திரு.வி.க. தமிழ்க்கொடை 11 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 11 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+344=352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 175/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்) - 5 35. திருமூல நாயனார் கொச்சகக் கலி 3569. அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில் முந்தைநிகழ் கோயிலுக்கு முதல்பெரு நாயகம் ஆகி இந்திரன் மால் அயன்முதல்ஆம் இமையவர்க்கு நெறிஅருளும் நந்திதிரு அருள்பெற்ற நான்மறை யோகிகள் ஒருவர். 1 3570. மற்று அவர்தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்றுஉடையார் கொற்றவனார் திருக்கயிலை மலைநின்றும் குறுமுனிபால் உற்றதுஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு நல் தமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக் கொண்டார். அணிமா ஆதி சித்திகள்: அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா - அணுவினுஞ் சிறிய உருவங் கொள்வது. மகிமா எங்கும் நீக்கம் அற நிறைந்து நிற்பது. லகிமா - மேருவைப் போலிருந்தும் எடுக்குங்கால் லகுவாயிருப்பது. கரிமா - பரமாணுவைப் போலிருந்தும் எடுக்குங் கால் மேருவைப்போல் கனப்பது. பிராத்தி - எங்கும் போகும் ஆற்றலோடு எல்லா வளங்களையும் பெறுவது. பிராகாமியம் - ஓரிடத்திலிருந்தே எல்லாப் போகங்களையும் பெற்று நுகர்வது. ஈசத்துவம் - கடவுளைப்போல் முத்தொழில் செய்து. எவரும் பணிகேட்ப நிற்பது. வசித்துவம் - எவ்வுயிருந்தன் வயப்படுவது. கொற் றவனார் - சீகண்ட சிவனார் எழுந்தருளியுள்ள. திருக்கயிலைமலை - குருமார்கள் வாழுமிடம்; திருக்கயிலை பலவிதம்; இங்கே குறிப் பிடப்பட்டது இமயத்திலுள்ளது. . . . . . .வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே - திருமந்திரம்: பாயிரம். 19. குறுமுனிபால் - அகத்தியரிடத்து. கேண்மையினால் - நட்பினால். 2 3571. மன்னு திருக் கேதாரம் வழிபட்டு, மா முனிவர் பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித் துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூநீர்க் கங்கை அன்னம்மலி அகன்துறைநீர் அருகரையின் மருங்கு அணைந்தார். பசுபதி எழுந்தருளியுள்ள. 3 3572. கங்கை நீர்த்துறை ஆடிக் கருத்துஉறை நீள்கடல் ஏற்றும் அம் கணர்தாம் மகிழ்ந்தருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி, மங்குல் வளர்வரை விந்த மன்னு பருப்பதம் இறைஞ்சித் திங்கள் அணி சடையர் திருக் காளத்திமலை சேர்ந்தார். கருத்துறை. . . . . ஏத்தி - பிறவிக் கடலினின்றும் கரையேற்றும் சிவபிரான் வீற்றிருந்தருளும் காசியை வணங்கிப் போற்றி; அவி முத்தம் என்பதில் முத்தம் - விடுகை; விமுத்தம் - மிகவும் விடுகை; அவிமுத்தம் - மிகவும் விடவேண்டிய காலத்தும் விடாமையெனக் கொள்க. இதில் அசரம் எதிர்மறை. முன்னொரு காலத்திலே, திவோ தானன் அருந்தவமியற்றிப் பிரமதேவரால் காசியை ஆளும் அர சுரிமை பெற்றவழி, அத்தலத்திலே தேவர் வாசமில்லாதிருக்கும்படி வரமேற்று ஆண்டுகொண்டிருக்க, சிவபிரான் அவ்வரம் பொய்க்கா வண்ணம் தாம் மந்தர மலையை அடைய உத்தேசித்த காலத்தும் அருவுருவாக வீற்றிருந்தருளினராகலின், அவிமுத்தமெனப் பெயர் பெற்றதென்பது அத்தல மான்மியம் - இராமலிங்க சுவாமிகள். 4 3573. நீடு திருக் காளத்தி நிலவு தாணுவை வணங்கி, ஆடு திருஅரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தித் தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து மாடுஉயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார். தாணுவை - சிவத்தை. ஐந்து சபைகளுள் திருவாலங்காடும் ஒன்றாதலின் ஆடுதிரு அரங்கான ஆலவனம் என்றார். ஐந்து சபை கள்: இரத்தின சபை (திருவாலங்காடு), பொற்சபை (சிதம்பரம்), வெள்ளி சபை (மதுரை), தாமிர சபை (திருநெல்வேலி), சித்திரசபை (திருக் குற்றாலம்). திருஏகாம்பரம் - காஞ்சியிலுள்ள திருக்கோயில். 