திரு.வி.க. தமிழ்க்கொடை 9 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 9 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+320=328 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்) - 3 திருநின்ற சருக்கம் -5 26. திருநாவுக்கரசு சுவாமிகள் கொச்சகக் கலி 1271. திருநாவுக் கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழ, வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன்; பேர் உலகில் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். திருநாவுக்கரசர் வளர்த்த திருத்தொண்டின் நெறி வாழ்க. (அந்நெறி வளர்க்க) வந்த ஞானத்தவ முனிவராகிய அவ் வாகீசர். வாகீசர் - திருநாவுக்கரசர். உண்மை விளங்கும் அவர் தஞ் சரித்தி ரத்தைச் சொல்லப் புகுகிறேன் என்றபடி. வாகீசர் என்பவர் ஒரு முனிவரென்றும், அவர் திருநாவுக்கரசராகப் பிறந்தவர் என்றும் பின்னே புனையப் பெற்ற ஒரு கதையைப் பொருளாகக்கொண்டு அக் கதைக்கியையச் சிலர் இப் பாட்டிற்குப் பொருள் கூறியுள்ளனர். யானும் இளமையில் அக் கூற்றுக்கு இரையானேன். வாகீசர் என்பதும் திருநாவுக்கரசர் என்பதும் ஒரு பொருள் குறிப்பனவே. 18, 48, 75 -ஆம் பட்டுகளின் குறிப்புகளைப் பார்க்க. திருநாவுக்கரசர் சமய குரவருள் ஒருவராதலானும், அவர் தம் வாழ்வு பெரிதுந் தொண்டையே பற்றி நின்றமையானும், அவர்தந் தொண்டை வாழ்த்தும் வழி அவர்தம் புராணத்தைப் பாட ஆசிரியர் தொடங்கு கிறார். திருஞானசம்பந்தர்க்கும் ஒரு பாட்டில் வாழ்த்துக் கூறியே ஆசிரியர் அப் புராணத்தைப் பாடப் புகுந்தமையும் ஈண்டுக் கருதற் பாலது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாட்டுடைத் தலைவராகலானும், சருக்க முடிவுதோறும் அவருக்கு வாழ்த்துக் கூறப்பெறுதலாலும், தடுத்தாட்கொண்ட புராணத்தில் தனி வாழ்த்துக் கூறுதற்கு அவசிய மில்லை யென்க. 1 1272. தொன்மைமுறை வருமண்ணின் துகள்அன்றித் துகள்இல்லா நன்மைநிலை ஒழுக்கத்து நலம்சிறந்த குடிமல்கிச் சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள் மன்னிநிறைந் துளது; திரு முனைப்பாடி வளநாடு. பழைய முறைப்படி. துகள் (புழுதி) அன்றி வேறு துகள் (குற்றம்) இல்லாத. மல்கி - பெருகி. சிகரத்தில் சந்திரன் தவழுதலால் அணி செய்ய வளர்ந்த; சிகரத்தில் சந்திரன் குளிக்க வளர்ந்த எனினு மாம். மன்னி - நிலையாக. திருமுனைப்பாடி வளநாடு தொன்மை முறை வருவதும், மண். . .துகளில்லாததும் ஆகிய நன்மை நிலை யொழுக்கத்து. . .உளது. 2 1273. புனப்பண்ணை மணியினொடும் புறவின்நறும் புதுமலரின் கனப்புஎண்ணில் திரைசுமந்து, கரைமருங்கு பெரும்பகட்டு ஏர் இனப்பண்ணை உழும்பண்ணை எறிந்துஉலவி எவ்உலகும் வனப்புஎண்ண வரும்பெண்ணை மாநதிபாய் வளம்பெருகும். புனப்பண்ணை மணியினொடும் - குறிஞ்சி நிலத்திலிருக்குங் கூட்டமான இரத்தினங்களொடும். புற. . .கனப்பு - முல்லை நிலத்தி லிருக்கும் வாசனையுடைய புது மலர்களின் திரளை. எண். . .மருங்கு - எண்ணில்லாத அலைகள் சுமந்து கரைப் பக்கங்களில். பெரும். . .எறிந்து - பெரிய எருமைகள் பூட்டப்பட்ட ஏர்களின் அதிக கூட் டங்கள் உழுகின்ற வயல்களில் எறிந்து. வனப்பு எண்ண - அழகை மதிக்க. 3 1274. கால்எல்லாம் தகட்டுவரால்; கரும்புஎல்லாம் கண்பொழிதேன்; பால்எல்லாம் கதிர்ச்சாலி; பரப்புஎல்லாம் குலைக்கமுகு; சால்எல்லாம் தரளம்நிரை; தடம்எல்லாம் செங்கழுநீர்; மேல்எல்லாம் அகில் தூபம்; விருந்துஎல்லாம் திருந்துமனை. கால் - நீர்க்கால். வரால் மீன்கள். கண் - கணுக்கள். பால் - பக்கம். சாலி - நெற்கள். பரப்பு - அகன்ற இடம். சால் - படைச்சால். தரள நிரை - முத்து வரிசைகள். தடம் - குளம். செங்கழுநீர் - செங்குவளை. திருந்திய மனைகளிலெல்லாம் விருந்து. 4 1275. கடைஞர்மிடை வயல்குறைந்த கரும்புகுறை பொழி கொழுஞ் சாறு இடைதொடுத்த தேன் இழிய, இழிந்துஒழுகும் நீத்தமுடன் புடைபரந்து, ஞிமிறுஒலிப்பப் புதுப்புனல் போல் மடைஉடைப்ப, உடைமடைஅக் கரும்புஅடு கட்டியின் அடைப்ப ஊர்கள்தொறும். கடைஞர். . .குறை - பள்ளர்கள் நெருங்கிய வயல்களில் துண்டிக்கப்பட்ட கரும்புக் குறைகள். இடை. . .நீத்துமுடன் - (கொம்புகளுக்கு) இடையிடையே கட்டப்பட்டுள்ள தேன் கூடுகள் கிழியச் சொரிந்து பாயும் (தேன்) வெள்ளத்தோடு. புடை. . .ஒலிப்ப - பக்கங்களில் பரவி வண்டுகள் ஒலிக்க. புதுப்புனல்போல் - புதிய நீரைப்போல (ஓடி). புதுப்புனல்போய் என்னும் பாடத்துக்குப் புதுப் புனலுடன் போய் என்றுரைக்க. உடை. . .அடைப்ப - உடைபட்ட மடைகளை அக் கருப்பஞ் சாற்றால் காய்ச்சப்பெற்ற வெல்லக் கட்டிகளால் அடைப்பார்கள். 5 1276. கருங்கதலிப் பெருங்குலைகள் களிற்றுக்கைம் முகம்காட்ட, மருங்குவளர் கதிர்ச்செந்நெல் வயப்புரவி முகம்காட்டப் பெருஞ்சகடு தேர்காட்ட, வினைஞர் ஆர்ப்பு ஒலிபிறங்க, நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்ப்பனவாம் நிறை மருதம். கதலி - வாழையின். களிற்றுக்கை - யானைகளின் துதிக்கை. மருங்கு - பக்கத்தே. வயப்புரவி - வெற்றிக் குதிரைகளின். சகடு - வண்டி கள். வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க - பள்ளர்களின் ஆரவார ஒலி (பதாதியை) விளக்க. சாதுரங்க பலம் - நால்வகைச் சேனையை. 6 1277. நறைஆற்றும் கமுகு நவமணிக் கழுத்தினுடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர்எனப் புறம்புஅலை தண்டலைவேலித் துறையாற்ற மணிவண்ணச் சுரும்புஇரைக்கும் பெரும் பெண்ணை நிறையாற்று நீர்க்கொழுந்து படர்ந்துஏறும் நிலைமையாதல். நறை ஆற்றும் கமுகு - மணங் கமழும் பாக்கு மரங்கள். பொறை - சுமையை. புறம்பு. . .துறை - புறம்பே அலையும் சோலைகளை வேலி யாகக் கொண்ட கரையில். ஆற்ற. . .இரைக்கும் - மிகுந்த நீலமணி போன்ற வண்டுகள் ஒலிக்கும். பழம், காய், பாளை, சோலை முதலிய பன்னிறப் பொருள்களைக் கமுகு உடைமையான், அதற்கும் நவ மணிக் கழுத்துடன் கூந்தல் பொறை ஆற்றாத மகளிர்க்கும் உவமை. எண்ணார் முத்த மீன்று மரகதம்போல் காய்த்துக் கண்ணார் கமுகு பவளம் பழுக்குங் கலிக்காழி - திருஞானசம்பந்தர்: சீர்காழி. 9. 7 1278. மருமேவும் மலர்மேய, மாகடலினுள் படியும் உருமேகம் எனமண்டி, உகைத்தகருங் கன்றுபோல் பருமேனிச் செங்கண்வரால் மடிமுட்டப் பால்சொரியும் கரு மேதிதனைக் கொண்டு கரை புரள்வ - திரை வாவி. மணம்பொருந்திய மலர்களை மேயும்படி. இடியையுடைய மேகம் போல. உரும் - இடி. உருவெனக் கொண்டு கருநிறம் எனக் கூறலு மொன்று. மண்டி உகைத்த - நெருங்கிப் பாய்கின்ற. பருத்த உடலையும் சிவந்த கண்ணையுமுடைய வரால். மீன்கள். கருமேதிதனை - கரிய எருமையை. அலைகளையுடைய வாவிகள் கரைபுரள்வ. 8 1279. மொய்அளிசூழ் நிரைநீல முழுவல யங்களின் அலையச் செய்யதளிர் நறுவிரலின் செழுமுகையின் நகம் சிறப்ப, மெய்ஒளியின் நிழல்காணும் ஆடிஎன வெண்மதியை வையமகள் கைஅணைத்தால் போல்உயர்வ மலர்ச்சோலை. மொய். . . . .அலைய - கூட்டமாகத் திரண்ட வண்டுகள் சூழ்ந்த வரிசையானது முழு நீலமணிகளால் ஆக்கப்பெற்ற வளையல்களைப் போல் அலைய. . . . .வண்டுகள் கூடியுள்ள நீல மலர்கள் மழுவதும் நீலமணி வளையல். . .என்னலுமாம். செய்ய. . .சிறப்ப - சிவந்த தளிர்கள் அழகிய விரலைப்போலவும் செவ்யிய அரும்புகள் நகத்தைப் போலவும் சிறந்து விளங்க. மெய். . .என - உடல் ஒளியின் நிழலைக் காணும் கண்ணாடியைப்போல. வையமகள் - பூமிதேவி. 