பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 43 தமிழியற் கட்டுரைகள் ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 43 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2001 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12 + 188 = 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 125/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். வான்மழை வளச்சுரப்பு ஆழத்துள் ஆழமாய் அகழ்ந்து தங்கம் ஏன் எடுக்கப்படுகிறது? ஆழ்கடலுள் சென்று, உயிரைப் பணயம் வைத்து முத்துக் குளிக்கப் படுவது ஏன்? பவழப் பாளங்களை எடுப்பது ஏன்? வயிரம் முதலாம் மணிக்குலங்களை இடையறாமல் தேடித் தேடி எடுப்பது ஏன்? அணிகலப் பொருள்கள் என்பதற்கு மட்டுமா? வீட்டிற்கு மட்டுமன்றி நாட்டுக்கும் ஈட்டுதற்கு அரிய வைப்பு வளமாக இருந்து, நாட்டின் பொருளியல் மேம்பாட்டுக்கு அடிமணை யாகவும் இவை இருப்பதால் தானே! இவற்றினும் மேலாம் வைப்பு வளமும் உண்டோ? உண்டு! உண்டு! அவை சான்றோர் நூல்கள்! காலம் காலமாக அள்ளிக் கொண்டாலும் வற்றா வளமாய்த் திகழும் அறிவுக் கருவூலமாம் நூல்கள்! ஒன்றைக் கற்றால் ஒரு நூறாய் ஓராயிரமாய்ப் பல்கிப் பெருகத் தக்க பெறற்கரிய தாய் நூல்களாம் பேறமைந்த நூல்கள்! சேய்நூல்களை ஈனவல்ல செழு நூல்கள்! நுண் மாண் நுழைபுலத் தாய் நூல்களாய் இருப்பினும்! அவற்றைத் தாங்கிய தாள்கள், எத்தகைய பேணுதல் உடையவை எனினும் கால வெள்ளத்தில் அழியக் கூடியவை தாமே! கல்லெழுத்தே, கதிர் வெப்பாலும் கடலுப்பாலும் காத்துப் பேணும் கடப்பாடில்லார் கைப்படலாலும் அழிந்து பட்டமை கண்கூடு தானே! ஏட்டு வரைவுகள், நீரே நெருப்பே நீடித்த காலமே புற்றே போற்றா மடமையே என்பவற்றால் அழிந்து பட்டமைக்கு அளவு தானும் உண்டோ? மக்களுக்கு மாணப் பெரிய பயனாம் நூல்கள், கற்கும் மக்கள் பெருக்கத்திற்கும், பிறந்து பெருகிவரும் மக்கள் பெருக்கத்திற்கும் தக்க வகையில் அவர்களுக்குப் பாட்டன் பாட்டியர் வைத்த பழந்தேட்டென்ன அந்நூல்கள், மீளமீளத் தட்டில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டுவது நூற்பதிப்பர் தவிராக் கடமையல்லவோ! அக்கடமையை அவர்கள் காலந்தோறும் கடப்பாடாகக் கொண்டு செய்ய, ஆளும் அரசும் வாழும் அறிவரும் அருந்நுணையாதல் தானே கட்டாயத் தேவை! இவ்வாறு பதிப்பரும் அறிவரும் ஆள்நரும் தத்தம் மூச்சுக் கடனாக, நூற்கொடை புரிதலுக்கு மேற்கொடை இல்லையாம்! மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் ஒன்றா இரண்டா? நமக்கு எட்டாதவை போக எட்டிய நூல்கள் 32. கட்டுரை பொழிவு முதலாம் வகையால் கிட்டிய திரட்டு நூல்கள் 12. இன்னும் எட்டாத தொகுப்பும் அங்கொன்றும் இங்கொன்றும் வர வாய்ப்புண்டு! கடித வரைவு பா வரைவு என மேலும் பெருகவும் வாய்ப்புண்டு! இவற்றை எல்லாம் ஆயிரம் அச்சிட்டு அவ்வளவில் நின்று விட்டால், தேடுவார்க்குத் தேடும் பொழுதில் வாய்க்கும் திருவாகத் திகழக் கூடுமோ? ஆதலால், சேய் நூல்களுக்கு மூலமாம் தாய்நூல்கள், காலம் தோறும் வான்மழை வளச் சுரப்பாக வெளிப்பட வேண்டும் கட்டாயம் உணர்ந்து கடமை புரியும் வீறுடையார் வேண்டும்! மிக வேண்டும்! இத்தகைய விழுமிய வீறுடையர் - இனமானச் செம்மல் - தமிழ்ப் போராளி - திருத்தகு கோ. இளவழகனார், தாம் முந்து முழுதுறக் கொணர்ந்த பாவாணர் படைப்புகளை மீளமீளத் தமிழுலாக் கொள்ள வைக்கும் முன் முயற்சியாய், இம் மீள்பதிப்பை வழங்குகிறார்! தமிழுலகம் பயன் கொள்வதாக! பயன் செய்வதாக! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். சான்றிதழ் பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய சொல்லாராய்ச்சி, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய மொழியறிவியல், பேராசிரியர் சாய்சு எழுதிய ஒப்பியல் மொழிநூல் முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்து கிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய திராவிட மொழி களின் ஒப்பியல் ஆய்வு நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த தொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற் கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத் தூண்டியது. எனவே `ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. mt® tUªâíiH¤J MuhŒ¢á brŒJtU« m¿P® Mjyhš mtiu¥ gÂÆš mk®¤J« vªj Ãiya¤J¡F« mtuhš ngU« òfG« »il¡f¥ bgW« v‹W ah« KG e«ã¡ifnahL TW»‹nw«.* - மறைமலையடிகள் * மறைமலையடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய சான்றிதழின் தமிழாக்கம். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை .iii வான்மழை வளசிறப்பு v சான்றிதழ் vii நூல் 1. செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு 1 2. தென்மொழி 7 3. தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும் 9 4. தமிழ் தனித்தியங்குமா? 16 5. தமிழும் திரவிடமும் சமமா? 22 6. திரவிடம் என்பதே தீது 27 7. மொழிபெயர் முறை 29 8. நிகழ்கால வினை வடிவம்? 31 9. நிகழ்கால வினை எச்சம் எது? 36 10. கால்டுவெல் கண்காணியாரின்சறுக்கல்கள் தமிழ் வேற்றுமையமைப்பு 39 11. ஆய்தம் 45 12. மூவிடப்பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் 53 13. பாயிரப் பெயர்கள் 58 14. திருக்குறட் சிறப்புச் சொற்களும்சொல்லாட்சியும் 64 15. சிந்தாமணியின்செவ்விய வனப்பியல் 70 16. ஆவுந் தமிழரும் 82 17. கற்புடை மனைவியின் கண்ணியம் 88 18. அரசுர் யார்? 98 19. கோசர் யார்? 104 20. முருகு முதன்மை 120 21. மாந்தன் செருக்கடக்கம் 125 22. தற்றுடுத்தல் 133 23. தலைமைக்குடிமகன் 136 24. மாராயம் 142 25. முக் குற்றம் 145 26. திருவள்ளுவர் காலம் 148 27. வள்ளுவர் கோட்டக்கால்கோல் விழா வாழ்த்துரை விளக்கம் 153 தமிழியற் கட்டுரைகள் 1 செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு உலகம் முழுவதும் நோக்கின், மொழியமைப்பு, மொழி வளர்ப்பு, மொழிக்காப்பு ஆகிய மூவகை மொழிவினையிலும் தலை சிறந்தவர் குமரிநிலத் தமிழரே என்பது, தெளிவாகின்றது. வாய்ச்சோம்பலாலோ, தட்ப வெப்பநிலை பற்றிய நில வேறுபாட் டாலோ, இரண்டினாலுமோ, மொழி பொதுமக்கள் வாயில் திரிவதையும், அத்திரிபிற்கு எல்லையில்லாமையையும், கண்ட தமிழறிஞர், இயனிலைத் தமிழுக்குச் செந்தமிழ் என்றும், திரிநிலைத் தமிழுக்குக் கொடுந்தமிழ் என்றும் பெயரிட்டு, செந்தமிழையே உலகுள்ள அளவும் நிலையான அளவை மொழியாக்கி விட்டனர். நடைமொழி (dialect) யுண்மை பண்டைத் தமிழருக்குத் தெரியா தென்றும், வண்ணனை மொழி நூல் (Descriptive Linguistics) தோன்றிய பின்பே நடைமொழியாராய்ச்சி உலகெங்கும் பரவிய தென்றும், மேலை யரும் அவரைச் சார்ந்த வையாபுரிகளும் கருதிக் கொண் டிருக்கின்றனர். தமிழர் ``தம் மொழியைப் பிறமொழிகளுடன் மட்டுமன்றி, தம் சொந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிறமொழிகளுடன்கூட, ஒப்புநோக்க ஒருகாலும் முயன்றதில்லை. மொழிக் குடும்பம் என ஒன்று உண்டென்னும் கருத்தை, அவர்கள் என்றேனும் உட்கொண்டதில்லை,'' என்று கால்டு வெலாரும் எழுதிவிட்டார். ஆயின், அவர் காலத்தில் தொல்காப்பியப் பயிற்சியின்மையால், அவர் கூற்று மன்னிக்கத் தக்கதே. தமிழ் உலக முதன்மொழியா யிருத்தல் போன்று, மொழியாராய்ச்சியும் முதன்முதல் அம்மொழியிலேயே தோன்றிற் றென்பது கி.மு. 7ஆம் நூற்றாண்டிலெழுந்த தொல்காப்பியம் என்னும் சார்பிற் சார்பு நூலால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியம், வடசொல்லும் ஆரிய இலக்கியமும் ஆரியர் மரபும் தவிர, மற்றெல்லாவற்றையும் குமரி நாட்டு நிலைமை தழுவியே கூறுவதால், அக்காலத்தில் (அஃதாவது ஆரியர் வருமுன்) செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் பாகுபாடு தவிர, இற்றைத் திரவிட மொழிகள் கூடியது போன்ற ஒரு மொழிக் குடும்பம் தோன்றவில்லை என்பதை யறிதல் வேண்டும். மேலும், ஆரியர் வந்தபின் தமிழ் மொழி வளர்ச்சியும் மொழி யாராய்ச்சியும் தடுக்கப்பட்டு விட்டதனால், கால்டுவெலார் குறைகூறல் வலியற்றதாகின்றது. செந்தமிழ் இயல்பு 1. தூய்மை அல்லது பிறமொழிச் சொல்லின்மை. 2. திருத்தம் அல்லது எழுத்தும் சொல்லும் ஒலிப்பிலும் எழுத்திலும் உரிய வடிவிலிருத்தல். 3. இலக்கணம் அல்லது சொற்றொடரமைப்பில் வழுவின்மை. இம்மூவியல்பும் இல்லது கொடுந்தமிழ். தெற்கே மூழ்கிப்போன பழம் பாண்டி நாட்டின் தென்கோடியில் இருந்த குமரிமலைத் தொடரின் தென் கொடுமுடி, பனிமலை யளவு தொலைவிலிருந்த தனாலும், இறந்துபட்ட முதலிரு கழக நூல்கள் ஆயிரக்கணக்கின வாதலாலும், அக்காலத்துத் தென்சொல்வளம், குறைந்த பக்கம் இன்றுள்ளதுபோல் இருமடங்கின தாய் இருந்திருத்தல் வேண்டும். வணிக வாயிலாக வந்த வெளிநாட்டுப் பொருள்கட்கெல்லாம், உடனுடன் தமிழ்ப் பெயர்கள் புனையப்பட்டன. செந்தமிழ் நிலம் செந்தமிழ் வழங்கிய நிலம் பெரும்பாலும் பாண்டி நாடாகவே யிருந்தது. தமிழ் தோன்றி வளர்ந்த நிலமும் முக்கழகமும் இருந்த நாடும் பாண்டி நாடேயென்றும், அவற்றைப் புரந்தவர் பாண்டியரே யென்றும் அறிதல் வேண்டும். ``வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும்'' என்பது, பிற்காலத்துப் பொருளில் புனைந் துரையாம். செந்தமிழ்ச் சொல்வகை செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல் (Primitive), திரிசொல் (Derivative) என இருவகைப் படுத்தப்பட்டன. எ-டு: வெள் என்பது இயற்சொல்; வெள்ளம், வெள்ளி, வெள்ளை, வெளி, வெளில், வெளிறு, வெளு என்பன திரிசொல். கொடுந்தமிழ் நிலமும் திசைச்சொல்லும் கொடுந்தமிழ் நிலங்களில் தனிச்சிறப்பாக வழங்கும் சொற்கள் (இக்காலத்து மேனாரிக்கம் என்னும் தெலுங்கச் சொல்லும் சமாளி என்னும் கன்னடச் சொல்லும் போல்வன), ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பல திசை யினின்றும் வந்தமை பற்றித் திசைச்சொல் (Provincialism) எனப்பட்டன. கொடுந்தமிழ் நிலங்கள் பன்னிரண்டாகக் கணக்கிடப்பட்டன. ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைத்சொற் கிளவி.'' (தொல். எச். 4.) தொல்காப்பியர் காலத்துப் பன்னிரு கொடுந்தமிழ் நிலம் எவை யென்பது திட்டமாகத் தெரியவில்லை. ``தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி யருவா அதன்வடக்கு-நன்றாய சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்'' ``சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.'' என்னும் பிற்காலத்துப் பாடல்களும், அவற்றைத் தழுவிய ``செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப'' (நன். 273) என்னும் நூற்பாவும், கொள்ளத்தக்கன வல்ல அவற்றால் அறியக் கிடப்பதெல்லாம், ஒருகாலத்தில் இலங்கையுட்பட இந்தியா முழுதும் தமிழே வழங்கிற்று என்பதே. செந்தமிழ் வரம்பீட்டின் நன்மை 1. மொழிகெடாமை குமரிநாட்டு மொழியாகிய தமிழ் ஒன்றே, இன்று பல்வேறு வகையில் திரிந்து பதினெண் மொழியாகப் பிரிந்துள்ளது. எ-கா: தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு யான், நான் ஞான் நேனு நானு யானு ஒன்று ஒன்னு ஒண்டு, ஒகட்டி ஒந்து ஒஞ்சி வா வா ரா பா பா மருந்து மருன்னு மந்து மர்து மர்து இங்ஙனம் சொற்களெல்லாம் திரியாதிருந்திருப்பின், திரவிட மொழிகளெல்லாம் இன்றும் தமிழாகவே வழங்கும். தமிழிலுள்ள ஒருபொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திரவிடமொழி தெரித்தாள்வதும், தமிழின் திரவிடத் தாய்மையைக் காட்டும். எ-கா : மலையாளம் தெலுங்கு கன்னடம் வீடு இல்லு(இல்) மனெ(மனை) திரவிடமொழிகள் பேச்சு வழக்கில் திரிந்திருப்பினும், இலக்கிய வழக்கிலேனும் தமிழைப் பின்பற்றியிருந்திருப்பின் இன்றுள்ள வேறுபாடும் மாறுபாடும் நேர்ந்திரா. இற்றைத் தமிழ் நாட்டிற் பேச்சு வழக்கு இடத்திற் கேற்ப வேவ்வேறு வகையில் திரிந்திருப்பினும், இலக்கிய வழக்கிற் செந் தமிழைக் கடைப்பிடிப்பதால், நாடுமுழுதும் தமிழ்நாடென்றே வழங்குதல் காண்க. 2. நிலங்குன்றாமை செந்தமிழ் கொடுந்தமிழாகத் திரிந்து பின்னர்ப் பல்வேறு மொழி களாகப் பிரிந்து போனதனால், ஒருகாலத்திற் பனிமலைவரை பரவியிருந்த தமிழ்நிலம் படிப்படியாகச் சுருங்கி, இன்று சேரநாடுஞ் சேராது வடசோழ மாகிய தொண்டைநாடும் முண்டமாகியுள்ளது. கடைக்கழகக் காலத்தில் வேங்கடக் கோட்டம் வரை ஒருமொழி நாடாக இருந்த நிலம், இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, குடகம், துடவம், கோத்தம், படகம், மலையாளம், கொங்கணி என்னும் ஒருபான்மொழி நாடாகப் பிரிந்துள்ளது. 3. இனவொற்றுமை மொழி யொற்றுமையாலேயே இனவொற்றுமை நிலைத்து நிற்கும். மொழி வேறுபாட்டால் இன வேறுபாடும் அதனால் ஒற்றுமையின்மையும், இன்று இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் விளங்கித் தோன்றுகின்றது. திரவிடமொழியார் சமற்கிருதத்தைப் போற்றுவதும் தமிழைப் புறக்கணிப்ப தும் மொழி வேறுபாட்டின் விளைவே. 4. வேர்ப்பொருள் மறையாமை ``எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே,'' என்று சொல்லக்கூடிய மொழி, இவ்வுலகில் தமிழ் ஒன்றே. அது செந்தமிழ் வரம்பில் நிற்பதால், அது தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டுகளாயினும், ஆயிரக்கணக்கான அடிச்சொற்களும் இணைப்புச் சொற்களும் இறந்துபட்டும், இன்னும் அதன் பெரும்பாற் சொற்கள் வேர்ப்பொருள் காட்டி நிற்கின்றன. பிறமொழிக ளெல்லாம் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற்கட்கு வேர்ப்பொருளும் மூலமும் தெரியாது. வடமொழியாளர் வடசொற்களை இடுகுறி, கரணியக்குறி என இருவகையாய்ப் பிரித்ததோடு, மேலையரும் எல்லா மொழிகளும் இடுகுறிச் சொற்றொகுதிகளே என்று முடிவுசெய்து, அவ்வடிப்படையில் வண்ணனை மொழிநூலையும் தோற்றி வளர்த்து வருகின்றனர். சொல் இயனிலையில் மூலப்பொருள் காட்டுவதையும் திரிநிலையிற் காட்டாமையையும், கீழ்வரும் எடுத்துக்காட்டிற் காண்க. இயனிலை திரிநிலை இடைகழி டேகழி - ரேழி (கொச்சை) டேகழி - தேகலீ(வ) 5. வரலாற்றுத்தெளிவு சொற்கள் வேர்ப்பொருள் காட்டினால்தான் மொழிவரலாற்றை அறியமுடியும். தமிழ் ஒன்றே இயன்மொழியாதலின், மொழிவரலாற்றுத் திறவுகோல் அதிலேயே ஆழப் புதைந்து கிடக்கின்றது. 6. அழகுடைமை ``கல்விக்கழகு கசடற மொழிதல்'' ஓதிம (அன்ன) நடையினும் மாதர் நடையினும் உயர்ந்த அழகுள்ளது, மறைமலையடிகள் நடையாகிய செந்தமிழ் நடை. மேலையர், இந்தை ரோப்பிய மொழிக் குடும்பத்திற்கு மூலமான தமிழை அடிப்படையாகக் கொள்ளாது ஆரியத்தையே கொண்டாராய்ந்து, கோட்டைச் சுவரில் முட்டிய குருடர்போல் இடர்ப்பட்டு, தாய்மொழியும் கிளைமொழியும் என்னும் முறைமையின்றி, தனியாள் நடைமொழி (Personal dialect), குழு நடைமொழி (Group dialect), வகுப்பு நடைமொழி (Communal or Class dialect), தொழில் நடைமொழி (Professional dialect), இட நடைமொழி (Local dialect), வட்டார நடைமொழி (Regional dialect) என ஒவ்வொரு பெருமொழியையும் பல நடைமொழிகளாகப் பகுத்து, ஆராய்ந்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். சிலர் உலக வழக்கிற்கும் (Colloquial dialect) கொச்சை வழக்கிற்கும் (Slange usage) வேறுபாடு தெரியாது, பேச்சு மொழியையும் கவனித்தல் வேண்டுமென்று சொல்லி வருகின்றனர். தமிழில் உயர்ந்தோர் பேச்சு வழக்கே உலக வழக்காம். ``வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான'' (தொல். மரபியல். 93) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. எல்லா வகையிலும் , மேன்மக்கள் நடையையே கீழ்மக்கள் பின்பற்றல் வேண்டும். கீழ்மக்கள் பேச்சை ஒப்புக் கொள்ளவேண்டுமெனின், கீழ்மக்கள் ஒழுக்கத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அங்ஙனங் கொள்ளின், ஆட்சியும் காவலும் வழக்குத் தீர்ப்பும் குற்றத் தண்டனையும் வேண்டியதேயில்லை. ``கருத்தறிவிப்புத் தானே மொழியின் பயன்! vªeilƉ ngádh by‹d?'' என்பர் சிலர். அது, ``பசியைப் போக்குவது தானே உணவின் பயன்! v§‡d« (gšJy¡fhJ« FËahJ« mLfy¤â‰FŸ ifÆ£L«) c©lhby‹d?'' என்று வினவுவது போன்றிருக்கின்றது. ஆறறிவு படைத்த நாகரிக மாந்தன் எவ்வினை செய்யினும், திருந்திய முறையிலேயே செய்தல் வேண்டும். மொழிக்குச் செம்மை வரம்பிடாது வாய்போன போக்கெல்லாம் பேச்சுத் திரியவிடின், அது சண்டிக் குதிரைபோல் ஓரிடத்து நில்லாது காடுமேடாய் இழுத்துச் செல்லும்; இறுதியிற் குழிக்குள்ளும் தள்ளும். புதுப்புது நடை தோன்றிப் பழநடை வழக்கு வீழும். பண்டை இலக்கியம் பயனற்றுப்போம். ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட ஆங்கில இலக்கியம், இன்று ஆராய்ச்சியாளர்க்கே பயன்படுகின்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலக்கியமோ, இற்றையிலக்கியம் போல் எல்லார்க்கும் பயன்படுகின்றது. ஆதலால், செந்தமிழ் மரபை எத்துணைப் பாடுபட்டும் பொருட் செலவிட்டும் போற்றிக் காத்தல் வேண்டும். ``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்'' (தொல். மரபியல், 90) ``மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்.'' (க்ஷ 92) ஆரியரால் மூவாயிரம் ஆண்டும், அயலரசுகளால் முந்நூறாண்டும், வையாபுரிகளால் ஐம்பானாண்டும் சிதைக்கப்படினும், இன்றும் தமிழை அழியாது காத்தது அதன் செம்மை வரம்பே. தமிழ் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற தனிமொழி. அதன் உயிர்நாடித் தன்மை தூய்மை. 2 தென்மொழி சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருந்த மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளையவர்கள், ``கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே'' என்று தமிழின் திரவிடத் தாய்மையையும், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திலங்கிய சிவஞானமுனிவர், ``இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவமே தழீஇயினார் என்றாலிவ் ïUbkhÊí« Ãfbu‹W« ïj‰ifa« csnjnah?'' என்று தமிழின் சமற்கிருதத்திற்கொத்த தன்மையையும், பதினேழாம் நூற்றாண்டில் வதிந்திருந்த கருணைப்பிரகாசர், ``மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்தவேணி இறைவர்தம் பெயரைநாட்டி இலக்கணம் செய்யப்பெற்றே அறைகடல் வரைப்பிற்பாடை அனைத்தும்வென் றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உண்ணினைந் தேத்தல்செய்வாம்'' என்று தமிழ் ஆரியத்திற் கொப்பாயிருப்பதோடு அதனொடு மாறுபட்டு உயர்விற்குப் போராடு நிலையையும், பதினாறாம் நூற்றாண்டில் திகழ்ந்திருந்த திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர், ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோடமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ்ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் v©Â il¥gy ïlªjjh v©zî« gLnkh!'' என்று தமிழுக்கு வடமொழிக்கில்லாத இலக்கண வரம்புண்மையையும், ஒரு பழந்தமிழ்ப்புலவர், ``ஓங்க லிடைவந்(து) உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்---ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்'' என்று தமிழின் உலக முதன்மையையும் இலக்கிய முன்மையையும், பலபடப் பாராட்டிச் சென்றனர். இங்கிலாந்தினின்று தென்னாடு வந்து வாழ்நாள்முழுதும் தமிழையும் திராவிட மொழிகளையும் கற்றாய்ந்த கால்டுவெல் கண்காணியாரும், தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவும், தழைத்தோங்கவும் வல்லதென்றும், திராவிட மொழிக்குடும்பம் உலக முதன் மொழிக்கு மிக நெருங்கியதென்றும் மக்களின் முதற் பெற்றோர் மொழியினின்று வழிவழி வந்து வழங்கும் ஒரு சொற்றொகுதியைத் தன்னகத்துக் கொண்டுள்ள தென்றும், தெளிவாகக் கூறியுள்ளார். இங்ஙனமிருந்தும் சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஒரு புன்சிறு புதுக்கலவை மொழியினும் தாழ்வாகக் கருதப்பட்டு வருகின்றது; இலக்கண விலக்கியச் செம்மை நிரம்பி எண்டிசையும் பரவி என்று முள தென்றமிழ்க் கிவ்விழிதகவைப் போக்கி, அதனை மீண்டும் அரியணையில் அமர்த்து தற்கே எழுந்தது இவ்விதழ். குல மத கட்சி நிலச்சார்பின்றித் தூய மொழித்தொண்டே இவ் இதழ் மேற்கொண்டுள்ளமையின், அகம், நாடு, புலம், பொழில் வரைப்பு முதலிய இடப்பொருளீறின்றித் தூய மொழிப் பெயரே இதற்கு இடப்பெற்றுள்ளது. தயிர் பாலினின்று திரிந்துள்ளதுபோல் திரவிட மொழிகள் தமிழினின்று திரிந்து ஓரளவு ஆரியத் தன்மை அடைந்துவிட்டமையாலும், வடவேங்கடந் தென்குமரி யிடைப்பட்ட பண்டைத் தமிழ்ச் சொற்களே, தென்னாட்டுத் திரவிட மொழிகளில் சிறப்பாகப் பழஞ்சேரநாட்டு மொழி யாகிய மலையாளத்தில் அடிப்படையாக மண்டிக்கிடப்பதாலும், இற்றைச் சோழ பாண்டி நாட்டு மொழியையும் தென்னாட்டுத் திரவிடத்தின் தமிழ்ப் பகுதியையும் ஒருங்கே தழுவுதற்கே `தென்மொழி' யென்னும் பெயர் இவ்விதழிற்கு இடப்பெற்றதென்க, ஆகவே `தமிழ்' என்பது தமிழை மட்டும் குறிக்குமென்றும், `திரவிடம்' என்பது தமிழினின்று திரிந்த பிறமொழிகளையே குறிக்கு மென்றும், `தென்மொழி', என்பது அவ்விரண்டையும் குறிக்குமென்றும் வேறுபாடறிந்து கொள்க. 3 தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும் எப்போதும், அண்மையிருப்பு அன்புறவையும் சேய்மையிருப்பு அயன்மை பகையையும் காட்டா. ஒருவர்க்கு அடுத்த வீட்டார் பிறவிப் பகைவராகவும் அயல் நாட்டார் உயிர் நண்பராகவும் இருக்கலாம். உள்ளூ ரிருந்துந்தம் உள்ளத்தன் பில்லாரேல் கள்ளவிழ் சோலையாங் காட்டுள்ளார் காட்டுள்ளும் உள்ளத்தன் புள்ளாரேல் உற்றார்வாழ் நாட்டுள்ளும் நள்ளி நடுவூ ருளார். (214) என்பது அறநெறிச்சாரம். ஒரு நாட்டு அல்லது இனத்து மக்களின் உள்ளத்தெழுங் கருத்து களைத் தெரிவிக்கும் சொற்றொகுதியே மொழியாதலின், இங்கு மக்களுக்குச் சொன்னது மொழிகட்கும் ஒக்கும். ஆங்கிலம் ஏறத்தாழ ஆறாயிரம் கல்லிற்கு அப்பாலுள்ள அயல் நாட்டு மொழியாதலாலும், வடமொழி நம் நாட்டிலேயே தோன்றி வழங்கி வருவதாலும், ஆங்கிலம் தமிழுக்கு அயலென்றும் வடமொழி தமிழுக்கு உறவென்றும், ஒரு தவறான கருத்து இருந்து வருகின்றது. ஆங்கிலத்தின் உண்மை வெளியீடும் வடமொழியின் உண்மை மறைப்பும்: ஆங்கிலர் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கலத்துறையிற் சிறந்து கடல்கடந்து, உலகத்தின் பல பகுதிகளிலும் தம் ஆட்சியை நிறுவினதினால், ஆங்காங்குள்ள மக்களின் மொழிகளினின்று வேண்டுமளவு சொற்களைக் கடன் கொண்டு தம் மொழியை வளப்படுத்தியுள்ளனர். இவ்வுண்மையை அவரே தம் சொற் களஞ்சியங்களில் (அகராதிகளில்) தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளனர். எ-கா : அணைக்கட்டு - Anicut ஆனைகொன்றான் - Anaconda கட்டுமரம் - Catamaran தேக்கு - Teak பச்சிலை - Pachouli மிளகுத் தண்ணீர் - Mulliga tawny வெற்றிலை - Betel ஆனைகொன்றான் என்பது இலங்கையில் ஆனையைக் கொல்லத் தக்க ஒரு பெரும் பாம்பிற்குப் பெயரென்றும், பின்பு அது தென்அமெரிக்கா விலுள்ள ஒரு பெரும் பாம்பிற்கும் இடப்பட்டதென்றும், கீற்று (Skeat) என்னும் ஆங்கிலச் சொற் பிறப்பியலகராதியாசிரியர் வரைந்துள்ளார். தேக்கு, வெற்றிலை என்பவை மலையாளச் சொல்லாகக் குறிக்கப் பட்டுள. மலையாளம் என்பது பழஞ் சேரநாட்டுத் தமிழ் என்பதை அறிக. இனி, Amuck (Amoq) என்பது மலையாச் சொல்லென்றும், Taboo (Tapu) என்பது பாலினீசியச் சொல்லென்றும், உயர்வில்லாமொழிச் சொற்களைக்கூட உள்ளவாறே வெளியிட்டிருக்கின்றனர். ஆயின், வடமொழியாளரோ, வடமொழியில் ஐந்திலிரு பகுதி தமிழாயிருந்தும், ஒரு சொல்லைக்கூடத் தமிழென்று ஒப்புக்கொள்ளாமல் வடமொழி தேவ மொழியென்றும். அது பிற மொழியினின்று கடன் கொள்ளாதென்றும், இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர், அதற்கேற்ப. அவர் வடமொழியிலுள்ள தென்சொற்களையெல்லாம் தவறாகப் பிரித்து, பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறியிருக்கின்றனர். எ-டு : உலகு: உலம் = உருட்சி, திரட்சி, உருண்டகல் உலம்வா - உலமா, உலமருதல் = சுழலுதல் உலக்கை = உருண்ட பெருந்தடி உலண்டு = உருண்டுநீண்ட புழு உலம் = உலவு, உலவுதல்=சுற்றுதல், திரிதல் உலவை = சுற்றி வீசுங் காற்று. உலா =சுற்றி வருதல், அரசன் நகரை வலமாகச் சுற்றி வருதல் உலா - உலாவு, உலாவுதல் = சுற்றித்திரிதல் உலா - உலாத்து, உலாத்துதல் = சுற்றித் திரிதல் உலா - உலாஞ்சு, உலாஞ்சுதல் = தலை சுற்றுதல் உலம்-உலவு-உலகு=உருண்டையானது, கதிரவனைச் சுற்றி வருவது உலகு-உலகம். ஒ.நோ: கடுகு-கடுகம் அண்டம், கோளம், Globe, Sphere முதலிய பிற அல்லது பிறமொழிச் சொற்களும் உலகத்தைக் குறிப்பது உருட்சிபற்றியே. உலகம் என்பது வடமொழியில் லோக்க (loka) என்று திரியும், அதற்கு லோக் என்பதை வேராகக்கொண்டு பார்க்கப்பட்ட இடம் என்று பொருட்காரணங் காட்டுவர். லோக் என்பதற்கு Look என்னும் ஆங்கிலச் சொல் இனமாம். உலகு அல்லது உலகம் என்னும் சொற்குத் தமிழ் வேர்ப் பொருளா வடமொழி வேர்ப் பொருளா, எது பொருந்தும் என்று பகுத்தறிவுடையார் கண்டு கொள்க. லோக்க என்பது லோக் என்று இந்தியிற் குறுகும். ஐயன்: ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர். ``என் ஐ முன் நில்லன்மின்' என்பது குறள் (771) தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும். அரசன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர். தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும். ஐ என்பது `அன்' ஈறுபெறின் ஐயன் என்றாகும். ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால், அண்ணனைக் குறிக்கும் போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன், தம் என்னும் முன்னொட்டுப்பெறும். தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர், ஆசிரியர் எவ்வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு. பெரியோரை யெல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன் மரபு. ``ஐயர் யாத்தனர் கரணம் என்ப.'' (தொல். 1091) என்பது தொல்காப்பியம் பிங்கல நிகண்டில் முனிவரைப்பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப்பெயர் பெற்றுளது. முனிவரிலும் பெரியவர் தெய்வங்களாதலின், தெய்வங்கட்கும் கடவுட்கும் ஐயன் என்னும் பெயர் வழங்கும். ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள். ஐயை = காளி, மலைமகள். இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற்சிதை வென்பர் வடவர். வடவை: வடவை அல்லது வடந்தை என்பது வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடமுனையத்தில் (துருவத்தில்) அவ்வப்போது தோன்றும் நெருப்பை அல்லது ஒளியைக் குறிக்கும் தூய தென்சொல். தாயுமானவர் இதை வடவனல் என்றே குறிப்பிடுகின்றார். இதற்கு உத்தரம் (வடக்கு) அல்லது உத்தரமடங்கல் என்றும் பெயர். இதற்கு நேரான Aurora borealis என்னும் இலத்தீன் சொல்லும், வடக்கத்து நெருப்பு அல்லது ஒளி என்னும் பொருளதே. வடவை என்பதை வடவா எனத்திரித்து முகம் என்னும் சொல்லைச் சேர்த்து, பெட்டைக்குதிரை முகத்தில் தோன்றுவது என்று வடநூலார் பொருட்காரணங் கூறுவது, எத்துணை இழிதகவான செயல் என்று கண்டுகொள்க. இஞ்சி: இஞ்சுதல் = உள்ளிழுத்தல். நீர் இஞ்சியிருப்பது இஞ்சி. இஞ்சி, வேர்வகையாதலின் அதை இஞ்சிவேர் என்பது மரபு. கடைக்கழகக் காலத்தில் தமிழகத்தினின்று கிரேக்க நாட்டிற்கு ஏற்றுமதியான இஞ்சி வேர் கிரேக்கத்தில் Ziggi beris என்றும், இலத்தீனில் Zingiber, gingiber என்றும், அழைக்கப்பெற்றது. பின்னர் ஆங்கிலத்தில் ginger என்றாயிற்று. வேத அல்லது இந்திய ஆரியர்க்கும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆயினும், Ziggi beris என்னும் கிரேக்க வடிவத்தை ச்ருங்கவேர் எனத் திரித்து, விலங்கின் கொம்புபோன்றது எனத் துணிந்து கூறுவர் வடமொழிவாணர். ச்ருங்கம்=கொம்பு. வேர=உடம்பு. சாயுங்காலம்: பொழுது சாய்கின்ற காலம் சாயுங்காலம். இச் சொல் சாயங்காலம், சாய்ங்காலம் என மருவும். சாயங்காலம் என்பதின் வருமொழியை நீக்கிச் சாயம் (ஸாயம்) என வைத்துக்கொண்டு, முடிவது என்று பொருட் காரணங் கூறுவர் வடமொழியர். ஆமைவடை: ஆமையோடுபோல் மேலுங் கீழும் வளைவுள்ள வடை ஆமைவடை. ஆமைத்தாலி, ஆமைப்பலகை, ஆமைப்பூட்டு என்பனவும் இக்கரணியம் (காரணம்) பற்றியவையே. ஆமை என்பதை ஆம எனத்திரித்து, நன்றாய் வேகாதது எனக் கரணியங்காட்டின், பித்தரும் பேதையரும்தான் ஒப்புக் கொள்ளமுடியும். உவணம்: உ என்பதே உயரத்தைக் குறிக்கும் ஓர் ஓரெழுத்து வேர்ச் சொல். உக, உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர்தி, உன்னு முதலிய சொற்களை நோக்குக. ``உகம்பே உயர்தல்'' (தொல். 789) என்பது தொல்காப்பியம். உவண் = மேலிடம். உவணம் = உயர்ச்சி. உவணை = தேவருலகம். உவணம் = பருந்து, கலுழன் (கருடன்) உயரப்பறக்கும் பறவை உவணம் எனப்பட்டது. ``cauîau¥ gwªjhY« C®¡FUÉ gUªjhFkh?'' என்பது பழமொழி. உவணம் - சுவணம் = கலுழன் ஒ-நோ: உழல் - சுழல், உருள் - சுருள் சுவணத்தைச் சுபர்ண என்று திரித்து, சு+பர்ண என்று பிரித்து, நல்ல இலைபோன்ற சிறகுடையது என்று கரணியங்காட்டுவது, உத்திக்குப் பொருந்துமா என்று ஊன்றி நோக்குக. முத்து: முத்து-முத்தம். முத்து சிறியது; முத்தம் பெரியது. `அம்' ஒரு பெருமைப் பொருள் ஈறு (Augmentative Suffix) ஓ.நோ: நிலை-நிலையம், விளக்கு-விளக்கம், மதி-மதியம் (முழுநிலா) முட்டுப்போல் உருண்டிருப்பது முத்து. முட்டு = முட்டை. முத்து-முட்டு. உருண்டையாயுள்ள விதைகளும் முத்தெனப்படும். எ-கா: ஆமணக்கு முத்து, குருக்கு முத்து, வேப்பமுத்து. இந்தியாவில் தொன்று தொட்டு முத்திற்குச் சிறந்தது பாண்டிநாடு. ``வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழவளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து'' என்றார் ஔவையார். இடைக்கழகப்பாண்டியர் தலைநகராகிய கவாடபுரத்தினின்று சென்ற முத்து, சாணக்கியர் பொருள் நூலிற் பாண்டிய கபாடம் எனப் பெயர் பெற்றது. இங்ஙனமிருக்கவும், முத்தம் என்னும் சொல்லை முக்த என்று திரித்து, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் கரணியங் கூறின், அறிவுடைய தமிழன் எவன் நம்புவான்? இனி, முழுப்பூசனிக்காயைச் சோற்றில் முழுக்குவதுபோல், தமிழ் அல்லது தமிழம் என்னும் சொல்லையே, த்ரமிள-த்ரமிட-த்ரவிட எனத் திரித்து ஆரியச் சொல்லாக்க முயல்பவர் வேறு என்னதான் செய்யார்? ஆங்கிலம் தமிழ்த் தூய்மை பேணலும் வடமொழி தமிழ் வழக்கு வீழ்த்தலும்: இந்தியா முழுவதையும் ஓராட்சிப்படுத்தற்கும், இந்தியர்க்கு அறிவியற் கல்வி புகட்டற்கும் ஆங்கிலர் ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கினரே யன்றி, இந்திய மொழிகளைப் புறக்கணித்தற்கன்று. வேத ஆரியரோ, தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும் தம் முன்னோர் மொழியைத் தேவ மொழி என்றும் ஏமாற்றி, இந்திய நாகரிகமும் சிவ மால் மதங்களும் தமிழருடை யவையாயும், தமிழ் திரவிடத் தாயும் ஆரிய மூலமுமாயும், இருந்தும், தமிழ் வழிபாட்டிற்குதவாமொழி எனத்தள்ளி விட்டதனால், கடைக்கழகம் கலைந்தும் பண்டைத் தமிழ் நூல்களெல்லாம் அழிந்தும், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் வளர்ச்சியற்றும், ஆயிரக்கணக்கான தென்சொற்கள் மறைந்தும் வழக்கு வீழ்ந்தும், போனதொடு, தமிழரும் தாழ்த்தப்பட்டும், பல்துறையில் பிழைப் பிழந்தும், உயர்நிலைக்கல்வி யின்றியும், தன்மானமும் பகுத்தறிவும் நெஞ்சுரமும் குன்றியும், போயினர். வழக்கு வீழ்ந்த தமிழ்ச்சொற்கு எடுத்துக்காட்டு: தென்சொல் வடசொல் அளியன் மைத்துனன் அறம் தருமம் ஆ, ஆவு, கோ பசு ஆசிரியன் உபாத்தியாயன் ஐயம் பிச்சை (பிக்ஷை) ஐயுறவு சந்தேகம் ஓதிமம் அன்னம் காருவா அமாவாசை பொழுதுவணங்கி ஞாயிறு திரும்பி } சூரியகாந்தி மதியம், முழுநிலா வெள்ளுவா } பௌரணை, பௌர்ணமி வலக்காரம் தந்திரம் ஆங்கில வுறவு நெருக்கமும் வடமொழி யுறவுத் தொலைவும்: தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத் தமிழர் வடக்கே சென்று திரவிடராய்த் திரிந்தனர். அவருள் ஒரு சாரார் வடமேற்காய் ஐரோப்பா சென்று ஆரியராய் மாறினர். அவ்வாரியருள் ஒரு வகுப்பாரே நாவலந் தேயத்திற்குத் திரும்பி வந்த வேத ஆரியர். இவ்வரலாற்றைச் சில சொற்களும் அவற்றின் திரிபும் காட்டுகின்றன. எ-கா: தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் வடமொழி அம்மை amma - - amba (அம்பா) இரு are is es es as இரும்(பு) iren aer, aes - ayas காண் con, cna gno gno jna (ஜ்ஞா) கிழ - - geros jara (ஜரா) துளை thrure - thura dwara (த்வார) நாவாய் - navis - nau பொறு ber port, fer pher bhar மன் man - - manu முழுகு - merg - majj முன்னு mun - - man மெது smooth - - mrudu வல் - val - bal தியூத்தானியம் என்பது, ஆங்கிலம், செருமானியம், தச்சம் (Dutch), தேனியம் (Danish), ஐசுலாந்தியம் (Icelandic), முதலிய மேலையைரோப்பிய மொழிகளைக்கொண்ட ஒரு கிளையாரியக் குடும்பமாகும். உண்மை விடுதலை: ஆங்கிலர் ஆட்சி நீங்கினதினால் மட்டும் தமிழன் விடுதலை யடைந்து விடவில்லை. கீழையாரியமாகிய வடமொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ், விடுதலையடைந்து, முன்போல் மீண்டும் கோயில் வழிபாட்டு மொழியானாலொழிய, தமிழனுக்கு விடுதலையில்லை. உண்மையில் தேவமொழியென்று உலகில் ஒருமொழியுமில்லை. அங்ஙனம் ஒன்று இருக்குமாயின், அது, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்குமுன் குமரிக்கண்டத்தில் தானே தோன்றியதாயும், வடமொழிக்கு மூலமாயுமுள்ள தமிழாய்த்தானிருக்க முடியும். தமிழ் நாட்டில் விருதுநகர் சிலவகையில் சிறந்த நகராகும். விருது என்பது, பட்டம், கொடி முதலிய வெற்றிச் சின்னங்களுள் ஒன்றைக் குறிக்கும் பெயர். நாடார் கோட்டைகளுள் நாயகமானது விருதுநகர். நாடார் என்பது, நாடான் என்னும் சொல்லின் உயர்வுப் பன்மையாய், நாட்டாண்மைக் காரனை அல்லது நாடாளியைக் குறிக்கும் பெயர். நாடன்-நாடான் - நாடார். பேராயக் (Congress) கட்சியைச் சேர்ந்த திருவாளர் காமராசு நாடாரும், நேர்மைக் (Justice) கட்சியைச் சேர்ந்த திருவாளர் (V. V.) இராமசாமி நாடாரும், விருதுநகர் வாணர். இவருள், முன்னவர் ஆங்கில அடிமைத்தனத்தை அகற்றியவர்; பின்னவர் தமிழனின் உண்மை நிலைமையறிந்து ஆரிய அடிமைத்தனத்தையும் அகற்ற விரும்புகின்றவர். ஆதலால், அவர் தமிழர் அனைவராலும் பாராட்டப் பெறத்தக்கவராவர். இந்நிலவுலகில் அவர் நீடுவாழியாய் நின்று நிலவ, இறைவன் திருவருள் பொழிக. 4 தமிழ் தனித்தியங்குமா? தமிழ் வரலாறு தவறாய் எழுதப்பட்டிருப்பதாலும் அதன் சிறப்பியல்பு தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மாராலும் அறியப்படாதிருப்பதாலும், தமிழ் தவிர ஏனை மொழிகளெல்லாம் பிறமொழிக் கலப்புற்றிருப்பதனாலும், பல தென் சொற்கள் வட சொற்களெனக் கருதப்படுவதாலும், தமிழ் தனித்தியங்குமா என்னும் கேள்வி அறியார் வாயிலும் அறிந்தவர்கள் வாயிலும் நீண்ட நாளாயிருந்து வருகின்றது. சென்ற நூற்றாண்டில், கழக (சங்க) நூற்கல்வியும் தனித் தமிழுணர்ச்சி யும் மறைமலையடிகள் தனித் தமிழ்த் தொண்டும் இல்லாத காலத்தில், ஆங்கில நாட்டினின்று இங்கு வந்துதென்பாண்டி நாட்டிற் குடிபுகுந்து அரை நூற்றாண்டாகத் தமிழும் திரவிடமுமான தென் மொழிகளையாய்ந்து தென்மொழி யொப்பியவிலக்கணங் கண்ட மறைத்திருக் கால்டுவெல் கண்காணியார், தமிழின் தென்மையையும் முன்மையையும் தாய்மையையும் தூய்மையையும் உள்ளவாறுணராவிடினும், ``தமிழ் வடமொழித் துணை யின்றித் தனித்து வழங்குதல் மட்டுமன்றித் தழைத்தோங்குதலுங் கூடும்'' என்று தேற்றம்படக் கூறியுள்ளார். அங்ஙனங்கூறி முக்கால் நூற்றாண்டிற்கு மேலாகியும் அவர் காலத்தின்பின் மொழியாராய்ச்சி எத்துணையோ முன்னேறியிருந்தும், இன்னும் அவர் கூற்றில் ஐயுறுவதும் ஆய்ந்து உண்மை காண மறுப்பதும், தமிழை வேண்டாத் தன்மையையே விளக்குகின்றது. குமரிக் கண்ட முழுக்கினாலும் பண்டைத் தமிழிலக்கிய அழிவினா லும் எத்துணையோ உலக வழக்குச் சொற்களும் செய்யுள் வழக்குச் சொற்களும் இறந்துபட்டிருந்தும், இன்னும் தமிழைத் தனி மொழியாய் வளர்க்கக்கூடிய பல்லாயிரச் சொற்களும் பற்பல சொற்கருவிகளும் தமிழில் இருந்தே வருகின்றன. வழக்கற்ற தமிழ்ச் சொற்களை வழக்காற்றுப் படுத்துவதும் இக் காலத்திற்கு வேண்டிய புதுச் சொற்களை புனைந்து கொள்வதுமாகிய இரு வழிகளைக் கையாளின், தமிழ் தனித்தியங்க எள்ளளவுந் தடையில்லை. 1. வழக்கற்ற தென் சொற்கள் வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றையும் பண்டைத் தமிழ் வேந்தரின் பேதைமையையும் துணைக்கொண்டு, ஆயிரக் கணக்கான வட சொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென் சொற்கள் சிறிதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப் பட்டுள்ளன. எ-கா : வடசொல் தென்சொல் அன்னம் எகின், ஓதிமம் ஆன்மா ஆதன், உறவி, புலம்பன் ஆனந்தம், குதூகலம், சந்தோசம் உவகை, களிப்பு, மகிழ்ச்சி சகுனம் புள் சத்தியம், நிசம், வாதவம் உண்மை, வாய்மை, மெய்(ம்மை) சீரணம் செரிமானம் சுத்தம் துப்புரவு தந்திரம் வலக்காரம் திருப்தி பொந்திகை பிதிரார்ச்சிதம் முது சொம் மேகம் முகில், கார், கொண்டல் லாபம் ஊதியம் நட்டம் இழப்பு மைத்துனன் அளியன் வருசம் ஆண்டு திரீ, புருஷர் ஆடவர், பெண்டிர் இங்குக் குறிக்கப்பட்ட வட சொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டப்பட்டுள்ளன. நகைச் சுவையை ஹாய ரசம் என்பதும், அவையைச் சத என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த்தனித் தமிழ்ப் பெயர்களை, முறையே, கும்பகோணம், கபிதலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வட சொற்களாய் ஏற்கெனவே, மாற்றியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியையன்றி வேறெதைக் காட்டும்? இன்று தமிழில் வழங்கும் வட சொற்கள் தமிழிற்கு வேண்டியவுமல்ல; தமிழர் விரும்பியவுமல்ல. உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப் புழுக்களையும் இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும். இதனைத் தடுப்பவர் புறப் பகைவரும் உட் பகைவருமாயேயிருத்தல் வேண்டும். வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும். 2. புதுச் சொற்புனைவு பல பொருள்கள் பல் வகையில் வேறுபட்டிருப்பினும், அவற்றிற் கெல்லாம் பொதுவாக ஒரு தன்மை காணக்கிடக்கின்றது. உயிரிகள் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைப் பிறப்பிப்பது போன்றே கருத்துகளும் ஒன்று இன்னொன்றை அல்லது பலவற்றைத் தோற்றுவிக்கின்றன. இவ் வீருண்மைகளையும் கண்ட குமரிக் கண்டத் தமிழர். ஓரடியினின்றே ஈற்று வேறுபாட்டாற் பல்வேறு சொற்களைத் திரித்து, அவற்றாற் பற்பல பொருள்களையுங் குறிப்பித்திருக்கின்றனர். எ - கா : வெள் வெள்ளென வெள்கு வெளி வெளு வெளேல் வெள்ளை வெட்கு வெளிப்பு வெளுப்பு வெளேர் வெள்ளம் வெளிவு வெளுவை வெள்ளி வெளிச்சம் வெள்ளில் வெளிச்சி வெள்ளந்தி வெளிச்சை வெள்ளென்காட்டி வெளில் (வெள்ளெனக்காட்டி) வெளிறு வெள் - விள் - விள (வெள்ளைத் தோட்டுக் கனி) விளம், விளா, விளவு, விளாத்தி விளர் விளர்ப்பு (வெளுப்பு) விள் - வில் -வில்வு, வில்வம், வில்லம் (கூவிளம்) விள் - விள - விளங்கு, விளக்கு, விளக்கம். வெள் - வெண்- வெண்பு (வெண்ணிலம், Plain) வெள் - வெறு வெறு - வெறி வெற்று வெறிப்பு (முகில் நீங்கி வானம் வெறியாதல்) (வெள்ளிலை - வெற்றிலை) வெறிச்சு (வெண்மை = வெறுமை) வெறு - வறு வறு - வறிது வறுமை வெள் - வெட்டு (மின்) வெட்டு - வெட்டி (கூலியில்லா வெறுமை வேலை) வெட்டம் (வெளிச்சம்) வெட்ட (தெளிவான) வெட்டை (வெளி, வெறுமை, பயனின்மை) இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்களெல்லாம், வெண்ணினத்தைக் குறிக்கும். வெண் என்னும் ஒரேயடியினின்று பிறந்து வெண்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு காட்சிப் பொருள்களையுங் கருத்துப் பொருள்களையுங் குறிப்பனவாகும். இவ்வடியினின்று பிறந்த வேறு சில சொற்களுமுள. அவை விரிவஞ்சி இங்கு விடப்பட்டுள. சில பொருள்கட்குப் பிறவற்றிற்கில்லாத சிறப்பியல்புண்டு. அதனை யும் நம் முன்னோர்கண்டு, அதற்கேற்பப் பெயர்களை அமைத்திருக் கின்றனர். எ - கா : வாழை (அடி வழ வழவென்றிருப்பது). இங்ஙனமே பிற மொழியாளரும் தத்தம் மொழியிற் சொற்களை ஆக்கியிருக்கின்றனர். ஆகவே, ஆங்கிலக் குறியீடுகளின் வேர்ப் பொருளையோ அவற்றாற் குறிக்கப்படும் பொருள்களின் சிறப்பியல்பை யோ அறிந்து கொள்ளின், அறிவியலும் கம்மியமும் பற்றிய எல்லாச் சொற்களையும் எளிதாய்த் தமிழில் அமைத்துக் கொள்ளலாம் சொற்றிரி பிற்கேற்ற ஈறுகள் தமிழில் ஏராளமாகவுள்ளன. தொழிற் பெயரீறுகள் மட்டும் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், பாடு, காடு, அரவு, ஆனை, மை, து, இல், ஆல், அனை, அனம், இனம், அணம், இணம், அடம், இடம், அரம், இதம் முதலியனவாக முப்பதிற்கும் மேலுள்ளன. இவற்றொடு, வினை முதலீறுகள் செயப்படு பொருளீறுகள் முதலிய ஈற்றுவகைகளையும், குறுமைப் பொருள், பெருமைப் பொருள் முதலியனபற்றிய முன் பின் ஒட்டு வகைகளையும், சேர்ப்பின் எத்துணையோ பலவாகும். இலத்தீன் கிரேக்கம் முதலிய பல மொழிகளினின்று ஆங்கிலம் கடன் கொண்டுள்ள ஈறுகளை யும் ஒட்டுக்களையும் ஒத்த சொல்லுறுப்பு வளம், தமிழ் ஒன்றிலேயே இயல்பாக அமைந்து கிடக்கின்றது. Electricity என்னும் ஆங்கிலச் சொல், அம்பர் என்னும் நறுமணப் பொருளைக் குறிக்கும் electron என்ற கிரேக்கச் சொல்லினின்றும் பிறந்தது. அம்பர் என்பது தமிழில் மின்சாரம் எனவும் பெறும். 12ஆம் நூற்றாண்டின தான அடியார்க்கு நல்லாருரையில் அம்பர் என்னுஞ் சொல் வந்திருத்தலால், அதையும் தென் சொல்லெனக் கொள்ள இடமுண்டு. மின்னாற்றலைக் குறித்தற்கு அம்பர் என்னுஞ் சொல்லினின்று ஆம்பரியம் என்றொரு சொல்லைத் திரித்துள்ளனர் புதுச்சேரி வாணர். சென்னை நாட்டுத் தமிழில் மின்சாரம் என்னுஞ் சொல் ஏற்கெனவே புனையப் பெற்றுள்ளது. அதை மின்(னம்) என்றும் மாற்றிக் கொள்ளலாம். Radio என்னும் ஆங்கிலச் சொல், Radius என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்தது. இலத்தீன் பொருள், தண்டு, ஆரை, கதிர் என்பன. கதிர் என்னும் சொல்லினின்று கதிரம் அல்லது கதிரியம் என்றொரு சொல்லை நாம் திரித்துக் கொள்ளலாம். சில பொருள்களின் அல்லது கலை முறைகளின் பெயர், அவற்றைக் கண்டு பிடித்த ஆட்பெயரால் அல்லது இடப்பெயரால் அமைந்துள்ளன. அவற்றை அப்படியே வரிபெயர்த்து வைத்துக் கொள்ளலாம். எ - கா : Galvanism என்னும் மின்னாக்கமுறை கால்வனி (Galvani) என்பவராற் கண்டு பிடிக்கப்பட்டது. Galvanization = கால்வனித்தல். Galvanism கால்வனியம். Bauxite என்னும் மண் வகை பிரான்சு நாட்டில் பாக்கசு (Baux) என்னும் இடத்திற் கண்டு பிடிக்கப்பட்டது. அதைப் பாக்கசி என்று வரி பெயர்த்துக் கொள்ளலாம். Chemistry என்னும் ஆங்கிலச் சொல், Alckemy என்பதனின்று திரிந்தது. இது Al - kimia என்னும் அரபிச் சொல்லின் திரிபு. Al = the (அந்த என்று பொருள்படும் முன்னொட்டு); Kimia என்பது Khemia என்பதன் திரிபு. இது எகிப்து (Egypt) நாட்டுப் பெயரின் கிரேக்க வடிவம். ஆகவே, Chemistry என்பதைக் கெமியம் என்று சொல்லலாம். Chemist = கெமியன், கெமியர் Chemical = கெமிய. சில பொருட் பெயர்கள் அளவுபற்றி அமைந்துள்ளன. Duoderum என்பது பன்னிரண்டு என்னும் இலத்தீன் எண்ணுப் பெயர். அது ஆங்கிலத்தில் பன்னிரு விரல் (அங்குலம்) அளவுள்ள சிறு குடற் பகுதியைக் குறிக்கின்றது. இதைப் பன்னீரம் என்று மொழி பெயர்க்கலாம். Furlong என்னும் ஆங்கிலச் சொல் படைச்சால் நீளம் என்னும் பொருளது. fur = furrow (படைச்சால்). படைச்சால் என்பது அணைப்பு என்றும் சொல்லப்படும். ஆகவே, furlong என்பதைப் படைச்சால் என்றோ, அணைப்பு என்றோ, சானீளம் என்றோ மொழி பெயர்க்கலாம். சில பெயர்கள் உவமையாகு பெயராயுள்ளன. Bacterium என்னும் ஆங்கிலச் சொல் சிறு குச்சுப்போல் தோன்றும் ஒரு வகை நுண் புழுவின் பெயர். இது குச்சு என்று பொருள்படும் baktron என்னும் கிரேக்கச் சொல்லின் குறுமைப் பொருள் வடிவான bakterion என்பதன் திரிபு. இல் என்பது தமிழில் ஒரு குறுமைப் பொருட் பின்னொட்டு (diminutive suffix). எ -டு : தொட்டி - தொட்டில் = சிறு தொட்டி புட்டி - புட்டில் = சிறு புட்டி குச்சு என்பதனொடு இப்பின்னொட்டைச் சேர்ப்பின், bacterium என்பதற்கு நேரான குச்சில் என்னும் தமிழ்ச்சொல் ஆம். சிறு வீட்டைக் குறிக்கும் குச்சில் என்பது குற்றில் என்பதன் கொச்சைத் திரிபு. சிலபெயர்கள் பன்மடியாகு பெயர்களாயுள்ளன. Mail என்னும் ஆங்கிலச்சொல் பை என்னும் அடிப்படைப் பொருளது. அது பின்பு, முறையே, பைக்குள் இடும் கடிதங்களையும் அவற்றைக் கொண்டு செல்லும் புகை வண்டியையும் குறித்தது. ஆகவே, Mail என்பதை அஞ்சல் அல்லது அஞ்சலை என்று குறிக்கலாம். எல்லாச் சொற்களையும் வேர்ப்பொருள் பற்றியே மொழி பெயர்க்க வேண்டியதில்லை. பொருள்களின் சிறப்பியல்பு நோக்கி அதற்கேற்ப ஒரு பெயரிடலாம். இம்முறையிலேயே, train என்பதைப் புகைவிடும் சிறப்பியல்பு பற்றிப் புகை வண்டி எனக் குறித்தனர் தமிழ்ப் பொதுமக்கள். Train என்னும் ஆங்கிலச் சொல் இழு (Draw) என்று பொருள்படும் trab என்னும் இலத்தீன் முதனிலையினின்று திரிந்தது. Cycle மிதி வண்டி என்பர் நெல்லை நாட்டார். அதை ஈருருளி என்னத் தேவையில்லை. பண்டை நாட்களில் அயல் நாடுகளினின்று வந்த எல்லாப் பொருள் கட்கும், அவற்றின் சிறப்பியல்பு பற்றியத் தூய தென் சொற் பெயர்களை இட்டிருக்கின்றனர். பண்பட்ட பழந் தமிழ்ப் பொதுமக்கள். கரும்பு சாலித் தீவினின்றும், புகையிலையும் உருளைக் கிழங்கும் அமெரிக்க நாட்டினின்றும், வான்கோழி துருக்கி நாட்டினின்றும் வந்தவை. அமெரிக்கத் தன்னாட்டுச் சொற்களின் திரிபான tabaco (E. tobacco), Patata ( E. potato) என்னும் இசுப்பானியச் (Spanish) சொற்களைத் தமிழ் ஏற்றுக் கொள்ள வில்லை. இம்மொழியுணர்ச்சி பிற்காலத்தில் ஆரியத்தாற்கெட்டது. சில சொற்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அடிப்பொருளும் வழிப் பொருளும் ஒத்துள்ளன. Pen என்னும் ஆங்கிலச் சொல், தூவு (feather) என்று பொருள்படும் Penna என்னும் இலத்தீன் சொற்றிரிபு. தூவல் என்னும் தமிழ்ச் சொல்லும் அத்தகையதே. ஆங்கிலச் சொற்களை மொழி பெயர்க்கும்போது வண்ணனை (descriptive) முறையைக் கையாளக்கூடாது. Collector என்பதைத் தண்டலாளர் என்றே மொழி பெயர்த்தல் வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் என்று குறிப்பின், Collector என்பதையும் District Administrative Head அல்லது District Chief Administrator என்று மாற்றல் வேண்டும். அது பொருந்தாமை காண்க. காட்சியும் கருத்துமாகிய இருவகைப் பொருள் கட்கும், சொற்கள் ஒரு மருங்கு காரணக்குறியாய் இருந்தாற் போதும். இத்தகைய முறைகளைக் கையாளின், எல்லா ஆங்கிலக் குறியீடு களையும் தமிழில் மொழி பெயர்த்து விடலாம். ஆங்கிலக் குறியீடுக ளெல்லாம் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. தமிழர்க்கு வேண்டுவது தமிழ்ப்பற்று ஒன்றே. 