5 3574. நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்துபோய்க் கல்புரிசைத் திருஅதிகை கலந்து இறைஞ்சிக் கறைக்கண்டர் அற்புதக் கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திருவீதிப் பொன் பதியாம் பெரும்பற்றப் புலியூரில் வந்து அணைந்தார். புரிசை - மதில். பெரும்பற்றப் புலியூரில் - சிதம்பரத்தில். 6 3575. எவ் உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் செவ்வியஅன்பு உறவணங்கிச் சிந்தை களிவரத் திளைத்து வவ்விய மெய் உணர்வின்கண் வரும் ஆனந்தக் கூத்தை அவ் இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார். திளைத்து - இடையீடின்றி ஒன்றி; பரவசப்பட்டு. வவ்விய - (திளைத்தலால்) ஏற்ற. அவ்வியல்பில் - அவ்வானந்த இயல்பிலிருந்து. 7 3576. தடநிலை மாளிகைப் புலியூர் தன்னில் உறைந்து இறைஞ்சிப்போய் அடல் விடையின் மேல் வருவார் அமுதுசெய அஞ்சாதே விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார். தடம் - பெரிய. அடல் - போர்; வலிமையுமாம். கடல் சிவபிரா னுக்கு நஞ்சை யளித்தமையான். காவிரி அதில் புகாது உயிர்கட்கு நலஞ் செய்ய வளந்தந்து பயன் தருவது ஈண்டுக் குறிப்பிடப்பட்டது. 8 3577. காவிரி நீர்ப் பெரும் தீர்த்தம் கலந்து ஆடிக் கடந்து ஏறி ஆவின் அருங் கன்று உறையும் ஆவடுதண் துறை அணைந்து சேவில் வரும் பசுபதியார் செழுங்கோயில் வலம்வந்து மேவு பெருங் காதலினால் பணிந்த அங்கு விருப்புறுவார். சேவில் - இடபத்தில். பசுபதியார் - திருவாவடுதுறைப் பெரு மான் பெயர். . . . சீருடையான் சிவன் ஆவடு தண்டுறை - சீருடை யான்பதஞ் சேர்ந்திருந்தேனே, சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை - திருமந்திரம்: பாயிரம். 16, 17. 9 3578. அந் நிலைமைத் தானத்தை அகலாதது ஒரு கருத்து முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்தப் பின்னும் அகன்று ஏகுவார் பேணவரும் கோக்குலங்கள் பொன்னி நதிக் கரைப் புறவில் புலம்புவன எதிர்கண்டார். முன்னி - நினைந்து. ஆதரவு - விருப்பம். பேண. . . . புலம்புவன - மேய்த்துப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட பசுக்கூட்டங்கள் காவிரிநதிக் கரைக்காட்டிலே புலம்புவதை. 10 3579. அந்தணர்தம் சாத்தனூர் ஆமேய்ப்பார் குடித்தோன்றி முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன்எனும் பெயர் உடையான் வந்து தனி மேய்க்கின்றான் வினை மாள வாழ்நாளை வெம் தொழில்வன் கூற்று உண்ணவீடி நிலத்திடை வீழ்ந்தான். சாத்தனூர் அந்தணர்களின் ஆக்களை மேய்ப்பவர்களது குடியில் . . . . நிரை - பசுநிரை. கூற்று - யமன். வீடி - இறந்து. 11 3580. மற்றுஅவன்தன் உடம்பினைஅக் கோக்குலங்கள் வந்து அணைந்து சுற்றி மிகக் கதறுவன சுழல்வன மோப்பன ஆக நல் தவ யோகியர் காணா நம்பர் அருளாலே ஆ உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார். 12 3581. இவன் உயிர்பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று அவன் உடலில் தம்உயிரை அடைவிக்க அருள்புரியும் தவ முனிவர் தம் உடம்புக்கு அரண்செய்து தாம்முயன்ற பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார். அரண் - காப்பு. பவனம் - பிராணவாயு. காயாதி பூதம் கலைகாய மாயையில் - ஆயா தகல அறிவொன் றறிதியே - ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால் - வீயாப் பரகாயம் மேவலு மாமே - திருமந்திரம்: அட்டமாசித்தி. 13 3582. பாய்த்திய பின் திரு மூலராய் எழலும் பசுக்கள் எல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்துத் துள்ளிப்பின் நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தனவால். 