9 1280. எயில் குலவும் வளம்பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர்க்கண்வியல் இடங்கள் பல பரந்துஉயர்நெல் கூடுகளும் வெயில் கதிர்மென் குழைமகளிர் விரவிய மாடமும்மேவி மயில் குலமும் முகில் குலமும் மாறாட மருங்குஆடும். எயில் குலவும் - மதில்கள் சூழ்ந்த எங்குமுள்ள. வயலில் பொலிந்த பயிர்கள் உள்ள அகன்ற இடங்கள் பலவற்றில். நெற் கூடுகளிலும். வெயிலொளி உமிழும் மெல்லிய இரத்தினக் குண்ட லங்களை அணிந்த பெண்மக்கள் நெருங்கியுள்ள மாடங்களிலும். குலமும் - கூட்டமும். மாறாட - (கண்டோர் மயிலோ முகிலோ என்று) மயங்க. மருங்கு - பக்கங்களில். 10 1281. மறம் தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி அறம்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதுஆனால் நம்அளவோ பேர்உலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு. மறம் - பாவத்தை. மணிகண்டர் வாய்மை நெறி - சிவபிரானது சத்திய மார்க்கமாகிய. சீர்ப்பாடு - சிறப்பு. 11 1282. இவ் வகைய திருநாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும் மெய்வளங்கள் ஓங்கவரும் மேன்மையன; ஆங்குஅவற்றுள் சைவநெறி ஏழ்உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருஆம்ஊர் திருவாமூர். எனைப்பல ஊர்களும் - எல்லா ஊர்களும். எனைப்பொருள் உண்மை மாத்திரை கண்ட - மணிமேகலை: 27. சமய. 62. . . .எனைப் பலகோடி தொகுத்தே - தக்காயப்பரணி: 265. பாலிக்கும் - காக்கும்; வளர்க்கும். சிவம் - நன்மை. திருஆம்ஊர் - செல்வம் உண்டாகும் (இலக்குமி வாழும்) ஊராகிய. 12 1283. ஆங்குவன முலைகள் சுமந்து அணங்குவன - மகளிர்இடை; ஏங்குவன - நூபுரங்கள்; இரங்குவன - மணிக்காஞ்சி; ஓங்குவன - மாட நிரை; ஒழுகுவன - வழு இல் அறம்; நீங்குவன - தீங்கு நெறி; நெருங்குவன - பெருங் குடிகள். வனமுலை - அழகிய முலைகளை. மகளிரிடை (இடுப்புகள்) அணங்குவன (வருந்துகின்றன) நூபுரங்கள் - சிலம்புகள். மணிக் காஞ்சி - மணிமேகலை. மாடநிரை - மாடவரிசைகள். வழுவில்லாத அறங்கள் ஒழுகுவன (நிகழ்கின்றன; நீள வளர்கின்றன). 13 1284. மலர் நீலம் வயல் காட்டும்; மைஞ் ஞீலம் மதி காட்டும்; அலர் நீடு மறுகு ஆட்டும் அணிஊசல் பலகாட்டும்; புலர்நீலம் இருள் காட்டும் பொழுதுஉழவர் ஒலிகாட்டும்; கலம் நீடும் மனைகாட்டும் - கரைகாட்டாப் பெருவளங்கள். மதிமைஞ்ஞீலம் காட்டும் - மதிபோன்ற முகம் கரியநீல மலர் போன்ற கண்ணைக் காட்டும். அலர்நீடு மறுகு - அகன்ற நீண்ட தெருக்கள். இருள் (குமரி இருள்) புலர்தற்குரிய நீலத்தைக் காட்டும். பொழுது - வைகறை. அளவில்லாப் பெருவளங்களைப் பலதிறப் பண்டங்கள் நிறைந்த மனைகாட்டும். 14 1285. தலத்தின்கண் விளங்கியஅத் தனிப்பதியில் அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடை மருவும் குடி நாப்பண் விலக்கு இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும். தலத்தின்கண் - உலகத்திலே. மருவும் - விளங்கும். குடி நாப்பண் - குடிகள் மத்தியில். விலக்கு இல் - வழுவில்லாத. மேதக்க - மேம்பட்ட. உழுத சால்வழியேயுழு வான்பொருட் - டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே (தனிக்குறுந்தொகை: 8): ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் (திருமறைக்காட்டுத் திருத்தாண்டகம்: 5) என வரூஉம் அப்பர் திருவாக்குகளை யோர்க. குறுக்கையர் என்பவரின் வழி வருங்குடி. 15 1286. அக்குடியின் மேல்தோன்றல் ஆயபெருந் தன்மையினார்; மிக்கமனை அறம்புரிந்து விருந்துஅளிக்கும் மேன்மையினார்; ஒக்கல்வளர் பெருஞ்சிறப்பின் உளர்ஆனார்; உளர்ஆனார் - திக்கு நிலவும் பெருமை திகழவரும் புகழனார். மேலார் தோன்றலாய - பெருந்தலைவராகிய. ஒக்கல் - சுற்றம். சிறப்பின் உளரானாராகிய புகழானர் உளரானார். 16 1287. புகழானார் தமக்கு உரிமைப் பொருஇல் குலக்குடியின்கண் மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில் நிகழும் அலர்ச் செங்கமல நிரைஇதழின் அகவயினில் திகழவரும் திருஅனைய திலகவதியார் பிறந்தார். பொருவில் - ஒப்பற்ற. நிகழும். . .அனைய - விளங்கும் செந் தாமரை மலரின் ஒழுங்குபட்ட இதழ்களிடைப் பொலிய வீற்றி ருக்கும் திருமகளைப் போன்ற. 17 1288. திலகவதியார் பிறந்து சிலமுறையாண்டு அகன்றதன் பின் அலகு இல் கலைத்துறை தழைப்ப, அருந்தவத்தோர் நெறி வாழ, உலகில் வரும் இருள் நீக்கி ஒளிவிளங்கு கதிர்போல மலரும், மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார். அலகில் - அளவில்லாத. கதிர் - சூரியனை. இங்கு மருள் நீக்கி யார் முற்பிறப்புக் குறிப்பேயில்லை. மருள் நீக்கியார், வாகீசர் அவதாரமென்றும், சுதபாமுனி அவதாரமென்றும் இரண்டு கதைகள் பின்வந்தவர்களாற் புனையப்பட்டன. பாட்டு. 1, 48, 75 - குறிப்பு களைப் பார்க்க. 18 1289. மாதினியார் திருவயிற்றில் மன்னியசீர்ப் புகழனார் காதலனார் உதித்ததன்பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகுநல் வினைசிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதம் இல் பல் கிளை போற்ற, இளங் குழவிப்பதம் கடந்தார். காதலனார் - மருள்நீக்கியார். மேன்மை பொருந்திய நல் வினை கள் சிறக்க. ஏதம். . .போற்ற - குற்றமில்லாத பல சுற்றத்தார் செய்ய. பதம் - பருவம். 19 1290. மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும் தெருள் நீர்ப்பல் மாந்தர்எலாம் மகிழ்சிறப்பச் செய்ததன்பின் பொருள்நீத்தம் கொளவீசிப் புலன்கொளுவ மனம்முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்குவித்தார் தலைமயிர் நீக்கும் மங்கல காரியம். தெருள்நீர் - தெளிந்த குணம் வாய்ந்த - பொருளை வெள்ளமாக வீசி (தானஞ் செய்து). புலன் கொளுவ - அறிவு கொள்ளுமாறு. முகிழ்த்த சுருள் - குவிந்த முகையை. புலன்கள் வழி உணர்வு பெற என்றும், மனத்தரும்புஞ் சுருளை என்றுங் கூறுவோருமுளர். மனம் மொட்டுப் போலிருப்பது. அறிவு விளக்கத்துக்கு அஃது அரும்பிமலர்தல் வேண்டும். அதனை அரும்பி மலரச் செய்வது கலை. கலையின் சிறப்புக் கூறியவாறு காண்க. 1291. தந்தையாய் களிமகிழ்ச்சி தலைசிறக்க, முறைமையினால் சிந்தைமலர்ந்து எழும் உணர்வில் செழுங்கலையின் திறங்கள்எல்லாம் முந்து முறைமையில் பயின்று முதிர, அறிவு எதிரும் வகை மைந்தனார் மறுஒழித்த இளம்பிறைபோல் வளர்கின்றார். தலைசிறக்க -மிகச் சிறக்க. திறங்கள் - வகைகள். அறிவு எதிரும் - அறிவு தோன்றும். மறு - களங்கம். 21 1292. அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறிரண்டின் முன் ஆக, ஒத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர்; மின்ஆர்செஞ் சடைஅண்ணல் மெய்அடிமை விருப்புஉடையார்; பொன் ஆரும் மணிமௌலிப் புரவலன்பால் அருள் உடையார். பன்னிரண்டு வயது ஆக. மௌலி புரவலன்பால் - கிரீடந்தரித்த அரசனிடம். அருள் - அன்புக் கட்டளை. 22 1293. ஆண்தகைமைத் தொழிலின்கண் அடல் அரியேறு என உள்ளார்; காண்தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும்பெயரார், பூண்டகொடைப் புகழனார்பால் பொரு இல்மகள் கொள்ள வேண்டிஎழும் காதலினால், மேலோரைச் செல விட்டார். ஆண். . . . .