாடுவார். மடாதிபதி பரம்பரையைச் சேர்ந்தவர். மகாதேவ அண்ணாவி. திருநெல்வேலி செந்தில்வேலண்ணாவியின் குமாரர். துளஜா மகா ராஜாவால் வரவழைக்கப்பட்டுத் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். இவர் தமிழிலும் தெலுங்கிலும் அநேக வர்ணங்கள் கீர்த்தனைகள் சுரஜதிகள் செய்திருக்கிறார். அவை நாளது வரை வழக்கத்திலிருந்து வருகின்றன. இவர் துளஜா மகாராஜா கொலுமண்டபத்தில் தோடி ராகத்தில் “போசலே துளஜேந்திர ராஜா” என்னும் வர்ணத்தைப்பாடித் தன்னோடு திருநெல்வேலியிலிருந்துகூட வந்த வனசாட்சி, முத்துமன்னார் என்ற நாட்டியப் பெண்களை ஆட்டி வைத்தார். அந்தக் காலத்தில் சமஸ்தான வித்துவான்களாயிருந்த ஆதிப்பையர், வீணை சுப்புக்குட்டி ஐயர், திருமலை ஐயர், வெங்குசுப்பையர், முதலியவர்கள் இவரிடம் தங்கள் வீணை வாசிப்பை பாவ ராக தாளத்துடன் விருத்தி செய்து கொண்டார்கள். காஞ்சீபுரம் சாமா சாஸ்திரிகளும் திருவாரூர் முத்துசாமி தீட்சதரும் இவரிடம் வீணையும் பரதசாஸ்திரமும் அப்பியாசம் செய்து கொண்டவர்கள். சங்கீதத்தில் இவருக்கிருந்த அபார யோக்கிதைக்கு மகாராஜா சந்தோஷப்பட்டுத் தஞ்சாவூர் மேல ராஜவீதியில் வீடு கட்டிக் கொடுத்து 10 வேலி நஞ்சை நிலம் சர்வ மானிய மிட்டு சமஸ்தான வித்துவானாக வைத்துக் கொண்டார். சிவானந்தம், வடிவேல், குருமூர்த்தி இவருடைய பிள்ளைகள். இவர்கள் மூன்று பெயரும் சங்கீத சாகித்தியத்திலும் பரத நாட்டியத்திலும், வீணை வாசிப்பிலும் சிறந்த வித்துவான்களாயிருந்தார்கள். மகாதேவ ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தான வித்துவான் பரமேஸ்வர ஐயரின் குமாரர். மூன்று ஸ்தாயியும் காம்பீரமாய்ப் பாடுவார். ஒவ்வொரு அட்சரமும் தெளிவாய்த் தெரியும்படி அவ்வளவு நன்றாய்ப் பிடில் வாசிப்பார். இவர் குமாரர் வீணை சாமி ஐயர். அனந்தராம ஐயர் இவர் மாணாக்கர். மகாதேவ நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்தியங்களில் மிகத் தேர்ந்தவர். அநேக ராஜாக்களாலும் பிரபுக்களாலும் தோடா, கண்டி முதலிய சன்மானங்கள் பெற்றவர். மகாதேவன். மகா புத்திசாலி. நாகசுரத்தில் மனதுருக வாசிப்பார். இவர் பரம்பரை நல்லப்பா கணக்குத் தவறாமல் நாகசுரம் நன்றாய் வாசிப்பார். மதனபாலதேவ. 1528. “ஆனந்த சஞ்சீவன” என்ற சங்கீத நூல் எழுதியிருக்கிறார். மதிராஜம் பாகவதர். மத்திம காலத்தில் சுகமாய்ப் பாடுவார். திருநெல்வேலி எட்டையாபுரத்திலிருந்தார். மரியான் உபதேசியார். ஏழாயிரம் பண்ணை, திருநெல்வேலி. அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். மா மாசிலாமணி முதலியார். சென்னப் பட்டணத்தில் பிரசித்த போட்டோ கிராபராயிருந்து சங்கீதம் கற்று, பிடில் மிகவும் அற்புதமாய் வாசிப்பார். இவருடைய மாணாக்கர் ஜோனாஸ் சுந்தரராஜம். மாணிக்கம். பிடில் நன்றாய் வாசிப்பார். மாதவ மகாராஜா. குவாலியர். இவர் சங்கீதத்திலும் வீணை பிடில் முதலிய வாத்தியங்களிலும் கெட்டிக்காரராயிருக்கிறார். மாதவ ராவ். கமாஸ்தார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். இவர் குமாரர் ரகுபதிராவ் பாட்டிலும் சுரபத்திலும் மிருதங்கத்திலும் நல்ல யோக்கியதை யுடையவர். மாதவ ராவ். இவரை தார்வாட மாதவ ராவ் என்று அழைப்பார்கள். பல்லாரியிலிருந்தார். கர் நாடகமும் இந்துஸ்தானியும் நன்றாய்ப் பாடுவார். சாரீரம் கின்னர தந்தி போல் சுகமாயிருக்கும். மாதுருபூதையா. புதுக்கோட்டை. சேஷாசல பாகவதரின் குமாரர். சங்கீத வித்தையில் மிகத் தேர்ந்தவர். மாதுருபூதையா. திருச்சிராப்பள்ளி. இவருக்கு கவி மாதுரு பூதையா என்று பெயர். இவர் ஸ்ரீ சுகந்தி குந்தளாம்பாள் பேரில் நீதி ரசமாகவும் பத்திரசமாகவும் அநேகக் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சிருங்கார ரசத்திலும் அநேக பதங்கள் செய்திருக்கிறார். “பாரிஜாதகரணம்” என்னும் நூலைக் கீர்த்தனமாய்ச் செய்திருக்கிறார். இவர் கீர்த்தனங்கள் “திரி சிர கிரி” என்ற முத்திரையால் முடியும். மாமுண்டியா பிள்ளை. புதுக்கோட்டை. கிஞ்சிரா வெகு அற்புதமாய் வாசிப்பார். தாள ஞானமுடையவர். இவருடைய மாணாக்கர் தக்ஷணாமூர்த்தி. மீ மீனாக்ஷிசுந்தரம் அண்ணாவி. இவர் மதுரை மீனாக்ஷிசுந்தர ஆலயத்தின் நட்டுவாங்கப் பரம்பரையில் தோன்றியவர். பரத சங்கீத சாகித்தியங்களில் சிறந்தவர். ஆரிய திராவிட ஆந்திர பரத சாஸ்திரங்களைச் சேகரித்து வைத்திருந்தார். மு முத்து இராமலிங்க சேதுபதி ராஜா. இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் கெட்டிக்காரர். இவர் செய்த சாகித்தியங்கள் அநேகம் அச்சிடப்பட்டு வழக்கத்திலிருக்கிறது. 45 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். முத்து இராமலிங்க சேதுபதி ராஜா. இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை, பிடில் முதலான வாத்தியங்களிலும் நல்ல பழக்கமுள்ளவர். முத்து கிருஷ்ண நாயுடு. இவரும் இவர் குமாரரும் மிருதங்கம் வெகு சுகமாய் வாசிப்பார்கள். முத்து கிருஷ்ண முதலியார். சென்னப் பட்டணம். இவரை மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்றழைப்பார்கள். இவரும் இவர் குமாரர் மணலி சின்னையா முதலியாரென்ற வேங்கட கிருஷ்ண முதலியாரும் தமிழிலும் சங்கீதத்திலும் அதிக அபிமானமும் பிரியமுமுள்ளவர்கள். இவர்கள் அநேக தமிழ் வித்துவான்களையும் சங்கீத வித்துவான்களையும் வைத்து ஆதரித்து வந்தார்கள். சுண்டி வேங்கட சுப்பையர், இராமசாமி தீக்ஷதர், கோவிந்த தீக்ஷதர், குருமூர்த்தி சாஸ்திரி, முத்துத் தாண்டவ கவிராயர், அருணாசலக் கவிராயர், முத்துசுவாமி தீக்ஷதர், பாலசுவாமி தீக்ஷதர், சின்னசாமி தீக்ஷதர் ஆகிய இவர்கள் இவர் சபையிலிருந்த வித்துவான்களில் சிறந்தவர்கள். முத்துசாமி. இவர் மாரியப்பனின் குமாரர். பரதத்திலும் தாளத்திலும் பாட்டிலும் மிகவும் சமர்த்தர். அநேக சமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். முத்துசாமி தீக்ஷதர். 1775. இவர் இராமசாமி தீக்ஷதரின் குமாரர். எட்டையாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவான். மாயாமாளவ கௌள ராகத்தில் கீர்த்தனைகளும் ராமர் அஷ்டபதிகளுக்கு வர்ணகிரமத்தோடு ராகதாளங்களும், சூளாதி சப்த தாளங்களில் நவக்கிரக கீர்த்தனைகளும், கமலாம்பாள் விஷயமாய் 9 கீர்த்தனங்களும், வேங்கடேசுவர எட்டப்ப பூபதியின் மேல், மேகரஞ்சித ராகத்திலும் அமிருத வருஷணி ராகத்திலும் கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். “குருகுக” முத்திரையுடன் தியாகராஜ சுவாமி பேரிலும் இன்னும் அநேக சுவாமிகள் பேரிலும் வேங்கடமகி சம்பிரதாய ராகங்களை விடாமல் கமக ஜாதியங்கள், அந்தந்த ராக ஜீவசுரங்கள், ராக நாமங்கள் நன்றாய் விளங்கும்படி கீர்த்தனைகள் செய்திருக்கிறார். திருக்கடவூர் பாரதி, ஆவிடையார் கோவில் வீணை வேங்கடாரமணையா, தேனார் சுப்பிரமணி ஐயர், திருவாரூர் சுத்த மிருதங்கம் தம்பி அப்பன், தஞ்சாவூர் பொன்னையா, வடிவேல், வேட்டனூர் சுப்பராயலு, கொரநாடு இராமசாமி, திருவழுந்தூர் வில்வவனம், திருவாரூர் ஐயாஸாமி, திருவாரூர் கமலம், வள்ளலார் கோவில் அம்மணி முதலியவர்கள் இவர் மாணாக்கர்கள். முத்துசாமித் தேவர். இராமநாதபுரம். பிடில் நன்றாய் வாசிப்பார். முத்துசாமி நட்டுவர். இவர் குருமூர்த்தி நட்டுவரின் குமாரர். சென்னப்பட்டணத்தி லிருந்தவர். வீணையிலும் பரதத்திலும் பிரசித்திபெற்ற வித்துவான். வேங்கடகிரி ஆரணி சமஸ்தான வித்துவானாயிருந்து மேற்படி ராஜாக்களுக்கும் சங்கீதம் சொல்லி வைத்தவர். இவர் 108 தாளத்திலும் பல்லவி பாடும்படியான அபார வல்லமை யுடையவர். இவரிடம் பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், பட்டணம் சுப்பரமணிய ஐயர், மகா வைத்திநாதையர், கோயம்புத்தூர் ராகவையர், வீணை வேணு, சிதம்பரம் அப்பாக்கண்ணு, திருமுல்லை வாயில் பஞ்சனதம், புதுக்கோட்டை மாமுண்டியாபிள்ளை, தலை நாயர் இராதாகிருஷ்ண ஐயர், வீணை தனம், திருவல்லிக்கேணி தாசி கிருஷ்ணா முதலியவர்கள் சிட்சை சொல்லிக் கொண்டவர்கள். இவர்களில் தாசி கிருஷ்ணா வேங்கடகிரி சமஸ்தானத்தில் வீணை வாசிப்பதில் தேர்ந்தவளாயிருந்தாள். சிங்காரம் என்ற வீணை வேணு இவரின் குமாரர். முத்துசாமி முதலியார். தாசில்தார், திருத்துறைப்பூண்டி. இவர் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரிடம் சொல்லிக்கொண்டு வீணை, பிடில் வாசிப்பதிலும் பாடுவதிலும் பேர் பெற்றவராயிருந்தார். முத்துசுவாமி நட்டுவர். இவருக்கு உசித பாவ அலங்கார முத்துசுவாமி நட்டுவர் என்று பெயர். இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் வித்துவானா யிருந்து சங்கீத பரிiக்ஷயில் சரப்பளி விருது பெற்றிருக்கிறார். முத்துசுவாமி முதலியார். பாளையங்கோட்டை. வெங்கு முதலியாரின் பரம்பரை. இவர் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் கெட்டிக்காரர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். முத்துத்தாண்டவர். இவர் அருணாசலக் கவிராயருக்கு முன்னிருந்தவர். தமிழிலும் சங்கீதத்திலும் வித்துவான். சிதம்பரம் நடராஜர் பேரில் பக்தி ரசமாயும் சிருங்கார ரசமாயும் அநேக பதம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். முத்து, முனுசாமி. இவர்கள் மிருதங்கத்தில் முத்தமிட்டுக் கொள்ளுவதுபோல அவ்வளவு நாஜுக்காய் வாசிப்பார்கள். முத்தையர். போடிநாயக்கனூர். மிருதங்கம் வாசிப்பதில் கெட்டிக்காரர். முத்தையர். இவருக்கு கேகர முத்தையர் என்று பெயர். இவர் ராகம் பல்லவிகளையும் கீர்த்தனைகளையும் கர்நாடக சுத்தமாய்ப் பாடுவார். முத்தையா பாகவதர். ஸ்ரீவில்லிபுத்தூர். இராகம் பல்லவிகளை மிகவும் நன்றாய்ப் பாடுவார். முத்தையா பாகவதர். அரிகேச நல்லூர். திருநெல்வேலி ஜில்லா. இவர் சென்னப்பட்டணம் சபேசையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்த இலட்சண வித்துவான். கோட் வாத்தியம் இனிமையாக வாசிப்பார். அரிகதை செய்வதில் உலகப் பிரசித்தர். அநேக இடங்களில் போய்ச் சன்மானம் பெற்றிருக்கிறார். முனுசாமி. ஆர்மோனியம் பிடில் இவைகளை நன்றாய் வாசிப்பார். மே மேரு சுவாமி. தஞ்சாவூர் மடாதிபதி பரம்பரையைச் சேர்ந்த இவர் மலையாள சமஸ்தானத்திலிருந்தார். மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார். யு யுவரங்க பூபதி. இவருக்குக் கச்சி யுவரங்க பூபதி என்று பெயர். துளஜா ராஜா காலத்தில் உடையார் பாளையத்திலிருந்த ஜமீன்தார். சங்கீதத்தின் பெருமையையும் அருமையையும் நன்றாய் அறிந்தவர். சங்கீதத்தில் அதிகப் பிரியமுள்ளவர். தர்மசிந்தையும், தாராள மனசு முடையவர். தமது சமஸ்தானத்தில் சங்கீத சபை ஒன்று ஏற்படுத்தி அதில் அநேக வித்துவான்களை வைத்து ஆதரித்து வந்தவர். ஒரு தடவை துளஜா மகாராஜா தம் மந்திரியோடு உருமாறி நாட்டுச் சோதனையாகப் போயிருந்தபோது உடையார் பாளைய சமஸ்தானத்தில் திரளான வித்துவான்கள் கூடி யிருப்பதையும் சங்கீத கச்சேரி நடந்து கொண்டிருப்பதையும் வெகுநேரம் பார்த்து ஆச்சரியமும் வெட்கமுமடைந்தவராய்த் தன் அரண்மனைக்கு வந்து இவர் மூலமாகவே நல்ல வித்துவான்களைத் தன் சமஸ்தானத்திற்கு வரவழைத்து சங்கீதத்தையும் சங்கீத வித்துவான்களையும் பரிபாலித்து வந்தார் என்பார்கள். “யுவரங்கன்” என்ற முத்திரையுடன் அநேக பதங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. யோ T.யோசேப்பு ரயிட்டர். நெய்யூர். திருவனந்தபுரம். பொருட் செறிவான அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வ வடிவேல் நட்டுவனார். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். வாய்ப் பாட்டிலும், வீணை, பிடில், முதலிய வாத்தியங்களிலும் ஒப்பில்லாதவர். இவர் ஒரு தடவை சென்னப் பட்டணத்தில் தஞ்சாவூர் சாமா நாயக்கர் வீட்டுக்குப் போனபோது அங்கே காதிலோடு அதாவது உயர்ந்த திண்டு மெத்தை போட்டு அதில் உட்கார்ந்து கச்சேரி பண்ணிக் கொண்டிருந்த திருவொற்றியூர் வீணைக் குப்பையர் என்பவர் இவரது பிடில் வாசிப்பைக் கேட்ட பின் ஆசனம் விட்டு இறங்கித் தம் ஆசனத்தில் இவரை உட்காரும்படி செய்து இவருக்கு மிகவும் மரியாதை செய்தாரென்றும் அதற்குப்பின் இவரின் அபார யோக்கிதையை அறிந்து காதிலோடு என்னும் ஆசனத்தில் உட்காருகிறதில்லை என்றும் பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது. இவர் தியாகராஜ ஐயர் காலத்தில் அவர் முன்னிலையில் கீர்த்தனம் பாடி அவரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். எவரும் தங்கள் சங்கீத சாகித்தியங்களைக் கீர்த்தனங்கள் செய்வதில் சிறந்த தியாகராஜ ஐயரவர்கள் முன்னிலையில் பாடிக்காட்டுவது வழக்கம். ஆனால் அவர் ஒருவர் பாட்டுக்காவது சிரக்கம்பம் செய்கிறதில்லை. அதைக் கேட்ட ஐயர் பூரிகல்யாணி ராகத்தில் “நாசாமிக நாமித தய சூட ராதா” என்ற தெலுங்குப் பதத்தைக் கல்லுங் கரையும்படியாகப் பாடி ஐயரவர்களை சிரக்கம்பம் கரக்கம்பம் செய்யும்படி செய்து விட்டார் என்று பரம்பரையாய்ச் சொல்லிக் கொள்ளப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம் குலசேகர மகாராஜாவினால் வரவழைக்கப்பட்டு அரண்மனையிலேயே மாதம் ஒன்றுக்கு 105 ரூ சம்பளத்தில் அமர்ந்திருந்தார். குலசேகர மகாராஜாவுக்கு சங்கீத சாகித்தியங்களை நன்றாய்ப் போதிக்க அவர்களும் அநேக கீர்த்தனைகள் சுரஜதிகள் வர்ணங்கள் செய்திருக்கிறார்கள். அவ்விடத்தில் 11 வருஷமிருந்து சங்கீதத்தில் இணையற்ற வித்துவான் என்று பேர் பெற்றுத் தந்தப் பிடிலும் தந்தப் பெட்டியும் ராஜாங்க முத்திரையுடன் 1834-ல் பரிசு பெற்றிருக்கிறார். மற்றும் அநேக சன்மானங்கள் பெற்றிருக்கிறதாகவுந் தெரிகிறது. வடிவேல் நட்டுவனார். தஞ்சாவூர். இவர் பல சமஸ்தானங்களில் அநேக பரிசுகள் பெற்றிருக்கிறார். பிரசித்தி பெற்ற வித்துவான்களால் கொண்டாடப் பெற்றவர். இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பாஸ்கர சேதுபதியவர்களால் தசரா காலத்தில் நாரதர் தாம்பூல மென்று ஒரு புது மரியாதை பெற்றவர். பரத சங்கீத சாகித்தியங்களில் சிறந்தவர். அநேகருக்குச் சிட்சை சொல்லி வைத்திருக்கிறார். வரதப்பா. இவரை நர்த்தக்க வரதப்பா என்றழைப்பார்கள். பரதம் நன்றாய்க் கற்றுக் கொடுப்பார். இவர் குமாரரும் அப்படியே பரத சாஸ்திரத்தில் கெட்டிக்காரர். வரதாச்சாரியார். இவர் தென்மடம் நரசிம்மாச்சாரியாரின் சகோதரர். இவர்களிருவரும் வீணையிலும் பிடிலிலும் சிறந்த வித்துவான்கள். வரதாச்சாரியார், B.A. கே. அதி மனோகரமாய்ப் பாடுவார். வராகப்பையர். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பக்ஷியாயும் சங்கீத வித்துவானாயுமிருந்தார். இங்கிலீஷ் வாத்தியங்களிலும் கர்நாடக வாத்தியங்களிலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர். கவர்னரிடம் பிடில் வாசித்து மெடல் வாங்கி யிருக்கிறார். மகாராஜா இவருக்குத் தஞ்சாவூர் டவுனில் வீடு கட்டிக் கொடுத்துப் பசுபதி கோயிலில் நஞ்சை நில மானியமும் கொடுத்திருக்கிறார். இவர் மாணாக்கர் லக்ஷ்மண கோசாய், பரமேஸ்வர பாகவதர், வடிவேலு. இவர் பரம்பரையார் இன்னும் வீணையில் சிறந்த வித்துவான்களா யிருக்கிறார்கள். வராகம் ஐயர். இவர் வீணையில் சிறந்த வித்துவான். இவர் குமாரர் வீணை கோபாலசாமி ஐயர். வா வாஞ்சிய சாஸ்திரியார். அதி ரமணியமாய்ப் பாடுவார். வி விசாக மகாராஜா. திருவனந்தபுரம் சமஸ்தானாதிபதி. இவர் சங்கீத சாகித்தியங்களிலும் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் சிறந்த வித்துவான். அநேக சாகித்தியங்கள் செய்திருக்கிறார். 25 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். விசுவநாத ஐயர். இவர் மகா வைத்திநாதையரின் குமாரர். இவர் தகப்பனாரைப் போலவே நன்றாய்ப் பாடுவார். விசுவநாத கவிராயர். வங்க தேசத்தில் 14-ம் நூற்றாண்டிலிருந்த ஒரு பெரிய சங்கீத வித்துவான். “சாகித்திய தர்ப்பணம்” என்ற நூல் செய்திருக்கிறார். விசுவநாத ராவ். இவர் பிடிலும் சுரபத்தும் நன்றாய் வாசிப்பார். விஜயகோபால். விஜயகோபால் முத்திரையுடன் சாகித்திய கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். 200 வருஷங்களுக்கு முன்னிருந்ததாகத் தெரிகிறது. விஜய வராகப்பையர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் வீணை வித்துவானாக இருந்தவர். இவர் வீணை சிக்க ஓதப்ப ஐயரின் பௌத்திரர். வீ வீரபத்திர ஐயர். பிரதாபசிங் மகாராஜா காலத்தில் (1740-1763) அநேக ரசிக ராகங்களிலும் தேசிக ராகங்களிலும் கற்பனையான அநேக கீர்த்தனைகளும் பதங்களும் தில்லானாக்களும் செய்திருக்கிறார். இவர் தென்னிந்திய சங்கீதத்தை ஒழுங்குக்குக் கொண்டு வரப் பிரயாசப் பட்டவர். வீரபத்திர பிள்ளை. திருநெல்வேலி. நன்றாய்ப் பாடுவார். வீணை வாசிப்பார். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வீரமா முனிவர். 1680. இவர் ஐரோப்பிய ரோமன் மத குரு. இந்தியாவுக்கு வந்து தமிழ் கற்று வித்துவானாகி தேம்பாவணி, வேதியரொழுக்கம், சதுர அகராதி, தொன்னூல், முதலிய நூல்களும், பஞ்சரத்தனம், நவமணிமாலை, நசல் காண்டம் முதலிய வைத்திய நூல்களும், பொருட் சுவை சொற் சுவை பக்தி ரசமுள்ள அநேக கீர்த்தனைகளும் செய்திருக்கிறார். இவர் திருநெல்வேலி ஜில்லா மணப்பாட்டில் சமாதியானார். வீராசாமி. இருப்பூர். பிடில் நன்றாய் வாசிப்பார். வீராசாமி. இவருக்கு அட்டேகண்டி வீராசாமி என்று பெயர். இவர் சில ராகமாலிகைகளையும் தில்லானாக்களையும் சுரஜதிகளையும் செய் திருக்கிறார். சிட்சை செல்லி வைப்பதில் சமர்த்தர். வீராசாமி சாஸ்திரி. நாயுடுபேட்டை. நன்றாய்ப் பாடுவார். வீராசாமி நாயக்கர். தாசில்தார், தஞ்சாவூர். இவர் வீணை வாசிப்பிலும் வாய்ப்பாட்டிலும் சமர்த்தர். அநேக கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். வீராசாமி நாயுடு. தஞ்சாவூர். இராமநாதபுர சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். சாரந்தா வெகு சுகமாய் வாசிப்பார். இவரை சாரந்தா நாயக்கர் என்பார்கள். வீரராகவாச்சாரியார். பந்தனபல்லி. வீணை நன்றாய் வாசிப்பார். வீரராகவையர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானா யிருந்தார். சுகமாய்ப் பாடுவதினால் சல்லகாலி வீரராகவையர் என்று பெயர் பெற்றவர். வெ வெங்கட கிருஷ்ண நாயுடு. இவருக்கு மோதிரம் வெங்கட கிருஷ்ண நாயுடு என்று பெயர். இந்துஸ்தானி மிகவும் அழகாயும் தெளிவாயும் பாடுவார். வெங்கட சுப்பையர். T. B.A.,B.L. சென்னப்பட்டணம். இவர் திருவத்தூர் தியாகராஜ ஐயர் மாணாக்கர். வீணை நன்றாய் வாசிப்பார். பக்தி ரசமாய் அரிகதை செய்வார். வெங்கட சுப்பையர். மானம்புச்சாவடி. திருவையாறு தியாகராஜ ஐயருக்குப் பந்துவான இவர் அவரிடமே சங்கீதம் சொல்லிக் கொண்டு பிரபல வித்துவானாயிருந்தார். அநேக கீர்த்தனைகளை வெங்கிடுசாமி பேரில் செய்திருக்கிறார். பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார். பஞ்சாபகேச ஐயர், சிவராம ஐயர் இவரின் மாணாக்கர். வெங்கட சுப்பையர். இவர் துளஜா ராஜா காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தான வித்துவானாயிருந்தார். அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் செய்திருக்கிறார். இவர் 4,000 ராகம் பாடியிருப்பதாகச் சொல்லுகிறார்கள். இவருக்குத் திருவையாற்றில் 5 வேலி நஞ்சை மானியம் ராஜா கொடுத்திருக்கிறார். வெங்கடசுப்பையர். இவருக்கு சுண்டி வெங்கடசுப்பையர் என்று பெயர். வீணை இராமகாளாஸ்திரி ஐயரின் மாணாக்கர். துளஜா மகாராஜா சபையில் சமஸ்தான வித்துவான். அவர் பேரில் பிலஹரி இராகத்தில் விசேஷ கற்பனையுடன் வர்ணம் செய்திருக்கிறார். மணலி சின்னையா முதலியார் சபையில இவரால் செய்யப்பட்ட சங்கீத சாகித்தியங்கள் அநேகமுண்டு. இவர் குமாரர் சுண்டி வெங்கடரமணையர். வெங்கடபதி ராஜா. கார்வேட் நகரம். இவர் கார்வேட் நகரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்திலும் வீணையிலும் கெட்டிக்காரர். 