5 தமிழும் திரவிடமும் சமமா? கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மறையுண்டு வந்திருப்பத னாலும், ஆரியக் குலப் பிரிவினையால் தமிழும் தமிழரும் தாழ்த்தப்பட் டிருப்பதனாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட பல்வேறு துறைபற்றிய ஆயிரக் கணக்கான தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் இயற்கையாலும் செயற்கையாலும் இறந்துபட்டமையாலும், மொழியாராய்ச்சி இதுபோது சரியான முறையில் நடை பெறாமையாலும், தமிழைக் காட்டிக் கொடுக்கும் கோடரிக் காம்புகள் தலைமையிடம் பெற்றிருப்பதனாலும், அரசியலும் பல்கலைக் கழகங்களும் தமிழ் பற்றிய உண்மைகளை ஆராய்ந்தறிவதில் அக்கறை கொள்ளாமையாலும், தமிழின் தலைமை இன்னும் தமிழராலும் சரியாய் உணரப் பெறவில்லை. தமிழே திரவிடத்திற்கு மூலம் என்பது, பல்வேறு சான்றுகளால் தெள்ளத் தெளிய அறியக் கிடக்கின்றது. அச்சான்றுகளாவன :- 1. வரலாறு கூறல் தமிழும் அதன் திரிபான திரவிடமும், தமிழரும் அவர் வழியினரான திரவிடரும், எங்கு என்று எவ்வாறு தோன்றினர் என்னும் வரலாற்றுக் குறிப்பு தமிழிலன்றி எத்திரவிட மொழியிலுமில்லை. ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி'' (சிலப். 11 : 10-22) ``முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே'' (புறம். 9 : 10, 11) ``மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று வேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்'' (முல்லைக்கலி, 4) ``.......... தலைச் சங்கமிருந்தார் ........... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரை யென்ப.'' ``.......... இடைச் சங்கமிருந்தார் ........... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.'' (இறையனாரகப் பொருள், 1, உரை) ``முதலூழி யிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச்சங்கத்து .......... அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னுமாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே ஏழு நூற்றுக் காவதவாறும், இவற்றின் மலிவானென மலிந்த ......... நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்ல முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால்'' - (சிலப். 8 :1, அடியார்க்கு நல்லார் உரை) இக்குறிப்புகள், தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் முழுகிப் போன குமரிக் கண்டம் என்பதைக் காட்டுகின்றன. மாந்தன் தோன்றிய இடமும் குமரிக் கண்டமே. அது பனிமலை (இமயம்) கடலுக்குள்ளிருந்த காலத்தும் கழி முதுநிலமாயிருந்த கணிப்பருந் தொன்மை வாய்ந்தது. அடியார்க்கு நல்லார் பெயருடன் குறித்துள்ள ஏழேழ் நாடும் வரலாற் றுண்மையே யன்றிக் கட்டுச் செய்தியன்று. திருவாங்கூர் (திருவிதங்கோடு) நாட்டில் உள்ள பறளியாறே பண்டைத் தமிழிலக்கியத்திற் குறிக்கப்பட்ட பஃறுளியென்பது, தமிழ்ப் பகைவர் கூற்றென்று விடுக்க. இனி, ``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி'' (தொல். 883) என்னும் தொல்காப்பிய நூற்பா, ஆரியத்தொடு கலந்து திரவிடமாய் மாறிய கொடுந் தமிழ்த் தோற்றத்தை யுணர்த்தும். 2. ஆரியத் தொடர்பற்ற இலக்கியம் இறந்துபட்ட முது நாரை, முது குருகு, களரியா விரை, வெண்டாளி, வியாழமாலை யகவல், இசை நுணுக்கம், சிற்றிசை பேரிசை, முறுவல், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலிய எண்ணிறந்த தொன்னூல்களும்; ஏரணம் (Logic), உருவம் (sculpture), ஊழ்கம் (யோகம்), இசை, நாடகம், கணக்கு, பொன்னாக்கம், (Alchemy), கண்கட்டி (சாலம்), வசியம் (Enchantment), சூனியம் (Witchcraft), மறம் (போர்) மல்லம் (Wrestling), யானை நூல், குதிரை நூல், நீர் நூல், நில நூல், பொருள் நூல் (Economics), அரசியல் நூல் (Politics), கட்டிட நூல் (Architecture), ஓவியம், கணியம் (Astrology) தொன் நூல் (Astronomy), மறை நூல் (Scripture), மந்திர நூல் (Mystif Philosophy), மருத்துவம், மடை நூல் (Cookery) புதையல் நூல் முதலிய பல்வேறு கலையும் அறிவியலும் பற்றிய ஆயிரக் கணக்கான அரிய நூல்களும்; தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள, அறுவகைப்பாவும் அவற்றின் வேறுபாடுகளும், ``பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அகங்கதம் முதுசொல்'' (1236) என்னும் எழுநிலை யாப்பும், வாழ்த்துவகையும் பண்ணத்தியும் இருபது வண்ணமும், எண்வகை வனப்பும் நூற்றுக்கணக்கான அகப்பொருள் புறப்பொருட்டுறைகளும் ஆகியவற்றிற்குரிய பண்டை யிலக்கியமும், ஆரியச்சார்பற்ற அருந்தமிழ் நூல்களே. திரவிட மொழிகளிலுள்ள இலக்கியமெல்லாம் பெரும்பாலும் வடமொழி யிதிகாச புராணங்களின் பெயர்ப்பும் திரிப்புமே. 3. நூற்சிறப்பு தொல்காப்பியம், திருக்குறள், கலித்தொகை, சிலப்பதிகாரம் திருக்கோவை, கம்பவிராமாயணம், திருப்புகழ், காளமேக, மாம்பழக் கவிராயர் பாடல்கள் ஆகியவற்றை யொத்த பனுவலும் பாடலும் எத் திரவிட மொழியிலும் காணக் கிடைக்குமோ? ஆரியப் பேரிலக்கிய மொழிகளிலும் அவற்றைக் காண்பதரி தாயிருக்கும்போது, திரவிட மொழிகளில் அவை இல்லவே யில்லை யென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 4. இலக்கண அமைதி முதலீறை நிலையென்னும் எழுத்து வரையறையும், சில சொன்மரபும், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் யாப்பு வகையும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடும், செந்தமிழ் என்னும் வரம்பும், திரவிட மொழிகட்கில்லை. 5. இலக்கியத் தொன்மை தலைக் கழகக் காலத்திலேயே முத்தமிழிலக்கண விலக்கியம் முற்றியிருந்தமையால், கி. மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன்பே தமிழிலக்கியம் தோன்றியிருந்தமை புலனாம். திரவிட மொழிகளிலுள்ள இலக்கியமெல்லாம் கி. பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையே. 6. மொழித்தொன்மை தமிழ்த் தோற்றம் கி. மு. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது. கொடுந்தமிழ்களுள், வடுகென்னும் தெலுங்கு திரிந்தது. கி. மு. 10ஆம் நூற்றாண்டு; கருநடம் என்னும் கன்னடம் திரிந்தது. கி. பி. 6ஆம் நூற்றாண்டு; சேரலம் என்னும் கேரளம் அல்லது மலையாளம் திரிந்தது. கி. பி. 13ஆம் நூற்றாண்டு ஏனைத் திரவிடங்கள் திரிந்தது இவற்றிற்கிடையும் பின்னும். 7. மொழித் தூய்மை தமிழ், பல்லாயிரக் கணக்கான இலக்கியச் சொல்லும் உலகியற் சொல்லும் இறந்துபட்டுள்ள இக்காலத்தும், எள்ளளவும் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவும் தழைத்தோங்கவும் வல்லது. திரவிட மொழிகட்கோ வடமொழித் துணை இன்றியமையாதது. 8. சொற்களின் இயனிலைமை தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் முந்திய இயனிலையிலும் திரவிடச் சொற்கள் பெரும்பாலும் பிந்திய திரிநிலையிலுமே உள்ளன. இதை ஓரரிசிப் பதமாகத் தெலுங்கினின்று எடுத்துக் காட்டுவோம். 1. மூவிடப் பெயர் தமிழ் தெலுங்கு தன்மை : ஏன்-யான்-நான் நேனு ஏம்-யாம் மேமு நாம் மனமு முன்னிலை : நீன்-நீ நீவு நீம், நீயிர்-நீவிர்-நீர் மீரு படர்க்கை : அவன் வாடு அவள் ஆமெ அவர் வாரு அது, அவள் அதி அவை அவி 2. `ஆகு' என்னும் வினைப்புடை பெயர்ச்சி தமிழ் தெலுங்கு பகுதி : ஆ, ஆகு அவு ஏவலொருமை : ஆ, ஆகு கா ஏவற்பன்மை : ஆகும், ஆகுங்கள் கம்மு, கண்டி (படர்க்கை) ஆண்பால் இ. கா. முற்று : ஆயினான் அயினொடு இ. கா. பெயரெச்சம் : ஆன, ஆயின அயின, ஐன இ. க. வினையெச்சம் : ஆய், ஆகி அயி, ஐ நி. நா. வினையெச்சம் : ஆக கா, அவ எ. கா. வினையெச்சம் : ஆயிற்றேல் அயித்தே (படர்க்கை) ஒன்றன் பால் தமிழ் தெலுங்கு எ. கா. முற்று : ஆகும் - ஆம் அவுனு உடன்பாட்டிடைச் சொல்: ஆம் அவுனு ஒன்றன் பால் எதிர்மறை முற்று : ஆகாது காது தொழிற் பெயர் : ஆதல், ஆகுதல் அவுட்ட, காவடமு 3. சில பொதுவகைச் சொற்கள் தமிழ் தெலுங்கு சுருட்டு சுட்ட திருத்து தித்து பருப்பு பப்பு மருந்து மந்து 9. சொல்வளம் மலையாளத்தில் வழங்கும் வீடு என்னும் சொல்லும், கன்னடத்தில் வழங்கும் மனை என்னும் சொல்லும். தெலுங்கில் வழங்கும் இல்(லு) என்னும் சொல்லும், தமிழுக்குரிய ஒரு பொருட் பல சொற்களாம். ஆய், இளை, எழிலி, கார், காளம், குயின், கொண்டல், கொண்மு, செல், பெயல், மங்குல், மஞ்ச, மால், முகில், மை என்பன மேகத்தைக் குறிக்கும் வேறுபட்ட நுண் பொருட் சொற்களாம். இத்தகைய சொல் வளத்தைத் திரவிட மொழிகளிலும் காணவியலாது. 10. முத்தமிழ்ப் பாகுபாடு தொன்று தொட்டு வழங்கிவரும் இயலிசை நாடகமென்னும் முத்தமிழ்ப் பாகுபாடும் திரவிட மொழிகட்கில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாண்டிய வேந்தர் போற்றிப் புரந்த முத்தமிழ், முத்தமிழ்க் கழக நல்லிசைப் புலவர், நலமுற நாடியாய்ந்த நன்மொழி, பிற மொழிகட்கில்லாத தொன்மையும் முன்மையும், தென்மையும் மென்மையும், இளமையும் வளமையும் எண்மையும் ஒண்மையும், தாய்மையும் தூய்மையும், செம்மையும், மும்மையும், பெருமையும், திருமையும், முதுமையும், புதுமையும் தாங்கி நின்றும், திரவிட மொழிகளுள் ஒன்றாக எளிவந்தும் இழிவந்தும் இருப்பது எத்துணை இரங்கத்தக்கது! ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து எண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ'' என்னும் பரஞ்சோதி முனிவர் பாடலையேனுங் கண்டு உண்மை தெளிக. 6 `திரவிடம்' என்பதே தீது நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழியடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும், அதன் வழியாகவே முன்னேறுவதாலும், தமிழர் யாவரும் தமிழ்ப்பற்றுக் கொண்டிருத்தல் வேண்டும். எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே. இந்நாட்டாராயினும், அஃதில்லார் அயலாரே. தமிழ்ப் பெயரே தாங்குதலும், இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும், திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும், மக்கள் உலகத்தில் `தேவமொழி'யில்லை யென நம்புதலும், இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ் நாட்டில் அடியோடொழித்தலும், தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும், தமிழன் என்பதற்கு அடையாளமாம். தமிழிற்கு இடைக் காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென் சொற்கள் வழக்கற்றுப் போயின. அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும். கால்டுவெல் கண்காணியார் முதன் முறையாகத் திராவிட மொழி களை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மை யாலும், தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச்சிமிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழி யாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிறஇனமொழி களையே திரவிடம் என்றும் வேறு படுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம். தமிழ் தூய்மையான தென் மொழியென்றும், திரவிடம் ஆரியங் கலந்த தென் மொழியென்றும் வேறு பாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல். வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும். ஆதலால், வட சொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு; அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு. திரவிடம் என்ற மொழி நிலையே வடமொழிக் கலப்பால் தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும்; திரவிடம் வடமொழித் துணையின்றித் தினித்தியங்காது. இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும், ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது: ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம். திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமுமாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப்போம். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான், இந்தியா முழுதும் ஆரியமாய் விடும். தமிழ், திரவிடமொழிகளைப்போல ஆரியச் சார்பு கொள்ளாமை யாலும், வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும், தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (Lingusitic Autonomy) பெறுதல் வேண்டும். போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம். .....âuhÉl முன்னேற்றக் கழகம்,தமிழ்நாLஎன்னு§கொள்கையவி£டுவிட்Lத்திராÉடநhடுஎன்Dம்பொருத்தம‰றகொள்கைaக்கடைப்பிடித்தும்,தம¡குத்தhமேமுட்டுக்கட்டையி£டுக்கொண்ld. இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை. தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும்,திராவிட«என்னுŠசொல்லிšஇல்லை. திராவிடம் பனிமலை (இமயம்) வரை பரவுயுள்ளது. தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு, திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது, பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே. தமிழ்நாடுபிரிந்தபின்,குறைந்தபட்சம்தென்னாட்டுத்திரவிடரெல்லாம்தமிழரொடுகூடிமிகப்பரந்தபுலனங்களில்(விஷயங்களில்)ஒரகூட்டொப்பந்தம்செய்யும்போதேதி.மு.க.சொல்லும்திரவிடம்தோன்றும்.அதற்குஇன்றுதமிழர்மட்டுமேமுயல்வது,வானத்துமீனுக்குவன்றூண்டி Èட்டfதையேaம்.ïJfhW§ T¿யவற்றால்,உ©மைநிiலயைஉŸளவாறுணர்ந்து,நiடமுறைக்fவ்வாதவீ©fள்கைகளையும்வீwப்புக்களையும்வி£டுவிட்டு,எLத்தமுaற்சிஇiடயூறின்றிtற்றிgறுதற்gருட்டு,gதுநலத்தைமு‹வைத்துஒ‰றுமையாகப்gராடி,மு‹னேற்றப்பhதையில்முiனந்துrல்க. (`jÄœ' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து) 7 மொழி பெயர் முறை ஒரு மொழியிலுள்ள சொற்களை அல்லது குறியீடுகளை வேறு மொழியில் பெயர்க்கும் முறைகள் ஐந்தாம். அவையாவன :- 1. நேர்ச்சொல் (எ-கா : pen - தூவல்) 2. வேர்ப் பொருட் சொல். (எ-கா : motor - இயங்கி) 3. சிறப்பியற் சொல். (எ-கா : train - புகை வண்டி) 4. ஒலிப்பொலிச் சொல் 5. முதலெழுத்துச் சொல் இவற்றுள், முதலது முன்னமேயுள்ள சொல். ஏனையவெல்லாம் புதிதாய் ஆக்கப் பெறுவன. ï›it tifíŸ, Kjš _‹W« ``jÄœ jŤâa§Fkh?'' என்னும் முந்திய கட்டுரையிற் கூறப்பட்டுள. ஏனையிரண்டே இங்குக் கூறப்பெறும். ஒப்பொலிச் சொல்லாவது, ஒலியிலும் பொருளிலும் ஒக்குமாறு அமைத்துக் கொள்ளப் பெறும் சொல். எ-கா : ஆங்கிலம் தமிழ் Parliament பாராளுமன்று bracket பிறைக்கோடு Parliament என்பது பேசுங்களம் என்று பொருள்படும் தனிச் சொல் (ஒரு சொல்). பாராளுமன்று என்பது பாரை ஆளும் மன்று என்று பொருள்படும் முச்சொற்றொடர். Parler என்பது பேசு என்று பொருள்படும் பிரெஞ்சு வினைச் சொல்; ment என்பது ஒரு பிரெஞ்சுத் தொழிற் பெயரீறு. ஆகவே, இவ்விரு சொற்கட்கும் எள்ளளவும் தொடர்பில்லை ஆயினும், ஒலியிலும் பேரளவு ஒத்திருக்கின்றன. Braccal என்பது breeches (குறுங்காற் சட்டைகள்) என்று பொருள் படும் இலத்தீன் சொல். Braga என்பது அதன் இசுப்பானியத் (Spanish) திரிபு. Bragueta என்பது அதன் குறுமைப் பொருள் வடிவம் (Diminutive). அதனின்று முதலில் bragget என்றும், ஆங்கிலச் சொல் திரிந்தது. பிறைக் கோடு என்பது பிறைபோல் வளைந்துள்ள கோடு என்று பொருள்படும் இரு சொற்றொடர். இவற்றிற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆயினும், ஒலியும் பொருளும் ஒத்துள்ளன. இங்ஙனம் அமைதல் மிக அருமையாதலின், ஒரு சில சொற்கள் தாம் இம் முறையில் அமைக்கப்பெறும். முதலெழுத்துச் சொல்லாவது, ஒரு பொருளைப் பற்றிய வண்ணனைச் சொற்கள் முதலெழுத்துக்களைமட்டும் சேர்த்து ஒரு பெயர் அல்லது குறியீடு அமைத்தல். எ. கா : Radar. இது, radio detection and ranging என்னும் நாற்சொல் முதலெழுத்துக் கோப்பு. இம்முறை பற்றியே, கதிரியத்துப்பறிவும் வீச்சீடும் என்னும் முற்சொற்களின் முதலெழுத்துக்களைச் சேர்த்துக் கதுவீ என்றோ, (வானூர்தி மரக்கலம் கடற்கரை முதலியவற்றின்) வாக்கும் (direction) வீச்சும் (range) காணி என்னும் பொருளில் வாவீணி என்றோ, அமைத்துக் கொள்ளலாம். ஆங்கிலக் குறியீடுகளெல்லாம் பொருளளவில் பெருவளங் கொண்டன வேனும், சொல்லளவில் மிக எளிய முறையிலேயே அமைந் துள்ளன. மேற்கூறிய ஐம்முறைகளையும் கையாளின் எல்லா அறிவியற் குறியீடுகளையும் தமிழில் எளிதாய் மொழி பெயர்த்து விடலாம். தாய் மொழிப் பற்றொன்றே தேவை. 8 நிகழ்கால வினை வடிவம் தொல்காப்பியர், ``வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்'' (வினையியல். 1) ``காலந் தாமே மூன்றென மொழிப'' (வினையியல். 2) ``இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே'' (வினையியல். 3) என்னும் நூற்பாக்கள் வாயிலாக வினைச் சொற்காலம் மூன்றெனக் கூறியிருப்பினும் நிகழ்காலவினை முற்றுவடிவிலோ எச்சவடிவிலோ இடநிலைக்காட்டி யாண்டுங்கூறவேயில்லை. அவர், ``செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவவகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி'' என வினையெச்சவாய்பாடுகளை, ஒருவாறு நிகழ்காலமும் அடங்க முக்காலத்திற்கும் தொகுத்துக் கூறினோரானும், பெயரெச்ச வாய்பாடுகளைக் கூறுமிடத்து. ``செய்யும் செய்த என்னுஞ் சொல்லே'' என, நிகழ்காலத்தற்றும் எதிர்காலத்திற்கும் பொதுப்படச் `செய்யும்', என்னும் ஒரே வாய்பாட்டை ஆண்டாரேயன்றி, ``செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டின்'' என நன்னூலாரைப் போல நிகழ் காலத்திற்கெனத் தனிப்பட ஒன்றையுங் கூறிற்றிலர். சேனாவரையர் உள்ளிட்ட உரையாசிரியன்மாரும், முக்கால வினை முற்றிற்கும் ``உண்டான், உண்ணா நின்றான், உண்பான்'' என எடுத்துக் காட்டினரேனும் நிகழ்கால வினையைத் தொல்காப்பியர் விதந்து குறிப்பிடும் நூற்பாக்களின்கீழ் செய்யா நின்றான் என்னும் வாய்பாட்டு வினைமுற்றைக் காட்டாவிடத்தெல்லாம் `செய்யும்' என்னும் வாய்பாட்டு வினையையே எடுத்தாண்டுள்ளனர். `ஆநின்று' என்னும் இடைநிலை `கின்று' என்பதுபோல் அத்துணைச் சிறந்ததன்று. ஆயினும், அதுவும் தொல்காப்பியத்திற் காணப்பெறவில்லை. கிறு கின்று ஆநின்று என நிகழ்கால இடைநிலை மூன்றென்பர் நன்னூலார். இவற்றுள் கிறு என்பது கின்று என்பதன் தொகுத்தலே. இவற்றை இரண்டாகக் கொள்ளினும், மூன்றாகக் கொள்ளினும், இழுக்கன்றாம், ஆயின் இவற்றுள் ஒன்றைக் கூடத் தொல்காப்பியர் தனியாகவே வினைச்சொல்லில் வைத்தோ குறியாதது மிகவும் வியத்தற்குரியதே. இனிநிகழ்கால வினைபற்றிய தொல்காப்பிய நூற்பாக்களும், அவற்றிற்குச் சேனாவரயர் தந்த எடுத்துக்காட்டும், வருமாறு :- ``நிகழுஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணையொருமை தோன்றலு முரித்தே அன்ன மரபின் வினைவயி னான'' (பெயரியல் 3.19) எ-கா : சாத்தன்யாழெழுஉம், சாத்தி சாந்தரைக்கும், ``பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா'' (வினையியல் 30) (இதற்கு எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது) ``நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே.'' (வினையியல் 37) எ-கா : வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங்கோல், ஒதும் பார்ப்பான், உண்ணுமூன்...... (புக்கவில், உண்ட சோறு, வந்தநாள், வென்றவேல், ஆடியகூத்தன், போயின போக்கு) ``அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவிற்று முரித்தே'' (வினையியல் 38) (இதற்கும் எடுத்துக்காட்டு நூற்பாவிலேயே உள்ளது) ``முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும்'' (வினையியல் 43) எ-கா : ``மலைநிற்கு, ஞாயிறியங்கும், திங்களியங்கும் எனவும்'' ``தவங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதிருந் தண்கடல் வையத்து'' எனவும் வரும் ``மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே'' (வினையியல் 45) எ-கா : ........ ஒருவன் றவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும், மிக்க தன்வினைச் சொனோக்கி அம்மிக்கதன்றிரியில் பண்பு குறித்த வினை முதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டுகொள்க. ``வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை'' (வினையியல் 48) எ-கா : ``....... கூறை கோட்படா முன்னும், இக்காட்டுட் போகிற் கூறை கோட்பட்டான் கூறை கோட்படும் என்னும் ........... மழைபெய்யாமுன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும் ஆண்டு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்த காலத்தானும் நிகழ்காலத் தானும் தோன்றியவாறு கண்டுகொள்க. இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் `செய்யும்' என்னும் எதிர்காலவினை வாய்பாட்டையே, நிகழ்காலத்திற்குள் கொண்டமை தெளியலாம். ஆயின் அவர் காலத்துச் `செய்கின்றான்' என்னும் வாய்பாட்டு வினை வழக்கில் இலதோவெனின் உண்டு, அதனை அவர் செவ்வையாய் ஆராய்ந்திலர் என்றே கொள்ளல்வேண்டும். அஃதெங்ஙனமெனின், கூறுவல். `செய்கின்று' என்னும் பாலீறற்ற நிகழ்கால வினை, பழஞ்சேர நாடாகிய மலயாள நாட்டில், செய்யுந்து எனத் திரிந்து இருவகை வழக்கிலும் வழங்குகின்றது இத் திரிபின்படியே, செய்கின்றான் என்னும் பாலீறேற்றற வடிவம், முறையே, செய்குந்நான் - செய்குநன் என்றும் செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன் என்றும் திரிந்து, தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது. இங்ஙனமே செய்குநர் செய்நர் எனப் பலர்பாற் சொல்லும் செய்குந. செய்ந எனப் பலவின்பாற் சொல்லும், வழங்கி வருகின்றன. இவையெல்லாம் தமிழில் நிகழ்காலங்குறித்த வினையா லணையும் பெயர்களாம். மகிழ்நன், வாழ்நன் (வாணன்) முதலியனவும் இத்தகையனவே. செய்யுந்து என்னும் மலையாள வடிவம் நிகழ்கால வினைமுற்றாம். `செய்குந' `செய்ந' என்னும் வாய்பாட்டுப் பலவின்பால் வினையாலணையும் பெயர்கள், தொல்காப்பியம் பலவிடத்தும் பயின்று வருகின்றள. எ-கா : எழுத்ததிகாரம் (1) தொகைமரபு ``இயல்பா குநவும் உறழா குநவும்'' (9) ``இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்.'' (16) ``வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும்'' (17) (2) குற்றியலுகரப் புணரியல். ``கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கில் மருவொடு திரிநவும்'' (78) சொல்லதிகாரம் (1) இடையியல். ``புணரியல் நிலையிடைப் பொருணிலக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவும் ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவும்'' (2) (2) எச்சவியல் ``பெயர் நிலைக் கிளவியின் ஆஅகுநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்'' (53) பொருளதிகாரம் பொருளியல் ``அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்'' (37) இஃதேல், தொல்காப்பியர் தம் நூலுள் தாம் கூறியதையே ஏன் ஆராய்ந்திலர் எனின். ``தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று'' (100) என அவர் செய்யுளியலில் தாம் கூறியதையும் நோக்காதே. ``ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும்'' எனக் குற்றியலுகரப் புணரியலிற் கூறியதுபோன்றே எனக்கூறி விடுக்க (தொண்டு 9. தொண்டு பத்து - தொண்பது (90) தொன்பது - ஒன்பது. தொண்டு நூறு தொண்ணூறு (90) தொண்டு ஆயிரம் தொள்ளாயிரம் 900). ``அற்றேல் கின்று என்பது றன்னகரங் கொண்டிருக்கவும் அதன் திரிவில் தந்நகரம் வந்த தெங்ஙனமெனின் தந்து - தந்து, வந்நு - வந்நு எனத் தந்தநகரம் பயின்றுவரும் சேரநாட்டு வழக்குப்பின்பற்றி யென்க. செய்நன் என்னும் வடிவு தோன்றியதே மூக்கொலிமிக்குப் பியலும் சேரநாட்டில்தான். இதுகாறும் கூறிவற்றால், `கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை திரிந்தோ திரியாதோ தொல்காப்பியர் காலத்திலும் வழங்கிற்றென்றும், அவர் நிகழ்காலத்திற்குத் தனி வினை வடிவு கூறாதது குன்றக் கூறலாமென்றும் அறிந்துகொள்க. - தமிழ்ப்பொழில் 1956 சூன், சூலை 9 நிகழ்கால வினையெச்சம் ஏது? ``செய்து செய்பு செய்யச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினையெச்சம்பிற ஐந்தொன்றா றுமுக் காலமு முறைத்தரும்'' (343) என்னும் நூற்பாவால் `செய்ய' என்னும் வாப்பாட்டு வினையெச்சம் அல்லது `செய' என்னும் அதன் தொகுத்தல் வடிவு, நிகழ்காலமுணர்ந்தும் எனக் கூறினர் பவணந்தி முனிவர். இதையொட்டியே, `செய்ய' என்பது நிகழ்கால வினையெச்ச வாய்பாடென்று தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது. ஆயின் தொல்காப்பியர் இங்ஙனங் கூறாமை மட்டுமின்றி ``செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.'' (713) என `செய' என்னும் வாய்பாட்டை எதிர்கால வினையெச்சம் எனக் கருதுமாறு, `செய்யியர்' `செய்யிய' `செயின்' என்னும் எதிர்கால வினையெச்ச வாய்பாடுகட்கும், `செயற்கென' என்னும் எதிர்கால வினையெச்ச வாய்பாட்டிற்கும் இடையில் நிறுத்தியுமுள்ளார். இனி, `செய்ம்மன' என்னும் வாப்பாடோவெனின், அதுவும் எதிர்கால வினையெச்சமே. `செய்ம்மார்' என்னும் வாய்பாடு `வான்' பார் ஈற்று வினையெச்சங்களின் பன்மையான முற்றெச்சமாய்த் தெரிதலின், அதுவும் எதிர்காலச் சொல்லென அறியப்படும். தொல்காப்பியர், ``வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்'' (683) ``காலத் தாமே மூன்றென மொழிப'' (684) என முற்றும் எச்சமுமாகிய இருவகை வினைச்சொற்கும் பொதுவாகக் கூறியிருத்தலின் நிகழ்கால வினையெச்சமும் தமிழ்க்குண்டென்பது தேற்றம். தொன்றுதொட்டு நிகழ்கால வினையெச்சமென வழங்கி வரும் `செய்ய' என்னும் வாய்பாட்டுச் சொல், காரண காரியமும் உடனிகழ்ச்சியும் காரிய காரணமும் பற்றிவரும் தொடர்களில் முறையே முக்காலமும் உணர்த்துதலின். நிகழ்காலத்திற்குச் சிறப்புபா வுரியதெனக் கொள்ளுதல் பொருந்தாது. எ-கா : மழைபெய்யப்பயிர் விளிந்தது - காரண காரியம் (இறந்தகாலம்) மின்னல் மின்ன இடி இடிக்கிறது - உடனிகழ்ச்சி (நிகழ்காலம்) பயிர் விளைய மழைப்பெய்யும் - காரிய கரணம் (எதிர்காலம்) இனி, உடனிகழ்ச்சிபற்றி, `செய்ய' என்னும் வினையெச்ச வாய் பாட்டை நிகழ்காலமெனக் கொள்ளுதுமெனின், அதுவும் முக்காலத்திற்கும் பொதுவாய் வருதலின், அங்ஙனம் கோடற்குரியதன்றாம். எ-கா : சாத்தன் சொல்ல இளங்கோவடிகள் கேட்டனர் - இ. கா. கண்ணொன்று காணக் கருத்தொன்று நாடுகின்றது - நி. கா. முருகன் முழவியக்கக் கொற்றன் குழலூதுவான் - எ. கா. இங்ஙனம் `செய்ய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ஒரு வகையிலும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தாமையின், அதனின் வேறான ஒரு சொல்லே உண்மை நிகழ்கால வினையெச்சமாயிருத்தல் வேண்டும். `செய்ய' என்னும் நிகழ்கால வினையெச்சத்திற்கு நேரான `to do Infinitive , Mood)' என்னும் ஆங்கில வினைவடிவமும் எதிர்காலத்தையே உணர்த்துவதும், செய்ய என்னும் வடிவுச்சொல் இயல்பாக இனிமேற் செய்ய என்றே பொருள்படுவதும் இங்குக் கவனிக்கத்தக்கன. ஆங்கிலத்தில் நிகழ்கால வினையெச்சம் (present , participle) என்று சொல்லப் படுவது `doing' என்னும் வாய்பாட்டு வினைச்சொல்லாகும். அதற்கு நேரான தமிழ் வாய்பாடு `செய்துகொண்டு' என்பதே. `தச்சன் பெட்டி செய்து கொண்டு இருக்கின்றான்', என்னும் சொற்றொடரில், `செய்துகொண்டு' என்னும் சொல் இருசொற்போல் தோன்றினும் ஒரு சொற்றன்மைப்பட்டும், எச்சப் பொருள் கொண்டும் நிகழ்காலத்தைச் சிறப்பாய் உணர்த்தியும், நிற்றல் காண்க. `செய்து கொண்டு' என்னும் வாய்பாட்டு வினையெச்சம், இருந்தான் இருக்கின்றான் இருப்பான் என்னும் முக்கால முற்றொடும் பொருந்துதலின், நிகழ்காலத்திற்குச் சிறப்பாய் உரித்தாதல் எங்ஙனமெனின், `செய்து' என்னும் இறந்தகால வினையெச்சம் செய்து வந்தான், செய்து வருகின்றான், செய்து வருவான் என முக்கால முற்றொடும் பொருந்துமாயினும் இறந்த காலத்திற்கே சிறப்பாயுரியதென்று கொள்ளப்பட்டாற்போன்றே `செய்து கொண்டு' என்னும் நிகழ்கால வினையெச்சமும் முக்கால முற்றொடும் பொருந்துமாயினும், நிகழ்காலத்திற்கே சிறப்பாயுரியதென்று கொள்ளப் பட்டதென்க. அற்றேல், `செய்து கொண்டு' என்னும் வாய்பாட்டுச் சொல் தொல்காப்பியத்தும் சங்க நூல்களிலும் காணப்படாமையின் பிற்காலத்துச் சொல்லென்று கொள்ளப்படுமெனின் அற்றன்று, உலக வழக்கும் செய்யுள் வழக்கும் எனச் சொற்கள் இரு தொகுதிப்பட்டு நிற்றலின், நீன் என்னும் முன்னிலையொருமைப் பெயர் இற்றைத் தென்பாண்டி நாட்டிலும் கருநடநாட்டிலும் தொன்றுதொட்டு உலக வழக்காய் வழங்கிவரவும் அதன் கடைக் குறையான நீ என்னும் சொல்லே இலக்கண விலக்கியங்களிற் பயின்று வருதல்போல், `செய்து கொண்டு' என்னும் சொல்லும் தொன்று தொட்டு உலக வழக்கில் இருந்துவரினும் அதற்கீடாக செய்து என்னும் இறந்தகால வினையெச்சமும் `செய்தனன்' என்னும் முற்றெச்சமுமே `செய்து கொண்டு' என்னும் நிகழ்கால வினையெச்சப் பொருளில் இலக்கிய வழக்காய் இருந்து வருகின்றன என்க. எ-கா : பாடி வந்தான், பாடினன் வந்தான் - இ. கா. பாடி வருகின்றான் பாடினன் வருகின்றான் - தி. கா. பாடி வருவான் பாடினன் வருவான் - எ. கா. இவற்றில் , பாடி என்பது பாடிக்கொண்டு என்று பொருள்படுதல் காண்க. இலக்கணவிலக்கிய நூல்கள் எத்துணைப் பரந்துபட்டனவாயினும் அகர வரிசைச் சொற்களஞ்சியங்களல்லவென்றும் `செய்து கொண்டு' என்னும் வினையெச்ச வாய்பாடு சங்ககால உலகவழக்கில்லை யென்பதற்கு யாதொரு சான்றுமில்லையென்றும், அறிதல் வேண்டும். புலியாற் கொல்லப்பட்ட மருதன் என்றும், பேயாற் பிடிக்கப்பட்ட நாகன் என்றும் சொல்லற்கேற்ற செயப்பாட்டு வினை தமிழிலிருந்தும், புலிகொன்ற மருதன், பேய்பிடித்த நாகன் என்பனவே இயல்பான இருவகை வழக்குமாதலால், சில இலக்கணச் சொல் வடிவங்கள் முற்றாட்சி பெற்றிருப்ப தொன்றே அதன் மறுவடிவை மறுக்குஞ் சான்றாகாதென்பதைத் தெற்றென வுணர்க. இனி தெலுங்கில் `செய்து கொண்டு' என்னும் எச்சத்திற்கு நேரான `சேசுகொனி' என்னும் வடிவத்துடன், `சேத்து' என மற்றொரு நிகழ்கால வினையெச்ச வடிவும் இருப்பது மகிழத்தக்க தொன்றாகும். தமிழ்ப் பொழில் துணர் 32. மலர் - 4. (1956. சூலை, ஆகச்டு) ப. 102 - 104. 10 கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் - தமிழ் வேற்றுமையமைப்பு எமக்குத் தெரிந்தவரை, தமிழிலும் தமிழைப்பற்றியும் இதுகாறும் எழுதியுள்ளவராய் இதுபோது அறியப்படும் நூலாசிரியருள், தொல் காப்பியர், திருவள்ளுவர், கால்டுவெல், மறைமலையடிகள் என்னும் நால்வரே நாயகமாணவர். இவருள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் ஒப்புயர்வற்ற தனிப்பேராற்றலர் ஆயினும், மூவகை நூலினும் முதனூலே சிறந்தது என்னும் முறைமை நோக்கின், திருவள்ளுவரும் கால்டுவெலும் ஏனையிருவரினும் திகழ்ந்து தோன்றுவர். இலக்கணத்திலும் வேறாக மொழி நூல் என ஒரு தனிநூல் அறியப் படாது. நாவலந்தேய மொழிகளெல்லாம் தேவமொழியான சமற்கிருதத்தின் திரிபென்று பெரும்பால் தமிழராலுங் கொள்ளப்பட்டிருந்த காலத்தில், திரவிட மொழி இத்துணை என வகுத்துக் காட்டியும் அவை ஆரியத்திலும் வேறெனப் பிரித்துக் காட்டியும், திரவிட மொழித்துறைத் திண்ணிருளைப் போக்கிய மேலைக் கதிரவன் கால்டுவெல் கண்காணியா ராவர். ஆயினும், ``ஆணைக்கும் அடி சறுக்கும்'' ஆதலின் பிராமண வருகைக்கு முந்திய பழந் தமிழ் நூல்களெல்லாம் இறந்துபட்டு, ஆயிரக்கணக்கான தூய தென் சொற்கள் அழிவுற்று, பல்வேறு துறையிலும் தமிழர் தாழ்வுண்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட சங்கநூற்பயிற்சி குன்றி குமரி நாட்டுண்மை மறைந்திருந்த பெருவழுக்கலில் வழிகாட்டியின்றிச் செல்ல வேண்டியிருந்ததால், இரண்டோர் இடத்தில் சறுக்கிவிழ நேர்ந்தது. எனினும் அது எட்டுணையும் அவரது அருந்தொண்டின் பெருமையைக் குறைக்காது. தவறுவது மாந்தன் இயல்பே, ஆராய்ச்சியில்லாத மாணவரின் ஐயமறுத்தற்பொருட்டே, அவருடைய சறுக்கல்கள் இங்கு எடுத்துக் காட்டப்பெறுகின்றன என்க. காட்டப்பட்டுள்ள காரணம்பற்றி, திரவிடத்திலுள்ள இலக்கண முள்ளிட்ட எல்லா உயர் நூல்களும் கலைகளும் ஆரிய மொழியினம் என தவறான முன் முடிபுகொண்டுவிட்டதினாலேயே, தமிழ் இலக்கண வேற்றுமையமைப்பு வடமொழியிலக்கண வேற்றுமையமைப்பைத் தழுவியதெனப் பின்வருமாறு தவறாக வரைந்துள்ளார் கால்டுவெல் கண்காணியார். ``திரவிட மொழிகளின் வேற்றுமையமைப்பின் கூறுபாட்டை ஆயப்புகுங்கால் திரவிட இலக்கணியர் அவற்றை ஒழுங்குபடுத்தியுள்ள முறையையே கையாள்வோம். அது சமற்கிருத முறையே. இவ்வகையில் சமற்கிருதத்தைப் பின்பற்றியது உண்மையில் வழுவே. ஏனெனின், சமற்கிருதத்தில் எட்டே வேற்றுமையிருக்க தமிழ் தெலுங்கு முதலியவற்றி லுள்ள வேற்றுமை யெண்ணிக்கை பெரும்பாலும் திட்டமற்றதாயிருக் கின்றது. ஒரு பெயரின் ஈற்றில் சேர்க்கப்பெறும் ஒவ்வொரு பின்னொட்டும், சரியாய்ச் சொன்னால், ஒரு புது வேற்றுமையாகின்றது. அதனால் அத்தகைய வேற்றுமைகளின் எண்ணிக்கை, பேசுவோனின் தேவையையும் வண் வெளிப்படுத்த விரும்பும் பல்வேறு நுண்பொருள் வேறுபாட்டையும் பொறுத் துள்ளது. விதப்பாக, சில வேளைகளில் வேற்றுமைத் திரிபு என அமைக்கப் பெறும் வேற்றுமையடி, சிலவிடத்துக்கிழமைப் பொருளும் சிலவிடத்து இடப்பொருளும், சிலவிடத்து பெயரெச்சப் பொருளும் தருவதால் அது ஒரு தனியிடம் பெற்றிருத்தல் வேண்டும். உடனிகழ்ச்சி வேற்றுமையும் அங்ஙனமே. (வேற்றுமையடியையுங் கருவி வேற்றுமையை யும் காண்க) இங்ஙனமிருந்தும், திரவிட இலக்கணியர் வழக்கம் வேற்றுமை யெண்ணிக்கையை எட்டாக வரையறுத்திருக்கின்றது. இவ்வொழுங்கு பாட்டிற் பல வசதிக் குறை களிருப்பினும் நாம் புகவிருக்கும் கூறுபாட்டாய் வில் பொதுவான வழக்கைத் தழுவுவது தெளிவுணர்ச்சிக் கேற்றதாயிருக்கும். தமிழ் இலக்கணியர் சமற்கிருத வேற்றுமையொழுங்கைப் பின்பற்றுங் கால், கொடை வேற்றுமை நீக்க வேற்றுமை எனப் பொருள்பற்றிப் பெயரிடாமல் எண்பற்றியே சமற்கிருத முறையைத்தழுவி பெயரிட்டருக்கின்றனர். அவர், சமற்கிருதத்திலுள்ள வரிசைப்படியே, முதல் வேற்றுமை இரண்டாம் வேற்றுமை என எட்டாம் வேற்றுமை வரையும், ஒவ்வொரு வேற்றுமைக் கும் முன் ஓர் எண்ணை யிட்டிருக்கின்றனர். எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை திரவிட வேற்றுமை வரிசையின் தலைப்பில் நின்றாலும். இம்மொழிகளால் ஆளப்பெறும் உண்மையான வேற்றுமைகள் திரிவேற்றுமைகளே''. இதன் மறுப்பு வருமாறு:- ``வேற்றுமை தாமே ஏழென மொழிப'' (தொல். 546) ``விளிகொள் வதன்கண் விளியோடெட்டே'' (தொல். 547) எனத் தொல்காப்பியம் பொருள்பற்றி வேற்றுமை எட்டேயெனத் திட்டமாய் வரையறுத்துக் கூறுவதால், திரவிட வேற்றுமை யெண்ணிக்கை திட்டமற்றது எனக் கூறுவது பொருந்தாது. தொல்காப்பியத்தின் வழி நூலான நன்னூலும், ``ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கும் றாய்ப்பொருள் வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை'' என (நன். 291) வரையறையே காரங்கொடுத்துக் கூறுதல் காண்க. (2) வேற்றுமையுருபு, அசையுருபு, சொல்லுருபு, எனஇருதிறத்தது அவற்றுள், சொல்லுருபுகள் அசையருபுபோல் திட்டமுற்றவையல்ல. ஒரு வேற்றுமைக்குரிய பொருள்படும் சொல்லெல்லாம் அவ்வேற்றுமையுருபாக வரும். பொருள்பற்றி வேற்றுமையே யன்றிச் சொல் அல்லது உருபுபற்றி வேற்றுமையன்று. ``ஏழாகுவதே கண்எனக் பெயரிய வேற்றுமைக் கிளவி'' (தொல். 565) என முதற்கண் ஒரே சொல்லுருபு கூறிய தொல்காப்பியர் பின்பு) ``கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால் என்மனார்'' என அதனைப் பிற ஒருபொருட் சொற்களோடுஞ் சேர்த்து விரித்துக் கூறியமை காண்க. இனி, இதனையே நன்னூலார், ``கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின் முன்கார் வலமிடம் மேல்கீழ் புடைமுதல் பின்பா டளைதேம் உழைவழி உழியுளி உள்அகம் புறமில் இடம்பொரு ளுருபே'' (302) எனப் பெருக்கிக் கூறியதும் காண்க. (3) `காட்டு', `மரத்து', என்பன போன்ற வேற்றுமையடிகள் ஒரு வேற்றுமை யுருபும் பெறாது தொகை நிலையாயிருப்பதால், 6ஆம் வேற்றுமைக்கும் 7ஆம் வேற்றுமைக்கும் பொதுவாயிருக்கின்றன. இதனால், அவற்றை மயக்க வேற்றுமையெனக் கோடல் தகாது. ஒவ்வொரு வேற்றுமையும் வெவ்வேறுருபு கொண்டு ஒழுங்குள்ளதாக ஆசிரியரால் எழுதப்பெறும் சமற்கிருதத்திலும், பல வேற்றுமைகள் ஒரே வடிவு கொள்கின்றது. எ-கா : மன. மனம் - 1ஆம் வேற்றுமை மன மனத்தை - 2ஆம் வேற்றுமை மனது. மனத்தினின்று - 5ஆம் வேற்றுமை மனது மனத்தின் - 6ஆம் வேற்றுமை மனோப்யாம் இருமனங்களால் - 3ஆம் வேற்றுமை மனோப்யாம் இருமனங்கட்கு - 4ஆம் வேற்றுமை மனோப்யாம் இருமனங்களினின்று - 5ஆம் வேற்றுமை மனோப்ய பலமனங்கட்கு - 4ஆம் வேற்றுமை மனோப்ய பலமனங்களினின்று - 5ஆம் வேற்றுமை கிழமை வேற்றுமைப் பெயர்களெல்லாம் பெயரெச்சப்பொருள் படுதலின், காட்டு, `மரத்து' என்பன போன்ற சொற்கள் பெயரெச்சமாய் ஆளப்பெறுவது ஒரு வியப்பன்று. ஆங்கிலத்திலும் possessive adjective அழைக்கும் வழக்கமுண்மை காண்க. (4) 3ஆம் வேற்றுமையும் 5ஆம் வேற்றுமையும் பல பொருள் கொண்டுள்ளன போலத் தோன்றினும், அவை உண்மையில் ஒரு பொருள்கொண்டவையே. 2ஆம் வேற்றுமைக்குரிய கருவி வினைமுதல் உடனிகழ்ச்சி ஆகிய மூன்றனுள் முதலிரண்டும் ஈற்றதைத் தழுவியவையே. ஒருவன் ஒரு கருவியால் ஒரு கருமம் அல்லது பொருள் செய்யும்போது, அக்கருவி அவனொடுகூட இருத்தல் காண்க. வினைமுதல் முதல் வேற்றுமை (எழுவாய்) வடிவிற் கூறப்படாது 3ஆம் வேற்றுமை வடிவிற் கூறப்படின் கருவி நிலையடைந்துவிடுவதால் வினைமுதலும் கருவியோடொக்கும். கருவியும் உடனிகழ்ச்சியும் ஒருபாற்படுவதினாலேயே, இருசார் 3ஆம் வேற்றுமையுருபுகளும் இரு பொருளிலும் மயங்குகின்றன என அறிக. எ-கா : (ஆல்) ஆன் - உளியாற் செதுக்கினான் (கருவி) (ஆல்) ஆன் - ஊரானொரு தேவகுலம் (உடனிகழ்ச்சி) ஒடு (ஒடு, உடன்) - நாயொடு நம்பி வந்தான் ஒடு (ஓடு, உடன்) - மண்ணொடு குயின்றகுடம் (கருவி) ஆங்கிலத்திலும், I see with my eyes I write with my pen } Instrument I came with my son Conjunction. என ஒடுச்சொல் இருபொருளிலும் வருதல் காண்க. இனி 5 வேற்றுமைப் பொருள்களாகிய நீங்கல் ஒப்பு எல்லை ஏது என்னும் நான்கனுள், இறுதி மூன்றும் முதலதன் நுண் வேறுபாடுகளே. ஒப்பு என்பது உவமப்பொருவு உறழ்பொருவு என இருதிறப்படினும் ``காக்கையிற் கரிது களம்பழம்'' என்பது 5ஆம் வேற்றுமையாய்ப் பல காக்கையைவிடக் கரிது என்றே பொருள்படும். காக்கையைப்போலக் கரிது என்னும்பொருள் வேற்றுமைக் குரியதாம். ``கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள்கல்வி'' என்பன போன்ற தொடர்களெல்லாம் உறழ் பொருவுற்று 5ஆம் வேற்றுமைக்கேயுரியனவாம். ஒரு வகையில் ஒப்புமை கொண்ட இருபொருள்களுள், ஒன்று உறழ்ந்து அல்லது விஞ்சி நிற்பின் ஒப்புமையினின்று நீங்குதல் காண்க. இனி `தில்லையின் வடக்கு சென்னை' என்பதில் இடவகையான நீங்கற்பொருளும், வாணிகத்தின் ஆயினான் வடிவேல் என்பதில் நிலை வகையால் நீங்கற் பொருளும் இருத்தல் காண்க. இங்ஙனம் 5ஆம் வேற்றுமைப் பொருள்களெல்லாம் நீக்கப் பொருளேயாதல் நோக்கித்தெளிக. ஏனை வேற்றுமைகளெல்லாம் ஒவ்வொரு பொருளே கொண்டன வென்பது எல்லார்க்கும் தெளிவாம். (5) இதுபோதுள்ள தமிழிலக்கண நூல்களுள் முதலதான தொல்காப்பியம் அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி என்னும் ஈற்ற'' என (548) வேற்றுமைகளைப் பொருள்பற்றி வரிசைப்படுத்தி உருபுபற்றிப் பெயரிட்டழைக்கின்றது. இனி ``அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே'' (தொல், 549) ``இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல், 555) ``முன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி (நெல், 557) ``நான்கா குவதே குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல், 559) ``ஐந்தா குவதே இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல், 561) ``ஆறு குவதே அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல், 563) ``ஏழா குவதே கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல், 565) ``விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெயியத் தோன்றும் இயற்கைய என்ப'' (தொல், 603) எனப் பிற்பட்ட நூற்பாக்களிலும் முற்கூறிய முறையையே முதன்மையாகக் கையாளுதல் காண்க. நன்னூலாரும் தொல்காப்பியரை அடியொற்றியே வேற்றுமைகளைப் பெயரிட்டழைக்கின்றார். எழுவாய் எனினும் பெயர் எனினும் ஒக்கும். இங்ஙனம் பொருளை அடிப்படையாகக் கொண்டு உருபுபற்றி வேற்றுமைகளை வரிசைப்படுத்திக் கூறும்போதே, எண் முறை பற்றிப் பெயரிட்டாளுதற்கும் தோற்றுவாய் செய்துள்ளது. தொல்காப்பியம் அல்லது அதன் முன்னூலான தொன்னூல். ஆகவே, எண் முறைபற்றி வேற்றுமை களைப் பெயரிட்டாள்வது தமிழில் தலைமையானதன்றென்பதும் பெற்றாம். சமற்கிருத இலக்கணம் தமிழிலக்கணத்திற்குப் பிற்பட்டதனாலும் அதன் வழிபட்டதினாலும், தமிழ்முறையைப் பின்பற்றி, பின்வருமாறு வேற்றுமைகளை வகுத்துக் கூறுகின்றது. வேற்றுமை பொருள் 1. பிரதமா விபக்தி கர்த்தா (வினைமுதல்) 2. துவிதீய விபக்தி கர்மம் (செய்பொருள்) 3. திருதீய விபக்தி கர்த்தா, கரணம் (கருவி) 4. சதுர்த்தீ விபக்தி சம்பிரதானம் (கொடை) 5. பஞ்சமீ விபக்தி அபாதானம் (நீக்கம்) 6. சட்டீ (ஷ ஷ் டீ)விபக்தி சம்பந்தம் (தொடர்பு) 7. சப்தமீ விபக்தி அதிகரணம் (இடம்) 8. சம்போதன விபக்தி சம்போதனம் (வி) தென்மொழி வடமொழிகளின் முன்மை பின்மையையும் முதன்மை வழிமையையும் அறியாமையால், தமிழிலக்கணம் சமற்கிருத விலக் கணத்தைப் பின்பற்றியதெனப் பிறழக் கூறினார் கால்டுவெல் கண்காணியர் என்க. தென்மொழியிலக்கணம் குமரி நாட்டில் தோன்றியது கி.மு. பத்தாயிரம் ஆண்டுக்கு முன் என்றும், அதனைப் பின்பற்றி வடமொழியிலக்கணம் தோன்றியது கி.மு. ஈராயிரம் ஆண்டுக்கு முன் என்றும் அறிதல் வேண்டும். (6) வேற்றுமை, உண்மையில் ஏழேயாயினும் பெயரின் எண் நிலைகளுள் பெரும்பாலான வேற்றுமைப் பட்டவையாதலாலும், இயல்பான பெயரும் பிறவற்றோடு ஒப்பு நோக்க வேற்றுமைப்படுலானும், வேற்றுமை எட்டெனக் கூறப்பட்டன. ஒரு பொருளுக்கு இடும்பெயர் அதனை எழுவாயாக ஆளுதற்கே யாதலின் இயல்பான பெயரை முதல் வேற்றுமையாகக் கொள்வதே மொழியின் இயற்கை நிலையாம் இதற்கு மாறாக முதல் வேற்றுமைக்கும் திரிபெயர்கொள்வது திரிபுடைமொழியின் இயல்பென்க. ``கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ்ஏ னை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ''. -தமிழ்ப் பொழில்-துணர் 32. மலர்.5 ப-146-152. (1956-ஆகச்டு, செப்டம்பர்.) 11 ஆய்தம் ஆய்த எழுத்துவகைமை `எழுத்தெனப்படும் அகர முதல னகர விறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே' `அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன' (தொல்.) என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் (நூன்மரபு, 1, 2) முதலெழுத்து முப்பதென்பதும், சார்பெழுத்து மூன்றென்பதும், இவற்றுள் முன்னையவே சிறந்தன வென்பதும் பெறப்படும். ``முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்து வரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன; ஏனைய முப்பதும் அவ்வாறு சிறந்திலவெனவும் பொருடந்து நிற்றலின், அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு, எழுத்தோரன்ன என்றார்'' என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, ``இப் பெயர்களே பெயர். இம்முறையே முறை தொகையும் மூன்றே'' என்று நச்சினார்க்கினியர் தேற்றேகாரமிட்டுக் கூறுவதாலும், நன்னூலார் சார்பெனக் கூறிய பத்து எழுத்துக்களுள் ஏனைய வேழும் தொல்காப்பியர்க்கும் நச்சினார்க்கினியர்க்கும் நன்னூலார் கொள்கை யிருந்ததில்லை யென்பது தெளிவாம். ஆய்தப்பெயரும் ஒலியும் தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிக்கும்போதே முப்பாற்புள்ளி என அதற்கு மற்றுமொரு பெயர் கொடுத்தார். பிற்காலத் தாசிரியர் வேறுஞ் சில பெயரிட்டு வழங்கினர். ``ஆய்தம் என்பது அஃகேனம். அஃகேனமெனினும் ஆய்தமெனினும் தனிநிலை யெனினும் புள்ளி யெனினும் ஒற்றெனினும் ஒக்கும். என்னை? `அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே' என்றார் மயேச்சுரர் என்று காரிகையுரையாசிரியரான குணசாகரரும், ``ஆய்தம் எனினும், அக்கேனம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும். என்னை? `அக்கேன மாய்தந் தனிநிலை புள்ளி யொற்றிப் பால வைந்து மிதற்கே' என்றார் அவிநயனார்'' என்று யாப்பருங் கலவிருத்திகாரரும் கூறுவது காண்க. அவிநய நூற்பாவில் அக்கேனமென்பது ஏட்டுப் பிழையாயிருத்தல் வேண்டும். பழைய திண்ணைப் பள்ளிப் பாடமுறையில் ஆய்தப்பெயர் அதன் ஒலி வடிவொட்டி அஃகன்னா என வழங்கிற்று ஆய்தவொலி ஏனையிரு சார்பெழுத்துப் போன்றே, ஆய்தமும் ஒரு முதலெழுத் தின் திரிபென்பது, ``இதற்கு (ஆய்தத்திற்கு) வடிவு கூறினார், ஏனையொற்று கள் போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின்,'' என்னும் நச்சினார்க்கினியர் உரையாலும், `சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும்' (பிறப்பியல், 19) என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும், சார்பெழுத்து என்னும் பெயராலும், அறியப்படும். ஆயின், எவ்வெழுத்தின் திரிபெனின், ககரத்தின் திரிபாம் என்க. ஆய்தம் தொன்றுதொட்டு மெல்லிய ககரமாகவே ஒலிக்கப்பட்டு வருவதாலும், ஏனச் சாரியை பெற்றக்கால் அஃகேனம் எனக் ககரத்தோ டியைந்தே வழங்குவதாலும், பண்டையேட் டரிச்சுவடிகளில் க - ஃ என்று எழுதப்பெற்றமையாலும் உயிருக்கும் மெய்க்கும் இடையில் வைக்கப்பட் டிருப்பினும் ககரத்தை யடுத்திருப்பதாலும், போப்பையர் தம் தமிழிலக் கணத்தில் `The Guttural' என்றும், கால்டுவெல் தம் ஒப்பியலிலக்கணத்தில் ``guttural `h' '' என்றும் குறித்திருப்பதாலும், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் அதன் அமைப்பு முறையை விளக்குமிடத்து `The aspirate aytam' என்று குறித்திருப்பினும், வரிபெயர்ப்பில் (Transliteration) k என்னுங்குறியை ஆள்வதாலும் ஆய்தவெழுத்து ககரத்தின் திரிபேயெனத் தெற்றென வறிக. ஆரிய வன்மை சான்ற வல்லெழுத்துக்கள் தமிழுக்கின்மையின், ஆய்தத்தை வடமொழி ஹகரம் (h) போன்ற மூச்சொலியாகக் கொள்வது முற்றும் தவறாம். இனி வடமொழி விசர்க்கம் (.) போன்ற ஒலியெனக் கொள்ளின், ஒலியளவில் விசர்க்கம் ஆய்தத்தை யொத்திருப்பினும், அதில் அகரக் கூறும் கலந்திருப்பதால், அதுவும் பொருந்தாதென்க. ஆய்தம் எவ்வகையினும் உயிரேறப்பெறா எழுத்தாம் ``குறியதன் முன்ன ராய்தப் புள்ளி'' என்னும் நூற்பா வுரையில், ``ஆய்தமான புள்ளி, `ஆய்தப்புள்ளி' என்றார், இதனையும் ஒற்றின்பாற் சார்த்துதற் கென்க. ஒற்றேல் உயிரேறப் பெறல் வேண்டுமெனின், சார்பெழுத்தாதலின் உயிரேறப் பெறாதெனக் கொள்க'' என மயிலைநாதர் உரைத்திருப்பதைக் காண்க. ``ஆய்தம் (``அற்றாலளவறிந் துண்கவஃதுடம்பு'' முதலிய இடங்களில் உயிர்போல அலகு பெற்றும், ``தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்'' முதலிய இடங்களில் மெய்போல அலகு பெறாமலும் உயிர்மெய்களை (ஒருபுடையொத்து) உயிருமாகாமல் மெய்யுமாகாமல் (அலிபோலத்) தனிநிற்றலால், `தனிநிலை' எனப்பட்டது'' என்றார் நன்னூற் காண்டிகை யுரைகாரராகிய சடகோபராமானுசாச்சாரியார். ``அற்றாலளவறிந் துண்க வஃதுடம்பு'' என்னும் பாடத்திற்கு ஆய்தம் அலகு பெறல் வேண்டாமை யானும், அவ்வாச்சாரியாரே ``உயிரும் மெய்யும் தம்மிற் கலத்தல் போல ஆய்தம் ஓரெழுத்தோடுங் கலத்தலின்றித் தனி நிற்றலால் தனிநிலை யெனப்பட்ட தென்றலு மொன்று,'' எனக் கூறியிருத்தலானும் அவ்வுரை பொருந்தாதென்க. ஆய்தம் ககரத்தின்பாற்பட்ட ஒர நுண்ணிய வொலி யாயிருத்தல் பற்றியே அப்பெயர் பெற்றதென் றறிக. `ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' (உரியியல், 32) என்பது தொல்காப்பியம். ஆய்தப் பெயர்க்காரணங் கூறுமிடத்து, ``that which is subtle, minute'' என்றார் கால்டுவெலும். