உரைவேந்தர் தமிழ்த்தொகை 6 பெருங்கதைச் சுருக்கம் ஆசிரியர் ஒளவை துரைசாமி இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 6 ஆசிரியர் : ஒளவை துரைசாமி இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 384 = 408 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 255/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளி யிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு . துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக் களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறை யிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரை வேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ் செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப் பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும்.சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற் பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார்.தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல் களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர் களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக் காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xx நூலடக்கம் உஞ்சைக்காண்டம் 1. முன்னுரை 1 2. கரடு பெயர்த்தது 7 3. மாலைப்புலம்பல் 10 4. யாழ்கைவைத்தது 15 5. நருமதை சம்பந்தம் 23 6. சாங்கியத்தாயுரை 29 7. விழாக் கொண்டது 37 8. விழாவாத் திரை 44 9. புனற்பாற் பட்டது 49 10. உவந்தவை காட்டல் 51 11. நீராட்டரவம் 58 12. நங்கை நீராடியது 62 13. ஊர் தீயிட்டது 66 14. பிடியேற்றியது 69 15. படைதலைக் கொண்டது 73 16. உழைச்சன விலாவணை 75 17. உரிமைவிலாவணை 80 18. மருத நிலங்கடந்தது 87 19. முல்லை நிலங் கடந்தது 91 20. குறிஞ்சி நிலங்கடந்தது 95 21. நருமதை கடந்தது 97 22. பாலை நிலங்கடந்தது 100 23. பிடி வீழ்ந்தது 105 24. வயந்தகனகன்றது 109 25. சவரர் புளிஞர் வளைந்தது 112 26. வென்றியெய்தியது 116 27. படைவீடு 122 28. சயந்திபுக்கது 125 இலாவாண காண்டம் 1. நகர் கண்டது 128 2. கடிக் கம்பலை 131 3. கட்டிலேற்றியது 136 4. உடன்மயிர் களைந்தது 139 5. மண்ணு நீராட்டியது 142 6. தெய்வச்சிறப்பு 146 7. நகர்வலங் கொண்டது 149 8. யூகிபோதரவு 152 9. யூகி சாக்காடு 156 10. யூகிக்கு விலாவித்தது 160 11. அவலந்தீர்ந்தது 165 12. மாசன மகிழ்ந்தது 168 13. கறிக்கோட்கேட்டது 172 14. உண்டாட்டு 175 15. விரிசிகை மாலை சூட்டு 177 16. ஊடலுணர்த்தியது 180 17. தேவியைப் பிரித்தது 183 18. கோயில் வேவு 188 19. தேவிக்கு விலாவித்தது 191 20. சண்பையுள் ஒடுங்கியது 197 மகத காண்டம் 1. யாத்திரையேகியது 201 2. மகதநாடு புக்கது 207 3. இராச கிரியம்புக்கது 209 4. புறத்தொடுங்கியது 212 5. பதுமாபதி போந்தது 214 6. பதுமாபதியைக்கண்டது 216 7. கண்ணுறு கலக்கம் 221 8. பாங்கர்க்குரைத்தது 223 9. கண்ணி தடுமாறியது 227 10. புணர்வு வலித்தது 231 11. அமாத்தியர் ஒடுங்கியது 234 12. கோயில் ஒடுங்கியது 237 13. நலனாராய்ச்சி 240 14. யாழ்நலந் தெரிந்தது 247 15. பதுமாபதியைப் பிரிந்தது 250 16. இரவெழுந்தது 251 17. தருசகனொடு கூடியது 256 18. படைதலைக் கொண்டது 259 19. சங்கமன்ன ருடைந்தது 265 20. மகட்கொடை வலித்தது 268 21. பதுமாபதி வதுவை 271 22. படையெழுச்சி 277 23. மேல்வீழ் வலித்தது 279 24. அரசமைச்சு 285 25. பாஞ்சாலராயன் போதரவு 290 26. பறை விட்டது 292 வத்தவகாண்டம் 1. கொற்றங்கொண்டது 298 2. நாடுபாயிற்று 300 3. யாழ்பெற்றது 303 4. உருமண்ணுவா வந்தது 307 5. கனா இறுத்தது 309 6. பதுமாபதியை வஞ்சித்தது 311 7. வாசவதத்தை வந்தது 313 8. தேவியைத் தெருட்டியது 318 9. விருத்தி வகுத்தது 320 10. பிரச் சோதனன் தூதுவிட்டது 322 11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது 325 12. பந்தடி கண்டது 327 13. முகவெழுத்துக் காதை 331 14. மணம்படு காதை 338 15. விரிசிகை வரவு குறித்தது 342 16. விரிசிகை போத்தரவு 346 17. விரிசிகை வதுவை 348 நரவாண காண்டம் 1. வயாக் கேட்டது 352 2. இயக்கன் வந்தது 357 3. இயக்கன் போந்து 359 4. வயாத் தீர்ந்தது 364 5. பத்திராபதி உருவு காட்டியது 367 6. நரவாணதத்தன் பிறந்தது 369 7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது 372 8. மதனமஞ்சிகை வதுவை 375 9. மதனமஞ்சிகை பிரிவு 379 10. முடிப்புரை 382  முதலாவது உஞ்சைக்காண்டம் 1. முன்னுரை கௌசாம்பி வத்த நாட்டின் தலைநகரம். அதன்கண் இருந்து அந்த நாட்டையர சாளும் வேந்தன் சதானிகன் என்பவன். அவன் தன் மனைவி மிகாவதியொடு கூடி இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றான். மிகாவதி சேதிநாட்டரசனான சேடகன் என்னும் வேந்தற்கு மகளாவாள். சேடகற்கு மக்கள் பதின்மருண்டு. அவன் அரசியற் போகத்தில் உவர்ப்புற்று அதனைத் தன் மக்கள் பால் வைத்துத் துறவு மேற் கொள்ளத் தொடங்கினானாக, மக்களுள் இளையனான விக்கிர னொழியஏனை ஒன்பதின்மரும் அரசியலையேற்க மறுத்து நீங்கினர். விக்கிரனும் தந்தையின் வன்புறைமறுக்கமாட்டாது ஏற்றனன். சேடகன், பின்பு, ஆலங்கானத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த சீதான் என்னும் முனிவன்பால் அறங்கேட்டுத் தவநெறிக்கண் ஒழுகுவானாயினன். சேடகன் துறவுபூண்டதும் விக்கிரன் அரசேற்று ஆட்சி புரிவதும் பிறவும் கேள்வியுற்ற மிகாவதி ஒருபால் வருத்தமும் ஒருபால் உவகையும் கொண்டு இருந்து வருபவள் கருக் கொள்கிறாள். அக்கருவில் தேவனொருவன் வந்து தங்குகின்றான். கருநிரம்பிய திங்களில் ஒருநாள் மிகாவதி தன் உடல் முழுதும் சிவந்த துகிலால் மூடிக் கொண்டு தோழியர் நடுவே நிலா முற்றத்தே யுறங்கிக் கிடக்க, அவள் உருவைப் பசிய தசையென்று கருதி, அண்ட பேரண்டப் புள்ளொன்று சிவ்வென்று பாய்ந்து அவளைத்தூக்கிக் கொண்டு சென்றது. சென்ற பறவை, சேடகன் தவம்புரிந் தொழுகிய காட்டையடைந்து அவனது தவப்பள்ளியருகே அவளைத் தரைமேல் வைத்து உண்ணத் தொடங்குங்கால், மிகாவதி விழித்துக் கொண்டாள். பறவையும் மருண்டு அவ்விடத்து நின்றும் பறந்து போய் விட்டது. மிகாவதிக்குக் கலக்கம் பெரிதாயிற்று. பறவையாற் கொணர்ந் திடப்பட்ட அதிர்ச்சியாலும், கானத்திடையே தனித் திருப்பப் பிறக்கும் அச்சத்தாலும் மிகாவதி கருப்ப நோய்மிக்கு ஆண்குழந்தை யொன்றைக் கருவுயிர்ப்பாளாயினள். அதனைக் கண்டு ஒருவாறு கவலை தீர்ந்த மிகாவதி தன் அரசியற் செல்வரும் கானத்துத் தனிமையும் நினைந்து புலம்பத் தொடங்க, அவ்வழியே நீராடப் போந்த சேடகமுனிவன் அவளைக் கண்டு அவதி ஞானத்தால் தன் மகளென்றுணர்ந்து தான் உறையும் தவப்பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆங்கு ஒருபால் இருக்கச் செய்தார். அவட்குத் துணையாகப் பிரமசுந்தர முனிவர் மனைவி பரம சுந்தரியிருந்து வேண்டுவ உதவி வந்தாள். அவள் மகன் யூகியென்பவனும் மிகாவதியின் மகனுக்கு நண்பனாய் வளர்ந்தொழுகி வரலானான். மிகாவதியின் மகன் ஞாயிறு தோன்றுங்காலத்துத் தோன்றிய காரணத்தால் உதயணன் என முனிவர்களால் பெயரிடப் பெற்றான். உதயணனும் யூகியும் பிரியா நண்பராய்ப் பிரம சுந்தர முனிவர்,சேடக முனிவர் என்ற இருவர்பாலும் கற்றற்குரிய கல்வியும் பயிறற்குரிய கலைத்துறைகளும் கடை போகக் கற்று மேம்பாடெய்தினர். அக்காலத்தே, உதயணன் பிரமசுந்தரர்பால், கானத்துயானை முதலிய விலங்குகளும் புள்ளினங்களும் கேட்டுத் தன் அடிபணியச் செய்யும் இசைத்துறையில் ஈடு மெடுப்புமற்ற புலமை யெய்தி, இந்திரன் பால் அம் முனிவர் பெற்றிருந்த சோடபதி யென்னும் யாழை இசைக்கும் நெறி முற்றும் கற்றுப் பல்லோரும் பரவும் சிறப்பெய்தினான். மேலும், உதயணன் ஒருநாள் காட்டின் கண் யானைக்கூட்டத்தின் இடையே நின்ற தெய்வயானை யொன்றைத் தன் யாழிசையால் வணக்கினானாக, நன்றிருட் கனவினாகம் நயமறிந்தினிதுரைக்கும் பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும் இற்றைநாள் முதலா நீ நானின்றியே முன்றுண்டாலும் அன்றுன் பால் நில்லேன் என்றே அக்கரியுரைப்பக்கேட்டான் இஃது இவ்வாறிருக்க, சேடகற்குப்பின் சேதி நாட்டையாண்டு கொண்டிருந்த விக்கிரன், தனக்கு மகப்பேறில்லாமையால், தந்தைபாற் போந்து தன் கருத்தைத் தெரிவித்து வருந்தியிருந்தான். அக்கால் அங்கே போந்த உதயணனது உரு நலங்கண்டு வியந்து நோக்க அந்நோக்கமுணுணர்ந்த சேடக முனிவன் அவன் வரலாற்றினை விளங்கக் கூறினான். முடிவில் விக்கிரன் உதயணனையும் அவன் தாய் மிருகாவதி யையும் ஊகியையும் அழைத்துக் கொண்டு தன் தலை நகராகிய வைசாலிக்குச் சென்று, உதயணற்கு அரசு தந்து தான் தவமேற் கொண்டான். உதயணன் யூகியைத் தனக்கு முதன் மந்திரி யாகக் கொண்டு, தெய்வயானை தன்னோடு இனிதிருக்க நாட்டில் நலம் சிறப்ப ஆட்சிபுரிந்து வரலானான். மிகாவதி நிலாமுற்றத்திருந்து நீங்கியது முதல், சதானிகன் அவளைப் பல இடங்களிலும் பல்லாண்டுகள் தேடியும் காணானாய் வருந்தி, ஒருகால் சுவ்விரத ரென்னும் முனிவரைக் கண்டு, அவர்பால் தன் குறையைத் தெரிவித்துநின்றான். அவர் நிகழ்ந்தது முற்றும் விளங்கக் கூறி, உதயணனுடன் அவள் வைசாலியில் இருந்து வருதலைத் தெரிவித்தார். சதானிகன் மிக்க மகிழ்ச்சியுற்று வைசாலியடைந்து தன் மனைவி மிகாவதியையும் மகன் உதயணனையும் கண்டு பேருவகை கொண்டான். பின்னர், மகனை வைசாலியிலிருந்து அரசு புரிய விடுத்துத் தான் தன்மனைவியுடன் கௌசாம்பி நகரையடைந்து பண்டுபோல் அவனோடு கூடி இனிது வாழ்ந்து வந்தான். அவற்கு மிகாவதிபால் பிங்கலன், கடகன் என இருமக்கள் பிறந்தனர். அவ்விருவரும் கல்வி கேள்விகளிற் சிறப் பெய்தியதும் சதானிகன் துறவு பூண்டான்; உதயணன் கௌசாம்பியி லிருந்து கொண்டு வத்தவநாடு, சேதிநாடு என்ற இரண்டையும் செவ்வேயாட்சி புரிந்து வரலானான். சில ஆண்டுகள் கழிந்ததும் சேதி நாட்டை வைசாலியிலிருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வருமாறு யூகியை நிறுவி, உதயணன் கௌசாம்பியிலிருந்து, வயந்தகன், உருமண்ணுவா, இடவகனென்ற மூவரையும் அமைச்சராகக் கொண்டு சிறப்புற ஆட்சிபுரிந்து வந்தான். அவனுடைய கல்வி, வீரம், அரசியல் முதலிய நலங்களால் உண்டாகிய புகழ் எங்கும் பரவிற்று. ஒருகால், உதயணன், வயந்தகன் உருமண்ணுவா முதலிய தோழருடன் காட்டிற்குச் சென்று வேட்டையாடி, நீர் வேட்கை மிக்குவருந்துகையில், குபேரனுக்குத் தொண்டு புரியும் இயக்கருள் ஒருவனான நஞ்சுகனென்பவன் போந்து அவர்கட்கு நீருதவி, தன்னை நண்பனாகக்கருதுமாறும், தன்னை நினைத்தால் தான் வருவதாகவும் கூறித் தன்னை நினைத்தற்குரிய மறைமொழியினை உருமண்ணுவாவுக்கு உரைத்துவிட்டு நீங்கினன். அவர்கள் அனை வரும் இயக்கனை வாழ்த்திக் கொண்டு நகரையடைந்தனர். பின்பொருகால், உதயணன் தன்பால் இருந்த தெய்வயானைக்குத் தான் செய்திருந்த உறுதி தவறினானாக, அவ்யானை நீங்கி விட்டது. அதனைத் தேடிக் கொண்டு, உதயணன், கோடபதி யென்னும் யாழையேந்திக் கொண்டு காடுகட்குச் சென்று தேடித் திரியலானான். யானை நீங்குதற்குரிய குற்றம் தன்பால் நிகழ்ந்ததை யுணர்ந்து உதயணன் எய்திய துன்பத்துக்கு எல்லையில்லை. இஃது இவ்வாறாக, உச்சயினி நகரத்தே இருந்து கொண்டு, அவந்தி நாட்டைப் பிரச்சோதனன் என்னும் வேந்தன் ஆட்சிபுரிந்து வந்தான். அவற்கு வத்தவ நாட்டரசனும் சேதி நாட்டரசனும் திறை செலுத்தும் கடமையுடையர். இவ் விரண்டினையும் ஆளும் உதயணனும் யூகியும் திறை செலுத்தாமையின், அதற்குக் காரணம் ஆராய்ந்தவன், நீதி நூற்புலமையும் அரசியற் சூழ்ச்சியும் பிற மதி நுட்பமும் மிகவுடைய சாலங்காய னென்னும் முதலமைச்சனால், இவ்விருவருடைய வலியும் தெறலும் நட்பும் பிறநலங்களும் கேள்வியுற்று இருவரையும் எவ்வகையாலேனும் கைப்பற்றக் கருதுகின்றான். இதனை வென்றியுற முடித்துக் கோடற்கு எந்திரயானை யொன்றைச் செய்து உதயணனையும், பெரும் போர் சூழ்ந்து யூகியையும் பிரித்துச் சூழ்ச்சிகள் பல செய்யப்படுகின்றன. முடிவில் உதயணன் சாலங்காயனால் கைப்பற்றப்படுகின்றான். உச்சயினி நகர்க்கண் பிரச்சோதனன், அவ்வுதயணன் கால்களில் தளையிட்டு இருள் நிறைந்த பெருஞ்சிறையில் வைத்துவிடுகின்றான். உதயணன் தானே விரும்பிப் பகைவர் கைப்படுங்கால் சூழ்ச்சித் திறம் வல்ல வயந்தகன்பால் ஓலை யொன்றை யெழுதி யூகிக்கு விடுப்ப, அதனையறிந்ததும் அரிய சூழ்ச்சிகள் பல செய்து விடுகின்றான். முதற்கண், கள்ளத்தால் யானை செய்து அதன் வாயிலாக வேந்தனான உதயணனைப் பற்றிய பிரச்சோதனன் நகரத்தை யானையொன்றால் அழித்து, தீக்கிரையாக்கி, அவன் மகள் வாசவதத் தையையும் உதயணனையும் மீட்பதே செயற்பாலது எனவஞ்சினம் கூறி கௌசாம்பியில் பிங்கலகடகரும் அவந்திநாட்டின் எல்லைப் புற நகரமாகிய புட்பக நகரத்தில் உதயணன் சுற்றமும் படையும் இருக்க வைத்தான். உருமண்ணுவா சயந்தி நகரில் இருந்து வந்தான். யூகி வேறு பல வீரரை வயந்தகனுடன் பிரச்சோதனனுடைய அக நகர் புற நகர்களில் வேற்றுருக்கொண்டு சென்று ஆங்கு நிகழ்வனவற்றையறிந்துரைக்குமாறு அமைத்தான். வயந்தகன் கல்வி கற்கும் மாணவன் போல் ஒழுகிவரலானான். யூகியும் தான் இறந்து விட்டதாகப் பொய்வதந்தி கிளப்பிவிட்டுத் தன்னை வடிவத்தா லொத்த ஒரு பிணத்தைச் சுட்டெரித்தான். இதனால் யூகி, உதயணன் பிரிவாற்றாது இறந்து பட்டானென்று செய்தியொன்று பரவி விட்டது. பிரச்சோதனனும் அவன் சுற்றத்தாரும் மகிழ்ச்சியுற்றனர். உண்மையறியாத பிங்கலகடகர் யூகி இறந்தானெனக் கேட்டுப் பெருவருத்தமுற்றனர். யூகி வேற்றுருவுடன் உச்சயினியின் புறத்தே யுள்ள ஒருசிற்றூரை யடைந்து ஒரு பாழ்வீட்டில் இருந்து வந்தான். அவன் தோழர் பலரும் வேற்றுமொழி கற்று மிக்க தந்திரமாக இருந்து வருவாராயினர். நிற்க, பாஞ்சால நாட்டரசனான ஆருணியென்பான் உதயணன் சிறைப்பட்டதை யறிந்து பெருந்தானையுடன் கௌசாம்பியடைந்து, பிங்கலகடகரை வென்று வெருட்டி யோட்டிவிட்டுத் தான் அதனைத் தனக்கு அரசிருக்கையாகக் கொண்டு அரசாளலா னான்; பிங்கல கடகர் வீரர் சிலருடன் வேற்றிடம் சென்று கரந்துறைவாரா யினர். இவ்வாறு நாட்கள் சில செல்ல யூகி வேற்று வேடம் தாங்கி உச்சயினி நகர்க் குட்புகுந்து வேற்று மொழியால் தன் வரவினை உதயணற்கு அறிவிப்ப, அவனும் தன்னுண்மையினை யூகிக்கு வேய்ங்குழலூதித் தெரிவித்தான். இவன் செய்கை பற்றி ஐயுற்ற பிரச் சோதனனும் அவன் அமைச்சன் சாலங்காயனும் செய்த முயற்சிகள் வீணாயின. யூகி, பிரச்சோதனனுடைய நளகிரியென்னும் அரசு யானையையண்மி அதன் காதில் மறைமொழி யொன்றை யோதி எவராலும் அடக்க முடியாத பெருஞ்சிணம் கொள்ளுமாறு ஏவி விட்டான். அதுவும் நகர்க்குட்புகுந்து பெருந் தீங்கினைச்செய்வளதாயிற்று. நளகிரியின் தீச் செயலைக் கண்டு பெருங்கலக்கமுற்ற பிரச் சோதனன் தன் அரசியற் சுற்றத்தோடு சூழ்ந்து செய்வதறியாது திகைக்கலுற்றான். முடிவில் சாலங்காயன் உதயணனை விடுத்து வேண்டிக் கொண்டால், அவன் தன் யாழிசையால் அதனையடக்கி விடுவானெனத் தெரிவிக்க, சிவேதன் என்னும் அமைச்சன் அவ்வாறே சென்று உதயணனைப் பணிந்து இரந்து நளகிரியையடக்கு மாறு வேண்டினான். உதயணனும் அதற்கிசைந்து சென்று, தன் யாழிசை யால் அதனையடக்கி அதன்பிடரி மிசையிவர்ந்து வந்தான். பிரச் சோதனனும் உதயணனது வன்மையும் கலைத்திறமும் கண்டு வியந்து பகைமை நீங்கிய கருத்தினனாய் அவனைச் சிறப்புற வரவேற்று இன்முகத்துடன் நல்லுரை வழங்கி அவனது நலம் பாராட்டலுற்றான். அப்பாராட்டுரையில் உதயணன் கற்றகல்வி வகைகளை அவன் கூறப் பிரச்சோதனன் கேட்டுப் பெருவியப் பெய்துகின்றான். 2. கரடு பெயர்த்தது (கரடு - யானையின் செருக்கு) பிரச்சோதனன் கேட்ப, உதயணன் தான் அறநூல், பொருள் நூல், இன்ப நூல், உலக புராணம், சமய நூல்கள், இசைநூல், நாடக நூல் முதலிய பல்வகை நூல்களையும் கற்றிருப்பதாகத் தெரிவிக் கின்றான். பிரச்சோதனன் பெரிதும் வியந்து, "இத்துணை இளமைக் காலத்தில் இவன் அளப்பரும் கலைத்துறை கற்று வல்லனாகியது முன்னைத் தவத்தின் பெரும் பயனாகும்" என்று எண்ணி, உதயணன் தன் பதிக்குத் திரும்ப யேகும் வரையில் தன் மக்கட்குக் கல்வி கற்பித்து வருமாறு வேண்ட, அவனும் அதற்கு இயைந்து தருவன கூறுகின்றான். உதயணன் நளகிரியை யடக்கிப் போந்ததும், பிரச்சோதனன் அவனோடு உரையாடி மகிழ்வதும் நிகழ்கையில், பிரச்சோதனன் மகளான வாசவதத்தை உதயணனைக் காண் கின்றாள்; அண்ணலும் அவளை நோக்கினான். ஒருவர் பேரழகை ஒருவர் அள்ளிப்பருகினர். தென்கடலிட்டதோர் திருமணிவான் கழி வடகடல் நுகத்துணை வந்து1பட்டா அங்கு நளி2 சேண் இட்டநாட்டினராயினும் 3பொறைபடுகருமம் பொய்யாதாகலின் சிறைபடுவிதியிற் சென்றவட்குறுகி மதியரும் ஞாயிறும் கதிதிரிந்தோடிக் கடனிறவிசும்பினுடனின்றாங்குப் 1பைந்தொடிச்சுற்றமொடு தந்தை தலைத்தாள் ஆயத் திளடயோள்2 பாசிழைப்பாவை யானைமிசையோன் மாமுடிக்குரிசில் இருவரும் அவ்வழிப்3பருகுவனர் நிகழ அந்நிலையில் பிரச்சோதனன் நிகழ்வது தெரியாது நளகிரி பெருஞ்சினங் கெண்டு அழி செயல் செய்ததற்குக் காரணம் யாதா கலாமென உதயணனை வினவுகின்றான். கதிர்முடி வேந்தன்4 கண்ணியநுண்பொருட் கெதிர் மொழி5 கொடீஇய எடுத்த சென்னியன் மன்னவன் முகத்தே மாதரும் நோக்கி உள்ளமும் நிறையும் தள்ளி டக்கலங்கி... 6இல்வழி வந்ததம் பெருமை பீடுறத் 7தொல்வழி வயத்துத் தொடர்வினை தொடர வழுவில்8 போகமொடு வரம்பின்றி நுகரும் உழுவலன்பினுள்ளந் தாங்கி 9இழையினுங் கொடியினு பிடியினும் பிணங்கித் தேனினும் பாலினும் தீஞ்சுவைத்தாகிக் குலத்தினும் குணத்தினுங் கூடிய அன்பினும் இனத்தினும் பிறவினும் இவ்வகையிசைந்த அமைப்பருங் காதலும் 10இமைப்பினுளடக்கி ஒருவயிற் போல11 வுள்ளழி நோக்கமொடு இருவயின் ஒத்தஃது இறந்த பின்னர் உதயணன் வேந்தனுக்கு நளகிரி மதம்பட்டுப் பெருஞ் சினங் கொண்டதற்குரிய காரணத்தை விளங்கவுரைக்கின்றான். கேட்ட அரசனும் அவையினரும் பெருவியப் பெய்துகின்றனர். பின்னர், பிரச்சோதனன் கணக்கரையும் திணைத் தொழிலாளரையும் வருவித்து, உதயணன் இனிதிருத்தற் பொருட்டுக் குஞ்சரச் சேரிக்கண் அழகியமாளிகை யொன்று அமைக்குமாறு பணித்து அதனை ஓலையி லெழுதிக் கையெழுத்திட்டுக் விடுகின்றான். பன்மணி விளக்கும்1 பள்ளிக்கட்டிலும் பொன்னினடைப்பையும் பூரணகலசமும் கவரியுங் கடகமும் கதிர்முத்தாரமும் நிகரின்மாண் கலநிதியொடு நிறைந்த 2ஆரியச்செப்பும்3 யவமைஞ்சிகையும் பொன்செய் பேழையொடு4 பொறித் தாழ் நீக்கி நன்களம்படுத்து நகுமலர்பரப்பி விரைவிரியாளர்5 புரைவுறப்புணர்த்த பண்டம் புதைத்த 6வண்டுபடுவளநகர் இனிது அமைக்கப் பெறுகின்றது. திணைத் தொழிலாளர் போந்து "அணிந்தது நகர் எனப் பணிந்து" அரசற்குரைக்கின்றனர். வேந்தனான பிரச்சோதனன், குஞ்சரச் சேரிக்குச் சென்று தங்குமாறு கூறியபின் தன்மனையகம் செல்கின்றான். உதயணனும் யானை யிவர்ந்து குஞ்சரச் சேரிக்குச் செல்கின்றான். 3. மாலைப்புலம்பல் குஞ்சரச் சேரிக்கண் அமைந்த கொழுமனையடைந்த உதயணன், அதனுட்புகுந்து அதன் செய்வினைவனப்பும், ஆங்கமைக்கப் பெற்றுள்ள அந்தக் கேணி, எந்திரக் கிணறு, தண் பூங்கா, வெண் சுதைக் குன்று முதலிய விளையாட்டிடங்களைக் கண்டு வியந்து செல்லுங்கால், பிரச்சோதனன் தன்பால் பகைமையுடை யனாதலின், இம் மனைக்கண் வஞ்சம் புணர்த்திருப்பனென ஐயுற்று, உழையரையழைத்து, "சிறப்புடை மாணகர்ச் செல்வம் காண்கம்" என்று சொல்கின்றான். அவரும் அவன் ஏவல் வழி வருகின்றனர். அவரோடு செல்லும் உதயணன், முட்டு வழிகளையும் முடுக்குகளையும் சிறிய இடைக்கழி களையும், கரப்பறை களையும் உள் தெருக்களையும், கள்ளப் பூமியையும் ஆராய்ந்து, மரத்தாலும் மண்ணாலும் இயற்றப்பட்ட பொறிகளையும் ஆராய்ந்து அவற்றில் பழுதின்மையையும் வஞ்ச மின்மையையும் கண்டு தெளிந்து இன்புறுகின்றான். அக்காலத்தே, 1சந்தன வேலிச் சண்பகத்திடையதோர் வேங்கையொடு தொடுத்த வினையாட்டூ சற் 2றூங்குடி மறலு முழைச்சிறு சிலதியர் பாடற் பாணி யொடளை இப்பல்பொறி ஆடியல் மஞ்ஞை யகவ, அயலதோர் 3வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பிற் 4சிதர் தொழிற்றும் பியொடு மதர் வண்டு மருட்ட மாதர் இருவ் குயில் மணிநிறப் பேடை காதற் சேவலைக் கண்டுகண் களித்துத் 1தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும், அன்னமொன்று தன் பெடையினைக் காணாது கலங்குவது கண்டும், வாசவதத் தையை நினைந்து உதயணன் நெஞ்சில் கலக்க முறுகின்றான். இந்நிலையில் மாலைப் போது நெருங்குகிறது. சென்று சென்2றிறைஞ்சிய சினந்தீர்மண்டிலம் 3சூடுறுபாண்டிலின் சுருங்கியகதிர்த்தாய்க் 4கோடுயருச்சிக்குடமலைக் குளிப்ப விலங்கும் பறவையும் வீழ்துணைப் படர... வரம்பில் 5பன்மீன் வயின்வயின் விலங்கிப் பரந்து மீதரும்பிய 6பசலை வானத்துத் தலைத் தேர்த்தானைக்குத் தலைவனாகி முலைப்பாற் காலத்து முடிமுறையெய்திக் 7குடைவீற்றிருந்த குழவிபோலப் பொழில் கண் விளக்குந் 8தொழில் நுகம்பூண்டு 9புயன் மாசுகழீஇப்புனிற்று நாளுலவாது வியன்கண் மாநிலந்தாங்க10 விசும்பூர்ந்து பைந்தொடி மகளிர் பரவினர் கைதொழச் செங்கோட்டிளம் பிறைச் செக்கர்த்தோற்றித் தூய்மை காட்டும் வாய்மை முற்றாது 1மதர்வை யோர்கதிர் மாடத்துப்2 பரத்தரச் சுடர் வெண்ணிலவின் தொழிற்பயன் கொண்ட 3மிசைநீண்முற்றத் தசைவளி போழ... அகில் நாறங்கைசிவப்ப நல்லோர் துகிலின் வெண்கிழித் 4துய்க்கடைநிமிடி 5உள்ளிழுதுறீஇயவொள்ளடர்ப்பாண்டிற் றிரிதலைக் கொளீஇ யெரிதருமாலை வெந்துயர்க் கண்ணில் வேலிட்டது போல் வந்திறுத்தன்றால்; அதுகண்டு உதயணன் வாசவதத்தைபால் உண்டாகிய வேட்கை நோய் மிக்கு வெதும்புறுகின்றான். உழையர் பொழுதா கியது சொல்லி, அணிநிலைமாடத்து மணிக்கால மளிப்பல் பூஞ்சேக்கையடைவிக்கின்றனர். அக்காலை, வாசவதத்தையின் உருவெளித் தோற்றங்கண்ட உதயணன் நெஞ்சுருகி உரமழிந்து, 6இலமலர்ச்செவ்வா யெயிறு விளக்குறுக்க 7அலமருதிருமுகத் தலிகத் தப்பிய செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல் பண்பிற் காட்டிப் பருகுவனள் போலச் சிதர்மலர்த் தாமரைச்8 செந்தோடு கடுப்ப மதரரி நெடுங்கண் வேற்கடைகான்ற 9புள்ளி வெம்பனி கரந்த கள்விதன் 10காரிகையுண்ட வென்பேரிசையாண்மை செறுநர்முன்னர்ச் சிறுமையின்றிப் 11பெறுவென் கொல் லென மறுவந்து மயங்கி எவ்வம் மிக்கு வருந்தலுற்றான். இப்பால், உதயணன் பால் தீராவேட்கையுற்றுத் தெருமந்து கலங்கிய வாசவதத்தை, தன் தந்தை உதயணனை அருளானாயினன் என நினைந்து மனம் நொந்து, அவ்வுதயணன் பால் அன்பு பெரிதுடையளாய், தெளிதல் செல்லாள் தண்ணிறையழிந்து 1பொறியறுபாவையின் அறிவறக் கலங்கிக் காம னென்னும் நாமத்தை மறைத்து வத்தவனென்னும் நற்பெயர் கொளீஇப் 2பிறைக்கோட்டியானை பிணிப்பது மன்றி 3நிறைத்தாழ் பறித் தென் னெஞ்சகப்புகுந்து கள்வன் கொண்ட வுள்ளம் இன்னும் 4பெறுவென் கொல்லெனமறுவந்து மயங்கித் தீயுறு வெண்ணெயினுருகு நெஞ்சமொடு மறைந்து வருந்தலுற்றாள். அவளது உள்ள நோய் அறியாது தோழியரும் தாயரும் செய்வனசெய்து "தமனியத் தியன்ற தாமரைப் பள்ளி" யிற் கிடப்பித்தனர். இரவுப் போது நன்கு படர்வதாயிற்று. இருவர் நெஞ்சமும் இடைவிடலின்றித் திரிதர லோயாது 5திகிரியிற் சுழல ஊழ்வினைவலிப்பினல்ல தியாவதும் 6சூழ்வினையறுத்த சொல்லருங் கடுநோய்க் காமக் கனலெரி கொளீ இ7யாமம் தீர்வது போலாதாகித் திசைதிரிந் 1தீர்வது போல விருளொடு நிற்பச் சேர்ந்த பள்ளி 2சேர்புணையாகி நீந்தியன்ன நினைப்பினராகி முழங்குகடற்பட்டோ ருழந்து பின்கண்ட 3கரையெனக் காலை தோன்றலின் முகையின பூக்கண் மலரப் 4புலம்பிய பொய்கைப் பாற்கேழன்னதமொடு பல்புள்ளொலிப்பப் பரந்து கண் புதைஇய பாயிரு ணீங்கிப் புலர்ந்தது. 4. யாழ்கைவைத்தது பொழுது விடிந்ததும், பிரச்சோதனன் காலைக் கடன்களைச் செய்து முடித்து, நீராடிச் சான்றோரை வழிபட்டு அரசவைக்கு வருகின்றான். பால் பரந்தன்ன 1வால்வெள்விதானத்து மாலைதொடர்ந்த மங்கலப் பந்தர் 2விரிநூலந்தணர் வெண்மணை சூழ்ந்த திருமணிக்கட்டில் திறத்துளி யெய்தி அறம் நிலைபெற்ற அருள்கொள் அவையத்து நிறை நூற் பொத்தகம் நெடுமணை யேற்றி வல்லோர் வகுத்த3 வாசனை வாக்கியம் பல்லோர் பகரப் பயம்பல பருகித் தருமவிகற்பமொடு தானையேற்றம் கரும விகற்பமொடு காமமும் கெழீஇய 4இன்பக் கேள்வியினிது கொண்டெழீஇத் துன்பநீங்குந் 5தொழின் முறைபோக்கி முடிகெழு மன்னரொடு முற்றவை பால் பரவிருந்போன்றதும் வெள்ளிய விதானம் இடப்பட்டது மலர் மாலைகள் நாற்றி அணி செய்யப் பெற்றதும் ஆகிய மங்கலமுடைய கேள்விப் பந்தரை அடைந்தான். ஆங்கு ஒவ்வொரு துறையினும் வல்லோராகிய பலரும் ஒதிய மொழிப் பொருள் நன்குணர்ந்து சுவைத்தனன். அரசியற் கருமங்களை விழிப்புடன் அமைச்சருடன் ஆராய்ந்து செய்து முடித்தபின் இருந்து முறை வேண்டி வருவார்க்கும் குறை வேண்டி வருவோர்க்கும் முறையும் குறையும் நெறியறிந்து புரிந்து இனிதிருக் கின்றான். பின்னர், அரசவையின் நீங்கி, அந்தப்புரம் அடைந்து அங்கே இருந்து உதயணனைக் கண்டு பேச விரும்பி, "உதயண குமரனையுழைத்தரல் விரைந்து" என உழையரைப் பணிக்கின்றான். அவர் தெரிவிப்பத் தெரிந்த உதயணன், "இழை யணியிரும் பிடி எருத்த மேறி" அரசன் கோயிலை யடைகின்றான். அவன் வரவறிந்த பிரச்சோதனன், மனம் மகிழ்ந்து, வரவேற்று இருக்கையில் அமர்த்தினன். பின்னர் தருமணல் முற்றத்துத் தானெதிர் சென்று 1திருமணியம்பலங்கொண்டொருங்கேறி 2இரட்டைத் தவிசினிருக்கை காட்டி 3இசைக்க வேண்டா இதையுனதில்லெனச் சிறப்புடைக் கிளவி செவ்விதிற் பயிற்றித் தளரிய லாயமொடு தன்புடைநின்ற பணியோள் பற்றிய பவழச் செப்பின் வாசநறுந்4திரை வகுத்து முன்னீட்டித் தாமரை யங்கையிற் றான்பின் கொண்டு குறிப்பின் இருக்ககுமரன் ஈங்கென மொழிந்து தான் மட்டில் எழுந்து உள்ளே சென்று, தன் அமைச்சருள் மூதறிஞனான சிவேதன் என்பானையழைத்து. உதயணனை எவ்வாற்றானும் சின்னாள் தன்னகர்க்கண் தங்கு வித்தல் வேண்டுமென்ற கருத்தால், தன் மக்கட்குக் கலைப்பயிற்சியும் மகள் வாசவதத்தைக்கு யாழ்ப்பயிற்சியும் உதயணனைக் கற்பிக்கச் செய்தல் வேண்டும்; தீதொடுவரினும், இக்குறையைத் தீர்த்தல் கடன் என்று சொல்லி விடுக்கின்றான். அவ்வாறே சிவேதனும் உதயணனையடைந்து அவன் மனங் கொள்ளத் தக்க வகையில் அரசன் குறையைத் தெரிவிக்கின்றான். இதைக்கேட்டதும் உதயணன் உள்ளத்தில் எண்ணங்கள் பல எழத் தொடங்கின. மகட்குறையுணர்ந்து மன்னவன் விடுத்த திருமணிவீணை யிசைத்தலுந்தெருமந்து 1ஒருநிலைகாறும் உள்ளே யொடுக்கி விழுப்பமொடு பிறந்த வீறுயர் தொல்குடி ஒழுக்கங் காணியவுரைத்ததை யொன்று கொல்? 2ஒளி மேம்பட்டன னொன்னான் என்றெனை 3அளிமேம்படீஇய எண்ணிய தொன்று கொல்? உள்ளமருங்கின் உவத்தது செய்தல் செல்வமன்னவன் சீலம் கொல்லோ? யாது கொல் மற்றிவ்வேந்தன் பணி?என முறையே தன் மனத்தில் உதயணன் எண்ணமிடுகின்றான். இதற்கிடையே வாசவதத்தை பால் எழுந்த வேட்கையும் அவள் நெஞ்சையலைத்துக் காட்சியாசை யையவன் கருத்திலுறுவிக்கின்றது. "இவ்வேந்தன் பணி யாதாயினும் ஆகுக; இதனையான் மேற் கொள்ளின் வாசவதத்தையைக் காண்டல் ஒருதலை" என்பான், யாதெனப் படினும் படுக இவன் பணி மாதரைக் காட்டுதல் மங்கலம் எனக்கென நெஞ்சில் துணிகின்றான். இது பொருளாக, மேலும் சூழ்ச்சி அவற்குப் பிறக்கின்றது. அதனால், 4அஞ்சொலாயத் தன்றியான் கண்ட தாமரை முகத்தி5 தலைக்கையாகப் பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள் நல்லிசையார் சொல் நயக்கின்றாளெனச் சொல்லினன் வினவும்6 சுவடுதனக் கின்மையின் யாரேயாயினும் இவன் மகளொருத்தியைச் சீர்கெழுவீணை சிறப்பொடு காட்டிப் பயிற்சியுள்வழிப் பல்வோர் வருதலின் அழித்தும் ஒருநாள் அன்றியான்கண்ட இப்பணியை யான் ஏற்றுக் கோடலே நன்று எனத் துணிந் தான். 'அம்மன்னன் புதல்வியருள் நெருநல் புலிமுக மாடத்தின்மேல் தோழிமாருடன் நின்ற அப்பெண்ணின் நல்லாள் தானோ? வேறொருத்தியோ? அறியேன். யாரேயாயினும் ஆகுக. இவ் வேந்தனுடைய புதல்வியர் பலரும் வரும் பொழுதில், என்னுள்ளங் கவர்ந்த' கதிர்மதி முகத்தியைக் கண்டலுமுண்டென முழுதும் 1தன்னறிவு செலுத்தி ஆராய்கின்றான். தான்மேற் கொள்ளும் பணியினால், தனக்குளதாகும் மானம் புலனாகின்றது. அதுபற்றி நினைந்தவன், செய்யேனாகிச் 2சிறுமைநாணின் உய்யேனாதல் ஒருதலை; அதனால், உயிர்கெடவருவழி யொழுக்கங்கொள்ளார் செயிரறு கேள்வி தேர்ந்துணர்ந்தோரென வெல்லினும் தோற்பினும் விதியெனவகுத்தல் பொருணூலாயும் புலவோர் 3துணிவென மதிவழி வலித்த மனத்தனாகி என்னிதற்படுத்த நன்னுதன் மாதரைப் பேரும் பெற்றியுந் தேருமாத்திரம் நேர்வது பொருளென நெஞ்சுவலியுறீஇச் 4செறுநரைப் போலச் சிறையிற்றந்து தன் 1சிறுவரைப் போலச் செய்தோன் முன்னர்த் 2தவன் முறையாயினும் தன்மன முவப்பன இயன் முறையாற்றி என் கடன் தீர்ந்த பின்னராகு மென் 3பெயர் முறை என்ன ஆன்பாற் கடலில் தேன்மழை பெய்தது போலமிகமிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது என்று மட்டற்ற மகிழ்ச்சி எய்தினான். ஆன்பால் தெண்கடலமுதுற வளைஇய தேன்பெய் மாரியின் 4திறவதாகப் பருகுவன்ன பயத் தொடு கெழீஇ உருகுவன்ன ஒவகையனாகித் தன் உடம்பாட்டினைச் சிவேதனுக்குரைக்கின்றான். அவனும் விரைந்து சென்று அரசற்குரைத்து மகிழ்கின்றான். பின்பு, அவன் தன் பெதும்பைப் பருவத்து மகளிரனை வரையும் வருவிப்ப, அவரனைவரும் அவ்வயின் வருகின்றனர். வாசவதத்தை பெதும் பைப்பருவங்கடந்தமையின், பிரச்சோதனன், தெய்வத் தாமரை திருமகட்கெடுத்தோர் ஐயப்படூஉ 5மணியிற் கேற்ப ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும் பெண்மையும் பெருமையும் பிறவு முடைமையின் பாசிழையாயத்துப் பையெனநின்ற வாசவதத்தை வல்லளாகென 6ஊழ் முறை பொய்யாது கருமமாதலின் யாழ்முறைக் கருமம் இவள தென்று எண்ணி, அவளை வருவித்து உதயணற்குக் காட்டாமல், வந்த ஏனைமகளிரை முறையே தன் வலத்துடையில் இருத்திக் காட்டி, அவரவர் விரும்பிய பரிசுகளை வழங்குகின்றான். மேலும் அவர் கற்றுள்ள கலைவகைகளைக் காட்டச் செய்கின்றான். அவர்களும் தாம் கற்ற அடிசில்வினை, யாழின் துறை முதலாக வாக்கின் விகற்ப மீறாகப் பல கலைகளையும் காட்டுகின்றனர். முடிவில், வாசவதத்தை யாழ்கற்றற்கு வேண்டுவன பலவும் அமைக்கப் பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளைப் பலருங் காண்கின்றனர். அவருள், ஈன்ற தாயும் என்மகட்கித் தொழில் மாண்ட தென்று மனத்திற்1புகல மழலைக் கிண்கிணிக் கழலோன் பெருமகள் அரும் பெறல் தத்தைக் காசானாகி 2போக வீணை புணர்க்கப் பெற்ற 3தேசிக குமரன் திருவுடையன்னென அடியரும் ஆயரும் 4நொடிவனர் வியப்ப ஏனைத் தாயருமானா தேத்த வத்தவர் பெருமகன் வல்லவீணை தத்தை தனக்கே தக்கதாலென வேட்டது பகருங் கோட்டியாகி ஈன்ற நற்றாயும் என் மகளுக்கு இத்தொழில்ஏற்றது என மகிழ்ந்துரைத்தாள். இந்தவாசவதத்தைக்கு யாழ்கற்பிக்கும் ஆசானாகியஉதயணன் நற்றவமுடையவன் என ஆயமகளிரும் ஏனயை மகளிரும் மகிழ்ந்து கூறினர். இந்த உதயணன் கற்பிக்கும் வீணையைக் கற்கும் சிறப்பு இந்தத் தத்தைக்கே தக்கதாகும் என்றும் அனைவரும் தம்முட்பேசிக் கொள்வாராயினர். இதற் கிடையே வாசவதத்தை யாழ்கற்றுக் கோடற்குரிய கீதசாலை வகுக்கப் பெறுகிறது. வாசவதத்தையும் கீத சாலை வருதற்காக ஒப்பனை செய்யப் பெறுகின்றாள். பின்பு, 1பொத்தின் றமைந்த புனைவிற்றாகிச் 2சொத்துற்றமைந்த கதையில் செஞ்சுவர் வெண்கோட்டு நெடுந்தூண் விதானந் தூக்கித் 3தேநவின் றோங்கிய திருநா ளொடு சிறைக் கீத சாலை 4வேதி நிறைய மல்லற் சுற்றமொடு கல்லெனப் புகுதந்து அரக்குப் பூமி யாயமோ டேறிப் பரப்புமலரொரு சிறைப் பாவையை நிறீஇ குற்றமற்ற பொன்னால் இயற்றப் பெற்றதும், பொன்னால் சுவரமைக்கப் பட்டதும், யானை வெண்கோட்டான் இயன்ற தூண்களை யுடையதும், மேற்கட்டி யுடன் அணி செய்யப்பட்டதும் காட்சிக்கு இனியதுமாகிய இசைமன்றத்தை அடைந்தனர். மலர் பரப்பிய அவ்விடத்தில் வாசவதத்தையை நிற்கச்செய்தனர். யாழ்க்குரிய பலிக்கடன் செய்தற்கு உதயணனையழைத்து வருமாறு பிரச்சோதனன் பணிப்ப, மகளிர் பலர் விரைந்து சென்று அவனைக் கீத சாலைக்கு அழைத்து வருகின்றனர். அவன் வந்து தனக்கு இடப்பட்டிருந்த இருக்கையில் இருக்க ஏனை மகளிர் தத்தம் இருக்கையில் இருக்கின்றனர். அவனருகே திரைக்குள் வாசவதத்தை யிருப்ப, யாழ்க்குரிய பலிக்கடன் இட்ட அளவில், 5நன்னர்க் கிளவி நயவரப் பயிற்றி ஆசான் கொடுக்கும் அரும் பெறல்விச்சை காண்போர் செய்யுங்கடப்பாடிது வென வெள்வளை முன்கை தோழியர் பற்றி 6ஒள்ளிழை மாத 7ரொழுக்கஞ் செய்கெனக் காந்த ளழித்த கைம்முகிழ் கூப்பிக் 8கஞ்சிகை திறந்த பொழுதினன்று தன் காட்சிக் கொத்த கள்வனாதலின் 1மேற்படு நோக்கமொடிருவரு மெய்தி 2எப்பெறு துயரமொ டிலங்கிழை யிறைஞ்சிப் பொற்காற் படுத்துப் பூந்துகில் வளைஇக் கைக்கோற்3 சிலத ரொடு கன்னியர் காப்பத் தெய்வத் தன்னதிறலோன் காட்ட வாசவதத்தை யாழ் கைவைத்து இசைபயில்கின்றாள். 5. நருமதை சம்பந்தம் உதயணன் வாசவதத்தைக்கு யாழ் கற்பித்து வருகையில், நகரத்தில் வாழ்வோருட் சிலர், உதயணனது அழகு முதலிய நலங்களையும் வாசவதத்தையின் வனப்பையும் நோக்கித் தமக்குள்ளே புகழ்ச்சொற்கள் சில கூறத் தொடங்கி, ஒன்னலர் நுழையா ஒரிமை மாணகர்த் தன்மகளொருத் தியைத் 1தானயாழ்கற்கென 2ஏதின் மன்னனை யெண்ணான் தெளிந்த 3பேதை மன்னன் பின்னுங் காண்பான் சென் றேயாயினுஞ் சிதையினல்லது 4நன்றறிவாரா தொன்றறி வோர்க்கென அரசன் ஆசான் அரும்பெறல் தந்தையென எண்ணித் தம்முட் கூறிக் கொள்ள நாவெழாது பேரச்சங் கொண்டு, வேந்திடையிட்ட வெஞ்சொலாதலின் 5சேர்ந்தோர் மாட்டுஞ் செப்பல் தீதென உரைப்போர் நாவிற் 6குறுதியின்மையின் நினைத்தது மிகையென 7நெஞ்சுவலியுறீஇத் தத்தம் மனத்தே இவற்றை யடக்கிக் கொண்டொழுகு கின்றார்கள். அரசன் மகனான பாலகுமரன் என்பான் தனக்கு விற்பயிற்சி நல்கும் ஆசானாகிய உதயணகுமரற்கு வேண்டிய மாலையும் சாந்தும் மடியும் பிறவும் வயந்தகன் என்பான் பால் கொடுத்தனுப்பு கின்றான். அவன் மாற்றுருக் கொண்டு உதயணனுக்குத் துணை செய்ய வந்திருந்த அவன் தோழருள் ஒருவனாவான். அவனைப் பாலகுமரன் அறிந் திலனாயினும் உதயணன் தெரிந்து கொண்டு அவ்வயந்தகன் பாலே இனி நாடோறும் தனக்கு வேண்டுவன கொடுத்து விடுக்குமாறு ஏற்பாடு செய்ய அவ்வண்ணமே வயந்தகனது நெருங்கிய தொடர்பினை உதயணன் பெற்று அவன் வாயிலாக, 1மாயயாக்கையொடு மதிலகத் தொடுங்கிய 2ஆய மாக்க ளவன்வயி னறிந்து காவலாள 3ரற்றநோக்கி 4மேவனமென்னும் சூழ்ச்சியராகி நாட்கள் பல கழிக்கின்றனர். இந்நிலையில், உதயணன் வாசவதத்தையொடு அடிக்கடி யாழ்கற்பிக்குமாற்றால் பயிற்சிமிக்கு அடங்கா வேட்கை யெய்திக் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வேறு பட்டாள். 5கட்கொண்டாங்குக் களிநோய்கனற்றத் தீமுகத் திட்டமெழுகிற் றேம்பியும் தாய்முகத் தியாத்தகன்றிற்புலம்பியும் 6உயலருந் துன்பமொடொருவழிப்பழகிப் 7பயலை கொண்டவென் பையுளாக்கை பண்டென் வண்ணம் பயின்றறிமாக்கள் இன்றென் வண்ணம் 8இடைதெரிந்தெண்ணி நுண்ணி தினோக்கி நோய் 1முதனாடிற் பின்னிது காக்கும் பெற்றியரிது என வாசவதத்தை பொருட்டுத் தனக்குண்டான வேறுபாட்டை மறைத்தற்குரிய நெறி களையாராய்கின்றாள், வயந்தகன் சூழ்ச்சித் துணைவனாகின்றான். முடிவில், உதயணன், வயந்தகனை நோக்கி, பிறன்பாற் பட்ட பெண்பால் நாடி அவன்பாற்பட்ட 2வார்வம் செய்கம் அன்னானொருத்தியை 3யறிந்தனைவம்மெனப் பணிக்கின்றான். அவன் பரத்தையர் சேரிக்குச் சென்று அங்கே வாழ்ந்த நருமதை யென்னும் நாடகக் கணிகை மனையையடைந்து, அவள் தாய்க்கு உதயணன் கருத்தை யறிவிப்ப, அவளும் மனம் மகிழ்ந்து, அணியிழை மகளிரும் யானையும் 4வணக்கும் மணியொலி வீணையுஞ் 5சாமமுமரீஇக் கழறொடி கவை இய 6கலம் பொழிதடக்கை உதயணகுமரனுள்ளத் 7துளளெனின் ஒண்டொடி மாதரு 8மொருதுணை யோருட் பெண்டுணை சான்ற பெருமை பெற்றனள் என் மருமகற் புகலும் 9மனம்புரி கொள்கை இருமூதாட்டி யெனக்கு முண்டென இனிய தேன் கலந்த சொற்கள் பல சொல்லி, வயந்தகனை மகிழ்வுறுத்தி நரு மதையையடைந்து நிகழ்ந்தது கூறி, "ஐயன் வந்த ஆசறுகருமம், கைவளை மாதராய், சென்று களைவாயாக" என்று சொல்லி வயந்தகன் கொடுத்த நிதியப் பொதியைக் காட்டுகின்றாள். அவளோ, உதயண குமரன் மனைக்குச் சென்று இன்பந்தருவதை விரும்பாது மறுத்து, "சிறு நில மன்னற்கு அம்மனை நயந்து, யான் அவ்வயிற் சேறல் இயலாது" என்று சீறி விழுகின்றாள். அவட்கு உற்றாரும் துணைவரும் போந்து, "கணிகையராகிய நம்மலர், பழமையிற் 1பசையாது கிழமையிற் 2கெழுவாது தவந்தீர்மருங்கிற்றிருமகள் போலப் 3பயந்தீர் மருங்கிற் பற்றுவிட்டொரீஇ 4இட்டதையுண்ணும் நீலம் போல 5ஒட்டிடத் தொட்டு முறுதி வாழ்க்கையுட் 6பத்திமை கொள்ளார், பைந்தொடி! கேள்என மொழிகின்றனர். அதற்கும் அந்நருமதை இசைகின்றிலள். அவள் தாய் மனத்தே சீற்றங் கொண்டு,வயந்தகனை நோக்கி, "நீ இவளைப் பற்றி நின் தேர் மீதேற்றிக் கொண்டு செல்வதே தகுதி" என்று சொல்ல, அவன் அவ்வாறே கொண்டு போகையில் அவள், வலிதி னென்னைவத்தவர் பெருமகன் 7கொலிய செய்வது குழூஉக்கள் காண்கெனப் பூசலிடுகின்றாள். அது கண்டு நிற்கும் மக்களுட் பலர், மாரியுந்திருவும் மகளிர் மனமும் 8தக்குழி நில்லாது பட்டுழிப் படுமெனும் கட்டுரையன்றியுங்கண்டனம் யாமென; வேறு சிலர், அவள் செய்கையை வெறுத்தவராய், உதயணனைப் பாராட்டி, விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும் ஒத்தொருங்கமைந்த வுதயணகுமரனைப் பெற்றனளாயினும்1 பிறர்க்குநைந்தழுவோள் வெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர் 2கண்ணிலியாகு மிக் கணிகைமகளென; வேறு சிலர், உதயணன் செய்கையை வெறுத்தும் நருமதை பால் இயங்கியும் கூறுவாராய், ஆற்றற் கொற்றமொ டரசுவழிவந்ததன் காத்துயர் தொல்குடிக் 3கதுவாயாகப் 4பண்பில் சிறு தொழில் பயின்றதையன்றியும் தன்னொடு டாளைத் தாயைந்தரற்றிக் 5கண்ணற்றனனாற் காவலன் மகனென உதயணனை இழித்துரைக்கின்றனர். இவ்வுரைகளைக் கேட்கின்றானாயினும், வயந்தகன் நரு மதையை விட் டொழியாது தன் வையத் தேற்றிக் கொண்டு, 6தகைப்பருங்காமத்துத் தாம்வீழ்மகளிர் நகைப்பதம் பார்க்கும் நனிநாகரிகத்துச் 7சொல்லினுண்பொருள் காட்டி 8யில்லின் படுகாழ்ப்படுத்துத் தேய்வையுறீஇக் 9கலுழி நீக்குங் கம்மியர் போல மகர வீணையின் மனமா சுகழீஇ நகர நம்பியர் திரி தருமறுகில் விடரும் தூர்த்தரும் தத்தமக்கு ஒத்தனபேசி அலர் தூற்ற உதயணனிருந்த மனைக்குக் கொணர்கின்றான். அவ்விடத்தே, பகங்கதிர் கருங்கிய பசலைத்தாகி விசும் பெழத்தேயும்வெண்மதிபோல 1வலியிற்றீரா தொளியிற் குன்றிப் பெருநல் கூர்ந்த பெருவரையகலத் 2தெவ்வமறைத்தல் வேண்டி வையத்து வலிதிற் றந்த வால்வளைப் பணைத்தோள் 3ஒருமனம்புரிந்த நருமதை கேட்ப வேட்கைக் கிளவி வெளிப்படப்பயிற்றி 4சேட்படு குருசில் சேர்தொறும் பொறாஅள் நச்சுயிர்ப் பளைஇய நாகம் போல 5அச்சுயிர்ப் பளை இயமரா நோக்கமொடு 6சில்லைச் சிறுசொன் மெல்லியல் மிழற்ற அவ்விருளடக்கி 7வைகிருட்போக்கி உதயணன் வாசவதத்தையின் பொருட்டு ஏதிலார் கூறும் பெரும் பழியை மேற் கொள்கின்றான். 6. சாங்கியத்தாயுரை நருமதை பொருட்டாக உதயணன் ஏறட்டுக் கொண்ட பழிப்பினை யொற்றர் சென்று பிரச்சோதனனுக்குத் தெரிவிக்கின்றனர். அது கேட்டு நகையும் நாணுங் கொண்டானாயினும், பிரச் சோதனன், யாரிடத்தும் பழிப்புறஞ் சொல்லாப் பண்புடையனா தலால், 1உருவுவழிநில்லா தாயினு மொருவர்க்குத் திருவு வழி நிற்குந் 2திட்பமாதலிற் கேட்டது கரந்து வேட்டது பெருக்கி பட்டது நாணாது 3பெட்டது மலையும் 4கால மன்மை யல்லது காணிற் கோலமன்னோகுமரற் கிதுவென எள்ளியு முரையா னினைமைய தியல்பென எண்ணி முறுவல் செய்கின்றான். அதன் மேலும் நருமதை உதயணன் பால் அன்பு கொண்டு அவன் விருப்பு வழி யொழு குவிக்கும் நெறி நினைந்து அவட்குச் சிறப்புப் பல செய்கின்றான். இருங்கலப் பேழையும் திருத்தகு வையமும் புள்ளியற் பாண்டிலும் அவள் இல்லத்திற்குச் செல்கின்றன. புனலாட்டு, தெய்வவிழாக் காண்டல் முதலியன குறித்து நகர் கடந்து செல்லக் கடவாளல்லளென விலக்கி, அரசன் கோயிற்குப் போந்து ஏனைநாடக மகளிர் போலக் கூத்தாடுதலும் வேண்டா என ஆணை தந்தருள்கின்றான். இஃதிவ்வாறாக, வேற்று நாட்டு வேந்தர் பலரும் வாசவதத்தையின் இசைப்புலமை யினையும் வனப்பினையும் கேள்வியுற்று மணம் பேசித் தூது விடுக்கின்றனர். பிரச்சோதனன் தூதுவர் கொணர்ந்த ஓலைப் பொருளும் அவர் உரைக்கும் உரையும் கேட்டு, அமைச்சரொ டாராய்ந்து, நன்று மென்றானன் றென 1மறாஅன் மரனிவர் குரங்கின் 2மகக் கோட்போல நிலைமையொடு தெரிதரும் 3நீதியனாகித் தான் எண்ணுவன வெண்ணித் துணிந்துரைக்குங்காறும் அவ்வவ் வேந்தரை யமைந்திருக்குமாறு சொல்லி விடுகின்றான். தூதுவரும் தத்தம் நாடு செல்கின்றனர். பின்பு பிரச்சோதனன் வாசவதத்தையின் செவிலித் தாயாகிய சாங்கியத் தாயை வருவித்து நிகழ்ந்தது கூறி, மகளின் மனக்கருத்தையறிய விழைகின்றான். அவளும் அவ்வாறே சென்று வாசவதத்தையைக் கண்டு தனியிடத் திருத்தி, வேந்தர் திருமணம் குறித்து விடுத்த தூதிதனைத் தெரிவிக்கின்றாள். 4நொதுமற் கிளவிகதுமென வெரீஇப் புதுமரப் பாவை பொறியற்றாங்கு 5விதுப்புறு நடுக்கமொடு விம்முவனளாகி இது மெய்யாயினின்னுயிர் வேண்டி வாழ்வோருளரெனிற் சூழ்கதன் வினையென ஆவிநுண்டுகில் 6யாப்புறுத்தாயினும் சாவதுறு தியான்7றப்பியபின்றை என்பிற் றீர்கவெந்தை தன் குறையென 8அன்பிற் கொண்ட அரற்றுறுகிளவி வளைக்கை நெருக்கி வாய்மிக்கெழுதரக் கதிர்முத்தாரங் 9கழிவன போலச் 10சிதர்முத்தாலி சிதறிய கண்ணள் தேம்பியழலுறுகின்றாள். உடனே சாங்கியத்தாய் அவளைத் தழீஇத் தன்மடி மிசையிருத்தித் தகுவனபல கூறித் தேற்றி நிறைமைசான்றநின் னெஞ்சங் கொண்ட 1பொறைமைகாணிய பொய்யுரைத்தே னென 2ஓதியுநுதலு மாதரை நீவித் தக்கது நோக்காள் பெற்றது விரும்பி நுந்தை நேரான் நெஞ்சு கொள் காரணம் பைந்தொடித் தோளி3பரிறக் கேளென் இளமையும் வனப்பு 4மில்லொடு வரவும் வளமையுந்தறுகணும் வரம்பில் கல்வியும் 5தேசத் தமைதியு 6மாசில் சூழ்ச்சி யொ டெண்வகை நிறைந்த நன்மகற்கல்லது 7மகட் கொடை நேரார் மதியோராதலின் அவையொருங் குடைமையவர் வயினின்மையின் அதுபொய்யாத 8லதனினுந் தேறெனச் சொல்லித் தெளிவிக்கின்றாள். தெளிந்த வாசவதத்தையும் தன் மனக் கருத்து இது வென்று கூறலுற்று. 9தோற்றநிகர்ப் போரின்றியாற்றல் சாலனொடொக்கு ஞாலப் பெரும்புகழ் 10புகரின் னோங்கியநிகரில்கேள்வியன் காமநுகர் வோர்க் காரணங்காகிய 11ஏம வெண்குடையேயர் மகனொடு வையக மறியக் 12கையகம்புக்குத் தானறிவீணை தனியிடத்தெழீஇக் காணுமென்னுங் கட்டுரையன்றியும் உலகமாந்த ருள்ளங் கொண்ட 13ஐயக்கிளவி தெய்வந்தேற்றினும் தூயளென்னாத் தீதுரையெய்தி வாசவதத்தையும் வாழ்ந்தனளென்னும் 1ஓசைநிற்றலுலகத் தஞ்சுவள் எமர்தர2வாராதாயினு மிவணோற் றவணுறையுலகத் 3தழித்துப் பிறந்தாயினும் எய்துதல் வலித்தனென் செய்வது கேள் எனத் திட்பமும் ஒட்பமும் தோன்றச் செப்புகின்றாள். கேட்ட சாங்கியத்தாய், "மிகுதியின் மிக்க தன்4மேற்றிணைக் கேற்பத் தகுவன கூறினள் தலைமகன் மகள்" என்று வியந்து, "நீ கொண்ட கொள்கை ஏற்றமுன்கைத் தொடிவீழ்ந்தற்று" என்று உவப்புரைபல உரைத்து, "நேற்றிரவெல்லாம் மகளிரொடு நொடிபகர்ந்து விளையாடிக் கங்குல் யாமங்கூறும் கண்படை கொண்டிலை; வீணை யாசிரியன் வருந்துணையும் பள்ளி கொள்வாயாக" என்று சொல்லி விட்டு வெளிப்போந்து, யான் வருந்துணையும் ஒருவரும் இங்கே வாரா வகையிற் காவல் புரிக எனக் காஞ்சனமாலை யென்னும் பணிமகளைப் பணித்து விட்டுச் செல்கின்றாள். செல்கின்றவள் கீதசாலையையடை கின்றாள். சிறிது போதில் உதயணன் வாசவதத் தைக்குயாழ்கற்பிக்குங் காலமாத லோர்ந்து அங்கே வருகின்றான். அவiனக் கண்ட சாங்கியத்தாய், அவளைத் தனியிடத்திற் கழைத்துச் சென்று மண்ணகங்5காவலன் மாபெருந்தேவி திருவயிற்றியன்ற 6பெருவிறற்பொலிவே 7இனையையாவதெம்மனோர் வினையென யாக்கைய தியல்பினும் அன்பினுங் கொண்டதன் 8சாட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி இன்னளென்றியான் என்9முதலுரைப்பேன் மன்னவன் மகனேமனத்திற்கொள்ளெனத் தன் பண்டை வரலாறு கூறலுற்று, "யான் கௌசாம்பி நகரத்துப் பார்ப்பன னொருவன் மனைவியாய பார்ப்பனி; இளமையில் என் கணவன் என்னின் நீங்கி நின் தந்தையின் அரசவை யிற்றங்கிப்பன்னாள் வாரா தொழிந்தானாக, யான் கற்பு வரம்பு கடக்கும் குற்றத்துக்குள்ளானேன்; அறங்கூறவையத்தார், அக்குற்றத் துக்காக என்னையொரு மட்குடத்திற் கட்டி யமுனையிலிடுமாறு புலையனொருவனைப் பணிப்ப, அவன் அவ்வாறே என்னைக் குடத்தொடு பிணித்துத் தோணியொன்றி லேற்றிக் கொண்டு செல்கையில், ஆற்றில் தோழருடன் விளையாடிக் கொண்டிருந்த நீ என்னைக் கரையிற் கொணர்ந்து நிறுத்துமாறு பணித்தனை; அவன் கரையிலிறக்கும் போது, அவன் துடுப்புப் பட்டதனாலுண்டான புண்வடு ஈதெனக் காட்டினள். அவளே, மேலும் கூறலுற்று எனக்கு இடப் பெற்ற தண்டம் குற்றத்தின் மிக்கதென்றுரைத்து அருகே கூடியிருந்த அறிஞரையுசாவ பலர் பல கூறலும், சேனைக் கணிமக னொருவன் முன் வந்து." இவட்குத் தவமேதக்கது; கொல்வது மிகை யென்றும், இவள் சில நாள் தவத்திலொழுகிப் பின்னர் அரசன் அந்தப்புரத்து மகளிர்க்கு அறங் கூறும் நன்மகளாக விளங்குவள் என்றான். அது கேட்டு அவ்வாறே செய்க வென வென்னைப் பணித்துச் செல்லவிட்டாய்; யான் சென்று சாங்கிய நூலாசிரியன் ஒருவனைக் கண்டு அவன் பால் சாங்கிய நூல்களை யுணர்ந்து அந்நெறி மேற் கொண்டு இமயமலையடியில் இரண்டாண்டு தவமிருந்தேன். பின்னர் அவ்வாசிரியன் கன்னிக் குமரித் துறையில் நீராட நினைந்து புறப்பட அவனுடனே யானும் வருகையில், இந்நகர்க்கண் அரசவை யில் அறுவகைச் சமயங்கள் பொருளாகச் சொற்போர் நிகழ்வது கேட்டு, ஆசிரியன் அரசவைக்குச் செல்ல யானும் உடன் சென்றேன்; சாங்கிய நூலாசிரியன் எல்லோரையும் வென்று தன் சமயக் கோளை நிலை நாட்ட அரசன் முதலனைவரும் மேற்கொண்டனர்; இங்கே ஆசிரியனும் என்னோடுடன் வந்தாரும் சின்னாட்டங்கி யிருக்கையில், என் பாலன்பு கொண்ட அரசமா தேவி தன்னோடிருக்க வென வேண்டினள்; இருந்து வருகையில் குழவியாக விருந்த வாசவதத்தை என்பால் பேரன்பு கொண்டாள். அரசமாதேவி என்னையவட்குச் செவிலியாக விருக்குமாறு வேண்டினள்; யான் இன்றும் அவட்கு அறங்கூறுஞ் செவிலியாக விருந்து வருகின்றேன்; இங்கே நீ நருமதைபொருட்டுச் செய்த செயல் ஆராய் என்னை வருத்துகிறது என்று கூறுகின்றாள். இவற்றைக் கருத்தூன்றிக் கேட்ட உதயணன், தன் கருத்து முற்றும் உடனே யுமிழ்ந்து விடாத வுறுதியுடையனாய், பண்டறிவுண்டெனப் பகை நிலத்துறைந்த பெண்டிரைத் 1தெளிந்து பெருமறையுரைத்தல் 2நுண்முறையாளர் நூலொழுக்கன்றெனத் தேறாத் 3தெளிவொடு கூறாதடக்கி, மாயமென்றஞ்சின் மற்றிது முடிக்கும் வாயிலில்லென வலித்தனன் றுணிந்து தாய்4முதலிருந்து தன் னோய் முதலுரைப்ப, அவள், வேற்று வேந்தர் வரைவு வேண்டித் தூது விடுத்ததும், பிரச்சோதனன் செயலும், தான் வாசவதத்தையின் கருத்தறியப் புக்கதும், சுருங்கக் காட்டி, அவளது மனக் கொள்கையிது வென்பாளாய், நன்மணியைம் பானருமதைக் கரற்றிய மன்னகுமரன் 5மனம் பிறிதாயினும் எந்தையும் யாயுமின்னகையாயத்துப் பைந்தொடிச் சுற்றமும் பலபாராட்ட மாசில் வீணைம 6டமொழிக் கீந்தோன் ஆசானென்னுஞ் சொற்பிறிதாமோ அண்ணற் குமரற் கடிச் செருப்பாகெனத் தன்மனங் கொண்டவ 7டாவமுற்றிச் 8சாவினைத் துணியுமாத்திரையாவதும் 9மறுவொடு மிடைந்து மாண்பிலவாகிய சிறு10சொற்கிளவி கேளலசெவியென அங்கையிற் புதை இய11ணிநிறமழுகிய நங்கையைத் தழீஇ நன்னுதனீவி மன12ங் கொள் காரணமருளக் காட்டி இனமிலொருசிறையின் 1னினிதாகப் பூமலி சேக்கையுட் புகுத்தினென் போந்தேன் பாயலுளாயினும் 2பரிவவள் தீர்கென இஃதவணிலைமை யென்று சொல்லி, நருமதை மேற்சென்றதாகத் தோன்றும் உதயணன் கருத்தை மீட்டு வாசவதத்தை பாற் செல்வித்தல் வேண்டுமென் றெண்ணி, இன்னினிக் கொண்டு பரிவுமெய்நீங்கிப் பசலையுந்தீர்கென ஒண்ணுதன் மாதர் கண்3ணேப் பெற்ற புண்ணுறு நெஞ்சிற் புலம் பு4கையகல மாதர் நுதலிய மருந்தி5யற் கிளவி ஆருமி லொருசிறை யன்புறப்6பயிற்றி நிலைமைக் கொத்த நீதியையாகித் தலைமைக் கொத்தவது வையெண்ணென உரைக்கின்றாள். இந்நிலையில் அவளை உதயணன் காணாத படி விலக்குகின்றாளாதலால், அதற்கேற்ப, 7பூட்டுறு பகழிவாங்கிய வேட்டுவன் வில்லிசை கேட்8டவெரூ உப்பிணைபோலக் காவலாட்டியர் நாமிசை யெடுத்த சொல்லிசை வெ9ரீ இயமெல்லென்பாவை என்முகத் தேயு மிறைஞ்சிய முகத்தள் நின்றாகத் தாயினிகழ்ந்ததை நாணி 10நிலம்புகுவன்ன புலம்பினளாகிச் சிறுமையினுணர்ந்த பெருமகனிரங்க மண்கெழுமடந்தாய் 11மறைவிடந்தாவென ஒன்று புரிகற் போடுலகு விள12க்குறீஇப் பொன்ற1லாற்றிய புகழாள் போல கொண்ட கொள்கையி னொண்டொடியோனாம் துளிப்பெயன் மொக்குளி லொளித்2தலஞ்சுவென் இன்றை3க்கேள்வியிடையிடு மெனினும் சென்ற4 யாநங்கையைச் செவ்விநோக்கி இன்றுணை மகளி ரொடொன்றியான் விடு5த்தரும் சொல்லொடு6 படுத்துச் செல்கவென் களி7றெனச் சொல்லிவிட்டுச் செல்கின்றாள். சிறிது போதில் காஞ்சன மாலை யென்னும் காவல் மகள் போந்து உதயணனைக் கண்டு, "கற்கும் நாழிகை கழிந்தது, இனிச் செல்க" என்று உரைக்கவே, அவன் தன் மனை நோக்கிச் செல்லலுற்று, அக்காஞ்சன மாலையை நோக்கி, கற்றிலளென்னுங் கவற் சிவேண்டா; 8பற்றிய கேள்வியு முற்றிழை முற்றினள் குஞ்சர 9வேற்றுங் கொடித் தேர் வீதியும் பொங்குமயிர்ப் புரவியும் போர்ப் படைப்10புணர்ப்பும் நீதியும் பிறவு மோதிய வெல்லாம் நம்பி11குமரருந்தந்துறை முற்றினர் வல்லவை யெல் லாம் வில்லோன் மக்களை நவ்லலவைப்12படுப்பது நாளையாதலின் என்னறி யளவையி னொண்ணுதல் கொண்ட தைவரற் 13கியன்ற தான்பயில் வீணையைக் கையினுஞ் செவியினும் செவ்விதிற் போற்றி ஆராய் கென்14பது நேரிழைக் குரையென உரைத்துத் தானும் காவலர் கைதொழக் குறும்புழை வழியாகத் தன் மனைக்குச் சென்று சேர்கின்றான். 7. விழாக் கொண்டது மறுநாள் அரசகுமரார் ஐயாயிரவரும் தாம் உதயணன் பால் கற்ற படைத்திறத்தை அரசவையிற் காட்டியரங்கேற்றற்கு வேண்டிய ஏற்பாடு செய்யப்படுகின்றன. அரங்கேற்றத்துக் கேற்ப அரச குமரரும், உதயணனும் வேறு பல வீரரும் அரசவைக்கு வருகின்றனர். அரசனான பிரச்சோதனன், புறஞ் சுற்றமைந்த பிறங் கெ1டைப்படுகால் நித்திலந்தொ2டரிய நிகரில் கம்தமத்துச் சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்துச் சந்தானப்பீடி3 கைச் சார்வணை யேறிப் பன்மயிர்க் கவரி யொடு பரிசனஞ் சுற்ற இனிதிருக்கின்றான். பின்பு உதயணன் அவன் மக்களைத் தாம் கற்றவற்றைக் காட்டுமாறு பணிக்க, கல்விமாந்தர் கலித்4த கௌவையில் ஆப்புறு5பா டமொடருத்தங்கூறி நாமக்கேள்வி நவிற்றிக் காட்டி மண்டல6மருங்கிற் கொண்டகம் புகுந்து படைகெழுதெய்வம் புகலப் 7பலிவகுத் திடைநாட் பிறையினேற்றிய திருவிற் கண்ணா8லுறுத்துக் கடவதிற்றாங்கி எண்ணால9ரணரும் மீரெண்10கரணரும் துள்ளரும்1 பாசமொடுதொடங்குபு தோன்றி அரிதியல் சாரியை2 யந்தரத் தியற்கையும் 3பொருவின்னாழிகை பூணுமாறும் செருவாளாட்டுஞ் 4சேடகப்பிண்டியும் சாரியை விலக்கும் வேறி5ரிவகையும் இருக்கட் போதி 6னேப்பூமியுள் வகுத்த7வாயில் வகைவகையிவையென 8ஒட்டும் பாய்த்துளுங் கரந்தொருங்கிருக்கையும் செருக்கொள்யானை மருப்பிடைத் திரிவும் தாழாச் சிறப்பிற் 9பாழியிற் பயின்ற காலாட்கருமவிகற்பருங் காட்டிக் கருவித்தாக்கினும் காலாட் சுற்றினும் தனியினாயினுந்தானையோ டாயினும் 10புகவும் போக்கும் 11பொச்சாப்பின்றிப் பகைவெல் சித்திரம் பல திறம் பயிற்றி வண்பரிப்புரவியும் வானெடுந்தேரும் அண்ணல் யானையும் பண்ணுறுத் தேறி 12இலைய வினப்பரி கொளீஇச் சிலையின் மதியோர் புகழ்ந்த மரபியல் வழாமை 13நுதியமை நுண்படை 14நூல்வழிச் சிதறி மழைத்துகள் படினும் வான்றுகள் சூழினும் விலக்கித் தவிர்க்கும் விற்றொழிலுள்ளிட் டிலக்கத் திண்படை யேறுபலகாட்டலும் கண்ட அவையினர் பெருமகிழ்வு கொண்டு, "தலைத் தேர் யானைக்குந் தருக்கினராயினர்" எனப் புகழ்ந்தோதிப் பாராட்டு கின்றனர். தன் மக்கள் உதயணனுக்குப் பகைவன் மக்களாயினும், செற்றம் சிறிதுமின்றிக் கோட்ட மில்லா மனத்துடன் தான் மிகக் கற்றுள்ள விச்சையனைத்தையும் உதயணன் கற்பித்ததை நினைந்து பிரச்சோதனன், அவன் பால் பேரன்பும் பெருமதிப்புங் கொண்டு, அச்செயல்குறித்து அவற்குத் தான் செய்யக் கடவ கைம்மாறு யாதாமென நினைந்து, கைம்மாறிது வெனக் 1கடவதினிறையும் 2செம்மாணாற்றாச் சிறுமையமாதலின் ஒன்பதின் கோடி யொண் பொருள் கொடுப்பினும் பண்பெனக் கொண்டிவன்3 பண்டஞ் செய்யான் நங்குடித்தலைமையிங் கிவற்கியற்றி நாமிவன் குடைக்கீழ்க்4காமுறக் கலந்திவன் வேண்டியது செய்யு மாண்பல திலமென மண் முதலிழந் தோற்கு5 மறுமனமழித்துத் தன்பதிப்புகுந்து தான் மணம் படுகென உதயணனோடும் பிறரோடும் பேசிப் பாராட்டி அவனைத் தன் மனைக்குச் செல்லவிட்டுத் தான் அந்தப்புரஞ் சென்று தன் தேவிக்கும் பிறர்க்கும் "நம் குடிகெழு குமரர் வெறுமைநீங்கினர் விச்சையின் அமைந்து" என்று சொல்லி இன்பக் கடலுள் மூழ்கி யிறு மாந்திருக்கின்றான். பின்னர், "வாசவதத்தையும் இசைக்கேள்வி நிரம்பினள்; நல்லவைப் படுப்பது நலம்" என்று உதயணன் பிரச் சோதனனுக்குத் தெரிவிக்கின்றான். அவனும் மகிழ்ச்சிமிக்கு, இசையரங்கு ஏற்பாடு செய்து இசைப்புலவர் பலரையும் வருவிக் கின்றான். நாடகக் குழுவினரும், யாழ், குழல் தண்ணுமை முதலியன இயக்குவோரும், பாடன் மகளிரும் ஆடன் மகளிரும் வந்து கூடியிருக்கின்றனர். பிரச்சோதனனும் "இந்திரன் மாணகர் இறை கொண்டாங்கு' இனிது வீற்றிருக்கின்றான்; அரங்கிலிருந்த கண்டத் திரையினுள்ளே வாசவதத்தை யாழொடு வந்திருக்கிறாள். முதற் கண், செவிலி போந்து, "மகள் மாணாக்கி வணங்கும் நும்மை" யென அவைப் பரிசாரங் கூறியதும், 6ஐவகைக்கதியுமற்ற மின்றித் தெய்வ நல்யாழ் திருந்திழைதைவர மெய்பனிப்பது போன்7மொய்யவை மருள 1நாற்பெரும் பண்ணு2மெழுவகைப்பாலையும் 3மூவேழ் திறத்தொடு முற்றக் காட்டி நலமிகு சிறப்பொடு நல்லவை புகழ இயம் வெளிப்படுத்த பினி4 சைவெளிப்படீஇய 5எரிமலர்ச் செவ்வா யெயிறு வெளிப்படாமைத் திருமலர்த்தாமரைத் 6தேன் முரன்றது போற் பிறந்துழியறியாப் பெற்றித்தாகிச் சிறந்தியம் பின்குரற் றெளிந்தவண் 7எழுவச் சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும் குறுக்கியுநீட்டியு நிறுப்புழி நிறுத்தும் மாத்திரை கடவா மரபிற்றாகிக் கொண்ட8தானங் கண்டத்துப் பகாமைப் பனிவிகம் பியங்குநர் 9பாடோர்த்துநிற்பக் கனிகொளின்னிசைக் கடவுள் வாழ்த்தித் தேவகீதமொடு 10தேசிகந் தொடர்ந்த வேதவின்னிசை விளங்கிழை பாடக் கேட்டிருந்த அவையோர் மகிழ்ச்சிமிகுதியாய் "சிரகம் பிதத்துடன் கரகம்பிதஞ்" செய்து அரசனைப்பாராட்டி, வத்தவநாடன் வாய்மையிற்றருக்கும் கொற்றவீணையுங் கொடுங்குழை கொண்டனள் இறைகெழு குமரரு மேனைவிச்சைத் துறைநெறி போகிய துணிவினாயினர் தேயாத் 11திருவநீயுந் தேரின் நிலங் கொடைமுனியாய் கலங் கொடைகடவாய் வேள்வியிற்றிரியாய் கேள்வியிற் பிரியாய் இனையோய் தாணிழல் தங்கியநாடே வயிரவெல்படை வானவ12ரிறைவன் ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும் மீமிசையுலகினுந் தீ1திகந்தன்றெனச் சொல்லிசையாளர் சொல்லெடுத்தேத்தப் பிரச்சோதனன் இன்பம் கைம்மிகுந்து இசையா சிரியரை யுள்ளிட்ட இசைவாணர் பலர்க்கும் கட்டுடைக் கலனும், கதிர் முத்தாரமும், பட்டியற் கலிங்கரும் பாசிழை பலவும் அளித்து மகிழ் கின்றான். அப்போது வாசவதத்தை வந்து அவன் திருவடியில் வீழ்ந்து வணங்க அவன் அவளைத் தன் மடிமீதிருத்தித் தோள்நீவிக் குழை திருத்தி, "பொன்னிழை! தாயுழைப் போக" என விடுக்கின்றான். அரச மாதேவி இன்ப மேலீட்டால் ஒன்றுஞ் சொல்ல மாட்டாது அதனைக் கண்ணாற் புலப்படுக்கின்றாள். ஏனைத் தாயரெல்லாம், அவளைத் தழுவி, "இன்சொல் மகளிர் ஏனைப் பலருள்ளும். நுந்தை நெஞ்சம் நீயறப் பெற்றாய்" என்று பாராட்டுகின்றனர். பின்பு, பிரச்சோதனன் தனது பொற் கோட்டம் பலம் புகுந்து கற்றோர், சூழ்ந்திருப்ப, உதயணனை வருவித்துப் பெருஞ் சிறப்புச் செய்து. தா2முயல் வேட்கையின் மாநிலத் துறையுநர் மரமுதல் சாய ம3ருந்து கொண்டாங்கு நங்குடிவலித்தல் வேண்டி நம்பி தன்குடி கெடுத்தத கவிலாளனேன் என்று மனங் கெழுமிய நல்லுரையாற் சொல்லி அமைச்சரை நோக்கி, என்மனம் புகல வேண்டின் இவனைத் தன் மண்மிசை நிறுக்கு4மந்திர மிருக்கென மதிவலாளர் விதிவகையிதுவென மந்திரங்கூடுகின்றது; ஆண்டு நிகழ்ந்த ஆராய்ச்சியின் முடிவில், 5தண்ணுஞ் சேனையுந்தகைக்கோ சம்பியும் பண்டு6கண்ணழிந்த பகையினைநீக்கிப் பொன்னு நெல்லும் புரிவின் 1வழங்குகென் றொன்றெனப் பயிற்றியுருமிடித்தன்ன வென்றிமுரசம் வீதி தோ2றெருக்கி முன்யானிவனைமுருக்கலும் வேண்டினேன் பின்யானிவனைப் பெருக்கலு முற்றனென் 3எமரனாயினிறை கொடுத்தகல்க அமரனாயினமை வொடு நிற்கென அடல் வேற்றானை ஆருணியரசற்குத் தூது விடுகின்றான். உதயணற்கும் பெருஞ் சிறப்புக்கள் பலதந்து மறுநாள் உதயணனும் தன் மகன் பாலகனும் பெருஞ் சேனையும் சேனைத்தலைவரும் செல்க வென ஆணைதந்து அந்தப்புரஞ் செல்கின்றான். அமைச்சனும் செவிலியும் அமைந்த வகையால் நாள் கொளற்கிருக்கின்றனர். அந்நிலையில், பாகீரதியென்பா ளொருத்தி, தெய்வமருள் கொண்டாள் போல ஆரவாரிததுக் கொண்டு வீதியிற் போந்து பலரும் கேட்ப, கழிந்த யாண் டுங்4கயநீராட்டணி ஒழிந்த தன்5றண்டமுயர் கொடி மூதூர்க் குருதி வெள்ளங்6 கூலம் பரப்பி அழுகுரன் மயங்கிய வல்லற்றாக மதவலி வேழ7மையலுறுத்த கடவுள் யானெனக் கடவுட் காட்டி ஓடி வருகின்றாள். மக்கள் பலர் கூடுகின்றனர். கட்டு விச்சியர் எதிர் வந்து, "குற்ற முண்டெனிற் கூறுமின் எமக்கு" என வேண்டு கின்றனர். பாகீரதி நகைத்து விழாக் கோட்குரியாரை வருவிக்க வென்கின்றாள். அவரும் வருகின்றனர். அவர்களை நோக்கி, திருநீராட்டணி மருவீராயின் 1பிணக்குறைபடுத்துப்பிளிறுபு சீறிய இன்றுஞ் சென்றியான்குஞ் சரம்பு குவலென்று அவள் கூறுகின்றாள். அவர்களும் அதற்கிசைந்து சென்று பன்றியெறியுற்ற புண் கூர்2ஞமலி குன்றாவடிசிற் 3குழிசி காணினும் வெரீஇயன்ன வியப்பினராகி 4அலகை மூதூரான்றவரெல்லாம் 5உலகந்திரியா வொழுக்கினராதலின் காவல் மன்னற்குக்கது மெனவுரைத்தலின், அவன் நீராட்டு விழாவையெடுக்குமாறு பணிக்கின்றான். நீராட்டிற்குரிய நீரியல்மாடம், நீந்தியற் புணை, சிவிகை, தேர், வையம் முதலியன செப்பம் செய்யப்படுகின்றன. நூலறிவாளர் நால்வரைச் செலுத்தி இச்செய்தியை உதயணற்கும் அரசன் தெரிவிக்கின்றான். 8. விழாவாத் திரை நீர்விழா வயரும் செய்தி உஞ்சேனைநகர் முழுதும் தெரி விக்கப்படுகிறது. நகரமெங்கும் மக்கள் நீர் விழாவுக்குச் செல்லும் விருப்புடைராய்த் தத்தமக்குரிய வூர்திகளிலேறிப் புறப்படு கின்றனர். விழாக்குறித்தெடுத்த கொடிகள் 1ஆர்வமகளிரு மாய் காதன்மைந்தரும் வீரகுமரரும் விரும்புவனரேறிய மாவுங்களிறு 2மருப்பிய லூர்தியும் 3காலிரும்பிடியும் கடுங்காற் 4பிடிகையும் தேருமாக்களுந் தெருவகத்தெடுத்த எழுதுகள் சூழ்ந்து மழுகுவுமாழ்கிப் பகலோன் கெடுமெனப் 5பாற்றுவனபோல அகலிருவானத் துகள் துடைத்தாட வையங்களின் நிரையும் பிடியானைகளின் ஒழுங்கும் சிவிகை களின்போக்கும் பிறவும் வரிசை வரிசையாக நகர வாயிலைக் கடந்து நீர்த்துறை நோக்கிச் செல்கின்றன. விழாவயரும் நீர்த் துறைக்குச் செல்லும் மக்கள் அவ்விடத்தும் அதனைச் சார்ந்து முள்ள பழனக்கரையிலும் ஆற்றின் கரையிலும் உள்ள பொழிலிலும் கமுகிளந்தோட்டங்களிலும் பூம் பொதும்பர்களிலும் பன்மலர்க் காக்களிலும் நிறைந்திருக்கின்றனர். ஆங்கே அமைந்துள்ள நீரங் காடிகள், 1உண்ணமதுவுமுரைக்கு நானமும் சுண்ணமுஞ்" சாந்துஞ் 2சுரும்பிமிர் கோதைழயும் அணியுங் கலனுமாடையு நிறைந்த கண்ணகன் கடைகளொண்ணு3 தலாயத்துக் கன்னிமா4 ண்டுழிந் துன்னுபு 5நசைஇய தூதுவர் போல 6மூசினகுழீஇ 7ஆணைத் தடைஇய நூனெறி யவையத்துக் கல்வியாளார் சொல்லிசை போல வேட்போரின்றி 8வெறியவாக அவரவரும் தத்தமக்கு வேண்டியவற்றைக் குறைவறத்தம் மோடே கொணர்ந்திருக்கின்றனர். இவ்வாறு நகர மக்களனை வரும் நீர்த்துறையிடத்தே இறைவன் பணியென்றிறை கொண்டு ஈண்டி யிருக்கின்றனர் என்ற செய்தியை விழாக்கோளாளர் சென்று வேந்தனான பிரச்சோதனற்குத் தெரிவிக்கின்றனர். அடக்கருங் களிறுகளைச் சேணிலத் துறையும் சேனையிற் சேர்க்கப்படுகின்றன. அவனாணையால், வேந்து பிழைத்த வினைவரும், சேர்ந்தோர்த் தப்பிய செறுநரும், கள்வரும் வேற்றுநிலத்திற் செலுத்தற் குரியாரா யினும், அவ்வாறு செய்யாது அவர்கள் விழாவிடத்திற்குக் கொண்டு போகப்படுகின்றனர். விழாநிகழும் இருபத்தொரு நாளும் படைவீரர் படையொழியற் பாலரென விடுகை பெறுகின்றனர். புனற்றாரை, நாழிகைத் தூம்பு, மலர்ப்பந்து, சுண்ணவட்டு, கழிநீர்க் கோடு முதலியனவும் பிறவுமாகப் புனலகத் துதவும் போகக் கருவிகளை யேற்றியபிடியானைகள் ஓராயிரம் உடன் வரக் குறும் பொறை மருங்கிற் குன்றம் போல விளங்கும் யானை யொன்றின் மேல், 9கடிகையாரங் கழுத்தின் மின்னப் 10பயிர் கொள் வேழத்துப் 11பணையெருத் திரீஇக் கடவுட்கல்லது 1காறுளக்கில்லது தடவு நிலைநிழற்றிய தாமவெண்குடை ஏந்திய நீழற் சாந்து கண்புலர்த்திய பரந்த கவரிப் படா2கைச் சுற்றத் துயர்ந்த வுழை 3க்கலத்தியன்ற வணியின் முந்நீரொலியின் முழங்கு முரசமொ டின்னீர் வெள்வளையலறுமார்ப்பின் மைத்து4ன மன்னரு மந்திரத்துணைவரும் அத்துணை சான்ற வந்தணாளரும் சுற்றுபு சூழ முற்றத் தேறி மலர் தூவிய மாடமறுகில் இனிது செல்கின்றான். அவற்கு முன்னும் பின்னும் பிடியும் வையமும் வடிவமைபிடிகையும் தம்மிற் பிணங்கி மொய்த்துச் செல்கின்றன. அவற்குப்பின், அணிகலப் பேழையும் ஆடை வட்டியும், மணி வள்ளமும் மதுக்குடமும், பூப் பெய் செப்பும் புகையகிற் கட்டையும், சீப்பிடு சிக்கமும் செம்பொற் கலசமும், கட்டிலும், பள்ளியும், இணைவட்டும், முகக்கண்ணாடியும் பிறவும் வர, அவன் தேவியர் வருகின்றனர். வாசவதத்தையின் நற்றாயான பதுமகாரிகை தத்தையின் கண்ணழகையுற்று நோக்கி, 5முகடுய ருலக முன்னிய முனிவரும் கண்டாற்கண் டவாங் 6கதிர்ப்பினவாகித் 7தண்டாப் பெருந்துயர் தருமிவள்கண்ணென உண்மலியுவகை யளாகித் தன்மகள் இளவனையாயத் திளையர் கேட்பப் புனல் விளையாட்டினுட் போற்றுமின் சென்றென 8ஓம்படைக்கிளவி பாங்குறப்பயிற்றி ஆங்கவருள்ளுமடைக் கலநினக்கெனக் காஞ்சன மாலைக்குக் கைப்படுத்தொழிந்தபின் தனக்குரிய வையமேறிச் செல்லலுறுகின்றாள். ஏனையுரிமை மகளிரும் இவ்வாறே புறப்பட்டு வருகின்றனர். தாய் செல்லும் சிவிகையைச் சார்ந்து வாசவதத்தையும் மாடச் சிவிகை யொன்றில் வருகின்றாள், அச்சிவிகை, 1யவனக் கைவினையாரியர் புனைந்தது தமனியத் தியன்ற தாமரை போலப் பவழமு மணியும் பல்வினைப் பளிங்கும் தவழ்கதிர் முத்துந் 2தானத்தணிந்தது விலைவரம் பறியா 3வெறுக்கையுண்மிக்க 4தலையளவியன்றது தனக்கிணையில்லது. இவ்வாறு இச்சிவிகைகள் வருகையில், காவல் புரிந்து செல்லும் வீரர், முனிவராயினு மூத் தோராயினும் ஏனையீர் பிறரும் எதிர்வரப் பெறீரென வானுறையுலகினும் வையக வரைப்பினும் 5தான வினைவினுந்தவத்தது பயத்தினும் எண்ணரும் பல்லுயிரெய்தும் வெறுக்கையுட் பெண்டிருண் மிக்க பெரும் பொருளின்மையின் உயிரெனப்படுவது ரிமையாதலிற் 6செயிரிடையிட்டது செல்வன் காப்பென ஆறுகடி முரச மஞ்சுவரக் கொட்டிச் செல்கின்றார்கள். மகளிரும் ஏனை நகரமாக்களும் நீர்த் துறைக்குச் சென்று சேர்கின்றனர். வெண்மணலிலமைத்த நாளத் தாணிக்கண்ணிருந்த பிரச்சோதனன், உழையரை நோக்கி, தனக்கென்றாய்ந்த தலையிரும் பிடிகளுள் 7இலக்கணக் கரும மெட்டா முறையது மதியோர் புகழ்ந்த மங்கலயாக்கையொடு விதியோர் கொளுத்திய வீரிய முடையது 1சேய்ச் செல னோன்புரிச் சீலச் செய்தொழிற் பூச் செய் கோலத்துப் பொலிந்த பொற்படை மத்த கமாலையொடு மணமகள் போல்வது 2உத்தராபதத்து மொப்பு மையில்லது பத்திராபதியே பண்ணிச் செல்கென உதயண குமரற் கியைவனபிறவும் உழைக்கலமெல்லாந் தலைச் செலவிட்டு வல்லே வருக வில்லாளன் விரைந்தென விடுக்கின்றான். உதயணனும் அவ்வாறே வரமுற்பட்டுத் தன்னைமிக்க சிறப்புற ஒப்பனை செய்து கொண்டு கையிற் பிடித்த குவளையுடன் முற்றத்து நின்ற பத்திராபதியைக் கண்டு படுமணியிரும்பிடிப்பக்கம் நண்ணி பொலிந்த தருவிற் 3பொற்புடைத்தாகி மலிந்த யாக் கையின் மங்கலமிக்கதன் வனப்பிற் கொவ்வா வாழ்விற்றாகி வாழ் நாளற்ற வகையிற் றாயினும் 4கணைச் செலவொழிக்குங் கடுமைத்திதுவென மனத்திற் கொண்டமதியனாகிக் கண்டேபுகன்ற தண்டாவுவகையன் 5தாரணியிரும்பிடி தலைக் கடையிரீஇ அதன் எருத்த மேறிச்செல்லலுற்றான்; அவன் பின்னும் புடையிலும் பொங்கு மயிர்ப்புரவியும் பண்ணமை நெடுந்தேரும் வர, பாலகுமரரும் பிறரும் வரலாயினர். யாவரும் விழாவயரும் நீர்த்துறை வந்தடைகின்றார்கள். 9. புனற்பாற் பட்டது நம்பியர் கூடியிருந்த நாளவைக்கண் பிரச்சோதனன் இனிது வீற்றிருக்கின்றான். மங்கலக்கணிகள் போந்து புரைமீன் கூடிய பொழுதியல் கூறுகின்றனர். அரசன் இருபது யானையும் எண்பது புரவியும், ஐம்பது தேரும் ஆயிரத்தொருகழஞ்சு பொன்னும் தக்கணையுதவி ஒடியாக் கேள்விப் பெரியோர் ஈண்டிய குழுவை அடிபணிந்து வணங்குகின்றான். அந்தணரும்ஆசைமாக்களும் பெறப் பொன்னை வாரிப் பொழிகின்றான். அறிஞர் பால் ஆயிரம் பொற்பூ விடுத்துப் பள்ளிக்கு வழிபாடியற்றப் பணிந்து வரப் பணிக்கின்றான். பின்னர், வெற்றி முரசிற்குப் பலியூட்டி நீராட விடுகின்றான். அதன்பின்பு அவன் மகளிரொடு நீர்க்கரையடை கின்றான். அங்கே மக்கள் கடல் போற் கூடியிருக்கின்றனர். அவன் அவர்களை நோக்கி, ஆடுகபோயென்றவர்களையருளி உதயணகுமரனு முவந்துழியாடித் துறை நகர் விழவின் 1றோற்ற மெல்லாம் பரந்த செல்வங் காண்கெனப் பணித்துப் புரிந்த பூவொடு 2பொற் சுணங்கமும் எழுந்த வார்ப்பொடிய 3ம்பலது வைப்பத் தான் சென்று புண்ணிய நீராட்டயர்கின்றான். துறை தோறும் மக்கள் நீராடி அறம் புரியத் தொடங்கி, "தக்கணையேற்கும் அந்தணாளர் அடைக" என்று கூவலும் அவர்கள் பெருந்திரளாய் ஓடிவருகின்றனர். சிலர் மங்கல வேள்வியில் மகட் கொடை புரிவாராய், சிலர் மகளிரொடு இழைக்கலம் நிறீஇ இல்லீகின்றனர்; சிலர் கமுகம் படுவும் வயலும் தோட்டமும் வழங்குகின்றனர். சேதாக்கணைத் தொகுத்துக் கொம்பினும் குளம்பினும் பொற் பூணிட்டு, அவற்றிற்கு வேண்டும் தளையுந்தாம்பும் பிறவும் நல்குகின்றனர். நீராட்டிடமெங்கும், 1இலமென் மாக்களையிரவொழிப்பவர் போற் கலங் கொடைபூண்ட கையராகி வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும் ஒண்படையணிந்த 2வண்பரிப்புரவியும் உண்டியு முடையுங் கொண்டகஞ்செறிந்த பண்டியு மூர் தியுங் கொண்டன3ருழிதந் தந்தணர் சாலையு மருந்தவர் பள்ளியும் 4தந்தற மருங்கிற்றலைவைப் போரும் நிலம் பெய்வோரும் நிதிபெய் வோரும் களிறு பெய்வோரும் பரிபெய்வோரும் பெய்வோர் பெய்வோர் பெயர்வறக் குழீஇக் கொள் வோரறியாக் 5குரலராகி மணற் கெழுபெருந்துறை மயங்குற தழீஇ எங்கும் இன்பமே இலங்காநிற்கின்றது. 10. உவந்தவை காட்டல் மேலே கூறியவாறு உஞ்சேனை நகரமக்களும் அரசனும் நீர் விழாவயரும் நீர்த்துறைகளில் நீரணிமாடங்கள் பல அழகு திகழ அமைக்கப்பட்டுள்ளன. நீரணி1மாடத்து நிலாநெடு முற்றத் தரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வியலிக் கருங்கண் மகளிர் 2கைபுடைத்தோப்ப இருங் கண் விசும் பகமிற குறப்பரப்பிக் கருங்கயல் கொண்ட 3கவுளவாகிப் பொங்கிரும் புன்னைப் பூம்பொழின் 4முன்னிச் செங்கானாரை செல்வன காண்மின் சில கூனர்கள், நீர்த்துறையில் மிடைந்திருக்கும் மகளிரை நோக்கி, "எங்கள் தலைவி நீராட வருகின்றாள்; சிறிது அவட்கு இடம் விடுங்கள்" என்று சொல்லிக் கொண்டு நறுமண்ணும் சாந்தும் நானச் செப்பும் எடுத்து வருகின்றனர். திடீரென அவ்விடத்தே பெருங்கிளர்ச்சியுண்டாகிறது. கூன்கள் அஞ்சியலறி "எங்கள் தலைவியைத் தாங்குவோர் இல்லையே" என மனம் துளங்கி மறுக, பெருங் கோ நங்கை பெட்ப5வேறிய இருங்கை யிளம் பிடிகடச் 6செருக்கெய்திக் 7கடிற்றுப் பாகன் கைப்புழிச் செல்லாது தொடிக்கை மகளிர் நீர் குடை வெரீஇய நெட்டிரும் பொய்கைக் குட்1டமண்டி ஒளிச் செந்தாமரைப் பாசடைப் 2பரப்பிற் களிக்கய லிரியக் குளிப்பது காண்மின் ஒருத்தி ஆம்பற் பூத்திருந்த விடத்தே நீராடுங்கால் அவனணிந் திருந்த பொன்னரி மாலை அவன் முதுகிடத்தே மறைந்தொழிய, அதனைத் தன் பக்கத்தே நீராடுங் கணவன் கொண்டானெனக் கருதி மெல்லத் திரும்பித் தன் கடைக்கண்ணானோக்கி, அங்கே அவனில் லாமையாற் புலந்து மனமழுங்குகின்றவள், தன்னைக் காணாமை யாற்றேடிவருங்காதலன் பின்னர்த் தானிருக்குமிடமறிந்து வரக் கண்டு மகிழ்ச்சிமிக்குக் கண்ணீர் சொரிந்து தலைகவிழ்ந்து நின்றாள். பிறிதோரிடத்தே அரசமாதேவியின் மகளான வாசவதத்தை நீராடுதற் பொருட்டு மன்னர் பலர் கூடி நாவாயொன்று அமைக்கின்றனர்; அவர்களுக்குக் கள் கொணர்ந்திட்டமகளிர் கள்ளூற்றும் வெள்ளிவள்ள மொன்றை மறந்துவிட்டுப் போய் விடுகின்றனர். கள்ளடு மகடூஉக்கை 3சோர்ந்திட்ட வெள்ளிவள்ளம் பல்லுறக் கல்வி 4கூடக் கூம்பினீள்திரளேறி உச்சிக் கிவருங் 5கட்கின் கடுவன் வீழ்ந்த திங்களை விசும்பு கொண்டேறும் தெய்வ மகாஅரி னை6யுறத் தோன்றித் துள்ளுபு திரிதரு தோற்றம்காண்மின். கள்விற்கு மகளிர் அக்கள்ளைக் குடையுமோசையும், கம்மிய ரொலியும், வள்ளையரவமும் குடில் யாழ் என்பவற்றின் இசையும் முழவோசையும் மிக்கிருக்கும் இடத்தினின்றும் நீங்கிய ஒரு கட்குடியன், துறக்கவின்பமே என்னைத் தேடி வருவதாயினும் யான் இக்கள்ளுண் வாழ்க்கையைக் கைவிடேனென்று கூறிக் கொண்டும் செல்வழிக்கீத மொன்றைச் சிதையப்பாடி வருகின்றான். அவ்வழியே ஓர் அந்தணன் வருகின்றான். அவனைக் கண்டதும் இக்களிமகன் செல்லல் ஆணை நில்லிவண் நீயென எய்தச் சென்று வைதவண் விலக்கி வழுத்தினே 1முண்ணுமிவ் 2வடிநறுந்தேறலைப் பழித்துக் கூறுநின் 3பார்ப்பனக் கணமது சொல்லாயாயிற் புல்லுவன் யானெனக் 4கையலைத் தோடு மோர் களிமகற் காண்மின் சிலர் மகளிர் நீராடுங்கால் அவர்தம் இடையிலிருந்த ஆடை நீங்கி விடவே, நாண் கைம்மிக வோடி வேறே ஆடையுடுத்துத் தம் கூந்தலை யுலர்த்தி அகிற் புகையூட்டுகின்றனர். பிறிதோரிடத்தே, 5பட்டியல்கண்டத்துப் பலர் மனங்கவற்றவோர் எட்டிகுமர னினிதினியக்கும் இன்னொலி வீணைப் பண்ணொலி வெரீஇ வஞ்சிக் கொம்பர்த் 6துஞ்சரித் துளரி ஒளிமயிர்க் கலாபம் பரப்பி 7யிவ்வோர் களிமயில் கணங்கொண்டாடுவன காண்மின். ஒரு பக்கத்தே அரசமாதேவியார் பெயரால் நிறுவிய அறச் சோற்றட்டிலில் சோறுண்ணும் அந்தணர் தலைப் பெருமடையனை அலைத் துண்பதும், மகளிர் சிலர் கூடிக் குரவையயர்வதும், மெல்லியவுடையுடுத்த மகளிர் நீராடு மிடத்து நனைந்த தம்முடை நிறந்தோன்றாது அவர் மேனிநிறமே தோன்றக் கண்டு, ஆடை யில்லையே யென அலமருவதும், நீராடுங்கால் தம் கையிலள்ளிய நீரில் தம் கண்ணிழல் தோன்றக் கண்ட மகளிர் சிலர் அதனைக் கயலெனப் பிறழவுணர்ந்து மருள்வதும், களிமகனொருவனும் அவன் காதலியும் தம்மில் ஊடலும் கூடலும், புணைபிடித்து நீராடிய காதலரிருவர் தம்மிற் புலந்து கூடலும், மேன்மேலும் நீராடக் கருதிய வொருத்தியைச் செவிலியர் விலக்க, விலக் குண்டவள் தன் தோழியராடக் கண்டு கண்ணீராடலும் நிகழ்கின்றன. வேறொருசர், வாசவதத்தை நீராடுதலை முன்னிட்டுப் பொருட் கொடை செய்யப்படுகிறது. அக்காலை, கண்டு1 கண்ணோராக் காமர் காரிகை 2 வண்டுளரைம் பால் வாசவதத்தை பேணியாடும் பெரும் புனல் விழவினுள் 3நாணிச் செல்லா நல்குரவுடையோர்க் கரும் பொறியணிகல மாரப் பெய்த 4பெரும் பொறிப் பேழையிவை யெனக் கூறிக் 5கறைவாய் முரசங் கண்ணதிர்ந் தியம்ப அறையவுங் கொள்ளுங் குறையிலராகித் துறை துறை தோறு 6மிறை கொண்டோருள் அணியா தோரை யாராய்ந்துழி தரும் 7பணியா வேந்தன் பணிநரைக் காண்மின். மகளிர் நீராடுதலால் அலைப்புண்டதோர் தாமரைப் பூவிலிருந்த அன்னப் புள் பறந்து சென்று அருகிருந்த புன்னைப் பொதும்பரில் அப்புன்னைத் தாதுதிர்ந்து அதன் புறத்திற் கிடப்பத் தங்குகிறது. அதனைக் காணாத சேவலன்னம் வெண்டாமரைப் போதொன்றைப் பெடையென வெண்ணிச் சென்று ஏமாந்து, மீள வருகையில் நீரின் அடைகரையில் மகளிர் வைத்த வெள்ளிச் செப்பைக் கண்டு அதன்பாற் சென்று கண்டு மயங்கி முடிவில் பொழிறொறும் சென்று தன் பெடையைத் தேடியலைகிறது. புனலாடுமகளிர்க்குத் தீங்கு வாராவகையில் ஒருத்தி புனற்றுறைக் கண் பொங்கு மடைப்புழுக்கலை விடுக்கின்றான்; அவற்றைக் காக்கைகள் உண்கின்றன. அதனை யொரு பார்ப்பான் கண்டு, தன்கண்ணாலேயுண்டு, வேண்டலானாயினும் விறல் உஞ்சேனையும் நீண்ட விஞ்சியு நிறை மணி மாடமும் உருக்குறு நறுநெய்யுள்ளுறப் பெய்த 1புழுக்க லொடு பாற் சோறாயினவாயின் 2வழுக்கலின்றி யென் வயிற்றகமார உண்பலென்று தன் கண்பனிவாரக் கொள்ளா வயிற்றி 3னாண்டகையன் செல்வோற் கண்டு பொள்ளெனநக்கு நுரைபுரை வெண்டு கிலரை மிசைவீக்கி 4அவியிடப் படினென்னாருயிர் வைப்பது 5கடிவோரில்லை முடிகு வெனின்றெனச் 6செவிமடுத் தெற்றிச் சிவந்த கண்ணினன் உண்டற் புண்ணிய முடையெனை யொளித்துக் கொண்டனை போகிற் கூடுமோ நினக்கெனப் 7பிண்டப் பெருங்கவுட் பெருவியரிழிதரக் கண்டோரார்ப்பக் 8கலாஅங் காமுறும் பண்டப்பார்ப்பான் 9பட்டிமைகாண்மின் ஒருத்தியின் கண்களை மலரென்று மயங்கிய வண்டினம் அவள் முகத்தே மொய்த்துக் கொள்கின்றன. அவள் அவற்றை விலக்க மாட்டாது கைவிரலாற் கண்களைப்புதைத்துத் தலை கவிழ்ந்து நிற்பதும், காதலர் இருவர் நீராடச் சென்றவிடத்துக் காதலன் முன்னே நீரில் இறங்கி, நீயும் இறங்குக என அழைப்ப, இறங்கிய அவள் தன்னிழலும் அவனிழலும் ஒருங்கு தோன்றக் கண்டு, உண்மையோராது மயங்கிப் புலந்து, "நீரரமகளிரொடு நிரந்துடன் நின்ற சூரன்" என்று சினந்து கரையிலேறிக் கொள் கின்றாள். அதனையுணர்ந்து அவனும் கரைக்குப் போந்து தகுவன கூறி அவளைத் தேற்றி, நீர் நிலைக்குச் சென்று இருவர் முகமும் சேரக் கொண்டு நிழல் தோன்றக் காட்டி மகிழ்வுறுத்துவதும் அவ்விடத்தே காணப்படுகின்றன. ஒரு பக்கத்தில் பிரச்சோதனனது சேனை வாணிகன் மகள் ஒருத்தி ஏனை மகளிருடன் நீராடுங்கால் அவள் கூந்தலிற் புனைந் திருந்த பொன்னரி மாலை கழன்று நீரால் ஈர்த்துச் செல்லப்பட, அயற்றுறையில் நீராடிக் கொண்டிருந்த அவள் மைத்துனனொருவன் அதனைக் கண்டெடுத்துப் போந்து அவள் கையிற் கொடுக்கவும். 1தடம் பெருங் கண்ணி தலைகவிழ்த் திறைஞ்சி 2செறிப்பினாகிய செய்கையினொரீ இயவள் குறிப்பிற் கொண்டனன் கோதை யென்பது அயலோர் கருதி 3னற்றந்தருமெனக் கயமுலர் நெடுங்கண் கண்பனிகால மாலை கவர்ந்து மற்றவற் கீத்தனை கோல வைவே லேனைய குமரர்க் கறியக் கூறுவனஞ்சுவையாயிற் 4பெயர்த்துத் தம் மெனச் செயிர்த்தவணோக்கி நீரணியாட்டொடு நெஞ்சுநொந்துரைக்கும் வாணிக மகளின் 5மடத்தகை காண்மின். ஒருபக்கத்தே வாசவதத்தை யாடும் நீர்த்துறையுளது. அதனைக் கஞ்சுகிகள் காவல் புரிகின்றனர். அவர்கள் நீராடுவோரை நோக்கி, மின்னிவர் மணிப்பூண் மன்னவன்ம டமகள் 1அங்கலுழ்பணைத் தோட் செங்கடைமழைக்கண் நங்கையாடும் பொங் குபுனற் பூந்துறைக் குங்குமக் 2குழங்கல் கொழுங் களியாக இத்துறை மேவ வெத்துறையாயினும் ஆடன் மின்யா வரும் ஆடுவிருளரெனின் ஆடகப் பொன்னிறு மளவினியன்ற பாவையாகும் படு3முறையது வெம் கோவினாணை போமினீவிரெனச் சொல்லி விலக்குகின்றனர். இவற்றை யெல்லாங் காணும் நகர மாந்தர், இன்னவை பிறவும் 4கண்ணொடு புணர்ந்த புண்ணிய முடைமையிற் காண்மினீரெனப் 5பணிவில் நல்வினைப்பயனுண்டாயின் மணிமுடி மன்னனணியுஞ் சேனையுள் எழுமைப்பிறப்பும் எய்துகம் யாம் எனக் காதலாற் கைதொழுது வேந்தனைப் பரவிப் பாராட்டு கின்றனர். 