உள்ளார் - போர்த் தொழிலில் வலிய சிங்க ஏறு போன்றவர். வனப்பின் - அழகுடைய. அழகு கண்ணைக் கவருந் தகை யினதாகலான். காண்டகைய என்றார். கொடையறம் பூண்ட புகழனாரிடம். பொருவில் - ஒப்பற்ற. 23 1294. அணங்குஅனைய திலகவதியார் தம்மை ஆங்குஅவர்க்கு மணம்பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம்பேசிக் குலம்பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணம்கொள் அரவு அகல் அல்குல் பைந்தொடியை மணம் நேர்ந்தார். அணங்கு அனைய - திருமகளை யொத்த. பணங்கொள் அரவு - பாம்பின் படம் போன்று. மணம் நேர்ந்தார் - திருமணஞ்செய்து கொடுக்க உடன்பட்டார். 24 1295. கன்னிதிருத் தாதையார் மணம்இசைவு கலிப்பகையார் முன்அணைந்தார் அறிவிப்ப, வதுவைவினை முடிப்பதன்முன் மன்னவற்கு வடபுலத்துஓர் மாறுஏற்க, மற்றுஅவர்மேல் அன்னவர்க்கு விடைகொடுத்தான்; அவ்வினைமேல் அவர்அகன்றார். வதுவை வினை - திருமண வினை. வடதேசத்துள்ள பகைவர் கள் போர்தொடுக்க (படையெடுக்க), அவர்களுடன் போர்புரியச் சேனாபதியாகிய கலிப்பகையார்க்கு 25 1296. வேந்தற்குஉற்றுழி வினைமேல் வெம்சமத்தில் விடைகொண்டு போந்தவரும் பொருபடையும் உடன்கொண்டு சிலநாளில் காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்துகடுஞ் சமர்க்கடலை நீந்துவார்நெடு நாள்கள் நிறைவெம்போர்த் துறை விளைத்தார். வேந்தற்கு. . . . .கொண்டு - அரசனுக்கு ஆபத்து நேர்ந்தபொழுது போர்த் தொழிலை மேற்கொண்டு கொடிய போருக்கு விடை பெற்று. பொருபடையும் - போர் செய்யுஞ் சேனைகளையும். பகைவர்களின் போர்க்களத்திற் கலந்து. 26 1297. ஆயநா ளிடைஇப்பால் அணங்குஅனையாள் தனைப்பயந்த தூயகுலப் புகழனார் தொன்றுதொடு நிலையாமை மேயவினைப் பயத்தாலே இவ்உலகை விட்டுஅகலத் தீயஅரும் பிணி உழந்து விண்உலகில் சென்று அடைந்தார். ஆய நாளிடை - கலிப்பகையார் போர் புரிந்து கொண்டி ருக்குங் காலத்தில். இப்பால் - திருவாமூரில். அணங்கு அனையாள் தனைப் பயந்த - திலகவதியாரைப் பெற்ற. பழமையாய்த் தொடர்ந்து வரும் நிலையாமை சேர்தற்குரிய வினை வசத்தால். அரும்பிணியால் வருந்தி. 27 1298. மற்றவர்தாம் உயிர் நீப்ப, மனைவியார் மாதினியார் சுற்றமுடன் மக்களையும் துகள் ஆகவே நீத்துப் பெற்றிமையால் உடன்என்றும் பிரியாத உலகு எய்தும் கற்புநெறி வழுவாமல் கணவனாருடன் சென்றார். துகளாக - அற்புதமாக. பெற்றிமையால் - தன்மையால். 28 1299. தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன்பின் மாதரார் திலகவதி யாரும் அவர் பின்வந்த காதலனார் மருள்நீக்கி யாரும்மனக் கவலையினால் பேதுஉறுநல் சுற்றமுடன் பெருந்துயரில் அழுந்தினார். மாதர் ஆர் - அழகு நிறைந்த. பேதுறும் - வருந்தும்; கலக்க முறும்; மதி மயங்கும். 29 1300. ஒருவாறு பெருங்கிளைஞர் மனம்தேற்றத் துயர்ஒழிந்து, பெருவானம் அடைந்தவர்க்குச் செய்கடன்கள் பெருக்கினார்; மருவார்மேல் மன்னவற்கா மலையப்போம் கலிப்பகையார் பொருஆரும் போர்க்களத்தில் உயிர்கொடுத்துப் புகழ் கொண்டார். கிளைஞர் - சுற்றத்தார். பெருக்கினார் - செய்தார். மரு. . . . போம் - பகைவர்மீது மன்னவன் பொருட்டுப் போர்புரியச் சென்ற. பொரு ஆரும் - பகைமை நிறைந்த. 30 1301. வெம்முனைமேல் கலிப்பகையார் வேல்வேந்தன் ஏவப் போய் அம்முனையில் பகைமுருக்கி அமருலகம் ஆள்வதற்குத் தம்முடைய கடன் கழித்த பெருவார்த்தை தலம் சாற்றச் செம்மலர்மேல் திருஅனைய திலகவதியார் கேட்டார். வெம்முனை மேல் - கொடும்போர் முகத்துக்கு. முருக்கி - அழித்து. அமருலகம் - விண்ணுலகம். தலம் - தம்மிடத்தில்; உலகத் தாருமாம். 31 1302. எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனைக் கொடுக்க இசைந்தார்கள். அந்த முறையால் அவர்க்கே உரியது; நான் - ஆதலினால், இந்த உயிர், அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய, வந்துஅவர்தம் அடிஇணைமேல் மருள் நீக்கியார் விழுந்தார். என் அன்னையும். அவர்க்கு - கலிப்பகையார்க்கு. திலகவதி யாரைக் கலிப்பகையார்க்கு மணஞ் செய்விக்கத் தாயுந் தந்தையும் உறுதி செய்தமையானும், அதனால் அம்மையார் நெஞ்சம் கலிப் பகையார்பால் செல்ல நேர்ந்தமையானும், வெளிப்படையாக மணவினை நிகழாமையைக் காரணமாகக் கொள்ள அம்மையார் மனம் எழாமையானும், அவர் தம்முயிரைக் கலிப்பகையார் உயி ரோடிசைவிக்கத் துணிந்தார் என்க. இதுவே உண்மைக் காதல் (தலை யாய அன்பு) என்பது. 32 1303. அந்நிலையில் மிகப்புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும்நான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்; என்னைஇனித் தனிக்கைவிட்டு ஏகுவீர் எனில், யானும் முன்னம்உயிர் நீப்பன் என மொழிந்துஇடரின் அழுந்தினார். அத்தனும் - தந்தையும். 32 1304. தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்ததயா உம்பர்உலகு அணையஉறு நிலைவிலக்க, உயிர்தாங்கி அம்பொன்மணி நூல் தாங்காது, அனைத்துஉயிர்க்கும் அருள்தாங்கி, இம்பர்மனைத் தவம்புரிந்து, திலகவதியார் இருந்தார். உளராக - உயிரோடிருக்க. விண்ணுலகை அடைதல்வேண்டு மென்று கொண்ட உறுதி நிலையை விலக்க. தயா விலக்க. அம்பொன் மணி நூல் - திருமாங்கலிய சூத்திரம்; அம்பொன்மணி முதலியவற் றாலாகிய அணிகளை என்னலுமாம். திருநாவுக்கரசு சுவாமிகள் உலகுய்யத் தோன்றிய பெரியாராதலான் அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி என்றார். இம்பர்மனை - இம் மண்ணுலகில் வீட்டிலிருந்தே. அம்மையார் தியாகமும், தன்னலமற்ற வாழ்வும், ஒப்புரவும் இங்கே குறிக்கப்பட்டன. 34 1305. மாசுஇல் மனத் துயர் ஒழிய மருள் நீக்கியார் நிரம்பித் தேசநெறி நிலையாமை கண்டுஅறங்கள் செய்வாராய்க் காசினிமேல் புகழ்விளங்க நிதி அளித்துக் கருணையினால் ஆசில்அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார். நிரம்பி - உற்ற வயதடைந்து; கல்வி அறிவு ஒழுக்கத்தால் நிரம்பி என்னலுமாம். தேச நெறி - உலகியல் நெறி. காசினிமேல் - உலகில். ஆசில் - குற்றமற்ற. 35 1306. காவளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்துஅளித்தும் விருந்துஅளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்து உள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார். கா - சோலைகளை. கடப்பாடு - நேர்மை; கடமை. மேவினர்க்கு - வந்தடைந்தவர்க்கு. 36 1307. நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து, சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு தெரிந்து, உணர நம்பர் அருளாமையினால், கொல்லாமை மறைந்துஉறையும் அமண்சமயம் குறுகுவார். நிலையாத வாழ்க்கைக்கு உரியனல்லேன். நல்லாறு - சன் மார்க்கம். நம்பர் - சிவபெருமான். கொல்லாமையில். மருள்நீக்கியார் பெரிதும் இடைக்காலச் சமயநூல் பயின்றிருப்பர். அதனால் அவர் நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துறந்து. . .