தொல்காப்பியம் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனார் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை- 600 017 பேசி : 2433 9030 நூற்குறிப்பு நூற்பெயர் : தொல்காப்பியம் சொற்பொருட் களஞ்சியம் (முதல் தொகுதி) ஆசிரியர் : இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2002 தாள் : 18.6 கி. ஜே.கே. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 12 + 324 = 336 படிகள் : 2000 விலை : உரு. 210/- நூலாக்கம் : பாவாணர் கணினி 2 சிங்காரவேலர் தெரு சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேவரா எண்டர்பிரைச 44, வி.எம். தெரு, இராயப்பேட்டை சென்னை - 600 014 கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : கீழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை சார்ந்த தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி : 2433 9030 நூலமைதி சொல் என்பதற்கு 'நெல்' என்பது ஒருபொருள். மணி உள்ளதையே நெல் என்பர். மணியில்லாததைப் பொய்க்கு (பொக்கு) என்பர். பதடி, பதர் என்பதும் அது. சொல் தருவதாம் உணவைச், 'சொன்றி' என்றும் 'சோறு' என்றும் குறிப்பர். பொருளுடைய சொல்லே சொல் என்பதும், பொருட்பயன் நிரம்பாதது சொல்லாகாது என்பதும் நம்மவர் உட்கிடை. பொதுவகையில் சொல்லப்படும் சொல்லுக்கும், பெரும்பயன் பாட்டு வகையில் ஆக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் வரும் சொல், பெரும் பயன் சொல். அதனைக் 'கலைச் சொல்' என்பர். சொல், நெல் எனப்படின், கலைச்சொல்லோ, 'விதைநெல்' அன்னது. ஒன்று, ஆயிரம், பதினாயிரமாய் விளைவுதரும் விதை நெல் போன்றது கலைச்சொல் எனின், அதன் அருமையும் பெருமையும் தானே விளங்கும். இதனால் ஆசிரியர் தொல்காப்பியர், சொல்லதிகாரத்தின்முதல் இயலாகக் 'கிளவியாக்கம்' என்பதை வைத்தார். கிளவியாவது சொல். இரட்டைச் சொல், இரட்டைக் கிளவி எனப்படுதல் இதனைத் தெளிவாக் கும். எ-டு : படபட, மடமட. கிளவி என்பது 'கிளவியம்' எனக் கலைச்சொல் லாக்கமும் பெறும். கிளவியாக்கம் என்பதை விளக்கும் சேனாவரையர், ''வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான், இவ்வோத்து 'கிளவியாக்கம்' ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல்; நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி யமைத்தாரை 'அரிசியாக்கினார்' என்பராகலின்'' என்றும், ''கிளவி, சொல், மொழி என்னும் தொடக்கத்தன வெல்லாம் ஒரு பொருட்கிளவி'' என்றும் கூறினார். தொல்காப்பியம் குறிக்கும் கலைச் சொற்களை அகர நிரல்படுத்தி, உரையாசிரியர் நூலாசிரியர் ஆய்வாளர் ஆயோர் வழியே அச் சொல் பெறும் விளக்கத்தைக் காட்டுவது இச் சொற்பொருட் களஞ்சியம் எடுத்துக் கொள்ளப்பட்ட கலைச்சொல், தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ள இடத்தை முதற்கண் சுட்டுகிறது. அச்சொல் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட நூல்களில் இடம் பெற்றுள்ள வகையை அடுத்தே காட்டுகிறது. அச்சொல்லுக்கு அல்லது அச்சொற் றொடர்க்கு உரையாசிரியர் இளம்பூரணர் முதலாகப் பழைய உரையாசிரி யர்களின் உரையையும், பிற்கால உரையாசிரியர், பிறநூல் உரையாசிரியர், கட்டுரையாசிரியர் என்பார் உரைவிளக்கங்களையும் தருகின்றது. இத்தொகுப்பு, பதினைந்து ஆண்டுகளின் முன்னர்ச் செய்யப்பட்டது. ஆகலின், அக்காலத்திற்குப் பிற்பட்ட உரைகளும் ஆய்வுகளும் கொள்ளப் பட்டிரா என்பதைக் குறிப்பிடல் கடமையாகின்றது. நூலும் உரையும் ஆய்வும் காட்டப்பட்டாலும், இன்றியமையா இடமெனக் கருதப்படும் இடங்களில் மட்டும் 'ஆய்வுக் குறிப்பு' நறுக்குத் தெறித்தாற்போல் சுருங்கக் காட்டப்பட்டுள. இவ்வைப்பு முறையைச் 'சொற்பொருள் வைப்பு முறைச் சுருக்க விளக்கத்தில்' கண்டுகொள்க. ஐம்பகுதிப்பட்ட அது, எல்லாச் சொற்களுக் கும் இடமாய் அமைவது அன்று. ஐம்பகுப்பில் மூன்றோ நான்கோ இடம்பெறலும் உண்டு. சிறப்புப் பெயர்ச் சுருக்க விளக்கம் கொண்டு இத்தொகுப்புக்குப் பயன்பட்ட நூற்பட்டியை அறிந்துகொள்ளலாம். அரிதாகப் பயன்பட்ட நூல், பயன்பட்ட இடத்திலேயே முழுமையாகக் குறிக்கப்பட்டிருக்கக் காணலாம். இந் நூல் கருவி நூல். ஆய்வாளர்க்குப் பயன் செய்யும் நூல். பல நூல்களைத் தொகுத்தலும் தேடிக் காணலும் ஆகிய இடர்களைத் தவிர்த்து எளிதில் பயன்கொள்ள வாய்த்த நூல். அகரநிரல்படுத்தப்பட்டமை, தேடி அயரும் பெருமுயற்சியை எளிமைப்படுத்தி உதவுவதுமாம். நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத், தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளுவர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பல்லாண்டுகள் பல்வேறு பதிப்பகங்கள் அரிதின்முயன்று தமி ழாக்கம் குறித்துச் செய்த நூல்களையெல்லாம், அந் நூல்கள் நாட் டுடைமையாக்கப்பட்ட நற்செயலால், ஒரு குறித்த காலத்தில் ஒட்டுமொத்த மாக வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டமை அவர்தம் ஆர்வத்திற்கும் வெற்றிக்கும் வாய்த்த வாய்ப்பாகிச் சிறக்கின்றது. இப்பேறு தமிழர்தம் பேறாதல் சான்றே. மொழிஞாயிறு பாவாணர் நூல்கள், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் நூல்கள், ஈழத்துப் பேரறிஞர் ந.சி. கந்தையா அவர்கள் நூல்கள் ஆயவை தட்டின்றிக் கிடைப்பதாம். ஆதலால், தமிழ்மண் பதிப்பகம், 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. உண்ணாட்டுத் தமிழரே அன்றி வெளிநாட்டுத் தமிழரும் விழுமிய நூற்பயன் கொள்ளும் வகையால் சிங்கபுரி, மலையகம் ஆகியவற்றுக்குச் சென்று, அங்குள்ள ஆர்வலர் அருந்துணையால் நூல்வெளியீடும், நூல் அறிமுகமும் செய்துவருதல் வினையால் வினையாக்கிக் கொள்ளும் வித்தகமாம். பதிப்பாளர் முயற்சி பாரெல்லாம் சிறக்குமாக. தொல்காப்பியப் பதிப்புகளை வரிசையாக வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஊன்றிய இளவழகனார் இக்களஞ்சியத்தையும் வெளியிடு கிறார். இது முதல் தொகுதி; இதன் இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் தொடரும். இதனை வெளியிடும் பதிப்பகம் சார்ந்த அனைவருக்கும் நன்றியன். இதன் மெய்ப்புப் பார்த்துதவிய பேரன்பர் பெருந்தகைத் தோன்றல் முனைவர் தமிழகனார்க்கு இனிய வாழ்த்தும் நன்றியும் உடையேன். இன்பமே சூழ்க. திருவளர்குடி (அல்லூர்) இரா. இளங்குமரன் திருச்சி மாவட்டம் - 620 101 திருவள்ளுவர் தவச்சாலை பதிப்புரை உலக வரலாற்றுக் களஞ்சியங்களில் ஒன்று, தொல்காப்பியக் களஞ்சியமாகும். தமிழ்மொழி உலகுக்களித்த அறிவுக் கொடைகள் பல. அவற்றுள் ஓங்கி நிற்பவை தொல்காப்பியமும், வள்ளுவமும், சிலம்பு உள்ளிட்ட பல சங்க நூல்களுமாம். உலகின் தொன்மைமிக்க மொழி தமிழ். இலக்கிய வளமும், இலக்கியச் செறிவும் மிக்க நம் தாய்மொழி என்றும் இளமை குன்றா வளமிக்க மொழி. தமிழ் இலக்கியச் செம்மல் பெருந்தமிழ் அறிஞர் புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் 'தொல்காப்பியம் சொற் பொருட் களஞ்சியம்' எனும் பெயரில் இந் நூலினை ஆக்கித் தந்துள்ளார். மொழிக்கு வளம் சேர்க்கும்வண்ணம் தமிழ் உலகிற்குப் புதிய வரவாகப் படைத்தளித்துள்ளார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்கள் அனைவரும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தமிழ்நூல் பதிப்பால் ஏற்றம் பெற்றவர்களாவர். தமிழ்நூல் பதிப்பிற்குக் களமாகவும், தமிழிய ஆய்விற்குத் தளமாகவும் அமைந்தது இந் நூற்பதிப்புக் கழகமாகும். பாவாணர் நூல்களைத் தமிழுலகிற்குக் கொண்டு சென்ற பெருமைக் குரிய பதிப்பகம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். நல்ல தமிழ் நூல்களையும், நல்ல தமிழ் அறிஞர்களையும் தந்த பல்கலைக்கழகமாம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை இந்த நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறேன். இந் நூலாசிரியர் இயற்கையிலேயே நூல் வேட்கையும், ஆய்வு வேட்கையும் மிக்கவர். ஆழமான செய்திகளை நெஞ்சில் ஆழப்பதிக்கும் ஆற்றலாளர். இவர் எழுத்தும், பேச்சும், ஆய்வும், ஒப்புநோக்கும் திறனும் தமிழின் பரப்பை விரிவு செய்வன. தமிழர்தம் பெருமையை உலகறியச் செய்வன. அறிவாண்மைமிக்க இவர் தமிழிலக்கிய, இலக்கணச் செறிவும், படைப்பிலக்கிய ஆற்றலும் உடையவர். இவருடைய பொழிவுகள் தமிழுக்கு ஒளியூட்டுவன. கேட்பார்ப் பிணிக்கும் தகையன. காவிரியின் கரைதனில் தமிழ்மொழிக்குத் தமிழ் மாளிகை எழுப்பி அருந்தமிழ் நூல்களைக் கண் போல் காப்பவர். உண்மையையும், நடுவுநிலையையும் கண்டுகாட்டும் இவரின் பேராற்றல் மதிக்கத்தக்கது. வாழும் அறிஞர்களுக் கெல்லாம் அறிஞராய் வாழ்பவர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழலில் படாடோபமின்றியும், விளம்பரப் போலிமையின்றியும் அமைதியாக இருந்துகொண்டு தமிழ் மொழியின் ஆழத்தை அகழ்ந்து காட்டும் அறிஞர். பாவாணரின் வேர்ச்சொல்லாய்வில் அவர் தடம்பற்றி வருங்காலத் தமிழுலகிற்குப் புதிய முத்திரை பதித்தவர்; பதித்து வருபவர். அறிவுச் செறிவும், தெளிவும், எளிமையும் மிக்க நிறைதமிழ் அறிஞர். இப் பெருந்தகை 75 அகவையைக் கடந்தும் 25 வயது இளைஞரைப் போல் தமிழகம் முழுவதும் சுற்றிச்சுற்றிச் சுழன்று தமிழ்ப் பணியைத் தம் தலையாய பணியாய் மேற்கொண்டு எம் போன்றாரை வியக்கவைக்கும் இவர் நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். இவரை எண்ணுங்கால் இனமீட்பர் தந்தை பெரியார் நினைவும், மொழிமீட்பர் மொழிஞாயிறு பாவாணர் நினைவும் என் உணர்வுகளில் வருகிறது. என் உள்ளத்தில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாவாணரின் நிறைதமிழ் அறிவை இன்றைய இளைஞர்களுக்குக் கண்டு காட்டும் அறிஞர்களில் தலையாய வர். இவர் நோக்கும், போக்கும் தமிழ், தமிழினம் என்றே பாடாற்றி வருவன. இப் பெருந்தகை எழுதியுள்ள தொல்காப்பியம் சொற்பொருட் களஞ்சியத்தை உங்கள் கைகளில் தவழவிடுகிறேன். இவரைப் போன்றாரை வாழுங்காலத்தில் நல்லவண்ணம் காப்பதும், போற்றுவதும் தமிழர்தம் கடமையாகும். அவர் நலமுடன் இருக்குங்கால் இன்னும் பல நூல்களைப் படைத்தளித்தால்தான் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பயன் ஏற்படும். தொல்காப்பியம் சொற்பொருட் களஞ்சியத்தைத் தொகுத்தும், பகுத்தும், வகுத்தும், வரிசைப்படுத்தியும் இன்று நம் கைகளில் தவழவிட் டுள்ளார். பல்கலைக் கழகங்களோ, அறிஞர் குழுமமோ செய்யத்தகும் இவ் வரிய அறிவுப் பணியைத் தன்னந் தனியாக இருந்து தொகுத்து வழங்கி யுள்ளமை வணங்கத்தக்கது. இலக்கணப் புலமை தேடும் தமிழ் அறிஞர் களுக்கும், ஏனையோர்க்கும் பயன்படும் இந் நூலை வெளியிட்டுள்ளோம். தமிழ் உலகம் பயன்கொள்ள வேண்டுகிறோம். நன்றி கோ. இளவழகன், பதிப்பாளர் சொற்பொருள் வைப்புச் சுருக்க விளக்கம் தலைப்புச் சொல் அ. தொல்காப்பிய நூற்பா ஆ. தொல்காப்பியத்திற்குப் பிற்பட்ட இலக்கண நூல்களின் நூற்பாக்கள் இ. இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலோர் உரைகள், விளக்கங்கள் ஈ. பண்டை உரையாசிரியர்களுக்குப் பிற்பட்டோர் உரை, உரைக்குறிப்பு, கட்டுரைச் செய்திகள் உ. ஆய்வுக் குறிப்பு சிறப்புப் பெயர்ச் சுருக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம் அகநானூறு அடியார்க். அடியார்க்கு நல்லார் அதி. அதிகாரம் அ.வ.இ. அறுவகை இலக்கணம் ஆ.கு. ஆய்வுக்குறிப்பு இ.க. இறையனார் களவியல் இ.வி. இலக்கண விளக்கம் இளம். இளம்பூரணம் எ-டு. எடுத்துக்காட்டு ஒ. ஒழிபியல் ஒ.நோ. ஒப்புநோக்குக க.கா. களவியல் காரிகை கடலாடு. கடலாடு காதை கலி. கலித்தொகை க.வெ. க. வெள்ளைவாரண னார் கா.பா. காக்கை பாடினியம் கு.சு. கு. சுந்தரமூர்த்தி குறுந். குறுந்தொகை சங்; சங்கர. சங்கரநமச்சிவாயர் சா.தே. சாமுண்டி தேவநாயனார் சி.க. சி.கணேசையர் சி.கா.பா. சிறுகாக்கை பாடினியம் சி.பா. சிதம்பரப் பாட்டியல் சிலப். சிலப்பதிகாரம் சிவஞான. சிவஞானமுனிவர் சீவக. சீவகசிந்தாமணி சு.நா. சுவாமிநாதம் சூடா.நி. சூடாமணிநிகண்டு செய். செய்யுளியல் சேனா. சேனாவரையர் சொல். சொல்லதிகாரம் த.நெ.வி. தமிழ்நெறி விளக்கம் திருக். திருக்குறள் தெய். தெய்வச்சிலையார் தொ; தொல். தொல்காப்பியம் தொ.வி. தொன்னூல் விளக்கம் ந.அ. நம்பியகப் பொருள் நச். நச்சினார்க்கினியர் நவநீதப். நவநீதப் பாட்டியல் நன். நன்னூல் நாவலர் நாவலர் ச.சோ. பாரதியார் பக். பக்கம் பதிற்றுப். பதிற்றுப்பத்து பரிமே. பரிமேலழகர் பா. பாடாண்டிணை புண. புணரியல் பு.வெ; பு.வெ.மா. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பாண். பெரும்பாணாற்றுப் படை பேரா. பேராசிரியர் பொ. பொருளதிகாரம் மயிலை. மயிலைநாதர் மயேச். மயேச்சுரம் மர. மரபியல் மலை. மலைபடுகடாம் மா.அ. மாறனகப்பொருள் மா.அலங். மாறனலங்காரம் மு.அ. மு.அருணாசலம் பிள்ளை மு.வீ. முத்துவீரியம் முன். முன்னுரை மேற். மேற்கோள் மொழி. மொழிமரபு யா.கா. யாப்பருங்கலக் காரிகை யா.வி. யாப்பருங்கல விருத்தி வ.சுப.மா. வ.சுப. மாணிக்கனார் வ.று. வரலாறு விமலை. விமலையார் இலம்பகம் வீ.சோ; வீரசோ. வீரசோழியம் ( ) நூற்பா நுதலியது கூறல் [ ] பாடம் சுட்டல், பிற குறிப்புச் சுட்டல். தொல்காப்பியம் சொற்பொருட் களஞ்சியம் அகத்திணை (அகம்) அ. அகத்திணை மருங்கின் (தொல். பொ. 58, 59) ஆ. களவும் கற்பும் கைகோள் ஆக அளவில் அன்பின தகமெனப் படுமே (யா.வி. மேற்.96) (Ã.சேõ. மேற். 104) ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே (¯õ.Â.மேØ. 96) அகமெனப்படுவது வகையொரு மூன்றனுள் இன்பம் என்னும் இயல்பிற் றாகி அகத்துநிகழ் ஒழுக்கம் ஆதல் வேண்டும்" (இ.வி.375) பூவில் மணமெனப் புனிதத் தமிழினுக்(கு) ஆவி யாகும் அகப்பொருள் இயல்பே" இயற்கையில் மனத்தினுக் கின்ப மேயினி(து) ஆதலின் அகப்பொருள் அஃதெனல் இசைவது" (அ.வ.இ. 3:4,5) சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்க லாவ(து) அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் வெந்தீ" (சீவக. விமலை.74) இ. இளம்: அகப்பொருளாவது, போக நுகர்ச்சியாகலான், அதனான் ஆய பயன்தானே அறிதலில் அகம் என்றார். (தொ. பொ. முன்.) நச்: ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய் யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்ப முறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம். (தொ.பொ.1) ஈ. நாவலர்: அகமாவது, காதலர் உளக்கிடையும், அவர் காதல் கதிர்த்து வினைப்பட்டு அன்னோர் மனையறவாழ்க்கையில் தொடர்புறுவதுமாகும். (தொல்.அகத். முகப்பு.) வ.சுப.மா.: அகத்திணை என்ற தொடரில் 'அகம்' என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் வீடு என்பது. அகம்புகல் மரபின் வாயில்கள் என்பது தொல் காப்பியம் (1097). வீடு அல்லது குடும்பம் ஆகும் காதலே அகத்திணை நுதலுவது. அகத்திணை மாந்த ரெல்லாம் ஒருவீட்டு உறுப்பினர்களே. ஆதலின் அகம் என்னும் சொல் வீடு என்பதனையே முதலாவதாகக் குறிக்கும். எனினும் இல், மனை, வீடு என்ற பலசொற்கள் இருக்கவும் இச்சொல்லைக் குறியீடாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? சங்கத்தார் தாம் வடித்த புதிய காதல் இலக்கியத்தின் கூறுகள் எல்லாம் தோன்றத் தக்கதொரு சொல்லை ஆராய்ந்தனர். காதலர் தம் உள்ளப்புணர்ச்சி அவ்விலக்கியத்தின் உயிர்க்கூறு. உள்ளம் என்னும் பொருளும் அகச்சொல்லுக்கு இயல்பாக இருத்தலின் அகத்திணை என்று இலக்கியக் குறியீடு வைத்தனர். (தமிழ்க் காதல், பக்.3277) அகத்திணை வகை அ. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (தொ.பொ.1) ஆ. மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும் (ந.அ.1) அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப் பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும் (இ.வி.376) அகப்பொருள் புறப்பொருள் ஆயிரண் டவற்றுள் பெருகிய கைக்கிளை பெருந்திணை குறிஞ்சி ஆதிஐந் திணையென அகப்பொருள் ஏழே; கைகோள் இரண்டாம்; களவு கற்பே; வதுவை வாழ்க்கை வரைவகப் பொருளே (தொ.வி.199) அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனஎழு வகைப்படும் என்மனார் புலவர் (மு.வீ.1) (ஐந்திணையே அகம் எனக்கொண்டாரும் ஒருசார் ஆசிரியர்) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் அருஞ்சுரப் பாலையோ டைந்தும் அகமே (யா.வி.96. மேற்) இ. இளம்: அவ்வெழுதிணையும் ஆவன: கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. (தொ.பொ.1) ''முற்படக் கிளந்த எழுதிணை எனவே பிற்படக் கிளக்கப்படுவன எழு திணை உள என்பது பெறுதும். அவையாவன: வெட்சி முதலாகப் பாடாண் டிணை ஈறாகக் கிடந்த எழுதிணையும்". (தொ.பொ.1) நச்: ''முற்படக் கிளந்த என எடுத்தல் ஓசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணையுளவாயிற்று. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை எனவரும். ஒழிந்தோர் பன்னிரண்டு என்றார் ஆதலிற் புறத்திணை ஏழென்றது என்னை? எனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்கு ஆகாது இரண்டே ஆயவாறுபோல, அகத்திணை ஏழற்குப் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடைத் தாயிற்று". (தா.பொ.1) ஈ. வ.சுப.: கைக்கிளை பெருந்திணைகளின் பெருமைப்பாடு எவ்வாறாயினும் அவற்றை அகத்திணைப் பகுப்பினின்றும் தள்ள முடியாமைக்கும் ஐந்திணையோடு உடனெண்ணுதற்கும் குருதி யொப்பன்ன பண்பொப் பினை இவற்றிடைத் தமிழ்மூதாளர் கண்டிருத்தல் வேண்டும். இவ் விரண்டனையும் சேர்த்துக் கொள்ளாவிடின் அகத்திணை நகமற்ற விரல் போலவும் படியற்ற மனைபோலவும் முழு வனப்பில் ஒருகுறையுடைய தாகத் தோன்றும். (தமிழ்க்காதல், பக்.39) எழுதிணைகளையும் ஒருங்குசுட்ட வேண்டுங்கால், அகத் திணை என்னும் பொதுக்குறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கு. புறத்திணை மருங்கிற் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே (தொ.பொ.) அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் (தொ.பொ.) அகத்திணைப் பொதுப்பெயரை ஐந்திணைப் பிரிவின் மறு பெயராகத் தொல்காப்பியம் ஆண்டதில்லை. அகன் ஐந்திணை என்ற பொது அடையால், ஐந்திணை, அகத்திணையுள் ஒருவகை என்பதும் அகக்கைக்கிளை அகப் பெருந் திணை எனப் பிறவகை களும் உள என்பதும் கொள்ளக் கிடத்தல் காண்க. (தமிழ்க்காதல், பக்.40) கைக்கிளை பெருந்திணை ஐந்திணை என்ற மூன்றும் அகத்திணை யின் உட்பகுதிகள். அகத்திணையின் தன்மை எது, அது இம்முப் பகுதியிலும் காணப்படுதல் வேண்டும். உட்பகுதிக்கு ஒரு தனித் தன்மை இருக்கும். அத்தன்மையோடு மூலத் தொகுதியில் பொதுத் தன்மையும் இருக்கும். (தமிழ்க்காதல், பக்.211) அகத்திணையின் உட்பிரிவுகள் மூன்றனுள் கைக்கிளை யாவது நிகழா ஒழுக்கம்; பெருந்திணையாவது கழிபேரொழுக்கம்; ஐந்திணையாவது இயல்பொழுக்கம். உனக்குக் குழந்தைகள் எத்தனை என்று ஒரு மாதினை வினவின் உள்ள குழந்தை களையும் கூறுவாள். கருவிற் சிதைந்தவற்றையும் கழிசடையாய்ச் சென்றவற்றையும் உடன்மொழிவாள். அகத்திணைத் தாயின் முப்பகுதிக் குழந்தைகளும் இத்தன்மையனவே. (தமிழ்க்காதல், பக்.258) உ. ஆ.கு. ''புறத்திணைபன்னிரண்டு என்றார்" என்றது பன்னிரு படலத்தாரையும் புறப்பொருள் வெண்பாமாலையாரையும் கருதியதாம். அகத்தோன்செல்வம் அ. உழிஞைத் திணையின் துறைகளுள் ஒன்று (தொ.பொ.68) ஆ. ''ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று" (பு.வெ.மõ.86) ''ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் நொச்சிப் பூப்புனை புகழ்ச்சி" (இ.வி.609) ''வேந்தன் சிறப்பு" (Ã.சேõ. 101) இ. இளம்: ''அகத்தரசனது செல்வம்". நச்: அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வம் கூறுதல். அவை, படை, குடி, கூழ், அமைச்சு, நட்பும் நீர்நிலையும் ஏமப் பொருண்மேம் பாடு பண்டங்களும் முதலியனவாம். ஈ. நாவலர்: கொளற்கு அரிதாய் உணவுமுதலிய கூழும் நன்னீரும் படையும் உலையாதூக்கும் அறைபோகாத் தறுகண் மறவர் காவலு முடையது அரண் அகக்காவலன் பரிசு குறித்தலும். க.வெ.: அரணகத்துள்ள வேந்தனது செல்வ மிகுதி. அகத்தோன் வீழ்ந்த நொச்சி அ. அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். பொ. 69) ஆ. ''ஆழ்ந்துபடு கிடங்கொடு அருமிளை காத்து வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று" (பு.வெ. 89 இ.வி.609) இ. இளம்: ''முற்ற அகப்பட்ட அகத்தினுள்ளான் வீழ்ந்த நொச்சி" நச்: ''உண்மதிற்கட் புறத்தோனால் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன்போர் செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தல். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலும் கொள்க. அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்குமாயிற்று. இக்கருத்தானே 'நொச்சிவேலித் தித்தன் உறந்தை' (அகம். 122) என்றார் சான்றோரும். ஈ. நாவலர்: முற்று அகப்பட்ட அகத்தினுள்ளான் வீழ்ந்த நொச்சி. க.வெ.: புறமதிலிலன்றி உண்மதிற்கண் புறத்தோனால் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதிற்காவல். அகப்பாட்டு வண்ணம் அ. ''அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே" (தொ.பொ. 525) ஆ. ''முடியாததுபோன் முடிந்து வருவன அகப்பாட் டென்மனார் அறிந்திசி னோரே" (மு.வீ.994) இ. இளம்: அகப்பாட்டு வண்ணமாவது முடியாத் தன்மையான் முடிந்ததன் மேலது என்றவாறு. பேரா: அகப்பாட்டு வண்ணம் என்பது இறுதியடி இடையடி போன்று நிற்பது. அவையாவன: முடித்துக்காட்டும் ஈற்றசை ஏகாரத்தான் அன்றி ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன. நச்: அகப்பாட்டு வண்ணமாவது முடித்துக் காட்டாத் தன்மையாலே முடிந்ததன் மேலே நிற்பதாம். அது, தன்னை முடித்ததற்குரிய ஈற்றசை ஏகாரத்தான் வாராது இறுதி இடையடி போன்று நிற்பது. உ. ஆ.கு: ''இன்ன பா இவ்வாறு முடிக" என்பது முறை. அம்முறை போற்றாமல் முடியும் பா அகப்பாட்டு வண்ணமாம் என்க. அகம் புகன்மரபில் வாயில்கள் அ. ''அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய" (தொ.பொ. 150) இ. நச்: விருந்து முதலிய வாயில்கள் போலாது அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள். ஈ. க.வெ.: அகம்புகல்மரபின் வாயில்களாவார் பாணர் கூத்தர் முதலியோர். இவர்கள் தலைமகனை எக்காலத்தும் அகலாது நின்று தலைவியின் பிணக்கத்தைத் தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வந்து பழகும் இயல்பின ராதலின் 'அகம்புகல் மரபின் வாயில்' என வழங்கப் பெற்றனர். உ. ஆ.கு.: ''அகம்மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளு மாமே" (சூடா. நி. 12) 'அகம்புகல்' என்றதற்கு 'அகநகர்க்கட்புகுதல்' என்றார் நச். நகராவது மனை, அகநகர் உள்வீடு. விருந்து முதலிய வாயில்கள் ஓரொருகால் வந்து செல்வார். அகம் புகல் மரபின் வாயில்களாவார் பல்கால் பயின்று மனையிடத்துப் பழகும் இயல்பினர். அவர், பாணர் கூத்தர் போல்வார். அகம்புகல் மரபின்வாயில்கள் கூற்று அ. ''கற்புங் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் முகம்புகல் முறைமையில் கிழவோற் குரைத்தல் அகம்புகல் மரபின் வாயில்கட் குரிய" (தொ.பொ. 150) இ. இளம்: அகம்புகல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று. கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோள் மாட்டு உளதாகிய தன்மைகளை முகம்புகு தன்மையானே தலைமகற்கு உரைத்தல், அகம்புகுமரபின் வாயில்கட்குரிய. செய்யுளியலுள் 'வாயில் உசாவே தம்முளுரிய' (191) என்பதனால் தலை மகற்குரைத்தலே யன்றித் தம்முள் தாம் கூறுதலும் உரியர் எனக்கொள்க. நச்: இது விருந்து முதலிய வாயில்கள்போலாது அகநகர்க்கட் புகுதற்குரிய வாயில்கள் கூற்று உணர்த்துகின்றது. கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கமும், அன்பும், எவ்வாற்றானும் தம்குலத்திற்கு ஏற்றவாற்றான் ஒழுகும் ஒழுக்கமும், வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப்போலாது ஒருதலையாக மெல்லென்ற நெஞ்சினராய்ப் பொறுக்கும் பொறையும், மறைபுலப்படாமை இறுக்கும் நெஞ்சுடைமையும் வறுமையும் செல்வ மும் குறியாது வல்லாற்றான் விருந்தினரைப் பாதுகாத்து அவர் மனமகிழ் வித்தலும், கொண்டோன் புரக்கும் நண்புடைமாந்தரும் சுற்றத்தாரும் குஞ்சர முதலிய காலேதங்களும் பலபடை மாக்களும் உள்ளிட்ட சுற்றங்களைப் பாதுகாத்து அவை உண்டபின் உண்டலும் அவை போல்வன பிறவுமாகிய தலைவியுடைய மாட்சிமைகளை அவன் முகம்புகும் முறைமை காரணத்தால் தலைவற்குக் கூறுதல் அகநகர்க்கட் புகுந்து பழகி அறிதன் முறைமையினையுடைய வாயில்களுக்குரிய. அன்ன பிறவாவன, அடிசிற்றொழிலும், குடிநீர்மைக் கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ் வுறுத்தலும், காமக்கிழத் தியர் நண்பு செய்து நன்கு மதிக்கப்படுதலும் போல்வன. புகலுதல் மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க; அவட்கு முகம்புகல் முறைமை இன்மையின். ஈ. க.வெ.: கணவனே தன் ஆருயிர்த் தலைவன் என்னும் உறுதியிற் கலங்கா நிலைமை யாகிய கற்பென்னுந் திண்மையும், தலைவன்பால் மாறாத வேட்கையும், நன்றின்பால் உய்க்கும் ஒழுக்கமும் அன்பென்னும் ஈரமுடைமை யாகிய மென்மைத் தன்மையால் அறியாமையாற் பிறர்செய்த குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் மறைபுலப்படாமை யடக்கி நிறுத்தும் நிறையுடைமையும் தான் கற்றுவல்ல அட்டிற்றொழில் வண்மையால் செல்வம் நல்குரவாகிய எந்நிலையிலும் விருந்தினரைப் பேணுதலும் சுற்றத்தாரைத் துயர் துடைத்துப் பாதுகாத்தலும் பிறவும் அத்தன்மைய வாகிய தலைவியின் நற்குண நற் செயல்களை முகம் விரும்பிக் கேட்கும் முறையில் தலைவனுக்கு எடுத்துக்கூறும் கூற்றுக்கள் மனைக்கண் பலகாலும் வந்து பழகும் முறைமையினையுடைய பாணர் முதலிய வாயில்கட்கு உரியன. அகமலி ஊடல் அகற்சி அ. ''அகமலி ஊடல் அகற்சிக் கண்ணும்" (தொ.பொ. 157) இ. இளம்: தலைவி தனது அகமலிந்த ஊடல் நீங்கும் இடம். நச்: தனது நெஞ்சில் நிறைந்து நின்ற ஊடல் கையிகந்து துனியாகிய வழி. ஈ. க.வெ.: தனி மனத்தே யுண்டாகிய மகிழ்ச்சி காரணமாக ஊடல் அகலுதல். உ. ஆ.கு: அகம் மனம்; மலிதல் மிகுதல்; மனத்தே மகிழ்வு மிகுதல். தலைவியின் மனத்தே தலைவனைக் கண்ட அளவான் மகிழ்வு மீக்கூர்தலால் முறுகியிருந்த ஊடல் தானே அகலும் என்றதாம். ''எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து" ''காணுங்கால் காணேன் தவறாய" எனவரும் குறள்களை (1285, 1286) அறிக. அகவல் அ. ''அகவல் என்பது தாசிரி யம்மே" (தொ.பொ. 386) ஆ. ''தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க் கன்பா வரைந்த ஆசிரியம் என்ப." ''ஏஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே ஓஈ ஆயும் ஒரோவழி ஆகும்" ''என்னென் சொல்லும் பிறவு மென்றிவற் றுன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே." (அவிநயம்) ''இயற்சீர்த் தாகியும் அயற்சீர் விரவியும் தன்தளை தழுவியும் பிறதளை தட்டும் அகவல் ஓசைய தாசிரி யம்மே." ''ஏயென் றிறுவ தாசிரியத் தியல்பே ஓஆ இறுதியும் உரிய ஆசிரியம்." ''நின்ற தாதி நிலைமண் டிலத்துள் என்றும் என்னென் றிறுதிவரை வின்றே." ''அல்லா ஒற்றும் அகவலின் இறுதி நில்லா அல்ல நிற்பன வரையார்." (மயேச்சுரம்) ''அகவல் என்ப தாசிரியப் பாவே." (சங்கயாப்பு) ''நேரிசை இணைக்குறள் மண்டில நிலைப்பெயர் ஆகுமண் டிலமுமென் றகவல் நான்கே." (யா.வி. 70) ''நேரிசை இணைநிலை மண்டிலம் மண்டிலம் ஈரிரண் டியல எண்ணுங் காலை." (¯õ.Â.மேØ.) ''அகவல் இசையன அகவல் மற்றவை ஏஓ ஈஆய் என் ஐயென் றிறுமே" (இ.வி. 732) ''நேரிசை இணைக்குறள் நிலை மண் டிலமே அடிமறி மண்டிலம் இந்நான் ககவல்" (இ.வி. 733) ''ஆசிரி யத்தொலி அகவலாய் இயற்சீர் தன்தளை பிறவும் தழுவிய அளவடி நடையான் நடப்பது நால்வகைத் தாமவை நேரிசை இணைக்குறள் நிலைமண் டிலமே அடிமறி மண்டிலம் ஆகும் என்ப." (தொ.வி. 233) ''அகவல் ஓசை யொடும்அள வடித்தாய் வருவ தகவற் பாவென மொழிப." (மு.வீ. 922) இ. இளம்: அகவல் என்னும் ஓசை ஆசிரியத்திற்கு என்றவாறு. தூக்கு எனினும், ஓசை எனினும் ஒக்கும். அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி. பேரா: வழக்கினுள் அகவல் என்று வழங்கப்படும் பாவினை ஆசிரியத்திற்குரிய பாவென்ப. அகவிக் கூறுதலான் அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதியவாறெல்லாம் வரையாது சொல்லுவதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கினுள்ளார் அழைத்தலென்றுஞ் சொல்லுப. அங்ஙனஞ் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாந் தொடர்ந்து கிடந்த ஓசை அகவலெனப்படும். அவை தச்சு வினை மாக்கள் கண்ணும், களம்பாடும் வினைஞர்கண்ணும், கட்டுங் கழங்குமிட்டு உரைப்பார் கண்ணும், தம்மில் உறழ்ந்துரைப்பார் கண்ணும் பூசலிசைப்பார் கண்ணும் கேட்கப்படும். கழங்கிட் டுரைப்பார் அங்ஙனமே வழக்கிலுள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பாவெனப்படும் என்றவாறு. நச்: வழக்கினுள் அகவல் என்று வழங்கப்படும் ஓசையை ஆசிரியத்திற் குரிய என்ப. அகவிக் கூறலின் அகவல் ஆயிற்று. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங்கருதியவாறெல்லாம் வுரையாது கூறுவது. அதனை வழக்கினுள் அழைத்தல் என்ப. அங்ஙனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்தவோசை அகவலாம். அவைகளம்பாடு பொருநர் கண்ணும், கட்டுங்கழங்கும் இட்டுரைப்பார் கண்ணும் தம்மின் உறழ்ந்துரைப்பார்கண்ணும் பூசலிசைப்பார் கண்ணும் கேட்கப்படும். வழக்கின்கண் உள்ளதாய் அங்ஙனம் அழைத்துக்கூறும் ஓசை ஆசிரியப்பா என்றவாறு. ஈ. சி.க: கூற்று ஒருவர் ஒன்று கூறுவது. ஒருவர் வினாவக் கூறுவதுமாம். மாற்றம் அதற்கு மறுமாற்றம் பின் ஒருவர் கூறுவது. விடையாகக் கூறுவதுமாம். இதனை இக்காலத்தும் கழைக் கூத்தர்பாற் காணலாம். கேட்பச் செப்பிக் கூறாது என இயைக்க. உ. ஆ.கு.: அகவுதல் அழைத்தல். அகவிக்கூறலால் அகவல் என்ப. ''அகவன் மகளே! அகவன் மகளே" எனவரும் பாட்டு (குறுந். 23) அகவிப் பாடுதல் மரபால் அவள் பெற்ற பெயர் என்பதைக் காட்டும். கூற்றும் மாற்றமுமாக வருதல் செப்பல்; இது கூற்றாகவே வருதல். ''அன்னச்சேவல் அன்னச்சேவல்", ''வாயிலோயே வாயிலோயே" என விளியாய்ச் செய்தி தொடர்தல் அறிக. அகற்சி அ. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே (தொ.பொ.41) இ. இளம்: (சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித்) தமது மனையயற்கண் பிரிந்தார் ஆயினும் பிரிவின் கண்ணதே. எனவே ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். நச்: (இளம்பூரணர் உரையை வழிமொழிந்த நச்சினார்க்கினியர்), ''நற்றாய் தலைவியைத் தேர்ந்து இல்லிற் கூறுவனவும் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின் சென்றதேயாயிற்று. இக்கருத்தான் 'ஏமப்பேரூர்' என்றார். இதனானே மனையயற்கட்பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த் துணர்க" என விளக்கம் வரைந்தார். ஈ. நாவலர்: உடன்போயவரைத் தேடிச்சுரஞ்செல்லும் செவிலித்தாயர் அன்றி, தமர் ஏவலர் முதலிய பிறரேயாயினும் அவர்தேடுதல் அண்மைச்சேரி யன்றி அகன்ற சேய்மைச் சுரத்தின் கண்ணதேயாம். உடன்போகுந் தலைமக்கள் தம்முட்பிரிதல் இன்மையின் அவரொழுக்கம் பாலையாதல் இல்லை. அதனால் ஈண்டு 'அகற்சி' என்பது பிரிதலை உணர்த்தாது சேய்மையையே உணர்த்தும் என்க. மு.அ.: தாயர் சேரியினும் சுரத்தினும் சென்று தேடுதற்குக் காரணம் தலைவி தம்மைவிட்டுப் பிரிந்தமையேயாகும். எனவே, தமர்வரைப் பிரிதலும் பிரிவின்பாற்படும் எனக்கொள்ளல் வேண்டும்; அங்ஙனமன்றி இருவரும் உடன்செல்லுதல் பற்றியுடன்போக்கினைப் புணர்தலின் பாற்படுத்துக் குறிஞ்சித் திணைக்கண் கூறுதல் யாண்டும் வழக்காறில்லை. அகைப்பு வண்ணம் அ. அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும் (தொ.பொ. 530) ஆ. அறுத்தறுத் தியல்வன அகைப்பா கும்மே (மு.வீ. 992) இளம்: அறுத்தறுத்து இயலுவது அகைப்பு வண்ணமாம் என்றவாறு. பேரா: அறுத்தறுத்துப் பயில்வது அகைப்பு வண்ணம் எறு. இது விட்டுவிட்டுச் சேறலின் அகைப்புவண்ணம் என்னும் பெயர் பெற்றது. நச்: அகைப்பு வண்ணமாவது விட்டுவிட்டுச் செல்லும் ஓசையை உடையது எறு. அகைத்தல் அறுத்தல் ஆதலிற்காரணப்பெயர். ஒருவழி நெடில்பயின்றும் ஒருவழிக் குறில்பயின்றும் அற்றும் வருவது. உ. ஆ.கு: அகைத்தல், வேதனை, ஒடித்தல், அறுத்திடல் என்னும் பொருளில் வருவது. 'முரிவரி', 'யாழ்முரி' என்பவை ஒப்பிட்டுக் காணத்தக்கன. அங்கதச் செய்யுள் அ. ''வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்" (தொ.பொ.434) இ. இளம்: வசையொடும் நசையொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப் பெயர் பெறும் என்றவாறு. பேரா: (மேற்கூறிய) அங்கதச் செய்யுள் வசையேயன்றி, அவ்வசையானே நசை தோன்றச் செய்வது செவியறிவுறை எனப்படாது அங்கதச் செய்யுள் எனவே படும் எறு. எனவே, இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாகச் செய்யினும் அங்கதச் செய்யுள் எனப்படும் என்றவாறு. அவை, விலக்கியற் செய்யுளுட் கண்டு கொள்க. இதுவும் செம்பொருளாகியும் பழிகரப்பாகியும் வருமென உணர்க. எனவே கூறப்பட்டன எல்லாம் வெகுளியும் பொருளும் நகையும் பயப்பனவாயின. நச்: வசைப்பொருளொடும் அதனாற் பிறந்த நசைப் பொருளொடும் ஒரு செய்யுள் கூடி வருமாயின் அதனைச் செம்பொருளங்கதம் பழிகரப்பங்கதம் எனப் பெயர் கூறப்படும் எறு. உ. ஆ.கு: பிற்கால அணி இலக்கணத்தார் புகழாப் புகழ்ச்சி, வஞ்சப் புகழ்ச்சி, பழிப்பதுபோலப் புகழ்தல், புகழ்வதுபோலப் பழித்தல் எனக் கூறுவன எண்ணத்தக்கன. நசை என்றது விருப்பத்தாற்றாங்கியுரைத்தலிற் போலும். பின் 'இல்லாதன சொல்லி நகைப்பொருட்டாக' என்றும் 'வெகுளியும் பொருளும் நகையும்' என்றும் வருதலின் இது நகையென்றும் இருக்குமோ என்பது ஆராயத் தக்கது என்பார் சி.க. (தொ.பொ. 434 குறிப்புரை) அங்கதப்பாட்டளவு அ. அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும். (தொ.பொ.461) (அவற்றோடு நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு) இ. இளம்: அங்கதப் பாட்டாகிய வெண்பாவிற்கு எல்லை சிறுமை இரண்டடி. பெருமை பன்னிரண்டடி என்றவாறு. பேரா: அங்கதப் பாட்டிற்கும் வெண்பாவே உறுப்பாகலான் ஈண்டு வைத்தான். இதுவும் மேற்கூறிய இரண்டெல்லையும் பெறும் என்றவாறு. நச்: வசைப்பாட்டின் எல்லை முற்கூறியவைபோல ஈரடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையுமாய் வரும் எறு. உ. ஆ.கு: அங்கதத்திற்கெனப் பரிபாடல், கலிப்பா என்பனபோல ஒருபா வகை இல்லையென்றும், அது வெண்பா யாப்பால் வருமென்றும் கொள்க. அதனாலேதான், ''அங்கதப் பாட்டாகிய வெண்பா" என உரையாசிரியர்கள் உரைத்தாராயினர். நேமிநாதம் நூற்பா வெண்பாவால் ஆயது. அங்குதல் வளைதல். நேரே புகழ்வோ, நேரே இகழ்வோ இன்றி ஒன்றைப் பற்றி ஒன்று கூறுதலின் அங்கதம் ஆயிற்றாம். பேராசிரியர் இரண்டெல்லை என்றது அடிச்சிறுமை, அடிப்பெருமையாகிய ஈரெல்லைகளையுமாம். அங்கதம் அ. 1. ''அங்கதம், 'யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (தொ.பொ.384) 2. ''அங்கதச் செய்யுள், 'வெண்பா யாப்பின" (தொ.பொ.423) 3. ''அங்கதந் தானே அரில்தபத் தெரியிற் செம்பொருள் கரந்தது எனவிரு வகைத்தே" (தொ.பொ. 429) 4. ''செம்பொருள் ஆயின வசையெனப் படுமே" (தொ.பொ.430) 5. ''மொழிகரந்து மொழியின் அதுபழிகரப் பாகும்" (தொ.பொ.431) இ. இளம்: 1. அங்கதயாப்பு. 2. அங்கதம் என்பது பொருளான் ஆகிய பெயர். 3. அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொருள் எனவும் கரந்தது எனவும் இருவகைப்படும். 4. செம்பொருள் அங்கதம் வசையெனப் பெயர் பெறும். 5. தான்மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப் பெனப் பெயர்பெறும். பேரா: 2. அங்கதம் என்பது முகவிலக்கு முதலாகிய விலக்குறுப்பாகியும் பிறவாற்றானும் அவைபொருளாகவருவன. அங்கதச் செய்யுள் என்பது பண்புத் தொகை; உம்மைத்தொகை என்பார் செய்யுள் என்பதும்வேறு என்ப. 3. அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றாற்கூறுக என்பான் இது கூறினான். 'அரில்தப' என்றது என்னை எனின், அவை புகழ்போன்று வசையாதலும்பட்டுத் தோன்றும் மயக்கமுடைய வாதலின் மயக்கமறத் தெரியின் என்றவாறு. 'நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான்' (கலி.52) என்பது புகழ்போன்று வசையாயிற்று. என்னை? கொன்றான் ஆயினும் குறங்கினைக் கதத்தண்டு கொண்டு எற்றுதல் குற்றமாதலின் என்ப தறிக. கொடைமடங் கூறுதல் வசைபோன்று புகழெனப்படும். அஃது அங்கதம் ஆகாது என்பான் 'அரில்தப' என்றான் என்பது. 4. வாய்காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும். இது வெண்பாவினால் வருதலே பெரும்பான்மை. 5. வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப் பங்கதம். மாற்றரசனையும் அவனிளங்கோ வினையும் வசைகூறுமாறு போலாது தங்கோனையும் அவனிளங்கோவினையும் வசைகூறுங்கால் தாங்கி யுரைப்பர்; அவைபோலப்பழிப்பன என்றவாறு. நச்: 2. வசையாகிய பொருள்மேல் வருஞ்செய்யுள். அங்கதத் செய்யுள் பண்புத் தொகை. 3. வசைச்செய்யுளைக் குற்றமற ஆராயிற் செம்பொரு ளங்கதமும் பழிகரப் பங்கதமும் என அவ்விரு வகையினையுடைத்து. அவை புகழ்போன்று வசையாதலும், வசைபோன்று புகழாதலும் படவரும் என்றற்கு 'அரில்தப' என்றார். 'நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திட்டானும் போன்ம்' என்பது புகழ்போன்று வசை. மாயோன் கூற உணர்தலின் கரந்ததின்பாற்படும். கொடைமடம் படுதல் அல்லது' என்பது வசைபோன்ற புகழ். இது செம்பொருளின் பாற்படும். இதனானே அங்கதம் ஆகாது என்பது கருத்தாயிற்று. 4. வாய்காவாது கூறப்படும் வசை செம்பொருள் வசை எனப்படும். அவை வெண்பாவேயன்றிச் சிறுபான்மை மற்றைய பாக்களாலும் வருமென் றுணர்க. 5. வசைப்பொருளினைச் செம்பொருள் படாமல் இசைப்பது பழிகரப்பு அங்கதமாம். ஈயென இரத்தல் என்னும் புறப்பாட்டினுள் (204) ''தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல், உண்ணார் ஆகுவர் நீர்வேட் டோரே" என்ற வழி நின் செல்வங்கடல் போற்பெரிதேனும் பிறர்க்கினிதாய் நுகரப் படாதென வசையைச் செம் பொருளாகாமல் கூறியவாறு காண்க. புறத்தினுள் பலவும் இவ்வாறே வருவன காண்க. அச்சம் நான்கு அ. ''அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே" (தொ.பொ.252) இ. இளம்: அணங்கு முதலாகச் சொல்லப்பட்ட நான்கினும் பிறக்கும் மாறுபடுதல் அமையாத அச்சம் நால்வகைப்படும். பிணங்கல் சாலுமாயின் நடுக்கம் முதலாயின உளவாகா, அவை பிணங்கல் சாலாதவழியே உளதாவதென்று கொள்க. கொலைகளவு கட்காமம் பொய்யென்பனவற்றை நிகழ்த்தினவர்க்கு அரசனால் அச்சம் வருதலின் அவனும் அஞ்சப்படும் பொருளாயினான். பேரா. : தெய்வமும் விலங்கும் கள்வரும் தமக்கு இறைவராயினாருமென நான்கு பகுதியான் அச்சம் பிறக்கும். அணங்கென்பன, பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும் நிரயப்பாலரும் பிறரும் அணங்குதல் றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலானயினாரும் உருமிசைத் தொடக்கத்தனவும் எனப்படும். விலங்கென்பன, அரிமா முதலாகிய அஞ்சு தக்கன. கள்வர் என்பார், தீத்தொழில் புரிவார் இறை எனப்படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். 'பிணங்கல்சாலா அச்சம்' என்றதனால் முன்னையபோல இவை தன்கட் டோன்றலும் பிறன் கட்டோன்றலும் என்னுந் தடுமாற்றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும் என்பது. பிணங்காத அச்சம் என்னாது சாலா அச்சம் என்ற மிகையான் இந் நான்குமே யன்றி ஊடன் முதலியனவும் அச்சத்திற்குப் பொருளாம் என்று கொள்க. ஈ. நாவலர் : காட்சி கடந்து காரணங்காணாவிடத்துக் கடவுள்மேல் ஏற்றிக்கூறும் உலகியலில் துன்புறுத்தும் சூர் அல்லது இயவுளாக் கொள்வதை அணங்கு என்பது பழவழக்கு. கள்வர், அலைப்பொருள் வௌவுவோர். இறை, குற்றங்கடிந்து ஒறுக்கும் வேந்து. குடிக்குற்றம் ஒறுத்தோங்கும் அறம் பிற வேந்தர்க்கு இன்மையின் இறை கடியும் ஒறுப்பச்சம் தரும் வேந்தைத் ''தம்மிறை" எனச் சுட்டிய பெற்றி அறிக. அச்சம் ஏதுவாம் தம்மிறை (வரை)யும் அதற்குரிய ஒறுப்பாலச் சுறுத்தும் தம் இறையையும் ஒருங்கே 'தம்மிறை' எனச் சுருக்கி விளக்கிய செவ்வியுணர்க. இனிப் பிணங்கல், மாறுபடல், நெருங்கல் எனும் பொருட்டாம். மாறுபட்டு நெருங்கக்கூடும் எதுவும் அஞ்சப்படாது ஆதலின் பிணங்கல் சாலா அச்சம் நான்கே என்று இந்நான்கன் பொதுவியல் விளக்கப்பெற்றது. உ. ஆ.கு: அணங்கு அச்சுறுத்தி வருத்துவது என்னும் கருத்துண்மையால், அணங் குறுத்தல் என்னாமல் ''தகையணங்குறுத்தல்" என வள்ளுவர் ஆட்சி புரிந்தது கருதத் தக்கதாம். தம் இறையும் அச்சத்திற்குரியர் ஆகலின் அழலின் நீங்காது அணுகாது தீக்காய்வார்போல் அரசரோடு தொடர்பு கொளல் வேண்டும் என்பது பண்டு தொட்டே பயிலவழங்கியதாம். ஏனையவை அச்சப்பொருளாதல் வெளிப்படை. அசை: அ. 1. குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையு மென்றிசிற் பெயரே (தொ.பொ. 312) 2. இருவகை உகரமோ டியைந்தன வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப குறிலிணை உகரம் அல்வழி யான (தொ.பொ. 313) இயலசை முதலிரண் டேனவை உரியசை (தொ.பொ. 314) தனிக்குறில் முதலசை மொழிசிதைத் தாகாது (தொ.பொ. 315) ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம் (தொ.பொ. 316) முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும் (தொ.பொ. 317) குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே (தொ.பொ. 318) ஆ. அசைக்குறுப்பு: குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும் அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் வறிதே உயிர்மெய்யும் மூவினமென் றோதினர் என்று செயிரவர்க்கு நின்றதோ சென்று. நெடிய குறிய உயிர்மெய் உயிரும் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே (அவிநயம்) குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றுகர ஆதி குறுகிய ஐஔமவ் வாய்தம் நெறிமையால் ஆய்ந்த அளபெடைதாம் வண்ணங்கட் கெண்முறையால் ஏய்ந்தன அந்நான் கெழுத்து. குறில் நெடில் ஆய்தம் அளபெடை ஐகாரக் குறில்குற் றிகர வுகரம் மறுவில் உயிர்மெய் விராய்மெய்யோ டாறா றெழுத்தும் செயிர்வன்மை மென்மை சமன். (நாலடி நாற்பது) உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக் குறில்நெடில் அளபெடை மூவினம் எனாஅ அஃகிய நல்லுயிர் மஃகான் குறுக்கமோ டைந்து தலையிட்ட ஐயீ ரெழுத்தும் அசைதொடை நேரசை யாகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே. (பெரியபம்மம்) குறில்நெடில் அளபெடை உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையோ டாய்தம் இஉ ஐயென மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும். (Põ.பõ.) குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக்கெழுத்தே (].Põ.பõ.) (யா.வி.2. மேற்.) உயிரே மெய்யே உயிர்மெய் என்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐஓள மகரக் குறுக்கம் என்றாங் கைம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே (யா.வி.2) குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயர் ஆய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதல் பேரமர்க்கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் அறிஞருரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே (யா.கா.4.) நேரசை ஒன்றே நிரையசை இரண்டல காகும் என்ப அறிந்திசி னோரே. நேரோர் அலகு நிரையிரண் டலகு நேர்புமூன் றலகு நிரைபுநான் கலகென் றோதினர் புலவர் உணரு மாறே. (அவிநயம்) தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை என்ப. குறிலிணை குறில்நெடில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நிரையசை என்ப (நற்றத்தம்) குறில்நெடில் தனியாய் நின்றுமொற் றடுத்தும் குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும் நடைபெறும் அசைநேர் நிரையசைநா லிரண்டே (பல்காயம்) நேர்நால் வகையும் நெறியுறக் கிளப்பின் நெடிலும் குறிலும் தனியே நிற்றலும் அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும் இவைதாம் நேரசைக் கெழுத்தின் இயல்பே. இணைக்குறில் குறில்நெடில் இணைந்துமொற் றடுத்தும் நிலைக்குரி மரபில் நிரையசைக் கெழுத்தே. (சங்கயாப்பு) நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் கடிவரை இலவே நேரசைத் தோற்றம். குறிலும் நெடிலும் குறில்முன் நிற்பவும் நெறியினொற் றடுத்தும் நிரையசை யாகும் (மயேச்சுரம்) நேர்நேர் நிரைநேராய் நேர்பு நிரைபடங்கும் சீர்மேல் அசைபலவாய்ச் சேருங்கால் ஈரியல்பில் குற்றிபோல் குற்றிகரம் கொண்டியற்ற நேர்நிரையாய் முற்றி முடிந்து விடும். நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் மேவ ஓடிய விடுவா ரும்முளர் நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ஆட்டுருப் போல ஒருவிரல் நேரே (மயேச்சுரம்) விரலிடை யிட்டன அசைச்சீர் நாலசை விரல்வரை யிடையிலும் மானம் இல்லை விரலிடை யிட்டன ரடருடு வடிவம் நிரல்பட எழுதி அலகு பெறுமே (மயேச்சுரம்) தனியசை யென்றா இணையசை யென்றா இரண்டென மொழிமனார் இயல்புணர்ந் தோரோ (Põ.பõ.) நெடிலோடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை யாகுதல் இலவென மொழிப (Põ.பõ.) குறிலிணை யாகியும் குறில்நெடில் ஆகியும் ஒற்றொடு வந்தும் நிரையசை யாகும் (].Põ.பõ.) (யா.வி.5. மேற்.) நேரசை யென்றா நிரையசை யென்றா ஆயிரண் டாகிய அடங்குமுன் அசையே (யா.வி.5.) நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகை யானே (யா.வி.6.) குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும் நெறிமையின் நான்காய் வருநிரை யசையே (யா.வி.8.) குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில்நெடிலே நெறியே வரினும் நிறைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென் றறிவேய் புரையுமென்றோளி உதாரணம் ஆழிவெள்வேல் வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே (யா.கா.5.) குறிலும் நெடிலும் எனுமிவை நேரசை; குற்றெழுத்துப் பெறின் இவையே நிரை யசையாம்; பிழைப்பில்லைபின் பொற்றிறினும் நேர்நிரை யென அசை ஓரிண்டாகும் (இ.வி.713) நெடிலும் குறிலும் தனித்துமொற் றடுத்தும் நடைபெறும் நேரசை நான்கும் நீங்காக் குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும் நெறிவரும் நிரையசை நான்கும் ஆகும் (இ.வி.714) அசையே நேர்நிரை யாமிரு வகைய நெடில்தனிக் குறில்மெய் நிகழ்குறில் நேராய் இணைக்குறில் குறில்நெடில் இவைநிரை யசையே (தொ.வி.204) நெடில்குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகையானே (மு.வீ. 863) குறிலிணை குறில்நெடில் தனித்தும் ஒற்றடுத்தும் நெறிமையின் நான்காய் வருநிரை யசையே (மு.வீ. 864) குறில்நெடில் தனித்தும்மெய் ஒன்றிரண் டணைந்தும் குஎனக்கூஎனக் கல் எனக் கார்என நெய்த்துவாழ்ந் தெனுமிரு மொழிகளின் ஈற்றெழுத் தகன்றா லெனவரும் அறுவகை நேரே (அ.வ.இ.சொல்.72) குற்றெழுத் திணைந்தும் குறில்நெடில் புணர்ந்தும் இவற்றோடொற் றொன்றிரண் டணைந்தும் கரிஎனச் சிவா எனக் குகன் எனக் கவான்என நிகழ்ந்து விடாய்க்கெனும் இருசொற் கடையெழுத் தொழிந்தால் எனஇரு மூன்று விதநிரை வருமிவை அன்றியும் ஒருவா றறைகுதும் அடுத்தே (அ.வ.இ.சொல்.73) செய்கை தன்மம் கல்வி தன்மை பொன்னில் எனுமிவை போன்றநேர் நேரும் நிற்கும் இடத்தால் நிரையெனப் படுமே (அ.வ.இ.சொல்.74) நேர்நாள் நிரைமலர் இவைகள் ஓரசைச் சொற்க ளாமெனத் துணிந்தனர் புலவர் (அ.வ.இ.சொல்.75) இ. இளம்: 1. (அசையாமாறு உணர்த்துதல்) குறிலும் நெடிலும் குறிலிணையும் குறினெடிலும் தனியேவரினும் ஒற்றொடுவரினும் ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமாம் என்றவாறு. இதுவும் ஒரு நிரல்நிறை; முந்துற்ற நான்கும் ஒருபொருளாய்ப் பின்னிரண்டாகி வரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான். 'கோழிவேந்தன்' என நான்கு நேரசையும் (கோ ழி வேந் தன்) வெறிசுறா நிறம் குரால் எனநான்கு நிரையும் (வெறி சுறா நிறம் குரால்). 2. மேற்சொல்லப்பட்ட இரண்டையும் குற்றியலுகரமுமல்லாத முற்றிய லுகரமும் பொருந்திவரின் நேர்பசையும் நிரைபசையும் எனப்பெயராகும். அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத இடத்து என்ற வாறு. காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு என்பன நேர்பசை. வரகு, அரக்கு, மலாடு, பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு என்பன நிரைபசை. தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு, நிரைபு என்பனதாமே உதாரணமாம். அஃதேல், நேர்பசை, நிரைபசை யெனக் காக்கை பாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலராலெனின், அவர் அதனை இரண்டசை யாக்கி யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தராது, வெண்பா ஈற்றின்கண் வந்த குற்றுகர நேரீற்றியற்சீரைத் தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசை யூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பு என உகர ஈற்றான் உதாரணம் காட்டினமையானும் வெண்பா ஈற்றிலும் முற்றுகரமும் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும் நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க. அலகிடுங்கால் நேரசை ஓரலகு; நிரையசை இரண்டலகு; நேர்பசை மூன்றலகு; நிரைபசை நான்கலகு. பேரா: 1. (அசைவகையுணர்த்துதல்) குறிலும் நெடிலும் தனித்து வந்தும் குறில் இரண்டு இணைந்து வந்தும் குறிற் பின்னர்நெடில் இணைந்து வந்தும் அவை ஒற்றடுத்தும் முறையானே நிரல்நிறை வகையானே நேரசையும் நிரையசையுமென்றாம். 'குறிலே நெடிலே ஒற்றொடு வருதலொடு' எனவும், 'குறிலிணை குறினெடில் வருதலொடு' எனவும், வேறுநிரல் நிறீஇப் பொருளுரைக்க. மெய்ப்படநாடி என்பது பொருள்பெற ஆராய்ந்து. எனவே, இப் பெயர் ஆட்சிகாரணமேயன்றிக் குணங்காரணமாகலுமுடைய என்றவாறு. உயிரில் லெழுத்தல்லன (356) தனித்து நிற்றலின் இயலசை யென்னும் பொருள்பட நேரசை யென்றாயிற்று. அவை இரண்டும் நிறைதலின் இணையசை என்னும் பொருள்பட நிரை யசை யென்றாயிற்று. அல்லதூஉம் மெய்ப்பட நாடி என்றதனான் அவ்வாய் பாடே அவற்றுக்குக் காரணம் என்பதூஉம் கொள்க. உடம்பொடு புணர்த் தல் (665) என்பதால் உதாரணங்கூறியவாறு. அவை நேர்நிரையெனச் சொல்லிக் கண்டு கொள்க. அ, ஆ எனவும், அல் ஆல் எனவும், பல பலா எனவும் புகர் புகார் எனவும் பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் கொள்க. மற்றுக் குறினெடிலென எழுத்தாக ஓதியதென்னை? சொல்லாய வழி அசை யாகாவோ எனின், அவை ஒற்றொடு வருதல் என்றதனானே சொல்லாதலும் நேர்ந்தானாகவே அவை இருவாற்றானும் அசையாம் என்பது சீரின் றன்மைக் கண் வந்தது. 'உள்ளார் தோழி' என நேரசை நான்கும் வந்தன. 'வரி வரால் கலா வலின்' என நிரையசை நான்கும் வந்தன. 2. (இது சொல்லாத அசைக்கூறும் சொல்கின்றது) இருவகை உகரம் என்பன, குற்றுகர முற்றுகரங்கள். அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின் நிறுத்த முறையானே நேரசையோடு ஒன்றிவந்த குற்றுகரமும், அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை எனப்படும். நிரையசை யோடு ஒன்றிவந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும். இயைந்து என்றான் இருவகை உகரமும் இருபிளவுபடாது ஒன்றாகி வரல்வேண்டும். அங்ஙனம் அசையாங்கால் என்றற்கு, இருவகை உகரமும் ஒருகாலத்து ஒன்றன்பின் வாரா. வேறுவேறு வரும் என்பது, இருவகை உகரமும் இறுதிக்கண் நின்று அசையாக்கும் என்பதென்னை பெறுமா றெனின், குற்றுகரம் ஈற்றுக்கண் அல்லது வாராமையானும் 'நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும்' (9) என்பதனானும் பெறுதும் என்பது. அல்லதூஉம் நுந்தை என்னும் முதற்கட்குற்றுகரம் இறுதிக்கண் நேரசை யல்லது நிரையசையடுத்து வருதலின்மையானும் அது பெறுதும் என்பது. முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசை கூறி அவற்றுப்பின் இருவகை உகரம் வரும். எனவே, அவை குற்றுகரத் தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றவேனும் அவற்றுள் குற்றெழுத்துப்பின் வரும் உகரம் நேரசையாகா தென்பது. ........ ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும், நிரைபசை நான்குமாயின. வண்டு, நாகு, காம்பு எனவும், வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு எனவும் இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு. இனி, முற்றுகரம் இரண்டசைப்பின்னும் வருங்காற் குறிலொற்றின் பின்னும் நெடிற்பின்னுமென நேரசைக்கு இரண்டல்லதாகாது. நிரையசைக் கண்ணும் குறிலிணைப்பின்னும் குறினெடிற் பின்னுமல்லதாகாது. மின்னு, நாணு எனவும் உருமு குலாவு எனவும் வரும் (இதன் மேலும் தடைவிடைகளால் விளக்குகிறார் பேராசிரியர்) நச்: 1. (அசை கூறுகின்றது) குறிலும் நெடிலும் தனித்துவந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும் குறிற்பின்னர் நெடில் இணைந்துவந்தும், பின்னர் இந்நான்கும் ஒற்றொடு வருதலோடே பொருள்பெற ஆராய்ந்து நிரனிறை வகையான் நேரசையும் நிரையசையும் என்று பெயர் கூறினார் ஆசிரியர். குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரை ஒவ்வாவேனும் அவற்றின் மாத்தி ரையை நோக்காது எழுத்தாந்தன்மை நோக்கி இரண்டற்கும் ஒரோவோ ரலகு பெறுமென்றார். இது குறிலிணைக்கும் குறினெடிற்கும் ஒக்கும். நேரசை நிரையசை என்ற பெயர் ஆட்சியும் குணமும் காரண மாகப் பெற்ற பெயர். இரண்டெழுத்தானாகாது ஓரெழுத்தா னாதலின் நேரியதன்றே; அதனான் நேரிய அசை நேரசை என்றாயிற்று. உயிரிலெழுத்தும் எண்ணப் படாஅ (44) என்றலின், எண்ணப்படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைந்து நிற்றலின் அசையென்னும் பெயரும் எய்திற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசை நிற்றலின் அசையென்னும் பெயரும் எய்திற்று. இரண் டெழுத்து நிரைதலின் இணையசை யென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. (எடு.) அ, ஆ, அல், ஆல் எனவும்; பல, பலா, புகர், புகார் எனவும் வரும். ஒற்றுக்கள் எழுத்தாய் நின்று அலகுபெறுதற்குரியவல்ல என்பது மொழி மரபின்கண்ணே 'மொழிப்படுத்திசைப்பினும்' (20) என்பதன்கட் கூறிய வாற்றான் உணர்க. குறில் நெடில் என எழுத்தாக ஓதிற்றேனும் 'நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி' என்றதனால் நெடில் சொல்லாந் தன்மையும், குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே என்றதனால் (10, 11) குறிலும் சிறுபான்மை சொல்லாந் தன்மையும் பெறுதும். அன்றியும் ஒற்றுக் கூறினமை யானும் பெறுதும். 'உள்ளார் தோழி' என நேரசை நான்கும்; வரிவரால் கலாவலின்' என நிரையசை நான்கும் வந்தன. 2. (கூறாத அசைக்கூறுங்கூறுகின்றது) குற்றுகர முற்றுகரங்களோடே மேற்கூறிய நேரசையும் நிரையசையும் பிளவுபடாது ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின், நிறுத்த முறையே நேரசையோடியைந்த குற்றுகரமும் அதனோடியைந்த முற்றுகரமும் நேர்பசை எனப்படும். நிரையோடு இயைந்த குற்றுகரமும் அதனோ டியைந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும். நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு; நிரையின்பின் உகரம் வருதலின் நிரைபு என ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயராதல் மேற்கூறிய வற்றுட்காண்க. வண்டு நாகு காம்பு; மின்னு நாணு தீர்வு நேரசை மூன்றன் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயிற்று. குறிற்பின்வரும் இருவகையுகரமும் நேர்பசையாகாமை மேற்கூறுகின்றார். வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்றுகரமும் நிரையசை மூன்றிற்பின்னர் முற்றுகரமும் வந்து நிரைபசை யாயிற்று. குறினெடில் ஒற்றின்பின் வந்த முற்றுகரம் உளவேற் காண்க. குற்றியலுகரமும் அற்றென மொழிப (புண. 3) என்ற விதியாற் குற்றுகரம் புள்ளிபெற்று நின்றும் புள்ளிபெற்ற ஒற்றுப்போன்று ஒடுங்கி நில்லாது தன்னான் ஊரப்பட்ட மெய்யுந்தானும் அரை மாத்திரைத்தாய் நின்றதேனும் அகன் றிசைத்தலின் ஒற்றென்றலு மாகாது; ஒரு மாத்திரை பெற்ற உயிர் போல அகன்றிசையாமையின் உயிரென வேறோர் அலகு கொடுத்தலு மாகாது; இதனைச் செயற்பாலது வேறோர் அலகு கொடுத்தலுமாகாது; இதனைச் செயற்பாலது வேறோரசையாக்குதலென நோக்கி நேர்பசை நிரைபசை என வேண்டினர் ஆசிரியர். பின்னுள்ளோர் அலகுபெறுமென்று கொண்டாரேனும் அவர்க்கும் அலகு பெறாவென்றுங்கொள்ள வேண்டிய வாறும், தேமா, புளிமா ஒழியக் காசு பிறப்பு எனக் குற்றுகர ஈறாக வேறுதாரணங் கொள்ளவேண்டிய வாறும் உணர்க. எனவே குற்றுகரம் அலகு பெறாவாயிற்று. வண்டு, கொண்டி என ஓசை ஒவ்வாமை செவி கருவியாக உணர்க. ஒரு மாத்திரை பெற்ற முற்றுகரம் நேர்பசை நிரைபசையாமோ எனின், வண்டு வண்டு வண்டு வண்டு என்புழிப் பிறந்த அகவலோசை மின்னு மின்னு மின்னு மின்னு என்புழியும் பெறப்படுதலானும், வெண்பாட் டீற்றடி 'வண்டு' எனக் குற்றுகர வீற்றானின்றுழியும் 'கோலு' என முற்றுகர வீற்றான் நின்றுழியும் ஒத்த ஓசையவாம் ஆகலானும் அவ்வசைகளாயின. இஃது எழுத்தளவெஞ்சினும்... மொழிப" (செய். 43) என்ற விதியாற் பெறுதும். ].P.: 1. உடம்பொடு புணர்த்தல் என்பதனை உடம்படு புணர்த்தல் (உடம் படுபு உணர்த்தல்) என்று பாடமிருப்பதாக டாக்டர் உ.வ. சாமிநாதையர் நன்னூல் சங்கரநமச்சிவாய ருரைப்பதிப்புட் கூறியுள்ளார். இங்கே உடம்பொடு புணர்த்தலால் அமைந்து கிடந்ததென்பது நேரும் நிரையும் என்று கூறிய அசைப்பெயர்களே அவற்றிற்குதாரணமாய் அமைந்து கிடக்கு மாறு சொன்னமையை. 2. இரு பிளவு படாது என்றது வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசை யாகாமல் ஒருசொல் விழுக்காடுபட நிற்றலை. 'உண்டுடுத்து' இதில் உண்டு என்பது குற்றுகரமேனும் வருஞ்சொல்லோடு சேர்ந்து வேறசையானமை யால் நேர் பன்றானமை காண்க. பிறவாறும் பிளவுபடுவன ஆகா என்க; புணர்ச்சி வகையான் முற்றியலுகரம் வந்ததற்கு உதாரணம் 'நாணுத்தளை, விழவுத் தலைக் கொண்ட' என்பன. இவற்றில் வரும் உகரம் புணர்ச்சிபற்றி வந்தன. நாண் உகரம் பெற்று நாணு எனவும், விழா என்பது குறுகி உகரம் பெற்று விழவு எனவும் நின்றன. அசைச்சீர் அ. இசைநிலை நிறைய நிற்குவ தாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே (தொ.பொ.335) ஆ. நேர்நிரை வரினே சீர்நிலை எய்தும் பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி (அவிநயம்) நேரும் நிரையும் சீராய் வருதலும் சீரும் தளையும் சிதைவழிக் கொளலும் யாவரும் உணர்வர் யாவகைப் பாவினும் (மயேச்சுரம்) ஓரசை, சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே (பல்காயம்) ஓரசைச் சீரும்அஃதோரிரு வகைத்தே (யா.வி.14) ஓரசையே நின்றும் சீராம் (யா.கா.6) ஓரசையானும், சீர்பெற நடப்பது பொதுச்சீர் (இ.வி.716) நேரே நிரையே அசைச்சீர் இரண்டு (தொ.வி.204) ஓரசை நின்றும் சீரா கும்மே (•.Ã.யõ.7) நேர்நாள் நிரைமலர் தேமாக் காசு புளிமாப் பிறப்பெனப் புகலப் படுமே (•.Ã.யõ.11) நாள்மலர் ஓரசைச்சீர் (].பõ.2) இ. இளம்: (ஓரசைச்சீராமாறு உணர்த்துதல்) இசைநிற்கின்ற நிலை நிரம்பா நிற்குமாயின் அசையும் சீராம் தன்மை போல வரையார் ஆசிரியர் என்றவாறு. பேரா: (இது நான்கசையும் சீராகும் இடனுமுடைய என்கின்றது) ஓசைநிலை நிறையாமையாற் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப்பட்ட சொற்களையெல்லாம் சீர்நிலைபெறுதற்கண் வரையார். இவற்றை உண்மை வகையாற் சீராம் என்றான் அல்லன். 'தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்தியல' (எழுத். மொழி. 17) என்றாற்போலக் கூறினான் என்பது. இங்ஙனம் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி என்னுமாறு இல்லை என்பது. நச்: ஓசை நிலைமையால் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசை நிலைமைப்பட்ட சொற்களையெல்லாம் சீர்நிலை பெறுதற்கு வரையார். இங்ஙனங் கூறாக்கால் 'வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்" என்ற விதி ஆமாறின்று. உ. ஆ.கு. : நாள், மலர் என்னும் வாய்பாடுகள் ஓரசைய. அவற்றைச் சீர்நிலையாகக் கொள்ளாக்கால் ''குறுவெண்பாட்டிற்கு அளவெழுசீரே" என்னும் இலக்கணம் (தொ.பொ.460) முரணாதல் உண்டாம். பேராசிரியர் நான்கசை என்றது நேர், நிரை, நேர்பு, நிரைபு என்பவற்றை. அசைதிரிந்திசையாமை அ. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர் (தொ.பொ.193) இ. இளம் : இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசைதிரிந்து ஒலியா என்றவாறு. என்றது சொல்லோடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச் சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள் படுமாறாயிற்று. நச் : சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டு இசைப்பினும், இவ்வதிகாரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கு மாகிய புலனெறி வழக்கில் திரிந்து இயன்றிசைப்பினும் அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்துமென்று தொல்லாசிரியர் கூறுவர். சொல்லாவது எழுத்தினால் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறுக்கும் ஓசை யாதலின் அதனை இசையென்றார்; இஃது ஆகுபெயர். அசைக்கப்பட்டது அசையென்பதும் ஆகுபெயர். ஈ. க.வெ: சொற்கள் தம்முன் தொடர்புபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும் சொல்லக்கருதிய பொருள் இயைபு பெறப்புலப்படும். அந்நிலையிற்சொற்களுக்கு உறுப்பாகிய அசைச்சொற்கள் திரிந்து ஒலியா என்று கூறுவர் புலவர். உ. ஆ.கு : சொல்லும் பொருளும் பருந்தும் நிழலுமெனத் தொடர்தலே முறைமை. ஒருகால் சொன்மாறிக் கிடப்பினும் பொருண்மாறாதியைத்தல் வேண்டு மெனப் பொருண்முதன்மை குறித்தது. அசையும் சீரும் இசையொடு சேர்த்தல் அ. அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே (தொ.பொ.319) இ. இளம் : அசையையும் சீரையும் ஓசையோடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள் நெறி. அஃதாவது பொருளொடு சொல்லை அறுத்தவழித் தளையும் சீரும் சிதையின் அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக என்றவாறு. ''மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ் வார்" என்றவழி வாழ்வார் எனப்பொருள்நோக்கிச் சீராமாயின் ஓசைகெடும். அதன் கண் வாழ்என்பதனை முதல் நின்ற சீரொட்டக் கெடாதாம். பேரா : அசைகளையும் சீர்களையும் ஓசையோடு சேர்த்தி வேறுபடுத்து உணர்த்து வித்தலும் அச்செய்யுளிலக்கணத்துறை போயினாரது நெறி. இவற்றைப் பிற நூலார் வகையுளி என்ப. மேல் (313) மாத்திரை என்பதோர் உறுப்புரைத்தான்; அதனான் அசை சீர்களது ஓசையை அளந்து கூறுபடுத்து இன்னோசையும் இன்னாவோசை யும் உணர்த்துக.எழுத்தியல்வகைக்கும் இஃதொக்கும். ''குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு" எனின் வெண்பா ஈற்றடி இன்னோசைத் தன்றாம். 'கருப்புக் கொழுந்து கவர்ந்து' என முடிக்கின், இன்னோசைத்தாய் வெறுத்திசையின்றாம் என்பது. இச்சூத்திரத்தினுள் 'வகுத்தனர் உணர்த்தல்' என்றமையின் இனி, வெண்பாவினுள் வெண்சீரொன்றி வந்தவழியும் வேற்றுத் தளைவிரவும் இடனுடைய; அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக. உம்மையான் அடியினை வகுத்துணர்த்துதலும் கொள்க. இன்னும், இவ்விலேசானே எழுத்தல் ஓசையும் அசை யொடும் சீரொடும் சேர்ந்து வகுத்துணர்த்தலும் கொள்க. நச்: அசைகளையும் சீர்களையும் ஓசையோடு சேர்த்தி வேறுபாடு உணர்வித்த லும் செய்யுள் இலக்கணத்துறை போயினாரது நெறி. முற்கூறிய மாத்திரை என்னும் உறுப்பின் ஓசையை அளந்து இன்னோசை யும் இன்னாவோசையும் அறிந்து உணர்த்துக என்றவாறு. இனி, அகவன் முதலிய நான்கு ஓசையினையும் ஒன்று மூன்றாக்கி வகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்றாயிற்று; என்னை? இயலசை மயங்கிய இயற்சீரும் உரியசை மயங்கிய இயற்சீரும் வெண்சீரும் பற்றி ஓசை வேறுபடத் தோன்றலின் அவை பன்னிரண்டென்னும் வரையுள் அடங்கா என்பது பற்றி. இன்னும் இசையொடு சேர்த்தி என்றதனானே 'ஓரளபாகும் இடனுமா ருண்டே' (தொல்.மொழி.24) என்ற ஐகாரமும் பொருள் சிதைந்திசையொடு சேர்தல் காண்க. 'வண்கொன்றையை மருட்டுங் காண்' 'புகழ்த லானாப் பெருவண் மையனே' இவை முதலிடை கடைகளிற் சிதைந்தும் வருமென்று கொள்க. ஈ. ].P.: வகையுளியாவது, நீடு கொடியை மாவருவாய் எனவும், வாழ்வார் என்பதை வாழ் வார் எனவும் பிரித்து வகுத்தல், ஓரசையாய் நிற்க வேண்டிய எழுத்தை வேறாகப்பிரித்தும், ஒருசொல்லாய் நிற்கவேண்டிய அசைகளை வேறாகப் பிரித்தும் சீர்செய்தலின் வகையுளியாயிற்று. நீடுகொடி என்பதனை நேர்பு நிரை என்று கொள்ளவேண்டும். அதனை வகையுளி செய்வோர் 'நீ எனவும்'டுகொ' எனவும் 'டி' எனவும் பிரித்து மாவருவாய் ஆக்குவர் என்றபடி. இது எழுத்து வகையுளி. நீடு வாழ்வார் என்புழி வாழ்வார் என்னும் ஒரு சொல்லில் 'வாழ்' என்பதனைப் பிரித்து 'நீடு' என்பதனோடு சேர்த்து 'நீடுவாழ்' எனவும் 'வார்' என்பதை வேறு அசைச் சீராகவும் கோடல் வகையுளியாமென்க. இது சொல்வகையுளி. உ. ஆ.கு: வகையுளி எனப்பிற்காலத்தார் கொண்டதற்கு நூற்பா. அருணோக்கு நீரார் அசைசீர் அடிக்கட் பொருணோக்கா தோசையே நோக்கி மருணீக்கிக் கூம்பவும் கூம்பா தலரவும் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு (யா.வி.95 மேற்.) எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறைத் தொழுக்கலும் அடியொடு தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே (யா.வி.95 மேற்.) அடக்கியல் (கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்று. போக்கு, வாரம், சுரிதகம் என்பவும் அது). அ. 1. இடைநிலைப்பாட்டே தரவு போக் கடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிய (தொ.பொ.437) 2. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே (தொ.பொ.441) 3. அடக்கியல் வாரம் தரவோ டொக்கும் (தொ.பொ.447) 4. எழுத்தே கொக்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (தொ.பொ.455) ஆ. குனிதிரை குனிதிரை, நீர்ச்சுழிபோல நின்றுசுரிந் திறுதலின் சோர்ச்சியில் புலவர் சுரிதகம் என்ப. 'தனிநிலை சுரிதகம் வரைநிலை இலவே' சிறுமை இரண்டடி பெருமை பொருள்முடிவே சுரிதகம் என்ப தொன்மொழிப் புலவர் ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் ஒன்றாகி அடிபெற் றிறுதி வருவது சுழியம் எனப்பெயர்ச் சுரிதகம் ஆகும். தரவின் அளவின் சுரிதகம் அயற்பா விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை (யா.வி.82) அடக்கியல் உறுப்பும் ஆறடித் தாகத் தொடுக்கு மாகின் தொல்லையோர் துணிவே. சுரிதகம் என்ப சுரிந்தெனக் கனின் பின்அகவல் வெள்ளை யாக முடிவதே (தொ.வி.232) இ. இளம்: 1 போக்கு எனினும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினும் ஒக்கும். 2. சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். 3. அடக்கியலாகிய சுரிதகம் தரவோடொத்த இலக்கணத்தது. பேரா: 1. உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்கும் இயற்பிற் றாகலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குத லிற் போக்கெனவும், அவையெல்லாம் போதந்து வைத்தலின் வைப்பெனவும் கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக்கூறுதலின் வாரம் எனவும் எல்லாம் ஒன்றொன்றனை ஒத்தே பெயராயின. 2. போக்கினது இலக்கணப்பகுதி வைப்பென்று சொல்லப்படும். இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியலென வும் வாரம் எனவும் சொல்லுப. போக்குதலும் வைத்தலும் என்னும் இரண்டு இலக்கணம் உடைத்து, வாரமெனச் சொல்லின் முடியும் இலக்கணமே கூறுவான் போலப் போக்கின் இலக்கணப் பகுதி வைப்பு என்றதனைச் சுட்டிக் கூறப்படுமாகலின். 3. தரவோடு ஒத்துவரும் அடக்கியல்வாரம். அடக்கியல்வாரம் என்பது அடக்கும் இயல்பிற்றாகிய வாரம் என்றவாறு. நிறுத்தமுறையானே எண்ணுறுப் புணர்த்தாது மயங்கக் கூறியதனானே தனிச் சொல் வருஞான்று எண்ணீற்றினும் சுரிதகத்து முன்னும் புணர்க்க. அடக்கியல் என்றான், முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினை ஒருபெயர் கொடுத்தடக்கி நிற்றலின். வாரம் என்றான், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடிமிகுமாகலின் என்பது. 4. அவ்வுறுப்புகளிற் கூறிய பொருளை அடக்குமியற்பிற்று வாரம் ஆகலின் அதனை அடக்கியல் வாரம் என்றான். நச்: 2. போக்கினது இலக்கணப்பகுதியை வைப்பென்று கூறப்படும் என்றது போக்குதலும் வைத்தலும் என்னும் இரண்டு இலக்கணமும் உடைத்து. செய்யுள் பிறிதொன்றினை அவாவாமல் கடைபோகச் செய்தலிற் போக்கெனவும், முற்கூறிய தரவு தாழிசைகளிற் பொருள்களைக் கொண்டு தொகுத்து வைத்தலின் வைப்பெனவும் படும் என்றவாறு. இதனை அடக்கியல் என்றும் வாரம் என்றும் மேற்கூறுவார். ஆண்டு அப்பொருள்களும் உணர்க. 3. அடக்கியல்பிற்றாகிய கரிதகம் தரவோடு ஒக்கும். முன்னர்ப் பல்வகை யாற் புகழ்ந்த தெய்வத்தினை ஒருபெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கிய லாயிற்று. தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் வாரமாயிற்று. ஈ. சி.க.: 2. ''போக்குதலும் வைத்தலும் என்னும் இரண்டு இலக்கணமுடைத்து எனச் சொல்லின் முடியுமிலக்கணமே கூறுவான் போலப் போக்கின் இலக்கணப் பகுதி வைப்பென்று அதனைச் சுட்டிக் கூறியவாறு. இங்ஙனங் கூறப்பட்ட உறுப்பினை அடக்கியல் எனவும் வாரம் எனவும் சொல்லுப. (''அடக்கியல் வாரம் தரவோ டொக்கும் என்பவாகலின் என ''ஒருபிரதியில் பாடம்" உள்ளதாகக் கூறி ''அதுவே பொருத்த மானது" என்பார் சி.க.) அடி அ. 1. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (தொ.பொ.340) 2. அடியுள் ளனவே தளையொடு தொடையே (தொ.பொ.342) 3. அடியிறந்து வருதல் இல்லென மொழிப (தொ.பொ.342) 4. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே (தொ.பொ.343) ஆ. தடுத்தனர் தட்ட தளைபல தழுவியும் அடுத்த சீரின் அடியெனப் படுமே (யா.வி.23 மேற்.) செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை அடியில் ஈட்டத் தழகுபட் டியலும் (யா.வி.95. மேற்.) ஒரோஅடி யானும் ஒரோஇடத்தியலும் (யா.வி.95. மேற்.) இ. இளம்: 1. நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடியென்று சொல்லப்படும். 2. தளையும் தொடையும் அடியின் கண்வரும். 3. தளையும் தொடையும் நான்குசீரடியின் வருதல் அன்றி அடியின் நீங்கி வருதல் இல்லை. அடியரையறை இல்லாதனவற்றிற் கொள்ளப்படாது. 4. அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படும். எனவே, பாட்டென்னும் செய்யுட்கு அடி இன்றியமையாதது என்று கொள்க. பாட்டாவன: வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்பன. பேரா: 1. அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன நாற்சீரடி. எனவே, இருசீரானும் முச்சீரானும் ஐஞ்சீரானும் அறுசீர் முதலியவற் றானும் வருமாயினும் அவை சிறப்பில என்றவாறாம். இருசீரான் வருவதனை அடியென்னுமோ எனின் அடிக்கெல்லாம் எழுத்து வகையானே மேற்பெயர் கூறும். அவ்வாறே சீர்வகை யானும் கொள்ளப்படும் என்பது. சுருங்கிய எழுத்தான் வருவன குறளடி என்றும், அவற்றின் ஏறிய எழுத்தான் வருவன சிந்தடி என்றும், இடைநின்றன அளவடி என்றும், அவற்றின் நெடியன நெடிலடி என்றும், அவற்றினும் நெடியன கழிநெடிலடி என்றும் கூறுமாகலான். அவ்வாறே இருசீரடி குறளடி என்றும், முச்சீரடி சிந்தடி என்றும், நாற்சீரடி அளவடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், அறுசீர் முதலியன கழிநெடிலடி என்றும் கோடும் என்பது. இவற்றினெல்லாம் நாற்சீரடி சிறந்தது என்றது என்னை எனின், அளவிற்பட்டமைத்தமையானும், அது பயின்று வருதலானும் என்பது. 2. முன்னர்க்கூறிய நாற்சீர் அடியுள் உள்ளனவே தளையும் தொடையும். மற்று, மாத்திரையும் எழுத்தும் அசையும் சீரும் அவ்வடியுள்ளன அல்லவோ எனின், அற்றன்று; அவ்வடிக்கண் உள்ளன எல்லாம் கூறு கின்றான் அல்லன் இது என்பது. என்னை? நாம் தளைப்பகுதியாற் கட்டளை அடியென உறழ்வதூஉம் அறுநூற்றிருபத் தைந்தடியென வரையறை கூறுவதூஉம் அவ்வளவடியே என்றற்கு 'நாற்சீர்க் கண்ணது தளை' என்றான் என்பது. முன்னும் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடி யெல்லாம் தளைவகையுடையவென விதந்தோதி வந்ததனானே நாம் தளை கொள்வது நாற்சீர் அடிக்கண் என்பான் 'அடியுள்ளது தளை' என்றான் என்பது. மற்றையடிக்கண் தளைகொள்ளின்அது வரையறையின்றாம் ஆகலின் ஈண்டு வைத்தோதினான் என்பது. அது தக்கது. மற்றுப் பொழிப்பும் ஒரூஉவும் போலாத மோனை முதலிய தொடையெல்லாம் அடி யிரண்டியையத் தொடுக்கல் வேண்டுமன்றே? அவற்றை அடியுள் ளனவே தொடையும் என்றது என்னை எனின், அற்றன்று; நாம் தொடை யுறழச் சீர்கொள்வதூஉம் இவ்வளவடிக்கண் என்பது கூறினான். ஆண்டுத் தொடை கூறும்வழி வரையாது கூறுமாகலின் என்பது. எனவே, கட்டளைப் படுப்பதூஉம், தொடையுறழ்தற்கு இடனாவ தூஉம் நேரடியெனச் சிறப்பித்தவாறு. 3. அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஓரடியின் இறந்து வாரா மேற்கூறிய தளையும் தொடையும். என்றது, மேற்கூறிய தளைவகையேயன்றி அடியோடு அடிக் கூட்டத்துத் தளைகொள்ளுங்காலும் ஓரடிக் கண்ணேவழுவாமல் கோடல்வேண்டு மெனவும் அங்ஙனமே தொடைகொள்ளுங்காலும் வந்தவந்த அடியே வரப்பெறுவதெனவுங் கூறியவாறு. 4. அடியின் சிறப்பு என்பது அடி இரண்டும் பலவும் அடுத்து வந்த தொடையே பாட்டு. தலையிடை கடைச்சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீர் அடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும்பான்மையும் செய்தார்; வஞ்சிப்பாச் சிறுவரவிற் றெனக் கொள்க. நச்: 1. நாற்சீர் கொண்ட அளவடியை அடியென்று சிறப்பித்துக் கூறப்படும். எனவே ஒழிந்த நான்கடியும் (குறள், சிந்து, நெடில், கழிநெடில்) சிறப்பிலவாயிற்று. 2. அந்நாற்சீர் அடியான் வரும் கட்டளையடிக்கண் உள்ளனவே எழுபது தளையும் பத்தொன்பதினாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடையும் என வரையறைப்படுவன. 3. அறுநூற்றிருபத்தைந்து அடியுள்ளும் ஓரடி நின்றாங்கு வருகின்ற அடியும் முன்னின்ற அடியை இறந்து வருதலில்லை என்று சொல்லுவர் ஆசிரியர். 4. அந்நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டையே சிறப்புடைப் பாட்டென்று கூறப்படும். அடியினாற் செய்யுள் வரையறை கூறலின்றி மாத்திரை முதலிய உறுப்பால் இத்துணையும் செய்யுளென்று வரையறை கூறப்படாமை யின் அடியான் வந்ததே பாட்டென்றார். அது மூவகைச் சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற் சீரடியானே மூன்று பாவும் (வெண்பா, அகவல், கலி) வரப்பெரும்பான்மை செய்யுட் செய்து, வஞ்சிப்பா சிறு வரவிற்றாகச் செய்யுள் செய்தவாற்றான் உணர்க. உ. ஆ.கு.: நாற்சீர் கொண்ட அடியே அளவடி எனப்படும். அதனால் அவ்வளவிற் குறியவும் நெடியவும் அளவுச் சிறப்புடையன அல்ல என்று குறித்த வாறாம். எதுகை மோனை முதலாய தொடை காட்டற்கும் அளவடியே கொள்ளலும், பிற அடிகளைச் சார்த்திக் கூறலும் அறிக. ''அடியிறந்து வருதல் இல்" லெனக் குறித்தது சிறப்பில்லன எனக் கொள்க. அடியின் சிறப்பே பாட்டெனக் கொள்ளலால் ''யாதும் ஊரே யாவரும் கேளிர்" ''ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்பன போல்வனவும் தனியொரு பாடற்சிறப்புடன் விளங்குதல் காணத்தக்கது. முதுமொழிக்காஞ்சி அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே என்பதற்குச் சீரிய சான்றாம். இவ்விலக்கண வாய்ப்பே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியவற்றுக்கு வழிவகுத்துத் தந்ததெனலாம். அடிமயக்கம் அ. 1. இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே (தொ.பொ.368) 2. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப (தொ.பொ.369) 3. அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே (தொ.பொ.370) 4. எழுசீ ரடியே முடுகியல் நடக்கும்சூ (தொ.பொ.371) 5. முடுகியல் வரையார் முதலிரண் டடிக்கும் (தொ.பொ.372) 6. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் மூவகை யடியும் முன்னுதல் இலவே (தொ.பொ.373) ஆ. வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே (நற்றத்தம்) வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கலிவரை வின்றே (பல்காயனார்) அகத்திணை அல்வழி ஆங்கதன் மருங்கின் வகுத்த சொற்சீர் வஞ்சியொடு மயங்கும் (பனம்பாரனார்) ஆசிரியப் பாவில் அயற்பா அடிமயங்கும் ஆசிரியம் வெண்பாக் கலிக்கணாம் ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவில் ஒண்பா அடிவிரவா உற்று. சீர் வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் வஞ்சியுள் ஊரும் கலிப்பா சிறுச்சிறிதே பாலினுள் வெண்பா ஒழித்துத் தளைவிரவும் செய்யுளாம் வெண்பா கலியுள் புகும். (நாலடி நாற்பது) இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை அகப்பட வரூஉம் அகவலும் உளவே (யா.வி. 29) வெள்ளடி கலியினுள் விரவவும் பெறுமே. (யா.வி.30) வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார் (யா.வி.31) இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கின் எஞ்சாஅகவல் கயற்கணல் வாய்கலிப் பாதமும் நண்ணும் கலியினுள்ளான் முயக்கப் படும்முதற் காலிரு பாவும் முறைமையினே (யா.கா.41) இயற்சீர் வெள்ளடி வஞ்சி யடியிவை மயக்கப் படுதலும் வெண்சீர் வெள்ளடி கலியடி ஒரோவழி அகவலுள் கலத்தலும் வெள்ளடி அகவல் கலியுளும் அகவலும் கலியும் ஒரோவழி வெண்பா அடியும் வஞ்சியுள் மயங்கி வருதலும் ஐஞ்சீர் அடிகலி அகவலொ டருகிவந் தடுத்தலும் கடிநிலை இன்றே கருதுங் காலை (இ.வி.745) இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவற் பாவினுள் அடையப் பெறுமே. (•.நி.யஷ.து.13) வஞ்சியுள் அகவல் அடிகலி யடியும் விரவி வரப்பெறும் விளம்புங் காலே (•.Ã.யõ.J.14) கலியினும் அகவ லினும்ஐஞ் சீரடி வருவதும் உளவென வகுத்தனர் புலவர் (•.Ã.யõ.J.15) இ. இளம்: (ஆசிரியப்பாவின்கண் வெண்பா அடிமயங்குமாறு உணர்த்துதல்) 1. இயற்சீர் வெண்டளையான் ஆகிய வெண்பாவடி ஆசிரியப் பாவின்கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவும் உள. உள என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க. வெண்டளையென்னாது 'அடி' என்றதனால் தளைவிரவுதல் பெரும் பான்மை; அடிவிரவுதல் சிறுபான்மை என்று கொள்க. 2. இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடி யும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள. உண்டு என்னாது 'உள' என்றதனான் ஒருபாட்டிற் பல வருதலும் கொள்க. ஆசிரியமென்பது அதிகாரத்தான் வந்தது. 3. அறுசீரடி யாசிரியத்தளையோடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் ஆசிரியப்பா என்பது அதிகாரத்தான் வந்தது. 4. எழுசீரான்வரும் முடுகியலடி. 5. மேற்சொல்லப்பட்ட ஐஞ்சீரடிக்கும் அறுசீரடிக்கும் முடுகியல் நீக்கப்படாது. 6. முடுகியலாகி வரும் மூவகையடியும் ஆசிரியப்பாவினும் வெண்பா வினும் நிற்றல் இல. எனவே கலிப்பாவினுள் நிற்கப் பெறும் என்றவா றாயிற்று. நாற்சீர் கொண்டது அடி என ஓதிப் பின்னும் இருசீரடி வஞ்சிக்கண் உரித்தென ஓதி, ஐஞ்சீரடியும் எழுசீரடியும் உள என ஓதினமையான் அடியாவது இரண்டு முதலாக வருமெனவும், அவற்றுள் இருசீரடி குறளடி எனவும், முச்சீரடி சிந்தடி எனவும், நாற்சீரடி அளவடி எனவும், ஐஞ்சீரடி நெடிலடி எனவும் அறுசீர் முதலாக வரும் அடியெல்லாம் கழிநெடிலடியாம் எனவும் பிறநூலாசிரியர் கூறிய இலக்கணமும் இவ்வாசிரியர்க்கு உடம்பாடென்று கொள்க. அறுசீர் முதலான அடிகளுள் எழுசீர் எண்சீர் சிறப்புடையன எனவும், எண்சீரின் மிக்கன சிறப்பில்லன எனவும் அவ்வாசிரியர் உரைப்ப. இவ்வாசிரியரும் அடிக்குச்சீர் வரையறையின்மை ''ஆங்கனம் விரிப்ப அளவிறந் தனவே, பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை." (செ.49) என்றதனான் உணர்த்தினார் என்று கொள்க. ஈண்டு நாற்சீரடியை எடுத்தோதியது வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் அவ்வடியினால் வருதலின் என்று கொள்க. பேரா: 1. (வெண்சீரொன்றிவரும் அடி, கலிப்பாவிற்கும் உரித்தென்ற முறையானே இயற்சீர் வெள்ளடியான்வரும் ஆசிரியத்திற்கு மயங்கியல் வகையான் நிலைக்குரித்தாகி நிற்கவும் பெறும் என்கின்றது). அம்மயங்கியல் வகைதான் அப் பாவிற்கு உரிமைபூண்டு நிற்கும்; ஆசிரிய அடியோடு கூடிய கூட்டத்துக்கண். வெண்பாவினுள்ளாயின் ஆசிரியவடி முழுவதும் தன்தளையோடு வாராது என்னை? ''தூஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்" .... பசப்பு" என்பதன் முதலடியுள்ளே 'தூஉத்தீம்புகை' என ஓர் ஆசிரியத் தளைவர மற்றையன வெண்டளையாகி வந்தமையின். அற்றன்றி முழுவதூஉம் ஆசிரியத் தளைவரின் வெண்பாசிதையுமாகலின், இதனையே முடிவிலக்கணத்தான் வெண்பா என்றான். எனவே வேறோசை விராயவழித் தன்னோசை அழிதல் இதற்குப் பெரும்பான்மை யாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு அழியாதென்பது கருத்து. என்போலவோ எனின், பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையால் பளிங்கு வேறுபடி னல்லது பஞ்சி வேறுபடாதது போல என்பது. இதனான் வெள்ளை என்பது ஒப்பினான் ஆகிய பெயர் என்பதூஉம் பெற்றாம். 2. (ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது) மேனின்ற அதிகாரத்தாற் கலிப்பாவிற்கு ஐஞ்சீரடியும் உள. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்' என்றது என்னை யெனின், அவ்வைஞ் சீரடி வெண்பாவோடு விராயும் ஆசிரியப் பாவோடு விராயும் வருமென்றவாறு. ஈண்டுத் தளையென்றது அப் பாக்களையாதலால் அப் பாக்களோடு விரவும், எனவே, அப் பாக்களை உறுப்பாகக் கொண்டு வரும் பிற செய்யுட்கண்ணும் அவ்வைஞ்சீரடி வருமென்பது பெற்றாம். வெண்டளையோடு விரவும் எனவே ஐஞ்சீரடி அவற்றுக்கு உரியவல்ல என்பதாம். எனவே கலிப்பா வின்கண்வரும் ஐஞ்சீரடியாயின் அக்கலி யோசைக்கு உரிமையுடைத் தென்பதாம். 'உள' எனவே ஐஞ்சீரடி கலியினுட் பயின்று வரும் என்பதூஉம் அல்லனவற்றுட் பயிலா எனவும் கொள்க. ''விராஅய தளையும் ஒரூஉநிலையின்று" எனப்பட்ட (செய்.61) கலிப்பாவினோடு இயைபுபட்ட வெண்பாவடி யும் அதனோடு இயைபுபட்ட ஆசிரிய அடியும் கூடி, அம்மூன்றனை யும் உடன் கூறினான் ஆயினும் ஆண்டுச்சிறந்தவாறே ஈண்டும் அவ் வதிகாரத்ததாக நாட்டி, ஐஞ்சீரடியும் உளவென்று ஆண்டுநின்ற கலிக்குக் கூறிய அவ்வடி வெண்டளைவிரவியும் ஆசிரியம் விரவியும் வருமெனப் பிறவற்றுக்குங் கூறினான் என்பது. ''ஐஞ்சீரடியும்' அளவடி மூன்று பாவிற்கும் உரித்தென்றால் அளவடியை அவ்வப் பாவிற்கு வேறுவேறாகக் கொண்டாற்போல ஐஞ்சீரடியையும் பாத்தோறும் வேறுபடுத்துக் கொள்க. ஆசிரியத்துள்... இரண்டடி ஒருங்கு நிற்குமென்பது அறிவித்தற்கு ஐஞ்சீரடிக்குச் சிறந்த கலிப்பாவோடு வைத்தான். அதனை முறை பிறழ என்பது. எனவே வெண்பாவிற்கு ஐஞ்சீரடி ஒன்றல்லது வாரா தாயிற்று. இக்கருத்தே பற்றி ''ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆதலும், வெண்பா யாப்பிற்குரிய வல்ல" என்றார் பிறரும் என்க. உம்மையான் இருசீரடியும் கலியடியாம். மூன்று பாவிற்கும் முச்சீரடி உரித்தென்பது முன்னர்ச் சொல்லும். வரையாது கூறினமையின் கலிப்பாவிற் காயின் ஐஞ்சீரடி வருங்கால் தளைவிரவியும் விரவாதும் வேண்டியவாறு வரப்பெறும் என்பது. 3. (முறையானே அறுசீரடியும் கலிப்பாவிற்கு உரித்து என்கின் றது). நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடியும் வருதலுமுண்டு. அன்னது வருங்கால் தனக்குரிய வெண்டளையேயன்றி ஆசிரியத் தளையொடும் வழக்குப்பெற்று நடக்கும். கலிப்பாவினுள் 'நெறி பெற்றுவரும்' என்றதனாற் சிறுபான்மை நேரடி இடையிட்டன்றி ஒருசெய்யுள் முழுவதூஉம் தானே வருதலும் கொள்க. ஆசிரியத் தளையொடும் என்ற உம்மையாற் கலி தனக்குரிய வெண்டளையான் வருதலும் மயங்கி வருதலும் உரியவாம். 4. எழுசீரான் வருமளவும் அடியுள; அவைபயின்று நடப்பது முடு கியற்கண். எனவே முடுகாதவழி அத்துணை நடையாட்டம் இல எழுசீரடி என்பதாம். இவை பரிபாடலுள்ளும் கலியுள்ளும் காணப்படும். 5. எழுசீரடிக்கு முன்னர் இடைநின்ற ஐஞ்சீரடியும் அறுசீரடியும் முடுகியல் நீக்கார். முதல் ஈரடிக்கும் என்ற உம்மை எச்சவும்மை. அவ்வும்மையால் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகும் என்பது. மற்று இவற்றை அராகம் என்னாமோ எனின், அதனைப் பரிபாடற்கு உறுப்பென்றமையாற் பிறவடியோடு தொடராவுற்று வரவேண்டும். இஃது அன்ன தன்று என்பது. எழுசீரடியிற் சிறுவரவினவாகலான் ஐஞ்சீரடியினையும் அறுசீரடியினையும் வரையார் என்றான். அவற்றி னும் சிறுவரவிற்றாகலின் இதனை உம்மையாற் கொண்டான். முற்றும்மை யாகாதோ எனின் அதுவும் எச்சப்படுதலின் அமையும் என்பது. அல்லதூஉம் முதலடி யிரண்டேயன்மையின் முற்றாகா தென்பது. 6. (முடுகியல் இன்னபாவிற்கு உரித்தென்கின்றது. எய்திய திகந்து படாமற்காக் கின்றதென்பதூஉமாம். என்னை? நாற்சீரடி முதல் மூன்றும் அகவலோசைக்கும் செப்பலோசைக்கும் உரிய எனவே, அவை முடுகி ஆண்டுஞ் சேறல் எய்தியதனைக் கலிப்பாவிற் கல்லது ஆகாது என்றமையின்). ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டு பாவினும் முடுகியலடி மூன்றும் புகா. மூவகை அடியும் என்றது ஐஞ்சீரடி முதன் மூன்றும் எனப்படும் என்பார், அளவடி முடுகுதல் ஆசிரியத்திற்கும் உரிமையின் அது வரையறையின்று என்றலும் ஓன்று... வஞ்சிப்பாவிற்குக் குறளுஞ் சிந்தும் அல்லது இன்மையின் இவ்வாராய்ச்சி இன்று என்பது. எனவே ஆசிரியத் தளையோடு முடுகிய அடியினைக் கலியடி என்றும், முடுகாத அறுசீரடி ஆசிரியத் தளையோடு நெறி பெற்று வருதற்கும் கலிப்பா விற்குச் சிறுபான்மையான் வரும் என்பதூஉம் சொல்லப்பட்டது. அல்லாதார் ஐஞ்சீரடி முதலிய மூன்றும் கலிக்குரிய; பிறபாவிற் குரிய வல்ல என்றற்கு வந்தது இச்சூத்திரமென்ப. அற்றன்று; அங்ஙனம் கூறில் தாம் வேண்டும் ஐஞ்சீரடி ஆசிரியத்துள்ளும் புகாதென்று மறுக்க. 'முன்னுதலில' என்றது யாண்டுமாகா தென்றவாறு. நச்: 1. (வெள்ளடி ஆசிரியத்துள் வருமாறு கூறுகின்றது). இயற்சீர் ஆசிரியச் சீரான் வரும்வெள்ளடி, ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும். ஆசிரிய வடியோடு மயங்கி அதற்குரிமை பூண்டு நிற்கும் என்பார், 'நிலைக்குரி மரபின்' என்றார். இதனான் மயங்காமல் வெள்ளடி முழுதும் வரவும் பெறுமென்றுங் கொள்வாருமுளர். இனி ஆசிரியத்துள் இங்ஙனம் வருமெனவே வெண்பாவினுள் ஆசிரிய அடி முழுவதூஉம் தன்தளையோடு வாரா, சிறிது வருமென்று கொள்க. அது கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய் வரும். வெண்பாக்களில் ஆசிரியத்தளைவருமேனும் அவை வெள்ளைக் கொச்சகமா மாறும் உணர்க. 2. (மூன்று பாவிற்கும் ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது). வெண்பாவோடும் கலிப்பாவோடும் விராஅயும், ஆசிரியப் பாவோடு விராஅயும் வரும் ஐஞ்சீரடிகளும் உளவென்று கூறுவர் புலவர். ஈண்டுத் தளையென்றது அப் பாக்களை, வெண்டளையெனவே இரண்டு வெண்டளையும் அடங்கலின் அவற்றுள் வெண்சீர் வெண்டளையான் வருஞ்சீர்வகை வெண்பாவும் சீர்வகைக்கலியும் அடங்கிற்று. இனி நிரைமுதல் வெண்சீர் (60) என்னுஞ் சூத்திரம் இதற்கதிகாரமாதலின் கட்டளைக்கும் ஐஞ்சீரடி கொள்க. தளையென்ற தனாற் கட்டளை வெண்பாவிற்குங் கொள்க. 