1875 வருஷம் எட்வர்ட் சக்கிரவர்த்தி பிரன்ஸ் ஆப் வேல்ஸ் பிரபுவாக சென்னைக்கு வந்த சமயத்தில் அவருக்கு வீணை வாசித்தார். வெங்கடாசலமையர். தஞ்சாவூர் வீணை ஆதிமூர்த்தி ஐயரின் குமாரர். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்துவான். இவரும் தம் பரம்பரை முன்னோர்களைப் போலவே தஞ்சாவூர் அரண்மனையில் வீணை வித்துவான். வெங்கடேச சாஸ்திரி. இவர் பாலக்காட்டைச் சேர்ந்த பல்லாவூரி லிருக்கிறார். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். வெங்கடேச சாஸ்திரி. வீணையும் பிடிலும் சுகமாய் வாசிப்பார். சிட்சை சொல்லி வைப்பதில் கெட்டிக்காரர். வெங்கடேச சாஸ்திரியார். சங்கீதத்திலும் வீணையிலும் சிறந்த வித்துவான். 1892-ல் “சங்கீத சுயபோதினி” என்கிற நூல் செய்திருக்கிறார். வெங்கட்ட ஐயர். கோயம்புத்தூர். மிருதங்கம் சுகமாய் வாசிப்பார். வெங்கட்டசாமி ராஜ். காளாஸ்திரி. வீணை நன்றாய் வாசிப்பார். நன்றாய்ச் சிட்சையும் சொல்லி வைப்பார். வெங்கட்டரமண ஐயா. குரத்தவாசி. இவர் திருவத்தூர் வீணை குப்பையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியங்களில் பெரிய வித்துவான். நன்றாய்ப் பாடுவார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். வெங்கட்டரமணையர். சுண்டி. இவர் சுண்டி வெங்கட சுப்பையரின் குமாரர். சரபோஜி மகாராஜா (1798-1824) சபையில் சங்கீத வித்துவானா யிருந்தார். சங்கீத சாகித்தியத்திலும் கானத்திலும் தகப்பனாரைப் போலவே கெட்டிக்காரராயிருந்தார். அனேக வர்ணங்கள் செய்திருக்கிறார். பல்லவிகளை அற்புதமாய்ப் பாடுவார். வெங்கட்டராம ஐயர். கரூர். சங்கீத வித்துவான். வெங்கட்டராம சாஸ்திரியார். இவர் தஞ்சாவூருக்கு சமீபம் மெலட்டூரி லிருந்தார். சரபோஜி சிவாஜி மகாராஜா காலங்களில் (1798-1856) சங்கீத வித்துவானாயிருந்தவர். கைசிக ரீதியாய் நல்ல பதங்களைச் சேர்த்துச் சிருங்கார ரசத்துடன் அனேக பதங்கள் செய்திருக்கிறார். வெங்கட்டராம பாகவதர். கும்பகோணம். இவர் அரிகதை நன்றாய்ச் செய்வார். வெங்கட்டராம பாகவதர். இவர் சங்கீதத்துடன் அரிகதையும் நன்றாய்ச் செய்வார். வெங்கட்ட ராமையர். இவர் பாடிய சங்கீத கீர்த்தனைகள் ஜாதீயங்கள் பிறர் பாடுவதற்குக் கஷ்டமாயிருந்தமையால் இவரை ‘இரும்புக்கடலை வெங்கட்டராமையர்’ என்று சொல்லுவார்கள். போதேந்திர சுவாமிகள் பேரில் “சதமனி” என்னும் தோடி கீர்த்தனமும் மருதா நல்லூர் சுவாமிகள் பேரில் சில கீர்த்தனங்களும் கோபாலகிருஷ்ண முத்திரையுடன் செய்திருக்கிறார். இவர் ஆதிப்பையரின் கடைசிக் காலத்திலிருந்ததாகத் தெரிகிறது. வெங்கட்ட ராமையர். இவருக்குத் தஞ்சாவூர்க்குச் சமீபம் அம்மாபேட்டை சொந்தவூர். பிடில் நன்றாய் வாசிப்பார். வெங்கட்ட ராமையர். வெளிப்பாளையம். சங்கீத வித்துவான். வெங்கட்ட ராமையர். திருநெல்வேலி. சிட்சை நன்றாய்ச் சொல்லி வைப்பார். இவர் மாணாக்கர் கோபாலையர் பிடில் நன்றாய் வாசிப்பார். வெங்கட்ட ராமையர். மைசூர் சாம்ப ஐயரின் சகோதரர். சங்கீதத்தில் சிறந்த பாண்டித்தியமுடையவர். இவரும் இவர் குமாரர் இராமசுவாமி ஐயரும் லட்சுமண ஐயரும் வீணை மிகவும் சுகமாய் வாசிப்பார்கள். வெங்கட்ட ராமையர். சிங்களாச் சாரியாரின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார். வெங்கட்ட ராமையர். லாகூர். மனோகரமாய்ப் பாடுவார். வெங்கட்ட ராமையர். இவருக்குக் கொனுகோல் வெங்கட்டராமையர் என்று பெயர். உச்சஸ்தாயியில் நன்றாய்ப் பாடுவார். வெங்கட்ட ராமையர். வேட்டனூர். தீக்ஷதரின் மாணாக்கர். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் குமாரர் சுவேதாரண்ய ஐயர் பிடில் நன்றாய் வாசிப்பார். வெங்கட்ட ராவ். கும்பகோணம். பாட்டிலும், பிடிலிலும், மிருதங்கத்திலும் கெட்டிக்காரர். வெங்கட்ட ராவ். பிடில். பித்தாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவான். அதிக அற்புதமாய்ப் பிடில் வாசிப்பார். வெங்கட்ட வைத்தியநாதர். முத்து வேங்கடமகி இவர்களிருவரும் வேங்கடமகியின் பரம்பரையில் சங்கீத வித்துவான்களாயிருந்தார்கள். வெங்கட்டேச்வர எட்டப்ப ராஜா. 1816-1839. எட்டையாபுரம் சமஸ்தானாதிபதி. சங்கீதத்தில் அதிக பிரீதியுடையவர். அநேக சங்கீத வித்துவான்களை வரவழைத்து ஆதரித்தார். தானும் சங்கீதம் கற்றுக் கொண்டு வீணையும் அப்பியாசித்தவர். முகாரி ராகத்தில் ‘சிவகுருநாதனை’ என்ற தமிழ்க் கீர்த்தனம் செய்திருக்கிறார். வெங்காசாமி ராவ். சென்னப் பட்டணம். ரெவினியு போர்டு ஆபீஸ் சிரஸ்தார். சங்கீதத்திலும் வாய்ப்பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக் காரராயிருந்தார். வெங்k. இவரும் இவர் சகோதரர் சாமிநாதனும் சிதம்பரத்தில் மிருதங்கத்திலும், தாளத்திலும் மிகவும் கெட்டிக்காரர்களாயிருந்தார்கள். வெங்கு பாகவதர். திருநெல்வேலி. இவர் வடிவேல் நட்டுவனாரின் மாணாக்கர். இவருக்குப் பழமையான கீர்த்தனங்கள் அனேகம் பாடமுண்டு. ராக ஆலாபனைகள் பல்லவி சுரங்கள் நன்றாய்ப் பாடுவார். தரு கீர்த்தனை தானம் வர்ணங்களைச் செய்திருக்கிறார். சுமார் 60 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். இவருடைய பிள்ளை பிரம்மானந்தப் பரதேசி. வெங்குப் பிள்ளை. திருநெல்வேலி. பிடிலில் ராகம், பல்லவிகளை லயசுத்தமாயும், விரிவாயும் வாசிப்பார். வெங்கோப ராவ். இவர் உமையாள்புரம் கிருஷ்ண சுந்தர ஐயரின் மாணாக்கர். தஞ்சாவூரில் பிடில், ஜலதரங்கம், மிருதங்கம் வாசிப்பதிலும் பாடுவதிலும் சிறந்த வித்துவான். இவர் தம்பி இராம ராவும் இவரைப் போலவே சிறந்த வித்துவான். வே வேங்கடகிரியப்பா. ஐதராபாத். அநேக ஜாவளிகளைச் செய்திருக்கிறார். வேங்கடசாமி. பூசலை. இவர் நாகசுரம் நன்றாய் வாசிப்பார். வேங்கடமகி. கி.பி. 1660. கோவிந்த தீக்ஷதரின் குமாரர். இவர் தமயனார் எக்கிய நாராயண தீக்ஷதரிடத்திலும் சங்கீத வித்துவான் தானப்ப ஆசாரியார் இடத்திலும் சங்கீதமும் வாத்தியமும் வாய்ப்பாட்டும் சங்கீத இலட்சிய இலட்சணங்களும் கற்றுக் கொண்டவர். இவர் வீணை சுருதி சுரம் மேளம் இராகம் டாயம் கீதம்பிரபந்தம் தாளம் முதலியவைளை விஸ்தரித்து ‘சதுர்தண்டிப் பிரகாசிகை’ என்ற சங்கீத நூலைச் செய்திருக்கிறார். தனித் தனியான கீதம்பிரபந்தம் செய்திருக்கிறார். திருவாரூர் தியாகராஜர் பேரில் 24 அஷ்டபதி செய்திருக்கிறார். வேங்கட ரமணதாஸ். இவர் விஜயநகரம் சமஸ்தானத்தில் வீணை வித்துவானாயிருக்கிறார். வீணை குருராயாச்சாரியாரின் பௌத்திரர். சங்கீத சாகித்தியத்திலும், ராகம் பல்லவி பாடுவதிலும்சிறந்த வித்துவான். வீணையில் அபார சாதகம் செய்திருக்கிறார். கடின பாகங்களைச் சுலபமாயும் வேகமாயும் வாசிப்பார். வேணு. சென்னப் பட்டணம் முத்துசுவாமி நட்டுவரின் குமாரர். தன் தகப்பனாரிடமும் திருவத்தூர் வீணை தியாகையரிடமும் சொல்லிக் கொண்ட சங்கீதத்திலும் வீணையிலும் பிரசித்த வித்துவானாயிருக்கிறார். இவர் மாணாக்கர் மைலாப்பூர் சுப்புக்குட்டி ஐயர், பார்த்தசாரதி ஐயர். வேணுகோபாலதாஸ் நாயுடு. இவர்க்கு வீர சூர வீர கண்டாமணி வேணுகோபாலதாஸ் நாயுடு என்று பெயர். இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் நடந்த சங்கீதப் பரிட்சையில் கண்டாமணி விருது பெற்ற வித்துவான். வேணுகோபாலன். நாகப்பட்டணம். இவர் மிகவும் நன்றாய் நாகசுரம் வாசிப்பார். வேதநாயக சாஸ்திரியார். 1774-1864. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் சிறந்த வித்துவான். தஞ்சாவூரில் சரபோஜி மகாராஜா சபையில் மந்திரி பாவா பண்டிதர் நாளில் சங்கீத வித்துவானாயிருந்தார். போன்சலே இராஜ வம்ச சரித்திரத்தைப் பாடலாகப் பாடி சன்மானம் பெற்றிருக்கிறார். ஞானபத கீர்த்தனைகள், பெத்தலேகம் குறவஞ்சி, ஞானக்கும்மி, பராபரக்கண்ணி, ஆரணாதிந்தம், ஞானவுலா, ஜெபமாலை, பேரின்பக் காதல் முதலிய சிறியதும் பெரியதுமான 120 நூல்கள் செய்திருக்கிறார். இவருக்கு இராஜா கட்டிக் கொடுத்த வீட்டில் நாளது வரையில் இவருடைய பரம்பரையார் பாடகர்களாயிருக்கிறார்கள். இவர் பரம்பரையில் ஞானதீப அம்மாள், ஞானசிகாமணி சாஸ்திரியார், நோவா ஞானாதிக்கம் சாஸ்திரியார், எலியா தேவசிகாமணி சாஸ்திரியார் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் பிரக்கியாதியா யிருந்தார்கள். வேதநாயகம் பிள்ளை. முன்சீபுதார், மாயவரம். இவர் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். தமிழிலும் சங்கீதத்திலும் சாகித்தியத்திலும் பிரக்கியாதி பெற்ற வித்துவான். வீணை நன்றாய் வாசிப்பார். இவர் செய்த கீர்த்தனங்களில் ஆயிரம் கீர்த்தனைகளுக்கு மேல் புஸ்தகமாக அச்சிடப்பட்டு வழக்கத்திலிருக்கின்றன. இவர் சமுசாரமும் குழந்தைகளும் பாட்டிலும் வீணையிலும் பழக்கமுள்ளவர்கள். நீதிநூல் முதலான பல நூல்கள் செய்திருக்கிறார். வேதபுரி குப்புசாமி தீக்ஷதர். கும்பகோணம். எல்லா வாத்தியங்களிலும் சிறந்த வாசிப்புள்ளவர். வேதா. இவர் “சங்கீத மகரந்த” என்ற நூல் செய்திருக்கிறார். வேதாந்த பாகவதர். கல்லிடைக் குறிச்சி. முத்து சாஸ்திரியாரின் குமாரர். வாய்ப்பாட்டில் கெட்டிக்காரர். வை வைகுண்ட சாஸ்திரி. இவர் சமஸ்கிருதத்தில் இனிய நடையில் விசேஷ அர்த்த புஷ்டியுள்ளதாய் தேசிக ராகங்களில் வைகுண்ட முத்திரை யுடன் அநேக கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். வைத்தி. இவரை மணத்தட்டு வைத்தியநாதையர் என்பார்கள். கர்நாடக சுத்தமாய்ப் பாடுவார். இவர் தம்பி இராமசுவாமி ஐயரும் குமாரர் துரைசாமி ஐயரும் அதி மனோகரமாய்ப் பாடுவார்கள். வைத்தியநாத ஐயர். நடுக்காவேரி. அதி மனோகரமாய்ப் பாடுவார். வைத்தியநாத ஐயர். மாயவரம். வீணையில் பிரக்கியாதி பெற்ற வித்துவான். நல்ல லயஞான முள்ளவர். பல்லவி பாடுவதில் மகாவித்துவான். இவர் குமாரர் சபேசையர் வீணை சுகமாய் வாசிப்பார். வைத்தியநாத ஐயர். இவரைக் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரென்பார்கள். இவர் வாய்ப்பாட்டில் சிறந்தவர். வைத்தியநாதையர். அறந்தாங்கி. சிட்டியில் அதிக அப்பியாச முள்ளவர். நன்றாய்ப் பாடுவார். வைத்தியநாத பாகவதர். சூலமங்கலம். அரிகதை பக்தி ரசமாய்ச் செய்வார். வைத்தியநாத பாகவதர். நெமலி, ராஜமன்னார் கோவில். அரிகதை நன்றாய்ச் செய்வார். வைத்தியநாத பாகவதர். மெலட்டூர். சுகமாய் அரிகதை செய்வார். வையாபுரி முத்து. திருப்பாதிரிப்புலியூர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். மகா வைத்தியநாதையர். இவர் தஞ்சாவூருக்குச் சமீபத்திலுள்ள வையைச்சேரி துரைசாமி ஐயரின் குமாரர். சிறு வயதிலேயே தகப்பனாரிடமே சொல்லிக்கொண்டு சுகமாய்ப் பாடவும் சபைகளில் கச்சேரி செய்யவும் கூடியவிதமாச் சங்கீத வித்தையை நன்றாய் அப்பியாசம் பண்ணினவர். நல்ல நியமத்தையுடையவர். சங்கீதத்திலும் சாகித்தியத்திலும், வாய்ப்பாட்டிலும் சிறந்த வித்வான். கீர்த்தனைகளை அற்புதகரமாயும் கனநய தேசிகங்களைத் தெரிந்தும் பாடுவார். அநேக சமஸ்தானங்களில் விருதுகள் பெற்றிருக்கிறார். சக்காராம் சாகிப்அவர்கள் சபையில் சங்கீத வித்வானாயிருந்தவர். 72 மேளக் கர்த்தா ராகமாலிகை பாடி தஞ்சை சங்கீதமகாலில் சக்காராம் சாகிப் முன்னிலையில் அரங்கேற்றி விசேஷ சன்மானம் பெற்றவர். இவர் மிகச் சிறு பிராயத்தில் அதாவது 12-வது வயதில் கல்லிடைக் குறிச்சியில் திருவாவடு துறையாதீன மடத்தில் அனேக வித்துவான்கள் மத்தியில் பாடிக் கொண்டிருக்கும்போது மகா வைத்திய நாதையர் என்ற பட்டப் பெயர் பெற்றவர். பழமாறனேரி பிடில் சாமிநாதையர், உமையாள்புரம் சாமிநாதையர், பட்டணம் சபேசையர், மாயவரம் வீணை வைத்தியநாத ஐயர் முதலிய வித்துவான்கள் இவர்களின் மாணாக்கர்கள். 6. மேற்காட்டிய அட்டவணையில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய சில குறிப்புகள். மேற்கண்ட சங்கீத வித்துவ சிரோமணிகளில் பலருடைய சரித்திரமும் அவர்கள் சங்கீதத் திறமையும் பூரணமாகத் தெரியவில்லை. மேலும் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற வித்துவ சிரோமணிகளில் பலருடைய பெயர்களும் மற்றைய விபரமும் எனக்குக் கிடைக்க தாமதித்ததனால் இங்கே சேர்க்கக்கூடவில்லை. அதோடு ஒவ்வொருவரும் செய்த சங்கீத உருப்படிகள் இவ்வளவென்றும் தெரியவில்லை. இந்த அட்டவணையில் கண்ட பெயர்களில் புரந்தர விட்டல்தாஸ், ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர், அருணாசல கவிகள் போன்ற மகான்கள் கர்நாடக சங்கீதத்திலுள்ள ராகங்களில் பல உருப்படிகள் செய்து கர்நாடக ராகங்கள் மறந்து போகாமல் நிலைநாட்டியவர்களென்று சொல்ல வேண்டும். அவர்களுடைய பக்தி நிறைந்த கருத்துக்களும் அக்கருத்துக்கிணங்கிய இராகத்தின் சஞ்சாரமும் மிக அற்புதமானவை. சுவைக்கச் சுவைக்க இனிமை தரும் தேவாமிர்தமாகச் சங்கீதத்தின் அருமையை அறிந்தோரால் கொண்டாடப்படுகின்றன. அதன்பின் கர்நாடக சங்கீதத்தின் பெருமைக்கேற்ற விதமாய் அநேக சங்கீத வித்துவ சிரோமணிகள் பதங்கள், கீர்த்தனங்கள், வர்ணங்கள், ராகமாலிகைகள், சிட்டா சுரங்கள் செய்து நாளது வரையும் நிலைத்திருக்கும்படிச் செய்திருக்கிறார்கள். இவர்களுள் புரந்தர விட்டல்தாஸ், ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர், அருணாசல கவிகள், வேங்கடமகி, குருராயாச்சாருலு, வீணை குப்பையர், சதாசிவராயர், வீணை வெங்கிட்ட ரமணதாஸ், சிங்களாச்சாரியார், மகாதேவ அண்ணாவி, வடிவேல் அண்ணாவி, சுப்பிரமணிய ஐயர், சாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷதர், வெங்கட சுப்பையர், சுப்பராம ஐயர், தாளபாக்கம் சின்னையா, மானம்புச்சாவடி வெங்கட சுப்பையர் மகா வைத்தியநாத ஐயர், கடுவா பாகவதர், தலைஞாயர் சோமு ஐயர் முதலிய வித்துவசிரோமணிகள் சிறந்தவர்களாக நாளதுவரையும் பலராலும் கொண்டாடப்படுகிறார்கள். இவர்கள் சங்கீத சாகித்திய ஞானமுடையவர்களாய்த் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய பாஷைகளில் அநேக உருப்படிகள் செய்து இனிமை யுடன் கானஞ் செய்திருக்கிறார்கள். இவ்வருமையான கானங்களின் முக்கிய ரசங்கள் விளங்கும்படியாகவும் எல்லாரும் தேவகானமென்று கொண்டாடும் படியாகவும் மகா வைத்திநாத ஐயர், பிச்சாண்டார் கோயில் சுப்பராயர், இராகவையர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், சிங்காரம் அல்லது வேணு, சின்னவைத்தி, பெரிய வைத்தி, சரபசாஸ்திரிகள், பட்டணம் சபேசையர், இராமநாதபுரம் சீனு ஐயங்கார், பரமேஸ்வர பாகவதர், மன்னார்குடி பக்கிரி, மதுரை பொன்னுசாமி, விஜயநகரம் குருராயாச்சாருலு, சூரிய நாராயண சோமயாஜி, வெங்கட்டரமணதாஸ், மைசூர் சாமண்ணா, மைசூர் சுப்பண்ணா, மைசூர் சேஷண்ணா, சல்லகாலி கிருஷ்ணையர், வீணை பெருமாளையர், வீணை சுப்புக்குட்டி ஐயர், வீணை கல்யாண கிருஷ்ணையர், பிடில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், பழமாறனேரி சாமிநாத ஐயர், படாரம் கிருஷ்ணப்பா, திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், அனந்தராம பாகவதர், கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், திருவையாறு சுப்பிரமணிய ஐயர், மாயவரம் வீணை வைத்தியநாத ஐயர், மிருதங்கம் நாராயணசாமி அப்பா, மிருதங்கம் அழகநம்பி, மிருதங்கம் தக்ஷணாமூர்த்தி, மிருதங்கம் கிருஷ்ணய்யர், புல்லாங்குழல் சஞ்சீவி ராவ், பிடில் பஞ்சாபகேச பாகவதர், கோட்டுவாத்தியம் முத்தையா பாகவதர், பிடில் மாசிலாமணி பிள்ளை, பிடில் கோவிந்தசாமி பிள்ளை முதலியவர்கள் கானம் செய்தும், செய்து கொண்டும் வருகிறார்கள். இதோடு தோகூர் அனந்தபாரதி, கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவிகள், கவிகுஞ்சரம் ஐயர், இராமசாமி ஐயர், முததுராமலிங்க சேதுபதிகள், வேதநாயக சாஸ்திரியார், வேதநாயகம் பிள்ளை முதலிய கனவான்கள், தமிழ் மக்கள் நெடுநாள் வழங்கக்கூடியதாக அநேக கீர்த்தனங்கள் செய்து புஸ்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் சங்கீத ஞானமும் சாகித்தியங்களின் பொருளும் சொற்சுவை பொருந்திய இனிய தமிழ் நடையும் தமிழ்மக்கள் கொண்டாடும்படிச் சிறந்ததாய் நாளது வரையும் விளங்கிக் கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ளோர் கேட்டும் உணர்ந்தும் உய்யுமாறு மேற்கண்ட கனவான்கள் செய்த அருமையான கருத்தடங்கிய கீர்த்தனங்கள் பாடுவதை விட்டு விட்டுப் பாடுகிற வித்துவ சிரோமணிகளுக்கும் கேட்கிற பிரபுக்களுக்கும், பொருள் விளங்காத கீர்த்தனங்கள் பல பாடப்படுகின்றன. தியாகராஜ ஐயர் போன்ற மகான்கள் செய்த பக்திரசமான கீர்த்தனைகளின் பொருளை முதல் முதல் தெரிவித்துப் பின் பாடுவார்களானால் அவற்றின் பொருள் விளங்கி ஆனந்திக்க இன்னும் அதிகமான இடமுண்டு. பொருளறியாது இனிய ஓசையை மாத்திரம் கேட்டு என்ன பயனடையப் போகிறார்கள்? வெறும் காலப்போக்காகுமேயொழிய வேறல்ல. தென்னிந்தியாவின் தமிழ் மக்கள் பொருளறிந்து நற்பயனடையும் படித் தமிழ்க் கீர்த்தனங்களையும் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, தாயுமானவர் முதலிய பக்தி ரசமுள்ள பண்களையும் மிகுந்து கேட்கவும் அந்நிய பாஷையிலுள்ள கீர்த்தனங்களை மொழி பெயர்த்தபின் படிக்கும்படிச் செய்யவும் வேண்டுமென்று நான் மிகவும் விரும்புகிறேன். தெய்வ ஸ்தோத்திரங்களும் விண்ணப்பங்களும் அடங்கிய ஒரு கீர்த்தனையை அந்நிய பாஷையில் கேட்பதினால் மாத்திரம் சந்தோஷப்படுகிற ஒருவனைப் பார்க்கிலும் அதன் பொருளறிந்து உணர்வடைந்து ஆனந்திப்பவனே நன்மை யாக தன் காலத்தை ஆதாயப்படுத்திக் கொண்டவனாவான். மணி ஒலியின் இன்னிசையால் மான் இறப்பதுபோல செவிக்கின்பம் மாத்திரம் தேடும் மக்கள் கதியும் இருக்குமே. கீதத்தில் நற்பொருளில்லாது போனால் அதை உயிரற்ற தென்றே சொல்ல வேண்டும். அதைக் கேட்டு என்ன பயனடையப் போகிறார்கள்? தெய்வத்தின் குணாதியங்களைச் சொல்லி ஆனந்திக்கும் ஒருவன் பண்களால் அதையே பாடும்பொழுது மிகுந்த உணர்ச்சி யுடையவனாய் மனம் ஒடுங்கித் தியான நிலைக்கு வந்து திருவுருவைத் தரிசிக்கும் மேன்பதமடைவான். அப்படியே பக்திரசமான பண்களைப் படிக்கக் கேட்கிறவர்களும் அப்பயனையே அடைவார்கள். பயனடையாது வெறும் இன்னிசையை மாத்திரம் கேட்குமவர் இராகத்தின் இனிமையை மாத்திரம் கேட்டுச் சீக்கிரம் மறந்துபோவார்கள். தீய இயல்புடைய மானுடருக்குத் தீமை நீங்கி நன்மை உண்டாகத் தெய்வபக்தி நிறைந்த கானம் அவசியம் வேண்டும். இயற்றமிழைக் கேட்டும் வாசித்தும் உணராத ஒருவன் இசைத் தமிழைக் கேட்கும்பொழுது எப்படியும் உணர்வடைவான். பொருளில்லாத வெறும் ஓசையை மாத்திரம் பாடும் ஒரு பிராமணனைப் பிராமணப் பந்தியிலிருந்து விலக்க வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லி யிருக்கிறார்களே. ஒரு கீர்த்தனையின் அர்த்தம் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று கேட்டுக் கொண்டால் சங்கீத வித்துவ சிரோமணிகள் தாங்கள் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் அதைப் பிறருக்குச் சுருக்கமாய்ச் சொல்லவும் மிகுந்த பிரிய முள்ளவர்களாயிருப்பார்களென்று நம்புகிறேன். 