சமண் சமயம் குறுக எண்ணினார் போலும். உலகைத் துறத்தல் என்பதைப் பெரிதும் அறிவுறுத்துவது இடைக்காலச் சமண சமயம். மருள் நீக்கியார் கலைஞானியராக மட்டும் இருந்தார் என்பது நம்பர் அருளாமையினால் என்பதால் தெரிகிறது, திருநாவுக்கரசர் காலச் சமண சமய நிலைக்கும், பண்டைச் சமண சமய நிலைக்கும் வேறு பாடுகள் பல உண்டு. இது கொல்லாமை மறைந்துறையும் அமண் என்பதால் நன்கு விளங்குகிறது. இதுபற்றித் திருஞானசம்பந்த சுவாமிகள் புராணத்தில் தெளிவு செய்யப்படும். ஆசிரியர் ஈண்டுக் குறிப்பது திருநாவுக்கரசர் காலத்திய சமண சமய நிலையை எனக் கொள்க. 37 1308. பாடலிபுத் திரம்என்னும் பதிஅணைந்து சமண் பள்ளி மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு வீடு அறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன் கூடவரும் உணர்வு கொளக் குறிபலவும் கொளு வினார். பாடலிபுத்திரம் - அந்நாளில் சமணர் அரசு, கழகம், பள்ளி, பாழி முதலியன பல்கிக் கிடந்த நகரங்களுள் சிறந்தது; இதுவே திருப் பாதிரிப்புலியூர் என்பது. சமண் பள்ளி மாடு - சமணக் கோயிலில்; உறைவிடத்தில் என்னலுமாம். ஐயருறை பள்ளியிடம் ஆண்டழகர் காண - சிந்தாமணி: 1782. பட்டு: 141. குறிப்புப் பார்க்க. மருங்கு - (மருள் நீக்கியார்) அருகில். அவர்க்கு - மருள் நீக்கியார்க்கு - தங்களுடன் சேர்தற்குப் பிறக்கும். குறி - கருத்து; நூல் கொளுவினார் - போதித்தார். மெய் போல் கொளுவினார் - வெளிக்கு உண்மை போலத் தோன்ற என்ற படி. 38 1309. அங்கு அவரும் அமண் சமயத்து அருங் கலைநூல் ஆனஎலாம் பொங்கும் உணர்வு உறப்பயின்றே அந்நெறியில் புலன் சிறப்பத் துங்கமுழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார். புலன் - அறிவு. துங்க - உயர்ந்த. உடையில்லாத நீண்ட உடல் என்றபடி. தங்கட்கு மேம்பட்ட குருவாக என்றவாறு. தருமசேனர் என்ற பெயர் அக்காலச் சமணப் பெரியார்களிடை வழங்கி வந்த தொன்று; சந்து சேனனும் சிந்துசேனனும் தருமசேனனும். . . - திரு ஞானசம்பந்தர்: திருவாலவாய். திருநாவுக்கரசர் சமண் சமயம் புகுந்து தருமசேனர் என்ற பெயர் பெற்றாரென்பது, அவரைப்பற்றிச் சமணப் புலவரொருவரால் யாக்கப் பெற்ற தருமசேன புராணம் என்னும் நூலான் இனிது விளங்கும். திருநாவுக்கரசர் சமண் சமயம் புக்கதற்கு அவர் திருவாக்கிற் பிறந்த அகச் சான்றுகள் பல. அவைகளுள் சில வருமாறு; ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரோடே - காது வித்தாய் அமணோடு இசைவித்து குண்டனாய்ச் சமண ரோடே கூடி சமணர்தமை உறவாக் கொண்ட பரங்கெடுத்து சமணர் பொய்யில் புக்கழுந்தி நின்றுண்ணுங் கையர் பொய் யெல்லாம் மெய்யென்று கருதிப்புக்கு பல்லுரைச் சமணரோடே பல பல காலமெல்லாம் சொல்லிய செய்தேன் அமணே நின்றார் சொற்கேட்டு உடனாகி உழி தந்தேன். 39 1310. அத்துறையின் மீக்கூரும் அமைதியினால், அகல் இடத்தில் சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண் உய்த்த உணர் வினில் வென்றே, உலகின் கண் ஒளி உடைய வித்தக ராய் அமண் சமயத் தலைமையினில் மேம்பட்டார். அத்துறையின் மீக்கூரும் அமைதியினால். அச்சமண சமய ஞானத்தில் மிகுந்து சிறந்து விளங்கும் பெருமையினால். அகலி டத்தில் - உலகில். சித்தநிலை - உறுதிநிலை (சித்தம் - நிச்சயம்); சித்தர் நிலை எனக் கொள்ளலுமாம்; சமணர்கள் நிலைகளில் மிக உயர்ந் தது சித்தர் நிலை. தேரரையும் - புத்தரையும். சமணத்துக்கும் பௌத் தத்துக்கும் அறத்தில் ஒற்றுமையும் தத்துவத்தில் வேற்றுமையும் உண்டு. உய்த்த உணர்வினில் - (வெகுளாது) செலுத்திய உணர்வினால்; ஆராய்ந்து பெற்ற உணர்வினால்; (உய்த்துணர்தல் - ஒரு தந்திர யுத்தி). வித்தகராய் - பெரியோராய். 40 வேறு 1311. அந்நெறியின் மிக்கார் அவர்ஒழுக, ஆன்றதவச் செந் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொல் நெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூயசிவ நன்னெறியே சேர்வதற்கு நாதன் அருள் நண்ணுவார். மிக்காராய். ஆன்ற - அமைந்த; அடங்கிய. தூயசிவ நன்னெறி - தத்துவங்கடந்த சிவத்தைப் பற்றிய நன்னெறி. தடுத்தாட் கொண்ட புராணம்: 28. குறிப்புப் பார்க்க. 41 1312. பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால் ஆராத அன்புபெற ஆதரித்த அம் மடவார், நீர்ஆர் கெடிலவட நீள் கரையில் நீடுபெருஞ் சீர்ஆர் திரு அதிகை வீரட்டானம் சேர் ந்தார். பாசக்கட்டு (பாசம் - ஆணவம் கர்மம் மாயை). பிஞ்ஞகன் பால் - சிவபெருமானிடம். ஆராத - அடங்காத. ஆதரித்த - விரும்பிய. அம் மடவார் - திலகவதியார். நீர் ஆர் - நீர் நிறைந்த. வீரதானம் - வீரட்டனாம். திருவதிகை - வீரட்டத் தலம் எட்டனுள் ஒன்று; முப் புரம் எரித்த இடம்; பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல் புரம் அதிகை - மாமன் பறியில் சலந்தரன் விற்குடி மாவழுவூர் - காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில் - தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே. 42 1313. சென்று திருவீரட்டானத்து இருந்த செம்பவளக் குன்றை அடிபணிந்து, கோதுஇல் சிவசின்னம் அன்று முதல் தாங்கி, ஆர்வம்உறத் தம்கையால் துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார். செம்பவளக் குன்றாகிய சிவபெருமானின். பலதிறத் திருப் பணிகள். 43 வேறு 1314. புலர்வதன்முன் திருஅலகு பணிமாறிப் புனிறுஅகன்ற நலம்மலிஆன் சாணத்தால் நன்குதிரு மெழுக்கு இட்டு, மலர்கொய்து கொடுவந்து, மாலைகளும் தொடுத்து அமைத்துப் பலர்புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார். திருவலகு பணிமாறி - பெருக்கி. புனிறு - ஈன்றணிமை. புலர் வதன் முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்தி - அப்பர்: திருவாரூர்த் திருத்தாண்டகம். 44 1315. நாளும்மிகும் பணிசெய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில், கேள் உறும் அன்பு உறஒழுகும் கேண் மையினார் பின் பிறந்தார் கோள் உறு தீவினை முந்தப் பரசமயம் குறித்ததற்கு மூளும் மனக் கவலையினால், முற்றஅருந் துயர் உழந்து. அங்கு உறைந்து அடையும் - திருவதிகையில் வதிந்திருக்கும். குறைந்து என்னும் பாடத்துக்குக் குறையிரந்து என்று கொள்க. கேள் உறும் அன்பு உற - உறவினர் தம்மாட்டு மிகுந்த அன்புகொள்ள. கேண்மையினார் - அன்புடையவராகிய திலகவதியார். பின்பிறந்தார். தம்பியார். வலிமைமிக்க தீ வினை முற்பட. 45 1316. தூண்டு தவவிளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை ஆண்டருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை, ஈண்டு வினைப் பரசமயக் குழி நின்றும் எடுத்து, ஆள வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால். தூண்டு தவம் - இடையறாத தவமுடைய. சுடரொளியை - சிவ பெருமானை. பின்வந்தவனை - என் தம்பியாரை. சேரும் தீ வினையை விளக்கும். 46 1317. தவம் என்று பாய் இடுக்கித் தலைபறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான், வீழாமே அருளும் எனச் சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப் பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார். அவம் ஒன்றும் - பயனின்மை (வீண்) பொருந்திய. பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் - பிறவிக்கு வித்தாகச் சேரும் வினைகளைக் களையுஞ் சிவபெருமான். 47 1318. மன்னுதபோ தனியார்க்குக் கனவின் கண் மழவிடையார், உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந் தான் முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்; அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம் என அருளி மழவிடையார் - இளவேறுடைய சிவபெருமான். சூலை நோய் தந்து முனியாகி என்பது பொதுவாகக் கூறப்பட்டிருக்கிறது எப் பெயருடைய முனிவர் என்பது விளங்க வில்லை. இது குறித்துப் பின்வந்த பலர் பலதிறப் பொய்க் கதைகளைக் புனைந்துள்ளார். முதற்பாட்டுக் குறிப்பைப் பார்க்க. 48 1319. பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவு இறைவழுவும் தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக் கண் தரு நெற்றியர் அருளக் கடுங்கனல் போல் அடும் கொடிய மண்டு பெருஞ் சூலை அவர் வயிற் றினிடைப் புக்கதால். பண்டுபுரி - முன்னே செய்த. இறை அளவு பழுதின் வழுவும் - மிகச் சிறு பிழையால் வழுவிய தொண்டரை - தருமசேனரை. கண்தரு நெற்றியர் - சிவபெருமான். திருநகரச் சிறப்பு: 46 குறிப்புப் பார்க்க. அடும் - வருத்தும். மண்டு - மிக்குச் செல்லும். அவர் - தருமசேனர். 