11. நீராட்டரவம் அரசகுமரரும் அவர்தம் உரிமை மகளிரும், சக்கரம், எறிவேல், வளையம், ஈர்வாள், கப்பணம், வட்டிணை, எந்திர நாழிகை என்பன முதலிய நீர்விளையாட்டிற்குரிய கருவிகளைக் களிறுகளின் மேலேற்றிக் கொண்டு வருகின்றனர். அவர்கள் களிறுகளை நிரையே நீரில் நிறுத்தி, மாற்று 1மன்னராகு மினெனத்தம் உரிமை மகளிரொடு செரு2மீக் கூறிக் கரை சென்மாக்கள் கலா அங்காமுறும் அரைசகுமரரார்ப் பொலியரவமும், அகிலும் சந்தனக் குழையும் கருவிளமும் இரவமரமும் கழையும் தேக்கும் திமிசும் பயம்பும் கோட்டமும் கொணரும் வண்டிகள் அமிழ்ந்து கீழாழ வருங்கலஞ் சுமந்து நுரைபுனனீத்தத்து நூக்3கு வனர்புக்குக் கரை 4முதற் சார்த்து'ங்காளை களரவமும், நகரமக்களால் வளர்க்கப்படும் மான்பிணைகள் இனத்திற் பெயர்ந்தவை நீரைக்கடக்க மாட்டாது கலங்குவது கண்டு நம்மில் காலை யெ5ன்ன வென்றெண்ணி, புனற் கழி நீத்த நீந்தி மற்றவை இனத்திடைப்புகுத்தும் இளையோரரவமும், மகளிர் பலர்கூடி யேறிச் செல்லும் அம்பிகளைக் கண்டு, ஆரவாரம் செய்து, தாழ்தரும் வலிமின்தையலீரெனத் திரிதர லோவாது தீய1வை சொல்லிய மைத்துனமைந்தரை நோக்கி மடந்தையர் அச்சப் 2பணிமொழி யமிழ்தென மிழற்றி நச்சு3வனராடு நல்லோரரவமும் 4காமங்காலா வேம நோக்கத்து மாதராற்றா மழலையங் கிளவிப் பேதை மகளிர் சேத5டியணிந்த கண்பிணிப் பகுவாய்க் கிண்கிணியரவமும் மின்னுக் கொடி பிறழுங் கன்னிக்6கோலமொடு 7ஒதுங்கலாற்றா வொளிமலர்ச் சேவடிப் பெதும்பை மகளிர் சிலம்பொலி யரவமும் கொடி யெனநுடங்குங் கோலமரு'ங்குலர் அம்பெனக் கிடந்த வையரி நெடுங்கண் மங்கை மகளிர் பைங் கா8சரவமும் நுடங்குகொடி மருங்கி நுணுகிய நு9சுப்பின் மடந்தை மகளிர் குடைந்தா டரவமும் அம்மென் சாயலரிவை மகளிர் 10செம்மலஞ் சிறுவரைச் செவிலியர் காப்பப் பூம்புனலாடு தொறும் புலம்பும் புதல்வரைத் தேம்படு கிளவியிற் 1றீவியமிழற்றிப் பாலுறுவளமுலை பகுவாய்ச் சேர்த்தித் தோளுறத் தழீ இ2யோலுறுப்பரவமும் மண3லிரு நெடுந்துறை மங்கலம் பேணிப் பெரியோருரைத்த பெறலருந்தானம் உரியோர்த் தரீஇ யுள்ளுவந்தீயும் தெரிவைமகளிர் வரி4வளையரவமும் தாமிள மகளிரைக் காம5ஞ் செப்பி அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித்தாடுமிந் நங்கையர் நோற்ற பொங்குபுனற் புண்ணியம் நுங்கட் காகென நுனி6த்தவைகூறி நேரிழை மகளிரை நீராட்டயரும் பேரிளம் பெண்டிர் பெருங்கலியரவமும் வயவர், புகுவோர், போவோர், தொடுவோர், நகுவோர் முதலியோர் செய்யும் அரவமொடு, மயங்கிய சனத்திடை மம்7மர் நெஞ்சமொடு நயந்த காதனன்னுதன் மகளிரைத் தேருநரரவமுந்திகை8க் குநரரவமும் பேருநர்ப் பெறாப் பெரியோரரவமும் நெடுந்துறை நீந்தி நிலை கொளலறியார் கடுங்கண் வேந்தன் காதலரரவமும் கொலைத் தொழில் யானைச் சென்றுழிச் செல்லாத் 9தலைக்கணிரும் பிடி பிளிற்றிசை யரவமும் 10துறைமாண் பொராத் தூமண லடைகரை நிறைமாண்குருகி னேர் கொடிப்பந்தர்ப் பாடலோடியைந்த பல்லோரரவமும் ஆடலோடியைந்த 1அணிநகையரவமும் ஆற்றொலியரவமொடின்னவை பெருகி எங்கும் பேரொலியே சிறந்து நிற்கிறது. 12. நங்கை நீராடியது வழுவில் கொள்கை வானவரேத்தும் 1கழிபெருங்கடவுளை வழிபடினல்லது 2வணக்கமில்லா வணித்தகு சென்னித் 3திருச்சேரகலத்துப் பிரச்சோதனன் மகள் 4அரிமானன்னதன் பெருமானகலத்துத் திருவுநிறை கொடுக்கு முருவு கொள்காரிகை வால்வளைப்பணைத் தோள் வாசவதத்தையைக் கோல் வளைமகளிர் 5கொட்டையைச் சூழ்ந்த 6அல்லியுமிதழும் போல நண்ணித் துறைதோறும் நிறுத்தப்பட்ட நீரணி மாடங்கள் நிற்கும் வீதி வழியே வாசவதத்தையை யழைத்துச் செல்கின்றனர். அவளைக் காண்போருட் சிலர், வேந்தன் மகளே விரையாது செல்க என் கின்றனர்; சிலர் "பொங்குமலர்க் கோதாய் போற்றுக" என்கின்றனர்; வேறு சிலர், "பொன்னே போற்றி பொலிக" என்கின்றனர்; வேறு சிலர், "திருவே, மெல்லச் செல்க" என்ன, மற்றுஞ் சிலர், "நங்காய், மெல்ல நட" என்கின்றனர். வாசவதத்தை நீராடுந்துறைக்கு. 7பைங்கேழ்ச்சாந்துங் குங்குமக் குவையும் மலர்ப்பூம்பந்தும் 8தலைத் தளிர்ப்போதும் மல்லிகைச் சூட்டும் நெல் வளர்கதிரும் இனிக்குறையில்லையாமுமாடுகம் எனத் துணிந்திளையோ 1ரிரு நூற்பெய்த அனிச்சக் கோதையுமாய் பொற் சுண்ணமும் 2அந்தர மருங்கின் வண்டுகைவிடாஅச் சுந்தரப் பொடியுஞ் 3சுட்டிச் சுண்ணமும் வித்தகர் கொடுத்த 4பித்திகைப் பிணையலும் மத்த நல்யானைமதமும் 5நானமும் வாசப் பொடியும் பிறவும் கொணரப்படுகின்றன. நீர்கால் கழுவிய எக்கர் மணலிடத்தே முத்துமணியும் பொற்குறு சுண்ணமும் வெள்ளியும் பவழ முமுன் விழுந்6திமைப்ப வண்ணவரி சியொடு மலரிடை விரைஇ நுண்ணிது 7வரித்த அண்ணனகர் வயின் தமனியத் தடத்துப் பவழப் பாய்கால் திகழ் மணிவெள்ளிப் புகழ் மணைசேர்த்தி, கதிர் நகைமுறுவற் 8காரிகை மாதரை எதிர்கொண்டு வணங்கி யிழித்தளர் நிறீஇக் காஞ்சன மாலையும் செவிலியும் பற்றி 9எஞ்சலில் கம்மத் திணைதனக் கில்லாப் பஞ்சவண்ணத்துப் 10பத்திபலபுனைந்த 11பொங்குமலர்த் தவிசிற் பூமிசையாயினும் அஞ்சுபுமிதியாக் கிண்கிணிமிழற்ற வேழத்தாழ்கைக் 1காழொடு சேர்த்த கண்டப் பூந்திரை மண்டபத்திழைத்த நன்னகர் நடுவண்பொன் மணை யேற்றி வாசவதத்தையைத் திருமஞ்சன நீராட்டுகின்றனர். பொன்னும் மாலையும் முத்தமும் இரவலர்க்கு வழங்கப்படுகின்றன. பின்னர், தோழியர் சூழ வாசவதத்தை நீர்க்குள் இறங்கித் தன் கூந்தல் நனைய நீரில் மூழ்குகின்றாள். பின்னர்க் கரையேறி மகளிர் கூந்தலை யுலர்த்திப் புகையிட்டு மாற்றுடையுடுத்துப் பல்வகையணிகளைக் கொண்டு ஒப்பனை செய்கின்றார்கள். அந்தணமகளிரும் அரைச மகளிரும் சேனாபதி மகளிரும் பெருந்திணை மகளிரும் காவிதி மகளிரும் வாணிகமகளிரும் நகரத்துப் பெருங்குடி மகளிரும் நீரில் இறங்கி விளையாடுகின்றனர். நீர்தலைக் கொண்ட நெடும் பெருந்துறைவயிற் 2போர் தலைக்கொண்டு பொங்குபுமறலிக் கொங்கலர் கோதை கொண்டு 3புறத் தோச்சியும் அஞ்செஞ் சாந்தமாகத் தெறிந்தும் நறுநீர்ச் சிவிறிப் பொறி4நீ ரெக்கியும் முகிழ்விரற் றாரை முகநேர்விட்டும் 5மதிமருடிரு முகத் தெதிர் நீர் தூவியும் 6பொதி பூம்பந்தி னெதிர் நீரெறிந்தும் சிவந்த கண்ணினர் 7வியர்ந்த நுதலினர் அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர் 8ஒசிந்த மருங்குலரசைந்த தோளினர் 1நல்கூர் பெரும்புனல் கொள்கவென்று தம் செல்வமெல்லாஞ் சேர்த்திறைத் தருளி இளையா விருப்பின் தம் விளையாட்டு 2முனைஇக் கரையேறுகின்றனர். கரையேறியவர் கூந்தலையுலர்த்தி நீரறவாரிப் பூம்பிணைய லொடு முடிக்கின்றனர்; பின்பு சந்தன மணிந்து, கோசிகமும் வங்கச் சாதமும் கலிங்கமும் பட்டும் தூசும் நீலம் முதலிய வண்ணம் கொண்டு நூலினும் நாரினும் இயன்ற ஆடைகளுமுடுத்துத் தம் சீரிய இழைகளையும் ஏற்றவாறு அணிந்து கொள்கின்றனர். அக்காலை பத்திராபதி யென்னும் யானை மேலிருந்த உதயணன் தன்னைச் சிறைப்படுத்தியிருக்கும் பிரச்சோதனன் செல்வத்தையும் துறையாடும் அவன் ஊரவர் போகத்தையும் கண்டு பழம் பகையால் நெஞ்சுகனன்றிருக்கின்றான்; அவன் நெஞ்சில் தன்னாட்டிற்கு மீண்டேக வேண்டுமெனும் நினைவுமிக்கிருக் கின்றது. இந்நினைவு கை கூடுதற்கேற்ற சூழ்ச்சியையும் முயற்சியையும் உதயணனுடைய தோழர்கள் விரைந்து செய்கின்றனர். 13. ஊர் தீயிட்டது இந்நிலையில் யூகியுரைத்து விட்ட சூழ்ச்சியை வயந்தகன் போந்து உதயணற்குக் கூறலுற்று. வேந்தற்1கோடல் வியனாடு கெடுத்தல் ஆங்கவன் மகனையருஞ் சிறை வௌவுதல் மூன்றினு ளொன்றே 2காய்ந்தவர் கடுந்தொழில் தோன்றக் கூறிய மூன்றனுள்ளும் முன்னைய விரண்டு முடியாமற்றவன் அரும் பெறன்மடமக 3ளமிழ்துபடுதீஞ்சொல் 4ஏசுவதில்லா வெழில் படுகாரிகை வாசவதத்தைக்கு வலத்தனாகிச் செந்தீ வெம்புகையிம்பர்த்தோன்றலும் அந்தீங் கிளவியை யாண்மையிற் பற்றிக் 5காற்பிடி தன்னோடேற்றுக ஏற்றலும் வேற்படையிளை ஞர் நாற் பெருந்திசையும் வாழ்கவுதயணன் 6வலிக்க நங்கே ளெனப் 7பாழினு முழையினுங் காழில் பொத்தினும் ஒளித்த வெம்படை வெளிப்பட வேந்தி 8மலைக்கு நருளரெனின் விலக்கு நராகித் தொலைக்கு நம்படை யெனத் துணிந்திது கருதுக என்று சொல்லி அதன் செல்லுதற்குரிய முறையையும், வழியின் கண் ஏற்பாடு செய்திருக்கும் பாதுகாப்பையும் தான் பின்னர் மீண்டு வருந்திறத்தையும் யூகி கூறியதாகத் தெரிவிக்கின்றான். உதயணனும் மகிழ்ந்து தானும் யானும் தீதிலமாயின் வானும் வணக்கவ மேனைய தென்னென முறுவல் கொண்ட முகத்தனாகி நறுநீர் விழவி 1னாளணியகலம் பூண்சேர் மார்வன் காண்பான் போலக் 2கடைப்பிடியுளமொடுமடப்பிடி 3கடைஇக் கோமகளாடும் பூமலி பெருந்துறை 4அகலாதணுகாது பகலோன் விண்முனிந் திருநிலமருங்கி னிழிதந்தாங்குப் பெருநலந்திகழுந்திருநலக் கோலமொடு யூகியுரைத்த கருமத்திற் கேற்ற துணிவோடு காலம் நோக்கி யிருக்கின்றான். சிறிது போதில் பெருங்காற்று எழுகின்றது. கனவிற் கண்ட விழுப் பொருளை நனவிற் கண்ட நல்குரவாளன் போல, யூகி காற்றெழக் கண்டதும், மறைந்து திரியும் தன் மாந்தர்கள் அறியுமாறு முரசினை முழக்குகின்றான். கேட்ட உதயணனுடைய வூரிடத்தே பூசல் விளைப்ப, அவனால் விடுக்கப்பட்ட வஞ்சனை மகளிர் நகரின் வீடுகளிற் புகுந்து அட்டிலும் அறையும் விட்டெரி கொளுவுகின்றனர். எட்டெனக் கூறிய திசைதிசை தொறூஉம் 5ஐந்தலையுத்தி யரவு நாணாக மந்தரவில்லி 6னந்தணன் விட்ட 7தீவாயம்பு திரிதரு நகரின் ஓவா தெழுமடங் 8குட்குவரத் தோன்றி நகரத்தைச் சூழ்ந்து கொள்ளுகிறது. நீராடற்குச் செல்லாது மனையகத் தொழில் புரி பரிசார மகளிர் வயிற்றிலடித்துக் கொள்கின்றனர்; ஈற்றுப் பெண்டிர் தம் இளமகவைத் தழீஇக் கொண்டு அலறுகின்றனர்; பெருஞ்சூற் பெண்டிர் பெரும் பேதுறு கின்றனர்; தவழும்புதல் வரையுடைய மகளிர் உலகம் படைத் தோனைப் பழித்து நொந்துரைக்கின்றனர்; கண்பார்வை குன்றி நடை தளர்ந்து வருந்து நரைமுது மகளிர் புகுமிடமறியாது சுவரொடு முட்டி வருந்துகின்றனர். தீ வைத்த மகளிரைப் பற்றுவது குறித்து அரச வீரர் படையேந்தித்தேடித் திரிகின்றனர்; ஊருள் எழுந்த இக்கொடுந்தீ. அந்தணர் சேரியும் அருந்தவப் பள்ளியும் வெண்சுதை மாடமும் வேந்தன் கோயிலும் தெய்வத் தானமுமொழிய ஏனையெல்லா விடங்களிலும் பரவுகிறது. அதனால், பாடிக் கொட்டில் பதினாறாயிரமும், முட்டிகைச் சேரி முந்நூறாயிரமும் கம்ம வாலயமும் தானைச் சேரியும் பிறவும் வெந்தழிகின்றன. 14. பிடியேற்றியது நகரின்கண் தீப்பற்றியெரிவது கண்ட துறையாடும் மகளிரிற் சிலர் உளம் நடுங்கித் தம் கணவரைப் பற்றி எவ்வாறு நகர்க்குச் செல்வது என்று அலமருகின்றனர்; "புதல்வரை யொழிந்து யாம் போந்தனமே" யென்று மனம் புழுங்கி வயிற்றைப் பிசைந்து கொண்டு சில மகளிர் துடிக்கின்றனர்; தீயைக் காணச் செல்வோரைச் சிலர் தடுக்கின்றனர்; துன்பம் மிகுதலால் ஆற்றாது சிலர் உடன் வந்தோரையும் எண்ணாது ஓடுகின்றனர்; தீயிடையெழும் முழக்கங் கேட்டுச் சிலர் நடுங்குகின்றனர்; இவ்வாறு நடுங்குவோரும் நவையுறுவோரும் ஒடுங்குவோரு 1மொல்குவோரும் இளையராகத் தம் புனைநலம் புல்லென நங்கையுஞ் 2சேயணம் மிறைவனு 3நண்ணான் என் கொலீண்டு நம்மின்னுயிர்த்துணையென மங்கையரெல்லாம் மம்மரெய்த, ஒருபால், யானைகள் மதம் பட்டுத் தீங்கு செய்யாமை குறித்து அவற்றைச் சில வீரர் அடக்கி நிற்கின்றனர்; சில அறிஞர் நம் வேந்தன் சிறையகத் திருந்த உதயணனை வாளாதிரியுமாறு செய்வது நீதியன்று எனத் தம் வேந்தனை வெகுள்கின்றார்கள். வேந்தனான பிரச்சோதனன், 4பௌவமெல்லாம் படரு மீண்டெனக் 5கௌவை வேந்தனுங் காற்றொலியஞ்சி 1யானையின ருஞ்சிறைவளை இயதனுணம் சேனையு முரிமையுஞ் செறிக வந்தெனப் 2பிறிதிற் றீரா நெறியினனாக இருக்கின்றான். இந்நிலையில் புதுக் கோள்யானை யொன்று கடாஞ் செருக்கிமைந்தரையும் மகளிரையும் அச்சுறுத்துகின்றது. பிறிதோரிடத்தே. நகரத்து முழக்கமும் தீயின் பேரொலியும் ஏனையிடங்களி லெழுந்த பல்வேறு ஒலிகளும் கேட்டு மருண்ட நளகிரி யென்னும் யானை தளையை யறுத்துக் கொண்டு நகர மக்கட்குத் தீங்கு செய்கிறது. 3இன்னாக் காலை 4யொன்னாமன்னனும் 5தன்னாண்டொழிற் றுணிவெண்ணுமாயினும் செறியக் கொள்ளும் செய்கையோரான் அறியக் கூறிய வன்பினனல்லதைத் தன் வயினின்று தன் 6னின்னியங் கொள்ளும் என்மகளுள் வழியிளைய ரோடோடி காவலின்று தன் கடனெனக் 7கூரி 8மத்தவன் மான்றேர் வத்தவற் குரையெனப் 9பாய்மான் றானைப் பரந்த செல்வத்துக் கோமான் பணித்த குறைமற்றிதுவென ஏவலிளையரிசைத்த மாற்றம் 10சேதியர் பெருமகன் 11செவியிற் கேட்டு விசும்பு முதல் கலங்கி வீழினும் வீழ்க கலங்க வேண்டா காவலென்கடனெனக் காற்றிற் 1குலையாக் கடும்பிடி கடைஇ ஆற்றுத் துறை குறுகிய அண்ணலைக் கண்டே ஆங்கிருந்த காவலரும் கஞ்சுகிகளும் ஏவலரும் ஓடிவந்து வணங்கி நின்று, மாடமுங்கடையு மதிற்புறச்சேரியும் ஓடெரி கவரலினூர் புகலாகாது 2வையமும் சிவிகையும் கைபுனையூர்தியும் காற்றுப் 3பொறிகலக்க வீற்றுவீற்றாயின போக்கிட மெங்கட்குப் புணர்க்க லாகா தோக்கிட மெமக்கு முண்டாகவருளி ஆய்ந்த நல்யாழ்த் தீஞ்சுவையுணர்ந்தநின் மாணாக்கியை யெம்மன் னவனருளால் இரும்பிடி நின்னோ டொருங்குட னேற்றிக் 4கொடுக்குவ வேண்டுமென்றெடுத் தெடுத்தேத்தி யுரைக்கின்றனர். அவர்கட்கு உதயணனும், "இவ்வழி இனி நிற்றலும் ஏதம்; ஈண்டே வருக" என்கின்றான். உதயணன் வாசவ தத்தைக்கு ஆசிரியனாதலின் அவனோடவளை யேற்றி விடுத்தலாற் குற்றமில்லை யென்று கொண்ட காவலர், அவனை நோக்கி, திருமா நுதலியைத் தீதொடு வாராது அரசன்பாற் சோர்க்கவென வேண்டு கின்றனர். உதயணற்கு உண்டாகும் உவகைக்கு எல்லையில்லை. பெரியோர்க்குதவிய சிறு நன்றேய்ப்பக் 5கரவாது பெருகினக் 6கையிகந்து விளங்கும் உள்ளத் துவகை தெள்ளிதினடக்கி வாசவதத்தையைத் தன் பிடிமேற் கோடற்குச் சமைகின்றான். அவனோடு செல்லற் கிசைந்து வரும் வாசவதத்தை, தன்னை யேற்றிக் கோடற்கு வணங்கி நிற்கும் பிடியானையின் அருகே வந்து 1உருகு நெஞ்சத் துதயணகுமரனைப் பருகும் வேட்கையள் 2பையுள் கூர நிறையு நாணு 3நிரந்து முன் விலங்க நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்துரையா அஞ்சிலோதியை நெஞ்சுவலியுறப் பயிற்சி நோக்கினியற் கையிற்றிரியாக் காஞ்சன மாலை 4கையிசைந்தொருங்கே ஏந்தின ளேற்ற விரும்பிடியிரீஇ முடியா 5வாள் வினை முடித்தனமின்றென உதயணனும் அவளைத் தன்குடங்கையாற்ற ழுவிப்பிடிமீது ஏற்றினான். 15. படைதலைக் கொண்டது வாசவதத்தையைப் பிடியானை மேலேற்றிக் கொண்டு உதயணன் செல்லலுற்றானாக. அவட்குத் துணையாய் உடன் வரும் காஞ்சன மாலையென்னுந் தோழி. நாணத்தாலும் பெருவேட்கை யாலும் நடுங்குகின்ற வாசவதத்தையைத் தேற்றிக் கொண்டு வருகின்றாள். சாங்கியத் தாயின் வாயிலாக உதயணன் யூகிக்கு எழுதி வைத்திருந்த ஓலையைப் பிறரறியா வகையில் அவளிடம் சேர்ப் பித்து அதனை யூகிபால் சேர்க்குமாறு குறிக்கின்றான். அதனைப் பெற்றுச் செல்லும் சாங்கியத்தாய் வாசவதத்தையைக் கண்டு அவட்கு ஆறுதல் கூறுகின்றாள். அவள் நீங்குதலும், உதயணன் தானேறிச் செல்லும் பிடியானையின் செவியில், 1அங்கண் ஞாலத் தன்புடையோரைப் 2புன்கண் நீக்குதல் புகழுடைத்தாதலின் உங்களன்பின் யானுறு நோயினைப் பைங்கண் 3வேழத்துப் பகடன்றீர்ந்த திவள் செழுங்கடை மழைக்கண் செருக்கயல் புரைய உண்ணெகிழ்ந்து கவிழ்ந்த 4ஒறாஅ நோக்கிற் 5கண்ணெகிழ் கடு நோய் 6கைவருகாலை ஈர்வது போலு மிருளுடையாமத்துத் தீர் திறமறியேன் றேர்வுழித் 7தீர்திறம் வந்துகை கூடிற்றாகலின் இன்றிது நீக்கல் நின்கடன் 8மாக் கேழிரும்பிடி என்று அதற்கேற்ற மொழியிற் கூறிக் கடவுகின்றான். அக்காலை நீங்கா வுரிமைக் காவலனான வராகன் என்பான் வாசவதத்தையின் காவல் பொருட்டு வருகின்றான். அவன் கையகத் திருந்த வில்லும் அம்பும் வஞ்சனையாக வாங்கிக் கொண்டு, பிடியானையின் பின்னேயேறுக என்று பணித்த உதயணன் அவன் ஏறுதற்கு முன்பே யானையைக் கடுவிசையிற் செலுத்துகின்றான்; அதுவும் விரைந்தோடுகிறது. 1ஆற்றல் மன்னன் காற்றெனக் 2கடாவ விசையின் வீழ்ந்து 3வெருளியாற்றான் 4ஆய்பெருங்கடிநகர் வாயிலு நோக்கான் கோமகனுள் வழிக்கு நுகலுங்குறு கான் 5ஓவிய முட்கு முருவியைத் தழீஇப் போயினன் வத்தவன்புறக் கொடுத்தொய் யென ஓலமிடுகின்றான். வீரர் பலர் வந்து மொய்த்துக் கொள் கின்றனர். அவருள் பலர் கலக்கமுற்று, மண்ணகமழித்து 6மலைத்துச் சிறைகொண்ட நண்ணாமன்ன 7னாட்டமோவிம் பண்ணமை பிடிமிசைப் பையரவல்குலை ஏற்றல் வேண்டுமென்றிரந் தேற்றினமால் 8கூற்றவாணையெங் கொற்றவன் 9றலைத் தாள் என் சொலிச் 10சேறு மென்றெண்ணுபு நாணினள். வேறு சிலர் போருடற்றலாயினர்; அது காலை மாறு வேடத் திருந்த உதயணனுடைய வீரர்கள் அவரொடு மலைந்து முதுகு கண்டு, உதயணன் பாற் சினங் கொண்டெழும் வீரர் பலரையும் செகுத்தழிக்கின்றனர். 16. உழைச்சன விலாவணை உதயணன் இவர்ந்து சென்ற பிடியைத் தொடர்ந்து வரும் வீரர்களை அவனுடைய வீரர் பலர் மறைவிருந்து தாக்குகின்றனர். அவரிடையே கடும் போர் நிகழ்கின்றது. ஓங்குமடற் பெண்ணைத் 1தீங்குலைத் தொடுத்த விளைவுறு தீங்களி வீழ்ச்சி 2யேய்ப்பத் 3தளையவிழ் தாமமொடு தலைபல புரளவும் 4வேகப் புள்ளின் வெவ்விசைக் 5குலந்த நாகப் பிறழ்ச்சியிற் றோண் முதனுணியவும் அஞ்செஞ்சாந்த மெழுதிய 6வகலம் ஒண் செங்குருதிப் 7பைந்தளி பரப்பவும் 8குசைத் தொழிற் கூத்தன் விசைத்து நனிவிட்ட பொங்கு பொறித் தாரையிற்றங்கல் செல்லாது குருதிச் செம்புனல் தவிரா 9தெக்கவும் எண்ணிறந்த வீரர் போரிற் பட்டு வீழ்கின்றனர். எம்மருங்கும் தலையுந்தடக்கையும் தாளும் உடம்பும் சிதறிக் கிடக்கின்றன. பார்க்கு மிடமெங்கும் வில்லும் சுரிகையும் வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும் தண்டும் வாளும் பிறவுமே காணப்படுகின்றன. இவ்வாறு 1அடங்காத்தானைய வந்தியரிறைவற் காருயிரன்ன வரும் பெறன் மடமகள் 2வால்வளைப் பணைத் தோள் வாசவதத்தையை வலிதிற் கொண்டவத்தவரிறைவனை நலிதற் கெழுந்த 3நண்ணாவிளையரைக் கடல்விலக் 4காழியிற் கலக்கமின்றி உதயணனுடைய வீரர் அடர்த்தழித்து விடுகின்றனர். இந்நிலையில், யூகி யென்பான் தன்னியல் பானவுருக் கொண்டு, தான் தவம் செய்து பெற்ற வாளைக்கையிலேந்தி, எதிர்த்த வீரரை வென்று கொண்டு உதயணன் ஏறிச் செல்லும் யானையையணுகி அதனை வலம் வந்து பரவி, நும்பொருட்டாக 5நெடுந்தகை யெய்திய வெம் பெருந்துயரம் படுத்தனையாகிக் காட்டகத் 6தசையாது கடுகுபு போகி நாட்டகம்புகுக 7நண்பிடையிட்ட இரும்பிடி நினக்கிது பெருங்கடன் என்று அப்பிடியானைக்குச் சொல்லி அதன் காதில் ஒரு மந்திரமும் உரைக்கின்றான். உதயணனை நோக்கி "அரசே, விரைந்து செல்க" என்று விளம்புகின்றான். அவற்கு உதயணன் சாங்கியத்தாயின் தகுதிகளை அவன் நன்குணருமாறு எழுதிய ஓலையை யூகிக்குச் செலுத்தி அவனுடைய சூழ்ச்சியமைதியை யெண்ணித் தனக்குள்ளே வியந்து செல்கின்றான். யானையும் வடகீழ்ப் பெருந்திசையிற் செல்கின்றது. அப்போது உதயணனைப் பின் தொடர்ந்து வந்த வராகனை நோக்கி, உதயணன் பாலொடு தேன் கலந்தாற் போலும் இனிய சொற்களால், ஆற்றலும் வென்றியும் அறிவுமூன்றும் 1கூற்றுத் திறைகொடுக்குங் கொற்றத்தானை அவந்தியர் பெருமகனடி முதல் குறுகிப் பயந்து தான் வளர்த்த பைந்தொடிப் பாவையைச் 2சிறையிவ ளென்னுஞ் சிந்தையினீக்கிக் குறையுடையுள்ளமொடு கொள்கெனத்தந்துதன் காதலின் விடுப்பப் போகுதல் வலித்தனென் வணக்கம் இன்றுயான் செய்தனன் தனக்கெனக் கூறினை சென் மெனத் 3தேறக்காட்டி விடுக்கின்றான். அவனும் அவ்வாறே செல்கின்றான். வராகன் உடன் வராது செல்லக் கண்ட வாசவதத்தை கலக்க முற்றுக் காஞ்சன மாலை யென்னும் தோழியை நோக்க, அவள் உதயணனைப் பார்த்து, பைந்தளிர் 4பொதுளிய பனிமலர்க்காவின் செந்தளிர்ப் 5பிண்டிச் சினைதொறும் தொடுத்த பின்னுறு நுண் நாண் 6பெருந்தொடர் கோத்த 7பண்ணுறு பல்வினைப் பவழத் திண் மணை 8ஊக்கமை யூசல் வேட்கையின் விரும்பினும் திருநலத் தோழியர் 9சிறுபுறங் கவைஇப் பரவையல்குற் பல்காசுபுரளக் 1குரவையாயங் கூடித் தூங்கினும் தன் வரைத்தல்லா விம்முறு 2விழுமமொடு நோய் கூர்ந்தழியு மெங் கோமகணடுங்க எறிவளிபுரையு மிரும்பிடி கடைஇப் 3பின் வழிப் படருமெம் பெரும்படை 4பேணாய் என் வலித்தனையோ இறைவ நீயென வேண்டுகின்றாள். அவட்கு உதயணன், நடுக்கம் வேண்டா நங்கைநீயும் அடுத்த காவலன் இவனொடும் அமர்ந்து விடுத்தமையுணரா 5வீரிய விளையர் தருக்கொடுவந்து செருச் செய றுணிந்தனர் பணிவகையின்றிப் பண்டும் 6இன்னதை அணியிழை மடவோய் துணிகு வெனாயின் அரியவு முளவோ 7அஞ்சல் ஓம்பெனத் தேற்றிச் செல்கின்றான். அவளும் வாசவதத்தையைத் தெளி விக்கின்றாள்; வாசவத்தையும் மனவமைதி கொள்கின்றாள். இஃது இவ்வாறாக, அவந்தியர் இறைவன்மனையில், கொட்டம் தாங்கும் கொடியிடை மகளிரும் கவரியேந்தும் மகளிரும் பணி புரியும் கூனும் குறளும் வாசவதத்தையைக் காணாது வருந்து கின்றனர். ஒருபால், 8நால்வகை நிலனும் பால்வருத்தியற்றி 9அறவையல்லது பிறபுகப் பெறாஅ வளமரம் 1துறுமிய விளமரக்காவினுள் கொண்ட கோலமொடு குரவை 2பிணைஇ வண்டலா டுந்த3ண்டாக்காதல் எம்மையு முள்ளா திகந்தனையோ வென 4மம்மர் கொண்டமனத் தராகித் தோழியரெல்லாம் பூமியிற் கிடந்து புரண்டழுகின்றனர். பிறிதொருபால், மையார் நெடுங்கண் மாலையாமத்துப் 5பையாந்து பொருந்திப் பள்ளி கொள்வோய் காதற் காளை 6கானத் தொய்ப்பப் போதற்கண்ணே புரிந்தனையோ வெனச் செவிலித் தாயர் அவலித் தழுகின்றனர். ஒருபால் உழைக்கல மகளிர் இழைப் பிரிந்தரற்றுகின்றனர். இதற்கிடையே, உதயணனை வழிகூட்டி விடுத்துப் போந்த சாங்கியத் தாய் யூகியுறையும் இட மடைந்து மேலே செய்யத் தகுவனவற்றை ஒருகுயவன் மனையில் மறைந்திருந்து ஆராய்கின்றனர். 17. உரிமைவிலாவணை உதயணனால் விடுக்கப்பட்டுத் திரும்பிப் போந்த வராகன் கோயில் வாயிலில் நின்று அரசன் செவ்வியறிந்து வருமாறு காவலனை விடுப்ப, அக்காலை. பிரச்சோதனன் நிமித்திகன் ஒருவனுடன் தனக்கு வரவிருக்கும் இன்னா வின்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றான். வாயிற்காவலன் போந்து வராகன் வரவினைத் தெரிவிக்கின்றான். 1அகன் மொழி தெரியு 2மருமறைப் பொழுதும் மகன் மொழியல்லது மற்றைய கேளா இயற்கைய னாதலின் பெயர்த்துப் பிறிதுரையான் வருகமற்றவன் 3வல்விரைந்தென்றலின் வராகன் சென்று மன்னன் இருந்த இருக்கைக்கு எழுகோல் எல்லையுள் நின்று வணங்கித் தன் மனக்கருத்தை முகத்திற் காட்டு கின்றான். பிரச்சோதனன். 4வண்ணமும் வடிவும் நோக்கி மற்றவன் 5கண்ணிவந்தது கடுமை சேர்ந்த தென் றெண்ணிய விறைவன் இருகோலெல்லையுள் 6துன்னக் கூஉய் 7மின்னிழை பக்கம் மாற்ற முரையென மன்னவன் கேட்ப 1இருநிலமடந்தை திருமொழி கேட்டவட் கெதிர் மொழி கொடுப்போன் போல விறைஞ்ச; பின்னுந்தானே மன்னவன் வினவ, மறுமொழி 2கொடாஅ மம்மர் கண்டவன் உறுமொழி கேட்கு முன்ன மூர்தர நெஞ்சினஞ்சாது நிகழ்ந்தது கூறென் 3றாருயிர்க் கபயங் கோமான் கொடுப்ப எரியுறு மெழுகினுருகிய முகத்தன் ஆரமார்ப நின் அருள் வருகயாங் கொல் சரர் முகத் தெழுந்தது கடுவளி வளியென 4நகைத் தொழிலறிய நன்கை வரைப்பகம் 5புகைக் கொடி சுமந்து பொங்கெரிதோன்ற புறமதிற் சேரியும் குறுமுதற் கரிதாக காற்று மெரியுங் கலந்து டன் றோன்ற எப்பான் மருங்கினு மப்பான் 6மலைக்குநர்த் 6தப்புதலல்லது மிக்குயல் காணோம் கூற்றுமஞ்சுநின் 7னாற்றலாணை உரைப்பவு மொழியாது தலைத்தலைசிறப்பநின் அடி நிழல் 8வட்டமடையத் தரூஉம் கடியரணின்மையிற் 9கையற வெய்தி 10வெம் முரண்வேழத்து வெஞ்சினமடக்கிய 1உண்முரண்அறா அவுதயண குமரனொ டுடன் பிடியேற்ற 2லுற்ற னெமாகித் 3தடம் பெருங் கண்ணியைத் தலைவியிற் மணிந்திரந் தேற்றின மேற்றலுங் காற்றெனக் 4கடாஅய் எம் மொடுபடா அனிந்நகர் குறுகான் தன்னகர்க் 5கெடுத்த தருக்கினனாதலின் ஆயிரத்தைவர் காவற் கானையர் மாயிரு ஞாலத்து மன்னுயிருண்ணும் கூற்றெனத் தொடா வேற்றுருள் 6விலங்கி 7வயவரென்றியாம் வகுக்கப் பட்டோர் 8பயவரன்றிப் பணிந்தவர் தொலைய வென்றியெய்திக் கொன்று பலர் திரிதர பின்றையு நின்றியான் பிடிப்பின் செல்வுழி அடுத்தகாத லணங்கைத் தந்தவன் விடுக்கப் போந்த னென் மீண்டிது கூறெனத் தடக்கை கூப்பி நின் 9னடித்திசைக் கிறைஞ்ச ஒழிந்தி யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பி னோர் மாயம் போலும் காவல அருளென மொழிந்து நிற்கின்றான். இச்சொற்கள் செவியகம் புகுதலும் பிரச்சோதனனுக்குக் கடுஞ்சினம் பிறக்கின்றது. கண்களில் தீப்பொறி பறக்கின்றது. சுற்றத்தவர்களைச் கடுவான் போல நோக்குகின்றான். "மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட ஏற்றுச் சிங்கம் போல" எழுந்து உரறுகின்றான். அருகிருக்கும் தானைத் தலைவரை நோக்கிப் பெருஞ் சினம் கிளர குரல்கம்மியது கொடியணி தேருங் குதிரையும் யானையும் வடிவேலிளையரும் வல்விரைந்தோடி 1எய்கணையியற்கை யியற்றமையிரும்பிடி கையகம் புக்க தன்றியில் வையகத் 2தறத்தொடுபுணர்ந்த துறைப்புனலாட்டத் தற்றமும் பிறவு 3மொற்று வனனோக்கி 4வள்ளிமருங்கின் வயங்கிழைத்தழீஇ எள்ளி யிறந்த 5வின்னாமன்னனைப் பற்றுபு 6தம்மெனப் படையுறப்படுத்துச் சாலங்காயன் என்னும் அமைச்சனை நோக்குகின்றான். அவ்விடத்தே சாலங் காயனேயன்றி அரசகுமரருள் ஒருவனான பரதகனும் வேறு சில அமைச்சர்களும் அந்தணர்களும் இருக் கின்றனர். அவரனைவரும் இனிச் செயற் பால குறித்து ஆராய் கின்றனர். முடிவில், சாலங்காயனெழுந்து நின்று, 7உளைவன செய்த உதயணகுமரனைத் 8தளைவயினகற்றலும் கிளைவயிற் பெயர்த்தலும் ஆரமார்ப வஃதியாவருமறிவர் வருமுலை யாகத்து 9வணங்கு கொடி மருங்கில் 10திருமக டன்வயிற் றெரிந்தனைகாணின் குலத்தினுங் குணத்தினு நலத்தகு நண்பினும் நிலத்தினின் னொடு நிகர்க்கு நனாதலின் மேல்வகை விதியின் 1விழுமியோர் வகுத்த பால் வகைமற்றிது பழிக்கு நரில்லை ஆறென வருளா 2யண்ணன் மற்றிதுநீ வேறென வருளிய வேட்கையுண்டெனின் 3முன்னிலை முயற்சியினன்றி மற்றினிப் 4பின்னிலை முயற்சியிற் பெயர்த்தனந் தருதல் திருவளர் மார்ப தெளிந்தனையா கென உரைக்கின்றான். எப்பொருளையும் தானே தேர்ந்துணரும் அறிவு வலிமிக்க பிரச்சோதனன் நிகழ்ந்த செய்தியைத் தன் பட்டத்துத் தேவிக்குத் தானே சென்று தெரிவிக்க எண்ணுகின்றான். இடையே, நீராடப் போந்தவர் நகர்க்குள்ளே மாலையிற் புகுதல் வேண்டா; காலையிற் சென்று சேர்க என நீராடப் போந்த நகரவர்க்குத் தெரிவிக்கின்றான். இரவுப் போது வருகிறது. எங்கும் விளக்கங்கள் இனிது ஏற்றப்படு கின்றன. நீரணிவிழாவிற்கென இயற்றிய நகர்க்கண்ணே அந்தப் புரத்தே அரசன் தேவி இருக் கின்றாள். அவளும் நகர்க்குற்ற 5ஆகுலப் பூசலும் அழலுமற்றவை 6காவலனறிந்த கருத்தினனாகியென் வாசவதத்தையை 7வலிதிற் கொண்டேகினும் 8தீது நிகழினு மேத மில்லென நினைந்த வண்ணமிருப்பவள், அரசன் வரவு கேட்டு அவனை எதிர் நோக்கியிருக் கின்றாள். அக்காலை அங்கே வந்த வேந்தன் வாசவதத்தை அங்கேயில்லாமை தன் நெஞ்சை வருத்தக் கலக்க முற்று ஒருவாறு தெளிந்து தேவியையணுகி உவப்புரை சில கூறிப் பின்னர். 1பூங்கொடி புனைந்த வீங்குமுலையாகத்து 2வாங்கமைப்பணைத் தோள் வாசவதத்தையை நல்லியாழ் நவிற்றிய 3நளிமணிக் கொடும்பூண் உறுவரைமார் பினுதயண குமரன் 4மறுவி னொன்று மனைவளந் தரூஉம் செல்வியாகச் சிறப்பொடு சேர்த்தியவன் நாட்டகம் ஒருத்தற்கு 5வேட்ட தென்மனன் ஒண்குழை மடவோய் உவத்தியோ வென அரசமா தேவியும் பெருவிருப்பந் தோற்றி வேந்தனைப் பணிந்து அருமையிற் பெற்ற நும் அடித்திதன் வயிற் 6றிருமணச் சூழ்ச்சி யெழுமைத் தாயினும் ஏதமின்றால் இன்பம் பயத்தலின்; யானைக் கெழுந்த வெஞ்சினமடக்கிநின் 7தானைத் தலைத் தாள் தந்த ஞான்றவன் 8நிலையிற்றிரியா இளமைக் கோலம் 9உயர்பிற் றிரியா தொத்து வழிவந்த மகளான உத்தாயர் மனத் தகம் 10புற் கற்றலின் யானுமன்றே பேணினென் அடிகள் 1மானமில்லை மற்றவன் மாட்டென உவந்து கூறுகின்றாள். பிரச்சோதனன் அது கேட்டு உவப்போ வெறுப்போ கொள்ளாது அமைதியுடன் உதயணன் வாசவதத் தையைக் கொண்டேகிய திறத்தைக் கூறுகின்றான். இனியயா ழோசைக்குப் பின், பறையோசை கேட்ட கசுணமாவைப் போலத் தேவி அச் சொல்லைக் கேட்டதும் மயங்கி வீழ்ந்து வருந்துகின்றாள். அன்புடைய மகனைப் பிரிந்து வருந்தும் அவள் வருத்தம் மிக்கு நிற்கிறது. உடனே பிரச்சோதனன் அவளைத் தேற்றலுற்று, 2மடவை மன்ற மடவோய் மண்மிசை 3உடைவயிற் பிரியா துறை ஞரு முளரோ 4இற்றுங் கேண்மதி முற்றிழை மகளிர் 5தத்துநீர்ப் பெருங்கடற் சங்கு 6பொறையுயிர்த்த நித்திலத் தன்னர் நினைந்தனை காண் என உரைத்துத் தேற்றுகின்றான். தேவியும் ஒருவாறு தேறினா ளாயினும் மகட்பிரி வால் மன வருத்தம் கொண்டுறைகின்றாள். நகரெங்கும் வாசவதத்தையின் பிரிவால் உளதாய புலம்பொலி நிலவுகின்றது. 18. மருத நிலங்கடந்தது பிரச்சோதனனால் விடுக்கப்பட்ட பொற்றாருடுத்த பொங்கு மயிர்ப் புரவியும் தாழாக் கடுஞ் செலல் ஆழித்திண்டேரும், வெடி படு சீற்றத்து அண்ணல் யானையும், மேலாட்கமைந்த காலாட்களும் கொண்ட பெரும்படை பின்னே தொடர்ந்து வர, 1பரவையெழுச்சிப் பக்கமு முன்னும் 2வெருவரத்தாக்கி வீழ நூறி நற்றுணைத் தோழ 3ருற்றுழியுதவ அமிழ்தத் தன்ன அஞ்சில் கிளவி 4மதர்வை நோக்கின் மாதரைத்தழீஇ ஓங்கிய தோற்ற மோடுடொருதானாகி உதயணன் செல்கின்றான். பகற் போது நீங்க மாலைப் போது நெருங்குகின்றது. பகல்வெப்பம் நீங்க எங்கும் தட்பம் நிலவுகிறது. உதயணனும் தத்தையும் காஞ்சன மாலையுமாகிய மூவரையும் ஏற்றிச் செல்லும் பிடியானையும், 5வித்தகக் கோலத்து வீழ்ந்த கிழவற்குப் பத்தினியாகிய பைந்தொடிப்பணைத் தோள் 6தத்தரி நெடுங்கண் தத்தை 7தம்மிறை ஆணையஞ்சிய 1யசைவு நன் கோம்பிக் 2கோணை நீண்மதிற் கொடிக் கோசம்பி 3நகைத்துணையாய மெதிர் கொள நாளைப் புகுத்துவலென்பது 4புரிந்தது போல 5பறத்தரல் விசையினும் பண்ணினு மண்மிசை உறப்புனைந் தூரு முதயணன் வலப்புறத் தறியக் கூறிய செலவிற்றாகிக் 6கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பறிந்து ஓடுதல் புரிகின்றது. அக்காலை, காஞ்சனமாலை வாசவதத் தையைத் தேற்றி, "நின்னை நின் தந்தை திருமணம் செய்து தர, இவ்வுதயணன் தீவலம் செய்து கைப்பற்றிலன் என்பதொன்று தவிர, அன்று நினக்கு வீணையாசானாக இருந்த போது பல்லோர் கூடிய பேரவையில் நின் ஆசான் இவர் என்று கூறிய தொன்றேயமையும் காண்" எனக் கூறி மகிழ்விக்கின்றான். பின்பு, பிடியானையின் கடு நடையால் தாம் காண்கின்ற காட்சிகளைக் காட்டி வருபவள், 7உவணப்புள்ளினஞ் சிவணிச் செல்லும் சிறக ரொலியிற் 8றிம் மெனவொலிக்கும் 9பறவையிரும்பிடிப் பாவடி யோசையின் 10அவணைபோதலஞ்சி வேய்த்தோள் வாளரித்தடங்கண் வாலிழைமாதர் 11கேள்விச் செவியிற் கிழித்துகிற் பஞ்சி 12பன்னிச்செறித்துப் பற்றினையிருவென உரைக்கின்றாள். வாசவதத்தையும் அவ்வண்ணமே செய்து கொள்கிறாள். அவர்கள் முன்னே மருதநிலம் காணப்படுகிறது. அதனுடைய அழகிய காட்சி செல்வோர் உள்ளத்தைக் கவர்கிறது. அங்க ணகல்வய லார்ப் பிசை 1வெரீஇய பைங்க ணெருனம் படுகன் 2றோம்பிச் 3செருத்தல் செற்றிய தீயபா லயல உருவ வன்னமொடு குருகு பார்ப்பெழ 4பாசடைப் பிலிற்றும் பழனப்படப்பை அறையுறு சுரும்பினணிமடற் றொடுத்த நிறையுறு தீந்தே 5னெய்த் தொடை முதிர்வை உழைக்கவின் றெழுந்த 6புழற் காற்றாமரைச் செம்மலர் அங்கண் தீயெடுப்பவைபோல் உண்ணெகிழ்ந் 7துறைக்கும் கண்ணகன் புறவற் பாளைக் கமுகும் பணையும் 8பழுக்கிய வாழைக்கானமும் வார் குலைத்தெங்கும் பலவும் 9பயினு மிலைவனர் மாவும் புன்னையுஞ் செருந்தியும் பொன்னிணர் ஞாழலும் இன்னவைபிறவு மிடையறவின்றி இயற்றப்பட்டவை 10யெரிகதிர் விலக்கி பகலிருள் பயக்கும் 11படிமத்தாகி அகலமமைந்த 12வயிர் மணலடுக்கத்து 1காறோய் கணைக்கதிர்ச் சானோய் சாலி வரம்பணி கொண்ட 2நிரம்பணி நெடுவிடை உழவ ரொலியுங் களமர் கம்பலும் வளவயலிடையிடைக் 3களைகளை கடைசியர் 4பதலையரியல் பாசிலைப் பருகிய 5மதலைக் கிளியின் மழலைப் பாடலும் தண்ணுமை யொலியுந் தடக்கரி 6கம்பலும் 7மண்ணமை முழவின் வயவரார்ப்பும் மடைவாய் திருத்து 8மள்ளர் சும்மையும் இடையறவின்றி யிரையாறுதழீஇ வயற் புலச் சீறூரயற் புலத்தணுகி மருதந் தழீஇய 9மல்லவம் பெருவழி நூற்றிருபத்தைந்து எல்லையும் கடந்து செல்கின்றனர். இவ் வழியின் இடப்பக்கத்தே கிடங்கும் வாயிலும் புரிசையும் அமைந்து மள்ளர் பலரிருந்து காவல் புரியும் அருட்ட நகரம் காணப்படுகிறது. அதனருகே செல்லுங்கால் இரவூணுண்டு யாவரும் உறங்கும் இருட்காலம் நிலவுகிறது. 19. முல்லை நிலங் கடந்தது அருட்ட நகரத்தையணுகிய எல்லையில் வயந்தகன் என்பான் யாழைப் பிடியானையின் கழுத்துக் கயிற்றிற் கட்டி விட்டுக் கையில் வாளும் கேடகமும் மேற்கொண்டு உதயணனைப் பணிந்து, இந்நகரை இடத்திட்டே குதலொழிந்து வலத்திட்டே குதல் வேண்டுமென்பானாய், செல்வ மருதத் தெல்லையுளிருந்த 1தொல்லருஞ் சிறப்பினிம் மல்லன் மாநகர் அகப்பட்டியங்கு நரச்சம் நீக்கி 2புறப்பட்டியங்கு நர்ப்புன் கண் செய்யும் கப்புவினையுடைத்தே 3யாப்புறவிதனை இடத்திட்டேகுது மெனினே யெங்கும் 4முடத்தாட்டாழை மொய்த் தெழு 5முழுச் சிறை தோட்டமும் 6படுவும் 7கோட்டகக் கோடும் பிரம்பெழுபெரும்பாரடைந்து 8மிசைச்செற்றிச் 9செதும்பு பரந்தெங்குஞ்சேற்றிழுக் குடைத்தாய் வாய்க்கானிறைந்த போக்கரும் 1பணையொடு வரம்பிடைவிலங்கி வழங்குதற் கரிதாய் 2நிரம்பாச் செலவி னீத்தருஞ் சிறு நெறி நலத்தகு புகழோய் நடத்தற் காகாது வலத்திட் டூர்ந்து வழி முதற் 3கோடு மென்று உரைக்கின்றான். அவ்வாறே உதயணனும் சிறிதும் ஓசை யுண்டாகாதபடி யானையைச் செலுத்துகின்றான். சிறிது போதில் நகர வெல்லை கழிகின்றது. பின்னர் வயந்தகன் உதயணனை நோக்கி "எதிரே இருவழிகள் தோன்றுகின்றன; இடவழியே செல்லின், அது பகைமன்னற்குரிய இடத்தைச் சென்று சேரும்; இடையிடையே ஏற்றிழிவு மிக்குளது; நீரும் நிழலும் ஆண்டுக்கிடையாது; அவ்வழியே ஏவல் வினையாளர் விரும்பிச் செல்வரேயன்றிச் செவ்வினையாளர் செல்லார். நாம் செல்வே மாயின், நம்பதிக்கு அணித்தாக அது நம்மைக் கொண்டு செல்லாது. வலத்திற் கிடக்கும் வழியேதக்கது; அது வளைந்து வளைந்து செல்லும் இயல் பிற்றாயினும் நால்வகைப் படையும் இனிது செல்வதற்கேற்ற உள்ளகலம் உடையது; நேரே நருமதையாறு சென்றடையும் வரை இவ்வழி செல்லும் நாடு தருநிலை பெற்றுத் தீயோரில்லாச் செம்மை நாடாகும்; நின் முன்னோருள் ஒருவனாகிய துல்லியன் என்பான் கண்ட குளமும் பொய்கையும் கூவலும் வாவியும் வழி முழுதும் உள்ளன. இவற்றுள் நீ விரும்புவதொன்றன் வழியே செல்க" என்கின்றான். உதயணன் வலத்திற் கிடந்த வழியே யானையைச் செலுத்துகின்றான். பொருள் வயிற்பிரிவோர் வரவெதிரேற்கும் கற்புடைமாதரிற் 4கதுமென ஒரறி முற்றுநீர் வையகமுழுது முவப்பக் 5கருவிமாமழை பருவமொடெதிர 6பரவைப்பௌவம் பருகுபு நிமிர்ந்து 1கொண் மூவிதானந்தண்ணிதிற் கோலித் 2திருவிற்றாம முழபடநாற்றி விடுசுடர் மின்னொளி விளக்கமாட்டி 3ஆலிவெண்மணலணி பெறத் தூஉய் கோலவனப் பிற் 4கோடணை போக்கி அதிர் குரன் முரசினதிர்தலானாது தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து 5வேனினாங்கி மேனிவாடிய மண்ணகமடந்தையை 6மண்ணுநீராட்டி முல்லைக்கிழத்தி 7முன்னருளெதிரப் பல்லோர் விரும்பப் பரந்து 8கண்ணகன்று பொருள்வயிற் பிரிந்து 9பொலங்கலவெறுக்கையொ டிருள் வயின் வந்த வின்னுயிர்க் காலன் பார்பக மணந்த நேரிழை மடந்தையர் மருங்குல் போலப் பெருங்கவினெய்திய முல்லை நிலம் எதிரே தோன்றுகிறது. குரவும் தளவும் குருந்தும் கோடலும் மலர்ந்து விளங்குகின்றன. பூத்தொறும் வண்டினம் படர்ந்து தாதூதி இசைபாடு கின்றன. பூத்த பூவின் நறுமணம் பொதும்பர் தோறும் எழுந்து பரவிப் பொலிவுறுத்து கின்றது. அதனூடே சிறிது துலைவு செல்கின்றனர். அங்கே, உறங்குபிடித்தடக்கை யொருங்கு நிரைத்தவை போல் 10இறங்குகுரலிறடி 11யிறுங்குகடைநீடிக் 12கவைவக்கதிர் வரகுங் கார் பயிலெள்ளும் 13புகர்ப்பூ வவரையும் பொங்குகுலைப் பயனும் உழுந்துங் கொள்ளுங் 1கொழுந்து படுசணாயும் 2தோரையுந் துவரையுமாயவும் பிறவும் கடக்கலாகா விடற்கரு 3வினையுட் கொல்லைபயின்று வல்லையோங்கிய வரையினருகா 4மரையா மடப்பிணை செருத் தற்றீம்பால் 5செதும்பு படப்பிலிற்றி வெண்பூ முசுண்டைப் பைங்குழையேயச் சிறுபிணை தழீஇய 6திரிமருப்பிரலை செறியிலைக் காயா சிறுபுறத் 7துறைப்பத் 8தடவுநிலைக் கொன்றை யொடுபிடவுதலைப் பிணங்கிய 9நகைப்பூம் புறவிற் பகற்றுயிலமரா வரித்தாரணிந்த விரிப்பூந் 10தொழுதிப் புல்லுத ளினத்தொடு புகன்று விளையாடும் 11பல்லிணர்ப் படப்பை ப12டியணை பெருங்கடி பக்க விலைப் பண்டமொடு பல்லோர் குழீஇ நகரங் கூஉ13நாற்ற நந்திப் பல்லாப்படு நிரைப் 14பயம்படுவாழ்க்கைக் கொல்லைப் பெருங் குடிக் கோவலர் குழீஇய முல்லை நிலத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி யெய்துகின்றனர். இதனெல்லை நூற்றிருபத்தைந்தையும் இவ்வாறு மகிழ்ச்சியுடன் கடந்து செல்கின்றனர். 20. குறிஞ்சி நிலங்கடந்தது முல்லை நிலத்தைக் கடந்து சென்றவர்க்கு எதிரே குறிஞ்சி நிலம் தோன்றுகிறது. அதனையடைந்ததும் இருமருங்கும் மலைகள் நிற்க. இடையே அவர்களுடைய வழி செல்லுகின்றது. 1அளப்பரும் படிவத் தான்றோர் போல 2துளக்கமில்லாத் திருத்தகு நிலைமைய மதுரம் பொழிந்த மழலையங்கிளவிச் 3சதுரச் சந்திச் சமழ்ப்பில் கலாபத்து 4தொட்டிமைகலந்த தூசுவிரியல்குற் பட்டிமையொழுக்கிற் பலர் தோய்சாயல் 5அரம் போழவ்வளை மகளிர் மனத்தின் நிரம்பா நெறியின வாகியரும் பொருள் நல்லாமாந்த ருள்ளம் போல 6நொய்ந்துரை சுமந்து மெய்ந்நயந்தெரிந்த மேலோர் நண்பிற் றாழ விழிதரும் அருவியறா அவாகலினயல 7பருவி வித்திய பைந்தாட்புனந்தோ றீரமில் குறவர் பரண்மிசை 8பொத்திய ஆ9ரத்துணியொடு காரகில் கழுமிய கொள்ளிக் கூரெரி 1வெள்ளிவிளக்கிற் கவரிமானேறு கண்படைகொள்ளும் 2தகரங்கவினிய தண்வரைச் சாரல் நாகம் வருக்கை, மா, வழை, வாழை, ஆசினி, செண்பகம் பிண்டி, குறிஞ்சி, வேங்கை, கள்ளி முதலிய பல்வகை மரங்களும் நறையும் பிறவுமாகிய கொடி வகைகளும் காந்தள் முதலிய செடிகளும் பிரம்பும் வேயும் வெதிருமாகிய புதர்களும் நிரம்பி அழகு திகழும் காட்சி நல்குகின்றது. 3ஏனற் பெருந்தினை யேனங்காவலர் கானற் பெருமரங் 4கண்ணுற மாட்டி இருள்பட வோங்கிய வெல்லை வேலி தொறும் 5வெருள்படப் போக்கிய வெண் டீவிளக்கம் 6மங்குல் வானத்து மதிநிலா மழுங்கக் 7கங்குல் யாமத்துக் கடையற வெழுந்த கதிரோன் போல 8வெதிரெதிர் கலாஅய் நறும்பூஞ் சோலைநாற்றங் கழுமிய குறிஞ்சிப் பெருந்திணை குலாஅய்க்கிடந்த குறிஞ்சி நிலத்தின் எல்லை நூற்றிருபத்தைந்தையும் கடந்தேகு கின்றனர். அதற்கு இருபத்தைந்தெல்லையில் நருமதை யாறு ஓடுகின்றது. 21. நருமதை கடந்தது குறிஞ்சி நிலத்துக்கு இருபத்தைந்தெல்லையிற் கிடந்த நருமதை யாற்றை நெருங்குகின்றனர். அதனது பெருகிய வரவு தோன்றுகிறது. 1மதிய முரைஞ்சு மால்வரைச் சென்னிப் 2பொதியவிழ் பூமரம் பொதுளியசோலை அகலத் தெல்லையு 3மாழ்ச்சிய தந்தமும் உயர்பி 4னோக்கமும் உணர்த்தற் காகா விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிலிந்து கல்லுட் பிறந்த கழுவாக் கதிர்மணி மண்ணுட் பிறந்த மாசறு பசும்பொன் 5வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம் 6வெதிரிற் பிறந்த பொதிய விழ் அருநெல் மருப்பினுட் பிறந்த 7மண்ணா முத்தம் வரையிற் பிறந்த வயிரமொடுவரன்றி மாவும் பலாவும் வாழையும் ஐவனநெல்லும் கரும்பும் தேனும் பிறவும் சுமந்து கொண்டு நருமதையோடி வருகிறது. இவ்வாறு 8ஒருப்படுத் தொழியாது விரும்பினேந்தி மலைவயிற் பிறந்த மாண்புறு பெருங்கலம் 9நிலைவயின் வாழ்நர்க்குத் தலைவயினுய்க்கும் பகர்விலைமாந்தரினுகர் பொருளடக்கிப் பன்மலைப்பிறந்த 10தண்ணிற வருவிய 1அமலையருங்கலம டக்குபுத்தழீஇத் தன்னிற் கூடிய 2தானைச் செல்வமொடு இருகரை மருங்கினும் பெருகுபுதழீஇ வரும் அதன்பால் குருக்கத்தியும் அதிரலும் முல்லையுமாகிய கொடிவகை படர்ந்த ஞாழல், புன்னை, குருந்து, கொன்றை, முருக்கம், தேக்கு முதலிய மரங்களும், மாவும் மருதும் சேவும் குரவும் ஆலும் அரசும் புன்கும் நாவலும் என்ற பல்வகை மரங்களும் மிதந்து வருகின்றன. கரையிலும் பிற விடங்களிலும் வாழும் புள்ளினமும் விலங்கினமும் செய்வன காணப்படுகின்றன. புள்ளிமானும் 3புல்வாய்த் தொகுதியும் ஆமாவினமுந் 4தாமாறோடி இனடப்புனற் பட்டவை யுடைப்புனற்கிவரப் பொறிமயிர்ப் பேடை 5போத் தொடுபுலம்ப எறிமயி 6ரேனமோடெ7ண்கின மிரியக் குரங்கு முசுவு மரந்தொறும் 8வாவச் சுரும்புந்தும்பியும் விரும்பு வுவிரைய 9அகத்துறை பல்லுயிரச்ச மெய்தப் புறத்துறை பல்லுயிர் புகன்று விளையாடப் 10படிவப் பள்ளியொடு பாக்கங் கவர்ந்து குடிகெழுவளநாடு கொள்ளை கொண்டு 11கவ்வை யோதங் கால்கிளர்ந்துராஅய்ப் பௌவம் புகூஉம்12படர்ச்சித்தாகிக் 1கருங்காற் குருகுங் கம்புளுங் கழுமிப் பெரும் பூட் 2பூணியும் பேழ்வாய்க் கொக்கும் 3குளிவையும் புதர்வும் தெளிகயக் கோழியும் அன்றிலு நாரையுந்4 துன்றுபு கெழீஇ வாளையும் வராலு 5நாளிரையாக அயிரையும் பிறவும் 6அல் கிரையமைத்துப் பறவைப் 7பார்ப்பினஞ் சிறு மீன் 8செகுத்து வார் மணலடைகரைப் 9பார் வலொடுவதியும் சும்மையறாத் தன்மைத் தாகிக் கயம்பல கெழீ இயியங்குதுறை 10சில்கிப் பெருமதயானையொடு பிடியினம் பிளிற்றும் நருமதைப் பேர் யாற்றின் கரையை உதயணனும் வயந்த கனும் வந்தடை கின்றனர். யாற்றில் புதுப்புனல் பெருக்கெடுத் தோடுகிறது. காஞ்சனமாலையும் வாசவதத்தையும் உதயணனும் பிடியானையின் மேலேயிருப்ப, வயந்தகன் மட்டில் கீழேயிறங்கிக் கால்நிலை கொள்ளும் இயங்கு துறையைத் தேடிக் கண்டு வழி காட்டி முன்னே செல்கின்றான். அக்காலை வாசவதத்தை யுறங்கு கின்றாள். அவனைத் திண்ணிதாகத் தழீஇக் கொண்டு பிடியானையை உதயணன் மெல்லச் செலுத்தி வரையேறும் அரிமாப் போல ஆற்றைக் கடந்து மறுகரையேறுகின்றான். 22. பாலை நிலங்கடந்தது 1கார்நீர் நருமதைக் கரையகங்கடந்தபின் 2வார்நீர் துடைத்து வயந்தக னேறி வானக நாண்மீன் 3றானநோக்கி ஆற்றின தளவு 4மாரிரு ளெல்லையும் 5ஏற்றமையிரும்பிடி யியக்கமும் எண்ணி உதயணற்கு உரைக்கின்றான். அவர் எதிரே பாலை நில மொன்று கிடக்கின்றது. அதனைச் சிறிது கடந்த வளவில், பரல் குரம்பாகிய சுரநிலம் காணப்படுகிறது. அங்கே அகன்ற புரிசை சூழ்ந்த கோயிலொன்று உளது. அருகே வேப்மரங்கள் நிற்கின்றன. அவற்றின் கிளைகளில் உயிர்களைக் கொன்று அவற்றின் குடர் கொண்டு திரித்த கயிறு பிணித்த ஊசல்கள் நாறுகின்றன. உச்சியில் மான்கொம்பும் மயிற்பீலியும் கட்டிய கொடிகள் அசைகின்றன. கோயில் முன்றிலில் தோற்கேடகரும் எறி வேலும் வாளும் அம்புப்புதையும் அமைவரி வில்லும் உள்ளன. திகழ்மதி முகத்தி 6எண்வகைப்பொலிந்த வொண்படைத்தடக்கைக் கச்சார் வனமுலைக் 7கண்மணிக் கொடும்பூண் பச்சைப் பாற்கிளி பவழச் செவ்வாய் முத்தேல் முறுவன் 8முயங்குகயற் றடங்கண் 9சிலையேர் புருவச் செங் கட்செல்வி 10கலை காமுறுவி நிலைகாமுற்ற இக்கற் சிறைக் கோட்டம் காண்போர்க்கு நல்ல காட்சி நல்குகின்றது. அதனைக் கண்டு செல்லுங்கள். வில்லே ருழவர் 1செல்சாத் தெறிந்துறி 2நல்லாப்படுத்த நடுகல் லுழலையும் ஆனிடு 3பதுக்கையு 4மரில் பிணங்கடுக்கமும் 5தானிடு குழியுந் தலைகரந் தியாத்த புல்லும் பொள்ளலும் வெள்ளிடைக்களரும் நீரில் யாறும் நிரம்பா நிலனும் 6ஊரில் காறும் 7ஊடிடி முட்டமும் வெறுஞ் சுனைப் பாவையும் 8குறும்பரற் குன்றமும் இயற்கையினமைந் தவுஞ் செயற்கையிற் சிறந்தவும் ஒன்றுகண் டவைபோற் 9சென்றுவப் பரிதாய்த் தட்பக் காலத் தும்வெப்ப மாளாது விளங்கும் பாலைப் பெரு நிலம் பரந்து தோன்றுகிறது. அங்கே ஓமை, உழிஞ்சில் உலவை, உகாய், கடு, தான்றி, விடத் தேரை, அரவு, அரசு ஆர், ஆத்தி, இரவு, இரண்டு, குரவு, கோங்கு, கள்ளி கடம்பு முள்ளி, முருக்கு, தணக்கு, பலாசு, நெமை, ஈங்கை, இலவு, நெல்லி, வாகை முதலிய பல்வகை மரங்கள் நிற்கின்றன. நிழலும் பசுமையும் இன்மையின் இவ்விடத்தே மயிலும் குயிலும் வருவ தில்லை பெடையொடு விளையாட் டயரும் சேவற்புரு வன் பரலுண்டு கள்ளிமரத்தின் சினையேறிக் கூப்பிடுங்குரல் ஆங்காங்குச் செவிப்புலனாகின்றது. விலங் கினங்களில், கானம்பன்றித் 1தோன்முலைப் பிணவல் 2குரங்கு நடைக் களிற்றொடு 3திரங்குமரற் சுவைத்து நீர் நசைக் 3கெள்கித் 4தேர்மருங்கோடவும் 5உள்ளழலெனா அதொள்ளழலன்ன செம் முகமந்தி 6கைம்மகத் தறீஇப் பைங்குழைப் 7பிரசமங்கையினக்க 8நொதுமற் கடுவினது கண்டாற்றாது 9காஞ்சிரங் கவர்கோற் கவின்பெறத் தொடுத்த தண்டேனூட்டித் தாகந் தணிப்பவும் வெங்கற் சாரல் 10வேய்விண்டு திர்த்த அங்கதிரமுத்த மணிமழைத்துளியெனச் காட்டுக் கோழிச் 11சூட்டுத்தலைச்சேவல் குத்தலானாது தத்துற்றுத் தளரவும் 12கயந்தலைத் தழீஇய கறையடியிரும்பிடி 13நயந்தலைநீங்கிய நாரின் முருங்கை 14வெண்பூங் கவளமுனைஇ டுதல்லிப் பைங் காயமித்தம் பல்வயினடக்கி 15யாறு செல்வம்பலர் சேறுகிளைத்திட்ட 16உவலைக் கேணி யவறுடுத் துலாவவும் செந்தளிரி ருப்பைப் பைந்துணர் வான்பூத் தீஞ்சுவை நசைஇய தூங்குசிறைவாவல் கல்லெனத்17துவன்றிப் பல்வயிற்பறப்பவும் இன்னவைபிறவும் வெம்மையின் வருந்தி நடப்பவும் பறப்பவு மிடுக்கணெய்தி 1வேட்டச் செந்நாய் வேண்டாதொழித்த 2காட்டுமாவல் சியர் கரந்தை பாழ்பட வெட்சி 3மிலைச்சிய வில்லுறு வாழ்க்கைச் 4சிறுபுல்லாளர் சீறூர்க்கியங்கும் 5கற்குவிபுல்லதர் பற்பலபயின்று பாலை தழீஇய பயனறு பெருவழி இவ்வாறு தோன்றக் காணும் வயந்தகன் உதயணனை நோக்கி, இப்பெருவழியை இருட் காலத்துக்கடத்தல் வேண்டுமே யன்றிப் பகலில் செல்லுதல் கூடாதென விலக்குகின்றான். அப்போழ்தில் யானையின் கத்துக் கயிற்றில் கட்டியிருந்த உதயணனது யாழ்வழி யருகுகின்ற வேயொன்றிற் பிணங்கிமுடிய விழ்ந்து வீழ்ந்துவிடுகிறது. அதுகண்ட வயந்தகன். வத்தவ! நின்யாழ் நிலமிசை வீழ்ந்ததுநிற்கநின்பிடியென நலமிகுபுகழோய்! நல்லிரு 6நூற்றுவிற் சென்றது கடிதினிச் செய் திறமிதன்மாட் டொன்று மில்லையுறுதி வேண்டின் தந்த தெய்வத்தாலே 7தருமெனப் பின்னிலை வலித்து முன்னிலை வறிய 8இன்னாப் போகுதற் காகும் பொழுதென உதயணன் கூறுகின்றான். இதற்கிடையே பிடியானையும் பறந்து செல்வது போற் கதிசிறந்து செல்கிறது. இவ்வாறு அஃது எண்பதெல்லை சென்றதும் கண்சுழன்று குருதி கொப்புளித்து தாழ்ந்து தலைவணங்கி இறுதியிடும் பையுற்று மெலிகிறது. அதனை யுணர்ந்த உதயணன் இது வீழ்தற்குள் எஞ்சிநிற்கும் இருப தெல்லையும் கடத்தல் வேண்டுமெனக்க டாவுகின்றான். ஆயினும் அவ்யானை அவன் குறிப்பு வழி நில்லாது. நோயின் கடுமை 1நூக்குபு நலிய என்னுயிர் விடுவல் இழிந்தனையாகி நின்றுயிர்க் 2கேம மறிந்தனை நீங்கென 3வடுத் தீர் பெரும்புகழ் வத்தவரிறைவனை விடுப்பது போல நடுக்கமெய்திய 4மெய்யிற் கூறிக்கை வரை நில்லாது அயர்வுற்றுச் சோர்ந்து நிற்கிறது. 23. பிடி வீழ்ந்தது நுரை நீரை நொய்ய தெப்பம் பற்றிக் கடக்கும் ஒருவற்கு அஃது அவன்கையாள்வது போலப் பிடியானை சிறப்பு நோயுற்றுச் சோர்ந்து நிற்கக்கண்ட உதயணன் வயந்தகனை நோக்கி, "அரும்பிடி நம்மை ஆற்ற ஒத்தது. காண்" என்று சொல்லிக் காஞ்சனையைப் பார்த்து. "இனி, இவ் யானையின் பின்பக்கத்தே இறங்குக" எனப்பணிக்கின்றான். பின்பு, 1கவர் கணை நோன் சிலைகையாலடைக்கி வருத்த முற்றலமரும்2 வாளரித்தடங்கண் திருத்தகு 3தாமரைத் திருப்புக்குத் திளைக்கும் அருவரை யகலத் தணிபெறத் தழீஇக் கருவரை மிசைநின்றி ருநிலத் திழிதரும் உமையொடு புணர்ந்த வமையா நாட்டத்துக் 4கண்ணங்கவிரொளிக் கடவுள்போல யானையினின்றும் இழிகின்றான். அம்பிடியானையும் பக்கமாக வீழின் அங்கு நிற்கும் உதயணன் முதலாயினார்க்கு கூறுண்டா மென்ற கருத்தால் நான்குகால்களையும் பரப்பிக் கொண்டு உதயணன் முன்னே அவன் சேவடி தலையுறச் செய்தது; "பொறு என வணக்கம் செய்வது போல" நிலத்தில் வீழ்ந்துகுருதி காலுகின்றது. அதன் வீழ்ச்சிகண்டு கண்கலுழ்ந்து நிற்கும் உதயணன் அதன் செயலால் தனக்கோர் இடையூறு நேரவிருக்கிறதென்றும் பின்புதான் தன்நிலத்தைப் பெறுதலுறுதி யென்றும் அறிந்து கொள்கின்றான். இந்நிலையில் அதற்கு உயிர் நீங்கும் காலம் நெருங்குவது காண்கின்றான். உடனே, இறுதிக்காலத் துறுதியாகிய 1ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றிச் 2செல்கதிமந்திரம் செவியில் செப்பி எம்மையிடுக்கணிம்மை தீஃத்தோய் வரும்பிறப்பெம் மோ3டொ ருங்காகியர் என மொழிந்து கண்ணீர் உகுக்கின்றான். பிடியும் உயிர்விடுகிறது. அப்போது வயந்தகனும் மிக்க வருத்தமுற்று நிற்கின்றான். அவனை நோக்கி உதயணன் சில கூறலுற்று, பெறற்கரும் பேரியாழ்கைவயிற் பிரிந்ததும் இயற்றமையிரும்பிடி யின்னுயி ரிறுதியும் 4எள் ளுமாந்தர்க் கின்பமாக்கி உள்ளுதோறு முள்ளஞ்சுடுதலிற் கவற்சியிற்5கையறனீக்கிமுயற்சியிற் 6குண்டுதுறையிடுமணற் கோடுறவழுந்திய பண்டிதுறையேற்றும்7பகட்டிணைபோல இருவே மிவ்விடர்நீக்குதற் கியைந்தனம் 8திருவேர் சாயலைத் தேமொழித் துவர்வாய்க் காஞ்சனமாலையொடு 9கண்படை கொளீஇக் காவலோம்பு என உரைத்துத் தான் மட்டில் கையில் வாளும் கேடகமும் ஏந்திக்கொண்டு பிடியானைக்கு நீர்க்கடன் செய்யாது கழிதல் இலக்கணமன்மையின் நீர்நிலை யொன்றைத் தேடிச்செல்கின்றான். இருளும் புலரத் தொடங்குகிறது. வெள்ளி முளைத்து முன்னே தோன்றுகிறது. சிறிது நேரத்தில் ஒரு நீர்நிலையைக் காண் கின்றான். வருதிரைகூ உம் வருணன் போல நீர் நிலையில் இறங்கி, வாய்ப் பூச்சியற்றித் தூய்மையுடையனாய், "இரும்பிடி இனிதுழி யேறுக சென்றென" நீர்க் கடனாற்றிக்கரையேறி வழிபடு தெய்வத்தை வணங்கி, பிடிகிடந்த விடத்தையடைந்து அதனை வலம் வந்து அரிதிற் பிரிந்து வயந்தகனையடைகின்றான். இருவரும் பகற்காலம் வந்தமையின். இனி, பிறர்கண்ணிற் படாமல் இருத்தற்குரிய இட மொன்றைக் காண்பது குறித்து ஆராய்கின்றனர். வயந்தகன் கூறத் தொடங்கி 1நஞ்சம்பொதிந்து நமக்கும் பிறர்க்கும் அஞ்சல் செல்லா வரணகம் வலித்துக் காட்டகத் துறையும்2கடுவினை வாழ்க்கை வேட்டுவர் பயின்ற விடாமற்றிந்நிலம் நாட்டுச் சந்திது நாமிவ ணீந்தி ஒன்றி ருகாவதஞ் சென்றபின்றைக் குன்றகச் சாரற்3 குறும்புபல வடக்கிநம் வன்னாளினையர் வாழ்பதிக்கியங்கும் வழியது வகையும் 4தெரிவழிக்குறையும் 5திகைத்திலே னாதலின்மதிக்குமென்மனனே 6மடத்தகை மாதர் வருந்தினு நாமிவட் கடப்பது கருமம் காவல வருளென மொழிகின்றான். உதயணன் தான் நீர்நிலைக்குப்போம்போது மேற்கொண்ட வாளும் கேடகமும் நீக்கிக் கோறும் சிலையும் கைக்கொள்கின்றான். காஞ்சன மாலையைப் பார்த்து, பள்ளிகொண்ட7வள்ளியஞ்சாயற் 8கற்பொடு வுணர்வியைக் காஞ்சனமாலாய்! நற்பொருளிது வெனநன்களமெடுப்பி நடக்கல் வேண்டுநாமிவணீங்கி இடுக்கணில்லாவி டம்புகுமளவென நயந்திகழக் கூறுகின்றான். அது கேட்கும் வாசவதத்தையும் அவன் கூறியவண்ணம் நடந்துவர வொருப்படுகின்றாள், 1பூமலர்க் கோதையும் பொறையென வசைவோள் மாமலை தாங்கு2மதுகையள்போல இன்பக் காதலற் கேதமஞ்சிப் 3பொன்பு னைபாவையும் போகுதல் வலிப்பக் 4கொடிப்படை கோமகனாகக் 5கூழை வடுத்தீர்வயந்தகன் வாள்வலம்பிடித்துக் 6கடித்தகப்பூம்படை கைவயினடக்கிக் காவல் கொண்டகருத்தினனாகப் புரிசைச் சுற்றம் காஞ்சனையாக நால்வரும் செல்கின்றனர். விடியலும் காலையும் கழிந்ததும் வெயில் மிகுகிறது. வாசவதத்தையின்பூப்போன்றிய மெல்லிய அடிகள் நடந்தற்காகாது கொப்பளிக்கின்றன. அவள் வருத்தத்தை யுணர்ந்த உதயணன் வயந்தகனைநோக்கி, "வாலிழை வருந்தினள்: இயங்குதல் செல்லாது இருக்குமிடம் காண்பாயாக" என்கின்றான். 7கார்ப்பூ நீலங் கவினிய கலித்துறை நீர்ப்பூம் பொய்கை நெறியிற் கண்டுஅதன் படுகரை மருங்கிற்8படர்புறம் வளைஇக் கன்முரம்படுத்துக் 9கவடுகாறாழ்ந்து புள்ளினம் புகலினும் புகற்கரிதாகி ஒள்ளெரி யெழுந்த 10வூழ்படு கொழுமலர் முள்ளரையிலவத்துள் 11ளுழையரண் முன்னி முள்ளங்கோடு12 மூழிலைப்பிறங்கலும் 13வள்ளிலைவாடலும் வயந்தகன்களைந்து பாசடைப் பள்ளியொன்று காண்கின்றான். அதனுள் வாசவதத்தையையும் காஞ்சனமாலையையும் இருந்து துயில்கொளச் செய்து இருவரும் அருகே கரந்திருக் கின்றனர். பகற்போது இவ்வாறு கழிகிறது. 24. வயந்தகனகன்றது இவ்வண்ணம் கடும்பகற்போது கழிதலும், வாசவதத்தையும் காஞ்சனமாலையாகிய தோழியொடு கண்ணிற் காணுமாறு, கலவமஞ்ஞைகவர்குரல் பயிற்றி இலவங் கொம்பு தோ1றிறைகொண் டீண்டப் பொறிவரி யிரும்புலிப்2 போத்து நனி வெரீஇ 3மறியுடன்றழீஇய மடமானம்னை துள்ளுநடை யிரலையொடுவெள்ளிடைக் 4குழுமப் பிடிக்கணந்தழீஇய பெருங்கையானை இடிக்குரலியம்பி யெவ்வழி மருங்கினும் நீர்வழிக்5கணவரு நெடுங்கையவாகிக் 6காரிரு முகிலிற் கானம் பரப்பச் செழுநீர்ப் பொய்கையுட் கொழுமலர் கடம்பப் புள்ளினங் 7குடம்பை சேரப்புல்லென அம்புறுபுண்ணி னபந்திவந்திறுப்ப வயந்தகனாகிய தோழன் உதயணற்கு மேற்செய்வது தெரிந்து கூறலுற்று. ஓங்கிய பெரும்புக ழுருமண்ணு வாவுறை தேங்கமழ் திருநகர்த் திசைவு மெல்லையும் 8ஆற்றதிடருமவ்வழியுள்ள 9பொல்லாக் குறும்பும் போகுதற் கருமையின் காலைநீங்கிய மலையாமத்துப் 1பனிப்பூங் கோதையொடு தனித்தனமியங்கின் அற்றந்தரூஉமஃ2தமைச் சிழுக்குடைத்தென உரைக்கின்றான். அவனே மேலும் கூறுவானாய், வாசவதத்தை பிடிமிசையிருந்து பெருங்கவின்வாடியதும் வழிநடந்தவருத்தத்தால் சீறடி சிவந்து கொப்புளங் கூர்ந்ததும் அடிசிலயிலா அசைவும் தளர்ச்சியும் எடுத்தோதி. 3உலைவில் பெரும்புகழ் 4யூகி யொட்டார். நிலவரை5நிமிர்வுறு நீதி நிறீஇக் 6கூற்றுறழ் மொய்ம்பி னேற்றுப் பெயரண்ணல் பரந்தபடையொ டினிதிருந் துறையும் புகலரும் புரிசைப் பொருவில்புட்பகம் இருளிடை யெய்திப் பொருபடைதொகுத்துக் காலைவருவேன் காவலோம்பிப் போகல் செல்லாது புரவல இருவென 7உள்ளத் துள்பொருளுணர்ந்தோன் போலக் கூறுகின்றான். அவற்கு உதயணன் அடையாளமாகப் பண்டை நிகழ்ச்சிகள் சில தெரிவிப்பானாய். கோசம்பிநகரத்தில் தானும் இடபகனும் யானைமேற் சென்று, அங்கே அவ்விடயகற்குத் தன்னாடையணிகளை யணிந்து சேனாபதியென்றும் நண்பனென்றும் சொல்லிப் பின் யானை வாரி முதலியவற்றிற்கு அவனைச் செலுத்தி யாராய்ந்ததும் பிறவும் சொல்லி, பின் வாசவதத்தையொடு வந்ததும் பிடிவீழ்ந்ததும் தத்தை நடக்கலாற் றாளானதும், கானத்துக் கரந்திருந்த சேக்கையும் பிறவும் வாய்ப்பக்கூறி வாட்படை தொகுத்துக் கொண்டு இருள்கழி காலையில் கோற்குறி யெல்லையுள் இக்குறிவழி விரைந்து வருக எனச் சொல்லி விடுக்கின்றான். இப்பால், 1பினிவரைமார்பன்றனியனாகி வேழவேட்டத்து வீழநூறி அருஞ்சிறை யெய்தி 2யாப்பொடு புக்க பெருஞ்சிறைப்பள்ளிப் பேரிருள்போலும் துன்பப் பெருங்கடற் கின்பமாகி 3மாந்தளிர்மேனி யேந்துபுணையாக 4நீதுதல் வலித்த நெஞ்சினனாகிக் கணையொடுதிரிதரு காமன்போலத் துணைநலமாதரைத் தோழியொடுதுயிற்றித் துஞ்சல் செல்லான் 5வெஞ்சினவிடலை வாள்வலங் கொண்டு காவலோம்ப 6வரிநிறக் கோம்பிவாலிமிழ்ப்புவெழீஇ எரிமல ரிலவத் திருஞ்சினையி ருந்த 7அலந்த மஞ்சை யாமம் கூவப் பொழுது புலர்வதாயிற்று. 25. சவரர் புளிஞர் வளைந்தது உதயணனெழுந்து பொய்கைக்குச் சென்று முகந்தூய்மை செய்து அந்தி கூப்பித் தென்புலக் கிறைஞ்சிக் காலைவழிபாடு முடிக்கின்றான் வாசவதத்தை, தமரிற் பிரிந்த தன் தணிமையை நினைஇ 1அமரிய தோழி யாகத் தசைந்து சுடர்முகம் புல்லெனப்2படரொடுமயர்ந்து வேனல்3வள்ளியின் மேனிவாடி உள்ளங்கனலு மொள்ளிழைமாதரைக் 4குற்ற நலத்துக் குறிப்புநனிகாட்டி உற்றவெந்நோய் ஓம்பெனவுற்ற காஞ்சனமாலையை யாங்கனமருளி வயந்தகன் வருவழி நோக்கி உதயணன் இருக்கையில், வறண் மரத்துச்சியிலிருந்த வயவளென்னும் பறவை கூற, பகற்போதில் பகைப்படையொன்று வருமெனத் தேர்ந்து வெங்கணைதிருத்தி வில்லிடந்தழீஇ இரும்பிடையிட்ட பெரும்புடைக்கச்சையன் வளிசுழற் றறாஅ 5முளிமரக்கானத் தென்கொனிகழு மேதமின்றென 6நெஞ்சொடுசாவுஞ்சிந்தையனாகி வெஞ்சினவீரமொடு ஒருபுடையேயிருக்கின்றான். அக்கானத்தே சவரர்புளிஞர் ஒருபால் வாழ்கின்றனர். அருளின்மையும் கொலைவினையும்அவர்பால் மிக்கிருக்கின்றன. 1காலி னியங்குநர் கற்குழிக்கொளினும் நூலினியன்றவை நோக்கார்சாபமென் றாடூஉவு மகடூஉவு2மாடுமறியார் காடுதேர் முயற்சியர் கைப்பட்டோர்களைப் பாடற்பாணிப் பல்லிசைகேட்டும் 3ஆடனவணங்கிற் கருந்தலைதுமித்தும் 4வீளையோட்டின் வெருவவெய்தவர் ஊளைப் பூசலோடா டல்கண்டுவந்தும் 5காட்டுயிர் காணார் கைப்பயில் குறியொடு வேட்டன செய்யும் வேட்டுவினைக் கடுந்தொழிற் கவர்கணை வாழ்க்கையராகிய அவர்கள் உதயணன் ஏறிவந்த பிடியானையின் சுவடுகண்டு, இது காட்டுப்பிடியன்று: நாட்டுப் பிடியே இவ்வழி நடந்தது எனத் தேர்ந்து அதனைத்தொடர்ந்து வருகின்றனர். வருபவர், பிடியது வீழ்ச்சியும் பெண்பாற் சுவடும் 6அடுதிறலாடவரற்றமும் பிறவும் படியினாய்ந்து கடுகுவனரோடி வெள்ளிடைவெண்மணன் மிதித்தசுவடுதொறும் 7புள்ளடியொழுக்கம் புரிவனர் நோக்கி நெருநனீடிருணீங்குநர் சுவடிவை 8அருமையுடைத்தவர்த்தலைப்படமைந்கென. எண்ணுகின்றனர். அருகே மரத்தின்மேலிருந்த புள்ளொன்று வீச்சுறு விழுக்குரலெடுத்துக் கூவுகிறது. அதனைக் கேட்டுப் பொருள் தெரியும் ஒரு வேட்டுவமுதுமகன் கூறலுற்று. பெருமகனென்னப் பெறலருங் கலத்தோ டொருமக னுளவழி 1யெதிர்த் துமம்மகன் நடுங்குதுய ருறுத்தும் 2 கடுங்கணாண்மையன் ஆண்மையழிய நாண்3மீக் கூரி மெய்ப்பொருணோர்ந்து கைப்படுநமக்கெனக் காட்டகமருங்கினல்லது மற்றவர் நாட்டகம்புகுதனன்கிருள்கழியினும் இல்லையெழுகென யாவரும் எழுந்து செல்கின்றனர். சிறிது தூரம் சென்றதும் உதயணனைக். காண்கின்றனர். அவனைக் கைப்பற்றியலைக்கும் கருத்தினராய்ப் போர் தொடுப்ப, உதயணன் காஞ்சனமாலையை நோக்கி, "நீ இவனைப் போற்றுக; இனிமேல் வரக் கடவதுன்பமொன்றுமில்லை. இவ்வேடருயிரையான் உண்பேன்" எனக் கூறி முன் சென்று, கைச்சிலைவளைத்துக் கணைநாண்கொளீஇ 4முற்றிய கோங்கின் முழுத்தாள்பொருந்தி ஒற்றுபு நோக்கு மொற்றையாளன் வார்கணை செவியுற வாங்கி மற்றவர் ஆருயிர் வௌவவதன் றாண் முதல்பொருந்தி 5உடும் பெறிந்தது போற் கடுங்கணை முள்க விட்டவேந்தன்விற் றொழில்கண்டும் கண்டுகைவிடுதல் கருமமன்றென விண்டலர் இலவத் 6தண்டைசார்ந்தவனைக் கண்டவேட்டுவர் 7தண்டாதுநெருக்கிப் போருடற்றலாயினர். அக்காலையவர் உதயணனைப்பார்த்து. "ஊர்ந்து வந்த பிடி வீழ்ந்ததனால் வேறே நடந்து சென்று உய்தி பெறலாமென எண்ணி இம்மரத்தடியில் ஒளித்தனை போலும். இனி நீ எவ்வழிப் போவாய்? நின் இன்னுயிரை யுண்டன்றிப் போகேம்: நீயார்?" என்று வீரம் பேசுகின்றனர். அவர்களோடு பேச்சு நிகழ்த்தாது, கையில் உள்ள கடுங்கணை யொவ்வொன்று கொண்டு வேட்டுவர் அருகு சாராத வகையில் பொருது உதயணன் விசையுற விடுத்து வெருட்டுகின்றான். வேடர் நிலைகலங்குகின்றனர். ஆயினும் அவ்விடத்தினின்றும் நீங்காது அவனை வளைத்துக் கொண்டு, 1கோலவுருவொடு குன்றிடைப் போந்தவோர் காலன் சொல்லிவன் கானத் தோர்க்கெனப் பன்முகத்தானும் 2பற்றடைந்தன்னவன் வின்முகம் புகாஅர் வேட்டுவரஞ்சிப் புட்கூற் றாளனை3யுட்கூற்றாகி அழித்தனை கொணர்ந்தென வெகுண்டு பழிக்கலாயினர். அவரது ஆர்ப்பொலியும் வீழ்ச்சி யொலியும் கானத்திற் கல்லெனக் கலந்தெழுகின்றன. 26. வென்றியெய்தியது தன்னைநோக்கி வேட்டுவர் பழித்துரைப்பது கேட்ட புள்ளுவ முதுமகன், நாம்பலராகவும் ஒருவனாய் நின்று பொருதலைப்பவன் முள்ளரை இலவத்துள்ளரை யிருத்தலால் வெல்வதாயிற்று. இப்பகுதியைத் தீக்கிரையாக்குவோமாயின், இதனுள் இருப்பவர் வெளிப்படுவர். இதனை யுணராது நீவிர் வெறிதே பொருதழிந்தீர்; புள்ளுரை பொய்த்திலது" என்கின்றான். வேட்டுவரும் அவனுரை யையேற்று. கணையொடுபிடித்த 1கைக்கோலரணிப் புடையி டுபூனைப் பூப்புறமடுத்துப் 2பிசைந்த சிறுதீப் பெருகமூட்டி இசைந்த3முளரி யெண்டிசைப்பக்கமும் வேனற் போழல் கானவர் கொளுத்தி நோவக் கூறிச் சாவதல்லது போதல்பொய்க்கு மினியெனப்போகார் 4அரிமாவளைந்த நரிமாப்போல 5இகன்முனைவேட்டுவரிடுக்கண் செய்யப் புகைமிகு வெவ்வழல் பூம்பொழில் புதைப்ப அதுகண்ட வாசவதத்தை மான்பிணை போல மனமருண்டு வருந்தலானாள். உதயணன் காஞ்சனமாலையை நோக்கி. "நீ இனி என்வழிப்படாதுவேறோர் வழியே இத்தத்தையையழைத்துச் செல்க; யான் இவர்கள் உயிரைக்கொன்றுவந்து சேர்வேன்" என்று சொல்லி விடுக்கின்றான். பின்னர் உதயணன் வெளிப்படலும், வேட்டுவர்கண்டு முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கி அவனொடு பொரலுற்று அவன்கைச்சிலையின் நாணையறுத்து விடுகின்றனர். அதனால் அவன் செய் வகையறியாது திகைப்படை கின்றான். 1வலைநாணிமிழ்ப்புண் வயமாப் போலக் 2காட்சிக்கின்னா வாற்றலனாகிப் 3பேரமர் ஞாட்பினுள் பெருமுது தந்தைதன் வார்சிலைப் புரிஞாண் 4 வாளியினறுப்பத் தேர்மிசைத் திரிந்த 5திறலோன்போல வீழ்தருகடுங்கணை வில்லின் விலக்கி 6ஊழ்வினைதுரப்பவுயிர்மேற்செல்லாது தாழ்தருதடக்கையுந்தாளுந்தழீஇ 7வாயறை போகிய வடுச்சேர்யாக்கையன் 8ஆழிநோன்றாள் அண்ணல் நிற்பக்கண்ட வாசவதத்தைதான் அணிந்துள்ள அணிகலன் களைக் கழற்றிக் காஞ்சனமாலை கையிற்றந்து தன் கருத்தையுரைக்க, அவளும் அவற்றை உதயணன் கையிற்றந்து, "இவற்றை இவ்வேட்டு வர்க்குக் கொடுத்திலமாயின் கொடுமைவிளைவு உண்டு" என்கின்றாள். தன்னை யின்னா னெனத்தெரிவிக்க விரும்பாத உதயணன், வேட்டுவரை நோக்கிக் கூறுவானாய். குன்றச்சாரற்9குறும்பினு ளுறையும் வன்றோ ளினையீர் வந்துநீர் கேண்மின் பெருங்கலம் பெய்தியாம் பிடியொடுபோந்த அருங்கலவணிக ரப்பிடி வீழ வருத்த மெல்லா10மொருப்படுத்தொருவழி நெறிவயினீக்கிக்1குறிவயிற்புதைத்தனெம் கொள்குவிராயிற் கலைத் தொழி னீங்குமின் உள்வழியப்பொருள் காட்டுக முய்த்தெனக் கூறினன். அது கேட்ட குறவர் தலைவன் முற்போந்து ஏனை யோரையடக்கி நீவிர் யார் என்பதை எமக்கு அறியக்கூறுக என்கின்றான். அவற்கு, வத்தவர்கோமான் வணிகரித்திசைப் 2பெரும்பெயர்க்கிளவிப்பிரச்சோதனனாட் டரும் பொருள் கொண்டியாம் ஆற்றிடைப் போந்தனெம் மடப்பிடி வீழ3விடர்ப்பட்டிருளிடைப் பொழில்வயிற்புதைத்த தொழிலினெம்யாமென 4முகைத்தார் மார்பனுவப்பதையுரைப்ப வத்தவன் வணிகரென்ற சொல்லைக்கேட்ட துணையானே அவ்வேட்டுவர் மகிழ்ச்சியுற்றுத் தம்படையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு, உதயணன் மேலாடையால் அவனும் படையெடாவாறு கட்டி "அரும்பொருள் புதைத்த இடத்தைச் சென்று காட்டுக" என்று கேட்க, உதயணன் புதைத்த இடம் தெரியாவாறு நீவிர் இக்கானத்தைக் கொளுத்திவிட்டீர்: அவ்வழல் ஆறுங்காறும் இவ்விடத்தே நின்மின்" என்று சொல்ல, அவர்களும் அதற்குடன்பட்டு எவ்வழியாயினு மெரியவித் 5தவ்வழிக் காணலுறுதுங் காட்டாயாயின் 6ஆண முன்கையடுதும் யாமென மொழிகின்றனர். அந்நிலையில் உதயணன் கையாப் புற்றிருப்பது காணும் வாசவதத்தை மனம் கலங்கிக் கண்ணீருகுக்கின்றாள். அதனையறிந்த காஞ்சனமாலை, "இப்பொழிலகம் நம் வேந்தன் காவற்குட்பட்டது காண்: அன்றியும் இவ் வரிமானன் னோன் பொருட்டு உயிர்கொடுத்தற்கு வந்தனைபோலும்" எனப்பாராட்டு கின்றாள். உதயணனும், வேட்டுவரைநோக்கி, "உங்கட்குயாம் புதைத்த பேரணிகலம் வேண்டின் கையாப்புறுமுறையைப் பின்னர் அறிமின் காஞ்சனமாலாய்! இவள் துயரத்தை நீக்குக; ஈண்டுஎழும் தீப்புகை தீர்தலும் யான் அதனைக்காட்டுவேன்" என்கின்றான். வேடர்தலைவன் தத்தையின் மெலிவைக்கண்டு இரங்கினான் போல், 1கையகப்பட்டோன் பொய்யுரைத்தனனெனின் உய்வகையிலை யிவனுரைத்ததையெல்லாம் செய்தும் யாமென உரைத்து யானையைச் செலுத்தித் தழும்பேறியிருந்த உதயணன் கைகட்டினைய விழ்த்து நாற்புறமும் காத்துநிற்கின்றார்கள். உதயணன், வழிநடந்த வருத்தத்தால் மாக்கவின் வாடி மெலிவு மிக்கிருந்த தத்தையைத் தழுவிக் குழலைநீவுகின்றான். அதனால் நீலத்தண்மலர் நீர்ப்பட்டதுபோல் உளங்கரைந்த வாசவதத்தை கண்ணீர் துளிக்கின்றாள். இஃதிவ்வாறாக. இடபகன்துணை வேண்டிச் சென்ற வயந்தகன் அவனை விடியற் போதிற் சென்று கண்டு. இருநிலக் கிழமை2 யேயர்இறைவன் வென்றியும் விறலும்3விழுத்தகு விஞ்சையும் ஒன்றிய நண்பு ரூக்கமுமுயர்ச்சியும் 4ஒழுக்க நுனித்த வுயர்வுமிழுக்கா அமைச்சி னமைதியு மளியுமறனும் சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த வாற்றலும் வெங்கோல் வெறுப்புஞ்செங்கோற் செல்வமும் உடைய உதயணன் தத்தையைக் கொண்டு இருளிடைப் போந்ததும் இரும்பிடியிறுதியும் காட்டிடையிருந்ததும் அவன் கடறிய அடையாளங்களும் சுருங்கச் சொல்லுகின்றான். அது கேட்ட இடபகன் படையொடு எழுபவன், விண்ணோர் விழையும் 1செண்ணைக் கோலத்துக் கண்ணிய செலவிற்2கஞ்சிகைவையம் கண்ணி சூட்டிக்கடிமணையூட்டி வண்ணமகளிர் கண்ணுறக்கவினிய உழைக்கலமேந்தி3யுழைப்படர்ந்தியலப் பொற்கலத் தியன்றநற் சுவையடிசில் 4காப்புப் பொறி யொற்றி5யாப்புற வேற்றித் தனிமையெய்தி மன்னனுந்தையலும் அணியுங்கலனு6மகன் பரியாளமும் 7துணிவியல் சுற்றமுந் தொடர்ந்து டன்விட்டுப் பின்வர வமைத்து முன்வரப்போகி வயந்தகன் உடன்வரக்காட்டகத்தையடைகின்றான். அங்கே உதயணன் தங்கிய இடம் தீப்பற்றிக் கரிந்து கிடப்பக் கண்டு வயந்தகன் பெருங்கலக்கமுற்று மனம் துயர்ந்து, "இது நம் இறைவன் இருந்தவிடம்; அவன் ஏதம்பட்டானாயின், இன்னே இறத்தலே பொருள்" என்று அரற்றுகின்றான். இதற்குள் உடன்வந்த படை யாளர் காட்டிற்குள்பலவிடமும் சென்று தேடி ஒருபால், பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக் 8காவிகவினிய தாவில் பொய்கையுள் தனித் தாணிவந்த தாமரை போலப் 9பனித் தார்மார்பனிற்ப மொய்த்துடன் வளைத்தனர்10வலக்கும் வயவரைக்கண்டே உனைப்பொலி மாவும் வேழரு மூர்ந்தவர் போஒந் திசைவயிற் புதைந்தளர்நிற்ப. அக்காலையில் வேடருள் முதுவோனொருவன் புட்குரல் கேட்டு, "வேடுவர்களே, இனி ஓடிப்போமின்; இன்றேல் உங்கள் உயிர்க்குக்கேடு வரும்" என்று தெரிவிக்கவே, வேட்டுவரும் அச்சமும் அவலமும் கொண்டு மருண்டு நிற்ப, இடபகன் படையாளர் எடுத்த கோடும் வயிரும் பிறகருவிகளும் முழக்கிசை அவர்களைச் சூழக்கேட்கின்றது. உதயணன் வருவோர் தனக்குரி யோர் என்பதையுணர்ந்துவைத்தும். அதனையடக்கிக்கொண்டு, "இப்போது வருபவர் நுமரோ: அன்றி இவர் பிறரோ? எம்மை இவரிடமிருந்து காமின்" என வேட்டுவர்களைக் கேட்கின்றான். வேடர்தலைவன் உதயணனை நோக்கி, 1அடையார்க்கடந்த உதயணன் மந்திரி இடபகனென்போ னெறிபடைதானிது 2கோளுலாயெழுமெனிற் கூற்றெனப்பரந்த 3நாளுலாப்புறுத்தும் வாள் வலியுடைத்தே தெரிந்தனை நில்லாயாகியெம்மொடு புரிந்தனை போது; போதாயாயின் பிரிந்துகாண்பிற4ரருந்தலைதுமிப்ப என்று சொல்லி, அவற்கொருவில்லும் கணையும் தந்து விரைந் தோடத்தலைப் படுகின்றனர். இதற்குள் இடபகன்படை யாளரும் வந்து சூழ்ந்து பொருகின்றனர். வேட்டுவர் பொருதற்காற்றாது. ஒளித்தும் கிடந்தும் வீழ்ந்தும் கெட்டழிகின்றார்கள். இருதிறத் தாரும் எறியும் படைகள் தம்மேல் வந்து வீழாவாறு உதயணன் தன் கைப்படையால் தாங்கித்தத்தை காஞ்சனமாலை யென்ற இருவருடன் மரம்பயிலழுவத்தில்மறைந்துநின்றான். வேடர் கூட்டம் தொலை கிறது. படையாளர் உதயணனைச் சூழ்கின்றனர். 5அங்கண்விசும்பிற்றிங்களைச் சூழ்ந்த வெண்மீன்போல வென்றி யெய்திப் 6பன்மாண் படைஞர் பரந்தனர் சூழ மலிந்தவனேறி வத்தவர்பெருமகன் 7கலிந்த துன்பம் 8கையிகந் தகலப் பெருமகனாகிய உதயணன் இனிது மகிழ்கின்றான். அவர்கள் உதயணற்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்து மேலே நடந்து செல்லாவாறு கைகூப்பித் தொழுது வேண்டுகின்றனர். 27. படைவீடு படையாளர் சூழ உதயணனிருந்த விடத்துக்கு வயந்தகனும் இடபகனும் போந்து அவனைக்கண்டு வணங்கிநிற்கின்றனர். வஞ்சமிப் பெரும்புகழ் வத்தவரிறைவனும் நெஞ்சமகிழ்ந்து1நீத்துமிகவுடைய துன்பம் பெருங்கடற்றுறைக்கட்பொருந்திய இன்பப் பெரும்புணை யாயினிரெமக்கென 2அன்புடையருண்மொழிநன்புபலபயிற்றி ஆர்வத் தோழரை3யார்தலாற்றான் ஒரு சோலையிடையே தங்குகின்றான். இதற்குள் ஏவலாளர் பலரும் கூடி வேந்தரும் மகளிரும் இனிதிருத்தற்கேற்ற பாடிவீட மைக்கின்றனர்.அருகிருந்த மலைச்சாரலில். இறைமகன்4விட்டிட வுறையுண் முறைமையின் மறுகுமன்றமு 5மாண்பட வகுத்துத் 6தறிமிசைக் கொளீஇய செறி நூன்மாடமொடு நிரைநிரைகொண்ட நுரைபுரைதிருநகர் பசும்பொற்புளகம் விசும்புபூத்ததுபோல் பரந்த7பாடிநிரந்தவை தோன்ற அதன்கண் வாசவதத்தையிருத்தற்கேற்ற அழகிய இடம் அமைத்து அங்கே அவட்கு வேண்டிய சிலதியருடனே, 8மணிக்கலப் பேழையுமணிக்கண்ணாடியும் மணிதிகழ்விளக்கு9மயிர்வினைத்தவிசும் இருக்கைக்கட்டிலு 1மடைப்பைத் தானமும் 2செங் கோடிகமும் வெண்பாற் றவிசும் 3முட்டிணைவட்டும் பட்டிணை யமளியும் ஆலவட்டமுமணிச் சாந்தாற்றியும் மாலைப் பந்தும் ஏனையபிறவும் பொருந்த வமைக்கின்றனர். பிறிதொருபால் உதயணன் இருத்தற் கென இடமொன்றை ஏற்படுத்துகின்றனர். ஏவலரும் வினை யாளரும் மள்ளரும் எனப் பல்வகை வேலையாட்கள் வந்து நிற்கின்றனர். உதயணன் பிடிமிசையிவர்ந்து கடிதுவந்த வருத்த மறிந்து மருத்துவர் வகுத்தளிக்கும் மருந்துணவு கொள்ளும் கால மறிந்துரைக்கும் காலக்கணக்கரும் உள்ளனர். உண்டற்குரிய காலம் வருதலும், நள்ளிரு 4ணடைப்பிடியூர்ந்த நலிவினும் பள்ளி கொள்ளாப் பரிவிடை மெலிவினும் கவர்கணைவேடரொடமர்வினை வழியினும் பல்பொழுதுண்ணாப் பசியினும் வருந்திய செல்வக்காளை வல்லவன் வகுத்த வாச வெண்ணெய்பூசிப் புனைந்த 5காப்புடை நறுநீர் காதலினாடி யாப்புடைத்தோழருடன் உதயணன் அடிசில் அயிறுகின்றான். அப்பால் வாசவதத்தையை நீராட்டுதலுற்று. புறவயிற் பொம்மென6வெம்பி யகவயின் தன்மையடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர் வரிவளைபணைத் தோள் 7வண்ணமகளிர் சொரிவளராட்டித் தூசுவிரித் துடீஇக் 8கோங்கின்றட்டமும் குரவின்பாவையும் வாங்கிக் கொண்டுவாருபு முடித்து மணி1மாராட்டத் தணிபெற வழுத்திக் காவலன் மகனைக் கைதொழுதேத்தி 2ஆய்பத வடிசில் மேயதை யூட்டி மகிழ்விக்கின்றனர். அன்றைப்பகல்கழிந்ததும் இரவு வருகிறது. மறுநாள் மதியம்பெற்ற வானகம் போலப் பொதியவிழ் பூந்தார் புரவலற் றழீஇச் 3சுரமுத னிவந்த மரமுத றோறும் பால்வெண்கடலின் பனித் திரையன்ன 4நூல்வெண்மாடங் கோலொடு கொளீஇ 5மொய்த் தமாக்கட் டாகியெத்திசையும் மத்தயானை முழங்குமாநகர் உத்தரகுருவென ஒண்புகழ் பெற்று உயர்ந்து தோன்றுகிறது. 28. சயந்திபுக்கது மறுநாள் யாவரும் சயந்திநகரம் நோக்கிப்புறப்படுகின்றனர். உதயணன் அழகிய உயர்ந்த களிறொன்றில் மேற்செல்கின்றான். புடையே அவனுடைய தோழர்கள் தத்தமக்குரிய களிறுகளின் மேல் செல்கின்றனர். இவர்கட்கு முன்னும் மருங்கினும் எண்ணிறந்த படைவீரர் காவல்புரிந்து செல்கின்றார்கள். பின்னே, அந்தண்1பொதியிற் சந்தனமரமும் நறுந்தண்சோலை 2யிறுங்காற்றிமிசும் 3அடவிவிந்தத் தியானைமருப்பும் 4வடதிசைமாமலைச் சுடர்விடுபொன்னும் குடகடற்பிறந்தபடர்கொடிப்பவழமும் தென்றிசைப்பிறந்த5வெண்சுடர்மணியும் விஞ்சையம் பெருமலை விளங்கொளி வெள்ளியும் 6இலங்கையீழத்துக் கலந்தரு செப்பும் இமயத்துப் பிறந்த வயிரச்சாதியும் 7கடாரத்திரும்பொடுகையகத்தடக்கி. யவனத்தச் சரும் அவந்திக் கொல்லரும் மகதநாட்டுமணிவினைக் காரரும் பாடலி நாட்டுப் பொன் வினைஞரும் கோசலநாட்டு ஓவியக்காரரும் வத்தநாட்டு வண்ணக்கம்மியரும் கூடித் தம் கைவன்மை தோன்ற ஆரமுஞ்சூட்டு நேர்து8ணைக்குழிசியும் அச்சுமாணியும்9வச்சிரயாப்பும் 1அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும் 2பத்திரப்பந்தமும் சித்திரப் புளகமும் புறமணைப் பலகையு மகமணைத்தட்டும் 3சந்திக் கோணமுமென்திரவாணியும் 4கஞ்சிகைக் கொளுவொடுகயிற்றுநிலையமைத்து மூக்குங் கோடுங் 5கோப்புமுறை கொளீஇ 6முகத்தூணளவு மகத் தூணமைதியும் நூலிட்டமைத்த கோலக் கூடத்து நாண்மீ னொழுக்குங்கோண்மீன் கோப்பும் கரந்துறை கோளொடு7நிரந்தவைநிறீஇயவற் 8றேழ்ச்சியுமிறு தியுஞ்சூழ்ச்சியுமுணர 9அரும்பொறிமண்டலமகவயி னியற்றிப் புலமையுணர்ந்து புலங்கெழு நுட்பத்துப் பெரும் பொறிப்பாவை மருங்கினிறீஇ முடியுமடியுமுறைமையிற் புனைந்து 10கொடியுமலருங்கொள்வழி யெழுதிப் பிடியுங் களிறும் பிறவு மின்னவை வடிமாண் சோலையொடு வகைபெற வரைந்து 11நயத்திறம் பொருந்த நாடகங் கண்டும் விசித் திரவனப்பின் வீணையொழீஇயும் பொன்னு மணியும் பன்மலர்த்தாரும் திருத்தியணிந்துமருப்புநெய்பூசிச் சேணெறி செல்லக் 12கோணெறிக் கொளுத்தி 13உலைவிலூர்ச்சி வலவன்காத்தலின் புதியராய் வந்த மகளிர் ஏத்த, வாசவதத்தைவையத்தின் மேலேறிச் செல்கின்றாள். கோற்றொழிலாளர் மாற்றுமொழியியம்ப, கொடிகள் நுடங்க, குன்றம் சிலம்ப, முரசமுழங்க வையம் செல்கின்றது. மலைச்சாரலில் வாழும் சீறூரவர்க்கு இவர்கள் வரவு முன்பே தெரிவிக்கப்படுகிறது. அவர்கள், 1குழிப்படு வேழக் கூன்மருப்பிரட்டையும் வரைப்படு தேனுஞ்சினப்படுகனியும் 2வீணைத்தண்டும் வேய்படு முத்தும் கானத்தகிலும் 3ஏனத்தெறியும் பொறிப்புலித் தோலு மறுப்பிய 4லூகமும் மந்திப்பிணையொடு மற்றவைபிறவும் தந்திறை தந்து முந்துசிறைப்பட்ட 5அற்ற காலத்து முற்ற நோக்கி 6அடியுறை செய்தொழில் குடிமுதல் பிழைத்தல் இருநிலம் பெயரினும் எம்மாட்டிலவெனத் தெரிவித்துப்பணிகின்றனர். இவ்வாறு காடும் நாடும் கடந்து, 7வரியகட் டலவன் வள்ளுகி ற்றெனக் கன்னிவாளையுண்ணா தொடுங்கும் 8தண்பனைதழீஇய வண்பணை வளநாடு 9அருமிளையுடுத்த வமைவிற் குன்றாது 10பெருமலை சூழ்ந்த வரிதியலமைவோ டிழிக்கப்படாஅவெழிற் பொலிவெய்திப் 11பெருமண்ணுவாவும் பேராப்பல்படை 12உருமண்ணுவாவுக் குரிமையினிருந்த சயந்தியம்பெரும்பதியை நெருங்குகின்றார்கள். இவர்கள் வரவினை முன்பே தூதுவரால் அறிந்த நகரமாந்தர் பெரு மகிழ்ச்சி யுடன் எதிர்நோக்கியிருக்கின்றனர். முதலாவது உஞ்சைக்காண்டம் முடிந்தது. இரண்டாவது இலாவாண காண்டம் 1. நகர் கண்டது சயந்தநகர்க்கண் உதயணனும்தோழரும் புகுந்ததும், அவரை வரவேற்பது குறித்து அந்நகர் முழுதும் நன்கு ஒப்பனை செய்யப் பட்டுள்ளது. 1தாதுமலரணிந்த வீதிதோறும் பழுக்குலைக்2கமுகும் விழுக்குலை வாழையும் கரும்பு மிஞ்சியு மொருங்குட னிரைத்து 3முத்துத் தரியமும் பவழப்4பிணையலும் ஒத்த தாமமொ ருங்குடன்5பிணைஇப் பூரணப் பெருங்கடைத் தோரணநாட்டி 6அருக்கன் வெவ்வழ லாற்றுவபோல விரித்த பூங்கொடி வேறுபல நுடங்க 7எண்வகைச் சிறப்பொடு கண்ணணங் கெய்த விடாவிளகொளி வெண்பூந்தாமமொடு 9படாஅகையும் விதானமும் பாற்கடல்கடுப்ப 10இருமயிர் முரச முருமென வுரறக் 11கடமுழக் கின்னிசை யிடையிடை யியம்ப வெந்துய ரருவினை 12வீட்டிய வண்ணலை இந்திரவுலக மெதிர் கொண்டாங்கு மகளிருமைந்த ருந்1துகணிலந் துளங்க நற்பெருங்கடை முதனண்ணுவளர்குழீஇப் பொற் பெருங் குடத்திற்2புதுநீர் விலங்கி பொங்குமலர்த்தாரோய் புகுக என்றும், மிகுதி வேந்தே மேல்வருக என்றும், நன்னர்வேந்தே மன்னுகவென்றும் வரவேற் கின்றனர். வாசவதத்தையைக் காண்பவர், மாயோனைக் கூடுந் திருமகள் போல உதயணனாகிய சேயோனைக் கூடும் செல்வமெய்தற்கு நோற்றபாவாய், வருக என்னும், நின்னைக் காணப்பெற்றே மாதலின், யாங்கள் உம்மை செய்த புண்ணிய முடையம் இம்மையின் மற்றினி என்னுளது பெறற் கென்றும் பெருவனப்பிற் கெல்லையாய் வாசவதத்தை யென்பாளொருத்தி யுளள் என்பது கேட்டதேயன்றிக் கண்டதில்லை. அவள் நலத்தையாம் கண்ணிற் காணுமாறு இவண் கொணர்ந்த வேந்தன் மன்னுக வென்றும் அன்புடை நன்மொழி கூறிவாழ்த்துகின்றனர். வேறு சிலர், இவ்வாறெல்லாம் நிகழ்தற்குக் காரணனாகிய போகாப் பொருந்திறல் யூகியென்பான் மண்ணிற் பல்லாண்டு மன்னுக என்கின்றனர். இவர்களிடையே, வேறொரு சாரார், 3வியன்கண்ஞாலத் தியன்றவை கேண்மின்: நன்றாய் வந்த வொருபொருளொருவற்கு நன்றே யாகி4நந்தினு நந்தும் நன்றாய் வந்த வொருபொருளொருவற் 5கன்றாய் மற்றஃ6தழுங்கினுமழுங்கும் தீதாய்வந்த வொருபொரு ளொருவற்கு தீதேயாகித் 7தீயினுந்தீயும் தீதாய்வந்த வொருபொருளொருவற்கு 8ஆசில்பெரும்பொருளாகினு மாமெனச் 9சேயவ ருரைத்ததைச் செவியிற் கேட்கும் 1மாயிகாஞ்சனம்வத்தவரிறைவற்குப் பெருஞ்சிறைப்பள்ளியுளருந்துயரீணீன்று தீயது தீர்ந்தத் 2தீப்பொரு டீர்ந்தவன் செல்வப் பாவையைச் சேர்த்திச் 3செந்நெறி அல்வழி வந்துநம் மல்லறீர நண்ணத் தந்ததுநன்றாகிய ரெனக் கண்ணிற்கண் டவர்புண்ணியம் புகழ்ந்து பேசிநிற்ப, மற்றொரு சாரார், வேறொன்று நினைத்துக் கூறுதலுற்று, ஓங்கிய4பெருங்கலந்த ருக்கியவுதயணன் தேங்கமழ் கோதையென்றிருநுதன்மாதரை வேண்டியுங் கொள்ளான் 5வேட்டனென்கொடுப்பிற் குலத்திற் சிறியவன் பிரச் சோதனனென நிலத்தின் வாழ்ந ரிகழ்ச்சியஞ்சி யானைமாயங் காட்டிமற்றுநம் 6சேனைக் கிழவனைச் சிறையெனக் கொண்டு வீணைவித்தகம்7விளங்கிழைகற்கென மாணிழையல்குன் மகணலங்காட்டி 8அடற்பேரண்ணலைத் தெளிந்து கைவிட்டனன் கொடுப்போர் செய்யும் குறிப்பிஃது என்று கூறுகின்றார்கள். இவ்வண்ணம் மகளிரும் மைந்தரும் தத்தம் மனமுவந்தன கூறிவரவேற்க, அமரர்பதிபுகும் அமரர் கோன் போலத் தமர்நகராகிய சயந்திநகர்க் கண்புகுந்து உதயணன் தங்குகின்றான். 