7. கர்நாடக சங்கீதத்தை மிகவும் ஆதரித்து வந்த மகாராஜாக்களும், பிரபுக்களும். இவ்விடத்தில் சங்கீத வித்துவான்களை ஆதரித்தும் வீடு வாசல் கட்டிக் கொடுத்தும் நிலங் கொடுத்தும் நிலைவரமான சம்பளம் கொடுத்தும் காலா காலத்தில் அவர்களை உற்சாகப்படுத்த ஆடை ஆபரணங்கள் விருதுகள் கொடுத்தும் சங்கீதத்தை வளர்த்து வந்த மகாராஜாக்களையும் பிரபுக்களையும் மிகவும் கொண்டாட வேண்டியதாயிருக்கிறது. தஞ்சாவூர் சமஸ்தானம் துளஜா மகாராஜா, பிரதாபசிங் மகாராஜா. மலையாளம் குலசேகரப் பெருமாள் மகாராஜா, ஆயில்ய மகாராஜா. இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதிகள். வேங்கடகிரி ராஜகோபாலகிருஷ்ண மகாராஜா. விஜயநகரம் பசுபதி ஆனந்த கஜபதி மகாராஜா. பிட்டாபுரம் ராஜா வெங்கட்ட குமார சூரியராவ் பகதர். புதுக்கோட்டை ராமச்சந்திர மகாராஜா. மைசூர் மகாராஜா, கிருஷ்ணசாமிராஜ உடையார், சாமராஜ உடையார். கார்வேட் நகர் வேங்கடபதி ராஜா. எட்டையாபுரம் ஜெகதீஸ்வர எட்டப்ப மகாராஜா, ஜெகதீஸ்வர ராம குமர எட்டப்ப மகாராஜா. ஆரணி ஜாகீர்தார், திருமலைராவ். அரியலூர் ஜாகீர்தார் யுவரங்கபூபதி. திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், சுப்பிரமணிய தேசிகர், அம்பலவாண தேசிகர். மணலி முத்து கிருஷ்ண முதலியார் என்ற சின்னையா முதலியார் வெங்கடகிருஷ்ண முதலியார். முதலிய பெரியோர்களைச் சங்கீதத்தை வளர்த்தவர்களென்று இங்கே சொல்ல வேண்டும். இவர்கள் சங்கீத வித்துவான்களுக்குச் சகலமும் கொடுத்து ஆதரித்தார்களென்று சொல்வதோடு சங்கீத வித்துவான்களின் தவறுதலைத் திருத்தவும் தாங்களே பாடவும் சாகித்தியம் செய்யவும் கூடியவர்களாய் அநேக உருப்படிகள் செய்து நாளது வரை தங்கள் முத்திரை யுடன் வழங்கி வரும்படிச் செய்திருக்கிறார்கள். அழியாப் புகழ் பெற்ற இவர்கள் ஆதரித்து வந்ததுபோல தற்காலத்தில் அதிகமாய் ஆதரிப்பாரில்லா திருந்தாலும் மைசூர், திருவனந்தபுரம், புதுக்கோட்டை, விஜயநகரம், பிட்டாபுரம், கார்வேட் நகரம், இராமநாதபுரம், எட்டையாபுரம் முதலிய நாடுகளிலுள்ள மகாராஜாக்களால் வித்துவான்கள் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள். 8. சங்கீத பரம்பரையில் சொல்லப்படாமல் விட்ட பலர். இங்கே குறிக்கப்பட்ட வித்துவான்களைப் பார்க்கிலும் ஏராளமான பேர் ஓச்சரென்றும், அண்ணாவியென்றும், நாகசுரக்காரரென்றும், தவுல்காரரென்றும், மிருதங்கக்காரரென்றும், வீணைக்காரரென்றும், முகவீணைக்காரரென்றும், கந்தர்வர்களென்றும், தேவதாசிகளென்றும், நடனமாதர்களென்றும் சொல்லப்படும் வகுப்பாருள் சங்கீத சாகித்தியங்களிலும் பாவ ராக தாளங்களென்றும் சங்கீதத்தின் முக்கிய மூன்று அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். சங்கீதத்தின் முக்கிய அம்சமாகிய பாவ, ராக, தாளங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர்களாகிய இவர்களே பூர்வம் முதற்கொண்டு சங்கீதத்தைக் கற்று அதையே தங்களுக்கு ஜீவனமாகக் கொண்டவர்களென்று நாம் யாவரும் அறிவோம். இவர்களுள் காந்தர்விகள் (பாடகிகள்) பாட்டில் சிறந்தவர்களாயிருந்தார்களென்றும் இருக்கிறார்களென்றும் நாம் அறிவோம். அவர்களுள் வீணை வாசிக்கிறவர்கள் மிக ஏராளமாயிருந்தார் களென்றும் மிகச் சிறந்த வீணை வித்துவான்களாயிருந்தார்களென்றும் 2,000 வருஷங்களுக்கு முன்பே கரிகால சோழன் காலத்திலிருந்த மாதவியின் திறமையாலும் காந்தர்வதத்தையார் வீணாகானத்தாலும் நாம் அறிகிறதோடு தற்காலமும் அப்படிப்பட்டவர்களிருக்கிறார்களென்றும் அறிவோம். அவர்கள் பெயர் விபரங்கள் எனக்குக் கிடைக்கத் தாமதித்ததினால் இங்கே காட்டக்கூடவில்லை. சங்கீதத்திற்கேயுரிய இவர்களிடமிருந்தே மற்ற யாவரும் கற்றுக் கொண்டார்களென்பது பூர்வ முதல் காணக் கிடக்கின்றJ. சுமார் 30 வருஷங்களுக்குப் பின்னாலேயே பிராமணர்களும் மற்றவரும் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டு ஒரு முட்டுக்காரனைப்போல் சபைமுன் வந்தார்களென்பது உலகமறிந்த விஷயம். சங்கீதத்தில் தகுந்த பிழைப்பிருக்கிறதென்று யாவரும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலம் மிகச் சமீபமானதென்றே சொல்ல வேண்டும். சுமார் 1,000 வருஷங்களுக்கு உட்பட்டே இப்படி நடந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் பூர்வமென்று நாம் எண்ணும் புராணங்களிலும் கதைகளிலும் கந்தர்வர் யக்ஷர், கின்னரர், கிம்புருடர், நாகர், தும்புரு, நாரதர், ரம்பை, திலோத்தமை, ஊர்வசி, மேனகை முதலியவர்கள் ராஜசபைக்கு வந்தார்களென்றும் சங்கீதத்தை மற்றவர்கள் அறியக் கச்சேரி செய்தார்களென்றும் நாம் பார்க்கிறோம். “அதே காலத்தில் பிராமணர்கள் ஓமம் வளர்த்தார்களென்றும் வேத சுலோகம் சொன்னார்க ளென்றும் ஆசீர்வாதம் பண்ணினார்களென்றும் தானம் வாங்கினார்களென்றும் பிராமண போஜனம் நடந்ததென்றும்” சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் ஒரு “பிராமணர் ஆடினார் பாடினாரென்றும் நாகசுரம் வீணை வாசித்தாரென்றும் நடனமாடினாரென்றும் சொல்லப்படவில்லை.” இதினாலும் காயகன், நடன், விடன் அதாவது “ஆடுதல், பாடுதல், அபிநயித்தல் என்னும் மூன்றும் தொழில் செய்வோரைப் பிராமணப் பந்தியிலிருந்து விலக்க வேண்டுமென்று உபநிடதங்கள் சொல்வதாலும் இவர்கள் முற்றிலும் சங்கீதத்திற்கு உரியவர்களல்ல” என்று தோன்றுகிறது. என்றாலும் பகவான் நாமத்தைச் சொல்லுகிறவர்களையும் அதைப் பிரஸ்தாபப்படுத்துகிறவர் களையும் ஒருவாறு நாம் ஒப்புக் கொள்ளக் கூடியதாயிருக்கிறது. மேற்கண்ட சங்கீத வித்துவ சிரோமணிகள் யாவரும் கர்நாடக சங்கீதத்தையே படித்து வந்தார்களென்பதைச் சந்தேகமறச் சொல்லுவோம். ஆனால் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னதென்று தெரிந்து நிச்சயம் பண்ணிக்கொண்டதாகத் தெரியவில்லை. 9. 72 மேளக்கர்த்தாவைப் பற்றிய சில குறிப்புகள். பூர்வமுதல் தமிழ் மக்களும் தமிழ் நாட்டில் குடியேறிய மற்றவரும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கும் பன்னிரு சுரங்களையும் அவைகளின் சேர்க்கை பேதத்தாலுண்டாகும் பல இராகங்களையும் தாய் இராகங்களாக வைத்துக்கொண்டு நாளது வரையும் அப்படியே வழங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் சுருதி இன்னதென்று தெரிந்து கொள்ளாமல் சங்கீத ரத்னாகரர் சொல்லிய துவாவிம்சதி சுருதிகள் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வருகிறதென்று சில சூத்திரங்களைச் சொல்லி வாசித்தும் வருகிறார்கள். “ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர் போன்ற மகான்கள் தாங்கள் இன்ன சுருதியை இன்ன இராகத்தில் வழங்குகிறோமென்று தெளிவாகச் சொல்லவில்லை.” ஆனால் வேங்கடமகி, மகா வைத்திநாதையர் போன்ற மகான்கள் 72 மேளக்கர்த்தாவிலும் கீதம், இராக மாலிகை செய்து வைத்திருக்கிறார்கள். இந்த 72 மேளக்கர்த்தா வேங்கடமகியினால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் இதற்கு மேலாவது கீழாவது வேறொருவரும் கண்டுபிடிக்க முடியாதென்றும் தாம் எழுதிய சதுர் தண்டிப் பிரகாசிகையில் சொல்லுகிறார் என்று சின்னசாமி முதலியார் M.A. எழுதியிருக்கிறார். அது வருமாறு:- உத்தரமேளம் 36 “1. (a) சாரங்கதேவர் உண்டு பண்ணிய சங்கீத ரத்னாகரத்தின் இராக விவேக அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் இராகப்பிரிவினைகள் வாடிக்கையில் இல்லையென்றும். (b) இராமாமாத்தியர் செய்த ஸ்வரமேள கலாநிதியில் சொல்லப்பட்டிருக்கும் பிரசித்த மேளங்களின் கணக்குப் பிசகென்றும், அந்நாளையில் வழங்கினது 19 தான் என்றும், (c) பூர்வாங்கத்திலும், உத்தராங்கத்திலும் உள்ள ஆதி, அந்த ஸ்வரங்களை மாற்றாமலும், விக்ரு திபேதங்களில் ஒன்றையும் விடாமலும் வரிசைக்கிரமமாய் மேளபிரஸ்தாரஞ் செய்தால் சுத்தமத்யமத்துடன் 36, பிரதிமத்யமத்துடன் 36, ஆக 72 மேளங்கள் தான் உண்டாகுமென்றும், வேங்கடமகி சதுர்தண்டிப் பிரகாசிகையில் கண்டித்திருக்கிறார்.” 2. இவைகளில் சிலதுகள் மாத்திரமே பிரசித்தமாயிருக்க, மற்றவை வியர்த்தமென்றும் பெருமைக்குச் செய்யப்பட்டனவென்றும் ஒருக்கால் யாராகிலும் ஆட்சேபிப்பதாயிருந்தால் அதற்கு வேங்கடமகி சொல்லும் சமாதானம் யாதெனில் :- (a) “மனிதர்கள் அனேகபேதங்கள். (b) தேசங்களும் அனேக பேதங்கள். (c) அவைகளுக்குள் பாடுகிறவர்களாலும் வெகு விதமான சங்கீத சாஸ்திரங்களை அறிந்தவர்களாலும், கற்பிக்கப்பட்டதுகளும், கற்பிக்கப் படுகிறதுகளும், கற்பிக்கப்படப் போகிறதுகளும், நம்மைப் போன்றவர்களால் அறியப்பட்டதுகளும், இலக்கணத்தில் மாத்திரம் இருக்கிறதுகளும் ஆனபல தேசிக ராகங்கள், அந்தந்த ராகங்களுக்குப் பொதுவான மேளங்கள், (d) பந்துவராளி, கல்யாணி முதலிய முக்கியமான பல தேசிய ராகங்கள், அந்தந்த ராகங்களுக்குப் பொதுவான மேளங்கள். (e) இவைகள் அனைத்தையும் கிரகித்துக் கொள்வதற்காக இந்த 72 மேளங்கள் நம்மால் சொல்லப்பட்டன. ஆதலால் இந்த மேளங்களில் வியர்த்த மென்ற சந்தேகத்திற்குக் காரணம் உண்டாகிறதா? (f) விருத்தரத்னாகரமென்ற சாஸ்திரத்தில் நிரூபிக்கப்பட்டதும் அதில் பிரஸ்தாரத்தில் கிடைத்ததுமான விருத்த சமுகத்திற்குள் என்னைப் போலொத்தவர்கள் பிரசித்தமான ஓர் விருத்தத்தை வியர்த்தமென்று சொல்லுவது சாராதல்லவா? (g) தாளப் பிரஸ்தாரத்திலுண்டான தாள சமூகத்திற்குள் பிரசித்தமான ஓர் தாளத்தை வியர்த்தமென்று சொல்லுவது சாராதல்லவா? (h) பிரசித்தமான பன்னிரண்டு ஸ்வரங்களைக் கொண்டு பிரயாசத்துடன் சேர்க்கப்பட்ட எழுபத்திரண்டு மேளங்களைக் காட்டிலும் குறைவாயாவது அதிகமாயாவது மேளத்தை ஒருவனும் உண்டுபண்ணான். உண்டுபண்ணுவானேயானால் என்னுடைய இந்தப் பிரயாசமானது வியர்த்தமாகிவிடும். “குறைவாகவாவது அதிகமாகவாவது உண்டு பண்ணுவதற்கு நெற்றிக்கண்ணுடையவனாலும் முடியாJ.” ஆனதால் மாதிருகைகள் என்ற பெயர்களையுடைய எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்பதுபோல், எழுபத்திரண்டு மேளங்களுக்குக் குறைவும் உண்டாகாது. அதிகமும் உண்டாகாது. இவ்விதமாக நிச்சயமாக எழுபத்திரண்டு மேளங்கள் சொல்லப்பட்டன.” etc. etc . இந்த 72 மேளக்கர்த்தாவும் அதன் ஜன்னிய இராகங்களும் கர்நாடக சங்கீதத்தையே குறிக்கிறதென்றாலும் சிற்சில சந்தேகம் வரும்படியான விதம் செய்யப்பட்டிருக்கிறJ. வேங்கடமகிக்கு முன் கி.பி. 1,500-ம் வருஷத்திலிருந்த புரந்தரவிட்டல்தாஸ் என்பவரால் செய்யப்பட்ட கீதங்களும் சாகித்தியமும் நாளது வரையும் வழங்கி வருகின்றன. இவர் காலத்திற்கு முன்னாலேயே எழுதப்பட்டதாகத் தோன்றும் ‘வியாசகடகம்’ என்ற புஸ்தகத்தில் கனகாங்கி, ரத்னாங்கி, கானமூர்த்தி என்ற பெயர்களுடனும் கிரக நியாச அம்ச சுரங்களின் குறிப்புடனும் எழுதப்பட்டிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். வேங்கடமகிக்கு புரந்தர விட்டல் தாஸ் முந்தியவரென்றும் வியாச கடகம் அதற்கும் முந்திய தென்றும் தோன்றுகிறது. கனகாங்கி, ரத்னாங்கி என்ற 72 மேளக்கர்த்தாக்களின் பெயரை மாற்றிக் கனகாம்பிரி, பேனதுதி, கானசாமவராளி என்று எழுதி யிருக்கிறதைக் கவனிக்கும்பொழுது “முந்தின நூல்களின் சாரத்தை கிரகித்துப் புதிதாக ஒரு நூல் தாம் உண்டாக்கி முந்தினதை மறைத்தார்கள் போலும்” எனத் தோன்றுகிறது. இவ்வழக்கம் போலவே பூர்வ தமிழ் நூல்களிலுள்ள சாரத்தை அந்நிய பாஷைகளில் எழுதிக் கொண்டு தமிழ் நூல் மறைக்கப் பட்டிருக்க வேண்டும். 10. 103 பண்களின் மாறுதல். மேலும் இந்த 72 மேளக்கர்த்தாவையும் ஒப்புக் கொள்ளாமல் சங்கீத ரத்னாகரர் ராமா மாத்தியர் அபிப்பிராயப்படி 19 ராகங்கள்தான் உண்டென்று சாதிக்கிறவர்களுமுண்டு. 2,000 வருஷங்களுக்கு முன் வழங்கி வந்த 103 பண்களும் வழக்கத்திலில்லாமல் போயிற்றென்று நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் அப்படியல்ல. பூர்வ காலத்தில் படிக்கப்பட்டு வந்த ராகங்கள் அப்படியே நாளது வரையும் பேணப்பட்டு வருகின்றன. ஆனால் அவைகளின் பெயர்கள் “அந்நிய பாஷைகளில் மாற்றப்பட்டும் அக்காலத்தில் வழங்கிய வர்ணமெட்டுகளுக்கு வேறு பாஷைகளில் சாகித்தியங்கள் போட்டும்” வழங்கி வருகிறதென்று நாம் மறந்துபோகக்கூடாJ. இப்படி வழங்கி வரும் இராகங்களும் இராகத்தில் வழங்கி வரும் சுரங்களும் சுருதிகளும் நிச்சயம் தெரியாமல் போனபின் பலர் பலவிதமாய்ச் சொல்லவும் அந்நிய இராகங்கள் கலக்கவும் அசலாயுள்ள இராகங்கள் பிழைபடவும் நேரிட்டது. இப்பிழைகளை அறிந்து கொள்ளவுமில்லை. தாங்கள் பாடும் இராகங்களில் வரும் சுருதிகளையும் அறிந்துகொள்ளவில்லை. இதினால் 10 வருஷம் 12 வருஷம் தொண்டு செய்து கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறதே யொழிய புஸ்தக மூலமாய் அறிந்து கொள்ளக்கூடிய வித்தையாயில்லை. இவ்விஷயத்தைப் பற்றி அதாவது சுரம், சுருதி, இராகம் முதலியவைகளைப் பற்றி நெடுநாள் விசாரித்து வந்த எனக்கு இவைகளை வித்துவ ஜன சமுகத்தில் விசாரித்து ஒரு முடிவு செய்வது நல்லதென்று தோன்றிற்று. இதுகாரணத்தினாலேயே சங்கீத வித்தியா மகாஜனசங்கம் என்று ஒரு சபை கூட்டும்படி நேரிட்டது. VII. சங்கீத வித்தியா மகாஜனசங்கம், தஞ்சை. 1. சங்கம் கூட்டுவதற்கு நேரிட்ட காரணம். அமிழ்தினும் மேலானதெனக் கொண்டாடத்தகும் சங்கீதத்தையும் அதன் ரகசியங்களையும் அறிய வேண்டுமென்று வெகுநாள் பிரயாசப்பட்டேன். சென்ற சில வருஷங்களாகச் சங்கீதத்தைப் பற்றிய வியாசங்கள் வர்த்தமான பத்திரிகை மூலமாக அடிக்கடி காணப்பட்டன. அவைகளில் சொல்லிய விஷயங்கள் பல பலவாயும் சில பொதுக் குறிப்புகளாயு மிருந்தன. என்றாலும் அவற்றில் சுரங்களைப் பற்றிய சில சந்தேகங்களும் ராகங்களைப் பற்றிய சந்தேகங்களும் மேற்றிசை சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களையும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களையும் ஒத்துப் பார்த்ததனால் உண்டான சந்தேகங்களும் துவாவிம்சதி சுருதிகளும் கர்நாடக சங்கீதமும் கலந்துண்டான சந்தேகங்களும் அங்கங்கே காணப்பட்டன. இவ்வியாசங்களைக் கவனித்த எனக்கு மேற்கண்ட சந்தேகங்கள் சரியானவையல்ல என்றும் இவைகளுக்குச் சரியான சமாதானம் சொல்லும் சிறந்த வித்துவ சிரோமணிகள் தென்னிந்தியாவில் யாராவது இருப்பார்கள் என்றும் அவர்கள் இச்சந்தேகங்களுக்குப் பதில் சொல்லும் சிறந்த வாக்கியங்கள் மற்றவரைப் போதித்து நிற்கும் என்று உத்தேசித்துச் சுதேச மித்திரன், மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பத்திரிகையாகிய செந்தமிழ், Hindu முதலிய வர்த்தமான பேப்பர்களுக்கு எழுதினேன். அவ்வியாசம் வருமாறு :- (a) இந்தியாவின் சங்கீதம். “பசும் பொன்னெனச் சிறந்து விளங்கும் வர்த்தமானியே! சென்ற பத்து வருஷங்களாக இந்தியாவில் சங்கீத மூலாதார ரகசியங்களை அறிய விரும்பி விசாரித்துக் கொண்டிருக்குமெனக்கு உன் அங்கத்தில் ‘இந்தியாவின் சங்கீத’ மென்ற முகப்புடன் விளங்கிய வியாசம் மிகவும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தந்தது. நீ சிறந்த அநேக வித்துவான்களாலும் இராஜாதி இராஜாக்களாலும் போற்றப்பட்டுப் புதிது புதிதாய்ப் பல அரிய விஷயங்களுடன் ஒவ்வொரு நாளும் பிரகாசிப்பதைக் கொண்டு இதையுனக் கெழுதுகிறேன். உலகில் தோன்றிய மானிட வர்க்கமும் மிருக பக்ஷி ஊர்வன வர்க்கமும், தங்கள் தங்களுக்குத் தகுந்தபடி இன்ப துன்பங்களை விளக்கும் ஓசையுடையனவாகவும், இன்னிசையில் அதிகப் பிரிய முடையனவாகவும் விளங்குவது யாவரும் அறிந்த விஷயம். ஓரறிவுள்ள புல், பூண்டு, விருக்ஷதிகளுள்ளும் தென்றலினால் பூக்கும் மா, பலா, ஈந்து, புளி, நெல்லி, வேம்பு, சண்பகம், மகிழ் முதலிய விருக்ஷங்களும், மல்லிகை குடமல்லிகை முதலிய செடி இனங்களும், மேல் காற்றினால் மலரும் மலை விருக்ஷங்களும், தாழை இனங்களும், வடந்தையினால் புஷ்பிக்கும் பாரிசாதம், பிச்சி, முல்லை, சாமந்தி, ரோஜா, தாமரை முதலிய செடி வகைகளும், ஜம்பங்கி, ஜிமிக்கி முதலிய கொடி வகைகளும், மரமல்லிகை பன்னீர் முதலிய விருக்ஷ வகைகளும், எல்லாப் புல்லினங்களும் காற்றில் கலந்த சாந்தமான தொனியினால் வசியப்பட்டு புஷ்பிக்க ஆரம்பிக்குமானால், ஆறறிவுள்ள மனிதர் இன்னிசைக்கு இரங்காதிரார். மெல்லிய மந்தமான நாதத்தில் தெய்வமே இருந்து ஒரு சிறந்த பக்தனோடு பேசினாரென்பதைக் கவனிக்கையில் அவர் தாமே நாத சொரூபியாயிருந்து தம் நாத வேற்றுமை யினால் அண்டபுவன சராசரங்கள் யாவற்றையும் நடத்திக் கொண்டு வருகிறாரென்று நாமறிய வேண்டும். தொட்டில் பிள்ளை பருவ முதல் தொண்டு கிழம் வரையும் தொடர்ந்து இன்பந்தரத்தக்கது நாதமும் கீதமுமே. இவ்வின்பத்திலும் என்று மழியாத பேரின்பத்திற்கு மனதைப் பக்குவப்படுத்துவதும், பக்குவமடைந்தவரைப் பரவசப்படுத்துவதும், பரவசமடைந்தவர் ஆநந்தத்தை யறிவிப்பதும் நாதமும், கீதமுமே. ‘ஓ’ மென்ற நாதத்தால் உலகெல்லாம் படைத்து அவற்றுக்குயிர் வடிவாக நின்ற முதல்வனே நாதமென்றும், வார்த்தை யென்றும் அழைக்கப் பெறுவானானால் நாதத்தின் உயர்வை வேறெதைக்கொண்டு உவமை சொல்ல? காணப்படு மெல்லாமாயும், ஜீவர்களின் ஜீவனாயும், ஜீவர்களின் ஊக்கமாயும், ஊக்கத்தில் உணர்வாயும், உணர்வில் அறிவாயும், அறிவில் ஆநந்தமாயும், ஆநந்தத்தில் நாதமாகி, எழுவகைத் தோற்றத்திற் கெல்லையாய் நின்ற அவனையே ஏழுசுரங்களாக அமைத்து அவற்றின் உட்பிரிவுகள் அல்லது அலைவுகளையே சுருதிகளாக்கி இன்னிசைகொண்டு இன்னிசைக் காதாரமூர்த்தியைத் துதித்து நல்லிசை பெற்றார்கள் பெரியோர்கள். இவ்வருமை யுணராத சிற்றறிவுடையோர் தாம் பெரிதெனமதிக்கும் லௌகீக கருமங்களில் கீதத்தை உபயோகித்தும் அனைத்திலும் நாடியதை யடைந்தார்கள். இப்படி இம்மை மறுமை யென இருநிலைகளிலும் உதவியாயிருக்கும் நாதகீதத்தை ஏற்றபடி கற்றறிந்து கொள்வதும் அறிந்தபடி சாதிப்பதும், சாதித்தபடி மற்றவர்க்கு அறிவிப்பதும், அறிவித்துத் தானும் பிறரும் ஆநந்திப்பதும் ஜீவர்களின் இயல்பான பிரியம். ஆனால் விரும்பியபடி யாவரும் அறியவும் சாதிக்கவு முடியாமல் அரைகுறையாய் நின்று விடுகிறார்கள். அப்படி நின்றுவிட்டாலும் இன்னிசையில் ஈடுபடும் இயல்பு அதிக முடையவர்களா யிருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களில் நானு மொருவன். இதைப் பார்க்கும் சங்கீத வித்துவ சிரோமணிகளே! எனக்குத் தோன்றும் சில சந்தேகங்களை நிவர்த்தித்து இன்னிசை வளர்ந்தோங்கக் கிருபை செய்வீர்களென்று தங்களை மிகவும் பிரார்த்திக்கிறேன். 