இளங்குமரனார் தமிழ்வளம் 27 1. கழக ஆட்சியர் வ.சு.வரலாறு ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 27 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 368 = 384 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 240/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் கழக ஆட்சியர் வ.சு.வரலாறு 1. ஒரு பெருவிழா 19 2. ஒரு மனிதர் 23 3. பெருமகனார் பிறந்தார் 26 4. இளமையும் கல்வியும் 28 5. எப்பொருளும் ஆன திருவரங்கர் 34 6. நூற்பதிப்புக் கழகப் பெருமை 37 7. கழகக் கால்கோள் 44 8. கழக நோக்கச் சிறப்பு 48 9. ஆட்சியின் அருமை 52 10. சென்னையில் முகவர் 59 11. அடிமேல் அடி 68 12. கோடையில் குளிர்தரு 71 13. வீசு தென்றல் 76 14. இரு பேரிடிகள் 81 15. அடுத்தடுத்தும் அடை மழை 86 16. இணைமலர்ப்பிணையல் 93 17, தூண்டித் துலக்குதல் 99 18. மூலவர் 109 19. வியத்தகு வெளியீடுகள் 114 20. துறைதோறும் தொண்டு 124 21. செந்தமிழ்க் காவலர் 131 22. வாரிபெருக்கி வளப்படுத்தல் 144 23. புதுவழி புதுக்குநர் 158 24. விழவறா விழுப்புகழ் 164 25. தேடித்தொகுத்தலும் பேணிக்காத்தலும் 179 26. உலகுவக்கும் ஒரு பணி 197 27. மறைமலை மருகர் 210 28. அறம்வளர் திறவோர் 220 29. பேராசிரியப் பெருநிலை 227 30. புலவரைப் போற்றும் புகழ்மை 235 31. பேரும் புகழும் 242 32. பலர்புகழ் பண்புகள் 259 33. விழுமிய வேட்கை 288 34. உரைமணி மாலை 296 35. பாமணி மாலை 307 36. நறுமலர் நாயகர் 311 பின்னைணைப்பு : 1 புலமையர் வழங்கிய புகழுரை 314 2. புரவலர் வழங்கிய போற்றுரை 327 3. கழக ஆட்சியர் வ.சு. அவர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ள காலக்குறிப்புகள் சில 335 4. கழகம் நடத்திய மாநாடுகள், விழாக்கள் முதலியன 338 5. சிறப்புப் பெயர் அகரவரிசை 343 6. கழக ஆட்சியர் பவள விழா மலரின் மாண்பு 360 37. குறிப்புகள் 362 கழக ஆட்சியர் வ.சு.வரலாறு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் துணைவேந்தர், டாக்டர். வ.சுப.மாணிக்கம் அவர்கள் அன்புடன் அளித்த அணிந்துரை தாமரைச் செல்வர் தமிழ்ப் பெருமகன் சுப்பையா பிள்ளை வரலாறு தனியொருவர் வரலாறன்று, நூற்றிதழ்த் தாமரை போலத் தமிழ்மொழிக் காப்பையும் வளர்ச்சியையும் பெருமையையும் புலமையையும் தன்னுட்கொண்ட மாபெரு வரலாறாகும். தனித் தமிழியக்கம், இந்தியெதிர்ப்பு இயக்கம், தமிழிசைக் கிளர்ச்சி, தமிழ் வழிபாடு, தமிழாட்சி, தூய தமிழிதழ், அச்சகம், நூல்நிலையம், தமிழ்க் கலைகள், புலவர் விழா, புலவரைப் போற்றல் என்பனவெல்லாம் இவர் வரலாற்றொடு தொடர்புடையவை. பெரியவர் வ. சுப்பையா பிள்ளை தமிழ்வளர்ச்சிக்குத் தாமே கண்ட பதிப்பு நெறிகளும் நூன்முறைகளும் தலைப்புகளும் வியக்கத்தக்கவை. சொற்பொழிவு என்ற நூல் வகையில் சங்க முதல் தமிழிலக்கியம் எல்லாம் காலத்திற்கேற்ற கைவடிவு பெற்றன, நூற்றுக்கு மேலான அறிஞர்களின் மதிநுட்பத்தையும் எழுத்து வன்மையையும் திருவுருவங்களையும் சொற்பொழிவு என்னும் இவ்வுரை நடைச் சிற்றிலக்கியம் பொதிந்து வைத்திருக் கின்றது. எதிர்கால ஆய்ஞர்க்கு இவை தொடுமணற் கேணியாகும். சங்க இலக்கியப் பேழை என்பது தமிழுக்குத் தங்க இல்லப் பேழை என்பதனை வரலாறு சொல்லும். குழவியர், சிறார், இளைஞர், முதியோர், பெண்டிர், அயலோர், மாற்று மொழியினர் என அனைதிறத்தினர்க்கும் பக்குவ நூல்கள் வெளியிட்ட பார் புகழ் தமிழ்த்தொண்டு திருவரங்கனார் தோற்றிய வ. சுப்பையா பிள்ளை நிலைநாட்டிய கழகத்திற்கே உரியது. மறைமலையடிகள் நூல்நிலையம் என்பது விலைமதிக்க முடியாத அருங்கலை மாளிகையாகும். தாமரைச்செல்வர் தம் முயற்சியால் தமிழன்னைக்குக் கட்டிய தமிழணி நிலையம் என்று உலகறிஞர் பாராட்டுகின்றனர். எவ்வளவு இளைய அறிவுடை நம்பிகள் இந்நிலையத்திற்கு நாள்தொறும் சென்று இருந்து குறிப்புத் தொகுத்து ஆய்வை விதைக்கின்றனர். இஃது அறிவாற்றுப்படையாக விளங்குகின்றது. எதிர்மறையாகப் பார்த்தாற்றான் மெய்த் தொண்டுகளின் ஏற்றங்கள் புலப்படும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என ஓர் அமைப்பு இல்லாதிருந்தால், கழகப் பாடநூல்கள் இல்லாதி ருந்தால், சங்கவிலக்கியங்கட்கும், காப்பியங்கட்கும், தொல்காப்பிய முதலான இலக்கணங்கட்கும் சிற்றிலக்கியங்கட்கும், உரைப் பதிப்புக்களும், மேலுரைப் பதிப்புக்களும், அடக்கப் பதிப்புக் களும், உரைநடைப் பதிப்புக்களும் இல்லாதிருந்தால், மு.