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி, தான் கொண்ட குறிக்கோட்கொப்ப, தமிழ்ச் சொற்களைத் தமிழ்வழி ஆராயாது, ஆய்தம் என்னும் தென்சொல்லைச் சார்ந்திருக்கை யென்று பொருள்படும் ஆசிரிதம் என்னும் வடசொற்றிரிபா யிருக்கலாமெனக் கருதி மயங்குகின்றது. குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்றாயிருக்க, அவற்றுள் ஒன்றிற்கு மட்டும் சார்ந்திருக்கைப் பொருட்சொல் எங்ஙனம் பெயரா யமைந்திருத்தல் கூடும்? வடமொழியைத் தமிழுக்கடிப்படையாய் வைத்து, ஒலி முறைச் சொல்லியல் (Sound Etymology) பற்றித் தென்சொற்கள் பலவற்றை வடசொல்லெனக் கூறுவது, வடமொழியாளர்க்குத் தொன்று தொட்ட வழக்கமாயிருந்து வருகின்றது. இனி, ஆய்தம் என்னும் தென்சொல்லை ஆயுதம் என்னும் வடசொல் லொடு மயக்கி, அடுப்புக்கூட்டும் கேடகம் மூவிலைச் சூலம் ஆகிய படைக்கலமும் போல் வரிவடிவு கொண்டிருப்பதால் ஆய்தம் எனப் பெயர் பெற்றது எனக் காரணங்காட்டுவாரும் உளர். ஆய்தம் என்னும் சொல் ஓரிடத்தும் ஆயுதம் என எழுதப் படாமையையும், ஆயுதம் என்னும் சொல்லும் ஆய்தம் என எழுதப்படாமையையும், நோக்குக. ஆரியர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே, ஆய்தவெழுத்தும் அதன் பெயரும் குமரிநாட்டில் தோன்றிவிட்டன என்னும் உண்மையையும் அறிந்து கொள்க. இனி, யாப்பருங்கலவிருத்தி யுரைகாரர் ``உயிரே மெய்யே'' என்னும் நூற்பாவுரையில், ``சார்பிற் றோன்றும் தன்மைய'' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், அகரத்தொடு யகரவொற்று வந்தும் ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாய் நிற்கும்...................................... `ஆய்தமும் யவ்வு மவ்வொடு வரினே ஐயெனெழுத்தொடு மெய்பெறத் தோன்றும்' என்றார் அவிநயனார். ``வரலாறு...................................f~R, கஃதம், கஃசம்எdஅகரத்தொLஆய்தம்வªதுகைR,கைத«,கைrம்vனஐகாரத்âன்பயத்தவாயினவாறு............................'' என உரைத்திருப்பது, ஆய்தத்தைப்பொறுத்தமட்டிšஉத்திக்கு¥பொருந்துவதன்று. கஃசு முதலிய மூன்றும் கைசு முதலிய மூன்றாகத் திரிந்திருக்கலாமேயன்றி, ஆய்தம் யகரமெய் யொத்தொலித் திருத்தல் முடியாது. ஒருகால், கள் என்பது கஃசு முதலியவற்றின் அடியாகலின், அது கய் எனத் திரிந்திருக்கலாம். ஒப்புநோக்க : தொள் - தொய், பொள் - பொய். ஆய்தப் பிறப்பு ``சார்ந்துவரி னல்லது'' என்னும் சார்பெழுத்துப் பிறப்பு நூற்பாவின் ஆற்றொழுக்கைக் கொண்டுகூட்டாகச் சிதைத்து, இருகூறாக்கி, ``சிலvழுத்துகளைச்rர்ந்துnதான்றினல்லதுjமக்கெனத்nதான்றுதற்குXரியல்பிலவென்று,Mராய்ந்துbவளிப்படுக்கப்பட்டvழுத்துகள்jம்முடையãறப்பியல்பு_ன்றினையுங்Tறுங்கால்,jத்தமக்குcரியrர்பாகியbமய்களதுáறப்புப்ãறப்பிடத்தேãறத்தலோடுbபாருந்திeடக்கும்''vன்றும்,``ஒழிந்தMய்தந்jமக்குப்bபாருந்தினbநஞ்சுtளியாற்ãறக்கும்''vன்றும்cரைத்தனர்eச்சினார்க்கினியர்.ïª நூற்பா முழுவதையும் ஒரே கூற்றாகக் கொண்டு, `சில எழுத்து களைச் சார்ந்துவரினல்லது தமக்கெனத் தனியியல்பில்லாதனவென ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட (குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமுமாகிய) மற்ற மூன்று எழுத்துகளும், தத்தம் முதலெழுத்துகளின் பிறப்பொடுபொருந்தி அவற்றோடொருபுடை யொத்த தோற்றத்தினவாய்த் தத்தம் சிறப்புத் தன்மையுடன் நடக்கும்' என்றுரைப்பதே பொருத்தமாம். ``இனி ஆய்தந் தலைவளியானும் மிடற்றுவளியானும் பிறக்கு மென்பாரும் உளர்'' என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆய்தச் சாரியை `காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை' (புணரியல், 32) என்னும் எழுத்துச்சாரியை நூற்பாவில் ஆய்தவெழுத்திற்குரிய சாரியையை ஆசிரியர் கூறாவிடினும், ``நேரத்தோன்றும் எனவே நேரத்தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின'' என்று உரையாசிரியர் (நச்சினார்க்கினியர்) கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. தொல்காப்பிய நூலிற் கூறப்படாத சில இலக்கணங்கள் உரையாசிரியராற் கொள்ளப்பட்டுள்ளன அவற்றுள் ஆய்தவெழுத்துச் சாரியையும் ஒன்று. இது உரையிற் கோடல் என்னும் உத்திபற்றியது. ஆய்தச் சார்பு ஆய்தம், குறிலுக்கு முன்னும் வல்லினவுயிர்மெய்க்குப் பின்னுமாக அவ்விரண்டிற்குமிடையில் வருவதே இயல்பாம். `குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே (மொழிமரபு, 5) என்றார் தொல்காப்பியனார். `ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய் வலியதன் மேல்வந் தியலு மென்ப' என்றார் கையனார். இவ்விதிக்கு, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, அஃது இஃது, உஃது என நச்சினார்க்கினியரும்; அஃகம், வெஃகா, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும்; எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனக் குணசாகரரும்; எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு என மயிலை நாதரும் எடுத்துக்காட்டினர் இவை தனிச் சொற்கள். அஃறிணை, முஃடீது, அஃகடிய என்பன தொடர்ச்சொற்கள். `விலஃஃகி வீங்கிரு ளோட்டுமே மாத ரிலஃஃகு முத்தி னினம்' என இவ்வாறு குறிலிணைக் கீழும் ஆய்தம் வருமாலோவெனின், அன்ன இயல்பாகவே ஆய்தமாய் நிற்பனவல்ல. ஓசை நிறைத்தற்பொருட்டு ஒற்றின்வழி ஒற்றாக்குதலின், ஈண்டு ஆய்தமும் ஒற்றாய் வருமெனக் கொள்க'' என்று மயிலைநாதர் கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. ``லளஃகான்'' (நூன்மரபு, 24) ``ணனஃகான்'' (க்ஷ 26) எனத் தொல்காப்பியத்தில் வந்திருப்பவை உம்மைத் தொடர்களாதலின், குறிலிணைக்கீழ்வந்தன வாகா. ஆயின், ``இளஃகுமே'' எனச் சிந்தாமணியில் (149) வந்திருப்பது விதிக்கு மாறாதலின், இதனையும் ஒற்றில் வழியொற் றெனவே கொள்ளல் வேண்டும். ஆய்தம் தோன்றும் வகை லகரத்திரிபு, வகரத்திரிபு, ளகரத்திரிபு, ஒற்றில் வழியொற்று, சாரியைப் புணர்ப்பு என ஆய்தம் தோன்றும் வகை ஐந்தாம். `தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே' (புள்ளிமயங்கியல், 74) என்பது லகரத்திரிபு. கஃறீது, கற்றீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. அஃறிணை பஃறுளி என்பன உறழ்ச்சியில்லாதன. `வேற்றுமை யல்வழி யாய்த மாகும்' (பு.ம.84) என்பது வகரத்திரிபு. ``அஃகடிய, இஃகடிய, உஃகடிய, சிறிய, தீய, பெரிய'' என்பன எடுத்துக்காட்டு. `ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான' (பு. ம. 104) என்பது ளகரத்திரிபு. முஃடீது, முட்டீது என்பன எடுத்துக்காட்டு. இவை உறழ்ச்சி. ஒற்றில் வழியொற்று முன்னர்க் காட்டப்பெற்றது. அஃகான், மஃகான், வஃகான் என்பன சாரியைப் புணர்ப்பு. `அஃது' என்பதன் குறுக்கமே `அது' எனத் தெரிதலின், `செய்வஃது' என்பது `செய்வது' என்பதன் விரித்தல் திரிபெனக் கொள்வது சரியன்று. வகரத்திரிபும் சாரியைப் புணர்ப்பும் ஒத்தியலமைவு (Assimilation) என்னும் நெறிமுறை பற்றியன. ஆய்தம் வரும் தனிச்சொற்கள் ஆய்தச் சார்பையும் ஆய்தந் தோன்றும் வகையையும் துணைக் கொண்டு ஆய்தம் வரும் தனிச்சொற்களை ஆய்ந்து பார்ப்பின், அவற்றுட் பெரும்பாலான லகர ளகரத் திரிபாகவே போதரும். இத் திரிபு குமரிநாட்டின் ஒரு மருங்கு தோன்றியிருக்கலாம். எ-கா: அஃகு அல்குதல்=சுருங்குதல், குன்றுதல், நுணுகுதல். mšF>m~F. அஃது, இஃது, உஃது, எஃது இவை, அல்+து, இல்+து, உல்+து, எல்+து என்னும் புணர்ச்சியாகத் தோன்றுகின்றன. அன்று இன்று என்று என்னும் காலச் சுட்டுவினாச் சொற்களின் அடிகளும், அல் இல் எல் என்பனவே. இவற்றை, அல்லி இல்லி எல்லி என்னும் கன்னட இடச்சுட்டு வினாச்சொற்களொடும், அன்று (அல்+து) இன்று (இல்+து) நன்று (நல்+து) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுச் சொற்களொடும், ஒப்புநோக்குக. mš+J=m~J>m¤J>mJ. இங்ஙனமே ஏனையவும். ``அத்தொடு நின்றது அலைச்சல், கொட்டொடு நின்றது குலைச்சல்,'' ``எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம்'' என்பன பழமொழிகள். பஃது gš+J=g~J>g¤J>gJ. gš>g‹=g¤J. ஒ. நோ: Mš>M‹, btš>bt‹. பன்+இரண்டு = பன்னிரண்டு. g‹>gh‹=g¤J. இருபான் முப்பான் முதலிய எண்ணுப் பெயர்களை நோக்குக. முதன் முதலாகத் தோன்றிய ஒன்று முதற் பத்து வரைப்பட்ட எண்ணுப்பெயர்களுள், ஒன்பதிற்கு மேற்பட்ட எண்ணைப் பல என்னும் கருத்துப்பற்றிப் பல் என்னும் அடியினின்று அமைத்ததாகத் தெரிகின்றது. எஃகு இள் (>ïs>ïsF)>vŸ>vŸF> எஃகு=உருக்கு, அதாவது இளகின தாது (உலோகம்). எஃகு-எஃகம் = உருக்கினாற் செய்த வேல். பஃறி பல்+தி=பஃறி (பன்றி)=பன்றி வடிவான ஒருவகைப் படகு. இதிற் சரக்கேற்றிச் செல்வதை இன்றும் கூவம் முதலிய ஆறுகளிற் பார்க்கலாம். வெஃகு பிள் - பிண் - பிணா-பிணவு - பிணவல். பிணா-பிணை. பிள்-பெள்-பெண்-பேண்-பேடு-பேடை பெள்-பெட்டை-பெடை. பெள்-பெட்பு=விருப்பம். பெள்-வெள்-வெய்-வெய்ம்மை-வெம்மை=வேண்டல். வெள்-வேள்-வேண்-வேண்டு. வெள்-வெள்கு-வெஃகு. வெஃகுதல்=பிறன்பொருளை விரும்புதல், கஃறு கல்-கால்=கருமை. ``கால்தோய் மேனிக் கண்டகர்'' (கம்பரா. வானர. 21) கல்-கள்-காள்-காளம்=கருமை. கள்+து=கஃறு (கருமை) ``கஃஃறென்னுங் கல்லதரத்தம்'' (தொல். எழுத். 40, உரை) கஃசு, கஃடு, கஃது, கஃபு முதலிய பிற ஆய்தச் சொற்களின் வேர்ப்பொருள்கள் மறைந்துபோயிற்றென்க. ஆய்த வரிவடிவு ஆய்தவொலி, அடுப்பில் நெருப்பை அணைக்கும்போது உண்டாகும் ஓசையை ஒருபுடை ஒத்திருப்பதால், ஒருகால், அதன் வரிவடிவு அடுப்புக் கூட்டுப்போல் முப்புள்ளி வடிவாய் அமைக்கப்பட்டிருக்கலாம். முடிபு இதுகாறும் கூறியவற்றால். ஆய்தம் தமிழெழுத்தென்றும், அது லகர ளகர வகரத் திரிபான நுண் ககர மெய்யென்றும், ஒன்றாயிருத்தலும் உயிரேறாமையும் பற்றித் தனிநிலை யெனப்பட்டதென்றும், அறிந்து கொள்க. இனி ஆய்தவெழுத்தைத் தமிழெழுத்துகளின் முன்னும் பின்னும் இட்டு, ஜ, ஷ, F, Z முதலிய பிறமொழியெழுத்துக்களை இக்காலத்துச் சிலர் குறிப்பது, தமிழியல்பிற்கு மாறானதும் தொல்லாசிரியர் கட்டளைக்கு முரணானதுமாகுமென்றும், பிறமொழிச் சொற்களையெல்லாம் ``எழுத்தொடு புணர்ந்த'' சொல்லாகவே திரித்தெழுதல் வேண்டுமென்றும், அல்லாக்கால் தமிழ் நாளடைவில் வேறு மொழியாக மாறிவிடுமென்றும், அறிந்து கடைப் பிடிக்க. மேலும், ஆய்தவொலிக்கு அயன் மொழி யொலிகளைக் குறிக்கும் ஆற்றலில்லையென்றும், ஆய்த வரிவடிவெழுதுவதும் அயன் மொழி வரிவடிவெழுதுவதும் ஒன்றே யென்றும் எழுத்தென்பது உண்மையில் ஒலியேயன்றி வரிவடிவன்றென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. 12 மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள் படர்க்கை என்னும் இடவகுப்பு, சுட்டுப்பெயர் சுட்டாப்பெயர் ஆகிய இருவகைப் பெயர்களையும் தன்னுளடக்குதலின், சுட்டுப் பெயர்களை மட்டும் தழுவும் அளவில் மூவிடப் பெயர் என்னும் தொகுதிக் குறியீட்டை ஆளுதல், குன்றத்தழுவல் என்னுங் குற்றத்தின் பாற்படுவதாம். படவே, தமிழ் முறைப்படி மூவிடச் சுட்டுப் பெயர் என்றோ, ஆங்கில முறைப்படி மூவிடப் பதிற்பெயர் என்றோ, குறியிட்டாளுதலே தக்கதாம். ``உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே'' (தெல். சொல். 1.), ``தீரார் நிழல குடஞ்சுட் டினத்துள்ளும்'' கலித். 109, 3) ``சுட்டுத்தலை போகாத் தொல்குடி'' (சிலப். 12, 21) ``பிறநாற் பெருஞ்சுட்டுடுவான்'' (நீதி நெறி.20), என்பவற்றால், சுட்டாப்பெயர்களும், ஒருவகையில் ஓரளவு சுட்டுப் பெயர்களாய் அமையுமேனும், வெளிப்படையாய் அல்லது தெளிவாய்ச் சுட்டும் அல்லது பிரித்துக் காட்டும் பெயர்களே ஈண்டுச் சுட்டுப் பெயர் எனக் கொள்ளப்பட்டன வென்க. யான், யாம் என்பவற்றைத் தன்மைச் சுட்டுப்பெயர் என்றும், நீ, நீர் என்பவற்றையும் முன்னிலைச் சுட்டுப் பெயர் என்றும், அவன், அவள், அவர், அது, அவை என்பவற்றைச் சேய்மைச் சுட்டுப் பெயர் என்றும், இவன், இவள், இவர், இது, என்பவற்றை அண்மைச் சுடடுப் பெயர் என்றும், உவன், உவள், உவர், உது, உவை என்பவற்றை முன்மை அல்லது இடைமைச் சுட்டுப் பெயர் என்றும், தான், தாம் என்பவற்றைத் தற்சுட்டுப் பெயர் என்றும் அழைக்கலாம். இவற்றுள் தன்மையும், முன்னிலையும் அல்லாத வெல்லாம் படர்க்கையாகும். ஆகவே, அறுவகைச் சுட்டுப் பெயரும் மூவிடங்கட் குள்ளேயே அடங்கு மென்றறிக. சுட்டுப்பெயர் என்னுங்குறியீடு தன்மை முன்னிலைகட்குப் பொருந்தாதெனின், பதிற்பெயர் (pronoun) என்பது முற்றும் பொருந்துவதே. படி- (படில்) - பதில். படி என்னும் தென்சொல்லே வடமொழியில் பிரதி (ப்ரதி) எனத் திரிவதாலும் அத்திரி சொற்குப்பதில் என்பதும் ஒரு பொருளாத லானும், ஒரு சிறப்புப் பெயர்களுக்குப் பதிலாக வரும் சுட்டுப்பெயரை அல்லது பொதுப் பெயரைப் பதிற்பெயர் என வழைத்தல் பொருத்தமானதே. உருது என்பது, தில்லி (Delhi) வட்டாரத்தில் 12ஆம் நூற்றாண்டில், இந்தியும், பாரசிகமும் அரபியும் கலந்து தோன்றிய கலவை மொழியே யாதலின். உருதுச்சொல் என ஒரு தனிச்சொல் இல்லையென்றும், உருதுவில் வழங்கும் தமிழ்த்திரி சொற்களும், பதில் என்பதும் ஒன்று என்றும், பாரசீக அரபி மொழிகளிலும் சில தமிழ்ச் சொற்கள் உண்டென்றும் அறிந்து கொள்க. முதற் காலத்தில் தமிழில் தோன்றியனவாகத் தெரிகின்ற தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள், முறையே, ஏன், ஏம், ஊன், ஊம், ஆன் ஆம் என்பனவாகும். இவற்றுள் ஏன், ஏம் என்பன ஈ என்னும் அண்மைச் சுட்டப்பிறந்த ஈன் ஈம் என்பவற்றின் மோனைத்திரிபாகவோ, உயர்வு குறித்த ஏ என்னும் சொல்லடிப் பிறந்தனவாகவோ, இருக்கலாம். ஊன், ஊம் என்பன, இதழ்கு முன்னிலை யிடத்தைச் சுட்டும் ஊகாரச் சுட்டிப் பிறந்தனவாகும். இவையெல்லாம் பிற்காலத்திற் பின்வருமாறு திரிந்துள்ளன. தன்மைப் பெயர் ஓன் - யான்- நான் (ஒருமை) ஓம் - யாம் - நாம் (பன்மை) (யாம் - கள் - யாங்கள். நாம் - கள்- நாங்கள்) முன்னிலைப் பெயர் ஊன் - நூன் - நீன் - நீ (ஒருமை) ஊம் - நூம் - நீம் (பன்மை) (ஊம் - கள் - ஊங்கள், நூம் - கள் - நூங்கள். நீம் - கள் - நீங்கள். நீ - இர் - நீயிர் - நீவிர். ஊங்கள் நூங்கள் என்பன வழக்கற்றுப்போய் அவற்றின் வேற்றுமையடிகளான உங்கள் நுங்கள் என்பனவே எஞ்சியுள்ளன. நீன் நீம் என்னும் பெயர்கள் இன்றும் தென்நெல்லை வட்டாரத்தில் வழங்குகின்றன. ஊகார முதல் ஈகாரமுதலாகத் திரிவதை, தூண்டு - தீண்டு, (தூண்டாவிளக்கு - தீண்டா விளக்கு) நூறு-நீறு முதலிய திரிவுகளால் அறிக. படர்க்கைப் பெயர் ஆன் - தான் (ஒருமை) ஆம் - தாம் (பன்மை) (தாம் - கள் - தாங்கள்) தான், தாம் என்பன முதற்காலத்தில் வெறும் படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக (Demonstrative Pronouns) இருந்து, பின்பு, படர்க்கைத் தற்சுட்டுப் பதிற் பெயர்களாக (Third personal Reflexive Pronouns) மாறியிருக்கின்றன. இவை எங்ஙனமிருப்பினும், மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால வடிவில், னகர மெய்யீறு பன்மையும் உணர்த்துகின்றன என்பது தெளிவாம். இவ் ஈறுகள் எங்ஙனம் தோன்றியன என்பதை ஈண்டைக் கெடுத்துக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாம். ``எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.'' (தொல் - பெயரியல்.1) என்பதால், இன்று வேர்ப் பொருளும் அடியும் தெரியாமல் உருமாறிக் கிடக்கும் விகுதிகளும் வேற்றுமை யுருபுகளுங்கூட, ஒரு காலத்தில் பொருளுணர்த்திய சொற்களாயிருந்தன என்பது பெறப்படும். அற்றேல் மூவிடப் பதிற் பெயர்களின் ஒருமை பன்மையீறுகள் எச்சொற்களின் திரிபுகள் எனின், கூறுவல்:- அறிவு முதிராத முதுபழங்காலத்தில், பொருள்களின் ஒருமை பன்மை என்னும் எண்வேறுபாடு தான் உணரப்பட்டதேயன்றி, ஆண்மை, பெண்மை முதலிய பால் வேறுபாடு உணரப்படவில்லை. ஆதலால், ஒன்று என்னும் பொருள் கொண்ட ஒன் என்னும் சொல்லையும், கூடுதலைக் குறிக்கும் உம் என்னும் சொல்லையும், முறையே ஒருமையீறாகவும் பன்மையீறாகவுங் கொண்டு, அவற்றை, ஏ, ஊ, ஆ என்னும் அடிகளோடு புணர்த்தித் தன்மை, முன்னிலை, படர்க்கைப் பதிற் பெயர்களை அமைத்தனர். ஏ - ஒன் -ஏஒன் - ஏன் ஏ - உம் - ஏஉம் -ஏம் ஊ - ஒன் - ஊஒன் - ஊன் ஊ - உம் - ஊஉம் - ஊம் ஆ - ஒன் -ஆஒன் -ஆன் ஆ - உம் - ஆஉம் - ஆம் கோஒன் என்பது கோன்என்றும், ஆடும் (ஆவும்) என்பது ஆம் என்றும், தொக்கு நிற்றல் காண்க. ``ஓகார விறுதிக் கொன்னே சாரியை.'' (தொல். எழுத். 180) என்னும் தொல்காப்பிய நூற்பாவின் ஒன் என்பது சாரியை எனக் கூறப்பட்டது. இதற்கு, ``கோஒனை கோ ஓனொடு'' என எடுத்துக் காட்டினார் நச்சினார்க்கினியர். இவ் ஒன் என்னும் சொல்லுறுப்பை னகர வொற்றாகக் கொண்டு, ``ஆமா கோனிவ் வனையவும் பெறுமே.'' என்றார் பவணந்தியார் (நன்.248). சொற்சாரியை புணர்ச்சியில் இரு சொற்கிடையே அல்லது இரு சொல்லுறுப் பிற்கிடையே வருமேயன்றி, தனிச்சொல்லின் ஈறாக வராது. அங்ஙனம் வருவதை ஈறென்று கொள்வதல்லது சாரியையென்று கொள்வது பொருந்தாது. ஒன் என்பதும் ஒன்று என்பதும் ஒல் என்னும் ஒரே அடிப்பிறந்த சொற்களாம். ஒ-ஒல், ஒத்தல்-பொருந்துதல். ஒல்லுதல், பொருந்துதல். ஒல்-ஒன். ஒப்பு நோக்க: வெல்-வென். ஒல்-து-ஒன்று, ஒ, நோ: நல்து - நன்று. ஒன்னுதல் - பொருந்துதல், ஒன்னார் - பொருந்தார், பகைவர், ஒல்-ஒள்-ஒண். ஒன்ணுதல் - பொருந்துதல். ஒன் -து- ஒட்டு, ஒண்டு. உம் என்பது கூடுதல் பொருள் கொண்டிருப்பதை, `அழகனும் முருகனும்,' `வந்து போயும்' என்னும் எண்ணுமைத் தொடர்களால் உணர்க. பல உகரமுதற் சொற்கள் அகரமுதல வாகத் திரியும். எடு: முடங்கு -மடங்கு, குடும்பு - கடும்பு, குடம் -கடம். இங்ஙனமே உம் என்பதும் அம் எனத் திரிந்து வெவ்வேறு சொற்களைப் பிறப்பிக்கும். அம் - அமல், அமலுதல் - நெருங்குதல். அமல் - நிறைவு, அமலை - திரளை. அமைதல் - நெருங்குதல், அமைவு - நிறைவு, அமல் -அமர், அமர்தல் - நெருங்குதல். பிற்காலத்தில் படர்க்கைப் பன்மையீறுகளாக எழுந்த, ஆர், கள் என்னும் சொற்களும் கூடுதல் பொருள் குறித்தனவாகவே யிருத்தல் காண்க. ஆர்தல் - பொருந்துதல், நிறைதல். அர் என்பது ஆர் என்பதன் குறுக்கம். கள்ளுதல் - பொருந்துதல், ஒத்தல், கள்ள-ஒக்க, போல. `கள்ள' என்பது ஓர் உவமையுருபு. `கள்ளக்கடுப்ப ஆங்கவை எனாஅ'' (தொல். உவ.11) கள் - அம் - களம் - கூட்டம், கூடுமிடம். சில மகர மெய்யீற்று அஃறிணைப் பெயர்கள் னகர மெய்யீறாகத் திரியும். இது ஒருவகைப் போலியாம். இதை, ``மகரத் தொடர் மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகர்றக் கிளந்த வஃறிணை மேன'' (மொழி.49) என எதிர்மறை வகையில் தொல்காப்பியரும் ``மகரவிறுதி யஃறினைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே.'' (எழுத். 122) என உடன் பாட்டு வகையில் நன்னூலாரும் எடுத்துக் கூறினர். தொல்காப்பிய நூற்பாவிற்கு, உதாரணம்: எகின் செகின் விழன் பயின், குயின், அழன் புழன், கடான் வயான், எனவரும்..... நிலம் நிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் கடன், பொலம் பொலன், புலம் புலன், நலம் நலன், குளம் குளன், வளம் வளன், என இத் தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம், ஓடம் பாடம் இவைபோல் வன மயங்காதன. வரையறை னகரத்தின் மேற்செல்லும் மயங்காவெனவே மயக்கமும் பெற்றாம் என்பது நச்சினார்க் கினியருரை. இவ் எளிய உண்மையை அறியாது, அறிஞர் சிலர், நிலம் நிலன். முதலியவற்றை யான் யாம் முதலியவற்றோடொப்பக் கொண்டு, மயங்கி, நிலன் ஒருமை யென்றும் நிலம் பன்மையென்றும் கருதுகின்றனர். இது, அஃறினையீற்று ளகர வொற்றையும் பெண்பாலீறாகிய ளகர வொற்றொடு மயக்கி, மதில் செதில் என்பவற்றின் போலியாகிய மதின் செதிள் என்பனவும் பெண்பாலே யெனக் கொள்வ தொத்ததே. மேலும், ஒருமையீறு பன்மையீற்றிற்கு இடவகையிலேனும் முந்தியதாதலின், யான் நான் என்னும் னகரவீற்றுச் சொற்கள் யாம், நாம் என்னும் மகரவீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், இதற்கு மறாகப் போலிச் சொற்களுள், மரம் குளம் முதலிய மகரவீற்றுச் சொற்கள் மான் குளன் முதலிய னகர வீற்றுச் சொற்கட்கு முந்திய வாதலையும், காண்க. இனி, இதழ்கள் பொருந்துவதாலேயே பிறக்கும் மகரம் முன்னண்ணத்தை நுனிநா அழுந்தப் பொருந்தும் முயற்சியாக பிறக்கும் னகரத்தினும் எளிதாயிருத்தலால், அதுவே முந்தித் தோன்றிய மெல்லின மெய்யாயிருத்தல் வேண்டுமென்றும், கண்டு கொள்க. இனி, மடம், சினம் முதலிய பண்புகள் பொதுவாக எண்ணப்படு பொருள்களாகாமையும் அறிக. ஒரு பெருமொழி பேசப்படும் இடம் மிகப் பரந்ததாயிருக்கு மாதலின், இடந்தொறும் சில எழுத்தொலிகள் வேறுபடுவது இயல்பே. அதோடு இன்னோசை பொருட்டுப் புலவர் சிலர் தம் செய்யுட்கள் வரும். ஒரு சில சொற்களின் ஓரிடத்து ஒரெழுத்தை மற்றோரெழுத்தாக மாற்றிக் கொள்வதுமுண்டு. இது தொன்றுதொட்டுப் போலியென வழங்கிவருவது மரபாயிருக்க, அதற்கு எண்ணுப் பொருளை ஏற்றிக் கூறுவது போலியென விடுக்க. - தென்றல் 1958 13 பாயிரப் பெயர்கள் பாயிரம் என்பது முகவுரை. அது ஒரு நூற்கு இன்றியமையாத தென்பது, ``எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை? ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவலன்றே' என்றாராதலின் ``பாயிரமென்றது புறவுரையை, நூல் கேட்கின்றான் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோல அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்! என்றாராகலின் ``அப்பாயிரந்தான் தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றா யிருத்தலின்; அது கேளாக்காற் குன்று. முட்டியகுரீ இப் போலவும் குறிச்சி புக்கமான் போலவும், மாணாக்கன் இடர்ப்படும் என்க'' என்னும் நச்சினார்க் கினியர் உரையான் உணரப்படும். பவணந்தியார். மாடக்குச் சித்திரமும் மாறகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கினியும் போல் - நாடிமுன் றுரையா நின்ற பரிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது.'' எனச் சில உவமை வாயிலாகவும் பாயிரத்தின் தேவையை வற்புறுத்தினார். அப்பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து என்றார் நச்சினார்க்கினியர். அதையே, பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே'' என நூற்பாயாத்தார் பவணந்தியார். அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன் முகத்தும் உரைக்கப்படும். அது தான் நான்கு வகைத்து. ``ஈவோன் தன்மை ஈதலியற்கை கொள்வோன் தன்மை கோடன் மரபென ஈரிரண்டென்ப பொதுவின் தொகையே.'' என்னும் இதனான் அறிக என்பது நச்சினார்க்கினியம். நன்னூலார் இவற்றோடு நூலையுங் காட்டி ``நூலே, நுவல் வோன், நுவலுந் திறனே, கொள்வோன், கோடற் கூற்றாம் ஐந்தும் இவை பொதுப் பாயிரம் என நூற்பா இயற்றினார். இதனால், கற்பிக்கப்படும் நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தின் இயல்பையும் விளக்குவது பொதுப்பாயிரம் என்றாயிற்று, இதன் ஐங்கூறும் எல்லா நூற்கும் பொதுவா யிருத்தலின் இனிச் சியப்புப் பாயிரமாவது தன்னால் உரைக்கப்படும் நூற்கு இன்றியமையாதது. அது பதினொருவகையாம். ஆக்கியோன் பெயரே, வழியே, எல்லை, நூற்பெயர், யாப்பே, நுதலிய பொருளே, கேட்போர், பயனோ. டாயெண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே காலம், களனே, காரணம் என்றிம் மூவகை யேற்றி மொழிநரும் உளரே. இப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே (பனம்பாரனார் தொல் காப்பியத்திற்குக் கூறிய சிறப்புப் பாயிரத்துள்ளே) பெறப் பட்டன.'' நூல் செய்தான் (சிறப்புப்) பாயிரஞ் செய்தானாயின் தன்னைப் புகழ்ந்தானாம். தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான் தற் புகழ்தல் தகுதியன்றே என்பவாகலின்.'' (சிறப்புப்) பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னோடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர் என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிர நச்சினார்க்கினியர் உரைப்பகுதி. சிறப்புப் பாயிரம் என்பது, ஒரே நூற்றாச் சிறப்பாயிருந்து, அதன் ஆசிரியன் பெயர், அந்நூல் வந்தவழி, அதுவழங்கும் எல்லை, அந்நூற்பெயர் முதலிய பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குன்ற வேனுங் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பது (Foreword, opinion, Editor's preface etc). மதிப்புரையெல்லாம் சிறப்புப் பாயிரமே. ஒரு நூலாசிரியன் தானே தன் நூலைப் புகழ்தல் தக்கதன்றாதலின், சிறப்புப் பாயிரஞ் செய்வார் பிறராயிருத்தல் வேண்டுமென்பது தொன்று தொட்ட மரபு. அதனைச் செய்யத் தக்கார் மூவரென்று குறிப்பிட்டார் நச்சினார்க்கினியர். அவரொடு உரையாசிரியனையுஞ் சேர்த்து. ``தன்னாசிரியன் தன்னொடு கற்றோன், தன் மாணாக்கன், தகுமுரை காரனென் றின்னோர் பாயிரம் இயம்புதல் கடனே'' என்றார் பவணந்தியார். ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற்பொருள், நூல் வந்தவழி, நூற்பெயர் முதலியன நூலாசிரியன் கூறுவதே பொருத்தமாதலானும், அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும், அவற்றை நூலாசிரியன் கூறுவது தக்கதென்று கொள்ளப் பட்டுத் தற்சிறப்புப் பாயிரம் எனப்பெயர் பெறும். வணக்கம் அதிகாரம் என்றிரண்டுஞ் சொல்லச் சிறப்பென்னும் பாயிரமாம் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைப்பது தற்சிறப்பாகும். என்பன காரிகையுரை மேற்கொள். சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்திற்குச் செய்த பாயிரமும், கம்பர் தம் இராமாவதாரத்திற்குச் செய்த பாயிரமும், தற்சிறப்புப்பாயிரத்திற் கெடுத்துக்காட்டாம். இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலும் அது மேற்கூறிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள. அவை, முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை. புனைந்துரை பாயிரம் என்னும் எட்டாம் (நன்னூல், 1) இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு. 1. முகவுரை இது நூல் முகத்து உரைக்கப்படுவது; இற்றை வழக்கில் உரைநடையா யிருப்பது; பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது. 2. பதிகம் இது நூலாசிரியன் பெயர், நூல்வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புக்களைத் தருவது. ஒரு பொருள் பற்றிய பத்து அல்லது பதினோரு பா அல்லது பாவினத் தொகுதி பதிகம் என்றுபெயர் பெற்றிருத்தல் காண்க. எடுத்துக் காட்டு : தேவாரப் பதிகம். பதிகம் என்னும் பெயருக்கு ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது என்று பொருள் கூறி, அடிக்குறிப்பாக, பதிகக் கிளவி பலவகைப் பொருளைத் தொகுதியாகச் சொல்லுதல் தானே'' என மேற்கோளுங் காட்டினர். நன்னூலுரையாசிரியர் சடகோப இராமானுசாச்சாரியர். ஐம்பொருள் பொதுப்பாயிரத்திற்கும், பதினொரு பொருள் சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. பதிகம் என்னும் பெயர் பத்து (பது) என்னும் சொல்லினின்று தோன்றியிருத்தலின்; ஆக்கியோன் பெயரே என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட எண் பொருளும், காலங்களனே என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட முப்பொருளும் ஆகிய பதினொரு பொருளைத் தருவதென்று உரையுரைப்பதே பொருத்தமானதாம். ஒன்று பத்தை நோக்கச் சிறிதாதலின் பதினொன்றும் பத்தாகவே கொள்ளப் பெறும் (ஆங்கிலத்தில் பதின் மூன்று - Baker's dozen எனப்படுதல் போல) இங்ஙனம் பதிகம் என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் தூய தமிழாயிருக்கவும், அது ப்ரதீக என்னும் வடசொல்லின் திரிபாக வட மொழியாளர் கூறுவதும், அதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி பின்பற்றியிருப்பதும், குறும்புத்தனமும் பொறுப்பற்ற செயலுமாகும். உண்மையில், பதிகம் என்னும் தென் சொல்லே ப்ரதீக என்னும் வடசொல்லாகத் திரிந்துள்ளது. பதின் செய்யுட்டொகுதியை குறிக்கும் பதிகம் என்னும் தென் சொல்லைப் பத்யம் (செய்யுள்) என்னும் வடசொல்லோடிணைக்க விரும்புவார் வேறு என்தான் சொல்லார். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் உள்ள சிறப்புப் பாயிரங்கள் பதிகம் எனப்பெயர் பெற்றுள்ளன. 3. அணிந்துரை இது மறைமலையடிகள் மதிப்புரையும் முன்னுரையும் போல் ஒரு நூலுக்கு அணி (அழகு) செய்து நிற்பது. 4. நூன்முகம் இது நூலுக்கு முகம் போல்வது; உரைநடை, செய்யுள் ஆகிய இரு வடிவிற்கும் பொதுவானது. 5. புறவுரை இது நூலுக்குப் புறமாக உரைக்கப்படுவது. புறம் - பின்பு, இறுதி. தொல்காப்பிய இறுதியில் உரைக்கப்பட்டுள்ள நூலுரைமரபு பறவுரையாகும். சிலர் நூலுரை மரபு செய்யுளியலிலேயே கூறப்பட்டு விட்டதனால் (1421 - 1430) மரபியலில் உள்ளது பிற்செருகல் என்பர் (1590 - 1610) அகத் திணையியலிற் கூறிய உவமையிலக்கணச் சுருக்கத்தையே (992 - 995). பின்னர் உவமவியலில் தொல்காப்பியர் விரித்துரைப்பதால் (1222 - 1258) மரபியலின் இறுதியில் விரித்துரைக்கப்பெறும் நூலுரைமரபு பிற்செருக லெனக் கொள்ளப்படாதென்க. (புறவுரை என்பது, மேலை நாடக நூற்களிற் கூறப்படும் Epilogue என்பதை ஒரு புடையொத்ததாகும்.) பதிற்றுப்பத்தின் உரைபெறு கட்டுரைகள் இட வகையால் புறவுரையாக அமைந்துள்ளன. 6. தந்துரை இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர் முன்னுரை (Introduction). பெரும்பாலும் தந்துரையாகவிருக்கும். 7. புனைந்துரை இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது, திருக்குறட் சிறப்பைப் போப்பையர் முன்னுரை (Introduction) எடுத்துக்காட்டுவது போல. புனைதல் - சிறப்பித்தல், புகழ்தல். 8. பாயிரம் இது முதன் முதல், பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடு மொழியைக் குறித்தது; பின்பு நூன் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது. நெடுமொழி போர் மறவனின் தன் மேம்பாட்டுரை. பாயிரம் என்பது முதற்கண் நெடு மொழியைக் குறித்தமையை, ``மறு மனத்தனல்லாத மாநலத்த வேந்தன் உறு மனத்தனாகி யொழுகின் - செறுமனத்தார்'' பாயிரங் கூறிப் படைதொக்கால் என் செய்ப ஆயிரங் காக்கைக் கோர் கல்.'' (249) என்னும் பழமொழிச் செய்யுளான் உணர்க. பாயிரம் என்பதற்கு வீரத்துக்கு வேண்டும் முகவுரைகள். என்று பழையவுரை உரைத்தலையும் நோக்குக. பயிர்தல் - அழைத்தல், போருக்கழைத்தல், பயிர் - (பயிரம்) - பாயிரம். சென்னைப் பல்கலைக் கழக அகராதி, பாசுரம் என்பது பாயிரம் என்று திரிந்திருக்கலாம் என்று தன் அறியாமையைக் காட்டுகின்றது. இற்றை நூல் வழக்கை நோக்கின் பாயிரப் பெயர்களுள் புறவுரை, பாயிரம் என்னும் இரண்டும் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாம்; ஏனைய சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாம். சிறப்புப் பாயிரத்திற் குரியவற்றுள் முகவுரை. நூன்முகம், பாயிரம் என்னும் மூன்றும் தற்சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன இவற்றுள் நூன்முகம் என்பது தற்சிறப்புப் பாயிரத்திற்குச் சிறப்பென்று கொள்ள இடமுண்டு. தந்துரை என்பது, வழக்கிலில்லாவிடினும், பொதுப்பாயிரத்திற்கும் ஏற்கும். உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்தெழுந்த புதுவழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற் சிறப்புப் பாயிரத்தையும், பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள்; ஏனைய உரைநடை இது காறுங் கூறிய பாயிரப்பெயர்களெல்லாம் தூய தென் சொற்களென்று அறிக. முகம் என்பது தென் சொல்லே என்பதை, யான் சென்ற ஆண்டுத் தமிழ்ப் பொழிலில் வரைந்துள்ள தமிழ் முகம் என்னும் கட்டுரையைக் கண்டு தெளிக. இற்றைத் தமிழருட் பெரும்பாலார் பகுத்தறிவிழந்திருப்பது நோக்கி வடவரும் (அவர் அடிவருடியரும் அடியார்க்கடியாருமான) வையா புரிகளும் தூய தென் சொற்களை வடசொல்லெனத் துணிந்து மருட்டுவது பற்றி, அவை அன்னவென்று மயங்கற்க. மேற்காட்டியவாறு, முகவுரையைக் குறிக்கப் பல தூய தென் சொற்களிருப்பவும், இடைக்காலப் புலவர், சிறப்பாக யாழ்ப்பாணத்தார், உபக்கிரமணகை, உபோத்காதம் என்னும் வடசொற்களை வேண்டாது வழங்கிச் சிறுமையிற் பெருமை கொண்டனர். இத்தகைய வடசொல்லாட்சி தமிழரின் மடமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்ந்ததேயன்றி, தலைமைசால் தமிழ்ப்புலவர் தாமாக விரும்பித் தழுவியன்று. ஆதலால், தமிழின் தூய்மையைக் குலைத்துமதுன்றி அதன் தொண்டையையும் நெரித்துக் கொல்லப் பார்க்கும் ஐந்தாம் படைச் சொற்களையெல்லாம், அறவே அகற்றிவிடுவது தமிழன் முதற் கடமையாம். தமிழன் விடுதலை, தமிழின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டது. தமிழுயரத் தமிழன் உயர்வான். 14 திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும் ஒவ்வொரு பெருநூலிலும் ஓரிரு அல்லது ஒருசில சொற்களையும் சொல்லாட்சியையும் சிறப்பாகக் காண்கின்றோம். திருக்குறளிலுள்ள சிறப்புச் சொற்களையும் சொல்லாட்சியையும் எடுத்துக்கூற எழுந்ததிக்கட்டுரை. நிகண்டு என்னும் வடசொற்பெயராற் குறிக்கப்படும் உரிச் சொற்றொகுதி களும், உரையாசிரியன்மார் உரைகளும், பிற நூல்களிலுள்ள சொற்களை யெல்லாம் தொகுத்தும் எடுத்தும் கூறும் இயல்புடையனவாதலின், திருக் குறட் சிறப்புச் சொல் வராதனவென்று விலக்கப்பட்டவை, அவ் விருவகை யொழிந்த ஏனைய நூல்களும் பனுவல்களுமே. 1. சிறப்புத் தனிச்சொற்கள் கஃசு=காற்பலம். ``தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.'' (1037) கூழ்=செல்வம், பொருள், பொன். ``படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு.'' (381) ``கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச் சூழாது செய்யு மரசு,'' (554) உணவைக் குறிக்கும் கூழ் என்னுஞ் சொல் குழை என்னும் முதனிலைத் திரிபாதலாலும், உணவு என்னுஞ் சொற்குச் செல்வம் என்னும் பொருளின்மையாலும். ``பல்வகை யுணவும் பயிரும் பொன்னும் கொள்ப மாதே கூழென் கிளவி'' என்று திவாகரங் கூறுவதாலும், செல்வத்தைக் குறிக்கும் சொல் உணவுப் பெயரின் வேறு என்று கொள்ளவும் இடமுண்டு. இனி குழைவான (Ductile) தாது (உலோகம்) பொன் என்றுமாம்; அல்லது இன்றியமையாத அடிப்படைச் செல்வம் உணவே எனினும் ஒக்கும். கொட்குதல்=வெளிப்படுதல். ``கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை யிடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.'' (663) தவ்வெனல்=தாழ்தல், சுருங்குதல். ``கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னுந் தன்மை யிழந்து.'' (1144) ஓசை வகையைக் குறிக்கும் தவ் என்னும் குறிப்புச் சொல்வேறு. ஆதலால், `தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி; ``நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாழ்துளி மறைப்ப'' என்புழியும் அது.'' என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. தவ்வல் என்னும் பெயர் இருதிணையிலும் இளமை குறித்தலாலும், தவ்வுதல் என்னும் வினைக்குக் குறைதல், குவிதல், தவறுதல், கெடுதல் என்னும் பொருள்களிருத்தலாலும், நெல்லை வட்டத்தில் ஒரு பாடத்தில் தாழ்வா யிருக்கும் மாணவனை அப் பாடத்தில் தவ்வலென்று கூறும் வழக்குண்மை யாலும், தவ் என்பதை இங்கு ஒரு வினைப் பண்புக் குறிப்பென்று கொள்வதே பொருத்தமாம். தோல்=பழமையான புகழ், பெருமை. தொல்-தோல், தொன்மை - பழைமை. ``தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னும் நசை.'' (1043) ``இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்'' ``தோலென மொழிப தொன்மொழிப் புலவர்'' (1494) என்னும் தொல்காப்பிய நூற்பா ஒரு வகை வனப்பின் (காவியத்தின்) இலக்கணத்தைக் கூறுவதால், அதனொடு திருக்குறட் சொல்லைத் தொடர்பு படுத்துதல் தவறாம். முகடி=மூதேவி (சேட்டை). ``மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்.'' (617) அதி=மிகு, மிக. ``மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை.'' (636) ``அதியென்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோரிடைச்சொல்; அது திரிந்து நுட்பமென்பதனோடு தொக்கது'' என்றார் பரிமேலழகர். மிகுதிப் பொருள்தரும் வடமொழி முன்னொட்டு (உபசர்க்கம் - Prefix) ati, adhi என்று இரு வடிவிலிருப்பதனாலும், மிகுதலைக் குறிக்கும் அதிகரித்தல் என்னும் வினைச் சொல் வடமொழியிலின்மையாலும், அதிகம் என்பதற் கினமான அதனம் (அதி+அனம்) என்னும் தொழிற்பெயர் தமிழிலேயே யிருத்தலானும், அதிகன் என்னும் தமிழச் சிற்றரசர் குடிப்பெயர் மிக்கோன் அல்லது பெரியோன் என்று பொருள் கொண்டிருக்கலாமாதலானும், அதி என்பதைப் பெரும்பாலும் ஒத்த அதை என்னும் தமிழ் வினைச் சொல் வீங்குதல் (பருத்தல்) மிகுதல் என்னும் பொருள் தருதலானும், அதி என்னும் சொல் ஒருகால் ஒரு வழக்கற்ற பழந்தமிழ் வினையாயிருக்குமோ என்னும் ஐயம் நிகழ்கின்றது. ïÅ, ``mâD£g«'' v‹W ghl§ bfh©L, ``nk‰T¿a ü‰ fšÉnahLTl E©Âjh»a kâÆidí« cilah®¡F, mjÅD« E©ÂathŒ kh‰whuhby©z¥g£L vâ®Ã‰F« ÉidfŸ ahîs?'' என்னும் மணக்குடவர் உரை, சொல்வகையிலும் பொருள் வகையிலும் பரிமேலழகருரையினுஞ் சாலச் சிறந்ததாம். இப்பொருளில் அதி என்னும் முன்னொட்டிற்கே இடமில்லை. பரிமேலழகர் ஒரு தென்சொல்லை வடசொல்லாக்குவான் வேண்டி, ``இனி, அதினுட்பமென்று பாடமோதி, அதனினுட்பம் யாவென்றுரைப்பாருமுளர். அவர் சூழ்ச்சிக்கினமாய் முன் சுட்டப்படுவதொன்றில்லாமையும், சுட்டுப் பெயர் ஐந்தா முருபேற்றவழி அவ்வாறு நில்லாமையு மறிந்திலர்.'' என்று மணக்குட வருரையை மறுத்திருப்பது, அவரையுந் தாக்குதல் காண்க. 2. சிறப்புத் தொடர்ச் சொற்கள் அசையியல்=நுடங்கிய இயல்பினையுடையாள். இது அன்மொழித் தொகையாயினும் அரிய அமைப்புடையது. ``அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யா னோக்கப் பசையினள் பைய நகும்'' (1098) அறன்கடை=கரிசு (பாவம்) ``அறன் கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்'' (142) உயிர் நிலை=உடம்பு. ``உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு'' (255) ``கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு'' (290) ஊருணி=ஊரார் குடிக்கவோ குளிக்கவோ உதவும் குளம். இது பாண்டி நாட்டு வழக்கு முதற் காலத்தில் இது குடிநீர் நிலையையே குறித்திருத்தல் வேண்டும். ``ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு'' (215) குறியெதிர்ப்பை=கைம்மாறு கருதல். ``வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து'' (221) தொல்வரவு=தொன்று தொட்டுவரும் குடிப் பண்பு ``தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னும் நசை'' (1043) மலர்மிசையேகினான்=கடவுள் (அடியார் நெஞ்சத் தாமரையின்கண் அமர்ந்தவன்) ``மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'' (3) வாலறிவன்=கடவுள் (தூய அறிவினையுடையவன்). ``கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'' (2) வாழ்க்கைத்துணை=மனைவி. இது இல்லறவியலில் 2ஆம் அதிகாரத் தலைப்பு. வாழ்க்கைப்பதல் (மனைவியாதல்) என்னும் பாண்டி நாட்டு வழக்கு இங்குக் கவனிக்கத் தக்கது. 3. சிறப்புச் சொல் வடிவம் அறி=அறிவு. இஃது முதனிலைத் தொழிற்பெயர். ``அறிகொன் றறியா னெனினு முறுதி உழையிருந்தான் கூறல் கடன்'' (638) ஒப்பாரி=ஓப்பு, உவமை. ``மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்.'' (1071) ஒருவந்தம் = ஒருதலை. தலை=அந்தம். இழவிற்கழும் ஒப்பாரியையும் ஒப்பென்பர். ``வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும்'' (563) ``ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார்'' (593) கெடு=கேடு (வறுமை). இதுவும் முதனிலைத் தொழிற்பெயர். ``கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கட் டங்கியான் தாழ்வு'' (117) பீழி = பீடி. பீழித்தல் = துன்புறுத்தல். பிள்-பீள்-பீழ்-பீழி. பிடுங்கல் என்னும் வழக்கை நோக்குக. ``அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது'' (843) ``நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது'' (1217) முயற்று=முயற்சி. ``முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்'' (616) வரன்=பரம் (மேலுலகம்). புரம்-பரம்-வரம்-வரன். புரம்=மேலிடம். கோபுரம்=அரசனிருக்கும் உயர்ந்த இடம். ``புரை யுயர் பாகும்'' (தொல்காப்பியம், 785) ``உரனென் னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து'' (24) 4. சிறப்புப் பொருளாட்சி இடம்=செல்வம். இடம்-இடன். ``இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக் காலு மிரவொல்லாச் சால்பு'' (1064) ``இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்'' (218) என்பு=உடம்பு. இது சினையாகுபெயர். ``அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு'' (72) ``அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு'' (73) குடங்கர்=குடில். ``உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று'' (890) குதித்தல்=தாண்டுதல், கடத்தல், மேற் கொள்ளுதல், வெல்லுதல். ``கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு'' (269) சிமிழ்த்தல்=வலையுள் அகப்படுத்துதல். ``தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று'' (274) மாடு = செல்வம். இது ஒரு பழைய பொற்காசைக் குறித்த மாடை என்னும் சொல்லின் திரிபாகக் கருதப்படுகின்றது. மாழை = பொன்`பொற்கட்டி. மாழை-மாடை-மாஷ (வட சொல்). பண்டைக் காலத்தில் உலகமெங்கும் கால்நடையே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் விலங்குப்பெயரே செல்வம் என்னும் பொருளைத் தழுவிற்றென்று கொள்வதே மிகப் பொருத்தமாம். ஓப்பு நோக்க: இலத்தீன் (L): Pecu (=cattle)-pecunia (=money)- ஆங்கிலம் (E): pecuniary=consisting of money. L. caput (=head)-capitalis-E. capital-cattle-chattel=movalle possessions. ``கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவதற்கு மாடல்ல மற்றை யவை.'' (400) மையாத்தல்=மயங்குதல். ``மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று'' (1112) நாகரிகம்=பண்பாடு. இச்சொல்லை இப்பொருளிலேயே திருவள்ளுவர் ஆண்டிருக் கின்றார். கண்ணோட்டம் ஒரு பண்பாட்டியல் யென்பதை யறிக. நாகரிகம் என்னுஞ் சொற்குக் கண்ணோட்டம் என்பது நேர்ப்பொருளன்று. 15 சிந்தாமணியின் செவ்விய வனப்பியல் செய்யுள், ஒன்றாய்த் தனித்திருப்பது பற்றித் தனிநிலை என்றும், பலவாய்த் தொடர்ந்திருப்பது பற்றித் தொடர்நிலை என்றும் இரு வகைப்படும். தொடர்நிலையும், சொற்றொடர்நிலை, பொருட்டொடர்நிலை என இரு திறப்படும். செய்யுள் நூல்களையெல்லாம் பிற்காலத்திலக்கணியர் வடநூற் பாகுபாட்டைத் தழுவிச் `சிறு காப்பியம், பெருங்காப்பியம்' என இரு வகையாகப் பகுப்பர். தொல்காப்பியர் உள்ளிட்ட தொல்லாசிரியரோ, அவற்றை, ``அம்மை அழகே தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபென'' எண் வகை வனப்பாகப் பகுப்பர். ஆகவே, வனப்பு என்பதே அவர் செய்யுணூற்கு இட்ட பெயராம். தனிநிலைச்செய்யுளும் ஓராயிரம் அடியும் ஈராயிரம் அடியும் கொண்டு ஒரு காவியமாகலாமாதலானும், தொடர்நிலைச் செய்யுள் காவியமாய் மட்டுமன்றி, இலக்கணநூலும் மருத்துவநூலும் அறநூலும் பிற நூலுமாயிருக்கலாமாதலானும், தொடர்நிலைச்செய்யுள் என்பது `காவியம்' என்னும் வடசொற்கு நேரான தென்சொல்லன்று. இது போது தமிழிலுள்ள வனப்புக்களுள், சிந்தாமணியும் சிலப்பதிகாரமும் தலைசிறந்தன என்பதை, நடுநிலையறிஞர் எவரும் மறார். ஒரு வனப்பு, சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை, அணிச் சுவை என்பவற்றிற் சிறந்திருத்தல் மட்டும் போதாது, மிகுந்த சொல் வளமும் இலக்கணச் செம்மையுமுடையதாயும், பலகலையியல்பை விளங்குவதாயும், வருங்காலத்தில் வரையப்படும் வரலாற்று நூற்குச் சான்றாகப் பல செய்திகளைக் கொண்டதாயும், சிறந்த வாழ்க்கை வரம்புகளை வகுத்து உயர்ந்த குறிக்கோளை வலியுறுப்பதாயும், சொல்லாராய்ச்சிக்குத் துணை செய்வதாயும் இருத்தல் வேண்டும். இவ்வளவைப்படி, சிந்தாமணியின் வனப்பியற் செம்மையை ஆராய்வாம்: I. சொற்றிறம்: (I) சொன்னயம்: (க) இன்சொற்புணர்ப்பு: தேவர் இசைத்தமிழில் முற்றத்துறை போகி இன்னிசையின்பத்தை நுண்ணிதினுகரும் எஃகுச் செவிபடைத்தவராதலின் இன்னோசைச் சொற்களைத் தேர்ந்தாளுவதோடமையாது, செவிக்கின்பஞ் சிறக்குமாறு இன்னோசைச்சாரியை கொண்டும் சொற்களைப் புணர்த்துக் கொள்கின்றார். எடுத்துக்காட்டு: அண்ணலங்குமரன், ஆழியங்கழனி, மயிலஞ்சாயல், முல்லையங்கோதை. (உ) இலக்கணச்செம்மை: மதவியல் பற்றிச் சிந்தாமணியில் பல வடசொற்கள் புகுத்தப்பட் டிருப்பினும், அவற்றை யாண்டும் தமிழியல்பொடு பொருந்தத் தற்பவ மாகவே வடித்தாளுகின்றார் தேவர். கம்பராமாயணத்தில் `லோபேன்' என்னும் லகரமுதற்சொல் வந்துள்ளது போல, அன்முதலெழுத்தை மொழி முதற்கொண்ட ஒரு வடசொல்லும் சிந்தாமணியில் வந்தில்லை. (ங) சொற்றூய்மை: சிந்தாமணிச் சொற்றொகுதி, அந்நூற்காலத்தோடு பொருந்த நோக்கின், எத்துணையோ தூய்மையானதாகும். பெரும்பான்மையான செய்யுட்கள் தனித்தமிழிலேயே இயன்றுள்ளன. வடசொற்கள் வந்துள்ள சில செய்யுட்களிலும், அவை நூற்றுக்கு அரை முதல் முப்பது வரையே வந்துள்ளனவாதலின், சிந்தாமணியின் செந்தமிழ்த்திறத்தைப் பெரிதும் சிதைக்கவில்லை. ``சாமெனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றும் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார்.'' 1605 என்னுமிச்செய்யுள் தனித்தமிழில் இயன்றது. `காமன்', `திரு' என்பன தென்சொல்லே. ``பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதி ரீன்று பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேற் பிணிசெய் பன்மா உழவிர்காள்! மேயும்; சீல வேலியுய்த் திடுமின்,' என்றான்.'' 379 இதில், `சீலம்' என்னும் ஒரு சொல்லே வடசொல்லாம், அதுவும் `சீர்' என்னும் தென்சொற்கு இனமாதலின், அதை இரு மொழிப் பொதுச்சொல் எனக்கோடலே சாலச்சிறந்ததாம், ``குரல்குர லாசப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன் விரல்கவர்ந் தெடுத்த கீதம் மிடறெனத் தெரிதல் தேற்றார் சுரரொடு மக்கள் வீழந்தார்; சோர்ந்தன புள்ளு மாவும்; உருகின மரமுங் கல்லும்; ஓர்த்தெழீஇப் பாடு கின்றான்.'' 