1. சப்த சுரங்கள் ஆதியில் எப்படிக் கண்டு பிடிக்கப்பட்டது? அவைகளுண்டான கிரமமாவது அல்லது இப்போதுண்டாக்கும் கிரமமாவது நானறியத் தயவாய்த் தெரிவிப்பீர்களா? 2. சப்த சுரமுள்ள அல்லது ஊ-ஊ வரையுள்ள ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகளுண்டென்கிறார்களே. அவைகள் அப்படித்தானா? அப்படியானால் அவைகளின் பெயரென்ன? சங்கீதத்தில் தேர்ந்த சாரங்கதேவர், மதங்கரிஷி முதலியவர்களின் அபிப்பிராயம் எப்படி? அவர்கள் இருபத்திரண்டு சுருதிக்கு இட்டு வழங்கிய தீவிர, குமத்தவதி, மந்த, சந்தோவதி முதலிய இருபத்திரண்டு பேர்களும் தீப்த, ஆயுள், மருது, மத்திய, கருணை முதலிய ஐந்து ஜாதிகளும் இப்போது வழங்கி வருகின்றனவா? வழங்காதிருக்குமானால் வேறு இருபத்திரண்டு பேர்களாவது வழங்கி வருகிறதா என்று நானறியலாமா? நாலு ஷட்ஜமம், 4 மத்திமம், 4 பஞ்சமம், 3 ரிஷபம், 3 தைவதம், 2 காந்தாரம், 2 நிஷாத மென்கிறார்களே. அவைகளின் ஸ்தானமும், பெயரும் பிரயோகமும் இன்னதென்று அநுக்கிரகிக்கலாமா? 3. நேத சுருதி ஷட்ஜமம், பஞ்சமம் நீங்கலாக மற்ற சுரங்களின் சுருதி பேதத்தாலுண்டாகக் கூடிய இராகங்கள், இப்போது வழங்கி வரும் ஆயிரத் தெட்டுத்தானா? அல்லது வேறு இராகங்கள் உண்டாக இடமுண்டா? 4. சுருதி பேதங்களினாலுண்டாகும் ஆயிரத்தெட்டுக் குட்பட்ட அல்லது மேற்பட்ட ஒரு இராகத்தை அதற்குரிய சுருதியில் சஞ்சாரக் கிரமப்படி வக்கிர வர்ஜிய விதிப்படி பாடுவதற்கு யாவரும் சுலபமாய்ப் பார்க்கக் கூடிய வழி யுண்டுமா? அல்லது பாடப்படுகிற ஒரு இராகம் சரி தப்பென்று சொல்வதற்குத் தகுந்த ஆதார பிரமாணமுண்டா? 5. ஒவ்வொரு இராகங்களின் சஞ்சாரக்கிரம மறிவதற்குக் கீதம் ஆதாரமென்கிறார்களே. அப்படிப்பட்ட கீதம் இப்போதுண்டாக்கக் கூடியவர்கள் இருப்பார்களானால் பின்வரும் சுருதியுள்ள சுரங்களில் தமக்குப் பிரியமான ஒரு தாளத்தில் கீதம் அமைத்து கீதம் அமைக்கும் விதத்தையும் என் சொற்ப அறிவுக்குத் தெளிவாக விதியுடன் சொல்ல அநுக்கிரகிப்பார்களா? 24-வது மேளம் வருணப் பிரியையில் ஜன்னியமான நவநீத பஞ்சமம் சகமத பதநிசா சநிபமரிசா த-நி. 6-வது சுருதி க-ரி 4 சுருதி சுத்தமத்திமம். 6. சிலகால முன்னுள்ள தெலுங்கு நாட்டு ஷேத்திரிஞ்ஞரவர்கள், திருவாரூர் முத்து சாமி தீக்ஷதரவர்கள், தஞ்சாவூர் சாமாசாஸ்திரிகள், திருவையாறு சுப்பிரமணிய ஐயரவர்கள், மைசூர் சதாசிவராயரவர்கள், ஆயிரமா யிரமாய்க் கீர்த்தனங்கள் செய்த திருவையாறு தியாகராஜ ஐயரவர்களும் செய்த கீர்த்தனங்கள் மிகவும் அருமையானதா யிருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அவர்கள் எந்த ஆதாரத்தைக் கொண்டு கீர்த்தனங்களுண்டு பண்ணினார்கள்? அவர்களுக்காதாரமாயிருந்த இரகசிய முறைகளைப் பின்னுள்ள யாருக்காவது உபதேசித்தார்களா? இராம பக்தனான தியாகராஜ ஐயரவர்கள் தெய்வ சந்நிதியில் புதிது புதிதான கீர்த்தனம் செய்து பகவானைத் துதித்துக் கொண்டு வருகையில் பழக்கமான இராகங்களில் பல கீர்த்தனங்கள் செய்வதைப் பார்க்கிலும் அபூர்வமான வெவ்வேறு இராகங்களில் பகவானைத் துதிக்க வேண்டுமென்று விரும்பி இராகங் களடங்கியதும் பாடக்கூடிய விதத்தைத் தெரிவிப்பதுமான ஒரு சுவடியை நாரதர் கொடுத்தாரென்று பரம்பரையாய்ச் சொல்லப்பட்டு வருகிறது. அதைக் கொண்டும் உலகெல்லாம் மதிக்கத் தகுந்த சங்கீத ஞானத்தின் உயர்வு ஒவ்வொரு கீர்த்தனங்களிலும் அமைந்திருப்பதைக் கொண்டும், இராகங்களைச் சுலபத்தில் பாடக்கூடிய ஒரு உத்தமமும் சுலபமுமான முறை இருக்க வேண்டு மென்று நானினைத்தது தப்பாகமாட்டாதென்று துணிவுடன் தங்கள் சமுகத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்தக்கிரந்தம் இப்போதிருக்கிறதா? யாரிடமிருக்கிறது? 7. மனிதர் நினைக்கக்கூடிய வெவ்வேறு சுருதி பேதமுள்ள எல்லா இராகங்களையும் தெரிவிக்கும் தாய் இராகங்களடங்கிய மேளக்கர்த்தா இப்போதிருக்கிறதா? 8. சுத்தரிஷபமும் சாதாரண காந்தாரமுமுள்ள அநுமத்தோடி யென்னும் 8வது தாய் இராகத்தில் இரண்டாவது சுருதி ரிஷபமும், மூன்றாவது சுருதி காந்தாரமுமுள்ள தோடியும் மூன்றாவது ரிஷபமும் ஐந்தாவது காந்தாரமு முள்ள பூபாளமும், முதலாவது ரிஷபமும் மூன்றாவது காந்தாரமுமுள்ள அசாவேரியும் ஜன்னிய இராகங்களாக வரலாமா? ஒரு வேளை வேறு மார்க்கமின்றி இரண்டின் கீழ் மூன்றையும் நாலின்கீழ் ஐந்தையும் சேர்த்துக் கொண்டு ராகபூபாளம் உண்டாக்கினார்களென்று வைத்துக் கொள்வோம். இரண்டின் கீழ் ஒன்றையும் நாலின்கீழ் மூன்றையும் வைத்து அசாவேரியைக் குறிப்பதற்கென்ன நியாயம்? இரண்டில் ஒன்று தப்பாயிருக்க வேண்டுமே. சரி தப்பான இரண்டு பேதங்களை ஒரு மேளத்தில் குறிக்கும் வழக்கம் மிகுந்திருப்பதினால் முறைப்படி கற்க விரும்புவோர்க்கு முரண்படாதா? மயக்க முண்டாகாத வேறுமுறை மகான்களால் சொல்லப்பட்டிருக்கு மென்பதே என் துணிவு. அப்படி இருக்குமானால் சுருதி தவறுதலின்றி ஒவ்வொரு இராகத்தையும் யாவரும் சுலபமாயறிந்து கொள்ள ஏதுவாகுமென்றே இதைக் கேட்கிறேன். 9. ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு அரைச்சுரங்களில் நேத சுருதி ஷட்ஜமம் பஞ்சமம் நீங்கலாக மற்ற சுருதிகள் சரியான அளவிலில்லை யென்றும் அளவு கணக்கின்படி மாத்திரம் வைக்கப்பட்ட சுருதிகள் சரியல்ல வென்றும் தற்காலத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதோடு சுருதி தப்பாயிருப்பது நிமித்தம் ஆர்மோனியம் பியானா முதலிய வாத்தியங்களில் இந்தியாவின் இராகங்களை வாசிக்க முடியாதென்று சொல்லும் ஆஷேபனையும் கலந்து பெருங் கூச்சலிடுகிறது. இவைகளில் பன்னிரண்டு அரைச்சுரங்களாகிய 72 மேளக்கர்த்தா இராகங்களை ஆர்மோனியம் பியானாவில் பாடுவதில் அபசுரமுண்டாகாதென்பது என் நிச்சயம். அரை அரையாயமைந்த இந்தப் பன்னிரண்டு சுருதிகளில் கால் காலாயமைந்த 22 சுருதியுள்ள இராகங்களைப் பாடுவது கூடியதல்ல. எந்தச் சுருதியுள்ள சுரங்களைப் பாடுவதில் உபயோகிக்கிறோமென்று தெரியாமையினால் இப்படிச் சொல்லுகிறார்களோ வென்று நான் சந்தேகிக்கிறேன். திருஷ்டாந்தரமாக சதுர் சுருதி ரிஷபமும் தைவதமுமுள்ள தீரசங்கராபரண இராகத்தை ஆர்மோனியம் பியானாவில் வாசிக்கலாமே யொழியப் பஞ்ச சுருதி ரிஷபமும் தைவதமு முடைய சங்கராபரண இராகத்தை அதன் எல்லா அழகோடும் படிக்க முடியுமா? அந்த இராகத்திற்கு ஜீவனாக விளங்கும் பஞ்சசுருதி ரிஷபமும் தைவதமும் நீங்கினால், எல்லா அம்சத்தில் ஒத்திருந்தும் ஜீவனற்ற உடல் போலவே இருக்குமென்று எண்ணுகிறேன். இது தவிர வேறு காரண மிருக்குமானால் அல்லது நான் கேட்பது தப்பாயிருக்குமானால் தயவாக மன்னித்து வீணையில் காணப்படும் சுரங்களுக்கும் ஆர்மோனியத்தில் காணப்படும் அரைச் சுரங்களுக்கும் பேதமின்ன தென்று தெளிவாகச் சொல்லக் கேட்டுக் கொள்ளுகிறேன். (22 சுருதிகளைப் பற்றியும் கால் சுருதிகளைப் பற்றியும் என்னுடைய அபிப்பிராயம் சற்று வித்தியாசப் பட்டிருந்தாலும் தற்காலத்தில் பிரஸ்தாரத்தி லிருப்பதை அநுசரித்துச் சொல்லுகிறேன். 10. முன்னுள்ள பிரபல வித்துவான்களில் அநேகர் ஒரு இராகத்தைப் பத்து நாள் இருபது நாட்களாக முன் வந்த சங்கதிகள் திரும்ப வராமல் பாடினார்களென்று சொல்லிக் கொள்ளுகிறார்களே. ஆனால் தற்கால வித்துவான்கள் கால்மணி அரைமணி நேரம் பாடுவது அபூர்வமாக விருக்கிறதே. முன்னுள்ள பெரியோர்கள் விரிவாகப் பாடுவதற்கு உதவியா யிருக்கும் அநேக வகையான பிரஸ்தாரங்களை மனனம் பண்ணிப் பின் மனோதர்மம் உண்டாகியிருக்கலாமென்று யூகிக்க இடமிருக்கிறது. எத்தனை வகையான பிரஸ்தாரங்களுண்டு? அவைகள் இப்போது எங்கே கிடைக்கு மென்று தாங்கள் தயவாய்த் தெரியப்படுத்துவீர்களா? இந்தியாவின் கீதத்தை உள்ளபடியே கேட்டு ஆநந்திக்கும் அதிபுத்தி சூட்சமமுள்ள சில கனவான்கள். அரைச்சுரங்கள் நீங்கலாக வரும் சுருதிகளின் நிச்சயம் தெரிய விசாரிக்கும் பொழுது சிறந்த வித்துவான்களுங்கூட அவைகள் கமக மென்றும் அவைகள் பத்து வகைப்படுமென்றும் கமகத்துக்கு அர்த்தம் மறைபொருளென்றும் எங்கள் பெரியோர் இப்படி எங்களுக்குச் சொல்லி வைத்தார்களென்றும் அதை எழுதிக்காட்ட முடியாதென்றும், நெடுநாள் கேள்வியினாலேயே அது வரவேண்டுமென்றும் சொல்லுகிறதைப் பல தடவைகளிலும் கேட்டிருக்கிறேன். தாமறிந்த பல நலமுள்ள கலைகளையும் உள்ளது உள்ளபடியே பிறர் அறிந்து கொள்ளப் போதுமான மறைப்பற்ற நூல்களும் உபகரணங்களு முண்டாக்கிக் கலாசாலை ஏற்படுத்திக் கற்றுக் கொடுத்துத் தம்காருண்யத்தையும் திறமையையும் பலவகையிலும் நிலைநாட்டும் மறைப்பற்ற ஆங்கிலேயர் அரசாட்சி செய்யும் இக்காலத்தி லாவது இந்தியாவின் சங்கீத இரகசியங்களையும் மூலாதாரப் பாடங்களையும் விதிகளையும் தெளிவாக யாவருக்கும் விளங்கும்படிச் செய்தால் இந்தியாவின் சங்கீதத்துக்கு இப்போதிருக்கும் பெருமையைவிட அனந்த மடங்கு பெருமையாயிருக்கு மென்று உத்தேசித்து இவைகளைக் கேட்டுக் கொண்டேன். கற்றறிந்த தங்கள் முன் தகுதியற்ற இச்சிறு சந்தேக வினாக்களைக் கேட்டதற்காக என் மேல் வருத்தமடையாமல் மன்னித்துச் சரியான சமாதானம் சொல்வீர்களென்று நம்பி இவ்விண்ணப்பம் தங்களுக்குச் செய்து கொண்டேன்.” மேற்கண்ட சில சந்தேக வினாக்களுக்கு ஒருவரும் எவ்விதமான பதிலும் நாளதுவரை எழுதவில்லை. 2. தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றி மேற்றிசைக்கு எழுதிய வியாசம். இதன்பின் சிலநாள் பொறுத்து இந்திய சங்கீதத்தை அறிய விரும்பும் மேற்றிசை சங்கீத வித்துவ சிரோமணிகளுக்கு “இந்திய சங்கீதம்” என்ற வியாசம் எழுதி அடியில் கண்ட இங்கிலீஷ் வர்த்தமான பத்திரிகைகளாகிய Royal Society of Arts,” John Street Adelphi, London. “The Music News” 3, Wine Office Court, Fleet Street, London. “The Musical Standard” 83, Charing Cross Road, London. “The Musical Times” 160, Wardour Street, London. இவைகளுக்கு அனுப்பினேன். அவ்வியாசம் வருமாறு :- INDIAN MUSIC “Indian Music has been, for some time, an attractive and interesting study to Englishmen. Some of them have also been touring in this country in order to make their own researches and obtain first-hand information in the field of Indian Music. One of these tourists, Mr. A.H. Fox Strangways, was recently in our midst here at Tanjore, holding interviews with the eminent musicians of the place with a view to know the inherent quality and worth of Indian Music. Writing on this subject in the “Madras Mail,” a few months ago, he observed that Indian musicians who are disposed to wrap up their musical practice in mystery and who deliberately withhold the knowledge which their pupils had paid for, have no need of an acoustic theory. He regretted that not even one in a hundred cared to inquire into the theory of the SRUTI. He further said that there was room for good work in recording the excellent Indian songs, but that no Indian would think of it; that the work, however, would be published in Germany and sold in America. In regard to these remarks of his, I wish to say a few words. Students of Indian Music who wish to have a knowledge of the Srutis ransack all their book in vain to find out (a) the principle which underlies and pervades them all, (b) the method of constructing melodies out of the Srutis, and. (c) the Melakartha which contains all the melodies. No problem relating to Indian Music could be solved without a definite knowledge of these three things. Professors of Indian Music have devoted a whole life-time to a single Ragam and have composed Gheetams, Varnams, Kirthanams and Pallavis out of it, leaving the fundamental theory thereof to remain an enigma. Only the old Ragams are sung at the present day and nobody thinks of attempting the various new Ragams, although they are furnished with the basis-scales of all the Ragams. New discoveries and unusual phenomena relating to earth and sky are coming to light every day, but, in the realms of Indian Music, time-honoured methods prevail, and so the music remains where it was. While allowing that there area few things that are, of course, excellent in what is ancient. my humble opinion is, that in respect of Indian Music, time-honoured methods have been the betenoir of progress. Before proceeding to explain what I have to say regarding Sruti, Ragasputam and Kartha, I wish to say a few words as to the Mother-Ragam in Indian Music and the Janyams or melodies that are born of them. 1. In the Piano or the Harmonium, the scale played from the middle C to its octave and back is the basis scale for the 29th Mother-Ragam in Indian Music, known as Dheerasankarabharanam. In English notation the scale and Ragachurukkam (a simple specimen of the Ragam) of this will be as 1 on page 353. A. 2. With D as keynote, if 8 successive white notes be sounded, we get the basis-scale for the 22nd Mother-Ragam known as Karaharapriya. The scale and Raga-churukkam will go as 2 on page 353. A. 3. With E as the keynote if 8 successive white notes be played we get the basis-scale for the 8th Mother-Ragam known as Hanumathodi. The scale and Ragachurukkam is as 3 on page 353. A. No.1. Sankarabaranam Scale and its simple ramifications No.2. Karaharapiria Ragachurukam Scale and its simple ramifications No.3. Hanumathodi Ragachurukam Scale and its simple ramifications No.4. Meshakalyani Scale and its simple ramifications No.5. Harikambothi Scale and its simple ramifications No.6. Natabairavi Ragachurukam Scale and its simple ramifications No.7. Hanumathodi Ragachurukam Scale and its simple ramifications 4. With F as the keynote if 8 successive white notes be played we obtain Meshakalyani, the 65th Mother-Ragam. The scale and Ragachurukkam will be as 4 on page 353. A. 5. With G as the keynote, if 8 successive white notes be played we obtain Harikambodhi the 28th Mother-Ragam. The basis-scale and Ragachurukkam will be as 5 on page 354. B. 6. With A as the keynote, if 8 successive white notes be sounded we get the 20th Mother-Ragam or Natabhairavi. The basis-scale and Ragachurukkam will be as 6 on page 354. B. 7. With B as keynote if 8 successive white notes be sounded, we get a Ragam named Sutha Thodi without G. This is regarded as a Janyam from Hanumathodi, the 8th Mother-Ragam. The basis-scale and Ragachurukam will be as 7 on page 354. B. N.B. - In all Indian Music, each Ragam commences with C which is the first note of the basis-scale : therefore when we speak of a scale commencing with G we really mean it commences with C, but the intervals are arranged as if the scale were played on the white notes only. from G to G. For example, if the Harikambodhi scale be G A B C D E F G, the semi tones fall between 3 and 4, and, 6 and 7. So the real Harikambodhi scale will be C D E F G A B and C. The 12 white and black notes of an octave in the Harmonium and the 12 notes of the octave on the Indian veena are just the same. Only the intervals between these 12 Swaras, say, tones less than a semitone, cannot be sounded on the Harmonium. So, at the outset, it is easy to understand what are popularly known as the 72 Mother-Ragams, derived from these twelve notes and their tonal relationship. The peculiar excellence of Indian Music consists in singing according to given Sruti the thousands of melodies derived from the 72 Melams or Mother-Ragams based on the 12 notes of the octave. without allowing any admixture of other notes, and strictly according to given laws. But this unique system of singing is undergoing a gradual change in the hands of Indian musicians, from time to time. either by the Sruti of a melody getting a little changed or