2. கடிக் கம்பலை இனி, சயந்திநகர்க்கண் உதயணன் இருக்குங்கால், அவற்கும் வாசவதத்தைக்கும் திருமணம் நிகழ்த்துதலேபொருளாவது என்று சான்றோர் துணிகின்றனர். உருமண்ணுவாவும் ஏனைத் தோழரும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கின்றார்கள். அந்நிலையில் 1எண்டரும் பெருங்கலை யொண்டுறைபோகிக் 2கண்ணகன் புணர்ப்பிற் கவின்பெற நந்தி விண்ணகம் விளங்கும் 3மேதகு நாட்டத்த 4நாற்பொருளுணர்ந்து பாற்பொருள் 5பன்னி நூற்பொரு 6ணுனித்துத் தீப்பொருளொரீஇ 7அலகை வேந்தற் குலகங் கொண்ட ஒழுக்க நுனித்த 8வழுக்கா மரபிற் புணர்ப்பில் காட்சியன் 9புரையோர் புகழப் போந்து திருமணத்துக் குரிய நாளைக்கணித்துரைக்கின்றான். உடனேவள்ளுவனை யழைத்துத் திருமணநாளை நகரவர்க்குத் தெரிவிக்குமாறு பணித்தலும், முரசுகொட்டிற்குச் சென்று, பலி யோச்சி, முற்றவை காட்டிக் கொற்றவை பரவித் திருநாள், படை நாள், கடிநாள் என்ற பெருநாட்கல்லது பிறநாட்கு அறையாத வள்ளுவன், முரசினை அரசுவாவின் மேலேற்றித் தேர்திரியும் மறுகுதோறும் சென்று, பொலிக 10வேல்வலம், புணர்கபூமகள், 11மலிகமண்மகள்; மன்னுக மன்னவன்; 12மல்லன் மூதூர்ப்13பல்லவர் கேண்மின்; திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி உருவொடு புணர்ந்த 1வொளியினராகுமின். பல்களிற்றியானைப் 2படைப்பெரு வேந்தன் மெல்லியற் குலமகள் 3மிடைமணிப்பைம்பூண் சிலம்பொலி சீறடிச் சென்றேந்து புருவத் திலங் கொளிவாட்கணின்னகைத்4துவர்வாய் வாசவதத்தை யொடுவதுவைகூடிக் கோலநீண்மதிற் கொடிக் கோசம்பி 5மாலைமன்னவன் மணமகனாகும் 6காலை இதுவென முரசறைகின்றான். நகரமாந்தர் அனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டுதத்தம் மனைகளில் கடைதோறும் பசும்பொற் றோரணம் விசும்புற நாட்டுகின்றனர்; வாயிலின் இருமருங்கிலும் பொற்றாரும் முத்துத்தாமமும் கட்டித் தொங்கவிடுகின்றனர்; சதுரத்திண்ணை முன்னிட்ட பூம்பந்தலில் பழுக்காய்க் குலையும் பழங்காய்த் துணரும், களிக்காய்க்குலையும் துவர்க்காய்க் குலையும் பளிக்காய்க் குவையும் பிறவும் புனைந்து அழகுறுத்துகின்றனர். அந்தணர்க்கும் அல்லார்க்கும் வேண்டுவன நல்கும் செல்வச் சாலைகளும், வருவோர்க்கு வரையாது வழங்கும் அறச் சோற்றட்டில்களும் ஆங்காங்கு நிறுவப்படுகின்றன. மனைகளிலே, ஏவல்மகளிர்கூடி குங்குமக்குழையலும் தூவெள்ளலரும் வாசச் சுண்ணமும் புதுப்பூ மாலையும் அரத்தக் கூட்டும் இவைபோல்வனபிறவும் கொண்டு வீதியும் முற்றமும் கோலஞ் செய்கின்றனர். அவற்றைச் சிறார் சுழிப்பது கண்டஞ்சிய வலமுற்று அவர்தம் தாயர்பால் தவறெடுத் துரைத்து வருந்தும் கம்பலை மனைதோறும் எழுகின்றது. ஒருபால், வண்ணக் கலிங்கத் துக்1கண்ணறைக்கண்டம் தலையொடு தலைவர விலையடுக்கிழீஇக் 2கச் சுவாய் சோடித்துமுத்துப்புரிநாற்றி ஒண்மணித் தாரோடு பன்மணிப்புளகம் விலங்கு நீளமு மிலங்கித் தோன்றி 3மிழற்றுபு விளங்கு மெழிற் பொலிவெய்த வல்லவன் புனைந்த பல்வகைக் கம்மத்து மங்கலப் பெருங்கொடி4மங்குல் வானத்துள் 5உரற்றுமழைகிழிக்கு மொண்மணியுச்சிப் பல்லோர் காணும்6பரூஉத் திரளடியிற் பன்மணி கண்டத்துக் கண்ணிழற் கலங்கி ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்விப் பயில்பூம்பத்திக் 7குயில்புரை கொளுவின வட்டமைத்தியற்றிய 8வலம்புரிசாற்றி ஆடகப்பொற் கயிற்றரும் பொறியாப்பின வயிரப் 9பல்லரிப் பயில்பூம்பத்திக் கிண்கிணித் தாரொடு கலவிய கதிரணி 10கொளுவொடுபடாஅக் கொடிப்பவழத்துத் தாமந்தாழ்ந்து தலைமுதற் கோத்த 11நீலக் காழ்மிசை நெற்றிமூழ்கி 12உண்ணுகுப் போலையுள் கண்விரித்தியற்றிய 13பாத சக்கர மாறெதிர் நீர்தரக் கோதைத் தாமமொடு 14கொட்டை முதற்கோத்த இலங்கொளி முக்குடை யெந்திரத்தியங்க அறிவர் சரித முறையிற் சுட்டி உரையு15மோத்தும் 16புரையாப்புலமைப் பெரியோர்1 நடாவுந் திரியாத் திண்ணெறி 2ஒராஅவுலகிற் கோங்குபு வந்த அராகந்தாணத்தின்கண் "அருச்சனைகள்" செய்யப்படுகின்றன. வேறு வீதிகளில், காமவல்லியும் கதலிகை யணிந்த தாமவல்லியும் படாகையும் காலேந்திரமும் நூலேந்திரமும் பத்திப் படாமும் சித்திரக்கொடியும் பிறவும் கொண்டு செய்யப்படும் அணிநலம் விளங்கித் தோன்றுகிறது. வணிகருள் முதியோர் ஏனைச் செல்வரைப் பார்த்து, "யாவர் வேண்டினும்யாவரும் ஈமின்; ஈத்ததின் இரட்டி நுமக்கு இறைவன் தருகுவன்" என்றுஅறிவுறுத்து கின்றனர். செல்வர் மனையிலுள்ளமகளிரெல்லாம், 3இடிக்கண் முரசி னேயர் பெருமகன் வதுவை நாப்பண்புதுவது புணர்ந்து நுந்தையர் தம்மொடு செவீஇயெந்தையர் வருக வீண்டெனவறிதி னோடும் 4தம்மமர்பு தல்வரைத் தலையடிகாறும் 5கம்மப்பல்கலங் கைபுனைந்தணிந்து செல்லவிடுகின்றனர். கள்ளுண்போர் வீதிகளில், தெங்கின் ஊறலும் தேம்பிழித் தேறலும் பனைக்கள்ளும் மதுவும் புதுமலர் வேரியும் கரும்பின் சாறும் பெரும்பொதித் தேனும் வருவோர்க்குப் பெய்ம்மின் தம்மின், ஈமின் என்று இல்லந்தோறும் எடுத்துரைப் போர் ஓசை மிக்கிருக்கின்றது. யானைப்பாகர் சேரிக்கண், 6வெம்படைமிகப்பலர்மெய்ம்மிசை யெறியினும் தம்படைக் 7கொல்காப் பண்புடன்பயிற்றி மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅரென நாற்பா லோரையு 8நூற்பாற்செய்தொழிற் பாகர்வேண்டினும் 9பையுள் செய்யா 10வேகவுள்ளத்து வேழந்தெரிந்து அவற்றைக் கைவல் கம்மியர் கூடி ஐவகை வண்ணங்கொண்டு மேனிமேல் கொடியும் பத்தியும் வடிவுபடவெழுதிச் சூழியும் ஓடையும் மணிமாலையும் அணிகின்றனர். அத்தகைய யானைகள் ஆயிரத்தெட்டு மண்ணுநீர் கொணர்தற் பொருட்டுப் பண்ணப்படு கின்றன. ஒருபால், பிடியளவாய் நுசுப்பும் சிவந்து அரிபரந்து விளங்கும் கண்ணுமுடையராய், ஈன்றோர்மாட்டுமெதிர்முகநோக்காது 1மான்றோங்கூறு மம்மர் நோக்கினர் பொன்னணி கொண்ட பூந்தண்2சிகழிகைக் கன்னிமகளிர்3கண்ணணங்குறூஉம் 4ஒவ்வாவணியின ரொப்பக் கூடி 5மண்ணகக்கிழவற்கு மண்ணுநீர் சுமக்கும் புண்ணிய முடையீர் போதுமினீங்கென வாயில்தோறும் வந்தெதிர்கொள்ள அரசன் கோயிலிற் புகுகின்றனர். இவ்வாறு நகரெங்கும் இன்பக் கிளர்ச்சி யெழுந்து சிறப்பெய்துகிறது 3. கட்டிலேற்றியது திருமணத்துக்குரிய சிறப்புக்களெல்லாம் ஒருங்கமையவே. உதயணற்கும் வாசவதத்தைக்கும் ஓருயிர்க்கிழமை நல்கும் ஓரையை யளந்துரைக்கும் காலக்கணக்கர்போந்து செந்தீவேட்கும் செம் பொழுது வந்தது எனத் தெரிவிக்கின்றனர். அத்தீத்தொழிலில் துறைபோகிய அந்தணன் முன் வந்து தீவேட்டற்குரிய இடத்தினது இலக்கணத்தை இனி தாராய்ந்து வெண்மணல் நிரப்பி, தீவளர்த்தற் கமைந்த குழிமூன்றினும் பலாசின் சமிதை பரப்பித் தீயை வளர்க் கின்றான். வெண்மணற் பந்தருள் பூரண குடங்கள் பொலியவிருக் கின்றன. அதன்கண் ஒருபால் ஐவகையுணவொடு ஆறு சுவையடி சிலமைத்துப் பலரும் மிச்சிலெய்தாமையுண்ணும்பகுதியுளது. கிழக்கு மூலையிலிருந்து அருந்ததிப்படிவத்தின் முன்னின்று பரவும் பார்ப்பன முதுமகன் ஆவிரம்பூவும் அறுகும் நந்திவட்டமும் இடையிடைவைத்துத் தொடுத்த மாலையில் அவ்விடத்தை அணிசெய்தவன் அருந்ததி யோடமைந்த வசிட்டனைப்பரவியபின் நான்முகற்குரிய இடத்தில் இருந்துகொண்டு, பாற்சோறும் தேன் கலந்த சோறும். புளிச்சோறும், கன்னற்சோறும், வெண்பொங்கலும் பரப்பி, தக்கோல முதலிய பஞ்சவாசமும் வெற்றிலைப்பாக்கும் வலப்பக்கத்தே வைத்து விளக்கேற்றித் தூமமெடுத்துத் தேவரை நோக்கி, மலையி னீராயினு 1மண்ணினீராயினும் 2அலைதிரைப் பௌவத்தகத்தினீராயினும் விசும்பினீராயினும் 3விரும்புபுவந்து நும் பசும்பொன்னுலகம் பற்றுவிட்டொழிந்து குடைநிழற் றானைக் கொற்றவன்மடமகள் 1மடையமைந்துண்டு மங்கலந்தம்மென ஒப்பக்கூறி வேண்டுகின்றாள். பின்னர் கன்னியர் பலர் சூழ்ந்து வர, முதுபெண்டிர் பலர், உழுந்துஞ் சாலியுருப்பு மலரும் பசுங்2கிளிச் சிறையெனப்பக்கம்நிறைத்த பாகுஞ்சாந்தமும் போகமொடு புணர்ந்த மங்கல மரபின வங்கையுளடக்கிக் 3கொழுமுகைச் செவ்விரல் போதெனக் கூப்பி எழுமுறை யிறைஞ்சுகென் றேத்துவனர் காட்ட 4ஐதேந்தல்குலர் செய்கையிற் றிரியா 5மடைத்தொழில் இவ்வாறு கழிகின்றது. பின்னர் நடைப் பாவாடையிட்ட வழியாக வாசவதத்தையை மகளிர் கொணருகின்றனர். காஞ்சன மாலை அவளை உதயணன் பக்கத்தே உட்கார வைக்கின்றாள். இருவரும் ஒருங்கிருப்ப வேள்வித் தொழில் தொடங்குகிறது. உதயணன் சமிதை யிட்டெழுப்பிய நீயில் துடுப்பைக் கையிலேந்தி நெய்யைப் பெய்ய, அந்தணன் மந்திர மோதுகின்றான். அது முடிந்ததும், அவன் வாசவதத்தையின் செந்தளிர்ச் சீறடிபற்றி, "போகமும் கற்பும் புணர்ந்துடன்நிற்க" எனச் சொல்லி அம்மி மிதிப்பித்து வெண்பொரியைச் சொரிகின்றான். அந்தணனும், "நன்னிலையுலகினுள் நாவல் போலவும், பொன்னணி நெடுமலை" போலவும் இந்நிலத்தே இவர்கள், மன்னுவார்களாக" என வாழ்த்து கின்றான். வேள்விமுடிந்ததும், உதயணன் வாசவதத்தையின் கையைப்பற்றித் தீயை வலம் வந்து தென்றிசைக் கண்இட்ட தருப்பைப்புன் மேல் இருந்து அந்தணர்கூறும் வாழ்த்தினைப் பெறுகின்றான். வடதிசைக்கண் தோலிட்ட இருக்கையில் இருந்து தத்தைக்கு வடமீனைக் காட்டி "இவ்வுலகில் நின் இயல்பு எனக் குண்டாக அருளுக" என மும்முறை வணங்குக," எனத் தத்தையைப் பணிவிக்கின்றான். இவ்வாறு மணவினை நிகழும் நான்கு நாளும் கழிந்தபின் நான்காம் நாள் இரவு தத்தையொடு உதயணன் மணவறை யேறுகின்றான். மணவறைக்கண், 1மருப்பினும் பொன்னினு மாரியினும் புனைந்த திருத்தகு திண்காற்2றிருநிலைபெற்ற வெண்பூம்பட்டிற்3றிண்பிணியமைந்த பள்ளிக்கட்டில் வெள்ளிதின் விரிந்த கோடுயர்4பல்படை5சேடுறச் சேர்த்தி வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும் மணியுமுத்தும் அணிபெறப்பரப்பி அடிநிலையமைத்து முடிநிலைகாறும் தாமநாற்றிக் 6காமங்குயின்ற கோலச் செய்கை வாலணிப் பொலிந்த 7எட்டிக்காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன்மாதர் இயல்பிற்படுத்த கட்டிலின்மேல் உதயண குமரன் வீற்றிருப்ப, காஞ்சனைமாலை வாசவதத்தை யைக் கோலஞ்செய்து கொணர்ந்து கட்டிலில் இருக்கச் செய்கின்றாள். 8மண்ணார் மணிப்பூண்மாதரையிரீஇயபின் 9கண்ணார் குரிசிலைக் கவின்பெற வேற்றித் 10தகைமலர்த்தாளேன் தடக்கைபற்றியவள் முகைமலர்க்கோதை முடிமுதற்11றீட்டிச் செம்பொற்றால மலிரப்பெய்த மங்கல12வயினி மரபுளி யுறீஇ அனைவரும் நீங்குகின்றனர். 4. உடன்மயிர் களைந்தது திருமணக் கட்டிலேறிய உதயணற்கும் வாசவதத்தைக்கும் ஆறு திங்கள் கழிகின்றன. ஆறாந் திங்கள் இறுதியில் உடல் மயிர் களையும் திருமணவினை நிகழ வேண்டியுளது. அது குறித்து உருமண்ணுவாவும் வயந்தகனும் பரினமாந்தரும் மறையவரும் பெருங்கணிச் சங்கமும் திணைநிலைமக்களும் கணக்கரும் ஏனை இளையரும் ஒருங்கீண்டி. கணக்கரைக்கொண்டு, நாற்பத்தைந்து தெய்வமிருத்தற் கேற்ப எண்பத்தெழுகோல் அளவிற்றாயமணப் பந்தர் அமைக்கின்றனர். அவ்விடத்தே வடபகுதியில்,மயிர்வினை வல்ல புலவர் போந்து, கல்லு மோடும் புல்லுங்கரியும் உமியுமயிரு மென்பு முட்பட 1அமைவில் தன்மைய வரித்துடன்களைந்து விண்மேம்படூஉம் விழுத்தகவுடைத்தாய் மண்மேம்படுத்து 2மணிநிழலுறீஇ வடக்கும் குணக்கும் வகையுளிப்3பணித்துக் குடக்குந்தெற்குங் கோண 4முயரி 5நிரப்பங் கொளீஇ நின்ற நிலமிசை. வேள்விச் சேதாவின் சாணங்கொண்டு செம்மையுற மெழுகி, முத்தமும்மணியும் பொன்னும் பவழமும் கொண்டு ஒப்பனை செய்கின்றனர். சத்திமுகம், சக்கரவட்டம், பத்திவரிப்பு, பாவை நுடக்கம், குஞ்சரமுகம், நந்திமலர் எனப்படும் வடிவுகளுள் போர் மன்னர்க் கெனவகுக்கப்பட்ட வடிவாகிய முக்கோண வடிவில் இடமொன்றமைக் கின்றனர். அவ்விடத்தே, கொழுங்களியுழுந்துஞ்செழுங்கதிர்ச் செந்நெலும் உப்புமரிசியும் 1கப்புரப் பளிதமொடு ஐவகைவாசமும் கைபுனைந்தியற்றிய 2முக்கூட்டமிர்து மக்கூட்டமைத்துத் தேனும்பாலும் தயிருங்கட்டியும் ஆனெயும் வெண்ணெயு மனையவை பிறவும் 3பதினறு மணியும் பைம்பொன்மாலையும் 4நுதியிற்பெய்து விதியுற விரீஇப் பொதியிற் சந்தனம் போழ்ந்து கொண்டியற்றிக் கதிரொளி பயின்ற கம்மக்கைவினை நாற்காலமைத்தபாற் பெரும்படுமணைப் பொங்குமயிர்த் தவிசொடு பூமலர்புனைஇ நண்ணிய சிறப்பொடுநாற் பெருந்திசையும் 5பண்ணிய வுணவின் றிண்ணிலைக்குப்பையுள் பைம்பொன் விளக்கைநிறுத்தி யேற்றிவைக்கின்றனர். உதயணன் மிக்கசிறப்புற்ற அணியாலும் ஆடையாலும் ஒப்பனை செய்து கொண்டு இலக்கண வகையிற் குன்றாதமைத்த இருக்கையில் இருக்கின்றான். காஞ்சனமாலையும் வாசவதத்தையை நன்கு கைபுனைந்து கொணர்ந்து உதயணன் பக்கத்தே யமர்த்துகின்றாள். மணிக்குழை காதில் விளங்க மார்பில் தண்ணறுஞ் சாந்தம் கமழ, வெள்ளிய ஆடையுடுத்த அந்தணர் பலர்போந்து மந்திரவிதியின்6வாய்ப்பூச் சியற்றித் தந்தொழின் முடித்துத் தலைவனைக்குறுகி வெண்ணிற மலரும் தண்ணறுஞ்சாலியும் 7புண்ணியப் புல்லும் பொன்னொடு முறைமையின் மண்ணார்மணிப்பூண்மன்னனொடு மாதரைச் 8சென்னியு முச்சியுஞ் சேடுபடத்தெளித்துக் கூப்பிய கையர்காப்பொடு பொலிந்த அமரருமுனிவரு 1மமர்வனராகி ஆயுளுந் திருவும் போகரும் பொலிவும் மேயினர்தரு கெனமிகப்பல வாழ்த்தி மறையோதுகின்றனர். இப்பாடல், இலக்கணம் பிழையா2வெஃகமையிருப்பின் நிரளந்தூட்டிய நிறையமை 3வாளினைப் பஞ்சிப்பட்டொடு4துரூ உக்கிழிநீக்கிப் பைங்கதிரவிர் மதிப்பாகத்தன்ன அங்கேழ்க்கன்மிசை யறிந்து5வாய்தீட்டி வெங்கேழ்த் துகின்மிசை விதியுளிபுரட்டிச் 6செங்கேழ்க்கையிற் சிறந்து பாராட்டி ஆசறுநறுநீர்7பூசனை கொளீஇ 8வாட்டொழிற் கம்மம் வல்லிதிற் பிழையாது. 9சேட்டொழிற் பொலிந்த திருமுகக் கேற்ப 10மூரிக்கொள்ளான் முனிதல் செல்லான் 11ஆவிக் கொள்ளான் அயர்ந்தும் பிறர்நோக்கான் சீர்கெழு நெடுந்தகை செவ்வியிற்றிரியான் கண்ணினுமனத் தினுங்கையினு மமைத்த 12மண்ணுவினை மயிர்த்தொழி னன்னலநாவிதன் பின்பு வாசவதத்தைக்குப் புருவமொதுக்குமாற்றால் மதிமாசு கழுவிய வண்ணம் போலக் கைவினை செய்கின்றான். அவள் சேவடிக்கேற்ப வாருகிர் குறைத்துத் துகிலாற் றுடைத்துச் செம்மை செய்கின்றான். வந்திருக்கும் அன்பர் அனைவரும். "வேந்தே, விண்ணவர்காப்ப, நீமண்மிசை நீடுமன்னுக" என வாழ்த்த உடன் மயிர்களை வினை ஒப்பற்ற சிறப்புடன் முடிகிறது. 5. மண்ணு நீராட்டியது உடன்மயிர்களையும் திருமணவினை முடிந்ததும் சான்றோர் நீராட்டுதற்கு வேண்டுவனவற்றைச் செம்மையுறவமைக்குமாறு உருமண்ணுவாவுக்கும் வயந்தகற்கும் தெரிவிக்கின்றனர். அதனை யறிந்ததும் ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் வம்பமாந்தரும் பிறரும் செறியக்கூடி கன்னிமகளிர்பலரைத் தமனியத் தண்குடன் கொண்டு களிறுகளின்மேலேற்றி மண்ணுநீர் கொணரப்புறப் படுகின்றனர். வாளும் தோட்டியும் கொற்றக் குடையும் பொற் குடமும் வலம்புரிச் சங்கும் தவளச் சங்கும் கண்ணாடியும் சுடர் விளக்கும் கவரியும் கயலும் தவிசும் திருவும் முரசம் படாகையும் ஆழியும் ஓமாலிகையுமென்ற பதினாறு வகைமங் கலப்பொருள் களையேந்திய வண்ணம் மங்கலக் கன்னியர் முன்னே செல்கின்றனர். அனைவரும் நீரெடுத்தற்குரிய குளத்திற்குச் சென்று 1நிழறிகழ் தெண்ணீர் நீலஞ்சூழப் 2பறவைத் தொழுதிப்பக்க நீக்கி நிறைய முகந்து முறைமையி னேந்தி ஐந்நூற்றிரட்டியணிதிகழ்தாமரைச் செந்நீர்ப் போதொடு 3செறிய வீக்கிப் பூஞ்4சுமட்டிரீஇப் போற்றுவளர்தந்த தேங்கமழ் நறுநீர் மணமனையின் முற்றத்திற்குக் கொண்டு சேர்க்கின்றனர். நீராட்டயரும் வித்தகர்வரித்த சித்திரநகரில் முத்தும் சாலியும் உழுந்தும் பரப்பி அதன்மீது பொற் பெரும்படு மணையிட்டு அதன்மிசை உதயணனை ஏற்றி, உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் கூடி. அறுகைப் புல்லினும் வாகைத்தளிரினும் நறுநெய் தோய்த்து முறைமுதனீவி நின்னோரன்னநீப்பருங்காதல் பொன்னணி புலவரொடு1செம்மலையாகிக் கொற்றங் கொண்டு கோலினி தோச்சென வெற்றவெள்வேல்2வீரியற்புகழ்ந்து நெய்யணிபுரிகின்றனர். மங்கலமடந்தையர் பலர் கூடி வாசவதத்தையைக் கொணர்ந்து அவற்கு இடப்பக்கத்திருத்தி, 3திருக்கொடிச் சாலிசெம் பொன்வாகையென் றொருப்படுத் 4தூமூழ் முறைமையினேந்தி 5நானங்கலந்த நறுநெய் தோய்த்துத் தானந்தோறுந் தலைமுதலுறீஇக் கொண்டோன்வேட்குங் குறிப்பினையாகித் 6தண்டாப்புலமொடு மகளிரைத்தழீஇத் திருமகனைக் கிழமையினொரு7மீக்கூரிக் கற்புமேம்படீஇயர் பொற்றொடி பொலிந்தென 8நற்பல கிளவி பற்பல பயிற்றி நெய்தலைப் பெய்த பின்றை9மெய்வயின் மென்மையு நேயமு நன்மையு நாற்றமும் ஒருநாட்பூசினு மோரியாண்டுவிடாஅத் 10திருமாணுறுப்பிற்குச் சீர்நிறையமைத்துக் கருமவித்தகர் கைபுனைரந்தியற்றிய வாசவெண்ணெய்பூசினர் போற்றி மகளிர் நால்வர் முற்போந்து தாமரை மூடிய தமனியக் குடத்துநீர் கொண்டு முறையே சொரிந்து நீராட்டுகின்றனர். பின்னரனைவரும் பொய்கையுள் இறங்கி நீராடலுறுகின்றனர். உதயணனும் வாசவதத்தையும் அவர்களோடு கூடிநீர் விளை யாட்டயர்கின்றார்கள். நீர்விளையாட்டு முடிந்து கரையேறுதலும் அறுவைத்தூத் தொழிலாளர் வெண்துகிலை விரித்துடுக்கின்றார்கள். இருவரும் முறையே தத்தமக்குரிய ஒப்பனை யிடங் கட்குச் செல்கின்றனர். உதயணனை ஒப்பனை செய்வோராய், கனமணிமுடியுங் கதிர்முத்தாரமும் இனமணிப்பூணு 1மேகவட்டமும் வயிரக்குழையும் வல்வினைப்பொலிந்த நெடுந்தோள்வளையும் கடுங்கதிர்க்கடகமும் 2நாமாவளியும் காமர்கைவினைச் சித்திரப் பிணையலும் 3பத்திரச்சுரிகையும் பத்திக்கச்சினோ டொத்தவைபிறவும் 4ஆரணங்காகிய பேரணிகலங்களும் உழைப்பருஞ் சிலதியர் 5பிழைப்பிலர்நீட்ட அருவரை பிளந்த வஞ்சுவருநெடுவேல் ஒருவலத் துயரிய பொருவில் 6புட்கொடித் 7தளையவிழ் நறுந்தார்த் தனக்கிணையில்லா 8இளையவன் படிவமேற்பவியல்புறீஇச் சித்திரவிருநிதிச் செந்நெறி நுனித்த வித்தகவினைஞர் தம்முடன் வந்து வடிவுகண்டிடும் வத்தவர்பெருமகன் 9ஒடிவில்வென்றியுதயணகுமரன் ஒருமெய்சேர்ந் திவைபெருமைபெறுகென அருளி னணியினல்லதை யிவற்கிவை உருவெனவணியா வுறுப்பு முதலணிதலிற் புண்ணிய முடையவிப் பொன்னணிகலனென எண்ணிய நெஞ்சமொடு நுண்வினைப்பொலிந்த கோலவித்தகர் 10வாலணிபுனைய வேறொருபால் வாசவதத்தையை ஒப்பனை செய்கின்றனர். நீராடிய வாசவதத்தையின் ஈரவுடையை நீக்கிக் கோடியுடுத்துப் பொன்மணையிட்ட கைபுனை மண்டபத்துக்கு அழைத்தேகு கின்றனர். அங்கே, அவளை மணைமீதேற்றிய மங்கல மகள் 1நெட்டிருங்கூந்தல் நீரற வாரிப் 2பன்னுமுறைவிரித்துப் பின்னுமுறை தொகுத்துக் கோட்டிடை வனைஇய குஞ்சரத்3 தடக்கையிற் 4சூட்டொடு விரைஇச் சுற்றுபுமுடித்துப் 5பத்திப்பலகைப் பரிசரக்கைவினை வித்தகப்பத்தி வேறுபட விரித்தவை 6ஒழுக்குமுறையறிந்து 7வழுக்கிலன்வைத்து முடிக்கல முதலாமுறைமுறை தோன்றும் அடிக்கல மீளா வணிந்தழகு பெறீஇ வாசநறுஞ்சாந்து வகைபெறப்பூசி மாசில் 8திருமகள் வண்ணம் பழிப்பதோர் கோலஞ்செய்து முடிக்கின்றாள். பின்னர் அவளையழைத்துக் கொண்டு கடிநகர்புகுகின்றனர். அங்கே அவள் அடிசிலயின்று இனி திருக்கின்றாள். இவ்வகையாற் சிறப்புற்ற உதயணனும் வாசவதத் தையும் இன்பக்கடலில் மூழ்கி மகிழ்ந்திருக்கின்றார்கள். 6. தெய்வச்சிறப்பு இவ்வண்ணம் இன்பத்தில் மூழ்கியிறுமாந்திருக்கும் உதயணனைச் சான்றோர் பலர்கண்டு, "அரசே, கடிமணம் செய்து கொண்ட காவலரசர் தேவகுலமும் திருநகரும் வலம் செய்தல் வேண்டும்: அஃது அவர்கட்குக் கடன்" என்று உரைக்கின்றனர். உதயணனும் அதற்கு உடன்பட்டுப் புறப்படுகின்றான். பொன்னலகும் பவழக்காலும் வெண்போர்வையுமுடைய தாமநெடுங்குடை நிழல்செய்ய, செம்பொற்செருப்பணிந்து உதயணன் வீதிவழியே வருகின்றான். வேந்தன் நகர் வலங்கொள்ளும்நாள் இது வென் றெண்ணிய மக்கள் வீதிமுற்றும் பூப்பந்தரிட்டுப் பல்வகைக் கொடியு யர்த்திப்புனைந்துள்ளனர். உதயணனும், மாண்பதியுறையுநர் காண்பது விரும்பித் தன்னினன்றியும் தமக்குவழிவந்த குலப்பெருந்தெய்வங்1கூப்புதலானும் அருமலர்க்கண்ணியொடக நாட்டுப்பெயரும் 2கருமக்காலைப் பெருவரம் பெறுகென 3உள்ளகத்துணர்ந்ததையுண்மையானும் சுருக்கமின்றிச் சுடர்ப்பிறைபோலப் பெருக்கம்வேண்டிப் பெருநிலமன்னவன் ஆரணங்காகிய 4அறிவர்தானத்துப் 1பூரணப்படிமை காண்டலானும் இன்னவை பிறவுந் தன்னிய லாதலின் நேரேதான் வணங்குதற்குரிய சினாலயத்துக்குச் செல்கின்றான். அதனுடைய திண் சுவரும் பொற்றூணும், திருமணிக்கபோதமும், வித்தகநாசியும் கூடப்பரப்பும் பிறவும் கண்டுமகிழ்கின்றான். பின்னர் வெள்ளிக்க தவுடைய அதன் வாயில் வழியாக உள்ளே செல்பவன், 2திருத்தம் செறிந்து திகழ்ந்து நிழல் காட்டும் உருக்குறு தமனியத் தொண்பொற் கட்டில் அணிப் பொலிந்தியன்ற வழலுமிழரிமான் உச்சியிற் சுமந்து கொண்3டோங்குவிசும்பிவர்தற்கு நச்சியன்ன 4ஒட்குவருருவிற் றருமாணாசனத் திருநடு5விலங்க இருந்த வேந்தைக் கண்டு வழிபடு வோரையும் உடன்காண்கின்றான். ஒருபால் சிலர், வாடாத் தாரினர் 6சேடார்கச் சையர் 7வட்டுடைப் பொலிந்த கட்டுடையல்குவர் மலர்ந்தேந் தகலத்து இயங்குமணியாரத் துடன் கிடந்திமைக்கு மொருகாழ் முத்தினர் 8முழவுறழ் மொய்ம்பினர் முடியணி சென்னியர் 9கழுமணிக் கடிப்பினர் கடகக்கையினர் திணிதோளருமாய் நின்று வழிபடுகின்றனர். இளையமகளிர் ஒருபால்நின்று பரவுகின்றனர். உதயணன் சின தேவனைக் காணுலுற்றவழி அவனிருந்த விடத்தைச் சூழவுள்ள சுவரில் விச்சாதரர், இந்திரர் முதலாயினார் உருவங்கள் அழகுதிகழ எழுதப்பட்டிருப்பதைக் காண்கின்றான். அழகுபடப் புனைந்த 1வலங்குமணித்தவிசின்மிசை நிறைகதிர் வெண்மதி நிலாவொளி விரிந்து முறையின் மூன்றுடனடுக்கினபோலத் 2தாமருக்குடை தாருறை கவிப்ப உலகவெள்ளத்தாழும் பல்லுயிர்க் 3கலகையாகிய வருந்தவக் கிழவனை விதிப்படி வணங்கித் துதிக்கின்றான். துதிக்கின்றவன், பெறற்கரும் 4பேதையைப் பெறுகெனப்பரவிச் சிறப்பெதிர் கொள்கைச் 5சித்திக்கிழவன் பேரறம்பேணிய சீர்நெறிச் சிறப்பிற் 6றெய்வதை யமர்ந்தெனக் கைம்முதல்கூப்பி விரவுமலர்ப்போதொடு வேண்டுவவீசிப் பரவுக்கடன் கழிக்கின்றான். 3ம் மகத காண்டம் 17 முதல் 4ம் வத்தவகாண்டம் 3 யாழ் பெற்றது முடிய 7. நகர்வலங் கொண்டது தேவகுலம் சென்று வழிபாடியற்றிய உதயணன் நகர்வலம் செய்யத் தலைப்படுகின்றான். அதனை முன்புணர்ந்த கோற்றொழில் இளையர் வெளியே வந்து "மங்கலமக்களல்லது பிறர் எவரும் உதயணகுமரன் முன் நில்லன்மின்" எனவிலக்குகின்றனர். அவனைக் காண்பது விரும்பி மைவரை மீமிசை மகளிர் போலச் செய்வளை மகளிர் செய்குன்றேறிநிற்கின்றனர். ஒருபால் கொற்றவனைக் காணும் கொள்கை மேற்கொண்ட வென்வேல் தடக்கையினை யுடையவீரர் மகளிர் வழிவழிவிலக்கவும் பொருள் செய்யாது சென்று நகர்காண் ஏணியேறி நிற்கின்றனர். அவனது கோலம் காணும் மகளிருள் குலமகளிரொழிய ஏனை மகளிருள் பெதும்பை மகளிர் பேதுற்று விதும்பி நோக்குகின்றனர். 1நேரியற் சாயல்நிகர்தமக்கில்லாக் கா2ரிகை கடுநுனைத் தூண்டிலாக உட்குநாணுமூரா3ணொழுக்கும் கட்கின் கோலமுங்கட்டி4ரையாக இருங்கண் ஞாலத் திணையோரீட்டிய அருங்கல 5வெறுக்கையவைமீனாக வாங்குபு கொள்ளும் வழக்6கியல் வழாஅக் கணிகைமகளிர் மயிற்குழாம் போற் கூடி மாடந்தோறும் தங்குகின்றனர். தாம்வைத்துவிளையாடிய பந்தும் கழங்கும் பாவையும் கிடப்ப, சூடிய கோதையும் குழலும் துள்ளப் பேதை மகளிர் வீதியில் நிற்கின்றனர். "வாசவதத்தையின் தோட்குத்தக்க தொடுகழற்குமரனைக்கண்டவர்கள் சிறிது நீங்குமின்: யாமும் காண்போம்" என்று சொல்லித் தம் புதல்வர்களுடன் சாலேகந் தோறும் தெரிவை மகளிர் முகம் வைத்துப் பார்க்கின்றனர். அறம்புரிசெங்கோலவந்தியர் பெருமகன் 1மறம்புரி தானைமறமாச் சேனன் 2பாவையருள்ளு மோ3வா வாழ்க்கை ஏசுவதில்லா வாசவதத்தையும் காமனன்ன கண்4வாங்குருவிற் றாமந்தாழ்ந்த வேமவெண்குடை வத்தவரிறைவனு முற்பான் முயன்ற அத்தவமறியினெத்திறத்தாயினும் நோ5ற்று மென்னுங் கூற்6றினராகி மணிநிற மஞ்ஞையுஞ் சிங்கமுமயங்கி அணிமலையிருந்த தோற்றம்போல மகளிரும் மைந்தருந் தொகைகொண்7டீண்டி மாடந் தோறும் மலர்மாரி பொழிகின்றனர். வீதியிலும் மேன்மேலும் நெருங்கிக் காண்டற்கு வேண்டும் இடம்பெறாது நெருங்கும் மக்கட்களவில்லை. இவ்வாறு தெருவுலா வந்த உதயணன், தெய்வமாடமும் தேர்நிலைக் கொட்டிலும் ஐயர்தானமும் அன்னவை பிறவும் பார்த்துக் கொண்டே சென்று கடிநகர் சென்று சேர் கின்றான். பின் பொருநாள் உதயணன் வாசவதத்தை நீராடவிழை வதை யுணர்ந்து நீராடச் செல்கின்றான். வாசவதத்தையும், 1கைந்நவில் கம்மத்துக் கம்மியன்புனைந்த செய்2கலத் துள்ளும் சிறந்தவை நோக்கி ஏற்குந் தானத்துப் பாற்படவணிந்து 3பானீர் நெடுங்கடற் பனிநாளெழுந்த மேனீராவியின் மெல்லி தாகிய 4கழுமடிக்கலிங்கம் வழுவிலவாங்கி ஒண்மணிக்காசிற்பன் மணிப்பாவை 5கண்ணியகாத லுண்ணெகிழ்ந்து விரும்பி ஆடற்கவாவுமமிழ்த்ஞ்சோர ஊடுபோந்துறழ வொளிபெற 6வுடீஇச் சென்று நீராடி மகிழ்கின்றாள். 8. யூகிபோதரவு உதயணன் வாசவதத்தையின் கூட்டத்தாற்பிறக்கும் இன்பத்தில் திளைத்திருக்கையில், பிரச்சோதனன் நகரின்கண் இருந்து, கண்ணகன் 1கிடக்கைக் கலிகெழு மூழியுள் மண்ணகந் தழீஇ மன்னிய2வூழிதொறும் புண்ணியவுலகிற்கும் பொலிவிற்றாமெனத் தொன்3றோங்காளர் துணியப்பட்ட பொன்றா4வியற் கைப்புகழது பெருமையும் ஆன்முலைப்பிறந்த வானிற5வமிர்தம் 6மலைபெய் நெய்யொடு தலைப்பெய்தாங்கு வேறுபட்டேகினும் கூறுபட்டியலா அன்பினி னளை7இய நண்பினமைதியும் அசைவிறானை விசைய வெண்குடைப் பெருநிலமன்னர் கருமங் 8காழ்த்த அருமதி நுனித்த வமைச்சினாற்றலும் இன்னவை பிறவுந்தன் வயிற்9 றாங்கி உதயணற்குப் படைவேண்டுழிப்படையுதவியும் வினைவேண்டுவழி அறிவுதவி யும் வந்த யூகி யென்பான், உதயணன் வாசவதத்தையைக் கொண்டு பிடியானை யேறிப்போய் விட்டபின், நகரமக்கள் பிரச்சோதனனைப்பற்றிப் பலவாறு இழித்தும் பழித்தும் கூறிக் கொள்வதைக் கேள்வியுறுகின்றான். மேலும், நறுநுதற்பணைத்1 தோணங்கையைநம்மிறை 2உறுவரை மார்பினுதயணற் குள்ளத் தருளொடும் போக்கிப் பொருளொடு புணர்த்தமை யாவிரு மறைவிரன்றெனின்மற்றிவன் காவலவ்வழிக் காணலம்யாமென மறவோர் பலர் மங்கையர் நடுவேயிருந்து கூறிக் கொள்வதும், 3கூற்றவேழமடக்கிய குமரற்குக் காற்றுமெரியுங்கலந்து கைகொடுப்ப மயக்கமெய்திமாணகர் மாந்தர் 4கயக்கமின்றிக் கடையிடைதெரியார் தம்முட்டாக்கிய விம்ம5வெகுட்சியுள் பொருமு6ரணண்ணல் பூந்தாரகலத்துத் திருமக டன்னிற் றீரா7தியைந்தனள் இன்னுமவனே கன்னிரைகானத்துக் காதலிற் காப்பத் தீதிலளாகிப் புக்கனைவனொடு புனைபிடியூர்ந்தென வேறுபலர் கூறிக் கொள்வதும் யூகியின் செவியில் வீழ்கின்றன. இக்கேள்வியால் ஓரளவு அமைதியுற்ற யூகி மேலும் செய்யக்கடவன எண்ணி, ஆங்காங்கு மறைந்திருந்த தன் வீரர்களை நகர்ப்புறத் தேயுள்ள மாகனவனத்தில் பேயுருவெழுதிய பாழ்மண்டபத்தில் வந்து திரளுமாறு குறிப்பால் தெரிவிக்கின்றான். பூவளங் கவினிய பொழி8லுஞ்சேனை மாகனவனத்து மன்னுயிர்நடுக்கும் பணைப்பெருந்திரடோட்பகு9வாய்க் கூரெயிற் றிணைப்பெருங் காதினிலங்கு குழையணிந்த சே10டேந்து வனப்பிற் செழுமலர்த்தடங்கண் 11மோடேந்தரிவை முற்றத்து முனாது12 பனஞ்1செறும் பன்ன பன்மயிர் முன்கை நிணம்பசை கொண்ட நீளி2நெடும்பற் சாஅய்நீங் கிச்சார்ந் தோர்துட்கெனும் பேஎ யுருவம் பெறவகுத் தெழுதிய அழிசுவர் மண்டபத் தகவயினாரிருள் வந்து சேர்கின்றனர். அவர்களை "இனி ஈங்கிருத்தல் வேண்டா: உதயணனிருக்கும் இடத்திற்குச் சென்று சேர்மின்" எனப்பணிப் பவன் உதயணன் சென்ற வழியே அவர்களைச் செல்லவிடாது வேறுவேறு வழியாகச் செல்லப்பணிக்கின்றான். இவ்வாறு, நாடுமலையுங் காடும் பொருந்திக் கனிவளங் கவர்ந்து பதிவயிற்பெயரும் பனி3யிறைவாவற் படர்ச்சி யேய்ப்பப் படையினுந்தொழிலினு நடைவேறியன்ற உருவினு மியல்பினு மொருவிரும்பலரும் கலிகெழு பண்டம் கணைகலம்போல வலிகெழு சிறப்பின் மதிலுஞ்சேனை உள்ளகம் வறுமை யெய்திப்புல்லெனப் பெருந்தவ முள்வழி விரும்பு செல்லும் பொருளும் போகமும் புகழும்போல 4மறுவின் மணிப்பூண் மன்னவனுள்வழிக் குறுகுதல் குணனென வுரைத்து அவர்களைச் செல்லவிடுக்கின்றான்.பின்னர் அவ்யூகி தோழர் சிலருடன் சூழ்ந்து முக்காலமுணரும் முனிவர் பள்ளியும் பிறதவப் பள்ளியும் புகாது அற்றைப்பகற் போதினை மாறுவேடங் கொண்டு மோனிகளுறையும் கடவுள் பள்ளியொன்றைக் கண்டு அங்கே தங்கிக் கழிக்கின்றான். இரவுவருதலும், உதயணனுடைய முன்னோர்க் குக் கலஞ்செய்து கொடுக்கும் குடியிற் பிறந்து ஈண்டுக் குடியேறிவாழும் சாதகனென்னும் குயவனொருவன் மனையை யடைந்து அங்கேயிருந்த சாங்கியத்தாயைக் கண்டு அவட்கு நிகழ்ந்தது முற்றும் தெரிவித்துப் பசியும் வெப்பமும் போக்குதற்குரிய மருந்து கொண்டமைத்த அவல் முடிப்பும் தண்ணீர்க்கரகமும் கொண்டு தன்னோடு புறப்படச் சமைந்திருக்கு மாறு பணித்து. உதயணற்குத் திண்ணிய நண்பனும் யவனப்பாடி தலைவனுமான யவனனைக்கண்டு அவற்குத் தன்புறப் பாட்டினைத் தெரிவிக்கின்றான். அவனும், கையிற்புனைந்த கழிநுண்சிறப்பொடு வையகத்தியங்கும் வெய்யவனூரும் தேரினன்ன செலவிற்றாகி யாவருமறியா வரும் பொறியாணியின் இருப்புப்1பத்திர மிசையக்கவ்வி 2மருப்புப் பலகை மருங்கணிபெற்றுப் பூணியின்றியும் பொறியினியங்கும் மாண்வினைவையம் தருகின்றான். அதனைக் கண்டு, அதனுடைய கடுப்பும் விடுப்பும் தவிர்ப்பும் யூகி செம்மையாய்த் தெரிந்து கொண்டு அதன்மீது சாங்கியத் தாயை யேற்றிக் கொண்டு புறப்படுகின்றான். அப்போது யவனத் தலைவனை நோக்கி. "நமக்குத் தமரா யுள்ளா ரனைவரையும் எஞ்சாமல் விடுத்தபின்பு நீயும் வருவாயாக"என்று உரைத்து விடைபெற்றுக் கொண்டு, தெய்வ3ப்படைக்கலங்கையகத்தடக்கி வத்தவனன்னா டத்திசைமுன்னி வித்தக வாணி வேண்டுவயின்முறுக்கி வானாறாக, உதயணனிருக்கும் புட்பகநகரத்தின்புறநகருக்கு நேரேவந்து விண்ணினின்றிழிந்து மண்ணகத்தே புறநகரைக் கடந்து வருகின்றான். 9. யூகி சாக்காடு புட்பக நகரத்துப் புறஞ்சேரி நோக்கி, 1பூணியின்றிப் பொறிவிசைக் கொளீஇ 2உள்ளிய வெல்லையோட்டிக்கள்ளமொடு நடுங்குந் தானமும் கடும்பகற் கரக்கும் 3ஆளவிகாடும் 4அருஞ்சுரக்கவ லையும் 5கோளவிந்தொடுங்கிய குழூ உக்குடிப்பதியும் வயவர்நாடும் 6கயவர்கானமும் 7குறும்பும் குன்றும் மறிந்தும் மதிகலங்காது வரும்யூகி, இடபகன் இருக்கும் அப்புட்பகநகரத்துப் புறத்தே தங்கி, ஓரிடத்தே தன்வையத்தின் பொறிகளைத் திரிபுபடுத்திக் கரந்துவைக்கின்றான். பின்னர், இடபகன் அரண்மனையடைந்து அவனைக்கண்டு அளவளாவி மகிழ்கின்றான். களைப்புநீங்கிய பின் தானும் இடபகனுமாக மறைவிடமொன்றின்கண் இருந்து பிரச் சோதனன் நகரில் தான் கரந்திருந்தது முதல் உதயணன்வரவே தத்தையுடன் புறப்பட்டுவந்த தீறாக நடந்தவற்றை முறையே ஒழுங்காக எடுத்துக் கூறி, உதயணன் வாசவதத்தையொடுவந்த வரலாற்றை எடுத்துரைக்குமாறு கேட்கின்றான். இடபகன் உதயணன் கானம் வந்ததும், சவரர்புளிஞரால் வளைப்புண்டதும் தான்துணை செய்ததும், உருமண்ணுவா நகரமடைந்ததும், வாசவதத்தையொடு திருமணம் செய்து கொண்டதும் பிறவும் எடுத்தோதி, உதயணன் தத்தையின் போகத்தின் மூழ்கிக் கிடக்கின்ற இயல்பை, விரித்துக் கூறலுற்று, உருமண்ணுவாவி 1னூரகம்புகீஇப் போகப் 2பெருநுகம் பூட்டியகாலை மாகவிசும்பின் மதியமு ஞாயிறும் எழுதலும் படுதலுமறியாவின்பமொடு ஒழுகுபுன லகழினை 3யுடையெனக்கிடந்த முழுமதி னெடுங்கடை முதற்பெருநகரம் தாரணியானை பரப்பித் தலைநின் றாருணியரச னாள்வது மறியான் தன்னுயி ரன்னதம் பியர்நினையான் இன்னுயிரிடுக்க ணின்னதென்றறியான் அவையுங் 4கரண முமவை பொரீஇத் வகுத் திருவான் அந்த மந்திரத் தருநெறி தயாரீகத் தந்தையொ டொறுக்கப்படாஅன் சிந்தை அகனுணர்வில்லா மகனே போலத் தன்மனம் பிறந்த வொழுக்கினனாகி பொன்னகர் தழீஇய6புதுக் கோப்போலச் 7செவ்வியுங் கொடாஅன் இவ்வியல் புரிந்தனன் என உரைக்கின்றான். அது கேட்கும் யூகி முறுவலித்து, "பெறுக போகம் பெருமகன் இனிதே" என்று மொழிகின்றான். பின்பு தனித்திருந்து சாங்கியத் தாயை யழைத்துத் "தருமத் தியற்கையும் கருமக் கிடக்கையும் தலைமையது தன்மையும் நிலைமையது நீர்மையும்" வகுத்தெண்ணிக் கூறல் வேண்டுமென நினைக்கின்றான். அவ்வாறே அவனை வருவித்து, "நீவிர் உதயணற்குத் தாய்போல் அன்புடையீராதலால், நும்மால் சொல்லவேண்டிய மெய்ப்பொருள் ஒன்று உளது;" கேட்டு ஆவனவிரைந்து செய்தல் வேண்டுமென மொழியத் தொடங்கி, 1அற்றங் காத்தலி னாண்மை போலவும் குற்றங்காத்2தலிற் குரவர் போலவும் நன்றியன்றிக் 3கன்றியது கடிதற்குத் 4தகவில செய்தலிற் பகைவர் போலவும் இனையனபிறவு மினியோர்க்கியன்ற படுகடன் ஆதியிற்பட்டது நினையான் தொடுகழற் குருசில்5வடுவுரைநிற்ப இன்ப6வளற்று ளிறங்கினனாதலின் துன்பந் துடை7த்த தொழிலேபோல அலல8மொழிப்பியவன் வயிற்றிi9சயா இகலடுபேரரணிலா வாணத்தவன் உக10ந்துண் டாடிமகிழ்ந்தபினொருநாள் வாலிழை மாதரை மன்னவனகல் விடைக் கோலக்கோயில் கூரெரிக் கொளீஇப் பொய்ந்நிலமருங்கிற் போத்11தந்தென்வயிற் கண்ணெனத் தருதல் கடனெனக்கூறி இன்பந்துடைத்தவற்கிறைக்க12டம் பூட்டுதல் நின்கடனாமென நினைந்து நெறி திரியா 13துருப்பநீளதர்க்கமைத்துமுன் வைத்த த14ருப்பணஞ் செருமித் தன்னுயிர்வைத்தனன் யூகி என்பதுணரக் கூறி நிலங்குறைபட்ட மன்னனைநிறுவுதல் புலந்துறை15 போகிய பொய்யில் வாய்மொழி நும்மினாத லெம்மிற் சூழ்ந்தது அறியக்கூறி னேன் யானென வவளொடும் தோழரொடும் உரைத்து, சாங்கியத்தாயை மீட்டும் காண்டற் குரிய இடம் குறித்து விடுக்கின்றான். அவளும் அதற்கிசைந்து உதயணனிருந்த நகரத்துக்குச் சென்று சேர்கின்றாள். இப்பால் யூகி அவலுண்டு விக்கிஇறந்ததுபோலக் காட்டுகின்றான். தோழர் பலரும் பிறரும் கூடி விடுகின்றனர். பலர் காண, தோழர்கள் "இனியாமும் வாழேம்" எனச் சூளுரைத்துக் கங்கையில் யூகியின் உடலை இடுதுமெனக் கொண்டு சென்று ஓரிடத்தே மறைத்து விடுகின்றனர். யூகியிறந்தான் என்று, இச்செய்தி நாடெங்கும் பரவுகிறது. 10. யூகிக்கு விலாவித்தது அமைச்சனாகிய யூகியின்பால் விடைபெற்றுப் போந்த சாங்கியத்தாய் சயந்திநகரையடைந்து அரண்மனைக்குட்புகுந்து உதயணனைக் காண்கின்றாள். தாயைக் காணும் ஆன்கன்று போல அவளை உதயணன் பேரார்வத் துடன் வரவேற்கின்றான். அவளை ஓர் உயரிய பீடத்திருத்தி வழிபடுகின்றான். அவற்கு அவள், "மன்னவன் மகனே, வாசவதத்தையொடு நீ நின்நகர்புகுந்த பின்னர்க் காண்பேனாயினேன்; இனி எனக்கு ஆகவேண்டிய குறையேதும் இல்லை" யென்று முகமன் கூறுகின்றாள். வாசவதத்தையொடு வந்த பின் நிகழ்ந்தவற்றைக் கேட்பவன், சாங்கியத்தாயை முகமமர்ந்து நோக்கி, "அன்னாய், உம்முடன் யூகிவந்திலனோ?" என்று கேட்கின்றான். அவள் உடனே விடையிறாது அறிவானாராய்ந்து கூறுவாளாய், ஒலி1யுஞ்சேனையுள் வலியோரை வணக்கி நங்கையைத் தழீஇ நீ போந்த கங்குற் பட்டதை யெல்லாம் பட்2டாங்குணர்ந்து மறுபிறப்புணர்ந்த மாந்தர் போல உறு3 குறைக்கரும முள்ளகமருங்கிற் றானே யுணரி னல்லது புற4ப்பட் டேனோ ரறியா வியற்கைத்தாகி காரிய முடிவினாரி ருண்மறையா அரும்பொறிவை1யத்துக் கரந்தக2த் தொடுங்கி எம்மைக் கொண்டுவந் தே3மஞ்சேர்த்தி வெ4ம்மை வேட்டுவர் வியன்மலை வரைப்பிற் கோற்5றொழிற் கரும மாற்று6ளி முடித்துச் சிலபகல் கழிந்தபின் வருவனீர் சென்று நலமிகு வேந்தனை நண்ணுமின் விரைந்தென் றொழிந்தனன், உதயண! யூகி என மொழிகின்றாள். அதனைக் கேட்டு அவன் மகிழ்ச்சியால் முறுவலிக்க, அவன்பால் விடைபெற்று அந்தப்புரம் சென்று வாசவதத்தையைக் கன்றுகாண்கறவை போலக்கண்டு மகிழ்ந்து கண்கலுழ்கின்றாள். வாசவதத்தையை வளர்த்ததாயாதலின் பேராதரவொடுதழுவி அவளது கண்ணீரைத் துடைத்துஇன்புறுவன கூறித் தேற்றுகின்றாள். தேறியதத்தைக்கு, 7வட்டிகை வாக்கின் வனப்பொடுபுணர்ந்த பட்டச் சின்னுதற் பதினானாயிரர் நும்8மோய் மார்களும்தம்மினமகளிரும் ஒருது ணையாயரு முடை9வு கொண்டொழியப் பெருமகன்னானெனப் பெற்றியிற் பிழையான் யாப்10பமை காதலொ டாருயிரன்ன கோப்பெருந்தேவிக்கு நீப்பிட 11முணர்த்தித் தந்தையுரைகாட்ட வுய்ந்தது முதலா இன்பக்கட்டுரை பைந்தொடி கேட்ப உரைக்கின்றாள். வாசவதத்தை வருத்தமும் அன்பும் கலந்த மனத்தினளாய்க் கண்ணீர் சொரிகின்றாள். உடனே சாங்கியத்தாய், 12அவலங் கோடலங்கண் ஞாலத்து b13வங்கண் வேந்தன் பைந்தொடிப்பாவாய் ம14ங்கல மகளிர்க்குமரபன்று எனக்கூறி அருகிருந்த செய்குன்றுக் கழைத்துச் செல்கின்றாள். அதன்சிகரத்தில் ஏறிக் கோசம்பி நகரிருந்த திசையைக் காட்டி, இத்திசையில் உள்ளது உன் தந்தை நகரம் எனக் காட்டித் தெரி விக்கின்றாள். பின்னர்,அவள் உருமண்ணுவாவும் வயந்தகனும் இருந்த இடம் சென்று அவர் இருவரையும் ஒருங்கே மறைவிடத் தேயிருத்தி யூகியுரைத்த கருமத்தை யறிவிக்கின்றாள். அவர்கள் அதனை வருந்தி நோற்ற அருந்தவம்போல ஏற்றுச் செய்வன தேர்ந்து செய்கின்றனர். கைவினைவல்லகண்ணுளன் ஒருவனைக் கொண்டு யூகியினது உருவநலத்தை ஓவியத்தெழுதி, அதன்கண், யூகியின் முகத்தே நான்குகண்களையெழுதி வைக்கின்றார்கள். மேலிரண்டும் கண்களும்மழுகிய தோற்றமுடையவாகவுள்ளன. ஒருநாள் அவ்வோவியத்தை நன்கு நோக்குகின்றாள். அவள் உள்ளத்தே நினைவுகள் பல எழுகின்றன. இன்1னியன் மாந்தர் திண்ணிய லுறுப்பினுள் தாளே பெருங்கிளை தோளே துணைவி பல்லே மக்கள் கண்ணேதோழர் முடியே குரவரடியே யா2ளாம் ஆக்கையினாடியங்ஙனங் காணின் மேற்கட்குற்றத்து விது3ப்பியல் வழாது நூற்கணுனித்த நுண்ணுணர்4வெண்ணத்தின் யூகி தன்வயி னுறுகண்வெந்தொழில் ஆகிய துண்டென வையந்தேறி உதயணன் மா5ழாந்துயிர்வாழ் வொழிகெனச் சிதர்6பொறி யெந்திரம் போலச் சிதர்ந்து தாரும் பூணு மார்பிடைத் துயல்வரக் கண்சோர்ந்து மெய்ம்மறந்து கீழேவீழ்கின்றான். அது காணும் வாசவதத்தையும் இடியேறுண்ட நாகம் போல அவன் மார்பின்மேல் சோர்ந்து வீழ்ந்து துயருறுகின்றாள். அழுகை யொலிமிகுகின்றது. பின்னர்த் தாயரும் சான்றோரும் கூடி உதயணனையும் தத்தையையும் தெளிவிக்கத் தேறுகின்றனர். உதயணன் கண்ணீர் சொரிந்து யூகியின் அருஞ்செயல்களைச் சொல்லி யவலிக்கின்றான். கோசம்பி நகரத்தில் சிறைப்பட்டிருந்த தன்னை வாசவதத்தையுடன் கூட்டி இச் சயந்திநகரம் வந்தடையுமாறு சூழ்ச்சி செய்த யூகியின் செயலை நினைந்து புலம்புகின்றான். இனித் தனக்குத் தருமத் துணையும் கருமச் சூழ்ச்சியும் செவ்வே உண்டாகா என்றேங்கி யிளைகின்றான். இளமைக்காலத்தே தாங்கள் இருந்த இருப்பை நினைத்து வருந்துகின்ற உதயணன், குழற்1 சிகை யவிழக்குண்2டுநீர்யமுனைக் 3கணைக்கடுநீத்திடைப் புணைப்புறந்தழீஇ வினையாட் டுவிரும்பி யளையினவாகிய இன்சுவையடி சிலுண்பது மொரீஇ மன்பெருங் கோயிலுள் வளர்ந்தகாலை வேக4நம்பிக்கு விலக்குக வடிசிலென் றாகுபொரு5ளறிவிய ரும்பொரு ளென்மகன் யூகந்த ராயனுண்கெனவுண்ணாய்; குடிப்பெருந்தேவி யடிக்6கலம்பற்றி அருளினுங்காயினு மொப்பதல்லதை பொருளஃ தன்று புரவலன் மாட்டென் றென்செய் குற்ற நின்கட்டாங்கி அன்பளி சிறப்பித் தின்பத7மியற்றல் இளமைக் காலத்து யியல்பா வுடையோய் முதுமைக்காலத்து மத8லையிற் றாங்கிப் பின்போக் குரிய பெருந்தகையாள, முன்9போக்கு விரும்புதல் மூர்க்கரதியல்பு எனக் கேட்போர் நெஞ்சுருகிக் கண்கலுழுமாறு சொல்லிச் சொல்லிப் புலம்புகின்றான். அருகிருக்கும் உருமண்ணுவா முதலியோர் அவனைத் தேற்றுகின்றனர். உதயணனை நோக்கி, பூந்தார் மார்ப! புலம்பு1கொண்டழீஇ இருநில வரைப்பினியற்கை யோராப் பெருநிலங் காவல! பேணா2தவர்முன் இனையை யாகுத லிறை3மையன்றால்; கொடுங்4காழ் சோரினுங் கூட மூன்றிய நெடுங்5காழ் போல நிலைமையின் வழாஅது துன்பத்திற் றுளங்காது இன்பத்தின்மகிழாது ஆற்றுளி6நிற்றல் ஆடவர்கடன் என்பன முதலிய சொற்களைக் கூறி உதயணனைத் தேற்றுகின்றனர். உதயணனும் ஒருவாறு தேறினும், யூகியின் செயலையும் மதிநுட்பத் தையும் சொல்லிச் சொல்லி வருந்துகின்றான்; வயந்தகன்போந்து, "அரசே, யூகி ஒருகால் உயிர்பிழைத்து வருதலும்கூடும்; நாம் வறிதே இளைவது கூடாது" எனஆற்றுவிக்கின்றான். உதயணன் ஓரளவு ஆறியிருக்கின்றான். 11. அவலந்தீர்ந்தது முழுமதியம் நாடோறும் தேய்வது போல உதயணன் நாடோறும் யூகியை நினைந்து மெலிகின்றான். அதுகண்ட அமைச்சர் முதலியோர் தம்முட்கூடி, காவல1ன திர்ந்த காலை மண்மிசைத் தாவில் பல்லுயிர் தளர்ச்சியெய்தலின் எத்திறத்தாயினும் 2அத்திறமகற்றல் மந்திர மாந்தர் தந்திரமாதலின் வத்தவர் கோமாற் கொத்தவுறு தொழில் உத்தம மந்திரியூகியிற் பின்னார் அருமை சான்ற3வாய்பொருட் கேள்வி உருமண்ணுவாவிற்குறுகடனிதுவென ஏற்பாடுசெய்கின்றனர். அமைச்சுக்கடம்பூண்ட உருமண்ணு வா மலர்தலை யுலகிற் குயிரெனச் சிறக்கும் வேந்தர்க்கு உண்டாகும் துன்பத்தைப் போக்குதற் குரியவாயில்களை மனத்தாலெண்ணித் துணிகின்றான். ஏனைத்தோழரைக்கூட்டி, 4தணப்பில் வேட்கைதலைத்தலை சிறப்ப 5உணர்ப்புள் ளுறுத்த வூடலமிர்தத்துப் புணர்ப்புள் ளுறுத்த 6புரைபதம் பேணும் 7காமக்காரிகைக் காதன்மகளிர் தாமப்புணர்1முலைத் தலைப்பிணியுறீஇ 2யாமக் கோட்டத்தருஞ்சிறைக்கோடல் வணங்காமன்னரை வாழ்வு கெடமுருக்கி 3அணங்கரும் பெருந்திறை கொணர்ந்து முன்னிடுதல் பூமலர் பொதுளிய புனல் வரைச்சோலை மாமலைச் சாரலொடுகானங் காட்டுதல் யானையுஞ் 4சுரியுளையரிமானேறும் மானிற் பெடையும் வாள்வரியுழுவையும் புள்ளுமாக்களுமுள் ளுறுத்தியன்ற நொய்ம்மரநெடும்புணை கைம்முதற்றழீஇக் 5கூறாடாயமொடு குழூஉக் கொண்டீண்டி ஆறாடாயமொட ணிவிழவயர்தல் இன்னதொன்றினு 6ளென்ன தொன்றாயினும் செய்தல் வேண்டும்; செய்யும் நாம் கானங்காட்டி மகிழ்விக்கு மிடத்து ஒருவனைத் துறவி போல் உருத்தாங்கி ஓரிடத்தே யிருக்க வைத்து, அவன்பால் உதயணன் சென்று குறி கேட்குமாறும், அவற்கு அவள் யூகிவருவன் என உரைக்குமாறும் பிறவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் கூறி எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றான். துறவுக் கோலம் பூண்டோனொருவனை ஓரிடத்தேயிருத்தி, உருமண்ணுவாமுதலியோர் உதயணன் அவன்பால் "அரசே, கானத்தின்கண் விரதத்தை மழுவாகக் கொண்டு பாவமாகிய மரத்தை வேரொடு துணிக்கும் இயல்புடைய முனிவ னொருவன் உளன். அவன் முக்காலமும் ஒருங்கறிந்துரைக்கும் ஒட்பமுடையன்" என்கின்றனர். "அவ்வாறு கூறும் முனிவரும் உளரோ?" என்று உதயணன் வியந்து கேட்ப, உருமண்ணுவா ஆம் எனத் தலையசைத்து, உதயணன் பிறப்பு வரலாறு முனிவனொரு வனால் விளக்கப்பட்டதும் பிறவும் விரியக்கூறி, "அவ்வாறே யூகியின் செய்தியும் தெரிந்து கோடல் கூடும்" என்று கூறுகின்றான். ஏனைத் தோழரும் 1நகாஅர் பல்லவர் நலம்புகழ்ந்தேத்தும் 2விழுப்ப மெய்தி யொழுக்கியல் போம்பி இழுக்காதியன்ற விலாவாணத் தயல் உண்டாட்டயர்தல் உறுதியுடைத்தென உரைக்கின்றனர். உதயணனும் அதற்கிசைந்து விருப்புடன் உண்டாட்டுவிழா வயர்தற்குள்ள ஒருப்பாட்டினைத் தெரிவிக் கின்றான். விழா நிகழ்ச்சி நகர் முழுதும் முரசறைந்து உணர்த்தப் பெறுகிறது. 12. மாசன மகிழ்ந்தது உண்டாட்டுவிழா நிகழ்ச்சி தெரிந்த நகரமக்கள் குறித்த நாளில் 1தகரங்கம ழுந்தண் வரைச்சாரல் தக்கோ ருறையுந் தாபதப் பள்ளியும் கற்றோ ருறையுங்2கவுட்டானமும் புக்கோர் 3புறப்படலுறாஅப்பொலிவிற் சுனையும்யாறும் இனையவைமல்கி 4மேவரவமைத்த மேதகுவனப்பிற் கோலக் கோயிலொடு 5குரம்பைகூடிப் பலா, மா, நாகம், மகிழ், அசோகு, வேங்கை, வினா, கோங்கம், குரவு, வழை, வாழை, கழை முதலிய பல்வகை மரங்கள் செறிந்து, இடையிடையே கொடிப் பூம்பந்தரும் பிறவும் நெருங்கியழகுற்று விளங்குமிடம் நோக்கிச் செல்கின்றனர். தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் ஊர்தியும் பிடிகையும் நிரை நிரையாகப் போகின்றன. மைந்தரும் மகளிரும் பாடியிட்டிருக்கும் பெருமலைச் சாரல், மாசில்வானத்து மதிவிரிந்தன்ன 6தூசக்குடிஞையுந்7துலாமண்டபமும் பல்காழ்த் 8திரையும் படா9கையுங் கொட்டிலும் 1ஒல்காக் கூடமும் ஒருங்குதலைப்பிணங்கி மன்றும் வீதியுந் 2துன்றிவீறெய்தி எவ்விடந்தோறு மவ்விடத்தாகி உயர்மிசை யுலகநீங்கி நிலமிசை அந்தரமருங்கி3னந்தன வனத்தோ டிந்திர னுரிமையொ4டெண்கொண்டிறங்கின தன்மைத் தாய் இன்பம் பயக்கின்றது.ஒருசார், சுனையிடத்து நீலத்தைக் கண்ட மகளிர் சிலர், "இவைநம் கண்ணழகு கொண்டு கவினுறுகின்றன" வெனக்கண் சிவப்ப, அதுகண்ட குமரர், கூம்பி யுள்ள நீலங்களைக் காட்டி, 5கண்ணிழ லெறிப்பக் கலக்கமொடு நடுங்கி நண்ணிழலிழந்த 6வொளியவாகித் தொழுவன: இரக்குந் தோழிகைக்7கொடீஇ ஒழிக8வுள்ளழிவிவற்றொடுநீர் என உரைத்துச் சிவப்பாற்றி மன்னனை வாழ்த்துகின்றனர். ஒரு சார், தம்கைவிரல் போல் கவினுற்று விளங்கும் காந்தளைப் பறித்துக் கையிற் கொண்ட மகளிருட் சிலர், தம் கைவிரல் ஆழிகள் காந்தளின் நிறம் பெறக்கண்டு கண் சிவந்தது, "எமக்கு அணியாய் எம்மோடு றையும் நீர், உமக்கு அணியரை ஏன்று கொண்டீ"ரென அவற்றைக் கழற்றி யெறிந்து, "இவற்றின் இயல்பு காமக்கிழத்தியர் இயல்பாம்" எனச் சினந்து நிற்ப, அவர்துணைவர் போந்து, காலக் காந்தள் 9கதழ் விடங்காட்டிக் கோலக் கொழுவிர10லேலொளி யெறிப்ப அரும்பென நில்லா 11வஞ்சினவளிய 12விரிந்த விவற்றொடு விடுமின் 13வேர்வென் றிரந்து தெருட்டி யியைந்து கூடியின்புறுகின்றனர். வேறொரு சார் தெரிவைமகளிர் சிலர் வேங்கைப் பூக்களைக் கண்டு தம் மார்பிற்பரந்திருந்த சுணங்கெனப் பிறழ வுணர்ந்து, "யாம் புதல்வர் பயந்தமையின், நம் சுணங்கு மலையிடத்துஇப்பெருமரத்தைப் பொருந்தின"வெனச் சிவந்து அவற்றை நிலத்தே எறிகின்றனர். உடனே அவர்தம் காதலர் போந்து, மாலையோதி 1மடவரல் மகளிர்க்குக் 2காலை கழியினுங் கழியா திதுவென உவந்தவுள்ளமொடு நயந்து பாராட்டி 3அன்மையையுணர்த்த வண்மையிற் றாழ்ந்து வேங்கைப் பூவைச் சூடி விளையாட்டயர்கின்றனர். வேறொரு பால், கோங்கிணை வெறுத்துமாம் பொழிற் சோலையில் விளை யாடலுறும் மகளிர்க்கு மராமரத்தின் பூக்களைத் தொடுத்தின்புறும் காளையர் அவர் குறிப்பறிந்தணிந்து கூடுகின்றனர். ஒருபால், 4முடந்தாட் பலவின் முன்றில்நின்ற கானவர் மகளிர்5காரிகை நோக்கி வானவர்மகளி ரல்லராயின் வனமலைச் சாரல் வரைமிசையுறையும் 6இளநலமகளி ரிவரென வெண்ணி ஏனை மகளிர் பலரும் அஞ்சி நிற்கின்றனர். பிறவி டங்களில், விச்சாதரியரின் வியப்பத் தோன்றிச் சுனைப்பூக் குற்றும் 7கள்ளி சூடியும் சினைப்பூ வணிந்தும் கொடிப்பூக் கொய்தும் மகிழின் வட்ட8வார்மலர் தொடுத்தும் பவழப்பிண்டிப் பல்லிணர் பரிந்தும் 9செண்ணத் தளிரிற் கண்ணிகட்டியும் மாலைதொடுத்து மலைவளம் புகழ்ந்தும் கோலக்குறி10ஞ்சிக் குரவையாடியும் மணிமயிற் பீலி மாமயிற்11றொழுதி அணிநலநோக்கியுமா டல்கண்டுவந்தும் மாதர்ப்1பைங்கிளி மழலைகேட்கும் மகளிர் நாப்பண் மன்னவன் போலத் துக2ளணியிரும்பிடி துன்னுபுசூழ அந்தண் மரா3அத்த பைந்தளிர் வாங்கிக் கண்ண4யற் பிறந்த கவுளிழி கடாத்துத் தண்ணறு நாற்றந் தாழ்5ப்பத் தவிர்த்துப் 6பெருமையிற் பிறப்பினும் பெற்றி போகாச் சிறுமையாளர் செய்கை போல 7மூசுதலோவா மிநிற்றின8மிரிய வீசுத லோவா9விழுத்தகுதடக்கை இருங்களிற் றினநிரை விரும்புபு நோக்கியும் கொய்குர10 லேனலும்குளிர் சுனைப்11 பாறையும் 12மைவளர் சென்னி மரம்பயில் கானமும் மலர்ப்பூஞ் சோலையுந் 13திளைத் தலானார் ஆடியும் பாடியுங் கூடியும் பிரிந்தும் ஊடியு முணர்ந்தும் ஓடியுமொளித்தும் நாடியு நயந்து நலம் பாராட்டியும் மைந்தரும் மகளிரும் மணந்து விளையாடி அந்தமில் இன்பத் தாழ்ந்து களிக்கின்றனர். 13. குறிக்கோட்கேட்டது மைந்தரும் மகளிரும் இவ்வாறு விளையாடியிருப்ப, ஐம் பெருங்குழுவும் எண்பேராயமும் சூழ்ந்துவர மலைப்பக்கத்தே காணப்பட்ட அழகிய சோலை யொன்றிற்கு உதயணன் செல் கின்றான். அரணம் வேண்டாதச்சம் நீக்கி 1வருணமொன்றாய் மயங்கிய வூழிச் சிறுமையும் வறுமையுந் 2தின்மையும் புன்மையும் 3இறுபும் புலம்பு மின்மையு மிரக்கமும் அறியுமாந்தரி னுறுவளங்கவினி 4ஐந்திணை மரனும் பைந்தளிர்க் கொடியும் தந்துணைச் செல்வந்தலைத் தலைப்பெருகி அருமதி முனிவர் 5நிசமிதம் போல அழல்கண் ணகற்றி நிழன்6மீக்கூரி நீர்புக்கன்ன நீர்மைத்தாகி, 7ஊர்புக் கன்னவுள்ளுறப் புறீஇ மலர்த் தவிசடுத்துத் தளிர்க் குடையோங்கிப் பூங்கொடிக்கவரி புடைபுடைவீசித் தேங்கொடிப் பறவையுந்திருந்து 8சிறைமிஞிறும் விரும்புறு சுரும்பும் பெரும் பொறிவண்டும் 1குழல்வாய்த் தும்பியுங் குயிறுங்கூடி மழலையப் பாடலின் 2மனம்பிணியுறீஇ முதிர்கனியமிர்த மெதிர் கொண்டேந்தி 3மேவனபலபயின்றீவன போன்ற 4பயமரமல்லது கயமரமில்லாக் காவினைக் காண்பவன் அதன் எதிரே தவப்பள்ளியொன்று இருப்பதும்கண்டு மகிழ்கின்றான். உதயணனொடு போந்த அரசியற் சுற்றத்தாருட் சிலர் அத்தவப் பள்ளிக்குச் சென்று வேந்தன் காண விரும்பி வந்திருப்பதனைத் தெரிவிக்கின்றனர். பெருங்குலப்பிறப்பினு 5மரும்பொருள் வகையினும் இருங்கண் ஞாலத்தின்னுயி ரோம்பும் காவல் பூண்ட 6கடத்தினும் விரும்பி இமையோர்7இறைவனை யெதிர் கொண்டோம்பும் அமையா தீட்டிய 8அருந்தவ முனிவரின் அத்தவப் பள்ளியுறையும் முனிவன் முறைப்படி எதிர்கொண்ட ழைத்துச் சென்று ஆங்குள்ள அசோக மரத்தின் நீழலில் இருந்த மணல் மேட்டில் இருக்கச் செய்கின்றான். இருக்கும் உதயணன் தன் தோழனான யூகியை நினைந்து வருந்துகின்றான். அக்காலை அவன் கையிலிருந்த வெண்பூவொன்று சோர்ந்து அமர்ந்திருக்கும் அவன்தாளில்வீழ்கின்றது.அவன் மனநிலையையுணர்ந்த முனிவன், உதயணனை நோக்கிக் கூறுவானாய், பசுமரஞ் சார்ந்தனையாதலின் மற்றுநின் 9உசிர்ப்பெருந்தோழனுண்மையுங் கூட்டமும் 10கண்ணகன்றுறைந்த கடிநாளமையத்துத் 11திண்ணிதாகுந் தெளிந்தனையாகுமதி விரும்பிநீ பிடித்த வெண்மலர் வீழ்ச்சி பொருந்தி நீயளக்கும் 1பொருவில் போகத் திடையூறுண்மை 2முடியத் தோன்றும் வீழ்ந்த வெண்மலர் வெறுநிலம்படாது தாழ்ந்த கச்சைநின்றாள்3முதற்றங்கலிற் பிரிந்தபோகம் பெயர்த்தும் பெறுகுவை நிலத்துமிசையி ருந்தனையாதலின் மற்றுநின் தலைப்பெரு நகரமொடு நன்னாடுதழீஇக் 4கொற்றங்கோடலு முற்றியதாகி முன்னிய நின்றவை முடியத் தோன்றும்என் றெண்ணிய விப்பொரு டிண்ணிதி னெய்தும் 5பெறும்பயமிதுவென வுரைத்துப் பின்னர்ச் சாரணர் போந்து உரைக்கவிருக்கும் உரையும் வாழ்நாள் எல்லையும் பிறவும் எடுத்துரைக்கின்றான். பின்பவன், உதயணன் கொண்ட மனக்கலக்கம் தெளிவெய்துமாறு அவனை விட்டு நீங்குகின்றான். யூகியை மீளக் காண்டல் கூடுமென்றெழுந்த மனக்கிளர்ச்சியால் உதயணன் மகிழ்ச்சியுடன் எழுகின்றான். யூகியைக் கூடியதுபோலும் உவகை அவனுள்ளத்தேமிகுகிறது. சென்று வாசவதத்தையிருக்கும் இடமடைந்து அவளோடு விளை யாடுகின்றான். 14. உண்டாட்டு விளையாட்டு விருப்பமே உதயணன் உள்ளத்தை விழுங்கி விடுகிறது. அவற்கு நாட்டைப் பற்றியும் நகரத்தைப் பற்றியும் சிறிதும் நினைவு எழுகின்றிலது. அவனோடு வந்துள்ளமைந்தரும் மகளிரும், ஒருபால். மாயோன் மார்பின்1மன்னுபுகிடந்த. ஆரம்போல 2வணிபெறத் தோன்றிப் பசும்பொற் றாதொடு பன்மணி வரன்றி 3அசும்பு சோரருவரை யகலம் பொருந்தி ஞாலமாந்தரை 4 நாணியன்ன நடுங்கு செலற் கான்யாற்றுக் கடும்புனலாடி 5மணிநிழற் பாவைமருங் கிற்6பல்கி அணிகலப் 7பேழையகந்திறந்தன்ன நறுமல ரணிந்த குறுவாய்க் குண்டுகனை நீணீர் முழவின் பாணி8யிற் பாடி மகிழ்கின்றனர். ஒருபால், மகளிர் சிலர் கூடிக் குரவம் பாவையைக் கொய்து குழவியெனக் கொண்டோலுறுத்தாடுகின்றனர்; ஒரு பாலார் வேயிடையுடைந்துதிர்ந்த முத்துக்களைத் திரட்டிச் சிற்றி லிழைத்து விளையாட, வேறுசிலர் அக்குரவம் பாவைக்குப் பொற்கல மெனக்கோங்கம்பூவைக் கொணர்ந்து தருகின்றனர். அசோகின் கிளையில் ஊசல் கட்டி விளையாடுபவரும், முல்லை முதலிய பூக்களைக் கொய்து மாலை தொடுப்பவரும் இலைகளைக் கிள்ளி மீன்போலவும் யாமைபோலவும் வடிவு சமைப்பவருமாய் விளையாடுகின்றார்கள். வேறொருபால், 1உறியோர்க்குதவுதல் செல்லாதொய்யெனச் சிறியோ ருற்றசெல்வம் போலப் 2பொருசிறைவண்டினம் பொருந்தாது மறக்க நறுமலர்ச் செல்வமொடு3நாட்கடிகமழும் செண்பகச் சோலைத் தண்டழை4தைஇயும் 5பேறருங்கற்பின்பிரச் சோதனன் மகள் 6மாறடு வேற்கண் வாசவதத்தை செல்வருஞ் சிறப்பும் பல்லூழ்பாடிக் குராஅநீழற் கோல்வளை யொலிப்ப 7மராஅங் குரவை மகிழ்ந்தனர் 8மறலியும் விளையாடாநிற்ப. சில மகளிர் பந்தெறிந்தும் பாவை புனைந்தும் புதலிடைக் கரந்தும், குறமகளிர் அவலிடிக்குமிடத்து அவர்கள் தம் தலைவர் இயல்பு புகழ்ந்து பாடும் இன்னிசை கேட்டும் இன்புறுகின்றனர். இவ்வாறு. கோயின்மகளிர் 9மேயினராடப் பொருவில் போகமொ டொருமீக்10கூறிய 11உருவப்பூந்தா ருதயணகுமரனும் 12வள்ளியம்பணைத் தோண் முள்ளெயிற்றமர்நகை 13வான்மணிக் கொடும்பூண் வாசவதத்தையும் இயல்பிற் செய்யவாயினு முயர்வரை அருவியாட்டினு 14மறற்சுனைத் திளைப்பினும் பூங்குழை மகளிர் 15பொலங்கலத் தேந்திய தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும் தாமரைச் செவ்விதழ்த் தலைக் கேழ்விரித்த காமர் கொடுங்கண் 16கைம்மீச் சிவப்ப இன்பமயக்கத்தால் இனிது மகிழ்ந்திருக்கின்றனர். 15. விரிசிகை மாலை சூட்டு உண்டாட்டயரும் மலைச்சாரலிலே ஒருபால் முனிவர் பள்ளியொன்றுளது. நாகமும் சந்தனமும் செறிந்த 1ஆத்திரையாளர் தங்குமிடமும், கொடிப்பந்தரும் அப்பள்ளியின் அருகில் உள்ளன. தணக்கம்,தமாலம், தகரம், ஆச்சா முதலிய மரங்கள் நிறைந்த சோலையும், வராலும் வாளையும் வாழும் சுனைகளும் ஆங்கே இருக்கின்றன. அச்சுனையில் செங்கழுநீர்,ஆம்பல், கருங்குவளை முதலிய நீர்ப்பூக்கள் மலர்ந்து வண்டினங்கட்கு விருந்து செய் கின்றன. பலாமரங்கள் பழுத்துநிற்கின்றன. பள்ளியின் முன்றிலில் சேணுற சிவந்த தென்னைகள் விளங்க, அதனைச் சூழ, 2மணிக்கண்மஞ்ஞையும் மழலையன்னமும் 3களிக்குநற்புறவும் கருங்குயிற் பெடையும் பூவையுங் கிளியும் 4யூகமு மந்தியும் 5மருளிமாவும் 6வெருளிப் பிணையும் அன்னவை பிறவும் கண்ணுறக்குழீஇ 7நலிவோ ரின்மையி னொலி சிறந்து8ராஅய் அரசிறை கொண்ட வாவணம் போலப் பொலிவொடு புணர்ந்த பொழிலகம் இனிய காட்சியாற் காண்போர்உள்ளத்தைக் கவர்ந்து நிற்கிறது. அவ்வழியே போந்த உதயணனும் வயந்தக குமரனும் வாசவதத்தை, காஞ்கனமாலை முதலிய மகளிரும் அப்பொழிற் காட்சியில் ஈடுபடுகின்றனர். அவ்விடத்தே நின்ற அசோகின் நீழலில் உதயணனும் வயந்தக குமரனும் இருப்ப, வாசவதத்தையும் காஞ்சனமாலையும் ஏனைமகளிர் உடன் வரப் பொழிற் குள்ளே அதன்காட்சி யின்பந்துய்க்கச் செல்கின்றனர். அப்பொழிற் குள்ளிருந்த அத்தவப்பள்ளியில் அரசமுனிவன் ஒருவன் உறைகின்றான். அவற் கொரு மகள் உளள்; அவள் பெயர் விரிசிகை யென்பது. சிறிது போதில், விரிசிகையென்னும் விளங்கிழைக் 1குறுமகள் இருந்தினி தொழுகுமியன் மலைப் பள்ளியுள் அருந்தவரல்லதையா டவரறியாள் 2தவிர்வில் காதலொடு தன்வழிப்படூஉம் கவர்க3ணை நோன் சிலைக்காமனிவனெனும் மையலுள்ளமொடு 4பையவியலிப் பிள்ளைமைகலந்த பேதைப்5பெரும்பிணை வெள்ளை நோக்கமொடு விரும்புபு 6விதும்பிப் பவழப் பாவையும் பந்தும் 7கிடைஇ பூமரக் காவினுள்ளே மலர்ந்திருக்கும் நந்திவட்டம், நாகப்பூ, சிந்துவாரம், சேபாலிகை, குருக்கத்தி, சேடம், செண்பகம் முதலிய பல்வகைப் பூக்களைப் பறித்துத் தன் கையிலேந்திக் கொண்டு உதயணனைக் குறுகி, 8திருந்துவாய்திறந்து தேனெனமிழற்றிப் பெருந்தண்மலரிற்9பிணைய னொடுத்தென் பாவையும் யானும் பண்புளிச் சூடுகம் ஈமின் ஐய என இரந்து கேட்டு அவன் கையில் அப்பூக்களைக் கொடுக் கின்றாள். அவளுடைய உருவும் திருவும் உளங்கவர் வனப்பும் கண்ட உதயணன் முதற்கண் "இவள் தவப்பள்ளியுறையும் இயற்கைத் திருமகள் போலும்" என ஐயுற்று, கண்ணிமைத்தல், சூடிய மாலை வாடுதல் முதலியவற்றால் முனிவர்மகளெனத் தெளிந்து, அவள் வேண்டு கோட்கிசைந்து, தன் மேலாடையிலிருந்து இருநூலிழை யெடுத்துத் திரித்துப் பவழமும் வெள்ளியும் பசும்பொன் 1னடரும் திகழ்கதிர் முத்தமும் திருமணிக்காசும் 2உறழ்படக் கோத்தவொளியின போல வண்ணம் வாடாது 3வாசங்கலந்த தண்ணறும் பன்மலர் 4தானத்திரீஇச் சூடுதற்கேற்ற வகையில் தொடுத்துத் தருகின்றான். அதனை வாங்கிய விரிசிகை அதனைத் தானே சூடிக்கொள்ளும் வகை தெரியாது மயங்குகின்றாள். ஈயக் கொண்டுதன் னெழின்முடிக் கேற்பச் சூடுதல் 5தேற்றாள் சுற்றுபு திரியும் ஆ6டமைத் தோளியலமர னோக்கி மட7வரல் மாதரை வாவென வருளித் தடவரை மார்பன்றாண்8முதலுறீஇ தானே இனிது சூட்டி ஒப்பனை செய்து அழகுறுத்து கின்றான். அவளும் அவன் தாண்மேலிருந்து அவ்வொப்பனைக்குடன் படுகின்றாள். 16. ஊடலுணர்த்தியது விரிசிகை மனமகிழுமாறு உதயணன் ஒப்பனை செய்து "செல்கநங்கை மெல்ல நடந்து" என்று சொல்லிவிடுகின்றான். அவளும் மகிழ்ச்சியுடன் சென்றொழிகின்றாள். உதயணன் விடுப்பதும் விரிசிகை செல்வதும் பொழில்கண்டு திரும்பிவரும் வாசவதத் தைக்குத் தெரிகின்றன. அவள் உள்ளத்தே சினத்தீகனன்றெழு கின்றது. தாமரையன்னதன் த1கைமுகமழுங்கா 2ஓடரி சிதரிய வொள்ளரி மழைக்கண் ஊடெரியுமிழு மொளியேபோலச் சிவப்புள் ளுறுத்துச் செயிர்ப்3பு முந்துறீஇ நயப்4புள் ளுறுத்த வேட்கைநாணி 5உருத்தரிவெம்பனி யூழூழ்சிதரி விருப்பு மறைத்தடக்கி வேக6நோக்கமொடு பனிப்பிறை யழித்த7படிமைத்தாகிய 8அணித்தகு சிறு நுதலழன்று வியரிழிய உருவவானத் தொளிபெறக் குலா9அய 10திருவிலன்ன சென்றேந்துபுருவம் முரிவொடு புரிந்த முறைமையிற் 11றுளங்கத் தான் அணிந்திருந்த சாந்தைத் திமிர்கின்றாள்; தழையும் கண்ணியும் வீசி யெறிகின்றாள்; தன் மலர் போலும் வாயைத்திறந்து, 1முழுநீர்ப் பொய்கையுட்பொழு2தொடுவிரிந்த செழுமலர்த் தாமரைச் 3செவ்விப்பைந்தாது வைகலூதா வந்த4க்கடைத்தும் 5எவ்வந்தீராது நெய்தற்கவாவும் வண்டேயனையர் மைந்த ரென்பது பண்டேயுரைத்த பழமொழி மெய்யாக் கண்டே னொழிகினிக் 6காமக்கலப்பெனக் கடுகடுத்து மொழிகின்றாள். அருகே அஞ்சி நின்ற சாங்கியத் தாயையும் காஞ்சனமாலையையும் சிவந்து நோக்கி, "அன்பு இடையறாத என் தந்தைநகர்க்கு என்னை இன்னே கொண்டு சென்றுவிடுமின்" என்று புலந்துரைத்துப் போகின்றாள். அவள் பின்னே சிறிது தொடர்ந்து சென்ற சாங்கியத்தாயும் காஞ்சன மாலையும். "ஏனைத்தேர்ந்து மெல்லத்தனியே சென்று விடு கின்றார்கள். பின்னே சென்ற உதயணன், 7நறவினைதேற லுறுபிணிபோலப் பிறிதிற் றீராப் பெற்றிநோக்கிக் குறிப்புவயின் வாராளாயினும் கூடிப் 8பொறிப்பூணாகத்துப்புல்லுவனனொடுக்கி 9அருமைக் காலத்தகலாநின்ற திருமகட்பரவுமொருமகன்போல உரிமைத் தேவியுள்ளக நெகிழும் வழிமொழிக்க10ட்டளை வழிவழியளைஇ முடியணிதிருத்தல். அடிமிசைத்துகள் அகற்றல், கதுப்பணி புனைதல், கதிர்வனை யேற்றல், கண்டுளிதுடைத்தல், கடிப்புப் பெயர்த்தணிதல், புதுத்தளிர்கொடுத்தல், பூம்புற நீவல் முதலிய ஊடலுணர்த்துஞ் செய்கைகளைச் செய்கின்றான். அவற்றோட மையாது, "இச்சினஞ்சிறக்குமாயின் என் உயிர்க்குறுகண் தந்தல்லது நீங்காது" என மொழிந்து நெட்டுயிர்த்து வலியச் சென்று அவளைச் சார முயல்கின்றான். தத்தையோ சாரவிடாது தடுத்து, மொழிகுழற, 1காமவேகம் உள்ளங்கனற்றத் தாமரைத் தடக்கையிற் றாமம்2பிணைஇ 3ஆத்த வன்பினரும் பெறற்காதலிக் கீத்தது மமையாய் பூத்த கொம்பின் அவாவுறு நெஞ்சமொடுகவான்4முதலிரீஇத் 5தெரிமலர்க் கோதை திகழச்சூட்டி 6அரிமலர்க் கண்ணிநின்னகத்தளாக அருளின் நீ விழைந்த மருளி7னோக்கின் மாதரையாமும் காதலெம்பெரும பொம்8மென்முலையொடு பொற்பூணெ ருங்க விம்ம9 முறுமவள் வேண்டாமுயக் கெனப் பாட்டிடைப்பண்ணும் பழத்திடைத்தேனும் போலும் சொற்களை வழங்கிப் பிணங்கி நிற்கின்றாள். அக்காலையிற் கதுமெனக் கரு முகமுகக்கலையொன்று ஓடிவருகிறது. அதுகண்டஞ்சிய வாசவதத்தை ஞெரே லெனவோடிவந்து ஞாயிறு மண்டிலத்தைத் திங்கள் மண்டிலஞ் சேர்ந்தாற் போல உதயணனைத் தழீஇக் கொள்கின்றாள். திலகத் திருமுகஞ் 10செல்வன்திருத்தி 11ஒழுகுகொடிமருங்கு லொன்றாயொட்டி மெழுகுசெய் பாவையின் மெல்லியல12சைந்து 13அச்சமுயக்கம்நச்சுவனள் விரும்பி அமிழ்துபடுபோகத் 14தற்புவலைப்படுத்த உதயணன் வாசவதத்தையுடன் இனிதிருப்பவன் மேற்செய்ய வேண்டிய கருமங்களை நினையாது கானத்திடத்து விளையாட்டே விரும்பியுறைகின்றான். 17. தேவியைப் பிரித்தது 'உதயணன் கானத்து விளையாட்டே கருதியிருக்கையில், யூகி, இலாவாண நகரத்து அரண்மனையில் சுருங்கை வழியொன்ற மைத்து அதன் வழியாகத் தானிருக்குமிடம் தத்தையைக் கொணர் வித்துப் பிரித்துவைக்குமாற்றால் உதயணனை மேற் செயற்பாலன செய்தற்கு எண்ணங்கொள்ளுமாறு செய்யும் குறிப்பினனாய், ஏனைத் தோழருடன் கலந்தெண்ணி வேண்டுவன செய்து முடிக் கின்றான். பின்னர் அவனே வேற்றுருவுடன் கானத்துக்குப் போந்து சாங்கியத் தாய்க்குத் தெரிவித்து உதயணனை இலாவாண நகரத்துக்கு வருவிக்குமாறு ஏற்பாடு செய்து விட்டுத்தான் கரந்துறையுமிடத்துக்குச் செல்கின்றான். செல்பவன், நலத்தகு1சேதாநறுநெய் தீம்பால் 2அலைத்துவாய்ப்பெய்யுமன்புடைத்தாயின் 3இன்னா செய்து மன்னனை நிறூஉம் கருமக்4கடுக்கம் ஒருமையினாடி உருமண்ணுவாவுக்கும் வயந்தகற்கும் உணர்த்திப் பின் சாங்கியத் தாயை நோக்கி, நகர்க்கண் தீயெழுதலும், தத்தையைக் கொணர்தற்குரிய காலமும் இடமும் குறிக்கின்றான். பின்னர். சாங்கியத் தாய் தக்ககாலம் நோக்கி உதயணனை யடைந்து, கானத் தின்நீங்கி இலாவாணநகரம் செல்வதுநன்றென்பாளாய், தோற்கை5யெண்குங் கோற்6கைக் குரங்கும் மொசி7வாயுழுவையும் பசி8வாய்முகவும் வெருவு தன்மைய; ஒருவயி னொருநாட் கண்ணுறக்1 காணிற் கதுமென நடுங்கி ஒண்ணுதல்மாதருட்2கலுமுண்டாம் பற்றா3ருவப்பப் பனிவரைப்பழகுதல் நற்றார்மார்ப! நன்4றியின்றாகும்; இன்னெயிற் புரிசை இலாவாணத்துநின் பொன்னியல் கோயில் புகுவது பொருள்என மொழிகின்றாள். அவ்வாறே உதயணனும் மனமிசைந்து மைந்தரும் மகளிரும் நகர் செல்லப்பணித்துத் தானும் தத்தையும் தோழரும் பிறவும் உடன்வர இலாவாண நகரத்தையடைந்து இனிதிருக்கின்றான். இருக்குங்கால் ஒருநாள் தோழர்போந்து, செய்வினை5மடிந்தோர்ச் சேர்ந்துறைவிலளே 6மையறு தாமரைமலர்மக டாமெனல் வையகத் துயர்ந்தோர் 7வாய்மொழியாதலின் ஒன்னா8மன்னர்க் கொற்றுப்புறப்9படாமைப் பன்னாட் பிரிந்து பசை10ந்துழிப் பழகாது வருவது பொருள்என என வுரைக்கின்றனர். அவர்கட்கு உதயணன் வாசவதத்தையைப் பிரியின் உயிர்தரியேன்" என்று கூற, வாசவதத்தையும், ஊழ்வினை யால், வேட்டஞ்சென்று தனக்கு அரும்பினும் மலரினும் பெருஞ் செந்தளிரினும் கண்ணி கட்டிக் கொணருமாறு வேண்டுகின்றான். உதயணன், தோழரும் மறவரும் உடன் வரக் குதிரையூர்ந்து வேட்டஞ்செல்கின்றான்; இப்பால், "காமவேட்கைக் கிரையாகிக் காவலன் மடியுற்றான்; அதனால் வேட்டுவர் அவனை யெள்ளி நகர்க்கண்தீவைத்தொழிந்தனர்" என்னும் சொல்பரப்பி நகர்க்குத் தீவைக்கப்படுகிறது. அப்போழ்தில் நல்லோரொழியத் தீமைகன்றிய தீயோர் பலர் தீயில் வெந்து உயிர்துறக்கின்றனர். அரசன் கோயி லெங்கும் தீப்பரவுகிறது. புகைபடர்ந்து எங்கும் இருள்செய்கிறது. அக்காலமறிந்த சாங்கியத்தாய், அஞ்சிநடுங்கியலமந்து வருந்தும் தத்தையைச் சுருங்கை வழியே கொண்டு யூகியிருக்குமிடம் அடைகின்றாள். சாங்கியத் தாய் வாசவதத்தைக்கு யூகியைக் காட்டி, அஞ்சி1லோதியஞ்சல் நும்பெருமான் நெஞ்சு2புரையமைச்சனீதியிற் செய்த வஞ்சமிது வென வலிப்3பக் கூறித் தேற்றுகின்றாள். அவளை யூகி எதிரேற்று இறைஞ்சி, இருங்கடலுடுத்தவிப் பெருங்4கண் ஞாலத்துத் தன்னினல்லது தாமீக்5கூரிய மன்னரை வணக்கும் மற6மாச் சேனன் காதல்மகளோ. மாதர்மடவோய் வத்தவர் பெருமகன் வரை7புரையகலத்து வித்தகநறுந்தார் விருப்பொடு பொருந்திய வால்8வனைப் பணைத்9தோள் வாசவதத்தாய். அருளிக் கேண்மோ அரசியல் வழாஅ இ10ருளறு செங்கோல் ஏயர் இறைவ னான உதயணன், நும்பெருமானாகிய பிரச்சோதனன் செய்த யானைமாயத்தாற் றளைப்பூண்டு சிறைப்பட்டானாக, பாஞ்சாலராயன் பெரும்படையுடன் போந்து கௌசாம்பியைக் கைப் பற்றிக் கொண்ட செய்தியையும் அறிந்திலன்; நீர்ச்சுழியில் அகப்பட் டோற்குப்புணை கிடைத்தாற்போல நின்னைப்பெற்றபின் தனக் குண்டாய இக்குறையை நினையானாயினன்; நின்னைப் பிரிதலாற்றாப் பெருவேட்கை யுடையோனைச் சின்னாட் பிரிந்தாலல்லது அவன் இக்குறையை நீக்கக் கருதான்; அதனால், 11சேண்வரு பெருங்குடிச் சிறுசொல்நீங்க ஆர்வநெஞ்சத் தாவது12புகலும் இன்னுயிரன்ன வென்னையும் நோக்கி, மன்னிய தொல்சீர் மரபி13ற்றிரியா நலமிகு பெருமைநின் குலமும் நோக்கி, பொருந்திய சிறப்பினரும் பெறற்காதலன் தலைமையின்14 வழீஇயநிலைமையு நோக்கி, நிலம்புடை1பெயரினும் விசும்புவந்திழியினும் கலங்காக்க டவு2ணின் கற்பும் நோக்கி அருளினையாகி யழியா வமைச்சியல் பொருளெனக் கருதிப் பூங்குழை3மடவோய் ஒன்னா4மன்னனை யுதயண குமரன் இன்னா செய்து தன்னிக5ன் மேம்படநினைச் சின்னாள் பிரியச் சிதைவதொன்றில்லை வ6லிக்கற்பாலை வயங்கிழைநீ யென்று யூகி இரந்து கேட்கின்றான்.இது கேட்ட வாசவதத்தை "உதயணற்குரிய நூல்வல்ல துணைவர் நால்வருள், யூகியோ இறந்தான்; உருமண்ணுவா, வயந்தகன், இடபகன் என்ற மூவருள் இவன் வேறாகின்றான்; இவன் யாவனாம்" என்று தனக்குள்ளே எண்ணினவளாய் எதிர்மொழி யொன்றும் கொடாது நிற்கின்றாள். அதனையுணர்ந்த சாங்கியத்தாய், "இவன் யூகியே; இறந்ததாகச் சொல்லெழுப்பி இங்கு வந்துளன்" என்று வற்புறுத்தலும், வாசவதத்தை தேறினாளாயினும் பெண்ணியல்பு மிக்கு நாணத்தால் இறைஞ்சிக் கண்கலுழ்ந்து, தனக்குள்ளே பலபடநினைப்பவளாய், 7அரிமானன்னவஞ்சுவருதுப்8பினெம் பெருமான் பணியன் னாயினும் தெரிமொழி நூலொடுபட்டநுனிப்பி9யல் வாழாமைக் காலவகையிற் கருமம் பெரிதெனல் நெறியிற் றிரியா நீர்மையிற் காட்டி 10உறுகுறையண்ணலிவன் வேண்டுறுகுறை நன்றேயாயினுந் தீதேயாயினும் ஒன்றா11வலித் தலுறு தியுடைத்தெனக் கருதுகின்றாள்; ஆயினும் வாசவதத்தையின் உள்ளத்தெழுந்த வருத்தம் மிக்குற்றெழு கிறது. அதனை ஒருவாறடக்கியும் அடங் காமையின் எழும் வெய்துயிர்ப்படக்கி, நீ வேண்டியது வேண்டாக் குறிப் பெமக்1குடைமை கூறலுமுண்டோ மறத்தகை2 மறவன் மாயயானையிற் சிறைப்படுபொழுதிற் சென்றவற்பெயர்க்க மாய 3விறுதி வில்லையாகிய நீதியாளநீ வேண்டுவ4வேண்டென மொழிந்து தன் உடன்பாட்டை யுரைக்கின்றாள். யூகியும் மகிழ்ந்து விருந்து பேணி, "உதயணன் மீண்டு இலாவாணத்துக்குப்போந்து துயருற்றுத் தெளியுங்காறும் இவ்விடத்தே நாம் இருத்தல் வேண்டு" மென ஏற்பாடு செய்கின்றான். அனைவரும் அதற்கிசைந்திருக் கின்றார்கள். 18. கோயில் வேவு வேட்டஞ் சென்ற உதயணன் வேட்டுவினை முடித்துத் திரும்புகின்றான். திரும்புபவன், 1குழையணி காதிற்குளிர்மதி2முகத்திக்குத் தழையுந் தாரு'கண்ணியும்3பிணையலும் 4விழைபவை பிறவும் வேண்டுவகொண்டு 5கவவுக் கமைந்த காமக்கனலி 6அவவுறு நெஞ்சத்தகல் விடத்7தழுற்றத் தனிக்கன் றுள்ளிய புனிற்றாப்8 போல விரைவிற் செல்லும் வியப் பினனாகி உடனிருந்த ஏவலனைக் குதிரையைப் பண்ணுமாறு பணிப்ப, அவனும் அவன் குதிரையைப் பண்ணமைத்துக் கொணர்ந்து நிறுத்து கின்றான். உதயணன் அதனை யூர்ந்து விரைந்து வருகின்றான். நகரைக் குறுகுமிடத்து. 9இடுக்கண்ட ருதற் கேதுவாகி இடக்கணாடலுந்தொடித்தோட10ளங்கலும் ஆருயிர்க் கிழத்தி யகன்றனளிவணிலள் நீர்மலர்ப்11படலை நெடுந்தகையாள காணாயாகி யானா விரக்கமொ 12டிழுக்கி னோழரோ டியங்குவையினியென ஒழுக்கும்புட்குர 13லுட்படக்கூறிய நிமித்த முஞ்குனமு 1நயக்குண மின்மையு நினைத்தனன் வரூஉம் நேரத்து நகர்க்கண் பெரும்புகை யெழுவது காண்கின்றான். 2அண்ணரும் பேரழலாக்கிய பெரும்புகை 3மாதிரத் தியங்குஞ் சோதி4டர் விமானமும் வாசமூட்டும் வகையிற் றாகி 5மஞ்சொடு விரைஇ வெ6ஞ்சுடர்மழுக்க இருள்படப் பரந்த மருள்7படுபொழுதில் அவன்பார்வை வாசவதத்தையிருந்த கோயிற் பக்கம் செல்கிறது. அது பெருந்தீக் கிரையாகிப் பெரும்புகை பரந்து தோன்றுகிறது. அவட்கு என்னதீங்கு நேர்ந்த தோவென்னும் எண்ணம் எழுந்து அவனைக் கவலைக்கடலில் வீழ்க்கின்றது. அவன் குதிரையும் விரைந்து நகர வாயிலை நெருங்குகின்றது. அங்கே உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் உதயணற் குண்டாக விருக்கும் துக்கத்தைத் தேற்றற்கு எதிர்நோக்கி நிற்கின்றனர். அங்குமிங்கும் மைந்தரும் மகளிரும் தலைவிரி கோலமாக அலமந்து வருந்துகின்றனர். அவருள் காஞ்சன மாலை வாசவதத்தையைத் தேடிக் காணாளாய், முகத்திலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு கோவெனக்கதறி, நாவலந்தண்பொழின8ண்ணாரோட்டிய காவலன்மகளே கண9ங்குழை மடவோய் 10மண்விளக்காகி வரத்தின்வந்தோய் பெண்விளக்காகிய பெறலரும் பேதாய். பொன்னே திருவே யன்னே11யரிவாய் நங்காய் நல்லாய் கொங்கார்12 கோதாய் வீணைக் கிழத்தீ வித்தகவுருவீ தே1னேர் கிளவீ சிறுமுதுக்2குறைவீ உதையணகுமரனுயிர்த்துணைத் தேவீ 3புதையழ லகவயிற் புக்கனையோவெனத் தீயிடைப்பட்ட மயில்போல அழுதுபுரண்டு துயர்கின்றாள். அவ்வாகுலத்திடையே உதயணன் கதுமெனச் சென்று காண்கின்றான். கலக்கம் மீதூர்கின்றது; உணர்வுமழுங்குகிறது. தான் இவர்ந்துநின்ற புரவியின் வழுக்கிப் 4பொறியறு பார்வையின் முடிமிசை யணிந்த முத்தொடுபன்மணி விடுசுடர் விசும்பின் மீனெனச் சிதற சாந்துபுலரா5கத்துத் தேந்தார் 6திவளப் புரிமுத் தாரமும் பூணும்புரள எரிமணிக்கடகமுங் குழையுமிலங்க வாய்மொழி வழுக்கி வரையின்விழுந்தே தேமொழிக் கிளவியிற்7றிறல் வேறாகி இருநிலமருங்கிற் பெருவலந் தொலையச் சோர்கின்றான். உடனிருந்த தோழர் அவனை யெடுத்து வேண்டும் உபசாரங் களைச் செய்கின்றார்கள். ஒருவாறு தெளிவு பிறக்கின்றது. தன் மலர்ப்போலும் கண்களை மெல்லத் திறந்து எழுந்து வாசவதத்தையின் பொருட்டு வாய்விட்டு அரற்றுகின்றான். 19. தேவிக்கு விலாவித்தது உணர்வுதலைக் கூடியரற்றும் உதயணன். இனித்தான் வாசவதத்தை யிறந்துபட்ட தீயிடைத்தானும் வீழ்ந்து இறத்தலே பொருளெனத் துணிந்து அதனை நோக்கிச் செல்கின்றான். உடனே தோழர்கள் முன்னின்று விலக்கலுற்று. 1அடங்காரடக்கிய அண்ணல்! மற்றுநின் கடுஞ்சினம் பேணாக்2கன்றிய மன்னர் 3கறுவுவாயிற் குறுதியாக இகப்ப4வெண்ணுத லேதமுடைத்தே ஆகிய தறியுமரும் பொருட் சூழ்ச்சி யூகியினல்லதையுதயண குமரன் உள்5ளமிலனென வெள்6ளைமைகலந்த புறத்தோருரைக்கும் புன்சொன் மாற்றம் அகத்தோர்க் கென்று மகஞ்7சுடலானாது ஆங்கமைந்நிலை யறிந்துமனங்கவலா தோங்கிய பெருங் 8குலந்தாங்குதல்கடனாப் பூண்டனை9யாகுதல் பொருள் மாற்றிதுவென உரைத்துத் தேற்றுகின்றனர். பெருங்கடல் நீர் மிகினும் கரையையிகவாதது போலத் தோழர் சொல்லிகவாத் தோன்றலாகிய உதயணன் அவர் சொல்வழி விலக்குண்டு நிற்கின்றான். ஆயினும் அவன் நெஞ்சம் வேறொன்றை விரும்புகின்றது. தோழரை1யிகவாத் தொடுகழற்குருசில் சூழ்வளை முன்கைச் சுடர்க்2குழைமாதர் மழைக்காலன்ன மணி3யிருங்கூந்தல் அழற்புகை சூழவஞ்சுவனணடுங்கி 4மணிக்கைநெடுவரை மாமலைச் சாரற் புனத்தீப்புதைப்பப் போக்கிடங்காணா 5தளைச் செறிமஞ்ஞையினஞ் சுவனள் விம்மி இன்னுயிரன்ன வென்வயின் 6நினைஇத் தன்னுயிர்வைத்த மின்னு7றழ் சாயல் உடப்புச்8சட்டக முண்டெனிற்காண்கம் 9கடுப்பழ லவித்துக் காட்டுமின் விரைந்தெனக் கேட்கின்றான். காவலர் பலர் தேடிப் பிணமொன்றும் காணப்பட வில்லையென்று சொல்ல உதயணனொழியானாய் மீளவுந்தேடச் சொல்லுகின்றான். உடனே உருமண்ணுவா, வஞ்சமனத்தார் சிலர் இறந்த குறைப்பிணங்காட்டி, "சாங்கியத் தாயும் வாசவதத்தையும் ஒருங்கே இறந்தனர் போலும்; இதில் மாயமில்லை" என்றுரைக் கின்றான். சிலர் ஆங்கே வெந்து கிடந்த அணிகலன்களைக் கொணர்ந்து உதயணற்குக் காட்ட, அவற்றுள் பொன்னரி மாலையைக் கண்ட அவன் மனம் கலங்கி, வெம்புகை சூழ்ந்து மேலெரியூர 10விளிந்தது நோக்கி யொழிந்தனையாகலின் நன்னுதன்மாதர் 11பின்னிருங்கூந்தல் பொன்னரிமாலாய்! பொருளிலை என்று புகன்று புலம்புகின்றான். அங்கே நெற்றிப்பட்டம் வீழ்ந்து கிடப்பக் கண்டு, மதிப்புறங் 1கவைஇய வானவிற்போல நுதற்புறங் 2கவவிமிகச் சுடர்ந்திலங்கும் சிறப்புடைப்பட்டம்! சிறியோர்போல இறப்புக் காலத்துத் 3துறப்புத்தொழில்துணிந்த வன்கண்மை பெரிதெனத் தன் கண்ணால் நோக்கமாட்டாது கலுழ்கின்றான். திலகப்பொட்டு சிதறிக்கிடப்பது கண்டு, 4பனிநாட்புண்ணியத் தணிபெறுதிங்கள் 5அந்தியுண்முளைத்த வெண்பிறைபோலச் செந்தீச் சிறுநுதல் மூழ்கத் 6தீந்து நிலமிசை மருங்கின் வீழ்ந்தனையோவெனத் திலகம் நோக்கிப்பலவுஞ் சொல்லி வருந்துகின்றான். சிறிது அண்மையில் காதணி வீழ்ந்திருப்ப, சிந்தை கலங்கிய உதயணன், வெண்மதிக்7கைப்புடை வியாழம்போல ஒண்மதி திகழவூசலாடிச் சீர்கெழுதிருமுகத் தே8ரணியாகிய வார்நலக்காதினுள் 9வனப்புவீற்றிருந்த நன்பொற் குழை! நீ நன்னுதல்மாதரை அன்பிற் 10கரந்தே யகன்றனை யோவென அவலிக்கின்றான். அவன் நினைவில் தத்தையின் தாமரைபோலும் கண்கள் முதலிய உறுப்புக்கள் தீயிடை வேகுவது போலும் காட்சிகள் எழக்கண்டு கதறிப்புலம்பு கின்றான். அவளுடைய பலவகை அணிகளும் தோளணிகளு இடையணி முதலியவை களும் நினைந்து வருந்துவோனுக்குப் பிரிவுத்துயர் மிக்கெழுகின்றது. அதனால் சிறிதும் அமையானாய் வாய்திறந்து மராஅந் 11துணரும்மாவின் றழையும் குராஅம் பாவையும் 12கொங்கவிழ் முல்லையும் 1பிண்டித் தளிரும் பிறவு மின்னவை கொண்டியான் வந்தேன் கொள்குவையாயின் வண்2டிமிர் கோதாய்! வாராய் எனத் தான் வேட்டஞ்செல்லத் தொடங்கிய காலையில் அவள் கூறியவற்றைக் கொண்டெடுத்துமொழிந்து நெஞ்சம் குலை கின்றான். மலைச்சாரலில் விரிசிகை பொருட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. உடனே, 3அணிவரைச் சாரலருவியாடியும் பணிமலர் கொய்தும் பாவைபுனைந்தும் திரு4விழை மகளிரொ டொருவழி வருவோய்! 5மருவில் மாதவன் மாசின்மடமகள் விரிசிகை வேண்டவேறுபடுவனப்பிற் 6தாமந்தொடுத்தியான் கொடுத்ததுதவறெனக் 7காமவேகங் கடுத்த கலப்பிடை முகத்தே வந்தோர் 8முசுக்கலைதோன்ற அகத்தே நடுங்கி 9யழற்படவெய்துயிர் தஞ்சியடைந்தவஞ்சில் தேமொழிப் பஞ்சிமெல்லடிப் பாவாய்! பரந்த கடுந்தீக்கஞ்சாது 10கரத்தியோ எனவும், அதற்கு முன் அவள் தன்னொடு காட்டிடை நடந்து வந்ததை நினைப்பவன். 11ஆயத்திறுதி அணிநடைமடப்பிடி கானத்தசைந்து தானத்திற்12றளர்ந்தபின் 13கரிப்புற்பதுக்கையும் கடுநுனைப்பரலும் எரிப்புள்ளுறீஇ 14யெஃகினியலவும் 1எற்காமுறலி னேதமஞ்சிக் கற்கால் பயின்ற 2காலவி சில்லதர் நடுக்கமெய்தி நடப்பது நயந்தோய் இடுக்கண்யான்பட என்னையும் நினையாது கடுப்3பழ லகவயிற் கரத்தியோ எனவும், அவட்குத் தான் வீணைகற்பித்த காலத்து அவள் கைவிரல் நரம்பின் மேலோடிச் சிவந்ததும் பிறவும் நினைந்து, படி4கடந்தடர்ந்த பல்களிற்றியானை இடியுறழ்முரசி னிறைமகன் பணிப்ப 5நூலமைவீணைக் 6கோலமைகொளீஇக் கரணம் பயிற்றினும் 7காந்தண் முகிழ்விரல் அரணங்காணா வஞ்சினபோலப் 8பயத்தினீங்காச் சிவப்புள்ளுறுவின அடைதற் காகா வாரழற்9செங்கொடி தொடுதற் காற்றத் துணிந்தவோ எனவும் பன்முறை சொல்லியும் அரற்றியும் அயர்ந்தும் உரற்றியும் உயிர்த்தும் விழுந்தும் எழுந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும் இரும்பிடி குழிப்படப் பெருங்களிறு வருந்துவது போல உதயணன் வருந்துகின்றான். இத்தனையும் கண்டிருக்கும் தோழர் ஒருவாறு தேற்றி, இது செறுநர் முன்னர்ச் சீர்மைபயவாதெனச் செப்புகின்றார்கள். அவர்களே ஆருணியரசனை யடுதற் பொருட்டுத் தேரும் புரவியும் யானையும் இளையரும் சித்தமுறச் செய்து, ஆருணியரசன் 10அடுதிறலாண்டகை அற்றமறியாச் 11செற்றச் செய்கையொடு மேல்வரவுண்டெனின் 12மீளிவாட்டிச் சென்று நெருங்காது 13பின்றியும்விடாது குன்றகமடுத்துக் 1கூழவணொடுக்கி யாப்பு2றநிற் கெனக் காப்புறுபெரும்படை திசைசெலப் போக்கி, உதயணற்குரைத்து அந்நெறிக் காவன கூறுமாறு வேண்டு மாற்றால் அவன் துன்பத்தைத் தீர்க்கத் தொடங்குகின்றார்கள். 