வ.வின் தெளிவுரை, திருக்குறள் நாட் குறிப்பு, திருவள்ளுவர் மலர் முதலான மலர்கள், மொழி பெயர்ப்புகள், புலவர் வரலாறுகள், அறிவியற் கொத்துக்கள், வடமொழி தமிழகர வரிசைகள், செந்தமிழ்ச்செல்வி இல்லாதிருந்தால், மலைகளிற் சிறந்த தமிழ்மலையான மறைமலையடிகளின் கடலனைய நூல்நிலையம் இல்லாதிருந்தால், இத்துணைக்கும் வினைமுதல்வரான திருவரங்கனாரின் இளவலான தாமரைச் செல்வரின் தெய்வ வுணர்வும், குறிக்கோள் வீரமும், நீடிய ஆயுளும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டுத் தமிழன்னை ஒரு குழந்தை தூக்கிச் செல்லும் மெல்லுருவமாக இருந்திருப்பபாள். தாமரைப் பிள்ளையும் கழகமும் தோன்றி வளர்ந்து ஆற்றிய உழவுத் தொண்டினால் நம் தமிழன்னை தலைபலவும், கைகால் ப்லவும் பெற்று நாடி நரம்பெல்லாம் நூல்முறுக்கேறிக் குருதி அறிவொளி பெருகி, திசை நான்கும் ஓடி, ஐந்து கோடி மக்களும் பத்துக்கோடித் தோளில் செம்மாந்து தூக்குமளவு உயிர்வளம் தழைத்திருக்கின்றாள். இப்புகழ்ச்சி பெருமிகையன்று. தொண்டாற்பழுத்த தமிழ்க் கிழவர் வ. சுப்பையாபிள்ளை வரலாற்றினைத் தொய்யா நடையில் முருகுபட எழுதியுள்ளார் புலவர் இளங்குமரனார். பகுதித் தலைப்புகள் இலக்கிய மணங் கமழ்கின்றன. கால முறையாகச் செய்திப் புனைவின்றியும் நடைப்புனைவோடும் இவ் வரலாறு அமைந்துள்ளது. தாமரைச் செல்வரின் வாழ்வு விரிவை அறிந்தார் இந்நூலை ஓர் அடக்கப் பதிப்பாகவே கருதுவார். எனினும் இம் முதற் பதிப்பு புதிய செய்திகள் பல பொதிந்த மூலப்பதிப்பாகும். இவ் வரலாற்றைப் படிப்பார், தமிழைப் படிப்பார், தமிழ்த் தொண்டு செய்வார், தொண்டாளர்களை மதிப்பார், தமிழ்ப் பிறப்பை மனங் கொள்வார். தமிழ்த் தொண்டினால் தமக்கும் ஒரு வரலாறு வரும்படி தமிழ்வாழ்வு நடத்துவார். இதுவே தாமரைச் செல்வர் தமிழர்பால் எதிர்பார்க்கும் தன்னலம். FOREWORD Dr. K.R.SRINIVASA IYENGAR Retd. Vice-Chancellor Andhra University. Former Vice - President Sathithya Akademi, Delhi. It is with pleasure that I Write this Foreword to Pulavar R. Ilankumaran’s detailed account of the life-work and times of Tiru Va Subbiah Pillau, whose name has become almost synonymous with the Personality, drive and achievements of the Tirunelveli South India Saiva Siddhanta Book- Publishing Kazhagam and its several affiliated instittuions. I have been a distant admirer of Tiru Va. Su for many years, and since my boyhood years in Tirunelveli. I have watched the Saiva Siddhanta Book-Publishing Society grow from its early auspicious beginings to its prsent impressive strength and healthy wide-ranging influence. I therefore welcome this opportunity to offer my own tribute to the Man and the Kaxhagam he has fostered with such care and clear sense of direction. Dr. Johnson’s words “slow rises worth by poverty depressed” had a close application to the first phase of Tiru Va Su’s life and career, Tlhe fourth son of Vairamuthu Pillai and Sundarathammayar of Palayamkottai, Subbiah losthis father when barely three, and two of his brothers and his only sister before he was twenty-five. On his elder brother, Tiruvaranganar, senior by seven years, fell the responsibility of sustaining the family throught its difficult years. He found employment in a commercial establishment in Colombo in 1907, and during the next ten years, his monthly remittance were the mainstay of the family. In the meantime, Subbiah passed his S.S.L.C. in 1916 from St. Xavier’s High School, Palayamkottai, and proceeded to Colombo to continue his studies. But not long after, illness made him return to Palayamkottai, however, he duly passed the London Matric in 1917 as a private candidate. Failing to secure admissin to the Madras Medical College in 1918, Va Su groped about for a while, till he presently found his great mission in life as salesman of the nectar of Tamil