by the admixture of strange sounds or by the absense of a definite system of laws to which all the various melodies may conform. As a result of this, some melodies, Keerthanams aud Varnams have become individualised and handed down to posterity, nay, they have become family treasures. In course of time, some characteristic errors have also crept in. Some Ragams have become invested with certain errors which embarrass even the best Indian Musician. These errors are now justified either on the score of antiquity or heredity, or considered too sacred to be rectified as they orginated from Rishis or sages of old. Recently, an Indian musician who noticed a Sruti difference in the Anandabhairavi, derived from the Natabhairavi. (the 20th Mother-Ragam) was afraid that he had to regard it as generating from 8 different Mother-Ragams. Another musician held that the very error had its beauty. And others said that when it was sung rightly, according to the Sruti pertaining to the Mother-Ragam, the result was simply charming. As there is such a variety of opinion among musicians of repute, they do not care to rectify themselves but go on singing it as they have received it from their predecessors, and do not care to inquire into the fundamental theory of Music. It has scarcely occurred to them that there must be in existence one theory and one law of constructing melody for all people from the Himalayas to Cape Comorin and from the Indus to the Bay of Bengal. If there be one such law acceptable to all, Indian Music is sure to reach a position of eminence. Though at the outset it may appear an Herculean task,yet it is possible to sing all the 171,396 melodies, everyone of which has a charm of its own. A precise knowledge of the law of melody is all that is required to get over the existing doubts and errors. The practice will be found comparatively easy by those who have a real ear for Music. Talking of Western Music, it may be said that. of the 6 melodies based on the 8 white notes from C to C, the first, namely the Dheerasankarabharanam is sung in English Music with the admixture of Srutis belonging to the other 5 melodies and some times clean without them. The resultant melody resembles Sankarabharanam in several places, but it is not entirely that, nor is it Thodi or Kalyani. The Indian musian has “Moods” to express the thoughts of his mind and Alapanams to bring out the choicest parts of a Ragam, while the subtlety of time and his own ingenuity are shown by means of the Pallavis. It is impossible to harmonise such intricate portion of the Indian Music. But I know, however, from my own experience. that simple Keerthanams and Swarajatis (plain singing without Alapams and Gamakams) can be beautifully harmonised. Musicians who have heard Indian Music sung to four parts admit that it is exquisite. I am of opinion that, as the Indian musician cultivated melody alone, he advanced beyond the middle stage of simple and popular Music into realms of intricate and subtle Music to show off his ingenuity in exposition and variation. My idea is to give a specimen Keerthanam or Swarajati for each of the above mentioned 6 Ragams in the course of my next article. I have given, however. the following. What I have already said and what I intend to say in the succeeding articles may not be altogether new to my readers and may not be of any real value to them or it may be considered impracticable. Again in some respects I may be overrating the importance of my subject or may fail to do it justice. Yet it is my earnest desire to try to meet all objections as far as I can, either by private correspondence or through the medium of any Journal. If I find that at least I have roused an interest in a few of my readers, I have had may reward.” Royal Society of Arts, John Street, Adelphi, LONDON W.C. 25th August 11. Dear Sir, I beg to acknowledge with many thanks your letter of 2nd instant. Articles on Music scarcely come within the scope of the journal, which deals, as you know rather with the applied arts than fine arts. If however, you would care to send me your ms. I should be glad to look at it. The principal papers that deal with the subject of Music are, the “Musical News” 3, Wine Office Court, Fleet Street, “The Musical Standard,” 83, Charing Cross Road, and “The Musical Times” 160, Wardour Street, the addresses given all being in London. Yours faithfully, G.K. MENZIES, Asst. Secretary. Rao Sahib M. Abraham Pandither, Karunanithi Medical Hall, Tanjore. Replies to my above articles. Royal Society of Arts, John Street, Adelphi, LONDON W.C. 17th Nov. 1911. Dear Sir, Since receiving your letter of September 13th. I have been making inquiries in different directions, but I am sorry to say without any satisfactory results. It is difficult to find any people in this Country with interest in or knowledge of Indian Music. I am therefore returning the ms. which you were kind enough to send me, with much regret that I have not been able to assist you. Yours faithfully, G.K. MENZIES, Editor of the Journal. M. Abraham Pandither, Karunanithi Medical Hall, Tanjore. (a) இந்தியாவின் சங்கீதம். “சீர் பெற்றிலங்கும் மேற்றிசை அன்பர்களே! சில காலமாக இந்தியாவின் சங்கீதம் எப்படிப்பட்டதென்று அறிய விரும்பிச் சுற்றுப் பிரயாணஞ்செய்து அங்கங்கே விசாரித்துக் கொண்டு வரும் ஆங்கிலேய துரைகளை நான் சந்திக்க நேரிட்டதில், இந்தியாவின் சங்கீதம் இப்படிப்பட்ட தென்றறிய அவர்களுக்கு விருப்பமிருக்கிறதென்றறிந்து இதை எழுதத்துணிந்தேன். சில நாள் முன் சங்கீத விஷயத்தை விசாரிப்பதற்கென்று வந்த மிஸ்டர் பாக்ஸ் ஸ்றிராங்குவே தஞ்சாவூரில் அநேக சங்கீத வித்துவான்களை வரும்படிச் செய்து, பல விசாரணைகள் செய்து போனார். அவர், “இந்தியாவிலுள்ள சங்கீத வித்துவான்கள் சங்கீத இரகசியங்களை மறைபொருளாக வைத்துக் கொண்டு தங்களிடம் கற்க விருப்பம் மாணாக்கர்களுக்குப் பூர்ணமாய்க் கற்றுக் கொடுக்காமல் போகிறார்கள். இப்பேர்பட்டவர்கள் சுருதியைப்பற்றி ஏன் விசாரிக்கிறார்கள்? சங்கீதம் கற்கும் நூறுபேரில் ஒருவன் கூட சுருதி சாஸ்திரத்தைப்பற்றி விசாரிக்கிறதில்லை. இந்தியாவில் மிக அருமையான சங்கீத துக்கடாக்கள் ஜர்மனியில் பிரசுரஞ் செய்யப்பட்டு அமெரிக்காவில் அவை விற்று முதலாகுமேயொழிய ஒரு இந்தியன் அதை முன்னுக்குக் கொண்டு வர நினைக்கிறதில்லை” என்பதாக மெயில் பேப்பரில் எழுதியிருக்கிறார். இவ்வியாசத்தைக் கண்ட நான் அவர் சொல்லும் விஷயத்தைப் பற்றிச் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். 1. சுருதியைப் பற்றி அறிய விரும்புவோர் இந்தியாவின் சங்கீத நூல்களைத் தேடி விசாரித்தால் அவற்றில் சுருதி நிச்சயம் திட்டமாய்ச் சொல்லப்படவில்லை. 2. சுருதிகளால் இராகங்களையுண்டாக்கும் விதமும் சொல்லப்பட வில்லை. 3. அப்படியுண்டான இராகங்கள் யாவுமடங்கிய மேளக்கர்த்தாவும் சொல்லப்படவில்லை. இம்மூன்று விஷயத்திலும் திட்டமான அறிவில்லாமல் சந்தேகம் நிவர்த்தியாவதெப்படி? ஒரு இராகத்தில் தங்கள் ஆயுள் முழுவதும் செலவு செய்து இனிமையாய்ப் பாடிக் கூடிய வரை அதில் கீதமும் கீர்த்தனங்களும், வர்ணங்களும் பல செய்து பின்னடியார்க்கு வைத்துப் போனார்களேயொழிய, இரகசியம் சொல்லவில்லை. பழமையான இராகங்களே தற்காலத்திலும் படிக்கப்பட்டு வருகின்றன. புதிய இராகங்கள் பலவற்றிற்கு ஆரோகணம் அவரோகணமிருந்தும் படிக்க நினைப்பாரில்லை. வானமும் பூமியும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதான செயல்களும் காக்ஷிகளுமுடையதாகத் தோன்றுவதையறிந்தும் இந்தியாவின் சங்கீதத்திலோ பழமையே பாராட்டப்பட்டு வருகிறது. பழமையிற் சிலவற்றை உயர்ந்தவை என்று நான ஒப்புக்கொண்டாலும் சங்கீத விஷயத்திலோ பழமையான சிற்சில அபிப்பிராயங்கள் இந்தியாவின் சங்கீதத்தை முற்றும் முன்னுக்கு வராமல் தடுத்தன என்று நினைக்கிறேன். இச்சமயத்தில் இன்னும் நான் சொல்லவிருக்கும் சுருதி, இராக பரிசோதனை, கர்த்தா முதலிய விஷயங்கள் தங்கள் மனதுக்கு நியாயமென்று படும்படி முதல் முதல் இந்தியாவின் தாய் இராகங்களையும் அவைகளில் ஜன்னியமாகும் இராகங்களையும் பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். 1. தாங்கள் இப்போது வழங்கி வரும் ஆர்மோனியம் அல்லது பியானாவில் மத்திய ஸ்தாயியில் C.C வரையுள்ள வெள்ளை நோட்டுகள் இந்தியாவில் 29-வது தாய் இராகமென்று வழங்கி வரும் தீரசங்கராபரண இராகத்துக்கு ஆரோகணமாகும். அதுபோலவே அவரோகணமும் சேர்ந்து இராகம் பூர்த்தியாகிறது. 2. அதே வெள்ளை நோட்டில் அடுத்த D-ஐ C-ஆக வைத்து ஆராகணம் அவரோகணம் செய்தால் 22-வது தாய் இராகமென்று வழங்கி வரும் கரகரப்பிரியாவாகிறது. 3. வெள்ளை நோட்டில் மூன்றாவதான E-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 8-வது தாய் இராகமான ஹநுமத் தோடியாகிறது. 4. வெள்ளை நோட்டில் F-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 65-வது தாய் இராகமான மேஷகல்யாணி யாகிறது. 5. வெள்ளை நோட்டில் G-ஐ c-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 28-வது தாய் இராகமான ஹரிகாம்போதி யாகிறது. 6. வெள்ளை நோட்டில் A-ஐ C-ஆக வைத்து ஆரோகணம் அவரோகணம் செய்தால் 20-வது தாய் இராகமான நடபைரவி யாகிறது. 7. வெள்ளை நோட்டில் B-ஐ Cஆக வைத்து ஆரோகணம் அவரோ கணம் செய்தால் G இல்லாத தோடியாகிறது. இது எட்டாவது தாய் இராகமான ஹநுமத் தோடியில் ஜன்னியமென்று வழங்கி வருகிறது. இவ்வேழு இராகங்களைப்பற்றியும் நோட்டேஷனில் முன்காட்டப் பட்டிருக்கிறது ஆர்மோனியத்தில் காணப்படும் 12 நோட்டுகளுக்கும் இந்தியாவில் வழங்கி வரும் வீணையின் 12 சுரங்களுக்கும் இராகங்களில் வரும் 12 சுரங்களுக்கும் எவ்விதமான பேதமுமில்லை. இப்பன்னிரண்டு சுரங்களுக்கும் இடையில் வரும் அநுசுரங்கள் மாத்திரம் பியானா, ஆர்மோனியாவில் காட்டக்கூடியவைகளல்ல. ஆனால் 12 சுரங்களினால் மாத்திரமுண்டாகும் 72 தாய் இராகங்களும் அவையுண்டாகும் விதமும் முதல் முதல் தெரிந்து கொள்ளச் சுலபமானவை. தாய் இராகமென்பது சுரங்களின் கலப்பினால் எத்தனை வெவ்வேறு பேதங்கள் வரக்கூடுமோ அவைகளிலொன்று. தாய் இராகம் எப்போதும் ஆரோகண அவரோகணத்தில் சம்பூர்ணம் அல்லது 7 சுரங்களுடையதாகவே இருக்கும். அது தாய் இராகமென்றும், கர்த்தா இராகமென்றும், மேளமென்றும் அழைக்கப்படும். ஜன்னிய இராகமென்பது மேற்காட்டிய தாய் இராகத்தில் சுருதியையே உடையதாயிருக்கும். ஆனால் அதன் ஆரோகணத்திலாவது அவரோ கணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒன்று அல்லது இரண்டு சுரங்கள் இல்லாமலாவது மாறியாவது வரும். இப்படி மாறி வருவதற்குரிய விபரமும் கணக்கும் பின்னால் எழுதப்படும். மேற்கண்ட தாய் இராகங்கள் ஏழையும் போலவே 12 சக்கரத்துள்ள கர்த்தா இராகங்கள் 72-ம் அவைகளில் ஜன்னியமாகும் ஆயிரமாயிரமான இராகங்களையும் அதனதன் சுருதிப்படி மற்ற சுரங்கள் கலவாமல் படிப்பதே இந்தியாவின் சங்கீதம் அருமையுடையதென மற்றவர் நினைப்பதற்குக் காரணம். இவ்வருமையான முறையும் காலத்துக்குக் காலம் மாறுபட்டு இராகத்துக்குரிய சுருதிகள் வேறுபட்டு அந்நிய சுரங்களுங்கலந்து பழக்கத்துக்கு வந்துகொண்டேயிருக்கிறது. இப்படிக்கிரமம் தப்பிப்படிப்பதற்குக் காரணம், தவறுதலென்றறிந்து திருத்திக் கொள்ளவும், இராகங்களைச் சரி பார்க்கவும் உண்டாக்கவுங்கூடிய கணக்கில்லாமையேயாகும். இப்படி இல்லாமையால் பரம்பரையாயுள்ள சில இராகங்களும், கீர்த்தனங்களும், வர்ணங்களும் அந்தந்தப் பரம்பரையாரே படித்து வரும்படி குலதனம் போலப் பேணப்பட்டன. அதோடுகூட அவரவர்களுக்கே உரிய சில சுரப்பிழைகளும் காலக்கிரமத்திலேற்பட்டன. இப்படிப் பல பரம்பரைகளால் ஒரு இராகம் சில தப்பிதங்களுடையதாக இந்தியாவின் சங்கீத வித்துவான்களே மலைக்கும்படி நேரிட்டது. பரம்பரையென்றும் புராதனமென்றும் மகான்களால் சொல்லப் பட்டதென்றும் அவரவர் தங்கள் கொள்கைகளையே சாதித்தும் தர்க்கித்தும் ஒரு முடிவுக்கும் வந்துத் திருத்திக் கொள்ளாமல் அவரவர் தங்கள் தங்கள் தப்பிதங்களையே கெட்டியாய்ப் பிடித்து நிற்கிறார்கள். சமீபத்தில் ஒரு வித்துவான் 20-வது தாய் இராகமான நடபைரவியில் ஜனித்த ஆனந்த பைரவியில் வரும் சுருதி பேதத்தால் இது எட்டுத்தாய் இராகத்தில் ஜன்னியமானதென்று சொல்ல வேண்டுமே என்று வருத்தப் படுகிறார். மற்றொரு வித்துவான் அப்படி இருப்பதுதானே அழகாயிருக்கிற தென்கிறார். அவ்விராகத்துக்குரிய சுருதியுடன் சுருதி மாறாமல் பாடிக் காட்டுகையில் எல்லாவற்றிற்கும் இது கனிவாயிருக்கிறதென்று மற்றவர்கள் சொல்லுகிறார்கள். இப்படிப்பல அபிப்பிராயங்கள் படுவதினால் அவரவர்கள் தங்களுக்குச் சாதனைக்கு வந்தவைகளைக் கூடியவரை இனிமையாகப் பாடிக் காலங்கழித்து விடுகிறார்களே யொழிய சங்கீத இலட்சணங்களை விசாரிக்க விரும்புகிறதில்லை. இமயமலை முதல் கன்னியாகுமரி வரையும் அல்லது வடதுருவ முதல் தென் துருவம் வரை யாவராலும் ஆஷேபனை இன்றி ஒப்புக்கொள்ளும் முறை யொன்றிருக்க வேண்டுமென்று தாங்கள் கவலைப் படுகிறதில்லை. அப்படி யாவராலும் ஒப்புக்கொள்ளப் படக்கூடிய பொதுவிதி யொன்றிருந்தால் சங்கீதமானது மிகுந்த உயர்வையடையும். துவக்கத்தில் சற்று மலைப்பாயிருந்தாலும் வெவ்வேறு அழகுடன்கூடிய இலக்ஷத்து எழுபத்தோராயிரத்து முந்நூற்றுத் தொண்ணூhற்றாறு இராகங்களைக் கேட்போம். ஒரு இராகத்தை யுண்டாக்குவதில் இப்போதிருக்கும் சந்தேகங்களும் கஷ்டங்களும் நீங்கச் சாதிக்கும் சொற்ப கஷ்டமாத்திரம் நிற்கும். சுரஞான முடையவர்களுக்கு அதுவும் மிகுந்த சுலபமே. C.C வரையுள்ள வெள்ளை நோட்டில் உண்டாகும் சுருதிப்படியே ஒவ்வொரு நோட்டுத் தள்ளி வாசிப்பதினாலுண்டாகும் ஆறு இராகங்களும் முதலாவதான சங்கராபரணமாத்திரம் சில சமயத்தில் கலப்பில்லாது சுத்தமாகவும், சில சமயத்தில் மற்ற 5 இராகத்துக்குரிய சுருதிகள் கலந்தும் மற்றவர்கள் வழங்கி வருகிறார்கள். ஆகையால் இப்படிப் பாடப்படும் இராகம் பல இடங்களில் சங்கராபரணம் போலத் தோன்றுகிறதே யொழிய முற்றிலும் சங்கராபரணமுமல்ல அல்லது தோடியுமல்ல, கல்யாணியுமல்ல. இப்போது வழங்கிவரும் சங்கராபரணம் மற்ற இராக சுரங்கள் கலவாது தனித்து வந்தால் அதற்கழகு கொடுக்கும். மற்ற மூன்று பாட்ஸ்களும் கிரமப்பட்டுத் தனியான மூன்று இராகங்களாகி இப்போதிருப்பதைப் பார்க்கிலும் மிக காம்பீரமுடையதாயிருக்கும். இந்தியாவின் சங்கீதத்தில் பாவங்களை விளக்கும் மனோதர்மங்களும் இராக நயங் காண்பிக்கும் ஆலாபனமும் தாளங்களின் நுட்பத்தைக் காட்டும் பல்லவியும் பாடும்பொழுது நாலு பாட்ஸ் பாடுவது கூடாத காரியம் என்றாலும் அவை இல்லாத சிறு சிறு கீர்த்தனங்களிலும் சுரஜதி முதலியவைகளிலும் பாட்ஸுடன் பாடுவது மிகவும் இன்பமாயிருக்கிறதென்று என் சொந்த அனுபோகத்தால் காண்கிறேன். இந்தியாவின் சங்கீதத்தை நாலு பாட்ஸுடன் படிக்கக் கேட்ட தேர்ந்த சங்கீத வித்துவான்களும் கேட்க மிகவும் இன்பமாயிருக்கிற தென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்தியர்கள் மெலடியை மாத்திரம் அப்பியாசித்துக் கொண்டு வந்து பொதுவாய் எல்லாருக்கும் விளங்கும்படியான நிலையில் நின்றும் மேற்பட்டு அநேகமநேகமான மனோ தர்மங்கள் செய்யும் துரிய நிலைக்கு வந்தார்களென்று நான் நினைக்கிறேன். ஆகையால் முதல் முதல் சங்கராபரண இராகத்தில் இராகச் சுருக்கம் (1) இராகசஞ்சாரம் தெரிந்து கொள்ளும் வாய்பாட்டாகிய கீதம். (2) சஞ்சாரத்தின் எடுப்பு முடிப்புக் காட்டும் சுரஜதி எழுதி அதே இராகத்தில் F ஷார்ப்பாவதினால் உண்டாகும் கல்யாணியையும் அப்படியே மற்றும் இராகங்களையும் அவைகளின் ஜன்னியங்களையும் அநுபோகத்துக்கு வரும்படி மியூசிக்குடன் கொஞ்சம் கொஞ்சமாக எழுத நினைக்கிறேன். உண்மையைக் கண்டு சத்தியத்தி நிலைநாட்டத் தம்முயிரையும் திரணமாக நினைத்து உழைப்பையும் காருண்ணியத்தையும் கடமையென்று சாதிக்கும் எனதருமைமேற்றிசைச் சங்கீத வித்துவா சிரோமணிகளே! இந்தியாவின் சங்கீதத்தின் இரகசியங்களென்று நான் நினைப்பவை ஒருவேளை தங்களுக்குத் தெரிந்ததாயிருந்தாலு மிருக்கலாம். அல்லது அவசியமில்லாதிருந்தாலு மிருக்கலாம். அநுபவத்திற்குக் கொண்டு வருவது கூடியதல்லவென்றிருந்தாலும் இருக்கலாம். சில விஷயத்தில் நான் சொல்லுவது சற்றுக் கூடியும் குறைந்துமிருந்தாலுமிருக்கலாம். நான் எழுதியவைகளில் தங்களுக்குத் தோன்றும் ஆஷேபங்களை பேப்பரிலாவது ப்ரைவேட்டாகவாவது தெரிவித்தால் ஏற்ற சமாதானஞ் சொல்ல மிகவும் விரும்புகிறேன்.” ராயல் சொஸைட்டி ஆப் ஆர்ட்ஸ், ஜான் ஸ்ட்ரீட், அடல்பி, லண்டன் று.C. ஆகஸ்டு 25, 1911. அன்புள்ள ஐயா, தாங்கள் 2-ம் தேதி யெழுதிய கடிதம் கிடைத்தது; அதற்காக மிகுந்த நன்றியறிதலான வந்தனம் சொல்லுகிறேன். இந்தப் பத்திரிகையில் சங்கீதத்தைப் பற்றிய வியாசங்களை அபூர்வ மாய்த்தான் பார்க்கலாம். சங்கீதம் போன்ற சிருங்காரரச வித்தைகளைவிட சாதன வித்தைகளைப் பற்றியே அதிகமாய்ச் சொல்லுவதைப் பார்க்கலாம். என்றாலும் தாங்கள் எழுதியிருப்பதை அனுப்பி வைத்தால் அதைப் பார்வை யிடுகிறேன். சங்கீத வியாசங்களைப் பிரசுரிக்கும் முக்கியமான பத்திரிகைகளாவன, ம்யூஸிக்கல் நீயூஸ், 3, உவைன் ஆபீஸ் கோர்ட், ப்ளீட் ஸ்ட்ரீட், லண்டன் Musical News, 3, Wine Office Court, Fleet Street, London), ம்யூஸிக்கல் ஸ்டாண்டர்ட், 83, சேரிங் கிராஸ் ரோட், லண்டன் ((The Musical Standard, 83, Charing Cross Road, London). ம்யூஸிக்கல் டைம்ஸ், 160, வார்டோர் ஸ்ட்ரீட், லண்டன் (The Musical Times, 160, Wardour Street, London) முதலானவைகளே. தங்களின் உண்மையுள்ள, ஜி.