49 1320. அடைவு இல் அமண் புரிதரும சேனர்வயிற்று அடையும்அது. வடஅனலும் கொடுவிடமும் வச்சிரமும் பிறவும்ஆம் .கொடியஎலாம் ஒன்றாகும் எனக்குடரின் அகம்குடையப் படர்உழந்து நடுங்கி, அமண் பாழி அறையிடை விழுந்தார். அடைவு இல் அமண் புரி - ஒழுங்கு இல்லாத சமண் சமயம் விரும்பி. அது - சூலைநோய். வடவாமுகாக்கினியும் ஆலகாலமும் வச்சிராயுதமும் பிறவும் ஆகிய. ஒன்றுபட்டன என்று சொல்லும்படி. படர் உழந்து - துன்பத்தால் வருந்தி. பாழி அறை யிடை - தங்கு மிடத்தில் (பாழி - சமணமுனிவர் தங்குமிடம்; குகை; 146 - குறிப்புப் பார்க்க). 50 1321. அச்சமயத் திடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத் திடவும் மேல் மேலும் மிக முடுகி உச்சம் உற, வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்தாம் நச்சுஅரவின் விடம் தலைக் கொண்டு எனமயங்கி நவை உற்றார். அச் சமண சமயத்தில்; அவ் வேளையில் எனினுமாம். முன் அதிகரித்து வாய்த்துவரும் - முன்னே அதிகம் பயின்று கைவந்துள்ள. விச்சைகளால் - வித்தைகளால், (மணி மந்திர ஔஷதங்களால்). நவை - துன்பம். 51 1322. அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டிக் கவர் கின்ற விடம்போல் முன் கண்டு அறியாக் கொடுஞ் சூலை இவர் தமக்கு வந்தது; இனி ahJ braš? என்று அழிந்தார் - தவம் என்று வினை பெருக்கிச் சார்பு அல்லா நெறி சார்வார். கையர் - வஞ்சகர்கள் பலர் சேர்ந்து. கவர்கின்ற - கதுவுகின்ற; அதிகமாகப் பற்றுகின்ற; கொள்ளுகின்ற எனினுமாம். தீ வினை - நற் சார் பல்லாத தீ நெறி. 52 1323. புண் தலைவன் முருட் டுஅமணர் புலர் ந்துசெயல் அறியாது குண் டிகை நீர் மந்திரித்தும் குடிப் பித்தும் தணியாமை கண்டு, மிகப் பீலி கொடு கால் அளவும் தடவிடவும் பண் டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார். புண் தலையும் வன்மையும் முருடும் உடைய சமணர்கள். புலர்ந்து - வாடி. கமண்டலநீர், மயிற்பீலி. பரிபவத்தால் - அவமா னத்தால். பண்டையினும் - முன்னையினும். 53 1324. தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்தபிணி ஓவாது நின்றிடலும், ஒழியாமை உணர்ந்தாராய் ஆ! ஆ! eh« v‹ brŒnfh«? என்று, அழிந்த மனத்தினராய்ப் போவார்கள்இது நம்மால் போக்க அரிது ஆம் எனப்பு கன்று. தாவாத - கெடாத. ஓவாது நின்றிடலும் - நீங்காமல் நிலைக்கவும். 54 1325. குண்டர்களும் கை விட்டார்; கொடுஞ் சூலை கைக் கொண்டு மண்டிமிக மேல் மேலும் முடுகுதலால் மதி மயங்கிப் பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராக் கொண்டு, அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த மண்டி - நெருங்கி அடர்ந்து. பழைய உறவினை உணர்ந்த தரும சேனர்க்கு. திலகவதியார் இருப்பதை மனத்திற் கொண்டு அவரிடம் சமையற்காரனை. 55 1326. ஆங்கு அவன் போய்த் திருஅதிகை தனை அடைய, அருந்தவத்தார் பூங்கமழ் நந்தன வனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி, ஈங்குயான் உமக்கு இளையார் ஏவலினால் வந்ததுஎனத் ‘Ô§F csnth? என வினவ, மற்று அவனும் செப்புவான். 56 1327. கொல்லாது சூலை நோய் குடர் முடுக்கித் தீராமை, எல்லாரும் கைவிட்டார்; இதுசெயல் என் முன்பிறந்த நல்லாள் பால் சென்று இயம்பி, நான் உய்யும்படி கேட்டு இங்கு அல் ஆகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான். அல்லாகும் பொழுது - இராப் பொழுது. 57 1328. என்றுஅவன்முன் கூறுதலும், யான் அங்கு உன்னுடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய, அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். மாற்றம் - சொல்லை; மறுமொழியை. பாழி - அமணர் தங்கு மிடம்; 146 - குறிப்புப் பார்க்க. புகுந்தபடி - நடந்தவாறு. 58 1329. அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் v›thW brŒt‹? என, ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியாஇத் துயர் ஒழியச் செவ்வாறுசேர் திலகவதியார் தாள் சேர்வன் என. அயர்வு எய்தி - சோர்வுற்று; வருந்தி. செவ்வாறு - செந்நெறி. 59 1330. எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருஅதிகை அணைவதனுக்கு உடுத்துஉழலும் பாய்ஒழிய உறிஉறு குண்டிகை ஒழியத் தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்கு துணிந்து எழுந்தார். அடுத்தலும் - சேர்த்தலும். உறியிற்றூக்கிய கமண்டலம் சேர்த்துக் கட்டப்பட்ட மயிற்பீலியும். 60 1331. பொய்தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடம் கழிந்து மெய்தருவான் நெறி அடைவார் வெண்புடைவை மெய் சூழ்ந்து கைதருவார் தமைஊன்றிக் காணாமே, இரவின்கண் செய்தவமா தவர் வாழும் திருஅதிகை சென்று அடைவார். மால் - மயக்கமுடைய. வான் நெறி - உயர்ந்த நெறி. புடவை - ஆணு டைக்குமாம்; பழைய வழக்கு; கலித்தொகை: 96, மதுரைக்காஞ்சி: 598, முல்லைப்பாட்டு: 59 உரை பார்க்க. மெய் சூழ்ந்து - உடலில் அணிந்து. ஆதரவாகக் கைகொடுப்போரைப் பற்றிக் கொண்டு. 61 1332. சுலவி வயிற்றகம் கனலும் சூலைநோய் உடன் தொடரக் குலவி எழும் பெருவிருப்புக் கொண்டணையக் குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திரு அதிகையினில், திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அணைந்தார். சுழற்றிச் சுழற்றி வயிற்றனுள்ளே எரியும். உள்ளத்தில் பொலிந்து எழும். குல மலைபோன்று விளங்கும். 62 1333. வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உறவணங்கி, நம் தமது குலம் செய்த நல்தவத்தின் பயன் அனையீர்! இந்த உடல் கொடும் சூலைக்கு இடைந்து அடைந்தேன்; இனிமயங்காது உய்ந்துகரை ஏறும் நெறி உரைத்தருளும் என உரைத்து. இடைந்து - மெலிந்து. 63 1334. தாள் இணைமேல் விழுந்துஅயரும் தம்பியார் தமைநோக்கி, ஆளுடைய தம்பெருமான் அருள் நினைந்து கைதொழுது, கோள் இல்பர சமயநெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அருந்துயர் உழந்தீர்; எழுந்திரீர் என மொழிந்தார். கோள்இல் - கொள்கை இல்லாத. பரசமயக் குழியினின்றும் எழுந்திரீர் என்பது குறுப்பு. 64 1335. மற்றுஅவ் உரை கேட்டலுமே மருள் நீக்கியார் தாமும் உற்றபிணி உடல் நடுங்கி எழுந்துதொழ உயர் தவத் தோர் கற்றை வேணியர் அருளே காணும்இது; கழல் அடைந்தோர் பற்று அறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீர் எனப் பிணித்தார். உயர் தவத்தோர் - திலகவதியார். இது கற்றைச் சடைமுடி யாராகிய சிவபெருமான் திருவருளே என்று உணர்வாயாக என்றபடி. தமது கழலையடைந்தோரின் பாசத்தை அறுப்பராகிய அச் சிவ பெருமானையே பணிந்து. 65 1336. என்றபொழுது, அவர்அருளை எதிர்ஏற்றுக் கொண்டு இறைஞ்ச, நின்ற தபோதனியாரும் நின் மலன் பேர் அருள் நினைந்து சென்று, திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக் குன்றுஉடையார் திருநீற்றை அஞ்சுஎழுத்து ஓதிக் கொடுத்தார். 