letters. During his sojourn inColombo, Va Su’s brother, Tiru varanganar, made the acquaintance of the notred Tamil scholar and writer, Maraimalai Adigal, arranged for the savant’s memorable first visit to Colombo in 1914, and stimulated the sale of his books. It was during his second visit in 1917 that Va Su met the Adigal andlaid the foundation of his Boswellian relationship to the Master. That year also saw the establishment by Tiruvaranganar of Tiru - Sankar Company, a bookshop in Colimbo for the sale of the works of Maraimalai Adigal and other scholars. Tiruvaranganar, however, Soon realised that his real work lay inTamil Nadu, and hence moved to Coral Merchant Street, Madras, to organise the bookshop Tiru-Sankar Company, while asking Va Su to open in the family home at Palayamkottai a branch of the firm. Tiruvaranganar and Va Su firmly believed that the sale of good books, being verily the commerce of idean and knowledge and values., blessed the givers and takers alkie; no surfeit in the receiving, and no loss in the giving! Tlhe next decisinve turn was the incorporation by the brothers, on 21 September 1920, of the Tirunelveli South India Saiva Siddhanta Book-publishing Kazhagam. The brother received much encouragement from Tiru M. Diraviyam Pillai and Tiru T.S. Visvanatha Pillai, and the Kazhagam commenced its career with and authorised capital of Rs. 50,000, made up of 5000 shares, each of Rs. 10. The capital was to be increased in 1952 to Rs. 1 lakh, and in 1963 to Rs. 2 lakhs. With the opening of the Madras Branch of the Kazhagam in February 1921, with Va Su as Manager on Rs. 35 per month (Tiruvaranganar shifting to the Tirunelveli Head Office), the Tirunelveli - Madras axis startedfunctioning with quiet efficiency and a change of missinary zeal. The new publishing firm was active from the very beginning. The bookshop Tiru - Sankar Company. and the Saiva Siddhanta Book-publishing Corporation teamed together and merged, and in 1923 a Tamil monthly literary journal, ‘Senthamil Selvi’, waslaunched as an auciliary force pointing towards the same end. In book-publishing, the new firm aimed at the diffusionof religious (especially Saiva), ethical, and worthy secular literature, classical as well as modern, and worthy secular literature, classicalas well as modern, and also at promoting a two-way Suez Canal-like traffic in letters:: Tamil into other languages,and Singnificant literature in other languages (notably English) into Tamil. There was to the a stress also on Scholarship, exegesis research, literary criticism and interpretaton. The first book to be issued under the Kazhagam imprint was, appropriately enough, Tiruvadi Pugazhamalai, and while the first year saw the publication of five books, the 2nd saw seven, the 3rdthriteen, the 4th twenty, and so on. Forty years after, In 1961, the 1008th book came out, and today the total in 1750 or more, averaging 25 per year, or one bookfor every 13 days during the entire 60-year period of the Kazhagam’s existence. Tiruvaranganar at Tirunelveli and Va Su at Madrasconstituted between them a resourceful and energetic publishing duumvirate for about 25 years, from 1920 to 1944. Good book-publishing is a taxing and trcky vocation that calls for a rare union of secular and spiritual qualities. A book has a soul as well as a body, aham and not alone puram it calls for the mobilisation of several instruments of production. Buildings, printing facilities, finance, editorial expertise,talent for marketing. pleasing and effective