14 3583. ஆவின் நிரை மகிழ்வு உறக் கண்டு அளிகூர்ந்த அருளினராய் மேவி அவை மேய்விடத்துப் பின்சென்று மேய்ந்தவைதாம் காவிரி முன்துறைத் தண்ணீர் கலந்து உண்டு கரைஏறப் பூவிரிதண் புறவின் நிழல் இனிதாகப் புறம் காத்தார். அளி - அன்பு; (கூர்தல் - உள்ளது சிறத்தல்). புறவின் - முல்லை நிலத்தின்; காட்டின். 15 3584. வெய்ய சுடர்க் கதிரவனும் மேல் பாலை மலை அணையச் சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆனினங்கள் தாமேமுன் பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி வையம் நிகழ் சாத்தனூர் வந்து எய்தப் பின் போனார். 16 3585. போனவர்தாம் பசுக்கள் எல்லாம் மனைதோறும் புகநின்றார் மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று ஆன பயத்துடன் சென்றே, அவர் நின்றவழி கண்டாள்ஈனம் இவர்க்கு அடுத்தது என, மெய் தீண்ட அதற்கு இசையார். வைகியபின் தாழ்ந்தார் என்று பொழுதுபோன பின்னும் கணவர் வரவில்லையே என்று. இவர்க்கு ஏதோஈனம்அடுத்தது......17 3586. அங்கு அவளும் மக்களுடன் அருஞ்சுற்றம் இல்லாதாள் தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் எனத் தளர, இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்துப் பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொதுமடத்தின் உள்புகுந்தார். வெருவுற - நடுக்குற. அணைவு - தொடர்பு. 18 3587. இல்லாளன் இயல்புவேறு ஆனமைகண்டு இரவு எல்லாம் சொல் ஆடாது இருந்தவர்பால் அணையாது துயிலாதாள் பல்லார்முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார். 19 3588. பித்து உற்ற மயல் அன்று; பிறிது ஒரு சார்பு உளது அன்று சித்த விகற்பம் களைந்து, தெளிந்த சிவ யோகத்தில் வைத்த கருத்தினர் ஆகி வரம்புஇல் பெருமையில் இருந்தார்; இத்தகைமை அளப்பு அரிதால் யாராலும் என உரைப்பார். சித்த விகாரத்தை நீக்கி; . . . . . . சித்தவிகாரக் கலக்கந் தெளிவித்த . . . . . . . . கோத்தும்பி திருவாசகம். 20 3589. பற்று அறுத்த உபதேசப் பரமர் பதம் பெற்றார்போல் முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் சுற்ற இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்பத் துயர் எய்தி மற்று அவளும் மையல் உற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார். 21 3590. இந்த நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த முந்தை உடல் பொறைகாணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார். காப்பில் வைத்த பழைய உடல் சுமையை. 22 3591. தண் நிலவு ஆர் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் கண்ணிய அத் திருவருளால் அவ் உடலைக் கரப்பிக்க எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உணர்ந்தார் சடையார் - சிவபெருமான். கண்ணிய - கருதிய. கரப்பிக்க - மறைப்பிக்க. எண்ணிறைந்த உணர்வுடையார் - திருமூலர்; யோகக் காட்சியினர் எண்ணிறைந்த உணர்வுடையராதல் இயல்பு. என்னை நன்றாக இறைவன் படைத்தனன் - தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறோ - திருமந்திரம்; பாயிரம் - திருமூலர் வரலாறு. 81. 23 3591. சுற்றியஅக் குலத்து உள்ளோர் தொடர்ந்தார்க்குத் தொடர்வுஇன்மை முற்றவே மொழிந்தருள அவர் மீண்டு போனதன்பின் பெற்றம் மீது உயர்த்தவர்தாள் சிந்தித்துப் பெருகு ஆர்வச் செற்றம் முதல் கடிந்தவர்தாம் ஆவடுதண் துறை சேர்ந்தார். இடபக்கொடியுடைய சிவபெருமான் தாளைச் சிந்தித்து. செற்ற முதல் கடிந்தவர்தாம் - காம வெகுளி மயக்கம் முதலியவற்றை அழித்த திருமூலர். 