20. சண்பையுள் ஒடுங்கியது தோழர்கள் இவ்வேற்பாட்டைச் செய்தவழியும் உதயணன் மனம் தெளிவின்றி வருத்தத்தே மூழ்கியிருப்பது கண்ட அறிவர் சிலர் அவன்பால் வருகின்றனர். அவர்கள் எடுத்துக்காட்டொன்றால் தம் சொல்லையவன் செவிகொளச் செய்து மேலே கூறுவாராய், தாமரைச் செங்கண் 1தகைமலிமார்ப காமத் தியற்கையுங் காணுங்காலை இறுதியிலின்ப மொடினியது போல 2உறுபயனீனாவுடம்பு முதற்புகுத்தலிற் பெறுபயமிதுவெனப் 3பேணார் பெரியோர் வெற்றித்தானையொடு வி4சயம்பெருக்கிக் கொ5ற்றம் வேண்டாய் பற்றொடுபழகிய ஆர்வப்6 புனலகத் தழுந்துவையாயின் ஊர்கடல் வரைப்பி 7னாருயிர் நடுக்குறீஇப் பெரும் 8பேதுற்று விளியுமற்றதனாற் கரும்9பேர் கிளவிக் கனங்குழை10திறவயிற் 11கழுமிய காதல் கைவிடல் பொருளென உரைத்து அவன் கருத்தை மாற்றித் தெளிவிக்கின்றனர். உதயணன் ஒருவாறு தெளிந்திருக்கின்றான். இந்நிகழ்ச்சிகளை அவ்வப்போதறிந்து போந்து யூகி வாசவதத்தைக்கு ஒன்றும் விடாது உரைத்து வருகின்றான். இந்நிலையில், "நாம் இனி இங்கிருப்பது பொருளன்"றெனமொழிந்து, தத்தை, சாங்கியத்தாய் இருவரையும் அழைத்துக் கொண்டு போகலுற்ற யூகி, தம்மை ஒருவரும் அறியா வகையில் மறைத்தல் வேண்டி, மாற்றுருக்கொள்ளும் மருந் தொன்றை நல்குகின்றான். அதனை மூவரும் உண்டு. அந்தணர் உருவம் அடைகின்றனர். அந்தண வுருவொடு சந்தனச் சாரற் பெருவரையடுக்கத் தருமைத்தாகிய கல்1சூழ்புல்லதர் மெல்லடி யொ2துங்கிப் பிரிவுதலைக் கொண்ட வெரி3புரைவெந்நோய் தலைமை4நீரிற் றண்ணெனத் தெளித்து முலைமுதற் கொழுநன் நிலைபெறவேண்டும் உள்ளவூர்தியூக்கம் பூட்டக் கள்ளக்5காதனாங் கினளாகி இமிழ்6வினை விச்சையினிடுக்கட்பட்ட மகிழ்மணி நாகர்மடமகள் போல யூகிநீதியிற் பேதை7 பிணிப்புண்டு அவன் செல்லவேண்டுமென்ற இடம் நோக்கிச் செல் கின்றாள். சிறிது தூரம் சென்றதும் முனிவருறையுமொரு தவப்பள்ளி காணப்படுகிறது. அதன்கண் முனிவர்களும் மகளிரும் குழீஇயிருக்கின்றனர். அதனை இம்மூவரும் அடைந்து அங்கே தங்குதற் கெண்ணி, உள்ளோரையுசாவி, அப்பள்ளியிலிருந்து தவம்செய்யும் முனிவரன் உருமண்ணு வாவின் தந்தையென்றறிந்து அவற்குத் தம்மை இன்னாரெனத் தெரிவித்து அங்கே உறைகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் பள்ளிகளும் ஊர்களும் மலைகளு பிறவும் கடந்து செல்கின்றார்கள். இடையிடையே தம்மை வினவுவோர்க்குச் சாங்கியத்தாய், தாம் சேய்மையிலுள்ள பள்ளிகளையும் ஊர்களையும் தமக்குரிய இடமாகச் சொல்லி, தாம் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்றுரைத்து, வாச வதத்தையைப் பற்றிக் கூறுமிடத்து, நாட்ட1வொழுக்கொடு நன்னுதலிவளை 2வேட்டோன் விட்டுக் காட்டகநீந்திக் 3குண்டுநீர்க்குமரித் தெண்டிரையாடிய போயினனென்னும் பொய்ம்மொழி கூறுகின்றாள். இவ்வாறு இவர்கள் சென்று கொண்டிருக்கின்றா ராயினும், உடனுக்குடன் இவர்கள் நிலை உருமண்ணுவா முதலிய தோழர்கட்குத் தெரிவிக்கப் படுகிறது. இதற்கிடையே காஞ்சன மாலையாகிய தோழி வாசவதத்தையைக் காணாது வருந்தும் பெருந்துயரைக் கண்ட உருமண்ணுவா, இனி இவள் தத்தையைக் காணாளாயின் உயிர் தரியாளென்பதையுணர்ந்து அவளை யழைத்துக் கொண்டு போந்து இவர்களுடன் கூட்டிவிட்டுச் செல்கின்றான். சின்னாட்குப்பின் யூகி, ஏனை மூவரோடெண்ணி இனி நாம் சென்று எங்கே தங்குவதென்றாராய்ந்து 4பற்றாராயினு 5முற்றாராயினும் 6ஒற்றுவருளரெனி 7னற்றந்தருமென மற்றவ 8ணொடுங்கார் மறைந்தனர் போகி உருமண்ணுவாவின் தந்தையாகிய முனிவற்குத் தோழனாகிய விசயலானிருக்கும் அங்கநாட்டுச் சண்பை நகர்க்குச் செல்வதெனத் துணிந்து அது நோக்கிச் செல்லத் தலைப்படுகின்றனர். அவர்கள், பெரும்புனற் கங்கைபெருவளம் கொடுக்கும் அங்கநன்னாட்ட9ணிபெறவிருந்தது எங்குநிகரில்ல தெழிற்10கிடங்கணிந்தது பொங்குமலர்நறுந்தார்ப்புனைமுடிபொற்கழற் விச்சாதரருந் தேவகுமரரும் அச்சங் கொள்ள 11வாடுகொடி நுடங்கிச் 12சத்திக் குடத்தொடு தத்துறலோம்பி விளங்குபு துளங்கும் வென்றித்தாகி அளந்து வரம்பறியா 1வரும்படையடங்கும் வாயிலும் வனப்புமேவிவீற்றி ருந்து மதிலணி தெருவிற் றாகிமற் றோர்க் 2கெதிரில் போக மியல்பமைமரபொடு குதிரையுங்களிறுங் கொடுஞ்சித்தேரும் அடுதிறன்மள்ளரும் 3வடுவின்றுகாப்ப நெடுமுடி மன்னருண் மன்னனேரார் கடுமுரணழித்த காய்சினநெடுவேற் 4படுமணியானைப் பைந்தார் வெண்குடை உக்கிர குலத்து ளரசருளரசன் 5விற்றிறற் றானை விசயவரனெனும் நற்றிறன் மன்னனாளுங் காக்கும் சண்பைப் பெருநகர்க்குச் சென்று சேர்கின்றனர். அங்கே மித்திர காமனென்னும் செட்டிப் பெருமகன் மனையில் தங்கு கின்றனர். அவனும் முட்டில் வாழ்க்கையனாய் இவர்களை ஏற்று ஆதரவுபுரிகின்றான். யூகி முதலிய நால்வரும் அங்கே இனிதிருந்து வருகின்றார்கள். இரண்டாவது இலாவாண காண்டம் முடிந்தது. மூன்றாவது மகத காண்டம் 1. யாத்திரையேகியது பாஞ்சால நாட்டரசனான ஆருணியென்பான் ஏயர் குலத் தார்க்கு குலப்பகைவனாதலின், விளக்கற்றம் பார்க்கும் இருள் போல உதயணனது அற்றம் பார்த்து அவனது கோசம்பிநகரைக் கைப்பற்றிக் கொண்டதோடமையாது. அவ்வுதயணன் யூகியை யிழந்தானென்பது கேட்டும், இலாவாண நகரத்தே தீக்கோளால் வாசவதத்தையையிழந்தானென்பது தெரிந்தும் இனி உதயணன் வலியழிந்தானாதலின், அவனால் விளையக் கூடிய பகைவினை "எழுமையின் இல்லை" யெனக் கருதி மகிழ்ந்து செருக்கால் மதில் காப்பிகந்து இருக்கின்றா னென்பதை உதயணன் ஒற்றரால் அறிகின்றான். மேலும், உருமண்ணுவாமுற்போந்து. "இனி, நாம் மகத வேந்தனுக்கு மருமகனாகி அவன்படைத்துணைகொண்டு பாஞ் சாலராசனை வெல்வதே பொருள்" எனவுரைக்கின்றான். இவ்வாற்றால் உதயணன் மனக்கலக்கம் தெளிவெய்துகின்றிலது. அவன் சாங்கியத்தாய் முதலாயினாரை நினைந்து, 1முன்னுபகாரத்து நன்னயம் பேணித் தன்னுயிர் கொடுக் குந்2தவமுதுதாயும் 3விறப்பினிற் பெருகியும் 4வறப்பினிற் சுருங்கியும் உறுதிநோக்கியுயிர்புரைகாதலோ டாழ்விடத்து தவுமரும்1புணைபோலத் தாழ்விடைத் தாங்கிச் 2சூழ்விடைத்துளங்கா உள்ளவாற்றலுறுபுகழ் யூகியும் 3அள்ளற் றாமரையகவிதழன்ன அரிபரந்த கன்றவம் மலர் கொடுங்கண் தெரிமலர்க் கோதைத் 4தேவியு மின்றித் 5தருமமுமத்தமுங் காமமுமிழந்தே இருநிலமருங்கி னிறைமைதாங்கி வாழ்தலி னினிதே6யாழ்தல் என்று உள்ளமழிந்து உருகுகின்றான். அன்றியும், இலாமயனென்னும் முனிவன் இருந்த கானவளமும் தீப்பட்டழிந்து போயிற்றென்பது கேள்வியுற்று "இனி குறி சொல்லற் குரியவரும் இல்லையே" என உதயணற்குக் கவலை மிகுகின்றது. அந்நிலையில் இசைச்சன் என்பான் உதயணனை நோக்கிக் கூறுவானாய், 7விச்சையின் முடியா விழுவினை யில்லெனல் பொய்ச் சொலென்பர் 8புண்மையோரே அற்றதாத8லிற்றுங் கூறுவென் கற்றதுங் கேட்டதுங் 9கண்ணாமாந்தர்க் 10சொற் கிடத்துதவு முறுவலி யாவது பொய்ப்பது போலு நம்முதற்றாகப் பற்றொடுபழகி 11யற் பழமுந்தி முடிவது நம்மைக் 12கடிவோரில்லை இல்லையாதலிற் சொல்லுவலின்னும் முடியாக் கருமமாயினுமுடியும் வாயின் 1முற்றித்துவயங்காதாயினும் 2சாவினும் பழியார் சால்புடையோரென 3மல்லற் றானைமறங்கெழுமன்னவன் செல்வப் பாவை சென்றினிது 4பிறந்துழி இம்மை யாக்கையி னியல்பினளாகத் தன்மையிற் றரூஉந்5தாழாப் பெருவினை 6உட்குடைவிச்சை யொன்றுண்டதனைக் கற்றுநனி நவின்ற கடனறியந்தணன் இருந்தினி துறையு மிசைகிரியெனும் 7பொருந்தரு வியனகர்ப்புக்கவற் குறுகி ஆற்றுளிவழிபாடாற்றி யமைச்சனொடு பூக்குழை மாதரை 8மீட்டனம் கொண்டு பெறற் கருவிச் சையுங்9கற்று நாமெனத் திறம்படச் சொல்லித் தெருட்டுகின்றான். உதயணன் வியந்து, "என்னே! அன்னவும் உளவோ?" என்று சொல்லி இராசகிரியம் செல்லவொருப்படுகின்றான். அவன் தோழர்களான இசைச்சன் முதலியோரும் தேர்ந்து கொள்ளப்பட்ட வீரர் நூற்றுவரும் வேற்றுருக் கொண்டு புறப்படுகின்றார்கள்; கையமைத்தியற்றிய கலிதங்கத் துணி அரையில் விளங்க, காலிற் செருப்பும் கையிற் குடையும் கொள்கின்றார்கள்; மடியில் இலவங்கம், ஏலம், கப்புரப்பளிதம், வெற்றிலை, பாக்கு முதலியன உள்ளன. அந்தணவுருக்கொண்டு செல்லுமிவர், சுருங்கச் சொல்லின், பட்டுச்10சுவேகமொடு பாடுப்புறமெழுதிய 11கட்டமைசுவடி பற்றியகையினர் புரி12நூலணிந்த பொன் வரைமார்பினர் விரிநூற்13கிரந்தம் விளம்பிய நாவினர் வாச1வெள்ளை வரைந்த கழுத்தினர் தேசந்திரிதற் காகிய வணியொடு செல்கின்றனர். முதற்கண் அவர்கள் எதிரே தாளகமலையும் அதனையடுத்த நாடும் காணப்படுகின்றன. அவற்றிற்குப்பின் காளவனம் கடந்து, தேவிக்குரிய கடன்களைக் கழித்துக் கீழ்த்திசை நோக்கிச் சென்று கருப்பாசமென்னும் கான்யாற்றைப் புனைதுணை யாகக் கடக்கின்றனர். இவ்வாறு அருஞ்சுரக்கவலையும் அடவியும் ஆறும் கடந்து செல்லுங்கால். உதயணன், கானத்தே மான்முதலிய கூட்டங்களைக் காண்கின்றான்; வாசவதத்தையை நினைந்து வருத்த முறுகின்றான். மானை நோக்கி, இனத்திற் கெழீஇய வின்ப மகிழ்ச்சியொடு புனத்திற் போகாது 2புகன்று விளையாடும் மான்மடப்பிணையே! வயங்கழற்பட்ட தேனேர் 3கிளவி சென்ற வுலகம் அறிதியாயின் யாருமங்கே குறுகச் செல்கங் கூறாய் என்கின்றான். அடுத்துச் சிறிது சென்றதும் வரையிற் பாறைமேனின்று தன் தோகையை விரித்து மயிலாடுவது காண்பவன், அருகே ஆண்மயில் காவல் செய்யப் பெடைமயில் தன் பீலியைக்கோதி மெல்லநடப்பது கண்டுதத்தையை நினைந்து, கண்கலுழ்ந்து. அரும்பெற4லிரும் போத்தச் சங்காப்ப மதநடைகற்கு மாமயிற் பேடாய்! சிதர்மலர்க் கூந்தல் செந்தீக்கவர மயர்5வனள் விளிந்தவென் வஞ்சி6மருங்குல் மாறிப் பிறந்துழி மதி7யினாடிக் கூறிற்குற்றமுண்டோ எனவும், ஆண்புறா வொன்று நுண்பொறி வெண்சிறையொடு விளங்குவது கண்டு, வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழியஞ்சப் 1பஞ்சுர வோசையிற் பையெனப்பயிரும் வெண்சிறைச் செங்கால் நுண்பொறிப் புறவே! நுண்சிறுமருங்கு னுகர்2வின் சாயற் பாசப்3பாண்டிற் பல்காழல்குலென் வாசவதத்தையுள் வழியறியின் ஆசைதீர வவ்வழியடைகேன் உணரக்கூறாயாயிற் பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லாதெனவும் பூத்தோறும் சென்று தாதுபடிந்துண்ணும் வண்டினங்களை நோக்கி, பசைந்து4ழிப் பழகல் செல்லாது பற்றுவிட் டுவந்துழித் தவி5ரா தோடுதல் காமுறும் இணையோ ருள்ளம் போலத் தளையவிழ்ந் தூது மலமொழியத் 6தாது பெற நயந்து 7சார்ப்புன மருங்கி னார்த்தனைதிரிதரும் அஞ்சிறையனுகாற் செம்பொறிவண்டே எனச் சொல்லி வருந்துகின்றான்; தென்றலைநோக்கி, பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச் சந்தனச் சோலைதொறுந் தலைச் சென்றாடி 8அகம்பிவரடைகரைப் பகந்தோ9 டுளரிச் 10சுள்ளிவெண் போது கரும்புண 11விரித்து ம12ணிவாய் நீலத் தணி முகை யலர்த்தி ஒண்பூங் காந்த ளு13ழக்கிச் சந்தனத் தந்த ணறுமல ரவிழ மலர்த்தி நறுங் கூதாளத்து நாண்மலரளைஇக் குறுந்தா1ட்குரவின் குவிமுகை 2தொலைச்சி முல்லைப் போதினுள்ளமி11ழ் துணாஅப் பல்பி டவத்துப் பனிமலர் மறு3கிப் பொற்றார்க் கொன்றை நற்றாது நயந்து சாத்து4 வினைக் கம்மியன் கூட்டுவினையமைத்துப் பல்லுறுப்ப டக்கிய 5பையகங் கமழ எல்லுறுமாலை யிமயத்துயர் வரை அல் 6குதற் கெழுந்த வந்தண் தென்றால்! தத்தையைஎவ்வழியானும் தேடிக் கண்டு அவள் மேனிமணத்தைக் கொணர்ந்து என் வருத்தம் களைவாயாக" எனப் புலம்பிக் கொண்டு, கண்டோர், அவலநெஞ்சமொடு அறிவு பிறிதாக வருந்தியவண்ணம் செல்கின்றான். அவன் தோழர் அவனை அவ்வப் போது தேற்று கின்றார்கள். இவ்வாறு சென்று மகத நாட்டு எல்லையையடைந்து உருவுகரந்து அதனுள்ளேயேகுகின்றனர். 2. மகதநாடு புக்கது மகதநாட்டெல்லைக்குட்புகுந்த வழியும் உதயணன் நெஞ்சில் வாசவதத்தை மாறிப் பிறந்திருக்கும் இடத்தைக் கண்டு அவளை மீட்டுப் பெறுவது பற்றிய நினைவே மீதூர்ந்து நிற்கிறது. அவனொடு வரும் உருமண்ணுவா, வயந்தகன், இசைச்சன் என்ற மூன்று தோழரும், விரிகதிர்த் திங்கள் வெ1ண்குடையாக ஒருவயிற் கவித்த லுற்ற வேந்தற் 2கருமையமைச்சர் பெருமலை யேறிக் கொண்டியாந்த ருதுங்கண் டனைதெளிகென 3நண்புணத் தெளித்த நாடகம் போலப் 4படைச் சொற்பாசத் தொடக்குள் qறீஇ அவனை யழைத்துக் கொண்டு செல்கின்றார்கள். மகத நாட்டு மருதவயல்களில் களமர் உழவுத் தொழில் செய்கின்றனர்; ஒருபால் கரும்புகள். இளமடல் விரிந்து எழிலுற்றுநிற்கின்றன; தாமரையும் ஆம்பலும் குவளையுமாகிய பல்வகைமலர்கள் விரிந்து விளங்க, வண்டினம் படிந்து தாதுண்டுபாடுகின்றன; கயங்களில் மூழ்கும் எருமைகள் கரும்பினை முருக்கி, செந்நெற் பயிரைச் சவட்டி, தாமரையை யுழக்கி, ஆம்பலைத் துகைத்துக் குவளையைக் குழைத்து, தவளைகளைக் கலக்கி, கமுகின் நிழலில் உறங்கி மன்றத்தயலே பரந்து செல்கின்றன. குறிஞ்சி நிலத்துக் குன்றுகளில் வீழும் அருவி களின் காட்சி காண்போருள்ளத்தைக் கவற்றுகின்றது. குன்றயற் பரந்த குளிர்1கொளருவி மறுவின் 2மானவர்மலிந்த மூதூர் வெ3றிது சேறல் விழுப்பமன்றெனக் கானவாழைத் தேனுறு கனியும் அள்4ளிலைப் பலவின் முள்ளுன டயமிர்தமும் திரடாண்மாஅத்துத் தேம்படுகனியும் வரைதாழ்5தேனொடு காஅய் 6விரைசூழ்ந்து மணியு முத்துமணிபெற வரன்றிப் பணிவில் பாக்கம் 7பயங்கொண்டு கவரா நிறைந்து வந்திழி தரும் நீங்காச் செல்வம் அவற்றிடைத் திகழ்கின்றன. இதனைச் சார முல்லைத் திணையுளது. இவ்வாறு மருதமும் குறிஞ்சியும் முல்லையும் இடையே விளங்க, பாலையும் நெய்தலும் இந்நாட்டிற்கு எல்லையாக இருக்கின்றன. சுருங்கச் சொல்லின், இந்நாடு, கோல மெய்திக் குறையாவுணவொடு துறக்கம்புரியுந் 8தொல்லையினியன்றது பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது சிறப்பிடையறாத 9தேசிகமுடையது மறப்பெருந்தகையது 10மாற்றோரில்லது விறற்புகழுடையது வீரியமமைந்தது உலகிற் கெல்லாந்திலகம் போல்வது அ11லகைவேந்த னாணை கேட்பது 12அரம்பு13மல்லலுங் 14கரம்புமில்லது செல்வப் பெருங்குடி சிறந்தணிபெற்றது நல்குர15வாளரை நாடினுமில்லது நன்பெ16ரும் புலவர் பண்புளி பன்னிய புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்தது என்று சொல்லிவிடலாம். இவையே யன்றி இவை போல்வனபிறவும் சிறப்பாகவுடைய இம்மகத நாட்டை உதயணன் முதலாயினர் சென்று சேர்கின்றனர். 3. இராச கிரியம்புக்கது மேலே கூறிய மகத நன்னாட்டிற்கு இராசகிரியம் தலை நகராகும். இதனைச் சுற்றிலும் பொய்கையும் வாவியும் கயமும் கேணியும் நல்கும் நீர்நலம் பொருந்தி, நறுமலர்க1ஞலியுறநிமிர்ந்த தொழுகிச் சாலிகவினிய கோலச் செ2றுவிற் செல்வங் கொடுத்து நல்3குதலறாஅ இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற் பல்குடித் தொல்லூர் புல்4லுபு சூழ உள்ளன. இவற்றைக் கடந்து செல்வோர், விண்ணிற் செல்லும் விளங்கொ5ளியவர்களை மண்ணிற் செல்வங் காணிய வல்விரைந் தடைதர்6மினென்னு மவாவினபோல 7வடிபடவியங்கும் வண்ணக் கதலிகைக் கூந்தலணிந்த வேந்து நுதற்சென்னிக் க8டியெயில் முதுமகள் காவலாக நின்று காட்சி நல்குவதைக் காண்கின்றனர். அப்பால் நிறைவளங்கவினிய மறுகிருபக்கமும் அந்திவானத் 9தகடு முறையிருந்த ஒண்கேழு10டுவினொளிபெறப் பொலிந்து கண்ணுறநிவந்த பண்1ணமைபடுகாற் கைவினைநுனித்த மை2தவழ்மாடத் தரும்3படைச் செல்வரமர்ந்தினி துறையும் பெரும்4படைச் சேரி திருந்தணியெய்திக் கைபுனை வனப்பினோர் பொய்கையாக இனிய தோற்றமளிக்கிறது. இச் சேரிநடுவே விளங்கும் நகரம் அழகிய தாமரை போல் தோன்றுகிறது. அதற்கு, கணிகர் உறையும் போகச் சேரி புறவிதழாக அமைந்துளது; அப்புறவிதழ் மருங்கி லுள்ள புல்லிதழாக, சால்பெனக் கிடந்த கோலப்பெருநுகம் 5பொறைக்கழிகோத்துப் பூண்டனராகி 6மறத்துறைப் பேரியாற்றுமறுகரைபோகி அறத் துறைப்7பண்டியசைவிலர்வாங்கி உயர்பெருங் கொற்றவனுவப்பினுங் காயினும் தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர் நன்பு8லந்தழீஇயமன் பெருஞ் செய்கைக் காரணக் கிளவிப் பூரண9நோக்கிற் பெருங்10கடியாளர் அருங்கடிச் சேரி உளது; அப்புற விதழருகே நல்லிதழாக வணிகர் தெருவும், அக விதழாக அந்தணர் சேரியும் இருக்கின்றன. அவற்றிடையே, இருநிலவரைப்பினெதிர்ப் போரின்றி 11அருநிலையுலகி னாட்சி12விறப்பினும் பெரும்படைக் கொற்றம் 13பீடழிந்து சுருங்கா அரும்படை மன்னராற்றலி னெருங்கத் தலைமையின் 14வழீஇய நிலைமை யெய்தினும் உற்றது முடிக்கு1முறுதிநாட்டத்துக் கற்றுப் பொருடெரிந்த 2கண்போற்காட்சி அருமதி யமைச்சர் திருமதிற் சேரி அல்லியாகவும், அரண்மனை அகத்துறையும் கொட்டை யாகவும் அமய நகரம் தாமரைப்பூவின் பொலிவுடைத்தாய் இருக்கிறது. அமையாச் செய்தொழில3வுணர்க்கடந்த 4இமையாச் செங்கணிந்திரனுறையும் அமராபதியு நிகர்தனக்கின்றித் துன்பநீக்குந் தொ5ழிலிற்றாகி இன்பங் கலந்த விராசகிரிய மென் றெண்டிசை மருங்கினுந் தன்பெயர் பொறித்த மன்6பெருஞ்சிறப்பின் மல்7லன் மாநகர் சாரச் சென்று அதன் வனப்பினைப் பார்த்துக் கொண்டே உதயணன் முதலாயினார் அதற்குட் செல்கின்றார்கள். 4. புறத்தொடுங்கியது இராசகிரிய நகரத்துட்புக்க உதயணனும் அவனுடைய தோழர்களும் வீரர்களும் ஆங்குள்ள யவனச்சேரி, எறிபடைப்பாடி, தமிழச்சேரி, கொல்லர்சேரி, மிலேச்சர் சேரி முதலிய சேரிகளையும், சித்திரசாலை, ஒட்டுவினைமாடம், கொட்டுவினைக்கொட்டில், தண்ணீர்ப் பந்தர், அறத்தியல் கொட்டில், அம்பலக்கூடம், யானைவட்டிடம், குதிரைவீதி, அரங்கம், கழகம், அறச் சோற்றட்டில், அம்பலச்சாலை, தேவகுலம், தேசிகப்பாடி, கடவுட்பள்ளி, வேள்விச்சாலை முதுலியவற்றையும் பார்த்துக் கொண்டே செல்கின்றனர். நகர்க்கு வடக்கின்கண் இட்டிகைப்படியமைத்த பொய்கை யொன்றுளது. அதனைக் கடந்து சென்றவளவில், வயலுந்தோட்டமுமயல்பல 1கெழீஇய தாமரைச் செங்கட் டமனிய 2விணைக்குழைக் காமன் கோட்டத்துக் கைப்3புடைநிவந்த இளமரக் காவி ளிணைதனக்கில்லாத் 4தூபத் தொழுக்கத் தாபதப்பள்ளி காணப்படுகிறது. அதனை உதயணன் முதலாயினார் தமக்கு இடமாகக் கொள்கின்றனர். அந்நகர்ப்புறத்தே சாகதுண்டன் என்ற ஓர் அந்தணனைக் கண்டு ஒருநாள், உதயணன் தோழர் வாச வதத்தையைப்பிரிந்து உதயணன் வருந்துந் திறமும் அவனை உய்வித்தற்குக் கூறவேண்டுவனவும் சொல்லி அவனை உதயணன் பாற் கொணர்கின்றனர். அவன்பால் உதயணன் யூகி வாசவதத்தை முதலாயினார். இறந்த செய்தியைச் சொல்லி அவர்களை மீளவும் பெறுந்திறமுரைக்குமாறு வினவுகின்றான். அருமதி யண்ணற் கவனிது கூறும்: 1இருமதி யெல்லை யியைந்த விரதமொ டிரக்கமின்றி யிருக்கல் வேண்டும் அத்துணை யிருந்தபினருங் காட்டகவயின் 2மொய்த்தழ லீமத்து முன்னர்க்காட்டிய 3தவாஅவன்பிற் றவமா4சாதனை போகிய பொழுதினாகிய நலத்தொடு மே5லையாகிய வடிவினளாகி மற்றவளடைவது தெற்றெனத் தெளியென அவன் வாசவதத்தையை மீளப் பெறும் திறத்தைச் செப்புகின்றான். கேட்ட உதயணன் பெருமகிழ்ச்சி கொள்கின்றான். அந்நிலையில் அவன் தோழர்களும் வியந்து, இருநிலம்புகுதலுமொருவிசும்ப்பிவர்தலும் வருதிரை நெடுங்கடல்வாய்6கொண்டுமிழ்தலும் மந்தரமேந்தலும் என்றிவைபிறவும் 7பண்டியல் விச்சைபயிற்றியமாக்களைக் கண்டுமறிதுங்கண் கூடாகச் செத் தோர்ப்புணர்க்கும் விச்சையொடுபுணர்ந்தோர்க் கேட்டுமறியலம் 8வீட்டருஞ்சிறப்பிற் புண்ணிய முடைமையி னண்ணினனாமிவன் ஒருதலையாகத் தருதல் 9வாயென 10உறுதிவேண்டியுருமண்ணுவாவும் மருவிய தோழரு மன்னனைத் தேற்றி மகதவேந்தனான தருசகன் என்பானொடு உதயணனைக் காதற் சுற்றமாக்கும் கருத்துக் கொண்டு அகநகர்க்கண் உறையாது மதிற்புறநகர்க்கண் ஒடுங்கியுறைகின்றார்கள். 5. பதுமாபதி போந்தது உதயணன் முதலாயினார் மேலே கூறியவாறு நகர்க்கண்ணே இருக்கையில் மகத நாட்டு இராசகிரியத்தார் மன்மதனுக்கு விழாவெடுக்கின்றனர். மகத வேந்தனான தருசகன் தங்கை பதுமாபதி யென்பவள் மன்மதனைவணங்கிவழிபடும் நோன்பு மேற்கொண்டு விழாநிகழும் ஏழுநாளும் காமன் கோட்டம் சென்று வழிபடும் மாண்புடையளாகின்றாள். இச் செய்தியை நகரவர்க்குத் தெரிவிக்கும் வள்ளுவன் வேழமீ தேற்றியமணி முரசறைந்து, 1புதுமலர்க் கோதைபுனையிருங் கூந்தற் பதுமாபதியெனும் பைந்தொடிக் கோமகள் கன்னியாயந்2துன்னுபு சூழ மதிற்புறங் 3கவைஇய புதுப்பூங்காவின் 4மகரவெல்கொடி5மகிழ்கணைக் காமற்கு நகரங் கொண்ட நாளணிவிழவினள் ஏழுநா டோறுங்கழுமிய காதலொடு வழிபா டா6ற்றிய போதருமின்றென ஆவணந்தோறும் தெரிவிக்கின்றான். விழாத்தொடங்கிய நகர மாந்தர் தத்தம் மனையும் தெருவும் பேரழகு செய்விக்கின்றனர். இடையறவில்லாக்கடைமுத னோறும் கை7வலோவியர் மெய்பெறவெழுதிய உருவப்பூங் கொடியொ8சியவெடுத்துத் தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும் பழமண னீக்கிப்புதுமணற்பரப்பி விண்மிசையுலகின் 1விழவமைந்தாங்கு மண்மிசை யுலகின் மன்னிய2சீர்த்தி முழவுமலி திருநகர் விழவுவினை தொடங்கப் பதுமாபதியும் தனக்கெனச் செம்மையுற வமைக்கப்பெற்ற வையம் தன் கன்னிமாடத்தின் வாயிலில் வந்து நிற்பப் போந்தேறுகின்றாள். அதனைக் கூன்மக ளொருத்தி கோல்கொண்டு செலுத்தலுறு கின்றாள். பிரம்பேந்திய கோற்றொழிலாளர் எதிரே செல்வோரை நோக்கி, நலத்தகுநங்கை போதரும் பொழுதின் 3விலக்கரும் வேழம் விடுதிராயின் 4காயப்படுதிர் காவலன் பணியென வாயிற் கூறிவழிவழிதோறும் காவல் புரிந்து செல்கின்றனர். வேறு சிலர் எதிரே அச்சம் தரும் உருவுடையாரையும் உருவுடைய பிறவற்றையும் விலக்குகின்றனர்: அறுபது வயதிற்கு மேற்பட்ட கஞ்சுகிமாக்களாகிய ஆடவர் பக்கத்தே காவல் செய்கின்றனர்: இந்நிலையில் அந்த வையம் காமன் கோயிலை வந்தடைகின்றது. 6. பதுமாபதியைக்கண்டது காமன் கோயிலின் வாயிலடைந்ததும், வலவனொருவன் போந்து பூட்டுவிட, வன்மகள் கீழேயிறங்கி, கஞ்சிகையை மெல்லத் திறந்துநிற்ப, பதுமாபதி கீழே யிறங்கு கிறாள். அப்போழ்தில், ஆங்கே நின்ற புன்னை மரத்தின் அடியில் குருக்கத்தியின் செந்தளிரைக் கையிற் கொண்டவனாய்த் தன்மனக்கினிய காதலியாகிய வாச வதத்தையை நினைந்து கவன்று கொண்டிருந்த உதயணன்பால் ஒருவன்போந்து "இங்கே இருத்தலாகாது, போமின் போமின்" என்று சொல்ல, "நீக்கச் சென்றனெ1னெருநலின்றிவண் நீக்கப்பட்ட னெனா தலி2னிலையா; ஆக்கமுங் கேடும் 3யாக்கை சார்வா 4ஆழிக்காலிற் கீழ் மேல்வருதல் வாய்மையாமென மனத்தினினைஇ" எழுந்து நீங்குகின்றான். அக்காலையில் கஞ்சிகை திறப்பப் பதுமாபதி வையத் தினின்றும் இறங்குவது அவன்கண்முன் நிகழ்கிறது. பதுமா பதியின் உருநலனும் வாசவதத்தையின் உருநலனும் வேற்றுமை சிறிது மின்றி ஒத்திருப்பதுணர்ந்து, சாகதுண்டக முனிவன்தான் தன் வாசவ தத்தையை இவ்வண்ணம் கொணர்ந்து காட்டுகின்றானோவென வெண்ணி மறுபடியும் அவளை நோக்குகின்றான். அவனுடைய, செஞ்சுடர்முகத்தே 5செருமீக்கூரிய வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ்6 நாகத்து தீயோரன்ன 1திறலவாகி முனையேர் 2முறுவன் முகிழ்த்த சின்னகை இளையோர் நெஞ்சிற் 3றனைமுதல் பரிந்தவர்க் கமிழ்தம் பொதிந்த வருளினவாகித் தலைபெருந் தாமரைச் செம்மலரன்ன 4நலத்தொடுபுணர்ந்த விலக்கண நெடுங்கண் அவளுடைய கண்களொடுகலந்து வெந்தொழிற் காமவேட்கையை விளைக்கின்றது. இருவர் உள்ளங்களும் ஒத்த உணர்வால் ஒன்றுபடு கின்றன. நெஞ்சுநிறையழிந்த பதுமாபதி, நன்னகர் கொண்ட 5தன்னமர் விழவினுள் கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித் தன்னலங் கதுமெனக்காட்டி யென்னகத் திருநிறை6யளத்தல் கருதிய தொன்றுசொல் அந்தணவடிவொடு வந்திவட்டோன்றி மேவன7நுகர்தற்கு மாயையினிழிதரும் தேவகுமரன் கொல்லிவன் தெரியேன் யாவனாயினுமாகமற்றென் காவனெஞ்சங்8கட்டழித்தனனென நினைந்து தன் படைக்கண்களை மலர்த்தி அவன் உருநல முற்றும் ஒருங்கு நோக்குகின்றாள்; 9உலைப்பருந்தானையுதயணகுமரற் 10கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப்பணைத்தோள் உரியவாயின வுணர்மி னென்றுதன் அரிமதர் நெடுங்கணயனின் னோர்க்கும் அறியக் கூறுதலமர்ந்தனபோல 11நெறியிற் றிரியாநிமிர்ந்து சென்றாடற் தளிர்போலும் மேனி பசந்துகாட்டுகிறது: உட்கும் நாணும் ஒருங்கு வந்தடைகின்றன: அன்னம் நாணநடந்து சென்று காமன் கோட்டத்துட் புகுந்து வழிபாடாற்றி. முதுமை மிக்க காஞ்சுகி மாக்களை நோக்கி, "அந்தணர் யாவரும் வருக: அவரை விலக்கன்மின்" எனப் பணித்து வந்தோர்க்குத் தானம்பலதானே செய்கின்றாள். அக்காலை ஒருத்தி, பலநாணோற்ற பயனுண்டெனினே 1வளமையும் வனப்பும் வண்மையுந்2திறலும் இளமையும் விச்சையும் என்றிவைபிறவும் 3இன்பக் கிழமையு மன்பேருலகினுள் யாவர்க்காயினு மடையு மடையினும் வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த வீணை விச்சையொடு 4விழுக்குடிப்பிறவரிது விழுக் குடிப்பிறந்திவ் வீறொடு விளங்கிய 5வழுக்காமரபின் வத்தவர் பெருமகன் உதயணகுமரனொ டொப்போன்மற்றிவள் 6புதை பூண் வனமுலைப் போகம் பெறுகெனப் பாடுகின்றாள். அது கேட்கும் பதுமாபதியும் "இன்று என்னால் நயக்கப் பட்டோன் அன்னனாகுக" எனஎண்ணிவழிபடுகின்றாள். சிறிது போதில் மாலைப் போது நெருங்கு கிறது. ஒருத்தி முற்போந்து, "மன்னவன்மகளே, ஞாயிறுபடாமுன் கோயில்புகுதல் முதனாள் விழாவிற் கியல்பு" என்கின்றாள். உடனே, பதுமாபதி தோழியர்சூழ, வையமேறி யரண்மனைக்குச் செல்கின்றாள்: அவள் நெஞ்சில் உதயணன்பாற் சென்ற காதல் மீதூர்ந்து நிற்கிறது. அவளிட்ட ஆணைப்படியே, 7இகலடு தானையிறை8மீக்கூறிய 9தவலரும் வென்றித் தருசகன்தங்கை கொங்கலர் கோதை நங்கைநம் பெருமகள் புகழ்தற் காகாப் 1பொருவில் கோலத்துப் பவழச் செவ்வாய்ப் பதுமாபதிதன் கன்னிநோன்பின் கடைமுடி விதனொடு முன்னி முற்று மின்ன தீமென 2நச்சுவனர் வரூஉ நான்மறையாளரை அச்சங் கொள்ளவகற்றன்மி னென்றுதன் ஆணைவைத்தகன்றனள் 3யாணரமைந்த விஃ தறிமினீரென முரசறையப் பெறுகிறது. அந்தணர்போந்து வேண்டுவனபெற்றுச் சென்ற வண்ணமிருக்கின்றனர். பதுமாபதிபால் பெருவேட்கை கொண்ட உதயணன் அவள் காமன் கோயிலைவிட்டகன்றதனால் கையற்றுவருந்தலுறுகின்றான். அப்போது ஆங்குநின்ற பதுமாபதியின் தோழியருள் ஒருத்தியான அயிராபதியென்னும் கூனியை நோக்கி, பதுமாபதியின் பெயர், குடிப்பிறப்பு, காவிற்குவந்த காரணம் முதலியவற்றை வினவுகின்றான். பொருணசையால், இவ்வந்தணன் வினவுகின்றானென நினைத்த அக்கூனி, அவள் வரலாறு கூறலுற்று, இன்பங் கலந்த விந்நகர்க் கிறைவள் தன்பெருமாட்டி 4தலைப்பெருந்தேவி 5சிதைவில் கற்பிற் சிவமதி யென்னும் பேருடைமாதர்க் கோரிடம் பிறந்த உதையையோடை யென்னுமொண்டொடி காசியரசன் காதலிமற்றவள் 6ஆசின்றுபயந்த வணியிழைக்குறுமகள் மதுநாறு தெரியன் மகளிருட் பொலிந்த பதுமாபதியெனப் பகர்ந்த பேரினள் 7துன்னருஞ் சிறப்பிற் கன்னிதானும் வயந்த8க் கிழவற்கு நயந்துநகர் கொண்ட விழவணி நாளகத் தழகணி காட்டி எழுநாள்கழிந்த வழிநாட்காலை வேதியர்க்கெல்லாம் வேண்டுவகொடுக்கும் போதல்வேண்டா பொருட்1குறைவுண்டெனின் ஏதமில்லை இவணி2ராமினென் றிந்நாட்டாரலிர் ஏனையர் போல்விர் எந்நாட்டெவ்வூரெக் கோத்திரத்தீர் யாமும் நும்மையறியப் போமோ 3வாய்மையாக மறையாதுரைமின்என்று வினவுகின்றாள். அவட்கு உதயணன், "நங்காய், காந்தார நாட்டுக்கு இரத்தினபுரம் தலைநகர். ஆங்கே சாண்டியனென்னும் அந்தணற்குமகன்: மாணகன்என்பது என்பெயர்: இந்நகர் காண வெழுந்த காதலாற் போந்தேன்" என்று சொல்லுகின்றான். அவளும் அவன்பால் விடைபெற்று நீங்குகின்றாள். 7. கண்ணுறு கலக்கம் அயிராபதி அகறலும் ஞாயிறும் மறைகின்றது; மாலைப் போது மெல்ல வருகிறது. முல்லைமலர, தாமரை முதலியனகூம்ப, மல்லிகையின் மணங்கமழ் தாதூதிய வண்டினம் கண்டுயில் கொள் கின்றன: ஆரல்மீனைக் கொணர்ந்த நாரைப்பெடை, அதனைத் தன் பார்ப்புக் களித்து இனிதிருக்கின்றன. வாடையும் வந்து எங்கும் குளிர் செய்கிறது. செங்கேழ் வானக்1கம்பலம் புதைஇ வெங்கணீரதாகி 2வேலிற் புன்கண்மாலை போழத் தன்கட் 3டீராக் கற்பிற் றேவியை மறந்து பேராக்கழற்காற் பெருந்தகைபுலம்பிப் 4பைவிரியல்குற்பதுமாபதிவயிற் 5கைவரைநில்லாக் காமவேகம் கனற்றக் கனன்று வருந்தும் உதயணன், பதுமாபதியைக் கனவிற் கண்டு கலங்கஞர் எய்தி "இனி இப்பதுமாபதியை எய்தும் வாயில் யாது கொல்" என்று எண்ணமிட்டுக் கொண்டே காவில் வதிகின்றான். அரண்மனையடைந்த பதுமாபதியும், நறுமலர்க் காவினுட்டு6றுமியபூந்துணர்க் கொடிக்குருக்கத்திக் கொழுந்தளிர்பிடித்து நாண்மலர்ப்புன்னைத் தாண்7முதலணைந்து பருகுவன்ன நோக்க மொடு1பையாந்து உருகுமுள்ளமொடொருமரனொடுங்கி நின்ற உதயணனைக் கண்ட காட்சியையே கனவிற்கண்டு கையற்று வருந்துபவள். அவன் புண்ணிய "நறுந்தோள் தீண்டும் வாயில்யாது கொல்" என்று எண்ணினவளாய் உறக்கமின்றி உருகியொழி கின்றாள். இருவயினொத்த 2வியற்கைநோக்கமொ டொருவயினொத்த 3வுள்ளநோயர் 4மல்லற் றானைவத்தவர் மன்னனும் செல்வப்பாவையும் செய்திறமறியார் வருந்தாநிற்ப,வெள்ளிமுளைப்ப விடியல் வருகிறது. பதுமாபதியின் உறக்கமின்மை உடல்மெலிவால் வெளிப்பட்டு விடுகிறது. 8. பாங்கர்க்குரைத்தது படுக்கைவிட்டெழுந்த பதுமாபதி, காலைக்கடன்களை முடித்துத் தெய்வம் பேணி நின்றாளாயினும், உதயணன்பாற் பிறந்த வேட்கையால் உள்ளம் சிதைந்து மெய்வேறுபட்டுத் தோன்று கின்றாள். அதனையுற்றுணர்ந்த செவிலி முதலாயினோர், படிநலப்1பாண்டியங்கடிதூர்ந்2துராஅய வையத்திருப்ப மருங்குனொந்தது கொல் தெய்வத் 3தானத்துத் தீண்டியதுண்டுகொல் பாடகஞ் சுமந்த 4சூடுறு சேவடி கோடுயர்மாடத்துக்கொடு 5முடியேற வாதக் கொப்புளொடு வருத்தங்கொண்டகொல் அளிமலர்ப் பொய்கையுட் குளிர்நீர்கு6டையக் கருங்கண்சிவப்பப் பெருந்தோணொந்தகொல் யாது சொல்நங்கைக்7கசைவுண்டின்றென ஆராய்கின்றனர். முடிவில் உண்மை சிறிதும் ஓராராய், "நாம் வையமேறி இளமரக்கா வுக்குச் சென்றுவருதும்" என்கின்றார்கள். "விழா முடியுங்காறும் வேந்தற் கறிவியாமலே யாம் வேண்டிடம் செல்லுதற்கு வேந்தன் ஆணையுண்டாதலின் அங்ஙனமே செய்க" எனப் பதுமாபதி பணிப்ப, வையம் வந்து சேர்கிறது. அனைவரும் காமன் கோட்டத்து இளமரக்காவுக்குச் சென்று சேர்கின்றார்கள். பதுமாபதி முன்னாள் உதயணனைக் கண்ட விடத்துக்குச் சென்று அவனைக் கண்டாற்போல மகிழ்வெய்துகின்றாள். சிறிதுபோதில் உதயணனும் அவண் போந்து அவளைக் காண்கின்றான். இருவருமியைந்து 1பருவரல் காட்டிப் புறத்தோர் முன்னர்க் 2குறிப்புமறைத்தொடுக்கிக் கருங்கண் டம்முளொ ருங்குசென்றாட வந்தும் பெயர்ந்து மன்றைக்3கொண்டும் காலையும் பகலு மாலையும் யாமமும் 4தவலருந் துன்பமொடு கவலையிற்கையற் றைந்நாள் கழிந்த பின்றை ஆறாம் நாள் பதுமாபதி தன்மனத்துள்ள வேட்கையைத் தன் தோழியாகிய அயிராபதிக்குத் தெரிவிக்கும் கருத்தினளாய் அவளைத் தழுவிக் கொண்டு நிற்ப, காவினுள்ளே உதயணனும் தன்மன வேட்கையைத் தன்தோழன் வயந்தகற்கு உணர்த்தும் குறிப்புடை யனாய் அவன் தோளைத் தழுவிக் கொண்டு நிற்கின்றான்; நிற்பவன் கையில் பூம்பந்தொன்று கொண்டு உருட்டிய வண்ணமிருக் கின்றான். அச்செய்கையைக் காணும் பதுமாபதி அயிராபதியை நோக்கி, "அந்தணவுருவொடு வந்துநிற்கும் அவன் யாவன்? அவனை நீ அறிதியோ" என்று வினவ, அவன் தான் முன்பு உதயண னைக் கண்டு சொல்லாடியறிந்த செய்தியைத் தெரிவிக்கின்றாள். உடனே, பதுமாபதி. பல்வகைமரபின் பந்துபுனைந்துருட்டுதல் 5வல்லவன் மற்றவன் கையிற் கொண்டது 6புறத் தோரறியாக்குறிப்பினுணர்த்தி நமக்கு 7வேண்டெனக் கூறுகின்றாள், அவளும் அவ்வண்ணமே போந்து, கையினும் கண்ணினும், இனியதுணர்த்தி அப்பூம்பந்தினைப் பெற்று வருகின்றாள். அவள் குறிப்பினுணர்த்திய வகையால் பதுமாபதியின் உள்ளம் தன்பால் தாழ்ந்திருத்தலை உதயணன் உணர்ந்து கொண்டு, வயந்தகனைப்பார்த்துக் கூறுவானாய், 1வள்ளிதழ்க்கோதை வாசவதத்தையை உள்வழியுணரா 2துழலுமென்னெஞ்சினைப் பல்லிதழ்க் கோதைப் பதுமாபதியெனும் மெல்லியற் கோமகண் மெல்லென3வாங்கித் தன்பால் வைத்துத் தானுந்தன்னுடைத் 4திண்பானெஞ்சினைத் திரிதரலொன்றின்றி என்னுழைநிறீஇத் 5திண்ணிதிற்கலந்த காமவேட்கையள் என்று உரைக்கின்றான். அது கேட்டுநிற்கும் இசைச்சன் என்னுந் தோழன் இடை புகுந்து, மன்னிய விழுச்சீர்மகதத்துமகளிர் 6நன்னிறையுடையர் நாடுங்காலை மன்னவனாணையுமன்னதொன்றெனாக் கன்னிதானும் 7கடிவரை நெஞ்சினள் 8வேட்டுழி வேட்கையோட்டாவொழுக்கினள் அற்றன்றாயிற் 9கொற்றங்குன்றித் தொடிகெழு10தோளி சுடுதீப் பட்டெனப் படிவநெஞ்சமொடுபார்ப்பன வேடம் கொண்டான்மற்றவன் கண்டோர் விழையும் வத்தவர் கோமானென்பதையறிவோர் 11உய்த்தவட்குரைப்ப வுணர்ந்தனளாகிப் பெறுதற்கரிய பெருமகனிந்நகர் குறுகவந்தனன் கூறுதல்குணமென நெஞ்சுநிறை12விட்டனளாகு மன்றெனின் 13ஈனமாந்த ரொப்பமற்றிவர் தானமேற்ற றகாஅ தென்றுதன் 1நுண்மதி நாட்டத்து நோக்கினளாமது 2திண்மதித்தன்றென மறுக்கின்றான்; ஏனைத் தோழரும் அவன் கூறியதனையே ஒட்டிப் பேசுகின்றனர். உதயணன் தன் கருத்து மாறானாய், அவட்கும் தனக்கும் கருத்தொன்றாயிருப்பதை அவர்கட்குத் தெளிவிக்கும் நெறியொன்றைநாடி, கண்ணியொன்று தொடுத்து, மலரினு மரும்பினுந்தளிரினும் வனைந்த 3சந்தக் கண்ணிதன் சிந்தையறியப் பூக்குழை மாதர் நோக்கி4டை நோக்கிப் ப5டுகாற் பொய்கைப் பக்கம் நிவந்த நறுமலர்ப் பொதும்பர் நாற்6றுவனம் போகி மறைந்தனமிருந்த காலைமற்றவள்என் கண்ணி கொள்ளிற் கலக்குமுள்ளம் திண்7ணிதாகுதல் தெளிமினீரென எடுத்துச் செப்புகின்றான். தோழரும் அதற்கிசைகின்றனர். 9. கண்ணி தடுமாறியது முன்பு தாங்கள் செய்த ஏற்பாட்டின்படி உதயணன் புன்னையும் ஞாழலும் மகிழும் பிறமரங்களும் பொருந்திய பொழிலகம்புகுந்து, வளங்கெழுவாழை யிளஞ்சுருள்வாங்கித் தாமரைப் பொய்கையுந் தண்பூங்1கேணியும் காமன்கோட்டமும் கடிநகர் விழவும் மாமலர்க் கோதை 2மடமொழியூரும் வையக்கஞ்3சிகை வளிமுகந்தெடுக்கவத் தெய்வப்பாவையைத் தேனி4மிர் புன்னைத் தாண்முதற் பொருந்தித் தானவட்கண்டதும் காமர் நெடுங்கண் கலந்த காமமும் இன்னவை பிறவும், தண்முதலாக உள்ளம் பிணிப்பவுகி5ரிற் பொறித்து வள்ளிதழ்க்கண்ணி வளம்பெறச்சூட அரும்பினும் போதினும் பெருந்தண்மலரினும் முறியினு மிலையினுஞ் செறியக்கட்டி ஞாழலின் சினையொன்றில் பதுமாபதி காணுமாறு தொங்கவிட்டுத் தானுந்தோழரும் ஒருபுறத்தே ஒதுங்கியிருக்கச் செய்கின்றான். சிறிது போதில் பதுமாபதி ஆயவெள்ளம் புடைவரப் பொழிலகம் வந்து சேர்கின்றாள். பொழிற்குள்ளே தாயரும் ஆயத்தவரும் அகலப் போகிய அமயம் நோக்கி யாப்பியாயினி யென்னும்பார்ப்பனத் தோழியுடன் பதுமாபதி அப்பொழிற்குள் ளேயிருக்கும் பொய் கைக்குள்ளே இறங்கி 1தாட்கொளெல்லையுள் வாட்கண் சிவப்பக் குளித்துங் குடைந்துந் திளைத்து விளையாடிக் கூட்டமை நறும்புகை யூட்டமைத் தியற்றிக் கண்ணெழிற்2கலிங்கந் திண்3ணென வசைத்துப் பாரமாகி நீரசைந்தொசிந்த 4காரிருங் கூந்தல் நீரறப்புலர்த்தி ஏற்பமுடித்துப் பூப்பிறிதணியாள் முத்துமாலை முதலியன பிறவற்றையுமணியாது, சிப்பப்பூணும் செம்பொற்காதணியும் ஏகவல்லியும் அணிந்து தாமரையெதிர்போது வாங்கிமற்றுத்தன் காமர் 5செவ்வியிற் காய்நலம்பெற்ற நாமமோதிரந்தாண் முதற்செறித்துப் புனைநறுஞ்சாந்தமும் துணைமலர்ப்6பிணையலும் மனநிறை கலக்கிய கனல்புரை7 நோக்கத்துப் பொன்வரை மார்ப னென்8னோயகலக் கொள்ளினன்றென வள்ளிதழ்க் கோதை மன்னவன் வைத்த சின்மென் போதுடன் நறுமலர்கமழ்சினை செறியச் சேர்த்தி மகிழ்கின்றாள். அக்காலையிற் பொழிலெங்கும் பல்வகை மலர்கள் நிறைந்திருப்பது கண்ட தோழியாகிய யாப்பியாயினி அவற்றுட்சில பறிப்பதற்க கல்கின்றாள். அரும்பெறற் றோழியுமகன்ற 9செவ்வியுள் விரும்புவனளாகி விண்ணவர் மருள வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த 10இலைவினைக் கம்மத்துப்பலவினைகண்டே தன்முத லாகலிற் சின்னகை முறுவலொடு பொற்பூண்முலைமிசை 11யப்புபுதடாஅக் 1கண்ணி கொண்டுதன் சென்னிசேர்த்தி ஒருங்கு கலந்தனள் போற்றிருந்தொளிதிகழ்ந்து விளக்கமுற்று நிற்கின்றாள். அகலப் போகியிருந்த யாப்பியாயினி திரும்பி வந்து சேர்பவள் பதுமாபதியின் விளக்கமும் பொலிவும் வேறுபட்டுத் தோன்றக்கண்டு வியந்து பின்னின்று. நீயார் நங்கை நின்னே போலுமெம் 2சேயாள் நங்கை செல்வப்பாவை 3மாயோ டன்னை மலர்த்4தகைக்காவினுள் 5இன்னினிக் கெடுத் தேனன்னவள் கூறிய 6துன்னருந் தோட்டத்திற் 7றுளங்குவனளாகி 8வேறுபட்டனளென விம்முவனளிறைஞ்சிக் கூறாது நாணிய குறிப்பு9நனிநோக்கி நின் கட்கிடந்த 10நீரணியேஎர் என்கண்கவற்றிற் றென்றலோடியலி இருவரும் கையில் ஏனை யாயத்தவரும் தாயரும் வந்து சேரக்கூடி வேறொருபாற் சென்று சேர்கின்றனர். நிகழ்ந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த உருமண்ணுவா முதலியோர். "இனி, பதுமாபதி உதயணன் பாலாளாயினள்" எனத் துணிந்து மேலே செய்யத் தகுவனவற்றை ஆராயத் தொடங்குகின்றனர். பொழில் வழியே வரும் வயந்தகன், பதுமாபதி வைத்துச் சென்ற மாலையும் சாந்தும் மோதிரமும் கண்டு எடுத்துக் கொண்டுவந்து உதயணற்குத் தருகின்றான். அவற்றைப் பெற்ற உதயணன் வாசவதத்தை முதலா யினாரை உயிரோடே பெற்றான் போலப் பெருமகிழ்ச்சி கொண்டு பதுமாபதி யாடிய பொய்கையுட்டானும் இறங்கி நீராடி, மாலையும் சாந்தும் மேற்கொண்டு, மோதிரத்தையும் விரலிற் சேர்த்து இறும்பூது கொள்கின்றான். பக்கநின்ற பொற்பூங் கோதையும் 1கண்ணுற நோக்கிச் சின்னகை முகத்தினள் 2கண்ணிற் கூட்டமு மன்றிநம்முட் 3கண்ணியமாயினங் கவலலென்றுதன் நெஞ்சிகைத் தேய4ஞ்சில மிழற்றிக் குன்றாக் கோயிற் சென்றவள் சேர்ந்தபின் உதயணன் அன்றிரவு பள்ளி கொள்ளுமிடத்து வாசவதத்தையைக் காண்பது போலவும் அவள் அவண் பதுமாபதி வைத்த மாலையும் சாந்தும் கொண்டணிந்தது பற்றி யூருவது போலவும், பின்னர் அவளைத் தெளிவிக்க முயல்வது போலவும் கனாக்கண்டு மருள்கின்றான். 10. புணர்வு வலித்தது பொழுது விடிந்ததும் உதயணன் தான் கண்ட கனாவினைத் தோழர்கட்குத் தெரிவிக்கின்றான். அவர்கள் முற்றிழை1 யரிவை செற்றங்2 கொண்டனள் மற்றிவள்வைத் தமாலையுஞ் சாந்தமும் அணிந்ததை பொல்லாத ருளினை யினி3யிவட் கனிந்த காமங் கைவிடல் பொருள்என உரைக்கின்றார்கள். உதயணனோ வாசவதத்தைபாற் கொண்ட காதலை வேற்றோன் போல மறந்து பதுமாபதியையே விரும்பி நிற்கின்றான். தோழர்கள் அவனது விடாப்பிடியை யுணர்ந்து இஃது ஊழ்வினை போலும் என்று தெளிய. அவர்கட்கு ஆருயிரன்ன வென்4னற்புவார்கொளீஇக் காரிகை5மத்தினென் கடுவலி கடையும் வார்வளைத் தோளிவந்தனள் புகுதரு மாடம்புக்கிருந் தோ6டுகயலன்ன பெருங்கண்கோட்டி விரும்புவனணோக்கி நாணொடுநிற்கு நனி7நாகரிகம் காணலெனாயிற் கலங்குமென்னுயிரென 8உரப்போர் வென்றி உதயணகுமரன் இரந்து கூறுகின்றான். அவர்கள் பலபட ஆராயத் தொடங்கிய காலை, முதற்கண், இரவலருருவில் உதயணனை அரசன்பாற் செல்ல விடுப்பதென எண்ணியவழி. ஒருவர் முற்போந்து, அவ்வாறு செய்யின். நன்றுணர் மாந்தர் நாளைக்காலை இரவல ருருவொடு1புரவலற் போக்கி 2மாற்றோ ருட்கும் வேற்றுநாட்டகவயின் தாமு3முன்னராகி மற்றவற் 4கேமநன்னெறி யீதலாற்றார் காமங்கன்றிய காவல் வேந்தனைத் தம்மிற் றீர்த்து வெம்முரண்வென்றி மகதவன் றங்கை மணிப்பூண்வனமுலை நுகரவிட்டனர் நுண்ணறிவிலர் எனின் ஏதமதனா னிகழ்பவை யிவையென உரைக்கின்றார். அது கேட்கும் உதயணன், "அற்றேல், அது வேண்டா; அஃது ஆண்மையுமன்று" என்று விலக்கி, "அவன் புகுதரும் மாடத்துப் புகுதல் நன்றன்றோ" என்கின்றான். அதற்கு அவர்கள் விடையிறுப்பாராய், மற்றவள் புகுதருமாடம்புகினே குற்றம்படுவ கூறக் கேண்மதி காவலாளர் கடுகுபு வந்தகத் தாராய்ந் தெதிர்ப்ப5ரருநவையுறாது போரார்குருசில்! போதரவுண்டெனின் உருவமாதர் பெருநலம் 6பெறுதி நன்றா வெய்தும்; வாயிலவருனை என்றேயாயினு மிரவலனென்னார் வேண்டாவது என விதியிற் காட்டி மறுக்கின்றனர். மற்று, உதயணன் மனமோ அதனையே துணிந்து நிற்கிறது. மேலும் அவன் கூறலுற்று "அவள்புகுதரும் மாடத்துக் காவலர் அறுபது வயது கடந்த காஞ்சுகியராதலின், அவர்தம் கட்பார்வை என்னைக் கண்டறிதல் கூடாது" என்று அவர்கட்கு விளக்குகின்றான். "இதுவே செய்யத்தக்கது" என வற்புறுப்பானாய், உதயணன் தனக்குநிகரின்றித் தான்மேம்பட்ட 1வனப்பின் மேலும் வனப்புடைத்தாகிக் கலத்தொடு கவினிக் கண்கவர் வுறூஉம் நலத்தகு2தேற னாணா3டோறும் தலைப்பெரும்புயலாத் தனக்கு நசையுடையதைக் குலனுஞ்செல்வமு நலனு நாணும் பயிர்ப்புமுட்கு மியற்கை4யேரும் மடனுமன்பு மாசில்சூழ்ச்சியும் இடனுடையறிவு மென்றிவைபிறவும் 5ஒல்காப் பெரும்புகழ்ச்செல்வ முமுடைய பதுமாபதியின் பெருநலத்தை நுகர்வதே ஆண்கடன் என்று உரைக் கின்றான். முடிவில் அவர்கள் உதயணன் கருத்திற்கிசைதலும், மறுநாள் முதியவேதியன் போல் உருக்கொண்டு உதயணன் சென்று காமன் கோட்டத்தே மறைந்திருக்கின்றான். அங்கே பதுமாபதி வருதலும் அவள்முன் தன் இளநலம் தோன்றநிற்கின்றான். இரு வர்க்கும் காதல் கைகடந்து செல்கிறது. இருவரும் யாழோர் மணம்புரிந்து கொள்கின்றனர். பிறரறியாமல் உதயணன் வெளி வருகின்றான். 11. அமாத்தியர் ஒடுங்கியது உதயணனும் அவன் தோழரும் இனி நகர்ப்புறத்தே யிருத்தலால் பயனெய் தாமையுணர்ந்து அரண்மனைக்குள்ளே வேற்றுருக் கொண்டு செய்வன செய்து கருதிய கருத்தை முடித்தல் வேண்டுமெனத் துணிகின்றனர். ஒருநாள் உதயணன் கோயில் வாயிலோனைக் கண்டு நட்புற்று அரசனான தருசகற்கு விருப்ப மாவனயாவையென உசாவி, இடையறா நீரூற்றுள்ள இடத்தைக் காண வேண்டுமென்னும் வேட்கை அரசற்கு மிகுதியுமுள்ளது என்று அவன் கூறக் கேட்டறி கின்றான். அதன் மேலும் அவன் விரும்பு வனயாவை எனஉதயணன் வினவ, வாயிலோன், 1பயந்தோன் படைத்த படைப்பரும்2 வெறுக்கை இருந்துழி யி 3சையா னிகந்தயர்த் 4தொழிந்தனன் அன்னவை யறிநருளரெனி னவர்கட் கின்னுயிராயினுமீவனவனென மொழிந்து, "நீவிர் இவையறிந்துரைக்க வல்லிரோ?" என அவ் வாயிலோன் கேட்க, அவற்கு உதயணன், வாரி5ம ருங்கற வற்றினு மகவயின் நீர்வளஞ் சுருங்கா நெற்றி6த் தாரைக் கூவலும் பொய்கையுங் கோயில் வட்டத் தெவ்வழி வேண்டினு மவ்வழிக் காட்டும் ஞானவல்லியத் தரும் பொருணுனி7த்தனென் ஏனைநூற்கு மேதிலனல்லேன் கரந்துழி யறியவருங்கலவெறுக்கை வைத்துழிக் காட்டும் வாய்மொழி விச்சை கற்றுக்கை1போகிக் காணவும் பட்டது கொற்றவனிவற்றுக் குறையொன்றுடையது காணவு மமையுங் காணானாயினும் காவலாளனைக் கட்படலுறுவேன் காட்டுதல் 2குறை என்று சொல்லுகின்றான். வாயிலோனும் பெருமகிழ்ச்சியுடை யோனாய் வேந்தன் நல்லவையுள் இருக்கும் செவ்விகண்டு உதயணன் வரவைத் தெரிவிக்கின்றான். நாடுகாவலின் பயன் கற்றுவல்ல நல்லோரைக் காண்டல் என்னும் கருத்துடையனான தருசகன், பேரத்தாணி நீங்கித் தன் தனியத் தாணிக்கண் புலவர் நடுவேயிருந்து உதயணனை வரவேற்கின்றான். வேந்தன் திருமுன் கற்றவை பலவும் உதயணன் தெற்றெனக் காட்டத் தருசகன் கழிபேருவகையெய்தி தன் முன்னோர் வைத்த பொருட்குவையைப் பெறும் கருத்தினானதை இனிது தெரிவிக்கின்றான். உதயணனும் சிறிதும் தயங்காது சென்று வைத் தோன்மீட்டும் எடுப்பது போலப் பொருட்குவையிருந்த விடத்தைக் காட்டுகின்றான். அவ்வாறே அவ்விடத்தையகழ்ந்தபோது அவன் உரை பொய்யாவகையில் நிறைந்த விழுப்பொருள் இருப்பக் கண்டெடுத்து எல்லையில் இன்பமெய்துகின்றான் தருசகன். அதனால், அவன், 3ஆனாக்காதலோ டாருயிரன்ன தோழனாகித் தோன்றா4தோற்றும் ஞானம் நவின்ற நல்லோனிவனென எனைத்5திவன் வேண்டினு மீவன்என்றுதன் கோயிலின் கண்ணே யிருக்குமாறு வேண்டுகின்றான். உதயணனும் அவன் கருத்திற் கியைந்திருந்து வருகையில், இடையறா நீரூற்றுள்ள இடங்கண் டுரைக்குமாறு தருசகன் விரும்ப, உதயணனும் நன்கு ஆராய்ந்து, கன்னியங்கடிநகர் காண1வாவுடைய இளமரக் காவினுள் வளமைத்தாய நீர்நலனுணர்ந்து சீர்நலக்குருசிற் கெழுகோலெல்லையு ளெழுமிது நீர்மற் றன்றியுமதனது நன்2றிநாடின் நாவிற்கு மினிதாய்த் தீதற3வெறியும் தண்மையு நுண்மையுந்தமக்கிணையாவன தெண்ணீரெவ்வழித் தேரினு மில்லை புகழ்வரை4மார்பிற் பூந்தாரண்ணல் அகமும் பொழுதி னிகழ்வ கேண்மதி இருமுழத் தெல்லையுள் வரிமுகம் பொறித்த பொன்னிறத் தேரை போதரும் பின்னர் மும்முழத் தெல்லையுட் டெண்ணிறங் குயி 5ன்றது தோற்றமினிதாய் நாற்ற6மின்னாப் பருமண லுண்டது பண்ணுநர் வீழ உட்காரீன்ற வொருகோலரையின் எட்பூநிறத்தொடு கட்கா7முறுத்தும் விளங்க8றல் வெள்ளியின் வீசுறும் என்று அதன் உள்ளே புகுந்து கண்டவன் போலக் கூறுகின்றான். வேந்தன் பெருமகிழ்ச்சியுற்று ஏவலரை நீரூற்றகழுமாறு ஏவு கின்றான். உதயணற் குறுதுணையாக உருமண்ணுவா ஆங்கே மறைந்துறைகின்றான். ஏனை இசைச்சனும் வயந்தககுமரனும் பதுமாபதியின் தாயுறையும் கோயிலில் தருமநூல் முதலியன வோது வோராய் அமர்கின்றனர். மற்றைய வீரரும் தக்கவாறு மறைந் தொழுகுகின்றார்கள். 12. கோயில் ஒடுங்கியது உதயணனது காதற்கூட்டத்தைக் காமன் கோட்டத்திற் களவினிற் பெற்று மகிழும் பதுமாபதி அவனைத் தானிருக்கும் கன்னிமாடத்துக்கே கொண்டேகும் கருத்தினளாய் அதனை உதயணற்குத் தெரிவிக்கின்றாள். அவனும் அதற்கிசைந்து காமன் கோட்டத்தில் கரந்துறைகின்றான். பதுமாபதி கன்னிமாடத்தி லிருந்து வருபவள் முன்னே தமக்குள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி, தன் சிவிகையைக் காமன் கோட்டத்தின் வாயிலில் இறக்கித் தான் தங்குதற்கமைத்த கடிமனையின் வாயிலில் வைக்கும் படி பணிக்கின்றாள். ஏவலர் சிவிகையை அவ்வண்ணமே வைத்து நீங்குகின்றனர். பதுமாபதி கோயிலுக்குட் சென்று காமனை வழிபட்டபின் ஓரிடத்தே கரந்திருந்த உதயணனொடு கூடி யின்ப முற்றவள், வேறிடஞ்சென்று ஆங்கு வந்திருக்கும் வேதியர் பலர்க்கும் மிக்க கொடையினைப்புரிகின்றாள். சிறிதுபோதில் அவள் குறிப் பறிந்து போந்த யாப்பியாயினி. "பதுமாபதி தான் மேற்கொண்ட பட்டினி நோன்பால் உடல் வெம்மையுற்று நலங்குன்றினள்; நடத்தற்குமாகாது; கடிமனைவாயிலைச் சேரச் சிவிகையைக் கொணர்மின்" என்று சொல்லுகின்றாள். சிவிகை கொணரப் பெற்றபின், உதயணன் பிறரறியாதபடி சென்று சிவிகைக்குள் நுழைந்து ஒடுங்குகின்றான். பதுமாபதியும் அதற்குள்ளேறிக் கொள்கின்றாள். யாப்பியாயினி, சிவிகை பொறுப்பாரை நோக்கி, "நீவிர் இதனைக் கொண்டு பதுமாபதியுறையும் கன்னிமாடத்துள் பள்ளியறைவாயிலில் வைத்து நீங்குதல் வேண்டும்: செல்லுங்கால் இதனருகே ஒருவரும் நெருங்குதல் கூடாது" என்று கட்டளையிடு கின்றாள். சிவிகையும் அவ்வாறே சென்று கன்னிமாடத்தைக் குறுகுகிறது. கொடியணி1கோயில்க் குறுகலும் ப2டியணி பெருங்கடை காவலர் பெருமான்றங்கை கருங்கடை மழைக்கண் கனங் குழைப்பாவை முடித்த நோன்பின் நெடித்3த வகையறியார் இருளின் குற்றங் காட்டி நங்கைதன் உரிமையுள்4படுநரைக் கழறுவனராகி முழுநிலைக்கதவமகற்றி முன்னின்று தொழுத5கையர் புகுதுகென்றேத்த வாயில்புக்குக் கோயில் வரைப்பிற் கன்னிமாடத்து முன்னறை வைத்துச் சிவிகைபொறுப்போர் நீங்குகின்றனர். அவ்விடத்தே இனிய நிழல்தரும் மரங்கள் தழைத்துநின்று இருள்செய்கின்றன; காலமும் இருட்காலமாதலின்பேரிருள் சூழ்ந்து கொள்கிறது. பகலேயாயினும் பயிலா6தோர்கள் கவ7லை கொள்ளும் கடிநிழற் கவினி மாடெழுமைந்தரு மூடு சென்றாடா அணியிற் கெழீஇயமராடும் பனிமலர்8க்காவின் படிமை9த்தாகி இருளொடுபுணர்ந்தமரு10ள் வருமாட்சித் தன்னகர் குறுகித் துன்11னிய மகளிரை அகல்கயாவிரு மழலு மெனக்கென உரைத்து எல்லோரும் அகன்றபின் சிவிகையைத் திறந்து விடுகின்றாள். உதயணன் சென்று பள்ளியறையில் ஒடுங்குகின்றான். பதுமாபதியும் அவன் பின்னே சென்று சேர்கின்றாள். ஆங்காங்குத் தக்க காப்புக்கள் அமைக்கப் பெறுகின்றன. பேரி1னசயண்ணலும் பெருநலமாதரும் ஆரி2ருள் போர்வையாக யாவரும் அறிதற் கரிய மறையரும்3புணர்ச்சியொடு கரப்4பறை யமைத்துக் கைபுனைந் தோர்க்கும் உரைக்கலாகா வுறுபொறிக்5 கூட்டத்துப் புதவணி6 கதவிற் பொன்னரிமாலை மதலை மாடத்து மறைந்திருந்து இன்ப நுகர்வாராயினர். 13. நலனாராய்ச்சி விண்ணுறையும் தேவரும் விரும்பத்தக்க போகமகளிர் உறையும் பேருலகத்தைப் பெற்றோனைப் போல உதயணன் கன்னிமாடத்தேயிருந்து பேரின்பம் நுகர்ந்தொழுகுகின்றான். அக்காலையில் பதுமாபதி தன் தோழியை நோக்கி, இராசகிரியத்து அரண்மனை, கோயில் வட்டம், வாயில்மாடம், வஞ்சப்பூமி, இலவந்திகை, இளமரக்கா, உரிமைக்கொட்டில், படைக்கலக் கொட்டில், அவை மண்டபம், ஆடரங்கு முதலியவெல்லாம் விளங்க ஓவியம் வரைந்து தருமாறு பணிக்க, அவளும் அவ்வாறே சிறிதும் வழுவாவகையில் எழுதித் தருகின்றாள்.அதனை உதயணன் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு, தெளிதல் செல்லாத் தெ1வ்வ2னிவனெனின் அளியியற்3செங்கோலரசுமுதல்வவ்4வறும் எளிதெனக் கென்னுமெண்ணினனாகிப் பெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப் பலவெனும் நுண்பா னூல்வழி நன்கனநாடின் ஏத5மில்லையிது வெனத்தேறி மாதர் மாட்டுமகிழ்ச்சியொடு தெளிதல் நீதியன்றென நெஞ்சத் தடக்கிச் செருக்க6ய னெடுங்கண் செவ்விபெற்றாங் குறைதலை விரும்பியிருந்து வருகின்றான். அவன் கூட்டத்திற் பிரியா துறையும் பதுமாபதியும் பிறர் காண்டற்கரியளாகின்றாள். இருவரும் இவ்வாறு எழுநிலைமாடத்துயர்நிலத்திருக்க ஏனை மகளிர் கேட்போர்க் குரைத்தல் வேண்டி. வாட்க1ட்பாவைமருவற் கின்னாக் காட்சியளாகிக் கருதுவதெதுவெனின் 2வீயா நண்பின் வேத3மகளுழை யாழும் பாட்டுமவை துறைபோகக் கற்றல் வேண்டு மினியெனக் கற்பதற் கன்புடையருண்மொழிய4டைந்தோருவப்ப ந5ன்பலபயிற்றிய நாவினளாகி, 6அமிழ்தினன்ன வறுசுவையடிசிலும் இவனோ வருக வின்றுமுதலென ஏவுகின்றாள். அவ்வாறே யாவும் நடைபெறுகின்றன. எழுநிலை மாடத் துயர்நிலத்துப் பேரறைவனப்பும் கட்டிலமைதியும் கண்கவர் ஓவியங்களும் உரைப்போர் உரையளவிகந்து விளங்குகின்றன. அங்கே உருவொடுபுணர்ந்த உயரணைக் கண் பதுமாபதியுடன் இன்புற்றிருந்த உதயணன், நிலாமுற்றத்து நின்ற பளிக்கிடைப் பொழிந்த நிலாக்கதிர் பள்ளியறை முழுதும் வெள்ளொளி பரப்பித் திகழ, அதன் அழகிய காட்சி தன் கருத்தைக்கவர, ஓவியத்தின் பொலிவைக் கண்ணுறுகின்றான். தன்னோடுடனிருப்பவன் தன் பொலிவை நினையாது ஓவியத்திற் பார்வை செலுத்தியது கண்டு பொறாமையாற் கண் சிவந்து புல்லுக்கை நெகிழ்த்துத் தான் சூடியிருந்த மல்லிகைக் கோதையைப் பறித்துச் சிதறி; மணியதாம் துடிப்பப் புலவி மிகுந்து, 7சூட்டுமுகந்திருத்தி வேட்டு8நறுநீரின் மயிருமிறகுஞ் செயி 9ரறக்கழீஇக் கோனெய் பூசித் தூய்மையுணிறீஇப் பாலுஞ்சோறும் வாலி10தி னூட்டினும் குப்பைகிளைப்பருக் கோழி போல்பவர் மக்களென்று மதியோ ருரைத்ததைக் கண்ணிற் கண்டே னென்று கைந்11நெரித்துப் பிணங்கிக் கட்டிலினின்று கீழே யிறங்கிச் சினக்கின்றாள். கண்கள் கயலெனப் பிறழ்கின்றன; திருநுதல் வியர்க்கின்றது: முகம் நிறம் பெயர்கிறது. தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய் தம்மை நோயதல்லது பிறரை எள்ள1து நோவ வேதமுடைத்தெனச் சிலவாய சொற்கள் மிழற்றப்படுகின்றன. நெற்றியின் மேற் சுருண்டு கிடந்த கருமயிர் கண்கவர் வனப்புடன் அசைகின்றது. கண்களி லிருந்து நீர்த்துளிகள் வீழ்கின்றன: வெய்துயிர்ப்பால் மார்பகம் வீங்கிவீங்கி யடங்குகிறது. இதனைக் காணும் உதயணன் நிலை கலங்கி, "ஒருபிழையும் செய்திலேனே! ஏன் இத்துணைப்புலவி" என்று எழுந்து இரந்து நிற்கின்றான். இன்பச் செய்கைகள் பல செய்து காட்டினும் அவள் சிவப்பாறு கின்றாளில்லை. தனது ஒவ்வொரு செய்கையும் அப்பதுமாபதியின் சினத்தை மிகுவித்தல் கண்டு மருள்கின்றான். 2அரவு வாய்க்கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக் 3குரவுக்கதிர் வொப்ப மொன்றுமில்லை சிறியோர் செய்த சிறுமையுண்டெனினும் தரியாது விடாஅர் தாநனி பெரியோர் என்பது சொல்லி முதுகைத் தைவந்து கலங்கிய தோடணிந்து அணி கலங்களைத் திருத்துகின்றான்; நலங்களைப் பாராட்டுகின்றான்; "இச் சிற்றிடை இவ்வணிகலங்களின் பொறையாற்றாது மெலிகிறது; இதனை யெண்ணுகின்றிலை" எனத்தழுவினாளாக, பதுமாபதி, "பூண்டபூணொடு பொறையொன்றாற்றேன்; தீண்டன்மின், பெரும," எனவுரைத்துச் சிறிது நீங்கி நிற்கின்றாள். அக்காலையில் எழுநிலைமாடத்து உச்சியில் நின்ற சத்திமேலிருந்த கூகையொன்று குழறுகிறது. அது கேட்ட பதுமாபதி, நெஞ்சஞ்து4ட் கெனநெடுவிடைநின்ற காற்றெறிவாழை யினா5ற்ற நடுங்கி அஞ்சிலோதியாகத் தசைத்தர அச்ச1முயக்க நச்சுவனன் விரும்பி மெல்லியன்மாதரொடு மேவன2கிளந்து புல்லியுந்தனை3த்தும் புணர்ந்தும் பொருந்தியும் அல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும் "அமரராக்கிய வமிழ்தெனக் கிளையோள் தன்முளை யெயிற்றுநீர் தானென வ4யின்றும்" இன்புறுகின்றான். இவ்வாறொழுகும் நாட்களில், பதுமாபதி தன் உயிர்த் தோழியுடன் யுசாவி உதயணனது கல்வி நலத்தையாராய வேண்டுமென வெண்ணுகின்றாள். அவ்வாறே தோழியர் போந்து உதயணனை வணங்கி, "ஐயனே, நீவிர் நன்கு பயின்றன யாவை?" என்று கேட்கின்றனர்; அவர்கட்கு அவன், "யான் வேதவிழுப் பொருள் நன்கு ஓதியுள்ளேன்" என்கின்றான்; "அவை எமக்கு என்செய்யும்?" என அம்மகளிர் மேலும் வினவுவாராய், "யாழ்த் துறை வல்லிரோ?" என்று அறியலுறுகின்றனர். அவர்கட்கு உதயணன் முறுவலித் துரைப்பான், 5நீத்தவர் வேண்டிய 6துப்புரவல்லால் பார்ப்பன மாக்கள் 7பரிந்து பிறபயிற்றார் வேள்விக் குரிய 8கருவியாவும் வாளேர் கண்ணி! வல்லேன்யான்என இசைக்கின்றான். "கருவிநூற் கருத்துக்களுள் ஏதேனும் ஒன்று கூறலாமே" என அம்மகளிர் கேட்ப, "என் மனைவிக்குத் துன்பம் வந்த காலத்தில் அவள் தொழுது கேட்க, யான் குடமுழா விசைத்த துண்டு" என்கின்றான். மகளிர் நகைத்து, நீங்குகின்றனர். பின்பொரு நாள் பதுமாபதி பயிற்றும் யாழைக்கொணர்ந்து அவள் கையில் தருகின்றனர். அவள்அதன் உறையைக் கழித்துத்திவவை நிறுத்த முயல்கின்றாள்; அவளால் இயலவில்லை. அவள் அதனை உதயணன்பால் தருமாறு யாப்பியாயினிக்குக் குறிப்பாலுணர்த்த, அவளும் அவ்வாறே அவனிருக்குமிடம் அதனைக் கொண்டு சென்று காட்டி, "தாரோய்,இதனை வீணைக்கேற்ப விசைப்படுத்தி, திவவு முதலியவற்றைத் தானத்திருத்தித் தருக என்கின்றாள்." உதயணன்: குலத்தொடும் வாராக் 1கோறரும் விச்சை நலத்தகும டவோய்! நாடினை2யாகின் அலைத்தல் 3கற்றல்குறித் தேன்யான் யாப்பி: மற்போர் மார்ப! இது கற்கல் வேண்டா; வலியினாவது வாழ்கநின்கண்ணி தரித்தர4லின்றிய விவற்றை யிவ்விடத்து இருத்தலல்லது வேண்டலம் யாம்; உதய: அன்னதாயி னாமெனிற் காண்கம் பொன்னிழை மாதர் தருக. எனக்கேட்டலும்,அவள் தந்த யாழை நன்கு ஆராய்ந்து குற்றங் களைந்து, எதிர்ச்சிக் கொவ்வாமுதிர்ச்5சித்தாகிப் பொத்த6கத் துடையதாய்ப் புனனின்றறுத்துச் செத்ததாருச்7 செய்தது போலும் இசைத்திற னின்8னா தாகியதிது என இவ்வாறு சொல்லி யாழை நீட்ட, அவள் அதனைக் கொள்ளாது பதுமாபதியிடஞ் சென்று உதயணன் அவ்யாழைக் கொண்ட முறையும், கண்ட கருத்தும், நரம்பினை யெறிந்து இசையுணர்ந்த வண்ணமும் பகைநரம்பறுத்துச் செறித்த பெற்றியும் பிறவும் தெளிந்து "இவன் யாழறிவித்தகன், அறிந்தருள்க" என்று சொல்லு கின்றாள். அவட்குப் பதுமாபதி, "நீ மேலும் சென்று ஆராய்க" எனப் பணிக்கவும், அவள் மீளவும் உதயணன்பால் வந்து, "ஒரு பண்ணமை கீதம்பாடுதல் வேண்டுமென வேண்டு கின்றாள்". அவள் தன் கண் கிடந்த விச்சை யெல்லாமறிந்து கொண்டாளென்பதை உதயணன் உணர்ந்து கொண்டு, "நான் வல்லுநனல்லேனல்லேன்" என வுரைக் கின்றான். அவள், ஒருமனத் தன்ன வுற்1றார்த் தேற்றா அருவினையில்லென வறிந்தோர்கூறிய பெரு2மொழி மெய்யெனப் பிரியாக் காதலொடு இன்ப3மயக்க மெய்திய வெம்மாட் டன்புது ணையாக யாதொன்றாயினும் மறா4அதருள் என மிகவும் வேண்டுகின்றாள். இதற்குள் மாலைப்போதும் வருகிறது. ஞாயிறு மேலைக்கடலையடைகிறது; முல்லைமலர்கிறது. தண்கண் வாடை சாலேக வழியே வருகிறது. உதயணன் யாழைத்தழுவி, தான் பண்டிசைத்த கோடபதியை நினைந்து,அது பிரிந்த நாள் தொட்டு நரம்பு தொடாதிருந்த கைவிரலால் யாழ்நரம்பை ஏற்றியும் இழித்தும் தாழ்வும் நெகிழ்ச்சியும் முடுக்கு மூன்றும் முறையே தலையிடை கடை களிற்பொருந்த, மிடற்றிசையும் நரப்பிசையும் வேற்றுமை தெரியா வாறு பறவையும் நிழலும் போலப்பாட்டும் இசையும் படரப் பாடுகின்றாள். பாட்டிசையால் மயங்கி, மாடக்5கொடு முடி மழலையம்யுறவும் ஆடமை6பயிருமன்னமுங் கிளியும் பிறவும் இன்னன பறவையும் 7பறவாத ஆடுசிற கொடுக்கிமாடஞ் சோரக் கொய்ம்மலர்க் காவிற் குறிஞ்சி முதலாப் பன்மரமெல்லாம் பணிந்தன 8குரங்க 9மைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்து மெய்ம்மறப்ப ஏனோர்க் கிசைப்பி னேதந்தருமென மானேர் நோக்கி மனத்திற் கொண்டு கண்கவர்வுறூ உங் காமனிற் பின்னைத் தும்புருவாகுமித் 10துறை முறைபயின்றோன் இவளிற் பின்னை நயனு11ணர் கேள்வி வகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன் உதயணன் வல்லனென்று1ரைப்ப வவனினும் மிகநனி வல்லன் இத் தகை2மலிமார்பன் என்று பதுமாபதி அடங்காமகிழ்ச்சியளாகின்றாள். இவ்வாறு இசைவகையால் இன்புறுத்திய உதயணன் அவளோடு களவே மேற்கொண்டொழுகுகின்றான். 14. யாழ்நலந் தெரிந்தது உதயணன் வழங்கிய செவிச்சுவையமுதத்தைச் செவியார வுண்டு தேக்கெறியும் பதுமாபதியும் யாப்பியாயினியும் அவனது யாழ்ப் புலமை முற்றும் நன்கு அறிந்து கொள்ளும் கருத்தினரா கின்றனர். பதுமாபதியின் குறிப்பறிந்த யாப்பியாயினி, மறுநாள் உதயணனை யணுகி, மறையோம் பொழுக்கின்1மதலை கேண்மதி நிறையோம் பொழுக்கினில்லை முணரேம் ஒருபேருலகம் படைத்த 2பெரியோன் உருவுகரந் தொழுகலு லுண3ராராகக் கொன்றையம் பகங்காய் பெருக்கியும் பயற்றின் நன்று4விளைநெற்றினைச் 5சிருக்கியுங் குன்றா இன்றீங் கரும்பினைச் சுருக்கியும் விண்டலைத் துன்6னரம் விசும்பு நீட்டிய நெறியும் இன்னவைபிறவு மிசைவில7வெல்லாம் படைத் தோன்படைத்த குற்ற மிவையென எடுத்தோ8த் துரையினியம்பியாஅங் கியானை வணக்குமைங் கதியருவினை வீணைவித்தகத் த9வனினுமிக்கதன் மாணல முணரேம் மட10வியனிவனென நாணக்காட்டு நளித் 11தொழில் புரிந்தேம் மாணக்காட்டு நின்மாணா12க்கியரே மாயினேம் இனியென நயம்படவுரைத்துச் சொல்லாடுகின்றாள். பின்பு, தான் வைத்திருந்த யாழைத் தந்து இதனைச் செவ்வழி நிறுத்தித் தருக என்றலும், உதயணன் அதனை யாராய்ந்து, "இது செதுவல் மரத்தாற் செய்யப் பட்டது. அதனால் இஃது ஆகாது" என்று மறுக்கின்றான். வேறொரு மகர வீணை கொணர்ந்து, "இது பதுமாபதியின் வீணை"யென்று கொடுப்ப, அவன் "இது சிறிதும் குற்றமில்லதாயினும், இதன் நரம்புகள் நன்கு உலர்த்தப்படாமையின் முறுக்குக் கொண்டுள்ளன: வேறுநரம்பு கொணர்க" என்கின்றான். அவளும் சென்று வேறு நரம்பு சில கொணர, அவற்றை உதயணன் குற்ற முடையவென மறுக்கின்றான். அவளும் அவளைப் பணிந்து, "இவற்றின் குற்றத்தை எம்மனம் தெளியக் கூறுக" எனவேண்டி நிற்க அவனும், நன்னுதல்மடவோய் நன்றலமற்றிவை பண்ண1றச் சுகிர்ந்து பன்2னுதலின்மையும் புக3ரறவுணங்கிப் புல4வறலின்மையும் குறும்புரிக் கொள்ளாது நெடும்புரி5த்தாதலும் நிலமிசை விடுதலிற் றலைமயிர் தழீஇ மணலகம் பொதிந்த துகளு6டைத்தாதலும் பொன்னே காண் என முறுக்கவிழ்த்துக் காட்டுகின்றான். அவளும் வியந்து, "யாழும் பாட்டும் யாவரும் அறிவர்: அத்துறை முற்றும் கற்றுணர்ந்தோர் இவன் போல்வார் இல்லை"யெனவியந்துரைத்து நன்னரம்பு களைக் கொணர்ந்து தருகின்றாள். அவன் அவற்றை யாராய்ந்து யாழிலிட்டுச் செம்மை செய்து தருகின்றான். யாப்பியாயினி அதனைப் பதுமாபதி யிடந்தர, அவளும் இசைத்துப் பாடியின் புறுகின்றாள். இவ்வின்பத்தில் திளைத்திருக்கும் இருவரும், கோடுயர் மாடத்துத் தோ7டுயர் தீரக் குறிவயிற்8 புணர்ந்து நெறியிற் றிரியார் வாயினுஞ் செவியினும் கண்ணினு மூக்கினும் மேதகு மெய்யினு மோத9லின்றி உண்டுங் கேட்டுங்கண்டு நாறியும் உற்றுமற்றவை யற்றமின்றி ஐம்புலவாயிலும் தம்புலம் பெருக நாடோறும் இன்புற்று வருகின்றார்கள். 15. பதுமாபதியைப் பிரிந்தது உதயணன் காமன் கோட்டமிருந்த இளமரக்காவினுள் இருக்கை கொண்டானாயினும் பதுமையொடு களவொழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகிவருகின்றான். இவ்வாறு ஒரு திங்கள் கழிகிறது. தருசகன் தங்கையாகிய பதுமாபதியை மணத்தற்கு விரும்பிய கேகயத்தரசனான அச்சுவப் பெருமகன், பாசிழையு நன்கலங் களைப் பரிசமாக முன்னே செலுத்தி, தனக்குரிய சிறப்புடன் இராசகிரியம் போந்து தன்வரவைத் தருசகற்குத் தெரிவிக்கின்றான். தருசகனும் அச் செய்தி கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்று புரவியும் யானையும் தேரும் சூழ்வர அரசர்க்குரிய சிறப்புடன் சென்று எதிர் கொள்கின்றான். போது1பிணைத்தன்ன மாதர் மழைக்கண் நன்றொடுபுணர்ந்த நங்2கைமணமகன் இன்றிவண் வருமென வில்லந்தோறும் எடுத்த பூங்கொடி யிருங்3கண்விசும்பகம் துடைப்பபோல நடுக்க4மொடு நுடங்கத் தேர் செலத் தேய்ந்த தெருவுக ளெல்லாம் நீர்செல் பேரியாறு நீரிழிந்தாங்கு மக்கள் இடையறாது போக்குவரவு புரிகின்றனர். அச்சுவப் பெருமகன், தான்இவர்ந்து போந்த யானையினின்றும் இழிந்து தருசகனை வணங்குகின்றான். தருசகன் அவனைத் தழீஇக்கொண்டு தன் அரண்மனைக்குச் செல்கின்றான். நகரமெங்கும் பதுமாபதியின் திரு மணங்குறித்த பேச்சே நிலவுகிறது. அச்சுவப் பெருமகனும் இராசகிரியத் திற்றங்குகின்றான். 16. இரவெழுந்தது தருசகன் படை பொருள் முதலியவற்றால் மிக்கிருப்பதறிந்து அழுக்காறும் பகையும் கொண்டொழுகும் விரிசகன், அத்தின புரவேந்தனான எலிச்செவி, வாரணவாசி வேந்தனான அடவியரசு, அயோத்தியரசன், போதனபுரத்துப் புரவலனான மிலைச்சன், துவராபதியரசனான சங்கரவரசன், மல்லன், வேசாலி என்ற இவர்கள் தம்மிற்கூடி, 1சங்கமாகிவெங்கணை 2வீக்கமொடு பகைநமக்காகிப் பணித்துத் திறைகொளும் மகத மன்னனை3மதுகை வாட்டிப் புரிபல வியைந்த வொருபெருங்கயிற்றினிற் பெருவலி வேழம்பி4ணித்திசினாஅங் கிசைந்த பொழுதேயிடங்கெட மேற்சென் றருந்திறன்மன்னனை நெருங்கினமாகித் தன்னுடையானையும் புரவியுந்தன்5றுணைப் பொன்னியல் பாவையும் புனைமணித்தேரும் அணிகதிர் முத்த மருங்கலமாதியும் பணிமொழிச் செவ்வாய்க் கணிகை மகளிரொடு பிறவு மின்னவை முறைமையிற் றரினும் இருங்கண்6மாதிரத் தொருங்கு கண்7கூடிய கருமுகில் கிழிக்குங் கடுவளி போலப் பொரு8முரண் மன்னர் புணர்ப்பி9iடப்பிரிக்கும் அறைபோ1க்கமைச்சின் முறைபோக் கெண்ணினும் அங்கண் ஞாலத் தழகுவீற்றிருந்த கொங்கலர் கோதை யெங்கையைப் பொருளொடு தனக்கே தருகுவன் சினத்தினீங்கி ஊனங்2கொள்ளாது தானவட் பெறுகெனத் தேறுமாந்தரை வேறவண்விடுத்துத் தனித்3தர வொருவரைத் தன்பாற்றாழ்ப்பினும் என்னவாயினு மன்னது விழையா தொடுங்கியிருந்தே யுன்4னியது முடிக்கும் கொடுங்காற் கொக்கின் 5கோளினமாகிச் 6சாய்ப்பிடமாகப் போர்ப்படைபரப்பி வலிகெழு வேந்தனை வணக்குதும் எனச் சூழ்ந்து தெளிந்து படையுடனெழுந்து போந்து நகர வெல்லையை முற்றுகையிட்டுக் கொள்ளுகின்றனர். இச்செய்தி தருசகற் கெட்டு கிறது. எதிர்பாராவகையில் பகைவர் சூழ்ந்து கொண்டதனால் பெருங்கலக்கமுற்று அமைச்சரோடெண்ணி மாணகனுக்கு (உதயணனுக்கு)த் தெரிவிக்க நினைக்கின்றான். இதற்கிடையே அயிராபதி போந்து உதயணற்கு நிகழ்ந்துள்ள செய்தியைத் தெரிவிக் கின்றாள். உதயணனும் "இருதிங்களில் யான் போந்து பதுமாபதியை மணப்பேன்; அதுகாறும் பிரிவாற்றி யிருக்க" எனச் சொல்லிவிடுக் கின்றான். தானும் உருமண்ணுவாவும் இருந்து சூழ்கின்றனர். உருமண்ணுவா, போருண்டாயது கண்டு, "இதுவே வாயிலாக நம் கருமம் முடித்தல் கூடும்" மிகை எண்ணி, தன் தோழரொடு ஆராயலுற்று. 7கடுத்த மன்னரைக் கலங்கத்தாக்கி 8உடைத்தபின்றை யல்லது நங்கையை அடுத்தல் செல்லா னரசனாதலின் 9அற்றநோக்கியவர் படையணுகி வாணிக1வுருவினமாகிமற்றவர் 2ஆணத் தானையகம்புக் காராய்த் திரவிடையெறிந்து பொருபடையோட்டிக் கேட்போர்க் கெல்லாம் வாட்போர் வலித்தொழில் வளமிகுதானை வத்தவர்க்கிறையைக் கிளை3மை கூறியுளi4ம கொளீஇக் காவினுணிகழ்ந்தது காவலற் குரைப்பின் 5மன்றல் கருதிவந்த மன்னற் கொன்றுபு கொடாமையுண்டுமாகும் ஒன்றினனாயிற் பொன்6றுஞ் சிளமுலைத் தெரியிழை மாத ருரிமையினோடாள் அண்ணதாதலொருதலையதனால் பின்னருமதற்குப் பிற்பிற நாடுதும் இன்னே யெழுக என்று சொல்லியெழுகின்றான். தோழர் பலரும் உடன்வரச் சின்னச் சோலையென்னும் மலைச் சிகரத்தையடைந்து ஏனை வீரர்பலரும் வந்து சேருமாறு ஒருவகைப்பாட்டைப் பாடுகின்றான். அதனைக் கேட்டதும் அவரனைவரும் வந்து கூடுகின்றனர். அவர்களை நோக்கி, "பிரச்சோதனன் படையைச் சிதைத்தழித்து உங்கட்கு ஈண்டுச் சூழ்ந்து நிற்கும் பகைவர் படை காக்கைக் கூட்டமேயாம் மேலும், இவர்களை வென்றழித்துப் பதுமாபதியை மணந்து கொண்டாலன்றி நம்வேந்தனான உதயணன் தன் வருத்த மொழி யான்" என்று வற்புறுத்தி, "நாம் இப்போது வணிகர் உருவுடன் பொருள் பல கொண்டு படைக்கூட்டத்துட் புகுந்து அழிக்க வேண்டும் என்று சூழ்ந்துரைக்கின்றான். அவ்வண்ணமே படை பலவும் மறைத்துக் கொள்வதுடன் விரைப்பொருள்களும் உண் பொருள்களும் மருந்துகளும் மகளிர்க்குரிய பொருள்களும் பிறவும் தம்முடன் கொண்டு செல்கின்றனர். செல்பவர் பகைவர் படியணு கவும் இசைச்சன் ஒரு குதிரை மேல் வருகின்றான். அவனை அங்கே நிறுத்தி, வயந்தககுமரனைத் தாலாட்டுத் தலைவகைக் கொண்டு, பகைவேந்தரைக் கண்டு, வாழ்க்கொடு புணர்ந்த வாசி1வாணிகம் உழப்2பே மற்றிவ னொன்பதிற் 3றியாட்டையன் மண்டமர்த்தானை மகதமன்னனும் பண்டையன் போலானாதலிற்படையொடு தொன்னகர் வரைப்பக மெந்நகராக்க 4இருந்தனம் வலித்தனம்யாம் எனப் பலவகைப் பொய்ம் மொழிகளைக் கூறுகின்றனர். "பகை மன்னன் படைத்திறங்கண்டுகூறும் இவர்கள் யாவராயினும் நமக்குத் துணையாவர்" எனத் துணிந்த அப்பகைமன்னர் அவர்களைத் தம்பால் இருக்க விடுகின்றனர். வணிகருருவொடுவந்த உதயணன் முதலியோர், பாடி வீட்டளவும், விறற்படைவீரமும், வேந்தர் குறிப்பும் பிறவும் நன்கறிந்து கொள்கின்றனர். இரவு வருகிறது. நள்ளிரவில், உதயணன் வீரர், விரிசிகன்வாழ்க என்றும், அடவி வாழ்க வென்றும், மிலைச்சன், வாழ்கவென்றும், சங்கரன் வாழ்கவென்றும் சொல்லிக் கொண்டு வீரர்களைத் தாக்குகின்றனர். இவ்வாறு வத்தவன் கொண்டமா முர5சியக்கி 6அயிலிற்புனைந்த 7வெயில்புரையொள்வாள் உரீஇய கைய ராகி யொரீஇக் காவல் மறவரைக் கண்8படையகத்தே வீழ9நூறி வேழந் தொ10லைச்சி மலையெனக் கவிழ மாமறித்திடாஅக் கொலைவினைப் படைமாக் கொடியணி நெடுந்தேர் கெட்டழியப்படுக்கின்றனர். பகைவர் படைத்தொகை பலவும் அழியக் கண்டதும், வீரர் "வத்தவன் வாழ்க" என்று ஆரவாரிக் கின்றனர். அதனைக் கேட்டதும் பகைவர் உண்மை தெளிந்து, எம்வயின்எம்வயின் எண்ணினர் கோளெனத் தம்வயிற் றம்முளுந் தெளியாராகிப் 1பாடியிருங்கலம் பட்டுக்கிடப்ப நீடிருலகத்து நீங்குதல் பொருளெனச் 2செவி செவியறியாச் செயலினராகித் தமக்கு அரணாக அமைந்த மலையொன்றையடைகின்றார்கள். 17. தருசகனொடு கூடியது பகைவரை வென்று வெருட்டியோட்டிய உதயணன் தோழ ரான உருமண்ணுவா முதலியோர், "பகைவேந்தரை ஓட்டி விட்டே மாதலின், இனி பதுமாபதியை நம் உதயணற்கு மணம் செய்வித்தல் எளிதின் இயலும்" என்ற எண்ணமுடையராய் வருகின்றனர். தம்முள் இம்முடிபு பற்றி ஒருதுணிபுற்ற தோழர் வயந்தகனை நோக்கி, மகத மன்னற்1குகவையாகக் 2கோடாச் செங்கோற் குருகுலத்தரசன் 3ஓடாக் கழற்கால் உதயண குமரன் கோயில் 4வேவினுளாய் வளைப்பணைத்தோள் 5தேவி வீயத் தீரர வவல மொடு தன்னாடகன்று பன்னாடுபடர்ந்து புலம்பிவட்6டீர்ந்து போகிய போந்தோன் 7கலந்தீர் பெரும்புகழ்ச் சதானிக வரசனும் மறப்பெருந்தானை மகதமன்னனும் சிறப்புடைக்8கிழமை செய்ததையறிதலின் 9அகப்பாட்டாண்மையனல்லதை யிகப்பத் தாதலர் பைந்தார்த் தருசகமைக்கு 10வேறல னவனை வென்றியினீக்கி 1மாறுசெயற் கிருந்த மன்னனை 2யோட்டியது 3பண்ணி சாரமாகக் கண்ணுற்று 4முற்பாற் கிழமை முதலற வின்றி 5நற்கியாப்புறீஇப் போது நாமெனச் சிறந்த தோழர் சிலரொடு சென்று விரவுமலர்த் தாரோ 6யிரவெறிந்தகற்றினன் என்பது கூறென உரைத்து விருக்கின்றார்கள். வயந்தகனும் அவ்வாறே வீதியுள்ளோரெல்லாரும் அறியும்படி உதயணனே பகைவரை இரவில் வெருட்டி யோட்டினவன் எனப் பறையறைந்து சொல்கின்றான். வயந்தகனுரைத்து வரும் செய்தியைத் தருசகன் கேட்டு, அவனைத் தன்பால் வருவிக்கின்றான். வயந்தகன் வருகையில் கேகயத் தரசனான அச்சுவப் பெருமகனும் உடனிருக்கின்றாள். இருவரும் வயந்தகனைப் பேரன்புடன் வரவேற்க, வயந்தகன் நிகழ்ந்ததைச் சுருங்கவுரைக்கின்றான். கேட்டுப் பேரின்பமுற்ற தருசகன், உயர்ந்த நண்பேயன்றி நம்மொடுபுணர்ந்த 7கண்போற் கிழமைக் கலப்பு முண்டெனத் தானைநாப்பட் டானெடுத் துரைத்து 8வீணைநவின்ற விறல் வேலுதயணன் இவண் வரப் பெற்றேன்றவமிகவுடையெ னென்று சொல்லி, பகைவர் பெரும் படையைத்தாக்கிய வண்ணமும், போக்கிய வாறும், ஏதமின்றிப் போந்தவாறும் பிறவும் கேட்டுஇன்புறு கின்றான். உடனே, உதயணனை எதிர்கொள்ள வேண்டி நகரை யணிசெய்யுமாறு நகரமாந்தர்க்குப் பறையறைந்து தெரிவித்து, குலத்தால் தன்னோடு உதயணன் ஒத்தவனாதலின், அவன் தேவியைப் பிரிந்து வருத்தமுறும் இக்காலத்தே இன்பப் பொருள்களை முன்னே செல்லவிடுத்தல் முறையன்றெனத் தெளிந்து, அரசச் சுற்றமும் பிற நண்பரும் சூழ்வர, "இடுமணியில்லதோர் பிடி மிசையேறி"ச் செல்கின்றான். "உதயணன் வினைமேம்பட்டவன்; அதனால் அவனை உற்றானாகத் தெளிதல் நன்றன்று" எனச் சிலர் தருசகனைத் தடுப்ப, "நட்புக்கிழமையால் நம்பொருட்டாக, நம்மேல் வந்த பகைவரை வென்று வரும் ஒருவனை வேறெனக் கருதுதல் குற்றம்" எனத் தடுத்துரைத்த சான்றோர்க்குத் தருசகன் உரைத்து உதயணனை வரவேற்கின்றான். இருவரும் "அன்பிற் கலந்த இன்பக்கட்டுரை" பயின்று இன்புறுகின்றார்கள். பக்கம் நின்றோர் உதயணன் ஆற்றலையும் குடிப்பிறப்பின் தொன்மைச் சிறப்பையும் தம்முட்பேசிக் கொள்கின்றனர். பின்னர், தருசகன், உதயணனுடன், அவ்விடத் தினீங்கிச் சென்று, மணிக்கன்மண்டபத் 1தணித்தகவிருந்து 2தொன்று முதிர் தொடர்பேயன்றியுந் தோன்ற அன்றைக்கிழமையுமாற்ற 3வளைஇப் பள்ளிமாடமொடு கோயிலும் பாற்படுத் 4தெள்ளிவந்த வின்னா5மன்னரைப் போரடு வருத்தம் தீரப்புகுகென்ன வேண்டுவன அமைத்து அக்கோயிற்கண் உதயணனை இனி திருக்கச் செய்கின்றான். 18. படைதலைக் கொண்டது உதயணனுடன் இனிதிருக்கும்தருசகன் அவனின் இளையனா யினும் தரும நூல் பலவும் நன்கு பயின்றவனாதலின், அவனோடு அறநூல்களை யாராய்ந்து இன்புற்று வருகின்றான். இஃதிவ்வாறாக, உதயணன் தோழர்க்குத் தோற்றோடிய பகை மன்னர் அரணமைந்த மலையொன்றிற் கூடி தமது தோல்விக்குக் காரணம் யாதாமெனத் தம்முள் ஆராய்ந்து, வாணிகவுருவொடு வந்திடைப்புகுந்த வீரராகு வோர் வேறு திரிந்தொடுங்கி ஆரிருண்1மறை இயருஞ் சினமழித்தோர் 2போந்திலராதலிற் பொருத்த முடைத்தென வேந்தனில்3 வந்தோர் வினவுதல் வேண்டா அமர்மேற் கொண்டோர் யாரேயாயினும் தமராக் கருதித் தம் வயிற்றெளிதல் 4ஏல்வன்றென்ன மேலவை கிளவா 5இனிவஞ்சு முனிவரேயாயினு மற்றினித் தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவு 6முந்துறீஇ வஞ்சினம் செய்து வெஞ்சினம் பெருக மீட்டுத் தருசகனொடு பொருது அவனைக் கெடுத்தல் வேண்டு மென்று முடிபு செய்து, பெரும்படை தொகுத்துக் கொண்டு வருகின்றனர். முன்வரும் அவரது படை போந்து, கேகயநாட்டின், இலைக்1கொடிச் செல்வமொடுதலைப்2பரந்தோங்கிய கணைக்காலி3கணையுங் கமுகும் வாழையும் சினைப் பெருமாவும் பணைக்4காற் பலாவும் கொழுமுதற் றெங்கொடு முழுமுதறொலை5ச்சிக் கழனிவிளைநெற் கனையெரி கொளீஇ நாட்டை யழித்துப் பாழ் செய்கின்றனர். அதனை நாட்டு மக்கள் தருசகற்குத் தெரிவிக்கின்றார்கள். வேகமள்ளர் மீட்டுவந்திறுத்த வெங்க6ட் செய்தொழி றன்கட்கூறலும் மறுநோய்7மாக்களி னாழ்ந்த மனத்தன் செறு வேல் வேந்தன் செய்வதையறியான் கூட்டம் பெருக்கி மீட்டுவந்தனரெனின் ஆற்றலெல்லாமளந்த பினல்ல தூக்கமிலரெனத் தூக்க8மின்றி மனத்தினெண்ணி மற்றது க9ரந்து சினத்த நோக்கமொடு சீறுபுவெகுண்டு செருவுடை மன்னரைச் சென்று மேனெருங்குதும் பொருபடை தொகுத்துப் போதுக என்று ஏவுகின்றான். விருத்திகாரரும் வேறுண்டியது பெறும் உரத்தகையாளரும் ஒருங்கு வந்தீண்டுமாறு முரசறையப்படுகிறது. இதனையறிந்த உதயணன், தோழரொடு வேண்டுவதாராய்ந்து கொண்டு, வயந்தகனை நோக்கி, செருச் செய்தானைப் பிரச்சோதனன்றன் பாவையையிழந்து 10பரிவு முந்துறீஇ சாவது துணிந்தியான் சேயிடைப் போந்தனென் மன்னுயிர் ஞாலத் தின்னுயிரன்ன அடுத்த நண்புரைத் தெடுத்தனையாகத் தன்மேல் வந்த தாக்கரும் பொருபடை என்மேற் கொண்டனெனாகி முன்னே எறிந்தனெ1னகற்றி யின்பம் பெருகச் சிறந்தோர் செய்கை செய்தேனின்னும் மறிந்து வந்தனரேமாற்2றோரென்பது அறிந்தனெ னதன்மாட் டவ3லம் வேண்டா. என்னினா தற்கிசைகுவதாயிற் பின்னரறியப்பிற பொருள் வலித்தல் யான் சென்றி4ரியினஃ தறிகுநரில்லைத் தான்சென் றுறுவழித் தளர்ந்தகாலை மகத மன்னனை மலைந்5து வென்றாமென மிகுதிமன்னர் மேல்வந்து நெருங்கின் என்னா மன்னதின்னாத்6 தரூஉம் எடுத்து7நிலையரி தெனவேதுக்காட்டி என்குறையாக வொழிக வெழுச்சி தன்படை யெல்லாந்தருக வென்னொடும் அடற்8றொழில் யானைப் படைத்தொழில் பயின்றோர் எனைவ ருரைவரனைவரும் யானும் ஏறுதற்கமைந்த விருங்கவு9ள் வேழமும் வீ10று பெறப்பண்ணி விரைந்தனவருக தன்பாற் படைக்குத் தலைவனாகியோர் வன்பார் மன்னன் வரினு நன்றெனக் கூறினன் மற்றெங்கோ மகனென்றவன் தே11றக்காட்டிமா12று மொழிகொண்டு விரைந்தனை வருக எனச் சொல்லி விடுக்கின்றான். சொல்வன்மை மிக்க வயந்தகனும் அவ்வண்ணமே தருசகன்பாற் சென்று உதயணன்உரைத்ததை யுரைக்கின்றான். அவனும் மந்திரமாக்களொடு ஆராய்ந்து, உதயணன் உரைத்தாங்குச் செய்வதே உறுதியெனத் தெளிகின்றான். யானையும் புரவியுமமைந்த பெரும் படை பண்ணுமாறு தானைவீரர்க்கு ஆணையும் தரப்படுகிறது. பின்பு, தருசகன் உதயணன் கருத்தைத் தன் மைத்துனனான அச்சுவப் பெருமகற் குரைக்கின்றான். அவனும், முற்கிளை வேண்டுநர் மற்றவர்க்கியைந்த அற்ற1ந்தீர்க்கினது பிற்பயம் பெருகும் அற்று2மன்றிப் பற்றா3மன்னர் மேல் வந்திறுப்ப வேல்பல படையொடு மாயாதிருப்பிற் கிளை4யோமற்றிவன் வேற்றாளெனவு மாற்றாளெனவும் போற்றாமன்னர்புறஞ்5சொற்படுமெனக் கேகயத் தரசனும் சினந்6துபலவெண்ணிக் காவல் வேந்தனைக் கண்டுகை கூப்பி வானோர் பெரும்படைவந்த தாயினும் யானே யமையுமடிகளென்னை விடுத்தற் பாற்றென வேண்டுகின்றான்.அதுகேட்டு மகிழ்ச்சி மிக்க தருசகன். தன்படைத் தலைவனாக வெம்மொடே வன்படையாளன் வருக என்றனன் மாண்7டவத்தவராண்டகை; ஆதலின் நம் மேல் வந்த வெம்8முரண்வீரர் தம்மேற் சென்று தருக்கற9நூறுதல் வத்த வரிறைவனும் வலித்தனனவனோ டொத்தனையாகியு டன்10றமர் செய்ய வல்லையாயிற் செல்வது தீதன்று எனச் சொல்லி விடுக்கின்றான். போர்க்கு வீரரனைவரும் புறப்படு கின்றனர். அக்காலையில், தருசகன், வயந்தகனை நோக்கி, உற்றநண்பினுயிர் போலுதயணற் கிற்11றிது கூறுமதி: இளையோள் பொருட்டா வந்திவணி ருந்தவெந்தி12றல் வீரன் தன்னொடு வந்து மன்னரை யோட்டிப் போதரத் துணிந்தன னேத13மின்றி ஆகும் வாயிலெண்ணி யப்படை போக 1நூக்கல் பொருள் எனக்கூறி விடுக்கின்றான். நால்வகைப்படைகளும் பண்ணமைந்து புறப்படு கின்றன. கண்ணார்2தகையாகவுளிழி கடாத்தன மண்ணார் நுதலின மாசின்மருப்பின ஆற்றலமைந்தன நீற்பாற்3புறத்தன அமர்பண்ட றிந்தன வச்சமில்லன புகரில்4வனப்பின போரிற் கொத்தன கோலங் கொளீஇச் சீலந் தேற்றின வாகிய யானைகளும் இப்பெற்றியவாகிய குதிரைகளும், சீரிய வீரர்களும் உடன்வர, அருந்திறல் யானையமைந்தது நாடி இரும்பிடர்த்5தலையிற் பெருந்தகைமேல் கொள உயர்ந்த வூக்கத்து ருமண்ணுவாவும் வயந்தக குமரனும் வாய்மொழிந்தாய்ந்த உயர்ச் சி6யுள்ளத் திசைச்சனும் ஏனைத் தடவரை மார்பினிடவக னுளப்பட எந்நூற்7கண்ணுமிடம்பாடுடைய முந்நூற் றறுவர் மொய்த் தொருங்கீண்டி நமக்கே வெற்றியுண்டாமெனும் உள்ளத்தராய்ப் புறப்பட்டுச் செல்கின்றனர். முரசும் சங்கும் முருகும் என்ற பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. உதயணன் தன்னொடுவரும் படை சீரிய முறையில் அணிபெற்றுச் செல்லுமாறு, பவ்1வத் தன்னபடையமை நடுவண் 2வவ்வற் கெண்ணிய வத்தவரிறைவன் 3கெடலருஞ் சிறப்பிற் கேகயத்தரசனும் உட4லுநர்க் கடந்த வுருமண்ணுவாவும் முன்னராக முன்னுகவென்னொடு பின்னராவோ ரின்னரென்றுரைத்துக் கூ5றுபடப் போக்கி வேறுபடப்பரப்பி எல்லையிகந்த விருங்கடல் போலப் பகைவர்பாடியைக் குறுகுகின்றான்.அதனையறிந்த பகைவரும் பொங்கி யெழுகின்றனர்.இருபடைகளும் போரில் கலக்கின்றன. காண்போர், ஈண்டுப்படும் உயிர்த்தொகைகட்கு நமனுலகு இடம் பற்றாதெனக் கூறிக் கொள்கின்றனர். 