723 இதில், `கீதம்' என்னும் ஒன்றே தெளிவான வடசொல், `சுரர்' என்பது இரு மொழிப் பொது. ``குரோதனே மானன் மாயன் கூர்ப்புடை யுலோப னென்பார் விரோதித்து விரலிற் சுட்டி வெருவரத் தாக்க வீரன் நிரோதனை யம்பிற் கொன்றான் நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ வெகுண்டனன்; அவரும் வீழ்ந்தார்.'' 3080 இதில், குரோதன், உலோபன், விரோதி, வீரன், நிரோதன், நித்தை (நித்திரை), பசலை (பிரசலை), விராகு (விராகம்), என்னும் எட்டும் வடசொற்கள். `மானன்', `மாயை' என்பன அருக சித்தாந்தச் சொற்களாயினும், முறையே `மானி' `மாய்' என்னும் தென்சொல்லடியாய்ப் பிறந்தவை. இச்செய்யுளில் எண் வடசொற் களிருப்பினும், செந்தமிழோசை சிதையா திருத்தல் காண்க. தீந்தமிழ்ச் சிலப்பதிகாரத்திலும், மதுரைத் தமிழ் மணிமேகலையிலுமே வடசொற்கள் பயின்றிருத்தலின், சிந்தாமணிக்கு அவற்றால் சிறப்பிழப்பில்லை என்க. தேவர், பல இடங்களில், அருக சித்தாந்தக் குறியீடுகளான வடசொற் களையும் தூய தமிழில் மொழி பெயர்த்தே செல்கின்றார். 3081ஆம் செய்யுளில், `ஞானம், தரிசனம், அந்தராயம்' என்னும் வடசொற்கள், முறையே,`உணர்வு, காட்சி, பேறு' என மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் காண்க. (2) சொல் வளம்: (1) அரும்பொருட்பெயர்கள்: (எ-டு.) அச்சுறு கொழுந்தொடர்-மரக்கட்டைகளில் இரும்பைத் தைத்து யானையின் வேகத்தை அடக்குமாறு அதன் கழுத்தில் மாலை போல இடுவதொரு கருவி. அடியூசி-அடியொட்டி (தப்பியோடுவார் அங்ஙனம் ஓடாதவாறு நிலத்தில் நட்டு வைக்கும் முள்.) அணிகம்-ஊர்தி. குளவுடையான்-இளவரசன். கோட்டகம்-பயிருள்ள நீர் நிலை. பண்ணுரை-புனைந்துரை (உபசார வார்த்தை) பாம்புரி-அகழியின் கீழ்ச் சூழ அமைத்த ஒரு மதிலுறுப்பு. முகவியர்-ஏற்றுக்கொள்பவர். வலஞ்சுழி-நந்தியாவட்டம். வடகம்-ஓர் உடை வகை. (2) அருந்தொடர் மொழிகள்: தேவர் சொல்லாட்சித் திறனில் மிக விஞ்சியவராதலின், வேண்டியவா றெல்லாம் விழுமிய தொடர்மொழிகளைப் புனைந்து கொள்கின்றார்: எ-டு : கட்டழலெவ்வம்-இணரெரி தோய்வன்ன இன்னா. பொன் வண்ணப்புழுக்கல்-பருப்புச்சோறு. நாண் மெய்க்கொண்டீட்டப்பட்டார்-நாணமே வடிவாய பெண்டிர். 2. பொருட்டிறம்: (1) கலைகள்: ``நீர்நின் றிளகிற் றிதுவேண்டா; நீரின் வந்த திதுபோக; வார்நின் றிளகு முலையினாய்! வாட்புண் ணுற்ற திதுநடக்க; ஒரு முருமே றிதுவுண்ட தொழிக; ஒண்பொ னுகுகொடியே! சீர்சால் கணிகை சிறுவன்போற் சிறப்பின் றம்ம விது,' என்றான்.'' 718 இது இசை பற்றியது. இங்ஙனமே, யாழ் மரத்தின் ஏனைக் குற்றங்களும், நரப்புக்குற்றங்களும், யாழுறுப்புகளும், யாழ்வகைகளும், பாடும் முறையும் காந்தருவதத்தையாரிலம்பகத்தில் கலைமுறைப்படி கூறப்பட்டுள்ளன. ``தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித் தோற்றினாள் முகஞ்செய் கோலம் துளக்கினாள் மனத்தை யெல்லாம்.'' 675 இது கூத்துப்பற்றியது. ``பொழிந்துநஞ் சுகுத்த லச்சம் இரைபெரு வெகுளி போகம் கழிந்துமீ தாடல் காலம் பிழைப்பென வெட்டி னாகும்; பிழிந்துயி ருண்ணுந் தட்டம் அதட்டமாம் பிளிற்றி னும்பர் ஒழிந்தெயி றூனஞ் செய்யுங் கோளென மற்றுஞ் சொன்னான்.'' 1286 இது (நச்சு) மருத்துவம் பற்றியது. இதற்கடுத்த இரு செய்யுட்களும் இதுவே. ``ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ ருலாமுகிற் கிழிக்கு மாட'' 2527 ``சூல நெற்றிய கோபுரத் தோற்றமும்'' 3003 ``பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக் கன்னிமூ தெயில்'' 1250 இவை சிற்பம் பற்றியன. சூலம்-இடி தாங்கி. (2) தொழின்முறை: நாமகளிலம்பகத்தில், உழவுத்தொழில் மிகவிரிவாக வரையப் பெற்றுளது. கோவிந்தையாரிலம்பகம், காந்தருவதத்தையாலம்பகம், மண்மகளிலம்பகம் ஆகிய மூன்றனுள்ளும், போர்த்தொழில் அக்கால மூன்றனுள்ளும் அழகாகக் கூறப்பட்டுள்ளது. பொற்கம்மியம் பற்றிய சில செய்திகள் ஆங்காங்குக் காணப்படு கின்றன. (எ-டு.) ``கறந்த பாலினுட் கரசில் திருமணி நிறங்கி ளர்ந்துதன் நீர்மைகெட் டாங்கு'' 1325 `கந்துக்கடன்' என்னும் ஆட்சிறப்புப் பெயர், ஒருகால், கந்து வட்டிக்குக் கடன் கொடுக்கும் வணிகத்தொழிலை உணர்த்தலாம். காந்தருவதத்தையாரிலம்பகத்தில் கடல் வாணிகம் கூறப்பட்டுளது. (3) விளையாட்டுகள்: ``கோட்டிளந்த கர்களுங் கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலுந் தோணிந்கோழி யாதியா வேட்டவற்றி னூறுளார் வெருளிமாந்தர் போர்க்கொளீஇக் காட்டியார்க்குங் கெளவையுங் கடியுங்கெளவை கெளவையே'' 73 இது, தகர்ப்போர், சேவற்போர், காடைப்போர் முதலிய ஆடவர் விளையாட்டைக் கூறுகின்றது. இதில், ``அவற்றின் ஊறுளார்'' என்று தேவர் குறிப்பது, அவரது அருட்பொலிவை உணர்த்தும். ``வைத்த பந்தெ டுத்தலும் மாலை யுட்க ரத்தலும் கைத்த லத்தி னோட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும் பத்தி யிற்பு டைத்தலும் பைய ரவ்வி னாடலும் இத்தி றத்த பந்தினோ டின்ப மெல்லை யில்லையே.'' 151 இது மகளிர் விளையாட்டாகிய பந்தாட்டு. குணமாலையாரிலம்பகத்தில், இருபாலார்க்கும் பொதுவான இளவேனில் நீர் விளையாட்டு விரிவாக வருணிக்கப்பட்டுள்ளது. (4) பழக்க வழக்கங்கள்: அறுபத்துநாற்களையுங்கற்றல், இழந்த அரசை எத்திறத்தும் கைப்பற்றுதல், வேண்டியவரை உயர்த்தி வேண்டாதவரை அடியோடழித்தல், பல மகளிரை மணத்தல், திரிபன்றி எய்தல் முதலிய அருஞ்செயல்களை யாற்றி மறக்கைக்கிளை மணம் புரிதல், பார்ப்பனர்க்குப் பெரும்பொற் கொடை அளித்தல், குற்றவாளிகட்கு நடை விளக்கெரித்தல் முதலிய கடுந்தண்டம் விதித்தல் இவை முதலியன பழக்க வழக்கங்கள். (5) அரசர் முதலியவர் வழக்கங்கள்: வளமனைகளில் வாழ்தல், கொல்லாப்பண்டி, சிவிகை முதலியன வூர்தல், ஐம்புலவின்பமும் ஆசை தீர நுகர்தல் இவை முதலியன அரசர் வழக்கங்கள். நறுஞ்சுண்ணம் பூசுதல், கிளி பூவை முதலியன வளர்த்தல், முல்லைக் கொடியை இல்லத்தில் வளர்த்து அதன் முதற்பூ மலர்ச்சியன்று விழவயர்தல் இவை முதலியன மகளிர் வழக்கங்கள். ஆணுடையணிந்து உவளகக்காவல் பூண்பது மறமகளிர் வழக்கம். புள்ளுங்குறியும் (நிமித்தம்) கண்டு போர்க்குப் புறப்படல், பூசையும் பலியுமிட்டுத் தேரைச் செலுத்துதல், பொற்றகடுவாயுளிட்டுப் போர் செய்தல் இவை முதலியன மறவர் வழக்கங்கள். கார்த்திகை மாதக் கார்த்திகை நாளில் விளக்கேற்றி விழாவயர்தல், கணியம் பார்த்தல், பொன் தொட்டுச் சூளிடுதல், அரசரைத் தெய்வமாகக் கருதுதல், செல்வரையே மதித்தல், மாலையமைப்பு வாயிலாகக் காதலர் செய்தியறிவித்துக்கொள்ளுதல் இவை முதலியன இருபான்மக்கள் வழக்கங்கள். (6) பிள்ளை வளர்ப்பு முறை: ``காடி யாட்டித் தராய்ச்சாறுங் கன்னன் மணியு நறுநெய்யுங் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப் பாடற் கினிய பகுவாயுங் கண்ணும் பெருக வுகிருறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த் தண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார்.'' 2703 என்னுஞ்செய்யுள் மிக இன்புறத்தக்கது. (7) வாழ்க்கை முறை: தேவர், துறவறமே சிறந்ததெனக்கொள்ளும் அருகமதத்தினராயினும், உலகியலுண்மையையும் இல்லறத்தின் இன்றியமையாமையையும் உணர்ந்தவராதலின், இருபாலாரும் மணவாமலே துறக்க இயலாவிடத்து, முதற்கண் இல்வாழ்க்கையை நடாத்தி இல்லற இன்பத்தை இயன்ற அளவு நுகர்ந்த பின்னரே துறவை மேற்கொள்ள வேண்டும் என்னுங் கருத்தை, சீவகனும் அவன் தாயும் அவன் தேவிமாரும் வாழ்ந்த வாழ்க்கை முறையில் வைத்தும்; இம்மையில் துறவுகூடாவிடினும் உம்மையில் கவனித்துக் கொள்ளலாம் என்னுங் கருத்தைப் பிறர் வாழ்க்கைமுறையில் வைத்தும்; ஒரு கணவனுக்குப் பல மனைவியரிருப்பினும், ஒரு மனைவிக்குப் பல கணவரிருத்தல் உகந்ததன்றென்பதை, ``திருமக னருளப் பெற்றுத் திருநிலத துறையு மாந்தர் ஒருவனுக் கொருத்தி போல உளமகிழ்ந் தொளியின் வைகிப் பருவரு பகையு நோயும் பசியுங்கெட் டொழிய'' 2377 என்னும் அடிகளில்வைத்தும் உலகிற்குணர்த்துகின்றார். ஒருவன், கற்புக்காலத்தில் சிற்சில காரணம் பற்றித் தன் மனைவியை அல்லது மனைவியரை விட்டுப் பிரிய நேரினும், அவரைக் கைவிடக் கூடாதென் பதும், அவரொடு மீண்டும் கூடி வாழ வேண்டுமென்பதும் சீவகன் வாழ்க்கையால் உணர்த்தப் பெறுகின்றன. (8) குறிக்கோள்: மருந்தைத் தனியாகவுண்டலும் உண்டியிற்கலந்துண்பித்தலும் பயனளவில் ஒன்றேயாதல் போல, அறவிதிகளை அறநூல் வாயிலாக அறிவித்தலும் வனப்புநூல் வாயிலாக அறிவித்தலும் குறிக்கோளளவில் ஒன்றே. சிறந்த அறவனப்பு நூல்கள் குறிக்கொள்வதெல்லாம் அறம் பொருளின்ப வீட்டுப் பேறே. சிந்தாமணி ஒரு சிறந்த வனப்பு நூலாதலின், அதன்கண்ணும் நான் மாண் பொருள்களே நன்முறையில் வலியுறுத்தப் பெற்றுள. ``குடித்துண்ணுங் கூற்றங் குடில்பிரியா முன்னே கொடுத்துண்மின் கண்டீர் குணம்புரிமின் கண்டீர்.'' 2620 ``நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல் ஆண்மக்கள் கடன்.'' 1119 ``உறுவர்ப் பேணல் உவர்ப்பின்மை உலையா வின்பந் தலைநிற்றல் அறிவர் சிறப்பிற் கெதிர்விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம்பகர்தல் சிறியா ரினத்துச் சேர்வின்மை சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ னறத்து வார்க்கெல்லாம இனிய ராதல் இதுதெளிவே.'' 2816 இவை அறம். துன்பத்திற் கலங்காமை, நட்பிற் குலவேற்றுமை காட்டாமை முதலிய சில பண்பாட்டியல்புகளும், தேவரால் ஆங்காங்குக் கூறப்படுகின்றன. ``செய்கபொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கும் எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணும் ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருள்மற் றல்லபிற பொருளே.'' 497 இது பொருள். ``தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்தமிழ் மெய்ப்பொரு ளாதலின் கோவத் தன்னமென் சீறடிக் கொம்பனாள் `பூவர் சோலை புகுவல்,' என் றெண்ணினாள்.'' 1328 ``காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார் மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகு கின்ற வன்பினா லன்ன மொத்தும் தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார்.'' 189 இவை இன்பம். ``மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்க டம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி உய்வகை யுயிரைத் தேயா தொழுகுத லொழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும்,' என்றான்.'' 1436 இது வீடு. முத்தியிலம்பகத்தில் வீடுபேற்றைப் பற்றி ஆருகத முறையில் மிக விரிவாகக் கூறுகின்றார் தேவர். அறவழியிற்பொருலீட்டி அதனைக்கொண்டு அறவழியில் இன்பந் துய்க்க வேண்டுமென்னும் திருவள்ளுவத்தேவர் கொள்கையே, திருத்தக்க தேவர் கொள்கையுமாம். ஆயின், இல்லறத்தாலும் வீடுபேறுண் டென்பது பின்னவர்க்கு உடம்பாடன்று. அஃது அவர் மனப்பான்மையும் மதமும் பற்றியது. சிந்தாமணி, சிலப்பதிகாரம் போல உள்ளோன் தலைவனாக உள்ளதும் இல்லதும் புணர்க்காது, இல்லோன் தலைவனாக இல்லதும் உள்ளதும் புணர்த்தலின், அதன்கண் வரலாற்றுற் சான்றுகள் காணக்கூட வில்லை. ஆயினும், தேவர் காலத்துத் தமிழ்நாட்டு நாகரிகத்தை அறிவதற்குத் துணையான பல செய்திகள், நூல் நெடுமையுங் கூறப்பட்டுள. 3. யாப்புத்திறம்: ``வெஞ்சின வெகுளியிற் குஞ்சர முழங்கலின் மஞசுதம் வயிறழிந் தஞ்சிநீ ருகுத்தவே.'' 570 இது வஞ்சித்துறை. இதனைக் `குறளடி நான்காய் வந்த கொச்சகவொருபோகு' என்பர் நச்சினார்க்கினியர். ``மடமா மயிலே குயிலே மழலை நடைமா ணனமே நலமார் கிளியே உடனா டுமெணை யனையென் றுருகாத் தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே.'' 1526 இது கலி விருத்தம். ``மாசித் திங்கள் மாசின சின்னத் துணிமுள்ளின் ஊசித் துன்ன மூசிய வாடை யுடையாகப் பேசிப் பாவாய் பிச்சை யெனக்கை யகலேந்திக் கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண் டறியாதார்.'' 2929 இது கலித்துறை. ``கருங்கொடிப் புருவ மேறா கயல்நெடுங் கண்ணும் ஆடா அருங்கடி மிடறும் விம்மா தணிமணி யெயிறும் தோன்றா இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ நரம்பொடு வீணை நரவின் நவின்றதோ என்று நைந்தார்'' 658 இஃது அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். ``மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில் பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங் குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக் கண்கனிய நாடகங்கண் டமரர் காமக் கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே.'' 3138 இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ``புன்காஞ்சி ... ... ... இளவேனில்.'' 648 ``தண்காஞ்சி ... ... ... இளவேனில்.'' 649 ``குறுத்தாள் ... ... ... இளவேனில்.'' 650 இவை தாழிசைக் கொச்சகம். இங்ஙனம், தேவர், நவில்தொறும் இன்பம் பயக்கும் பல்வகைச் செய்யுளும், அவ்வப்பொருட்கேற்ப வேவ்வேறோசை பட அச்சில் வார்த்தாற்போல அழகாக யாத்திருக்கின்றனர். 4. அணித்திறம்: ``மடமா மயிலே ... ... ... சோர்ந்தனளே.'' 1526 என்பது தலைசிறந்த தன்மையணி. ``சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.'' 53 இஃது அரிய உவமை. ``என்பினை நரம்பிற் பின்னி யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப் புன்புறந் தோலைப் போர்த்து மயிர்ப்புறம் பொலிய வேய்ந்திட் டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான் மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள வென்றான்.'' 1377 ``மன்னர்தம் வெகுளி வெந்தீ மணிமுகில் காண மின்னிப் பொன்மழை பொழியின் நந்தும் அன்றெனிற் புகைந்து பொங்கித் துன்னினார் தம்மை யெல்லாஞ் கட்டிடும்.'' 1117 ``விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்துனைப் பகழி.'' 435 இவை இனிய உருவகம், முத்தியிலம்பகத்தில் சீவகன் வீடுபேறு ஓர் உருவக நாடகமாக வரையப்பெற்றுளது, திருப்போரும் பிரபுலிங்க லீலையும் போல. ``வெஞ்சின ... ... ... உகுத்தவே.'' 570 என்பது தற்குறிப்பேற்றம். ``சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட ... ... ... ... .... ... .... ..... ..... ..... ...... ......... முந்திநலி கின்றமுது மூப்பொழியு மென்றான்.'' 2020 இஃது இரட்டுறல். இதையே வில்லிபுத்தூரர் தம் பாரதத்தில் ஆள்கின்றார். ``காழக மூட்டப் பட்ட காரிருட் டுணியு மொப்பான் ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறித லில்லான் மேழகக் குரலி னானோர் வேட்டுவன் றலைப்பட் டானே.'' 1230 இஃது ஒரு சொல்லோவியம். கம்பராமாணயத்திற்போல வரம்பிறந்த உயர்வு நவிற்சிகள் சிந்தாமணியிலில்லை. பகுத்தறிவிற்குப் பொருந்துமாறு அறிஞரை இன்புறுத்தும் அரிய அழகிய அணிகளையே தேவர் ஆளுகின்றார். 5. சொல்லாராய்ச்சித் துணை: சிந்தாமணிச் சொல்லாராய்ச்சியால் அறியப்படும் சொல்லியல் உண்மைகளாவன: (1) சொற்களின் முந்து வடிவம்: அரவு (அரா), நறவு (நறா), கோன் என்னுஞ் சொற்களின் முந்து வடிவம், முறையே, `அர, நற, கோவன்' எனபன. இவ்விருந்தான் (இவ்விடத்திருந்தான்) என்னும் வழக்கு, சுட்டிடைச் சொற்கள் ஆதியில் பெயரும் ஈரெச்சமுமாகப் பயன்பட்டதை உணர்த்தும். காதற்பொருளை உணர்த்தும் `மாதர்' என்னும் சொல்லின் பகுதி `மாது' என்பது. `மாதியாழ்' என வருதல் காண்க. (2) வழக்கற்ற சொற்கள்: இலக்கித்து (எழுதி) என்னுஞ்சொல், இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் பகுதியான இலக்கு என்பதினின்று திரிக்கப்பட்டு `இலக்கி' என ஒரு வினை பண்டைக்காலத்து வழங்கினமையை உணர்த்தும். பொற்ற (நல்ல), பொற்றது (பொலிவு பெற்றது) என்னுஞ் சொற்கள், `பொல்' என்னும் வழக்கற்ற வினையடியாய்ப் பிறந்த பெயரெச்சமும், வினைமுற்றுமாகும். `கல், வில்' என்னும் வினையடியாக, `கற்ற' `கற்றது' `விற்ற' `விற்றது' என்னும் பெயரெச்சவினை முற்றுக்கள் பிறத்தலைக் காண்க. பொல்லுதல்-பொலிதல், அழகாயிருத்தல். பொல்-பொன். பொல்-பொலம். பொல்-பொலி-பொலிவு. பொல்+பு=பொற்பு. பொலம்-பொனம். `பொற்பு' என்னும் உரிச்சொல், `பொற்ற' எனத்திரிந்ததென்று நச்சினார்க்கினியர் கூறுவது பொருந்தாது. உரிச்சொல் என்பது செய்யுட்சொல்லேயன்றி, இலக்கண வகைச் சொல் அன்று. `பொற்பு' என்னும் தொழிற்பெயர் செய்யுளிற் சிறப்பாகப் பயின்று உரிச்சொல்லாயிற்று. (3) புலவர் சொற்றிரிப்பு: புலவர் சொற்களைத் தம் செய்யுட்களில் மோனையெதுகைக் கேற்பத் திரித்துக்கொள்வர் என்பது, கம்பலம் (கம்பலை), அளமரு (அலமரு), இறுவரை (இருவரை), பிளிற்றல் (பிலிற்றல்), மத்தம் (மத்து), பொனம் (பொலம்) முதலிய சொற்களாற் பெறப்படும். (4) தொல்காப்பியவழு: `நும்' என்னும் சொல்லினின்று `நீயிர்' என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் திரிந்ததாகத் தொல்காப்பியர் கூறுவது பற்றி, `நீம்' என்னும் சிந்தாமணிச் சொல்லைத் தேவர் படைப்பாகச் சில புலவர் கருதுகின்றனர். `நீம்' என்னுஞ் சொல்லே முந்தியதாம். `நீன், நீம்' நீங்கள் (நீம்+கள்) என்பன முன்னிலையொருமை பன்மைப் பெயர்கள். `நீன், நீம்' என்னும் சொற்கள் இன்றும் தென்னாட்டில் நாட்டுப்புற மக்களிடை வழங்குகின்றன. கன்னடத்தில், `நீன்' என்பது திரியாதும், `நீம்' என்பது `நீவு' (நீம்-நீமு-நீவு) எனத் திரிந்தும் வழங்குகின்றன. `நும்' என்பது (இறந்துபட்ட) `நூம்' என்பதன் வேற்றுமையடியாகும். தன்மை முன்னிலைப் பெயர்களும் படர்க்கைப் பதிற்பெயர்களும், எழுவாய் வடிவில் நெடின்முதலவே அன்றிக் குறின்முதல் அல்ல. (5) வடசொல்லென மயங்கும் தென்சொற்கள்: கோட்டி - ஒருவரொடு கூட இருத்தல். கொள்ளுதல்-பொருந்துதல், கூடுதல். கொளுத்துதல்-பொருத்துதல், கொள்-கோள்=குலை (காயின் கூட்டம்), கோள்+தி=கோட்டி (கூட்டம், அவை). `இலக்கி' என்னுஞ்சொல் முன்னரே கூறப்பட்டது. இதுவே வடமொழியில் `லேக்' என்றும், இந்தியில் `லிக்' என்றும் திரியும். 6. நூலளவை: ஒரு துறையிற் பல நூல்களிருப்பினும், அவற்றுள் ஒன்றிரண்டே அளவை நூலாகும். திருக்குறட் கருத்துகளனைத்தையுந்தழுவிச் சொல் மாற்றி ஒருவர் ஒரு புதுநூல் இயற்றிவிடின், அது முதலியன்மை பெற்றுவிடாது. தேவர் காலத்தில், பாவினயாப்பில் சிந்தாமணிக்கு அச்சுக்கட்டாக அல்லது வழிகாட்டியாக ஒரு வனப்பு நூலும் இருந்ததாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் கால வனப்புக்களெல்லாம் கடைக்கழகக் காலத்திலேயே இறந்துபட்டன. தேவார திருவாசகங்களோ, வழுத்து நூற்கள். திருக்கோவை தலைசிறந்த பாவின நூலாயினும், யாப்பினும் பொருளினும் ஒரு துறைப்பட்டது. ஆகவே, தேவர், தம் மதியைத் தொல்காப்பியத்தால் துலக்கித் திருக்குறளால் தீட்டிப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கால் பாரித்திருப்பினும், வனப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சிந்தாமணியாப்பின் பெரும்பகுதி அவரது திறப்பாட்டின் விளைவே என்பது திண்ணம். கம்பராமாயணம் உட்பட்ட பிற்கால வனப்புக்கெல்லாம், சிந்தாமணி சிறந்த வழி காட்டியாயிருந்த தென்பதை எவரும் மறுக்க முடியாது. சிந்தாமணியைப் பின்பற்றிய பின்னருங்கூடத் கலைத்திறத்தில் வறுமைப்பட்டும், அணித்திறத்தில் அழகிழந்தும், தீர்ப்பியலில் நடுத் திறம்பியும் பிற்கால நூல்கள் பொலிவற்றிருப்பது, சிந்தாமணியை மேன் மேலுஞ்சிறப்பிக்கும். சுதஞ்சணன் செய்தியும் கலுழவேகன் செய்தியும் தேவியற் பட்டவாயினும், மதத்துறை சார்ந்தவாதலானும், சிலப்பதிகார மணிமேகலை யினுள்ளும் அத்தகைய செய்தி காணப்படுதலானும், இல்லோன் தலைவ னாகவுள்ள புனையியல் வனப்பிற்கு ஏதும் இழுக்கில்லை என்க. 16 ஆவுந் தமிழரும் எல்லா நாட்டிலும் எந்நிலை நாகரிகத்திலும் ஆவானது அருமை யாய்ப் போற்றப்படுவதேயாயினும் தமிழ்நாட்டில் அது தலைசிறப்பப் போற்றப்பட்டதென்பது எவரும் மறுக்கொணாதது. அரியப் பார்ப்பனர் ஆக்கொடையையே மிகுதியாய் விரும்பிப் பெற்றமையானும், ஆவோடு சேர்த்து வாழ்த்தப்படும் அந்தணரை ஆரியப் பார்ப்பரென்று இடைக்காலத்திற் பிறழ வுணர்ந்தமையானும், ஆவுக்குக் தமிழரோடுள்ள தொடர்பினும் ஆரியரோடுள்ளது மிக்கதென்று கருதப் படுகின்றது. வடமொழியாரியர் சிந்துவெளிக்கு வந்த புதிதில் முல்லை நாகரித்தையே அடைந்திருந்தமையால், அவருக்கு ஆத்துணை இன்றி யமையாததா யிருந்திருக்கலாம். ஆனால், இதனால் தமிழர்க்கு ஆத்தொடர்பு தொன்று தொட்டதென்னும் உண்மை வலிமை குன்றாது. மக்கள் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகரம் என நான்கு நிலைகளையுடையது. அவற்றுள் குறிஞ்சியிலேயே தமிழர்க்கு அல்லது தமிழரின் முன்னோர்க்கு ஆத்தொடர்பு இருந்திருத்தல் வேண்டும். ஏனெனின், ஆவானது முதன்முதல் குறிஞ்சி நிலத்திற்கே யுரிய விலங்காம். குறிஞ்சியையடுத்த முல்லை நிலத்திலிருந்த ஆயர் ஆட்டையும் மாட்டையும் பெருவாரியாய் வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்டு வாழ்ந்தனர். அவர் ஆட்டினும் மாட்டையே சிறப்பாய் வளர்த்தனர். ஆவை மேய்ப்பவர் ஆயர் எனப் பெயர் பெற்றமை கவனிக்கத்தக்கது. ஆ என்னும் பெயர் தற்காலத்திற் பொண்பாலையே குறிப்பினும் முற்காலத்தில் இருபாற்கும் பொதுவாய் இருந்தது. இது னகரச் சாரியை பெற்று ஆன் என நிற்கும். ``ஆவார் கொடியாய்'' (திருவிளை. நரிபரி. 191) ``பெற்றமும் எருமையும் மரையும் ஆவே'' (தொல். 1560) ``ஆன்முகத்த னடற்கண் நாயகன்'' (கந்த. பானு. 95) ஆன் = எருமை பெற்றம் மரை இவற்றின் பெண் (திவா.) ஆடு, மான், மரை, மிழா, கடமை, மாடு என்பவை முறையே ஒன்றினொன்று சிறிது வேறுபட்ட இனமாம். மா என்பது விலங்குப் பொதுப்பெயரையும் குதிரைப் பெயராயுமுள்ளது. குதிரை மானைப்போல வேகமாய் ஓடக்கூடியது. வடிவிலும் ஓரளவு அதை ஒத்தது. மா என்பது னகரச்சாரியை பெற்று மானையுங் குதிரையையுங் குறிப்பதுடன் விலங்குப் பொதுப்பெயராயு மிருக்கும். கடமா (கடம்+மா) என்பது காட்டாவிற்கும் காட்டெருமைக்கும் பெயர். இதனால், ஆ என்னும் பெயருக்கும் மா என்னும் பெயருக்கும் ஓர் இயைபிருப்பதை உணரலாம். இவ்விரண்டும் னகரச்சாரியை பெறுவதும் இங்கு நோக்கத்தக்கது. மா என்னும் பெயரே ஆ என்று திரிந்திருக்கலாம். மாஅஅ என்று முக்காரமிடும் மாடு மாவெனப்பட்டது. மா-ஆ; மான்-ஆன் மா - மான் -மாடு.ஒ.நோ : கா-கான்-காடு. ஆ-அவன்-வாடு (தெ.) ஆ என்பது முதலில் மாடு என்று பொருட்பட்டுப் பின்பு பசுவிற்கு வரையறுக்கப்பட்டது. பண்டையுலகம் முழுமையும் மாடே, மக்கள் செல்வமாயிருந்தது; அதனால் செல்வம் மாடெனப்பட்டது. ``கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை'' (குறள். ) E. Pecuniary = relating to money; & Pecunia = money Pecudes(pl.) = cattle. மக்களுக்கு முல்லை நிலத்திலேயே உழவு தோன்றிற்று; அது மருதநிலத்தில் சிறப்படைந்தது. முன்னதில் புன்செய்ப்பயிரும் பின்னதில் நன்செய்ப்பயிரும் விளைவிக்கப்பட்டன. மாடு இருநிலத்தார்க்கும் ஊனும் பாலும் உதவியதுடன், இருவகை வேளாண்மைக்கும் உழுதிறைந்துதவியது. ``பகடு நடந்த கூழ்'' என்றார் நாலடியார். மாட்டின் ஊனும்பாலும் மட்டுமல்ல; தோல், கொம்பு, உரசனை (ரோசனை), வால்மயில், சாணம் முதலிய பிறவும் பயன்பட்டன. வீட்டைத் துப்புரவு செய்யவும் அடுப்பெரிக்கவும் பயிருக்குரமிடவும் சாணம் உதவுவது. சிறந்த உணவும் மருந்துமாகிய தயிரும் மோரும் வெண்ணெயும் நெய்யும் பாலிலிருந்தெடுக்கப்படுவன. இங்ஙனம், உணவை விளைவிப்ப தும் தானும் உணவளிப்பதும் வேறு பல்வகை யுதவுவதுமாகிய மாட்டினத்தைச் செல்வமாக மட்டுமின்றி மக்கள் போலுங் கருதிவந்தனர் முன்னைத்தமிழர். (பால் முதல் நெய்யீறாகவுள்ள ஐந்தும் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்) எனப்படும். இவற்றுள் இரண்டை விலக்கி அவற்றிடத்தில் ஆநீர் ஆப்பி என்பவற்றைக் கூறுவது, தமிழர் கொள்கையறியாத புராணிகர் கூற்று என்பர் துடிசைகிழார் அ. சிதம்பரனார்.) ``ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்ர் காவலன் காவான் எனின்'' (குறள். 560) என்று வள்ளுவர் கூறுவதால் ஆவின் பயம்பாடு உணரப்படும். ``ஆவிற்கு நீரென் நிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில்'' (குறள்) என்பது இரவைக் கண்டிப்பினும், ஆவின் அருமையை உணர்த்தாது போகவில்லை. ஆவும் ஆவேறும் (காளையும்) மிகப்பயன்படுவது பற்றி அவற்றின் வரவு கண்டு முறையே `என் அம்மை வந்தாள். அவளுக்குப் புல்லிடு', `என் அப்பன் வந்தான். அவனுக்குத் தண்ணீர் காட்டு' என்று அன்புரைகளைக் கூறிவந்தனர் உழவர். இவை திணைவழுவுக் கெடுத்துக் காட்டாக இலக்கணத்தில் வழிவழி கூறப்பட்டன. அதோடு, சாத்தன் சாத்தி கொற்றன் கொற்றி முடவன் முடத்தி கொடும்புறமருதன் கொடும்புறமருதி முதலிய மக்கட் பெயர்களையே ஆவுக்கும் ஆவேற்றுக்கும் இட்டு அழைத்தனர். இவை, இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் என மூவகை விரவுப் பெயராகத் தொல்காப்பியத்திற் கூறப்பட்டன. (சொல். 174) `சாத்தன் வந்தது' `முடவன் வந்தது' `சாத்தன் புற்றின்னும்', `சாத்தி கன்றீனும்' முதலிய சொல்லதிகாரவுரை யெடுத்துக் காட்டுகளை நோக்குக. காளை மக்கட்காக மிக உழைத்தலினால் `மாடுபோலுழைத்தல்' என்னும் வழக்கெழுந்தது. காளை விடலை என்னும் பெயர்கள் உவமை யாகு பெயராக மறவர்க்கும் குறும்பரசர்க்கும் வழங்கிவந்தன. இடையூற்றைப் பொருட்படுத்தாமல் எடுத்த காரியத்தை முடிக்கும் திறவோன் பகடெனப் புகழப்பட்டான். ``மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கன் இடர்ப்பா டுடைத்து'' (குறள். 624) இளைஞரின் வலிமையை யறிதற்கு `ஏறுதழுவல்' (கொல்லேற்றைப் பிடித்து நிறுத்தல்) அளவையாகக் கொள்ளப்பட்டது. முல்லை நிலத்திலுள்ள ஆயரும் ஏறுதழுவின இளைஞர்க்கே பெண் கொடுத்து வந்தனர். ஆவின் வாலையும் எருதின் வாலையும் பற்றி ஆழமான ஆற்றைக் கடந்தனர். எருது ஊர்தியாக உதவிப் பொதியுஞ் சுமந்தது. இன்றும் வண்டியிழுக்கின்றது. ஆவும் ஆவேறுமாகிய இரண்டும் மக்கட்குப் பயன்படுவேனும் அவற்றுள், ஆவே அமைதியுடைமையும் அமுதளித்தலும் இருபாற்கன் றீனுதலும் பற்றிச் சிறப்பாகப் போற்றப்பட்டது. `பார்த்தாற் பசுப்போல, பாய்ந்தாற் புலிபோல' என்பது பழமொழி. ஆவுக்கு வாயுறை முப்பத் திரண்டறக் கொடைகளுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. இழக்கும் பொருளும் ஆவின் வாய்ப்பட்டால் ஆக்கமாம் என்னுங் கருத்தில், `பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே' என்னும் பழமொழி யெழுந்தது. தான் உண்டதை மீட்கும் தன் வாய்க்குக் கொணர்ந்து அசையிட்டுச் செரிக்கச் செய்வதுபற்றி, ஆவானது தலை மாணாக்கர்க்கு உவமையாகக் கூறப்பட்டது. ஆவின் தினவு தீர்த்தற்பொருட்டு, ஆவுரிஞ்சியென்றும் ஆவுரிஞ் சுதறியென்னும் ஆதீண்டுகுற்றியென்றும் சொல்லப்பட்ட தறிகள் ஊர்தொறும் நட்டப்பட்டிருந்தன. மக்காளல் வாழ்த்தப்படும் பொருள்களுள் ஆவும் ஒன்றாயிற்று. `ஆறுமுறை வாழ்த்து' என்னும் தொல்காப்பியப் பகுதியுரையில் (தொல். பொ. 81) ``முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகும்'' என்னும் அறுவரை வாழ்த்தல் என்று உரைத்தனர் நச்சினார்க் கினியர். மக்கள் நல்வாழ்விற்கு ஆவும் ஒரு காரணம் என்பதை உணர்ந்தே அதை வாழ்த்தினர் தமிழர். ``வாழ்க அந்தணர் வாழ்க ஆனினம்'' என்றார் திருஞான சம்பந்தரும். அந்தணர் - முனிவர். பார்ப்பார் =- நூல் பார்ப்பவர். தமிழகத்தில் முதலாவது பார்ப்பார் என்றிருந்தனர் தமிழர். பின்னர் பிராமணரும் தொழிலொப்புமை பற்றிப் பார்ப்பார் எனப்பட்டார். முதலாவது, செம்மார் என்னும் தமிழ் மரபினர் செருப்புத் தைத்துக் கொண்டிருந்து, பின்பு வடக்கிருந்துவந்த சக்கிலியரென்னும் தெலுங்கரும் தொழிலொப்புமை பற்றிச் செம்மார் எனப்படுதல் காண்க. ஆக்கள் மக்களைப்போல் மட்டுமன்றி அவரினும் மேலாகத் தூய்மை அல்லது தெய்வத் தன்மையுடையனவாகவுங் கருதப்பட்டன. ஒரு நாட்டிலுள்ள ஆநிரை கள்வரால் அல்லது பகைவராற் கவரப்படின், அது தூய்மைக் குலைச்சலாகவும் பேரிழப்பாகவும் கருதப்பட்டு கடும்போருக்குக் காரணமாயிற்று. ஆன்மடியறுத்தல் மாபெருங் குற்றமாயிற்று. ஆக கொலையோ சொல்ல வேண்டுவதில்லை. ``ஆன்முலை யறுத்த அறனில் லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவே'' என்றார் ஆலத்தூர்கிழார். எனினும், அது நன்றிமறந்த குற்றத்தை மிகுத்துக் காட்டற்கேயென வறிக. தீயன செய்யாத செங்கோன் மன்னரும் வேற்று நாட்டைக் கொள்ளக் கருதின் அந்நாட்டு ஆநிரையைத் தன் மறவர் வாயிலாய்க் கவர்ந் தோம்பினர். சில இடங்களில் ஆவிற்குக் கோயிலெடுத்தும் வழிபட்டனர். இது பகுத்தறிவிழந்த காலத்தில் நிகழ்ந்தது. ஆவிற்குக் கோவென்றும் பெயர். முல்லை நிலத்தார்க்கு அல்லது இடையர்க்கு ஆ என்னும் பெயரினின்று ஆயர் என்னும் பெயர் ஏற்பட்டது. கோ = பசு (பிங்.) எருது (இ.வி.9072).கோ என்னும் சொல் வடமொழியி லிருப்பதால் அது வடசொல்லாகி விடாது. ஆங்கிலத்திலும் அது (A.S.Cu. Ger. Kuh. S. Go.) Cow என்று வழங்குகின்றது. நூற்றுக்கணக்கான தூய தென்சொற்கள் மேலையாரிய மொழிகளினுஞ் சென்று வழங்குகின்றன. தா என்னும் வினைச்சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது. உலக வழக்காலும் ``தாவென் கிளவி ஒப்போன் கூற்றே'' என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆயினும், அதன் தொழிற்பெயரான தானம் என்பது வடமொழிச் சென்று வழங்கி வடசொல்லாகக் கருதப்படுகின்றது. தா என்னும் வினை இந்தியில் தேவ் என்றும் இலத்தீனில் தோ (do) என்றும் வழங்கு கின்றது. Donum donation முதலிய ஆங்கிலச் சொற்கள் இலத்தீனிலிருந்து வந்தவை. இங்ஙனம் எத்தனையோ சொற்களுள. அவற்றுள் குடி (LCot) என்பதும் ஒன்று. இதன் விளக்கத்தைக் கால்டுவெல் ஐயரின் ஒப்பியல் இலக்கணத்தின் முன்னுரையிற் கண்டு தெளிக. கோ+அன்=கோவன் = இடையன் ``கோவ னிரை மீட்டனன்'' (சீவக.455) கோவன் என்னும் பெயர் கோன் என்று குறுகும். அதன்மேல் `ஆன்' விகுதிபெற்றுக் கோனான் என நிற்கும். கோனார் என்னும் பெயர் குடிப்பெயராய்த் தொன்று தொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது. கோவன் என்னும் ஆயன் பெயரே திரியாதும், கோன் கோ எனத் தொக்கும் ஈறுகெட்டும் அரசனைக் குறித்தது. குடிகள் ஆக்களும் அரசன் ஆயனும் போல்வர் என்னுங் கருத்தில், அரசன் கோவன் எனப்பட்டான். கோவன் = அரசன். ``கோவனும் மக்களும்'' (சீவக. 1843). அரசன் கையிலுள்ள செங்கோலும் அவன் ஆயன் போன்றவன் என்னுங் கருத்தை வலியுறுத்தும். கிறித்தவரின் சமயாசிரியர் ஆங்கிலத்தில் Shepherd என்றும் Pastor என்றும் அழைக்கப்பட்டதும் இக்கருத்துப்பற்றியே. கடவுள் அனைத்துலகுக்கும் அரசனானதாலும் ஆயன் ஆநிரையைக் காப்பதுபோல் அவர் மக்களைக் காத்து வருவதாலும், அவரும் கோவன் எனப்பட்டார். கோவன் = சிவன் (அக.நி) பசு என்னும் வடசொல் கொள்கை நூலில் மக்களை அல்லது உயிர்களைக் குறிப்பது கவனிக்கத்தக்கது. ஆயா என்னும் தமிழ்ச் சொல் காட்டுப் பசுவைக் குறிக்கும். ஆ என்னும் பெயர் னகரச் சாரியை பெறின், ஆமா என்பது ஆன்மா என்றாகும். ஆனாகிய மா என்பது இதன்பொருள். இச் சொல்லே வடமொழியில் ஆத்மா என்றாகும். ஆன்மா என்னும் தென்சொல் உயிரையும் ஆத்மா என்னும் வடசொல் உடம்பையும் சிறப்பாய்க் குறித்தலை நோக்குக. கோ என்னுங் குறைச்சொல் அரசனையுந் தந்தையையுங் குறிக்கும். ``நின்கோ வரினு மிங்கே'' (கலி.116) என்னுமிடத்தில் தந்தையைக் குறித்தது. இனி ஆனிலை யுலகம் என்று மேலுலகத்தின் ஒரு பகுதி பெயர் பெற்றது. காமதேனு என்னும் கற்பித ஆ பற்றியோ, கண்ணன் பற்றியோ, வேறு காரணம் பற்றியோ, அறிகிலம். இதுகாறுங் கூறியவற்றால், தமிழர்க்கு ஆவொடு தொன்றுதொட்ட தொடர்புண்டென்றும், ஆவென்னும் பெயர் போன்றே கோ வென்னும் பெயரும் தனித்தமிழ்ச் சொல்லென்றும், வடமொழியிலிருப்பவையெல்லாம் வடசொலல்லவென்றும், ஆரியஞ் சென்று வழங்கும் தமிழ்ச்சொல் பலப்பலவென்றும், ஆவின் அருமை பெருமையைத் தமிழர் செவ்வனே யறிந்து அதற்குத்தக அதனைப்போற்றி வந்தனரென்றும், மக்கள் ஆக்களாகவும் அரசனும் கடவுளும் ஆயராகவுங் கருதப்பட்டனரென்றும், இக்கருத்தே உயிர்கள் ஆன்மாவென்று தென்மொழியிலும் பசுவென்று வடமொழியிலுங் குறிக்கப் பெற்றமைக்குக் காரணமென்றும் தெரிந்து கொள்க. குறிப்பு : அந்தணர் என்னும் சொல் முதன்முதல் தமிழ் முனிவரையே குறித்தது. பின்பு அது முறையே முனிவர் நிலையடைந்த ஆரியரையும், அடியாராயிருந்த அல்லது மறைத் தொழில் புரிந்த பிராமணரையும் இறுதியில் எல்லாப் பிராமணரையும், படிப்படியாத் தழுவலாயிற்று. `ஆவொடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே' என்பது பிற்காலக் கருத்து. 17 கற்புடை மனைவியின் கண்ணியம் ஓரறிவுயிர்முதல் ஆறறிவுயிர்வரை எல்லாவுயிர்களும் பெரும்பாலும் ஆண் பெண் என்னும் இருபாலின. இவ்விருபாலுள் எது சிறந்தது என்னும் வினாவிற்கு விடையிறுப்பது அரிதாகும். ஆணும் பெண்ணுமாகப் படைக்கப்பட்ட எல்லாவுயிர்களும் இருபாலுங் கூடிவாழ்வதே இறைவன் திருநோக்கமாதலானும், அக்கூட்டு வாழ்க்கையானேயே உலகம் இடை யறாது இயங்கிவருதலானும், அவ்வாழ்க்கையில் இருபாலும் ஒன்றுக் கொன்று துணையாய் ஒத்த உரிமையவாதலானும், ஒவ்வொன்றும் ஏனைய தாற் செய்யப்படாத ஒருசார் கடமையை மேற்கொண்டுள்ளமை யானும், இருபாலும் சமம் என்பதே கொள்ளத்தக்கதாம். இக் கருத்துப் பற்றியே, முதற்றாயான ஏவாள், முதற்றந்தையான ஆதாமின் (அடியு முடியு மல்லாது இடைப்பட்ட) விலாவெலும்பினின்று உண்டாக்கப்பட்டதாகக் கிறித்தவ மறை கூறும். ``பெருமையும் உரனும் ஆடுஉ மேன'' ``அச்சமும் நாணும் மடனுமுந் துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப'' (தொல். களவு, 7. 8) என்று கூறியது, களவொழுக்கத்தில் தலைவன் தலைவியிடத்துச் சிறந்து தோன்றும் குணங்களேயன்றி, இருபாலுக்குமுள்ள ஏற்றத்தாழ்வன்று. இக்குணங்கள் என்றுமுள்ளனவாயின், களவியலிற் கூறப்படாது இருகை கோளுக்கும் பொதுவான அகத்திணையியல் அல்லது பொருளியலிற் கூறப்பட்டிருத்தல்வேண்டும்: அங்ஙனம் கூறப்படாமை காண்க. களவு வெளிப்பட்டு மணநிகழு மட்டும் பகற்குறி இரவுக்குறி ஆகிய இருவகைக் குறியிலும் தலைவன் சிறிதும் அஞ்சாது பெருமையோடும் உரனோடும் சென்று மீள்வதும், தலைவிக்குத் தலைவன் மீதுள்ள அன்பு காரணமாக ஆற்றருமைபற்றி அச்சந் தோன்றுவதும், காமக்குறிப்பு அல்லது களவு வெளிப்பாடுபற்றி நாணம் பிறத்தலும், செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய அறியாமடமும், கூட்டத்தை நிகழ்த்தியிருந்தும் அறியாதது போன்ற அறிமடமும் நிகழ்வதுமுண்டு. தலைவனுக்கு மக்களும் விலங்கும் நச்சுயிரும் ஆகியவற்றால் நேரக்கூடிய சேதத்துடன், அவன் தெய்வத்தை நோக்கியிட்ட சூளுரைப் பொய்ப்பால் வரக்கூடிய ஊற்றுக்கும் தலைவி அஞ்சியிருந்தமை, ``அந்தரத் தெழுதிய எழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்'' (கற்பியல், 4) என்னுந் தொல்காப்பிய அடிகளால் உணரலாம். மேற்கூறிய இருபாற் குணங்களுடன் இரண்டொன்று கூட்டி, அறிவு நிறை ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற் குணமென்றும், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நான்கும் பெண்பாற் குணமென்றுங் கூறினர் பின்னோர். ``அறிவொடு நிறையே யோர்ப்புக் கடைப்பிடி குணநான் காமே'' ``நாணமே மடமே யச்ச நாட்டிய பயிர்ப்பு நான்கும் மாணிழை மடநல்லார்க்கு வைத்த நாற்குணங்களாகும்'' (சூடாமணி நிகண்டு, 12: 16, 17) அவ்வையும் காக்கைபாடினியும்போலும் புலவியரும், தடாதகையும் மங்கையும்போலும் அரசியரும், கண்ணகியும் திலகவதியும்போலும் கற்புடையாரும், கவுந்தியும் மணிமேகலையும்போலும் துறவியரும் இந்நாட்டிலும் இருந்திருக்க, அறிவு முதலிய நாற்குணங்களை ஆண்பாற்கே சிறப்பாகக் கூறியது, நந்நாட்டுப் பெண்டிர்க்கு இற்செறிப்பு காரணமாக அறிவுக் குறையும் பெண்டிர்க்கெல்லாம் இயல்பாகவுள்ள மென்மையும் பற்றியேயாம். இற்செறிப்பு பெண்டிரின் ஒழுக்கக்காப்பும் உயிர்க்காப்பும் நோக்கியது. பெரும்பாலும் வெளியேறாது வீட்டுக்குள்ளேயேயிருப் பவர்க்கு, அல்லது, அயலிடஞ் செல்லாது உள்ளூரிலேயே வதிபவர்க்கு அறிவு மட்டாயிருத்தல் மிகுதி. நந்நாட்டிற் பெண்டிர் சிற்றிளம் பருவத்தி லேயே இல்லறத்திற் புகுத்தப்பட்டு வந்தமையின், அவர்க்கு உயர்தரக் கல்விக்குப் போதிய வாய்ப்பு மிருந்ததில்லை. இதனால், ஒப்புநோக்கிய முறையில், பெரும்பான்மை பற்றி, மடத்தைப் பெண்பாற் குரித்தாக்கிப் பேதை மடநதை மடவால் முதலிய பெயர்களை வழங்கினர். பொதுவாகப் பெண்டிர்க்குப் பூப்படைந்தவுடன் மண நிகழ்ந்தமையின் பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபதாண்டிற்கு மேற்பட்ட கணவன், தன் இளமனைவியைப் பேதை அல்லது மடந்தை யென்றதனாற் குற்றமில்லை. அது, ``அஞ்சன் மடவனமே'' என்றாற்போல இளமை நோக்கிய அருமை விளியேயன்றி, அறியாமை நோக்கிய இழிப்பு விளியன்று. மேலும், நந்நாட்டில் ஆடவரின் மணப்பருவத்திற்கு வரையே யில்லை; மணத் தொகைக்கும் எல்லையில்லை. பெண்டிர்க்கோ கைம் பெண்ணாயின் மறுமணமில்லை யென்றும், வாழ்நாள் முழுதும் ஒருவனையே மணக்க வேண்டும் என்றும் வரம்புளது. இதனால் கணவனின் மூப்பும் மனைவியின் சிற்றிளமையும் பெருவழக்காம். மடம் என்னுஞ் சொல்லுக்கு இளமை யென்றும் பொருள், இளமையில் அறிவு முதிராமையின், எழுதிற இளம்பெண் பருவங்களில் முதலதான பேதைப் பருவம் ஐந்து முதல் ஏழாண்டுவரைப் பட்டதாதலையும் நோக்குக. இதனால், இளமையும் இற்செறிப்பும் அறிமடமும் பற்றியதே பெண்டிர்மடம் எனவும், அது எத்துணையும் இழிவு குறித்ததன்றெனவும், ஆடவரும் அறிவில்லாக்கால் பேதைப் பெயர்க்குரியர் எனவும், ஆன்மாவை ஆணவமலம் பிணித் திருப்பதுபோலப் பெண்பாலையே பேதமைக்குணம் இயல்பாய்ப் பற்றிக் கொண்டிருப்ப தன்றெனவும் அறிந்துகொள்க. ``ஒதி யுணர்ந்தும் பிறர்க்குறைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில்'' (குறள். ) என இருபாற் பொதுவாயும், ``அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்'' (குறள்.) என ஆடவரையே சுட்டியும் திருவள்ளுவர் பேதையென்னும் பெயரை வழங்கியமை காண்க. இனி பெண்டிர்க்கு மென்மைத் தன்மை சிறக்க, ஆடவர்க்கு இன்பஞ் சிறப்பதாம். அம் மென்மைத்தன்மைக்கு அணிகலமா யிருப்பது பேதைமையாம். ``பேதைமை யென்பது மாதர்க்கணிகலம்''. பெண்டிர்க்கு இயல்பாகவுள்ள மென்மைத் தன்மையால் இரக்கம் சிறந்து, துன்பங் கண்டவிடத்துப் பிறர் பொருட்டு அச்சந் தோன்றும். ஏனை நாணமும் பயிர்ப்பும் சிறந்த குணங்களென்று கூறவேண்டா. இனி, ஆடவர்க்கு வன்மையும் பெண்டிர்க்கு மென்மையும் சிறப்பியலாதலானும், மென்மையினும் வன்மையே சிறந்ததாதலானும், ஆடவரே சிறந்தவர் எனின், அவ்வன்மை மென்மையாகிய இரண்டும் ஒன்றையொன்று இன்றியமையாமையானும், பயம் பாட்டளவில் இரண்டும் ஒத்திருத்தலானும் மென்மையைத் தழுவிக் தாங்குவதே வன்மையின் பயனாதலானும், மென்மையே இன்பந் தருவதா யிருத்தலானும், இருபாலரும் ஒருபாலரே யெனக் கூறி விடுக்க. இங்ஙனம் இருபாலரும் ஒருபால ரல்லரெனின், ``ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியும் காண்க'' (தொல், பொருள், 2) ``அதுவே, தானே யவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல்'' (இறையனாகப்பொருள், 2) என்னும் நூற்பாக்கள் பொருளற்றன வென்க. மேற்கூறிய அச்சம் முதலிய நாற்குணங்களுடன் மணாளன் அல்லது கணவன் மீதுள்ள அன்புஞ் சேர்ந்தது காதல். காதல்வேறு, கற்புவேறு, காதலில் கற்புண்டு; கற்பில் காதலிருப்பது யாப்புறவின்று. வாழ்நாள் முழுதும் மணம் விரும்பாதவளுக்கும் துறவியா யிருப்பவளுக்கும் கற்பிருக்கலாம்; ஆனால் காதலிராது. அச்ச முதலிய நாற்குணங்களுள், நாணம் பயிர்ப்பு என்னும் இரண்டும் கற்பா யமையும்; ஆனால் காதலா யமைவது ஒன்றுமில்லை. ஆகவே, அச்ச முதலிய நான்கும் (ஒழுக்கமுள்ள) பெண்பாற் பொதுக்குணமும், காதலொன்றும் (அன்புள்ள) மனைவியின் சிறப்புக் குணமுமாகும். கணவன் மனைவியாகிய இருவர்க்கும் காதல் ஒருபடித்தாய் இன்றியமையாதது. அது இல்லற வாழ்க்கைக்குரிய நற்குணங்க ளெல்லாந் திரண்டு முழுநிறைவானது. அது இரு கைகோளுக்கும் பொது. சிலர்க்குக் களவிலேயே தொடங்கலாம்; சிலர்க்குக் கற்பில்மட்டும் தொடங்கலாம். கற்பெல்லாம் காதலற்றதென்று கொள்வது தவறு. களவில் வெளிப்பட வாய்ப்பில்லாத காதல், கற்பில்தான் வெளிப்படும். அத்தகைக் காதல், கரணமும் வாயிலும் பெற்றதேனும், காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போன்றதே. களவிலும் சூளுறவாகிய கரணமும், பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்களுமுண்டே! களவிற்கு அல்லது காதலுக்கு மெய்யுறு புணர்ச்சி இன்றியமையாது வேண்டுவதின்று; உள்ளப் புணர்ச்சியே போதும். ``உள்ளப் புணர்ச்சியு மெய்யுறு புணர்ச்சியுங் கள்ளப் புணர்ச்சியும் காதலர்க் குரிய,'' (நம்பியகப்பொருள், 34) உள்ளப் புணர்ச்சியையும் மெய்யுறுபுணர்ச்சியோ டொப்பக் கொண்டமையானேயே, திலகவதியார் போன்ற பண்டைக் கற்புடை மாதர், மணப்பேச்சு நிகழ்ந்து மணம் நிகழாதவழியும் கணவனிறந்தவிடத்து உயிர்நீக்கவும் கைம்மை நோற்கவும் தலைப்பட்டனர். உயர்ந்தோர் உள்ளப் புணர்ச்சியாலும் இன்பம் நுகர்வர்; தாழ்ந்தோரே மெய்யுறு புணர்ச்சியினாய இன்பமே வேண்டுபவர். இனி மணமக்கள் இருவரும் மணப்பேச்சிற்கு முன் ஒருவரை யொருவர் ஒருவகையாலும் அறியாதவரா யிருப்பினும், மணப்பேச்சுவழி அறிந்தவரேயாவர். அவரிடைக் காதல் தோன்றுமாயின் இரும்பைக் காந்தமிழுப்பது போலும், கட்டையில் தீப்பற்றுவதுபோலும் ஒருவர் மனத்தை ஒருவர் மனம் இழுத்துப் பற்றிக்கொள்ளும். வேட்டஞ்சென்ற தலைமகனும் புனங்காத்த தலைமகளும் காட்டில் ஒருவரை யொருவர் கண்டது போன்றே. மணப்பேச்சிற் குரிய மணமக்களும் வீட்டில் ஒருவரை யொருவர் காண்கின்றனர்; கண்ணாற் காணும் வாய்ப்பின்றேல் கருத்தா லேனுங் காண்கின்றனர். காதலுக்குக் காணுவதுங் கண்ணுவதும் ஒன்றே. உள்ளத்தால் மட்டும் கலக்கும் நட்பிற்கே புணர்ச்சியும் பழகுதலும் வேண்டாது உணர்ச்சியே போதுமெனின், உள்ளத்தாலும் உடலாலும் இரண்டறக் கலக்கும் காதலுக்கு உணர்ச்சி போதுமெனச் சொல்லவும் வேண்டுமோ? காதல் வாழ்க்கைக்கு அல்லது உண்மையான மணவாழ்க்கைக்கு, வாயிலும் கரணமும் இன்றியமையாது வேண்டுபவல்ல. ``கண்ணோடு கண்ணிணை, நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில'' (குறள்.) என்றார் திருவள்ளுவர். கோவையில் முதலாவது கூறப்படும் இயற்கைப் புணர்ச்சி, தலைவனுந் தலைவியும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய்க் கூடிப்புணரும் தெய்வப்புணர்ச்சியே. அதன்பின் அத்தகைப் புணர்ச்சிக்கு இடமின்மையானேயே, பாங்கனும் பாங்கியுமாகிய வாயில்கள் வேண்டப்படுகின்றன. அவ்வாயில்களாலும் இயலாதவழி கற்பு அல்லது கரணம் வேண்டப்படுகின்றது. உண்மையான கற்பாவது களவு வெளிப்பாடேயன்றிக் கரணமன்று. முதற்காலத்தில் கரணமில்லாமலே மக்கள் இல்லறம் நடாத்தி வந்தனர். மகப்பேறு காதலை வெளிப்படுத்தி விடுமாதலின், வாழ்நாள் முழுதும் களவொழுக்கம் இயலுவதன்று. ஆகையால், முன்பு களவும் பின்பு கற்புமாக மணவாழ்க்கை இருபகுதிப்பட்டது. பருவ மகனும் மகளும் முதலாவது கூடுங் கூட்டம், காமப் புணர்ச்சி காதற் புணர்ச்சி என இருவகைப்படும். இவற்றுள் முன்னது காமத்தால் மட்டும் நிகழ்ந்து பின்பு தீர்வது; பின்னது காமத்தோடு கூடிய அன்பால் நிகழ்ந்து காலமெல்லாம் நீடுவது. இது எண்ணாது (தெய்வத்தால்) நிகழ்வதும் எண்ணி நிகழ்வதும் என இருவகைத்து. இவ்விருவகையிலும் காதல் கரைபுரண்டோடி எத்துணைத் தடைகளையுந் தகர்த்தெரிந்து இறுதிவரை இன்பஞ் சிறப்பதே. முதற்காலத்தில் நடந்த களவெல்லாம் காதற் புணர்ச்சி யாகவே யிருந்தது. பின்பு, இடைக்காலத்தில் சில பல களவுகள் காமப்புணர்ச்சியயொழியவே, முனிவரால் கரணம் விதிக்கப்பட்டது. ``பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரண மென்ப'' (தெரில் கற்-4) ஆயினும், கரணத்தால் மட்டும் பொய்யும் வழுவும் தீர்ந்துவிடாது. உண்மையான காதல் வாழ்க்கை கரணமற்றதேனும் பழிக்கப்படாது. அலங்காரமும் மக்கட் கூட்டமும் இன்னிசையும் உண்டாட்டும் ஊர்வலமும் வரிசையளிப்பும் ஆகிய ஆரவாரமே கரணத்தைச் சிறப்பிப்பது. இவ் வாரவாரம் சற்றும் அற்றதாயின் கரணமும் பொதுமக்களால் சிறிது பழிக்கப்படுவதே. கரணத்தின் வழிப்பட்டவாழ்க்கையிலும் பொய்யும் வழுவும் தோன்று மாயின் அதுவுங்கரணமற்றதே. கரணவழிப்பட்ட பல இல்லறவாழ்க்கையில் பொய்யும் வழுவும் இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். கரணமற்றதாயினும் உண்மையான காதல் வாழ்க்கையாயின் இன்றும் பழிக்கப்படாது ஏற்றுக் கொள்ளத்தக்கதே. மக்கள் இம்மையில் அடையக் கூடிய இன்பங்களுள் தலை சிறந்தது பெண்ணால் வருவது. ``கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடியாள் கண்ணே யுள.'' (குறள், 1111) அதுவுங் காதலோடு, கூடியதாயின் சிற்றின்பமேனும் பேரின்பத்திற் கிணையாகக் கூறத்தக்கதாம். ``தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு'' (குறள்.) என்றார் திருவள்ளுவரும், ``எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉ மேவற் றாகும்'' (தொல். பொருளியல், 28) இக்காதலின்ப வாழ்க்கையில் வறுமையில்லை, நோயில்லை, துன்பமில்லை, கவலையில்லை, ஒரு குறையுமில்லை. ``இல்லதென் இல்லவள் மாண்பானால்'' என்றார் திருவள்ளுவர். எத்தால் வாழலாம் ஒத்தால் வாழலாம். காதலனும் காதலியும் தானென்றும் அவளென்றும் வேற்றுமை யின்றி ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றி நுகரும் இன்பம் இருவர்க்கும் பொதுவேனும், காதலனே மிகுதியாக நுகர்கின்றான். இதனாலேயே, ``விலங்கலைக் கால்விண்டு மேன்மேலிட விண்ணு மண்ணு முந்நீர்க் கலங்கலைச் சென்ற வன்றுங் கலங்காதவன்'' (திருக்கோவை, 24) ``தில்லைச்சிவன்றாளாம் பொற்றடலர் சூடும்'' (க்ஷ 21) ஆற்றலகற்றப் பெற்று, ``மடுக்கோகடலின் விடுதிமிலன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக்கோ பரன்றில்லை முன்றிற் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்காய குற்றேவல் செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே'' (க்ஷ 63) என எளிவந்தும் இழிவந்தும் குற்றேவல் செய்யவும், ``முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய் வழங்கா தவரின் வழங்கவும்'' (க்ஷ 157) மடலேறியும் ஏறுதழுவலும் புலிப்பால் கறத்தலும் கோளரியைக் கொல்லுதலும் முதலிய மறச்செயல் செய்தும் மணக்கவும், கரணத்தின் பின் புதல்வனைப் பெற்ற பின்பும் மனைவியைக் காலுங் கையும் பிடித்து வேண்டவும் (க்ஷ 590) துணிவது. இங்ஙனம் காதலி அல்லது கற்புடை மனைவி முதலாவது தன் காதலலுக்கு இணையற்ற இன்பம் பயக்கின்றாள். இரண்டாவது, கணவன் களவில் கூட்டந்தடைப்பட்டவழி மடலேறியும் பிதற்றியும், நிறையழிந்து பெருமையிழந்த விடத்தும், காதலி நிறைய யழியாது அடக்க வொடுக்கமாயிருக்கின்றாள். ``கடலன்ன காம முழுந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.'' (குறள்.) என்றார் திருவள்ளுவர். ``எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான'' (அகத்திணை இயல், 38) ``செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான'' (பொருளியல், 15) என்பன தொல்காப்பியம். ஆகவே, அறிவு, நிறை, ஓர்ப்பு கடைப்பிடி என்னும் நான்கும் ஆண்பாற்கே யுரியவையல்ல என்பது வெளியாம். அறிவுள்ள விடத்தில் ஏனை மூன்றும் அமையும். பெண்பாற்கும் அறிவுண்டென்பது இருவகை வழக்கிலும் கண்டதே. காதலன் தன்னைக் கைப்பற்றிய விடத்துக் கத்தினும், தாய்வந்தபோது அவனுக்குத் தண்ணீர் விக்கியதென்று சொல்வது, அறிவோ? அறிவின்மையோ? பெண்டிரிடைக் கல்வி பரவின் அவரும் ஆடவர்போல் அறிவுபெறுதல் திண்ணம். மூன்றாவது, கரணத்தின்பின் கணவன் தன்னைக் கைவிட்டுப் பரத்தையிற் பிரிந்த விடத்தும் மறுமணஞ் செய்த விடத்தும், காதல் மனைவி அவன்மாட்டு கடுகளவுங் காதல் குன்றாதிருக்கின்றாள். அவன் ஆணை பொய்த்தனிமித்தம் அவனுக்குத் தீங்கு நேராதபடி தெய்வத்தையும் இரவும் பகலும் வேண்டுகின்றாள். தன் பெற்றோரையும் விட்டு விட்டு, எத்துணைச் சிறந்தவனாயினும் வேறொருவனையும் கனவிலும் கருதாது, தன்னையே தெய்வமாக இறுகப்பற்றிக்கொண்டிருக்கும் மெல்லியலை மறந்து அவள் உயிரோடிருக்கும்போதே அவள் கண்ணெதிரே வேறொருத்தியை மணக்கும் ஆடவன் வன்மைதான் என்னே! நான்காவது, தலைவன் தனக்கு எத்துணைத் தீங்கு செய்யினும் அதைப் பொருட்படுத்தாதும் தன்னலங் கருதாதும் அன்னையும் அடியாளும் அமைச்சியும் போலப் பல்வகையிலும் அவனுக்குப் பணிவிடை செய்கின்றாள். கற்புடை மனையாள் தான் கணவனுக்கென்றே வாழ்ந்து அவனில்லாதபோது அலங்கரிப்பதும், சிறக்க உண்டுடுத் துறங்குவதும் ஒழிகின்றாள். கணவன் தனக்குச் செய்யுங் கொடுமையைத் தாய் கூறினும் கடிந்து அவன் இயற்படமொழிகின்றாள். ஐந்தாவது, இரப்போர்க்கீந்தும் அடியார்ப் பேணியும் விருந்தோம்பியும் பிறர்க்குத் தொண்டு செய்கின்றாள் கற்புடையில்லாள். ஆறாவது, பஞ்சகாலத்தும் மழைபொழிவிக்கவும், தேவையான விடத்து ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுடையவளாயிருக்கின்றாள் கற்புடைப்பெண். இவ்வாற்றல், இல்லறம் துறவறம் மணவாழ்க்கை ஆகிய முந்நிலைக் கற்புடைப் பெண்டிர்க்கும் பொதுவாம. இல்லறத்தி லிருந்துகொண்டே தெய்வத்தன்மை பெறவும், துறவியையும் வெகுளவும் வல்ல கற்புடையாளரின் பெருமை கட்டுரைக்குந் திறத்ததோ! ஏழாவது கற்புடை மனைவி தன் கணவனிறந்ததும் உயிர் நீக்கிறாள்; இல்லாவிடின் கைம்மை நோற்கிறாள். ``இத்தகைக் கற்புடைப் பெண்ணை மனைவியாகப் பெறுவதே உலகில் ஒருவன் பெறத்தக்க பேறுகளில் தலைசிறந்ததாம். ``பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின்'' (குறள். ) ``புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன் ஏறுபோற் பீடு நடை'' என்றார் திருவள்ளுவர். ``என்னொடு பொருதுமென்ப அவரை ஆரம ரலறத் தாக்கித் தேரொ டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த nguk U©f ÂtËD« ãÇf!'' (புறம். 