24 3593. ஆவடுதண் துறை அணைந்து அங்கு அரும்பொருளை உற வணங்கி, மேவு வார் புறக் குடபால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ்த் தேஇருக்கை அமர்ந்தருளிச் சிவயோகம் தலை நின்று பூ அலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்தி ருந்தார். அரும்பொருளை - சிவத்தை. புறக்குடபால் - புறத்தே மேற்குத் திசையில், சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனைச் - சேர்ந் திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை - சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில் - சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே நானும் இருந்தேன் நற்போதியின் கீழே - திருமந்திரம்: பாயிரம். 79, 82. பூவலரும் இதயத்து - இருதய கமலத்து. 25 3594. ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய ஞானம் முதல் நான்கும் அலர் நல் திரு மந்திர மாலை பான்மை முறை ஓராண்டுக்கு ஒன்று ஆகப் பரம்பொருள் ஆம் ஏன எயிறு அணிந்தாரை ஒன்று. அவன் தான் என எடுத்து. ஊனுடம்பிலிருந்து கொண்டே பிறவித் துன்பத்தை யொழித்தல் கூடும் என்பதற்குச் சான்றுகள் திருமந்திரத்தில் பல கிடக்கின்றன. அஞ்சனம் போன்றுடலையறு மந்தியில். வஞ்சக வாத மறு மத்தியானத்திற் - செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும் - நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே -727. மந்திரமாலை - மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை திருமந்திரம்; 86. ஏன எயிறு அணிந் தாரை - பன்றிக் கொம்பையணிந்த பரமசிவனை. 26 3595. முன்னிய அப்பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி, மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து, சென்னி மதி அணிந்தார்தம் திருஅருளால் திருக்கயிலை தன்னில் அணைந்த ஒருகாலும் பிரியாமைத் தாள் அடைந்தார். திருமந்திரத்தின் தொகை மூவாயிரம்; மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இடைச்செருகல் என்க. மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம், மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ், முத்தி முடிவிது மூவாயிரத்திலே, மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ் - திருமந்திரம்; 101, 99, 100, 3046. திருமூலர் ஒவ்வோராண்டுக்கு ஒவ்வொரு மந்திரமாக மூவாயிரம் ஆண்டிருந்து மூவாயிரம் மந்திரஞ் சொன்னார் என்பதற்கு அகச்சான்றில்லை. திருமூலர் நீண்ட காலம் இருந்தார் என்பது மட்டும் ஒப்பிலி கோடி யுகம் இருந்தேனே (74) இருந்தேன் இக்காயத்தில் எண்ணிலி கோடி (80) என வருவனவற்றால் விளங்குகிறது. ஆண்டு என்பது அந்நாளில் வேறு பொருளில் வழங்கப் பெற்றதா அறியக் கூடவில்லை. 27 3596. நலம் சிறந்தஞான யோகக் கிரியை சரியை எலாம் மலர்ந்த மொழித் திருமூல தேவர் மலர்க்கழல் வணங்கி அலர்ந்த புகழ்த் திருஆரூர் அமணர் கலக்கம் கண்ட தலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம். 28 திருமூல நாயனார் திருக்கயிலாயத்திலே நந்தியெம்பெருமான் திருவருள் பெற்ற சிவ யோகிகள் பலர் இருக்கிறார்கள். அவருள் ஒருவர் அணிமா முதலிய சித்திகளில் வல்லவர். அவருக்கு, அகத்தியருடன் சில நாள் தங்குதல் வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. அவர், அவ் வேட்கையைத் தணித்துக் கொள்ளத் திருக்கயிலையினின்றும் பொதிகை நோக்கிப் புறப்பட்டார்; வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திரு வாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுது, திருவாவடுதுறையை அடைந்தார். அத் திருப்பதியை விடுத்து அகலாத ஒரு கருத்து அவர்தம் உள்ளத்தில் உதித்துக் கொண் டிருந்தது. ஆயினும் அவர், ஒருநாள், திருவாவடுதுறையை விடுத்துப் புறப்பட்டார். அப்போது, காவிரிக் கரையில் உள்ள ஒரு பசுங் காட்டிலே பசுக் கூட்டங்கள் புலம்பிக் கொண்டிருந்தன. அக் காட்சியைச் சிவயோகியார் கண்டார். அப் பசுக்களை மேய்ப்பவன் சாத்தனூரில் உள்ள ஓர் இடையன். அவன், மூலன் என்னும் பெயரை உடையவன். அவன் அன்று இறந்துபட்டான். பசுக்கள் அவனைச் சுற்றி நின்று