'அடியும்' என்ற உம்மையான் வெண்பாவினுள் மிகவுஞ் சிறுபான்மை வருதல் கொள்க. 'உள' என்றதனால் கலிப்பா வினுள்ளும் அதற்குறுப் பாய் வரும் பாக்களுக்குள்ளும் பெரும்பான்மை வருதலும் ஆசிரியத் துள் அடுக்கி வருதலும் கொள்க. தன்னின முடித்தல் என்பதனாற் கட்டளையாசிரியத்திற்கு வருமேனும் உணர்க. இன்னும் ஐஞ்சீரடியும் என்ற உம்மையாற் கொச்சகக் கலிக்கு ஐஞ்சீரடியும் வருமாறு கொள்க. 3. (எய்தியதன்மேற்சிறப்பு விதி, கலிக்கு ஐஞ்சீரடி எய்தியதன்மேலே அறுசீரடியும் எய்துவித்தலின்). நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரிய வெண்டளையோ டன்றி ஆசிரியத்தளையோடு வழங்கப்பெற்று நடக்கும் கலியினுள். முன் என்றதனை இடமுன்னாகவும் காலமுன்னாகவும் கொள்க. தளையோடும் என்ற உம்மையால் தனக்குரிய வெண்சீர் வெண்டளை யான் மயங்கி வருதலும் பெற்றாம். நெறிபெற்று என்றதனால் பாக்கட்டளைவிட்டன்றி ஒரு செய்யுள் முழுவதூஉம் தானே வருதலும் கொள்க. கட்டளை அன்றேற் றளையென்றதனை நாற்சீரடிக்குத் தளைகோடல் இன்றென்றார்; இவற்றிற்குத் தளை வரையறையின்று. இவற்றைப் பின்னுள்ளோர் இனமென்பர். 4. (இது முறையானே கலிக்கு எழுசீரடியாமாறு கூறுகின்றது) எழுசீரான் வரும் அடியே முடுகியற்கண்ணே பயின்று நடக்கும். இவை கலிக்கும் பரிபாடற்கும் உரிய. முடுகாத எழுசீரடி வந்துழிக்காண்க. 5. (இஃது எய்தாத தெய்வித்தது; எழுசீரடியேயன்றி அறுசீரடியும் ஐஞ்சீரடி யும் முடுகும் என்றலின்) எழுசீரடிக்கும், ஐஞ்சீரடிக்கு முன்னின்ற அறுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கும் இம்முடுகியல் வரையார். முதலீரடிக்கும் என்ற உம்மை எச்சவும்மை யாதலின் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகும் என்க. 6. (முடுகியல் இன்ன பாவிற்கு உரித்தென்கிறது) தனியே வரும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் முடுகியலடி மூன்றும் வரப்பெறா. மூன்றென்றது நாற்சீரடியும், ஐஞ்சீரடியும் அறுசீரடியுமான அடிகளை. எழுசீரடி முன்னுதலின்று என்றதனால் முற் கூறிய மூன்றடியானும் வரும் முடுகியலோடு விராஅய்த் தொடர்ந்து ஒன்றாய்க் கலிக்குறுப்பாய்வரும் ஆசிரியமும் வெண்பாவும் உளவென்று கொள்க. இவற்றை (முடுகியலை) அராகம் என்னாமோ எனின், என்னாம்; அராகமாவது பிறிதொன்றனோடு கூட்டி ஆற்றுவியாமல் 'தானே போய் அற்றுநிற்பதாம். அது பரிபாடற் செய்யுளுறுப்பென்பர். இது பிறி தொன்றனோடு கூட்டி ஆற்றுவித்துக் கோடற்குரித்தாம். இவ்வேறு பாடு அறிக. ஆ.கு.: அடிமயக்கத்தை விரிவாகக் கூறுகிறது யாப்பருங்கல விருத்தி (2931) 'எறும்பி அளையிற் குறும்பல் சுனைய' (குறுந். 12) என்னும் அகவலடியைக் கொண்டு ''எறும்பி அளையிற் குறும்பல் சுனைய குறுந்தொடி யாம்செல் சுரம்" என வெண்பாவாகவும், ''குருகுவெண் டாளி" எனவரும் அகவற் பாவின் ''மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது" எனவரும் இரண்டாமடி யொடும் ''தீவழங்கு சுழல்விழிக்கண் சீயஞ்சென் றுழலுமே" என்னும் அடியை இணைத்துக் கலியடியாகவும் காட்டு வார். பிறவும் ஆங்குக் காண்க. அடியளவும் வகையும் அ. 1. நாலெழுத் தாதி யாக ஆறெழுத் தேறிய நிலத்ததே குறளடி என்ப (தொ.பொ.344) 2. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அல்வழி யான (தொ.பொ.345) 3. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே. (தொ.பொ.346) 4. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. (தொ.பொ.347) 5. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. (தொ.பொ.348) 6. உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான. (தொ.பொ.351) ஆ. நாற்சீர் கொண்டது நேரடி யாமென்ப தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப. (நற்றத்தம்.) குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென் றைவகை மரபின அடிவகை தாமே (Põ.பõ.) இருசீர் குறளடி சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் அறுசீர் அதனின் இழிபு நெடிலடி என்றிசி னோரே. (Põ.பõ.) குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடி லடியெனக் கட்டுரைத் தனரே. (யா.வி.23) குறளடி சிந்தடி இருசீர் முச்சீர் அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர் நிரல்நிறை வகையான் நிறுத்தனர் கொளலே. (யா.வி.24) கழிநெடி லடியே கசடறக் கிளப்பின் அறுசீர் முதலா ஐயிரண் டீறா வருவன பிறவும் வகுத்தனர் கொளலே. (யா.வி.25) குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி ஐயொருசீர் நிறைதரு பாதம் நெடிலடி யாம்; நெடு மென்பணைத்தோள் கறை கெழு வேற்கணல் லாய்மிக்க பாதம் கழிநெடிலே. (யா.கா.12) இருசீரும் முச்சீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஐந்தின் மிக்கு வருசீரும் அந்தரம் கால்தீப் புனலொடு மண்பெயரால் திரிசீ ரடியாம் குறள்சிந் தளவு நெடில்தகைமை தெரிசீர்க் கழிநெடில் என்று நிரல்நிறை செப்புவரே (Ã.சேõ.109) குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியென அடியைந் தாகும் (இ.வி.719) குறளொரு பந்தம் இருதளை சிந்தாம் முத்தளை அளவடி நால்தளை நெடிலடி ஐந்தளை முதலா எழுதளை காறும் வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப. (இ.வி.720) அடியென்ப தளைத்த வஞ்சீராம் நடையவை குறளடி இருசீர் சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி கழிநெடி லடியைந்தே கடந்தசீர் இவற்றுள் எண்சீர்மிக்க அடியெனிற் சிறப்பன்றே (தொ.வி.211) இருசீரான் வரல் குறளடி எனலே (மு.வீ.876) முச்சீ ரான்முடி வதுசிந் தடியே (மு.வீ. 877) நாற்சீ ரான்வரல் அளவடி யாகும் (மு.வீ.878) ஐஞ்சீ ரான்வரு வதுநெடி லடியே (மு.வீ. 879) அறுசீர் முதல்ஐ யிருசீர் அடிகடை யாக வருவது கழிநெடி லாகும் (மு.வீ.880) இ. இளம்: 1. (குறளடி வரையறையுணர்த்துதல்) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்று நிலத்தை யுடைத்து குறளடியென்று சொல்லுவர் என்றவாறு. எனவே குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம். 2. (சிந்தடியாமாறு உணர்த்துதல்) ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு; ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத இடத்தென்றவாறு. எனவே ஏழும், எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடியாம் என்றவாறாம். 3. (அளவடியாமாறு உணர்த்துதல்) அளவடி எனினும் நேரடி எனினும் ஒக்கும். பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்து அளவும் அளவடியாம். எனவே, பத்தும் பதினொன் றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம் பெறும். 4. (நெடிலடியாமாறு உணர்த்துதல்) பதினைந்தெழுத்து முதலாகப் பதினேழெழுத்தளவும் நெடிலடியாம். எனவே, பதினைந்தும் பதினாறும் பதினேழும் என மூன்று நிலம் பெறும் என்றவாறாம். 5. (கழிநெடிலடி உணர்த்துதல்) பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவும் கழிநெடிலடி யாம். எனவே பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும். 6. (மேற்சொல்லப்பட்ட அடிக்குரிய எழுத்துவரையறை உணர்த்துதல்). உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா, உயிர்போலே இயக்கமின்மை யான். உம்மை எச்சவும்மையாதலாற் குறுகிய உயிர்த்தாகிய குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் எண்ணப்படா என்று கொள்க. எனவே, எண்ணப்படுவன, உயிரும் உயிர்மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும். பேரா: 15. (இவை ஐந்து சூத்திரமும் உரையியைபுநோக்கி உடனெழுதப் பட்டன. நாற்சீரடி இத்துணைப்பகுதிப் படுமென அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. நாலெழுத்து முதலாக ஆறெழுத்தளவும் வந்த நிலம் மூன்றும் குறளடி எனவும், ஏழெழுத்து முதன்மூன்று நிலனும் சிந்தடி எனவும், பத் தெழுத்து முதல் ஐந்து நிலனும் அளவடி எனவும், பதினைந்து முதன் மூன்றுநிலனும் நெடிலடி எனவும், பதினெட்டெழுத்து முதல் இருப தெழுத்து வரை மூன்று நிலனும் கழிநெடிலடியெனவும் சொல்லுப ஆசிரியர். குறளடி நிலங்களை வகுத்தொழியாது ஒழிந்தனவும் வகுத்துரைத்தான். அவை முதல் இடை கடையென மூன்று கூற்றான் ஒன்றொன்றனிற் சிறப்பு இழிபுடையனவென்று கொள்ளினும் கொள்ளலாம் என்பது. குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற்றது பெயரும் முறையும் தொகையும் கூறினான். தொகை பதினேழ் நிலத்து ஐவகையடியென்பது எண்ணிப் பார்க்க. இப் பெயரெல்லாம் காரணப்பெயர். மக்களுள் தீரக்குறி யானைக் குறளன் என்றும், அவனினெடியானைச் சிந்த னென்றும், ஒப்பமைந்தானை அளவிற்பட்டா னென்றும், அவனினெடியானை நெடியானென்றும், அவனினெடியானைக் கழியநெடியானென்றுஞ் சொல்லுப. அவை போற்கொள்க இப்பெயரென்பது. 6. (இதுமேல் எழுத்தெண்ணிச் சீர் வகுத்தமுறையானே ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் ஒருங்கெண்ணப் படுதலெய்தினவற்றை விலக்கியவாறு) தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தம் தன்மையான் ஒலித்தற்றொழி லில்லாத எழுத்துக்கள் ஈண்டெண்ணப்படா; அங்ஙனம் எண்ணப் படாதவும் எழுத்தெனப்படுதலிற் சிறிது நாப் புடைபெயருந்துணை யான் ஒலித்தலும் மொழி சார்ந்து ஒலித்தலும் உடையவன்றே. அங்ஙனம் ஒருவாற்றான் உயிர்க்கும் திறமுடையவாயினும் அவ் வுயிர்க்குந்திறம் ஈண்டுச் செய்யுட்பாற்படுங்கால் உபகாரப்பட இயங்குமாறில வாகலின் எண்ணப்படா. மேற்சீர்தளை இருநிலைமைப்படுத்த அதிகாரத்தான் ஒற்றுங் குற்றுகர முமே ஈண்டு விலக்கினான் என்பது இச்சூத்திரம் வலித்ததாயிற்று. 'ஒற்றெழுத் தியற்றே குற்றியலிகரம். (செய்.8) எனவும் மேற்கூறினான் ஆதலின் என்பது. 'பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து' என ஒற்றும் குற்றுகரமும் ஒழித்து எண்ணப்பட்டமையின் நால் எழுத்தடியாயிற்று. பிறவும் அன்ன. நச்: 15 (பேராசிரியர் உரைபோல்வதே நச்சர் உரையும். ஐந்து நூற்பாக் களையும் ஒருங்கமைத்தே உரைவரைந்தார். எனினும் சீர்வகை அடியையும் சுட்டுகிறார்). 'ஓங்குதிரை வியன்பரப்பின்' 'வலமா திரத்தான் வளிகொட்ப' 'சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே' 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே'. 'நெறியறி செறிகுறி புரிதிரி பரியா அறிவனை முந்துறீஇ' ''கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட" ''மூவடியி னாலிரண்டு சூழ்சுடரு நாண முழுதுலகு மூடி முளைவயிர நாறி" என இவற்றை முறையானே குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எனப் பெயர் கூறுப. எண்சீரின் மிக்கன சிறப்பில. 6. (இஃது எய்தியது விலக்கிற்று) ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் எழுத்தெனப்பெயர் கூறினாரேனும் எழுத்தாக எண்ணப்படா; என்னை? அவை தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்குக் கூறிய எண்வகை நிலத்தினும் விளங்க இயங்கா மையின். என்றது எழுத்தெண்ணுமிடத்து அவை ஒழித்தெண்ணுக என்றவாறு. இது கட்டளையடிக்கு 'பேர்ந்து சென்று' என்பதனுள் அவை ஒழித்து எண்ணப்பட்டது. பின்னுள்ளோர் கொண்ட கட்டளைக் கலித்துறை சந்தம் தாண்டகங்கட்கும் இவ்வாறெழுத்தெண்ணுதல் வேண்டு மென்றுணர்க. உ. ஆ.கு: நாலெழுத்து முதலாக இருபதெழுத்து ஈறாக ஐவகை அடியும் வரும் என்றும், எனினும் ஐவகை அடியும் நாற்சீர் அளவே அளவாக வரும் என்றும், அதன்பெயர் கட்டளையடி என்றும் தொல்காப்பிய நூற்பாவாலும் உரைகளாலும் தெளிவாம். பின்னாளில் சீர்வகையடி கிளர்ந்ததை நச்சினார்க்கினியர் சுட்டுகிறார். பிற்காலத் தெழுந்த யாப்பருங்கலம் முதலிய நூல்கள் எழுத்துக்களை எண்ணலின்றிக் ''குறளடி சிந்தடி இருசீர் முச்சீர் அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர்" என்றும் ''கழிநெடிலடியே அறுசீர் முதலா ஐயிரண் டீறா வருவன பிறவும்." என்றும் உரைத்தன. பதினாறு சீர்க்கழிநெடிலடியும், அதன் இரட்டியும் (32) அதன் இரட்டியும் (64) அதனின் இரட்டியுமாக (128)க் கழிநெடிலடி வளர்ந்து வந்துள்ளது. இனிக் குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலியன சீரும் தளையும் சிதைய வருங்கால் எண்ணப்படா என்ற குறிப்பும் பிற்காலத் தெழுந்தது. சிதையாத விடத்து எண்ணற்குமாம் என்பது கருத்தாம். ''சீரும் தளையும் சிதையில் சிறியஇஉ அளபோ டாரும் அறிவர் அலகு பெறாமை" என்பது முதலாக இலக்கணம் எழுந்தது. ''ஒலித்தற்குக் கூறிய எண்வகை நிலம்" என நச்சினார்க்கினியர் கூறியது, எழுத்துத் தோன்று மிடமும் முயற்சியிடமு மாகிய எண்வகையிடங்களையு மாம். அது பிறப்பியல் முதல்நூற்பாவிற் கண்டது. அடியோர் பாங்கு அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத் தென்மனார் புலவர். (தொ.பொ. 25) இளம்: அடித்தொழில் செய்வார் பக்கத்தினும் வினைசெய்வார் பக்கத்தினும் (மேற்சொல்லப்பட்ட புணர்தல் முதலான பொருளைக் கூறல்) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கண் என்று சொல்லுவர் புலவர். 'புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. வினை செய்வார் என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க. இவர் அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும். அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக்குறைபாடு உடையராக லானும், குறிப்பறி யாது வேட்கை வழியே சாரக் கருதுவர் ஆகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனானும், இவர் புறப்பொருட் குரிய ராயினார் என்க. எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம்புறம் என இருவகையாயின. நச்: பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும் பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும், தலைமக்களாக நாட்டிச் செய்யுட் செய்தல் நீக்கப் படாது, நடுவண் ஐந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் என்றவாறு. இஃது அவ்வந்நிலத்து இழிந்தோர்க்கு எஞ்ஞான்றும் தொழிலேயாய் நிகழுமென்றும் புனங்காவலும் படு புள்ளோப்புதலும் இவ்வாறன்றி உயர்ந்தோர் விளையாட்டாகி இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ச் சின்னாளில் தவிர்வ என்றும் வேறுபாடு உணர்க. இக்கூறிய இருதிறத்தோரும் தமக்கு உரியரன்மையான் அறம் பொருள் இன்பம் வழாமை நிகழ்த்துதல் அவர்க்கு அரிதென்பது பற்றி இவற்றை அகப்புறம் என்றார். நாவலர்: மேற்கூறிய நானில மக்களின் திணைப்பெயர் வகுப்புகளில் அடங்காத பிறர்க்கு அடிமையாவார் இடத்தும், அடிமையர் அல்லாக் கம்மியர் போன்ற தொழிலாளர் இடத்தும் அகத்திணை ஒழுக்கங்களை நாட்டிச் செய்யுட் செய்தல் விலக்கு இல்லை என்பார் பொருள்நூல் வல்லார். ஈரிடத்தும், 'பாங்கினும்' எனவரும் உம்மைகள், முன்னைச் சூத்திரங்கள் கூறும் திணைமக்கள் ஒப்ப என இறந்தது தழீஇயும், பின்னர் 'ஏவன் மரபில் ஏனோரும்' என்பது நோக்கி எதிரது தழீஇயும் வந்த எச்சவும்மைகளாம். ஈண்டுப்புறத்தென்பது மேற்சூத்திரங்களில் கூறப்பட்ட நானில மக்கள் வகுப்புக்களின் ஐந்திணைக்குப் புறத்தே எனப்பொருள் கொண்டு, பழைய உரைகாரர் இச்சூத்திரம் அடியோர் வினைவலர் போன்றவர்க்கு ஐந்திணை ஒழுக்கம் உரித்தன்று எனவும் அவற்றின் புறத்தவான கைக்கிளை பெருந் திணைகளே அத்திறத்தார்க்குரிய அகவொழுக்கங்களாம் எனவும் கூறுவா ராயினார். அவர் கூற்றுக்கள் சூத்திரச் சொற் றொடர்களுக்கு அமையாமை யோடு முன்னுக்குப் பின் அவ்வுரை யாளர் கூறுவனவற்றிற்கே மாறாக முரணுவதாலும் அவைபொரு ளன்மை யறிக. இளம்பூரணர் இச்சூத்திரத்தின்கீழ் 'இது நடுவணைந்திணைக்குரிய தலைமக்களை (முன்) கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந் திணைக்குரிய மக்களை யுணர்த்துதல் நுதலிற்று' என்று குறிக்கின்றார். அன்பின் ஐந்திணையான ஒத்தகாமம் மேற்கூறிய நானில மக்களுக்கு மட்டும் அமையுமன்றி இச்சூத்திரம் கூறும் அடியோர் வினைவலர் களுக்கு என்றும் இன்று என்பதே இளம்பூரணர் கருத்தென்பது ஈண்டு அவர் கூறும் குறிப்பால் அறிகின்றோம். மேன்மக்களே என்றும் அன்பின் ஐந்திணைக்குரியர்; மற்றையோர் இழிதகவுடைய கைக்கிளை பெருந்திணைகளுக்கே உரியவராவர் என்பது இவர் கருத்தாமேல், முன் முதற் சூத்திரவுரையில் பிரமமுதல் தெய்வமீறாக நான்கு மணமும் மேன்மக்கள் மாட்சி நிகழ்தலானும், இவை உலகினுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும் அது பெருந்திணை எனக்கூறப் பட்டது என்று இவரே கூறுதல் முரணாகும். ஆனால் பெருந்திணை பெருவழக்கிற் றென்பதும் ஆண்டு இவர் கூறிப்போந்தார். அன்றியும், 'ஏவன் மரபின் ஏனோர் என்னும் அடுத்த சூத்திரத்தின் கீழ் 'ஏவுதல் மரபை யுடைய ஏனோரும் கைக்கிளை பெருந்திணைக்குரியர்' என்று இவரே கூறுகின்றார். எனவே இச் சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் இவ்வுரை யாசிரியர் கைக்கிளை பெருந்திணைகளுக்கு மேன்மக்கள் பெரும்பாலும் தலைமக்களாதற் குரியர் என்று தம் கருத்தை வலியுறுத்துபவர், இச்சூத்திரத் தின்கீழ் அதற்கு மாறாகக் கீழ்மக்களே கைக்கிளை பெருந்திணைகளுக்கு உரியர் என்று கூறுவது மாறுகொளக் கூறல் என்னும் குற்றத்திற்கு அவரை ஆளாக்குகிறது. இவ்வாறே, நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதும் பொருந்தாது. கைக்கிளை பெருந்திணைகளை ஆசிரியர் இவ்வியலின் இறுதியில் 50, 51ஆம் சூத்திரங்களாக நிறுத்தி, அவற்றிற்கு முன்னெல்லாம் இச் சூத்திரத்திற்கு முன்னும் பின்னும் அன்பின் ஐந்திணைப் பகுதிகளையே கூறிச்செல்வதால் இதில் அவர்கருத்து வேறுபாடு சுட்டப் பெறாத நிலையில் ஐந்திணைகளுக்கு வேறான கைக்கிளை பெருந் திணைகளை அவர் கூறுவதாகப் பொருள்காண முயல்வது அமைவுடைமையதாகாது. இனி கைக்கிளை பெருந்திணை போலவே இழிதகவுடைய பொருந்தாக் காமம் என்று இவ்வுரையாளர் கருதுவதால் ஈண்டுக் கூறப்படும் அடியோர் வினைவலராகிய மேன்மக்கள் அல்லாதார் இழிதகவுடைய அப்பொருந் தாக் காமத்திற்கு உரியரென்று இவர்கள் பொருள் கூறுகின்றனர் போலும். தொல்காப்பியர் பெருந்திணை ஒன்றையே பொருந்தாக் காமம் எனக் கூறி, கைக்கிளையைக் குற்றமற்ற ஒருதலைக்காதல் என வேறுபடுத்தி விளக்கு கின்றார். ஒருதலைக்காதல் கைக்கிளை. காதலித்தோரைக் காதலிக்கப் பட்டோரும் காதலித்தால் அது ஒத்த காமத்தின்பால் அடங்கும். அவ்வாறு அடக்காமல் பொருந்தாக் காமமான பெருந் திணையும் ஒத்த காமமான அன்பின் ஐந்திணையும் வெவ்வேறு கூறி அவற்றின் வேறுபட்டதாய்க் கைக்கிளையை இந்நூலார் பிரித்து இயல் விரித்தலால் கைக்கிளை அன்பொத்த இருதலைக் காமம் அன்றாயி னும் அன்பற்ற பெருந்திணையும் ஆகாமல், குற்றமற்ற ஒருதலைக் காமமாய் எல்லோர்பாலும் கடியப்படாத நல்லொழுக்கம் என்பதே தொல்காப்பியர் கருத்தென்பது தெளிவாகும். மு.அ.: மேன்மக்கள் மாட்டு நிகழுமென்றும், உலகியற் பெருவழக்காய் நிகழு மென்றும் கூறிய பெருந்திணை வேறு, அகனைந்திணையிற் சிதைந்துவரும் பெருந்திணையும் கைக்கிளையும் வேறு எனக் கொள்ளல் வேண்டும். ஏறியமடற்றிறம் என்னும் நூற்பாவில் கூறும் நான்கு பகுதியுமே பெருந் திணையென்றும் காமஞ்சாலா இளமை யோளைக் குறித்துக் கூறும் ஒன்றே கைக்கிளையென்றும் அவையொழிந்தவை யெல்லாம் அகனைந்திணை ஒழுக்கங்களே என்றும் ஆசிரியர் கருதியிருப்பாரேல், ஆடவர் மகளிர் அனைவர்க்கும் அகவொழுக்கம் பொதுவுரிமை யுடையது என எளிதாக ஓரிடத்திற் கூறியிருப்பர். அங்ஙனம் கூறாமல் பலநூற்பாக்களின் பலபடி யாக அகவொழுக்கம் பற்றிப் பகுத்துக் கூறியிருத்தலால் மக்களிடையே உயர்வு தாழ்வுகள் இருத்தல் போன்று அவர்களிடை நிகழும் அகவொழுக் கத்திலும் வேறுபாடுகள் உண்டென்று கொள்ளுவதே பொருத்தமாகும். இருதலையும் ஒத்த அன்புபற்றி நிகழும் அகவொழுக்கமே சிறந்த தென்றும் ஒருதலைவேட்கையான் நிகழும் இக் கைக்கிளை, அக வொழுக்கம் போற் சிறந்ததன்றென்றும் ஆசிரியர் கருதுதலால் இதனை ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையோடு சேர்த்து வேறு கூறினார். கைக்கிளை என்பது இஃதொன்றேயன்றி வேறு பலவுமுண்டு என்பதை இவ்வதிகாரத்தில் பலவிடத்தில் காணலாம். அவை தலைமக்களிடையே நிகழும் உரை யாடல்களாலும் பிறவற்றாலும் அறியப்படும். அடிவரை இகந்து வரும் பா அ. கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் செவியறி வாயுறை புறநிலை என்றிவை தொகைநிலை மரபின் அடியில என்ப. (தொ.பொ.462) இ. இளங்: கலிவெண் பாட்டும், கைக்கிளைப் பொருளைப் பற்றிய பாவும், செவி யுறை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து என்ற பொருண் மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா; பொருள் முடியுங்காறும் வேண்டிய அடிவரப்பெறும். பேரா: இவை ஐந்தும் பெருமைக்கு எல்லை இத்துணை எனத் தொகுத்துக் கூறும் தன்மையுடைய அளவால்வரும் அடியை உடைய அல்ல. கலிவெண் பாட்டு என்பது ஒருபொருள் நுதலுதலால் திரிபின்றி நடப்பதன்றிப் பன்னிரண்டடியின் இகந்து வந்து, 'தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்து' வாராது ஒன்றேயாகி வருவதெனக் கொள்க. கைக்கிளைச் செய்யுள் என்பது, கைக்கிளைப் பொருட்டு உரித்தாய் வரும் மருட்பா என்றவாறு. அஃதேல் ஈண்டோதிய கலிவெண் பாட்டு மொழிந்த கைக்கிளைப் பொருள்மேல் வாராவோ எனின், வரு மென்பது 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்புழிக் கொண்டாம் என்பது. எனவே வெண்பாட்டல்லாதன கலிப்பாட்டுக்கள் கைக்கிளைப் பொருள் மேல் வந்த வழியும் அவற்றுக்கு அளவைமேற்கூறிய வாற்றானே அடங்கும் என்பதாயிற்று. செவியறி வாயுறை புறநிலை என்பன மேற், 'கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ' எனவே ஒழிந்த பாவான் வருமெனப்பட்ட பொருண்மேல் வருஞ்செய்யுள், ஆண்டோதியவற்றிற்கு ஈண்டு அளவை கூறானே எனின் அஃது ஆசிரியமும் வெண்பாவுமாகி வேறுவருதலின் முற்கூறிய வகை யானே அடங்கும் என்பது. மற்றுக் கொச்சக ஒருபோகு ஆகியும் தொடர் நிலைச் செய்யுட்கண் வருமால் அவையடக்கெனின், அஃது 'யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய' கொச்சக ஒருபோகென் றொழிக. 'தொகுநிலை யளவின் அடியில' என்பது விரவுறுப்புடைய வெண்கலி யும் கொச்சகக் கலியும் உறழ்கலியும் என்றிவற்றிற்கு மேல் அம்போ தரங்கம் பெற்ற அளவினை முதலாக நாட்டிக் கொண்ட தொகுநிலை யளவெனப் பட்ட அடிமேல் அடியிகந்தோடா என்றவாறு. தொகுநிலை அளவென்பது தலையளவு இடையளவு கடையளவு எனப்பட்ட அம்போதரங்கம் மூன்றற்கும் பெருகிய எல்லையாகி அளவின் விரியாது அவற்றுக்குச் சுருங்கிய எல்லையாகி அறுபதும் முப்பதும் பதினைந்துமெனத் தொக்குநிற்கும் அளவினவாகிய அடிமேல் ஏறா என்றவாறு. தொகுமளவு என்னாது தொகுதிநிலை என்றான் மூன்று தொகை யினும் முப்பஃதாகிய இடைநிலைத் தொகையே கோடற் கென்பது. 'இன்' என்னும் ஐந்தாம் உருபு நீக்கத்தின்கண் வந்தமையின் முப்பஃதடியின் இகந்துவரும் அடிஇல என்றவாறு. இனி, அம்முப்பஃதாகிய தொகுநிலை என்னாது அளவு என்றான் என்பது, நீண்டதனை அளவுடைத்து என்ப ஆகலின். மற்று இங்ஙனம் இவை முப்பஃதடியின்மேல் வாரா என்று பெருக்கத் திற்கு எல்லை கூறவே, சுருக்கத்திற்கு எல்லை வரையறை இல என்றானாம். ஆகவே இரண்டடியானும் வருமென்றானாம் பிறவெனின், அற்றன்று. ஒருபொருள் நுதலி வரும் கலிவெண்பாட்டு ஆயிற் பன்னீரடி இகவாதென் பது, 'திரிபின்றி வருவது கலிவெண் பாட்டு' என்றவழிப் போது மாகலின், ஈண்டு ஓதிய கலிவெண்பாட்டுப் பதின்மூன்றடியிற் சுருங்காது என்பது பெற்றாம். இது கைக்கிளைப் பொருள்மேல் வந்ததாயினும் ஒக்கும். இக்காலத்தார் ஏறிய மடற்றிறம் என்னும் பெருந்திணைப் பொருள் மேலும் காமஞ்சாலா இளமையோளை ஒழிந்த மகளிரொடும் கூட்டி யுரைக்கும் கைக்கிளைப் பொருள்மேலும் கலிவெண்பாட்டெனப் பெயர் கொடுத்துச் செய்யுள் செய்பவால் அவை அவ்வாறு செய்தற்கும் அவை முப்பதிற்றடி யின் இகந்து எத்துணை யடியினும் ஏற்குமென்றற் கும் என்னை ஓத்தெனின் அவ்வாறு வருமென்பது இந்நூலுட் பெற்றில மாயினும் இருபதின் சீர்க்கழி நெடிலடியானும் இதுபொழுது செய்யுள் செய்யுமாறு போலக் காட்டலான் அமையும். அவை புலனெறி வழக்கிற்குச் சிறந்திலவாகலிற் சிறுவரவின என்றொழிக. நச்: கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், புறநிலைவாழ்த்துப் பொருள் மேல் வரும் செய்யுள், வாயுறை வாழ்த்துப் பொருள்மேல் வரும் செய்யுள், செவியறிவுறூஉப் பொருள்மேல் வரும் செய்யுள் என்று இவ்வைந்தும் பெருமைக்கு எல்லை இத்துணை எனத் தொகுத்துக் கூறும் தன்மையை யுடைய அளவால் வரும் அடியுடைய அல்லவென்று கூறுவர் புலவர். புறப்பொருளான் வந்து இரண்டுறுப்பாயும் ஓர் உறுப்பாயும் பாவும் பொருளும் வேறுபட்டு வெள்ளடியின் இகந்து வரும் கலிவெண் பாவாகிய உலாச் செய்யுள் அடிவரையின்றி வருமாறும் பெருந் திணைப் பொருண் மேல் வரும் மடற்செய்யுளும் ஓர் உறுப்பாய் அடியிகந்து வருமாறும் இக்காலத்துக் கூறுகின்றவற்றுட் காண்க. அது திருவுலாப் புறத்துள்ளும் 'வாமான ஈசன் வரும்' (ஆதியுலா) என முடித்து மேல் வேறோருறுப்பாய வாறும் ஒழிந்த உலாக்களுள் வஞ்சியுரிச்சீர் புகுந்த வாறும் அடிவரையறை யின்மையுமாம். அகப்புறமும் புறப்புறமுமாய மருட்பாவாய்க் கைக்கிளை அடிவரை யறையின்றி வந்தன வந்துழிக் காண்க. காமஞ்சாலா இளமையோள் வயின் வந்த கைக்கிளையும் காட்சி முதலிய கைக்கிளையும் ஆசிரியத்தி னும் வஞ்சியினும் வாரா. எனவே ஒழிந்த பாவினுள் எல்லாக் கைக்கிளையும் வருமாயிற்று. உ. ஆ.கு: அடிவரை அடியின் எல்லை (அளவு); இகத்தல் கடத்தல் , மிகுதல். இன்னபாவிற்கு இத்துணையென வகுக்கப்பட்ட அடியளவின் மிக்கு வருதல். அவற்றின் அளவு எடுத்துக்கொண்ட பொருளின் அளவும், பாடுவோன் குறிப்பின் அளவுமே என்க. ஆசிரியப்பாவின் அடி எல்லை ஆயிரம் என்றமையும், எண்சீர் பதின்சீர் என்பனவும் சிறப்பில்லன என்றமையும் விலக்குண்டு போனதைப் பின்வரவுகளால் தெளிவாக அறியலாம். அடிவரை இல்லாச் செய்யுள் அ. எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப (தொ.பொ.466) அவைதாம், நூலினான உரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. (தொ.பொ.467) ஆ. உரையொடு நூலிவை அடியில நடப்பினும் வரைவில என்ப வாய்மொழிப் புலவர் (பல்காயம்) மொழிபிசி முதுசொல் மூன்றும் அன்ன (பல்காயம்) ஓரடி யானும் ஒரோவிடத் தியலும் (பல்காயம்) உரையும் நூலும் அடியின்றி நடப்பினும் வரைவில என்ப வயங்கி யோரே (நத்தத்தம்) வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங் காமுறை மூன்றும் அன்ன என்ப (நத்தத்தம்) ஓரடி யானும் பலவடி யானும் ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள் அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகும் என்ப அறிந்திசி னோரே. (இ.வி.760) பத்தியம் என்ப பாவொடு பாவினம் கத்தியம் அவைபோல் கலையல் லனவே (தொ.வி.250) இ. இளம்: எழுநிலமாவன பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம்; முதுசொல் என்பன. அவற்றுள் பாட்டொழிந்த ஆறும் அடிவரை இல என்றவாறு (466). வாய்மொழி எனினும் மந்திரம் எனினும் ஒக்கும். அங்கதமாவது செம்பொருள் கரந்ததென இருவகைத்தே' (429) என்றதனால் கரந்த அங்கதம் எனினும் சொற்குறிப்பெனினும் ஒக்கும் (467). பேரா: அகமும் புறமும் ஆகிய எழுநிலத்துத் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தளவு ஆறாம். இதனானே ஆறு என்பதூஉம் ஓரளவியலாயிற்று. அவைதாம் என்பது அடிவரை இல்லன ஆறெனப் பட்டவையாம். நூலின் கண்ணவும் உரையின்கண்ணவும் நொடிதன் மாத்திரையாகிய பிசியின் கண்ணவும் ஒருமொழிக் கேதுவாகி வரும் முதுமொழிக் கண்ணவும் மறைத்துச் சொல்லும் சொல்லாற் கிளந்த மந்திரத்தின் கண்ணவும் சொல்லுகின்ற பொருளை இடைகரந்து சொல்லும் குறிப்பின் கண்ணவும் என அறுவகைப்படும். நூலின் கண்ணவும் என்றது சூத்திரச் செய்யுளை நோக்கிக் கூறியவாறு. அதனுள்ளும் அடிவரையுடைய ஆசிரியம் போல் அளவைபெற்று மேலே அடங்கும் என்பது. இனி அச்சூத்திரப் பொருளும் உரையின் கண்ணதாகி வருவதூஉம் ஒரு செய்யுளாம். நொடியொடு புணர்ந்த பிசியும், ஏது நுதலிய முதுமொழியும், மறை மொழி கிளந்த மந்திரமும், கூற்றிடைவந்த குறிப்புமென நான்கும் வழக்கு மொழி யாகியும் செய்யுள் ஆகியும் வருதலின் அவற்றுட் செய்யுளையே கோடற்கு அவற்றுக்கு அளவில என்றான் என்பது. இனி அவைபடும் பகுதி யாவையும் கூறுகின்றான்; நெடிலோடு புணர்ந்த என்ற மிகையான் இதுவன்றி இதுபோல்வது பண்ணத்தி என்பதும் ஒன்று உண்டென்பது கொள்க. நச்: அகமும் புறமுமாகிய எழுநிலத்திலும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறென்று கூறுவர் புலவர். எழுநிலம் என்றற்குப் பாட்டு உரைநூல் முதலியனவுமாம். முற்கூறிய அடிவரை இல்லாதனவும், நூலின் கண்ணாவனவும், உரையின் கண்ணாவனவும், நொடியின் மாத்திரையாகிய பிசியின் கண்ணாவனவும், ஒரு மொழிக்கு ஏதுவாகிவரும் முதுமொழிக் கண்ணாவனவும் மறைத்துக் கூறும் சொல்லாற் கூறிய மந்திரத்தின் கண்ணாவனவும் என ஆறுவகைப் படும். நூலினான என்றது சூத்திரச் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அளவை பெறாதனவற்றை நோக்கிற்று. அச்சூத்திரத்தை நோக்கி வருமுறையும் ஒரு செய்யுளாம். ஒழிந்தன வழக்கின் கண்ணும் செய்யுட்கண்ணும் வரினும் ஈண்டுச் செய்யுளை நோக்குதற்கு அவற்றின் கண்ண என்றார். இவையும் அளவிகந்து வருவனவே. உ. ஆ.கு: இதுவும் செய்யுள் எனப்படுதலின் அடியுண்டெனவும், அவ்வடியின் அளவு இனைத்தென இல்லை எனவும் அறியலாம். நூல் இலக்கணம். அதற்குரிய பா நூற்பா (சூத்திரம்). ஆயினும் அதற்கு யாப்புநெறி உண்மை அறிக. 'உரைப்பாட்டு மடை' எனச் சிலம்பில் வருவனவும், விடுகதை, பழமொழி என வழங்குவனவும் தத்தமக் கென ஒருவகை யாப்பியலும் அடிவரையும் கொண்டிருத்தலும் கருதுக. பிசியாவது இந்நாளில் வழங்கும் புதிர் (விடுகதை). அடுக்கிய தோற்றம் அ. அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே நிரனிறுத் தமைத்தல் நிரனிறை சுண்ணம் வரன்முறை வந்த மூன்றலங் கடையே. (தொ.பொ.309) இ. இளம்: அடுக்கிய தோற்றமாவது, உவமைபல அடுக்கித் தோற்றுதல் நிரனிறுத் தமைத்தலாவது, ஒருபொருளொடு தோற்று தொடரை யுடைத்தாகப் பலவுவமை வருதல். நிரனிறையாவது, உவமை பலவற்றையும் சேரநிறுத்தி உவமிக்கப் படும் பொருளையும் சேர நிறுத்தல். சுண்ணம் என்பது, உவமையையும் பொருளையும் துணித்து ஒட்டுதல். வரன்முறை வந்த மூன்றலங்கடையே என்பது, அடுக்கியலுவமை கடியப்படும்; ஆமென்று வரையப்பட்ட நிரல் நிறுத்தல் முதலிய மூன்றும் அல்லாதவழி என்றவாறு. அவற்றுள் கடியப்பட்டது உவமைக்கு உவமையாக அடுக்கி வருவது. அவ்வாறு உவமைக்கு உவமையாகக் கூறியவதனாற் போதுவதோர் பயன் இன்மையின் ஆகாதென்று கொள்க. பேரா: (முதலடியைத் தனி நூற்பாவாகவும், பின்னீரடிகளையும் தனி நூற்பா வாகவும் கொள்வார் பேராசிரியர்.) (இஃது எய்தியது மறுத்தது. என்னை? வேறு ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறீஇ, அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்தலும் உவமை என்று கொள்ளுவான் ஆயினும் அது கொள்ளப் படாது; பொருள் விளங்காமையின்' எனக் கூறி விலக்கியமையின்.) உவமையும் பொருளும் நிறுத்தி அடுக்கிய தோற்றம் சிறப்பினவாகக் கொள்ளப்படா. தோற்றம் என்றதனான் உவமையும் பொருளுமாக நிறீஇ உவம உருபு தோன்றக் கூறுங்கால் அடுக்கப்படுவ தென்பது. ஈ. க.வெ.: அடுக்கி வரலுவமையாவது, ஒருபொருளோடு ஒருபொருளை உவம உருபு தோன்ற உவமித்து, அப்பொருளோடு பிறிதொரு பொருளை யுவமித்து இவ்வாறு உவமைகளை உவமையும் பொருளுமாக முடித்துக் கூறுதல். இங்ஙனம் உவமையும் பொருளுமாக அடுக்கு தல் உவமையும் பொருளும் என்றவகையால் ஒக்குமாயினும் தம்முள் வேறுபாடுடைய இவை ஒரு பொருட்கு உவமையாகவரின் அவற் றிடையேயமைந்த பொதுத் தன்மை யாகிய ஒப்புமைக் குணம் தம்முள் மாறுபட்டுப் பொருள் மயக்கமுண்டாம் ஆதலால் அடுக்கி வரலுவமை யாகிய அது கொள்ளப்படாது என்றார் தொல்காப்பியனார். அடைநிலைக் கிளவி அ. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகும் ஆங்கென மொழிப. (தொ.பொ.440) இ. இளம்: (தனிச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.) அடைநிலைக் கிளவியாகிய தனிச்சொல் தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின் றொழுகும் எனச் சொல்லுவர். தாழிசைப் பின்னர் நடத்தலைப் பயின்றொழுகும் எனவே தாழிசைக்கு முன்னர் வருதலும் சிறுபான்மை உளதென்று கொள்க. பேரா: ஆங்கென் கிளவி என்பது பாடம். ஆங்கு என்னுஞ்சொல் தனிச்சொல் எனப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. தாழிசைப் பின்னர் ஆங்கு தனிச்சொல்லாய் நின்று பயிலும். ஆங்கென்னும் சொல்லினை எடுத்தோதினான், அது நடை நவின் றொழுகு மாகலின். ஆங்கென்னுஞ் சொல் பயின்று வருமெனவே, அல்லாதனவும் உள. இத்துணைப் பயிலாதன என்பது கொள்க. ஆங்கு என்பது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் தோன்ற நின்ற சொல் லாகலின் அஃதெல்லாச் செய்யுட்கண்ணும் தன் பொருண்மைக் கேற்பச் செய்யவேண்டும் பிறவெனின், அற்றன்று; அதனை அசை நிலையாகக் கொள்க; அல்லதூஉம் எல்லாச் செய்யுளும் இதன் பொருண்மைக்கேற்பச் செய்ய வேண்டுமென் றான் மிகைகூறிப் பயந்த தின்மையான் என்பது. அசைநிலை பெய்து செய்யுள் செய்தன் மரபாதலின் அஃது அமையு மென்பது; நடைநவிலாதன பொருள் பெறவரு மென்பது. நச்: ஆங்கென் கிளவி என்பது பாடம் இது தனிச் சொற்கு இடங் கூறுகின்றது. ஆங்கென்னும் அசைச்சொல்லாய் அடைநிலையாகிய சொல் தாழிசையின் பின்னே பயின்று வரும். ஆங்கென்னும் அசைச்சொல் பயிலும் எனவே அல்லாதன பொருள் பெற வருதல் பெற்றாம். ஆங்கென ஏழன் உருபாய் இடப்பொருள் உணர்த்திற் றேல் யாண்டும் பொருளுணர்த்தல் வேண்டும். அங்ஙனம் நில்லாமையின் அசை நிலையாயிற்று. உ. ஆ.கு: தான் தனித்து நிற்பினும் அடுத்துள்ள சொல்லொடு அடைந்து பொருள் தொடர்புறு வதாம் சொல் அடைநிலைக் கிளவி என்பதாம். அந்தணர்க்குரியவை அ. 1. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய. (தொ.பொ.615) ஆ. 2. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே (தொ.பொ.627) பாம்புநா வகிர்ந்த பசும்புலும் செங்கனற் குண்டமும் திரிந்தநூற் கோலும் சுருதியும் மஞ்சளிற் கலந்து வைத்தபச் சரிசியும் மாவிலை தொன்னை ஆதியும் அன்றி நூற்பொருள் உணர்தரும் நுண்ணிமை யில்லார் கொலைமகம் புரிதற் குறித்தயர்ந் துயிர்க்கும் இரக்கமும் பொலிவுறும் ஈசன் என்றே உலகினர் வழிபட உயர்ந்தோர் இடத்தே (அ.இ.பொ.70) தவத்தோர் உறையுளில் தண்டொடு கமண்டலம் கோவணம் மரவுரி குலவுகல் லாடை வெண்ணீ றணிமணி வேடர்கண் டுரித்த கொல்லாப் புலித்தோல் ஆதிய குலவுமே (அ.இ.பொ.69) இ. இளம்: 1. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு. 2. அமாத்திய நிலையும் சேனாபதிநிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில என்றவாறு. அதாவது மந்திரி புரோகிதனாகிய வழிக்கொடியும் குடையும் கவரியும் தாரும் முதலாயின அரசராற் பெற்று அவரோடு ஒரு தன்மையனாகி இருத்தல். பேரா: 1. (இஃது உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவான் முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டு வருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல்). முந்நூலுங் குண்டிகையும் முக்கோலும் யாமை மணையும் போல்வன அந்தணர்க்குரிய. ஆயுங்காலை என்றதனாற் குடையுஞ் செருப்பு முதலாயினவும் ஒப்பன அறிந்து கொள்க. இன்னும் ஆயுங்காலை என்றதனான், ஒருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படார் என்பது. முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகயலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதி னான் என்பது. மற்று அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலினை ஈண்டு வரைந்தோதின தென்னையெனின், ஒருகோலுடையான் நூல் களைவா னாகலின் அவனுஞ்சிறுபான்மை அந்தணன் எனப்படும் என்பது கோடற்குங் கரகமும் மணையும் உடையனென்றற்குமென்பது. நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானும் சிறப்பு முறையானும் என்பது. இனிக்குடுமியுங் குசையும்போல்வன கூறிற்றிலன், அது முன்னரும் பின்னரும் வருதலாலும் மன்னரும் வணிகரும் பெறுத லானும் என்பது. 2. (இஃது எல்லாவற்றிலுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க் குரியவாகலின் ஈண்டுப் போதந்து கூறுகின்றது). அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப் படாது. மக்களைத் தின்ற மன்னர்க்குப் பின்னை மறையோரான் அரசு தோற்றப் பட்டாற்போலக்கொள்க. உ. ஆ.கு: 'மாற்றருஞ் சிறப்பின் மரபு' என மரபிலக்கணம் கூறித் தொடங்கும் மரபியலில் நூல், கரகம், கோல், மணை என மாற்றமுறும் பொருள்களைக் கூறுதல் மரபொடு பொருந்தாமை வெளிப்படை. இளமை, ஆண்மை, பெண்மை என்பவை மாற்றருஞ் சிறப்பின என்பதையும், அவற்றைப் பற்றிக் கூறுவதே மரபியல் என்பதையும் எண்ணுதல் தகும். மற்றும், ''அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண் டொழுகலான்" எனப் பண்பியல் பகர்ந்த வள்ளுவமும் இவணெண்ணத் தக்கதாம். இவற்றானே, பின்னை ஆய்வாளர்களாகிய Põ.சுப்பிµ©o யனார், சி.இலக்குவனார், க.வெள்ளைவாரணனார் முதலோர் அந்தணர் முதலாக வரும் இப் பகுதியை இடைச்செருகல் என்றனராம். அம்பலும் அலரும்: அ. அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் (தொ.பொ.137) அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்குமென் றஞ்ச வந்த ஆங்கிரு வகையினும் (தொ.பொ.221) ஆ. அம்பலும் அலரும் களவு (இ.க.22) இ. இளம்: அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவர் ஒருவர் முகக்குறிப்பினால் தோற்றுவித்தல் (137). அலராவது சொல்லுதல். பேரா: அம்பல் பரவாத களவு (அலர் பரவிய களவு) திருக்கோ.180 நச் : அம்பலும் முகிழ்த்தலும். அலரும் பலர் அறியச் சொல் நிகழ்த்தலும். ஈ. இ.க.உரை: அவ்விரண்டும் (அம்பலும் அலரும்) நிகழ்ந்தன என்பது தாம் அறியின் அல்லது யாவரும் அறிவார் இல்லை; இன்மையின் அவைகளவு என்றவாறு; களவு என்பது செய்தாரே அறிந்து மற்றொருவர் அறியாதது ஆகலான். அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல், அலர் என்பது சொல்நிகழ்தல்; அம்பல் என்பது சொல்நிகழ்தல், அலர் என்பது இல் அறிதல்; அம்பல் என்பது இல் அறிதல், அலர் என்பது அயல் அறிதல் அம்பல் என்பது அயல் அறிதல், அலர் என்பது சேரி அறிதல்; அம்பல் என்பது சேரி அறிதல், அலர் என்பது ஊர் அறிதல்; அம்பல் என்பது ஊர் அறிதல், அலர் என்பது நாடு அறிதல்; அம்பல் என்பது நாடு அறிதல், அலர் என்பது தேசம் அறிதல். அது பொருந்தாது; என்னை? அம்பல் எனப்பட்டதே அலரும், அலர் எனப்பட்டதே அம்பலும் ஆயின. இஃது அம்பற்கு இலக்கணம். இஃது அலர்க்கு இலக்கணம் என்று விசேடங்காட்டிற்றிலர்; இவை இரண்டால் தம்முன் வேற்றுமை பெறப்படும் ஆகலான் என்பது. மற்று என்னோ எனின், அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று. இன்னதின் கண்ணது என்பது அறிய லாகாது என்பது. அலர் என்பது இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும்போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது, அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந் தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம். அம்பலும் அலரும் எவ்விடத்து நிகழுமோ எனின் காப்புக் கைமிக்க இடத்தே நிகழும் என்பது. களவினது நெடுங்காலத்துக்கண் இவ்வொழுக் கம் வெளிப்படுங் கொல்லோ என்னும் அயிர்ப்பினான் நிகழும் என்பது. அங்ஙனம் அயிர்த்த அயிர்ப்பினாற் களவொழுக்கம் ஒழிந்து நின்ற நிலைமை கற்பு என்று கொள்ளுவேன் ஆயின், வரைந்து புகுந்த தின்மையிற் கற்பு எனலும் ஆகாது; களவினகத்தென்று கொள்ளுவேனாயின் ஒழுக்கம் நிகழ்கின்றின்மை யிற் களவு எனலும் ஆகாது; என்னைகொல்லோ இதனை ஒருபாற் சார்த்துமாறு? என்று ஐயப்பட்டு நின்ற மாணாக்கற்கு, அம்பலும் அலரும் என்று நின்ற நிலைமையைக் களவின்பாலே கொள்க என்பது. இது பொருந்தாது. என்னை? 'தந்தை தாயே தன்னைய ரென்றாங் கன்னவர் அறியாப் பண்பா கும்மே' (இறை.கள.26) என்றமையின், இவரறியாத முன்னெல்லாம் களவென்பது போதும் என்பது. மா. ஒரு குமரியின் காதலொழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர் பெறும். 'அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்' (நற்.143) 'அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்' (அகம்.203) என இவ் வாய்ப்பட்டிகளை அகப்புலவர்கள் குறிப்பிடுவர் (uªÌUPõuÀ.பU.71) உ. ஆ.கு: அகம், அம். உள்ளீடாய் உறையும் நிலை அம்பல். அலர்தல் மலர்தல், வெளிப்பாடாம் நிலை. ஒன்றின் ஒன்று விரிவுறுதலின் அம்பலும் அலரும் அடுக்கிக் காட்டினார் களவியலுரையார். அம்போதரங்க ஒருபோகு அ. ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும் (தொ.பொ.150) கொச்சக ஒருபோ(கு) அம்போ தரங்கமென்(று) ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் (தொ.பொ.151) அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே செம்பால் வாரம் சிறுமைக் கெல்லை (தொ.பொ.154) ஆ. ஈரடி இரண்டும் ஓரடி நான்கும் முச்சீர் எட்டும் இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம் நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாக்கி தழுவும் தரவினோ டேனவும் யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம் (Põ.பõ.) சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையின் சுருங்கி மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ அளவின எல்லாம் அம்போ தரங்கம் (சி.கா.) உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த அடியான் நீர்த்திரை போல அசையடி பெறினவை அம்போ தரங்கம் (அவிநயம்) தாழிசைக் கீறாய் முறைமுறை யானே ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன்னர் ஆழ்புலன் திரைபுரை அம்போ தரங்கம் உம்பர் மொழிந்த தாழி சைவழி அம்போ தரங்கம் வண்ணக மாகும் (யா.வி. 83 மேற்.) முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி முச்சீர் குறள் நடுவே மடுப்பின்... அம்போ தரங்கவொத் தாழிசையே (யா.கா.38) ஐந்துறுப்பு, நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை (Ã.சேõ.1177) அம்போ தரங்கம் அம்பளாம் திரைபோல் அளவடி ஈரடி இரண்டும் பேரெண் அளவடி ஓரடி நான்கும் அளவெண் சிந்தடி ஓரடி எட்டும் இடையெண் குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண் எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச் சுருங்கவும் அந்நால் துணையுறுப் புடைத்தே (தொ.வி.231) அளவடி சிந்தடி குறளடி ஆகும் அசையடி ஆகிய அம்போ தரங்க உறுப்பைத் தாழிசை தனிச்சொற் கிடையில் கொண்டு தரவு தாழிசை அம்போ தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்துறுப் போடும்வரல் அம்போ தரங்க ஒத்தா ழிசைக்கலி யாமுறை தானே (•.Ã.யõ.36) இ. இளம்: அம்போதரங்க ஒருபோகு அறுபதடி பெருமைக் கெல்லையாம்; நடுவாகிய நிலை சிறுமைக்கு எல்லையாம் என்றவாறு. செம்பால் வாரம் என்பது செம்பாதி எனவுமாம். முப்பதடிச் சிறுமை என்றவாறு. பேரா: ஓர் உறுப்பு இழத்தலின் ஒருபோகு. ஒருபோகு என்பது பண்புத்தொகை; இடையீடில்லாத நிலத்தினை ஒருபோகு என்பவாகலின். அஃது ஒப்பி னாகிய பெயர். ஒருபோகு என்பதனைத் 'திரிகோட்டவேணி' என்றதுபோலக் கொள்க. இது தலையளவு அம்போதரங்க ஒருபோகும் இடையளவு அம்போத ரங்க ஒருபோகும் கடையளவு அம்போதரங்க ஒருபோகும் என மூன் றற்கும் சிற்றெல்லை கூறியவாறாயிற்று. அவற்றுக்குப் பேரெல்லை கூறுமாறு என்னை எனின், அறுபதிற்று அடித்தெனத் தலையளவிற்கு வேறு கூறி அவ்வளவைப் பற்றி அதன் செம்பாலும் அதன் வாரமும் எனப் பாகஞ் செய்து வந்தான் ஆகலாற் கடையளவு அம்போதரங்கத் திற்குச் சிற்றெல்லை பதினைந்தாம். கடையளவு அம்போதரங்கத்திற்குச் சிற்றெல்லை பதினைந்து ஆகிய வழிப்பேரெல்லை முப்பதின்காறும் உயருமெனவும், இடையள விற்குச் சிற்றெல்லை முப்பதாகியவழிப் பேரெல்லை அறுபதின் காறும் உயரும் எனவும் தலையளவிற்குச் சிற்றெல்லை அறுப தாகியவழி அதனையும் இவ்வாறே இரட்டிப்ப அதன் பேரெல்லை நூற்றிருபதாம் எனவும் கொள்ளவைத்தான் என்பது. அங்ஙனம் நூற்றிருபதாங்கால் மேல்நின்ற அதிகாரத்தால் தரவிற்கு எல்லை இருபஃது ஆகவும், அதனோடொப்ப வருதல் இலக்கணத்ததாகிய அடக்கியல் இருபதடி யாகவும் நாற்பதடி பெறப்படும். இனிச் சிற்றெண் பதினாறும் அராக அடி நான்குமாக இருபதடி பெறப்படும் கொச்சகம் இருமூன்றாகிய பத்தடியின் இகவாது அறுபது அடி பெறும் என்றவாறாயிற்று. இனிப் பதினைந் தாங்கால் தரவு இரண்டடியும் கொச்சகம் மூன்றாகி ஆறடியும் அராக அடி ஒன்றும் சிற்றெண் நான்கும் அடக்கியல் இரண்டுமெனப் பதினைந்தடியாம். ஒழிந்த இடையள விற்கும் தலையளவிற்கும் இவ்வாறே வருமென்றறிந்து கொள்க. நச்: ஒருபோகின் இயல்பும் இரண்டு கூறாம். இதன்பயன் ஒருபோகின்றிக் கொச்சகம் அம்போதரங்கம் என்றும் பெயர் வழங்கினும் அமையும் என்றவாறாயிற்று. பலவுறுப்புக்களும் முறையே சுருங்கியும், ஒரோவழிப் பெருகியும் முடுகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போத ரங்கம் எனவும் கூறினார். இவையும் ஒத்தாழிசைப் பகுதி என்பார் போக்கிய ஒத்தாழிசையானே ஒருபோகு என்றார் எனக் கொள்க. அம்போதரங்க ஒருபோகு என்பதும் அது. ஒருபோகென்பது பண்புத்தொகைப் புறத்தன்மொழி. இடையீ டில்லா நிலத்தினை ஒருபோகு என்ப ஆகலின், அது ஒப்பினாகிய பெயர். 'திரிகோட்ட வெளி' என்பதுபோலக் கொள்க. அம்போதரங்க ஒருபோகு தன்னுறுப்பெல்லாம் கூடி அறுபது அடித்தாய் ஒவ்வொரு பதத்திற்கும் இரண்டடியாகிய நூற்றிருபது அடியையுடைத் தாயும் வரும். சிறுமைக்கெல்லை கூறுமிடத்து அவ்வறுபதிற் செம்பாக மாகிய முப்பதடியிற் பாகமாகிய பதினைந்து அடியான் வரும். அறுபதிற் செம்பால் முப்பதில் வாரம் பதினைந்து என்று உணர்க. எனவே இடையளவு அறுபதும், தலையளவு அதன் இரட்டியாகிய நூற்றிருபதும் கடையளவு பதினைந்தும் ஆயிற்று. இனி அறுபதும் முப்பதும் பதினைந்தும் எனச் சிற்றெல்லைக்கே தலை யளவு இடையளவு கூறிற்றெனக் கொண்டு இவற்றில் கடையளவாகிய சிற்றெல்லைக்குப் பேரெல்லை முப்பதும், இடையளவாகிய சிற் றெல்லைக்குப் பேரெல்லை அறுபதும் எனப் பொருளுரைக்கில் தலையள விற் சிற்றெல்லைக்கும் இடையளவிற் பேரெல்லைக்கும் வேறுபாடு இன்றியும், இடை யளவிற் சிற்றெல்லைக்கும் கடையள விற்கும் வேறுபாடு இன்றியும் நிற்கும் என மறுக்க. அங்ஙனம் நூற்று இருபது தரவிற்கு எல்லை மேல்நின்ற அதிகாரத்தான் இருபதாகவும், அதனோடொத்து வருதல் இலக்கணத்தவாகிய அடக்கியல் இருபதடியாகவும் நாற்பதடி பெறப்படும். சிற்றெண் பதினாறும் அராகம் நான்குமாக இருபதடி பெறப்படும். கொச்சகம் இருமூன்றாகி ஒன்று பத்தடி பெற்று அறுபதடியாம். இனிப் பதினைந்தடியான் வருவன தரவு இரண்டடியும் கொச்சகம் இருமூன்றாகி ஆறும், அராகம் ஒன்றும், சிற்றெண் நான்கும், அடக்கியல் இரண்டு மாகப் பதினைந்தடியாம். இடையளவிற்கும் இவ்வாறே வருமாறு அறிக. உ. ஆ.கு: அம்பு தரங்கம்: அம்போதரங்கம், நீரலை; கரை சாரக் கரை சாரச் சுருங்கிவரும் நீரலைபோலச் சீர்களின் அளவு (எண்ணிக்கை) குறைந்து வருதல் அம்போதரங்க உறுப்பாகும். நாற்சீர் ஈரடி, இரண்டு என்பது அளவால் 16 சீர்களாம். நாற்சீர் ஓரடி, நான்கு என்பதும் அளவால் 16 சீர்களாம். முச்சீர் ஒரடி, எட்டு என்பது அளவால் 24 சீர்களாக வரினும் இறுதிச்சீர் ஓரசையாக இருத்தல் அறியத்தக்கது. அதனை இறுதிச் சீரொடு இணைப்பின் 16 சீர்களாம். இருசீர் ஓரடி, பதினாறு என்பது அளவால் 32 சீர்களாக வரினும் இரண்டாம் சீர் அசைச்சீராக வருதலின் 16 சீர்களாம். இவ்வாற்றான் அம்போதரங்கச் சீர் எண்ணிக்கை ஒரு நிகராய் அமைந்து அறுத்தறுத்துப் பகுப்புப் பெருக்கம் அடைதல் இசைக்குறிப்புடையதாம் என்க. அம்போதரங்க ஒருபோகு உறுப்பு அ. எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (தொ.பொ.455) ஆ. நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் தாக்கித் தழுவும் தரவினோ டேனவும் யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம் (Põ.பõ.) தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம் வருவன எல்லாம் தாழிசைக் கலியே சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையின் சுருங்கி மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ அளவின எல்லாம் அம்போ தரங்கம் (].Põ.பõ.) தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த் தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச் சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய் நிகழ்வது நேரிசை ஒத்தாழிசைக் கலி (யா.வி.82) முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே (யா.வி.83) தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய் நிரல்ஒன்றின் நேரிசைஒத் தாழிசைக்கலி நீர்த்திரைபோல் மரபொன்று நேரடிமுச்சீர் குறள்நடு வேமடுப்பின் அரவொன்று மல்குல் அம்போ தரங்கவொத் தாழிசையே (யா.வி.31) ஐந்துறுப்பு, நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை (Ã.சேõ.117) தரவொன் றொருமுத் தாழிசை தனிநிலை சுரிதகம் எனநால் துணைவரும் நேரிசை; தாழிசைக் கீழ்அம் போதரங்கம் சாரவும் அம்போ தரங்கமே ஆம் (தொ.வி.233) தரவு தாழிசை அம்போ, தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்துறுப் போடும்வரல் அம்போ தரங்க ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே (•.Ã.யõ.36) தரவுஒன்று அடைவில் தாழிசை மூன்றும் தனிச்சொல் சுரிதகமாம்;..... அளவே மன்சிந்து குறள் அடித் தாழிசைப் பின்பு வருமேல் ஏசில் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா (_.நõ.9) இ. இளம்: ஈண்டு எருத்து என்றது தரவு. யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சக ஒருபோகை அதன்பின் ஓதினமையால் இதற்கும் காமப்பொருளே பெறப்பட்டது. பேரா: தரவும் கொச்சகமும் அராகமும் சிற்றெண்ணும் அடக்கியல் வாரமும் என ஐந்துறுப்புடையது அம்போதரங்க ஒருபோகு. தரவெனினும் எருத் தெனினும் ஒக்கும். இனிக் கொச்சகம் என்பது ஒப்பினான் ஆகிய பெயர். என்னை? பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப. அதுபோலச் சிறியவும் பெரியவும் விராவி யடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டுக்களைக் கொச்சகம் என்றான் ஆகலின் என்பது. இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியும் கொய்சக மென்று சிதைத்தும் வழங்குப. இவை வெண்பாவாகல் பெரும்பான்மை வழிமுறை சுருங்கியும், வரையறை எண்ணுப் பெறும் எண்போலாது பாவினும் தளையினும் வேறுபட்டுப் பலவாகியும் வரும் கொச்சகம் என்பது. அராகம் என்பது அறாது கடுகிச் சேறல். பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டுந் துணைச் செய்யதாகிய பொன்னினை அராகித்த தென்பவாக லின், அதுவும் ஒப்பினாகிய பெயராயிற்று; என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுத லின். சிற்றெண் என்பது நால்வகை எண்ணினும் இறுதியெண்ணானமையின் அப்பெயர்த்தாயிற்று. அவ்வுறுப்புக்களிற் கூறிய பொருளை அடக்குமியல்பிற்று வாரமாகலின் அதனை அடக்கியல் வாரம் என்றான். நச்: தரவெனினும் எருத்தமெனினும் ஒக்கும். பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொய்சகமென்ப ஆகலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வரும் செய்யுளைக் கொச்சகம் என்றார். இது ஒப்பின் ஆகியபெயர். இக்காலத்து இது மகளிர்க்குரியதாய்க் கொய்சக மென்று வழங்கிற்று. இதுமுறையே சுருங்கிவரும் எண்ணுப்போலாது அடியும் சீரும் தளையும் வேறுபட்டு வரும் என்றுணர்க. வெண்பாவாகிற் பெரும்பான்மை அராகமாயது அறாது கடுகிச் சேறல். பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டும் துணைச் செய்யதாகிய பொன்னை அராகித்தது என்பவாகலின் இதுவும் ஒப்பினாகிய பெயர்; மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று உருண்டு வருதலின். சிற்றெண்ணாவது நால்வகை எண்ணினும் இறுதிநின்ற எண், வார முற்கூறிற்று. இவ்வுறுப்புக்களின் அளவு கூறாமையின் ஏற்றவாறறிந்து கூறப்படும். உ. ஆ.கு: எருத்து என்பது கழுத்து என்னும் பொருளது. யானை எருத்தம் என்பது யானைக்கழுத்தைக் குறித்து வருதல் பெருவழக்கு. அகவற் பாவிற்கு வரும் 'எருத்தடி நைதல்' என்பது ஈற்றயலடி குறைந்து முச்சீராக வருதல் என்னும் பொருளதாம். ஆயின் இவண் வரும் எருத்து கழுத்தைக் குறியாமல் தலை என்னும் பொருளில் முதல் உறுப்பாகிய தரவைக் குறித்து வருகின்றது. கொச்சகம் உரையாசிரியர் நாளில் கொய்சகம் என வழங்கிற்றென அறியமுடிகின்றது. இந்நாள் அது 'கொசுவம்' என வழக்கில் உள்ளது. அராகம் என்பது இராகம். அரத்தம் என்பது இரத்தமாக வழங்குவது போல் வழக்குற்றசொல். முடுகியல் ஓசையுடையதாம். ''உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்" என்பது (செ.224) எண்ணத்தக்கது. 'அடக்கியல் வாரம்' ஒரு தொடர்; அடக்கியலாகிய வாரம் என்க. அது முடிநிலை. அம்மை அ. சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அம்மை தானே அடிநிமிர் வின்றே (தொ.பொ.536) ஆ. அம்மை தானே அடிநிமிர் பின்றிச் சின்மென் மொழியால் சீர்புனைந் தியாத்தலும் (இ.வி.754) இ. இளம்: சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக்கப்பட்ட அடிநிமிர் வில்லாத செய்யுள் அம்மையாம். பேரா: (பாடம்) வனப்பியல் தானே வகுக்குங்காலைச் சின்மென் மொழியால் தாய பனுவலோ(டு) அம்மை தானே அடிநிமிர் பின்றே. இது தொகைச்சூத்திரத்துள், 'ஆறு தலையிட்ட அந்நாலைந்தும்' (தொல். செய். 1) எனக்கூறு செய்து நிறீஇப் பின்னர் எட்டுறுப்புக் கூறினான் அன்றே! இவை அவற்றோடொத்த இலக்கணத்த அன்மையான்; என்னை? அவை ஒரோ செய்யுட்கே ஓதிய உறுப்பு ஆகலானும், இவைபல செய்யுளும் திரண்டவழி இவ்வெண் வகையும் பற்றித் தொடுக்கப்படுமெனக் கூறப்பட்டது ஆகலானும் என்பது. இவற்றை வனப்பு என்று கூறப்படுமாறு என்னை? அச்சூத்திரத்துப் பெற்றிலமால் எனின், வனப்பென்பது பெரும்பான்மையும் பல உறுப்பும் திரண்ட வழிப்பெறுவதோர் அழகாதலின் அவ்வாறு கோடும். அதனாற் பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதி வகையான் ஏற்பதென்பது. அஃதேல் இவ்வெட்டும் தனிவரும் செய்யுட்கள் வந்தால் அழகு செய்யாவோ எனின், அவைபோல் இவை தனிவரும் செய்யுட்கும் ஆகும் என்றற்கு அவ்விருபத்தாறு உறுப்போடும் இவற்றை ஓரினப் படுத்து ஓதியதென்பது. சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம்மையாம். அடிநிமிரா தெனவே அம்மை என்பது முழுவதும் ஒரு செய்யுளாகல் வேண்டும்; வேண்டவே, அஃது உறுப்பன்றாகியே செல்லும்; அதனை உறுப்பெனல் வேண்டுமாதலான் அடிநிமிராதெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளாம் என்பது. சிலவாக என்பது எண்ணுச் சுருங்குதல், மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடி நிமிராதென்றது, ஐந்தடியின் ஏறாது என்றவாறு. தாய பனுவலோடு என்றது, அறம் பொருள் இன்பமென்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுப (போன்று) வேறு இடை இடை அவையன்றியும் தாய்ச் செல்வதென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும் அறம்பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணம் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் கார் நாற்பது களவழி நாற்பது முதலாயின வந்தவாறும் கண்டுகொள்க. ''பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும் இருள் தீர எண்ணிச் செயல்" என்பது இலக்கணம் கூறியதாகலிற் பனுவலோ டென்றான். ''மலர்காணின் மையாத்திநெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று" என இஃது இலக்கியமாகலால் தாய பனுவல் எனப்பட்டது. இவை தனித்து வரினும் அவ்வனப்பு எனப்படும். தாவுதல் என்பது இடையிடுதல். இவ்விருவகையும் செய்யுள் எனப்படும். அம்மை என்பது குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை என்றாயிற்று. நச்: இவற்றை வனப்பென்று பெயர் கூறிற்றுப் பலவுறுப்பும் திரண்ட வழிப் பெறுவதோர் அழகாதலின். இப்பெயர் சூத்திரத்தாற் பெறவேண்டுவார் 'வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியால்' எனப்பாடம் ஓதுப. இவ்வனப்பை ஒரோ செய்யுளுட் கொள்ளின் மாத்திரை முதலிய வற்றின் அழகு பிறவாதாம். இங்ஙனம் வகுப்பவே தனிநிலைச் செய்யுளும் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யுள் இரண்டா யிற்று. சின்மையால் மெல்லியவாய சொல்லானும் இடை யிட்டுவந்த பனுவல் இலக்கணத்தானும் அடிநிமிர் வின்றாய் வருவதுதான் அம்மை எனப்படும். அடிநிமிராதென்றது ஆறடியின் ஏறாமையை. சிலவாதல் சொல் லெண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல் சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தால் வருதல். தாயபனுவலின் என்பது அறம்பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவனபோன்றும் இடையிடையே அன்றாயும் தாவிச் செல்வது என்றவாறு. ஆசாரக்கோவையுள் 'ஆரெயின் மூன்றும்' (தற்சிறப்புப் பாயிரம்) ஆறடியாற் சிறுபான்மை வந்தது. உ. ஆ.கு: நூலுக்கு அழகெனக் கூறுவனவற்றுள் தலையிடத்தைப் பெறுவது 'சுருங்கச் சொல்லல்' என்பதும், அச்சுருங்கச் சொல்லலும் 'விளங்க வைத்த'லாக விளங்கவேண்டும் என்பதும், இவண் எண்ணின் அம்மை வனப்பின் அருமை விளங்கும். அழகு, வனப்பு என்பன வும் ஒருபொருள் என்பதும் கருதுக. திருக்குறட் சிறப்புகளுள் குறுவெண் பாட்டால் அமைந்தது தலைமையாவது என்பது எண்ணத்தக்க குறிப்பாம். அரசர்க்குரியவை அ. 1. படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய. 2. அந்த ணாளர்க் குரியவும் அரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே 3. பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழமைப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே. 4. ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே. 5. தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர் நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப. 6. இடையிரு வகையோர் அல்லது நாடிற் படைவகை பெறாஅர் என்மனார் புலவர் (தொ.பொ.616621) ஆ. மூவகை முரசமும் முத்தமிழ்ப் புலவர், ஆர்வமும் கரிபரி ஆதியின் பெருக்கும், கதிர்வாட் சேவகர் காப்பும் பசும்பொன், நவமணிக் குவியலும் நடம்பயில் அரங்கும், ஆக்கமும் செருக்கும் அறநெறி ஆதியும், மன்னர்வாழ் அரண்மனை வாய்ந்த பொருளே. ( அ.இ.பொ.71) அரசன் ஆயினும் மணிமுடி கவித்தலின் அரசு தொழில் அல்லது பிறிதுதொழில் பெறாஅன் பொய்கையார் கலாவியல் (நவநீதப்.75 மேற்.) இ. இளம்: 1. படை கருவி. படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவும் என்றதனான் ஆரமும் கழலும் எல்லாம் அரசர்க்கு உரிய என்றவாறு. 2. அவை நாலுதொழில்: ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதல். 3. இப்பொருண்மையும் அரசர்க்கும் உரித்து அந்தணர்க்கும் உரித்து என்றவாறு. 4. நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப்பெயரும் தத்தம் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையும் சார்த்தி அவையவை வருதல் பெறும். 5. தலைமைக்குணமுடையவராகக் கூறுதலும் தத்தமக்கேற்ற நிலைமைக் குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு எனவே, இறப்புவுயர்தல், இறப்ப இழிதல் ஆகாதென்றவாறாம். 6. அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக்கல வகை கூறப்பெறார் என்றவாறு. பேரா: 1. கொடிப்படையும் கொடியும் குடையும் முரசும் குதிரையும் யானையும் தேரும் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய. 'பிறவும்' என்றதனாற் கவரியும் அரியணையும் அரண் முதலாயினவும் கொள்க. 'தெரிவுகொள் செங்கோல்' அரசர் என்றதனால் செங்கோல் கொள்ளப்பட்டது. 'தார்' எனவே போர்ப்பூவும் தார்ப்பூவும் அடங்கின. 'படை' என்புழி 'நடைநவில் புரவியும் களிறும் தேரும்' அடங்காவோ எனின், அடங்கும். அவை நோக்கிக் கூறினான் அல்லன்; அவை பட்டஞ் சாத்தியவாதல் நோக்கிக் கூறப்பட்டன. அஃதேல் தேர் கூறிய தென்னை எனின், அதுவும் அவைபோல அரசர்க்கே உரியது என்றுளது என்றற்கும், அது பூண்ட குதிரையும் அவர்க்கே உரியவென்றுள என்றற்கும் கூறினான் என்பது. இக் கருத்தினாற் போலும் 'நடைநவில் புரவி' எனச் சிறப்பித்து அதனை முற்கூறிய தென்பது. எல்லாவற்றினுஞ் சிறந்த தாகலான் முடி பிற்கூறப்பட்டது; தெரிவு கொள்செங்கோல் அரசர் என்பதனான் அரசரெல்லாம் தம் நாட்டு நன்றும் தீதும் ஆராய்ந்து அதற்குத் தக்க தண்டஞ் செய்தற்கு உரிமையும் அதுவெனக் கொள்க. 2. அந்தணாளர்க்கு உரியவெனமேல் (625) ஓதப்பட்டவற்றுள் முந்நூலும் மணையும் போல்வன அரச சாதிக்கு உரியவாகியும் வரும். பொருளுமாருள என்றதனான், அந்தணாளர்க்குரியனவற்றுள் வேள்விக் கலப்பை ஒன்றி வருதல் பெரும்பான்மையென உணர்க. ஈண்டு அவற்றை விதந்தோதினான் ஒழிந்த புலனெறி வழக்கினுட் பயிலாமை யின் என்பது. 3. பரிசில் பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வன. பாடாண்திணைத்துறைக்கிழமைப்பெயர் பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள்பற்றியும் கொடைத்தொழில் பற்றியும் பெறும் பெயர்; அவை காளை இளையோன் என்பனபோல்வனவும், நெடுந் தகை செம்மல் என்பன முதலாயினவும் இவைபோல்வன பிறவும் புனைந்துரைவகையாற் சொல்லின் அல்லது சாதி வகையால் கூறுதல் அந்தணர்க்கு உரியது அன்று. பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வன கூறியும் கைக்கிளைப் பொருள் கூறியும் கொடைத் தொழில் கூறியும் அவற்றுக் கேற்ப எடுத்தோதிய பெயர் கூறியும் அந்தணரைத் தன்மை வகையால் செய்யுள் செய்யப்பெறா என்பது கருத்து. கொடுத்தற்றொழில் வேள்விக் காலத்ததென வரையறுத்தலிற் பொருந்தக் கூறுதல் அவர்க்கு உரித்தன்று என்றார் என்பது. பாடாண் திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னை எனின், அவை ஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரியன அல்ல என்றற்கு. எனவே, அரசர்க்காயின் இவையெல்லாம் உரிய என்பவாயிற்று. 4. நான்கு சாதியாரும் பிறந்த ஊரும் அவர்தம் பெயரும் அவர் சாதிக்கு உரித்து என்றற்கு ஏற்ற கருவியும் யாரும் சார்த்தப்பட்டு அவை அவை பெறுப. இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க்கும் ஒப்பச் செல்லும் என்பது கருத்து. எற்றுக்கு? இவை சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின். ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச் சேரி முடமோசி, பெருங் குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியன. உறையூர்ச் சோழன், மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியன. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணன், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க் குரியன. அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான்மாறன் என்பன வேளாளர்க் குரியன. இனி 'உடைத்தொழிற்கருவி' என்பன, அந்தணாளர்க்குச் சுருவையும் சமிதை குறைக்குங் கருவியும் முதலாயின; அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலும் சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. அவை யெல்லாம் அவரவர் செய்யுட்குரிய என்பது. 5. அந்நான்கு சாதியார் தலைமைக்குணம்படச் சொல்லும் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்தவும் படும். அந்தணர் தலைமைக்குணம் கூறுங்கால் பிரமனோடு கூறியும், அரசரை மாயனோடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனோடு கூறியும் வேளாண் மாந்தரை வருணனோடு கூறியும் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். 6. அரசரும் வணிகரும் அல்லது படைப்பகுதி பெறார். படைப்பகுதி என்பன; வேலும் வாளும் வில்லும் முதலாயின. 'நாடின்' என்பதனால் ஒருசார் அந்தணரும் படைக்குரியார் என்பது கொள்க. அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும் முதலா யினா ரெனக்கொள்க. வேளாண்மாந்தர்க்கும் இஃதொக்கும். இவை விகாரம் எனவும் எடுத்தோதிய வருணங்கட்கே இஃதியல் பெனவும் கொள்க. உ. ஆ.கு: அரசர்க்குரிய படை கொடி முதலியவையும் பரிசில் பாடாண் முதலியவும் பிற்காலச் சிற்றிலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தன வாம். சின்னப்பூ, விருத்தம், அரசன் விருத்தம், தசாங்கத் தயல், தசாங்கப்பத்து முதலிய சிற்றிலக்கிய வகைகளை எண்ணுக. எனினும், நாற்பாற்பகுப்பும், அவர்க்குரிய செய்திகளும் 'மாறுதல்' இல்லாதவை யல்ல. 'மரபு' என்பது மாற்றருஞ் சிறப்பினது; 'மயங்கா மரபினது' இவற்றை நோக்க இப்பகுதி பிற்காலச் சேர்க்கை என அறியலாம். 'அந்தணர்க்குரியவை' என்பதன் 'ஆ.கு.' காண்க. அராகம்: (பரிபாடல் உறுப்பு) அ. 1. கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமம் கண்ணிய நிலைமைத் தாகும் (தொ.பொ.426) 2. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும் (தொ.பொ.427 கலிப்பா உறுப்பு) 3. எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (தொ.பொ.455) ஆ. வழிபடு தெய்வம் வழுத்தி வழிமொழியின் தலையிடை கடையென அம்போ தரங்கம் நிலையினவ் வளவின் நினையுங் காலை அராகம் பேரெண் இடையெண் சிற்றெண் விராக என்ப தாழிசைப் பின்னர் கூறிய தரவே ஆறடித் தாகும். தாழிசைப் பின்னர் அராகஅடி இரண்டே அராகத் திறுதி பேரெண் இரண்டு விராக என்ப இரண்டிரண் டடியான் பேரெண் வழியால் இடையெண் ணாலடி நேரவேண்டும் நெறியறி புலவர் அம்மூ அளவிற்கும் அராகஅடி இரண்டே ஈறும் முதலும் எல்லா அளவிற்கும் கூறிய முறையிற் கொள்ள வேண்டும் (¯õ.Â.83.மேØ.) குறில்வயின் நிரையசை கூட்டிய வாரா அடியவட் பெறினே வண்ணக மாகும் (அவிநயம்) வண்ணகத் தியற்கை திண்ணிதிற் கிளப்பின் தரவொடு தாழிசை தலையளவு எய்தித் தாழிசைப் பின்னர்த் தனிநிலை எய்திப் பேரெண் இட்ட எண்ணுடைத் தாகிச் சிற்றெண் வழியா அராகஅடி நான்கு கீழள வாகப் பேரள வெட்டாச் சீர்வகை நான்கு முதல்பதின் மூன்றா நேரப் பட்ட இடைநடு எனைத்தும் சீர்வகை முறைமையின் அராகம் பெற்று அம்போ தரங்கத் தராகவடி இன்றி மடக்கடி மேலே முச்சீர் எய்திக் குறிலிணை பயின்ற அசைமிசை முடுகி அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும் உடைப்பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் ஆகும் (மயேச்சுரம்) உருட்டாம் அராகத் தொடுவரு வனவே. (மு.வீ.ய.27) இ. இளம்: 1. அராகம் என்பது ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத் தொடுப்பது. பெருமைக்கெல்லை ஆறடி. என்னை? அராகத் தாமே நான்காய் ஓரோவொன்று ஏறலும் உடைய மூவிரண் டடியே ஈரடி யாகும் இழிபிற் கெல்லை. என அகத்தியனார் ஓதுதலின். 2. முடுகியலாவது ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது. பேரா: 1. குறிலிணை பயின்ற அடி அராகம் எனப்படும். அராகம் எழுவாய் ஆகாமையின் அதனை இடைவைத்தான். முடுகியலடி என்பது முடுகியலோடு விராய்த் தொடர்ந்தொன்றாகிய வெண்பாவடி. அராகம் என்பது தாமே வேறு சில அடியாகி வருவன. இவையன்றிக் குறிலிணை பயில்வன முடுகியலெனவும் குறிலிணை விரவி வருவன அராகம் எனவும் சொல்லுவாரும் உளர். முடுகு வண்ணம், அடியிறந்தோடி அதனோரற்றே (தொ.செ. 234) என்பவாகலின் மேலதே உரை. 2. அராகம் என்பது அறாது கடுகிச் சேறல். பிறிதொன்று பெய்து ஆற்ற வேண்டுந்துணைச் செய்யதாகிய பொன்னினை அராகித்த தென்பவாக லின் அதுவும் ஒப்பினாகிய பெயராயிற்று. என்னை? மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று வந்து நடைபெறுதலின். நச்: 1. அராகம் இடையின் அல்லது வாரா. 2. அராகமாவது, தாமே வேறுசில அடியாய் வரும். உரிய எனவே கலிக்கு இத்துணை உரியவல்ல என்றுணர்க. எனவே அராக உறுப்புத் தேவபானிக்கு அல்லது வாராவென்று உணர்க. 3. வெண்பாவாகிற் பெரும்பான்மை அராகமாயது அறாது கடுகிச் சேறல் பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டுந் துணைச் செய்யதாகிய பொன்னை அராகித்தது என்பவாகலின் இதுவும் ஒப்பினாகிய பெயர்; மாத்திரை நீண்டும் துணிந்தும் வராது குற்றெழுத்துப் பயின்று உருண்டு வருதலின். உ. ஆ.கு: குற்றெழுத்துப் பயிறல் அராகம்; குற்றெழுத்துப் பயிறலொடு ஒற்றெழுத்து வாராமையும் கருதப்படும். ஒருகால்வரினும் இடையின மும் மெல்லினமுமன்றி வல்லினவொற்று வாராமை கொள்ளப்படும். வல் லொற்று வரின் முடுகிய லோட்டம் தடையுறல் அறிக. அருண்முந்துறுத்த அன்புபொதி கிளவி அ. அருண்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே (தொ.பொ.159) இ. இளம்: இது, தலைமகட்குரியதோர் இயல்பு உணர்த்திற்று. பொருள்படமொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யேகூறல் நச்: 'கிழவோட்கும் உரித்தே' (படம்) இது, தலைவன் பணிந்து மொழிந்தாங்குத் தலைவியும் பணிந்து கூறும் என்கின்றது. பிறர் அவலங்கண்டு அவலிக்கும் அருள்முன்தோற்றுவித்த அவ்வருள் பிறத்தற்கு ஏதுவாகி எஞ்ஞான்றும் அகத்து நிகழும் அன்பினைக் கரந்து சொல்லும் கிளவி, பணிந்த மொழி தோற்றாது வேறோர் பொருள் பயப்பக் கூறுதல் தலைவிக்கும் உரித்து. வேறு பொருளாவது தலைவன் கூறியாங்குத் தானும் பணிந்து கூறுவாள், பணியாதே தன் நெஞ்சு தன்னையும் கைகடந்து அவன் ஏவலைச் செய்தது என்றாற் போலக் கூறுதலுமாம். இது தன்வயிற் கரத்தலும் அவன்வயின் வேட்டலும் (தொ.பொ.11) எனப் பொருளியலுள் வழுவமைத்தற்கு இலக்கணம். ஈ. க.வெ: அருட்பண்பினைத் தோற்றுவிக்கும் அன்பினையுள்ளடக்கிய சொற்களைப் பணிதற் பொருள்தோன்றச் சொல்லுதல் தலைவிக்கும் உரியது. அன்பின் இலக்கணம் கூறும் முறையில் அமைத்தது 'அருள்முந் துறுத்த அன்பு' என்னும் தொல்காப்பியத் தொடராகும். இதனை அடியொற்றி அருளின் இலக்கணம் கூறுவதாக அமைந்தது 'அருளென்னும் அன்பீன் குழவி' எனவரும் திருக்குறள் தொட ராகும். அரும்பகை தாங்கும் ஆற்றல் அ. அரும்பகை தாங்கும் ஆற்றலானும் (தொ.பொ.75) (வாகைத் திணையின் துறைகளுள் ஒன்று) இ. இளம்: பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும், களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் போரெதிர்ந் தெம்முளும் உளனொரு பொருநன் வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே (புறம் 87) எனவும், என்னைமுன் நில்லன்மின் தெள்விர் பலரென்னை முன்னின்று கண்ணின் றவர் (திருக்.771) நச்: வெலற்கரும் பகைவர் மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக் கொள்ளும் அமைதியானும். எருது காலுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டுகடை தப்பலின் ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகடன் இரக்கும் நெடுந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே (புறம் 327) எனவரும், 'களம்புகல் ஓம்புமின்' என்னும் புறப்பாட்டும் (87) அது. உ. ஆ.கு: தாக்குதல், எதிரிடுவார் செயல்; தாங்குதல், தாக்குவார் தாக்குதலைத் தாங்குவார் செயல். பகையின் கடுமை கருதியது 'அரும்' என்னும் அடை. தாங்குவதுடன் வெற்றிபெறுதற்கு ஊக்கிநிற்க வாய்த்தமை யின் அத்திறம் 'ஆற்றல்' எனப்பட்டதாம். இத்தகு ஆற்றலே 'ஆற்றுவார் ஆற்றல்' எனப்படுவதாம். (திருக்.891) அருளொடு புணர்ந்த அகற்சி அ. அருளொடு புணர்ந்த அகற்சி யானும் ஆ. அருளொடு நீங்கல் (தொ.பொ.75) ஒலிகடல் வையகத்து நலிவுகண்டு நயப்பவிந் தன்று (பு.வெ.188) இ. இளம்: அருளொடு பொருந்தின துறவும் அஃதாவது அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பவற்றைப் பொருந்துதலாம். அவற்றுள், அருளுடைமை ஒழிந்த எல்லாம் விடுதலான் 'அகற்சி' என்றார். அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை. கொல்லாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை. பொய்யாமையாவது, தீமைபயக்கும் சொற்களைக் களவினால் கொள்ளா ராதல் புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல். கள்ளுண்ணாமையாவது, கள்ளுண்டலைத் தவிர்த்தல் துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல். நச்: அருளுடைமையோடு பொருந்திய துறவறத்தானும் அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரையும் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தந் தனதாக எண்ணி வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக் கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று. ஈ. சா.த: முழங்கும் கடலுலகத்துத் துயரத்தைப் பார்த்துப் பற்றை ஒழிந்தது (பு. வெ.188) நாவலர்: யார்மாட்டும் விரிந்து பெருகும் அருளொடு கூடிய துறவும் குறிப்பு : கடனாற்றும் முயற்சிக்கு அஞ்சித் தனக்கு ஒழிவுதேடும் போலித் துறவை விலக்கி அருள் சுரந்து எல்லார் மாட்டும் பரந்து பயன்தரும் அகன்ற அன்பாற் பிறர்க்கென முயலும் மெய்த்துறவின் வீறே ஈண்டு கூறக் கருதலின் வாளா அகற்சி என்னாது 'அருளொடு புணர்ந்த' என்று அடையொடு தொடர்ந்து சுட்டப்பட்டது. அல்ல குறி அ. இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்தும் (தொ.பொ.107) வருந்தொழிற் கருமை வாயில் கூறினும் குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் (தொ.பொ.111) அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே (தொ.பொ.131) ஆ. அல்ல குறிப் படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர வறியும் குறிப்பின் ஆன (இ.க.17) அல்லகுறி வருந்தொழிற் கருமை என்றாங் கெல்லிக்குறி இடையீ டிருவகைத் தாகும் (ந.அ.159 இ.வி.518) இறைவிக் கிகுளை இறைவர வுணர்த்துழித் தான்குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தலும் பாங்கி தலைவன் தீங்கெடுத் தியம்பலும் புலந்தவன் போதலும் புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கலும் தன்துணைக் குரைத்தலும் தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும் இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றலும் இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றலும் அவள்குறி மருண்டமை அவளவற் கியம்பலும் அவன்மொழிக் கொடுமைசென் றவ கியம்பலும் என்பிழைப் பன்றென் றிறைவி நோதலுமென ஒன்றுபன் னொன்றும் அல்லகுறிக் குரிய (ந.அ.160) 'அல்குறி சிறைப்புற மாகச் செப்பல்' (த.நெ.வி.18 இ.வி.519) எல்லுக்குறி இடையீ டிருவகைத் தவைதாம் அல்லகுறி வருந்தொழிற் கருமையென் றாகும் (மா.அ.51) மான்விழிக் கிகுளை மன்வர வுணர்த்தலும் தான்குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தலும் சேடி இறைவன் தீங்கு கிளத்தலும் ஊடி இறைவன் ஒழிதலும் ஒண்ணுதல் வறுங்களந் தன்னை வந்துகண் டிரங்கலும் நறுந்துணர் அலர்க்குறி நாட்டமுற் றினையலும் உறுந்துயர் இகுளைக் குரைத்தலும் உறுந்துயர் இகுளை தணித்தலும் இறைவன்மேல் இகுளை குறிபிழைப் பேற்றலும் கோதைமேல் தலைவன் குறிபிழைப் பேற்றலும் அவள்குறி மருண்டமை அவளவற் கியம்பலும் ஆயிடைப் பாங்கி கொற்றவன் கொடுமை குறித்தவட் குணர்த்தலும் என்பிழைப் பன்றென் றிறைவிநோ தலுமென ஆறிரண் டுடனொன் றல்லகுறி விரியே (மா.அக.52) இ. இளம்: அல்ல குறிப்படுதலும் தலைமகட்கு உரித்து; தலைவன் செய்த குறி மயங்கிய பொருத்தத் தோடுவரின் என்றவாறு. மயங்கிய அமைவாவது, அவன் செய்யும் குறியோடமைவுடையன. (தொ.பொ.131) நச்: இது தோழி அல்ல குறிப்படுமாறு கூறுகின்றது. இது இருவகைக் குறி பிழைப்பாகிய விடத்தும் என்புழித் தலைவி அல்ல குறிப்படுதல் கூறிற்று. தலைவன் தன் வரவு அறிவிக்கும் கருவிகள், அவன் செயற்கையான் அன்றி இயற்கைவகையானே நிகழ்ந்து தோழிமயங்கிய அமைதியோடே வருமாயின் குறியிடத்துக் கூட்டுங்கால் அவ்வல்லவாகிய குறியிலே மயங்குதலும் அத்தோழியிடத்து உரித்து. படுதல் எதிர்ப்படாமையை உணர்த்திற்று. ஆண்டுத் தன்மேல் தவறேற்றாது தலைவன் பொழுதறிந்து வாராமையின் மயங்கிற்று என்று அமைவு தோன்றலின் அமைவென்றார். (தொ.பொ.131) ஈ. இ.க.: தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து ஒருநாள் தலைமகள் செல்லாமே அவனாற் செய்யப்படுங் குறிப்புக்கள் தாமே வெளிப்பட் டன. அவை புன்னைக்காய் நீரில் இடுதலும், புள் எழுப்புதலும் என இவை. அவை வேறாய் நிகழுமாறு; புன்னைக்காய் மூக்கு ஊழ்த்தும் விழும், வளி எறியவும் விழும், புள் துளக்கவும் விழும். புள் எழும்புமிடத்து வெருவியும் எழும், வேற்றுப்புள் வரவும் எழும். இவைகண்டு இவனின் ஆயின எனக்கருதிக் கொண்டுபோந்து அவ்விடம் புகுந்து அவனின் ஆகாமை உணர்ந்து போந்து மனையகம் புகுந்தபின்னை, அவன் வந்து அக்குறி செய்யும்; செய்தக்கால் இரண்டாவது கொண்டு போகல் ஆகாதன்றே; என்னை, சிறிது முன்னாகப் போனாரன்றே, அக்கை புடை பெயராமைப்போகின்றார்' என்று உற்றார் பின் நின்று ஆராய்தலான் என்பது. அகத்தினின்று, 'நின்னின் ஆகாதன கண்டுவந்து நின்று போந் தோம்' என்பதனை அவனுக்கு உரைக்கும், திங்கண்மேலிட் டானும் அன்னத்தின் மேலிட்டானும் என்பது. |.A.: அல்லகுறி என்பது குறியல்ல என்றவாறு. அதனை முன்றில் என்பது போலக் கொள்க. அல்ல குறியாவது தலைவனான் நிகழ்த்தப்படுவனவாகிய புள்ளெழுப்பல் முதலியன பிறிதொன்றினான் நிகழ்தல். (159) அலர் அ. 1. அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் (தொ.பொ.137) 2. களவும் கற்பும் அலர்வரை வின்றே (தொ.பொ.160) 3. அலரில் தோன்றும் காமத்து மிகுதி (தொ.பொ.161) 4. களவு அலர் ஆயினும் (தொ.பொ.113) 5. அம்பலும் அலரும் களவுவெளிப்படுக்கும் (தொ.பொ.221) 6. ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் (தொ.பொ.260) ஆ. அம்பலும் அலரும் களவு (இ.க.22) அலர்பெரிது என்றல்... (த.நெ.வி.20) அலர்பார்த் துற்ற அச்சம் (மா.அக.56) அலர் அறிவுறுத்தல் (மு.வீ.848) அலர் அறிவுறுத்தல் (திருக்.அதி.115) இ. இளம்: 1. அலராவது சொல்லுதல். நச்: 2. பலர் அறியச் சொல் நிகழ்த்துதல். வரைவு நீட்டிப்போனும் தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனும் தலைவனே என்றுணர்க. 3. களவு அலராகிய வழி இடையீட்டிற்கு அஞ்சிய அச்சத்தான் இருவர்க் கும் காமம் சிறத்தலும் கற்பினுட் பரத்தமையான் அலர் தோன்றிய வழிக் காமஞ் சிறத்தலும் அவள் வருந்துமென்று தலைவற்குக் காமஞ் சிறத்தலும் தலைவன் பிரிவின்கண் தலைவிக்குக் காமஞ் சிறத்தலும் பிறவுமாம். ஈ. இ.க: அலர் என்பது இன்னானோடு இன்னானிடை இதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அலர் என்பது (அப்) பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமை. அம்பலும் அலரும் எவ்விடத்து நிகழுமோஎனின், காப்புக் கைம்மிக்க இடத்து நிகழும். (இ.க.22) பரிமே: களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்ற வாற்றைத் தோழிக் கறிவுறுத்தலும் வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்தனக் கறிவுறுத்த லும் ஆம். (திருக். அலரறிவுறுத்தல்) அவிப்பலி அ. ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி யானும் (தொ.பொ.75) ஆ. ''அவிப்பலி என்றா" வெள்வாள் அமருள் செஞ்சோ றல்லது உள்ளா மைந்தர் உயிர்ப்பலி கொடுத்தன்று (பு.வெ.வா.30) ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால் வீரியர்எய் தற்பால வீடு (பு.வெ.வா.30) அடல்கெழு மறவர் அவிப்பலி கொடுத்தலும் (இ.வி.613) இ. இளம்: (வாகைத்துறைகளுள் ஒன்று) பொருந்தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்புசொன்ன வஞ்சினமரபின் ஒன்றோடு பொருந்தித் தொன்று தொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலி. நச்: பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்கு மதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வல் எனத் தான் கூறிய பகுதி இரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகி வருகின்ற உயிரை அங்கியங் கடவுட்குக் கொடுத்த அவிப்பலி. நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையால் வென்றமையால் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல். ஈ. (இது மறத்துறை வாகையுள் ஒன்று) நாவலர்: பகைவரும் நாணுமாறு தம் தலைவரைக் குறித்து முன்சொன்ன வஞ்சின வுரையொடு வாய்ப்ப அமைத்துப் பழந்தொடர்புடைய (படையா) உயிரைக் களப்பலியாக வழங்கும் மறவேள்வியும். உ. ஆ.கு: அவித்து ஆக்கப்பட்ட உண்டிவகைகளைப் படைய லிட்டுத் தெய்வ வழிபாடு செய்வது அவிப்பலி; பூக்களைப் படையலிட்டு வழிபடுவது பூப்பலி; உயிரைப் பலியிடுவது உயிர்ப்பலி. களப்போர் வெற்றி கருதிய உயிர்க்கொடை களப்பலி. இவற்றின் வேறானது இவ்வவிப் பலி என்க. ஆவிப்பலி அவிப்பலி யாயிற்று. அவையடக்கியல் அ. 1. வாயுறை வாழ்த்தே அவையடக் கியலே செவியறி வுறூஉஎன அவையும் அன்ன (தொ.பொ.416) 2. அவையடக்கியலே அரில்தபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே (தொ.பொ.418) ஆ. குறையவை என்பது கூறுங் காலை நிறைவில் சொல்லே நினைந்தவை யெடுப்ப அறையும் என்ப ஆணையின் இகந்தே (யா.வி.96 மேற்.) குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையிற் காதலின் பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாஅ இன்மையென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை. (ஆசிரியமாலை; ) (தொ.பொருள். 76 மேற்.) (புறத்திரட்டு அவையறிதல்.) குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை நடுச்சொல்லு நல்லணி ஆக்கம் கெடுக்கும் அழுக்கா றவாவின்மை அவ்விரண்டோ டின்ன இழுக்கா அவையின்கண் எட்டு (பு.வெ.மாலை 8:19) அவைபுகு நெறியே ஆயுங் காலை வாயிலின் நிரைத்துக் கூறப் புகுங்காலை இருவரும் புகாஅர் ஒருவர் முன்புகிற் புக்கவன் தொலையும் உய்த்தெனும் உண்மையின் இருவருங் கூடி ஒருங்குடன் பட்ட தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப. அவிநயனார் கலாவியல்; (நவநீதப். 96) அவையெனப் படுபவை அரில்தபத் தெரியின் நல்லவை தீயவை குறைநிறை யவையெனச் சொல்லுப என்ப தொல்லை யோரே. அவற்றுள், நல்லவை என்பது நாடுங் காலை எத்துறை யானும் இருவரும் இயம்பும் அத்துறை வல்லோர் அறனொடு புணர்ந்தோர் மெய்ப்பொருள் கண்டோர் மிக்கவை ஓர்ப்போர் கற்றவர் கல்விக் கடாவிடை அறிவோர் செற்றமும் சினமும் சேரா மனத்தோர் முனிவொன் றில்லோர் மூர்க்கர் அல்லோர் இனிய முகத்தர் இருந்துரை கேட்போர் வேந்தர் ஒருவர்கண் வாரம் படினும் தாந்தாம் ஒருவர்கட் பாங்கு படாதோர் அன்னோர் முன்னர்க் கூறிய பொழுதிற் றொலையும் ஆயினும் தொலைவெனப் படாஅது வெல்லு மாயினும் மிகச்சிறப் புடைத்தே. தீயவை என்பது தெரியுங் காலை சுலாவும் சுண்டும் தாமேற் கொண்டு நிலவாப் பொருள்களைக் குலவி எடுத்தாங் குரைத்த ஒருவற்காய்ச் செருவென மொழிந்து சொல்லிய துணரா தல்லவை யுணர்ந்து வாரம் படுவது தீயவை யாகும். நிறையவை என்பது நினையுங் காலை எல்லாப் பொருளும் தம்மகத் தடக்கி எதிர்வரு மொழிகளை எடுத்துரைப் பதுவே. (யா.வி.96 மேற்.) இ. இளம்: 1. ஒருசார் பொருட்குரிய மரபு உணர்த்துதல். வாயுறை வாழ்த்தும் அவை யடக்கியலும் செவியறிவுறுத்தற்பொருளும் கலியினும் வஞ்சியினும் வரப்பெறா என்றவாறு. எனவே, முன்னை (புறநிலை வாழ்த்து) ஒப்ப ஏனை இரண்டிலும் (வெண்பாவினும் ஆசிரியப் பாவினும் இவை யிரண்டும் புணர்ந்த மருட்பாவினும்) வரப்பெறும் என்றவாறு. 2. அவையடக்கியல் ஆமாறு உணர்த்துதல். அவையடக்கியலைக் குற்றமற ஆராயின், அறியாதன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல் வேண்டும் என எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்றவாறு. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. பேரா: 1. இதுவும் பாக்களை மூன்றாக வரையறுக்கின்றது. வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉம் என மூன்றும் மேலைப்புறநிலை வாழ்த்துப்போல் வாழ்த்துப் பகுதியவாக லும் கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாமையும் உடைய என மாட்டெறிந்தவாறு. அவையடக்கியல் அவையை வாழ்த்துதல்; அவையடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை; அடக்கியல் என்பது வினைத் தொகை; தானடங்குதலாயின் அடங்கியல் எனல் வேண்டும். அஃதாவது அவையத்தார் அடங்குமாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல். 2. இது முறையானே அவையடக்கியல் உணர்த்துகின்றது. வல்லாதன சொல்லினும் அவற்றை ஆராய்ந்து கொண்மின் என அவையத்தார் எல்லார்க்கும் வழிபடு கிளவி சொல்லுதல் அவையடக்கு. வல்லுதல் என்பது ஒன்று வல்லன் ஆதல். ஒருவன் வல்லனவற்றை 'வல்ல' வென்பவாகலான், வல்லாதனவற்றை 'வல்லா' என்றான் என்பது. அதற்குச் செய்யுள்: திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போல் உரைத்த உரைபோகக் கேட்கும் உரைத்த பயின்றவா செய்வார் சிலரே; தம் நெஞ்சத் தியன்றவா செய்வார் பலர். இது பூதத்தார் அவையடக்கு. 'அரில்தபத் தெரியின்' என்றதனானே யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைய கொச்சக ஒருபோகினும் அவையடக்கியல் சிறுபான்மை தொடர் நிலைக்கண் வரும் எனக்கொள்க. நச்: 1. இதுவும் பாக்களைப் பொருண்மேல் வரையறுக்கின்றது. வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறூஉவும் என்ற மூன்றும் மேலைப்புற நிலைவாழ்த்துப் போல வாழ்த்துப் பகுதியவாகலும் கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாமையுமுடைய. அவையடக்கியல் என்பது அவையடக்கிய இயலென விரியும்; அஃது அவர் அடங்குமாற்றால் தன்னை இழித்துக்கூறி அவரைப் புகழ்தல். அவைக்கண் தான் அடங்குதலாயின் அவையடங்கிய லென்பது பாடமாதல் வேண்டும். வரையறை இன்மையின் அதன்பின் (வாயுறை வாழ்த்தின்பின்) அவை யடக்கியல் கூறி(னார்). 2. இது முறையே அவையடக்கியல் கூறுகின்றது. அவை அடக்கிய இயலைக் குற்றமற ஆராயின் வல்லாதவற்றைக் கூறினும் அவற்றை ஆராய்ந்து கொள்க, என்று எல்லார்க்கும் வழிபடு கிளவி கூறியதாம். வல்லுதல் என்பது ஒன்று வல்லானாதல்; அஃது ஒருவன் வல்லன வற்றை 'வல்ல' என்பவாகலின் அதன் எதிர்மறை 'வல்லா' என்றாயிற்று. ''திரைத்த.... பலர்" இது பூதத்தார் அவையடக்கு. அரில்தப என்றதனால் சிறுபான்மை யாப்பினும் பொருளினும் வேறு பட்ட கொச்சகத்தாற் கூறும் தொடர்நிலைச் செய்யுட்கும் அவையடக் கியல் கொள்க. அது. ''கற்பா லுமிழ்ந்த.... புலமை மிக்கார்" (சிந்தாமணி பாயிரம்) என வரும். உ. ஆ.கு: பூதத்தார் அவையடக்கு எனப் பேராசிரியராலும் நச்சினார்க் கினியராலும் குறிக்கப்பட்ட 'திரைத்தவிரிக்கில்' என்னும் வெண்பா, பொய்கையார் பாடிய இன்னிலையில் அறத்துப்பாலின் ஐந்தாம் பாடலாக உள்ளது. அவையை மதித்தொழுகும் ஒழுக்கத்தாலும் உரையாலும் அவை யோரை வயப்படுத்திக் கோடல் அவையடக்கியலாம். அவையின் பெருநிலையை யும் தம் தகவின்மையையும் கூறுமாப் போலக் கூறுவ தோர் மரபியல், அவையடக்கமாகப் பிற்கால நூல்களில் பெருகி வருதல் காணக்கூடியவாம். அவையல் மொழி அ. 1. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (தொ.சொ.436) 2. மங்கல மொழியும் அவையல்மொழியும் மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப (தொ.பொ.240) ஆ. இலக்கண முடையது இலக்கணப் போலி மரூஉ என்றாகும் மூவகை இயல்பும், இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் (நன்.267) இ. இளம்: 1. (மரபு வழுக்காத்தல்) நன்மக்களுட் கூறப்படாத சொல்லைக் கிடந்தவாறே சொல்லற்க; பிறிது வாய்பாட்டான் மறைத்துச் சொல்லுக. (வறு) 'கால்மேல் நீர்பெய்தும்', 'வாய் பூசி வருதும்' எனவரும். நச்: நன்மக்களிடைக் கூறப்படுவது அல்லாத சொல்லினை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டால் கூறுக. ஆன்முன்வரும் ஈகார பகரம், கண்கழீஇவருதும், கருமுக மந்தி செம்பின் ஏற்றை, புலிநின் றிறந்த நீரல் ஈரத்து எனவரும். ஈகார பகரம் என்றது ஓர்உயிர்மெய் எழுத்தாகக் கூறின் அவையல் கிளவி யாம் என்று உயிரும் மெய்யுமாகப் பிரித்து அவ்வுயிர்மெய் எழுத்தையே கூறியது. ஒழிந்தன, அவ்வாறன்றி அவையல்கிளவிப் பொருளைப் பிற சொல்லான் உணர்த்திற்றேனும் அப்பொருளையே உணர்த்தி நிற்றலின், அதனைப் பிறிதோ ராற்றான் மறைத்தனவேயாம். தகுதியாவது, செத்தான் எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டன. தகுதி நோக்கி 'துஞ்சினான்' எனச் சிறுபான்மை வழங்கப்பட்டு நிற்கும். அவையல் கிளவியாவது, இழிந்தோர்கூறும் இழிசொற்களை நன்மக்க ளிடை மறைத்துக் கூறப்படும். இஃது இரண்டற்கும் வேற்றுமை. இங்ஙனம் மறைத்துக் கூறாக்கால் வழுவாதல் கருதி வழுவமைத்தார். தெய்: அவைக்களத்து வழக்கமல்லாத சொல்லைமறைத்துப் பிறவாய் பாட்டான் மொழிக என்றவாறு. மறைத்துச் சொல்லுதல் இருவகைப்படும்; மங்கல மரபினாற் கூறுதலும் இடக்கரடக்கிக் கூறுதலுமென. மங்கலமரபினாற் கூறுவது; செத்தாரைத் துஞ்சினார் என்றும், ஓலையைத் திருமுகம் என்றும் கூறுதல். இவை அவைக்களத்துப் பட்டாங்குக் கூறிற் குற்றம் பயக்குமாதலின்; அவ்வாறு கூறினார் என்க. இடக்க ரடக்கிக் கூறுதல் கண்கழீஇவருதும், கால்மேல் நீர் பெய்தும் எனப் பிறவாய்பாட்டான் வரும் பொருண்மையை மறைத்துச் சொல்லுதல். இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலிற் குறிப்பெச்சம் ஆயின. சேனா: அவைக்கண் உரைக்கப்படாத சொல்லை அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக என்றவாறு. அவைக்கண் வழங்கப்படும் சொல்லை அவை என்றார். (எடு.) ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் எனவும், கண்கழீஇ வருதும், கால்மேல் நீர்பெய்து வருதும் எனவும், கருமுகமந்தி, செம்பின் ஏற்றை; புலிநின்றிறந்த நீரல் ஈரத்து எனவும் இடக்கர் வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் கூறியவாறு. ஈகார பகரம் என்பதுபோலக் கண்கழுவுதல் முதலாயின அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றாற் கிளந்தன அல்ல எனினும் அவையல் கிளவிப் பொருண்மையை உணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப் பிறிதோராற்றாற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும். இவை, தகுதியும் வழக்கும் (சொல்.17) என்புழித் தகுதியாய் அடங்கு மெனின், செத்தாரைத் துஞ்சினார் என்றல் முதலாயின அன்றே தகுதி யாவன. ஆண்டுச் செத்தார் என்பது இலக்கணமாகலின் அதனானும் வழங்கப்படும். தகவு நோக்கிச் சொல்லுங்கால் துஞ்சினார் என்றும் சொல்லப்படும். ஈண்டை அவையல் கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்பாட்டானே கிளக்கப்படும்; அதனால் ஆண்டு அடங்கா என்பது. இது வழுவமைதியன்மையாற் கிளவி யாக்கத்துக் கூறார் ஆயினார். இளம்: 2. (உள்ளுறைப்பாற்படுவதோர் சொல் உணர்த்துதல்) அவையல் மொழியாவது இடக்கரடக்கிக் கூறுதல். அது கண்கழீஇ வருதும் என்றல். ''இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலி.89) என்றது தீயொழுக்கம் ஒழுகினாய் என இடக்கரடக்கி அவையல் மொழியால் ஒழுக்கக் குறைபாடு கூறியவாறு. நச்: (எய்தாதது எய்துவித்தது) (பாடம்: 'வைஇய மொழியும்') கூறியல் மருங்கின் தலைவன் தம்மை வஞ்சித்தானாகத் தலைவியும் தோழியும் கூறலும்; வைஇய மொழி தீங்கை வைத்த மொழியுமாம். ''வையினர் நலனுண்டார்வாராமை நினைத்தலின்" (கலி.134) என்பது வஞ்சித்தமை கூறிற்று. ''இதுவுமோர், ஊராண்மைக்கு ஒத்த படிறுடைத்து" என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழீஇ அமைந்தது. ஈ. க.வெ.: சொல்லதிகாரத்தில் தகுதி வழக்கின்பாற் பகுத்துரைக்கப்படும் மங்கல மொழி இடக்கரடக்கல் என்பன தனிமொழிகள் எனவும், இங்குக் கூறப் படுவன தொடர்மொழிகளாகிய கூற்றுவகைகள் எனவும் பகுத்துணர்தல் வேண்டும். உ. ஆ.கு: சான்றோர் அவைக்கண் கூறுதற்கு உரியதல்லாத மொழி அவையல் மொழியாம். இடக்கர் என்பது 'இடம்' என்னும் பொருட்டதாம். அது சான் றோர் கூடிய இடம் என்னும் பொருளில் வந்து இடக்கரடக்கு எனலாயிற்று. சிறப்புத் தகுதியால் ஒருவர் பன்மைச் சிறப்புறுதல் போல், ஒருவரே எனினும் அவையாகக் கொண்டு அடக்கிக் கூறலும் கொள்ளத்தக்கதாம். அழகு அ. செய்யுள் மொழியால் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே (தொ.பொ.537) (இ.வி.754) இ. இளம்: (அழகென்னும் செய்யுள் உணர்த்துதல்) செய்யுட்குரிய சொல்லினாற் சீரைப் புணர்த்துத் தொடுப்பின் அவ்வகைப் பட்ட செய்யுள் அழகெனப்படும். பேரா: (அழகுணர்த்துதல்) திரிசொற் பயிலாது செய்யுளுட் பயின்று வரும் மொழிகளால் சீரறுத்துப் பொலிவுபட்ட யாப்பின் பொருள் அழகு. அவ்வகை என்றதனால் அவைவேறு வேறு வந்து ஈண்டிய தொகை நிலைச் செய்யுள் என்றவாறு. அவையாவன: நெடுந்தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு. அழகு செய்யுண்மொழி என்றது என்னை எனின், அது பெரும்பான்மையாற் கூறினான். அம்மொழியானே இடைச்சங்கத்தாரும் கடைச்சங்கத்தாரும் இவ்விலக்கணத் தாற் செய்யுள் செய்தார்; இக்காலத்துச் செய்யினும் விலக்கு இன்று என்பது. மற்று மூவடி முப்பது முதலாயின அம்மை எனப்படுமோ அழகெனப் படுமோ எனின், தாயபனுவல் இன்மையின் அம்மை எனப்படா என்பது. இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண்ணே மாத்திரை முதலாகிய உறுப்பும் ஏற்ற வகையான் வருவன அறிந்து கொள்க. நச்: (அழகு கூறுகின்றது) வழக்குச் சொற்பயிலாமல் செய்யுளுட்பயின்று வரும் சொல்லானே சீர்த்துப் பொலிவுபெறப் பாடின் அப்பகுதி அழகெனப்படும். அவ்வகை என்றதனான் அவை வேறு வேறாகவந்து ஈண்டிய தொகை நிலைச் செய்யுள் என்றுணர்க. அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம். அது தலைச் சங்கத்தாரை ஒழிந்தோர் சிறுபான்மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட் சொல்லுமாக இவ்விலக்கணத் தாற் செய்தவாறே இக்காலத்துச் செய்யினுமாம் எறு. தாய பனுவல் இன்மையின் மூவடி முப்பது முதலியனவும் அழகின்பாற்படும். இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண் மாத்திரை முதலிய உறுப்பும் ஏற்ற வகையான் வருமாறு காண்க. ஈ. இ.வி.உரை: செய்யுட்கு உரிய சொற்களால் ஓசை இனியவாகத் தொடுப்பின் அவ்வகைப் பட்ட செய்யுள் அழகு என்று சொல்லப்படு(ம்). அழிவில் கூட்டம் அ. 1. முட்டுவயின் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை இன்மையென் றாயிரு நான்கே அழிவில் கூட்டம் (தொ.பொ.267) 2. தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல் இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழியுண்மை பொழுதுமறுப் பாதல் அருண்மிக உடைமை அன்புமிக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்தும் செப்பிய பொருளே (தொ.பொ.288) இ. இளம்: 1. (மனன் அழியாதவழி நிகழ்வன) முட்டுவயின் கழறல் என்பது, களவு இடையீடுபட்டுழி அதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக்கழறியுரைத்தல். முனிவுமெய்ந் நிறுத்தல் என்பது, இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழிதல். அவன்புணர்வு மறுத்தல் என்பது, இது தலைமகன் புணர்ச்சிக்கண் வாராக்காலத்துத் தானும் மனனழியாது நிற்கும் நிலை. தூதுமுனிவின்மை என்பது, தூதுவிட்ட வழிவெறாமை. துஞ்சிச் சேர்தல் என்பது, கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் என்பது, அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைம்மிக்குவருதல். கட்டுரையின்மை என்பது, கூற்று நிகழ்த்துதல் இன்றி உள்ளக் கருத்தினை மறைத்து அமர்ந்திருத்தல். இவை நடுவண் ஐந்திணைக்குரிய. 2. (இஃது அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் உணர்த்துதல்) தெய்வ மஞ்சல் என்பது, தெய்வத்தினை அஞ்சுதல். புரையறந்தெளிதல் என்பது, 'கடன்மிக் கனவே' என்றவழிப் பரத்தமை கண்டு புலவாது இதனைப் போற்றல் இல்லுறை மகளிர்க்கியல்பென்னும் அறத்தி னானே எனக் கூறியவாறு கண்டுகொள்க. இல்லது காய்தல் என்பது, தலைமகன்கண் இல்லாத குறிப்பினை அவன்மாட்டு உளதாகக் கொண்டு காய்தல். உள்ள துவர்த்தல் என்பது, உள்ளதனை உவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல். புணர்ந்துழி உண்மை என்பது, புணர்ந்தவழி ஊடலுள் வழிமறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல். பொழுதுமறுப்பாதல் என்பது, தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப்பொழுதினைப் பற்றி நிகழும் மனநிகழ்ச்சி. இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின், ஆண்டு ''மரபுநிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும்" (அகத்.48) விரிந்ததெனக் கொள்க. அருண்மிக வுடைமையாவது, தலைமகன் மாட்டு அருள்புலப்பட நிற்கும் நிலை. அன்புமிக நிற்றல் என்பது, அன்பு புலப்பட நிற்றல். பிரிவாற்றாமை என்பது, பிரிவின்கண் ஆற்றாமை. மறைந்தவையுரைத்தல் புறஞ்சொன் மாணாக்கிளவியோடு தொகைஇ என்பது, மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ்சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாத கிளவியொடு கூட என்றவாறு. மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல்லாவது, அலர். மாணாமையாவது அவ்வலர் மாட்சிமைப் படாமற் கற்புக் கடம்பூண்டல். அன்றியும், 'மாண மறந்துள்ளா நாணிலி' என்றாற் போல மாணாமை என்பது மிகாமை எனவுரைப்பினும் அமையும். அலர் மிகாமைக் கூறுங் கூற்றினும் கற்புக் கடம்பூண்டு கூறுதல். அலர்மிகாக் கிளவியாவது, அதற்கு உள்ளம் நாணுதல். சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது, இச்சொல்லப்பட்ட பத்தும் மேற்சொல்லப்பட்ட அழிவில் கூட்டப்பொருள் என்றவாறு. என்றவழி நடுவணைந்திணைக்குரிய பொருள் என்றவாறு. பேரா: 1. (வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடு இவை எட்டும் என்பது உணர்த்துதல்) முட்டுவயின் கழறல், தலைவன் கூட்டத்திற்கு முட்டுப் பாடாகிய வழிக்கழறியுரைத்தலும், முனிவு மெய்ந்நிறுத்தல், தலைமகள் உள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமையும், அச்சத்தின் அகறல், தலைமகன் கண்வரும் ஏதம் அஞ்சி அவனை நீங்கும் குறிப்பும், அவன்புணர்வு மறுத்தல், இரவுக்குறியும், பகற்குறியும் விலக்குதற்கு எழுந்த உள்ள நிகழ்ச்சியும், தூதுமுனிவின்மை, புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லு மின் அவர்க்கென்று தூது இரந்து பன்முறையானும் சொல்லுதலும், துஞ்சிச் சேர்தல், மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும், காதல் கைம்மிகல், காமம் கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும் கட்டுரை இன்மை, உரைமறுத்திருத்தலும் என்று ஆயிரு நான்கே அழிவில் கூட்டம், என்று எண்ணப்பட்ட மெய்ப்பாடெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய் தும் கூட்டம் என உணர்க. 2. (அழிவில் கூட்டம் நிகழ்ந்த பின்னர் வருதற்குரிய மெய்ப்பாடு இவை என்கின்றது) இவ்வெண்ணப்பட்ட பதினொன்றும் மேற்கூறிய அழிவில் கூட்டம் எனப்படும். செப்பிய பொருளென்பது அழிவில் கூட்டமன்றே, அதற்கு முற்படும் மெய்ப்பாடு எட்டனையும் அழிவில் கூட்டம் என்றதுபோல அதற்குப் பிற்படும் மெய்ப்பாட்டினையும் அழிவில் கூட்டமென்பான் மேற்கூறிய அழிவில் கூட்டமே இவையுமெனக் கூறியவாறு. எனவே வரைந்தெய்திய பின்னர்த் தலைமகள் மனத்து நிகழ்வன இவை யென்பது கூறினானாம். தெய்வம் அஞ்சல் என்பது, தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வ மும், அவற்கு ஆசிரியராகிய தாபதரும், இன்னாரென்பது அவனான் உணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினை அஞ்சி ஒழுகும் ஒழுக்கம், அவள்கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வம் அஞ்சல் என்றான் என்பது. மற்றுத்தனக்குத் தெய்வம் தன் கணவனாதலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சு தல் எற்றுக்கெனின், அவனின்தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டின மையின் அவனான் அஞ்சப்படுந் தெய்வம் தனக்கும் அஞ்சப்படும் என்பது. அல்லதூஉம் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவள் என்பது. புரையறந் தெளிதல் என்பது, தனக்கொத்த இல்லறம் இன்னதென்று தலைமகள் மனத்துப்படுதல். இல்லது காய்தல் என்பது, களவின்கட்போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக் கொண்டு காய்தல். உள்ளதுவர்த்தல் என்பது, தலைமகனாற்பெற்ற தலையளி உள்ளதே யாயினும் அதனை உண்மையென்றே தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி. புணர்ந்துழி உண்மை என்பது, முற்கூறிய இல்லது காய்தலும் உள்ளது உவர்த்தலுமாகிய விகாரமின்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி. பொழுது மறுப்பாக்கம் என்பது, களவின்கட் பகற்குறியும், இரவுக் குறியுமென வரையறுத்தாற்போல்வதோர் வரையறை இன்மையின் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமென்றவாறு. எனவே களவுக் காலத்துப் பொழுது வரைந்துபட்ட இடர்ப்பாட்டினீங்கிய மன நிகழ்ச்சி ஆக்கமெனப்படும். அருண்மிகவுடைமை என்பது, களவுக்காலத்துப் போலத் துன்பமிகுத லின்றி அருண்மிகத் தோன்றிய நெஞ்சின னாதல். அன்புதொகநிற்றல் என்பது, களவுக்காலத்துப் பிரிந்த அன்பெல்லாம் இல்லறத்தின் மேற்பெருகிய விருப் பினானே ஒருங்கு தொகநிற்றல். பிரிவாற்றாமை என்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமை. என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்று ஆகலின் என்பது. மறைந்தவை உரைத்தல் என்பது, களவுக் காலத்து நிகழ்ந்தனவற்றைக் கற்புக் காலத்துக் கூறுதல். புறஞ்சொன் மாணாக் கிளவி என்பது, தலைமகற்குவந்த புறஞ் சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்த கிளவி. அதற்கு வரும் பழிகாத்தலும் தனக்கு அறமாதலின் அதுவும் கற்பின்கண்ணே நிகழும் என்பது. கிளவியொடு தொகைஇ என்பது. இதனோடுந் தொகுத் தென்றவாறு, சிறந்தபத்தும் என்பது, விதந்தோதியபத்தும். செப்பிய பொருள் என்பது, அழிவில் கூட்டமெனச் செப்பிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடெனப்படும் இவையும் என்பது. மற்றுப் பதினொன்றனையெண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை 'ஒன்பதுங் குழவியோ டிளமைப்பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழிமாற்றியுரைக்கப்படும். அங்ஙனஞ் சிறந்த பத்தும் புறஞ்சொன்மாணாக் கிளவியொடு தொகைஇ எனக் கூட்டியுரைக்க. சிறந்த பத்தென்றதனான் இவையன்றிக் கற்பினுள் வரும் மெய்ப்பாடு பிறவுமுளவேற் கொள்க. ஈ. நாவலர்: 1. இற்செறிப்பு முதலிய கூட்டத்திற்கு இடையூறு உற்றுழி வரைவு வற்புறுத்தல், வெறுப்பை மெய்ப்படு குறிப்பறிவுறுத்தல் அலரும், தலைவன் ஆற்றூறு மஞ்சி அவனணுகாது சேட்படுதல், வரையாது வந்தொழுகும் தலைவன் கூட்டத்திற்குக் குறிமறுத்தல் ஒழியாது உடனுறையும் அழிவில் கூட்டம் கருதிய தூதினைவெறாமை. அஃதாவது கரப்பின்றி அவனுக்குத் தூதுய்க்கவும் அவன் தூது எதிரவும் விரும்புதல், வரையாத தலைவனை நேரின் மகிழாது மனமடிதல், புணர்வு பெறாமல் வரைவுநீட்டித்த வழி கையிகந்த காதலால் நையு நிலை, கையிகந்த காதலால் உரையொழிதல், எனவரும் அவ் வெட்டும் வரைந்து பிரியாவாழ்க்கை விருப்பின் மெய்ப்பாடாகும். அழிவில் கூட்டம் என்றது களவிற் போலப் பிறர்க்கு மறைத்து இடை யறவுபடும் கரவுக் காதலைப் போலாது உலகறிய ஒழியாது உடனுறை யும் கற்புயர் காதற் கூட்ட வேட்கைக் குறிப்பு. கூட்டம் இங்குக் கூட்டத்துணையாம் வரைவு வேட்கை குறிப்பனவற்றிற்கு ஆதலால் ஆகுபெயர். துஞ்சிச் சேர்தலாவது, வரைவுநீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமிடிதல். சோர்தல் என்னாது சேர்தல் என்றதனானும், துஞ்சலும் மடிமையுமுன், 'ஆங்கவை ஒருபாலாக' எனும் சூத்திரத்துத் தனிவேறு கூறியதானும் இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதல் சுட்டாது வரையாத் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக்கினுக்கு மாழ்கிப் பொலிவழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். துஞ்சல் மடிமையாகாமை 'நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்' என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானும் அறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல் வேண்டியவாறு கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனொடு புலந்தாள்போல மடிந்தொன்றுமாத லின்' என்னும் உரைக்குறிப்பால் உணர்க. இனி ''இஃது உரிமை பூண்டமையால் உறக்கம் நிகழ்தலாமாறும்" எனும் இளம்பூரணர் கூற்று ஏற்றது அன்மை தேற்றம். 2. இது வரைந்துடன் வாழும் கற்புக் காதலுக்குரிய மெய்ப்பாடுகள் கூறுகின்றது. தெய்வமஞ்சல் முதல் புறஞ்சொல் மாணாக்கிளவிவரை கூட்டிக் கூறிய பத்தும் அகத்திணையுட் சிறந்த கற்புக் காதலுக்குப் பொருந்தும் மெய்ப்பாடுகள் என்றவாறு. பத்தும் என்பதன் உம்மை இனைத்தென அறிந்த முற்றும்மை. செப்பிய பத்தும் சிறந்த பொருளே எனச் சொன்மாறுக. அன்றிச் சொற்கள் நின்றாங்கே கொண்டு மாணாக்கிளவியொடு கூட்டி எண்ணி உயர்ந்த கற்புக்குரியதனாற் சிறந்த பத்து மெய்ப்பாடுகளும் மேல் அழிவில் கூட்டமெனக் குறித்த கற்பொழுக்கத்திற்குரிய என்றுரைப்பி னும் அமையும். இதில் பொருள் என்பது ஈற்றடியைச் சொன்மாறிக் கண்ணழிப்பின் மெய்ப்பாடுகளையும் நின்றாங்கே கொள்ளின் கற்பொழுக்கத்தையும் குறிப்பதாகும். பின்னுரைக்குப் பத்தும் என்பதைப் பத்து மெய்ப்பாடும் எனக் கொள்ளல் வேண்டும். தெய்வமஞ்சலாவது சூள்பொய்த்தல் பரத்தையிற்பிரிவு முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவ தாம். தெய்வம் தொழாது கணவற்றொழுவதே நல்லில் லாட்டியர் தொல்லறமாதலின் தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக் கூறிய பெற்றியும் கருதற்பாற்று. புரையறம் தெளிதல் என்பது உயர்ந்த மனையறம் உணர்ந்தோம்பல் புரைஈண்டு உயர்ச்சிப் பொருட்டு. இல்லது காய்தல், கணவன்பால் இல்லாதவற்றை ஏறிட்டு வெகுளுவது. உள்ளது உவர்த்தல், இதுதலைவன் மெய்யாகச் செய்யும் அன்பினை மறுத்துப் பொய்யென வெறுத்தல். புணர்ந்துழியுண்மைப் பொழுது மறுப்பாக்கம் என்பது, மணந்து வாழ்வார் கற்புக்காதற்கு இடையுறு தடை கடந்தொழுகுதலாகும். இத்தொடரைப் புணர்ந்துழி யுண்மை, பொழுது மறுப்பாக்கம் எனப் பிரித்தெண்ணிப் பதினொன் றாக்குவர் பேராசிரியர். இது சிறந்த பத்தும் எனத் தெளித்துக் கூறிய சூத்திரச் சொற்றொடர்ச் செம் பொருளொடு முரண்படுவதால் அஃதுரையன்மை யறிக. பதினொன்றைப் பத்தென எண்ணலாமெனும் தம் கொள்கைக்கு 'ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே' எனுமரபியற் சூத்திர அடியை மேற்கோள் காட்டினார். மரபியற் சூத்திரத்தில் ஒன்பதும் குழவியொடு என்பதை, குழவியொடு ஒன்பதும் என மொழி மாற்றி னும் எண் பத்தாகாமல் ஒன்பதேயாகும். இங்கு மொழி மாற்றினும் பேராசிரியர் கொண்டபடி பத்தாகாமல் பதினொன்றா கின்றதாதலின் சொல்லொடுபொருள்முரண எண்ணுதற்கு அம்மரபியற் சூத்திரம் மேற்கோளாகாமை வெளிப்படை. இனி முதலுரை வகுத்த இளம் பூரணர் இச்சூத்திரத்தில் மெய்ப்பாடு பத்தெனவே எண்ணினார். எனின், அவர் இத்தொடரைப் பிரித்திரண்டாக்கி மறைந்தவை யுரைத்தல், புறஞ்சொல் மாணாக் கிளவி எனும் வேறுபாடு இரண்டை இணைத்து ஒன்றாக்கிப் பத்து எண்ணி அமைவு காட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பாடாகலானும், புறஞ்சொல் மாணாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப்படாமை யானும் அவ்விரண்டையும் இணைத்தல் ஏலாமை அறிக. மேலும் புணர்ந்துழி உண்மையைப் பிரிப்பதால் போதரும் பொருட் சிறப்பின்மையும் அது சூத்திரக் கருத்தின்மையை வலியுறுத் தும். ஆதலின் இத்தொடரை நின்றாங்கு ஒரு தொடராக்கிக் கொண்டு அதன் செம்பொருள் உரைப்பதே சூத்திரக் கருத்தாதல் தெளிவாம். அருள்மிக உடைமையாவது, முன் களவில் தலைவன் அருளையே வேண்டிய தலைவி கற்பினில் தான் அவனை அருளொடு பேணும் பெற்றி. அன்பு தொக நிற்றலாவது, கொழுநன் கொடுமை உள்ளங் கொள்ளாமல் அவன்பாற் காதல் குறையா தொழுகல். பிரிவாற்றாமை, களவிற் போலக் கற்பினிற்றலைவி காதலை மறைத்தல் வேண்டாமை யின் தலைவன் பிரிவைத் தாங்காதழுங்கல். மறைத்தவை உரைத்த லாவது, ஒளித்து நிகழ்வபின் உவந்தெடுத் துரைப்பது. புறஞ்சொல் மாணாக்கிளவியாவது, தலைவனைப் புறந்தூற்றும் புன்சொல் பொறாத தலைவி அதைமறுத்து வெறுப்பது. புறஞ்சொல் நன்றாகாதென வெறுக்கும் தலைவியின் மறுப்புரை, புறஞ்சொல் மாணாதெனக் குறிக்குங்கிளவி என்று கூறப்பட்டது. இனி, முன் களவியலில் 'வேட்கை ஒரு தலையுள்ளுதல்' என்னும் சூத்திரத்தில் வேட்கை முதல் சாக்காடீறாகக் கூறிய பத்தும் களவிற்குச் சிறந்தனவாதலின் அவை, 'சிறப்புடைய மரபினவை களவென மொழிப' எனக் குறிக்கப்பட்டன. அதுவேபோல், இங்குக் கூறிய பத்தும் கற்பிற் சிறந்தனவாதலின், 'சிறந்த பத்தும் செப்பியபொருளே' எனப்பட்டன. இன்னும் கரந்தொழுகலால் காமஞ்சாலாத களவினும் வரைந்து உலகறிய உடன் வாழ்ந்து ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிக் கிழவனும் கிழத்தியும் வாழ்தலால், காமஞ்சான்ற கற்புச் சிறந்தது. அச்சிறந்த வாழ்வு கழிந்தகளவின் பயனாகுமெனக் கற்பியலிறுதியில் தெளிக்கப்பட்டிருத்தலால் அன்புத்திணையில் சிறந்தது கற்புக் காதல். அதற்குச் சிறந்த இங்குக் கூறப்படும் மெய்ப்பாடு பத்தும் எனும் அமைவு தோன்ற, இப்பத்து மெய்ப்பாடுகளையும் 'சிறந்த பத்தும் செப்பிய பொருளே' எனக் கூறிய பெற்றியும் கொள்ளற்பாலது. க.வெ: 'புணர்ந்துழியுண்மை பொழுதுமறுப்பாக்கம்' எனவரும் இத்தொடர், பகரவொற்றின்றிக் காணப்படுதலால் புணர்ந்துழி யுண்மையும் பொழுதுமறுப் பாக்கமும் என இரண்டு மெய்ப்பாடுகளாகவே உரையாசிரியர் இருவரும் கொண்டனர். அன்றியும் 'பொழுது மறுப்பு ஆக்கம்' என்பதே மெய்ப்பாடாதலின் அதனைப் 'புணர்ந்துழி யுண்மைப் பொழுது' என அடைகொடுத் தோதல் வேண்டாமை யாலும், தலைவி தலைவனுடன் தடையின்றிக் கூடியிருக்கும் மகிழ்ச்சிக் காலத்தில் தலைவியது திரிபற்ற உள்ளத்தின் உண்மை யியல்பாகிய மெய்ப்பாடு கற்பியலுக்கு இன்றியமையாததாய்ச் சிறப்பாக எடுத் துரைக்கத் தகுவதொன்றாதலானும், அதற்குக் காரணமாயமைந்ததே 'பொழுது மறுப்பாக்கம்' என்னும் மெய்ப்பாடாதலின் முறையே காரியமும் காரணமுமாயமைந்த இவ்விரு மெய்ப்பாடுகளையும் ஒன்றென எண்ணுதல் பொருந்தாதாகலானும் முன்னையுரை யாசிரியர் இருவரும் கூறியவண்ணம் இவ்விரண்டினையும் தனித்தனி மெய்ப்பாடு களாகக் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் எண்ணித்தொகை கூறுங்கால் அத்தொகையுள் அடங்கிய வொன்றைத் தனியே பிரித்துக் கூறுதலை யும் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது, மரபியல் முதற்சூத்திரத் தில் இளமைப் பெயர்களை எண்ணித் தொகை கூறுமிடத்தில் ''ஒன்பதுங் குழவியோடிளமைப்பெயரே' எனக் குழவியென்னும் இளமைப் பெயரைத் தனித்தெடுத்துக் கூறுதலாற் புலனாம். இங்குப் 'புறஞ்சொல் மாணாக்கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்தும்' என ஆசிரியர் எண்ணித் தொகை கூறுதலால் இச்சூத்திரத்தில் எண்ணப் பட்ட மெய்ப்பாடுகள் பத்தெனக் கொள்ளுதலே ஏற்புடைய தாகும். எனவே 'மறைந்தவை யுரைத்த புறஞ்சொல் மாணாக்கிளவி' என இளம் பூரணர் கொண்ட பாடமே பத்து என்னும் தொகையொடு பொருந்தி வருகின்றதென்பதும்' மறைந்தவையுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇ' எனப் பேராசிரியர் கொண்ட பாடம் 'பத்து' என்னும் தொகையொடு பொருந்த வில்லையென்பதும் இங்கு நினைத்தற் குரியனவாகும். அழுகை அ. 1. நகையே அழுகை இழிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென் றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொ.பொ.247) 2. இழிவே இழவே அசையே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொ.பொ.249) ஆ. கவலை கூர்ந்த கருணையது பெயரே அவலம் என்ப அறிந்தோர்; அதுதான் நிலைமை இழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை அழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாபம் எய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவல் இன்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னியிற்பிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்தி ளைத்தொ லிப்பத் தளர்ந்தவை நிறங்கிளர் அகலம் நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களம் கோட்டம் கோல்முனைக் கவற்சி அலைக்கண் மாறா அழுகுரல் அவலம் இன்னோர் அன்னவை இயற்பட நாடித் துன்னினர் உணர்க துணிவறிந் தோரே. இதன்பயம் இவ்வழி நோக்கி அசைந்தனர் ஆகி அழுதல் என்ப. (செயிற்றியம்) (தொ.பொ.249 மேற்.இளம்.) இ. இளம்: 1. (மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல்) அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. 2. (அழுகையாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல்) இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் அழுகைக் குப் பொருளாம் என்றவாறு. இழிவு என்பது, பிறர்தன்னை எளியன் ஆக்குதலால் பிறப்பது. இழவாவது, உயிரானும் பொருளானும் இழத்தல். அசைவு என்பது, தளர்ச்சி. அது தன் நிலையில் தாழ்தல். வறுமை என்பது நல்குரவு. இவை ஏதுவாக அழுகை பிறக்கும் என்றவாறு (செயிற்றியத்துக் கூறியன) வெல்லாம், இந்நான்கினுள் அடங்குமாறு அறிந்துகொள்க. பேரா: 1. (பிறர் வேண்டுமாற்றான் அன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த்துதல்) அழுகை என்பது அவலம்; அஃது இருவகைப்படும். தானே அவலித்த லும், பிறர் அவலங்கண்டு அவலித்தலும் என; இவற்றுள் ஒன்று கருணை எனவும் ஒன்று அவலம் எனவும் பட்டுச் சுவை ஒன்பது ஆகலும் உடைய என்பது. நகை முன்வைத்தது என்னை எனின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் (249) இவை யென்னும் இயல்பு இல்லன வல்ல என்றதற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத் தான் என்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். உ. (அழுகை என்னும் சுவையினைப் பொருள் பற்றி உணர்த்துதல் (பாடம்: இளிவு) இளிவென்பது பிறரால் இகழப்பட்டு எளியனாதல். இழவு என்பது தந்தையும் தாயும் முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது பண்டை நிலைமை கெட்டு வேறொருவாறாகி வருந்துதல். வறுமை என்பது போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறன்கண் தோன்றினும் அவலமாம் என்பது. எனவே, இவையும் எட்டாயின. விளிவில் கொள்கை, கேடில் கொள்கை; அங்ஙனங் கூறிய மிகையானே அழுகைக் கண்ணீர்போல, உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு. அதனையும் அழுகைப் பாற் சார்த்தி உணரப் படும். ஈ. நாவலர்: (அழுகை எனும் அவலவகை நான்கும் அவற்றின் இனப்பொது வியல்பும் உணர்த்துகிறது) இழிதகவு, இழத்தல், தள்ளாத்தளர்வு, அஃதாவது கையறவு, மிடி; அஃதாவது இல்லாமை என்று ஒழியாது அலமரச் செய்யும் அவலம் இந்நால் வகைத்தாம். ஈண்டு இளிவு, பிறரிகழ்விற் பிறக்குமவலம்; எனின், பழி பிறங்கும் பான்மைத்தாம் இளிவரலன்று. அவ் இளிவரலை அடுத்த சூத்திரம் கூறும். ஈண்டு இளிவுக்கு இதுவே பொருளாதல் இங்கு 'இழிவே' எனக் கொண்ட பழம் பாடத்தானும் வலியுறும். ஒழிவு தருவன அழுகை விளையா ஆகலின் ''விளிவில் கொள்கை அழுகை நான்கென" அவற்றின் பொதுவியல்பு விளக்கப்பட்டது. க.வெ: தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகையென்றும், பிறர்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணை யென்றும் கூறுதல் மரபு. அளபெடைத்தொடை அ. 1. அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும் (தொ.பொ.394) 2. அளபெழின் அவையே அளபெடைத் தொடையே (தொ.பொ.402) ஆ. அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே (யா.வி.41) ( மு.வீ.யா.28) அளபெடைத் தொடைக்கே அளபெடை ஆகும் (பல்காயம்.) அளபெடைத் தொடைக்கே அளபெடை ஒன்றும் (நத்தத்தம்.) அளபெடை இனம்பெறத் தொடுப்ப தளபெடை (அவிநயம்.) சொல்லிசை அளபெழ நிற்பது அளபெடை (சிறுகா.) அளபெழுந்து யாப்பின்அஃ தளபெடைத் தொடையே (மயேச்.) அடிதோறும், முதல்மொழிக்கண், அழியாது அளபெடுத் தொன்றுவ தாகும் அளபெடையே. (யா.கா.16) அளபெடுத் தொன்றின் அடிஅள பெடையும் (இ.வி.723) இ. இளம்: 1. (தொடைப்பாகுபாடு உணர்த்துதல்) அளபெடைத் தொடையோடே கூட ஐந்தென்று சொல்லவும் பெறும். 2. (அளபெடைத் தொடை ஆமாறு உணர்த்துதல்) அடிதொறும் அளபெழத் தொடுப்பின் அஃது அளபெடைத் தொடையாம். பேரா: 1. (எய்தியதன் மேற்சிறப்பு விதி) அந்நான்கே அன்றித்தொடைவகை ஐந்தெனவும் படும். அளபெடைத் தொடையோடு தலைப்பெய்ய. அளபெடை எழுத்தோத்தினுள் வேறு எழுத்தெனப் படாமைச் சிறப் பின்மை நோக்கி, ஈண்டுமதனை வேறு போதந்து கூறினான் என்பது. என்றார்க்கு, மேலைச்சூத்திரத்து (மோனை எதுகை முரணே இயை பென) நானெறி மரபின எனத் தொகை கூறினமையின் ஈண்டு அளபெடையும் தொடையாமென அமையும். நான்கின்மேல் ஒன்றே றியக்கால் ஐந்தாம் என்பது ஈண்டுச் சொல்ல வேண்டுவதன்று பிற வெனின், அற்றன்று. நான்கினோடு ஒன்றினையே சொல்லுகின்றா னாயின் அது கடா ஆவது, ஐந்தெனவும் ஆறெனவும் படுமென்றற்கு இது கூறினான்; எனவே உயிரள பெடையும் ஒற்றளபெடையும் என அளபெடை இரண்டாதலின் என்பது. அஃதே கருத்தாயின் ஆறும் ஆகும் என்னும் எனின், அங்ஙனங் கூறின் உயிரளபெடையோடு ஒத்த சிறப்பிற்றாவான் செல்லும் ஒற்றளபெடை யென மறுக்க, உயிரின் பின்னது ஒற்று ஆகலான் எடுத்தோத்துப் பெறுவது உயிரளபெடை எனவும், உம்மையாற் பெறுவது ஒற்றளபெடை எனவும் கொள்க. உம்மை எச்சவும்மை. ஒற்றளபெடை மூன்று பாவினும் செல்லாது கலிப்பாவினுள் துள்ளலோசையான் நில்லாமையின் என்பது. 2. (அளபெடைத் தொடை உணர்த்துதல்) அடிமுதற்கண் எழுத்துக்கள் அளபெடுத்தனவாயின் அவை அளபெடைத் தொடை எனப்படும். அவை என்றது உயிரளபெடையும் ஒற்றளபெடையும் என்றிரண்டு என்பது கோடற்கு. நச்: 1. அந்நான்குடனே உயிரளபெடையைக் கூட்டத் தொடை ஐந்துமாம். உம்மை உச்சவும்மையாகலின் ஒற்றளபெடை கூட்ட ஆறுமாம் என்றவாறு. உயிரின் பின்னது ஒற்றாகலின் உயிரளபெடையை எடுத்தோதி ஒற்றளபெடையை உம்மையாற் கொண்டார். கலிக்கு ஒற்றளபெடை துள்ளலோசையை நிகழ்த்தாதவாறு மேற்காண்க. 2. அடிமுதற்கண்ணே எழுத்துக்கள் அளபெழுந்தனவாயின், அவை அளபெடைத் தொடை எனப்படும். அவை என்றார் உயிரள பெடையும் ஒற்றளபெடையும் கோடற்கு. ஈ. யா.வி. இவற்றிற்கு இணை முதலியன கொள்ளாம், சிறப்பின்மையின்; அடி அளபெடை, இணை அளபெடை, பொழிப்பு அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற்கதுவாய் அளபெடை, கீழ்க் கதுவாய் அளபெடை, முற்று அளபெடை என அளபெடையோடு கூட்டி வழங்கினவாறு. 34 முதல் எழுத்து ஒன்றி வந்து அளபெழுந்தால் மோனை அளபெடைத் தொடை என்றும், இரண்டாம் எழுத்து ஒன்றிவந்து அளபெழுந்தால் எதுகை அளபெடைத் தொடை என்றும், முரணாய் வந்து அளபெழுந் தால் முரண் அளபெடைத் தொடை என்றும், அவை பலவாய் வந்து அளபெழுந்தால் மயக்கு அளபெடைத் தொடை என்றும், பிறவாராது அளபெழுந்தால் செவ்வளபெடைத் தொடை என்றும் வழங்கப்படும். 41 உயிரளபெடை: ''தனிநிலை முதனிலை இடைநிலை ஈறென நால்வகைப் படூஉம் அளபாய்வரும் இடனே" என வழங்கும். ''ஏஎ வழங்கும்' இது சீர்க்கு முன்னும் பின்னும் எழுத்தின்றி ஒரோஓர் எழுத்தே நின்று அளபெடுத்தமையால், தனிநிலை அளபெடைத்தொடை. ''காஅரி கொண்டான்" இதுமுதல்நின்ற சொல்லின்கட் பின்னும் எழுத்துப்பெற்று முதலெழுத்து அளபெழுந்தமையால் முதல்நிலை யளபெடை, ''கடாஅக் களிற்றின்" இது முதல்நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் இறுதிநிலை அளபெடைத் தொடை. ''உராஅய தேவர்" இது முதல்நின்ற சீரின் நடுநின்ற எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுத்தமையால் இடைநிலை அளபெடைத்தொடை. ஒற்றளபெடை ''வண்ண்டு வாழும்" இஃது இடைநிலை ஒற்றளபெடைத்தொடை. ''உரன்ன் அமைந்த" இஃது இறுதிநிலை ஒற்றளபெடைத்தொடை. 41 உ. ஆ.கு: அளபு + எடை அளபெடை; எடுப்பது எடை. ஒ.நோ: கொடுப்பது, கொடை; விடுப்பது, விடை. உரிய அளவின் மிகுதல், எடுப்பதாம். எடுப்பான தோற்றம் என்பதில் வரும் எடுப்பைக் கருதுக. சாய்ந்து கிடக்கும் பயிரை நிமிர்த்துதற்குப் பாய்ச்சும் நீரை, 'எடுப்புத் தண்ணீர்' என வழங்குதலும் எண்ணத் தக்கதாம். அளபெடை அசைநிலை ஆதல் அ. 1. அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே (தொ.பொ.325) 2. ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப (தொ.பொ.326) இ. இளம்: 1. (சீர்க்கண் உயிரளபெடைக்கு உரியதோர் மரபு உணர்த்துதல்) உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும். உம்மை எதிர்மறை ஆகலான் ஆகாமை பெரும்பான்மை. ''கடாஅ உருவொடு" (திருக். 585) இது அளபெடை அலகு பெற்றது. ''உப்போஓ எனவுரைத்து" இதன்கண் அளபெடை அசை நிலையாகி அலகு பெறாதாயிற்று. 2. (ஒற்றளபெடைக் குரியதோர் மரபு உணர்த்துதல்) ஒற்று அளபெடுத்து வரினும் அசைநிலையாகலும் உரித்து மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை. ''கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்" (மலை. 352) என வரும். பேரா: 1. (மேல் எழுத்ததிகாரத்து ஓதப்பட்ட அளபெடையை ஆண்டு மொழியெனக் கூறினான். அவ்வாற்றானே அவை பெரும் பான்மையும் ஈண்டும் ஈரசைச் சீராகலின் ஈண்டுக் கூறியவாற்றான் எய்திநின்றன வற்றை எழுத்து நிலைமைப் படுத்து அசை நிலையும் வேண்டினமை யின்) அளபெடை மேற்கூறிய இயற்சீர் நிலைமையே யன்றி ஓரசையாய் நிற்றலும் உரித்து; உம்மையாற் சீர்நிலை எய்தலே வலியுடைத்து. நிலை என்றதனால் எழுத்து நிலைமையும் நேர்ந்தானாம். அசையது நிலையைக் குறிலும் நெடிலும் குறிலிணையுமென எழுத்தான் வகுத்தமையின். 2. (ஒற்றளபெடையும் உயிரளபெடை போலச் சீர்நிலையாதலேயன்றி அசை நிலையாகவும் உரித்தென மாட்டெறிந்தமையின் எய்தாத தெய்துவித்தது. இதனை அசைப்படுத்து எழுத்து நிலையும் வேண்டு கின்றமையின் வழுவமைத்ததூஉமாம்). ஒற்றளபெடுத்தாலும் உயிரளபெடை போலச் சீர்நிலை எய்தலும் ஓரசையாய் நிற்றலும் உரித்து. 'கண்ண்' என்பது சீர்நிலையாகித் தேமாவாயிற்று. 'தண்ண்னென' என்றவழித் தட்பத்துச் சிறப்பு உரைத்தற்கு ணகர ஒற்றினை அளபேற்றிச் செய்யுள் செய்தான். ஆண்டு அது மாசெல்சுரம் என்னும் வஞ்சியுரிச் சீராவதனைப் பாதிரி என்னும் சீரேயாமென வழுவமைத்தவாறு. குற்றுகரம் குறிலோடு கூடி நிரையாவதனைக் குறிலிணை எனக் குற்றெழுத்தாக்கி ஓதினான். அதுபோல, ஒற்றளபெடையும் ஒரு மாத்திரை ஆவதனைக் குற்றெழுத்தென்று ஓதானோ எனின் அங்ஙனம் ஓதின் அவ்வளபெடை குறிலாகித் தன்முன் வந்த குறிலோடும் பின்வந்த குறிலோடும் நெடிலோடும் கூடி நிரையசையாகுவதாவான் செல்லு மென மறுக்க. 'அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே' என வரையாது கூறவே இச்சூத்திரமும் அடங்குமாகலின் இது மிகை யாம் பிற எனின் அற்றன்று; எழுத்தோத்தினுள் ஒற்றள பெடுக்கும் என்பது கூறாமையின் வேறு கூறினான். அல்லது உயிரளபெடையின் வேறுபட்டதோர் இலக்கணம் உடைமையின் இதனை வேறு கூறினான் என்பது. உயிரளபெடை போல ஒற்றளபெடை வருகின்ற எழுத்தோடு கூடி அசை யாகாது என்பதாம். ஈர்க்கு பீர்க்கு என ஈரொற்று நின்றவழி வேறோர் அசை ஆகாதவாறுபோல ஒற்றளபெடையும் ஒரோவழி அசைநிலை பெறாது என்பதூஉம் கூறினானாம். நச்: 1. (எழுத்ததிகாரத்து ''நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி" என்றதனாற் சொல்லாந் தன்மை எய்திய அளபெடை ஈண்டு ஈரசைச்சீர் கூறிய அதிகாரத்தானும் இயற்சீராம் தன்மை எய்திற்று, அதனையே எழுத்து நிலைமைப்படுத்து அசைநிலையும் வேண்டலின்) அளபெடைமேற்கூறிய இயற்சீர் நிலைமை பெறுதலே அன்றி ஓரசையாய் நிற்றலும் உரித்து. உம்மையாற் சீர்நிலையாதலே வலியுடைத்து. நிலை என்றதனால் எழுத்து நிலையும் நேர்ந்தார். சீர்நிலை எய்திய வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயது இயற்கை அளபெடை என்றும், செய்யுட்குப் புலவர் ஓசை கருதிச் செய்து கொண்டது செயற்கை அளபெடை என்றும் கொள்க. ஓசை சிதைத்தாற் செய்யுளின்பம் சிதையுமென்று அலகிருக்கைக் கட் சிதைத்தார். இவை, அலகு பெறா எனவே, நெடிலின் தன்மையே ஆயிற்று. இதனானே குற்றிகரம்போல் எழுத்தாந் தன்மையும் பெற்றாம். 2. (ஒற்றளபெடையும் சீர்நிலையாதலேயன்றி அசைநிலையு மாம் என எய்தாதது எய்துவித்தது) ஒற்று அளபெடுத்தாலும் உயிரளபெடை போலச் சீர்நிலை எய்தலும் ஓரசையாய் நிற்றலும் உரித்து. ஒற்றெனவே 'ஙஞணநமண வயலள வாய்தம்' என்னும் பதினொ ரொற்றும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுத்தல் பெறுதும். மங்ங்கலம் எனவும், அரங்ங்கம் எனவும் வரும். ஏனையவற் றோடும் ஒட்டுக. சீராமெனவே, ஈரசைச்சீரும் மூவசைச்சீருமாதல் பெறுதும். மேல் எழுவகைச்சீர் கூறுதலின் இதனை ஈண்டு வைத்தார். ஓரசையாதல் சிறுபான்மை. ''செய்யுட்கண் ஓசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பா டின்றி அணையுமாம் மைதீரொற் றின்றியும் செய்யுட் கெடினொற்றை உண்டாக்கு குன்றுமேல் ஒற்றளபுங் கொள்" என்னும் மாபுராணச் சூத்திரத்துள் 'மைதீரொற்று' என்றதனானே சீர்வகையடி யோசைகெடின் ஒற்றில்லாத சொல்லிற்கு ஓசை அவ்வொற்றை உண்டாக்கியும் நிற்கும் என்றும், 'குன்றுமேல் ஒற்றளபுங் கொள்' என்றதனானே அவ்வொற் றானும் ஓசை நிறையாவிடின் அங்ஙனம் வருவித்த ஒற்றை அளபெடுத்துங் கொள்க என்றும் கூறியவிதியும் கொள்க. ''அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன வந்தணன்... தங்கு ரவ்வர்" (சீவக.) இதனுள் யகரவகர ஒற்றில் வழி ஓசை அவ்வொற்றை உண்டாக்கிற்று. அஃது அளபெடுத்து வந்தவழிக் கண்டுகொள்க. உ. ஆ.கு: கடாஅ உரு என்பதில் கடா நிரை; அளபெடைக்கு அலகு இல்லாக்கால் நிரை என்னும் ஓரசையாக நின்று 'சீராம்' தன்மை இல்லா தொழியும் அளபெடைக்கு அலகு தருங்கால் நிரைநேர் (புளிமா) ஆகி வருஞ்சீர் நிரையொடு கூடி இயற்சீர் வெண்டளையாய்த் தளைபிழைபடாதாம். 'உப்போஒ என' என்பதிலுள்ள அளபெடை அலகு பெறுமாயின் நேர்நேர்நேர் (தேமாங்காய்) ஆய் 'என' என்னும் வருஞ்சீரோடு இயையக் கலித்தளையாம். அதனால் வெண்பா இலக்கணம் சிதையும். அளபெடை அலகு பெறாக்கால் இயற்சீர் வெண்டளை யாய்த் (தேமா முன்நிரை) தளை பிழைபடாதாம். அளபெடை வண்ணம் அ. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும் (தொ.பொ.520) ஆ. அடிதொறும் அளபெடை எதுகையாக வருவன அளபாம் வகுக்குங் காலே (மு.வீ.995) இ. இளம்: அளபெடை பயின்று வருவது அளபெடை வண்ணமாம். ''தாஅட் டாஅ மரைமலர் உழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஒட் டெருமை" எனவரும். பேரா: இரண்டளபெடையும் பயிலச் செய்வன அளபெடை வண்ணமாம். ''மராஅ மலரொடு விராஅய்ய்ப் பராஅம்" (அகம். 99) என்பது அளபெடை வண்ணம். ''கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்" (மலை.352) என்பதும் அது. நச்: இரண்டளபெடையும் பயிலச் செய்வது. உ. ஆ.கு: இரண்டளபெடை; உயிரளபெடையும், ஒற்றளபெடையும். ஓரிடத்தே வரின் தொடையன்றாம். ஆகலின் பயில என்றார். 'ஒன்றல்ல பல' என்பது தமிழ் நெறியாகலான் இரண்டற்குக் குறையாமை எனக் கொள்க. அறத்தொடுநிலை அ. 1. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும் தானே கூறும் காலமும் உளவே. (தொ.பொ.110) 2. அறத்தொடு நிற்கும் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழி என்ப. (தொ.பொ.203) 3. எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇய ஏழு வகைய என்மனார் புலவர் (தொ.பொ.204) 5. தாய் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் (தொ.பொ.136) 6. தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப (தொ.பொ.135) ஆ. வெளிப்படை தானே விரிக்கும் காலைத் தந்தை தாயே தன்னையர் என்றாங் கன்னவர் அறியப் பண்பா கும்மே (இ.க.26) அவருள், தாயறி வுறுதலின் ஏனோரும் அறிப (இ.க.27) தந்தை தன்னையர் ஆயிரு வீற்றும் முன்னம் அல்லது கூற்றவண் இல்லை (இ.க.28) காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகினும் நொதுமலர் வரையும் பருவம் ஆயினும் வரைவெதிர் கொள்ளாது தமரவன் மறுப்பினும் அவனூறஞ்சும் காலம் ஆயினும் அந்நால் இடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ அறத்தொடு நிற்றல் தோழிக்கும் உரிய (இ.க.29 ந.அ.47) ஆற்றூ ரஞ்சினும் அவன்வரைவு மறுப்பினும் வேற்றுவரைவு நேரினும் காப்புக்கை மிகினும் ஆற்றுறத் தோன்றும் அறத்தொடு நிலையே (ந.அ.47) கற்பமர் பூத்தான் தருமப் புணர்ச்சியும் காதலிக்குப் பொற்பமர் தண்புனல் தான்தரு நீதிப் புணர்ச்சியும்போர் அற்புத மாரும் களிறு தருமப் புணர்ச்சிமாங் கிற்பயில் கட்டுவிக் கேட்டல் எழிற்கட் டுவிகூறலே கூறப்படும்வெறிதான் அங்கெடுத் தல்கூ றுமவ்வெறிக் கீறற் றழிதல் அறிவுறக் கூறல் எழிற்றலைவி வேறற் றவருக் கறத்தொடு நிற்றல் வெறிவிலக்கல் ஊறற் றுயிரெலா முய்க்கு முருகற் குரைகடிதே. (க.கா.46, 47) தலைவி பாங்கிக் கறத்தொடு நிற்கும் பாங்கி செவிலிக் கறத்தொடு நிற்கும் செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும் நற்றாய் தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்கும் என்ப நெறியுணர்ந் தோரே (ந.அ.48 இ.வி.417) ஒருபுணர் ஒழிந்தவற் றொருவழித் தணப்பவும் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரியவும் இறைவனைச் செவிலி குறிவயின் காணவும் மனைவயின் செறிப்பவும் வருத்தம் கூறின் வினவியக் கண்ணும் வினவாக் கண்ணும் அனநடைக் கிழத்தி அறத்தொடு நிற்கும் (ந.அ.49 இ.வி.418) முன்னிலைப் புறமொழி முன்னிலை மொழிகளிற் சின்மொழிப் பாங்கி செவிலிக் குணர்த்து (ந.அ.50 இ.வி.419) செவிலி நற்றாய்க்குக் கவலையின் றுணர்த்தும் (ந.அ.51 இ.வி.420) நற்றாய் அறத்தொடு நிற்கும் காலைக் குரவனும் தன்னையும் குறிப்பின் உணர்ப (ந.அ.52 இ.வி.421) பாங்கி தலைவியை வினவும் செவிலி பாங்கியை வினவும் பாங்கி தன்னையும் நற்றாய் தானும் வினவும் செவிலியிற் பொற்றொடிக் கிழத்தியை உற்று நோக்கின் (ந.அ.53 இ.வி.422) ஆங்குடன் போயுழி அறத்தொடு நிற்ப பாங்கியும் செவிலியும் பயந்த தாயும் (ந.அ.54 இ.வி.423) தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் கிழவோன் தன்னொடும் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத்தோன் றாது (இ.வி.564) மறுதலை இல்லா மாண்பியல் கிளவியின் தலைவி தோழிக் கறத்தொடு நிற்றலும் செவிலி புகழ்தலும் தோழி உணர்த்தலும் முதுவாய்க் கட்டுவி முருகென மொழிதலும் அதுகுறித் தினைதலும் அறனல வினவலும் பொய்யென மொழிதலும் பொன்றத் துணிதலும் கையன் றென்றலும் காரிகை நேர்தலும் பாங்கி வெறிக்கண் படர்க்கை முன்னிலையும் ஈன்றோள் தன்வயின் கைத்தாய் இயம்பலும் வரைவெதிர் மறுத்தலும் மையலும் தெளித்தலும் கிளந்த தமர்வயின் நற்றாய் கிளத்தலும் இளையோர்க் கெதிர்தலும் வெளிப்படை என்மனார் (த.நெ.வி.22) கடியார் செவிலித்தாய் நற்றாய்க் கறத்தொடு நிற்றலவள் வெடியார் இயலைக் கறத்தொடு நிற்றல் மிகுவேறலைப் படிவார் வரைவு மறுத்தல் பரிச மொடுவருதல் வடிவார் வரைவு மலிதல் வரைவை யுடன்படலே வரைவார் முரசுக் கிரங்கல் மணமுர சம்வினாவென் றுரையார் கிளவிகள் ஈரஞ்சொ டொன்பது ஓங்குந்திரைக் கரையார் கருங்கடல் சூழுல கத்திற் கலைத்தமிழோர் விரையார் குழலாய் வெளிப்படை என்று விளம்புவரே. (க.கா.4849) முன்னிலை முன்னிலைப் புறமொழி என்றாங் கன்ன இருவகைத் தறத்தொடு நிலையே. (ந.அ.175) கையறு தோழி கண்ணீர் துடைத்துழிக் கலுழ்தற் காரணம் கூறலும் தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை எய்தக் கூறலும் இகந்தமை இயம்பலும் இயற்பழித் துரைத்துழி இயற்பட மொழிதலும் தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றலும் இவ்வயிற் செறித்தமை சொல்லலும் செவிலி கனையிருள் அவன்வரக் கண்டமை கூறலும் எனமுறை இயம்பிய ஏழும் புனையிழைத் தலைவி அறத்தொடு நிலைதனக் குரிய (ந.அ.176) எறிவளை வேற்றுமைக்கேது வினாவினும் வெறிவிலக் கியவழி வினாவினும் பாங்கி பூவே புனலே களிறே என்றினை யேது வாகத் தலைப்பா டியம்பும் (ந.அ.177) மின்னிடை வேற்றுமை கண்டுதாய் வினாவுழி முன்னிலை மொழியான் மொழியுஞ் செவிலி (ந.அ.178) என்றுடன் இயம்பிய எல்லாம் களவியல் நின்றுழி அறத்தொடு நிற்றலின் விரியே (இ.வி.533) கலுழ்தலின் பாங்கி கண்ணீர் துடைத்தலும் கலுழ்தற் காரணம் கூறலும் கடவுளைச் சூழுற் றுரைத்ததைத் துணிந்தமை சொல்லலும் இகந்தமை இயம்பலும் இயற்பழித் துரைத்தலும் இயற்பட மொழிதலும் இறைவன் பொறைகொளச் செல்குவம் என்றலும் சிறைபயில் இல்வயின் செறித்தமை செப்பலும் செவிலி இறைவனைக் கண்டமை கூறலொடு கருதிய ஒன்பதும் ஒண்டொடி அறத்தொடு நிலைதனக் குரிய (மா.அக.72) காரிகை வேற்றுமைக் காரணம் வினாவினும் வேரிகொள் வெறிவிலக் கியவழி வினாவினும் போதொடு புனல்களி றென்றிவை ஏதுவின் ஆதரப் பாங்கி அறத்தொடு நிற்கும் (மா.அக.73) அயலார் மணமுர சாயிடை விலக்கலும் கயல்விழிப் பாங்கி கடனென மொழிப. (மா.அக.74) மெல்லியல் வேற்றுமை கண்டுதாய் வினாவுழித் தொல்லியல் புணர்ந்த தொன்மைசால் செவிலி முன்னிலை மொழியான் மொழிதற்கும் உரியள் (மா.அக.75) நற்றமர்க் கவ்வழி நற்றாய் அறத்தொடு நிற்றலும் உளதென நிகழ்த்தினர் புலவர் (மா.அக.76) இன்னணம் இயம்பிய எல்லாம் களவியல் மன்னி வெளிப்படா அளவைத் தாகலின் அறத்தொடு நிற்றல் அதன்வகை விரியே (மா.அக.77) இ. இளம்: (தலைமகட்குச் சொல் நிகழும் இடம்) 1. தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குகின்றான். இன்ன நாள் வரைந்து கொள்வல் எனக் கூறித் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி அதனைத் தோழி ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய தலைவி அவன் வருந்துணையும் ஆற்றாது வருத்த முறினும், வரையாத நாளின்கண் மறைத் தொழுகாநின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டின வழியும் இவ் வொழுக்கத்தினை நின்தோழிக்கு உரையெனத் தலைவன் கூறியவழியும் தலைவிதானே கூறும் காலமும் உள என்றவாறு. உம்மை எதிர்மறை ஆகலாற் கூறாமை பெரும்பான்மை. 2. (அறத்தொடு நிற்கும் நிலை மரபு) தலைவி அறத்தொடு நிற்கும் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலள். 3. (தோழி அறத்தொடு நிற்குமாறு) இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று உரைக்கின்றவழி உரைக்கப்பட்டது. அது வருமாறு: எளித்தல் என்பது, தலைவன் நம்மாட்டு எளியன் என்று கூறுதல். அதனது பயம் மகளுடைத்தாயர் தம் வழி ஒழுகுவார்க்கு மகட் கொடை வேண்டுவராகலான் எளியன் என்பது கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு. ஏத்தல் என்பது, தலைவனை உயர்த்துக் கூறுதல். அது, மகளுடைத் தாயர் 'தலைவன் உயர்ந்தான்' என்றவழி மனமகிழ்வராகலின் அவ்வாறு கூறப்பட்டது. உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு. வேட்கை யுரைத்தலாவது, தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும் தலைவி மாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல். வேட்கை கூறி அறத்தொடு நிற்கும் என்றவாறு. கூறுதலாவது, தலைவியைத் தலைவற்குக் கொடுக்க வேண்டும் என்பதுபடக் கூறுதல். உசாவுதல் என்பது, வெறியாட்டும் கழங்கும் இட்டுரைத் துழி வேலனொடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல். ஏதீடு தலைப்பாடு என்பது யாதானுமோர் ஏதுவை இடையிட்டுக் கொண்டு தலைப்பட்டமை கூறுதல். உண்மை செப்புங்கிளவியாவது, பட்டாங்கு கூறுதல். (தொ.பொ. 112) 4. (செவிலிக்கு உரியதோர் மரபு) காமம் மிக்கவழியல்லது சொல் நிகழ்ச்சி இன்மையின் தலைமகள் தான் கருதிய பொருண்மேல் வேட்கையைத் தலைமகள் தன்னானே அறிவர். பன்மையாற் கூறினமையால் அவ்வுணர்ச்சி செவிலிக்கும் நற்றாய்க்கும் ஒக்கும். இதனாற் சொல்லியது அறத்தொடு நிற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க. 5. (நற்றாய்க்கு உரியதொரு மரபு உணர்த்துதல்) நற்றாய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுதல் அல்லது தந்தையும் தன்னையன்மாரையும்போல வெகுடல் இலள் என்றவாறு. காமர் கடும்புனல் எனத் தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள் (39) ''அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்" எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது. 6. (தந்தையும் தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல்) தந்தையும் தன்னையரும் குறிப்பின் உணர்ப. எனவே, கூற்றினான் உரைக்கப்பெறார் என்றவாறாம். நச்: 1. (தலைவி கூற்று இன்னவாறுமாம் என்கின்றது) வரைவு மாட்சிமைப் படாநிற்கவும் பொருள் காரணத்தான் அதற்கு இடையீடாகத் தலைவன் நீக்கிவைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தமெய்தினும், வரையாதொழுகுந் தலைவன் ஒரு ஞான்று தோழியையானும் ஆயத்தையானும் செவிலியையானும் கதுமென எதிர்ப்பினும், நொதுமலர் வரைவிற்கு மணமுரசு இயம்பியவழி யானும் பிறாண்டானும் தோழிக்கு இன்னவாறு கூட்டம் நிகழ்ந்த தெனக் கூறி, அதனை நமரறியக் கூறல் வேண்டுமென்றுந் தலைவற்கு நம் வருத்தமறியக் கூறல் வேண்டுமென்றும் கூறுதற்கண்ணும் இம் மூன்று பகுதியினும் தோழிவினாவாமல் தலைவிதானே கூறுங் காலமும் உள. உம்மையால் தோழி வினவிய இடத்துக்கூறலே வலியுடைத்து. 2. (தலைவியால் தோழிக்கு வருவதோர் வழுவமைத்தல்) தலைவி இக்களவினைத் தமர்க்கு அறிவுறுத்தல் வேண்டும் என்னும் கருத்தினளாகிய காலத்தன்றித் தோழி அறத்தின் இயல்பாகத் தமர்க்குக் கூறும் முறைமையிலள் என்று கூறுவர் புலவர். காலமாவன நொதுமலர் வரவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன. தலைவி களவின்கண்ணே கற்புக்கடம்பூண்டு ஒழுகு கின்றாளை நொதுமலர் வரைவைக் கருதினார் என்பதூஉம், இற் பிறந்தார்க்கு ஏலாத வெறியாட்டுத் தம்மனைக்கண் நிகழ்ந்ததூஉம் தலைவிக்கு இறந்துபாடு பிறக்குமென்று உட்கொண்டு அவை பிறவாமல் போற்றுதல் தோழிக் குக் கடனாதலின் இவை நிகழ்வதற்கு முன்னே தமர்க்கறிவித்தல் வேண்டும். அங்ஙனம் அறிவியா திருத்தலின் வழுவாய் அமைந்தது. 3. (அறத்தொடு நிலை இணைத்தென்கிறது) தலைவனை எளியனாகக் கூறல், அவனை உயர்த்துக் கூறல், அவனது வேட்கை மிகுத்துரைத்துக் கூறல், தலைவியும் தோழியும் வெறியாட் டிடத்தும் பிறவிடத்தும் சில கூறுதற்கண்ணே தாமும் பிறருடனே யும் உசாவுதல், ஒருவன் களிறும் புலியும் நாயும் போல்வன காத்து எம்மைக் கைக்கொண்டான் எனவும் பூத்தந்தான் தழைதந்தான் எனவும் இவை முதலிய காரணமிட்டுணர்த்துதல்; இருவருந்தாமே எதிர்ப்பட்டார் யான் அறிந்திலேன் எனக் கூறுதல் என்று அவ் வாறனையும் படைத்து மொழியாது பட்டாங்கு கூறுதல் என்னும் கிளவியோடே கூட்டி அத் தன்மைத்தாகிய ஏழு கூற்றையுடைய அறத்தொடு நிற்றலென்று கூறுவர் புலவர். அவ்வெழுவகைய என்றதனால், உண்மை செப்புங்கால் ஏனை ஆறு பொருளினும் சில உடன்கூறி உண்மை செப்பலும் ஏனைய கூறுங் காலும் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலும் கொள்க. (பாடம்: அவ்வெழுவகைய.) 4. (பாடம்: கிழவியர்) (மேலதற்கோர் புறனடை) 5. தலைவியர்க்கு ஏதமுற்ற இடத்தன்றித் தோழி அவ்வாறு மறைபுலப் படுத்துக்கூறாள் ஆதலின், அம்மறை புலப்படுத்துதல் விருப்பத் தைத் தலைவியர் காரணத்தால் தோழியர் உணர்வர். உணர்வர் என்று உயர்திணைப் பன்மையாற் கூறவே தலைவியரும் தோழியரும் பலரென்றார். கிழவி என்றாரேனும் ஒருபாற் கிளவி (தொ.பொ. 222) என்பதனாற் பன்மையாகக் கொள்க. உயிரினும் சிறந்த நாணுடையாள் (113) இது புலப்படுத்தற்கு உடம்படுதலின் வழுவாயமைந்தது. 6. (தந்தையும் தன்னையும் களவொழுக்கம் உணருமாறு) தந்தையும் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக் கொண் டுணர்வர். நற்றாய் அறத்தொடு நின்றவழியும், 'இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று, தெருமந்து சாய்த்தார் தலை' என்றலின் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டுணர்ந்தார் ஆயிற்று. 7. (தந்தை தன்னைக்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்துமாறு) நற்றாய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்கும் தன்னைக்கும் சென்றுறுந்தன்மை, செவிலிநற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும். என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல நற்றாயும் தந்தைக்கும் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. ஈ. இ.க. வெளிப்படை என்பது அறத்தொடு நிலை என்றவாறு. வெளிப்படை எனினும் அறத்தொடுநிலை எனினும் ஒக்கும் என, இவ் விரண்டும் ஒருபொருள் மேற்கிடந்தனவாயினும், கருத்து வேறுபா டுடையவாம். யாவரும் அறியப்படாத களவு, தந்தையும் தாயும் தன்னையரும் அறியப்பாடு நிகழ்ந்தமையின் களவு வெளிப்படை எனப்பட்டது; இனித் தலைமகள் அறன் அழியாமை நிற்றலின் அறத்தொடு நிலை எனவும் பட்டது. 26 செவிலித்தாய் தோழியால் அறத்தொடு நிற்கப்பட்டு நற்றாய்க்கு அறத் தொடு நிற்கும். அம்முறையானே நற்றாய் தந்தைக்கும் தன்னையன் மார்க்கும் அறத்தொடு நிற்கும் என்பது. செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் என்பது, பெற்றவாறு என்னை எனின் உரையிற் கோடல் என்னும் தந்திரவுத்தியாற் பெறுதும் என்பது. 27 நற்றாய் தந்தைக்கும் தன்னையன்மார்க்கும், அறத்தொடு நிற்கும் இடத்து 'இன்னதொன்றுண்டால் அஃது என்னோ எனின், குலத்தானும் குணத் தானும் செல்வத்தானும் மிக்கான் ஒருவன் உலகத்தாரெல்லாம் ஒருகுறை வேண்டப் படுத்தன்மையன், தான் ஒருவர்பால் ஒருகுறை வேண்டுஞ் சிறுமையான் அல்லன். இத்தன்மையானவன் நம்மை வழிபட்டு வாழலுறும், அவனை யாம் கிழமை கொள்ள அழிவ துண்டோ? என்னும்; என அதுகேட்டு, அவர் என் கருதுபவோ எனின் 'இவள் கருதிச் சொல்லு கின்ற குறிப்பாவது இதுபோலும், தம்மகள் திறத்தினாகாதே என உணர்வாராவது. 28 ந.அ. நற்றாய் குறிப்பின் அன்றி அறத்தொடு நிற்கப் பெறாள் என்றமையாற் செய்யுள் இல்லை. 178 அறிவர் கூற்று அ. 1. சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. (தொ.பொ.152) 2. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் (தொ.பொ.153) ஆ. மறையோன் கூற்றும் அறிவர் கூற்றும் இறையோன் முதலா எனைவரும் கேட்ப (ந.அ.226) அறிவர் கிழவோன் கிழத்தியென் றிருவர்க்கும் (ந.அ.112) உறுதி மொழிந்த ஒருபெருங் குரவர் (இ.வி.480) இ. இளம்: 1. (அறிவர் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று) மேற்செவிலிக் குரியதாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும் உரிய. (செவிலிக்குரிய கூற்று). கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக் குரிய ஆகும் என்ப. (தொ.பொ.141) 2. (அறிவர்க்குரியதோர் மரபு உணர்த்திற்று) கழறிய எல்லைக்கண்ணே நிறுத்தலும் அறிவர்க்குரிய, தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின். நச்: 1. (அறிவரது கூற்றுக்கூறுகின்றது) முற்கூறிய நல்லவையுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்குமுரிய. என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொருள் இன்பங்களால் கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவர் என்பதாம். 2. (அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது) தலைவனும் தலைவியும் அவ்வறிவரது ஏவலைச் செய்து நிற்பரா தலின் அவரைக் கழறி ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழி லாகும். அஃது உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானை யும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையும் கழறுப. ஈ. க.வெ.: கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் இடித்துவரை நிறுத்தலும் அவரதாகும் என இயையும். அறிவன் தேயம் அ. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் (தொ.பொ.74) ஆ. ''முக்கால நிகழ்வும் முறையுளி யறிவும் தக்கோன் நிலைபுகல் அறிவன் வாகையாம்" (இ.வி.613) ''அறிவன் வாகை" (பு.வெ.8) ''புகழ் நுவல முக்காலமும் நிகழ்வறிபவன் இயல்புரைத்தன்று" (பு.வெ.வா.13) ''முக்காலம்" (வீர.104) இ. இளம்: குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும். இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழுதுணர்ந் தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடலத்துள் 'பனியும் வெயிலும் கூதிரும் யாவும் துனியிற் கொள்கையொடு நோன்மை எய்திய தனிவுற் றறிந்த கணிவன் முல்லை' எனவும் ஓதுதலின் மேலதே பொருளாகக் கொள்க. அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுத லாவது, பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மின்வீழ்வும் கோள் நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் என்றார். நச்: காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும். தேயத்தைக் கிழவோள் தேஎத்து (இறைய. 8) என்றாற்போலக் கொள்க. கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க. ஈ. நாவலர்: பெரும்பொழுதாறும் வெயில் மழை பனி என்ற மூன்றில் அடங்கும். மூவகைக் காலமும் 'நெறியின் ஆற்றிய அறிவன்' என்றது தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பனி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளைவும் நுண்ணிதின் உணர்ந்து காலத்தால் ஆற்றுவ ஆற்றிப் பயன் கொள்ளும் மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சரைக் குறிப்பதாகும். நாளும் கோளும் கண்டதுபோலக்கொண்டு கூறி வயிறு வளர்ப்போர் கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணுமளவினர். இவரை எதிர்கால விளைவுகள் எடுத்துக் கூறும் கணிகளெனப்படுவதன்றி மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. அறிவோடமையாது 'ஆற்றுதலும் கூறுதலால் கணிகளின் வேறாய் வருவன சூழ்ந்து செயல்வகை தேர்ந்து ஆய்ந்தாற்றும் அறிஞரான அமைச்சரைக் குறிப்பதே கருத்தாதல் தேற்றம். அறிவுடம்படுத்தும் குறிப்புரை அ. 1. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் (தொ.பொ.93) 2. குறிப்பே குறித்தது கொள்ளு மாயின் ஆங்கவை நிகழும் என்மனார் புலவர் (தொ.பொ.94) ஆ. அரிவை நாட்டம் அகத்துநிகழ் வேட்கை தெரிய உணர்த்தும் குரிசிற் கென்ப. (ந.அ. 122 இ.வி.491) கண்ணிணை புகுமுகம் புரிதலின் காரிகை உள் நிகழ் வேட்கை உரவோற் குணர்த்தும் (மா.அக.10) வழிநிலைக் காட்சியும் உள்ளப் புணர்ச்சியென் றெழில்பெறு மேனும் இணைவிழைச் சின்றால் கைக்கிளை என்பதம் கடனெனத் தகுமே (மா.அக.11) இ. இளம்: 1. (மேல், தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப் பாற்படும் ஆகலானும் இக்கந்திருவ நெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டும் ஆதலானும் ஆண்டு ஒருவரோடு ஒருவர் சொல்லாடுதல் மரபன்மையானும் அவருள்ளக் கருத்ததறில் வேண்டுதலின் அதற்குக் கருவியாகிய உணர்த்துதல் நுதலிற்று). தலைமகன் கண்ணும் தலைமகள் கண்ணும் ஒருவர் வேட்கைபோல ஒருவர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்ந்து நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்குத் தமது வேட்கையொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்கும் காமக்குறிப்புரையாம். இருவர்க்கும் கவர்த்து நின்ற அறிவை ஒருப்படுத்தற் பொருட்டு வேட்கையொடு கூட்டிக் கூறும் காமக்குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும். 2. (மேலதற்கொரு புறனடை உணர்த்துதல்) ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளுமாயின், அவ்விடத்துக் கண்ணினான் வரும் குறிப்புரை நிகழும். எனவே, குறிப்பைக் கொள்ளாதவழி அக்குறிப்புரை நிகழாது என்றவாறாம். இதனாற் சொல்லியது, கண்ட காலத்தே வேட்கை முந்துற்ற வழியே இக் கண்ணினான் வருங்குறிப்பு நிகழ்வது; அல்லாத வழி நிகழாது என்பது. தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிந்தவழியும் கூற்று நிகழாது, பெண்மையான். நச்: 1. (மக்களுள்ளாள் எனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த் துங்கால் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்தும் என்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறும் என்பதூஉம் கூறுகின்றது. எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக் காட்சி கூறுகின்றதாயிற்று). தலைவன் அங்ஙனம் மக்களுள்ளாள் என்று அறிந்த அறிவானே தலைவியைக் கூட்டத்திற்கு உடன்படுத்தற்குத் தன்னுடைய நோக்கம் இரண்டானும் கூட்டி வார்த்தை சொல்லும். அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறும் கூற்றும் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம். நாட்டம் இரண்டிடத்தும் கூட்டுக. உம்மை விரிக்க. ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார். நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும். 2. (இது புணர்ச்சியமைதி கூறுகின்றது) தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே தலைவி கருத்துத் திரிவு படாமற் கொள்ளவற்றாயின் அக்குறிப்பைக் கொண்ட காலத்துப் புகுமுகம் புரிதல் முதலாய் இருகையும் எடுத்தல் ஈறாகக் கிடந்த மெய்ப்பாடு பன்னிரண்டனுள் பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றும் முறையே நிகழும் என்று கூறுவர் புலவர். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையும் எடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. உரையிற் கோடலால் மொழிகேட்க விரும்புதலும் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்தவழிக் காண்க. அறிவுவகை அ. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (தொ.பொ.571) ஆ. மெய்ந்நா மூக்கு நாட்டம் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமேல் உணர்தலின் ஓரறி வாதியா உயிரைந் தாகும் (நன்.444) இ. இளம்: (உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல்) ஓரறிவுயிராவது உடம்பினான் அறிவது; ஈரறிவுயிராவது உடம்பினா னும் வாயினானும் அறிவது; மூவறிவுயி ராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பி னானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணி னானும் செவியினானும் அறிவது. ஆறறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினா னும் செவியினானும் மனத்தினானும் அறிவது. இவ்வகையினான் உயிர் ஆறுவகையினான் ஆயின. இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். கண்ணினால் வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும். மனத்தினால் அறியப்படுவது 'இதுபோல்வன வேண்டும் எனவும், இது செயல் வேண்டும் எனவும் இஃது எத்தன்மை எனவும் அனுமானித்தல். அனுமான மாவது, புகைகண்ட வழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயி னும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல். இவ்வகையினான் உலகிலுள்ள வெல்லாம் மக்கட்கு அறிதலாயின. பேரா: (மேல் அதிகாரப்பட்ட ஓரறிவுயிர் உணர்த்தும் வழி அவ்வினத்தன வெல்லாம் கூறுதல் நுதலிற்று). ஒன்றறிவதென்பது ஒன்றனை அறிவது; அஃதாவது, உற்றறிவ தென்பதும், இரண்டறிவதென்பது அம்மெய் யுணர்வினோடு நாவுணர்வுடையதென வும், மூன்றறிவுடையது அவற்றோடு நாற்ற வுணர்வுடைய தெனவும், நான்கறிவுடையது அவற்றோடு கண்ணுணர்வுடைய தெனவும், ஐந்தறி வுடையது அவற்றோடு செவியுணர்வுடைய தெனவும், ஆறறிவுடையது அவற்றோடு மனவுணர்வுடைய தெனவும் அம்முறையானே நுண்ணுணர் வுடையோர் நெறிப்படுத்தினர். இது முறையாதற்குக் காரணமென்னையெனின், எண்ணுமுறையாற் கூறினார் என்பது. அல்லதூஉம், எல்லா உயிர்க்கும் இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுகள் என்றற்கு அம்முறையாற் கூறினார் என்பது; என்னை அது பெறுமாறெனின், நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர் என்பதனாற் பெறுதும். மற்று, ஒன்று முதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பன போல வேறு கூறியதென்னை எனின், ஓரறிவுயிர்க்கு மனமின்மையின் அங்ஙனம் கூறினாரென்பது. அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோ எனின், உயிருடையவாகிய நந்து முதலியவற்றுக்குச் செவிமுதலாகிய பொறியின்மை கண்டிலையோ என்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மனவுணர்வில்லை என்பதும் மனமுண் டென்பாரும் என இருபகுதியர். அவையெல்லாம் வல்லார் வாய்க்கேட் டுணர்க. அல்லதூஉம் பொறியுணர்வென்ப தாமே உணரும் உணர்ச்சி; அங்ஙனம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ்சென்று கொள்ளு மென்ப தென்னையெனின், மனம் ஒன்றிவை நினையா நிற்க மற்றொன்று கட்புல னாயக்கால் அதனைப் பொறியுணர்வு மற்றோர் பொருட்கண் நின்ற காலத்துப் பிறபொருட்கட் சென்றதெனப் படாதன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர் வாகலான் அவை தம்மின் வேற்றுமையுடைய வென்பது. அல்லதூஉம் தேனெய்யினை நாவின்பொறியுணர்ந்தவழி இன் புற்றும் கண்ணுள் வார்த்து வெய்யுணர்வுணர்ந்த வழித்துன்புற்றும், நறிதாயின் மான்மதத்தினை மூக்குணர் வுணர்ந்தவழி இன்புற்றும், கண்ணுணர் வுணர்ந்தவழி இன்பங்கொள்ளாமையும் வருதலின் அவை பொறியுணர் வெனப்படும். மனவுணர்வும் ஒருதன்மைத் தாதல் வேண்டுமால் எனின், ஐயுணர்வின்றிக் கனாப்போலத்தானே யுணர்வது மனவுணர் வெனப்படும். பொறியுணர்வு மனமின்றிப் பிறவாதெனின் முற்பிறந்தது மனவுணர்வா மாகவே பொறியுணர் வென்பது ஓரறிவின் றாகியே செல்லும் என்பது. அற்றன்றியும் ஒருவன் உறுப்பிரண்டு தீண்டியவழி அவ்விரண்டும் படினும் ஒரு கணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப் பிரண்டற்கும் ஊற்றுணர்வு கெடாது கவர்ப்ப வாங்கிக் கைக்கொண்டு மீளும் என்பது காட்டலாகாமையானும் அஃதமையா தென்பது. ஈ. மயிலை: அவர் (தொல்காப்பியர்) மனத்தையும் ஒரு பொறியாக்கி அதனான் உணரும் மக்களையும் விலங்கினுள் ஒரு சாரவற்றையும் ஆறறிவுயி ரென்றார். இவர் அம்மனக்காரிய மிகுதி குறைவாலுள்ள வாசியல்லது அஃது எல்லா வுயிர்க்கும் உண்டென்பார் மதம் பற்றி இவ்வாறு சொன்னார் என்க. (நன்னூல் 448) அறுசீரடி அ. அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே (தொ.பொ.370) ஆ. அறுசீர் முதலா நெடியவை எல்லாம் நெறிவயின் திரியா நிலத்தவை நான்காய் விளைகுவ தப்பா இனத்துள விருத்தம் (காக்கை) அறுசீர் எழுசீர் அடிமிக வரூஉம் முறைமைய நாலடி விருத்தம் ஆகும் (சிறுகாக்கை) அறுசீர் எழுசீர் அடிமிக நின்றவும் குறைவில் நான்கடி விருத்தம் ஆகும் (அவிநயம்) ஆறு முதலா எண்சீர் காறும் கூறும் நான்கடி ஆசிரிய விருத்தம் (மயேச்சுரம்) கழிநெடில் அடிநான் கொத்திறின் விருத்தம் அழியா மரபின தகவ லாகும். (யா.வி.77) குறைவில்தொல்சீர், அகவல், விருத்தம் கழிநெடில் நான்கொத் திறுவது (யா.கா.30) தொல் கழிநெடிலாய், ஆன்றடி நான்கொத் திடிலா சிரிய விருத்தமன்றே (வீ.சோ.122) கழிநெடில் அடிநான் கொத்திறின் அகவல் விருத்தம்........ (இ.வி.735) (மு.வீ.யா.27) விருத்த விகற்பம் விளக்கிய காலை (தொ.வி.248) இ. இளம்: (ஆசிரியப் பாவிற்கு உரியதோர் மரபு உணர்த்துதல்) அறுசீரடி ஆசிரியத் தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம் நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண் என்றவாறு. ''சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணுமன்னே" என்பதன்கண் முதலடி நாற்சீரான் வந்தது; இரண்டாமடி ஆசிரியத் தளையொடு பொருந்தி அறுசீரடியாகி வந்தது. 'பொருந்தி என்றதனான் அத்தளை சில வருதல் கொள்க. ஏனையவை புணருஞ்சீரான் வந்தன. பேரா: (முறையானே அறுசீரடியும் கலிப்பாவிற்கு உரித்தென்கின்றது) நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடியும் வருதலுமுண்டு. அன்னது வருங்கால் தனக்குரிய வெண்டளையே அன்றி, ஆசிரியத்தளையொடும் வழக்குப்பெற்று நடக்கும் கலிப்பாவினுள். நெறிபெற்றுவரும் என்றதனால் சிறுபான்மை நேரடி இடையிட்டன்றி ஒருசெய்யுள் முழுவதூஉம் தானே வருதலும் கொள்க. ஆசிரியாத்தளை யொடும் என்ற உம்மையால் கலி தனக்குரிய வெண்டளையான் வருதலும் மயங்கி வருதலும் உரியவாம். முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோதம் மூழ்கிப் பெயர அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் றலறிப் பெயருந் தன்மை மடவார் தணந்துகுத்த வெண்முத்தம் புன்னையரும் பேயென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர் என்பது மூன்றாம் அடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீர் வந்தது. கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவில் அஞ்சுக நும்மை வரையர மங்கையர் வௌவுதல் அஞ்சுதும் வார லையோ என்பதன் முதலடியுள் 'வருதி ராயின்' என்பது ஆசிரியத்தளை; ஒழிந்தன வெண்டளை. முன்னென்றதனான் இடமுன்னும் கால முன்னும் கொள்ளப் படும். தொக்குத் துறைபடியும் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோண்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருட் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க்கென்னும் பெய்கல்லார் மீண்டுகரைக் கேசொரிந்து மீள்வார் காணார் எக்கர் மணற்கிளைக்கும் ஏழை மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை எனச் செய்யுள் முழுவதும் அறுசீரடியே வந்தது. ''வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதல் பொருட்டு வந்தோய்" என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. மற்றுத்தளையென்றோதுவது, கட்டளையடிக் கென்றிரால் ஈண்டுத் ளையென்ற தென்னை எனின், அவ்வரையறை ஒருவன் சொல்லு வது; அறுசீரடி வருங்கால் முதற்கண் நேரடிதூங்கிப் பின் இருசீ ரொடு தொடுத்தல் வேண்டும் என்னும் அஃது இச்சூத்திரற்கேலாது; நேரடிமுன் அறுசீர் வரின் என்பது பதின் சீரடியாமாகலின், அல்லதூஉம் குறளடி தூங்கியும் சிந்தடி தூங்கியும் அறுசீரடி வருதலின் அஃது அமையாதென்பது. என்னை, ''வாராது நீத்தகன்றார்; வருமாறு பாத்திருந்தார்; வடிக்கண்போல" என்றவழி இருசீரான் யாத்தமையின் அது தூக்கெனப் படாது. ''செங்காந்தள் கைகாட்டும் காலம்; சேட் சென்றார் வாரார் கொல் பாவம்" என முச்சீரான் யாத்தமையின் அதுவும் தூக்கெனப்படாது; அறுசீரடியே தூக்காகக் கொண்டமை யின், நேரடிமுன் இருசீரடி வந்த தென்ற தூஉம் பிழைக்கும் என்பது. நச்: (கலிக்கு ஐஞ்சீரடி எய்தியதன் மேலே அறுசீரடியும் எய்துவித்தல்) நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரிய வெண்டளை யோடன்றி ஆசிரியத்தளையோடு வழங்கப் பெற்று நடக்கும் கலியினுள். முன் என்றதனை இடமுன்னாகவும் காலமுன்னாகவும் கொள்க. தளை யொடும் என்ற உம்மையான் தனக்குரிய வெண்சீர் வெண்டளை யான் வருதலும் மயங்கி வருதலும் பெற்றாம். கட்டளையன்றேற் றளையென்றதனை நாற்சீரடிக்குத் தளைகோடல் இன்றென்றார்; இவற்றிற்குத் தளை வரையறையின்று; இவற்றைப் பின்னுள்ளோர் இனமென்பர். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் அ. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொ.பொ.74) ஆ. ''பார்ப்பன வாகை... (பு.வெ.8) ''நாற்குலப் பக்கம்". (வீ.சோ.15) அறுவகைப்பட்ட பார்ப்பன வாகையும் (இ.வி.613) கேள்வியான் சிறப்பெய்தியானை வேள்வியான் விறல் மிகுத்தன்று (பு.வெ.வாகை. 9) இ. இளம்: (வாகைத் திணைப்பாகுபாடு(களுள் ஒன்று)). நச்: ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். ஆறு பார்ப்பியல் என்னாது வகை என்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை, ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கண முமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து; அதர்வமும் வேள்வி முதலிய ஒழுக்கங்கூறாது பெரும் பான்மையும் உயிர்கட்கு ஆக்கமே யன்றிக் கேடுஞ்சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றொடு கூறப்படாதாயிற்று. ஆறங்கமாவன உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும் போதானீயம் பாரத்து வாசம் ஆபத்தம்பம் ஆத்திரேயம் முதலிய கற்பங்களும் நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும் செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாகும். தரும நூலாவன உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும் அவரவர் அதற்கு மாறுபடக்கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஒத்தாமென்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாரும் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பையும் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமும் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம். இனி ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைக்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோன் உணர்வு வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன் தன்மையும் ஈதனியற்கையுமாம். வேட்ட லாவது ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கலமரபினாற் கொடைச் சிறப்புத் தோன்ற அவி முதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி; வேளாண்மை பற்றி வேள்வி யாயிற்று. வேட்பித்தலாவது வேள்வியாசிரியர்க்கு ஓதிய இலக்கண மெல்லாம் உடையனாய் மாணாக்கற்கு அவன்செய்த வேள்விகளாற் பெரும் பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல். இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலியவற்றான் உணர்க. கொடுத்தலாவது வேள்வி யாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டுவந்தோரும் இன்புறு மாற்றான் வேளாண்மையைச் செய்தல். கோடலாவது கொள்ளத் தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியும் தாஞ்செய்வித்த வேள்வி பற்றியும் கொடுக்கின்றான் உவகை பற்றியும் கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியும் தலை இடை கடை என்பனவும் கொள்க. இனி வேட்பித்தலன்றித் தனக்கு ஓத்தினாற் கோடலும் கொடுப்பித்துக் கோடலும் தான் வேட்டற்குக் கோடலும் தாயமின்றி இறந்தோர் பொருள் கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலும் துரோணாசாரி யனைப் போல்வார் படைக்கலன் காட்டிக் கோடலும் பிறவும் கோடற் பகுதியாம். யாப்பியல் என்னாது பக்கம் என்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட் கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத் தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சில தொழிற்கு உரியர் என்பது கொள்க. ''ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி" (பதிற்றுப். 24) இஃது அந்தணர்க்குக் கூறியபொது. ஈ. நாவலர்: (வாகையின் சிறப்புவகைகளைக் கூறுகின்றது) அறுவேறுவகை மரபினரான பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பாயும். அறுவகைப்பட்ட பார்ப்பனர் என்றதனால் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையார் என்பது தெளிவு. இதனை அடுத்து அரசர் ஏனோர்களுக்கு மரபால் வகையெண் கூறப்படுதலின், பார்ப்பனர் அறுவகையும் அவர்தம் மரபு பற்றியதே யாகும்; மரபுச் சொல் குடிவகை குலமுறை வழக்காறுகளைக் குறிக்கும். இனி, ஆறு தொழிலுடைமையால் பார்ப்பார் அறுவேறுவகையினரா காமை வெளிப்படை. ஓதுவியாது ஓதும்வகையார். ஓதாது ஓதுவிக்கும் வகையார் என்ற முறையில் ஒவ்வொரு தொழில் வகையால் பார்ப்பாரை வெவ்வேறு மரபினராய் வகுப்பது யாண்டும் கேட்கப்படாதது. இன்னும் இரு பிறப்பாளருள் ஆறு தொழிலில் பின்னோக்கின்றிப் பார்ப்பார்க்குச் சிறப்புரிமை மூன்றே; ஏற்றல், வேட்பித்தல், ஓது வித்தல். இவை வீறுதரும் பெற்றியவன்றாதலின், வாகை வகையாகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும் உயிர் செகுத்துண்டு வேட்ட லும், வேதனத்துக்கு ஓதுவித்தலும் வெற்றிக்குரிய வாகையாகத் தமிழர் கொள்ளார். அவை வாகை வகையாய்ப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இங்குக் கருதற்கில்லை. எனவே, இக்காலப் பார்ப்பார் எண்ணாயிரவர், மூவாயிரத் தவர், வடமர், சோழியர் என வெவ்வேறு மரபினராதல் போல, முற்காலத் தமிழகத்தும் பார்ப்பார் மரபால் ஆறுவகை பிரிந்தவராதல் இயல்பு. இனி, அறுவகை வைதிக மதமரபாக அறுவகைப்பட்டவராதலும் கூடும். எனைத்து வகையாயி னும், இங்கு மரபால் அறுவகையிற் பிரிவுடைய பார்ப்பார் பரிசு குறிப்பதல்லால் அவர் அனைவருக்கும் பொதுவாகும் வினையால் அவரை அறுவகைப்படுத்தல் தொல்காப்பியர் கருத்தன்மை ஒருதலை. தொடக்கத்தில் தென்தமிழ் வரைப்பில் வந்து புகுந்த வம்பப் பார்ப்பார் மிகச் சிலராவர். மரபால் அன்னோர் அறுவகையராதல் அக்காலத்து அனைவரும் அறிந்ததொன்றாகலின்வகை விரியாது அதன் தொகை கூறப்பட்டது. யாவரும் அறிவதைக் கூறுதல் மிகையாதலின்; இருசுடர் மூவேந்தர், நானிலம் என்புழி, சுடர்வகை வேந்தர் குடிவகை நிலவகைகளை விரித்தல் வேண்டாதது போல; இதற்குப்பின் 'ஐவகை மரபின் அரசர்', 'இருமூன்று மரபின் ஏனோர்' என அனைவரும் அறிந்த அவர் மரபுவகை விரியாது தொகை எண்ணாற் குறிப்பதுபோல, அக்காலம் யாவருமறிந்த பார்ப்பனர் மரபுவகை ஆறாதலின் எண்மட்டும் கூறப் பட்டது. க.வெ. தமிழகத்தில் பண்டை நாளில் வாழ்ந்த பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையோர் என்பதற்குத் தமிழ்நூல்களில் எத்தகைய குறிப்பு மில்லை. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் (திருக்.560) என்றாங்கு அவர்கள் அறுவகைப்பட்ட தொழிலுடையோராகவே தமிழ் நூல்களில் பேசப்படுகின்றனர். அன்றியும் இங்கு எடுத்துரைக்கப்படும் வாகைத் திணை என்பது, தத்தமக் குரிய தொழிற் கூறுகளை மிகுதிப்பட வளர்த்த லையே சுட்டுவ தாதலின் ஈண்டு அறுவகை ஐவகை இருமூன்றுவகை எனக் குறிக்கப்பட்டன. மக்களுக்குச் சிறப்புவகையாற் கூறப்படும் தொழிற் கூறுகளேயாகும். பிற்காலத்திற்போன்று பிறப்புவகையாற் கூறப்படும் குலப்பகுப்பு எனக் கொள்ளுதல் பொருந்தாது. தமிழகத்தில் நால்வருணப்பாகுபாடு என்று இல்லாமையால் ஆரியர் கலப்பிற்குப்பின் பிற்காலத்துப் புகுந்த மிருதிநூற் கோட்பாடுகளை இயைத்துத் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு நச்சினார்க்கினியர் முதலிய பிற்கால உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரை தொல்காப்பியனார் கருத்துக்கு ஒத்ததன்று என வற்புறுத்துவதே நாவலர் பாரதியார் அவர்கள் எழுதியுள்ள உரைப்பகுதியின் நோக்கமாகும். ஆகோள் அ. 'ஆகோள்' (தொ.பொ.61, பு.வெ.1) (இ.வி.603) ஆ. வென்றார்த்து விறல்மறவர் கன்றொடும் ஆதழீயன்று (பு.வெ.8) இ. இளம்: (வெட்சித்துறைக்குள் ஒன்று) ஆண்டுளதாகிய நிரையைக் கோடல். நச்: திரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இவராக நிரையகப் படுத்தி மீட்டலும் நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும். ஈ. நாவலர்: ஆனிரை கொள்ளுதல். உ. ஆ.கு: 'ஆதந்தோம்பல்' என்னும் புறத்துறையும், ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்.... நும்மரண் சேர்மினென" வரும் புறப்பாடலும் எண்ணத் தக்கவை. ஆ ஆய் தாய்; கோ தெய்வம் என்பவையும் ஆவின் சிறப் புணர்த்தும். ஆதந்தோம்பல் காண்க. ஆசிரிய அடி அ. 1. இன்சீர் இயைய வருகுவ தாயின் வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே (தொ.பொ.338) 2. அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் ஒன்றுத லுடைய ஒரோவொரு வழியே. (தொ.பொ.339) 3. ஐவகை அடியும் ஆசிரியக் குரிய (தொ.பொ.359) 4. விராஅய் வரினும் ஒரூஉநிலை இலவே (தொ.பொ.360) 5. இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்பவும் உளவே. (தொ.பொ.368) 6. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப. (தொ.பொ.369) 7. அறுசீர் அடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே (தொ.பொ.370) ஆ. வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே. (பல்காயம்.) வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே. (நத்தத்தம்) ஆசிரியப் பாவில் அயற்பா அடிமயங்கும் (நாலடி நாற்பது) இயற்சீர் வெள்ளடி வஞ்சியடி இவை அகப்பட வரூஉம் அகவலும் உளவே. (யா.வி.29) வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார் (யா.வி.31) இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப் படாவல்ல; வஞ்சிமருங்கின் எஞ்சா அகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமும் நண்ணும் கலியினுள்ளான் முயக்கப் படும்முதற் காலிரு பாவும் முறைமையினே. (யா.கா.41) இயற்சீர் வெள்ளடி வஞ்சியடி இவை மயக்கப் படுதலும் வெண்சீர் வெள்ளடி கலியடி ஒரோவழி அகவலுள் கலத்தலும் வெள்ளடி அகவல் கலியுளும் அகவலும் கலியும் ஒரோவழி வெண்பா அடியும் வஞ்சியுள் மயங்கி வருதலும் ஐஞ்சீர் அடிகலி அகவலொ டருகி வந் தடுத்தலும் கடிநிலை யின்றே கருதுங் காலை (இ.வி.745) இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவற் பாவினுள் அடையப் பெறுமே. (மு.வீ.யா.ஒ.13) வஞ்சியுள் அகவல் அடிகலி அடியும் விரவி வரப்பெறும் விளம்புங் காலே. (மு.வீ.யா.ஒ.14) கலியினும் அகவ லினுமைஞ் சீரடி வருவதும் உளவென வகுத்தனர் புலவர் (மு.வீ.யா.ஒ.15) இ. இளம்: 1. (ஆசிரியப்பாவிற்கு உரியசீர் உணர்த்துதல்) இனிய ஓசை பொருந்தி வருவதாயின் ஆசிரிய அடிக்கு வெண்பா வுரிச்சீர் வரையார் ஆசிரியர். 2. இன் சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய அடிக்கண் வரும். 3. (ஆசிரியப்பா நாற்சீரான் வரும் என்பதூஉம் அதன்கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் உரிய என்பதூஉம் உணர்த்துதல்). நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற்குரிய. ஐவகை அடியும் உரிய என, அவற்றிற்கு முதலாகிய நாற்சீரடியும் உரித்தாயிற்று. 4. (மேற்சொல்லப்பட்ட அடி விரவி வருமாறு வரையறுத்து உணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட ஐந்தடியும் தனத்தனி ஆசிரியப் பாவிற் குரியவாக வருதலேயன்றி விரவி வரினும் நீக்கப்படாது. 'ஒரூஉநிலை' என்றதனால், தனித்தனி வரினும் விரவி வரினும் ஒக்கும் என்று கொள்க. 5. (ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்குமாறு உணர்த்துதல்) இயற்சீர் வெண்டளையானாகிய வெண்பாவடி ஆசிரியப் பாவின் கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவும் உள. உள என்பதனால் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க. வெண்டளை என்னாது அடி என்றதனால் தளைவிரவுதல் பெரும் பான்மை, அடிவிரவுதல் சிறுபான்மை என்று கொள்க. 6. இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள. 'உண்டு' என்னாது 'உள' என்றதனான் ஒருபாட்டிற்பல வருதலும் கொள்க. 7. அறுசீரடியாசிரியத்தளையொடு பொருந்தி நடைபெற்று வரூஉம், நேரடிக்கு முன்னாக ஆசிரியப்பாவின்கண். 'பொருந்தி' என்றதனான் அத்தளை சில வருதல் கொள்க. ஏனையவை புணருஞ்சீரான் வந்தன. பேரா: 1. (கட்டளையடியல்லாதவழிச் சீர்மயங்குமாறு உணர்த்துதல்) இன்னோசைத்தாகிய துணிவிற்றாகிவரின் ஆசிரிய அடிக்கண் வெண்சீரும் வரப்பெறும். வருகுவதாயின் என்று ஒருமை கூறினமையானும் இயைய என்றத னானும் ஓரடிக்கண் ஒன்றேயாண்டும் வருவதெனக் கொள்க. 2. (வஞ்சியுரிச்சீர் ஆசிரிய அடிக்கண் மயங்குமாறு உணர்த்துதல்) கட்டளையடியல்லாதவழி இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச் சீர்களும் ஒரோவழி ஆசிரியத்துள் வரப்பெறும். 3. (மேல்வகுக்கப்பட்ட அடியினை இன்ன பாவிற்குரிய அடி இவை யென்று கூறாதான் அது கூறினமை). நாலெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உணர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியத்திற்குரிய. ஐவகையடியும் ஓராசிரியத்துக்கண் வரல்வேண்டுமோ எனின் அன்ன தொரு வரையறை உண்டே, வரையாது கூறினமையின் அவை எல்லாவற் றானும் வருக. வருங்கால் ஐந்தும் ஆசிரியத்துக்கு உரிய என்பதே கருத்து. 4. தளை விரவிவரினும் ஒருவப்படா தளைமயங்காதனவே தளைவகையடி எனவும், அல்லன கட்டளை யடியாகாவெனவும் கோடும் என்பது. அஃதேல் தளைமயங்கின அடிக்கும் பதினேழ் நிலமும் கோடுமோ எனின் கோடுமன்றே! விராய் வரினும் என்ற உம்மை இறந்தது தழீஇயிற்றாகலின் என்பது. 5. அம்மயங்கியல்வகைதான் அப் பாவிற்கு உரிமைபூண்டு நிற்கும்; ஆசிரிய அடியோடு கூடிய கூட்டத்துக்கண். வெண்பாவினுளாயின் ஆசிரிய அடி முழுவதும் தன்றளையோடு வாராது. முழுவதூஉம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையு மாகலின். எனவே வேறோசை விராயவழித் தன்னோசை அழிதல் இதற்குப் பெரும்பான்மையாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு அழியாதென்பது கருத்து. என்போலவோ எனின் பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையால் பளிங்குவேறு படினல்லது பஞ்சி வேறுபடாத வாறு போல என்பது. 6,7. இவற்றை (ஐஞ்சீர் அறுசீர் அடிகளை)க் கலிப்பாவுக்குக் காட்டுகிறார் பேராசிரியர். நச்: 1. இனிய ஓசை பொருந்தவரும் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும். 2. கட்டளையல்வழி இன்சீர் இயையவரின் வஞ்சிச் சீர்களும் ஒரோவோர் வழி ஆசிரியத்துடன் பொருந்துதல் உடைய. 3. நாலெழுத்து முதல் இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியப்பாவிற்குரிய. 4. ஆசிரியம் இருபத்துமூன்று தளையிற் சில வழுவினும் முற்கூறிய பதினேழ் நிலத்தினொன்று குறைந்து பதினாறு நிலத்தின் நீங்கி வாரா. 5. இயற்சீர் வெண்டளை ஆசிரியச்சீரான் வரும் வெள்ளடி ஆசிரியப் பாவின்கண் நிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும். இதனானே, மயங்காமல் இயற்சீர் வெள்ளடி முழுதும் வரவும் பெறுமென்றுங் கொள்வாரும் உளர். 6. வெண்பாவோடும் கலிப்பாவோடும் விராஅயும், ஆசிரியப் பாவோடு விராஅயும் வரும் ஐஞ்சீரடியும் உளவென்று கூறுவர் புலவர். 7. நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரிய வெண்டளை யோடன்றி ஆசிரியத் தளையோடு வழங்கப்பெற்று நடக்கும் கலியினுள். உ. ஆ.