19. சங்கமன்ன ருடைந்தது நால் வேறுபடைகளும் தம்முள் எதிர் எதிர் பொருகின்றன. குதிரைகள், படையில், வெண்கடற்றிரையென மிசைமிசை1நிவந்தரும் பொங்குமயிரிட் டபொலிவினவாகி அரிபெய்2புட்டிலார்ப்பக் கருவியொடு மேலோ ருள்ளம் போல நூலோர் புகழப்பட்ட போர்வல்புரவி இகழ்தலின்றி யேறிய வீரர் வெம் முரண்வீரமொடு தம்முள் தாக்குகின்றனர்; யானைகள் யானையொடு பொருகின்றன. யானையின் கைகள் பனந் துணிபோல் வீழ்கின்றன. தலைகள் துடித்தலைபோல உருள்கின்றன; அற்று வீழ்ந்த யானையின் வால்கள் அறுப்புண்டு வீழும் விற்களைப் போலத் தோன்றுகின்றன. செக்கர் வானத்து மறையும் வெண்பிறை போல யானையின் கோடுகள் குருதியில் மூழ்கிமறைகின்றன; கார்முகக்3கடுமுகி லூர்தியாக விசும்பிடைத் தி4ரிதரும் விஞ்சைமாந்தரைக் கடுந்தொழில் விச்சைகற்ற மாற்5றவர் மறத்6தானெருங் கிமற்றவருடனே நிறத்தே7றுண்டு நிலத்து வீழ்வது போல் மார்பின் வெம்படையாரமாந்தி வீரநோக்கத்துடன் தாம் ஏறிய வேழங்களொ டுவீழ்கின்றனர். மறப்படையேந்திய வீரர் வேழம் வீழ்த் தும்போர்க்கு ஆற்றாராய்ப் பொருது உயிர்விடுகின்றனர்; உடைகலப்பட்டோர் திரையிடை யலைவது போல, தாம் ஏறிய குதிரைவீழ வீழும் வீரர் பிடித்தவார் விடாது பற்றி குருதிப் புனலில் மூழ்கி மடிகின்றனர்; இவ்வாறு நிகழும் போர்க்களம், புரவியும் யானையும் வீரரும் விழுந்து குழம்பாகி, குருதிச் சேறுபட்டு அந்திவானம் போலத் தோற்ற மளிக்கிறது. இவற்றிடையே உதயணன் எலிச்செவியரசனுடைய தம்பி யேறியிருந்த களிற்றின் மேற் பாய்ந்து அவனைக் கொல்லாது கச்சினால் அவன் தோளைப் பிணிக்கின்றான். அதனை எலிச் செவி கண்டு போர் வெறி கொள்கின்றான். உடனே உருமண்ணுவாவும் கேகயத்தரசனும் எலிச் செவியை வளைத்துக் கொண்டு பொரு கின்றனர். அப்போரில், எலிச்செவி கேகயத்தரசன் தலையை வெட்டி நிலத்தே புரள்விக்கின்றான். அதனோ டமையாத எலிச் செவி உருமண்ணுவாவின் களிற்றின்மேற்குதித்து அவனைப் பிணித்துக் கொண்டு, "என்தம்பியைச் சிறைவிடின், நீயும் உய்வை" என்று ஆரவாரிக்கின்றான். அதுகண்ட உதயணன். "உருமண்ணு வாவைக் கொல்லாதொழிகுவையாயின், உன் தம்பியை யான் கொல்லாதொழிகுவன்" எனவுரைக்கின்றான். சிறிதுபோதில் மாற்றோர் படை உடைந்து கெடுகிறது. உருமண்ணுவா பகை மன்னர்பால் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றான். உதயணன் வெற்றி யுடன் தருசகன்பால் வருகின்றான். தருசகன் உதயணனைப் பேரன்புடன் வரவேற்றுச் சிறப்புச் செய்கின்றான்.அவற்கு உதயணன் கேகயத்தரசன் பட்டது கூறலுற்று, எடுத்த பெரும்படை யெழுச்சியு1மிறுதியும் பரப்புஞ் சுருக்கும் 2பாழியுமறியான் விலக்கவும் நில்லான் றலைக்கொண்டோடித் தமரையுந்தீர்3ந்து நுமரையு நண்ணான் கேளன்ப4மன்னன் வாள்வாய்த் து5ஞ்சி மாகவி6சும்பினின்றுயி லேற்றனன் கேகயத்தரசன் என உரைக்கின்றான். அது கேட்கும் தருசகன் வருந்தி, "யான் என்கடன் தீரா தொழிந்தேனாயினும், அவன் தன் கடன் தீர்த்துத் தக்கது செய்தான்" என்று அன்புடை நன்மொழி மொழிந்து அவன் உடலைத் தேடியெடுத்து நீர்க்கடன் செய்கின்றான். இருவரும் நகர்க்குள்ளே செல்கின்றார்கள். நகரமக்கள் பேராரவாரத்துடன் அவர்களை வரவேற்கின்றார்கள். அவர்களுள், சிலர், உதயணனைப் பார்த்து, வாழ்கமற்றிவ் வத்தவர்பெருமகன் என்னா டிதுவன்1றென்னான் சென்றுழி அந்நாட்டி 2டுக்கணு மச்சமு மகற்றும் தத்3துவநெஞ்சத் துத்தமன் என்றும், இவனைப் பிறர் வஞ்சனையாற் கோறல் இயலு மேயன்றி நேர் நின்று பொருது வெல்லுதல் இல்லை என்றும், "இவனோடு உடனிருந்து வாழும் திருவிலாளாதலின், வாசவதத்தை தீப்பட்டாள்" என்றும், "இவனால் பின்னரும் நினைந்து இரங்கப்பட்டாளாதலின், வாசவதத்தை புண்ணியமுடையளே" யென்றும் கூறுகின்றனர். வேறு சிலரும் பலரும் கூடிநின்று. வலிகெழு4நோன் றாள் வத்தவமன்னற்குத் தருசகன்றங்கை தகையேர்5 சாயற் பத்திப்பைம் பூண் பதுமாநங்கை தக்கனள்; கொடுப்பின் மிக்க 6தென்போரும் வேண்டிவந்த வேந்தனும் வீய்7ந்தனன் ஈண்டினியிவற் கேயீந்த பால்வகை ஆதலு முண்டஃதறிவோர் யாரென வாயி 8ன் மிகுத்து வலித்துரைப் போரும் பொன்னணிமார்பன் முன்னராற்றிய நன்9னர்க் குதவும் பின்னுபகாரம் அலைதிரைப் பௌவ10மாடையாகிய நிலமுழுது கொடுப்பினும் நேரா வென்போருமாய்ப் பகர்ந்து நிற்கின்றனர். தருசகனும் உதயணனும் அரண்மனை சென்று சேர்கின்றனர். 20. மகட்கொடை வலித்தது தனக்குரிய கோயிற்கண் தங்கிய உதயணன் வேற்றுருவுடன் பதுமாபதிபாற் சென்று தான் பிரிந்த காலத்து அவள் ஆற்றியிருந்த திறம் பாராட்டிக் கூடி மகிழ்விக்கின்றான். பின்னர்த் தன்கோயிலை யடைந்து அவளை வரைந்து கோடற்கு வேண்டும் சூழ்ச்சியினை நினைந்திருக்கின்றான். தருசகனும் நூற்றுவரை வென்ற ஐவருள் ஒருவனான வீமன்போல விளக்கமெய்திய உதயணற்குத் தன் தங்கையாகிய பதுமாபதியை மணம் செய்விக்கக் கருதித் தமரொடு சூழ்ந்து, அமைச்சனை யழைத்து, இங்கண் இவனை எளிது1தரப் பெற்றும் கோ2லமங்கையைக் கொடா3அ மாகுதல் காலநோக்கிற் கருமமின்றென வலித்த4தை யுணர்த்தி வருதி நீயென உரைத்து உதயணன் கருத்தறிந்து வருமாறு விடுக்கின்றான். இதனை யறிந்த முதுமகளொருத்தி போந்து பதுமாபதிக்குத் தருசகன் செய்திருக்கும் முயற்சியைத் தெரிவிக்கின்றாள். அது கேட்கும் பதுமாபதி தன்னொடு களவினொழுகும் அந்தணன் உதயண னென்பதை யறியாதுளாளாகலின், மந்திரநாவி னந்தணன் கே5ண்மை இருநிலம் பேரினுந்திரி6த லின்றெனப் பெருநலமாத ரொருமையுள்7ளமொடு வாழ்வது வலியாள் சூழ்வன8ள் இருப்ப, தருசகன் விடுத்த அமைச்சன் உதயணனையடைந்து வேந்தன் கருத்தைத் தெரிவிக்கத் தொடங்குகின்றான். உதயணன் தோழர் உடனிருக்கின்றனர். 1பயங்கெழுவையத் துயர்ந்த தொல்சீர் 2விழுத்திணைப் பிறந்துதம் மொழுக்கங் குன்றாப் போரடு மன்னர் புலம்புமுந்துறீஇ ஆரஞ3ருழக்கலறிவெனப்படாது நீர்முதன் மண்ணகஞ் சுமந்த நிறை4பலி தான் முழுது கலங்கித் தளருமாயின் மலைமுதலெல்லா நிலைதளர்ந்தொடுங்கும் அலகைப் பல்லுயிர்க்கச்ச நீக்5குநர் கவலை கொண்டு தங்காவலிற்றளரின் உலகமெல்லா நிலைதளர்ந்தழியும் அற்றேயன்றிக் கொற்றக் கோமான் தானுந்தனிமையொ டென்6றலை வந்தனன் ஆனாவுவகையி னமைந்த புகழுடையன் மேனாட்கொண்ட மிகுதுயர்நீக்கி மறுத்தல் செல்லாச் சிறப்பு முந்துறீஇ அற்ற மி7னண் பின்யாப்பே யன்றியோர் சுற்றப்8பந்தமும் வேண்டினே னென்றனன் கொற்றவன் வலித்த திற்றெனக் கூறி முடிக்கின்றான். இதனைக் கேட்ட உதயணன் சிறிது நேரம் மறுமொழீயொன்றும் கொடானாய்த் தன் மனத்தே பலபட நினைக்கின்றான். நறுமலர்க்கோதையை நாட்9பூங்காவினுள் கண்ணுறக் கண்டதும் கரந்10தகம்புக்கதும் திண்ணிதி னறிந்தோர் தெரிந்து தனக்குரைப்ப ஆராய்ந்த தனையறிந்ததை11 யொன்று கொல் கருதிவந்த காவல குமரனும் பொருகளத் தவி1ந்தனன் பொருளி2வற் கீதல் பின்னன்றாகு மென்பதை நாடி நன்னர் நோக்கி நயந்ததை யொன்றுகொல் கோல்வளைப் பணைத்தோள் கொடுங்குழைக்காதின் நிலத் தன்னநெறியிருங் கூ3ந்தலைப் பால்வகைபுணர்க்கும் படி4மை கொல்லென உதயணன் நினைந்து, "யான் குறையிரந்து பெற வேண்டிய இப்பொருளைத் தானே குறையிரந்து தரப் பெறுவது என்தவப் பயனே" எனக் கருதி மகிழ்கின்றானாயினும், அதனைப் புலப் படுத்தாது மறைத்துக் கொண்டு, மனத்தெழுகவற்சியொடு மண்முதனீக்கி நயத்தகு மாத5ரொடமைச்6சனையிழந்தினி வாழே னென்னு வலித்த நெஞ்சமொடு போகிய தெல்லாம் பொய்யேபோலும்; இன்பமெய்தலென், அன்பவ7ட் கொழிந்தனன்; வாழ்ந்த காலை யல்லதியாவர்க்கும் ஆழ்ந்த8 காலை யன்புமில்லெனப் புறத்தோ ருரைக்கும் புன்சொற்9கட்டுரை நிறத்தே10னெஃகி னனையவாதலின் ஒத்த நிலைமையே னல்லே னொழி11கென உரைக்கின்றான். அமைச்சன், "இவ்வுரை பெருங்குடி மாந்தர்க்கு ஒத்த தன்று" என்பது போலும் சொல்பல சொல்லி வேண்டு கின்றான். பின்னர் உதயணன், திருமணத்துக் கிசைந்து, "தருசகனும் நீயும் இவ்வாறு மணம் செய்து கோடல் நன்றென்று மொழிதலால், யான் மறுக்கும் வகையில்லேன்" என்று சொல்லுகின்றான். அமைச்சனும் அகமகிழ்ச்சியுடன் மீண்டு செல்கின்றான். 21. பதுமாபதி வதுவை உதயணன் உடன்பட்ட செய்தியை யுரைப்பக் கேட்டதும் தருசகன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. இப்பால் உதயணன், தானே அந்தண வுருவொடு போந்து கூடின செய்தியைப் பது மாபதிக்கு அறிவித்தல் வேண்டுமென எண்ணி, அதற்குத் தக்கார் யாரெனத் தனக்குள்ளே சூழ்கின்றான். முடிவில், வயந்தகனை யழைத்துத் தருசகன் பாற்சென்று, இசைச்ச னென்னு மென்னுயிர்த் தோழன் அருமறை1நாவினந்தண னவன்றனக் கிருமுது2 குரவருமிறந்தன ராதலின் வேதத்3தியற்கையி னேதந்தீரக் கிரிசை4யின் வழாஅ வரிசை வாய்மையோர் அந்தணன் கன்னியை மந்திர விதியின் அவன்பாற் படுத்தபின்ன ரென்னையும் இத5ன்பாற் படுக்கவெண்ணுக தானென என் கூற்றாக இயையக் கூறி முன் கூற்றமைத்து முடித்தல் நின்கடன் எனச் சொல்லி விடுக்கின்றான். வயந்தகன் அவ்வாறே சென்று தருசகற் குரைப்ப, அவனும் நன்காராய்ந்து, "யாப்பியாயினி யென்னும் பார்ப்பன மடந்தை பதுமாபதிக்குத் தோழியாகியுளள்; ஒழுக்கத் தாலும் குலத்தாலும் விழுப்ப முடையள்; அவளை மணஞ் செய்விப்பேன்" என ஒருப்பட்டுரைக்கின்றான். பின்னர்த் தருசகன். தன் கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து அவள் உடன் பாட்டைப் பெறல் வேண்டிச் சான்றோரை விடுக்கின்றான். அவர்களும் அவ்வகையே சென்று அரசமாதேவிக்குத் தருசகன் கருத்தையறி விக்க, திருமாதேவியுந் தேன்பு1ரை தீஞ்சொற் 2கணங்குழை மகளைக் காமனனைய வணங்கு3சிலைத்தடக்கை வத்தவர் பெருமகற் கெண்ணின னெனவேயுண்மலியுவகையள் அதி4நாகரிகத் தந்தணிக்கணியும் முற்றணி கலங்கள் கொற்ற5ார கொடுப்ப. யாப்பியாயினியின் திருமணத்துக்கு வேண்டுவன ஏற்பாடு செய்யப்படுகின்றன. மணநாளும் குறிக்கப்படுகிறது. இச்செய்தி பதுமாபதிக் கெட்டுகிறது. யாப்பி யாயினியைக்கண்டு, 6மாணகற் பிரிந்த வென்மம்மர்7 வெந்நோய்க் 8காணமாகியவாயிழை தனக்கு நீங்குதிறனுண்டெனிற் றாங்குதிறனறியேன் விலக்குதலியல்பு மன்றார் கலக்கும் வல்வினைதானே நல்வினை யெனக்கென ஒள்ளிழை மாதருள் வயினீ9னைஇ 10மடுத்தணி கலனுமாலையும் பிறவும் கொடுத்தனளாகிக் கோமான் பணித்த 11வடுத்தீர் வதுவையின் மறந்தனையொழியாது வல்லேவாவென மெல்லியற்12புல்லி விடுக்கின்றாள். குறித்த ஓரையில் திருமணம் செவ்வே நடை பெறுகிறது. அக்காலையில் உதயணள் மணமகனான இசைச்சனைப் புல்லி, "இப்பதுமாபதி கோசம்பி நகரையும் யமுனையாற்றையும் கண்டு இனிது உறைவது காரணமாக வன்றோ. யாம் இம்மகதத் திற்றங்கினேம்" என்று மணமகளான யாப்பியாயினி கேட்பக் கூறுகின்றான். இதனைக் கேட்டதும், யாப்பியாயினி இவ்வாறு அன்று தன்செவி கேட்பக் கூறிய மாணவனான அந்தணன் தன் முன் கூறியதை நினைக் கின்றாள். குரலோசையும் ஒத்திருக்கிறது. உடனே உதயணனையுற்று நோக்கு கின்றாள். ஐயம் அவள்நெஞ்சினின்றும் நீங்குகிறது. 1வையங் காவலன் வத்தவர் பெருமகன் பார்ப்பனவுருவொடு பதுமாநங்கையை 2யாப்புடை நெஞ்சமழித்தன னறிந்தேன் ஒப்புழியல்ல தோடாதென்பது மிக்கதென்மனனென நினைக்கின்றாள். வதுவைநாள் ஏழும் நீங்குகின்றன. தான் அறிந்து கொண்ட மறையை எவ்வாறேனும் பதுமாபதிக்குத் தெரிவித்தல் வேண்டுமென அவள் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றாள். அவளை மணக்கோலத் தோடே காணும் விருப்பத்தால் விழுங்கப் பட்ட பதுமாபதி சிவிகையொடு சிலதரை விடுக்கின்றாள். யாப்பி யாயினி பதுமாபதி இருக்கும் கன்னிமாடம் புகுந்து, அவள் முன் சிறிது நாணிநிற்கின்றாள். அவளைக் கண்ட பதுமாபதி, "மணா ளனைக் கூடிய மங்கையாதலின், யான் நின்னைத் தீண்டிப்புல்லேன்" என நகுமொழி கூறுகின்றாள். நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து விடும் என்பதுபோல. யாப்பியாயினியும், "நினக்கும் ஒக்கும் அஃது எனக்கேயன்று" என மறுமொழி கூற, இருவரும் தழீஇ மகிழ் கின்றனர். அக்காலையில், யாப்பியாயினி. பதுமாபதியைத் தழுவி, புனையிழை! கேண்மதி: வண்டார் மார்பின் வ3டி நூல் வயவனைக் கண்டேனன்னதன்மையனாகிக் கள்ளவுருவொடு கரந்தகத் தடங்கிநின் உள்ளங் கொண்ட வுறுவ4வனரமார்பன் வசையி 5னோன்றாள் வத்தவர் பெருமகன் உதயண குமரன் போலு முணர்கென உரைக்கின்றாள். அவட்குப் பதுமாபதி, மயங்கி, நின்னைவேட்ட வந்தணனவற்குத் 1துன்னிய தோழனது முன்னே கேட்டனன் பெருமகனுள்ளத் துரிமைபூண்டவென் அதிரா2நன்னிறை கதுவா3ய்ப் படீஇத் தணத்த4றகுமோ நினைக் கெனக்கலங்கித் தன் திட்பத்தைச் செப்புகின்றாள். "இதனைப் பின்னர்க் காண்பாம்" என யாப்பியாயினி கூறி விடைபெற்றுக் கொண்டு மணமனை யடைகின்றாள். ஆங்கே அவள் உதயணனைக் கண்டு நிகழ்ந்தது கூறுகின்றாள். உதயணன் கிழிமிசைத் தன்வடிவொன்றெழுதி. அவளொடுதான் தனித்திருந்தபோது கூகையொன்று குழறிய குரல்வாயிலாகப் புலவி நீங்கிப் புல்லிய செயலை அடையாளமாக மொழிந்து விடுக் கின்றான். அதனையெடுத்துச் சென்று காட்டும் யாப்பியாயினி, "ஆய்பூங் காவின்கண் அந்தணவுருவொடு கரந்து போந்து நின் நலம் கவர்ந்த காவலன் வடிவு காண்" என்கின்றாள். ஆயினும், அதனையுற்று நோக்கிய பதுமாபதி, இன்னுயிர்க் கிழவனெழுதியபா5வை 6என்னும்வேற்றுமையில்லையாயினும் 7ஓராங்கிதனை யாராய்ந்தல்லது தீண்டலுந் தே8றலுந்திருத்தகைத்9தன்றென ஒதுங்கி நிற்கின்றாள். அப்போழ்தில் யாப்பியாயினி கூகையிற் கூடிய கூட்டத்தை யடையாளமாகக் கூறுகின்றாள். உடனே பதுமாபதி ஐயம் நீங்கிப் பேரன்பு கொண்டு. அங்கை யெறிந்து தங்கா10விருப்பொடு காமக் காதலன் கைவினைப் பொலிந்த ஓவியப்11பாவையையாகத் தொடுக்கி நீண்ட திண்டோள் தீண்டுவணைக்கு நெஞ்சங் கொண்ட நெடுமொழியாள! வஞ்சவு ருவொடுவலைப்1படுத்தனையெனப் புலவி நோக்கமொடு நலமொழி நயந்து கோமான் குறித்ததும் தோழி கூற்றும் ஒருப்பட்டு மகிழ்கின்றாள். நாட்கள் பல கழிகின்றன. பதுமா பதிக்கும் உதயணற்கும் திருமணநாள் குறிக்கப்படுகிறது. நகரமெங் கணும் அணிசெய்யப்படுகிறது. நகரவர் பெருமகிழ்ச்சியுறுகின்றனர். 2சேரார்க் கடந்த சேதியர் மகனையும் மதுநா3றைம்பாற்பதுமாபதியையும் மரபிற் கொத் தமண்ணுவி4னை கழிப்பிய திருவிற் கொத்துத் தீதுபிற தீண்டா நெய்தலைப் பெய்து மையணி5யுயர்நுதல் இருங்களிற்றியானை யெருத்திற்றந்த பெருந்த ணறுநீர் விரும்புவனராட்டி. திருமணை மீதிருக்கச் செய்து இருவரையும் முறையே திருமணத்துக் குரிய அணிவகை கொண்டு கைபுனைகின்றனர். அகன் பெருங் கோயிலுள் ஆயிரம் பொற்றூணமைந்த மண்டபம் ஒன்றுளது. அதன் நடுவண் சந்தனப் பெருந்தூண் ஒன்பது நாட்டிய மணப்பந்தர் அமைக்கப்படுகிறது. வேள்வித் தீ மூட்டப்படுகிறது; தருசகன் பதுமாபதியை உதயணற்கு நீர்பெய்து தருகின்றான். 6ஏதமில் காட்சி யேயர்பெருமகன் நன்னுதன் மாதரை நாட்க7டிச் செந்தீ முன்முத லிரீ8இ முறைமையிற்றிரியா விழுத்தகு9 வேள்வி யொழுக்கிய லோம்பிச் செம்பொற்பட்டம் பைந்தொடிப்பாவை. மதிமுகஞ்சுடர மன்னவன் சூட்டித் திருமணிப்பந்தருட் டிருக்க1டங்கழிப்பி ஒருமைக் கொத்தவொன்று2 புரியொழுக்கின் வல்லோர் வகுத்த வண்ணக்கைவினைப் பல்பூம்பட்டிற் பரூஉத்3திரட்டிருமணிக் காலொடு பொலிந்த கோலக்கட்டிற் கடிநாட் செல்வத்துக் காவிதிமாக்கள் படியிற்4றிரியாது படுத்தனர் வணங்கப் பட்டச் சின்னுதற்பதுமாபதியொடு கட்டிலேறிய உதயணன் கருதியது முடித்துக் கழிபேருவகையெய்து கின்றான். 22. படையெழுச்சி பதுமாபதியை மணஞ்செய்து கொண்டு ஆடல்கண்டும் பாடல் கேட்டும் இனிதிருக்கும் உதயணன், தன்னுடைய நண் பனான உருமண்ணுவாவை விரைவில் சிறைமீட்டுத்தருமாறு உரைக்கின்றான். அவனும் அதற்கு ஆவன செய்கின்றான். இடையே, அத்தருசகன், தம்முறு கருமந்தாஞ் சேர்ந்ததுவெனப் பின்னிது முடித்தல் பெருமையன்றால் முன்னுபகாரத்து 1நன்னராற்றிய நட்புமன்றி நம் மொடுகலந்த 2சுற்றமாதலிற் சுடர்ப்பூணுதயணன் 3அற்ற மெல்லா மறிந்தனமாகிக் 4கொற்ற நன்னாடு கொண்டனங் கொடுத்தல் கடன் நமக்கதுவென எண்ணி முடிவு செய்கின்றான். உதயணற்கு உறுதுணையாதல் வேண்டி, தாமே சென்று தம் வினை முடிக்கும் தகைமைசான்ற அமைச்சருள் வருடகாரன், தாரகாரி, தருமதத்தன், சத்தியகாயன் என்ற நால்வரையும். யானை இருநூறு, குதிரை ஈராயிரம், ஆயிரத் திரு நூறு தேர்,அறுபதினாயிரம் வீரர் கலந்த பெரும் படையையும், பதுமாபதிக்கு வேண்டும் சிறப்புகள் பலவற்றையும் நல்கி விடுக்கின்றான். அக்காலையில், அவன் வருடகாரனை நோக்கி, வடுத் தொழிலகன்ற வருடகார! 5உடற்றுநர்க்கடந்த வுதயணகுமரன் அடைக்கல நினக்கென வவன்வயிற்1கையடுத்து வேறுசில அன்புடை நன்மொழிகளைக் கூறி விடுக்கின்றான். அமைச்சர் நால்வரையும் ஒருங்கு நோக்கி, நிலைமையறிய1நீட்டாமின்றி மறை புறப்படாமை மனத்2தேயடக்கி 3ஒற்றொற்றியவரை யொற்றினாய்ந்து முன்னங் கொள்ளுமுபாய முயற்சியொடு நாவாய் தொடுத்து நளிபுனற் பேரியாற் 4றூர்மடி கங்குனீர் நெறிபோகி மலையர ணடுங்க நிலையரணடுங்க ஒற்றினானு முபாயத் தானும் ஆற்றல் சான்ற ஆருணி5தொலைச்சிக் கோற்6றொழில் கொடுத்து நீர் பெயர் மின் என்று பணிக்கின்றான். சிறிது போதில் படைமுற்றும் எழுந்து உதயணற் குரிய, கோசம்பி நோக்கிக்கடல் போலப் பரந்து செல்கிறது. 23. மேல்வீழ் வலித்தது உதயணனுடன் எழுந்த பெரும்படை இருட்காலத்தே எழுகின்றது. அவனை வழிவிடப்போந்த தருசகன். அன்புடைய மொழிகள் பல கூறி, மேல் செய்ய வேண்டு வன பற்றிப் பேச்சினைத் தொடங்கி, 1பீடு கெழுதானைப் பிரச் சோதனற்குக் கூடிய 2கிளைமைக் குணம்பல கூறி 3ஓடுகா லினையரை யோலையொடு போக்கின் நாடுவதல்ல தவனு நம்மொடு 4தீது வேண் டாநிலைமையனாகும்; மலைத்5தலைத் தொடுத்த மல்லற் பேரியாற்றுத் தலைப் பெயன் மாரியிற் 6றவிர்தலின்றி 7நிலைக்களந்தோறுங் கொலைப்படை விடுத்தபின் யானும் வேண்டின் வருகுவ னேனச் 8சேணிலமன்னர் கேண்மையுடையோர்க் கறியப் போக்கி னவர்களும் வருவர் செறியச் செய்த 9குறியினராயின் நிலம்படக்கிடந்தநின் 10னேமியந்தடக்கை 11வலம்படு வினைய வாக என உரைத்து உதயணனைத் தழுவி விடைநல்கி நீங்குகின்றான். அவற்கு உதயணன் விடையிறுப்பானாய், இருமணமெய்திய வின்பமெல்லாம் உருமண்ணுவாவினையுற்றதற்பின்னை ஐமுந்நாளினவனைச் சிறைவிடுத் தெம்முன்னாகத் தருதல் நின்கடன்என வேண்டிவிடுக்கின்றான். தருசகனும் உதயணன் தன் அமைச்சன் பால் கொண்டிருக்கும் அன்பினையும் அவ்வமைச்சனது பெருமை யினையும் வியந்து அவ்வண்ணமே செய்வதாக உறுதி கூறுகின்றான். உதயணன் பெரும் படையுடனே கோசம்பி நோக்கிச் செல்கின்றான். அப்பெரும்படையைக் காண்போர், "இப்பெரும்படை யார் மேற் போகின்றதோ? அவர்என்னாவரோ?" என வியப்புறுகின்றார்கள். இந்நிலையில், "படையோடு உடனே எழுதல் வேண்டு"மென யூகிவிடுத்த ஓலையொன்று வயந்தகற்குவருகிறது. அதனையறிந்து மகிழும் அவ்வயந்தகன் உதயணனறியா வகையில் மறைத்துக் கொண்டு, அவனையடைந்து, 1பின்னிணைக்குமரர் பிங்கலக டகர் இன்னாக்2காலை யெள்ளிவந்த 3பருமயானைப் பாஞ்சாலராயன் அருமுரணழிய 4நூறலினவனமர்க் காற்றா ருடைந்து நோற்5றோ ரொடுங்குழி குளிர்நீர்யமுனைக் 6குண்டுகயம்பாய 7வளியியற்புரவி வழிச் செலவிட்டவர் பொன்னியற் புரிசையோர் பெண்ணுறைபூமி அவணெதிர்ப்பட்டாங்கிவண8கம் விரும்பா தீரறு திங்களிருந்தபின்றை 1ஆரரணகர மாண்ட னனொழுகும் ஆருணியரசன் வார்பிணி முரசம் நிலனு டனதிர நெருப்பிற் காய்ந்து தலமுதற்2 கெடுநோய் தரித்தலாற்றார் போந்தனர் போலும் புரவல மற்றுநம் ஓங்கிய பெருங்குல முயர்தற் குரித்தென் றுரைக்கின்றான். உடனே உதயணன் பிங்கலகடகரை மார்புறத் தழுவி மனம் மகிழ்ந்து. இருமையின்பமும் ஒருமையிற் பெற்ற பெருமகன் போலப் பேரின்பக்கடலில் மூழ்கித் திளைக் கின்றான்.அவர் பின்வந்த படைகளும் வந்து கலந்து கொள்கின்றன. உதயணனை யடைந்து பணிந்தெழுந்துநிற்கும் பிங்கலகடகர், 3ஓர்த்தனம் தேறியுறுதி நோக்காது சேர்த்தியில்4செய்கையொடு சிறை கொளப்பட்டுப் பெருங்குடி யாக்கம் பீடற5வெருளி அருங்கடம்பூண்ட வவியாக் காதலொடு பயந்தினி தெடுத்த படைப்பருங் கற்பினம் கொற்ற6விறை விக்குக்7குற்றேல் பிழையா தொருங்கியா முறைத லொழிந்ததுமன்றி இருங்கடல் வரைப்பினினியோரெடுத்த இறை8மீக் கூறிய விராமன்றம்பி 9மறுவொடு பெயரிய மதலைக் கியைந்த 10ஆனாப் பெரும்புகழ் யாரு மெய்தத் தேனார் தாமரைத் திருந்து மலர்ச்சிசேவடி வழிபாடாற்றலும் 11வன்கணினீத்தனெம் சுழிபெருஞ்சிறப்பிற் காவல் வேந்தே 12இம்மையென்பதெமக்கு 13நெறியின்மையின் முன்னர்ப் பிறப்பின் மூத் தோர்ப்பிழையா துடன்வழிப் படூஉ முறுதவமில்லாக் 1கடுவினையாள ரேம்யாம்எனக் கலங்கி மறுபடியும் அவள் காலில் வீழ்ந்து வணங்குகின்றார்கள். உதயணன் அவர்களைத் தழுவி, "இனி, நீவிர் கவலுதல் வேண்டா; யான் செய்த தவறுகளை நினைந்து வருந்துதலிற் பயனில்லை" என்று கூறுபவன். 2எள்ளுமாந்த ரெரிவாய்ப்பட்ட 3பன்னற் பஞ்சியன்னராகுகன் வெகுளித் தீயிற் கிளையறச் சுடுதல் முடிந்த திந்நிலை முடிந்தனர4வரெனச் செப்பிய மாற்றம்பொய்ப்பதன்றால் 5பொரக் குறையிலம் என வெகுண்டு கூறுகின்றான். பின்னர், ஈன்ற தாயைப் பற்றிய நினைவு உண்டாக, அவளை நினைந்து இரங்குகின்றான். அந்நிலையில், களைகணாகிய காதலந் தோழனை வளையெரிப்பட்ட தெளிபேரன்பிற் 6றளையவிழ் கோதையொடு தருதலும் பொருளோ நும்மைத் தந்தென்7புன்மை நீக்கிய 8உம்மைச் செய்த செம்மைத்9தவத்தானென அவர் மனம் குளிரத் தக்க சொற்களைச் சொல்லித் தேற்றி விடுக் கின்றான். ஆருணியரசன் முதலாயினாரை வேறற்கு வேண்டும் செய்கைக் கண் அவன் உள்ளம் விரைகின்றது. இடவகனையும் வருடகாரனையும் தனியேயழைத்துச் செய்வினை குறித்து ஆராய்கின்றான். வருடகாரன் பலபடவெண்ணி. "அரசே, இருளின் கட்பெரும்படையுடன் சென்று நெடுமதிலில் ஏணி சாத்தி, உள்ளகம் புகுந்து நள்ளிருளில் நகரைக் கலக்குதல் வேண்டும்; அக்காலை நீ வேறே இருத்தல் நலம். பகைவேந்தனிருக்கும் கோயிலை முற்றி வாயில்தோறும் காவலரை நிறுவி, பன்னீராயிரம் வீரரை விடுத்துப் போர் உடற்றுதல் வேண்டும்." அவர்கள் சென்று வீரர்தங்கி யிருக்கும் மனைக்குள்ளே குதித்து உறக்கத்தே அவரைச் சாடுதல் வேண்டும். குதிரையும் யானையும் தேரும் இருக்கும் இடங்களை நன்கு காப்பமைத்து, அரசனைப் போர்க்கழைப்பின், பெருமழைநடுவணிருளிடை யெழுந்ததோர் 1கடுவன் போலக் காவல 2னுரறி மகிழ்ச்சியெய்திமாற் றோரில்லெனும் இகழ்ச்சி3யேதந்தலைத்த தெனக் கின்றெனக் கவலைமிக்கு வெளிவருவன். அவன் தேவியும் சீரலங்காரச் சித்திரமுடி மிசைத் தாரணி கோதை தாழ்ந்து4புறத்தசைய உற்றதையறியா5டெற்றென விரங்கி ஆவிb6வய்துயிர்ப் பளைஇயக முனைவனள் அவன் தானையைப் பற்றி யழுது கொண்டு போதருவள். அது கண்டு" கோயில் மகளிரும் உழைக்கல மகளிரும் உரிமை மகளிருள் ளிட்ட பிற மகளிரும் பேரார வாரத்தோடு அழத் தொடங்குவர். உடனே, நின்பால் அன்பு மாறாத நகரமாந்தர் கூடி, உண்மையறிந்து திருவார் மார்பி னெம்பெருமானு தயணன் 7கூற்றி டம்புக்கு மீட்டும் வந்தனன் நம்பொருட்டாக நகரமுற்றனன் அமைச்ச ருந்தானு 8மமைந்த கருமம் முடித்தனனாகலின் முற்றவமுடையேம் அன்றி9யின் வாரா னாதலி னெங்கோன் வென்றியெய்துதல் வேண்டுதுநாமென வெருப்பறை கொட்டி10யுருத்துவந்தீண்டி நமக்குப் படையாகித் துணைசெய்வர். அப்போழ்தில் அப் பகைவனைப் பற்றி உயிர் பருகுதல் கூடும்" என்று கூறுகின்றான். உதயணன். அவன் கூறியதை யேற்று அவ்வாறு செய்தலே தக்க தெனப்பணிக்கின்றான். வீரரும் பிறரும்அதனையே துணிந்து செவ்விநோக்கியிருக்கின்றார்கள். நகர்நிலையறிதற்கு ஒற்றர் சென்றிருக் கின்றனர். 24. அரசமைச்சு இஃதிவ்வாறாக, ஆரணியரசன், ஒற்றரால் உதயணன் முதலாயினார் போர் குறித்திருத்தலையறிந்து நகரத்தைச் செவ்விய காப்பில் அமைக்கின்றான். இரவும் பகலும் இகழாக் காப்பொடு 1முரவுந் தூம்பு முழங்குபு துவைப்ப ஆண்டகை யமைத்துப் 2பாம்புரிதிருத்தி அருஞ் சுழிநீத்தத் தாறுபுக வமைத்த சுருங்கைவாயிற் பெருங்கத3வொடுக்கிக் கொடுந்தாழ்4நூக்கி நெடும்புணைகளைந்து நீணீர்க்கி டங்கி னுட்டோணி போக்கிக் கல்லிடு5கூடை பல்லிடத்தியற்றி வில்லுடைப்பெரும் பொறி பல்வழிப் பரப்பிப் பற்றறத் துறந்த படிவத்6தோரையும் அற்ற7மின்றியாராய்ந்தல்லது அகம்புகவிடாஅதி8கந்து சேணகற்றி நாட்டுத் தலைவரை நகரத்து நிறீஇ நகரமாந்தரை நாட்டிடைநிறீஇ ஊர் தோறும் தன்னரசியற்கு மாறுபட்ட கருத்துடையோரை யாராய்ந்து தொகுத்துச் சிறைப்படுத்திக் காவல் புரிகின்றான். உதயணன்பால் பகை கொண்டிருந்த பிரச்சோதனன் மனம் கொள்ளத் தக்க முறையில் உதயணன் அவனை அவமதித்தொழுகுவதாகவும், அவனோடு பொருதற்கு மகதவேந்தன் துணைமை பெற்றிருப்ப தாகவும் தான் உடனிருந்தறிந்தான் போலப் பொய்யே எழுதி. ஓலை போக்குகின்றான்; சங்கமன்னர் என்பாரைத் தனக்குப் படைத் துணைவருமாறு வேண்டு கோள்விடுக்கின்றான்; மகதமன்னனைத் துணை செய்ய வேண்டியும், அது செய்தால் தான் இன்னது தருதல் கூடுமென்றும் தெரிவிக்கின்றான். இச்செய்தி முற்றும் ஒற்றர்கள் அறிந்து போந்து உதயணற் கறிவிக்கின்றார்கள். ஒற்றர் பலரும் உரைத்தவை ஒத்திருத்தலை உதயணன் உணர்கின்றான். அவற்குச் சூழ்ச்சி மிகுகின்றது; வருடகாரனை நோக்கி, 1இரவோ றொளித்துச் செரு2மேந்தோன்ற வளைத்திருந்தழிக்குவ மெனினே மற்றவன் 3வலித்ததுநாடிநலத்தகு நண்பின் மிலைச்ச மன்னருங் கூடித்4தலைத்தலை வந்தவ 5னிதிப்பயங் கருதி முந்துற 6முற்றுபு விடுப்பி7னற்ற மீனும் வேண்டாவஃதிவண் மீண்டிது கேட்கென மேலும் கூறலுற்று, "முதற்கண் நீ பொய்யாக என்னின் நீங்கி விட்டாய் என நம்மவரால் அவற்குப் பாங்காயினார் பக்கல் செய்தி விடுத்தல் வேண்டும்; அது கேட்டு ஆருணி உன்னைத் தன்பால் அழைப்பன்; அக்காலை, நீ அவன்பால், உதயணனொடு வந்த தற்குக் காரணம் கூறுமாற்றால், மகத வேந்தன் பிரச்சோதனனுக்குச் செய்த சூளுறவின்படி இன்சொல் வலைப்படுத்து னவனின் உதயணனை நிழல் போற் றொடர்ந்து வாய்த்தவிடத்துப் பிரச்சோதனன்பால் சேர்க்க வெனச் சொல்லி விடுத்தனன்; அதனால் யான் வந்தனென் எனக் கூறுக; மேலும், அத்தருசகனே என்னை நோக்கி, 'இவ்வுதயணன் மிக்க தருக்குடையவன்.' 1பெருமீக்கூற்றமும் பேணான் பிறரொடு செருமீக் கூற்றமும் செய்கையும் வேண்டான் ஒருதலையாக வாற்றலன் மற்றிவண் பழிதலை நம் மேல் வருதலுமின்றி நாமுமெண்ணி விட்டனமாகத் தானே சென்று தன்வலியறியான் அழியினும் நமக்குக் கழிவதொன்றில்லை 2ஆனிலைப் படாஅ தீனிலைக் கண்ணே பற்றாமன்னர் படையொ3டுபுணரின் அற்றப் 4படீஇயரதனினு முவத்தும் என் றின்னவையெல்லாந் 5திண்ணிதினுரைத்தனன் என்று கூறுக. அது கேட்டு ஆருணிவேந்தன், நீ கூறுவதை மெய்யென நம்பித் தன் கருமமாக்களை நின்பால் விடுப்பன். அவர்களை ஒருபால் தொகுத்து நிறுத்துக; யாம் அவர்களைப்பற்றி; குற்றம் காட்டிக் கொலைபுரி குதும்; இதனையறியும் பகைவர் சென்று பாஞ்சால ராயற்குணர்த்திப் போர்க்குடம்பட்டெழச்செய்வர்; அக்காலை, சிறிது நீ எம்மிற் பிரிந்திருக்க வேண்டும்; யாம் பாரப்பண்டியும் பாடிக் கொட்டிலும் அழல்வாய்ப்படுத்தி. சயந்தி நகரைச் சென்று சேர்வோம். நீ பாஞ்சாலராயனையணுகி, 'உதயணன் வலிகுன்றி அஞ்சியுறைகின்றான்' எனத் தெளிவித்தல் வேண்டும். அவனும் தன்னைப் போலும் வேந்தரை மதிலகத் திருத்தி இகழ்ந்திருப்பன். அது நோக்கி, யாம் சவரர் புளிஞரைக் கொண்டு அவன் நாட்டையலைக்கத் தொடங்குவேம். அவன் சிறுபடை கொண்டு போர்க்கெழுவன்; யாம் முன்னும் பின்னும் பக்கமும் நெருக்கி அவன் வலியழித்துக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று சொல்லி விடுக்கின்றான். வருடகாரனும் உதயணன் பணித்த வண்ணமே உழையர் வாயிலாக ஒன்னா1ரோட்டிய உதயணனுள்ளத் 2துவர்த்தலன்றியுஞ் 3சிவக்கு மென்னைப் பழியாக்கொண்டன4னழியினன் நடையெனைப் பகலு மிரவு மகலிராகிக் காப்புநன் 5கிகழன்மின் கருமமுடிதுணை 6ஓப்புற வொருவனையுறப்பெறி னவனொடு தீக்குழி வலித் தியாந்7தீரினுந் தீர்தும் யாது செய்வாங்கொல் அஞ்சினம் பெரிதெனப் பகைவர் அறியுமாறு செய்தி பரப்புகின்றான். அதனையறிந்த பாஞ்சாலராயனது சேனாபதிமகன் போந்து. இருநூறியானையும் புரவிபூண்ட ஐம்பதுதேரும் ஆயிரம் குதிரையும் தன்பால் ஆருணி வேந்தன் தந்த தாகக்கூறி, "ஆட்சிபுரிதற்கு அறுபது ஊரும், முப்பதுபிடி யானையும், எண்பது நாடகமகளிரும், விழுநிதிபலவும் கொடுப்பன்; வாண்மி குதானை வத்தவற்கைவிட் டென்னொடு கூடி 8யொருவனாகப் பின்னைச் செய்வ பிறவும் பலவென உரைக்கின்றான். அவற்கு வருடகாரன். "குருசில், நீயே சென்று என் செய்தியெல்லாம் ஆருணிக்குச் சொல்லி அவன் கூறுவனவற்றையும் தெளிய அறிந்து வருக" எனவிடுப்ப, அவனும் இருட்காலத்தே சென்று ஆருணிக்கு அறியவுரைக்கின்றான். போகூழ் வயப்பட்ட ஆருணியும் சிறிதும் ஓராது சேனாபதிமகன் சொன்னது முற்றும் தெளிந்து, முன்னியது முடிக்கும் முழுவலிமாக்களான சகுனி கௌசிகன் முதலிய நால்வரை வருவித்து, அவற்குக்காட்டி, 9ஒட்டாமன்னன் உதயண குமரனை 10நட்டானாகி நாட்டவந்த 11தண்டத் தலைவன்றளர்வி லூக்கத்து வண்டளிர்ப்ப12டலைவருடகாரன் நம்பாற்பட்டனனவன் வலித்ததை யெல்லாம் 1திண்பாற் றாகத் தெளிந்தனன் இவன் என உரைத்து அவனுடன் போக்குகின்றான்; போக்குபவன், மேலும், "நீவிரும் சென்று ஆங்கு உள்பொருள் எல்லாம் சென்றறிந்து வருதிர்" எனப் பணிப்ப, அவரும் "அங்ஙனமேயாகுக" எனப் பணிந்து நீங்கி வருடகாரனையடைகின்றார்கள். 25. பாஞ்சாலராயன் போதரவு இருட்காலத்தே மிக்கமறைவாகச் சகுனிகௌசிகன் முதலி யோர் தன்பால் வரக்கண்ட வருடகாரன் ஓரிடத்தே அவர்களை மிக்கமகிழ்ச்சியுடன் ஒளித்துவைத்து, தன்னொடு தருசகனால் விடுக்கப்பட்டுப் போந்திருக்கும் தாரகாரியை நோக்கி, நீ சென்று 1ஊர்கடற் றானையுதயணற்குறுகி எண்ணிய கரும மெல்லாந்திண்ணிதின் 2திரிதலின்றி முடிந்தனவதனால் 3பரிதல் வேண்டா பகைவன் றூதுவன் சகுனி கௌசிகன்றன்னை யன்றியும் விசய வில்லாளரை விடுத்தனென் விரைந்தென் றோடி னைசொல்லென அவனும் விரைந்து சென்று உதயணற்கறிவிப்ப, அவன் மகிழ்ச்சி யுற்று, பிங்கல சாரணி முதலாகவுள்ள வீரர் பதின்மரை விடுத்து. "சகுனிகௌசிகன் முதலாயினாரைப் பற்றிக் கொணர்க" எனப் பணிக்கின்றான். அவர்களும் சென்று. கெண்டைமீனை யெறியும் சிரற்பறவைபோல அவர்களைப் பற்றிக் கொணர்ந்து உதயணற்குக் காட்டுகின்றனர். உதயணன் அவர்களை இடவகன் பால் ஒப்பித்து "இரவுப் போது வருதலும் செந்தீ யீமத்து இவர்களுள் சகுனி கௌசிகன் முதல் மூவரை இடுமின்" எனக்கடுகிப் பணிக்கின்றான். பின்பு, உதயணன்தான் இருந்த குரம்பையொடு பாடிக் கொட்டிலும் தீயிடுவித்து அரிய காப்பமைந்த மலை யொன்றைச் சென்று சேர்கின்றான். இதனையறிந்த வருடகாரன், தன்முயற்சி பாழ்பட்ட தாகப் பொய்யாகப் புலம்பி வருந்து கின்றான். தப்பியோடியோர் சிலர் ஆருணியையடைந்து. அகலா தாகிய அரும்பெறற் 1சூழ்ச்சிச் சகுனி கௌசிகன்2சார்ச் சியை முன்னே உதயணனுணர்ந்து 3புதைவளர் தம்மெனத் தமர்களை யேவலின் அவர்வந்தவரைக் கொண்டனர் செல்ல வண்டலர்தாரோன் விடைப் பேரமைச்சனுழை விடுத்தலின் மற்றவன் கண்டவர் நடுங்கத் 4தண்டந்தூக்கி இன்னுயிர் தவுக்கென வெரியகத்தி ட்டதும் பின்னர் மற்றவன் பெருமலையடுத்ததும் நம்மொடு புணர்ந்த5நண்புடையாளன் எம்மொடு போதந்திப்பாற்பட்டதும் இன்னவை நிகழ்ந்தவென உரைக்கின்றார்கள். ஆருணியும், "உதயணன் வருடகாரனை விடுத்து நீங்கினதனால், நாம் இனி இவனைத் தெளியலா"மெனத் தேர்ந்து, அகநகர்க்கண்ணே பெரும்படையை நிறுவி, எறிபடை யாளர் ஏழாயிரவரும், மறவர் ஆறாயிரவரும், தேர் ஆயிரமும், யானை ஐந்நூறும், பதினாயிரம் பரிமாவும். தன்னொடுவர, சாயன், காந்தாரகன், சூரவரன், பிரமசேனன். என்னும்தானைத் தலைவரும், பூரணகுண்டலனென்னும் அமைச்சனும் புடை சூழ வருடகாரன் இருக்கும் இடம் நோக்கி வருகின்றான். வருடகாரனும் அவனை எதிர்கொண்டு வணங்குகின்றான். ஆருணி, வருடகாரனை மகிழ்ந் தேற்று, அவற்கு, பதினா றாயிரரடுதிறன்மறவரும் 6அதிராச் செலவின வாயிரங் குதிரையும் 7முதிராயானை முந்நூற்றறுபதும் காணமும் வழங்கி நாணா டோறும் ஊனிடையறாமை யுணாத்தந்திடூஉம் சேனை8வாணிகஞ் செறியக் காக்கெனப் பணித்து, அவனது சேனைக்கு ஆறுகடந்து போதரும் வீரரும் கூறுகின்றான். வருடகாரனும், அவற்கு வழங்கப்பட்ட படைவீரரும் ஆருணி செய்த பொருள் சிறப்பைப் பெற்று ஆறுகடந்து சென்று அப்பால் தங்குகின்றார்கள். 26. பறை விட்டது வருடகாரன் பாஞ்சாலராயன் பக்கல் இருந்து வருகையில் ஒற்றர் போந்து. 1வடுவில் பெரும்புகழ் வத்தவன் மந்திரி இடவகன்2பணியி னேழாயிரவர் சவரர் புளிஞருங் 3குவடுறை குறவரும் குறுநிலமன்னரும் நிறைவன ரீண்டி வஞ்ச4காந்தையொடு கந்தவதி யெனும் குளிர்புனற் பேரியாறு கூடிய வெல்லையுள் நளிபுனனாட்டக நடுங்கக் கவர்ந்தாண் டொளிர்தரு மிருக்கையினொ5டுங்கினர்தாம் எனக் கூறுகின்றனர். பாஞ்சாலராயனும் செய்வகையாதென ஆராய்கை யில், உடனிருந்த வருடகாரன், அருளிக் கேண்மெனத் தெருளிக் கூறும்: மாரிப் பெரும்புனல் 6வருவாயடைப்பின் ஏரிப் பெருங்குளநீர்நிறை யிலவாம் அற்றேபோலப் பற்றாமன்னற்குத் தலைவரும் பெரும்படை தொலை7யநூறிற் சுருக்கமல்லது பெருக்கமில்லை. என்று கூறி மேலும் சொல்லலுற்று. "அரசே, கல்லிடையிட்ட காடுகடந்து வெள்ளிடை வந்த வேட்டுவப்படையினை எதிர்த் தழிப்பது இப்போது செயற்பாலதாம். அன்றியும், எதிர்த்து மேல் வந்த வேந்தனையும் வெற்பிடை முற்றுகை செய்து, நாம் நாற்படை சூழச் சென்று நெருங்குவோமாயின், அவன் தன்பாலுள்ள சிறுபடை யாளருடன் அகப்பட்டழிவன்" என்று கூறுகின்றான். இதனைக் கேட்ட ஆருணியும் மகிழ்ச்சிமிக்கு அவற்குச் சிறப்பொன்றியற்றிப் படையொடு செல்வதே பொருளென ஒருப்படு கின்றான். வருட காரனும் இதற்கிடையே இங்கே நிகழும் நிகழ்ச்சியினை உதயணற்கு மறைமுகமாகத் தெரிவித்து விடுகின்றான். உதயணனும் வேழமும் புரவியு மடங்கிய படையொன்றைத் தன் தம்பியர் தலைமையின்கீழ் அரணாக அமைந்த அம்மலையகத்தே நிறுத்து கின்றான்; அவற்கருகே தருமதத்தனைத் தலைவனாகக் கொண்ட படையொன்றை நிறுவு கின்றான்; இப்படைகட் கிடையே எறுத்துப் புடையல் இடவகன் பெருஞ்சேனையுடன் நிற்கின்றான். ஆருணியின் படையும் நெருங்குகிறது. அதற்குப் புறங்காட்டியோடுதல் போல உதயணன் சேனை இருபிளவாய்ப் பிளந்து நீங்குகிறது.; அவற்றிற் கிடையே நோக்கி ஆருணியின்படை செல்கிறது. 1உருள்படி போலவருடகாரன் போக்கிடமின்றி 2யாப்புறவடைப்ப இருங்கணி காரனெண்ணமாக வரம்பணி3வாரியுள் வந்துடன்புகுந்த அருந்திற லாருணி யென்னும் யானையைப் படைக்கலப் 4பாரம் பற்பல சார்த்தி இடுக்கண் யாஞ்செய5வியைந்த தின்றென 6வாரிப் பெரும்படை மற்றவண்வகுத்து நேராமன்னனை நீதியிற் றரீஇப் போரிற் கோடற்குப் புரிந்துபடை7புதையா வார்கழல் 8நோன்றாள் வத்தவன் எதிர் நோக்கியிருக்கின்றான். வருடகாரன் தனக்கு மெய்யான நண்பனெனும் கருத்தோடே ஆருணியும் செல்கின்றான். ஆருணி யூர்ந்துவரும் மந்தரமென்னும் யானையின் நெற்றியிலிட்ட படாம் சூறைக்காற்றால் கொட்டை யொடு பாறுகிறது; முழங்கிப் போந்த முரசம் திடீரெனக் கண்கிழிகின்றது; ஏந்திநின்ற கொடியும் முறிந்து வீழ்கிறது; புட்களும் தீநிமித்தம் செய்கின்றன. இவற்றைக்கண்ட ஆருணியின் அமைச்சனான பூரணகுண்டலன் என்பான், தாரணிமார்ப! 1பெயர்த்து நகரம் புகுது மிந்நாள் 2அகைத்த தறிந்தனை யருண்மதி நீயே3ன் றடையார்க்கடந்து தடைபா4டகற்றிய அறிந்துபடைவிடுப்பதன்னது பொருளெனத் தடுத்துரைக்கின்றான். உடனே வருடகாரன், "அரசே, இந்நி மித்தங்கள் பகைவர்க்கே யன்றி நமக்கல்ல; நாம் செய்வதே பொருள்" எனத் தூண்டுகின்றான். இருதிறத்தார் படைகளும் தம்முட் கலக்கின்றன. எண்டிசைமருங்கினும் 5இயமரத்தொலியொடு விண்டோய்6வெற்பொலி விரவுபுமயங்கி ஆர்ப்பிசையரவமும் போர்க்களிற்றதிர்ச்சியும் கார்க்கடலொலி யெனக்கலந்துடன் கூடித் 7திமிரம் பாய்ந்த வமர்மயங்8கமயத்துச் சிலைத் தன9தூசி; மலைத் தனயானை; ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை விலங்கினவொள்வாள் இலங்10கினகுந்தம் விட்டன தோம11ரம் பட்டனபாய்மா துணிந்தன தடக்கை குனிந்தன குஞ்12சரம் அற்றன பைந்தலை யிற்றன பல்கொடி சேர்ந்தன பல்குடர் வார்ந்13தன குருதி குழிந்தது போர்க்களம் எழுந்தது செந்து14கள் அழிந்தனபூ15ழி விழுந்தனர் மேலோர் இப்படி நிகழ்ந்த காலைவெப்ப16மொடு பெரும்படைச் செற்ற1த்திருங்கடல்மாந்திக் குஞ்சரக் கொ2ண்மூக்குன்றடைந்து குழீஇக் காலிய3லிவுளிக் கடுவளி யாட்ட வேலிடை மிடைந்து வாளிடை மின்னக் கணைத்4துளிபொழிந்த கார்வரைச் சாரல் உதயண குமரன் இடி போல் உரறிக் கொண்டு படைநடுவண் புகுந்து தாக்குகின்றான். ஆருணியரசனும் அவன்தானைத் தலைவர் களான காந்தாரகன், சாயன், சூரன், பிரமசேனன் என்ற நால்வரும் செந்நேராகச் சென்று பொருகின்றனர்.அப்போரில், கடகபிங்கலர் காந்தாரகனை வீழ்த்துகின்றார்கள். இவ்வாறே பிறரும் பொருதழிகின்றனர். இந்நிகழ்ச்சிகண்டு பொறாதெழுந்த ஆருணி, "என்னொடு போரேற்போர் உளராயின், ஈண்டுவந்து எதிர்க்க" என்று உரறுகின்றான். உடனே, உதயணன், 5தாங்கருங் காதற் றம்பியர் சூழப் பூங்கழற் றோழர் புடைபுடைய6ார்தர ஒன்னா7ப்பகையா னுதயணனென்பேன் இன்னாமன்ன! நின்னுயி ருணீஇய வந்தனென் என்றே. சென்று மேல் நெருங்குகின்றான். கண்டதும் கண்கள் தீப்பொறி போல, கைகள் கேடகம் தாங்க, மனம் சீற்றத்தாற் பொங்கிச் சீறியெழுகின்றான். உதயணனும் "இவனை இன்னேயொழித்து வெஞ்சினம் தணிகுவேன் என்று கடரச் செல்கின்றான். அக்காலை யில், தருமதத்தன் முற்போந்து." அரசே,மாற்று வேந்தனையான் பொருதழிப்பன்; இடையருளல் வேண்டும்" என வேண்டி விடை பெற்றுச் சென்று ஆருணியுடன் போர் தொடுக்கின்றான். இவ்வாறு, தருமதத்தன், பலர்க்குப்பதமின்றிப் பாஞ்சாலராயனைத் தனக்குப் பதமாகத் தலைப்1பெய்தேற்றலின் வார்கவுள் வேழமும் வசத்த2தன்றியவன் ஊர்வழிச் செல்லா தொல்குடி3நிற்றரக் கூர்கெழு வச்சிரங்கொண்டு வான4வன் கார்கெழுமாமலைக் கவின5ழித்தது போறில் தாரணிமார்பன் யானையை6வீழாக் கனல்சொரிமலையிற் கவிய7 நூறித் தார்கெழு மார்புந் தலையுந் 8தகர முடியணி யார முத்துநிரை 9துளங்கத் தொடியணி திண்டோ டுணிந்து நிலஞ்சோரத் தறுக ணிமையான் றருக்கி னொடுறுதி10யேய் பிறுமுனைமருங்கி னே11டுபடத்திருகி மால்12முதல் வகையி னான்13மறையாளன் மழுவேறுண்ட மன்ன14வன் போலக் கொழுநிணக் குருதியுட் குஞ்சரத் தோடும் அழிவு கொண்டாருணியவிந்தனள்; பிறகு தருமதத்தனே வெற்றி முரசினை வேழமேலேற்றி, "குருகுலத் திறைவன் கொற்றம் பெற்றனன்" என்று நகரினும் நாட்டினும் பறையறையப் பணிக்கின்றான். இவ்வாறு தன்வீரருள் ஒருவனானே தருமதத்தனே ஆருணியை வென்றதும் பறையறை வித்ததும் கண்ட உதயணன் தான் செய்தற் கில்லையேயென ஏங்கிச் சமழ்க்கின்றானாயினும், பகைவேந்தற்குரிய இறுதிக்கடனைத் தானே முன்னின்று முடிக்கின்றான். இதற்குள்ளே வருடகாரன் இரிந்தோடும் படையொடு ஒருங்குகூடிக் கொண்டு, வென்றி பெற்று வரும் உதயணனை வரவேற்றற்கு, கொடிக் கோசம்பிக் 1கொற்றவாயில் அடுத்தனன் முறுகி யஞ்சன்மின்யாவிரும் வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் கோமான் 2படுத்தனன் கண் டீர்பாஞ்சால ராயனை அடைத்தளிர்வையாத3கற்றுபின் கதவென அறிவிக்கின்றான். அது கேட்கும் நகரத்தார். "எம் வேந்தனாகிய உதயணனது வெல் பொறி யோலை வந்தாலல்லது, யாம் நும்மைப் புகுதரவிடோம்" எனப் புகன்று மறுக்கின்றனர். பின்னர், அவர்கட்கு உதயணன் மந்திரியாகிய இடவகன் வந்தமை தெரிவிக்க. அவர்கள் கதவைத் திறந்து எதிர்கொள்கின்றார்கள். வென்றிவீரருட் சிலர் பாஞ்சாலராயற்குக் கண்மணி போலும் நட்புடைய கும்ப னென்பவனை அந்நகரிடத்தே பற்றிக் கொலைபுரிகின்றனர். வேறும் பகைமன்னற்கு உற்றார் உள்ளரோவெனத் தேடிப்பற்ற. சான்றோர் இடைநின்று அவர்பால் அருள் செய்யப்பணிக்கின்றனர். பின்னர் நகர மெங்கணும், பணை முரசினையானைமேலேற்றி உதயணன் பகையினை யழித்து வென்றி போதரும் செய்தி தெளியப் பறை அறைந்து அறிவிக்கப் பெறுகின்றது. மகத காண்டம் முடிந்தது நான்காவது வத்தவகாண்டம் 1. கொற்றங்கொண்டது தன்வரவினைப் பறையறைவித்துப் பின்னே போதரும் உதயணன் வருடகாரனைவருவித்து. அவன் ஆருணியால் அறை போகாமல், தன் கருத்தினையே பொய்யாது முடித்த அருமையைப் புகழ்ந்து,அவன் ஏறிய யானையும் தன் மெய்யில் அணிந்த அணி கலனும் தந்து, அவற்கு ஆருணியளித்த செல்வத்தையும் கொடுத்துச் சிறப்பிக்கின்றான். பின்னர், தருமதத்தனையழைத்து, பாஞ்சால ராயனை வென்ற அவனது அண்மையைப் பாராட்டிப் பத்தூர் களைத்தந்து அதற்குச் சான்றாகப்1பட்டிகையும் வழங்குகின்றான். பெருங்கணியாவான் நகர்க்குட்புகுதற்குக் குறித்த நாளும் வருகிறது. 2நன்னாட் கொண்டுதுன்னினர் சூழ வெங்கண்யானை மிசைவெண்குடைகவிப்பப் பொங்குமயிர்க்கவரி புடைபுடைவீசக் கங்கை3நீத்தங்கடன்4மடுத்தாங்குச் சங்கமுந்5துரமு முரசினோ டியம்ப மன்பெரு மூதூர் மா6சனமகிழ்ந்து வாழ்த்து மோசை மறுமொழி யார்க்கும் கேட்பதை யரிதாய்ச் சீர்த்தகச் 7சிறப்ப ஊழிதோறு முலகுபுறங் காத்து வாழிய நெடுந்தகை யெம்மிடர் தீர்க்கெனக் கோபுரந் தோறும் பூமழைபொழிய உதயணன் போந்து கோயில் வாயில் புகுகின்றான். ஆங்கே, ஆருணியோடு ஈமமேறாத இயல்புடை மகளிர்க்கு ஏமம் அளிக் கின்றான்; ஏனோரை நோக்கி, அவரவர்க்குற் றோராய்ப் போரிடைப்பட்டார்க்கு ஈமக்கடனாற்றுமாறு பணிக்கின்றான். இவ்வாறு. செயற்குரியவற்றைச் செம்மையுறச் செய்தபின், முதற்பெருங் கோயில்முந்து தனக்கியற்றி மணிப்பூண் 1கண்ணியர் மரபறிமாந்தர் முட்டில் 2கோலமொடு கட்டில் படுப்ப 3நோற்றோர் விழையு நாற்பயன்மருங்கினும் முழவொலிச் சும்மை யொடு முரசங்கறங்க விடிவியல் சும்மையொடு வியனகர்4துவன்றிக் குடியுங் குழுவு5மடியுறை செய்ய ஏவல் கேட்குங் காவலரெல்லாம் பெருந்திறைச் செல்வமொடொருங் குவந்திறுப்பக் களம்படக்கடந்து கடும்பகையின்றி மாற்றாரைத் தொலைத்த மகிழ்ச்சியொடு திருவோலக்க மண்ட பத்தே அரசு கட்டிலில் உதயணகுமரன் உயர்வற வுயர்ந்து வீற்றிருக் கின்றான். 2. நாடுபாயிற்று ஆருணிவேந்தன் ஆட்சி செலுத்திய காலத்தில்,கோசம்பி தனக்குரியதல்லாத வேற்றுநாட்டது எனக் கருதி அதற்கேற்பத் தவறாக உண்டாக்கியிருந்த அரசியல் முறைகளை நீக்கிய உதயணன் தனக்குரியதாதல் பற்றிச் செங்கோற் செல்வம் சிறக்குமாறு பண்டைய அரசியல் முறையை நிறுவுகின்றான். ஆருணியீன் ஆட்சியால் நெருக் குண்டு வருந்திய தொல்குடி மக்கட்கு மனங்குளிரத் தகுவனகூறித் திருந்திய சிறப்பிற் 1றேவதானமும் அருந்தவர் பள்ளியு 2மருகத் தானமும் திருந்து தொழிலந்தணரி ருந்தவிடனும் தோட்டமும் 3வாவியுங் கூட்டியநல்வினை ஆவணக் கடையு மந்தியுந்தெருவும் 4தேவருலனும் யாவையு மற்றவை சிதைந்தவை யெல்லாம் 5புதைந்தவைபுதுக்கென் றிழந்த மாந்தரு மெய்துக 6தமவென முரசறைவிக்கின்றான். வறியோரும் முதியோரும் பிணியுற்றோரும் ஆதரவற்ற மகளிரும். உறுப்புக் குறையுற்றோரும் இவர் போலும் பிறரும் தன்பால் வந்து தம்குறையுரைத்துத் துன்பம் நீங்க இன்ப முண்டாக வேண்டுவனதரப் பெறுகவெனத் தெரிவிக்கின்றான். போர் வாழ்நரும், கல்விவாணரும், வணிகரும், அந்தணரும் விரதியரும், சிற்பியரும், பிறரும் தீதின்றி வாழுமாறு செம்மை செய்கின்றான். இதனால், மறனினெருங்கி நெறிமையி 1னொரீஇக் கூற்றுயிர் கோடலு 2மாற்றாதாக 3உட்குறு செங்கோலூறின்றுநடப்ப யாறுந்4தொட்டவும் மூறுவரைவொழுகக் காடும் புறவுங் கவின்று வளஞ்சிறப்ப பொய்யா5மாரித்தாகி வைகலும் 6தண்டாவின்பந்தலைத் தலைசிறப்ப விண்டோய் வெற்பின் வினைகு7ரலேனற் குறவரெறிந்த கோலக் குளிர்மணி முல்லைதலையணிந்த 8முஞ்ஞைவேலிக் கொல்லைவாயிற் குப்பையுள் வீழவும் 9புன்புல வுழவர் படை10மிளிர்த் திட்ட ஒண்கதிர்த் திருமணி யங்கண்11யாணர் மருதமகளிர் 12வண்டலுள் வீழவும் வயலேரெடுத்த கவ்வைக்13கிருங்கழிக் கயல்கொள் 14பொலம்புள் கதுமென வெருவவும் திணைவிராய்மணந்து திருவிழைதகைத்தாக் களவு 15மரம்புங் கனவினுமின்றி விளைத16லோவா வியன்பெருநாட்டொடு 17பட்டி நியமம் பதிமுறைநிறீஇ முட்டின்று நிரம்ப முழுமதிக்குடைநிழற்ற நல்லரசுபுரிந்தொழுகு கின்றான். அண்மையிலிருந்த பகைப்புலத்தவர் குறும்புசெய்யா வண்ணம் உதயணனுடைய தம்பியர் சென்று அவர் தலைமடங் குவித்து ஆணைவழியொழுகப் பண்ணுகின்றனர். இனி, உதயணன், தன்னொடு மகத நாட்டினின்றும் போந்த மறவரை அவர் நாட்டுக்கே செல்லவிடுக்கின்றான். அக்காலை, தருசகனுக்கு அருவிலை நன்கலம் பல கொடுத்து விடுகின்றான். அவரவரும் விடைபெற்று நீங்கினாராக, பட்ட மெய்திய பதுமாபதி யுடன் முட்டில் செல்வத்து முனிதல்1செல்லான் 2மட்டுவினை கோதை யொடுமகிழ்ந்து விளையாடிச் செங்கதிர்ச்செல்வ னெழுச்சியும்3பாடும் திங்களு நாளுந் தெளிதல் செல்லான் அந்தளிர்க் கோதையை முந்து தானெய்திய இன்பக்கிழ4வனிடவகையன்றி மன்பெருமகதன் கோயிலுள் வான்றோய் கன்னிமாடத்துப் பன்முறையவளொடு கழிந்தவும் பிறவுங்கட்டுரை மொழிந்து பொன்னிழைமாதரொடின்5மகிழ்வெய்திப் பெருநகர் வரைப்பிற் றிருமனையிருந்து தீயனநீக்கித் 6திருவிழை தகைத்தாத் தன் நாடெங்கும் செல்வமும் சிறப்பும் பெருகிப் பரவச் செய்தான். 3. யாழ்பெற்றது உதயணன் ஆட்சி செலுத்தி வருகையில் தன்வீரனை யழைத்து, "நீவிர் விரைந்து சென்று கானகத்தில் யான் வாசவதத்தை யொடு ஊர்ந்து போந்த பிடியானை வீழ்ந்துவிட்டது; அதன் என்பும் தோலும் பிற உள்ளவையும் நாடிக் கொணர்மின்" என்று கூறி அவ்விடத்தையும் குறித்து விடுகின்றான். அவர் சென்றபின், வேட்டுவத்தலைவரையும் ஏனைக் குறவரையும் வருவித்து. 1அடவியுள் வீழ்ந்த கடுநடையிரும்பிடி நம்மாட்டுதவிய 2நன்னர்க் கீண்டொரு கைம்மாறாற்றுத லென்றுமின்மையின் உதவிசெய்தோர்க் குதவாராயினும் மறவி3யின்மை மாண்புடைத் ததனாற் 4கோடுயர் வரைப்பினோர் மாடமெடுப்பித் 5தீடமைபடிவமிரும்பிடியளவா ஏற்பவெடுப்பித் தெல்லியுங் காலையும் பாற்படல் பரப்பிப் பணிந்துகை கூப்பி வழிபாடாற்றி வழிச்செல்வோர்கட் க6ழிவு நன்ககல வரும்பத7மூட்டாத் தலைநீர்ப் பெருந்8தளி நலனணி கொளீஇ எனைவராயினு மினைவோர்க்கெல்லாம் முனைவெந்துப்பின முன்னவணீகென மொழிந்து, அதற்கேற்ற விருத்தியும் கொடுக்கின்றான். உடனே தச்சரும் கொல்லரும் சிற்பியரும் அவ்விடம் சென்று தளியும் சாலையும் சமைக்கின்றார்கள். வேட்டுவரும் என்பும் தோலும் தேடிக் கொணர்கின்றனர். அவர்கட்கு இன்னுரையமுதமும் பொன்னும் பொருளும் உதயணன் வழங்குகின்றான். சின்னாளில், உதயணன் விரும்பிய யானைத்தளியும் சாலையும் அமைக்கப்படுகின்றன. நான்மறையாளர் நன்றுண்டாகெனத் தாமுறைபிழையார் தலைநின்றுண்ணும் 1சாலையுந்தளியும் பால2மைத் தியற்றிக் கூத்தியரிருக்கையுஞ் சுற்றியதாகக் காப்பிய3வாசனை கலந்தவை சொல்லி எண்ணியதுண்ணுமேண்4டொழிலறாஅக் குழாஅமக்களொடு திங்கடோறும் விழாஅக் கொள்கென வேண்டுவகொடுத்து உதயணனும் யானைக்குரிய கடனைச் செய்து முடிக்கின்றான். இஃதிங்ஙனமாக, உஞ்சேனை நகரத்தில் வாழும் அருஞ்சுக னென்னும் அந்தணனொருவன், உதயணன் வாசவதத்தையொடு போந்த காட்டுவழியே வருகின்றான். அவன் பல்கலையும் நன்கு பயின்றவனாதலோடு, தல5முதலூழியிற்றானவர் தருக்கறப் புலமக6ளாளர் புரிநரம்பாயிரம் வலிபெறத் தொடுத்தவாக்க7மை பேரியாழ்ச் செலவு8முறையெல்லாம் செய்கையிற் றெரிந்து மற்றையாழுங் கற்று முறை பிழையான் பண்9ணுந்திற10னுந்திண்ணிதிற்11சிவணி வகைந12யக் கரணத்துத் தகைநயம் நவின்று நாரத 13கீதக் கேள்வி நுனித்துப் பரந்த நூல்பலவும் நன்கு பயின்ற பயிற்சியுடையன். அவனு டைய தமர், கோசம்பிநகரத்தில் வாழ்கின்றமையின், அவரைக்காண்டற்கு வருகின்றான். வழியில் காட்டிடத்தே யானைக் கூட்டம் நீர்நசை கொண்டெழுவதைக் கண்டு அஞ்சி அருகிருந்த வேங்கை மரத்தில் ஏறிக் கொள்கின்றான். எழுந்து வரும் யானைக்கூட்டம் ஓர் மூங்கிற் புதரருகே வந்ததும் அசைவின்றி நின்றொழிகின்றன. அருஞ்சுகனும் வியந்து அவ்விடத்தை நோக்குகின்றான். அங்கே, கொய்தகைகொடி யொடு மெய்யுறநீடிய கரப்1பமை நெடுவேய் நரப்புப்புறம் வருடத் தாஅந்தீமெனத் தண்2ணிசைமுரலத் தீந்தொடைத் தேனினஞ் செற்றி3யசைதர வடிவேற்றானை வத்தவர் பெருமகன் படிவ விரதமொடு பயிற்றிய நல்லியாழ் கடி4மிகு கானத்துப் பிடிமிசைவழுக்கி வீழ்ந்த வெல்லை முதலாவென்றும் தாழ்ந்த தண்வளி யெறி தொறும் போகா5 அந்தரமருங் கினமரர் கூறும் மந்திரங் கேட்குஞ் செவிய போலக் கையுங்காலு மாட்டுதல் செய்யா மெய்யொடு மெய்யுறக் குழீஇ மற்றவை பிறப்புணர்பவை போலிறப்பவு 6நிற்ப மிகவும் வியப்படைகின்றான். சிறிது போதில் யானைகள் போய் விடுகின்றன. அருஞ்சுகன் யாழை எடுத்துக்கொண்டு கோசம்பி வந்து சேர்ந்து தன் சுற்றத்தார் மனையில் தங்கி, சுற்றத்தார் மகிழ அதனை இசைக்கின்றான். அதன் இசை காற்றின் வாயிலாக அரசன் மனையில் கேட்கின்றது. இன்பவிளையாட்டில் மகிழ்ந்திருந்த உதயணன் செவியில் அவ்விசையமுதம் பாய்ந்து "பெரும, என்னை மறந்தனைபோலும்; நின்மனம் வலிது காண்" என்று சொல்லுவது போல்கின்றது. உடனே உதயணன் மெய்காப்பாளனை அழைப்ப, வயந்தகன் போதருகின்றான். அவன்பால் உதயணன் நிகழ்ந்தது கூற, அவனும் இவ்விசை கோடபதியாகிய யாழின் இசையே யென உணர்ந்து அருஞ்சுகனைக் கண்டு அவ்வியாழைப் பெற்றது எவ்வகையென்று வினவ, அவனும் உண்மையை யுரைக் கின்றான். வயந்தகன் அவனை யாழொடு உதயணனைக் காணவருமாறு அழைத்துவருகின்றான். உதயணனும் மகிழ்ந்து, வருகவென்1னல்லியாழ் வத்தவனமுதம் தருகவென்றளித்துணைதந் தோய்நீயிவண் வேண்டுவதுரையென்றாண் டவன் வேண்டும் அருங்கல2வெறுக்கையொடு பெரும்பதிநல்கி அந்நகர் இ3ருக்கப் பெறாஅய்நீயெனத் தன்னகரத் தேதக்கவை4நல்கி உலவா5விருப்பொடு புலர்தலை கூறும் உள்ளியு முருகியும் புல்லியும் புணர்ந்தும் பள்ளிகொள்வானாயினன். 4. உருமண்ணுவா வந்தது விடிந்த பொழுதில் எழுந்த உதயணன், வாசவதத்தையை நினைந்து "நீ இசைத்த யாழ் என்னைவந்து சேர்ந்தது; நீ வந்திலை; என்னை மறந்தனைபோலும்" என்று வருந்தினான். தம்பிகளை அடைந்ததும் கோடபதியாம் யாழைப் பெற்றும் மகிழ்வின்றி இருந்தான். உதயணன் இவ்வாறு இருக்க, இராசகிரிய நகரத்தில் தருசகன் தான் பாதுகாத்து வைத்திருந்த சங்கமன்னருடைய பொருள்களை விடுவித்து, "இங்கே உள்ள அரசர்களை விடுவிப்பேன்; உருமண்ணு வாவை நீ விரைந்து விடுவிக்க" என்று கருமக் காரர்களை, (கடப்பாட்டாளர்களை) விடுத்தான். சங்கமன்னர், "இழிந்த மாக்களோ டின்பம் ஆர்தலின்1 உயர்ந்த மாக்களோ மறுபகை இனிதென மகிழ்ந்த நெஞ்சமொடு" உருமண்ணுவாவை விடுவித்தனர், உருமண்ணுவா வந்து, தருசகனைக் கண்டான்: சித்திராங்க தானையும் சிறையில் இருந்த பிற அரசர்களையும் விடுவிக்கச் செய்தான்; உதயணனைப் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்து எல்லையற்ற உவகை எய்தினான், அந்நிலையில், சாதகன் என்பான் யூகி கொடுத்த ஓலையை உருமண்ணுவாவிடம் கொடுத்தான். அதில், "நாம் நினைத்தவை எல்லாம் நிறைவேறின; இனி வாசவதத்தையை உதயணனிடம் ஒப்படைத்தலே முறைமை" என்று எழுதியிருந்ததை அறிந்தான். உருமண்ணுவா சாதகனிடம், "நாம் பிரிந்தபின் நிகழ்ந்தவற்றைக் கூறவேண்டும்" என்ன அவன் கூறினான். உருமண்ணுவா சாதகனுடன் யூகியையும் வாசவதத்தையையும் புண்டரம் என்னும் நகரில் கண்டு அவர்களொடு கௌசாம்பி நகருக்குச் சென்று மதுகாம்பீரம் என்னும் சோலையை அடைந்து, விருந்தின் மன்னர்1 இருந்துபயன் கொள்ள இயற்றப் பட்ட செயற்கருங் காவினுள் மறைத்தனன் அவர்களைத்2 திறம்பட இரீஇயபின் வந்த உள்ள மொடுருமண்ணு வாவும் புகுந்தனன் மாதோ பொலிவுடை நகரென்.3 5. கனா இறுத்தது உதயணன், புதுமணக் கோமகள் பதுமாவதியொடு பாடியும் இனசத்தும் மகிழ்வோடு இருந்தனன், அப்போது பதுமாவதி, "வடிவேல் தடங்கண் வாசவ தத்தை வழிபா டாற்றி வல்ல ளாகிய அழிகவுள்1 வேழம் அடக்கு நல்லியாழ் யானும் வழிபட் டம் முறை பிழையேன் காண லுறுவேன் காட்டி யருளென முள்ளெயி றிலங்கச் செவ்வாய் திறந்து சில்லென் கிளவி2 மெல்லென மிழற்றி நகைநயக் குறிப்பொடு தகைவிரல் கூப்பி" வேண்டினாள். வாசவ தத்தை கற்றவாறு யானும் அவ் யாழில் கற்க விரும்பு கிறேன் என்ற பதுமாவதியின் வேண்டுதல் எரிபுண்ணில் எறிந்த வேல் போல் உதயணனை வெதுப்பியது. ஏதும் உரையானாய் உழன்ற அவன் முகக் குறிப்புணர்ந்து இப்பொழுது புலத்தல் பொருத்தம் இல்லை. வாசவ தத்தையை இவ்வாறு நினைந்துப் போற்றுவது முறையே: ஒழுக்கமுடையார் இயல்பு இதுவே என எண்ணி ஏதோ ஒரு செயலை நோக்கிச் செல்வாள் போலச் சென்றாள். கவலையோடிருந்த உதயணனை வயந்தகன் நெருங்கினான். வாசவ தத்தைக்கும் பதுமாபதிக்கும் நிறைகோல் போல் சமமாக அன்பு காட்டிய நீ இதுகால் இவ்வாறு ஒருபால் உயரவும் தாழவும் ஆயது என் என அதனைச் செவிக் கொள்ளாமல் "இரும்பு புரை1 எருத்தம் ஏறிய ஞான்று2 கண்டது முதலாக் கானம் நீந்திக் கொண்டனன் போந்தது நடுவாப் பொங்கழல் விளிந்தனள்3 என்ப திறுதி யாக அழிந்த நெஞ்சமொ டலமரல் எய்தி" இரவெல்லாம் கண்ணுறங்கா துழன்று விடியலில் கண்ணயர்ந்தான். அவ்வேளையில் பாற்கடலில் முழுமதி கிளர்ந்து வந்த தென்னும் எழிலுடன் ஏறு ஒன்று வரவும், அமரர் கோன் நிதியின் கிழவன் ஆயோர் போற்றவும் எழிலார்ந்த தெய்வமங்கை வெண்டாமரைப் பூ வொன்று வழங்கவும் கனவு கண்டான்; விழித் தெழுந்தான். அருகனாலயம் ஒன்றை அடைந்து, ஆங்கிருந்த அறிவரிடம் "இன்றியான் கண்டது இன்னது மற்றதை என்கொல் தானென"க் கேட்டனன். உதயணன் கண்ட கனாவினைக் கேட்ட அவ்வறிவர், "மாசில் கற்பின் வாசவ தத்தை முழங்கழல் மூழ்கி முடிந்தனள் என்பது பொய்யெனக் கருது புரவ லாள; இந்நாளகத்தே சின்மொழிச்4 செவ்வாய் நன்னுதல் மாதரை5 நண்ணப் பெறுகுவை; பெற்ற பின்றைப் பெய்வளைத்6 தோளியும் கொற்றக் குடிமையுட் குணத் தொடும் விளங்கிய விழுப்பெறுஞ் சிறப்பின் விஞ்சையர்7 உலகின் விழுக்கில்8 சக்கரம் வலவயின் உய்க்கும் திருமகற்9 பெறுதலும் திண்ணிது" என்று கனவொடும் இணைத்துக் காட்ட "அறிவர் உரை என்றும் பொய்க்காது" என மகிழ்ந்து அரண்மனையை அடைந்தான். அந்த மகிழ்வான பொழுதில் உருமண்ணுவா அரண்மனையை அடைய அவனை முற்படச் சென்று அழைத்து அரவணைத்து, யூகியைப் பெற்றது போன்ற களிப்பொடு அந்தப் புரம் அடைந்தான். 6. பதுமாபதியை வஞ்சித்தது உதயணன் உருமண்ணுவாவுடன் ஒருதனி இடத்தே விருந்து தாங்கள் பிரிந்த பின் நிகழ்ந்தவற்றைக் கூறுக என்று கேட்டான். உருமண்ணுவா தான் சிறைப்பட்டது முதலாகிய செய்திகளைக் கூறினான். அப்பொழுது அங்கு வந்த வயந்தகனிடம், 'இங்கு நிகழ்ந்தது கூறுக' எனக் கேட்டறிந்தான் உருமண்ணுவா; அது போது, கோடபதியை உதயணன் மீண்டும் பெற்றதைக் கூறும்போது உதயணன் வாசவதத்தையை நினைத்துப் பெருந்துயருற்றான். அத்துயர் ஆற்றும் வகையால் வயந்தகன். "நயந்துநீ அரற்றும் நன்னுதல் அரிவையும் பயந்த கற்பிற் பதுமா பதியுமென் றிருவ ருள்ளும் தெரியுங் காலை யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும் யாவரை உவத்தி1 யாவதை யுணரக் காவ லாள கரவா2 துரையென" வேண்டினான். உதயணன், "பீடுடை ஒழுக்கில் பிரச்சோதனன் மகள் வாடிடை மழைக்கண்3 வாசவ தத்தை"யே மிகு விருப்புக் குரியவள். என் தவக் குறையால் அவளை எரியுண்ண அவலமுறுகின்றேன் என்றான். "வாசவதத்தை மீது வாஞ்சை மிக்குடைய நீ பதுமாவதியைக் கண்டு அவனை மறந்தது ஏன்? 'ஒருபாற்பட்டது அன்று உன்மனம்' என்றான் வயந்தகன். பதுமாபதியும் தத்தையும் பலவகையாலும் ஒப்புடையவர்கள் ஆயமையால், என்மனம் சென்றுவிட்டது. அன்றியும் என் வினைப் பயனும் அதுவேயாம் என்றான். நாம் இராச கிரியத்தின் புறத்தே தங்கிய நாளில் கண்ட காகதுண்டகன் என்னும் அந்தணன், இன்று இங்கே வந்துள்ளான். அவன் வாசவ தத்தையை வரச் செய்து வழங்குவதாகக் கூறியுள்ளான். ஆதலால், நீ பனிமலர்க் கோதைப் பதுமாபதியை நீங்கித் தனிமையில் தங்குதல் நலமாம் என்றனன். அதனைக் கேட்டு மகிழ்ந்த உதயணன், "என்பகைவரை அழிக்கும் ஒருகடமை உண்டாயிற்று. அதனால் பதுமாவதி முதலிய யாவரும் அகன்று செல்க" எனப் போக விடுத்தான். பின்னர் அவ்வந்தப் புரத்தில், மயிரினும் தோலினும் நூலினும் இயன்ற பயில்பூஞ் சேக்கையுள்1 பலரறி வின்றி உழைக்கலச் சுற்றமும்2 ஒழிந்தனன் ஆகி விழுத்தகு வெண்டுகில்3 விரித்தனன் உடுத்துத் தூய னாகி வாய் மொழி பயிற்றித் தோள் துணை மாதரை மீட்டனை பணியென வாட்படை மறவன்4 காட்டிய வகைமேல் சேட்புலம் பகலச்5 சிந்தை நீங்கி வீணை கைவலத் திரீஇ6 விதியுளி7 ஆணை வேந்தன் அமர்ந்தனன் துயிலென் 7. வாசவதத்தை வந்தது உதயணன் துயிலும் போது, வேறு பெண்களிடத்து அவனுக்குப் பற்று இல்லை என்பதையும், தன்பகையை வெல்லுதற்குத் தருசகன் உதவியை விரும்பியே அவன் தங்கை பதுமாவதியை அவன் மணந் தான் என்பதையும், அவன் இரவு பகல் எப்போதும் வாசவதத்தையை எண்ணியே புலம்பிக் கொண்டிருப்பதையும் வாசவதத்தைக்குக் காட்டி உதயணன் மெய்யன்பை உணர்ந்து கொள்ளுமாறு அவளைச் சிவிகையில் ஏற்றிக் கொண்டு வந்து, உதயணன் துயிலுமிடத்தே அமைச்சர்கள் விடுத்தனர். அப்போது உதயணன் "வாசவதத்தையே உனக்கு யாழ் கற்பிக்கும் போது உன்பார்வையால் துயருற்ற யான், உன்னைப் பிரிந்து தாங்காத் துயருற்றேன்; நீ என்னை மறந்து விட்டாயோ" என்று கனவில் வருந்தி ஆங்குப் பரப்பப்பட்ட மலர்களும் வாடுமாறு பெருமூச்சு விட்டுக் கிடந்தான். அவன் நிலையை வாசவதத்தைகண்டு, "கனவினும் இதுவோ நறுந்தார் மார்பன் தன்னல தில்லா நன்னுதல் மகளிரை மறுதர வில்லாப் பிரிவிடை அரற்றுதல் உறுகடல் வரைப்பின்1 உயர்ந்தோற் கியல் பெனல் கண்டேன்" என்று மகிழ்ந்து, "இவ் வன்புடையார்க்கு மறுமையின்பமும் எய்தட்டும்" என்று வணங்கியவளாய் நெருங்கிச் சென்றாள். உதயணனால் தழுவிக் கிடக்கப்பட்ட கோடபதியாழைக் கண்டு பெற்ற குழந்தையைக் கொண்டு மகிழும் தாயே போல அமைந்து அதனை மெல்ல மீட்டினாள், அவ்விசையொலி உதயணன் செவியில் படவே, "வாசவ தத்தாய் வந்தனை யோவெனக் கூந்தன் முதலாப் பூம்புறம் நீவி1 ஆய்ந்த திண்டோள் ஆகத் தசைகி2 என்வயின் இனையா3 தேதிலை4 போல நன்னுதல் மடவோய் நாள் பல கழிய ஆற்றிய5 வாறெனக் கறியக் கூறு" என்றான். வாசவதத்தை மாற்றுரை கொடாது இருந்தாள். உதயணன். நாம் பூம் பொழில் விளையாட்டுக்குப் போய் இலாவாண மலைச் சாரலில் தங்கிய போது நீ தழையும் மலரும் கொய்து தர வேண்டிய போது, அவற்றைப் பறிக்க யான் சென்ற போதில் வீட்டில் தீப்பற்ற உயிர் நீத்த இனியவளே உன் அணிகலன்களை எல்லாம் அகற்றி மற்றொருத்திபோல் தோன்றுகின்றாய்; எரியில் பட்டோர் இயல்பு இதுவோ? கூறுக என்று அவளை மெல்ல வருடித் துயின்றான். அப்பொழுது அமைச்சன் வயந்தகன் அணுகி," நீ ஒழுக்க மிக்க யூகி அமைச்சனுடன் இங்கு வந்து சேர வேண்டியது நாளைக்கே ஆகும். ஆதலால் இங்கிருந்து புறப்படுக. "கேள்வன்6 அன்பு கெடாஅன் ஆகுதல் துயிலுறு பொழுதில் தோன்றக் காட்டுதல் அயில்வேல் கண்ணி யதுநனி வேண்டித்7 தந்தேம் என்பது கேள்" என்றான். வாசவதத்தை பிரிவதற்கு வருந்தி தன் மேல் வைத்திருந்த உதயணன் கையை மெல்ல எடுத்து வைத்துவிட்டு, உடலில் இருந்து பிரியும் உயிரே போல வெளியேறிச் சாங்கியத் தாயையும் யூகியையும் அடைந்தாள். பின்னர் உதயணன் விழிப்புற்று, "என் வினாவுக்கு ஏன் நீ விடை தரவில்லை" என்று அவளை அரவணைக்க முயல, அவளை அங்கே காணானாய்ச் செயலற்றுத் துயிலொழிந்து, கிடைத்தற்கு அரிய மாணிக்கத்தைப் பெற்ற ஏழை ஒருவன் ஆழமான கடலில் கைவிட்டுத் துயரடைவது போல வருந்தினான். அவன் நிலை கண்ட வயந்தகன் "காவல் மன்னன் இவ்வாறு இரவும் பகலும் கவலையினனாக இருப்பது முறையன்று" என்று விளக்கிக் கூறினான். உதயணன், "தேரணி சேனைத் திறன்மீக் கூறிய பிடிமகிழ் யானைப் பிரச்சோ தனன்மகள் வடிமலர்த் தடங்கண் வாசவதத்தையென் பள்ளிப் பேரறை பையெனப்1 புகுந்து நல்லியா ழெழீஇ2 நண்ணுவன விருப்ப வாச எண்ணெய் இன்றி மாசொடு பிணங்குடி கிடந்த பின்னுச் சேர் புறத்தொடு மணங்கமழ் நுதலும் மருங்குலும்3 நீவி அழிவு நனி தீர்ந்த யாக்கையே னாகிக் கழிபே ருவகையொடு கண்படை கொளலும்4 மறுத்தே நீங்கினள் வயந்தக" என்று தன் ஆற்றாமையை உரைத்தான். அம்மொழி கேட்ட வயந்தகன், "கனவில் கண்டதை நனவில் பெறுதல் தேவர்க்கும் அரிது; உன் இச் சொல்லைப் பிறர் கேட்பின் நகைப்புக்கு உரியதாம். இங்கே வாசவதத்தை போல் உருவம் கொண்ட இயக்கி ஒருத்தி உண்டு. அவள் செயல் இது. இதனைத் தடுக்கும் மந்திரத்தை யான் அறிவேன்" எனப் பல கூறினான். பொழுது விடிந்தது. விடியல் கடமைகளை முடித்து வாசவதத்தையை நினைந்து மறைவல்லார்க்கு உயரிய அணிகளை வழங்கித் தான் கண்ட கனவை உரையாமல், "காமுறு நெஞ்சில், காதலர்ப் பிரிந்தோர்க்கு ஏமுறு வேட்கை5 யாகு மென்பது ஈது கொல் என்னப் பற்பல நினைஇ" இருந்தனன், அப்பொழுது வயந்தகன், "நாம்முன்னர் மகத நாட்டில் கண்ட அந்தணர், இந் நகரிலுள்ள மதுகாம்பீரம் என்னும் பொழிலில் வந்து தங்கியுள்ளார். அவரை நாம் காணச் செல்வோம்" என்றான். உதயணன் மகிழ்ந்து தேரில் புறப்பட்டான். மதுகாம்பீரவன மாளிகையில் ஓரறையில் தவக் கோலத்தோடு தங்கியிருந்தான். அடுத்திருந்ததோர் அறையில் சாங்கியத்தாயும் வாசவதத்தையும் இருந்தனர். வயந்தகன் தானும் உதயணனும் வந்ததை முதலாவதாக யூகிக்கு உணர்த்தினான்; உதயணனோடு சென்று தவயூகியை அணுகிக் காட்டினான். "இவன் நாம் முன்னர் மகதத்தில் கண்ட முனிவன் அல்லன்; யூகியே ஆவன். இவனைத் தழுவுமாறு வேட்கை எழுகிறது" என்று எண்ணிய உதயணன், தவக் கோலமுடையானின் மார்புத் தழும்பைக் கண்டு 'இவன் யூகியே' என உறுதி செய்தான். மட்டற்ற மகிழ்வுற்று "ஊறில்1 சூழ்ச்சி யூகந்த ராய" என்று சொல்லிக் கட்டித் தழுவினான். தேனொடு பால் கலந்தது போல மகிழ்வுற்றனர். உதயணன் யூகியை நோக்கி, "எக்காரணம் கொண்டேனும் இனி நீ என்னை விட்டு நீங்குவையாயின், நீங்கும் என்னுயிர்" என்றான். உதயணன் ஆவலை உணர்ந்த யூகி, "இனிக் காலம் தாழ்த்தாது தத்தையை இவனுக்குக் காட்டுதல் வேண்டும்" என்று கூறினான். உதயணனைச் சாங்கியத் தாயும் வாசவ தத்தையும் உறைந்த மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அவ்வளவில் உதயணனைக் கண்ட தத்தை. "காரியம் இதுவெனச் சீரிய காட்டி அமைச்சர்2 உரைத்தது இகத்தல்3 இன்றி மணிப்பூண் மார்பன் பணித் தொழில் அன்மை நல் ஆ சாரம் அல்லது புரிந்த கல்லாக் கற்பிற் கயத்தியேன்4 யானென நாண்மீ தூர நடுங்குவணன் எழுந்து" கைகூப்பி, உவகைக் கண்ணீர் வடித்தனள்; பல்கால் அவளைத் தழுவினான் உதயணன், பின்னர் அப்பால் நின்ற சாங்கியத்தாயை நோக்கி, "துன்பக் காலத்துத் துணையெமக் காகி இன்பம் ஈதற் இயைந்து கை விடாது பெருமுது தலைமையின் ஒருமீக் கூரிய உயர்தவக் கிழமைநும் உடம்பின் ஆகிய சிற்றுப காரம் வற்றல் செல்லாது ஆல வித்தில் பெருகி ஞாலத்து நன்றி யீன்ற தென்று1 அவட் கொத்த சலமில்2 அருள்மொழி சாலக் கூறி" னான். இரவில் கண்ட வடிவே வடிவாய் வாசவதத்தை இருத்தலைக் கண்டான் உதயணன். நகரம் அறியத் தான் வாசவதத்தையை அடைந்து மகிழ்வாய் இருத்தலைத் தெரிவித்தான். நகரத்தோர் தத்தம் மாடங்களில் கொடி எடுத்து மகிழ்ந்து வரவேற்றனர். வாசவதத் தையின் கற்பு மேம் பாட்டையும், யூகியின் திறத்தையும் சீராட்டிப் பாராட்டினர். யானைமேல் கொண்டுவரப்பட்ட நன்னீரால் உதயணனும் வாசவதத்தையும் நீராடி, நல்லுடை உடுத்து நல்லணி பூண்டு விளங்கினர். 8. தேவியைத் தெருட்டியது உதயணன், 'யூகியைப் பாராட்டிச் சொல்லுதல் உயிர் நட்பிற்கு உரியது அன்று' என்று எண்ணி, ஒன்றும் கூறானாய், சாங்கியத் தாயின் சால்புகளை மீட்டும் பாராட்டினன். வாசவதத்தையை வந்து காணுமாறு பதுமாவதிக்குச் சொல்லி யனுப்பினன். அவன், 'உதயணன் உயிர்க் காதலி வாசவ தத்தை' என்பதை உணர்ந்தவள் ஆதலால், உடனே அணிமணிகள் பலவற்றைக் காணிக்கையாக ஏந்தி, அரசனை அகன்று தத்தை தனியே இருந்த வேளையறிந்து, தன் தோழியர் சூழச் சென்று வணங்கினாள். அவன் அவளைத் தழுவிக் "கற்பு மேம் படீஇயர் கணங்குழை1 நீயென" என்று வாழ்த்தி அவளைத் தன்னோடு இருக்கையில் அமர்த்தினான். இருவரும், "திருவிரண்2 டொருமலர் சேர்ந்தவண் உறையும் பொருவரும்3 உருவம் பொற்பத்4 தோன்றி"னர் இப்பால் உதயணன் யூகியினிடம் "உஞ்சைச் சிறையில் இருந்து என்னை மீட்ட பின்பு, மீட்டுமொரு சாவு நேர்ந்ததாகக் காட்டியதற்கும் வாசவதத்தை தீயிற்பட்டு இறந்தாள் என்று பொய்ச் செய்தி பரப்பியதற்கும் என்ன காரணம்?" என்று கேட்டான். "பாஞ்சாலமன்னன் கௌசாம்பியைத் தன்னுடைமை ஆக்கிக் கொண்டான். பிரச்சோதனனும் நட்புக் கொள்வதற்குரிய காலத்தையும் கருதிக் கொண்டிருந்தான். இவற்றை யான் ஒற்றரால் அறிந்தேன். அவன் சூழ்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும், நீ மீளவும் ஆட்சி புரிய வேண்டும் என்றும் எண்ணினேன். நீ இது பற்றிக் கவலை யொன்றும் இல்லாதவனாய் வாசவதத்தையைப் பிரியா உறவில் உறைந்தாய்; இந்நிலையை மாற்றியமைக்க எண்ணினேன். தருசகனை உனக்குப் படைத்துணையாக்க உறுதி கொண்டேன்; பிங்கல கடகரை உன்நட்பாக்க விரும்பினேன். இவற்றையெல்லாம் நிறைவேற்றுதற்காகவே மாயச் சாக்காடு உற்றதாகவும், எரிவாயில் தத்தை பட்டதாகவும் பொய்யை மெய்யாகப் பரப்பினேன். திருவருள் துணையால் வெற்றியே எய்தியது. இவ்வெற்றிக்குப் பேருதவியாக இருந்தவர் இச் சாங்கியத்ததாயே" என விரித்துரைத்தான். மேலும் உன் இசைவு பெறாமலே என் மனம்போல் செயல்பட்ட என்னை நீ பொறுத்தருளல் வேண்டும் என்றான். இம்மறு மொழி கேட்ட உதயணன், "வழுக்கிய1 தலைமையை இழுக்கம்2 இன்றி அமைத்தனை நீயென அவையது நடுவண் ஆற்றுளிக் கூற அத்துணை3 யாயினும் வேற்றுமைப் படுமது வேண்டா ஓழிகென" தானும் யூகியும் உயிரொன்றானவர் என்பதை எண்ணிக் கூறா யமைந்தான்; யூகியைத்தன் மெய்யன்பைக் காட்டி அரண்மனையுள் சென்றான். அங்கே வாசவதத்தையொடு பதுமாவதியை ஒரு கலத்துண்ணு மாறு கூறியிருப்பப் பதுமாவதி, அரும் பெறற் காதலன் திருந்தடி வணங்கினாள். வணங்கி, "பெருந்தகு கற்பின் எம் பெருமகள்4 தன்னொடு, பிரிந்த திங்கள் எல்லாம் பிரியாது ஒருங்கவண் உறைதல் வேண்டுவல் அடிகள் அவ்வரம் அருளித் தருதல்என் குறை5 என" வேண்டினாள், அதற்கு இனிய மொழிகூறி முதற் பெருந்தேவி கோயிலுக்குச் சென்றாள். பதுமாவதியிடம் உதயணன் வைத்திருக்கும் காதலன்பை உணர்ந்த வாசவதத்தை ஊடினாள். பதுமாவதியைத் தன்னொடும் ஒப்பிட்டு எண்ணிய எண்ணம் அவளை உருத்தியது. "அறிவிலும் அழகிலும் உன்னை ஒப்பவளாக இருந்தமையால் யான் மணம் செய்தேன்" என்று உதயணன் கூறியதைத் தாங்கிக் கொள்ள அவளால் இயலவில்லை. உதயணன் பலப்பல கூறிப் பணிவுடைய சொல்லனாய், "அவன் தோற்றத்தால் அல்லாமல் குணத்தால் சிறிதும் ஒப்பாக மாட்டாள்" என்று தெளிவித்து அவள் துயரை நீக்கினாள். 9. விருத்தி வகுத்தது இவ்வாறு மகிழ்வாக இருக்கும் நாளில் உருமண்ணுவாவை அழைத்துத் தன் பெயர் எழுதிய மோதிரத்தைத் தானே அணிவித்து "நீ படைத்தலைவனாக விளங்குக" என்று வாழ்த்தினான் உதயணன். பழுதிலாமல் பல பல நூறாயிரம் வருவாய் வரும் ஊர்களையும், நால்வகைப் படை களையும் வழங்கினான். பதுமாவதியின் கண் போன்ற தோழியாக இருந்த இராசனை என்பாளை அவனுக்கு மணவாட்டியாக்கி வேண்டும் வளங்களை எல்லாம் குறைவறத் தந்து சயந்தி, இலாவாணக நகரங்களை அளித்து ஆங்கே உறைந்து தந்தையாரைப் பேணிக் காத்து வேண்டும் காலத்து இவன் வந்து செல்க என விடுத்து வைத்தான். முதன்மைச் சிறப்புடைய சேதி நாட்டையும் வைசாலி நகரையும் வழங்கி அவற்றை ஆளும் அரசன் யூகி என்பதை நாடறியுமாறு ஓலை விடுத்தான். இடபகனுக்கு முனையூர் என்னும் நகரையும் கான்வளமிக்க நாடுகள் ஐம்பதும் புட்பகம் என்னும் நகரும் மேல் வருவாய் வரும் வாய்ப்புகளும் செய்து அழைக்கும்போது வருக எனவிடுத்தான். வயந்தகனுக்குப் பதினொரு நகரங்களையும் வேண்டும் வாய்ப்புகளையும் வழங்கி ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் பொன் பேறும் பெற்றுத் தன்னோடு என்றும் உறையுமாறு செய்தான். இசைக்கன் முதலாகியவர்களுக்குப் பலப்பல ஊர்களை அளித்து அவர்கள் விரும்பும் இடங்களில் இருக்க விடுத்தான். உச் செயினிச் சிறையில் இருந்த போது தனக்கு உதவியாகவும் காப்பாகவும் இருந்த வீரர்களை யெல்லாம் வரவழைத்து அவர் களுக்கு வேண்டுவ செய்தான். போரில் இறந்த வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தெரிந்தழைத்து அவர்களுக்குத் தக்க சிறப்பும் வளமும் அருளினான். சாதகன் என்னும் குயவனை அழைத்து அவனுக்குப் 'பெருங் குயம்' என்னும் பட்டம் வழங்கி இரண்டு ஊர்களையும் தந்து 'இலாவாணை நகரில் இனிது உறைக' என்றான். ஆத்திய தருமன் என்பானுக்கு ஓர் ஊர் கொடுத்தான். அச்சமயத்தில் தன் அரிய உயிரை வழங்கிய சத்திய காமன் என்பானின் மக்களை அழைத்து அவர்கள் கூட்டத்துத் தலைமைப் பொறுப்புத் தந்தான். இவ்வாறு, "தொன்றிற் கொண்டு1 தொடர்ச்சியில் பழையோர் ஒன்றிற் குதவார் என்று புறத் திடாது2 நன்றி தூக்கி நாடி3" உதவினான். பலப்பலரையும் போகவிடுத்த உதயணன் யூகியைப்போக விடுக்காமல் தன்னோடே இருக்கச் செய்தான். அவன் பரிவாரம் படைகளை அந் நாட்டுக்கு விடுத்தான். தன் தாய் பலப்பல அறங்களும் செய்யுமாறு வேண்டுவ வெல்லாம் வழங்கி ஒரு நாட்டையும் தந்தான். வாசவ தத்தைக்கும் பதுமாவதிக்கும் அரசியர்க்கு அமைந்த வளங்களை யெல்லாம் அருளினான். அவர்களுக்கு வேண்டும் தோழியர் பணிப்பெண்கள் ஆகியவர்களையும் பகுத்தளித்தான். இவ்வாறு நட்பும் சுற்றமும் நாடும் மகிழப் பலப்பல கொடை களையும் வழங்கிக் கோன்மையில் சிறந்தான். 10. பிரச் சோதனன் தூதுவிட்டது இவ்வாறு இருந்த நிலையில் ஒருநாள் வாயில் காவலன் வந்து அடிவணங்கி "உஞ்சை நகரில் இருந்து பிரச் சோதனன் விடுத்த தூதுவர் வந்துள்ளனர்" என்றான். "உடனே அவர்களை வரவிடுக" என்றான் உதயணன். அரசர்க்கு ஓதிய நீதிநூல்களை ஒதியவளும், கற்பன கற்றுச் செற்றமும் ஆர்வமும் அற்றவளும், எச் செய்தியையும் கூறாமலே குறிப்பறிந்து கொள்ள வல்லவளும், உறுப்புகளைச் சிதைத்தாலும் ஊசியால் குத்தினாலும் கடுஞ்சொற்களால் வாட்டினாலும் அளவிறந்து சிறப்புகளையும் பொருள்களையும் அள்ளி வழங்கினாலும் கொண்ட கருத்தில் மாற்றமில்லாது கூறுபவளும், 'இன்னது செய்க' என்று ஏவாமல் எண்ணுவார் எண்ணம் அறிந்து செய்பவளும், பழிச் சொல் சொல்லாது புகழ்ச் சொல் போற்றுபவளும் பலரும் பலப்பல கூறினாலும் அவற்றுள் நல்லோர் கூறும் நயவுரையையே செவிக் கொள்பவளும் ஆகிய பதுமையென்னும் பெயருடைய தூதியும், கல்விவல்ல கணக்கர் காவல் வீரர் ஆகியோரும், யவன வினைஞர் களால் செய்யப்பட்ட ஐம்பது தேர்களும் தோழியர் ஆயிரவரும் அணிகலங்களும், பயன்படு பொருள்களும், இளமையில் பயின்ற பறவை முதலியவைகளும், நாடக மகளிர்களும் ஆகிய எல்லா வற்றையும் உதயணனுக்குக் காட்டி "இப் பொருள்களையும் இவர் களையும் இங்குச் சேர்க்க வேண்டும்" என்பது எங்கள் அரசன் ஆணை என்றனர். பதுமையாம் தூதி உதயணனை வணங்கிப் பிரச்சோதனன் கொடுத்த திருமுகத்தைப் பணிவோடு தந்தாள். இருக்கையில் இருந்து எழுந்து, பெருவிருப்புடன் பெற்று அத்திருமுகத்தைப் படித்தான். பிரச்சோ தனனெனும் பெருமகன் ஒலை; உரை1 சேர் கழற்கால் உதயணன் காண்க; இருகுல2 மல்லது இவணகத் தின்மையின் குருகுலக் கிழமை கோடல்3 வேண்டிச் சேனையொடு சென்று செங்களம் படுத்துத் தானையொடு தருதல் தானெனக் கருமையிற் 4பொச்சாப் போம்பிப் பொய்க்களிறு புதைஇ5 இப்படித் தருகென ஏவினேன் எமர்களை;6 அன்றைக் காலத் தந்நிலை, நினையா தின்றைக் காலத் தெற்பயந் தெடுத்த கோமான்7 எனவே கோடல் வேண்டினேன்; ஆமான்8 நோக்கி ஆயிழை தன்னொடு மகப்பெறு தாயோடு யானும் உவப்பப் பெயர்த்தென் நகரி இயற்பட எண்ணுக; தன்னல திலளே, தையலும்; தானும், எள்ளல திலனே; இனிப்பிற னாகலென்; பற்றா மன்னனைப் பணிய நூறிக்9 கொற்றம் கொண்டதும் கேட்டனென் தெற்றென யான் செயப் படுவது தான் செய்தனனினிப் பாம்பும் அரவும் பகையும் சிறிதென ஆம் பொருள் ஓதினர் இகழார்; அதனால், மேம்படு தாரோ தெளிதலொன் றிலனாய் ஓங்குகுடை நீழல் உலகுதுயில் மடியக் குழவிகொள் பவரின்10 இகழா தோம்பிப் புகழ்பட வாழ்க புகழ் பிறி தில்லை ஆகி யவிழுச்சீர் அரும்பெறல் அமைச்சன் யூகியை எமரொடும் உடனே விடுக்க கருமம் உண்டவற் காணலுற் றனெனென ஒருமையிற் பிறவும் உரைத்தவை யெல்லாம் பெருமையிற் கொள்கெனப்" பிரச்சோதனன் விடுத்த ஓலை கூறியது. ஓலைச் செய்தியை மனத்துக் கொண்ட உதயணன் ஓலை தந்த தூதி பதுமையைப் பார்த்து "வாசவதத்தை தீயுள் எரியுண்டது பொய்ச் செய்தி எனினும் அது பற்றி வேந்தன் எதுவும் எழுதிலனே" என்றான். அவள் பணிவுடன் வணங்கி, எங்கள் மாமன்னர் இச் செய்தியைக் கேட்டு மனம் முடங்கியவராய் ஒரு மாமுனிவரைக் கண்டு கவலையுடன் நின்றார். "நூல்நெறி மரபில் தானறிவு தளரான் தொடுத்த மாலை எடுத்தது போல முறைமையின் முன்னே தெரிய அவனெம் இறைமகற்1 குரைத்தனன் இத்துணை யளவவள் மாய இருக்கையள்2 ஆய்வ தாமென நீட்ட மின்றவள் நீயள விடினே கூட்டம் எய்தும் நாளும் இதுவென இன்றை நாளே எல்லை யாகச் சென்ற திங்கட் செய்தவன் உரைத்தனன் ஆண3 மாகிய அருந்தவன் வாய்மொழி பேணும் ஆதலில் பெருமகன் தெளிந்தனன்" என்றாள். எல்லாச் செய்திகளும் ஒத்தனவாக உள்ளனவா என அவள் பணிவுடையலாய் வினாவ 'ஆம் ஒத்துள' என்று ஏற்றான் உதயணன். தன் தோழர்களோடு சென்று பிரச்சோதனன் விடுத்த பொருள்களைக் கண்டு மகிழ்ந்தான். வந்தவர்களை யெல்லாம் இனியவை கூறி வரவேற்று ஏற்ற வகையில் போற்றினான். தேவி வாசவதத்தை அறிந்து மகிழக் காட்டுக எனக் கட்டளை இட்டான். யூகியைப் பார்த்து, "நீ அவந்திக்குச் சென்று இங்கே நிகழ்ந்தவற்றை யெல்லாம் சொல்லி உன்திறமும் அறியச் செய்து மீளவும் விரைவில் வருக" என விடுத்தான். 11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது யூகியை அவந்திநகர்க்கு உதயணன் விடுக்கும்போது, தூதர் வழி, ஓலை ஒன்றும் விடுத்தான். அவ்வோலையில் , "தங்கள் நாட்டிற்கும் எங்கள் நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகிய காடு மலைகள், யான் நாடு நீங்கி இருந்தபோது பிறர் வயமாகிவிட்டது. அப் பகுதியை நம் ஆளுகைக்குள் கொண்டு வந்தால் அல்லாமல், எம்மைச் சேர்ந்த எவரும் அங்கே போதற்கு இடமில்லை." என்று வரைந்திருந்தான், "இனி எக்காலமும் நம் இரு குலத்தாரும் பிரிவில்லாமல் ஒருப்பட்டவராய் இயங்குமாறும் செய்திடுக" என்று சொல்லுமாறும் யூகிவழிக் கூறினான். மேலும், பொன் அணிகலன்களும், நாலாயிரம் குதிரைகளும், ஐந்நூறு தேர்களும், ஒருநூறு யானைகளும் பதினாறாயிரம் பசுக்களும் வேந்தனுக்கு விடுத்தான். வாசவ தத்தையின் தாய்க்குப் பாஞ்சால அரசனை வென்று கொண்டுவந்த மகளிர் நூற்றுப் பதினொருவரைக் கொடுக்க அருளினான். பிரச்சோதனன் மைந்தனாகிய கோபாலகன் என்பானின் தாய்க்கு இருபது மகளிரை வழங்கினான். கோபாலகன், பாலகுமாரன் ஆகிய இருவருக்கும் அறுபது அறுபது மகளிரை வழங்கினான். பரதனுக்கும் அவன் தம்பிக்கும், எட்டு நூறாயிரம் பொற்காசுதனித்தனியே அளித்தான். சிவேதகன் என்பானுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் ஈந்தான். இவ்வாறு பிறர் பிறர்க்கும் கொடை புரிந்தான். இவ்வாறு செய்து, உத்தராயனுடன் யூகியும் சென்றுவருக எனத் தேர் வழங்கினான். பின்னர், 'வனப்பு வீற்றிருந்த வாசவதத்தையும்', 'பழிப்பில் காரிகைப் பதுமாபதியும்' ஆகிய தேவியர் இருவருடன், உண்டும் பருகியும் ஆடல் பாடல் நயந்தும் கோயிலும் குளமும் கண்டு வழிபட்டும் இனிய வகையில் பொழுதுபோக்கினான். 