66 1337. திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு உருஆர அணிந்து தமக்கு உற்றஇடத்து உய்யும் நெறி தருவாராய்த் தம் முன்பு வந்தார்பின் தாம் வந்தார். திருவாளன் - சிவபெருமானது. உருவார - உடல் முழுவதும். உற்ற இடத்து - ஆபத்து நேர்ந்த இடத்து. தருவாராய்த் தம்முன் பிறந்த திலகவதியார். திலகவதியார் பின்னே மருள் நீக்கியார் சென்றார் என்றபடி. 67 1338. நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறைகங்குல் புறத்து இருளும் மாறவரும் திருப்பள்ளி எழுச்சியினில் மாதவம் செய் சீறடியார் திருஅலகும் திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடு புக்கார். திருநீறணிந்த மருணீக்கியாரது அகவிருளும், நிறைந்த இரவாகிய புறவிருளும் நீங்கவரும் திருப்பள்ளி எழுச்சி காலத்தில் (வைகறையில்) சீறடியார் - சிற்றடியையுடைய திலகவதியார். திரு வலகும் - விளக்குமாறும். திருமெழுக்கும் - சாணமும். அவரை - மருள் நீக்கியாரை. 68 1339. திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங் கனக வரைச்சிலையார் பெருங்கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித் தரைத் தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால் உரைத்தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார். செங்கனக வரைச்சிலையார் - செம்பொன்மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும். தம்பிரான் - சிவ பெருமான். புகழ்த்தமிழ். மருள் நீக்கியாரிடம் ஆண்டவன் திருவருள் பதிந்து என்றபடி. 69 எண்சீர் விருத்தம் 1340. நீற்றால் நிறைவு ஆகியமே னியுடன் நிறை அன்பு உறுசிந் தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணிமா யைஅறுத் திடுவான் கூற்றா யினவாறுவிலக் ககிலீர் என நீ டியகோது இல் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும்துயரும் போமாறு எதிர் நின்றுபுகன் றனரால். பகைவர்களின் முப்புரத்தை அழித்த சிவபெருமானை. மருளும் - தமக்கு மயக்கத்தை விளைக்கும் போற்றுதலால். தமது பிணி மாயையை அறுத்திடும் பொருட்டும், உலகேழின் வருந் துயரும் போகு மாறும் திருமுன்னே நின்று. 70 1341. மன்னும் பதிகம் அதுபா டியபின் வயிறு உற்று அடுசூலைம றப்பிணி தான், அந்நின்ற நிலைக்கண் அகன் றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச், செந்நின்ற பரம்பொருள் ஆனவர் தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் முன்னின் றதெருட் சிமருட் சியினால் முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே. அடு - வருந்திய. சூலையாகிய. மறப்பிணிதான் - கொடிய பிணி யானது. அந்நின்ற நிலைக்கண் - துன்புறுத்தி நின்ற நிலையினின்றும். அடியேனுக்கு எனா - என்று. திருஆர் - ஞானத்திரு நிறைந்த. சிறப்பு டையோர் - மருள்நீக்கியார். தெருட்சி மருட்சியினால் - ஞானத் தெளிவால் விளைந்த மயக்கத்தால். சூலைதீர்த் தடியேனை ஆளுங் கொண்டார், உடலுறுநோய் தீர்த்தென்னை ஆளுங் கொண்டார், கட்டநோய் பிணிதீர்த்தாய் - அப்பர்: தனித்திருத்தாண்டகம். 3, 6; திருவேகம்பத் திருவிருத்தம். 71 1342. அங்கங் கள்அடங் கஉரோ மம்எலாம் அடையப் புளகங்கள் முகிழ்த்து அலரப் பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார், இங்கு என் செயல் உற்றபிழைப்பு அதனால் ஏறா தபெருந்திடர்ஏ றிடநின் தங்கும் கருணைப் பெருவெள்ளம் இடத் தகுமோ எனஇன் னனதாம் மொழிவார். அங்கங்களடங்க உள்ள. அடைய - ஒருங்கே. புளகங்கண் முகிழ்த்தலர - மகிழ்ச்சியால் சிலிர்த்து மலர. புனல் - ஆனந்தநீர். அயர்வார் - ஆனந்தப் பரவசராய். இங்கே என் செயலில் விளைந்த பிழையினால். திடர் - மேட்டில். ஏறிட - பாயும்படி. இட - பாய்ச்ச. தம்மைத் தடுத்தாண்ட அருமைப் பாட்டைக் குறிப்பிட்டவாறு. 72 1343. பொய்வாய் மைபெருக் கியபுன் சமயப் பொறி இல் சமண் நீ சர்புறத்து றையாம் அவ்ஆழ் குழியின் கண் விழுந்து எழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன் மைவா சநறுங் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க் கழல் வந்து அடையும் இவ் வாழ் வுபெறத் தருசூ லையினுக்கு எதிர்செய் குறைஎன் கொல் எனத் தொழுவார். பொய்வாய்மை - அசத்தியம். புறத்துறையாம் - புறச்சமயமாகிய. மணவாளன் - சிவபிரானது. எதிர் செய்குறை - கைம்மாறு; பிரதி யுபகாரம். திருவருள், சூலை நோயாகப் போந்து தம்மை ஆட் கொண்டமையான், அச் சூலையைப் போற்றியவாறு காண்க. வீட் டிற்கு வாயிலெனுந்தொடை சாத்துசொல் வேந்த! பொது - ஆட்டிற்கு வல்லன் ஒருவதற்கு ஞான அமுதுதவி - நாட்டிற்கிலாத குடர்நோய் நினைக்குமுன் நல்கினும் என் - பாட்டிற்கு நீயும் அவனும் ஒப்பீர் எப் படியினுமே - நால்வர் நான்மணி மாலை: 3. 73 1344. மேவுற் றஇவ் வேலையில் நீ டியசீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாஉற்று அலர் செந் தமிழ் இன் சொல் வளப் பதிகத் தொடைபா டியபான் மையினால், நாவுக் கரசு என்று உலகுஏ ழினும் நின் நல் நாமம் நயப்பு உற மன்னுக என்று யாவர்க் கும்வியப்பு உறமஞ்சு உறைவான் இடையேஒரு வாய்மை எழுந்ததுவே. தொழுத இவ் வேளையில். பாட்டென்பது இலக்கண வரம்பில் அடங்கி ஒடுங்கி உருக்கொள் வதன்றாகலானும், அது மகிழ்ச்சி பொங்குதலினின்றும் பரந்தெழுவதாகலானும் பாவுற்றலர். . . என்றார். திருவருளால் திறக்கப் பெற்ற ஊற்றினின்றும் பொங்கிப் பெருகியோடும் பா என்றபடி. தொடை - மாலை. நயப்பு - விருப்பு; மகிழ்ச்சி; இன்பு. மஞ்சு உறை - மேகங்கள் வாழும். வானிடையே ஒரு வாய்மை - அசரீரி வாக்கு. 74 1345. இத்தன் மைநிகழ்ந் துழிநா வின் மொழிக்கு இறைஆ கியஅன் பரும் இந்நெடு நாள் சித்தம்தி கழ்தீ வினையேன் அடையும் âUnth ïJ? என்று தெருண்டு, அறியா அத்தன் மையன் ஆயஇரா வணனுக்கு அருளும் கருணைத் திறம் ஆன அதன் மெய்த் தன்மை அறிந்துது திப்பதுவே மேல்கொண்டு வணங்கினர் மெய் உறவே. நாவின் மொழிக்கு இறை - நாவுக்கு அரசர்; சொல்வேந்தர்; வாகீசர். திருவோ - செல்வமோ. தெருண்டு அறியா - தெளிந்து அறியாத. இராவணன் அறியாமையால் கயிலை மலையைத் தூக்கப் புகுந்தான். பின்னர் அவன் அம் மலையைத் தூக்க இயலாது நொறுக் குண்டு வருந்தலானான். அவ் வேளையில் அவன் தனது அறியாமையை யுணர்ந்து வருத்திக் கசிந்து கசிந்து உருகி இறைவனை நினைந்து வேண்டுதல் செய்தான். இறைவன் அவனது நிலைக்கு இரங்கித் திருவருள் செய்தான். இது புராண கதை. இதன் நுட்பம் என்னை? அறியாமையால் அடாதன செய்து பின்னை அறிவு விளங்கிச் செய்த குற்றத்தை யுணர்ந்து உண்மையாக வருந்துவோர்க்கு ஆண்டவன் அருள்புரியக் காத்துக் கெண்டிருக்கிறான் என்பது நுட்பம். திரு நாவுக்கரசர் ஆண்டவன் கருணைத் திறத்துக்கு ஓர் அறிகுறியாக இராவணன் நிலையைப் பெரிதும் பத்தாம் பாட்டில் குறிப்பா ராயினர். ஆண்டவன் கருணைத் திறத்தை வியந்து பாடப் புகுந்த திருநாவுக்கரசர் மொழியைக் கொண்டு பின்வந்தோர், திருநாவுக் கரசர் முற்பிறப்புக் கதையெனப் பல பொய்மைகளைப் புனைந் துரைத்தார் போலும். முதற்பாட்டுக் குறிப்பையும் பார்க்க. 75 1346. பரசும் கருணைப் பெரியோன் அருளப் பறிபுன் தலையோர் நெறிபாழ் படவந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா, அடியார் புடைசூழ் அதிகைப் பதி தான் முரசம் படகம் துடிதண் ணுமையாழ் முழவம் கிளைதுந் துபிகண் டையுடன் நிரைசங்கு ஒலி எங்கும் முழங் குதலால் நெடுமா கடல் என் னநிறைந் துளதே. பரசும் - போற்றும். பெரியோன் - சிவபெருமான்; பிறவா யாக்கைப் பெரியோன் - சிலப்பதிகாரம்: 5 இந்திர. 169 பறிபுன் தலை யோர் நெறி - சமண சமயம். அரசு - திருநாவுக்கரசு. இங்கு அருள் பெற்றதால் உலகு உய்ந்தது - உய்ந்தது. எனா - என்று. புடைசூழ் - பக்கத்தில் சூழ்ந்த. படகம் - ஒருவகைத் தோற்கருவி. துடி - துடிப் பறை; தமருகம்; உடுக்கை. தண்ணுமை - மத்தளம். முழவம் - குட முழா. தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே - சிலப்பதிகாரம்: அரங். 