மோந்து மோந்து அழுது கொண்டிருந்தன. பசுக்களின் அழுகை சிவ யோகியார் நெஞ்சைக் கவர்ந்தது. பசுக்களின் துயரை நீக்குதல் வேண்டும் என்னும் கருணை அவர்தம் உள்ளத்தில் பிறந்தது. இவ் விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப் பசுக்களின் துயர் நீங்காது என்று அவர் நினைக்கலானார். சிவயோகியார், கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தில் வல்லவ ராதலால், அவர் தமது உடலை ஓரிடத்திலே சேமித்து வைத்தார்; இடையன் உடலிலே நுழைந்தார்; திருமூலராய் எழுந்தார். பசுக்கள் எல்லாம் ஆனந்தமுற்றன; அவரை நாத் தழும்பத் தழும்ப நக்கின; மோந்தன; கனைத்தன; துள்ளியோடி மேய்ந்தன. பொழுது போயிற்று. பசுக்கள் வழக்கம்போலச் சாத்தனூரை நோக்கி நடந்தன. திருமூலரும் அவை களுடன் சென்றார். பசுக்கள் இல்லந்தோறும் நுழையலாயின. திருமூலர் வீதியிலே ஓரிடத்தில் நின்றார். மூலனுக்கு ஒரு மனைவி உண்டு. அவள், என்ன! நாயகர் இன்னும் வரவில்லையே என்று வெளியே வந்து பார்த்தாள்; சிவ யோகியார் நின்ற இடத்துக்கு வந்தாள்; இவர் ஏன் இங்கே நிற்கிறார்? இவருக்கு என்ன? தீட்டா? என்று சிவயோகியரைத் தீண்டப் போனாள். சிவயோகியார் அவளைப் பார்த்து, என்னைத் தீண்டாதே என்றார். அவள் மருண்டு இஃதென்ன! என்று தளர்வுற்றாள். சிவயோகியார், அவளை நோக்கி, எனக்கும் உனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சொல்லி ஒரு பொது மடத்தில் நுழைந்தார். இடையன் மனைவி இரவு முழுவதும் துயிலாது வருந்திக் கொண்டிருந்தாள். பொழுது விடிந்தது. விடிந்ததும், அவள் அவ் வூரிலுள்ள அறிஞர்களிடஞ் சென்று, தன் கணவன் செயலைத் தெரிவித்தாள். அவர்கள் சென்று திருமூலரைப் பார்த்தனர்; பார்த்து, இது பித்தன்று; மயக்கமன்று; இவர் சித்தம் சிவயோகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இனி இவர் சுற்றத்துடன் சேர்ந்து வாழார் என்று சொல்லி விட்டார்கள். அது கேட்ட மனைவி துயரக் கடலில் ஆழ்ந்தாள். அவர்கள் அவளைத் தேற்றி உடனழைத்துச் சென்றார்கள். பின்னே திருமூலர் எழுந்து பசுக்கள் வந்த வழியே சென்றார்; தாம் சேமித்துவைத்த தமது உடலைத் தேடினார்; அதைக் கண்டா ரில்லை. சிவாகமத்தின் உண்மைப் பொருளைத் தம் வாயிலாகத் தமிழில் வெளியிடவேண்டி உடலை மறைத்தது சிவபிரான் திரு வருள் என்பதை ஞான உணர்வினால் திருமூலர் தெளியலானார். அந்நிலையில், சுற்றத்தார், திருமூலரைத் தொடர்ந்து சூழ்ந்தனர். திருமூலர் அவர்களைப் பார்த்து, உங்களுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; நீங்கள் போங்கள் என்றார். அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள். திருமூலர், திருவாவடுதுறை சேர்ந்தார்; திருக்கோயிலுள் நுழைந்தார்; மேற்புறத்திலுள்ள அரசமரத்தடியில் அமர்ந்தார்; மூவாயிரம் ஆண்டு சிவயோகத்தில் இருந்தார். ஆண்டுக்கு ஒரு மந்திர மாககத் திருமந்திரம் மூவாயிரம் அவரால் அருளிச்செய்யப்பட்டன. அத்திருத் தொண்டு முற்றுப் பெற்றதும் அவர் திருக்கயிலை அடைந்தார். 36. தண்டி அடிகள் அறுசீர் விருத்தம் 3597. தண்டி அடிகள் திருஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் அண்ட வாணர் மறைபாட ஆடும் செம்பொன் கழல் மனத்துக் கொண்ட கருத்தின் அக நோக்கும் குறிப்பே அன்றிப் புறநோக்கும் கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண்காணார். தண்டியடிகள் அகக்கண் விளங்கப் பெற்றவர்; புறக் கண்ணில்லாதவர். இதனால் நாட்டமிகு தண்டிக்கும் என்றார் திருத்தொண்டத்தொகையுடையார். கருத்தின்கண் என்னும் பாடத் துக்கு அகக்கண் என்று கொள்க. உணர்வு இருவகைத்து. ஒன்று கண்ட உணர்வு; மற்றொன்று அகண்ட உணர்வு. முன்னையது புறக்கண்ணுக்குரியது; பின்னையது அகக்கண்ணுக்குரியது. 