12. பந்தடி கண்டது "மன்பெரும்சிறப்பின் மறப்போர் உதயணன் அருமை சான்ற ஆருணி அரசன் உரிமைப் பள்ளியுள் தெரிவனன் கொண்ட ஆயிரத் தெண்மர் அரங்கியல் மகளிர் மாசில் தாமரை மலர்மகள் அனையோர் ஆடலும் பாடலும் நாள்தொறும் நவின்ற நன்னுதல் மகளிரை மின்னேர் நுண்ணிடை வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும் கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை1 கொடுத்த காலை அடுத்த அன்போ டரசன் உலாவெழும் அற்றம்2 நோக்கித் தேசியர் இருவரும் ஓவியச் செய்கையின் நிலாவிரி முற்றத்துக் குலாவொ3 டேறிப் பந்தடி காணிய நிற்ப இப்பால்" வயந்தகன், உதயணனை அடுத்துச் சென்று "நின் தேவியர் இருவரும் தத்தம் மகளிர் பந்தாட்டத்திறத்தைக் காட்டிப் போட்டி யிடப் போகின்றனர். இந்நிலையில் உலாச் செல்லப்புறப்படு கின்றனை, இருவரும் இகலும் பந்தடியைக் காணல் இனிது; அதனால் பெண்ணுருக் கொண்டு ஒருபிடி யானைமேல் வந்து தெரியாமல் இருந்து காண்பாயாக" என்றான். இச் செய்தியை அறிந்துமகிழ்ந்த உதயணன், படையொடும் உலாச் செல்வது போலக் காட்டி, யாரும் அறியா வகையில் பெண்ணுருத் தாங்கி ஒரு பிடிமேல் ஏறி மகளிர் கூட்டத்திடையே மறைந்திருந்தான். முதற்கண் தருசகன் தங்கையாகிய பதுமாபதியின் பங்கில் அமைந்த இராசனை என்பவள் தலைவியை வணங்கிப் பந்தடிக்க முன்வந்தாள். "கிடையும்1பூளையும் இடைவரி உலண்டும்2 அடையப் பிடித்தவை அமைதியில் திரட்டிப் பீலியும்3மயிரும் வாலிதின் வலந்து4 நூலினும் கயிற்றினும் நுண்ணிதிற் சுற்றிக் கோல 5மாகக் கொண்டனர் பிடித்துப் பாம்பின் தோலும் பீலிக் கண்ணும் பூம்புனல் நுரையும் புரையக் 6குத்திப் பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள் வேறுவேறியற்கைக் கூறுகூறு அமைத்த வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன தண்வளி எறியினும் தாமெழுந் தாடுவ கண்கவர் அழகொடு நெஞ்சக லாதன ஒண்பந் தோரேழ் கொண்டனளாகி" கண்ணிமை யாமல் எண்ணுக என்று கூறி ஆயிரங்கை அடித்துச் சென்றாள். காஞ்சன மாலை என்பவள் ஆயிரத் தைந்நூறு கை அடித்தாள்; அயிராபதி என்பவள் இரண்டாயிரம் கை அடித்தாள். வாசவதத்தைக்கு வலத்தோள் போன்ற விச்சுவ லேகை என்பவள் இரண்டாயிரத்து ஐந்நூறு கைபிடித்தாள்; பதுமையின் தோழியாகிய ஆரியை என்பவள் மூவாயிரங்கை அடித்தாள். அதன்மேல், "வரிநெடும் பந்து வந்தெதிர் கொள்ளுநர் ஒருவரும் இன்றி நின்றுழிப் பொருவரும்7 வாளேர் தடங்கண் வாசவ தத்தை கோனேர் மதிமுகம் கோட்டி8 நோக்"கினான். கோசலத் தரசன் மகள் வாசவதத்தை தோல்வியுற்றது பொறாதவளாய்ப் பந்தடிக்க முன்வந்தாள். அவள் இருபத்தொரு பந்துகளை எடுத்தாள். தேவியர் இருவரும் திகைத்தனர்; இருந்தனர். அவள், "ஓடா நடவா ஒசியா1 ஒல்காப்2 பாடாப் பாணியின் நீடுயிர்ப் பினளாய்க் கண்ணின் செயலினும் கையின் தொழிலினும் விண்ணவர் காணினும் வீழ்வர் கொல் வியந்தெனப் பாடகத்3தரவும் சூடகத்4 தோசையும் ஆடுபந் தொலியும் கேட்பின் அல்லதை ஐய5பந் தெழஎழ அதனுடன் எழுதலில் கையும் காலும் மெய்யும் காணார் மண்ணினள் விண்ணினள் என்றறி யாமை"ப் பந்தடித்தாள். அப்பொழுது, சுழன்றன தாமம்6; குழன்றது கூந்தல், அழன்றது7மேனி; அவிழ்ந்தது மேகலை; எழுந்தது குறுவியர்; இழிந்தது சாந்தம்; ஓடின தடங்கண்; கூடின புருவம்; அங்கை8யின் ஏற்றும் புறங்கையின் ஓட்டியும் தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும் இடைஇடை இருகால் தெரிதர மடித்தும் அரவணி அல்குல் துகில்நெறி திருத்தியும் நித்திலக்9 குறுவியர் பத்தியில் துடைத்தும் பற்றிய கந்துகம் சுற்றுமுறை யுறைத்தும் தொடையும் கண்ணியும் முறைமுறை இயற்றியும் அடிமுதல் முடிவரை இழை10பல திருத்தியும் படிந்தவண் டெழுப்பியும் கிடந்தபந் தெண்ணியும் தேமலர்த் தொடையல் திறத்திறம் பிணைத்தும் பந்துவரல் நோக்கியும் பாணிவர நொடித்தும்11 சிம்புளித்12 தடித்தும் கம்பிதம்13பாடியும் ஆழி14யென உருட்டியும் தோழியொடு பேசியும் சாரி15பல ஓட்டியும் வாழியென வாழ்த்தியும் அந்தளிர்க் கண்ணி அவந்திகை வெல்கெனப் பைந்தொடி மாதர் பற்பல வகையால் எண்ணா யிறங்கை" அடித்தனள். அந்நிலையில் வாசவதத்தை, "இவள் மதிபோலும் முகத்தை மன்னவன் கண்டால் மயங்கிப் போவான்" என எண்ணினாள். அவ்வாறு எண்ணும் பொழுதில் மானனீகையின் அழகிலும் ஆட்டத்திலும் வயப்பட்டுச் சென்ற தன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாய்த் தன்னுண்மை வடிவத்தோடு தேவியர் முன்னர்த் தோன்றினான் உதயணன்; அவர்கள் அங்கு மேலும் நில்லாமல் தோழியரொடு தத்தம் இடங்களுக்குச் சென்றனர். 13. முகவெழுத்துக் காதை தேவியர் தத்தம் இடங்களுக்குச் செல்ல, உதயணன் மானனீகைபால் கொண்ட காமத் துயரினால் தளர்வுற்றான். பள்ளி யம்பலம் என்னும் இடத்திற்குச்சென்று ஏவல் மகளிரை அழைத்துத் தேவியர் வருமாறு சொல்லியனுப்பினான். தேவியர் வேந்தன் அழைத்தற்கு ஐயமுற்று, மானனீகையை ஓரிடத்து மறைத்து வைத்து விட்டுத் தாங்கள் இருவரும் உதயணன் முன் எய்தி வணங்கி நின்றனர். "பெருகிய வனப்பிற் பேணுந் தோழியர் புகுதுக என்றலும் புக்கவர் அடிதொழச் சுற்றமும் பெயரும் சொல்லுமின் நீரென முற்றிழை மாதரை முறைமுறை வினவலின் மற்றவர் எல்லாம் மறுமொழி" கொடுத்தனர். அதனைக் கேட்ட உதயணன் அத்தோழியரைப் பாரானாய் வாசவதத்தையைப் பார்த்து, "ஒரு பைந்தொடி நின்னொடு வாரா தொழிதல் கூறு" என்று மானனீகையைக் காணாதவனாய்க் கூறினான். "அவளுக்கு உரைக்க வேண்டியது ஒன்று உண்டானால் அவளை அவைக்கு அழைக்க வேண்டிய தென்ன; அவளிடம் தனித்துக் கூறலாமே" எனக் கண் சிவப்பேறச் சினந்து கூறினாள். அவள் சினக் குறிப்பறிந்த உதயணன், "பாஞ்சால மன்னன் பெற்ற வளத்தையும் வாழ்வையும் அவள் நன்றாகத் தெரிந்தவள் என்பதைக் கேட்டு அறிந்துள்ளேன். அச் செய்தியை மேலும் தெளிவுற அறிவதற்காகவே அவளைப்பற்றிக் கேட்டேன்; வேறு எக்காரணமும் இல்லை" என்றான். அதன் பின்னர் உதயணன் கூறியவாறு மானனீகையை வாச வதத்தை அழைத்தாள். அவள் வந்து உதயணனை வணங்கினாள். உதயணன், "பாஞ்சால மன்னன், ஓலை எழுதிவிடுத்தல், வரும் வழக்குகளை ஆய்ந்து கூறுதல், படை நடாத்துதல், அந்தப் புரத்து மகளிர்க்கு ஒப்பனை செய்தல் எல்லாமும் செய்தல் வல்லவள் என்பதை அறிந்துள்ளேன். உன் பெயர், உன் சிறந்த சுற்றத்தின் சிறப்பு என்பவற்றை உரைப்பாயாக" என்றான். உதயணனை வணங்கி, "கோசலத் தரசன் மாபெருந் தேவி மாசில் கற்பின் வசுந்தரி என்னும் தேனிமிர் கோதை சேடியேன்யான்; மான னீகை என்பதென் நாமம்;1 எம்மிறை படையை எறிந்தனன் ஓட்டிச் செம்மையிற் சிலதியர்2 தம்மொடும் சேரப் பாஞ்சா லரசன் பற்றிக் கொண்டு தேன்தேர் கூந்தல் தேவியர் பலருளும் தன்னமர் தேவிக் கீத்த பின்றை வண்ண மகளாய்3 இருந்தனென் அன்றி அருளியது யாதும் அறியேன் யான்எனக் கடல்புரண் டெனப்பயந் தழுதனள்" நின்றாள்! உதயணன் அதை ஒப்பினவனாகி, நீ முன் செய்த அம்முறை யாலே வனப்புமிக்க வாசவதத்தைக்கும் வண்ண மகளாக இருந்து பணி செய்வாயாக என்றான். அவள் அங்கிருந்து சென்றாள். சென்ற மானனீகை வாசவதத்தையின் அடிமுதல் முடிவரை அறியா வகையில் அழகுக்கு அழகு செய்தாற் போல எழிலுறுத்தி னாள். புனைந்த அக்கோலத்தை வாசவதத்தை உதயணனுக்குக் காட்டினாள். உதயணன் அப்புனைவைக் கண்டு, "புனைவு நன்கு அறியாள் அவள். இதோபார் யான் புனைவேன்" என்று சொல்லி மானனீகை புனைந்த புனைவுகளை எல்லாம் நீக்கிப் புதிது புனையலானான். மானனீகை யவன மொழியை அறிந்தவள். என்பதை உதயணன் அறிந்தவன். ஆதலால், புனைவன புனைந்து அவள் முகமே ஏடாக "ஒடியா விழுச்சீர் உதயணன் ஓலை கொடியேர் மருங்குல் குயில்மொழிச் செவ்வாய் மான னீகை காண்க" என முன்னிலைப் படுத்தி, "மாடத்தின் மேல் இருந்து மயில் ஆடியது போல ஆடல் மகளிரொடு இருந்து நீ ஆடிய பந்தாட்டம் என் நெஞ்சைப் பிளந்தது; அப்புண்ணொடு நொந்து உயிர் வாழ்தற்கு இல்லேன்; அப்புண்ணை அகற்றும் மருந்தாக இருப்பவள் நீயே; நான் நின் காதல் நினைவில் இறந்துபடாமல் இருக்க அருளல் வேண்டும். இரந்து கேட்பவர்க்கு அவர் கேட்டதை இல்லை என்னாமல் வழங்குவதே நற்செயல். மேலும் விரிவுற எழுத இடமில்லாமையால் இவ்வளவில் எழுதினேன். அருள் செய்வாயாக" என எழுதி வாசவதத்தையை நோக்கி, "இப்பொழுது இப்புனை கோலம் பொருந்தி அமைந்துளது போய் வருக" என விடுத்தான். வாசவதத்தைக்கு உதயணன் புனைந்த புதிய கோலத்தைக் கண்ட மானனீகை,அவன் எழுதிய முக வோலையைப் படித்து நாணமுற்றவளாய் 'அரசன் புனைந்த கோலம் அழகிது' எனக் கூறி, மேலும் அச்சமும் நாணமும் ஒருங்கே கொண்டாள். அந்நாள் இரவு கழிந்து மறுநாள் காலையில் வழக்கம்போல் வாசவதத்தையை மானனீகை அழகுறுத்தினாள். முன்னாள் உதயணன் தனக்கு எழுதிய யவன மொழியிலேயே, முழுதியல் அருள்கொண்டு அடியனேன் பொருளா எழுதிய திருமுகம் பழுதுபடல் இன்றிக் கண்டேன் காவலன் அருள்வகை என்மாட்டு உண்டே ஆயினு மொழிகஎம் பெருமகன் மடந்தையர்க் கெவ்வா றியைந்தவை இயையும்1 பொருந்திய பல்லுரை உயர்ந்தோர்க் காகும் சிறியோர்க் கெழுதிய உயர்மொழி வாசகம் இயைவ தன்றால் இவ்வயின் ஒருவரும் காணார் என்று காவலுள் இருந்து பேணா செய்தல் பெண்பிறந் தோருக்கு இயல்பு மன்றே அயலோர் உரைக்கும் புறஞ்சொலு மன்றி அறந்தலை நீங்கும் திறம்பல ஆயினும் குறைந்தஎம் திறத்து வைத்ததை இகழ்ந்து மறப்பது பொருளென உற்றவண் மறுமொழி மற்றெழு தினளாய் அடியேற் கியைவ திது"வென விட்டனள் வாசவதத்தை மானனீகை புனைந்துவிட்ட புதுக்கோலத் தோடு சென்று அரசனை வணங்கினாள். மானனீகை எழுதிய மறுமொழியைக் கண்ட மன்னவன் தீப்பட்ட புண்ணிலே அம்பும் வேலும் பாய்ந்தாற்போல் வருந்தி உழன்றான். மானனீகை செய்துவிட்ட புனை கோலத்தை அழித்து, "இன்றை எல்லையுள் இயையா தாயின் சென்றதென் உயிரெனத் தேவிமுகத் தெழுதி வாட்டிறல்1 வேந்தன் மீட்டனன் விடுத்தலில்" வாசவதத்தை சென்றாள். வாசவதத்தைக்குச் செய்துவிட்ட புனை கோல எழுத்தைப் புரிந்து கொண்ட மானனீகை சுழலும் நெஞ்சைத்திடப் படுத்திக் கொண்டு, "விளைக பொலிக வேந்தன் உறுகுறை களைகுவல்2 இன்றெனும் கருத்தொடு புலம்பி"னாள். மறுநாள் காலையில் தத்தைக்குச் செய்த புனைகோலத்தில் கூத்தப்பள்ளியில் அமைந்த குச்சரக் குடிசை மேடைப் பகுதியில் இரவு சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்தாள். உதயணன் வாசவதத்தை கோல எழுத்தைக் கண்டு மகிழ்ந்து, "இற்றைப் புனைவு இனிதென இயம்பிப்" பாராட்டினான். வாசவதத்தை பதுமாபதி ஆகிய இருவரும் அறியா வகையில் குறித்த இடத்தை மானனீகை அடைந்தாள். உதயணன் வாசவதத்தையிடம் பதுமாபதி மாளிகைக்குச் செல்வதாகவும், பதுமாபதியிடம் வாசவதத்தை மாளிகைக்குச் செல்வதாகவும் கூறி மானனீகை குறித்த குறியிடத்தை அடைந்தான். வாசவதத்தைக்கு உதயணன் செயல் ஐயத்தை உண்டாக்கியது. அதனால், தன் தோழி காஞ்சன மாலையை அழைத்து மன்னவன் செல்லுமிடத்தை மறைவாகச் சென்று அறிந்து வருமாறு ஏவினாள். காஞ்சன மாலை அவ்வாறே தொடர்ந்து கூத்தப்பள்ளியின் ஒரு பக்கம் மறைந்து கொண்டு கவனித்தாள். உதயணன் மானனீகையைக் கண்டு விருப்பத்தொடு தழுவி அவள் நடுக்கம் தவிர்த்து விருப்புமிக, "ஊடியும் கூடியும் நீடுவிளை யாடியும் இருந்த பின்றை இருவரும் முறைமுறை திருந்திய முகத்துப் பொருந்திய காதலொடு எழுதிய முகத்துப் பொருந்திய காதலொடு எழுதிய வாசகம் எல்லாம் உரைத்து வழுவுதல் இன்றி வைகலும் ஈங்கே குறியெனக் கூறிச் சிறுவிரல் மோதிரம் கொடுத்தனள் அருளிக் கோயிலுள்1 நீங்கி"னர். வாசவதத்தையால் ஏவப்பட்ட காஞ்சன மாலை கூத்தப் பள்ளியில் நடந்த கூத்தை அவளுக்கு உரைத்தாள். அதனைக் கேட்ட தத்தை சினத்தை அடக்கிப் பெருமூச்சு விட்டு வருந்தினாள். மறுநாள் விடிந்த போது உதயணனைக் கண்டு, "இரவு யான் ஒரு கனாக் கண்டேன். அதுபுதுமையானது; அதனைக் கேட்க"என்று கூறினாள். என் மனத்தில் இருந்து எப்பொழுதும் பிரியாத நீர் என்னை மறைத்துத் தனித்துப் போய்க் கூத்தப்பள்ளியை அடைந்து அங்கிருந்தவளுடன், "ஊடியும் உணர்ந்தும் கூடிவிளை யாடியும் தேறினிர் ஆகித் தெளிவுடன் இருவிரும் மாறுமா றெழுதிய வாசகம் கூறி மாதரும் நீயும் அயலுரைத் தெழுந்து போதரும்2 போதையின் மோதிரம் அருளிப் பெயர்ந்தனை நயனமும் மலர்ந்தன; ஆங்கே புலர்ந்தது கங்குலும்1 புரவல வாழ்கென"க் கூறினாள். அதற்கு உதயணன், "வண்டலர் கோதாய் மனத்தினும் இல்லது கண்டனை ஆதலில் கலங்கினை மற்றுநின் உள்ளத்துள்ளே உறைகுவே னாகவும் கள்வன் என்று கருதினை அன்றியும் நெறியுடை மகளிர் நினைப்பவும் காண்பவும் இவை இவை போலும் கணவர்தம் திறத்தெனக்" கூறினான். வாசவதத்தை, "கனவில் கண்டது பிறரொடு பேசக் குறைபோம் என்றலிற் கூறினேன் அன்றியும் யாவை காணினும் காவலற் கன்றிப் பேசுவ தெவரொடு பெரியோய் என்று" கூறி உள் நகைத்து நீங்கினாள். தேவிக்கு உண்டாகிய ஐயத்தைத் தீர்த்துத் தெளிவாக்கி விட்டோம்; வேறு கண்டார் இல்லை என எண்ணி இருப்பப் பொழுது மாலையாயிற்று வாசவதத்தை மானனீகை அந்தப்புரம் விட்டு அகலாவகையில் சிறைப்படுத்தித் தோழி காஞ்சன மாலையொடு முதல் நாள் மானனீ கையும் உதயணனும் சந்தித்திருந்த கூத்தப்பள்ளியை அடைந்து இருந்தாள். நிகழ்ந்ததை அறியாத உதயணன் நெருங்கவும், நீங்கிச் சென்றாள் தத்தை. மானனீகை ஊடியதாக எண்ணிய உதயணன், அவள் ஊடலை அகற்றிக் கூடலைக் கொள்ள விரும்பியவனாய், "முரசு முழங்கு தானை அரசொடு வேண்டினும் தருகுவல் இன்னே பருவரல்2 ஒழியினி மானே தேனே மானனீ காயெனக் கால்நேர் பற்றத் தானது கொடா அது உரைப்பது கேட்ப மறுத்தவள் ஒதுங்கி"னாள் அதனால் காதல் மீக் கூர்ந்து ஒரு புதுமை கூறுவான் போல நேற்று நம் இருவரும் கொண்டு மகிழ்ந்த இன்ப விளையாடல்கள் எல்லாம் வாசவதத்தை கனவாகக் கண்டதாகக் கூறினாள். கனவு என்பது முந்தி நிகழ்ந்த செயல் என்பர். அதனை மறையாது அவள் என்னிடம் உரைக்க என் மனத்திலேயும் அதற்கு இடமில்லை என்று அவளுக்குக் கூறித் தெளிவித்ததை நீ தெளிந்திலை என்று மீளவும் மீளவும் பணிந்து மானனீகையே அருள்வாயாக என்று சொல்ல தத்தை நகைத்தவளாய், "மானும் தேனும் மானனீகையும் யானன் றென்பெயர் வாசவ தத்தை காணெனக் கைவிட் டோடினள் ஓடி அடுத்த காட்சியில் தனித்தொரு மண்டபத் தொளித்தனள் ஆகித் திகைத்தனன் இருப்ப" வாசவதத்தை சீற்றத்தொடு சென்றாள். அன்றை இரவு கழிந்து பொழுது விடிந்தது. 14. மணம்படு காதை பொழுது விடிந்தது. வாசவதத்தை கோசலத்து மன்னன் மகளாகிய மானனீகையை அழைத்துச் சீற்றமிக்கவளாய் ஒரு தூணில் கட்டினாள். "உதயணனோடு கூத்தப் பள்ளியுள் கூறியதை எல்லாம் கூறு" என்றாள். அங்கே இருந்த ஒருத்தியை அழைத்து, "இவள் கூந்தலை வெட்டுதற்கு ஒரு கத்தரி கொண்டுவா" என்றாள். இந்நிலையை மறைவாகக் கண்ட வயந்தகன் உதயணனிடம் சொல்லு மாறு அவனைத் தேடினான். கண்டு மானனீகை கூந்தலை வெட்ட வாசவதத்தை கத்தரியோடு இருப்பது கூறினான். "அவளுக்கு ஒரோ ஒரு மயிர் வெட்டப்படும் எனினும் என்னுயிர் போய்விடும் நீ அதனை உடனே தடு" என்றான். நிகழ்ந்தது என்ன வென்று வயந்தகன் உதயணனிடம் கேட்க அவன், "நீ பந்தடி காண ஏவியதால் விளைந்தது இது என்றான். நான் பந்தாட்டம் பார்க்கச் சொன்னதை அல்லாமல் வேறு என்ன செய்யச் சொன்னேன்? தேவியின் சீற்றத்தை மாற்றுவார் எவர்? ஆறேழு நாழிகை அளவு மயிர்களையப் பெறாமல் காப்பேன்" என்று கூறித் "தேவியை அதற்கு மேல் சீற்றம் தணிவிக்க வேறொருவரை விடுக்க வேண்டும்" என்று சொல்லிச் சென்றான். வாசவதத்தையை நெருங்கி வணங்கிய வயந்தகன், "அரசன் எங்குள்ளான்" என வினவினான். தேவி சினங்கொண்டுள்ளாள் என்றொருத்தி சொன்னாள். கால் நடுக்கம் கொண்டவன் போல் வயந்தகன் நின்று இவள் செய்த தவறு என்ன என வினாவினான். வாசவதத்தை. 'வார்ப்பொலி கழற்கால் மன்னவன் உருவில் தூர்த்தக் கள்வன் பாற்போய்க் கேள்' என்றாள். "இவள் மேல் குற்றம் உண்டாயின் யான் கூந்தலைக் குறைக்க அறிவேன்" என்றான் வயந்தகன். "அவ்வாறே குறை" என்றாள் தத்தை. கத்தரியை வாங்கிய வயந்தகன் கத்தரியின் வகைகளைப் பற்றிய செய்திகளைக் கூறி, தன்னிடம் தந்த கத்தரியை வாங்கினான். "இக்கத் தரியால் இவள் கூந்தலைக் குறைத்தால் இவளுக்கு நலமே உண்டாகும். ஆதலால், வேறொரு கத்தரி உண்டானால் அதனைத் தருக" என்றான்; அவ்வாறே பலப்பல கத்தரிகள் வர அவற்றைப் பற்றிப் பல கூறிப் பொழுது நீட்டித்தான். இந்நிலையில் உதயணன் யூகியை அழைத்து நேர்ந்தவற்றைச் சொல்லி மானனீகை கூந்தலைக் களையாமல் காக்க ஏவினான். அவனும் வயந்தகன் கூறிய வாறு, "ஆறேழு நாழிகை அளவே காப்பேன் அதற்கு மேல் இயலாது" என்று கூறி அங்கே சென்றான். அவன், "பொற்பணி வெண்பூக் கோவை தந்த மேவரச் சேர்த்திக் கூறை கீறி1ச் சூழ்வர உடீஇ நீறுமெய் பூசி நெடிய மயிர்களை வேறுவே றாகும் விரகுளி2முடித்துக் கண்டோர் வெருவக் கண்மலர் அடக்கம் கொண்டோன் ஆகிக் குறியறியாமல் கைத்தலம் ஒத்தாக் கயிடபடை3 கொட்டிப் பித்தர் உருவில் துட்கெனத்4 தோன்றலும் ஏழை மாதரைச் சூழ்தர நின்ற பாவையர் பலரும் பயந்திரிந் தோடி விழுநரும் எழுநரும் மேல்வர நடுங்கி அழுநரும் தேவியின் அணைநரு மாகத் தேன்தேர் கூந்தல் தானது நோக்கி மேல் மேல் நகைவர விரும்பினள் நிற்ப" வயந்தகன் நிகழ்ந்ததைக் கூறுமாறு ஏவலாட்டி ஒருத்தியை உதயணனிடம் விடுத்தான். உதயணன் தேவி பதுமாபதியை அழைத்தாள். அவளிடம் எதுவும் உரையாடானாய் இருக்க, அவள் "அடிகள் நெஞ்சில் கடிகொண்1 டருளுமக் கருமம் எம்மொ டுடையாது என்" என்றாள். எனக்குச் சொல்ல நாணமாக உள்ளது. உன் அக்கை வாச வதத்தை அதனைக் கூறுவாள். அதனை நீ கேட்டு என் உயிரைத் தந்து உதவுக எனத் தந்தைபால் விடுத்தான். பதுமாபதி, வாசவதத்தையைக் கண்டு செய்தியை எல்லாம் அறிந்தாள். பின்னர் வாசவதத்தையிடம், அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை அறியார் போலச் சிறியோர் தேஎத்துக்2 குறைகண் டருளுதல் கூடா தன்றியும் பெற்றேன் யான்இப் பிழைமறந் தருளென வேண்டி நின்றாள். அப்பொழுதில் கோசலத்து அரசன் விடுத்த தூதுவர் வந்திருத் தலைக் காவலர் உதயணனுக்கு உரைத்தனர். அவர்களை அழைத்து வரக் கூறினான். வந்ததூதுவர், கோசலத்து அரசன் தேவி வாசவதத் தைக்கு ஓர் ஓலை விடுத்ததை வணங்கி வழங்கினர். இது நன்மையாம் பொழுதென உணர்ந்த உதயணன் அவ்வோலையை வாசவதத்தையிடம் வழங்குமாறு விடுத்தான். ஓலையைப் பெற்ற வாசவதத்தை அதனைப் படிக்குமாறு பதுமாபதியிடம் வழங்கினாள். பதுமாபதி ஓலையைப் படித்தாள். கோசலத் தரசன் ஓலை மங்கை வாசவ தத்தை காண்க; தன் தங்கை மாசின் மதிமுகத்து வாசவ தத்தை பாசவல் படப்பைப் பாஞ்சாலரசன் சோர்விடம் பார்த்தென் ஊர்எறிந் தவளுடன் ஆயமும் கொண்டு போயபின் பவனை நேர்நின் றனனாய் நெறிபடப் பொருதகொல் வத்தவர் பெருமான் மங்கையர் பலருடன் பற்றினன் கொண்டு நற்பதிப் பெயர்ந்து தனக்குத் தங்கை யியற்பது மாபதி அவட்குக் கூறிட் டளிப்பத் தன்பால் இருந்ததும் கேட்டேன் வசுந்தரி மகளெனப் பயந்த நாளொடு பட்டதை உணர்த்தாள்1 தன்பெயர் கரந்து மானனீகையென் றங்கொரு பெயர் கொண்டிருந்ததும் கேட்டேன் அன்புடை மடந்தை தங்கையை நாடி எய்திய துயர்தீர்த் தியான்வரு காறும் மையல் ஒழிக்க தையல் தான்மற் றிதுவென் குறையென எழுதிய வாசகம் பழுதின் றாக முழுவதும் உணர்ந்து" கொண்டாள். ஆனால், "வாசகம் உணரேன் வாசிமின் அடிகளென் றாசில் தவ்வை2 தன்கையில் கொடுப்ப," ஓலையை வாங்கிய தத்தை படித்துப் பார்த்தாள்! ஏங்கினாள்; கண்ணீர் வடித்தாள். "பெண்நீர் மைக்கியல் பிழையே போன்மென" நொந்தாள். அவளைக் கட்டில் இருந்து விலக்கிக் "கோசலன் மகளே" அழாதே! உன் தமக்கையாம் யான் செய்ததைப் பொறுத்துக்கொள்; 'எம்முறை செய்தேன்; என் செய்தேன்' என்று ஏங்கினாள். தான் உடனிருந்து அவளுக்கு நறுநீராட்டி, நறு நெய் பெய்து நல்லுடை உடுத்து பதுமையும் தானும் இனியன கூறி, மூவரும், ஒரு கலத்தில் உண்டனர். (வாசவதத்தை, பதுமாபதி, மானனீகையாம் வாசவதத்தை) இதனை வயந்தகன், அரசன் உதயணனுக்கு உரைத்தான். மேகத்தால் மறைக்கப்பட்ட முழுமதி அம்மேகம் மறைய ஒளிவிடல் போல முகமலர்ந்தான். வாசவதத்தை, "கோசல வேந்தன் மகளை மணக்கோலம் செய்க" எனப் பதுமைக்குக் கூறினாள். அரசனுக்கும் அறிவித்தாள். அவன் மணக்கோலத்துடன் வந்தான். வாசவதத்தையும் பதுமாபதியும் கோசல மன்னன் மகளை விரும்பிக் கொடுக்க உதயணன் மணம் செய்து கொண்டான். முத்தேவியரும் ஒத்தியல் இன்பத்தில் மகிழ்ந்து செங்கோல் புரிந்தான் உதயணன். 15. விரிசிகை வரவு குறித்தது இலாவாணத்துக் கருகிலுள்ள கானத்தே வாழும் 1ஏதமில் காட்சித் தாபதன் மடமகள் பூவிரிந்தன்ன போதமர் தடங்கண் 2வீழ்ந்தொளி திகழும் விழுக்கொடி மூக்கிற் திருவிற் புருவத்துத் தேன்பொதி செவ்வாய் விரிசிகை யென்னும் விளங்கிழைக்3குறுமகள் அறிவதறியாப் பருவநீங்கிச் 4செறிவொடு புணர்ந்த செவ்விய ளாதலிற் பெருமகனான உதயணன் அன்று வாசவதத்தையொடு சென்றிருந்த காலத்தே சூட்டிய பிணையலல்லது பூப்பிறிதணியாளாய் அவற்கே உரிமை கொண்டொழுகி வருகின்றாள். அதனை அத்தாபதன் உணர்ந்து கோசம்பியையடைந்து உதயணனைக் கண்டு. பயத்தொடுபுணர்ந்த பாடி5மாற்றம் இசைப்பதொன்றுடையே னிகழ்தல் 6செல்லாது சீர்த்தகை வேந்தே யோர்த்தனை கேண்மதி நீயே நிலமிசை நெடு7மொழி நிறீஇ 8வீயாச்சிறப்பின் வியாதன் முதலாக் கோடா9துயர்ந்த குருகுலக் குருசில் வாடாநறுந்தார் வத்தவர் பெருமகன் தேனார் மார்ப தெரியின்யானே அந்தமில் சிறப்பின் மந்தரவரசன் யான் பன்னாள் அரசியலாட்சிபுரிந்தபின் மறுமை நாடி மக்கள் பால் அரசியல் நுகத்தைப் பூட்டி, 1வளைவித்தாரும் வாயில் நாடி விளைவித் 2தோம்புதும் வேண்டியதாமென ஒடுக்கிவைக்கு முழவன்போல அடுத்த வூழி தோறமைவரநில்லா யாக்கை நல்லுயிர்க்கரணமிதுவென மோ3க்க முன்னிய முயற்சியேனாகி ஊக்கஞ் சான்ற வுலகியற்றியோன் உம்4மைப் பிறப்பிற் செம்மையிற் செய்த தானப்பெரும் பயந்தப்புண்டிறத்தல் ஞானத் தாளர்நல்லொழுக்கன்றென உறுதவம் புரிந்த வொழுக்5கினென் மற்றினி மறுவிலேனமர்6மாபத்தினியும் காசி யரசன் மாசின்மடமகள் நீலகேசி யென்னும் பெரும்7பெயர்க் கோலத் தேவி குலத்திற்பயந்த வீயாக்கற்பின் விரிசிகையென்னும் பாசிழை யல்குற் பாவை8யைத் தழீஇ மாதவம்புரிந்தே மான்9கணமலிந்ததோர் வீததை10கானத்து விரதமொடொழுகும் காலத்து ஒருநாள் யான் நீராடச் சென்றிருக்குங்கால், நீ அவண் போந்து அவளை நின் கவான்முதல் இருத்திப்பிணையல் சூட்டினை; அதுவே தனக்குப் புணையாகக் கொண்டு நினக்கே தன்னை உரிமை செய்தொழுகுகின்றாள். ஞாலம்விளக்கும் ஞாயிறு நோக்கிக் கோலத் தாமரை கூம்பவி11ழ்ந்தாங்குத் த1ன்பாற் பட்டவன்பினவிழ்ந்த நன்னுதன் மகளிரென்ன2ராயினும் எவ்3வந் தீரவெய் தினரளித்தல் வையத் துயர்ந்தோர் வழக்கால்; வத்தவ! யாமகட்டருதும் கொள்கெனக் கூறுதல் ஏம4வையத் தியல்பன் னாயினும் வண்டார்தெரியல் வா5ண்முகஞ்சுடரப் பண்டே6யணிந்த நின்பத்தினியாதலிற் பயந்த7னர் கொடுப்ப வியைந்த னராகுதல் முறையே யென்ப, விறைவ!வதனால் யானே முன்னின்ற8டுப்ப நீயென் தேனேர் கிளவியைத் திருநாளமைத்துச் செந்தீக் கடவுண் முந்9தை நிறீஇ எய்துதல் நன்று என்று உரைக்கிறான். அவ்வுரையை உதயணன் தன்தேவி வாசவதத் தைக்கு அறிவிப்ப, அவளும் அந்நிகழ்ச்சியைப் பண்டேயறி வாளா தலின், "இது நன்று" என இயைகின்றாள். உடனே உதயணன் தன் உடன் பாட்டைத் தாபதற்குணர்த்து கின்றான். அரசியற் சான் றோர்க்கும் இச்செய்தி தெரிகிறது. திருமணத்துக்குரிய நாள் குறித்து அவளை வருக என உதயணன் உரைக்கின்றான். நகரம் நன்கு அணி செய்யப் படுகிறது. நகரவர் விரிசிகையைக் காணவேணவாக் கொண்டிருப்பதை வேந்தன் அறிகின்றான், அதனால் அவன், வினர10கமழ் கோதை விரிசிகைமாதர் வருவது வினவிக் காண்பது 11மால்கொளக் காண்பதொன்றுண்டெனக்கைத் 12தொழின்மறக்கும் மாண்13பதி யியற்கை மன்னனுமுணர்ந்து தடந்தோள் வீசித் தகைமாண் வீதியுள் நடந்தே வருக நங்கை என்று கட்டளையிடுபவன், "நகரில் இல்லந்தோறும் மெல்லிய மலர் சொரிக; கோயில் மகளிரும் நன்மூதாளரும் காஞ்சுகிமாந்தரும் சென்று வரவேற்றுவருக," என்கின்றான். அவள் நடந்து வருதலைக் காண நகரவீதி யெங்கும் மக்கட் கூட்டம் மலிந்திருக்கிறது. 16. விரிசிகை போத்தரவு மாதவனுடைய தவப்பள்ளியிலிருந்து திருவுடைய சிவிகை மீது விரிசிகையைக் கொணரும் வயவர், கோசம்பிநகர்க்குப்புறத்தேயுள்ள ஒரு தெய்வக் கோயிலின் சார்பிலுள்ள காவினுள் இறக்குகின்றார்கள். அவளை வரவேற்றல் வேண்டி உரிமை மகளிரும் வண்ணமகளிரும் வந்திருக்கின்றார்கள். அவர்கள் அவளை அங்கே நறுநீர் கொண்டு நீராட்டிக் கூந்தலை வாரிப்புகையூட்டி வடித்து வனப்புற முடிக் கின்றனர். பின்னர், தளிரினும் போதினு மொளிபெறத் தொடுத்த சேடு1று தாமஞ்சிறந்தோன் சூட்டி வாடுறு2பிணைய லொடு வகைபெற வளா3ய்க் குளிர் கொள்சாதிச் சந்தனக் கொழுங்குறைப் பளிதம் பெய்த பருப்பிற் றேய்வையின் ஆகமு முலையுந் தோளு மணிபெறத் தாi4ரயுங் கொடியுந் தகைபெற வாங்கி இ5ருந்தாள் இளம்பனை விரிந்திடைவி டாஅ முளைநு6கும் போலை முதலீர்க்கு விரித்துத் தளையவி ழாம்பற் றாஅள்7வாட்டி நீலநெடுமயி றெரியுங்கருவிக் காலெ8னவடிந்த காதணிபெறீஇச் சில்லெனரும்பு வல்லிதினமைத்து 9கச்சாவெயிற்றினல்லோன் புனைந்த 10நெற்சிறுதாலி நி11ரல் கிடந்திலங்கக் கடைந்து செறித்தன்ன கழுத்து முதற்கொளீஇ உடைந்து வே1யுகுத்த வொண்முத்தொருகாழ் அடைந்து வில்லிமைப்ப வணிபெறப்பூட்டிக் கல்லுண் கலிங்கநீ க்கிக் காவலன் இல்லின்2 மகளி ரேந்து வனரீத்த கோடிநுண்டுகில்கோலமாக அவ்வரி யரவின் மையெனப் பரந்த செல்வவல் குற்றீட்3டி வைத்ததுபோல் வல்லிதின் வகைபெற வுடீஇப் பல்லோர் காணச் சேறலாற்றா4மகட்கு நாணு5த்தரீகன் தாங்கிக் கையுளோர் நீணீர் நறுமலர் நெரித்துக் கொடுத்து ஒப்பனை முடித்தபின், அவள்தமர் சாங்கியத்தாயைத் தலைமையாக் கொண்டு போந்த உதயணன் தமர்க்கு "இவட்கு அடுத்த காதல்தாயரும் தவ்வையரும் தந்தையுமெல்லாம் வத்தவர் கோவே" எனவிடுக்கின்றார்கள். 17. விரிசிகை வதுவை விரிசிகையின்தமர் சென்று அவள் தந்தைக்குத் தெரிவிப்ப, அவன் போந்து, 1வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் பெருமாற் கடுத்தனென் நங்கைநின்னையானும் விடுத்தனென் போகி வியனுலகேத்த வடுத்தீர் மாதவம் புரிகுவென்மற்றெனக் கூறுகின்றான். அது கேட்கும் விரிசிகை கண்கலுழ்ந்து வருந்தவும், அவளைத் தேற்றிவிட்டுத் துறவுக்கோலந்தாங்கிய முனிவனாய் நீங்குகின்றான். இப்பால், விரிசிகை தான் உறைந்த தவப்பள்ளியுள் தன்னொடு பல நாள் பயின்றனவாகிய குயிலும் மயிலும் புறாவும் மான் பிணையும், ஊகமும் பிறவும் உடன் வரவருகின்றாள். அந்தணர் சாலையருங்கலமெல்லாம் கொணரப்படுகின்றன. வீதியிலே நடந்து வருகின்றாளாதலின், அவளது வனப்பு நலங்கண்ட நகர மக்கள், தம்முட் பலவாறு பாராட்டிப் பேசிக் கொள்கின்றனர். சிலர், 2குடிமலி கொண்ட கொடிக் கோசம்பி வடிநவில் புரவி வத்தவர்பெருமகற் காக்கம் வேண்டிக் காப்பு3டைமுனிவர் அஞ்சுதரு முது4காட் டஞ்சாரழலின் விஞ்சை வேள்வி விதியிற்றந்த கொற்றத் திருமகண் மற்றிவடன்னை 5ஊனார்மகளி ருள்வயிற் றியன்ற மானேர் நோக்கின் மடமகளென்றல் மெய்யன்றம்மொழி பொய் யொன்று கூற, வேறு சிலர், இவள் மந்திரத்தாற் றோன்றிய மகளாயின் கோதை வாடலும் நுதல் வியர்த்தலும் இலவாம்; ஆதலால் இவள் பெருமைப்பயனாய்ப் பிறந்த மாதவன் மகளே யென்று மறுக்கின்றனர்; ஒருசிலர், குவளை மலரைக் கையிற் பற்றிப் பணைத்தோள் வீசிப் போதரும் இவள் நீரர மகளாகுமேயன்றி, மாதவன் மகளெனலாகாது என்கின்றார்கள். வேறுசிலர், அவரை மறுத்து, 1கயத்துறுமகளெனிற் கயலேர் கண்கள் பெயர்த்தலு மருட்டி யிமைத்தலுமுண்டோ வான்றோய் பெரும்புகழ் வத்தவர் பெருமகன் தேன்றோய் நறுந்தார் திரு2வொடுதிளைத்தற் கான்ற கேள்வியருந்தவன் மகளாய்த் தோன்றிய தவத்தள் துணிமின் என்று இசைக்கின்றார்கள். மற்றொருபால், சிலர் மருண்டு, "இவளோர் இயக்கமகள்; உதயணன் பால் போக நுகர்தற் பொருட்டுச் சான்றோரிட்ட சாபந்தீர்ந்து வருகின்றாள்; இவளை மாதவ முனிவன் மன்னற்கு விடுப்பது ஏதமாம்" என்றஞ்சு கின்றார்கள்; அவரை மறுத்துரைப் போர் சிலர், இவள் அடிகள் நிலத்தில் தோய் கின்றன; அணியும் பார்வையும் ஒவ்வாவாயின; ஆகவே இவள் மாதவன் மகளே; வேறு கூறன்மின்" என்று விளம்புகின்றார்கள். ஒருசிலர் 3இமிழ் திரைவையத் தேயர்பெருமகன் தமிழியல்4 வழக்கினன் த5ணப்புமிகப்பெருக்கி நில6வரை நிகர்ப் போரில்லா மாதரைத் தலைவர7 விருந்தது தகாது என்று சாற்றுகின்றார்கள்; வேறுசிலர், "வேந்தன் களத்தின்கண் உண்டாட்டயர்ந்திருந்த காலத்து அவனது தனிமைதீர்த்த திரு மகளாதலால், அவட்கு அவன் இனியனே" என்கின்றனர். மற்றொருபால், ஒருசிலர் தம்முட்கூடி, பவழரு முத்தும் பசும்பொன் மா1சையும் திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய அணிகல மணிவோ ரணியிலோரே 2மறுப்பருங்காட்சி யிவள் போன்மாண்டதம் உறுப்பேயணிகலமாக வுடையோர் பொ3றுத்தன் மற்றுச் சில பொருந்தாது என்று கூறுகின்றார்கள். வேறு சிலர், "யாமே அழகுடையேமெனத் தருக்கித் திரியும் மகளிர் இவள் வனப்பினைக் காணின் என் செய்ப" என்று விடுக்கின்றனர். முடிவில் சிலர், ஏதமிலொழுக்கின்மாத வரிற்4பிறந் தெளிமை வகையி னொளிபெற நயப்பப் பிறநெ5றிப்படுதல் செல்லாள் பெருமையின் அறநெறி தானேயமர்ந்து கை6கொடுப்ப 7அம்மையணிந்த வணிநீர் மன்றல் தம்முட்டாமே கூடியாங்கு வனப்பிற்கொத்த வினத்தினளாகலின் உவமமிலுருவி னுதயணன்றனக்கே தவமலிமாதர் தக்கனள் என்று தகவுரை வழங்குகின்றனர். இவ்வாறு கண்டோர் பேசிக் கொள்ள, விரிசிகை தன் சேவடி சிவப்ப, மென்மெல8 வியலிவீதி போந்து கொடிபட நுடங்குங் கடிநகர் வாயல் முரசொடு சிறந்த பல்லியங்9 கறங்க அரசமங்கல மமைவர வேந்திப் பல்பூம் படா1கை பரந்தநீழல் நல்லோர் தூஉ நறுநீர்நனைப்பச் சேனையு நகரமும் சென்றுடனெதிர்கொள மிக்க சிறப்புடன் வேந்தன் கோயிலையடைகின்றாள். திருமணம் நிகழ்கிறது. தேவியர் மூவரும் தீமுன்னின்றவட் குரிய2வாற்றி மரபறிந்தோம்பி அருவிலைநன்கல மமைவர வேற்றிக் குரவர்3 போலக் கூட்டுபு கொடுப்பக் கூட்4டமை தீமுதற் குறையாநெறிமையின் வேட்5டவட் புணர்ந்து வியனுலகேத்த அன்பு நெகிழ்ந்தணை6இயின் சுவையமிழ்தம் பனியிருங் கங்குலும் பகலு மெல்லாம் முனிவில னுகர்ந்து முறைமுறை பிழையாது துனியும் புலவியு மூடலும் தோற்றிக் களிபடுகாமங் கலந்த களிப்பொடு நற்றுணை மகளிர் நால்வரும் வழிபட இன்புறு செல்வத்தோடுஇன்னுயிரோம்பி உதயணன் பெருகும் உயர் வாழ்வு வாழ்ந்து வருகின்றான். வத்தவ காண்டம் முடிந்தது. ஐந்தாவது நரவாண காண்டம் 1. வயாக் கேட்டது உதயணன் மனைவியர் நால்வரும் தன்னை வழிபட இனிது வாழ்ந்து அரசியலையும் செம்மையுற நடாத்தி வருகையில் ஒருநாள் வணிகர் சிலர் போந்து தமக்குரியதொரு வழக்கைத் தெரிவிக் கின்றனர். உதயணன் திருவோலக்கமிருப்பவன், உருமண்ணுவாவைத் தீர்ப்பு வழங்குக எனப் பணிக்கின்றான். அவ்வணிகர் வழக்கு வருமாறு. "நாங்கள் மூவரும் ஒருதாய் வயிற்றிற் பிறந்தவர்கள்; மூவரும் முத்திறம் பட்டவர். ஒருவன் கடலிடை வங்கம் செலுத்தி வேறு நாடுகட்குச் சென்று கடைவைத்துப் பொருளீட்டுபவன்; ஒருவன் தன்னாட்டகத்தே கடைவைத்து உடை யதைப் பெருக்கி வாழ்பவன்; ஒருவன் அரிய பண்டங்களை எளிய காலத்து வாங்கித் தொகுத்து உரிய காலத்து விற்பவன். கடலூடு சென்ற மூத்தவன் உடைகலப்பட்டு உயிரிழந்தான்; அவன் தாயை ஏனையிருவரும் அடைந்து செய்வது யாது எனக் கேட்டவழி அவள் ஒன்றும் உரைத்திலள்" என்பது வழக்குரை. உருமண்ணுவா. "இறந்தோன் மனைவியிருக்கின்றாளன்றோ? அவள் மறுமொழி யென்னை?" என்று வினவ, "அவள் கருக்கொண்டிருக்கின்றாளாதலால், அவளும் ஒன்றும் உரையாடு கின்றனள்" என்று அவர்கள் விடையிறுக் கின்றார்கள். உருமண்ணுவா, வருக அப்பொருள் வந்தபினவ்வழி இருவரு 1மிலைச்சித் தீரறுதிங்கட் கொருவன் கையகத் திருக்க விருந்தபின் 2மிக்கோண்மாற்ற மெய்யெனின் மேலை இயல்பேயாகு மதுதானன்றி 1மறுவில் கொள்கையோர் சிறுவனைப் பெறினே உறுபொருண் மற்றிவ ருரைக்கவும் பெறாஅர் வெண்குடைநிழற்றிய வேந்தே பெண்பெறிற் புற2நடை யொழித்திவர் திறவதி னெய்துப நூனெறி யிது என உரைக்கின்றான். இதனைக் கேட்டிருந்த உதயணற்கு நினைவு பிறக்கின்றது. "எனக்கு மக்கள் இன்றெனின், என்குலமும் இடையறும்" என நினைந்து ஆற்றானாய்ச் செல்கின்ற உதயணன் தன் மனைவி வாசவதத்தையைக் காண்கின்றான். அவள் பூப்புக்கழிந்த நாளில் நோன்பிகட்குக் கொடைக்கடனாற்றி இனிதிருக்கையில், பல்சிறைப் புறாவொன்று தான் வாயிடைக் கொணர்ந்த இரையைத் தன்பார்ப்புக் கட்கு அளிப்ப அவை மிக்குற்ற பசி தீரவுண்பதையும் அது கண்டுமகிழும் புறாவினது அன்பையும் கண்டு வியந்திருக்கின்றாள். அவளைக் கண்டு இன்பவுரையாடி இனிதிருப்பவன் அன்று கனவொன்று காண்கின்றான். கனவில், அயில் வேனெடுங்க ணோரா3யிழையணுகி அருளு மெம்மிறை யெழுபுவியளித்தற்குப் பொருளுமதுவே போதுக என்ற4லின், யாரவன் கூறெ5ன வவ்வழி யிறைஞ்சிப் பேரவ ளுரைத்தலிற் பெருமகனோக்கித் துன்பமு மின்பமுந் துறக்க6லாற்றா மன்பெருந் தே7வியொடு செலவுளம8மர்தலின் மற்றதை யுணர்த்தி முற்றிழை யெழுகெனப் பற்றுநளுடனே பறந்து விசும்பிவர மேலுங் கீழு மேவர நோக்கி மாசறு மகளிர் மம்ம ரெய்தி ஆனாக் கனவிடை மாநிதிக் கிழவன் விளங்கவை நாப்பண் துளங்9கினர் புகுதலின் அரிமா சு10மந்த வமளி காட்டத் திருமாணாகத்துத் தேவியொடேறி இருந்த பொழுதிற் பொருந்திய வல்லியுள் வெள்ளேறு கிடந்த வெண்டாமரைப்பூக் கொள்வழி யெழுதிய கொடு1ஞ்சியுடைத்தேர்ப் பொன்னி2ய றொடரிற் புதல்வனிருத்தலிற் பின்னரப் பூவின் பிக்க3நோக்கிப் பிறழ்ந்த வாழியிற் பெருநடுவாக உறழ்ந்து நனியழுத்திய வுறுபொன்னல்4லியின் ஒருமுடி பிறழ்தலினருமையொடு விரும்பிக் கொண்டது வாவெனக் கோமகள் கொண்டு வண்டவிழ்நறுந்தார் வத்தவற்கருளி நெடித்த5னெ னெழுகென விடுத்தனள் கொடிக்கோசம்பிக் குறுகித் தமரிடை முடிக்கலமெல்லா முறைமையி னோக்கிக் கைவினைக் கம்மத்துக்க6திர்ப்புநனி புகழ்ந்து வேண்டுக விதுவென விளங்கிழைக் கோமகட் கீயக் கொண்டு தன்னிடைமுலைச் சேர்த்தலும் காய் கதிர்க்கன7லியிற் கதுமெனப் போ8ழ்ந்து புக்கது வீழ்தலும் பொருக் கென வெரீஇ எழுந்தமாதரோடு உதயணனும் எழுகின்றான். இருவரும் தாம் கண்ட கனவை நினைந்து நூல்வல்லோர் சிலருடன் ஆராய்கின்றனர். உதயணனை நோக்கி, வல்லோன் ஒருவன் கூறலுற்று. "விஞ்சையர் வாழும் வெள்ளிமலையை யாளும்திருவும் வெற்றியுமுடைய மகனொருவன் பிறப்பான்; அதில் ஐயமில்லை"யென்று உரைக்கின்றான். கேட்டு உதயணன் மகிழ்ச்சி மிகுகின்றாள். சின்னாள் கழிதலும், வாசவதத்தை கனவொன்று கண்டு, உதயணனை வணங்கி, என்னைகொ லடிகள் இன்றியான் கண்டது விண்ணகம ருங்கில்வெண் முகில்புரைவதோர் அண்9ணல் யானையென் கண்ணுற வந்துதன் ஆய்வலித் தடக்கை சுருட்டுபு முறுக்கியென் வாய்புக் கடங்கிய பொழுதிற் சேய்1நின் றந்தரம ருங்கிற் றுந்துபிகறங்கப் புகழ்ந்து பல ரேத்தப் பொருக்கெனப் பெயர்த்தே உமிழ்தேனுமிழப் பரந்திறகு தோற்றிப் பல்லோர் மருளப் பறந்து சென்றுயர்ந்ததோர் வெண்மலை மீமி2சை யேறி வேட்கையின் விண்மிசைஞாயிறு விழுங்கக் கண்டனென் என்னைகொல் இதனது பயமென வினவுகின்றாள். உதயணனும் மிக்க மகிழ்ச்சியுடையனாய், மறுவின்று விளங்குமறப் 3பேராற்றலோர் சிறுவனைப் பெறுதி சேயி 4ழை மற்றவன் உறுதி5ரைப் பக்கமும் வானமும் போகி அச்சமி6லாற்ற லோர் விச்சாதரரிடை ஆழி7யுருட்டு மென்றறிந்தோருரைத்த வீழா8விழுப் பொருள் மெய்பெறக் கண்டனை தீதின்றாகித் திருவொடுபுணர்க என உரைக்கின்றான். அவளும் உளம்மகிழ்ந்து ஒழுகுகின்றாள். சின்னாட்கள் கழிந்ததும் வாசவதத்தை கருப்பமுறுகின்றாள். கருமுதிரமுதிர வாசவதத்தைக்கு, இமயமும், அங்கே பெருகும் புனல் யாறும், நீலமலையும் ஏனைத் தீவுகளும், மந்தரமலையும், இமைய வருல கத்துப் பொய்கையும் நந்தவனமும் உத்தர குருவும் காண்டல் வேண்டுமென்ற வேட்கையுண்டாகிறது. அதனைப் பிறர் எவரிடத்தும் கூறாது உள்ளத்தே கொண்டிருக்க, கருமுதிர்ச்சியால் உடல் விளர்த்தல், வாய்வெளுத்தல், பசுநரம்போடல் முதலிய குறிகளை யுடையளாகின்றாள். உள்ளத்தெழுந்த வேட்கையால் மேனிமெலிகின்றாள். அவளது அம்மெலிவை யுணர்ந்து கொண்ட உதயணன் அதனை வினவ, அவள் அதனை யுரைப்பதற்கு நாணியொடுங்குகின்றாள். அவட்கு உதயணன். நின்னுயிர் 1மதியாயாயின் என்னுயிர் யானும் வேண்டேனாயிழை கேண்மோ கூடிய கொழுநன் கொழுங்குடர்2 மிசைகுற ஓடி3ய வுள்ளத் துயர்துணைத் தேவியைக் குறையிற் கேட்டுக் கொடுத்து நோய்தணித்த மறை4யில் பெரும்புகழ் மன்னவன் போல என்னதாயினு மீகுவன் மற்றுநின் இன்னா5வெந்நோயெத்திறத் தாயினும் ஒடுங்கா6வுள்ளமொடகற்றுவல்யானெனக் கடுஞ்சூள் அறைகின்றான். உடனே வாசவதத்தையும் வாய்விட்டுச் சொல்வாளாய். அசையா7வூக்கத் தடிகளென் னுள்ளம் விசைகொ8ணோன்றாள் விச்சாதரர் போல் மிசையே சென்றுற மேன்மே னெ9ருங்கும் இசையா10வரும்பொருளிற் றென11வுரைத்தல் வ12சைதீர் வையத்துநகைய தாதலின் சொல்லிய திலன் என மெல்லிதின் மிழற்றுகின்றாள். உதயணனும் தன் அமைச்சரைக் கொண்டு இது பற்றி யாராய்ச்சி செய்கின்றான். 2. இயக்கன் வந்தது உதயணன் இவ்வாராய்ச்சியில் இறங்கும்போது உருமண்ணுவா இலாவாணகத்தில் இருந்து ஆட்சிபுரிந்து வருகின்றான். உதயணன் அவனை வருவித்து அவற்கு வாசவதத்தையின் வேட்கையினையும், அதனைத் தீர்த்தற்கு வாயிலாக வானவூர்தி செய்யுமாற்றையும் தெரிவித்து ஆராயலுறுகின்றான். அவன் பல படநினைந்து, முடிவில், 1பொறியுடைமார்ப வதுபுணர்க்கும் வாயில் அறிவல்யானஃ தருளிக் கேண்மதி 2வெற்றத்தானையும் வேழரு நீக்கி உற்றோர் சிலரோடொருநாளிடைவிட்டு வேட்டம் போகி 3வேட்டுநீர்பெறாஅ வெம்பர4லழுவத் தெம்5பருமின்மையின் மதிமயக்கெய்திப் புதுமலர்க்காட்டுட் *டெய்வதையுண்டெனிற் கையற6 லோம்புகெனப் பாற்படுபலாசி னோக்கமை7 கொழுநிழல் குரவம்பாவைக் குறுமலர் நசை8இ அரவ வண்டினம் யாழென வார்ப்பத் தெறுகதிர்ச் 9செல்வன் முறுகிய நண்பகல் அசைந்10தி யாங் கிடந்தனமாக அவ்விடத்தே ஓர் இளைஞன் வெண்டுகிலேற்ற தாளையும், சந்தனம் எழுதிய மார்பும், வனப்புடைய மேனியும், ஆரமணிந்த கழுத்தும், செல்கழுநீர்த்தாரும், செவ்விய கண்ணு முடையனாய் வந்து தோன்றி "நீவிர்யார்? ஏகலாற்றாது மெலிந்துளீராதலின் நுமக்கு உற்றது யாது?" என்று கேட்ப, நம் வருத்த முரைத்தேமாக, நாம் விரும்பிய வாறு நன்னீர் கொணர்ந்து தந்து நம் அசைவு போக்கினான். பின்னர், அவன் தெய்வமகனென்பது தேர்ந்த நாம், அவளது நன்றியினைப் பாராட்டி, "எமக்கு இது போலும் பேரிடர் உற்றபோது நினைப் போம்; அக்காலையிற் போந்து உதவுதல் வேண்டு" மென வேண்டி னேமாக, அவன், வச்சிர1வண்ணனை வழிபட்டொழுகுவேன் நச்சு2 நண்பினஞ்சுக னென்னும் இயக்க னென்னை மயக்க3ற வுணர்ந்து மறப்பின்னொழுகு நயப்4பொடு புணர்ந்த நன்னட்பாள னேன்யான்இனி நுமக்கென என்னட்ப5றிமினென்று மென்வயின் எள்ள6லில்லா துள்ளிய காலை ஓ7தியி னோக்கியுணர்ந்தியான் வருவேன் ஈதி8யன் மந்திரமென்று கூறி என்பெயர் நினைந்தா லெவ்விடத்தாயினும் துன்பநீக்குவென் என்று சொல்லித் தந்த மந்திரமொன்றுளது; அதனை மறந்திலேன். அவனை இப்பொழுது நினைப்பாயாக என்று கூறி அம்மந்திரத்தை யெழுதித் தருகின்றான். உதயணன் தூயனாயிருந்து மந்திரத்தை யோதுகின்றான். அன்று கண்ட கோலத்தே இயக்கன் தோன்று கிறான். 3. இயக்கன் போந்து தோன்றிய இயக்க விளைஞனை உதயணன் அன்போடு முகமனுரைத்து இன்புறுத்துகின்றான். இன்புற்ற இயக்கனும் உதயணனை நோக்கி, வாசவதத்தையொடு வருங்கால் கூட்டிடைப் பட்ட கோட்புலிபோல வேட்டுவரிடைப் பட்ட போதும், யூகியால் தேவியைப் பிரிந்து மகத நாடடைந்த நீ ஆண்டுப் போர் நிகழ்ந்த போதும் பிறாண்டும், 1துயரந்தீர்க்குந் தோழனென்றென்னைப் பெயராக்2 கழலோய் பேணாயாகி ஒன்றிய செல்வமோடுறுகணில்லா இன்று நினைத்த தென்னெ3னப்படும் என்று கேட்கின்றான். அவற்கு, உதயணன் சொல்லுவானாய், அவையனைத்தும் எம்மால் தீர்த்துக் கொள்ளப்படும் எல்லைக்கண் நின்றன; அப்போது நின்னை நினைத்தல் நீர்மைத்தன்று; அதனால் நின்னையாம் உள்கிற்றிலேம்; இப்போது, அஞ்சொன் மழலைய4வந்திகையென்னுநின் நெஞ்சமர் தோழி5நிலைமை கேண்மதி மிசைச் செல 6வசாஅ விழுமவெந்நோய் தலைச்7செலத் தானுந் தன்மனத்தடக்கி ஏறாக் 8கருமமிதுவென வெண்ணிக் கூறாண் மறைப்ப வூற9வணாடி உற்றியான் வினவ விற்றென விசைத்தனள் மற்றியாந்தீர்க்கு மதுகை1யறியேன் நயந்த நண்பி னன்2னர் நோக்கி உடையழிகாலை யுதவியகைபோல் 3நடலை தீர்த்தல் நண்பன தியல்பென 4உரத்தகை யாள! உள்ளினேன். என்று இயம்புகின்றான். அவற்கு அருஞ்சுகன் உரைக்கலுற்று. தாரணிமார்ப காரணங்கேண்மதி 5மெச்சார்க்கடந்த மீளி6மொய்ம்பின் விச்சாதரருறை யுலகம் விழையும் திருமகளு நின்பெருமனைக் கிழத்தி வயிற்றகத் துறைந்த நயப்பு7று புதல்வன்; அன்னானாகுதற் றிண்ணிதி னா8டி மெய்ப்பொரு டெரியுமிடை9தார் மன்னவ! பொய்ப்பொருணீங்கிய விப்பொருள் கேண்மதி. என்று தொடங்கிப் பத்திராபதியின் வரலாற்றினைக் கூறுகின்றான்: விந்தமலையரு குள்ள காட்டிலே ஒருகாலத்தே நருமதையாற்றங் கரையிலே குபேரன் தன் மனைவியோடிருந்தான். ஆங்கே அவனுடன் பத்திரை, மேனகை, திலோத்தமை, பத்திராபதி, உருப்பசி, அரம்பை முதலிய பதினெண்மர் நாடக மகளிர் வந்திருந்தனர். அவருள் பத்திராபதி வேந்தன் ஆணை பெற்று ஆலங்கானத் தாற்றயலில் விளையாடச் சென்றாள். அங்கே, கண்ணயற்10கடாஅத் துக்களிவண்டோப்ப மாறுதனக் கின்றிமற 11மீக்கூரி ஆறுதனக் காரணா வணிநல நுகர்ந்து மருப்பிடைத் தாழ்ந்த பருப்12புடைத்தடக்கை செருக்1குடை மடப்பிடி சிறுபுறத் தசைஇ நறுமலர் நாகத் தூழ்முதிர் 2வல்லிப் பொறிமலர் கும்3பம் புதையவுதிர அஞ்சாப் பைங்கணோர் வெஞ்சின வேழம் 4எழுவகை மகளிரின்ப மெய்தி அகமகிழ்ந்தாடு மண்ணல் போல நின்ற வின்ப நேயம் கண்டு, "வேழப்பிறப்பும் விழைதக்கதே" யென்று நினைத்தாள். அந்நினைவை வெளியே புலப்படுத்தாது மனத்தே யடக்கிக் கொண்டவள் மீளச் சென்று குபேரன் முன் நாடகமாடிய போதும் அதனையவற்குத் தெரிவியாது வேழப்பிறவியை வியந்து பாடினாள். அவனோ தன் அவதி ஞானத்தால் அவளது நினைப்பை யுணர்ந்து கொண்டான். "தெய்வ வின்பம் பெற்றும் அதனை விழையாது விலங்கின்பத்தை விழைந்தனள் இவள்" என மனத்தே வெகுண்டு. வேழம் நினைஇ வேட்கை5மீதூர்ந்து ஊழ்வினை வகையினுடம்பிட்டேகி நன்றியில்6 விலங்கின் பிறவி நயந்துநீ 7கானஞ் செய்தது காரணமாக மலைக்கணத்தன்ன மாசில் யானையுள் இலக்கணமமைந்த தோளளம்பிடியாகிப் பிறந்த பின்றைச் சிறந்து நீ நயந்த வேகயா8னையொடு விழைந்து விளையாடிப் போகம் நுகர்க எனச் சாபமிட்டான். அது கேட்டு மனம் திடுக்கிட்டஞ்சிய பத்திராபதி அவனை வணங்கியதற்கு வீடுபேறருளுமாறு வேண்ட, அவன், "நீ யானையாய்ப் பிறந்து இன்புற்று வாழும்நாளில் உதயணன் வாசவதத்தையொடு பிரச்சோதன் நகர்நீங்கிச் செல்லுங்கால் வழியில் நீ பசியும் காலவட மென்னும் நோயும் பெருக வீழ்வாய்: அக்காலத்தில் அவன் நின் செவியில் பஞ்ச நமஸ்கார மென்னும் மந்திரத்தை யோதுவன்; பின்பு நீ நின் தெய்வப்பிறப்பை யெய்துதல் கூடும்" என்று உரைத்தனள். அவ்வாறே அவள் பத்திராபதி யென்ற பிடியானையாய் இருந்து தெய்வப் பிறப்பையெய்தினள். எய்தியவள் குபேரனையடைந்து, வணங்கி நின்று நின்பொருட்டொரு வரம் வேண்டுவாளாய், 1கடவது கழித்த காவலன்றனக்கோர் மறுவில்2சிறப்பினோர் மகனை வேண்டுவேன் பெறுதற்கொத்த பிழை3ப்பில னாயினும் அறாஅவ4ருநிதிக் கிழவ வதனை மறா5அதருள் என வேண்ட, அவனும் அவ்வரத்தை நல்கியருளினான். அவனே தான் நல்கிய வரம் தப்பாமைப் பொருட்டுச் சௌதருமேந்திரன் என்னும் முனிவனை யடைந்து இதனைத் தெரிவித்து வேண்டினன். அவனும், தேவபோகம் வேண்டித் தவம்புரிந்திருந்த சோதவனென்னு முனிவனை யழைத்து உதயணற்கு மகனாகத் தோன்றி வித்தியா தரவுல காண்ட பின்வருக எனப் பணித்தான். அதற்கிணங்கிய சோதவன் பத்திராபதியை நோக்கி, நீ விரைந்து சென்று உதயணன் மனைவி வாசவதத்தைக்குக் கனவின் கண்யான் பிறக்குமாற்றைத் தெரிவிக்க வென்றான்; அவளும் அவ்வண்ணமே, 6ஒள்ளரிமழைக்கண் தேவியையு7ள்ளிநீ பள்ளி கொண்டுழிப் பரிவு8கையகல வெள்9ளிய நறும்பூத் தந்தனள் விளங்கிழை ஆர்வ வுள்ள முடையோர் கேண்மை தீர்10வதன்றம்ம தேர்ந்துணர் வோர்க்கே இது வரலாறு; என்று அருஞ்சுகன் சொல்லி முடிக்கின்றான். பின்னரும் அவன் உதயணனை நோக்கி, "அப்பத்திராபதியாகிய தெய்வமகள், இதுவும் 1நன்னயஞ் சிறிதென வதனைத் தான் வெளிப்ப2டாஅள் இன்னும் நுனக்கோர் வான்வெ3ளிப்படூஉம் வாரிவிழுப்பொருள் தருதல் வேட்கையொருத4லையுடையள்; ஆனாக்கடுந்திறலண்ணல்! அதனால் மேனாட் கிழ5மை விண்ணவர் மகளை மனத்தினுள்ளி மந்திரங்கூறி நினைத்தபொழுதினின் முனர்த் தோன்றும் தோன்றிய பின்னர்த் தோன்றலைத் தந்த மகனது வரவு முறைமையினுணர்த்தும் நீ அகனமர்ந்துரைத்த வயா6அவரும் பொருள் இற்றெனவுரைத்தலு முற்றிழை தீர்க்கும் மற்றிது முடியாதாயின் ம7றித்தும் வருவல் யானெனத் தான் தெரிவித்த பத்திராபதியை வருவித்தற்குரிய மந்திரத்தைச் சொல்லிவிட்டு உதயணனைப் புல்லிவிடைபெற்று நீங்குகின்றான்." 4. வயாத் தீர்ந்தது இயக்கன் சென்ற பின் உதயணன் அவன் தந்த மந்திரத்தை யோதிவருகின்றான். பத்திராபதி அவன் முன்தோன்றுதற்கு வாயில் காணாமையால் வரத் தாழ்க்கின்றாள். வாசவதத்தையின் வேட்கை விரைவில் நிறைவேறுகின்றிலதே யென்ற கவலை உதயணனை யலைக்கின்றது. "இதற்குரிய முயற்சியை யேனும் நாம் தொடங்குவது சிறப்"பெனக் கருதிய அமைச்சர், நாட்டிலுள்ள தச்சர் பலரையும் ஆணை வழியாய் வருவித்து விசும்பிற் செல்லும் வானவூர்தி சமைக்கு மாறு வேண்டுகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒருமுகமாக, நீர் சார்பாக வூர்பவு மரத்தொடு நிலஞ்சார்பாகச் செல்பவு மலங்குசினை இவளிலைசார்பாக இயல்பவு மென்றிப் 1பால்வகை மரபினல்லதை நூல்வழி 2ஆருயிர் கொளினு மதுவெமக் கரிதெனச் சாற்றுகின்றார்கள். இதனைக் கண்ட பத்திராபதி "இவர் உருவாகி இவ்வினை முடிப்பன்" என்றெண்ணித் தான் ஒரு இளந்தச்சனுருவில் தோன்றிக் கோயில் வாயிலை யடைகின்றாள். உருமண்ணுவா முதலாயினார்கண்டு, உதயணனைக்குறுகி, கண்ணியன் கழலினன் கச்சினன் றாரினன் 3வண்ணவாடையன் வந்திவட்டோன்றித் தச்சுவினைப் பொலிந்த விச்சை4யின் விளங்கி என்னே மற்றிவ ரறியாரொழி5 கெனத் துன்னிய 6துயரந் துடைப்பான் போன்றனன் மன்னருண் மன்னன் மறுமொழி யாதென வேண்டி நிற்ப. தான் உரைக்க வேண்டியவற்றை யொழியாதுரைத்து, "நெடித்தல் செல்லாது விசும்பூர்ந்து செல்லும் பொறி யொன்ற மைத்து விரையக் கொடுத்தல் வேண்டும்" என்று விளம்புகின்றான். பத்திராபதியும் விசும்பூர்தி செய்தற்1குரியவென சில பொருள்களைப் பெற்றுச் சென்று மறைந்திருந்து ஊர்தியொன்று செய்து கொணர் கின்றாள். அதன் மீது உமையொடுபுணர்ந்த விமையாநாட்டத்துக் 2கண்ணணங்கவிரொளிக் கடவுளைப்போல வாசவதத்தையுடன் தான் ஏறியமர்கின்றான். உருமண்ணுவாதன் தேவியும் கருவுற்று இவ்வயாக் கோடலைக் கூற அவனையும் உதயணன் அவன் மனைவியொடு ஏற்றிக் கொள்கின்றான். மற்றைய பதுமாபதி மூவரும் நோக்கி, "இம்மூவரும் உடளேறுதற்கு ஒல்லு மோ" என்று கேட்கின்றான். பத்திராபதி, "வேந்தே, உலகமெல்லாம் ஏறினும் ஏறுக; ஒரு குறையும் இல்லை" என்றலும் எல்லோரும் ஏறிக் கொள்கின்றனர். ஊர்திக்குரிய கடும்பும் தவிர்ப்பும் யாவையென உதயணன் கேட்ப, "நீ நினைக்குமாறு இயலும்" எனப்பத்திராபதி யுரைப்ப, உதயணன் நாடோறும் முறை முறையாகச் சென்று வரப்பயில்கின்றான். பின்பு, தனது தந்தையுறையும் நாடு சென்று காண்கின்றான்; அதன்பின், பதுமாபதியின் நகர்க்குச் செல்கின்றான். அக்காலை அவளை நோக்கி, "இந்நகர் புகுதுமோ" என்றாற்கு, "அவள் வேண்டா" என அவன் திரும்பிவருகின்றான். இவ்வாறு பயின்றவன், பொன்மலை சென்று அங்குள்ள சேதியங் கண்டு தொழுகின்றான்; பின் விஞ்சையருலகு புகுந்து அங்கேயுள்ள நகரமும், பூந்தண்காவும், ஒரு நூறாயிரம் பூசனைக் களரியும் காண்கின்றான். பிறகு, இமயமும் கங்கையும் சிந்துவும் மேருவும் அதின் மேலுள்ள காவும் சிந்துவும் சீதையும் சீதோதகையும் விதேயமும் அந்தியும் தேவகுருவும் உத்தரகுருவும் மகளிர்க்குக் காட்டி மகிழ்வுறுத்து கின்றான். இப்பால், அவந்திகை நாடும் அணியுஞ் சேனையும் மலைமருங் கறையு மழக1ளிற் றீட்டமும் கலைமானேறுங் கவரியுங் களித்த அருவித் தலையு மணிமலையி டமும் குளிர்பொழிற் சோலையுங் குயிற்2றொகைப் பரப்பும் மயில் விளையாட்டு மான்கணமருட்சியும் புயல் வளம்படுக்கும் பொருவில் வள3மை அவந்தி நாடு மிகந்து மீயி 4யங்கித் தண்டா5ரணியுந் தாபதப் பள்ளியும் வண்டார் சோலையும் வளங் கெழுமலையும் மயிலாடு சிமையப் பொதியிலு மதன்மிசைக் குளிர்கொள் சந்தனத் தொளிர் மலர்க்காவும் காவினடு6வண வாவியுங் கதிர்மணித் தேவகுலனுந் தென்பாலிலங்கையும் அராஅந்தாணரும் குமரித் துறையும் பிறவும் கண்டு மகிழ்ந்து, தன்னகர்க்கு வேண்டும் அருங்கலம் கொண்டு வந்து சேர்கின்றான். 5. பத்திராபதி உருவு காட்டியது கோசம்பி நகர்வந்து சேரும் உதயணன் ஓரிரண்டு நாட்கள் கழித்த பின் வையமியற்றிய பத்திராபதியை யழைத்துச் சிறப்புப் பல செய்து அன்புமிகக் காட்டி, தொல்லைச் செய்தந1ன்னருமறியேம் எல்லையில் பெருந்துயரெய் தினமகற்றினை 2அரசினா காதாணையினாகாது விரைசெலலிவு3ளியொடு வெங்கண்வேழம் பசும்பொனோடைப்பண்4ணொடு கொடுப்பினும் விசும்பிடைத் திரிதரும் வேட்கை வெந்நோய் பொன்னி5றையுலகம் பொருளொடு கொடுப்பினும் துன்னுபு மற்றது துi6டக்கு நரின்மையின் உறு7கண் டீர்த்தோய்க்குதவியொன்றாற்றிப் பெறுகுவம் யாமெனப்8பெயர்ப்பதையறியேம் நல்வினையுடைமையிற் றொல்வினைதொடர்ந்த எந்திரந்தந்து கடவுளையொத்த என்று இன்பவுரை பல இயம்புகின்றான். பின்னர்த்தான் அணிந் திருந்த பெருங்கலமொன்றைத் தலையிடத்தே களைந்து கொடுத்துச் சிறப்புச் செய்கின்றான். உடனே, பத்திராபதி, "புரவல, பொருள் எனக்கு என் செய்ய வல்லதாம்; வேண்டா" என மறுத்துத் தன் பண்டை வரலாறு முற்றவும் கூற, உதயணன் கேட்டு, "இயக்கன் கூறியது இவளும்" கூறுகின்றாள்; ஆர்வமுடையோர் கேண்மை எவ்வழியும் குன்றாது போலும்" என்றெண்ணி, ஒன்றும் கூறாதிருக் கின்றான். பத்திராபதி, மேலும் கூறலுற்று, மேனீ செய்த உதவிக் கியானோர் 1ஐயவியனைத்து மாற்றியதில்லென முன்றனக் குரைத்தன முறை முறைகிளந்து நீயும் யானு வாழு மூழியும் 2வேறலம் என்று விளங்கக் கூறி, அவன் கண்காணுமாறுதன் உருவத்தைக் கொள்கின்றாள். பின்னர் அவளின் நீங்கிப் பிடியுருக்கொண்டு விசும் படைந்து முகில் மிசை நடந்து தன்னுலகு சேன்று சேர்கின்றாள். அவள் பெயரால் வாயிலொன்று நிறுவி உதயணன் வாயிலாளருடன் அவளை வழிபடுகின்றான். 6. நரவாணதத்தன் பிறந்தது பின்னர் உதயணன் தன் மனைவியர் நால்வருடன் இனிதிருக் கின்றான். உருமண்ணுவா முதலியோர் தத்தம் முறையில் வழுவா தொழுகுகின்றார்கள். வாசவதத்தை முதலிய மகளிர் கருமுற்றி வருகின்றனர். வாசவதத்தை கருவுயிர்க்கும் காலம் நெருங்குகிறது. பகை1முதல் சாயப்பசிபிணிநீங்க மாரியும்விளையுளும் 2வாரியுஞ் சிறப்ப வ3ழுக்காவாய் மொழி வல்லோர்வாழும் வி4ழுத்தகு வெள்ளி வியன்மலை விளங்கத் திருத்தகுதே விவருத்தமின்றிப் பொய்கைத் தாமரைப் பூவினுறையும் தெய்வத் திருமகள் சேர்ந்து மெய்காப்பப் பொய்யில் 5பொருளொடு புணர்ந்த நாளாற் றெய்வ விளக்கந் திசைதொறும்விளங்க ஐவi6கப் பூவும் பல்வகை பரப்ப மதி7யுறழ் சங்க நிதியஞ் சொரிய அந்தரவிசும்பி னா8ழிக்கிழவன் வந்து பிறக்கின்றான். இங்ஙனம் வாசவதத்தைக்குப் பிறந்த மகன் பொருட்டு உதயணன் தோழரும் அரசவையாரும் ஐம்பெருங் குழுவும் நாட்டவரும் நகரத்தவரும் ஒருங்கு கூடி "ஆயுட்டானம்" புரிகின்றார்கள். கோயில் முற்றத்தே முரசியம்புகிறது. பல்வகைக் கொடை நிகழ்கிறது. பெருங்கை யானையின் பிணரெருத் தேற்றிய முரசம், வீதிதோறும் சென்று, கொ1லைச் சிறைவிடுக தளை2ச் சிறை போக்குக கொற்றத் தானையொடு கோப்பிழை3த் தொழுகிய குற்ற மாந்தருங் கொடிநகர் புகுதுக அருங்கடி நகரமு நாடும் பூண்ட பெருங்க டன்விடுக விருங்கடல் வரைப்பின் 4நல்குரவடைந்த நசைசாலாடவர் 5செல்லல் தீரவந் துள்ளியது கொள்க பொருந்தா மன்னரும் பொலிகெனுங் கிளவி பெருந்திறையாக விரைந்தனர் வருக நிலைஇய சிறப்பி னாட்டுளுங்காட்டுளும் கொலைவினை கடிககோநகரெல்லாம் விழவொடுபுணர்ந்த வீதியவாக எனத் தன் இருங்கண்ணதிர முழங்கித் தெரிவிக்கிறது. மாடந்தோறும் பூம்படாகைகள் எடுக்கப்படுகின்றன. நீராட்டர வரும் நெய் யாட்டரவரும் மன்னரொடு கூடியுறையும் உதயணன் மகிழ்கின்றான். மகன் பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும் சிறந்துறுங்கோளுங் கொண்டு சாதகங் கணிக்கும் பெருங்கணிக் குழுவுக்குப் பெரும் பொருள் வழங்கப்படுகிறது. ஆங்குப் போதரும், 6ஏத்தியலாளரும் கூத்தியர் குழுவும் கோயின் மகளிருங் கோப்7பெரு முதியரும் வாயின் மறவருஞ் சா8யாச் செய்தொழிற் கணக்கருந் திணை9களும் காவிதிக்10கணமும் அணித்தகு மூதூராவ11ணமாக்களும் சிறப்பொடு புணருமறப் பெருங்குழுவும் ஏனோர் பிறர்க்கு மிவை யெனவகுத்த அணியு மாடையு மணியும் நல்குகின்றனர். மகற்பேற்றினை உதயணன் தன் தம்பியர்க்கும் தருசகற்கும் பிரசோதனற்கும் ஓலை போக்கித் தெரிவித்து, உடனே வருகென யூகிக்கு அறிவிக்கின்றான். இவ்வாறு வேள்வியும் விழாவும் பன்னிருநாட்கள் நடக்கின்றன. பன்னிரண்டாம் நாள். மகற்குப் பெயரிடுவது குறித்து ஆராய்ந்த சான்றோர். 1உயர்நிலையுலகி னுலோகபாலன் நயமிகு சிறப்பொடு நகர்மிசைப் பொலிந்த பலர்புகழ் செல்வன்றந்தன னாதலின் உருவா2ண மாகியவோங் குபுகழ்ச் செல்வன் 3நரவாணதத்தன் என்று பெயரிடுகின்றார்கள். உருமண்ணுவாவின் மனைவி கரு வுற்றிருந்தவள் கருவுயிர்க்கும் நாளாதலறிந்து அவன் அன்றே பெயர்ந்து செல்கின்றான். சின்னாட்களில் உருமண்ணுவாவின் புதல்வற்குப் பூதியென்றும், ஏனை மூவர்புதல்வர்கட்கும் முறையே அரிசிகன், தவந்தகன், கோமுகன் என்று பெயரிட்டுச் சிறப்பயர் கின்றனர். அறிந்த நகரத்தார் அனைவரும், 4மதலைமாண்குடி தொ5லைவழி யூன்றும் புதல்வற் பெற்றா னெனப்புகழ்வோரும் உதவி நண்ணரு முதயணகுமரன் போகமு பேரும் புகழ் மேம்பட்டதும் ஆகிய வறிவினரும் பெற்றசூழ்ச்சி யூகியினன்றோ வெனவுரைப்போரும் 6குறிகோட் கூறியநெறிபுகழ்வோரும் வெண்முகிலொழுகிய வெள்ளியம்பெருமலை உண்முதலுலகிற் கொருமீக்7 கூறிய தெய்வவாழி கைவலத்8 துருட்டலும் பொய்யாதாத லுறு9பொருளென்மரும் இவையும் பிறவும் கூறி மகிழ்கின்றனர். மக்களும் சிறப்புடன் வளர்ந்து வருகின்றார்கள். 7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது உதயணன் மகப்பேறு குறித்து விடுத்த திருமுக வோலை கண்ட பிரச்சோதனன், ஓலை கொணர்ந்த தூதர்க்குச் சிறப்புப்பல செய்கின்றான். முரசெறியும் முதியரை வருவித்து அவர் பெறுவன நல்கி, நாடு நகரமுற்றும், மதிமருணெ1டுங்குடை மறமாச் சேனற்குப் பதினாறாயிரம் பட்டமகளிருள் முதற் பெருந்தேவி திருநாளீன்ற மதுக்2கமழ் கோதை வாசவதத்தை வடதிசை3மீனிற் கற்பு மீக்கூரி 4வடுவில் செய்தொழில் வத்தவர் பெருமகன் குறிப்பறிந் தொழுகிக் கோடாக் 5குணத்தொடு பொறிப்பூண் மார்பிற் புதல்வற் பயந்தனள் என்று முரசறை விக்கின்றான். மாடந்தோறும் படாகையும் கொடியும் காட்சிக் காகாமாட்சியுறுகின்றன. அரண்மனை முற்றும் பன்னா றாயிரம் முரசங்கள் ஆர்க்கின்றன. அரசன் மகளிரொடு சுண்ண மாடுகின்றான். எங்கும் அணிபாராட்டலும் நீராட்டயர்தலும் சிறப்புறுகின்றன. பிரச்சோதனன் யூகியை வருவித்துப் பெருஞ் சிறப்புச் செய்து. தன் அரசவைக்கண் தன்னுடைய பதினாறாயிரம் அமைச்சரை வருவித்து அவருட்டலைவனாகிய சாலங்காயனொடு வாதம் புரியுமாறு வேண்டுகின்றான். ஞாலம் புகழுஞ் சாலங் காயன் ஏற்ற சிறப்பின் யூகி தன்னொடு மாற்1றங் கொடுத்தல் வலித்தனனாகி முதல்வன் செல்வி முகமுத னோக்கிச் சிதை2பொருளின்றிச் செந்3நெறிதழீஇ உதையத் திவருமொண் சுடர்போல எல்லாமாந்தர்க்கு மிருளற விளங்கும் செல்லாறிது வெனச் சொல்லுதல் வேண்டிச் சா4லவைநாப் பட்சலத்5திற்றீர்ந்த கேள்வியாளரை வேறு தெரிந்தமைத்து வாதம் வேண்டிய சாலங்காயன் மாற்றம்பகுத்தற் காற்றினாடி மேற்கொண்டுரைக்கு மெய்த்து6றை மருங்கின் நூற்பாற்றழீஇய குற்றமிவையெனக் கேட்டோர் மனமு7ளரக் கிளந்தவன்கடாவ மெய்த்தகு நுண்பொருள் மெத்தப்பன்னி உத்தர8 வாக்கியம் யூகியுநி9றீஇக் கழிபேருவகையொடு காவல் வேந்தன் ஒழிக நாமிவற்காற்றே முரையெனச் சாலங்காயன் தோல்வி யெய்தி யூகியைப் பாராட்டுகின்றான். பிரச்சோதனனும் மிக்க மகிழ்ச்சி கொண்டு யூகியைப் பாராட்டு வானாய், நண்பின் மாட்சியுங் கல்வியதகலமும் பண்பின்10றொழிலும் படைத் தொழில்மாண்பும் 11காயு மாந்தராயினும் யாதும் 12தீயவை கூறப்படாத திண்மையும் இவற்கல தில்லையிவனாற்பெற்ற 13அவற்கல தில்லையரசின் மாட்சியெனப் புகழ்ந்தோதிச் சிறப்பிக்கின்றான். வாசவதத்தை பயந்த மகன் பொருட்டாற்றும் திருநாட்டானம் இன்றே போலுமென்னுமாறு வந்தோர் பலர்க்கும் வேண்டுவ பலவும் வெறுப்ப வழங்கி யூகிக்குப் பரதகன் தங்கையாகிய திலகசேனை யென்பாளையும் சாலங்காயன் தங்கை யாப்பியையும் மணம் புரிவிக்கின்றான். மேலும் அமையாத பிரச்சோதனன், அங்கண் ஞாலத் தரசியலமைதி எங்கட் கெல்லா மின்றி யுதயணன் தன்கட் டங்கிய தன்மை நாடின் நின்கண்1 மாண்பி னெடுமொழியாள ஆயிற் றென்று அருண்மொழீபல உரைக்கின்றான். யூகிக்கும் பெருமகிழ்ச்சி யுண்டாகிறது. அவன் பிரச்சோதனனை வணங்கி விடை பெறுகின்றான். விடை நல்கும் பிரச்சோதனன், நவிறொறும் இனிய ஞானம் போலப் பயிறொறு மினியநின் பண்புடைக்கிழமை உள்ளு தோறுள்ளுதோறுள்ள மின்புறப் பிரிவுறு துன்ப மெம்மாட்டெய்த எரியுறு2 நெடுவே லேயர்இறைவன் வருகவென்றனன் சென்மதி நீயென ஆர்வத்துடன் வழிவிடுகின்றான். அவன் தந்த பெருஞ் செல்வமுடன் யூகியும் நல்ல பல நாடுகளைக் கடந்து கோசம்பிநகரையடை கின்றான். 8. மதனமஞ்சிகை வதுவை பிரச்சோதனன் பால் விடைபெற்றுப் போதரும் யூகி கோசம்பி நகரம் போந்து உதயணனைக் கண்டு ஆங்கு நிகழ்ந்தவற்றையும் பிரச்சோதனன் றனக்குச் செய்த சிறப்பையும் விளங்கச் சொல்லி, அவந்திநாடு மணியுஞ் சேனையும் இயைந்து மு1ந்துறீஇருபாற் குலனும் தெம்முனி2ழியாத் தெளிவிடையாகச் செம்மையிற் செய்த செறிவுந்திண்மையும் நம்பிக் கீத்த நன்புகழ்நாடும் இன்னவையென்று தெரிவிக்கின்றான். அது கேட்கும் உதயணன், நாட்டுவாயுளும் காட்டுவாயுளும் கரத்தலின்றிப் பரத்த3னன்றெனத் தாமுடைநாடு நகரமுந்தரீஇ வாய்முறை வந்த வழக்கியல் வழாமை ஏட்டு4மிசை யேற்றி இயல்பினின் யாப்பு5றுத்து சான்றோர் துணைபுரியச் சுற்றம் சூழ்ந்து நிற்ப, கூற்றமும் விழையக் கோலினிதோச்சிக் கோட்டமின்றிக் குடிபுறங்காத்து வாழ்ந்து வருகின்றான். அவன் மகனான நரவாணதத்தனும் 6உலம்பொருமார்பினுதயணகுமரன் நலம்பெறு தோழர் நால்வரும் பெற்ற வ7லம் பெறு சிறப்பின் வனப்பொடுபுணர்ந்த நலம்பெறு கோமுகனாமவிரிசிகன் 1தகைமிகு பூதி தவந்தகனென்னும் நன்னரமைந்த நால்வருஞ்சூழத் தளர்நடைக் காலத்திளமையி 2கந்து நல்லாசாரமொடு 3நல்லோர்காட்ட நற்பொருண் ஞா4னநவின்று துறைபோகி வற்பொரு5ணன்னூல் விதியினுனித்6துப் படைக்கலக் கரண7ம் பல்வகை பயிற்றிக் கொடைக்கடம் பூண்ட கொள்கையனாய் ஒழுகி வருகின்றான். அந்நகரத்தே கணிகையர் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர் இரண்டாயிரத்தைந் நூற்றுவராவர். அவருள் தலைக்கோற் சிறப்புப் பெற்றுப் பலராலும் பாராட்டப்படும் சிறப்பினைக் கலிங்க சேனையென்பாள் பெற்று மேம்படுகின்றாள். அவள் மாசில்லாத கற்புடையவள். அவட்கு மகளாயினாள் ஒருத்தி, வானோருலகினல்லது மற்றவட் 8கீனோருலகி னிணைதானில்லெனக் கண்டோராயினுங் கேட்டோராயினும் 9தண்டாது புகழுந்தன்மையளாகித் துi10த பூங்கோதை சுமத்தலாற்றா மதர்மானோக்கின் மாத11ரஞ்சாயற் பத12ரில் பணி மொழிப்பணைத் தோட்சின்னுதல் மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை என்னும் பெயர் கொண்டு திகழ்கின்றாள். அவள் ஒருநாள் தன் பெருமனையின் உயர்நிலையில் பந்தாடிக் கொண்டிருக்கின்றாள். அத்தெருவழியே மலை வீழும் அருவிபோலக் கடாஞ்சொரியும் களிறு மேற்கொண்டு நரவாணதத்தன் தோழருடன் செல்கின்றான். அவளெறிந்த பந்து போந்து நரவாணதத்தனுடைய துகின்மேல் வீழ, அது காரணமாக அம்மருங்கே காண்பவன் மதன மஞ்சிகையின் கண் வலைப்பட்டுக் கலக்கமெய்துகின்றான். பந்தினைக் கைக்கொண்டு செல்லுமவன் தோழருடன் தண்ணிய பூங்காவை யடைந்து தோழரொடு உசாவுகின்றான். கோமுகன் என்னும் தோழன் அப்பந்தினை நோக்கி அதன்பால் சந்தனந் தோய்ந்த கைவிரற் சுவடு தோன்றக்கண்டு, விரலும் விரலுக்கேற்ற அங்கையும் அங்கைக் கேற்றபைந்தொடி முன்கையும் முன்கைக் கேற்றநன்க1மை தோளும் தோளிற்கேற்ற வாளொளி முகமும் மா2ப்படுவடுவுறழ் மலர்நெடுங்கண்ணும் துப்3பனவாயுமுத் தொளிமுறுவலும் ஒழுகு கொடிமூக்கு மெழுதுநுண்புருவமும் சேட4மை செவியுஞ்சில்லிருங் கூந்தலும் ஒல்குமயிரொழுக்கு மல்குற்பரப்பும் மருங்கினீளமும் நிறங்கிளர் சேவடித் தன்மையு மெல்லா முன்முறை5நூலின் அளந்தனன் போல வளம்படவெழுதி இதன் வடிவொப்பவள் இந்நகர்க்கண் வாழும் கலிங்கசேனை மகளான மதனமஞ் சிகையே யாவளெனத் துணிகின்றனர். அதன் மேல் அவளைப் பெறுதற்கு வேண்டும் சூழ்ச்சியிற்றலைப்படு கின்றனர். கோமுகன் கலிங்கசேனையின் மனைக்குச் சென்று நிகழ்ந்தது கூறி அவள் கருத்தறிகின்றான். அவளும், "வழிபடுதெய்வம் வரம் தருகின்ற"தென மொழிந்து, ஏனை மகளிரொடு மாராய்ந்து, தலைக்கோன்மகளிரின் தன்மையை விரித்துரைத்து, கற்6கெழு கானவன் கைக்7கோலுமிழ்ந்த எற்படு சிறுதீ யெழுச்8சியிற் காமம் மிகுமனத் துவகையி னொல்லைவிருப்பம் முறையின் முறையின் முறுகமூட்டிக் கொடித்தேர்க் கோமான் குறிப்பினல்லதை அடித்தியையருளுதல் யாப்1பின்று என மொழிகின்றாள். கோமுகன் சென்று உதயணர்க்குத் தெரிவிக்க, அவன் வாசவதத்தைக் கறிவித்துச் சான்றோரை யாராய்ந்து, "அவள் உரியள்" என யாவரும் உரைப்பக் கேட்டுத் திருமணத்தை மிக்க சிறப்புடன் செய்விக்கின்றான். நரவாணதத்தனும் மதன மஞ்சிகையும் இன்பக் கூட்டத்தால் மிக்குற்று இனிதிருக் கின்றனர். 9. மதனமஞ்சிகை பிரிவு கோசம்பி நகரத்தில் திருவிழா நடைபெறுகிறது. எங்கும் பேரழி திகழ்கிறது. பலநாட்டவரும் வந்து கூடுகின்றனர். பொன்றா1வேட்கைப் புலங்களைநெருக்கி வென்றாராயினும் விழையும் விழவணி காணும்வேட்கையொடு சேணு2யருலகிற் றேவகணமும் மேவரவிழிதர விறல்கெழு சிறப்பின் விச்சாதரரும் வந்து சேர்கின்றனர். சேடிமால் வரையில் உள்ள வித்தியாதரர் உலகினையாளும் வேந்தர் நூற்றுப்பதின்மருள் மானசவேகன் என்பானும் விழாவணி காண வரு கின்றான். விழாக் காண்பவன். பத்திப்3படாகையும் பல்பூங்கொடியும் சித்தரித் தெழுதியவித்தக விமானமும் இருநிலத் தியங்கு மியந்தி4ரப்பாவையும் அருவினை நுட்பத்தியவனர்ப்புணர்ப்பும் பொத்த5கை யானையும் பொங்குமயிர்ப் புரவியும் சித்திரமாலையுமக்கடந் 6தொட்டிலும் வெண்டா7ரொழுக்கும் விளக்குறு பூதமும் எண்ணரும் பல்பொறி யெந்திரப் 8பொருப்பும் நாடும் நகரமும் ஆடுநர் பாடுநர் ஆடலும் பாடலுமன்னவை பிறவும் கண்டுமிக்க வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டு இன்புறுகின்றான். இப்பெற்றியோன். கோலக் கோயிலும் நால்1வகைநிலனும் புடைசூழ் நடுவட் பொன்மலர்க்காவின் இடைசூழருவி யேந்து 2வரைச்சென்னி ஆய்மயிலகவு மணிச் சுதை3க் குன்றின் மீமிசைமருங்கின் மின்னென நுடங்கிப் பழ4விறன் மூதூர் விழவணிநோக்கி மும்மணிக் காசும் பன்மணித்தாலியும் பொன்மணிக் கொடியும் பூணுஞ்சுடர மதனமஞ்சிகை நின்றோட்கண்டு சென்றணுகி நின்றினிது நோக்கி இவள் விச்சாதரியே யெனக்கருதி யயலிருந்த தேவமாடம் சேர்ந்திருக்கின்றான். அங்கே பூதவடிவமொன்றை விழாவயர்வோர் செய்து வைத்திருப்ப, அது கண்டு மதனமஞ்சிகை யஞ்சுகின்றாள். அந்நிலை யிற் றோன்றிய அவளது சாயல் மாசை வேகன் மனத்தைக் கலக்க, அவன், "இவளை யொப்போர் ஒருவருமிலர்; இவள் யாவளாயினும் எய்துவேன் யான்" என்று துணிந்து செவ்வி நோக்கியிருக்கின்றான். இரவுப் போது வருகிறது. வளமைநன்னிலத் திள5முளை போந்து கல்விநீரிற் கண்6விட்டுக்கவினிச் செல்வப்7பல்கதிர் செறிந்து வனப்பேறி இன்பம்8விளைந்த நன்பெரு நெல்லின் ஆண9மடையிற் காண்வரப்பற்றி வேட்கை10நாவின் விருப்பொடு சுவைக்கும் 11மாற்றலில்லா மனத்தினராகிப் பொலிவும் புகழும் பொருந்திய சிறப்பிற் குவமமாகு முதயணனொருமகன் 1அவமில் சூழ்ச்சி யாய்தாரண்ணலும் ஆணு2முட்கும் அச்சமும் பயிர்ப்பும் பேணுங் கோலமும் பெருந்த கைக்கற்பும் வாணுதல் மகளிர் மற்றுப் பிறர்க் கின்றித் தானே 3வவ்விய தவளையங் கிண்கிணி மானேர் நோக்கிம தனமஞ்சிகையும் ஆனாக் 4காதலோ டமர்ந்து விளையாடி உறக்கங் கொள்கின்றனர். அது காணும் அக்கொடியவனான மானசவேகன், நரவாணதத்தன் உறக்கத்தை மிகுவித்து அவனைத் தழுவிக்கிடந்த மதன மஞ்சிகையை மெல்ல வெடுத்துத் தன் மார்பிலொடுக்கி இகல் கொள்வீரிய5னிகழ்தல் செல்லா மண்மிசை வந்தனென் மயக்6கற வின்று விண்மிசையுலகிற்கு விழுப்7பொருள் பெற்றேன் என்னும் உவகையுடன் எடுத்துப் போய் விடுகின்றான். கண்விழித்துப் பார்த்த நரவாணதத்தன் மதனமஞ்சிகையைக் காணாமல் பெருங்கலக்க முற்றுப் பித்தனைப் போல் அவளைத் தேடித் திரிந்து அலைகின்றான். நகரமெங்கும் பெரும் துயரும் பூசலும் உண்டாகின்றன. 10. முடிப்புரை மதனமஞ்சிகையை எடுத்துச் சென்ற மானசவேகன் வித்தியா தர வுலகிலுள்ளதன் பெருமனையில் மெல்ல வைத்துப் பாதுகாக் கின்றான். அவள் கண் விழித்துப் பார்த்து இடத்தின் புதுமை யுணர்ந்து நரவாணதத்தனை நினைந்துபுலம்புகின்றாள். மானச வேகன் அவள்பால் போந்து நிகழ்ந்தது கூறித் தன் கருத்தையும் அவட்குத் தெரிவிக்கின்றான். அவள் பெருஞ் சினங்கொண்டு அவனை இகழ்ந்து பேசுகின்றாள். அவன் சென்று தன் தங்கை வேகவதி யென்பாளை விடுத்து மதனமஞ்சிகையின் மனத்தைத் திரிக்க வேண்டுகின்றான். அவளுடைய முயற்சிகள் பயன்படா தொழிகின்றன. நரவாணதத்தனுடைய மேனி நலனும் குணஞ் செயல்நலனும் கேட்ட வேகவதிக்கு நரவாணதத்தன்பால் பெருங்காதல் வேட்கையுண்டாகிறது. அவள் நிலவுலகத்துக்கு வருகின்றாள். வருபவள் மதனமஞ்சிகையின் பிரிவாற்றாது வருந்தித் திரியும் நரவாணதத்தனைக் கண்டு அவன் பேரழகில் ஈடுபட்டுத் தன் விச்சையால் மதனமஞ்சிகையின் உருக்கொண்டு நிற்கின்றாள். அவளைக் கண்ட ஆர்வத்தால் ஆராய்ச்சியிலனாகிய நரவாணதத் தன் உடனே அவளைக் கூடுகின்றான். வேட்கை மயக்கந்தணிந்த பின் வேறுபாடறிந்து அவனை யாவளென வறிகின்றான். அவள் வரலாறு முற்றுஞ் சொல்லுகின்றாள். இதற்கிடையே, வேகவதியைக் காணாது தேடிப் போந்த மானசவேகன் இருவரையும் கொண்டு தன்னாட்டிற்குச் செல்கையில் நரவாணதத்தனை இடைவழியில் ஊர்தியினின்றும் கீழே தள்ளிவிடுகின்றான். வேகவதியின் விச்சைவலியால் நரவாணதத்தன் ஊறொன்று மின்றிச் சதானிகன் முனிவன் இருக்கும் தவப் பள்ளியையடைகின்றான். முனிவன் தன் அவதி ஞானத்தால் அவனை இன்னானென்று தெரிந்து ஆறுதல் கூறி, "நீ நின் தந்தை உதயணனையடைந்து அவன் பால் வான்வழியாகச் செல்லும் மந்திர மறிந்து வித்தியாதர வுலகினை யடைக" என்று மொழிகின்றான். நரவாணதத்தனும் வித்தியாதரவுலகையடைந்து சீதரமென்னும் நகரின் கோட்டை வாயிலை யடைந்து ஆங்கே தங்கியிருக்கின்றான். அந்நகரிலிருந்து ஆட்சி செலுத்தும் நீலவேகனென்னும் வித்தியாதர வேந்தன் நரவாணனது வரவை முன்பே சுமித்திரனென்னும் முனிவரால் அறிந்திருந்தமையின் அவனை வரவேற்று அவற்குத் தன்மகள் அநங்க விலாசனியை மணஞ்செய்து தருகின்றான். நரவாணதத்தன் அங்கே தங்கியிருக் கின்றான். முன்னைத் தவப்பயனால் பல்வகை நலங்களும் அவற்கு உண்டாகின்றன. தேவர்கள் போந்து அவற்குப் பெரு நிதிகளை வழங்குகின்றார்கள். வித்தியாதரவுலகத்து ஏனை வேந்தரனைவரும் நரவாணனைக் கண்டு அடிபணிகின்றார்கள். இதனையறிந்து அஞ்சிப் போந்த மானச வேகன் மதனமஞ்சிகையைக் கொணர்ந்து தந்து தன் தங்கை வேகவதியை மணஞ்செய்வித்துத் தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டுகின்றான். மேலும் எண்ணா யிரம் வித்தியாதர மகளிரை மணந்து நரவாணதத்தன் வித்தியா தரவுலகுக்கு வேந்தனாய் ஆட்சி செலுத்துகின்றான். சில நாட்கள் கழிந்ததும் நரவாணதத்தன் மனைவியரும் பரிசனமும் சூழக் கோசம்பிநகரம் போந்து தந்தை தாயரைக் கண்டு அடிபணிந்தின் புறுகின்றான். பெற்றோரும் பெருமகிழ்வு கொள் கின்றனர். நரவாணதத்தன் வேண்டு கோட்கிணங்கி, உதயணன் பதுமாபதியின் மகன் கோமுகனை இளவரசனாக்குகின்றான். பின்பு நரவாணதத்தன் வித்தியாதரவுலகை யடைந்து ஆட்சிபுரிந்து வருகின்றான். நரவாண காண்டம் முடிந்தது. ஆறாவது துறவுக் காண்டம் நரவாணன் முதலியோர் பெற்ற நலம் பலவும் கண்டு இன்புற்று பெருமகிழ்ச்சி கொண்டிருக்கும் உதயணற்கு நாளடைவில் தவத்தின் மேல் விருப்புண்டாகிறது. அதனையுணர்ந்த அவன் தேவிமார் அவன் உள்ளத்தைத் தம்வயமாக்கித் தம்பாற் சுரக்கும் இன்பத்தில் அவனை யீடுபடச் செய்கின்றனர். இவ்வாறிருக்கும் நாளில், ஒருநாள் அரசனது பட்டத்தியானை மதம்பட்டு நகரமக்கட்குத் தீங்கு செய்கிறது. யாவரும் அதனையடக்க வியலாது கையறுகின்றனர். அக்காலத்தே நகர்க்கரு கிலிருக்கும் சோலையில் தரும வீரரென்னு முனிவர் சாரணர் பலருடன் வந்து தங்கி அறவுரை பகர்கின்றார். அவ்வுரை கேட்டுச் சோலையிற் கூடிய மக்களுயிரேயன்றி மாவும் புள்ளும் தம் தீவினை நினைந்து துன்புறுகின்றன. அந்நிலையில் மதம்பட்டபட்டத்து யானையும் சென்று அறவுரை கேட்டுத் தன் தீச்செயல் நினைந்து வருந்தி நிற்கிறது. சிறிது போது கழிதலும், அவ்வியானை அரசனது கோயில் வாயிலை யடைந்து மதவெறி தணிந்து அமைந்து நிற்கிறது. அதனையறியும் உதயணன் அதன்மீதிவர்ந்து சோலைக்குச் செல்கின்றான். தருமவீரர் அவற்கு அவ்வியானையின் பழம் பிறப்பினையெடுத் தோதி அவற்கும் அறவுரை கூறுகின்றார். அறங்கேட்டுத் தவத்தினை மேற்கொள்ள விழைந்த உதயணன் நரவாணதத்தனை அரசேற்குமாறு வேண்ட அவனும் தவத்தையே தான் விரும்புதலைத் தெரிவிகின்றான். முடிவில் பதுமாபதி மகன் கோமுகனே அரசனாகின்றான். அவன் தேவியரும் யூகிமுதலிய அமைச்சரும் தவத்தை விரும்பி அவனோடு உடன் வரத் தலைப் படுகின்றார்கள். அனைவரும் தவவனம் அடைகின்றனர். உதயணன் தருமச் சுருதி யென்னும் முனிவர்பால் அறம் கேட்கின்றான். தவப்பேறும் பிறநலங்களும் உதயணன்பால் திகழ்கின்றன. உதயண குமரன் உதயணமுனிவனாகின்றான். முடிவில் உதயண முனிவர் தாம் மேற்கொண்டாற்றும் தவயோகச் சிறப்பால் சித்தபதத்தை யெய்து கின்றார். வாசவதத்தை முதலிய தேவரும் யூகி முதலிய அமைச்சரும் தோழரும் தாங்கள் ஆற்றும் தவப்பயனால் கற்பலோகத்தை யடைந்து இன்புறுகின்றார்கள். துறவுக்காண்டம் முடிந்தது. பெருங்கதைச்சுருக்கம் முற்றும் 1. இக்கருத்தே, "பரவைவெண்டிரைம்ப வடகடற்படு நுகத்துணையுடள், திரை செய்தென் கடலிட்டதோர் நோன்கழி சிவணி, அரைவசத்துணையக வயிற் செறிந்தென" (சீவக. 2749) என்று தேவரும் கூறுதல் காண்க. 2. சேண் இட்ட - சேய்மையிடையிட்ட (மிக்க தூரமான) 3. தனக்குரிய காலம் வருந்துணையும் பொறுத்திருந்து, வந்ததும் தன்பயனை ஒழியாது நல்கும் இயல்புபற்றி வினையை, "பொறைபடுகருமம்" என்றும், "பொய்யா" தென்றும் கூறினார். 1. பைந்தொடிச் சுற்றம் - பசியவளையணிந்த மகளிர் கூட்டம். 2. பாசிழைப்பாவை - பசிய இழையணிந்த வாசவதத்தை 3. ஒருவரையொருவர் கண்ணாலே விழுங்குவார் போலப் பார்த்துக் காதல் கொள்ள. 4. கண்ணிய நுண்பொருட்கு - கருதி வினவிய நுண்ணிய பொருளமைந்த வினாவுக்கு. 5. கொடீஇய - கொடுப்பதற்காக 6. இல்வழி - குடிப்பிறப்பு 7. தொல்வழி வயத்துத் தொடர்வினை - முன்னைப் பிறப்புக்களிற் றோன்றித் தொடரும் வினையாகிய ஊழ்வினை. 8. குற்றமில்லாத போக மென்றற்கு "வழுவில் போக" மென்றார். 9. இழை - நூலிழை; கொடி - மரத்தொடு பின்னிக் கொண்டு நிற்கும் கொடி; 10. இமைப்பினுள் - கண்ணிமைப்புக்குள்ளே. 11. உள்ளழி நோக்கம் - உள்ளம் நிறையழிந்த தனைப் புலப்படுக்கும் நோக்கம். 1. பள்ளிக் கட்டில் - பள்ளி கொள்ளும் கட்டில்; அரசு கட்டில், முரசு, கட்டில்களை வேறுபடுத்த, "பள்ளிக்கட்டில்" என்றார். 2. ஆரியச் செப்பு - ஆரிய நாட்டவர் செய்த செப்பு 3. யவனமஞ்சிகை - யவனர் செய்த ஒருவகைப் பெட்டி. 4. பொறித்தாழ் - வில்பூட்டு 5. புரைவுறப் புணர்த்த - உயர்வு பொருந்தச் செய்த 6. சுண்ணப்பொடியும் நறுமலரும் நிரம்பி நறுமணம் கமழ்தல் தோன்ற, "வண்டுபடு வளநகர்" என்றார். 1. சந்தன வேலிச் சண்பகம் - சநதனமரத்தை வேலியாக வுடைய சண்பகத் தோப்பு. 2. தூங்குடிமறலும் - ஊசலாடி மாறுபட்டு மயங்கும் 3. வெயில் கண் போழா - ஞாயிற்றின் கதிர்கள் நழைந்து செல்ல மாட்டாத. 4. சிதர் தொழில் தும்பி - பூக்களின் தாதினைச் சிந்துதலைத் தொழிலாகவுடைய தும்பி. 1. தளிப்பூங்கொம்பர் - தேன் துளிக்கின்ற பூக்களையுடைய கொம்பிலிருந்து. 2. இறைஞ்சிய - மேற்றிசையில் தாழ்ந்த 3. சூடுறுபாண்டில் - பழுக்கக் காய்ச்சிய வட்ட மானதகடு 4. கோடு - சிகரம் 5. பன்மீன் - பலவாகிய விண்மீன்கள். 6. பசலைவானத்து - விளர்த்துத் தோன்றும் வானத்தில் 7. குடைவீற்றிருந்த - வெண்குடைக்கீழ் வீற்றிருந்த. 8. தொழில் நுகம்பூண்டு - துன்பவிருளை நூக்கி இன்பவொளியைப் பரப்பும் பெரும் பாரத்தை மேற்கொண்டு 9. கருமுகில் - நீலவானத்திற் படிந்து தோன்றுவது. அவ்வானைப்பற்றிய மாசுபோறலின், "புயன்மாசுகழீஇ" என்றார். 10. விசும்புஊர்ந்து - வானத்தெழுந்து 1. மதர்வை - மயக்கம் ஓர் கதிர் - ஓர், அசை நிலை 2. பரத்தர - பரவ. 3. மிசைநீண்முற்றம் - மேலிடமாகிய நீண்டநிலா முற்றம். 4. துய்க்கடை நிமிடி - பஞ்சித்துயினையுடைய திரியின் நுனியை விரலால் திருகி. 5. உள் இழுது உறீஇய - உள்ளே நெய் பெய்துள்ள 6. இலமலர்ச் செவ்வாய் - இலவம்பூப் போலும் செவ்விய இதழையுடைய வாய்; சிவந்த வாய். 7. கலமருதிருமுகத்துத் திருநுதல், அப்பிய கண்ணம் சிதர்ந்த திருநுதல் என இயையும். 8. செந்தோடுகடுப்ப - சிவந்த இதழ் போன்ற 9. புள்ளி வெம்பனி - துளிதுளியாக அரும்பிநிற்கும் வெவ்விய வியர்வை. 10. காரிகை - அழகு 11. "பெறுவன் கொல்" என்கின்றான். தன் பேரிசையாண்மையை வாசவதத்தை கவர்ந்து கொண்டதாகக்கருதுதலின். 1. பொறியறு பாவையின் - இயக்கும் கயிறு அற்ற மரப்பாவை போல; அறிவு அற - அறிவு முற்றும் 2. பிறைக் கோட்டு யானை - பிறைத் திங்கள் போன்ற கோட்டினையுடைய நளகிரி யென்னும் பட்டத்துயானை. 3. நிறைத்தாழ் - நிறையாகிய தாழ். 4. பேரிசையாண்மையினையிழந்ததாக உதயணன் நினைத்தது போலவே, வாசவதத் தையும், தன் உள்ளம் இழந்ததாக வருந்துமாறு காண்க. இஃது இருவயினொத்த காதன் மாண்பு. 5. திகிரியிற் சுழல - குயவன் சக்கரம் போற் சுழல. 6. மற்றொன்று சூழினும் தான் முந்துறும் பெருவலியுடைத் தாதலின், "ஊழ்வினை வலிப்பினல்ல" தென்றதனோ டமையாது "சூழ்வினையறுத்த" என்றும், காமநோய் கண்ணனார்க்கும் உரைப்பரிதாதலின், "சொல்லருங்கடு நோய்" என்றும் கூறினார். 7. யாமம், போலாதாகி, இருளொடு நிற்ப என முடிக்க. 1. ஈர்வது போல - உயிரை யரிவது போல. 2. கங்குல்யாமத்தைக் கடலெனக் கருதுதலின், அதனை நீந்திக் கடக்கும் புணை பள்ளியாயிற் றென்பார், "சேர்ந்த பள்ளி சேர் புணையாகி" யென்றார். சேர்புணை - கரை சேர்க்கும் புணை. 3. "கரை யெனுங் காலை கண்டார்" (சீவக 1132) என்றார் தேவரும். 4. புலம்பிய பொய்கை - புள்ளினம் நீங்குதலால் தனித்துக்கிடந்த பொய்கை. 1. வால்வெள் விதானம் - மிகவெண்மையான மேற்கட்டி. 2. விரிநூல் அந்தணர் வெண்மனை சூழ்ந்த - விரிந்த நூல்களையுணர்ந்த துறவோர் இருந்துரைக்கும் வெண்மையான மணைகளாகிய இருக்கைகள் சூழவுள்ள. 3. வாசனை வாக்கியம் - ஞானப் பொருள் நிறைந்த உரைகள். 4. இன்பக் கேள்வி - உறுதிப் பயனாகிய இன்பத்தை விளைவிக்கும் கேள்வி; உறுதியாவன அறமும் பொருளும் காமமுமாதலின் அவற்றைத் "தரும விகற்ப மொடு தானையேற்றம் கருமவிகற்ப மொடு காமமும்" என்றார். ஒரு எண்ணுப் பொருட்டு. தானையேற்பும் கரும விகற்பமும் பொருளின் கண் அடங்கும். 5. தொழில் முறை - அரசியல் முறை, இனி நூற்பயம் பருகலும் கேள்வி கோடலுமாகிய தொழில் எனினுமாம். 1. திருமணி அம்பலம் - அழகிய மணிகள் பதித்த அம்பலம். 2.இரட்டைத் தவிசு - இருவர் ஒருங்கிருக்கக் கூடிய தவிசு. 3. இசைக்க வேண்டா - வேறாகக்கருதிச் சொல்ல வேண்டா; இதை உனது இல்லெனக் கொள்க என ஒரு சொல் வருவித்து முடிக்க. 4. திரை - வெற்றிலை 1. ஒரு நிலை காறும் - ஒரு சிறிது நேரம்; உள்ளே ஒடுக்கி - மனத் தெழுந்த எண்ணங்களை யொடுக்கி. 2. ஒளி - அறிவொட்பத்தாற்பிறந்த நல்லிசை. ஒன்னான் - பகைவன். 3. அளிமேம்படீஇய - அன்பு மேம்படுதற் பொருட்டு. 4. அஞ்சொல் ஆயம் - அழகிய சொற்களை வழங்கும் மகளிர் சூழல் 5. தலைக்கை - முதனிலையாக; முதலவளாக 6. வினவும் சுவடு - வினவுதற்குரிய முற்பயிற்சி; அறிகுறியுமாம். 1. கதிர் மதி முகத்தியென்றான், மனத் தெழுந்த ஐயவிருளையகற்றும் குறிப்புடை யனாதலின். வாசவதத் தையின் திருமிகு நலமே நெஞ்சில் நிலவுதலின், முன்னர்த் "தாமரை முகத்தி" யென்றமை காண்க. 2. சிறுமை நாணின் - மானத்தால் நாணு வேனாயின். 3. இக்கருத்தினையே பரிமேலழகரும், "இன்றியமையாச் சிறப்பின வாயினும் குன்றவருப விடல்" (குறள் 961) என்பதன் உரை விளக்கத்தில், "இறப்பவருவழி இனிவந்தன செய்தாயினும் உய்க என்னும் வட நூன் முறைமையை மறுத்து... செய்யற்க வென்பதாம்" என்றது ஈண்டு ஒப்பு நோக்கற்குரித்து. மனு 10:104 ஒழுக்கமே உயிரினும் சிறந்த தென்பது தமிழ் நூற் கொள்கையாதலின், ஈண்டுப் பொருணூா லாயும் புலவோர் என்றது வட நூற் புலவரையென வறிக. 4. செறுநரைப் போலச் சிறையில் தந்து - பகைவரையிடுதல் போலச் சிறையில் இட்டு 1. சிறுவரைப் போலச் செய்தோன் - மக்களுக்குச் செய்வது போலச் சிறப்புச் செய்த பிரச் சோதனன் 2. தவல் - நீங்குதல் 3. பெயர் முறை - நீங்கும் திறம். 4. திறதாக - அமைந்தாக 5. திருமகளையிழந்து தேடுபவர் வாசவதத்தையைக் கண்டு திருமகளோ என ஐயுறுதற் கேதுவாகிய அழகுடைமை தோன்ற, "ஐயப்படூஉம் அணியிற் கேற்ப" என்றார். 6. ஊழ் முறை பொய்யாது - ஊழ் வினை தனக்குரிய பயன்தரும் முறைமையில் தவறாது 1. மனத்திற்புகல - மனத்தால் விரும்ப. 2. போகவீணை - இசையின்பமாகிய போகத்துக்குரிய வீணை. 