கு: ஆசிரியப்பாவினுள் இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பா அடியும், வஞ்சியடியும் வந்து மயங்குதலும் அவ்விருவகை அடியுமே யன்றி, வெண்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடியும் கலியடியும் அரிதாக வந்தும் மயங்கும் என்பதாம். இயற்சீர் வெண்டளை, ஈரசைச்சீராகலின், ''ஈரசைநாற்சீர் அகவற் குரிய" தாம் என்னும் இலக்கணத்தொடு பொருந்திற்றாம். ஆசிரிய வழிப்பட்டது வஞ்சியாகலின் அஃதிணைந்து வருதல் இயைபுடைய தாயிற்று. எஞ்சிய வெண்சீர் வெண்டளையடியும் கலியடியும் மூவசைச் சீராகலின் அருகி யன்றி வாரா எனக் கொள்க. ஆசிரிய உரிச்சீர் அ. 1. (இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை) உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். (தொ.பொ.321) 2. முன்நிரை இறினும் அன்ன ஆகும். (தொ.பொ.322) 3. வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை இலவே. (தொ.பொ.331) ஆ. ஒரோஒ அசையினா லாகிய ஈரசைச் சீஇர் இயற்சீர் என்னப் படுமே. (காக்கை) இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர். (காக்கை) ஈரசைச் சீர்நான்கு இயற்சீர் (அவிநயம்) ஈரசை கூடிய சீரியற் சீரவை ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே. (யா.வி.11) நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரையென் றீரிரண் டென்ப இயற்சீர்த் தோற்றம் (யா.வி.11 மேற்.) ஈரசை நாற்சீர் அகவற் குரிய (யா.கா.6) தேமாபுளிமா கருவிளம் கூவிளம் சீரகவற்காம் (யா.கா.7) அசையிரண் டொன்றின் முற்சீர் (வீ.சோ.யா.1) கருவிளங் கூவிளம் தேமா புளிமா எனக்கலந்து மருவிய நான்கு முதற்சீர்களாம் (வீ.சோ.யா.2) ஈரசை கூடிய சீரியற் சீரஃ தீரிரண் டாமவை அகவற் கிசைதலும் (இ.வி.716) நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை ஈரசை இயற்சீர் ஈரிரண்டு (தொ.வி.204) நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம் ஆகுநாற் சீரும் அகவற் குரிய (மு.வீ.யா.3) இ. இளம்: 1. (ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல்) (இயலசை மயங்கிவந்தன இயற்சீர் எனப்படும்) உரியசை மயங்கிவந்தன ஆசிரிய உரிச்சீர் எனப்படும். மயங்குதலாவது ஒருங்கு வருதல். உரியசையாகிய நேர்பும் நிரைபும் என்றவற்றைத் தம்மின் உறழ நான்கு சீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும். 2. (இதுவும் ஆசிரிய உரிச்சீராமாறு உணர்த்துதல்) நேர்பசை நிரைபசைப்பின் நிரையிறுதியும் ஆசிரிய உரிச்சீராம் என்றவாறு. 3. வெண்பா வுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவினது நேரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை. பேரா: 1. இயலசையும் உரியசையும் வேறுவேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச் சீர் உணர்த்துகின்றது. நேர்புநேர்பு நிரைபுநேர்பு நிரைபுநிரைபு நேர்புநிரைபு என்பன நான்கும் ஆசிரிய உரிச்சீர். ஆசிரிய உரிச்சீரை வீடுபேறு வரகுசோறு தடவுமருது பாறுகுருகு எனவுங் காட்டுப. ஆசிரிய உரிச்சீர் என்றதூஉம் (அவ்வாறே) ஆட்சியும் குணனும் நோக்கிய பெயர். ஆட்சி; ''வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்" (335) எனவும் பிறாண்டும் ஆகுப. உரியசை மயக்கமாகலானும் ஆசிரியத் திற்குரிமை யானும் இக்குறி குணங்காரணமாயிற்று. மற்றிவை இயற்சீர்போல ஓரோர் சொல்லாய் யாண்டும் நிற்ற லில்லை. பிறவெனின், அற்றன்று, தோன்றுவாக்கு, இரங்குவாக்கு என்றாற் போல்வன உளவென்பது. இனி இயற்சீர் தாமும் இரண்டு சொற்கூடியும் ஒன்றாகிய வழியே சீரெனப்படும். அதுபோல இவையும், ''எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய" என்பதனான் ஒருசொல்லாயின எனினும் அமையும். 2. (இயலசையும் உரியசையும் மயங்கியாவன கூறுகின்றது) உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் (13) என மேனின்ற அதிகாரத் தான் அவ்வுரியசைப் பின்னர் நிரையசையுறினும் அவ்வுரியசை மயக்க மாகிய ஆசிரியவுரிச்சீராம். அவை நேர்புநிரை, நிரைபுநிரை எனவரும். இவற்றை நீடுகொடி நாணுத்தளை குளிறுபுலி விரவுக்கொடி எனவும் பிறவாற்றானும் (களிற்றுக்கணம், விரவுத்தளை) காட்டுப. மற்று இயலசையும் உரியசையும் விரவி இயற்சீராவன இலவோ எனின் உள; அவையன்றே மேற்சொல்கின்றன என்பது. அஃதேல், இவ் விரண்டும் இயற்சீராகாவோ எனின், 'அன்ன' என்று மாட்டெறிந்த கருத்தினான் அதுவும் அமையும் என்பது. என்றார்க்கு இவற்றை ஆசிரிய உரிச்சீர் என்றல் குற்றமாம் பிறவெனின், பெரும்பான்மையும் ஆசிரியத் திற்கும் அதற்கு இனமாகிய வஞ்சிக்கும் உரியவாகலானும் ஒழிந்த இரண்டு பாவின்கண்ணும் சிறுவரவின ஆகலானும், வெண்பா வினுட் கட்டளையடிக்கண் வாராவென்பது 'கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ" (24) என வரைந்தமையாற் பெறுதுமாகலானும் இவற்றை ஆசிரிய உரிச்சீர் என்றலே வலியுடைத்தென்பது. 3. (கட்டளையாசிரியப் பாவினுள் அடியுறழப்படாத சீர் இவை என்கிறது) வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் ஆசிரியப்பாவிற்கு ஒப்பவரும் நிலைஇல. 'இன்பாநேரடி' என்பது ஆசிரிய அடி என்றவாறு. 'ஒருங்கு' என்றதனான் இயற்சீராகிய தன்சீரேபோல வெண்சீரும் வாராதென்ப தாம். இயலசை மயங்கினவே இயற்சீர் எனப்படுவன எனவும், உரியசை மயங்கினவே ஆசிரிய உரிச்சீரெனப்படுவன எனவும் முன்னர்ச் சொல்லிப் போந்தானாகலின் ஈண்டு உரியசை மயக்கத்தினையே ஆசிரிய உரிச்சீரென்றான். எனவே நீடுகொடி, குளிறுபுலி என்னும் இரண்டாசிரியவுரிச்சீரும் ஆசிரியத்து வந்து அடியுறழும் என்பது ஈண்டுக் கொள்ளப்படும். நச்: 1. (இது முறையானே இயலசையும் உரியசையும் வேறுவேறு தம்முள் மயங்கி வரும் ஈரசைச் சீர் உணர்த்திற்று). இயலசை மயங்கினவற்றை இயற்சீர் என்றும், உரியசை மயங்கின வற்றை ஆசிரியவுரிச்சீரென்றும் கூறுக. நேர்பு நேர்பு, நிரைபுநிரைபு எனத் தம்மொடு தாம் மயங்கின. இரண்டினையும் பிரித்து நேர்பு நிரைபு, நிரைபுநேர்பு எனப் பிறிதொடு மயக்க இந்நான்கும் ஆசிரிய உரிச்சீராயின. இவற்றை வீடுபேறு தடவுமருது, பாறுகுருகு, வரகுசோறு எனக் காட்டுப. ஆசிரியத்திற்கு உரிமையான உரிச்சீர் என ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர். 2. (இயலசையும் உரியசையும் மயங்கிச் சீராமாறு கூறுகின்றது). உரியசைமயக்கம் ஆசிரிய உரிச்சீர் (13) என்ற அதிகாரத்தான் அவ் வுரியசை முன்னர் நிரையசை வரினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரிய உரிச்சீராம். நீடுகொடி, நாணுத்தளை, உரறுபுலி, விரவுகொடி எனவரும். 3. (கட்டளை ஆசிரியத்திற்கு அடியுறழப்படாத சீர் இவை என்கிறது). வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கட்டளை ஆசிரியப்பாவில் வரும் அளவடிக்குப் பொருந்த நிற்றலின்று. எனவே, நீடுகொடி, உரறுபுலி என முன்னிரையீற்ற இரண்டும் உறழும் என்பது ஈண்டுக் கொள்க. கட்டளையடிக்கு இங்ஙனம் வருமெனவே சீர்வகையடிக்கு வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் பொருந்தவரும் என்றுணர்க. உ. ஆ.கு: மாமுன் நேரொன்றுவது நேரொன்றாசிரியத்தளை; விளமுன் நிரையொன்று வது நிரையொன்றாசிரியத்தளை. இத்தளைகள் ஆசிரியப்பாவிற்குச் சிறப்புரிமை உடையன. எனினும், இத்தளைக ளோடு ஈரசைகள் ஒன்றாமை யால் வரும் இயற்சீர் வெண்டளை வெண்பாவிற்கு உரிமை பூண்டது எனினும் ஈரசைகள் இயை புடைமையால், ''ஈரசை நாற்சீர் அகவற்குரிய" என்னும் பொதுவிதிக்கு உட்பட்டதாகலின் ஏற்புடையதாயிற்று. தொல்காப்பியர் நாளில் நேர், நிரை அசைகளுடன் நேர்பு, நிரைபு அசை களும் (குற்றியலுகர ஈற்றான் அமைந்த நேர், நிரை அசைகளும்) வழக்கில் இருந்தமையான் அவற்றை, ஆசிரியச்சீர் என்னாராய்த்தழுவு வகையால் 'ஆசிரிய உரிச்சீர்' எனக் கொண்டார் என்க. ஆசிரியச்சீர் அல்லது அகவற்சீர் என்பதற்கும் ஆசிரியவுரிச்சீர் அல்லது அகவலுரிச்சீர் என்பதற் கும் உள்ள வேறுபாடு கண்டு கொள்க. அதற்கே உரியது அச்சீர்; அதற்கு உரிமையால் இயைந்தது உரிச்சீர். ஆசிரியத்தளை அ. சீரியல் மருங்கின் ஓரசை ஒப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும் (தொ.பொ.362) ஆ. இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்பம் இலவாய் விரவி நடப்பின் அதற்பெயர் ஆசிரியத்தளை யாகும். (காக்கை) ஈரசை இயற்சீர் ஒன்றிய தெல்லாம் ஆசிரி யத்தளை என்மனார் புலவர். (மயேச்சுரம்) நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின் யாவரும் அறிய ஆசிரி யத்தளை (மயேச்சுரம்) ஈரசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே. (அவிநயம்) ஈரசைச் சீர்நின் றினிவரும் சீரொடு நேரசை ஒன்றல் நிரையசை ஒன்றலென் றாயிரு வகைத்தே ஆசிரியத் தளையே. (யாவி.19) தன்சீர் தனதொன்றின் தன்தளையாம் (யா.கா.10) நேர்நேர் ஒன்றல் நிரைநிரை ஒன்றலென் றாயிரு தளையும் அகவற் கியைதலும் (இ.வி.718) ஆசிரி யத்தளையாம் இயற்சீர் ஒன்றல் (தொ.வி.207) மாமுன் நேர் நேர் ஒன்றிய அகவல் தளையாம் விளமுன் நிரை நிரை யொன்றிய அகவல் தளையாம் ஆயுங் காலே. (மு.வீ.யா.9) இ. இளம்: சீர்கள் தம்முட் பொருந்தும்வழி நிலைமொழியாகிய இயற்சீரின் ஈறும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றா சிரியத்தளையாம்; நிரையாய் ஒன்றின் நிரையொன் றாசிரியத்தளை யாம். இரண்டையும் ஆசிரியத்தளை என வேண்டுதலின் பொதுப்படக் கூறினார். அவ்வழி வருஞ்சீர் இயற்சீராயிற் சிறப்பின்றெனவும் கொள்க. பேரா: (கட்டளையடிக்கண் இயற்சீர் தட்குமாற உணர்த்துதல்) (பாடம்: சீரியை) இயற்சீர் பத்தும் பிறிதொன்றனோடு இயையுங்கால் அவை தத்தம் ஈற்றசை ஒன்றி, வருஞ்சீரின் முதலசையோடொப்ப நிற்பின் ஆசிரிய வடிக்குந் தட்கும் முறைமையென் றறியப்படும். ஒப்பின் ஆசிரியத்தளை எனவே ஒவ்வாதொழியின் வெண்டளை என்று எதிர்மறுத்துக் கொள்ளப்படும். ஈரசை ஒப்பின் என்பது பாடமாக உரைப்பின் நேரும் நிரையும் ஒன்றின் என்றவாறுமாம் எனக்கொள்க. நச்: (இது கட்டளையடிக்கட் பத்தியற்சீருந்தட்குமாறு கூறுகின்றது) (பாடம் சீரியை) இயற்சீர் பத்தும் பிறசீரோடு இயையுங்கால் தத்தம் ஈற்றசை வரும் சீரின் முதலசையோ டொன்றின் அஃது ஆசிரிய வடிக்குத் தட்கும் முறைமை என்றறியல் வேண்டும். ஒப்பின் எனவே ஒவ்வாதது இயற்சீர் வெண்டளை என்று எதிர் மறுத்துக் கொள்ளப்படும். உ. ஆ.கு: தளை கட்டு; தளைத்தல், கட்டுதல்; யாத்தல், தளைதல் (கட்டல்) ஆகலின் யாப்பில் அதற்கு இடமுண்டாயிற்றாம். எழுத்து, அசை, சீர், அடி என்பனபோலத் தளை என ஓர் உறுப்பு இல்லை எனினும் சீரை இயைத்து அடியாக்கும் வினைமாட்சிமையுடையது தளையாதலின் பிற்காலத்தவர்கள் அதனையும் யாப்புறுப்பாக்கிக் கொண்டனர். ''எழுத்தசை சீர்தளை அடிதொடை பாவினம்" என அவர்கள் எண்ணினர். ஆசிரியத்துள் முச்சீரடி அ. 1. ஈற்றயல் அடியே ஆசிரிய மருங்கின் தோற்ற முச்சீர்த் தாகும் என்ப. (தொ.பொ.374) 2. இடையும் வரையார் தொடையுணர்ந் தோரே. (தொ.பொ.375) ஆ. ஈற்றதன் மேலடி ஒருசீர் குறையடி நிற்பது நேரிசை ஆசிரி யம்மே. (அவிநயம்.) இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி பெறுவ நேரிசை யாசிரி யம்மே. (சிறுகாக்கை.) அந்த அடியின் அயலடி சிந்தடி வந்தன நேரிசை ஆசிரி யம்மே. (யா.வி.71) கடையயற் பாதம் முச்சீர்வரின் நேரிசை (யா.கா.29) ஈற்றயல் முச்சீர் வரின்நேரிசையாம். (வீ.சோ.115) அந்த அடியின் அயலடி சிந்தடி வந்திடின் நேரிசை ஆசிரியம் (இ.வி.734) ஈற்றயல் சிந்தடி இயைந்து வருமே. (தொ.வி.224) ஈற்றய லடிமுச் சீராய் வருவது நேரிசை யகவற் பாவாகும்மே. (மு.வீ.யா.23) இ. இளம்: 1. (ஆசிரியப்பாவிற்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல்) ஆசிரியப்பாவின் ஈற்றயலடி தோன்றுமிடத்து முச்சீர்த்தாகவும் பெறும். 2. (இதுவும் அது) மேற்சொல்லப்பட்ட முச்சீரடி ஆசிரியப்பாவினுள் இடையும் வரப்பெறும் என்றவாறு. பேரா: 1,2 (இவை இரண்டு சூத்திரமும் உரை இயைபு நோக்கி உடனெழுதப் பட்டன. இவை ஆசிரியத்துட் சிந்தடி வருமென்றமை யின் எய்தாதது எய்துவித்தனவாம் (பாடம் தொடையுணர்வோரே). ஆசிரியத்துள் எருத்தடியொன்றும் இடையடி இரண்டுமாகி முச்சீரடி வரும். முச்சீர்த்தென்று ஒருமை கூறினமையின் அஃது ஒன்றாகலும் தொடையுணர்வோர் என்றமையின் இடைவருவன இரண்டாகலும் கூறினான் என்பது. இடையும் வரையார் என்றமையான் ஈற்றயன் முச்சீர்த்தாதல் பெரும்பான்மை. நச்: 1,2 இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடன் கூறிற்று. இவை ஆசிரியத்துள் சிந்தடி வருமென எய்தாதது எய்துவித்தது) (பாடம் தொடையுணர்வோரே). ஆசிரிய மருங்கின் ஈற்றயலடியே தன்தோற்றரவு முச்சீரை யுடைத்தாய் வரத்தோன்றும்; தொடையுணர்வோர் இடையிலும் வருதலும் நீக்கார். முச்சீர்த்து என ஒருமை கூறிய அதனால் ஈற்றயலடிக்கண் ஒன்றே வருதல் பெரும்பான்மை என்றும், தொடையுணர்வோர் என்றதனால் இடை இரண்டணைந்து வருதலும் தோற்றம் என்றதனால் இடை யொன்று வருதலும் கொள்க. உ. ஆ.கு: ஈற்றயலடி முச்சீர் வருவதே தொல்பழமரபு எனல், சங்கத்தார் அகவற் பாடல்கள் அனைத்தும் அம்முறைமையான் வெளிப்பட் டுள்ளமையால் புலப்படும். அதனையே பிற்காலத்தார் நேரிசை ஆசிரியப்பா என்றனர். இடையே சீர்குறைந்து வரும் அகவற்பாவை இணைக்குறள் ஆசிரியப்பா என்றனர். எல்லா அடியும் நாற்சீராய் வரும் வழக்கும் தோன்றியமையால் அதனை நிலைமண்டில ஆசிரியப்பா என்றனர். நிலைமண்டில ஆசிரியப் பாவின் எவ்வடியை எவ்வடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதவை யுண்டாயின் அவற்றை அடிமறி மண்டில ஆசிரியப்பா என்றனர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை முதலிய இடைக்கால இலக்கண நூல்களைக் காண்க. ஆசிரியவகை பிற்கால இலக்கண நூல்களில் வருமாறு ஈற்றதன் மேலடி ஒருசீர் குறையடி நிற்பது நேரிசை ஆசிரி யம்மே. (அவிநயம்) இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி பெறுவன நேரிசை யாசிரி யம்மே. (சி.கா.) ஈற்றயல் குறைந்த நேரிசை (மயேச்சுரம்) அந்த அடியின் அயலடி சிந்தடி வந்தன நேரிசை ஆசிரி யம்மே. (யா.வி.71) கடையயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை (யா.கா.29) ஈற்றயல் முச்சீர் வரின்நே ரிசையாம் (வீ.சோ.115) அந்த அடியின் அயலடி சிந்தடி வந்திடின் நேரிசை ஆசிரியம். (இ.வி.734) நேரிசைச் சிறுமை நேருமூ வடியே வரையா பெருமையே மற்றடி அளவடி ஈற்றயல் சிந்தடி இயைந்து வருமே. (தொ.வி.224) ஈற்றய லடிமுச் சீராய் வருவது நேரிசை யகவற் பாவா கும்மே. (மு.வீ.923) நேரொன் றாசிரி யத்தளை யான்வரல் நேரிசை யகவல் எனப்படும் எனலே (மு.வீ.யா.31) நூற்பா வென்ன நுவல்கையில் தோன்றி இரண்டாப் பிரிக்கில் சீர்நலம் என்னும் வாய்பா டுறுமைந் தசைச்சொலின் இன்றியும் நான்காப் பிரிக்கின் காய்கனி இன்றியும் மோனை வழாதும் அடியொன் றாகி ஈரடிக் கொவ்வோர் எதுகைத் தாகி இரட்டிய தொகையடி யாகி முடிவது நேரிசை யகவற் பாவெனல் நெறியே. (அ.இ.யா.5) ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே. என்னென் கிளவியை ஈறாப் பெறுதலும் அன்ன பிறவும் அந்தம் நிலைபெற நிற்கவும் பெறூஉம் நிலைமண் டிலமே. ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்னென் கிளவியை ஈறா கப்பெறும் அன்ன பிறவும் நிலைமண்டிலமே. (அவிநயம்) ஒத்த அடியின நிலைமண்டிலமே (மயேச்சுரம்) என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித் துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே. (மயேச்சுரம்) என்னென் றிறுதல் வரைநிலை யின்றே. (மயேச்சுரம்) ஒத்த அடியின தாகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே (யா.வி.74) எல்லா அடியும் ஒத்து நடைபெறு மாயின் நிலைமண்டிலம் (யா.கா.29) ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பின் நிலைமண் டிலம். (இ.வி.734) நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி (தொ.வி.225) எல்லா அடியுமொத் திறின்நிலை மண்டில அகவல் என்மனார் அறிந்திசி னோரே. (மு.வி.924) ஈற்றுறும் அடிக்கு முந்திய அடியிலீர் அசைகுறை வாகிய வேற்றுமை ஒன்றே அணைவுறும் நேரிசை அகவற் பாவே நிலைமண்டிலமென நிகழ்த்தும் அகவலே. (அ.இ.யா.6) இடைபல குறைவது இணைக்குறள் ஆகும். (அவிநயம்) இணையாம், ஏற்ற அடியின் இடைபல குறைந்தன. (மயேச்சுரம்) அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக் குறளடி சிந்தடி என்றா இரண்டும் இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும். (காக்கைப், இ.வி.734) இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும் (சி.கா.) இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே. (யா.வி.72) காமருசீர், இடைபல குன்றின் இணைக்குறள் (யா.கோ.29) இணைக்குறட்பா, ஏற்ற குறள்சிந் திடையே வரும். (வீ.சோ.115) இணைக்குறள் முதலீற் றீரடி அளவடி இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே. (தொ.வி.225) ஆதியும் அந்தமும் அளவடி யாகி குறளடி சிந்தடி என்றாங் கிரண்டும் இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே. (மு.வீ.யா.25) கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டிலம்; ஒத்திறின் நிலைமண் டிலமே. (அவிநயம்) எவ்வடி யானும் முதல்நடு இறுதி அவ்வடி பொருள் கொளின் மண்டில யாப்பே. (மயேச்.) உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி இடைப்பால் முதலீ றென்றிவை தம்முள் மதிக்கப் படாதன மண்டில யாப்பே. (காக்கை) கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர். (சி.கா.) எழுவாய் இரட்டித் திறுதி ஒன்றாய் வரினது மண்டில ஆசிரி யம்மே. (யா.வி.73 மேற்.) மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம் (யா.வி.73) நடுஆதி அந்தத் தடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே (யா.கா.29) தலைநடுஈ றாற்றிய பாதத் தகவல் அடிமறி மண்டிலமே (வீ.சோ.115) மனப்படும் அடிமுதல் இடையீ றாயின் அடிமறி மண்டில ஆசிரியம் (இ.வி.734) அடிமறி மண்டிலம் அந்நடைத் தாகி அடிமா றினும்தான் அழியா நிலைத்தே. (தொ.வி.226) மூன்றடி முதலா முடிந்தெலா அடியும் இடைக டைமுத லாயெடுத் தாலும் ஓசையும் பொருளும் உலவாது வருவன அடிமறி மண்டில அகவலா கும்மே. (மு.வீ.926) அகவலோசை வகை அகவல் ஏந்திசை அகவல் தூங்கிசை அகவல் ஒழுகிசை அகவல்மூ வகைப்படும். (மு.வீ.93) நேரொன் றாசிரி யத்தளை யால்வரல் ஏந்திசை அகவல் எனப்படும் எனலே. (மு.வீ.931) நிரையொன் றாசிரி யத்தளை யால்வரல் தூங்கிசை அகவல் எனச்சொலப் படுமே. (மு.வீ.932) இவ்விரு தளையும் பிறவும் மயங்கி வருவ தொழுகிசை யாம்வழுத் திடினே. (மு.வீ.933) ஆசிரிய நடை அ. ஆசிரிய நடைத்தே வஞ்சி (தொ.பொ.413) இ. இளம்: ஆசிரியம் போன்ற நடையை உடைத்து வஞ்சி. நடையென்றது அப்பாக்கள் இயலும் திறம். பேரா: ஆசிரியத்து விகற்பமாகித் தூங்கலோசை விரிந்தடங்கும். நச்: ஆசிரிய விகற்பமாகித் தூங்கலோசை விரிந்தடங்கும். உ. ஆ.கு: ஆசிரியம் வெண்பா வஞ்சி கலியெனப் பாக்கள் நான்கெனப் பகுத்துக் கூறப்பட்டாலும் அந்நான்கும் இரண்டாம் என்பது தொல்லோர் கருத் தாகும். நான்கும் இரண்டாகும்கால், ஆசிரியம் இயலுமாறு வஞ்சிப்பா வும், வெண்பா இயலுமாறு கலிப்பாவும் இயல்வனவாகலின் நான்கு பாவும், ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டனுள் அடங்கும் என்பதாம். ஒன்றன் வழிவந்த பாவை, அதனோடு ஒன்றாக்கிவிடலாமோ என்பார்க்கு ''ஒன்று ஒன்றனோடு ஒக்குங்காற் பிறப்பித்ததனோடு பிறந்த தொப்ப வேண்டுமென மறுக்க" எனவுரைத்தார் பேராசிரியர் (தொ.செ.107, 108). அவரே, ''ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும், ஒழிந்தன விகாரம் எனவும் கொள்க" என்பதால் இயல்பினுள் விகாரம் அடங்கும் எனவும் நிறுவினார் (தொ.செ. 107, 108). அறிவியல் ஆய்வாளர் மரம் செடி கொடிகளையும், மக்களையும் அவர்கள் பேசும் மொழிகளையும் இனப்பாற்படுத்துவதை எண்ணுதல் தகும். ஆசிரியப்பாட்டின் அளவு அ. ஆசிரியப் பாட்டின் அளவிற் கெல்லை ஆயிர மாகும் இழிபுமூன் றடியே. (தொ.பொ.459) ஆ. ஆசிரியப் பாவின் சிறுமைக் கெல்லை மூவடி யாகும் பெருமை ஆயிரம். (நத்தத்தம்) மூவடிச் சிறுமை ஆயிரம் ஆகும் ஆசிரியத்தின் பெருமை அளவே. (சங்க யாப்பு.) ஐயிரு நூறடி ஆசிரியம் வஞ்சிச் செய்யுள் நடப்பினும் சிறப்புடைத் தென்ப. (மயேச்சுரம்) வஞ்சி ஆசிரியம் என்றிரு பாட்டும் எஞ்சா மூவடி இழிபுயர் பாயிரம் (பரிமாணம்) மூவடி முதலா முறைசிறந் தேறித் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றெண்ணிரண் டெய்தும் என்ப இயல்புணர்ந் தோரே. (பரிமாணம்) சிறுமை மூவடி ஆசிரியம் (யா.வி.32) உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே உயர்பு (யா.கா.14) பெருமை ஆயிரம் (இ.வி.747) வரையா பெருமையே. (தொ.வி.224) அகவற் கொருமூன் றடிச்சிறு மையே. (மு.வீ.யா.ஒ.20) இ. இளம்: (ஆசிரியப் பாவிற்கு எல்லை கூறுதல்) ஆசிரியப்பாவின் அளவிற்கு எல்லையாவது சுருங்கினது மூன்றடி; பெருமை ஆயிரமடியாக இடைப்பட்டன எல்லா அடியானும் வரப்பெறும். பெரியபாட்டு பத்துப்பாட்டினுள்ளும் சிலப்பதிகாரத் துள்ளும் மணிமேகலையுள்ளும் கண்டு கொள்க. 'ஆசிரிய நடைத்தே வஞ்சி' (104) என்றதனான் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப் பெருமையாகக் கொள்க. பேரா: (இத்துணையும் பாவுறுப்புக்கூறி, இனி அப்பாவினுள் உள்ளுறுப் பாகிய அடியளவை கூறுவான் எழுந்தான்; முறையானே ஆசிரியப் பாவிற்கு அளவு கூறுகின்றான்). ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்கு எல்லை மூன்றடி. ஆயிரம் அடியான் வருவனவும் உளவேற்கண்டுகொள்க. ஆசிரியப் பாட்டின் எல்லை என்னாது அளவு என்றதனான் அதன் இயற்றாகிய வஞ்சிப் பாவிற்கும் இவ்வாறே கொள்ளப்படும். நச்: (ஆசிரியத்திற்கு அளவியல் கூறுகின்றது) ஆசிரியப்பாவின் பெருக்கத்துக்கு எல்லை ஆயிரமாகும். சுருக்கத்திற்கு எல்லை மூன்றடியாகும். ''நீலமேனி... முறையே" (ஐங்குறு. வாழ்த்து) இது சுருக்கத்திற் கெல்லை. கூத்தராற்றுப்படை தலையளவிற் கெல்லை. மதுரைக் காஞ்சியும் பட்டினப் பாலையும் ஒழிந்த பாட்டேழும் பரிபாடலும் கலியும் ஒழிந்த தொகை யாறும் இடையளவிற்கெல்லை. பாட்டின் எல்லை என்னாது அளவென்றத னான் அதனியற்றாகிய வஞ்சிக்கும் இவ்வாறே கொள்க. உ. ஆ.கு: மூன்றடிச் சிறுமை ஆசிரியத்திற்கு உரிமை பூண்டதாம். வஞ்சிப் பா, கலிப்பா ஆகியவற்றின் சுரிதகம் அகவற்பாவாக அமையு மெனின் அச்சுரிதகம் ஈரடியான் வருவதும் உண்டு. ஈற்றடி நாற்சீராக வும், அதன் அயலடி முச்சீராகவும் அமைதல் கண்டறிக. மருட்பாவின் முற்பகுதி வெண்பாவும், பிற்பகுதி அகவற்பாவும் ஆகலின் அதுவும் ஈரடியான் வந்து இறுதலும் அறிக. தனியாசிரியமாக வருமிடத்து மூவடிச் சிறுமையிற் குறையாது என்பது முடிந்த முடிவு என்க. ஆண்பாற்பெயர் அ. 1. ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும் மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப. (தொ.பொ.546) 2. ஆண்பால் எல்லாம் ஆணெனற் குரிய (தொ.பொ.595) 3. பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே (தொ.பொ.614) இ. இளம்: 1. (ஆண்பாற் பெயர் உணர்த்துதல்) ஆண்பாற் பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் பிறவுமாம். பிறவும்என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவன போல்வன கொள்க. 2. ஆண்பால் உயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும். இத்துணையும் கூறப்பட்டது; வேழத்துள் ஆண், களிறு, ஒருத்தல், ஏற்றை எனப்படும். பன்றியுள் ஆண், களிறு, ஒருத்தல் எனப்படும். புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போத்து, இரலை, கலை எனப்படும். புலியுள் ஆண், ஒருத்தல் போத்து ஏற்றை எனப்படும். கவரியுள் ஆண், ஒருத்தல் ஏறு ஏற்றை எனப்படும். கராத்துள் ஆண், ஒருத்தல் ஏறு ஏற்றை கண்டி எனப்படும். சுறவில் ஆண் ஏற்றை எனப்படும். பெற்றத்துள் ஆண் போத்து ஏறு ஏற்றை எனப்படும். எருது காலுறாதிளையர் கொன்ற' என்று வருதலின் எருதும் ஆம்; அதிகாரப் புறனடையாற் கொள்க. நீர்வாழ் சாதியுள் ஆண்வராற்போத்து வாளைப்போத்து எனவரும். முசுவில் ஆண் கலையெனப்படும். குரங்கும் ஊகமும் இவ்வாறே கொள்ளப்படும். கடுவன் எனவும் வரும். ஆட்டினுள் ஆண், மோத்தை நகர் உதள் அப்பர் என வரும். புள்ளினுள் மயில் ஆண், எழால்சேவல், போத்து, ஏற்றை எனப்படும். புள்ளினுள் ஆண் எல்லாவற்றிலும் மயில் அல்லாதனவெல்லாம் சேவல், ஏற்றை எனப்படும். ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை எனவரும். 3. பெண்ணும் ஆணும் பிள்ளையும் பற்றி வருஞ்சொல் மேலெடுத் தோதினவை என்றவாறு. பேரா: 1. ஆண்பாற் பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந்தும் என்றவாறு. பிறவும் என்றதனான் ஆண் என்றும் விடை என்றும் வருவன போல்வன வும் கொள்க. 'யாத்த ஆண்பாற்' என்றதனாற் போத்து என்பது இளைமைப் பெயராயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறு போலச் சிறவாது அதற்கென்பது கொள்க. 2. ஆண் என்னுஞ்சொல் எல்லாச் சாதியுள்ளும் ஆண்பாற்கு உரித்து. அவை ஆண்யானை ஆண்குரங்கு ஆண்குருவி என்றாற்போல்வன. இவை காணப்படும் எனவே இத்துணை விளங்க வாராது சிறுவரவி னான் வருவனவும் உள இருபாலும் அல்லாதன என்பது. ஆணலி பெண்ணலி எனவும், ஆண்பனை பெண்பனை எனவும் வரும். 3. பெண்ணும் ஆணும் பிள்ளையும் என வாளாது சொல்லியவழி உயர்திணைக்கு ஏற்றன மரீஇ வந்த மரபு. வாளாதே பெண் வந்த தென்றவழி அஃறிணைப் பொருளென்பது உணரலாகாது. பெண்குரங்கு வந்தது என விதந்தே கூறல் வேண்டும் என்பது. 'பெண் பிறந்தது' 'ஆண் பிறந்தது' 'பிள்ளை பிறந்தது' என அடையடாது சொல்லியவழி உயர்திணைக்கேயாம். அஃறிணைக் காயின் அற்றன்றென்பது. உ. ஆ.கு: காளை என்பது ஆண்பாற் பெயர். காளைமாடு எனவும் பசுமாடு எனவும் வழங்கும் வழக்கால் வெளிப்பட விளங்கும். அக்காளைப் பெயர் காளை போல்வானுக்கும் வந்தது. காளையப்பன், காளைச் சாமி, செந்தட்டிக்காளை என்பவை வழக்கிலுள்ள பெயர்கள். பன்றியுள் ஆண் 'சலவன்' என வழங்குதலுண்டு. 'விடை' என்பது காளைக்கு வருதல், 'விடை'யேறி என இறைவனைச் சுட்டும் சுட்டால் தெளிவாம். 'ஆட்டுக்கடா' என்பதால் 'கடா' என்பது ஆண்மைப் பெயராதல் வெளியாம். உறங்கியவன் கன்று கடாக்கன்று என்பது பழமொழி. இவ்வாறு எண்ணி இணைக்கத் தக்க ஆண்பாற் பெயர்கள் இருவகை வழக்குகளிலும் உள. ஆதந்தோம்பல் அ. ''வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற் றாகும்" (தொ.பொ.60) ஆ. ''வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றி கல்முனை ஆதந் தன்று" (பு.வெ.1:1) அவற்றுள், வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரப் பொருபோர் உறுமுறை தொடங்கிய வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பலும் அந்நிரை மீட்டலும் எனவிரு பாற்றே அஃதென மொழிப (இ.வி.602) இ. இளம்: (இது வெட்சித்திணையாமாறு உணர்த்துதல்) வேந்தனால் விடப்பட்ட முனை ஊரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக் கொண்டு பாதுகாக்கும் மேவலை யுடைத்து. ஓம்புதலாவது மாளாது காத்தல் புறப்பொருட் பாகுபாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரசராத லானும், அவர்க்கு மாற்றரசர்பால் திறைகொண்ட பொருள் மிகவும் சிறந்ததாகலானும் அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்று கோடல் வேண்டுதலானும் போர்க்குமுந்துற நிரைகோடல் சிறந்ததாக லானும் இப்பொருள் முன் கூறப்பட்டது. பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன இருவகைத்தே வெட்சி என இரண்டு கூறுபடக் கூறினாராயினும் முன்வரு கின்ற வஞ்சி உழிஞை தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து தன்னுறுதொழில் எனத் தன்நாட்டும் களவின் ஆன்நிரைகோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியனார் கூறினாரென்றல் பொருந்தாது. நச்: (இது வெட்சி எனக் கூறிய புறத்திணைக்குப் பொதுவிலக்கணம் கூறுகின்றது) வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங்காத்திருந்த தண்டத் தலைவர் பகை நிலத்தே சென்று களவினாலே ஆநிரையைக் கொண்டு போந்து பாது காத்தலைப் பொருந்துதலையுடைத்தாகும் வெட்சித்திணை. களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய கந்தருவமணம் வேத விதியாலே இல்லற மாயினாற்போல இருபெரு வேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர்நாட்டு வாழும் அந்தணரும் ஆவு' முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும் அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக்களவி னால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு 'ஆதந்து ஓம்பல்' என்றார். அது, 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்' எனச் சான்றோர் கூறியவாற்றான் உணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடைவேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு 'மேவற்றாகும்' என்றார். அகநாட்டன்றிப் புறஞ் சிறைப்பாடியில் ஆநிரை காக்கும் காவலரைக் கொன்றே நிரைகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையும் கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப் புலங் காத்திருந்தோர் தாமே சென்று நிரைகோடலும், குறுநில மன்னர் நிரை கோடலும், ஏனைமறவர் முதலியோர் நிரை கோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத்திணைக்கண்ணுங் களவு நிகழ்ந்தாற்போலப் புறத் திணை ஏழற்கும் களவு நிகழுங்கொல் என்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டும் களவின் என்று இத்திணைக்கே களவு உளதாக வரைந் தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான் இருபெரு வேந்தருந் தண்டத் தலைவரை ஏவிவிடுவரென்றும் ஆதந்தோம்பும் என்றதனாற் களவின் கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்று பொருள்கூறுமாறு சூத்திரஞ்செய்தாராகலின் இருபெருவேந்தர் தண்டத் தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் 'மீட்டல் கரந்தை' என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. களவின் என்பதற்குக் களவினான் எனவும், களவின்கண் எனவும் இரு பொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்தல் என்னும் உத்தியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளும் கூறத்தொடங்கி ஈண்டு அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினார். ஈ. நாவலர்: (இது வெட்சித்திணையின் இயல்விளக்குகிறது) மன்னரால் ஏவப்பெற்ற படைமறவர், கரவால் பிறர்நிலத்துக் கவர்ந்து போந்து புறந்தருதலை (அவ்வெட்சி) விரும்பும் தன்மைத்தாம். கொண்ட பொருட்குறிப்பால் அவாய்நிலையாய் 'அவ்வெட்சி' என்பது கொள்ளப்பட்டது. இனி, வெட்சி மறனுடை மரபில் அமர்தொடங்கும் ஒழுக்கமாதலின், போர் விரும்பும் மன்னர் ஏவலால் அது நிகழ்தற்பாற்று. பிறநாட்டொடு போர் தொடங்குதல் இறைமை முறையாய் மன்னர் பாலதேயாதலால், இப்போர்த் தொடக்கத்தினை அவராணை வழித்தாதல் ஒருதலை. அன்றியும், அது போர்க்குறியாதலால் மன்னரேவினும் பொரு நரல்லாப் பிறர்மேற் கொள்ளற் பாற்றன்று. பிறர் நிரைகவர்தல் போர்த் தொடக்கம் குறியாமல் திருட்டின் பொருட்டாய்க் கருதப்பெறுமாகலின் இத்திணைக்கு மன்னர் பிறரை விலக்கித் தம் படைமறவரையே ஏவற்பாலர். மேலும் முனைஞரும் மன்னர் ஏவலின்றித் தாம் விரும்பி யாங்குப் போர் தொடங்கல் கூடாதாக லின் போர்த் தொடக்கமாம் ஆகோளும் வேந்தர் ஆணையில்வழி அவர்க்கொவ்வாத் தவறாகும். இத்தமிழ்ப் பேரறம் விளக்கவேண்டி ஆனிரை கொள்ள வேந்து விடுதலும் அவ்வாறு விடப்படுவார் முனைஞரே ஆதலும் வெட்சித் திணைக்கு இன்றியமையாமை சுட்டி வேந்துவிடு முனைஞர் எனக் கூறப்பட்டது. இன்னும், கவரவிரும்பும் பிறநாட்டு நிரையும் போர் நிகழாக் காலத்து மன்னறக் காவல் துன்னித் தன்னிலத் துய்க்கப் பெற்றுழிக் கவரப்படுதல் முறை திரும்பி அறமழிப்பதாம் ஆகலின் போர் துவக்குவோர் தமதல்லாப் பகைநிலத்தில் நிரைகவரற்பாலர் எனற்கு 'வேற்றுப் புலத்து' என விளக்கப்பட்டது. போராகாமல் போர்க்குறி அறிவிப்பாய் நிரைகொள்ளலே இத்திணை யாதலால், பகைப்படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது பகைவர் நிலத்து அவரறியாமல் கரவில் கைப்பற்றும் முயற்சியே வெட்சியும், வெளிப்படையாய்ப் பகைவரை அறைகூவி நிரைகவர்தல் தும்பைப் பாற் கொண்டியுமாம் என்பது தோன்றிக் 'களவின்' எனக் கூறப் பட்டது. நிரைகவரக் கருதிச் சென்றோர் எதிர்பாராத காவலர் எதிர்ப்பிற்கு இடைந்து நிரைகவராதேனும் கவர்ந்தாங்கே மீட்க விட்டேனும் வாளாமீளல் ஆகோள் வெட்சியாகாது என்பதையும் மீட்கவிடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தர்பால் ஊறின்றி உய்ப்பது முனைஞர் கடமையாதலையும் தெளிக்க வேண்டி 'ஆதந்தோம்பல் மேவற்றாகும்' என விளக்கப்பட்டது. இக்கருத்தானே 'ஓம்புதலாவது மாளாமல் காத்தல்' எனவும் 'போர்க்கு முந்துற நிரைகோடல் சிறந்த'தெனவும், இச்சூத்திரத்தின் கீழ் உரைக் குறிப்பாய் இளம்பூரணர் கூறுதலும் காண்க. இம்மாற்றருஞ் சிறப்புடை மரபுகள் போற்றாத பிற்காலத்தில் நிரைமீட்கும் முயற் சியை வெட்சியின் அடக்காமல் கரந்தை என வேறு திணையாக்கியும், இவ்வெட்சியை வேந்தன் மேற்றாய் நிறுத்தாமல் தன்னுறு தொழிலே வேந்துறு தொழி லென்று அன்ன இருவகைத் தாக்கியும், தன் நாட்டை விலக்காமல் யாண்டும் பிறர்நிரை கவர்தல் வெட்சியாம் போலவும், முறைபிழத் துறைகளைக் கூட்டியும் மாற்றியும் முந்துற நிரைகவர்ந்து போர்த் துவக்கத்தில் நிகழும் கொடிநிலை, கொற்றவைநிலை, வெறியாட்டு அன்ன கடவுட்பராவு நிலைகளை வெட்சிக்கண் போர்த்துறைகளாக எடுத்து நிறுத்தியும் இன்னும் பல்லாற்னும் பின்னூல்களில் மரபிறந்த மாறுபாடுகள் மலிவவாயின. பன்னிரு படலத்துள் 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி' எனவும் அதைப்பற்றி 'வென்றிவேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றிகன் முனை ஆதந்தன்று' என வெண்பாமாலையிலும், வெட்சியை இரு கூறுபடக் கூறினராயினும் முன்வருகின்ற வஞ்சி உழிஞை தும்பை முதலாயின அரசர்மேலாய் இயன்று வருதலின் வேந்துறு தொழிலொழித்துத் தன்னுறு தொழி லெனத் தன்னாட்டும் பிறர்நாட்டும் களவில் ஆனிரைகோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம் என இளம்பூரணரும் பிழைபட்ட பிற்காலக் கொள்கைகளைக் கடிதல் காண்பாம். இனி, முடிவேந்தர் அல்லார் சிலரைப் புகழ்ந்துவரும் வெட்சிப் பாடாண் புறப்பாட்டுக்களைக் காட்டி, அவை மன்னர் பணிப்பின்றி ஆகோள் தன்னுறு தொழிலாய்க் கொள்வதற்கு மேற்கோள் என்பாருளர். அப் பாட்டுக்கள் குறுநில மன்னரைப் பற்றியவை. 'மன்பெறு மரபின் ஏனோர்' ஆகிய குறுமன்னர்க்கு வேந்துவினை இயற்கை வேந்தனின் ஒரீஇய (அவ்) வேனோர் மருங்கினும் எய்திட னுடைத்து எனத் தொல்காப்பியரே கூறுகிறார். எனவே, இன்னோரைப் பாராட்டும் வெட்சிப் பாடாண் புறப் பாட்டுக்கள் ஒருவகையாய் மன்னராவார்க்கு உறுதொழிலே கூறுவனவாம்; வேந்தன் பணிப் பின்றியும் மக்களில் யாரும் தன்னுறு தொழிலாக நிரைகவரும் தவறுக்கு இப்பாட்டுக்கள் மேற்கோளாகாமை வெளிப்படை. உ. ஆ.கு. ஓம்பல் என்பதன் விளக்கம், 'விருந்தோம்பல்' என்னும் ஆட்சியில் காண்க. 'ஊனோம்பல்' 'ஓம்பினேன் கூட்டை' என்பவை திருக்குறளி லும், தேவாரத்திலும் இடம் பெறுபவை. தனக்கு வேண்டும் என்று வைத்துக் கொள்ளாமல் கருதியும் பாராமல் கொடுக்கும் கொடை. 'ஓம்பா வீகை' யாம். இவற்றால் ஓம்புதல் பொருள் விளங்கும். ஆபெயர்த்துத் தருதல் அ. ஆபெயர்த்துத் தருதல் (தொ.பொ.63) ஆ. ஆபெயர்த்துத் தருதல் (இ.வி.604) இ. இளம்: ஆபெயர்த்துத்தருதல் நிரைமீட்டல். நச்: வெட்சி மறவர் கொண்ட நிரையைக் குறுநில மன்னராயினும் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத் தருதலும். 'ஏறுடைப் பெருநிரை' (புறம். 259) இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. இதனுள் தன்னூர் என்றலிற் குறுநில மன்னன் நிரைமீட்டுப்பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இனிக் கண்டோரும் மறவரும் கூத்தரும் பாணரும் விறலியரும் கூறினும் அவர்தாம் கையற்றுக் கூறினும் அத்துறைப் பாற்படும். தருதல் என்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத்துறைப் பாற்படும். வலஞ்சுரி மரா அத்து (அகம்.83) என்னும் களிற்றுயானை நிரையுள்... யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க. இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க. ஈ. இ.வி: வெட்சியார் கைப்பற்றிய ஆநிரைகளைக் கரந்தைவீரர் மீட்டுத் தருதல். பகைவர் கவர்ந்த நிரையைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டுத் தருதலும். அமரோட்டலும் ஆபெயர்த்தலும் நிரைமீட்கும் கரந்தைப் பொருநர் வினையாதலானும் கவர்ந்த மறவரை வென்று ஓட்டினாலொழிய நிரை மீட்டல் கூடாமையானும் இவையிரண்டும் காரணகாரிய முறையில் ஒன்று தொடர்ந்து நிகழும் பெற்றியவாம். உ. ஆ.கு: பெயர்த்துத் தருதல் மீட்டுத் தருதல். ஆட்டுக்கிடையை ஓரிடத்தி லிருந்து வேறிடத்திற்கு மாற்றி யடித்தலை (பெயர்த்து அடித்தலை)ப் 'பெயர்வை' என வழங்குதல் இன்றும் வழக்கில் உள்ளது. 'பேர்த்தும் அப்பெற்றியனே' என்பதில் பேர்த்து மீளல் பொருளில் வருவதாம். ஆரமர் ஓட்டல் அ. ஆரமர் ஓட்டல் (தொ.பொ.63) ஆ. அரும்போர் மலைதல் (வீ.சோ.100 பு.வெ.2) அருஞ்சமர் விலக்கல் (இ.வி.604) இ. இளம்: அரிய அமரைப் போக்குதலும். நச்: குறுநில மன்னரும் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும். 'பொன்வார்ந் தன்ன' (புறம். 308) இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங்கண்டது. 'கள்ளின் வாழ்த்தி' இது மறவன் ஆரமர் ஓட்டல் கூறியது. இவை தன்னுறு தொழில் கூறியன. இவை புறம். ஈ. நாவலர்: நிரைகவர்ந்த படைமறவரைக் கரந்தைப் பொருநர் வென்று புறம் கொடுத்தோடச் செய்தலும். இதில் அமர் என்பது அமர்புரிபவருக்கு ஆகுபெயர். 'வடவாரியரொடு வண்டமிழ் மயக்கத்து' என்னும் காட்சிக்காதை யடியிலும் 'வடதிசை மருங்கின் மன்னவரெல்லாம், தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென' என்னும் கால்கோட் காதையடியிலும், 'தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானம்' எனவரும் குடபுலவிய னார் புறப்பாட் டடியிலும், 'கொண்டடிமிகை படத் தண்டமிழ் செறித்து' என்னும் கபிலரின் 7ஆம் பத்தின் 3ஆம் பாட்டு அடியிலும் 'தமிழ்' என்பது தமிழ்ப்படைக்கு ஆகுபெயராய் நிற்பதுபோல ஈண்டு அவரென்பது தானைப் பொருநரைச் சுட்டுதல் வெளிப்படை. ஆரமர் ஓட்டல் எனப்பொதுப்பட நிற்றலால் நிரைகொண்டார் மீட்க வரும் மறவரை ஓட்டுதலும், மீட்பவர் நிரை கவர்ந்தவரை வென்றோட்டலு மாகிய இரண்டனையும் இத்தொடர் குறிக்குமெனப் பிறர் உரை கூறினர். நிரைகொள்ளும் வெட்சிமறவர் மீட்போரை வென்றழிக்கும் பரிசெல்லாம் முன் வெட்சிவகை ஆகோளின் துறைகளினுள் அடங்கக் கூறுதலானும் அதைவிலக்கிக் கரந்தை முதலிய பிறவகை வெட்சித் துறைகளே இதிற் கூறவேண்டுதலானும், இதையடுத்த துறை கவரப்பட்ட நிரையை மீட்டுத் தருதலாதலின் கொண்டோரை வென்றன்றி ஆபெயர்த்துத் தருதல் கூடாமையாலும் ஈண்டு 'ஆரமர் ஓட்டல்' ஆகோள் மறவர் வென்றி குறியாது அவரை வென்றோட்டும் கரந்தைப் பொருநரையே குறிப்ப தொருதலை. அன்றியும் ஆரமரோட்டல் முதல் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் வரை குறிக்கப்படும் துறையனைத்தும் அனைக்குரி மரபினது கரந்தை எனத் தெளிக்கப்படுதலானும் இது கரந்தைத் துறையேயாம். உ. ஆ.கு: ஆர் அருமைப்பொருட்டதாம். கடத்தற்கு அரியபோரைச் சுட்டலான் ஆர்அமர் எனப்பட்டதாம். ''கடந்தடுதானை" என்பது படைக்கமைந்த பாராட்டுரை. ஆறறிவு உயிர் அ. 1. ஆறறி வதுவே அவற்றொடு மனனே (தொ.பொ.571 இ.வி.912) 2. மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொ.பொ.577) 3. ஒருசார் விலங்கும் உளவென மொழிப (தொ.பொ.578) ஆ. மாவும் மக்களும் மேவுமவ் வறிவின (இ.வி.913) அக்கிளைப் பிறப்பும் அவ்வறி வுறுமென்ப (இ.வி.914) ஒருசார் விலங்கும் அதுவென மொழிப (இ.வி.915) 2. (ஆறறிவுயிராமாறு உணர்த்துதல்) மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர். அக்கிளைப் பிறப்பு, பிறவுமுள என்றவாறு. பிறவாவன தேவர் அசுரர் இயக்கர் முதலாயினோர் பிறப்புக்கள். 3. விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் என்றவாறு. அவையாவன: கிளியும் குரங்கும் யானையும் முதலாயின. பேரா: 1. (ஓரறிவுயிர் உணர்த்தும் வழி அவ்வினத்தன வெல்லாம் கூறுதல்) ஆறறி வகை காண்க. பக். 107 2,3. (ஆறறிவுயிர் கூறுகின்றது) மக்கள் எனப்படுவோர் ஐம்பொறியுணர்வேயன்றி மனம் என்பதோர் அறிவும் உடையர். அக்கிளைப்பிறப்பு மேலும் உள. முப்பத்திர ண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ, மகடூஉ மக்களெனப்படும்; அவ்வாறு உணர்விலும் குறைவு பட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப்பிறப்பினுட் சேர்த்திக் கொள்ளவைத்தான் என்பது. அவை ஊமுஞ் செவிடும் குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும் தானவரும் முதலாயினார். பிறப்பென்றதனாற் குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும் மனவுணர் வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறி உயிராய் அடங்கும் என்பது. தாமே எனப் பிரித்துக் கூறினமையான் நல்லறிவுடையார் என்றற்குச் சிறந்தார் என்பதும் கொள்க. உ. ஆ.கு: ஆறறிவாவது மன அறிவு. அவ்வறிவு ஐம்பொறிகளான் அறியப் படும். அறிவுபோலாது, உயர்ந்து நிற்றலின் இலங்கறிவு, விளங் கறிவு, வாலறிவு என வழங்கப்படும். இலங்குதல், விளங்குதல் தூய்தாதல் என்பன தன்னல நாட்டம் விடுத்து உயிர்ப்பொது நலம் நாடுவதாக அமைவனவாம். ஆணையிற்கிளத்தல் அ. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கியல் ஆணையிற் கிளத்தற்கும் உரியன் (தொ.பொ.495) ஆ. தமர்வரின் இடைச்சுரம் தன்னில் கிழத்தியொடு அமர்தரு கிழவோன் ஆணையும் கூறும் (இ.வி.567) இ. இளம்: (தலைவற்குரியதோர் மரபு உணர்த்துதல்) தலைவியை உடன்கொண்டுபோம் இடைச்சுரத்தின்கண் தலை வியைத் தலைவன் வழக்குநெறியாணையானே கூறுதற்குரியன. உம்மை எதிர்மறை. ஆணை என்பது ஆக்கினை. வடமொழித் திரிபு. மெல்லிய காமநிகழுமிடத்து ஆக்கினை கூறப்பெறானாயினும் அவ் விடத்து வேண்டும் என்பது எடுத்தோதப்பட்டது. மெல்லிய மகளிர்முன் வன்மை கூறலாகாமையின் இது வழு வமைத்தது. பேரா: (இதுவும் கூற்று விகற்பமே கூறுகின்றது) இடைச்சுரத்து உடன்போகிய கிழத்தியொடும் கிழவன் நீதிநூல் வகையாற் கிளத்தற்கு முரியன். நீதிநூல் வகையாற் கிளத்தல் என்பது கிழத்தி தன் தமர் இடைச் சுரத்துக் கண்ணுறின் அவர்கேட்பத் தலைவிக்குச் சொல்லுவானாய் வழக்கியல் கூறுதலும் உரியன் என்பது. வழக்கியல் ஆணை என்றதனால் நீதிநூல் விதிபிறழக்கூறின் அஃது இராக்கதம் போன்று காட்டும் என்பது. உம்மையால் கிழத்தியோடு வழக்கியலாணையானன்றி மருட்டிக்கூறவும் பெறும் என்பது. நச்: (பேராசிரியர் வழியே உரைக்கிறார் நச்.) ஈ. சி.க.: வழக்கியலாற் கூறல் நின்தமர்வரின் அவரைக் கொல்லேன் என்றல். ''நுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே" என்னும் அடியானும் (நற்.362) ''நுமர்வரின் ஓர்ப்பின் அல்ல தமர்வரின், முந்நீர் மண்டில முழுவது மாற்றா. தெரிகணை விடுதலோ இலனே, அரிதமர் மழைக்கண் கலுழ்வகை எவனே" என்னும் செய்யுளானும் அறிக. பிறழக் கூறின் என்றது அவரைக் கொல்வேன் எனக்கூறலை. கொன்று கோடலும் இராக்கதமாதலின் கொல்வேன் என்றலும் இராக்கதம் ஆயிற்று. இசை திரிந்திசைத்தல் அ. இசைதிரிந் திசைப்பினும் இசையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர் (தொ.பொ.193) இ. இளம்: (தொடர்மொழிக்கண் பொருள் இயையுமாறு உணர்த்துதல்) இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசைதிரிந்து ஒலியா என்றவாறு. என்றது, சொல்லொடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட் டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும் வழி அசைச் சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள் படுமாறாயிற்று. நச்: (இவ் வோத்தின்கண் அமைக்கின்ற வழுவமைதிக ளெல்லாம் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இருவகைய என்கின்றது. சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப் பினும் இவ்வதி காரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கு மாகிய புலனெறி வழக்கிற் றிரிந்து இயன்றிசைப்பினும் அவை மிகவும் பொருளே யாய்ப் பொருந்துமென்று தொல்லாசிரியர் கூறுவர். அதனால் யானும் அவ்வாறு கூறுவல் என்றார். சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டு பொருளறிவுறுக்கும் ஓசையாத லின் அதனை இசை யென்றார். இஃது ஆகுபெயர். அசைக்கப்பட்டது அசையென்பதும் ஆகுபெயர். புறத்திணை இயலுட் புறத்திணை வழுக்கூறி அகப்பொருட் குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்றுணர்க. இயலா என்றதனால் 'என்செய்வாம்' என்றவழிப் 'பொன்செய்வாம்' என்றாற்போல வினாவிற்பயவாது இறைபயந்தாற்போல நிற்பனவும் கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் தொடர் பொருளாற் பொருள்வேறுபட இசைத்தலும் கொள்க. ஈ. க.வெ.: இது தொடர்மொழிகள் தம்முள் வேறுபட்டனவாகச் சொல் வகையால் திரிந்து வரினும் பொருளில் வேறுபடாது இயைதல் உண்டு என்கின்றது. சொற்கள் தம்முள் தொடர்புபடும் வாய் பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும் சொல்லக்கருதிய பொருள் இயைபு பெறப் புலப்படும். அந்நிலையிற் சொற்களுக்கு உறுப்பாகிய அசைச் சொற்கள் திரிந்து ஒலியா என்று கூறுவர் புலவர். இசை சொல்; என்றது தொடர்மொழிகளை. திரிந்து இசைத்த லாவது தொடர்ந்து பொருள் கொள்ளுதற்கேற்ற ஒத்த வாய்பாடுகளாக அமைத லின்றி வேறுவேறு தொடர்மொழிகளாகக் கூறப்படுதல். அசை மொழிக்கு உறுப்பாகிய விகுதி முதலியன. உ. ஆ.கு: ''என்றது சொல்லோடு சொல் தொடர்புபடும் வாய்பாட்டாற் றொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட் டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும். அவ்வழி அசைச் சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமாறாயிற்று" என (இளம்பூரணரின்) இவ்வுரைப் பகுதி அமைந்திருத்தல் வேண்டும் என்பார் க.வெ. இசை நிலைநிரம்பல் அ. 1. இசைநிலை நிறைய நிற்குவ தாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே (தொ.பொ.335) 2. இயற்சீர் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான (தொ.பொ.336) இ. இளம்: (ஓரசைச்சீராமாறு உணர்த்துதல்) 1. இசை நிற்கின்றநிலை நிரம்பாநிற்குமாயின் அசையும் சீராம் தன்மைபோல வரையார் ஆசிரியர் என்றவாறு. 'நாள், மலர், காசு, பிறப்பு' என வரும். 2. (ஓரசைச்சீர் தளையாமாறு உணர்த்துதல்) ஓரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மைவேண்டுமிடத்து இயற்சீர் போலக் கொள்க என்றவாறு. பேரா: 1. (நான்கசையும் சீராகும் இடனுமுடைய என்கின்றது) (பாடம்: நிற்குவ வாயின்) ஓசைநிலை நிறையாமையால் சீர்த்தன்மைபட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப்பட்ட சொற்களை யெல்லாம் சீர்நிலை பெறுதற் கண் வரையார். 'கழல்தொழா மன்னர்தம் கை' என்று நேரசைசீராயிற்று. 'புனனாடன் பேரே வரும்' என நிரையசைசீராயிற்று. 'எய்போற் கிடந்தானென் னேறு' என நேர்பசைசீராயிற்று. 'மேவாரை அட்ட களத்து' என நிரைபசை சீராயிற்று. இவற்றை உண்மைவகையாற் சீராம் என்றான் அல்லன். 'தொடர் மொழி எல்லாம் நெட்டெழுத்தியல என்றாற் போலக் கூறினான் என்பது. இங்ஙனம் கூறாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடி யென்னுமாறு இல்லை என்பது. 2. (எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. இயலசையிரண்டும் சீர்நிலை பெறினும் தளை கொள்ளப்படா என்றமையின். இனி, எய்தாதது எய்துவித்ததூஉமாம். என்னை? உரியசையால் தளை கொள்ளுமாறு உணர்த்தினமையின்). இயற்சீர்க் கண்ணே கூறுபடுத்து இயற்றப்படும் அவை தளைவகை சிதையாத் தன்மைக்கண். நச்: (நான்கசையும் சீராம் இடனுமுடைய என்கின்றது) 1. ஓசை நிலைமையால் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்குமாயின் அசைநிலைமைப்பட்ட சொற்களையெல்லாம் சீர்நிலை பெறுதற்கு வரையார். 2. முன்னர்க்கூறிய உரியசை இரண்டும் இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து அவ்வியற்சீர்க்குக் கூறும் தளைவகை கெடாத தன்மைக்கண்ணே அவற்றையும் இயற்றிக் கொள்க. உ. ஆ.கு: வெண்பாவின் ஈற்றில் வரும் நாள் மலர் என்பவை அசைச் சீர்கள். காசு, பிறப்பு என்பவை குற்றியலுகர ஈற்றான் வருதலின், அவ்வுகரம் மாத்திரை விலக்குண்ணுமாகலின், அவையும் அசைச்சீர்களாகவே அமையும். ஆகலின், அசையைச் சீராக்கவேண்டிய இலக்கண முறையை இயம்பினார். அல்லாக்கால் வெண்பாவின் ஈற்றடி முச்சீராக எண்ணப்பெறாமை சுட்டினார். ஈற்றசைச் சீருக்கு மேல் வேறு சீர்கள் இன்மையாலும், தளையென்பது முதற் சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் தளைய வருதலானும் இம் முறையமைதியாதல் கொள்க. இடம் அ. ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியும் கரும நிகழ்ச்சி இடமென மொழிப (தொ.பொ.502 இலக்.574) ஆ. சூசூ''நெறிப்படு கருமம் நிகழ்வுழி இடனே" (ந.அ.227) இ. இளம்: (நிறுத்தமுறையானே இடமாமாறு உணர்த்துதல்) ஒருவழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர். நிகழ்ச்சி, நிகழ்ந்த இடம். ஒரு நெறிப்படுதலாவது, அகமாயினும் புறமாயினும் ஒரு பொருள் மேல் வருதல். ஓரியல் முடிதலாவது, அகத்தின்கட் களவென்றானும் கற்பென் றானும் அவற்றின் விரிவகையில் ஒன்றானும் பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானும் மீட்டலானும் மேற்செலவானும் எயில்வளைத்த லானும் யாதானு மோர் இயல்புபற்றி வருதல். கரும நிகழ்தலாவது, அப்பொருளைப் பற்றி யாதானுமொரு வினை நிகழுமிடம். இன்னும் கரும நிகழ்ச்சி என்றதனால் தன்மை முன்னிலை படர்க்கை என்பனவும் கொள்ளப்படும். யாதானுமோர் கரும நிகழ்வுழி அதற்காகும் இடத்தொடும் கூட நிகழ்தல் வேண்டுமென்று இப்பொருள் கூறப்பட்டது. ஒரு நெறிப்படாதும் ஓரியன் முடியாதும் வருமிடம் வழுவாம். அஃதாவது தலைமகளொடு புணர்தல் வேண்டித் தோழியை இரந்து குறையுறுவான் அவ்விடத்திற்குத் தக்கவுரை கூறாது தன்னாற்றலும் பிறவும் கூறுதல். ''நெடும்புனலுள்.... பிற" இதுவும் இடனறிதல். ''உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார்" இது தன்மையானையும் முன்நின்றானையும் ஒழித்துப் படர்க்கை யானைத் தொழிற்படுத்துதல். உண்ணற்க வென்னும் படர்க்கைச் சொல் படர்க்கைப் பெயரொடு முடிந்தது. பேரா: (களனெனப்பட்ட உறுப்புணர்த்துகின்றது) பலவும் ஒருவழிப்பட்டு ஓரிலக்கணத்தான் முடியுங்கரும நிகழ்ச்சியை இடமென்று கூறுப. இடமெனினும் களமெனினும் ஒக்கும். ஒரு செய்யுட்கேட்டால் இஃது இன்னவிடத்து நிகழ்ந்ததென்று அறிதற்கேதுவாகியதோர் உறுப்பினை இடமென்றான் என்பது. ஒரு நெறிப்படுதல் என்பது ஒருவழிப் பலவும் தொகுதல். ஓரியல் என்பது அவற்றுக்கெல்லாம் இலக்கணம் ஒன்றாதல். அஃதாவது காட்சியும் ஐயமும் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்ச மும் வன்புறையுமென்று இன்னோ ரன்னவெல்லாம் ஒருநெறிப்பட்டு இயற்கைப் புணர்ச்சியென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கரும நிகழ்ச்சியென்பது காமப்புணர்ச்சியென்னும் செயப்படு பொருள் நிகழ்ச்சி. அஃது இடமெனப்பட்டது. இது வினை செய்யிடம். நிலமாயின முன்னர்த் திணையெனப்பட்டன. ''எலுவசிறாஅ ரேமுறு நண்ப" (குறுந். 129) என்னும் பாட்டும், ''கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்" (குறுந். 280) என்னும் பாட்டும் பாங்கற்கூட்டமே இடனாக ஒருவழிப்பட்டன. என்னை? நின் வேறுபாடு எற்றினான் ஆயிற்றென்று வினவிய பாங்கற்கு இதனினான் ஆயிற்றென்று உரைத்ததூஉம் அதற்குப் பாங்கன் கழறினானை எதிர்மறுத்த தூஉமென இரண்டும் பாங்கற் கூட்டத்துப்பட்டு ஓரியலான் முடிந்தன. நச்: (இது களனெனப்பட்ட உறுப்புக்கூறுகின்றது). பலவும் ஒருவழித் தொக்கவற்றுக்கெல்லாம் ஓரிலக்கணத்தான் முடியும் கரும நிகழ்ச்சியை இடமென்று கூறுப. பேராசிரியர் விளக்கத்தையே மேலும் எடுத்துரைக்கும் நச்சினார்க்கினியர், ''இது புறத்திணைக்கும் ஒக்கும்" என்று முடிக்கிறார். ஈ. இ.வி: இடம் என்பது ஒருசெயல் நிகழும் சந்தர்ப்பம். நிலம் என்பது முல்லை முதலாக ஐவகைப்படுவது. இடம்வேறு நிலம் வேறு என்பதனை, ''ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே" என்ற நூற்பாவில் இடமும் நிலமும் வேறு வேறாகக் கூறப்பட்டதனாலும் அறியலாம். உ. ஆ.கு: ''முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே" என்பதில் வரும் (தொ.பொ.4) நிலம் இடமாம். இதனால் இடம் அடிப்படைப் பொருளாதல் கருதுக. இடைச்சுரமருங்கில் தவிர்தல் அ. வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை உள்ளம் போல உற்றுழி உதவும் புள்ளியற் கலிமா உடைமை யான. (தொ.பொ.192) ஆ. சேயிழைக் கிழத்தியை வாயில் வேண்டலும் வாயில் நேர் வித்தலும் வயங்குதுனி தீர்த்தலும் வினைமுடித் ததன்பின் வியன்பதி சேய்த்தென இனைவோற் றேற்றலும் பாகற் கியல்பே (ந.அ.102 இ.வி.470) இ. இளம்: (வினைமுற்றி மீண்ட தலைவற்குரியதோர் மரபு உணர்த்திற்று) இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை என்பது வழியில் இடையில் தங்காது இரவும் பகலுமாக வருமென்பது கருத்து. தங்குவானாயின் மனையாள் மாட்டு விருப்பின்றாம். நச்: (பிரிந்து மீளுங்காற் செய்யத் தகுவதோர் இயல்பு கூறுகின்றது). யாதானுமோர் வினையிடத்துப் பிரிந்தோன் அதனை முடித்து மீண்டு வருங்காலத்து எத்துணைக்காதம் இடையிட்டதாயினும் அவ்விடை யின்கண் உண்டாகிய ஒருவழியிடத்துத் தங்கி வருதலில்லை. உள்ளம் சேட்புலத்தை ஒருகணத்தில் செல்லுமாறு போலத் தலைவன் மனஞ் சென்றுற்ற விடத்தே ஒருகணத்திற் சென்று உதவி செய்யும், புட்போல நிலந்தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரையுடையன் ஆதலான். தேருங்குதிரையால் அல்லது செல்லாமையிற் குதிரையைக் கூறினார். இஃது இடையில் தங்காது, இரவும் பகலுமாக வருதல் கூறிற்று. இதனை மீட்சிக்கெல்லை கூறிய சூத்திரங்களின் பின்வையாது ஈண்டுத் துறவு கூறியதன்பின் வைத்தார் இன்ப நுகர்ச்சியின்றியிருந்து அதன் மேல் இன்பமெய்துகின்ற நிலையாமை நோக்கியும் மேலும் இன்பப் பகுதியாகிய பொருள்கூறுகின்றதற்கு அதிகாரப் படுத்தற்கும் என்றுணர்க. ஈ. இ.வி: தலைவன் வினை முற்றியபிறகே தலைவியின் நினைவு மேலிட்டுச் சுரத்திடைக் காலம் தாழ்த்தாது மீண்டு வருதலை விரும்புவான் என்பதும் மீட்சிக்குப் பாகன் மிகவும் உதவுவான் என்பதும் கொள்க. க.வெ: தவிர்தல் தங்குதல், இளைப்பாறிக் காலந்தாழ்த்தல். இடை வழியில் தங்கிக் காலந்தாழ்த்தல். உ. ஆ.கு: தவிர்தல் மீளும் செயலில் தவிர்தல்; உள்ளம் நினைவு; நினைந்த மாத்திரையான் நிறைவுறல். புள்ளியற்கலிமா உடைமை விரைந்து மீளற்கு வாய்ப்பாம் நிலை. இடைநிலைப்பாட்டு அடியளவு அ. இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப (தொ.பொ.437) 1. இடைநிலைப் பாட்டே தரவகப் பட்ட மரபின என்ப. (தொ.பொ.439) 2. ''ஒத்துமூன் றாகும் ஒத்தாழிசையே, தரவில் சுருங்கித் தோன்றும் என்ப (தொ.பொ.446) ஆ. ''தரவில் சுருங்கல் தகுதி" (இ.வி.747) ''தாழிசைப்பா சுருங்கிற் றிரண்டடி ஓக்கம் இரட்டி" (யா.கா.44) இ. இளம்: 1. (தாழிசைக்கு அடியாமாறு உணர்த்துதல்) தாழிசைகள் தரவிற் சுருங்கிவரும் என்றவாறு. 'தரவகப்பட்ட மரபின' என்றதனால் தரவிற்கு ஓதப்பட்ட நான்கடியில் மிகாதென்பதூஉம் மூன்றடியானும் இரண்டடியானும் வரப்பெறும் என்பதூஉங் கொள்க. வருகின்ற சூத்திரத்துள் ஒத்து மூன்றாகும் ஒத்தாழிசையே (446) எனக் கூறுதலானும் இப்பாவினை ஒத்தாழிசைக் கலி எனக் கூறுதலானும் தாழிசை ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருமென்று கொள்க. 2. (தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல்) தாழிசையும் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகிவரும். அவை தரவிற் சுருங்கித் தோன்றும் (446). பேரா: 1. (தரவிற்குச் சுருங்கியன்றித் தாழிசை வாராதென்ப துணர்த்துதல்) தரவின் அகப்பட்டது தாழிசை. 'அகப்படுதல்' என்பது அகம் புறம் என்று இருகூறு செய்தவழி முற்கூற்றினுட்படுதல். முன்னென இடவகையும் காலவகையும் பற்றிய ஒரு கூற்றினுள் யாதானும் ஒன்று கொள்க. எனவே, பதினோரடி முதல் இரண்டடிகாறும் இழிந்துவரப்பெறும் என்றவாறாயிற்று. தரவிற் சுருங்கும் என்னாது அகப்படும் என்றான், தரவோடு ஒத்து வரும் தாழிசை என்பதூஉம் கோடற்கு. என்னை? மக்களத்துப் பிறந்தான் என்றவழி அச்சாதியோடொக்கப் பிறந்தான் என்பது படுமாகலின். மரபின என்றதனான் மேலைக்கொண்டும் அடிப்பட வந்த மரபினாற் சுருங்கும் என்பது. எனவே, மரபின் என்றதனாற் சிறுபான்மை ஐந்தடி யானும் வருவனவும் உள. ஆறடியின் வருவன வந்தவழிக்கண்டு கொள்க. மற்று நான்கடியின் இழிந்து ஓரடியானும் தாழிசை வருமாலெனின் வாராதன்றே, 'இடைநிலைப் பாட்டே' என்றாராகலின்; என்னை? பாட்டெனப் படுவன ஓரடியான் வாராமையின். 2. தம்மின் ஒத்த அளவினவாகலும் ஒத்தபொருளவாகலுமுடைய தேவபாணிக்கண் மூன்றாக வரும் ஒத்தாழிசை. இவைபொருள் ஒக்குமெனவே, முன்னை அகநிலையொத்த தாழிசைக் கண் வரும் இடைநிலைப் பாட்டிற்பொருள் ஒவ்வாது வருதலும் சிறுபான்மை யுண்டென அறிக. நச்: 1. ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையும் தரவும் சுரிதகமும் தனிச் சொல்லும் என நான்கு உறுப்பாகப் பயின்று வருமென்பதாம். அவ்வாறு பயின்று வருமெனவே இத்துணை ஏனையொன்றும் பயிலாது வருமென்ப தாம். செய்யுளிடையே நிற்றலானும், தாழம்பட்ட ஓசையன்றியும் வருவன வும் கோடற்குத் தாழிசையென்னாது பொதுவாக இடைநிலை என்றார். அவை தாமே பாட்டாயும் வருதலும் அங்ஙனம் வருங்காலொன்றும் பலவுமாயும் வருதலும் கோடற்குப் பாட்டென்றார். இதனைத் தரவிற்கு முற்கூறினார். ஒத்தாழிசைக்கலியென இதனாற் பெயர் பெறுதலின். 2. (இதனை இரண்டு நூற்பாக்களாகக் கொள்வார்) முன்னர் வந்த ஒத்தாழிசைபோல் தாழிசை தரவோடொத்து வாராவென ஐயமகற்றியது. 1. பொருளும் அளவும் தம்முள் ஒத்து மூன்றாய்வரும் தேவபாணிக்கண் வரும் தாழிசை. இவை பொருளொக்குமெனவே அகநிலையொத்தா ழிசைக்கண் வரும் தாழிசை சிறுபான்மை பொருளொவ்வாது வருதல் பெற்றாம். 2. எட்டும் ஆறும் நான்குமென்ற வண்ணகத்தின் தாழிசையும் சமநிலைத் தரவிற் சுருங்கித் தோன்றும். வாளாதே 'சுருங்கும்' என்றாரேனும் 'தோன்றும் என்றதனால் தரவின் பாதியாகிய நான்கடியு மூன்றடியுமே தனக்குப் பெருமைக் கும் சிறுமைக்கும் எல்லை என்று கொள்க. ஈரடியிரண்டும் வந்து தொடர்த லின் நான்கடித் தரவின் பாகமாகிய ஈரடித் தாழிசை யாகாதாயிற்று. இங்ஙனம் கூறாக்கால் ஏழடிப்பெருமையாகத் தாழிசை கோடல் வேண்டும். இதனாற் கூறிய, நான்கடியானு மூன்றடியானு மன்றி ஐந்தடியானும் இரண்டடியானும் வாரா தென்பதாயிற்று. ஈ. சி.க: (பேராசிரியர்) யாதானும் என்றதனால் இடமுன்னுங் கொள்ளலாம். கால முன்னுங்கொள்ளலாம் என்றபடி. நான்கையும் பன்னிரண்டையும் இடமுன்னாக வைக்குங்கால் இரண்டு முதல் நான்கு வரையும் ஐந்து முதல் பன்னிரண்டு வரையும் கொள்ளப்படும். இங்கே இரண்டற்கு நான்கு இடமுன்னாதலும், ஐந்தற்குப் பன்னிரண்டடி இடமுன்னதாலுங் காண்க. இனிக் கால முன்னாகக் கொள்ளுங்கால் நான்கற்கு முன் எண்ணப்படும் இரண்டும், பன்னிரண்டடிக்கு முன் எண்ணப்படும் ஐந்தும் கால முன்னாதல் காண்க. இருமுன்னாக வைத்துப் பார்ப்பினும் பொருள் ஒன்றா மென்றபடி. இயலசை அ. இயலசை முதலிரண்(டு) ஏனவை உரியசை (தொ.பொ.314) இ. இளம்: (அசைக்குப் பிறிதோர் குறியிடுதல்) முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசை எனக்குறி பெறும். பேரா: (அசை நான்கினையும் இருகூறு செய்து அவற்றுக்கு எய்தாதது எய்துவிக் கின்றது. இனி, ஆட்சியுங் குணனுங் காரணமாக வேறு வேறு பெயர் கொடுக்கின்றது). முதற்கண் நின்ற நேரும் நிரையும் இயற்றிக் கொள்ளப்படாது; இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பனவாம். இயற்கையால் இயறலின் இயலசை. ஆட்சியும் குணனுங் காரணமாகப் பெயர் எய்துவித்ததூஉ மாயிற்று. நச்: (அசையை இருகூறு செய்து அவற்றுக்கு எய்தாதது எய்துவிக்கின்றது). முதற்கண் நின்ற நேரும் நிரையும் இயற்றிக் கொள்ளப்படாது இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைத்தலின் இயலசை. உ. ஆ.கு: நேர் நிரை நேர்பு நிரைபு என்னும் நான்கு அசைகளுள் முன்னின்ற நேரும் நிரையும் இயலசையாம். பின்னின்ற இரண்டும் இயலசை செய்யும் தொழிற்குரியதாகவருதலின் உரியசை எனப் பெயர் பெற்றதாம். மின் இயலசை; மின்னு உரியசை உரும் இயலசை; உருமு உரியசை. என்பவற்றால் இயலசை உரியசை வேற்றுமையறிக. இயற்சீர் அ. 1. இயலசை மயக்கம் இயற்சீர் (தொ.பொ.321) 2. நேரவன் நிற்பின் இயற்சீர்ப் பால (தொ.பொ.323) ஆ. இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் காக்கை. ஈரசை கூடிய சீர் இயற்சீர் அவை ஈரிரண் டென்ப இயல்புணர்ந் தோரே (யா.வி.11) அசையிரண் டொன்றின் முற்சீர் (வீ.சோ.யா.1) ஈரசை இயற்சீர் ஈரிரண்டு (தொ.வி.204) நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா நிரைநிரை கருவிளம் நேர்நிரை கூவிளம் ஆகுநாற் சீரும் அகவற் குரிய. (மு.வீ.யா.3) இ. இளம்: 1. (ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கிவந்தன இயற்சீர் எனப்படும். மயங்குதலாவது ஒருங்குவருதல். இயலசையாகிய நேரும் நிரையும் தம்மின் உறழ நான்கு சீராம். அவை இயற்சீர் எனப்படும். ''தேமா புளிமா கருவிளம் கூவிளம்" எனவரும். 2. (இயற்சீர்க்குரியதோர் வேறுபாடுணர்த்துதல்) உரியசைப் பின்னர் நேரசைவரின், அது இயற்சீரென வரும். ஆற்றுக்கால் குளத்துக்கால் எனவரும். பேரா: 1. (தம்முன் மயங்கிவரும் ஈரசைச்சீர் உணர்த்துகிறது) நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை என்பனநான்கும் இயற்சீர். இயற்சீரைத் தேமா புளிமா கணவிரி பாதிரி எனவும், வாய்க்கால், வாய்த்தலை, துலைவாய், துலைமுகம் எனவும் பிறவும் இன்னோரன்ன வேறுவேறு காட்டுப. ''கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை" (குறுந். 216) என நான்கு இயற்சீரும் வந்தன. இஃது ஆட்சியும் குணனுங் காரணமாகப் பெற்ற பெயர். ஆட்சி: இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின் (தொ.சொ.19) எனவும் பிறாண்டும் ஆகுப. குணம்: இயற்சீர் ஆகலானும் நான்கு பாவிற்கும் இயன்று வருதலானும் குணம் காரணமாயிற்று. இயல்புவகையான் ஒரோஒன்றாகி நின்ற சொற்கள் வருதல் பெரும் பான்மையாகலானும் நான்கு பாவிற்கும் பொதுவாகி இயன்று வருதலானும் இயலசையான் வரும் ஈரசைச்சீராகலானும் இவற்றை இயற்சீர் என்றான். எனவே, சொல்லின் முடியும் இலக்கணத்தால் நான்கு பாவிற்கும் உரிய வென்பதூஉம் ஈண்டுப் பெற்றாம். அல்ல தூஉம் அவற்றைத் தளைகூறும் வழி மூன்று பாவிற்கும் உரிமை கூறிக் கலிப்பாவிற்கும் வஞ்சிப் பாவிற்கும் நேரீற்றியற்சீர் வாராவென ஒழிந்தசீர் வருமென்பது உடன்பட்டமை யானும் நான்கு பாவிற்கும் இயன்று வருமென்பது பெற்றாம். 2. இயலசை உரியசை மயக்கத்துப்பிறப்பன இரண்டியற்சீர் உணர்த்து கின்றது. முன்னர் உரியசைப் பின்னர் நிரையசைவரின் ஆசிரிய வுரிச்சீராம் என்றான். அவ்வதிகாரத்தால் உரியசை யிரண்டன்பின்னும் நேரசை வரின் அவையிரண்டும் ஆசிரியப்பாவாம். அவை நேர்பு நேர், நிரைபு நேர் எனவரும். சேற்றுக்கால், வேணுக்கோல், களிற்றுத்தாள், முழவுத்தோள் என வரும். நீத்துநீர், குளத்துநீர், போதுபூ, விறகுதீ எனவுங் காட்டுப. பிறவுமன்ன. இவை இயற்சீர் நான்கினுள்ளும் எப்பாற்படுமெனின், அதிகாரத்தால் நீடுகொடி, குளிறுபுலி என்பபோல இறுதியில் நின்ற கணவிரிப் பாற்படும் முறையான் என்பது. எனவே, போதுபூ பாதிரியாகவும், விறகுதீ கணவிரியாகவும் இயற்றப்படும் என்பது. இவ்வாறு கூறவே, இவை பாதிரி கணவிரி போல அசைதிரிந்து நிரையாம் என்பது கொள்ளற்க. நேர்பு நிரைபு முதலாக நிரையீறாகிய சீர்தளை கொண் டாங்குக் கொள்ளப்படும் இவையும் என்பதாம். 'தளைகோள் ஒக்கும்' எனவே ஏழு தளையுள்ளும் இவற்றை ஒன்று ஒன்றனுள் அடங்குமென்று அடக்கற்க. என்னை? இவை வேறுவேறு பட்ட அசையான் வேறுவேறு சீரானமையின் என்பது. அசைச்சீர்க்கு உரிச்சீரிலக்கணமின்மையின் இதற்கு இஃதொப்ப வாராதென்றுணர்க. ''நீத்துநீர்ப் பரப்பின் நிவந்துசென் மான்றேர்" என்புழிப்போது பூவும் விறகுதீயும் வந்தவாறு கண்டுகொள்க. இவற்றை ஆசிரிய வுரிச்சீர்ப்பின் வைத்த தென்னையெனின் இவையும் அவைபோல ஈண்டொருங்கியைதல் பெரும்பான்மை என்பது அறிவித்தற்கெனவுணர்க. நச்: 1. (இயலசை வேறுவேறு தம்முள் மயங்கிவரும். ஈரசைச்சீர் உணர்த்திற்று) இயலசை மயங்கினவை இயற்சீர் என்று கூறுக. மயக்கம் என்றது தம்மொடு தாம் மயங்குதலும் தம்மொடு பிறிது மயங்குதலுமாம். நேர்நேர் நிரைநிரை எனத்தம்மொடு தாம் மயங்கின; இரண்டனையும் பிரித்து நேர்நிரை, நிரைநேர் எனப் பிறிதொடு மயக்க இந்நான்கும் இயற்சீராயின. இந்நான்கு வழியல்லது வேறு கூட்டமின்மையும் உணர்க. இவற்றைத் தேமா புளிமா பாதிரி கணவிரி எனவும் கருவிளம் கூவிளம் எனவுங் காட்டுப; பிறவாறுங் காட்டுப. 2. (இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண்டியற்சீர் உணர்த் திற்று). மேனின்ற அதிகாரத்தான் உரியசை யிரண்டன்பின்னும் நேரசை வரின் அவை யிரண்டும் இயற்சீர்ப் பாலவாம். (எடு.) சேற்றுக்கால், வேணுக்கோல், களிற்றுத்தாள், முழவுத் தோள் என வரும். நீத்துநீர் குளத்துநீர் எனவும் போதுபூ, மேவுசீர், விறகுதீ, உருமுதீ எனவும் கண்டு கொள்க. இவையெல்லாம் பாதிரி, கணவிரி என்னும் இயற்சீர்ப் பாற்படும். போதுபூ, விறகுதீ என்னும் இரண்டன்கட் குற்றுகரம் மேல்வரும் நெடிலோடு இணைந்து நிரையாய்ப் பாதிரி, கணவிரி போல நிரையாமோ எனின், ஆகா; அக்குற்றுகரம் நேர்பு, நிரைபு மாயே நின்று நேரும் நிரையும் முதலாய் நிரையீறாகிய சீர்தளை கொண்டாங்குத் தட்கும். ''நீத்துநீர்ப் பரப்பின் நிவந்துசென் மான்றேர்" எனப் போதுபூவும், விறகு தீயும் வந்தன. இயற்சீர் வெள்ளடி அ. இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்பவும் உளவே. (தொ.பொ.368) ஆ. வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே (பல்காயம்) இயற்சீர் வெள்ளடி வஞ்சி யடியிவை அகப்பட வரூஉம் அகவலும் உளவே (யா.வி.29) வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே வெண்பா விரவினும் கடிவரை இன்றே (நற்றத்தம்) இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப் படாஅல்ல" (யா.கா.41) இ. இளம்: (ஆசிரியப்பாவின்கண் வெண்பாமயங்குமாறு உணர்த்துதல்) இயற்சீர் வெண்டளையான் ஆகிய வெண்பாவடி ஆசிரியப்பாவின் கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவும் உள. உள என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க. வெண்டளை என்னாது அடி என்றதனால் தளைவிரவுதல் பெரும்பான்மை, அடிவிரவுதல் சிறுபான்மை என்று கொள்க. ''கடல்பா டொழிய இனமீன் முகந்து" என்பது இயற்சீர் வெண்டளையடி. பேரா: (நிற்கவும் பெறுமே பாடம்) இது, இயற்சீரடியான் வரும் ஆசிரியத்திற்கு மயங்கியல் வகையான் நிலைக்குரித்தாகி நிற்கவும் பெறும் என்கின்றது. அம்மயங்கியல் வகைதான் அப் பாவிற்கு உரிமை பூண்டு நிற்கும்; ஆசிரிய அடியோடு கூடிய கூட்டத்துக்கண். வெண்பாவினுள்ளாயின் ஆசிரிய அடி முழுவதும் தன் தளையோடு வாராது. என்னை? ''தூஉத் தீம்புகை... பசப்பு" என்பதன் முதலடியுள்ளே தூஉத் தீம்புகை என ஓர் ஆசிரியத்தளை வர மற்றையன வெண்டளையாகி வந்தமையின். அற்றன்றி முழுவதூஉம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையுமாகலின் இதனையே சொல்லின் முடிவிலக்கணத்தான் வெண்பாவென்றான். எனவே வேறோசை விராயவழித்தன்னோசை அழிதல் இதற்குப் பெரும் பான்மையாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு அழியா தென்பது கருத்து. என்போலவோ எனின், பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையால் பளிங்கு வேறுபடின் அல்லது பஞ்சி வேறுபடாதது போலவென்பது. இதனான் வெள்ளை என்பது ஒப்பினான் ஆகிய பெயரென்பதூஉம் பெற்றாம். ''கொலைநவில் வேட்டுவன்... கண்ணே" என்பது செய்யுள் முழுவதும் இயற்சீர் வெள்ளடியான் வந்தது. நச்: (நிற்கவும் பெறுமே பாடம்) (வெள்ளடி ஆசிரியத்துள் வருமாறு கூறுகின்றது). இயற்சீர் வெண்டளை ஆசிரியச்சீரான் வரும் வெள்ளடி, ஆசிரியப் பாவின்கண் நிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும். உம்மை எதிர்மறை. ஆசிரிய அடியோடு மயங்கி அதற்குரிமை பூண்டு நிற்கும் என்பார் 'நிலைக்குரி மரபின்' என்றார். இதனான் மயங்காமல் இயற்சீர் வெள்ளடி முழுதும் வரவும் பெறுமென்றுங் கொள்வாரும் உளர். ''கொலைநவில் வேட்டுவன்... கண்ணே" இது வெள்ளடி முழுதும் வந்ததென்று பேராசிரியர் காட்டினார்.. இதனை அகவலோசை பிறக்குமென்று கொள்ளின் இயற்சீர் வெண்டளையான் வருமென்ற கட்டளை வெண்பாவின்றாமென மறுக்க. இனி ஆசிரியத்துள் இங்ஙனம் வருமெனவே வெண்பாவினுள் ஆசிரிய அடி முழுவதூஉம் தன்தளையோடு வாரா சிறிது வருமென்று கொள்க. அது கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய் வரும் வெண்பாக்களில் ஆசிரியத்தளை வருமேனும் அவை வெள்ளைக் கொச்சகமாமாறும் உணர்க. உ. ஆ.கு: மாமுன் நிரையும், விளமுன் நேருமாக வருதல் இயற்சீர் வெண்டளை. இவ்வெண்டளையானேயே வரும் அடி இயற்சீர் வெள்ளடியாம். 'கடல்பா டொழிய இனமீன் முகந்து' என இளம்பூரணர் சுட்டும் எடுத்துக்காட்டில் எல்லாச் சீர்களும் மாமுன் நிரையாகவே வந்து இயற்சீர் வெண்டளையாதல் அறியலாம். இயன்மொழி வாழ்த்து அ. அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும் (தொ.பொ.87) ஆ. இயன்மொழி வாழ்த்தே. (பு.வெ.9) இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும் அன்னோர் போல அவையெமக் கீயென என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று (பு.வெ.பா.6) மயலறு சீர்த்தி மான்தேர் மன்னவன் இயல்பே மொழியினும் அத்துறை யாகும் (பு.வெ.பா.7) இன்னோர் இன்னவை கொடுத்தனர் நீயும் அன்னோர்போல் அருள்கெனும் இயன்மொழி வாழ்த்தும் (இ.வி.617) இ. இளம்: (பாடாண் திணைக்குத் துறையாமாறு உணர்த்துதல்) வென்றியும் குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும் அஃது, இயல்மொழி எனவும், வாழ்த்து எனவும், இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும். நச்: (மக்கட்பாடாண்திணைக்குரிய துறை கூறுகின்றது). தலைவன் எதிர்சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்; என்றது, இக்குடிப்பிறந் தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும் அவற்றை நீயும் இயல்பாக உடையை என்றும் அன்னோர் போல எமக்கு நீயும் இயல்பாக ஈயென்றும் உயர்ந்தோர்கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்மைத்தொகையாக்கி இயன் மொழியும் வாழ்த்துமென இரண்டாக்கிக் கொள்க. இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலானும் வண்ணப் பகுதி யின்மையானும் பரவலின் வேறாயிற்று. ''இம்மைச் செய்தது" (புறம். 134) இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி என்றமையின் அயலோரையும் அடுத்தூர்ந் தேத்தியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. நாவலர்: (இது பாடாண்வகைப் பொருள் இயலும் பெயரும் கூறுகிறது) நெருங்கிப் பொருந்திப் புகழும் இயன்மொழி வாழ்த்தென்னும் துறையும். குறிப்பு: உள்ள சால்புரைப்பது இயன்மொழி. பிற்காலத்து இது மெய்க் கீர்த்தி எனப்பட்டது. க.வெ. புலவர்பாடும் புகழுடையவர்களை நெருங்கி முந்துற்று அவர்தம் வென்றியும் கொடைத்திறனும் முதலிய நல்லியல்புகளை எடுத்து மொழிந்து உளமுவந்து வாழ்த்தும் இயன்மொழி வாழ்த்தும். உ. ஆ.கு: உள்ளதன்மை உள்ளவாறு கூறுவதாம் தன்மை நவிற்சியை இயல்பு நவிற்சி என்றல் அறியத்தக்கது. அவ்வகையில் இயல்பு மொழிவதும் வாழ்த்துவ தும் ஆகிய இரண்டும் இணைந்தவை இயன்மொழி வாழ்த்து என்பதாம். இயைபு (தொடை) அ. 1. மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப (தொ.பொ.393) 2. இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப (தொ.பொ.401) ஆ. இறுவாய் ஒப்பினஃ தியைபெனப் படுமே (யா.வி.40) இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப (அவிநயம்) இயைபே இறுசீர் ஒன்றும் என்ப பல்காயம் இறுசீர் ஒன்றின் இயைபெனப் படுமே நத்தத்தம் ''இறுதி இயைபு" (யா.கா.16) ''அந்தம் இயைபே" (தொ.வி.212) இறுதி அசையெழுத்தேனும் ஒன்றுவது அடியியைபாமென அறையப் படுமே (மு.வீ.யா.25) இ. இளம்: 1. (தொடைப்பாகுபாடு உணர்த்துதல்) 2. (இயைபுத் தொடையாமாறு உணர்த்துதல்) அடிதோறும் ஈற்றெழுத்து ஒன்றிவரின் அஃது இயைபுத் தொடை என்று சொல்வர். அசைசீரென வரையாது கூறினமையான் ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம் என்று கொள்க. பேரா: 1. (தொடைவகை இவையெனப் பெயரும் முறையும் உணர்த்துதல்) 2. (இயைபு கூறுகின்றது) (பாடம்: ''இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே") இரண்டடியினும் பொருளியைபின்றி எழுத்தாதல் சொல் லாதல் ஈற்றிலே பொருந்தத் தொடுப்பது இயைபுத் தொடைக் கிலக்கணம். (கட்டளை எழுத்தடி யியைபு, கட்டளைச் சொல்லடி யியையுபு, கீழ்க்கதுவாயியைபு, முற்றியைபு, சீர்வகைப் பொழிப்பு, சீர்வகை மேற்கதுவாய் முதலியவற்றுக்கு எடுத்துக்காட்டுக் காட்டுவார்). உ. ஆ.கு: எதுகை மோனை என்பவை செய்யுளின்பம் பயப்பன. அவற்றுடன் அடியிறுதிச் சீரோ, அசையோ, எழுத்தோ இயைந்து வருவதாம் இயைபு, முடிநிலை ஓசையின்பம் தந்து மும்மடி இன்பம் பயப்பதாம். மேலை மொழியாம் ஆங்கில மொழியில், இயைபு இலக்கணம் தனிச் சிறப்போடு இலங்குதலை ஒப்பிட்டுக் காண்பார் தமிழ்த் தொடை யின் தகவுகளைத் தனித்துணர்ந்து இனிப்புறுவர். அடியிறுதியே யன்றி அரையடி யீற்றில் இயைபு வருதலும் தமிழ் வழக்காகும். எடு: ''பல்லெலாம் தெரியக்காட்டி பருவரல் முகத்தில் கூட்டி" (குசேலோபாக்கியானம்.) இறுதி இருசீர்களில் இயைபு வருதலும் இசையின்பம் மிகப் பயத்தல், ''கலக வாள்விழி வேலோ சேலோ மதுர வாய்மொழி தேனோ பாலோ" (திருப்புகழ்) என்பனபோலவரும் வண்ணப்பாக்களால் விளங்கும். இயைபு (பாடல் முடிநிலை) அ. ஞகார முதலா னகாரை ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே (தொ.பொ.541) ஆ. ஞணநம னயரல வழள என்னும் புள்ளியிறுதி இயைபெனப் புகறலும் (இ.வி.754) இ. இளம்: (பாடம்: ''ஞகாரை முதலா னகாரை ஈற்றுப்") (இயைபாமாறு உணர்த்துதல்) ஞண நமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபென்னும் செய்யுளாம். உதாரணம் வந்தவழிக் காண்க. பேரா: (இயைபுணர்த்துதல்) (பாடம்: ''ளகாரை ஈற்று") ஞண நமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றனை இறுதியாகச் செய்யும் செய்யுள் பொருட்டொடராகவும் சொற்றொட ராகவும் செய்வது இயைபெனப்படும். இயைபென்றதனான் பொருளும் இயைந்து, சொல்லும் இயைந்து வருமென்பது கருத்து. சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேக லையும் கொங்குவேளிராற் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன. அவை, னகார ஒற்றான் இற்றன. மற்றை யீற்றான் வருவன வற்றுக்கும் ஈண்டிலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கொள்க. இப்பொழுது அவை வீழ்ந்தன போலும். பரந்தமொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோலொடு இதனிடை வேற்றுமை என்னையெனின், அவை உயிரீற்றவாதல் பெரும் பான்மையாக லான் வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலு முடைய என்பது. சொற்றொடரென்பது, அந்தாதி எனப்படுவது என்றதனான், உயிரீற்றுச் சொற்றொடர் சிறுபான்மை என்பது கொள்க. நச்: (பாடம்: ''ளகார ஈற்று") (இயைபு கூறுகின்றது) ஞண நமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈறாகக் கொண்டு செய்யுளைப் பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும். இயைபென்றதனானே பொருளியைதல் பெற்றாம். பரந்த மொழியால் அடிநிமிர்ந்த தோல் உயிரீற்றவாயே வரும். னகரவீற்றான் இற்றுப் பொருள் தொடர்ந்தன மணி மேகலையும் உதயணன் கதையும். ஒழிந்த ஒற்றுக்களுக் கும் இலக்கண முண்மையின் இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும். எனப்படுவ என்றதனான் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் றொடரும் கொள்க. உ. ஆ.கு: கொங்குவேளிரால் செய்யப்பட்டது பெருங்கதை; உதயணன் கதை என்பதும் அது. 'கொங்குவேண்மாக் கதை' என்றாரும் உளர். மணி மேகலை, பெருங்கதை ஆகியவற்றின் எல்லாப் பாடல்களும் 'என்' என்னும் ஈற்றால் முடிந்துள. ஆகலான், னகார ஈற்றான் முடிந்தன வாம். 'என்' என்னும் ஈற்றான் முடிந்த இவ் வாசிரியம் அனைத்தும் நிலைமண்டில ஆசிரியமாக இருத்தல் எண்ணத்தக்கதாம். ஈற்றயல் முச்சீராதல் நேரிசை யாசிரியம் என்பதும், அது நாற்சீராக இருத்தல் நிலைமண்டில ஆசிரியம் என்பதும், பாட்டு தொகைகளில் இடம் பெற்றுள்ள ஆசிரியம் அனைத்தும் நேரிசை யாசிரியமே என்பதும் எண்ணத்தக்கனவாம். இயைபுவண்ணம் அ. இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. (தொ.பொ.519) ஆ. இயைபு வண்ணம் (இ.வி.757) 'இடை' (தொ.வி.250) இடையினம் மிகுவன இடையிசை எனலே. (மு.வீ.யா.ஒ.24) இ. இளம்: (இயைபுவண்ணம் ஆமாறுணர்த்துதல்) இடையெழுத்து மிக்கு வருவது இயைபு வண்ணமாம். பேரா: இடையெழுத்து மிகுவது இயைபு வண்ணம். மென்மை வன்மைக்கு இடைநிகரவாகிய எழுத்தான் வருதலின் இயைபு வண்ணமென்றார். நச்: இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. உ. ஆ.கு. வன்மையும் மென்மையும் மிகுதல் இன்றி இடைத் தரத்த ஒலியுடையவாம் இடையெழுத்து மிகுவரலால் 'இடைபு' அல்லது இடையிசை வண்ணம் எனத்தக்கதெனினும் தொல்லாட்சி கருதி இயைபு ஆயிற்றாம். இனி, வலியும் மெலிவும் இன்றி இரண்டற்கும் இயைந்து செல்லும் இடைநிகர வாம் ஒலியுடையதாகலின் இப்பெயர் பெற்றது எனினுமாம். இரங்கல் அ. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் (தொ.பொ.16) இ. இளம்: (உரிப்பொருள்) இரங்கலாவது ஆற்றாமை. நச்: கடலுங் கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும் தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணைப் புள்ளும் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். ஈ. நாவலர்: இரங்கல் ஆற்றாதிரங்கல். உ. ஆ.கு: பிரிவுக்கு ஏற்பட்ட இரங்கல், இதுகால் பெரும் பிரிவுக்கும் உரித்தாகி இரங்கல் கூட்டமாகவும் நடைமுறையில் உள்ளது. உரிப்பொருள் காண்க. இரட்டைக்கிளவி அ. ''இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே" (தொ.பொ.293) ஆ. ''அடையொடு பொருட்கடை புணர்க்கும திரட்டை" (மாறனலங்.103) இ. இளம்: (ஒருமரபுணர்த்துதல் நுதலிற்று) இரட்டைக் கிளவியாவது உவமையிரண்டு சொல்லோடு அடுத்து வருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொருளாகி வருதல் வேண்டும். அவ்வழி இரண்டு சொல்லும் ஒரு சொன்னீர்மைப்பட்டு வருதல் வேண்டும் என்று கொள்க. பேரா: (எய்தாதது எய்துவித்தது; அடையொடுவந்த பொருளொடு புணர்க்குமாறு கூறினமையின்) அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாகச் சொல்லப் படும் கிளவி, அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாக்கி நிறுத்தப் படும் உவமையின் வழித்து. இரட்டைக் கிளவி எனப் பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொருளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்கும் என்பது கருத்து. உம்மையான் ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்தாகி வருவன கொள்க. ஈ. க.வெ: உவமை இரண்டாகி ஒரு சொற்றன்மைப்பட்டும் அவற்றால் உவமிக்கப் படும் பொருளும் இரண்டாகி ஒரு தொடர்த் தன்மைப் பட்டும் வரின் இவை இரட்டைக் கிளவி எனப்படும். இவ்வாறு இரட்டைக் கிளவியாய் வரும் உவமைக்கேற்பவே உவமேயமும் இரட்டைக் கிளவியாக அமைதலே பொருள் புலப்பாட்டிற்கு ஏற்புடைய இலக்கணமரபாம் என்பது இந்நூற்பா வின் கருத்தாகும். உ. ஆ.கு: ''பொன்காண் கட்டளை கடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பு" (பெரும்பாண். 21920) எனக்காட்டும் பேராசிரியர், ''தம் பைம்பூண் புடைத்த செஞ்சுவட் டினையும் மார்பினையும், பொன்னுரையோடும் கல்லோடும் உவமித்தமை யின் இரட்டைக் கிளவி இரட்டை வழித்தாயிற்று" என்றார். இதில் மார்புக்குக் கட்டளையுவமையும், பூணுக்குப் பொன்னுரையுவமையும் இரட்டைபட நிற்றல் அறிக. இரட்டை யாப்பு அ. நிரனிறுத் தியற்றலும் இரட்டை யாப்பும் மொழிந்தவற் றியலான் முற்றும் என்ப. (தொ.பொ.396) ஆ. முழுவதும் ஒன்றின் இரட்டை யாகும் (பல்காயனார்) சீர்முழு தொன்றின் இரட்டை யாகும் (நற்றத்தனார்) ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை (அவிநயனார்) அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை (பரிமாணனார்) இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே (யா.வி.51) அடிமுழுதும் வந்தமொழியே வருவதிரட்டை (யா.கா.17) நேரடியின் முழுவதும் ஒருசொல் வரினஃ திரட்டை (இ.வி.725) இரட்டை முழுதோர் இறையடுக் கியவடி (தொ.வி.217) ஓரடி முழுதும் ஒரு சொல்லேவரத் தொடுப்பது இரட்டைத் தொடையெனப் படுமே (மு.வீ.892) இ. இளம்: (தொடைப்பாகுபாடு உணர்த்துதல்) ''இரட்டை யாப்பு" இரட்டைத் தொடையாவது ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வருதல். பேரா: வந்தசீரே நாற்கால் தொடுக்கும் தொடை. இரட்டைத் தொடை என்பது ஒரு சொல்லே நான்கு சீருமாகி வரும் என்பது அஃது, ''ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்" எனவரும். இது குறையீற்றிரட்டை; இயைபுத் தொடையாய் அடங்கும். ''பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ பாவீற் றிருந்த புலவீர்காள் பாடகோ" என்பது நிறையீற்றிரட்டை. இதுவும் இயைபால் அடங்கிற்று. நச்: இந்நூற்பாவிற்கு உரை கிடைத்திலது. ஈ. யா.வி: சொல்வேறுபடாது பொருள்பிறிதாகியும் ஆகாதும் வருவதே கொள்ளப் படும். ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்துங் கொடுங்குழாய்! நாடி உணர்வார்ப் பெறின். இது பொருள் வேறாய் ஒரு சொல்லே வந்த இரட்டைத் தொடை. உ. ஆ.கு: யாப்பருங்கல விருத்தியார் எடுத்துக்காட்டு: கூடற்பழனத்து ஓடை ஓடைக்கொடி. கொல்லிமலைமேல் ஓடை மலைவழி. மாறன்மதகளிற்றுநுதல்ஓடை நெற்றிப்பட்டம். கோடலங்கொல்லைப்புனத்து ஓடை நீரோடை. இது, சொல்வேறுபடாது பொருள்பிறிதாகியது. ''ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்" என்பது பொருள் வேறுபடாத சொல்லடுக்கு. இறுதி ஒக்கும் என்பதில் ஏகாரம் குறைதலால் குறையீற்றிரட்டை என்றார் பேரா. பாடுகோ என்பது குறையாமல் இறுதியில் நிற்றலால் நிறை யீற்றிரட்டை என்றார். இரவுக்குறி அ. 1. குறியெனப்படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப (தொ.பொ.128) 2. ''இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான" (தொ.பொ.129) ஆ. குறியெனப்படுவது இரவினும் பகலினும் அறியக் கிளந்த இடமென மொழிப (இறை. 18) இரவுக் குறியே இல்வரை இகவாது இரவுமனை இகந்த குறியிடத் தல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை (இறை. 21) பகற்குறி இரவுக்குறியெனும் பான்மைய புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ்இடன் (ந.அ.37 இ.வி.406) இல்வரை இகந்தது பகற்குறி இரவுக்குறி இல்வரை இகவா இயல்பிற் றாகும் (ந.அ.38 இ.வி.406) வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல் கூடல்பா ராட்டல் பாங்கில் கூட்டல் உயங்கல் நீங்கலென் றொன்பது வகைத்தே இயம்பிப் போந்த இரவுக் குறியே (ந.அ.157 இ.வி.516) மாட்சியின் வேண்டல் மறுத்தல் உடன்படல் சூழ்ச்சியின் கூட்டம் சோலையிற் கூடல் பாராட்டுதலொடு பாங்கிற் கூட்டல் உய்த்தல் நீங்கலென் றொன்பான் ஆகும் வகுத்துப் போந்த இரவிற்குறி வகையே (மா.அக.49) இ. இளம்: 1. குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தை உடைத்து. எனவே, இரவிற்குறி பகற்குறி என இரு வகைப்படும் என்பது கொள்ளப்படும். 2. (இரவுக்குறிக்கு இடமுணர்த்துதல்) இரவுக்குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகா விடத்துக்கண் மனையோர் கிளவிகேட்கும் அணிமைத்தாம். எனவே மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும். நச்: 1. (கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது) (பாடம் அறியத்தோன்றும்) குறியென்று சொல்லப்படுவது இரவின்கண்ணும் பகலின் கண்ணும் தலைவனும் தலைவியும் தானும் அறியும்படி தோன்றும் நெறியை யுடைய இடம். நெறியென்றார், அவன் வருதற்குரிய நெறி இடமென் றற்கு. அதுவென்று ஒருமையாற் கூறினார், தலைப்பெய்வ தோரிட மென்னும் பொதுமை பற்றி. இரவு களவிற்குச் சிறத்தலின் முற் கூறினார். அறியத்தோன்றுமென்றதனாற் சென்று காட்டல் வேண்டா, நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க. 2. (இரவுக்குறியிடம் உணர்த்துகின்றது) உண்மனையிற் சென்று கூடுதற்கு உரித்தல்லாத முற்காலத்துண்டான இரவுக்குறியே, இல்வரைப்பினுள்ளதாகியும் மனையோர் கூறிய கிளவி கேட்கும் பிற மனையிடத்ததாம். அல்லகுறிப்பட்டதனை ஒருவாற்றால் உணர்த்திய காலத்து அவன் அதுகேட்டு ஆற்றுவன் என்பது கருதி, மனையோர் கிளவி கேட்கும் வழியது என்றார். என்றது, இரவுக்குறி. அம்முயற்சிக்காலத்து அச்ச நிகழ்தலின் அகமனைக்கும் புறமதிற்கும் நடுவே புணர்ச்சி நிகழு மென்றதாம். அகமனையிற் புகாக் காலை எனவே, இரவுக்குறி அங்ஙனஞ் சிலநாள் நிகழ்ந்தபின்னர் அச்சமின்றி உண்மனையிற் சென்று கூடவும் பெறுமென்பதும் கூறியதாம். தலைவி புறத்துப் போகின்றாள் எனச் செவிலிக்கு ஓர் ஐயம் நிகழ்ந்த வழிப் பின்னர் மனையகத்துப் புணர்ச்சி நிகழுமென்றுணர்க. உ. ஆ.கு: குறி குறியிடம். தலைவன் தலைவியர் சந்திப்புக் குறித்த இடம் 'குறி' எனப்பட்டதாம். பின்னர்க் குறிப்பு, குறிக்கோள் அறிகுறி என வளர்ந்து அடையாளம், செய்கை, நினைவு, இலக்கணம் எனப் பொருள் விரிந்து பெருகியுள்ளதாம். இருத்தல் அ. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் (தொ.பொ.16) இ. இளம்: (உரிப்பொருள்) இருத்தலாவது தலைமகன் வருந்துணையும் ஆற்றி யிருத்தல். நச்: தலைவி, பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றிருத்தலும், பிரிந்துழிக் குறித்த பருவமென்றுதானே கூறுதலும் பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவனவும் போல்வன இருத்தல். ஈ. நாவலர்: இருத்தல் பிரியாவிடையாற்றியிருத்தல். உ. ஆ.கு: தலைவி தன்துயர் பொறுத்துத் தலைவன் வரவை எதிர்நோக்கி யிருத்தல் என்பது இருத்தல் பொருளதாம். (உரிப்பொருள் காண்க). இருநிலத்தீண்டா அருநிலை அ. கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை வகையோடு இருபாற்பட்ட ஒருசிறப் பின்றே (தொ.