140, 141. கிளை - ஒருவகை நரம்புக் கருவி; வீணையுமாம். (யாழ் வேறு; வீணை வேறு - பாட்டு 1059 பார்க்க) கண்டை - கண்டாமணி. நீரை - ஒழுங்கான. 76 1347. மையல் துறைஏ றிமகிழ்ந்து அலர் சீர் வாகீ சர்மனத் தொடுவாய்மை யுடன் மெய்யுற்ற திருப் பணிசெய் பவராய் விரவும் சிவசின் னம் விளங் கிடவே எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு இன்றிஎழும் திருவாசகமும் கையில் திகழும் உழவார முடன் கைக் கொண் டுகலந்துகசிந் தனரே. மையல் - மயக்கமாகிய. அலர்சீர் - பரந்த புகழையுடைய. மனத் . . பணி - மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரணங்களாலுஞ் செய்யப்படுந் திருத்தொண்டுகள். விரவும் - அன்பில் கலப்பிக்கும். சிவ சின்னம் - விபூதி ருத்திராக்கம். எய்துற்ற - அருளால் தோன்றி நிலை பொருந்திய. மனத்தால் தியானம்; வாய்மையால் (வாயினின்றும் வருவது) திருவாசகம் (பாடல்); மெய்யால் (கையால்) உழவாரத் தொண்டு. 77 1348. மெய்ம்மைப் பணிசெய் தவிருப்பு அதனால் விண்ணோர் தனிநா யகனார் கழலில் தம் இச் சைநிரம் பவரம் பெறும் அத் தன்மைப் பதிமேவியதா பதியார் பொய்ம்மைச் சமயப் பிணிவிட் டவர் முன் போதும் பிணிவிட் டருளிப் பொருளா எம்மைப் பணிகொள் கருணைத் திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ் சினரே. தன்மைப்பதி - அத்திருவதிகை. தாபதியார் - திலகவதியார். பிணி (சூலை நோயை) விட்டருளி; 34. ஆம் பாட்டைப் பார்க்க. 78 கலித்துறை 1349. இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்றுஇடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையின் பாடலி புத்திரம் நகரில் புன்மை யேபுரி அமணர் தாம் கேட்டுஅது பொறாராய். சிவநெறி எது? இறைவன் ஒருவனே. அவனது அருள் நெறியும் ஒன்றே. இறைவனுக்கும் அவனது அருள் நெறிக்கும் உலகில் வழங்கும் பெயர்கள் பல. பெயர்ப் பன்மைகளை நீக்கிப் பொருள் ஒருமையை உணர்வது அறிவுக்கு அழகு. பன்மைப் பெயர்கள் உலகில் பல சமயங்களாக நாளடைவில் கொள்ளப்பட்டன. முடிவில் எல்லாம் ஒன்றே என்பது நனி விளங்கும். திருநாவுக்கரசரின் தாய் தந்தையர்கள் உலகு வழக்கிலுள்ள சைவ சமயத்தைக் கடைப் பிடித்தொழுகியவர்கள். அவர்கட்குப் பிறந்த திருநாவுக்கரசரும் அவர்களது சமய வழக்கில் நிற்கலானார். அந்நிலையில் அவர்பால் சிவனருள் விளங்கித் தோன்றவில்லை. இது பற்றியே நம்பர் அருளா மையால் 37 என்றனர் இந்நூலாசிரியர். திருநாவுக்கரசருக்குப் பல சமய உணர்வே தொடக்கத்தில் மிக்கிருந்தது. அதனால் அவர் பல சமய நூல்களை ஆராய்தல் நேர்ந்தது. ஆராய்ச்சியில் அவர்க்குச் சமண சமயம் மெய்ச் சமயமாகத் தோன்றிற்று. தோன்றவே அவர் அச் சமயம் புகுந்தார். அச் சமயத்திலும் அவர் கலைப் புலவராகவே வாழ்ந்தார். பின்னே ஈசனருள் கூட லாயிற்று 89. அப்பொழுது அவர்க்கு இறைவன் ஒருவனே என்பதும், அவனது நெறியும் ஒன்றே என்பதும், சமயங்களுள் மெய்ச் சமயம் பொய்ச் சமயம் வகுத்தலும் சமயம் மாறலும் அறியாமை என்பதும், இன்னபிறவும் புலனாயின. அவர், யான் முன்னே தாய் தந்தையர் குறிப்பிட்ட சிவன் என்ற பெயரால் நிகழ்த்திய வழிபாடும் ஒரு பரம் பொருளையே சார்ந் திருத்தலைத் திருவருட்டுணையால் காண்கிறேன். ஆகவே, யான் எப்பொழுதும் பரம்பொருளை மறந்தறியேன் என்னுங் கருத்துப்பட முதற் பதிகத்திலேயே பாடப் புகுந்தார். இந் நுட்பம், நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையா தொருபோதும் இருந் தறியேன் எனவும், சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோ டிசை பாடல் மறந்தறியேன், நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் எனவும் வரூஉந் திரு வாக்குகளில் பொலிதல் காண்க. இச் சீரிய கருத்துப் பொதுளப் பின்னரும் பல பாக்கள் அவரால் பாடப்பட்டன. அவைகளுள் சில வருமாறு;- உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே (திருவையாற்றுத் திருத்தாண்டகம்: 1): ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஒருருவே மூவுருவம் ஆன நாளோ - (திருவாரூர்த் திருத்தாண்டகம்: 1). வாது செய்து மயங்கு மனத்தராய் - ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் - யாதோர் தேவர் எனப் படுவார்க்கெலாம் - மாதேவன்னலால் தேவர் மற்றில்லையே - (ஆதிபுராணத் திருக்குறுந் தொகை: 4); ஆறொன் றிய சமயங்களின் அவ்வவர்க்கப் பொருள்கள் - வேறொன் றிலாதன ஆறு சமயத்தவரவரைத் தேற்றுந் தகையன - (திருவின்னம்பர்த் திருவிருத்தம்: 4; 7); சமயமவை ஆறினுக்குந் தலைவன் தான் காண் - (திருக்கச்சி ஏகம்பத் திருத்தாண்டகம்: 7). ஈண்டுச் சிவநெறி என்றது ஆண்டவன் அருள்நெறி என்னும் ஒன்றையே குறிப்ப தென்க. சிவநெறி கட்டுப்பட்ட நெறி அன்று. அஃது உலகில் வழங்கப்படும் எல்லா நெறிகளுமாய், அவைகளுக்கு உயிருமாயிருப்பது. அதற்கு இச் சமயம் ஆகும் இச் சமயம் ஆகாது என்பதில்லை. எறிபத்த நாயனார் புராணம்: 7. குறிப்பைப் பார்க்க. தாயுமானார்; ஆகார புவனம் - சிதம்பர ரகசியம் 8, 9, 10 - ஆம் பாடல்களை நோக்குக. ஈண்டுப் புன்மையே புரி அமணர் என்றது அஹிடசா பரமோ தர்மா தயாமூல தர்மம் என்று உலகுக்கு அறிவுறுத்திய ஆதி நாதராகிய விருஷபதேவர் கண்ட சமண அருள் நெறியினின்றும் வழுக்கிய இடைக்காலச் சமணரை என்க. இது குறித்துத் திருஞான சம்பந்த சுவாமிகள் புராணத்தில் விளக்கஞ் செய்யப்படும். 79 1350. தருமசேனர்க்கு வந்தஅத் தடுப்ப அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உயப் போய்ப் பெருகு சைவராய்ப் பெயர் ந்துதம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவும் நம் பெருஞ் சமயம் வீழ்ந்தது என மருள்வார். அவர் உய்ய. மருவும் - (நீண்டகாலமாய்) நிலவும். 80 1351. மலையும் பல் சமயங்களும் வென்று, மற்று அவரால் நிலையும் பெற்றஇந் நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக் கொலையும் பொய்மையும் இலஎன்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழவந்து ஒரு சிறை சார்ந்தார். மலையும் - ஒன்றோடொன்று மாறுபடும். பல சமயங்களை யும். அழுங்கி - வருந்தி. ஒருசிறை - ஒரு பக்கம்; துன்பத்தால் சிறைப் பட்டார் என்பது குறிப்பு. 81 1352. இவ்வகைப் பல அமணர்கள் துயருடன் ஈண்டி மெய்வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவன் ஆகிநம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் brŒtJ v‹? என, வஞ்சனை தெரிந்து சித்திரிப் பார். ஈண்டி - கூடி - விருத்தியும் - சீவிதத்தையும்; (சீவிதம்; சர்வ மானியம்; கவலையின்றிச் சீவிக்கும்படி விடப்படுவது). 82 1353. தவ்வை சைவத்து நிற்றலின், தரும சேனரும் தாம் பொய் வகுத்ததோர் சூலை தீர்ந்திலது எனப்போய் இங்கு எவ்வம் ஆகஅங்கு எய்திநம் சமயலங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் எனச்சொலத் தெளிந்தார். தவ்வை - தமக்கை. எவ்வமாக - கபடமாக; வெறுப்பாக. லங்கனமும் - விடுத்துத் தாண்டுதலும். 