கே. மென்ஸீஸ், அஸிஸ்டெண்டு செக்ரெட்டரி. ராவ் சாஹேப் K. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர். மேற்கண்ட வியாசத்திற்கு பதில் கடிதம் ராயல் சொஸைட்டி ஆப் ஆர்ட்ஸ், ஜான் ஸ்ட்ரீட், அடல்பி, லண்டன் று.C. 17.11.11. அன்புள்ள ஐயா, செப்டம்பர் மாதம் 13-ம் தேதியில் தாங்கள் அனுப்பின கடிதம் கிடைத்தது முதல் இதுவரை பலவித ஆராய்ச்சி செய்தும் தாங்கள் கேட்கும் வினாக்களுக்குத் தகுந்த பதில் கிடைக்கவில்லை. இந்திய சங்கீதத்தில் தேர்ந்த அறிவும் நாட்டமுமுள்ளவர்களை எங்கள் தேசத்தில் காணக்கிடைப்பது அரிதாயிருப்பதால், தாங்கள் அன்புடன் அனுப்பியிருந்த மேனுஸ்கிரிப்டை தங்களுக்குத் திருப்பியனுப்பியிருக்கிறேன். இது விஷயமாய்த் தங்களுக்கு எவ்விதமான உதவியுஞ் செய்ய ஏலாதவனாயிருப்பதையிட்டு மெத்தவும் விசனிக்கிறேன். தங்களின் உண்மையுள்ள, ஜி.கே. மென்ஸீஸ், பத்திராதிபர். ராவ் சாஹேப் K. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர். 3. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் ஆரம்பம். அதன்பின் அநேக வித்துவ சிரோமணிகளை நேரில் கண்டும் இவ்விஷயங்களைக் கேட்கையில் அவர்களாலும் சரியான பிரதியுத்தரம் கிடைக்கவில்லை. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களும் சுருதிகளும் இன்னதென்று நிச்சயம் தெரியாதிருக்கையில் அதன் மேலுள்ள ஒவ்வொரு படிகளும் எப்படி நிலைக்கும்? சுரங்களின் நிலை ஏற்பட்ட பின்பே இராகக்கிரமம் ஏற்படும். சுரங்களின் கணக்குகள் ஏற்பட்டபின்பே சங்கீதம் உறுதிப்படும். “எண்ணமறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்றின்னா” என்பது போல சுருதிகளின் கணக்கில்லாத சங்கீதமும் பலவிதமான சந்தேகத்துக்கிட மாகிப் பிழைபடும் என்பது தெரிந்த விஷயமே. மூலாதார கணிதமில்லாத ஒரு சாஸ்திரமும் அஸ்திபாரமில்லாத வீடும் எப்படி நிலைத்திருக்கும்? தென்னிந்தியாவின் சங்கீதம் நாள் செல்லச் செல்ல தேசிகக் கலப்புற்று மற்ற தேசத்தவர் கானம்போல் கலந்து போமே என்று நினைத்து 1912-ம்´ பெப்ரவரிµ 14-ம் தேதியில் மாட்சிமை தங்கிய சென்னை கவர்னர் கர்மிக்கேல் பிரபு அவர்கள் தஞ்சைக்கு எழுந்தருளிய காலத்தில் அவர்களைப் பார்க்க வந்திருந்த மாயவரம் வீணை வைத்திநாதையர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தஞ்சாவூர் பஞ்சாபகேச பாகவதர், R. சுப்பிரமணிய ஐயர், சுப்பிரமணிய சாஸ்திரிகள், N.P. சுப்பிரமணிய ஐயர், A.G. பிச்சைமுத்து B.A.,L.T., ஹரிஹர பாகவதர், வீணை வெங்கடாசலமையர், இராமலிங்க குருக்கள், கோனேரி ராஜபுரம் வைத்தியநாதையர், திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் முதலிய வித்துவான்களை ஒரு சிறு சபையாகச் சேர்த்து என் அபிப்பிராயங்களைச் சொல்ல அவர்கள் யாவரும் இப்படி ஒரு சபையிருக்கவேண்டியது மிக அவசியமென்று தீர்மானித்தார்கள். அதன்பின் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா அவர்கள், பாப்பாநாடு ஜமீன்தார் மகா-ராச-ராச-சிறி சுவாமிநாத விஜயதேவர் அவர்கள், பூண்டி மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி வாண்டையார் அவர்கள், உக்கடை மகா-ராச-ராச-சிறி ராவ்பகதூர் அண்ணாசாமித் தேவர் அவர்கள், மகா-ராச-ராச-சிறி ஆவிடையப்ப பிள்ளை அவர்கள், மகா-ராச-ராச-சிறி P.V. கிருஷ்ணசாமி நாயிக் அவர்கள், மகா-ராச-ராச-சிறி T. சாம்பமூர்த்தி ராவ் அவர்கள், மகா-ராச-ராச-சிறி S. வெங்கட்ட சுப்பையர் அவர்கள், மகா-ராச-ராச-சிறி ராவ் பகதூர் C. நாகோஜி ராவ் அவர்கள் முதலிய சில கனவான்களுக்கும் இவ்விஷயங்களைச் சொல்ல அவர்களும் தாங்கள் இச்சங்கத்திற்கு வேண்டும் உதவிகளைச் செய்வதாக மனப்பூர்வமாய் வாக்களித்தார்கள். அதன்மேல் அநேகர் தாங்கள் சங்கத்தில் சேர்வதாகவும் உதவி செய்வதாகவும் முன் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு சபையும் ஐக்கியமும் அவர்களால் உலகத்துக்கு நேரிடும் நன்மையும் இன்னதென்று மற்றவர் அறிந்த பின்பே அவர்கள் உதவி தேட வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுவரையும் சங்கம் சொந்தச் செலவிலே நடந்து வருகிறது. சங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டவர்களும் கேட்டவர்களும் ரிப்போர்ட்டின் மூலமாய்த் தெரிந்து கொண்டவர்களும் சங்கத்திற்கு வேண்டிய உதவி செய்ய மனப் பூர்வமுடைவர்களாயிருக்கிறார்களென்று கேள்விப்படுகிறேன். இச்சங்கம் நாளுக்குநாள் பலமடைந்து அநேக வழியில் தென்னிந்திய சங்கீதத்தை முன்னுக்குக்கொண்டு வருவதற்கு உதவியாயிருக்குமென்று நம்புகிறேன். அடியில் வரும் சில குறிப்புகளால் தஞ்சை சங்கீத வித்தியா மகா ஜனசங்கத்தைப் பற்றிய மற்றும் சில விவரங்கள் தெரிந்து கொள்வோம். இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கத்தையும் அதில் சேர்ந்திருக்கும் சங்கத்தவர்களையும் அவர்கள் செய்து வரும் வேலைகளையும் பற்றிச் சில முக்கிய குறிப்புகளைப் பார்ப்பது நமக்குப் பிரயோஜனமாயிருக்குமென்று நம்புகிறேன். 4. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் நோக்கம் 1. தென்னிந்திய சங்கீதத்தின் விருத்திக்கானவைகளை விசாரித்து முன்னுக்குக் கொண்டு வருவதும் அவற்றை எல்லோரும் அறியப் பிரசுரப்படுத்துவதும். 2. தென்னிந்திய சங்கீதத்தையும் அதன் ஆதாரக்கிரமங்களையும் முறைப்படிக் கற்க வித்தியாசாலை ஏற்படுத்துவJ. 3. அதில் கற்கும் மாணவரையும் பரிட்சிக்கப்பட விரும்பும் மற்றவரையும் பரிட்சித்து யோக்கியதா பத்திரம் கொடுப்பது. 4. கர்நாடக சங்கீதத்திற்கு உதவியான நூல்கள், அச்சிடப்படாதிருக்கும் கீர்த்தனைகள் முதலியவைகளைத் தேடி அச்சிடுவJ. 5. கதைகள் செய்வதிலும் பாடுவதிலும் முக்கிய தேர்ச்சி பெறும்படி ஒழுங்குபடுத்துவJ. 6. கர்நாடக சங்கீதத்திலுள்ள சில முக்கிய விஷயங்களைப் பற்றிக் கேள்விகளுக்கு ஆலோசனை செய்து சந்தேகம் தீர்ப்பJ. 7. கர்நாடக ராகங்களில் வரும் சில தவறுதல்களை நீக்கிச் சுத்தப்படுத்துவது. 8. சிறந்த வித்துவ சிரோமணிகளுக்கு மெடல், பட்டப் பெயர் முதலியவை கொடுப்பது. 9. கர்நாடக சங்கீத சம்மந்தமான நூதன புத்தகங்கள், பத்திரிகைகள், அபிப்பிராயங்கள், கீர்த்தனங்கள் முதலிய உருப்படிகளை அரங்கேற்றுவதும் கர்நாடக இராகங்களையும் பண்களையும் பாடக்கூடிய வித்துவ சிரோமணிகளைக் கொண்டு பாடிக்காட்டுவதும். இச்சங்கத்தில் பல கனவான்களும் தனவான்களும், வித்துவான்களும் சேர்ந்து தங்கள் பொருளையும், தேகசிரமத்தையும் பாராமல் சங்கீத சபையை மிக ஊக்கமுடன் நடத்தி வருகிறார்கள். 5. தஞ்சை சங்கீதவித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர். நிரந்தர சங்கத் தலைவர் ராவ் சாஹேப் K. ஆபிரகாம் பண்டிதர் வரவேற்புத் தலைவர் மகா-ராச-ராச-சிறி பஞ்சாபகேச பாகவதர் அவர்கள் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்கள் காரியதரிசிகள் மகா-ராச-ராச-சிறி A.G. பிச்சைமுத்து அவர்கள், B.A.,டு.T. மகா-ராச-ராச-சிறி N.P. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், முதலாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி வீணை வைத்தியநாதையர் அவர்கள், மாயவரம் மகா-ராச-ராச-சிறி சாமிநாதையர் அவர்கள், பழமாறனேரி ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. இரண்டாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி T. சாம்பமூர்த்தி ராவ் அவர்கள், B.A.,B.L. தஞ்சாவூர். மகா-ராச-ராச-சிறி A.G. பிச்சைமுத்துப் பிள்ளை அவர்கள், B.A.,L.T. தஞ்சாவூர். மகா-ராச-ராச-சிறி P.V. நாகநாத சாஸ்திரியார் அவர்கள், B.A.,B.L. தஞ்சாவூர். ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. மூன்றாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி வீணை வேங்கடரமணதாஸ் அவர்கள், விஜயநகரம் மகா-ராச-ராச-சிறி H.P. கிருஷ்ணராவ் அவர்கள், B.A.,மைசூர் மகா-ராச-ராச-சிறி சபேசையர் அவர்கள், சென்னப்பட்டணம் ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. நாலாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி V.P. மாதவ ராவ் அவர்கள், C.I.E., திவான் பரோடா மகா-ராச-ராச-சிறி துரைசாமி ஐயங்கார் அவர்கள், சென்னப்பட்டணம் ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஐந்தாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி T.A. இராமகிருஷ்ணையர் அவர்கள், Retired Sub-Judge, Palghat இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஆறாவது சங்கம் மகா-ராச-ராச-சிறி A.S. பாலசுப்பிரமணிய ஐயரவர்கள், B.A.,B.L., Sub-Judge, கும்பகோணம் இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது. ஆதரிப்பவர் 1. H.H. மகாராஜா ஹோல்கார், இண்டூர். 2. H.H. சேதுபதி மகாராஜா, இராமநாதபுரம், 3. The Right Hon'ble Viscountess Churchill, V.A. London. 4. மகா-ராச-ராச-சிறி சிவாஜிராஜா சாகிப் அவர்கள், தஞ்சாவூர். 5. “ பிரதாப்சிங் ராஜா சாகிப் அவர்கள், தஞ்சாவூர். 6. “ சாமிநாத விஜயதேவர் அவர்கள், ஜமீந்தார், பாப்பாநாடு. 7. “ V.P. மாதவராவ் அவர்கள்C.I.E. திவான், பரோடா. 8. “ ராவ் பகதூர் A. அண்ணாசாமித் தேவர் அவர்கள், உக்கடை 9. “ V. அப்பாசாமி வாண்டையார் அவர்கள், பூண்டி, 10. “ V. கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள், அரித்துவாரமங்கலம். 11. “ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், திருப்பாதிரிப்புலியூர். 12. “ ராவ் பகதூர் C. நாகோஜிராவ் அவர்கள் B.A, கோயம்புத்தூர். 13. “ ராவ் சாயேப் J. சுனாம்பட் அடகல்லி, பல்லாரி. 14. “ S.R.M.M.C.T. பெத்தாச்சி செட்டியார் அவர்கள், ஆண்டிபட்டி ஜமீந்தார். 15. “ ராய் பகதூர் J.S. ஞானியார் நாடார் அவர்கள் B.AL B..., Sub-Judge, Nagapatnam. 16. “ T.A. இராமகிருஷ்ணையர் அவர்கள் Retired Sub-Judge, Palghat. 17. “ A.S. பாலசுப்பிரமணிய ஐயரவர்கள் B.A.,BL, Sub-Judge, கும்பகோணம். 18. “ ராவ் பகதூர் N. கிருஷ்ண சாமி ஐயங்கார் அவர்கள் B.A., B.ட, கும்பகோணம். 19. “ T. சாம்பமூர்த்தி ராவ் அவர்கள் B.A., B.ட தஞ்சாவூர். 20. ” ஆதிநாராயணையர் அவர்கள், பாவூர். 21. “ S. வெங்கிடுசுப்பையர் அவர்கள் B.A., M.L., தஞ்சாவூர். 22. “ Dr. T.N. கோவிந்தையர் அவர்கள் MLB. & LM. திருநெல்வேலி. 23.” .இராதாகிருஷ்ணையர் அவர்கள் B.A., புதுக்கோட்டை , 24. “ T.D. சாமிநாதையர் அவர்கள், தஞ்சாவூர். சங்கத்திற்கு வந்திருந்த சங்கீத வித்துவான்கள் மகா-ராச-ராச-சிறி வீணை வேங்கடரமண தாஸ் பந்துலுகாரு, விஜயநகரம். “ பிடில் சபேசையரவர்கள், சென்னப்பட்டணம். “ பிடில் சாமிநாதையர் அவர்கள், பழமாறனேரி. “ கிருஷ்ணையர் அவர்கள், எர்னாக்குளம். “ வீணை வைத்தியநாதையர் அவர்கள், மாயவரம். “ பிடில் பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். “ முத்தையா பாகவதர் அவர்கள், அரிகேசவ நல்லூர். “ பிரதாப இராமசாமி பாகவதர் அவர்கள், பூவனூர். “ வீணை வெங்கடாசலமையர் அவர்கள், தஞ்சாவூர். “ நாகராஜ பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். “ துரைசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர். “ சப்தரிஷி பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். “ இராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், கும்பகோணம். “ வீணை இராமசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர். “ வீணை அப்பாக்கண்ணு பிள்ளை அவர்கள், சிதம்பரம். “ பிடில் நாராயணசாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர். மகா-ராச-ராச-சிறி பிடில் ஜோஹனாஸ் சுந்தரராஜம் அவர்கள், சென்னப்பட்டணம். “ “ கோவிந்த பாகவதர் அவர்கள், கருந்தட்டாங்குடி, தஞ்சாவூர். “ “ சாமா சாஸ்திரி அவர்கள், தஞ்சாவூர். “ “ ஜெகநாத பட்கோசாமி அவர்கள், தஞ்சாவூர். “ “ விசுவநாத சாஸ்திரியார் அவர்கள், தஞ்சாவூர். “ “ அப்பாசாமி ஐயர் அவர்கள், வையைச்சேரி. “ “ R. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், தமிழ் வித்துவான், தஞ்சாவூர். “ “ சங்கீத இராமச்சந்திர ஐயர் அவர்கள், உக்கடை, “ “ சாமிநாத பிள்ளை அவர்கள், தஞ்சாவூர். “ “ பிடில் பத்மநாப நாயுடு அவர்கள், தஞ்சாவூர். “ “ மிருதங்கம் சுவாமி ஐயர் அவர்கள், தஞ்சாவூர். “ “ மிருதங்கம் மணி பட்கோசாமி அவர்கள், தஞ்சாவூர். “ “ கடவாத்தியம் சுந்தரராம் ஐயர் அவர்கள், கும்பகோணம். “ “ S.V. ரெங்கசாமி ஐயங்கார் அவர்கள், சென்னப்பட்டணம். “ “ M.R. சீனிவாச ஐயங்கார் அவர்கள், சென்னப்பட்டணம். “ “ K.V. சீனிவாச ஐயங்கார் அவர்கள், திருச்சிராப்பள்ளி, “ “ சாது கணபதி சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்கள், திருவையாறு. “ “ K. இராமச்சந்திர ஐயர் அவர்கள், கீவளூர். “ “ சேஷையர் அவர்கள், மாயவரம். “ “ சொக்கலிங்க நாடார் அவர்கள், நடுக்காவேரி. “ “ சுவாமிதாஸ் ஹேண்றிங்ஸ் அவர்கள், விஜயபுரம். “ “ A.G பிச்சைமுத்துப் பிள்ளையவர்கள் B.A., LT., தஞ்சாவூர். “ “ வீணை பாக்கியம் அம்மான். (Mrs. Abraham Pandither) “ “ வீணை அன்னபூரணி அம்மாள். (Mrs. Gnanasigamany) “ “ பிடில் மரகதவல்லி அம்மாள். (Miss. Abraham Pandither) “ “ பிடில் கனகவல்லி அம்மாள். (Miss. Abraham Pandither) சங்கீத சம்பந்தமான வியாசம் வாசித்தவர்கள் மகா-ராச-ராச-சிறி A.G. பிச்சைமுத்துப் பிள்ளை அவர்கள் B.ALT, தஞ்கை . சங்கீதத்தின் உயர்வும், உபயோகமும், ஐரோப்பிய சங்கீத சரித்திரமும், அதன் சில அம்சங்களும் – “ R. சுப்பிரமணிய ஐயர் அவர்கள், தஞ்சாவூர். “ சங்கீதத்தின் உயர்வும், உபயோகமும் “ சப்தரிஷி பாகவதர் அவர்கள், தஞ்சை . “ சங்கீதமும் சாகித்தியமும், துவாவிம்சதி சுருதியின் நிர்ணயமும், உபயோகமும். “ A.P. கணேசையா அவர்கள், மைலாப்பூர். “ கர்நாடக சங்கீதம், அதன் தற்கால நிலைமை, சங்கீத இரகசியம், “ “ பாட்டுப்பாட வேண்டிய விதம். “ முத்தையா பாகவதர் அவர்கள், அரிகேசவ நல்லூர். சங்கீத அப்பியாச முறை. “ பஞ்சாபகேச பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். சங்கீதம் பாட வேண்டிய முறை; துவாவிம்சதி சுருதி விஷயம். 7. மகா-ராச-ராச-சிறி இராதாகிருஷ்ண பாகவதர் அவர்கள், கும்பகோணம். சங்கீதத்தின் உயர்வும்; பைரவி இராக ஆராய்ச்சி துவாவிம்சதி சுருதிப்படி “ S. சுப்பிரமணிய சாஸ்திரிகள், சமஸ்கிருத பண்டிதர், தஞ்சாவூர். சங்கீத போதன முறை, சுருதிவிசாரத்தின் உபக்கிரமம், துவாவிம்சதி சுருதி - விசாரணை, தாள விசாரணை. “ S.V. நடராஜ ஐயர் அவர்கள், சேங்காலிபுரம். இந்தியாவின் சங்கீத அபிவிர்த்தி. “ வீணை வெங்கடாசலமையர் அவர்கள், தஞ்சை. நாட்டை இராகம். “ PV.. கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் BLA, வக்கீல், தஞ்சாவூர். நாதப்பிரம்மம், நாதோபாஸனை, நாதமகிமை, தியாகராஜசுவாமி சரித்திரம், நாதமும் நவரசமும். “ P.S. சுந்தரமையர் அவர்கள் B.ALLT, தஞ்சாவூர். துவாவிம்சதிசுருதி. “ C. திருமலை நாயுடு அவர்கள் M.R.AS., சென்னப் பட்டணம். மாயாமாளவ ராகம். “ அப்பாசாமி ஐயா அவர்கள், வையைச்சேரி. துவாவிம்சதிசுருதி. “ சாமாசாஸ்திரி அவர்கள். துவாவிம்சதிசுருதி. “ வேங்கடரமணதாஸ் அவர்கள், விஜயநகரம். வீணை அப்பியாசிக்கும் வழி. “ T.A. வெங்கட்டராம சாஸ்திரிகள், தஞ்சாவூர். நாதப்பிரம்மம். “ வீணை அப்பாக்கண்ணு பிள்ளை அவர்கள், சிதம்பரம். வீணை . “ அரங்கநாத சுவாமிகள், சிதம்பரம். நாதம். “ ஜோஹனாஸ் சுந்தரராஜம் அவர்கள், சென்னப் பட்டணம். இந்திய சங்கீதத்தின் அபிவிருத்திக்குரிய சில முக்கியக் குறிப்புகள். “ சேத்துராம் பாரதியார் அவர்கள், தமிழ்ப் பண்டிதர், தஞ்சாவூர். தமிழ் நாட்டுப்பண்கள். “ நாகராஜ பாகவதர் அவர்கள், தஞ்சாவூர். தியாகராஜ ஸ்வாமிகளின் சரித்திரம். “ சபேசையரவர்கள், சென்னப் பட்டணம். துவாவிம்சதி சுருதி விஷயம். “ மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள். துவாவிம்சதி சுருதி பொதுக்குறிப்பு, சங்கீதத்தின் உயர்வு. சங்கீதத்தின் பூர்வீகம். “ பிரதாபராமசாமி பாகவதர் அவர்கள், பூவனூர். துவாவிம்சதி சுருதி. சங்கத்திற்குச் சகாயராயிருப்போரில் சபைக்கு வந்திருந்தவர்கள் 1. மகா-ராச-ராச-சிறி K.V. சீனிவாச ஐயங்கார் அவர்கள், B.A., LT., Dy-Collector. தஞ்சாவூர். 2. ” G கோதண்டராமான்ஜுலு நாயுடுகாரு அவர்கள், B.ALB.L, Sub-Judge, தஞ்சாவூர். 3. “ P.C. திருவேங்கடாச்சாரியார் அவர்கள், B.A, B, Sub-Judge, தஞ்சாவூர். 4. “ T. சேஷையர் அவர்கள், B.A Dy-Collector, தஞ்சாவூர். 5. “ ராவ்சாஹேப் D. திரவிய நாடார் அவர்கள், B.A., Dy-Collector, தஞ்சாவூர். 6. “ D.K. குன்னு 'மேனன் அவர்கள், B.A., Dy-Collector, தஞ்சாவூர். 7. “ Y.V. சீனிவாசையர் அவர்கள், B.A., Dy-Collector, தஞ்சாவூர். 8. “ S. சுந்தரமையர் அவர்கள், Receiver, தஞ்சாவூர். 9. “ அப்டுல் கரீம் கான் சாஹேப் அவர்கள், Inspector of Police, தஞ்சாவூர். 10. “ மல்லாரிராவ் அவர்கள், Retired Dist. Mபாsif, தஞ்சாவூர். 11. “ விஜயராகவாச்சாரியார் அவர்கள், M.A., Post Master, தஞ்சாவூர். 12. “ ராவ்பகதூர் K. சீனிவாச பிள்ளை அவர்கள், தஞ்சாவூர். 13. “ புருஷோத்தம் முதலியார் அவர்கள், B.A.,M.E.C.M. தஞ்சாவூர். 14. “ T.D. கோவிந்தையர் அவர்கள், M.B.COM., தஞ்சாவூர். 15. “ P.V. நாகநாத சாஸ்திரி அவர்கள், B.A., B.ட, தஞ்சாவூர். 16. “ N.K. இராமசாமி ஐயர் அவர்கள், B.A., B.ட தஞ்சாவூர். 17. “ T.K. அனந்தபத்மநாப ஐயர் அவர்கள், B.A., மதுரை. 18. “ K. நடராஜன் அவர்கள், B.A., B.ட தஞ்சாவூர். 19. “ P.V. மகாலிங்க ஐயர் அவர்கள், B.A., B.ட, தஞ்சாவூர். 20. “ E. சூரிய நாராயண ஐயர் அவர்கள், BA., B.ட தஞ்சாவூர். 21. “ P.V. ராமசேஷையர் அவர்கள், B.A, B.ட, தஞ்சாவூர். 22. “ T.V. பஞ்சாபகேச ஐயர் அவர்கள், B.A., B.ட, தஞ்சாவூர். 23. “ பவானிராவ் சாஹேப் அவர்கள், தஞ்சாவூர். 24. “ T.S. சுந்தரமையர் அவர்கள், தஞ்சாவூர். 25. “ V. மங்கன வெட்கார்Editor"modem world”, மைலாப்பூர். 26. “ T.R. சீனிவாச ஐயங்கார் அவர்கள், B.A., LTLM.R.A.S. தஞ்சாவூர். 