7) என்பது ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினம். கற்புடைப் பெண்ணை யுடைமைபற்றிப் பலவரசர் புலவராற் பாராட்டப் பெற்றனர். ``செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ'' (புறம். 3) ``ஓடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ'' ``ஆன்றோள் கணவ'', ``புரையோள் கணவ'' (பதிற்றுப்பத்து, 14, 55, 70) கற்புடை மனைவியை இங்ஙனம் கணவனுக்கு விழுச்செல்வமாகப் பாராட்டியதோடு நில்லாது, அவளை இறந்தபின் தெய்வமாகவும் வணங்கினர் முன்னோர். ``உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்'' (சிலப். ) என்றார் இளங்கோவடிகளும். குமரிமுதல் பனிமலை வரை தன் ஆணையைச் செலுத்திய செங்குட்டுவனும் பிறவரசரும் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டனர். துரோபதையம்மன் ஒச்சாண்டம்மை முதலிய தெய்வங்களும் கற்புத்தெய்வங்களே. மறச்செயல் புரிந்த கற்புடைப் பெண்ணைத் தெய்வமாக வணங்கும் வழக்கமே, கடவுளின் ஆற்றலைப் பெண்பாலாக உருவகிக்கவும் போர்த்தெய்வத்தைப் பெண்பாலாகக் கொள்ளவுங் காரணமாயிருந்திருக்கலாம். போரிலிறந்த சிறந்த மறவரும் வணங்கப்பட்டனரேனும், அவரைத் தாழ்ந்தோரன்றி உயர்ந்தோரேத்த இதுகாறுங் கண்டிலம். ஆகையால் பெண்பால் எந்நிலையினும் ஆண்பாலினுந் தாழ்ந்ததன்றென்பதும் கற்புடை மனைவியே ஒருவனுக்கு இம்மையில் தலைசிறந்த பேறென்பதும் மறக்கொணாத முடிபுகளாம். பட்டினத்தாரும் சிவப்பிரகாசரும் போன்ற அறிஞர் பெண்டிரைப் பழித்துக் கூறியதெல்லாம், விலைமகளிரின் தீயொழுக்கமும் வீடுபேற் றிற்குத் தடையான உலகக் கவர்ச்சியும் பற்றியேயன்றிப் பெண்பாலின் இழிவுபற்றி யன்று. இதுகாறுங் கூறியவாற்றால், ஆண்பெண்ணாகிய இருபாலும் ஓரன்னநிலையவென்றும் இருபாலுக்கும் இயற்கையிலேயே பெருமை யில்லையென்றும், பெண்பாலரிற்போல் ஆண்பாலரிலும் இழிந்தாருண் டென்றும், கற்புடை மனைவியே மனைவியென்றும், காதல் வாழ்க்கையே வாழ்க்கையென்றும். இல்லறவின்ப வாழ்க்கையை நடாத்துபவர் கணவன் மனைவியாகிய இருவருமே யாதலின் அவர்க்குப் பிறர்துணை இன்றியமை யாததன்றென்றும், மனப்பொருத்தமே மணப் பொருத்தமென்றும், உண்மையான மணம் கூட்டமேயன்றிக் கரண மன்றென்றும், காதலர் கூடியபின் இறப்பினா லன்றிப் பிரிப்பில்லையென்றும், காதல் வாழ்க்கை மண்ணுலகை விண்ணுல காக்குவதென்றும், இதுவே முன்னைத் தமிழர்கண்ட அன்பு நெறி அகப்பொரு ளின்பவாழ்க்கை யென்றும் அறிந்து கொள்க! குறிப்பு:-கற்புள்ள மனைவியும் கணவனிறந்தபின் மறுமணஞ் செய்யலா மென்பது இக்காலக் கருத்தாம். மனைவியிறந்த பின் கணவன் மறுமணஞ் செய்யும் போது, மனைவிக்கு மட்டும் என்னோ தடை! நாவலந் தேயத்தில் ஆடவராற் பெண்டிர்க்குச் செய்யப்படுங் கொடுமை அளவற்றதாகும். பெண்டிரின் அடிமைத்தனத்தைப் போக்கியபின்பே ஆடவர் தம் அடிமைத்தனத்தைப் போக்கற்பாலர். தொன்று தொட்டு வரும் பெண்டிரின் அடிமைத்தனமே பெண்பாலைத் தாழ்வாகக் கருதக் காரணமாகும். ஆனால், உண்மையில் இருபாலரும் ஒன்றே. மென்மை யாலாகும் இன்பத்தையெல்லாம் நுகர்ந்து கொண்டு அதை வன்மையால் ஒடுக்குவது முறையோ? கணவனிறந்தபின் கற்புடை மனைவி உயிரைத் துறப்பது அளவுக்கு மிஞ்சியதாகக் கருதப்படுகின்றது. கபிலரும், பிசிராந்தையும் பொய்யாமொழியும் போன்ற வன்மைபெற்ற ஆடவரே நட்புரிமை காரணமாகத் தம் நண்பர் இறந்தவுடன் உயிரைத் துறப்பாராயின், மென்மையிற் சிறந்த கண்ணகியும் பூதப் பாண்டியன்றேவியும் போன்ற மெல்லியலார் தம் கணவரிறந்தவுடன் உயிரைத் துறவாது வேறென் செய்வர்? ஆயினும், புலவரெல்லாம் தம் நண்பரிறந்தால் உயிர் விடுவாரல்லர்; அதுபோன்று கற்புடைய மனைவியாரெல்லாம் தம் கணவரிறந்தபின் உயிர்விடுவாரல்லர். ஈரிடத்தும் உயிர் விடுவதற்குக் காரணம், உணர்ச்சி மிகுதியே. அஃதுள்வழி போற்றப்படினும், இல்வழி இகழப்படாது. 18 அசுரர் யார்? புராணங்களிலும் புராணச் செய்தி குறிக்கும் இலக்கியங்களிலும் அசுரர் என்னும் வகுப்பாரைப் பற்றி அடிக்கடி படிக்கின்றோம். அவருள் கயமுகாசுரன், சம்பராசுரன், தாரகாசுரன், நரகாசுரன் பகாசுரன், விருத்திராசுரன், முதலிய சிலர் மிகப் பெயர் பெற்றவர். அசுரரெல்லாரும். இயல்பாகக் மிகக் கொடியவரென்றே கூறப்படுகின்றனர். இவ்வசுரர் யார்? சுரர் என்னும் தேவருக்கும் பகைவர் என்றும், விசும்பில் (ஆகாயத்தில்) இயங்கக் கூடிய பதினெண் கணத்தாருள் ஒரு கணத்தார் கூட்டத்தார் என்றும் அரக்கரைப் போலக் கொடியவரென்றும், பண்டைநாளில் இந்தியா முழுவதும் இருந்தவரென்றும், அடியார் முறையீட்டின்பின் அவ்வப்போது சிவனால் அல்லது திருமாலால் அழிக்கப்பட்டவரென்றும், புராணங் கூறும். சுரையென்னும் அமுதத்தை உண்டவர் சுரர் என்றும், அதை உண்ணப் பெறாதவர் அசுரர் என்றும், பெயர்க் காரணம் காட்டப் பெறும். அசுரர்க்கு அவுணர், தாணவர் என்ற பெயருமுண்டு, அசுரர் ``A class of Demons at war with the gods'' என்று சென்னைப்பல்கலைக்கழகத் தமிழகராதி கூறும். அசுரர் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டவரும், மக்களினத்திலின்று வேறுபட்டவருமான ஒருகொடிய வகுப்பினரென்றே புராணங்களும் இதிகாசங்களும் ஒருமிக்கச் கூறினும், ஆராய்ந்து பார்ப்பின், அவர் தமிழரின் அல்லது திராவிடரின் முன்னோரேயென்பதும், அத்துணைக் கொடியவரல்லர் என்பதும் வெளியாகும். அசுரர் வடநாட்டில் மட்டுமன்றித் தென்னாட்டிலும் இருந்திருக் கின்றனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பேரூர்ப் புராணமும் அங்கு முற்காலத் தில் ஓர் அசுரன் அல்லது அரக்கண் இருந்து ஆண்டதாகவே கூறுகின்றது. தஞ்சையில் தஞ்சன் என்னும் அரக்கனும், திருச்சியில் திருசிரன் னென்னும் அரக்கனும் மன்றெச்ச நல்லூரில் மண்ணரக்கன் என்பவனும் பிற நகரங்களில் பிறவரக்கரும், முதற்காலத்தில் ஆண்டனர் என்பது புராண கதை, அசுரரும் அரக்கரும் வெவ்வேறினத்தாராகப் பதினெண்கணப் பாட்டுகளிற் கூறபட்டிருப்பினும், இயலிலும் செயலிலும் ஒன்றுபட்ட வராகவே காட்டப்படுகின்றனர். மேலும் அவ் விரு வகுப்பார்க்கும் ஒருவரே (காசியப முனிவர்) தந்தையென்றும் புராணங் கூறுகிறது. தென்பெருங் கடலில் முழுகிப்போன ஒரு தீவையாண்ட சூரபதுமன் அசுரனாகவே சொல்லப்படுகின்றான். இங்ஙனம் தமிழகமெங்கும் தொன்முதுகாலத்திலிருந்த அரசரை யெல்லாம் அசுரரும், அரக்கருமாகக் கூறுவதே அயிர்ப்பிற்கு (Suspicion) இடனாகின்றது. இனி செங்குட்டுவனிலும், பன்மடங்கு திறமையாக ஆண்ட சேர வேந்தனாகிய மாவலி என்னும் பச்சைத் தமிழனையும் அவன்மகன் வாணனையும், அசுரராகப் புராணாங் கூறுவது. எனைமுது பண்டைத் தென்னாட்டரசரும், தமிழரே என்றும் வாணன் என்னும் பெயரைப் பாணன் என்றும் திருத்தினர் பின்னோர். மணிமேகலை காலத்துச் சோழ வேந்தனாகிய நெடுமுடிக் கிள்ளையின் தேவி சீர்த்தி யென்பவள் மாவலி மரபில் தோன்றிய ஓர் அரசன் மகள் என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். `` நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய வந்தாள் நீரிற் பெய்த மூரிவார்சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவி யொடு ............... இந்திர திருவன் சென்றினி தேறலும் மணிமேகலை (19.51 - 116) இப்பகுதியில் மாவலிக்கு ``மூரி வார்சிலை'' என்னும் அடை கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. சேரனுக்குச் சிறப்பாக உரியசின்னம் வில். மூரிவார்சிலை - வலிமையுள்ள நீண்ட வில் ``மூரிவெஞ்சிலை'' என்றார் கம்பரும் (கம்பராகும் - 26). மாவலியின் மகன் வாணன் அவன்வழியினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருக்கோவலூரைச் சூழ்ந்த மகதையென்னும் நடுநாட்டை 14ஆம் நூற்றாண்டு வரை வானகோவரையர் என்னும் பட்டப் பெயருடன், பெரும்பாலும் சேர வேந்தர்க்கடங்கிய சிற்றரசராயும், படைத் தலைவராயு மிருந்து ஆண்டு வந்ததாகச் தெரிகின்றது. வாண கோவரையிரைப் பற்றி வி.நா. இராமச்சந்திர தீட்சிதர் கூறுவது:- மகாபலியின் வமிசவத்தர்களாக வழங்கப்பட்ட இவர்கள், சங்ககால முதலே பலம் பெற்ற சிற்றரசராயிருந்தவர்கள். அக்காலத்தில் சோணாடாண்ட கிள்ளிவளவனது பட்டத்துத் தேவி சீர்த்தி என்பவளை மாவலி மருமான் சீர்கெழுத் திருமகள்' என்று மணிமேகலை கூறுதலுங் காண்க. பிற்காலத்தில் இன்னோர் நடுநாடான மகதை மண்டலத்தின் தலைவர்களை ஆறகழூர் அல்லது ஆறை என்ற நகரிலிருந்து ஆட்சி செய்து, சோழ ஏகாதி பத்தியத்தின் பெருமையைத் தாங்கி வந்தார்கள். நம் சோழனது ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியில் விளங்கிய வாணவரசன் ``ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோவரசன்' என்பவன். இவன் சாசனங்கள் சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை ஜில்லாக்களில் அமைந்துள்ளன. இவனன்றி இக்காலத்தில் மிகவும் பிரபலனாக விளங்கியவன். ``ஆறகளுருடைய மகதேசன் ராஜ ராஜ தேவன். பொன் பரப்பினான் வாணகேசவரைமன்'' எனப்பட்டவன். திருவண்ணாமலை கோயிலிலும் பிறவிடங்களிலும் வரைந்துள்ள கல்வெட்டுகளில் இவ்வாணனைப் பற்றிய பாடல்கள் பல உள்ளன. அவையாவும் சொற்சொரிவும் பொருட் பொலிவும் பெற்று விளங்கும். அவற்றிலிருந்து பெருந்தமிழ்ப் புலவர்களில் புகழ்மாலை சூடியவன் இவன் என்பது தெரியலாம். இவனது வீரச்சிறப்பும் வெற்றிகளும் அறச்செயல்களும் அப்பாடல்களில் மிக அழகாகச் சிறப்பிக்கப்படுகின்றன. இவன் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலைப் பொன் வேய்ந்தவனாதலால் ``பொன் பரப்பினான்'' என்ற பெயர் இவனுக்கு வழங்கியது. (மூன்றாம் குலோத்துங்கச் சோழன் பக். 65, 66) மாவலி வழியினரைப் பற்றி வி. வெங்கையர் வரைவது. பாண வம்சத்து அரசர்கள் மகாபலியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கல்வெட்டுக்கள் வடஆர்க்காடு ஜில்லா வேலூருக்கடுத்த திருவல்ல மென்கிற கிராமத்திலும், மைசூர் சமதானத்தில் குல்கான்பொடே என்கிற ஊரிலும் கிடைத்திருக்கின்றன. முவ்வுலகிலும் தொழப்பட்டவனாயும் தேவர்களுக்கும் அசுரர் களுக்கும் தலைவனாயுமிருக்கின்ற பரமேசுவரனுக்கு வாயில் காக்கும் படியாக நியமிக்கப்பட்ட மகாபலிபுரத்தைச் சேர்ந்தவன், என்று சில பாணவரசர்கள் தங்களுக்குரிய கல்வெட்டுகளிற் சிறப்பிக்கப்பட் டிருக்கிறார்கள். பாணகுலத்தைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள் இரண்டுண்டு, அவற்றில் ஒன்று சிதம்பரம் கனக சபையின் முகட்டைப் பொன்வேய்ந்த பராந்தகன் என்று சொல்லப்பட்ட வீரநாராயணச் சோழன், பாணவம்சத்தை நின்மூலம்பெய்து அவர் நாட்டை கங்கவம்சத்தைச் சேர்ந்த அத்திமல்ல னென்ற அரசனுக்குக் கொடுத்ததாகச் சொல்லுகின்றது. இந்த வீரநாராயணன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீவித்திருந்தான். மற்றொரு செப்பு பட்டயத்தில் கீழே எழுதப்பட்டிருக்கும் வம்சாவளி கிடைத்தது. பலி; அவன் மகன் பாணன்; அவன் குலத்திற் பிறந்தவன் பாணாதிராசன். இவ் வம்சத்தைச் சேர்ந்த அநேக அரசர்கள் மரித்த பிறகு இருந்தோன் ஜயத்திவர்மன் (இவன் ஆந்திர தேசத்திற்கு மேற்கிலிருந்த நாட்டை ஆண்டவன்) அவன் மகன் முதலாம் விசயாதித்தன். அவன் மகன் ஜகதேகமல்லன் என்கிற மல்லதேவன். அவன் மகன் பாணவித்தயாதரன். அவன் மகன் பிரபுமேருதேவன். அவன் மகன் முதலாம் விக்ரமாதித்தன். அவன் மகன் புகழ் விப்பவர் கண்டன் என்கிற இரண்டாம் விசயாதித்தன். அவன் மகன் விசயபாகு என்று கூறப்பட்ட இரண் விக்ரமாதித்தன், (மணிமேகலை 19.54 உ.வே.சா. அடிக்குறிப்பு) கீழ்வரும் பாடல்கள் 12-ஆம் நூற்றாண்டிலிருந்த ஏகம்ப வாணன் புகழ்பற்றியன. ``பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம் மார்பகலக் கண்டு மகிழ்வோரே - போர்புரிய வல்லான் அகலங்க வாணன் திருநாடே எல்லாம் எழுதலாம் என்று'' வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர் கோன் வானின் புகழுரையார் வா யுண்டோ வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ வுண்டோ அடிதாங்கி நில்லா அரசு. பாண்டியனைப் பேர்மாற்றிப் பாணர்க்க சரகளித்த ஆண்டகையென் றுன்னை யறியேனோ மூண்டெழுந்த கார்முற்றுஞ் செங்கைக் கடகரிவானவுனது பேர்மாற்றுவதரிதோ பேசு.'' என்கவிகை யென்சிவிகை யென் கவசம் என்துவசம் என்கரியீ தென்பரிபக தென்பவரே மன்கவன மாவேந்தன் வாணன் வரிசை பரிசு பெற்ற பாவேந்தரை வேர்தர் பார்த்து,'' தேருளைப் புரவி வாரணத் தொகுதி திறைகொணர்ந்து வரும் மன்னநின் தேசமேதுனது நாமமேது புகல் செங்கையாழ் கடவு பாணகேள் வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக தேவன் ஆறைநகர் காவலன் வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகு நீரிசை பெற்றுலகு புலவன் யாசு வருடம் இப்பரிசு பெற்று மீள்வர லாகும் ஓடும் அவன் முன்றில்வாய் நித்திலச் சிவிகை மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம் ஆரும் நிற்கும் உயர் வேம்பும் நிற்கும் வளர் பனையும் நிற்கும் அதன் அருகிலே அரசும் நிற்கும் அரசைச் சுமந்த சில அத்தி நிற்கும் அடையாளமே.'' ``சேனை தழையாக்கி செங்குருதிச் நீர்தேக்கி ஆனை மிதித்த அடிச்சேற்றில் மானபவன் மாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஓகம்பன் மூவேந்தர் தங்கள்முடி'' இங்ஙனம் மாவலி மரபு வாண கோவரையர் வரை தொடர்ந்து வந்த தூய தமிழ்க் குடியாயிருக்க அவனையும் அவன் மகனையும் அசுரன் எனக்கூறுவது எவ்வாறு பொருந்தும்? இனி அசரர் தமிழர் அல்லது திராவிடர் என்பதற்கு வேறுமொரு சான்றுண்டு. வடநூல்கள் கூறும் எண்வகை மணங்கள் ஒன்றான ஆசுரம், மறச் செயல் புரிந்த மகட் கோடலாம். ஆசுரமாவது! கொல்லேறு கேபிடல், திரிபின்றி செய்தல், வில்லேற்றுதல், முதலியன செய்து கோடல் என்பர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள் சூ. 92 வரை) பண்டை தமிழகத்து முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்த போதே ஒருசேய் கன்னிற்கு அவள் பெயர் குறித்து அதை கொல்லேருக வளர்ப்பதும், அவள் பூப்படைந்த பின் அக்கொல்லேற்றை அடக்குபவனுக்கே அவனைக் கொடுப்பது வழக்கம். ``கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள்.'' (கலித்தொகை) கன்றுகாலி வளர்த்து நெய்பால் விற்கும் இளம் செய்தி இத்தாயின் போரையே தொழிலாகக் கொண்ட பாலை மறவரும் மூவேந்தரும் எத்துணைத் தறுகணாளருடம் துணி செயலாளருமா யிருந்திருப்பார். இதனாலேயே செயற்கருஞ் செயலை அசுரநிருத்தியம் என்றும், அறுவை மருத்துவத்தை (Surgery) அசுரவைத்தியம் என்றும் வடநூல் கூறும். ``ஆரார் தலைவளம்கார் ஆரார்தார் கையெடார். ஆரள் தாஞ் சித்திரத்தில் ஆறாதார் சீராருடம் தென்புலியூர் மேவும் சிவனருள் சேர் அம்பட்டத் தம்பிபுகான் வாசலிலேதான்'' என்னும் கம்பர் பாடல், பண்டைத்தமிழ் அறுவை மருத்துவத்திற்குச் சான்று பகரும். பண்டைக் காலத்தில் மாபேருடல் வலிமையுள்ள மல்லரையும், மறவரையும், உறுவலி மதவலி மாவலி என்றழைப்பது வழக்கம். மாவலிமை யுடைமையாலேயே மாவலி அப்பெயர் பெற்றான். மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி என்று அவனை இகழ்வோரும் புகழ்வர். வரையாது வந்தீயும் வள்ளன்மையும் வருவதற் கஞ்சா வாய்மையும் முறைசெய்து காப்பாற்றும் இறைமையும் மாவலியின் அருடம் பண்புகள். ஆரியத்திற்கு மறிக யிருந்ததினாலோ சிவநெறிக் கடும் பற்றினாலோ சூழ்ச்சியாக மாவலி மாய்க்கப்பட்டான். அதன் முடிவு அவன் மறைந்தது முதல் கடைக்கழக காலம் வரை தமிழகம் முழுவதும் ஆண்டிற்கொரு முறை ஓணநாளிற் கொண்டாப் பெற்றான். இன்று அது அவன் பிறப்பு நாடாகிய மலையாள நாட்டில் மட்டும் நிகழ்ந்து வருகின்றது. மாங்குடி மருதனார் தலையாளங் காணத்து செருவென்ற நெடுஞ்செழியன் மேல் மதுரைக் காஞ்சி பாடியது, ஓர் ஓணத்திரு நாள் என்று கூறப்பெறும், அச்செவியறிவு நூலை ``ஞணத்திருநாளில் அவர் கூறியதற்கு அரிய கருத்து ஒன்றுண்டு, மூவுலகையும் அடக்கியாண்ட மாவலி சக்கரவர்த்தியை ஒடுக்க வேண்டி வாமனாவதாரத்தைக் கொண்டாடுவதே அத்திருவிழா என்பர். அம்மாவலி உத்தம குணசெயல்கள் உடையவனா யினும், தன் ஆசுரவியப்பால் தேவர் முதலியவர்க்கு இடுக்கணர் விளைவித்து வந்தவன். அதனால் கடவுளே அவதாரமூலம் அவன் செருக்கை ஒடுக்க நேர்ந்தது. எத்தனை பெருவலியும் செல்வங்களும் உடைய வனாயினும் தெய்வபலம், இல்லையேல் அவையாவும் சிதைந் தாழியும் என்ற உண்மையை குறிப்பிடுவது அத் திருநாள் என்று கூறுவர் மு. இராகவையங்கார், இது ஆராய்ச்சியிலுள்ள தமிழ்ப் புலவர் கருத்தன்று. சொற்றாவருமையினாலே மாவலி மாய்ந்தான் என்றும் தவறியிருப்ப தப்பியிருப்பான் என்றும் முடிவு கொல்வதற்கே குறள் தோற்றரவுக் (வாமனாவு) கதை இடந்தருகின்றது. கொடையும் வாய்மையும் வழுவிய அறங்களேயன்றி வழுவாய் (பாவம்) ஆகா. அவற்றை ஊக்குவதன்றித் தளர்விப்பது இறைவனுக்கு ஒத்ததன்று. மேலும் மாபலி கொடை வழங்கிய சமையம் வேள்வி என்று கூறப்படுவதால் அது தெய்வப் பற்றைக் காட்டுவதுடன் ஆரிய முறைப்படி சீரிய திருச் செயலுமாகின்றது. ஆதலால் தெய்வத்துக்கு மாறாக அவன் எதுவும் செய்ததாக தெரியவில்லை. தேவர் முதலியவர்க்கு இடுக்கண் விளைவித்தான் என்று வேகடையாய்க் கூறுவது பொருந்தாது. தேவர் யார்? அவருக்கு என்ன தீங்கு செய்தான்? மண்ணுலக வேந்தன் விண்ணுலக தேவருக்கு எங்ஙனம் தீங்கு செய்ய முடியும்? இன்னோரன்ன வினாக்கட்கு விடையின்மையால் அக்கூற்று பொருளற்ற தென கூறிவிடுக்க. குடிகளை அன்பாய் அரவணைத்து காப்பதே அரசன் கடமை. ஆண்டிற் கொருமுறை ஓணநாளில் மாவலி தன் குடிகளை கண்டு போக இறைவனிடம் ஈவு (வரம்) பெற்றான் என்றும் மலையாளியர் அவனைக் கண்டு களிப்பது போல் கொண்டாடுகின்றனர் என்றும் கூறப்படுவது மாவலியின் மாபெருந்தகைமையைக் காட்டுமன்றோ! இதுகாறும் கூறியவற்றால் அசுரர் தமிழரின் முன்னவரே யென்றும், தீயவரல்ல ரென்றும், பாரபாகதத்திற் கொள்வது போல், சுரையென்றும் கள்ளையுண்டவர் சுரர் என்றும் அதை உண்ணாத சான்றோரை அசுரர் என்றும் கூறுவதே பொருத்தமென்றும் தெரிந்து கொள்க. 19 கோசர் யார்? கடைக்கழகக் காலத்தில், கோசர் என்றொரு வகுப்பார் மூவேந்தர்க் கும் படைத்தலைவராகவும், தமிழகத்தில் ஆங்காங்கு வெவ்வேறு சிற்றரசராகவும் இருந்தமை, பழந்தமிழ் நூல்களாலும் செய்யுட்களாலும் அறியக்கிடக்கின்றது. இவ்வகுப்பாரைப்பற்றி அறிஞரிடை பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. காலஞ்சென்ற ரா. இராகவையங்கார், தம் `கோசர்' என்னும் ஆராய்ச்சிச் சுவடியில், கோசராவார் காசுமீர நாட்டினின்று வேளிரையடுத்துக் கோசாம் பியைத் தலைநகராகக்கொண்ட வத்த (வத்ஸ) நாட்டு வழியாய்த் தமிழ்நாடு போந்தவர் என்றும்; வத்தம் அல்லது வச்சம் (வத்ஸம்) என்னும் வடசொற்கு இளைமைப் பொருளுண்மையாலும் அவர் கோசம் என்னும் ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதினாலும், இளங்கோசர் என்னப்பட் டிருக்கலாமென்றும் கோசர் என்னும் பெயருக்குக் கோசம் என்னும் சூள்முறையன்றி, கோசம் (கோசாம்பி) என்னும் நகர்ப்பெயரும், குசர் என்னும் ஆட்டுப்பெயரும், கோசம் (திரவியம்) என்னும் செல்வப்பெயரும், காரணமாயிருக்கலாமென்றும் கோசர் முதற்கண் கொங்கில் வதிந்து பின்பு குடகிற் குடியேறியவர் என்றும்; அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநில மன்னர் கோசர் என்றும்; இது போதுள்ள கைக்கோளரும் செங்குந்தரும் கோசர் மரபினர் என்றும்; பிறவும்; தம் ஆராய்ச்சி முடிபாகக் கூறியுள்ளார். இவற்றுள் ஒன்றிரண்டேயன்றி எல்லாம் உண்மையல்ல. ஒருசார் அறிஞர், கோசரை வம்பமோரியர் படைக்கு முன்னணியாக வந்த வடுகராகவுங் கொள்வர். இதுவும் உண்மை அன்று. கோசர் காசுமீரத்தினின்றோ வத்தநாட்டினின்றோ வந்தவர் என்பதற்கு ஒருவகை வரலாற்றுச்சான்றுமில்லை. அவர் தொன்று தொட்டுத் தமிழ் நாட்டிற் பல்வேறிடங்களில் வாழ்ந்தவரென்பதே, பண்டைத் தமிழ் இலக்கியத்தால் தெரியவருகின்றது. தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மாறானதொன்றும் அவரைப்பற்றிய வண்ணனைகளிற் காணப்படவில்லை. ``பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவனாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயனெறி மரபில்நின் வாய்மொழி கேட்ப ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... மகிழ்ந்தினி துறைமதி பெரும'' (மதுரைக். 771-79) என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடப்படுவதால், பாண்டி நாட்டிலும், `... ... ... ... ... ... ... செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற் றாகி யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கட் கோசர் நியம மாயினும்'' (அகம். 90) என்பதால் சோழநாட்டிலும், ``பல்லார்க்கும் ஈயும் பரிசிற் கொடைத்தடக்கை மல்லார் மணிவரைத்தோள் வண்கோசன்-மல்லலந்தார் செஞ்சொல் செருந்தைதன் தென்னுறந்தை யென்றாளும் வஞ்சிக் கொடிமருங்குல் வந்து'' (யாப்பருங்கலவிருத்தி. ஒழிபியல்) என்னும் பழம் பாட்டால், உறையூரிலும், ``கொங்கிளங் கோசர் தங்கள்நாட் டகத்து'' (சிலப். உரைபெறுகட்டுரை) என்பதால், கொங்கு நாட்டிலும், ``கோசர் துளுநாட்டன்ன'' (அகம். 15) என்பதால், துளுநாட்டிலும், கோசர் வதிந்திருந்தமை புலனாம். கொங்குநாடு பிற்காலத்தில் மூவேந்தரிடையும் பிற சிற்றரசரிடையும் அடிக்கடி கைமாறி வந்திருப்பினும், முற்காலத்தில் சேரர்க்கே உரியதா யிருந்திருத்தல் வேண்டும் என்பது, ``சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்'' என்று அருணகிரிநாதர் பாடியிருப்பதாலும், தகடூராண்ட அதிகமான்குடி வரலாற்றாலும், பிறவாற்றாலும், அறியப்படும். கடைக்கழகக்காலத்தில், முத்தமிழ்நாட்டிலும் ஆங்காங்கிருந்த குறுநிலமன்னர் தத்தம் வலிமிக்க காலத்து, தத்தம் வேந்தர் தலைமையினின்று திறம்பியதொடு அவர் நாட்டையும் கைப்பற்றினர் என்பதற்கு. ``வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூட் கிள்ளி'' (அகம். 205) `தித்தன் உறந்தை'' (அகம். 122) என்பன சான்றாம். இம்முறையே, கொங்கும் துளுவும் கோசர் வயிற்பட் டிருத்தல் வேண்டும். இளங்கோவடிகள் ``குடகக் கொங்கர்'' என வரந்தருகாதையிற்குறித்தது, ஒருகால், குடகுநாட்டுக் கோசரை நோக்கியதா யிருக்கலாம். துளுவும், குடகும் ஒரு காலத்தில் குடகொங்குப் பகுதிகளாக விருந்தன. ``குடகக் கொங்கர்'' என்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. திருநெல்வேலி மாவட்டக் கல்லிடைக்குறிச்சீத் திருமால் கோவி லுக்குக் கோசர்குடி பெருமாள் கோவில் என்று பெயர். அதே மாவட்டத்துக் கழுகுமலையில் ஒரு தெருவிற்குக் கோசர்க் குடித் தெரு என்று பெயர். கோசருட் பெருந்தமிழ்ப் பாவலரான நல்லிசைப் புலவரும் இருந்தனர் என்பதை, ``செல்லூர்க்கோசனார்'' (அகம். 66). ``கருவூர்க்கோசனார்'' (நற்றிணை, 214) என்னும் பெயர்கள் காட்டும். இவையெல்லாம், கோசர் தமிழ்நாட்டிற் கொங்கில் மட்டுமன்றி எங்கும் வதிந்தவர் என்றும், அவர் தமிழரே என்றும், தெரிவிக்கும். வேத ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் இனத்தாரான திரவிடருமே பரவியிருந்ததினால், அகத்தியர் (காசுமீரத்) துவராவதியினின்று பதினெண்குடி வேளிரைத் தென்னாடு கொண்டுவந்தனரென்பதும், காசுமீரநாட்டு வரலாறு கூறும் இராசதரங் கணியில் அந்நாட்டார் கோசம் என்னும் ஒரு சூள்முறையைக் கையாண் டமை கூறப்பட்டிருப்பதும், கோசநாடு எனப் பெயரிய சுனைத்தடம் காசுமீரநாட்டிலுண்மையும், உதயணன் தாய் சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவரான பேர்கோன் கலிக்காமநாயனாரின் குலமாயிருந்ததும், கோசர் வடநாட்டினின்று வந்தவர் எனக் காட்டும் சான்றாகா. மூலப்படை, கூலிப்படை; நாட்டுப்படை, காட்டுப்படை; பகைப் படை, துணைப்படை; என இவ்விருபாலாகப் பகுக்கப்படும் அறுவகைப் படையுள்; நாட்டுப்படை என்பது படைமாட்சி கைக்கோளர் செங்குந்தர் படைகளையும், காட்டுப்படை என்பது கள்ளர் மறவர் படைகளையும் குறிக்கும். படைத்தலைவர் இயல்பாகத் தத்தம் படைமறவர் பாங்காகவே வதிவராதலின், வேந்தரை அடுத்தும் அவர் தலைநகரிலும் என்றுமிருந்த படைத்தலைவர் நாட்டுப்படைத்தலைவரே. ``வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி'' (தொல் மரபியல். 80) ``வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே'' (தொல் மரபியல். 81) என்பவற்றால், நாட்டுவாணராகிய (உழுவித்துண்ணும்) வேளாளர் வேந்தராற் படைத்தலைவராய் அமர்த்தப்பெறுவர் என்பது பெறப்படும்). முடியொழிந்த, ``வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் வாளும்'' (தொல். மரபியல். 83) முதலிய பிறசின்னங்களையுடைய குறுநிலமன்னர், நாட்டுவாணரும் காட்டுவாணருமாக இருவகையர். முடியுடைமூவேந்தர் என்றும் நாட்டு வாணரே. எத்தொழிலராயினும், பிறர்க்குக் கீழ்ப்பட்டு வாழும் மக்களெல்லாம், தம் தலைவர்பொருட்கு உற்றவிடத்துயிர் வழங்குவோரும் வழங்காதோரும் ஆக இருவகையர். ``..................................e£òª தயையும் கொடையும் பிறவிக்குணம்'' என்னும் ஔவையார் கூற்றும், ``அன்பிலா ரெல்லாந் தமக்குரியர்அன்புடையா® என்பு முரியர் பிறர்க்கு'' (குறள்.) என்னும் வள்ளுவர் கூற்றும், அன்பு பிறவிக்குணம் என்பதையும், அஃதுடையார் தம்மால் அன்பு செய்யப்பெற்றோர்க்கு உயிரையும் உதவுவர் என்பதையும், தெரிவிக்கும். இறைவனடியார் தம் திருவடிமைத் தொண்டில் தம் உயிரையும் விட அணியமாய் (தயாராய்) இருப்பதுபோன்றே அரசப்பற்றுமிக்க பணியாள ரும் தம் mரசன்பொருட்டுv‹றும்உÆர்விடஇUப்பர்.இ›îyf¤J நீடுவாழ்ந்து இல்லறஇன்பந்துய்க்கவிரும்பும் பொதுப்பணியாளர் மனநிலையே இஃதாயின், போர்க்களத்து மடிதலைப் பொன்னுலகம் புகுதலாகக் கொண்டு கூற்றுவனையும் அறைகூவவும், கொற்றவைக்குத் தம்மைத்தாமே பலியிட்டுத் தம்தலையைத் தம் வலக்கையிலேந்திக் கூத்தாடவும் வல்ல தறுகண் மறவர் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! பன்னூற்றாண்டுகளாகத் தமிழறசின்மையாலும், கழிபல நூற்றாண் டாகப் பிறப்பொடு தொடர்புற்ற ஆரியமுறைக்குலப் பிரிவினையிண்மை யாலும், தமிழர் பெரும்பாலும் மறமிழந்திருக்கும் இற்றைநிலைநோக்கி, பண்டைத்தமிழர் மறம்பற்றியும் சிலர் ஐயுறுகின்றனர். அவர் தொல்காப்பியப் புறத்திணையியலிலும் படைபற்றிய திருக்குறளதிகாரங்களையும், புறப்பொருள் வெண்பா மாலையையும் நம்பாவிடினும், சில புறநானூற்றுச் செய்யுட்களையும், கரிகால்வளவன், செங்குட்டுவன் முதலியோரின் வடநாட்டுப் படையெடுப்பையும், முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் முதலியோரின் மெய்கீர்த்தியையும், கலிங்கத்துப் பரணியை யும், நோக்கியேனும் தம் கருத்தைத் திருத்திக்கொள்வாராக. பண்டைத் தமிழ்ப்படைமறவருள், போரிற் புறங்கொடுக்கக் கூடாதென்றும் அரசனுக்காக உயிரைத் துறத்தல் வேண்டுமென்றும் சூளிட்டுக்கொண்ட ஒருசாரார் இருந்தனர். அவர் பூட்கை மறவர் என்னப்பட்டனர். பூட்கை உறுதி பூணுதல். அவர்போன்றே, அரசனுக்கு அவ்வப்போது வேண்டும் பணிகளைத் தப்பாது செய்யவேண்டுமென்றும், தப்பின் உயிர் துறப்பதென்றும், சூளிட்டுக் கொண்ட ஒருசார் பணியாளர் இருந்தனர். அவர் வேளைக்காரர் என்னப் பட்டனர். வேளைதவறாது பணி செய்பவர் வேளைக்காரர். அவர் தலைவன் வேளைக்கார நாயகம் என்னப்பட்டான். ``ஓடாப் பூட்கை விடலை'' (புறம். 295) ``போரெனிற் புகலும் புனைகழன் மறவர்'' (புறம். 31) ``உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத் தணிபறை யறையு மணிகொள் தேர்வழ'' (புறம் 68) என்னும் பகுதிகள், பண்டைத்தமிழ்மறவரின் மேற்கோளையும் போர்விருப்பத்தையும் தெளிவாகப் புலப்படுத்தும். பூட்கை, மேற்கோள், கோள் என்பன ஒருபொருட்சொற்கள். ஒன்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதென மேற்கொள்வது மேற்கோள். அங்ஙனமே உள்ளத்தில் அல்லது செயன்முறையிற் கொள்வது கோள், ``மாட்சியின் மாசற்றார் கோள்'' என்று திருவள்ளுவரும் (குறள். 646) கூறுதல் காண்க. கொள்வதும் பூணுவதும் மேற்கொள்வதும் நீன்றிற்கும் தீதிற்கும் பொதுவேனும், கோள் பூட்கை மேற்கோள் என்னும் முச் சொல்லும் வழக்காற்றில் நற்கொள்கையையே குறிக்கும். பூட்கைமறவரும் அவர்தலைவரும் உறுதியான கோளுடைமைப் பற்றிக் கோளர் என்னப்பட்டனர். கை என்பது படையுறுப்பாதலின், படையுறுப்பைச்சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர். ஏனெனில், படையுறுப்பைச் சேராது தற்சார்பான கோளருமிருந்தனர் (Free lance): ``ஒப்பன படையுறுப் பொழுக்கம் சிறுமை கரமும் பின்பிறந் தாளும் கையே'' என்பது பிங்கலம். பெரும்புலவர் ரா. இராகவையங்கார், இடங்கை வலங்கை என்பன படைவகுப்புக்கள் என்றும், அவற்றைச்சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர் என்றும் கூறுவர். இடங்கை வலங்கை என்பன படை வகுப்புகளையன்றி, அரசன் அமர்ந்திருக்கும்போதும் செல்லும்போதும் இடத்திலும் வலத்திலும் இருக்குமாறும் செல்லுமாறும் குறிக்கப்பட்ட குலங்களையே குறித்தலானும், இடங்கையைச் சேர்ந்தவர் வலங்கையையும், வலங்கையைச் சேர்ந்தவர் இடங்கையையும் சேராமையானும், அது பொருந்தாதென்க. கை என்பது படைவகுப்பாதலின், உறுதியான ஒழுக்கத்தைக் கைகொண்டவர் கைக்கோளர் என்பதும் பொருந்தாது. ``அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறம் தெரிந்து தேறப்படும்'' (குறள். 501) என்னும் முறைபற்றியோ, வேறுவகையிலோ, மறம் உண்மை பணிவு நன்றியறிவு, அன்பு, கடைப்பிடி, வலிமை முதலிய பண்பிற் சிறந்தவராக வேந்தரால் தெரிந்தெடுக்கப் பெற்ற கைக்கோளர், தெரிந்த கைக்கோளர் என்னப்பட்டனர். ``பராந்தகன் தெரிந்த கைக்கோளர்,'' ``சுந்தரசோழர் தெரிஞ்ச கைக்கோளர்'', ``பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக்கோளர்'' எனக் கல்வெட்டில் வருதல் காண்க. அரசரின் முழு நம்பிக்கைக்குரியவராயிருந்த கைக்கோளர் அரண்மனையிலும் உவளகத்திலும் அகப்பரிவாரமாகவும் அமர்த்தப் பெற்றனர் என்பது, ``நம்பிராட்டியார் நேரியன் மாதேவி யகப்பரிவாரத்துக் கைக்கோளன் சோறுடையா னருக்கனான அன்பார பாணதி ராயன்'' (S. I. I. Vol. No, 700) எனவரும் கல்வெட்டுப்பகுதியால் அறியலாம். கோளர் குடியிருந்த பலவூர்கள் அவர்குடியாற் பெயர் பெற்றிருந்தன. கொடுங்குன்றத்திற்கு அருகில் திருக்கோளக்குடி என்றொரு மலையடியூர் உளதென்றும் ``கோளர் இருக்குமூர் கோள்களவு கற்றவூர்'' என்றும் காளமேகப்புலவர் தனிப்பாட்டில் `கோளர்' என்பது குடிப்பெயர் என்றும், பெரும் புலவர் ரா. இராகவையங்கார் கூறுவர். பாணன் என்னும் குடிப்பெயர் பாண் என்று குறுகுவதுபோல், கோளன் என்னும் குடிப்பெயரும் கோள் என்று குறுகும். இக்குறுக்கம் பெரும்பாலும் பாண்சேரி, கைக்கோட் படை எனப் புணர்மொழிப் பெயர்களிலேயே நிகழும். ``இப்படிக் சம்மதித்து விலைப்பிரமாணம் பண்ணிக்கொடுத்தோம் ஆதிசண்டேச்சுர தேவர்க்கு, திருநெல்வேலிக் கைக்கோட் சேனாபதிகளோம்.'' (S.I.I. Vol. V. No. 118) எனவரும் கல்வெட்டுப் பகுதியைக் எண்க. சில சொற்களில் ளகரம் சகரமாகத் திரிகின்றது. இதற்கு உளி-உசி, தூளி-தூசி என்பன எடுத்துக்காட்டு. இம்முறையில் கோளன் என்பதும் கோசன் எனத் திரிந்ததாகத்தெரிகின்றது. பின்பு, தேசம்-தேயம் என்பது போல் கோசன்-கோயன் என்றாயிருத்தல் வேண்டும். பாண், கோள் என்னுங் குறுக்கங்கட்கேற்ப, கோயன் என்பது கோய் என்று குறுகுதலும் இயல்பே. ``கோயன் பள்ளி என்பது கருவூரையடுத்துள்ளது. இதனாற் கோசன் என்னும் பெயர் கோயம் என வழங்கப்பட்டதென்று உணரலாம். கோயன் புத்தூர் என்பதும் இப்படிப்பட்டதேயாம், இக்கோயர்குடி கோய் எனவும் வழங்கப்பட்டதென்பது இளங்கோய்க்குடி என்ற பெயரான் அறியலாம். முள்ளி நாட்டு இளங்கோய்க்குடி (அம்பாசமுத்திரத்தின் பெயர்) என்பது சாசனம் Top. List. Tinnevelly Dist. Nos. 28, 29 பார்க்க). ``இளங்கோ படையரசன் முனையதரன்'' (S. I. I. VI. No. 538 of 1909) எனத் தஞ்சையைச் சேர்ந்த கோவலூர்ச் சாசனத்து வருதலான், இக்குடிவழக்குண்மை உணரப்படும். திருநெல்வேலியைச்சார்ந்த கடையம் உள்ள நாடு கோய்நாடு என வழங்கப்படும்.'' எனப் பெரும் புலவர் ரா. இராகவையங்கார் எழுதியிருப்பது பொருத்தமே. (கோசர், பக். 54, 55) ஆயின், ``கோசர் என்னும் சொல்லே நாளடைவிற் கோளர் என மரீஇயினதென்று நினையலாம்.'' (கோசர் பக். 57) என்று அவர் தலைகீழாகக் கூறியிருப்பது பொருந்தாது. சகரம் சகரமாகத் திரிதலன்றிச் சகரம் ளகரமாகத் திரிதலில்லை. தூளி, தூசி என வரு தலும் நினைக'' என அவர் எடுத்துக்காட்டியிருப்பதே அதற்குச்சான்றாம். ஆகவே, கோசர் என்று கடைக்கழகச் செய்யுட்களிலும், கோளர் என்று பிற்காலச் செய்யுளிலும், கைக்கோளர் என்று கல்வெட்டுக்களிலும், குறிக்கப் பெற்றவர் ஒரேவகுப்பினர் என்று துணியத்தகும். பண்டைச் செய்யுட்களில் கோசர் என்ற வடிவமே காணப்பெறுவதால், அதுவே முந்தினதாகும் என்று ஒரு பாலர் கருதலாம். உலக வழக்கு செய்யுள் வழக்கினும் முந்தியதென்றும், செய்யுள் வழக்குச் சொல்லெல்லாம் மூலவடிவத்தைக் காட்டாவென்றும், தெரிந்துகொள்க. நீ என்னும் முன்னிலையொருமைப்பெயரின் மூலவடிவம் நீன் என்பதேயாயினும், முன்னதே செய்யுள் வழக்காகவும் பின்னது உலக வழக்காகவும் இருத்தல் காண்க. ``ஈன்றல் காலையு நட்பிற் கோடார் சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியிற் ... ... ... ... ... ... ... கோசர்'' (அகம். 113) எனவும் ``ஒன்றுமொழிக் கோசர்'' (அகம். 196) எனவும் ``வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர்'' (அகம். 205) எனவும் ``கோசர் நன்மொழி போல வாயாகின்றே'' (குறுந். 15) எனவும் வருவனவெல்லாம், கோசர் ஒரு பூட்கையை அல்லது கோட் பாட்டையுடையவரென்றே புலப்படுத்தல் காண்க. இனி, ``இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர்'' (அகம். 90) எனவும் ``துணைகா லன்ன புனைதேர்க் கோசர்'' (அகம். 251) எனவும் ``வளங்கெழு கோசர் விளங்குபடை'' (அகம். 205) எனவும் ... ... ... ... ... ... ... .... .... .... .... வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற் பெருமரக் கம்பம் போல (புறம். 169) எனவும் ``வலம்புரி கோசர் அவைக்களத் தானும்'' (புறம். 283) எனவும் ``மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்' (அகம். 15) எனவும் ``கோசர் துளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்'' (அகம். 15) எனவும் வருவனவெல்லாம், கோசர்தமிழர்க்குமாறான ஓரியல்பும் உடையரல்லர் எனக் காட்டுதல் காண்க. இனி, செங்குட்டுவன் மோகூர்ப் பழையனை வென்று அவன் காவன்மரமாகிய வேம்பின் அடியை வெட்டிய செய்தியைக் கூறும், ``வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து மொய்வளஞ் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழூஉநிலை யதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலின் அவற்பரந் தொழுக ... ... ... ... ... .... .... .... .... .... .... .... .... .... .... கருஞ்சினை விறல்வேம் பறுத்த குட்டுவன்'' (49) என்னும் பதிற்றுப்பத்துப் பகுதியுள் வரும் `நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்' என்னும் தொடர். ``இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர்'' (குறள். 779) என்னும் குறளொடு பொருந்திய, தமிழ்ப் பூட்கை மறவரின் போது வியல்பைக் குறிப்பதன்றி, வேற்றுநாட்டு மறவரின் சிறப்பியல்பைக் குறிப்பதாகாது. ஆதலால், ``இழிசின னாகிய காசன் அரசனுடைய ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன்'' எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் மேற்கோள்காட்டும் காசுமீரநாட்டு வரலாறாகிய இராசதரங்கணிப்பகுதி, கோசர் தமிழரல்லர் என்னுங் கொள்கைக்குச் சான்றாகாமை காண்க. தமிழகத்தையடுத்து வடக்கிலுள்ள வடுகர், மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பில் அவர்படைக்கு முன்னணியாக வந்துதவினர் என்பது, ``முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு'' (281) என்னும் அகப்பகுதியால் அறியலாகும். மோகூர் மன்னனாகிய பழையன் மோரியர்க்குப் பணியாமல் எதிர்த்துநின்ற போரில், கோசர் தம் சொல் தவறாமல் மோகூரையடுத்த ஆலம்பலத்துத் தோன்றி அவனுக்குதவின செய்தியை, ``மழையொழுக் கறாஅப் பிழையாவிளையுட் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன'' (மதுரைக்காஞ்சி. 507-9) ``பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பூ தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே... ... ... ... ... .... .... ..... (குறுந்தொகை.15) ``... ... ... ... ... ... ... ... வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க்கோச® தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர்'' (அகம். 251) என்னும் பகுதிகள் தெரிவிக்கும், கோசர் காசுமீரத்தினின்று வத்தநாட்டு வழியாய்த் தமிழ்நாடு வந்த வடவரெனின், தமிழரையடுத்த வடுகரே வடநாட்டராகிய மோரியர்க்கு cjவியிருக்கும்போது,அtUம்உதthதிருந்திருப்பரோ? மேற்fh£oa மதுரைக்காஞ்சிப் பகுதியுள் tந்துள்ள`நான்மொழிக்nகாசர்'vன்னும்bதாடருக்கும்,Fறுந்தொகைச்bசய்யுளுள்tந்துள்ள`நாலூர்க்nகாசர்'v‹னும்jடருக்கும்,தÄழ்,மiலயாளம்,க‹னடம்,jலுங்குஆ»யநh‹மொழியும்வழ§கியதால்நா‹மொழிநாடுஎன¥பெaர்பெற்றநாkக்கல்வட்lத்தில்வதிªதகேhசர்என்Wம்,வாšமீகிஇரhமாயணத்திற்செhல்லப்பட்டகுச®என்gவரின்நா‰òதல்வர்அமை¤தகௌrம்பிமுதலிaநாலூÇனின்றுபரவிaகௌrர்வழியிdர்என்று«,பெரு«புலவர்ரா. இராfita§fh® முறையே காரணங் காட்டுவர். இனி, அவரே, ``கழுகுமலைச் சாசனங்களில்'' நாலூர், நால்கூர் என்ற பெயருடையஊர்பல்லிடத்தும்வருதல் காணலாம்..................nfhrர்xருதிரளாfச்சபjஞ்செய்துகொள்பவரென்gதுஇவ்வூiரயடுத்துŸள``குழுவாiணநல்லூர்''vன்றபெயரான்ஊகிக்கப்gடுவதுஇக்குழுtணைநšலூர்க்கோச®தாம்குறுந்தொiகயில்நல்லூர்க்fச®எனவழங்கப்பட்டdரேhஎனஐயுறுகின்nw‹. அன்றி மேலே காட்டிய கழுகுமலைப்புறத்து நாலூர் பற்றி நாலூர்க்கோசர் எனப்பட்டனரெனினும் பொருந்தும். '' (பக். 51, 52) எனவும் கூறியுள்ளார் ``வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து'' என்று பனம் பாரனார் கூறிய தொல்காப்பியர் கால மொழிநிலையே கடைக்கழகக்காலத்தும் தமிழகத்திருந்ததினால், கி. பி. 8ஆம் நூற்றாண்டிற் புகுந்த தெலுங்கும்,10-ஆம்நூற்றாண்டிற்குப்பின்திரிந்தகன்னடமும்,12ஆம் நூற்றாண்டிற்குப்பின்திரிந்தமலையாளமும்,3ஆம்நூற்றாண்டில்நாமக்கல்வட்டத்தில் வழங்கினவென்பது காலமலைவு vன்னும்Fற்றமாம்.Mfnt நான்மொழிக் nfhrர்என்னும்jடருக்கு,ஒன்று மொழிதல்,eண்பர்¡Fஉற்றுழியுதtல்,எளியhரைக்காத்தல்,பழிக்குப்gழிவாங்குதšஆகியeல்வகைப்பூ£கைbமாழிகளைக்bfண்டnகாசர்என்றுபொருŸகொள்tnதஉ©மைக்கும் உத்திக்கும்bபாருத்தமா«.மொழி இங்குஉறுதிமொÊ, ``நான்மொழிக் கோசர் தோன்றி யாங்கு'' என்னும் மதுரைக் காஞ்சித் தொடருக்கு, ``நான்கு வகையாகிய கோசர் வஞ்சின மொழியாலே விளங்கினாற் போன்று என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. குறுந்தொகைச் செய்யுளில் வரும் ``நாலூர்க்கோசர்'' என்னும் தொடரும் நாலுரைக் கோசர் என்பதன் வழூஉ வடிவோ என ஐயுற இடந்தருகின்றது. ``கொங்கு மண்டிலத்துட் பலபாகங்களில், வத்தவன், வத்தராயன், வச்சராயன் என்னும் பெயர்கள் இக்காலத்து வழங்கப்படுவன'' என்று, பெரும் பேராசிரியர் பண்டாரகர் (Dr.) உ.வே. சாமிநாதையர் பெருங்கதை முகவுரையிற் கூறியிருப்பது, கொங்கு வேள் அவ்வனப்பை அல்லது தொடர்நிலைச்செய்யுளை இயற்றிய பின் நேர்ந்துள்ள நிலைமையையே குறிப்பதாகும். இக்காலத்தும் இரசியாவைப்பற்றிக் கேள்விப்பட்ட தமிழருள் ஒருசிலர் தம் புதல்வர்க்குத் தாலின் (Stalin), லெனின் (Lenin) எனப் பெயர் இடுவதையும், அதுபற்றி அவரை இரசியர் எனக்கொள்ள இடமின்மையும், நோக்குக. இனி, இளங்கோசர் என்னும் வழக்கில் உள்ள `இள' என்னும் அடைமொழிக்காரணம் பற்றி, பெரும்புலவர் ரா. இராகவையங்கார், ``வேட்டொழிவ தல்லால் வினைஞர் விளைவயலுள் தோட்ட கடைஞர் சுடுநந்து-மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை இன்புறுத்த வல்லமோ யாம்'' ... ... ... ... இவ்வச்சத்தொள்ளாயிரப் பாட்டில் `வச்சத்திளங் கோவை' எனப் பாடியதனால், இந்நாட்டுக் குடியேறியவன் வச்சத்திளங்கோவேந்தன் வழியினன் என்று தெளியலாகும். இவன் கோசத்தினின்று இங்கு வந்தவன் வழியினனாதலால் இவன்வழிக் கோசரெல்லாம் இளங்கோசர் என்று வழங்கப்பட்டனரென உய்த்துணரலாம்'' ``இனி இக்கோசாம்பியை ஆண்ட அரசரே இளன் என்னும் திங்கட் குலத்து வேந்தன் வழியினரென்றும், அதுபற்றியே அவன் வழிவேந்தர் இளங்கோ எனப் பெயர் சிறப்பரென்றும் கருதுவாருண்டு'' ``இனி, இவர் வத்ஸதேசத்துக் கோசம் என்ற தலைநகரிலின்று வந்தவராதலான், இளங்கோசர் என வழங்கப்பட்டனரெனின், அதுவும் நன்கு பொருந்தும். வத்ஸ மொழி ஆரியத்தில் இளமைக்குப் பெயராதலான் வத்ஸ கோசர்-இளங்கோசர் எனமொழிபெயர்த்துத் தமிழரால் வழங்கப் பட்டன ரென்றுங் கொள்ளலாம். கோசரைக் கூறிய பலவிடத்தும் சான்றோரெல்லாம் பல்லிளங் கோசர், நல்லிளங்கோசர், கொங்கிளங்கோசர் என வழங்கிக் காட்டலான், இஃது உடலிளமைபற்றியதாகாதென்பது ஒருதலையாகத் துணியலாம். வத்ஸதேசத்தை இளநாடெனக் கொண்டு அந்நாட்டு வேந்தனை இளங்கோவென்றும், அந்நாட்டுக் கோசரை இளங்கோசர் என்றும் வழங்கினரென்பது பொருந்தியதாம்.'' எனப் பலவாறு கூறியுள்ளார் (பக். 7, 8). பின்னர், அவரே, முன்னுக்குப்பின் முரணாக, ``கோசர் எப்போதும் இளமையோடி யிருப்பரென்று துணிவது பொருந்தாதாம். ``ஊர்முதுகோசர்'' (அகம். 262) என வழங்கலான், இவர் எல்லா மக்களும் போன்று யாக்கை மூத்துக்கழிதலுண்டென்க. இதனால், இவரை இளங்கோசர் எனப் பல்லிடத்தும் வழங்குவது இவர் குடிபற்றியது அல்லது நாடுபற்றியதெனின், நன்கு பொருந்துமென்க.'' எனவுங் கூறியுள்ளார் (பக். 9). ``பாசிலை யான்ற பயறா புக்கென வாய்மொழித் தந்தையைக் கண்களைந் தருளா தூர்முது கோசர் நவைத்த சிறுமையிற் கலத்து முண்ணாள் வாலிது முடாஅள் சினத்திற் கொண்ட படிவம் மாறாள் மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர் இன்னுயிர் செகுப்பக் கண்டுசின மாறிய அன்னி ஞிமிலி போல'' (262) என்ற அகச்செய்யுளினின்று, ``வாய்மொழித் தந்தை'' என்றது ஊர்முது கோசரோடு ஒரே இனத்தவன் ஆன தந்தை என்பது புலப்படநின்றது. முதுகோசராயிருந்தும் இனமென்று நோக்காது,தண்டந்தகுதியன்றென்பதும்எண்ணாது,எல்லாவுறுப்பினுஞ்சிறந்தகண்ணைஅருளாதுகளைந்தனரென்றார்...........FW«ãaDª திதியனும் கோசரினமல்லராயின் இங்ஙனம் எளிதில் ஒன்றுமொழிக்கோசரைக் கொன்று முரண்போக்கலாகா தென்க. ``முரண்போகிய'' (அகம். 196) என்றதனால் ஓரினத்திற்குள் நேர்ந்த முரண்பாடு இஃதெனத் துணியலாம். ஊர்முதுகோசர் பிழையாதலால், இவ்வழக்கில் வேளிர் இடையிற்புக்குக் கொன்று முரண்போக்கல் இயலாதென்க. கோசர் அந்நியராற் கொல்லப்படத்தக்க எளியரல்லர் என்பதும் நினைக,'' எனத் தம் மனம்போனவாரெல்லா;ம் உய்த்துரைப்பர் பெரும்புலவர் ரா. இராகவையங்கார். கோசர் மட்டுமன்றி உண்மை சொல்வோரெல்லாம் வாய்மொழிவாயர் எனப்படுவர். ``வாய்மொழிவாயர் நின்புகழேத்த vன்றுgதிற்றுப்பத்துள்tருதல்fண்க(37,2) nகாசர்gலவிடத்துப்ãறரால்bவல்லப்பட்டமைgண்டைïலக்கியத்தினின்bதரியவருதலால்,``அந்நியராற்bகால்லப்படத்jக்கvளியரல்லாvன்றுTறுவதுbபாருந்தாது,mவரெல்லாரும்mத்தகையtலியரெனின்,_வேந்தர்mவர்முன்vங்ஙனம்eடாண்டிருக்கKடியும்?இளையரே பொருதற்குச் சிறந்தவராதலாலும், `இளையர், மழவர்' முதலிய இளமைகுறித்த பெயர்கள் போர்மறவர்க்குப் பழஞ்செய்யுட்களுள் வருவதாலும், இளைஞரான கோசரே, இளங்கோசர் என்னப்பட்டனரென்றும், அவருள் மூத்துப் போர்த் தொழிலினின்றும் நீங்கி இக்காலத்து ஓய்வுபெற்ற பெருநர் (Ex-service men) போல் ஊர்க்குள் வதிந்தவரே ``ஊர்முது கோசர்'' என்னப்பட்டனர் என்றும், கொள்வதே மிகப்பொருத்தமாம். கோசர் தமிழரே என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிதலால், பழையன், அதகன், ஞிமிலி, அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, தழும்பன் முதலிய குறுநிலமன்னரும் படைத்தலைவரும் பொருநரும் தமிழரே என்று தெளிக. அவர் பெயரெல்லாம் தூய தமிழ்ச்சொல்லா யிருத்தலையும், அவர் என்றோனும் வேற்றுமொழி பேசியதாக எங்கேனும் சொல்லப்படாமையும், நோக்குக. எத்தொழிலையும் இருவகுப்பார் செய்துவரின், அவர்க்குள் இகலும் இசலிப்பும் ஏற்படுவது இயல்பே. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு ஒத்திருந்தமையின், அவரிடைச் சிறிது பகைமை ஏற்பட்டிருக்கலாம். இதுபற்றிக் கோசரை வடநாட்டாரெனக் கொள்வது பொருந்தாது. ஆரிய வருகைக்கு முன் நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் வழியினரான திரவிடருமே குடியிருந்ததினால், வேளிரைப்போன்றே கோசரும் பனிமலை (இமயம்)வரை பரவியிருந்திருக்கலாம். ஆதலால், கோசம் என் னும் சூள்முறையை வடநாட்டார் கையாண்டமை, அதன் அயன்மையைக் காட்டாது. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு பொதுவாயிருந்த தேனும், அது கோசர்க்கே சிறந்திருந்தமை ``இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கட் கோசர்'' (அகம். 90) ``வளங்கெழு கோசர் விளங்குபடை'' (அகம். 205) ``... ... ... ... ... ... ... வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற் பெருமரக் கம்பம் போல'' (புறம். 169) ``மெய்ம்மலி பெரும்பூட் கோசர்'' (அகம். 15) ``கடந்தடு வாய்வாள்இளம்பல் கோசர்'' (மதுரைக். 778) ``அமர்வீசு வண்மகிழ் அகுதைப் போற்றிக் காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்'' (அகம். 113) ``... ... ... ... ... ......btšbfho¤ துனைகா லன்ன புனைதேர்க் கோசர்'' (அகம். 251) என வருபவற்றால் அறியப்படும். இதனால், கோசர் ``உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது'' (762) என்னுங் குறட்கு இலக்கான மூலப்படையைச் சேர்ந்த அல்லது தொல்வரவான பூட்கைமறவரும், படைத்தலைவருமாவர். வேளிர் உழுவித்துண்ணும் வேளாண் வகுப்பைச்சேர்ந்த குறுநில kன்னரும்gண்ணையார்(மிராசுதார்)v‹னும்gருநிலக்கிழாருமாவார். இÅ, கோசர், அத்திகோசம் (யானையெறிகோசம்), வீரகோசம் (ஆளெறிகோசம்) என இருவகையராகவும் சொல்லப் பெறுவர். படைக்குச் சிறந்ததும் விலங்கிற் பெரியதும் யானையென்று கொண்டு, அதனையே போர்க்களத்தில் எறிந்துகொல்வோர் யானையெறிகோசத்தார். அஃது ஒரு விலங்கென்று இழித்து மறவரையே கொல்வோர் ஆளெறிகோசத்தார். ``கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது'' (குறள். 772) ``கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்'' (குறள். 774) ``வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே'' (புறம். 301) ``கறையடி யானைக் கல்ல துறைகழிப் பறியா வேலோன் ஊரே'' (புறம். 323) ``ஆனை யாயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி'' (இலக். வி. 839) என்பன யானையெறி கோசத்தானைப் பற்றியன. ``தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை யெறிதல் இளிவரவால்-யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும் இருகை சுமந்து வாழ்வேன்'' (தொல். புறத்திணை. 5 உரை) என்பது ஆளெறி கோசத்தானைப்பற்றியது. இச்செய்யுட்களெல்லாம் தமிழ் மறவருட் சிறந்தாரைக் குறிப்பதல்லது. ஒரு வேற்றுநாட்டு வகுப்பாரை விதந்தோ கிளந்தோ குறியாமை காண்க. பிற்காலச் சோழபாண்டியகொங்கு நாடுகளில், பழந்தமிழ்க் கோசரின் வழியினரான கைக்கோளப் படைமறவருள்ளும் தலைவருள்ளும் போர்க்களத்திற் பட்டவரின் குடும்பத்தார்க்கு, இரத்தக்காணிக்கை யென்றும் உதிரப்பட்டியென்றும் வழங்கும் மாநிலம் அரசரால் விடப்பட்டமை ஆங்காங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கும். இங்ஙனம் கூற்றுடன்று மேல்வரினும் ஆற்றலுடன் பொரும் குறுகணாண்மைப் படைமறவரான கைக்கோளர், 16-ஆம் நூற்றாண்டிற்குப் பின் (சேர சோழ பாண்டியரான) முத்தமிழரச மரபும் அற்றுப்போனதினா லும், போர்த்தொழிற்கிடமின்மையாலும், பிறப்பொடுதொடர்புற்ற ஆரியமுறைக் குலப்பிரிவினாலும் `தொல்வரவுந் தோலும்' கெட்டு மறம் என்னும் திறமும் அறவே இழந்துவிட்டனர். அவர் இன்று நெசவுத்தொழிலை மேற்கொண்டிருப்பினும், தமிழ்நாட்டின் தென்பாகத்தில் கைக்கோளர் என்றும் வடபாகத்தில் செங்குந்தர் என்றும் இன்றும் அவர்க்கு வழங்கிவரும் பெயர்கள், அவரின் முன்னோர் நிலைமையைத் தெற்றனக் காட்டாநிற்கும். முன்னர்க் கைக்கோளர் படை என்பது மரபாக வழங்கியதுபோன்று, இன்று கைக்கோளர் தறி என்பது மரபாக வழங்குகின்றது. கைக்கோளர் உயர் என்னுந் தலைப்பில் திவாகரம் கூறும், ``செங்குந்தப் படையர் சேனைத்தலைவர் தந்துவாயர் காருகர் கைக்கோளர்'' என்னும் நூற்பா, கைக்கோளரின் பண்டை நிலைமையையும் இற்றை நிலைமையையும் ஒருங்கே உணர்த்தும். தந்துவாயார். காருகர் என்பன நெசவுபற்றி வந்த பெயர்கள். குந்தம் ஈட்டி, செங்குந்தம் குருதியாய் சிவந்த ஈட்டி. பண்டை வேளிருள்ளும் கோசருள்ளும் இருந்தது போன்றே, முறையே அவரின் மரபினரான வெள்ளாளருள்ளும் கைக்கோளருள்ளும் படைத்தலைவர் இருந்தமையின். இன்றும் அவ்விரு வகுப்பாரின் வழியினரும் குலத்தாரும், முதலியார் என்னும் பட்டத்துடன் அழைக்கப் பெறுகின்றனர். முதலியார் என்பது சேனை முதலியார் அல்லது படை முதலியார் என்பதன் குறுக்கம் முதலியார். இங்குத் தலைவர் வடகொங்கில் வதியும் அகம்படியர் தமக்கு முதலியார் பட்டம் இட்டுக்கொண்டது பிற்கால வழக்கு. தஞ்சைமாவட்டத்தில் சமணர்க்கு வழங்கும் முதலியார் பட்டம் படைத்தொடர்பின்றிப் பொதுவாகத் தலைவர் அல்லது பெரியோர் என்று பொருள்படுவதே. கோசரும் கைக்கோளரும் ஒரு வகுப்பாரே என்று முதன்முதற் கூறியவர் பெரும்புலவர் ரா. இராகவையங்காரே. கோசர் தமிழரா வேற்றுநாட்டரா என்பதுபற்றி மட்டும் கருத்துவேறுபாடுள்ளது கழகக் காலத்துக் கோசரும் வேளிரும் வடநாட்டின் வெவ்வேறு பகுதியினின்று தென்னாட்டுப் புகுந்தவர் என்பது அவர் கொள்கை. தென்னாட்டுப் பழக்கவழக்கங்கள் வடநாட்டிற் கையாளப்பெற்றமையே. அவர், அங்ஙனம் தலைகீழான முடிபிற்கு வரக்காரணம். தென்னாட்டு மாந்தர் வடநாட்டாரினும் முற்பட்டவர் என்பதை அறிந்திருப்பின், அவர் அங்ஙனம் கொண்டிரார். வடநாட்டிற் கண்ணபிரான் நப்பின்னையை ஏறுதழுவி மணந்ததும், காளிக்கோட்டத்தில் (Calcutta) காளிக்கு எருமைக் கடாவைக் காவு கொடுத்ததும், தென்னாட்டு (தமிழ்நாட்டு) வழக்கங்களே. அங்ஙனமே காசுமீரத்தார் கோசமுறையில் சூளிட்டதும் தென்னாட்டு வழக்கமே. ஆதலால், அதுபற்றிக் கோசரை வடநாட்டினின்று வந்தவர் என்று கொள்வது வரலாற்றுமலைவாம். இதுகாறுங் கூறியவற்றால், கடைக்கழகக்காலத்தில் உலக வழக்கில் `கோளர்' என்றும், செய்யுள் அல்லது இலக்கிய வழக்கில் `கோசர்' என்றும், இடைக்காலத்திலும் இக்காலத்திலும் இருவகை வழக்கிலும் கைக்கோளர் என்றும், செங்குந்தர் என்றும், பெயர் வழங்கப்பெற்றவர் ஒரு வகுப்பாரே யென்றும், தென்னாட்டுத் தூய தமிழ்ப் பழங்குடிமக்களே யென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. பண்டைக்காலத்தில், கொல்லேறு தழுவிமணந்த இடையரும் கோளரிக்கும் அஞ்சாக் குறவரும் ஆகிய இரு வகுப்பாரின் வழியினர் ஆரியத்தால் இன்று தம் முன்னோரின் தறுகணாண்மைத் தமிழமறத்தை முற்றும் இழந்திருப்பதுபோன்றே, கூற்றுவனைச் சீறும் கோசரின் வழியினரான கைக்கோளர் செங்குந்தரும் இன்றுள்ளனர் என்க. 21 முருகுமுதன்மை முருகு முதன்மை யென்பது முருகனின் முதன்மை என்று பொருள் படுவது. முதன்மை என்னுஞ்சொல் முன்மை, தலைமையென இருபொருள் தரும். 1. முருகு என்னுஞ்சொல் வரலாறு:- உல்-முல்-முன்-முனி - (கன்று), யானைக்கன்று. ``முனியுடைக் கவளம் போல'' (நற். 360). முன் - L. min =Small, minimus = Smallest இவ்விலத்தீன் சொன்களினின்று, mini (e.g. minibus, minicale), miniature, minify, minim, minimal, minimalize, minimus, minor, minute முதலிய ஆங்கிலச் சொற்கள் பிறக்கும். முல்-முள்-முளை = 1. தோன்றுவது, தோன்றியது. 2. இளமை, ``முளையமை திங்கள் (கம்பரா. கும்பக.16) 3. மரக்கன்று. ``அதன்றாள் வழியே முளையோங்குபு'' (சீவக.223) ம. முள, து, முளெ, க. மொளெ, தெ. மொள. முளை-முளையான் - சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (உ.வ.) முள்-மள்-மள்ளன் - 1. இளைஞன், ``பொருவிறல் மள்ள'' (திருமுரு. 262). 2. குறிஞ்சி நிலத்தில் வாழ்வோன். (சூடா) 3. மறவன், வீரன். ``களம்புகு மள்ளர்'' (கலித்.306). மள்-மழ - 1. இளமை. ``மழவுங் குழவும் இளமைப் பொருள்''. (தொல். உரி 14) 2. குழந்தை. ``அழுமழப் போலும்'' (திருக்கோ.147). மழ-மழவு. (பிங்) மழவு-மழவன். 1. இளைஞன். ``மழவர்தம னையன மண வொலி'' (கம்பரா. நாட்டுப். 50) 2. மறவன். ``மழவர் பெரும'' (புறநா-96). மழ-மழல்-மழலை. 1. இளமை. ``பெருமழலை வெள்ளேற்றினர்'' (தேவா. 579) 2. குழந்தைகளின் திருந்தாச் சொல். ``தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்'' (குறள். 66). 3. மென்மொழி. ``மழலைவாயின் முறுவற் றையலாள்'' (சீவக.181) மழல்-மழறு. மழறுதல் - மென்மையாதல், ``மழறு தேன் மொழி யார்கள்'' (திவ். திருவாய். 6:2:5) மழ. மாழை. 1. இளமை. ``மாழை மடமான் பிணையியல் வென்றாய்'' (கலி.131). 2. அழகு. ``மாழைநோக்கொன்றும் மாட்டேன் மினே'' (திவ். திருவாய். 2:4:10). 3. பேதைமை. ``மாழை மென்னோக்கி (திருக்கோவை, 61). மழ-மக-1. இளமை. (யாழ்.அக.). 2. பிள்ளை ``மந் திம்மக'' (சீவக. 18) 3. மகன் அல்லது மகள். ``மக முறை தடுப்ப'' (மலைபடு. 185) க.மக. மக-மகவு-1. குழந்தை. ``மகவுமுலை வருட'' (கம்பரா. தைல. 13) 2. மகன், ``கொண்டதோர் மகவினாசை (அரிச். பு. மயான, 20). 3. குரங்குக் குட்டி. (தொல். மர. 14). க. மகவு (g) மக-மகன், க, kfk(g) மக-மகள், ம. -க. -மகள் (g) ``Mac (mak). A Gaelic Word signifying Son, and prefixed to many Surnames, as Mac Donald, Mac Grigor & C. It is synonymous with Son fem, magattes (G. magd, a maid)'' - The Imperial Dictionary of the English Language (Vol.III, p.91). முள்-(முர்)-முருகு-1. இளமை. (திவா). 2. அழகு. (பிங்). 3. முருகன். ``அருங்கடி வேலன் முருகொடு வளைஇ'' (மதுரைக்.611). 4. தெய்வம். ``முருகு மெய்ய்பட்ட புலைத்தி போல'' (புறநா.259). 5. வேலன் வெறியாட்டு ``முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்'' (குறுந். 362). 6. முருகன் திருவிழா. ``முருகயர் பாணியும்'') (சூளா, நாட்.7). முருகு-முருகன் - 1. கட்டிளமையோன். (திவா). 2. முருகதேவன். 3. வேலன் வெறியாட்டாளன். ``முதியாளோடு முருகனை முறையிற் கூவி'' (கந்பு. வள்ளி 155) இளமைக்குரிய பண்பு அழகும் மறமும், முதற்காலக் குறிஞ்சிநில வாணர் பிற்காலப் பாலை நிலவாணர் போன்றே கடு மறவராயிருந்தனர். அதனால் தம் தெய்வம் இளமையும் மறமும் அழகும் உடையோன் என்று கருதி, முருகன் என்று பெயரிட்டனர். அழகுக் கருத்தினும் இளமைக் கருத்தே முந்தியது. ஆயின், திரு. வி.க. தம் ``முருகன் அல்லது அழகு'' என்னும் கட்டுரையில் அழகுக் கருத்தையே முந்தியதாக அல்லது முதன்மையானதாகக் கொண்டார். முரு-முருந்து - 1. கொழுந்து (சங்.அக.) இளந்தளிர், (அரு.நி.). 2. தென்னை பனை முதலியவற்றின் வெண்குருத்து (சூடா). முரு-முறு-முறி - தளிர். ``முறிமேனி'' (குறள். 1113). முறி-மறி-விலங்கின்குட்டி ``பார்ப்பும் ....... மறியும் என்று ...... இளமைப் பெயரே.'' (தொல். மர.1). மரஞ்செடி கொடிகள் அடர்ந்தும் அடிக்கடி மழை பொழிந்தும் இருண்டும் குளிர்ந்தும் இருந்த குறிஞ்சியில், ஒளி பெறவும் குளிர் போக்கவும் மட்டுமன்றி, கிழங்கு கடவும் கொடுவிலங்கைத் துரத்தவும், நெருப்பு இன்றியமையாததா யிருந்ததினால், அவ்வப்போது மரங்கள் உரசி இயற்கையாகத் தோன்றும் நெருப்பைத் தம் தெய்வ வெளிப்பாடாகக் கருதி, குறிஞ்சி நிலமக்கள் முருகனுக்குச் சேயோன் (சிவந்தவன்) என்று பெயரிட்ட தாகத் தெரிகின்றது. தங்களைப் போல் வேற்படையுடையோன் என்றும், குறிஞ்சிநிலக் கடப்ப மாலையணிவோனென்றும் கருதி வேலனென்றும் கடம்பனென்றும் பெயரிட்டனர். அரசன், வேந்தன் என்னும் பெயர்கள் சீறுகுன்றி அரசு, வேந்து என்று வழங்குவது போன்று, சேயோன், முருகன் என்னும் பெயர்களும், முறையே, சேய், முருகு என இலக்கியத்தில் வழங்கும். 2. முருகன் முன்மை (வணக்க நிலை): முதற்காலத் திணைநிலைத் தெய்வநூற்பாவில் ``சேயோன் மேய மைவரை உலகமும்'' - என்று தொல்காப்பியர் முருகனையே குறிஞ்சி நிலத்தெய்வமாகக் குறிக்கின்றார். குமரிநாட்டில், முதற்காலத்தில், முருகன் குறிஞ்சி நிலத்திற்கே சிறப்பாகவுரிய தெய்வமாக, அறுவடையும் திருமணமும் போன்ற இன்பக் காலத்திலும், நோயும் பஞ்சமும் போன்ற துன்பக்காலத்திலும், அவ்வப்போது இம்மைப் பயன் நோக்கியே, மதுரை வீரனும் எல்லையம்மனும் போல வணங்கப்பட்டான். பிற்காலத்தில் ஐந்திணை வாழ்க்கையேற்பட்ட பின், வெறியாடும் வேலனாலும், குறிகூறும் குறத்தியாலும் முருக வணக்கம் மருதநிலத்தில் புகுந்தது. 3. சிவன் பின்மை (மதநிலை): மருத நிலத்து மக்கட்பெருக்காலும் நாகரிக வளர்ச்சியாலும், உழவு, வாணிகம் காவல் கல்வி என்னும் நால்வகைத் தொழிலும், வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நால்வகைத் தொழில் வகுப்பாரும் தோன்றிய பின், மறுமை நோக்கும் மதவுணர்ச்சியும் ஏற்பட்டு, குறிஞ்சி நிலச் சேயோன் வணக்கத்தினின்று சிவமதமும், முல்லை நில மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும் தோன்றின. ஆயின், சிவன் சேயோனினும் வேறுபட்டவனென்றும், இளமை நீங்கிய நடுப் பருவத்தானென்றும், சிவை அல்லது மனைமகள் என்னும் தேவியுடையனென்றும், காளையூர்தியனென்றும், தில்லை மன்றாடி யென்றும், வீட்டின்பந் தருபவனென்றும், மறைகளாற் போற்றவும் மெய்ப் பொருள் நூல்களால் ஆயவும் படுபவனென்றும், நிலையான கருத்துகள் எழுந்துவிட்டன. ஆரியப் பூசகர் முருகனை மகனாகவும் சிவனைத் தந்தையாகவும் இருவரையும் ஆரியத் தெய்வங்களாகவும் காட்டி, பல தொன்மங்களையும் (புராணங்களையும்) தீட்டி விட்டனர். இதனால் அத்தெய்வங்களின் உருவத் தோற்றமும் வழிபாட்டுமுறையும் மிக மாறிவிட்டன. சேய் என்னுஞ் சொல்லிற்கு முருகன் குழந்தை, என்று இருபொரு ளிருப்பதும், இளைஞனைக் குறிக்கும் குமரன் என்னுஞ் சொல் வடமொழி யில் குமார என்று திரிந்து மகனைக் குறிப்பதும், தொன்மிகர்க்குத் (புராணிகர்க்குத்) துணையாயின. 4. சேயோனுக்கும் சிவனுக்குமுள்ள ஒற்றுமை:- சிவனுஞ் சிவையும் பெற்றோர் போன்றும், முருகனும் வள்ளியும் மகனும் மருமகளும் போன்றும், தோற்றமளிப்பினும், முருக வழிபாட்டில் தனிப்பற்றுள்ளவர். முருகனுஞ் சிவனும் ஒன்றேயென்று கொள்ளற்கேற்ற ஒற்றுமைச் சான்றுகளையுங் கண்டுள்ளனர். (1) இருவருக்கும் நெருப்புப் பூத அடிப்படையில், சேயோன் என்றும் சிவன் அல்லது செய்யவன் (செய்யோன்) என்றும் பெயர் தோன்றியுள்ளமை. இதனால் சிவாயநம என்பது முருகனுக்கும் ஏற்கும். (2) இருவருக்கும் மலைக்கோயில்கள் சிறப்பிருக்கையாயிருக்கை. (3) இருவர் ஊர்திகளும் படைக்கலங்களும் மலரணிகளும் குறிஞ்சி நிலத்திற்குரியனவாயிருத்தல். (4) இருவர்க்கும் முகங் கண் கைகள் முப்பதாய் முடிகை. (5) முருகனும் வீடளிப்பவனாகத் திருமுருகாற்றுப்படை கூறல். (6) இருவரையும் நான்முக திருமாலர்க்கு மேலவராகக் கதைகள் விளம்பல். (7) சிவனியக் கொண்முடியும் (சித்தாந்தமும்) மெய்ப் பொருட் கோவையும் முருகனுக்கும் ஏற்றல். (8) இருவரும் அகத்தியற்குத் தமிழாசிரியராகச் சொல்லப்படுதல். (9) வள்ளி குறிஞ்சி நிலத் தேவியாதலால், மலைமகள் என்னும் பெயர் அவளுக்கும் பொருந்தும். மலைமகள் = மலைத்தேவி. (10) முல்லை நிலத்து மாயோன் என்னும் வணக்கநிலைத் தெய்வம் மதநிலைத் என்னும் வணக்கநிலைத் தெய்வம் மதநிலைத் தெய்வமாக (பெருந்தேவனாக) மாறிய போது, முருகனுஞ் சிவனும் போன்றே வேறுபாடு ஏற்படவில்லை. 5. முருகன் கவர்ச்சி: இயற்கை வளஞ் சிறந்த குறிஞ்சி நிலத்தில், இளமையும் அழகும் இணைந்த முருகனும் வள்ளியும், அரசருங் காண விரும்பும் அழகிய ஆண்மயில் மீதமர்ந்து, அடியார்க்கு அளிக்கும் கண்கவர் கவின் காட்சியும், காவடிநோன்பின் மாட்சியும், முருகநேயர்க்கு முழுமனக் கவர்ச்சி யென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. 6. முருகன் முதன்மை:- இனி, முருகனே சிவனுகு ஓங்காரப் பொருளை உணர்த்தினான் என்று சிவனியரும் ஒப்புக் கொள்ளுஞ்செய்தி, `மகவே மாந்தனின் தந்தை (``The child is father to the man'') என்னும் பழமொழிக் கருத்தையுணர்த்தி முருகனின் முதன்மையை நாட்டுகின்றது. காந்தம் (காந்தம்) உள்ளிட்ட பதினென் புராணங்களைப் புனைந்த வியாசர் காலம் கி.மு. 1000 அல்லது 1200. தமிழகத்தில் முருக வணக்கந் தோன்றியது கி.மு. 1,00,000. தமிழ்நிலப்பறவைகளுள் வெற்றிகாணும்வரை வீறுமறப் போரிடுவது குறிஞ்சி நிலக் கோழிச் சேவல் ஒன்றே. அதனால், குறிஞ்சிநில மறவர் தம் மறத்தெய்வ முருகனுக்குக் கோழிச் சேவலைக் கொடிச்சின்னமாக்கினர். இதையுணராது காலஞ்சென்ற கே.ஏ. நீலகண்ட சாத்திரியார், முருகன் என்னும் பெயர் சேவலைக் குறிக்கும் `முர்கா' என்னும் பாரசீகச் சொல்லி னின்று திரிந்ததாகக் கருதியது, எத்துணை இழிதகலானது என்பதைப் பகுத்தறிவுள்ள நடுநிலையறிஞர் கண்டு கொள்க. 22 மாந்தன் செருக்கடக்கம் இவ்வுலகிலுள்ள உயிரினத் தொகுதியுள், மாந்தன் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ற மதியுடைமைபற்றி உயர்ந்தவனே. அதனால், அவன் தன்னை உயர்திணை என்று கூறிக் கொண்டது உத்திக்கும் பொருந்துவதே. ஆயினும் அவன் தன்னை இறப்பமதித்து, ``இயலாது'' என்னும் சொல் என் அகரமுதலியில் இல்லையென்றும், எண்பெருஞ் சித்துக்களை அடைவேன் என்றும், இறைவனே இல்லை யென்றும், உலக முழுவதையும் ஒரே குண்டில் ஒழித்து விடுவேன் என்றும், தருக்கியும் செருக்கியும் தட்டுக்கெட்டுத் தடுமாறிக் கெடாவண்ணம், அவன் அவிந்தடங்கி அறிவு பெறும் வகையில், அஃறிணையுயிர்கட்கும் சிற்சில பேறுகளை ஒத்த அளவிலும் உயர்ந்த அளவிலும் இறைவன் அருளி யிருப்பத மிகமிகக் கவனிக்கத்தக்கது. 1 நீடுவாழ்வு மாந்தன் இவ்வுலகில் அடையும் பேறுகளுள் நீடுவாழ்வும் ஒன்றாம். இன்பச் சிறப்பு அதன் மிகுதியை மட்டுமின்றி நீட்சியையும் தழுவும். உயிரினங்களின் வாழ்நாட் பேரெல்லையை நோக்கின், இனம் உயர வுயர வாழ்நாள் குறுகுவதைக் காணலாம். உயிரினம் வாழ்நாட்பேரெல்லை (ஆண்டு) மாந்தன் 100 யானை 100 ஆமை 120 முதலை 300 திமிங்கிலம் 500 செம்மரம் (American Red-wood) 4000 கலிபோர்னியாவிலுள்ள ஒரு மரத்தின் (Sherman) அகவை ஐயாயிரம் ஆண்டுவரை மதிக்கப் பெறுகின்றது. ``மனிதர்க்கு வயது நூறல்ல தில்லை'' என்று கபிலர் கூறினாரேனும், இக்காலத்தில் அறுபதாண்டிற்கு மேற்பட்டதெல்லாம் இறைவனால் அளிக்கப்பெறும் நீட்டிப்பென்று கருதப்படுகின்றது. நூறாண்டிற்கு மேற்பட்டவரும் ஒரோவொருவர் ஆங்காங்கிருப்பது உண்மையேனும், அது அருகிய வழக்காதலின் கணக்கிற் கொள்ளப்படுவதன்று. ஆகவே, அறுபதாண்டு வாணரும் இக்காலத்து நீடுவாழியராம். அசுவத்தாமன், மாவலி (மகாபலி) முதலிய எழுவரும் என்றும் வாழியர் என்றும், மார்க்கண்டேயன் என்றும் பதினாறாட்டை யிளைஞன் என்றும், கூறுவதெல்லாம் பொருளொடு புணராப் புன்மொழியென விலக்குக. இனி, முதுபழங்கால மக்கள் பன்னூறாண்டு வாழ்ந்திருந்ததாக மறைநூல்கள் கூறுகின்றனவே யெனின், அதற்கேற்ப அஃறிணை யுயிரி களின் வாழ்நாளும் நீண்டிருந்ததெனக் கூறி விடுக்க. 2 வன்மை திமிங்கிலமும் யானையும் ஒட்டகமும் பருமைக்கும், அரிமாவும் வேங்கையும் காண்டாவும் வலிமைக்கும், சிறந்தவை. உடற்பருமை, உறுப்புரம் ஆகிய இரண்டினாலும் வன்மையுண்டாம். இவ்விரண்டுமற்ற பாம்பும் சுரமண்டலமும் போன்ற சிற்றுயிரிகள் நச்சுறுப்பினால் வன்மை பெற்றுள்ளன. ``பாம்பைக் கண்டாற் படையும் நடுங்கும்''``சுரமண்டலம் கடித்தாற் பரமண்டலம்'' ``அரணை தீண்டினால் மரணம்'' (உயிரி-பிராணி) இற்றை மாந்தன் துப்பாக்கியொடு வேட்டைக்குச் செல்லினும், குண்டு தப்பினாற் கொடுவிலங்கால் கொல்லப்படுவது திண்ணம். இனி, பருமையும் வலிமையும் பெற்ற இருதிணை யுயிரிகளையும் எளிதிற் கொல்லத்தக்க ஊனக் கண்ணிற்குத் தெரியாத, நுண்ணிய உலண்டுகளும் (germs) உள்ளன. 3. அழகு இயங்குதிணை (சங்கமம்) உயிரிகளுள், சில பறவையினங்கள் அழகிற்குச் சிறந்தவை. மயிலும் கிளியும் அழகிற்கு எடுத்துக்காட்டாதலின், அவற்றின் பெயர்கள் அழகிய பெண்டிர்க்கு உவமையாகு பெயராக இலக்கியத்தில் வழங்கி வருகின்றன. பாலித்தீவிலுள்ள விண்ணகப் பறவைகள் (Paradise Birds) வண்ணத்தாலும் வண்ணிக்க முடியாத அழகு வாய்ந்தவை. நிலைத்திணை (தாவரம்) உயிரிகளுள்ளும் ஒரு சில மரஞ் செடி கொடிகளும் அவற்றின் உறுப்புகளும் கண்கவர் கவின் கொண்டவை. அதனாலேயே, ஆடை யணிகளையும் கட்டிடங்களையும் தட்டுமுட்டு களையும் அணி செய்யும் ஓவியம், பெரும்பாலும் இலை வடிவாகவும் மலர் வடிவாகவும் இருக்கின்றது. ``இலைமுகப் பைம் பூண்'' என்றார் குமரகுருபரர். ``பூவாராடை'' என்றார் உலோச்சனார் (புறம். 274), ``பூக்கனிந்து'' என்றார் முடத்தாமக்கண்ணியார் (பொருந. 82). 4 நாற்றமின்மை மாந்தன் நாள்தொறும் மூவேளையும் முழுகிக்குளித்தாலும் சவர்க்காரமிட்டுத் தேய்த்தாலும், சாந்தமும் சுண்ணமும் பூசினாலும் வியர்வை நாற்றம் அவனைவிட்டு விலகுவதில்லை. பல விலங்குகளும் பறவைகளும் பன்னாட் குளியாதிருப்பினும், அவற்றின் உடலம் தீ நாற்றம் தருவதில்லை. 5. எச்சிலன்மை: கலத்தில் அல்லது இலையில் படைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் மாந்தன் கைபடினும் எச்சாம். ஆயின் அணிலுங் கிளியும் கடித்த காய் கனிகளும், ஈயும் எறும்பும் மொய்த்த உண்டிவகைகளும், நாய் கௌவிய வேட்டையுயிரிகளும் எவர்க்கும் ஏற்பாம். ``... ... ... ... .... ... ... நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு'' என்பது பழமொழிச் செய்யுள் (36) இனி, மாந்தன் கைபடினும் விரைந்து கெடும் கண்ணுறையும் (மசாலையும்) கறிவகைகளும், கோழி, குருவி முதலிய சில பறவைகளும் ஆடு, மாடு முதலிய சில விலங்குகளும் வாய் வைப்பினும் கெடுவதில்லை. 6. தீட்டன்மை: அரசன் இறப்பினும் இழவு கேட்கச் செல்பவர்க்குத் தீட்டாம். ஆயின், செத்த விலங்குகளையும் பறவைகளையும் பார்ப்பின் எவருக்கும் தீட்டில்லை. 7. கழிபொருள் தூய்மை: மாட்டின், சிறப்பாக ஆவின், சிறுநீரும் சாணமும் நிலத்தையும் தளத்தையும் துப்புரவாக்கும் கருவிகளாக மட்டு மன்றி, இருபால் மக்கட்கும் தீட்டுக் கழிக்கும் திருப்பொருள்களாகவும், இத்தேயத்தில் தொன்று தொட்டு ஆளப் பெற்று வருகின்றன. புலம்பனின் (ஆன்மாவின்) மும்மலத்தையும். போக்குவதாகக் கருதி, சிவநெறியாரால் மேனிமுழுதும் பூசப் பெறும் திறுநீறு, ஆவின் எருச்சாம்பலே. இனி, சிவனடியார் மட்டு மன்றிச் சிவபெருமானும் திருநீறு பூசுவதாகச் சொல்லப்பெறும். ``பூசுவதும் திருநீறு'' என்றார் மாணிக்கவாசகர் (திருச்சாழல்). ஆவின் பால், தயிர், நெய், சிறுநீர்சாணம் ஆகியவற்றின் கலவையாகிய ஆனைந்து (பஞ்சகவ்வியம்) சிவன் கோயில்களில் தெய்வச்சிலைத் திரு முழுக்கிற்குப் பயன்படுத்தப் பெறுகின்றது. திருமால் நெறிப் பெண்டிர் சிலர் பிள்ளைப்பேற்றுத்தீட்டுக்கழிக்க ஆனைந்து உட்கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது. காலஞ் சென்ற துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவின் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தன் கலவையே ஆனைந்து என்பர். இது உத்திக்குப் பொருத்தமே; ஆயின் இற்றை வழக்கிலில்லை. 8. ஒழுங்கு: மாந்தன் தோன்றி ஐந்திலக்கம் ஆண்டிற்கு மேலாயினும் இன்னும் பல நாட்டு மாந்தரிடைக் கூட்டுறவும் ஒழுங்கும் தோன்றவில்லை. நீரில் வாழும் இறாவும் மீனும் கூட்டங் கூட்டமாக இயங்குகின்றன. நிலத்தில் வாழும் ஓநாயும் மானும் போன்ற விலங்குகள் மந்தை மந்தையாக மேய்ந்து தத்தம் சேக்கை திரும்புகின்றன. நிலத்திலும் வானிலும் இயங்கும் வெட்டுக்கிளிகளும் குருவிகளும் படை படையாகப் பறந்திறங்குகின்றன. சிலவெட்டுக்கிளிப் படைகள் வெயில் மறையுமளவு இலக்கக் கணக்கான கிளிகள் செறிந்தவை. ஒரு தேன் கூட்டிலுள்ள நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான தேனீக்கள் ஒரு தாயும் பல ஆணும் கழிபல பெண்ணும் சேர்ந்த ஒரு குடும்பமாய் இருந்து தத்தம் வேலையை ஒழுங்காகச் செய்து வருகின்றன. சிறுமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப் பெறும் சிற்றெறும்பும், இலக்கக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஒரு வளைக்குள் குடியிருந்து எக்காரணத்தையிட்டும் ஏனை வளையெறும்புகளொடு மோதாமல், ஊணிருக்கு மிடத்தை ஒற்றாலறிந்து தலைமையும் முற்காவலும் பிற்காவலும் அமைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாகவோ சிற்சிலவாகவோ ஒழுங்கான வரிசையாகச் சென்று, இழுக்கவியலாததை இருந்த விடத்தும் இழுக்க வியல்வதை வளைக்கு இழுத்துச் சென்றும் ஒற்றுமையாகப் பகுத்துண்டு தொன்றுதொட்டு நடாத்திவரும் உயரிய குடியரசு, மேனாட்டாரும் நாணித் தலைகுனியத்தக்க வியத்தகு செய்தியாம். நாய் முகத்தையுடைய ஒருவகைக் குரங்கினம் (Baboon) வேலைப் பகுப்பும் ஆட்சியொழுங்கும் உடைய தென நூல்கள் கூறும். 9. பண்பாடு: மாந்தரிடைக் காண்டற்கரிய பல பண்பாட்டுக் குணங்கள் அஃறிணை யுயிர்களிடத்துக் காணப்படுகின்றன. குருவி, காகம், புறா முதலிய பறவைகள் ஒருமனை மணத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கின்றன. அன்றில், மகன்றில் என்னும் பறவைகள் இணைபிரியாது வாழ்ந்து ஒன்றையயொன்று பிரிவாற்றாமல் உடனிறக்கும் உண்மைக் காதலன. கவரிமான் என்னும் திபேத்தியக் காட்டெருமை, தன் உடம்பினின்று ஒரு மயிர் வீழினும் உயிர் விடத்தக்க தலையாய மானமுடையது. ``மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்'' (குறள்.) என்றார் திருவள்ளுவர். காகம் ஓரிடத்து உணவைக் கண்டவுடன் தன் இனத்தை அழைத்து உடனுண்கின்றது. ``காக்கை கரவா கரந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள'' (குறள்.) என்றார் திருவள்ளுவர். ``நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று.'' (குறள்.) ``கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்'' (குறள்.) என்னும் இரு குறள்கட்கும் இலக்காயது நாயினம் ஒன்றே. ``யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய்.'' (நாலடியார், 213) என்னும் உண்மை என்றும் எங்கும் காணலாம். ``கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி''... ... (190) என்னும் புறப்பகுதி,புÈபசிப்பினு«இடப்பக்க«விழுந்jவிலங்fஉண்ணா¡கோட்பாடுடையJஎன¤தெரிவிக்கும். ``கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல்... ... ...'' (99) என்னும் குறுந்தொகைச் செய்யுள், ஒரு மந்தியின் தலையாய காதலையும், அதன் குட்டியைப் nபணும்bபாறுப்òணர்ச்சியையும்,mக்குட்டியைVற்றுக்bகாண்டãறFரங்குகளின்Tட்டுறtன்பையும்,xருங்கேcணர்த்தும்.xG§F, ஒற்றுமை, கூட்டுறவு என்பனவும் பண்பாட்டுள் அடங்கு மேனும், தொகுதிப் பண்பாதலின் முன்பு வேறாகக் கூறப்பெற்றன. 10 மதிநுட்பம் விலங்குகட்குள் நரி வலக்காரத்தில் (தந்திரத்தில்) சிறந்ததென்பது மரபுக்கூற்று. வலக்காரம் மதிநுட்பக் கூறுகளுள் ஒன்று. குறவை மீன், எலி, மூட்டைப் பூச்சி முதலிய உயிரினங்கள் மாந்தர் கைக்குத் தப்புவதற்குக் கையாளும் விரகுகள் (உபாயங்கள்), அவற்றின் மதிநுட்பத்தைச் சிறப்பக் காட்டும். 11 புலநுணுக்கம் பாம்பு, சிறப்பாக நல்ல பாம்பு, கூர்ங்கட் புலனாலும் மோப்பத்தி னாலும் எல்லா ஆட்களையும் எளிதாய் அடையாளங் கண்டு கொள் கின்றது, அதனால், ஒருவனால் அடியுண்டு தப்பிய நாகம் பின்னர் அவனைக் கண்டு கொன்று விடும் என்பது உலக நம்பிக்கை. மலையாள நாட்டு இல்லங்களில் படைப்பினாலும் பூசையினாலும் பேணப் பெறும் நாகங்கள். தம்மைப் பேணுவோர் இருண்ட இரவில் தம் பக்கமாகச் செல்லினும், அவரையும் அவரொடு கூடவரும் பிறரையும் கடிப்பதில்லை என்று, செய்தித் தாட்கள் அறிவிக்கின்றன, பாம்பு நுண்ணிய செவிப் புலனும் உடையது, `அரவம் அரவம் அறியும், என்பது பழமொழி. இடியோசை நாகத்திற்கு இன்னாதது. கழுகினம் நெடுந்தொலைவில் கிடக்கும் விடக்கூனையும் முகர்ந்தறியும் ஆற்றலுடையது. வழக்கற்றுப்போன அசுணம் என்னும் விலங்கு, இன்னிசைக்குச் சிறந்த எஃகு செவியுடைய தென்றும், அதனை வேட்டையாடுபவர் அதனருகே மறைவிலிருந்து இனிய யாழை இயக்கி அது இன்புற்று மயங்கி நிற்கும்போது திடுமெனக் கடும்பறையறைய, அது உடனே இறந்து விடுமென்றும், இலக்கியம் கூறும். யானை நீடிய நினைவாற்றலுடையது. 12 வினைத்திறம் ``வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோருமே யென்று வலிமைசொல் வேண்டாய்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.'' என்னும் ஔவையார் பாடலொன்றே சில அஃறிணை யுயிரிகளின் வினைத்திறத்தைக் காட்டப் போதுமானது. 13 பயன்பாடு உணவு, மருந்து, கருவி, வினைத்துணை, காட்சியின்பம், காவல், ஆடையணி, நறுவிரை, உறையுள், தட்டுமுட்டு முதலிய பல்வேறு வகையில் இயங்குதிணை, நிலைத்திணை ஆகிய இரு பால் அஃறிணை யுயிரிகளும், உடம்பு முழுமையும் மட்டுமன்றி உறுப்புறுப்பாகவும், மாந்தர்க்குப் பயன்பட்டு வருகின்றன. மாடு செல்வம்போற் பயன்படுவதால், `மாடு' என்பதே செல்வத்திற்குப் பெயராயிற்று, (Pecuniary என்ற ஆங்கிலச் சொல்லும் இக்கருத்ததே- L. Peccv=Cattle). 14 பன்னாளுண வேற்றல் ஒட்டகம் ஒரு மாதத்திற்கு வேண்டும் உணவை ஒருங்கே உட்கொள்ள வல்லது. ``ஒருநா ளுணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ வறியா இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்று புலம்பினார் ஔவையார். 15 நீடுண்ணாமை ஒட்டகம் பன்னாளுணவை ஒருங்குட் கொள்ளலில் நீடுண்ணாமை யும் அடங்கும். மூட்டைப் பூச்சி மும்மாதம் உண்ணா துயிர் பிழைக்கும். 16 பிறந்தவுடன் இயங்கல் சில பறவைக் குஞ்சுகளும் விலங்குக் குட்டிகளும் பிறந்தவுடன் இயங்க வல்லன. 17 மூவிட வாழ்க்கை சில ஊருயிரிகள் நிலத்திலும் நீரிலும், சில பறவைகள் நிலம் நீர் வான் ஆகிய மூவிடத்திலும் இயங்க வல்லன. 18 வெட்ட வெட்டத் தளிர்த்தல் எல்லா நிலைத்திணை உயிரிகளும் வெட்ட வெட்டத் தளிர்க்கும். வாதமடக்கி போன்ற சில மரத்தின் கிளைகள், காய்ந்த பின்பும் மழை பெய்யின் தளிர்க்கும். அட்டை, பூரான் போன்ற பூச்சிகள் நடுவில் வெட்டுண்ட பின்பும் பிழைக்கும். 19. காப்பு: சில மரஞ்செடி கொடிகளும் அவற்றின் உறுப்புக்களும் நோயி னின்றும் பேயினின்றும் காக்கும் திறத்தன வாய்க்கொள்ளப்பெறும். மூவேந்தரின் அடையாளப் பூக்களும், போர்ப்பூக்களும், கடிமரங்களும் இத்தகையன. வேப்பிலையும் வெண்சிறுகடுகும் பேய்க்காப்பெனப்படும். நரிக்கொம்பு மிகுந்த பொங்கை (அதிர்ஷ்டத்தை) உண்டு பண்ணும் என்பது பொது மக்கள் நம்பிக்கை. 20. தெய்வம்: சிலவிலங்கு பறவைகளின் உருவங்கள் தொன்றுதொட்டுத் தெய்வங் களாக வணங்கப்பட்டு வருகின்றன. கலுழனும் (கருடன்) நல்லபாம்பும் இன்றும் உயிருள்ள நிலையில் தொழப் பெறுகின்றன. நன்மைப் பேறும் தீங்கச்சமும் தெய்வத் தொடர்பும் இதற்குக் காரணமாம். இறுதியிற்கூறிய இரண்டும் மூடப்பழக்கமேயாயினும் பெரும்பாலும் மாந்தர்க் கில்லாத சிறப்பைக்காட்டுகின்றன. சிலர் மாந்தர்க்குப் பேசுந்திறன் பிறவுயிரிகட் கில்லாத பெருஞ்சிறப் பென்பர். சில கிளிகளும் பூவைகளும் கற்றுக்கொடுத்த அளவிலாவது பேசுந்திறனுடையன. இதுகாறும் கூறியவற்றால், மாந்தன் எக்காரணத்தையிட்டும் செருக்கடையாது, முடிசார்ந்த மன்னரும் முடிவிலொரு பிடிசாம்பராகும் உண்மையை நினைந்து, இறைவன் திருவடியடைந்து உய்வானாக. 23 தற்றுடுத்தல் ஆடவர் அரையில் ஆடை யணியும் முறை, (1) சுற்றிக் கட்டுதல், (2) தாறு பாய்ச்சிக் கட்டுதல், என இருவகை. இவ் விரண்டும் தமிழருடையனவே. சிலர் தாறு பாய்ச்சிக் கட்டுதல் ஆரிய வழக்கம் எனக் கருதுகின்றனர். அது தவறு. தாறு பாய்ச்சிக் கட்டுதலுக்கு முந் நிலைப்பாடு வேண்டும். அவை, (1) மெல்லாடை, (2) பல்வேறு மெய்யியக்கம், (3) வினைவிரைவு, என்பன. பஞ்சினாலும் பட்டினாலும் நெய்யப்பட்ட மெல்லாடை, வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் அணிந்து வந்தனர். உழவு, கூத்து, போர் முதலிய தொழில்கள் பல்வகை உடம்பசைவையும் விரைந்த செலவையும் கடுவுழைப்பையும் வேண்டுவன. ஆதலால், அவற்றைச் செவ்வையாய்ச் செய்தற்குத் தாறுபாய்ச்சிக் கட்டுதல் இன்றியமையாதது. இருந்தவிடத்தி லிருந்து கொண்டு நெசவாளி தன் வேட்டியைச் சுற்றிக் கட்டிக் கொண் டிருக்கலாம். ஆயின், விரைந் தியங்கும் வேட்டைக்காரனும், போர் செய்யும் மறவனும், நடஞ் செய்யுங் கூத்தனும், தாறுபாய்ச்சிக் கட்டாமல் தம் தொழிலைச் செய்ய முடியாது. கால் சட்டையும் சல்லடமும் (Drawers அரைக் காற் சட்டை) பண்டைக் காலத்திலில்லை. தாறுபாய்ச்சிக் கட்டுதல், (1) மொட்டைத்தாறு, (2) வட்டத்தாறு, (3) வால்தாறு, என மூவகை. மொட்டைத் தாறாவது, சுற்றிலும் வேட்டியைத் திரைத்து, முழங்காற்குக் கீழ் மிகுதியாய் அல்லது ஒரு சிறிதும் வேட்டி தொங்காதபடி முன்புற முந்தியை அல்லது அடிப்பாகத்தை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வட்டத்தாறாவது; ஒருபுற முந்தியைக் கணுக்கால் வரை இருகாலும் மறையத் தொங்கவிட்டு. மற்றொரு புறமுந்தியை இருகாற்குமிடையே பாய்ச்சிப் பின்னால் இறுகச் செருகுதல். வால்தாறாவது; வட்டத்தாற்றொடு பின்னால் வால் விட்டுக் கட்டுதலாம். இது ஒற்றை வால்தாறு; இரட்டை வால்தாறு என இருவகைப்படும். முன்பக்கத்தி லிருந்து ஒரு கீழ் முந்தியை மட்டும் பின்னாற் கொண்டுபோய் இடக்காற் பக்கமேனும் வலக்காற்பக்கமேனும் நடுவிலேனும் வால்விட்டுச்செருகுவது ஒற்றை வால்தாறு என்பதாம். இரு கீழ் முந்தியையும் முன்போற் கொண்டுபோய் வலக்காற்பக்கம் ஒன்றும் இடக்காற் பக்கமொன்றுமாக இருவால் விட்டுச் செருகுவது இரட்டை வால்தாறு என்பதாம். மொட்டைத் தாற்றுக்கு நான்கு முழழும், வட்டத்தாற்றுக்கு ஐந்து முழமும், வால் தாற்றுக்கு ஆறு முழமும், ஆடை வேண்டும். இவை, முறையே, ஒன்றினொன்று மதிப்பானவை. ஆதலால், கல்லாப் பொதுமக்களும் கல்லாப் பெரு மக்களும் கற்ற பெருமக்களும் இவற்றை, முறையே, கையாள்வர். இது தொன்றுதொட்ட வழக்கம். கல்லாப் பொதுமக்கள் பெரும்பாலும் உழைப்பாளிகளாதலின், மதிப்பு வேண்டாமையொடு உழைப்பு வசதியும் மொட்டைத்தாற்றையே அவர்க்குரியதாக்கும். ஊக்கமாய் வினைசெய்யும் உழைப்பாளிகள், சிறப்பாக உழவர், மொட்டைத்தாற் றுடையும் மிகையெனக் கருதி நீர்ச்சீலை (கோவணம்) யொன்றே யணிந்து வினைசெய்வர். எவ்வுழைப்பு வினையையும் ஊக்கமாய்ச் செய்ய முனையின், அரையாடையை இறுகக் கட்டிக்கொள்வது மாந்தர் இயல்பு. அதனால், ``குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.'' (குறள்.) என்று, தெய்வத்தின் மேலும் தற்றுடுத்தலை ஏற்றிக் கூறினார் திருவள்ளுவர். ஒரு வினையை முனைந்து செய்வதற்கு அரையில் ஆடையை இறுக்கிக் கட்டினால் மட்டும் போதாது; கீழ்ப் பாய்ச்சியுங் கட்ட வேண்டும். தற்றுடுத்தலெனினும் தாறு பாய்ச்சிக் கட்டுத லெனினும் ஒன்றே. தறுதல்-இறுகக் கட்டுதல் அல்லது உடுத்துதல். தற்றுடுப்பது தாறு. (முதனிலை நீண்ட தொழிலாகுபெயர்). தறு-தாறு. ஒப்பு நோக்க:இறு-ஈறு, உறு-ஊறு. தறுக்கணித்தல்: 1. உணவுப்பொருள் இறுகுதல். 2. சதை அல்லது புண் காய்த்துப் போதல். 3. பழங் கன்றிப் போதல். வழி நடைக்குக்கூட, சுற்றிக் கட்டுவதினும் தாறுபாய்ச்சிக் கட்டுதலே வசதியானது; அல்லாக்கால், கால் தட்டும், வெட்டும்; துணி பிதிரும், கிழியும். கி.மு. 3000 ஆண்டுகட்குமுன் மேனாடுகளில் துணி நெய்யப்பட வில்லை யென்றும், இந்தியாவினின்றே ஏற்றுமதி யாயிற்றென்றும், வயவர் சான் மார்ஷல் (Sir John Marshall) கூறுகின்றார். இதற்குச் சான்றாக, பருத்தியும் பஞ்சும் துணியும் பற்றிய தமிழ்ப் பெயர்கள் இன்றும் மேனாடுகளில் வழங்குகின்றன. பன்னல் - பருத்தி. L. Punnus-Cotton. It. Panno-Cloth. கொட்டை, கொட்டான். - பஞ்சு. Ar. Qutun, It. Cotone. Fr. Coton, E. Cotton. பருத்திப் பஞ்சைக் கொட்டையென்றும் கொட்டானென்றும் கூறுவது நெல்லை நாட்டு வழக்கு. E. Calico-Cotton Cloth. மலையாள (பழஞ்சேர) நாட்டுத் துறைமுகங்களுள் ஒன்றான கோழிக்கோட்டிலிருந்து ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் `காலிக்கோ' எனப்பட்டது. `கோழிக்கோடு' இன்று கள்ளிக் கோட்டை என மருவி வழங்குகின்றது. இம்மரூஉ. (Calicut என்னும்) ஆங்கிலப் பெயர் வடிவைத் தழுவியது: பண்டை மேனாட்டார் ஆடையைச் சுற்றிக் கட்டினரே யன்றித் தற்றுடுத்தினதில்லை. கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்குப் பின் இந்தியாவிற் புகுந்த வேத ஆரியர், ஆடுமாடு மேய்க்கும் முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்ததனால், அவரும் மெல்லாடையைத் தற்றுடுத்தியதுமில்லை; தமிழர்போற் கடுமையாய்ப் பலதுறையில் உழைத்ததுமில்லை. ஆகவே, தாறுபாய்ச்சிக் கட்டுதல் தொன்று தொட்ட தமிழர் வழக்கேயென்றும், அதனைக் குறிக்குஞ் சொல்லும் தூயதமிழ்ச் சொல்லேயென்றும், பிராமணர் கட்டும் பஞ்சகச்சமும் தமிழர் தற்றுடுத்தலின் வேறுபாடேயென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. 24 தலைமைக்குடிமகன் மக்கள் வாழ்க்கைக்கு எத்துணையோ பல பொருள்கள் வேண்டி யிருப்பினும், அவை யெல்லாவற்றுள்ளும் இன்றியமையாதது உணவு ஒன்றே. அதனால், உணவை விளைவிக்கும் உழவன் எல்லாருள்ளும் உயர்ந்தவனாகின்றான். இது பற்றியே, திருவள்ளுவர் தம் ஒப்புயர்வற்ற உலகப் பொது நூலில், குடி செயல் வகையின் பின் உழவதிகாரத்தை வைத்தார். உணவளிப்பவன் ``உழுவார் உலகத்திற் காணியர், தாற்றா(து) எழுவாரை யெல்லாம் பொறுத்து.'' (குறள்.) என்னுங் குறளால், உழவர் உலகமாகிய தேருக்கு அச்சாணியாவர் என்றுரைத்தார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார். `அச்சாணியில்லாத தேர் முச்சாணும் ஓடாது, செயற்கை விளைவின்றி, மக்களினம் பெருத்த உலகம் ஒரு நாளும் நடைபெறாது. உணவு விளைத்தலை அதன் அருமை பற்றி அளித்தல் என்றது உயர்வு நவிற்சி. விருந்தோம்பி வேளாண்மை செய்பவன் விருந்து புதுமை. புதிதாய் வந்த அயலார்க்கு அன்புடன் உணவளிப்பதே விருந்தோம்பல். வேளாண்மையாவது பிறரை விரும்பிச் செய்யும் பல்வகையுதவி. இவையிரண்டும், தாமாகவே உணவை விளைப்ப வரும் தலைமுறை தலைமுறையாய்ப் பிறரைப் பேணிப் பண்பட்டு வருபவருமான உழவர் குடியினர்க்கே இயலும். வேளாண்மை செய்வதிற் சிறந்ததினாலேயே, உழவர்க்கு வேளாளர் எனப்பெயர். உழுதுண்பாரும் உழுவித்துண்பாருமாக. வேளாளர் இருவகையர். ``வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்'' என்றார் நல்லாதனார். இரப்போர் சுற்றத்தான் ``இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய் தூண்மாலை யவர்.'' (குறள்.) என்றார் திருவள்ளுவ நாயனார். ``இரப்போர் சுற்றமும்........ உழவிடை விளைப்போர் (சிலப். நாடுகாண். 149) என்றார் இளங்கோ வடிகள் ஒத்தோர்க்கும் உயர்ந்தோர்க்கும் உயரிய முறையில் விருந்தளிப் பவர், இரப்போர்க்கு உணவும் பிறவும் அளிப்பது வியப்பன்று. புரப்போர் கொற்றத்தான் அரசன் உட்பட அனைவர்க்கும் உணவு விளைவித்தும், ஆள் வினைக்கு வேண்டும் ஆறிலொரு கடமையிறுத்தும், பகையரசன் படை யெடுத்துவரின் பொருதுவென்றும், ஊக்கமுள்ள தம் வேந்தன் பிறநாடுகளை வென்று புதுவிறல் தாயம் பெற உதவியும், அரசன் வெற்றிபெறக் காரணமா யிருப்பவர் வேளாண்பெருமக்களே. இதனால், ``பலகுடை நீழலுந்தங் குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்.'' (குறள். ) என்று திருவள்ளுவரும், ``வெளிற்றுப்பனந் துணியின் வீற்று வீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொறாத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே.'' என்று வெள்ளைக்குடி நாகனாரும், ``புரப்போர் கொற்றமும்...cH விடைவிளைப்போர்'' என்று இளங்கோவடிகளும், உழவரை உயர்த்துக் கூறினர். உழைப்பாளி கடுங்கோடையிலும் புயல்மாரியிலும் இரவும் பகலும் உடலை வருத்தி உழைப்பவர் உழவரே. ``உழுவாருலகத்திற் காணி'' என்னுங் குறளில் ``அஃதாற்றாது என்னுந் தொடரும், ``சுழன்று மேர்ப் பின்ன துலகம்'' என்னுங் குறளில் ``உழந்தும்'' என்னும் சொல்லும்,உழவுத்bதாழிலின்cழைப்புக்fLமையைக்கு¿க்கும்கு¿ப்புக்களாம்.பÆ®brŒjiy¥ `பாடுபடுதல்'vன்னும்bநல்லையுழவாtழக்கும்ïங்குக்fருதத்தக்கது.j‹DÇikahs‹ தன் நிலத்தில் உழுதுபயிர் செய்பவன் தனக்குத் தானே தலைவனாத லின், பிற தொழிலாளர் போல் பிறர்முன் கைகட்டி நிற்க வேண்டியதும் ஒருவர்க்கு அஞ்ச வேண்டியதும் இல்லை. ``உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்'' (குறள்.) என்று தமிழ்மறை கூறுதல் காண்க. முதற்றொழிலாளி உலகில் முதன் முதல் தோன்றியது உழவுத்தொழிலே. அதனால், பிற தொழிலாளரும் ஒவ்வொரு வகை உழவராகவே கூறப்படுவர். விற்படைஞரை வில்லேருழவர் என்றும், நூற் புலவரைச் சொல்லே ருழவரென்றும், கூறினார் திருவள்ளுவர். களவுத் தொழிலைக் களவேர் வாழ்க்கை என்றார் சீத்தலைச் சாத்தனார். வாள்மறவனை வாளுழவன் என்றது திவாகரம். பழுதற்ற தொழிலான் உழவுத் தொழிலில் ஒருவகை குற்றமுமில்லை. ``ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு,'' என்றார் அருந்தமிழ் மூதாட்டியார் ஔவையார். உண்மை இங்ஙனமிருப்பவும், ``உழவுத்தொழிலில் பூச்சி புழுக்களும் செடி கொடிகளும் கொல்லப்படுவதால், அதை இழிந்ததென்று உயர்ந்தோர் கை விட்டனர்.'' என்று ஆரியப் போலி அறநூல்கள்கூறும். இதினின்று தமிழ்க் கொள்கைக்கும் ஆரியக் கொள்கைக்குமுரிய ஏற்றத் தாழ்வைக் கண்டு கொள்க. தலைமைக் குடிவாசி மேற்கூறிய இயல்புகளால், உழவனே தலைமைக் குடிவாசி என்பது பெறப்படும். இதை உட்கொண்டே ``தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு) ஐம்புலத்தா றோம்பல் தலை.'' ``இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றில் நின்ற துணை.'' ``இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.'' ``வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.'' என்று குறிப்பாக வேளாளனைப் பாராட்டிக் கூறினர் திருவள்ளுவர். ``வேதநூல் முதலாகி விளங்குகின்ற தலையனைத்தும் ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே'' என்று கம்பர் கூறியதுங் காண்க. (ஏரெழுபது). பண்டைநாளில், சிற்றூர் வாணராயினும், பேரூர் வாணராயினும், கொல்லன், தச்சன், கற்றச்சன், கன்றான், தட்டான், கொத்தன், குயவன், வண்ணான், மஞ்சிகன் (நாவிதன்), வாணியன், பாணன், பறையன் முதலிய பதினெண் தொழிலாளரும் குடிமக்கள் எனப்பட்டு, உழவர்க்குப் பக்கத் துணையா யிருந்து தத்தம் தொழிலைச் செய்து, கதிரடிக்களத்தில் அவ்வக் காலத்துக் கூலத்தைக் கூலியாகப் பெற்று வாழ்ந்தமை, அக் காலத்துக் கூட்டரவு (சமுதாய) அமைப்பில் உழவரே தலைமையா யிருந்ததை உணர்த்தும். ``சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.'' என்னும் குறட்கருத்தும் இதனாலேயே விளங்கும். இங்ஙனம் பல்வகையிலும் உழவர் உயர்வுடையவராயிருந்தும், பிறப்போடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால், தாழ்ந்தவரென்று பிற்காலத்தில் தாழ்த்தப்பட்டனர். இதற்குத் தமிழரே காரணர். தன்னையும் தன்னினத்தையும் தகாதவகையில் தாழ்த்திக் கொண்டவன் தமிழனைத் தவிர வேறொரு நாட்டானும் இவ் விரிந்தவுலகத்தில்லை. பாண்டி வேளாளர், நெல்லை வேளாளர், சோழிய வேளாளர், கொங்க வேளாளர், தொண்டை மண்டலந் துளுவ வேளாளர், குடியானவர், உடையார், படையாட்சியர், பள்ளர் எனப் பலகுலத்தினர் இற்றைத் தமிழ உழவர். இவருள் தலைமையான நெல்லைச் சைவவேளாளரிடத்தும் பிராமணர் உண்பதில்லை. தமிழருள் தலைமையானவரே தாழ்த்தப்பட்டு விட்டதனால் அந்தணரரசர்வணிகர் வேளாளரான தமிழரெல்லாரும் சூத்திரர் எனத் தாழ்த்தப்பட்டு விட்டனர். தாழ்த்தப்பட்டவரென்று பொதுவாகக் கூறப்படுவார் ஒடுக்கப்பட்ட வரும் பிறதமிழராலும் தீண்டப்படாதவரு மாவர். இவ்விருநிலைமையும் மாறினாலொழியத் தமிழன் முன்னேற முடியாது. ஆரியர் வருமுன் இங்கிருந்த கூட்டரவுநிலை பொருளாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது. அவர் வந்தபின் ஏற்பட்டது. மதவியலை அடிப்படையாகக் கொண்டது. மேலும், உழவர் பெரும்பாலும் கல்லாதவராயிருப்பதால், நாட்டுப் புறத்தானென்றும், பட்டிக் காட்டானென்றும், படியாத முட்டாளென்றும், தற்குறியென்றும், இற்றையுழவனை இழித்துக் கூறுவதே வழக்கமா யிருக்கின்றது. பொங்கல் என்பது, உழவர் பண்டிகை, அறுவடையான பின், புதிரி என்னும் புது நெல்லைச் சமைத்து நன்றியறிவுடன் வழிபடு தெய்வத்திற்குப் படைத்துண்பதே பொங்கல். நீர்வளம் மிகுந்த பாங்கரில் முப்பூ விளையும். (பூவென்பது வெள்ளாமை.) நீர் வளமில்லா இடங்களில் மாரி நீர்த் தேக்கத்தால் ஒரு வெள்ளாமை தான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். ஆதலால், தைப் பொங்கல் பெரும் பொங்கல் எனப்பெறும். செந் நெற் பச்சரிசியைப் பெரும்பாலுந் தவிடு போக்காமல் சரி நீர் வைத்துச் சமைத்து, பருப்புக்குழம்புடன் உண்பது பொங்கல் மரபு. ``gU¥ò¡nf£F« g¢rÇá¢nrhW, brU¥ò¡ nf£F« á¤âiu khjbtÆš!'' என்பது பழமொழி, பொங்கற் பானையில் உலை பொங்கி வந்தவுடன் சிறிது வழிய விடுவது பொங்கல் அடையாளமாகக் கருதப் பெறும், இதுவே உழுதுண்பார் பொங்கல். அக்காரடலை (சருக்கரைப் பொங்கல்), அக்காரவடிசில் (சருக்கரை நெய்ப்பொங்கல்), நெய்ப்பொங்கல், மிளகுப் பொங்கல், வெண் பொங்கல் முதலிய சுவைமிக்க பொங்கல் வகைகளெல்லாம் உழுவித் துண்பாரும் செல்வருமான பிறர் பொங்கல். பால் பொங்க வைப்பது இடையர் பொங்கல். சல்லிக் கட்டென்றும் மஞ்சு விரட்டென்றும் மாடுவிடுதல் என்றும் நடைபெற்றுவருவது பண்டை முல்லை நில வழக்கம். (ஏறுதழுவல்). திணை நிலைக் காலத்தில் உழவர் வழிபட்ட தெய்வம் விண்ணோர் தலைவனான வேந்தன் (இந்திரன்). திணைமயக்கம் ஏற்பட்டபின், பாலை நிலத் தெய்வமான காளியும், நடுதல் தெய்வங்களும் வழிபடு தெய்வங்களாயின. சிவநெறியும் திருமால் நெறியுமான பெருமதங்கள் தோன்றியபின், உழுவித்துண்பார் தம் கொள்கைப்படி சிவனையோ திருமாலையோ வழிபட்டு வருகின்றனர். ஆங்கிலக் கல்வியினாலும் நயன்மை (நீதி)க்கட்சி யாட்சியினாலும், தமிழரிடையே மறுமலர்ச்சியுண்டாயிருப்பதால், பொங்கல் பெருநாள் ஒரு நாட்டினத் திருநாளாகத் தமிழரனைவராலும் ஒருவகைப் புத்துணர்ச்சியுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பிராமணர் பொங்கலைச் சங்கராந்தி என்பர். பொங்கல் உழவர்க்கே சிறப்பாகவுரிய பெரும் பண்டிகையாயினும், அரசியலாரும் உழவரல்லாத பிற பொது மக்களும் இப்பெருநாளைக் கொண்டாடி உழவரை ஊக்குவதுடன்; நன்றியறிவாகவும் தந்நலங்கருதியும், நிலமுள்ள ஏழையுழவர்க்குக் கடனடைக்கவும், குலவெருதுகள் வாங்கவும் பொருளுதவியும், பொறியியற் கருவிகள், நல்விதைகள், வல்லுரங்கள் முதலியன இலவசமாக வழங்கியும்; நிலமில்லாதவுழவர்க்கு அவற்றோடு நிலமும் வழங்கியும்; பெருநிலக் கிழவரும் சிறுநிலக்கிழவரும் `நிலமில்லா வுழவருமாகிய முத்திறத்தார்க்கும் புதிய அறிவியல் முறைகளைக் கற்பித்தும்; உழைப்பினால் பெருவிளைவு காட்டுபவர் பண்ணையாராயின் (மிராசுதார்) பட்டம் சின்னம் சலுகை முதலியவற்றாலும் எளியவராயின் நன்கொடையினாலும், சிறப்பித்தும்; சூத்திரன் என்னும் சிற்றிழிவையும் தீண்டாதான் என்னும் பேரிழிவையும் அடியோடகற்றியும்; எதிர்கால வுழவராவது தாய்மொழிச் செய்தித்தாளைப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக் கொள்ளுமாறு, இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியை விரைந்தேற்படுத்தியும்; உணவுப் பொருள் விளைவுப் பெருக்க இயக்கத்தை ஓங்கச் செய்வாராக. ``பகடு நடந்த கூழ்'' என்று நாலடியார் கூறியபடி, உழவுத் தொழிற் குதவும் எருதுகளையும், பிந்தியுதவக் கூடியகன்றுகளையும், பாலுண வளிக்கும் பெற்றங்களையும் (பசுக்களையும்), போதிய ஊட்டங் கொடுத்தும், மிகைவேலை வாங்காதும், நோய் மருத்துவஞ்செய்தும், உடையவர் பேணுமாறு கருத்தாய்க் கவனித்தும்; பேணாதவரைத் தண்டித்தும்; கால்நடைப் பண்ணைகளை ஆங்காங்கு ஏற்படுத்தியும்; அரசிலார் உழவுத் தொழிலை ஊக்குவாராக. உழவர் வாழ்க! உழவெருதுகள் வாழ்க! 25 மாராயம் மாராயம் என்பது, செயற்கரிய செய்த அமைச்சரும் படைத்தலை வரும் மறவரும் புலவரும் பிறரும் மாராயனாகிய வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. அது `மாராயம் பெற்ற நெடுமொழி யாகும்'' என்று வஞ்சித் திணைத்துறையாகத் தொல்காப்பியப் புறத்திணையியலில் (81) குறிக்கப் பட்டுள்ளது. இதற்கு நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை கூறியுள்ளார். ``மாராயம் பெற்ற நெடுமொழியாலும்- வேந்தனாற் சிறப்பெய்திய வதனால் தானேயாயினும் பிறரேயாயினும் கூறும் மீக்கூற்றுச் சொல்லும்; ``சிறப்பாவன:- ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படைவேண்டியவாறு செய்க என்றது; இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது. ``போர்க்கடலாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ-போர்க்கெலாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதிப் பட்டத்திவன்'' இது பிறர் கூறிய நெடுமொழி. ``துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின் கால மாரியின் அம்பு தைப்பினும் வயற் கெண்டையின் வேல் பிறழினும் பொலம்புனை யோடை அண்ணல் யானை இலங்குவான் மருப்பின் நுதிமடுத் தூன்றினும் ஓடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுவது யாவது படினே மாசில் மகளிர் மன்றல் நன்றும் உயர்நிலை யுலகத்து நுகர்ப அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றுங் காண்டிரோ வரவே'' புறம் (287) இது தண்ணடை பெறுகின்றது.'' தண்ணடை - நாடு, மருதநிலத்தூர். ``வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே.'' (மரபியல், 83) என்று தொல்காப்பியம் கூறுவதற்கேற்ப, புறப்பொருள் வெண்பாமாலை `மாராய வஞ்சி' என்னுந்துறைக்குக் கூறும், ``நேராரம் பூண்ட நெடுத்தகை நேர்கழலான் சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப்-போரார் நறவேய் கமழ்தெரியல் நண்ணா ரெறிந்த மறவே லிலை முகர்ந்த மார்பு'' என்னும் வெண்பா, போர்மறவர் முத்தாரங்களை மாராயமாகப்பெறும் செய்தியைக் குறிக்கின்றது. இனி பகையரசன் தலையையோ அவனுடைய படைத்தலைவன் தலையையோ கொண்டுவந்து கொடுத்த மறவனுக்கு வேந்தன் செய்யும் சிறப்பு `தலைமாராயம்' என்னும் காஞ்சித்திணைத் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலையிற் கூறப்பட்டுள்ளது பகைவனின் தலையைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் செய்த மாராயம் தலைமாராயம். அதற்குரிய வெண்பா. ``உவன்தலை யென்றும் உறழ்வின்றி யொன்றார் இவன்தலையென் றேத்த வியலும்-அவன்தலை தந்தாற்கு நல்கல் வியப்போ இளந்தேத்தி வந்தார்க் குவந்தீயும் வாழ்வு.'' என்பது இது தருவானது பெருவாழ்விற்கேற்ற பெருஞ் செல்வத்தைக் குறிக்கின்றது. இனி, நாடும் ஊரும் ஆரமும் செல்வமும் முதலிய உடமைகளைக் கொடுப்பதுடன், மாராயன் என்னும் பட்டத்தையும் அரும்பணியாற்றிய அமைச்சர் படைத் தலைவர் கருமத்தலைவர் முதலியோர்க்கு வேந்தன் மாராயமாகக் கொடுப்பது வழக்கம். ``பஞ்சவன்மாராயன்..........bfh§fhŸth‹'' என்று கல்வெட்டில்வருதšகாண்க. அரிவர்த்தன பாண்டியனின் அமைச்சராகியமாணிக்கவாசக®பிராமணராயிருந்ததினால்,தென்னவன்பிரமராaன்என்Dம்பட்டத்தைமாராயமாகப்பெற்றh®. முரஞ்சியூரிலிருந்த முடிநாகர்மரபைச் சேர்ந்த புலவர் ஒருவர் முடிநாகராயர் என்னும் பட்டம் பெற்றார் போலும்! பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த அரசர், குறுநில மன்னர் என்னும் சிற்றரசரும்பெருநிyமன்ன®என்னு«பேரரசருமாfஇUதிறத்தினர். சேர சோழ, பாண்டியர் மூவரும் பேரரசர்; பிறறெல்லாம்சிற்றரச®பின்னவ®வேளி®எனவு«பெய®பெறுவர். அரசன் என்னும் சொல் அரைசன், அரையன் என்றும் முறையே திரிந்து வழங்கும். அரையன் என்னுஞ்சொல்லாற் குறிக்கப்பெறும்போது, பேரரசன் மாவரையன் எனப்படுவான். மாவரையன் என்பது மாராயன் என மருவும், மாராயன் செய்யும் சிறப்பு மாராயம் எனப்பட்டது. நச்சினார்க்கினியர், ``ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் Kjலியனவும்gWதலுமாம்''என்Wரைத்துமாuயம்என்gதுஎன்dதென்றுவிள¡கினாரேயெhழிய,மாuhயம்என்னுŠசொšலிற்குப்பொUள்கூறினhரல்லர்.