1 3598. காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் பேணும் செல்வத் திரு ஆரூர்ப் பெருமான் அடிகள் திருவடிக்கே பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் சேணும் அறிய அரிய திருத்தொண்டின் செறியச் செறிந்து உள்ளார். 2 3599. பூஆர் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் தேவாசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய்ச் செம்மைபுரி நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நல் பதமே ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒருநாள் போல வரும் நாளில். சடிலம் - சடை தேவாசிரிய மண்டபத்தின் முன். நற்பதமே - நல்ல மந்திரமே ஓவா - நீங்காத. 3 3600. செங்கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் அங்கு அந்நிலைமைதனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார். குடபால் - மேற்கிலுள்ள. பாங்கு - பக்கம். பாழிகளாய் - மடங்களாய்; குகைகளாய். ஆதரவால் - விருப்பத்தால். கல்ல - தோண்ட; வெட்ட. 4 3601. குழிவாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக்குலையின் இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடைதடவி, வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப்போய் ஒழியா முயற்சியால் உய்த்தார்; ஓதும் எழுத்து அஞ்சு உடன் உய்ப்பார். குலையின் - கரையின். இழிவாய்ப்புறத்து - இறங்கும் இடப் புறத்தில் தறியோடு - முளையுடன். மறித்தும் - மீண்டும். உய்த்தார் - சேர்த்தார்; கொட்டினார். உய்ப்பார் - உச்சரிப்பவராய். 5 3602. நண்ணி நாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக் கண்ட அமணர் பொறார் ஆகி, எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன்நின்று இயம்புவார் மண்ணைக் கல்லில் பிராணிபடும் வருத்த வேண்டா என்று உரைத்தார். பிராணிபடும் - உயிர்கள் சாகும். வருந்த வேண்டாம் என்பது பாடமாயின், நீரும் வீணே வருந்தவேண்டாம் என்று கொள்க. 6 3603. மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் தேசு பெருகும் திருத்தொண்டர் செப்பு கின்றார் திருஇலிகாள் பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி ஆசு இலா நல் அறம் ஆவது அறிய வருமோ? உமக்கு என்றார். அந்தம் - எல்லை. முடை - நாற்றம் வீசும். தேசு - ஒளி. திருவிலி காள் - மூதேவிகளே என்றபடி ஆசிலா - குற்றமில்லாத. 7 3604. அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் சிந்தித்து இந்த அறம் கேளாய் brÉí« ïHªjhnah? என்ன, மந்த உணர்வும் விழிக் குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார். 8 3605. வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமலச் சேவடிகள் அல்லால் வேறு காணேன் யான்; mJ Ú® m¿j‰F M®? என்பார்; நில்லா நிலையீர்! உணர்வு இன்றி நும் கண் குருடு ஆய் என் கண் உலகு எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர்? என்று எடுத்துரைத்தார். வில்லால் - மேருவில்லால். எயில் மூன்றும் - மூன்று மதில் களையும்; முப்புரங்களையும். 9 3606. அருகர் அதுகேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் பெருகும் இவ் ஊரினில் யாங்கள் பின்னை இருக்கிலோம் என்று, கருகு முருட்டுக் கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித் தருகைக் கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார். கொட்டை - மண்வெட்டியை. கருத்தின் வழிதரு - கருத்துப் போல் வழி தெரிவிக்கும். தலைபறித்தார் - தலைமயிர் பறிப்பவர் களாகிய சமணர்கள். 10 3607. வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள் தாம் மைகொள் கண்டார் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி ஐயனே! இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய நைவது ஆனேன்; இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார். 