27. “ Rev. J.B. ஞான ஒலிவு அவர்கள், B.A., LT., தஞ்சாவூர் 28. “ S.A. இஸ்ரவேல் பிள்ளை அவர்கள், B.A., LL.T., தஞ்சாவூர். 29. “ S. தானியேல் பிள்ளை அவர்கள், B.A., LT., தஞ்சாவூர். 30. “ R. சுந்தரமையர் அவர்கள், B.A., LT., தஞ்சாவூர். 31. “ A.C. பால் அவர்கள், B.A., தஞ்சாவூர். 32. “ V. வாமனராவ் அவர்கள், B.A., 33. “ K. பிரகதீசன் அவர்கள், B.A., 34. “ V. இராமையாகாரு அவர்கள், B.A., 35. “ இராமச்சந்திரையர் அவர்கள். 36. “ M.P. துரைசாமி ஐயர் அவர்கள். தஞ்சாவூர். 37. “ S.V. நடராஜ ஐயர் அவர்கள், சேங்காலிபுரம். 38. “ வித்துவான் அரசன் சண்முகம் பிள்ளை அவர்கள், சோழவந்தான். 39. “ D. சவரிராய பிள்ளை அவர்கள், M.R.A.S., திருச்சிராப்பள்ளி. 40. “ L உலகநாத பிள்ளை அவர்கள், தமிழ்ப்புலவர், தஞ்சாவூர். 41. “ தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள், சென்னப்பட்டணம். சங்கத்திற்குச் சகாயராயிருப்பவர்கள் , 1. சப்கமிட்டி கூடிய காலம் 1912-ம் வருஷம் பிப்ரவரி௴t14௳ 2. முதலாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1912-ம் வருஷம் மே- ௴ 27௳ 3. இரண்டாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1912-ம் வருஷம் ஆகஸ்டு-மீ 21௳ 4. மூன்றாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1913-ம் வருஷம் ஏப்ரல்- ௴19௳ 5. நாலாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1913-ம் வருஷம் ஆகஸ்டு-௴ 9௳ 6. ஐந்தாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1914-ம் வருஷம் ஏப்ரல்- ௴18௳ 7. ஆறாவது கான்பிரன்ஸ் கூடிய காலம் 1914-ம் வருஷம் அக்டோபர்-௴24௳ 6. பரோடா திவான் மகா-ராச-ராச-சிறி மாதவ ராவ் அவர்கள், C.I.E . சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். “வித்துவான்களே! கனவான்களே! - சங்கீத வித்வ சிரோமணிகளால் நிறையப்பெற்ற இந்த ஸபையில் அக்கிராசனாதிபத்யம் வசிக்கும்படி என்னை இச்சங்கத்தார் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெரும் கண்ணியமாகக் கொள்ளுகிறேன். கனம் பண்டிதரவர்களுக்கு அதற்காக நான் முக்கியமாய் நன்றியுள்ளவனா யிருக் கிறேன். இங்கே வாசிக்கப்பட்ட உபந்நியாசங்களைக் கேட்டுக் கொண்டிருக் கையில் என் மனதில் சில எண்ணங்கள் உதித்தன. இவ்விதமான ஒரு சங்கம் ஏற்படுத்தி வித்துவான்கள் எல்லாரும் சேர்ந்திருந்து இந்திய சங்கீதத்தின் அம்சங்களை மற்றவர்களுக்குப் படித்துக்கொடுக்கும்படி பண்டிதரவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டுக்காக ஜனங்கள் யாவரும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்படியாகக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எல்லாவித வித்தைகளுக்கு உறைவிடமா யிருந்த இந்தத் தஞ்சைமாநகரில் மற்றவித்தைகள் க்ஷீணித்துப் போனதைப் போலவே சங்கீத வித்தையும் க்ஷீணித்துப் போக ஆரம்பித்து விட்டது. அப்படியிருந்த சமயத்தில் இவ்வித சங்கம் ஒன்று ஏற்படுத்தி வித்துவான்களை ஆதரிக்கிற அவர்களுடைய செயலானது அந்த வித்தையைத் திரும்ப உயிர்ப்பிக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. இந்திய சங்கீத ஆராய்ச்சியும் வித்துவத்துவமும் முற்காலத்தில் இராஜாக்களால் சம்ரக்ஷிக்கப்பட்டு வந்தன. அப்படி ராஜாக்களால் செய்யப்பட்டு வந்த வேலையானது இப்போது பண்டிதரவர்களால் செய்யப்பட்டு அவர்களே அதன் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு நடத்தி வரும் செயலை யார்தான் மெச்சிக் கொள்ளாதிருப்பார்? ஆனால் ஸங்கத்தின் அங்கத்தினரும் அதன் விர்த்தியை விரும்பும் மற்றவர்களும் தாங்களும் இனிமேல் இது விஷயத்தில் உதவி செய்வோம் என்று வாக்களித்திருப்பதும் மெச்சிக் கொள்ளப்படத் தக்கதே. இப்பேர்ப்பட்ட பெரும் வேலைகளில் பாரம் ஒருவர் மேல் மாத்திரம் விழாமல் பலரும் சேர்ந்து அதன் பாரத்தைத் தாங்குவதானது மிகவும் நல்ல காரியம். காலவிசேஷத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட சங்கங்கள் பலர் கூடிச் செய்ய வேண்டிய வேலையென்று தெளிவாய் விளங்கும். தற்கால அபிப்பிராயம் என்னவென்றால், வித்தைகளையும், தொழில்களையும் சம்ரக்ஷணை செய்வது துரைத்தனத்தாருடைய வேலை யல்ல. ஜனங்களுடைய வேலையென்பதே. இதற்கிசைந்தே இந்தச் சங்கத்தின் வேலையும் நடக்கிறதாகத் தெரிகிறது. ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கமானது, இப்போது பலபேருடைய முயற்சியாலும் பிரயோஜனத்துக்கேற்ற விதமாய் நடத்தி வரப்படுகிறJ. நான் இன்னொரு காரியமும் கவனித்தேன். முதலாவது நாதமகிமையைப் பற்றி மகா-ராச-ராச-சிறி P.V. கிருஷ்ணசாமி ஐயரவர்கள் பேசியபோது அதைப்பற்றி மிகவும் வியப்புற்றேன். அப்புறம் ஆங்கிலேய சங்கீதத்தைப் பற்றியும், அதற்கும் இந்திய சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்தைப் பற்றியும் மகா-ராச-ராச-சிறி A.G. பிச்சைமுத்து அவர்கள் பேசினபோது இன்னும் அதிகமாய்ப் பிரமையுற்றேன். எனக்கு இங்கிலீஷ் சங்கீதத்தைப் பற்றி வெகு தாழ்வான அபிப்பிராயம் இதுவரையிலும் இருந்தJ. இப்போது அதில் இருக்கும் உயர்வை அறிந்து கொண்டேன். உபந்நியாசங்கள் எல்லாம் தமிழ்ப் பாஷையிலேயே இருந்ததைக் கண்டு மிகவும் சந்தோஷப் பட்டேன். ஜனங்களுடைய ஸ்வய பாஷையிலேயே அவர்களுக்கு வித்தை களைச் சொல்லிக் கொடுப்பதானது மெச்சப்படத்தக்க காரியம். இந்த உபந் நியாசங்களை யெல்லாம் இங்கிலீஷில் மொழி பெயர்த்து மாகாணங்கள் தோறும் பிரசுரித்தால் வெகு பிரயோஜனமாயிருக்கும். இவைகளில் முக்கியமாக மகா-ராச-ராச-சிறி A.G. பிச்சைமுத்து அவர்கள் ஆங்கிலேய சங்கீதத்தைப் பற்றியும் இந்திய சங்கீதத்தைப் பற்றியும் பண்ணின உபந் நியாசத்தை இங்கிலீஷில் பிரசுரித்தால் அநேகருக்குப் பிரயோஜனமா யிருக்கும். அது அநேகருடைய கண்களைத் திறக்கும் என்பதற்குச் சந்தேக மில்லை. இப்பேர்ப்பட்ட வித்துவான்களை ஒன்று சேர்த்து ஒருவருடைய கொள்கை மற்றொருவருக்குப் பிரயோசன முண்டாகத் தெரியும்படி எளிதில் சொல்லும்படியாக இப்படி ஓர் சங்கத்தை ஏற்படுத்தினதற்காக மகா-ராச-ராச-சிறி ராவ் சாஹேப் M. ஆபிரகாம் பண்டிதரவர்களுக்கு வந்தனம் சொல்லு கிறேன். பண்டிதரவர்கள் இது விஷயத்தில் மாத்திரமல்ல. தேசாபிவிர்த்திக்கு வேண்டிய இன்னும் அநேக காரியங்களில் சிரத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்று நம்மெல்லோருக்கும் தெரியும். கடைசியாக, ஸங்கீத களஞ்சியம் என்று பேர் வாங்கின இத்தஞ்சை மாநகரில் சங்கீதமானது திரும்பவும் ஸ்தாபிக்கப்படவும் அதினால் இந்தச் சங்கம் நெடுநாள் நிலைத் திருந்து நல்ல பெயர் வாங்கவும் கடவுளை நோக்கிப் பிரார்த்திக்கிறேன்.” 7. பாலக்காடு மாஜி சப்ஜட்ஜ் மகா-ராச-ராச-சிறி இராமகிருஷ்ணையர் அவர்கள் B.A.,B.L., ஐந்தாவது கான்பரென்ஸின் அக்கிராஸனாதிபதியாய்ச் சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். “கனவான்களே! இப்போது வாசிக்கப்பட்ட இரண்டு உபந்நியாசங்களும் யாவருக்கும் மிகவும் நன்மை பயக்கத் தக்கவைகளாயும், யாவருடைய மனதையும் கவரத்தக்க இனிமையுள்ளவைகளாயும் இருந்தன என்று நாம் யாவரும் ஒப்புக் கொள்வோம். இந்திய சங்கீத விஷயத்தில் மகா-ராச-ராச-சிறி பண்டிதரவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசைக்காக நாம் யாவரும் அவர்களுக்கு நன்றி யுள்ளவர்களாயிருக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட வேலையைத் தஞ்சாவூரில் ஆரம்பித்தது தகுதியே. ஏனென்றால் இந்நகரானது சங்கீதம் ஒருகால் கீர்த்தி பெற்றிருந்த இடமாய் மாத்திரமல்ல. தென்னிந்தி யாவின் பேர்போன சங்கீதவித்துவான்கள் உற்பத்தியான இடமாயுமிருக்கிறது. மகா-ராச-ராச-சிறி பண்டிதரவர்கள் ஆரம்பித்த இந்த வேலையானது துவக்கத்தில் மலையேறும் விஷயம்போல் கடினமாயிருந்தபோதிலும், இப்படிக் காலாகாலங்களில் வித்துவான்கள் ஒன்றுகூடி இந்த வேலையை நடத்துவதானது அக்கடினத்தைச் சற்று நீக்கி நன்மை பயக்கக்கூடியதா யிருக்கும் என்பதற்குச் சந்தேகமேயில்லை. மகா-ராச-ராச-சிறி பண்டிதரவர்கள் எதைக்கண்டும் மனஞ்சலித்துப் போகக்கூடாJ. சங்கீதமானது சிறந்த கலைகளில் முதலாவதானJ. சங்கீதம் இல்லாத ஜாதி கிடையாது. தெய்வத்தின் அம்சம் சங்கீதத்திற்கு இருப்பதால் ஒருவன் ஆத்மலாபம் அடைவதற்கு அது அவனைத் தூண்டும் கருவியாயிருக்கிறது. இந்தியாவில் மற்ற கலைகள் சிறந்து விளங்கினதுபோலவே சங்கீதமும் வெகு உன்னத பதவியை அடைந்திருந்த காலம் உண்டு. சங்கீதத்தின் சிறப்பினால் மனித வாழ்க்கையில் ஏற்படும் அநேக விஷயங்களும் மேன்மையை அடைந்திருந்தன. வீட்டில் நடக்கும் சம்பவங்களிலும், கோவில்களிலும் மற்ற விசேஷங்களிலும் காணப்படும் சிறப்புக்கும் மேன்மைக்கும் காரணம் சங்கீதமே. ஆதிகாலத்தில் சங்கீதத்தை விர்த்தி பண்ணுவது ராஜாக்களுடைய கடமையாயிருந்தது. இப்போதோ அது சாதாரண ஜனங்களுடைய வேலையாயிருப்பதால் யாவரும் அதற்காக உழைப்பது அவசியம்.” 8. கும்பகோணம் சப்-ஜட்ஜ் மகா-ராச-ராச-சிறி A.S. பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் B.A.B.L., 6வது கான்பரென்ஸின் அக்கிராஸனாதிபதியாய்ச் சங்கத்தைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். “இந்திய சங்கீதம் இந்து தேசத்திற்குப் பூர்வீகமாயுள்ளJ. அந்த சாஸ்திரமானது இந்த தேசத்து ரிஷிகளுக்குத் தேவர்களால் அனுக்கிரகம் பண்ணப்பட்டதென்று அறிவோம். சங்கீதமானது முதல் முதல் தேவர்களால் அப்பியாசிக்கப்பட்டதென்பது நடராஜருடைய ஆனந்தத் தாண்டவத்தால் நன்றாய்த் தெரிகிறது. தேவர்களுக்குள் கானம், தாளம், பாட்டோடுகூடிய கீர்த்தனமானது மிகுந்த குதூகலத்துடன் கொண்டாடப்பட்டு வந்ததென்பதும் இந்தியர்களின் வேதங்கள் சங்கீதத்தின் இரகசியத்தைக் கைப்பற்றியே சொல்லப்பட்டிருக்கிறதென்றும் மேல் கண்ட வேதங்களைப் பார்த்தவர் களுக்குத் தெளிவாய் விளங்கும். ரிக்வேதமானது ஏக சுரத்திலிருந்துண்டாகி மற்ற வேதங்களில் புகுந்து சுரப்பெருக்கத்தையடைந்ததென்றும் வேத பாராயணமே சங்கீத சாஸ்திரத்தை அனுசரித்ததென்றும் விளங்குகிறJ. இவ்விதம் காதையென்பது இரண்டு சுரத்திலும் சாமமென்பது மூன்று சுரத்திலும் பாடப்படுகிறJ. இம்மூன்று சுரத்திலிருந்து ஏழு சுரம் வரைக்கும் எப்படிக் கிடைத்த தென்பதைப் பற்றிப் பாணினி முனிவர் சவிஸ்தாரமாய் எழுதியிருக்கிறார். இப்படி வேதங்களிலிருந்து உற்பத்தியான இந்தச் சங்கீதம் தேவலோகத்தில் அப்பியாசிக்கப்பட்ட அளவில் சாகித்யம் நடனம் முதலான அநேக சாஸ்திரங்கள் உண்டாவதற்கு இடமாயிற்று. அநேக சாஸ்திரங்களாக இவ்விதம் வியாபித்து விளங்கின இந்தச் சங்கீத சாஸ்திரம் காந்தர்வ வேதமென்கிற பெயர் பெற்று வழங்கியJ. பக்தி சிரத்தையோடு இதை அப்பியாசம் பண்ணுகிறவர்களுக்குத்தான் சங்கீதத்தின் பெருமை தெரியும். சபேசர் நர்த்தனம் பண்ணும்போது மகா விஷ்ணு மத்தளம் போடவும் புல்லாங் குழல் ஊதவும் பிரம்மா தாளம் போடவும் கணேசர் சாலரிடவும் பிரபஞ்ச மாயா லோகத்தின் சலனத்தை நடித்துக் காட்டியதுபோல முதல் முதல் தேவலோகத்தில் நடந்த சங்கீத வைபவத்தை நாரதர் தெரிந்து கொண்டு திரிலோகத்திலும் அதினுடைய பெருமையை வியாபித்து விளங்கும்படிச் செய்தார். இந்திரன் சபையில் கானம் நாட்டியம் நர்த்தனம் சாகித்தியம் பிரபல திசையை யடைந்ததாகத் தெரிகிறது. அப்படியிருக்க அதை உலக தந்திரத்தில் சத்காரியங்களுக்கு விரோதமாய் பிரவிர்த்தி செய்ய மனுநாரதர் முதலான ஸ்மிருதி கர்த்தர்கள் தபோ மார்க்கத்தில நியம நிஷ்டையாயிருப்பவர்களுக்குக் கந்தர்வவேதம் ஹிதமல்லவென்று எழுதும்படி நேரிட்டது. ஆயினும் பிர்ம்மநிஷ்டரான நாரதரும், திரேதாயுகத்தில் வால்மீகி மகரிஷியும் அவர் சிஷ்யர்களான இராஜ குமாரர்கள் குசீலவர்களும், துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மா, கோபிகள், அர்ஜுனசுவாமி முதலிய உயர் குலத்தோர்கள் கந்தர்வ வேதத்தைக் கைவிடாது அப்பியாசித்து அனுபவித்து வந்ததாகத் தெரிய வருகிறது. அக்காலத்தில் சங்கீதமும் அங்கங்கே சக்கிரவர்த்திகளால் அபரிமிதமாக சம்மானிக்கப்பட்டு கேட்போர்களுக்கு உயர்ந்த அறிவையும் சத்குணத்தையும் ஆத்மபோதத்தையும் உண்டாக்கியJ. அமெரிக்கா முதலான பெரிய தேசங்களில் சர்வகலாசாலைகளில சங்கீதமும் ஒரு முக்கியப் பாடமாக ஏற்பட்டு அதில் சாஸ்திர பிரக்ஞையும் அப்பியாசத் தேர்ச்சியுமுள்ள மாணாக்கர்களுக்குப் பட்டம் யோக்கிதாபத்திரம் முதலானது கிரமமாகக் கொடுத்து வருகிறார்கள். ஐரோப்பிய சங்கீத வித்தையில் தேர்ந்த ஓர் நிபுணி சென்னைக்கு வந்திருந்தபோது அவர்கள் முன் கோபிகா கீதையைப் பாடிய ஒரு சாமானிய வைதீக பிராமணரின் பாட்டைக் கேட்டு தான் ஐரோப்பிய சங்கீதத்தில் மிலடி என்று படித்து உயர்வாக நினைத்திருந்ததை இப்போதுதான் கேட்டு ஆனந்தமடைந்தேன் என்பதைக் கேட்ட நான் நமது இந்திய சங்கீதத்தின் உயர்வை நினைத்துச் சந்தோஷமடைந்தேன். அப்படிப் பாடுகிறவர்கள் தற்காலத்தில் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள். பின்னிட்டு அக்பர் சக்கிரவர்த்தி காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் சங்கீதத்தில் தேர்ச்சி யுள்ளவரொருவரையும், அரபி சங்கீதத்தில் கவாய் ஒருவரையும், இந்திய சங்கீதத்தில் வித்வானொரு வரையும், ஆஸ்தான பண்டிதர்களாக நியமித்து இம்மூன்று சங்கீதங்களின் தாரதம்மிய ஆராய்ச்சிகள் செய்வித்ததாயும், ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் சங்கீதம் கற்றுக் கொடுக்கப்பட்டதென்றும் சங்கீதம் தெரியாதவர்களிருக்கப்படாதென்று சட்டமிருந்ததாகவும் அபூல் பாசல் எழுதியிருக்கிறார். தற்காலத்திலோ சங்கீதம் படித்தால் பிள்ளைகளின் படிப்புக் கெட்டுப் போகுமென்று நினைக்கிறார்கள். அவுரங்கசீப் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். அக்பர் செய்த பற்பல நன்மைகளும் எப்படி மாறுபாடடைந்தனவோ அப்படியே மனூசி என்றும் சரித்திரக்காரர், அவுரங்கசீபு சங்கீதத்தைக் கல்லறை யடக்கம் செய்ததைப்பற்றி மனசுபதறும்படி எழுதியிருக்கிறார். அக்பர் நாளில் நடந்த ஆராய்ச்சிகளின் பல ரூபமாய் கபீர்தாஸ், விட்டல்தாஸ், புரந்தரதாஸ் முதலிய மகான்களின் சங்கீதங்கள் பூர்வீக சங்கீதத்துக்கும் தற்கால சங்கீதத்துக்கும் மத்திமமாக இருக்கிறJ. அவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு அடங்காத மகிழ்ச்சியும் ஆத்ம போதமும் சமாதி நிலையும் உண்டாக்கக் கூடியவைகளாகவே யிருக்கின்றன. நம்முடைய தற்கால சங்கீதத்துக்கும் தாஸ் கீர்த்தனங்களுக்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறJ. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய்ச் சங்கீதம் அப்பியாசிக்கப் பட்டு வருகிறது. அந்த முறைகளெல்லாம் ஒருவாறு தெரிந்து இந்திய சங்கீதத்தில் அவைகளில் உத்தமமாயுள்ளவைகளைச் சேர்த்துக் கொண்டு இந்திய சங்கீதத்தை விருத்தி பண்ண வேண்டியது நம்முடைய கடமை. நம்முடைய சங்கீத வித்துவான்கள் இந்தக் கடமையைத் தெரிந்து கொள்ளவில்லை. தென்னிந்தியாவில் சமீப காலத்தில் சங்கீதம் அபிவிருத்திக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சரித்திரபூர்வமாகத் தெரிகிறது. தெலுங்கு தேசத்தில் ஷேத்திரிஞ்ஞரின் பதங்கள் அற்புத கற்பனை யுள்ளவைகளாயிருக்கின்றன. கேட்போர் மனதைப் பரிசுத்தப்படுத்தி சமஸ்த பாபத்திலிருந்து நீக்கி ஈஸ்வர அர்ப்பணமாக மனதை நிலை நிறுத்தும்படியான தெளிவான பதங்கள் அமைந்துள்ளன. ஷேத்திரிஞ்ஞர் பதங்கள் தற்காலம் கேட்பதற்கு அபூர்வமாகிவிட்டன. ஒருவரும் அவைகளைப் பாடுகிறதில்லை. சதுரில்மாத்திரம் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஷேத்திரிய பதங்களே இந்தக் கெதியிலிருக்க இந்திய சங்கீதத்துக்கு மாத்திரம் என்ன பெருமை? தஞ்சாவூர் சமஸ்தானத்தைச் சங்கீதத்திற்கு இருப்பிடம் என்று சொல்வார்கள். இங்கே சங்கீத வித்வான்களுக்குள் பாட்டில் ஒற்றுமை யில்லை. ஒருவர் பாடுவதுபோல இன்னொருவர் பாடுவதில்லை. தீக்ஷதர், தியாகஐயர், சாமாசாஸ்திரி முதலிய மகான்களின் பதங்களை யாரால் மறக்கக் கூடும்? அவர்களுடைய கீர்த்தனங்களும் கீதங்களும் கேட்போர் மனதை உருகும்படி செய்கின்றன. சமஸ்த உபநிஷத்துக்களின் ரகசியத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. உபநிஷத்துக்களின் சத்து அடங்கிய அவர்களுடைய இருதயகமலத்திலிருந்து வந்தபடியால் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உபநிஷத் தாகவே விளங்குகிறJ. நிறைவுள்ள இருதயத்திலிருந்து பரவசப் பட்டுத் தெய்வீகமாய் வெளிப்படுகிற வாக்கே சங்கீதமல்லவா? கேட்பவர்களின் மனதைப் பரிசுத்தப்படுத்தித் தெய்வத் தன்மையில் மனதை நாடும்படிச் செய்வதல்லவோ சங்கீதத்தின் பயன். நமது சங்கீத சாஸ்திரத்தின் முக்கியக் கொள்கையே அப்படித்தான். பிரம்மம் நாத சொரூபமாகி சிருஷ்டி ஸ்திரி சம்ஸாரங்களுக்குக் காரணமாயிற்று. இதரபூதங்களான சுவரூபங்கள் உபாதான காரணமாய் மாத்திரமாயின. நாதத்துக்குச் சுவரூபங்களை உண்டுபண்ணவும் காப்பாற்றவும் அழிக்கவும் சக்தி உளதென்று பாச்சாத்தியர்களுடைய சயன்சினாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். அது கொண்டு நாதத்திலிருந்து உற்பத்தியான நமது ஆத்மா சப்த சுரங்களாய் விளங்கும் தன்மையைநாதானு சந்தானத்தில் அகன்று ஆதிமூலஸ்தானஸ்வரத்தில் லயமடைவித்து சுவரூபசாஷாத் காரம் சுவரூபலயம் என்ற மோக்ஷங்களைப் பெறலாமென்பது சித்தாந்தம். இச்சித்தாந்தமே நமது இராஜாங்கத்தில் வெகு காலம் ஆஸ்தான கவியாயிருந்த ஆல்பிரட் டெனிசன் என்பவர் தன்னுடைய நாமமாகிய மந்திர சுவரூபத்தைத் தியானித்ததால் அவருக்குண்டாகிய சுவரூப சாக்ஷhத்காரத்தை அவர் பிளட்டு துரையால் நடந்த உணர்ச்சி மாறுபாடுகளைக் குறிக்கிற ஆராய்ச்சியிலும் புரொபஸ்ஸர் டிண்டலின் சம்பாஷணையிலும் ஏன்ஷியண்டு சேஜ் என்னும் கவியிலும் வெளியிட்டிருக்கிறார். நாதம் அல்லது மந்திரங்களின் மகிமையை இதர நாடுகளிலும் அன்னிய மதஸ்தர்களும் அந்நாட்டு மகான்களான கிறிஸ்து மகம்மது முதலானவர்களாலும் கொண்டாடியும் அனுபவித்துமிருக்கிறதாகத் தெரிய வருகிறது. இந்தியாவில் தற்காலம் அனுஷ்டிக்கப்படுகிற சங்கீதத்தின் அருமை அதை அப்பியாசிக் கிறவர்களுடைய தன்மையைப் பொறுத்ததாயிருக்கிறது. சங்கீதம் எந்த விஷயத்துக்கு உபயோகப் படுத்தப்படுகிறதோ அதைக் கொண்டே அந்த சாஸ்திரத்துக்குப் பெருமை ஏற்படும். அதனுடைய அருமை பெருமையை அறியாத சிலர்கள் அதை விவஸ்தையில்லாது உபயோகப் படுத்தி சாஸ்திரத்திற்குப் பெருமைக்குறைவு உண்டுபண்ணுகிறார்கள். இந்திய சங்கீதம் தற்காலம் இவ்விதமான குறைவை யுடையதாயிருக்கிறது. தகுதி யில்லாத பாடகர்களால் சங்கீத