public relations, and above all a flair for the location of writing talent and its mobilisation :: all are needed. AndTiruvaranganar and Va. Su. were able to assemble a dedicated group of writers andeditors, and publish a body of literature (mainly in Tamil), both impressive in bulk and marked by a varegated richness. Tiruvaranganar’s marriage to Maraimalai Adigal’s daughter, Nilambikai, in 1927, and Va Su’s to Mangayarkarasi (daughterof Tiru Aundiappa Pillai of Palayamkottai), in 1935 brought a humanising influence to the brothers’ lives; and Tiruvaranganar in Tirunelvaly and Va Su in Madras worked in perfect co-ordination devoted to the claims of the hearth and equally to the exaction demands of book-publishing as well as advancing the other aims of the Kazhagam. The untimely death of Tiruvaranganar, th Father of the Kazhagam, in 1944, followed by that of Nilambikai Ammal next year, was a double blow under which the publishing firm could not but reel for a time. It now became necessary for Va Su’s wife, Mangayakarasi, to shift to Palayamkottai with her two daughters, so as to be able to look after Tiruvaranganar;s children and the aged mother-in-law., During the next eight years, Va Su gallan-tly contined at Madras, cookming his own meals, and living a life of simplicity, austerity and infallible regularity. And he laboured with redoubled dedication and saw that the progress of the Kazhagam didn’t suffer,whether in Madras or at Tirunelveli, He bought the Janasakthi Press for Rs.20,000, re named it Appar Achakam, and had it opened by Omandur Ramaswami Reddiar in 1948. This gave a push to the Kazhagam’s book-publishing activities and helped it to build an opulently diversified body of publications in a variety of formats;; mini, medium and large, paperback, calico, rexine,popular, and gold-lettered deluxe! learned commentaries on Tolappiyam, and other works of grammar;; the whole ensemble of the Sangam Classics;; the minor but no less significant literary forms (ula, kalambakam, thoothu, Kuravanji, andadi, pillaithamizh etc.) ;; the celebrated Tirukkural in a diversity of editons, one of them (with Mu Varadarjanar’s paraphrase) achieving a sale of a million;; the classics of religions divination and ecastasy like Tirumandiram, Tevaram, Tiruvasagam and Tiruppugazh;; philosophical classics like Meikandar’s;; the Sangam Classics in prose or in summary reecitals;; collections of speeches and conference papers;; historical and scientific works;; secular literature like fiction, essays and drama; children’s literature; the works of Maraimalai Adigal; translations; research monographs in Tamil and in English; biographies, dictionaries..........well, God’s plenty, in fact. The Kazhagam’s list is a composite and comprehensive library by itself. No wonder it has been remarked that the Kazhagam, as an instittution, is older than the Annamalai,and Madurai KamarajUniversities; and its record of scholoarly publications in Tamil is more outstanding than that of the University of Mazdras. In September 1950, the death of Maraimalai Adigal left a big void in theTamil world. By his last will and testament, he hadbequeathed his very considerable privare library of rare Tamil books and other scholarly works to the Kazhagam, and this priceless collection of about 4000 books was to become the necleusof the Maraimalai Adigal Memorial Library, which was duly opened by Tiru. M. Bhaktavatsalam on 24th August 1958, in a historic building in Linghi Chetti Street, The building has seminal