பொ.71) ஆ. கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா வெருவரு நிலையும் (இ.வி.611) விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகைநிலை யுரைத்தன்று (பு.வெ.149) இ. இளம்: (தும்பைத் திணையின் சிறப்பியல் உணர்த்துதல்; ஒருபாற்கு மிகுதலின்றி இருவகையார்க்கும் ஒத்த இயல்பிற்றாம்; ஒருவர் மாட்டும் மிகுதல் இல்லையாம்). கணையும் வேலும் படைத்துணையாகக் கொண்டு பொருதல் காரணமாகச் சென்ற உயிரின் நின்ற யாக்கை, நீர் அட்டை காலவயப் பட்டு உடலினின்று உயிர்பிரிக்கப்படுமாறு இருபால் பகுக்கப்படும் அற்ற துண்டம் இணைந்தது போன்ற ஆடலொத்த பண்பினை யுடையது. நச்: (தும்பைத் திணைக்கு ஆவதோர் இலக்கணம் கூறுதலின் எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது). பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகலநின்று அம்பான் எய்தும் வேல்கொண்டெறிந்தும் போர்செய்ய அவ்வம்பும் வேலும் ஒன்றோ டொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின் சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு, வாளும் திகிரியு முதலிய வற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரியநிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி, இரண்டுகூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை. எனவே, (முற்கூறிய) மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந்தீண்டாயாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைச் சிறப்புக்கூறியது. மொய்த்தலின் என்றது, யாக்கையற்றாட வேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள்முதலியன ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலீகனிற அற்றுழியும் உடம்பு ஆடுதலின் அட்டையாடல் எனவும் இதனைக் கூறுப. (அலீகன் அட்டை). இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற்றுறை யெனவும் படாது; ஆயினும் துறைப் பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென்றுணர்க. ஈ. நாவலர்: (தும்பைத்திணையின் ஒரு சிறப்புணர்த்துகிறது). அளவிறந்த அம்பும் வேலும் செறிந்து அடர்தலின், பிரிந்த உயிரி னின்றும் நீங்கிய பின்னும் வீழாது நின்ற உடலின் அரிய நிலைப்பரிசு (அறுபட்ட தலை முதலிய உறுப்புக்கள்) பெருநிலம் படியாது முறுகிய இகல் முனைப் பால் துடித்தியங்கும் அரிய நிலைமையாகிய பரிசுடன் இவ்விரண்டு கூறுபட்ட ஒப்பற்ற சிறப்பினை யுடைத்து தும்பைத் திணை. முறுகிய தறுகண் முனைப்பால் உயிரிழந்த உடல் வீழாது நிற்றலும் துணிக்கப்பட்ட தலை முதலிய உறுப்புக்கள் நிலந்தோயாமல் துடிந் தியங்கலும் ஆகிய இருவகை அரியநிலையைச் சிறப்பாக வுடையது தும்பைத்திணை. அரு என்பதை அட்டை எனக்கொண்டு அதன் பின்வரும் இருபாற்பட்ட எனுந் தொடரை அவ்வட்டைக்கு அடையாக்கி, இருகூறுபட்ட அட்டைப் பகுதிகள் தனித்தனி ஊர்ந்து இயங்குவது போலத் துணிக்கப்பட்ட தலையும் உடலும் தனித்தனி துடிக்கும் எனப்பொருள் கூறுவர் பழைய உரைகாரர். இரண்டின் மேற்பட வெட்டுண்ட அட்டைத்துண்டுகளும் துடிப்ப தியல்பாதலால் இருபாற்பட்ட என்பது பொருளற்றதாகும். அன்றியும் ஊர்ந்து செல்லுதல் நிலமிசையேயா மாதலால் அது இருநிலந் தீண்டா அருநிலை எனற்கும் அமையாது. அதனால் இருபாற்பட்ட எனுந்தொடர் அதையடுத்து வரும் ஒரு சிறப்புக்கே அடையாதல் தேற்றம். நின்ற யாக்கை, நிலந்தீண்டா உறுப்பு அருநிலை என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க. க.வெ.: 'இருநிலந்தீண்டா அரு' என்றது நீரில் வாழும் அட்டை எனப்படும் சிற்றுயிரை. நீரிலுள்ள அட்டையின் உடம்பு பலகூறாகத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் அறுபட்ட துண்டங்கள் தனித்தனியே இயங்குமாறு போன்று போர்க்களத்திற்பொரும் வீரனது தலை அறுபட்ட நிலையிலும் அவனது குறையுடலும் தலையும் நிலத்திற்கிடவாது துள்ளியாடும் நிலையினையே 'இருநிலந்தீண்டா அருநிலை' என்றார் தொல்காப்பியனார். இதனை அட்டையாடல் எனவுங் கூறுப. இருமூன்று மரபிற்கல் அ. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபிற் கல்லொடு புணர (தொ.பொ.63) ஆ. களத்திடை வீழ்ந்தோர்க்குக் கல்கண் டிடுதலும் கற்கோள் நிலையும் கல்நீர்ப் படுத்தலும் மற்றவை நிரைத்த அத்துறைப் பகுதியும் கல்நாட்டுதலும் கல்முறை பழிச்சலும் பொன்னார் இல்கொடு புகுதலும் (இ.வி.619) கல்கண்டிடுதல் ஆனா வென்றி அமரில்வீழ்ந் தோற்குக் கானம் நீளிடைக் கல்கண் டன்று (பு.வெ.8) கற்கோள்நிலை மண்மருளத் துடிகறங்க விண்மேயாற்குக் கற்கொண்டன்று (பு.வெ.9) கல்நீர்ப்படுத்தல் வண்டுசூழ் தாமம்புடையே அலம்வரக் கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று (பு.வெ.10) கல்நீர்ப்படுத்தலின் பக்கம் ஓங்கியகல் உய்த்து ஒழுக்கல் ஆங்கெண்ணினும் அத்துறையாகும் (பு.வெ.11) கல்நாட்டுதல் அவன்பெயர் கல்மிசைப் பொறித்துக் கவின்பெறக்கல் நாட்டின்று (பு.வெ.12) கல்முறை பழிச்சல் நிழலவிர் எழில்மணிப் பூண் கழல் வெய்யோன் கல்வாழ்த்தின்று (பு.வெ.13) இல்கொடுபுகுதல் வேத்தமருள் விழிந்தோன் கல்லென ஏத்தினர் துவன்றி இல்கொண்டு புக்கன்று (பு.வெ.14) இ. இளம்: (வெட்சிக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உணர்த்துதல்) காட்சி (போர்க்களத்துப்பட்ட வீரரைக்கல் நிறுத்தற் பொருட்டுக்) காண்டல். கால்கோள் (அவ்வாறு காணப்பட்ட கல்லைக் கைக்கோடல்). நீர்ப்படை அக்கல்லை நீர்ப்படுத்துதல். நடுதல் அக்கல்லை நடுதல். சீர்த்தகுமரபிற் பெரும்படை மிகவுந் தக்கமரபினையுடைய பெரும் படையினும் அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. வாழ்த்து அக்கல்லைப் பழிச்சுதல். நச்: (புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல்) காட்சி: கல்லெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப் பின்னர்க் காண்டலும் என இருவகையாம். கால்கோள் கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும் நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இரு வகையாம். நீர்ப்படை கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்த லும். பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டியவழி நீராட்டுதலுமென இருவகையாம். நடுதல் கல்லினை நடுதலும், அக்கல்லின்கண் மறவனை நடுதலு மென இரு வகையாம். சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை அவன்செய்த புகழைத் தகும்படி பொறித் தலும் அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம். வாழ்த்தல் கால்கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்து தலும், பின்னர் நடப்பட்ட கல்லிணைத் தெய்வமாக்கி வாழ்த்தலுமென இருவகையாம். ஈ. நாவலர்: காட்சி பொருதுவீழ்ந்தார்க்கு நடுதற்பொருட்டுத் தக்கோர் கல்லைத் தேர்ந்து காணல். கால்கோள் தேர்ந்து கண்ட கல்லைக் கொணர்தல். நீர்ப்படை விழாவொடு அக்கல்லைத் தூய நீரால் குளிப்பித்தல். நடுதல் பிறகு அதனை எடுத்து நடுதல். சீர்த்தகு மரபிற்பெரும்படை சிறந்த முறையில் நாட்டிய கல்லுக்கு மிக்க பலியுணவு படைத்தல். வாழ்த்தல் அவ்வாறு கடவுளேற்றிப்பலியூட்டிய அக்கல்லைப் பழிச்சுதல். என்றிருமூன்றுவகையில் கல் இவ்வாறு அறுதிறப்படும் நடுகல். போரிற்புகழொடு பட்டானைப் பாராட்டிக்கல் நாட்டு விழாவொடு பழிச்சுதல் பண்டைத் தமிழர் வழக்காகும். உ. ஆ.கு: சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் இருமூன்று மரபிற் கல் என்னும் இலக்கணத்திற்கு அமைந்த இலக்கியமாம். இருமூன்று மரபின் ஏனோர்பக்கம் அ. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் (தொ.பொ.74) ஆ. இருமூன்று மரபின் ஏனோர் வாகை (இ.வி.613) ''வாணிக வாகை வேளாண் வாகை" (பு.வெ.8) ''நாற்குலப்பக்கம்" (வீர.104) ''செறு தொழிலின் சேண் நீங்கியான் அறு தொழிலும் எடுத்துரைத்தன்று" (பு.வெ.வா.10) ''மேல்மூவரும் மனம்புகல வாய்மையால் வழிஒழுகின்று" (பு.வெ.வா.11) இ. இளம்: (வாகைத்திணைப்பாகுபாடு உணர்த்துதல்) ஆறுமரபினையுடைய வணிகர் வேளாளர் பக்கமும். வணிகர்க்குரிய ஆறுபக்கமாவன: ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வாணிகம், நிரையோம்பல். வேளாண்மாந்தர்க்குரிய ஆறு மரபாவன: உழவு, உழ வொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடுபுறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த கல்வி. நச்: (வாகைத்திணைக்கே) யானதொரு சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறுகின்றது). ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமு மாகிய அறுவகையிலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகை யிலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும். வாணிகரையும் வேளாளரையும் வேறு கூறாது இருமூன்று மரபின் ஏனோர் எனக் கூடவோதினார். வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்கும் ஒத்தலின். இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக் கூட்டி ஆறென்பாருமுளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர். பக்கமென்றதனான் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குத் தொழில்வரையறை அவர்நிலைகளான் வேறுவேறு படுதல் பற்றி அவர் தொழில் கூறாது இங்ஙனம் பக்கமென்பதனான் அடக்கினர். இவை ஆண்பால் பற்றி உயர்ச்சி கொண்டன. ஈ. நாவலர்: (வாகையின் சிறப்பு வகைகளைக் கூறுகிறது) இனி, 'இருமூன்று மரபின் ஏனோர்' என்றதும், தமிழர் மரபு வகையே குறிப்பதாகும். பண்டைத் தமிழகத்தில் மக்கள் மரபாலும் தொழிலாலும் ஒத்த உரிமையுடன் வாழ்ந்தவர்கள். அவரிடைப் பிறப்பால் உயர்வு தாழ் வுடைமையும் விரும்பும் வினைபுரியும் உரிமைவிலக்கும் வழக்காறில்லை. தமிழர் வாழ்க்கைமுறை ஒழுக்க வழக்கம் விளக்கும் தொல்காப்பியரின் அகப்புறத்திணை யியல்களில் யாண்டும் வடநூல் சுட்டும் வருணவகைக் குறிப்பு ஒரு சிறிதுமில்லை. இவ்வுண்மை 'பெயரும் வினையுமென்றா யிருவகைய' என்னும் சூத்திரவுரையில் விரித்துக் கூறப்பட்டது. அதனாலும் இங்குத் தொழிற் துறையில் வாகை சூடுவாரின் மரபுவகை கூறுதலானும் 'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்' வழக்கன்றிப் பிறநூல் மரபுகள் பேணாமையே தொல்காப்பியரின் துணிபாதலானும் ஈண்டு நிலம்பற்றிய தமிழர் மரபுவகை சுட்டுவதே கருத்தாதல் தேற்றமாகும். தமிழரின் தாவில் கொள்கை வினையனைத்தும் வாகைக்குப் பொருளாக வெற்றி விரும்பு மக்களின் மரபு வகைகளையே இங்கு எண்கள் சுட்டுவது ஒருதலை. ஆயர் குறவர் உழவர் பரவர் என முல்லை முதல் நானில மக்களும் நிலக்குறிப் பின்றி யாண்டுமுள்ள வினைவலர் ஏவன்மரபினர் என்றிரு வகையின் மக்களுமாக மரபால் அறுவகைப்பட்ட தமிழ்க்குடிகள் உண்மையைத் தொல்காப்பியரே அகத்திணையியலில் தெளித்துளராதலின் தமிழர் புறவொழுக்கமும் கூறுமிவ்வியலின் இச்சூத்திரம் தமிழரை இருமூன்று வகையின் ஏனோர் என்று அடங்கக்குறிப்பதே அவர் கருத்தாமெனத் தேர்வது பொருத்தமாகும். அகத்திணை குறிக்கும் 'அடியோர்' பிறர்போல் இன்ப ஒழுக்கம் ஏற்பாராயினும் தாம் பிறர் உடைமையாய்த் தனிவினை யுரிமை தமக்கிலராதலின் வாகைக்குரியார் ஆகா ரென்பது வெளிப்படை. அவரொழியத் தமிழர் அறுவகையாரே வாகைக்குரியர். இன்னும் இங்கு வருணவகை விளக்குவதே கருத்தாயின் உரிமையுடைய இரு பிறப்பாளர் மூவரையுமுறையே கூறிப்பிறகு அவர்க்குரிய அடிமைக ளாய் உரிமையற்ற நான்காம் வருணத்தாரையும் வரிசை முறையே வகுத்துக் கூறுவர். அதைவிட்டுப் பார்ப்பாரையும் ஆளும் வேந்தரையும் மட்டும் சுட்டி, வைசியரை யும் ஆளாச் சத்திரியரையும் அறவேவிட்டு, அந்தணரும் அரசரும் அல்லார் எல்லாரையும் சூத்திரருடன் சேர்த்து ஓராங்கெண்ணி ஒருவகுப்பாக்கி ஒத்த வாகைத் தொழிலுடைய 'ஏனோர்' எனத் தொகுத்துச் சுட்டிய தொன்றே வருண தருமவகையெதுவும் கருதும் குறிப்பிங்கு இன்மையினை வலியுறுத் தும். அன்றியும் தமிழகத்தில் நான்கு வருணம் என்றுமின்மையாவரு மறிந்த உண்மை. தமிழரொடு கலவாத்தருக்குடைய பார்ப்பார் தமிழருள் சத்திரியர் வைசியர் என யாரையும் தழுவினதில்லை. உணவும் மணமும் ஓத்தும் வேள்வியும் முப்புரிச் சடங்கும் இருபிறப் பெய்தலும் இன்னபிறவும் தம்மரபினர்க்கு ஒத்தவுரிமையைத் தமிழருள் யார்க்கும் பார்ப்பார் தாரார். இல்லாக்கற்பகம் பொல்லா யாளிகள் கதைக்கப்படுதல்போல், இடை இருவருணமும் வடவர் புனைந்த நூற்கதையன்றித் தமிழக வரைப்பில் வழக்காறில்லை. இன்னும் பார்ப்பாரல்லா மற்றைய மூன்று வருணத்தார்க்கும் மனு முதலிய வடநூல்கள் விதிக்கும் தொழில்வகைகள் இச்சூத்திரப் பழைய உரைகாரர் அவரவர்க்குக் காட்டும் தொழில்வகைகளுடன் முற்றும் முரணுதலானும் அவருரை பொருந்தாமை தேறப்படும். தமிழரெல்லாரும் கடைவருணச் சூத்திரர் என்பதே பார்ப்பனர் துணிவு. மற்றை மேலோர் மூவருக்கும் அடிமைகளாய்த் தொண்டு புரிவ தொன்றே அவர்க்குரிய தொழில், பிறதொழிலெதுவும் தமக்குத் தம் பயன்கருதி மேற்கொள்ளுமுரிமை சூத்திரருக்குச் சிறிதுமில்லை. ஒத்த உணவு மணம் ஓதல் வேட்டல் தொழில் முதலிய ஆரிய மக்களுரிமை எதுவுமில்லா இழிந்த அடிமைச் சூத்திரரை இருபிறப்புடைய வைசியரோடெண்ணி வைசியர் தொழில்களைச் சூத்திரருக்குரித்தாக் கினதுமன்றி தருமநூல்களில் வைசியருக்கும் விலக்கிய அறுதொழி லுடைமையையும் சூத்திரரான நான்காம் வருணத்தமிழருக்குத் தந்து கூறும் உரை ஆரிய நூல்களொடு முரணித் தமிழ் மரபும் அழித்த தாகும். வரலாற்றுண்மை சிறிது மறியாது வேளாளருள்ளிட்ட தமிழ்ப் பெருமக்களை எல்லாம் கடைக்கீழடிமைச் சூத்திரவருணத் தவரெனக் கூறத்துணிவு, அறிவறம் வெறுக்கும் வெற்றுரையாகும். க.வெ: பார்ப்பனப் பக்கத்தையும் அரசர் பக்கத்தையும் பகுத்துக் கூறிய தொல் காப்பியனார் தம் காலத்து நால்வகை வருணப்பாகுபாடு தமிழகத்தில் நிலைபெற்றிருப்பின் பார்ப்பனப்பக்கம் அரசர் பக்கம் என்றதுபோல வணிகர் பக்கம் வேளாண் பக்கம் என்பவற்றையும் தனித்தனியே எடுத் துரைத்திருப்பர். ஏனோர் என்னுஞ்சொல் முன்னர் எடுத்துக்கூறப்பட்டோர் அல்லாது எஞ்சியுள்ளார் அனைவரையும் சுட்டுவதன்றி வணிகர் வேளாளர் ஆகிய இரு திறத்தாரையும் சுட்டினதெனக் கொள்ளுதற்கு இடமில்லை. இருவகைக் குறி பிழைப்பு அ. 1. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்தும் (தொ.பொ.105) 2. வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்... குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் ... தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் (தொ.பொ.109) 3. ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் காப்பின் கடுமை கையற வரினும் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி (தொ.பொ.112) ஆ. அல்ல குறிப் படுதலும் அவ்வயின் உரித்தே அவன்வர வறியும் குறிப்பி னான (இறை. 17) அல்லகுறி வருந்தொழிற் கருமை என்றாங் கெல்லுக்குறி யிடையீ டிருவகைத் தாகும் (ந.அ.159 இ.வி.518) எல்லுக்குறி இடையீ டிருவகைத் தவைதாம் அல்லகுறி வருந்தொழிற் கருமையென் றாகும் (மா.அக.51) குறிபிழைப்புவிரி இறைவிக் கிகுளை இறைவர வுணர்த்துழித் தான்குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தலும் பாங்கி தலைவன் தீங்கெடுத் தியம்பலும் புலந்தவன் போதலும் புலர்ந்தபின் வறுங்களம் தலைவிகண் டிரங்கலும் தன்துணைக் குரைத்தலும் தலைமகள் அவலம் பாங்கி தணித்தலும் இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றலும் இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றலும் அவள்குறி மருண்டமை அவளவற் கியம்பலும் அவன்மொழிக் கொடுமைசென்றவட் கியம்பலும் என்பிழைப் பன்றென் றிறைவி நோதலுமென ஒன்றுபன் னொன்றும் அல்லகுறிக் குரிய (ந.அ.160) தாயும் நாயும் ஊருந்துஞ் சாமை காவலர் கடுகுதல் நிலவுவெளிப் படுதல் கூகை குழறுதல் கோழிகுரற் காட்டுத லாகிய ஏழும் அல்லகுறித் தலைவன் வருந்தொழிற் கருமை பொருந்துத லுரிய (ந.அ.161) திரட்டியிவ் வாறு செப்பிய ஒன்பதிற் றிரட்டியும் இரவுக்குறி யிடையீட்டு விரியே (ந.அ.162 இ.வி.519) மான்விழிக் கிகுளை மன்வர வுணர்த்தலும் தான்குறி மருண்டமை தலைவியவட் குணர்த்தலும் சேடி இறைவன் தீங்கு கிளத்தலும் ஊடி இறைவன் ஒழிதலும் ஒண்ணுதல் வறுங்களம் தன்னை வந்துகண் டிரங்கலும் நறுந்துணர் அலர்க்குறி நாட்டமுற் றினையலும் உறுந்துயர் இகுளைக் குரைத்தலும் உறுந்துயர் இகுளை தணித்தலும் இறைவன்மேல் இகுளை குறிபிழைப் பேற்றலும் கோதைமேல் தலைவன் குறிபிழைப் பேற்றலும் அவள்குறி மருண்டமை அவளவற் கியம்பலும் ஆயிடைப் பாங்கி கொற்றவன் கொடுமை குறித்தவட் குணர்த்தலும் என்பிழைப் பன்றென் றிறைவிநோ தலுமென ஆறிரண் டுடனொன் றல்லகுறி விரியே (மா.அ.52) தாய்துஞ் சாமை ஊர்துஞ் சாமை நாய்துஞ் சாமை நகரக் காவலர் கடுகுதல் கங்குலின் உடுபதி உதித்தல் கூகை குழறல் குக்குடம் குரல்காட்டல் ஆகிய ஏழும் அல்லுக் குறிக்கிறைவன் வருந்தொழிற் கருமை பொருந்துதற்குரிய. (மா.அ.53) இ. இளம்: 1. பகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி இரவிற்குறி என்பது எற்றாற் பெறுதுமெனின். ''குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப" என்பதனாற் கொள்க (கள.40) அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்த விடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. 2. தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டுவருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும். தலைவன் செய்த குறியை ஒப்புமை பற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற்கண்ணும். அஃதாவது புள்ளெழுப்புதல் போல்வன. அவை பெற்றுப்புள்ளரவம் எழும். அவ்வாறு மருளுதல். 3. தலைவன், வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்றதனால் எய்திய கலக்கத்தானும் காவற்கடுமை வரையிறந்ததனானும் குறியிட மும் காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலைமையை விலக்கி (யதனானும்). நச்: 1. இரவுக்குறியும் பகற்குறியும் பிழைத்த இடத்தும். (தலைவி கூற்று நிகழ்த்துமாறு). 2. தலைவன் இடைவிடாது வருதற்கு ஆண்டு நிகழும் ஏதம் பலவாற் றானும் உளதாம் அருமையை வாயிலாகிய தோழி கூறினும். இரவுக்குறி வருந்தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனான் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி அதனை மெய்யாக உணர்ந்து தலைவி மயங்கிய வழியும். புனலொலிப்படுத்தன் முதலிய அவன் செயற்கை யானன்றி இயற்கையான் நிகழ்த்துழிக் குறியின் ஒப்புமையாம். தலைவி தன்னாற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலிய காரணங்களான் இழக்கப்பட்டனவற்றை இவை இழக்குமென முந்தவே உணராத காலத்து முற்கூறிய குறியிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலால் தமக்குப் பயம்படாத வறுங் களத்தை நினைந்து அதனைத் தலைவற்கு முந்துறவே குறிபெயர்த் திடப் பெறாத தவறு தன்மேல் ஏற்றிக் கொண்டு, தோழியையும் அது கூறிற்றில ளெனத் தன்னொடு தழீஇக்கொண்டு தலைவி தெளிதற் கண்ணும்; ஆகவே, அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். தழீஇ தோழியைத் தழீஇ. அத்தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறினாள். வழுப்படுத லின்றி நின்ற இயற்பட மொழிதற்பொருண் மைக்கண்ணும்; வழுவின்றி நிலைஇய என்றதனால் தோழி இயற்பழித் துழியே இயற்பட மொழிவ தென்க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொறாது தான் இயற்பட மொழிந்ததல்லது, தன்மனத்து அவன் பரத்தமை கருதுத லுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம். தலைவியும் தோழியும் தலைவன் இரவுக்குறி வருங்காற் பொழுதா யினும் நெறியாயினும் இடையூறாகிப் பொருந்துத லின்மையின் அழிவுதலைத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக் கண்ணும். 3. (தோழி கூற்று நிகழுமிடம்) தலைவன் வருகின்ற நெறியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றத னானே எய்திய கலக்கத்தின் கண்ணும் காத்தற்றொழிலால் உண்டாங் கடுஞ்சொற்கள் களவொழுக்கத் திடத்தே எல்லையற வருமிடத்தும், அவளிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழாநிற்க இருவகையிடத் தையும் இருவகைக் காலத்தையும் தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து (அவன்வயின் தோன்றிய கிளவியையும்). உ. ஆ.கு: குறிபிழைப்பு, வருந்தொழிற்கருமை என்பன குறிஞ்சிப்பாட்டில் விரிவாக உள்ளமை காணத்தக்கது. இருவகைப் பிரிவு அ. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றலும் உரிய தாகும் என்மனார் புலவர். (தொ.பொ.13) இ. இளம்: (பாலைக்குரிய பொருளாமாறு உணர்த்துதல்) இருவகைப் பிரிவான தலைமகளைப் பிரிதலும் தலைமகளை உடன் கொண்ட தமர்வரைப் பிரிதலும் நிலைபெறத் தோன்றலும் பாலைக்கு உரிய பொருளாம் என்று கூறுவார் புலவர் (தமர்வரை தமரை மட்டும்). உம்மை எச்சவும்மையாகலான், நிலைபெறத் தோன்றாது பிரிதற் குறிப்பு நிகழ்ந்துழியும் பாலைக்குரிய பொருளாம் என்று கொள்க. அதிகாரப் பட்டு வருகின்றது பாலையாகலின், இருவகைப் பிரிவும் பாலைக்குரிய பொருளாயின். நச்: (பாலைப்பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தென வும் கூறுகின்றது). நான்கு வருணத்தார்க்கும் காலிற்பிரிவும், வேளாளர்க்குக் கலத்திற் பிரிவும் தத்தம் நிலைக்கேற்பத் தோன்றினும், பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்கும் என்று கூறுவர் புலவர். கடலினை நிலமென்னாமையிற் கலத்திற்பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு இருவகைப் பிரிவும் என்னும் முற்றும்மை கொடுத்துக் காலிற் பிரிவோடு கூட்டிக் கூறினார். கலத்திற்பிரிவு அந்தணர் முதலிய செந்தீ வாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேதவணிக ரல்லாதார் கலத்திற் பிரிவு வேத நெறியின்மையின் ஆராய்ச்சியின்று. இக்கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலும் கலத்திற் பிரிவிற்கு இளவேனி லொன்றுங் காற்று மிகாத முற்பக்கத்துச் சிறுவரவிற்றாய் வருதலுங் கொள்க. ஒழிந்த உரிப்பொருள்களிலும் பாலை இடைநிகழு மென்றலிற் பிரிய வேண்டிய வழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கு வந்தாலும் இழுக்கின்று. என்னை? கார் காலத்துக் கலத்திற் பிரிவும் உலகியலாய்ப் பாடலுட்பயின்று வருமாயி னென்க. தோன்றினும் என்றவும்மை சிறப் பும்மை; இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின். ஈ. நாவலர்: (இது முதிர்வேனிலிற் பிரிந்தார் கார்காலத்து மீண்டு வந்து கூடலும், பின்பனிக் காலம் பிரிந்தார் இளவேனிலிற் கூடலும் மரபென்பதை விளக்குகிறது). (முன்னையிரு சூத்திரங்களிலும் கூறப்பெற்ற) வேனிற் பிரிவும், பின்பனிப் பிரிவும், பிரிதல் நிமித்தங்களாக அமையாது பிரிந்து நின்ற பாலையாகவே உருப்படினும், அது பாலைக்குரியதேயாகும் என்று கூறுவர் புலவர். மு.அ: (நிலமும் பொழுதும் கூறிமுடித்த நிலையில் வரையறை கூறும் நூற்பாவாம் இஃது இடமாறியுள்ள தென்று கூறி விளக்குகிறார்). முதற்பொருளின் பாகுபாடாகிய நிலமும் பொழுதும் கூறி முடித்தாராகலின் அவ்விரு வகையன்றி வேறு நிலமும் பொழுதும் இல்லையென இந்நூற்பாவான் வரையறை செய்தார். 'முதலெனப்படுவது', 'திணைமயக்குதலும்', 'உரிப்பொரு ளல்லன', 'புணர்தல் பிரிதல்', 'இருவகைப்பிரிவும்', 'கொண்டு தலைக் கழிதலும்', 'கலந்தபொழுதும்' என நூற்பா வரன்முறை இருத்தல் வேண்டும் என்பார். தொ.பொ.13 ஆய்வுரை பக்.139. இருவகைவிடை அ. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் (தொ.பொ.88) ஆ. ''பரிசில் நிலையே, பரிசில் விடையே" (பு.வெ.9) ''புரவலன் மகிழ்தூங்க, இரவலன் கடைக்கூடின்று" (பு.வெ.மா.25) ''வேந்தன் உள்மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று" (பு.வெ.மா.26) ''விரைந்துகொடை பெற்றும் விடைபெறா திரவலன் பரிந்துகடைக் கூட்டிய பரிசில் நிலையும் வண்புகழ் அறைந்தோர்க்கு மன்னவன் உதவிப் பண்புற விடுத்த பரிசில் விடையும்" (இ.வி.617) இ. இளம்: (பாடாண்திணைக்குத் துறை) பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்கவளனை ஏத்தி வழக்கின் கண்தோன்றிய இருவகைவிடையும், அவையாவன: தான்போதல் வேண்டும் எனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும். இருவகை விடையும் என்றதனால், பரிசில் பெற்றவழிக் கூறுதலும் பெயர்ந்தவழிக் கூறுதலுமாம். நச்: (மக்கட் பாடாண்டிணைக்குரிய துறை) பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக் கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டுவகைப்பட்ட விடையும். இருவகையாவன, தலைவன் தானே விடுத்தலும், பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறி விடுத்தலுமாம். நடைவயின் தோன்றும் என்றதனாற் சான்றோர் புலனெறி வழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவும் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்டிப்போகலும், இடைநிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவன வும் மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும் பிறவும் வேறுபட வருவன வெல்லாங் கொள்க. ஈ. நாவலர்: (இது பாடாண்துறை கூறுகின்றது) பரிசில் பெற்ற பின்னும் (பெறுமுன் ஏத்தியது போலவே) பெற்றோன் ஈந்தோனை மீக்கூறிப் புகழ்ந்து இரவலன் தானே விடைவேண்டலும் அவனுக்குப் புரவலன் விடைதரலும் ஆகிய உலக வழக்கில் பயின்றுவரும் இருவகைவிடைகளும். இழைபு அ. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித் தோங்கிய மொழியான் ஆங்கவண் மொழியின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும் (தொ.பொ.543) ஆ. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி காறும் ஓங்கிய சொல்லான் ஆங்கனம் மொழியின் இழைபெனப் படுதலும் எய்தும் என்ப. (இ.வி.754) இ. இளம்: (இழைபாமாறு உணர்த்துதல்) ஒற்றோடு புணர்ந்த வல்லெழுத்தடங்காது ஆசிரியப்பாவிற் கோதப்பட்ட நாலெழுத்தாதியாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானேவரத் தொடுப்பது இழைபென்னும் செய்யுளாம். பேரா: (இழைபிலக்கண முணர்த்துதல்) (பாடம்: அடக்காது; ஆங்கனம்) ஒற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாது இருசீரடி முதலாக எழுசீரடியள வும் வந்த அடி ஐந்தனையும் ஒப்பித்து நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப் போல் ஓசையெழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல்லான், இவையும் ''சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது" பொருள்புலப் படச்சென்று நடப்பின் இழைபென்று சொல்லப்படும் இலக்கணத்தது. (ஒப்பித்தலென்பது பெரும்பான்மையான் நாற்சீரடி படுக்கப்பட் டென்றவாறு) அவையாவன: கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பது. இவற்றுக்குக் காரணம் தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது, அவிநயத் துக்கு உரியவாதல் நோக்கி என்பது. மற்றிதனை வெண்டுறைச் செய்யுட்கு முன் வைப்பின் என்னெனின் இஃதிசைப் பாட்டாகலின் இனிவருகின்றது இசைத்தமிழாகலின் அதற்குபகாரப்பட இதனை இறுதிக்கண் வைத்தான் என்பது. நச்: (இழைபு கூறுகின்றது). வல்லொற்றடுத்த வல்லெழுத்துப் பயிலாமல் இருசீர் முதல் எழுசீரடி யளவும் அவ்வைந்து அடியினையும் ஒப்பித்து நெட்டெழுத்துப் போல் ஓசைதரும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களுமுடைய சொல்லானே முற்கூறியவாறே தெரிந்தமொழியால் கிளந்து ஓதல் வேண்டாமல் பொருள்புலப்படச் செய்யும் இழைபினது இலக்கணம் பொருந் திற்றாம். கழிநெடிலடியானும் வருமென்றாரேனும் எழுசீரின் மிகாதென்று கொள்க. ஒப்பித்து என்றதனாற் பெரும்பான்மை நாற்சீரடியான் வருஞ் செய்யுட் கண்ணே ஒழிந்த நான்கடியும் வருமென்று கொள்க. அவ்வாறு வருவன கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றுணர்க. இவ்வைப்பு இனத்திற்குரிய வாகலின் தேர்தல் வேண்டாது பொருள்தோன்றச் செய்க என்றார். இத்தொல்காப்பியனார் மேற்கூறியது இசைத்தமிழாகலின் அதற்கு அதிகாரம்பட இதனை ஈற்றுக்கண் வைத்தார். உ. ஆ.கு: வல்லொற்று மிக்கிருத்தல் ஒழுகிய ஓசைக்குத் தடையாக நிற்றலின் அதனை விலக்கிக் கொள்வதை இழைபு இலக்கணம் என்றார். இழை நூலிழை; பஞ்சு திப்பியும் கற்றையும் கொற்றையும் உளதாயின் நூலிழைத் தல் இடையறவுபட்டும் தடையுற்றும், செல்லாதாதல் அறியின் இவ் விழைபின் இலக்கணம் தெளிவாம். இழைத்து அணிகலம் செய்வார் பொன்னை உருக்கி ஓடவிட்டுக் கம்பியாக்கல் கருதுக. மரவேலையில் இழைப்புப் பணி, தேக்கில் திகழுமாப் போல வேறுவகை மரங்களில் அமையாமை அறிக. முண்டும் முடிச்சும் மரத்தில் உண்டாயின் இழைப் புளியும் தெறித்துப் போதல் கண்கூடு. இளமைப்பெயர் அ. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியு மென் றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே (தொ.பொ.545) இ. இளம்: (இளமைப் பெயராமாறு உணர்த்துதல்) குழவியோடிவ்வொன்பதும் இளமைப்பெயராம் என்றவாறு. பேரா: (எல்லாப் பொருளின் கண்ணும் இளமைக்குணம் பற்றி நிகழுஞ்சொல் இவையென்று வரையறுத்துக் கூறு கின்றது). விலக்கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணம் கூறின் பார்ப்பும், பறழும், குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப்பெயர். மேலன எட்டும் குழவியுமென இளமைப்பெயர் ஒன்பதாயின. குழவியோ டொன்பதென்னாது ஒன்பதுங் குழவியோடு என மயங்கக் கூறியதனாற் போத்தென்பதும் இளமைப்பெயரெனவும் பிறவும் வருவனவுளவாயினும் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல்வரையறுத்து இன்னபொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது சொல்லும். மாற்றருஞ் சிறப்பின் என்றதனானே இவைஒருதலையாகத் தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படும் என்பதூஉம் ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடுபட்ட மரபு பிறழவும் செய்யுளின் பால்படின் அவ்வாறு செய்க என்பதூஉம் கூறியவாறாயிற்று. உ. ஆ.கு: இனி, இவற்றையன்றி அணங்கு, கயந்தலை, குஞ்சு, துடியடி, நாகு, புதல்வன், புதல்வி, போதகம் இன்ன பிறவும் இளமைப் பெயரென இணைத்துக் கொள்ளத் தக்கனவாம். இவை நூலாசிரியர் காலத்தவும், பிற்பட்டவும் இக்காலம்வரை இருவகை வழக்குகளிலும் உள்ளவும் ஆகியவையாம். இளிவரல் அ. மூப்பே பிணியே வருத்தம் மென்மையோ டியாப்புற வந்த இளிவரல் நான்கே (தொ.பெ.250) இ. இளம்: (இளிவரலாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல்) மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மையும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு. இவை நான்கும் தன்மாட்டுத் தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும். பிணி என்பது, பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம். வருத்தம் என்பது, தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத்தானும் இழிப்புப் பிறக்கும். மென்மை என்பது, நல்குரவு. இன்னும் யாப்புற என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன. பேரா: (மூன்றாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற இளிவரல் கூறுகின்றது). மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல். வருத்தமெனினும் முயற்சியெனினும் ஒக்கும். யாப்புற வந்த என்பது திட்பமுறவந்த என்றவாறு. அங்ஙனங்கூறிய மிகையானே வீரமுத லாயின பற்றியும் இளிவரல் பிறக்கும் என்றவாறு. இவையும் முன்னைய போலத் தன்கட் டோன்றுவனவும் பிறன்கட் டோன்றுவன வும் பற்றி எட்டாத லுடைய என்பது கொள்க. இளையோர் கிளவி அ. 1. ஆற்றது பண்பும் கருமத்து வினையும் ஏவன் முடிபும் வினாவும் செப்பும் ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும் தோற்றஞ் சான்ற அன்னவை பிறவும் இளையோர்க் குரிய கிளவி என்ப. (தொ.பொ.168) 2. உழைக்குறுந் தொழிலும் காப்புமுயர்ந்தோர் நடக்கை எல்லாம் அவர்கட் படுமே (தொ.பொ.169) ஆ. மடந்தையை வாயில் வேண்டலும் வாயில் உடன்படுத் தலுமவள் ஊடல் தீர்த்தலும் கொற்றவற் குணர்த்தலும் குற்றேவல் செய்தலும் சென்றுமுன் வரவு செப்பலும் அவன்திறம் ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும் வழியியல்பு கூறலும் வழியிடைக் கண்டன மொழிதலும் இளையோர் தொழிலென மொழிப (ந.அ.98) (இ.வி.466) (பாடம்: கொற்றவற் காத்தலும்; செப்பலும் பாசறை) இ. இளம்: 1. இளையோர்க்குரிய கிளவியாமாறுணர்த்திற்று) சூத்திரத்தாற் பொருள் விளங்கும். 2. (இதுவும் இளையோர்க்குரிய திறன் உணர்த்திற்று). இடத்தினின்று குற்றேவல் செய்தலும் மெய்காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க்குளதாகிய நடையெல்லாம் இளையோர் கட்படும். நச்: 1. 'உழைக்குறுந்தொழிற்குங் காப்பிற்கும்' (தொ.பொ.171) உரியாராகிய இளையோர்க்குரிய இலக்கணங்கூறு கின்றது). தலைவன் தலைவியுடனாயினுந் தானே யாயினும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாலராகிய இளையோர் தண்ணிது வெய்து சேய்த்து அணித்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும், ஒன்றாகச் சென்று வந்து செய் பொருண்முடிக்குமாறு அறிந்து கூறுதலும், இன்னுழி இன்னது செய்க என்று ஏவியக்கால் அதனை முடித்து வந்தமை கூறுதலும், தலைவன் ஏவலைத் தாம் கேட்டலும், தலைவன் வினவாத வழியும் தலைவிக்காக வாயினும் செப்பத்தகுவன தலைவற்கு அறிவு கூறுதலும், செல்சுரத்துக்கண்ட நிமித்தம் முதலிய பொருள்களைத் தலைவர்க்குந் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறுத லும், ஆண்டு மாவும் புள்ளும் புணர்ந்து விளையாடுவன வற்றை அவ் விருவர்க்குமாயினும் தலைவற்கே யாயினும் காட்டியும் ஊறுசெய்யும் கோண்மாக்களை அகற்றியும் கூறுவனவும் அங்ஙனம் அவற்குத் தோற்றுவித்தற்கமைந்த அவைபோல்வன பிற கூற்றுக்களும் இளையோர்க்குரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர். தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிறபொருளுணர்ந்து வந்துரைப்பனவும் ஒற்றர்கண் அடங்கும். ஏவன்முடிபிற்கும் இஃதொக்கும். சான்ற என்றதனான் ஆற்றது பண்பு கூறுங்கால் இதுபொழுது இவ்வழிச் சேறல் அமையாதென விலக்கலும், கருமம் கூறுங்கால் சந்து செய்தல் அமையுமெனக் கூறுதலும் போல்வன அமையாவாம், அவர் அவை கூறப்பெறாராகலின், பிறவாவன, தலைவன் வருவான் எனத் தலைவி மாட்டுத் தூதாய் வருதலும் அறிந்து சென்ற தலைவற்குத் தலைவிநிலை கூறுதலும், மீளுங்கால் விருந்து பெறுகுவள்கொல் எனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. ஆற்றது பண்பும் ஆற்றிடைக்கண்ட பொருளும் இறைச்சியும் உடன் போக்கலும் கற்பிலும் கூறுவனவாதலின் இச்சூத்திரம் கைகோள் இரண்டற்கும் பொதுவிதி. 2. (முற்கூறியவற்றிற்கு உரியார் இங்ஙனஞ் சிறந்தாரென மேலதற்கோர் புறனடை) (பாடம்: உயர்ந்தோர்க்கு). அவரிடத்து நின்றுகூறிய தொழில் செய்தலும் போற்றீடு முதலிய பாதுகாவலும் பிறவும் உயர்ந்தோர்க்குச் செய்யும் தொழிற்பகுதி யெல்லாம் முற்கூறிய இளையோரிடத்து உண்டாம். என, இவ்விரண்டற்குமுரியர் அல்லாத புறத்திணையர் முற் கூறியவை கூறப்பெறார் என்பது பொருளாயிற்று. ஈ. க.வெ: அகப்பொருள் ஒழுகலாற்றில் ஒற்றர்க்கு இடமின்மை யால், தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிறபொரு ளுணர்ந்து வந்து கூறுவனவும் இளையோர்க் குரிய கிளவிகளாகவே கொள்ளத் தக்கனவாதலின், இவற்றை ஒற்றர்க்குரியவாகக் கூறுதல் பொருத்த முடைய தாகத் தோன்றவில்லை. இறைச்சி அ. 1. ''இறைச்சி தானே உரிப்புறத் ததுவே" (தொ.பொ.225) 2. ''இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே" (தொ.பொ.226) 3. ''அன்புறு தகுந இறைச்சியிற் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே" (தொ.பொ.227) ''இடைச்சுரத்து இறைச்சியும்" (தொ.பொ.146) ''ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்" (தொ.பொ.168) ''இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கில் தோன்ற லான" (தொ.சொல்.196) ஆ. ''கருப்பொருட் பிறக்கும் இறைச்சிப் பொருளே" (நம்பி. 239) ''இறைச்சிப் பொருள்வகை திறப்படத் தெரியில் அங்கியற் பொருளே திணைநிலைப் பொருளே வன்புலப் பொதுப்பொருள் மென்புலப் பொதுப்பொருள் பெருமைப் பொதுப்பொருள் விருந்துப் பொதுப் பொருளென இருமூன் றென்பர் தெரிநூற் புலவர்" (வீ.சோ.9094. மேற்.) ''இறைச்சி" (வீரசோ.90) கருப்பொருள் களனாக் கட்டுரை பயின்ற பொருட்புறத் தனவாம் இறைச்சிப் பொருளணி (மாறனலங்.) இ. இளம்: 1. (இறைச்சிப் பொருளாமாறு உணர்த்துதல்) இறைச்சிப் பொருளென்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள் என்றவாறு. அஃதாவது கருப்பொரு ளாகிய நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது. 2. (இறைச்சிப் பொருள் வயிற்பிறக்கும் பிறிதுமோர் பொருள் உணர்த்து தல்). இறைச்சிப்பொருள் வயிற்றோன்றும் பொருள் உள; பொருட் டிறத்தியலும் பக்கத்து ஆராய்வார்க் கென்றவாறு. இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள் கொளக் கிடப்பனவும் கிடவாதனவுமென இருவகைப்படும். இறைச்சியிற் பிறக்கும் பொருள் எனவே இறைச்சிப்பொருளும் அதனிடமாகப் பிறக்கும் பிறிதோர் பொருளும் எனப் பொருள் இரண்டென்றவாறு. எனவே நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடைமொழியாய் உரிப்பொருட் புறத்தாய் வருவதும், அவ்வளவிலன்றிப் பிறிதுமோர் பொருள் பயப்ப உரிப் பொருட்குச் சார்பாய் வருவதும் என இறைச்சிப் பொருள் இருவகைப் படும் என்பதாம். க.வெ. 3. (இது இறைச்சிப் பொருளாற் படுவதோர் பொருள் உணர்த்திற்று). அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப்பொருட்கண் சுட்டுதலும் வற்புறுத்தலாம் என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. நச்: 1. (பாடம்: பொருட்புறத்ததுவே). (இது தலைவிக்கும் தோழிக்கும் உரியதோர் வழுவமைக்கின்றது. இறைச்சியாவது உள்ளபொருள் ஒன்றனுள்ளே கொள்வதோர் பொரு ளாகலானும் செவ்வன் கூறப்படாமை யானும் தலைவன் கொடுமை கூறும்வழிப் பெரும்பான்மை பிறத்தலானும் வழுவாயிற்று). கருப்பொருட்கு நேயந்தான் கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையதாம். 2. (இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது). கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலே யன்றி அக்கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள. அஃது உள்ளுறை உவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து, அவ்வுள்ளுறைவுவம மன்று இஃது இறைச்சியென்று ஆராய்ந் துணரும் நல்லறிவுடை யோர்க்கு. கருப்பொருளினுள்ளே கருதியுணரப்படும் இறைச்சியும், கருப் பொருள் நிகழ்ச்சியினையே உவமையாகக் கொண்டுவரும் உள்ளுறை யுவமமும் தம்முள் வேறாதல் நன்கு புலனாம். க.வெ. 3. (இஃது, இறைச்சி முற்கூறியவற்றின் வேறுபடவரும் என்கின்றது). பிரிவாற்றாத காலத்து, தோழி கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தக்கனவற்றைக் கருதிக்கூறலும் வற்புறுத்தலாகும். ஈ. சேனா: வடநூலார் இதனை நேயம் என்ப. (தொ.சொல்.55) தமிழண்ணல்: இறைச்சி கருப்பொருள்களின் (ஓரறிவுயிர் முதல் ஐந்தறி வுயிர்கள் வரை சிறப்பாகப் பறவை விலங்குகளின் அன்பு வாழ்வு. உரிப் புறத்தது மக்களுக்குரிய அவ்வுரியின் புறத்ததாய் அதைச் சிறப்பிக்கும். மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி; பிற உயிரினங்களின் காதற் செய்கைகள் உரிப்புறத்தன. ஒருசார் உரியெனவும் ஏற்பதற்கே உரிப்புறத்தன என்றார் இறைச்சி, பக்.2425. இறைச்சி என்பது கருப்பொருள். கருப்பொருள்களுள்ளும் ஓரறிவுயிர் முதல் ஐயறிவுடையனவரை இதனால் குறிக்கப்படுகின்றன; அவற்றுள்ளும் பறவை விலங்கினங்களே சிறப்பாகக் குறிக்கப்படுகின்றன. இறைச்சி என்பது கருப்பொருளின் செயற்பாட்டைக் குறித்தது; அவற்றின் இயக்கத்தைச் சுட்டியது. பறவை விலங்குகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிக்கவும் பயன்பட்டது. அவற்றின் பாலுணர்வு வெளிப்பாடுகளைக் குறிக்கவும் பயன்பட்டது. அவற்றின் பாலுணர்வு வெளிப்பாடுகளை அன்பை வெளிப்படுத்தும் மிகுவிக்கும் காட்சிகளைச் சுட்டப் பெரிதும் இடனாயிற்று. இறைச்சி என்பது மாந்தர்தம் காதல் உணர்வுக்கு இயைபுப் பின்னணி யாக அல்லது எதிர்ப்பின்னணியாக அமைந்து அவ்வுணர்வைத் தூண்டும் ஒன்றாக வளர்ந்தது. இறைச்சி என்பது இதனால் பிறிதொரு பொருளையும் உணர்த்துவ தாகியது. அதற்குக் குறிப்புப் பொருள்தரும் சிறப்பும் இருப்பதனால் இறைச்சி என்றாலே குறிப்புப் பொருள் என அதன் கருத்து வளர்ந்தது. பக்.4445. உரிப்பொருள்வழி உணர்வைத் தூண்டுதல் சுவையை மிகுவித்தல் அதன் (இறைச்சியின்) முதற்படி. உரிக்குத் துணையாக வேறு ஒரு குறிப்புப் பொருளையும் தருதல் இரண்டாவது படி. உணர்வைத் தூண்டி அமைவன நுட்ப இறைச்சிகள். அதனோடு தொடர் புள்ள குறிப்புப் பொருளையும் தருவன திட்ப இறைச்சிகள் என நாம் இன்று வகைப்படுத்தி இலக்கியத் திறனாய்வு செய்யலாம். பக்.78 இன்பம் அ. எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொ.பொ.219) இ. இளம்: (மேலதற்கோர் (ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தானேவழக்கெனமொழிப என்பதற்கு) புறனடை உணர்த் திற்று). எல்லா உயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்திவரும் விருப்பத்தையுடைத்து என்றவாறு. எனவே, மனம்பொருந்திய வழிப் பரத்தையர் மாட்டும் இன்பமுளதாகும் எனவும், பொருந்தாத வழி மனைவியர் மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க. நச்: (மேலதற்கோர் புறனடை) அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவது தான் மக்களுந் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லா உயிர்க ளுக்கும் மனத்தின் கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும் ஆணும் பெண்ணுமென அடுக்கிக் கூறலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும். மேவற்றாகும் என்றார் என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்பம் நுகர்ந்தாரெனப் படாது அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொதுவென்பதூஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழ்த்துமென்பதூஉம் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வருமென்றாராயிற்று. ஈ. க.வெ: அன்பினைந்திணை யொழுகலாற்றில் இன்பம் எனப்படுவதுதான் எல்லா உயிர்க்கும் பொதுப்பட உரிய புலனுகர்ச்சியாகிய இன்பம் என்ற அளவிலமையாது மக்கட்குலத்தார் ஆணும் பெண்ணுமாய்த் தம்மிற்கூடி அளவளாவும் நிலைமைக்கண் அவர்தம் மனனுணர் வின்கண் அன்பின் வழித்தோன்றும் காதலின்ப நுகர்ச்சியே ஈண்டு இன்பம் எனச் சிறப்பித் துரைக்கப்படும். உகரம் ஒற்றொடு நிற்றல் அ. குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே (தொ.பொ.318) இ. இளம்: (எய்தியது விலக்கல்) இருவகை உகரமும் ஒற்றொடு தோன்றித் தனியசையாகி நிற்கவும் பெறும் என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. (எடு.) ''நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும்". இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசை யாயிற்று. ''கண்ணும் படுமோ" இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையாயிற்று. பேரா: (எய்தாத தெய்துவித்தது; இயலசைகளை, 'ஒற்றொடு வருதலொடு மெய்ப்படநாடி" என்றான் (செய்.3) உரியசைக்கு அது கூறாதான் ஈண்டுக் கூறுகின்றமையின். மேற்கூறி வருகின்ற குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும், அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாயின். எனவே, அவை நிலைமொழி ஒற்றுடையவாயின் நேர்பும் நிரைபு மாகா; வருமொழி வல்லெழுத்து மிகிலேயாவ தென்றவாறு. அஃதென்னை பெறுமாறெனின் ''வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி" என்றதனான், முன்னர் நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரம் வருமெனக் கூறிய அதிகாரத்தானே ஒற்றுத் தோன்றின் என்றான் ஆகலானும் பெறுதும். நிலைமொழியுகரம் பெற்று வருமொழி ஒற்றெய்துவது கண்டான் ஆகலான் என்பது. 'சேற்றுக்கால்' 'நாணுத்தளை' 'நெருப்புச்சினம்' கனவுக் கொல் (என) இவை இருவகை உகரமும் ஒற்றடுத் துரியசை யாயினவாறு. உம்மை, எதிர்மறை யாகலான் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை. இங்ஙனம் வருமொழி யொற்றுமிகின் அவைகொண்டு நேர்பும் நிரைபுமாம் எனவே, 'உண்ணும்' எனவும், 'நடக்கும்' எனவும் நிலைமொழி யொற்று நின்றவழித் தேமாவும் புளிமாவும் ஆவதல்லது நேர்பசையும் நிரைபசையுமாகா தென்பதாம். விக்குள், கடவுள் என்பனவும் அவை. நச்: (உரியசைகள் ஒற்றுப்பெற்று நிற்குமென எய்தாததெய்து வித்தது) முற்கூறிய குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வருமொழி வல்லெழுத்து வரும் வழி வல்லொற்றோடு தோன்றி நிற்கவும் பெறும். (பேராசிரியர் விளக்கமே இவர் விளக்கமாகவும் உளது). உ. ஆ.கு: ஒற்றெழுத்து அலகிடப்பெறாது என்பது பொது விதி. அவ்விதி குற்றியலுகர முற்றியலுகர ஈற்றொடு ஒற்றுப்பெற்று வரும் அசைக்கும் பொருந்தும் என்பதாம். ஆயின் இவ்வாறு வருவது செய்யுளின் இடையேயன்றி இறுதியில் அன்றாம் என்க. உசாத்துணை அ. 1. ''தோழி தானே செவிலி மகளே" (தொ.பொ.123) 2. ''சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே" (தொ.பொ.124) 3. உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின் உரிய தாகும் தோழிகண் உரனே (தொ.பொ.235) உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே (தொ.பொ.236) ஆ. ''தோழி செவிலி மகளாய்ச் சூழ்தலோ டுசாத்துணை யாகி அசாத்தணி வித்தற் குரிய காதல் மருவிய துணையே" (ந.அ.110 இ.வி.478) இ. இளம்: 1. (தோழிக்குரியதொரு சிறப்பு உணர்த்துதல்) களவுக்காலத்தும் இன்றியமையாளாகத் தலைவியால் வேண்டப் பட்டாள் செவிலிமகள் என்றவாறு. எனவே, பயின்றா ரெல்லாருந் தோழியராகார். அருமறைகிளக்கப் படுதலான் உடன்முலையுண்டுவளர்ந்த செவிலி மகளே தோழி எனப்படு வாள் என்றவாறு. 2. (தோழிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவுபெறும் என்றவாறு. எனவே, செவிலிமகள் என்னுந்துணையாற் பொலிவு பெறாள் என்றும் தோழியாவாள் செவிலி மகளாதலேயன்றிச் சூழவும் உசாத்துணை யாகவும் வல்லள் ஆதல் வேண்டும் என்றவாறு. 3. (தோழிக்குரியதோர் மரபுவழுக்காத்தலை நுதலிற்று). தலைமகற்குற்ற துன்பம் பரிகரித்தல் தோழியியல்பாகலின் அவட்குரிய தாகும் அறிவு என்றவாறு. அதனானேயன்றே; ''கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும்" (கலி. 21) எனக் கூறினாள் என்று கொள்க. நச்: 1. (தோழியது சிறப்புணர்த்துகின்றது) தோழியர் பலருள்ளும் ஒருத்தி எனப்பிரிக்கப்படுவாள் முற்கூறிய செவிலியுடைய மகள். இதற்கும் அருமறை கிளத்தல் அதிகாரத்தாற் கொள்க. தாய்த்தாய்க் கொண்டு வருகின்றமையின் உழுவலன்பு போல்வதோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று. 2. (இதுவுந்தோழி சிறப்பினையே கூறுகின்றது). தலைமகனும் தலைமகளும் உசாவுதற்குத் துணைமை சான்ற நிலைமை யினாலே புணர்ச்சியுண்மையை ஏழுவகையானும் சூழ்தற் கண்ணும் பொலிவுபெறும். எனவே இம்மூன்று நிலைக்கும் (அரு மறை கிளத்தல் சூழ்தல் உசாத்துணை யாதல்) தோழி உரியள் என்றார். 3. (இது, தோழி அறிவுடையளாகக் கூறலும் அமைக என்கின்றது). தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின் தோழிமாட்டு அறிவுளதாகக் கூறல் உரித்தாகும். ஒன்றென முடித்தலான் தலைவி உரனுடையள் எனக் கூறலுங் கொள்க. ஈ. க.வெ: 2. தோழியின் சிறப்பிலக்கணம் கூறும் இத்தொடரும் அவள் இன்ன தொடர்புடையாள் எனச் சுட்டும் மேலை நூற்பாவும் தொல்காப் பியனாரால் ஒரே சூத்திரமாக இயற்றப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது, ''தோழி தானே செவிலி மகளே சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே" என ஓரெதுகையில் அமைந்து ஒருபொருள் குறித்து வருதலால் இனிது புலனாகும். தோழியாவாள் இவள் எனவும் அவளது சிறப்பியல்பு இதுவெனவும் பகுத்துரைக்கும் நோக்கில் இரு சூத்திரங்களாகப் பிரித்து உரை வரையப் பெற்றதெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். 3. களவொழுக்கத்தில் ஒழுகும் காதலர் இருவர்க்கும் நேரக்கூடிய இடை யூறுகளை முன்னரே உய்த்துணர்ந்து அவை நிகழாவாறு பாதுகாத்தல் தோழியின் பால் எதிரதாக் காக்கும் அறிவின் திண்மை இன்றியமையாது நிலைபெறற் குரியதாகும். உறுகண் காதலர் வாழ்க்கையில் வந்து உறுவனவாகிய இடையூறுகள். ஓம்பல் வாராது தவிர்த்தல். உ. ஆ.கு: உசாவுதல் கலந்துரையாடிக் கருத்தறிதல். உசாத்துணை 'நாத்தூண் நங்கை' எனப்படுவார். (சிலப். 16:19) இதுகால் நாத்துணையாள், நாத்தூண் நங்கை என்பவை 'நாத்தினாள்' என வழக்கில் உள்ளன. உண்டனபோலக் கூறல் அ. உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலும் மரபே. (தொ.பொ.210) இ. இளம்: (ஒருசார்வழுவமைத்தல்) உண்டற்றொழிலுக்கு உரிய அல்லாத பொருளை உண்டனவாகக் கூறலும் மரபு என்றவாறு. (எடு.) ''பசலையால் உணப்பட்டு" எனவும், ''நீலமுண்ட துகில்" எனவும் ''நெஞ்சே! இவை என்னைத் தின்னும் அவர்க்காணலுற்று" எனவும் வரும். இது சொல்லின்கட் கிடந்ததோர் ஒழிபு. நச்: (சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்தும் வழுவமைக்கின்றது). உண்டற்றொழிலை நிகழ்த்துதற்குரியவல்லாத பொருளை அத் தொழிலை நிகழ்த்தினவாகப் புலனெறி வழக்கம் செய்தலும் மரபு. இதன்கட் சொல்வழுவின்றிச் செய்யாமரபிற்றொழிற் படுத்து அடக்கலும் அமைத்தார். இன்னும் 'உய்த்துக் கொண்டுணர்தல்' என்பதனான் உண்ணப் படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கூறலும் மரபாம் என்பது பொருளாகக் கொள்க. உம்மையாற் பிறதொழில் பற்றி வருவனவுங் கொள்க. ஈ. க.வெ: உண்ணுதற்றொழிலுக்கு உரியவல்லாத பொருள் என்றது, உண்ணுதற் றொழிலை நிகழ்த்தும் அறிவும் செயலும் வாய்க்கப் பெறாத அறிவில் பொருள்களை. உண்டனபோலக் கூறலாவது, அவை அத்தொழிலை நிகழ்த்தினவாக அத்தொழிற்கு வினை முதலாந்தன்மையை அவற்றின் மேல் ஏறிட்டுக் கூறுதல். உ. ஆ.கு: இதனைப் பிற்கால இலக்கணர் 'இலக்கணை' என்பர். இலக் கணையாவது ஒன்றன் இலக்கணத்தைப் பிறிதொன்றற்குத் தந்துரைப்ப தாம். அது, உண்டனபோலக் கூறலன்றி விரிவான வழக்குடையதாம். ''அழகு வீற்றிருக்கிறது"; ''அழகு விளையாடு கிறது" என்பனபோலக் கூறல். உண்டாட்டு அ. உண்டாட்டு (தொ.பொ.61) ஆ. உண்டாட்டு (பு.வெ.1 இ.வி.603, 604) தொட்டிமிழும் கழல்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று (பு.வெ.14) இ. இளம்: (வெட்சித்துறை) உண்டாட்டு (நிரைபகுத்தமறவர்) களிப்பினால் அயரும் விளையாட்டு. நச்: உண்டாட்டு நிரைகொண்டார்தாம் கொண்ட நிரையைப் பகுத்துத் தாம் கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தோடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுத லும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும். ஈ. நாவலர்: உண்டாட்டு வெட்சியோர் வெற்றி மகிழ்ச்சியால் உண்டுகளித்தல். உ. ஆ.கு: கள் அருந்துதல், குடித்தல், பருகுதல் என்று சொல்வதற்குரிய நீர்மைப் பொருளே எனினும், ஊணினும் விஞ்சிய ஆர்வத்துடன் பருகப்படுவ தும், ஊணை விடுத்தும் பருகப்படுவதுமாக வேட்கையைத் தருவது ஆகலின் பண்டு தொட்டே ''கள்ளுண்டல்" என்பது வழக்கில் ஊன்றியதாம். ''கள்ளுண்ணாமை" என்பது திருக்குறளில் ஓரதிகாரம். உணர்ந்ததுபோல உறுப்பினைப் புணர்த்தல் அ. 1. வண்ணந் திரிந்து புலம்புங் காலை உணர்ந்தது போல உறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே (தொ.பொ.199) 2. உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை" (தொ.பொ.200) இ. இளம்: 1. (தலைமகட்குரியதோர் பொருளுணர்த்திற்று) தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமையுறுங்காலைத் தலை மகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந்தனபோலப் பொருந்தும் வகையாற் கூறவும் பெறும் என்றவாறு. 2. இஃது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன எனக் கூறினல்லது கிழவோன் உள்வழிப்படர்தல் கிழத்திக்கு இல்லை. நச்: 1. (வருத்தமிக்கவழி இவையுமாம் என்கிறது). மேனிபசந்து தனிப்படருறுங் காலத்துத் தலைவி தனது உறுப்பினை அறிந்தனபோலப் பொருந்தின கூற்றாற் சொல்லவும் பெறும். காதும் ஓதியும் முதலியன கூறப்பெறா. கண்ணும் தோளும் முலையும் போல்வன புணர்க்கப்படும் என்றற்குப் 'புணர்ந்தவகை' என்றார். இதனானே இவற்றைத் தலைவன்பாற் செலவு வரவுடையனபோலக் கூறலுங்கொள்க. 2. (தலைவனொடு வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழுவமைதி கூறுகின் றது) தன் உடம்பும் உயிரும் தேய்ந்து கூட்டமின்றி இருந்தகாலத்தும் இவை என்ன வருத்தமுற்றனகொல் என்று தனக்கு வருத்தமில்லன போலக்கூறினல்லது தலைவிக்குத் தலைவனைத் தானே சென்று சேர்தல் இருவகைக் கைகோளினும் இல்லை. இது காதல் கூரவுங் கணவற் சேராது வஞ்சம்போன்றொழுகலின் வழுவாயினும் அமைக்க. ஈ. க.வெ: 1. 'புலம்புறுங்காலை' எனத்திருத்துக. உணர்ந்தனபோல என உரையிற் காணப்படுதலால் அதுவே இளம்பூரணர் கொண்ட பாடம் எனத் தெரிகிறது. 2. கிழவோற் சேர்தல். தலைவனை அவன் உள்ள இடத்திற் சென்று சேர்தல். உத்திவகை அ. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலிய தறிதல் அதிகார முறையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தல் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் மொழியா ததனை முட்டின்றி முடித்தல் வாரா ததனால் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராதது முடித்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல் ஒருதலை மொழியே தன்கோட் கூறல் உடம்பொடு புணர்த்தல் பிறனுடம் பட்டது தானுடம் படுதல் இறந்தது காத்தல் எதிரது போற்றல் மொழிவாம் என்றல் கூறிற் றென்றல் தான்குறி யிடுதல் ஒருதலை யன்மை முடிந்தது காட்டல் ஆணை கூறல் பல்பொருட் கேற்பின் நல்லதுகோடல் தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் மறுதலை சிதைத்துத் தன்துணி புரைத்தல் பிறன்கோட் கூறல் அறியா துடம்படல் பொருளிடை யிடுதல் எதிர்பொருள் உணர்த்தல் சொல்லின்எச்சம் சொல்லியாங் குணர்த்தல் தந்துபுணர்ந் துரைத்தல் ஞாபகம் கூறல் உய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிறஅவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்க நாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே (தொ.பொ.656) ஆ. நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைப்பே தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்தல் தொடர்சொற் புணர்த்தல் இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்கல் எதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் உரைத்து மென்றல் உரைத்தாம் என்றல் ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல் எடுத்த மொழியின் எய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் பிறநூல் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்கம் மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென உத்தியெண் ணான்கே (நன்.14) நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ஏற்புழி அறிந்திதற் கிவ்வகை யாமெனத் தகும்வகை செலுத்தல் தந்திர உத்தி (நன்.15) மாறன் அலங்காரம் குறிப்பிடும் உத்திவகைகளையும் கொள்ளலாம் இ. இளம்: (தந்திர உத்தியாமாறு உணர்த்துதல்) நுதலிய தறிதல் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் தந்திர உத்தியாம் என்றவாறு. தந்திரம் எனினும் நூல் எனினும் ஒக்கும். உத்தி என்பது வடமொழிச் சிதைவு. அது சூத்திரத்தின் பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடு காட்டுவது. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் என்பது நூற்குப் பொருந்திய காட்சியினான் உரைக்கும் உத்திவகையை விரிக்குங் காலத்து என்றவாறு. நுதலியதறிதல் சூத்திரத்திற் சொற்ற பொருளுணர்த்தலன்றி இதன் கருத்திது வென உணர்த்தல். அதிகாரமுறை முன்னம் பலபொருளையதிகரித்த வழிப்பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துள் ஓதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத்திரந்தோறும் கொணர்ந் துரைத்தல். தொகுத்துக்கூறல் வகைபெறக் கூறல் வேண்டுமாயினும் அதனைத் தொகுத்துக்கூறல். இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத் துணையுங் கூறப்பட்டது இதுவெனலுமாம். வகுத்துமெய்ந்நிறுத்தல் தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல். இன்னுமதனானே பொதுவிலக்கணத்தான் முடியாதவழிப் பெரும் பான்மை சிறுபான்மை கொண்டு வகுத்துப் பொருளுரைத் தலுமாம். மொழிந்த பொருளோடொன்றவைத்தல் சூத்திரத்துட் பொருள் தோன்று மாயின் முற்பட்ட சூத்திரத்திற்கொக்கும் பொரு ளுரைத்தல். முற்பட்ட சூத்திரத்தினான் ஒரு பொருளோதியவழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடொன்ற வைத்தலுமாம். மொழியாததனை முட்டின்றி முடித்தல் எடுத்தோதாத பொருளை முட்டுப்படாமல் உரையினான் முடித்தல். இதனை 'உரையிற் கோடல்' என்ப. இக்கருத்தினானே, ''சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே" (மர.105) என ஓதுவாராயிற்றென்க. வாராததனான் வந்தது முடித்தல் ஒருங்கெண்ணப்பட்ட பொருளொன் றனைப் பகுத்துக் கூறியவழி ஆண்டு வாராததற்கோதிய இலக்கணத்தை இதன் கண்ணும் வருவித் துணர்த்துதல். வந்ததுகொண்டு வாராதது முடித்தல் ஒருங்கெண்ணப் பட்ட வற்றுள் ஒன்றைப் பகுத்து இலக்கணங்கூறியவழி வாராததன் கண்ணும் இவ்விலக்க ணத்தைக் கூட்டி முடித்தல். முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றம் முற்பட அதிகரித்த பொருளை அவ்வகையினாற் கூறாது முறைபிறழக் கூறல். இவ்வாறு கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல் வேண்டும். ஒப்பக் கூறல்ஒருபொருள் எடுத்து இலக்கணங்கூறியவழி. அதுபோல் வனவற்றையும் இலக்கணத்தான் முடித்தல். ஒருதலைமொழி ஏகாக்கரமென்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது, சூத்திரத்திற்குப் பொருள் கவர்த்துத் தோன்றின் அதனு ளொன்றனைத் துணிந்து கூறல். தன்கோட்கூறல் பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன்கோட் பாட்டால் கூறுதல். உடம்பொடுபுணர்த்தல் இலக்கண வகையான் ஓதுதலன்றிச் ஆசிரியன் சூத்திரத்தின்கண்ணேயொரு சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல். பிறனுடம்பட்டது தானுடம்படுதல் பிறநூலாசிரியன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல். இறந்தது காத்தல் மேற்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தான் அமைத்தல். எதிரது போற்றல் முன்கூறப்பட்ட சூத்திரத்தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல். மொழிவாம் என்றல் சில பொருளைக்கூறி அவற்று ளொன்றனை இன்னவிடத்துக் கூறுவாமெனவுரைத்தல். கூறிற்றென்றல் பலபொருளாய் அதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லப்பட்டனவென்றல். தான்குறியிடுதல் உலகின்கண் வழக்கின்றி ஒரு பொருட்கு ஆசிரியன் தான் குறியிடல். ஒருதலையன்மை முடிந்தது காட்டல் ஒருபொருளை யோதியவழிச் சொல்லுதற்கே உரித்தன்றிப் பிற பொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல். ஆணைகூறல் ஒருபொருளைக் கூறும்வழி ஏதுவினாற் கூறலன்றித் தன் ஆணையாற் கூறல். பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் ஒரு சூத்திரம் பல்பொருட்கு ஏற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல். தொகுத்தமொழியான் வகுத்தனர்கோடல் தொகுத்துக் கூறிய சொல் தன்னானே பிறிதுபொருள் வகுத்துக் காட்டல். சொல்லின் முடிபின் அப்பொருள் முடித்தல் என்பதுமது. மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிற நூலாசிரியன் கூறின பொருண்மையைக் கெடுத்துத் தன்துணிபு கூறுதல். பிறன்கோட்கூறல் பிறநூலாசிரியன் கொண்ட கோட் பாட்டைக் கூறுதல். அறியாதுடம்படல் தானறியாத பொருளைப் பிறர்கூறிய வாற்றான் உடம்படுதல். இது வழிநூலா சிரியர்க்குரித்து. பொருளிடையிடுதல் ஒருபொருளை யோதியவழி அதற்கின மாகிய பொருளைச் சேரக்கூறாது இடையீடு படக்கூறுதல். எதிர்ப்பொருள் உணர்த்தல் இனிக்கூற வேண்டுவதிதுவென வுணர்த்தல். சொல்லின் எச்சம் சொல்லியாங்குணர்த்தல் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்குச் சொல்லியவாற்றாற் பொருள் கோடல். தந்துபுணர்ந்துரைத்தல் முன்னாயினும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தினுங் கொணர்ந்து புணர்ந்துரைத்தல். ஞாபகங் கூறல் இரட்டுற மொழிந்து இரண்டு சொற்கும் பொருள் உய்த்துக் கொண்டுணர்தல் ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதிய வழி அதற்குப் பொருந்தாமையுளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விசாரித் துணர்தல். இவை முப்பத்திரண்டுந் தந்திர வுத்தியாவன. மேற்சொல்லப்பட்டவற்றோடு கூடப்பொருள் பட ஆராய்ந்து அல்லாதன வாகிய பிற அவண்வரினும் சொல்லிய நெறியினாற் சுருங்க மனத்தினான் ஓர்ந்து குற்றமறத் தெரிந்து சொல்லிய இனத்தொடு பாகுபடுத்து உரைத்தல் வேண்டுமது நுண்மை தகப் புலவர் கூறிய நூலினை என்றவாறு. பிறவாறு கொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னினமுடித்தல் என்பன. இவற்றுள் மாட்டெறித லாவது முன்னொரு பொருள்கூறிப் பின் வருவதும் அதுபோலும் என்றல். சொற்பொருள் விரித்தல் பதந்தோறும் பொருள்விரித்துக் கடாவும் விடையும் கூறுதல். இன்னும் 'சொல்லிய அல்லது பிற' என்றதனான் யாற்றொழுக்கு, அரிமா நோக்கு, தவளைப் பாய்த்துள், பருந்துவிழுக்காடு என்னுஞ் சூத்திரக் கிடக்கையும் ஆதி விளக்கு, மத்திமதீப, இறுதி விளக்கு என்னும் பொருள்கோள் நிலையும் கொள்ளப்படும். யாற்றொழுக்காவது, கருதிய பொருளை வழுவாமற் சூத்திரம் ஒருங்குபடக் கிளத்தல். அரிமாநோக்காவது, முன்னும் பின்னும் கூறுகின்ற இரண்டு சூத்திரத்தினை யும் இடைநின்ற சூத்திரம் நோக்குதல். தவளைப் பாய்த்துளாவது, இடையறுத்தோடுதல். பருந்து விழுக்காடாவது, அவ்வதிகாரத்துட் பொருத்த மில்லாத பொருள் யாதானுமொரு காரணத்தால் இடைவருதல். ஆதிவிளக்காவது, சூத்திரத்தினால் ஆதியின் அமைத்த பொருள் அந்தத் தளவு மோடுதல். மத்திமதீபமாவது, இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதி விளக்காவது, இறுதிநின்ற பொருள் இடையும் முதலும் நோக்குதல். பேரா: (இறுதிக்கண் நின்ற முப்பத்திருவகை உத்தியுங்கூறி மற்றும் இந்நூலுள் அதிகாரம் மூன்றற்கும் வேண்டும் புறனடையும் கூறுதல்) உத்தி என்பது நூல் செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யு ளும் போலச் செவ்வனஞ் சொல்லுதல் ஒண்மையுடைத் தன்றாம் பிறவெனின், அற்றன்று. அவ்வாறு செய்தக்கால், ''நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகல் வேண்டும்" என்பது முன்னர்ச் சொல்லினான். ஈண்டுச் செவ்வனஞ் சொல்லாத தந்திர உத்திவகையும் அவ்வாறே ஒண்மை யுடையவாம் என்பது கருத்து; என்றார்க்குச் செவ்வனஞ் செய்தலை உத்தி என்னானோ எனின், அது சொல்லாமை முடிந்ததாகலின் அன்றே உத்தி என்னாது இவற்றை உத்திவகை என்பானாயிற்றென்பது..... இவ்வுத்திவகை எல்லா நூற்கும் இன்றியமையா வாயின. நுதலியதறிதல் சூத்திரத்துள் ஓதிய பொருளாற் சொல்லப்படும் பயன் இல்லதுபோலச் சொல்லியதனானே. அதற்கேற்ற வகையாற் கருதியுணரப் படுபொருள் இன்னதென்று கொள்ள வைத்தல். இதனை முதற்கண் வைத்துப்போய் இறுதிக்கண்ணே உய்த்துக் கொண் டுணர்தலை வைத்தான் இதுவும் அதுபோல் உய்த்துக் கொண்டுணர்தல் ஒருவகையான் உடைத்தாயினும் அதனாற் பெற்ற பயன் பிறிது மொன்று உளதாதல் வேற்றுமை யுடைமையின் என்பது. மூவகைத் தமிழ் வழக்கமும் நுதலியதும் அவற்றுள் இயற்றமிழே நுதலியதும் அதிகாரம் நுதலியதும் அதிகாரத்துள் ஓத்து நுதலியதும் ஓத்தினுட் சூத்திரம் நுதலியதுமெனவும் இவை நுதலியதறிதற் பகுதியாய் அடங்குமென்பான். ''மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும்" என்கின்றான் என்பது. மேல்வருகின்றவற்றுக்கும் ஒக்கும். அஃதேல், இதனை ஆண்டு வைத்து மற்றதனை ஈண்டு வைப்பினும் இஃதொக்கும் பிறவெனின், அற்றன்று; நூலின் வேறாகிய பாயிரத்துள் ஆயினும் இந்நுதலியதறிதல் வருதலும் உத்தி என்றற்கு இதனை முன் வைத்தான் என்பது. அதிகாரமுறைமை முன்னிற் சூத்திரப் பொருண்மை பின்வரும் சூத்திரத் திற்கும் பெறற்பாலன பெறவைத்தல். வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும். அச்செய்யுள் இன்றி அமையாத இசை யிலக்கணம் இசைத் தமிழெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்டதெனப்படும்; இவ் விரண்டன்வழி நிகழ்த்துங் கூத் திலக்கணங்கூறிய நாடகத் தமிழ் அவற்றுப் பின்னர்த் தாமென முறைமை கூறுதலும்; இனி, இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத்தோடு சொல்லதிகாரத் திற்கும், சொல்லதிகாரத்தோடு பொருளதிகாரத்திற்கும் இயைபு கூறுதலும் அதிகாரத்துள் ஓத்துப் பலவாகலின் அவை ஒன்றன்பின் ஒன்று வைத்தற்கு இயைபு கூறுதலும் அவ்வாறே சூத்திரத்திற்கு இயைபு கூறுதலுமெல்லாம் அதிகாரமுறைக்கு இனமென்று சேர்த்தியுணரப்படும். அதிகாரம் என்ற பொருண்மை என்னை எனின், முறைமை எனவும், இடமெனவும், கிழமை எனவும் கொள்ளப்படும். அவற்றுள் ஈண்டு அதிகாரம் என்றொழியாது முறைமை எனவும் கூறினமையின் அதிகாரம் என்பது முறைமைப் பொருட் டன்றி முன் ஓரிடத்து நிறுத்தி அதன் வழிமுறையாற் பொருள்கோடல் கொள்க. என்னை? முன்னும் பின்னும் நின்ற சூத்திரம் இரண்டனையும் ஓரிடத்தனவாகக் கருதல்வேண்டும்; அங்ஙனம் கருதல் இயைபுகொண்டன்றி ஒன்றன் பொருண்மை ஒன்றற்கு வருவித்தல் அரிது ஆகலானும் அங்ஙனம் இடம் பற்றாக்கால் ஒருவன் செய்த நூலோடு பிறிதொரு நூற்கு இயைபு கூறாத வாறு போல எழுத்ததிகாரத்தோடு சொல்லதி காரத்திடை இயைபு கூறல் வேண்டுவதன்றாவான் செல்லுமாதலானும் என்பது. எனவே, இடமெனப் பட்டது தானே முறைமைப் பொருளும் படுமாயினும் இச்சூத்திரத்துள் அதிகாரம் எனவும் முறைமை எனவும் கூறினமையின் ஈண்டு இடமுறைமை என்பதே கருத்தாயிற்று. இதனானே உடன் பிறந்தாருள் ஒருவற்குரியது வழித்தோன்றினார்க்கும் ஒருவழி உரியவாறுபோல முன்னர் நின்றவிதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படும் என்பது உத்தி வகையாயிற்று. இனியொருசாரார், இங்ஙனம் வரைந்து கொண்ட இடத்துள்ளே யாற் றொழுக்குப் போலவன்றி இடை யிடையும் பெறு மென்பது நோக்கி அரிமா நோக்கும், தேரைப் பாய்த்துளும், பருந்து விழுக்காடும் ஆகிவருமெனவும் சொல்லுப. அவையும் இனத்திற் சேர்த்தி யுணர்த்தவே படுமென்பது. தொகுத்துக்கூறல் தொகுத்து யாத்த நூலுள்ளும் தொகுத்துக் கூறுதல். வகுத்து மெய்ந்நிறுத்தல் அங்ஙனந் தொகுத்துக் கூறியவழி எழுத்து முப்பத்துமூன்று என்ற தொகையினைக் குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் என்றாற் போலவும், உயர்திணை அஃறிணை என்ற தொகை யினை ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்றாற் போலவும் வகுத்தல். மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல் எடுத்தோதிய பொருண்மைக்கு ஏற்ற வகையான் அப்பொருண் மைக்கட் சொல்லாததொன்று கொள்ள வைத்தல். 'முட்டின்றி முடித்தல்' என்றதனான் எடுத்தோதாததும், எடுத் தோதியத னோடு ஒக்கும் சிறப்பிற்று என்றவாறாம். அது போல்வன அதற்கு இனமெனப்படும். மற்று இதனை அருத்தாபத்தி என்னாமோ எனின், என்னாம் அன்றே, 'பிற சீர் உள்வழித் தன்தளை வேண்டுப' என்னும் பொருட்டன்றித் தன்சீரோடு இயற்சீர் வந்து தளை கொள்ளுமென மொழியாதோர் பொருட்கோடலின் என்க. வாராததனான் வந்தது முடித்தல் ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததோர் சூத்திரத்தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச் செய்தல். இனி, இங்ஙனம் முடிபு கோடலன்றி ஆண்டுக் குறியிடுதலும், ஆட்சியும் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தது பின்னர் ஆட்சிக்கண் வாராமையும் வந்தவழிப் பிறவற்றோடு கூறுதலும் அதற்கு இனமெனப் படும். மற்று இவை எதிரது போற்றலாகாவோ எனின், அதுபொருட் படைக் கண்ணதெனவும், இது ஆட்சியும் குறியீடும் பற்றியதோர் பகுதி எனவும் கூறி விடுக்க. அஃதேல், குறியீட்டால் ஈண்டாராயானோ எனின், இவை உத்திவகை ஆகலானும் அதுதானே உத்தியெனப் படுதலானும் அதனை ஈண்டு ஆராயான் என்பது. வந்ததுகொண்டு வாராததுணர்த்தல் பின்னொருவழி வந்தது கொண்டு முன் வாராததோர் பொருள் அறிய வைத்தல். முந்துமொழிந்ததன் தலைதடுமாற்று முன்னொருகாற் கூறிய முறையன்றிப் பின்னொருகால் தலைதடுமாறாகக் கூறுதல். ஒப்பக் கூறல் ஒன்று கூறுங்கால் இருபொருட் குறித்ததென்று இரட்டுறச் செய்தல். ஒருதலைமொழிதல் ஓரதிகாரத்திற் சொல்லற்பாலதனை வேறு அதிகாரத்துச் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டுங் கொள்ள வைத்தல். உடம்பொடு புணர்த்துச் சொல்லுவன அதற்கு இனமெனப் படும். என்னை? விதியல்லாதது விதிபோல மற்றொருவழிச் சேறலின். தன்கோட்கூறல் சொல்லாதன பிறவுளவாயினும் அந்நூற்கு வேண்டுவதே கொள்வல் என்றல். முறைபிறழாமை காரணமின்றித் தான் சில பொருள் எண்ணி நிறுத்திய பின்னர் அம்முறை பிறழ்ந்தாலும் குற்றமில் வழியும் அம்முறையினையே இலக்கணமாகச் சொல்லுதல். பிறனுடம்பட்டதுதானுடம்படுதல் உள்பொருள் அன்றாயி னும் வழக்கியலாற் கொள்பொருள் இதுவெனக் கூறுதல். பிறனுடம்பட்டது தானுடம்பட்டதாகாதோ முதனூ லாசிரியன் உடம்பட்ட தாகலின் எனின், அற்றன்று; முதனூலாசிரியனைப் பிறனென்னாமை யானும் முதனூலின் வழித்தாகிய நூலுள் அவன் உடம்பட்ட தொன்று உடம்படுமென்று உத்தி வகையாற் கொள்ளாது முழுவதூஉம் கொள்ளுமாக லானும் அவ்வாய்பாடு கூறலாகா தென்பது. பிறனென்றது வழக்கினுள்ளோரை நோக்கியாயிற்று என்றாற்கு ஒழிந்த வழிநூலாசிரியரைப் பிறவென்னாமோ எனின், அவருடம்பட்டது உடம் பட்டதனாற் பயந்த தென்னை? முதனூற் பிறழாமை நூல் செய்யுமாயின் என மறுக்க. அல்லதூஉம் இசைநூலும் கூத்தநூலும் பற்றிப் பிறன்கோட் கூறல் என்பதனாற் பிறனென்னினன்றி இயற்றமிழ்க்கண்ணே முதனூலாசிரி யனைப் பிறனென்னான் என்பது. அஃதேல் வழக்குநூல் செய்வான் வழக்கினை வழங்குவாரைப் பிறனென்னாமோ எனின், இலக்கண மும் வழக்குமென இரண்டனுள் இஃதிலக்கணமாதலின் அவ் வழக்கினுள் வழங்குவாரைப் பிறனென்றல் அமையுமன்றோ என்பது; என்றாற்கு அவருடம்பட்டது உடம்படுதல் உத்திவகை என்பது எற்றுக்கு? அஃதியல்பே யன்றோ எனின் திரிபுபடும் வழக்கினை உடம்படுதல் இலக்கணமன்றாயினும் அது வழக்கினுள்ளார் வேண்டுமாற்றான் இலக்கணமேயாம் என்பது கருத்து. அல்லாக் கால் எள்ளேபோல எட் குப்பையும் தன் தன்மையான் உள்பொருளாகலும் வேண்டுமன்றோ என்பது. இறந்தது காத்தல் முற்கூறியவோர் சூத்திரப் பொருண்மையைப் பின்னொரு சூத்திரத்தான் விலக்குதல். நூற்புறனடையும், ஓத்துப்புறனடை யும், அதிகாரப் புறனடையும் போல்வன, அதற்கு இனமெனப்படும். எதிரது போற்றல் வருகின்ற சூத்திரப் பொருண்மைக்கு ஏற்ப வேறொரு பொருண் முற்கூறல். மொழிவாம் என்றல் ஒரு பயனோக்கி முற்கூறுதும் என்றல். கூறிற்றென்றல் முற்கூறியதோர் இலக்கணத்தினை மற்றொரு பொருட்கும் விதிக்க வேண்டியவழி, அவ்விலக்கணத்தினை மீட்டுங்கூறாது மேற்கூறிய வாற்றானே கொள்க என்பான் அவை கூறினாம் என்று நெகிழ்ந்து போதல். தான்குறியிடுதல் உலகு குறியின்றித் தன்னூலுள்ளே வேறு குறியிட் டாளல். உயர்திணை அஃறிணை எனவும், கைக்கிளை பெருந்திணை எனவும் சொல் லிற்கும் பொருளிற்கும் வழக்கியலானன்றி ஆசிரியன் தானே குறியிடுதல். ஒருதலையன்மை யாண்டும் ஒருதலையாக வாராது, வருஞான்று வருவது ஆண்டென்று கொள்ளவைத்தல். சொல்லோத்தினுள் வேற்றுமை என்று ஓதப்பட்ட எட்டனுள் எழுவாய் வேற்றுமையினையும் விளி வேற்றுமையினையும் வேற்றுமை என்னாது எழுத்தோத்தினுள் அல்வழி என்றல் போல்வன அதற்கு இனமெனப்படும். முடிந்தது காட்டல் சொல்லுகின்ற பொருட்கு வேண்டுவன வெல்லாம் சொல்லாது தொல்லாசிரியர் கூறினாரென்று சொல்லுதல். ஆணைகூறல் இவ்வாசிரியன் கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல். மற்றுத்தன்கோட் கூறலோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், அது தந்திரஞ் செய்யும் பகுதிக்கண்ணது. இஃது அன்ன தன்றிப் புணர்ச்சிக்கட் சிறப்புடைய நிலைமொழி வருமொழிக்குத் திரிபு போலா தென்று கருவியாகிய இடைச் சொற்காயின் இத்துணை யமையுமென்று ஆணை செய்தலின் அப் பெயர்த்தாயிற்று. பல்பொருட்கேற்பின் நல்லதுகோடல் ஒரு சூத்திரத்துட் பயந்த சொற் றொடர் பலபொருட்கேற்றதாயினும் நல்லது கொள்கின்றாரெனக் கருதி அவ்வாறு செய்தல். இதனை ஏற்புழிக்கோடல் எனவும், ஒருபுடைச் சேறல் எனவுஞ் சொல்லுப. தொகுத்தமொழியான் வகுத்தனர்கோடல் ஒருவாய்பாடு எடுத்தோதப் பலவாய்பாடு அதற்கு வந்து பூணும் என்று வகுத்துக் கொள்ள வைத்தல். மறுதலை சிதைத்துத் தன்துணிபுரைத்தல் ஒரு பொருளினை ஒருவன் வேறுபடக் கொள்வதோர் உணர்வு தோன்றியக்கால் அவ்வேறு பாட்டினை மாற்றித் தான் துணிந்தவாறு அவற்கும் அறிவுறுத்தல். இது மறுதலை சிதைத்த லுடைமையின் வாளாது தன்கோட்கூறலின் அடங்காதாயிற்று. பிறன்கோட்கூறல் தன்னூலே பற்றாகப் பிறநூற்கு வருவதோர் இலக்கணம் கொள்ளுமாறு கூறுதல். அறியாதுடம்படல் தானோதிய இலக்கணத்தின் வேறு பட வருவனதான் அறிந்திலனாகக்கூறி அதன்புறத்துச் செய்வ தொரு புறனடை. இறந்ததுகாத்த லோடு இதனிடை வேற்றுமை என்னை யெனின், இறந்தது என்பது தான் துணிந்து சொல்லப்பட்ட பொருளாதல் வேண்டும். இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருண் மேற்றாகி அதுவும் தான் துணியப்படாத பொருளாகித் தான்நூல் செய்த காலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினும் கொள்க என்பான் வேறுபிற தோன்றினும் எனவும் வருபவுள வெனினும் எனவும் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந் தோர்க்கல்லது பழுதறச் சொல்லலாகாமை யின் அஃது அவையடக்கியல்போல்வதோர் உத்தியெனக் கொள்க. பொருளிடையிடுதல் வேற்றுமைப்பொருளினைச் சொல்கின்ற பொருண் மைக்கிடையே பெய்து சொல்லுதலும் சொல்கின்ற பொருட்கு இயை புடையதனை ஆண்டுச் சொல்லாது இடையிட்டுப் போய்ப் பிறிதொரு வழிச் சொல்லுதலும் போல்வன. எதிர்ப்பொருள் உணர்த்தல் தான்கூறிய இலக்கணத்திற் சில பிற்காலத்துத் திரிபு படினும் படுமென்பது முதற்கால முதனூலுங் கொண்டுணர்ந்த ஆசிரியன் எதிர்காலத்து வருவதுநோக்கி அதற்கேற்ற தோர் இலக்கணம் கூறிப் போதல். சொல்லினெச்சம் சொல்லியாங்குணர்த்தல் சொல்லின் ஆற்றலாற் பெறப்படும் பொருளினையும் எடுத்தோதி யாங்குக் கொள்ள வைத்தல். 'மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்றி முடித்த'லோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், இஃது எடுத் தோத்தினோடு ஒப்ப எச்சப்பட வைத்துக் கொள்ளும் இலக்கணம் எனவும் அதனோடு இதனிடை வேற்றுமையுணர்க. தந்துபுணர்ந்துரைத்தல் உள்பொருளல்லதனை உளபோலத் தந்துகூட உணர்த்தல். ஞாபகங்கூறல் சூத்திரஞ்செய்யுங்கால் அதற்கு ஓதிய இலக்கணவகை யானே சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருள்நனி விளங்கவும் செய்யாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றும் அதனானே வேறுபல பொருளுணர்த்தல். உய்த்துக்கொண்டுணர்தல் ஒருவழி ஒருபொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளினை யுங் கொணர்ந்து கொண்டறியு மாறு தோன்றச் செய்தல். மற்று நுதலியறிதலோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், அதுவாளாது பயமில கூறியதுபோலக் கூறியவழி இவ்வாறு கூறியது இன்ன கருத்துப் போலுமென்று அறியவைத்தலும் உரைவகையானும் நுதலிய தறியச் சொல்லுதலுமாம். இஃது அன்னதன்றி அச்சூத்திரந் தன்னான் ஒருபொருள் பயந்ததன்தலையும் பின்னொரு பொருள் பெற வருதலின் இது வேறென்பது. மற்று ஞாபகங்கூறலோடு இதனிடை வேற்றுமை என்னை எனின், பயமில்லாதுபோலவும் அரிதும் பெரிதுமாகவும் இயற்றி எளிதும் சிறிது மாக இயற்றாது சூத்திரஞ் செய்தல் வேறுபாடே நிமித்தமாகத் தோற்றிக் கொள்வதாரு பொருள் பெறவைத்தலின் இதுவும் வேறெனப்படும் என்பது. உய்த்துக்கொண்டுணர்தலோடு மேற்கூறிய முப்பத் திரண்டும் இச்சூத்திரத் துள் எடுத்தோதிய பொருள் வகையான் ஆராய்ந்து சொல்லப்பட்டனவன்றே; அங்ஙனம் சொல்லாதன பிறவும் இந்நூலுள் வரினும் உத்திவகையென வகுத்துக் கொண்டு ஓதிய முப்பத்திரண்டு பகுதியான் அடங்குமாறு ஆராய்ந்து, ஓதப்பட்ட உத்திபலவும் ஒருங்குவரினும் உள்ளத்தால் தெள்ளிதின் ஆராய்ந்து மயக்கந் தீரவேறுவேறு தெரிந்து வாங்கிக் கொண்டு முப்பத்திரண்டற்கும் ஏற்றவகையான் இனஞ்சார்த்தி மற்றவற்றை இன்னது இதுவெனப் பெயர் கூறல் வேண்டும்; அங்ஙனந் தொகநின்ற வழியும் வேறு வேறு கொண்டு தலைமைசான்ற ஆசிரியராற் கூறப்பட்ட நூல். எண்ணிய முப்பத்திரண்டு மல்லன தோன்றினும் அவற்றுள் அடக்கி, அவைதாம் ஒருங்குவரினும் வேறு தெரிந்து இனந்தோறும் சேர்த்து தலை அவாவி நிற்கும் ஈண்டு ஓதிய நூலென்பது கருத்து. ஒரு சூத்திரத்துட் பலவந்தவழி ஒன்றே உத்தியென்றுணராது மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்டு இவ்வாற்றான் இனத்திற் சேர்த்துக என்றான் ஆசிரியன் என்பது. மரபு கூறும் வழி...... நூலிற்குப் பொருட்படையாகிய யாப்புக் குற்றங் களும் உத்திவகையும் கூறல் வேண்டுதலிற் கூறினான் என்பது. அங்ஙனங் கூறாக்காற் பாட்டின்மரபு கட்டுரை போலவும், 'கட்டளை அரங்கின்றி வட்டா டியது' போலவும் வரம்பின்றி வேண்டியவாறு நூல் செய்தல் விலக்கின்றாவான் செல்லும். உத்திவகையும்... இன்றியமையாதன எனப்படும். என்னை? உணர்த்தப் படும் பொருள் இதுவென்று அறிவித்தலும், எழுத்துச் சொற்பொரு ளெனப்பகுத்துக் கொண்டு அதிகாரஞ் செய்தலும், உணர்வு புலங்கொள்ளு மாற்றால் தொகுத்துக் காட்டலும் மற்று அவற்றை வகுத்துக் காட்டிய வழிப் பயமில கூறலென்று கருதாமல் அது தன்னானொரு பயம்படச் செய்தலும் முதலாயின வெல்லாம் நூற் பொருளுணர்தற்குக் கருவியாகலும் சூத்திரச் சுருக்கத்துக் கேதுவாக லும் உடைமையின் அவையும் வேண்டப்பட்டன என்பது. இனி அவற்றை இத்துணை எனவரையறாக்கால் எத்துணையும் பலவாகி இகந்தோடுதலும், வழிநூல் முதனூல் வழித்தன் றாகலும் படும். ஈ. சங்: மதத்தினுள்ளும் அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியதென்னையெனின், கொள்கை வகையான் மதமென்றும், சிறப்பு வகையான் அழ கென்றும், இம்மதம் அழகு முதலியவெல்லாம் புத்தி நுட்பத்தமையும் வகையான் உத்தியென்றும் கூறப்படும் என்க. அங்ஙன மாயின் மதம் அழகு எல்லாவற்றையும் உத்தியின் பாற் படுத்துக்கூறாது சிலவற்றைக் கூறியது என்னை எனின், வரம்பின்றி வரும் உத்தியுள் தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டின் வந்தன கூறினார் என்க. (நன்.14) பாவாணர்: உத்தல் பொருந்துதல் உ ஒ, ஒத்தல் பொருந்துதல். உத்தி புணர்ப்பு, பொருத்தல், பொருத்தமானதை அறியும் அகக்காரணம், நூற்கும் உரைக்கும் பொருந்தும் நெறிமுறை. விளையாட்டில் இவ்விருவராய்ச் சேர்ந்துவரும் சேர்க்கையைக் குறிக்கும் உத்தி என்னும் சொல்லும் இதுவே. தெ. உத்தி. வடமொழி வரலாறு, 92 உயர்மொழிக்கிளவி அ. 1. உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி (தொ.பொ.234) 2. உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே (தொ.பொ.236) இ. இளம்: 1. (தலைமகற்கும் தலைமகட்கும் உரியதோர் மரபு உணர்த்துதல்) உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்கும் தலை மகட்கும் ஒத்த கிளவி. 2. (தோழிக்குரியதோர் மரபு வழுக்காத்தல்) உயர்த்துச் சொல்லும் கூற்றும் உரித்து தோழிக்கு என்றவாறு. நச்: 1. (தோழிக்கும் தலைவிக்கும் உரியதோர் வழுவமைக் கின்றது) பாடம் உயர்மொக்கு உரிய இன்பம் உயர்தற்குக் காரணமான கூற்றுநிகழுமிடத்து எதிர்மொழியாக மாறுபடக்கூறும் கிளவி நிகழ்தலும் உரிய. உறழுங் கிளவியைப் பொதுப்படக் கூறினார். தோழி உயர் மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர்மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலும், தலைவன் உயர்மொழி கூறியவழித் தலைவி உறழ்ந்து கூறலும், தலைவி உயர்மொழி கூறியவழித் தோழி உறழ்ந்து கூறலும் கோடற்கு. 2. (தோழிக்குரியதோர் வேறுபாடு கூறுகின்றது). தோழிக்குத் தலைவியையும் தலைவனையும் உயர்த்துக் கூறும் கூற்றும் உரியவாம் ஒரோவோரிடத்து. ஈ. க.வெ: 1. (தலைவனுக்கும் தலைவிக்கும் உரியதோர் சொல்வகை உணர்த்து கின்றது). வியந்து உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவி ஆகிய இருபாலர்க்கும் ஒத்த சொல்வகையாகும். உயர்மொழிக் கிளவியாவது, காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியில் ஒருவரை ஒருவர் வியந்து நோக்கித் தம்மினும் உயர்ந்தாராக உயர்த்துக் கூறும் சொல்லாகும். 2. (தோழிக்குரியதோர் திறம் உணர்த்துகின்றது) காதலர் இருவரையும் மக்களின் மேற்படவுயர்ந்த தெய்வமாக வுயர்த்துக் கூறும் மொழியும் மேற்குறித்த தோழியாகிய அவட்குரிய. 'உயர்மொழிக் கிளவியும் அவட்குரிய' என இயையும். உரிப்பொருள் அ. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே (தொ.பொ.16) ஆ. புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் நிமித்தமு மெனவாங் கெய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே (ந.அ.25) புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் அனைவயின் இரங்கலும் அவற்றின் நிமித்தமும் களவொடு கற்பெனக் கவைநர் கூறிய அளவின் உரிப்பொருள் ஆகும் என்மனார் (த.நெ.வி.13) புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனவாங் கெய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தவை ஓரிரண் டோரிரண் டுரைத்தவைந் திணைக்கும் நேரும் என்மனார் நெறியுணர்ந் தோரே (இ.வி.393) குடவரைக் குறிஞ்சியும் குணகடல் நெய்தலும் கடவ தாகும் களவிற் குரித்தே. (மு.வீ.அக.41) நன்னில மருதமும் தொன்னில முல்லையும் துன்னருங் கற்பொடு தோன்றும் தொடர்ந்தே (மு.வீ.அக.42) புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் இவற்றின் நிமித்தமும் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே (மு.வீ.808) இ. இளம்: (உரிப்பொருளாமாறு உணர்த்துதல்) புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் இவற்றின் நிமித்தமும் என்று சொல்லப்பட்ட இவை ஆராயுங் காலத்து ஐந்திணைக்கும் உரிப்பொருளாம். பிரிவு பாலைக்கு உரித்தாமாறு மேற் சொல்லப்பட்டது (இருவகைப் பிரிவும் என்னும் நூற்பா). ஏனைய மொழிந்த பொருளோடொன்றவைத்தல் (மரபு.110) என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக் கும், இரங்கல் என்பது நெய்தற்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும் பான்மையும் உரியவாகவும், சிறுபான்மை எல்லாப் பொருளும், எல்லாத் திணைக்கும் உரியவாகவும் கொள்ளப் படும். இருத்தலாவது தலைமகன் வருந்துணையும் ஆற்றியிருத்தல். இரங்கலாவது ஆற்றாமை. நச்: (உரிப்பொருள்கூறுகின்றது. உரிப்பொருள் உணர்ந்தா லல்லது உரிப் பொருள் அல்லன உணரலாகாமையின்). புணர்தலும் புணர்தல் நிமித்தமும், பிரிதலும், பிரிதல் நிமித்தமும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும், ஊடலும் ஊடல் நிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்காலை ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் என்றவாறு. தேருங்காலை என்றதனால் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந்நிமித்தங்களும் உரியவென்று ஆராய்ந்துணர்க. அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறிப் புணர்ந்துழி யல்லது பிரிவின்மை யானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானும், தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மை யானும் பிரிவினை அதன்பிற் கூறிப் பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லை யாகலின் இருத்தலை அதன்பிற்கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவன் ஏவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதே யாதலின் அவ்விரங்கற்பொருளை அதன்பிற்கூறி இந்நான்கு பொருட்கும் பொதுவாதலானும் காமத்திற்குச் சிறத்த லானும் ஊடலை அதன்பிற்கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார். நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் முற்பட்ட புணர்ச்சியே புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற்கூறினார். அவை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப் பாடும் பாங்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப் பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும் ஆண்டுத் தோழி கூறுவனவும் குறைநேர்தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சி நிமித்தம். இனி, ஓதலும் தூதும் பகையும் அவற்றின் பகுதியும் பொருட் பிரிவும் உடன்போக்கும் பிரிவு. ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் தோழி யொடு வலித்தன் முதலியன பிரிதல் நிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்து வனவும் தோழி ஆற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னொரு காற் பிரிதற் கும் நிமித்தமாம். அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின். இனித் தலைவி, பிரிவுணர்த்தியவழிப் பிரியார் என்றிருத்தலும், பிரிந்துழிக் குறித்த பருவமன்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவனவும் போல்வன இருத்தல். அப்பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன முல்லைசான்ற கற்பன்மை யிற்பாலையாம். இனிப் பருவங் கண்டு தலைவி ஆற்றாது கூறுவனவும் தோழி பருவமன் றென்று வற்புறுத்தினவும் வருவரென்று வற்புறுத்தினவும், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும் அவைபோல்வனவும் நிமித்தமாக லின் இருத்தல் நிமித்தம் எனப்படும். இனிக் கடலும் கானலும் கழியும் காண்டொறும் இரங்கலும் தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும் பொழுதும் புணர் துணைப் புள்ளும் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவும் தலைவன் நீங்குவனவும் எல்லாம் நிமித்தமாம். புலவி முதலியன ஊடலாம். பரத்தை பாணன் முதலியோர் ஊடல் நிமித்தமாம். ஏனையவும் வழக்கியலான் நால்வகை நிலத்தும் சிறுபான்மை வருமேனும் பெரும்பான்மை இவை உரிய வென்றற்குத் 'திணைக் குரிப்பொருளே' என்றார். உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை ஈ. நாவலர்: (அகப்பொருட் பகுதியிற் சிறந்த அன்பின் ஐந்திணைக்கு நேருரிமை கொண்ட ஒழுக்கவகைகளை உணர்த்துகிறது). கூடுதல், பிரிதல், பிரிவிடையாற்றியிருத்தல், ஆற்றா திரங்கல் புலவி என்ற ஐந்தும் அவற்றிற்கியைபுடைய நிமித்தங்களுமே ஆராயும் பொழுது அன்பின் ஐந்திணை யெனற்குச் சிறந்துரிய பொருள்களாம். முதல் கரு உரிப் பொருள்கள் அனைத்தும் அகத்திணைப் பகுதியாகவே அமைத்துக் கோடல் தவறன்றாயினும், திணை என்பது ஒழுக்கங் கண்ணிய பேராதலால் அன்பின் ஐந்திணை எனற்குப் புணர்தல் பிரிதல் முதலிய தலைமக்கள் ஐந்தொழுக்கங்களே சிறப்புரிமையுடைய பொருள்க ளாகும் என்பதை இச்சூத்திரம் விளக்குகிறது. நிமித்தமாவது ஒவ்வோரொழுக் கத்தை அடுத்து முன்னும் பின்னும் முதலும் முடிவுமாகத் தொடுத்து அவ் வொழுக்கத்திற்கு இன்றியமையாத் தொடர்புடையனவற்றைச் சுட்டுவ தாம். புகுமுகம் புரிதல், நகுநயம் மறைத்தல் முதலியன புணர்தலுக்கு முன்னெழும் நிமித்தங்களாம். பாராட்டெடுத்தல் முதலியன புணர்வின் பின்னர் நிகழும் நிமித்தங்களாம். இவ்வாறு தொடர்பணிமை யற்றன நிமித்தமாகா. ''அன்னபிறவும்... நிமித்தமென்ப" என்னும் மெய்ப் பாட்டியல் 19ஆம் சூத்திரமும் இதை வலியுறுத்தும். இவ்வாறே பிற திணைகளுக்கும் நிமித்தவகைகளை ஏற்ற பெற்றி அமைத்துக்கொள்க. நிறுத்த முறையானே முன்னர் முதற்பொருளைக் கூறினவர் அதனை அடுத்துக் கருப்பொருளைக் கூறாமல் அதற்குமுன் ஈண்டு உரிப் பொருள் களைக் கூறுவது ஏன் எனிற் சொல்லுவன்; அகப்பகுதியில் முதற்பொருள் உரிப் பொருள்கள் அல்லாதன அனைத்தும் கருப் பொருள்களாய் அமைத லின், முதலில் வரையறைப் பட்டவற்றை விளக்குவான் தொடங்கி, நிலம் பொழுதெனும் இரண்டே வகையுள் அடங்கும் முதற்பொருள் கூறினதும், அளவறுதிப் படாக் கருப் பொருள்களைக் கூறுமுன் ஐந்து ஒழுக்கத்தளவில் அடங்கும் உரிப் பொருளை இடையிற் கூறியமைத்த பெற்றி உய்த்துணர வைத்தார். மு.