சாஸ்திரத்துக்கே ஊனம் ஏற்படுகிறJ. ஆதலால், சங்கீதத்தின் செயலும் பயிற்சியும், சாஸ்திரம் தெய்வ பக்தி இம்மார்க்கத்தை யனுசரித்தேயிருக்க வேண்டும். தெய்வானு சந்தானமில்லாத சங்கீதமும், உதரபோஷண மாத்திரமுள்ள தொழிலும் மாங்கல்யமல்லாத ஆபரணங்களும் போல பயன்படவுமாட்டாது, சோபிக்கவுமாட்டாJ. அவ்வித மாய்ச் சங்கீதத்தை அப்பியாசித்து வெளிப்படுத்தின மகான்களின் பரம்பரையில் தற்காலம் ஒருவரும் இல்லை. அவர்கள் முறைப்படி சாஸ்திரத்தைத் தொடர்ந்து விருத்தி செய்கிறவர்களும் ஒருவருமில்லை. இருக்கிற வித்துவான்கள் மனோபாவம் என்று ஒரு பெயர் வைத்துக்கொண்டு இஷ்டம்போல் பாடுகிறார்கள். தியாக ஐயர் கீர்த்தனம் பாடும்போது இன்ன கீர்த்தனமென்றே புரியவில்லை. சாஸ்திரம், முறை, கருத்து, ஒழுங்கு எல்லாவற்றையும் விட்டு ஒருவித பக்தியிலும் கலப்பில்லாமல் யாருடைய வழியென்றும் தெரியாமல் எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி நூதன முறையில் பாடக் கேட்கிறோம். இதுதான் அவர்களின் மனோதர்மத்தின் விளையாட்டு இப்படியிருந்தால் சாஸ்திரம் ஏன் சிலாக்கியக் குறைவை யடையாது? தற்கால சங்கீத வித்துவான்கள் அப்பியாசிப்பது போல் அப்பியாசித்தால் எந்தச் சாஸ்திரந்தான் முன்னுக்கு வரும்? வைத்திய சாஸ்திரம் எங்கே? ஜோதிடம் எங்கே? சங்கீதம் எங்கே? இந்தச் சாஸ்திரங்களில் முயன்றவர்கள் சாஸ்திரத்தைவிட்டு சமயசஞ்சீவிகளாய்ப் பரம்பரை மாத்திரம் போதுமென்றிருந்து வருவதால் நஷ்டப் பிராயங்களாகிவிட்டன. சாஸ்திரத்தி லிருந்து நழுவினால் ஒன்றையேனும் சரியான வழியில் காணமாட்டோம். ஒரு சாஸ்திரமும் நம்மால் பிரகாசத்துக்கு வராது. பூரணயோக்கிதையும்,. பொறுப்புமுள்ள வித்துவான்களும், சாஸ்திரத்தைக் கற்று நிர்வகிக்கும்படியான சிஷ்யர்களும் தேவை. சங்கீதம் அப்பியாசிப்பவர்கள் அந்தச் சாஸ்திரத்தின் பெருமையையும் அதை அறிவில்லாமல் உபயோகப்படுத்துவதாலுண்டாகும் அபாயங்களையும் அந்தச் சாஸ்திரத்துக்கே வரக்கூடிய விகாரங்களையும் முற்றிலும் அறிய வேண்டும். இத்தியாதி விஷயங்களை உத்தேசித்து ஒரு சபை ஏற்படுத்த வேண்டுமென்பது வெகுகாலமாக என்னுடைய விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்து நான் பார்க்கும்படி ஏற்பட்டதானது மகா-ராச-ராச-சிறி பண்டிதர் அவர்களுடைய பாக்கியம். சங்கீத விஷயமாய் அவர்கள் எடுத்துக்கொள்ளுகிற சிரமத்துக்குச் சரியானபடி பெருமை சொல்ல எனக்குச் சக்தியில்லை. இந்தச் சபையினுடைய கருத்தும் அதை நடத்துகிற விதரணையையும் கவனிக்கும் பொழுது, எனக்கு அடங்காத சந்தோஷமுண்டாகிறJ. பண்டிதர் அவர்களின் குழந்தைகள் இப்பொழுது தாளம் லயம் ஸ்வரம் வர்ணம் மெட்டு உருக்கம் வாக்குச்சுத்தி பக்தி வழுவாது பாடக்கேட்ட எனக்கு இந்திய சங்கீதத்திற்கு ஏற்பட்ட குறைவெல்லாம் போய் பூர்வத்திலுள்ள பெருமை மறுபடியும் ஏற்பட்டுவிடுமென்று நிச்சயமாகி விட்டது. சங்கீத அப்பியாசம் பண்ணவும் வித்துவான்களை ஆதரிக்கவும் ஒவ்வொரு வித்துவான்களுக்குள்ள சங்கீதத் தேர்ச்சியை நிர்ணயிக்கவும் தகுந்த ஒரு சபை சென்னப்பட்டணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று ஏழு வருஷமாக எத்தனித்தும் நிறைவேறவில்லை. வித்துவான்களை ஒருமிக்கக் கொண்டுவரவும் சாஸ்திர சம்பந்தமான புஸ்தகங்கள் லைபரேரி சேர்க்கவும் இன்னும் பலவிதமான வாத்தியங்களைச் சேர்த்து வைத்து வித்துவான்களுக்கும் அப்பியாசிப்பவர்களுக்கும் பிரயோசனப் படும்படிச் செய்ய வேண்டுமென்பது என்னுடைய நீடித்தகால விருப்பம். சரஸ்வதி சபை, பார்த்தசாரதிசபை, கிருஷ்ணகான சபை முதலிய சபைகள் பட்டணத்தில் ஏற்பட்டிருக்கின்றன. பாடிச் சம்பாதிப்பதும் பாடகர்களுக்குப் பாட்டுக் கச்சேரிகளுக்குப் பணம் கொடுப்பதும் சங்கீத சாஸ்திரத்தை ஆதரிக்கிறதாகமாட்டாது. காசுக்காகப் பாடுகிற பாட்டுச் சங்கீதத்தின் அருமையைத் தெரியும்படிச் செய்யாJ. சங்கீதத்தின் நோக்கம் தெய்வீகமான ஊக்கத்தை யுண்டாக்குவதுதான். எப்பொழுது இந்தக் கருத்தை அவலம்பித்து, அதே சங்கீத சாஸ்திரத்தின் தர்மம் என்று ஒப்புக்கொண்டு அப்பியாசிக்கி றோமோ அப்பொழுதான் இந்திய சங்கீதத்தின் பெருமையை அறிந்தவர்களாகவும் அதைக் காப்பாற்றுகிறவர்களாகவும் நாம் சொல்லிக் கொள்ளலாம். இப்பொழுதுபோல சங்கீத அப்பியாசமிருக்குமானால் பரத சாஸ்திரம் எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்குச் சங்கீத சாஸ்திரமும் வந்துவிடும். பரதசாஸ்திரத்தில் பாவத்தை வியக்தமாக ஆராய்ச்சி பண்ணி அறிந்தவர்களில்லை. எவரைக் கேட்டாலும் தெரிந்து கொள்ள மார்க்கமில்லை. இதே அபாயந்தான் இந்திய சங்கீதத்திற்கும் ஏற்பட்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஜனங்கள் மற்ற சாஸ்திரங்களை அப்பியாசிப்பதுபோலவே பெரியவர்கள் முறை தவறாமல் சாஸ்திரமாகவே சங்கீதத்தையும் அப்பியாசிக்க வேண்டும். இதற்கெல்லாம் முக்கியமாய் வேண்டியது சாஸ்வதமான தெய்வபக்தி, அதிலிருந்துண்டாகும் மனோ வாக் காய சுத்தி, சங்கீதத்தின் கௌரவம், அதை உபயோகப்படுத்தும் முறை இவைகள்தான். பகவத் அவலம்பமில்லாவிடில் முக்கியமாய்ச் சங்கீத சாஸ்திரத்தை ஒருவரும் உண்மையில் தெரிந்துகொள்ளமாட்டார்கள். பங்காள முதலிய தேசங்களிலிருந்து பாடகர்கள் சுவாய்கள் பாட்டைக் கேட்டுத் திருப்தி யடையாதவர்களில்லை. பிரதிதினம் ஆயிரக்கணக்காய் அவர்கள் சம்பாதிப்பது ஆச்சரியமாயிருந்தாலும் யோக்கியதா அம்சத்தில் நம்முடைய சங்கீத வித்துவான்கள் அவர்களைப் பார்க்கிலும் பின்னிட்டவர் களல்ல. அவர்கள் சாஸ்திர கௌரவத்தைக் கவனித்து நடப்பதில் பெருமை யடைந்திருக்கிறார்கள். நம்முடைய வித்துவான்களோ ஆராய்ச்சியில் கொஞ்சமும் விருப்பமில்லாதவர் களாயிருப்பதோடு தங்களுடைய பெருமை யைக்காட்டிச் சம்பாதிப்பதிலேயே நோக்கமுடையவர்களாயிருக்கிறார்களே யொழிய சாஸ்திரத்தை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஞாபகமே யில்லாதவர்களா யிருக்கிறார்கள். ஆத்மார்த்தமான சிரேயசை அடைய வேண்டுவதே சங்கீதத்தின் நோக்கம். இந்த நோக்கத்தைக் கைவிட்டுத் திரவியத்தை நாடிப் பாடுகிறவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். இவ்வித குறைகளினின்று நமது இந்திய சங்கீதத்தை விடுவித்து மகான்களுடைய முறையைப் பரிசோதித்துத் தெரிந்து கொண்டு நம்முடைய சமஸ்த வித்துவான்களும் தெய்வத்திற்கென்று பாடவும் அப்பியாசிக்கிறவர்கள் தெய்வத்தினுடைய பெருமை விளங்கும் பொருட்டு அப்பியாசிக்கவும் கேட்கிறவர்கள் தெய்வத்தினிடம் தங்கள் மனதை நிலைநிறுத்தவும் இவ்வித ஸ்திதிக்கு இந்திய சங்கீதம், இச்சங்கீத சபையால் வரவேண்டுமென்று ஆதியந்தரஹிதனாய் அனந்த கல்லியாணகுணனாய்க் கருணாநிதியாய் விளங்கும் ஆதிமூலத்தைப் பிரார்த்திக்கும்படி இங்கே கூடியிருக்கும் எல்லா வித்துவான்களையும் வணக்கமாய்க் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு வித்துவானும் தன்னால் இயன்ற அளவு இந்தக் கருத்தை நோக்கிப் பிரயாசைப்பட்டால் முன் சொன்னபடி அடையக்கூடிய பரலோக நித்திய பேரானந்தத்தோடுகூட நம்மைப் போல மற்ற கண்டங்களிலிருக்கிற பெரிய ஜாதியார்களும் இந்தியாவில் மற்ற சாஸ்திரங்களைப் போலவே சங்கீத சாஸ்திரமும் அற்புதமானது என்று நினைக்கிற ஒரு பெருமையும் நமக்குச் சித்திக்கும்.” 9. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள். இச்சங்கம் ஏற்படுத்துவதற்கு வேண்டிய முக்கிய அவசியங்களை யோசிக்குங் காலத்தில் அரிகேசவநல்லூர் மகா-ராச-ராச-சிறி முத்தையா பாகவதர் அவர்கள் முக்கிய உதவியாயிருந்தார்கள். பலவிதமான சங்கடங்கள் நேரிட்டாலும் ஊக்கத்தோடு நடத்திவர விஜயநகரம் வீணை வித்துவான் மகா-ராச-ராச-சிறி வேங்கடரமணதாஸ் அவர்கள் மிகுந்த ஆதரவு செய்தார்கள். என் பிள்ளைகளுக்கு கர்நாடக சங்கீதத்தை வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் பாடும்படி மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்ட தஞ்சாவூர் மகா-ராச-ராச-சிறி பஞ்சாபகேச பாகவதர் அவர்களும், இங்கிலீஷ் மீயூசிக் (English Music) சொல்லி வைத்த தஞ்சாவூர் மகா-ராச-ராச-சிறி பிச்சை முத்துப் பிள்ளை B.A.L.T., அவர்களும் வீணை சொல்லி வைத்த தஞ்சாவூர் மகா-ராச-ராச-சிறி வெங்கிடாசலமையர் அவர்களும் ஒவ்வொரு கான்பிரன்சிலும் ஒவ்வொரு சபை துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் சபையோர் கேட்டு ஆனந்திக்கும்படி என் பிள்ளைகளோடு பாடி சபையைச் சிறப்பித்து வருகிறார்கள். சங்கத்தின் நோக்கத்திற்கிணங்க குறிக்கப்பட்ட விஷயங்களைத் தங்களால் கூடியவரை பிரயாசப்பட்டு அநேக கனவான்கள் வியாசம் எழுதியும் வாசித்தும் வருகிறார்கள். குறிக்கப்பட்ட இராகங்களை மிகுந்த உற்சாகமாய்ப் பாடிக்காட்டியும் அதில் வரும் நுட்ப விஷயங்களை ஊக்கமாய் விசாரித்தும் வருகிறார்கள். சங்கத்தில் வந்திருந்தவர்களுக்கு வேண்டிய முக்கிய உதவிகளை மகா-ள-ள-ஸ்ரீ V. இராமையா காரு B.A. அவர்கள் மிகுந்த சிரத்தையோடு செய்து வருகிறார்கள். கர்நாடக இராகங்களில் வரும் சுருதிகளைப் பற்றி விசாரிக்கையில் கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத துவாவிம்சதி சுருதி, என் ஆர்மானிக் ஸ்கேல் (Enharmonic Scale) போசான்கே (Bosanquet) 53, கிலேமெண்ட்ஸ் (ஊடநஅநவேள) 27 போன்ற பல முறைகள் ஆராய்ச்சிக்கு வந்திருக்கின்றன. இதனால் சற்று காலதாமதம் போல் தோன்றினாலும் தென்னிந்திய சங்கீதத்தில் வரும் சுருதிகளை அறிவதற்குமுன் மற்றவர் சொல்லும் முறைகளையும் ஆராய்வது நல்லதென்று நினைத்தே பூரணமாய் விசாரணை நடந்து வருகிறது. அநேகர் தாங்கள் பாடிக்கொண்டிருக்கும் சிறந்த கீதத்தின் சுருதிகளை அறிந்துகொள்ள பல வழியாகவும் விசாரணை செய்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதத்தைப் பற்றிய பல விஷயங்களிலும் பலபேர் விசாரிக்கவும் சபையில் சேரவும் ஆதரிக்கவும் எண்ணமுடையவர்களாயு மிருக்கிறார்கள். பரோடா திவான் மகா-ராச-ராச-சிறி மாதவராவ் C.I.E. அவர்களும், பாலக்காடு மகா-ராச-ராச-சிறி இராமகிருஷ்ணையர் B.A.,B.L., சுநவசைநன ளுரb-துரனபந அவர்களும், கும்பகோணம் மகா-ராச-ராச-சிறி பாலசுப்பிரமணிய ஐயர் B.A.,B.L., ளுரb-துரனபந அவர்களும், சங்கீத சங்கத்திற்குத் தலைமை வகித்து சபையோரை உற்சாகப்படுத்திப் பல அரிய விஷயங்களையும் போதித்தார்கள். பாப்பாநாடு ஜமீந்தார் மகா-ராச-ராச-சிறி சாமிநாத விஜயதேவர் அவர்கள், பூண்டி மகா-ராச-ராச-சிறி அப்பாசாமி வாண்டையார் அவர்கள், உக்கடை மகா-ராச-ராச-சிறி ராவ் பகதூர் அண்ணாசாமித் தேவர் அவர்கள், மகா-ராச-ராச-சிறி K. V. ஸ்ரீநிவாச ஐயங்கார், B.A.,LT., Dy. Collector அவர்கள் மகா-ராச-ராச-சிறி திருவேங்கடாச்சாரியார் B.A.,B.L., Sub-Judge அவர்கள் மகா-ராச-ராச-சிறி கோதண்டராமானுஜலு நாயுடு, B.A.,B.L., ளுரb-துரனபந அவர்கள், மகா-ராச-ராச-சிறி சேஷையர், B.A., Dy. Collector அவர்கள் மகா-ராச-ராச-சிறி ராவ் சாகேப் திரவிய நாடார், B.A., Dy. Collector அவர்கள், மகா-ராச-ராச-சிறி லு.V. சீனிவாச ஐயர், B.A., Dy. Collector அவர்கள், மகா-ராச-ராச-சிறி விஜயராகவாச்சாரியார், M.A., Post Master அவர்கள்,மகா-ராச-ராச-சிறி ராவ் பகதூர் K. S. சீனிவாச பிள்ளை அவர்கள், அரித்துவாரமங்கலம் மகா-ராச-ராச-சிறி கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள் போன்ற மற்றும் கனவான்களும், மகா-ராச-ராச-சிறி அரசன் சண்முகம் பிள்ளை அவர்கள், மகா-ராச-ராச-சிறி சவரிராய பிள்ளை M.R.A.S. அவர்கள்,மகா-ராச-ராச-சிறி சேதுராம பாரதியார் அவர்கள், மகா-ராச-ராச-சிறி உலகநாத பிள்ளை அவர்கள், மகா-ராச-ராச-சிறி தேவப்பிரசாதம் பிள்ளை அவர்கள் முதலிய தமிழ் வித்துவசிரோமணிகளும் சங்கத்திற்கு வந்திருந்து சபையோரை உற்சாகப்படுத்தினார்கள். சங்கத்திற்கு வந்திருந்த வித்துவசிரோமணிகள் ஒவ்வொருவரும் மிகுந்த ஊக்கம் காட்டி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி உற்சவ தினம்போல் கொண்டாடி வருகிறதைக் கவனிக்கையில் தஞ்சாவூர் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் மிகுந்த விருத்தியுடைதாகுமென்று தோன்றுகிறது. 10. முதல் பாகத்தின் முடிவுரை சங்கீத வித்யா மகாஜன சங்கத்தில் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றி உண்டான சந்தேகமே மேற்கண்ட சில வரிகளை எழுதும்படி நேரிட்டது. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னதென்று நிச்சயப்படுத்துவதற்கு முன் சுருதிகள் இன்னதென்று சித்தாந்தப்படுத்திய மற்றவர் முறைகளைத் தீர்க்கமாய் ஆலோசிக்க வேண்டு மென்று என் மனதில் தோன்றிற்று. ஏனென்றால் சமஸ்கிருத நூல்களாகிய சங்கீத ரத்னாகரம், சங்கீத பாரிஜாதம், ராக விபோதம், சுரமேளகலாநிதி முதலியவைகளில் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயங்களும் மேற்றிசை என் ஆர்மானிக்ஸ்கேலும் (Enharmonic Scale), பைதாகோரஸ் (Pythagoras), முறையும், மர்க்கடர் (Mercator), பூல் (Poole), ஒயிட் (White), தாம்சன் (Thompson), போசான்கே (Bosanquet) சொல்லுகிற ஐம்பத்து மூன்று சுருதிகளின் முறையும், 22 என்று சொன்ன நாகோஜிராயர் அவர்களின் முறையும், தேவால் (Deval) அவர்களின் முறையும், 27 என்று சொல்லுகிற கிளமெண்ட்ஸ் (Clements) அவர்களின் அபிப்பிராயமும், சென்சேசன் ஆப் டோன்ஸ் (Sensation of Tones) என்னும் புஸ்தகம் எழுதிய ஹெல்மோல்ட்ஸ் (Helmholtz) அவர்களின் அபிப்பிராயமும் கலந்த சில வார்த்தைகள் வந்ததினால் அவர்களுடைய சுருதி நிச்சயம் இன்னதென்று ஆராய்ந்து அறிந்து கொண்டபின் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றி எழுத நினைத்தேன். இவைகளை எழுதிக்கொண்டு வருகையில் பூர்வ தமிழ் நூல்களின் அபிப்பிராயம் இன்னதென்று அறிய நான் விசாரித்ததில் தென்னிந்தியாவின் சங்கீதமும் அதன் சில முக்கிய ஆதாரவிதிகளும் மிகப்பூர்வமானதென்றும் அழிந்துபோன லெமூரியாக் கண்டத்திலுள்ள தென் மதுரையிலிருந்த முதற் சங்க காலத்திலேயே சங்கீதம் விருத்தியடைந்து வந்ததென்றும் தமிழ்ப் பாஷையிலேயே முதல் முதல் இயல், இசை, நாடகமென்று ஏற்பட்டதென்றும் அதன்பின்பே மற்றும் பல இடங்களில் சங்கீதம் அப்பியாசிக்கப்பட்டு வந்த தென்றும் எனக்குத் தோன்றிற்று. மேலும் பூர்வ நூல்களில் சொல்லப்படும் சுருதி முறைகளும் கானங்களும் மற்றவரால் அறிந்து கொள்ள முடியாத வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களை உடைத்தாயிருக்கின்றனவென்றும் அறிந்தேன். ஆகையினால் தமிழ்ப்பாஷை பேசுவோரால் வழங்கி வரும் தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றிய சில சரித்திரக் குறிப்புகள் எழுத நேரிட்டது. இச்சரித்திரக் குறிப்புகள் மிகவும் சொற்பமானவையென்றே சொல்ல வேண்டும். ஆனால் சங்கீதத்தைப் பற்றி விசாரிக்கும் அறிவாளிகளுக்கு இவைகள் இன்னும் பல வழியிலும் விசாரிக்க இடந்தரும் எல்லைக்கல் போலவாவது இருக்குமென்று நான் எண்ணுகிறேன். என் விசாரணைக்கு வந்தவைகளில் எல்லாவற்றையும் எழுத இங்கு இடமில்லை. பூர்வத்தில் அதாவது 4,000-5,000 வருஷங்களாக இந்தியா நீங்கலானமற்ற இடங்களில் சங்கீதமிருந்ததாகச் சில வரிகளைச் சொல்லிய பின் ஜலப்பிரளயம் உண்டான 5,000 வருஷங்களுக்கு முன்னும் பின்னும் இந்தியாவில் சங்கீத மிருந்ததென்றும் அதில் தென்னிந்தியா மிகப்பூர்வம் பெற்றிருந்ததென்றும் அதற்கு முன்னிருந்த தென்மதுரையும் தமிழ்ச் சங்கமும் மிக மேன்மை பெற்றிருந்ததென்றும், தமிழ்ப் பாஷை மிகப் பூர்வமான பாஷையென்றும் சங்கீதத்தை அப்பாஷை பேசுவோரே அதிகமாய் வழங்கி வந்தார்களென்றும் தென்மதுரை அழிந்தபின்பும் கபாடபுரம் அழிந்தபின்பும் பாண்டியராஜ்யம் அழிந்த பின்பும் சங்கீதம் பேணுவாரற்று வரவரக் குறைந்து பிறர் கையில் போனதென்றும் தேசிகக் கலப்பு வந்ததென்றும் அங்கங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். அதோடு தென்னிந்திய சங்கீதத்தைப் பற்றியும் இந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றியும் இந்திய சங்கீதத்தைப் பற்றியும் பல கனவான்கள் சொல்லும் அபிப்பிராயங்களில் சிலவற்றையும் சொல்லியிருக்கிறேன். பாண்டியராஜாக்களால் ஆதரிக்கப்பட்டு வந்த மூன்று சங்கங்களைப் பற்றியும், இப்போதிருக்கும் நாலாவது சங்கத்தைப் பற்றியும், பாண்டிய ராஜ்யம் அழிந்தபின் சோழ ராஜாக்களால் சங்கீதம் ஆதரிக்கப்பட்டதையும், கோயில் மானியங்களினால் ஆதரிக்கப்பட்டதென்பதற்குச் சாட்சியாக இரண்டு சாசனங்களையும் அதன் பின் சோழ ராஜ்யத்தில் நாயக்க ராஜர்களாலும் மகாராஷ்டிர ராஜர்களாலும் அதன்பின் மற்றும் பிரபுக்களாலும் ஆதரிக்கப்பட்டு வந்ததையும் அதில் சிறந்து விளங்கிய வித்துவ சிரோமணிகளையும் ஒருவாறு குறித்திருக்கிறேன். கர்நாடக சங்கீதத்திற்கு அஸ்திபாரமாகிய சுருதி முறையும் இராக முறையும் திட்டமாய் அறிந்துகொள்ளக் கூடாமையாயிருப்பதினால் சுருதி ஞானமுள்ள யாவரும் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சுலபமான முறை யிருக்க வேண்டுமென்று நினைத்து அதை விசாரிப்பதற்கும் மற்றவர்களுக்கு பிரஸ்தாபப்படுத்துவதற்கும் அநுகூலமாகச் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் ஒன்று ஸ்தாபித்து அதில் சங்கத்தலைவர்களாயிருந்து சங்கம் நடத்தியவர் களையும் சங்கீத விஷயமான வியாசங்கள் வாசித்தவர்களையும் சங்கத்தை ஆதரிக்கும் கனவான்களையும் சங்கத்திற்கு வந்திருந்தவர்களையும் சங்கத்திற்கு ஆதரவாயிருப்பவர்களையும் சொல்லியிருக்கிறேன். மேற்கண்ட யாவும் ஒரு பெரிய சமுத்திரத்தினின்று எடுத்த சில திவலைகள் போல் மிக சொற்பமென்று நினைக்கிறேன். சங்கீதத்திற்குச் சம்பந்தமான அநேக விஷயங்கள் இதன் பின் அங்கங்கே சுருக்கமாகச் சொல்லப்படும். விஷயங்களை விஸ்தாரமாக அறிந்த பெரியோர், விடுபட்ட முக்கியமானவைகளையும் தவறுதலானவைகளையும் தெரியப்படுத்தினால் மிகவும் நன்றியுள்ளவனாகி இரண்டாம் பதிப்பில் சேர்த்துக் கொள்வேன். சங்கீத சாஸ்திரத்திற்கு முக்கியமானது சுரமும் சுரத்தின் உட்பிரிவு களாகிய சுருதிகளும் என்று எல்லாரும் ஒப்புக்கொண்டாலும் சுரத்திலும் சுருதிகளிலும் நிலையில்லாத வெவ்வேறு அளவுகள் பலராலும் சொல்லப் படுகின்றன. அவைகளைப்பற்றி நிச்சயமான ஒரு முடிவுக்கு வருவது மிக அவசியம். ஆகையினால் சுருதியைப் பற்றிப் பலர் சொல்லும் அபிப் பிராயங்களையும் சீர்தூக்கி ஆராய வேண்டியது நமது முக்கியக் கடமையாகு மாதலால் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றிய விஷயங்கள் இரண்டாம் பாகத்தில் சொல்லப்படும். கருணாமிர்த சாகரம் முதல் பாகம் முற்றிற்று.