அவர் ஒரு மொழி நூலதிகாரியுமல்லர்; அவர் காலத்தில் மொழியாராய்ச்சியும் இல்லை. ஆகவே, மாராயம் என்பது, மாராயனால் செய்யப்படும் சிறப்பென்றே பொருள் படுவதாகும். அச்சிறப்பு செல்வக்கொடை பட்டமளிப்பு என இரு வகைப்படும். பொதுவாக படைத் தலைவர்க்கு ஏனாதிப்பட்டம், அமைச்சருக்குக் காவிதிப் பட்டமும், வணிகர்க்கு ஏட்டிப் பட்டமும் வழங்கப்பெறும். ஏனாதி நல்லுதடன், ஏனாதி திருக்கிள்ளி, எனாதி நாயனார் (சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவர்) முதலிய பல ஏனாதிப் பட்டத்தினர் பெயர்கள் இலக்கியத்திற் காணப்படுகின்றன. காவிதி என்னும் சொல்லிற் குத்திவாகரத்தில் மந்திரி யென்னும் பொருளும், சூடாமணி நிகண்டில் கணக்கர் என்னும் பொருளும் கூறப்பட்டுள. எட்டி காவிதியர்க்குக் கொடுக்கப்படும் பொற்பூ, எட்டுப்பூ, காவிதப்பூ என்றும், நாடு அல்லது ஊர் எட்டிப் பரவு காவிதிப்புரவு என்றும், முறையே பெயர் பெறும் வணிக மாதர் இவ்விருபட்டங்களையும் பெற்றதகாக் கூறும் ``எட்டி காவிதிப் பட்டந்தாங்கிய மயிலியன் மாத'' என்னும் பெரு கதைக்கூற்று எத்தகைய தென்று திட்டமாய்த் தெரியவில்லை ஒருகால் கணவர் பட்டங்களை அவர்களும் தாங்கி வந்தனர் போலும்! ஏனாதிக்குக் கொடுக்கப்படும் அடையாளம் மோதிரமாகும் அது ஏனாதி மோதிரம் எனப்படும். வேந்தனாற் பெறும் பெருஞ்சிறப்பு மகிழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் உரிய நற்செய்தியாதலல், மாராயம் என்னும் சொல்லிற்கு மகிழ்ச்சி, பாராட்டு நற்செய்தி முதலிய பொருள்களுந் தோன்றியுள்ளன. 26 முக் குற்றம் ஆதனின் (ஆன்மாவின்) அல்லது மாந்தனின் குற்றங்களை யெல்லாம் மூன்றாக அடக்கி, அவற்றை ஆசை, சினம், அறியாமை என முறைப்படுத்திக் கூறினர் நம் முன்னோர். அவற்றையே, ``காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமங் கெடக்கெடு நோய்'' (குறள். 360) என்றார் திருவள்ளுவர். காமம் ஆசை; வெகுளி சினம்; மயக்கம் அறியாமை. வெகுளி, சினம் என்பன ஒருபொருட் சொல்லாயினும், வேகும் நெருப்பைப் போல வெம்மை மிக்க சினமே வெகுளி என அறிக. ``குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது'' (குறள். 29) என்னுங் குறளை நோக்குக. பொதுவாக, அறியாமையே துன்பத்திற்கெல்லாம் மூலமாகச் சொல்லப்படுகின்றது. ஒரு பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதாலும், ஒரு கொடிய உயிரியிடம் அல்லது பொறியிடம் அல்லது இயற்கையிடம் அகப்பட்டுக் கொள்வதாலும், ஒரு தீயபொருளை நல்லதென்று நுகர்வதாலும், துன்புறுவது மெய்யே. ஆயின், அவற்றை அண்டாமலும் நுகராமலும் இருந்த விடத்திற் பாதுகாப்பாக விருப்பின், பெரும்பாலும் துன்பத்திற்குத் தப்பிக் கொள்ளலாம். ஒரு பொருளைத் தேடிச் சென்று அது கிடையாக்கால் துன்புறுவதற்கு, அது பற்றிய அறிவும் ஓரளவு கரணியமாம். ஆகவே, உண்மையில் துன்பத்திற்கு மூலக்கரணியமாயிருப்பது ஆசையேயன்றி வேறன்று. இன்ப துன்பங்களை விளைவிக்கும் நல்வினை தீவினைகளைச் செய்விப்பதும், ஒருவனுடைய ஆசையே யன்றி அறியாமையன்று. அதனாலேயே, ``அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து'' (குறள் 361) ``அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும்'' (குறள். 368) ``இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந் துன்பத்துள் துன்பங் கெடின்'' (குறள். 369) ``ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும்.'' (குறள். 370) என்றார் திருவள்ளுவர். அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தைத் துறவறவியலின் இறுதியில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கதாம். காமம் அல்லது ஆசை துன்பத்திற்கு மூலக் கரணியமாயிருப்பத னாலேயே அது முன்வைக்கப்பட்டது. விரும்பியதொன்று கிடையாமை யால் அல்லது வெறுப்பான தொன்றை இன்னொருவன் செய்ததனால், சினம் அல்லது வெகுளி பிறப்பது இயல்பே. ஆயின், காமத்திற்கும் வெகுளிக்கும் இடை நிலம் (Middle Ground) இருப்பதனால், வெகுளி என்பது காமம் என்பதன் எதிர்ச்சொல்லே (Contrary term) யன்றி மறுதலைச் சொல் (Contradictory term) அன்று. விரும்பாத பொருள்மேலெல்லாம் ஒருவனுக்கு வெறுப்புண்டாகாது. அம் மனப்பான்மை நொதுமல் நிலை யொத்ததே. காமத்தொடு எதிர்நிலைத் தொடர்பு கொண்டிருப்பதால், வெகுளி அதன் பின்வைக்கப்பட்டது. மயக்கம் என்றது அறியாமையே அறிவு முற்றறிவும் சிற்றறிவும் என இருவகைப்பட்டிருப்பது போன்றே, அறியாமையும் முற்றறியாமையும் சிற்றறியாமையும் என இருதிறப்படும். ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமை முற்றறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பிறழவுணர்தல் சிற்றறியாமை ஒன்றை அதுவோ இதுவோ என மயங்கல் அறிவிற்கும் அறியாமைக்கும் இடைப்பட்ட ஐயநிலை. சிற்றறியாமை திரிபு என்றும், முற்றறிவு தெளிவு என்றும், சொல்லப்பெறும். காம வெகுளி மயக்கம் என்னும் மூன்றையும் வடவர் ஐந்தாக விரிப்பர். ``குற்றங்களைந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன; இவற்றை வடநூலார் பஞ்சக்கிலேசமென்பர்'' என்று 38ஆம் குறளுரையிலும், ``அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவாவும். அதுபற்றி அப்பொருட்கட் செல்லுமாசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங் கோபமுமென வடநூலார் குற்றமைந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக் கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணு மடங்குதலான், மூன்றென்றார்.'' என்று 360ஆம் குறளுரையிலும், பரிமேலழகர் கூறியிருத்தல் காண்க. அகங்காரம் என்னும் சொல், வடமொழியில் வினை முதனிலை யின்றி அஹம்-கார என நின்று, நான் என்னும் அகப்பற்றை யுணர்த்து மென்றும், தமிழில் அகங்கரி என்னும் முதனிலையடிப் பிறந்து அகங்கரிப்பு அல்லது செருக்கு என்று பொருள்படும் தொழிற்பெயர் அல்லது தொழிற் பண்புப் பெயராகுமென்றும். வேறுபாடறிக. அகம் மனம். கரித்தல் கடுத்தல் அல்லது மிகுதல் அகம் + கரி = அகங்கரி - அகங்கரிப்பு. அகங்காரம் வடமொழியில், அஹம்-கார என்பது எனது என்னும் புறப்பற்றை யுணர்த்தும் மமகார என்பதன் மறுதலைச் சொல்லாம். தமிழில் அத்தகைய நிலையின்மையை நோக்குக. இதனால் இருசொல்லும் வெவ்வேறெனவும், வடிவொப்புமை யினாலும் ஆராய்ச்சியின்மையாலும் தமிழரால் அறியாதும், வடவரால் அறிந்தும், ஒன்றோடொன்று மயக்கப் படுகின்றன வென்றும் அறிக. இனி, ஆரியச்சார்பான சிவனியக் கொண் முடிபில் (சைவ சித்தாந்தத்தில்), ஆணவம், மாயை, காமியம் எனக் கூறியிருக்கும் மும்மலப் பெயரும், காம வெகுளி மயக்கம் என்பவற்றின் திரிப்பே யென்பது, என் `தமிழர் மதம்' என்னும் நூலில் விளக்கப்பெறும் ஆணவம் என்பது ஆண் என்னும் அடிப்பிறந்து அகங்காரத்தை அல்லது வெகுளியைக் குறிப்பது; அணு என்னும் அடிப்பிறந்து அறியாமையைக் குறிப்பதன்று. மயக்கம் என்பதே அறியாமையை (உயிரொடு நிலையான தொடர்பற்ற உடம்பை நான் என உணரும் திரிபுணர்ச்சியை) உணர்த்தும். ஐம்பூதங்கட்கும் மூலமான மாயை வேறு; பிறழ்வுணர்ச்சியைக் குறிக்கும் மயக்கம் வேறு, மாய்+ஐ = மாயை (மாய்ந்த அல்லது மறைந்த நிலை). ஒ. நோ: சாய் + ஐ = சாயை = சாயா (வ), மாயை - மாயா (வ). காமம்-காமியம்=விருப்பமானவை. கார்மிய என்பதன் திரிபாகக் கொண்டு இருவகை வினையென்று கூறுவது பொருந்தாது. திருவள்ளுவர் இல்லறத்தாலும் வீடுபேறுண்டெனக் கூறியிருத்த லாலும் சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரிய புராணங் கூறுதலாலும் நுகர்ச்சியினாலும் நல்வினையாலும் பழந்தீவினை போக்கப்படுமாதலாலும் தீவினை கலவாது இறைவழிபாட்டோடு கூடிய நல்வினைத் தொகுதியும் பிறவிக்குக் கரணியமாம் என்பது உத்திக்குப் பொருந்தாமையாலும், இவ்வுலகிற் பிறந்து வளர்ந்து கற்றுத் துறந்து ஒரு வினையும் செய்யாமல் வீடுபெறலாமென்பது இயலாத தாதலாலும், ``நல்வினை தீவினைகள் மேற்குறித்தவாறு தூலமாச் செய்யப்படும் பொழுது `ஆகாமியம் என்றும் பின் சூக்குமமாய நிலைபெற்று நிற்கும் பொழுது `சஞ்சிதம்' என்றும், பின் இன்பத் துன்பங்களாய் வந்து பயன்படும் பொழுது `பிராரத்தம்' என்றும் பெயர் பெறும் `பிராரத்தமே' ஊழ் எனப்படுகின்றது. `நல்வினை தீவினை' என இருவகைப்பட்டு விரியால் எண்ணிறந்தனவாய் நிற்றலின் சடமாயும் பலவாயும் உள்ள இவை `காரியம், என்பதும். அதனால் இவை ``தோற்றமும் அழிவும் உடையன'' என்பதும், அதனால் மூலகன்மமே காரண கன்ம மாயத் `தோற்றக் கேடின்றி நிற்கும்' என்பதும், அதனால் மூலகன்மமே காரண கன்ம மாயத் `தோற்றக் கேடின்றி நிற்கும்' என்பதும் பெறப்படும்.'' என்று அறப்புரவளாகம் (தருமையா தீனம்) வெளியிட்டுள்ள `சித்தாந்தத் தெளிவியல்' என்னும் கொண்முடிபுத் தெளிவியல் கூறுவது (பக். 160) அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற்கேற்காது. ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் மூன்றையும் முறையே எதிர்வு, இறப்பு, நிகழ்வு எனத் தூய தமிழிற் கூறலாம். 28 திருவள்ளுவர் காலம் முதலிரு கழக இலக்கியமும் அழிக்கப்பட்டபின், தமிழ் நாகரிகத்தை யும் பண்பாட்டையும் தாங்கிக்கொண்டிருக்கும் இருபெரு நூல்களுள் ஒன்றான திருக்குறளின் காலம், அதை இயற்றிய திருவள்ளுவரின் காலம், இன்ன நூற்றாண்டில் இன்னவாண்டிலிருந்து இன்னவாண்டுவரை என்று திட்டவட்டமாய்க் கூறுதற்கியலாவிடினும், தொல்காப்பியர் காலமாகிய கி.மு. ஏழாம் நூற்றாண்டிறகும் கடைக்கழக முடிவாகிய கி. பி. 3ஆம் நூற்றாண் டிற்கும் இடைப்பட்டதாய்க் கிறித்துவிற்கு முந்தியதென்று கொள்வது, பெரும்பாலும் குற்றத்திற்கிடமில்லாததும் ஏறத்தாழ உண்மையை ஒட்டியதுமாகும். திருவள்ளுவர் காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தினதென்பதற்குச் சான்றுகள்: 1. தொல்காப்பிய நூற்பாக்களையும் மாந்தர்ப் பகுப்பையும் திருவள்ளுவர் தழுவியிருத்தல். திருவள்ளுவர், ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப'' (1434) என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, ``நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்'' (28) என்னுங் குறளிலும், ``எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான'' (981) என்னுந் தொல்காப்பிய நூற்பாவை, ``கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்'' (1137) என்னுங் குறளிலுந் தழுவியிருத்தலும். ``மாவும் மாக்களும் ஐயறி வினவே'' (1531) ``மக்கள் தாமே ஆறறி வுயிரே'' (1532) என்று, ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு அல்லது பண்பாடு உள்ளவரை மக்கள் என்றும் அஃதில்லாதவரை மாக்கள் என்றும், மாந்தரை இரு வகுப்பினராகத் தொல்காப்பியர் வகுத்தவாறே, ``விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்'', (410) ``அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்'', (997) ``மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்'' (1071) என்னுங் குறள்களிற் பண்பட்ட மாந்தரை மக்கள் என்றும், ``கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து'', (329) ``செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென்'' (420) என்னுங் குறள்களிற் பண்படா மாந்தரை மாக்கள் என்றும், கூறியிருத்தலுங் காண்க. 2. ``இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை'' (53) என்னுங் குறளிலுள்ள `ஆனால்' என்னுஞ் சொல்வடிவம் தொல்காப்பியர் கால நடைக்கு ஏற்காமை. `ஆயின்' என்பதே அற்றைக்கேற்ற வடிவமாம். 3. ``ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல'' (510) என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலுங் கைக்கொள்ளப் பெறாமை. எ-டு: ``உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அங்காற் கள்ளியங் காடிறந் தோரே'' (குறுந். 16) ``சென்றோர் மன்றநங் காதலர் என்றும்'' (நற். 226) ``முந்துவந் தனர்நங் காத லோரே.'' (ஐங். 223) ``சொல்வரைத் தங்கினர் காத லோரே'' (கலித். 2) ``மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே.'' (அகம். 211) இங்ஙனமே, ``நெருநற்றுச் சென்றார்எங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து'' (1278) என்று குறளிலும் உலகவழக்கிற்குரிய உயர்வுப் பன்மை வந்திருத்தல் காண்க. 4. ``எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே'', (1008) ``வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்'', (1336) ``வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே'' (1582) என்று தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்ட முழுநிறைவான மூவேந்தர் தலைமை, ``பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு'' (735) என்று குறைவுறக் குறிக்கப்பட்டமை, 5. ``தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில்'' (256) என்னுங் குறள் புத்தமதக் கொள்கையைக் கண்டிப்பதாயிருத்தல். புத்தர் காலம் கி. மு. 6ஆம் நூற்றாண்டு. புத்த மதம் உலகிற் பரப்பப் பட்ட காலம் கி. மு. 273-36. அசோகன் மகன் (அல்லது உடன்பிறந்தான்) நால்வருடன் இலங்கை சென்று அங்குப் புத்த மதத்தைப் பரப்பிய காலம் கி. மு. 247-07. அதன் பின்னரே அம் மதம் தமிழகத்திற் புகுந்திருத்தல் வேண்டும். 6. `மலர்மிசை யேகினான்' (`பூமேல் நடந்தான்'), `பொறிவாயி லைந் தவித்தான்' முதலிய அருகன் பெயர்கள், கடவுட்பெயர்களாகத் திருக்குறள் முதலதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளமை, புத்த மதத்தின் பின்னரே ஆருகதம் தமிழகம் வந்ததாகத் தெரி கின்றது. திருவள்ளுவர் காலம் கடைக்கழக முடிவிற்கு முந்தியதென்பதற்குச் சான்றுகள்: 1. ``பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்'' (319) என்னுங் குறள், ``முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றிய காண்'' (21:3-4) என்று கி. பி. 2ஆம் நூற்றாண்டினதான சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாக இளங்கோவடிகளால் அமைக்கப்பட்டிருத்தல். 2. ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை'' (55) என்னுந் திருக்குறள், ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்'' என்று பெரும்பாலும் சொன்மாறாதும் திருவள்ளுவரின் சிறப்புப்பெயர் குறிக்கப் பெற்றும், சிலப்பதிகாரக் காலத்ததான மணிமேகலையில் (22:59-62) சதுக்கப் பூதத்தின் கூற்றாகச் சீத்தலைச் சாத்தனாரால் எடுத்தாளப் பெற்றிருத்தல். 3. ``எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு'' (110) என்னுந் திருக்குறட் கருத்து ஆலத்தூர்கிழார் பாடிய, ``ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ'' (34) என்னும் புறப்பாட்டிலும், ``ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய்'' (69) என்னுங் குறட்கருத்து, காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய ``செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே'' (278) என்னும் புறப்பாட்டிலும், அமைந்திருத்தல். ``அறம்பாடின்றே'' என்று நூலின் சிறப்புப் பெயரைக் குறியாது அதன் பொருள்வகையையே பொதுப்படக் குறித்தமையால், ஆலத்தூர்கிழார் காலத்தில் திருக்குறள் மிகப் பழைமையானதாகவும் அளவைநூலாகவும் இருந்திருத்தல் வேண்டும். சான்றோன் என்னுஞ் சொல், ``சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே'' (புறம். 312) என்பதிற்போல் கல்வியறிவொழுக்கத்தாற் சிறந்தவனை மட்டுமன்றி, ``தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்', (புறம். 63) என்பதிற்போல் போர்மறவனையுங் குறிப்பது கருதத்தக்கது. 4. கி.மு. 3ஆம் நூற்றாண்டினதான திருக்கோவை 25 கிளவிக் கொத்துகளையும் 400 துறைகளையும் கொண்டிருக்க, இன்பத்துப்பால் என்னுந் திருக்குறட்கோவை கிளவிக்கொத்தின்றி 135 துறைகளே கொண்டிருத்தல். தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுள்ள துறைகள் ஏறத்தாழ நானூறு. அவற்றுட் சில திருக்கோவையில் இல்லாதன; சில பெயர் குறிக்கப்பெறாதன; சில, நுண்வேறுபாடுகளுடையன. திருக்கோவைக்குப் பிந்தின கோவை களில் 45 வரை துறைகள் கூடியுள்ளன. திருக்குறள் அறநூலாதல் பற்றி அறமல்லாத துறைகள் விலக்கப்பட்டிருப்பினும், 135 என்பது மிகக் குறைவான தொகையாதலால், அது திருக்கோவைக்குப் பல நூற்றாண்டுகள் முந்தினதா யிருத்தல் வேண்டும். 5. திருவள்ளுவர் மயிலையில் வாழ்ந்த ஏலேலசிங்கன் என்னும் கடல்வாணிகரிடம் நூல் வாங்கி நெசவுத்தொழில் செய்ததாகச் செவி மரபுக்கதை கூறுதல், ஏலேலசிங்கன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு. 6. கிறித்துவிற்குப் பிற்பட்ட சிறப்பு நிகழ்ச்சி எதுவும் திருக்குறளில் குறிப்பாகவேனுங் கூறப்படாமை. கடைக்கழகச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது. இச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி. மு. 2ஆம் நூற்றாண் டென்று கொள்வது மிகப் பொருத்தமென்றும், எவ்வகையிலும் அது கிறித்துவிற்குப் பிற்பட்டதாகாதென்றும், ஒருகால் புத்தாராய்ச்சியால் இம் முடிபு மாற்றப் பெறினும் திருவள்ளுவர் காலம் இதினும் முற்படுமே யன்றிப் பிற்படாதென்றும், தெற்றெனத் தெரிந்துகொள்க. இன்னும் இதன் தொடர்பான பிற செய்திகளையெல்லாம் என் `திருக்குறள் தமிழ் மரபுரை'யின் முன்னுரையிற் கண்டு தெளிக. கடைக்கழக முடிவு கி. பி. 5ஆம் நூற்றாண்டென்பது, காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் (V. R.) இராமச்சந்திர தீட்சிதரின் முடிபாம். தொல்காப்பியர் காலம் கி. மு. 7ஆம் நூற்றாண்டென்பது, என் தொல்காப்பிய விளக்கத்தில் தக்க சான்றுகளால் நிறுவப் பெறும். - திருவள்ளுவர் 2000 ஆண்டு விழா மலர் - சேலம் நகரத் தமிழாசிரியர் கழகம் 1969 27 வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழா வாழ்த்துரை விளக்கம் முகவுரை: கன்னி உ-ஆம் பக்கல் (18-9-74) அறிவன் (புதன்)கிழமை பிற்பகல் 5 மணிக்கு, சென்னை மாநகர் நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில், மாண்புமிகு கல்வியமைச்சர் பர். (Dr.) நாவலர் இரா. நெடுஞ்செழியனார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு முதலமைச்சர் பர் (Dr.) கலைஞர் மு. கருணாநிதியார் அவர்கள் தொடங்கி வைத்த வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில், மாண்புமிகு பொதுப்பணித் துறையமைச்சர் ப. உ. சண்முகனார் அவர்கள் வேண்டுகோட் கிணங்கி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறையமைச்சர் பேரா. க. அன்பழகனார் அவர்கள் முன்னிலையில், நான் வழங்கிய வாழ்த்துரை நேரமின்மைபற்றி முற்றுப் பெறாமையால், அதைப் பலர்க்கும் பயன் படுமாறு முற்றுவித்தற் பொருட்டு, இந்நெடு விளக்கக் கட்டுரையை வரையலானேன். 1. வாழ்த்துரை வகைகள் இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து என வாழ்த்துரை மூவகைப்படும். ஒருவருடைய சிறந்த பண்புகளையும் அரிய ஆற்றல்களையும் எடுத்துரைத்துப் புகழ்வது அல்லது வாழ்த்துவது, இயன்மொழி வாழ்த்து, ``அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்தும்'' (தொல். புறத். 35). ``மயலறு சீர்த்தி மான்றேர் மன்னவன் இயல்பே மொழியினும் அத்துறை யாகும்.'' (பு. வெ. 9:195). கடவுள் (அல்லது நீ வணங்கும் தெய்வம்) உன்னைப் பாதுகாக்க, நீ வழிவழி செல்வத்தோடு சிறந்து விளங்குக என்று, ஒருவரை வாழ்த்துவது புறநிலை வாழ்த்து. ``வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்என்னும்புறநிலைவாழ்த்தே.....'' (தொல். செய். 109). நோயாளிக்கு முன்பு கசப்பாகவும் காரமாகவுமிருந்து வருத்தினும், பின்பு நலம்பயக்கும் மருந்து போன்று, நெறிதவறியவருக்கு அல்லது அறியாதவருக்கு முன்பு கேட்பதற்கு வெறுப்பாக இருப்பினும், பின்பு நன்மை பயக்கும் நல்லறிவுரை கூறுவது வாயுறை வாழ்த்து. வாயுறை மருந்து. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்(று) ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே.'' (தொல். செய். 111 வாழ்த்துதல் என்பது ஒருவரை நலமாக நீடு வாழவைத்தல், அது, முற்றத் துறந்த முழுமுனிவரான நிறைமொழி kந்தர்mல்லதுMன்றவிந்jடங்கியrன்றோர்``நீடுthœf''என்று bசால்tதனாலும்,மூதறிஞ®கூறும்mறவுuஅல்லது அறிவுuயாலும்நிகழும். தனிப்பட்lt®¡F இவ்விரு tழியும்ïயலும்;xருbதாகுதியார்க்கோãன்னதேVற்கும்.âUtŸSt®, உலகினர் அனைவர்க்கும், சிறப்பாகத் தமிழர்க்கு, உரைத்த அறவுரையும் அறிவுரையுமான திருக்குறள், திருவள்ளுவ மாலையில் மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் என்னும் புலவர் பெயரிலுள்ள, ``இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும் மன்பதைக் கெல்லாம் மனமகிழ-அன்பொழியா துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து'' என்னும் வெண்பாவின்படி, `வாயுறை வாழ்த்து' எனப்படினும் உண்மையிற் `புறநிலை வாழ்த்து'ங் கலந்ததேயாகும். இயன்மொழி வாழ்த்திற் கடவுள் வாழ்த்தும் அடங்குவதனாலும், கடவுளை ஒருவர் புகழ்வதன்றி வாழவைத்தல் என்பது பொருந்தாமை யாலும், மாந்தரைப் புகழ்வதற்கும் கடவுளைப் புகழ்வதற்கும் வேறு பாடுண்மையாலும், கடவுள் வாழ்த்திலுள்ள சிறப்பான அச்சத்தோடு கூடிய அன்பு வணக்கத்தைக் குறித்தற்கு, வாழ்த்து என்னும் சொல்லினின்று வழுத்து (வ. துதி) என்னும் சொல் திரிக்கப் பட்டது. ``வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீ ரென்று.'' (குறள். 1317) என்னும் திருக்குறளில், வழுத்தினாள் என்னுஞ் சொல்லை வாழ்த்தினாள் என்னும் பொருளில் திருவள்ளுவர் ஆண்டிருப்பினும், அதைப் பாவலன் உரிமை (Poetic licence) யென்றே அமைத்தல் வேண்டும். கடவுளை வழுத்தும் சிறப்பான கலிப்பா வகைகள் தேவபாணி யெனப்படும். ஆரியர் தமிழகம் வந்தபின் ``வருணப் பூதர் நால்வகைப் பாணியும்'' (சிலப். 6, 35-6) எனச் சிறுதெய்வ வழுத்தும் தேவபாணியெனப் பட்டமையால், புரிவோன் என்னுங் கொள்கைபற்றிக் கடவுளையொத்த சிவன் அல்லது திருமால் வழுத்துக்கள் பெருந்தேவபாணி யெனப்பட்டன. வள்ளுவர் கோட்டக் கால்கோள் விழாவில் வாழ்த்துப் பெறற்குரியார், திருவள்ளுவரும் அவருக்குக் கோட்டம் அமைப்போரும் ஆவர். இவருள் முன்னவர் வாழ்த்துப் புகழ்வு முறையிலும், பின்னவர் வாழ்த்து நீடுவாழ வேண்டல் முறையிலும், முன்னும் பின்னுமாக இக்கட்டுரையுள் அமையும். திருவள்ளுவர் வாழ்த்துத் தேவபாணியின் பாற்படும். 2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கோட்டம் என்று பெயர் குறிக்கப் பெற்ற கோயில்கள் புறநிலைக் கோட்டம் (சிலப். 5:180) = ஸ்ரீ கோயில் என்னும் அருகன் கோயில். ``அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம்நிலாக்கோட்டம்....'' (சிலப். 9: 9-13). அமரர்தரு=தேவருலகத்துக் கற்பக மரம். வெள்யானை = ஐராவதம் என்னும் தேவர் கோனின் வெள்ளையானை. வெள்ளை நாகர் = வெண் ணிறப் பலராமர். உச்சிக்கிழான்=கதிரவன். ஊர்=சிவனிருக்கையாகிய கைலாயம் என்னும்வெள்ளிமலை. வேல்=வேலன் என்னும்முருகன். வச்சிரம்=தேவர். கோன் வயிரப் படைக்கலம். புறம்பணையான் = ஊர்ப் புறத்தையடுத்தஐயனா®என்னு«சாத்தன். காமவேள் கோட்டம் (சிலப்.9:60). மணிவண்ணன் கோட்டம் (சிலப். 10:10)=திருமால் கோயில். ஐயை கோட்டம் (சிலப். 12:4) = காளிகோயில். பத்தினிக் கோட்டம் (சிலப். 30:151)= கண்ணகி கோயில். சுடுகாட்டுக் கோட்டம் அல்லது சக்கரவாளக் கோட்டம் (மணி 6:30-1) = உலகம் முப்பத்தொன்றையும் தன்னுள்ளடக்கிய சக்கரவாளம் என்னும் கோளத்திலுள்ள, எல்லாத் தேவர்க்கும் பூம்புகார்ச் சுடுகாட்டையடுத்துச் சமைக்கப்பட்ட மாபெருங் கோயில். முதியோள் கோட்டம் (மணி:22:3) = நாவலந் தேயக்காவல் தேவியாகிய சம்பாபதி கோயில். இனி, இறந்துபோன அந்தணர்க்கும் அரசர்க்கும் கற்புடைப் பெண்டிர்க்கும், உற்றாருறவினராய் சமைக்கப்பட்ட பள்ளிபடைகளும் (சமாதிகளும்) fல்லறைகளும்,nfட்டமென்றேமÂமேகலையிற்கு¿¡f¥g£LŸsd. ``அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் ............................................................................ இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் bசய்தF¿aî« நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலை கோட்டமும்'' (மணி. 6: 54-59) இனி, ``இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின் சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்'' (மணி. 203-4) என்று, சுடலையும் கோட்டமென்றே குறிக்கப்பட்டிருப்பதால், மதிலால் அல்லது வேலியாற் சூழப்பட்ட எவ்விடமும் கோட்டம் என்னும் பெயருக்குரியதென்பது அறியப்படும். 3. கோட்டம் என்னும் சொல் வரலாறு உல்-உலம்=உருட்சி. உலம்வருதல்-உலமருதல்=சுழலுதல். உல்-உல-உலவு-உலாவு. உலவுதல்=வளைதல், சூழ்தல், சுற்றுதல், திரிதல். உல்-குல்-குல-குலவு. குலவுதல்=1. வளைதல் ``குலவுச் சினைப் பூக்கொய்து'' (புறம். 11:4). 2. உலாவுதல் ``எமதன்னையை நினைத்தே குலவினனோ'' (சிவரக. விசயை.14). Fyî=tisî.``Fyî¡ கொடுஞ்சிலை'' (பு. வெ. 1:10) குலவு-குலாவு. குலாவுதல்=வளைதல். வளைத்தல். ``குலாவுஞ் சிலையர்'' (பு. வெ. 4:3). குலு-குலுத்தம்=வளைந்த காயிலுள்ள பயற்று வகை. (திவா). குல்-கொல்-கோல்=1. (உருண்ட) திரட்சி. ``கோனிற வளையினார்க்கு'' (சீவக. 209). ``கோற்றொடி மாதரொடு'' (சிலப். 26:121). 2. உருண்டு திரண்ட தடி. கோல்-கோலம்-பந்துபோற் சுருளும் முள்ளெலி. கோல்-கோலி-குண்டு வடிவான விளியாட்டுக் கருவி. ம. கோலி, தெ. கோலி (g), து. nfhË(g), மரா. கோலீ (g). குல்-குன்-குனி. குனிதல்-1. வளைதல். ``குனிவளர் சிலை'' (சீவக. 486). 2. வணங்குதல். (சூடா.) குன்-குனுகு-குனுகுதல்-சிரித்து உடல் வளைதல். குன்-கூன்-1. வளைவு. ``கூனிரும்பினிற் குறைத்து'' (நைடத. நாட்டுப். 10). 2. உடற்கூனல். (திவா.). ``கூனுங் குறளும்'' (புறம்.28). 3. கூனன். (கூனி). ``சிறுகுறுங் கூனும்'' (சிலப். 27:214). கூன்-கூனி-வளைந்த சிற்றிறால். ``கூனிகொத்தி............. கொக்கிருக்கும் பண்ணை'' (குற்றா. குற. 94). கூனுதல்-1. வளைதல். 2. முதுகு வளைந்து போதல். கூன்-கூனை-மூலையிற் கூனுள்ள நீர்ச்சால். குலவு-குரவு-குரவை-சிறப்பு நாட்களிற் குறிஞ்சி அல்லது முல்லை நில மகளிர் எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாக நின்று, பாடியாடிச் சுற்றிவருங் கூத்து... ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை. (சிலப்.) குரவு-ஓ. நோ: L. curvo, E. curve, to bend. குரவை-ஒ. நோ: Gk. choros, a dance in a ring. E. ``Chorus, n. (L. chorus, from Gr. koros, a dance in a ring, a chorus) 1. In the Greek drama, (a) originally a company of dancers dancing in a ring accompained by their own singing or that of others; a band of singers and dancers.'' E.``Choir, n. (Written also quire, from O. Fr. choeur L. chorus, Gr. choros, a dance in a ring. a band) 1. A band of dancers. .......2. A collection of singers, especially in divine service, in a church......'' - The Imperial Dictionary of the English Language. குரவு-குரகு-குரங்கு, -குரங்குதல்-வளைதல். ``பாடினாள்...... இலைப்பொழில் குரங்கின'' (சீவக. 657). குரங்கு-ஒ. நோ: E. crank. குலு-குரு-குருகு-1. வளையல், ``கைகுவி பிடித்துக் குருகணி செறித்த'' (கல்லா. 44:22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவை. 3. நாரை வான்பறைக் குருகி னெடுவரி பொற்ப'' (பதிற்றுப். 83:2). 4. நாரை வடிவொத்த கொல்லுலைத் துருத்தி. ``ஊதுலைக் குருகி னுயிர்த்தனர்'' (சிலப். 4:59). 5. ஓதிமம் (அன்னம்). ``நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து'' (நாலடி. 135). 6. அன்றில். ``குருகு பெயர்க் குன்றம்'' (மணி. 5:13). குருகு-ஓ. நோ: E. crane, OE. cran, OS., OHG. krano F. grue. குரு-குருள்-குருளுதல்-சுருளுதல். ``குருண்ட வார்குழல்'' (திருவிசை. திருவாலி. 1:3) குருள்-1. நெற்றி மயிர்ச்சுருள். (W.). 2. பெண்டிர் தலை மயிர். (பிங்.). குருள்-ஒ.நோ: E.curl, MDu. krul, G. krol, LG., Du., E Fris, kurl. குரு-குறு-கிறு. கிறுகிறுத்தல்-1. தலை சுற்றுதல். 2. மயக்கமடைதல். கிறுகிறுவாணம்-சிறுவர் சுழற்றி விளையாடும் பொரிவாணம். குறு-குற-குறங்கு-கறங்கு. கறங்குதல்-1. சுழலுதல். ``பம்பரத்து......fw§»a படிய'' (கந்தபு. திருநகரப். 28). 2. சூழ்தல். ``கறங்கிருள் மாலைக்கும்'' (திருவள்ளுவமாலை, 34). கறங்கல்-1. சுழற்சி. (பிங்.). 2. வளைதடி. (அக. நி.). கறங்கு-1. சுழற்சி. (திவா.). 2. காற்றாடி. ``கான்முக மேற்ற........fw§F«'' (கல்லா. கணபதி). கறங்கு-ஓ நோ: Gk guros, ring. L. gyre, E. gyrate, go in circle or spiral, revolve, whirl குறு-குறள்-குறண்டு-குறண்டுதல்-1. வளைதல். 2. சுருண்டு கொள்ளுதல். குல்-குள்-குளம்-1. வளைந்த நெற்றி. திருக்குள முளைத்த கட்டாமரை'' (கல்லா. 31:9). 2. வெல்ல வுருண்டை. குளம் (வெல்லம்)-வ. gula. குளம்-குளம்பு-உருண்டு திரண்ட விலங்குப் பாதம். குள்-குளி-குளியம்-1. உருண்டை. (அக. நி.). 2. உருண்டையான மருந்து மாத்திரை. (பிங்.) குளி-குளிகை-1. உருண்டையான மருந்து மாத்திரை. 2. பொன்னாக்க மாத்திரை, ``குளிகையிட்டுப் பொன்னாக்குவன்'' (திருமந். 2709). ``குளிகை-வ. குளிகா (gulika). குழலுதல்-சுருளுதல், ``கடை குழன்ற கருங்குழல்கள்'' (சீவக. 164). குள்-குளல்-குழல். குழல்-1. மயிர்க் குழற்சி. ``குழலுடைச் சிகழிகை'' (சீவக. 1092). 2. பெண்டிர் தலைமயிர் சுருட்டி முடிக்கப்படுகை. (திவா.). குழியம்-1. வளைதடி. (W.). 2. நறுமணவுண்டை. (சிலப். 14:171, அரும்.). 3. உருட்சி. (திவா) குளியம்-குழியம். குள்-குண்டு-1. உருண்டிருப்பது அல்லது உருண்டு கனத்திருப்பது. 2. உருண்டையான நிறைகல். 3. உருண்டையான பொன்மணி. ``பொன்னின் பட்டைமேற் குண்டு வைத்து'' (S.I.I. ii. 182). 4. விலங்கின் விதை. 5. வெடிகுண்டு. 6. உருண்ட மாம்பழ வகை. 7. உருண்ட கலவகை. 8. உருண்டு திரண்ட ஆண் குதிரை அல்லது ஆண் கழுதை. தெ. குண்ட, மரா. குண்ட (g). குண்டன்-தடித்த குள்ளன். குண்டான்-உருண்ட சட்டி வகை. குண்டான்-குண்டா. மரா. குண்டா (g). குண்டி-உருண்டு திரண்ட புட்டம். குண்டை-உருண்டு திரண்ட காளை. குண்டு-குண்டலம்-1. வட்டம் 2. சுன்னம், 3. வானம். (பிங்.) 4. ஆடவர் காதணி வளையம். குண்டலம்-வ. குண்டல. குள்-குண்-குண-குணகு-குணகுதல்=வளைதல். குணகு-குணங்கு. குணங்குதல்-வளைதல். குணகு-குணக்கு-வளைவு. ``நாய்வாலைக் குணக் கெடுக்கலாமா? ``(பழ.). குணக்குதல்-வளைத்தல். குணகு-குணுகு-குணுக்கு-1. சிறுமியர் காது வளையம். 2. மீன்வலை ஈயகுண்டு. குணுக்குதல்-வளைத்தல். குணலை-நாணத்தால் உடல்வளைகை ``கூச்சமுமாய்ச் சற்றே குணலையுமாய்'' பணவிடு. 310). குண-குணம்-குடம்-1. உருண்ட திரட்சி. (W.). 2. வண்டிக் குடம். 3. நீர்க்குடம். 4. கும்ப ஓரை. (பன்னிருபா. 163). 5. குடதாடி 6. குடக்கூத்து. ``நீணில மளந்தோ னாடிய குடமும்'' (சிலப். 6:55). குடம்-வ. கடம் (ghata). குடக்கம்-வளைவு. குடக்கி-வளைவானது. குட-வளைந்த (திருமுரு. 229, உரை). குடம்-குடங்கு-குடங்குதல்-வளைதல். குடங்கு-குடங்கர்-1. குடம். ``குணங்கர்கொணர்ந்திடா........beh©L கொண்டனர்'' (கந்தபு. தேவகிரி. 24). 2. கும்பவோரை (சூடா). குடம்-குடந்தம்-1. மெய் வளைத்துச் செய்யும் வழிபாடு. ``குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி'' (திருமுரு. 229). 2. நால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி நெஞ்சிடை வைக்கை. (திருமுரு. பக். 47, அடிக்குறிப்பு. 3. குடம். ãங்.). குடம்-குடா-1. வளைவு; ``குடாவடி யுளியமும்'' (சிலப். 25:50), 2.Flh¡flš. வளைகுடா, எ-டு: மன்னார்குடா, விரிகுடா, எ-டு; வங்காளக்குடா, 3. மூலை (W.). குடம்-குடி-வளைந்த புருவம். (பிங்). குள்-கூள்-கூளி-வளைந்த பச்சை வாழைப்பழம். குள்-கொள்-வளைந்த பயற்றங்காய். அதிலுள்ள பயறு. கொள்-கொண்பு-கொம்பு-விலங்கின் தலைமேலுள்ள விளைந்த வுறுப்பு, மரக்கிளை, கோல், பிள்ளை, பெண்பிள்ளை, வளைந்த எழுத்து வரி. கொம்பு-கொப்பு-கொம்பு போன்ற மரக்கிளை, ஒரு காதணி. கொம்பு-கம்பு-கோல், தடி (பாண்டி நாட்டு வழக்கு). கம்பு-கம்பம்-தூணாக நாட்டும் பெருமரத் தடி. கொம்பு-கொம்பன்-ஆண்பிள்ளை, சமர்த்தன். கொள்-கொடு-கொடுமை-வளைவு, நெறிதிறம்பல், அட்டூழியம். கொடுவாள், கொடுக்காய்ப்புளி முதலியவற்றிற் பருப்பொருட் கோணலையும்; கொடுங்கோல், கொடும்பாடு முதலியவற்றில் நுண் பொருட் கோணலையும்; கொடுமைச் சொல் குறித்தல் காண்க. கொடு-கொடுக்கு-1. வளைந்த கொட்டும் உறுப்பு; 2. அழகிய ஆடைத்தொங்கல். ``கச்சை புனைந்ததிலே விட்டான் பெருங் கொடுக்கு'' (திருவாலவா. 30:9). 3. தொங்கும் கிழிசல். கொடுக்கன்-தேள். கொடுக்கி-தேட்கொடுக்கி என்னும் செடி. கொடுக்கு-ஒ நோ: E. crook, ME, croc, ON. krokr, hook. கொடு-கொடுகு-கொடுகுதல்-கொடுமையாதல். ``கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்.'' (தேவா. 918:1). கொடு-கொடும்பு-கொடுமை கொடு-கொடி-வளைந்து நீண்டு வளரும் தண்டு. கொடு-கொடிறு-வளைந்த பற்றுக் குறடு, பற்றுக் குறடு போன்ற வாயலகு (கதுப்பு). கொள்-கொள்கு-கொட்கு கொட்குதல்-1. சுழலுதல். ``வளிவலங் கொட்கு மாதிரம்'' (மணி. 12;91). 2. சூழ வருதல். ``காலுணவாகச் சுடரொடு கொட்கும்'' (புறம். 43:3). 3. சுற்றித் திரிதல். ``கொடும்புலி கொட்கும் வழி'' (சிறுபஞ். 80). ஒ. நோ: வெள்-வெள்கு-வெட்கு. கொள்ளுதல்-1. வளைதல், 2. சுழலுதல் 3. திரிதல். கொள்-கொட்பு-1. சுழற்சி. ``கொட்புறு கலினப் பாய்மா'' (கம்பரா. மிதிலை. 13). 2. சுற்றித்திரிகை. (திவா). கொள்-கொட்கு-கொக்கு-வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை. கொட்கு-கொட்கி-கொக்கி-வளைந்த கொளுவி. ஒ. நோ bfh¡»-E. hook, OE. hoc, MLG. hok, Du. hock. கொள்-கொட்டை. ஒ.நோ: வள்-வட்டை. கொட்டை-1. உருண்டு திரண்ட விதை. 2. அவ்விதை போன்ற உறுப்பு. 3. உருண்ட தலையணை, ``பஞ்சின் நெட்டணையருகாக் கொட்டைகள் பரப்பி'' (பதினொ. திருவிடைம. மும். 19). 4. ஆடைத்தும்பின் மணி முடிச்சு. ``கொட்டைக் கரைய பட்டுடை நல்கி'' (பொருந. 155). 5. பாதக் குறட்டின் குமிழ். ``பவழக் கொட்டைப் பொற்செருப் பேற்றி'' (பெருங். மகத. 22:202). 6. பஞ்சுச் சுருள். `கொட்டைத் தலைப்பால் கொடுத்து `` (திவ். பெரியாழ். 3:5:1). 7. உருண்ட பருவடிவம். கொட்டையெழுத்து; (உ.வ.). கொள்-கோள்-1. சுற்றிவரும் அல்லது உருண்டையான விண்சுடர் அல்லது வேறுலகம். ``எல்லாக் கோளும் நல்வழி நோக்க'' (பெருங் இலாவாண. 11:70). 2. திங்களைச் சூழும் கோட்டை. ``மதியங் கோள்வாய் விசும்பிடை'' (சீவக. 1098). கோள்-கோளம்-1. உருண்டை. 2. உயிர்மெய்களில் (பிராணிகளில்) நீர் சுரக்கும் தசைப்பகுதி. கோளம்-வ. கோல (gola). கோளம்-கோளகம்-1. உருண்ட மிளகு. 2. மண்டல விரியன். (பிங்). கோளகம்-வ. கோலக (மிளகு), nfhyf(g) (மண்டல விரியன்) கோளகம்-கோளகை-1. வட்ட வடிவம், ``அண்ட கோளகைப் புறத்ததாய்'' (கம்பரா. அகலிகைப் 60). 2. கிம்புரிப் பூண் வளையம். 3. மண்டலிப் பாம்பு. (சூடா.). கோளகை-வ. கோலக (g). கோள்-கோளா-1. நறுமணப் பண்டங் கலந்ததும் இறைச்யுள்ளிட் டதுமான உண்டையுணவு 2. கஞ்சாவுருண்டை. கோள்-கோண்-கோணுதல்-1. சாய்தல். 2. வளைதல். 3. நெறிதவறுதல். 4. மாறுபடுதல். 5. வெறுத்தல். `கோணிக் கோணிக் கோடி கொடுப்ப திலும் கோணாமற் காணி கொடுப்பது மேல்.'' (பழ). கோண்-1. வளைவு. ``கோணார்பிறை'' (திருவாச 16:5). 2. கொடுங்கோன்மை. (திவா.). 3. கோணம் ``முக்கோ ணிவர்தரு வட்டம்'' (குற்றா: தல. பராசத்.). 3. 4. கூன் கோணன்-கூனன் (பிங்.). கோண்-ஒ. நோ: Gk. gonia, angle. கோண்-கோணம்-1. மூலை. ``கோண மொத்திலங்கோர் முழத்தினின்'' (திருவாலவா. 15:2). 2. ஒதுக்குப் புறமான இடம். கோணம்-வ. கோண. கோணம்-காணம்-1. வளைந்த கொள்ளுக்காய் 2. கொட்பயறு (பாண்டிவழக்கு). (காணப்பயறு) கோண்-கோணை-1. வளைவு. 2. கோணல் 3. கொடுமை. (அக.நி.) 4. தொல்லை. ``கோணை பெரிதுடைத்தெம் பெருமானைக் கூறுதலே'' (திவ் திருவாய். 2: 5: 10.) கோணை-கோணையன்-மாறுபட்ட குணஞ் செயல் கருத்துடை யவன். கோண்-கோடு. ஒ.நோ: பாண்-பாடு. கோடுதல்-1. கோணுதல், 2. வளைதல். ``கொடும் புருவங் கோடா மறைப்பின்'' (குறள். 1086) 2. நெறி அல்லது நடுநிலை தவறுதல். ``கோடாருங் கோடிக் கருவினைய ராகியார்ச் சார்ந்து'' (நாலடி. 124), ``கோடாமை சான்றோர்க் கணி'' (குறள். 118). 3. சூழ்தல். 4. வட்டமாதல். கோடு-1 வளைவு. 2. வளைந்த சங்கு. ``கோடு முழங் கிமிழிசை யெடுப்பும்'' (பதிற்றுப். 50:25.). 3. பிறைமதி, ``கோடுமிலைந்தான்'' (திருக்கோ. 149). 4. விலங்கின் கொம்பு. ``கோட்டிடையாடினை கூத்து'' (திவ். இயற். திருவிருத். 21). 5. யானை மருப்பு (தந்தம்). ``மத்த யானையின் கோடும்'' (தேவா. 39: 1)6. மரக்கிளை. (பிங்) 7. யாழ்த்தண்டு. ``மகர யாழின் வான்கோடு தழீஇ'' (மணி 4: 56). 8. எழுத்தின் கொம்புக் குறியீடு. ``விலங்கு பெற்றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும்'' (தொல். எழுத். 17, உரை), 9. மயிர்ச் சுருள்முடி. ``குரற் கூந்தற் கோடு'' (கலித். 72:20). 10. வளைந்த குளக்கரை. ``கோடின்றி நீர் நிறைந்தற்று'' (குறள். 523). 11. குளம். ``கோடெலா நிறையக் குவளை மலரும்'' (தேவா. 425:4). 12. ஆடைக்கரை. கொடுந்தானைக் கோட்டழகும்'' (நாலடி. 131). 13. வரம்பு. (பிங்). 14. வரி. 15. வட்டாடும் கட்டம். ``கோடின்றி வட்டாடல் கொள்வ தொக்கும்'' (தாயு. நினை. 2). 16. காலவட்டம். ``கலியுகக் கோட்டுநாள்'' (T.A.S.H.P. 5). 17. நடுநிலை திறம் புகை. ``கோடி றீக் கூற்றம்'' (நாலடி. 5). 18. கொடுமை. கோடற வைத்த கோடாக் கொள்கையும்'' (பதிற்றுப். 37:11). 19. வரம்பு போன்ற பக்கம். ``கோடுய ரடுப்பு (புறம். 164). கோடு-கோட்டம்-1. வளைவு. ``மரத்தின் கனக்கோட்டத்தீர்க்கு நூல்'' (நன். 25), மிதி வண்டிச் சக்கரம் கோட்டம் பட்டிருக்கிறது. (உலகவழக்கு). 2. வணக்கம் (உடல்வளைவு). ``முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன்'' (திருக்கோவை, 156. 3. வணருறுப்புள்ள அல்லது வளைந்த தண்டுள்ள யாழ். (பிங்.) 4. வளைந்த அல்லது சூழ்ந்த குளக்கரை அல்லது ஏரிக்கரை. ``உயர்கோட்டத்து........th‹ பொய்கை'' (பட்டினப். 36). 5. மனக்கோணல். ``உட்கோட்ட மின்மை பெறின்'' (குறள். 119). 6. நடுநிலை திறம்புகை. ``கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது.''(தேவா. 1182:2). 7. வேலி சூழ்ந்த தோட்டம். (பிங்.). 8. அரண்வேலி சூழ்ந்த பாசறை. (பிங்.). 9. மதில் சூழ்ந்த பள்ளிபடை அல்லது கல்லறை. ``சுடும ணோங்கிய நெடு நிலைக் கோட்டமும்'' (மணி. 6:59) 10. மதில் சூழ்ந்த கோயில். ``கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்'' (சிலப். 14:10). 11. மதில் சூழ்ந்த சிறைச்சாலை. ``கோன்றமர் நிகள_ழ்கிக்nகாட்டத்துக்Fரங்க''(சீவக.262). 12. சாலை. ``அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து'' (மணி. 19:133), ``அறஞ்செய் கோட்டம்'' (மணி. பதிகம், 72). 13. மதில் சூழ்ந்த நகர். (பிங்.). 14. வட்டாரம் அல்லது மண்டலம் என்னும் நாடு. (பிங்). 15. மதில் சூழ்ந்த இடம். 16. இடம். (பிங்). இங்ஙனம், கோயிலைக் குறிக்கும் கோட்டம் என்னும் சொல், உல் என்னும் மூல வேரினின்றும் குல் என்னும் அடிவேரினின்றும் தோன்றிய தூய தொன்சொல்லாயிருப்பினும், பிராமணத் தமிழ்ப் புலவர் வையாபுரி(ப் பிள்ளையை)த் துணைக்கொண்டு, நாலிலக்கத்திற்கு மேற்பட்ட செலவில், கால் நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில், தமிழ் சமற்கிருதக் கிளையென்னும் கருத்துப்படத் தொகுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, அதை ஆரிய மரபுப் படி `கோஷ்ட்ட' (koshta) என்று திரித்து வட சொல்லாகக் காட்டியுள்ளது. khÅa® cÉšÈa«R rk‰»Uj-M§»y mfuKjÈÆš, `nfhZ£l' v‹DŠ brh‰F _ybkd Édh¡F¿íl‹ Iíwthf¡ fh£l¥gL« brhš, to tear asunder, to pinch, to force or draw out, extract, to knead, to test, examine(?), to shine (?), to gnaw, nibble, to weigh, balance என்று பொருள் குறிக்கப்பட்டுள்ள `குஷ்' என்பதே. குஷி (வயிறு), கோச (உறை) என்பன உறவுச் சொற்களாயிருக்கலாமென்றுங் குறிக்கப்பட்டுள்ளது. அறிஞர் இதன் புரைமையைக் கண்டு கொள்க. கோயில், கோட்டம், நகரம், குடிகை, நியமம் என்பன ஒரு பொருட் சொற்களாகச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் ஆளப்பட்டுள்ளன. இவற்றுள் `நியமம்' ஒன்றே வடசொல். ஆயினும் அதற்கு முன்னுள்ள முச்சொல்லும் வடசொல்லேயென்று துணிந்து ஏமாற்றுவர் ஆரியர். ஆரியம், சமற்கிருதம், கீர்வாணம், தேவபாடை, வடமொழி என்பன ஒரு பொருட் சொற்கள். 4. சமற்கிருத வரலாற்றுச் சுருக்கம் ஓரிலக்கம் ஆண்டுகட்கு முன் மாந்தன் தோன்றியதும், ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழன் தோன்றியதும், ஒரு காலத்தில் இந்தியாவை ஆத்திரேலியாவோடும் தென்னாப்பிரிக்காவோடும் இணைத்துக் கொண்டிருந்ததும், இந்துமாவாரியிலும் அமைதிமாவாரியிலும் மூழ்கிப்போன (மேலையர் `இலெமுரியர்' (Lemuria) என்னும்) குமரிக் கண்டமே. குமரிக்கண்ட அநாகரிக மாந்தர் முன்பும், பண்பட்ட தமிழ் மக்கள் பின்பும், பல்வேறு நிலையில் பல்வேறு காலத்தில் பல்வேறு திசையாகச் சென்று பார்முழுவதும் பரவிப் போயினர். பனிமலைப் பக்கமாக வடதிசை நோக்கிச் சென்ற தமிழர், நாளடைவில் திரவிடராகத் திரிந்தனர். அவருள் ஒரு சாரார் வடமேற்காக ஐரோப்பா நோக்கிச் சென்று ஆரியராக மாறினர். அவருள் ஒரு வகுப்பார் கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய ஒரு மொழியைப் பேசிக் கொண்டு, கி.மு. 