அ: அகவாழ்வுக்குச் சிறந்தது இல்லிருந்து மகிழும் உடனுறைவு இன்ப மாகலின், அதனை முதற்கண்கூறி, அவ்வின்பத்தினை மிகுவிப்பன பிரிதல் முதலிய நான்குமாகலின் அவற்றைப் பின்னர்க் கூறினார். பிரிதல் காரணமாகவே இருத்தல் முதலிய மூன்றும் நிகழுமாதலின் அவை பிரிதலின் பின் முறையே கூறப்பட்டன. புணர்தல் ஒன்றே யாகப் பிரிதற் பகுதிகள் நான்காகக் கூறியதன் கருத்து அறிந்து கொள்ளத்தகும். முதற்பொருளும் அதுபற்றிய வரையறையும் புறனடையும் கூறி முடித்த பின்னர்க் கருப்பொருள் கூறுதலே முறையாயினும் கைக்கிளை பெருந் திணைகளுக்கு நிலம் பொழுதுகள் கூற வேண்டி, முதற் பொருளுக்குப் புறனடை கூறிய திணைமயக் குறுதலும் என்னும் நூற்பாவையடுத்து 'உரிப் பொருளல்லன' என்றலும் மேலை நூற்பா கூறப்பட்டது. அதன்கண் கைக்கிளை பெருந்திணைகள் மயங்கவும் பெறும் என்னாது உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறும்' என்றமையால் உரிப்பொருளாவன இவை என்பதனை ஈண்டுணர்த்த வேண்டியதாயிற்று. மேலும் இங்குப் பொது வகையாற் கூறப்பட்டவுரிப்பொருள் ஐந்தனுள், ஒன்றாகிய பிரி வொழுக்கம் பற்றிச் சிறப்பிலக்கணம் சில கூறவேண்டி யிருத்தலால் இந் நூற்பாவை யடுத்து அவ்விலக்கணங்கள் கூறிய பின்னர்க் கருப்பொருள் இலக்கணம் கூறுவாராயினர். உ. ஆ.கு: உரிப்பொருள் என்பது உரிமைப்பொருள் ஆகலாம். கிழமை உரிமை; கிழமை யடியாகப் பிறந்த சொற்களே கிழவன், கிழத்தி என்பவை. காதலின்ப வாழ்வுக்கு உரிமையுடைமை கருதிய பெயரே அவை. காதற் கிழமைக்கு உரிமை பூண்ட உணர்வுகள் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பன ஆகலின் உரிப் பொருள் எனப்பட்டனவாம். மனனுணர்வில்லா மற்றை விலங்கு பறவை முதலிய உயிரிகளுக்கும் புணர்தல் பிரிதல் உண்டு எனினும், அவற்றை நீள நினைந்து இருத்தல் இரங்கல் ஊடல் இன்மையால் அவற்றை உரிப்பொருள் என்னாராய், அவற்றின் நேயப்பகுதிகளை இறைச்சிப் பொருள் என்னும் வகையில் அமைத்தனராம். உரியசை அ. இயலசை முதலிரண் டேனவை உரியசை (தொ.பொ.314) இ. இளம்: (அசைக்குப் பிறிதோர் குறியிடுதல்) முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசை எனக் குறிபெறும்; நேர்பசையும் நிரைபசையும் உரியசை எனக் குறிபெறும் என்றவாறு. பேரா: (மேற்கூறிய, அசை நான்கனையும் இருகூறு செய்து அவற்றுக்கு எய்தாதது எய்துவிக்கின்றது. இனி, ஆட்சியும் குணனுங்காரணமாக வேறுவேறு பெயர் கொடுக்கின்றது இச்சூத்திரமெனவும் அமையும்) (பாடம்: ஏனைய). முதற்கண் நின்ற நேரும் நிரையும் இயற்றிக் கொளப்படாது, இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பனவாம். ஒழிந்த இரண்டும் இயற்றிக் கொள்ளப்பட்டு இயலசை யாதற்கு உரியவாம். எனவே எய்தாதது எய்துவித்தது. இயலசை உரியசை என்று ஆளுமாக லானும் இயற்கையால் இயறலின் இயலசை எனவும், அவை செய்யும் தொழில் செய்தற்கு உரியவாகலான் உரியசை எனவும் ஆட்சியும் குணனும் காரணமாகப் பெயர் எய்துவித்த தூஉமாயிற்று. நச்: (பேராசிரியர் கூறிய பொருளையே நச்சினார்க்கினியரும் கூறினார்). ஈ. சி.க: இயலசை செய்யும் தொழிற்குரியது உரியசை என்றவாறு. உருட்டுவண்ணம் அ. ''உருட்டுவண்ணம் அராகந் தொடுக்கும்" (தொ.பொ.533) ஆ. ''உருட்டு" (வீ.சோ.142 தொ.வி.250) உருட்டுவண்ணம் (இ.வி.757) உருட்டாம் அராகத் தொடுவரு வனவே (மு.வீ.யா.ஒ.27) இ. இளம்: (உருட்டு வண்ணமாமாறு உணர்த்துதல்) உருட்டு வண்ணமாவது அராகந்தொடுக்கும். ''தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்" பேரா: உருட்டிச் சொல்லப்படுவது அராகமாதலின் அராகந் தொடுப்பது உருட்டுவண்ணமாம். ''உருமுரறு கருவிய பெருமழை தலைஇய" எனவும், ''எரியுரு வுறழ விலவ மலர" எனவும் வரும். இது நெகிழாது உருண்ட ஓசையாகலிற் குறுஞ்சீர் வண்ண மெனப் படாது. உருட்டு வண்ணமெனப்படும் என்பது. நச்: உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்குமது. உருட்டிச் சொல்லப்படுவது அராகமாதலின், ஞெகிழாது உருண்ட ஓசைத்தாகலின் இது குறுஞ்சீர் வண்ணத்தின் வேறாம். ''உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்" எனவரும். ஈ. யா.வி: உருட்டு வண்ணம் என்பது அராகத் தொடைமேல் வருவது. கு.சு: உருட்டிச் சொல்லப்படும் அராகம் தொடர்ந்து வருவது உருட்டு வண்ணமாகும். அராகம் குறிலிணைச் சொற்களே பயின்று வருவது. இங்ஙனம் வரின் முடுகியலோசை வரும். உ. ஆ.கு: உருட்டுவண்ணம் முடுகுவண்ணம் ஆகிய இரண்டற்கும் வேற்றுமை, முடுகுவண்ணம் அடியளவால் வரை கடந்து செல்வது என்பதாம். உருவின் உவமம் அ. 1. போல மறுப்ப ஒப்பக் காய்ந்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி உருவின் உவமம் (தொ.பொ.287) 2. நாலிரண்டாகும் பாலுமா ருண்டே (தொ.பொ.289) இ. இளம்: 1. (உருவத்திற்குரிய சொல் உணர்த்துதல்) போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவு வமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு. (தொ.பொ.287) 2. உருவென்பது நிறமும் குணமுமென இருவகையாம் (தொ.பொ.289) பேரா: 1. (நான்காம் எண்ணு முறைக்கண் நின்ற உருவுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது.). இவ்வெட்டும் உருவுவமம். இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச் சூத்திரத்தான் வருமெனப்பட்ட வாய்பாடு சிறுவரவின. (இனி உருவுவம வாய்பாட்டிற்குங் காரணங் கூறுங்காற் போலும் என்பது இடைச்சொல் லாகலானும் மரீஇவந்த வினைப்பாற்பட்டதாகலானும் அதற்குக் காரணங் கூறப்படாது என்பது. அஃதேல் அதனை இவ் வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, பொரு ளுடையவற்றைப் பிற்கூறி எனின், அதுவும் அன்ன வென்பது போல மற்றைமூன்று உவமத்தும் பயின்று வரும் என்பது எய்துவித்தற் கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடைய என்பது ஆசிரியன் பெருவரவின வாக உரிமைப் படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் மரபிற்றோன்றும் என்றதனான் இவையெல்லாம் மரபு பற்றி அறியல் வேண்டும். எனவே தலைச்சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலான் என்பது) ''தத்தம் மரபில் தோன்று மன் பொருளே" என்னும் நூற்பாவின் விளக்கத்தில் வரும் செய்தி இது. 2. இனி, உருவின் கண்ணும் போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனவென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவை ஒன்றெனப்பட்டன. ''நளியென்கிளவி செறிவுமாகும்" என்றதனால், அதனொடு சேர்ந்த தென்னும் பொருட்டேயாயிற்று. இனி, மறுப்ப காய்த்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருள வாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் இரண்டாயின. நந்துதல் என்பது கேடு. வியத்தல் என்பது உவமையான் வியக்கத் தக்கது பொருளெனவே அதன்கண் அக்குண மின்றென மறுத்த வாறாம். காய்த்தல் என்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தல் என்பதன் பொருளெனப் பட்டது. இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர் விற்றென்க. உ. ஆ.கு: நான்கு வகையும் இரண்டாதல் எனக்கொண்டு 'நிறம் குணம்' என்றார் இளம்பூரணர். நான்கும் இரண்டாய் எட்டாதல் எனக் கொண்டு உவமைத் தொகை நான்கு, விரிநான்கு என்றார் பேராசிரியர். உரை அ. 1. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே (தொ.பொ.649) 2. மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்த நூலானும் ஐயமு மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் (தொ.பொ.650) (பார்க்க: தொ.பொ.384, 466, 467) இ. இளம்: 1. (உரையாமாறு உணர்த்துதல்) சூத்திரத்துட்பொருள் ஒழியவும் அந்நூலகத்தில் யாப்பிற்கும் பொருந்த இன்றியமையாதன எல்லாம் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகும் என்றவாறு. 2. (இதுவும் அது). உரையாவது, மறுதலைக்கடாஅ மாற்றமுடைத்தாக ஐயப் பட்டு நிற்றலும் மருண்டு நிற்றலும் நீக்கி, தன்னூலானாதல் அப்பொருண் முடிவுறக் கூறின நூலானாதல் தெளியவொரு பொருளை ஒற்றுமைப் படுத்து இதுவே பொருளெனத் துணிதல் உரையிற் கியல்பென்றவாறு. மாற்றமுமுடைத்தாகி என்ற உம்மையால் விடையு முடைத்தாகி என்க. பேரா: 1. (இதுமேல், ''ஒத்தசூத்திர முரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி" என நிறுத்த முறையானே காண்டிகையினை மெய்ப்படக் கிளந்த வகையுணர்த்துதல் நுதலிற்று). மேல் ''பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்" (மர. 101) வருதலும் அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும் உடைத்தாகி வருதலுமென இருவகையும் உடைத்தென்றான். இனிச் சூத்திரத்துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்துவன வெல்லாம் அதனோடு கூட்டிச் சொல்லுதல் உரையெனப்படும். அவை, 'இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்' (இள. 19) என்றவழி எடுத்தோத்தின்றி 'நிலம்வலிதாயிற்' றென்னும் வழுவமைதி கோடலும், ஒத்த சூத்திரம் என்றவழிப் பாயிரம் ஒத்த சூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க. எல்லாம் என்றதனாற் சூத்திரப்பொருளேயன்றி எழுத்தும் சொல்லும் பற்றி ஆராயும் பகுதியுடையவாதல் வேண்டும் அவ்வுரை என்பது கொள்க. இனி, மேற்காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற் கேற்பனவெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை ஏதுநடை யும் எடுத்துக்காட்டும் சூத்திரம் சுட்டுதலுமென்று இன்னோரன்ன கொள்க. இவையெல்லாம் தழுவுதற்குப் போலும், இன்றியமையா தியைபவையெல்லாம் என்று எடுத்தோதுவானாயிற் றென்பது. 2. (இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத் தென்பது அறியு மாற்றான் எய்தியதன்மேற் சிறப்பு விதி உணர்த்துதல்). மறுதலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை முதனூலாகிய சூத்திரத் தானும் (இதனானே உரையின்றிச் சூத்திரமே நூலெனப் படுவதூஉம் ஆயிற்று), அதன் முதல் நூலானும் ஐயவுணர்வும் பொய்யுணர்வும் செம்பொருளான் நீக்கி, அச்செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றெனவும் இரட்டுறுதல் நீக்கி ஒற்றுமை கொளுத்தி யும் கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்து மாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரை இலக்கணம். முடிந்த நூல் என்பது இணைநூல் என்பாரும் உளர். இணைவன கூறத் தான் கூறானாயின் அது குன்றக் கூறலென மறுக்க. அங்ஙனம் கொள்ளும் பொருண்மை உளவாயின் அவை, 'சூத்திரத்துட் பொருளன்றியும்' என்பதனான் அடங்கும். மற்று, முதனூலாற் கூறிய பொருள் சில குன்றக் கூறினான் போல முடிந்த நூலாற்கொள்க; என்றது என்னை எனின்; அற்றன்று; இப்பொருண்மை முடிந்த நூலினும் உண்டென்று எடுத்துக்காட்டப்படும் என்றான் என்பது; இது, மேல் 'ஏதுநடையினும் எடுத்துக் காட்டினும்' என்ற வழிப் பெறுதும் ஆயினும், முதனூலல்லது எடுத்துக்காட்டப் பெறாஅர் என்றற்கு ஈண்டு வரைந்து கூறினான் என்பது; எனவே, இணைநூலும் அவற்று வழிநூலும் எடுத்துக்காட்டுங்கால் தனக்கு முதல்வ ராயினாரை நாட்டி அவர்கருத்தே பற்றிப் பிறர் செய்தா ரெனினல்லது பிறர்மேல் தலைமைநிறீஇ அவர் கருத்துப்பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ஙனம் கூறின் அவர் நூற்கே உரையெழுது வான் அல்லனோ என மறுக்க. இனி, 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவ' னாற் செய்யப்பட்ட முதனூற்காயின் முடிந்தநூல் எடுத்துக் காட்டுதல் என்னும் இவ்விலக்கணம் இன்று என்பது கொள்க, ஒருதலையன்மை என்னும் உத்திவகை பற்றி என்பது. மறுதலையும் மாற்றமும் என்பது கடாவிடை; ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கல் ஒருபுடை யொப்புமை யுடைய போலியும் அதற்கு ஒன்றும் இயைபில்லாத பொய்ப்பொருளும் எனப்படும். நிற்றல் என்பது நிற்க அவ்வுரை என்றவாறு. தன்நூலானும் முதனூலானும் ஐயமும் மருட்கையும் நீங்குங்கால் அவற்றுட்கிடந்த செம்பொருளானே நீக்கப் படும் என்பது. இரண்டு கண்ணானும் கூர்மையாற் பார்த்தான் என்பதுபோலக் கொள்க. உ. ஆ.கு: இவண் 'உரை' என்றது நூலுக்கு உரை கூறுதல் பற்றியதாம். இக்காலம் 'உரைநடை' என்பதுபோல்வது அன்று. அதன் அடிக்களம் 'உரைவகை' என்பதில் உள்ளதாம். உரைவகை அ. 1. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடுபுணர்ந்த நகைமொழி யானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப. (தொ.பொ.475) 2. அதுவே தானும் இருவகைத் தாகும் (தொ.பொ.476) 3. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே ஒன்றே யார்க்கும் வரைநிலை இன்றே (தொ.பொ.477) ஆ. ''ஓரடி யானும் பலவடி யானும் ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள்" (இ.வி.760) ''உரையொடு நூலிவை அடியில நடப்பினும் வரைவில என்ப வாய்மொழிப் புலவர்" (பல்காயம்) உரையெனப் படுவ துணருங்காலை கருத்தே கண்ணழி வுதாரணம் பொழிபொருள் அகலம் நுட்பமென் றாங்கன முடிய உணர்த்தும் சொல்வகுத் துரைத்தபின் எழுத்தெழுத் தாகப் பொருள்தெரிந்து சூத்திரம் படலம் பிண்டமென் றவற்றான் யாப்புற வகுத்த நூற்பொருள் வழாமை நோக்கொடு மாறுகோள் என்புழி யறிந்து முதல்நடு இறுதி உரைமாறு படாமை நிரல் நிறை சுண்ணம் அடிமறி ஆற்றொழுக் களைமறி பாப்புவிற் பூட்டுத் தாப்பிசை கொண்டுகூட் டாகிய வகையால் ஏற்பக் கூறல் உரையெனப் படுமே வடமொழி கூட்டினும் வரையார் ஆண்டே (நவநீதப். மேற்.72) சூத்திரந் தோற்றல் சொல்வகுத்தல் சொற்பொருள் உரைத்தல் வினாவுதல் விடுத்தல் விசேடங் காட்டல் உதாரணங் காட்டல் ஆசிரிய வசனங் காட்டல் அதிகாரவரவு காட்டல் தொகுத்து முடித்தல் விரித்துக் காட்டல் துணிவு கூறல் பயனொடு முடித்தல் பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே. பாடம் கண்ணழி வுதாரணம் என்றிவை நாடித் திரிபில ஆகுதல் பொழிப்பே. தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர். ஏதுவின் ஆங்கவை துடைத்தல் நுட்பம். துடைத்துக்கொள் பொருளே எச்சம் என்ப. (தொ.இளம்.பாயி.) (இ.வி.பாயி.) இயல்பெனப் படுவ தியல்புழி எண்ணில் இன்னுழியா யின்ன தியன்றதிது வென்ன இன்ன முரைப்ப தென்மனார் புலவர் (வீரசோ.90.மேற்.) சொற்றொறும் சொற்றொறும் துணிபொருள் உரைத்தல் கற்றறி புலவர் கண்ணழி வென்ப. (ந.அ.1 மேற்.) பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே (யா.கா.1. மேற்.) அகலம் என்ப தாசறக் கிளப்பின் விகலம் இன்றி விரித்துரைப் பதுவே. (யா.கா.5. மேற்.) ஆண்டே அயனம் இருதுத் திங்கள் பக்கம் நாளே கிழமை நாழிகை அஞ்சுங் கலையே காட்டே முதலா ஈண்டிதற் கேற்ப திதுவென எடுத்துக் காண்டக வுரைப்பது கால வுரையே. கருத்தெனப்படுவது கருத்துறத் தெரியில் அறிதல் அறியாமை ஐயுறல் என்னும் முறையுளி நோக்கின் மூவகைப்படுமே. அறிந்தறி யாமை அறிந்தவை ஐயுறல் அறியா தறிதல் ஐயுற் றிலாமை எனநனி வகுத்த இத்திறல் வகைத்தே. புடையுரை என்பது நடைவகை தெரியின் திறந்தெரி பாட்டி னிற்பொருள் அன்றியும் புறம்பெற வரூஉம் பொருள்வகை யுடைத்தே. (வீ.சோ.90. மேற்.) சொல்லே சொற்பொருள் சோதனை மறைநிலை இலேசே எச்சம் நோக்கே துணிபே கருத்தே செறுத்தலென் றீரைங் கிளவியும் நெறிப்பட வருவது பனுவல் உரையே (யா.வி.பாயி.) வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் ஆணியும் தமக்கமை கருவியும் தாமாம் அவைபோல் உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே (நேமி.பாயி.) (அகத்தியனார்) நன்.மயிலை. இ. இளம்: 1. (உரைபாகுபடுமாறு உணர்த்துதல்) 1. பாட்டினிடை வைக்கப்பட்ட பொருட்குறிப்பினானும் உரையாம். பலசொல் தொடர்ந்து பொருள் காட்டுவனவற்றுள் ஓசை தழீஇய வற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுட்டன்மைத் தாய் வருவது நூலெனப்பட்டது. அவ்வகையுமன்றிவரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப்பட்டது. 'ஊர்க்கால் நிவந்தபொதும்பருள்' என்னும் குறிஞ்சிக் கலியுள் 'இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து' என்றது உரைக்குறிப்பு. 2. பாக்களை ஒழியத் தோற்றிய சொல்வகையானும் உரையாம். அஃதாவது வழக்கின்கண் ஒருபொருளைக் குறித்து வினவுவாரும் செப்புவாரும் கூறும் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒரு பொருளைக் குறித்துச் செய்யப்படுதலானும் செய்யுளாம். இதனைக் குறித்தன்றே, 'செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்' என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க. 3. பொருளியல்பில்லாப் பொய்ம்மொழியானும் உரை வரும். 4. பொருளைப் பொருந்திய நகைவழி மொழியாய் வருகின்றது. நகை மொழியாவது, மேற்சொல்லப்பட்ட உரை பொருந்தா தென இகழ்ந்து கூறுதல். அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்த்தும் உரை பிறக்குமாதலின் பொருளொடு புணர்ந்த நகை மொழியானும் உரை வருமென்றார். இவ்வகையினான உரை நான்கு வகைப்படும் என்றவாறு. 2. மேற்சொல்லப்பட்ட உரை இரண்டு வகைப்படும் என்றவாறு. அது மைந்தர்க்கு உரைப்பனவும் மகளிர்க்கு உரைப்பனவுமாம். 3. (மேல் இருவகைப்படும் என்ற உரையை உரைத்தற்குரியாரை உணர்த்துதல்). மகளிர்க்கு உரைக்கும் உரை செவிலிக்கு உரித்து. மைந்தர்க்கு உரைக்கும் உரை எல்லார்க்கும் உரித்து. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்ற உரையும், பாட்டில் உரைக்கின்ற உரையும் கூறுவளோ எனின், அவ்விடங்களில் வரும் உரை பொருள் பற்றி வருதலின் அப்பொருள் கூறுவள் என்க. அன்றியும் அதுவே தானும் என்பது பொருளொடு புணர்ந்த நகை மொழியைச் சுட்டிற்றாக்கி அம்மொழியிரண்டும் கூறுபடும் எனப் பொருளுரைப்பினும் அமையும். பேரா: 1. (உரையாமாறு உணர்த்துதல்) உரைப்பகுதி வழக்கு இந்நான்காகுமென்று சொல்லுவர் புலவர். ''பாட்டிடை வைத்த குறிப்பினானும்" என்பது, ஒரு பாட்டு இடை யிடை கொண்டு நிற்கும் குறிப்பினான் வருவன எனப்படும். என்னை? பாட்டு வருவது சிறுபான்மை யாகலின். அவை தகடூர் யாத்திரை போல்வன. மற்றுப் பிறபாடை விரவியும் வருவனவோ எனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின எல்லாம் 'பாட்டிடை வைத்த குறிப்பு' என ஈண்டு அடங்கும்; பிற பாடைக்காயின் ஈண்டு ஆராய்ச்சியின்று என்பது. ''பாவின்றெழுந்த கிளவியானும்" என்பது பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவனபோல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ எனின், படா. பாட்டும் உரையும் நூலும் என (391) வேறு ஓதினமையின். அல்லாத சூத்திரத்தாற் சொல்லாத பொருளினை உரையாற் சொல்லித் தொடர்பு படுப்பது பாட்டிடை வைத்த குறிப்பாவது. இஃது அன்ன தன்று; வேறொரு வன் சூத்திரத்திற்கூறிய பொருளையே மற்றொரு வன் கூறுகின்றானாதலால் என்பது. ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே பொரு ளெழுதின் அஃதொக்கும். அவை பாரதம் பருப்பதம் முதலாயின. ''பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும்" என்பது, ஒரு பொரு ளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்வன. அவை, ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன வென்று அவற்றுக்கியையாப் பொருள்படத் தொடர்நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்றுவரலாற்று முறையான் வருகின்றன. ''பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்" என்பது, பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலை. அதுவும் உரையெனப்படும். அவையாவன சிறுகுரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வன எனக் கொள்க. இவற்றுட் சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது. உலகியலாகிய நகை தோற்றும் என்பது. இவ்வகையான் உரை நான்கெனப்படும் என்றவாறு. 'உரைநடை' என்னாது 'வகை' என்றதனான் இவ்வுரைப்பகுதி பிறிதும் ஒன்றுண்டு. அது மரபியலுட் பகுத்துச் சொல்லுதும். 2. (உரையின் தொகை கூறுகின்றது). அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும், ஏனைய இரண்டும் ஒன்றாகவும் தொகுக்கப்படும். அவ்வாற்றாற் பயங்கொள்ளுங்கால். 3. (உரையின் இயல்புணர்த்துதல்) இதுவும் மேனின்ற அதிகாரத்தான் இறுதிநின்ற இரண்டன் தொகுதி யாகிய ஒன்று செவிலிக்கே உரித்து. ஒழிந்த இரண்டானுமாகிய ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து எனவும் கூறியவாறு. தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுதுபோக்குதற்குரியர் என்பது இதன் கருத்து. இக்கருத்தேபற்றிப் பிற சான்றோரும், ''செம்முது செவிலியர் பொய்ந் நொடிபகர" என்றார் என்பது. பிறவும் அன்ன. 'மற்றும்' என்றதனான் அவையன்றி வருகின்ற பிசியும் செவிலியர்க்கு உரித்து என்பது கொள்க. இனி, ''பாட்டிடைவைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும்" யாருக்கும் வரையின்றி வருமாறு அவ்வச் செய்யுளுட் காணப்படும். நச்: 1. (உரை கூறுகின்றது) பாட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது, ஒரு பாட்டினை யிடையிடை கொண்டு நிற்கும் கருத்தினான் வருவனவும். அவை தகடூர் யாத்திரையும் சிலப்பதிகாரமும் போல்வன. ஆண்டுப் பிறபாடை தழுவி வருவன தமிழுரை யாகாமையின் ஈண்டு ஆராய்ச்சி யின்றாம். அதன்கண் தமிழுரையுள்ளன ஈண்டு அடங்கும். 'பாவின் றெழுந்த கிளவியானும்' என்பது பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொரு ளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப்படா, 'பாட்டும் உரையும் நூலு'மென வேறோ தலின், அன்றியும் சூத்திரம் கருதிய பொருளையன்றி உரையான் வேறோர் பொருள்கூறி அதனைத் தொடர்புபடுத்திக் கூறாமையின், ஆண்டும் ஒருவன் கூறியதற்கு ஒருவன் பொருள் கூறுகின்றானாம், ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே உரை கூறுவனவும் ஒக்கும். 'பொருளொடு புணராப் பொய்ம்மொழியானும்' என்றது பொருள் முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவன. அவை ஓர் யானையும் குதிரையும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கு இயையாப் பொருள் பட்டதோர் தொடர் நிலையாய் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன. 'பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்' என்றது பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டு நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலையானும். இவை சிறுகுரீஇ உரையும் தந்திரவாக்கியமும் போல்வன. இவை பொய்யெனப்படாது உலகியலாகிய நகை தோன்றுதலின். 'என்று உரைநடைவகையே நான்கென மொழிப' என்று உரைப்பகுதி வழக்கு இந்நான்குமென்று உரைப்பர் புலவர். வகை என்றதனான் உரைப்பகுதி பிறிதுமுள. அவை மரபியலுள் கூறுப. 2. இது அந்நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும், ஏனைய இரண்டும் ஒன்றாகவும் தொடுக்கப்படும், அவற்றால் பயன் கொள்ளும் காலத்து. 3. இதுமேனின்ற அதிகாரத்தான் இறுதிநின்ற இரண்டன் பகுதியுமாகிய ஒன்று செவிலிக்கே உரித்து. ஒழிந்த இரண்டனான் ஆகிய ஒன்றும் வரைவின்றி எல்லார்க்கும் உரித்து. தலைவியை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் என்றவாறு. மற்றும் என்றதனான் இவையேயன்றி வருகின்ற பிசியும் செவிலிக்கு உரித்தென்க. இனிப்பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் வரையறையின்றி வருமாறு பலவற்றுள்ளும் காண்க. உ. ஆ.கு: சிலப்பதிகாரத்தில் வரும் உரைப்பாட்டு மடையும், சிலப்பதிகாரத் திற்கு உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பதொரு பெயர் உண்மையும் எண்ணத்தக்கவை. 'உரையிடையிடுதல்' உரைச்சொல் வருதல் என்பதாம். ''நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோநீ மடக்கொடி யோய்என". என்றும், தருகெனத் தந்து தான்முன் வைப்ப என்றும், என என்னும் உரைச்சொல் வருதல் காண்க. உரையிட்டுவந்த நடையும் நூலுக்கு வரைந்த உரையும் பின்னே முழுமை யாய் 'உரைநடை' என ஒருநடை உருக்கொள்ள வாய்த்ததாம். உவகை நான்கு அ. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென அல்லல் நீத்த உவகை நான்கே (தொ.பொ.255) இ. இளம்: (உவகையாமாறும் அதன்பொருளும் உணர்த்துதல்) செல்வநுகர்ச்சியானும், கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும் மகளிரொடு புணர்தலானும், சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகைபிறக்கும் என்றவாறு. ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும் ஒத்த காமத் தொருவனொடு பலரும் ஆடலும் பாடலும் கள்ளும் களியும் ஊடலும் உணர்தலும் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும் நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும் குளம்பரிந் தாடலும் கோலம் செய்தலும் கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும் துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும் அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும் நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந்துறைதலும் கலம்பயில் சாந்தொடு கடிமலர் அணிதலும் ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும் சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன் துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே எனச் செயிற்றியனார் விரித்தோதினராயினும் இவை யெல்லாம் இந்நான்கினுள் அடங்கும். பேரா: (ஈற்றுக்கண் நின்ற உவகை உணர்த்துதல்) செல்வம் என்பது நுகர்ச்சி; புலன் என்பது கல்விப்பயனாகிய அறிவுடைமை; புணர்வென்பது காமப்புணர்ச்சி முதலா யின. விளையாட்டென்பது யாறும் குளனும் காவுமாடிப்பதி யிகந்து வருதல் (191) முதலாயின. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை தோன்றும். உவகை எனினும் மகிழ்ச்சி எனினும் ஒக்கும். 'அல்லல் நீத்த உவகை' என்றதனாற் பிறர் துன்பங்கண்டு வரும் உவகையும் உவகை எனப்படாது என்பது. இதுவும் தன்கட்டோன்றிய பொருள் பற்றி வரும் என்றார்க்குப் பிறன் கட்டோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்கும். அஃதெப்பாற்படும் எனின், அதுவும் அல்லல் நீத்த உவகை என்றதனான் உவகை எனப்படும். இனித் தன்கட் டோன்றிய பெருமிதமும் உவகையும் முற்கூறாது பிறன்கட்டோன்றிய அச்சம் முற்கூறி இதனை ஈற்றுக்கண் வைத்தமையான் எடுத்தோதிய நான்கும் போலாது இது பிறன்கட் டோன்றிய இன்பம் பொருளாக வருமென்பது கொள்க. உ. ஆ.கு: 'புலன்' புலமை; புலன் வழியாக அடையும் அறிவுப்பேறு. புலமை யால் ''தாமின்புறுதலுடன், உலகின்புறக் காண்டல்" உண்டாதலானும், ''தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது" ஆகலானும், ''உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்" புலவர் தொழில் ஆகலானும், ''இகலிலர் எஃகுடையர் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி" என்பர் ஆகலானும் புலமையால் அடையும் இன்பம் புலனாம். பிறவகை யின்பம் வெளிப்படை. உவமைச்சொல் (உவமஉருபு) அ. அவைதாம், அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப என்ன மான என்றவை எனாஅ ஒன்ற ஒடுங்க ஒட்ட வாங்க வென்ற வியப்ப என்றவை எனாஅ எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக் கள்ளக் கடுப்ப வாங்கவை எனாஅக் காய்ப்ப மதிப்பத் தகைய மருள மாற்ற மறுப்ப வாங்கவை எனாஅப் புல்லப் பொருவப் பொற்பப் போல வெல்ல வீழ வாங்கவை எனாஅ நாட நளிய நடுங்க நந்த ஓடப் புரைய என்றவை எனாஅ ஆறா றுவமையும் அன்னவை பிறவும் கூறுங் காலைப் பல்குறிப் பினவே. (தொ.பொ.282) ஆ. போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே. (நன்.367) ஆங்க, ஒப்புமைச் சொற்களைச் செப்புங் காலை ஒப்ப உறழ உணர்ப்ப உரப்ப வேய்ப்ப மெத்த மெய்த்தவிளக்கப் புரையப் பொருந்தப் பொற்பக் கடுப்பக் குரையக் கதழக் கருதக் கூட நிகர மேவ நோக்க ஓராங்(கு) இகல ஏய இயைப்ப ஒப்ப மான மருள மறல நீக்க நீர அனைய நோக்கத் தொடிய நுணங்கப் படிய துணிப்ப உன்ன வணங்க வாவ மலைய என்ன வெப்பத் தொழப்ப விட்ட இருள இன்ன அன்ன என்றா இவையும் துன்னும் என்ப துணிந்திசி னோரே. (வீ.சோ.9094 மேற்.) போல மானப் புரையப் பொருவ நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப ஏர ஏய மலைய இயைய ஒப்ப எள்ள உறழ ஏற்ப அன்ன அனைய அமர ஆங்க என்ன இகல விழைய எதிரத் துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ இணைசிவண் கேழ்அற்றுச் செத்தொடு பிறவும் நவைதீர் பான்மை உவமைச் சொல்லே. (தண்டி.35) பொதுவினும் சிறப்பினும் புணர்ந்துள வாகி இதுவழக் கிதுசெயுள் எனுமீ ரிடத்தும் வெளிப்படை குறிப்பென விழுமிய நெறியால் கொளப்படும் உவம உருபினைக் கூறின் அன்ன போல அனைய மான என்ன நேர இறப்ப நிகர்ப்ப நாட நளிய நடுங்க நந்த ஓட ஒன்ற ஒடுங்க ஒட்டக் கள்ளக் கருதக் காட்டக் கடுப்ப எள்ள விழைய எதிர ஏர்ப்ப மருள மலைய மாற மதிப்ப என்ற வந்த ஏர ஏய ஆங்க ஒப்ப அமர இயையப் புல்ல உறழப்புரையப் பொருவ அனைதுணை கெழுவீழ் தழைசெத் தற்றணி என்றிவை நாற்பான் எட்டும் பிறவும் ஒன்றிய திறத்தால் ஒழுகுதல் உளவே. (மா.அல.113) போல மறுப்ப ஒப்பக் காய்ப்ப நேர வியப்ப நளிய நந்த கடுப்ப ஏய்ப்ப மருள புரைய ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப அன்ன ஆங்கு மான விறப்ப என்ன உறழத் தகைய நோக்க எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழவென்(று) ஈரெட்டு மெட்டும் இருநான்கும் முறையே தத்தம் மரபின் சாற்றுமூன் றுவமைக்கும் ஒத்த உருபாம். உரைத்தமூன் றுவமைக்கும் ஒன்ற நடுங்க ஏர ஏற்ப வென்ற நாட மாற்றப் பொற்ப ஆர அமர அனைய அவற்றோ டெதிர ஏய இயைய இகலத் துணைப்ப மலையத் தூக்கே செத்தொடு கெழுதேர் நகைமிகு சிவண்நிகர் இன்னவும் இன்னன பிறவும் எய்துதல் உரிய (இ.வி.642) இ. இளம்: (இஃது உவமையுணர்த்துஞ் சொற்களை வரையறுத்து உணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட உவமைகள் தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங் காலத்துப் பல குறிப்பினையுடைய என்றவாறு. சொல்லுங்காலத்து என்றமையிற் சொல்லென்பது கொள்க. அன்னபிறவாற் கொள்ளப்படுவன; நோக்க, நேர, அனை, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க. 'பல்குறிப்பின' என்றதனான் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மையவாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச் சொல் நீர்மையவாய் வருவனவும் எனக் கொள்க. 'புலிபோன்ற சாத்தன்' 'புலிபோலுஞ் சாத்தன்' என்பன பெயரெச்சம். 'புலிபோன்று வந்தான்' 'புலிபோலப் பாய்ந்தான்' என்பன வினையெச்சம். 'புலிபோலும்' புலிபோன்றனன் என்பன முற்று. அன்ன, இன்ன இடைச்சொல். இன்னும் 'பல்குறிப்பின' என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங் கொள்க. 'தேன்போல இனியமொழி' இது விரிந்தது. 'தேன்போலும் மொழி' இது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்கு நின்றது. 'தேமொழி' என்பது எல்லாந் தொக்கது. பிறவுமன்ன. பேரா: (இஃது, உவமத்தினையும் பொருளினையும் ஒப்பிக்குங்கால் இடைவருஞ் சொல் இனைத்தென்கின்றது. 'அவைதா' மென்பது, வினைபயன் மெய்யுருவென்னு நான்குவமையு மென்றவாறு.) இவை எண்ணப்பட்ட முப்பத்தாறு சொல்லும் இவையே போல்வன பிறவும் வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் (எறு.) 'ஆறாறவையு' மென்பது அவை முப்பத்தாறு மென்றவாறு 'பல்குறிப்பின' வென்பது, அவை இடைச்சொல்லாகித் தொக்கு வருவனவுந் தொகாமே நிற்பனவும் வினைச் சொல்லாகி வேறுபட நிற்பனவுமெனப் பலவா மென்றவாறு. இவ்வோதிய வாய்பாடெல்லாம் நான்கு உவமத்திற்கும் பொது வென்பது ஈண்டுக்கூறி, இனி அவை சிறப்பு வகையான் உரியவாறிது வென்பது மேற் கூறுகின்றான். 'பிறவும்' என்பதனான் எடுத்தோதினவேயன்றி, நேர நோக்க துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழுவ, கொண்ட, எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும் பிறவுமெல் லாங்கொள்க. ஈண்டு எடுத் தோதியவற்றுள் வரையறை வகையவென மேற்கூறப்படுவன பொதுவகையான் வருமாற்றுக்கும் உதாரணம் அவற்றை உரிமை வகையான் உதாரணங் காட்டும்வழிக் காட்டுதும். ஆண்டு எடுத் தோதாதன ஆறெனப்படும். அவை, ஒன்ற என்ற மாற்ற பொற்ப நாட நடுங்க என்பன. அஃதேல் ஆண்டு வரையறை கூறப்பட்டன எண்ணான்கு முப்பத்திரண் டாயினவா றென்னை? முப்பதே யாகல் வேண்டுமால் அவையெனின், அவற்றோடு புறனடை யாற் கொண்டவற்றுள்ளும் நேர நோக்க என்னும் இரண்டு கூட்டி ஓதினான் ஆண்டென்பது. ஈ. க.வெ: இதன்கண், 'அன்னபிறவும்' என்றதனால் இச்சூத்திரத்திற் சொல்லப் படாத நோக்க, நேர, அனைய, அற்று, இன், ஏந்து, ஏர், சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர, துணைப்ப, மலைய, அமர முதலிய பிறவுருபுகளும், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் ஆகிய வுவமவுருபுகளெல்லாந் தழுவிக் கொள்ளப்பட்டன. 'புலிபோன்ற சாத்தன்' எனப் பெயரெச்ச மாகவும் இங்ஙனம் பல்வேறு வடிவங்களில் உவமவுருபுகள் பயின்று வருதல் பற்றிக் 'கூறுங்காலைப் பல்குறிப்பினவே' என்றார் ஆசிரியர். உவமத்தோற்றம் அ. 1. வினைபயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் (தொ.பொ.272) 2. விரவியும் வரூஉம் மரபின என்ப. (தொ.பொ.273) 3. உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை (தொ.பொ.274) 4. சிறப்பே நலனே காதல் வலியோடு அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப. (தொ.பொ.275) 5. கிழக்கிடும் பொருளோ டைந்து மாகும் (தொ.பொ.276) ஆ. பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின் ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த் தொப்புமை தோன்றச் செப்புவ துவமை. (தண்டி. 31 இ.வி.639) பட்டாங் குரைத்தல் புகழ்தல் பழித்தலில் பண்புபயன் சிட்டார் தொழில்வடி வாதி உவமை செறிந்துறுப்புத் தட்டா தியலும் பொருளும் உவமமும் சார்பொதுவாய் முட்டா மலேநிகழ் காரண மும்பெறும் மொய்குழலே. ஒப்பி லுவமை இழிபுயர் வோடு உயரிழிபு துப்பில் சமமே தலைப்பெயல் தெற்றுத் தொகைவிரிவு தப்பில் உறழ்ந்து வரலோ டொருவழி ஓர்பொருள்மேல் செப்புச் சினைமுதல் ஒப்பு மறையென்று தேர்ந்தறியே (வீ.சோ.1589) அதுவே, நிறைவினும் குறைவினும் நிகழ்த்துதல் நெறித்தாய்த் துறைதொறும் பழைமையும் புதுமையும் தோய்ந்து விரியினும் தொகையினும் விழுமிதின் நடைபெறும். (மா.அல.93) உவமை என்ப துரிக்குணத் தொழிற்பயன் இவற்றொன்றும் பலவும் இணைந்து தம்முள் ஒப்புமை தோன்றச் செப்பிய அணியே (தொ.வி.328) இ. இளம்: 1. (உவமத்தினை ஒருவாற்றாற் பாகுபாடுணர்த்துதல்) தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபடவந்த உவமைக்கண் புலனாம். எனவே கட்புல மல்லாதனவும் உள என்றவாறாம். அவை செவியினா னும் நாவினானும் மூக்கினானும் மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விரு வகையும் பாகுபட வந்த உவமையாம். அவற்றுட், கட்புலனாகியவற்றுள் வினையாவது, நீட்டல், முடக்கல், விரித்தல், குவித்தல் முதலாயின. பயனாவது, நன்மையாகவும் தீமை யாகவும் பயப்பன. வடிவாவது, வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவன: வெண்மை பொன்மை முதலாயின. இனிச் செவிப் புலனாவது ஓசை. நாவினான் அறியப்படுவது கைப்பு, கார்ப்பு முதலிய சுவை. மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம், தீநாற்றம். மனத்தால் அறியப்படுவன இன்ப துன்ப முதலியன. 2. (மேலதற்கோர் புறனடையுணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட உவமைகள் ஒரோவொரு பொருளான் வருத லன்றி, இரண்டும் பலவும் விரவியும் வரும் மரபினையுடைய என்றவாறு. ''இலங்குபிறை யன்ன விலங்குவால் வையெயிற்று" என்றவழி வடிவும் நிறனும் விரவி வந்தது. பிறவும் அன்ன. இன்னும் விரவியும் வரூஉம் மரபின என்றதனாற் பலபொருள் விரவி வந்தது. ''அடைமரை யாயிதழ்ப் போதுமாற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ" (கலித். 84) என்றவழித் தாமரையிலையும் பூவும் குடைக்கும் புதல்வற்கும் உவமை யாயினும் தோற்றத்திற்கு இரண்டும் ஒருங்கு வந்தமையான் வேறோதப் பட்டது. இன்னும் 'விரவியும் வரூஉம் மரபின' என்றதனால் தேமொழி என தேனின்கண் உளதாகிய நாவிற்கினிமையும், மொழிக்கண் உளதாகிய செவிக்கினிமையும் உவமிக்க வருதலும் கொள்க. பிறவும் இந்நிகரன வெல்லாம் இதுவே ஒத்தாகக் கொள்க. 3. (மேலதற்கோர் சிறப்பு விதி உணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந் ததன் மேலன என்றவாறு. ஈண்டு உயர்ச்சியாவது வினைமுதலாகச் சொல்லப்பட்டன உயர்தல். ''அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்" என்றவழித் துப்புடைய பலவற்றினும் அரிமா உயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது. 4. மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப் பட்டனவேனும் சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்கனமாக வரும் என்றவாறு. இவையிற்றைப் பற்றித் தோன்றும் என்பது கருத்து. 5. (எய்தியதன்மேற்சிறப்பு விதி வகுத்தல்). மேற்சொல்லப்பட்ட சிறப்பு முதலிய நான்கும் ஒழியத் தாழ்ந்த பொரு ளொடும் உவமை பொருந்துமிடத்து உவமிக்கப்படும் அதனோடும் கூட ஐந்தாம் என்றவாறு; என்றது பொருள் உவமமாயும், உவமம் பொருளாயும் நிற்குமிடமும் உள என்றவாறு. மேற்சொல்லப் பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங்கூட ஐந்தென்றார். பேரா: 1. (உவமத்திற்கெல்லாம் பொதுவிலக்கணங்கூறி அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல்). தொழிலும் பயனும் வடிவும் வண்ணமும் என்னும் நான் கெனப்படுங் கூறுபட வரும் உவமத்தோற்றம். உவமம் என்பதனை வினை முதலாகிய நான்கினொடுங் கூட்டி வினை யுவமம், பயனுவமம், மெய்யுவமம், உருவுவமமெனப் பெயர் கூறப்படும். வினையாற் பயப்பது பயனாதலின் பயத்திற்கு முன் வினை கூறப் பட்டது. அதுபோலப் பிழம்பினால் தோன்றும் நிறத்தினை அதற்குப் பின் வைத்தான். பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் அதனுடன் வைத்தான் என்பது. மற்று மெய்யெனப்படுவது பொருளாதலின் அதன் புடைபெயர்ச்சி யாகிய வினை பிற்கூறுக எனின், வினையுவமந் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாக நோக்கி அது முற்கூறினான் என்பது. அது புலிமறவன் எனத் தொகாது, புலியன்ன மறவன் என விரித்தே நிற்றலும், புலிப்பாய்த்துள் எனத் தொக்கு வருத லும் உடைத்தென்பது. தொகை நான்கென எண்ணிக் கொடுத்தான். 2. (எய்தியது இகந்துபடாமற் காத்தது; நான்கென மேல் தொகை கொடுத்தமையின் அவைவேறு வருதல் எய்தியதனை அவ்வாறே யன்றி விரவியும் வரும் என்றமையின்). அந்நான்கும் ஒரு பொருளோடு ஒருபொருள் உவமஞ் செய்யும் வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவியும் வரும் அதன் மரபு. மரபின என்றதனான் அவை அவ்வாறு விராய்வருதலும் மரபே. வேறு வேறு வருதலே மரபெனப்படாது எனக் கொள்க. 3. (எய்தாதது எய்துவித்தது) உவமையெனப்பட்டது உயர்ந்த பொருளாகல் வேண்டும். எனவே, உவமிக்கப்படும் பொருள் இழிந்துவரல் வேண்டும் என்பது. உள்ளுங் காலை என்றதனான் முன்னத்தின் உணருங் கிளவியான் உவமங்கோட லும், இழிந்தபொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப்படச் செயல் வேண்டும் எனவுங் கொள்க. 4. (இதுவும் எய்தாதது எய்துவித்தல்) வினை, பயன், மெய், உரு என்பனபற்றி உவமை கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமை. நிலைக்களம் என்பது அவை அவ்வாறு உவமை செய்தற்கு முதலாகிய நிலைக்களம் என்றவாறு. இவ்வாறு கூறவே, உயர்ந்த பொருளின் இழிந்ததெனப் பட்ட பொருள் யாதானும் இயைபில்லாதொன்று கூறலாகாது எனவும், உவமையொடு முழுவதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோடொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட் கண்ணும் உளவாகல் வேண்டும் எனவுங் கூறி அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும் ஒருபொருட்கண் தோன்றிய நன்மை பற்றியனவும் காதன் மிகுதியால் உளவாகக் கொண்டு உரைப்பனவும் தன்தன்மையால் உளவாயின வலி பற்றியனவும் என நான்காம் என்றவாறு. இவற்றுக் கெல்லாம் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் தலைப்பெய்யும் என்பது. சிறப்பென்பது உலகத்துள் இயல்புவகையான் அன்றி விகார வகையாற் பெறுஞ்சிறப்பு. நலனென்றது அழகு. காத லென்பது அந்நலனும் வலி யும் இல்வழியும் உண்டாக்கி யுரைப்பது. வலி என்பது தன்தன்மை யானே உள்ளதொரு வலியெனக் கொள்க. இவற்றை நிலைக்களம் எனவே இவை பற்றாது உவமம் பிறவாதென்பதாம். 5. (மேற்கூறிய நிலைக்களத்திற்கு ஒரு புறனடை) அந்நிலைக்களம் நான்கேயன்றிக் கிழக்கிடு பொருளோடு ஐந்து எனவும் படும். கிழக்கிடு பொருள் என்பது கீழ்ப்படுக்கப்படும் பொருள். ''கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே" (குறுந். 337) என்புழிக்கீழ் வீழ்ந்தன என்பதனைக் கிழக்கு வீழ்ந்தன என்பவாகலின், ஒருபொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக் களமாம் என்றவாறு. ஈ. க.வெ: 5. உவமைக்கு நிலைக்களன்களாக முன்னைச் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட சிறப்பு நலன் காதல் வலி என்னும் நான்குடன் இங்கு ஐந்தாவதாக எண்ணப்படுவது பொருளின் தாழ்ந்த தன்மையாகிய இழிநிலை என்றலே பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. மேற்சொல்லப் பட்ட நான்கும் உயர்வின் பகுதியாதலின் இதனொடுங்கூட ஐந்து என்றார் எனவரும் இளம்பூரணர் உரைத்தொடரும், ஒருபொருளின் இழிபு கூறுவான் உவமத்தான் இழிபு தோன்றுவித்தலின் அதுவும் நிலைக்களமாம் என்றவாறு எனவரும் பேராசிரியர் உரை விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கி உணரத்தக்கனவாகும். உவமப்போலி அ. 1. உவமப் போலி ஐந்தென மொழிப. (தொ.பொ.295) 2. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப. (தொ.பொ.296) இ. இளம்: 1. (இதுவும் ஓர் உவமை விகற்பங் கூறுதல்) உவமையைப் போன்று வருவன ஐந்து என்று சொல்லுவர். அவை யாவன: இதற்கு உவமை இல்லை எனவும், இதற்கு இதுதானே உவமை எனவும், பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந் தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பலபொரு ளினும் உளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும் கூடாப் பொருளோடு உவமித்து வருவனவும். 2. மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய்பாட்டாற் கூறும் வழிச் சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க் கூறவேண் டும் என்றவாறு. நினக்கு உவமையில்லை என்னும் வழிச்செயலானாதல் பயனானாதல் உறுப்பானாதல் பிறப்பானாதல் ஒப்பா ரில்லை எனல் வேண்டும் என்பது கருத்து. பிறவும் அன்ன. பேரா: 1. உள்ளுறையுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர். இதனது பயம், ஏனை உவமத்திற்கு நிலைக்களம் ஐந்து ஓதினான். அவ்வாறே இதற்கு நிலைக்களம் ஓதாது அவை போறலின், அவையே நிலைக்களம் என்றலும் ஏனை யுவமத்துள் ஒரு சாதியோடு ஒரு சாதியினை உவமித்தல் வழக்கன்றாயினும் உள்ளுறை உவமத்திற்கு அமையும் என்றலும் என்பது. 2. வினைபயன் மெய் உருவென்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும். உறுப்பென்றது மெய்யினை; உடம்பினை உறுப்பு என்ப வாகலானும் மெய்யுவமமெல்லாம் உறுப்பினையே பற்றி வருதல் பெரும் பான்மைய என்றற்கும் அவ்வாறு கூறினான் என்பது. தவலருஞ் சிறப்பின் அத்தன்மை நாடின் என்றதனான் ஏனை உவமத்தினும் உள்ளுறை யுவமமே செய்யுட்கும் பொருளிலக்கணத்திற்கும் சிறந்த தென்பது. ஈ. க.வெ: உவமையைப்போன்று வருவன உவமப்போலி என்பர் இளம்பூரணர். அவர்கூறும் உவமப்போலி ஐந்தனுள், இதற்கு உவமை இல்லை என்பதனை உண்மை உவமை எனவும், இதற்கு இதுதானே உவமை என்பதனைப் பொதுநீங்கு உவமை எனவும், பல பொருளினும் உளதாகிய உறுப்புக்களைத் தெரிந் தெடுத்துக்கொண்டு சேர்த்தியதனைப் பலபொருள் உவமை எனவும், பலபொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்து உவமையாக வந்ததனை விகார உவமை என வும், கூடாப்பொருளொடு உவமித்து வந்ததனைக் கூடாவுவமை எனவும் கொள்வர் பேராசிரியர். உ. ஆ.கு: உள்ளுறை உவமத்தில் உவமை மட்டும் கூறப்படும் என்பதும், பொருள் உய்த்துணர்ந்து கொள்ளத்தக்கதாய் அமைந்திருக்கும் என்பதும் கொண்டு உள்ளுறை உவமமே உவமப்போலி என வழங்கப்பட்டதாம். 'உள்ளுறை உவமை' காண்க. உவம மரபு அ. 1. முதலுஞ் சினையுமென் றாயிருபொருட்கும் நுதலிய மரபின் உரியவை உரிய (தொ.பொ.277) 2. சுட்டிக் கூறா உவம மாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. (தொ.பொ.278) 3. உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் (தொ.பொ.279) 4. பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவம மாகும். (தொ.பொ.280) 5. பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய. (தொ.பொ.281) 6. வேறுபட வந்த உவமைத் தோற்றம் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் (தொ.பொ.305) 7. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. (தொ.பொ.306) 8. உவமைத் தன்மையும் உரித்தென மொழிப பயனிலை புரிந்த வழக்கத் தான. (தொ.பொ.307) 9. தடுமாறு வரலும் கடிவரை இன்றே. (தொ.பொ.308) இ. இளம்: 1. (உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல்) (ஐயம் அறுத்ததூஉமாம்) முதலும் சினையுமென்று சொல்லப்பட்ட இருவகைப் பொருட்கும் கருதிய மரபினான் அவற்றிற்கு ஏற்பவே உரியவாம். சொல்லதி காரத்துட் ''செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே" என்றார். அவ்வாறன்றி யுவமைக்கு நியமமில்லை என்றவாறாயிற்று. 2. (இதுவுமோர் வேறுபாடு உணர்த்துதல்) சுட்டிக் கூறா உவமை என்பது, உவமிக்கப்படும் பொருட்கு உவமை இதுவெனச் சுட்டிக் கூறாமை. அவ்வாறு வருமாயின் உவமச் சொல் லொடு பொருந்த உவமிக்கப்படும் பொருளொடு புணர்த்து உவம வாய்பாடு கொள்க என்றவாறு. இதனாற் சொல்லியது உவம வாய்பாடு தோன்றா உவமம் பொருட்குப் புணராக் கண்ணும் உவமை உள என்றவாறாம். ''மோப்பக்..... விருந்து" இதன்கண் 'அதுபோல' எனச் சுட்டிக் கூறா உவமையாயினவாறு கண்டுகொள்க. 3. (உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல்) இரட்டைக் கிளவியாயினும் நிரனிறுத்தமைந்த நிரனிறைச் சுண்ணமாய் வரினும் மிக்கும் குறைந்தும் வருதலன்றி யுவமை யடையடுத்து வரினும் தொழிற்பட்டு வரினும் ஒன்றும் பலவுமாகி வரினும் வருமொழியும் அவ்வாறே வருதல் வேண்டும். அவ்வழி வாராது மிக்கும் குறைந்தும் வருவது குற்றம் என்றவாறாம். 4. (உவமைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல்) உவமிக்கும் பொருள்தன்னை உவமமாக்கிக் கூறினும் மயக்கமற்ற சிறப்பு நிலைமையான் எய்தும் உவமை யாகும். ஒருசாராசிரியர் ரூபகம் சொல்லப்பட்டது உவமைபற்றி வருதலின் இஃது உவமையின் பாகுபாடு என்பது இவ்வாசிரியர் கருத்து. 5. (உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல்) உவமையும் பொருளும் ஒத்தனகூறலேயன்றிப் பெருகக் கூறலும் சிறுகக் கூறலும் மேற்சொல்லப்பட்ட சிறப்பென்னும் நிலைக்களத்து நீங்காச் சிறப்பின் வரூஉம் வழக்கப் பாட்டினையுடைய. எனவே, வழக்கின்கட்பயின்று வாராத இறப்ப உயர்தலும், இறப்ப இழிதலும் ஆகா என்றவாறு. 6. (மேலனவற்றிற்கெல்லாம் புறனடை யுணர்த்துதல்). ஈண்டு எடுத்தோதப்பட்ட இலக்கணத்தின் வேறுபட்டு வந்த உவமைத் தோற்றம் எடுத்தோதிய நெறியிற் கொள்ளும்வழிக் கொளுவுக. 7. (இதுவும் உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல்) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக்கூறலும் மருவிய இயல்பு. 8. உவமிக்கப்படும் பொருளோடு உவமைதோன்ற வருதலே யன்றி உவமையது தன்மை கூறலும் உவமையாதற் குரித்து, பயனிலை பொருந்திய வழக்கின்கண். எனவே, இவ்வாறு வருவது பயனிலை யுவமைக்கண் என்று கொள்க. 9. உவமைக்கண் தடுமாறு வருதல் நீக்கப்படாது. தடுமாறுதலாவது, ஐயமுறுதல். எனவே ஐயநிலை யுவமமும் கண்டு கொள்க. பேரா: 1. (மேற்கூறிவருகின்ற உவமை, முதல் சினை பற்றி வருங்கால் இன்னவாறாக என்கின்றது). முதற்பொருளும் சினைப்பொருளும் என்னும் அவ் விரண்டு பொருட்கும் குறித்த வகையான் மரபு படவரின் உரியவை உரியவாம். இதன்கருத்து முதலொடு முதலும், சினையொடு சினையும், முதலொடு சினையும், சினையொடு முதலும் வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்கு உரிய எனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும் கூறியவாறு. 2. (எய்தாதது எய்துவித்தது). உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்புமைக் குணம் நான்கினையும் விதந்து சொல்லி உரையாதவழி அவ்விரண்டினையும் எதிர்பெய்துசுட்டி, ஆண்டுப் பொருந்திய தொன்று பொருந்தியதுபற்றி வினைபயன் மெய்யுருவென்னும் நான்கினுள் இன்னதென்று சொல்லப் படும். 3. உவமானமும் பொருளும் தம்மின் ஒத்தனவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும். 4. (மேற்கூறியவாறன்றி வருவதோர் உவமைவிகற்பம் கூறுகின்றது). ''உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை" என்புழி உவமம் உயர்ந்து வரல் வேண்டும் என்றான். இனிப் பொருளினை உவமமாக்கி உவமையை உவமிக்கப்படும் பொருளாக்கி மயங்கக் கூறுங்காலும் அஃது உவமம் போல உயர்ந்ததாக்கி வைக்கப்படும். 5. (உவமத்திற்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல்) இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளு மாற்றான் வருதலை வழக்கு வலியாகவுடைய. 6. (மேலெல்லாம் இருவகையுவமம் கூறி இன்னும் ஏனையுவமப் பகுதியே கூறுவான் எய்தாதது எய்துவித்தது). வேறுபாடு தோன்றவந்த உவமைச்சாதி அங்ஙனம் வேறுபட வந்தன வாயினும் மேற்கூறிய பகுதியானே கொள்ளும் இடனறிந்து கொளுவுக. தோற்றம் எனினும் பிறப்பெனினும் சாதி எனினும் ஒக்கும். வேறுபட வருதல் என்பது உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலும், ஒப்புமை கூறாது பெயர்போல்வன வற்று மாத்திரையானே மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக்கூறுதலும், ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோருவமை நாட்டுதலும், உவமையும் பொருளும் முற்கூறி நிறீஇப் பின்னர் மற்றைய ஒவ்வா என்றலும், உவமைக்கு இருகுணங் கொடுத்துப் பொருளினை வாளாது கூறுங்கால் உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறலும், ஒப்புமை குறைவு பட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்புதலும், ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமை கோடலும், உவமத்திற் கன்றி உவமத்திற்கு ஏதுவாகிய பொருட்குச் சில அடை கூறி அவ்வடை யானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தலும் உவமானத் தினை உவமேயமாக்கியும், அது விலக்கியும் கூறுதலும், இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமை என்பது கொள்ள வைத்தலும் இன்னோரன்னவெல்லாம் வேறுபட வந்த உவமத் தோற்றம் எனப்படும். இவற்றைக் 'கூறிய மருங்கிற்கொளுத்துதல்' என்பது முற்கூறிய ஏனையுவமத்தின்பாலும் பிற்கூறிய உள்ளுறை யுவமத்தின் பாலும் பகுத்து உணரப்படும் என்பது. ஏனையுவமத்தின் பாற்படுத்தல் என்பது; வினை பயன் மெய்யுரு என்ற நான்கும் பற்றி வருதலும் அவற்றுக்கு ஓதிய ஐவகை நிலைக்களனும் பற்றி வருதலும் எனக் கொள்க. உள்ளுறையுவமத்தின் பாற்படுத்தல் என்பது, இவ்வேனை யுவமம் போல உவமையும் பொருளுமாகி வேறுவேறு விளங்க வாராது குறிப்பினாற் கொள்ள வருதலின், இக்கருத்தினானே இதனை ஈண்டு வைப்பா னாயிற்று. 7. (இதுவும் ஏனையுவமத்திற்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல்). ஒக்கும் எனக் கூறாது ஒவ்வாது எனக் கூறும் அதுவும் உவமை யாதற்கு அடிப்பட வந்த வழக்கு. 8. விகார வகையாற் பெருமையும் சிறுமையும் ஒருபொருட்குக் கூறாது பட்டாங்கு உவமங்கூறுதலும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர். அதனானும் ஒரு பயன்தோன்றச் சொல்லுதல் நெறிப்பாட்டின்கண். உவமைத்தன்மையும் என்ற உம்மையான் உவமத் தன்மையேயன்றி வாளாது தன்மை கூறுதலும் அந் நிலத்திற்கே பயனிலையெனப் படுவனவும் கொள்க. 9. பாடம்: தடுமாறுவமம். உவமையும் பொருளும் வேறு நிறீஇ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டினையும் உவமையுறச் சொல்லும் தடுமாறுவமம்; இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமை யாக்கியும் தடுமாறச் சொல்லுதலும் தடுமாறுவமமெனப்படும். அவ்விரண்டும் உவமமென்று சொல்லற் பாட்டிற் கடியப்படா. ஈ. க.வெ: உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதல் விரியுவமை. ஒப்புமை மறுத்துப்பொருளை நாட்டிக் கூறுதல் உண்மையுவமை. ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோருவமை நாட்டுதல் மறுபொரு ளுவமை, தண்டியலங்காரம். உவமையும் பொருளும் முற்கூறி நிறீஇப்பின்னர் மற்றைய ஒவ்வா என்றல் தடையுவமை. ஒன்றற்குக்கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறுதல் உம்மையுவமை. ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங் கொடுத்து நிரப்புதல் இசையுவமை. ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமைகோடல் வீரசோழியம். அடையால் உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித்தல் மோக வுவமை. உவமானத்தினை உவமேயமாக்கியும் அதுவிலக்கியும் கூறுதல் விலக்குவமை. இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமை யென்பது கொள்ளவைத்தல் வேற்றுப்பொருள் வைப்பு தண்டி யலங்காரம். உ. ஆ.கு: 'அடுக்கிய தோற்றம்' காண்க. உவமைவகை அ. 1. அன்ன வாங்கு மான விறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம் (தொ.பொ.283) 2. அன்னஎன் கிளவி பிறவொடும் சிவணும் (தொ.பொ.284) 3. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப்ப வெல்ல வீழ என்றாங் கெட்டே பயனிலை உவமம் (தொ.பொ.285) 4. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒண்ட ஒடுங்க ஒட்ட நிகர்ப்பவென் றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம் (தொ.பொ.286) 5. போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியப்ப நளிய நந்தவென் றொத்துவரு கிளவி உருவின் உவமம் (தொ.பொ.287) 6. தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே (தொ.பொ.288) 7. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே (தொ.பொ.289) இ. இளம்: 1. (மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடையன உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் வினையுவமத்திற்குரிய சொல் வரையறையுணர்த்துதல்). அன்னமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் வினை யுவமத்திற்குரிய சொல்லாம். 2. மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்ன என்னுஞ் சொல் ஒழிந்த பொரு ளொடும் செல்லும். 3. என்ன என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலை உவமைக் குச் சொல்லாம். 4. கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத் திற்குரிய சொல்லாம். 5. போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவுவமத் திற்குரிய சொல்லாம். 6. மேற்பாகுபடுத்துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றான் அன்றித் தத்தம் மரபில் தோன்றும் பொருளும் உளவாம். மன் ஆக்கம் குறித்து வந்தது. ஈண்டு மரபு என்றது பயிற்சியை. இதனானே நூல் செய்கின்ற காலத்து வினை முதலாகிய பொருள்கள் ஓதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற் றென்று கொள்ளப்படும். 7. மேற்சொல்லப்பட்ட உவமை நான்கு வகையாதலேயன்றி எட்டாம் பக்கமும் உண்டு. அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இரு வகையாம். பயன் என்பது நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகை யாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்பது நிறமும் குணமுமென இருவகையாம். இவ்வகை யினால் எட்டாயின. பேரா: 1. இவ்வெட்டும் வினையுவமம். (கடுக்கும், கெழு, போல, ஒப்ப, ஏய்க்கும் எனப்) பிறவாய் பாட்டாற் சிறுபான்மை வரும் வினையுவமம் பொதுவிதியாற் கொள்ளப்படும். 2. வினைக்கே உரிமை எய்தியதாகக் கூறிய அன்ன என்பது நான்குவமைக் கும் உரிமையொக்கவரும். 3. இவை எட்டும் பயனிலையுவமம். இவையெட்டும் பெருவரவின எனவே சிறுவரவினான் (போல், புரைவது, ஏய்க்கும், நிகர்ப்ப, கொண்ட, என, செத்து, உறழ கடுப்ப) எனவரும். 4. இவ்வெட்டும் மெய்யுவமம். இவற்றை உரிமைகூறிப் பெருவரவின எனவே, ஒழிந்தனவுஞ் சிறுபான்மை வருமென்பதூஉம் அவை பொதுச் சூத்திரத்தான் அடங்கு மெனவும் கொள்க. அவை: (போல, செத்து, அனைய, வென்ற, போல், நேர், உறழ்) எனவரும். இவை புறனடையாற் கொண்டனவும் எடுத்தோதினவும் பொதுவிதியான் வந்தவாறு. 5. இவ்வெட்டும் உருவுவமம். நளிய நந்த என்பன இக்காலத்து அரியபோலும். இனி இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச் சூத்திரத்தான் வரு மெனப்பட்ட வாய்பாடு சிறுவரவின வருமாறு. (ஏர், என, ஏய்க்கும், புரையும், மருள், உறழ, ஆங்கு, கடுக்கும், அன்ன, செத்து) எனவரும். 6. இன்னதற்கு இன்ன வாய்பாடு உரிய வென்றற்குக் காரணம் என்னை யென்றார்க்கு அவை தத்தம் வரலாற்று முறைமை யானே அவ்வப் பொருடோன்ற நிற்கும் என்றவாறு. புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தா' னென வினையுவமத்திற்கு வந்த ஆங்கென் கிளவி, 'தளிராங்குச் சிவந்தமேனி' யெனிற் பொருந்தாது. இனி, எள்ளவென்பது பயவுவமைக்கு ஏற்குமென்றான் அது 'புலி யெள்ளும் பாய்த்து' ளெனலாகாது; என்னை? புலிக்கு வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகாதாக லானென்பது. ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக்கண்டு எதிர்நிற்கலாற்றாது புறங்கொடுத்த தெனலும், நடுங்கிற் றெனலும் கண்சிம் புளித்ததெனலும், அவற்குப் புகழாமென் பதே கருதிக் கூறின் கூறின, உவமை வெளிப்பாடுமின்றி அவற்கது, புகழுமாகா தென்பது கருத்து. இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுப வன்றே, அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின் விழைய வீழ புல்ல மதிப்பவெல்ல என்பனவும், உவமை தான் பொருளை யொத்தற் கவாவினவென்று பொருள்தோன்ற நிற்குமென்ற வாறு, கள்ளவென்பதூஉம் அதன் குணம் அதன் கண் இல்லாமற் கதுவிற்றென்னும் பொருட்டு. பொருவ வென்பதூஉம் மழையினையும் ஒருவனையும் உறழுந் துணைச் சிறந்தானெனச் சொல்லுதல். இவ்வாற் றான், இவை உரிமை கூறப்பட்டன. இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ்வாறே ஒரு காரணமுடையபோலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத்திற்கும் ஏலாது; என்னை? கடுத்த லென்பது ஐயுறுதல். புலியோடு மறவனை ஐயுற வேண்டுவதோர் காரணமின்மையானும், மழையின் விளைத்த பயத்தோடு உவமித்தலின் மழையோடு ஒருவனை ஐயஞ்செய்தல் வேண்டுவதின்மையானும், வடிவுகண்டவழி ஐயம் பிறக்குமாக லானும், உரு வென்பது குணமாகலாற் பொருள் வேற்றுமை அறிந்த வழி ஐயஞ்செல்லாதாகலானும், மெய்க் குரிமை கூறினானென்பது ஏய்த்தலென்பதூஉம் பொருந்துதலாகலின் வடிவிற்கேற்கும். மருள புரைய ஒட்ட ஒடுங்க என்பனவும் கடுத்தல் போலும் பொருண்மைய; என்னை? மருட்சியும் புரையுணர்வுங் கவர்த்தலைக் காட்டுதலாலும், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண்டனை ஒன்றென்னும் பொருண்மைய வாகலானுமென்பது, நிகர்த்தலும் அவ்வினப் பொருளென்பதனைக் காட்டுதலின் வடிவிற் கேற்றது. ஓடவென்பதும் ஓடுதற்றொழில் வடிவிற் கல்லதின்மையின் அவ்வடிவிற்கேற்றது. பண்பாயிற் பண்பு நிறப்பண்பு ஓடிற்றென லாகாமையின். இனி, உருவுவம வாய்ப்பாட்டிற்குங் காரணங் கூறுங்காற் போலு மென்பது இடைச்சொல்லாகலானும், மரீஇ வந்த வினைப்பாற் பட்டதாகலானும், அதற்குக் காரணங் கூறப்படாதென்பது. அஃதேல் அதனை இவ்வெட்டற்கும் முன்பு கூறியதென்னை, பொருளுடைய வற்றைப் பிற்கூறியெனின், அதுவும் அன்னவென்பதுபோல மற்றை மூன்று உவமத்தும் பயின்றுவருமென்பது எய்துவித்தற் கென்பது. மறுப்ப ஒப்ப என்பன முதலாயினவும் ஒரு காரணமுடையவென்பது ஆசிரியன் பெருவரவினவாக உரிமைப்படுத்துக் கூறினமையின் அறிந்தாம். அல்லதூஉம் 'மரபிற் றோன்றும்' என்றதனான் இவையெல் லாம் மரபுபற்றி அறியல் வேண்டும் எனவே, தலைச் சங்கத்தார் முதலாயினார் செய்யுட்களுள் அவ்வாறு பயின்று வருமென்பது அறிந்தாமன்றே, இவ்வாறு சூத்திரஞ் செய்தலானென்பது. 7. வினைபயன் மெய் உரு எனப்பட்ட நான்கும் எட்டாம் பகுதியும் உண்டு. அவை: உவமைத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாத லும் உடையவென்றவாறு. அவை புலியன்ன பாய்த்துள் 'புலிப்பாய்த் துள்' எனவும், மழையன்ன வண்கை 'மழை வண்கை' எனவும், வேயன்ன தோள் 'வேய்த்தோள்' எனவும் பவளத்தன்ன வாய் 'பவள வாய்' எனவும் தொகைவிரிபற்றி நான்கும் எட்டாயின வாறு. சொல் லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான். அவ்வுவமந் தான் ஈண்டுக் கூறப்படுதல் பொருளினவாகலானும், இடைச் சொல்லே யன்றிப் பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலா னும், அதன் விரிவினை ஈண்டுப் பெயர் தந்து கூறி அதன் தொகையொடு படுப்ப இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகை யுவமமும் என்றானென்பது. இதுவுமொரு கருத்து; முன்னர் எவ்வெட்டாகக் கூறியவை ஒவ்வொன் றும் இரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய என்றவாறு. யாங்ஙன மெனின் அன்ன என்னுஞ் சொன்முதலாகிய எட்டனுள் அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் வேறொரு பொருளை உணர்த்தாமை யின் ஓரினமாகி ஒன்றாகவும், விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடைமையின் ஒரு பொருளாகவும். இவ்வாறே இன நோக்குதற் குறிப்பினவாயிற்று; இவ்வாற்றான் இரண்டெனவும்படும் எட்டு மென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச் சொல் எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியு மென்னும் பொருட்டு. உறழ்ச்சியும் தன் இனமாகக் கொண்டு மாறுதற் பொருட்டேயாம். தகுதி அதுவெனப்படுவது என்னும் பொருன் மைத்தாக லின் அவற்றோ டொக்கும். நோக்கென்பதூஉம் அவ்வாறே இனமாக்கி நோக்குதற் பொருட்டு. இவ்வாற்றான் இரண்டெனவும் படும் எட்டுமென்ற வாறு. இதனது பயன்: ஓதிய வாய்பாடு எண்ணான்கற்கும் இன்னவாய்பாடும் இன்ன வாய்பாடும் ஒரு பொருள வென்று அறிதலுந் தத்தம் மரபிற் பொருள் தோன்ற வருமென்பதும் இடைச்சொல்லென்றலும் ஒப்பில் வழியாற் பொருள் செய்யினும் இடைச்சொல்லாகா, தெரிநிலைவினை உருபாயினும் என்பதறிவித்தலுமெனக் கொள்க. மேல் வருகின்றனவற்றிற்கும் இஃதொக்கு மென்பது. இனிப் பயவுவமை வாய்பாடு எட்டனுள்ளும் என்ன பொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித்தற் பொருளவாகி ஒன்றா யடங்கும். என்னை? மழையைப் பொரீஇச் சொல்லுதலும் அதனது தன்மைக் குணங்கள்ளப் படுதலும் வெல்கையும் அதனை எள்ளுதலும் போல்வன இழிவினையே காட்டுதலின். இனி விழைய புல்ல மதிப்ப வீழ என்னும் நான்கும் உவமிக்கப்படும் பொருளினை உயர்த்தாமையானும் உவமத்தினை இழித்துக் கூறாமையானும் அவை நான்கும் ஒரு பொருள எனப்பட்டன. இவ்வாற்றாற் பயவுவமை யெட்டும் (289) இரண்டாயின வென்பது. மெய்யுவமை இரண்டாங்கால் ஐயப்பொருட்கண் நான்குந் துணி பொருட்கண் நான்குமென இரண்டாம். கடுப்ப மருள புரைய ஓட என்னும் நான்கும் ஐயப் பொருளவாகி ஒன்றாம். ஓடவென்பது உவமத்தின் கண்ணும் பொருளின் கண்ணும் உணர்வு கவர்ந்தோடிற் றென்னும் பொருள் தோன்றவும் சொல்லின் அதுவும் ஐயமெனப் பட்டது போலும். இனி ஏய்ப்ப ஒட்ட ஒடுங்க நிகர்ப்ப என்னும் நான்கும் ஐயமின்றி உவமையும் பொருளும் ஒன்றென உயர்வு தோன்றும் வாய்பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் (290) இரண்டாயின. இனி, உருவின் கண்ணும் (291) போல ஒப்ப நேர நளிய என்னும் நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தனவென்று கோடற்கு வாய்பாடாகி வருதலின் அவை ஒன்றெனப்பட்டன. 'நளியென் கிளவி செறிவு மாகும்' (தொல். சொல். உரி. 17) என்றதனால், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டே யாயிற்று. இனி மறுப்ப காய்ந்த வியப்ப நந்த என்னும் நான்கும் உவமையோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவை யெட்டும் இரண் டாயின. நந்துதலென்பது கேடு. வியத்த லென்பது உவமையான் வியக்கத் தக்கது பொருளெனவே அதன்கண் அக்குண மின்றென மறுத்தவாறாம். காய்த்த லென்பதூஉம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தலென்பதன் பொருளெனப்பட்டது. இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண்டென்பது இதன் கருத்து. இவற்றுட் பலவற்றையும் செயவெனெச்ச வாய்பாட் டால் ஓதியது என்னையெனின் அஃது, (665) உடம்பொடு புணர்த்த லென்பதனான் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொற் போல நிற்குமெனவும் அதனானே பெயரெச்சமும் வினையெச்ச மும் முற்றுமாகி நிற்குமெனவும் அவையுந் தெரிநிலை வினை யுவமையாய் வருமெனவும் அறிவித்தற் கென்க. இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண் ணுணர்விற்றென வுணர்க. உவமைக்கூற்றில் சில வரம்புகள் அ. 1. கிழவி சொல்லின் அவளறி கிளவி (தொ.பொ.297) 2. தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது (தொ.பொ.298) 3. கிழவோற் காயின் உரனொடு கிளக்கும் (தொ.பொ.299) 4. ஏனோர்க் கெல்லாம் இடம்வரை வின்றே (தொ.பொ.300) 5. கிழவோட் குவமை ஈரிடத் துரித்தே (தொ.பொ.302) 6. கிழவோற் காயின் இடம்வரை வின்றே (தொ.பொ.303) 7. தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக் கூறுதற் குரியர் கொள்வழி யான. (தொ.பொ.304) இ. இளம். 1. (உவமை கூறுவார் பலருள்ளும் தலைமகட்குரியதோர் பொருள்வரை யறுத்துணர்த்துதல்). உவமப் பொருளைத் தலைமகள் கூறில் அவளறிந்த பொருட்கண்ணே உவமை கூறப்படும். எனவே, தானறியாத பொருட்கண் கூறினாளாகச் செய்யுட் செய்தல் பெறாது என்றவாறு. 2. (தோழி உவமை கூறுமாறு உணர்த்துதல்) தோழி உவமை சொல்லின் அந்நிலத்தினுள்ளனவன்றிப் பிற நிலத்தி னுள்ளன கூறப்பெறாள் என்றவாறு. 3. (தலைமகன் உவமை கூறுமாறு உணர்த்துதல்) தலைவன் உவமை கூறுவானாயின் அறிவொடு கிளக்கப்படும். அன்றியும், உரனொடு கிளக்கும் உவமையெனப் பெயரெச்சமாக்கிப் பெயர் வருவித்தலுமாம். 4. மேற்சொல்லப்பட்ட மூவருமல்லாத நற்றாய் செவிலி முதலானோர்க்கு உவமை கூறுமிடம் வரையறுக்கப் படாது. 5. (தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்துதல்) தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்டிடத்தும் உரித்து என்றவாறு (இரண்டிடம் இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்). எனவே இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்றவாறாம். 6. (தலைமகற்குரியதோர் மரபு உணர்த்துதல்). தலைமகன் உவமை கூறுதல் எப்பொருட்கண்ணுமாம் என்றவாறு. 7. தோழியும் செவிலியும் உவமை கூறுங்காற் பொருந்துமிடம் பார்த்துக் கூறுதற்குரியர், கேட்டோர் கொள்ளுநெறியான் என்றவாறு. பேரா: 1,2. (இரண்டு நூற்பாக்களையும் ஒன்றாக்குவார் பேராசிரியர். மற்றும் இவ்வெல்லாமும் உள்ளுறை உவமத்திற்கு உரிமையாகக் கொள்வார்). (மேற்கூறிய உள்ளுறையுவமைக்காவதோர் இலக்கணம்). ஐந்துவகைப்பட்ட உவமப்போலியும் பிறிதொடுபடாது பிறப்பு நோக்கி உணரக் கூறியவழி, அக்கூற்றுத் தலைமகட்குந் தோழிக்கும் உரித்தாங் காற் தலைவிக்காயின் அவளறியும் கருப்பொருளானே செய்யல் வேண்டும்; தோழிக்காயின் அந்நிலத்துள்ளனவெல்லாம் சொல்லவும் பெறும். பிற நிலத்துள்ளன அறிந்து சொல்லினளாகச் செய்யுள் செய்யப் பெறார் என்றவாறு. இதனது பயம் தலைமகள் அந்நிலத்துள்ளனவெல்லாம் அறியுந் துணைப் பயிற்சியிலள் எனவும், அவள் ஆயத்தா ராயின் அந்நிலத் துள்ளன அறியச் சிதைந்ததின்றெனவும் கூறியவாறு. 3.4 (இரண்டு நூற்பாக்களையும் இணைத்து ஒன்றாக்குவார் பேராசிரியர்). கிழவோன் சொல்லும் உள்ளுறை உவமம் தன்உரனுடைமை தோன்றச் சொல்லப்படும். ஏனோர் எனப்பட்ட பாங்கனும் பாணனும் முதலாயி னோர் சொல்லுங்காலை மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது தாந்தாம் அறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந் துரையாத பொருளானும் அந்நிலத்துள்ள பொருளானும் உள்ளுறை உவமை சொல்லப் பெறுப. 5. தலைமகள் இரண்டிடத்தல்லது உள்ளுறை உவமை சொல்லப் பெறாள். இரண்டிடம் என்பன மருதமும் நெய்தலும், அந்நிலத்துப் பிறந்த பொருள் பற்றியல்லது உள்ளுறை உவமம் சொல்லுதல் கிழத்திக் குரியதன்று என்பது கருத்து. இவ்விடத்து உரிமை உடைத்தெனவே குறிஞ்சிக்கண் அத்துணை உரித்தன்று என்றவாறு. இனிக் 'கிழவோட் குவமம் பிரிவிடத்துரித்து' என்பது பாடமாக உரைப்பாருமுளர். யாதானுமொரு நிலத்தாயி னும் பிரிந்திருந்தவிடத்து உள்ளுறையுவமம் கூறப்பெறும் கிழத்தி என்பது இதன் கருத்து. 'பெருந்தண்வாடையின் முந்துவந் தோன்' என்பது பிரிவன்றாகலின் ஈரிடம் என்றலே வலிதென்பது. 6. (மேல் 'உரனொடு கிளக்கும்' என்றதல்லது இன்னவழிச் சொல்லப் பெறுந் தலைமகன் என்றிலன். அதனான் அதற்கு எல்லா நிலனும் உரியவாம் என்கின்றான் என்பது). தலைமகற்கு இடவரையறையில்லை. வரையறையில்லவற்றுக்கு வரையறை கூறாமே முடியாமோ எனின், அங்ஙனமாயினும் கிழத்திக்கும் தோழிக்கும் இடம் வரையறுத்த தனைக் கண்ட மாணாக்கன் இவ்வாறே தலைமகற்கும் இடம் வரையறை உண்டுகொல் என்று கருதிற் கருதற்க என்றற்கு இது கூறினான் என்பது. 7. (இது தோழியும் செவிலியும் உள்ளுறை உவமம் கூறுமிடம் உணர்த்துதல்). காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறை உவமம் கூறப்பெறுப தோழியும் செவிலியும். காலமும் இடனும் பொருந்துதல் என்பது வெளிப்படக் கிளவாது முன்னத்தான் மறைத்துச் சொல்லவேண்டியவழி அவ்வாறு சொல்லப் பெறுப அவரும் என்றவாறு. இங்ஙனங் கூறவே, 'ஏனோர்க்கெல்லாம் இடம்வரை வின்றே' என்றவழி, எல்லாரும் உள்ளுறை உவமம் சொல்லப் பெறுவர் என்பது பட்டது. அதனை நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தன்னையரும் உள்ளுறையுவமை கூறப்பெறார் எனவும், தோழிகூறின் நிலம்பெயர்ந்துறையாத பொருளான் ஒருவழிக் கூறு மெனவும், செவிலிக்கா யின் இடம் வரைவின் றெனப்பட்டவகையாற் பொருந்தும்வழிக் கூறுதற்குரியள் எனவும் கூறினானாம் இச் சூத்திரத்தான் என்பது. கொள்வழி என்றதனால் தோழிக்குப் போல நிலம் பெயர்ந்துறையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கும் உரித்தென்பது கொள்க. மற்றிவையெல்லாம் அகப்பொருட்கே உரியவாக விதந் தோதியதென்னை? புறப் பொருட்கு வாராதனபோல எனின், ஆண்டு வருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினான் என்பது. ஈ. க.வெ: 5 இனிதுறு கிளவியாவது, இன்பவுணர்வாகிய மகிழ்ச்சியினைப் புலப்படுத்துஞ் சொல். துனியுறு கிளவியாவது, பிரிவும் புலவியும் ஆகிய துன்பவுணர்வினைப் புலப் படுத்துஞ் சொல். உ. ஆ.கு: 'உள்ளுறையுவமம்' காண்க. உழிஞை அ. 1. உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறிமரபிற் றாகும் என்ப. (தொ.பொ.66) 2. அதுவே தானும் இருநால் வகைத்தே (தொ.பொ.67) 3. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் கிவர்தலும் தோலது பெருக்கமும் அகத்தோன் செல்வமும் அன்றி முற்றிய புறத்தோன் அணங்கிய பக்கமும் திறற்பட ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்படச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே (தொ.பொ.68) 4. குடையும் வாளும் நாள்கோள் அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச் சுற்றமர் ஒழிய வென்றுகைக் கொண்டு முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் மதில்மிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகல்மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் வென்ற வாளின் மண்ணோ டொன்றத் தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. (தொ.பொ.69) ஆ. உழிஞை ஓங்கிய குடைநாட் கோளே வாள்நாட் கோளே முரச உழிஞை கொற்ற உழிஞையொ டரச உழிஞை கந்தழி என்றா முற்றுழி ஞையே காந்தள் புறத்திறை ஆரெயில் உழிஞையொடு கோள்புறத் துழிஞை பாசி நிலையே ஏணிநிலையே இலங்கெயிற் பாசி முதுவுழி ஞையே முந்தகத் துழிஞை முற்று முதிர்வே யானைகைக் கோளே வேற்றுப்படை வரவே உழுவித் திடுதல் வாள்மண்ணு நிலையே மண்ணுமங் கலமே மகட்பால் இகலே திறைகொண்டு பெயர்தல் அடிப்பட இருத்தல் தொகைநிலை உளப்பட இழுமென் சீர்த்தி இருபத் தொன்பதும் உழிஞை என்மனார் உணர்ந்திசி னோரே (பு.வெ.6) நுவலருங் காப்பின் நொச்சி ஏனை மறனுடைப் பாசி ஊர்ச்செரு என்றா செருவிடை வீழ்தல் திண்பரி மறனே எயிலது போரே எயில்தனை அழித்தல் அழிபடை தாங்கல் மகள்மறுத்து மொழிதலென எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும் நொச்சித் திணையும் துறையும் ஆகும் (பு.வெ.5) வேந்தன் சிறப்பு மதிலே றுதல்வென்றி வாட்சிறப்புக் காந்தும் படைமிகை நாட்கோ ளொடு காவ லேமுடிகோள் ஏந்தும் தொகைநிலை கொற்றம் நீர்ப்போர்ச்செல்வம் ஊர்ச்செருவே போந்த முதிர்வு குறுமையென் றாமுழி வகுப்புணர்ப்பே (வீர.103) முடிமிசை உழிஞை சூடி ஒன்னார் கொடிநுடங் கெயில்கொளக் குறித்த உழிஞையும் குடைநாட் கோளொடு வாணாட் கோளும் கடைநாட் பௌவத்து அதிர்முர சுழிஞையும் பற்றலர் மதில்கொளப் பரந்தெழு தானையொடு கொற்றவன் எழுதரு கொற்ற உழிஞை யும் மிகப்படும் ஊக்கமுதல் வேந்துறு தலின் அரண் அகப்படும் என்ற அரச உழிஞையும் வண்ணமலர்த்தார் மன்னனைச் சோவெறி கண்ணனென் றேத்திய கந்தழி உழிஞையும் இயங்கரண் அழித்தனன் இறையுமிது புனைந்தென வயங்கினர் உழிஞையை வழுத்துமுற் றுழிஞையும் காந்தள் வேய்ந்தனன் சேந்தனும் போர்க்கெனின் வேந்தரில் எவர்பூ விரும்பார் என்றலும் மறத்துறை மலிந்து மண்டி மாற்றார் விறற்கொடி மதிலின் புறத்தொருங் கிறுத்தலும் வாஅள் மறவர் வணங்கார் வைகிய நீஇள் மதிலின் நிலையெடுத் தியம்பலும் வென்றியொடு நெடும்புகழ் விளைக்குமென் றிறைவன் தொன்று வந்த தோல்மலி புரைத்தலும் கருதார் காக்கும் கடிமதிற் குமரிமேல் ஒருதான் ஆகி உடன்றகுற் றுழிஞையும் வளையினம் ஒலிப்ப வயிர்கிளர்ந் தார்ப்ப மிளைபிறக் கொழிய விரைந்த பக்கமொடு பாடருந் தோற்படை பீடுசால் மறவர் ஆடலோ டடைந்த பக்கமும் அதாஅன்று விண்டோய் அருமிளை கடந்துகுண் டகழிப் புறத்துவந் திறுத்தலும் போர்க்கருங் கிடங்கின் பற்றல ரொடுபொரூஉம் பாசிநிலையும் தொடுகழல் மறவர் துன்னித் துன்னார் இடுசூட் டிஞ்சியின் ஏணி சார்த்தலும் ஆடுதல் ஒல்லா அரண்கா வலவர் ஈடற ஏணியின் இவரெயில் பாசியும் வேஎய் பிணங்கிய மிளைசூழ் அரணம் பாஅய் புள்ளின் பாய்ந்தமூ துழிஞையும் முரணகத் தவிய முதுசினம் சிறந்தோன் அரணகத் தோரை அடலகத் துழிஞையும் அருமுர ணதனால் அமர்வர வறியாச் செருமதி லோர்சிறப் புரைத்த பக்கமும் அகத்தோன் காலை அதிர்முர சியம்பப் புறத்தோன்வஞ் சினம்புகல் முற்று முதிர்வும் மேவலர்க் கடந்து வெலற்கருங் காவலொடு யானைகைக் கொண்ட யானைகைக் கோளும் முற்றுவிட் டகல மற்றொரு வேந்தன் வெற்றியம் படைவரூஉம் வேற்றுப்படை வரவும் எண்ணார் ஆரெயில் கழுதை ஏரின் உண்ணா வரகுகொள் உழுவித் திடுதலும் புண்ணிய நீரில் புரையோர் ஏத்த மண்ணுதல் புரிந்த வாள்மங் கலமும் கோமகன் அடிமலர் குறுகலர் புனைய மாமதில் குமரியொடு மணந்தமங் கலமும் தொடர்ந்தெயில் கொண்டோன் சூழ்மதில் வேந்தன் மடந்தையை வேண்டிய மகட்பால் இகலும் தூவடி வேலவன் தொகுத்தநிதி யளந்து சேவடி வணங்கத் திறைகொண்டு பெயர்தலும் பேணா மன்னர் பெருமறங் காற்றி ஆணை போக்கி அடிப்பட இருத்தலும் எம்மதில் உள்ள இகலுடை வேந்தரும் அம்மதில் அடியின் அடைந்ததொகை நிலையுமென முரண்தரு புரிசை முற்றினர் கோடல் இரண்டுதலை யிட்டமுப்பதிற்றுத் துறைத்தே (இ.வி.608) ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் நொச்சிப் பூப்புனை புகழ்ச்சியும் துண்ணென வரூஉம் தூசு தாங்கி விண்விருந் தாக விளிந்தமறப் பாசியும் அருமிளை யொடுகிடங் கழியா திகலி உருகெழு மறவர் உடன்றவூர்ச் செருவும் ஆழ்ந்துபடு கிடங்கொடு அருமிளை காத்து வீழ்ந்த வேலோர் விறல்மேம் படுதலும் மதிதொடு புரிசை வாமான் கடுப்பிற் கெதிரன்மின் என்னும் இவுளி மறமும் வாள்வடுப் பட்டும் வடுப்படா தகத்தோர் தோள்வடுப் படப்பகை தொலைத்தஎயிற் போரும் துணிவுடை அடுபகைத் தொடுகழல் மறவன் அணிமணி எயில்மிசை அழிந்த நொச்சியும் இழிபு மேன்மேல் எழுதலும் இகலி அழிபடை யானெறிந் தழிபடை தாங்கலும் வெம்முர ணான்மகள் வேண்டலும் அதனுக் கம்மதி லோர் மறுத் துரைத்தலும் எனமுறை கூறிய ஒன்பதும் குண்டகழ் உடுத்த வீறெயில் காத்தல் விரியெனப் படுமே (இ.வி.609) பகைவர் அரணைப் பற்றுதல் உழிஞை (மு.வீ.826) இ. இளம்: 1. (உழிஞைத் திணையாமாறு உணர்த்துதல்) உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம்; அது முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் வருந்தன்மைத் தாகிய நெறியை மரபாக உடைத்து. 'முதல் அரணம்' என்றதனான் தலையும் இடையும் கடையும் என மூவகைப் படுமவற்றுள் தலையரண். அஃதாவது, அரணிற்குக் கூறு கின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல். மருதத்திற்கு இது புறனாய வாறு என்னையெனின் வஞ்சியிற் சென்ற வேந்தனொடு போர்செய்தல் ஆற்றாது உடைந்து மாற்றுவேந்தன் அரண்வலியாகப் போர் செய்யுமாக லானும், அரண், அவன் நாட்டகத்தாகலானும் அவ்வழிப் பொரு வார்க்கு விடியற் பொழுது காலமாகலானும் அதற்கு இது புறனாயிற்று. நாட்டெல்லையின் அழிப்பு உழிஞையாகுமோ எனின் அது பெரிதாயின் அதன்பாற்படும்; சிறிதாயின் வெட்சியுள் ஓதின 'ஊர்கொலை'யுள் அடங்கும். 2. (உழிஞைத்திணையை வரையறுத்து உணர்த்துதல்) உழிஞைத் துறைதான் எட்டுவகைத்து. அவையாமாறு முன்னர்க் காணப்படும். 3. (இதுவும் உழிஞையாமாறு உணர்த்துதல்) கொள்ளார்தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப் பட்டன உழிஞைத்துறையாம். பகைவரது தேயத்தைக் கொள்ளக்குறித்த கொற்றமும், கொள்ளார், தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும். நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும். இன்னும் 'உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்' என்றதனால் அகத்தரசனை அழித்தது கூறலும் கொள்க. தொல்எயிலின்கண் பரத்தலும், தோற்படையினது பெருக்கமும் அகத்தரசனது செல்வமும் அன்றியும் பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும், வலிபட ஒருதானாகிச் சென்ற குற்றுழிஞையும், வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் ஆரெயில் உழிஞையும் உட்படக் கூறப்பட்ட எட்டு வகைத்து, பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துத் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை. 4. (இதுவும் அது). குடைநாட்கோள் முதலாகச் சொல்லப்பட்டுள்ள பன்னிரண்டு துறையும் உழிஞைக்குரிய துறை; மேற்சொல்லப்பட்டவற்றின் விரியும் பன்னிரண்டு உள என்றவாறு. குடைநாட்கோள், வாள்நாட்கோள் எனவருவனவும், மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணிசார்த்தி அதன்மேல் பொரும்போர் மயக்கமும், முற்று அகப்பட்ட அகத்தி னுள்ளான் வீழ்ந்த நொச்சியும், நொச்சியின் புறத்தாகிய உழிஞையான் வீழ்ந்த புதுமையும், கிடங்கின் உளதாய போரின்கண்ணே வீழ்ந்த பாசியும், அஃதொழிய ஊர்ச்செருவின் கண் வீழ்ந்த பாசி மறனும், மதின்மேற் கோடற்குப் பரந்த மதிலோர் பக்கமும், தம்முடன் இகலி மதில்மேல் நின்றானை அட்டு அவன் முடிக்கலங்கொண்ட மண்ணுமங்கலமும் வென்ற வாளின் மண்ணுமங் கலமும் பொருந்த அம்மதிலழித்தமையான் மற்றுள்ள மதில்கள் வரைப்பில் மாறுபட்ட வேந்தரும் முரண் அவிந்தபடி அடைதல் என் னும் துறையொடு கூடிய உழிஞைவகை பன்னிரண்டு என்று கூறுவர். நச்: 1. (இந்நூற்பாவின் முதலடியை ஒரு நூற்பாவாகவும், பின்னீ ரடிகளையும் ஒரு நூற்பாவாகவும் கொண்டு உரை வரைவார் நச்சினார்க்கினியர்). அ. (உழிஞைத்திணை அகத்திணையுள் மருதத்திற்குப் புறனாம் என்கிறது). உழிஞை என்று கூறப்பட்ட புறத்திணை, மருதம் என்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு. இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செலற்காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்தது ஆதலானும் அம்மதிலை முற்றுவோனும் அந்நிலந்திருத்தலானும், ஒருவன்வாயில் வேண்டத்திறவாது அடைத்திருத்தல் ஒப்புமையானும் உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானும் சிறு பொழுதினும் விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத் திற்குப் புறனாயிற்று. மற்று எதிர்சென்றானை வஞ்சிவேந்தன் என்னுமெனின், அஃது இருவரும் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றிருப்ப ரென்றலின் வஞ்சியாகாதாயிற்று. ஆ. (உழிஞைத்திணையது பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது). 1. வேற்று வேந்தன் குலத்துக்கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, சென்றவேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக் கொண்டு காத்தலுமாகிய இலக்கணத்தை உடைத்து அவ்வுழிஞைத் திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு. முழு அரணாவது, மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுள் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுண் முதலிய பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பலபொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். இனி மலையரணும் நிலவரணும் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணைசொரியும் இடமும் பிறவெந் திரங்களும் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந்தழித்தலும் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று. சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும் மகப்பெறா தோனையும் மயிர்குலைந்தோனையும் அடி பிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்தபடை யெடா தோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப்பொருதலும் முதலியனவாம். இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. 2. (முற்கூறிய முற்றலும் கோடலும் ஒருவன் தொழிலன்று என்பதூஉம் முற்கூறியபோல ஒருதுறை இருவர்க்கும் உரியவாகாது ஒவ்வொரு வர்க்கு நான்கு நான்காக எட்டாம் என்பதூஉம் கூறுகின்றது). அவ்வுழிஞைத்துறைதானும் மதில்முற்றியவேந்தன் கூறு நான்கும், அகத்தோன் கூறுநான்குமென எட்டுவகைத்து என்றவாறு. அது மேற்கூறுப. 3. (முற்கூறிய நாலிரு துறைக்கும் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது) பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போலவேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும், அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும், ஒருகாலத்தும் அழி வில்லாத மதிலை இற்றைப் பகலுள் அழித்து 'மென்று கூறிஅஃது அழித்தற்கு விருப்பம் செய்தலும், அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்கு தற்குக் கிடுகுங்கேடகமும் மிடையக் கொண்டு சேறலும், இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க. அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வம் கூறுதலும் மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருத்திய கூறலும், அகத்திருந்தோன் தன் அரணழிவு தோன்றிய வழிப் புறத்துப் போர்செய்யும் சிறுமையும், புறத்தோன் அகத்தோன் மேல்வந்துழி அவன் பகையினைப் போற் றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுதலகப்படமேல் இருநால்வகைத்தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதிய தாம் உழிஞைத்திணை என்றவாறு. முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுந்தொகை கூறினார், அந்நாலிரண்டு மேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறைதோன்றும் என்றற்கு. இவை புறத்து வேந்தன் தன் துணையாகிய அரசனையாயினும் தன்படைத்தலைவரை யாயினும் ஏவி அகத்துவேந்தற்குத் துணை யாகிய அரசரது முழு முதலரண் முற்றலும் அவன்றான் அதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ்விரு நான்குவகையும் இருவர்க்கும் உளவாதலாம். இத்திணைக்குப் படையியங் கரவம் முதலியன வும் அதிகாரத்தாற் கொள்க. இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டிய வாறு செய்வனவாகலிற் றமிழ்கூறுநல்லு லகத்தன அல்லன வென மறுக்க. இனி முரசுழிஞை வேண்டுவார் உளரெனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. 