11 3608. பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து தொழுது போந்து மடம்புகுந்து தூய பணி செய்யப்பெறாது அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார். பழுது தீர்ப்பார் - சிவபெருமான். 12 3609. நெஞ்சில் மருவும் கவலையினை ஒழிநீ! நின் கண் விழித்து அந்த வஞ்ச அமணர்தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் அஞ்ச வேண்டா என்றருளி அவர்பால் நீங்கி, அவ் இரவே துஞ்சும் இரவில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார். 13 3610. தண்டி நமக்குக் குளம்கல்லக் கண்ட அமணர் தரியாராய் மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான்; அவன்பால் நீமேவிக் கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் தொண்டர் இடுக்கண் நீங்க எழுந் தருளினார் அத் தொழில் உவப்பார். மிண்டு செய்த - இடக்கர் செய்து; தருக்கால் பிழைசெய்து. . . . . . . உவப்பார் - சிவபெருமான். 14 3611. வேந்தன் அதுகண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர்முகிழ்ப்பப் பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத்தொண்டர் பால் சார்ந்து புகுந்தபடி விளம்பத் தம்பிரானார் அருள் நினைந்தே ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார். வேய்ந்தவரை - அணிந்தவரை. புலர - இருள்விடிய. ஏய்ந்த - அடைந்த புகுந்த வண்ணம் இது நிகழ்ந்ததை. 15 3612. மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்தக் குளம் கல்லத் துன்னு அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பலசொல்லிப் பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி என்னை வலிசெய்து யான்கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி. 16 3613. அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர்? என்ன, இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஒட்டினார் இது மேல் வந்த வாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார். அந்தனான - குருடனான. ஒட்டினார் - சபதங் கூறினார். இது மேல் வந்தவாறு. இது முன்னே நடந்த விதம். 17 3614. அருகர்தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம்நோக்கிப் பெருகும் தவத்தீர்! கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர். மலர் நிறைந்த தீர்த்தத்தின் அருகே நின்று. 18 3615. ஏய்ந்த அடிமை சிவனுக்குயான் என்னில் இன்று என் கண்பெற்று வேந்தன் எதிரே திருஆரூர் விரவும் சணமர் கண் இழப்பார் ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு எழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் வாவி மூழ்கினார். 19 3616. தொழுது புனல்மேல் எழும் தொண்டர் தூய மலர்க் கண் பெற்று எழுந்தார்; பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழுந்தண் பூ மாரி; இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு, பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றார். பொழுது தெரியாவகை - சூரியன் மறையும்படி; பொழுது நீட்டித்தல் தெரியாதபடி எனினுமாம். இழுதை - அறவில்லாதவர் களாகிய. விழித்த நிலையில் கண்ணிழத்தலாவது கண்ணொளி இழத்தலாம். 20 3617. தண்டி அடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண்குண்டர் அண்டர் போற்றும் திருஆரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் கண்ட அமணைர்தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி. துரக்க - ஓட்டுக வயவர்மண்டி - வீரர்கள் மிக்குச் சென்று. 21 3618. குழியில் விழுவார்; நிலை தளர்வார்; கோலும் இல்லை என உரைப்பார்; வழி ஈது என்று தூறு அடைவார்; மாண்டோம் என்பார் மதிகெட்டீர்! அழியும் பொருளை வட்டித்து இங்கு அழிந்தோம் என்பார் அரசனுக்குப் gÊ