3. தேசிக குமரன் - அயல் நாட்டு அரசகுமரன் 4. நொடிவனர் வியப்ப - சொல்லுவாராய் வியப்பெய்த. 1. பொத்தின்று - குற்றமின்றி 2. சொத்துற்றமைந்த - பொன்னாற் செய்யப்பட்ட 3. தே நவின்று - தெய்வத் தன்மை பொருந்தி 4. வேதி - வேதிகை (மேடை) 5. நன்னர்க்கிளவி - நல்லசொல். 6. ஒள்ளிழை மாதர் - வாசவதத்தை; அண்மைவிளி. 7. ஒழுக்கம் - வழிபாடு 8. கஞ்சிகை - திரை 1. மேற்படு நோக்கம் - மேற் கொள்ளும் கருத்து 2. எப்பெறு துயரம் - மிக்குற்ற துன்பம் 3. கைக்கோற் சிலதர் - கையிற் கோ லேந்திக் காவல் புரியும் ஏவலர். 1. தானயாழ் - இசைக்குரிய தானங்களையுடைய யாழ். 2. ஏதில் மன்னன் - அயலானாகிய அரச குமரன் - உதயணன் 3. "பின் விளைவது தெரியாது செய்தலின் பிரச் சோதனனைப்" பேதைமன்னன் என்றார் பின்னும் காண்பான் - பின்னர்த் தெளிவான். 4. நன்றறிவாராது - நன்மைபயவாது. 5. "வெங்கண் வேந்தர் தங்கட்குற்றது. அங்கண் ஞாலத்தாரேயாயினும், அகலிடத் துரைப்பினற்றம் பயத்தலின்" (Iv. 6 : 32, 4) என்ப வாகலின், “சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீது.” என்றார். 6. உறுதியின்மையின் - அறுபடா தொழிதற்கு வழியில்லாமையால் 7. நெஞ்சு வலியுறீஇ - நெஞ்சினை நினைய வொட்டாது வலியுற நிறுத்தி. 1. மாயயாக்கையொடு - வேற்று வடிவத்துடன். 2. ஆயமாக்கள் - யூகியின் துணைவர்கள். 3. அற்றம் நோக்கி - சோர்ந்திருக்கும் சமயம் பார்த்து. 4. மேவனம் - வந்தடைவோம் 5. கட் கொண்டாங்குக் களிநோய்களற்ற - கள்ளருந்திய வழி அதனுண்மை புலப்படுவது போலக் காமக்களிப்பும் உள்ளிருந்து கிளர. 6. உயலருந் துன்பம் - நீங்குதற் கரிய வருத்தம். 7. பயலை கொண்ட வென்பையுள் யாக்கை - பசந்து மெலிவுற்றிருக்கும் என்னுடம்பு. 8. இடைதெரிந்தெண்ணி - வேறு பாடாராய்ந்து தறிந்து 1. நோய் முதல் நாடின் - நோய்க்குக் காரணமான வேட்கையை யறிந்து விடின். 2. ஆர்வம் செய்கம் - அன்புடைச் செய்கைகளைச் செய்வோம். 3. அறிந்தனைவம்மென - அறிந்து கொண்டுவருக என்று 4. மகளிரும் வணக்கும் - மகளிர் மனம் தன்பால் தாழப்பண்ணும். 5. சாபம் - வில். 6. கலம் பொழி தடக்கை - இரப்பார்க்கு அருங்கலம் வழங்கும் பெரியகை. 7. உள்ளத்துள ளெனின் - மனத்தால் விரும்பப்பட்டாளென்றால். 8. ஒரு துணையோருள் பெண்டுணை சான்ற பெருமை - உயர்ந்த துணைவராகிய ஆடவரைக் கொண்ட மகளிருள் தன் பெண்மை யளவின் மிக உயர்ந்த துணைவனைக் கொண்ட பெருமை 9. மனம் புரி கொள்கை - மனத்தால் மேற் கொள்ளும் உவகை. 1. பசையாது - பற்றுவையாது 2. கெழுவாது - பொருந்தாது 3. பயந்தீர் மருங்கு - பொருள் வறிதாகிய விடத்து 4. இட்டதையுண்ணும் நீலம் - எந்நிறத்தையும் பற்றித் தன்னிறமே பெறுவிக்கும் நீலநிறம். 5. ஒட்டிடத் தொட்டும் உறுதி வாழ்க்கை - முதலிற் பொருந்துவ தொன்றையே முடிவு போகப் பொருந்தியுறையும்; ஒருமை வாழ்வு - குலமகளிர் வாழ்க்கை. 6. பத்திமை கொள்ளார் - பற்று வைத்து மேற் கொள்வதில்லை. 7. கொலிய - துன்புறுத்துதற்கு; கொல்வதற் கென்று மாம். 8. தக்குழி நில்லாது - நிற்கத்தக்க இடங்களில் நில்லாது. 1. பிறர்க்கு நைந்த தழுவோள் - பிறர் பொருட்டு மனம் உருகி வருந்துமிவள். 2. கண்ணிலி - அறிவில்லாதவள் 3. அதுவாயாக - உயிர்களைக் காத்துயர்தல் நேர்மையாக இருப்ப; 4. பண்பில் சிறு தொழில் பயின்றதை - இசைகற்பிக்கும் அரசர் பண்புக்காகாத சிறு செயல் செய்வது. ஐ - சாரியை 5. கண்ணற்றனன் - இரக்கமிலனாயினான். 6. தகைப்பருங் காமம் - தடுத்தற் கரிய காமம். 7. சொல்லின் - நன்குபயின்றுள்ள எளிய சொற் களாலமைந்த பாட்டுக்களால். 8. இல்லின் படுகாழ் - தேற்றாங் கொட்டை 9. கலுழி - கலங்கல் 1. மெய் வலி குறைந்திலனாயினும் மேனிவாடிப்பசந்திருத்தல் பற்றி, “வலியிற்றீரா தொளியிற் குன்றி” யென்றார். 2. எவ்வம் - குறைவு. 3. ஒரு மனம் புரிந்த நருமதை - எத்துணைச் செல்வந்தருபவராயி னும் பிறர் மனை சென்று இன்பந்தருதல் கணிகை மகளிர்க்குக் கூடாதென்னும் நெறியில் திறம்பா வுள்ளத் தளாதலின், நருமதையை, “ஒருமனம் புரிந்த நருமதை” யென்றார். 4. சேட்படுகுரிசில் - நருமதையைப் பெறலாகாத அருமைப்பாட்டையுடைய உதயணன். 5. அச்சுயிர்ப்பு அணைஇ - அச்சத்தாற் பெருமூச்சுவிட்டு. 6. சில்லைச் சிறு சொல் - இழிவான சிலபுன் சொற்கள். 7. வைகிருள் - விடியற் காலத்திருள். 1. உருவு - உட்குவிக்கும் செயல் 2. திட்பம் - மனத்திண்மை, 3. பெட்டது - விரும்பியது. மலையும் - ஏற்கும், 4. உதயணன் தன்பால் சிறைப் பட்டிருத்தலின் அவன் தான் கேட்டது கரந்தும், வேட்டது பெருக்கியும், பட்டது நாணாமலும் பெட்டது மேற்கொண்டும் ஒழுகும் தன்னுரிமையிலனாதல் பற்றி, “காலமன்மையல்லது” என்று கருதுகின்றான். 1. மருகன் - மறுத்தொன்றும் உரையானாய், 2.மகக் கோள் - குட்டியைத் தழுவிக் கோடல், 3. தன் நிலைமைக் கேற்பவற்றை யாராய்ந்து செய்யும் முறைமை குன்றாமை பற்றி, “நீதியனாகி” யென்றார். பிறாண்டும் “நிலைமைக் கொத்த நீதியையாகி” (1.6 : 327) என்ப. 4. நொது மற்கிளவி - அயலார்க்கு மணம் பேசும் பேச்சு, 5. விதுப்புறுநடுக்கம் - துடிதுடித்து நடுங்குதல். 6. யாப்புறுத்தாயினும் - கழுத்திற் சுருக்கிட்டாயினும், 7. தப்பிய பின்றை -இறந்த பிறகு, 8. உதயணன் பாற் கொண்ட - காதலன் பால் அயல்மணம் கேட்டு அரற்று கின்றாளாதலின் வாசவதத்தையை, “அன்பிற் கொண்ட அரற்றுறுகிளவி” யென்றார். கிளவி - கிளவியையுடையதத்தை, 9. கழிவனபோல - முத்தாரம் அற்று ஒவ்வொன்றாய் உதிர்வது போல, 10. சிதர்முத்தாலி - சிதர்ந்துவிழும் முத்துப் போன்ற கண்ணீர்த் துளி. 1. பொறைமை - பொறுக்குந்தன்மை, 2. ஓதி - கூந்தல், 3. பரிவறக் கேள் என - துன்பமகலக் கேட்பாயாக என்று சொல்லலுற்று, 4. இல்லொடு வரவும் - குடிப்பிறப்பு, 5. தேசத்தமைதி - நாட்டில் நற் பண்பு. புகழ்க்குரிய ஏனைநற் குணநற் செய்கைகளுமாம், 6. மாசில் சூழ்ச்சி - ஆராய்ந்து முடிவு செய்து செயல் மேற் கொண்டவழி சூழ்ந்த பயனைத்தருவதில் வழுப்படாத சூழ்ச்சி, 7. மகட் கொடை - மகனை மணஞ்செய்து தருதல், 8. அதனினும் - அவ்வின்மையினும், 9. தோற்றம் - மேனிவடிவு, 10. புகரின்று - குற்றமின்றி, 11. ஏமவெண்குடையேயர் மகன் - உயிர்கட்குப் பாதுகாப்பினைப்புரியும் வெண்கொற்றக் குடையினையுடைய ஏயர் குலத்திற் பிறந்த உதயணன், 12. கையகம்புக்கு - கைப்பட்டு, 13. ஐயக்கிளவி - உதயணன் பால் வாசவதத்தைக்கும், அவள் பால் அவனுக்கும் காதல் பிறந்திருக்கலாமெனும் ஐயவுரை. 1. ஓசை - வசைச்சொல்; புகழாயின் அஃது “இசை” யெனப்படும், 2. வாராதாயினும் - திருமணம் கூடாதொழியின், 3. கழித்துப் பிறந் தாயினும் - மீட்டும் பிறந்தாயினும், அவன் உறையுலகத்துத் தோன்றுதலை விலக்கி மீள இவ்வுலகத்துப் பிறத்தலை வற்புறுத்துவது காண்க, 4. மேற்றிணை - மேற்குடிப்பிறப்பு, 5. காவலன் - சதர்நீகன், தேவி - மிருகாவதி, 6. பெருவிறற் பொலிவே - பெரியவெற்றிவன்மையின் அழகிய வுருவே. 7. இனையையாவது எம்மனோர் பாவம் - நீ இத்தன்மையனாய் யாம் காண நிற்பது எம்முடைய தீவினையே. 8. காட்சிக் கண்ணீர் - கண்ட விடத்துப் பூசலிட்டு வரும் கண்ணீர். 9. என் முதல் உரைப் பேன் - என் வரலாற்றினை முந்துறக் கூறுவேன். 1. தெளிந்து - நம்புதற்குரியா ரெனவெண்ணி. 2. நுண்முறையாளர் - நுண்ணிய நூற்றுறைகளையறிந்துரைக்கும் சான்றோர். 3. தேறாத் தெளிவு - அகத்தில் தெளியாது புறத்தே தெளிந்தாற் போலத் தோற்றுவித்தல். 4. தாய் முதல் - சாங்கியத் தாயின் முன்னே. 5. பிறிதாயினும் - காதல் வேறிடத்தும் படர்வதாயினும். 6. மடமொழிக்கு - வாசவதத்தைக்கு. இது வாசவதத்தை பிறர் கூற்றெனக் கொண்டெடுத்து மொழிதல். 7. தாவம் - தாபம்; வேட்கையாற் பிறக்கும் பரிதாபம். 8. சாவினை - சாதலாகிய தொழில், 9. மறுவொடுமிடைந்து - குற்றத் தோடுபொருந்து. 10. சிறுசொல் - இழிப்புரை. 11. அணிநிறம் மழுகிய - அழகிய மேனி நிறம் வேறுபட்ட. 12.மனங்கொள் காரணம் மருளக் காட்டி - மனத்தால் எண்ணி யேற்றுக் கொள்ளத்தக்க காரணங்களை நன்கு உரைத்து. கேட்ட காரணத்தின் வழியன்றி மனம் பிறிது படரா தபடி நிறுத்துதல் பற்றி, “மருளக் காட்டி” யென்றார். 1. இன்னினிதாக - மிகமிக இனிதாக. 2. பரிவு - வருத்தம். 3. மாதர் கண்ணேப் பெற்றபுண் - மாதராகியதத்தையிடத்து மிக்குற்ற வருத்தம். 4. கையகல - நீங்க. 5. மருந்தியற் கிளவி - உதயணற்குமருந்தாய் நலஞ் செய்யும் சொல். மாதர் - தத்தை. 6. அன்புறப் பயிற்றி - அன்புண்டாக எண்ணி. 7. பூட்டுறுபகழி - வில்லிற்பூட்டிவிடும் அம்பு. 8.கேட்ட - கேட்டதனால். வெரூஉப்பிணை - அஞ்சும் மான்பிணை. 9. வெரீஇய - அஞ்சிய. 10. நிலம் புகுவன்ன - நிலத்திற் புகுந்து விடுவாள் போல. 11. மறை விடம் தா - யான் மறைதற்குச் சிறிது இடந்தருக. 12. விளக்குறீஇ - விளக்கஞ் செய்து. 1. பொன்றலாற்றிய புகழாள் - இறத்தலை வேண்டிய சீதை. 2. ஒளிதல் அஞ்சுவன் - மறைந்து விடுவளென்று அஞ்சுகின்றேன். 3. இன்றைக் கேள்வி - இன்று நடக்க வேண்டிய இசைப்பாடம். 4.அயா நங்கையை - வருந்தும் வாசவதத்தையை, 5. விடுத்தரும் - சொல்லிவிடுக்கும், 6. சொல்லொடுபடுத்து - சொற்கேற்ப, 7. களிறு, விளி, காதல் பற்றிக் களிறே யென்றாள். 8. பற்றிய கேள்வி - இசைபற்றிய கேள்வியறிவு, 9. குஞ்சர வேற்று - யானை யேற்றம். 10. போர்ப்படைப் புணர்ப்பு - போர்க் குரிய படைகளைக் காலத்துக் கேற்ப அணிவகுத்தல். 11. நம்பி குமரர் - அரசகுமரர். 12. நல்லவைப்படுப்பது - நல்ல வீரரும் வேந்தரும் கூடிய அவையில் அரங்கேற்றுவது. 13. தை வரற்கியன்ற - தடவுதற் கென்றமைந்த. 14. ஆராய் கென்பது - ஆராய்ந்து பயிற்சி செய்து கொள்க என்று யான் உரைக்கும் இதனை. 1. பிறங்குகடைப் படுகால் - உயர்ந்த பக்கத்தையுடைய படி. 2. தொடரிய - மாலையாகத் தொங்கவிட்ட. 3. பீடிகை - மேடை. 4. கலித்த கௌவை - கூடிய கூட்டத்தில் (ஆரவாரத்தில்) 5. ஆப்புறுபாடம் - மூலபாடம் (Theory) 6. மண்டலம் - வட்டமாக வகுத்தவிடம். 7. பலிவகுத்து - பலியிட்டு வழிபாடாற்றி. 8. கண்ணாலுறுத்து - கண்ணால் நன்கு பார்த்து. 9. எண்ணாலரணம் - தற்பாதுகாக்குமுறை முப்பத்திரண்டு. 10. ஈரெண்கரணம் - அரணத்துக்குரிய கரணவகைபதினாறு. 1. பாசம் - ஒருவகைப் போர்க்கருவி. 2. அந்தரத்துச் சாரியை இயக்கம் - வேறு வேறாகச் செல்லும் கதியிலே செல்லுதல். 3. நாழிகை - அம்பறாத் தூணி, 4. சேடகப் பிண்டி - கேடகம் பிடிப்பது. 5. வேல் திரிவகை - வேலைச் செலுத்தும் பல்வேறு வகை. 6. ஏமப்பூமி - பாதுகாப்பான இடம். 7. வகுத்த வாயில் - வகுத்த இடங்கள். 8. ஒட்டும் - சேரநிற்றல். 9. பாழி - போர்க்களம். 10. புகவு - தனித்துப் புகுதல். 11. பொச்சாப்பின்றி - மறதியில்லாமல். 12. இலைய இனப்பரி - கொட்டும் தாளத்துக் கேற்ப நடக்கும் குதிரை. 13. நுதி - கூர்மை. 14. நூல்வழி - ஒரு நூலிழையும் பிழையாதபடி. 1. இறையும் - சிறிதும், 2. செம்மாணாற்றா - செவ்வையாகச் செய்தற்கில்லாத. 3. பண்டம் செய்யான் - பொருள் படுத்தான். 4. காமுற - அன்புடன். 5. மறுமனம் - மாறுபட்டகருத்து. 6. ஐவகைக் கதி - ஐவகைத் தாளகதி. இதனைச் சச்சபுட முதலாமைஞ் சதாளமென்பர் சிலப்பதிகார அரும்பதவுரைகாரர். 7. மொய்யவை - நிறைந்துள அவையோர். 1. நாற்பெரும்பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. 2. எழுவகைப்பாலை - செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற் செம் பாலை யென்ற எழுவகைப்பாலை, 3. மூவேழ் திறம் - மூவகை வங்கியத்தினும் நால் வகையாழினும் பிறக்கும் பண்களுக்கின்றியமையாத திறம் இருபத்தொன்று என்பர் அடியார்க்கு நல்லார். குறை நரம்பால் இயல்வது திறம். 4. இசை - மிடற்றுப்பாடல். 5. எரிமலர் - தாமரை. 6. தேன் - வண்டினம். 7. எழுவ - எழுப்பிப்பாட. 8. தானம் - சுரதானம். 9. பாடோர்த்து நிற்ப - இசையோசையைக் கேட்டு நிற்க. 10. தேசிகம் - தமிழோடு வட சொல்லும் திசைச் சொல்லும் கலந்து வரும் பாட்டு. 11. திருவ - திருவினையுடையாய். 12. இறைவன் - இந்திரன். 1. தீதிகந் தன்று - குற்றமின்றியுளது: இவ்வாறே, “மாந்தரஞ் சேரலிரும் பொறை யோம்பிய நாடே, புத்தேளுலகத்தற்றே” (புறம். 22) என்று பிறரும் கூறுப. 2. உயல் வேட்கையின் - உய்தல் வேண்டுமென்ற விருப்பத்தால். 3. மருந்து கொண்டாங்கு - “மரஞ்சாவ மருந்து கொள்ளார்” என்பது பழமொழி. 4. மந்திரம் - ஆலோசனை. 5. தண் உஞ்சேனை - தண்ணிய உஞ்சயினி. 6. கண்ணழிந்த - பகைமையால் கண்ணோட்ட மின்றிக் கெடுதற்கேது வாயிருந்த. 1. பகையுற்றிருந்த வேந்தரிருவர் நட்புற்ற வழி நிகழும் வழக்காறு. இவ்வாறே, “கட்டியங்காரனோடு காவலனொருவனானான், விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்குமின்” (சீவக. 2159) என்று கோவிந்தராசன் கூறுதல் காண்க. 2. எருக்கி - அறைந்து. 3. எமரன் - எமக்குரிய நண்பன். 4. கய நீராட்டணி- கயத்தில் நீராடும் சிறப்பு. 5. தண்டம் - தண்டனை. 6. கூலம் - கடைவீதி. 7. மையல் உறுத்த - மதமயக்கம் கொள்வித்த. 1. பிணக்குறை - உறுப்புக் குறைந்த பிணங்கள், படுத்து - உண்டாக்கி. 2. ஞமலி - நாய். 3.குழிசி - பானை. 4. அலகை மூதூர் - பேரளவுடைய மூதூர். 5. உலகம் - உலகநடை. 1. ஆர்வமகளிர் - காதல் மகளிர். 2. மருப்பியலூர்தி - யானைக் கொம்பாற் செய்த ஊர்தி; “கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்” (பொருள். 163) என்றாற் போல. 3. காலிரும்பிடி - காலாற் பெரிய பிடியானை. 4. பிடிகை - ஒருவகை யூர்தி. “கண்ணார் பிடிகை” (1.37. 270) என்றாற் போல. 5. பாற்றுவன - துடைப்பவை. 1. உண்ணமது - வெப்பமானமது. உண்ணமென்பது வடமொழியில் உஷ்ண மென வழங்கும் 2. சுரும்பிமிர் கோதை - வண்டுசூழ்ந்திசைக்கும் பூமாலை. 3. ஒண்ணுதலாயம் - ஒள்ளிய நெற்றியையுடைய மகளிர் கூட்டம். 4. கன்னிமாண்டுழி - கன்னித் தன்மை நீங்கிப் பூப்படைந்த விடத்து. 5. துன்னுபு நசைஇய - திருமணத்தாற் கொள்ள விரும்பி வந்த. 6. மூசின குழீஇ - மொய்த்துக் கூடி. 7. ஆணைத்தடை இய - தலைவாரணையால் பேசாதிருக்குமாறு தடுக்கப்பட்ட. 8. வெறியவாக - வாங்குவோரின்மையின் விலைப் படாவாக. 9. கடிகையாரம் - பவழத்துண்டுகளாலாகிய மாலை. 10. பயிர் கொள் வேழம் - பாகர் பயிரும் மொழிக் குறிப்பறிந்த யானை. 11. பணையெருத்து - பெரியகழுத்து. 1. கால் துளக்கில்லது - காம்பு வணங்குதல் இல்லாதது. 2. படாகை - திரள். 3. உழைக்கலம் - அருகே வேண்டும் பொருள் களைவைத்திருக்கும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த கலங்கள். 4. மைத்துன மன்னர் - மைத்துனக் கேண்மையுடைய வேந்தர். 5. முகடுயர் உலகம் - எல்லாவுல கிற்கும் உயர்ந்த உச்சியிலுள்ள உலகம். 6. கண்டு அவாம் - கண்டதும் காதல் நோய் எய்துவிக்கும். கதிர்ப்பு - ஒளி. 7. தண்டாப் பெருந்துயர் - நீங்காத பெரிய துன்பம். 8. ஓம்படைக்கிளவி - பாதுகாப்புச் சொற்கள். 1. யவனக் கைவினை - யவன தேயத்தவரின் வேலைப்பாடு. 2. தானம் - உரிய இடம். 3. வெறுக்கை - செல்வம். 4. தலையளவு - தலைக் கொடிஞ்சியளவு நன்கமைந்தது. 5. தானவிளைவு - தானஞ் செய்தலால் விளையும் போகம். 6. செயிர் இடையிட்டது - தன்னிடையே பிறர்வரின் துன்பம் தரும் செயிரினை யுடையது. 7. இலக்கணக்கருமம் எட்டா முறையது - இலக்கணத்தாற் சிறிதும் குறைபாடில்லாதது. குறையுடையதற்கு இலக்கணம் நிரம்புதற் கேற்ற கருமம் செய்ய. 1. சேய்ச் செலல் - நெடுந்தொலைவு செல்லுதல். 2. உத்தராபதம் - வடநாடு. 3. பொற்பு - உயர்வு. 4. கணைச் செலவொழிக்கும் கடுமைத்து - அம்பினும் கடிது செல்லும் விரை வினையுடையது. 5. தாரணி இரும்பிடி - பொன்னரி மாலையணிந்த பெரிய பிடியானை. 1. தோற்றமெல்லாம் - காணப்படும் காட்சி வகையெல்லாவற்றினும். 2. பொற் சுணம்கழும - பொன்னின் நிறத்தையுடைய சுண்ணப் பொடி பரவ. 3. இயம்பல துவைப்ப - வாச்சியங்கள் ஒலிக்க 1. இலமென்மாக்கள் - இல்லையென்று சொல்லியிரக்கும் இரவலர். 2. வண்பரிப்புரவி - வளவிய செலவினையுடைய குதிரை. 3. உழிதந்து - திரிந்து 4. தந்து அற - அறத்தந்து - தம் பால் உள்ளனமுற்றும் தந்து. 5. எல்லாரும் எல்லாம் பெற்றதனால் கொள்வோரிலராயதறிந்து மேலும் கொள்வோர் கிடையாமையால், அவரைக் கூவியழைக்கும் குரலோசை மிக்கெழுதலின், “கொள்வோர் அறியாக் குரலராகி” யென்றார். 1. நீரணி மாடம் - நீரிற் செல்லும் அழகிய மாடமமைந்த நாவாய். 2. கைபுடைத் தோப்ப - கைதட்டி யோட்டும் படி. 3. கவுளவாகி - கன்னத்தையுடையவாய். 4. முன்னி - நோக்கி 5. பெட்ப வேறிய - விரும்பியேறிய 6. கடச் செருக்கு - மதக் களிப்பு 7. கடிற்றுப் பாகன் கைப்புழி - யானைப்பாகன் செலுத்துமிடம் 1. குட்டம் - குளம். 2. பாசடைப்பரப்பு - பசிய இலைபரந்த விடம் 3. கைசோர்ந்திட்ட - மறந்து விட்டுச் சென்ற 4. கூடக் கூம்பு - நாவாயின் மேற்றளத்துள்ள கூம்பு. 5. கட்கு இன் கடுவன் - காண்பதற்கினிய ஆண் குரங்கு 6. ஐயுற - வியப்புண்டாக. 1. உண்ணும் - உண்பீராக. 2. வடிநறுந் தேறல் - வடித்த மணம் கமழும் கள். 3. பார்ப்பனக் கணம் - பார்ப்பனக் கூட்டம் 4. கையலைத் தோடும் - கையை வீசித் தொடுதற் பொருட்டோடும் 5. பட்டியல் கண்டம் - பட்டினாற் செய்த பல்வண்ணத் திரை. 6. துஞ்சரித்து உளரி - உறங்கிவிழித்துத் தன் சிறகையலகாற் கோதி. 7. இவ்வோர் - இவ்விடத்தே. 1. கண்ணோரா - கண்ணிரண்டும் அமையாத. 2. வண்டுளர் ஐம்பால் - வண்டு மொய்த்தரற்றும் கூந்தல் 3. நாணி - இரத்தற் கஞ்சி நாணி 4. பெரும் பொறிப் பேழை - பெரிய எந்திரப் பூட்டமைந்த பேழைகள் 5. கறை வாய் முரசம் - உரல் போல் வட்டமான வாயமைந்த முரசம் 6. இறை கொண்டோர் - தங்கினவர். 7. பணியா வேந்தன் - வணங்கா முடி மன்னன். பணிநர் - ஏவலர் 1. புழுக்கல் - புழுக்கிய கறி 2. வழுக்கல் இன்றி - சிறிதும் எஞ்சாதபடி 3. ஆண்டகையன் - தடவிக் கொடுக்கும் கையையுடையனாய். 4. அவியிடப்படின் - அவியை எனக்கும் படைத்தால் தான். வைப்பது என்பதன் பின் “இல்லையாயின்” என ஒரு சொல் வருவிக்க. 5. கடி வோர் - விலக்குவோர். முடிகுவென் - இறப்பேன். 6. செவிமடுத்தெற்றி - காதுகளில் அறைந்து கொண்டு. 7. பிண்டப் பெருங்கவுள் - உணவுப் பிண்டத்தையடக்கிய கன்னத்தினின்று. 8. கலா அம்கா முறும் - பூசலைவிரும்பும். 9. பட்டிமை - வஞ்சச் செயல். 1. தடம் பெருங்கண்ணி - பரந்த பெரிய கண்களையுடையாள். 2. செறிப்பு - அடக்கம். இற்செறிப்புப் போல்வது. 3. அற்றம் - குற்றம் 4. பெயர்த்துத் தம்மென - மீளத் தருகவென்று. 5. மடத்தகை - இளமையழகு 1. அங்கலுழ் - அழகொழுகும். 2. குழங்கல் - குழம்பு. 3. படு முறை பெண் கொலை புரிந்த நன்னன் செயல் கூறும் பரணர் பாட்டிற் காண்க. “மண்ணிய சென்ற வொண்ணுதலரிவை, புனல் தருபசுங்காய் தின்றதன்றப்பற்கு, ஒன்பதிற் றொன்பது களிற் றொ டவணிறை, பொன் செய்பாவை கொடுப்பவும் கொள்ளான்” (குறுந். 292) என வருதல் காண்க. 4. கண்ணொடு புணர்ந்த புண்ணியம் - கண் பெற்றுக் காண்டற்கு நேர்ந்த நல்வினை. 5. பணிவில் நல்வினை - தனக்குரிய நன்மை பயத்தலில் சிறிதும் தாழ்தல் இல்லாத நல்வினை 1. அரசரும் உரிமை மகளிரும் நீராடுமிடத்து மாற்று மள்ளரும் மன்னருமாய் நின்று விளையாட்டயரும் இயல்பினைச் சீவக சிந்தாமணி முதலிய நூல்களும் கூறுகின்றன. 2. செருமீக் கூறி - செருவில் கூறப்படும் நெடுமொழி கூறி. 3. நூக்குதல் - தள்ளுதல். “ஒல்லைநீர்புக நூக்க” (திருநா. நீலக்குடி.) என வருதல் காண்க. 4. கரைமுதல் - கரையிடம். 5. என்ன - என்ன தன்மையையுடையவாம். 1. தீயவை - பரிகசித்துக் கூறியவை. 2. அச்சப் பணிமொழி - அச்சுறுத்திய பணிமொழி. பணிமொழி யென்றது, “ஊடினும் இனிய கூறும்” இயல்பைப் புலப்படுத்து நிற்பது காண்க. 3. நச்சுவனர் - விரும்புவோர் 4. காமங்காலா ஏம நோக்கம் - காமக் குறிப்பில்லாத அன்புடைய நோக்கம். 5. சேதடி - சிவந்ததாள்; “சேதாம்பல்” என்பது போல. 6. கன்னிக் கோலம் - கன்னித் தன்மைக்குரிய ஒப்பனை. 7. ஒதுங்கல் - நடத்தல். 8. பைங்காசு - பசிய மேகலை. 9. நுசுப்பு - இடை 10. செம்மல் - செம்மை; தலைமையுமாம். 1. தீவியமிழற்றி - இனியவற்றைக் கூறி. 2. ஓலுறுப்பு - தாலாட்டுதல். 3. மணல் இகுணடுந்துறை - நுண்ணிய மணல் செறிந்த நெடிய நீர்த்துறை. 4. வரிவளை - வரிபொருந்திய வளைகள். 5. காமஞ் செப்பி - விருப்பந்தரும் சொற்களைச் சொல்லி 6. நுனித்தவை - நுணுகிய அறிவொடுபட்ட சொற்கள். 7. மம்மர் - மயக்கம் 8. திகைக்குநர் - ஊடுபவர் 9. தலைக்கண் இரும்பிடி - முதற் சூல் கொண்டு கன்றீன்ற பெரிய பிடியானை. 10. துறைமாண்பு ஏரா - துறைக்குரிய சிறப்பு நீங்காத. 1.அணிநகை - அழகிய நகையினையுடைய மகளிர் 1. மிகப்பெரிய கடவுளாகிய பரம்பொருளைக் “கழி பெருங்கடவுள்” என்கின்றார். 2. கடவுட் கன்றிப் பிறரெவர்க்கும் வணங்காமுடி யென்பார், “வணக்கமில்லா அணித்தகு சென்னி” யென்றார். “உலகு பொதியுருவத்துயர்ந்தோன் சேவடி... இறைஞ்சாச் சென்னியிறைஞ்சி வலங் கொண்டு” (சிலப். 26 : 55 - 7) என்று அடிகளும் கூறுவர். 3. திருச்சேர் அகலம் - திருமகள் தங்கும் மார்பு. 4. அரிமான் - சிங்கம். 5. கொட்டை - தாமரைப் பொகுட்டு. 6. அல்லி - அகவிதழ். 7. பைங்கேழ்ச்சாந்து - பசியநிறம் பொருந்திய சந்தனம். 8. குங்குமக்குவை - குங்குமப் பரணி. 1. இரட்டை நூலாற் றொடுத்த - பா. 2. மேலே தூவிய கண்ணத்தை நிலத்தில் விழாதபடி வண்டினம் பறந்துண்டல் பற்றி, “சுந்தரமருங்கின் வண்டுகைவிடாச் சுந்தரப் பொடி” யென்றார். 3. சுட்டிச் சுண்ணம் - நீராடற்குரிய பொடி. 4. பித்திகைப் பிணையல் - பிச்சிப் பூவாற் றொடுத்த பூமாலை. 5. நானம் - கத்தூரி. 6. இமைப்ப - விளங்க 7. வரித்த - கோல மிட்ட. 8. சாரிகை மாதர் - அழகுடைய மாதராகிய வாசவதத்தை. 9. எஞ்சலில் - குறைபாடில்லாத 10. பத்தி - வரிசை 11. பொங்குமலர்த்தவிசி - மிக்க மலர் பெய்து வைத்த இருக்கை 1. யானையின் கைபோற் கடைந்துவைத்த குத்துக்கால் 2. நீராடுமிடத்து மாற்று வேந்தரும் வேந்தரும் போலப் போர் தொடுத்து விளையாடலில், “போர்தலைக் கொண்டு” என்றும் அதற் கேற்பப் “பொங்குபு மறலி” யென்றும் கூறினார். 3. புறத்தோச்சி - முதுகில் அடித்து. 4. எக்கி - தெறித்து. 5. மதிமருள் திருமுகம் - திங்கள் போலும் முகம் 6. பொதி பூம்பந்து - நீர் பொதிந்த பந்து 7. வியர்ந்த நுதலினர் - வியர்வையரும்பிய நெற்றியையுடையராய் 8. ஒசிந்த - தளர்ந்த. 1. நல்கூர் பெரும்புனல் - வறுமையுற்ற பெரும் புனல். மிகுதியாற் பெருமையுடைத் தேயன்றி, இம்மகளிர் தரும் செல்வம் தன்பால் இல்லாமையின், புனலை “நல் கூர் பெரும்புனல்” என்றார். 2. முனைஇ - வெறுத்து நீங்கி. 1. வேந்தற் கோடல் - வேந்தனைவென்று கொள்வது. 2. காய்ந்தவர் கடுஞ்செயல் - பகைமையுற்ற வேந்தர் செய்யும் மிக்க செயல். 3. அமிழ்து படு தீஞ் சொல் - அமிழ்து போலும் சொற்கள். 4. ஏசுவது - பழிக்கத்தகுவது. 5. காற்றைப் போலும் செலவினையுடைய பிடியைக் “கற்பிடி” யென்றார். 6. வலிக்க - வலிபெறுக 7. பாழ் - பாழிடம். முழை - கற்குகை. காழில் பொத்தினும் - உள்ளீடில்லாத மரப் பொந்துகளிலும். 8. மலைக்குநர் - பொருபவர். 1. நாளணியகலம் - விழா நாளிற் கொண்டாடும் விழாவிடத்தின் பரப்பு 2. கடைப்பிடியுளம் - கொண்டகருத்தைச் சாதிக்கும் குறிப்பை விடாத மனம். 3. கடைஇ - செலுத்தி. 4. எளிதிற் பற்றிக் கோடல் வேண்டி “அகலாது” என்றும், பிறர் ஐயுறுவரென்ற கருத்தால் “அணுகாது” என்றும் கூறினார். 5. ஐந்தலை யுத்தியரவு - ஐந்துதலையும் அவற்றிற்புள்ளியுமுடைய பாம்பு. 6. அந்தணன் - சிவன். 7. தீவாய் அம்பு - தீயை வாயிலேயுடைய அம்பு; தீயைக்கக்குகின்ற அம்பு மாம். 8. உட்குவர - அச்சமுண்டாக. 1. ஒல்குவோர் - தளர்வோர். 2. சேயள் - சேய்மையில் உள்ளாள். 3. நண்ணான் - அருகிலுள்ளானில்லை. 4. பௌவமெல்லாம் - கடல்கள் ஏழும். 5. கௌவை வேந்தன் - பேரிகையினையுடைய மன்னன். 1. யானையின் அருஞ்சிறைவளைஇ - யானைகளை அரிய சுவர்போலச் சூழநிறுத்தி. 2. பிறிதின் தீரா - வேறு எவ்வகையாலும் இத்துன்பத் தினின்றும் நீங்கும் வழி காணமாட்டாத. 3. இன்னாக்காலை - துன்பக் காலத்து. 4. ஒன்னாமன்னன் - பகைப்புலத்து மன்னனான உதயணன். 5. தன் ஆண்தொழில் - தன்னுடைய ஆண்மைக்குரிய பகைமைச் செயல். 6. இன்னியம் - இனிய வீணை. 7. கூரி - மிகுத்து. 8. மத்த வன்மான் - மத்தகத்தால் வலியயானை. 9. பாய்மான் - தாவிச் செல்லும் குதிரை. 10. சேதியர் பெருமகன் - சேதிநாட்டார் அரசனான உதயணன். 11. பெரு விருப்போடு கேட்டனன் என்பது தோன்றச் “செவியிற் கேட்டு” என்றார். 1. உலையாக் கடும்பிடி - தளராத விரைந்த செலவையுடையயானை. 2. வையம் - தேர் 3. பொறிகலக்க - எந்திரப் பொறிகளை நிலைகுலையச் செய்ததனால். 4. கொடுக்குவவேண்டும் - பாதுகாத்தருள வேண்டும். 5. கரவாது - ஒளியாது 6. கையிகந்து - மிகுந்து 1. உருகு நெஞ்சத்து - காதலால் உருகுகின்ற நெஞ்சினையுடைய. 2. பையுள் கூர - வேட்கையால் துயர் மிக 3. நிரந்து - வரிசையுற நின்று. விலங்க - தடுக்க 4. கையின் அசைந்து - கையிற்றாங்கி 5. ஈண்டு “ஆள்வினை” யென்றதற் கேற்ப, முன்னே “தன்னான் தொழில்” என்றது காண்க. 1. அங்கண் ஞாலத்து - அழகிய இடத்தையுடைய உலகில். 2. புன்கண் நீக்குதல் - துன்பத்தி னின்று நீக்குவது 3. வேழத்துப் பகடு - வேழமாகிய யானை. அன்று ஈர்ந்தது என்க. 4. உறாஅ நோக்கின் - உறாதார் (பொருந்தார்) நோக்குவது போலும் நோக்கில். 5. கண்ணெகிழ் - கண்வழியாகப் புலப்படும். 6. கைவருகாலை - மிகும் போது. 7. தீர்திறம் - நீங்கும் வகை. 8. மாக்கேழ் இரும்பிடி - அண்மை விளி. 1. ஆற்றல் மன்னன் - வலிமிக்கவனான உதயணன். 2. கடாவ - செலுத்த. 3. வெருளி - அஞ்சி 4. ஆய்பெருங் கடிநகர் - அழகிய பெரிய காவல் மிக்க நகரம். 5. ஓவியம் உட்கும் உருவி - ஓவியம் போலும் உருவினையுடைய வாசவதத்தையை. 6. மலைத்து - போர் செய்து வென்று. 7. நாட்டம் ஓராம் - கருத்தையறிந்திலேம். 8. கூற்ற ஆணை - கூற்றத்தைப் போலக் குறித்தது தப்பாத ஆணை. 9. தலைத்தாள் - முன்னே. 10. சேறும் - செல்லுவேம். 1. தீங்குலைத் தொடுத்த - இனிய குலைகுலையாகக் காய்த்த 2. ஏய்ப்ப - போல. 3. தளையவிழ் தாமம் - இதழ் விரிந்த பூவாற் றொடுக்கப் பட்டமாலை. 4. வேகப்புள் - வேகமாகப் பறக்கும் கருடன். 5. உலந்த - கெட்ட 6. அகலம் - மார்பு 7. பைந்தளி - பசியதுளி 8. குசைத் தொழிற் கூத்தன் - குசைப்புல்லாற் பொறியமைத்து நீரில் விளையாடும் கூத்தன். 9. எக்க - மேலெழ. 1. அடங்காத தானை - பகைவரால் அடக்க முடியாத வன்மையையுடைய தானை. 2. வால்வளை - வெண்மையான வளை. இது யானைக் கோட்டாலும் சங்கினாலும் செய்யப்படுவதாதலின் “வால்வளை” யென்றார். 3. நண்ணா இளையர் - பகைமையுற்ற வீரர். 4. ஆழி - கரை. 5. நெடுந்தகை - நெடிய தகைமையினையுடைய உதயணன். 6. அசையாது - தங்காது. 7. நண்பிடையிட்ட இரும்பிடி - இடையே நட்பால் பிணிப்புற்ற பெரிய பிடியானையே; விளி. 1. கூற்றுத் திறை கொடுக்கும் கொற்றத் தானை - கூற்றுவன் வலியிழந்து தோற்றுத் திறை செலுத்திப் பணிந்து நீங்கத்தக்க வலியும் வெற்றியுமுடைய தானை. 2. சிறை - சிறைப்பட்டவன் 3. தேறக்காட்டி - தெளியுமாறு சொல்லி. 4. பொதுளியல் - தழைத்துச் செறிந்த. 5. பிண்டி - அசோக மரம் 6. பெருந்தொடர் - பெரிய சங்கிலி. 7. பண்ணுறு பல்வினை - செப்பம் செய்தற் கேற்பப் பலவாகிய கைத் தொழில். 8. ஊக்கமை யூசல் - தள்ளியமைத் தற்கமைந்த ஊசல். 9. சிறு புறம் கவைஇ - முதுகைத்தழுவி. 1. ஆயம் கூடிக் குரவை தூங்கினும் என இயைக்க. 2. விழுமம் - வருத்தம். 3. பின் வழிப்படரும் - பின்னே வழி தொடர்ந்து காவல் புரிந்து வரும். 4. பேணாய் - அன்பு செய்யாது பொருது நீக்கினை. 5. வீரிய இளையர் - சினங் கொண்ட வீரர். 6. இன்னது - இவ்வாறு கொண்டு செல்வது. 7. அஞ்சல் ஓம்பு - அஞ்சுவ தொழிக. 8. நால்வகை நிலன் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். 9. அறவை - அறஞ்செய்த நல்லுயிர்கள். 1. துறுமிய - செறிந்த. 2. பிணைஇ - விளையாடி. 3. தண்டாக்காதல் - குன்றாத அன்பு. 4. மம்மர் - வருத்தமிகுதியாற் பிறக்கும் மயக்கம் 5. பையாந்து - மயங்கி. 6. ஒய்ப்ப - செலுத்த. 1. அகல் மொழி - அகன்ற நிலத்தவர் கூறும் மொழிகள், தெரியும் பொழுதும் மறைப்பொழுதும் என இயைக்க. 2. அருமறைப் பொழுதும் - அரிய இரகசியங்களைக் கேட்கும் பொழுது. 3. வல்விரைந்து - மிக விரைவாக. 4. வண்ணம் - மேனிநிறம். 5. கண்ணிவந்தது - கருதிவந்தது. கடுமை - விரைந்து கேட்டற்குரிமை. 6. துன்ன - நெருங்குமாறு. 7. மின்னிழை பக்கம் - மின்னுகின்ற இழையணிந்த வாசவதத்தையைப்பற்றிய 1. நிலத்தில் வீழ்ந்து வணங்கித் தலைகவிழ்ந்து அதனையே நோக்கி நிற்றலின், இவ்வாறு கூறுகின்றார். 2. கொடாஅ மம்மர் கண்டு - கொடாமல் மயங்கி நிற்கும் மயக்க நிலைகண்டு. 3. திறமல்லன கூறற்கு அஞ்சு கின்றானாகலின், நல்லவல்லாத கூற்றாயினும் யான் நின்னைக் கொல்லேன் என அரசன் கூறினானென்பார், “ஆருயிர்க் கபயம் கோமான் கொடுப்ப” என்றார். 4. நகை - விளையாட்டு, “நகையேயும் வேண்டற்பாற்றன்று” (குறள்.) 5. புகைக்கொடி - புகையின் ஒழுங்கு. 6. மலைக்குநர் - போர் செய்யும் வீரர் தப்புதல் - இறத்தல். 7. ஆற்றல் ஆணை - ஆற்றலமைந்த அதிகாரம். 8. வட்டம் - நிலப்பகுதி. 9. கையற வெய்தி - செயலற்று. 10. வெம்முரண் - வெவ்விய மறச் செருக்கால் உண்டாகிய சினம். 1. உண்முரண் அறா - உள்ளத்தே கொண்ட மாறுபாடு நீங்காத. 2. உற்ற னெமாகி - கருதினேமாய்; 3. தடம் பெருங்கண்ணி - பரந்த பெரிய கண்ணையுடைய வாசவதத்தை இது தத்தைபாற் குற்றமின்மை கூறியவாறு. 4. கடா அய் - செலுத்தி. 5. தன் நகர்க்கு எடுத்த தருக்கினனாதலின் - தன்னகர்க்குக் கொண்டேகும் பெரு மிதத்தையுடையனாகவே. 6. விலங்கி - குறுக்கிட்டுத் தடுத்து. 7. வயவர் - வலியுடையோர். 8. பயவரன்றி - பயனை விளைக்கும் நன்மக்களாகாமல். 9. ஆடித் திசைக் கிறைஞ்ச - நீயுறையும் இத் திசை நோக்கி வணங்க. அரசனாளும் நிலப்பகுதியை “அடிநிழல் வட்ட” மென்னாற் போல, அவனுறையும் திசையை “அடித் திசை” யென்றான். 1. எய்கணையியற்கை - விடுத்த அம்புபோற் செல்லும் செலவு; இயன்றமையிரும்பிடி யென்புழி. இயற்றமை விகாரம். இயன்று அமை - பயின்றமைந்த 2. அறத்தொடுபுணர்ந்த துறைப்புனலாட்டு - அறவோர் கூறியவாறு நீர்த்துறை யிலாடும் நீர்வினையாட்டணி. 3. ஒற்றுவனன் நோக்கி - ஒற்றுப்பார்த்திருந்து. 4. வள்ளி மருங்கின் - கொடிபோலும் இடையினையுடைய. 5. இன்னா மன்னன் - துன்பத்தைச் செய்த மன்னனாகிய உதயணன். 6. பற்றுபு தம்மென - பற்றிக் கொணர்க என்று. 7. உளைவன - வருந்தத் தகுவன. 8. தளைவயின் அகற்றல் - விலங்கிட்டு நாட்டினின்று அகற்றியது. 9. வணங்கு கொடி மருங்கில் - வளைந்த கொடி போலும் இடை. 10. திருமகள் தன் வயின் - வாசவதத்தையின் மனப்பாங்கு (மணத்திற்குரிய அமைதி) யுமாம். 1. விழுமியோர் மேல்வகை விதியின் வகுத்த பால்வகை - உயர்ந்தோர் எல்லா வகையாற்றற்கும் மேலாக விதித்துரைத்த ஊழ்வினை. 2. ஆறு என - அரசர் மகட்கோடல் நெறிகளுள் ஒன்றென்று 3. முன்னிலை முயற்சியினன்றி - நாமே முன்னின்று செய்யும் முயற்சி மேற் கொள்ளாமல். 4. பின்னிலை முயற்சி - பின்னே பிறரைக் கொண்டு தகுவன செய்தல் 5. ஆகுலப் பூசல் - ஆகுலமாகிய பூசல்; ஆரவாரம். 6. காவலன் - உதயணன். 7. தத்தையின் விருப்பமின்றிக் கொண்டேகினும் என்பாள், “வலிதிற் கொண்டேகினும்” என்றும், 8. கொண்டேகுபவன் அவனைத் தானே மணஞ் செய்து கொள்ளினும் குற்றமில்லை, அவள் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற கருத்தால், “தீதுநிகழினும் ஏதமில்” லென்றும் கருதுகின்றாள். “தனக்குத் தெரிவியாது தாமே மணம் புரிதல் நன்றன்” றென்றற்குத் “தீது” என் இனி, இதனாற் பிறர் பழிப்புரை யுண்டாயினும் குற்றமில்லை என்றுரைப்பினுமாம். 1. பூங்கொடி - பூங்கொடி போலும் அணிவகை. 2. வாங்கமைப்பணைத்தோள் - வளைந்த மூங்கில் போல் பருத்த தோள். 3. நளிமணிக் கொடும் பூண் - பெரிய மணிகளைத் தொடுத்த வளைந்த மாலை 4. மறுவில் தொன்றுமனை வளந்தரும் செல்வி - குற்றமில்லாத பழைய தாய் அடிப்பட்டு வரும் மனை வாழ்க்கைக்கு வளத்தை நல்கும் மனைவி. 5. என் மனன் வேட்டது - என் மனம் விரும்புகிறது. 6. திருமணச் சூழ்ச்சி - திருமண வேற்பாடு. 7. தானைத் தலைத்தாள் - தானையின் முன்னே. 8. நிலையில் திரியா இளமைக் கோலம் - தன் இயல்பில் சிறிதும் மாறுபடாத இளமையழகு. 9. உயர்வின் திரியாது ஒத்து - உயர்தலில் குன்றாது எவ்வகையும் ஒத்து. 10. புகற்றலின் - விருப்பத்தை யெழுப்பினமையின். 1. மானமில்லை - குற்றமில்லை. 2. மடவை - அறியாமையுடையை 3. உடைவயின் - தம்மையுடைய இடத்தினின்றும் 4. இற்றும் - இன்னமும் 5. தத்துநீர் - அலைதவழ்கின்ற நீர் 6. பொறையுயிர்த்த - ஈன்ற. 1. பரவை யெழுச்சி - கடல்போல் கிளர்ந்தெழுந்து வரும் படை யெழுச்சி. 2. வெருவரத்தாக்கி - அச்சமுண்டாகத் தாக்கி; 3. உற்றுழி உதவ - வேண்டுமிடத்து உதவிநிற்ப, 4. மதர்வை நோக்கின் மாதரை - மதர்த்த பார்வையையுடைய வாசவதத்தையை. 5. வித்தகக் கோலம் - சதுரப்பாடுடைய தோற்றம். வீழ்ந்த - விரும்பிய, 6. தத்தரி நெடுங்கண்- பரந்த அரிகளையுடைய நெடிய கண்ணானாகிய. 7. தம்மிறை - தமது இறைவனாகிய பிரச்சோதனன். 1. அசைவு - ஆணைக்கஞ் சுதலாற் பிறக்கும் வருத்தம். 2. கோணை நீண் மதில் - வலிமையமைந்த நீண்ட மதில். 3. இயலிசைநாடகங்களால் இன்புறுத்தும் மகளிர் கூட்டத்தை “நகைத்துணையாயம்” என்றார். நகை, விளையாட்டுமாம். 4. புரிந்தது போல - கருதியது போல. 5. பறத்தரல் விசை - பறப்பது போலும் விசை. 6. கோடுதல் செல்லாது - நெறியினின்றும் கோணிச் செல்லாமல். 7. உவணப்புள்ளினம் சிவணி - கருடப் பறவைகள் தம் முட் கூடி 8. திம்மென - திம்மென்னு மோசையுண்டாக. 9. பறவையிரும்பிடிப்பாவடி யோசை - பறப்பது போலச் செல்லும் பெரிய பிடி யானையின் பரந்த காலடியின் ஓசை. 10. அவணை - அவண். 11. வீணைச் செவியின் வேறுபடுத்த வாசவதத்தையின் செவியை, “கேள்விச் செவி” யென்றார்; கேட்டற்குரிய செவியென்பது பொருள். 12. பன்னி - நன்கு ஆராய்ந்து. 1. வெரீஇய - அஞ்சிய. 2. படுகன் றோம்பி - இளங்கன்றை நினைந்து. 3. செருத்தல் செற்றிய மடியிற் செறிந்து சொரிந்த. 4. பாசடைப் பிலிற்றும் - பசிய இலையிடத்தே சென்று தேங்கும். 5. நெய்த் தொடை முதிர்வை - தேனெய் நிறைந்து முதிர்ந்த தேனடை. 6. புழற் கால்தாமரை - உள்ளே புழை பொருந்திய தண்டினையுடையதாமரை. 7. உறைக்கும் - துளிக்கும். 8. பழுக்கிய - பழுக்க விட்ட. 9. பயின் - ஒருவகைமரம். 10. எரிகதிர் - எரிக்கின்ற ஞாயிற்றின் கதிர். 11. படிமத்தாகி - உருவினையுடைத்தாய். 12. அயிர் மணல் - நுண்மணல். 1. கால் தோய் கணைக்கதிர் - தாளிலே மடங்கி விழும் திரண்ட கதிர். 2. நிரம்பணி; அணி நிரம்பு என இயையும். 3. களை களை கடைசியர் - களையெடுக்கும் கடைசியர். 4. பதலை - அகன்ற வாயையுடைய மட்கலம். இது பதாலியென்றும் நாட்டில் வழங்கும். இதனிடையே பெய்த கள்ளை, “பதலையரியல்” என்றார். 5. மதலைக்கிளி - மதலையிடத்தேயுள்ளகிளி. 6. கம்பல் - ஓசை. 7. மண்ணமை முழவு - வார்க்கட்டமைந்தமுழவு. 8. மள்ளர் சும்மை - உழவரோசை. 9. மல்லல் - வளம். 1. தொல்லருஞ் சிறப்பின் இம்மல்லல் மாநகர் - பழமையும் பகைவர் கொள்ளற் கருமையுமமைந்த சிறப்பினையுடைய இந்த வளவிய அருட்ட நகரம். 2. புறப்பட்டியங்குநர் - புறத்தே பகைவர் சேறற்குரிய நெறிபற்றிச் செல்வோர்க்கு. புன்கண் - துன்பம். 3. யாப்புற - தற்காப்பமைய. 4. முடத்தாள் தாழை - வளைந்த அடியையுடைய தாழை. 5. முழுச் சிறை - நிறைந்த வேலி. 6. படு - மடு; படுகையுமாம். 7. கோட்டகக் கோடும் - கரையமைந்த நீர் நிலையின் கரை. 8. மிகைச் செற்றி - மேலே செறிந்து. 9. செதும்பு - ஊற்று. 1. பணை - நன் செய்வயல். 2. நிரம்பாச் செலவு போதிய - அகலமில்லாத வழி 3. வழி முதற் கோடும் - வழியைக் கொண்டு செல்வோம். 4. கதுமென - சட்டென. 5. கருவிமாமழை - மின்னும் இடியும் மழையும் தொகுதி கொண்ட மழை. 6. பரவைப் பௌவம் - பரந்த கடல். 1. கொண் மூவிதானம் - மேகமாகிய மேற்கட்டி. 2. திருவிற்றாமம் - இந்திரவில்லாகிய மாலை. 3. ஆலிவெண்மணல் - ஆலங்கட்டிகளாகிய வெள்ளியமணல். 4. கோடணை - முழக்கம். 5. வேனில் - வெயில். 6. மண்ணு நீராட்டி - திருமுழுக்கு நீராட்டி 7. முல்லைக் கிழத்திமுன் - முல்லை நிலமாகிய மகளின் திருமுன்பு. 8. கண்ணகன்று - இடமகன்று. 9. பொலங்கலவெறுக்கை - பொற்கலன்களாகிய செல்வம். 10. இறங்குகுரல் இறடி - தாழ்ந்த கதிர்களையுடையதனை. 11. இறுங்கு - சோளம். 12. கவைக்கதிர்வரகு - கவைத்தகதிர்களையுடைய வரகு. 13. புகர்ப்பூ அவரை - புளிபொருந்திய பூவை யுடைய அவரை. 1. கொழுந்துபடு சணாய் - கொழுந்துகளையுடைய கடலை. 2. தோரை - ஒருவகைநெல். 3. வகையுள் - விளைந்து நிற்கும் பயிர். 4. மரையா - காட்டுப்பக. 5. செதும்புபட - சேறுபட. 6. திரிமருப்பிரலை - திரிந்தது போல் முறுக்குண்ட கொம்பினையுடைய ஆண்மான். 7. உறைப்ப - துளிப்ப. 8. தடவுநிலைக் கொன்றை - உயர்ந்த நிலையினையுடைய கொன்றை மரம். 9. நகைப்பூம்புறவு - மலர்ந்த பூக்கள் நிறைந்த காடு. 10. தொழுதி புல் உதளினம் - கூட்டமான புல்லிய ஆட்டினம். 11. பல்லிணர்ப்படப்பை - பலவாகிய பூங்கொத்துகள் செறிந்த தோட்டம். 12. படியணை பெருங்கடி - நிலத்திடைப் பொருந்திய பெரிய விளக்கம் நிறைந்த. 13. நாற்றம் நந்தி - மணம் மிக்கு. 14. பயம் - பால். 1. அளப்பரும்படிவம் - அளத்தற்கரிய தவவொழுக்கம். 2. துளக்கம் - அசைவு. 3. சதுரச் சந்தி - நாற்சந்தி கூடுமிடம். 4. தொட்டிமை - வனப்பு. 5. அரம் போழவ்வளை - அரத்தால் அறுத்துக் கடையப்பட்ட சங்குவளை. 6. நொய்ந்நுரை - நொய்ம்மை யொருந்திய நீர்நுரை. 7. பருவி - பருத்தி. 8. பொத்திய - கொளுத்தியெரித்த. 9. ஆரத்துணி - சந்தனக்கட்டை. 1. வெள்ளிவிளக்கு - வெண்மையான ஒளியில். 2. தகரம் - ஒருவகை விரைமரம். 3. ஏனல் - தினை. 4. கண்ணுற மாட்டி - இடம் பொருந்த விளக்கத்தையேற்றி. 5. வெருள்பட - மயக்கம் இல்லையாக. 6. மங்குல் - மேகம். 7. கங்குல்யாமம் - நள்ளிரவு. 8. எதிரெதிர் கலாஅய் - எதிரெதிரே கலந்து. 1. மதியமுரைஞ்சும் - சந்திரன் உராய்ந்து செல்லும். 2. பொதிய விழ்பூ - அரும்பிப் பூத்தபூ. 3. ஆழ்ச்சி - ஆழம். 4. ஓக்கம் - ஓங்கிய நிலை. 5. வேயுட் பிறந்த ஆய்கதிர் முத்தம் - மூங்கிலுட் பிறந்த அழகிய ஒளியையுடைய முத்து. 6. வெதிர் - ஒருவகை மூங்கில். 7. மண்ணா முத்தம் - கழுவாத முத்து. 8. ஒருப்படுத்து - தொகுத்து. 9. நிலைவயின் - அடிப்பகுதி. 10. தண்ணிற அருவி - குளிர்ந்த இயல்பிற்றாகிய அருவி. 1. அமலை - ஒலி. 2. தானைச் செல்வம் - தானையாற் பகைப்புறத்துப் பெறப்படும் செல்வத்தோடொத்த செல்வம். 3. புல்வாய்த் தொகுதி - மானினத்தின் திரள். 4. தாம்மாறோடி - தாம் மாறாகச் சென்று. 5. போத்து - ஆண்மயில். 6. ஏனம் -பன்றி. 7. எண்கு - கரடி. 8. வாவ - தாவிச் செல்ல. 9. அகத்துறை - துறையினகத் தேயுள்ள. 10. படிவப்பள்ளி - தாபதர் உறையும் இடம். 11. கவ்வை யோதம் - ஒலிக்கின்ற அலைகள். 12. படர்ச்சித்தாகி - படர்ந்து செல்வது போலும் செலவினையுடைத்தாய். 1. கருங்காற்குருகு - கரிய கால்களையுடைய கொக்கு முதலியன. 2. பூணி - நீர்ப்பறவையுள் ஒன்று. இதன் சிறகிற் கோடுகள் அணியணிந்தது போறலின். இது “பெரும் பூண் பூணி” யெனப்பட்டது. 3. குளிவை - கொக்குவகையுள் ஒன்று. புதா - பெருநாரை. 4. துன்றுபுகெழீஇ - நெருங்கிப் பொருந்தி. 5. நாளிரை - நாட்காலத்துப் பெறும் உணவு. 6. அல்கிரை - குறையாத உணவு. 7. பறவைப்பார்ப்பினம் - பறவைகளின் குஞ்சுகள். 8. செகுத்து - கொன்று. 9. பார்வல் - பார்வை. 10. இல்கி - சிலவாய்க்குறைந்து. 1. சார்நீர் - கரியநீர்; தெளிவுடைமை தோன்றக் “கார்நீர்” என்றார். 2. வார்நீர் - ஒழுகும் நீர். 3. தானம் நோக்கி - காலங் காண்டல் வேண்டி நாண்மீன் நின்ற இடம் கண்டு. 4. ஆரிருள் எல்லை - நிறைந்த இருட்காலமாகிய இரவில் கழிந்த நாழிகையளவு. 5. ஏற்றமை - ஏறுதற்கியன்ற. 6. எண்வகைப்படை கேடகம், பத்திரம், மழு சக்கரம், அயில், சுரிகை வச்சிரம், பாசம், அங்குசம் என்பன. 7. கண்மணி - உருத்திளக்கமணி 8. முயங்குகயல் - பிறழும் கயல்மீன். 9. சிலையேர்புருவம் - வில்லொத்தபுருவம். 10. கலை - ஆண்மான். 1. செல்வித்து - செல்லும் வணிகர் கூட்டம். 2. நல்லாப்படுத்தநடு கல் உழலை - நல்லபசுக்கனையுள்ளே நிறுத்தி வாயிலில் இருமருங்கும் கல்நிறுத்தி அவற்றிற்றுணை செய்து அத்துணையூடே சுழி குறுக்கே செருகப்பட்ட பட்டி. 3. ஆளிடுபதுக்கை - ஆட்களைக் கொன்று அவர்பிணத்தின்மேற் குவித்த கற்குவியல். 4. அரில்பிணங்கடுக்கம் - கொடிகள் பின்னிக் கொண்டிருக்கும் பக்கமலை 5. தாளிடு குழி - கால்களை வெட்டிப் புதைத் துள்ள குழி. 6. பொள்ளல் - மரப்பொந்து. 7. ஊரில்காடு - பரப்பில்லாத காடு. ஊழடிமுட்டம் முன்புவழியாயிருந்து கெட்டழிந்த இடம். 8. குறும்பாற் குன்றம் - குறிய பரற்கற்கள் நிறைந்த குன்றுகள் 9. உலப்பரிது - கெடுதற்கரியது. 1. தோன்முலைப்பிணவல் - பாலின்றித் தோல் திரங்கிய முலையையுடைய பெண்பன்றி. 2. குரங்குநடை - அசைந்தநடை. களிறு - ஆண்பன்றி 3. திரங்குமால் - வாடிய மரற்பழம் 3. என்கி - மெலிந்து. 4. தேர் - கானல். 5. உள்ளழலரு தொள்ளழல் - நீறுபூத்தநெருப்பு. கைம்மக - கையிலை தன்குட்டியை; 7. பிரசம் - தேன். 8. நொதுமற் கடுவன் - அயலதாகிய ஆண் குரங்கு. 9. காஞ்சிரம் - எட்டி 10. வேய்விண்டு - மூங்கில் பிளந்து 11. சூட்டு - கொண்டை. 12. கயந்தலைதழீஇய கறையடியிரும்பிடி மெல்லியகன்றைத் தழுவிச் செல்லும் உரல்போற்கால்களையுடையபிடியானை. 13. நயம் - பசுமை. 14 வெண்பூங்கவளம் - வெள்ளியபூவாகிய உணவு. 15. ஆறு செல்வம்பலர் - வழியே செல்லும் புதியோர். 16. உவலைக் கேண் - சருகுகள் நிறைந்த சிறு கிணறு 17. துவன்றி - நெருங்கி 1. வேட்டச் செந்நாய் - வேட்டையாடும் தொழிலவாகிய செந்நாய்க்கூட்டம். 2. காட்டுமாவல் சியர் - காட்டிடத்து விலங்குகளையுணவாகவுண்பவர். 3. மிலைச்சிய - சூடிய 4. சிறுபுல்லாளர் - சிறுமைக் கேதுவாகிய புல்லியஆண்மையுடையர். 5. கற்குவிபுல்லதர் - கற்கள் குவிந்துபுல் இணைத்திருக்கும் வழி. 6. நாலிருநூற்றுவில் - எண்ணூா று வில்லளவு. 7. தந்த தெய்வம் தானே தரும் - முன்னேதந்த தெய்வம் மீளவும் தரும் 8. இன்னா - துன்பம் 1. நூக்குபுகலிய - மிக்குற்றுவருத்த. நூக்குதல் - தள்ளுதல். 2. ஏமம் - காப்பு. 3. வடுத்தீர் - குற்றமில்லாத 4. மெய்யிற் கூறி - உடலதளர்ச்சியாற் காட்டி. 1. கவர்கணை நோன்சிலை - கவைத்த வாயையுடைய அம்பும் வலிய வில்லும் 2. வாளரித் தடங்கண் - ஒளியும் அரிகளும் பொருந்திய பெரிய கண்களையுடய வாசவதத்தை - அன்மொழித் தொகை. 3. தாமரைத் திரு - தாமரைப் பூவிலிருக்கும் திருமகள். 4. கண்ணணங் கவி ரொளிக் கடவுள் - காண்போர் - கண் வருந்தத்தக்க பேரொளியினையுடைய கடவுளாகிய இறைவன் (சிவபெருமான்) 1. ஓம்படைக்கிளவி - ஈண்டுவாழ்த்துக்குறித்து நிற்கின்றது. 2. செல்கதிமந்திரம் - இறந்தபின் நற்பிறப் பெய்துதற் குரியமந்திரம். 3. ஒருங்காகியர் - ஒருங்கேதோன்றுவாயாக 4. எள்ளும் மாந்தர்க்கு - பகைமையால் இகழ்ந்துரைப்பவர்க்கு. 5. கையறல் - மிக்க கவலையாற் செயலற்றொழிதல். 6. குண்டுதுறை - ஆழ்ந்தநீர்த்துறை. 7. பகட்டிணை - இரண்டாகிய எருதுகள். 8. திருவேர் சாயல் - திருமகள் போலும் சாயலையுடைய வாசவதத்தை 9. கண்படைகொளீஇ - உறங்குவித்து. 1. நஞ்சம் - விடம் போலும் கொடுமை. 2. கடுவினை - கொலைத்தொழில். 3. குறும்பு - சிற்றரண்கள். 4. தெரிவழிக் குறை-தெரிந்தேகுதற்கு இன்றியமையாத நல்வழி பயக்குறை யென்றாற்போலத் “தெரிவழிக்குறை” யென்றார். 5. திகைத்திலேன் - அறியா துமயங்கி னேலில்லை. 6. மடத்தகை - இளமை யொடுகூடிய அழகு 7. வள்ளியஞ்சாயல் - வள்ளிநாயகியைப் போலும் சாயல்; முன்பு “திருவேர் சாயல்” என்றதும் நோக்குக. 8. கற்பொடு புணர்வி - மேற்கொண்ட கற்பால் தன்னொடு உடன் வரும் வாசவதத்தை கற்புக்கடம்பூண்ட மகளிர் உடன்போக்கிசைதல் தமிழ் மரபு 1. பூமலர்க் கோதை - பூவால் தொடுக்கப்பட்ட மாலை. 2. மதுகை - வலி. 3. பொன்புனைபாவை - பொன்னாற் செய்த பாவை போல்பவளானதத்தை. 4. கோமகனாகிய உதயணன் கொடிப்படையாக. 5. கூழை - பின்னே வரும் படை. 6. கடித்தகம் - யானையின் பின்புறத்தே கட்டித் தொங்கவிடும் கேடகம் போலும் படை. 7. கார்ப்பூ நீலம் - கரிய நிறமுடைய பூவாகிய நீலமலர். 8. படர்புறம் வளைஇ - சென்று தங்குதற்குரிய இடம் வளைத்து. 9. கவடுகால் தாழ்ந்து - மரக்கிளைகள் காலாகத் தாழ்ந்து. 10. ஊழ்படு கொழுமலர் - முறையே மலர்ந்து தரும்கொழுவிய பூக்கள். 11. முழையரண் முன்னி - கன் முழைஞ்சு போலும் காப்பமைந்த இடத்தையடையக் கருதிச் சென்று. 12. ஊழிலைப் பிறங்கல் - உதிர்ந்த சருகிலைக் குவியல். 13. வன்னிலை - வளவி இலைகள். 1. இறைகொண்டு ஈண்ட - ஈண்டியிறை கொள எனமாற்றி, கூடித்தங்க எனக் கொள்க 2. புலிப்போத்து - ஆண்புலி 3. மறி - மான்கன்று. 4. வெள்ளிடைக்குழும - வெளியான இடத்தே கூடியுறைய. 5. நீர்வழிககு அணவரும் நெடுங்கைய வாகி - நீர் இருக்குமிடம் நோக்கி மேலே எடுத்த - நெடியகையையுடையனவாய். 6. காரிருமுகிலின் - கார்காலத்துக் கரிய மேகம் போல. 7. குடம்பை - கூடு. 8. ஆற்றது இடரும் - வழியில் உளவாகிய இடர்களும். 9. பொல்லாக் குறும்பும்தீங்கு செய்யும் அரணிடங்களும். 1. பனிப்பூங்கோதை - அன்மொழித் தொகையாய் வாசவதத்தை மேற்றாயிற்று. 2 அமைச்சிழுக்கு - அமைச்சற்குக் குற்றமாம். தனித்தனம் இயங்குதலை யூக்குவது அமைச்சற்குக் குற்றமாமென்பான் “அமைச்சிழுக்குடைத்” தென்றான். 3. உலைவில் -கெடாத. 4. ஓட்டார் - பகைவர் 5. நிமிர்வுறு நிதிநிறீஇ - ஓங்கிநிற்கும் நீதியை நிறுத்தி. 6. கூற்றுறழ் மொய்ம்பின் - கூற்றினும் மிக்க வலியையுடைய; ஏற்றுப் பெயர் அண்ணன் - எருதின் பெயரையுடைய தலைவன்; இடபகன் என்பது இடபம் - ஏற்றின்பெயர். 7. உள்ளத் துள்பொருள் - உதயணன் கருத்தில் உள்ள கருத்து. இதனால், உதயணனும் வயந்தகன் கருதியதையே கருதினமை அறியப்படும். 1. பனிவரைமார்பன் - குளிர்ந்த மாலைபோலும் மார்பையுடைய உதயணன். 2. யாப்பொடு புக்கபெருஞ்சிறைப்பள்ளி - பண்டுதான் சாலங்காயனால் கைப்பற்றப் பட்டு விலங்கு பூண்டு இடர்பெற்றிருந்த பெரிய சிறையிடம் குறிக்கப்படுகிறது. 3. மாந்தளிர் மேனி - வாசவதத்தை; அன்மொழித்தொகை. 4. நீந்துதல் - துன்பப் பெருங்கடலை நீந்துதல். 5. வெஞ்சினவிடலை - உதயணன். 6. வரிநிறக் கோம்பி வரிகளையுடைய பச்சோந்தி. வாலிமிழ்ப்பு - வாலாற் கட்டும் கட்டுக்கு. 7. அலந்த மஞ்ஞை - அச்சமுற்றுக் கலங்கியமயில். 1. அமரிய தோழி - தன்னை விரும்பிப் பேணும் காஞ்சனமாலை. 2. படரொடு மயர்ந்து -துன்பத்தால் மயங்கி. 3. வேனல் வள்ளியின் வாடி - வெயிலிற்பட்ட கொடிபோல வாடி 4. வருந்துதலால் எழும் குற்றமும் வருந்தாது தெளிதலாலெழு நலமும் என்ற இரண்டு குறிப்புக்களையும், “குற்ற நலத்துக் குறிப்பு” என்றார். 5. முளிமரக் கானம் - உலர்ந்த மரங்கள் நின்ற காடு. 6. நெஞ்சொடு உசாவும் - தன் நெஞ்சிற்குள்ளே ஆராயும். 1. காலின் இயங்குநர் - காறறுப் போற் செல்லும் செலவினர். 2. மாடு - பொன். ஆடவர் பெண்டிர் என்ற உயர்திணைப் பொருளையும் மாடென்ற அஃறிணைப் பொருளையும் வேறுபடுத்து நோக்கார். 3. ஆடு என விலங்காகிய ஆடு என எண்ணி. 4. வீளையோட்டு - சீழ்க்கையடித்தல். 5. காட்டுயிர் காணார் - காட்டிடத்தே ஒருயிரையும் உடம்பிடைநிற்கக் காணாராய். 6. ஆடுதிறலாடவர்அற்றம் - கொல்லும் திறல் படைத்த உதயணன் வயந்தகன் என்ற இருவருடைய காற்சுவட்டையும். 7. புள்ளடி யொழுக்கம் - பறவைகளின் காலடி யொழுங்கு 8. அவர்களைத் தலைப்படல் அருமையுடைத்து; தலைப்படல் - எதிர்ப்படுதல். 1. எதிர்த்தும் - எதிர்ப்படுவோம்; தன்மைப்பன்மை வினைமுற்று. 2. கடுங்கண் ஆண்மை - மாற்றார்க்கு அச்சம் தரும் ஆண்மை. 3. நாண்மீக் கூரி - நாணம் மிகுந்து. 4. முற்றிய கோங்கு - முற்றிநின்ற கோங்குமரம். முற்றுதல் படை முற்றுகை போல்வது. 5. உடும்பின் மேல் தைத்தது போல உதயணன் விடும் அம்புகள் சென்றுதைப்பதை, “உடும்பெறிந்தது போற் கடுங்கணை முள்க” என்கின்றார். 6. அண்டை - அருகில். 7. தண்டாது - அஞ்சாது. 1. மோலவுரு - அழகிய மேனி கடுந்தொழில் வேட்டுவர்கட்பார்வை உதயணன் கோல மேனியைக் குறிக்கொண்டு நோக்குதலைக் குறிக்க. 2. பற்றடைந்து - தமக்குப்பற்றுக் கோடாயுள்ள இடங்களைச் சார்ந்து. 3. உட்கூற்றாகி - உட்பகையாய்க் கொலைக் குட்படுத்துவோனாய். 1. கைக்கோல் அரணி - கைக்கோலாகப் பற்றியிருந்த அரணிக்கட்டையில் 2. பிசைந்தசிறு தீ - கடையப்பிறந்த சிறியதீ. 3. இசைந்த முளரி - தீவளர்தற்கிசைந்த விறகு. 4. அரிமா, உதயணற்குவமம். 5. இகன் முனைவேட்டுவர் - மாறுபாட்டினை முன்னே விளைக்கும் வேடர். 1. வலைநாண் சிமிழ்ப்புண் - வலைநாணால் கட்டுறும். 2. காட்சிக்குஇன்னா ஆற்றலனாகி இன்னாக் காட்சிக்கு ஆற்றலனாகி என இயைத்து இத்துன்பத்தைக் காணப் பொருளாய் என வுரைக்க. 3. பேரமர் ஞாட்டி - பெரிய அமராகிய சண்டை. 4. வாளியின் - அம்பினால். 5. திறலோன் - திறலையுடையனான அபிமன்யு. 6. வேடர்விடுங்கணை உதயணன் உயிர் மேற் செல்லாமைக்கு ஏது ஊழ்வினை என்க. 7. வாய் அறைபோகிய - வாய்மருங்கிய.8. ஆழி நோன்றாள் அண்ணல் - அரசியலாணையாகிய ஆழி யேந்தும் வலிமையையுடைய தலைவனான உதயணன். 9. குறூம்பினம் - அரணமைந்த இடத்தில். 10. வருத்தமெல்லாம் ஒருப்படுத்து - வருந்தி யீட்டியவற்றை ஒருங்கு தொகுத்து. 1. குறிவயின் - அடையாளமிட்ட ஓரிடத்தே. 2. பெரும் பெயர்க்கிளவி - பெரும் புகழ் . 3.இடர்ப்பட்டு - இடர்க்குள்ளாகி. 4. முகைத்தார்மார்பன் - அரும்பு கணற்றாறொடுத்த மாலையணியும் மார்பினையுடைய உதயணன். 5. அவ்வழி - அந்தக் குறியிடம். 6. ஆணம் - பாதுகாப்பு. 1. கையகப்பட்டோன் - கையாப்புற்றிருக்கும் இவன். 2. ஏயர் இறைவன் - ஏயர் குலத்திறைவனாகிய உதயணன். 3. விழுத்தருவிஞ்சை - மேன்மை தங்கியிருக்கின்ற கல்வியறிவு. 4. ஒழுக்கம் நுனித்த உயர்வு - ஒழுக்கங் காரணமாகப் பிறக்கும் உயர்வு. 1. செண்ணம் - அழகிய வடிவு. 2. கஞ்சிகை - திரை. பிறாண்டும் “செண்ணச் சிவிகை” என்பர். 3. உழைப்படர்ந்திய - பக்கத்தே தொடர்ந்து வர. 4. காப்புப் பொறி யொற்றி - நன்றென வாராய்ந்து மூடி முத்திரையிட்டு. 5. யாப்புற - செம்மையுற. 6. பரியாளம் - பரிவார மக்கள். 7. சுற்ற மாதற்குத்தக்காரெனத் துணிந்து கொள்ளப்பட்டாரைத் துணிவியல் சுற்றம்; என்பர். 8. காவி - கருங்குவளைகள். 9. பனித்தார் - குளிர்ந்த மாலை; வேடர்க்குக் கருங்குவளையும் உதயணற்குத் தாமரையும் உவமம். 10. வலிக்கும் - சூழும். 1. அடையார் - பகைவர். 2. கோள் உலாய் - கொல்வது கருதி. 3. நாள் உலாப்புறுத்தும் - நாள் கெடச் செய்யும்: உலப்புறுத்தும் என்பது உலாப்புறுத்தும் என எது கைநோக்கித் திரிந்தது. 4. அருந்தலை - அரியதலைகள் 5. அங்கண் விசும்பு - அழகிய இடமுடைத்தாகிய விசும்பு. 6. பன்மாண் படைநர் - பலராய் மாட்சிமைப்பட்ட - படைவீரர். 7. கலிந்த - மிக்குற்ற 8. கையிகந்து அகல - நீங்கியொழிய. 1. நீந்து மிகவுடைய - மிக்க பொறுமையுடன் நீந்துதற்கரிய. 2. அன்புடையருள் மொழி - அன்புமிகுதியாலுளதாகும் அருள்நிறைந்த மொழி.3. ஆர்தல் ஆற்றான் - கண்ணால் நிரம்ப நோக்கி. 4. விட்டிட - தங்க. 5. மாண்படி - மாட்சியுண்டாக. 6. தறி - தூண்(அ) கம்பம். 7. பாடி - தங்குதற் கமைத்த விடம்; படைவீடு 8. மணிக்கலப்பேழை - மணிகளாலாகிய அணிகள் வைத்த பெட்டி. 9. மயிர்வினைத்தவிசு - மயிரால் நெய்யப்பட்ட கம்பளவிருக்கை. 1. அடைப்பைத் தானம் - அடைப்பை வைக்கும் இடம். அடைப்பை - வெற்றிலைப் பாக்குவைக்கும் கலம். 2. செங்கோடிகம் - சிவந்த உறையிட்ட திண்டு. 3. முட்டிணை வட்டு - இருக்கையின் கையும்பின்பக்கமும் சேரும் முட்டிடைவட்டமாக அமைத்த பஞ்சினை வட்டம். 4. நடைப்பிடி - விரைந்த நடையினையுடைய பிடியானை. 5. காப்புடை நறுநீர் - அழுக்குறாதபடி பாதுகாக்கப்பட்ட இனியநீர் 6. வெம்பி - வெப்பமுற்று. 7. வண்ணமகளிர் - அலங்காரஞ்செய்யும் பணிப்பெண்கள். 8. கோங்கின் தட்டம் கோங்கம்பூ தட்டுப் போலப் பூத்திருப்பதுபற்றி. “கோங்கின் தட்ட”மென்றார். 1. மாராட்டத்து அணி - மகாராட்டிர தேசத்தார் செய்யும் அணி. 2. ஆய்பத அடிசில் - மென்மையுற வெந்தமைந்த சோறு. 3. சுரமுதல் நிவந்த மரமுதல் - சுரத்தின்கண் உயரநின்ற மரத்தின் அடி. 4. நூல்வெண் மாடம் - நூலாலமைந்த வெண்மையான மாடம். 5. மொய்த்தமாக்கட்டாகி - நிறைந்த மக்களையுடையதாய். 1. பொதியிற் சந்தனம் - பொதிய மலையிலுண்டான சந்தனமரம். 2. இறுங்கால் தாமிசு - இருங்கால் திமிக - பெரிய அடியையுடைய திமிசென்னும் மரம். எதுகை நோக்கி, இறுங்கால் என வந்தது 3. அடவிவிந்தம் - காட்டையுடைய விந்தமலை 4. வடதிசைமாமலை - இமயமலை. 5. வெண்சுடர்மணி - வெள்ளியவொளி திகழும் முத்து. 6. இலங்கையீழம் - இலங்கையாகிய ஈழநாடு. 7. கடாரம் - பர்மாநாடு. 8. துணைக்குழிசி - சகடத்தின் நடுவேயுள்ள குடம் 9. வச்சிரயாப்பு - வச்சிரத்தாற் கோத்த கட்டுக்கோப்பு. 1. அகவாய்க் கோடு - உள்ளாழி. 2. பத்திரப்பந்தம் - மரத்தால் இலைபோற் செய்து விளிம்பிற்றைத் திருக்குமது. சித்திரப் புளகம் - பூங்கொடி யெழுதப் பெற்ற முக்காணி. 3. சந்திக் கோணம் - மூலைகள் சந்திக்குமிடத்துத் தைக்கப்பெறும் பலகை. 4. கஞ்சிகைக் கொளு - திரையிடுதற்குரிய கொளு. 5. கோப்பு - கோப்புச் சட்டம். 6. முகத்தூண் - முன்னேநிற்கும் தூண். 7. நிரந்தவை - வரிசையுற அமைக்கப்பட்டவை. 8. ஏழ்ச்சி - எழுச்சி; தோன்றுதலுமாம். 9. அரும்பொறி மண்டலம்- அரிய எந்திரக் கண்ணாடி வட்டம். 10. கொடி - பூவொடுகூடிய கொடி. 11. நயத்திறம் - விரும்பும் திறம். 12. கோள்நெறி - கொள்ளத்தக்க நெறி. 13. உலைவில் ஊர்ச்சி - செலுத்தும் திறமை குன்றாத செலுத்துகை. 1. குழிப்படு வேழம் - நிலத்தே பொய்க் குழியமைத்து வேழங்களைப் பிடிப்பது மரபாதல் பற்றி, அவ்வாறு பற்றியவற்றை, “குழிப்படுவேழ” மென்றார். 2. வீணைத்தண்டு - வீணைக்கு வேண்டும் தண்டு. 3. ஏனத்தெறி - பன்றிகளை எறிதற்குரிய கருவி. 4. ஊகம் - கருங்குரங்கு. 5. அற்றக்காலமென்பது எதுகை நோக்க இயல்பாயிற்று. 6. அடியுறை - அடியின் கீழ் வாழ்தலையுடைய யாம். 7. வரி அகட்டலவன் - வரிகள் பொருந்திய வயிற்றையுடைய நண்டு. 8. தண்பணை - தண்ணியநன் செய்வயல். 9. அருமிளை -புகுதற்கரிய காவற்காடு. 10. பெருமலை - பெரியமலையாகிய அரண். 11. பெருமண்ணு உவாவும் - பெரிய மண்முழுதும் நிரம்பிய. 12. உருமண்ணுவா - உதயணன் மந்திரி. 1. தாதுமலர் அணிந்த வீதி - மலர்த்தாது அணிந்த வீதி யென இயையும். தாது - பூவிற்றுகள். 2. கமுகு - பாக்கு. 3. முத்து உத்தரியம் - முத்துக் கோத்த உத்தரியம். 4. பிணையல் - மாலை. 5. பிணைஇ - பிணைத்து. 6. அருக்கன் வெவ்வழல் - சூரியனது வெவ்விய வெயில். 7. எண்வகையாவன: சுடர்மண்டலம். சுரதுந்துபி. தெய்வத்துவனி, சிங்கவணை, பிண்டிமலர், வெண்சாமரை, மலர் மழை, பொற்குடை (திருநூற்றந்தாதி. 80) 8. கண்ணணங் கெய்த - கண் காண முடியாது வருந்த. 9. படா அகை-கொடி. 10. இருமயிர் முரசம் - கரிய மயிர் சீவாது போர்த்த முரசம். 11. கடமுழக் இன்னிசை குடமுழாவின் முழக்கொலி. 12. வீட்டிய அண்ணல் - கெடுத்தழித்த அருகதேவன். 1. நிலம் துகள்துளங்க - நிலத்தேதுகளெழுந்து பரவ. 2. புதுநீர் விலங்கி - புது நீர் கொணர்ந்து குறுக்கே தெளித்து. 3. வியன்கண் ஞாலம் - அகன்ற இடத்தை யுடைய நிலம் வுலகம். 4. நந்தினும்நந்தும் - நலம் மிகுக் கினுமிகுக்கும் 5. அன்றாய் - தீதாய் 6. அழுங்கினும் அழுங்கும் - வருத்தினும் வருத்தும். 7. தீயினும் தீயும் - துன்புறுத்தினும் துன்புறுத்தும்: துன்பம் தீப்போற் சுடுதல் பற்றித் தீயினும் தீயும் என்றார்; தீயினும் என்றதற்கு நெருப்பைக் காட்டிலும் எனினுமாம். 8. ஆசில - குற்றமில்லாத. 9. சேயவர் - காலத்தாற் சேயரான பெரியோர். 1. மாயிகாஞ்சனம் - கபடவித்தை. 2. அத் தீப்பொருள் தீர்ந்து - அத் தீமை நீங்கி; அவன் - அப்பிரச் சோதனன். 3. செந்நெறி - செம்மை சேர்ந்த நெறியினையுடைத்தாய்அல்வழி - இருட்டுவழி. 4. பெருங்கலம் தருக்கிய - பெரிய செல்வமுடையேமெனச் செருக்குக் கோண்டுலவிய. 5. வேட்டனென் கொடுப்பின் - வேள்வி வேட்டு அவ்வழியே கொடுத்தால். 6. சேனைக் கிழவன் - சேனைக்குத் தலைவனாகிய உதயணன். 7. விளங்கிழை - விளங்குகின்ற இழைகளையணிந்த வாசவதத்தை. 8. பேரடல் அண்ணல் - மிக்க அடல்பொருந்திய உதயணன். ஆடல் பெற்ற. 1. எண்டரும் பெருங்கலை - எண்ணாகிய அரியபெரிய கலை; கணிதக்கலை. 2. கண்ணகன் புணர்ப்பு - விரிந்த அறிவு நெறிப்புணர்ப்பு. 3. மேதகு நாட்டத்த - மேன்மை பொருந்திய கூரிய நோக்கிற் ககப்படும். 4. நாற்பொருள் - அறமுதலிய நான்கு. 5. பன்னி - ஆராய்ந்து. 6. நுனித்து - கூர்மையாகத் தேர்ந்து. 7. அலகை வேந்தன் - பிற வேந்தர்க்குவம மாகு வேந்தன். 8. வழுக்காமரபு - குற்றப்படாத முறைமை. 9. புரையோர் - உயர்ந்தோர். 10. வேல்வலம் - வேலாலுண்டாகும் வெற்றி. 11. மலிக - வளம் நிறைக. 12. மல்லல் - வளம். 13. பல்லவர் - பலரும் 1. ஒளி - ஒப்பனையாற் பிறக்கும் அழகொளி. 2. படைப்பெருவேந்தன் - படையினால் பெரியனாகிய வேந்தன். 3. மிடைமணிப் பைம்பூண் - மணிசெறிந்த பசியபூண். 4. துவர்வாய் - சிவந்த வாய். 5.மாலைமன்னவன் - மாலையணியும்வேந்தன். 6. காலை - காலம். 1. கண்ணறைக்கண்டம் - கணுவிடத்தே அறுக்கப்பட்ட துண்டம். 2. கச்சுவாய் சோடித்து - அணிந்த சீலைகளின் கூட்டுவாய் தோன்றாவாறு புனைந்து. 3. மிழற்றுபு விளங்கும் -சொல்லிவைத்தது போல விளங்கும்.4. மங்குல்வானம் - மேகம் தங்கும் வானம். 5. உரற்றுமழை - முழக்கிளையுடைய மழை. 6. பரூஉத் திரள் அடி - பருத்துத்திரண்ட அடி. 7. குயில்புரை கொளுவின - குயின்ற புரைகள் அமைக்கப்பட்டன. 8. வலம்புரிசாற்றி - வலம்புரி வடிவமைத்து. 9. பல்லரி - பலவாகிய அரிகள். 10 கொளு - பொருத்துவாய். 11. நீலக்காழ் - நீலநிறமுடைய காம்பு. 12. உள் நுகுப்பு ஓலை - உள்ளேயுள்ள ஓலை விரியாபனங் குருத்தின்வெள்ளிய இளைய ஓலை. 13. பாதச்சக்கரம் - அடிவட்டம். 14. கொட்டை - குஞ்சம். 15. ஓத்தும் - ஓதப்படும்பாட்டு. 16. புரையாப்புலமை - ஒப்புக்கூற முடியாத புலமை. 1. நடாவும் - நடத்தும். 2. ஒராஅ - நீங்காத 3. இடிக்கண் முக்கர் - இடிபோல் முழங்குதலையுடைய முரசு. 4. தம்மமர்புதல்வர் - தம்மால் விரும்பப்படும் புதல்வர்கள். 5. கம்மப்பல்கலம். தட்டார் செய்யும் பொற்பணிகள். 6. வெம்படை - சினம் வருதற் கேற்ற வெவ்வியபடைகள். 7. தம்படைக்கொல்காப் - தம் படைக்கு மனஞ்சிதையாத. 8. நூற்பால் செய்தொழில் - நூலிற் கூறிய பகுதிவழியே; செய்வன - செய்தலையுடைய. 9.பையுள் - துன்பம். 10. வேகவுள்ளம் - சினம் மாறாத உள்ளம். 1. மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர். - மானின் பார்வையிலும் குற்றம் உண்டென்னு மாறு மருண்டு நோக்கும் நோக்கமுடையர். 2. சிகழிகை - கொண்டை 3. கண்ணங்குறூஉம் - கண் கூசும்படியான. 4. ஒவ்வா அணியினர் - ஒன்றற் கொன்றொப்பில்லாத அணியுடையராய். 5. மண்ணகக் கிழவன் - வேந்தன்; மண்ணாளும் உரிமைபற்றிக் “கிழவன்” என்றார். 1. மண்ணினீர் - நிலத்திடத்தே உள்ளிராயினும். 2. அலைதிரைப் பௌவம். அலைகின்ற திரைகளையுடைய கடல். 3. விரும்புபு - விரும்பி. 1. மடை - பொங்கற்படையல். 2. கிளிச்சிறை - ஒருவகைப் பொன். 3. கொழுமுகைச் செவ்விரல் - கொழுவிய அரும்பு போலும் கைவிரல். 4. ஐதேந்தல் குலர் - மெல்லப்பக்கம் உயர்ந்த அல்குலையுடைய மகளிர். 5. படைத்தொழில் அமைக்குந் தொழில். 1. மருப்பு - யானைக்கோடு. 2.திரு - கண்டார் விரும்பும் அழகு. 3. திண்பிணி - வலிதாகக் கட்டிய கட்டு. 4. பல்படை - பல்வகைப்பூவும் பஞ்சும் பெய்தமைத்த படுக்கை. 5. சேடு - பெருமை. 6. காமம் குயின்ற கோலச் செய்கை - காமவுணர்ச்சியை யெழுப்பு மாறமைந்த அழகு. 7. எட்டிக்காவிதிப் பெற்ற மகளிர்; எட்டி என்றும் காவதியென்றும் பட்டம் பெற்ற மகளிர். இவர் இப்பட்டங்களைத் தாங்கி யோருடைய மகளிர் என்பர் டாக்டர். உ.வே.சா. அவர்கள். “பட்டந்தாங்கியோர்” என்னாது தாங்கிய வெனப்பெயரெச்சமாகவே கூறுதலின் அவர் கூறுவது பொருளன்மை யறிக. 8. மண்ணார்மணி - கழுவுதல் அமைந்த மணி. 9. கண்ணார் குரிசில் - கண்ணிறைந்த அழகுடைய உதயணன். 10. தகைமலர்த்தாரோன் - அழகிய பூமாலை யணிந்த அவன்11. தீட்டி - சூடி. 12. மங்கலவயிறுனி - மஞ்சனநீரிற் கலந்தசோறு; இது கண்ணேறு கழிப்பு. 1. அமைவில் - பொருத்தமில்லாத. 2. மாரிநிழல் உறீஇ - மாணிக்க மணிகளால் ஒளிநிலவச் செய்து. 3. வகையுளிப்பாரித்து - முறைமையால் தாழச் செய்து. 4. கோணம் உயரி - மூலையுயரச் செய்து. 5. நிரப்பம் கொளீஇ - சமமாக நிரவல் செய்து. 1. கப்புரப்பாளிதம் - கற்பூரப் பாளிதம். 2. முக்கூட்டமிர்து - வெற்றிலை, பாக்கு. சுண்ணாம்பு என்ற மூன்று; பிறாண்டும் “முக்கூடட்டரத்தம்” என்பர். 3. பதினறுமணி - பதினாறு வகைப்பட்ட மணி. இவ்வகை விளங்கவில்லை. 4. நுதியிற் பெய்து - ஓரத்தே கட்டித் தொங்கவிட்டு, 5. பண்ணியவுணவு - பண்ணியாரங்கலந்த வுணவு. விளக்கை நிறுத்தி, அதைச் சுற்றிலும் பணியாரங்கலந்த வுணவு வகையைப் பரப்பிவைப்பது மரபு போலும். 6. வாய்ப்பூச்சியற்றி - வாய்கழுவி. 7. புண்ணியப்புல் - தருப்பைப்புல். 8. சென்னி - தலை 1. அமர்வனராகி - விரும்புவாராய். 2. எஃகமையிருப்பின் - எஃகும் இரும்பும். 3. வாளினை - சிறைக்கும் கத்தியை. 4. துரூஉக்கிழி - ஆட்டுத் தோலாற் செய்த பை. 5. வாய் தீட்டி - கூர் தீட்டி. 6. செங்கேழ்க்கை - சிவந்த நிறமுடையகை. 7. பூசனை கொளீஇ - நீர் தெளித்துக்கும்பிட்டு. 8. வாட்டொழில் கம்மம் - சிறைக்கும் தொழில். கன்மம் கம்மம் என வந்தது; தன்மம் தம்மம் என வருதல்போல. 9. சேட்டெழில் - மிக்க அழகு. 10. மூரிக் கொள்ளான் - திமிர்வி விடானாய். 11. ஆவிக் கொள்ளான் -கொட்டாவி விடானாய். 12. மண்ணுவினை - கழுவுதற்குரிய. 1. நிழல் - ஒளி. 2. பறவைத்தொழுதி - நிர்ப்பறவைகளின் கூட்டம். 3. செறிய வீக்கி - நன்கு மூடிக் கொள்ளுமாறுகட்டி. 4. பூஞ்சுமடு - பூ மாலைகளால் அமைந்த சும்மாடு. 1. செம்மலையாகி - தலைமையுடையனாய். 2. விரியற் புகழ்ந்து - வீரமுடையனான உதயணனைப் புகழ்ந்து. 3. திருக்கொடிச்சாலி அழகிய ஒழுங்கினையுடைய சாலிநெல். 4. ஊழ்ஊழ் - முறைமை. 5. நானம் - கத்தூரி. 6. தண்டாப்புலமொடு - குன்றாவறிவுடனே. 7. மீக்கூரி - மேன்மைமிகுந்து. 8. நற்பலகிளவி - நல்லனவாகிய பல சொற்கள். 9. மெய்வயின் - உடம்பிலே. 10. திருமாண் உறுப்பு - நறுமணத்தால் அழகுறுதற்கு வேண்டும் பொருள்கள். 1. ஏகவட்டம் - ஒற்றைச் சரவட்டமாலை. 2. நாமாவளி - பெயர் பொறித்தமாலை. 3. பத்திரச் சுரிகை - அகன்ற வாயையுடைய சுரிகைவாள். 4. ஆரணங்கு - காண்பார் கண்ணுக்கொளியால் வருத்தந்தருவதாகிய. 5. பிழைப்பிலர் - தவறாமல். 6. பொருவில் புட்கொடி - ஒப்பில்லாத சேவற்கொடி. 7. தளை - அரும்பு. 8. இளையவன் - முருகன். 9. ஒடிவில் வென்றி - குன்றாதவெற்றி. 10. வாலணி - வெள்ளிய அணிவகைகள். 1. நெட்டிருங்கூந்தல் - நெடியகரிய கூந்தல். 2. பன்னுமுறை - சிக்கில்லாவகை. 3. குஞ்சரத்தடக்கை - யானையில் பெரிய கை. 4. சூட்டு - தலையிற் சூடப்படுவது. 5. பத்திப்பலகை - வரிசையமைத்த பலகை. பரிசரக்கைவினை - சூடுதற்குரிய அணிகளை முறையுறச் சூடும் தொழில். 6. ஒழுக்குமுறை - ஒழுங்கானமுறை. 7. வழுக்கிலள் - குற்றமின்றி. 8. மாசில் திருமகள் - குற்றமில்லாத திருமகள். 1. கூப்புதலானும் - தொழுதலியல்பாதலாலும். 2. கருமக் காலை - செயல் நிகழுங்காலத்து. 3. உள்ளகத்துணர்ந்ததை - மனத்தின் கண்ணே நினைப்பது, ஐ, சாரியை. 4. அறிவர் தானம் - சினதேவன் கோயில். 1. பூரணப்படிமை - பூரணமான வடிவம். 2. திருத்தம் செறிந்து - அழகுமிக்கு. 3. ஓங்குவிசும்பு இவர்தற்கு - உயர்ந்த விசும்பின்கண் ஏகுதற்கு. 4. உட்குவருஉரு - அச்சம் பொருந்திய உருவம்; உகரம் விகாரத்தாற் கெட்டது. 5. திருநடு விலங்க - அழகிய நடுவிடத்தே குறுக்கிட்டு. 6. சேடார் - பெருமை பொருந்திய. 7. வட்டுடை - முழந்தாள் அளவாகவுடுத்த வுடை. 8.முழவுறழ் மொய்ம்பினர் - முழவு போலும் தோளையுடையர். 9.கழுமணிக்கடிப்பினர் - நன்குகழுவப்பட்ட மணிகளாகிய காதணியுடையவர். 1. அலங்குமணி - அசைகின்றமணி. 2. தாமமுக்குடை - மாலைசூட்டியமுக்குடை. 3. அலகை - அளவெல்லை. 4. பேதையைப் பெறுகுஎன - பேதையாகிய வாசவதத்தையைப் பெறுவேன் என்று. 5. சித்திக்கிழவன் - அருகதேவன். 6. தெய்வதை - தெய்வம்; இது தெய்வதம் எனவும் வழங்கும். 1. நேரியற்சாயல் - இயல்பாகவே யுண்டாகிய மென்மை. 2. காரிகை - அழகு. 3.ஊராணொழுக்கம் - ஒப்புரவாண்மை; பிறாண்டும் “ஊராண்மகளிர்” என்பர். 4.கட்டிரை - தூண்டில் முள்ளிடததேகட்டப்படும் இரை. 5. அருங்கல வெறுக்கை- அரிய கலங்களாகிய செல்வம். 6. வழக்கியல் - முறைமையியல்பு. 1. மறம்புரிதானை - மறவினையே விரும்பும் தானை; சேனன், என்றது பிரச்சோதனனை. 2. பிரச்சோதனற்கு மகளிர் பலராதலின், “பாவையருள்ளும்” என்றார். 3. ஓவாவாழ்க்கை - நீங்காத வாழ்வு. 4. கண்வாங்கு உருவு - தன்னைக் கண்டகண் மீட்டு வேறெதனையும் காணாது தன்னையே கண்டிருக்கச் செய்யும் உருவவழகு. 5. நோற்றும் - நோற்போம். 6. கூற்றினராகி - சொல்லுபவராய். 7. தொகை கொண்டீண்டி - கூட்டமாகத் திரண்டுநின்று. 1. கைந்நவில் கம்மத்துக்கம்மியன் - தான் கருதியதனைவாயாலுரையாது செய்வினையாற் செய்து தெரிவிக்கும் கைவன்மை வாய்ந்த கம்மியன். 2. செய்கலம் - செய்த அணிகலம். 3. பால்நீர் நெடுங்கடல் - பாலாலாகிய நெடியகடல். 4. கழுமடிக்கலிங்கம் - சலவை செய்து மடிக்கப்பட்ட ஆடை. 5. கண்ணிய காதல் - கருத்திலுள்ளகாதல். 6. உடீஇ - உடுத்து. 1. கண்ணகன்கிடக்கை - இடமகன்ற நிலவுலகம். 2. ஊழிதொறும் - கற்பந்தோறும். 3. தொன்றோங்காளர் - பழமை கொண்டோங்கிய முனிவர். 4. பொன்றாவியற்கை - கெடாத இயல்பு 5. வானிற வமிர்தம் - வெண்மையான பால். 6. மலைப் பெய் நெய் - மலையிடத்தே பெறும் தேனெய். 7. அன்பின்அளைஇய - அன்பு கலந்த 8. கருமம் காழ்த்த - கருமஞ் செய்தலிற்கைதேர்ந்த. 9. தன்வயின் தாங்கி - தன்பாற் பொருந்தக் கொண்டு. 1. பணைத்தோள் - பருத்த தோள்; மூங்கில் போலும் தோள் என்றுமாம். 2. உறுவரை - பெரியமலை. 3.கூற்றவேழம் - யமனையொத்த யானை. 4. கயக்கம் - மனக்கலக்கம். 5. விம்மவெகுட்சி - மிக்கவெகுண்டு செய்தபோரில். 6. பொருமுரண் அண்ணல் - பொருதற்குரிய வலியினையுடைய உதயணன். 7. தீராதியைந்தனள் - நீங்காது கூடினள். 8. பொழில் உஞ்சேனை - பொழில் சூழ்ந்த உச்சயினிப்பதி. 9. பகுவாய் - அகன்றவாய். 10. சேடோந்து வனப்பு - மிக்குயர்ந்த வனப்பு. 11. மோடேந்தரிவை - பெரிய வுடம்பினையுடையகாளி. 12. மனாது - முன்னே. 1. பனஞ்செறும்பு - பனங்கருக்கு; பனஞ்செதும்பு என்றுமாம் 2. நீளி நெடும்பல் - நீண்டநெடியபல். 3. பனியிறை வாவல் - குளிர்ந்த சிறகுகளையுடைய வௌவால். 4. மறுவில் மணி - குற்றமில்லாதமணி. 1. இருப்புப்பத்திரம் - இருப்புத் தகடு. 2. மருப்புப்பலகை - யானைத் தந்தத்தாற் செய்த பலகை. 3. தெய்வப்படைக்கலம் - தெய்வங்கட்குரிய மந்திரஞ் சொல்லிவிடும் படைக்கலங்கள். 1. பூணி - பூட்டப்படும் எருது, குதிரை முதலியன. 2. உள்ளிய எல்லை - செல்லக் கருதிய இடம். 3. ஆளவிகாடு - மக்கள் வழங்குதலில்லாத காடு. 4. அருஞ்சரக்கவலை - செல்லுதற்கரிய சுரத்திடத்துக் கவர்த்தவழிகள். 5. கோள் - கொள்கை. 6. கயவா - பெரிய வேட்டுவர். கீழ்மக்களுமாம். 7. குறும்பு - அரண். 1. ஊரகம் - சயந்தி நகரம். 2. போகப்பெருநுகம் - திருமணமாகிய பெரியபாரம். 3. அகழினையுடையெனக்கிடந்த - அகழினையாடையாகக் கொண்டு விளங்கிய. 4. அவையும் கரணமும் - அவைபுகுதலும் அரசியற் கரணம் (கணக்கு) ஆய்தலும்; வகுத்து இருவான் - ஆராய்ந்து பகுத்திருத்துதலும் செய்யான். 6. புதுக்கோ - புதிய அரசன். 7. செவ்வியும் கொடான் - காண்டற்குரிய காலம் வகுத்திலன்; காண்டற் கரியனாயினன் என்பதாம். 1. அற்றம் - சோர்வு. 2. குற்றங்காத்தலில் - குற்றம் வராமற் காத்தலில். 3. கன்றியது - தவறியது 4. தகவில செய்தலில் - தகுதியில்லாதவற்றைத் தவறிச் செய்யுமிடத்து. 5. வடுவுரை - பழிச்சொல். 6. இன்ப அளற்றுள் - பெண்ணின்பமாகிய சேற்றினுள். 7. துடைத்த - நீக்கிய. 8. அவலம் ஒழிப்பி - அவலத்தை நீக்கி. 9. திசையா - மங்காமல். 10. உகந்து - விரும்பி. 11. போத்தந்து - கொணர்ந்து. 12. இறைக்கடம்பூட்டுதல். அரசுரிமை எய்துவித்தல். 13. உருப்ப நீள் அதற்கு - வெயில் வருத்தும் நீண்ட வழிக்கு. முன் அமைத்துவைத்த என இயைக்க. 14. தருப்பணம் செரும - அவல்விக்கி. 15. புலம் துறை போகிய - அறிவுத் துறையிற் கடைபோகிய. 1. ஒலி உஞ்சேனையுள் - பல்வகை ஒலிமிக்க உச்சயினி நகர்க்குள். 2. பட்டாங்குணர்ந்து - நிகழ்ந்த வாறே யறிந்து. 3. உறுகுறைக்கருமம் - செய்தற்குற்ற இன்றியமையாத கருமம். 4. புறப்பட்டு - வெளிப்படையாக. 1. வையம் - தேர். 2. கரந்தகத் தொடுங்கி - மறைவிடத்தே தங்கி. 3. ஏமம் - பாதுகாப்பான இடம். 4. வெம்மை வேட்டுவர் - கொடுமை செய்யும் வேடர். 5. கோற்றொழிற் கருமம் - அரசியற்குரிய செய்கைகள். 6 ஆற்றுளி - செய்யுமுறையால். 7. வட்டிகை வாக்கு - சித்திர மெழுதுதற்கு வேண்டும் பலகை. 8. நும்மோய் மார்கள் - நின்தாய்மார். 9. உடைவு - மனவருத்தம். 10. யாப்பமை காதல் - பிணிப்புண்டமைந்த காதலன்பு. 11. நீப்பிடம் - நீங்கியதிறம். 12. அவலங்கோடல் - அழுதல். 13. வெங்கண் வேந்தன் - வெவ்விய சினத்தையுடைய பிரச்சோதனன். 14. மங்கலமகளிர் - புதுமண மகளிர். 1. இன்னியல்மாந்தர் - இனிய இயல்பினையுடைய மக்கள். 2. ஆள் - ஏவலாள்; ஏவலிளையரான வீரருமாம். 3. விதுப்பியல் வழாஅது - விரைந்து நடுக்கமுற்று. 4. நுண்ணுணர்வெண்ணத்தின் - நுண்ணிய அறிவு கொண்டு நெஞ்சிற்குள் ஆராயும் ஆராய்ச்சிக்கண். 5. மாழாந்து - மயங்கி. 6. சிதர்பொறி எந்திரம்போல - சிதர்ந்து வீழும் பொறிகளையுடைய எந்திரம் போல. 1. குழற் சிகை - குழலாகிய தலைமுடி. 2. குண்டுநீர் - ஆழமான நீர். 3. கணைக்கடுநீத்து - அம்புபோலும் விசைந்த செலவினையுடைய நீரின்கண். 4. வேகநம்பி - மனவேகமுடைய (சினமுடைய) நம்பியாகிய உதயணன். 5. ஆகுபொருள் அறிவி - ஆகும் பொருள் இது வெனநன் கறியும் நற்றாய். 6. அடிக்கலம் - திருவடிகள். 7. இன்பதம் இயற்றல் - இனிய செவ்வியைச் செய்தல். 8. மதலையின் - தூண்போல. 9. முன் போக்கு - முன்னே யிறத்தல். 1. புலம்புகொண்டழீஇ - புலம்பலுற்றுவருந்தி. 2. பேணாதவர் - பகைவர். 3. இறைமை - அரசத் தன்மை. 4. கொடுங்காழ் - கொடிய (திண்ணிய) சுவர் 5. காழ் - தூண். 6 ஆற்றுளி - ஆறியிருக்கும் வகையால். 1. அதிர்ந்த காலை - நெஞ்சுநடுக்கமுற்றபோது. 2. அத்திறம் - அத்தளர்ச்சி. 3. ஆய்பொருட்கேள்வி - நுண்ணிய பொருள் குறித்த கேள்வியறிவு. 4. தணப்பில் வேட்கை - நீங்காத விருப்பம். 5. உணர்ப்பு உள்ளுறுத்த வூடல் - உணர்வித்துத் தெளிவித் தலையுள்ளுறையாகவுடையவூடல். “ஊடியவரை யுணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று” என்பவாகலின், ஊடல் உணர்தலையுட் கொண்டிருக்க வேண்டுமென்பது முறையாயிற்று. 6. புரைபதம் - போகநுகரும் உயரிய காலம். 7. காமக் காரிகை - காமவின்பத்துக்குரிய அழகு. 1. முலைத்தலைப் பிணியுறீஇ - முலையிடத்தே பிணிப்புறுவித்து. 2. யாமக் கோட்டம் - அந்தப்புரம். 3. அணங்கரும் பெருந்திறை - கண்டார்க்கு அச்சமும் வருத்தமும் பயக்கும் அரிய திறைப் பொருள். 4. சுரியுளையரிமானேறு - சுருண்டுகரிந்த பிடரிமயிரையுடைய சிங்கவேறு. 5. கூறாடாயம் - பலவேறு கூறுகளாகப் பிரிந்தாடும் மகளிர் கூட்டம் 6. என்னதொன்று - யாதாமொன்று. 1. நகாஅர் - நகுதலைச் செய்யாது. 2. விழுப்பம் - உயர்வு. 1. தகரம் - நறுமணங் கமழும் தகரமரம். 2. கடவுட்டானம் - கோயில்; கடவுளைத் தொழுதல் கற்றதனாலாய பயனாதலின், “கற்றோருறையும் கடவுட்டான” மென்றார். 3. புறப்படலுறாஅ - புறத்தே காணப்படாத 4. மேவர அமைத்த - விருப்பமுண்டாகச் செய்த. 5. குரம்பை - சிறுகுடிசை. 6. தூசக்குடிஞை - வெள்ளிய ஆடையைக் கூரையும் சுவருமாக அமைத்த சிறுவீடு (Just as the tents which are used now) 7. துலாமண்டபம் - துலாம் வைத்துக் கட்டிய போகம் (துலாம் - தூலருமாம்) 8. பல்காழ்த்திரை - பல குத்துக்கோல் நிறுத்திக் கட்டிய திரை. 9. படாகையங்கொட்டில் - கொடி கட்டிய கொட்டகை. 1. ஒல்காக் கூடம் - தளராத தூண்கள். 2. துன்றி - நெருங்கி 3. நந்தனவனம் - கற்பகச் சோலை. 4. எண்கொண்டிறங்கின - விருப்பங் கொண்டு இறங்கிய. 5. நிழல் கண்ணெறிப்ப - ஒளி கண்கூச. 6. ஒளியவாகி - நிறத்தையுடையவாய். 7. கைக்கொடீஇ - கையிற் கொடுத்து. 8. உள்ளழிவு - உள்ளத் தெழுந்த சினம். 9. கதழ்விடம் - சிதறிக்கிடக்கும் இடம். 10. ஏல்ஒளிஎறிப்ப - ஏற்புடைய செவ்வொளி பரவுதலால். 11. அஞ்சின அளிய - அஞ்சிநிற்கின்றனவாதலால் உங்களால் அளி செய்யப்படற்குரியவாம். 12. விரிந்த - மலர்ந்த. 13. வேர்வு - சினம். 1. மடவரல் மகளிர் - மடப்பம் வந்த மகளிர். 2. காலை - வயது. 3. அன்மை - சுணங்கு பொருந்தாமை. 4. முடந்தாட்பலவு - வளைந்த அடியையுடைய பலாமரம். 5. காரிகை - அழகு. 6. இளநலமகளிர் - இளமை நலம் பொருந்திய வரையரமகளிர். 7. சுள்ளி - ஆச்சா மரத்தின்பூ. 8. மகிழின் வட்டவார்மலர் - மகிழம்பூவாகிய வட்டமான அழகிய பூ. 9. செண்ணத்தளிர் - அழகிய வடிவுடையதளிர். 10. குறிஞ்சிக் குரவை - குன்றவர் குறிஞ்சிப்பூச் சூடியாடும் குரவைக்கூத்து 11. தொழுதி - கூட்டம். 1. மாதர்ப்பைங்கிளி - அன்புடைய பச்சைக்கிளி. 2. துகள் அணி இரும்பிடி - சுண்ணப்பொடி பூசப்பெற்ற பெரிய பிடியானை. 3. மராஅத்த - மராமரத்தினுடைய 4. கண்ணயல் - கண்ணிற் கயலாகிய கன்னம். 5. தாழ்ப்ப - குறைபட. 6. பெருமை இல் - பெருமை பொருந்திய இல்லத்தே. 7. மூசுதல் ஓவா - மொய்த்தல் நீங்காத. 8. இரிய -நீங்க. 9. விழுத்தகு - பெருமை தக்கியிருக்கின்ற. 10. கொய்குரவேனல் - கொய்தற்குரிய கதிர்களையுடைய தினை. 11. சுனைப்பாறை - சுனையருகேயுள்ள பளிக்குப்பாறை. 12. மைவளர் சென்னி - மேகந்தங்குகின்ற உச்சி. 13. திளைத்தல் ஆனார் - கூடுதல மையாராய். 1. வருணமொன்றாய் மயங்கியவூழி - நால்வகைச் சாதியுமின்றி எல்லாம் ஒருசாதியாய் மயங்கும் காலமுடிவு. 2. தின்மை - தீமை. 3. இறுபு - சாக்காடு. 4. ஐந்திணை மரனும் குறிஞ்சி முதலாகவுள்ள ஐந்து திணைக்கண்ணும் வளரும் மரங்களும். 5. நிருமிதம் போல - படைப்புப் போல. 6. நிழல்மீக்கூரி - நிழல் மிகுந்து. 7. ஊர்புக்கன்ன உள் உறப்பு உறீஇ - ஊரகத் தேபுகுந்தாற் போல உள்ளே செறிவு மிகப் பொருந்தி; செறிந்து என்பதாம். 8. திருந்து சிறை மிஞிறு - அழகிய சிறகுகளையுடைய மிஞிறு, மிஞிறு சுரும்பு, வண்டு, தும்பி என்பன வண்டுவகை. 1. குழல்வாய்த்தும்பி - குழல் போல் இசைக்கும் ஓசையையுடையதும்பி. 2. மனம் பிணியுறீஇ - மனத்தையீர்த்துப் பிணித்து. 3. மேவன பலபயின்று - விரும்பத்தக்க கனிகள் - பலவும் நிரம்பி. 4. கலமரம் - கீழானமரங்கள்; கயமை - கீழ்மை; ஈண்டு இனிய கனிபயவாமை மேற்று. 5. அரும்பொருள் வகை - அறமுதலிய அரிய பொருள்களைச் செய்தலும் பேணுதலு முடைய செயல்வகையுடைமை. 6. கடத்தினும் - கடமையுடைமையாலும்; 7. இமையோர் இறை வனை - இமையவர்க்கரசனான இந்திரனை. 8. அருந்தவ முனிவரின் - அரிய தவத்தினையுடைய முனிவர்களைப் போல. 9. உசிர்ப் பெருந்தோழன் - உயிரொத்த பெருமை வாய்ந்த தோழனாகிய யூகி. 10. கண்ணகன்று - இடத்தினின்று பிரிந்து. 11.திண்ணிதாகும் - உறுதியாகும். 1. பொருவில் போகம் - நிகரில்லாத இன்பநுகர்ச்சிக் கேதுவாகிய வாசவதத்தை. 2. முடியத் தோன்றும்- விளங்கக் காட்டா நிற்கும். 3. தாள்முதல் - மடிமீது. 4. கொற்றங்கோடல் - வெற்றிபெறுதல். 5. பெறும்பயம் - பெறவிருக்கும் பயனாகும். 1. மன்னுபு கிடந்த - நிலைபெற விருந்த. 2. அணிபெற - அழகுண்டாக. 3. அசும்பு சோர் அருவரை - ஊறியொழுகும் அருவியையுடையமலை 4. நாணியன்ன - நாணியசைவது போல. 5. மணி - மலையிடைப்பிறக்கும் மணிகள். 6. பல்கி - பெருகி. 7. அணிகலப் பேழை - அணிகலன்களை வைத்திருக்கும் பெட்டி. 