associations with Ramalinga Vallalar, who is said to have delivered his rirst impromptu discourse there to and astonished assembly. The Library began with the 4000 of the Maraimalai Adigal collection and anothe 5000 in the Kazhagam’s garner. Since then there have been steady accessions, includiug whole libraries like that of the historian,the late V. Rangachari; and today the library has about 35,000 books and rare manuscripts. Although located in a crowded part of the city, the Library is the haunt of Tamil scholars old and yound; and, for the committed, it is what anideal Library shouldbe, a Houseof Perpetual Enlightenment. I may be added that Maraimalai Adigal’s ownhouse in Pallavaramhas also been turned by the Kazhagaminto a memorial Kalai Manram, and is serving the cause of arts and letters during the last two decades. What becomes clear when lone reads Pulavar Ilan kumaran’s account of the life of Tiru.Va. Subbiah Pilai is that the biography merges with the history of a dedicated family, as also with that of Kazhagamand its collateral institutions, and even with that of the Pure Tamil movement and the Tamil literary renaissance witnessed during the last sixty years. Tiruvaranganar and Va Su were closely linkedwith Maraimalai Adigal as disciples and heirs to his ministry in the service of Tamil. If Tiruvaranganar became the Adigal’s son-in-law also, on Va Su fell the responsibility of cherishing and fostering the Maraimalai tradiontgs of integrity and high seriousness in Tamil scholarship. After performing the marriage of Tiruvaranganar’s daughters, Mayilamami and Muthammal, Va Su thought of the marriageof his own daughters Vadivazhagiar and Vairamaniyar. The former was married in 1956 to Kalyansundaram, Va Su’s brother-in-law’s elder son. The younger son, Mutukumaraswamy married Vairamani in 1959. And in yound Muthukumaraswamy - young but fully trained in Library Science-the Maraimalai Adigal Library has found a seasoned libratian,who has fosteredits growth in the right directions andmade it a veritable mecca for advanced Tamil studies and research. Between 1920,the year of the Kazhagam’s foundation, and today over sixty years have passed, For the first 25 years, the Tiruvarangam-Va Su duumvirate gave the right leadership to the Kazhagam. After 1944, althoughg Va Suhad to take upon himself the responsibilities at Madrasa swell as at Tirunelveli, he had good collaborators, and found in his sons-in-law admirable executants. At Tirunelveli, the Sivagnana Munivar’s Library, the Thiruvalluvar Tamil College and the Kumaraguruparar Nursery School came up one after another. Branches of the Kazhagam have been established at Madurai, Coimbatore, Kumbakonam and Tiruchirappalli. Although never in exceptionally robust health (he had a period of acute illness at Jaffna in 1951), Va Su has both kept going the different institutions under his charge in a high pitch of efficiency and also constantly endeavoured to add new dimensins to their activities. He is a master builder, really:: he is a Kazhagam by himself, and always a power for good. The incorporation of the Saiva Siddhanta Book-Publishing Foundation was an act of faith, a blow struck in favour of Tamil language, literature and culture. Like Maraimalai Adigal,the Kazhagam and Va Su have been advocation with evangelical fervour the ‘Pure Tami’ movement, it was Suryanarayena Sastri who first changed his Sanskritised name into the Tamil ‘Parithimar Kalaignar’ Likewise ‘Swami Vedachalam’ underwent a sea-change into ‘