4. (இஃது எய்தாதது எய்துவித்தது; உழிஞைத்திணையுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின்). தன் ஆக்கங்கருதிக்குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடைநாட் கொள்ளுத லும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட்கொள்ளுத லும் அன்றி மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசை நின்று புறத்தோரும் அகத்தோரும் போர்செய்தலும், புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு உண்மதிலை வளைத்த வினைமுதிர்ச்சியும் அகத்தோன் தன்படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாகப் புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினைமுதிர்ச்சியும், புறமதிலிலன்றி உண்மதிற்கட் புறத் தோனால் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில் காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர் செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும், இடைமதிலைக் காக்கின்ற அகத் துழிஞை யோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந் தோன் விரும்பிக் கொண்ட புதுக்கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத் தினைப் பின்னை அகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும், கொண்ட மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத்தாக்க லாற்றாத அகத் தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங் கின்கட் போரை விரும்பின பாசியும், அம்மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசிமறனும், புறஞ்சேரி மதிலும் ஊரமர் மதிலும் அல்லாத கோயிற்புரிசைகளின் மேலும் ஏறிநின்று போர் செய்தற்குப் பரந்து சென்றோன் கூறுபாடும், அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும், இருபெருவேந்த ருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்ற வாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலோடேகூட அவ்வாண்மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக்கடற் கெல்லாம் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னும் துறையோடு முற்கூறியவற்றைத் தொகுத்து அங்ஙனம் ஒன்று இருவகைப் பட வந்த பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளும் என்க. தன்னாட்டி னின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞை யெனப்படாது ஆகலின் அகத்தோனும் முற்றுவிடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித்தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நான்கொளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றிய வழித் தனக்கு இன்றியமை யாதன வற்றை அத்திசைநோக்கி அக்காலத்தே முன்னர்ச் செல்ல விடுதல். நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலும் கொள்க. அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலு மென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே ''நொச்சிவேலித் தித்தன் உறந்தை" என்றார் சான்றோரும் (அகம். 122). நீர்ச்செரு வீழ்ந்த பாசி; பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி என்றார். ஊர்ச்செருவீழ்ந்த மற்றதன் மறன்; பாசி என்றார் நீரிற்பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். முற்றலையும் கோடலையும் இருவகை என்றார். துறை என்றதனான் அதன் பகுதியாய் வருவனவும் அத்துறைப் பாற்படுத்துக. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும், அவர் அரசற்கு உரைப்பனவும், குடைச்சிறப்புக் கூறுவனவும், முரசு முதலியன நாட்கோடலும், பிறவும் குடைநாட் கோடலாய் அடங்கும். இதுவாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்கும் குடைபொது வாகலின் முற்கூறி, மேல்வருகின்றபோர்த் தொழிற்கே சிறத்தலில் வாளினைப் பிற்கூறினார். இவைபோர்த் தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும் புட்போல உட்பாய்தலும் ஆண்டுப்பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் பாசிமறத்தின்பாற்படும். ஏறும் தோட்டியும் கதவும் முதலியன கோடல் அகமிசைக் கிவர்ந்தோன் பக்கத்தின் பாற்படும். புறத்தோன் இருப்பிற் றொகை நிலைப்பாற்படும். துறையெனமொழிப என எல்லாவற்றையும் துறையென்று கூறுகின்ற வர் தொகைநிலையென்னும் துறையெனத் தொகை நிலையை விதந்து ஓதினார், அது பலவாகாது இரண்டு துறைப்பட்டு வேறுவேறு துறையாம் என்றற்கு. அது, தும்பைத் தொகைநிலைபோல் இருபெரு வேந்தரும் உடன்வீழ்தலும் சிறுபான்மை உளதாம் என்றுணர்க. எதிர்செல்லாது அடைத் திருந்தோன் புறப்படுதல் சிறுபான்மையாத லின் இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின்மூன்றென்னா ராயினார். இது வேறு வருதலும் சிறுபான்மை. இன்னும் துறையென்ற தனானே புறத்தோன் கவடி வித்துதலும் தொகை நிலைப்பாற் பட்டுழி அகத் தோர்க்குச் செல்லாமை கொள்க. ஒன்ற என்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறு பான்மை என்று கொள்க. இனி மகண்மறுத்தோன் மதிலைமுற்றுதல் மகட்பாற் காஞ்சிக் கண் அடங்கும். யானையும் குதிரையும் மதிற்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளாராயினார். ஈரடியிகந்து பிறக்கடி யிடுதலும் கேடு என்றுணர்க. ஈ. நாவலர்: (முதலடியை ஒரு நூற்பாவாகவும் பின்னீரடிகளையும் ஒரு நூற்பாவாகவும் கொள்வார்). அ. (இதுபற்றலர் அரணை முற்றி எறியும் உழிஞைப் புறத்திணை, மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாகும்). உழிஞைத்திணையானது மருதம் என்ற அகத்திணைக்குப் புறனாகும். மருதத்துக்கும் உழிஞைக்கும் அரணுடைய ஊர்களே நிலைக்களம் ஆதலானும், புலத்தலும் ஊடலும் மருத ஒழுக்கம் ஆதல்போல முற்றிய ஊரரணின் அகப்புறப் படைகள் தம்முள் கலாய்த்து இகலுதலே உழிஞை யாத லானும் மருதத்துக்கு உழிஞை புறனாயிற்று. ஆ. (இஃது உழிஞையின் இயல் விளக்குகிறது). கெடாத தலையான காவலுடைய கோட்டையை வளைதலும் எயில் காவலர் எதிர்ப்பை அழித்து எயிலைக் கைப்பற்றுதலும் அம்முறைகளின் தன்மையுடைத்தாம் உழிஞைத்திணை என்பர் புறநூற்புலவர். ஈங்குக் கோடல் என்பது முற்றியோர் வென்று அரண் கொள்ளுதலையே குறிக்கும். கொள்ளாது முற்றிய கோட்டையை விட்டு விலகுதல் உழிஞை ஆகாமையிற் கோடலும் முற்றலுடன் கூறப்பட்டது. இனி, கோடலை அரண்காவலர் தொழிலாக்கி முற்றலை மட்டும் உழிஞை எனின், முற்றியோர் அரண்கைப்பற்றுதல் உழிஞையில் அடங்காமல் வேறு திணையுமாகாமல் குன்றக்கூறலாய் முடியும். அன்றியும் முற்றியோர் அரணைப்பற்றாவழி அகப்படை அதனை மீட்டுக் கோடல் இன்மையால் அவரரண் கோடல் உழிஞை என்பது மிகைபடக் கூறலாகும். இன்னும், முற்றியோரை முறையே ஓட்டி அகத்தவர் வெற்றிபெற்ற காலை, அஃது அரண்காத்த லன்றிக் கோடலாமா றில்லை யாதலானும் முற்றியோர் வெற்றியால் அரணைப்பற்றியபின் தோற்ற காவலர் அவரை முற்றி அரணை மீட்டுக் கோடல் அவரளவில் உழிஞையே யாமாதலானும் முற்றியோரும் அரண் காவலரும் கைகலந்து பொருவது உழிஞையின் இடை யியல் நிகழ்ச்சியாவதன்றித் தன்னளவில் தனித்தொரு திணையாமாறு இல்லை யாதலானும் அகத்தவர் எதிர்ப்பை நோக்கியெனத் தனித்தொரு திணை யாக்கின் அதற்கு நேராம் அகத்திணை ஒன்றுமின் றாதலானும் அகத்தோன் வீழ்ந்த நொச்சியை உழிஞைத்துறை வகைகளுள் ஒன்றாயடக்கிப் பின்சூத்திரம் கூறுவதானும் இங்குக் கோடல் என்பது அகத்தவர்க்கு ஆகாமை ஒருதலை. 2. (இது உழிஞைத்திணை எட்டுவகைப்படும் என்கின்றது). பொருள் வெளிப்படை. 3. (இது மேல் நாலிரு வகைத்தே எனத் தொகுத்த உழிஞை வகைகளின் பெயரும் இயல்பும் கூறுகிறது). பகைவர் நாட்டைக் கொள்ளத்துணியும் வீறும், எண்ணிய எண்ணி யாங்கு எய்தும் திண்ணிய திறனுடைய வேந்தன் சீரும், பகைவர் முன் பற்றாத பழமையான மதிலைப்பற்றி முற்றியோர் ஏறுதலும் பகைவர் படைக்கலன் உறாவாறு தடுக்கச் செறித்தகேடகங்களின் பொலிவும், (கொளற்கு அரிதாய் உணவு முதலிய கூழும் நன்னீரும் படையும் உலையாத ஊக்கும் அறை போகாத் தறுகண் மறவர் காவலும் உடைய) அரண் அகக்காவலன் பரிசுகுறித்தலும், ஊறஞ்சாது உரனுடன் ஒருவனாய் எதிர்த்தேறிப் புரியும் குறும்போரும், வெகுண்டுமேல் வரும் உழிஞைப் பொருநரைப் பொருட் படுத்தா உரனுடையார் காவலால் கொளற்கரிதாம் அரணின் பெருமை உள்ளிட்டு முன் சூத்திரத்தில் சுட்டப்பட்ட எட்டு வகைத்தாம் உழிஞைத் திணை. இவை எட்டும் பிறர் கூறுமாறு துறைகளாக, உழிஞைத் துறை பன்னிரண் டும் அடுத்த சூத்திரம் கூறுதலால் இவ்வெட்டும் உழிஞைத் திணைவகை எனத்தெளிக. 4. (உழிஞைத்திணைவகை மேற்கூறி இதில் அதன் துறைவகை பன்னிரண்டும் குறிக்கப்படுகின்றன). வேந்தன் கொற்றக்குடையும் வெற்றிப்போர்வாளும் முறையே நன்னாளில் எடுத்துக்கொள்ளுதலும், தொடை யமைந்த ஏணிப்படி களின் மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முள் கலந்து மலைதலும், முற்றியோன் தன்மறவரைச் செலுத்தி எதிர்த்தோரை மலைந்து மதிற்புறப்போர் முடிந்து ஒழியுமாறு வென்று எயிலைக்கைப்பற்றி உள்ளேறி அரணக மறவரைச் சூழும் முனைப்பும், புறத்தோரால் வளைக்கப் பெற்ற அகப் படைத் தலைவன் அரண்காவல் விரும்பிப் புரியும் அமராம் நொச்சியும். அவ் வெதிர்ப்பால் வெகுண்டு புகுந்த புறப்படைத் தலைவன் விரும்பும் புதுக்கோளும், எயிற்புறத்து நீர்நிலையில் (அகற்ற ஒழியாது வந்து விரவும் பாசிபோல) இருதிறப் படையும் தளர்ந்தகலாமல் மேன்மேல் விரும்பிக் கலந்து மலையும் பாசித்துறையும், அதுவுமன்றி அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்மை யும், மதின்மேல் ஏறி அகற்றப் படாது ஊன்றிய மறவர் பரிசும், பகைமதிலின் முடியகப் படுத்திய பெருமிதம் கொண்டாடும் நீர்விழா வும், உழிஞைப் போரில் வென்றோர் வெற்றிதந்த வாளை நீராட்டும் விழவொடு பொருந்த, தோற்றோர் தொகுதித் தொலைவாம் தொகை நிலை என்னும் துறையொடு கூட்டிப் பன்னிரு வகைப்படும் உழிஞைத்துறை என்பர் புறநூற்புலவர். மடையமை ஏணி: மடை பூட்டு; ஏணிப்பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால் மடையமை ஏணி எனப் பட்டது. வீழ்ந்தநொச்சி: வீழ்தல் விரும்புதல்; நொச்சி மதில். அது மதிற் காவற்கு ஆகுபெயர். புதுமை: எதிர்ப்பாரை அடர்த்து அவர் நிலையிடத்தைப் புதிதாய்க் கொள்ளுதல் புதுமை எனப்பட்டது. பாசி: விட்டுவிலகாது விரைந்து விரவும் நீர்ப்பாசி போலக் கலந்து இருபடையும் மலைந்து இருதலையும் அலையென மோதும் அமரின் பரிசு பாசி எனப்பட்டது. மதிற்குடுமி: இதில் குடுமியை மதிலுக்கு ஆக்காமல் பிரித்து ஆகுபெய ராக்கிப் பிறர்குடுமி எனக்கொண்டு காவலர் முடிக்கலம் எனப்பிறர் கூறுதல் பொருந்தாமை வெளிப்படை. வேந்தனுக்கல்லாமல் மதில் காக்கும் மறவர்க் கெல்லாம் முடிக்கலம் இன்மையானும் முற்றிய மதின்மேல் முடிவேந்தன் ஏறி முடிபறி கொடுத்தல் இராவணற்கன்றிப் பிறமன்னர்க்குச் சான்றோர் செய்யுட்களில் கேட்கப்படா அரு நிகழ்ச்சியாதலானும் இங்கு மதிற்குடுமி என நின்றாங்கே நேர் பொருள் கொள்ளுதலே அமையும். முற்றியோர் மதிற்குடுமி கொள்ளுதல் பெரும்பாண் அடிகளிலும் (4504) மற்றும் பலபழஞ் செய்யுட்களிலும் பரக்கவருவதனாலும் இதுவே தொல் காப்பியர் கருத்தாதல் தேற்றமாகும். வாளின்மண்: மண்ணுதல் கழுவுதல். இங்கு வாளை வெற்றிதரும் படைக் கலங்களுக்குப் பொதுக்குறியீடாகக் கொள்ளுதல் சால்புடைத்தாகும். வாளைப் போலவே வேலும் பண்டை மறவர் கொண்ட போர்ப் படையாத லின், வென்றபின் வேல்கழுவிவிழவு எடுத்தலும் இத்துறையேயாகும். தொகைநிலை: மக்கள் தொக்க தொகுதியாய்த் தொலைவதையே தொல் காப்பியர் காலப்புலவர் 'தொகைநிலை' என வழங்கினர் என்பது, தும்பைத் திணைத்துறைவகையில் தொல்காப்பியர் சுட்டும் தொகை நிலைக் குறிப்பால் இனிது விளங்கும். 'ஒருவரும் ஒழியாத் தொகை நிலை' என்பது ஆங்கு அவர்தரும் 'தொகைநிலைக்' குறிப்பாகும். உழிஞையிலும் தோற்றோரின் தொகையழிவே வென்றோர் விழவொடு ஒன்றுவதாகும். இனி, இதில் தொகைநிலைக்கு நச்சினார்க்கினியர் வேறுபொருள் கூறுவர். போர் முடிவில் வென்றோர் விழாது நின்றோரைத் திரட்டி புண்புறம் பொதிந்தும் தண்மொழி பகர்ந்தும் அவர்திறம் வியந்தும் தளர்வோரை ஊக்கியும் பாராட்டுவது தொகைநிலை என்பது அவர் கருத்து. தொகை கூட்டம் குறிக்குமாதலின் அவ்வாறு கொண்டார் போலும். ஈ. க.வெ: 4. இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் சில புறத்தோனுக்கு உரியன வாகவும், சில அகத்தோனுக்கு உரியனவாகவும் ஆசிரியர் தொல்காப்பிய னாரால் வரைந்து கூறப்படுதலால், இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் யாவும் புறத்தோன் அகத்தோன் ஆகிய இருதிறவேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியன எனக்கூறுதல் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடைய தாகாது. இந்நூற்பாவிற் புறத்தோனுக்கு உரியவாகச் சொல்லப்பட்ட துறைகள் அகத்தோ னுக்கும், அகத்தோனுக்கு உரியவாகச் சொல்லப்பட்ட துறைகள் புறத்தோனுக்கும் ஒப்பவுரியனவாக வழங்கிய பிற்கால மரபினை அடியொற்றித் தோன்றியது பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலாகும். இது நச்சினார்க்கினியர் உரையில் மட்டும் எடுத்துரைக்கப் படுகிறது. பிற்கால நூலாகிய இதன்கண் அமைந்த துறைகள் எல்லாவற்றையும் இந்நூற்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தொல்காப்பியத்தில் அடக்குதல் இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்னும் நச்சினார்க்கினியரது ஆர்வத்தின் பாற்படுமேயன்றி வரலாற்று முறைக்கு ஏற்புடையதன்றாம் எனத் தெரிதல் வேண்டும். உள்ளுறை உவமம் அ. 1. உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத் தள்ளா தாகும் திணையுணர் வகையே (தொ.பொ.49) 2. உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே. (தொ.பொ.50) 3. உள்ளுறுத் திதனோ டொத்துப் பொருள்முடிகென உள்ளுறுத் துரைப்பதே உள்ளுறை உவமம் (தொ.பொ.51) 4. பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி முன்ன மரபிற் கூறுங் காலைத் துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே (தொ.பொ.294) ஆ. அவற்றுள், உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும் (ந.அ.238) இ. இளம்: 1. (உவமவகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல் புணர்த்துதல்). உள்ளுறைக்கண்வரும் உவமமும் ஒழிந்த உவமமும் என இருவகை யாலும் திணையுணர்வகை தப்பாது ஆகும். 2. (உள்ளுறையாமாறு உணர்த்துதல்) உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை இட மாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர். குறி இலக்கணம். 3. (உள்ளுறையுவமம் ஆமாறு உணர்த்துதல்) உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை உள்ளுறுத்துக்கருதிய பொருள் இதனோடு ஒத்துப் பொருள்முடிக என உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம். எனவே உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உரு அன்றிப் பொருளுவமையாற் கொள்ளப்படுவது. நச்: 1. (உவமவியலுள் அகத்திணைக் கைகோள் இரண்டற்கும் பொதுவகை யான் உரியதொன்று கூறுகின்றது). மேற்கூறும் உள்ளுறை உவமம்தான் ஏனைய உவமமென்று கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது. அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை உவமம்போல எல்லாத் திணையையும் உணருங்கூற்றைத் தள்ளாதாய் வரும் நல்லிசைப்புலவர் செய்யுட் செய்யின் என்றவாறு. எனவே ஏனையோர் செய்யின் றானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம். இனித் தள்ளாது என்றதனானே... ஏனை உவமமாய் நின்று கருப்பொரு ளொடு கூடிச் சிறப்பியாது தானே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன போலவும், கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப் பொருள் தருவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறை உவமமும் ஏனையுவமமுமென உவமம் இரண்டே யென்பது கூறினார். 2. (இதுமுறையே உள்ளுறை உவமங்கூறுகின்றது). உள்ளுறை எனப்பட்ட உவமம் தெய்வம் முதலிய கருப்பொருளுட் டெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப இலக்கணம் அறிந்தோர் என்றவாறு. எனவே உணவு முதலிய பற்றிய அப்பொருள் நிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறை உவமமாயிற்று. இனி, அஃது உள்ளத்தான் உய்த்துணர வேண்டுமென மேற்கூறுகின்றார். 3. (இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறையுவமத்தினைப் பொருட்கு உபகாரம் பட உவமம் கொள்ளுமாறு கூறு கின்றது). தான்புலப்படக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாக என்று புலவன் தன் உள்ளத்தே கருதித் தான் அங்ஙனங் கருதும் மாத்திரையே அன்றியும் கேட்டோர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நிகழ்த்துவித்து அங்ஙனம் உணர்த்துவதற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக் கொண்டு முடிவது உள்ளுறை உவமம் என்றவாறு. இதனானே புலவன் தான் கருதியது கூறாதவழியும் கேட்டோர் இவன் கருதிய பொருள் ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சில சொற்கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று. ஈ. நாவலர்: 1. (அகத்துறைச் செய்யுட்களில் வரும் உரிப்பொருட் பகுதிகள் எல்லாவற் றிற்கும் சிறப்பாக உரித்தாம் உவமவகை கூறுகிறது). ஐந்திணையுணர்த்தும் உரிப்பொருட் பகுதிகளில் உள்ளுறை உவம மானது மற்றைய உவமத்தோற்றம்போல அருகாமல் வந்துபயிலும். ஈற்றேகாரம் பிரிநிலை, அகத்துறைகளுள் திணையுணர் வகையை வேறு பிரித்தலின் அவ்வகையல்லாப் பிற அகப்பகுதிகளில் ஏனையுவமம் அருகாது என்பது குறிப்பு. உவமம், வெளிப்படத் தோன்றும் உவமமும், உள்ளுறை உவமமும் என இருவகைத்தாம். இவற்றுள் உள்ளுறை உவமமே திணையுணரும் உரிப்பொருட் பகுதிகளைச் சிறப்பித் தற்கு உரித்தாகும். ஏனைய உவமம் அவ்வாறு அகவொழுக்க வகைகளுக்குச் சிறவாதாகையால், அகத்துறைகளில் திணையுணரும் பகுதிகளுக்கு அத்துணையா ஆட்சிபெறுதல் இல்லை. 'தள்ளாதாகும்' என்றதனால் ஏனை உவமம் அருகிப்பயிலும் என்பதும், உள்ளுறை உவமம் அவ்வாறன்றிப் பெருவரவிற்றாம் என்பதும் பெறப்படும். உள்ளுறை, உவமத்தின் ஒரு பகுதியாய் அடங்குமேனும் புறத்திற்கே பெரிதும் உரிமைகொள்ளும் ஏனை உவமம் போலாது அகத்திற்கே சிறந்துரியது ஆதலின் இது உவம வியலிற் கூறப்பெறாது அகவொழுக் கம் கூறும் இத்திணையிற் கூறப்பட்டது. ஏனை உவமத்தை அகத் திணைக்கு உரித்தல்லாதது என ஏனை உவமச் சூத்திரத்தின் கீழ் விரிவுரையில் நச்சினார்க்கினியர் கூறுவர். சான்றோர் செய்யுட்களில் அருகிய ஆட்சி அகத்திணையிலும் ஏனை உவமம் பெறுதலின், அதனை அறவே அகத்திணைக் குரித்தில்லை என விலக்குதல் பொருந்தாது. இன்னும் இளம்பூரணர் உள்ளுறை உவமம் ஒழிந்த உவமம் என இருவகையாலும், 'திணையுணர்வகை தப்பாதாகும்' எனக் கூறுவ தாலும் ஏனை உவமத்திற்கு அருகியேனும் அகத் திணைக்கண் ஆட்சியுண்மை தெளியப்படும். 2. (உள்ளுறை உவமத்திற்கு நிலைக்களம் உணர்த்துகிறது). அகத்திணையிற் பயிலும் உள்ளுறை உவமம் கருப் பொருள்களுள் தெய்வம் நீக்கி மற்றையவற்றைத் தனக்கு நிலைக்கள னாகத் தழுவி வரும் என்று கூறுவர் ஒப்பியலறிந்தோர். ஒப்பியல் அறிந்தோர் என்னும் எழுவாய் கூறுவர் என்னும் வினைக்கு ஏற்ப அவாய் நிலையாற் பெறப்பட்டது. 3. (உள்ளுறை உவமத்தின் இயல்பு கூறுகின்றது). வெளிப்படக்கூறும் பொருளோடு உள்ளும் பொருளும் ஒத்து முடியு மாறு உள்ளத்து ஊன்றி நுணுகி உணர அமைந்து முடிவது உள்ளுறை உவமமாகும். இறுவதை என்பது, ஏற்றை என்பதுபோல ஐயீறு பெற்று முடிந்த பெயர். (கனகசபாபதிப்பிள்ளை: பாடம்: 1) உள்ளுறுத் துரைப்பதை 2. உள்ளுறுத்திறுவதை. மு.அ: 1. உள்ளுறையுவமமாவது, உவமம் ஒன்றே வெளிப்படக் கூறப்பட்டு அஃது உவமிக்கப்படும் பொருள் முதலியவற்றைக் குறிப்பால் உணர்த்தி நிற்பது. ஏனையுவமமாவது, உவமம், உவமிக்கப்படும் பொருள், பொதுத் தன்மை, உவமஉருபு என்னும் நான்கும் வெளிப்பட்டு நின்று பொருளை இனிது விளக்குவது. அகத்திணைக்கே உரியதாயும் களவு கற்பென்னும் இரண்டற்கும் பொதுவானதாயும் வரும் உள்ளுறை யுவமத்தைப் பொது விலக்கணம் கூறும் இவ்வியலிற் கூறுவார் ஏனையுவமமும் உடன் கூறினார். 'இது புறத்திற்கும் பொது' என நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார். இவர், அகத்திணைக் கைகோள் இரண்டற்கும் பொதுவாய் வருவது இவ் வுள்ளுறை உவமமென இந்நூற்பாவின் கீழ்க் கருத்துரை எழுதி யிருத்தலானும், இன்பத் துறை பற்றிய செய்திகளன்றிப் புறப்பொருட் செய்திகள் மறைத்துக் கூற வேண்டாமை யானும் ஒரோவழி மறைத்துக் கூறப்படுமேல் அது பிறிது மொழிதலென்னும் அணியின் பாற்படு மன்றி உள்ளுறை உவமம் எனப்படாமையானும் ''அறுமருப் பெழிற் கலை புலிப்பாற்பட்டென" என்னும் புறப்பாட்டின் (23) பகுதிக்குக் கலை புலிப்பாற் பட்டெனச் ''சிறுமறி தழீஇய மடப்பிணை, பறந்தலை வேளைவெண்பூக் கறிக்கும்" என்பது அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம்புதல்வரை யோம்பற் பொருட்டு இறந்து படாது அடகு தின்று உயிர்வாழ்கின்றார் என்பதோர் பொருள் தோன்ற நின்றது என அப்புறநானூற்று உரையாசிரியர் எழுதினாரன்றி அதனை உள்ளுறை உவமமென்று கூறாமை யானும் உடனுறையுவமம் முதலிய உள்ளுறையைந்தும் அகத் திணைக்கண் வருமன்றிப் புறத்திணைக்கண் வாராமை யானும் இது புறத்திற்கும் பொதுவென எழுதியிருப்பது ஆராயத்தக்கது. இது, களவிற்கும் கற்பிற்கும் பொதுவென்றேனும், ஏனை யுவமம் புறத்திற்கும் பொதுவென்றேனும் அவர் எழுதி யிருந்தவுரை, புறத்திற் கும் பொதுவெனப் பிழைபட்டிருக்கலாமோ என எண்ணுதற்கும் இடமிருக்கின்றது. 2. உவமம் பற்றிய உள்ளுறை தெய்வம் ஒழிந்த கருப்பொருளை யிடமாகக் கொண்டு தோன்றுமென இதனாற் கூறியுள்ளார். எனவே, உடனுறை முதலிய நான்கு உள்ளுறைகளும் கருப்பொருளிடமாகத் தோன்றா என்பது ஆசிரியர் கருத்து. இங்ஙனம் கொள்ளாமல் உடனுறையாகிய இறைச்சி என்ற உள்ளுறையும் கருப்பொருள் இடமாகத் தோன்று மெனக் கொண்டு விளக்கம் கூறுவது கற்பவர்க்கு மயக்கத்தை விளைப்பதாகும். 3. செய்யுட் செய்யும் புலவன் யான் வெளிப்படக் கூறுகின்ற இவ்வுவமத் தோடொத்து அங்ஙனம் வெளிப்படக் கூறப்படாத உவமிக்கப்படும் பொருள் முடிவதாக என்று, தன் உள்ளத்திலே அமைத்துக்கொண்டு அதற்கேற்ப வேண்டுஞ் சொற்க ளெல்லாம் அச்செய்யுளின்கண்ணே நிறையப் பெய்துரைப் பதே உள்ளுறை உவமம் என்றவாறு. இவ்வாறு பொருள் கொள்ளுதல் எளிது. முடிகென என்புழி வியங்கோளீறு தொக்குநின்றது. உள்ளுறை வகை அ. 1. உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே (தொ.பொ.238) 2. அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே (தொ.பொ.239) 3. மங்கல மொழியும் அவையல் மொழியும் மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியும் கூறிய மருங்கிற் கொள்ளும் என்ப. (தொ.பொ.240) இ. இளம்: 1. (உள்ளுறையாமாறு உணர்த்துதல்). உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப்புமெனக் கெடலரு மரபினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் என்றவாறு. உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்பதொன்று. அது கருப்பொருள் பற்றிவரும் என்பது அகத்திணையியலுள் (50) கூறப்பட்டது. உடனுறையாவது, உடனுறைவ தொன்றைச் சொல்ல அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது. உவமம் என்பது, உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது, ஒருபொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட் படுதல். நகையாவது, நகையினாற் பிறிதொரு பொருளுணர நிற்றல். சிறப்பு என்பது, இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவதனானே பிறிதோர் பொருள்கொளக் கிடப்பது. 2. (இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் பொருள் உணர்த்துதல்) 'அந்தமிலாத சிறப்பினாகிய இன்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த இயல்பு என்றவாறு. 'அந்தமில் சிறப்பு' என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல். 3. (இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் சொல் உணர்த்துதல்). மங்கல மொழி முதலாகச் சொல்லப்பட்டனவும் உள்ளுறைப் பாற்படும் என்றவாறு. மங்கலமொழியாவது, மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றல். அவையல் மொழியாவது, இடக்கரடக்கிக் கூறுதல். அது கண்கழீஇ வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது, ஒருவனைச் சிங்கம் வந்தது என்றாற்போல் கூறுவது. அவையெல்லாம் சொல்லாற் பொருள்படாமையின் உள்ளுறைப் பாற்படும். நச்: 1. (மேல்வெளிப்படக் கிளப்பன கூறிப்பின் வெளிப்படாமற் கிளக்கும் உள்ளுறை இனைத்தென்கின்றது). நான்கு நிலத்தும் உளவாய் அந்நிலத்துடனுறையும் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்பமறைத்துக் கூறும் இறைச்சியும், அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும், ஏனையுவமமும், உடனுறை யுவமமும் அன்றி நகையும் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும் அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டி வருவனவும், நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும், ஏனையுவமம் நின்று உள்ளுறையுவமத்தைத் தருங்கருப் பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று கெடுதலிலாதாகிய முறைமையினை யுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும். ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையாம் என்றார். இறைச்சிதானே (229) இறைச்சியிற் பிறக்கும் (230) என்பனவற்றுள் இறைச்சிக்குதாரணம் காட்டினாம். உவமம் உவம இயலுட் காட்டுதும். அன்புறு தகுந என்பதனுள் (231) ஏனையதற்குதாரணம் காட்டினாம். (காரணம் என்பது உதாரணம் என்றிருத்தல் வேண்டும். க.வெ.). உள்ளுறை யுவமம் ஏனை உவமம் என்னுஞ் சூத்திரத்து விரிகதிர் மண்டிலம்' என்னும் மருதக்கலியுட் சிறப்புக் கொடுத்து நின்றது காட்டினாம். அறத்தொடு நிலையும் பொழுதும் ஆறும் முதலியனவும் செவ்வனம் கூறப்படுதலின் இவை கரந்தே கூறப்படுதலிற் 'கெடலருமரபின்' என்றார். இவை தோழிக்கும் தலைவிக்கும் உரியவாறு செய்யுட்களை நோக்கியுணர்க. 2. (முற்கூறிய உள்ளுறை பற்றித் தலைவற்கு வருவதோர் வழுவமைக் கின்றது). முற்கூறிய உள்ளுறை ஐந்தானும் அவர்கள் உண்டாக்கிய முடிவிலாத சிறப்பினையுடைய இன்பம் தலைவன் கண்ணும் நிகழ்ந்து இன்பஞ் செய்தலும் காமத்துக்கு முதலாசிரியன் வகுத்த இலக்கணம். தலைவன் தன்மை என்பதொன்றின்றி தந்தன்மையெனக் கருதுதலின் யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் முனியாது இன்ப மெனக் கொள்வனெனக் கூறியவற்றை அவன் இவை இன்பந் தருமென்று கோடலின் வழுவமைக்கப் பட்டன. 3. (மேன்மூன்று பொருளும் வழுவாயமைக என்றலின் எய்தாதது எய்துவித்தது). படம் வைசிய மொழியும். தலைவற்குத் தீங்கு வருமென்று உட்கொண்டு தோழியும் தலைவியும் அதற்கு அஞ்சி அவனை வழுத்துதலும், தலைவன் தம்மை வஞ்சித் தானாகத் தலைவியும் தோழியும் கூறலும், மாறுபாடில்லாத ஆளுந் தன்மையிடத்தே பழிபடக் கூறிய மொழியும் வழுவமைதியாகக் கூறிய இலக்கணத் திடத்தே கொள்ளும் மொழியென்று கூறுவர் ஆசிரியர். வைஇயமொழி தீங்கைவைத்த மொழியுமாம். ஈ. க.வெ: இங்குக் கூறப்பட்ட உள்ளுறை ஐந்தனுள் உடனுறை என்பது இறைச்சி யையும், உவமம் என்பது உள்ளுறை உவமத்தினையும், சுட்டு என்பது அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டுதலையும் குறித்தன எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். நகைக் குறிப்புத் தோன்ற ஒன்று நினைந்து ஒன்று கூறுதல் நகை என்னும் உள்ளுறையாகும் என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் ஏற்புடையதேயாகும். உடனுறைக்கும் நகைக்கும் இளம்பூரணர் தரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் குறித்த அவ்வந் நிகழ்ச்சிக்கு மட்டுமன்றி ஏனையவற்றுக்குச் செல்லாமையின் அவற்றை உள்ளுறைக் குரிய வகையாகக் கொள்ளு தற்கு இயலவில்லை. இளம்பூரணர் சுட்டென்னும் உள்ளுறைக்கு எடுத்துக் காட்டிய 'தொடிநோக்கி' எனவரும் திருக்குறள் (1279) குறிப்பறி வுறுத்தல் என்ற தலைப்பில் தலைமகள் குறிப்பினை வெளியிட்டுரைப்பதாகலின் அதனை மறைத்துக்கூறும் உள்ளுறை வகையாகக் கொள்ளுதற் கியலவில்லை. உறழ்கலி அ. கூற்றும் மாற்றமும் இடையிடை மிடைந்தும் போக்கின் றாகல் உறழ்கலிக் கியல்பே (தொ.பொ.458) இ. இளம்: (உறழ்கலியாமாறு உணர்த்துதல்) உறழ்கலிப் பாவிற்கு இலக்கணம், கூற்றும் மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடிதல் என்றவாறு. இதனைக் கொச்சகக் கலியின்பின் வைத்தமையான் அக் கொச்சக வுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும். (எடு.) யாரிவன் எங்கூந்தல். (கலி. 89) இப்பாட்டுச் சுரிதகமின்றி வந்தவாறு கண்டு கொள்க. எற்றிற்கு? இறுதியின்கண் வந்தது சுரிதகம் ஆகாதோ எனின், சுரிதகமாகாது. சுரிதகமாவது ஆதிப்பாட்டினும் இடை நிலைப்பாட்டினும் உள்ள பொருளைத் தொகுத்து முடிப்பது. இஃது அன்னதன்று என்க. பேரா: (முறையானே உறழ்கலியுணர்த்துதல்). ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் நின்றது உறழ்கலி. 'போக்கின்று' எனவே தரவு பெறுதலும் பாட்டிடை மிடைதலும், ஐஞ்சீரடுக்கலும், ஆறுமெய்பெறுதலும், ஒழிந்த சொற்சீரடி பெறுத லும் பாமயங்கி வருதலும், அம்போ தரங்கத்திற்கோதிய அளவை பெறுதலும் எல்லாம் வெண்கலிப் பாட்டிற்குப் போலமேனின்ற அதிகாரத்தாற் பெறப்படுவ தாயிற்று. 'போக்கின்றாகல் இயல்பு' எனவே இயல்பின்றி விகார வகையால் சில போக்குடையவுமாம் என்றானாம். அதுவும் 'பல்பொருட்கேற்பின் நல்லது கோடல்' என்பதனான் வெள்ளைச் சுரிதகம் ஒழித்து ஆசிரியச் சுரிதகமே கொள்ளப்படும். என்னை? வெள்ளைச் சுரிதகம் பல வந்த வழி ஒன்றனைச் சுரிதகமெனலாகாமையானும், அச்சுரிதகம் இரண்டும் 'போக்கியல் வகையே வைப் பெனப்படுமே' எனக் கூறப்பட்ட இலக்கணத்த அல்ல வாயினும், 'எழுசீர் இறுதி ஆசிரியங்கலி யென' நின்றவழி அப்பாட்டு முடிந்து காட்டி நிற்றலானும் அதுவே கொண்டாம் சிறுபான்மை என்பது. மற்றுத் தரவின்றி வருவனவும் உளவால் எனின், இதற்குத் தரவு முதலாயின உறுப்பு விதந்து ஓதியதிலனாகலின் அஃது ஆராய்ச்சி யின்றென்பது; அற்றன்று தரவும் போக்கும் உடன்கூறியதனால் 'போக்கும் பாட்டிடை மிடைந்தும்' என்னும் அதிகாரம் பற்றி ஈண்டுப் போக்கு விலக்கினமை யின் அது பொருந்தாது; மற்று என்னை கருதியதனின், இதற்கு அதிகாரம் பட நிறீஇய கலிவெண்பாட்டு ஓதிய சூத்திரத்திற் பாட்டினை இடைகூறாது தரவும் போக்கும் உடன் கூறியதனாற் போக்கின் இலக்கணத்தையும் பெறும் என்றானாம். அதனானே, ஈண்டு விலக்குண்ட போக்குப் போலச் சிறுபான்மை தரவின்றியும் வருமென்பது. இக்கருத்தினான் அன்றே இதனைப் பாநிலையோடு கூறாது தரவு வகைப்படும் கொச்சகத்தின் பின்னர் வைப்பா னாயிற்றென்பது. இனிப்போக்குடையன தரவின்றி வாரா, அவை ஓரினம் என்று ஓதப் பட்டமையின் என்பது. மற்று இதற்குப் போக்கின்மை யும் இலக்கண மாகலின் அதுபற்றியும் பெயர் கொள்ளாமோ எனின், போக்கின்மை சிறுபான்மை கொச்சகத்திற்கும் உரிமையின் அவ்வகை உரியதோர் இலக்கணம் பற்றிப் பெயர் கூறான் என்பது. மற்று இதனையும் கொச்சகம் என்றக்கால் இழுக்கென்னை எனின், நாடகச் செய்யுட்போல வேறுவேறு துணிபொருள வாகியும் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறுபாடுடைமை நோக்கியும் இது பொருளதிகாரமாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்றுமுறைமை பற்றியும் வேறு செய்யு ளென்றான் என்பது. நச்: (போக்கின்றாதல் பாடம்). (முறையானே உறழ்கலி கூறுகின்றது). ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச் சென்று பின்னர் அவற்றை யடக்குவதோர் சுரிதகமின்றி முடிவது உறழ்கலியாம். 'போக் கின்று' எனவே ஒழிந்த உறுப்புக்கள் எல்லாம் கலிவெண்பாட்டிற்கு ஓதியவாறே வரும் என்பதூஉம், பாமயங்கி வரும் என்பதூஉம், அம்போத ரங் கத்தின் அளவே அளவு என்பதூஉம் மேனின்ற அதிகாரத்தாற் பெற்றாம். 'இயல்'பெனவே இயல்பன்றி விகாரவகையாற் சில போக்குடைய வாதலும் அவைதாம் ஆசிரியமேயாகலும் சில தரவும் போக்குமின்றி வருதலும் சிறுபான்மை கொள்க. போக்குடையன தரவின்றி வாராமையும் கொள்க. வெள்ளைக் கொச்சகம் பல வந்து அவற்றுள் ஒன்றைச் சுரிதகம் எனின் அதற்குப் போக்கியற் பொருண்மை இன்மையான் அதனை நீக்கிப் போக்கியற் பொருண்மை இன்றேனும் ஆசிரியம் வந்துழி அப்பாட்டிற் கோர் முடிவு காட்டி நிற்றலின் ஆசிரியமே போக்கியலாம் எனக் கொண்டாம். நாடகச் செய்யுட்போல வேறுவேறு துணிபொருளவாகிய பல தொடர்ந்த வேறுபாடு நோக்கியும் பொருள்வேறுபாடு நோக்கியும் வரலாற்று முறைமை நோக்கியும் அதற்குரியதோர் இலக்கணத்தால் உறழ்கலியென வேறோர் செய்யுளென்றார், கொச்சகத்தில் அடங் காமையின். ''மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை; மரபுவழிப்பட்ட சொல்லினான" என மரபு கூறலின் (தொ.மர.90). உ. ஆ.கு: உறழ்தல் எதிரிட்டுக் கூறுதல்; தருக்கமிடுதல், தடை விடைகளால் விளக்குதல் என்பன உறழ்வகையே. கூற்றும் மாற்றமும் இடையிடை வருதலால், கலிக்கென யாப்புறவைப் பொருளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டது இவ்வுறழ்கலியாம். பொருள்நிலை கருதியமைத்துக் கொள்ளப் பட்ட யாப்பியல் வளர்ச்சி வகையுள் இவ்வுறழ் கலிக்குச் சீரிய இடமுண்டு. பின்னே எழுந்த மனோன் மணியம் போன்ற நாடகக் காப்பிய முன்னோடிச் சான்று மேலைநாட்டு நூல்வகை என்பதனுடன், இவ்வுறழ் கலிக்கும் பங்குண்டு எனலாம். உன்ன நிலை அ. ஓடா, உடல்வேந் தடுக்கிய உன்னநிலை (தொ.பொ.63) ஆ. துன்னருந் துப்பின் தொடுகழல் மன்னனை உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று (பு.வெ.4) இ. இளம்: ஓடாத வெகுண்ட வேந்தரைச் சார்த்திய உன்னநிலை. உன்னம் என்பது மரம். அது தன் நாட்டகத்துக் கேடு வருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும். நச்: பிறக்கடியிடா உடன்றவேந்தனை உன்ன மரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்ன நிலை என்றது வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம் வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும், பகை வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தம் கோடலும் என இருவகைத் தெய்வத் தன்மை. அஃதுடைமையான் அடுக்கிய உன்னநிலையும் என்றார். இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையும் கருதலின் வழுவுமாயிற்று. ஈ. நாவலர்: பின்வாங்காது மலையும் வேந்தன் வெற்றியை உளத்தெண்ணிச் சார்த்து வகையால் உன்ன மரத்தில் நிமித்தம் கொள்ளும் உன்ன நிலையும். உன்னம் சிற்றிலையும் பொற்பூவும் உள்ளதோர் மரவகை. பண்டைத் தமிழ் மறவர் போர்க்கெழுமுன் உன்னமரக் கோட்டில் மாலைகளை அடுக்கி நிமித்தம் கொள்ளுவது வழக்காறு. இனிக் குறிபார்ப்பவர் தம் மன்னற்கு ஆக்கம் எனின் மரக்கோடு தழைவதும், கேடுளதேல் அழிவதும் ஆகிய ஒரு கடவுட்டன்மையுண்டென்றும் அதனால் பொருநர் போருக்குமுன் அம்மரத்தைப் பரசிக்குறி கேட்பரென்றும் அவ்வாறு கேட்டலே உன்ன நிலை என்றும் உரைப்பாரும் உளர். உ. ஆ.கு: உன்னுதல் எண்ணுதல், தம் எண்ணக்குறிப்பை வெளிப் படுத்தத் தக்கதெனக் கருதப்பட்ட மரம் 'உன்னம்' ஆகலாம். பூக்கட்டிப் பார்த்தல் இறைவன் உன்னம் அறிதலாம். இனி உன்னல் நிலைபெறு வீறுகாட்டி நினைவில் நிற்றலால் உன்னம் எனப்புறத்துறை ஆயிற்றாம். ''மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே" என்பது புறப்பாட்டு, உன்னுதல் முன்னுதலாக விரியும். ஊர்கொலை அ. ''முற்றிய ஊர்கொலை" (தொ.பொ.61) (இ.வி.603) ஆ. ''ஊர்கொலை" (பு.வெ.1) விரைபரி கடவி வில்லுடை மறவர் குரையழல் நடப்பக் குறும்பெறித் தன்து (பு.வெ.1:7) (வெட்சித்துறைகளுள் ஒன்று) இ. இளம்: சூழப்பட்ட ஊரை அழித்தல். நச்: நிரைகோடற்கு எழுந்தோர் அவர்புறஞ்சேரியை வளைத்துக் கொண்டு ஆண்டுநின்ற நிரைகாவலரைக் கொன்று பகை யறுத்தலும் நிரை மீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக் கோறலும். ஈ. நாவலர்: வளைந்துகொண்டு நிரைமீட்கப் பொருவாரைக் கோறல். ஊர் மீட்கப் பொரும் ஊரவர்க்கு ஆகுபெயர். ஊர்ச்செருவீழ்ந்தமறன் அ. ''ஊர்ச்செருவீழ்ந்த மற்றதன் மறனும்" (தொ.பொ.69) ஆ. அருமிளையொடு கிடங்கழியாமைச் செருமலைந்த சிறப்புரைத் தன்று (பு.வெ.3) ''ஊர்ச்செரு" (பு.வெ.3) அருமிளையொடு கிடங்கழியாது இகலி உருகெழு மறவர் உடன்ற ஊர்ச்செருவும் (இ.வி.609) இ. இளம்: ஊர்ச்செருவின்கண் வீழ்ந்த பாசிமறனும். நச்: அம்மதிற்புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய பாசிமறனும் பாசி என்றார் நீரிற்பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். ஈ. நாவலர்: அதுவுமன்றி, அரணகத்து ஊரில் அமர் விரும்பி ஒருவரை ஒருவர் முனைந்து பொரும் அப்பாசிப் போரின் தறுகண்மையும். எச்சம் அ. சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சம் ஆகும் (தொ.பொ.507) ஆ. சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம் (இ.அ. 58) முற்படக் கிளந்த பொருட்படைக் கெல்லாம் எச்சம் ஆகி வரும்வழி யறிந்து கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே (இ.அ.59) சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும் சொல்லி முடித்தல் வேண்டுவ தெச்சம் (ந.அ.232) இ. இளம்: (செய்யுள் உறுப்புகளுள்) (எச்சவகையாமாறு உணர்த்துதல்) பிறிதோர் சொல்லொடும் பிறிதோர் குறிப்பொடும் முடிவுகொள்ளும் இயற்கையைப் பொருந்திய செய்யுள் எச்சமாகும் என்றவாறு. எனவே சொல்லெச்சம் குறிப்பெச்சமென இருவகை யாயின. அது எச்சவியலுள் 'பிரிநிலைவினை' யென்னும் சூத்திரத்துள் (34) பிரிநிலை என்பது முதலாகச் சொல்லப்பட்ட எண்வகையானும் வருவன சொல் லெச்சமாம். குறிப்பென்று ஓதப்பட்டது குறிப்பெச்சமாம். பேரா: (எச்சங்கூறுகின்றது). கூற்றினானும் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தொடு 'முடிவு கொள் இயற்கை' எனவே, செய்யுளின் கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடிக்கப்படும் என்பது பெற்றாம். ''செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே" எனச் செய்யுண் முடிந்தவழியும் இவற்றான் யாங் குறையுடையேம் அல்லேம் என்று தலைவற்குச் சொன்னாளேல் அது கூற்றெச்சமாம். என்னை? அவ்வாறு கூறவுஞ் சிதைந்த தின்மையின். தலைமகட்குச் சொன்னாளேல் அது குறிப் பெச்சம். என்னை? அது காண்பாயாகில் காணெனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகி அதுதான் கூறாளாகலின் என்பது. நச்: (முறையே எச்சம் என்னும் உறுப்புக்கூறுகின்றது). கூற்றினானும் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந்திய கிளவி எச்சம் என்னும் உறுப்பாம். முடிவுகொள் இயற்கை எனவே செய்யுட் கண்ணதன்றிப் பின்கொணர்ந்து முடித்தல் பெற்றாம். ''செங்களம்... தட்டே" இக்காந்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம்; அக்கூற்றும் செய்யுட்குச் சிதைவின்மையின். அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி இடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம்; அவனைக் கூடுக எனத்தான் கூறாளாகலின். உ. ஆ.கு: எச்சம் எஞ்சியிருப்பது. தக்கார் ''தகவிலர்" என்னும் திருக்குறளில் வரும் எச்சம் இப்பொருட்டதே. சடுகுடு என்னும் ஆட்டத்தில் பாடிச் செல்பவன் பாடுங்கால் இடையே மூச்சு விடுதலை 'எச்சுப்போதல்' என்பதும், ''எச்சவன் இளைத்தவன்" என்னும் இணைமொழியில் வரும் 'எச்சவன்' என்பதும் இவ்வழிப் பட்டனவே. எட்டுவகை நுதலிய அவையம் அ. ''எட்டுவகை நுதலிய அவையகத் தானும்" (தொ.பொ.75) ஆ. ''அவைய முல்லை" (பு.வெ.8) ''நவை நீங்க நடுவு கூறும் அவைய மாந்தர் இயல்புரைத் தன்று" (பு.வெ.8) தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித் தொடைவிடை ஊழிவை தோலாத் தொடைவேட்டு அழிபடல் ஆற்றல் அறிமுறையென் றெட்டின் வழிபடர்தல் வல்ல தவை (பு.வெ.8) குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மைதூய்மை நடுச்சொல்லு நல்லணி ஆக்கம் கெடுக்கும் அழுக்கா றவாவின்மை அவ்விரண்டோ டெட்டும் இழுக்கா அவையின்கண் எட்டு (பு.வெ.8 மேற்.) எட்டுவகை நுதலிய அவைய முல்லை (இ.வி.613) இ. இளம்: எட்டுப்பாகுபாட்டைக் குறித்த அவையகமும். எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான் ஏனைய அவையின் இவ்வகை மிகுதி உடைத்து என்றவாறு. அவையாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்பன. அவை எட்டினானும் அவை வருமாறு: குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காதல் இன்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின் மையென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை. (ஆசிரியமாலை) (புறத்திரட்டு, அவையறிதல்) நச்: (பாடம்: அவையம்). எண்வகைக்குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமை யானும் அவை குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறின்மை, அவாவின்மை, என இவையுடையராய் அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல். ''குடிப்பிறப்புடுத்து" என இதனுள் எட்டும் வந்தன. ஈ. நாவலர்: எண்வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப் பெறும் சிறப்புடைய அவையத்து முந்தியிருக்கும் வீறு கூறுகிறது. அத்தகைய சால்புகள் ஒழுக்கம்.... அழுக்காறாமை எனப்படுதல் நூலானறிந்தது. எண் அ. 1. வண்ணகம் தானே, தரவே, தாழிசை எண்ணே வாரமென் றந்நால் வகையில் தோன்றும் என்ப. (தொ.பொ.444) 2. முதற்றொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே (தொ.பொ.448) 3. எண்ணிடை ஒழிதல் ஏதம் இன்றே (தொ.பொ.449) ஆ. ஈரடி இரண்டும் ஓரடி நான்கும் முச்சீர் எட்டும் இருசீர் இரட்டியும் அச்சீர் குறையினும் அம்போ தரங்கம் (யா.வி.83 மேற்.) சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையின் சுருங்கி மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ அளவின வெல்லாம் அம்போ தரங்கம் (சி.கா.) உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த அடியான் நீர்த்திரை போல அசையடி பெறினவை அம்போ தரங்கம் (அவிநயம்.) முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே (யா.வி.83) நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி முச்சீர் குறள்நடுவே மடுப்பின் ......... அம்போ தரங்கஒத் தாழிசையே (யா.கா.31) ஆங்கதன் இடையே அளவடி சிந்தடி பாங்கமை குறளடி படுநீர்த் திரைபோல் ஓய்ந்தோய்ந் துற்றிடு மாயின் அன்ன அம்போ தரங்க வொத்தா ழிசையும் (இ.வி.738) அம்போ தரங்கம் அம்பளாம் திரைபோல் அளவடி ஈரடி இரண்டும் பேரெண்; அளவடி ஓரடி நான்கும் அளவெண்; சிந்தடி ஓரடி எட்டும் இடையெண்; குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண் எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச் சுருங்கவும் அந்நால் துணையுறுப் புடைத்தே (தொ.வி.231) இ. இளம்: 1. (வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல்) வண்ணக ஒத்தாழிசையாவது தரவும் தாழிசையும் எண்ணும் சுரிதகமும் என்று சொல்லப்பட்ட நான்கு உறுப்பினையும் உடைத்து என்றவாறு. 2. (எண்ணாமாறு உணர்த்துதல்). முதற்றொடுத்த உறுப்புப் பெருகிப்பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கி வரும் என்றவாறு. அதனை இரண்டடியான் வருவன இரண்டும், ஓரடியான் வருவன நான்கும், சிந்தடியான் வருவன எட்டும், குறளடியான் வருவன பதினாறும் எனப்பிற நூலாசிரியர் உரைப்பர். இவ்வாசிரியர்க்கு வரையறை இலவாம். 3. (மேலதற்கோர் புறநடை உணர்த்துதல்) மேற்சொல்லப்பட்ட எண் ஒரோஒன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது, தனிச்சொல் இல்லாவழி என்றவாறு. எனவே சொல்லப்பட்ட உறுப்புக்கள் தனிச்சொல் வருவழி இடை யொழியாமல் வருதல் வேண்டும் என்றவாறு. தனிச்சொல் உளப்பட ஐந்துறுப்பாயிற்று. இனித் தனிச்சொல் இன்றி எண் இடையிட்டவழி 'ஒருபோகு' எனப்பெயர் பெறும். பேரா: 1. எண்ணுறுப்புத்தான் நீர்த்திரைபோல வரவரச் சுருங்கி வருதலின் அம்போதரங்கம் எனவும் அமையும். 2. எண்ணுறுப்பாமாறு உணர்த்துகின்றது. முதல் பெருகியவழி முதலெண். 'தொடை' என்றதனான் தலையெண் இரண்டு அளவடியான் ஒரு தொடையாகி வருமெனவும், 'பெருகி' என்றதனான் இரண் டடியான் இரண்டனை நாட்ட அதுவேபற்றி, முதல் பெருகிய என்றதனான் ஒழிந்த எண்ணுத்தொடை பெறுதலும் நேர்ந்தானாம். இதனை, முதலெனவே வழிமுறை வருவனவும் எண்ணவென்பது பெற்றாம். அவை, இத்துணை என்பது அறியுமா றென்பதென்னை? 'முதற்றொடை பெருகி' என்றதனான் இரண்டடியான் இரண்டனை நாட்டி அதுவே பற்றிச் சுருங்கும் என்றமையின் ஈரடியிற் சுருங்கி ஓரடியாதலும், ஓரடியிற் சுருங்கி இரு சீராதலும், இருசீரிற் சுருங்கி ஒருசீர் ஆதலும் கொள்ளப்படும்; 'நாற்சீர்கொண்ட தடியெனப் படுமே' என்றானாகலின். ஆகவே இருசீர் எனப்பட்டது குறளடியாயினும் இவை இரண்டு தொடர்ந் தன்றி எதுகையாய் அமையாமையிற் குறளடி என்னான் ஆயினான் என்பது. ஒருசீர்க்கும் அளவடிப்படுத்துத் தொடைகோடல் ஒக்கும். என்னை? அளவடிப்படுத்தே தொடைகொள்பவாகலின். அஃதேல் ஒருசீரினும் சுருங்கப்பெறாதோ எனின் கந்தருவ நூலின்கண்ணும் ஒருசீரிற் சுருங்கின வாராவாகலின் இவனும் 'பிறநூல் முடிந்தது தானுடம்படுதல்' என்னும் உத்திவகையான் ஒருசீரிற் சுருங்குதல் நேரான் என்பது. மற்று வழிமுறையாற் பாகஞ் சுருங்குதல் பெறுமாறு என்னை எனின், 'வகார மிசையும் மகாரங் குறுகும்' (புள்ளி. 35) என்றாற்போல மேலைக் கொண்டும் வருகின்றவாற்றாற் பாகமே சுருங்குதல் பெறலாம் என்பது. மன் என்பது ஆக்கத்தின் கண்ணும் வந்தது ஆகலிற் சுருங்கிப் பலவாம் என்பது கொள்க. எனவே, இரண்டடி இரண்டும், ஓரடி நான்கும், இருசீர் எட்டும், ஒருசீர் பதினாறுமாகி எண்பல்கும் என்பது. இருசீர்குறளடியு மாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண் எனவே படும். ஆகவே, ஒழிந்த எண்மூன்றும் தலை யெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணும் என மூன்றும் கூட்டி எண்ணி நிற்றற் குரியவாயின. இது நோக்கிப் போலும் எண்ணென்று அடக்காது, 'சின்ன மல்லாக்காலை' என ஒரு சீரினை வேறுபடுத்துமேற் கூறுகின்றதென்பது. இனி, அளவடியினை நாட்டியே முதற்றொடை பெருகிச் சுருங்கும் என்றமையின், அளவடியிற் சுருங்கின இருசீரும் ஒரோவழிச் சின்ன மெனப்படும். இனி அல்லாதார் ஈரடி இரண்டினைப் பேரெண் எனவும், ஓரடி நான்கினைச் சிற்றெண் எனவும், கடை எண்ணினை இடையெண் எனவும், ஒருசீரான் வருவனவற்றை அளவெண் எனவுஞ் சொல்லுப. அளவடியாக நோக்கிப் பேரெண் சிற்றெண் என்றலும் சின்னம் பட்டவழி இடைநின்றது இடையெண் ஆதலும் எல்லை அளவைத்தாகிய சின்னம் அளவெண்ணாதலும் அமையும். அவற்றுள் இருசீரினை முச்சீராகவும் ஒருசீரினை இருசீராகவும் அலகு வைப்பி னும் அதனை, அசையும் சீரும் இசையொடு சேர்த்தி என்பதனான் மறுக்க. 3. (மேலதற்கோர் புறனடை). முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று. சின்ன எண்ணொன்று மொழிந்து நில்லாவிடத்து. எனவே, சின்ன எண் ஒழியாது மூவகை எண்ணும் ஒழிதலும், சின்ன எண் ஒழிய மூவகை எண்ணும் பெறுதல் பெரிதும் சுவையுடைத்து என்றவா றாயிற்று. இதனானே 'எண்ணொழி தல்' எண்ணாது 'இடை' என்றதனால் தலையெண்ணும் இடையெண்ணும் அல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியும் குறைந்து வரும் என்பதும் கொள்க. மூவகை எண்ணும் சின்னமும் பெற்று வருதல் சிறப் புடைமை. 'ஏதமின்று' என்றதனாற் பெறுதும். நச்: 1. (எண்ணுறுப்பு) நீர்த்திரைபோல் முறையே சுருங்கி வருதலின் அதனை அம்போதரங்க ஒத்தாழிசை என்றும், வண்ணகம் என்றதனை அராக வுறுப்பாக்கி அவ்வுறுப்புடையது வண்ணக ஒத்தாழிசையென்றும் கூறுவாருமுளர். இது பின்னுள்ளோர் கூறிய நூற்கெல்லாம் முதனூலாத லின், தொல்காப்பியனாரை மாறுபடுதல் மரபன்றென்க. 2. (எண்ணுறுப்பாமாறு உணர்த்துகின்றது). எண்ணாவது முற்படப் பெருகிய வழிமுறையாற் சுருங்கி வரப்பெறும் 'தொடை; என்றதனான் ஒழிந்த எண்களும் தொடைபெறுதலும் நோக்காராயிற்று. 'முற்பட' எனவே பிற்படச் சிலவரும் என்பது பெற்றாம். பெருகி என்றதனான் ஈரடியான் இரண்டைநாட்டி வழிமுறை சுருங்கி வரும் எனவே ஈரடியிற் சுருங்கி ஓரடியாயும், ஓரடியிற் சுருங்கி இரு சீராயும், இருசீரிற் சுருங்கி ஒரு சீராயும் ஒன்றற்கொன்று பாகமே சுருங்குதல் கொள்க. 'நாற்சீர் கொண்ட தடியெனப்படும்' (செய்.32) என்றலின் அளவடியே கொள்க. இருசீரான் வருவன இரண் டிணைந்து அளவடி யாதற்கேற்பத் தொடைகொண்டு சுவடுபட நிற்றலானும், ஒருசீரான் வருவனவும் நான்கிணைந்து அளவடியாதற்கேற்பத் தொடைகொண்டு சுவடுபட நிற்றலானும் அவையும் அளவடிக்கண் அடங்கின. மன் ஆக்கமாத லிற் சுருங்கியும் பலவாதல் கொள்க. ஈரடியும் ஓரடியும் இருசீரும் ஒருசீருமாய்ச் சுருங்கி வாரா நிற்கவும், இரண்டிற்கு நான்கும், நான்கிற்கு எட்டும், எட்டிற்குப் பதினாறுமாய் ஒன்றற்கொன்று உறுப்பு வகையான் இரட்டிக்கும் எனக் கொள்க. இருசீர் வருவன குறளடி எனப் படுதலின் மேற்சின்னமென்பன அடியின் அடங்கா ஒருசீரேயாயின. ஆகவே இதனை ஒழிந்த எண் மூன்றும் நான்குமாய்த் தலையெண் இடையெண் கடையெண் எனவும் படுதல் நோக்கிமேல் எண்ணும் சின்னமும் எனப்பிரித்தோதுப. இனி அளவடியிற் சுருங்கும் என்றலின் இவ்வளவடியிற் சுருங்கிய இருசீரையும் ஒருவழிச் சின்னமெனவும்படும். இனி ஈரடி இரண்டினைப் பேரெண் எனவும், ஓரடியதனிற் குறைதலிற் சிற்றெண் எனவும், இவற்றிற்கும் பின்வரும் சின்னத்திற்கும் இடையேநிற்றலின் இருசீரை இரண் டிடையெண் எனவும் முடிவிற்கு அளவாய் நிற்கும் சின்னத்தினை அளவெண் எனவும் பெயர் கூறினும் அமையும். இருசீரினை முச்சீராக்கியும் ஒருசீரினை இருசீராக்கியும் அலகுவைப் பின் அதற்கு அசையும் சீரும் இசையொடு சேராமை உணர்க. 3. (மேலதற்கோர் புறனடை) முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று, சின்ன எண்ணொன்று நில்லாத இடத்து. எனவே சின்ன எண்ணொழியாது மூவகையெண்ணும் ஒழிதலும், சின்ன எண்ணொழியுமிடத்து மூவகை யெண்ணும் ஒழியாது வருவதும் சுவையுடைத்தாயிற்று. இடையென்றதனாற் றலையெண்ணும் இடையெண்ணும் அல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியும் குறைந்து வருதலும் கொள்க. மூவகை எண்ணும் சின்னமும் பெற்று வருதல் சிறப் புடைமை, ஏதமின் றென்பதனாற் பெறுதும். உ. ஆ.கு: அம்போதரங்க ஒருபோகு காண்க. எண்ணப்படா எழுத்து அ. உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான (தொ.பொ.351) ஆ. ஒற்றள பெழாவழிப் பெற்றஅல கிலவே (கா.பா.) அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் அலகியல் பெய்தா என்மனார் புலவர் (அவிநயம்) தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே அளபெடை அல்லாக் காலை யான (யா.வி.3. மே) (யா.கா.38. மே) ஈரொற் றாயினும் மூவொற் றாயினும் ஓரொற் றியல என்மனார் புலவர் (யா.வி.3. மேற்.) (யா.கா.38. மே.) ஒற்றள பெழாவழிப் பெற்றஅல கின்மையும் (இ.வி.742) இ. இளம்: (அடிக்குரிய எழுத்து வரையறை உணர்த்துதல்). உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா; உயிர்போல இயக்க மின்மையான், உம்மை எச்சவும்மையாதலாற் குறுகிய வுயிர்த்தாகிய குற்றியலிகரமும் குற்றியலுகரமும் எண்ணப் படா என்று கொள்க. எனவே எண்ணப்படுவன உயிரும் உயிர் மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும். பேரா: (எழுத்தெண்ணிச் சீர்வகுத்த முறையானே ஒற்றும் ஆய்தமும் குற்று கரமும் ஒருங்கெண்ணப்படுதல் எய்தினவற்றை விலக்கியவாறு). தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தம் தன்மையான ஒலித்தற்றொழில் இல்லாத எழுத்துக்கள் ஈண்டெண்ணப்படா; அங்ஙனம் எண்ணப்படாத வும் எழுத்தெனப்படுதலிற் சிறிது நாப்புடை பெயருந் துணையான் ஒலித்தலும் மொழி சார்ந்து ஒலித்தலும் உடையவன்றே! அங்ஙனம் ஒரு வாற்றான் உயிர்க்குந் திறமுடையவாயினும் அவ் வுயிர்க்கும் திறம் ஈண்டுச் செய்யுட்பாற்படுங்கால் உபகாரப்பட இயங்குமாறில வாகலின் எண்ணப்படா. மேற்சீர்தளை இருநிலைமைப்படுத்த அதிகாரத்தான் ஒற்றும் குற்று கரமுமே ஈண்டு விலக்கினான் என்பது இச்சூத்திரம் வலித்ததாயிற்று, ''ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்" (செய்.8) எனவும் மேற்கூறினான் ஆதலின் என்பது. நச்: ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் எழுத்தெனப்பெயர் கூறினாரேனும் எழுத்தாக எண்ணப்படா; என்னை? அவை தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்குக் கூறிய எண்வகை நிலத்தினும் விளங்க இயங்காமையின். என்றது, எழுத்தெண்ணுமிடத்து அவை ஒழித்தெண்ணுக என்றவாறு. இது கட்டளையடிக்கு, ''பேர்ந்து சென்று" என்பதனுள் அவை ஒழித்து எண்ணப் பட்டது. பின் னுள்ளோர் கொண்ட கட்டளைக் கலித்துறை, சந்தம் தாண்டகங்கட்கும் இவ்வாறெழுத்தெண்ணுதல் வேண்டு மென்றுணர்க. எண்ணான்கு பொருளும், நானான்கு பொருளும் அ. ''பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான் கென்ப" (தொ.பொ.245) இ. இளம்: (சுவையும் சுவைக்குறிப்பும் உணர்த்துதல்) விளையாட்டாயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையும் குறித்து அதன்புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் புலவர். பண்ணையுடையது பண்ணையென்றார்; புறத்து நிகழ்வதனைப் புறமென்றார். பண்ணைத் தோன்றிய கண்ணியபுறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், எண்ணான்கு பொருளுங் கண்ணியபுறன் என ஒருசொல் நடையாக ஒட்டித் தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது. ஈண்டுச் சொல்லப்பட்ட பதினாறு பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையாற் பண்ணைத் தோன்றிய என்றார். என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்கண் தோன்றாமையின். பிறவும் அன்ன. முப்பத்திரண்டாவன: நகை முதலானவற்றிற்கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத்து ஓதப்படுகின்றன. அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக்குறிப்பு, இழிப்புக் குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக் குறிப்பு, அவலக்குறிப்பு, உருத்திரக் குறிப்பு, நகைக்குறிப்பு, நடுவுநிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப் பட்ட பதினெட்டினும் நடுவுநிலையும் அதன் குறிப்பும் ஒழித்த பதினாறுமாம். 'வியப்பு' எனினும் 'அற்புதம்' எனினும் ஒக்கும். 'காமம்' எனினும் 'சிருங்காரம்' எனினும் ஒக்கும். 'அவலம்' எனினும் 'கருணை' எனினும் ஒக்கும். 'உருத்திரம்' எனினும் 'வெகுளி' எனினும் ஒக்கும். வீரம் என்பது மாற்றாரைக் குறித்து நிகழ்வது. அச்சம் என்பது, அஞ்சத் தகுவன கண்டவழி நிகழ்வது. இழிப்பு என்பது, இழிக்கத்தக்கன கண்டவழி நிகழ்வது. வியப்பு என்பது, வியக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது. காமம் என்பது, இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது. அவலம் என்பது, இழவு பற்றிப் பிறப்பது. உருத்திரம் என்பது, அவமதிப்பாற் பிறப்பது. நகை என்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது. நடுவுநிலைமை என்பது, யாதொன்றும் விகாரப்படாமை. அவை இற்றாக மத்திமம் என்பதனை ஈண்டொழித்தது என்னை யெனின், ''மத்திமம் என்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடும் புல்லா தாகிய பொலிவிற் றென்ப" ''நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற் சேர்த்தி யோர்க்கும் சார்ந்துபடு வோர்க்கும் ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப." ''உய்ப்போ ரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவர் அறிவரொடு பிறரும் காமம் வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும் அச்சுவை ஒருதலை ஆதலின் அதனை அவர்க்கில ஆதலின் மெய்த்தலைப் படுக்கவிதன் மிகவறிந் தோரே" என்பது செயிற்றியச் சூத்திரம். இதனானே இது வழக் கிலக்கணம் அன்று என உணர்க. இனி, சுவை என்பது காணப்படு பொருளாற் காண்போர் அகத்தின் வருவதோர் விகாரம். ''இருவகை நிலத்தின் இயல்வது சுவையே" என்றும், ''நின்ற சுவையே... ஒன்றிய நிகழ்ச்சி சத்துவம் என்ப" என்றும், ''சத்துவம் என்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளித்தல் கண்ணீர் வார்தல் நடுக்கங் கடுத்தல் வியர்த்தல் தேற்றம் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிப சத்துவந் தானே" என்றும் சார்பொருள் உரைப்ப. பேயானும் புலியானும் கண்டான் ஒருவன் அஞ்சியவழி மயக்கமும் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்புமுளவாகின்றே. அவற்றுள் அச்சத் திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலந் தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு. நடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவது என்று கொள்க. ஏனைய மனநிகழ்ச்சி. பிறவுமன்ன. இவற்றின் விரிவை நாடக நூலிற் காண்க. பேரா: (மெய்ப்பாடு பிறர் வேண்டுமாற்றான் இத்துணைப் பகுதிப்படு மென்றுணர்த்துதல் நுதலிற்று). முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் தாம் நுகரும் இன்ப விளையாட்டி னுள் தோன்றிய முப்பத்திரண்டு பொருளும் அவை கருதிய பொருட்பகுதி பதினாறாகி அடங்கும் நாடக நூலாசிரியர்க்கு. அது முதனூலை நோக்கிக் கூறியவாறு போலும். முப்பத்திரண்டாவன யாவை எனின், ஒன்பது சுவை எனப்பட்டனவற்றுள் உருத்திரம் ஒழிந்த எட்டனையும் கூறுங்காற் சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப் பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீர் அரும்பலும், மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறுபாடாகிய சத்துவங் களுமென நான்காக்கி அச்சுவை எட்டோடுங் கூட்டி ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்திரண்டாம் என்பது. எனவே, சுவைப்பொருளும் சுவை யுணர்வும் குறிப்பும் விறலுமென நான்காயின. விறல் எனினும் சத்துவம் எனினும் ஒக்கும். சுவைப்பொருள் என்பன, அறுசுவைக்கு முதலாகிய வேம்பும் கடுவும் உப்பும் புளியும் பாக்கும், கரும்பும் போல்வன. அவையாமாறு: நகைச் சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறும் தமிழும் குருடரும் முடவரும் செல்லும் செலவும் பித்தரும் களியரும் சுற்றத்தாரை இகழ்ந்தலும் குழவிகூறும் மழலையும் போல்வன. அச்சப் பொருளாவன: ''வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை முள்ளெயிற் றரவே முழங்கழற் செந்தீ ஈற்றா மதமா ஏக பாதம் கூற்றம் கோண்மா குன்றுறை யசுணம்" என்று சொல்லப்பட்டன போல்வன. இவற்றைச் சுவை கோடல் என்பது என்னை எனின், நகையும் அச்சமும் முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவான் ஒருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவை எனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென்னும் பொறியும் தலைப்பெய்துழி யல்லது கைப்புச் சுவை பிறவாதது போல அப் பொருள் கண்டவழியல்லது நகையும் அச்சமும் தோன்றா. ஒழிந்த காமம் முதலியனவும் அன்ன. இக்கருத்தே பற்றிப் பிற்காலத்து நாடகநூல் செய்த ஆசிரியரும் 'இருவகை நிலத்தின் இயல்வது சுவையே' என்றார் என்பது. இனி, இருவகை நிலனென்பன உய்ப்போன் செய்தது காண்போர்க்கு எய்துதல் அன்றோ எனின், சுவை என்பது ஒப்பினான் ஆயபெய ராகலான் வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுணர் வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவ தன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடி வருகின்றான் ஒருவனை மற்றொருவன் கண்ட வழி இவன் வள்ளெயிற்றரிமா முதலாயின கண்டு அஞ்சினான் என்றறிவதல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான்காண்டல் வேண்டுவதன்று; தான்கண் டானாயின், அதுவும் சுவையெனவே படும். ஆகவே அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணை செய்தலும் கண்டோர்க்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போனுய்த்த அறிவின் பெற்றியாற் செல்லாதாகலின் இருவகை நிலமெனப்படுவன சுவைப்பொரு ளும் சுவைத்தோனு மென இருநிலத்தும் நிகழும் என்பதே பொருளாதல் வேண்டும் என்பது. குறிப்பென்பது, கைப்பின் சுவையுணர்வு பிறந்தவழி வெறுப்பு முதலாயின உள்ள நிகழ்ச்சிபோல, அஞ்சுதக்கன கண்டவழி அதனை நோக்காது வெறுக்கும் உள்ள நிகழ்ச்சி. விறல் என்பன, அவ்வுள்ள நிகழ்ச்சி பிறந்தவழி வேம்பு தின்றார்க்குத் தலைநடுங்குவது போலத் தாமே தோன்றும் நடுக்கம் முதலாயின. இவ்வகையால் இந்நான்கினையும் எட்டொடும் உறழவே முப்பத்திரண் டாயின. இனி, அவை பதினாறு ஆயினவாறு என்னை எனின், வேம்பு முதலா யின பொருளும் அதனொடு நாமுதலாயின பொறியும் வேறுவேறு நின்றவழிச் சுவையென்று சொல்வதே பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலானும் அவை பதினாறும் எட்டெனப்படும்; இனிக் குறிப்பும் சத்துவமும் என்பனவும் உள்ள நிகழ்ச்சியும் உடம்பின் வேறு பாடும் என்பராகலின் அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சத்துவ மாகலின் அவை ஈரெட்டுப் பதினாறாகும் என்பது மற்றிவை பண்ணைத் தோன்றுவன வாயின், இது பொருளோத்தினுள் ஆராய்வதென்னை? நாடக வழக்கந்தானே, ஒருவன் செய்ததனை ஒருவன் வழக்கினின்றும் வாங்கிக் கொண்டு பின்னர்ச் செய்கின்றதாகலானும் வழக்கெனப்படாது ஆகலானும் ஈண்டு ஆராய்வது பிறிதெடுத்துரைத்தல் என்னும் குற்றமாம் என்பது கடா. அதுவன்றே இச்சூத்திரம் பிறன்கோள் கூறலென்னும் உத்திவகையாற்கூறி மரபாயிற்றென்பது. அ. ''எண்ணுவண்ணம் எண்ணுப் பயிலும்" (தொ.பொ.529) ஆ. ''எண்" (வீ.சோ.142) ''எண்ணுவண்ணம்" (தொ.வி.250 இ.வி.757) ''எண்ணி வருவன எண்ணெனப் படுமே" (மு.வீ.987) எண்ணுவண்ணம் இ. இளம்: (எண்ணுவண்ணம் உணர்த்துதல்) எண்ணுப் பயின்று வருவது எண்ணு வண்ணமாம். எடு: ''நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே" எனவரும். பேரா: எண்ணுப் பயில்வது எண்ணுவண்ணம். இஃது அடியெண்ணுப் பயிறலான் எண்ணுவண்ணமெனக் காரணப் பெயராயிற்று. ''நன்னன் ஏற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி" என்றாற் போல்வன. நச்: எண்ணு வண்ணமாவது அடிக்கண்ணே பயின்று வருவது. இது காரணப் பெயர். ''நன்னன் ஏற்றை... கட்டி" என வரும். ஈ. யா.வி: எண்ணுவண்ணம் என்பது செவ்வெண்ணினாலும், உம்மை எண்ணினா லும், என எண்ணினாலும் என்றா எண்ணினாலும் பிறவும் யாதானும் ஓர் எண்ணினாலும் வருவது. எதுகை அ. 1. மோனை எதுகை முரணே இயைபென நால்நெறி மரபின தொடைவகை என்ப. (தொ.பொ.393) 2. அஃதொழித் தொன்றின் எதுகை ஆகும். (தொ.பொ.398) 3. ஆயிரு தொடைக்கும் கிளையெழுத் துரிய (தொ.பொ.399) ஆ. இரண்டாம் எழுத்தொன் றியைவதே எதுகை (யா.வி.36) இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் ... எதுகை (யா.கா.16) ஏன்றா முதலள வொத்திரண் டாமெழுத்தொன்றிவரின் சான்றார் அதனை எதுகையென் றோதுவர் (வீ.சோ.111) ஏனை, இரண்டாம் எழுத்தோ டியையின் எதுகையும் (இ.வி.723) எதுகை என்ப தியைவன மொழிக்கண் முதலெழுத் தளவொத்து முதலொழித் தொன்றுதல் (தொ.வி.213) இரண்டாம் எழுத்தொன் றுவதெது கையே (மு.வீ.யா.26) இ. இளம்: 1. (தொடைப்பாகுபாடுணர்த்துதல்). (எதுகையாமாறுணர்த்துதல்). அடிதொறும் முதலெழுத்தொன்றாமல் இரண்டாமெழுத் தொன்றின் எதுகையாகும். 3. (எய்தியதன்மேல் சிறப்புவிதி யுணர்த்தல்). மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலன்றி வருக்க எழுத்தும் உரிய என்றவாறு. ''ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து" (கலித்.கடவுள்) பேரா: 1. (தூக்குணர்த்தித் தொடைவகை உணர்த்துவான் எழுந்தான். அவைதாம் இவையெனப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல்). 2. (இரண்டாம் எண்ணு முறைமைக்கண் நின்ற எதுகைத் தொடை யுணர்த்துதல்). இரண்டடியினும் முதனின்ற சீர் முதலெழுத்திரண்டும் ஒழிய அல்லன வெல்லாம் ஒன்றி வருதலும் ஒரோ வெழுத்தே ஒன்றி வருதலுமென இங்ஙனங் கூறியவற்றுள் அஃதொழித்து அச்சீர் முழுதொன்றில் தலையாகெதுகை யென்றும், இரண்டாமெழுத் தொன்றில் அடியா கெதுகை யென்றும் வழங்கப்படும். அயலெழுத்தொன்றின் என்னாது முதலெழுத்தினைச் சுட்டிக் கூறுதல் என்னை எனின், இவ்வாறு எதுகையாங்கால் முதலெழுத்துக்களின் மாத்திரை தம்மின் ஒத்து வரல் வேண்டுமென்றற்குக் கூறினான் என்பது. (அடியெதுகையை) இடையாகெதுகையெனவும் அமையும். ஒழிந்தன கடையாகெதுகை எனப்படும். 3. (மேற்கூறிய தொடைப்பாற் பட்டுவருவன வேறுபல தொடைகண்டு அவை கூறுகின்றது). ஆயிரு தொடை என்பன மோனையும் எதுகையும், இவை இரண்டற்கும் கிளையெழுத்துக்களும் ஒன்றி வரப்பெறும். இதன் கருத்து, அங்ஙனங் கிளையாகி வந்த வேறுபாட்டான் எல்லாத் தொடையும் வேறு பலவாம் என்றவாறு. கிளையெழுத் தென்பன, வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் உயிருமென இவை. இவையெல்லாம் ஒரே கிளைமையுடைமையிற் கிளையெனப்பட்டது. இனி, ஆசெதுகையும் மூன்றாமெழுத்தொன் றெதுகையும் அடியெதுகைக் குரித்தாகிய இரண்டாமெழுத்தின் முன்னும் பின்னும் தொடர்ந்து நிற்றலின் அவையும் கிளையெனினும் அமையும்; அற்றன்று; அடிமோனை யும் தலையாகெதுகையும் அடியெதுகையும் வந்து, நுந்தை என்னும் சீர்க்கண் மூன்றா மெழுத்தொன்றி வருதல் 'மெய்பெறு மரபிற் றொடை' எனப்பட் டமையின். ஆண்டு அது கிளையாகாது. மெய்த்தல் ஒத்தல் என்ற வழியன்றி, ஈதல் காய்தல் என்றவழி நெடின் மோனையாய்த் திரிபுபடுதலின் ஆசிடை எதுகையும் கிளையாகாது. ஈண்டு ஓதிய கிளை உயிரும் ஒற்றுமென இரண்டாகலின் அவ்விரு வாற்றானும் கிளைமைபற்றி அனுக்கொள்ளப்படும். என்னை? 'அஆ ஆயிரண் டங்காந்தியலும்' அகர ஆகாரம் கிளையாயின. ஐகார ஔகாரம் போலி வகையான் அவை எனப்படும். இ ஈ எ ஏ என்பனவும் உ ஊ ஒ ஓ என்பனவும் உடன்பிறப்பினவாகலான் அவையும் கிளை எனப்படும். ஒற்றுக்கிளை என்பன தம்முன்னர்த் தாம் வருதலும் பிறவருதலுமென இரண்டு. அவற்றுள் தம் முன்னர்த்தாம் வருங்கால் வந்த உயிரே வாரா. அவ்வனுவிற்கு ஓதிய உயிரே வேறுபட வருமென்பது. இனி ஓரடிக்கண்ணே ஐஞ்சீரானும் அறுசீரானும் வந்த வழியினும் அனுவெனப்படும் என்பது. இனித் தம் முன்னாகப் பிற வருங்கால் வந்த உயிரே வரவும் பெறுமெனக் கொள்க. பிற வருங்கால் ஞகர நகரங்களும், மகர வகரங்களும், சகர தகரங்களும் இனம் பற்றிக் கிளையாம் என்பது. அவற்றுள் மகர வகரங்கள் இதழ்பற்றிப் பிறத்தலிற் கிளையாயின. இவ்வாறே இ ஈ எ ஏ என்பனவும் யகரமும் மிடற்றுவளியாற் பிறத்தலானும் இயல்பொப் புமையானும் கிளையாம் என்பது. நச்: 1. (நிறுத்தமுறையானே தொடைகூறுகின்றார்; அவற்றது பெயரும் முறையும் உணர்த்துதல்). 2. (இஃது எதுகை கூறுகின்றது). முற்கூறிய முதலெழுத்தினை ஒழித்து இரண்டடியினும், சீர்முழுதும் ஒன்றினும், இரண்டாமெழுத்தே ஒன்றினும், ஓரடிக்கண் முதலிரு சீர்க்கண் இரண்டாமெழுத்து ஒன்றினும், முதற்சீரினும் மூன்றாம் சீரினும் இரண்டா மெழுத்து ஒன்றினும், முதற்சீரினும் நான்காம் சீரினும் இரண்டா மெழுத்து ஒன்றினும், முதற்சீரொழித்து ஏனைய ஒன்றினும், முதலயற்சீரொழித்து ஏனைய ஒன்றினும் ஈற்றயற் சீரொழித்து ஏனைய ஒன்றினும், நாற்சீரும் ஒன்றினும் தலையா கெதுகை, அடியெதுகை, இணையெதுகை, பொழிப் பெதுகை, ஒரூஉ எதுகை, கூழை எதுகை, மேற்கதுவாயெதுகை, கீழ்க்கதுவா யெதுகை, முற்றெதுகை எனக் கூறப்படும். அயலெழுத்தொன்றின் என்னாது முதலெழுத்தைச் சுட்டிய அதனால், முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்தல் வேண்டும் என்றுங் கொள்க. 3. (இது முற்கூறியவற்றோடு ஒப்பன சிலதொடை கூறுகின்றது). முற்கூறிய மோனைக்கும் எதுகைக்கும் கிளை யெழுத்துக்களும் ஒன்றிவரப் பெறும். கிளையெழுத்தாவன: வருக்கமோனையும், வருக்க வெதுகையும், வல்லின வெதுகையும், மெல்லின வெதுகையும், இடையின வெதுகையும் என ஐந்தாம். ஈ. யா.வி: எதுகைத் தொடையிற் சீர் முழுதும் வருவது தலையாகு எதுகை; ஓரெழுத்தே வரத்தொடுப்பது இடையாகு எதுகை; இனத்தானும் மாத்திரையானும் பிறவாற்றானும் வரத்தொடுப்பது கடையாகு எதுகை; என்றும், முன் இரண்டடியும் ஓர் எதுகைத் தொடையாய் வந்து, பின் இரண்டடியும் மற்றொரு திறத்தான் வரினும் குற்றமில்லை. அஃது இரண்டடி எதுகை, என்பார் ஒருசார் ஆசிரியர் என்றற்கும், ஒருசார் ஆசிரியர் எதுகைத் தொடையுள் ய, ர,ல, ழ என்னும் நான்கு ஒற்றும் வந்து மிகத் தொடுத்தால் அதனை ஆசிடை எதுகை என்று வேண்டுவர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது. (யா.வி.37) உ. ஆ.கு: எதுகை வகைகளின் விரி முதலெழுத் தளவொத் தயலெழுத் தொன்றுவ தெதுகை அதன்வழி இயையவும் பெறுமே முதலெழுத் தொன்றுவ மோனை; எதுகை முதலெழுத் தளவோ டொத்தது முதலா அதுவொழித் தொன்றின் ஆகும் என்ப. (பல்காயம்) முதலெழுத் தொன்றின் மோனை யாகும் அஃதொழித் தொன்றின் எதுகை யாகும் ஆயிரு தொடைக்கும் இணையெழுத் துரிய (நத்தத்தம்) முதலெழுத் தொன்றி முடிவது மோனை ஏனைய தொன்றின் எதுகைத் தொடையே உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் நெறிப்பட வந்தன நேரப்படுமே (சிறுகா.) வருக்க நெடிலினம் வரையார் ஆண்டே (யா.வி.37) அடிதொறும் முதலெழுத் தாவதை முதற்றொடை இடையதன் முன்னொன் றியைவதை எதுகை நெடிய பிறவும் இனத்தினும் ஆகும் சீர்முழு தொன்றின் தலையா கெதுகை ஓரெழுத் தொன்றின் இடைகடை பிறவே. யரலழ வென்னும் ஈரிரண் டொற்றும் வரன்முறை பிறழாது வந்திடை உயிர்ப்பின் ஆசிடை எதுகையென் றறிந்தனர் கொளலே (யா.வி.37 மேற்.) இரண்டடி எதுகை திரண்டொருங் கியன்றபின் முரண்ட எதுகை இரண்டல வரையார் கடையிணை பின்முரண் இடைப்புணர் முரணென இவையுங் கூறுப ஒருசா ரோரே. (யா.வி.39 மேற்.) வருக்க நெடிலினம் வந்தால் எதுகையும் மோனையுமென் றொருக்கப் பெயரால் உரைக்கப் படுமுயிர் ஆசிடையிட் டிருக்கும் ஒருசார் இரண்டடிமூன்றாம் எழுத்தொன்றின் நிரக்கும் எதுகையென் றாலும் சிறப்பில நேரிழையே (யா.கா.42) தலையா கெதுகை தன்சீர் முழுதுறல் இடைகடை அவ்வவ் வெழுத்தொன் றுவதே (தொ.வி.213) மூன்றாம் எழுத்தொன்றல் ஆசினம் தலையாகு இடைகடை ஆறும் எதுகை வகையே. (தொ.வி.214) வருக்க நெடிலினம் வந்தால் எதுகையும் மோனையு மாமென மொழியப் படுமே. (மு.வீ.978) யரலழ இடையுறின் ஆசெனப் படுமே (மு.வீ.979) எருத்து அ. 1. கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். (தொ.பொ.426) 2. எருத்தே கொச்சம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே. (தொ.பொ.455) இ. இளம்: 1. (பரிபாடலாமாறு உணர்த்துதல்) எருத்தென்பது இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும் கால் சுரிதக மாதலானும் இடைநிலைப் பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமுங் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க. ''தரவே எருத்தம் அராகம் கொச்சகம் அடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே" என்பது அகத்தியமாதலின். தரவென்பதோர் உறுப்புங் கோடல் வேண்டுமெனின் இவ்வாசிரியர் கொச்சகம் என ஓதிய அதனானே தரவும் அவ்விலக்கணத்திற்படுமென்பது ஒன்று. எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தரவென்பது போலும். 2. (அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல்) ஈண்டு எருத்து என்பது தரவு பேரா: 1. (பரிபாடற்கேற்ற பாவுறுப்பினை எடுத்து விரிகூறி இத்துணை உள்ளுறுப்புடைத் தென்கின்றது). எருத்தினை ஈற்றுக்கண் வைத்தான் அதனை இன்றியும் வரும் பரிபாடல் என்றற்கும், இஃது இடைவரு மென்றற்கும் என்பது. 2. (அம்போதரங்க வுறுப்பு இவை ஐந்துமெனக் கூறியவாறு). தரவெனினும் எருத்தெனினும் ஒக்கும். நச்: 1. (பரிபாடற்கேற்ற உள்ளுறுப்புக் கூறுகின்றது. இவை சிறப்புறுப்பாகிய முப்பத்து நான்குமன்றி இதற்கும் கலிக்கும் உறுப்பாய் வருமென்று கொள்க). எருத்தினை ஈற்றில் வைத்தது தரவின்றியும் அது (பரிபாடல்) வருதலின். 2. (அம்போதரங்கவுறுப்பு இவை ஐந்துமெனக் கூறியவாறு). தரவெனினும் எருத்தமெனினும் ஒக்கும். ஈ. யா.வி: 'தரவு' எனினும் 'எருத்தம்' எனினும் ஒக்கும். எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக் கொண்டு தந்துமுன் நிற்றலின் தரவு என்பதூஉம் காரணக்குறி. ''தந்து முன் நிற்றலின் தரவா கும்மே". (யா.வி.82) தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும் துன்னு மிடத்துத் துணிந்தது போலிசை தன்னொடு நிற்றல் தரவுக் கியல்பே (கா.பா.) எழுத்தியல் வகை அ. அவற்றுள், மேற்கிளந் தனவே என்மனார் புலவர். (தொ.பொ.311) ஆ. குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும் அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் வறிதே உயிர்மெய்யும் மூவினமென் றோதினர் என்று செயிரவர்க்கு நின்றதோ சென்று. நெடிய குறிய உயிர்மெய் உயிரும் வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமோ டாமசைக் கெழுத்தே (அவிநயம்) குறில்நெடில் அளபெடை உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையோ டாய்தம் இஉ ஐயென மூன்றன் குறுக்கமோ டப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும் (கா.பா.) குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமை யளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக் கெழுத்தே (சி.கா.பா.) குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றுகர ஆதி குறுகிய ஐஔமவ் வாய்தம் நெறிமையால் ஆய்ந்த அசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையால் ஏய்ந்தன அந்நான் கெழுத்து. குறில்நெடில் ஆய்தம் அளபெடை ஐகாரக் குறில்குற் றிகர வுகரம் மறுவில் உயிர்மெய் விராய்மெய்யோ டாறா றெழுத்தும் செயிர்வன்மை மென்மை சமன் (நாலடிநாற்பது) உயிருறுப்புயிர்மெய் தனிநிலைஎனாஅக், குறில்நெடில் அளபெடை மூவினம் எனாஅ அஃகிய நல்லுயிர் மஃகான் குறுக்கமோ டைந்து தலையிட்ட ஐயீ ரெழுத்தும் அசைதொடை நேரசை யாகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே (பெரியபம்மம்) உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா குறிலே நெடிலே அளபெடை என்றா வன்மை மென்மை இடைமை என்றா சார்பில் தோன்றும் தன்மைய என்றா ஐஔ மகரக் குறுக்கம் என்றாங் கைம்மூ வெழுத்தும் ஆமசைக் குறுப்பே (யா.வி.2) குறில்நெடில் ஆவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே மறுவறு மூவினம் மைதீர் உயிர்மெய் மதிமருட்டும் சிறுநுதல் பேரமர்க்கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் அறிஞ ருரைத்த அளபும் அசைக்குறுப் பாவனவே (யா.கா.4) அவற்றுள், எழுத்துமேற் கிளந்த இயல்பிற் றாகும் (இ.வி.712) இ. இளம்: எழுத்தியலாவது, உயிரெழுத்து மெய்யெழுத்து சார்பெழுத்து என மூவகைப்படும். உயிரெழுத்து, குற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என மூவகைப் படும். மெய்யெழுத்து, வல்லினம் மெல்லினம் இடையினம் என மூவகைப் படும். சார்பெழுத்து, குற்றிய லிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என மூவகைப் படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப் பெறும். குற்றெழுத்து அ, இ, உ, எ, ஒ; நெட்டெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ; அளபெடை ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ வல்லினம் கசடதபற; மெல்லினம் ஙஞணநமன; இடையினம் யரலவழள; குற்றியலுகரமாவது நெட் டெழுத்தின் பின்னரும் மூன்றெழுத்து முன்னான மொழியினும் வல்லெழுத்தை ஊர்ந்து வந்த உகரம் நாகு நாக்கு; காறு காற்று என இந்நிகரன. குற்றிய லிகரமாவது, இவ்வுகரந் திரிந்து மகரமூர்ந்து மகரமோடியைந்து வரும். நாகியாது உகரந்திரிந்தது. கேண்மியா மகரமூர்ந்தது; பிறவும் அன்ன. ஆய்தமாவது குற்றெழுத்திற்கும் வல்லெழுத்திற்கும் இடைவரும். அஃதாவது எஃகு எனவரும். ஒற்றளபெடையாவது மெல்லினமும் வயலளவும் ஆய்தமும் அளபெடுக் கும். அவை மங்ங்கலம், மஞ்ஞ்சு எனவரும். இனி உயிரும் மெய்யும் கூடி உயிர்மெய்யெழுத்தாம். அவை ககர முதல் னகர வீறாகிய இருநூற்றொருபத்தாறும் இன்னும் ஐகாரக் குறுக்கமும் மகரக் குறுக்கமும் என்பவுமுள. ஐகாரக்குறுக்கம் அளபெடையுந் தனியுமல்லாத வழிக் குறுகும். மகரக் குறுக்கம் ணகர னகர ஒற்றின் பின்வரும். புணர்மொழிக் கண் வகரத்தின் மேனின்ற மகரங்குறுகும். இவையெல்லாம் எழுத்ததிகாரத்துட் காண்க. பேரா: ஈண்டுப் பதினைந்து எழுத்தென்று கூறிப் பயங்கோடுமாயின் ஆண்டை முப்பத்து மூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன சிலவெழுத்து மல்ல என்பான் மேற்கிளந்தன்ன என்றான் என்பது. மற்று எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வதன்றிப் பதினைந்தென்று கொள்ளுமா றென்னையெனின் எழுத்தோத்தினுள் குறிலும் நெடிலும் உயிரும் மெய்யும் இன மூன்றும் சார்பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்பு வகையான் ஆண்டுப் படுத்தோதினான், உயிர்மெய்யும் உயிரள பெடையும் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஔகாரம் போலிவகையாற் கூடுமாறும் யாழ் நூலகத்து ஒற்றிசை நீளுமாறும் ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே, அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோடொக்கு மென்று உய்த்துணர்ந்து கொள்ள வைத்தான் என்பது. இவற்றொடு மகரக்குறுக்கமும் கூட்டிப் பதினாறெழுத்து என்பாருமுளர். அதனாற் பயனென்னை யெனின், பாட்டுடைத் தலைவன் கேட்டுக்குக் காரணமாமென்பர். மற்று உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென்றிலனாகலான் ஈண்டு எழுத்தியல் வகையுள் எழுத்தாக்கி அடக்குமாறென்னையெனின் ஈண்டு அன்ன வெனவே ஆண்டு இரண்டெழுத்தின் கூட்டமெனவும் மொழியெனவும் போலி யெனவும் கூறினானாயினும் அவற்றை எழுத்தியல் வகையெனப் பெயர் கொடுப்பவே ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத் தெனப்படும் என்பதாயிற்று. இதன் கருத்து இயலென்றதனான் இயற்றிக் கொள்ளும் வகையான் எழுத்து இனையவென்றானாம். வகை என்பதனான் முப்பத்து மூன்றினைக் குறிலும் நெடிலும் என்றற்றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டாற் பத்து வகைப்பட இயற்றுதலும் கூட்டவகையான் இரண்டும் போலிவகையான் இரண்டும் யாழ்நூல் வேண்டும் வகையான் ஒன்று மென ஐந்து வகையான் இயற்றுதலு மென இருவகையும் கொள்ளப்படும் அல்லதூ உம் செய்யுட்கள் அவ் வெழுத்து வகையான் இன்னோசையவாக விராய்ச் செய்தலும் கொள்க. மற்று, அளபெடையை மேல் மொழியென்றான் ஈண்டெழுத் தென்றானாக லின், இதனை ஓரெழுத்தென்று கோடுமோ இரண் டெழுத் தென்று கோடுமோ எனின், ''நெட்டெழுத்திம்பர் ஒத்தகுற் றெழுத்தே" என்று கூறியவாற்றான் ஆண்டிரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயினும் முன்னர்ப் போக்கி, ''அளபெடை அசைநிலை ஆகலு முரித்தே" என்றவழி எழுத்து நிலைமையும் எய்துவிக்குமாகலான் எதிரது நோக்கி ஈண்டு ஓரெழுத்தென்று கோடும் என்பது. இனி அவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக் குறுப்பாம். மற்று, ''ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி" என்பதனான் ஒற்றும் அசைக்குறுப்பாகாவோ எனின், அச்சூத்திரத்தானன்றே அவை குறிலும் நெடிலும் அடுத்து வந்தும் வேறுபடாது நேர்நிரையாதல் எய்தியது நோக்கி அவை அசைக்குறுப்பாகா என்றதென்க. மற்று, இடைநின்று நிரையாதலை விலக்காவோ எனின் அன்னதொரு விதியுண்டாயினன்றே இவை இடை புகுந்து விலக்க வேண்டுவதென மறுக்க. நெடிலும் அளபெடையிரண்டும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஐகாரக் குறுக்கமும் ஔகாரக்குறுக்கமும் எனப்பத்தும் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடை இரண்டும் இனம்மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனமே வேறுபடவந்த பயனோக்கி எழுத்தினை இயற்றிக் கோடலின் எழுத்தியல் வகையென்றான் என்பது. அஃதேல், ஒற்றும் குற்றுகரமும் ஈண்டோதிய தென்னையெனின் ஒற்றளபெடையான் அசைநிலையும் சீர்நிலையும் கோடலின் ஈண்டு ஒற்றுக் கூறினான். குற்றிகரமும் உயிராயி னும் ஒற்றுப்போல எழுத்தெண்ணி அடிவகுக்குங்கால் எண்ணப்படா தென்றற்குக் கூறினான் என்பது. அஃதேல், ''ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்" என்பவாகலின், அதை ஈண்டுத் தழாஅற்க எனின் அக் கருத்தினால் அவ்வாறும் அமையும் என்பது. அற்றன்று இதனை மேற் புள்ளிபெறுமென்றிலன் ஆதலின் புள்ளி பெறும் என்றற்கும் 'ஒற்றெழுத்தியற்றே குற்றிய லிகரம்' என்றான் என்பது. இனி, ''எழுத்தியல் வகையும் மேற்கிளந்தன்ன" என்பதனையும் எழுத் திலக்கணத்தில் திரியாமல் செய்யுள் செய்க என்றவாறு என்பவெனின் அஃதே கருத்தாயிற் சொல்லோத்தினுள்ளும் எழுத்திலக்கணமாகிய மயக்கமும் நிலையும் முதலாகிய இலக்கணம் திரியாமல் சொல்லாராய்தல் வேண்டும் எனவும், இவ்வதிகாரத்துள்ளும் எழுத்தியல் வகையும் சொல்லியல் வகையும் மேற்கிளந்தன்ன எனவும் சூத்திரஞ் செய்வான்மன் ஆசிரியனென மறுக்க. நச்: முற்கூறிய முப்பத்து மூன்றெழுத்தும் யாப்பிலக்கணத் திற்குப் பதினைந்து பெயரவாய் நடக்கும் கூறுபாடு(ம்) எழுத்தோத்திற் கூறிய இலக்கணத்தில் பிறழாமை வருமென்று கூறுவர் புலவர். எழுத்து முப்பத்து மூன்றனுட் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர் கொடுத்து அவற்றைக் குறிலும் நெடிலும் அள பெடையும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஐகாரக் குறுக்கமும் ஔகாரக் குறுக்கமும் எனப்பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும் சில எழுத்துக்கலை மெய்யென்னும் பெயர் கொடுத்து அவற்றை மெல்லினமும் வல்லினமும் இடையினமும் ஆய்தமும் ஒற்றள பெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு ஆறாக்கியும் இவையிரண்டும் கூடியவற்றை உயிர்மெய் என வேறோர் பெயராக்கியும் மேற்கூறியவாறே பதினைந்து பெயரவாய் ஈண்டு நடக்கும் என்றற்கு 'எழுத்தியல்வகை' என்றார். இவ்வெழுத்தினை எழுத்தோத்தினுட் கூறிய சூத்திரங்களொடு மாட்டெறிந் தார். அவை, 'ஔகார விறுவாய்' (நூன்.8), 'அ இ, உ. எ (நூ.3) 'ஆ ஈ ஊ ஏ' (. 4), 'நீட்டம் வேண்டின்' (. 6), அவைதாம், குற்றியலிகரம் (. 2), 'ஓரளபாகும் இடனுமாருண்டே' (மொழி. 4); 'வல்லெழுத்தென்ப' (எழுத்.19), 'மெல்லெழுத்தென்ப' (.20), 'இடையெழுத்தென்ப' (.21), 'உயிர்மெய் யல்லன' (மொழி.27), என்பனவாம். அளபெடை யிரண்டும் எழுத்தாந்தன்மை மேலே (செய். 17, 18) பெறுதும். இவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக் குறுப்பாம். ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக்கு உறுப்பாகா. ஒற்றளபெடைக்கு உறுப்பாம். நெடிலும் அளபெடை இரண்டும் உயிரும் உயிர்மெய்யும் மூவினமும் ஐகார ஔகாரக்குறுக்கமும் தொடைக் குறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடை இரண்டும் மூவினமும் ஆய்தமும் வண்ணத் திற்கு உறுப்பாம். இவற்றை இயற்கை எழுத்தும் சார்பெழுத்தும் என இரண்டாகவும் வகுப்பர். எழுதிணை அ. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப. (தொ.பொ.1) கைக்கிளை முதலா ஏழ்பெருந் திணையும் முற்கிளந் தனவே முறையி னான. (தொ.பொ.486) ஆ. மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனவெழு பெற்றித் தாகும். (ந.அ.1) கைக்கிளை யுடைய தொருதலைக் காமம் ஐந்திணை யுடைய தன்புடைக் காமம் பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப் பெருந்திணை எனவெழு பெற்றித் தாகும். (இ.வி.376) கைக்கிளை ஐந்திணை பெருந்திணை முறையே ஒருதலைக் காமமும் அன்புடைக் காமமும் பொருந்தாக் காமமும் பொருந்துதல் உடைய (இ.வி.377) அகப்பொருள் புறப்பொருள் ஆமிரண் டவற்றுள் பெருகிய கைக்கிளை பெருந்திணை குறிஞ்சி ஆதியைந் திணையென அகப்பொருள் ஏழே. (தொ.வி.199) அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனஎழு வகைப்படும் என்மனார் புலவர். (மு.வீ.அக.1) அவற்றுள் கைக்கிளை ஒருதலைக் காமம் அன்புடைக் காமமைந் திணைவயின் படுமே (மு.வீ.அக.3) பொருந்தாக் காமம் பெருந்திணைப் பொருட்டே (மு.வீ.அக.5) இ. இளம்: கைக்கிளை என்று சொல்லப்படும் பொருள் முதலாகப் பெருந்திணை என்று சொல்லப்படும் பொருள் ஈறாக ஏழுபொருள் முற்படக் கூறப்பட்டன என்று சொல்வர். அவ்வெழு திணையும் ஆவன; கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை, ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து உணர வைத்தவாறு அறிந்துகொள்க. நச்: கைக்கிளை எனப்பட்ட ஒழுக்கம் முதலாகப் பெருந்திணை யென்னும் ஒழுக்கத்தினை இறுதியாகவுடைய ஏழனையும் முற்படக் கூறப்பட்ட அகத்திணை ஏழென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. முதலும் ஈறும் கூறித்திணையேழெனவே நடுவணைந் திணை உளவாதல் பெறுதும். அவைமேற்கூறுப. (அகத்.3). ஈ. நாவலர்: கைக்கிளை முதலாகப் பெருந்திணை இறுதியாக முன்னே சொல்லப் பட்ட அகத்திணை ஏழாமென்று கூறுவர், தமிழ்நூல் வல்லார். இச்சூத்திரத்தில் அகத்திணை ஏழும் நிரலே கூறப் பெறாமை யானும் கிளக்கும் என்னாது கிளந்த என இறந்தகால எச்சம் பெய்த பெற்றிமை யானும். இதன் பிறகுள்ள சூத்திர வைப்பு முறையில் கைக்கிளையை முதலாகவும் அதனை அடுத்து அன்பின் ஐந்திணையும் இறுதியிற் பெருந்திணையுமாக அமைத்துக் கூறப்பெறாமல் முதற்கண் அன்பின் ஐந்திணை கூறி, அவற்றின்பின் கைக்கிளை பெருந்திணைகள் தொடர்ந்து கூறப்படுவதாலும் முற்படக் கிளந்த எழுதிணை என்பது அகத்திணை யியலில் இச்சூத்திரத்தின் பின் அமைத்துக் கூறப்பட்ட முறையைச் சுட்டாதென்பது வெளிப்படை. எனவே, ஈண்டு 'முற்படக் கிளந்த' என்பது இடத்தால் முற்படக் கூறும் அமைப்பு முறையோடு பொருந்தாமையால் காலத்தால் முற்படக் கிளந்த ஒன்றனையே குறிக்கும் என்பது தேற்றமாகும். மு.அ: கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என முதலும் ஈறும் கூறி அடுத்து வரும் நூற்பாவில் 'நடுவண் ஐந்திணை' யெனக் குறித்துள்ள மையால் அகத்திணை யேழும் மாட்டெறிந்து பின்னர்க் கிளக்கப்படும் புறத்திணைகள் ஏழுள வென்பவை அறிவித்தற்கே 'முற்படக் கிளந்த எழுதிணை' என இறந்த காலத்தாற் கூறினார் என்று இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் பொருள் கொண்டனர்; இவ்வாறு பொருள் கொள்வதில் முன்னென்பது காலமுன்னாகவே நின்றது. அவர்கள் இதனை இடமுன்னாகக் கொண்டு பொருள் கூறாமையால் இவ்விய லில் பின்வரும் நூற்பாக்களில் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை யென்னும் முறைப்படி இலக்கணம் கூறப்படவில்லை என்பது பொருந்தாது. அங்ஙனம் முறை பிறழக் கூறியதற்குக் காரணம் நடுவணைந் திணையின் சிறப்பும், ஏனையவற்றின் சிறப்பின்மையுமே யாகும். 'கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்' என முதலும் ஈறுங்கூறி 'எழுதிணை'யெனத் தொகை கொடுத்தமையால் இவ் விரண்டற்கும் இடையில் ஐந்திணைகள் உள வென்பதும், இவ்வெழு திணைகளும் அகத்திணையியல் தொடக்கத்தில் கூறப்பட்டிருத்தலால் அகத்திணைகளே என்பதும் பெறப்பட்டன. படுதிரை வையத்தின் பல பகுதிகளில் வாழும் பலதிறப்பட்ட ஆடவர் மகளிரிடையே நிகழும் காதலின்ப வுறவுபற்றிய ஒழுகலாறுகள் எல்லாம் இக்கைக்கிளை முதலிய எழுதிணையுள் அடங்குவனவாகும். படுதிரை வையம் என்பது எதிரது போற்றலால் (நூற்பா.2) இங்கு எடுத்தாளப் பட்டது. எழுநிலத்தெழுந்த செய்யுள் அ. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர். (தொ.பொ.384) ஆ. ஓரடி யானும் பலவடி யானும் ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள் அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆக்கின என்ப அறிந்திசி னோரே (பல்காயம்.) அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகும் என்ப அறிந்திசினோரே. (இ.