8. முழவின்பாணியிற் பாடி - அருவியாகிய முழவினது தாளத்துக் கொப்பப்பாடி. 1. உறியோர்க்கு - உரிமையுடையவர்க்கு. 2. பொருசிறை வண்டினம் - பொருகின்ற சிறகுகளையுடைய வண்டுகள். 3. நாட்கடிகமழும் - புதுமணம் கமழும். 4. தழை தைஇயும் - தழை தொடுத்தணிந்தும். 5. பேற ருங்கற்பு - பெறுதற்கரிய கற்பு; 6. மாறடுவேல் கண் - மாறுபட்ட பகைவரை வெல்லும் வேல்போன்றகண். 7. மராஅங்குரவை - மரவமலர் சூடியாடும் குரவைக்கூத்து. 8. மறலி - மாறுபட்டு. 9. மேயினராட - விரும்பிவிளையாட. 10. மீக்கூறிய - மேலாகக் கூறப்பட்ட. 11. உருவப்பூந்தார் - அழகிய பூமாலை. 12. வள்ளி - சங்குவளை. 13. வான்மணிக் கொடும்பூண் - முத்துக்களாலாகிய வளைந்த பூணாரம். 14. அறற்கணைத் திளைப்பு - கணையறல் திளைப்பு எனமாற்றி, கனைநிரில் மூழ்குதல் என கொள்க. அறல் - நீர். 15. பொலங்கலம் - பொற்கலம். 16. கைம்மீச் சிவப்ப - கைகடந்து (மிகவும்) சிவக்க. 1. ஆத்திரையாளர் - யாத்திரை செய்பவர். 2. மணிக்கண் மஞ்ஞை - நீலமணிபோல நிறமும் ஒளியுமுடைய கண்ணையுடைய மயில். 3. களிக்குரற் புறவு - கட்குடித்தார் குரல் போலக் கம்பித்த குரலையுடையபுறா. 4. யூகம் - கருங்குரங்கு. 5. மருளி மா- மயக்கத்தையுடைய மாக்கள். 6. வெருளிப்பிணை - எளிதில் அச்சமடையும் பெண்மான். 7. நலிவோர் - வேட்டையாடி வருந்துவோர். 8. உராஅய் - பரந்து. 1. குறுமகள் - இளம் பெண். 2. தவிர்வில் காதலொடு - நீக்கமுடியாத விருப்பத்தால். 3. கவர்கணை - கவர்த்த வாயையுடைய அம்பு; மனத்தை வேட்கையால் கவரும் அம்பு என்றுமாம். 4. பைய வியலி - மெல்ல நடந்து வந்து 5. பேதைப் பெரும் பிணை - பேதமை நிறைந்த பெரிய பெண் மான் குயில் 6. விரும்புபு விதும்பி - விருப்பத்தால் மனம் விரைந்து. 7. கிடைஇ - கிடத்திவிட்டு. 8. திருந்து வாய் - வன்சொற்களைப் பயின்றறியாத அழகிய வாய். 9. பிணையல் - மாலை. 1. பொன்னடர் - பொற்றகடு. 2. உறழ்பட - மாறுபட. 3. வாசம் கலந்த - வாசனை கலந்த. 4. தானத்து இரீஇ - உரிய இடத்தே பொருந்தவைத்து. 5. தேற்றாள் - அறியாளாய். 6. ஆடமைத் தோளி - அசைகின்ற மூங்கில் போதும் தோளையுடைய விரிசிகை. 7. மடவரல் - மடப்பம். 8. தாள்முதல் - மடித்தலம். 1. தகைமுகம் - அழகிய முகம். 2. ஓடு அரி - பரந்த வரிகள். 3. செயிர்ப்பு முந்துறீஇ - சினத்தை வெளிப்படுத்தி. 4. நயப்பு உள்ளுறுத்த - காதலையகத்தே கொண்ட. 5. உருத்து - வெம்பி. 6. வேகநோக்கம் - சினப்பார்வை. 7. படிமைத்தாகிய - வடிவினையுடையதாகிய. 8. அணித்தகு சிறுநுதல் - ஒளியால் அழகு தங்கியிருக்கின்ற சிறிய நெற்றி. 9. குலாஅய - பொருந்திய. 10. திருவில் - இந்திரவில்; வானவில். 11. துளங்க - துடிக்க. 1. முழுநீர் - மிக்குள்ளநீர். 2. பொழுதொடு விரிந்த - காலத்தே மலர்ந்த. காலந்தப்பாது மலர்வது குறித்தே, பூக்களின் அரும்பைப் “போது” என்பது வழக்காயிற்றெனவறிக. 3. செவ்வி - அழகு. 4. ஊதா வந்தக்கடைத்தும் - உண்டுவந்த காலத்தும். 5. எவ்வம் தீராது - பல பூக்களையும் நோக்கும் குற்றத்தின் நீங்காது. 6. காமக்கலப்பு - காமப்புணர்ச்சி. 7. நறவினைத் தேறல் - நறவிடத்தே வடித்துப் பெறும் கட்டெளிவு. 8. பொறிப்பூண் ஆகத்து - பொறியும் பூணும் கிடக்கும் மார்பு. பொறி - மார்பிடைவிளங்கும் வரி; திருமகட்காயினும் ஈண்டது பொருந்தாமையறிக. 9. அருமைக் காலம் - புண்ணியம் சுருங்கிய காலம் 10. வழிமொழிக்கட்டளை - வழிபட்டுப் பெறும் கட்டளை மொழிகள். 1. காமவேகம் - காமவேட்கை. 2. தாமம் பிணைஇ - மாலைகட்டி. 3. ஆத்த அன்பு - உயிரைப்பிணித்த அன்பு. 4. கவான் முதல் இரீஇ - மடிமீதிருக்க வைத்து. 5. தெரிமலர்க் கோதை - ஆராய்ந் தெடுத்த பூவாற் றொடுத்தமாலை. 6. அரிமலர்க்கண்ணி - வண்டு விரும்பும் பூப்போலும் கண்ணையுடைய விரிசிகை. 7., மருளின் நோக்கின் மாதர் - மருட்சியினையுடைய கட்பார்வையையுடைய காதலியாகிய விரிசிகை. 8. பொம்மென் முலை - பொம்மெனப்பெருத்த முலை. 9. விம்மம் உறும் - வருந்துவள். 10. செல்வன் - உதயணன். 11. ஒழுகுகொடி மருங்குல் - ஒழுங்கான கொடி போன்ற இடை. 12. அசைந்து - துவண்டு. 13. அச்சமுயக்கம். அச்சத்தாற் றழுவிக் கொள்ளுதல். 14. அற்பு வலை - காதலன்பாகிய வலை. 1. சேதா - செம்மையான பசு. 2. அலைத்து - வற்புறுத்தி. 3. இன்னாசெய்து - துன்ப முறுவித்து. 4. கருமக்கடுக்கம் - விரைந்து கண்ணோடாது செய்தற்குரிய கருமம். 5. தோற்கை - தோலால் மூடியுள்ள கை. 6. கோற்கை - திரண்டுநீண்டகை. 7. மொசிவாய் உழுவை - பற்கள் செறிந்த வாயையுடைய புலி. 8. பசிவாய் - பசுமையானவாய். 1. கண்ணுறக் காணில் - கண்களால் பொருந்தக் காண்பாளாயின். 2. உட்கல் - அஞ்சுவது. 3. பற்றாருவப்ப - பகைவர் மகிழ்ச்சிகொள்ள. 4. நன்றி-நன்மை; அறமுமாம். 5. மடிந்தோர் - சோம்பியிருப்போர் 6. மையறு தாமரை - குற்றமில்லாத தாமரை. 7. வாய்மொழி - மெய்ம்மொழி. 8. ஒன்னாமன்னர் - பகைவேந்தர். 9. புறப்படாமை. வெளிப்படாவாறு. 10. பசைந்துழி - ஐயுறுதற் குரிய இடம். 1. அஞ்சிலோதி - வாசவதத்தையைக் குறித்தது. அண்மைவிளி. 2. நெஞ்சுபுரை யமைச்சன் - உள்ளம் போன்ற நட்புடைய அமைச்சன். 3. வலிப்பக் கூறி - வற்புறுத்துச் சொல்லி. 4. பெருங்கண் ஞாலம் - பெரிய இடத்தையுடைய நிலவுலகம். 5. மீக் கூரிய - மிக்குள்ள. 6. மறமாச் சேனள் - மறம் பொருந்திய குதிரைகளையுடைய பிரச் சோதனன். 7. வரைபுரையகலம் - மலைபோல் உயர்ந்த மார்பு. 8. வால்வளை - வெண்மையான சங்கினாற் செய்த வளை. 9. பணைத் தோள் - மூங்கில் போன்ற தோள். 10. இருள் அறு செங்கோல் - அறமல்லன இல்லாது கடிந்து செய்யும் செங்கோன்மை. 11. சேண்வரு பெருங் குடி - மிகப்பழமை தொட்டே வழிவழியாக வரும் பெரிய குடி. 12. ஆவது புகலும் -ஆக்க மாவது யாதோ அதனைச் சொல்லும். 13. மரபிற்றிரியா - முறைமையினின்று வழுவாத; முறைமையாவது, பிறந்த குடியேயன்றிப் புகுந்த குடிக்கும் புகழ்பயக்கும் முறைமை. 14.தலைமையின் வழீஇய நிலமை - தலைமைச் சிறப்பையிழந்து நிற்கும் தாழ்நிலை. 1. நிலம்புடை பெயரினும் - நிலநடுக்கமுண்டாயினும் 2. நின்கடவுட் கற்பு என இயைத்து- நின்னுடைய தெய்வக்கற்பு என வுரைக்க. 3. பூங்குழை மடவோய் - அழகிய குழையணிந்த இளையோளே; குழையணிந்த செவியையுடைய மடவோய் எனச் செவியணி கூறிச் சிறப்பித்தது, தான் கூறியதனைக் கேட்டுச் செயற்கண் நிலைபெற வேண்டுமென்றற்கு. 4. ஒன்னாமன்னன் மிகைவேந்தனான ஆருணியரசன். 5. இகல் - வெற்றிகரணமாகப் பிறக்கும் முரண். 6. வலிக்கற்பாலை - நெஞ்சு வலிமையுற்றுப் பிரிவாற்றியிருத்தல் வேண்டும்.7. அரிமான் அன்ன - சிங்கம் போன்ற. 8. துப்பு - வன்மை. 9. நுனிப்பியல் - நுனித்துணரும் அறிவியல். 10. உறைகுறை - குறையுறுவென இயைத்து. குறையுற்றிருக்கும் அண்ணல் என உரைக்க. 11. ஒன்றாவலித்தல் - ஒருதலையாய்த் துணிந்து மேற்கொளல். 1. உடைமை - உண்டாதல். 2. மறத்தகைமறவன் - மறப்பண்பினையுடைய அமைச்சனான சாலங்காயன் என்னும் பிரச்சோதனனுடைய அமைச்சன். 3. மாயவிறுதிவல்லையாகிய நீதியாள - மாயத்தால் இறந்ததாகச் சொல்லி மேற் செய்வன செய்தற்கண் மிக்க வல்லமையும் நீதியும் உடையவனாகிய நீ 4. வேண்டு - விரும்பிக் கேள். 1. குழையணிகாதின் - குழையணிந்த காதினையுடைய. 2. முகத்தி - முகத்தையுடைய வாசவதத்தை. 3. பிணையல் - மாலை. 4. விழைபவை - விரும்புகின்ற பொருள்கள். 5. கவவு - புணர்ச்சி. 6. அவவுறு நெஞ்சம் - அவாக்கொண்ட நெஞ்சம். 7. அழற்ற - நெருப்புப் போல்வருத்த. “காமநோய் விடின் கடலாற்றும்” (குறள்) 8. புனிற்றுஆ - ஈன்ற அணிமை நீங்காத பசு. 9. இடுக்கண் - துன்பம். 10 துளங்கல் - துடித்தல். 11. நீர்மலர்ப்படலை - குளிர்ந்த பூமாலை 12. இழுக்கில் தோழர் - நீங்காத் தோழருடன். 13. உட்பட - உள்ளத்தில் பொருள் விளங்குமாறு. 1. நயக்குணம் - விரும்புதற் குரியநலம். 2. அண்ணரும் பேரழல் - நெருங்குதற் கரிய பெரிய தீ. 3. மாதிரம் - விண். 4. சோதிடர் - ஞாயிறு. திங்கள் முதலிய கோள்களும் விண்மீன்களும். 5. மஞ்சொடு - மேகத்துடன். 6. வெஞ்சுடர் - வெவ்விய ஞாயிறு. 7. மருள்படு பொழுது - மயங்கும் காலம். 8. நண்ணார் ஓட்டிய - பகைவரைக்கடந்த. 9. கணங்குழை - கூட்டமான குழை முதலிய அணிகள். 10. மண் விளக்கு - மண்ணுலகத்தே என் மனை வாழ்க்கைக்கு விளக்கு. 11. அரிவாய் - அரிவையே. 12. கொங்கார் சோதாய் - தேன் நிறைந்த மாலையையுடையவளே. 1. தேனேர் கிளவீ - தேன் போன்ற சொற்களையுடையவளே. 2. சிறு முதுக்குறைவீ - இளமைபொருந்திய மேனியும் பேரறிவும் உடையவளே. 3. புதையழல் - எங்கும் பரந்து ஒன்றும் தோன்றாதபடி மறைத்துக் கொண்டெரியும் தீ. 4. பொறியறு பாவையின் - சூத்திரக்கயிறு அற்ற பாவை போல. 5. சாந்துபுலராகம் - பூசிய சந்தனம் உலர்ந்த மார்பு 6. திவள - புரண்டுவிளங்க. 7. திறல், வேறாகி - வலிநிலை வேறுபட்டு. 1. அடங்கார் - பகைவர். 2. கன்றிய மன்னர் - பகைத்த வேந்தர். 3. கறுவுவாயிற்கு கறுவிப்பொருதற்கு. 4. இகப்பவெண்ணுதல் - உயிர்விடக்கருதுதல். 5. உள்ளம் இலன் - ஊக்கமும் அதற்கேதுவாகிய சூழ்ச்சியறிவும் இலனாவான். 6. வெள்ளைமை - மடமை. 7. அகஞ்சுடல் ஆனாது - நெஞ்சைச் சுடுவதில்தப்பாது. 8. குலம் - குலப்பெருமை 9. பூண்டனையாகுதல் - மேற்கொள்ளுதல். 1. தோழரை இகவா - தோழர் கூறும் உறுதிச் சொற்களைக் கடத்தல் இல்லாத. 2. சுடர்க் குழை மாதர் - ஒளிதிகழும் குழையணிந்த காதலியாகிய வாசவதத்தை 4. மணிக்கை நெடுவரை - மணிகள் கிடந்து விளங்கும் பக்கத்தையுடைய நெடியமலை. 5. அளைச்செறி மஞ்ஞையின் - குகையிடத்தே புக்கொடுங்கும் மயில்போல. 6. நினைஇ - நினைந்து 7. மின்னுறழ் சாயல் - மின்னற் கொடிபோலும் சாயலையுடைய வாசவதத்தை. 8. உடம்புச் சட்டகம் - வெந்தபிணம். 9. கடுப்பழல் - மிக்கதீ. 10. விளிந்தது - இறந்தமை. 11. பின்னிருங் கூந்தல் - பின்னப்படும் கரிய கூந்தல். 1. கவைஇய - தழுவிய. 2. கவவி - சூழ்ந்து. 3. துறப்புத் தொழில் - கைவிட்டு நீங்குதலாகிய செயல். 4. பனிநாள் - குளிர்காலத்து நாள். ஈண்டுப்புண்ணிய மென்றது திருமணம். 5. அந்தி - அந்தி மாலை. 6. தீந்து - வெந்து 7. கைப்புடை - பக்கம்; “மண்டலம் நிறைந்த மாசில் மதிப்புடை வியாழம் போன்று” (சீவக. 618) என்றார் பிறரும். 8. ஏர்அணி - அழகிய அணிகலன். 9. வனப்பு - அழகு. 10. அன்பிற்கரந்து - அன்பு துறந்து. 11. மராஅந்துணர் - மராமரத்தின் பூங்கொத்து. 12. கொங்குஅவிழ் முல்லை - தேன் சொரியும் முல்லை. 1. பிண்டி - அசோகு. 2. வண்டிமிர் கோதாய்- வண்டிசைக்கும் பூமாலையையுடையவளே. 3. அணி வரைச் சாரல் - அழகிய மலைச் சாரல். 4. திருவிழை மகளிர் - திருமகளும் விரும்பத்தக்க மகளிர். 5. மருவில் மாதவன் பொருந்துதற்கரிய பெரிய தவத்தையுடைய முனிவன்; மருவின் மாதவன் - என்றே கொண்டு நட்பால் கூடுதற்கினிய பெரிய தவத்தையுடைய முனிவன் என்றுரைப்பினுமாம். 6. தாமம் - மாலை. 7. காம வேகம் - காமவேட்கையாற் பிறந்த சினமிகுதி. 8. முசுக்கலை - கொண்டை முயல் என்னும் குரங்குவகை. 9. அழற் படவெய்துயிர்த்து - சினம்மிக்குப் பெருமூச்செறிந்து. 10. கரத்தியோ - மறைந்தனையோ 11. ஆயத்திறுதி - நம் கூட்டத்துக்கு இறுதித் துணை. 12. தளர்ந்தபின் - தளர்ந்து வீழ்ந்த பின்பு. 13. கரிப்புற் பதுக்கை - கரிந்த புல் சூழ்ந்த கற்குவியல். 14. எஃகின் - எஃகிரும்பாலாகிய ஆணி போல. 1. எற்காமுறலின் - என்னைவிரும்புதலால். 2. கால் அவிசில்லதர் - காற்றுலவாத சிறிதாயவழி. 3. கடுப்பழல் - மிக்கதீ. 4. படிகடந்து - பகையைவென்று. 5. நூலமை வீணை - இசைநூல் முறைப்படியமைந்த வீணை. 6. கோல் - நரம்பு. 7. காந்தள் முகிழ்விரல் - காந்தட்பூவின் அரும்பு போன்ற விரல். 8. பயத்தின் நீங்கா - செம்மைப் பண்பாகிய பயன்நீங்காத. 9. ஆரழற் செங்கொடி - நிறைந்த சிவந்த தீ யொழுங்கு. 10. அடுதிறல் ஆண்டகை - பகையை வெல்லும் திறலும் ஆண்டகையுமுடைய உதயணனது. 11. செற்றச் செய்கை - செற்றமுண்டாதற் கேதுவாகிய செய்கை; உதயணனது நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட செய்கை. 12. மீளி - வலிமை. 13. பின்றியும் விடாது - முதுகிட்டோடியவழியும் விடாமற் கைப்படுத்து. 1. கூழ் - உணவுப் பொருள். 2. யானப்புற - கட்டுப்பாடமைய. 1. தகை - அழகு. 2. உறுபயன் ஈனா - மிக்க பயனைத் தாராது. 3. பேணார் - பொருளாக விரும்பார். 4. விசயம் - வெற்றி. 5. கொற்றம் - அரசுக்குரிய வுரிமை. 6. ஆர்வப்புனலகம் - பெண்ணாசையாகிய கடலில். 7. ஆருயிர் நடுக்குறீஇ - நிறைந்த உயிர்கள் நடுக்கத்தை யெய்தி. 8. பெரும் பேதுற்று - பெரிய கலக்கமுற்று. 9. கரும்பேர்கிளவி - கரும்புபோல் இனிய சொல். 10. களங்குழை திறவயின் - கனவிய குழையையுடைய வாசவதத்தைபால். 11. கழுமிய காதல் - நிறைந்த காதல். 1. கல்சூழ்புபல்லதர் - கற்கள் சூழ்ந்த புல்லியவழி. 2. ஒதுங்கி - நடந்து. 3. எரிபுரை வெந்நோய் - நெருப்புப் போலும் கொடிய பிரிவுத்துன்பம். 4. தலைமை நீர் - தலைமைப் பண்பாகிய தண்ணீர். 5. கள்ளக்காதல் - புறத்தே தோற்றாது உள்ளத்தே மறைத்த காதல். 6. இமிழ்வினை - கட்டுப்படுத்துவதாகிய மந்திரத் தொழில். 7. பேதை - பேதையாகிய வாசவதத்தை. 1. நாட்டவொழுக்கு - உயிரினும் சிறந்ததாக நோக்கியோம்பப்படும் ஒழுக்கம். 2. வேட்டோன் - மணந்த கணவன். 3. குண்டுநீர்க்குமரி - ஆழ்ந்த நீரையுடைய குமரித் தீர்த்தம். 4. பற்றார் - பகைவர். 5. உற்றார் - நண்பர். 6. ஒற்றுவர் - ஒற்றர். 7. அற்றம் - தீங்கு. 8. ஒடுங்கார் - தங்காமல். 9. அணிபெற - அண்ணிதாக. 10. கிடங்கு - அகழி. 11. ஆடுகொடி - அசைகின்ற கொடி. 12. சத்திக்குடம் - மாடத்தின் உச்சியிலமைந்த கலசத்தே நிறுத்திய சூலத்தோடு கூடியது. 1. அரும்படை - தாங்குதற்கரிய போர்ப்படை 2. எதிரில் போகம் - நிகரில்லாத செல்வ நலம். 3. வடுவின்று - சோர்வில்லாமல். 4. படுமணியானை - பக்கத்தே யொலிக்கும் மணிகட்டிய யானை. 5. விற்றிறல் தானை - விற்போரில்வல்ல படை. 1. முன்னுபகாரம் - முன்பு யமுனைக் கரையில் தான் அவட்குச் செய்த உதவி, 2. தவ முதுதாய். - தவமும் முதுமையுமுடைய தாய், சாங்கியத்தாய். 3. விறப்பு - செல்வச் செறிவு. 4 வறப்பு - செல்வம் சுருங்கிய துன்பக்காலம். 1. புணை - தெப்பம். 2. சூழ்விடைத் துளங்கா - ஆராய்ச்சிக்கண் கலங்காத. 3. அள்ளல்தாமரை - சேற்றிடை முளைத்ததாமரை. 4. தேவி - வாசவதத்தை. 5. தவறாது தாயை யிழந்ததால் அறமும், யூகியை யிழந்ததால் பொருளும். தேவியைப் பிரிந்ததால் காமரும் இழந்து நிற்றலின், “தருமமும் அத்தமும் காமமுமிழந்தே” என்றான். 6. ஆழ்தல் - இறத்தல். 7. விச்சை - அறிவு. 8. புன்மையோர் - கீழ்மக்கள். 8. இற்றும் - இன்றும். 9. கண்ணா - கண்களாக. 10. ஏற்கிடத்து - தளர்ச்சியுற்ற விடத்து. 11. அற்பழல் - அன்பாகிய தீ. 12. கடிவோர் - விலக்குவோர். 1. வாயில் முற்றித்து - செய்வினை, காலம், இடம், கருவி, சூழ்ச்சி, பயன் முதலிய கூறுகளை நன்காராய்ந்து கொண்டது. 2. சாவினும் - செய்வினை முடியாது. இடையே உயிர் துறப்பினும்; “இழைத்த திகவாமைச் சாவாரையாரே, பிழைத்த தொறுக்கிற்பவர்” என்பது திருக்குறள். 3. மல்லல் - வளம். 4. பிறந்துழி - பிறந்துள்ளவிடம். 5. தாழர் - தவறாத. 6. உட்குடைவிச்சை - கண்டார்க்கச்சம் தரும் வித்தை. 7. பொருந்தருவியனகர் - பகைவர் பொருந்திக் கொள்ளுதற்கரிய பெரிய நகர். 8. மீட்டனம் கொண்டு - மீட்டுக் கொண்டு. 9. கற்றும் - கற்போமாக. 10. பட்டுச்சுவேகம் - பட்டுத் துணியாலாகிய உறை. 11. கட்டமைசுவடி - கட்டுதலமைந்த சுவடி. 12. புரிநூல் - பூணூா ல். 13. கிரந்தம் - ஆரியமொழி 1. வாசவெள்ளை - வாசனைபொருந்திய சந்தனம். 2. புகன்று - விரும்பி. 3. தேனோர் கிளவி - தேன்போலும் சொல்லையுடைய வாசவதத்தை. 4. அரும்பெறல் இரும்போத்து - பெறுதற்கரிய சேவல். 5. மயர்வனள் - மயங்கி. 6. வஞ்சிமருங்குல் - வஞ்சிக்கொடி போலும் இடையினையுடைய தத்தை. 7. மதியின் நாடி - அறிவாரால் ஆராய்ந்தறிந்து. 1. பஞ்சுரம் - ஒருவகைப் பண். 2. நுகர்வின் சாயல் - நுகர்தற்கினிய மென்மை. 3. பாசப் பாண்டில் - கயிற்றாற் கட்டிய வட்டக்காசு. 4. பசைந்துழி - பசையாகிய பொருளும் இளமை நலமும் வற்றியவழி. 5. தவிராது - தங்காது. 6. தாது - தேன். 7. கார்புனம் - கார்காலத்தே விளையும் தினைப்புனம். 8. அசும்பு - ஊற்று. 9. பசுந்தோடு உளரி - பசிய இதழ்களையசைத்து. 10. சுள்ளிவெண்போது - ஆச்சாவின் வெண்மையான பூ. 11. விரித்து - மலர்த்தி. 12. மணிவாய் நீலம் - நீலமணியின் நிறம் வாய்த்த நீலோற்பலம். 13. உழக்கி - கலக்கி. 1. குறுந்தாள் குரவு - குறுகிய தாளையுடைய குராமரம். 2. தொலைச்சி - உதிர்த்து. 3. உள்ளமிழ்து உணாஅ - உள்ளேயிருக்கும் தேனையுண்டு. 4. சாத்து வினைக்கம்மியன் - சந்தனச் சாந்து முதலியவற்றைச் செய்ய வல்லவன். 5. பையகம் கமழ - பையின் உட்புறம் போல மணம் வீச. 6. அல்குதற்கு - தங்கும் பொருட்டு. 1. வெண்குடை - வெண்கொற்றக் குடை. 2. அருமையமைச்சர் - ஆரிய சூழ்ச்சியினை யுடைய அமைச்சர். 3. நண்புண - நட்புற. 4. படைச்சொற்பாசம் - படைத்துச் சொல்லும் சொற்களாகிய கயிறு. 1. குளிர் கொள் அருவி - குளிர்ச்சிபொருந்திய அருவி. 2. மறுவில் மானவர் - குற்றமில்லாத பெரியோர். 3. வெறிது சேறல் - வெறுங்கையுடன் செல்லுதல். 4. அள்ளிலைப்பலவு - கூரிய இலைகளையுடைய பலா. 5. வரைதாழ்தேன் - மலையிடத்தே தாழக்கட்டப் பட்டதேன். 6. விரை - மணம். 7. பயம் - பயன் 8. தொல்லை - பழமை. 9. தேசிகம் - ஒளி. 10. மாற்றோர் - பகைவர். 11. அலகை வேந்தன் - தன்னாட்டளவும் தன்னாணை செவ்வே செல்ல ஆட்சிபுரியும் வேந்தன்; பிறர்க்குத்தான் உவமமாகும் வேந்தன் என்றுமாம். 12. அரம்பு - குறும்பு செய்வோர். 13. அல்லல் - துன்பம். 14. கரம்பு - பாழ்பட்டநிலம். 15. நல்குரவாளர் - வறியோர். 16. நன்பெரும்புலவர் - நல்லபெரிய புலவர். 1. கஞலி - நிறைந்து. 2. செறு - வயல். 3. அறாஅ - நீங்காத. 4. புல்லுபு சூழ - நெருங்கிச் சூழ்ந்திருக்க. 5. ஒளியவர் - தேவ சாரணர்கள். 6. அடைதர்மின் - வந்தடையுங்கோள். 7. வடிபட - காற்றசைப்ப. வளி, வடியென்றாயிற்று; வெளி, வெடியெனவருதற் போல; “வெடிபட்டுவீற்று வீற் றோடும்” (கலி.) 8. கடிஎயில் முதுமகள் - காவல் பொருந்திய எயிலாகிய முதுமகள். 9. அகடு - வயிறு 10. உடு - விண்மீன். 1.பண்ணமைபடுகால் - பண்ணப்பட்டமைந்தபடி. 2. மைதவழ்மாடம் - மேகம் தவழும் மாடம். 3. அரும்படைச் செல்வர் - அரியபடைகளையேந்தும் வீரச் செல்வர். 4. பெரும்படைச் சேரி - பெரிய படைவீரர்வாழும் இடம். 5. பொறைக்கழி - பொறுமையாகிய கழி. 6. மறத்துறைப் பேரியாறு போர்த்துறையாகிய பெரியயாறு. 7. அறத்துறைப்பண்டி - அறநெறியாகிய வண்டி. 8. நன்புலம் - நல்லறிவு. 9. பூரணnக்கின். குறைவின்றாகக் காணும் காட்சி. 10. பெருங்கடியாளர் - பெரியகாவலர். 11. அருகிலையுலகு - பெறுதற்கரிய நிலையினையுடைய தேவருலகு. 12. விறப்பினும் - செறியக் கூறிடினும். 13. பீடழீந்து சுருங்கா- பெருமை யிழந்து சுருங்க. 14. வழீஇய - குற்றப்பட்ட. 1. உறுதி நாட்டம் - உறுதியையே நாடும் நாட்டம். 2. கண்போற்காட்சி - கண்போல நோக்கும் நுண்ணறிவு. 3. அவுணர் - தேவர்க்குப் பகைவர். 4. இமையாச் செங்கண் - இமைத்தல் இல்லாத செவ்விய கண். 5. தொழிலிற்றாகி - தொழிலையுடையதாய். 6. மன்பெருஞ்சிறப்பு - நிலைபெற்ற பெரிய சிறப்பு. 7. மல்லல் - வளம். 1. கெழீஇய - பொருந்திய. 2. தமனிய விணைக்குழை - பொன்னாற் செய்த இரண்டாகிய குழை. 3. கைப்புடை - பக்கத்தே. 4. தூபத் தொழுக்கத்தாபதப்பள்ளி - தூப முதலியன இட்டுவழிபடும் ஒழுக்கத்தையுடைய தாபதர் உறைவிடம். 1. இருமதி - இருதிங்கள். 2. மொய்த்தழலீமம் - தீச்சூழ்ந்தெரியும் பிணஞ்சுடும் விறகு. 3. தவாசு - கெடாத. 4. தவமாசாதனை - தவத்தாற் சாதிக்கும் பெரிய மந்திரசாதனம். 5. மேலையாகிய வடிவினள் - முன்னே கொண்டிருந்த மேனியும் வடிவும் உடையளாய். 6. வாய்கொண்டுமிழதல் - வாயில் முகந்து கொண்டு பின்பு உமிழ்தல். 7. பண்டியல் விச்சை - தொன்று தொட்டு இயலும் மந்திரியம். 8. வீட்டருஞ்சிறப்பு - கெடுதற்கரிய சிறப்பு. 9. வாய் - மெய்யாம். 10. உறுதி வேண்டி - உதயணன் மனவுறுதி கொள்ளுதலை விரும்பி. 1. புதுமலர்க் கோதை - புதிய பூக்களாற் றொடுத்தமாலை. 2. துன்னுபு சூழ - நெருங்கிச் சூழ்ந்துவர. 3. கவைஇய - சூழ்ந்த (அ) வளைந்த. 4. மகர வெல்கொடி - மகரமீன் எழுதியகொடி. 5. மகிழ்கணைக்காமன் - விருப்பந் தரும் மலர்க்கணையுடைய காமதேவன். 6. ஆற்றிய - ஆற்றுதற்கு 7. கைவல் ஓவியர் - கைத்தொழிலில் வல்ல ஓவியக்காரர். 8. ஒசிய - அசைய. 1. விழவு - திருவிழா. 2. சீர்த்தி - மிக்கபுகழ். 3. விலக்கரும் வேழம் - எளிதில் விலக முடியாத யானை. 4. காயப்படுதிர் - வெகுளப்படுவீர்; வெகுளிக்கு ஆளாவீர். 1. நெருநல் - நேற்று தான்பின் னேவர முன்னே நிற்பார் நீக்கப்பட்டு வழிவிடப்படும் சிறப்பு நினைந்து. “நீக்கச் சென்றனென் நெருநல்” என்றான். 2. நிலையா - செல்வங்கள் நிலைபெறா. 3. யாக்கை - உடம்பு. 4. ஆழிக்கால் - சகடக்கால். 5. செருமீக்கூரிய - போர்பற்றி மிக்கெழுந்த 6. நஞ்சுமிழ் நாகம் - விடத்தைக் கக்கும் பாம்பு. 1. திறலவாகிய - திறலினையுடையவாய். 2. முளையேர் முறுவல் - முளைபோலும் பல். 3. தளைமுதல் பரிந்து - நிறை முதலிய கட்டுக்களையறுத்து. 4. நலம் - அழகு. 5. தன்னமர் விழவு - தன்னை நோக்கிச் செய்யும் விழா. 6. இருநிறை - பெரிய நிறையை. 7. மேவன நுகர்தற்கு - விரும்பியவற்றை நுகர்வதற்காக. தேவர். மேவன செய்தொழுகுவர். (குறள். 1073) 8. கட்டழித்தனன் - நிறை கெடுத்துக் கலக்கமுறுவித்தனன். 9. உலைப்பருந்தானை - கெடுத்தற்கரியதானை. 10. இலக்கெழுந்து குயின்ற - கொழுந்தாகிய இலைகளைப் போல் கைவேலை செய்யப்பட்ட தொய்யலுமாம். 11. நெறியின் திரியா - நெறியிற் பிறழ்ந்து. 1. வளமை - செல்வம். 2. திறல் - வெற்றி. 3. இன்பக்கிழமை - காதலர் தொடர்பு. 4. விழுக்குடிப் பிறவு - உயர்குடியிற்பிறத்தல். 5. வழுக்காமரபு - குற்றப்படாத முறைமை. 6. புதைபூண் வனமுலை - பூண்புதை வனமுலை பூணாரங்களால் மறைப்புண்ட பெரிய முலை. 7. இகல் - பகைவரது மாறுபாடு. 8. மீக்கூறிய - மேம்படப்புகழப்பட்ட. 9. தவலரும் வென்றி - கெடாதவெற்றிச் சிறப்பு. 1. பொருவில் கோலம் - ஒப்பில்லாத அழகு. 2. நச்சுவனர் - விரும்பினவராய். 3. யாணரமைத்த - புதிதாய் ஏற்படுத்தப்பட்ட. 4. தலைப்பெருந்தேவி - பெரிய முதற்றேவி. 5. சிதைவு - குற்றம் 6. ஆசின்று - குற்றமின்றி. 7. துன்னரும் சிறப்பு - நெருங்குதற்கரிய சிறப்பு. 8. வயந்தக் கிழவன் - காமதேவன். 1.பொருட்குறை - பொருள் வேண்டும் குறைபாடு. 2. இவணிராமின் - இவ்விடத்தே இருப்பீர்களாக. 3. வாய்மையாக - உண்மையாக. 1. வானக்கம்பலம் - வானமாகிய கம்பலம். 2. வேலின் - வேல்போல. 2. தீராக்கற்பு - நீங்காத கற்பு. தேவி - வாசவத்தை. 4. பைவிரிஅல்குல் - பாம்பின்படம் போலும் அல்குல். 5.கைவரை நில்லாக் காமவேகம் - கைப்படுத்த டக்கமுடியாத காம வேட்கை. 6. துறுமிய - செறிந்த. 7. தாள் முதல் - அடிப்பகுதியில். 1. பையாந்து - வருந்தி. 2. இயற்கை நோக்கம் - பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றித் தாமே தமித்து இயல்பாக நோக்கும் காமநோக்கம். இயற்கைப்புணர்ச்சிக்குரிய நோக்கம். 3. உள்ளநோயர் - உள்ளத்தே பொருந்திய நோயினையுடையராய். 4. மல்லல் - வளம். 1. படிநலம் பாண்டியம் - உருவத்தாலழகியவண்டி. 2. உராஅய - சென்றதனால். 3. தெய்வத்தானத்து - கோயிலிடத்தே. 4. சூடுறு சேவடி - சூடுதலுற்ற பாதம். 5. கொடுமுடி - மிக்க உயர்ந்த நிலையிடம். 6. குடைய - நீராடுங்கால். 7. அசைவு - தளர்ச்சி; நோய். 1. பருவரல் - வருத்தம். 2. குறிப்பு - மனத்தெழுந்த வேட்கைக்குறிப்பு. 3. அன்றைக் கொண்டும் - அன்று முதல் தொடங்கி. 4. தவலரும் துன்பம் - நீங்குதற்கரிய துன்பம். 5. வல்லவன் - வன்மையுடையனாயுள்ளான்; எனவே அவன் வேறொன்று புனைந்து கோடலும் கூடும் என்பதுகுறிப்பு. 6. புறத்தோர் -வெளியார். 7., வேண்டென - வேண்டிப் பெற்று வருக என்று 1. வள்ளிதழ்க் கோதை - வளவிய பூவிதழ்களாற் றொடுத்த மாலை. 2. உழலும் - வருந்தும். 3. வாங்கி - வளைத்து 4. திண்பால் நெஞ்சு - திண்மைபொருந்திய நெஞ்சம் 5. திண்ணிதிற் கலந்த - மீளவும் நீங்காத வகையிற் கூடிய. 6. நன்னிறையுடையர் - சிறிதும் கலங்காத நிறையையுடையராவர்; “உண்ணிறையுடையவல்ல” (சீவக.) என்பவாகலின், “நாடுங் காலை” என்றான். 7. கடிவரை நெஞ்சினள் - காவலிலே வைத்த நெஞ்சினை யுடையள்; “மகளிர் நிறைகாக்கும் காப்பேதலை” (குறள்.) யாதலின் கடிவரை நெஞ்சினள்” என்றான். 8. வேட்டுழி - விரும்பியவிடமெல்லாம். 9. கொற்றம் - வெற்றிக்கேதுவாகிய வலி. 10 தொடிகெழுதோளி - தொடியணிந்த தோளையுடைய வாசவதத்தை. 11. உய்த்தவட்குரைப்ப - சென்று அவளுக்குச் சொல்ல. 12. நிறை விட்டனளாகும் - நெகிழ்ந்து காதலுற்றா ளென்பது துணிபாம். 13. ஈனமாந்தர் - கீழ்மக்கள். 1. நுண்மதி நாட்டம் - நுண்ணிய மதியொடு நோக்கும் நோக்கம். 2. தண்மதித்தன்று - திண்ணிய அறிவுடைமையாகாது. 3. சந்தக்கண்ணி - அழகிய கண்ணியையுடைய பதுமாபதி. 4. நோக்கிடை நோக்கி - நோக்கும் நோக்கத்துக்கு இடையே நோக்கி. 5. படுகால் - படிகன். 6. நாற்றுவனம் போகி - தொங்கக் கட்டிலிட்டுச் சென்று. 7. திண்ணிதாகுதல் - உறுதியாதல். 1. கேணி - கிணறு. 2. மடமொழி - மடமொழியினையுடைய பதுமாபதி. 3. வையக் கஞ்சிகை - வையத்திற்கட்டியதிரை. 4. தேன் இமிர்புன்னை - வண்டினம் ஒலிக்கும் புன்னை மரம். 5. உகிரிற் பொறித்து - கைந்நகத்தால் எழுதி. 1. தாள்கொள் எல்லை - துடையளவாய தண்ணீரெல்லை. 2. கலிங்கம் - ஆடை 3. திண்ணென அசைத்து - வலியுற வுடுத்து. 4 காரிருங் கூந்தல் - கரிய நீண்ட கூந்தல். 5. செவ்வியின் - செம்மைபோல; காய்நலம் - ஒளிதிகழும் அழகு. 6. மலர்ப்பிணையல் - மலர்மாலை. 7. கனல்புரை நோக்கம் - நெருப்புப் போலச் சுடும் பார்வை. 8. நோய் - காமநோய். 9. செவ்வியுள் - சமயத்தில். 10. இலைவினைக்கம்மம் - வாழையிலையிடத்தே வன்மையுற எழுதிக்காட்டப்பட்ட ஓவியவினை. 11. அப்புபு - அப்பி. 1. கண்ணி - தலையில் சூடும் மாலை. 2. சேயான் - முருகன் போலும் தருசகன். 3. மாயோள் - மாமைநிறமுடைய பதுமாபதி. 4. மலர்த்தகைக் கா - மலர்களால் அழகுற்றிருக்கும் சோலை. 5. இன்னினி - இப்பொழுதே. 6. துன்னரும் தோட்டம் - நெருங்குதற் கரிய தோட்டம். 7. துளங்குவனளாகி - அசைவுற்று. 8. வேறுபட்டனள் - மேனி வேறுபட்டாள். 9. நனி நோக்கி - உற்றுப்பார்த்து. 10. நீரணி ஏஎர் - நீராட்டாற் பிறந்த புத்தழகு. 1. கண்ணுற நோக்கி - கண்ணால் உற்றுப்பார்த்து. 2. கண்ணாற் கூட்டம் - கண்ணால் ஒருவர் ஒருவரைப் பார்த்து உள்ளத்தாற் காதல் கொள்ளுதல். 3. கண்ணியமாயினம் - கண்ணியை யுடையேமாயினேம். 4. அஞ்சில மிழற்றி - அழகிய சில சொற்களைச் சொல்லி. 1. முற்றிழை அரிவை - அழகிய இழையணிந்த பதுமாபதி. 2. செற்றம் - பகை. 3. இவள் கனிந்த காமம் - இவள் பொருட்டு முறுகிய காமவேட்கை. 4. அற்புவார் கொளீஇ - அன்பாகிய கயிற்றைக் கொண்டு. 5. காரிகைமத்தின் - அழகாகியமத்தினால். 6. ஓடுகயல் - ஓடுகின்ற கயல்மீன். 7. நனி நாகரிகம் - மிக்க கண்ணோட்டம். 8. உரப்போர் வென்றி - வன்மை கொண்டு போருடற்றிப் பெறும் வெற்றி. 1. புரவலற்போக்கி - உதயணனை விடுத்து. 2. மற்றோர் உட்கும் - பகைவர் புகுதற்கஞ்சும். 3. முன்னராகி - கண்முன்னே அருகில் உளாராகியும். 4. ஏம நன்னெறி - பாதுகாப்பாகிய நல்ல நெறியை. 5. அருநவையுறாது போதரவு உண்டெனின் என இயையும். நவை - துன்பம். 6. பெறுதி நன்றா எய்தும் - பெறுதல் இனிது அமையும். 1. வனப்பு - அழகு. 2. தேறல் - அழகாகிய தேன். 3. நாணாணாடோறும் - நாடோறும் இடையறவின்றி. 4. இயற்கையேர் - இயற்கையழகு. 5. ஒல்கா- சுருங்காத. 1. பயந்தோன் - பெற்றவனாகிய தந்தை. 2. படைப்பரும் வெறுக்கை - ஈட்டு தற்கரிய செல்வம்; எளிதில் ஈட்டுதற்கரிதாயதே புதைத்துவைத்தற் கேதுவாயிற்றென்பது தோன்ற. “படைப்பரும் வெறுக்கை” என்றான். 3. இசையான் - சொல்லாமல். 4. அயர்த் தொழிந்தனன் - மறந்திறந்தொழீந்தான். 5. வாரி மருங்கற - கடல் தனது நீர்முற்றும். 6. நெற்றித் தாரை - உயர்ந்த நீர்த்தாரை. 7. நுனித்தனென் - கற்றறிந்துள்ளேன். 1. கைபோகி - கைதேர்ந்து. 2. குறை - இன்றியமையாது செயல்வகையில் ஆராய்ந்து காணவும்பட்டது என்றற்குக்“கைபோகி”யென்றான். 3. ஆறாக்காதல் - மிக்க காதல். 4. தோன்றாதோற்றும் - தன்னறிவுக்குத் தோன்றாத நுண்பொருளைத் தோற்றுவிக்கும். 5. எனைத்து - எவ்வளவு 1. காணவா - காண்டல் வேண்டுமெனும் வேட்கை. 2. நன்றி - நலம். 3. தீதற வெறியும் - குற்றமுற்றும் இல்லையாக நீக்கும். 4. வரைமார்பின் - மலைபோலும் மார்பினையுடைய. 5. குயின்றது - பொருந்தியது. 6. நாற்றம் இன்னா - நாற்றம் பொல்லாததாய். 7. கட்காமுறுத்தும் - கண்ணால் காணவேண்டுமென்றாசையுண்டு பண்ணும். 8. விளங்கு அறல் - விளங்கும் நீர்; மணலுமாம். 1. கொடியணி கோயில் - கொடிகட்டியுள்ள அரசன் அரண்மனை. 2. படிஅணி - படிகால் அமைக்கப்பட்ட. 3. நெடித்த வகை - தாமதித்த திறம். 4. உரிமையுள்படுநர் - உரிமைகளில் உறையும் இடத்தே அறியாது வருவோர். 5. தொழுதகையர் - எடுத்துக் கும்பிடும் கையினையுடையர். 6. பயிலாதோர் - பயின்றறியாதவர்; புதியர் என்பதாம். 7. கவலை கொள்ளும் - மயங்குதற் கிடமாகும். 8. பனிமலர்க்கா - குளிர்ந்த பூக்களையுடைய இளமரக்கா. 9. படிமைத்தாகி - தன்மையையுடையதாய். 10. மருள் - மயக்கம். 11.துன்னிய மகளிர் - அருகே வந்த பெண்கள். 1. பேரிசையண்ணல் - மிக்க புகழையுடைய தலைவனான உதயணன். 2. ஆரிருள்போர் வையாக - மிக்க இருளில் மறைந்து. 3. மறையரும் புணர்ச்சி - களவினால் பெறும் இன்பப்புணர்ச்சி. 4. கரப்பறை - பதுங்கும் இடம். 5. பொறிக்கூட்டம் - எந்திர அமைப்பு. 6. புதவணிகதவம் - வலியதாழிணைத்தகதவு. 1. தெவ்வன் - பகைவன். 2. இவன் - தருசகன். 3. அளியியல் செங்கோல் - அருள் புரியும் இயல்பினையுடைய செங்கோன்மை 4. வவ்வல் - கவர்தல். 5. ஏதம் இல்லை - குற்றமில்லை. 6. செருக்கயல் நெடுங்கண் - பொருது விளையாடும் கயல் போன்ற நெடிய கண். 1. வாட்கண் பாவை - ஒளி பொருந்திய கண்ணையுடைய பாவையாகிய பதுமாபதி. 2. வீயா - நீங்காத. 3. வேதமகள் - பார்ப்பனப் பெண்ணாகிய யாப்பியாயினி. 4. அடைந்தோர் - நெருங்கிய நண்பர்கள். 5. நன்பல பயிற்றிய - நல்லபல சொற்களைச் சொல்லும். 6. அமிழ்து - தேவரமுது. 7. சூட்டு - கொண்டை. 8. நறுநீர் - வாசனைகலந்த நீர். 9. செயிர் அற - அழுக்கில்லையாக. 10. வாலிதின் - தூய்மையாக. 11. கைநெரித்து - கையைப் பிசைந்து கொண்டு. 1. என்னதும் - எவ்வளவும். 2. அரவு - ராகு வென்னும் பாம்பு. 3. உரவுக்கதிர் - பரந்த வெண்கதிர். 4. துட்கென - அச்சமெய்த 5. ஆற்ற - மிகவும். 1. அச்ச முயக்கம் - அச்சம் காரணமாகத் தழுவிக் கொள்ளுதல். 2. மேவன - விருப்பம் பயக்கும் சொற்கள். 3. தளைத்தும் - கைகளாற் பிணித்தும். 4. அயின்றும் - உண்டும். 5. நீத்தவர் - துறவியர். 6. துப்புரவு - நுகர் பொருள். 7. பரிந்து - விரும்பி 8. கருவி - வேத நூற்பயிற்சிக்கருவியாகிய அங்கம் ஆறு. 1. கோல்தரும் விச்சை - நரம்புடைய வீணைக்கல்வி. 2. நாடினையாகின் - ஆராய்ந் தனையாயின். 3. அலைத்தல் கற்றல் குறித்தேன் - வெற்றி பெறுமுகத்தால் பிறரை அலைப்பது குறித்துக் கற்றுள்ளேன். 4. தரித்தரல் - நிலைபெறுதல். 5. முதிர்ச்சித்தாகி - முற்றியதாய். 6. பொத்து - புழை. 7. தாரு - மரத்தால். 8. இன்னாதாகியது - தீயதாயிற்று. 1. உற்றார் - உற்ற நண்பர். 2. பெருமொழி - பெரியோர் உரைக்கும் மொழி. 3. இன்பமயக்கம் - இன்பம் பயக்கும் நட்பு. 4. மறாதருள் - மறுக்காமல் செய்தல் வேண்டும். 5. மாடக்கொடு முடி - மாடத்தின் உச்சி. 6. ஆடமை பயிரும் - அசைகின்ற மூங்கிலிடத்தேயிருந்து கூவும். 7. பறவா - பறவாதொழிந்தன. 8. குரங்க - வளைந்து நிற்ப. 9. மைம்மலர்க் கண்ணி - வண்டு மொய்க்கும் மலர் போலும் கண்ணையுடைய பதுமாபதி; மைதீட்டிய மலர்போலும் கண்ணியென்றுமாம். 10. இத்துறை - இந்த யாழ்த்துறை. 11. நயன் உணர் கேள்வி - இசைநலம் தேரும் கேள்வியறிவு 1. உரைப்ப - உரைப்பார்கள். 2. இந்த கைமலிமார்பன் - இந்த அழகுடைய மாலையணிந்த மார்புடைய உதயணன். 1. மதலை - பார்ப்பமைகனே. ஒழுக்கத்துச் சார்பாகும் மதலை போன்றவனே யென்றுமாம். உதயணன் பார்ப்பனவேடத்துடன் இருத்தல்பற்றி இவ்வாறு கூறுகின்றாள். 2. பெரியோன் - நான்முகன். 3. உணராராக - உணராதவராயொழிய. 4. நன்று - மிகவும். 5. சிறுக்கி - சிறிதாக்கி. 6. துன்னரும் - கிட்டுதற்கரிய. 7. இசைவில - பொருந்தாதன. 8. எடுத்தோத்து - எடுத்தோதப்படும் உரை. 9. அவன் - உதயணன். 10 மடவியன். அறியாமையுடையோன். 11. நளித்தொழில் - பெரிய செயல். பொருந்தாச் செய்கை யென்பது குறிப்பு. 12. மாணாக்கியரேம் - மாணாக்கியராயினேம். 1. பண்ணற - சிக்கற. 2. பன்னுதல் - ஆராய்தல். 3. புகர் - குற்றம். 4. புலவு - புலால்நாற்றம். 5. நெடும்புரித்து - நெடிய முடிச்சுடையது. 6. துகள் - மணற்றுகள். 7. தோள்தயர் - தோளைத் தோய்தற் கெழுந்த காமவேட்கைத் துன்பம். 8. குறிவயிற் புணர்ந்து - குறியிடத்தே சென்று கூடி. 9. ஓதல்இன்றி - நீங்குதலின்றி; “ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை” (குறள்.) என்றார் போல. 1.போது - மலர். 2. நங்கைமணமகன் - நங்கையாகிய பதுமாபதிக்கு வந்த மணமகன். 3. இருங்கண் விசும்பகம் - பெரிய இடமுடைய வானகம். 4. நடுக்கமொடு - அசைவுடனே. 1. சங்கமாகி - கூடி 2. வீக்கம் - பெருக்கம். 3. மதுகை - வலி. 4. பிணித்திசினாஅங்கு - கட்டிக் கொண்டது போல. 5. தன்துணை - தன்தங்கை 6. மாதிரம் - திசை. 7. கண்கூடிய - ஓரிடத்தே கூடிய. 8. பொருமுரண் மன்னர் - பொருகின்ற முரண்பாட்டையுடைய வேந்தர். 9. புணர்ப்பிடைப் பிரிக்கும் - நட்பைப்பிரிக்கும். 1. அறைபோக்கமைச்சின் - கேடுசெய்யும் அமைச்சர்களைப்போல. 2. ஊனம் கொள்ளாது - பகைமை கொள்ளாமல். 3. தனித்தர - தனியே விடுக்க. 4. உன்னியது - கருதியது. 5. கோளினம் - கொள்கையுடையேம். 6. சாய்ப்பிடம் - பகைவரைச் சாய்த்துத் தொலைப்பதற்குரிய இடம். 7. கடுத்த - பகைமிகுவந்த 8. உடைத்தபின்றை - தோல்வியுறச் செய்த பின்பு. 9. அற்றம் - சோர்வு. 1. வாணிகவுருவினமாகி - வணிகர் வேடங் கொண்டு சென்று. 2. ஆணத்தானை - ஆணைவழி நிற்கும் தானை; ஆணை ஆணமெனநின்றது; பாதுகாப்புமாம். 3. கிளைமை - கேளிராம் தன்மை. 4. உளமை - உளனாம் தன்மை. 5. மன்றல் - திருமணம். 6. பொன்துஞ்சு இளமுலை - பொன்போலும் திதலைபொருந்திய இளமுலை. 1. வாசிவாணிகம் - குதிரைவாணிகம். 2. உழப்பேம் - செய்து வருகின்றேம். 3. ஒன்பதிற்றியாட்டையன் - ஒன்பதுயாண்டுகள் எம்மோடு பழக்கமுடையன். 4. இருந்தனம் - காலங்கருதி யிருந்தேம். 5. இயக்கி - முழக்கி. 6. அயிலிற் புனைந்த - கூர்மையுண்டாகச் செய்த 7. வெயில்புரை - ஒளியால் உயர்ந்த. 8. கண்படையகத்தே - உறங்கும் பொழுதின்கண். 9. நூறி - அழித்து. 10. தொலைச்சி - வெட்டித்தள்ளி. 1. பாடி - போர்ப்பாசறை. 2. செவிசெவியறியாச் செயலினர் - பிறர் செவி யறியாமல் மிக்க இரகசியமான செயலினையுடையனாய். 1. உகவை - மகிழ்ச்சியாக; உயர்வாக. 2. கோடாச் செங்கோல் - வளையாத செங்கோல். 3. ஓடா - பின்னிடாத. 4. வேவு - தீப்பற்றி வேதல். 5. தேவி - வாசவதத்தை. 6. தீர்ந்து போகிய - நீங்கியொழியவேண்டுமென்று. 7. சலம்தீர் - வஞ்சமற்ற. 8. சிறப்புடைக்கிழமை - மிக்க அன்புடைநட்புச் செயல். 9. அகப்பாட்டாண்மையனல்லதை - மிகவும் நெருங்கிய நண்பனாதற்கியையுடைய வனல்லனென்பதை. 10. வேறலன் - வேறுபட்டவன் அல்லன். 1. மாறு - போர். 2. ஓட்டியது - வென்று துரத்தியது. 3. பண்ணிகாரம் - காணிக்கை 4. முற்பாற்கிழமை - முன்னை நட்புரிமை. 4. நற்குயாப்புறீஇ - நன்கு நிலைபெறச் செய்து. 5. இரவு எறிந்து - இராப் போதில் தாக்கி. 7. கார்போற் கிழமை - கண்ணைக் காப்பது போலும் உரிமை. 8. வீணை - யாழிசைக்கும் கலை. 1. அணித்தக - அழகுற. 2. தொன்றுமுதிர்தொடர்பு - தொன்றுதொட்டுப் பெருகி வரும் நட்பு. 3. அளைஇ - கலந்து. 4. எள்ளி - இகழ்ந்து. 5. இன்னாமன்னர் - பகைவேந்தர். 1. மறைஇ - மறைந்து. 2. போந்திலர் - வாராதொழிந்தனர். 3. வேந்தனில் வந்தோர் - வேந்தனால் விடுக்கப்பட்டு வந்தோராவர். 4. ஏல்வன்று - பொருத்தமன்று. 5. இளிவு - தாழ்வு. 6. முந்துறீஇ - முந்துறக் கொண்டு. 1. இலை கொடிச் செல்வம் - இலையும் கொடியுமாகிய கூட்டம். 2. தலைப்பரந்து - மிகவும் விரிந்து. 3. இகணை - ஒருவகைமரம். 4. பணைக்கால் - திரண்டஅடி. 5. தொலைச்சி - வெட்டித்தள்ளி. 6. வெங்கண் செய்தொழில் - வெவ்விய பகைமையைச் செய்யும் தொழில். 7. மறு நோய் மாக்கள் - நீங்கிய நோய் மீளவும் வரப்பெற்றோர். 8. தூக்கமின்றி -தாழ்த்தலின்றி. 9. கரந்து - மறைத்து. 10. பரிவு - துன்பம். 1. எறிந்த னெனகற்றி- அழித்தொழித்து. 2. மாற்றோர் - பகைவர். 3. அவலம் - வருத்தம். 4. இரியின் - அழிவேனாயின். 5. மலைந்து - பொருது. 6. இன்னாத்தரூஉம் - துன்பத்தைப் பயக்கும். 7. எடுத்துநிலை - பழமைபோல் எடுத்துநிறுத்துதல். 8. அடற்றொழில் - போர்த்தொழில். 9. இருங்கவுள் - பெரியகபோலம். 10. வீறு - சிறப்பு. 11. தேற - தெளிய. 12. மாறுமொழி - விடை. 1. அற்றம் - இடையூறு. 2. அற்றுமன்றி - அன்னதேயன்றி. 3. பற்றாமன்னர் - பகைவேந்தர். 4. கிளையோ - உறவுடைமையாகுமோ. 5. புறஞ்சொல் - பழிப்புரை. 6. கிளந்து - தானே ஏறட்டுக் கொண்டு. 7. மாண்டவத்தவர் - மாட்சிமை பொருந்திய வத்தநாட்டவர். 8. வெம்முரண் வீரன் - வெவ்விய மாறுபாட்டையுடைய வீரர்கள். 8. நூறுதல் - அழித்தல். 10. உடன்று - தாக்கி. 11. இற்றுஇது - இப்போது இதனை. 12. வெந்திறல் - வெவ்விய திறலையுடைய. 13. ஏதம் இன்றி - குறைபாடின்றி. 1. நூக்கல் - செலுத்துதல். 2. கண்ணார் தகைய - கண்ணுக்குநிறைந்த அழகுடைய. 3. நீற்பாற் புறத்தன - நீலநிறத்தைப் பக்கத்தேயுடையன. 4. புகர் - குற்றம். 5. இரும்பிடர்த்தலை - பெரிய கழுத்து. 6. உயர்ச்சியுள்ளம் - உயர்ந்தது கருதும் ஊக்கம். 7. எந்நூற் கண்ணும் - எல்லாநூல்களையும் கற்று. 1. பவ்வம் - கடல். 2. வவ்வற்கு - கவர்ந்து கோடற்கு. 3. கெடலருஞ் சிறப்பு - கெடுதற்கரிய சிறப்பு. 4. உடலுநர் - பகைவர். 5. கூறுபட - பகுதிப்பட. 1. நிவத்தரும் - எழும். 2. அரிபெய்புட்டில் - உள்ளே பரல் பெய்யப்பட்ட கெச்சை; சதங்கையுமாம். 3. கார்முகக் கருமுகில் - வில்லாகிய கரிய மேகக்கூட்டம். 4. திரிதரும் - திரிகின்ற; 5. மாற்றவர் - பகைவர். 6. மறத்தான் - பகைமையால். 7. நிறத்தேறுண்டு - மார்பில் வேலும் அம்பும்தைப்புண்டு. 1. இறுதி - வீழ்ச்சி. 2. பாழி - வலிமை. 3. தீர்ந்து - நீங்கி. 4. கேளல்மன்னன் - பகைவேந்தன். 5. துஞ்சி - கொலையுண்டு. 6. மாகவிசும்பு - துறக்க வுலகம். 1. என்னான் - என்றுகருதாமல். 2. இடுக்கண் - துன்பம். 3. தத்துவ நெஞ்சம் - எவ்வுயிரும் தன்னுயிரொப்பக் கருதியொழுகும் நெஞ்சம். 4. வலிகெழு நோன்றாள் - வன்மை பொருந்திய பெரிய தாள்கள். 5. தகையேர் சாயல் - அழகுபொருந்திய மென்மை. 6. மிக்கது என்போர் - மேலாம் என்பார் 7. வீய்ந்தனன் - இறந்தனன். 8. வாயின் மிகுத்து - வாய்தவறி. 9. நன்னர் - நன்றி. 10. பௌவம் - கடல். 1. தரப்பெற்றும் - வந்திருக்கப்பெற்றும். 2. கோலம் - அழகு. 3. கொடாஅமாகுதல் - கொடாது போதல். 4. வலித்ததை - நினைத்ததை. 5. கேண்மை - காதற் கிழமை. 6. திரிதலின்று - மாறாது. 7. ஒருமையுள்ளம் - ஒருநெறிப்பட்டமனம்; கற்பு மாண்பு. 8. சூழ்வனள் இருப்ப - நினைந்திருக்க. 1. பயங் கெழுவையம் - வளம்பொருந்திய உலகம். 2. விழுத்தினை - உயர்குடி. 3. ஆரஞருழக்கல் - துன்பமுற்றுவருந்துதல். 4. நிறைவலி - நிறைந்த வலியையுடைய அரசன். 5. அச்சம் நீக்குநர் - துன்பம் துடைப்பவர். 6. என்றலை - என்னிடம். 7. அற்றமில் நண்பின் யாப்பு - குற்றமில்லாத நட்பாற் பிறக்கும் தொடர்பு. 8. சுற்றப்பந்தம் - சுற்றத்தாற் சுற்றப்படுதல். 9. நாட்பூங்கா - நாட்காலத்தே மலரும்பூக்களையுடைய சோலை. 10. கரந்து - மறைந்து. 11. அறிந்ததை யொன்று கொல்லோ - அறிந்தானாதல் வேண்டும்; அல்லது 1. அவிந்தனன். இறந்தான். 2. இவற்கு ஈதல் பொருள் - இவற்குமணஞ்செய்து கொடுப்பது சிறப்பு. 3. கூந்தல் - கூடந்தலையுடைய பதுமாபதி. 4. படிமை - வகை. 5. மாதர் - வாசவதத்தை. 6. அமைச்சன். - யூகி. 7. அவட்கு - வாசவதத்தைக்கு. 8. ஆழ்ந்த காலை - மறைந்தவிடத்து. 9. புன்சொற் கட்டுரை - இழிவுபயக்கும் சொல். 10. நிறத்தேறு எஃகு - மார்பிற்றைக்கும் வேல். 11. ஒழிக - இம்மணப் பேச்சினைக் கைவிடுக. 1. அருமறைநாவின் அந்தணன் - அரியமறைகளை யோதும் நாவினையுடைய அந்தணன். 2. இருமுது குரவர் - தாய்தந்தையர். 3. ஏதம் தீர - குறைநீங்க. 4. கிரிசை - செய்கை. ஒழுக்கமுமாம். 5. இதன்பால் - இந்த மணவினைக் கண். 1. தேன்புரை தீஞ்சொல் - தேன் போலும் இனிய சொல். 2. கணங்குழை - கூட்டமான குழை முதலிய அணிகள். 3. வணங்குசிலை - வளைந்த வில். 4. நாகரிகம் - கண்ணோட்டம். 5. கொற்றவி - இராசமாதேவி; தருசகன் தாய். 6. மாணகன் - பார்ப்பனவுருவில் உதயணன் கொண்டிருந்த பெயர். 7. வெந்நோய் - வெவ்விய காம நோய். 8. ஆணமாகிய ஆயிழை - பாதுகாக்கும் தோழி. ஆணம் - பற்றுக்கோடு. 9. நினைஇ - நினைந்து. 10. மடுத்தணிகலன் - செறித்தணியும் ஆபரணங்கள். 11. வடுத்தீர் வதுவை - குற்றமற்ற திருமணம். 12. மெல்லியற்புல்லி - நாணத்தால் மெலிந்து நிற்கும் யாப்பியாயினியைத் தழுவி. 1. வையங்காவலன் - நிலவுலகைக் காக்கும் வேந்தன். 2. யாப்புடை நெஞ்சம் - நிறையழியாத மனம். 3. வடிநூல்வயவன் - குற்றமற்ற நூல்களைக் கசடறக்கற்ற வீரன். 4. உறுவரை மார்பன் - உயர்ந்த மலைபோன்ற மார்பையுடையவன். 5. வசையில் நோன்றாள் - குற்றமில்லாத வலியதாள். 1. துன்னிய தோழன் - நெருங்கிய நண்பன். 2. அதிரா நன்னிறை - கலங்காத திண்ணிய நிறை. 3. கதுவாய்ப்படீஇ - குற்றப்பட்டு. 4. தணத்தல் தகுமோ - நீங்குவது கற்புடை மையாமோ. 5. பாவை - ஓவியவுருவம். 6. என்னும் - சிறிதும். 7. ஓராங்கு - ஒருதலையாக. 8. தேறலும் - தெளிதலும். 9. திருத்தகைத்தன்று - செம்மையாகாது. 10. தங்கா விருப்பு - அடங்காத காதல். 11. ஓவியப்பாவை - ஓவியத் தெழுதிய உருவம். 1. வலைப்படுத்தனை - நின்வசப்படுத்திக் கொண்டாய். 2. சேரார் - பகைவர். 3. மது நாறைம்பால் - தேனின் மணங்கமழும் கூந்தல். 4. மண்ணுவினை - நீராட்டுங்கலம். 5. மையணி உயர்நுதல் இருங்களிறு - கரிய வுயரிய நெற்றியையுடைய பெரிய யானை. 6. ஏதமில் காட்சி - ஐயந்திரிபில்லாத மெய்யுணர்வு. 7. கடி - திருமணம். 8. இரீஇ - இருக்கவைத்து. 9. விழுத்தகு வேள்வி - மேன்மை பொருந்திய வேள்வித் தொழில். 1. திருக்கடம் - திருமணச்சடங்கு. 2. ஒன்றுபுரியொழுக்கு - ஒன்றியிருந்தாற்றும் அறவொழுக்கம். 3. பரூஉத்திரள் - பருத்ததிரண்ட. 4. படியிற்றிரியாது - உருவவழகில் வேறுபடாது. 1. நன்னர் ஆற்றிய - நன்கனம் செய்த. 2. சுற்றமாதலின் - தங்கைக்குக்கணவனாகிய உறவினனாதலால். 3. அற்றம் - குறைகள். 4. நன்னாடுகொற்றம் கொண்டு கொடுத்தல் - நன்னாட்டை வென்றுகொண்டு இவ்வுதயணற்குக் கொடுப்பது. 5. உடற்றுநர் - போர் செய்யும் பகைவர். 2. நீட்டம் - தாமதம். 1. கையடுத்து - அடைக்கலப்படுத்தி. 3. ஒற்றொற்றியவரை ஒற்றினாய்ந்து - ஒற்றர் ஒற்றிவந்த செய்தியை அவரறியாமல் வேறு ஒற்றரால் அறிந்தாய்ந்து. 4. ஊர்மடிகங்குல் - ஊரார் உறங்கும் இரவுப்போது 5. ஆருணி தொலைச்சி பாஞ்சாலராயனான ஆருணி வேந்தனைக் கொன்று. 6. கோற்றொழில் - அரசாட்சி. 1. பீடு கெழுதானை - பெருமை பொருந்திய தானை. 2. கிளைமைக்குணம் - உறவினனாகும் தன்மைக்குரிய குணம். 3. ஓடுகால் இளையர் - ஓடுகின்ற காற்றுப்போற் செல்லும் வீரர். 4. தீது வேண்டா நிலைமையனாகும் - பகைமை கொள்ளாது அன்பு கொள்ளும் இயல்புடையவனாவான். 5. மலைத் தலைத் தொடுத்த - மலையினின்று தோன்றி வருகிற. 6. தவிர்தலின்றி - தங்காமல். 7. நிலைக்களந்தோறும் - நிற்றற்குரிய இடந் தோறும் (Stategic Points) 8. சேணில மன்னர் - சேய்நாட்டிலுள்ள வேந்தர். 9. குறி - குறிக்கோள். 10. நேமியந்தடக்கை - சக்கரமேந்தும் பெரியகை. 11. வலம்படுவினைய வாகுக - வெற்றிபெறும் வினைகளைச் செய்துமுடிப்பனவாகுக. 1. பின்னிணைக்குமரர் - பின்னே பிறந்த இருவராகிய குமரர். 2. இன்னாக்காலை தக்ககாப்பில்லாத துன்பக்காலம். 3. பருமயானை - பருமம் அணிந்த யானை. 4. நூறலின் - தாக்குதலால். 5. நோற்றோர் ஒடுங்கும் -தவஞ்செய்வோர் சென்று தங்கும். 6. குண்டுகயம் - ஆர்ந்தமடு. 7. வளியியற்புரவி - காற்றுப்போற் செல்லும் குதிரை. 8. இவண் அகம் விரும்பாது - இவ்விடத்தைவிரும்பாது; இவணகம், அவணகம் என்பன இவ்விடம் அவ்விடம் என்னும் பொருளிலும் வழங்கும். 1. ஆரரணகரம் - கொள்ளுதற்கரிய மதில் சூழ்ந்த கோசம்பிநகரம். 2. தலமுதற்கெடுநோய் - தங்கள் நாட்டினையிழத்தலால் வரும் துன்பம். 3. ஓர்த்தனம் தேறி - ஓர்ந்துணர்ந்து 4. சேர்த்தியில் செய்கை - பொருந்தாச் செய்கை. 5. பீடற வெருளி - பெருமை கெடுதற்கஞ்சி. 7. கொற்ற இறைவி - அரசமாதேவியாகிய தாய். 8. குற்றேல் - குற்றேவல். 8. இறைமீக்கூறிய - அரசர்களில் உயத்துக்கூறப்படும். 9. மறு வொடுபெயரிய மதலை - சக்கர ரேகையாகிய மறுவணிந்து இலக்குமணன் என்ற பெயர் பெற்ற இளையவன். 10. ஆனாப் பெரும்புகழ் - அமையாத பெரியபுகழ். 11. வன்கணின் நீத்தனம் - மனத்தின் வன்பாட்டால் ஒழிந்தேம். 12. இம்மை - இவ்வுலக இன்பவாழ்வு. 13. நெறியின்மையின் - பெறுதற்குரிய நெறியில்லாமையால். 1. கடுவினை - தீவினை. 2. எள்ளுமாந்தர் - இகழ்ச்சி செய்யும் பகைவர். 3. பன்னற் பஞ்சி - பன்னப்படும் பஞ்சி. 4. அவர் - பகைவர். 5. பொரக் குறையிலம் - பொருதற்குக் குறைபாடு இல்லேம். 6. தளையவிழ் கோதை - அரும்பு மலர்ந்த பூவாற்றொடுக்கப்பட்ட மாலையணிந்த வாசவதத்தை. 7. புன்மை நீக்கிய - தாழ்வு நீக்கிக் கோடற்கு. 8. உண்மைச்செய்த - முற்பிறப்பிற்செய்த. 9. தவத்தன் - தவத்தையுடையேன். 1. கடுவன் - ஆண்குரங்கு. 2. உரறி - ஆர்ப்பரித்து. 3. இகழ்ச்சியேதம் தலைத்தது - இகழ்ந்திருந்ததாகிய குற்றம் தீங்குபயத்தலைத் தலைப்பட்டது. 4. புறத்தசைய - முதுகிலே கிடந்தலைய 5. தெற்றென - தெளிய; தெற்றென அறியாள் இரங்கியென இயைக்க. 6. வெய்துயிர்ப்பளைஇ - பெருமூச்சுவிட்டு. 7. கூற்றிடம்புக்கு - எமன்வாய் நுழைந்து. 8. அமைத்த - நிருமித்த. 9. ஈன் - இவ்விடத்தே. 10. உருத்து - வெகுண்டு. 1. முரவும்தூம்பும் - முரசம் பெருவங்கியமென்னும் இசைக்கருவியும். 2. பாம்புரி - சூளோடியென்னும் மதிலிடத்துப்பகுதி. 3. ஒடுக்கி - அடைத்து. 3. கொடுந்தாழ் நூக்கி - வளைந்த தாழைச் செலுத்தி. 5. கல்லிடுகூடை - மாற்றார் மேல் எறிதற் பொருட்டுக் குவித்து வைக்கப்படும் கற்கள் பெய்த கூடை. 6. படிவத்தோர் - விரதியர். 7. அற்றமின்றி - தவறாமல். 8. இகந்து - இகப்ப. 1. இரவு - இராக்காலம். 2. மேந்தோன்ற - மேம்பட்டுத் தோன்றுதற்கு. 3. வலித்தது - கருதியது. 4. தலைத்தலை - இடந்தோறும். 5. நிதிப்பயம் - செல்வமாகிய பயன். 6. முற்றுபு - வளைத்துக் கொள்ள. 7. அற்றம் - தோல்வி. 1. பெருமீக் கூற்றம் - பெரியோருரைக்கும் பெருமொழி. 2. ஆன்நிலைப்படாது - அவ்விடத்தே வாராது. 3. புணரின் - வருவார்களாயின். 4. அற்றப்படீஇயர் - அழிவு றுவானாயின். 5. திண்ணிதின் - திட்பமாக. 1. ஒன்னாரோட்டிய - பகைவரைத் துரத்திய. 2. உவர்த்தூதல் - அன்பறுதல். 3. சிவக்கும் - அடிக்கடி வெகுள்கின்றான். 4. நடையழியினன் என இயைக்க; ஒழுக்கமில்லாதவன். 5. இகழன்மின் - சோர்ந்திராது காவல்புரிக. 6. ஓம்புற - பாதுகாப்பாக. 7. தீரினும் தீர்தும் - மாளினும் மாள்வோம். 8. ஒருவனாக - ஒருமனப்பட்டவனாக வருவாயாயின். 9. ஒட்டாமன்னன் - பகைமன்னன். 10. நட்டானாகி - நண்பனாகக்கருதி. 11. தண்டத்தலைவன் - தானைத்தலைவன். 12. படலை - மாலை. 1. திண்பாற்றாக - திண்ணிதாக. 1. ஊர்கடல் - பரந்த கடல். 2. திரிதலின்றி - பிழைபடாமல். 3. பரிதல் - வருந்துதல். 1. சூழ்ச்சி - மதிநுட்பமுடைய. 2. சார்ச்சியை - சாரச்செய்வதை. 3. புதைவனர் - மறைந் திருந்து. 4. தண்டந்தூக்கி செய்தற்குரிய - தண்டனையாராய்ந்து. 5. நண்புடையாளன் - நண்பனாகிய வருடகாரன். 6. அதிராச் செலவினை - நடுங்காத செலவினையுடையவாகிய. 7. முதிராயானை - இளமைபொருந்தியயானை. 8. சேனைவாணிகம் - சேனைக்குத் தந்தது போக எஞ்சியதைப் பிறர்க்குவிற்கும் வாணிகம். 1. வடு - குற்றம். 2. பணியின் - கட்டளைப்படி. 3. குவடு - மலையுச்சி. 4. வஞ்ச காந்தை, கந்தவதி யென்பன ஆறுகள். 5. ஒடுங்கினர் - தங்கியிருக்கின்றனர். 6. வருவாய் - கால்வாய். 7. தொலையநூறின் - முற்றவுமழியுமாறு தாக்கினால். 1. உருள்படி - உருளையொடு கூடியபடி; தவறிய வழிக் கீழே தள்ளுவது. 2. யாப்புற - செம்மையாக. 3. வாரி - யானையைப் பற்றுதற்கு அமைத்த பொய்யிடம். 4. பாரம் - சுமை. புதிது பற்றிய யானைமேல் மிக்க சுமையை வைத்து அடக்குவது மரபு. 5. இயைந்தது - கைகூடிற்று. 6. வாரிப் பெரும்படை - கடல் போலும் பெரிய படை 7. புதையா - மறைத்து. 8. நோன்றாள் - வலியதாள்களையுடைய 1. பெயர்த்தும் - மீட்டும். 2. அகைத்தது - பறவைகள் தீநிமித்தமாக வொலித்தது. 3. ஏன்று - பகைவரை எதிரிட்டுக் கொண்டு. 4. தடைபாடு - மிக்க தடை அகற்றிய அறிந்து - அகற்றுதற்குரிய நிலையையறிந்து கொண்டு. 5. இயமரம் - இசைக்கருவி. 6. வெற்பொலி - மலையிடத்து எதிரொலி. 7. திமிரம் - இருள். 8. அமர்மயங்கமயம் - போரிற் படைகள் தம்முட்கலந்து பொருங்காலத்தில். 9. தூசி - கொடிப்படை. 10. இலங்கின - விளங்கின. 11. தோமரம் - எறியும் ஒருவகைப்படை. 12. குஞ்சரம் - யானைகள். 13. வார்ந்தன - பெருக்கிட்டொழுகின. 14. செந்துகள் - சிவந்த மண்பொடி. 15. பூழி - புழுதி 16. வெப்பம் - சினமிகுதி. 1. பெரும்படைச் செற்றத்திருங்கடல் - பெரிய சினமிக்குப் பொரும் படையாகிய கடல். 2. குஞ்சரக் கொண்மூ - யானையாகிய கருமுகில். 3. காலியல் இவுளி - காற்றுப்போலும் குதிரை. 4. கணைத்துளி - கணையாகிய மழை. 5. தாங்கருங் காதல் - மிக்க காதல். 6. ஆர்தர - நிறைந்து வர. 7. ஒன்னாப்பகை - நின்னொடுபொருந்தாத பகைவன். 1. தலைப்பெய்தேற்றலின் - நேர் கொண்டு பொருதலின். 2. வசத்ததன்றி - ஆருணியின் வசப்படாமல். 3.நல்குழநிற்றர - தளர்ந்து நின்றொழிய. 4. வானவன் - இந்திரன். 5. கவின் - சிறையுடைமையாற் பெற்றிருந்த அழகு. 6. வீழா - வீழ்த்து. 7. கவிய நூறி - கவிழ்ந்து வீழத்தாக்கி. 8. தகர - கெட. 9. துளங்க - அறுந்து உதிர. 10. உறுதி ஏய்பு - உறுதி கொண்டு. 11. ஏடுபடத் திருகி - எடுபடுமாறு தாக்கி. 12. மால் முதல் வகை - திருமாலாகிய முதல்வனுடைய பிறப்புவகை. 13. நான்மறையாளன் - பரசுராமன. 14. மன்னவன் - கார்த்தவீரியன். 1. கொற்றவாயில் - வெற்றிக் கொடிநிற்கும் கோட்டைவாயில். 2. படுத்தனன் - கொன்றொழித்தான். 3. அகற்றுமின் - அகலத்திறந்து வைம்மின்; அரசன் வருங்கால் வாயிலடைத்திருத்தல் மங்கலமன்மையின் இது கூறுகின்றான். 1. பட்டிகை - written document of his Royal prodam----. 2. நன்னாட் கொண்டு - நன்னாட் போது நோக்கி. 3. கங்கை நீத்தம் - கங்கையாற்று நீர்ப்பெருக்கு. 4. மடுத்தாங்கு - கலந்ததுபோல. 5. துரம் - முழா. 6. மாசனம் - மிக்க மக்கள். 7. சிறப்ப - மிகுந்து நிற்ப. 1. கண்ணியர் - ஏனாதி. காவிதி முதலிய பட்டம் குறித்த கண்ணியையுடையோர். 2. முட்டில் கோலம் - குன்றாத அழகு 3. நோற்றோர் - துறவிகள். 4. துவன்றி - நிறைந்து. 5. அடியுறை - அடிப்பணி. 1. தேவதானம் - கோயில்கட்கு விடப்படும் தானநிலம். 2. அருகத்தானம் - அருகன் கோயில். 3. வாவி - குளம். 4. தேவகுலம் - தெய்வங்கட்குரிய கோயில். 5. புதைந்தவை - சீரழிந்தவை. 6. தம - தம்முடையவை. 1. ஒரீஇ - நீங்கி. 2. ஆற்றாதாக - மாட்டாதாக. 3. உட்குறு செங்கோல் - தீயோர்க்கு அச்சத்தைப் பொருந்திய செம்மைநீதி. 4. தொட்டவும் - செயற்கையாய்த் தோண்டப்பட்ட கேணிகளும், ஏரிகளுமாம். 5. பொய்யமாரித்தாகி - தப்பாத மழையினையுடையதாய். 6. தண்டா வின்பம் - குறையாத இன்பத்துக்குரிய செல்வம். 7. குரல் ஏனல் - கதிர்களையுடைய தினை. 8. முஞ்ஞை - முன்னைக் கொடி. 9. புன்புலம் - புன்செய்நிலம். 10. படைமிளிர்த்திட்ட - உழுபடையால் உழுது உள்ளிருப்பதை மேற்படுத்தி விளங்க வைத்த. 11. யாணர் - புதுமை. 12. வண்டல் - மகிளர் விளையாட்டு. 13. கவ்வை - ஆரவாரம். 14. பொலம்புள் - பொன்னிறமான பறவைகள். 15. அரம்பு - குறும்பு. 16. வினைதல் ஓவா - விளைவுகுறையாத. 17. பட்டிநியமம் - சிற்றூரும் கடைத் தெருக்களும். 1. முனிதல் செல்லான் - வெறுப்பின்றி நுகர்வானாய். 2. மட்டுவினை கோதை - தேன் பொருந்திய பூமாலையணிந்த பதுமாபதி. 3. பாடு - மறைதல். 4. இன்பக் கிழவன் இடம் - காமன் கோட்டம் வகையென்றதனால் அதனருகேயுள்ள சோலையும் வாவியும் கொள்க. 5. இன்மகிழ்வு - இன்பநுகர்ச்சி காரணமாகப் பிறக்கும் மகிழ்ச்சி. 6. திருவிழை தகைத்தா - திருமகள் நீங்காது உறைதற்கு விரும்புதற்குரிய தகைமையினையுடையதாக. 1. அடவி - காடு. 2. நன்னர்க்கு - உதவிக்கு. 3. மறவியின்மை - மறவாமை 4. கோடுயர் வரைப்பு - உயர்ந்த கோபுரங்களையுடைய இடம். 5. ஈடமை படிவம் - அழகமைந்த உருவம்; சுதையால் செய்து இடப்பட்ட படிவமென்றுமாம். 6 அழிவு - துன்பம். 7. அரும்பதம் - உயர்ந்த சோறு; உணவுமாம். 8. பெருந்தளி - பெரிய கோயில். 1. சாலை - உணவுச்சாலை. 2. பாலமைத்து - பக்கத்தே ஏற்படுத்தி. 3. காப்பிய வாசனை - புராணம்படித்தல். 4. ஏண்தொழில் - நிலைத்ததொழில் 5. தலமுதல் ஊழியில் - நிலத்தே முதல்யுகத்திலே 6. புலமகளாளர் - அறிவாகிய மகளையாளும் தலைவர்; அறிஞர் என்பது. 7. வாக்கமை பேரியாழ் - நன்கு திருத்தம் அமைந்த பேரியாழ்: ஆயிரம் நரம்புடைய யாழாதலின் பேரியாழெனப்பட்டது; இதனை ஆதியாழென்றும் கூறுப. 8. செலவு முறை - “செலவெனப்படுவதன் செய்கைதானே. பாலைபண்ணே திறமே கூடமென, நால்வகை யிடத்து நயத்ததாகி, இயக்கமுகடையுமெய்திய வகைத்தாய், பதினோராடலும் பாணியுமியல்பும், விழிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே” (சிலப். கானல். அரும்.) 9. பண் - நிறை நரம்புடையது. 10. திறம் - குறை நரம்புடையது. 11. சிவண் - பொருந்தி. 12. நயக்கரணம் - செலவு முறைக்கு இடமாம் கரணமாகிய பாலை, பண், திறம் கூடம் என்ற நான்கிடத்தும் பிறக்கும் நயப்பாடு. 13. நாரத கீதம் - நாரதர் செய்த பஞ்சபாரதீய மென்னும் இசைநூல்; இது தமிழ்நூல்; வடநூலன்று அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம் காண்க. 1. கரப்பமை - மறைதற்கமைந்த. 2. தண்ணிசை - குளிர்ந்த இசை. 3. செற்றியசை தர - செறிந்து மொய்க்க. 4. கடி - அச்சம்; நறுமணமுமாம். 5. போகா - நீங்காவாய். 6. இறப்பவும் நிற்ப - செயலற்று நின்றொழிய. 1. அவன் - அவ்வருஞ்சுகன். 2. அருங்கலவெறுக்கை - பெறற்கரிய அணிகலன்களும் செல்வமும். 3. இருக்கப்பெறாஅய் - இருத்தல் வேண்டா 4. நல்கி - கொடுத்து விட்டபின்னர். 5. உலவா விருப்பு - தளராத விருப்பத்துடன் 1. ஆர்தல்-நுகர்தல்; 1. விருந்தின் மன்னர்-புதுவதாக வரும் அரசர். 2. அவர்கள்-வாசவதத்தை, சாங்கியத் தாய், யூகி என்பவர். 3. நகர்-கோசம்பி நகரம். 1. கவுள்-கன்னம், மதம்: 2. கிளவி-சொல் 1. புரை-ஒப்பு, உயர்வு 2. ஞான்று-பொழுது 3. விளிந்தனள்-இறந்தாள் 4. சின்மொழி-சிலசொல் 5. மாதர்-வாசவதத்தை 6. வளை - மூங்கில் 7. விஞ்சையர்-யாதோர் (கந்தருவர்) 8. வழுக்கில்-குற்றமில்லாத 9. திருமகன் - திருமால் போன்ற மைநதன். 1.உவத்தி-விரும்புகிறாய் 2. கரவாது-மறையாது 3. மழைக்கண்-குளிர்ந்தகண் 1. சேக்கை-இருப்பிடம், படுக்கை 2. உழைக்கலச் சுற்றம் - பரிவாரத்தர் 3. துகில்-உடை 4. வாட்படை மறவன்-வயந்தகன். 5. சேட் புலம்பு அகல - நெடிய துயர் நீங்க 6. இரீஇ-இருக்கச் செய்து 7.விதியுளி-முறையாக. 1. வரைப்பின்-எல்லையில் 1. நீவி-தடவி 2. ஆகத்தசைகி-மார்பில் சார்த்தி 3. இனையாது-வருந்தாது 4. ஏதிலை-அயலால் 5. ஆற்றிய-பொறுத்த 6. கேள்வன்-கணவன் 7. நனிவேண்டி-மிகவிரும்பி. 1. பையென-மெல்லென; 2. எழீஇ-எழுப்பி, மீட்டி; 3. மருங்குல்-இடை; 4. கண்படை கொள்ளல்-துயிலுதல். 5. ஏமுறு வேட்கை-பாசக்காப்பாகிய விருப்பம். 1.ஊறில்-இடையூறு இல்லாத; 2. அமைச்சர்-யூகி; 3. இகத்தல்-கடத்தல் 4. கயத்தியேன்-கீழாம் தன்மையுடையேன்; 1. மேற்கோள் உறக்கும் துணையதோர் ஆலம் வித்தீண்டி இறப்ப நிழற் பயந்தாங்கு - நாலடி 38, 2. சலமில்-வஞ்சமில்லாத. 1. கணங்குழை-திரண்ட கூந்தலை உடையாள் 2. திருவிரண்டு-திருமகள் இருவர்; 3. பொருவரும் - ஒப்பில்லாத; 4. பொற்ப-பொலிவுற; 1. வழுக்கிய-தவறிய; 2. இழுக்கம்-இழிவு; 3. அத்துணை-அவ்வளவு 4. பெருமகள்-வாசவதத்தை; 5. என் குறை-என் வேண்டுதல். 1. விருத்தி-சிறப்பான வாழ்வுக்கு; 1. தொன்றிற் கொண்டு-பழமையாகக் கொண்டு; 2.புறத்திடாது-ஒதுக்கி விடாது. 3. தூக்கி நாடி-ஆராய்ந்து விரும்பி. 1. உரை - புகழ் 2.பிரச்தோதனன் உதயணன் ஆயோர் குலம். 3. கோடல் - கொள்ளுதல் 4. பொச்சாப்பு ஓம்பி - சோர்ந்திருக்கும் வாய்ப்புக் கருதி. 5. புதைஇ - மறைத்து; 6. எமர் - எம்மவர்; 7. எற்பயந்தெடுத்த கோமான்-என்னைப் பெற்றெடுத்த தந்தை. 8. ஆமான் -ஆவைப் போலும் மான்; 9. நூறி-அழித்து; 10. குழவி கொள்பவர் - குழந்தையைக் காக்கும் தாய்; 1. இறைமகன் - அரசன்; பிரச்சோதனன்; 2. மாய இருக்கை - மறைந்து இருத்தல்; 3. ஆணம் - அரணம், பாதுகாப்பு 1. நெடுந்தகை - உதயணன் 2. அற்றம் - சமயம், பொழுது 3. குலாவொடு - மகிழ்ந்து தழுவுதல். 1. கிடை - நெட்டி; 2. உலண்டு -பட்டுப்பூச்சிக்கூடு; 3. பீலி - மயில்தோகை; 4. வலந்து - கட்டி; 5. கோலம் - அழகு; 6. புரைய - ஒப்ப; 7. பொருவரும் - ஒப்பில்லாத; 8. கோட்டி - கோணி, சுழித்து. 1. ஒசியா - ஒசிந்து, வளைந்து; 2ஒல்கா - ஒல்கி, தளர்ந்து; 3. பாடகம் - காலணி; 4. சூடகம் - முடியணி; 5. ஐய - அழகிய; 6. தாமம் - மாலை; 7. அழன்றது - வெதும்பியது. 8. அங்கை - அகங்கை, உள்ளங்கை. 9. நித்திலம் - முத்து; 10. இழை - அணிகலம்; 11. நொடித்தும் - விரலை மடித்து ஒலிஎழுப்பியும், சுடக்கிடல்; 12. சிம்புளித்தல் - சிலிர்த்தல்; 13. கம்பிதம் - நிலைபெறநிற்றல்; 14. ஆழி - சக்கரம்; 15. சாரி - இடவலத்திரிகை. 1. நாமம் - பெயர்; 2. சிலதியர் - பணிப்பெண்டிர்; 3. வண்ணமகள் - அழகுறுத்துவோர்; ஒப்பனை புரிவோர். 1. இயையும் - பொருந்தும். 1. வாள்திறல் - வாள்வலிமை. 2. களைகுவல் - நீக்குவன். 1. கோயில் - அரண்மனை. 2. போதரும் - உண்டாகிய. 1. கங்குல் - இரவு. 2. பருவரல் - துயர். 1. கூறை கீறி - உடை கிழிந்து; 2. விரகுளி - சூழ்ச்சியால்; 3. கயிட படை - கைக்கருவி; 4. துட்கு - நடுக்கக்குறிப்பு; 1. கடிகொண்டு - சூழ்ந்து. 2. தேஎத்து - இடத்து; 1. பட்டதை உணர்த்தாள் - நிகழ்ந்ததைக் கூறாள். 2. ஆசில் தவ்வை - குற்றமற்ற அக்கை. 1. ஏதமில் காட்சி - மெய்யுணர்வு. 2. வீழ்ந்தொளிதிகழும்; ஒளி வீழ்ந்து திகழும் - ஒளி தெறித்து விளங்கும். 3. குறுமகள் - இளையவள். 4. செறிவு - அடக்கம். 4. பாடிமாற்றம் - தனித்திருந்து பேசும் பேச்சு. 6. இகழ்தல் செல்லாது - இகழ்ச்சி செய்யாமல். 7. நெடுமொழி - புகழுரை. 8. வீயாச்சிறப்பு - கெடாதபுகழ். 9. கோடாதுயர்ந்த குலம் - வழுவாது மேம்பட்டுவரும் குலம். 1. வளைவித்து - பாதுகாப்புக் கொண்டு. 2. விளைவித்து ஓம்புதும் - நன்கு விளையக்கூடிய வித்தினைப் பேணிவைப்போம்; வேண்டியது ஆம் - மேலைக்கு வேண்டும் விளைபயன் பெரிதாகும். 3. மோக்கம் - துறக்கம்; பரிநிருவாண முமாம். 4. உம்மைப் பிறப்பு - முன்னைப் பிறப்பு. 5. ஒழுக்கினென் - ஒழுக்கத்தையுடையேன். 6. அமர்மாபத்தினி -விரும்பியுறையும் மனைவி. 7. பெரும் பெயர் - கீர்த்தியமைந்த பெயர். 8. பாவை போல்வளைப் பாவையென்றது ஆகுபெயர். 9. மான்கணம் - மான்களின் கூட்டம்.10. வீததை கானம் - பூக்கள் நிறைந்த காடு. 11. கூம்பு அவிழ்ந்தாங்கு - கூம்பியிருந்தது விரிவது போல. 1. தன்பாற்பட்டா - நின்பால் கொண்ட. 2. என்னராயினும் - எவ்வியல்பினராயினும் 3. எவ்வம் - துன்பம். 4. ஏமவையம் - ஒழுக்கநெறியால் பாதுகாக்கப்பட்ட வுலகம். 5. வாள்முகம் கடர - ஒளிபொருந்திய முகம் காதற்காமக்கூட்டத்தால் ஒளி திகழ. 6. பண்டே யணிந்த பத்தினி - முன்பே காதல் மணத்தால் கூட்டமெய்திச் சிறக்கும் மனைவி. 7. பயந்தனர் - பெற்றோர். 8. அடுப்ப - மணத்துக்குடன்பட்டுத்தர. 9. முந்தை நிறீஇ - முன்னாக நிறுத்தி. 10. விரை - நறுமணம். 11. காண்பது மால்கொள்ள - காணவேண்டியெழுந்த வேணவா. மிக. 12. கைத்தொழில் மறக்கும் - மேற்கொண்ட செயலற்று விழையும் 13. மாண்பதி - மாட்சிமையுடைய நகரத்தார். 1. சேடுறு தாமம் - பெருமைமிக்கமாலை. 2. வாடுறு பிணையல் - வாடிக்கிடக்கும் மாலை. 3. அளாய் - கலந்து. 4. தாரையும் - மெல்லிய கயிறு. தாரமென்பது தாரையெனவந்தது. 5. இருந்தாள் - பெரிய அடிப்பகுதி. 6. நுகும்போலை - குருத் தோலை. 7. தாள் வாட்டி - தண்டினையுரித்து 8. கால் - கத்தரிக்கோலின் விரலிடும் காது. 9. நச்சரவு - நஞ்சினை யுடையபாம்பு. 10. நெற்சிறுதாலி - சிறுநெற்றாலி யென இயைத்து நெற்றாலியென்னும் கழுத்தணி. 11. நிரல் - வரிசை. 1. வேய்உகுத்த - மூங்கில் சொரிந்த. 2. ஈந்துவளர் ஈத்த காவலன் இல்லின் மகளிர்க்குரிய கோடி நுண்டு கில் என இயையும். 3. தீட்டிவைத்தது - எழுதிவைத்தது. 4. ஆற்றா மகட்கு என்றார், பெரு நாணமுடையன் என்பது தோன்ற. 5. நாண் உத்தரீகம் - மார்பு மறைத்து நாணம் காக்கும் மேலாடை. 1. வடுத்தீர் - குற்றமில்லாத. 2. குடி மலிகொண்ட - குடிமக்கள் நிறைந்துள்ள. 3. காப்புடை முனிவர் - மந்திரத்தாற் றம்மைக் காத்தொழுகும் முனிவர். 4. முதுகாடு - சுடுகாடு. 5. ஊனார் மகளிர் - மானுடமகளிர். 1. கயத்துறு மகள் - நீரரமகள். 2. திருவொடுதிளைத்தற்கு - செல்வமார்பைக் கூடுதற்கு. 3. இமிழ் திரைவையம் - ஒலிக்கின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகம். 4. தமிழியல் வழக்கினன் - தமிழர் மரபாகிய காதற் காம மணம் புரியும் கருத்தினன். 5. தணப்பு - பிரிவு. 6. நிலவரை - நிலத்தில். 7. தலைவர இருந்தது - தன்னைத் தேடி வரத்தான் சென்று கூடாதிருந்தது. தமிழ மரபின்படி யொழுகக் கருதியவன் அது பிழைபட ஓழுகுதல் கூடாதென்பதாம். 1. மாசை - பொன். பொன் மாசையென்பது மீமிசை யென்றாற் போலும் ஒரு பொருட் பன்மொழி. 2. மறுப்பருங்காட்சி - காண்போர் கண்களை மீட்டுக் கொள்ளாவாறு பிணித்து நிறுத்தும் அழகு; 3. பொறுத்தல் - தாங்குதல்; அவர்க்குச் சுமையாவதேபயன் என்பதாம். 4. இற்பிறந்து - குடியில் தோன்றி. 5. பிற நெறிப்படுதல் - வேறு பிறரை மணத்தல். 6. கைகொடுப்ப - உதவிபுரிய. 7. அம்மை - முன்னைப் பிறப்பு. 8. இயலி - நடந்து. 9. பல்லியம் - பல வாச்சியங்கள். 1. படாகை -துகிற்கொடி. 2. உரிய ஆற்றி - உரிய சடங்குகளைச் செய்து. 3. குரவர் - பெற்றோர். 4. வட்டமை தீ - சமித்துக்களோடு கூட்டிய தீ. 5. வேட்டு - மணம் புணர்ந்து. 6. அணைஇ - அணைந்து. 1. இருவரும் இலைச்சித்து - இருவரும் முத்திரையிட்டு. 2. மீக்கோள் மாற்றம் - மேலாகக் கொள்ளும் உரை. 1. மறுவில் கொள்கை - குற்றமில்லாத ஒழுக்கம். 2. புறநடை - மனைவிக்குரியதாக வழங்கும் பாகம். 3. ஆயிழை - பெண் 4. என்றலின் - என்றாளாக. 5. கூறு என - சொல்லுக என உதயணன் கேட்க. 6. துறக்கலாற்றா - பிரிந்திருக்க முடியாத. 7. தேவி - வாசவதத்தை. 8. உளம் அமர்தலின் - மனம் விரும்புவதனால். 9. துளங்கினர். - அசைந்து. 10. அரிமா சுமந்த அமளி - சிங்கம் சுமந்த கட்டில். 1. கொடுஞ்சி - தேர்த்தட்டு. 2. பொன்னில் தொடர் - பொன்னால் செய்யப்பட்டதொடர். 3. பிக்கம் - உட் பக்கம். 4. அல்லி - அசுவிதழ். 5. நெடித்தனென் - தாழ்த்தேன். 6. கதிர்ப்பு - வனப்பு. 7. கனலி - சூரியன். 8. போழ்ந்து - பிளந்து. 9. அண்ணல்யானை - பெரிய யானை. 1. சேய் நின்று - சேய்மைக்கண்ணே நின்று. 2. மீமிசை - மேலே. 3. மறப்பேராற்றல் - மறத்தோடு கூடிய பேராற்றல். 4. சேயிழை - வாசவதத்தையே. 5. உறுதிரைப்பக்கம் - மிக்க அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகம். 6. அச்சமில் ஆற்றல் அச்சமின்மையாற் சிறந்து தோன்றும் ஆற்றல். 7. ஆழியுருட்டும் - அரசியற்றும் 8. வீழாவிழுப்பொருள் - கெடாத மேன்மையுடைய செய்தி. 1. மதியாய் - பொருளாகக் கருதா தொழியின். 2. மிசைகுற - உண்பதற்கு. 3. ஓடிய உள்ளத்துயர் துணை தேவி - விரும்பிய மனத்தால் உயர்ந்த தேவி; கொழுநன் குடரைத் தின்பதற்கு வேட்கையுற்ற மனைவி உயர்ந்தவளாதல் கூடாமையின், அக்குற்றத்தை விலக்குதற்கு “உயர்துணைத் தேவி” யென்றார். இவ்வரலாறு எந்நூலில் எந்நாட்டில் வழங்குகிறதென்று அறிய முடியவில்லை. 4. மறையில்பெரும் புகழ் - குற்றமில்லாத பெரிய புகழ். மறு மறையென வந்தது; “மறையேற்றின் மேலிருந்தாடி” (கலி. 103) என்புழிப் போல. 5. இன்னாவெந்நோய் - துன்பந்தரும் கொடிய வேட்கை நோய். 6. ஒடுங்காவுள்ளம் - பின்னிடாத மனம். 7. அசையா வூக்கம் - தளராத மனவெழுச்சி. 8. நோன்றாள் - வலியதாள். 9. நெருங்கும் - மிகும். 10. இசையாவரும் பொருள் - எவ்வாற்றானும் கைகூடுதற்கரிய பொருள். 11. இற்று -இது. 12. வசைதீர் வையம் - குற்றமில்லாத நல்லோர் கூட்டம். 1. பொறியுடைமார்ப - திருத்தங்கும் மார்பையுடையாய். 2. வெற்றம் - வெற்றி. 3. நீர் வேட்டுப் பெறாஅ - நீர் வேட்கையால் அதனை விரும்பிப் பெறாமல். 4. வெம்பரலழுவம் - வெவ்விய பரற்கற்கள் நிறைந்த பாலைநிலம். 5. எம்பரும் - எவ்விடத்தும். *தெய்வதை - தெய்வம். 6. கையற லோம்புக - கையறலொழிக; வருந்துதல் வேண்டா என்பதாம். 7. நோக்கமை கொழுநிழல் - அழகமைந்த குளிர்ந்த கொழுவிய நிழல். 8. நசைஇ - விரும்பி. 9. செல்வன் - சூரியன். 10. அசைந்து - சோர்வுற்று. 1. வச்சிர வண்ணன் - இந்திரன். 2. நச்சும்நண்பு - விரும்புதற்கேதுவாகிய நட்பு. 3. மயக்கற - தெளிவாக. 4. நயப்பொடு - விருப்பத்தோடு. 5. அறிமின் - மறவாது நினைமின்; நன்றியறிதல் என்புழிப்போல. 6. எள்ளல் இல்லாது - இகழாமல். 7. ஓதி - அவதிஞானம். 8. இயல்மந்திரம் - வருவித்தற்கமைந்த மந்திரம். 1. துயரம் தீர்க்கும் தோழன் - உற்றுழிப் போந்து உறுகண் தீர்க்கும் நண்பன், 2. பெயராக், கழலோய் - பிறக்கிடாத கழலணிந்தவனே. 3. என்னெனப்படும் - என்னென்று கருதப்படும். 4. அவந்திகை - அவந்தி வேந்தன் மகளான வாசவதத்தை. 5. தோழன் X தோழி. 6. அசாஅ - விரும்பி வருந்தும். 7. தலைச்செல - மிக்குற. 8. ஏறாக்கருமம் - இயற்கையொடு பொருந்தாச் செய்கை. 9. அவள் ஊறுநாடி - அவட்கு உளதாகிய மேனிமேலிவை யாராய்ந்தறிந்து. 1. மதுகை யறியேம் - வலியுடைமையில்லேம். 2. நன்னர் - நன்றி. 3. நடலை - வருத்தம். 4. உரத்தகையாள - திண்ணிய அறிவும் தகைமையு முடையாய். 5. மெச்சார் - பகைவர். 6. மீளி மொய்ம்பு - சிங்கத்தின் வலி. 7. நயப்புறு புதல்வன் - விரும்பத்தகும் மகன்; “செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்” எனப் பிற சான்றோர் கூறுதல் காண்க. 8. நாடி - இகரவீற்று வியங்கோள்; நாடுக என்பது பொருள்; “ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி” (சிவ. போ. சூ. 9) என்று மெய்கண்ட தேவரும் இவ்வாறு வழங்கியருளுவர். 9. மிடைதார் - நெருங்கிய மாலை. 10. கண்ணயற் கடாத்து - கண்ணயலதாகிய கன்னத்தொழுகும் மத நீரிலே. 11. மீக்கூரி - மிக்கு.12. பருப்புடைத்தடக்கை - பருத்தலையுடைய பெரியகை. 1. செருக்கு - காதலனுடன் கூடியின்புறும் பெருமிதம். 2. வல்லி - கொடி. 3. கும்பம் - மத்தகம். 4. எழுவகை மகளிர் - பேதை முதலாகக் கூறப்படும் எழுவகைப்பருவ மகளிர்; இனி, தான் கூடிய பிடி எழும் வகையில் என்று கொண்டு நின்ற இன்பம் என்பதனோடியைத் தலுமொன்று. 5. வேட்கை மீதூர்ந்து - காமவேட்கைமிக்கு. 6. நன்றியில் விலங்கு - யானை; “யானையறிந்திருந்தும் பாகனையே கொல்லும்” செயல்பற்றி, “நன்றியில் விலங்” கென்றார். மக்கள் தேவர்களைப் போல நலமில்லாத விலங்கு என்றுமாம். 7. கானம் செய்தது - பாடியது; எண்ணியதூஉமாம். 8. வேகயானை - சினத்தோடுகூடிய யானை. 1. தன்னைச் சுமந்து போந்துதவிய யானைக்குத் தான் செய்யத் தக்ககடமையாக மந்திரமோதிய நற்செயலை, “கடவது” என்றாள். 2. மறுவில் சிறப்பு - கெடாத சிறப்பு; சிறப்புக்கு மறுகெடுவது. 3. பிழைப்பிலன் - நல்வினையுடையன். 4. அறாஅ அருநிதிக் கிழவ - குன்றாத பிறர் பெறற்கரிய நிதியினையுடைய குபேரனே 5. மறாஅது - மறுக்காமல். 6. ஒள்ளரி - ஒள்ளிய செவ்வரி. 7. உள்ளி - நினைந்து. 8. பரிவு - வருத்தம். 9. வெள்ளிய - வெண்மையான. 10. தீர்வதன்று - நீங்குவதன்று. 1. இதுவும் நன்னயம் சிறிது - இந்த நல்லவுதவியும் சிறிது. 2. வெளிப்படாஅள் - வெளிப்படக் கூறாமல். 3. வான் வெளிப்படூஉம் - வானகத்தேயுண்டாகும் புகழ் உலக முழுதும் பரவச் செய்யும் என்றுமாம். 4. ஒருதலை - உண்மையாக. 5. கிழமை - நட்புரிமையுடைய. 6. வயாஅ அரும்பொருள் - மிக விரும்பும் அரிய வித்தியாதரவுலகு சென்று காணும் செயலாகிய பொருள்; தொழிலும் பொருளாயிற்று, செயப்படுதலின். 7. மறித்தும் - மீளவும். 1. பால்வகை யென்ற பாடத்தினும் இப்பாடமே சிறந்தது. 2. பால் - பகுதி. 3. ஆருயிர்கொளினும் - எமதுமாட்டாமையால் எம்முயிரை நீ கொள்வதாயினும். 4. வண்ண, வாடையன் - அழகிய ஆடையினையுடையன். 4. விச்சை - வித்தை. 5. ஒழிக - இவர்களை விடுக. 6. துன்னிய துயரம் - நெருங்கியுள்ள துன்பம். 1. செய்தற்குரியன இவையென நூலாசிரியர் குறித்திலர்; “உரிய கொடுப்ப” என்றே குறிக்கின்றார்; உரியவை யிவையெனச் சிலவற்றைத் தம்புலமைக்கண்ணாற் கண்டுகுறித் திருப்பரேல் எத்துணை நலம் பயப்பதாகும்! 2. கண்ணணங்கு அவிரொளி - கட்பார்வையால் வருத்தும் விளங்குகின்ற ஒளி கடவுள் - சிவபெருமான். 1. மழகளிற்றீட்டம் - இளைய யானைகளின் கூட்டம். 2. குயிற்றொகை - குயிற் பறவைகளின் கூட்டம். அவற்றின் ஒலிப்பரப்பை, பரப்பென்றார். 3. வளமை - செல்வம். 4. மீயியங்கி - மேலே பறந்து. 5. தண்டாரணி - தண்டாரணிய 6. நடுவண - நடுவிலுள்ளனவாகிய. 1. நன்னர் - நன்றி. 2. அரசு முறையும், அதிகாரமும் வல்லோன் ஒருவன் மனத்தைப் புதுவது புனைதற்கண் வற்புறுத்திச் செலுத்தும் வன்மையுடையவல்ல; அவன் தானே விரும்பிக் காண்டலே வேண்டுவதெனத் தெரிவிக்கும் இவ்வாசிரியரது அரசியற் புலமை குறிக்கத்தக்க தாம். 3. இவுளி - குதிரை. 4. பண் - பண்ணமைத்தல். 5. பொன்னிறை யுலகம் - தேவருலகம். 6. துடைக்குநர் - விலக்குநர். 7. உறுகண் - துன்பம். 8. பெயர்ப்பதை - கொடுக்கத்தக்க பொருளை. 1. ஐயவி - சிறுகடுகு. 2. வேறலம் - வேறுபட்டவர் அல்லேம். 1. முதல்சாய - வேரோடு கெட. 2. வாரி - மழை. 3. வழுக்காவாய் மொழி - குற்றம்படாத மெய்ம்மை மொழி. 4. விழுத்தகு - மேன்மையமைந்த 5. பொருள் - அறம். 6. ஐவகைப்பூ - கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ, புதற்பூ; ஐவகை நிலத்து ஐவகைப் பூவுமாம். 7. மதியுறழ் சங்கம் - திங்களைப் போன்ற நிறமுடைய சங்கு. 8. ஆழிக்கிழவன் - அரசன். 1. கொலைச்சிறை - கொலைக் குற்றமுடையோரிருக்கும் சிறை. 2. தளைச்சிறை - பிற குற்றத்தால் உரிமை மறுக்கப்பட்டோர் இருக்கும் சிறை. 3. பிழைத்து- குற்றம் செய்து. 4. நல்குரவு - வறுமை. 5. செல்லல் தீர - துன்பம் நீங்க. 6. ஏத்தியலாளர் - சூதர்மாகதர் முதலியோர். 7. கோப்பெரு முதியர் - அரசியற் பணிபுரிந்து மூத்தோர். 8. சாயா - கெடாத. 9. திணைகள் - உயர்ந்தோர். 10. காவிதிக்கணம் - காவிதிப்பட்டம் பெற்றவர் கூட்டம். 11. ஆவணமாக்கள் - வணிகர்; பரதகுமரருமாம். 1. உயர்நிலையுலகின் உலோகபாலன் - தேவருலகத்து குபேரன் 2. ஆணம் உருவாகிய - அன்புருவாகிய. 3. நரவாகனன் என்பது குபேரற்குப் பெயர்; நரவாகனன் என்பது நரவாணனென வந்தது. 4. மாண்குடி தொலைவு மதலையூன்றும் புதல்வன் என இயையும். மதலை - தூண்; மதலையாய் என இயைக்க. 5. தொலைவழி - சலியுமிடத்து. 6. குறிகோள், மெய்க்குறியும் பிறந்த நாட்குரிய நாளும் கோளும் 7. மீக்கூறிய - புகழ்ந் தோதப்பட்ட. 8. கைவலத்துருட்டல் - கைக்கொண்டு செலுத்துதல். 9. உறுபொருள் - மிகவும் உறுதியாம். 1. மதிமருள் நெடுங்குடை - திங்களைப் போலும் வெண்கொற்றக்குடை. 2. மதுக்கமழ் கோதை - தேன் மணம் கமழும் பூமாலை 3. வடதிசைமீன் - அருந்ததியென்னும் விண்மீன். 4. வடு - குற்றம். 5. கோடாக்குணத்தொடு - நெறிவழுவாதொழுகும் குணஞ்செய்கை களுடனே பொருந்தி. 1. மாற்றம் - மாறுரை. 2. பொருள் சிதைவின்றி - பொருட்குற்றமின்றி. 3. செந்நெறி -குற்றமில்லாத செவ்விய நெறி. 4. சாலவை - புலமைசான்ற பெரியோர் கூடிய சபை, 5. சலத்தின் தீர்ந்த - வஞ்சனையில்லாத. 6. மெய்த்துறை - மெய்ப்பொருள் காணும் தருக்கத்துறை. 7. மனம் உண - மனம் பொருந்த 8. உத்தரவாக்கியம் - பிரதிவாதம். 9. நிறீஇ - நிலைநாட்டி. 10. பண்புஇன் தொழிலும் - நற்பண்பும் அதனால் வரும் இனிய செய்கையும். 11. காயுமாந்தர் - பகைவர். 12. தீயவை - குற்றம். 13. அவற்கு - உதயணனுக்கு 1. நின் கண்மாண்பு - நின்பாலுள்ள குணமாண்பு. 2. எரியுறு நெடுவேல் - நெருப்புப் போல் ஒளிதிகழும் நீண்டவேல். 1. முந்துறீஇ - முற்பட்டு. 2. தெம்முன் இழியா - பகைவர் முன் குறையாத 3. பரத்தல் நன்று - பரவவுரைப்பது நல்ல. 4. ஏட்டுமிசை யேற்றி - ஏட்டில்எழுதி. 5. யாப்புறுத்து - காப்புறச் செய்து. 6. உலம் - தூண். 7. வலம் - வெற்றி. 1. தகைமிகு பூதி - அழகு மிக்க பூதி. 2. இகந்து - கடந்து. 3. நல்லோர் காட்ட ஆசாரமொடு ஞானம் நவின்று என இயைக்க. 5. விற்பொருள் நன்னூல் - வில்வித்தையும் பொருள் நூலும் அறநூலும் 6. நுனித்து - நுணுகியறிந்து. 7. கரணம் - செயல்வகை. 8. ஈனோருலகு - இவ்வுலகு. 9. தண்டாது - தடையின்றி.10. துதைபூங்கோதை - நிறைந்த பூவாற் றொடுக்கப்பட்டமாலை. 11. மாதர் - காதல் 12. பதரில் பணி மொழி - வீண்மொழி யில்லாத பயனுடைய பணிவைப்புலப்படுத்தும் மொழி. 1. நன்கமை தோள் - அழகமைந்த தோள்; நல்ல மூங்கில் போலுந் தோள் என்றுமாம். 2. மாப்படுவடு - மாமரத் திலுண்டாகும் வடு; மாவடு போலும் கண்ணென்பதாம். 3. துப்பு - பவளம். 4. சேடு - பெருமை. 5. முன்முறை நூல் - முன்னோர் உரைத்த உறுப்புக்களின் அமைப்பு முறைகளைக் கூறும் நூல். 6. கற்கெழுகானவன் - மலை சார்ந்த காட்டிடத்து வாழும் குறவன். 7. கைக்கோல் - தீக்கடையும் கோல். 8. எழுச்சியின் - எழுவது போல. 1. யாப்பின்று - பொருத்தமன்று. 1. பொன்றா வேட்கை - குறையாத ஆசையை யுண்டுபண்ணும். 2. சேணுயருலகம் - விஞ்சைய ருலகிற்கும் அப்பாற்பட்ட தேவருலகம். 3. பத்திப்படாகை - வரிசையுற வெடுத்த கொடி. 4. இயந்திரப்பாவை - உயிரிப்பாவை போலத் தோற்றமும் செய்கையுமுடைத்தாகத் தோன்ற எந்திரம் அமைந்த பாவை. 5. பொத்தகை - உள்ளேபுழைபொருந்திய கை. 6. மக்கள் தம் தொட்டில் - தொட்டில் நாற்றிய இராட்டினம். 7. வெண்டாரொழுக்கும் - வெண்மையான நீர்த்தாரைகளைச் சொரியும் சிவிதவகை.8. எந்திரப்பொருப்பு - எந்திரம் அமைந்த செய்குன்றுகள். 1. நால்வகைநிலன் - குறிஞ்சி, முல்லை, மருதம்; நெய்தல். 2. ஏந்துவரைச் சென்னி - உயர்ந்த மலைச் சிகரம். 3. சுதைக்குன்று - சுண்ணாம்பு முதலியன கொண்டு சுதை வேலை செய்யப்பட்ட செய்குன்று. 4. பழவிறல் மூதூர் - பழமையான வெற்றிபொருந்திய ஊர். 5. இளமுளை - இளமையாகிய முளை 6. கண்விட்டு - கணுவிட்டுத் தழைத்து. 7. செல்வப் பல்கதிர் - செல்வமாகிய பல்வகைக் கதிர். 8. இன்பம் - இன்பமாகிய நெற்கதிர். 9. ஆணமடை - அன்பாகிய சோறு. 10. வேட்கை நா - காமவேட்கையாகிய நாக்கு. 11. மாற்றல் இல்லா - மாறாத. 1. அவம் இல் சூழ்ச்சி - தவறுபடுதல் இல்லாத சூழ்ச்சியறிவு. 2. ஆணும் - அன்பும். ஆணம் ஆணென நின்றது. உட்கு - உரு. 3. வவ்விய - உரிமைகொண்ட. 4. ஆனாக்காதல் - நிறைந்த காதல். 5. வீரியன் - வீரியமுடையேனாய். 6. மயக்கற - தெளிவாக 7. விழுப்பொருள் - மேலான பொருள்.