1500 போல் இந்தியாவிற்குட் புகுந்தனர். அவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலையில் எழுத்தின்றியும் சிறு தெய்வங்களை வணங்கிக் கொண்டும் அரை நாகரிகராகவே இருந்தனர். அவர் சிறு கூட்டத்தாராயிருந்ததனால், பேரினத்தாராகிய வடநாட்டுப் பழங்குடி மக்களொடு கலந்தபின் தம் தாய் மொழியை மறந்துவிட்டு, பிராகிருதம் என்னும் முந்து திரவிட மொழியையே பேசினர். ஆயின், அவருட் பூசகர் மட்டும், பழங்குடி மக்களின் பேதைமை, மதப்பித்தம், கொடைமடம் ஆகிய குணங்களைப் பயன்படுத்திக்கொண்டு, தம்மை நிலத் தேவரென்றும் தம் முன்னோர் மொழியைத் தேவமொழியென்றும் கூறி ஏமாற்றி, தம்மை அளவிறந்து உயர்த்தி, அப்பழங்குடி மக்களை அடிமை யராகத் தாழ்த்தி விட்டனர். இங்ஙனம் செய்தற்கு, அவர் வெண்ணிறமும் அவர் முன்னோர் மொழியின் எடுப்பொலியும் துணை நின்றன. பழங்குடி மக்களுள் தம் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவரை, ஏற்றுக் கொண்டவரைக் கொண்டே போரிட்டு அடக்கியும் விட்டனர். தமிழ நாகரிகம், தலைசிறந்துள்ள தென்னாட்டிலும், ஆங்கிலராட்சியால் அறிவியற் கல்வி பெற்று ஆராய்ச்சி செய்யும் இன்றும், ஆரியச் சார்பான தமிழரும் திரவிடரும் அச்சார்பில்லாத் தம் இனத்தாரையே வன்மையாக எதிர்த்து நிற்றலை நோக்கிக் தெளிக. இந்திய ஆரியர், முதற்கண் அக்கினி, வருணன், மித்திரன், உருத்திரன், இந்திரன் முதலிய சிறுதெய்வங்கட்கு விலங்குகளை வேள்வியிற் படைப்பதையே மதமாகக் கொண்டிருந்தனர். அவ் வேள்விகளில் அவர் பாடிய சிறு தெய்வ வழுத்துத் தொகுப்பே பிற்காலத்தில் `வேதம்' எனப்பட்டது. வேதக்காலத்திலேயே ஆரியப் பூசகருள் ஒரு சிலர் தென்னாடு வந்து தமிழரின் சிறந்த நாகரிகத்தைக் கண்டு கொண்டதனால், தமிழ் மதங்களாகிய சிவநெறியையும் திருமால் நெறியையும் படிப்படியாகத் தழுவலாயினர். ஆயின், முத்தொழிலிறைவன் என்றே தமிழர் வழிபட்ட சிவனையும் திருமாலையும், அழிப்புத் தெய்வமும் காப்புத் தெய்வமுமாக முறையே ஒடுக்கி, தாம் புதிதாகப் படைத்த பிரமன் என்னும் படைப்புத் தெய்வத்தொடு சேர்த்து, முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்து, இரு தமிழ மதங்களையும் இந்துமதமென ஒருமைப்படுத்தித் தமதாக்கிக் கொண்டனர். தமிழரின் அகப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகைத் தொழில் தலைவர் பாகுபாட்டை, பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நாற்பாற் பிறவிக் குலமாகத் திரித்து, இந்தியப் பழங்குடி மக்களையெல்லாம் வெண்மை செம்மை பொன்மை கருமை என்னும் நிற அடிப்படையில், முன்னர் நால்வேறு வரணங்களாகவும் பின்னர் நூற்றுக் கணக்கான நிலைத்த குலங்களாகவும் பிரித்து, சின்னபின்னமாகச் சிதைத்து, அடியோடு அவர் ஒற்றுமையைக் குலைத்து விட்டனர். இதற்குத் துணையாக இருந்தவர், முதுகுடுமிப் பெருவழுதியும் பெருநற்கிள்ளியும் பல்யானைச்செல்கெழு குட்டுவனும் போன்ற தமிழக மூவேந்தரே. ஆரியரின் முதலிலக்கியம், முதற்கண் ஒன்றாயிருந்து பின்னர் மூன்றாகவும் இறுதியில் நான்காகவும் வகுக்கப்பட்ட வேதமே. அது, இறந்து பட்ட அவர் முன்னோர் மொழியும் வடநாட்டுப் பழந்திரவிடமாகிய பிராகிருதமும் கலந்த, இலக்கியக் கலப்புநடை மொழியில் இயன்றதாகும். அதில் எகர ஒகரக் குறிலின்மை, அதன் பிராகிருதக் கூற்றின் பெரும்பான்மையைக் காட்டும். தமிழர் பல்துறைப்பட்ட நாகரிகமும் பண்பாடும் தலை சிறந்து, உருவ வணக்கமும் உருவிலா வணக்கமுங் கொண்ட கடவுள் மதத்தைக் கடைப் பிடித்து வந்ததைக் கண்ட ஆரியர் (பிராமணர்), தமக்கென ஒரு பல் துறையிலக்கியம் இருந்தாலன்றித் தமிழரை நிலையாக அடிப்படுத்த வியலாதென்று கண்டு, அதற்கேற்ற சொல்வளம் வேதமொழியில் இன்மையால், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டும் அவற்றினின்று நூற்றுக் கணக்கான சொற்களைத் திரித்துக் கொண்டும், வேத மொழியொடு தமிழ் கலந்த சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை இலக்கியக் கலவை நடைமொழியில், முதலிரு கழக இலங்கு நூல்களை யெல்லாம் மொழி பெயர்த்துக் கொண்டு, மொழிபெயர்ப்பையே முதனூலென்றும், சமற்கிருதம் தேவமொழியாதலால், அதிலுள்ள சொற்களெல்லாம் சமற்கிருதமேயென்றும், ஏமாற்றி விட்டனர். எதிர் காலத்தில் கண் திறந்து எதிர்க்கும் தமிழர்க்குச் சான்றாகாவாறு, ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. வேதமொழி வேறு; சமற்கிருதம் வேறு. தமிழ் வரலாறறியாத மேலை மொழி நூலார், வேதமொழியை வேதச் சமற்கிருதம் (Vedic Sanskrit) என்பது, முற்காலப்படுத்தும் (Prochronism) என்னும் குற்றமாகும். பழங்குடி மக்கள் மொழி ஆரியர் வருகைக்கு முந்திச் செய்யப்பட்டதென்னும் கருத்துப்பற்றிப் பிராகிருதம் என்றும் ஆரியர் இலக்கியமொழி வேதமொழியுந் தமிழும் கலந்து செய்யப்பட்டதென்னும் கருத்துப்பற்றிச் சமற்கிருதம் என்றும் பெயர் பெற்றன. ப்ரா=முன். ஸம்=கல. கிருத=செய்யப்பட்டது. சமற்கிருதச் சொற்களுள், ஐந்திலிருபகுதி தமிழ்; ஒரு பகுதி மேலையாரியம்; ஒரு பகுதி பிராகிருதம்; ஒரு பகுதி புதிதாகப் புனைந்தது. ஆரிய மொழியில், மூவேறு காலத்தில் தமிழ்ச் சொற்கள் கலந்தன. 1. திரவிடநிலை. 2. வேதநிலை. 3. சமற்கிருதநிலை. முதன்முதலாக ஆரியம் எனப் பெயர் பெற்றது இந்திய ஆரியமே, சென்ற நூற்றாண்டில் மாக்கசு முல்லரே, அதற்கினமான ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் அப்பெயராட்சியை விரிவுபடுத்தினர். தமிழ் முந்தியதென்றும், பிராகிருதம் இடைப்பட்டதென்றும், இந்திய ஆரியம் கடைப்பட்டதென்றும், அறிதல் வேண்டும். எ-கா : தமிழ் பிராகிருதம் இந்திய ஆரியம் வட்டம் வட்ட வ்ருத்த நடி-நடம்-நட்டம் நட்ட ந்ருத்த இவ்வுண்மை அறியாதார், தமிழ்ச் சொல்லைப் பிராகிருத வழியாக இந்திய ஆரியத்தினின்று தலைகீழாகத் திரிப்பர். எ-கா. வ்ருத்த-வட்ட-வட்டம். வல்-வள்-வட்டு-வட்டம் என்னும் வரலாற்றைத் தமிழில்தான் காணமுடியும். மொழியென்பது மாந்தர் தொடர்பற்ற தனிப் பொருளன்று, ஒரு கூட்டத்தார் அல்லது இனத்தார், தம் உள்ளக் கருத்துகளை வெளிப்படுத்தும் வாயிற்கருவியாகக் கையாளும் ஒலித்தொகுதியே மொழி. அது பிறப்பதும் வாழ்வதும் மக்கள் வாயே. ஒரு மொழியைப் பேசினால் அது வாழும்; இன்றேல் மாளும். பேசுவதென்பது, ஒரு கூட்டத்தார் பிள்ளைப் பருவத்தில் இயல்பாகவும் எண்ணாதும் பிறர்வாயினின்று அறிந்து வழங்குவதேயன்றி, பிற்காலத்தில் ஓரிருவர் நூல் வாயிலாகக் கற்று மொழிவதன்று. பேசா மொழியெல்லாம் இறந்த மொழியே. இனி, பேசா மொழிகளாகச் சில செயற்கை மொழிகளும் உள. அவை இலக்கிய நடை மொழியாகிய சமற்கிருதமும் புதுப்புனைவு மொழியாகிய எசுப்பெரேன்றோவும் (Esperanto), போல்வன. அவை பிறந்தனவுமல்ல; இறந்தனவுமல்ல; உயிரற்ற பாவை போல்வனவே. மொழி மக்கள் வாயினின்று தோன்றுவதால், உலக மொழிகளெல்லாம் மக்கள் மொழிகளே. இம் மண்ணுலகில் எங்கேனும் தேவரின்மையால், தேவமொழியுமில்லை. பிராமணன் நிலத்தேவன் என்பது எங்ஙனம் முழுப்பொய்யோ, அங்ஙனமே அவன் முன்னோர் வாயினின்று வந்த மொழியும் தேவ மொழியென்பது முழுப் பொய்யே. மொழியென்பது ஒலித் தொகுதியே. ஒலிகளெல்லாந் தோன்றி மறையுந் தன்மையன. நீர்மேலெழுத்துக் கண்ணிற்குத் தோன்றி மறைவது போன்றே, ஒலியும் செவிக்குத் தோன்றி மறையும். நாடாப் பதிவானிற் பதிந்தவொலியும் தோன்றி மறைவதே. ஏட்டிலுங் கல்லிலும் எழுதும் வரிவடிவும். சில பலநாள் நிலைத் திருப்பினும், படிப்பாரும் விளக்குவாருமின்றிப் பயன்படுவது மில்லை; தானாக எங்கும் இயங்குவதுமில்லை. ஆதலால், வேதங்கள் பூசித்துப் பூட்டிட்டது மறைக்காடு (வேதாரணியம்) என்பது ஆமை மயிர்க்கயிற்றால் கொம்புக் குதிரையைக் கட்டினது போன்றதே. மரையென்பது மான்வகை. அது மிகுந்த மரைக்காடு என்பதே, மறைக்காடு எனத் திரிக்கப்பட்டுக் கதையுங் கட்டப்பட்டது. இனி, வேதம் இறைவன்போல் தொடக்கமிலி. அதன் மந்திரங்கள், முனிவராற் காணப்பட்டனவேயன்றி இயற்றப் பட்டனவல்ல; என்பதோ வெனின், ஈடிணையற்ற மாபெரும் பொய்யாகும். திருவள்ளுவமாலையில் வெள்ளி வீதியார் என்னும் பெயரிலுள்ள பாவில், வேதத்தைச் ``செய்யா மொழி'' என்றது, ஆரிய அடிமைத் தமிழரின் பேதமையையும் மூடநம்பிக்கையையுமே காட்டும். உலகில் தேவமொழியென்று சொல்லத்தக்க உயர்மொழி ஒன்றுண் டெனின், அது குமரி நாட்டுக் குமரித் தமிழே. 5. திருவள்ளுவர் பெருமை (1) தமிழர் மீட்பர் பிராமணர் தமிழரை நால்வரணக் கூண்டுகட்குள் அடைத்தபின், அவர் என்றும் அவற்றினின்று வெளியேறாதிருத்தற் பொருட்டு, நால்வரணப் பூத வடிவங்களை, மதுரைக் கோட்டை மதில் வாயில் நான்கிலும், நாடக வரங்குகளிலும், கல்லறைகளிலும், எழுதி வைத்தனர். ``வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்'' (புறம். 183) ``பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்'' (சிலப். 22: 109) ``நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ............................................................ ஆதிப்பூதத் ததிபதிக் கடவுளும் ................................................................. பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ................................................................... அரைச பூதத் தருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் ................................................................... விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையும் மேனியன்................ மண்ணுறு திருமணி புரையு மேனியன் ................................................................. கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றி .................................................................. நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர'' (சிலப். 22: 16-108) ``தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்து'' (சிலப். 3: 106-7) இதன் (அடியார்க்கு நல்லார்) உரை: ``அந்தணர் அரசர் வணிகர் சூத்திரரென்று சொல்லப்பட்ட நால்வகை வருணப் பூதரையும் எழுதி, மேனிலத்தே யாவரும் புகழ்ந்து வணங்கவைத்தென்க.'' ``என்னை? கூறிய வுறுப்பிற் குறியொடு புணர்ந்தாங் காடுநர்க் கியற்று மரங்கி னெற்றிமிசை வழுவில் பூத நான்கும் முறைப்பட எழுதின ரியற்ற லியல்புணர்ந் தோரே'' என்றாராகலின். ``அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்'' (மணி. 6: 54-59.) இப் பாடல்கள் திருவள்ளுவர் காலத்திற்குப் பிந்தினவாயினும், இவற்றுட் சொல்லப்பட்டுள்ள நிலைமை அவர் காலத்திற்கு முந்தியதே. இங்ஙனம் தமிழரைத் தாழ்த்தி அவரொற்றுமையைக் குலைத்த கொடுமையைக் கண்ட திருவள்ளுவர், அதைக் கண்டித்து, ``பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.'' (குறள். 972) ``மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். (குறள். 973) ``பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.'' (குறள். 978) ``ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.'' (குறள். 133) ``மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.'' (குறள். 134) ``உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.'' (குறள். 1033) ``இரவார் இரப்பார்க்கொன் றீவர்; கரவாது கைசெய்தூண் மாலை யவர். (குறள். 1035) என்றும், பிராமணரே துறவிற்குரியவர் என்றதை மறுத்து, ``அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.'' (குறள். 30) என்றும், துறவறத்தால் மட்டும வீடு பெறலா மென்றதை மறுத்து, ``அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஓய்ப் பெறுவ தெவன்.'' (குறள். 46) ``அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று' (குறள். 49) என்றும், பிராமணன் வேதம் ஓதுவதனாலேயே மற்ற மூவருணத்தாரும் வாழ்கின்றனர் என்றதை மறுத்து, ``உழுவார் உலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து.'' (குறள். 1032) ``இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை'' (குறள். 41) ``துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வா னென்பான் துணை.'' (குறள். 42) என்றும், பிராமணன் வேள்வி செய்வதனாலேயே உலகில் மழை பெய்கின்ற தென்றதை மறுத்து, ``இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு.'' (குறள். 545) ``முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (குறள். 559) என்றும், திருக்குறளியற்றித் தமிழரை மீட்டார். 2. வாழ்க்கை வழிகாட்டியார். ``கோளில்பொறியிற்குணமிலவே...'' (குறள். 9) ``எண்ணென்பஏனையெழுத்தென்ப....'' (குறள். 392) ``கற்றில னாயினுங்கேட்க....'' (குறள். 414) ``மங்கலமென்பமனைமாட்சி...'' (குறள். 60) ``மனையாளையஞ்சும்மறுமையிலாளன்....''(குறள். 904) ``இருமனப் பெண்டிருங் கள்ளுங்கவறும்....'' (குறள். 920) ``பகைபாவம் அச்சம்பழியெdநான்கும்...'' (குறள். 146) ``தந்தை மகற்காற்றும்நன்றி....'' (குறள். 67) ``மகன்றந்தைக் காற்றும்உதவி....'' (குறள். 70) ``ஒண்பொருள்காழ்ப்ப....'' (குறள். 760) ``முயற்சி திருவினையாக்கும்....'' (குறள். 616) ``பொருள்கருவிகாலம்....'' (குறள். 675) ``எண்ணித் துணிககருமம்''(குறள். 467) ``அடுக்கிவரினும்....'' (குறள். 625) ``ஒல்லும்வகையால்அறவினையோவாதே...''(குறள். 33) ``ஆக்கமுங்கேடும்...'' (குறள். 642) ``தன்னெஞ் சறிவதுபொய்யற்க...'' (குறள். 293) ``உள்ளத்தா லுள்ளலுந்தீதே...'' (குறள். 282) ``இன்னாசெய் தாரை யொறுத்தல்...'' (குறள். 314) ``செய்யாமற் செய்தஉதவிக்கு...'' (குறள்.101) ``நல்லினத்தி }§குந்துizயில்லை...''(FwŸ. 460) ``ஆய்ந்தாய்ந்து bfள்ளாதான்f©மை...''(FwŸ. 792) ``அளவளா வில்லாதான் tழ்க்கை...(குறள். 523) ``அரியவற்று bளல்லாம்mÇதே... (குறள். 443) ``kUªbjd வேண்டாவாம்யாக்கைக்கு... (குறள். 942) ``தோன்றி‹புகழொLதோன்றுக....'' (குறள். 236) இக் குறள்களும் இவை போன்ற பிறவும், ஒருவன் உலகிற் செம்மையாகவும் சிறப்பாகவும் இன்பமாகவும் வாழச் சிறந்த வழி காட்டுவனவாகும். 3. திருமறை யாசிரியர் திருக்குறள், வீடுபேற்றிற் கின்றியமையாத எல்லாம் வல்ல இறைவன் வழிபாட்டையும், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும், துறவு நெறிக்குரிய அறவொழுக்கங்களையும், நிறைவாகக்கூறி, இன்பத்துப் பாலால் திருக்கோவை போல் உவமை வாயிலாகப் பேரின்பத்தை யுணர்த்தும் திருமறையாகும். 4. மெய்ப்பொருளறிஞர் தன்வயத்தம், தூய்மை, இயற்கை முற்றறிவு, இயல்பாகக் கட்டின்மை, பேரருள், முடிவிலாற்றல், வரம்பிலின்பம், எங்கு முண்மை, பகாமை என்னும் தொண்குணத்தனாய், தனக்குவமையில்லாத முழுமுதற் கடவுள், எல்லாம் வல்லனாதலின், அவனை எழு கூறாகப் பகுக்கும் ஆரிய முறையை மறுத்து, ஐம்பூதமும் ஐம்பூதத் தன்மையும் அறிவுப் பொறியைந்தும் கருமப்பொறியைந்தும், அவற்றையறியும் ஆதனும் (புருடனும்), அவன் அறிதற் கருவியாகிய மதியுள்ள மனநானுணர்வுகளும் ஆகிய இருபத்தைந்தொடு, காலம் இறைவன் என்னும் இரண்டையுங் கூட்ட, மெய்ய்பொருள் மொத்தம் இருபத்தேழேயெனும் கருத்துப்பட, ``சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு.'' (குறள். 27) எனத் திருவள்ளுவர் கூறியிருப்பது, அவர் ஒருவரே உண்மையான தெளிந்த மெய்ப்பொருளறிஞர் என்பதைக் காட்டும். ஊழ் என்பது வினையுள் அடங்கும். 5. செந்தண்மை அந்தணர். ``தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தானுண்பான் v§‡d« MS« mUŸ?'' (குறள். 251) ``இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து (குறள். 1062) கெடுக உலகியற்றி யான். என்னுங் குறள்கள் உணர்த்தும் ஆசிரியருணர்ச்சியை ஊன்றி நோக்கின், ``அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.'' (குறள். 30) என்னுங் குறட்குத் திருவள்ளுவரே சிறந்த எடுத்துக் காட்டெனத் தோன்றுகின்றது. 6. தெய்வப் புலவர் திருவள்ளுவ மாலையில், நக்கீரர் பெயரிலுள்ள தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால் ஆனா அறமுதலா அந்நான்கும்-ஏனோகுக் கூழி னுரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்றும் மற்று. என்னும் பாவும், மாமூலனார் பெயரிலுள்ள அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார். என்னும்பாவும், கல்லாடர் பெயரிலுள்ள ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. என்னும் பாவும், உருத்திரசன்ம கண்ணர் பெயரிலுள்ள மணற்கிளைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத் துணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்-பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க் காய்தொறும் ஊறும் அறிவு. என்னும் பாவும், மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் பெயரிலுள்ள புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருள்மா லைக்கும் பெயர். என்னும் பாவும், திருவள்ளுவரின் தெய்வப் புலமையை ஒருவாறுணர்த்தும். 7. முதற் பாவலர் காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பைபுலி-ஆசு வலவர்க்கும் வண்ணம் புலியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி. என்பது, ஔவையார் ஒருவர் பெயரிலுள்ள பழம்பாட்டு. பாவிற்குச் சிறந்த வெண்பாலிலுங் குறுகிய வகையான குறட்பாவில், திருவள்ளுவர் விரிந்த பொருளையமைத்திருப்பது, அவரின் முதற்பாவன்மையைச் சிறப்பக் காட்டும். எ-கா : ``நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது.'' (குறள். 235) இதனைக் கபிலர் பெயரிலுள்ள தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி. என்னும் வள்ளுவமாலைப் பாவுந் தெரிவிக்கும். 8. தமிழ்நாட்டுத் திருப்புரவலர் (Patron Saint). ஒவ்வொரு நாட்டிற்கும் திருப்புரவலர் அல்லது காவல் தூயர் ஒருவர் உளர். தமிழ்நாட்டுத் திருப்புரவலர் திருவள்ளுவரே. அவர் முக்கால அரசியல் அறிஞராதலால், இக்காலத்திற்கும் ஏற்றவாறு அரசியலமைப்பைத் தம் நூலிற் கூறியேயுள்ளார். முதல் மாந்தன் குடும்பம் தோன்றியதிலிருந்து, அரசும் தோன்றி, குடும்பத் தலைவன், ஊரன் (கிழவன்), நாடன், வேள், மன்னன், கோ(கோன்), வேந்தன் எனப் படிப்படியாக வளர்ந்து, செங்கோலன், கொடுங்கோலன், முற்றதிகாரி, மட்டதிகாரி என இடையிடையே மாறி, இன்று பெரும்பாலும் பாராளுமன்றக் கோவரசு, பாராளுமன்றக் குடியரசு, மக்களாட்சிக் குடியரசு, கூட்டுடைமைக் குடியரசு என நால்வகைப் பொறுப்பாட்சிப் பொது மக்களரசாகத் திருந்தியுள்ளது. மக்கள் தொகை மிக்க இக்காலத்திற்குப் பொதுவாக ஏற்றது கூட்டுடைமையாட்சியே. கார்ல்மார்க்கசும் இலெனினும் போன்றவர் இந்நூற்றாண்டில் வகுத்த கூட்டுடமை சிறப்பாக ஆலைத் தொழிலாளர் நிலைமை நோக்கியதே; திருவள்ளுவர் இருபது நூற்றாண்டுகட்கு முன்னரே வகுத்த கூட்டுடைமையோ, எல்லாத் தொழிலாளர்க்கும் அலுவலர்க்கும் பொதுவானதாகும். பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் (குறள். 44) பாத்தூண்மரிஇயவனைப்பசியென்னும்.... (குறள். 227) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் (குறள். 322) தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் (குறள். 1107) இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்.... (குறள். 1063) என்னுங் குறள்கள் கூட்டுடைமை பற்றியனவே. இனி, ``பிரித்தலும் பேணிக் கொளலும்'' (குறள். 633) என்னுங் குறளும் எக்காலத்திற்கும் ஏற்றதே. 9. திருக்குறள் ஒப்புயர்வற்ற நூல் ஆரிய வேதத்தையும் பகவற்கீதையையும் மனுதரும சாத்திரத் தையும், பலரும் சிலரும் திருக்குறளுக்கு இணையாகக் கூறுவர். அவர் அறியார். வேதம் பிள்ளைத்தனமான எளிய கருத்துக்களுள்ள சிறு தெய்வ வழுத்துத்திரட்டு. திருக்குறளோ, எல்லாம் வல்ல முத்தொழிலிறைவன் வழுத்தொடு கூடிய தலைசிறந்த அறநூல். , கட்குடி திருக்குறளில் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இருக்கு வேதத்திற் சோமம் என்னும் கட்சாறோ, 110 மந்திரப் பதிகங்களில் சிறு தெய்வமாக வழுத்தப்பட்டுள்ளது. திருக்குறள் பிறப்பாற் சிறப்பில்லை என்பதை வற்புறுத்திக் கூறுகின்றது; பகவற்கீதையோ, மிக நுட்ப வலக்காரமாக, நால்வரணப் பாகுபாட்டை இறைவன் படைத்த பிறவிக்குலமெனக் காட்டுகின்றது. மனு தரும சாத்திரம் உலகிற் கடைப்பட்ட அறக்கேடான நஞ்சு நூல். அது பிராமணரைத் தெய்வமாக உயர்த்தியும் சிறந்து வாழவைத்தும், பிறரை விலங்காகத் தாழ்த்தியும் அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் வறுமையிலும் வருந்தவைத்தும், மகிழ்ந்து பெருமை கொள்வது. அதிலுள்ள பொருளாட்சிக் கொள்கைகளும் கருத்துகளும், இறப்ப இழிந்தவை; அறக்கொடியவை. எ-கா : ``சிலர் பயிரிடுதலை நல்லதொழிலென்று கருதுகின்றனர். அந்தப் பிழைப்புப் பெரியோரால் இகழப்பட்டது. VbdÅ‹, ïU«ig Kf¤â‰ bfh©l VU« k©bt£oí« Ãy¤ijí« Ãy¤âYŸs g‰gy ó¢á òG¡fisí« bt£L»‹wdt‹nwh!'' (மனுதருமசாத்திரம், 10:84.) 10. திருக்குறள் தமிழ்மறையே திருக்குறள் பொதுமறையெனப் பெயர் பெற்றிருப்பினும், அது தமிழரை ஆரிய அடிமைத்தனத்தினின்று மீட்கும் தமிழ்மறையாகவே இயற்றப்பட்டது. தமிழர் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் தலைசிறந்தி ருந்ததனால், திருவள்ளுவர் நடுநிலையாக இயற்றிய தமிழ்மறை தானாக உலகப் பொதுமறையாயிற்று. அதனாலேயே, பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறும் சேரச்-சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால். இன்பமுந் துன்பமும் என்னும் இவையிரண்டும் மன்பதைக் கெல்லாம் மனமகிழ - அன்பொழியா துள்ளி புணர வுரைத்தாரே ஓதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து. அறந்தகளி ஆன்ற பொருள்திரி யின்பு சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு-குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து. வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும் தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம் உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால் வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து. என்னும் வள்ளுவமாலைப் பாக்கள் எழுந்தன. வள்ளுவன் தன்னை யுலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று, பாவலர் சுப்பிரமணிய பாரதியார் பாடியதும் அவ் வகையிலேயே. ``ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள். 656) என்னுங் குறளுரையில், ``இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொதுவிதி, பொருணூல் வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரிய ராதலும் நன்குமதிக்கற் பாடுமுடைய அமைச்சர்க் கெய்தாமைபற்றி, இவ்வாறு கூறினார்.'' என்று, ஆரிய முறைப்படி உரைகூறும் பரிமேலழகரும் சிறப்புக் குறிப்பு வரைந்திருப்பதால், திருவள்ளுவர், சமையம் வாய்க்கும் போதெல்லாம், ஆரியக் கொள்கையைக் கண்டித்துத் தமிழ் மரபை நாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டவர் என்பது, தெள்ளத் தெளிவாம். பரிமேலழகர் அறநூல் என்றது மனுதரும சாத்திரத்தை. தரும நூலென்று ஆரியர் கூறுவனவெல்லாம் அதரும நூல்களாதலின், ஆரியம் பொது அவற்றை அறநூல் என்பது தமிழர்க்கு எதிர்மறைக் குறிப்பாம். 11. நாற் பொருட் பாகுபாடு ஆரியர் சிந்துவெளியில் தங்கியிருந்தபோது, இயற்கைத் தோற்றங் களையும் ஐம்பூதங்களையும் உணவுப் பொருள்களையுமே தெய்வங்களாக வணங்கி வந்தனர். சோமம் என்னும் ஒரு கொடிச் சாற்றுமதுவும் தெய்வமாக வணங்கப் பட்டது. விடியற்கால ஒளியை உஷா என்றும், கதிரவன் எழுமுன் அதை ஸவிதா (ஸாவித்ரீ) என்றும், எழுஞ் செங்கதிரவனை அருண என்றும், எழுந்த கதிரவனைச் சூர்ய என்றும், எழுகை உச்சிச் செலவு விழுகை ஆகிய முந்நிலை இயக்கங் கொண்ட கதிரவனை விஷ்ணு என்றும், பின்னர்ப் பன்னிரு மாதம் அல்லது ஓரைபற்றிச் சூரியனைப் பன்னிருவர் ஆதித்தர் என்றும், இங்ஙனம் ஒரே சுடரை அறு தெய்வமாக வணங்கியது, அவரின் மதிவளர்ச்சியில்லா நிலையைக் காட்டும். அவருக்குக் கோயிலுமில்லை; குளமுமில்லை. விலங்கைக் காவு கொடுக்கும் வேள்வித் தூணே கோயில். இறந்தபின் உயிர்கள் கூற்றுவன் உலகத்தையும் கதிரவன் உலகத்தையும் திங்கள் உலகத்தையும், அடையும் என்பதே, அவர் மறுமைக் கொள்கை. கடவுளை அறியாததனால், வீடுபேற்றுக் கருத்தே அவருக்கிருந்ததில்லை. தமிழரோ முதல் மாந்தனினத்தாராய்க் கி.மு. ஓரிலக்கம் ஆண்டுகட்கு முன்பே குமரி நாட்டில் தோன்றி, கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் வளர்த்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்துறை நாகரிகமும் முத்தமிழிலக்கியமும் முழுமுதற் கடவுள் வணக்கமுங் கண்டவர். அதனால், அறம் பொருளின்பம் வீடென்னும் நாற் பொருட்பேற்றை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர். பொருள்கள் அறிவியல்தொறும் வெவ்வேறு பாகுபாடு கொள்ளும். அறம் பொருளின்பம் வீடென்பது அறநூற்பாகுபாடு; அகம் புறம் என்பது பொருளிலக்கண நூற்பாகுபாடு; பொருள் குணம் கருமம் பொது சிறப்பு ஒற்றுமை இன்மை என்பது, ஏரண நூற்பாகுபாடு; சித்து (செத்து) சடம் (சட்டம்) என்பது கொண் முடிவு (சித்தாந்த) நூற்பாகுபாடு. இங்ஙனமே ஏனையவும். ஒரே அறிவியற்குள்ளும், அவ்வந்நிலைக்கு அல்லது பிரிவுற்கேற்றவாறு பொருட்பாகுபாடு வேறுபடுவதுமுண்டு. இலக்கண நூலுள், எழுத்ததிகாரத்தில் உயிர், மெய், உயிர்மெய் என்றும், சொல்லதி காரத்தில் உயர்திணை அஃறிணையென்றும், பொருளதிகாரத்தில் அகம் புறம் என்றும், இனிச் சொல்லதிகாரத்துள்ளும் பெயரியலில் பொருளிடங் காலம் சினை குணம் தொழிலென்றும், வேறுபடல் காண்க. அகப் பொருளிலக்கணத்தில், தலைவன், பொருள்வயிற் பிரியுங்காற் கூறும் கூற்றுக்களுள் ஒன்று `மூன்றன் பகுதி' (தொல். அகத். 41) எனப்படும். அது ``அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற்காமம் நுகர்வேன்'' என்பது. இதனால், அறம் பொருளின்பம் என்னும் பாகுபாடும் அகம்புறம் என்னும் பாகுபாடும் வெவ்வேறென்பதும், இரண்டும் தமிழே யென்பதும் பெறப்படும். இதில் இன்பம் என்றது இம்மைக்குரியதாதலால், வீடு விடப்பட்டது. தமிழரின் உயர்ந்த மதங்கள், சிவமதம் திருமால்மதம் இவ் விரண்டிற்கும் பொதுவான கடவுள் மதம் என மூன்றாம். இவற்றுள் முந்தியது சிவமதம். ``பாண்டி நாடே பழம்பதி யாகவும்'' ``தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே'' ``மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்'' ``தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி'' என்று மாணிக்கவாசகர் பாடியிருப்பதனாலும், பனிமலைக்கும் குமரிமலைக்கும் இடைநடுப்பட்ட தில்லைச் சிற்றம்பலம் பேருலக நெஞ்சத்தாவாக, ``பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல்'' கொள்ளுமுன்பே, பாண்டியனால் அமைக்கப்பட்டதனாலும், ஆரியர் சிவநெறியைத் தழுவு முன்பு, வடநாட்டில் திருக்குறி (லிங்க) வழிபாடு செய்து வந்த தமிழரைச் `சிசின தேவர்' என்று பழித்ததனாலும், உருத்திரன் கடுங்காற்றுத் தெய்வமேயாதலாலும், சிவன் வேதத் தெய்வமன்மையாலும், சிவமதம் தமிழ மதமே யென்பது வெள்ளிடை மலை. வீடு பேறு இறைவனிடம் பெறுவதேயன்றிச் சிறு தெய்வங்களிடம் பெறுவதன்று. வடபாற் சென்ற தமிழரே திரவிடராகத் திரிந்தும், வடமேற்கிற் சென்ற திரவிடரே ஆரியராக மாறியும் இருப்பதால், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாம். ஆதலால், ஆரியரே நாற்பொருட் பாகுபாட்டைத் தமிழர்க் கறிவித்தனரென்பது, பேரன் தன் பாட்டன் திருமணத்திற்குப் பாட்டியற்றினான் என்பது போன்றதே. 12. திறக்குறளைப் பயன்படுத்தல் ஒரு கொடிய நோய்க்கு ஒரு மருத்துவர் சிறந்த மருந்து காணின், அதை நோயாளி உண்டாலொழியக் கண்டாலுங் கொண்டாலும் பயனில்லை. அது போன்றே, ஆரிய ஏமாற்றினின்று தப்புவதற்குத் திருவள்ளுவர் வகுத்த சிறந்த முறையைக் கையாளாது, ஆண்டுதோறும் அவர் பெருமையையோ அவர் நூற்சிறப்பையோ அவையோர் மகிழ அடுக்கிக் கூறிப் பயனில்லை. ``எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு.'' (குறள். 423) என்பது ஓர் அறிவுத் துணுக்கு. வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இல்லாத பண்டைக் காலத்தில், தென்னாடு வந்த ஆரியரான பிராமணர், தம்மை நிலத்தேவரென்று மூவேந்தரையும் ஏமாற்றினர். அவ்வேந்தரும் அதை நம்பி அவர் ஏவியதை இயற்றினர். அதைப் பொதுமக்களும் பின்பற்றினர். ஆயின், ஆங்கிலராட்சியும் அறிவியற் கல்வியும் கல்வியும் கண் திறந்த பின்னும், நயன்மைக் கட்சித் தலைவர் கால் தூற்றாண்டு இன முன்னேற்றத் தொண்டு செய்தபின்னும், மறைமலையடிகள் தனித் தமிழியக்கங் கண்ட பின்னும், ஆரிய மொழியாராய்ச்சி யுண்மைகள் வெளிப்பட்டபின்னும், தி.மு. க ஆட்சியும் தவத்திருக் குன்றக்குடியடிகளின் அருள்நெறித் திருக்கூட்டமும் ஏற்பட்ட பின்னும், மருத்துவமும் ஏரணமும் வரலாறும் ஞாலநூலும் கற்றபின்னும், பிறநாடு சென்று மீண்ட பின்னும், பிராமணரை நிலத்தேவரென்று கொள்ளாவிடினும் பிறப்பாலுயர்ந்தவரென்று நம்பியும், மறுமையிற் பிராமணக் குலத்திற் பிறக்க வேண்டுமென்று விரும்பியும், பகுத்தறிவிற்குச் சிறிதும் ஒவ்வாத பிராமணர் நடிப்பை எண்ணிப் பாராதும், மானமழிந்து மதிகெட்டுத் தாம் மக்கட்டன்மை யிழப்பதுடன், தம் முன்னோர்க்கு இழிவும் பின்னோர்க்கு அழிவுந் தேடும் தமிழர், மக்கட் பெருக்கமும் உணவுத் தட்டும் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், இருப்பதினும் இல்லாமையே மேலாம். தமிழன் எத்துணை நாகரிகமுங் கல்வியுந் துப்புரவும் ஒழுக்கமும் தோற்றப் பொலிவும் செல்வமும் அதிகாரமும் உயர்வும் உடையவனாயினும், பிராமணனொடு தன் இல்லத்திலோ அவனில்லத்திலோ உண்டாட்டிற் கலந்து கொள்ள முற்றுந் தகுதியற்றவன்போல் இருக்கின்றான். பிராமணன் உண்டிச் சாலையில் அல்லது ஒரு பொதுவிடத்தில், பிராமணருந் தமிழரும் கூடியுண்ணலாம்; ஆயின், பிராமணன் இல்லத்தில் அங்ஙனம் உண்பதில்லை. தமிழருள் உயர்ந்த மரக்கறி வெள்ளாளன் இல்லத்தில், பொற்கலத்தில் நீர் அல்லது பால் அன்பளிப்பாகக் கொடுப்பினும் பிராமணன் குடியான். ஆயின், அவரினும் மிகத் தாழ்வாகக் கருதப்படும் இடைச்சி, அல்லது தன்னை இடைச்சியென்று சொல்லிக் கொள்பவள், தன் பழைய மட்கலத்தில் தன்வீட்டுத் தண்ணீரைக் கலந்து கொடுக்கும் தயிரையோ, வானமுதம் போற் கடுவிலைக்கும் வாங்கிக் குடிப்பான. அதையும், அவள் வீட்டிற்குள்ளிருந்து குடிக்க மறுப்பான். தாழ்த்தப்பட்டவர் தவிர மற்றத் தமிழர் யாராயினும், அவல், கடலை, பொரி, அப்பம் (ரொட்டி) விற்பின், பிராமணன் தன் இனத்தான் விற்பது போன்றே கருதி வாங்குவான். இன்குடிப்பும் தண்குடிப்பும் தாழ்த்தப்பட்டவன் புட்டியில் அடைப்பினும், பிராமணன் வாங்கத் தவறான். ஒரு தமிழனும் ஒரு பிராமணனும் இளமை முதல் முதுமைவரை எத்துணை நெருங்கி நட்பாடினும், உண்டி வேளையில் மட்டும் அந் நட்பு முற்றும் நீங்கி விடும். இதை இக் காலத்தும் பிராமணன் உயர்வாகக் கருதலாம். ஆயின், இது அநாகரிகமேயன்றி உயர்வாகாது. பிராமணன் தமிழன் இல்லத்தில் ஒருமுறை யுண்ணினும் அவன் உயர்வு போய்விடுமென்பதும், அதன்பின் விலைக்கன்றி இலவசமாகத் தமிழன் உணவளியான் என்பதும், பிராமணனுக்குத் தெரியும். அதனால்தான், நிலையாகப் பிராமணன் வாழவும் தமிழன் தாழவும் தன்குலக் கட்டுப்பாட்டை இறுகக் கடைப் பிடிக்கின்றான். இதனால், பிராமணன் உண்டிச் சாலையில் திருப்பதியிற் போற் பணங் குவிகின்றது; பிராமணன் இல்லாதவூரில், ஒரு பிராமணனுக்கு இலவச வீடும் நிலமும் வாழ்க்கைப் பொருளுங் கிடைக்கின்றன. இதை ஈகை அல்லது ஒப்புரவொழுதல் எனச் சிலர் கருதலாம். இதனால் தமிழ இனத்திற்கு நிலையாக நேரும் மானக் கோட்டையும் அடிமைத்தனத்தையும் அகக்கரண வளர்ச்சித்தடையையும் நோக்குதல் வேண்டும். தமிழன் முதன்முதல் உலகில் நாகரிக விளக்கேற்றி வைத்தவன்; பகுத்தறிவடிப்படையில் மொழியை வளர்த்துப் பொருளுக்கும் இலக்கணங் கண்டவன்; கண்காணாததைக் காணவும் கரது கேளாததைக் கேட்கவும் நெற்றிக் கண்ணை வளர்த்துக் கொண்டவன்; இறப்புநாளை முன்னரே அறிந்து பணிமுடித்து அணியமாகி, மகிழ்ச்சியொடு உறவினரிடம் விடைபெற்றுச் சென்றவன். கடந்த மூவாயிரம் ஆண்டாக, தமிழன் பிறப்பில் தாழ்ந்தவன் என்று சொல்லிக் சொல்லி அஃறிணையாக்கப்பட்டு விட்டதனால், மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழருள் நூற்றிற் கெழுபத்தைவர் பகுத்தறிவை யிழந்து விட்டனர். ``பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' (குறள். 972) ``பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தம் கருமமே கட்டளைக் கல்'' (குறள். 505) ``நல்ல குலமென்றுந் தீய குலமென்றும் சொல்லள வல்லாற் பொருளில்லை-தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம்''. (நாலடி. 195) செல்வன், தவஞ்செய்தோன்; கற்றோன், உழைப்பாளி, அதிகாரி என்று பெயர் பெறுவதனாலன்றி, பிறப்பாற் சிறப்பில்லை யென்பது இதன் பொருள். ஒருவர் அல்லது ஓரினத்தார் தம் முன்னோராலும் பெருமை பெறலாம். தமிழரின் முன்னோர் புறப்போராகவும், ஆரியரின் முன்னோர் இரப்போராகவும் இருந்ததனால், தமிழரே ஆரியரினும் உயர்ந்தோராவர். இற்றையுலகில், தூய வெள்ளையர் ஐரோப்பியரும் அவர் வழியினருமாவர். அவருக்கு நேர்மாறாக இருண்ட கறுப்பர் ஆப்பிரிக்கர். ஆயினும், ஆப்பிரிக்கர் வெண்ணிறம்பற்றியோ, தம்மை நாகரிகப் படுத்தினவர் என்பதுபற்றியோ, ஐரோப்பியரை உயர்வாகவும் தம்மைத் தாழ்வாகவுங் கருதுவதில்லை. எல்லா வகையிலும் ஆப்பிரிக்கரினும் உயர்வான தமிழர் ஏன் கையுங்காலுமாக வந்து தம்மையிரந்தவரும் தம்மாற் புரக்கப்பட்டவரும் நாகரிகப்படுத்தப்பட்ட வரும் சின்னஞ் சிறுபான்மை யருமான அயலாருக்குத் தாழ்ந்து நிற்றல் வேண்டும்? இங்கிலாந்தில், பொதுமக்கள் (Commons), பெருமக்கள் (Lords) என இருவகுப்பார் இருப்பினும், பதவியினாலும் அரசனதிகாரத்தினாலும் பொதுமக்களும் பெருமக்களாகின்றனர். இங்கே இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் தமிழரனைவரும் கதிரவனுந்திங்களுமுள்ள காலமெல்லாம் பிராமணனுக்குத் தாழ்ந்தவரென்பது, பகுத்தறிவிற் கொவ்வாததும் வாழ்நாட் சிறை போன்ற கடுந் தண்டனைக் கேற்றதுமான குற்றமேயாகும். நெற்றித் கண்ணைத் திறந்தாலுங் குற்றம் குற்றமேயென்று நக்கீரர் போன்று, ``இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான்'' (குறள். 1062) என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், அவர் போன்று திடநெஞ்சும் நடுநிலையும் உள்ளவரேயன்றி, தொடை நடுங்கிகளும் வையாபுரிகளும் திருக்குறளை ஆராயவோ பயன்படுத்தவோ முடியாது. ஆதலால், வையாபுரிகளையும் வாய்மைத் தமிழரையும் பிரித்தறிதல் வேண்டும். 13. தமிழாரியப் போராட்டம் செங்குட்டுவ கனகவிசயர் போர் பதினெண் நாழிகையும், பாண்டவர் கௌரவர் போர் பதினெண்நாளும், இராம இராவணர் போர் பதினெண் மாதமும், தேவரசுரர் போர் பதினெண் ஆண்டும் நடந்தனவென்று சொல்லப்படும். ஆயின், தமிழாரியப் போரோ பதினெண் நூற்றாண்டு நடந்து வந்தும் இன்னும் முடிந்தபாடில்லை. ``ஆரியம் நன்று; தமிழ் தீது'' எனவுரைத்து, நக்கீராற் சாவவும் எழவும் பாடப்பட்ட குயக்கோடன் காலத்திலிருந்து தமிழாரியப் போர் நடந்து வருகின்றது. கடவுள் மக்களெல்லாருக்குந் தந்தை. எல்லாரும் அணுகி தத்தம் தாய் மொழியிற் போற்றி வழிபடலாம். திருத்தமாகப் பேசும் மக்கள் மொழியைவிட, திருந்தாத மழலை பேசும் குழந்தைகள் மொழியே பெற்றோர்க் கின்பம் பயக்கும். அங்ஙனமே, கற்றோர் புகழும் புலமைச் செய்யுளைவிட, கல்லார் புகலும் எளிய உரை நடையே இறைவனுக்கு இன்பமாம். இந்திய மதங்களுட் சிறந்த சிவமதம் திருமால் மதமும், தமிழர் கண்டவை என்பது முன்னரே கூறப்பட்டது. குறிஞ்சி நில முருகன் வணக்கத்தினின்று சிவமதமும், முல்லைநில மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன்றின. உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வமும் சிவன் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு; அங்ஙனமே, விஷ்ணு என்னும் ஆரியத் தெய்வமும் திருமால் என்னும் தமிழத் தெய்வமும் வெவ்வேறு. சிவ வழிபாடும் திருமால்வழிபாடும் தமிழ்நாட்டில் தொன்று தொட்டுத் தமிழிலேயே நடைபெற்று வந்தன. பிராமணர் முதுகுடுமிப் பெருவழுதி போன்ற பேதை வேந்தரை ஏமாற்றி, தமிழ்ப் போற்றி நூல்களை ஆரிய ஆகமங்களாக மொழி பெயர்த்துக் கொண்டு, தமிழை வழிபாட்டிற்குத் தகாததென்று தள்ளி, பிராமணரே சமற்கிருதத்தில் கோவில் வழிபாடு நடத்திவருமாறு செய்து விட்டனர். ``மன்னு மாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்'' என்று மாணிக்கவாசகர் பாடியிருத்தல் காண்க. மகேந்திரம் என்பது, இலங்கைக்கு மேற்கில் பொதிய மலைக்குத் தென்பால் இந்துமாவரியில் மூழ்கிப்போன ஒரு மலைத் தீவு. அதிற் சிவபெருமான் போற்றி நூல் தோற்றுவித்தது ஆரியர் வருகைக்கு முந்திய நிகழ்ச்சி. அத்தீவின் தமிழ்ப்பெயர் இறந்து பட்டது. ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் கிறித்தவ மதத்தைப் பரப்பியவர் உரோமாபுரிக் கிறித்தவக் குரவராதலால், அவர் தம் இலக்கிய மொழியாகிய இலத்தீனிலேயே வழிபாடு நடத்தினர். ஆயின் இத்தாலி யரல்லாதவ ரெல்லாரும் நாளடைவில் தத்தம் தாய்மொழியிலேயே வழிபாட்டை நடத்தி வருவாராயினர். இங்கோ, நாடு தமிழ்நாடு; மக்கள் தமிழ் மக்கள்; மதம் தமிழ மதம்; கோவில் தமிழர் கடியவை; தெய்வப்படிமை தமிழர் சமைத்தவை; தெய்வம் தமிழர் தெய்வம்; திருக்கோவில் உடமைகளெல்லாம் தமிழர் தந்தவை; மக்கள் பேசும் மொழி தமிழ். இங்ஙனமிருந்தும், பிராமணர் தமிழ் வழிபாட்டைத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழருள் திரவிடரும் அடங்குவர். இனி, மராட்டிய மன்னரும் பிறரும் கட்டிய இரண்டொரு கோவில்களிருப்பினும், அவையும் தமிழர் தந்த வரிப்பணங் கொண்டே கட்டியவையென்றறிதல் வேண்டும். இது கோவரசு நீங்கிய குடியரசுக் காலம். தி.மு.க. அரசு எல்லா நிலைமைகளையும் தீர ஆய்ந்து, தமிழ்த் திருமணத்தைச் சட்டப்படி செல்லவைத்தது போன்றே, தமிழ் வழிபாட்டையும் திருக்கோவில்களிற் புகுத்தியது. இது தமிழ் நாட்டரசு செய்ய வேண்டிய தலையாய கடமையே. ஆயின், தமிழரை என்றும் தம் அடிப்படுத்தவே திட்டமிட்டுள்ள பிராமணர், இக்காலத்தில் நிலத்தேவர் என்று தம் உயர்வை நாட்ட முடியாமை கண்டு, தம் இலக்கியக் கலவை மொழியையே கருவியாகக் கொண்டு, சமற்கிருதம் தேவமொழியென்றும் அஃதொன்றிலேயே வழிபாடு நடத்தல் வேண்டுமென்றும் அதுவே தொன்று தொட்ட வழக்கென்றும், தில்லி மேலுயர் மன்றத்தில் வழக்காடி வென்று விட்டனர். பண்டைய இந்திய வரலாறும் தமிழ்நாட்டு வரலாறும் செவ்வை யாகவும் உண்மையாகவும் வரையப்படாமையால், இந்திய மேலுயர் மன்றம் செய்த தீர்ப்புச் செல்லாது. இவ்வழக்கு உலக முதன்மொழியாகிய தமிழும் தமிழர் பல்கலை நாகரிகமும் பற்றியதாதலால், ஒன்றிய நாட்டினங்களின் கூறான (ஏக்கிலுள்ள) உலக அறமன்றத்திற்கும், இதைத் தீர்க்குந் தகுதியில்லை. எந்நாட்டிலும் எக்காலத்திலும் வழிபாட்டிற்குத் தகுந்தமொழி தாய்மொழியே. ஒருவன் தன் உள்ளத்திலுள்ளவற்றைத் தன் தாய் மொழியிலேயே உணர்த்த முடியும். தேவமொழியென்று ஒரு மொழியுமில்லை. ஒரு மொழியைத் தேவமொழியென்று சொல்லும் பூசகன், தெய்வத்திரு முன்பு நின்று தெய்வத்தையே துணிந்து ஏமாற்றித் தீராத் தீவினை செய்கின்றான். மன்றாட்டின் வலிமை மன்றாடுவானின் உள்ளத் தூய்மையையும் திண்மையையும் பொறுத்ததேயன்றி, அவன் ஒலிக்கும் ஒலியின் வன்மையைப் பொறுத்ததன்று. ஒலிக்கே வலிமை யுண்டெனின், நூற்றுக்கணக்கான கழுதைகளைக் கூட்டி ஒருங்கே கத்தும்படி செய்யலாம். ஏனெனில், கழுதை கத்துதல் போன்ற மூச்சொலிமிக்க வல்லொலி, எந்த மாந்தர் மொழியிலுமில்லை. தி. மு. க. அரசு இனிக் கடைப்பிடிக்க வேண்டிய வழி ஒன்றே. அது வருமாறு:- தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் பொதுவான `காலம்' `உலகம்' போன்ற ஐந்நூறு அடிப்படைச் சொற்களைத் தொகுத்து, அவற்றிற்கு வேரும் வரலாறும், தவத்திருக் குன்றக்குடி அடிகள் தலைமையில்; மாண்புமிகு கல்வியமைச்சர் பர். (Dr.) நாவலர் இரா. நெடுஞ்செழியனார், அரசவயவர் முத்தையா (செட்டியார்) பர் (Dr.) மணவாளராமானுசம், பர் (Dr.) வ. சுப. மாணிக்கம், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேரா. திரு. ஞானசம்பந்தனார், வயவர். இராமசாமி (முதலி)யார், சென்னை உயர்மன்றத் தலைமைத் தீர்ப்பாளர் உயர் திரு. வீராசாமி (நாயுடு) ஓய்வு பெற்ற புதுவைக் கல்வித்துறை இயக்குநர் இரா. பெருமாள் (முதலியார்) எம். V; vš.o., முதலியோரைக் கொண்ட நடுவர் குழுமுன், மொழியாராய்ச்சித் தமிழ்ப் புலவர் கூற, தென்னாட்டிலும் வட இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள தலைமைச் சமற்கிருதப் பேராசிரியர் வந்து அவற்றை மறுத்து, அச் சொற்கள் சமற்கிருதச் சொல்லேயென்று நாட்டல் வேண்டும். அதன்பின் நடுவர் குழுத் தீர்ப்புக்கூறல் வேண்டும். அத்தீர்ப்பு உலக முழுதுஞ் செல்ல வேண்டும். அதுவே தமிழாரியப் போராட்டத்தின் உறுதியும் அறுதியும் இறுதியுமான முடிபாயிருத்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்யாக்கால், எல்லா அடிப்படைத் தமிழ்ச் சொற்கும், பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் மூலமும் பொருட் கரணியமுங்கூறி, உலகுள்ள அளவும் பிராமணர் தமிழரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பர். தமிழின் தாழ்வு சமற்கிருத உயர்வு; தமிழன் தாழ்வு பிராமணன் உயர்வு என்ற அடிப்படையிலேயே எல்லாம் நிகழும். வையாபுரிகளும் பகுத்தறிவிலிகளும் தமிழறியா மேனாட்டாரும் என்றும் பிராமணர்க்குப் பக்கத் துணையாகவே நிற்பர். தமிழனுக்குப் பொழுது விடியாது. காலஞ் செல்லச் செல்ல அடிமைத்தனம் பெயர்க்க முடியாதவாறு ஆழ வேருன்றி விடும். ஆதலால், விழித்திருந்து இன்றே இன்னே விடுதலை பெறல் வேண்டும். ``தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமை வளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம் தமிழல்லால் நம் முன்னேற்றம் அமையாது சிறிதும் இதில் ஐயமில்லை ஐயமில்லை அறிந்து கொண்டோம்.'' -பாரதிதாசன். மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதியென்னும் அருட்செல்வனார் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை ஏற்றுக்கொண்டமை யால், பாரதிதாசன் கனவு நிறைவேறிவிட்டது. ``புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேறாதல் வேண்டும்-வழிபெருங் கண்ணோட்டஞ் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து.'' - குமரகுருபரர் ``ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிர்ஒன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.'' - பழந்தனிப்பா வையக மெல்லாம் வடமொழியைப் போற்றினும் மெய்யகந் தென்மொழி மேற்று. தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. ஆங்கிலராட்சி நீங்கினவுடன் விடுதலை வந்து விட்டதென்பது, வரலாறறியாதார் குருட்டு நம்பிக்கையே. உண்மையான கொடிய அயலாட்சி பிராமணியம். இந்தியக் கட்டாயம் நீங்கி, ஆங்கிலமும் நிலையான இந்திய ஆட்சி மொழியாகி தமிழ்நாட்டுத் திருக்கோவில்களிலெல்லாம் தமிழே வழிபாட்டு மொழியாகி நாட்டு வாழ்த்துத் தமிழிலேயே பாடப்படும் போதுதான், தமிழ்நாடு விடுதலையடைந்ததாகும். இன்று தமிழ்நாட்டைக் கெடுப்பவை பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்புமே. இம் மூன்றும் திருவள்ளுவர் காலத்திலேயே தீங்கு செய்யத் தொடங்கி விட்டன. அதனாலேயே, அவர் ``பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு'' (குறள். 735) என்று எச்சரித்தார். 14. வள்ளுவர் கோட்ட அமைப்புப் பற்றிய கருத்துகள் 1) திருவள்ளுவர் உலக முழுதும் ஒப்புயர்வற்ற தெய்வப் புலவராதலின், அவர் கோட்டம் திருவள்ளுவர் கோட்டம் என்றே பெயர் பெறுதல் வேண்டும். 2) தமிழ் மறையாக இயற்றியதே உலகப் பொதுமறையான தென்பதை, தேர்ச்சக்கரத்தில் உள்பரப்பில் தமிழ்மறை என்றும், வெளிவிட்டத்தில் உலகப் பொதுமறை என்றும் பொறித்துக் காட்டலாம். 3) அறத்துப்பால் இல்லறம் துறவறம் என இருவியல் கொண்டி ருப்பதால், அறத்தைக் குறிக்கும் கருங்கல் தேர்த்தட்டும் இருபடை கொண்டிருத்தல் நன்று. 4) இல்லறத்தினாலும் பேரின்ப வீடு பெறலாமென்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், கருங்கல் தட்டின் இருபடையிலும் சுற்றிவர ஓரத்தில் பச்சை வண்ணக் கரையிடலாம். பச்சை கண்ணிற்கினிய நிறமாதலால் பேரின்பத்தைக் குறிக்கும். 5) தேர்க்கும்பத்தில் நாற்புறமும் `அன்பு', `அறிவு', `அமைதி' என்னும் சொற்களுள் ஒன்றைப் பொறிக்கலாம். 15. முடிபு ``ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'', ``யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்பன தமிழர் கொள்கையாதலால், அவருக்கு வேற்றினத்தார் மீது வெறுப்பில்லை. ஆயின், பிராமணரோ, ஒண்ட வந்த தெய்வம் ஊர்த் தெய்வத்தைத் துரத்தினதுபோல், தொன்று தொட்டுக் கட்டுப்பாடாகத் தமிழுக்குந், தமிழர்க்கும் மாறாகவே வேலை செய்து வந்திருக்கின்றனர். இனிமேலாயினும், தம் முன்னோரின் தவற்றையுணர்ந்து அவர் ஏமாற்றுக்கலையையுந் திருவிளையாடலையுந் தொடராது, உடன் பிறப்புப்போல் தமிழரொடு ஒன்றி வாழ்ந்து தமிழைக் காப்பாராக. அங்ஙனந்திருந்தின், கல்வியிலும் அலுவற்பேற்றிலும் வகுப்புவாரிப் படிநிகராண்மை (பிரதிநிதித்துவம்) தலை தாழ்ந்து தகுதியே தலையெடுக்கும். தமிழ்நாடு தழைத்தோங்கும் மேலையரும் வியக்கும் அறிவியல் இறும்பூதுகளும் (அற்புதங்களும்) நிகழும். 16. வாழ்த்து 1. ஒள்ளியநல் லறம்பொருளும் இன்பவீடும் இனியென்றும் உலகருறத் தமிழருக்கென் றுருவான தெள்ளுதமிழ்த் திருக்குறளைத் தீட்டியுயர் திருவாரூர்த் தேர்வடிவிற் சூழ்வுதிகழ்ந் திலகுதிரு வள்ளுவர்நற் கோட்டமதை வகுத்தமைத்தான் கரிகாலன் வழியனெனத் தகுகருணா நிதியென்னும் வள்ளல் அருட் செல்வன்தென் னிலத்தலைமை வாழிவாழி வையகமே போற்றும்வகை நீடூழி. 2. தமிழ்நாட்டில் முதன்முதலாய்த் தலைசிறந்த தமிழ்ப்புலமை தாங்குமயற் சொற்பெயரைத் தள்ளியபின் நிமைகாக்குங் கண்ணெனவே நிவந்ததமிழ்ப் பெயரேற்ற நெடுஞ்செழியன் எனுங்கல்வி யமைச்சன் முன் தமிழ்காத்த பாண்டியன்போல் தன்கடமை யென்றுணர்ந்து தமிழாட்சி மொழியாக மாணவரின் சுமைநீக்கி யிருமொழிக் கல்வியை யமைத்தான் சோர்வில்லாச் சொல்வல்லான் நீணெடுங்கால் வாழியரோ. 3. முன்பருமைப் பெற்றோரே யிட்டதெனா தொருமருங்கு மொழிபெயர்த்தோ இராமையா எனும் பெயரை அன்பழகன் என்றழகா யமைத்தொருபேர் வழிகாட்டி அவலவெந்நோய் தீர்க்குமுடல் நலத்துறையில் பண்புமிகு மாணவரும் பண்டுவரும் படிப்படியாய்ப் பைந்தமிழில் நலத்துறையை மாற்றுதற்கு நன்பணிசெய் அமைச்சனுடன் எம்பெருமான் துணையிருக்க நானிலத்து நூறாண்டு வாழியரோ. 4. பொதுப்பணித் துறையமைச்சன் சண்முகன்நற் சீராளன் பொறுப்புடன் கோட்டத்தைப் புனைந்தமைக்க விதப்புறுங் கண்காணச் சூழ்ச்சியகன் வினைதேர்ந்த வேங்கடா சலபதியுங் கூடுபெரு மிதத்துடன் பணிசெய்து கம்மியரும் ஏவலரும் மிடுக்கொடு பல்லாண்டு வாழியரோ! மதர்ப்புறு தமிழருடன் பிறநாட்டார் ஆராது மதிப்பொடு நாள்தோறுங் கண்டிடவே. 5. வாழ்க வள்ளுவன் வான்புகழ் என்றுமே வீழ்க வண்பெயல் விளைக பல்பயிர் சூழ்க குறள்நெறி சோர்க பகையெலாம் ஆழ்க நடுநிலை ஆயுந் துறைகளே. 