வி.760) இ. இளம்: பாட்டுமுதலாக முதுசொல் ஈறாகச் சொல்லப்பட்ட எழுநிலத்தினும் வளவிய புகழையுடைய சேரன் பாண்டியன் சோழன் என்னும் மூவரது தமிழ்நாட்டகத்தவர் வழங்கும் தொடர்மொழிக்கண் வரும் யாப்பாவது என்றவாறு. எனவே, யாப்பாவது, பாட்டியாப்பு, உரையாப்பு, நூலியாப்பு, மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, பழமொழி யாப்பு என எழுவகைப் படும். மேலைச்சூத்திரத்துள், 'குறித்த பொருளை முடிய நாட்டல்' என்றமை யானும், இச்சூத்திரத்துள், 'நாற்பே ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது' என்று ஓதினமை யானும், குறித்த பொருள் முடியுமாறு சொற் றொடுத்தல் என்று கொள்ளப்படும். பேரா: பாட்டும் உரையும் நூலும் வாய்மொழியும் பிசியும் அங்கதமும் முது சொல்லுமென்று சொல்லப்பட்ட அவ்வேழு நிலத்தும், ''வடவேங்கடந் தென்குமரி யாயிடை" நாட்டார் நடாத்துகின்ற செய்யுளின் பெயரே தனக்குப் பெயராகவு முடைத்து மேற்கூறிய யாப்பு. எனவே, மேற்குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டல் யாப் பென்றான். அதுவேயன்றி இப்பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பே யென்றானாம். இவ்வேழு வகையானும் செய்தன் மரபென எதிரது நோக்கிற்று. நச்: (யாப்பிற்கோர் வேறுபாடு கூறுகின்றது). பாட்டுக்களும் உரைகளும் நூல்களும் மந்திரங்களும் பிசிகளும் அங்கத மும் முதுசொல்லும் எனப்பட்ட அவ்வேழு பொருளிடத்தும் கொடையாற் பெற்ற புகழினையுடைய சேரசோழ பாண்டியருடைய குளிர்ச்சியையுடைய நாவலம் பொழிலுள் தமக்கு வரைந்து கொண்ட வடவேங்கடந் தென்குமரி யிடத்து மலை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயரையுடைய தமிழ் நாட்டார் நடாத்தும் செய்யுளின் பெயர் தனக்குப் பெயராகவும் உடைத்து மேற்கூறிய யாப்பு என்றவாறு. என்றது, குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டுதலே யன்றி இப் பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப் பென்றதாம். பாட்டுச் செய்யுள் உரைச் செய்யுள் நூற்செய்யுள் எனத்தமிழ் நாட்டார் வழங்கியவாறே பெயர் பெறு மென்றவாறு. எனவே அந்நாட்டார் வழங்கும் யாப்புப் பகுதி கூறினா ராயிற்று. உ. ஆ.கு: எழுநிலம் ஏழுபகுதி. 'வடவேங்கடம்... நல்லுலகத்து' எனப்பனம் பாரனார் நூலின் இடவரம்பு கூறியதற்கு வித்து இந்நூற்பா ஆகலாம். உரையும் ஒருவகை யாப்புடையது எனின் பிறவெலாம் யாப்புடைமை கூற வேண்டுவ தில்லையாம். பாட்டு, உரை என வருவனவற்றைச் சிறப்புத் தலைப்புகளுள் காண்க. ஏந்தல்வண்ணம் அ. ஏந்தல்வண்ணம், சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும் (தொ.பொ.532) ஆ. நேரிறு உரிச்சீர் மிகவந் தேந்திய ஓசையின்வருவன ஏந்திசை யாகும். (மு.வீ.990) இ. இளம்: ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும். கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா கூடலுட் கூடலே கூடலும் கூடல் அரும்பிய முல்லை அரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு என வரும். பேரா: சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்வது ஏந்தல் வண்ணம். ஏந்தல் என்பது மிகுதல்; ஒரு சொல்லே மிக்குவருதலின் ஏந்தல் வண்ணம் என்றாயிற்று. அது, ''வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்" எனவரும். நச்: ஏந்தல் வண்ணமாவது ஒருகாற் சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்தல். ஏந்தல் ஒரு சொன்மிகுதல். ''வைகல்... துணராதார்" ''கூடுவார்... பிரிவு". என வரும். உ. ஆ.கு: குறிலகவல் ஏந்திசை வண்ணம் முதலாக இருபது ஏந்திசை வண்ணங் களைக் காட்டும் யாப்பருங்கல விருத்தி நூலார், ''அவைதாம் மதயானை நடந்தாற்போலவும் பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட்போலவும் வருமெனக் கொள்க" என்றார். ஏந்தல் வண்ணத்தை ஏந்திசை வண்ணமெனக் கொண்டது முத்துவீரியம். ஏரோர் களவழியும் தேரோர் களவழியும் அ. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் (தொ.பொ.75) ஆ. கிணைநிலை தண்பணைவயல் உழவனைத் தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று (பு.வெ.வா.32) களவழி மலிவயல் உழவனை வறுமைதீர் பெருவளம் பொலிகெனக் கிணைவன் புகழ்ந்த களவழியும் (இ.வி.613) இ. இளம்: ஏரோர் களவழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும். அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம். களவழி களத்து நிகழும் செயல்கள். நச்: வேளாண் மாக்கள் விளையுட் காலத்துக் களத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றி யன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும். என்றது நெற்கதிரைக் கொன்று களத்திற்குவித்துப் போரழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட்பலி கொடுத்துப் பின்னர் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்கு மாறு போல அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற்குவித்து எருது களிறாக வாள்பட ஓச்சி அதரி திரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவேண்மான் இடந்துழந்தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்து கொள்ளக் கொடுத்தலாம். ஈ. நாவலர்: களமர் களத்தில் நெற்போரடித்தல் முதலிய விழவார்ப்போடு போர்க் களத்தில் தேர்மறவர் வெற்றி விழவின் வீறும். க.வெ: நச்சினார்க்கினியர் கூறும் இவ்வுரை பொய்கையார் பாடிய களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை உளங்கொண்டு எழுதப்பெற்றதாகும். நச்சினார்க் கினியர் கருதுமாறு இத்தொடர் தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியைக் குறித்ததாயின் அது பாடாண்டிணை யாகுமே யன்றி வாகைத் திணையாகாது. ஆகவே, 'தேரோர் தோற்றிய வென்றி' என்பதற்குத் தேரேறிவந்த போர்வீரர்கள் ஏர்க்களத்துக் களமர் செய்யுமாறு போலப் போர்க்களத்துத் தோற்றுவித்த வெற்றிச் செய்கைகள் எனப் பொருளுரைத் தலே வாகைத்திணை யமைப்புக்கு ஏற்புடையதாகும். ஏணிமயக்கம் அ. மடையமை ஏணிமிசை மயக்கமும் (தொ.பொ.69) ஆ. ஏணிநிலையே (பு.வெ.6) தொடுகழல் மறவர் துன்னித் துன்னார் இடுசூட் டிஞ்சியின் ஏணிசாத் தின்று (பு.வெ.உழிஞை.18) உடல் சினத்தார் கடியரணம் மிடல் சாயமேல் இவர்ந்தன்று (பு.வெ.உழிஞை. 19) தொடுகழல் மறவர் துன்னித் துன்னார் இடுசூட் டிஞ்சியின் ஏணி சார்த்தலும் ஆடுதல் ஒல்லா அரண்கா வலவர் ஈடற ஏணியின் இவரெயிற் பாசியும் (இ.வி.608) இ. இளம்: மதிலிடத்து மடுத்தல் அமைந்த ஏணி சார்த்தி அதன்மேல் பொரும்போர் மயக்கமும். நச்: மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசை நின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தலும். ஈ. நாவலர்: தொடையமைந்த ஏணிப்படிகளின் மேல் ஏறுவோரும் எதிர்ப்போரும் தம்முன் கலந்து மலைதலும் (மடை பூட்டு. ஏணிப்பக்கச் சட்டங்களில் பழுக்கள் பூட்டப்படுதலால் மடையமை ஏணி எனப்பட்டது.) உ. ஆ.கு: ஏண் ஏணி உயரம். உயரச் செல்வதற்கு அமைந்த கருவி. மயங்குதல் கலத்தல்; இவண் கைகலத்தலுக்கு ஆயது; கை கலத்தல் கருவிகலத்தலு மாம். 'கலகம்' என்பது அறிக. ஐஞ்சீரடி அ. வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப. (தொ.பொ.369) இ. இளம்: (ஆசிரியப்பாவிற்குரியதோர் மரபுணர்த்துதல்). இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள. 'வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்' என்றது என்னை யெனின், அவ்வைஞ்சீரடி வெண்பாவோடு விராயும் ஆசிரியப்பா வோடு விராயும் வருமென்றவாறு. ஈண்டுத் தளை என்றது அப் பாக்களையாதலால் அப் பாக்களோடு விரவுமெனவே, அப் பாக்களை உறுப்பாகக் கொண்டு வரும்பிற செய்யுட் கண்ணும் அவ்வைஞ்சீரடி வருமென்பது பெற்றாம். வெண்டளையொடு விரவும் எனவே ஐஞ்சீரடி அவற்றுக்கு உரியவல்ல வென்பதாம். எனவே, கலிப்பாவின் கண்வரும் ஐஞ்சீரடியாயின் அக்கலியோசைக்கு உரிமை யுடைத்தென்பதாம். 'உள' எனவே ஐஞ்சீரடி கலியினுட் பயின்று வருமென்பதூஉம் அல்லன வற்றுட் பயிலாவெனவுங் கொள்க. 'விராஅய தளையும் ஒரூஉநிலையின்று' (செய். 61) எனப்பட்ட கலிப்பாவினோடு இயைபுபட்ட வெண்பா வடியும் அதனோடு இயைபுபட்ட ஆசிரியவடியும் கூறி, அம் மூன்றனையும் உடன் கூறினானாயி னும் ஆண்டுச் சிறந்தவாறே ஈண்டும் அவ் வதிகாரத்ததாக நாட்டி ஐஞ்சீரடி யும் உளவென்று ஆண்டு நின்ற கலிக்குக் கூறிய அவ்வடி வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் வருமெனப் பிறவற்றுக்கும் கூறினான் என்பது... 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம்.235) என்பன ஐஞ்சீரான் வந்த ஆசிரியவடி. ஆசிரியத்துள் இவ்வாறு இரண்டடி ஒருங்கு நிற்கும் என்பது அறிவித்தற்கு ஐஞ்சீரடிக்குச் சிறந்த கலிப்பாவோடு வைத்தான், அதனை முறைபிறழ என்பது. எனவே வெண்பாவிற்கு ஐஞ்சீரடி ஒன்றல்லது வாராதாயிற்று. இக்கருத்தே பற்றி, ''ஐஞ்சீ ரடுக்கலும் மண்டில மாகலும் வெண்பா யாப்பிற் குரிய வல்ல" என்றார் பிறரும் என்க. நச்: (மூன்று பாவிற்கும் ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது). வெண்பாவோடும் கலிப்பாவோடும் விராஅயும் ஆசிரியப் பாவோடு விராஅயும் வரும் ஐஞ்சீரடிகளும் உளவென்று கூறுவர் புலவர். ஈண்டுத் தளையென்றது அப் பாக்களை. வெண்டளை யெனவே இரண்டு வெண்டளையும் அடங்கலின் அவற்றுள் வெண்சீர் வெண்டளையான் வரும் சீர்வகை வெண்பாவும் சீர்வகைக் கலியும் அடங்கின. இனி, நிரைமுதல் வெண்சீர் (60) என்னுஞ் சூத்திரம் இதற்கதிகார மாதலின் கட்டளைக்கலிக்கும் ஐஞ்சீரடி கொள்க. தளையென்றதனாற் கட்டளை வெண்பாவிற்குங் கொள்க. அடியும் என்ற உம்மையான் வெண்பாவினுள் மிகவும் சிறுபான்மை வருதல் கொள்க. உளவென்றதனாற் கலிப்பாவினுள்ளும் அதற்குறுப்பாய் வரும் பாக்களுள் ளும் பெரும்பான்மை வருதலும் ஆசிரியத்துள் அடுக்கி வருதலும் கொள்க. தன்னின முடித்தல் என்பதனாற் கட்டளை யாசிரியத்திற்கு வருமேனு முணர்க. இன்னும் ஐஞ்சீரடியும் என்ற உம்மையாற் கொச்சகக் கலிக்கு ஐஞ்சீரடியும் வருமாறு கொள்க. இதனை இனமென்பாருமுளர் பின்னுள்ளோர். உ. ஆ.கு: ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீர் அடி வரும் என்பது இந்நூற் பாவாற் பெறப்படுதல் போல், ''ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்க லும் வெண்பா யாப்பிற்குரிய வல்ல" என்பதனால் (தொ.பொ.375. மேற்.: நக்கீரனார் அடி நூல்) ஐஞ்சீர் வெண்பாவுள் புகாமை அறியலாம். ஐந்தறிவது அ. 1. ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே (தொ.பொ.571) 2. மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொ.பொ.576) ஆ. வானவர் மக்கள் நரகர் விலங்குபுள் ஆதி செவி அறிவோ டையறி வுயிரே (நன்.449) மாவும் மக்களும் மேவுமவ் வறிவே (இ.வி.913) இ. இளம்: 1. ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் அறிவது. 2. நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவும் உள என்றவாறு. பிற ஆவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவும் கொள்ளப்படும். பேரா: 1. ஐந்தறிவுடையது அவற்றொடு (ஊறு, நா, மூக்கு, கண் ஆகிய அறிவொடு) செவியுணர்வுடையது. 2. (பாடம்: மாக்களும்). ஐயறிவுடையன விலங்கும் அவைபோல்வன ஒருசார் மானிடங்களு மாம். அக்கிளைப் பிறப்புப் பிறவும் உள. மா என்பன நாற்கால் விலங்கு, மாக்கள் எனப்படுவார், மனவுணர்ச்சி யில்லாதார். கிளை என்பன, எண்கால் வருடையும், குரங்கும் போல்வன. எண்காலவாயினும் மாவெனப்படுதலின் வருடை கிளையாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளையாயிற்று. பிறப்பென்பன கிளியும் பாம்பும் முதலாயின. மற்றுப் பாம்பிற்குச் செவியும் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவி எனப்படுமாகலின் ஐயறிவில்லை பிறவெனின், பொறியென்பன வடிவு நோக்கின அல்லவாகலின் ஒன்றே இரண்டுணர்விற்கும் பொறியாம் என்பது. கிளி என்பது பறவையாகலின் அதனை வேறோதுக எனின், முன்னையவற்றிற்கும் பறவையென்றோதிய திலனாகலான் அவ்வச் சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது. ஈ. சிவஞான: ஆசிரியர் தொல்காப்பியர் 'மக்கள் தாமே ஆறறி வுயிரே' எனக் கூறியிருக்க மக்கள் முதலியோரை ஐயறிவுயிரெனக் கூறல் மாறு கொளக் கூறலாம் பிறவெனின், மக்கள் முதலியோர் மன அறிவோடு ஆறறிவுயிரென்பது நோக்கியன்றே முன்னர் 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை' எனக்கூறிப் போந்ததூஉம் ஆதலின் இங்ஙனம் ஐம்புலன் மாத்திரையே நுகரும் அறிவுடைய மக்கள் முதலியோரை விலங்கு முதலியவற்றோடு எண்ணி ஐயறிவுயிரெனக் கூறினாரென உய்த் துணர்ந்து கொள்க. (நன்.459. சங்.) ஐயக்கிளவி அ. 1. ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே (தொ.பொ.234) 2. சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப இழிந்துழி இழிபே சுட்ட லான. (தொ.பொ.91) 3. வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென் றன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்றவை களையும் கருவி என்ப. (தொ.பொ.92) ஆ. மடமா னோக்கி வடிவும் கண்ட இடமும் சிறந்துழி எய்துவ தையம் (ந.அ.120) எய்திய இருவருள் சிறந்தஇறை வன்மேற் றையுறல் என்ப அறிவுடையோரே (மா.அ.8) எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும் வாடிய மலரும் கூடிய வண்டும் நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும் அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும் கச்சமில் ஐயம் கடிவன வாகும். (ந.அ.121 இ.வி.490) அலம்வரல் கண்ணிமைப் பச்சம் உகக்கும் மலருயிர்ப் பதனில் வாடுதல் பெயர்த்தல் ஒளிர்கலன் வள்ளி வண்டுடன் நிழலிடுதல் அடிநிலம் தோய்தல் அவணிகழ் ஐயம் கடிவன வாகும் காவலன் தனக்கே. (மா.அ.9) இ. இளம்: 1. ஐயக்கிளவி தலைமகற்கே உரித்து என்றவாறு. தலைவிமாட்டு ஐயக்கிளவி இன்று என்றவாறாம்.. அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும். காணாமை யின் ஐயமிலள் என்க. 2. (ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல்). ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விருவருயும் உயர்வுடைய ராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர். அவர் இழிபுடையராயின் அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டி உணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள்தான் சிறந்துழியும் கொள்ளப்படும். அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும். உருவமிகுதி யுடைய ளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார். அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தி னும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத் தாராகிய குறுநில மன்னர்மாட்டும் உளராவரன்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ்விழி மரபினையே சுட்டியுணரா நிற்குமாத லான். ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னையெனின், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது. 3. (ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல்) எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகிய அவ்விடத்து நிகழா நின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு. ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. நிகழாநின்றவை என்பது குறுகி நின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது, பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளாள் என்றறிதற்குக் கருவியாயிற்று. இழை என்பது அணிகலன். அது செய்யப் பட்டதெனத் தோற்றுதலானும், தெய்வப்பூண் செய்யா அணியாதலா னும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுத லின் கருவியாயிற்று. அலமரல் என்பது தடுமாறுதல். தெய்வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப் பென்பது கண்ணிமைத் தல். தெய்வத்திற்குக் கண்ணிமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால்நிலந் தோய்தல், வியர்த்தல், நிழலிடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு. காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இனிக் குறிப்பறிதல் கூறுகின்றாராகலின் அக்குறிப்பு நிகழும் வழி இவை யெல்லாம் அகமாம். என்னை? இருவர் மாட்டும் ஒத்த நிகழ்ச்சியாத லான். இவை தலைமகள் மாட்டுப் புலப்பட நிகழாது, ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழும் என்று கொள்க. நச்: 1. கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ்சொல் தலைவற்கு உரித்து. இனி, ஐயப்பாடு தலைவிக்கும் உரித்து என்றாற் 'சிறந்துழி யையம்' என்பதற்கு மாறாம். 2. (எய்தாதது எய்துவித்து எய்தியது விலக்கிற்று. 'முன்னைய நான்கும் என்றதனாற் கூறிய ஐயம் தலைவன் கண்ணே எனவும் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின்). அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளும் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர்; அத்தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான். தலைவற்குத் தெய்வமோ அல்லளோ என நிகழ்ந்த ஐயம், நூன் முதலிய வற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறி வுடையனாத லும், தலைவிக்கு முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக் குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். 3. (இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தன அன்றி மண்ணகத் தன ஆதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப). பயின்றதன் மேலல்லாது செல்லாத தாது ஊதும் வண்டு ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள்; முலையினுந் தோளினும் எழுதும் தொய்யிற் கொடி; கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ; வான்கண்ணல்லாத ஊன்கண்; கண்டறியாத வடிவு கண்ட அச்சத்தாற்பிறந்த தடுமாற்றம் அக்கண்ணின் இதழ் இமைத்தல்; ஆண்மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம்; என்று அவ்வெண்வகைப் பொருளும் அவைபோல்வன பிறவும் அவ்வெதிர்ப்பாட்டின்கண்தான் முன்பு கண்ட வரையர மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழநின்ற அப்பிழம்புகளை முந்து நூற்கண்ணே அவ்வையம் நீக்கும் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர். எனவே, எனக்கும் அது கருத்தென்றார். இவையெல்லாம் மக்கட் குரியனவாய் நிகழவே தெய்வப் பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன்கூறிற்றே ஆயிற்று. 'அன்னவாவன கால்நிலம் தோய்தலும், நிழலிடும் வியர்த்தலும் முதலியன. இங்ஙனம் ஐயம் தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. ஈ. க.வெ: 2. தலைவி ஒத்தநலங்களாற் சிறந்து தோன்றியவழி (தலைவனது உள்ளத்தே) ஐயந்தோன்றுதல் சிறந்தது என்பர். சிறப்பின்றித் தாழ்ந்த நிலையில் அவ்விழிபே இன்ன தன்மையள் எனத் தெளிவிக்குமாதலின் (இந்நிலையில் ஐயம் தோன்றுதற்கு இடமில்லை). ஐயக்கிளவியாவது இவர் மக்களினத்தாரோ அன்றித் தெய்வமோ எனத் தம்மினும் மேலாயினாரோடு வைத்து எண்ணி ஐயுற்றுக் கூறுஞ்சொல். ஐயக்கிளவியின் அறிதல் அ. கிழவோன் அறியா அறிவினள் இவளென மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் ஐயக் கிளவியின் அறிதலும் உரித்தே. (தொ.பொ.115) இ. இளம்: (நற்றாயும் செவிலியும் துணியுமாறு). தலைவன் அறியா அறிவினையுடையவள் எனக் குற்றமற்ற சிறப்பினை யுடைய உயர்ந்தோர் மாட்டு உளதாகிய ஐயக் கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து செவிலிக்கும் நற்றாய்க்கும் என்றவாறு. கிழவோன் அறியா அறிவினள் என்பது தலைமகன்அறியா அறிவினை யுடையவள் என்றவாறு. எனவே, ஒருபக்கம் எதிர்காலம் நோக்கிக் கூறினார் போலத் தோன்றும்; ஒருபக்கம் இறந்தகாலம் தோன்றும். அவன் அறியாத அறிவுரிமை பூண்டு மயங்குதல். அவள் எத்துணையும் மயக்கமிலள் எனவும், அவன் பொருட்டு மயங்கினாள் எனவும் படக்கூறுதல். இஃது எற்றினான் ஆயிற்று எனக் குற்றமற்ற தமரை வினாயவழி அவர் இவ்வாறுபட்டதென மெய்கூறுதலும் தகுதியன்றாம். பொய் கூறுதலும் தகுதியன்றாம்; ஆதலால் ஐயப்படுமாறு கூறியவழி அதனானே யுணர்ப என்றவாறு. கிழவோன் அறியா அறிவினள் என்றவாறு கூறியவழிக் கிழவன் எதிர்ப்பட இறந்த காலத்துள் தலைவன் உளன் என்றவாறாம். நச்: (இஃது அங்ஙனங் களவு வெளிப்பட்ட பின்னர் நற்றாய்க்குஞ் செவிலிக்கும் உரியதோர் இலக்கணம் கூறுகின்றது). நங்குலத்திற்கு ஒத்த தலைவனை அறிந்து கூடாத அறிவினை யுடையள் இவளென்று தம் மனத்தே ஐயமுற்றும் பிறரோடும் உசாவும் கிளவியைக் குற்றமற்ற சிறப்பினை யுடைய அந்தணர் முதலியோ ரிடத்தே கூறி அதுவும் முறைமையென்று அவர் கூற அறிதலும் உரித்து. என்றது, 'மிக்கோனாயினும் கடிவரையின்றே' என முற்கூறினமையின் தலைவன் தன் குலத்தின் உயர்ந்தமை அறிந்தவிடத்து இங்ஙனங் கூடுதல் முறையன்றென்று ஐயுற்ற செவிலியும் நற்றாயும் உயர்ந்தோரைக் கேட்டு இதுவுங் கூடுமுறைமை யென்றுணர்வர் என்பதாம். இலக்கணமுண்மை யின் இலக்கியமும் அக்காலத்துள வென்றுணர்க. ஈ. க.வெ: (நற்றாயும் செவிலியும் தலைமகளது ஒழுகலாற்றை ஐயுற்றுத் துணியுமாறு கூறுகின்றது). 'தலைமகன் அறியா அறிவினையுடையாள் இவள்' என்று குற்றம் அறுத்த சிறப்பினையுடைய உணர்ந்தோர் பக்கத்து உளதாகிய ஐயக்கிளவியால் தலைவனோடு தலைவிக் குளதாகிய புணர்ப்பினை அறிந்து கொள்ளுதல் செவிலிக்கும் நற்றாய்க்கும் உரியது. தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றாயும் குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து தம் மகளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பர். அந்நிலையில் முக்கால நிகழ்ச்சிகளையும் ஒருங்குணரும் நுண்ணுணர்வுடைய அப் பெரியோர்கள் 'இவள், இத்தன்மையான் ஒருவனைக் காதலிக்கின் றாள்' எனத் தலைவியோடு தலைவனுக் குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும், நிகழ்ந்ததனை மறைத்தல் தமது வாய்மைக்கு மாறாதலானும் 'நும்மகள் தலைமகன்அறியா அறிவினை யுடையாள்' என்றாற் போன்று ஐயுறுதற்குரிய கவர்த்த பொருளுடைய தொடரால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணந்து கொள்ளும் உரிமையுடைய கணவனாலும் அறியப்படாத பேரறி வினை யுடையாள் நும் மகளாகிய இவள்' என வெளிப் படையாக ஒரு பொருளும், 'தன் காதற்கிழமை யுடையவனாக ஒழுகும் தலைமகனாலும் அறியப் படாத அறிவுரிமை பூண்டு அவன் பொருட்டு மயங்குகின்றாள் இவள்' எனக் குறிப்பாக மற்றொரு பொருளும் தரும் நிலையில் அறிவர் கூறிய ஐயக்கிளவியை உய்த் துணர்ந்து தலைவன் ஒருவனுடன் தம் மகளுக்கு உளதாகிய தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்து கொள்ளுதற்கும் உரியர் என்பது இந்நூற்பாவினால் அறிவுறுத்தப்படும் நுண்பொருளாகும். ஐயங் களையுங் கருவி அ. வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென் றன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்றவை களையுங் கருவி என்ப. (தொ.பொ.92) ஆ. எழுதிய வல்லியும் தொழில்புனை கலனும் வாடிய மலரும் கூடிய வண்டும் நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும் அச்சமும் பிறவும் அவன்பால் நிகழும் கச்சமில் ஐயங் கடிவன வாகும். (ந.அ.121) (இ.வி.490) அலம்வரல் கண்ணிமைப் பச்சம் உகக்கும் மலருயிர்ப் பதனில் வாடுதல் வெயர்த்தல் ஒளிர்கலன் வள்ளி வண்டுடன் நிழலிடுதல் அடிநிலம் தோய்தல் அவனிகழ் ஐயம் கடிவன ஆகும் காவலன் தனக்கே. (மா.அ.9) இ. இளம்: 1. ஐயக்கிளவி தலைமகற்கே உரித்து என்றவாறு. தலைவிமாட்டு ஐயக் கிளவி இன்று என்றவாறாம். அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும். காணாமையின் ஐயமிலள் என்க. 2. (ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல்) ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விரு வரும் உயர்வுடைய ராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர். அவர் இழிபுடையராயின் அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டி உணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள்தான் சிறந்துழியும் கொள்ளப்படும். அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும். உருவமிகுதி யுடைய ளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார், அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தி னும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவரன்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ்விழி மரபினையே சுட்டியுணரா நிற்கு மாதலான். ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னையெனின், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது. 3. (ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல்). எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகிய அவ்விடத்து நிகழா நின்ற ஐயங்களையுங் கருவி என்றவாறு. ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. நிகழாநின்றவை என்பது குறுகி நின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது, பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளாள் என்றறிதற்குக் கருவியாயிற்று. இழை என்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோற்றுதலானும், தெய்வப்பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையிலும் தோளிலும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ள தாகித் தோன்றுதலின் கருவியா யிற்று. அலமரல் என்பது தடுமாறுதல், தெய்வமாயின் நின்றவழி நிற்கும்; அவ்வாறன்றி நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப் பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண்ணிமை யாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்சமென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால்நிலந்தோய்தல், வியர்த்தல், நிழலிடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு. காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இனிக் குறிப்பறிதல் கூறுகின்றாராகலின் அக் குறிப்பு நிகழும் வழி இவை யெல்லாம் அகமாம். என்னை? இருவர் மாட்டும் ஒத்த நிகழ்ச்சியாத லான். இவை தலைமகள் மாட்டுப் புலப்பட நிகழாது. ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழும் என்று கொள்க. நச்: 1. கூறுவேமோ கூறேமோ என்று ஐயமுற்றுக் கூறுஞ்சொல் தலைவற்கு உரித்து. இனி, ஐயப்பாடு தலைவிக்கும் உரித்து என்றாற் 'சிறந்துழி யையம்' என்பதற்கு மாறாம். 2. (எய்தாதது எய்துவித்து எய்தியது விலக்கிற்று. 'முன்னைய நான்கும் என்றதனாற் கூறிய ஐயம் தலைவன் கண்ணதே எனவும் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலும் கூறலின்). அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளும் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர்; அத்தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான். தலைவற்குத் தெய்வமோ அல்லளோஎன நிகழ்ந்த ஐயம், நூல் முதலிய வற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடையனாக லானும், தலைவிக்கு முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனங் கூறினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக் குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். 3. (இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சி யாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தன அன்றி மண்ணகத் தன ஆதல் நூற்கேள்வியா னும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப). பயின்றதன் மேலல்லாது செல்லாத தாது ஊதும் வண்டு; ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள்; முலையினுந் தோழினும் எழுதும் தொய்யிற் கொடி; கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ; வான்கண்ணில்லாத ஊண்கண்; கண்டறியாத வடிவு கண்ட அச்சத்தாற்பிறந்த தடுமாற்றம்; அக்கண்ணின் இதழ் இமைத்தல்; ஆண்மகனைக் கண்டுழி மனத்திற்பிறக்கும் அச்சம்; என்று அவ்வெண்வகைப் பொருளும் அவைபோல்வன பிறவும் அவ்வெதிர்ப்பாட்டின்கண் முன்பு கண்ட வரையர மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப்பிழம்புகளை முந்து நூற்கண்ணே அவ்வையம் நீக்கும் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர். எனவே, எனக்கும் அது கருத்தென்றார். இவையெல்லாம் மக்கட் குரியனவாய் நிகழவே தெய்வப்பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கத் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன்கூறிற்றே ஆயிற்று. இங்ஙனம் ஐயம் தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. ஈ. க.வெ: 2. தலைவி ஒத்தநலங்களாற் சிறந்து தோன்றியவழி (தலைவனது உள்ளத்தே) ஐயந்தோன்றுதல் சிறந்தது என்பர். சிறப்பின்றித் தாழ்ந்த நிலையில் அவ்விழிபே இன்ன தன்மையள் எனத் தெளிவிக்குமாதலின் (இந்நிலையில் ஐயம் தோன்றுதற்கு இடமில்லை). ஐயக்கிளவியாவது இவர் மக்களினத்தாரோ அன்றித் தெய்வமோ எனத் தம்மினும் மேலாயினாரோடு வைத்து எண்ணி ஐயுற்றுக் கூறுஞ்சொல். நச்: (ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயுங்கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தன வன்றி மண்ணகத் தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சி யானும் தலைமக்கள் உணர்ப). பயின்றதன்மேல் அல்லது செல்லாத தாதூதும் வண்டு, ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள், முலையினும் தோளினும் எழுதும் தொய்யிற்கொடி, கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ, வான் கண் அல்லாத ஊன்கண், கண்டறியாத வடிவுகண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம், அக்கண்ணின் இதழ் இமைத்தல், ஆண் மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம், என்று அவ்வெண் வகைப் பொருளும் அவை போல்வன பிறவும் அவ்வெதிர்ப் பாட்டின் கண் முன்புகண்ட வரையர மகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை முந்து நூற்கண்ணே அவ்வை யம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர். எனவே எமக்கும் அது கருத்தென்றான். இவையெல்லாம் மக்கட் குரியனவாய் நிகழவே தெய்வப்பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று. இனி, 'அன்னபிற' ஆவன கால் நிலந்தோய்தலும் நிழலீடும் வியர்த்தலும் முதலியன. உ. ஆ.கு: ஐயங்களையுங்கருவி ஐயத்தை அகற்றித் தெளிதற்கு உதவும் கருவி. காட்சி ஐயம் துணிவு (ந.அ.118 இ.வி.486) காண்டல் சந்தயம் தெளிதல் (மா.அ.6) காட்சி ஐயம் தெளிதல் (மு.வீ.835) ஐயத்திற்கு அப்பால் துணிவு, தெளிவு என இருத்தல் அறிக. ஐயஞ்சிறத்தல் அ. சிறந்துழி ஐயம் சிறந்த தென்ப இழிந்துழி இழிவே சுட்ட லான (தொ.பொ.91) ஆ. மடமான் நோக்கி வடிவும் கண்ட இடமும் சிறந்துழி எய்துவ தையம் (ந.அ.120 இ.வி.489) எய்திய இருவருள் சிறந்தஇறை வன்மேற் றையுறல் என்ப அறிவுடை யோரே (மா.அ.8) இ. இளம்: (ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல்) ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விருவகையரும் உயர்வுடைய ராயின் அவ்விடத்து ஐயம் சிறந்ததென்று சொல்லுவர்; அவர் இழிபுடைய ராயின் அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டியுணர்த்த லான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள் சிறந்துழியும் அவளைக் கண்ட இடம் சிறந்துழியும் கொள்ளப் படும். உருவ மிகுதியுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வ மென்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தா ராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவரன்றே; அவரெல்லாரினும் செல்வத் தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளு மாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ்விழி மரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் என்றவாறு. ''உயர்மொழிக் கிளவி உறழும் கிளவி ஐயக்கிளவி ஆடூஉவிற் குரித்தே" என்றாராகலின் ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னை எனின், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாக காம நிகழ்ச்சி உண்டாகாது. நச்: (பாடம்: இழிபே). (எய்தாதது எய்துவித்து எய்தியது விலக்கிற்று, முன்னைய நான்கும் (பொ.52) என்றதனாற் கூறிய ஐயந்தலைவன் கண்ணதே எனவும் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலும் கூறின). அங்ஙனம் எதிர்ப்பாட்டின் இருவருள்ளும் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர்; அத்தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆகலான். தலைவற்குத் தெய்வமோ அல்லளோ என நிகழ்ந்த ஐயம், நூல் முதலிய வற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடைய னாகலானும், தலைவிக்கு முருகனோ இயக்கனோ மகனோ என ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனம் கூறினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச்சிறத்தல் பற்றிச் 'சிறந்துழி' என்றார். ஈ. க.வெ: ஒரு பொருளைக் கண்டு ஐயுற்றுத் தெளிதற்குரிய இருபாலருள் பெண்ணினும் ஆடவன் சிறத்தல் பற்றித் தலைமகனைச் 'சிறந்துழி' எனவும், அச்சிறப்பின்மை பற்றித் தலைமகளை இழிந்துழி எனவும் ஆசிரியர் குறித்துள்ளார் எனக் கொண்டு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை. 'செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான' எனத் தொல்காப்பியனார் அறிவுறுத்திய பெண்மை யிலக்கணத்திற்கு முரண்பட்ட தாகும். இந்நூற்பாவில் 'சிறந்துழி' 'இறந்துழி' எனச் சுட்டியது ஐயப்படுதற் குரிய காட்சிப் பொருளாகிய தலைமக்களது உருவவனப்பின் சிறப்பினையும் சிறப்பின்மையினையும் அன்றிக் கண்டு ஐயுறுவோரது உயர்வினையும் தாழ்வினை யும் சுட்டியதன்றென்க. ஐவகை அடி அ. ஐவகை அடியும் விரிக்குங் காலை மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும் எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே (தொ.பொ.357) நாலெழுத் தாதி யாக ஆறெழுத் தேறிய நிலத்தே குறளடி என்ப. (தொ.பொ.344) ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்றம் அவ்வழி யான (தொ.பொ.345) பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே (தொ.பொ.346) மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப (தொ.பொ.347) மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப. (தொ.பொ.348) சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது நேர்நிரை வஞ்சிக் காறும் ஆகும் (தொ.பொ.349) ஆ. குறள்சிந் தளவு நெடில்கழி நெடிலென் றறுவகை மரபின அடிவகை தாமே (கா.பா.) இருசீர் குறளடி சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் அறுசீர் அதனின் இழிபு நெடிலடி என்றிசி னோரே (கா.பா.) குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியெனக் கட்டுரைத் தனரே (யா.வி.23) குறளடி சிந்தடி இருசீர் முச்சீர் அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர் நிரல்நிறை வகையான் நிறுத்தனர் கொளலே (யா.வி.25) குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர் அறைதரு காலை அளவொடு நேரடி ஐயொருசீர் நிறைதரு பாதம் நெடிலடி யாம்நெடு மென்பணைத்தோள் கறைகெழு வேற்கணல் லாய்! மிக்க பாதம் கழிநெடிலே (யா.கா.12) இருசீரும் முச்சீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஐந்தின்மிக்கு வருசீரும் அந்தரங் கால்தீப் புனலொடு மண்பெயரால் திரிசீ ரடியாம் குறள்சிந் தளவு நெடில்தகைமை தெரிசீர் கழிநெடி லென்று நிரல்நிறை செப்புவரே (வீ.சோ.109) குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடில் அடியென அடியைந் தாகும் (இ.வி.719) குறளொரு பந்தம் இருதளை சிந்தாம் முத்தளை அளவடி நால்தளை நெடிலடி ஐந்தளை முதலா எழுதளை காறும் வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப. (இ.வி.720) அடியென்ப தளைத்த அஞ்சீராம் நடையவை குறளடி இருசீர் சிந்தடி முச்சீர் அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி கழிநெடி லடிஐந்தே கடந்தசீர் இவற்றுள் எண்சீர் மிக்கடி எனின்சிறப் பின்றே (தொ.வி.211) இருசீ ரான்வரல் குறளடி எனலே (மு.வீ.14) முச்சீ ரான்முடி வதுசிந் தடியே (மு.வீ.15) நாற்சீ ரான்வரல் அளவடி யாகும் (மு.வீ.16) ஐஞ்சீ ரான்வரு வதுநெடி லடியே (மு.வீ.17) அறுசீர் முதலே யிருசீ ரடிகடை யாக வருவது கழிநெடி லாகும் (மு.வீ.18) இ. இளம்: (மேற்சொல்லப்பட்ட அடிக்கெல்லாம் விரியுணர்த்துதல்) நாற்சீரடியை எழுத்தளவு பற்றி வகுக்கப்பட்ட குறளடி முதலாகிய ஐந்தடியினையும் விரித்துணர்த்தும் காலத்து, எழுத்தமைந்த நாலெழுத்து முதலாக இருபதெழுத்து ஈறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் எழுபது வகைப்பட்ட உறழ்ச்சியின் வழுவுதலின்றி இரண்டு சீர் தம்முட் புணரும் புணர்ச்சி எழுபது வகையாம். மெய் என்பது உடம்பு அஃதாவது அசையும் சீரும் தோற்றுதற் கிடமாகிய எழுத்து. இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரிய உரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடி எனவும், நிரையீற்று வஞ்சிச் சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், உரியசையீற்றான் வருவதனை உரியசையீற்று வஞ்சியடி எனவும், ஓரசைச்சீரான் வருவதனை அசைச்சீரடி எனவும் வழங்கப்படும். அவற்றுள் இயற்சீரடி நேரீற்றியற்சீரடி எனவும் நிரையீற் றியற்சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற்றியற்சீரடி யாவது நேரீறு நேர்முதலாகிய இயற்சீர் வருதலும், நேர்பு முதலாசிரிய வுரிச்சீர் வருதலும், நேர்முதல் வெண்பா உரிச்சீர் வருதலும், நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும், நேர்முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். நிரையீற் றியற்சீரும் நிரைமுதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். ஆசிரியவுரிச்சீரடியும் இருவகைப்படும். நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என. அவற்றுள் நேர்பீற்றுச்சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபீற்றுச் சீரும் அவ்வாறே நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடியும் நேரீறும் நிரையீறும் என இருவகைப்படும். அவற்றுள் நேரீறு நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். நிரையீறும் அவ்வாறே நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலும் என இருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களோடு உறழ்தல் ஐவகைப்படும். நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களோடு உறழ்தலும் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதன வும் என இருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரைபும் நிரையும் முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலிய சீரொடு உறழ ஐவகைப்படும். உரியசை யீற்று வஞ்சியடியும் அவ்வாறே உறழப்பத்து வகைப்படும். அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழப் பத்து வகைப்படும். இவ்வகையால் தளை ஏழு பாகுபட்டன; இவை நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என எழுவகையாம். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர் பாற்படும். ஆசிரியவுரிச்சீரும் அதுவேயாம். மூவசைச்சீருள் வெண்பாவுரிச்சீர் ஒழிந்தனவெல்லாம் வஞ்சியுரிச் சீராம். அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது நேரொன்றாசிரியத் தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன்றாசிரியத் தளையாம்; மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம்; வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம்; நிரையாய் ஒன்றிற் கலித்தளையாம்; வஞ்சி யுரிச்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித் தளையாம்; ஒன்றாதது ஒன்றாத வஞ்சித் தளையாம். இவ்வகையால் தளை ஏழாயின. இனி அடி அறுநூற்றிருபத்தைந்தாமாறு; அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய வுரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி இவ்வைந்து சீரும் வருஞ்சீராகவுறழும் வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின் கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந்நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ அறுநூற் றிருபத்தைந்தாம் என்றவாறு. பேரா: (முன்னர்ச் சிறப்புடைத்தென வேண்டிய நாற்சீரடியினைக் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி யென வகுத்தமையாமாறு கூறினான். இனி அறுநூற்றிருபத் தைந்தென அவைபட்ட விகற்பமுங் கூறியவாறு). மேற்கூறிய ஐவகையடியினையும் விரிக்குங்காலைப் பொருள் வகை யமைந்த பதினேழ் நிலத்து எழுபது வகைக்குற்ற நீங்கி அறுநூற் றிருபத்தைந்தாம். எனவே, பதினேழ்நிலத்து ஏறினும், எழுபது வகைக் குற்றம் விரவச் செயினும் அறுநூற்றிருபத்தைந்தெனப் படா என்பதாம்... ஆசிரியத்துள் இயற்சீர் பத்தொன்பதும் ஆசிரியவுரிச்சீர் நான்கும் அசைச் சீர் நான்குமென இருபத்தேழாகி, 'எழுத்தளவெஞ்சினும் சீர்நிலைதானே, குன்றலும் மிகுதலும்' இன்றி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும், ஒழித்து ஒழிந்த சீர் இருபத்து மூன்றும் வெண்சீர் நான்கினோடும் தலைப்பெய்ய அவையும் அவ்வாறே இருபத்தேழாம். கலிப்பாவிற்கு நேரீற்றியற்சீர் மூன்றொழித்து ஒழிந்த இயற்சீர் பதினாறும் ஆசிரியவுரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் என இருபத்து நான்காம். இவை மூன்று பகுதியும் தொகுப்ப எழுபத்தெட்டாயின. அவற்றுள், ஆசிரியத்தளை வந்த அசைச்சீர் நான்கினையும் வெண்பாவினுள் வந்த அசைச்சீர் நான்கினையும் ஈண்டுத் தளைகொள்ளுங்கால் இயற்சீர்ப் பாற்படுத்து அடக்குக வென்று ஆண்டுக் கூறினமையின் (340) ஈண்டு அவற்றை இயற்சீர்ப் பாற்படுத்தடக்கின் எழுபதாகக் கொள்ளப்படும். அங்ஙனங் கொள்ளப்பட்ட சீர் ஒன்றனோடு தட்குங்கால் அவ்வெழு வகை யானுமன்றித் தட்குமாறில்லை. அது நோக்கி எழுபது வகையின் வழுவிலவாகியென்றான் என்பது... தளைசிதையா அடி அறுநூற்றிருபத்தைந்தும் மூன்று பாவிற்கும் உரிய பகுதியவாம். யாங்ஙனம்? ஆசிரியவடி முந்நூற்றிருபத்து நான்கும் வெண்பாவடி நூற்றெண்பத் தொன்றும், கலியடி நூற்றிருபதுமென அறுநூற்றிருபத் தைந்தாம்... நச்: (பேராசிரியர் உரையின் வழியே இயல்கின்றது நச்சினார்க்கினியர் உரை). மெய்வகையமைந்த என்றதனான் நான்குசீரினும் உறழ்கின்ற சீரினை அடி முதற்கண்ணே வெளிப்பட வைத்து அவ்வச்சீரின் அடியாக்கிப் பெயருங் கொடுத்து அகவற்கு ஒரோ ஒன்று பன்னீரடியாகவும் ஒழிந்த இரண்டற்கும் பிறவாறாகவும் உறழப்படும். ஈ. யா.வி: குறளடி முதலாகிய அடிகளை இடுகுறியானும் காரணக் குறியானும் வழங்குப. 'காரணக்குறியான் வழங்குமாறு யாதோ?' எனின், மக்களில் தீரக் குறியானைக் 'குறளன்' என்ப; அவனின் றெடியானைச் 'சிந்தன்' என்ப; குறியனும் நெடியனும் அல்லாதானை 'அளவிற் பட்டான்' என்ப. அவனின் நெடியானை 'நெடியன்' என்ப. அதனால் இவ்வடிக்கும் இவ்வாறே பெயர் சென்றன என்ப. உ. ஆ.கு: (தொல். செய். 3640. இன் ஐவகையடியும் உரைக்கும் பேராசிரியர், குறளடி முதலியவற்றை இவ்வாறே விளக்கியுள்ளார்). ஐவகை மரபின் அரசர் பக்கம் அ. ஐவகை மரபின் அரசர் பக்கமும் (தொ.பொ.74) ஆ. அரசவாகை (பு.வெ.8) பகலன்ன வாய்மொழி, இகல்வேந்தன் இயல்புரைத்தன்று (பு.வெ.8:3) நாற்குலப் பக்கம் (வீ.சோ.104) ஐவகை மரபின் அரச வாகை (இ.வி.613) இ. இளம்: ஐவகைப்பட்ட அரசர் பக்கமும். அவையாவன: ஓதலும் வேட்டலும் ஈதலும் படை வழங்குதலும், குடியோம்புதலுமாம். பக்கம்என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற் கெல்லாம் இதுவே ஒத்தாகக் கொள்க. நச்: ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ் செய்தல் என்னும் ஐவகை யிலக்கணத்தையுடைய அரசியற் கூறும். வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும் பிற்கூறிய இரண்டும் சிறப்புமாதல் கொள்க. பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராச சூயமும் துரங்க வேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்துயாத்துக் குளம்புங்கோடும் பொன்னணிந்த புனிற்றா நிரையும், கனகமும் கழுகு முதலியனவும் அன்னமும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையும், தண்ணடையும் கன்னியரும் பிறவுங் கொடுத்தலும் மழுவாள் நெடியோன் ஒப்ப உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்கு உரிய ஈதலாம் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்க ளானும் நாற்படையினும் கொடைத் தொழிலானும்பிறவாற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனங் காக்கப் படும் உயிர்க்கு ஏதஞ் செய்யும் மக்களையாயினும் விலங்கை யாயினும் பகைத்திறத்தை யாயினும் அறஞ் செய்யா அரசையாயினும் விதி வழியால் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும். 'வகை'யென்றதனானே களவு செய்தோர் கையிற் பொருட் கோடலும் ஆறிலொன்று கோடலும் சுங்கம் கோடலும் அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப் பொருள் நும்மிடத்து யான் கொள்வ லெனக் கூறிக் கொண்டு அது கோடலும், மறம் பொருளாகப் பகைவர் நாடு கோடலும், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன் றாயங் கோடலும், பொருளில்வழி வாணிகஞ்செய்து கோடலும், அறத்திற் றிரிந்தாரைத் தண்டத்திற்றருமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்கமென்றதனான் அரசர் ஏனை வருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணத்துப் பகுதியோரும் சில தொழிற்குரியர் என்று கொள்க. ஈ. நாவலர்: ஐவேறு குடிவகையினராய் ஆளும் மன்னர் இறைமைத் திறமையின் சார்பாயும். வேந்தர்தம் வாகைக்குரியவை போர்வென்றி கொடை செங்கோற் செவ்வி போல்வன. அதுவேபோல் ஏனைய தமிழ்மக்களுக்கு அவரவர் கொண்ட தவறறு தொழில் எல்லாம் வாகைக்குரியவாகும். ஐவகை மரபின் அரசர் என்றது, சேர சோழ பாண்டியராவார் முடிவேந்தர் குடிமூன்று. ஆளுதற்குரிய வேளிர் குடி ஒன்று. மற்றைய குறுநில மன்னர் குடிமரபொன்று, ஆக மன்னவர் ஐவகை மரபினராய்ப் பண்டைத் தமிழகத்தாண்டன ராதலின், அரசர் எனப்படுதலான் ஈண்டுக் குறிப்பது ஆளுமன்னவரை மட்டுமே. தமிழ் வழக்கில் ஆளாத அரசர் என்றொரு சாதியில்லை. அமர்த்தொழில் தறுகண் மறவர் அனைவருக்கும் பொது உரிமை. அத்தொழில் புரிபவர் பொருநராவ தல்லால் அரசர் எனப்படார். க.வெ.: குறுநில மன்னரும் வேளிர் மரபினைச் சார்ந்தவரே என்பது 'வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து; எனவரும் பதிற்றுப் பத்துத் தொடராற் புலனாதலின், வேளிரின் வேறாகக் குறுநில மன்னரைக் கூட்டி அரசர் பக்கம் ஐந்துஎன்றல் பொருத்தமுடைய தாகத் தோன்றவில்லை. ஒத்தாழிசை அ. 1. ஒத்துமூன் றாகும் ஒத்தா ழிசையே (தொ.பொ.446) 2. தரவிற் சுருங்கித் தோன்றும் என்ப ஆ. தாழிசை, ஒத்தாழ்ந் திறினஃ தொத்தா ழிசையே இரண்டடி சிறுமை பெருமை இரட்டி தரவடி அதனில் தாழ்ந்திறும் தாழிசை தத்தமில் ஒத்துத் தரவின் அகப்பட நிற்பன மூன்றும் நிரந்ததா ழிசையே. (கா.பா.) இ. இளம்: (தாழிசைக்கு அடிவரையறை உணர்த்துதல்). தாழிசையும் தம்முள் அளவும் ஒத்து மூன்றாகிவரும். அவை தரவிற் சுருங்கித் தோன்றும் என்றவாறு. பேரா: 1. (முறையானே ஒத்தாழிசை உணர்த்துகின்றது). (இருநூற்பாவாகக் கொள்வார் பேராசிரியர்). தம்மின் ஒத்த அளவினவாகலும் ஒத்த பொருளவாகலு முடைய தேவபாணிக்கண் மூன்றாகவரும் ஒத்தாழிசை. இவை பொருள் ஒக்குமெனவே, முன்னை அகநிலை யொத் தாழிசைக்கண் வரும் இடைநிலைப் பாட்டின் பொருள் ஒவ்வாது வருதலும் சிறுபான்மை உண்டென அறிக. 2. (இஃது ஐயம் அறுத்தது. அகநிலை ஒத்தாழிசைகட்குப் போலத் தரவோடொத்து வருங்கொலென்றையுறாமைத் தரவிற் சுருங்கித் தோன்றுமென்றமையின்). மூவகை வண்ணத்தின் தாழிசையும் சமநிலைத் தரவிற் சுருங்கித் தோன்றும். வாளாதே தரவென்றமையின் இடையளவின்மேற் செல்லும் அடியென்றவழி அளவடி மேற்று ஆயதுபோல என்பது. 'தோன்றும்' என்பதனான் இடைநிலையாகிய நான்கடியானும் மூன்றடியானுமன்றி ஐந்தடியானாகாது என்பது கொள்க. எண்ணோடு தொடர்தலின் இரண்டடியா னாகாது என்பது பெற்றாம். இடையளவு தரவிற் சுருங்குமெனவே கடையளவு தரவினும் தாழிசை சுருங்குமென்பது உய்த்துணரப்படும். இங்ஙனங் கூறாக்கால் ஓரடி முதலாகத் தாழிசை கோடல் வேண்டும் அஃதன்றோ என்பது. தோன் றும் என்றதனாற் கடை யளவினை ஒழித்து மற்றைத் தரவிரண்டள வாகக் கொள்வாமெனக் கொள்க. நச்: (இருநூற்பாவாகவே கொள்வார் நச்சினார்க்கினியரும்). (இது தாழிசை கூறுகின்றது). அ. பொருளும் அளவும் தம்முளொத்து மூன்றாய் வரும் தேவபாணிக்கண் வரும் தாழிசை. இவை பொருளொக்குமெனவே அகநிலை யொத்தாழிசைக்கண் வருந்தாழிசை சிறுபான்மை பொருளொவ்வாது வருதல் பெற்றாம். உ. (இது முன்னர் வந்த ஒத்தாழிசைபோல் தாழிசை அளவோடொத்து வாராவென ஐயமகற்றியது). எட்டும் ஆறும் நான்கும் என்ற வண்ணத்தின் தாழிசையும் சமநிலைத் தரவிற் சுருங்கத் தோன்றும். வாளாதே சுருங்கும் என்றாரேனும், தோன்றும் என்றதனால் தரவின் பாதியாகிய நான்கடியும் மூன்றடியுமே தனக்குப் பெருமைக்கும் சிறுமைக்கும் எல்லையென்பது. ஈரடித் தாழிசையாகாதாயிற்று. இங்ஙனங் கூறாக்கால் ஏழடிப் பெருமையாகத் தாழிசைகோடல் வேண்டும். இதனாற் கூறிய நான்கடியானு மூன்றடியானுமன்றி ஐந்தடியானும் இரண்டடியானும் வாராதென்பதாயிற்று. ஈ. யா.வி: ஒத்த ஒருபொருள் முடிவினால் ஒத்த தாழ்ச்சியால் இசைத்தலானும் தரவிற் குறைந்து இசைத்தலானும் 'ஒத்தாழிசை' என்பதூஉம் 'தாழிசை' என்பதூஉம் காரணக்குறி. ஒத்தாழிசைக்கலிப்பா அ. 1. அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும். (தொ.பொ.436) 2. இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப (தொ.பொ.437) 3. ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே (தொ.பொ.442) ஆ. தரவே தாழிசை தனிநிலை சுரிதகம் எனநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி (கா.பா.) விட்டிசை முதற்பாத் தரவடி ஒத்தாங் கொட்டிய மூன்றிடைத் தாழிசை அதன்பின் மிக்கதோர் சொல்லாத் தனிநிலை சுரிதகம் ஆசிரியத்தொடு வெள்ளை யிறுதலென் றோதினர் ஒத்தா ழிசைக்கலிக் குறுப்பே. (விநயம்) தரவொன் றாகித் தாழிசை மூன்றாய் தனிச்சொல் இடைகிடந்து சுரிதகம் தழுவ வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி (மயேச்சுரம்) தரவின் அளவின் சுரிதகம் அயற்பா விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை (மயேச்சுரம்) தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த் தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச் சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய் நிகழ்வது நேரிசை ஒத்தாழிசைக்கலி (யா.வி.82) முந்திய தாழிசைக் கீறாய் முறைமுறை ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே (யா.வி.83) அவற்றொடு முடுகியல் அடியுடை அராகம் அடுப்பது வண்ணக ஒத்தா ழிசைக் கலி (யா.வி.84) இ. இளம்: 1. ஒத்தாழிசைக்கலி இரண்டு வகைப்படும். 2. (ஒத்தாழிசைக்கலி பாகுபடுமாறு உணர்த்துதல்). தாழிசையும் தரவும் சுரிதகமும் அடைநிலைக் கிளவியும் என நான்கு உறுப்பினையுடைத்து ஒத்தாழிசைக்கலி. தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனக் கிடக்கை முறையாற் கூறாது முற்கூறிய வகையான் இப்பாவிற்கும் ஒத்தாழிசை சிறந்ததாதலின் முற்கூறினார். முற்கூறுகின்ற வழியும் இடைநிலைப்பாட்டே எனக் கூறுதலின் முந்துற்றது தரவு என்றவாறாம். இடைநிலைப் பாட்டுஎனினும் தாழிசை எனினும் ஒக்கும். போக்கு எனினும் சுரிதகம் எனினும் வாரம் எனினும் அடக்கியல் எனினும் ஒக்கும். அடை எனினும் தனிச்சொல் எனினும் ஒக்கும். தனிச்சொல்லைப் பின் எண்ணிய அதனான் தாழிசை தோறுந் தனிச்சொல் வரவும் பெறும் என்று கொள்க. 3. ஒத்தாழிசைக் கலிப்பா முன்னிலையிடத்துத் தேவரைப் பராவும் பொருண்மைத்து. பேரா: 1. ஒத்தாழிசைக்கலி இரண்டு கூற்றதாம். இதனது பயம், அவை இரண்டும் தம்முட் பகுதியுடைய என்பது. 2. மேற்கூறிய ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையும் தரவும் சுரிதகமும் தனிச்சொல்லுமென நான்கு உறுப்பாகப் பயின்றுவரும். பயின்றுவரும் எனவே இவ்வாறன்றிப் பயிலாது வருவனவும் இதன் பகுதியாயடங்குவனவும் உள வென்பது. அவை தாழிசைப் பின்னர் எண்ணுறுப்பு வருங்கால் ஐந்துறுப்புப் பெறுதலும், அவற்றிடை அராகம் பெறின் ஆறுறுப்பு வருதலுமென இவையென்ப. அற்றன்று நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியின் அராகவுறுப்பும் அம்போதரங்க உறுப்பும் பெற்று வருவன இன்மையின் அவை பொருளன்றென்பது. மற்று 'நடைநவின்றொழுகும்' என்றது என்னையெனின், இத்துணை பயின்று வாராது ஏனையொன்றும் என்றற் கென்பது; தாழிசையினை இடைநிலைப்பாட்டு என்பவோ எனின், அவ்வாறும் சொல்லுப. அச்செய்யுள் இடை நிற்றலான் என்பது. இனி இடைநிலைப் பாட்டென்பது தாழிசையினை நோக்காது; என்னை? தாழம்பட்ட ஓசையல்லாதனவும் இடைநிலைப் பாட்டாய் வருமாதலின் என்பது. தரவு என்றதன் பொருண்மை என்னையெனின், முகத்துத் தரப்படுவ தென்ப; அதனை எருத்தெனவுஞ் சொல்லுப. என்னை? உடம்பும் தலையுமென வேறுபடுத்து வழங்கும் வழக்கு வகையான் உடம்பிற்கு முதல் எருத்தென்பதாகலின். இனி இசைநூலாரும் இத்தரவு முதலாயினவற்றை முகம் நிலை கொச்சகம் முரியென வேண்டுப. கூத்த நூலார் சொக்கமுள்வழி அதனை நிலையென அடக்கி முகம் நிலை முரியென மூன்றாக வேண்டுப. அவரும் இக்கருத்திற்கேற்ப முகத்திற்படுந் தரவினை முகமென வும், இடைநிற்பனவற்றை இடைநிலை யெனவும், இறுதிக்கண் முரித்து மாறும் சுரிதகத்தினை முரியெனவும் கூறினார் என்பது. செந்துறைச் செய்யுள் அடைநிலை பயப்ப தின்மையின் அது சிறந்ததன்றென்று அடக்கிமொழிப. உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்கும் இயல்பிற்றாகலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலிற் போக்கெனவும், அவையெல் லாம் போதந்து வைத்தலின் வைப்பெனவும், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் எல்லாம் ஒன்றொன்றனை ஒத்தேபெயராயின. அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிறவுறுப் புக்களை அடைந்தன்றி வாராது. அது, தனி நின்று சீராதலின் சொல்லெனவும் படும். இடைநிலை உறுப்பென்னாது பாட்டென்ற தென்னையெனின், அவை தாமே பாட்டாயும் வருமிடனுடைய; வருங்கால் அவை ஒன் றும் இரண்டும் பலவுமாய் வருமென்பது. இடைநிலைப்பாட்டினைத் தரவிற்கு முற்கூறினான், அது பெயர் பெறுதலின். எனவே தரவு முன் வைத்தலே மரபாயிற்று. ஒத்தாழிசை கூறிய முறையானே தரவு தாழிசை போக்கு என்னும் மூன்றுறுப்பானும் சிறுபான்மை வந்து தனிச்சொல் இன்றி வருதலின் தனிச் சொல்லினை இறுதிக்கண் வைத்தான் என்பது. 3. அது முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து. எனவே இஃது அகநிலைச் செய்யுளாகா தென்றான். இதனானே முன்னையது அகநிலை யொத்தாழிசை எனப்படும். மற்று முன்னிலைக்கண் என்றதென்னை எனின், தெய்வத்தினை முன்னிலையாகச் சொல்லப்பட்டனவன்றி அல்லன தேவபாணி யெனத் தகா என்பது. என்னை? யான் இன்ன பெருஞ் சிறப்பின் இன்ன தெய்வமென்று தன்னைத்தான் புகழ்ந்து கூறி 'நின்னைக் காப்பேன்! நீ வாழிய' எனத் தெய்வஞ் சொல்லிற்றாகச் செய்யுள் செய்தலும் ஆகாது; வாழ்க்கினுள் அவ்வாறு உண்டாயின் என்பது. இதனானே படர்க்கை யும் விலக்கினானாம். ஆகவே தெய்வம் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தாவதன்றித் தேவர்ப்பராயிற்றாகாது, பாட்டுடைத் தலைவ னோடு கூட்டிச் சொல்லினும் என்றானாம். இங்ஙனங் கூறவே பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாக்காலும் தேவர்ப் பராயிற்றேயாம், முன்னிலை யாயினென்பது பெற்றாம். மற்றிவை பாடல்சான்ற புலனெறி வழக்கிற் கன்றித் தேவர்ப்பராயதற்கும் உரியவோ எனின், ஆண்டு அகப்பொருட்குரிமை யுடையன கலியும் பரிபாடலுமென்றதனானே அத்துணை உரிமையின்றிக் கடவுள் வாழ்த்துப் பொருள்படவும் வருமென்பது ஈண்டுக் கூறினான் என்பது. அதுவன்றே ஏனை ஒன்றே எனச் சிறுமை தோன்றப் பிற்கூறியதென்பது. நச்: 2. (பாடம்: நடைபயிற்று). இது மேற்கூறிய ஒத்தாழிசை இரண்டனுள் ஒன்று தாழிசையும் தரவும் சுரிதகமும் தனிச்சொல்லும் என நான்குறுப்பாகப் பயின்று வருமென்று கூறுவர் புலவர். அவ்வாறு பயின்று வரும் எனவே இத்துணை ஏனையொன்றும் பயிலாது வருமென்பதாம். செய்யுளிடையே நிற்றலானும் தாழம்பட்டவோசை யன்றியும் வருவனவும் கோடற்குத் தாழிசையென்னாது பொதுவாக இடைநிலை யென்றார். அவைதாமே பாட்டாயும் வருதலும், அங்ஙனம் வருங்கால் ஒன்றும் பலவுமாயும் வருதலும் கோடற்குப் பாட்டென்றார். இதனைத் தரவிற்கு முற்கூறினார் ஒத்தாழிசைக்கலியென இதனாற் பெயர் பெறுதலின். முகத்துத் தரப்படுதலின் தரவு; உடம்பும் தலையும் வேறுபாடாக வழங்கும் வகையான் உடம்பிற்குக் கழுத்துப் போல் இது முன்னிற்ற லின் எருத்தென்று பெயர் கூறுப. முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களையடைய நிற்றலின் அடைநிலை. அது தனிநின்றும் சீராகலின் தனிச்சொல் எனவும் படும். எனவே தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் முறையே வருதல் மரபாம். சிறுபான்மை தனிச்சொல் இன்றியும் வருதலிற்றனிச் சொல்லையீற்றிற் கூறினார். 3. ஒழிந்த ஒத்தாழிசை முன்னிலையிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து. எனவே இது அகநிலைச் செய்யுளாகாதென்பதூஉம், முன்னையது அகநிலைச் செய்யுளாமென்பதூஉம் பெறுதும். முன்னிலைக்கண் வருமெனவே முன் நூற்பாவிற்கு முரித்தென்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கும் எய்திற்றேனும் அவை தேவபாணியாகாவாயிற்று. அங்ஙனம் பராவினும் படர்க்கையாயவழிப் புறநிலை வாழ்த்தேயாம் பாட்டுடைத் தலைவனைக் கூட்டிக் கூறினும் என்பது பெறுதும். எனவே, பாட்டுடைத் தலைவனைக் கூட்டினும் கூட்டாவிடினும் தேவர்ப் பராயிற்றேயாம்; முன்னிலையென்பது பெற்றாம். கலிப்பாப் புலனெறி வழக்கேயன்றிச் சிறுபான்மை கடவுட்பராஅய பொருளா னும் வருமென்றற்கு இதனைப் பிற் கூறினார். தெய்வந் தானே நின்னை யான் காப்பே னெனக் கூறும் உலக வழக்குமாகாதென்றுணர்க. ஈ. அடியார்க்: தரவினை நிலையென அடக்கி முகத்திற் படுந்தரவினை முகநிலை யெனவும், இடைநிற்பனவற்றை இடைநிலை யெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலையெனவும் பரவுதற் பொருண்மையாற் பெயர் கொடுத்தார் செய்யுளியலின் கண்ணும் எனக் கொள்க. இனி, இசைத்தமி ழின் வருங்கால் முகநிலை, கொச்சகம், முரி என்ப, ஒருசாராசிரியர். (சிலப்.கடலாடு.35) யா.வி: அளவிற்பட்டு ஆழமுடைத்தாகிய பொருளைச் சொல்லுதலானும் ஓதப்பட்ட கலிப்பாவினாலும் பொது இலக்கணத்தோடு ஒத்து ஆழ முடைத்தாய் இசைத்தலானும், ஒத்துத் தாழ்ந்த புகழிற்று ஆகலானும், ஒத்த பொருண்மேல் மூன்றாய்த் தாழ்ந்திசைக்கும் ஒத்தாழிசையைத் தனக்குச் சிறப்புறுப்பாக உடைத்துஆகலானும் ஒத்தாழிசைக்கலி என்பதூஉம் காரணக்குறி. யா.வி.79 ஒப்பினது வகை அ. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொ.பொ.269 இ.வி.488) இ. இளம்: (களவியலிற் கூறப்பட்ட தலைவற்கும் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல்). இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம் (களவியல், ''ஒன்றே வேறே" என்னும் நூற்பாவுள் உரைத்தது). ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்பது. ஒப்பு பத்து வகைப்படும். அவை: பிறப்பாவது அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆயர் வேட்டுவர் குறவர், நுளையர் என்றாற்போல வருங்குலம். குடிமை யாவது அக்குலத்தி னுள்ளார் எல்லாரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார். ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" எனப்பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது ஆண்மைத் தன்மை. அஃதாவது, ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம். ''மொழியாததனை முட்டின்று முடித்தல்" (மர. 110) என்பதனால் தலைமகள் மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். ஆண்டென்பது, ஒருவரின் ஒருவர் முதியரன்றி ஒத்த, பருவத்தராதல். அது குழவிப்பருவங் கழிந்துபதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத் தாளும் ஆதல். உருவு என்பது வனப்பு. நிறுத்த காமவாயில் என்பது நிலை நிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது ஒருவர் மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத் திற்குப் புரியும் கருணை. உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க. பேரா: (இதுவும் அம்மெய்ப்பாட்டுப் பகுதியே கூறுகின்றது; மேற் களவிய லுள், 'ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப' என்றான்; அவ்வொப்பினது பகுதி இத்துணைக் குறிப்பு உடைத்தென்ப துணர்த்தினமையின்). ஒத்த பிறப்பும், ஒத்த ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும், ஒத்த பிராயமும், ஒத்த உருவும், ஒத்த அன்பும், ஒத்த நிறையும், ஒத்த அருளும், ஒத்த அறிவும் ஒத்த செல்வமுமெனப்பத்து வகைய தலைமகளொப்பினது பகுதி. இவை தலைமகற்கு மெய்ப்பாடு எனப்படாவோ எனின், படுமா யினும் அஃது ஒப்பினது வகை என்றதனானே தலைமகட்கே உரிமை கொளப்படும். குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னை யெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல். அதற்குத் தக்க ஒழுக்கம் குடிமை எனப்படும்; குடிப்பிறந்தாரது தன்மையைக் குடிமை யென்றாரென்பது; அதனை ஊராண்மை யெனவுஞ் சொல்லுப. ஆண்மை புருடர்க்காம். அஃது ஆள்வினை எனப்படும். இது தலைமகட்கு ஒப்பதன்றால் எனின், குடியாண்மை என்புழி ஆண்மை என்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையும் என்பது. யாண்டென் பது ஒத்தவா றென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஓத்தினுள் ஒப்ப முடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும். உருவு நிறுத்த காமவாயில் என்பது பெண்மைவடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு என்றவாறு. இங்ஙனம் ஓதிய வகையான் இவை ஒன்பதாகலிற் பத்தாமாறு என்னை யெனின் காமவாயிலெனப்பட்ட இயற்கையன்பு வடிவு பற்றியல்லது தோன்றாமையானும் குணம்பற்றித் தோன்றுவன செயற்கையன்பாக லானும் உருவினை அன்பிற்கு அடையாகக் கூறினானாயினும் உருவு சிறப்புடைமையின் அதனை நாம் பகுத் தெண்ணிக் கொண்டாம் என்பது? என்னை? ''வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு" என்புழிக் கற்றறிதல் என்பதனை இரண்டாக்கி ஐந்தென்ப வாகலின். அஃதேல் உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறு என்னை யெனின், அவ்வுருப் பற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே; அதனான் அது மெய்ப்பாடெனப்படும். நிறை யென்பது மறைபிறர் அறியாமை, நெஞ்சினை நிறுத்தல். அருளென்பது எல்லா உயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல். அதுவும் காமத்திற்கு இன்றி யமையாத தோர் குறிப்பு. உணர்வென்பது அறிவுடைமை; அதாவது உலகியலாற் செய்யத் தகுவது அறிதல். திருவென்பது பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி. அது வினையுள் ளுடைமை எனவும்படும். இவை யெல்லாம் இருவர்க்கும் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் அவை பற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு. வகையென்றதனான் ஆண்மை வகை பெண்மை வகை யெனவும், குடிமை வகை யென்பது இருவருக்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமென வும், பிறப்பினது வகை அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும், வணிகர்க்கு இரண்டும், வேளாளர்க்கு ஒன்றும் பிறப்பு வகையெனப்படும் எனவுங் கூறுக. இனி ஏவன் மரபின் ஏனோர் பாங்கினும், அடியோர் பாங்கினும் வினைவகை பாங்கினும் தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத் துருவம் காமக்குறிப்பு முதலாயினவும் கொள்க. இவ்வெண்ணப் பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக் குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென் றோதினான் என்பது. அடியோர் பாங்கினும் வினைவல பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயவற்றை இலேசினாற் கொண்டான்; அவை பிறழ்ந்து வருமாகலின் என்பது. ஈ. இ.வி: பிறப்பு குடிப்பிறத்தல்; குடிமை அதற்குத் தக்க ஒழுக்க முடைமை; ஆண்மை ஆள்வினை; ஆண்டு பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பன்னீராண்டும் பதினாறாண்டுமாகிய பருவம்; உருவு பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்த வனப்பு; நிறுத்தகாம வாயில் நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயிலாகிய அன்பு; நிறை மறைபிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்தல்; அருள் பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை; உணர்வு உலகியலால் செய்யத்தகுவது அறிதல்; திரு செல்வம். ஒரீஇக் கூறல் அ. ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. (தொ.பொ.306) ஆ. பொருளையும் சினையையும் பொருவன் றென்று உரையினிற் கோடல் உண்மை உவமை (வீ.சோ.உரை.157) மேதகு வுவமையை விலக்கியப் பொருளையே ஓதி முடிக்கும் உண்மை உவமையும் (இ.வி.640) உண்மை உவமையாம் உவமை மறுத்தென நுண்மையின் பொருட்டிறம் நுவன்று விளக்கலே (தொ.வி.339) உவமையைக் கூறி மறுத்தல் பொருளை உரைத்து முடிப்பஃ துண்மையாம் எனலே (மு.வீ.பொ.9) இ. இளம்: (உவமைக்குரியதோர் மரபு உணர்த்துதல்) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு என்றவாறு. பேரா: (ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணம் உணர்த்துதல்) ஒக்குமெனக் கூறாது ஒவ்வாதெனக்கூறலும் அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு. உம்மை இறந்தது தழீஇயிற்று. ''யாங்ஙனம் ஒத்தியோ..." (புறம். 8) ''மாதர் முகம்போல்" (திருக்.1118) இவற்றுள் யாங்ஙனம் ஒத்தியோ என்பது ஒவ்வாய் என்னும் பொருட்டு. காதலை வாழி மதி என்றவழியும் யான் காதலியாமையால் மதியமே அவள் வாண்முகம் ஒவ்வாய் என்றலின் ஒரீஇக் கூறிற்று. இவற்றையும் வேறுபடவந்த உவமம் என்னாமோ எனின், உவமையும் (பொருளும்) அவ்வழி மாறுபட வருமாறு உவமத்துக் கூறினான், உவமை யின்மை கூறுதலும் உவமை எனப்படும் என்றற்கு இது கூறினான் என்பது. ஈ. இ.வி: விளக்கம்: உவமானத்தை உவமேயத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அஃது ஒப்புமை யாகாமையான் அதனை விடுத்து உவமேயத்தையே குறிப்பிடுவது உண்மை உவமையாம். உவமையை நீக்குமுன் அதனை ஒப்பிடுதல் நிகழ்ந்தமை யின், இதுவும் உவமை வகையுள் ஒன்றாகும். இதனைத் தொல்காப்பிய னார், 'ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே' என்று குறிப்பிடுவார். ஒருபாற்கிளவி அ. ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப. (தொ.பொ.218) இ. இளம்: (ஒருசார் பொருள் கொளுந்திறன் உணர்த்துதல்). ஒருபக்கத்துக்கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக் கண்ணும் வருவகை தாம் வழக்கு நெறி. மனையோள் மாட்டும் காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர் மாட்டும் நிகழும். இப்பரத்தையர் பொருட்பெண்டிராதலின் இன்பம் பயக்குமோ எனின், அஃதின்பமாமாறு வருகின்ற சூத்திரத்தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொதுவிலக்கணம் கூறியவாறு. வருகின்ற சூத்திரம் என்றது, ''எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்" என்பது (219) நச்: (இஃது ஒன்றே வேறே (தொ.பொ.93) என்னுஞ் சூத்திரத்து 'ஒத்தகிழவனும் கிழத்தியும்' என்ற ஒருமை, பன்மைப் பாலாய் உணர்த்துகவென வழுவமைத்தது). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்றவழி ஆணொருமையும் பெண் ணொருமையும் உணர்த்திநின்ற சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டா ரேனும் அவ்வொருமைச் சொற்கள், நால்வகைக் குலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச் சொற்கண்ணே நின்று பன்மைப் பொருள் உணர்த்திவரும் கூறுபாடுதானே உலகவழக் கென்று சொல்லுவர் ஆசிரியர். இதனாற்பயன் உலகத்து ஓரூர்க்கண்ணும் ஒரோவொரு குலத்தின் கண்ணும் தலைவரும் தலைவியரும் பலரேனும் அவர்களையெல்லாம் கூறுங்காற் கிழவனும் கிழத்தியு மென்று ஒருமையாற் கூறுவதன்றி வேறோர் வழக்கின்று என்பதுபற்றி முதனூலாசிரியர் அங்ஙனஞ் சூத்திரஞ் செய்தலின் யானும் அவ்வாறு சூத்திரஞ் செய்தேனாயினும்; அச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்தா ராயிற்று. ஒருவனோடு பலர் கூட்டமும் கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற் கூறாது எனைப்பாலெனப் பன்மையாற் கூறினார். இதனால் சொல்வழுவும் பொருள் வழுவும் அமைத்தார். ஒத்த கிழவனும் கிழத்தியும் என்ற ஒருமையே கொள்ளின் அன்னார் இருவர் இவ்வுலகத்துள்ளாரன்றி வேறாக நாட்டின் கொள்ளப்பட்டா ரென்பது பட்டு இஃது உலகவழக்கு அல்லாததோர் நூலுமாய் வழக்குஞ் செய்யுளும் என்பதனோடு மாறுகோடலேயன்றிப் 'பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே' (தொ.பொ.224) என்றாற்போல்வன பிற சூத்திரங்களும் வேண்டாவாம் என்றுணர்க. ஈ. க.வெ: கிழவன் கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணொருமையும் பெண் ணொருமையும் உணர்த்தி நிற்கும் ஒருமைச் சொற்கள் நானிலத்துத் தலைவரையும் தலைவி யரையும் உணர்த்தும் பன்மைச் சொற்கண்ணே நின்று பன்மைப் பொருளை உணர்த்தும் முறை உலக வழக்கில் நிலை பெற்று வழங்கும் சொற்பொருள் மரபாகும் என்பதாம். ஒருபோகு அ. 1. ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும். (தொ.பொ.450) 2. கொச்சக ஒருபோ கம்போ தரங்கமென் றொப்ப நாடி உணர்தல் வேண்டும் (தொ.பொ.451) இ. இளம்: 1. (ஒருபோகு பாகுபடுமாறு உணர்த்துதல்) 2. ஒருபோகென்னும் கலி கொச்சக ஒருபோகு எனவும், அம்போதரங்கம் எனவும் பொருந்த நாடியறிதல் வேண்டும். பேரா: 1. (ஒத்தாழிசை இரண்டனுள் ஏனை ஒன்றனை வண்ணக ஒத்தாழிசை ஒருபோகென இருவகைத்தென்றான். அவற்றுள் ஒருபோகின் வகையுணர்த்துதல்). ஒருபோகும் இருவகைத்தாகும். ஓருறுப்பு இழத்தலின் ஒருபோகாதல் ஒக்குமாயினும் நிகழ்கின்ற உறுப்புத் தம்மின் வேறாதல் அறிவித்தல் என்பது. 2. (மேல் வகுக்கப்பட்ட இரண்டற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல்). கொச்சக ஒருபோகும் அம்போதரங்க ஒருபோகுமென இரண்டாக உணரப்படும் அவை. கொச்சகம் இழத்தலிற் கொச்சக ஒருபோகு ஆயிற்று. வண்ணகம் ஒருபோகென்றவழி ஒன்றேயாகி நின்ற கொச்சகம் ஒருவழி வாராமை யின் அது கொச்சக ஒருபோகாம். ஒருபோகு என்பது பண்புத்தொகை. இடையீடில்லாத நிலத்தினை ஒருபோகு என்பவாகலின். அஃது ஒப்பினாகிய பெயர். ஒருபோகு என்பதனைத் 'திரிகோட்ட வேணி' என்றது போலக் கொள்க. நச்: 1. (ஒத்தாழிசை இரண்டனுள் ஏனை ஒன்றனை வண்ணகம் ஒருபோ கென இருவகைத்தென்றார்; அவற்றுள் ஒருபோகும் இருவகைத்தாம் என்கின்றது). ஒருபோகின் இயல்பும் இரண்டு கூறாம். இதன்பயன் ஒருபோகின்றிக் கொச்சகம் அம்போதரங்கமென்றும் பெயர் வழங்கினும் அமையும் என்றவாறு ஆயிற்று. 2. (மேல்வகுத்த இரண்டற்கும் பெயரும் முறையும் கூறுகின்றது). கொச்சக ஒருபோகு அம்போதரங்க ஒருபோகு என்றிரண் டாகப் பெயர்கொடுத்துப் பொருந்த ஆராய்ந்துணரப் படுமவை. கொச்சகவுடைபோலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சகமெனவும், பலவுறுப்புகளும் முறையே சுருங்கியும் ஒரோ வழிப் பெருகியும் முடுகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போற லின் அம்போதரங்கமெனவுங் கூறினார். இவையும் ஒத்தாழிசைப் பகுதியென்பார் போக்கிய ஒத்தாழிசையானே ஒருபோகென்றாரெனக் கொள்க. அம்போதரங்க ஒருபோகென்பதும் அது. ஒருபோகென்பது பண்புத்தொகைப்புறத்து அன்மொழித் தொகை. இடையீடில்லா நிலத்தினை ஒரு போகென்பவாகலின், அது ஒப்பினா கிய பெயர். ஒருபோகு என்றதனைத் 'திரிகோட்ட வெளி' என்றது போலக் கொள்க. (தோட்ட என்பதும் பாடம்). ஈ. யா.வி: இனி ஒருசார்க்கொச்சகங்களை 'ஒருபோகு' என்று வழங்குவாரும் உளர். மயேச்சுரராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவபாணியும் திரிந்து, தரவு ஒழிந்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்ட மூவகை எண்ணும் நீங்கினும், வண்ணத்துக்கு ஓதப்பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கிய உறுப்பு ஒழியத் தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒருபோகு எனப்படும். அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயன அம்போதரங்க ஒருபோகு எனவும், வண்ணக உறுப்புத் தழீஇயின வண்ணக ஒருபோகு எனவும் படும். என்னை? கூறிய உறுப்பிற் குறைபா டின்றித் தேறிய இரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை ஒழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ப உணர்ந்திசி னோரே (யா.வி.86) என்றார் மயேச்சுரர். உ. ஆ.கு: கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு சிறப்புத் தலைப்புகளில் காண்க. ஓருறுப்புப் போதலால் ஒருபோகு என்க. ஒரூஉ அ. இருசீர் இடையிடின் ஒரூஉவென மொழிப (தொ.பொ.404) ஆ. ஒரூஉத்தொடை, இருசீர் இடைவிடின் என்மனார் புலவர் (அவிநயம்) சீரிரண் டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை (யா.வி.44) சீரிரண் டிடைவிடின் ஒரூஉ வென மொழிப (பல்காயம்) இரண்டிடைவிட், டிறுதியொடு கொள்வது ஒரூஉ பரிமாணம் ஒருவாம், இருசீர் இடையிட்டது (யா.கா.19) சீரிரண் டிடைவிடத் தொடுப்பின் ஒரூஉ (இ.வி.723) இறுவது ஒரூஉ... (தொ.வி.216) இருசீ ரிடையிட் டாதியும் அந்தமும் ஒன்றின் ஒரூஉவென் றுணர்ந்திசி னோரே (மு.வீ.யா.34) இ. இளம்: (ஒரூஉத் தொடையாமாறு உணர்த்துதல்) இரண்டுசீர் இடையிட்டு மோனை முதலாயின வரத் தொடுப்பது ஒரூஉத் தொடையாம். பேரா: நாற்சீருள்ளும் இடையிரு சீரொழித்து, ஒழிந்த முதற்சீரும் நான்காம் சீரும் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பின் அதனை ஒரூஉ என்ப. அதிகாரத்தான் ஒரூஉ எதுகை எனப்பட்டது. அதுவும் பொழிப்புப் 'போல வந்த எழுத்தே வருதலும் இணையெழுத்து வந்து கிளை யொரூஉ எனப்பட்டு இரண்டாதலுமுடைத்து. இவை இரண்டு தொடையுங் கட்டளையடிக்கண் வருங்கால் ஒரூஉ எதுகை ஐந்நூற்றிருபத் தெட்டாம். (அகவற்றொடை இருநூற்றைம்பத்து மூன்று, வெண்டொடை நூற்றெழுபத் தொன்பது, கலித்தொடை தொண்ணூற்றாறு என எண்ணுவார்). ''இன்னும் புலவராறு என்றதனால் தொடையந்தாதியும், விட்டிசையும் ஒரோவொன்று இரண்டாகி அசையந்தாதியும், சீரந்தாதியும், விட்டிசைத் தொடையும், குறிப்பு விட்டிசையு மென நான்காம்" என்றும் விளக்குவார். நச்: இரண்டு சீரை நடுவேயிட்டு வைத்து முதற்சீரும் நாலாஞ் சீரும் ஒன்றிவரின் ஒரூஉமோனை, ஒரூஉ எதுகை, ஒரூஉ முரண், ஒரூஉ இயைபு எனப்படும். ஒரூஉவை விதந்தோதினார், வெண்பாவிற்குச் சிறந்து வருதலானும் ஆசிரியத்திற்கு ஏனையவற்றிற் சிறந்து தோன்றுத லானும். ஒரூஉ வண்ணம் அ. ஒரூஉ வண்ணம் ஒரூஉத்தொடை தொடுக்கும் (தொ.பொ.528) ஆ. ஒரூஉ (வீ.சோ.1142) ஒரூஉ வண்ணம் (தொ.வி.250 இ.வி.757) அடிதொறும் ஒன்றாத் தொடையொடு வருவன ஒரூஉ எனப்பெயர் உரைக்கப்படுமே (மு.வீ.யா.38) இ. இளம்: (ஒரூஉ வண்ணம் உணர்த்துதல்). ஒரூஉ வண்ணமாவது நீங்கின தொடையாகித் தொடுப்பது. அது செந்தொடையாம்.ச பேரா: (பா: ஒரீஇத் தொடுக்கும்). யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறி தொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉ வண்ணம். ஒரீஇத் தொடுத்தலென்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால் தொடுத்தல் என்பாரும் உளர். செந்தொடையும் தொடையாகலான் அற்றன் றென்பது. யாப்புப் பொருள் நோக்கியவாறு போல இது பொருள் நோக்காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. நச்: (பேராசிரியர் கொண்ட பாடமே கொண்டார்). ஒரூஉ வண்ணமாவது யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றினை யவாவாமை அறுத்துச் செய்வது. இஃது யாப்புப் போலப் பொருள் நோக்கு ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப் படாது. இனி எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையாற் றொடுப்பது ஒரூஉ வண்ணமெனக் கூறிப் 'பூத்த வேங்கை' என்பது உதாரணங் காட்டுவது தொடைப் பகுதியாம். ஈ. யா.வி: ஒரூஉ வண்ணம் என்பது ஒன்றாத தொடையாற் கிடப்பது. அஃதியாதோ எனின், செந்தொடை. ஒழுகுவண்ணம் அ. ஒழுகுவண்ணம் ஓசையின் ஒழுகும் (தொ.பொ.527) ஆ. ஒழுகு (வீ.சோ.142 தொ.வி.250) ஒழுகுவண்ணம் (இ.வி.757) விரவி மூவினமும் மிகுவன ஒழுகிசை (மு.வீ.யா.25) இ. இளம்: (ஒழுகுவண்ணம் ஆமாறு உணர்த்துதல்). ஓசையான் ஒழுகிக் கிடப்பது ஒழுகுவண்ணமாம். பேரா: முற்கூறிய வகையானன்றி ஒழுகியல் ஓசையாற் செய்வது ஒழுகுவண்ணம். ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறு வேறிலக்கணமுடையன என்பது. நச்: முற்கூறியவாறன்றி ஒழுகிய வோசையாற் செய்வது ஒழுகுவண்ணம். ஒழிந்தனவும் ஒழுகுமேனும் அவற்றின் வேறிலக்கணமுடைய. உ. ஆ.கு: ஒழுகிய வண்ணமுடையது விழுமிய பொருளும் வாய்ந்தது என்பது வெளிப்படை. ஒன்றேவேறே என்றிருபால் அ. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே (தொ.பொ.90) இ. இளம்: (இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுந் திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல்). ஒன்றேவேறே என்றிருபால் வயின் என்பது, ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி அவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்த லும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு. ஒன்றி உயர்ந்த பாலதாணையின் என்பது, இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு. உயர்ந்ததன் மேற்செல்லும் மனநிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து. ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்பது, ஒப்பு பத்து வகைப்படும். அவை, ''பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். (இதன் விளக்கத்தை ஒப்பினது வகை என்னும் தலைப்பில் காண்க). மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே என்பது, இக் குணங்களால் தலைமகன் மிக்கான் ஆயினும் கடியப்படாது என்றவாறு. எனவே இவற்றுள் யாதானும் ஒன்றினாயினும் தலைமகள் மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம். பாலதாணையின் ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்ப என்பது, ஒருவரை யொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற் றாமையிற் பாலதாணையான் ஒருவரை ஒருவர் புணர்தற்குறிப்போடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. எற்றுக்கு, எதிர்மறையாக்கி இழிந்தோன் ஆயினும் கடியப் படாது என்றாற் குற்றம் என்னையெனின், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமையாதலின், இழிந்தானொடு உயர்ந்தாட்குள தாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக் கொள்ளப் படும் என்பது. ஈண்டுக் கிழவனும் கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும் போலக் கூறினாராயினும், ''ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப" என்பதனானும், இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பலவகைப்படுவர். அஃதாமாறு, அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்ம ராவர். இவரை நால்வகை நிலத்தொடு உறழ நாற்பதின்மராவர். இவரையும் அவ்வந் நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னுந் தொடக்கத்தா ரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப்பன்மையான் நோக்க வரம்பிலராவர். நச்: முற்கூறிய காமக் கூட்டத்திற்குரிய கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டுக்குக் காரணமும் அங்ஙனம் எதிர்ப்படு தற்கு உரியதோர் பெற்றியும் கூறுகின்றது. இருவர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின்கண்ணும், உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமை யாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே, பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுப. அங்ஙனம் எல்லாவற் றானும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினும் கடியப்படா. 'என்றிரு பால்வயிற் காண்ப' எனப்பால் வன்பால் மென்பால் போல நின்றது. உயர்ந்த பாலை 'நோய் தீர்த்த மருந்து' போற்கொள்க. ஒருநிலம் ஆதலை முற்கூறினார். இவ்வொழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆதற் சிறப்பு நோக்கி, வேறு நிலமாதலைப் பிற்கூறினார். குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணைமயக்கத்தான் மருதம் நெய்த லென்னும் நிலப்பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கிவந்து எதிர்ப்படுதல் உளவாதலு மென வேறுபட்ட பகுதிபலவும் உடன் கோடற்கு ஒருநிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவத்தா ளாயினாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் 'பாலதாணையிற் காண்ப' என்றார். எனவே வேற்று நிலத்திற்காயின் வேட்டைமேலிட்டுத் திரிவான் அங்ஙனந் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலதாணை வேண்டுமாயிற்று. மிகுதலாவது: குலம் கல்வி பிராயம் முதலிய வற்றான் மிகுதல். எனவே அந்தணர் அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும் அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலும் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண் கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித் தென்று கொள்க. கடி, மிகுதி. அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படா தென்றார். பதினாறு தொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண் டொன்பதும் ஒரு பெண் கோடற்கு மூன்றுயாண்டாக அந்தணன் உயருங் கந்தருவமணத்து; ஒழிந்தோராயின் அத்துணைஉயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத் தெட்டாதல் பிரம முதலியவற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற்போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். கிழவன் கிழத்தி எனவே பல பிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும், 'ஒருபாற் கிளவி' என்னுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும் ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணும் கொள்க. இக்காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறுதல் புலனெறி வழக்கன்மை உணர்க. ஈ. க.வெ: ஒன்றுவித்தலைச் செய்யும் நல்லூழினை 'ஒன்று' எனவும், வேறுபடுத்து தலைச் செய்யும் போகூழினை 'வேறு' எனவும் கூறினார் ஆசிரியர். காணுதல் என்றது, தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. பிற்காலத்தில் தமிழகத்தில் அயலவர் கலப்பால் தோன்றிய நால்வகை வருண வேறுபாடு பற்றி இந் நூற்பாவுக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் பண்டைத் தமிழியல் நூலாசிரியராகிய தொல்காப்பியனார் கருத்துக்கு ஒவ்வாதாம். ஒன்றே வேறே என்றிருபால்வயின் எனவரும் இத் தொடரில் 'பால்' என்பதற்கு 'நிலம்' எனப்பொருள் கொண்டு நச்சினார்க்கினியர் எழுதிய இவ்வுரை, பால் என்பதனை ஊழின் பெயராகக் கொண்டு வழங்கிய தொல்காப்பியனார் கருத்துக்கு மாறுபட்டதாகும். 'பால்' என்ற சொல் லுக்குப் பலபொருள் உண்டெனினும் இந்நூற்பாவில் அச்சொல் ஊழ் என்ற பொருளிலேயே ஆளப்பெற்றுள்ளதென்பது, 'ஒன்றே வேறே என்று இருபால் வயின் ஒன்றி உயர்ந்தபால்' எனப் பாலின் தொகை சுட்டி அவற்றுள் ஒன்றனைப் பிரித்துரைத் தலால் நன்கு புலனாகும். அன்றியும் ஒன்றே வேறே என்றிருபால் எனத் தொல்காப்பியனார் கூறிய இருவகைப் பால்களுள் ஒன்றுவிக்கும் பாலினை ஆகூழ் (371), ஆகலூழ் (372) எனவும், வேறுபடுத்தும். பாலினைப் போகூழ் (371), இழவூழ் (372) எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். இந்நூற் பாவிற் சுட்டப்பட்ட ஒன்றியுயர்ந்த பால் என்பதனை, 'உடனுறை வாக்குக உயர்ந்தபாலே' எனக் கபிலர் இப்பொருளில் எடுத்தாண் டுள்ளமையும் (புறம். 236) இங்கு நினைக்கத்தகுவதாகும். உ. ஆ.கு: தெய்வப்புணர்ச்சி, கடவுட்புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி ஊழால் கூடுதல் பால்வரை என வழங்கும் வழக்குகளை எண்ணுக. ஓத்து அ. 1. இனமொழி கிளந்த ஓத்து (தொ.பொ.470) 2. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர் (தொ.பொ.472 நன்.16) இ. இளம்: 1. இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஓத்தினானும் என்றவாறு. 2. (ஓத்திற்கு இலக்கணம் உணர்த்துதல்) ஒத்த இனத்தாகிய மணியை ஒருங்கே கோவைப்பட வைத்தாற்போல ஓரோரினமாக வரும் பொருளை ஓரிடத்தே சேரவைத்தல் ஓத்தென்று பெயராம் என்றவாறு. எனவே, அவ்வினமாகிச் சேர்ந்த நிலைக்கு ஓத்தென்று பெயராயிற்று. அது 'வேற்றுமையோத்து' என்பதனான் அறிக. பேரா: 1. இனமாகிய பொருளினையே தொகுப்பது ஓத்து. 2. (ஓத்திலக்கணமுணர்த்துதல்). 'மேல்' இனமொழி கிளந்த ஓத்து' என்றான். அங்ஙனம் இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்து கிடப்பப் பல ஓத்தாகச் செய்யாது நேரினமணியை நிரலே வைத்தாற்போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தாவது. நேரினமணியெனவே ஒரு சாதியாயினும் தம்மின் ஒத்தனவே கூறல் வேண்டும் என்பதாம். வேற்றுமை யோத்தும், வேற்றுமை மயங்கிய லும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரின மென்று ஓரோத்தாக வையாது வேறுவேறு வைக்கப்படுமென்பது. உயர்மொழிப் புலவரென்பது, அங்ஙனம் நூல் செய்தல் உயர்ந்தோர் கடனென்றவாறு. நச்: 1. இனமாகிய பொருளைக் கூறிய ஓத்து. 2. இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்து கிடப்பப் பல வோத்தாகச் செய்யாது மணியை நிரல்பட வைத்தாற் போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தென்று கூறுவர் சிறந்த சொற்புலவர். நேரினமணி எனவே ஒருசாதியினும் தம்மின் ஒத்தனவே கூறல் வேண்டும். வேற்றுமை யோத்தும், வேற்றுமை மயங்கியலும், விளிமரபும் என மூன்றன் பொருளையும் ஒன்றாக வேற்றுமை யோத் தென்னாது வேறுவேறு வைத்தவாறு காண்க. ஈ. யா.வி: ஓத்தாவது ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப் பட வைப்பது ஆகும். சங்கர: ஒருசாதியாயுள்ள மணிகளை முறையே பதித்தாற் போல ஒருசாதியா யுள்ள பொருள்களை ஒருவழிப்படக் கூறுவது ஓத்துறுப்பாமெனச் சொல்லுவார் உயிர்க்குறுதி பயக்கும் மெய்ம்மொழிகளையுடைய புலவர். (நன்.16) *****