83 1354. சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார். (அரசன் கேள்விப்படுதற்கு முன்னம். முறைப்படுவோம் - முறை யிடுவோம். இருள் கூட்டம்; மனமிருண்டவர் என்பது குறிப்பு. 84 1355. உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர் கடை அணைந்து, அவன் வாயில் கா வலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்கு அவரும் தம் இறைவனுக்கு இசைப் பார். பேசாமல் நின்று உண்போர் என்றபடி. கடை - வாயிலை. அடைய - ஒருங்கே. இடை - சமயம். 85 கொச்சகக் கலி 1356. அடிகண் மார் எல்லாரும் ஆகுலம் ஆய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற, வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர்சார்பு ஆதலினால் கடிதுஅணைவான் அவர்க்கு உற்றது என்கொல்? எனக் கனன்றுஉரைத் தான். அடிகள்மார் - குருமார்கள்; சமண முனிவர்கள். நுடங்கு - அசையும். மன்னவனும் சமணச் சார்பினனாதலால். கடிது அணைவான் (அவர்கள்) விரைந்து அணைதற்கு; (அவர்களை) விரைவாக வருமாறு என்னலுமாம். கனன்று - கொதித்து; சினந்து. 86 1357. கடைகாவல் உடையார்கள் புகுதவிடக் காவலன் பால், நடையாடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணிய வாறு உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார். புகுதவிட - அடிகள்மார்களைப் புகவிட. நடையாடுந் தொழி லுடையார் - நடக்குந் தொழில் ஒன்றையே உடைய சமணர்கள்; நடைப் பிணங்கள்; ஆன்ம ஒளி இல்லாதவர்கள் என்றபடி. எண்ணி யவாறு - முன்னே சித்திரித்தபடி. நமக்கு முதன்மை யுடையவராகிய தருமசேனர் பிணியுற்றார்போல நடித்து. சிவபெருமானைச் சடையான் என்று சமணர்கள் இழித்துக் கூறுவது வழக்கம். 87 1358. விரை அலங்கல் பல்லவனும் அதுகேட்டு வெகுண்டு எழுந்து, புரை உடைய மனத்தினராய்ப் போவதற்குப் பொய்ப்பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்துஒழியப் பெறுவதே? கரைஇல் தவத்தீர்! ïjD¡F v‹brŒtJ? எனக் கனன் றான். விரைஅலங்கல் - மணங்கமழும் மாலையணிந்த. புரையுடைய - குற்றமுடைய. உரை - புகழ். பெறுவதோ. கரையில் - அளவில்லாத. கனன்றான் - கோபித்தான். 88 1359. தலைநெறி ஆகியசமயம் தன்னை அழித்து உன்னுடைய நிலைநின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை அலைபுரிவாய் எனப்பரவி, வாயால் அஞ்சாது உரைத்தார் - கொலைபுரியா நிலைகொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர். பொறியிலியை - ஞானமில்லாத தருமசேனரை. அலை புரிவாய் - அலைப்பாய்; வருத்துவாய். பிற உயிர்களை அலைப்பது சமணக் கொள்கையன்று; இச்சமணர்கள் தங்கள் கொள்கையினின்றும் வழுக்கி வீழ்ந்தவர்கள். முன்னே கொல்லாமை மறைந்துறையும் (37) என்றும், கொலையும் பொய்ம்மையும் இலவென்று கொடுமையே புரிவோர்(81) என்றும், இங்கே கொலைபுரியா. . . . .குண்டர் என்றுங் கூறினமை காண்க. 89 1360. அருள்கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவுஎன்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித் தெருள்கொண்டோர் இவர்சொன்ன தீயோசனைச் செறுவதற்குப் பொருள் கொண்டு விடாது, என்பால் கொடுவாரும் எனப் புகன் றான். கோடி - தவறி. தெருள் - தெளிவு. செறுவதற்கு - தண்டிப்பதற்கு; வருத்துதற்கு. 90 1361. அரசனது பணிதலை நின்று அமைச்சர்களும் அந்நிலையே முரசு அதிரும் தானையொடு முன்சென்று முகில் சூழ்ந்து விரைசெறியும் சோலைசூழ் திருஅதிகை தனைமேவிப் பரசமயப் பற்றுஅறுத்த பான்மையினார் பால் சென்றார். முரசு அதிரும் தானையொடு - முரசு முழங்கும் சேனை களுடன்; முரசதிர்ந்தானை முன்னோட - அப்பர்: திருவாரூர் 2. விரை செறியும் - மணங் கமழும். 91 1362. சென்று அணைந்த அமைச்சருடன் சேனைவீ ரரும் சூழ்ந்து மின்தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைத்து எமைவிடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி, நிறைதவத்தோர் உரை செய்வார். மின். . . . . அடியவரை - சிவனடியாராகிய திருநாவுக்கரசரை. நிறை தவத்தோர் - திருநாவுக்கரசர். 92 1363. நாம் ஆர்க்கும் குடிஅல்லோம் என்று எடுத்து நான் மறையின் கோமானை நதியினுடன் குளிர் மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார். தேம் - இனிய. பொருந்துமாறு நீர் அழைக்கும் முறையில் யாம் இல்லை. 93 1364. ஆண்டஅரசு அருள் செய்யக் கேட்டு அவரும் அடிவணங்கி வேண்டிஅவர்க் கொண்டுஏக, விடைஉகைத்தார் திருத்தொண்டர் ஈண்டுவரும் வினைகளுக்கு எம் பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்டசினப் போர்மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார். அவர்க்கொண்டேக - திருநாவுக்கரசரை அழைத்துப்போக. விடை உகைத்தார் திருத்தொண்டர் - திருநாவுக்கரசர். மந்திரிகள் அறிவித்தார்கள். 94 1365. பல்லவனும் அதுகேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை வல்அமணர் தமைநோக்கி மற்றுஅவனைச் செய்வதுஇனிச் சொல்லும் என, அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல்அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப்பு கன்றார். 95 1366. அருகு அணைந்தார் தமை நோக்கி அவ்வண்ணம் செய்க எனப் பெருகுசினக் கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை உருகு பெருந் தழல் வெம்மை நீற்றுஅறையின் உள் இருத்தித் திருகுகருந் தாள் கொளுவிச் சேமங்கள் செய் அமைத்தார். திருகு. . . . அமைத்தார் - முறுக்கிருப்புத் தாளிட்டுப் பாது காப்புகள் செய்து அடைத்து வைத்தார்கள்; சுழலுந் தன்மையுடைய இருப்புத் தாள் என்னலுமாம். 96 1367. ஆண்டஅரசு அதன் அகத்துள் அணைந்தபொழுது அம் பலத்துத் தாண்டவம் முன் புரிந்தருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே ஈண்டுவரும் துயர்உளவோ? ஈசன் அடியார்க்கு என்று மூண்டமனம் நேர்நோக்கி, முதல்வனையே தொழுது இருந்தார். அதன் அகத்துள் - நீற்றறையினுள். கிளர்ந்தெழுந்த மனதால் நேர்மையாக நினைந்து. 97 1368. வெய்யநீற்று அறையதுதான் வீங்கு இளவே னில் பருவம், தைவருதண் தென்றல், அணை, தண்கழுநீர்த் தடம் போன்று மொய்ஒளி வெண் நிலவு அலர்ந்து, முரன் றயாழ் ஒலியின தாய், ஐயர் திரு வடி நீழல் அருள் ஆகிக் குளிர் ந்ததே. வீங்கு - மிகுந்த. இளவேனிற் பருவம் - சித்திரையும் வைகாசியும். தைவரும் - வீசும் (தடவும்). தண்தென்றல் மென்மைத் தென்றல். குளிர்ந்த கழுநீர் மலர்ப் பொய்கை. முரன்ற - வாசிக்கப் பெற்ற. ஐயர் - சிவபெருமான். 98 1369. மாசுஇல் மதி நீடுபுனல் மன்னிவளர் சென்னியனைப் பேசஇனி யானைஉலகு ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனைஎம் பெருமானை எவ்உயிரும் தருவானை ஆசையில் ஆரா அமுதை அடிவணங்கி இனிது இருந்தார். 99 1370. ஓர்எழு நாள் கழிந்த தன்பின் உணர்வு இல் அமணரை அழைத்துப் பாரும்இனி நீற்றுஅறையை எனஉரைத்தான் - பல்லவனும்; கார்இருண்ட குழாம் போலும் உருஉடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்றுஅறையைத் திறந்தார்கள். கார்மேகம் - இருண்ட கூட்டம்போலும். தேரும் நிலை - சித்தந் தெளிந்தநிலை; 1354 - பார்க்க. 100 1371. ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர்ப் பாதத்து அமுதுண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே ‘